கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கைச் சுவடுகள் (வாழ்க்கையின் சுவடுகள்)

Page 1
Gš
C.
_— ---
----- ܒ- ܚܝܨ
, " , , * II. i h த. .
L-T , 4
וי ח . | , In . 1 ܩ .
" - . LILE
n, الله
 


Page 2
lith best compliments ܕܡܗ
from
PARKER TRADERS
Importers of
PARKER WALLCLOCKS
160, KEYZER STREET, COLOMBO - 11.
| | clւրիunes : 2 6 0 5 7

o - 1م L Ն sc
" قة وهي
வாழ்க்கையின் சுவடுகள்
நt பும்புத் தமிழ்" நார நி: ச .
『m, , 『
ܩ
அரக் கட்டா நி"யம்,
।
| g ET: ாே III. | - : "آفتهٔ """"
ܨܒܐ ܠܐ ܕ11

Page 3
WAALKK ATYN SUVADUK AL
(Short stories)
by Nayeema Siddeek, B.A.
(Trained Teacher) Zahira College, Gampola.
author of:
“Vaalkaip payanam” (Novel)
All rights reserved,
First published in December, 1987.
Thirty sixth publication of:
THAMIL MANRAM, Galhin na, Kandy.
Distributors:
P. S SUNDARAM & SONS, 75, Barber Street, Colombo 13. Phone: 28549.
Printed at :
St Joseph's Catholic Press, Advocate Road, Batticaloa,

நழுவிய பழம்
அண்மைக்காலத்தில் அதிகமான பெண் எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனரெனினும், 1950களிலும் 1960களிலும் விரல் விட்டெண்ணக்கூடியவர்களே எழுதி வந்தார் கள். அப்பொழு திருந்து, இன்றுவரை - திருமணமாகி, தாயாகி, தொழில் பார்த் துக்கொண்டு - எழுத்துத்துறையுடன் நெருங்கி உறவாடும் சகோ தரி நயீமா சித்தீக் அவர்கள், மூத்த பரம்பரை எழுத்தாளர். பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கிவிட்ட சகோதரி, இலங்கையிலும், தமிழகத்திலும் வெளிவருகின்ற பல பத்திரிகை கள், பல சஞ்சிகைகளில் தொடர்ந்தும் எழுதிவருகின்ருர், தமிழ கத்தில் தீபம்', 'மணி விளக்கு" ஆகியன இவரின் ஆக்கங் களைப் பிரசுரித்துள்ளன. இலங்கையில், இவரின் படைப்புக்கள் வெளிவராத பத்திரிகைகளில்லை என்றே கூறலாம்.
இத்தனை புகழ்பெற்ற ஒருவர், "என்னை நேரில் காணு விட்டாலும், என் எழுத்துக்களைக் கண்டிருப்பீர்கள் என்று நuபு கிறேன்" என எழுதியபொழுது, எமக்கு ஆச்சரியமாக இருந்தது. 1986ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 14ம் திகதிய கடிதத்தில், பல காலமாகவே எழுதவேண்டும் என்றிருந்த கடிதம்தான் இது. இன்றுதான் உங்களுக்கு எழுதமுடிந்தது” என்று மேலும் கூறியிருந்ததைப் பார்த்தபொழுது, இவர் எவ்வளவு அலுவல் களை எப்படிச் சமாளிச் கிருர் எனும் அதிசய எண்ணம் என்னுள் தோன்றியது. பலகாலமாகவே, நாமும், பிரபல்யமடைந்து கொண்டே வருகின்ற சகோதரியின் நூலொன்றை வெளியிட்டு உதவவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். பல அலுவல் களால், எமக்கும் தொடர்புகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எனினும், பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல், “எனது சிறுகதைத் தொகுதியொன்றினைத் தங்கள் மன்றத்தின்மூலம் வெளியிட்டுப் பேருதவி புரிய தங்களுக்கு இயலுமா என்பதை
-3-

Page 4
அறிந்துகொள்ள மிகுந்த ஆவலுடையவளாக உள்ளேன்” என்றும் அக்கடிதம் தெரிவித்தபோது, பெரிதும் மகிழ்ந்தேன். உடனே கதைகளைப் பிரதிபண்ணி அனுப்பும்படி கூறுவதற்குத் தூண்டுத லாய் கடிதத்தின் கடைசி வாக்கியமிருந்தது. "த பங்கள் இவ் வகையில் உதவிபுரிவீர்கள் என்றும் மானசீகமாக நம்புகிறேன்", என அக்கடைசி வாக்கியம் தெரிவித்தது. நாமும் கதைகளை அனுப்பும்படி தெரிவித்தோம்.
"பலகாலமாகவே தங்கள் தமிழ் மன்றத்தின் நற்பணிகள் கண்டு மானசீகமாக மகிழ்பவள் நான். தங்கள் பணிகள் மென் மேலும் சிறக்க வல்ல அல்லாஹ்வின் வான்கருணை மேலும் கிட் டட்டும்" என்ற சொற்களைப் படித்தபின்னரும, உதவுவதற்குப் பின்வாங்குவாருமுண்டா ? பெண் என்ருல் பேயுமிரங்கும் என நமது முதியோர் சும்மாவர் சொல்லிவைத்தார்கள் ?
மணிமணியான கருத்துக்களைக்கொண்ட சிறுகதைகளின் தொகுதியான “வாழ்க்கையின் சுவடுகள்” வெளிவருவதில் நாம் பெரிதும் பூரிப்படைகிருேம். எம்மால் வெளியிடப்படுகின்ற நயிமா சித்தீக்கின் முதல் நூல் இது. நிச்சயமாக, இது கடைசி நூலா யிராது - இன்னும், அவர் கைவண்ணத்தில் பல நூல்களை வெளி யிட இருக்கிருேம். எமக்கு இந்த வாய்ப்பைத் தந்த சகோதரிக்கு நன்றி. அச்சுவேலையில் கண்ணுங் கருத்துமாயிருந்து, அழகுற அச்சிட்டுத்தந்துள்ள மட்டக்களபயு புனித வளனர் கத்தோலிக்க அச்சகத்தினர்க்கும் எமது நன்றிகள்
எஸ். எம், ஹனிபா நிர்வாகச் செயலாளர். தமிழ் மன்றம், 10. நாலாவது லேன், கொஸ்வத்த ரோட், ராஜகிரிய.
--4-۔

நன்றிகள் பல.
அவ்வப்பொழுது, பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த எனது சிறு கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, இங்கு *"வாழ்க்கையின் சுவடுகள் எனும் பெயரில் வாசகர் முன்னிலையில் வைக்கின்றேன். சுமார் முப்பதாண்டு காலமாக வெளிவந்த சிறுகதைகள் நிறைய உள்ளன. இவற்றிஞல் மேலும் பல தொகுதிகள் வெளி வர வழி அமையும் என்று நம்புகிறேன். எனது கதை களில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனைதான் - அவை, எவரையும் குறிப்பனவல்ல.
எனது சிறுகதைகளைப் பிரசுரித்ததுடன், .6זות( வடிவில் வெளியிட அனுமதி தந்துள்ள பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்கள் அனைவர்க்கும் என்து நன்றிகள். "வாழ்க்கையின் சுவடுகள்" நூலுருப்பெற உதவிய தமிழ் மன்றச் செயலாளர் சட்டத்தரணி அல்ஹ ஜ் எஸ். எம். ஹனிபா அவர்களுக்கும் எனது நன்றி. எப் பொழுதும் எழுதுவதற்கு என்னைத் தூண்டுவதால் ஊக்கம் தந்துவரும் வாசகர் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
நயீமா சித்தீக்
ஸாஹிராக் கல்லூரி,
கம்பளை, 27-10-1987.

Page 5

ஒரு கந்தூரி W
நடந்து முடிகிறது!
"ஸ்ப்பீக்கரிலே’ ஒலித்த பாடல் காற்ருேடு கலந்து ஊரெல் லாம் ஒலித்துக்கொண்டிருந்தது.
ஊரின் மத்தியில் நாலாபுறமும் பிரிந்து பிரிந்து செல்லும் சிறு பாதைகளிலெல்லாம் சிறுவர் சிறுமியர் புத் துணர்ச்சியுடன் ஒடிக்கொண்டிருந்தனர். பல சிறுவர் சிறுமியரின் கைகளில் எல் லாம் ஊதிய பலூன்களும், மலிவான விளையாட்டுப் பொருடக ளும், தின் பண்டங்களுமாய். ஒ. 'ஊர்க் கந்தூரி” என்ருல் கேட்கவா வேண்டும்!
மத்திய மாகாணத்தில் உள்ள பெரிய முஸ்லிம் கிராமங்க ளுள் அதுவும் ஒன்று. ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட முஸ்லிம்கள் வாழும் கிராமம் அது. இந்தக் கிராமத்திலேதான் இந்த “ஊர்க் கந்தூரி", வருடம் வருடம் மிகவும் சிறப்பாக நடைபெறும் இந்த ஊக் கந்தூரி அயற் கிராமங்களிலும் பிரசித்திபெற்றிருந்தது.
ம். அறுபது எழுபது மூடை அரிசிக்குச் சோருக்கும் கந்தூரி என்ருல் இலேசா என்ன? இரண்டு நாட்களாக இரவு பகலப் நாற்பது ஐம்பது பேர் தொடர்ந்து சோருக்கிக் கொண்டே இருப்பர். எப்படியும் இருபது மாடுகளாவது அறுபடும். எல்லாமே அபாரம்தான்.
அதோ. பள்ளிவாசலை நோக்கிச் செல்லும் பாதையிலே சன நெரிசல் வரவர அதிகமாகிறது. ஒ. இன்னும் சிறிது நேரத் தால் சோற்றைப் பங்கிடப்போ கிருர்கள்.
அந்தப் பிரமாண்டமான பள்ளிவாசல்களின் 'மினரா"க்கள் வானுற உயர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கந்தூரிக்கென்றே புதுமெருகூட்டப்பட்ட அவைகள் உண்மை யில்லயே மிகவும் கவர்ச்சியுடன்தான் காட்சியளித்துக் கொண்
-7- -

Page 6
டிருக்கின்றன. அவற்றின் உச்சியில் ஒவ்வொரு ஐந்நூறு "வோல்ட்ஸ்’ மின் குமிழ்கள். அவை இந்தப் பகலிலும் ஒளிபரப்பியவாறே இருககின்றன. கந்தூரி கலேபரத்தில் அவற்றை அணைக்க மறந் திருப்பார்கள்.
பள்ளிவாயிலின் உள்ளேயும் ஊர்ப் பெரியவர்கள் கூட்டங் கூட்டமாய்க் கூடிநின்றும், இருந்தும், எதையெல்லாமோ கதைத் துக் கொண் டி ருந்த னர். பள்ளிவாயிலின் ஒரு மூலையில் "த்ரீ-இன்-வன்’ கெஸ்ட் ரேடியோ ஒன்று இந்தி இசையொன்றை அனதரவாப் இசைத்துக்கொண்டிருந்தது.
சோறு பங்கிடும் பொறுப்பையும் "ஊர்ப் பெரியவர்களுக்கு” மிகவும் வேண்டியவர்களான” இஸ்மாயில் லெப்பையும், காசி மும்தான் இம்முறை ஏற்றிருக்கிறர்கள். அவர்களுக்குத்தான் யார் யாருக்கெல்லாம் எப்படியெப்படி பங்கிடவேண்டும் என்ற தத்துவம் தெரியும்.
பள்ளிவாயலின் வலப்புறமாகப் பிள்ளைகள் ஓதுவதற்காகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்திலே உள்ளூர், வெளியூர் வறியவர் கள் - பிச்சைக்காரர்கள்! அவர்களும் சோற்றை எடுப்பதற்கே ஆயத்தமாக இருக்கின் ருர்கள். பாவம். அந்தக் கட்டடம் நிரம்பி வழியும் அவர்கள் நேற்றுப் பின்னோத்திலிருந்தே காத்திருக்கின் றனர். ம். இரவுகூட பள்ளிவாசலில் "பிரியாணி’ சாப்பாடு ஸ்பெஷலாக நடந்ததுதான். ஆனல் ஒரு எச்சில்கூட இவர்களது கண்களிற் படவில்லையே!
கட்டடத்தின் மேற்குப்பக்க வாயிலோரமாக நிலத்தில் அமர்ந்து, கூனிக் குறுகிய தன் உடம்பைச் சுவரோடு சுவராகச் சாய்த்துக் கொண்டிருந்தான் அஹமது. வயது நாற்பத்தைந்தைத் தாண்டியிராவிட்டாலும் வறுமை அவனில் எழுபது வயதைக் காட்டிக் கொண்டிருந்தது.
அஹமதுவும் நேற்றுப் பகலிலிருந்தே கொஞ்சம் சோற்றுக் காகத்தான் காத்துக்கொண்டிருக்கின் முன். பசி அவனுடைய வயிற் றைப் பாடாய்ப் படுத்துகிறது. அவனுடைய மனமோ வீட்டில் பசியோடு காத்திருக்கும் நோயாளியான தன் மனைவியையும் மகக்ளயுமே சுற்றி வட்டமிடுகிறது. தான் கொண்டுபோக இருக் கும் கந்தூரிச் சாப்பாட்டிற்காக ஏங்கி இருக்கும் மனைவியும் பிள்ளைகளும் அவனது மனத்திரையில விரிகினறனர்.
**சே. நோய்க்காரி. எப்படித்தான் வவுத்துப் பசியைத் தாங்குவாளோ” என அவன் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண் டான்,
--8ے

