கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சீர்பாதகுல வரலாறு

Page 1


Page 2

đÎIIIjö6) 6)IJ6ùI]]
ஆசிரியர் அருள் செல்வநாயகம்

Page 3

fLT556) QITGT)
அருள் செல்வ நாயகம்
அட்டைப்பட விபரம் :
கடலில் அலைகள் பொங்கிக் கொ ண் டி ரு க் கி ன் ற ன . தூ ர த் தே கடற்கரையில் இந்துக் கோயிலின் கோபுரம் உ ய ர்ந்து தோன்றுகிறது. எட்டாம் நூ ற் ரு ண் டை ச்
சேர்ந்த பாய்க்கப்பல் ஒன்று வருகிறது. அதில் மக் கள் இருக்கிருர்கள். பாய்க்கப்ப லின் நடுவில் மன்னவனும், அவன் மனைவி இளவரசியும் கோயில் கோ புரத் தை ப்
- திருவருள் வெளியீடு -
பார்க்கிருர்கள்.
جمعیتیمبرج عبریعہ
ser

Page 4


Page 5

UD
லவநாயக
இந்நூலாசிரியர் . அருள் செ
திரு
ர்கள்
அவாக
29, 1973
மறைவு
6-6-1926
ற்றம்
தோ

Page 6

மதிப் புரை
ஈழநாட்டு அறிஞர் புலவர்மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் அளித்தது
இந்து சமுத் தி ரத் தின் நடுவே தெளிவளர் குணதிசையின் எழில்மிகு இராணியாகக் காட்சி யளித்து என்றும் அளியாத கட்டிளமைச் செல்வி யுடன் இலங்குவது ஈழநன்நாடு. இதன் ஒருபகுதி யாகிய மட்டக்களப்புத் தமிழகமானது நீண்டகன்ற சமநிலப் பரப்பாய் இதன் கீழ்பாலில் வடக்குத் தெற் காக நிமிர்ந்து கிடக்கின்றது. இத்தமிழ் மாநிலம் மட்டக்களப்பு வாவியென் கின்ற நெடுநீர்ப் பரப்பி ணுல் இரு நெடுங்கூறுகளாகப் பிரிந்து கிடத்தலால், இதன் கீழ்பாலிற் கடல்வளஞ் சுரக்கும் நெய்தலங் கானலும் மேல்பாலில் நெல்வளம் பெருக்கும் தண் பனை மருதமும் இயல்பாகவே அமையப்பெற்றுள்ளது.
இந்த நாட்டிலே மட்டக்களப்பு வாவி கட் லொடு கலக்கின்ற முகத்துவாரமென்னும் (முகம் + துவாரம்) துறைமுகமானது காவிரி ஆறு கடலொடு கலக்கும் சங்கமத்துறையை நமக்கு நினைவூட்டுகிறது. ஈழ நா ட் டு உணவு காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சென்ற பழைய செய்தியை நினைக்கும்போது அது இத்துறைமுகத்தின் வாயிலாகவே சென்றிருத்தல் கூடுமோவெனச் சொல்வதற்கும் நா எழுகிறது. இத் துறைமுகம் மரக்கலத்தால் வருகின்ற மாண்புடைய செல்வத்தைத் தொகுத்துத் தருதலாலும் செழுமை சான்ற செங்கதிர்க் கழனிகள் செந்நெல் முதலிய
ܩܕ ܝ , r ! അത്ത

Page 7
உணவுப் பண்டங்களை மலைபோலக் குவித்துத் தருத லாலும் இந்நாடு வளம் மலிந்தது. நெறியல்லா நெறி யிற் சென்று நிதி திரட்டுகின்ற செயற்கை மனப் பான்மை இந்நாட்டு மக்களை ஆட்கொள்வதில்லை.
இயற்கையின் துணைகொண்டு வாழ்கின்ற இவர் கள் விருந்துபசாரஞ் செய்வதிலும், பாடறிந்து ஒழுகு வதிலும் இயல்பாகவே பயில்கின்ற மனப்பான்மை யுடையோர். வரண்ட சாத்திரம் பேசும் வழக்கம் இவர்களுக்கில்லை. சாதிசமய வேறுபாடுகள் காரண மாகப் பிரிந்து வாழ்வதையும் இந்நாட்டு மக்கள் அறியார்.
இத்தகைய இயற்கையமைதி குடிகொண்டுள்ள மட்டக்களப்பு மாநாடு காலந்தோறும் நல்லோர் பலரின் தொடர்பால் ஆக்கமடைந்துள்ள வரலாற்றை யும் பெற்றிருக்கின்றது. சோழநாடு போன்றது மட் டக்களப்புத் தமிழகம். இத்தமிழகத்தில் தெய்வத் திருக்குறிப்பால் நிகழ்ந்ததோர் சீரிய நிகழ்ச்சியானது பிரசித்திபெற்ற ஓர் வரலாற்றினைச் சிருட்டித்துள் ளது. நாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளிலே பெண் பாலார் நாட்டிய பல சாதனைகள் சமூகத்தை மறு மலர்ச்சி பெறச் செய்தமைக்கு இவ்வரலாறு நல்ல தோர் உதாரணமாகின்றது.
தேசங்களுக்கிடையே பரஸ்பரம் தொடர்புக ளின்றி உலகம் இனிது நடைபெருது. ஈழநாடு இத் தகைய தொடர்புகளை வரவேற்பதில் முதன்மை பெற்றுள்ளது. இந்த மனப்பான்மை காரணமாக ஈழநாடு சோழநாட்டுடன் கொண்ட தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. விசயன் காலந்தொட்டே திருமணச் சம்பந்தம் முதலிய கூட்டுறவு முறை க ளின ல் இரு நாடுகளும் நன்கு இணைந்துள்ளதைச் சரித்திரம் நமக்குக் கூறுகின்றது. இங்கு நாம் கூறுகின்ற தொடர்பானது, மட்டுமா நாட்டையும் சோழநாட்டையும் சமய சமூக கலா சாரப் பிணைப்பிலே நன்கு நிலைபெறச் செய்த சம்ப
ーiiー

வத்தை விளக்கி நிற்கின்றது. வரலாற்று ஆசிரியர் பலரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு கவர்ச்சி பூட்டி நிற்கும் சக்தி வாய்ந்ததாகவும் இது விளங்கு கின்றது.
வீரர்முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப் பேடு, திருக்கோயிற் செப்பேடு, கொக்கொட்டிச் சோலைச் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு முதலிய சாசனங்களிற் குறிப்பிடப்பட்டுள்ள இவ் வரலாறுபற்றி நாம் அறிந்திருக்கவேண்டியது அவசிய மாகும்.
தற்பொழுது கந்தரோடையென வழங்கும் கதிரமலையைத் தலைநகராகக்கொண்டு உக்கிரசிங்க மன்னனென்பான் சோழநாட்டு அரசிளங்குமரியாகிய மாருதப்பிரவல்லியைக் கீரிமலை சாகர சங்கமத் தீர்த் தக்கரையிற் கண்டு கரை கடந்த காதல் காரணமாக அவ்வல்லியைத் தி ரு ம ன ம் செய்துகொண்டான். இதை முன்மாதிரியாக வைத்து ஜெயதுங்க பரராச் சிங்கன் எனப் பட்டம்பெற்ற சிங்கை மன்னனன வாலசிங்கன் என்பான் குமராங்குச சோழமன்னனின் குமாரி சீர்பாததேவியைச் சோழ நாட்டி ன் கண் ணுள்ள பழையாறை என்னும் தலைநகரிலே புதுமணம் செய்கின்றன். இத்திருமணத்தின் வாயிலாக மட்டுமாநாட்டில் நடந்தேறிய இவ்வரலாறு, நமது நாட்டு வரலாற்று நூலிலே பொன்னெழுத்துக்களாற் பொறித்தற்குத் தகுதியுடையதாகும். ஏனெனில் இவ்வரலாறு நமது நாட்டிலே சிறந்ததோர் குலமரபினை நிறுவிவிட்டதுமன்றி ஒருமை நோக்கமைந்த உயர்ந்ததோர் தமிழ்ச்
சமுதாயத்தையும் உருவாக்கிவிட்டது.
பழையாறையில் நடந்தேறிய புதுமணத்தின் பின்னர் ஈழநாட்டரசனும் சோழநாட்டிளவரசியும் நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்தில் இரு வரும் ஒருவராய்ப் பலநாள் இன்பம் துய்த்தபின்னர் ஈழநாடு திரும்பச் சித்தங்கொண்டார். குமராங்குச மன்னன் மகளையும் மருமகனையும் கப்பலேற்றி அரச
— iii —

Page 8
விருதுகள் வரிசைகளுடன் ஈழநாட்டினுக்கு அனுப்பி வைத்தான். ஈழம் வந்த கப்பல் திரிகோணமலைக் கடலை அடைந்ததும் தெய்வத் திருக் குறிப் பால் ஆங்கே ஸ்தம்பித்து நின்றது. காரணத்தைக் காணச் சிந்தன் ஆழ்கடலிலிறங்கி நிலமட்டம்வரை சென்று ஆராய்ந்து பார்த் த பொழுது வினயக விக்கிரக மொன்று கண்ணுக்குப் புலனகியது. மன்னணுணை யால் அதனை மேலெடுத்துவந்து பணிவுடன் கப்பலி லேற்றி வைத்தனன்.
இந்த அற்புதக் காட்சியினைக் கண்ணுற்ற சீர்பாததேவியார் ‘இக்கப்பல் எங்கு கரை சேரு கிறதோ அங்கே ஆலயம் அமைத்து உடையவரைப் பிரதிட்டைசெய்து வழிபடுவோ'மென ஒர் நேர்த்திக் கடன் பண்ணிக்கொண்டாள். கப்பல் கடுகி ஓடி மட்டக்களப்பு வாவியை ஊடறுத்துச்சென்று வீரர் முனையிற் கரை சேர்ந்தது. தெய்வத் திருவருளை வாழ்த்திக்கொண்டு யாவரும் கரையிலிறங்கினர்கள். சீர்பாததேவியின் எண்ணப்படியே வாலசிங்க மன் னன் ஆலயம் எடுப்பித்து விஞயகமூர்த்திக்குச் சிந்து (கடல்) யாத்திரைப் பிள்ளையாரெனத் திருநாமஞ் சூட்டிப் பிரதிட்டை பண்ணித் தன் பரிவாரங்களுடன் வணங்கி வாழ்த்தும் வரமும் பெற்று மனநிறைவு கொண்டான். சிந்துயாத்திரைப் பிள்ளையார் என்னும் பெயர் காலவரையில் சித்தாத்திரைப் பிள்ளையா ரென மருவி வழங்கலாயிற்று. வீரர்முனையில் சிந்து யாத்திரைப் பிள்ளையார் கோயில் தோன்றிய வர லாறு இதுவாகும். ஆலய நிருவாகம்பற்றிய செய்தி களையும் ஒருசிறிது கூறுதல் இங்கே பொருத்தமாகு மென எண்ணுகிறேன்.
சீர்பாததேவியுடன் சோழநாட்டிலிருந்து வந்த தலைமைப்பாடுடைய சிலரின் பெயர்களும் இங்கே கவனித்தற்கு உரியனவாகின்றன. சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்கள் அரச பரம் பரையிலே வந்த வர் கள். கண்ணப்ப முதலியார்
— iv -

முதலியவர்கள் வேளாளர்கள். முத்துநாயகச் செட்டி, சதாசிவச் செட்டி, சங்கரச் செட்டி முதலியோர் வணிகர்கள். சந்திர சே க ர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் முதலியோர் அந்தணர்கள். இவர்களுக் குரிய மகளிரும் உடன் வந்தமை இங்கு குறிப்பிடு தற்கு உரியதாம். பரம்பரையாக வளர்ந்துவருகின்ற உயர்குண சீலமும், பிற நல்லியல்புகளும் வாய்க்கப் பெற்ற இவர்களெல்லாரும் வழிவழி வந்த உயர்குடிப் பிறப்பினையுடைய பெரும் மக்களாவர்.
சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயிற் திருப் பணி முற்றுப்பெற்றதும் சீர்பாத தேவியார் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைச் சமூகத்தில் நிரந்தர மாகப் புகுத்திவிட்டமை குறிப்பிடத்தக் க சிறப் புடைய அம்சமாகிறது. இதனுல் அச்சீமாட்டியார் சீர்திருத்தவாதிகளின் முதல் வரிசையிலே முதலிடம் பெற்றுவிட்டார். இந்த முன்மாதிரியான செயலை நமது நாட்டிலுள்ள ஆலய தருமகர்த்தாக்கள் சிந் திப்பாராக.
சீர்பாததேவியார் வீரர்முனைத் திருக்கோயில் முன்னிலையில் யாவரையும் அழைத்து இதனைக் கூற லானர். "இது ஆண்டவன் சன்னிதி. நாம் எல்லாம் ஆண்டவன் பிள்?ளகள். ஆண்டவன் திருமுன் எல்லாரும் சமம். இங்கே நிற் கின்ற உங்களுள் அரச குலத்தவர் இருக்கிறர்கள்; அந்தணர் இருக்கிறர்கள்; வணிகர் இருக்கிறர்கள்; வேளாளர் இருக்கிருர்கள்.
நீங்களெல்லாரும் இனிமேல் ஓர் குலமாக வாழ்ந்து இவ்வாலய
பரிபாலனத்தை ஒற்றுமையாக நடத்திவரவேண்டும். இன்றுதொட்டு
நீங்கள் அனைவரும் சீர்பாத குலத்தவராகுக” என்று கூறி விருதும் வரிசையும் நல்கி தமது நல்வாழ்த்தும் கூறி னர். சீர்பாதகுலம் சமூக ஒற்றுமையின் சின்னம். சீர்பாததேவியார் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்போரை ஒன்றுகூட்டிச் சீர்பாதகுல மென ஒரு குலம் அமைத்துவைத்ததின் உட்பொருளை
—- V ~—

Page 9
நாம் அறிந்துகொள்ளவேண்டும். சீர்பாததேவியாரின் விசால புத்தியோடு கூடிய இச்சீரிய செய்கையின் பலனன் ருே இன்று மட்டக்களப்பு மாநாடு சமூக ஐக்கியத்தில் நிலைபெற்று வாழ்கின்றது. இந்தச் சமரச நிலையினை நிலைநாட்டி வைத்த சீர்பாத தேவியார் இந்நாட்டில் அமரத்துவம் பெற்றுவிட்டார். அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோமாக.
ஒருமைப்பாட்டின் சின்னமாக அமைந்துள்ள இச்சீர்பாதகுல அமைப்பின் இரகசியத்தை நன்கறிந் தோர் சமூக அமைப்பின் கட்டுக்கோப்பினை அறிந் தவராவார். இதனை அறியா தார் அறியாதார். சீர்பாதகுலம் சில நல்ல குலங்களையடக்கிய ஒரு கூட்டுச் சமூகமாகும். இவர்களுக்குத் தாமரைப்பூ, செங்கோல், கொடி என்பன விருதுகளாகும். வரிசை களும் பல இவர்களுக்குண்டு. வரலாற்று முறையாக வந்த இச்சீர்பாத குலத்தினர் செல்வாக்கும் வல்லமை யும் ஒருமையுணர்ச்சியும் வாய்ந்து நாட்டிற்கு அணி கலனக விளங்கி வாழ்ந்துவருவாராயினர்.
இந்நாட்டின் சிறந்த வரலாற்றினுக்குரிய ஒரு மக்கள்
சமுதாயத்தின் சரித்திரம் ஒழுங்காக எழுதப்பெற்று ஒரு நூல்
வடிவில் வெளிவந்திராத குறையினை நிறைவுசெய்து நிற்கின்றது
"சீர்பாதகுல வரலாறு' என்கின்ற இச்சிரிய நூல்.
இந்நூலாசிரியர் ஆண்டில் இளைஞராயினும் அறிவாற்றலிலும், ஆராய்ச்சித்திறனிலும் குறிப்பிடத் தக்கவராகும். இலங்கை வானெலி வாயிலாக ரசிகர் 'களின் ஏராளமான பாராட்டுதல்கள் இவருக்குக் கிடைத்துள்ளன. சிறு க தை எழுத்தாளராகவும், நாவல் ஆசிரியராகவும், வரலாற்று இலக்கிய கர்த்தா வர்கவும், நாடக ஆசிரியராகவும் பொதுமக்களிடம் பிரபலியம் பெற்றுள்ள இவர் தேசிய நோக்கம் படைத்தவர். தேசியப் பாடல்களிலும், கிராமியக்
- wi

கவிதைகளிலும் அதிகம் ஈடுபாடுடையவர். இவரது விமர்சனக் கட்டுரைகள் மிகவும் சுவாரசமானவைகள்.
தினசரிப் பத்திரிகைகள், வார வெளியீடுகள், மாத சஞ்சிகைகள் முதலியவற்றிலே தரத்துக்கேற்ற முறையில் இவர் எழுதிவருகின்ற புதுப் புனைவுகள் பழமைக்குப் புதுமெருது கொடுத்து அழகு செய்கின் றன. ஆராய் ச் சி ப் பாதையிற் செல்கிற இவரது சீர்பாத யாத்திரை சிந்தா யாத்திரையாய் நிறைவு பெறுமென நம்புகிறேன்.
இவரது நூல்களுக்கு ஈழத்திலும் தமிழகத் திலும் நல்வரவேற்புக் கிடைத்திருக்கிறது. எல்லா வற்றினுக்கும் மேலாக மட்டுமாநாட்டு முத்தமிழ் வித்தகர், பன்மொழிப் புலவர் விபுலாநந்த அடிக ளாரின் கட்டுரைகள், கவிதைகள் ஆகிய தேசிய செல்வங்களைத் தேடியெடுத்துப் பல நூல்களாக வெளியிட்டுத் தமிழ் மக்களுக்கு அனுபவப் பொரு ளாக்கித்தந்த இவரது செயற்கருஞ் செயலானது இவரை நாட்டுக்கு நன்கு அறிமுகம் செய்துவிட்டது.
இனிச் சீர்பாதகுல வரலாறு என்கின்ற இந் நூலின் பொது அ மை தி யும் சிறிது காண்போம். இந்நூலின் சுருக்கவுரை சென்னைமாநகரில் நடந்தேறிய இரண்டா
வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் முதல்நாளன்று படிக்கப்
பெற்றமை நூலுக்குக் கிடைத்துள்ள ஒரு முதன் மதிப்பாகும்.
இந்நூல் எட்டு அதிகாரங்களைக்கொண்டு விரிகிறது. நாகநாட்டு வரலாற்றினைத் தொட்டுச்சென்று, சோழ நாட்டுக்கும் ஈழநாட்டுக்குமிடையே ஏற்பட்டிருந்த நட்புரிமையையும், உறவு முறையையும் நன்கு விரித் துக்காட்டுவது சீர்பாத நூலினுக்குத் தனிச் சிறப் பாக அமைகிறது. சீர்பாதம் சம்பந்தமான செப்பேடு களையும், சாசனங்களையும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்து இந்நூலினை ஆசிரியர் நிறைவுசெய்கின்ருர்,
- vii

Page 10
நிருவாகம் சுமு கமாக நிகழ்ந்தேறுவதற்குச் சட்டதிட்டங்கள் மாத்திரம் உதவமாட்டா. சட்ட திட்டத்துக்கு அமைந்து நடக்கின்ற நாகரீகப் பண்பு மக்களுக்கு இருக்கவேண்டும். இல்லையேல் சட்டதிட் டத்துக்கு மாறன சம்பவங்கள் நிகழும். வீரர்முனைக் கோயில் நிருவாகத்தில் இடைப்புகுந்தது பிரிவினை. இதனுல் நிர்வாகத் தலைவர்களுள்ளே ஒருவரான சிந்தன் என்பார் சீர்பாததேவி கொடுத்த தங்க வேலாயுதத்தைக் கொண்டு வீர ர் முனை யை விட்டு வெளியேறிய சம்பவமானது சீர்பாத வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயத்தை உண்டாக்கிவிட்டது.
தங்கவேலாயுதத்தை உடன் கொண்டுசென்ற சிந்தனென்கின்ற சீர்பாதகுல முதல்வர் மண்டூர் என்னும் திருப்பதியையடைந்தார். அங்கே திருக் குறிப்பினல் ஒரு தில்லை மரத்தின்மீது அந்தத் தங்க வேலாயுதத்தைப் பதித்துவைத்துப் பூசனை புரிந்தார். அங்கே ஒரு பேரொளி உண்டாயிற்று. மிகப் பிரசித்தி பெற்று விளங்குகின்ற தில்லை மண்டூர்க் கந்தசுவாமி கோயில் நிருவாகம் குருமண்வெளி, துறைநீலாவணை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, மண்டூர் என் னும் ஐந்து ஊர்களிலுள்ள தாய்வழி உரியைபெற்ற குடியினரின் அதிகாரத்தின் கீழ் நடைபெற்றுவருகின்ற நிகழ்ச்சியினையும் இந்நூல் எடுத்துக்கூறுகிறது. பிரி வினை காரணமாகச் சிந்தனென்னும் சீர்பாதகுலத் தலைவர் நிறுவிய தில்லை மண்டூர்த் திருக்கோயில் நிருவாகத்தில் வீரர்முனையிலுள்ள சீர்பாதகுலத்தவ ருக்கு உரிமையில்லாதது குறிப்பிடத்தக்க ஓர் அம்ச மாகும்.
வீரர்முனைச் சிந்து யாத் திரைப் பிள்ளையார் கோயிற் திருப்பணித் தாபகரும், நிருவாக அமைப் பாளருமாகிய வாலசிங்க மன்னனும், கற்பின் செல்வி சீர்பாத தேவியும் சமய பரிபாலன சேவையிலும், அரசியல் நிருவாக ஆட்சியிலும் அளப்பரிய முன்னேற் றங்களைச் சாதித்துச் சமாதான வாழ்வு நடத்திக்
- viii -

கொண்டிருந்தனர். சமய சேவை நிலை பேறுடையது, அரசியலாட்சி நிலையற்றது என்பதற்கிணங்க அவர் களது அரசியல் வாழ்வு பறிபோகும் நிலை ஏற்பட லாயிற்று. பாண்டிய மன்னன் போர் தொடுக்கிருன். வாலசிங்க மன்னவன் போரினை எதிரேற்று வீர சுவர்க்கம் புகுகிருன். சீர்பாததேவியும் உடன் கட்டை ஏறுகிருள். அரசியல் நிலை மாறுபட்டாலும் சீர்பாத தேவியார் நிறுவிய வீரர்முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் சிரஞ்சீவியாக நிலைபெற்றுத் திருவருள் ஒளிவீசி இருவரதும் ஞாபகச் சின்னம் போன்று இயங்கி நிற்கின்றது. தில்லை மண்டூர்த் திருக் கோயிலும் சிந்தன் என்பாரின் சிறந்த நினைவு ச் சின்னமாகத் திக்கெல்லாம் திருவருள் பொலிந்து திகழ்கின்றது.
மறைந்துகிடந்த இவ் வரலாறுகளையெல்லாம் பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து 'சீர்பாதகுல வரலாறு’ என்னும் ஒர் ஆராய்ச்சி நூலினை நமக்கு உபகரிக்கின்ற ஆசிரியர் அருள் செல்வநாயகம் அவர் களுக்கு தமிழுலகமும், சீர் பா த குல மும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளன.
??துாங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்தவீரர் தாங்கல் கடன்' -(சீவகசிந்தாமணி) என்கின்ற இலக்கியத்திற்கு உதாரணமாக விளங்கித் தன்குலம் விளக்கிய தகைசால் தமிழ்க்கொழுந்து தழைத்து இனிது வாழ்கென எனது அன்புகனிந்த
நல்வாழ்த்தினை ஆசிரியருக்கு அகம் நெகிழ்ந்து நவில் கின்றேன்.
ஏ. பெரியதம்பிப்பிள்ளை
"புலவரகம்’ குருக்கள் மடம்.

Page 11
முன் னுரை
கிறீஸ்துவிற்குப் பின் எட்டாம் நூற்றண் டில் சிங்கை நகரினைத் தலைநகராகக் கொண்டு வடக்கு ஈழத்தையும் கிழக்கு ஈழத்தையும் ஜெய துங்க பரராசசிங்கன் என்னும் மன்னவன் செங்
கோல் செலுத்தினன்.
வாலசிங்கன் என இயற்பெயர் கொண்ட ஜெயதுங்க பரராசசிங்கன் சோழ இளவரசியான சீர்பாததேவியைத் திருமணம் செய்துகொண்டு புறப்பட்டபொழுது, சோழ மன்னன் குமராங் குசன் பலரைத் துணையாகச் சேர்த்துக் கப்பலில் அனுப்பிவைத்தான்.
தனது ஆணை பரவும் நாடுகளின் வளத் தைக் கடல் வழியாகச் சீர்பாததேவிக்கு வால சிங்கன் காட்டிக் கொண்டு வந்தபொழுது கோணேசுவரன் கோயிலுக்கணித்தாய்க் கப்பல் நகராவண்ணம் நின்றுவிட்டது. கப்பல் நிற்கும் காரணத்தைக் காணப் பலர் கடலிற் குதித்தார்
56.
கப்பலுக்குக் கீழே கடலின் அடியில் வினயக ரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு கைதூக்கி எடுத்துக் கப்பலில் சேர்த்தனர். வினயகப் பெரு மானைக் கண்ணுற்ற சீர்பாத தேவி பணிந்து வழி பட்டு ‘இக்கப்பல் ஒடிக் கரைதட்டி நிற்கும் இடத்தில் ஆலயம் எடுப்பித்து நிலைபெறுதல் செய்வேன்' என வேண்டினுள். அதற்கிணங்க நின்ற கப்பலும் தானக ஓடலாயிற்று. கிழக்குக் கரை வழியாக ஒடிய கப்பலானது மட்டக்களப்பு வாவியிலே புகுந்து வீரர்முனை என்னுமிடத்திலே கரைதட்டி நின்றது.
ーX ー

சீர்பாத தேவி தன் வேண்டுதலுக்கிணங்க வீரர்முனையிலே விஞயகருக்குக் கோயில் எடுப் பித்தாள். கோயில் எடுப்பித்தால்மட்டும் போது மானதா? கோயிலில் வழிபாடும் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமே ? ஆகவே சீர்பாத தேவி தன்னுடன் துணைக்குவந்த சோழ நாட்டு மக்களை வீரர்முனையிலே குடியிருத்தினள். ஆகவே மன்னவன் வாலசிங்கன் கப்பலில் வந்த அரசகுலத்தவர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு குலத்தவர்களையும் ஒன்ருகக் குடியிருத்தினல் ஒருகாலத்தில் குல வேறுபாடு தலைதூக்கி ஆலய வழிபாடு சிதைந்துவிடவுங் கூடுமெனக் "கருதினன். இவ்வாருன ஒர் நிலைமை பின்னர் ஏற்படாமலிருக்கும் பொருட்டு நான்கு குலத்தவர்களையும் ஓர் குலமென வகுத்துச் சீர்பாததேவியின் பெயரில் சீர்பாதகுலம் எனப் பெயர் சூட்டினன்.
சோழநாட்டு மக்களை சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்த மன்னவன் அனைவரையும் பெருமை பொருந்திய அரசகுலமாகக் கெளரவித்து அர விந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக் கப்பெற்ற அரசகுல விருதினையும் வழங்கினன். இந்த வரன் முறையினை பல செப்பேடுகள் சிறப் பாகக் கூறுகின்றன. இத்தகைய பெருமையும் கெளரவமும் கொண்ட சீர்பாத குலத்தவரின் வரலாற்றினை ஆராய்ந்து ஓர் தனி நூலாக எழுத வேண்டுமென்று பல ஊர்களைச் சேர்ந்த பல பெரியார்கள் காலத்துக்குக் காலம் எம்மை வேண் டிக்கொண்டே வந்தார்கள்.
சிர்பாதகுலத்துப் பெரியோர்களின் அன்புமயமான வேண்டுகோனினுக்கிணங்கச் சீர்பாதகுல ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டேன். அதன் பயணுகச் சீர்பாத குலம் என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையினைத் தயாரித்து
- xi l

Page 12
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினுக்கு அனுப்பிவைத் தேன். சீர்பாதகுல ஆராய்ச்சிக் கட்டுரையினை உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஏற்றுக்கொண்டதின் பயனுகச் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் முதல்நாளன்று படித்தேன். சீர்பாதகுல ஆராய்ச்சிக் கட்டுரை மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் பாராட்டுதல்களைப் பெற்றது. பல அறிஞர்கள் இவ்வரலாற்றினை ஆராய்ந்து தனி நூலாக வெளியிடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
உலகத் தமிழ் அறிஞர்களின் பெரு விருப்பினுக் கிணங்கவும், சீர்பாதகுலப் பெரியோர்களின் அன்புமய மான வேண்டுகோளினுக் கிணங்கவும் பிறந்ததுதான் *சிர்பாதகுல வரலாறு” என்னும் பெரும்நூல்.
சீர்பாதகுல வரலாறு நூலினைப் படித்து அன்புடன் மதிப்புரை வழங்கிய ஈழத்து முது பெரும் அறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியறிதலை உரிமை யுடையதாக்குகிறேன்.
ஈழத்தின் பல ஊர்களில் நிறைந்து நிலை பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான சீர்பாத குலத்தவர்களின் ஒப்பற்ற த னித் துவ மான வரலாற்றினைக் கூறும் சீர்பாதகுல வரலாற்று நூலினை உங்களது அன்புக் கைகளில் அகம்மலர அர்ப்பணிக்கின்றேன்.
அருள் செல்வநாயகம்.

பதிப் புரை
அமரர் அருள் செல்வநாயகம் அவர்கள் கிழக் கிழங்கையின் புகழ்மிக்க எழுத்தாளர். அவருடைய படைப்புக்கள் அநேகம். விபுலானந்த அடிகள் பற்றி அவர் தொடர்ச்சியாக எழுதிய நூல்கள் அன்னரின் அறிவையும் ஆற்றலையும் யாவரும் அறியச்செய்வன.
சீர் பாதகுலச் செம்மல் அருள் செல்வநாயகம் அவர்கள் தம் குலம் சிறக்கவென்றே பிறந்தவர். தான் பிறந்த குலத்தின் பெருமைகளையும் சிறப்புக் களையும் பற்றி அவர் இலங்கையிலும் தமிழ்நாட் டிலும் எழுதாத தமிழ் ஏடுகளே இல்லையெனலாம். குலப்பெருமை யாரைத்தான் விட்டது.
'சங்கைக் கீர் . . . கீர் . . . என்றறுக்கும் கீரனே என்பாவில் பிழை காண்பது?’ என்று இறை வன் கேட்க,
'சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனுர்க்கேது குலம்? நாம் சங்கை அரிந்துண்டு வாழ்வோம், நின்போல் இரந்துண்டு வாழ்வதில்லை' என்று நக்கீரர் விடைகூற நடந்தவையெல்லாம் இறை வனும்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
சீர்பாதகுலத்தின் பெருமையை உலகத் தமி ழறிஞரும் அறியும்வண்ணம் இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இக்குலவரலாறு பற்றிய தமது ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தமக்கும் தம் குலத்திற்கும் சொல்லொணுப் பெருமையினைத் தேடிக்கொண்டவர் அருள் செல்வநாயகம் அவர்கள். தமது கனவு தனி நூலாக வெளிவருமுன்னமே சிவபத மடைந்துவிட்டார்கள். அன்னரின் ஆத்மா சாந்தி யடையும்வண்ணம் அப்பணியினை நிறைவு செய்யும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தமைபற்றி நாம் பெரு மகிழ்ச்சியடைகின் ருேம்.
-xiii

Page 13
இன்நூலின் சிறப்புக்கு மெருகூட்டும் வகையில் முன்னுரையினை எழுதிய புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் நூல் காணுமுன்னமே இறைபத மெய்திவிட்டார்கள். கிழக்கிழங்கையின் மூதறிஞர் புலவர்மணி அவர்கள் இக்குலத்தின் சிறப்பையும் பெருமையையும்பற்றித் தான் கொண்டிருந்த பெரு மதிப்பு அன்னரின் அணிந்துரையினல் நன்கு வெளிப் பட்டு நிற்கின்றது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்ருேம்.
இந்நாட்டில் தமிழறிஞருள் பெருமைமிக்கவர் வித்துவான் F. X, C. நடராசா அவர்கள். இந்நூலுக்கு அணிந்துரை ஒன்றினை வழங்கியதோடு, நூலின் கைப் பிரதியினை ஒப்புநோக்கியும் பிழை திருத்தியும், அது சிறப்பாக வெளிவர ஊக்கமளித்து உதவியவர்கள். கற்ருேரைக் காமுறும் பண்பாளர், இந்நாட்டில் அநேக நூல்கள் வெளிவர வே ண் டு மெ ன் று ம் வேணவா மிக்கவர். அன்னர் இன்னும் நீண்டகாலம் வாழ்ந்து எம்நாட்டிற்கு நற்பணிகள் பலவாற்ற ஆண்டவன் அருள்வானக.
இந்நூலினைச் சிறந்த முறையில் அச்சிட்டு வழங் கியவர்கள் மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகத்தார். யாவரையும் அன்போடும் பண்போடும் வரவேற்று நற்பணி ஆற்றுபவர்கள். சுறுசுறுப்பும், அனுபவமும், பண்பும்மிக்க தொழிலாளர்களைக்கொண்ட அவ்வச்ச கத்தாருக்கும், அவர் ஊழியர்கட்கும் நன்றி கூறக் கடப்பாடுடையோம்.
இறுதியாக இந்நூல் வெளிவரவேண்டுமென்ற பேரவாவோடு எமக்கு இந்நூலின் கைப்பிரதியினைத் தந்துதவிய திருமதி அருள் செல்வநாயகம் அவர்கட் கும், இந்நூல் வெளிவருவதற்கு ஆக்கமளித்த திரு. சா. தில்லைநாதன் அவர்கட்கும் ஏனைய எமதுகுலப் பெருமக்கள் அனைவருக்கும், ஏனையோருக்கும் எம் நன்றி உரித்தாகுக.
கு. சோமசுந்தரம் மட்டக்களப்பு சா. தில்லையா, 12-2-82. (சீர்பாதகுல சமூக கலாசார ஒன்றியம்)
- xiv

அணிந்துரை
(iii)ITI F. X. C. ELITI
அமரர் அருள் செல்வநாயகம் என் நண்பர்; மாணுக்கர். நல்லாசிரியராகத் திகழ்ந்தவர். சிறந்த எழுத்தாளர்; பண்பாளர். சுவாமி விபுலானந்தரின் கட்டுரைகளை, பாக்களை நூல்வடிவிற் பதிப்பித்தவர்; அடிகளாரின் சரிதையை அழகுற எழுதி அச்சேற்றின (o.
சிறுகதைகள் எழுதினவர்; பெருங்கதைகளும் புனைந்தவர். பண்டைய விபரங்கள் தரும் ஏடுகளைத் துருவி ஆராய்ந்து அவற்றை நூலுருவாக்கினவர். நாட்டுப் பாடல்கள் சம்பந்தமான கட்டுரைகளும் வரைந்தவர்.
ஈழத்திருநாடு தந்த எழுத்தாளர். எனவே சங்கங்கள் சபைகள் பலவற்றில் உரையாற்றியுமுள் ளார். அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டிற் கலந்துகொண்டு "சீர்பாதகுல வரலாறு' என்ற பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசிக்கும் வாய்ப் புப் பெற்றவர்.
இவ்வண்ணம் எழுத்து ல கிற் பிரவேசித்த அன்பர் அருள் செல்வநாயகம் மட்டக்களப்பு குரு மண்வெளி என்ற இடத்ற் பிறந்தார். சமயத்தால் கிறித்தவர். தொழிலால் ஆசிரியர். சிந்தனையால் எழுத்தாளர்; ஆராய்ச்சியாளர். குல ஆசாரத்தால் சீர் பாதர். எனவே தாம் பிறந்துவளர்ந்த குல ஆசா ரத்தினையும் மேன்மையினையும் எடுத்து இயம்பும் நோக்கமுடையாராய் 'சீர் பாதகுல வரலாறு' என் னும் இந்நூலினை எழுதலானர். நிறை நூலாக எழுதி
-- XV ---

Page 14
முடிவுரை வணக்கம் கூறி அச்சேற்றும் வாய்ப்பினை நோக்கிக்கொண்டிருந்தனர். நிறைவேற்றும் வாய்ப்புப் பெருது அமரர் ஆயினர்.
இவ்வகை நூலின் சிறப்பினையும் பெருமையினை யும் அறிந்த உற்ருர், நண்பர், அறிஞர் இந்நூலினை அச்சேற்ற வழிவகை செய்து பதிப்பிக்கும் முயற்சி யில் ஈடுபடலாயினர். இவ்வகை முயற்சியை நாம் பாராட்டாமலிருக்கமுடியாது. மட்டக்களப்பு எல்லா வகையாலும் முன்னேறவேண்டும்; பல்வகை நூல்கள் வெளிவரவேண்டுமென்ற வேணவாமிக்கவர்களாகிய நாம் இவ்வகை நூல்களை வரவேற்போமாக.
நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு பணிக்கப் பெற்றேன். நண்பன், அன்பன் எழுதிய நூலுக்கு அணிந்துரை எழுதுவதில் பெரிதும் மகிழ்ச்சியடை கின்றேன்.
தமிழ்மக்கள் தங்களைக் குலங்கள், கோத்திரங் கள் என்ற சமூகப் பிரிவுகளில் பிரித்துநின்று சிந்தனை யாலும் செயலாலும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துபவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள். தனித்துவத்தையும் பொதுத்துவத்தை யும் பேணும் ஆற்றல் வாய்ந்தவர்கள் தமிழர்கள். குலம் கோத்திரமென்ற தனித்துவத்தை நிலைநாட்ட முடியாதவர்கள் சமூகங்களின் நலனுக்காக உழைக்க மாட்டார்கள்.
மட்டக்களப்பில் வாழும் மக்கள் தங்களைக் குடிகள், குலங்கள் என்ற முறையிற் பிரித்துவாழும் பழக்க வழக்கமுடையவர்கள். இந்நூல் சீர்பாதம் என்னும் குலத்தின் தோற்றம், பாரம்பரியம் என்பன வற்றை எடுத்தியம்புகின்றது. இக்குலம்பற்றிய கல் வெட்டுகள் பல உள. இக் கல்வெட் டு க ள் பூர்வீக மானவை. இவையாவும் சீர்பாதகுலத்தின் உண்மை வரலாற்றினை எடுத்துரைத்து அக்குலத்தின் மேன்மை
-xvi

யினை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. அதனல் சீர் பாத குலத் தி ன் மேன்மை, சிறப்பு, உண்மை, தனித்துவம் இவற்றை நாம் அறியக்கூடிய தாக இருக்கின்றது.
சீர்பாதகுலத்தினர் வீரமுனை, துறைநீலாவணை, குருமண்வெளி, மண்டூர், முதலாமிடங்களில் வாழ்கின்றனர். குரு மண் வெளியில் இக்குலமக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். கட்டுமட்டான தோற்ற முடையவர்கள். நிறமும் அழகும் வாய்ந்தவர்கள். இவ்வூர்ப் பெண்கள் அழகுவாய்க்கப்பெற்றவர்களென் றும், வனப்பால் மிகுந்த மங்கையர் இலங்கையிலே குருமண்வெளியில் வாழ்கின்ருர்களென்றும் இளைய தம்பி என்ற ஆசிரியரால் எழுதப்பட்டிருக்கிறது.
இவ்வகைப் பெருமை மிக்க மக்களைப்பற்றி அவர்களின் தோற்றம், கலாசாரம், பண்பா டு, வாழ்க்கைமுறை, இவற்றை விரிவாக எடுத்துரைத்து நூல்வடிவில் வடித்துத்தரும் இந்நூலை எழுதிய ஆசிரி யரை நாம் போற்றுதல்வேண்டும். சீரிய முறையில் வெளிவருகிறது. இவ்வண்ணம் நூல்கள் பெருகுவதை நாம் வரவேற்போமாக. மேலும் பல நூல்கள் தோன்ற வழிவகுப்போமாக.
-xvii