வேறு நான்கு இடங்களுக்குப் போனலாவது பழசு பண்டங் களையாவது கொடுப்பார்கள தான். ம் . அப்படி போய்வருவதற் குள் கந்தூரிச் சோற்றைப் பங்கு வைத்துவிட்டால் என்ன செய் வது? அவன் சிந்தனைகள் ஒட்டமெடுத்தன.
அஹமதுவைப் போலவேதான் அங்கிருந்த எல்லோரும் எழுந்து போகவும் முடியாமல், உட்கார்ந்து இருக்கவும் முடி யாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
ஒ. சோறு பங்கிடத் தொடங்கிவிட்டனர்-இஸ்மாயில் லெப் பையும் காஸிமும்.
பிள்ளைகள் ஒதும் கட்டடத்தில் கூடி இருந்தவர்களில் பெரிய சலசலப்பு. ஒருவரை ஒருவர் முண்டியடித்து முன்னுற் பாயும் பிரயத்தனம். கூச்சலும் அடிபிடியுமாய் கந்தூரிச் சோற்றின் கமகமவென்ற வாசம். கறிகளின் மணம். வயிற்றின் பிய்க்கல் பிடுங்கல்களோடி காலமெல்லாம் போராடும் அவர்களுககே அவர் களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை,
சோறு பங்கிடும் இடத்திற்கு அவர்கள் கூட்டமாய்ப் போய் விழுகின்றனர். இஸ்மாயில் லெப்பையும் காஸிமும் சிோற்றைக் கிளர வைத்திருந்த பெரிய கம்புத் தடிகளைக் கொண்டு அடிக்கின் றனர். ஆச்சரியம்தான். ஒரு கணப் பொழுதின் பாதிகூட ஆகி யிராது. அவர்களிருவருக்கும் இபபடி அடித்துவிரட்ட எப் படித் தான் சக்தி வந்ததோ. எங்கிருந்துதான் ஆற்றல் வந்ததோ. சோற்றை ந டி ஓடிவந்தவர்களுள் பலருக்குக் கால்களிலும், கைகளிலும், முதுகிலுமாய்க் காயங்கள். இரத்தக் கசிவைகசுட அவர்களாற் கவனிக்கமுடியவில்லை. சோற்றை நோக்கியே கவ னம் மீண்டும் செல்கிறது. சோற்றைப் பங்கிடத் தொடங்கிய வர்சளுள் ஒருவர் பள்ளிவாயிலுக்குள் இருந்த ஒரு பெரியவரின் காதில எதையோ குசுகுசுக்க அவர் ஆர்ப்பரிக்கிருர்.
'பிச்சைக்காரக் சழுதைகளால ஒண்டுமே செய்யமுடியாது. வெளியில இரிக்கிற எலந்தாரிகளே. இங்க வாங்க. பிச்சைக் காரங்கள மட்டுப்படுத்துங்க."
அவரின் குரலுக்கு அவர் 'எலந்தாரிங்க" என்று குறிப்பிட்ட இளைஞர்கள் செவிசாய்க்குமுன்னர் வெளியே நின்றிருந்த எல்லா வயதினரும் ஓடிவந்தனர். பிச்சைக்காரர்களைத் தள்ளிககொண்டு போய் முன்பிருந்த கூடத்துக்குள் விட்டுவிட்டு வாயிலுக்கு நான் கைந்து பேர்களாய் இரண்டு வாயில்களிலும நின்றுகொண்டனர்.
--9-س

Page 7
அப்பாடா. இஸ்மாயில் லெப்பைக் கும் காஸி முக்கும் இப் போது தான் நி*மதி . அவர்கள் மளமளவென்று தங்கள் வேலை யைத் தொடர்கின்றனர். -
ஊர் மக்சளின் பெயர்களும் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் துண்டுகளில் எழுதி ஒட்டப்பட்ட ஒலைப் பெட்டி கள் வரிசை வரிசையாய் வைக்கப்பட்டிருக்கின்றன.
"ஊர்ப் .ெ ரியவர்களின்" பெட்டிகள் தனியே வேருக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக வேறுபடுத் தி வைக்கப்பட் டுள்ள "ஸ்டெஷ வ’ சோற்றையும விஷேட கறிகளையும் இஸ்மாயில் லெப்பையும், க லி மும் அவசர அவசாமாக நிாப்புகின்றனர். நெய் வடியும் அந்தச் சோற்றை அள்ளிப் போடுப போதும் முழுக் கோழிக் குறுமாவைப்  ெட்டியின் நடுவில் அமிழ்த்தி வைக்கும் போதும் அவர்கள் இருவருக்கும் வாயில் நீர் ஊறத்தான் செய் கிறது.
"பெரியவர்களின்" பெட்டிகள் வீடுகளை நோக்கி அவசர அவசரமாக விரைந்தன. பெட்டிகளைத் துரக்கமுடியாத அளவுக் குச் சூடு. அந்தச் சோறு தான் கடைசியாக இறக்கியது.
பொதுமக்களின் பெட்டிகளையும் நிரப்பத் தொடங்கினர். பள்ளிக் கணக்க பிள்ளை யார் பெரிய சீ ஆர். புத்தகமொன்றை யும் கையிலெடுத்துக்கொண்டு வந்து நின்ருர், அதில் தான் சுந் தூரிக்காகப் பணங் கொடுத்தவர்களின் விபரங்கள் இருக்கின்றன.
இன்னுமொருவர் வந்தார். அவர் ஒலைப் பெட்டிகளில் ஒட் டப்பட்டுளள பெயர்களை வாசித்தார். கணக்கப்பிள்ளை தனது புத்தகத்தில் பார்த்தார். பணம் கொடுத் திருந்தார்களாயின் சரி என் ருர். இஸ்ம யில் லெப்பையும் காஸி மும் சோற்றை நிரப் பினர். அது சாதாரண சோறு. பெயருக்கு இரண்டொரு துண்டு கறிகளையும் வைத்தனர். சமைத் து மலையாய் வைத் தி ருந்த சோறு சிறிது சிறிதாய்க் குறைந்தது. பெடடிகள் வீடு களை நோகதிப் பயணமாயின.
பெயர்களை வாசிப்பவர் வாசித்தார்.
'அக்கறை வயல் ஹ மீது லெப்பை. எட்டுப்பேர்’
கணக்கப்பிள்ளை பக்கங்களைப் புரட்டித் தேடினுர், ம். ஹ"ம். இல்லை.
அக்கறை வயல் ஹாமீது லெப்பை வரி கொடுத்தில்ல. சோறு போடவேண்டாம.”*
-10

அந்தப் பெட்டியைக் கொண்டுபோகக் காத் கிருந்த ஹா மீது லெப்பையின் பன்னிரண்டு வயது மகன் இப்ராஹிமின் தலையில் வானமே இடிந்து விழுந்ததுபோன்று உணர்வு . ஹர் மிது லெப்பைக்கு அவருடைய காலொன்று தேயிலைத் தொழிற்சாலை வி, ததொன்றின்போது இல்லாமற் போய் ஐந்தாண்டுகளாகிறது. நஷ்ட ஈடாய்க் கிடைத்த பணமும் கரைத து எவ்வளவோ நாட் களாகின்றன. ஐந்து பிள்ளைகளுடன் அவரும் அவருடைய மனைவி யும் வாழ்க்கையோடு போராடும போராட்டத்தில் பள்ளிக்கு வரி கட்டுவதென்பது முடிகிற காரியமில்லைதான்.
ஆனல் கணக்கப்பிள்ளையோ ஊர்ப் பெரியவர்களோடு கருணை காட்டி, மலையாய்க் குவிந்திருக்கும சோற்றில் கொஞ்சத்தைக் கொடுக்கவே இல்லே.
இப்ராஹிம் தொங்கிய தலையுடன் வெறும் பெட்டியுடன் விட்டை நோக்கிப் போகிருன். s
இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.
சோறு முடிந்துவிடும் நிலைமை. இன்னும் பல் பெட்டிகள் வெறுமையாகவே இருக்கின்றன. வரவரக் குறைத்துக் குறைத்
துப் போட்டும் சோறு போதவில்லை. கிட்டத்தட்ட عg D التي لا பெட்டிகள் வெறுமையாகவே இருக்கின்றன.
ஊர்ப் பெரியவர்க'ளில் ஒருவர் வருகிருர்,
* என்னப்பா. இப்புடியா பங்கிடுறது. கொஞ்சங் கவனமா பங்கிட்டிரிக்களா மில்லையா. இத்தனை பெட்டிகளுக்கு ம் ஜப்ப ன்ன செய்யிறது.?" அவரின் குற்றப்பத்திரிகிை இஸ்மாயில் லெப்பையையும் காசிமையும் பார்த்து நீளும் போது அவர்கள் இருவரும் நிலத்தைப் பார்க்கின்றனர்.
பிள்ளைகள் ஓதும் கூடத் துக்குள் அடைத்து வைத்திருப்பவர் கள் மேல் பெரியவரின் ஆத்திரம் பீரிட்டுப் பாய்கிறது . ஆவே சத்துடன் அவர்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் பேய்குரலில் கத்துகிருர்,
**பிச்சைக்காரக் கழுதைகளே. ஒடுங்கடா. இங்க ஒரு நாய்க்கும் ஒருமணிச் சோறும் கெடயாது. டேய். கதவுகளைத் தி பந்து விடுங்கடா. ஒடித்தொலையுங்கடா..." அவர் கத்திக் கொண்டே நின்றர்.
--

Page 8
கதவுசஞக்கருகில் காவலாய் நின்றவர்கள் தள்ளி நின்ருர் கள். அந்தக கூட்டத்துள் இருந்த ஏழை நெஞ்சங்கள் இரத்தக் கண்ணிர் சொரிந்தன.
"போங்கடா. நாய்களா.." பெரியவர் மீண்டும் கத்தினர். மெளனம் சில விஞடிகளை விழுங்கியது. பெரியவர் மீண்டும் கர்ச்சித்தார்."
**டேய். ஒடுறீங்களா. ஆள்களுக்குச் சொல்லி அடிச்சி வெரட்டவா..?’
அவர்களுக்கு அடிவாங்கச் சக்தியில்ல்.
அவர்கள் மெதுவாக வெளியேறினர். அந்த உருவங்களின் ஒவ் வொரு அணுவும், ஆன்மாக்களின் ஒவ்வொரு அணுவும் அழுதன.
"பெரியவர்' சமயற்காரர்களை நோக்கிப் போனர்.
**ம். என்ன செய்யிறது. எங்கட ஊட்டுக்கு ஓடிப்போய். ஒரு மூட அரிசிய எடுத்துவந்து சுருக்கா ஆக்கிப் போடுங்க. என்னு செய்யிறது. எப்பவுமே இப்புடித்தான் கடைசியில எங் கட ஊட்டு அரிசிதான். போவும்." அவர் பெரிதாக அலுத் துக்கொண்டார்.
முந்தாநாள் " ஊர்ப் பெரியவர்க"ளில் சிலரின் வீடுகளுக்கு இரவோடிரவாக பலமூடை அரிசி போனது பலருக்குத் தெரிந் திருக்க நியாயமில்லை.
(யாவும் கற்பனை)
‘இனிமை” ஜனவரி 1978,
-1.8-

உழைக்கப் பிறந்தவன்!
மேலே தெரிந்த வானத்தைப் பார்த்தவாறே எவ்வளவு நேரம் நின்றேனே ? விமானம் படிப்படியாகக் குறுகிக்குறுகி. இப்போது அதன் பிம்பம் கூட என் கண்களுக்குத் தெரியவில்லை. இன்னமும் கண்களை வேறு திசையில் திருப்பமுடியாத நிலை.
வாங்க. மச்சான். வாங்க போவம்." என் தோளின் கையை வைத்துப் பேசுகிருர் என் மச்சான். நான் திடுக்கிட்டு முகத்தைத் திருப்புகிறேன். என் கண்களில் திரண்டிருந்த நீர்த் துளிகள் இருவரது கைகளிலும் பட்டுத் தெறிக்கின்றன.
"தொர மாமா. நீங்க அழுவுறிங்களா?" என்று ஏககாலத் தில் என் மச்சானின் பக்கத்திலிருந்த இரண்டு பெண் குழந்தை களும் கேட்கின்றன.
கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு பேசமுயல்கிறேன். பேச்சு வெளிவாரமல் இதயத்தைப் பிழிந்து ஏதோ ஒர் துயரம் வந்து உருண்டையாய்த் தொண்டையை அடைத்துக்கொள்கிறது. நிலைமையைச் சமாளிக்க மச்சரின் முன்வருகிருர், "வாங்க. ராணி. பேபி. சுருக்கா வூட்டுக்குப் போயிருவோம். மிச்சம் சொனங்கினு போறது கஷ்டம."
எல்லோரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தி விருந்து வெளியே வருகிருேம். எனக்கு யாருடனும் எதையும் பேசமுடியாத நிலை. சிறிதுநேரம் மனமவிட்டு ஓவென்று கதறியழுதால் சற்று நிம மதியாக இருக்கமுடியும் என்று தே ன்றுகிறது. இருந்தாலும் நான் ஆண்பிள்ளையல்லவா ? நினைத்தமாத்திரத்தில் அழுதால் என் ஆண்மை என்ன ஆவது ? ஒ.
விமான நிலைய எல்லையைத் தாண்டும்போது திரும்பவும் ஒருமுறை திரும்பிப் பார்க்கின்றேன். என இனிய ஹித யா. நீ. பறந்துவிட்டாயா. எங்குபோய் என்னென்ன துயரங்களைச் சந்திக்கப்போகின்றயோ. யா. அல்லாஹ். என் அ ைபுக்குரிய ஹிதாயா எவ்வித இன்னலும் இன்றி வந்துசேர நீ தான் உதவ வேண்டுமென நான் மானசீகமாகக் கேட்டுக்கொளகின்றேன்.
ーI3