Page 15

1.
நாகநாட்டு அரசு
GIFTypi வாழ்வது சோழநாடு. பாண்டியர் வாழ்வது பாண்டியநாடு என்பதுபோல் ஈழர் வாழ் வது ஈழநாடு.
முன்னுளில் வாழ்ந்த சோழர், பாண்டியர் போன்ற ஓர் இனத்தவர்தான் ஈழர். ஈழத்தில் முதன் முதலாகக் குடியேறி வாழ்ந்தவர்கள் ஈழராகும். பண்பாட்டிலே சிறந்து, நாகரீகத்திலே மிகிந்து வாழ்ந்தவர்கள் ஈழர். − "
முன்னுளில் ஆசியாவின் மத்தியபீட பூமியில் வாழ்ந்த இவர்கள், கங்கைப் பள்ளத்தாக்கில் குடி யேறினர்கள். நாளடைவில் தென்னிந்தியாவிலும், ஈழத்திலும் பரந்தார்கள். இவர்களை ஆரியர் இயட் ஷர் என்ருர்கள். ஆரியருக்கு ழகர எழுத்தொலி இல்லாமையினுல் அதற் கியை ந் த விகாரமாக்கி இயட்ஷர் என வழங்கினர்கள். ஈழத்திலே குடியேறி வாழ்ந்த ஈழர், இயட்ஷரானர்கள். இயட்ஷர் இயக்க ரானர்கள். ஈழநாட்டின் ஆதிப் பழங்குடிகள் ஈழரான இயக்கராகும்.
ஈழத்தின் முதல் மன்னனக இயக்கர் குலத் தைச் சேர்ந்த வச்சிரவாணன் முடிபுனைந்தான். இவனைக் குபேரன் என்றும் அழைப்பர். புலத்திய முனிவருக்குப் பிறந்த விச்சிரவாணனின் மகனன வச்சிரவாணன் கடுந்தவமியற்றிப் புல வரங்களையும்,
سے H سس۔

Page 16
பெரும் நிதியினையும் பெற்ருன். அதன் பயனகத்தான் வச்சிரவாணனுக்கு ஈழத்து அரியணை கிடைத்தது.
வச்சிரவாணனுக்கு முன்னர் சுமாலி என்பவன் ஈழத்தைப் பெயரளவினுக்கு ஆட்சி செலுத்திக்கொண் டிருந்தான். வச்சிரவாணன் ஈழத்து அரசைக் கைப் பற்ற, சுமாலியும் அவனது உறவினரும் பாதாள உலகிற்குச் சென்ருர்கள்.
பாதாள உலகினை உறைவிடமாகக் கொண்ட சீமா லி. ஈழத்து அரியனை வச்சிரவாணனின் வழியிலே சென்றுகொண்டேயிருக்குமெனக் கவலைகொண்டான். எவ்வாருயினும் ஈழத்து அரியணைக்குத் தன் இனத்த வரையே உரிமையுடையதாக்கவேண்டுமென்று முயன் முன் அதன் பயனகத் தன் மகள் கைகசியை வச்சிர வாணனின் தந்தையான விச்சிரவாணனைக் காதலித் துக் கடிமணம் செய்யும்படி அனுப்பிவைத்தான்.
விச்சிரவாணன் கைகசியின் மோகன எழிலினைக் கண்டு மயங்கினன். காதல் கொண்டான். அதன் பயனுகக் கைகசியை இல்லாளாக்கிக்கொண்டான், விச்சிரவாணனும், கைகCயும் வாழ்க்கையில் இணைந்த தின் பயனுக இராவணன், கும்பகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை என்னும் நான்கு மக்களைப் பெற்றெடுத் தனர்.
இராவணன் வள ர் ந்து இளவலானபோது சுமாலி, "இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து ஈழத்து அரசினைப் பெறும்’ ’படி ஆலோசனை கூறினன் வச்சிரவாணனும் கடுந்தவமியற்றியே ஈழத்து அரி யணையைப் பெற்ருன் என்பதை அறிந்த இராவணன் கடுந்தவமியற்ற இமயமலைச் சாரலுக்குச் சென்ருன்.
இராவணன் மேற்கொண்ட கடுந்தவத்தின் பயணுக, எண்ணற்ற வரங்களையும், பெரும் நிதியை யும், நீங்காத வலிமையையும் பெற்ருன். தவத்தால் பெருமை பெற்றுவந்த இராவணனை அன்புடன் வர
ᏑᏕ

வேற்ற சுமாலி ஈழத்து அரியணையைப் பெறத் தூது அனுப்பும்படி கூறினன். அதன் பேருக இராவணன் ஈழத்து மன்னணுகிய வச்சிரவாணனிடம் ஈழத்து அரி யணையை ஒப்படைக்கும்படி பிரகதத்தனைத் தூதுவ ணுக அனுப்பினன்.
இராவணனது த வ வ லி மை யை அறிந்து கொண்ட வச்சிரவாணன், இராவணனிடம் ஈழத்து அரியணையை ஒப்புவித்துவிட்டுத் தவம் செய்ய இமய மலைச் சாரலுக்குச் சென்ருன்,
ஈழத்து மன்னணுக முடிபுனைந்துகொண்ட இரா வணன் தவவலிமை மட்டும் மிக்கவனல்ல! நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவன். இசை பாடு வதில் வல்லவன். வீணை மீட்டுவதில் நிகரற்றவன். கயிலைக்கே சென்று சிவனை வழிபட்டுவரும் ஆற்றல் கொண்டவன். இணையில்லா வீரனகத் துலங்கிய இராவணன், மண்டோதரியை மணந்து பட்டத்தரசி யாக்கிக்கொண்டான்.
பரந்துபட்ட ஈழத்தினைப் பல்லாண்டு காலமாக ஆணை செலுத்திவந்த இராவணன், ஊழ்வினையின் பயனுகச் சீதையைத் தூக்கிவந்தான். அதன் பயனுக ஏற்பட்ட பயங்கரமான போரில் இராமனது அம்பி ஞல் அடிபட்டு உயிர்துறந்தான்.
இராவணனது தம்பியான விபூசணன், இராம னுக்கு உதவியதனல் உயிர்தப்பினன். இராவணனது அரசமரபிலே எஞ்சிநின்ற விபூசணனுக்கு இராமன் ஈழத்து அரியணையை வழங்கினன். " . . . . . .
விபூசணனது ஆட்சி, இராவணனது ஆட்சி போல் ஈழமெங்கும் பரந்து நிற்கவில்லை. அதன் பய ஞக பல இயக்கச் சிற்றரசுகள் எழுந்தன. அவைகளுக் குள்ளே அடிக்கடி போர்களும் ஏற்பட்டன. இக்காலை யிலே வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலைநிமிர்ந்து எழுந்தது.
-سسسس

Page 17
நாகநாட்டில் நாகர் என்ற இனத்தார் வாழ்ந் தார்கள். நாகவழிபாட்டினை இவர்கள் கைக்கொண் .தனுல் நாகர் என்ற பெயரைப் பெற்ருர்கள்.
கிறிஸ்துவுக்குமுன் 1500 ஆண்டுகளுக்கு முன் னர் வட இந்தியாவிலே அரசு செலுத்திய பாண்ட வர்களுள் ஒருவனகிய அருச்சுனன் தீர்த்த யாத்திரை யின் பொருட்டு நாகநாட்டினுக்கு வந்தான். அருச் சுனன் வந்த காலையில், அரண்மனை நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருந்த நாகநாட்டு இளவரசி சித்தி ராங்கதையைக் கண் டான். கண்டதும் கருத்தை இழந்து காதல் கொண்டான். ஆணழகனன அருச் சுனனைக் கண்டு சித்திராங்கதையும் காதல் கொண் டாள். கிருஷ்ணரது உதவியினல் அருச்சுனன் சித்தி ராங்கதையைத் திருமணம் செய்தான்.
அருச்சுனனுடன் சித்திராங்கதை கூடிவாழ்ந்த தின் பயனக, சித்திரவாகனன் என்னும் வீரப் புதல் வனைப் பெற்றெடுத்தாள். தருமர் அஸ்வமதேயாகம் செய்த காலையில், திக்விஜயம் செய்த அருச்சுனனைப் போரிலே சித்திர வாகனன் வெற்றிகொண்டான். இச்சம்பவங்களை மகாபாரதம் என்னும் காவியத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
மகாபாரத காலத்தில் ஈழத்து நாகநாடு நாக ரீகத்தில் மேலோங்கி விளங்கியது. நாகநாட்டு மக் கள் கல்வியில் சிறந்து விளங்கினர்களென்பது தெளி வாகிறது. அருச்சுனனது மனதைக் கவரக்கூடிய அழ குள்ளவளாகச் சித்திராங்கதை துலங்கி இருக்கிரு ளென்பதையும், நாக நா ட் டு மக்கள் சீர்திருத்த முடையவர்களாக விளங்கியிருக்கிருர்களென்பதையும் மகாபாரதத்தினுல் நலம்படக் காணக்கூடியதாக இருக்கிறது.
தாகர்கள் ஈழத்தின் பழக்குடி மக்களல்ல. இவர்கள் ஈழத்தினுக்குக் குடியேறியவர்களாகும்.

கிறிஸ்துவிற்குமுன் நாளாயிரம் ஆண்டுகளுக்குமுன் னரே, மத்திய ஆசியாவினின்று இந்தியாவின் வட கிழக்குக் கணவாய் வழியாக வந்து இந்தியாவில் குடியேறினர்கள்.
இந்தியாவில் ஆரியருடைய குடியேற்றம் அதி கரிக்க, அதிகரிக்கத் தென்னிந்தியாவிலும் இலங்கை யிலும் குடியேறினர்கள்.
இராமாயண காலத்தில் மாதோட்டம் என் றழைக்கப்படும் மாந்தை நாக அரசதானியாக விளங் கியது. மாந்தை நகரத்திலே நாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும், தேவ சிற்பியாகிய விஸ்வகர்மாவின் வம்சத்தவரான கம்மியரும் அர சாண்டு வந்தார்கள்.
இராவணனது முதல் மனைவியான மண்டோ தரியும், குபேரனது மனைவி சித்திரரேகையும், சூர பத்மனது மனைவி பதுமகோமளையும் மாந்தையில் அரசுபுரிந்த நாகசூல தேவகம்மியரின் அரசகன்னிகை களாகும்.
குபேரனிடமிருந்த புட்பக விமானமும், இரா வணனிடமிருந்த வானவூர்த்தியும் மாந்தைநகர்க் கம்மியரால் செய்யப்பட்டவைகளாகும்.
நாகையில் ஆட்சிபுரிந்த நாக இனக் கம்மிய அரசர்கள் பெருஞ் செல்வமும், பெருமைமிக்க புகழு முடையவர்களாக இருந்ததஞற்ருன், இலங்கை வேந் தன் இராவணன் முதலியோர் பெண் கொண்டனர்.
மாந்தை ம ன் ன ர் க ள் காந்தக்கோட்டை அமைத்து ஆட்சிபுரிந்தார்கள். வாணிபத்தில் சிறந்து விளங்கினர்கள். வீரம் செறிந்த வாழ்க்கை நடத்தி னர்கள். தியாகத்தில் மேம்பட்டுத் துலங்கினர்கள்.
மாந்தையில் ஓவிய வல்லுனரான தாகர்கள் வாழ்ந்தார்கள். ஒவியரல்லாத மற்ற நாக குலத்த

Page 18
வர்கள் கதிரமலை, எருமை முல்லைத்தீவு, குதிரமலை முதலிய இடங்களிலிருந்து ஆட்சிபுரிந்தார்கள்.
அல்லி அரசாணியும், எழிலினியும், பிட்டங் கொற்றனும், குமணனும் குதிரைமலையிலிருந்து அர சாண்டார்கள். ஆந்தை, ஆத ன பூழிசி, நல்லியக் கோடன், வில்லியாதன் என்பவர்கள் மாந்தையிலும், எருமை முல்லைத்தீவிலுமிருந்து ஆட்சி செலுத்தினர்
6. :. . . .
இவர்களது சாதனைகளைப்பற்றி அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களிற் காணக்கூடியதாக இருக்கிறது. : . . .
சாக்கிய புத்ததேவர் தமது வாழ்நாளில் இலங் கைக்கு மூன்று தடவைகள் வந்துள்ளாரென்று மகா வம்சம் கூறுகிறது. இரண்டாம் தடவை மணிபல்ல வம் என்று சொல்லப்படும் நாகதீவத்திலிறங்கி மணி ஆசனத்தின் பொருட்டு எழுந்த சண்டையை நீக்கிப் பஞ்சசீலத்தைப் போதித்தார். இதனை மகாவம்சத் தின் முதல் அதிகாரமான புத்தர் வருகையில்,
46 - 'நாகர்களான மகோதரனும் குலோதரனும் மாமன் மருமகனவர். இவர்களுக்கிடையே போர் மூண்டது. , . . . . . . .
47 - சம்புத்தர் சைத்ரமாதம் கிருஷ்ண பட்சத்
தில் உபோசத தினத்தன்று அதிகாலையில்
புனிதமான பிட்சாபாத்திரத்தையும் ஆடை
யையும் எடுத்துக்கொண்டு நாகர்களிடம்
இரக்கம் கொண்டவராக நாகதுவீபத்தை அடைந்தார். . . .
48 - மகோதரநாகன் அப்பொழுது அரசனயிருந்
தான். அதீத சக்திகள் அவனிடமிருந்தன. நாகநாடு கடலில்:ஐஞ்நூறு யோசனைக்குப் பரந்து இருந்தது.'

49 -
59 --
51 -
கண்ணவர்த்தமான பருவத்திலிருந்த தாக மன்னனுக்கு மகோதரனுடைய தங்கையை மணம் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. அவ ளுடைய புத்திரன்தான் குலோதரன்.
அவனுடைய தாயாரின் தந்தை, அவன் :5ாய்க்கு அற்புதமான ரத்னச் சிம்மாசனம் ஒன்றை அளித்திருந்தார்.
கண்ணவர்த்தமான நாகமன்னன் இறந்த தும், மாமனுக்கும் மருமகனுக்கும் இந்தச் சண்டை மூழும்போலிருந்தது. மலைப்பகுதியி லிருந்த நாகர்களும் அற்புத சக்திகளாற் பலம் பெற்றிருந்தனர்.
என்று குறிப்பிடப்பட்டிருக்சிறது. மேலும் மகாவம்
சத்தில்,
58 -
59 -
-سس- 60
போர்க்களத்தினுக்கு மேலாக வானவெளி யில் சஞ்சரித்த வண்ணம், மன இருளை அகற் றும் மகாணுகிய குருநாதர் நாகர்கள்மீது அடர்ந்த இருள் கவியச்செய்தார்.
பீதியினல் துயரமுற்றவர்களைத் தேற்றி, மீண்டும் அங்கு ஒளி ஏற்படச்செய்தார். அருள்ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப் புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர்.
பின்னர் அச்சம் தீர்க்கும் அண்ணல் அவர் களுக்குச் சமாதான நெறியைப் போதித் தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ் வுடன் ஒன்றுபட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தைப் புத் தருக்கே அளித்தனர்.
என்று கூறப்பட்டிருக்கிறது.
கழனி என்றழைக்கப்படும் கல்யாணியைத் தலை நகராகக்கொண்டு ஆட்சி செலுத்திய நாக மன்னவ
re
مہم......سبت۔ 4 نوم... . دھ

Page 19
னகிய மணியக்கிகனின் வேண்டுகோட்படி புத்த பகவான் மூன்றுவது விஜயத்தின்போது கல்யாணிக் குச் சென்ருர். இதனை மகாவம்சத்தில்,
74 - பயத்தை வென்றவர் அறிஞர்க்கறிஞர் உத் தரீயத்தைப் போர்த்துக்கொண்டு பிட்சா பாத்திரத்தைக் கையிலேந்திக்கொண்டு மணி யக்கிகனுடைய கல்யாணிக்குச் சென்ருர், என்று கூறப்பட்டிருக்கிறது.
நாகநாட்டு அரசர்களைப்பற்றிய வரலாறுகளை மணிமேகலையிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
இராமாயணப் போரினல் இயக்கரின் வலிமை குன்றியது. நாகர்களின் வலிமை மேலோங்கியது. இக்காலையிற்ருன் விசயன் இலங்கைக்கு வந்தான்.
ஈழத்தில் வாழ்ந்த இயக்கரும் நாகரும் சைவ சமயத்தைத் தழுவினர்கள். விசயனும் சைவசம யத்தைச் சேர்ந்தவனகும். ஆதலினற்ருன் குவேனி யின் துணையினல் இலங்கைக்கு மன்னவனகிய விசயன் சைவ ஆலய திருப்பணிகள் செய்தான். அந்த வகை யிலேயே விசயன், கீரிமலையிலுள்ள நகுலேஸ்வரத்தி&ன யும், தெய்வந்துறையில் சந்திரசேகரன் ஆலயத்தினை யும், திரிகோணமலையிலுள்ள கோணேசுவரன் ஆல யத்தினையும், கதிர்காமத்திலுள்ள முருகன் ஆலயத் தினையும் புதுக்கிக் கட்டுவித்தான். அத்துடன் திருக் கேசுவரத்தின் திருப்பணியினையும் செய்வித்தான்.
விசயனுக்குப்பின்னர் அரியணை ஏறிய் பாண்டு வாசுதேவனுக்கு மகதநாட்டிலிருந்து கொண்டுவந்த பெண்ணுடன் வந்த அரச குமாரர்களில் ஒருவனகிய அனுரதன் என்பவன் அனுரதபுரத்தைக் கட்டி அரசு செலுத்தினன். அதுமுதலாகப் பிற்காலத்து அரசர்க ளெல்லாம் அனுரதபுரத்தையே த லை ந க ரா கக் கொண்டு ஆட்சி செலுத்தினர்கள்.
--8 ــــــــے

அனுரதபுரத்து மன்னவர்கள், நாக இன மன்ன வர்களை நண்பர்களாகக் கொண்டதுடன், திருமண உறவினையும் வைத்துக்கொண்டார்கள்.
தேவநண்பதீசன் அனு ர த புரத் தை ஆட்சி செலுத் தி ய காலையில், சங்கமித்திரை என்பவள் வெள்ளரசங் கிளையுடன் வந்து நாகநாட்டிலுள்ள சம் புத்துறை எனப்படும் சம்புக் கோவளத்தில் இறங் கினள். சங்கமித்திரையை வரவேற்பதற்காக தேவ நண்பதீசன் தன் பரிபாரங்களுடன் வந்து சம்புக் கோவளத்தில் காத்திருந்தான்.
சங்கமித்திரை வந் திறங்கியதும், அவளைக் கோலாகலமாக வரவேற்றுவந்து கதிரமலையிற் தங் கினன். பின்னர் கதிரமலையிலிருந்து பூநகரி மார்க்க மாகச் சென்று அனுரதபுரத்தையடைந்தான்.
ஈழத்தினுக்குக் கண்ணகி வழிபாட்டினை க் கொணர்ந்த கயவாகு மன்னன், முதலில் நாகநாட்டி லுள்ள அங்கணக்கடவையில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்து விழாக் கொண்டாடினன்.
கயவாகு மரணத் திரையால் மறைக்கப்பட அவனது மனைவியின் தந்தையான நாகர்குல அரசன் மகலக்கநாகன் அனுரதபுரத்து அரியணையில் அமர்ந் தான். மகலக்கநாகன் ஏழு வருடங்க ள் ஆட்சி செலுத்தினன். இவனுக்குப்பின்னர் கதிரமலை அர சர்கள், ஈழத்து அரசர்களுக்குப் பணிந்தே ஆட்சி செலுத்தினர்கள். y
மகலக்கநாகனுக்கு முன்பு வளைவணன் என் ம்ை மன்னன் கதிரமலையிலிருந்து ஆட்சி செலுத்தி ஞறன். வளைவணனின் மகளான பீலிவளை, புன்னமரச் சோலையிலே சோழ மன்னனன நெடுமுடிக்கிள்ளியைக் கண்டு காதலித்தாள். அவனுடன் ஓர் திங்கள் வாழ்ந்த தன் பயணுக வீரம்மிக்க ஓர் புதல்வனைப் பெற்றெடுத் ዶb {I 6ዥ. , . . . .
سے 9 س۔

Page 20
"வென் வேற் கிள்ளிக்கு நாகநாடாள்வோன்
தன்மகள் பீலிவளை தான்பயந்த புனற்றிளங்குழலி" என்றும்,
'நாகநாடு நடுக்கின்ருள்பவள்
வாகைவேலோன் வளைவணன் தேவி வாசமயிலை வயிற்றுட்டோன்றிய பீலிவ8ள ??
என்றும் கூறப்பட்டிருக்கிறது.
பீலிவளை தான் பெற்றெடுத்த புதல்வனைச் சோழ மன்னனிடம் ஒப்புவிக்கும்படி கம்பளச்செட்டி யிடம் கொடுத்தாள். கம்பளச்செட்டி சோழனின் செல்வனைக் கலத்திற் கொண்டுசென்றபோது, புயற் காற்றினல் கலம் சிதைந்தது. பீலிவளையின் செல்வ னைக் கடல் கொண்டுவிட்டதென்று சொல்லக்கேட்ட மன்னவன் நெடுமுடிக்கிள்ளி கலங்கினன். இதனை,
"கெடுகலமாக்கள் புதல்வனைக் கெடுத்து
வடிவேற்கிள்ளி மன்னனுக்குரைப்ப மன்னவன் மகனுக்குற்றது பொருஅ னன் மணியிழந்த நாகம்போன்று கானலுங் கடலுங் கரையுந் தேர்வுபூழி' என்று கூறப்படுகிறது.
பின்னர் தொண்டைக் கொடியாற் சுற்றப் பட்டுக் க ரை யில் ஒதுக்கப்பெற்ற மகனைக்கண்டு மகிழ்வுற்ற நெடுமுடிக்கிள்ளி அவனுக்கு இளந்திரை யன் எனப் பெயர் சூட்டினன். இவன் தொண்டை மண்டலத்தை ஆட்சி செலுத்தியதனல் தொண்டை மான் இளந்திரையன் என வழங்கப்பெற்றன்.
தொண்டைமான் இளந்திரையனுக்குப் பின் னர் பல்லவர் ஆட்சி தமிழ்நாட்டில் தலையெடுத்தது. ஆந்திர, கலிங்க மன்னவர்களை வெற்றிகொண்ட பல்லவர், சோழ பாண்டியரையும் வெற்றிகொண்
--..... ,10 - مس۔

டார்கள். ஈழத்து அரசையும், நாகநாட்டு அரசையும் கைப்பற்றினர்கள். எ மு நூறு ஆண்டுகள் பல்லவ ஆட்சி மகோன்னத நிலையிலிருந்தது.
மகலக்கநாகனின் ம க ஞகிய கனிட்டதீசன் அனுரதபுரத்தில் ஆட்சிசெய்த காலத்தில், கதிரமலையி லிருந்த பெரிய பள்ளியின் கட்டிடத்தைத் திருத்தி அமைத்தான்.
வொகாரத்தீசன் காலத்தில், அவன் மந்திரி யாகிய முகநாதன் என்பவன், சுளிபுரத்தில் திஸ்ஸ விகாரையைச் சுற்றி ஓர் ம தி ல் கட்டுவித்தான். வொகாரதீசன் கண்ணகி கோட்டத்தினுக்கு தினசரிச் செலவுக்கு வேண்டிய பொருட்கள் வழங்கினன்.
வொகாரத்தீசனின் தம்பியாகிய அபயநாகன் என்பவன், தனது தமையன் இல்லாளுடன் தகாத உறவு கொண்டது வெளிப்பட்டதனல் பயந்தான். ஆகவே நாகநாட்டினுக்குச் சென்று கப்பலேறித் தமிழகத்தினுக்குச் சென்றன். தமிழக மன்னனின் படை உதவி பெற்று, தமையனைப் போரிலே புறங் கண்டு எட்டு ஆண்டுகள் ஆணை செலுத்தினன்.
அனுரதபுரத்து அரியணையில் நாக அரசனுகிய வி ச யன் அமர்ந்தான். நாகநாட்டிலிருந்து வந்த இலம்பகன்னர்கள். அவனைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினர்கள். அதன் பெறுபேருக, சங்கத்தீசன், சங்கபோதி, கோதாபயன் என்னும் மூ வரும் ஒரு வருக்குப்பின் ஒருவராக ஆட்சி செலுத்தினர்கள்.
சங்கத்தீசன் என்பவன் ஜம்புப்பழம் உண்பதற் காகத் தனது மனைவி மக்களுடன் நாகநாட்டிற்குச் செல்வது வழக்கமாகும். அவ்வாறு சென்ற காலையில் நஞ்சூட்டிய ஜம்புப்பழத்தைத் தின்று உயிர் துறந்
sقتبه... 1 lسسسسه .

Page 21
சங்கத்தீசன் இறக்க சங்கபோதி அரசனுகினன். நர்கநாட்டிலிருந்து கோதாபயன் என்பவன் பெரும் சேனையுடன் வந்து சங்கபோதியைத் துரத்திவிட்டு அரியணையில் அமர்ந்தான்.
சங்கபோதி காட்டிலே வா ழ் ந் து வந் த து, கோதாபயனுக்குக் கல க் க த் தை க் கொடுத்தது. ஆகவே சங்கபோதியின் தலையைக் கொண்டுவருபவர் களுக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித் அான். வறியவனெருவன் சங்கபோதியைக் கண்டு நிலைமையைச் சொல்ல, சங்கபோதி தன் தலையையே ஈந்து கொடையில் மிக்கோளுகினன்.
இரண்டாம் அக்கிரபோதி மன்னவன் கதிரமலை யில் ஓர் பெளத்தப்பள்ளி கட்டுவித்தான். சிலமேக வண்ணன் என்னும் கதிரமலை அரசனகிய சிறிநாகன் Hல்லவ வேந்தனின் படை உதவி பெற்றுவந்து அனு ரதபுர மன்னவனை எதிர்த்தான். இப்போரில் அனு ரதபுர மன்னன் உயிர்துறந்தான். அவனது படை வீரர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுப் பெளத்தப் பள்ளிக்குச் சிறையாக அனுப்பப்பட்டனர்.
கி. மு. ஆரும் நூற்ருண்டு தொடக்கம் கி. பி. மூன்ரும் நூற்றண்டு வரை நாகப்பேரரசு தனிச் சிறப்புடன் துலங்கியது. நாகநாட்டு அரசர்கள் சில காலத்தில் ஈழத்து அரசினைக் கைப்பற்றி ஆணை செலுத்தினர்கள். சில காலத் தி ல் ஈழத்து மன்னர் களுடன் நட்புரிமை பாராட்டித் திருமண உறவும் கொண்டார்கள். நாக இனப் பெரும் புலவரான முடிநாகராயர் தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் வளர்த்தார். .
கி. பி. நாலாம் நூற்றண்டு தொடக்கம், கி. பி. எட்டாம் நூற்றண்டு வரையும் நாகநாட்டு மன்ன வர்கள் சிலவேளைகளில் தனி மன்னவர்களாகவும் சிலவேளைகளில் ஈழத்து மன்னர்களது ஆணையை ஒப்புக்கொண்டும் செங்கோல் செலுத்தினர்கள்.
-i e

முன்னர் நாகராயிருந்து, பின்னர் சிங்கள அரசர்களான மிசிரகுலத்தைச் சேர்ந்தவர்கள், புத்த சமயத்தைத் தழுவினர்களென்பதைப் பெளத் த ப் பள்ளிகளின் சான்றுகளால் அறியக்கூடியதாக இருக் கிறது. இவர்கள் அரியணையில் அமர்ந்து சாதித்த சாதனைகளையோ, அவர்களின் பெயர்களையோ அறிய முடியாதிருக்கிறது. ஆனல் இவர்கள் காலத்துக்குக் காலம் பல்லவர்களது படையெடுப்பினுக்குப் பலி யாகியும், திறை செலுத்தியுமிருக்கிருர்கள்.
கி. பி. எட்டாம் நூற்ருண்டிலே பல்லவர்களது வலிமை குன்றியது. அதேபோல் அனுரதபுரத்து மன்னர்களின் வலிமையும் குன்றியது."ஆதலினல் அவர் களது செல்வாக்கு நாகநாட்டில் மங்கி மறைந்தது.
இக்காலையில் கதிரமலை அரியணையில் அமர்ந்த அரசர்களது சந்ததியினரோ, சிற்றரசர்களோ, வழித் தோன்றல்களோ இல்லாது நாகநாட்டு அரசு தத் தளித்தது. இதனைத் தனக்கு வாய்ப்பாகக்கொண் டான் உக்கிரசிங்கன்.
விசயனுடன் வந்த கலிங்கர் குடியேறிய அண் னியபுரத் தலைவனுன உக்கிரசிங்கன் பெரும் படை யுடன் வந்து நாகநாட்டினைக் கைப்பற்றினன். கி. பி. 795ஆம் ஆண்டு நாகநாட்டின் தலைநகராகக் கதிர மலையையே கொண்டு செங்கோல் செலுத்தலானன்.
بسی۔ 13 بسی۔

Page 22
கதிரமலைக் காவலன்
கதிரமலை அரசிருக்கையில் வீற்றிருந்த நாக நாட்டு மன்னனன உக்கிரசிங்கனுக்கு, கீரிமலையில் குடிகொண்டிருக்கும் நகுலேசுவரப் மெருமானிடம் தனியோர் ஈடுபாடாகும். திங்கள்தோறும் கதிரமலையி லிருந்துவந்து, கீரிமலைப் புனித நீரூற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுச் செல்வது வழக்கமாகும்.
கீரிமலை நீரூற்று அற் புத மா ன மகாசக்தி கொண்டதாக விளங்கியது. ஈழத்திலும், தமிழகத் திலுமுள்ள மக்களைக் கவர்ந்திழுக்கத்தக்கதான புரா தனப் புதுமைகளும், அற்புதங்களும் கொண்டதாக விளங்கியது.
கீரிமலை நீரூற்றின் பெருமைகள் மிகவும் மகத் தானவைகளாகும். கிரேதாயுகத்தில் பரமேசுவரன் பார்வதி சகிதமாய் இமயமலைச் சாரலில் எழுந்தருளி னர். அப்பொழுது பார்வதிதேவி நீராடுவதற்காகக் கண்டகி தீர்த்தத்தை உண்டாக்கினர்.
கண்டகி தீர்த்தத்தில் தேவர்களும், இருடி களும் தீர்த்தமாடிப் புண்ணியவான்களாகப் போன தனல் இந்த இடத்தினுக்குப் புண்ணியபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.
நகுல முனிவர் கண்டகி தீர்த்தத்தில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுவந்ததனல், கீரிமுகம் மாறி மனித சுபாவம் கிடைத்தது. அதுமுதலாக இந்த மலை,

நகுலமலை என்று வழங்கப்படலாயிற்று. தகுலமலைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை நகுலேசு வரன் என்றும், இறைவியை நகுலேசுவரி என்றும் அழைத்து அடியவர்கள் வழிபடுவார்கள்.
இராவணனது வீணையைத் தன்னை த் தவிர மற்றவரெவரும் தொடக்கூடாதென்று கட்டளை பிறப் பித்திருந்தான். இராவணனது வீணையை மீட்டிப் பார்க்க சித்திராங்கதன் என்னும் கந்தருவன் ஆசை கொண்டான். அவனது ஆசை இராவணன் உயி ருடன் இருக்கும்வரை நிறைவேறவேயில்லை. ஆனல் இராமன், இராவணனது இருபது கைகளையும் வெட்டி வீழ்த்தியபோது, சித்திராங்கதன் வெட்டுண்ட கையி லிருந்த வீணையை எடுத்துக்கொண்டுவந்து, சீரிமலையி லிறங்கி மீட்டினன். அதனல் இந்த இடம் காந்தருவ நகர் என்றும், வீணுகராக்கியம் என்றும் வழங்க லாயிற்று.
நளமகாராசன் கீரிமலை நீரூற்றில் நீராடித் தன்னைத் தொடர்ந்துள்ள கலி நீங்கவேண்டுமென்று நகுலேசுவரனைப் பிராத்தித்தான். நகுலேசுவரன் நளனது குறையினைத் தனது கழுத்திலிருந்த நாகத் தினுக்கும், கையிலிருத்தி தீயினுக்கும் நீக்கும்படி பணித்தார். அதன்பயணுக நளனைப் பீடித்திருந்த கலி நீங்கியது.
அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் பொருட்டு, கீரிமலைக்கு வந்து கண்டகி தீர்த்தத்தில் நீராடி நகு லேசுவரன் அருள்பெற்று மீண்டான்.
இவ்வாருண பெருமைகள் கொண்ட கீரிமலைப் புனித நீரூற்றில் நீராடித் தனது குன்ம நோயினை நீக்கும்பொருட்டு சோழ தேசாதிபதியின் மகளான மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்தாள். குமாரத்தி பள்ளம் என்னுமிடத்தில் மாருதப்பிரவல்லி கூடார மடித்துத் தங்கியிருந்து தினமும் புனித நீரூற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபட்டுக்கொண்டு வந்தாள்.
YN للہ ...... , , ۔ ーl5ー -

Page 23
கதிரமலைக் காவலனன உக்கிரசிங்கனும் புனித நீரூற்றில் நீராடி நகுலேசுவரனை வழிபடும்பொருட்டு வளவர்கோன் பள்ளத்தில் கூடாரமடித்துத் தங்கி இருப்பது வழக்கமாகும். ஒர்நாள் உக்கிரசிங்கன் நகுலேசுவரன் சன்னிதியில் மாருதப்பிரவல்லியைக் கண்டு காதல்கொண்டான். அதேபோல் மாருதப்பிர வல்லியும் உக்கிரசிங்க மன்னவன் மீது காதல்கொண் டாள். இறைவனது சன்னிதியிலே தோன்றிய அவர் களது புனிதமான காதற்கதை இதுதான். ரஞ்சக மான காதற்கதை இதோ !
கதிரமலைக் காவலன்" - I -
“வேதனை இல்லாது வாழ வழிகாட்டுங்கள் சுவாமி’ என்று பணிந்துநின்றள் மாருதப்பிரவல்லி.
அவளது வேதனைக்குரல் இட்டேறவே நிஷ்டை யிலே அமர்ந்திருந்த சாந்த லிங்கச் சுவாமிகள் கண் களைத் திறந்தார்.
கன்னிப்பருவத்தின் எல்லைக்கோட்டிலே சுடர் விட்டுத் துலங்கிக்கொண்டிருக்க வேண்டியவளான மாருதப்பிரவல்லி கண்ணிர் சொரிய நின்றுகொண் டிருந்தாள்.
பருவத்தின் பண்புகள் அழகு செய்யவேண்டிய பொன்னன மேனி மாசுற்றிருந்தது. எத்தனையோ ஆடவர்களைக் காந்தம்போற் கவர்ந்திழுக்கவேண்டிய மென்னுடல் சோர்ந்துபோயிருந்தது.
* தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் மாத இதழான
அமுத சுரபியில் வெளிவந்த எமது சிறுகதை,
ー16ー

பம்பரம்போற் சுழலும் கயல் விழிகள் கண் ணிரைச் சொரிந்துகொண்டிருந்தன. பார்ப்போரைக் கவரும் மென்விழிகள் கண்ணிர் சொரியத்தான் பிறந் தன என்று சொல்லத்தக்கதாகவே இருந்தன. கண் ணிர் சிந்திச் சிந்திக் கருவிழிகள் கருமையை இழந்து விட்டன. இன்ரு! நேற்ரு? எத்தனையோ ஆண்டுக களாக் கண்ணிர் சொரிந்துகொண்டிருக்கின்றன அந்த விழிகள்.
சதா புன்முறுவல் த வழ வேண் டிய மென் அதரம் புன்னகையைக் கண்டு வெகுகாலமாயிற்று என்பதுபோல் ஏக்கத்தின் சின்னமாகத் துலங்கியது.
மாம்பழக் கனிபோன்ற கன்னக் கருப்புகள் ஒட்டி உலர்ந்து கறுத்திருந்தன. செம்மை படர வேண்டுய கன்னக் கதுப்புகளில் வேதனையின் சின்ன மான கருமை படர்ந்திருந்தது.
எடுப்பான மலர்முகம் விகாரமாக இருந்தது. அந்த முகத்திலே மகிழ்வு என்பதேயில்லை. சதா வேதனையே குடிகொண்டிருந்தது. வேதனையை இனித் தாங்க இந்த உடலுக்குச் சக்தியில்லை என்பதுபோல் துவண்டுகொண்டிருந்தாள் அவள்.
யெளவனத்தின் எல்லைக்கோட்டிலே, பூத்து மலரும் புதுப் பருவத்திலே, பெண் மை நிறையப் பெற்ற பூரணத் தோற்றத்திலே இருக்கவேண்டியவள், தீராத நோயினைச் சுமந்துகொண்டிருந்தாள். ஆமாம். வைத்தியரின் எந்த மூலிகைக்கும் கட்டுப்படாத கொடிய குன்மநோய் அவளைப் பற்றியிருந்தது.
சோழ தேசாதிபதிக்கு மகளாகப் பிறந்தாள் அவள். பஞ்சணை மெத்தையிலே படுத்து ந9ங்கி ப் பொழுதைப் போக்கவேண்டியவன், படுக்கவேமுடி யாது பரதவித்தாள்.
தந்தை மனம் வருந்தினர். செய்யாத வைத் தியம் இல்லை! நேராத கோயிலில்லை! ஆனல் நோய் தான் குணமாகவில்லை.
من۔ 17 ہے

Page 24
பெரியவர்கள் “இது ஊழ்வினையால் ஏற்பட்டது. புண்ணிய நீரூற்றுக்களில் நீராடி இறைவனை வழி பட்டுவந்தாற்ருன் குணமாகும்' என்று கூறினர்கள்.
மூலிகைகளுக்கு நோய் கட்டுப்படாதவிடத்து இறைவன் தானே கருணை செய்யவேண்டும்? ஆகவே மாருதப்பிரவல்லி சோழநாடெங்கும் சென்ருள். திருக் குளங்களிலே மூழ்கி எழுந்தாள். இறைவனை மனமார வழிபட்டாள். நோய் அணுவளவேனும் குறையவே யில்லை. அதஞல் மனம் சோர்ந்த மாருதப்பிரவல்லி எங்கு இறைவன் குடிகொண்டிருக்கிருர்? எங்கு புண் ணிய நீரூற்றுக்கள் இருக்கின்றனவென்று தேடித் தேடிச் சென்ருள். அவ்வாறு செல்லுங்காலையிற்ருன் சாந்தலிங்கச் சுவாமிகளைக்கண்டு பணிந்தாள்.
கண்களால் அவளை எடைபோட்ட சுவாமிகள் அன்புதும்ப 'மகளே' என்றழைத்தார்.
‘சுவாமி! வேதனையை இனி என்னுல் தாங்க முடியாது. தாங்குவதற்கு என்னுடலில் சக்தியுமில்லை. வேதனையில்லாது வாழ்வதற்கு வழிகாட்டுங்கள்' என்றவாறு விழுந்து வணங்கினுள்.
* எழுந்திரு மகளே! துன் பத் தை க் கண்டு கலங்குவது அழகா குமா ? இன்பமும் துன்பமும் கொண்டதுதானே வாழ்க்கை'
'இன்பத்தை என் வாழ்க்கையில் இதுவரை கண்டறியேனே சுவாமி. சதா வேதனையுடன்தான் போராடுகிறேன்'
**கு ன் ம நோய் பிறவியின் பயணுக எழுவது குழந்தாய். முற்பிறப்பில் நீ செய்த பாவத்துக்காக அனுபவிக்கிருய். இனி விமோசனம் பிறந்துவிடும்'
'சுவாமி! எனக்கு விமோசனம் கிடைக்குமா?*
* "நிச்சயமாகக் கிடைக்கும் மகளே! இரவும் பகலும் மாறிமாறித்தானே வருகிறது. உன்னைப் பிடித்
سی۔ 18 سس۔