Page 9
இயந்திரம்போல் உடன் வந்தவர்களுடன் கோட்டை ரயில் நிலையத்தை அடைகின்றேன். ரயிலில் இடம் பிடிக்கும் முயற்சியில் கூட ஈடுபட முடியாது என்னுள் அனைத்துமே அடங்கிவிட்டது போன்ற நிலைமை. மச்சான் த ரின் முண்டியடித்து பெருமுயற்சி யோடு இரண்டு முழுமையான சீட்டுககளைப் பிடித்துவிடுகின்ருர், ராணியும் டேபியும் ஆளுக்கொரு “மூலை”யைப் பிடித்துக் கொண்ட மகிழ்ச்சி அவர்களது கண்களிற் பளிச்சிட பிளாட் பாரத்தை வேடிக்கைபார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நானும் மச்சானும் மற்றவர்களும் உட்கார்ந்துகொள்கிருேம். என் சிந் தன ஹிதாயாவைச் சுற்றியே வட்டமிடுகிறது.
"டிகிரிமெனிகே'-ரயில் தன் தளிர் நடையைத் தொட்ங்கி, திடீரென வேகமெடுத்து ஓட ஆரம்பிக்கின்றது. ரயில் சத்தத்தை யும மீறிக்கொண்டு உள்ளே உளளவர்கள் பெரிய சத்தத்தோடு சுேகின்றனர். மாமி - மச்சானின் உம்மா - கம்பீரமாக மச்சா னைப் பார்த்துக் கேட்கிரு.
"மவேன். நேத்து. பேங்க் எக்கவுன்ட் தொறந்தீங்களே. யார்ட பேருக்கு.?"
"ஏன்ட பேருக்குத் தான் தொறந்தோம். மாகவே பதில் அளிக்கின்ருர்,
"அதுதானே பார்த்தேன். ஹிதாயா வேறு யார்டேயோ பேருக்கு எக்கவுண்ட் தொறக்கப்போறதா பேச்சு வந்திச்சி " எனறு இழுத்து மாமி என்னையே பார்த்து, பார்வையை வெற் றிப் பெருமிதத்துடன் நிலைக்கச்செய்கிரு.
எனக்குள் மின்னலாய் ஒரு நினைவுப்பொறி பளிச்சிடுகிறது. போனவாரம் என் தங்கை என்னிடம் பேச்சுவாக்கில் கேட் டாள். 'நாஞ ஒங்கட பேருக்கு சம்பளத்த அனுப்பவா ?”
மச்சான் கம்பீர
நல்லவேளை நான் அப்பவே தடுத்து "வேணும். நீ . ஒண்ட ஒழைப்பால் வர் ரதை எனக்கு அனுப்பாத. மசசானுககே அனுப் பிடு. நான் பசியில கெடந்தாலும ஒண்ட சசி லியில ஒரு சதத் தையும் தொடமாட்டேன்மா. என்ன செய்யிறது. அல்லாஹ் எனக்கு வசதியத் தந்திருந்தா நான் உன்ன வெளிநாடு போவ வேணும் எண்டு தடுப்பேன். எனக்கு இப்ப அந்த சக்தி இல்லாத தா லதான் இப்புடி தவிச்சிக்கிட்டிரிக்கிறேன்மா."
இதைக் கேட்கமுடியாது ஹிதாயா எப்படிப் பதறிப்போஞள்? தன் கை+ளுக்குள் முகத்தைப புதைத்துக்கொண்டு அவள் எப் படிக் கதறினுள் ?
-14

'நான. நீங்க எனக்கு என்னத்தில கொறவச்சீங்க. ஒங்க ளால முடிஞ்ச த எல்லாம் செஞ்சிங்க . இப்ப நீங்க செய்யல்ல எண்டுதான ந ன் போவப் பொறப்பட்டிருக்கிறேன் ."" ளால் தொடர்ந்து பேச முடியாது தொ ன் டை யைத் துயரம் அடைக்க, அவள் விம்மியது என்னுள் நினைவலைகளாய் மேலே எழுகின்றது.
ஹிதாயாவுக்கு இரண்டு பிள்ளைகள். ஹிதாயாவுக்குப்பின்னர் பிறந்த எனது இன்னுமிரண்டு சகோதரிக%ளயும் திருமணச் சந்தை யில படாத பாடுபட்டு விற்று நான் நிமிரும்போதுதான் இவள் வெளிநாட்டுககுப் போகப் புறப்பட்டுக்கொண்டுவந்து நிற்கிருள். நானே என் மனநிலையைச் சொல்லமுடியாமல் மனதுக்குள் ளாகவே சித்திரவதைப்பட்டவனக, இதே என்னுயிராய் வளர்த்த ஹிதாயாவை - என் உடன்பிறப்பை - வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு வந்துகொண்டிருக்கின்றேன்.
நான் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன். சொந்த ஊரிலிருந்து பலமைல் தூரத்துக்கு அப்பால் எனக்குப் பாடசாலை. என்னே நமயி வாழும் எனது தாய், தம்பி, தங்கையர். ஹிதாயாவின் திரு மணத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு தங்கைகளையும் திரு மணம செய்து கொடுத்து விட்டு இப்போது தான் நிமிர்ந்திருக்கின் றேன். இனிமேல் கான் எனக்குரிய வாழ்க்கைத் துணையைபபற்றி நி%னக்கலாமென்றிருந்த வேளையில் இதோ. ஹிதாயா புறப்பட்டு விட்டாள்.
ஹிதாயாவின் கணவரும், அவருடைய தாயாரும் தம்மையே மறந்து பேசிககொண்டே வருகினறனர்.
“மவேன். ஹிதாயா அனுப்புற சல்லியிலதான் ஊட்டக் கட்டனும். அது க்கு முந் தி ஊட்டுக்கு ஒரு டீ வீ யையும், நல்லதா ஒரு கெஸட்டையும் வாங்கிடனும் . எல்லா ஊடு+ளில யும் டீ வீயையும், கெஸட்டையும் வச்சிக்கிட்டு எத்தன பெரு மையா வாழுதுகள். ஹிதாயா அனுப்புற மொதல் சம்பளத் தில ஒரு டீ. வீ. வாங்கிடலாமா மவேன்?"
மாமி மிகுந்த ஆர்வத்துடன் கதையைத் தொடர்கிருர். அந்தச் சொற்கள் ஒவ்வொன்றும என் இதயத்தில் கூர்முனைப பாய்ச்சல் நடத்தி, இதயம் ரணகளமாய் வேதனையாற் துடிக்கின்றது.
ஹிதாயாவின் குரல் என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எனக்குமட்டுமே கேட்கக்கூடியதாக ஒலிக்கிறது. தான் வெளி நாடு போகும் விஷபத்தைக் கூற வந்தபோது நான் அவளை நோக்கி, "ஏன் ஹிதாயா, நீ போறத மச்சான் மாமி எல்லாரும் விரும்புருங்களா?' என்று கேட்கிறேன்.
6 بيئي
-15

Page 10
"நான, நான் போகப்போறதே அவங்கட நச்சரிப்புக்காகத் தானே. முதல்ல உங்கட மச்சான் விரும்பல்ல. ம மி சொன் ன ஆக்கப்புறம இவரும் ஒரே பிடியா நான் போகத்தான் வேணு மின்டு சொல்ருரு. நாஞ." இதற்குமேல் பேசமுடியாது அவள் விம்முகிருள்.
நான் அதிர்ச்சிக்குள் ஆழ்ந்து அவளையே பாாக்கின்றேன்.
"நான. அவருடைய உழைப்பால இனி ஊட்டக் கட்டவும், ஊட்டுக்கான நல்ல சாமான்கள வாங் சவும் முடியாதாம். ந லு பேரப்போல நாங்களும் நல்லா இரிக்சனும் எண்டா. நான் சவூதிக்குப் போகத்தான் வேணுமாம்"
இந்த வார்த்தைகள் கொடுமையான கற்களாய்ப் பாய்ந்து வந்து என் தலையில் விழுகின்றன.
நான் என்ன தான் செய்யமுடியும்! தாங்கமாட்டாமல் மச்சா னிடமே நேரில் கேட்டுவிடுகின்றேன்.
"மச்சான், இப்போ இரிக்கிற ஊடு போதாதா? மத்தவங் களைப்போல பெரிசா வாழுறதுக்காக ஹிதாயா சவூதிக்குப் போவ ணுமா?"
மச்சானிடமிருந்து நான் சற்றும் எதிர்ப்பாராத பதிலடி என்னைநோக்கி வருகிறது. ۔سی۔
'ஹிதாயாவை அனுப்பாமலிரிக்கமுடியும். நீங்க இந்த ஊட்ட நல்லாக் கட்டி, நாலு ஊடுகளிலும் இரிக்கிறதைப்போல நாலு நல்ல சாமான் தள வாங்கிப்போடுறதா இரிந்தா. மச்சான். உலகம் ஒடுறதப்போல நாங்களும் ஓடாட்டி நாங்க எங்கேயோ பின்னுக்குத்தான் நிக்கனும்.”
நான் வாயடைத்துப்போய் நின்றேன். யா அல்லாஹ். என் ஞல் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி என் ஹிதாயாவை சவூதிக்கு அனுப்பாமல் நிறுத்திவைக்க முடியுமா ?
என் மச்சான் கொடுத்த சொல்லடியால் சர்வாங்கமும் ஒடுங் கப்பட்டு நான் திருமபி நடக்கின்றேன் . ஹிதாயாவின் பெரு மூச்சு நீண்ட தூரம் என்னைத் தொடர்ந்துவருகிறது.
"மா. மா. மா.மா. குரும்ப குடிக்கிறீங்களா?" என் தங்கையின் மகள் இராணியின் குரல் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கிறது.
ーI6ー

வெளியே தலையை நீட்டிப் பார்க்கிறேன். ரம்புக்கனை ஸ்டேஷ னில் ரயில் நிற்கிறது.
"வாணும். நீங்க குடியுங்க.." எல்லோரும் குரும்பை குடிக் கின்றனர் என்னைத்தவிர.
என் தங்கையின் மாமி தன் வருங்காலத் திட்டங்களை இன் னமும் விரிவாக்கிக்கொண்டே இருக்கிருர்,
"மவேன். ஹிதாயா போறதுக்குமுந்தி. நா. ஒரு விஷ யத்த அதுகிட்ட சொன்னேன். சவூதியில நல்ல பசுந்தான செயின் இரிக்கி . பக்கத்து ஊட்டுகள்ள எத்தனையோபேர் போட்டிரிக் கிருங்க..இங்க செய்யிறதா இரிந்தா மூணு நாலு பவுண் போவும். அங்க ஒண்ணர பவுண்கூட இலெ. நலல பார்வையா இரிக்கி. கட்டாயம் எனக்கு ஒண்டு வாங்கி கெரிஞ்சவங்க யாராவது வந்தா கொடுத்தனுப்பச் சொன்னேன். ஹிதாயாவும் சரி எண்டிச்சி."
யாஅல்லாஹ். பொறுக்கமுடியாது என் மனம் பதறுகிறது. ஹிதாயா. உன் உழைப்பால்தான் இவர்கள் எல்லோரும் தங் கள் வசதிகளைப் பெருககிக்கொள்ளவேண்டுமா ?
பேசாமல் எழுந்து கம்ப்பார்ட்மென்டில் நடக்கிறேன்.
"இவர்கள் என்ன மனிதர்கள்.’ என்று பலமாக ஒலமிடுகிறது என் உதிரம். 'நாலுபேரைப்போல' நல்லா வாழுற தக்காக என் உடன் பிறப்பு பலிய 1 க்கப்பட்டுவிட்டாள் என்ற ஆற்றமை யுடனேயே ஊர்ப்போய்ச் சேருகின்றேன்.
காலம். அது யாருடைய பெருமூச்சைக் கண்டும் குதூகலக் கோலாகலங்களைக் கண்டும் நின்று கவனிப்பதில்லையே. ஹிதாயா போயும் ஆறுமாதங்களுக்கு மேலாகிவிட்டது.
அவளின் வீட்டில் டீ. வீ.யும், கெஸட்டும் வந்து சேர்ந்து விட்டதோடு மாமியின் கழுத்திலும் தங்கச் சங்கிலி மின்னுகிறது.
எனது பாடசாலை மூகவரிக்கு அன்று திடுதிப்பென்று ஹிதா யாவின் கடிதம் வந்தது. எனக்குப் பெரிய வியப்பு கைகளில் கனத்த கடிதத்துடன் ஸ்டாப் ரூமில் போய் ஆறு சுலாகக் கடி தத்தை உடைத்தேன். தன் இதயத்தையே அப்படியே திறந்து கொட்டியிருந்தாள் ஹிதாயா.
அதில் தனக்கு மூன்று பெரிய வீடுகளின் வேலைச் சுமைகளைத் தாங்கமுடியாதெனறும் ஏதாவது பொய்க்காரணம் ஒன்றைக்
-7-

Page 11
கூறி உடனே வரும்படி தனக்கு ஒரு டெலிகிராம் அனுப்பும்படி யும் பலமுறை வேண்டி இருந்தாள. இதனையிட்டு அவள் மசசா னுக்கும் எழுதி இருந்ததாகவும், அவர் அவசரப்பட்டு வர மவண்டாமென்றும் இரண்டு வருடங்கள் எப்படியாவது பொறுத் தக்கொள்ளும்படி கேட்டிருந்த தாகவும் குறிப்பிட்டிருந்தாள். இறுதியாக, "நான, நீங்களும் இந்த உதவியச் செய்யாவிட்டால் என்னுடைய மையத்தத்தான் பார்க்கவேண்டிவரும்" என்றும் எழுதி இருந்தாள்.
ஹிதாயாவின் கடிதம் என் இதயத்தை அழுத்தியது. என் கண்கள் குளமாயின.
அடுத்து என்ன செய்வது? ஹிதாயா சொன்னதுபோலவே செய்வதா? அல்லது விடுவத ? அவள் திடீரென வீட்டிற்கு வந்தால் பிரச்சினைகள் வராதா ? விஞக்கள் தொட்ர்ந்தன.
இறுதியில், தீர்க்கமான முடிவுடன் பாடசாலை முடிய, தபால் நிலையம் சென்றேன்.
தந்திப் பத்திரம் ஒன்றைப் பெற்றேன்.
'அம்மாவுக்குச் சுகமில்லை; அபாயகரமான கட்டத்தில் இருக்கிருள். உடனே வரவும்.’’ எனது கை மிக விரைவாக எழுதிக்கொண்டிருந்தது.
நான் தந்தியை அனுப்பிவிட்டு, தங்கியிருக்கும். வீட்டிற்குச் சென்றபோது அங்கு எனக்காக ஒரு தந்தி காத்திருந்தது. மச் சான்தான் அனுப்பியிருந்தார். படபடப்போடு வாசித்த என் கண்கள் இருளடைகின்றன. கைகால்கள் நடுக்கம் எடுக்கின்றன.
'ஹிதாயா இறந்து விட்டாள். மாரடைப்பால் இறந்ததாக அறிவித்துள்ளார்கள். இரவு கட்டுநாயக்காவுக்கு மையத்து வரு கிறது. நான் கட்டுநாயக்கா போ கிறேன். உடன் வரவும்"
பா. அல்லாஹ்.. என் ஹிதாயாவின் கதை முடிந்துவிட் டதா..? என் அனபு ஹிதாயா. எத்தனை மனத் துயரோடு நீ எழுதியிருந்தாய் ? அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கமுனை ரேயே நீ முந்திவிட்டாயா ?
*சிந்தாமணி” - 17-10-1982.
ーISー

அவள் எடுத்த முடிவு !
வஸிராவின் மனம் இடைவிடாது படபடத்துக்கொண்டி ருந்தது. அடிக்கொரு தரம் அவள் வீட்டு முன் வாசலைப் பார்த் தக் கொண்டிருந்தாள். ம். வாப்பா இன்னும் சில நிமிஷத்துல வந்கிடுவாறு . என்று அவளுடைய மனம தனக்குள்ளாகவே கூறிக்கொண்டது.
ஒ. அதென்ன சப்தம் கொழும்பிலிருந்து வரும் உடரட்ட மெனிகா தான்! வாப்பா இதில் தான் வருவ ரென்று வளி ரா வுக்கு நன்ருக தெரியும். "வாப்பா வந்த ல் , பயப்படாம மன சில உள்ளதைச் சொல்லிடனும்." இந்த தீர்மானத்தை இது வரை பலமுறை அவள் தனக்குள்ளாகவே செய்துகொண்டாள்.
வளிரா மீண்டும் அறைக்குள் போய் நுழைந்து. சிந்தனை யில் ஆழ்ந்தாள்.
அவளது தந்தை வந்து உள்ளே போகும் அரவம் கேட்டது. இருக்கட்டும். கொஞ்சம் ஆறுதலாக இருந்துவிட்டுச் சொல்ல லாம என்று அவள் இருந்துகொண்டாள். !
வாப்பா சமயலறையில் உம்மாவுடன் பேசுவது அவளுக்குக் கெளிவாகக் கேட்டது. அவள் தன் காதுகளைக் கூர்மையாக் இக் கொண்டாள்.
அவங்கட மசனுக்கு எத்தனையோ எடங்களில் பேசிவர்ராங் களாம். கரீம் ஹ ஜிபார் தண்ட மகளுக்கு ஐம்பதினுயிரம் ரூபா தர்ரதாச் சொலலி இரிக்கிராரும் . அவங்க எங்கட மொக துக்காகத்தான் இங்க வந்த க்களாம்! இருபதுக்கு குறையாம வேணுமாம். நகையும் பதினஞ்சு பவுனுககாவது தரணுமாம்.? வளிராவின் உடம்பில் இரத்தம் கொதித்துக்கொண்டு வந்
தது அவளது நாக்கு துடித்தது. கஷ்டப்பட்டு அவள் அடக் கிக்கொண்டாள்.
"எனச் கெண்டாக்கா அந்த மாப்புள்ளையை விடவே மன சில்ல. எங்கட வயல் துண்ட வித்தாவது இந்த காரியத்தைச்
- 19 س

Page 12
செய்திடனும் எண்டுதான் நெனப்பா இருக்கு" உம்மாவின் குரல்தான.
அவவுக்கு இந்த இடத்தை விடவே மனமில்லை. வளியீராவால் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லை, அவ ளது கால்கள் அவளை யுமறியாமல் சமையலறைக்குள் அவளை இழுத்துச் சென்று நிறுத்தின. அவளது திடீர்ப் பிரவேசம் அவ ளின் பெற்றேர்களை ஆச்சரியப்பட வைத்தது சில கணங்கள் மெளனம் அங்கே விழுங்கிச் சென்றது. யார் முதலில் பேசுவது என்ற வில்லங்கம்!
வஸிராவின் கணிரென்ற குரல்தான் முதலிடத்தைப் பிடித் துக்கொண்டத! தனக்குள்ளாகவே பல முறை ஒத்திகை பார்த் திருந்த வசனங்களை அவள் ஒப்புவித்துவிட்டாள்.
'வாப்பா எனக்கு நீங்க இப்பப் போய் பேசிவிட்டு வந்த மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லை."
இந்த வார்த்தைகள் அந்தப் பெற்ருேரை ஒரு கணம் அதிர்ச்சியடையச் செய்துவிட்டன. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வளிராவே தொடர்ந்தாள்.
*வாப்பா. மொஹிடீன் முதளாவியிட மகன் பெரிய பணக் காரப்பிள்ளை. நல்ல படிச்சவரு. அவருக்கு ஐம்பதிஞயிரம் இல்ல. ஒரு இலட்சம் கொடுதது பெண் கொடுககவும் ஆள் ளிருக்க. நாங்க ஏன் அங்க கால் வைக் கணும்.? வாப்பா..?? இடையில் நிறுத்தி தன் தந்தையைப் பார்த்தாள் அவள்.!
அவளுடைய கண்களில் ஏனே நீர் முட்டிக்கொண்டு வந்து. அவளது குரலும் இலேசாக அடைத்துக்கொண்டது!
**சொல்லும்மா." "அவங்கட காலடிக்குப் போய் நீங்க இப்ப கெஞ்சிட்டு வந் திருக்கிறீங்களே. இது எளக்குக் கொஞ்சமும் புடிக்கல்ல! அண் டைக்கு அவங்க பொண் பார்க்க வந்தபோது .” அதற்குமேல் அவள் பேசவில்லை. பேச முடியவில்லை. அவள் மனம் அசை போட்டது.
பெண் பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டதிலிருந்து அவளது தாயும் தகப்டனும் நிலையாக நிற்கவே இல்லை. ஏதோ கலியாணப் பேச்சுவார்த்தைகளே முடிந்துவிட்ட நினைப்பில் மிதந்தனர் 1 அன் றைய சிற்றுண்டி வகைகளுககாக மாத்திரம் ஐநூற்றிச் சொச்சம் செலவு! அது அவளின் தாயின் சிறிய சேமிடபில் ஒரு பகுதி! வீடு வாசலகளை ஒழுங்குபடுத்தி, பற்ருக்குறைகளைககொண்டு மறைத்து. ஓ. எததனை பாடு!
-20

அவர்களுக்கும், தங்களுக்கும் ஒத்து வராது என்பது வளிமீரா வுக்கு எப்போதோ புரிந்தபோதும் அவளைப் பெற்றவர்களைத் தான் ஆசை விட்டபா டில்லை. வளtராவின் களங்கமில்லாத அழகினைக் கண்டு மாப்பிள்ளை வீட்டார் மனமிறங்கினலும் சீதன விடயங்களில் பிடிவாதமாகவே நின்றனர்.
வளிராவின் தாய்தான் மெளனத்தில் "குறுக்கிட்டாள். "வஸிரா. இந்த விஷயத்தில் உனக்கென்ன பேச்சு. பேசாமல் போ..."
“ přLont" "என்ன காலம் இது. ஒண்ட வாப்பாவ்ை எனக்கு பார்த்து பேசி முடிக்கிறமட்டும் நான் அந்த பேச்சில் தலையிட்டேன .? சே. சே. பொமபளப்புள்ள என்ட வெட்கமே இல்லாம போச்சி! காலம் கெட்டகாலம்..” அவள் தன் காலத்தையும் தன் மகளுடைய காலத்தையும் ஒப்பிட்டுப் பேசத்தொடங்கிவிட்டாள். இருந்தாலும் வளிரா விட்டுக்கொடுக்கவில்லை! அவள் தன் தந்தையைப் பார்த்தே பேசினுள் !
"வாப்பா. அவ்வளவு பெரிய எடத்தில நான் போய் வாழ விரும்பவில்லை. தொட்டதுக்கெல்லாம் அவங்கட பணமும் எங் கட இல்லாமையும் சுட்டிக் காட்டப்பட்டு, ஒவ்வொரு நிமிஷ மும் நான் கூனிக் குறுகி. என் சுய கெளரவத்தையே விலை பேசமுடியாது. என் ஒருத்திக்காக உள்ள கொஞ்ச வயலையும் வித்திட்டு பொறவு என்ன செய்வீங்க. எனக்குப் பொறவும் அஞ்சிபேர் இரிக்கிருங்களே. அவங்கட வயிறு எப்படி நெறை யு ? வாசிட்டிக்கு எடுபட்டிருக்கானே தம்பி. அவனுக்கு எப் படி செலவழிப்பீங்க. வயலையும் வித்திட்டு. வூட்டுல உள்ள எல்லா பணம், நகைகளையும் எனக்குக் கொடுததிட்டு. கவி யாண செலவுக்காக இரிக்கிற இந்த வூட்டையும ஈடுவச்சிட்டு. என்ன செய்யப்போ நீங்க . வாப்பா வெரலுக்குதக்கதான் வீங்கனும். எங்கட தகுதிக்கு ஏத்தாப்போல யாராவது மாப் பிள்ளை கெடைக்காமலாப் போவான். மொஹிடீன் மொதலாளி யிட மகனை எந்தக் காரணம்கொண்டும் ந 1 ன முடிக்க முடி யாது . " மிக ஆவேசமாகவும் அதே நேரம் சற்று உரத்தும் பேசியதால் அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
இதுதான் தன் பெற்றேரின் முன்னுல் அவள் இப்படி பேசிய முதல் தடவையாகும்!
அவளது மனச்சுமை இறங்கிவிட்டது. இலேசான மனதுடன் அவள் அறைக்குள் நுழைந்தாள்!
“விடிவு” - மே - ஜுலை 1979.
一身及一

Page 13
வாழ்க்கையின் சுவடுகள் !
காலை பத்து மணி ஆகிவிட்டது. அவிசாவளை பஸ் நிலையத் தில் வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியவில்லை. நாலா புறங்களி லிருந்தும் வருகின்ற, போகின்ற பஸ்கள். அவறறில் ஏறி இறங் கும பயணிகள் கூட்டம், சகல வர்க்கப் பிரதிநிதித்துவமும் அங்கே நிதர்சனமாகி இருக்கிறது.
அங்காடி வியாபாரிகளின் வாழ்க்கைப் போராட்டம் அவர் களது வாய்வழியே பெருங்கூச்சல. ய் ஒலித்து, காதுசஞக்குப் பெருந்தொலி லை கொடுக்கிறது. நானவிதப் பொருடகளைச் சுமநது விற்கும் வியாபாரிசளின் தொல்லை ஒருபுறம்.
"வாப்பா பெப்பர்மின்ட்" மகன் சிபாஸ் என்னை நச்சரிக் கத் தொடங்கிவிட்டான். அதை விற்பவனும் தன் விற்பனைக் கூடையை என் மகன் முன்னலேயே வைத்துக்கொண்டு நிற் கின்றன். "ஓங்கி அவனுக்கு நாலு அறை கொடுத்துவிடலாமா" எனற அளவுக்கு எனககு ஆத்திரம்.
மகனின் நச்சரிப்பைத் தாங்காது நான் தவிப்பதை என் மனைவியும் உணருகிருள். அவளுடைய தோளில் கைக்குழந்தை சுரையா நித்திரை. என் மனைவி வியாபாரியைப் பாாத்துக் கூறுகிமுள்.
*"எங்க புள்ளைக்கி இதெல்லாம் குடுக்கக்கூடாதென்டு டாக் டர் சொல்லி இருக்கிருர். நீ கொண்டுபோப்பா...”*
வியாபாரி முகத்தைச் சுளித்துக்கொண்டு நகரத் தொடங்கு கிருன். என் அருந்தவக் குமாரனும் தன் பொ ைஞன வாயைத் திறக்கத் தொடங்குகிருன். இப்போது இவனது முதுகில் நாலு தரம் விளாச என் கை துரு துருக்கிறது. அதிகாலையில் மாத்தளையி லிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து, இதுவரை சுமார் பத்து ரூ 1ாய்க்கு மேல் இவனுக்காகவே செலவிட்டதை நினைக்க ஆத் திரம் பலமடங்காகிறது.
நல்லவேளை, இரத்தினபுரி பஸ் வந்துவிடுகிறது. வ்ழமை யான போராட்டத்தோடு பஸ்ஸில் ஏறி மூவருக்குமாக இடம் பிடித்துக்கொள்வதில் நான் வெற்றிபெறுகினறேன.
一22一