துள்ள கிரகணம் கழியப்போகிறது. நான் சொல்வது போற் செய்வாயானல் இந்தக் குன்மநோய் உன்னை விட்டு மாறிவிடும்'
‘என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள் சுவாமி”*
'மகளே! சோழநாட்டு நீரூற்றுக்கள் உன் பிறவிப்பயனன குன்மநோயினைத் தீர்க்காது. ஈழத்தின் வடபாலிலே கீரிமலையென்ற புனித மான நீரூற் ருென்று இருக்கிறது. அந்த நீரூற்றில் நீராடி ஓர் திங்கள்பொழுது நகுலேசுவரனைப் பணிந்துகொண்டு வருவாயானுல் இந்தக் குன்மநோய் நீங்கிவிடும்"
'தங்கள் வாக்குப்படி இப்பொழுதே ஈழநாட்டி னுக்குப் புறப்படுகிறேன் சுவாமி”*
‘நல்லது மகளே ! கீரிமலைப் புனித நீரூற்று உன்னைப் புனிதமான பேரழகியாக மாற்றித்தரும். கீரிமலை நகுலேசுவரப் பெருமான் உன் மனக் கவலை யைப் போக்கி, கவலையே இல்லாத வாழ்வை அமைத் துத்தருவார். சென்றுவா மகளே' என்ருர் சாந்த லிங்கச் சுவாமிகள்.
சுவாமிகளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டாள் மாருதப்பிரவல்லி!
- 2 -
கீரிமலையிலுள்ள நகுலேசுவரப் பெருமானின் ஆலயமணி ஒலித்தது. இறைவனை வழிபடுவதற்காகக் கோயிலினுள்ளே சென்ருன் கதிரமலைக் காவலன் உக்கிரசிங்கன்.
அர்ச்சகர் இறைவனுக்கான நைவேர்த்திய கருமங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். இறைவ னது சன்னிதியிலே நின்று இறைவனை மனதார வழி படிவந்த உக்கிரசிங்கன், வந்த நோக்கத்தை மறந்து
-سن-19--

Page 25
செயலற்று நின்றன். ஆமாம். பக்கத்தே அழகே ஒன்றுதிரண்டதான மங்கை நல்லாள் கண்களை மூடிய வாறு இறைவனை வழிபட்டுக்கொண்டு நின்ருள்.
கைகளால் இறைவனைத் தொழுதுகொண்டு, கண்களால் இந்த உலகத்தைப் பாராது தன் சிந் தையை நகுலேசுவரனிடம் செலுத்தி நின்ற மங்கை நல்லாளின் மோகன எழில் மன்னவனைக் கவர்ந்து இழுத்தது.
மோன நிலையிற்கூட என்ன அழகாக இருக் கிருள். இத்தகைய மங்கை நல்லாளை இதுவரை இங்கு
காண வில்லை யே என்று வியந்தான் கதிரமலைக் காவலன்,
கதிரமலைக் காவலன், நகுலேசுவரனிடம் அளவு கடந்த பக்திகொண்டவன். திங்களுக்கோர்தடவை கதிரமலையிலிருந்துவந்து நகுலேசுவரனை வழிபட்டுச் செல்லத் தவறமாட்டான். வழக்கப்படி நகுலேசுவரனை வழிபட வந்தபோதுதான் சன்னிதியில், இறைவனைத் தொழுதுகொண்டிருக்கும் எழிற்பாவையைக் கண் டான்.
வாலிபனன உக்கிரசிங்கனுக்கு அவள் பெரும் விருந்தாகத் தோன்றினள். கண்களைத் திறக்கமாட் டாளா? தன்னைப் பார்க்கமாட்டாளா? என்று துடி துடித்துக்கொண்டு நின்முன் கதிரமலைக் காவலன்.
சாந்தம் தவழும் செந்தாமரைபோன்ற அவ ளது மலர்முகம் மன்னவனது நெஞ்சகத்தே அளிக்க முடியாதவாறு பதிந்து விட்டது. பூங்கொடிபோற் துவண்ட இடையும், ப்ருவப் போதையை ஊட்டும் மார்பகமும் கதிரமலைக் காவலனுக்கு ஆசையை வளர்த்துக்கொண்டேயிருந்தது.
தான் ஓர் கட்டிளங்காளை. தனக்கு ஒர் இல்லாள் வேண்டுமென்ற சிந்தனை இல்லாது ஆணை செலுத்திக் கொண்டிருந்த உக்கிரசிங்கனது வாழ்விலே அவள்

புகுந்துகொண்டுவிட்டாள். இல்லை! மன்னவனுகவே உள்ளத்தே புகுத்திக்கொண்டுவிட்டான். இறைவனது சன்னிதியிலே, அவளை உள்ளத்தே இருத்தி அழகு பார்த்துக்கொண்டு நின்றன் கதிரமலைக் காவலன்.
சை எப்பொழுது முடியும். அர்ச்சகர் எப் பொழுது பிரசாதம் வழங்குவார் என்ற ஆவல் மன் னவனுக்கு. பூசை முடிந்தால் அவள் கண்களைத் திறப் பாள். அழகுசொட்டும் அழகுக் கண்களைப் பார்த்துப் பரவசமடையலாமென்ற எண்ணம் கதிரமலைக் காவல னுக்கு. அதற்கேற்ப அர்ச்சகர் தூபதீபம் காட்டி நைவேர்த்திய கருமங்களை முடித்தார். ஆலயமணியும் ஒலிக்கத்தொடங்கியது.
சிந்தையை இறைவனிடம் செலுத்திய அவள் மணி ஒசையினுல் கண்களைத் திறந்தாள். எதிரே தன்னையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண் டிருக்கும் மன்னவனைப் பார்த்தாள். எடுப்பான அவ னது தோற்றம் ஒருகணம் அவளை அலைக்கழித்தது. ஏறிட்டு நோக்கினுள். மன்னவனும் நோக்கினன். அதனல், கண்களைத் தாழ்த்திக்கொண்டாள் அவள்.
அர்ச்சகர் பிரசாதம் என்ருர், மன்னவன் கை களை நீட்டினன். அவளும் கைகளை நீட்டினுள். கை கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டன. அந்த இன்ப உணர்விலே அவள் மன்னவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள்.
அவளது புன்முறுவலிலே மன்னவன் சொக்கி நின்றன். பிரசாதம் பெற்ற அவள் திரும்பிப் பாரா மலே நடந்தாள். அவள் செல்லும் அழகை ரசித்த வாறு கதிரமலைக் காவலன் சன்னிதியிலே நின்று கொண்டிருந்தான்.
தனிமையாக அவள் சென்றிருப்பாளெனில் தொடர்ந்து சென்றிருப்பான் மன்னவன். ஆனல் துணையாகப் பல தோழிப்பெண்கள் செல்லும்போது அவனுல் என்னதான் செய்யமுடியும்.
سه سیس

Page 26
உள்ளத்தைக் காந்தம்போற் கவர்ந்து இழுத் துச்செல்லும் பேரழகி சென்று மறைந்தபோதுதான் மன்னவன் நினைவுலகினுக்கு வந்தான்.
எதிர்பாராது இறைவனது சன் னி தி யி லே தோன்றித் தன் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட பேரழகி யாராக இரு க் க லா மென் ற எண்ணம் மேலோங்கவும் கூடாரத்தை நோக்கி விரைந்தான்.
-3-
*அமைச்சரே! விசாரித்துவந்தீரா?* என்று ஆவல் பொங்கக் கேட்டான் கதிரமலைக் காவலன்
"ஆமாம் மன்னவா? என்ருர் அமைச்சர்.
"யாரவள்? எங்கிருக்கிருள் ? எப்படி இங்கு வந்தாள்?’ என்ற வாறு ஒன்றுக்குமேல் ஒன்ருகக் கேள்விகளைக் கேட்டான்.
“மன்னவா! சோழ தேசாதிபதியின் மகள் அவள். நீராத குன்மநோயினுல் பீடிக்கப்பட்டதனல்’’. அமைச்சர் முடிக்கவில்லை. மன்னவன் குறுக்கிட்டான்.
'அவளுக்கா குன் ம நோய். உளருகிறீரா? அழகின் அவதாரம்போற் தோன்றும் அவளா குன்ம நோய் பிடித்தவள். யாரையோ விசாரிக்கச்சொல்ல, யாரையோ விசாரித்துவருகிறீரே'
"மன்னவா? குன்மநோயினல் அவள் பீடிக்கப் பட்டிது உண்மைதான். அந்த நோயினைப் போக்கவே தான் அவள் இங்கு வந்தாள். புனிதமான கீரிமலை நீரூற்று அவளது நோயினைத் தீர்த்துவிட்டது".
"அப்படியா?" என்று வியந்த கதிரமலைக் காவலன், "எங்கிருக்கிருள் அவள்' என வினவிஞன். 'அண்மையிற்முன் கூடாரமடித்துத் தங்கி யிருக்கிருள்?? " " へい
سي-22 حمست

**பக்கத்திலே அவள் இருக்க, இங்குநான் தடு மாறுகிறேன்" என்றவாறு மன்னவன் எழுந்தான்.
உக்கிரசிங்கனது உள்ளத்திலே அழிக்கமுடியாத ஓவியம்போல் அவள் உறைந்துவிட்டாள். உள்ளத் திலே பெருகும் காதல் உணர்ச்சியை அவளிடம் கொட்டித்தீர்க்காமல் அவனுல் இருக்கமுடியவில்லை. அவளைக் காணுமல் கழியும் ஒவ்வொரு நாளிகைப் பொழுதும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாகவே இருந் திது.
வாழ்ந்தால் அவளுடன் வாழ்வு 1 இன்றேல் இந்த வாழ்வே வேண்டியதில்லை. அவ்வாறன வாழ்க் கையை நிர்ணயித்துக்கொள்ள அவளைக் காணவேண் டும். அவளைக் காணுமல், அவளுடன் ஓர் வார்த்தை தானும் பேசாதிருக்க மன்னவனது காதல் உணர்வு இடம் கொடுக் க வில்லை. பின்னுல் நடக்கப்போவ தையோ, தான் ஓர் அரசன், மக்களைத் தூயவழி. யிலே வழிநடத்திச் செல்பவன் என்ற எந்த எண்ணமு மில்லாது அவளைக் காணவென்று எழுந்தான்.
நள்ளிரவிலே மன்னன் உத்தரீயத்தை எடுத்துக் கொண்டு எழுந்ததைக் கண்ணுற்ற அமைச்சர்,
"மன்னவா' என்று குழைந்தர்ர்.
‘நான் ஓர் முடி பி னு க் கு வந்துவிட்டேன்
அமைச்சரே ! இப்பொழுதே அவளிடம் செல்லப் போகிறேன்'
"மன்னவா! அவளது கூடாரத்திற்குப் பலமான காவல் இருக்கிறது. காவலைக் கடந்துசெல்வது.”*
'முடியாத காரிய மென் கிறீரா? எப்படியும் நான் அவளிடம் சென்றுவிடுவேன் அமைச்சரே'
'தாங்கள் செல்ல முனைந்ததைத் தடுப்பதற்கு நான் யார்? இருந்தாலும் ஓர் வார்த்தை'
'சொல்லுங்கள் அமைச்சரே" என்றவாறு கதிரமலைக் காவலன் திரும்பினன்.
--س-23,3 س--

Page 27
“தாங்கள் செல்வதோ நல்லிரவு. அவள் நித் திரை வயப்பட்டிருப்பாள். நித்திரைக் கலக்கத்தில் தங்களைத் திடீரெனக் காண்பதனல் கூக்குரலிட்டால் அவமானமடையவேண்டும். ஆகவே அவளை அப்படி வாரி எடுத்துக்கொண்டு நமது கூடாரத் தினு க்கு வந்துவிடுங்கள்’’ என்ருர் அமைச்சர்.
அமைச்சரின் ஆலோசனை கதிரமலைக் காவல னுக்கு இதமாகவே இருந்தது. அதிதியாக வந்தவர் களைக் காக்கவேண்டியது மன்னவனது கடமையல் லவா? அப்படியிருக்க நள்ளிரவிலே அத்துமீறிச் செல் வது வேலியே பயிரை அழிப்பதுபோன்றதல்லவா?
நித்திரை வயப்பட்டிருக்கும் அவளை எழுப்பு வதனல் விபரீதம் ஏற்படவே செய்யும். அதனல் காவல் வீரர்கள் உசாராகிவிடுவார்கள்.
அவளை வாரி எடுத்துக்கொண்டுவந்தால், உட லைத் தொட்டவனுக்கே உரிமையாகிவிடுவாள். ஆகவே அறிவிலே முதிர்ந்த அமைச்சரது ஆலோசனை சிறந்த தெனக் கண்ட மன்னவன்,
** அமைச்சரே ! தங்கள் கருத்துப்படி வாரி எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிடுகிறேன்’ என்ற வாறு கூடாரத்தை விட்டு வெளியேறினன்,
- 4 -
மங்கலாக விடுவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. பொழுது மறைந்து நள்ளிரவாகியும், மாருதப்பிர வல்லி நித்திரை வயப்படாது பட்சணையிலே புரண்டு கொண்டிருந்தாள்.
இரவு உணவு உண்ண முடி யாது போயிற்று அவளுக்கு. மனம் எங்கோ ஓர் இன்ப உலகில் சஞ் சரித்துக்கொண்டிருக்கும்போது, உணவுதான் எப் படிப் பிடிக்கும். வயிறு நிறைந்தாற்ருனே நீத்திரை
一24一

வரும். மாருதப்பிரவல்லியின் வயிறு நிரம்பவில்லை. ஆனல் உள்ளம் நிரம்பியிருந்தது. இறைவனது சன் னிதியிலே கண்ட சுந்தரரூபன் அவளது உள்ளத்திலே பவனிவந்துகொண்டிருந்தான்.
எடுப்பான அவனது தோற்றம், அப்படியே கல்லில் செதுக்கியதுபோல் உள்ளத்திலே பதிந்து இருந்தது. வீரலட்சுமி தாண்ட வ மா டு ம் பூரித்த தோள்களும், அழகு சொட்டும் அரும்பு மீசையும், களை ததும்பும் இனிய முகமும் மறக்கவொண்ணதபடி நர்த்தனம் புரிந்தன.
இன்ப வாழ்வினுக்கும் தனக்கும் எத்தனையோ காததுரம் என முடிவுகட்டி ஏங்கிய அவள், உக்கிர சிங்கனைக் கண்டது ம் இன்ப வாழ்வைப்பற்றியே எண்ணலானள்.
மன வண்டு உள்ளம் கொள்ளைகொண்டவனையே சுற்றிச்சுற்றி வட்டமிட்டது. அவன் யாரோ? தான் யாரோ? என்ற எண்ணம் அவளுக்கு ஏற்படவில்லை. ஒருவருக்காகத்தான் ஒருவர் பிறந்தது என்ற எண் ணமே மேலோங்கி நின்றது.
உடல் பஞ்சணையிலே துவண்டுகிடந்தது. கண் கள் மூடியே இருந்தன. ஆனல் நித்திரையோ அணுக வில்லை. நித்திரைக்குப் பதிலாக உள்ளத்திலே குடி புகுந்தவனை நோக்கிய இனிய கற்பனையிலே மனம் உழன்றுகொண்டிருந்தது.
மெல்லிய பட்டுத்திரை நீக்கப்படும் சலசலப்புச் சத்தம் கேட்டுக் கண்களை மெல்லத் திறந்தாள். எவனை நோக்கி இதுவரை எண்ணி எண்ணி ஏங்கினளோ, அவனே பக்கத்தில் புன்முறுவல் தவழ நின்றுகொண் டிருந்தான். *
நள்ளிரவிலே பலமான காவலைக் கடந்துவந்து நிற்கிருரா ? தன்னிடம் ஒர் வார்த்தை சொல்லிக் கொள்ளாமல் வருவாரா? இருக்காது. இது வெறும் மனப்பிரமைதான் என்றவாறு உற்றுநோக்கினள்.
一25一

Page 28
அசையாது கைகளைக் கட்டியவாறு அவளையே பார்த்துக்கொண்டு நின்ருன் காவலன். நினைவுமல்ல! கனவுமல்ல ! உண்மையாகவே நிற்கிருரென்ற உள் ளுணர்வு ஏற்படவும் கையினைக் கிள்ளிப்பார்த்தாள். கிள்ளிய இடத்தில் வலித்தது. அப்பொழுதுதான் அவளது இன்ப மயக்கம் கலைந்து ‘நீங்களா' என்ற வாறு எழுந்தாள்.
‘நான்தான் அன்பே ! கதிரமலைக் காவலன் நான்தான்' என்றவாறு கைகளை நீட்டினன்.
‘சுவாமி' என்று அவளது வாய் குழறியது. அவ்வளவுதான். அப்படியே அவளை வாரி எடுத்து அனைத்துக்கொண்டான் கதிரமலைக் காவலன்.
- 5
பொழுது பலபலவென்று புலர்ந்தது. மாருதப் பிரவல்லி மெதுவாகக் கண்களைத் திறந்தாள். திறந்த அவளது கண்கள் வியப்பினுல் விரிந்தன. கூடாரத்தை உற்றுநோக்கினுள். தனது கூடாரமேயில்லை. வேறு எங்கோ தான் கடத்தப்பட்டு வந்திருக்கிருேமென்ற நினைவு எழவும் கூடாரத்தைச் சுற்றிக் கண்ணுேட்டம் விட்டாள்.
கூடாரத்தின் ஒர்புறத்திலே கதிரமலைக் காவ லன் நித்திரை வயப்பட்டிருந்தான். இல்லை! நித்திரை என்பதுபோல் பாசாங்காகப் படுத்துக்கொண்டிருந் தான்.
அவனைக் காணவும் நள்ளிரவுச் சம்பவம் நிழ லாடியது. உணர்ச்சிவயப்பட்டுப் பரந்த அவனது மார்பிலே தஞ்சம் புகுந்தது நினைவு க் கு வந்தது. "ஆமாம்! அவ்வாருயின் இங்கு எப்படி வந்தேனென்ற வினவெழுந்தது. விடைகாண முனைந்தாள். நினைவு இருந்தாற்ருனே!
ー 36 -

‘'தேவி’ என்றவாறு கதிரமலைக் காவலன் அரு காக வந்தான்.
'நான் எப்படி இங்குவந்தேன்' என்றவாறு மஞ்சத்திலிருந்து எழுந்தாள்.
* "நானகவே உன்னைத் தூ க் கிக் கொண் டு வந்தேன். இது எனது கூடாரம் தேவி! உன்னைப் பிரிந்து, உன்னைக் காணுமல் என்னுல் இருக்கமுடிய வில்லை. ஆதலினுல் உன்னையே கொண்டுவந்துவிட்
GL6ir
*" வியப்பாக இருக்கிறதே" என்றவாறு அவனை ஏறிட்டு நோக்கினுள்.
‘'தேவி ஈழத்தின் ஒர்பகுதியை ஒர் குடையின் கீழ் ஆணைசெலுத்தும் உக்கிரசிங்க மன்னவன் நான். கதிரமலைக் காவலனுண் என்னை உனக்குப் பிடிக்க வில்லையா?*’ என்றவாறு அவளது எழில் முகத்தினை உற்றுநோக்கினன்.
மாருதப்பிரவல்லி பேச வில்லை. கதிரமலைக் காவலனைக் கண்களால் எடைபோட்டுக்கொண்டிருந் தாள்.
'தனிமை எ ன் னை க் கொ ல் கி றது. இப் பொழுதே நாம் தலைநகரான கதிரமலைக்குச் சென்று நமது திருமணத்தை நடத்துவோம். புறப்படலாந் தானே..' என்று ஆசை பொங்கக் கேட்டான் கதிரமலைக் காவலன்.
'முருகவேளினுக்குக் கோயில் எடுப்பித்துக் கொண்டிருக்கிறேன். முருகவேளினை எழுந்தருளச் செய்து விழாக் கொண்டாடிய பின்னர்தான் இவ் விடத்தை விட்டுப் புறப்படுவேன்' என்னுள் மாரு தப்பிரவல்லி.
‘அப்படியானல் தேவிக்குத் துணையாக நின்று, தேவியின் ஆலயத்தை நானும் பூரணமாக்குகிறேன்" என்ருன் கதிரமலைக் கா வலன். அந்தவேளை சில பெண்கள் கூடாரத்தினுள்ளே நுழைந்தார்கள்.
سمبر27 سے

Page 29
மாதப்பிரவல்லியின் தோழிப் பெண்கள். கதிர மலைக் காவலனுடன் தங்களது தேவி இருப்பதைக் காணவும் அதிசயித்தார்கள்.
*' என்ன வேண்டும் ' என்பதுபோல் மன்னவன் அவர்களை ஏறிட்டு நோக்கினன்.
‘'தேவி! காலையில் தங்களைக் காணுமல் நாங் கள் த வியாய்த் தவித்தோம். பல இடங்களிலும் தேடிக் காணுமல் கதிரமலைக் காவலனிடம் முறையிடு வதற்காக இங்கு வந்தோம். இங்கு தங்களைக் கண் டோம். சோழ தேசாதிபதி தங்களை உயிரினும் மேலா கக் காக்கும்படி எங்களுக்குப் பணித்தார். ஆதலினல் இப்பொழுது நாங்கள் சோழ தேசாதிபதியினுக்கு என்ன சொல்வது?" என்று கேட்டாள் மாருதப் பிரவல்லியின் ஆருயிர்த்தோழி.
'நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் தலைவி கதிரமலைக் காவலனை மணந்துகொள்ளப்போகிருள்' என்று சோழ தேசாதிபதிக்கு ஒலை அனுப்புங்கள்
என்ருன் மன்னவன்.
"ஆமாம்' என்பதுபோல் மாருதப்பிரவல்லி தலையசைத்துப் புன்முறுவல் பூத்தாள்.
மாவிட்டபுரத்திலே முருகவேளினுக்கு மிகவும் பிரமாண்டமான கோயில் எழுந்தது. கோயிலில் சோழநாட்டிலிருந்துவந்த முருக வே ளின் திருவுரு வத்தை எழுந்தருளச்செய்து மாருதப்பிரவல்வி பெரு விழா எடுப்பித்தாள். மாருதப்பிரவல்லி முருகவேளின் ஆலயத்தைக் கட்டி எழுப்புவதற்காகக் கதிரமலைக் காவலன் தனது அரசதாணியைக் கதிரமலையிலிருந்து சிங்கை நகரினு க்கு மாற்றிக்கொண்டானெனில் அவனது காதலின் வலிமையே! வலிமையாகும்.
崇 率,柴
ー。8ー

ரஞ்சகமான காதற்கதை இதுதான். உக்கிர சிங்க மன்னவனின் காதற்கதை இதுதான்.
மாருதப்பிரவல்லி தனது குன்மநோய் நீங் கப்பெற்றதின் காரணமாக மாவிட்டபுரத்தில் முருக வேளினுக்கு ஒர் ஆலயம் எடுப்பிக்க முனைந்து தந் தைக்கு ஒலே போக்கினுள்
மகளின் விருப்பினுக்கிணங்கச் சோழ தேசாதி பதி பெரும் பொருளையும், சிற்பிகளையும் கோயில் எழுப்புவதற்காக அனுப்பிவைத்தார்.
சோழநாட்டுச் சிற்பிகளின் அயராத உழைப் பினுல் மரீவிட்டபுரத்திலே முருகவேளினுக்கு நவ மான கோயில் எழுந்தது.
முருகவேளின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பெருவிழாக் கொண்டாடாமல், கதிரமலைக் குச் செல்லமுடியாதென மாருதப்பிரவல்லி கூறிவிட் டாள். இறைவனது திருப்பணியாதலினல், அவளது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டான். ஆனல் காதலி யைப் பிரிந்து கதிரமலைக்குச் செல்லவும் அவனல் முடியவில்லை. ஆகவே சிறந்ததோர் முடிவினுக்கு மன்னவன் வந்தான்.
பெளத்தப் பள்ளிகள் நிறைந்த கதிரமலை, சிவ வழிபாடு கொண்ட உக்கிரசிங்கனுக்கு இதமானதாக இருக்கவில்லை. கடற்கரையிலே அழகுமிக்க துறைமுக மாகவும், கலிங்கர் வாழ்ந்துகொண்டிருந்ததுமான சிங்கை நகர் மேலானதாகத் தோன்றியது. ஆகவே தனது இல்வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு அனேக ஆண்டுகளாக நாகர்களின் தலைநகராக இருந்துவந்த கதிரமலையை விடுத்துச் *சிங்கை நகரினைத் தலைநகராக் கினன்.
* அன்று சிங்கை நகராகத் துலங்கிய இடமே இன்று யாழ்ப்பாணத் தில் வல்லிபுரம் என்றழைக்கப்படுகிறது. அதேபோல் கதிரமலை எனத் துலங்கிய இடம் இன்று கந்தரோடை என்று வழங்கப் பெறுகிறது.
س-29 س--

Page 30
  

Page 31
3.
சீர்பாதகுலம் வகுத்தல்
10க்கள் மனம் மகிழும் வண்ணம் செங்கோல் செலுத்திய உக்கிரசிங்க ம ன் ன வ ன் முதுமையின் கோரப்பிடியான மரணத்திரையால் மறைக்கப்பட் டான்.
தந்தைக்குப்பின் தனயன் என்ற வகையில் வாலசிங்கன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான்.
வாலசிங்க மன்னன் வேதங்களை முறையாகக் கற்றதனல், மக்கள் துயர் காணுவண்ணம் செம்மை யாகச் செங்கோல் செலுத்தலானன். தனது ஆணை பரவும் இடங்களுக்கெல்லாம், காலத்துக்குக்காலம் சென்று மக்களது குறைகளைக் கேட்டறிந்து நிமிர்த்தி செய்துவந்தான்.
ஆயகலைகள் அனைத்தினையும் மன்னன் செம்மை யாகக் கற்றதின் பயனுகச் சிங்கை நாட்டில் கலைகளை வளர்த்தான். கலைக்கூடங்களை நிறுவிக் கலைஞர்களை ஆதரித்தான். கலைஞர்களுக்கேற்றவாறு பரிசில்களும் வழங்கிக் கெளரவித்தான்.
தமிழகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாடி என்னும் பாணன் ஒர்நாள் மன்னனது சபாமண்டபத்தினுள் நுழைந்தான். பாணனையும் அவனது கரங்களிலே தவழ்ந்துகொண்டிருந்த யாழினையும் . கண்ட மன்ன வன் வாலசிங்கன், பாணனை அகம்மலர அன்புடன் வரவேற்ருன்.
س- 32 . سه

யாழ்ப்பாடி தனது வல்லமையைக் காட்டுவதற் காக யாழினை மீட்டலானன். யாழ்ப்பாடியின் கரங் ஆள் வேகமாக யாழிலே விளையாட, விளையாட மதுர மான தெய்வீக கானம் எழலா யிற் று. யாழிலே எழுந்த தெய்வீக கானத்தினுக்கேற்பப் பாணனும் தன் குரல் ஒலியினையும் இணைத்தான். தெய்வீக நாத மும், இன்னிசைக் கானமும் கலந்து சபா மண்டப மெங்கும் தெய்வீக கலைமணம் கமழச்செய்தது. சபா மண்டபத்திலே குழுமியிருந்த அனைவரையும் யாழ்ப் பாடி தனது குரலினலும் யாழினலும் ஓர் கந்தருவ உலகத்தினில் நர்த்தனமாடச் செய்தான்.
பல நாழிகைப்பொழுதாக ஒலித்த யாழ் ஒலி நின்றது. அப்பொழுதுதான் சபா மண் ட பத்தில் இருந்தவர்கள் இந்த உலக நினைவினுக்கு வந்தார்கள்.
மன்னன் வாலசிங்கன் யாழ்ப்பாடியின் திற மையை மனமாரப் பாராட்டினன். பெரும் பொருள் பரிசாக வழங்கியதுடன் நிற்காது தெற்கேயிருந்த *மணல்மேட்டினையும் பரிசாக வழங்கினன்.
மன்னவன் வாலசிங்கன் அளித்த பரிசினை மன முவந்து ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாடி தன்நாடேகித் தன் இனத்தாரில் பலரை அழைத்துவந்து மணற் றிடரைத் திருத்திக் குடியேறினன்.
சோழநாட்டு வணிகனெருவன், மன்னவன் வாலசிங்கனுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களுடன் தங்களது இளவரசியின் ஒவியத்தையும் கொடுத்துச் செற்ருன்.
* அன்று வாலசிங்க மன்னவன் அளித்த மணல்மேடுதான் இன்று கரையூர், பாஷையூர் என்றழைக்கப்படுகிறது. யாழ்ப்பாடி தனது இனத்தாரை அழைத்துவந்து மேட்டைத் திருத்திக் குடியேறி ஞன். அவனும் அவனது இனத்தாரும் குடியேறிய இடமே இன்று யாழ்ப்பாணம் என்றழைக்கப்படுகிறது.
-33

Page 32
ஒவியத்திலிருந்த இளவரசி சீர்பாத தேவியை மன்னவன் பார்த்தான். அவ்வளவுதான். அவளது மோகன எழிலிலே தன் மனதைப் பறிகொடுத்தான். சதா அவளையே பார்த்துக்கொண்டிருக்கலாம்போற் தோன்றியது மன்னவனுக்கு. உள்ளத்திலே சீர்பாத தேவியைக் குடியிருத்தி க் காதல் வயப்பட்டான் காவலன் வாலசிங்கன்.
சிங்கை நகரிலே மன்னவன் வாலசிங்கனுக்கு இருப்பேகொள்ளவில்லை. அவனது உள்ளமெங்கும் சீர்பாத தேவியே நிறைந்து நின்முள். ஆதலினல் அவளை நினைத்து நினைத்துப் பார்ப்பதிலேதான் அவ ன து பொழுதெல்லாம் கழிந்துகொண்டிருந்தது.
நாளாந்த ஆட்சிக் கடமைகளைக்கூடச் செய்வது வாலசிங்கனுக்குத் துன்பமாகவே இருந்தது. சீர்பாத தேவியை நினைத்து நினைத்துப்பார்த்து இன்ப வேதனை யுற்றதனல், சதா சிந் த ஃன வயப்பட்டவணுகவே தோன்றினன். d
மன்னவனது நிலை மை யி னை அவதானித்த அமைச்சர் சிந்தித்தார். இளமைப் பருவத்தினனன மன்னவனுக்கு எந்தவகையான நோ யும் ஏற்பட வில்லை. நோய்யென்றல் அரண்மனை வைத்தியர்கள் துடிதுடித்துக்கொண்டு முன்நிற்பார்களே! அவர் களது மூலிகைகளுக்கு எந்த நோய்யென்றலும் கட் டுப்பட்டுவிடுமே! ஆனல் அரண்மனை வைத்தியர்கள் மன்னவனை அணுகவேயில்லை. அப்படியானல் இளமை கொழிக்கும் மன்னவனுக்கு ஏற்பட்ட நோய், உடல் நோயல்ல! மனநோயாகத்தானிருக்கவேண்டுமென்று அமைச்சர் முடிவுகட்டினுர்.
வயதில் முதிர்ந்து, அனுபவத்தில்மிக்க அமைச்ச ரது முடிவு தவருனதாக முடியாதே. ஆகவே அமைச் சர் மன்னவன் வாலசிங்கனைத் தனிமையில் அணுகி னர். மனதிலுள்ளதை யாரிடமாதல் சொல்லித்தீர்க்க
---- 34 س--

வேண்டுமென்றிருந்த ம ன் ன வ னு க்கு, அமைச்சர் தனிமையிலே வந்தது இதமானதாகவே இருந்தது.
அமைச்சர் மன்னவனது கா த ல் நோயினை அறிந்துகொள்ள வந்தார். மன்னவனும் தனது காதல் நோயினை அமைச்சரினற்ருன் தீர்க்கமுடியுமென்று கருதினன். ஆத லின ல் மன்னன் தன் மனதையே திறந்துகாட்டினன் அமைச்சரிடம். தன் மனக் கருத் தைத் தெளிவாகவே கூறினன் மன்னவன்.
மன்னவனின் கருத்தினை நிறைவு செய்வது அமைச்சரின் தலையாய கடமையாயிற்றே! வாலிபப் பருவத்தினனன மன்னவனை வாழ்க்கையில் இணைத்து வைக்கவேண்டியதும் அமைச்சரின் தனியாய கடமையு மாயிற்றே, கடமையை நிறைவுசெய்ய, கடமை வீர
அமைச்சர் சோழநாட்டினுக்குப் புறப்பட்டார்.
சங்ககாலம் தொடக்கம் பெரும் புகழுடன் வாழ்ந்த சோழ மன்னர்களது வரலாற்றிலே ஆறு நூற்ருண்டுகள் இருள்படிந்த காலமாகும். கி. பி. 300ஆம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ஆம் ஆண்டு வரையும் சோழநாட்டு வரலாறு இருள் மண்டிய தாகும். இக்காலத்தில் சோழர்கள் முடி இழந்து சிற் றரசர்களாக வாழ்ந்தார்கள். இருண்ட காலத்துச் சோழ ம ன் ன ர் க ளை ப் பற்றி ச் சோழவரலாறு மெளனமே சாதிக்கிறது. இருந்தாலும் சில சோழ மன்னர்களைப்பற்றிப் பெரிய புராணமும், திருமுறை யும் கூறுகின்றன.
சோழர்கள் இருண்ட காலத்திலே சோழ மன் னர்கள் சிற்றரசர்களாக உறையூர், பழையாறை, திருவாரூர் என்னும் நகரங்களிலிருந்துகொண்டு செங் கோல் செலுத்தினர்கள். . .
கி. பி. ஏழாம் நூற்றண்டிலிருந்து பழையாறை நகரமே சோழர்களது தலைநகரமாக விளங்கியது.

Page 33
பழையாறை அரியணை வழியிலே சோழ மன்னனுகக் கி. பி. 831ஆம் ஆண்டு குமராங்குசன் முடிபுனைந் தான்.
குமாரங்குசன் நந்திவர்மபல்லவனின் ஆணையை ஒப்புக்கொண்டு திறை செலுத்தும் சிற் ற ர ச ஞ க ச் செங்கோல் செலுத்திவந்தான். பல்லவனுக்குத் திறை செலுத்தும் மன்னவனகக் குமாரங்குசன் செங்கோல் செலுத்திவந்தாலும், கொடையில் கர்ணனை நிகர்த் தவனக விளங்கினன். நேர்மை, ஒழுக்கம் என்னும் பண்புகளை ஆபரணமாகப் பூண்ட குமாரகுசன் தெய்வ பக்தியிலும் தர்ம சிந்தனையிலும் இணையற்று விளங் கினன். குடிமக்களைத் தன் மக்கள் போல் பேணிக் காத்துவந்த குமாரங்குசனது பெருமைகளைப்பற்றி வேலூர்ப்பாழையச் செப்பேடுகள் சிலாகித்துக் கூறு கின்றன.
சோழரது இருண்டகாலச் சிற்றரசு வாழ்க்கை யினுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் விஜ யாலயன் என்னும் வீரப்புதல்வனைப் பெற்றெடுத்தான் குமராங்குசன். இளவரசன் விஜயாலயனது ஒரே பேருன தங்கையாகப் பிறந்தாள் இளவரசி சீர்பாத தேவி! குமராங்குச மன்னனது அரவணைப்பிலே, பழை யாறையில் விஜயாலயனும் சீர்பாததேவியும் வளர்ந்து வயதெய்தினர்கள்.
இக்காலையில் பழையாறை அரண்மனைக்கு வந்த அமைச்சரைச் சோழ மன்னனு ன குமராங்குசன் அகம்மலர அன்புடன் வரவேற்ருன், சிங்கை மன்ன னின் பரிசுப் பொருட்களை முன்வைத்த அமைச்சர், திருமணச் செய்தியையும் வெளியிட்டார்.
பல்லவ வேந்தனுக்குத் திறை செலுத்திச் சிற் றரசன்போல் வாழ்ந்துவந்த குமராங்குச சோழன், சோழநாட்டின் நலத்தைப் பொறுத்து சிங்கை மன் னவனது சம்பந்தத்தை விரும்பினுன். தனது மகள் சீர்பாததேவியினைச் சிங்கை மன்னவனுக்குக் கொடுப்ப
-. 35 سمبس

தற்கு இயைந்தான். திருமண முகூர்த்த நன்நாள் குறித்து அமைச்சர் சிங்கைநகர் திரும்பினர்.
மன்னவன் வாலசிங்கன் திருமணத்தினுக்காக நாட்குறித்து வந்ததுபற்றிக் குதூகலப்பட்டான். உள் ளத்திலுறைந்தவள், வாழ்க்கைத் துணைவியாவதென் முல் குதூகலத்தினுக்குக் குறைவுதானேது?
பெரியவர்கள் நிச்சயித்த நன்நாளிலே சிங்கை மன்னவனுகிய ஜெயதுங்க பரராசசிங்கன், சோழ இளவரசி சீர்பாததேவியினை மக்கள் ம ன மா ர வாழ்த்த பழையாறை அரண்மனையில் திருமணம் செய்துகொண்டான். w
புதுமணத் தம் பதிகள் வெகு மகிழ்வாக ஓர் திங்கள் பொழுதினை இன்பமாகச் சோழநாட்டிலே கழித்தார்கள். சிங்கை மன்னவன், பழையாற்றை நகரத்திலே இன்பத்தின் எல்லையில் என்னுலும் நீந்திக் கொண்டிருக்கமுடியுமா? தனது வளநாட்டினுக்குத் திரும்பவேண்டியதின் அவசியத்தை இல்லாள் சீர்பா தேவியிடம் கூறினன். t -
கணவன் வாழும் இடந்தானே மனைவிக்கும். ஆகவே கணவனுடன் சிங்கை நாட்டிற்குச் செல்லச் சீர்பாத தேவி தந்தையிடம் அனுமதி கோரினுள்.
ஒரேபேருன மகளாகச் சீர்பாததேவி இருந் தாலும், கணவனுடன் இணைந்து வாழவேண்டியவ ளாயிற்றே! கணவன் வாழும் இடந்தானே மனைவிக் குச் சொர்க்கம். ஆகவே அருமை மகளைச் சிங்கை மன்னவனுடன் தனிமையாகக் குமராங்குச சோழன் அனுப்பிவைக்காமற் தன் மக்களிற் பலரைத் துணை யாகச் சேர்த்தான்.
திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டு மாவடி ஆதிய இடங்களில் வாழ்ந்த முதன்மையான அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர்
مناسب ۲ است.

Page 34
என்னும் குலத்தைச் சேர்ந்த தலைவர்களையும், அவர் களது மனைவிமார்களையும் சோழ மன்னவன் தேர்ந் தெடுத்தான். அந்த வகையிலே சிந்தன், பழையன், காலதேவன், காங்கேயன் என்னும் அரசகுலத்தவர் கள், சந்திரசேகர ஐயர், அச்சுத ஐயங்கார் என்னும் அந்தணர்கள், கண்ணப்பமுதலி என்னும் வேளாளர், முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சங்க ர ச் செட்டி என்பவர்கள், அளர்களது மனைவிமார்கள் முதலியோர் சிங்கை நாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறினர்கள்.
சோழகுல மகாராணிகள் பரம்பரையாக வழி பட்டுவந்த தங்கவேலினை அன்னையிடம் காணிக்கை யாகப் பெற்றுக்கொண்டு சீர்பாததேவி கப்பலில் ஏறினள். தொடர்ந்து மன்னவன் வாலசிங்கனும் கப்ப லில் ஏறினன். சோழகுல அரசகுலத்தவர்களும், சோழநாட்டு மக்களும் வாழ்த்தொழி எழுப்பக் கப்ப லானது கடலிலே விரையலாயிற்று.
கப்பல் கடலிலே " ஓடிக்கொண்டிருந்தது. அவ் வேளை சீர்பாத தேவி தன் கணவனிடம், சிங்கை நாட்டின் செங்கோல் பரவும் நாடனைத்தையும் சுற் றிக் காட்டும்படி வேண்டுகோள் விடுத்தாள்.
அன்பு மனையாளின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட வாலசிங்க மன்னன், கப்பலினை கிழக்குக் கரையோரமாகச் செலுத்தும்படி பணித்தான்.
வாலசிங்க மன்னவனது ஆணை பரவும் கிழக்குக் கரையோரமாக ஓடிவந்த கப்பலானது, திரிகோண மலையிலுள்ள கோணேஸ்வரப் பெருமானது ஆலயத் தினுக்கு எதிரா க நின்றுவிட்டது. எந்தத் திக்கும் நகர முடியாதவாறு நங்கூரம் பாய்ச்சியதுபோல் கப் பல் தானக நின்றது. அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது. -
கோணேசுவரப் பெருமானை மனமுருக வழி பட்டுக்கொண்டிருந்த சீர்பாததேவியினுக்கு, கப்பல் தானக நின்றது தெய்வீக அருளாகுமெனக் கருதினுள், ஆகவே கப்பல் நிற்கும் காரணத்தைக் காணுமாறு கப்பலில் இருந்தவர்களுக்குப் பணித்தாள். ༣."
ー58ー

சீர்பாததேவியின் கட்டளைக்குப் பணிந்த சிந்தன் காரணத்தைக் காணக் கடலிலே குதித்தான். கடற்பாறை எதிலுமே கப்பல் மோதி நிற்கவில்லை யெனக் கண்ட சிந்தன், கடலின் அடியிலே சென்று பார்த்தான். கப்பலுக்குக் கீழே, கடலின் அடியிலே வினயகப் பெ ருமானது திருவுருவமொன்றிருக்கக் கண்டு, சீர்பாததேவியிடம் கூறினன்.
வினயகப் பெருமானது அருளினுற்ருன் கப்பல் நின்றதெனக் கண்ட சீர்பாததேவி, வினயகரது திரு வுருவத்தைக் கப்பலிற் சேர்க்கப் பணித்தாள். சிந்தன் திரும்பவும் கடலிற் குதித்து வினயகப் பெருமானைப் பணிந்து, வினயகப் பெருமானது திருவுருவத்தைத் தூக்கிக் கப்பலிற் சேர்த்தான்.
வினயகப் பெருமானது திரு வுரு வ த்தை க் கண்டதும் கப்பலில் இருந்த அனைவரும் வீழ்ந்தபடி, பணிந்தார்கள். சீர்பாததேவியும் வினயகப் பெருமானை மனமார வழிபட்டு ‘இக்கப்பலானது தங்குதடை யின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற்கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்' என வேண்டினுள்.
சீர்பாததேவியின் வேண்டுதலுக்கிணங்கக் கப் பலும் ஒடலாயிற்று. கிழக்கு கடற்கரை வழியாக ஒடிய கப்பலானது மட்டக்களப்பு வாவியிலே புகுந்து தெற்கு நோக்கிச் சென்று வாவியின் அந்தமான *வீரர்முனையில் கரைதட்டி நின்றது.
* மட்டக்களப்பினை ஆட்சி செலுத்திய கூத்திக மன்னவன் தனது
வீரர்களைக் கொண்டு களப்பு முனைவரையும் பாதை அமைத் துக் களப்பு முனையில் படை வீடுகள் கட்டிக் குடியிருத்தினுன். அந்த இடத்தினுக்கு மன்னவன் வீரர்முனை என்னும் பெயர் சூட்டினுன், வீரர்முனை என்னும் பெயர் சிதைந்து வீரமுனை எனவும் வழங்குகிறது.
سے 39 ہس۔

Page 35
கரைதட்டி நின்ற கப்பலைக் காணவும் சீர்பாத தேவி மகிழ்வுற்ருள். கப்பலில் வந்த அனைவரும் இறங்கினர்கள். வீரர்முனையிலேயே அனைவரும் தங்கு
வதற்குக் கூடாரங்கள் அடிக்கப்பட்டன.
தான் வினயகப்பெருமானிடம் வேண் டி க் கொண்டதற்கிணங்கச் சீர்பாததேவி தன்னுடன் கப் பலில் வந்த சோழநாட்டு மக்கள் அனைவரையும் கோயிலெடுக்கப் பணித்தாள்.
சோழநாட்டு மக்கள் வீரர்முனையில் எடுக்கும் கோயிலுக்கு உதவிசெய்ய அப்பொழுது வீரர்முனை யில் மக்களே குடியிருக்கவில்லை. ஆகவே வாலசிங்க மன்னவன் அயல் இடங்களில் வாழ்ந்த மக்களைக் கோயிற் பணிக்கு உதவும்படி பணித்தான்.
மக்களது அயராத உழைப்பினல் வீரர்முனை யிலே வினயகப் பெருமானுக்கு நவமான கோயில் எழுந்தது. கண்கொள்ளாக் காட்சியாக எழுந்த கோயிலைப் பார்த்த சீர்பாததேவி அகம்மகிழ்ந்தாள்.
சோதிடர் குறித்த நல்நாளிலே வேதாகம விதிப்படி மன்னவன் வாலசிங்கன் வினயகரது திரு வுருவத்தைக் கோயிலில் எழுந்தருளச்செய்தான். சிந்துயாத்திரையின் பயனகக் கிடைத்த வினயக ராதலினல் *சிந்துயாத்திரைப் பிள்ளையார் என ப் பெயர் சூட்டி, மன்னவனும் தேவியுமாகப் பெரு விழா எடுத்த்ார்கள்.
சிந்துயாத்திரைப் பிள்ளையார்க் கோயில் எடுப் பித்து விழாக் கொண்டாடியதன் பயனகச் சீர்பாத தேவி சிந்து யாத்திரைப் பிள்ளையாரின் வழிபாட்டி னுக்காகக் கணவனிடம், தனது கருத்தைக் கூறினுள்.
* சிந்துயாத்திரைப் பிள்ளையார் என்ற பெயர் காலப்போக்கிறல் திரிந்து இன்று சிந்தாத்திரைப் பிள்ளையார் என்றும் வழங்கு கிறது.
ح۔ 40 -اس

சீர்பாததேவியின் கருத்தினை அகம்மலர வர வேற்ற மன்னவன் வாலசிங்கன் சோழநாட்டு மக்கள் அனைவரையும் அழைத்துக் கூறலானன்.
'பல்வேறு குலத்தைச் சேர்ந்த நீங்கள் சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்காக ஒன்றுபட்டு ஒரு குலத் தவர்போலக் கோயில் எடுப்பிக்க உழைத்தீர்கள். வீரர்முனையிலே உங்களது இளவரசி சீர்பாததேவி எடுப்பித்த சிந்து யாத்திரைப் பிள்ளையார் கோயில் என்றென்றும் சோழநாட்டு மணம் கமழ வழிபாடு குறையேயின்றி உங்களால் நடைபெறவேண்டும்'
'உங்கள் இளவரசி சீர்பாததேவியின் பெரு விருப்பினை நிறைவு செய்யவும், பல்வேறு குலத்தவ ரான உங்களுக்குள் எக்காலத்திலும் வேற்றுமை ஏற்படாதிருக்கவும், உங்கள் அனைவரையும் ஒரு குல மாக உங்கள் இளவரசி சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுக்கிறேன். இதுமுதல் நீங்கள் அரசகுலத்தவரல்ல! அந்தணரல்ல! வேளாளரல்ல! வணிகரல்ல! அனைவரும் ஒன்றன ஒருமித்த இனமான சீர் பாதகுலத்தவராகும்.’’
'சிந்துயாத்திரைப் பிள்ளையாருக்காக இது முதலாக வீரர்முனையிலே நிரந் த ரமாக வாழத் தொடங்கும் நீங்க ள் சாதாரணமானவர்களல்ல! அரசகுல கெளரவத்தை உடையவர்களாகும். சோழ நாட்டு இளவரசியின் உறவினரான நீங்கள் ஈழத்தின் மிகவும் மேலான அரசகுலமாக மதிக்கப்படுவீர்கள். ஆதலினல் சீர் பா த குலத்த வரான உங்களுக்கு அரவிந்த மலர், செங்கோல், கொடி எனப் பொறிக் கப்பெற்ற மேலான அரசகுல விருதினை வழங்கு கிறேன். அமரர்கள் என்று புகழத்தக்கதான கெளர வத்தையும் உங்களுக்கு அளிக்கிறேன்’’
"சிந்துயாத்திரைப் பிள்ளையாரின் ஆலய வழி பாட்டின் பொருட்டும், உங்களது வளமான வாழ்க்
-41

Page 36
கையின் பொருட்டும் வயல் நிலங்களை மானியமாக வழங்குகிறேன்' என்று கூறி முடித்தான் சிங்கை நாட்டு மன்னவனுன வாலசிங்கன்.
மன்னவன் கூறியதற்கிணங்க சாசனம் செய்து செப்பேட்டுத் திருமுகத்தையும் வழங்கினன்.
தன்பொருட்டு, தன்னுடன் வந்த சோழநாட்டு மக்களைத் தன் பெயரினல் சீர்பாதகுல:ாக வகுத்த தனல் மகிழ்ந்த சீர்பாத தேவி சோழ அரசகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டுவந்ததுமான தங்க வேலினைச் சீர்பாதகுலத்தவர்களுக்கு வழங்கினுள்.
அரச கெளரவமும், அரச விருதும் பெற்ற தாகக் கிழக்கு ஈழத்திலுள்ள வீரர்முனையில் சீர்பாத குலத்தை நிறுவி ம்கிழ்ந்த வாலசிங்க மன்னவனும், சீர்பாததேவியும் சிங்கைநகரினுக்கு மீண்டார்கள்.
'படையும் கொடியும் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரு முடியும் நேர்வனப் பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய என்ற தொல்காப்பியச் சூத்திரத்தினுல் அரச மர பினைச் சேர்ந்த சீர்பாதகுல மக்களின் சிறப்பினைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
سینیم 422 سسیس

4.
சீர்பாதகுலச் செப்பேடுகள்
கிழக்கு ஈழத்தைச் சிறப்பிக்கும் முக்கியமான அம்சம் இங்குள்ள கல்வெட்டுக்களாகும். கல்வெட்டுக ளென்ருல் சாதாரணமாகக் கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத்துக்களையே குறிக்கும். ஆனல் கிழக்கு ஈழத்திற் கல்வெட்டுகளெனில், கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத் துக்களுடன், செப்புத் தகடுகளில் எழுதப்பெற்ற எழுத்துக்களையும் குறிக்கும்.
கல்லிற் செதுக்கப்பெற்ற எழுத்துக்களைக் கல் வெட்களென்று வழங்குவதுபோல், செப் புத் தகடு களில் எழுதப்பெற்ற எழுத்துக்களைச் செப்பேடுக ளென்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிருர்கள். ஆனல் கிழக்கு ஈழத்திலே செப்பேடுகள் என்ற சொல் வழக்கத்தில் இல்லாமல், புராதன சாசனங்கள் அனைத் தும் கல்வெட்டுகளென்றே வழங்கப் படுகின்றன. கவிதை வடிவாக எழுதப்பெற்ற கிழக்கு ஈழத்துச் செப்பேடுகள், சேமிக்கப்பெற்ற இடத்தின் பெயரி ஞலே வழங்கப்படுகின்றன.
கிழக்கு ஈழத்துச் செப்பேடுகள் அனைத்தும் கோயில்களிற்ருன் சேமிக்கப்பட்டன. அந்நியர்களின் ஆட்சியின் பயணுகக் கோயில்களில் சேமிக்கப்பெற்ற செப்பேடுகள் பல ரி ன் கைகளுக்குக் கைமாறின. இன்று பல பழைய குடும்பங்களிடம் விலைமதிக்க முடியாத பெரும் புதையல்போல் இச்செப்பேடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
مسيس-443 جيم

Page 37
மன்னவன் வாலசிங்கன் வீரர்முனையிலே சீர் பாதகுலம் வகுத்துச் சாசனம் செய்து கையளித்தான். இச்சாசனம் செப்புத் தகட்டில் எழுதப்பெற்று வீரர் முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கப்பட்டது. இது வீரர்முனைச் செப்பேடு என்று வழங்கப்பெறுகிறது.
மன்னவன் வாலசிங்கனும், சீர்பாததேவியும் வீரர்முனையிலிருந்து சிங்கை நகரினுக்கு வழிகொண்ட போது, திருகோணமலைக் கோணேசுவரர் கோயிலுக் குச் சென்ருர்கள்.
கோணேசுவரப் பெருமானது அருளினற்ருனே வினயகர் திருவுருவம் கிடைக்கப்பெற்றது. அதன் பெறுபேருகத்தான் வீரர்முனையில் வினயகருக்குத் திருக்கோயில் எடுப்பிக்கவும் முடிந்தது. சோழநாட்டு மக் களை வீரர்முனையில் குடியிருத்திச் சீர்பாதகுல மாகவும் வகுக்க முடிந்தது. ஆகவே சீர்பாதகுலம் பற்றி மன்னவன் வாலசிங்கன் செப்பேட்டில் சாசனம் செய்து கையளித்தான். இச்சாசனம் திரிகோணமலைக் கோணேசர் கோயிலிற் சேமிக்கப்பட்டது.
சிங்கைநாட்டு மகாராணியான சீர்பாததேவி காலத்துக்குக் காலம் மன்னவனுடன் வீரர்முனை சிந்து யாத்திரைப் பிள்ளையாரை வழிபடவும், தன் நாட்டு மக்களைக் காணவும் வந்துசென்ருள். வீரர்முனைக்குச் சீர்பாத தேவி வருவதுடன், கிழக்கு ஈழத்திலுள்ள திருக்கோயில்களையும் தரிசித்துக்கொண்டு செல்வது வழக்கமாகும். இவ்வாருகச் சீர்பாததேவி மன்னவ னுடன் வந்த காலையில் திருக்கோயிற் சித்திரவேலா யுதர் கோயிலிலும், கொக்கொட்டிச்சோலைத் தான் தோன்றி ஈசுவரர் கோயிலிலும் சீர்பாதகுலம்பற்றிச் சாசனம் செய்து கையளித்தார்கள். இச்சாசனங்கள் அக்கோயில்களிலே சேமிக்கப்பட்டன.
சீர்பாதகுல வரன் முறையினைப்பற்றி வீரர் முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப்பேடு, திருக்
-44

கோயிற் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு, கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு என்பவை சிறப் பாகக் கூறுகின்றன. இனி இச்செப்பேடுகளை நோக்கு
G36 inT LÈ.
9. fsfläIIj (FüßII)
கலிங்க நாட்டு உக்கிரசிங்க மன்னவன் கதிர மலையைத் தலைநகராகக் கொண்டு நாகநாட்டினை ஆட்சி செலுத்தலானன். நாகநாட்டிலுள்ள புனித நீரூற் ரு ன கீரிமலைக்கு நீராடவந்த சோழ அரச குமாரியான மாருதப்பிரவல்லியை உக்கிரசிங்க மன்ன வன் காதலித்துக் கடிமணம் செய்துகொண்டான்.
இருவரும் மனமொத்த இல்வாழ்க்கை நடத் தியதன் பயணுக வாலசிங்கன் என்னும் புதல்வனைப் பெறறெடுத்தனர். பாலகனன வாலசிங்கன் வளர்ந்து சகல கலைகளையும் கற்றன். வான் வழியாகச் செல்லும் அபூர்வ சக்தியினையும் பெற்ருன்,
சோழநாட்டு மன்னவனுகிய குமராங்குசனது அருமை மகளான சீர்பாததேவியை மணந்து, தன் நாட்டினுக்குக் கப்பலில் புறப்பட முனைந்தபொழுது, சோழ மன்னன் குமராங்குசன் தனது உறவினரிற் பலரைச் சேர்த்துச் சீர்பாததேவிக்குத் துணையாக அனுப்பிவைத்தான்.
கப்பலானது ஓடிவருகையிலே, திரிகோணமலையி லுள்ள கோணேசுவரர் கோயிலினுக்கு எதிராகத் தானுகவே நின்றுவிட்டது. இதனை க் கண்ணுற்ற சீர்பாததேவி, வியப்புற்றுக் கப்பல் நிற்கும் காரணத் தைக் கண்டறியப் பணித்தாள்.
கப்பல் நிற்கும் காரணத்தைக் காணக் கடலிற் குதித்தவர்கள், கப்பலுக்குக் கீழே வினயகரது திரு
سپس 45 سبيبسب

Page 38
வுருவமொன்றிருக்கக் கண்டு, கப்பலிற் சேர்த்தார் கள். வினயகரது திருவுருவத்தைக் கண்ணுற்ற சீர் பாததேவி தெண்டனிட்டுப் பணிந்து "இக் கப்ப லானது தங்குதடையின்றி ஓடி எங்கு கரைதட்டி நிற் கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண் டாடுவேன்" என வேண்டினள்.
சீர்பாததேவியின் வேண்டுதலுக்கிணங்க நின்ற கப்பல் ஒடலாயிற்று. கடல் வழியாக ஒடிய கப்ப லானது மட்டக்களப்பு வாவியிலே புகுந்துசென்று வீரர்முனையிலே கரைதட்டி நின்றது.
வீரர்முனையிலே கப்பலிலிருந்து இறங்கிய சீர் பாததேவி, தனது வேண்டுதலுக்கிணங்கத் தன னுடன் கப்பலில் வந்த மக்களைக் கோயில் எடுப்பிக்கப் பணித்தாள். மன்னவன் வாலசிங்கன் கோயிற் திருப் பணியினுக்கு அயலில் வாழ்ந்த மக்களையும் உதவப் பணித்தான்.
சோழநாட்டு மக்க ளது கைவண்ணத்திலே எழுந்த திருக்கோயிலிலே வினயகரது திருவுருவத்தை எழுந்தருளச்செய்து சிந்துயரத்திரையின் பயணுகக் கிடைத்தமையினுற் சித்துயாத்திரைப் பிள்ளையார். எனப் பெயர் சூட்டி, மன்னவனும் தேவியுமாகப் பெருவிழா எடுத்தார்கள்.
கோயிலில் வழிபா டு செம்மையாக நடை பெறும் பொருட்டுச் சீர்பாத தேவி தன்னுடன் வந்த சோழநாட்டு மக்களை வீரர்முனையிலே குடியிருத்த விரும்பினுள்.
சீர்பாததேவி தன் நாட்டுமக்களைக் குடியிருத்த விரும்பியதனல், ம ன் ன வ ன் அவர்களைச் சீர்பாத தேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்தான். பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களை ஒரே குலமாகச் சீர்பாததேவியின் பெயரினுல் சிர்பாதகுலமாக வகுத்த மன்னவன் 'நீங்கள் அனைவரும் அரச குலத்தவ
معیسیم- 46 --سم

ராகும்' எனக் கூறி அதன் சின்னமாக அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும் வழங்கினன்.
தன் பெயரினல், தன் நாட்டுமக்களைச் சீர்பாத குலமாக வகுத்து வீரர்முனையில் குடியிருத்தியமை யினல் மகிழ்ந்த சீர்பாததேவி, சோழ அரசகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்க வேலினையும் சீர்பாத குலத்தவருக்கு வழங்கினள்.
சிந்துயாத்திரைப்பிள்ளையார் கோயிலில் இனிது நடைபெறும் பொருட்டு மன்னவன் வாலசிங்கன் வயல் நிலங்களை மானியமாக வழங்கச் சாசனம் செய்து கையளித்தான். இந்த வரன் முறையினை மன்னவன் செப்பேட்டில் பொறித்து வீரர்முனைச் சித்துயாத் திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கச்செய்தான்.
வீர ர் முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டுச் சாசனம் வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகிறது. இத் தகைய வீரர்முனைச் செப்பேடுதான் இது.
1. கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய்
இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனம் உக்கிர சிங்கனின் உறைவிடம் "கண்டி மிக்க புகழ்நின்ற விற்பன கன்னிகை மாருதப் புரவீக வல்லி என்பாளை பேருற மணந்து பெற்றிடு மகனும்.
2. வால சிங்கனென வலிவுறு சிங்கம்
வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம் கலைகள் அறுபத்து நான்கிலும் வலியன் தொலைவில் விண்ணில் துரிதமாய்ச் செல்லும் மந்திர வித்தையும் மாண்புறக் கற்ற சுந்தர ரூபன் சோழநா டேகி
கண்டி என வழங்கப்பட்டது கதிரமலை நகராகும். முன்னுலிற் தலைநகரினைக் கண்டியென்று வழங்குவது வழக்கமாகவும் இருந்தது.
تحسب 47 مسب

Page 39
அரவா பரணன் அடியினை மறவாக் குமராங் குசனென கூறு பெயரினன் சிறந்திடு சோழன் அருந்தவப் புதல்வி சீர்பாத தேவியை திருமணம் செய்து
ஈழ நாடேக எண்ணுங் கால் - சோழ மாமன்னன் துணையாட் களாய் மன்னர் குலத்து மக்களை யனுப்ப எண்ணம் கொண்டு இன்புட னய்ந்து
திருவொற்றி யூர் சேர்ந்திடு மயலிலும் பெருந் துறையூர் பின்னர் தன் மருங்கிலும் கட்டு மாவடி கரையிரு புறத்திலும் மட்டுக் கூங்கிய மறுபுறங் களிலும்
சிந்தன் பழையன் சீர்காங் கேயன் சந்திர சேகரன் சதாசிவச் செட்டி கால தேவன் கண்ணப்ப முதலி ஞாலம் புகழ் முத்து நாயக்கன் அச்சுத ஐயர் அவர்களது இச்சை மனைவியரும் இன்னும் பலரையும் சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து வாழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல
கப்பலும் கடல்மிசை அப்ப னருளால் செப்பம தாகவே தீங்கெதுவு மின்றி ஒடி வருங்கால் உயர்ந்தோர் நிதமும் பாடிப் பரவும் பரமனங் குசனும் கோணேசர் வாழும் கோயில் முன்பாக
நானுதிக் கொன்றினும் நகராது நிற்க
ஒலம் ஒலமென் றுமையாள் கொஞ்சும் பால னவனை பணிவுடன் வேண்டி நேர்ந்ததை யறிய நேரிழை நல்லாள் தேர்ந்தவர் தமக்கும் செப்பவே யன்னர்
ஆழ்கடலி லிறங்கி அலசிப் பார்க்க நீள் புவி போற்றும் நிமலனைங் கரனின் திருவின் உருவச் சிலைதனை யெடுத்து உருவி லேற்ற அரசனு மரசியும்
-48

0.
I.
2.
I 3.
14.
15.
16.
எங்குதா னேடினும் எம்மவரின் கப்பல் தங்கு தடையின்றி தட்டினற் கரையில் அவ்விட மாலயம் ஐயனே உமக் செவ்விதா யமைத்து சிறப்பொடு பூசனை நாடொறும் செய்வோம் நலம்புரி வா யென பாடிப் பரவி மன் ருடி யேநீர்
சிலையதைத் தாங்குமத் தெய்வீகக் கப்பல் அலைகடல் மீதே அல்லலு ருமல் மட்டுக் களப்பு வாவியை யண்டி முட்டுப் படாமல் மோதிநில் லாமல் ஒரேதிசை யாயோடி உறைவிட மிதுவென வீரர்முனைக் கரை விருப்புட நின்றதே.
அரசனு மரசியும் ஆனைமா முகற்கு பரிவுட னலயம் பாங்குற வமைத்து சிந்தர் குலத்தீர் தெய்வீகச் சிலையதை சிந்து யாத்திரைச் சின்னமென் றிருத்தி
மண்டலா பிசேகம் மாண்புறச் செய்து அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து சித்தி விஞயக சிந்து யாத்திரை பிள்ளையா ரென பெயருஞ் சூட்டி
தக்க புகழாகத் தகுவிழா வமைத்து எக்காலத்து மிவ்விழா நிலைத்திட பக்குவஞ் செய்து பல்வகை வாத்தியம் தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம் தம்மோடு வந்த தமதுற வினரை செம்மன துடனே திருக்கோயிற் பணி
புரியச் சொல்லி பூமி பகிர்ந்து தனித்தனி யளித்து தான் வணங்கி வந்த தங்க வேலையும் சாமிக் களித்து மங்கள கீதம்பா மகிழ்வாய்ப் டாடி
ஓர் பெயரினல் ஓர் குலத்தவரென சீர்பாத தேவியென் திருப்பெயர் சூட்டி சீர்பாத குலம் சிறந்து விளங்கிட பேராக வென்னளும் பெருகி வாழ்ந்திட
-49

Page 40
17. அரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி தரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி அரச குலமென அன்பாய் வாழ்த்திட வாழ்த்தி நல்லாசி வழங்கவே வாலசிங்கன் தாழ்த்திச் சிரமது தான்பணிந் தனரே.
FTafson o
கிண்ணறையம் வெளி கீற்றுத் துண்டு மல்வத்தை வெளி மல்வத்தைக் குளம் தரவை முன்மாரி சரிசம மாகிவிடும் கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள் நரசிங்க னென நற்பெயர் பெறும் வரல சிங்கனுமே மானிய மாக சாசன மெழுதி சகலருக்கு மீந்தான்.
3. ÉíG5TGIOIIpöbj GFüGLI)
சீர்பாததேவியின் பெயரினல், அவளது நாட்டு மக்கள் குடியிருத்தப்பட்டபோது சீர்பாதகுலம் என வகுக்கப்பட்டார்கள். இவர்கள் ஆரியநாடு கட்டு மாவடி, பெருந்துறை, திருவெற்றியூர் எ ன் னு ம் இடங்களில் பெரும் சிறப்புடன் வாழ்ந்தவர்களாகும்.
தருக்கள் பொருந்திய மாலையும், புகழ்பரப்பும் கொடியும், முத்துக் குடையும், முப்புரி நூலும், கவச குண்ட லமும், தாமரை மலரும், முர சாசனமும், ஆலாத்தியும், அரசகுடையும், பூரண கும் பமும், வாயிற் தோரணமும், நிலபாவாடையும் தங்களுக்கு வரிசையாகக் கொண்டவர்கள். மே லு ம் சீர்பாத குலத்தவர்கள் உலகம் புரக்கும் புகழும், மகிமையும் விருதும் கொண்டவர்களாகும். இவ்வாரு ன பெருமை கள் உடையவர்கள் சீர்பாத குலத்தவர்களென்று திரிகோணமலைச் செப்பேடு கூறுகிறது. இத்தகைய திரிகோணமலைச் செப்பேடுதான் இது.
سب سے 50 مسیست

திருமருவு கட்டுமாவடி பெருந்துறை சிறந்த
உத்தர தேசமும் செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே
செகமீது வருதீரனம் தருமருவு தெரியலவர் கொடிபெருமை தவளநிறத்
தகமிவை தனிவிளக்கு தகைமைபெறு பூனூலுடன் கவச குண்டலஞ்
சரசமலர் முரசாசனம் அருமைசெறி ஆலாத்தி குடை தோரணமோடரிய
மதில் பாவாடையோன் அரசியின் குலமென அவள் நாமமேபெற்று
அன்று சீர்டாதமானுேன் உருமருவு தரையினில் அரிய புகழ்செறி
உலகுமகிழ் மகிமையுடையோன் உரைவிருது தனையுடைய ஆரியநாடு திரு
வெற்றியூரரசு புரிவீரனே.
இ. திருக்கோயிற் செப்பேடு
ஈழநாட்டு மன்னவனகிய வாலசிங்கன் அறு பத்திநான்கு கலைகளையும் தெளிவாகக் கற்றவன். நான்கு வேதங்களையும் முறையாக ஒதியவன். கமண குளிகை எனப்படும் வான்வளிச் செல்லும் சக்தியைப் பெற்றவன். ஆதலினல் நீதி தவருது செம்மையாகச் செங்கோல் செலுத்தினன்.
கட்டிளங்காளையான வாலசிங்க மன்னவன் திருமணம் செய்யக் கருத்துக்கொண்டான். அதன் பயனுகச் சோழ மன்னவனின் மகளான சீர்பாத தேவியைச் சோழநாட்டினுக்குச் சென்று திருமணம் செய்தான்.
இல்லாளாகிய சீர்பாததேவியுை அழைத்துக் கொண்டு மன்னவன் வாலசிங்கன் ஈழத்தினுக்குப் புறப்ப்ட்டபொழுது, சோழமன்னவன் மகளுக்குத்
س-01--

Page 41
துணையாகப் பலரைச் சேர்த்து அனுப்பினன். அந்த வகையிலே அச்சுத ஐயங்கார், அவர் மனைவி செந்திரு, திருவொற்றியூர் சந்திரசேகரர், அவர் மனைவி பார்வதி, கட்டுமாவடிக் கண்ணப்பமுதலி, முத்துநாயக்கன், சங்கரச்செட்டி, சதாசிவச்செட்டி முதலியோர் ஈழத் தினுக்குச் செல்லும் கப்பலில் ஏறினர்கள்.
கப்பலானது கடல்வழியாகச் செல்கையில் திரி கோணமலையிலுள்ள கோணேசுவரர் கோ யி லி ன் முன்பு எந்தத் திக்கும் நகராதவாறு நின்றுவிட்டது. கப்பல் நிற்கும் காரணத்தைக் கண்டறிய மன்னவன் பணித்தான். கட்டளைக்குப் பணிந்து கடலில் குதித்த வர்கள் வினயகரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு கப்பலில் சேர்த்தார்கள்.
வினயகரது திருவுருவத்தினைக் கண்ட மன்ன வனும் தேவியும் பணிந்து ‘இக்கப்பலானது தங்கு தடையின்றி ஓடி எங்கு கரை த ட் டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடு வோம்' என வேண்டினர்கள். அதற்கிணங்க வினயக ரது அருளினல் கப்பலும் ஒடலாயிற்று. கடல் வழி யாகச் சென்ற கப்பல், மட்டக்களப்பு வாவியிலே புகுந்து சம்மாந்துறைக்கு அணித்தாகவுள்ள வீரர் முனையில் கரைதட்டி நின்றது.
கப்பலில் வந்த அனைவரும் வீரர்முனையில் இறங் கினர்கள். மன்னவன் வாலசிங்கன் வீரர்முனைக்கு அயல் இடங்களில் வாழ்ந்த மக்களை அழைத்து, சோழநாட்டு மக்களுடன் சேர்ந்து கோயில் எடுப்பிக் கப் பணித்தான்,
மக்களின் அயராத உழைப்பினுல் வீரர்முனை யிலே, வினயகருக்கு நவமான கோயில் எழுந்தது. புனிதமான நன்நாளில் வினயகரை எழுந்தருளச் செய்து, சிந்துயாத்திரையின் பயனகக் கிடைத்தமையி ஞல் சிந்துயாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர்சூட்டி மன்னவன் வாலசிங்கன் பெருவிழா எடுப்பித்தான்.
-52

கோயில் வழிபாடு குறைவில்லாது நடைபெறும் பொருட்டு நெற்காணிகளை மன்னவன் வழங்கி ச் சாசனம் செய்து கையளித்தான். சோழநாடு இருந்து வந்த அந்தணர்களை அழைத்து, ஆலய வழிபாட்டின் பொருட்டு வீரர்முனையில் இருக்கப் பணித்ததுடன், *"உங்கள் இளவரசியின் பெயரினல் நீங்கள் இனிச் சீர்பாத குலத்தவரென்று அழைக்கப்படுவீர்கள்” என்று கூறி வெற்றிக்கொடியை விருதாக வழங்கினன். வணி கர்களை அழைத்து 'நீங்களும் வினயகர் கோயில் விளங்க இங்கு ஒற்றுமையாக வாழுங்கள்’’ எனக் கூறினன்.
கோயிலுக்கும் சீர்பாதகுலத்தவருக்கும் விளை நிலங்களை மானியமாக வழங்கி மன்னவனும் சீர்பாத தேவியும் தலைநகரினுக்குச் சென்றர்கள். இந்த வரன் முறையினைக் கூறும் செப்பேடு திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயிலில் சேமிக்கப்பட்டது. ஆதலினல் இது திருக்கோயிற் செப்பேடு என வழங்கப்பெறுகிறது. இத்தகைய திருக்கோயிற் செப்பேடுதான் இது.
1. திருவளர் கயிலைச் சிவனருள் புரிய
மருவள ரிலங்கை மன்னனும் வால சிங்க னென்னும் சிறந்த பேருடையான் சித்துவித்தையில் செகமெச்சிய தீரன்
2. கலைஞானம் அறுபத்துநாலும் கற்றுத்தேறினேன்
இருக்கு யசுர் சாமம் அதர்வமெனும் வேதம் நான் கும் விரும்பி யுணர்ந்தோன் கமண குளிகையின் கார சக்தியால் நாணு தேசவள விகற்பங்களை நன்ரு ய் அறிந்தோன் ஈழ தேசமெனும்
3. இலங்கா புரிக்கு இராச தானியென
*கண்டிமா நகரை கனம்பெற வகுத்து செங்கோல் செலுத்தி தேசத்தை யாளுகையில் மன்னனு மப்போ மணஞ்செய்யக் கருதி
* கண்டி எனப்பட்டது தலைநகரான சிங் ைநகரினையாகும். முன் ஞளில் தலைநகரைக் கண்டி என அழைப்பது வழக்கமாகும்.
سس۔ 3 5 سس

Page 42
துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி மன்னு சோழன் மாதவப் புதல்வியை மணமாலை சூட்டி மகிழ்ந் திருக்கையில் இராசனும் தன் பவனகிய இராணியாம் அம்மா ஞடன் சனங்களையும் சேர்த்து சந்தோச மாக தென்னிலங்கா புரி
சேர விரும்பி ஆரியநா ட்டு அந்தணர் தம்மில் அச்சுதனையங்கார் அவர் மனைவி செந்திரு மாது தேவியா ருடன் திருவெற்றி யூரின் சிவனடி மாறவ சந்திர சேகர சமய தீட்சதர் தையலால் பார்வதி கட்டு மாவடி கண்ணப்ப முதலி முத்து நாயக்கன் முதலி யோருடன்
குடி மக்களைக் கூட்டிச் சேர்த்து கப்ப லோட்டக் கைதேர்ந் தவரில் சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி இவர்களை ஏற்றி இராசனு மிராணியுமேறி தென்னிலங்கா புரி திசைநோக்கி வருகையில் திரிகோணமலை திரைகடல் நடுவில்
கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது நின்றிடும் கப்பலை கண்டது மரசன் காரண மேதென கண்டறி வீரென் ஏவ லாளர் இறங்கி பார்க்கையில்
ஐந்து கரமும் யானை முகமும் அங்குச பாசமும் தாங்கிய கையுடன் எங்கள் பிரான் எழுந்தருளி யிருக்கிருரென அவ்வுரை கேட்டு அரசனும் திகைத்து அந்தணர் தங்களை அன்புடன் பார்த்து ஐயனே நீங்கள் ஆழியி லிருக்கும் மெய்யனை கப்பலில் விரைவுடன் சேரென அவ்வார்த்தை கேட்டு அந்தண ரானேர்
கண்ணிர் சொரியக் கசிந்த மனதுடன் வெள்ள மதம்பொழி வினயக பிரான உள் ளன்புடன் ஊக்கமாய் நின்று கணேசன வாவென கைகூப்பித் தொழ
ー54ー

0.
II.
12.
13.
l 4.
1 5 .
6.
அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல் திருவடி தன்னை சீக்கிரம் காட்ட கடலி லிருந்த கருன கரனின் பாதார விந்தம் பற்றி சேர்ந்தனர்
பற்றிய பொழுது பாராளு மன்னன் சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி ஐந்து கரனே இச்சிந்து யரத்திரையில் உன்திரு வடிகாண எத்தவம் புரிந்தோம் எத்தினே மென்று இறைஞ்சி பணிந்து கருணு கரனே இக்கப்ப லானது
கண்டி மாநகர் கரையை யடைந்தால் ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி பூசை செய்விப்பேனென பூபதி போற்றினுன் இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப
கணேச னருளால் கப்பலு மோடி சம்மாந் துறை சார்ந்திடு நகரம் வீரர் முனையென விளம்பிய திக்கரை கப்பல் சேர கண்டு எல்லாரும் கப்பலை விட்டு கரையி லிறங்கி
தச்சர் சித்தர் தட்டார் முதலிய குடி மக்களை கோவு மழைத்து ஐங்கரக் கடவுளுக்கு ஆலய மொன்று சீக்கிர மமையெனச் செலவு கொடுக்க
அரச னுரைப்படி ஆலயம் அமைத்தார் அந்தண ராதியோர் அபிசே கித்து வினயகப் பெருமான வீழ்ந்தடி பணிந்து கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார்
கண்டி யரசன் கணேசப் பெருமானை சிந்து யாத்திரையுள் திருவடி கண்டதால் சிந்து யாத்திரை பிள்ளையார் நாமத்துடன் நித்திய பூசை நியமமாகச் செய்து விஞயக ராலயம் விளங்கிடும் பொருட்டு செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்
سیسمس 5 سس

Page 43
17. தேவால யத்தின் திருப்பணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் தங்களை அரச னழைத்து பாசாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனுல் சீர்பாத தேவியின் திருப் பெயராற் சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி
18. அரசற்கும் தேவர்க்கும் அரும் விருந்தான வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து வணிகர் தம்மையும் வரும்படி செய்து இருசாதி யாரும் இசைந்தெக் காலமும் ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து
19. எழுத்தைப் பரராசன் இவர்களுக் கீந்து
குடி மக்களால் கோயில் சிறக்க சாதிக் காணிகள் சகலருக்கும் கொடுத்து செங்கோல் வேந்தனும் தேவியு மாக கண்டிமா நகரைக் கனம்பெற வடைந்தார்.
. GISTäG STILLņji3FT?Dj GFÉIGLI
சோழநாட்டு இளவரசி சீர்பாத தேவியுடன் துணையாகவந்த சோழநாட்டு மக்களை, சிந்தாத்திரன், காலதேவன், காங்கேயன், நரையாகி, வெள்ளாகி, முடவன், பெண்பழச்சி, என்னும் தலைவர் தலைவி களைக்கொண்டு அவர்களது பெயர்களினல் ஏழு குடி களாக வகுத்து, ஒற்றுமையாக வாழுங்களென்று சாசனம் செய்து மன்னவன் கையளித்தான்.
இந்த வரன்முறையினைச் சொல்லும் செப்பேடு கொக் கொ ட் டி ச் சோலை தான் தோன்றி ஈசுவரர் கோயிலில் சேமிக்கப்பட்டுள்ளது. அதன் பயணுக இச் செப்பேடு கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு என்று வழங்கப்படுகிறது. இத்தகைய கொக்கொட்டிச் சோலைச் செப்பேடுதான் இது. " . .
-س-56-م