டிக்கட்டுகளை வாங்கியபின் நான் மீதிப் பணத்தை மிகக் கவனமாக எண்ணி "பர்ஸில' வைத்துக் கொள்கினறேன். என் கையிலுள்ள "சிட்டிஸன்" கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கின்றேன் மணி பத்தே கால், ஏன் மனைவியைப் பார்த்து மிகவும் மெல்லிய குரலில் நான் கூறுகின்றேன் “சுடைதா, கழுத் தில் உள்ள செயின் கவனம். ஊரா ஊட்டுப் பொருள்” அவள் செயினை பிளவுசுக்குள்ளாக நன்கு இழுத்துவிட்டுக்கொள்கிருள்.
பஸ்ஸின் முன் சீட்டைப் பிடித்துள்ள சுபைதாவின் கைகளை ந7 ன் நோட்டமிடுகின்றேன். இாண்டு சோடி அழகான தங்க வளையல்கள் பளிச்சிடுகின்றன. சுமார் எட்டுப் பவுண்கள் இருக் கலாம். எல்லாமே எனது நண்பன் பாருக்கின் மனைவிக்குச் சொந்தமானவை. என் கையில் கடடி இருக்கும் கடிகாரமும் பாரூக்குடையதுதான். அவன் நன்ருக வாழவேண்டும்.
இரத்தினபுரியில், எனது உடன் பிறந்த தங்கையான ஸ்பீலா வின் வீட்டில் இன்று இரவு, அவளது மகளுக்குக் கலிபாணம். என்னுல், அங்கு போகாமல் இருக்க முடியவில்லை. சுமார் இருபது வருடங்களின் பின்னர், எனது தங்கை வீட்டிற்குச் செல்கின் றேன்.
ஒ . இருபது வருடங்கள். இந்த இருபது வருடங்களில்தான் அல்லாஹ் எங்கள் இருவரது வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை மாற்றங்களைச் செய்துவிட்டான்!
மாத்தளையிலே ஊருக்குச் சிறிது ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் சின்னஞ்சிறிய வீட்டில், நானும் என ஆறு உடன் பிறப் புக்களுமாக சதா மகிழ்ச்சியுடன் வாழ்ந்த அந்தப பொன்னன நாட்களை நான் நினைக்காத நேரமே இல்லை.
ஒ. அப்போது எங்கள் வாப்பா சிறியதொரு பெட்டிக் கடை தான் வைத்திருந்தார். வருமானம் ஒகோ. என்று கூறு மளவிற்கு இல்லை. ஆனலும், அந்தச் சொற்ப வருமானத்திலே செமமையாக குடும்பத்தை நடத்தினுள் எங்கள் உம்மா.
பானை நிறைய சோற்றையும் கறிகளையும் ஆக்கி இறக்கி வைத்துக்கொண்டு 'சோறு தின்ன வாங்க புள்ளைகளே' என்று உம மா கூப்பிடுவாள். கைகால்களைக் கழுவிக்கெ ண்டு, தலைக் கும் ஏதாவது புடவைத் துண்டுக%ளப் போட்டுக்கொண்டு போய் நாங்கள் பாய்களில் உட்காருவோம்.
தலை நிறைய முக்காட்டைப் போடடுக்கொண்டு 'பிஸ்மில்" சொல்லி, முதன் முதலில் வர்ப்பாவுக்குப் போட்டு மூடிவைப்
ー23ー

Page 14
பாள். அடுத்து, எங்களுக்க வரிசையாகப் போடுவாள். உம்றாட சைச் சமையலின் சுவை இன்னமும் என் நாக்கிலேயே இருக் கிறது. விவருக்கு அப்படியொரு கைராசி, நாங்கள் ஏழுபேரும் சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம் சண்டை பிடிப்போம். எல் லாமே எங்களுக்கு இறுதியில் மகிழ்ச்சிதான்.
காலத்தான் மனிதனின் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்களேச் செய்துவிடுகிறது? காலஞ்செய்யும் இந்த மாற்றங் கள் எல்லாரது வாழ்க்கையிலும் ஒரே தன்மைய தாய் இருந் தால் யாருக்குமே எநதப் பிரச்சினே யுமே ஏற்படமாட்டாது.
ஆணுல் சிலரது வாழ்க்கையிலே இளந் தென்றலாப் வீசும் காலம் பலரது வாழ்க்கையிலே கோரக் கொடும்புயலாக அல்லவா வீசி விடுகிறது?
காலம் கரைந்கதன் அறிகுறியாய் நாங்கள் ஏழுபேருமே வளர்ந்தோம் மாத் ஆஃள ஸ் ஹிருவில் ஆண்களுக்கும் பெண் களுக்குமான தனித்தனிப் பிரிவுகளில் கல்வி கற்ரும். என்&னப் பிடித்த துரதிர்ஷ்டம். எனக்குப் படிப்பு அவ்வளவாக வர
at al.
வTப்பா திடீரென மெளத்தானபோது, குடும்பத்தில் மூத்த வன் என்ற கார8ணத்தால் குடுமபச் சுமை பலவந்தமாக "எள் த&லயில் வைக்கப்பட்டது. அதற்காக எனக்குக் கிடைத்த ஊன்று கோல், வாப்பா நடத்திக்கொண்டிருந்த சிறிய பெட்டிக் கடை தான். இந்த ஊன்றுகோலின் துணே போடு மிகவும் சிரமப்பட்டு இ*ளயவாகளே முன்னேற்றினேன்.
எல்லாருமே இன்றைக்கு நல்ல நிலையில்தான் இருக்கின்ற னர். ஆணுல் சுமை தாங்கியாக இருந்த எனது முதுகுதான் இன்ன மும் நிமிரவில்லே. இதோ, இனறை குப் பே கிறேனே எனது தங்கச்சி ஸ்பீலாவின வீட்டிற்கு. இவள் இப்போது .ொய மாணிக்க வியாபாரியின் மனேவி. இவளே நான் கலியானம் செய்து கொடுப்பதற்காகப பட்ட கடஃன அடைக்கப் பதினேஞ்சு வருஷ வ்கள் பிடித்தன. ஆணு. இவ கஸ்பானம் செய்து சில மாதங்களிலேயே மச்சானுக்கு அதிர்ஷ்டத்துக்குமேல் கதிர்ஷ்ட மாசுக் கல கிடைத்தது. அவர் பெரிய முதலாளியாகிவிட்டார். பிறகு.? பிறகென்ன. இந்த ஏழை அவர்களது கண்களுக்கத் தெரியாமற் போய்விடடேன. எனது மூன்றுவது தம்பியுமSரண்ய தங்கச்சிசஞம் திருமணம் செய்த பிறகுதான் என்னுல் குடுமப வாழ்க்கையில் அடியெடுத்துவைக்க முடிந்தது.
--

இந்த ஸபீலாவுத் தான் சின்ன வயதில் என்னுேடு எவ்வளவு அன்பாக இருத்தி ருக்கிருள். ஒ . அதையெல்லாம் இப்போது ந - ன் நினேப்பதேயில்லே. நினே ஆதால் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று இறுக்கமாகி அடைத்துக்கொள்கிறது. .
நான் ஏதோ குறும்பு பண்ணியதற்காக, வாப்பா ஒரு சம யம் என்னே அடித்து வெளியே நிறுத்திவிட்டார். உம்மாவிடம் அன்றைக்குப் பகல் சாப்பாட்டையும் எ ன க் குக் கொடுக்க வேண்டாமெனக் கண்டிப்பாகச் சொல்விவிட்டார். எங்கள் வீட் டிற்குப் பின்னுலிருந்த கொக்கோ தோட்டத்தில் நான் உட் கார்ந்திருந்தேன்.
பாவம் ஸ்பீலா. அவனது சோற்றுப் பீங்கானே தன் சட்டை பால் மூடி எடுத்துக்கொண்டுவந்து "நாணு. இந்தாங்க. சுருக்கா திண்டிடுங்க" என்று தந்தாள். அந்த அன்பான ஸ்பீலா தான் இப்போது எப்படி மாறிவிட்டாள். ஆண்டவனே! பணம் இத்தனே கொடுமை வாய்ந்ததா?
ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் நான் என்னுடைய அதே பெட்டிக்கடையில் இருக்கும்போது திடீரென்று பதினுெகு பூஜீ வரிசைக் காரொன்று கடைமுன்னுல் நின்றது. அன்று சிகரெட் டுக்குப் பெரிய தட்டுப்பாடான ந ன். நான் காரைப் பார்த் தேன். காரின் பின் வீடடில் என் ஸ்பீலா! என் தங்கை டைரீஸ் வே தான். அம்பம்மா. அவளின் உடையும் நகைகளும். அப்பப்பா. இப்பொழுது எவ் பிளவு அழகாக. நன்று ச் சதை பிடித்து இருக்கிருள் என்று நானே வியந்தேன். இந்தப் பெட்டிக்கடை - அன்ளே வளர்த்து ஆளாக்கிய பெட்டிக்கடை - அவளுக்கு அடை III u ITETT தெரியாமற்போப் விட்டது. என் ஃன - அவளது உடன் பிரடர்பை - அவள் கண்டுகொண்டதாகவும் காட்டிக்கொள்ள வில் ஃவ.
அவளுடன் காரில் உட்கார்ந்திருந்த இன்னுமொரு பெண் ஆணுடன் மிக அழகாக ஆங்கிலத்தில் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தாள் "தங்கச்சி ஸ்பீலா" என்று இந்த உலக மெல்லாமே கேட்கக் கத்தவேண்டும்போல் என் மனம் துடி துடித்தது. ஜன்மப் பிரயத்தனத்தோடு நான் அடக்கிக்கொண் டேன. வீட புற்போய். என் மனேவியிடம் கூட இதை நான் சொல்லவில்க்ல. எப்படிச் சொல்லமுடியும்?
இதோ. என் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிருளே என் மனே வி. இவள் பிறந்தது முதல் வறுமையைத் தான் அனுபவித் தவள் அனுபவிப்பவளும்தான். ஆணுல், அனபு செய்வதில் இவளே
ー認5ー

Page 15
யாரும் மிஞ்சிவிட முடியாது. மனித மனங்களே வளர்க்கும் உன் னதமான நீர் இந்த அன்பு ஒன்றுதானே!
ஏதோ என்ன நினைத் தாளோ, ஸபீனாவின் மகளின் திரு மனத்திற்கு எனக்கும் கார்ட் அனுப்பி இருக்கின்றுள். கார்ட் ஒன்றிற்குப் பத்து ரூபா யாவது செல்வா கி இருக்குப. அவ்வளவு அழகான கார்ட், கார்ட் சடைச்கு எந்திருந்தால் நான் பேசா மல் கிழித்துப்போடடிருப்பேன். அது வீடடி ற் ஆவந்து தொஃ:த்து விட்டது. என் மண்வியின் அப்பாவி மனத்துக்கு, அது பெரிய மகிழ்ச்சி.
"ஏங்க ஒங் சுட தங்கச்சிட மகள் ட கவியானத் துக்கு நாங்க கட்டாயம் போய்வருவோங்கி. இப்படி ஒரு ந8  ைபொல்லாப்பு கனிவதான் குடும்பம் ஒண்டு சேரணும்" எனறு தொடங்கி விட்டாள். பிள்ளே களும் அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டன.
முடிவி?
மண் வியின் சுழுத்திலிருந்த ஒரே செயிஃா அடகுவைத்துப் பணம் பெற்று மணமகளுக்குப் பரிசும் எங்களுக்கு உடைகளும் வாங்கினேன். நண்பன் ப ரூ 4கிடம் சொல் லி அவனது மனேவி பயின் நகைகளே யும், அவனது கைக்கடிகாரத்தையும் இரவலாக வாங்கினேன் அடகுவைத்த செயின் மீட்க இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?
"இரத்தினபுரி வந்துடிச்சி. நீங்க என்னு இப்படியே யோசிச்
சிக்கிட்டு வர்ரீங்க. உங்கட தங்+ச்சி வீட்டுக்குப் போற சந் தே ஷமே இல் ஃ:யா?" என் மஃரவி என்னே சுய நினவுக்குக் கொண்டுவருகிருள்.
இறங்கி நடக்கத் தொடங்கினுேம், வெய்யிலென்ருலும் வெய் யில். எக்கச் சக்கமான வெய்யில், அரை மைல் நடந்த சன் தங்கை யின் வீட்டை யடைந்தோம். அப்பப்பா. பாதையெல்லாமே அலங்கா ரத் தோரணங்கள் திருமணம் இரவு தான் நடக்கவிருக் கிறது. இப்போதே நூற்றுக்கணக்கான கர்கள், மூன்றடுக்கு வீடு அந்த ளெவுக்கு நுழையவே என் கால்கள் கூசின. பேசா மல் திருப பிவிட மனந்துடித்தது.
"+ேட்' திறந்து தான் இருந்தது. தங்கச்சி ஸ்பீலா தான் முன்னுல் நின்று வேஃபக்காரர்களுக்கு ஏதோ வேலே சொல்லிக் கொணடிருந்தாள். எனனே அவள் கண்டுவிட்டாள்.
"நாஞ. என்ன இது. ஏனிப்புடி வேர்த்து 2 டிஞ்சி வர் ரீங்க. ஒரு ஹயசிங் காராவது எடுததுவரக்கூடாதா?
-26
 