துரை பேர் வீர கண்டன் சிந்தாத்திரன் காலதேவன் காங்கேயன்
நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழகாண்
வரையாக இவர்களையும் வகுத்துவைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து சீர் பாதமென்று செப்பினுனே. .
உ. துறைநீலாவனைச் செப்பேடு
சோழமன்னவனின் ம க ளா ன மாருதப்பிர வல்லியினுக்கு குதிரைமுகச் சாயல் படிந்திருந்தது. இச்சாயலைப் போக்கத் தமிழ்நாட்டிலுள்ள புனித நீரூற்றுக்களில் நீராடினள். பயனே கிடைக்கவில்லை . ஆகவே ஈழநாட்டிலுள்ள புனித நீரூற்றுக்களில் நீராடவென்று ஈழத்தினுக்கு வந்தாள். கந்த வேளின் தீர்த்த நதியான மாணிக்க கங்கையில் நீராடி ஆலயத்தில் பழிகிடந்தாள்.
ஒர்நாள் இரவு கந்தவேள் அவளது கனவிற் தோன்றி நாகநாட்டிலுள்ள கீரிமலை நீரூற்றில் மூழ் கினல் குதிரைமுகச் சாயல் நீங்கும் எனக் கூறியருளி ஞர். அதன் பயணுக மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்து புனித நீரூற்றில் நீராடலானள். அதன்பயனக அவளது குதிரைமுகச் சாயல் நீங்கியது. W
தனது குதிரைமுகச் சாயலினைக் கந்த வேள் நீக்கியதனுல் கீரிமலைச்சாரலில் கந்தவேளினுக்கோர் ஆலயம் எடுக்கலானள். ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கந்த வேளின் உருவச்சிலையதனை அனுப்பிவைக்கும்படி தந்தைக்கு ஒலை போக்கினுள்.
மாருதப்பிரவல்லியின் வேண்டுதலுக்கிணங்கச் சோழமன்னவன், கந்தவேளின் கனகச்சிலையதனை
ー57ー

Page 44
அனுப்பிவைத்தான். கந்த வேளின் சிலையை ஆலயத் தில் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தினுக்கு மாவிட்ட புரம் எனப் பெயர் சூட்டினள்.
கதிரைமலையிலிருந்து செங்கோல் செலுத்திய உக்கிரசிங்க மன்னவன், மாரு த ப் பிர வல்லியைக் கண்டு காதலித்துக் கடிமணம் செய்துகொண்டான். இவர்களது இல்லறத் தி ன் பயணுக வாலசிங்கன் என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தனர்.
வாலசிங்கன் வளர்ந்தான். ஆயகலைகள் அனைத் தையும் கற்றன். நான்கு வேதங்களையும் முறையாக ஒதினன். முனிவர்களது ஆசியினல் வான்வழியாகச் செல்லும் அபூர்வ சக்தியையும் பெற்றன்.
தந்தைக்குப்பின் தனயன் என்றவகையில் வால சிங்கன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான். சோழமன்னனன குமராங்குசனது மகளான சீர்பாத தேவியை முறைப் படி வாலசிங்கன் மணந்தான். சோழநாட்டிலிருந்து மன்னவன் வாலசிங்கன் சீர்பாத தேவியை அழைத்துக்கொண்டு திரும்பும் போது, சோழமன்னன் பலரைத் துணைக்கு சேர்த்து அனுப்பி வைத்தான்.
பழையாறை, திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னுமிடங்களில் வாழ்ந்த சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும் அவர் களது மனைவிமார்களும், கண்ணப்பமுதலி, முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சந்திரசேகர ஐய்யங்கார், அச்சுத ஐய்யங்கார் என்பவர்கள் கப்ப லில் ஏறினர்கள். கூடவே சீர்பாத தேவியும் மன்னவன் வாலசிங்கனும் ஏறிக்கொள்ளக் கப்பல் கடலில் விரைந் திதி.
கிழக்குக் கரைவழியாகச் சென்ற கப்பலானது, திரிகோணமலையிலுள்ள கோணேசுவரன் கோயிலுக்கு முன்னர் எந்தத் திக்கும் நகரமுடியாதவாறு நின்று விட்டது. கப்பல் நிற் கும் காரணத்தைக் காண மன்னவன் பணித்தான்.
-58

கடலில் குதித்தவர்கள் விஞயகரது திருவுருவ மொன்றிருக்கக்கண்டு, கைதுரக்கிக் கப்பலில் சேர்த் தார்கள். வினயகப் பெருமானைக் கண்ட சீர்பாததேவி கைகூப்பித் தொழுது ‘இக்கப்பலானது தங்குதடை யின்றி ஒடி எங்கு கரைதட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்' என வேண்டினள். அதற்கேற்பக் கப்பலும் ஒடலாயிற்று. கடல் வழியாகச் சென் ற கப்பல் மட்டக்களப்பு வாவியிலே புகுந்து ஓடி வீரர்முனை என்னுமிடத்தில் கரைதட்டி நின்றது.
கப்பலில் வந்த அனை வரும் வீரர்முனையில் இறங்கினர்கள். சீர்பாத தேவி கப்பலில் வந்த தன் நாட்டு மக்களை வீரர்முனையில் வினயகருக்குக் கோயில் எடுக்கப் பணித்தாள். வீரர்முனைக்கு அயலில் வாழ்ந்த மக்களைக் கோயிற்பணிக்கு உதவும்படி மன்னவன் கட்டளையிட்டான்.
அனைவரது உழைப்பினல் வீரர் முனையில் நவ மான கோயில் வினயகருக்கு எழுந்தது. வினயகரை எழுந்தருளச் செய்து சிந்து யாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர்சூட்டி மன்னவன் பெருவிழா எடுத்தான்.
சோழநாட்டு மக்கள் அனைவரையும் கோயில் வழிபா ட்டின் பொருட்டு ச் சீர்பாத தேவி வீரர் முனையில் குடியிருத்த மன்னவன் அவர்களைச் சீர்பாத குலமாக வகுத்து அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறித்த விருதினையும் வழங்கி அரசகுலத் தவரெனச் சாசனம் செய்து கையளித்தான்.
தன் பெயரினல், தன் நாட்டுமக்கள் சீர்பாத குல மாக வகுக்கப்பட்டதனல் மகிழ்வுற்ற சீர்பாத தேவி, சோழகுலத்தின் பழமைமிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்கவேலினையும் கையளித்தாள்.
மன்னவனது விருப்புப் படி ஒற்றுமையாக வாழ்ந்த சீர்பாதகுலத் தலைவர்களுள்ளே கருத்து
一59一

Page 45
வேற்றுமை எழுந்தது. அதன் பயனுகச் சிந்தன் என்ட வன் பழமைமிக்க தங்கவேலினை எடுத்துக்கொண்டு வழிநடந்தான். முடிவிலே வே லினத் தில்லைமர மொன்றிலே சொருகிவைத்து கொத்துப்பந்தலிட்டுத் தில்லைக் கந்தன் எனப் பெயர் சூட்டினன்.
சீர்பாத குலத்தவருக்கு உரிமையான மண்டூர்த் தில்லை முருகன் ஆலயத்தின் அர்ச்சகராகச் சிந்தனே* அமர்ந்தான் பல ஊர்களுக்குச் சென்று சீர்பாத குலத்தவர்கள் குடியேறியதனுல் குடிமரபு முறைகளும் வகுக்கப்பெற்றன. பூணுரல் பூணும் தன்மையும், அரச சின்ன விருதுகொண்ட சீர்பாதகுலத்தவரின் சிறப்பு கள் வானளாவப் பரந்ததாகும்.
இந்த வரன்முறையினைக் கூறும் செப்பேடு துறைநீலாவணைக் கோ யி லில் சேமிக்கப்பட்டது. ஆதலினல் துறைநீலாவணைச் செப்பேடு என்று வழங் கப்பெறுகிறது. இத்தகைய துறைநீலாவனைச் செப் பேடுதான் இது. -
சிந்து யாத்திரைப் பெருமானும் சீர்பாததேவியும்?
1. பரத கண்டத்தில் பண்புடை அரசராய்
தரமுட னண்ட சற்சன சோழன் தவப் புதல்வியாக தரையினிற் செனித்த நவமணி நேரும் மாருதப் புரவீக வல்லிதன் குதிரை வதனம் மாற
* சிந்தனின் பரம்பரையினரே இன்றும் தில்லை மண்டு முருகனின்
ஆலயத்தில் அர்ச்சகராக இருந்துவருகிறர்கள்.
இச்செப்பேட்டினை இலங்கை நூதனசாலையின் ASSt Ethnology to the Director gast Li Biu Tibbu 55. 6Tit. 14. J 1 saur ai atasir gTgsorsia)uni) Gsubj555i Lsi SPOLIA ZEYL ANICA Wol : 27 Part 1 என்னும் நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 24-10-1953ஆம் நாள் வெளியிட்டுள்ளார். திரு. இராகவன் இச்செப்பேடு துறைநீலாவனை என்னும் ஊரில் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-60 -

எல்லையிற் தீர்த்தம் இந்தியா முழுதும் படிந்து திரிந்து பயணில தாக வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென மன்றலங் குழலி வந்தனள் லிலங்கை கந்தன் கழலடி காரிகை வணங்க ந்தை யாக விரும்பும் நாகநன் நாடதை நண்ணி நகுலநன் மனையின்
மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வுந்தன் முற்பவ வினையால் தழுவிய குதிரை சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லியல் கனவில் உளம துருக உவப்புடன் கண்டு
கீரி மலையை கிட்டியே செல்வி நீரினில் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னை அறிந்திடு மாது மெச்சிட ஒற்றரை விரைவினிற் றன் உச்சித மாக உவப்புட னனுப்பினள்
அச்சம தில்லையென அரசன் விருப்புடன் கந்த னுருவக் கனகச் சிலைதனை விந்தைய தாக விரைவுட னனுப்ப கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு மெச்சிட ஒற்ருர் விட்டனர் படகை ጳት அவ்விடந் தனில் ஆயிழை வந்து செவ்வைசேர் காங்கேயன் திருவுரு வந்தனை நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு
தகமை சேர் கோயில் தையலாள் இயற்றி கொடித்தம்பம் நட்டு குற்றமில் விழாவை துடியிடை மங்கை சோர்வுறச் செய்து காரண நாமம் களறின ளப்போ
பாரதி லென்னை பற்றிய தீய மாமுக வடிவம் மாறின தாலே மாமுக லுறைவது மாவிட்ட புரம் காங்கேய னுருவது கரைசேர் இடம் காங்கேயன் துறையென கழறியே மீண்டு தாய்நா டேக தையலாள் இருந்தாள்
سسیس۔61 مسس

Page 46
10.
I l.
12.
ஒயாப் புகழ்சேர் உக்கிர வீர சிங்க னறிந்து தெரிவையை வேட்டு மங்கா வால சிங்கமென மகவைத் தரைதனி லீன்ருள் தற்பர னருளால்
உரைதரு பூர்வ உச்சித மதியென சிங்கன் வளர்ந்து தேர்ந்தனன் கலைகள் துங்கமார் தவசிகள் சூழும் ஆச்சிரமம் துணிவுடன் சென்று தொழுதவர் பதத்தை அணியனு மசியும் ஆகாய கமனமும் பயின்றினி திருந்தான் பார்த்திபன் மிக்க வைர உடலும் மாற்ருர் போற்றும் வாலைநற் பருவமும் வாய்த்திடு தன்மையால் வால சிங்கனென வழுத்தின ருலகோர் அன்னன் இலங்கையை யண்டியே கண்டி
நன்னகர் தன்னை நலியாது பிடித்து அரசராய் பலகால் அமர்ந்தினி திருந்து தரமுடன் மன்றல் தான் செய்ய எண்ணி சோழ அரசனின் தூமணி யான ஆழியி னமிர்தம் அதுநிகர் சீர்பாததேவியை விதிப்படி மணந்து விளங்கிடும் நாளில்
மதிமுக நங்கை மன்னனடி பணிந்து காதல நினது கார்வள நாடெனும் மாதல மனைத்தும் மகிழ்ந்து காட்டுவீரென அரச னதற்கு அண்டியுன் பிதாவை
வரமது கேட்டு வருகுவீ ரென்று கூறியே மன்னன் குறுகினன் குருசில்
சீர்பாத தேவி சேர்ந்துதன் தந்தைபால் ஏரார் இலங்கை ஏகிடச் செலவு பெற்ருள் படகிற் பேருவுவகை யாகி
உற்ற துணையால் உயிரின் தோழி வெள்ளாகி யெனும் மெல்லியள் தன்னுடன் இல்லாளர் ஊழியம் ஜெயமதில் நகர் கூக்க திருவொற்றியூர் கட்டுமாவடி பெருந்துறை நற்றவ நகரில் நலம்பெற வதியும் அரசர் வினைபுரி அருளுடை மேலோர்
* கனடி எனப்பட்டது சிங்கை நகரையாகும்.
ー62ー

13.
4.
15.
வரனுறு சிந்தன் பழையன் மருவும் காங்கேயன் காலதேவன் எனவோர் பாங்காய் அவரவர் பண்மொழி யாளுடன் மேயின ரன்றி வேளாள மரபோர் ஆயின ரவ்வினை அறையுதல் விளையின் கார்வள நாட்டின் கண்ணப்ப முதலி பேர்வள முத்து நாயக செட்டி சமய தீட்சதர் சதாசிவ செட்டி அமர்புகழ் சந்திர சேகர ஐயங்கார் அச்சுத ஐயங்கார் அரிவை பார்வதி பிள்ளை கச்சனி லட்சுமி கவினுடையாருடன் கன்னிகை ஒடம் களிப்புடன் ஏறினள் ஒதையின் வேகத்தால் உந்தியி லோடி
மாதவர் போற்றும் வளம்பெறு கோணேசர் கோயிலே குறியாய் கோதையா விருந்தாள் பாயுறு மோடம் படர்ந்திலை யப்பால் அரசி மின்னிடை கண்டருந் துயராகி கர மைந்துடை, கணேசனை நினைந்து சிந்தநீ படவின் கீழ் சென்று பாரென சிந்தினுள் சிந்தனும் சென்றன னப்போது ஐந்து கரமுடைய ஐயன் திருவுருவம் பந்த மகன்ருன் பார்வைக் கெட்ட உள்ளது சிந்தன் உரைத்தன னக உளமிகப் பூத்து உம்பர்தம் நாயகனை பணிந்து தூக்கி படவினில் வையென கனிந்த விருதயம் கணேசனை யாளும் ஆகு வாகனனை அன்பர்க் கெளியனை ஏகிட வந்த இன்பப் படவதிற் இருத்தினர் நின்ருேர் இன் கவி பாட
மருவிடை அன்னம் மற்றது சொல்லும் வாவி நிற்கும் வனிதை என்படவு தாவியே ஒடி தரையிடைச் சேர்ந்தால் தட்டிய இடத்தில் சார்பத மாக கட்டிதல் லாலயம் கணேசனை யிருத்தி விழாக் கொண்டாடிச் சேவித்தும் யாமென வளர்விலா வாய்மை சாற்றிய பின்னை ஒடமு மோடி உறுபுகழ் நீங்கா நீடும் மட்டக் களப்பின் கரையால் வளமிகு வீரர் மாமுனை எனுமிடத்து
-63

Page 47
16.
17.
I 8.
19.
20.
21.
அழகர் படவு அடங்கலும் அம்மை ஐங்கரக் கடவுட் காலய அமைத்து துங்க முடனே சொல்லருள் நிதியும் கிண்ணறை யம்வெளி தரவை முன்மாரி தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும் செந்நெல் காணியும் சேயிழை யுதவி விழாக் கொண்டாடி விருப்புட னங்கு
நாளும் திருப்பணி நலமுடன் புரிய ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி விருதென வீந்து விருப்புடன் தேவியின் திருபெய ரென்றும் மறவாது வழங்க சீர் பாதத் தோரெனச் சீரிய நாமம் பேர்பெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி
கோயி லூழியம் குறைவிலா தியற்ற
ஆயநான்கு மரபோர் ஆணையிற் படிந்து தான் துதி வேலை தரணியிற் துதிக்க பான்மொழி யீந்து பத்தா வுடன் கண்டியினை யடைந்து கருணையே ததும்ப அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினள் தாய்நாடு சென்று தவமணி யனையாள் ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக அரசியின் கட்டளைக் கமைந்து நடந்த
வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ தங்க வேலதை தண்ணளி யுடனே மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து வடக்கை நோக்கி வந்தோ ரிடத்தில் திடமுடன் தில்லை மரத்தில் வைத்து அங்குள பதியின் அமர்ந்தோர்க் குரைத்து துங்கமுட னவர்களை துணைவராய்க் கொண்டு கனகவேற் பணியை களிப்புட னெடுத்து மனமுடன் கொத்து மண்டப மமைத்து
தில்லைக் கந்தனென திருநாம மிட்டு
வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து உரிமை உங்கட்கு உளதென் ருேதினன் வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய் கந்தனுக் கினிய கடிமலர் தூவலும் வந்தவர் பூசையை வளிகொடு நடத்தலும் திருவார். சிந்தனின் செம்மை வங்கிசமே
--4 6-س-

22.
24.
ர்ே பாததேவியின் பேரால் திகழு மரபினர் எல்லிடை யெண்ணி புதுவுயர் மரபோர் வாழும் போதினில் வகுத்தார் தலைவர் கேழும் யாரெனக் கிளத்து மிங்கு ஒந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன் நரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி படையன் பரதேசி பாட்டு வாழி உடைய னருளினன் உத்தம ஞானி ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி வாகு மரபுடன் வதியச் செய்தனர்
நான்கு வருணமும் நலமுடன் பூனூல் தான்மார்பி லணியும் தன்மை யுடையார்
வில்வீர ரன்றி வேருேர் பூனூல் இப்புவி தனில் இடாரென மதித்து
பூனுரல் அணிந்த பொற்புறு அரசரை
அந்நூ லணிந்த அந்தண ரென்று
கூறுவ தன்றிக் குவலய மதில் அரசியின் குலமென அழைப்பது சாலும்
தரமுறு செங்கோல் தகைமைக் கொடி
அரவிந்த மலரும் அமைந்த மையால்
மங்கலப் பொருளாய் வளங்கிடு மிருகையும் துங்கமுடன் பெற்றுத் துலங்கவே
அரசர்க் குரிய அறுதொழில் தவழ மரபுட னற்றி வருவ தென்று மன்னியே வாழும் சீர்பாதத் தோர் மனுகுலமென வகுத்தார்.
- 65

Page 48
சீர்பாதகுல ஆராய்ச்சி
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர், வெகு ஆண்டு காலமாக வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலை நிமிர்ந்து நின்றது. அதன்பயணுக வடக்கு ஈழம் நாக நாடு என்னும் பெயரைப் பெற்றுச் சீரும் சிறப்பு மாகத் துலங்கியது.
கிறிஸ்துவிற்குப்பின் நாகப் பேரரசு தனது வலிமையை இழந்தது. கிறிஸ்துவிற்குப்பின் நாலாம் நூற்ருண்டு தொடக்கம் ஏழாம் நூற்ருண்டுவரை நாகப்பேரரசு நாக அரசாக வலிமை குன்றியது.
கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்ருண்டில் நாகநாட்டு அரசர்கள் சிலகாலத்தில் தனி அரசர் களாகவும், சிலகாலத்தில் அனுரதபுரத்து மன்னர் களது ஆணைக்குக் கட்டுண்டும் செங்கோல் செலுத்தி ஞர்கள். காலத்துக்குக்காலம் ஏற்பட்ட பல்லவ மன் னர்களது படையெடுப்பினல், அவர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாகவும் ஆட்சி செலுத்தி ஞர்கள்.
எட்டாம் நூற்ருண்டின் இறுதியில் பல்லவ மன்னர்களது வலி மை குன்றி யது. அதேபோல் அனுரதபுரத்து மன்னர்களது வலிமையும் குன்றியது. அதன்பயணுக வடக்கு ஈழத்திலே தலைநிமிர்ந்து நின்ற நாகநாட்டில் அவர்களது ஆணை செல்லாதொழிந்தது.

இக்காலையில் நாகநாட்டு அரசகுலச் சந்ததி யினரும் அற்றுப்போனர்கள். நாக அரசை நிலை நிறுத்த நாக அரசகுலத்துத் தோன்றல்கள் இல்லாது போனதை விசயனுடன் வந்த கலிங்கர் குடியேறிய அண்ணியபுரத் தலைவனுன உக்கிரசிங்கன் என்பவன் கேள்வியுற்ருன். கிறிஸ்துவிற்குப்பின் 795ம் ஆண்டு உக்கிரசிங்கன் பெரும் படையுடன் சென்று நாக நாட்டைக் கைப்பற்றிக் கதிரமலையைத் தலைநகராகக் கொண்டு ஆணை செலுத்தலானன்.
இக்காலையில் சோழகுலத்து அரசகன்னிகை யான மாருதப்பிரவல்லி, தீராத குன்ம நோயினல் பீடிக்கப்பட்டு வருந்தினுள். எந்த வைத்தியனுலும் அவளது குன்மநோயினை நீக்கமுடியாது போயிற்று. வைத்தியர்களின் மூலிகை களு க்கு நோய் கட்டுப் படாததனல், இறைவனது பெருங்கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். தமிழ் நாட்டிலுள்ள புனித நீரூற்றுக்களில் நீராடிக்கொண்டு வருகையில், சாந்தலிங்கம் என்னும் சன்னியாசியைக் கண்டு தன் மனக் குறையினை முறையிட்டாள்.
மாருதப்பிரவல்லியின் நிலைமைக்கு இரங்கிய சாந்தலிங்கம் 'ஈழத்தின் வடக்கேயுள்ள நாகநாட் டிலே கீரிமலை என்ருெரு மலை இருக்கிறது. அதனடி வாரத்தில் உப்புநீரினுள் சுத்தநீர்ப் புனித தீர்த்த மொன்றிருக்கிறது. புனிதமான கீரிமலைத் தீர்த்தத்தில் சிலகாலம் நீராடி வருவாயானுல் இந்த நோய் நீங் கும்' என்று கூறினர்.
சாந்தலிங்கச் சன்னியாசியின் சொற்படி மாரு தப்பிரவல்லி தன் பரிவாரங்களுடன் தமிழ்நாட்டி லிருந்து கப்பலேறிக் கீரிமலையில் வந்திறங்கினள்.
கீரிமலையில் வளவர்கோன் பள்ளத்தினுக்கணித் தாய் ஒர் இடத்தில் கூடாரமடித்துத் தங்கிக்கொண்டு
-67

Page 49
கீரிமலைப் புனித நீரூற்றில் நீராடிக்கொண்டுவந்தாள். இந்த வரலாற்றினை யாழ்ப்பாண வைபவமாலையில், ** சோழ தேசாதிபதியாகிய திசை உக்கிரசோழன் மகளான மாருதப்பிரவல்லி என்பவள், தனக் கிருந்த குன்மநோயினல். மெலிந்தவளாய், வியா தியை வைத்தியர் ஒருவரும் சுகமாக்க முடியாத தணுல் 'இனித் தீர்த்த யாத்திரையாதல் செய்து பார்த்தால் சுகம்வரவுங் கூடும்’ என்றெண்ணிக் காவிரிப்பூம் பட்டணத்திலிருந்து புறப் பட்டு அங்குமிங்கும் போய்த் தீர்த்தமாடிவருகையில் சாந்தலிங்கமென்னும் ஓர் ச ன் னியா சி யை க் கண்டு 'உன் வியாதி பண்டிதர் ஒருவராலும் குணமாக்கத்தக்கதன்று. நீ இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம்தரத்தக்கது. இலங்கை யின் வடமுனையிலே கீரிமலை என்ருெரு மலையுண்டு. அது சமுத்திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சல மத்தியிற் சுத்த தீர்த்தங்கலந்த உத்தம தீர்த்தம் ஒன்றுண்டு. அது உலகத்திலுள்ள எந்தத் தீர்த் தங்களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கிறது. அதில் நீ போய் நீராடிச் சில காலந் தங்கி இருந்தாற் சு க ம டை வாய்' என்று சொல்ல மாருதப்பிர வல்லி புறப்பட்டு தா தி மா ரு ந் தோழியருஞ் சூழ்ந்துவரக் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி குமா ரத்தி பள்ளம் என்னுமிடத்திற் பாளையம் போட் டுக்கொண்டிருந்து தீர்த்தமாடிச் சிவாலய தரி சனஞ் செய்துவந்தாள். சில காலத்தில் அவளுக் கிருந்த குன்மவலியும் தீர்ந்தது. குதிரை முகமும் மாறியது என்று கூறப்பட்டிருக்கிறது.
திரு. ஆ. முத் துத் தம் பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில்,
'சோழராசன் புத்திரியாகிய மாருதப்பிரவல்லி தனக்குற்ற குதிரை முகமென்னும் நோயின ல்
-68

வருந்துங்காலத்தில் கீரிமலையிலுள்ள சிற்ருற்றில்
ஸ்நானம் செய்யின் அந்நோய் நீங்குமென்று
ஒரு முனிவர் சொல்ல, அவ்வாறே தன் பரிவாரங்
களுடன் சென்று, அத்தீர்த்தத்தில் ஸ்நானம்
செய்து அந்நோய் நீங்கப்பெற்ருள்' என்று கூறியுள்ளார்.
சீர் பாதகுல வரலாற்றைக் கூறும் துறைநீலா
வணைச் செப்பேட்டில்,
1.
பரத கண்டத்தில் பண்புடை அரசராய் தரமுட னண்ட சற்சன சோழன் தவப் புதல்வியாக தரையினிற் செனித்த நவமணி நேரும் மாருதப் புரவீக வல்லிதன் குதிரை வதனம் மாற
எல்லையிற் தீர்த்தம் இந்தியா முழுதும்
படிந்து திரிந்து பலனில தாக
வடிவேற் பெருமான் வைகிய கதிரை சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென மன்றலங் குழலி வந்தன லிலங்கை கந்தன் கழலடி காரிகை வணங்க விந்தைய தாக விரும்பும் நாகநன் நாடதை நண்ணி நகுலநன் மலையின்
மாடே தெற்காய் மல்கும் நதியில் முழுகிட வுந்தன் முற்பவ வினையால் தழுவிய குதிரை சாயல் தீர்ந்து விளங்குவா யென்று மெல்லியல் கனவில்
உளம துருக உவப்புடன் கண்டு
கீரி மலையைக் கிட்டியே செல்வி நீரினில் படிய நீத்தது மாமுகம் அச்செயல் தன்னை அறிந்திடும் மாது மெச்சிட ஒற்றரை விரைவி னிற்ருன் உச்சித மாக உவப்புட னனுப்பினள்'
என்று கூறப்பட்டிருக்கிறது.
-69

Page 50
யாழ்ப்பாண வைபவமாலை மாருதப்பிரவல்லி யின் தந்தை சோழ தேசாதிபதியான திசை உக்கிர சோழன் என்று கூறுகிறது. திரு. முத்துத்தம்பிப் பிள்ளை தனது யாழ்ப்பாணச் சரித்திர நூலில் சோழ ராசன் புத்திரி என்று கூறுகிருர், சீர்பாதகுலத்துத் துறைநீலாவணைக் கல்வெட்டில் சற்சன சோழனின் மகள் மாருதப்பிரவல்லி என்று கூறப்படுகிறது.
இக்கூற்றுக்களுக்கு ஒர் முடிபு காண்பதுபோல்
சரித்திரம் என்னும் நூலில்,
இந்தியா வினெரு பகுதியினின்று தன் பரிவாரங் களுடன் தீர்த்த யாத்திரை காரணமாகக் கீரி மலைக்கு வந்து குமாரத்தி பள்ளம் என்னுமிடத் தில் பாளை யம டி த் துக் கீரிமலையில் நீராடிக் கொண்டு தன் பாளையத்துக்கணித்தாய் கந்த வேலுக்கோர் கோயில் எடுப்பித்தாள்’’ என்று கூறுகிறர்.
ஓர் அரசகன்னிகை. ஆனல் அவள் திசை உக்கிர சோழன் மகளோ அல்லது சற்சன சோழன் மகளோ என்பது மேலும் ஆராய்ச்சியினுக்குரியதாகும். ஏனெ. னில் கிறிஸ்துவிற்குப்பின் மூன்ரும் நூற் ரு ண் டு தொடக்கம் எட்டாம் நூற்றண்டுவரையுள்ள சோழர் காலம் இருள் சூழ்ந்த காலமாகும். இக்காலையில் சோழநாட்டைப் பங்குபோட்டுக்கொண்டு, பல சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்தியிருக்கிருர்கள். ஆனல் இவர்களைப்பற்றிச் சோழர் வரலாருே அல்லது தமிழ் நாட்டு வரலாறே எதுவுமே கூருது மெளன மே சாதிக்கிறது.
இக்காலையில் சோழர்கள் சிற்றரசர்கள் போல் ஒடுங்கி வாழ்ந்தார்கள். இருள் சூழ்ந்த சோழர் வர
سیا۔ 70 : حس۔

லாற்றினுக்கு ஒர் கலங்கரை விளக்குப்போற்ருன் கி. பி. 831ம் ஆண்டு குமராங்குச சோழன் பழை யாறை அரியணையில் அமர்ந்தான். குமராங்குச சோழனுக்குப்பின்னர்தான் சோழ வளநாடு மா பெரும் வல்லரசாக எழுந்தது. சோழர்களது பெருமை கடல்கடந்தும் பரவியது.
குமராங்குச சோழன் அரியணையில் அமர் வதற்குமுன்னர் சோழநாடு சிதறுண்டு கிடந்தது. பல மன்னவர்கள் குறுநில மன்னவர்கள்போல் ஆணை செலுத்திக்கொண்டிருந்தார்கள். ஆகவே சோழ நாட்டின் ஒர் பகுதியினைச் செங்கோல் செலுத்திய ஒரு தே சாதிபதி யின் மகளாகத்தான் மாருதப் பிரவல்லி பிறந்தாள். அந்தத் தேசாதிபதியின் பெயரினைத்தான் வரலாற்று ஏடுகள் மூடி மறைத்து விட்டன. எப்படியாயினும் மாருதப்பிரவல்லி சோழ குலச் சிற்றரசன் ஒருவனின் மகளாகுமென்பதில் ஐயமின்று.
மாருதப்பிரவல்லிக்கு குதிரை முகச் சாயல் இருந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலையிலும், திரு. முத்துத்தம்பிப்பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித் திரத்திலும், சீர்பாதகுலத் துறைநீலாவணைச் செப் பேட்டிலும் கூறப்படுகின்றன. ஆனல் முதலியார் இராசநாயகம் தனது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் மாருதவல்லி தீர்த்த யாத்திரையின்பொருட்டு கீரி மலைக்கு வந்தாளென்று கூறுகிருர். ஆதலினல் மாருதப்பிரவல்லிக்கு எந்தவகையான நோயுமில்லை யென்பது முதலியார் இராசநாயகத்தின் கருத்தா கும். ஆனல் யாழ்ப்பாண வைபவ மாலையில் மாருதப் பிரவல்லிக்கு குன்ம நோயும், குதிரை முகச் சாய லும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் சாந்தலிங்கம் என்னும் சன்னியாசியைச் சந்தித் ததின் பயனகத்தான் மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்தாள். தமிழ் நாட்டில் தீர்த்த யாத்திரையை மாருதப்பிரவுல்லி மேற்கொண்டது தனது நோயி

Page 51
னைத் தீர்க்கவேதான். கன்னிகையான் மாருதப் பிரவல்லி, அதிலும் வாழ்க்கையில் ஈடுபடாத அரச குலத்துக் கன்னிப்பெண் தீர்த்த யாத்திரையை மேற் கொள்வத்ாயின் ஏதாவது காரணமும் இருந்துதா ணுகவேண்டும். அந்தக் காரணம் வைத்தியர்களால் குணமாக்கமுடியாத நோய் பீடித்திருந்ததேயாகும். வைத்தியர்கள் குணமாக்கமுடியாதென்று கைவிட வுந்தான் மாருதப்பிரவல்லி இறைவனது பெருங் கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற் கொண்டாள். தீராத குன்ம நோயினல் மாருதப் பிரவல்லி தன் அழகை இழந்திருந்தாள். அழகினை இழக்கச்செய்த கொடிய குன்ம நோய் அவளுக்கு இருந்ததே தவிரக் குதிரை முகச்சாயல் இருந்த தென்று கூறுவது பொருந்தக்கூடியதல்ல! ஒப்புக் கொள்ளக்கூடியதுமல்ல! குதிரை முகச்சாயலை வைத் தியர்களின் மூலிகைகள் குணமாக்கமுடியாதே!
மாருதப்பிரவல்லி தீராத குன்ம நோயினல் பீடிக்கப்பட்டிருந்தாள். கர்ம நோயான குன்ம நோயை நீக்கவேதான் இறைவனது கருணையை நாடித் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். சாந்தலிங்கம் சன்னியாசினியினல் கீரிமலை நீரூற்று சக்திவாய்ந்ததென்பதையும், நோயைத் தீர்க்கும் சக்திகொண்டதென்பதையும் அறியவுந்தான் தமிழ் நாட்டிலிருந்து மாருதப்பிரவல்லி கீரிமலை க்கு வந்தாள்.
கீரிமலைச் சாரலில் பாளையமடித்துத் தங்கிக் கொண்டு கீரிமலை நீரூற்றில் மாருதப்பிரவல்லி தின மும் நீராடி, இறைவனையும் வழிபட்டு வந்தாள். இறைவனது பெருங் கருணையினலும், புனித நீரூற் றின் சக்தியினுலும் மாருதப்பிரவல்லியின் குன்ம நோய் நீங்கியது. , , ; *
கீரிமலை நீரூற்றில் நீராடிக்கொண்டுவந்த காலையில், மாருதப்பிரவல்லி அயலிலுள்ள இடங்
مسيس 2 سبي.