அவளுடைய இந்த வரவேற்பே எனக்கு அவளுடைய மன நிஃயை உணர்த்தியத. நான் என் மனேவியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
என் மனத்தில் திடீரென ஒரு மின்னல். என் தங்கை எபிலா எங் ஃா "வா" என்று கூடக் கூறுவிஸ்லே, பெரிய காரெ ன நில் வந்தியங்கிய யாரோ இரண்டு பெண் சுஃளக் கைக்ஃளப் பிடித்து அழைத்துக்கொண்டு, நேரே உள்ளே போய்விட்டாள்.
ந - ன் பரிசுப் பார் சஃலு வெளியே இருந்த ஒரு நாற்காவியில் வைத்தேன். திருப்பி நடந்தேன். என் மனேவியும் பிள் ஃள ஒரும் என்றுத் தொடர்ந்தனர் என் நெஞ்சித் தில், வாழ்க்கையின் அடிச்சுவடுகள் அழுத்தின. நல்லவேண் என் மகன் அடம்பிடிக் காமல் நடந்தான் !
தூரத்தே வானேப் பார்க்கின்றேன். அந்த வானம் நிலத் தைத் மாதாடுவதைப்போல இருந்தாலும், ஒருநாளும வானம் நிலத்தைத் தேடுவதேயில்ஃல.
திரும்ப வந்து அவிலாவளே பள்ளில் ஏறி உட்கார்ந்தபோது, பசி வயிற்றைக் கிள்ளியது. இந்தப் பசி எங்களுக்கொன்றும் புதியதல்லவே!
"சிந்தாமணி" - 8-2-1981,
ー37ー

Page 16
தன்னையே சுட்டபோது.
வீடே அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஆளுக்கொரு பக்கமாக கூச்சலும், வேலையுமாக முனைந்திருந்தனர்.
றசீன தன்னறையில் நிலைக் கண்ணுடியின் முன்னல் அமர்ந்த வளாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். ஒப்டனை தேவையில்லாத அழகு அவளுடையது. ஆனலும் ஒப்பனை செய்ய வேண்டும்போன்ற ஒரு மனநிலை.
முன் வராந்தாச் சுவரில் மாட்டியிருந்த பெரிய கடிகாரம் மூன்று முறை அடித்து ஓய்ந்தது.
றசீன எழுந்துநின்று நிலைக் கண்ணுடியில் தன்னை முழுமை யாகப் பார்த்துக்கொண்டாள். அவளது அழகிலும் அதற்கு மெரு கேற்றியிருந்த ஒப்பனையிலும் அவளது மனம் திருப்தியடைந்தது.
அவளது உடலோடு வேற்றுமை காணமுடியாத இளஞ் சிவப்பும், ஒரன் ஜும் கலந்த நிறத்திலான "சீக்குயின் சாரி அதே நிறத்திலேயே பளவுஸ். நீண்ட நீலக் கருங் கூந்தலைச் சுருட்டி போட்டிருந்த ‘பனச் ஒப் கேர்ள்ஸ்" கொண்டை. சாரியின் நிறத் திலான மலர்ந்தும் மலராத ஒற்றை ரோஜாச் செறுகல். வலது கைநிறைய தங்கமும், சாரியின் நிறத்திலான பிளாஸ்ட்டிக்குமான வளையல்கள். இடது கை நடுவிரலில் பெரிய கல் பதித்த இமிடே ஷ ன் மோதிரம். உள் கழுததோடு இணைந்த "நெக்லஸ்" காது களில் இரட்டை ஜிப்சி. ஆடம்பரமில்லாத ஆனல் யாரையுமே தொட்டிழுக்கும் அதீத லாவண்யச் சுடராய் றசீனு ஆள் உயர நிலைக் கணணுடியிற் பளிச்சிட்டாள்.
இன்று அவளை "பெண் பார்க்க வருகிருர்கள். அவளது வாழ்க்கையில் இதுதான் முதல் அனுபவம்.
மாப்பிள்ளை வீட்டார் மலைநாட்டை சேர்ந்தவர்கள். மாப் பிள்ளை காசிம் பாரூக் அரச தோட்டமொன்றில் பெரிய கிளார்க். கொழுத்த சம்பளம். பெரிய வீடு; வீட்டோடு தோட்டப; வேலைக்கு ஆள்; இத்யாதி. இவற்றை எல்லாம் புரோக்கர்
-28

சொன்னபோதே பக்கத்து அறையிலிருந்த றசீன வின் மனம் தன்னை யறியாமலேயே சிறகடித்து பறக்கத்தொடங்கியது. இன் னமுந்தான் பறந்துகொண்டிருக்கிறது.
றசீனவின் குடும்பத்தினர் மாப்பிள்ளையைப் போய்ப் பார்த் துப் பக்கத்து ஊரில் உள்ள அவனது குடும்பத்தினரையும் சந் தித்து பேசி அதன் பின்னர்தான் இன்றைய சம்பிரதாய பூர்வ மான பெண் பார்த்தலுக்கு ஏற்பாடுகள் நடைபெற்றன.
**காசிம் பாரூக் நவநகரீகமானவன். பெண்ணை தானும் நேரில் பார்க்கவேண்டும் என்ருன், சரி என்று நான் சொன் னேன்' என்று றசீனுவின் அண்ணன் முபாரக் கூறியபோது ஒரு கனம் றசீனவின் உள்ளம் உடம்பெல்லாம் என்னவோ போலா னது. இலேசான நடுக்கமும், பதட்டமுமான ஒரு நிலை"
அவளின் தாயாரே சம்மதித்தார். " அ துக்கு என்ன மவன் இப்ப நீங்களே எத்த%னயோ இடங்களிற் பொண்ணை நேரிலே பார்த்தீங்கதானே. இந்த காலத்துல அதை எல்லாம் பாக்க ஏலுமா' இது அந்தத் தாயின் சமமத வார்த்தைகள்.
றசீனுவின் தாயின் உடம்பில் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்துதான் பிறந்ததோ? கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே அவள் ஒடியாடி திரிந்து என்னவெல்லாமோ செய்துக் கொண் டிருக்கிருள்.
வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் றசீனவின் நெஞ்சம் மிக வேகமாக படபடக்கத் தொடங்கியது. அந்த வேகததை அடக்க அவள் மெதுவாக நற்காலியில் அமர்ந்து கொண்டாள். வீட்டிலுள்ளவர்கள் வெளியே ஒடிச் சென்று வர வேற்று, அமர்த்தி, குசலம விசாரித்து, குடும்பக கதை தொடங்கி அரசியல் வரை தொட்டுப் பார்த்து. றசீனுவுக்கு ஏனே இவை எல்லாம தேவையற்ற தொலல்களாய் பட்டது. இடையில மூன்று நான்கு முறை றசீனுவின் பக்கத்து வீட்டு சிநேகிதி வந்து வந்து றசீனுவின் க. துகளில் எதையாவது ஒன்றை - றசீனு வின் முகம் இரத்த சிவப்பாக வெட்கும் வகையில் சொல்லிச் சென்று கொண் டிருந்தாள்.
அவள்து நெற்றியில் துளிர்ந்திருந்த வெண் முத்துக்களான வியர்வை துளிகக்ளக் கைக்குட்டை படிப்பால் மிகி பகருவமாக ஒற்றியெடுதத அவளது தாய் எழுந்துநினற தன் மகளின பரி பூரண அழகில் தனனையே இழந்து உக்சியில் முத்தங் கொடுத் ዳbfféሸ
-س29%--

Page 17
உறசின. இப்ப இன்னங் கொஞ்சத்தில. முன்னுக்கு நாஞ வந்து கூட்டிப் போ வாரு வெட்கப்படாம போய் அவங்கி எது வும் கேட்டாக்கா பதில் சொல்லும் யா.’
சிறிது நேரத்தில் றசீனவின் அண்ணன் முபாரக்கும், பக் கத்து வீட்டுச் சிநேகிதியும் வந்து முன் ஹோலுக்கு அ விழத்துப் போஞர்கள். றசீனு எவ்வளவுதான் முயன்ருலும் அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. மாப்பிள்ளையுடன் வந்தி ருந்த பெண்கள் ஆளுக்கு ஒன்முய் ஏதேதோ கேட்க எதையெல்லாமோ பதில்களாய் அவள் கொடடி வைத்தாள். அதற்கிடையில் உடம் பெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டன.
முபாரக் மிகவும் அக்கறையுடன் காசிம் பாரூக்கையே பார்த் துக்கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் தன் தங்கையை அவனுக்குப் பிடிக்கிறதா? என்ற ஊடுருவல் பிரதிபலித்தது.
ம். ஹ7ம். காசிம் பாரூக்கின் முகத்திலிருந்து முபாரக் கிற்கு ஒன்றையுமே படிக்க முடியவில்லை.
எல்லோரும் தேனிர் அருந்த சாப்பாட்டறைக்கு அழைக்கப் பட்டனர். வந்தவர்களும், வீட்டாருமாய் றீசீனவையும் அழைத் தனர். பாவம் என்ன செய்வதென்றே தெரியாதவளாய் முபா ரககை நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுதுதான் மாப்பிள்ளையும் அவளது கணகளிற் பட்டான்.
நிறம் குறைவு தான். என்ருலும் ஆண்மை மிளிரும் கம்பீர மான தோற்றம் அவளது கண் வழியே நெஞ்சிற் புகுந்திருந்தது. அந்த நிறைவின் ததும்பல் மறுகணம் றசீனுவின் கண்களிற் தெரிந்தது.
*றசீன நீயும் வா எல்லோருமாய் டீ குடிக்கலாம்" என் முன் முபாரக் கனிவுடன்.
றசீனவின் முகத்தைப் பார்க்கவே முபாரக்கிற்கு முடியாமல் அவனது இதயத்தையே யாரோ பலவந்தமாக - இராட்சச கரங் கள ல் - அரக்கத்தனமாக வெறியோடு கசக்கிப் பிழிவதைப் போன்ற பயங்கர உணர்வின் உந்தலால் தன் அறையில் குறுக் கும் நெடுக்குமாய் அலைந்துகொணடிருந்தான்.
அறையை எட்டிப் பார்ப்பதும், போவதுமாய் இருந்தாள் தாய். முபாரக்கின எண்ண அலைகள் பல திசைகளிலும சிதறித் தெறித்தன. அவனுக்கும அவனது தங்கை றசீனுவுக்கும் திரு மணங்களை முடித்து வைக்க துடித்துக் கொண்டிருநதாள் அவர் களது தாய் றஹ்மத்தும்மா.
ー50ー

முபாரக்கிற்கும் திருமணம் செய்துக்கொள்வதில் விருப்பம் தான். ஆனல் இதுவரை முபாரக் விரும் பும் எல்லா அம்சங் களும் நிறைந்த பெண்தான் கிடைக்கவில்லை. சும்மா சொல்லக் கூடாது முபாரக்கும் இதுவரை எத் துனை வீடுகளேறி "பெண் பார்த்தாயிற்று' மனதுக்குத் தான் ஒன்றும் பிடிபடவே இல்லை. அது இருந்த ல் இது இல்லை; இது இருந்தால் அது இல்லை என இதுவரை பார்த்த எந்தப் பெண்ணையுமே முபாரக்கிற்கு பிடிக்க வில்லை.
அலைந்த கால்கள் தானகவே ஒய்ந்தன. அவனையுமறியாமல் அந்த அறையிலிருந்த கட்டிலில் அவனது உடல் சாய்ந்தது. மன அலைகள் ஓய்வினறி ஆர்ப்பரித்தன.
றசீனவை பெண் பார்க்க காசிம் பாரூக் வந்து போனதி லிருந்து றசீனுவின் போக்கில் பெரியதொரு மாற்றம் ஏற்பட் டிருந்ததை முபாரக் நன்கு உணர்ந்திருந்தான். பெயர் தெரி யாத ஒரு களிபபின் சாயல் அவளது முகத்தில் பரிணமிக்கத் தொடங்கியதை அவன் கண்டான். நடையில், பேச்சில், பார் வையிற்கூட அவள் சிறிது மாறிவிட்டிருந்ததை முபாரக் அறிய முடிந்தது.
வழமைபோல் இல்லாமல் றசீன ஏதாவது ஒரு சினிமாப் பாட்டை முணு முணுப்பது மு பாரக்கிற்கும் தெளிவாகக் கேட் !-து. மேசையில் அமர்ந்து சாப்பிடும்போதெல்லாம அவளின் இதழ்க் கடையில் ஒரு புன்னகையின் இழை நெருடும். அது பெண பார்க்க வந்த அன்று எல்லோரும ஒன முகி அமர்ந்து தேனீர் அருந்தியதன் நினைவுப் படரலாகவும் இருக்கலாம். ஒ . ஒரு பெண்ணின் மென்மையான இதயத்தில் எனணங்கள்தாம் எத்தனை விரைவாக ஆழமாகப் டடர்ந்து விடுகின்றது.
முபாரக் நெற்றிப் பொட்டுகளை விரல்களால் அழுத்திக் கொண்டான்.
றசீன எண்ணங்களாற் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் போது, காசிம் பாரூக்கின் "பெண் பிடிக்கவில்லை" என்ற அதிர்ச்சி தரும் செய்தியை முபாரக் எப்படிச் சொல்ல முடியும்? காலையில் கடிதம் வந்தபோது றசீன நல்லவேளையாகக் குளித்துக் கொண் டிருந்த" ஸ். கடிதததைப் படிக்கு போதே விபரம் சேட்ட தாயி டம் 'நீ வக அவசரப்பட்டு றசீனவிடம் ஒன்றையும் சொல்ல வேணும். நானே சொல்றேன்" என்று கூறி வைத்தான்.
தன் தங்கையின் மனம் நோகக் கூடாது என்ற நினைவு அவன் உள்ளத்துள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
--3 سے

Page 18
முபாரக் எழுந்து மீண்டும் அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தான். பெண் பிடிக்காமற் போனதற்கான எந்த காரண மும் கூறப்பட்டிருக்கவில்லை.
முபாரக்கின் உள்ளமே அவனைச் சுட ஆரம்பித்தது. ஒ. நானும் எத்தனைப் பேருக்கு இந்த பதிலை கடிதம் மூலமாகவும், "புமராக்கர்’ மூலமாகவும் சொல்லி அனுப்பி இருக்கின்றேன். அந்த வேளைகளிற் பெண் வீட்டார் இபபடித்தான் துன்பத்தை அனுபவித்து இருப்பார் 4ள்? என்று அவனுள் ஆயிரமாயிரம் குரலகள் ஏகோபித்து ஒலிப்பதுபோன்ற பிரமை. இத்தனை நாட் சளும் அவன் பிறரைச் சுட்ட நெருப்பானது அவனையே இப் போதுசுட ஆரம்பித்தபோதுதான் அந்த வேதனையின் தன்மையை அவனுல உணரமுடிந்தது. குட்டின் வேதனையைத் தாங்கமுடி யாத முபாரக் துடித் துக்கொண்டிருந்தபோது . வெளியே தாய் றஹ்மத்தும் மா வாய்விட்டே புலம்பத் தொடங்கிவிட்டாள். ஒளிவு மறைவு தெரியாத அவளது பாமரத்தனத்தை நினைத்து முபாரக் ஒனறுமே பேசவில்லை.
"அந்த மாப்பிள்ளை என் மகளில என் னத்தை தான் கொறையா கண்டானே. நாசமாப் போவானுக. வீடு வீடாய் வந்து வட்டிலாப்பமும், வாழைப்பழ மும் தின்னுட்டுப் போகப் படிச்சிட்டானுக." அவளின் புலமபல் தொடர்கிறது.
அவனுடைய அறைக்குள் மெதுவாக நுழைகிருள் றசீன. அவளது முகத்தில் சோகமா அல்லது விரக்தியா குடி கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியவிலலை. முபாரக் அவளைப் பார்க்காது சுவரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
"நான! உம்மா சொன்ஞங்க" என்றவள் அதற்குமேல் பேச முடியாதவளாக துயரம தொண்டையை அடைக்க வெளியே ஓடினுள்.
ஒ . தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரி யும் என்பது எவ்வளவு பெரிய உண்மை. -
'றசீன, உன்னைப் பெண் பார்க்க வந்ததில் நான் பெரிய பாடம் படித்துவிட்டேன்" என்று அவனது உள்ளம் ஒலமிட்டது.
*சிந்தாமணி” - 15-05-1977.
一33一

அவனுக்கென்று ஒர் ஆசை
கண்டிமாநகரின் மத்திய வீதியிலுள்ள அந்த ஹோட்டலில் பகல்வேளையின் களை கட்டியிருந்தது. வழமையாக வரும் வாடிக்கை யாளர்களும் ஏனையோருமாய் மேசைகள் எல்லாம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தன. சாப்பாட்டு ஒடர்களும் சிற்றுண்டி ஒடர்களு மாய் குரல்கள் ஒலித்தன.
ஹோட்டலின் காசாளராக அமர்ந்து பணத்தைப் பெற்றுக் கொணடிருந்த ஹோட்டல் சொந்தக்காரனின் மகன் இனுயத் துல்லாஹ் தனது பார்வையைச் சுற்றிச்சுற்றி ஒடவிட்டுக் கவனித் துக்கொண்டிருந்தான். வியாபாரம் என்பதும் அதன் நுணுக்கங் கள் என்பதும் அவனுக்குப் பரம்பரையாக வந்த கலைத்திறன். அவனுடனே கூடப்பிறந்தவை !
அந்த ஹோட்டலின் எடுபிடி வேலையாட்களில் ஒருவன்தான் ஜப்பார். பத்து வயது தானிருக்கும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கவேண்டிய வயது. ஆணுல் குடும்பத்துப் பொருளா தார நிலைமை அவனை இப்படிக் கொண்டுவந்துவிட்டிருந்தது.
அன்று காலைமுதலே ஜப்பாரின் கண்கள் அந்த ஹே ஈட்டலின் முன்னுலிருந்த "பேமன் டில் தான் மொய்த்தன. அடிக்கடி அந்த இடத்திற்கே அவனது கவனம் சென்றது - அவனும் எவ்வளவுதான் முயன்றுபார்த்தாலும் மனதை இழுத்துப்பிடிக்க இயலவே இல்லை. அவனது பிஞ்சு மனம் அந்த இடத்தையே மொய்த்ததில் வியப்பதற்கு எதுவுமில்லை என்பது தர்க்கரீதியான உண்மையாக இருந்தாலும் பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, பார்த்து ரசிப்பதற்குக்கூட அவனுக்கு உரிமை இருக்கவில்லை என்பதுதான் நிதரிசனமான உண்மையாக இருந்தது.
'டேய் என்னடா..? வெளியே வெளியே ஒடிகிட்டு. உள் ளுக்குப் போடா" என்று இனுயத்துல்லாவின் அதட்டல் இத் தோடு மூன்று தடவை வந்துவிட்டது. ஹோட்டலுக்கு வெளியே வந்துநின்று பார்த்துக்கெ னடிருந்த ஜப்பார் மின் வேகத்தில் உள்ளே போஞன்.
"டேய் மடையா. இவ்வளவு ஆள் வந்திருக்க நீ எங்கடா ஒடி. ஓடிப் போற' என்றவாறே அவனது முதுகில் படாரென
--333--

Page 19
ஒரு அடியை விட்டான். அந்த ஹோட்டலில் அதிக சேர்வீஸ்' உள்ள தலைமை சர்வர் கணி.
முதுகில் விழுந்த அடி நெஞ்சுக்குள்ளும் பரவி அவனது கண் களில் நீர் முட்டியது. கண்களைக் கண னிர் திரையாய் மறைக்க அவன் வேலையில் ஈடுபட்டான் !
இதையெல்லாம் கவனித்துக்கொண்டு ஒரு மேசையில் தன் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு நல்ல மனத்தின் உடமையான பாஹிம் மெதுவாக அவனை அழைத்தான்.
'தம்பி. வெளியே ஒடிப்போய் என்னப்பா பார்க்குற ?" என்று மிகுந்த ஆதங்கத்தோடு பாஹி 0 கேட்டபோது, சுற்று முற்றும் பயத்தோடு தன் பார்வையை ஒருமுறை சுழலவிட்டு, பதில் கூறினுன் ஜப்பார். -
"சேர். முன்னுக்கு பேமன் டில். மரத்தால செய்த மாட்டு வண்டி விக்கிருன் அத இழுத் தா. கடகட என்று சத்தம் கேக்குது. எனக்கும் அதில ஒண்ட வாங்க ஆச'
இதற்குமேல் அவனல் பேசமுடியவில்லை. பக்கத்து மேசையி லிருந்த வாலி (ஞெருவன் 'ஸ் ஸ்" என்று அழைத்தான். பாஹிமின் கண்களில் சுடரொளி பளிச்சிட்டது.
தன் மனைவியிடம் "டியர். இப்படி கொஞ்சம் இருங்க. நான் ஐந்து நிமிடத்தில் வந்துடறேன் !" என்றவாறே அவசர மாகக் கைகளைக் கழுவிக்கொண்டு வெளியே சென்ருன், சென்ற வேகத்திலேயே அவன் திரும்பவும் வந் தான். அவனது கைகளில் அந்த மரத தாலான மாட்டுவண்டி ஒன்று இருந்தது.
அதைப் பாஹிம் ஜப்பாருக்குக் கொடுத்த கணத்தில் ஜப்பா ரின் மனம் உணர்ச்சிவசப்படடுவிட்டது. ஆவல், பலம் ஆகிய உணர்ச்சிகள் அவனுள் பொங்கிப் பீறிட்டன.
**சும்மா வச்சுக்கோப்பா" என்றவாறே பலவந்தமாகக் கொடுத்து விட்டுத் கிரும்பி பில்லைக் கொடுத் துவிட்டு மனைவியுடன் வெளியேறிஞன் பாஹிம. அவனது உள்ளத்தில் ஏதோ ஓர் நிறைவு. இவற்றையெல்லாம் கிரம மா கப் பார்வையிட்டுக்கொண் டிருந்த இனுயத்துல்லாவின் கண்கள் கோபத்தால் சிவந்தன. கூட்டம் பெ ங்கிவழியும நிலையில் இனுயத்து லலாவால் எழுந்து செல்ல முடியவில்லை. பல்லைக் கடித்துக்கொணடிருந்தான் இனயத் து லொ நேரம் நகரத்தொடங்கியது. ஜப்பார் மெதுவாகத் தன் கையிலிருந்த ம டடுவண்டியை ஒரு மேசைக்குசுகீழ் ஒருவரது கால சளும் படாதவாறு வைத்துவிட்டு நிமிர்ந்து தன் வேலை களைக் கவனிக்கத்தொடங்கினன்.
-34

சனக்கூட்டம் சிறிது சிறிதாகக் குறையத்தொடங்கியது இந்த நேரத்தில்தான் ஊழியர்கள் ஒருவர் மாறி ஒ கவர க +ாட் பிடச்செல்வது வழக்கம். இன்று ஜப்பா ருக்குப் பசிப் பிரச்சினையே இல்லை. அவனுக்குப் பசிக்கவே இல்லை
அவன் மெதுவாக மாட்டுவண்டியை மேசைக்கடியிலிருந்து வெளியே எடுத்தான். அகில் தொடு ககப்பட்டிருந்த சிறிய கயிற் றைக் கையிற் பிடித்துக்கொண்டு அதனை மெதுவாக இழுக்கத் தொடங்கினன். அப்போது கடகடவென்ற சப்தம் அதிலிருந்து வெளிவரத்தொடங்கியது. அந்தச் சத்தம் இயைத் துல்லாவின் காதுகளில் நாரசாரமாக ஒலிக் சுத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 'ப. ளா.ர் ஜப்பாரி ைமுதுகில் விழுந்த அடியின் வேகம் அவனைக் கீழே குடபுறவிழச் செய்துவிடட்து. விழுந்த அவனது உடய பில் தாறுமா ருக உதைகள் விழுந்தன!
இனுயத்துல்லா மிகுந்த கோபத்தோடு நின்றுகொண்டிருந் தான்.
"கோ"வென்று கதறியழுத ஜப்பாரின் ஷேட்டைப் பிடித்து உலுக்கி அவனை அப்பிடி யே து க்கி இழுத்துப் பக்கத்திலிருந்த சுவரில் சாத்தி ஒரு கையால் பிடித்துக்கொண்டு மிறு கையால் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான். ஜப்பாரின் கண்களும் இருண்டுகொண்டு வந்தன. r
சப்தம் கேட்டு ஊழியர்களில் இரண்டு மூன்று பேரும் கடை முனஞல் நின்ற சிலரும் உள்ளே வந்தனர். ஆனல் ஒருவருமே வாய் திறககவில்லை. ஜ 'பாரின் மேலிருந்த தன கைப்பிடியைத் தளர்த்திய வேகத்தில் கீழே கிடந்த அந்த மாட்டு வணடியை எடுத்தான் இனயத்துல்லா. X
அடியின் வேகம் தாங்காது கீழே விழப்போன ஜப்பாரைப் பயத்துடனே வேறு ஒரு ஊழியன் பிடித்து மெதுவாக மேசை யில் துாக்கிவைத்துக் கிடத்தினன்.
இனயத் துல்லா கீழே கிடந்த மாட்டுவண்டியை எடுத்து மிக வேகமாக வெளியே தூக்கி எறிந்தான். அந்த அடியின் வேகத் தால் அது தூள் தூளாகச் சிதறியது. அப்பொழுது எழுந்த சப்தம் ஜப்பாரின் இதயத்தையே ஒரு குலுக்குக் குலுக்கியது.
அந்தக் குலுக்குதலில் அவனுக்கென்றிருந்த அந்த ஒரு அற்ப ஆசையும் குலுங்கியது.
“சுமதி” - 11-7-1976
-35