களுக்கு உல்ாவச்செல்வது வழக்கமாகும். ஒர்நாள் கோயிற்கடவை என்னும் பகுதிக்குச் சென்றபோது, ஓர் அரசமரத்தடியில் சடையன் என்னும் பெரியார் முருகனது வெள்ளி வேலினுக்கு விளக்கு வைத்து வழிபாடுசெய்துகொண்டிருந்தார். அதனைக் கண் ணுற்ற மாருதப்பிரவல்லி முருகன் மீது உளமுருகி வழிபட்டுநின்ருள். முதியவரான சடையன் வழி பாட்டை முடித்துக்கொண்டவுடன் மாருதப்பிரவல்லி அவரை அழைத்து,
இக்கோயில் எழுந்த வரலாறு யாது’’ எனக் கேட்டாள்.
'இவ்விடத்தில் முருகனுக்கு வெள்ளி வேலா யுதத்தை வைத்து நாங்கள் பரம்பரையாக வழி பட்டுக்கொண்டுவருகிருேம். எமது தோட்டப் பயிர்ச் செய்கை சிறந்த பயனைக் கொடுக்கவும், எங்களைக் காத்து வழிநடத்துவதற்காகவும் எங்கள் காவற் கடவுளான முருகனை வழிபட்டு வருகிருேம்’ என்று கூறினர் சடையன்.
அவரது வார்த்தைகளைக் கேட்டு ஓர் முடி பினுக்கு வந்த மாருதப்பிரவல்லி,
"பெரியவரே! உங்கள் வழிபாட்டையும், இவ் வெள்ளி வேலாயுதத்தையும் கண்டவுடன் முருகப் பெருமானுக்கு இவ்விடத்தில் அழகியதோர் கோயில் எடுக்கவிரும்புகிறேன். தங்களுக்குச் சம்மதமா?' என்று கேட்டாள்.
‘இறைவனுக்குத் தாங்கள் செய்யும் திருப் பணிக்கு மறுப்புச்சொல்ல நான் யார்? தங்கள் எண்ணப்படியே செய்யுங்கள்' என்று கூறினர் சடையன.
அவரது வார்த்தைகளினல் மகிழ்ந்த மாருதப் பிரவல்லி தனது கூடாரத்தினுக்குச் சென்று முரு
ー73ー

Page 52
கனுக்குக் கோயில் எடுப்பிக்க வேண்டியவற்றை அனுப்பிவைக்கும்படி தந்தைக்கு ஒலை அனுப்பினள்.
மாருதப்பிரவல்லியின் எண்ணப்படி சோழ தேசாதிபதி கோயில் எடுப்பிக்க வேண்டிய பொருளை யும், சிற்பிகளையும், முருகனது உருவச் சிலையினையும் அனுப்பிவைத்தார்.
முருகனது திருவுருவச் சிலை கப்பல்மூலமாகக் கசாத்துறையில் வந்திறங்கியது. கசாத்துறை இதன் காரணமாக காங்கேயன்துறை எனப் பெயர் பெற்
Dġibil.
மாருதப்பிரவல்லி தனது மேற்பார்வையிலே முருகனுக்கு நவமான ஓர் கற் கோயிலைக் கட்டி எழுப்பினள். இக்காலையில் கதிரமலையிலிருந்து ஆணை செலுத்திய உ க் கிர சிங் க ம ன் ன வ ன், மாருதப் பிரவல்லியைக் கண்டு காதலித்தான். நள்ளிரவில் அவளது கூடாரத்தினுக்குச் சென்று, அவளைத் தூக்கிவந்து தனது மனையாளாக்கிக்கொண்டான்.
உக்கிரசிங்கனும் மாருதப்பிரவல்லியும் இல் வாழ்க்கையை மேற்கொண்டதன்பயணுக நரசிங்கன் எனப்படும் வாலசிங்கனையும், சண்பகாவதி என்ற மகளையும் பெற்றெடுத்தனர்.
நரசிங்கஞன வாலசிங்கன் தந்தை இறந்ததும் ஜெயதுங்கபரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கை நாட்டு அரியணையில் அமர்ந்தான். இந்த வரலாற் றினை யாழ்ப்பாண வைபவமாலையில்,
** அக்காலத்திலே கதிரமலையிலிருந்து உக்கிரசிங்க மகாராசன், நகுலேசர் கோயிலைத் த ரிசிக்க மூன் ரு ந் த ரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வளவர்கோன் பள்ளத்தில் பாளையம் போட்டிருந் தான். அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சன்னிதானத்திற் கண்டு, அவள் பேரழகிலே
حبیب - } ----

மயங்கி, மிகுந்த ஆச்சரியங்கொண்டு, தான் அவளை விவாகம் செய்யவேண்டுமென்று தீர்மா னித்துக்கொண்டான். ஒருநாள் 10ாருதப்பிரவல்லி தேவாலய திருப்பணியைப்பற்றிய ஆலோசனை யுடன் சப்ரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாயிருக் கும் சாமவேளையிலே, உக்கிரசிங்க மகாராசன் பாளையர்களையும், அரனிப்பான சேனைக் காவலர் களையும் கடந்து அவளிருந்த பாளையத்தினுட் புகுந்து, அவளை எடுத்துத் தன் பாளையத்துக்குக் கொண்டுபோய் வைத்துக்கொண்டான். பொழுது விடிந்தபின் மாருதப்பிரவல்லியின் தாதிமாரும், காவற்சேனைகளும் அவளைக் காணுததனுல் மனங் கலங்கித் தேடிப்போய் உக்கிரசிங்க மகாராசன் பாளையத்திலிருந்த செய்தி அறிந்து அவனிடத் இற் சென்று ‘நாங்கள் என்ன செய்யலாம்" என்று கேட்க, அவன் ‘மாருதப்பிரவல்லி எனது பட் டத்துத் தேவியானுள். பிதாமாதா வுக்கறிவியுங் கள்’’ என்று சொல்லி வழிச்செலவுக்குப் பொரு ளுங் கொடுத்து அனுப்பிவிட்டான். அதன் பின் உ க் கி ர சிங் க ரா ச ன் கதிரமலைக்குப் போக யோசித்தபோது, மாருதப்பிரவல்லி கந்தசாமி கோயிற் திருப்பணி நிறைவேற்றி உற்சவச் சிறப் புக் கண்டால் அல்லாமல் அவ்விடத்தைவிட்டுப் போகப் பிரியமில்லையென்று சொன்னதனல், அப் பிரயாணத்தை நிறுத்தி ஆனி உத்திர தினத்தன்று துவசாரோகணந் தொடங்கி உச்சவத்தை நிறை வேற்றிக்கொண்டு கதிரமலையிற் சென்று விவா கச் சடங்கையும் நிறைவேற்றி சகல செளகரியங் களேயும் அனுபவித்திருந்தார்கள்.
கதிரமலையிலிருந்த உக் கி ர சிங்க ராசன் சிலகாலத்தின் பின் சிங்கைநகரைத் தலைநகராக்கி அங்கிருந்து அரசாண்டுவருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வ ராச லெட்சணங்களு முடையவனுய் சிங்கத்தின் வாலையொத்த வாலு
سے 75-سی-۔

Page 53
டனே ஒரு குமாரனும், அவனுடனுெரு பெண் ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் நரசிங்க ராசன், சண்பகாவதி என்றும் பெயரிட்டார்கள். அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி நரசிங்க ராசனெனப் பெயர்படைத்த வாலசிங்க மகா ராசனுக்கு முடிசூட்டி அரசாளவைத்து மரண மடைந்தான். வாலசிங்க மகாராசன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் பட்டத்துடன் முடிசூட் டப்பெற்று அரசாட்சியை ஒப்புக்கொண்டான்' என்று கூறப்படுகிறது.
முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப் பாணச் சரித்திரத்தில்,
'உக்கிரசிங்கன் அவள்மேற் கொண்ட காதலி ஞலோ அல்லது தனது அரசகுடும்பத்தைப் பெரு மைப்படுத்தும் நோக்கத்தினலோ ஓரிரவு அவள் கூடாரத்துட் புகுந்து அவளைப் பலவந்தமாகத் தன் கதிரமலைக்கு எடுத்துச்சென்று அவளை மணந் தான். அவளுடைய வேண்டுகோளினுக்கிணங்கி உக்கிரசிங்கன் மா விட்ட புர த் தி ல் அவளால் தொடங்கப்பெற்ற கந்தவேல் கோட்டத்தைக் கட்டிமுடிப்பித்து இந்தியாவிலிருந்து, அக்கோயி லுக்கு வேண்டிய விக்கிரகங்களையும், பூசை செய் யத் தில்லைவாழ் அந்தணர்குடியில் பெரியமனத் துள்ளார் என்னும் விப்பிரனையும் அழைப்பித்து ஆனிமாசத்து உத்தரநாளிலே கொடியேற்று விழாவும் செய்வித்தான். முன் புத்த சமயிகள் காயா யாத்திரை செய்வதற்காகக் கப்பலேறும் துறையாகவிருந்த காயாத்துறை அல்லது கசாத் துறை என்பது காங்கேயனென்னும் நாமமுடைய கந்தவேள் சிலை வந்திறங்கியபின்னர் காங்கேயன் துறையென மாறி வழங்குவதாயிற்று. இதற்குச் சிலகாலத்துக்குப்பின் உக்கிரசிங்கன் நாக அரசர் களுக்கு அனேகவாயிரம் ஆண்டுகளாகத் தலை நகராகவிருந்த கதிரமலையைவிட்டுச் சிங்கபுர
سانس 76-سن

மாகிய சிங்கை நகரைத் தனது இராசதானியாக வும் தலைநகராகவும் செய்தான். தன் இனத்த வர்களும் சனத்தவர்களுமாகிய கலிங்கர் அவ் விடத்திற் குடியேறி இருந்தபடியாலும், தான் சிவ வழிபாடுடையவனனபடியாலும், புத்தப் பள்ளிகள் நிறைந்திருந்த கதிரமலையிலும் சிங்கை நகரே சிறந்ததென நினைந்தான் போலும். அவ் விடத்தில் அவனரசுசெய்யுங் காலத்தில் நரசிங் கன் என்னும் ஒர் ஆண்மகவும், சண்பகாவதி என்னும் ஒர் பெண்மகவும் பிறந்தார்கள். மகனை இளவரசனுக்கினன். உக்கிரசிங்கன் இறந்தவுடன் இளவரசனுகிய மகன் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் நாமத்துடன் அரசாண்டான்' என்று கூறப்படுகிறது.
உக்கிரசிங்கனுக்கும் மாருதப்பிரவல்லிக்கும் மகளுகப் பிறந்தவன் நரசிங்கன் என்னும் வாலசிங்கன். இவன் தந்தை மரணத்திரையால் மறைக்கப்பட்ட சிங்கைநாட்டு அரியணையில் ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் அமர்ந்து ஆணேசெலுத்தலானன்.
சங்ககாலந்தொட்டுப் பெ ரு ம் புக முட ன் வாழ்ந்த சோழமன்னர்களது வரலாற்றிலே ஐந்து நூற்ருண்டுகள் இருள் சூழ்ந்த காலமாகும். கி. பி. 300ஆம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ஆம் ஆண்டு வரை சோழர்கள் தங்களது பெருமைகள் அனைத்தை யும் இழந்ததுடன் நாட்டின் பெரும் பகுதியினையும் பறிகொடுத்துச் சிற்றரசர்களாக ஒடுங்கி வாழ்ந்தார் கள்.
கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டுவரை சோழர் களது வாழ்க்கை சிற்றரசர் என்ற வரையறையிலே அடைபட்டுக்கிடந்தது. இவ்வாறன நிலைமையிலே தான் சோழ வரலாற்றின் வருங்காலப் புகழினுக்கு முன்னேடியாகப் பழையாறை அரியணையிலே கி. பி. 831ஆம் ஆண்டு குமராங்குச சோழன் அமர்ந்தான்.
مس - 77 س

Page 54
கொடையிலே கர்ணனைப் போன்றும், 6uזהur மையில் அரிச்சந்திரனை ஒத்தவனுமான குமராங்குசன் தன் வாழ் நாள் முழு தும் பல்லவ மின்னவனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனுகவே வாழ்ந் தான்.
பல்லவ மன்னனது ஆணயை ஒப்புக்கொண்டு வாழ்வது குமராங்குசனுக்கு விருப்புடையதாக இருக்க வில்லை. இருந்தாலும் தனது முன்னேர்கள் செய்த ஏற்பாட்டினை மீற அவனல் முடியாதுபோயிற்று. ஏனெனில் பெரும் வல்லரசாக விளங்கிய பல்லவ மன்னனை எதிர்க்கத்தக்கதான படைப்பலம் இல்லா மையேயாகும்.
பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசன் என்ற வரையறையிலே குமராங்குசன் நின்ருலும், சுதந்திரமான சோழ அரசினை நிறுவ வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கில்லாமலில்லை. எதற்கும் வேளை வரவேண்டுமென்ற பரந்த மனப்பாங் கிலே வாளா விருந்தான். இந்தநிலையிலேதான் ஒங்கை மன்னவனன வாலசிங்கனுக்குத் திருமணம் பேஒ வந்தார்கள்.
தானகவே பெண்கொள்ளவரும் சிங்கை மன்ன வனது திருமண உறவினைச் சோழநாட்டின் வருங் காலச் சுதந்திரத்தின் பொருட்டுக் குமராங்குசன் அகம்மலர வரவேற்றன்.
தனது வீரப்புதல்வனன விசயாலயன் է մեք6ծ) (r) மிக்க சுதந்திரச் சோழநாட்டைத் தோற்றுவிக்க, சிங்கை ம ன் ன வ னு ன வாலசிங்கன் துணைபுரிவா னென்ற வகையிலே, தனது மகளான சீர்பாத தேவியைத் திருமணம் செய்துகொடுக்கக் குமராங் குசன் தீர்மானித்தான்.
குமராங்குச சோழனது சிறப்பினை ப் ப நீற்றி வேலூர்ப்பாழையச் செப்பேடுகள் மிகவும் மேலான
سسسسس-78 سس

தாகவே கூறுகின்றன. நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட குமராங்குசன் தருமசிந்தையும் கடவுள் பக்தியும் கொண்டவனகும். பகைவனிடத்தும் அன்பு செலுத்தும் தனிப்பண்பு கொண்டதனற்ருன் வாழ் நாள் முழுவதும் பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக் கொண்டு சிற்றரசனகவே வாழ்ந்தான்.
வரலாற்று ஏடுகள் குமராங்குசனது மகளுறன விசயாலயனுக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. சோழ சாம்ராட்சியத்தினுக்கு அடிகோலி நாட்டை விடுவித் தவனென்று கல்வெட்டுகள் விசயாலயன் புகழ்பாடு கின்றன. இத்தகைய ஓர் நிலமை பிற்காலையில் தனது மகனுக்குக் கிடைக்குமென்றே குமராங்குசன் நம்பி ஞன். அந்த நம்பிக்கையினுக்கு முன்னேடியாகத்தான் சிங்கை மன்னஞன வாலசிங்கனுக்குத் தன் மகளான சீர்பாததேவியைக் கொடுத்து மருமகனுக்கிக்கொள்ள முனைந்தான்.
குமராங்குச சோழன் பல்லவ மன் ன ன து ஆணையை ஒப்புக்கொண்டு வாழ்ந்தகாலையில் அண்டை நாட்டு மன்னவனகிய பாண்டியன் பல்லவனது பகைவ ஞகவே துலங்கினன். அதன்பயனக இருவருக்கும் பல போர் நடந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் போர்க்களத்திலே இரத்தம் சிந்தி உயிரை பலியிட் டார்கள். இதனைப் பார்த்துத்தான் பகைவனுக்கும் இரங்கும் உள்ளங்கொண்ட குமராங்குசன் பாண்டிய னது பக்கம் சாராமல், பல்லவ மன்னனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரசனுக வாழ்ந்தான்.
அரசியல் சதுரங்க விளையாட்டில், பகடைக் காய் நகர்த்தும் பண்பினைக் கருத்திற்கொண்டுதான் சிங்கை மன்னவனுக்குத் தன் மகளைத் தார்வார்த்துக் கொடுக்க விரும்பி முகூர்த்த நன்நாளும் குறித்தான்.
சோழநாட்டுச் சோ தி டர் கள் குறித்த சுப முகூர்த்த நன்நாளிலே பழையாறை அரண்மனையில், சிங்கை மன்னவனுகிய வாலசிங்கன் சீர் பாததேவி யைக் கைப்பிடித்தான்.
مس ( ۲۴ مست.

Page 55
பல திங்கள்பொழுது புதுமணத் தம்பதிகள் பழையாறை அரண்மனையிலே வாழ்ந்தார்கள். சிங்கை மன்னவன் எ ன் ஞ ஞ ம் சோழநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கமுடியுமா? ஆகவே சிங்கை மன்னவன் மனையாளான சீர்பாததேவியை அழைத்துக்கொண்டு சிங்கை நாட்டினுக்குப் புறப்பட முனைந்தான்.
கணவன் வாழும் இடந்தானே மனைவிக்குச் சொர்க்கம். ஆகவே சோழமன்னவன் குமராங்குசன் தனது மகளை மட்டும் அனுப்பிவைக்காமல் துணையா கச் செல்லப் பலரைச் சேர்த்தான். அந்த வகையிலே திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை, பழை யாறை என்னும் நகரங்களில் வாழ்ந்த அரசகுலத்த வர், அந்தணர், வேளாளர், வணிகர் முதலிய குலத்த வரில் முதன்மையான பலரைத் தெரிந்தான்.
சிந்தன், பழையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், கண் ணப்பமுதலி, முத்துநாயகச்செட்டி, சதாசிவச்செட்டி, சந்திரசேகர ஐய்யங்கார், சங்கரச்செட்டி என்பவர் களும், அவர்களது மனைவியர்களும், இன்னும் பலரும் சிங்கைநாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறினர்கள். மன்னவன் வாலசிங்கனும் சீர்பாத தேவியும் ஏறிக் கொள்ளக் கப்பலும் கடலிலே விரையலாயிற்று.
கப்பல் கடலிலே சென்றுகொண்டிருக்கையில், சீர்பாததேவி கணவனிடம் அன்பு ம ய மான ஓர் கோரிக்கையினை விடுத்தாள். :
'தங்களது ஆணை பரவும் நாடுகளில் வளத் தைக் கடல்வழியாகப் பார்க்க விரும் புகிறேன்" என்று கோரிய சீர்பாததேவியின் விருப்பினுக்கிணங் கிய மன்னவன் ஈழத்தின் கிழக்குக் கரைவழியாகக் கப்பலைச் செலுத்தப் பணித்தான். அதற்கிணங்கக் கப்பலும் கிழக்குக்கரைக் கடல் வழியாக ஓடலாயிற்று.
سي 80 سم

கிழக்குக்கரைக் கடல்வழியாகக் கப்பல் செல் கையில், திரிகோணமலையில் குடி கொண்டிருக்கும் கோணேசுவரப் பெருமான் தி ரு க் கோயிலினுக்கு எதிர்த்தாப்போல் கப்பல் எத்திசைக்கும் நகரமுடி யாதவாறு நின்றுவிட்டது.
நங்கூரம் பாய்ச்சியதுபோல் கப்பல் அசையாது நிற்பதைக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். பாய் விரித்தபடியே நகரமுடியாதவாறு நின்ற கப்பலைக் கண்ணுற்ற சீர்பாததேவி, கப்பல் நிற்கும் காரணத் தைக் கண்டறியப் பணிக்தாள்.
கடலின் அடியிலே, கப்பலுக்குக்கீழே வினயக ரது திருவுருவமொன்றிருக்கக் கண்டு, கைகூப்பித் தொழுது வாரி எடுத்துக் கப்பலில் சேர்த்தார்கள். வினயகப் பெருமானைக்கண்ட சீர்பாததேவி தெண்ட னிட்டுப் பணிந்து ‘இக்கப்பலானது தங்குதடை யின்றி ஓடி, எங்கு கரைதட்டி நிற்கிறதோ அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடுவேன்' என வேண்டினுள்.
சீர்பாததேவியின் வேண்டுதலுக்கிணங்க கப்ப லும் விரைந்து ஓடலாயிற்று, கப்பலானது கிழக்குக் கரைவழியாகச் சென்று ஈழத்தைச் சுற்றிக்கொண்டு கடைசியாகச் சிங்கை நகரில் நிற்கும். சிங்கை நகர்க் கடற்க ரை யிலே பிரமாண்டமானதோர் ஆலயம் விணுயகருக்கு எடுக்கலாமென்று மன்னவன் கருதினன். அதேபோற்ருன் சீர்பாததேவியும் கப்பலானது தலை நகரிலே கரைதட்டி நிற்கும். அங்கு வினுயகருக்கு அழகான கோயில் எடுக்கலாமெனக் கருதினுள். ஆனல் கப்பலிலே குடி கொண்ட வினயகப் பெருமானது கருத்தோ வேறுவிதமாக இருந்தது.
கிழக்குக் கடல் வழியாக ஓடிய கப்பலானது மட்டக்களப்பினைச் சமீபித்ததும், கடல் வழியாகச் செல்லாமல் மட்டக்களப்பு வாவியிலே புகுந்த கப்ப
ســــ 81 سانس مننه

Page 56
லானது வடக்கு நோக்கிச் செல்லாமல் தெற்குத் திக்கிலே சென்று மட்டக்களப்பு வாவியின் அந்தமான வீரர்முனையில் கரைதட்டி நின்றது.
மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தமான முனை வீரர்முனையாகும். முன்னர் இங்கு படைவீரர் கள் பாளையமடித்துத் தங்கியிருந்ததனல் *வீரர்முனே எனப் பெயர் பெற்றது.
கப்பல் வீரர்முனையிலே கரைதட்டி நின்றகாலை யில், அங்கு மக்களே வாழவில்லை. ஆனல் வீரர் முனையை அடுத்துள்ள இடங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
வீரர் முனையில் கப்பல் நிற்கவும், அனைவரும் கப்பலினின்று இறங்கினர்கள். சீர்பாத தேவி தன் வேண்டுகோளினுக்கிணங்க, வீரர்முனையிலே வினய கருக்கு ஆலயம் எடுப்பிக்கும்படி தன்நாட்டு மக்களைப் பணித்தாள். மன்னவன் வாலசிங்கன் அயலிடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களை கோயிற் பணிக்கு உதவும்படி கட்டளையிட்டான்.
சோழநாட்டு மக்களின் கைவண்ணத்திலே, கிழக்கு ஈழத்து மக்களின் தன்னலமற்ற உழைப்பிலே வினுயகருக்கு நவ மா ன கோயில் வீரர்முனையிலே எழுந்தது. −
சோதிடர்கள் குறிப்பிட்ட புனிதமான நன் நாளிலே, வினயகப் பெருமான எழுந்தருளச்செய்து சிந்துயாத்திரையின் பயனுகக் கிடைத்த வினயகராத லினல் சிந்துயாத்திரைப் பிள்ளையார் எனப் பெயரிட்டு பெருவிழா எடுப்பித்தான் மன்னவன் வாலசிங்கன்.
வீரர்முனையிலே வினயகருக்கு நவமான கோயில் எழுந்தாயிற்று. வினயகப் பெருமானையும் எழுந்தரு
:سه
* வீரர்முனை என்ற பெயர் காலநீரோ டத்தின் விரைவிஞல்
மருவி வீரமுனே' என இன்று வழங்குகிறது.
سس--633 تس--.

ளச் செய்தாயிற்று. பெருவிழாவும் எடுத்தாயிற்று. இருந்தாலும் நாள் தவருமல் வினயகருக்கு வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருக்கவேண்டுமே?
வீரர்முனையில் வேளைதவருது வினயகருக்கு வழி பாடு செய்துகொண்டிருக்க அப்பொழுது மக்களே இருக்கவில்லை. ஆகவே வினயகரது வழிபாட்டினை வேளை தவழுது செய்துகொண்டுவரச் சீர்பாததேவி தன்னுடன் கப்பலில் வந்த சோழநாட்டு மக்களை வீரர் முனையிலே குடியிருத்த விரும்பினள்.
சீர்பாத தேவியின் விருப்பினை மன்னவன் வால சிங்கன் அகம்மலா ஏற்றுக்கொண்டான். ஆனல் அரச குலத்தவர் அந்தணர், வேளாளர். வணிகர் ஆகிய நான்கு குலத்தவர்களையும் வீரர்முனையிலே குடியிருக் கப் பணித்தால், ஒருக்கால் குல வேறு பாடு தலை யெடுத்து கோயில் வழிபாடு சிதையக்கூடுமேயென்று மன்னவன் கருதினன்
சீர் பாததேவியின் பெருவிருப்பு 1 சோழநாட்டு மக்களின் குலப்பிரிபு 1 வீரர்முனைச் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயில் வழிபாடு ! ஆகிய மூன்று பிரச் சனைகளையும் முன்னிறுத்தி மன்னவன் வாலசிங்கன் சிந்தித்தான். சிந்தனையின் முடிவிலே சிறந்ததோர் முடிவினைக் கண்டான் மன்னவன்.
சோழநாட்டிலிருந்து சீர்பாததே விக்குத் துணை யாக வந்த அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் நான்கு குலத்தவரையும், ஒரே குலமென வகுத்து சீர்பாத தேவியின் பெயரினல் சிர்பாதகுலம் எ ன நிறுவினன் மன்னவன் வால சிங்கன். . . . . .
அரசகுலத்தவருடன் ஏனைய குலத்தவர்களையும் சீர்பாததேவியின் பெயரினல், சீர் பா த குல மாக வகுத்த மன்னவன் அனை வரும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாகுமென்று கெளரவித்து அரவிந்த

Page 57
மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதையும் வழங்கினன்.
வீரர்முனையில் குடியிருத்தப்பட்ட மக்களுக்கும், வினயகர் ஆலயத்தினுக்கும் வயல்நிலங்களை மானிய மாக வழங்கிச் சாசனம் செய்து செப் பேட் டி ல் பொறித்து மன்னவன் கையளித்தான்.
த ன் நாட்டு மக்கள், தன்பொருட்டுத் தன் பெயரினல் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டதனல் மகிழ்ந்த சீர்பாததேவி சோழர் குலத்தின் பழமை மிக்கதும், தான் வழிபட்டு வந்ததுமான தங்கவேலி னைச் சீர்பாத குலத்தவர்களின் வழிபாட்டினுக்காக வழங்கினுள்.
சோழர் குலத்துப் பழமைமிக்க தங்க வேல் சிந்துயாத்திரைப் பிள்ளையாருடன் சேர்ந்து, சீர்பாத குலத்தவர்களின் தனி வழிபாட்டினுக்குமுரியதாகியது.
சீர்பாததேவி கையளித்த தங்கவேல்தான், சீர் பாதகுலத்தவர்களுள்ளே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினல் வீர ர் மு ன யிலிருந்து மண்டூர்க்குக் கொண்டுவரப்பட்டது. தில்லைமரத்திலே தங்கவேல் குத்தப்பட்டு, தில்லைக்கந்தன் எனப் பெயரிடப்பட் டது. இந்தத் தில்லைக்கந்தன் கோயில் வரன் முறைமை யினை இலங்கைப் பொருட்காட்சிச் சாலையில் சேமிக் கப்பட்ட துறைநீலாவணைச் செப்பேடு தெளிவாகவே கூறுகிறது.
சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணை யாக வந்த சோழநாட்டு மக்கள், வீரர்முனையிலே நிறுவப்பட்ட வினயகர் ஆலயத்தின் பொருட்டு, வீரர் முனையிலே சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றுக் குடி யிருத்தப்பட்டார்கள். பல குலத்தவர்கள் ஆலயத் தின் பொருட்டுக் குடியிருத்தப்பட்டதனல் ஆலைய வழி பாடு சீர்குலைந்து விடுமென்பதற்காகவேதான் மன்னவன் அனைவரையும் ஒருகுலமாக்கி சீர்பாதகுல
سی۔ 84 ہنسیس۔

மாக வகுத்தான். வரிசைகள் வழங்கினன். விருதினை யும் கையளித்தான். இந்த வரன்முறையினைச் செப் பேட்டில் பொறித்துக் கொடுத்ததைத்தான் வீரர் முனைச் செப்பேடு விபரமாகக் கூறுகிறது. -ത്ത
சீர்பாதகுல வரன்முறையினைப்பற்றிப் பல செப் பேடுகள் கூறுகின்றன. செப்பேடுகளை ஆராய்ந்தால் சம்பவங்கள் வெவ்வேறு வகையாகச் செல்வதைக் காணமுடிகிறது. அனைத்தும் ஒருமனதாகச் சீர்பாத தேவியின் பெயரைக்கொண்டே சீர்பாதகுலம் வகுத்த தாகக் கூறுகின்றன.
‘ஓர் பெயரினல் ஓர் குலத்தவரென
சீர்பாத தேவியென் திருப்பெயர் சூட்டி சீர்பாத குலம் சிறந்து விளங்கிட பேராக வென்ஞளும் பெருகி வாழ்ந்திட’’ என்று வீரர்முனைச் செப்பேட்டில் கூறப்படுகிறது.
‘'தேவால யத்தின் திருப்பணிச் சாமான் எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் தங்களை அரச னளைத்து பா சாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனுல் சீர்பாத தேவியின் திருப் பெயராற் சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி என்று திருக்கோயிற் செப்பேட்டில் கூறப்படுகிறது.
*நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந்தம் கொடி விருதென வீந்து விருப்புடன் தேவியின் திருப்பெய ரென்றும் மறவாது வழங்க சீர்பாதத் தோரெனச் சீரிய நாமம் பேர்பெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி" என்று துறைநீலாவணச் செப்பேட்டில் கூறப்படுகிறது.
-تست 85 سد

Page 58
'அரசியின் குலமென அவள் நாமமேபெற்று
அன்று சீர்பாதமானேன்’’ என்று திரிகோணமலைச் சேப்பேட்டில் கூறப்படுகிறது.
* திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினனே’’ என்று கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் கூறப்
படுகிறது.
சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்று எல்லாச் செப்பேடுகளும் ஒரே முகமாகக் கூறுகின்றன. ஆகவே சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகிறது.
சீர்பாததேவியின் பெயரினல் பல குலத்தைச் சேர்ந்தவர்கள் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டனர்ெ பதில் செப்பேடுகளுள் வேறுபாடுகளைக் காணமுடி கிறது.
வீரர்முனைச் செப்பேட்டில் தம்மோடு வந்த உற வினரைத் திருக்கோயிற் பணிபுரிய சீர் பாதகுலமாக வகுக்கப்பெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.
சோழநாட்டிலிருந்து புறப்பட்ட கப்பலில் G计 பாததேவியுடன் அரசகுலத்தவர், அந்தணர், வேளா ளர், வணிகர் என்னும் குலத்தவர்கள் வந்திருக்கிறர் கள். இவர்களில் தம்மோடு வந்த உறவினர் எனக் கொள்ளுங்கால் சோழநாட்டில் வாழ்ந்த அரசகுலச் சுற்றத்தவரேயாகும். ஏனெனில் இளவரசியான சீர் பாததேவிக்கு அந்தணர்கள் உறவினர்களாகமாட் டார்கள். வேளாளர்கள் உறவினர்களாகமாட்டர் கள். வணிகர்கள் உறவினர்களாகமாட்டார்கள். சீர் பாததேவியின் உறவினர்கள் அரசகுலத்தைச் சேர்ந்த வர்களாகவே இருப்பார்கள். ஆகவே வீரர்முனையில் சீர்பாததேவி சிந்து யாத்திரைப்பிள்ளையாரின் கோயில் வழிபாட்டின் பொருட்டுத் 'தன்' இனத்தவரையே
سین۔ 86 سے

குடியிருத்தினுள். சீர்பாததேவியின் சுற்றத்தவர்கள் குடியிருத்தப்பட்டதனற்ருன் மன்னவன் வாலசிங்கன் சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத் தான். இதனை வீரர்முனைச் செப்பேட்டில்
'தக்க புகழாகத் தகுவிழா வமைத்து
எக்காலத்து மிவ்விழா நிலைத் திட பக்குவஞ் செய்து பலவகை வாத்தியம் தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம் தம்மோடு வந்த தம துறவினரை செம்மண துடனே திருக்கோயிற் பணி புரியச் சொல்லி பூமி பகிர்ந்து தனித்தனி யளித்து தான் வணங்கி வந்த தங்க வேலையும் சாமிக் களித்து' என்று கூறப்படுகிறது.
திருக்கோயிற் செப்பேட்டில் அந்தணர்களை அழைத்து திருக்கோயிற் பணிபுரியச் சீர்பாததேவியின் பெயரினுல் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறப்படு கிறது. இதனை மிகவும் தெளிவாகத் திருக்கோயிற் செப்பேட்டில்
‘'தேவால யத்தின் திருபபணிச் சாமான்
எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் கங்களை அரச னழைத்து பாசாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனல் சீர்பாத தேவியின் திருப் பெயராற் சீர்பாத குலமெனச் சிறந்த பெயர்சூட்டி' என்று கூறப்பட்டிருக்கிறது.
வீரர்முனையில் வினயகருக்குக் கோயில் எடுப் பித்த பின்னர், கோயிற்பணி குறைவில்லாது நாளும் நடக்கவேண்டுமென்று சோழநாட்டிலிருந்து கப்பலில் வந்த அந்தணர்களை மன்னவன் வாலசிங்கன் அழைத் தான். வினயகரது திருவுருவத்தைக் கடலிலிருந்து கப்பலில் சேர்த்து வீரர்முனையில் எழுந்தருளச் செய்த
--نص۔87 مماس۔

Page 59
அந்தணர்களை வினயகரது ஆலயத்தின் பொருட்டு நாள் தவருது வழிபாடு செய்துகொண்டிருப்பதற் காகச் சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்தானென்று திருக்கோயிற் செப்பேடு தெளி வாகச் சொல்லுகிறது.
துறைநீலாவணைச் செப்பேட்டில் அரசகுலத் தவர் மட்டும் சீர் பாதகுலமாக வகுக்கப்படவில்லை. சோழநாட்டிலிருந்து சிங்கை நாட்டினுக்குச் செல்லக் கப்பலில் ஏறிய நான்கு குலத்தவர்களுமே GiftTri påsar யில் சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்துக் குடியிருத்தப்பட்டார்களென்று கூறப்பட் டிருக்கிறது. இதனை விவரமாகத் துறைநீலாவணைச் செப்பேட்டில்
"நாளும் திருப்பணி நலமுடன் புரிய
ஆளும் செங்கோல் அரவிந்தம் கொடி விருதென வீந்து விருப்புடன் தேவியின் திருபெய ரென்றும் மறவாது வழங்க சீர்பாதத் தோரென சிறந்த நாமம் பேர்பெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி கோயி லூழியம் குறைவிலா தியற்ற ஆயநான்கு மரபோர் ஆணையிற் படிந்து' என்று கூறப்படுகிறது.
திரிகோணமலைச் செப்பேட்டில், கட்டுமாவடி, பெருந்துறை, திருவொற்றியூர் என்னும் இடங்களில் வாழ்ந்த பல தலைவர்கள் சீர்பாததேவிக்குத் துணை யாக வந்தார்கள். அவர்கள் வீரர்முனையில் வினயகர் ஆலயத்தின் பொருட்டு குடியிருத்தப்பட்டார்கள். அதனல் அவர்களை அரசகுலமான சீர்பாதகுலமாக வகுக்கப்பெற்றதென்று கூறப்படுகிறது. இதனைத் திரிகோணமலைச் செப்பேட்டில் . . . . . . . "
مسس 88 سست

'திருமருவு கட்டுமா வடி பெருந்துறை
சிறந்த உத்தரதேசமும் செப்பமுடனே யுறைந்தொப்பித மிலாமலே செகமீது வருதீரனம் தருமருவு தெரியலவர் கொடிபெருமை
தவளநிறத் தகமிவை தனிவிளக்கு தகமைபெறு பூனூலுடன் கவசகுண்டலஞ்
சரசமலர் முரசாசனம் அருமைசெறி ஆலாத்தி குடைதோரண
மோடரிய மதில்பாவாடை யுடையோன் அரசியின் குலமென அவள்நாமமே பெற்று
அன்று சீர்பாதமானேன்’’ என்று கூறப்படுகிறது.
கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் சிந் தாத்திரன், காலதேவன், காங்கேயன், நரையாகி, வெள்ளாகி, முடவன், பழைச்சி என்பவர்களைத் தலைவர் தலைவிகளாகக்கொண்டு மன்னவன் அனை வரையும் சீர்பாததேவியின் பெயரினல் சீர் பாதகுல மாக வகுத்தானென்று கூறப்படுகிறது. இதனைக் கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில், *۔‘‘
"துரைபேர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன், காங்கேயன் . . . நரையாகி வெள்ளாகி முடவனெனும் பெண்பழச்சி குடியேழகாண் வரையாக இவர்களையும் வகுத்துவைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று திரையகல் சூழ்புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினுனே" என்று கூறப்படுகிறது
செப்பேடுகளைத் துணையாகக்கொண்டு நோக் கினல் பழையாறை அரசகுலத்தவர்கள் மட்டும் சீர் பாதகுலமாக வகுக்கப்பட்டார்களென்று வீரர்முனைச் செப்பேட்டில் காணமுடிகிறது. ' , '
-89

Page 60
அந்தணர்கள் மட்டும் சீர் பாதகுலமாக வகுக் கப்பெற்றதாகத் திருக்கோயிற் செப்பேட்டில் காண முடிகிறது.
. சோழநாட்டிலிருந்து சீர்பாத தேவிக்குத் துணை ዚ !ff Š வந்த அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தவர்கள் ஒன்ருக்கப்பட்டுச் சீர் பாதகுலமாக வகுக் கப் பெற்றதாகத் துறைநீலா வணைச் செப்பேட்டில் காணமுடிகிறது.
திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னும் நகரங்களிலிருந்து சீர்பாததேவிக்குத் துணை யாக வந்தவர்களைச் சீர்பாதகுலமாக வகுத்ததாக திரிகோணமலைச் செப்பேட்டில் காணமுடிகிறது.
சீர்பாததேவிக்குத் துணையாகவந்த ஏழு தலைவர் தலைவிகளைக்கொண்டு சீர் பாதகுலம் வகுத்ததாகக் கொக்கொட்டிச்சோலை செப்பேட்டில் காணமுடிகிறது.
செப்பேடுகளுள் காலத்தால் முந்தியது வீரர் முனைச் செப்பேடாகும். மன்னவன் வாலசிங்களுல் அளிக்கப்பட்ட வீரர்முனைச் செப்பேட்டில், அரச குலத்தைச் சேர்ந்தவர்களைக்கொண்டே வீரர்முனை யில் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது தெளி வாகிறது.
வாலசிங்க மன்னவன் வீரர்முனையில் முதன் முதலாகச் சோழநாட்டு அரசகுலத்தவரையே சீர் பாதகுலமாக வகுத்தான். அதனுற்ருன் அரசகுலக் கெளரவமான அரவிந்தமலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினை வழங்கினன்.
வீரர்முனைச் செப்பேட்டினுக்குப் பின்னர்தான் ஏனைய செப்பேடுகள் தோன்றின. அதன்பயணுகத் தான் பின்னர் தோன்றிய செப்பேடுகளில் சில சம்ப வங்கள் திரித்துக் கூறப்படமுடிந்தது.
- سه 90 س

திரிகோணமலைச் செப்பேடு பெயர்களைக் கூரு மல் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டவர்கள் எங்கிருந்து வந்தவர்களென்றும், அவர்கள் எவ்வாறன கெளர வத்தை உடையவர்களென்றும் கூறுகிறது.
வீரர்முனைச் செப்பேட்டினுக்கு அடுத்தபடியாக அதே ஆண்டில் எழுந்த செப்பேடுதான் திரிகோண மலைச் செப்பேடு. இச்செப்பேட்டினை மன்னவனும் சீர்பாததேவியும் வீரர்முனையிலிருந்து சிங்கை நகரி னுக்குச் சென்றகாலையில் திரிகோணமலைக் கோணேசு வரனை வழிபடச சென்ருர்கள். கோணேசுவரப் பெரு மானது அருளினற்ருனே கடலிலிருந்து வினயகப் பெருமானது திருவுருவம் கிடைக்கப்பட்டது. அதன் பயனகத்தானே வீரர்முனையில் வினயகருக்குத் திருக் கோயிலும் எழுந்தது. சீர்பாதகுலமும் வகுக்கப்பெற் றது. ஆகவே மன்னவன் வாலசிங்கன் சீர்பாதகுலம் வகுத்ததைச் சாசனம் செய்து திரிகோணமலைக் கோாணசுவரப் பெருமானது கோ யி லி னு க் கு க் கையளித்தான். . . . . . . .
வீரர்முனைச் செப்பேடு அரசகுலத்தவரையே சீர் பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. திரிகோண மலைச் செப்பேடு திருவொற்றியூர், கட்டுமாவடி, பெருந்துறை என்னும் நகரங்களில் வாழ்ந்த பலர் சீர்பாததேவிக்குத் துணையாக வந்தார்கள். அவர் களைத்தான் மன்னவன் சீர்பாதகுலமாக வகுத்த தாகக் கூறுகிறது. ஆகவே திருவொற்றியூர், கட்டு மாவடி, பெருந்துறை என்னும் நகரங்களில் வாழ்ந்த அரசகுலச் சுற்றத்தவரையே சோழ மன்னன் தன் மகள் சீர்பாத தேவிக்குத் துணையாகச் சேர்த்தனுப் பினுனென்பது தெளிவாகிறது. இதனை நன்கு தெளி வாகவே திரிகோணமலைச் செப்பேட்டில் 'அரசியின் குலமென அவள் நாமமே பெற்று அன்று சீர்பாத மானேன்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
--س۔ 91-سس۔

Page 61
வீரர்முனைச் செப்பேட்டினையும், திரிகோண மலைச் செப்பேட்டினையும் ஆராய்ந்தால் முதன் முதலிலே சோழ நாட்டு அரச குலத்தவரையே வீரர்முனையில் குடியிருத்திச் சீர் பாதகுலமாக வகுத்த தெனக் கொள்ளலாம்.
அரச குலத்தவரைக்கொண்டு வீரர்முனையில் சீர்பாதகுலம் வகுக்கப்பட்டாலும், சீர்பாததேவிக் குத் துணையாக வந்த ஏனைய அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்களும் வீரர் முனையிலே வசிக்கவேசெய்தார்கள்.
சீர்பாதகுலத்த வருடன் சோழநாட்டு அந்த ணர்கள், திருமண உறவினல் கலந்து சீர்பாதகுல மானர்கள். இதனைத் திருக்கோயிற் செப்பேடு உறுதிப் படுத்துகிறது.
பின்னர் வேளாளரும், வணிகரும் திருமண உறவினல் சீர்பாதகுலத்தவருடன் கலந்து சீர்பாத குலமானர்கள். இதனைத் துறைநீலாவணைச் செப் பேடு உறுதிப்படுத்துகிறது. -
சோழநாட்டிலிருந்து வந்த அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்த வர்கள் காலவரையில் ஒன்ருகக் கலந்து சீர்பாத
கோணமலைச் செப்பேடு, திருக்கோயிற் செப்பேடு, துறைநீலாவணைச் செப்பேடு என்பவைகளைக்கொண்டு தீர்மானிக்கலாம். ஏனெனில் இச்செப்பேடுகள் நான் கும் ஒன்றுக்குப்பின் ஒன்றன கால எல்லையிலே எழுந்தமையினற்ருன் இந்த முடி பி னு க்கு வர முடிகிறது. இருந்தாலும் ஏழு தலைவர், தலைவியர் களை ஒன்ருக்கிச் சீர்பாதகுலம் வகுத்ததாகக் கொக் கொட்டிச்சோலைச் செப்பேடு கூறுகிறது. அவ்வா ருயின் ஏழு தலைவர் தலைவிகளும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக ஓர்போதும் இருக்கமுடியாது.
-92 -

அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு குலத்தைச் சேர்ந்தவர்களாகவே ஏழு தலைவர் தலைவியர்களும் இருந்திருக்கவேண்டும்.
செப்பேடுகள் அனைத்தையும் ஒருமுகமாக நோக்கினுல் சிறந்ததோர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். வீரர்முனையில் முதலில் அரச குலத்தவர் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்கள். பின்னர் அந் தணர் கலந்து சீர்பாதகுலமானர்கள். பின்னர் வேளாளரும் வணிகரும் கலந்து சீர்பாதகுலமானர் கள். இக்கலப்பு முறையினுக்கு ஒரு சில ஆண்டுகள் பிடித்திருக்கும். ஆகவே சீர்பாதகுல வரன் முறைமை யினைச் சொல்லும் செப்பேடுகளில், வீரர்முனைச் செப்பேடு, திரிகோணமலைச் செப்பேடுகள் தோன் றிச் சில ஆண்டுகளின் பின்னர்தான் திருக்கோயிற் செப்பேடு தோன்றியது. அதற்குப்பின்னர்தான் கொக்கொட்டிச்சோலைச் செப்பேடும், துறைநீலா வணைச் செப்பேடும் தோன்றின.
துறைநீலாவணைச் செப்பேட்டில் நான்கு குலத்தையும் சேர்ந்த சீர்பாதகுலக் குடிமரபினர் குறிப்பிடப்படுகிறர்கள். ஆகவே சீர்பாதகுலத்து இறுதிச் செப்பேடு துறைநீலாவணைச் செப்பேடாகும்.
சீர் பா த குலத் து ஐந்து செப்பேடுகளையும் கொண்டு சிறந்ததோர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். அதாவது அரசகுலத்தவரான சீர்பாத குலத்த வருடன், சோழநாட்டிலிருந்து சீர்பாத தேவிக்குத் துணையாக வந்த அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து நவமான சீர்பாதகுலம் தோன்றி வளர்ந்ததாகு மென்பதேயாகும்.
சோழநாட்டிலிருந்து பல்வேறு குலத்தவர்கள் சீர்பாததே விக்குத் துணையாக வந்திருக்கிருர்கள். இறைவனது அருளினுல் அவர்கள் வீரர்முனையில்
أسس 93 حسن.

Page 62
குடியேறி வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓர் சிறு கூட்டத்தவர்களான அவர்கள், தங்களது சந் ததியினரை வளர்க்கும்பொருட்டு தங்களது இள வரசிக்காகக் காலவரையில் ஒன்ருகக் கலந்து சீர் பாதகுலத்தை வளர்த்துள்ளார்களெனலாம். காலத் துக்குக்காலம் ஏனைய குலத்தவர்கள், சீர் பாதகுலத் தவருடன் வீரர்முனையில் கலந்ததின் பயனகத் தங் களது குலப் பெருமை தொனிக்கும்வண்ணமாகப் பின்னர் வந்த மன்னவர்களிடம் கூறிச் சாசனம் செய்திருக்கிருர்கள். இந்தவகையிலேதான் சில செப் பேடுகள் எழுந்தன. ஒரே ஆண்டில் செப்பேடுகள் வரையப்பட்டிருக்குமெனில், சிறு முரண்பாடுகள் கூடக் செப்பேடுகளிற் தோன்றியிருக்காது. ஆகவே, சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணையாக வந்தவர்கள், சீர்பாதகுலத்தவருடன் கலந்தபோது தான் திருக்கோயிற் செப்பேடு, கொக்கொட்டிச் சோலைச் செப்பேடு, துறை நீலாவணச் செப்பேடு என்பவைகள் தோன்றின.
கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு தோன்றிய காலையில் சீர்பாதகுலத்துள்ளே அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்ற குல வேறு பாடுகள் இருக்கவில்லை. நான்கு குலத்தையும். சேர்ந்த ஏழு சீர்பாதகுலத் தலைவர் தலைவியர்களே இருந்திருக்கிருர்களென்பது தெளிவாகிறது.
துறைநீலாவணைச் செப்பேடு தோன்றிய காலத்தில் சீர்பாதகுலமென்ற ஒரே குலந்தான் இருந்திருக்கிறது. ஏழு தலைவர் தலைவியர்களைக் கொண்ட ஏழு குடிமரபுகளுடன், வேறு பல குடி மரபுகளும் சேர்ந்து ஒன்ரு ன, ஒரே இனமான சீர்பாதகுல மக்களாகவே வாழ்ந்திருக்கிருர்களென் பது தெளிவாகிறது.
ஓர் குலத்தவரை மட்டும் அதாவது அரச குலத்தவரை மட்டும் சீர்பாதகுலமாக வகுக்கவேண்
---94-م

டிய அவசியமேயில்லை. ஓர் குலத்தைச் சேர்ந்தவ் ருள்ளே வரிசைகளிலோ, விருதுகளிலோ, வேறுபாடு கள் தோன்றுவதற்கு இடமேயில்லை. ஏனெனில் வரிச்ைகளுக்கும், விருதுகளுக்காகவுந்தான் பின்னர் செப்பேடுகள் தோன்றின. இதனைச் சீர்பாதகுலத் துக் குடிமரபுப் பிரிவுகள் தெளிவாகக் காட்டுகின் றன. . . . . . .
பல்வேறு குலத்தவர்களை ஓர் குலமாக வகுக் காது, ஒன்முகக் குடியிருத்தினல் நிச்சயமாகக் கால வரையிலே வேறுபாடுகள் எழவேசெய்யும். தங்கள் தங்கள் வரிசைகளுக்காக முரண்படுவார்கள். குலப் பெருமை பேசுவதில் முரண்படுவார்கள். இவ்வாரு ன ஓர் நிலைமை பிற்காலையில் எழாது தவிர்க்கவேதான் சோழ நாட்டிலிருந்து, சோழ இளவரசிக்குத் துணை யாகவந்த நான்கு குலத்தவர்களையும், சோழ இள வரசி சீர்பாததேவியின் பெயரினல் சீர் பாதகுலமாக மன்னவன் வாலசிங்கன் வகுத் துவைத்தான். அதுவும் சீர்பாததேவி தன் நாட்டு மக்களை வீரர்முனையில் விஞயகராலய வழிபாடு செம்மையாக நடைபெறக் குடியிருத்த விரும்பியதின் பேரிற்ருன், பின்னுளில் குலப்பெருமை பேசிச் சீர்குலைந்து வினயகர் வழிபாடு குன்றிவிடாமலிருக்கத்தான் மன்னவன் வாலசிங்கன் எல்லாக் குலத்தவர்களையும் ஒன்ருக்கிச் சீர்பாதகுல மெனப் பெயர் சூட்டினன்.
வீரர்முனையில் சீர்பாதகுலத்தை நிறுவிச்சென்ற மன்னவன் வாலசிங்கன் தனது ஆட்சிக்காலத்தில் பலதடவைகள் வீரர்முனைக்கு வந்திருக்கிருன் தன் நாட்டு மக்களைப் பார்க்கும் பொருட்டும், திருக் கோயில்களைத் தரிசிக்கும் பொருட்டும் சீர்பாத தேவி காலத்துக்குக் காலம் கிழக்கு ஈழத்தினுக்கு வந்திருக் கிருள். மன்னவனும் சீர்பாததேவியும் வந்த வேளை யில் சீர்பாத குலத்தவர், ஏனைய குலத்தவர் கலந் தமையைக் கூறிச் சாசனம் செய்து செய்து தரக் கோரியிருக்கலாம். அல்லது பின்னர் ஆட்சி செலுத்
سیمسنہ 945 مس۔

Page 63
திய மன்னர்களிடம் கூறிச் சாசனம் செய்திருக்கலாம். ஆகையினற்ருன் பின்னர் குலப்பெருமை துலங்கத் தக்கதான சம்பவங்களைக் கொண்ட செப்பேடுகள் தோன்றமுடிந்தன.
செப்பேடுகளிலேதான் சீர் பாத குலத்தைக் காணமுடிகிறது. சீர்பாதகுலத்தவர்களின் பெருமை களைக் காணமுடிகிறது. எல்லாச் செப்பேடுகளும் ஒரேமுகமாகச் சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாத குலம் வகுத்ததென்று வரையறுத்துக் கூறுகின்றன.
அரசகுலத்தவர், அந்தனர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கு குலத்தவர்களும், படிப்படி யாகக் கலந்தாலும் சரி, அல்லது நான்கு குலத் தவர்களும் ஒரே முறையாகக் கலந்தாலும் சரி, காணப்பெறும் ஆராய்ச்சி முடிபு இதுதான். அதாவது அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் சோழநாட்டு நான்கு குலத்தவர்கள் வீரர் முனையிலே ஒன்ருகக் கலந்து சீர்பாதகுலம் என்னும் ஒர் புதுச் சாகியத்தை ஏற்படுத்தினர்களென்பதே யாகும்.
படிப்படியாக என்ருலும் சரிதான் அல்லது ஒன்ருக என்ருலும் சரிதான் நான்கு குலத்தவர்களும் வீரர்முனையிலே ஒன்ருகக் கலந்தார்கள். அவர்களது கலப்பினுக்கு காலம் இடைவளியாக இருந்தாலும் சரிதான், இல்லாவிட்டாலும் சரிதான் நான்கு குலத் தவர்களும் ஒர்குலமாகக் கலந்து அரசகுலமான சீர் பாதகுலமானர்கள். அன்று அரசகுலமான சீர்பாத குலம் வீரர்முனையில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று கிழக்கு ஈழத்தின் பல ஊர்கள் சீர்பாத குலத்தவர் கள் மட்டும் உறையும் தனி ஊர்களாகத் துலங்கு கின்றன. - s
நான்கு குலத்தாரும் ஒன்ருகக் கலந்து சீர்பாத குலமென்னும் புதுச்சாகியம் தோன்றி வளர்ந்து அரசகுலமாகக் கொள்ளப்பட்டது. சீர்பாதகுலத்த
سسـ96-يم

வர்கள் அரசகுலத்தவர்களென்று ஏனைய வர்கள் கெளரவிக்கும் வண்ணமாகத்தான் மன்னவன் வால திங்கன் சாசனம் செய்து கையளித்ததுடன் அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப் பெற்ற அரசகுல விருதினையும் வழங்கினன்.
அரசகுலமாக வகுக்கப்பெற்ற சீர்பாதகுலத் தவரைக் குலவிருதுச் செப்பேட்டில் அமரர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிருர்கள்.
"தோணி கரையார்க்கு தொப்பி துலுக்கருக்கு
காணி யுழுமேழிசுளி காராளருக்கு நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு எழுத்தாணி சுளி முற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு கைப்பிரம்பு கண்டாரப்பிள்ளைக்கு திமிலர்க்குப் பால்முட்டி சேணியர்க்கு நூலச்சு அமரருக்குத் தேர்க்கொடி அம்பட்டருக்குக் கத்தரிக்கோல் விமலருக்கு மத்து வேதியர்க்குப் பூனுரலாம். வண்ணுர்க்குக் கல்லு வாணிபர்க்குச் செக்கு சுண்ணும்பு சுடும் கடையர்க்கு கூடையாம் மின்னேகேள் வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு சேர்ந்த குயவர்க்கு கும்பகுடம் செப்புவேன் இன்னும் தட்டார்க்குக் குறடு சாணுர்க்குத் கத்தி செட்டிகுலத்தோர்க்குத் தோடு தராசுபடி இட்டமுடன் இந்தவிதிப்படிக்கு எல்லாம் விருதெனவே பட்டமது கட்டிவைத்தான் பாண்டி மன்னவன’’ என்று கூறப்பட்டிருக்கும் குல விருதுச் செப்பேட்டில் அமரருக்குத் தேர்க்கொடி என்று குறிப்பிடப்பட் டிருக்கிறது.
ஒவ்வொரு குலத்தவர்க்கும் எவை, எவை விருதாக இருக்கவேண்டுமென்று வரையறுக்கப்பட் டுள்ள குலவிருதுச் செப்பேட்டில் அமரருக்குத் தேர்க் கொடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமரர் களான தேவர்கள் போற் புகழும், பெருமையும், சிறப்பும் கொண்டதனற்ருன் குலவிருதுச் செப்பேட்

Page 64
டில் சீர்பாத குலத்தவரை அமரர்கள் எனக் குறிப் பிட்டு அவர்களது விருதும் அரசர்க்கு உரியதான தேர்க்கொடி என்றும் கூறப்பட்டிருக்கிறது.
குலவிருதுச் செப்பேட்டில் அமரர்களான சீர் பாத குலத்தவர்களுக்கு தேர்க்கொடியென்று சிறப் பாகவே கூறப்படுகிறது. இவ்வாருன விரு தினை க் கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்ருண்டில் வால சிங்க மன்னவன் சீர்பாதகுலச் செப்பேடுகள் கூறு கின்றன.
இவ்வாறன பெருமைகள் கொண்ட சீர்பாத குலத்தவர்கள் அன்று பூனூல் அணிந்து தலைநிமிர்ந்து அரசகுலமென்ற கெளரவத்துடன் வாழ்ந்தர்ாகள். ஆனல் இன்ருே தங்களது பெருமைகள் அனைத்தையும் மறந்தவர்களாக வாழ்கிருர்கள். இருந்தாலும்
"படையும் கொடியும் குடியும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாருமுடியும் நேர்வனப் பிறவும் தெரிவுகொள் செங்கேரல் அரசர்க்குரிய" என்ற தொல்காப்பிய சூத்திரத்தினுல் சீர்பாத குலத் தவர்கள் புகழ்மிக்க அரசகுலத்தைச் சேர்ந்தவர்க ளென்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
مقصبہ 598 جینیتو

6.
பாண்டியன் படையெடுப்பு
முதலாம் வரகுண பாண்டியன் மரணத்திரை பால் மறைக்கப்பட, அவனது மகனுன சீமாறன் சீவல்லவன் கிறிஸ்துவிற்குப்பின் 835ஆம் ஆண்டு பாண்டிய மன்னனக முடிபுனைந்தான்.
மாறவர்மன் என்ற பட்டமுடைய சீமாறன் சீவல்லவனைச் சடையவர்மன் என்றும் அழைப்பர். இவனுக்கு ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அவனிப சேகரன் என்ற சிறப்புப் பெயர்களும் வழங்கின. .
பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவை வேல் அவனிப சேகரன் சீர்கெழு செங்கோல் சீவல்லவன்' என்று புதுக்கோட்டையிலுள்ள சிற்றண்ணவாயல் சமணரது குகைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டு புகழ்ந்து கூறுகிறது.
சீமாறன் சீவல்லவனது வரலாற்றினைச் சின்ன மனூர்ச் செப்பேடுகள், தளவாய்புரச் செப்பேடுகள் தெளிவாகக் கூறுகின்றன. தந்தையைப்போலவே விர ம் மிக்க மன்னவனகவே சீமாறன் சீவல்லவன் விளங்கினன். a
அரியணையில் அமர்ந்த சீமாரன் சீவல்லவனது கவனம், பாண்டிய அரசின் பகைவர்களாகத் துலங் கியவர்கள்மீது திரும்பியது. முதலில் பக்கத்தே தனி
حس 99 سے

Page 65
வேந்தனுக விளங்கிய சேரன்மீது தாக்குதலைத் தொடங்கினன். விளிஞத்திலே நடைபெற்ற பயங் கரப் டோரிலே, சேரனது உயிரைப்போக்கி வெற்றி மாலை சூடினன். இதனைத் தளவாய்புரச் செப்பேட் டில் “விண்ணள வில்லவற்கு விளிஞத்து விடை கொடுத்தும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சேர மன்னவனைக் கொன்று வெற்றிவாகை சூடிய சீமாறன் சீவல்லவன் குண்ணுரர்ப் போர்க் களத்திலே தன்னை வந்தெதிர்த்த பகைவர்களையெல் லாம் புறமுதுகிட்டோடும்படி செய்தான்.
குடமூக்கில் வந்தெதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகிய மன்னவர்களை யெல்லாம் புறங்கண்டு மாபெரும் வெற்றி வீரஞகச் சீமாறன் சீவல்லவன் துலங்கினன்.
தமிழகத்தில் தன்னை எதிர்ப்பாரின்றி வெற்றி வீரணுக விளங்கிய சீமாறன் சீவல்லவனது கவனம் ஈழத்தின் மீது திரும்பியது. . . . . . . .
வடக்கு ஈழமாகிய சிங்கை நாட்டிலே ஜெய துங்க பரராசசிங்கனுன வாலசிங்கனின் செங்கோல் கிழக்கு ஈழம் வரை யும் செம்மையாகச் சென்று கொண்டிருந்தது.
அநுரதபுரத்து ம ன் ன வ ஞ க முடிபுனைந்து கொண்ட அக்கிரபோதியின் கா லத் தி லே கலக மொன்று ஏற்பட்டது. கலகத்தை அடக்கமுனைந்த மன்னவன் முடிவிலே கலகக்காரர்களின் வாளுக்கே பலியானுன்.
அக்கிர போதியின் மரணத்தினல், அவனது தம்பியான சேனன் ஈழத்து மன்னவனுக அனுரத புரத்திலே முடிபுனைந்தான். அனுரதபுரத்திலே . Փւգ, புனைந்த சேனன், தமிழர்களுக்கஞ்சி பொலநறுவை யினைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்தலானன்.
ص--۔ 100 سہ۔

அனுரதபுரத்து அரியணையின் ஆட்டத்தினை அறிந்த சீமாறன் சீவல்லவன், தனது பகைவர்களுக்கு ஈழநாடு புகலிடமாக இருக்கக்கூடாதென்பதற்காக, ஈழத்தைக் கைப்பற்றப் பெரும் படையுடன் புறப் பட்டான்.
சீமாறன் சீவல்லவன் தனது படையுடன் சிங்கை நாட்டில் இறங்கி, சிங்கை நகரைப் பிடிப்பதற்காகக் கோட்டையினை முற்றுகையிட்டான். பாண்டிய மன்ன னின் எதிர்பாராத முற்றுகையினைக் கண்ட சிங்கை மன்னவனுன வாலசிங்கன் திகைத்தான்.
.. பாண்டிய ன் சீமாறன் சீவல்லவன் படை
கொண்டு சிங்கை நகரினைத் தாக்கவருவானென்று வாலசிங்க மன்னவன் ஒர்போதும் எதிர்பார்க்கவே யில்லை. எதிர்பாராவிட்டாலும் முற்றுக்கையிட்டிருக் கும் பாண்டியனை எதிர்க்காது வாளா திருக்க முடி யுமா? பகைவணைக் கண்டவுடன் வெள்ளைக் கொடியை உயர்த்தினல் வீரத் தினு க் குத் தான் மதிப்பேது? வெற்றி அல்லது வீர மரணந்தானே! களம்புகுந்தால் கிடைப்பது? கோழையாகக் கைகட்டி வாழ்வதைவிட வீரணுகக் களம்புகுந்து வீர சொர் க் க ம டை வது மேலானதெனக் கண் - வாலசிங்கன் போர்முர சறையப் பணித்தான். மறு க ண ம் சிங்கைநகர்க் கோட்டையெங்கும் போர்முரசு ஒலித்தது. பிறந்து வளர்ந்த பொன்னட்டைக் காக்க, சிங்கை நாட்டு வீரர்கள் வீறுகொண்டெழுந்தார்கள். போர்கோலம் பூண்டு மன்னவன் வாலசிங்கன் போர்ப்படையினுக் குத் தலைமைதாங்கினன்.
பாண்டிய வீரர்கள் கோட்டை மதிலினைச் சிதை க்க த் தொடங்கினர்கள். பல ம் கொண்ட் கோட்டையாக இருந்தாலும், எத்தனையோ போர்க் களம் புகுந்து வெற்றிவாகை சூடிய பாண்டிய வீரர் களுக்குச் சிங்கை நகர்க் கோட்டை எம்மாத்திரம்?
y ar سحه 1 0 1 س---س

Page 66
பாண்டிய வீரர்கள் கோட்டை ம தி லின ச் சிதைக் கா வண்ணம், சிங்கை நாட்டு வீரர்கள் எதிர்த்தார்கள். அவர்களது பலமான எதிர்த் தாக்கு தல்களையெல்லாம் பாண்டிய வீரர்கள் முறியடித்து,
கோட்டையினுட் புகுந்த பாண்டிய வீரர்களைத், தன் வீரர்களுடன் சிங்கை மன்னவனன வாலசிங்கன் எதிர்த்தான். பாண்டிய வீரர்களும், சிங்கை வீரர் களும் கைகலந்தார்கள். பயங்கரமான போர் சிங்கை நகர்க் கோட்டையினுள்ளே எழுந்தது.
போர்க்களத்திலே பாண் டி ய மன்னவனை, சிங்கை மன்னவனன வாலசிங்கன் எதிர்த்தான். எத் தனையோ போர்க்களங்களிலே புகுந்து வெற்றிவாகை சூடிய சீமாறன் சீவல்லவனுக்கு, எதிர்த்து நின்று திறமை வியப் பினை யூட்டவேசெய்தது.
வான்வழியாகச் செல்லும் வல்லமை படைத்த வனும், பல்வேறு வகையான ஆற்றல்கள் படைத்த வனுமான வாலசிங்கன் வீரத்தைத் தன் உயிரினும் மேலாக மதித்தான். வேதங்களை முறையாகக் கற்ற வாலசிங்கன் வீரத்தைப் பெருமையாகவே போற்றி ஞன். கெளரவித்தான். அதன்பயனகத்தான் களம் புகுந்து பாண்டியனை வாலசிங்க மன்னவன் எதிர்த் தான்.
ஆற்றல்க ள் கொண்ட இருமன்னவர்களும் களத்திலே பயங்கரமாகப் பொருதினர்கள். பாண்டி யன் சீமாறன் சீவல்லவனுக்கோ பல போக்களங்கள் கண்ட அனுபவம். ஆனல் வாலசிங்க மன்ன வனுக்கோ முதற்போர்க்களம் போரின் பயங்கரத்தை நேரிலே பார்த்தறியாத வாலசிங்கன், இரத்த <ֆԱ) பெருகி ஓடுவதைக் காணவும் சிறிது நாழிகைப் பொழுது தயங்கினன். வாலசிங்க மன்னவனது தயக் கத்தைப் பயன்படுத்திக்கொண்ட சீமாறன் சீவல்ல வனின் உடைவாள், ஜெயதுங்க பரராசசிங்கனன
س-02 il -سسس

வாலசிங்கனின் தலையைத் துண்டித்து உயிரைக் குடித் தது. பாண்டிய வீரர்கள் வெற்றிமுரசு கொட்டினர் கள். தங்கள் மன்னவன் வாலசிங்கன் வீரசொர்க்கம் புகுந்ததைக் கண்ணுற்ற சிங்கைநாட்டு வீரர்கள் பின்வாங்கிச் சிதறி ஓடினர்கள். சிங்கைநகர்க் கோட் டையும் வீழ்ச்சியுற்றது.
பனைக்கொடி கம்பீரமாக ப் பறந்துகொண் டிருந்த சிங்கைநகர்க் கோட்டைக் கொடித்தம்பத் திலே, பனைக்கொடி இறக்கப்பட்டு, கயற்கொடியைப் பறக்கவிட்டான் பாண்டியன் சீமாறன் சீவல்லவன்.
பாண்டிய மன்னவன் சீமாறன் சீவல்லவன், சிங்கை நாட்டினை வெற்றிகொண்டானென்பதை இறையனர் அகப்பொருளில் உதாரணமாக எடுத் தாளப்பட்டிருக்கும்.
'மின்னேரொளிமுத்த வெண்ணைன் மேல்விரை நாறுபுன்னைப் பொன்னேர் புதுமலர்த்தாய்ப் பொதிவண்டு முரன்றுபுல்லா மன்னேரொழிய *மணற்றி வென்ருன்
கன்னிவார்துறைவாய்த் தன்னேரிலாத தகைத்தின்றி யான்கண்ட தாழ்பொழிலே’’ என்னும் கோவைநூற் செய்யுளால் நல ம் பட க் காணமுடிகிறது.
சிங்கைநகர்க் கோட்டையைக் கைப்பற்றிச் சிங்கை நாட்டினை வெற்றிகொண்ட சீமாறன் சீவல்ல வன், அனுரதபுரத்தை நோக்கித் தன் படையினை தடத்திச்சென்றன். አ
சிங்கை நாட்டினை வெற்றிகொண்டுவரும் பாண்டிய மன்னவனை, அனுரதபுரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் அன்புடன் வரவேற்று. ஆதரவுடன் சேர்ந்துகொண்டார்கள்.
* மணற்றி என்பது வடக்கு ஈழத்தினைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றகும். பின்றளில் மணற்றி, மணற்றிடல் எனவும் வழங்க விாயிற்று.
س--103 س

Page 67
பாண்டிய மன்னவனைச் சேனன் அனுரதபுரத் திலே எதிர்த்தான். ஒருசில நாழிகைப் பொழுது நீடித்த போரினுக்குச் சேனன் ஈடுகொடுக்கமுடியா மல் பின்வாங்கிப் பொலநறுவைக்கு ஓடினன். அவ னைத் தொடர்ந்து பாண்டியனும் தனது படையினை நடத்திச்சென் முன்
பொலநறுவையில் நடைபெற்ற பயங்கரமான போரிலே சேனன் தோல்வியைச் சுமந்ததனல், வெள் ளைக் கொடியை ஏந்திச் சரணடைந்தான். ւմn 6ծTւգ. யன் சீமாறன் சீவல்லவன், மன்னன் சேனனுடன் சமாதானம் செய்துகொண்டு அனுரதபுரத்தினுக்குத் திரும்பினன்.
ஈழத்தை வெற்றிகொண்ட சீமாறன் சீவல்ல வன் அனுரதபுரத்தைச் சூறையாடிக்கொண்டு மது ரைக்கு மீண்டான். ஈழம் முழுவதையும் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டிய சீமாறன் சீவல்லவனின் ஈழத்து வெற்றியினை,
'காடவனக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் பூரீவரகுணன் குறைகழற் கோச்சடையற்குச் சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் பூரீவல்லவன் மேய்போயந் தோளியர்கள் வித்தியாதர ஹிரண்யகர்ப்ப & குண்ணவல மாவென்றுங் குரைககூ லிழங்கொண்டும் விண்ணன வில்லவற்கு விழிஞத்து விடிைகொடுத்தும்" என்று சடையவர்மன் பராந்தகன் செப்பேட்டிலும்,
"ஆங்கவற் காத்மசனகி யவனிதலம் பொறைதாங்கி தேங்கமழ்பொழிற் குண்ணுாரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகைசூடிக் கோடாத செங்கோடைப்பக் , ' கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து' என்ற சின்னமனூர்ச் செப்பேட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. . . . . . . . . . . . . - - - - .۰ ۰ ۰۰. م
-104

7る。
சிர்பாததேவி தீக்குளித்தல்
111ண்டிய ம ன் ன ன் சீமாறன் சீவல்லவன் எதிர்பாராவண்ணம், சிங்கைநகர்க் கோட்டையினை முற்றுக்கையிட்டதைக் கண்ணுற்ற மன்னவன் வால சிங்கன் திகைத்தான்.
தமிழகத்து அரசியல் சூழ்நிலையிலே, தமிழக வேந்தர்கள் ஈழத்தின் மீது படையெடுக்கமாட்டார்க ளென்றே மன்னவன் வாலசிங்கன் கருதியிருந்தான். அல்ை தமிழகத்தில் மாபெரும் வெற்றிகள் ஈட்டிய தனல் தினைவுகொண்ட சீமாறன் சீவல்லவன், ஈழத் தின்மீது படையெடுக்க முனை ந் தான். தமிழகத்தி லுள்ள தனது பகைவர்களுக்கு, ஈழத்து மின்னர்கள் உதவிபுரியவோ, பாதுகாப்பளிக்கவோ இடம் வைக்கக் கூடாதென்பதற்காகவேதான், சீமாறன் சீவல்லவன் ஈழத்தின்மீது படையெடுத்தான்.
பாண்டியனது படையெடுப்பினுக்கு மு த ல் இலக்காகியது சிங்கைநகர்க் கேட்டையேதான். நள் ளிரவிலே கோட்டை முற்றுக்கையிடப்பட்டது வால சிங்கனுக்கு இதமானதாக இருக்கவில்லை. பகைவர் கள் இருக்கிருர்கள். பாதுகாப்பாக இருக்கவேண்டு மென்ற நிலைமையே வாழ்க்கையில் ஏற்பட்டிராத வாலசிங்கனுக்கு, பா ன் டி ய ன து படையெடுப்பு அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. メ
-س 5 10-۔

Page 68
நள்ளிரவிலே முற்றுகையிட்டிருக்கும் ப கை வனுக்கு அடிபணிய வாலசிங்கனது வீர உணர்வு இடம் கொடு க்க வே யில்லை. முன்வைத்த காலைப் பின் வைத்தறியாத வீரநெஞ்சம் படைத்த வாலசிங் கன் வெள்ளைக்கொடிபிடித்து சரணடைய விரும்ப வில்லை. வெற்றி அல்லது வீரமரணம் என்று சூழ் கொட்டிய வாலசிங்கன், ஒருகணப்பொழுது இல்லாள் சீர்பாத தேவியை நினைத்துப்பார்த்தான்.
போர்க்களம் புகுந்தால் முடிவு! வெற்றி அல் லது தோல்வி! இரண்டிலொன்றை நிச்சயமாக அனுப வித்துத்தான் தீரவேண்டும். வெற்றியென்றல் பெரு விழா! தோல்வியென்றல் மரண ஒலம்! இரண்டில் ஒன்றினை முன்னதாகவே நிச்சயித்துக்கொள்ள முடி யாதபடியால், எதற்கும் நங்கையர்களுக்கும். அரச உரிமைப் பொருள்களுக்கும் பாது காப்பளிப்பது மேலானதெனவே வாலசிங்கன் கருதினன்.
சிங்கைநகர்க் கோட்டையின் சுரங்கவழி பாண்டி யரின் முற்றுகையினைத் தாண்டியே வெளியேறிச் செல்லக்கூடியதாக தக்கதாகத்தானே, சுரங்கவழியும் முன்னேடியாக அமைக்கப்படுகிறது.
சுரங்க வழியினூடாகச் சீர்பாததேவியும் அந் தப்புர நங்கை யர் களையும் கதிரமலை நகரினுக்கு அனுப்பிவைத்தான். அவர்களைத் தொடர்ந்து நம் பிக்கைக்குரிய வீரர்கள் அரச உரிமைப் பொருட்களை யும், சிங்கை நாட்டின் செல்வங்களையும் சுமந்து கொண்டு சென்ருர்கள்.
சிங்கை நாட்டின் செல்வங்களைப் பாதுகாத்து விட்டோம். அந்தப்புரத்து நங்கையரின் மானத்தைக் காத்துவிட்டோமென்ற பெருமிதத்திலே மன்னவன் வாலகிங்கன் போரினுக்கான ஏற்பாடுகளை மேற் கொண்டான். போர்க்கோலம் பூண்டு போர்க்களம் புகுத்*ான்.
-1 06

மன்னவன் வாலசிங்கன் பாண்டியன் சீமாறன் சீவல்லவனினல் உயிரிழப்பானென்று விதி ஏலவே தீர்மானித்திருக்கும்போது, வீர ப் போர் புரிந்தும் பயன்தானேது? வீரலட்சுமியைத் தோள்களிலே தாங் கிய வாலசிங்கன், சிங்கைநாட்டின் சுதந்திரத்தினுக் காக வீரப் போர்புரிந்து வீரசொர்க்கம் புகுந்தான்.
பாண்டிய வீரர்கள் சிங்கைநகர்க் கோட்டை யைப் பிடித்தமைக்காக வெற்றிவிழாக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மன்னவன் வாலசிங்கனின் உயிரற்ற சடலத்தை மெய்ப்பாதுகாவல் வீரர்கள் தூக்கிக்கொண்டு கதிரமலை அரண்மனையிற் கிடத்தி ஞர்கள்.
அன்புக் கணவனின் உயிரற்ற சடலத்தைக் கண்ணுற்ற சீர்பாததேவி தன்னை மறந்து அழுது புலம்பினள். துக்கத்திலே தோய்ந்துகிடந்த சீர்பாத தேவி, பின்னர் கடமையினை உணர்ந்தாள். அமைச் சர்கள் மேற்கொண்டு நடக்கவேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள்.
கதிரமலை அரண்மனை வாசலிலே சிதை வளர்க் கப்பட்டது. சிதையின் நடுவிலே வாலசிங்க மன்ன வனின் உயிரற்ற சடலம் கிடத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் கண்ணிரினல் மன்னவனது சடலத் தைக் குளிப்பாட்டினர்கள்.
மக்களது கண்ணிர் வெள்ளம் கரைபுரண்டோ டச் சிதைக்குத் தீ மூட்டப்பெற்றது. தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. கண்ணீர் சொரிந்த மக்கள் வாய்விட்டுப் புலம்பினர்கள். அன்புக் கணவனை முடிவிலே ஒருபிடி சாம்பலாக்கும் தீயினை வலம் வந்துகொண்டிருந்த சீர்பாததேவி, கணவனுடன் இரண்டறக்கலக்கத் தீயிலே பாய்ந்தாள். செந்நிறத் தீயின் கொடிய நாக்குகள் சீர்பாததேவியை அன் புடன் அனைத்துக்கொண்டன. மக்கள் செய்வதறி யாது இரத்தக்கண்ணிர் வடித்தார்கள்.
--سس-107 سس

Page 69
கிழக்கு ஈழத்திலே சீர் பாதகுலம் என்னும் புதியதோர் சாகியத்தை வகுத்துவைத்த ஜெயதுங்க பரராசசிங்கஞன வாலசிங்கன், நாட்டைக் காக்கும் சுதந்திரப் போரிலே வீர சொர்க்கம் புகுந்தான்.
சீர்பாத குலமே வகுக்கக் காரணமாக இருந்த சோழகுல இளவரசி சீர்பாததேவியும் தீக்குளித்து வீரசொர்க்கத்தில் அன்புக் கணவனுடன் இரண்டறக் கலந்தாள்.
சீர்பாத குலத்தை நிறுவிப் பெருமைகண்ட ஜெயதுங்க பரராசசிங்கனன வாலசிங்கன், பாண்டி யன் சீமாறன் சீவல்லவனுடன் பொருத போரில் வீர சொர்க்கம் புகுந்தான். வாலசிங்கனுக்குப் பின்னர் சிங்கைநாட்டு அரியணையில் அவனது சந்ததியினரே அமர்ந்தனர். ஆணுல் அவர்கள் யார்? என்ற விபரங் *ள வரலாற்று ஏடு மூடிமறைத்துவிட்டது. இருந் தாலும் கிறிஸ்துவிற்குப்பின் ஒன்பதாம நூற்ருண்டு தொடக்கம் பதிமூன்ரும் நூற்ருண்டு வரையும் வால சிங்க மன்னவனின் சந்ததியினரே சிங்கைநகர் அரி யணையில் அமர்ந்திருந்தார்கள்.

சீர் பாதகுலத்தவர்
உறையும் 96Tr366iT
சோழநாட்டிலிருந்து சீர்பாததேவிக்குத் துணை யாக வந்தவர்கள், இறைவனது அருளினல் வீரர்முனை வினயகர் ஆலயத்தின் பொருட்டுச் சீர்பாதகுலமாகி வீரர்முனையிலே வாழலானர்கள்.
வீரர்முனையிலே வாழ்ந்துவந்த சீர் பாதகுலத்த வர்கள் காலத்தின் விரைவினல் பெருகி வரலாஞர் கள். மக்களது பெருக்கத்தினுக்கேற்ப உழுதுண்டு வாழும் தொழில்வளம் வீரர்முனையிலே பெருகவே யில்லை. ஆதலினல் வீரர்முனையிலே வாழ்ந்தவர்களது கவனம் உழுது பயிரிடுவதற்கேற்ற புதிய இடங்களை நாடுவதிலே சென்றது. அதன் பயனக மட்டக்களப்பு வாவிக்கரையினை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தைக் கவர்ந்திழுத்தன.
முதலில் நீலன் அண ப் பகுதி அவர்களது நோக்கினுக்குகந்த இடமாகத் தோன்றியது. ஆகவே பலர் நீலன் அணைப்பகுதியினுக்குச் சென்று உழு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தினர்கள். காடுகளை அழித்துக் கழனிகளைச் செப்பனிடுவதும், பயிர்களைப் பாதுகாப்பதும் சிரமமானதாகவே இருந்தது. ஆதலி ஞல் நீலன் அணைப்பகுதியினிலே நிரந்தரமாகக் குடி யேறி வாழலானர்கள். வளம் ததும்பிய மேற்பகுதி
س۔ 9 10 ہبسی۔

Page 70
யும், அவர்களது கவனத்தை ஈர்த்தமையினல் துறை அமைத்துப் டோக்குவரத்துச் செய்தார்கள். அதன் பயணுக நீலன் அணை என்னும் பெயர் துறை நீலன் அணை என வழக்கா கிக் காலவரையிலே துறை நீலாவணை என வழங்கலாயிற்று.
குடியேறிய மக்கள் சூழவரவுள்ள பள்ள நிலங் களை, வயல் நிலங்களாகச் செப்பனிட்டார்கள். மேற் குக் கரையிலுள்ள வயல்வெளிகளில் மந்தை வளர்த் தார்கள். காடுகள் அனைத்தும் மறைந்தன. கற்பகச் சோலையெனக் கழனிகள் தோன்றின. கழனிகளின் மேட்டு நிலங்களிலே இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கிய மக்கள், வாழ்க்கையினுக்கு வழிகாட்டிய வினயகப் பெருமானுக்கு முதலில் கோயில் எடுப்பித் தார்கள். தீர்த்தோற்சவத்தினுக்காகக் கோயிலினுக்கு முன்னர் குளமும் வெட்டினர்கள். குழ ந் தை கள் நோயின்றி நீண்டகாலம் வாழும்பொருட்டு இக்குளத் தில் நீராடினர்கள். அதன் பயணுகக் கிராமத்து மக்கள் அனைவரும் அக்குளத்தில் நீராடினர்கள். குளத்து நீர் குழந்தைகளைத் தாலாட்டி வளர்த்தமையினல் குளத் தினுக்குப் பிள்ளை வளர்த்தான் குளம் என்ற பெயர் ஏற்பட்டது.
கிராமத்தின் வட அந்தம் கல்லடிமுனை என்ற பெயரினைப் பெறுகிறது. இம்முனையிலுள்ள கருங்கற் பாறைகளின் மத்தியில் கன்னியரின் தெய்வமான கண்ணகி குடிகொண்டிருக்கிருள். வைகாசி முழுமதி யன்று கண் ண கி யி னு க்கு விழா எடுத்து ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. துறைநீலாவணைக் கண்ணகி ஆலயத்தின் பெருமைகள் சொல்லத்தர மன்று! கண்ணுெளியை இழந்தவர்கள்கூட இக்கண் கிையின் அருளினல் கண் ஒளிபெற்றிருக்கிருர்கள். இவ்வாருக ஏராளமான அற்புதங்களை இக்கண்ணகி நிகழ்த்தியிருக்கிருள்.
துறைநீலாவணையில் குடிகொண்ட சீர்பாதகுல மக்களில் ஒர்சாரார் தொழில்வளம் நாடி அயல்
-س. 0 1 1 سسسس

இடங்களுக்கும் பரந்தார்கள். மட்டக்களப்பு வாவி யின் கிழக்குக் கரையோரமாகத் தெற்கே ஒருகல் தொலைவில் பலர் சென்று காடுகளை வெட்டிச் சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள். பள்ள நிலங்களையும் திருத்தி, வயல்வெளிகளாக்கினர்கள். இவர்களோடு வீரர்முனையிலிருந்து பலர் வந்துசேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள். காலவரையில் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறியதனல் சேனைக்குடி எனப் பெயரிட்டு வாழலானர்கள்.
சேனைக்குடிக் கிராமத்தின் ஒர் அந்தம் மட்டக் களப்பு வாவியின் முக்கியமான துறையாக விளங்கி யது. இதனைச் சே%னக்குடித் துறை என அழைக்கப் பட்டது. இப்பகுதியில் வாழும் மக்களுக்கு வேண்டிய பொருட்களை மட்டக்களப்பு நகரத்திலிருந்து கொண்டு வந்து இத்துறையில் கிட்டங்கிகள் கட்டிச் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பயனுகச் சேனைக்குடித்துறை கிட்டங்கித்துறை என்று பெயர் பெறலாயிற்று. இத் துறையின் மேல் கரையில் ஏராளமான வயல்வெளிக ளுண்டு. அவ்வயல்வெளிகளில் ஏராளமான மக்கள் உழுதுண்டு வாழ்ந்துகொண்டிருக்கிருர்கள்.
துறைநீலாவணேயில் வாழ்ந்த சீர் பாதகுலத்த வர்களிற் பலர் மேலும் வளமான தொழில்புரியும் இடங்களை நாடியவகையில், வா வி யி ன் மேற்குக் கரையிலுள்ள காடுகளை அழித்துக் கழனிகளாக்கினர் கள். தங்களுக்கு ஊழியம் செய்துவந்த நாவிதர்களை இங்கு குடியேற்றி நாவிதன்வெளி எனப் பெயரிட் டார்கள். பின்னர் மக்கள் பெருக்கத்தினுல், நாவிதர் களை வேறு இடத்தினுக்குக் குடிபெயரவைத்துவிட்டு, தாங்கள் குடியேறினர்கள். என்ருலும் தாங்கள் முன் னர் இட்ட நாவிதன் வெளியென்ற பெயரை மாற்ருது அதனையே நிலைக்கவைத்தார்கள். இன்றும் நாவிதன் வெளியென்ற பெயரே வழக்கத்திலிருக்கிறது.
-Illa

Page 71
துறைநீலாவணையில் வாழ்ந்த மக்களிற் பலர் மேலும் வடக்குநோக்கிச் சென்று மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள வெளியிலே குடியேறினர்கள். குருத்துமணல் செறிந்து வெளியாக இருந்தமையினல் குருமண்வெளி எனப் பெயரிட்டனர்.
குருத்துமண் வெளியான குருமன்வெளியை மையமாகக்கொண்டு சுற்றிவர நான்கு பெரிய குளங் கள். குளத்துநீர் பாயத்தக்க வயல்வெளிகள் வாவிக் கரைவரையும். சுற்றிவரக் குளங்களும், வயல்வெளி களும் குருமண்வெளியைச் செழிப்பாக அழகு செய் கின்றன. ஊரின் மத்தியில் வினயகராலயமும், மாரி யம்மன் ஆலயமும் இணைந்து பொன்னுெளி பரப்பு கின்றன. இங்குள்ளவர்கள் பெரு நிலக்கிழார்களாக வாழ்கிருர்கள். சீர்பாதகுலத்துள்ளே பெருமைமிக்க அறிஞரைக்கொண்ட பெருமையையுடையது இவ் வூராகும். சீர் பாதகுலத்துப் பெரும் அறிஞரைத் தந்த குருமண்வெளிக் கிராமம் அழகிலே சிறந்த ஆரணங்கு களைக் கொண்டதாகும். ஈழத்திலே அழகு மிக்க ஆரணங்குகள் நிறைந்து விளங்கும் குருமண்வெளிக் கிராமம் சீர் பா த கு லத் துள் ளே பல சிறப்புகள் கொண்டதாகும்.
வளமார்ந்த குருமண்வெளியில் வாழ்ந்த சீர்பாத குலத்தவர்களிற் பலர் தெற்கே வாவிக்கரையின் கிழக்கிலுள்ள முனைக்குச் சென்று குடியேறினர்கள். இம்முனை மகிழமரங்கள் நிறைந்து காணப்பட்டதனல் மகிழுர்முனை எனப் பெயரிட்டனர். பின்னர் துறை நீலாவணையிலுமிருந்து பலர் வந்து குடியேறினர்கள்.
மேலும் பலர் குருமண்வெளியிலிருந்து தொழில் வளத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாவியின் மேல் கரையிலுள்ள மண்டூரின் கிழக்குப் பகுதியில் குடியேறி னர்கள். இப்பகுதி வாவிக்கரையில் கோட்டை வடிவ மாக முனையாக அமைந்து மண்டு மரங்கள் செறிந்து
سس۔ 2 1 1-سـ

கிடந்தமையினல் மண்டூர்க் கோட்டைமுனை எனப் பெயர் சூட்டினர்கள். மட்டக்களப்பு வாவிக்கரையில் மாரி அம்மன் அருள்வீசிப் பரிபாலித்துக்கொண்டிருக் கிருள். இக்கிராமத்தையடுத்து சீர்பாதகுலத்தவரின் சின்னக் கதிர்காமம் என வழங்கப்படும் முருகன் கோயில் கண்கொள்ளாக் காட்சியாகத் துலங்குகிறது.
மண்டூர்க் கோட்டைமுனையின் தென்மேற்கே சிலகல் தொலைவில் மகிழுர்முனையிருந்து தொழில் வளம் நோக்கிப் பலர் குடியேறினர்கள். இந்த இடம் தம்பலவத்தை என வழங்கப்டெற்றது. இங்கு மேலும் பலர் வீரர்முனையிலிருந்தும், மண்டூர்க் கோட்டை முனையிலிருந்தும் சென்று குடியேறினர்கள்.
தம்பலவத்தைக்கும் மண்டூர்க் கோட்டைமுனைக் கும் இடையில் பாலை மரங்கள் நிறைந்து மட்டக் களப்பு வாவிக்கரையில் முனை வடிவமாக இருந்த இடத்தில் தொழில்வளம் கருதிக் குடியேறினர்கள். பாலை மரங்கள் செறிந்து முனை வடிவமாக அமைந் திருந்தமையினல் பாலைமுனை எனப் பெயரிட்டார் கள். நாளடைவில் பாலைமுனை, பாலமுனையாக மருவி விட்டது.
துறைநீலாவணையில் "வாழ்ந்தவர்களிற் பலர் உழுதொழில் காரணமாக சென்றவிடத்திலே, மட்டக் களப்பு நகரின் தென்மேற்கே வாவியின் மறுகரையில் வளம்கொழித்த தீவினைக் கண்டார்கள். நிலவளம் மிக்கு இருந்ததனல் அங்கேயே நிலையாகத் தங்கினர் கள். இத்தீவில் கரையாக்கன் மரங்கள் நிறைந்து காணப்பட்டதனல் கரையாக்கன்தீவு எனப் பெயரிட் t-fTIT gs 6TT.
வீரர்முனையில் வாழ்ந்த சீர்பாதகுலத்தவருக் குரிய மானிய நிலங்கள் மல்வத்தை என்னும் பூங் காவிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஐந்துகல் தொலைவி லுள்ள மல்வத்தையே சீர்பாதகுலத்தவரின் முதற் குடியேற்றத்தினுக்குரிய இடமாகியது. முதல் குடி
--113 حس۔

Page 72
யேற்றத்தினுக்குரியதான மல்வத்தை, வீரர் முனை மக்களின் இறுதிக் குடியேற்றமுமாகியது குறிப்பிடத் தக்கதாகும்.
மேலே கூறிய ஊர்களில் சீர் பாதகுலத்தவர்கள் தனிச் சாகியமாகக் கலப்பின்றி வாழ்கிருர்கள். இவ் வூர்கள் அனைத்தும் சீர் பாதகுலத்தவர்களின் தனித் தாயக ஊர்களாகத் துலங்குகின்றன.
இன்னும் சீர் பாதகுலத்தவர்கள், அயல் இடங் கள் பலவற்றினுக்குச் சென்றும் குடியேறி வாழ்கிருர் கள். அந்த வகையிலே கோணேஸ்வரப் பெருமான் குடிகொண்டிருக்கும் தம்பலகாமம், கல்லோயாக் குடி யேற்றக் கிராமங்கள் முதன்மையானவைகளாகும். ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் திருமண உறவினுல் கலந்தும் பலர் வாழ்கிறர்கள். என்ருலும் சீர்பாத குலத்தவரின் ஆதி உறைவிடம் வீரர்முனையாகும். அடுத்ததாக நிலைத்த பெரிய உறை விட ம் துறை நீலாவணையாகும். இவ்விரு இடங்களிலுமிருந்துதான் மல்வத்தை, சேனைக்குடி, தம்பலவத்தை, நாவிதன் வெளி, குருமண்வெளி, ம கி மூர் முனை, மண்டூர்க் கோட்டைமுனை, பாலமுனை, கரையாக்கன்தீவு ஆகிய ஊர்களுக்குச் சீர் பா த குல த்த வர் கள் குடியேறி, காட்டை நாடாக மாற்றி, சீர்பாதகுலத்தவர்களின் தனி உறைவிடங்கள் என்னும் வண்ண ம் வாழ் கிருர்கள் - வாழ்ந்துகொண்டிருக்கிருர்கள் - வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
114

9.
* இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் முதல்நாளன்று ஆசிரியர் அருள் செல்வநாயகம் வாசித்த ஆராய்ச்சிக் கட்டுரை
சீர்பாதகுலம்
மாண்புமிகு தலைவர் அவர்களே! உலகத் தமிழ்ப் பேரறிஞர்களே! உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்களே! வணக்கம்!
கிறிஸ்து பிறப்பதற்குமுன் வெகு ஆண்டு கால மாக வடக்கு ஈழத்திலே நாகப்பேரரசு தலைநிமிந்ந்து நின்றது. அதன் பயனக வடக்கு ஈழம் நாகநாடு என்னும் பெயரினைப் பெற்றுச் சிறப்பாகத் துலங் இயது. கிறிஸ்துவிற்குப்பின் நாகப்பேரரசு தனது
இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரிலே 3-1-1968ஆம் நாள் தொடக் கம் 10-1-1968ஆம் நாள் வரை சிறப்பாக நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகிலுள்ள 35 நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதி கள் பங்குபற்றித் தமிழினச் சிறப்பாக ஆராய்ந்தார்கள். சீர்பாத குல வரலாறு நூல் ஆசிரியரான அருள் செல்வநாயகம் அவர் களும் இம்மகாநாட்டில் கலந்துகொண்டு முதல்நாள் சீர்பாதகுல வரலாறு நூலின் சுருக்கமான "சிர் பாதகுலம்’ என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வாசித்தார்.
سیسے 115۔سے

Page 73
வலிமையை இழந்தது. கிறிஸ்துவிற்குப்பின் நாலாம் நூற்ருண்டு தொடக்கம் ஏழாம் நூற்றண்டுவரை நாகப் பேரரசு, நாக அரசாக வலிமை குன்றியது.
கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்ருண்டில் நாகநாட்டு அரசர்கள் தனி அரசர்களாகவும், அனு ரதபுரத்து அரசர்களது ஆணைக்குக் கட்டுண்டவர் களாகவும், செங்கோல் செலுத்தினர்கள். காலத் துக்குக்காலம் ஏற்பட்ட பல்லவ மன்னர்களது படை யெடுப்பின ல் திறை செலுத்தும் அரசர்களாகவும் செங்கோல் செலுத்தினர்கள்.
எட்டாம் நூற்ருண்டின் இறுதியில் பல்லவர் களது வலிமை குன்றியது. அதேபோல் அனுரதபுரத்து மன்னவர்களது வலிமையும் குன்றியது. அதன் பயனுக நாகநாட்டில் அவர்களது ஆணை செல்லாதொழிந் தது. இக்காலையில் நாகசூல அரச சந்ததியினரும் அற் றுப்போனர்கள். இதனை அறிந்த விசயனுடன் வந்த அண்ணியபுரத் தலைவனுண் உக்கிரசிங்கன் என்பவன் கி. பி. 795 ம ஆண்டு நாகநாட்டைக் கைப்பற்றிக் கதிரமலையை தலைநகராகக்கொண்டு ஆணை செலுத்த
லானுன்.
மருதப்பிரவல்லி
இக்காலையில் சோழகுல இளவரசியான மாரு தப்பிரவல்லி என்பவள் தனது குன்மநோயினை நீக் கும்பொருட்டு தன் பரிவாரங்களுடன் நாகநாட்டி லுள்ள கீரிமலையில் வளவர்கோன் பள்ளத்துக்கணித் தாய் ஒர் பாளையம் போட்டுத் தங்கிக்கொண்டு, தினமும் கீரிமலைப் புனித நீரூற்றில் நீராடிக்கொண்டு வந்தாள்.
மாருதப்பிரவல்லி தீராத குன்ம நோயினுல் பீடிக்கப்பட்டிருந்தாள். கர்ம நோயான இக்குண்ம நோயினை நீக்கவே இறைவனது கருணையை நாடித்
س-6"1H س

தீர்த்த யாத்திரையை மேற்கொண்டாள். சாந்தலிங்க முனிவரால் கீரிமலை நீரூற்றின் சக்தியைக் கேள்வி யுற்றுத்தான் மாருதப்பிரவல்லி கீரிமலைக்கு வந்தாள்.
கீரிமலை நீரூற்றில் மாருதப்பிரவல்லி நாள் தவ ரு மல் நீராடிக்கொண்டு, நகுலேஸ்வரனையும் வழிபட் டுக்கொண்டுவந்தாள். புனித நீரூற்றின் மகத்துவத் தினுலும், இறைவனது அருளினலும் மாருதப்பிரவல்லி யின் குன்ம நோய் நீங்கியது. மாருதப்பிரவல்லி கீரி மலையில் நீராடிக்கொண்டு வந்த காலையில் அயல் இடங்களுக்கு உலாவச்செல்வது வழக்கம். ஒர்நாள் கோயிற் கடவைப் பகுதிக்குச் சென்றபோது, அரச மரமொன்றின்கீழ் சடையன் என்னும் பெரியார் முருகனது வெள்ளி வேலினுக்கு விளக்கேற்றி வழி பாடு செய்துகொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற மாருதப்பிரவல்லி தன்னையுமறியாது முருகனை வழி பட்டாள். அதன் பயனக அந்த இடத்திலே முரு கனுக்கோர் ஆலயம் எடுக்க உறுதிபூண்டாள். தந்தைக்கு ஒலை போக்கி கோயில் அமைக்கச் சிற்பி களையும், பெரும் நிதியையும் பெற்ருள். கோயிலும் கண்கொள்ளாக் காட்சியாக எழுந்தது.
முருகனது சிலைகளும், வழிபாடு செய்ய அந் தணர்களும் சோழ நாட்டிலிருந்து வந்தார்கள். ஆகம முறைப்படி முருகனது திருவுருவத்தை எழுந் தருளச்செய்து மாருதப்பிரவல்லி பெருவிழாக் கொண் டாடினுள்.
மாருதப்பிரவல்லி கோயில் எடுப்பித்த காலை யிற்ருன் உக்கிரசிங்க மன்னவன், அவளைக்கண்டு காத லித்தான். நள்ளிரவில் ஓர் நாள் அவளது கூடாரத் தினுக்குச் சென்று, அவளைத் தூக்கிவந்து தனது இல்லக்கிழத்தியாக்கிக்கொண்டான்.
திருமண வாழ்க்கையை மேற்கொண்ட உக்கிர சிங்கன் கதிரமலை நகரை விடுத்துச் சிங்கை நகரினைத்
-117

Page 74
தலைநகராக்கிக்கொண்டான். காலத்தின் வேகத்தி ஞல் மாருதப்பிரவல்லி நரசிங்கன் எனப்படும் வால சிங்கனையும், சண்பகாவதி என்ற மகளையும் பெற் றெடுத்தாள்.
உக்கிரசிங்க மன்னவன் மரணத் திரையால் மறைக்கப்பட அவனது மகஞன வாலசிங்கன், ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் விருதுடன் சிங்கைநாட்டு அரியணையில் அமர்ந்தான்.
குமராங்குச சோழன்
சங்ககாலம் தொட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்த சோழ மன்னர்களது வரலாற்றிலே ஐந்து நூற்ருண்டுகள் இருள் சூழ்ந்த காலமாகும். இ' 300ம் ஆண்டு தொடக்கம் கி. பி. 800ம் ஆண்டு வரை சோழர்கள் தங்களது பெரும் புகழினை இழந்து, நாட்டின் பெரும் பகுதியையும் பறிகொடுத்து சிற் றரசர்களாக ஒடுங்கி வாழ்ந்தார்கள். கிறிஸ்துவிற்குப் பின் ஒன்பதாம் நூற்றண்டுவரை சோழர்களது வாழ்க்கை சிற்றரசர் என்ற வரையறையிலே அடை பட்டுக்கிடந்தது. இவ்வாறன நிலையிலேதான் சோழ வரலாற்றின் வருங்கால மகோன்னத நிலைக்கு முன் னேடியாகப் பழையாறை அரியணையில் கி. பி. 831 լք ஆண்டு குமராங்குச் சோழன் அமர்ந்தான்.
குமராங்குச சோழனது சிறப்பினைப்பற்றி வேலூர்ப் பாழையச் செப்பேடுகள் மிகவும் சிலா கித்துக் கூறுகின்றன. நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட குமராங்குசன் தருமசிந்தையும், கடவுள் பக்தியும் கொண்டவனகும். கொடையில் கர்ணனைப் போன்று வாய்மை தவருத குமராங்குசன் பகைவ Eடத்தும் அன்புசெலுத்தும் பண்புகொண்டவணுகும். குமராங்குச சோழ மன்னன் வாழ்நாள் முழுதும், பல்லவனது ஆணையை ஒப்புக்கொண்டு சிற்றரச ஞகவே வாழ்ந்தான்.
س 8 1 1 ضضة "

இக்காலையில் சிங்கை நாட்டு அமைச்சர்கள், மன்னவன் வாலசிங்கனுக்குத் திருமணம் பேசிக் குமராங்குச சோழனிடம் வந்தார்கள். தானகவே பெண்கொள்ளவரும் சிங்கை மன்னவனது சம்பந்தத் தினை சோழ நாட்டின் வருங் கா ல உ ன் ன த நிலையை உத்தேசித்துக் குமராங்குச சோழன் அகம் மலர வரவேற்றன்.
SL ri JuIISIj5j GIFi
குறிக்கப்பட்ட முகூர்த்த நன்னுளிலே பழை யாறை அரண்மனையில் சிங்கை மன்னவனுகிய வால சிங்கன், குமராங்குச சோழனின் புதல்வியான சீர்பாததேவியை மணந்தான். இரு திங்கட்ப்பொழு தினை இன்பமாகக் கழித்த வாலசிங்க மன்னவன் தன் நாட்டினுக்குச் செல்ல முனைந்தான். கணவன் வாழும் இடந்தானே மனைவிக்கும். ஆகவே கும ராங்குச சோழன் தன் மகளை மட்டும் அனுப்பி வைக்காமல் துணைக்குப் பலரைச் சேர்த்தான்.
பழையாறை, திருவொற்றியூர், பெருந்துறை, கட்டுமாவடி என்னும் நகரங்களில் வாழ்ந்த அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்களில் முதன்மையான பல ரைத் தெரிந்தான். அந்த வகையிலே சிந்தன், பழை யன், காங்கேயன், காலதேவன் என்பவர்களும், அவர்களது மனைவியர்களும், கண்ணப்ப முதலி, சந்திரசேகர ஐயங்கார், முத்துநாயகச் செட்டி, சதாசிவச் செட்டி என்பவர்களும், அவர்களது மனைவி யர்களும், சீர்பாததேவியின் தோழியாகிய வெள் ளாகியும், இன்னும் பலரும் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். மன் ன வ ன் வா ல சிங் கணு ம், சீர்பாததேவியும் இறுதியாக ஏறிக்கொள்ளக் கப்ப லும் கடலில் விரையலாயிற்று.
س-9 11-سمبه

Page 75
தனது ஆணை பரவும் நாடுகளின் கடல் வளத்தைச் சீர்பாத தேவி காணும்பொருட்டுக் கப்ப லினை ஈழத்தின் கிழக்குக் கரையோரமாகச் செலுத் தப் பணித்தான். அதற்கிணங்கக் கப்பல் கிழக்கு ஈழக் கரையோரமாகச் செல்கையில் திரிகோணமலை யில் குடிகொண்டிருக்கும் கோணேசுவரப் பெரு மானின் திருக்கோயிலினைச் சமீபித்ததும் கப்பல் தானகவே நின்றது. கப்பல் நிற்கும் காரணத்தைக் காணப் பலர் கடலில் குதித்தார்கள். கப்பலுக் கடியில் பாறையில் கணேசரது திருவுருவமொன் றிருக்கக் கண்டு கப்பலில் சேர்த்தார்கள்.
கணேசப் பெருமானைக் கண்ட சீர்பாததேவி, தெண்டனிட்டுப் பணிந்து ‘இக்கப்பலானது தங்கு தடையின்றி ஓடி, எங்கு கரைதட்டி நிற்கிறதோ, அங்கு ஆலயம் எடுப்பித்து விழாக் கொண்டாடு வேன்' என வேண்டி ஞள். அதற்கிணங்கக் கப்ப லும் ஒடலாயிற்று.
கிழக்குக்கரைக் கடல் ஒரமாக ஒடிய கப்ப லானது மட்டக்களப்பினைச் சமீபித்ததும், கடல் வழியாகச் செல்லாமல் மட்டக்களப்பு வாவியிலே புகுந்து ஒடலாயிற்று. கணேசரது அருளினல் கப்ப லானது வடக்கு நோக்கிச் செல்லாமல் தெற்கு நோக்கிச் சென்று மட்டக்களப்பு வாவியின் அந்த மான வீரர்முனையிலே கரைதட்டி நின்றது.
வீரர்முனையிலே வீனுயகருக்கு ஆலயம்
கரைதட்டி நின்ற கப்பலிலிருந்து அனைவரும் இறங்கினர்கள். சீர்பாததேவியின் வேண்டுதலுக் கிணங்கக் கப்பலில் வந்த சோழ நாட்டு மக்கள் வீரர்முனையிலே விஞயகருக்கு ஆலயம் எடுக்க லானர்கள். சோழ நாட்டு மக்களின் கைவண்ணத் திலே, ஈழத்து மக்களின் பணியிலே வீரர்முனையில்
سس - 20 il -ست

விஞயகருக்கு நவமான ஆலயம் எழுந்தது. புனித மான நன்நாளிலே விஞயகரது திருவுருவத்தை எழுந்தருளச்செய்து சிந்து யாத்திரையில் கிடைக்கப் பெற்றமையினுல் சிந்து யாத்திரைப் பிள்ளையார் எனப் பெயர் சூட்டிப் பெருவிழா எடுப்பித்தான் மன்னவன் வாலசிங்கன்.
வீரர்முனையில் விஞயகர் ஆலயம் எழுந் தாயிற்று. வினயகப் பெருமான எழுந்தருளச்செய்து பெருவிழாவும் எடுத்தாயிற்று. இருந்தாலும் ஆல யத்தில் நாள் தவருது வேளை தோறும் வழிபாடு நடைபெற்றுக் கொண் டி ரு க் க வேண்டு மே! அப் பொழுது விஞயகருக்கு வழிபாடுசெய்ய வீரர்முனை யில் மக்களே குடியிருக்கவில்லை. ஆகவே விஞயகரது ஆலயத்தின் பொருட்டு, சீர்பாததேவி தன்னுடன் வந்த சோழ நாட்டு மக்களை வீரர்முனையில் குடி யிருத்த விரும்பினுள்.
di LII:550i, G51 fópíb
சீர்பாததேவியின் விருப்பினை மன்னவன் வால சிங்கன் அகம் மலர ஏற்றுக்கொண்டான். ஆனல் அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் தான்கு குலத்தவரையும் வீரர்முனையில் குடியிருக்கப் பணித்தால், ஒருக்கால் சாதிவேறுபாடு தோன்றி கோயில் வழிபாடு சிதைந்துவிடவுங் கூடுமேயென்று கருதினன். ஆகவே குலவேறுபாடு எழாமலிருக்கவும், ஆலய வழிபாடு செம்மையாக நடைபெறவும் நான்கு குலத்தவரையும் ஒரு குல மாக வகுத்துச் சீர்பாததேவியின் பெயரினல் சீர் பாதகுலம் எனப் பெயர் சூட்டினன்,
சோழ நாட்டு அரச குலத்தவருடன், ஏனைய குலத்தவர்களையும் சீர்பாததேவியின் பெயரினல் சீர்
பாத குலமாக வகுத்த மன்னவன் வாலசிங்கன்,
-121

Page 76
அனைவரையும் அரச குல்த்தவரென்று கெளரவித்து அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறித்த விருதினைச் சீர் பாதகுலத்தவருக்கு வழங் கினன் வீரர்முனை வினயகர் ஆலயத்தினுக்கும், சீர்பாதகுலத்தவர்களுக்கும் மானியமாக வயல்வெளி களையும் மன்னவன் வழங்கினன்.
செப்பேடுகளில் சீர்பாதகுலம்
. சீர்பாதகுல வான் முறையினைப் பற்றிப் பல
செப்பேடுகள் கூறுகின்றன. செப்பேடுகள் அனைத்தும்
சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலம் வகுத்த
தாகக் கூறுகின்றன. அந்தவகையிலே,
‘ஓர் பெயரினல் ஓர் குலத்தவரென
சீர்ப்ாத தேவியின் திருப் பெயர்சூட்டி'
என்று வீரர்முனைச் செப்பேட்டிலும்,
'பாற்கடல்மீது பற்றிச் சேர்த்ததனல் சீர்பாத தேவியின் திருப் பெயராள் சீர்பாத குலமெனச் சிறந்த பெயர்சூட்டி’’ என்று திருக்கோயிற் செப்டேட்டிலும்,
‘விருதெணவீந்து விருப்புடன் தேவியின் திருபெயரென்றும் மறவாது வழங்க சீர்பாதத் தோரெனச் சீரியநாமம்’ என்று துறைநீலாவணைச் செப்பேட்டிலும்,
*அரசியின் குலமென்ன அவள்நாமமே பெற்று
அன்று சீர்பாத மானேன்" என்று திரிகோணமலைச் செப்பேட்டிலும்
'திரையகல்சூழ் புவியரசன் சேர்த்துவைத்து
சீர்பாதமென்று செப்பினுனே"
என்று கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டிலும்
கூறப்பட்டிருக்கின்றன. சீர்பாததேவியின் பெய
一13&一

ரினல் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றதென்று எல்லாச் செப்பேடுகளும் ஏகோபித்து ஒரு மனதாகக் கூறு கின்றன. ஆகவே சீர்பாததேவியின் பெயரினல் சீர் பாதகுலம் வகுக்கப்பெற்றதென்பது ஐயத்துக்கிட மின்றித் தெளிவாகிறது.
செப்பேடுகளில் சீர்பாதகுல மக்கள்
வீரர்முனைச் செப்பேட்டில் தம்மோடு வந்த உறவினரைக் கோயிற்பணிபுரியச் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறப்படுகிறது. சோழ நாட்டிலிருந்து புறப்பட்ட கப்பலில் சீர்பாத தேவியுடன் அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிருர்கள். இவர் களில் தம்மோடு வந்த உறவினர் எனக் கொள்ளுங் கால், சோழ நாட்டிலிருந்து வந்த அரச குலத்த வரையே குறிக்கும். ஏனெனில் ஏனைய குலத்தவர் கள் அரச குலத்தினருக்கு உறவினராகமாட்டார் கள். ஆகவே வீரர்முனையில் சீர்பாததேவி அரச குலத்தவரையே ஆலயத்தின்பொருட்டுக் குடியிருத்தி ஞள். அவர்களை மன்னவன் சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்தான். இதனை வீரர்முனைச் செப்பேட்டில்,
** தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
தம்மோடு வந்த தம துறவினரை செம்மன துடனே திருக்கோயிற் பணி புரியச் சொல்லி பூமி பகிர்ந்து' என்று கூறப்பட்டிருக்கிறது.
திருக்கோயிற் செப்பேட்டில் அந்தணர்களைக் கோயிற் பணிபுரிய சீர்பாததேவியின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைத் திருக்கோயிற் செப்பேட்டில்,
** தேவால யத்தின் திருப்பணிச் சாமான் எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
-س، 23 Il --سه

Page 77
அந்தணர் தங்களே அரச னழைத்து பாசாங்கு சங்கரன் பாதார விந்தம் பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததஞல் சீர்பாத தேவியின் திருப் பெயராற் சீர்பாத குலமெனச் சிறந்த பெயர்சூட்டி' என்று கூறப்பட்டிருக்கிறது.
துறைநீலாவணைச் செப்பேட்டில் சோழ நாட்டி லிருந்து கப்பலில் வந்த அனைவரும் சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்களென்று கூறப் பட்டி ரு க்கிறது. அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்பவர்கள் அனைவருமே சீர்பாதகுலமாக வகுக்கப் பட்டார்கள். இதனைத் துறைநீலாவணைச் செப்பேட் 16), ԼԳ- *" கோயிலூழியம் குறைவிலாதியற்ற
ஆயநான்கு மரபோர் ஆணையிற் படிந்து'
என்று கூறப்பட்டிருக்கிறது.
திரிகோணமலைச் செப்பேட்டில் கட்டுமாவடி, பெருந்துறை, திருவொற்றியூர் என்னும் நகரங்களி லிருந்து கப்பலில் வந்தவர்கள் சீர் பாதகுலமாக வகுக்கப்பட்டார்களென்று கூறப்பட்டிருக்கிறது. இத னைத் திரிகோணமலைச் செப்பேட்டில்,
'திருமருவு கட்டுமாவடி சிறந்த உத்தரதேசமும்
உரைவிருது தனையுடைய ஆரியநாடு
திருவொற்றி யூரரசு புரிவீரனே’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
கொக்கொட்டிச்சோலைச் செப்பேட்டில் சிந் தாத்திரன், காலதேவன், காங்கேயன், நரையாகி, வெள்ளாகி, முடவன், பழைச்சி என்னும் தலைவர், தலைவியர்களைக்கொண்டு அனைவரையும் சீர்பாதகுல மாக மன்னவன் வகுத்தானென்று சொல்லப்பட் டிருக்கிறது. இதனைக் கொக்கொட்டிச்சோலைச் செப் பேட்டில்,
--سی۔ 1984 میس۔

‘துரை பேர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன் நரையாகி வெள்ளாகி முடவனெனும் பெண் பழைச்சி குடியேழ் காண் வரையாக இவர்களையும் வகுத்துவைத்து மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று திரையகல் சூழ் புவியரசன் சேர்த்துவைத்து சீர்பாத மென்று செப்பினுனே' என்று கூறப்பட்டிருக்கிறது.
GFÜGIGGS I TiIjk
வீரர் முனைச் செப்பேடு அரச குலத்தவரைச் சீர்பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. திரி கோணமலைச் செப்பேடு கட்டுமாவடி, பெருந்துறை, திருவொற்றியூர் என்னும் நகரங்களில் வாழ்ந்தவர் களைச் சீர் பாதகுலமாக வகுத்ததாகக் கூறுகிறது. வீரர்முனைச் செப்பேட்டினையும், திரிகோனமலைச் செப்பேட்டினையும் ஆராய்ந்தால் அரச குலத்தவர் களே சீர்பாதகுலமாக வகுக்கப்பட்டார்களெனக் கொள்ளலாம். அரச குலத்தவரைக்கொண்டு சீர் பாதகுலம் வகுக்கப்பட்டாலும், கப்பலில் கூடவே வந்த அந்தணர், வேளாளர், வணிகர் என்பவர் களும் வீரர்முனையிலே வசிக்கவேசெய்தார்கள்.
சீர்பாதகுலத்தவருடன் கூடிவாழ்ந்த அந்தணர் திருமண உறவினல் கலந்து சீர்பாதகுலமானர்கள். இதனைத் திருக்கோயிற் செப்பேடு உறுதிப்படுத்து கிறது. பின்னர் சீர் பாதகுலத்தவருடன் வேளாளரும், வணிகரும் திருமண உறவினுல் கலந்து சீர் பாதகுல மானர்கள். இதனைத் துறைநீலாவணைச் செப்பேடு உறுதிப்படுத்துகிறது.
ஏழு தலைவர் தலைவியர்களை ஒன்ருக்கிச் சீர்பாத குலம் வகுத்ததாகக் கொக்கொட்டிச்சோலைச் செப்
سنہ 135۔--س۔

Page 78
பேடு கூறுகிறது. அவ்வாருயின் ஏழு தலைவர் தலைவி யர்களும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. நான்கு குலத்தைச் சேர்ந்தவர்களாகவே ஏழு தலைவர் தலைவியர்களும் இருந்திருக்கவேண்டும்.
சீர்பாதகுலத்து ஐந்து செப் பே டு களை யும் கொண்டு பூரணமான ஓர் ஆராய்ச்சி முடிபினுக்கு வரலாம். அதாவது அரசகுலத்தவரான சீர்பாத குலத்தவருடன் அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய குலத்தவர்கள் கலந்து வீரர்முனையிலே நவமான சீர்பாதகுலம் தோன்றியதாகும்.
கொக்கொட்டிச்சோலைச் செப்பேடு எழுந்த காலையில் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்னும் குலத்தவர்கள் ஒன்ருன ஒர்குல
தெளிவாகிறது.
ஒர்குலத்தவரை மட்டும் சீர் பா த குல மாக வகுக்கவேண்டிய அவசியமேயில்லை. ஒர்குலத்திலுள்ள வர்களிலே விருதுகளிலோ, வரிசைகளிலோ வேறு பாடுகள் தோன்றுவதற்கு இடமேயில்லை. பல்வேறு குலத்தவரை ஓர்குலமாக வகுக்காது ஒன்ருகக் குடி யிருத்தினுல் நிச்சயமாக வேறுபாடுகள் தோன்றவே செய்யும். இவ்வாறன ஓர் நிலைமை ஏற்படாது தவிர்க் கவே சோழ இளவரசி சீர்பாததேவிக்குத் துணையாகச் சோழ நாட்டிலிருந்துவந்த நான்கு குலத்தவர்களை யும் சீர்பாததேவியின் பெயரினல் ஒர்குலமாக மன்ன வன் வகுத்தான். வீரர்முனை வினயகராலய வழிபாடு குலப்பெருமைகளினல் சீர்குலையாமல் இருக்கவேதான் மன்னவன் வாலசிங்கன் அனைவரையும் சீர்பாததேவி யின் பெயரினல் சீர்பாதகுலமாக வகுத்தான்.
கிறிஸ்துவிற்குப்பின் எட்டாம் நூற்றண்டில் வீரர்முனையில் வளரத்தொடங்கிய சீர்பாதகுலத்தவர் கள் இருபதாம் நூற் ரு ண் டா கிய இக்காலையில்
ーI26ー

மல்வத்தை, துறைநீலாவணை, சேனைக்குடி, நாவிதன் வெளி, குருமண்வெளி, மசிழுர்முனை, மண்டூர்க் கோட்டைமுனை, தம்பலவத்தை, பாலமுனை, கரை யாக்கன்தீவு என்னும் ஊர்களில் நிறைந்து வாழ்கிருர் கள். இவ்வூர்கள் அனைத்தும் சீர்பாதகுலத்தவர்கள் மட்டும் நிறைந்து வாழும் தனி ஊர்களாகத் துலங்கு கின்றன.
அரசகுலமாகச் சீர்பாதகுலம் வகுக்கப்பெற்றது. ஆதலினுற்ருன் குலவிருதுச் செப்பேட்டில் அமரர்கள் என்று சீர்பாதகுலத்தவர்கள் குறிக்கப்பட்டிருக்கிருர் கள். இதனைக் குல விருதுச் செப்பேட்டில்,
'அமரருக்குத் தேர்க்கொடி’ என்று கூறப்பட்டிருக்கிறது.
முடிவுரை
இருபதாம் நூற்ருண்டில் பல்லாயிரக்கணக் கானவர்களாகப் பெருகி வாழும் சீர்பாதகுலத்தவர் கள் அன்று பூனூல் அணிந்து அரசகுலக் கெளரவத் துடன் வாழ்ந்தார்கள்.
* படையும் கொடியும் குடியும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரு முடியும் நேர்வனப் பிறபட்ம் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய" என்ற தொல் காப்பிய ச் சூத்திரத்தினுல் அரசமர பினைச் சேர்ந்த சீர்பாதகுலத்தவர்களின் மங்காத மாபெரும் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.
வணக்கம்.
سیب 37 سس

Page 79

qīheaïsı qp u tím 170) IĢĢĞfigo 109 חרgט199. 1,9 urto-TGT 1,91109ms@go urteaĵon 41 urto-aơn ș urmsẾĝseg s@ựgosố @ uri sfîre q2,995muog) (goujoĒC)@fi urte
IỆ1,9% greso
q1@@199.19 1çesingøqørte 115īņasēs) ugi (egயூரிடிஜசிஇா @ș1909tigo
se úų919.gs
@ Lú@
rīqas@@H1çołąo 1įortefntī logostog)??1,7 g) 1įoof-ı ÇısỆo @@@@esmo(o Ģ Įfē 199 urte qalismuoto Lgs.
g@响了闾 1çosnoçoigraogofio @@JIsops@H
UȚ919 oC)
o urmsfilo
q兇晚白3
qi-TaĵUT 1;21) sírmfī0) IỆ@ 11:21,9
דrר9ט199.
1,9 Liao-Ton q9 udøm@zoo
floaĵLGT
qrt9-7 UGT ș urms@@eg IỆųoosố qøgelsmuog) sfî uotos@fi urte IỆ1994/19łąo qıñĒGÐ1ę919 1995mgoqofte ú5īņ@ uga do@smlogo??TIT @@ 1195e3)||59 fie ligoqøgĪ
@ l' tiġi raqasỆH Igoło 1çøftermin logoftog)??? Urag) 1,9 osaņģī)? @@@@@ smogo @@ ựfērso urte qī£1.5m U19 Ugi 间晚了奥 1995 moçois figọđỉg IỆ@grossfı Ļoqpiso(g)
o urnų elgo
đficos,
es reH Lq LqL EesH L OBqD HAH LLL eM rBqD LBLB LLL LLLL HeH LLL Lq LBL LLL LLLL aH LH Lae L OH sqe eBeB rL M
c
N N N N Ns N \ 0 % to ex c N o c N N. N. N O 8 s on on c on r \s \s
低鸣n
Z3 I 33 I g8 * : 法學9 Ģg žg jog Zjo Z† 心动 88 8ɛ
· Z8? 83 sg Þg †g 33 .
8I
ZI Z I gI
AX AļX įįA
quae ştı

Page 80

அருள் செல்வநாயகம் அவர்களின் ஏனைய நூல்கள்
வரலாறு :
விபுலாநந்த அடிகள்
விபுலாநந்த இலக்கியம்:
விபுலாநந்த அமுதம் விபுலாநந்தத் தேன் விபுலாநந்தக் கவிதை விபுலாநந்த வெள்ளம் விபுலாநந்தச் செல்வம் விபுலாநந்த ஆராய்வு விபுலாநந்தக் கவிமலர் விபுலாநந்தர் பேசுகிருர் விபுலாநந்த இன்பம்.
நாவல் :
வாழமுடியாதவன் பாசக் குரல் மர்ம மாளிகை.
சிறுகதை :
தாம்பூல ராணி ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள். ஆராய்ச்சி :
நறுமலர் மாலை ஈழமும் தமிழரும். இலக்கியம் :
சதாரம் பூசணியாள் − பாஞ்சாலி சுயம்வரம் நாடகம் :
உயிர் ஈந்த ஒவியம்.

Page 81