Page 20
நானும் டிரிப் போகணும்!
இண்டைக்கு எங்கட ஸ்கூல்ல “ட்ரிப்". போனங்க. ஒ எவ்வளவு பெரிய “ட்ரிப்' நா.லு நாள் பயணம். இலங்கையில முக்காவாசிப் பகுதிய சுத்திடுவாங்களாம். ..ம் . குடுத்து வச்ச புள்ளைகள். போருங்க. அடேயப்பா. காலையிலேயே பஸ் புறப் பட்டது! அப்பப்பா. பஸ் புறப்படுற நேரத்திலே பார்க்சணுமே புள்ளைகள்ட சந்தோஷத்த. மொதல்ல. ஸ்கூல் மெளலவி சேர் "பாத் கிஹா" ஒதினரு . அதுக்குப் பொறவுதான் எல்லாரும் பஸ்ஸில ஏறினங்க . பஸ்செல முன்னுக்கே ஸ்கூல் கொடியயும் தூக்கிவிட்டிருக்காங்க. . பஸ்ஸில ஏறி உட்கார்ந்த உடனேயே எல்லோருமா சேர்ந்து ஸ்கூல் கீதத்தை அழகா பாடினங்க. .ம் .சும்மா நிண்டுகொண்டிருந்த நானும் கூட சேர்ந்து பாடத் தொடங்கிட்டேன். .நெசமாவே நான் பாடினது எனக்குக் கூடத் தெரியா மேயேதான் !
பஸ்சுக்குள்ள இருந்த புள்ளைகள் நான் பாடறதக் கண்டு அவங்க பாடிக்கிட்டே - என்னைப் பார்த்து கையைக் கையை நீட்டி, நீட்டிச் சிரிச்சாங்க. நான் பேசாம எங்கட ஊட்டுக் குள்ள ஓடிவந்து, கதவிடுக்கால பஸ்ஸைப் பார்த்தேன். இந்த பஸ் போயும் போயும் எங்கட ஊட்டுக்கு முன்னுக்கா நிற் கணும்.? உம்மா அடிக்கடி சொல்லுவாங்க. "மகள். எல் ல ம ஆண்டவன்ட சோ தின எண்டு. இதுவும் கூட ஆண்ட வன்ட சோதினதானே? இந்த ஆண்டவன், பணக் கார பெரிய மனுஷர்களுக்கு சோதின "வய்க்கமாட்டானே? எனக்கெண்டா புரியவேமாட்டேன் குது'
பஸ்ஸையே பார்த்துக்கிட்டிருந்தபோது உள்ளேயிருந்து உம்மா
பெரிய குரல்ல கூப்பிட்டாங்க. 'டீ. பெள ஸ்ரீ.' என்று! இந்த உம்மாவே இடபடித்தான். எப்பவுமே "டீ" என்றுதான் தொடங்குவாங்க ம். எங்கட ஊட்டுக்கு எதிர்த்தாப்பல
இரிக்கிற பரீத் ஹாஜியார் ஊட்டுலயும ஒரு பெளஸி இரிக்கிரு. அவங்கட உம்மா அவவ எவ்வளவு அருமையா கூப்பிடுவாங்க தெரியுமா..? 'பெளஸி டியர். பெளஸி கண்மணி. பெளஸித் தங்கம்." இப்படித்தான் கூப்பிடுவாங்க. ம். எமக்னேப்
--36 سے

பார்த்து அப்பிடி யார்தான் கூப்பிடப்போருங்க. நான் யோசிச் சுக்கிட்டேயே இருந்தேன். "ட்ரிப்" பஸ்சும் போயிடுச்சி!
உம்மாட குரல் திரும்பவும் கேட்டது. "டீ. பெளளிச் சனியனே. இங்க வந்து டொலையேன்." இதைக் கேடடு எனக்குக் கோபம் வரல்ல. ஏன் தெரியுமா. இதைப்போல எல் லாம் எனக்கு கேட்டுக் கேட்டு பழகிப் போயிச்சி. பேசாமே குசினிக்குப் போனேன்.
உம்மா ஆப்பையெல்லாம் சுட்டு அடுக்கி வ்ச்சிரிந்தாங்க. இதை எடுத்துக்கிட்டு இந்த ஊரிலே அரைவாசிப் பகுதிக்கு விற்கப்போசனும், **இந்தாடி பெளஸி. மணி எத் தனயாச்சு o இந் தா. இந்த பிளேன் உயைக் குடி. இந்தா கரு பட்டி ." என்று அவசர அவசரமாக புடி ஒடைந்த கோப் ையில தேத் தண்ணியும் கருப்பட்டியும் தந்த நீக . மடக் மடக்கெண்டு குடிச் சிட்டு, ஆப்பப் பொட்டியத் தூக்கினேன். ம். சரியான பார மாக. என்ன செய்யிறது.
ஆப்பப் பொட்டியத் தூக்கிக்கிட்டுப் போறபோதும் எனக்கு ட்ரிப் போனவங்களப் பத்தத்தான் ஒரே நினைவாக இரிந்திச்சு. ம். போன வருஷமும் இப்படித்தான் "ட்ரிப் போனுங்க. அப்ப நான் ஆரும் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். 'ட்ரிப்” போறதுக்கு ஆசை ஆகையால் வாப்பாகிட்ட யும், உம்மா கிட்ட யும் கேட்டுக் கேட்டு சல்லியும் சேத்து வச்சிரிந்தேன். என்ன செய்யிறது? உம்மா அடிக்கடி சொல்ருப்போல. ஆண்டவன்ட சோதனை போல. வாப்பா திடீரென்று நெஞ்சுவலி எண்டு படுத்
தவரு. அண்டைக்கே மெள ததாகியும் விட்டாரு. வாப்பா மெளத்தாகி மூணுங் கத்தம் நடந்த அண்டைக்குத்தான் "ட்ரிப்'  ோணுங்க. எனச்கு எப்படி "ட்ரிப்" போக மனசுவரும்.? என்
கிட்ட இருந்த காசையும உம்மா கிட்ட கொடுத்திட்டேன்..!
இந்த வரிஷம் "ட்ரிப் போக உம்மா கிட்ட காசு கேட்டுப் பார்த்தேன். உம்மாதான் என்ன செய்வாங்க, நானும், எண்ட ரெண்டு தம்பிகளும், ஒரு தங்கச்சும். எல்லாருக்குமாக உம்மா சுடுற ஆப் பயில வாற நயம்தான்! வாப்பா மெளத்தாகி உம்மா "இத்தாவில** இரிக்கிற வரைக்கும் சாச்சா, பெரியப்பா எல் லாம் கொஞ்சம் கொஞ்சம் வந்துபோய் ஒதவி செய்தாங்க. அதுக்குப் பொறவு. எலலாம் உம்மாட தலயிலதான். உம்மா சொகமில்லாம ஒருநாள் படுத்து ஆப்ப சுடாட்டா. எங்களுக் குச் சாப்பிடவும் ஒண்ணுமேயில்ல; பசியிலதான் இரிக்கனும,
-37

Page 21
ஆப்பயத் தூக்கிட்டு நடந்து நடந்து காலெல்லாம் வலிக் கிறது. ம். இனி ஓடி ஒடி வரணும் ஸ்கூல்ல . இண்டைககு அவ்வளவு படிப்பு இரிக்காதுதான! உம்மா போகச்சொல்ருங் கமளா தெரியாது!
உம்மா போகச்சொன்ன கட்டாயமாகப் போகத் தான் வேணும் பாவம் உம்மா. உம்மாட மனசை நோசச் செய்யக் கூடாது! எங்களுக்க கத்தானே உம்மா கஷ்டப்படருங்க! உம் மாவ சஷ்டப்படுத்தக்கூடாது என்றதுக்காகத் தான் இந்தத் தடவ "ட்ரிப்” போக நான் காசு கேட்டு சஷ்டப்படுத்தல்ல! புன்னுக்கு ஊட்ல உள்ள பரீத் ஹ ஜியார்ட மனைவி எப் டியெல்வாம் உடுப்பாங்க தெரியுமா? அவங்ககிட்ட எத்தன சாரி தான் g) fisië குமோ? எங்கட உம்மாகிட்ட ஒண்டே ஒன்டுதான் இரிக்குது!
ஒ. “ட்ரிப் போனவங்க இப்போ. எங்க போயிரிப்பாங் களே T. "ட்ரிப் போயிட்டு வந்தா.. ஸ்கூல்ல அதைப் பத்தி எழுகச் சொல்லுவாங்க. எல்லாரும் எழுதிக் காட்டுவாங்க.
அப் வெல்லாம் எனக்கு மிச்சம் வெக்கமாகத் தா னிருக்கும்! "ட்ரிப் போன வங்க மட்டும் சேர்ந்து சேர்ந்து அங்க பார்த்தது களப் பத்திக் கதைப்பாங்க. எங்கள சேர்த்துக் கொள்ளவும் மாட்டாங்க. சே. சே. இந்த “ட்ரிப்” எல்லாம் என்னத் துக்குத்தான் போருங்களோ தெரியாது. இல்லாட்டா. காசு இல்லாதவங்களயும் ஸ்கூலால காசு போட்ட்ாவது கூட்டிட்டுப் போவனும்,
"யா. அல்லாஹ். நான் எங்கே இரிக்கிறேன். இதென்ன கைகாலெல்லாம் பெரிசா கட்டுப்போட்டிருக்கிருங்க.* ஏம்ம பெளஸி. ரோட்டில பாத்துவரக் கூடாது. சைக்கிள் வந்தது கூடத் தெரியல்ல" உம்மாட குரல்தான்.
'உம்மா நானும் ட்ரிப்' போசணும். நான் ஏன் இப் படிச் சொன்னேனே? எனக்கே புரியவில்ல. “உம்மா. a ubular...” கைகளை நீட்டுறேன் நீட்டமுடியல்ல.
உம்மாட கண்ணில இரிந்து கண்ணீர் கொட்டுது என்னக்
கட்டிப் பிடிச்சுக்கிட்டு உம்மா ஏன் இப்படி அழருங்க, உம்மாட கண்ணிர் என்ட மொகத்த நனைக்குது...!
(யாவும் கற்பனை)
“கலைமலர்” - ஆகஸ்ட் 1978,
س-38-س

நேர்மை உள்ளம் !
காலைப்பொழுது புத்தெழிலோடு மலர்ந்தது. சகீலா புத் துணர்வோடு எழுந்தவள் இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந் தாள்.
சீதளப் பணியில் சில்லிட்டுச் சிவிர்த்து நிற்கும் புதுமலராக அவளின் அகமும், முகமும் திகழ்கின்றன. மனத்தில் எழுந்த அழுத்தமான தீர்மானம் அவளது இந்த சுறுசுறுப்பிற்கு வித் தாய் அமைந்ததோ..?
'ஒ. மனமே, உனக்குத்தான் எத்தனை அபார சக்தி ? இரண்டு மூன்று நாட்களாக நீ சோர்வுற்றபோது உடல் முழு வதுமே சோர்வு bறதே. இப்போது. உனது தீவிர உற்ச ' கம் உடலெங்கும் எவ்விதம் வியாபித்தது?" என்று கேட்கவேண்டும் போல் சகீலாவுக்குள் ஓர் உந்தல் 1
வேலைக்குச் செல்லத் தயாரான சகீலா, வழமைபோல் தாயி
டம் 'உம்மா. போயிட்டுவர்ரேன்." என்று விடைபெற்ருள். *"ம.க..." என்று தாயார் எதையோ சொல்ல ஆயத்த மாஞர். 'ம.க. சகீலா உங்கட ஸ்கூல் மாஸ்டர் அ ைஸா
ருக்கு நீங்க என்ன பதில் இண்டைக்கு சொல்லப்போ நீங்க..?" எனற கேள்வி பெரியதொரு எதிர்ப்பார்ப்போடு தாயிடமிருந்து பிறந்தது.
ஒருசில கணங்கள் சகீலா மெளனமானுள். தன் முடிவை இப்போதைக்கு தன் தாயிடம் சொல்லுவதா வேண்டாமா என்ற சில நிமிடத் தவிப்பு ஒரு முடிவிற்கு வந்தவளாய், 'உம்மா. இன்னமும் நான் ஒரு முடிவிற்கு வரல்ல. ஆறுதலா சொல்லுவம்’ என்று ஒரு பொய்யைச் சொன்னுள். தாயாரின் மனதை காலையிலேயே நோகச் செய் பக்கூடாது என்ற உணர்வு அவளிடம் பிறந்தது! தாமதிக்காது அவள் வெளியேறிவிட்டாள்!
'யா அல்லாஹ். இந்தப் புள்ள நல்லதொரு பதிலச் சொல்லி அந்த மபஸ்டர கலியாணம் செய்து கிட்டா எனக்கு
-س 389--

Page 22
நிம்மதியா இரிக்கும். வலிய வர்ர சீதேவிய ஏன் தர்ஞே இவ புரிஞ்சுகொள்ளாம இரிக்கா...' என்று சிந்திக்கத்தொடங்கிஞர் அந்தத் தாய்!
சகீலாவும் சிந்தனையுடனேயே பாடசாலையை நோக்கி நடந் தாள் 1 அன்ஸார் மாஸ்டர் அவளுடன் வேலை பார்ப்பவர், பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர், ஒரு பட்டதாரி ஆசிரியர் பல நல்ல பண்புகளையுடையவர்.
கடந்த சில மாதங்களாகவே அவர் தன் மனம் சகீலாவிடம் ஈடுபாடு கெபண்டுள்ளதை மறைமுகமாக விளக்கிக்கொண்டு வந் தார். கடந்தவாரம் ஆசிரியர்களின் ஸ்டாப் ரூமில் சகீலா ஒப் வாக இருந்தபோது வெளிப்படையாகத் தனது உள்ளத்தை வெளிப்படுத்திவிட்டார்.
அதை நினைத்தால் சகீலாவின் மனம் இப்போதும் இதமான ஒரு சுகானுபவத்தைச் சுகித்த உணர்வையே பெறுகிறது!
ஒ. அவர்தான் எந்தனை சாமர்த்தியமாக தன் மனக் கருத்தை வெளிப்படுத்திவிட்டார்?
*டி.ச்.ச.ர்.’’ என்று அன்ஸாரின் குரல் கேட்ட சகீலா
தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தனது கவனத்தை அவர் மீது திருப்பினுள்.
"ச. கீ , லா." என என்றுமில்லாதவாறு அவள் பெயரை அவர் உச்சரித்தபோது சில கணங்கள் சகீலா அதிர்ந்துபோனுள். அந்தக் குரலில் உலகத்து அன்பையெல்லாம் ஒன்று திரடடிய தன்மை வெளிப்பட்டதோ ?
"ச. கீ , லா. உங்கள. உங். கள. நான் என் மனைவி யாக்கிக்கெ 1ள்ள விரும்புரன். உங்கட பதில. நீங்க. யோசிச் சுச் சொல்லுங்க...' என்று பதட்டத்துடன் கூறி முடித்தார்
அன்ஸார். கால்சட்டைப் பைக்குள் இருந்த கைக்குட்டையை எடுத் துத் தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டார். உடனடி யாக "ஸ்டாப் ரூமை" விட்டும் வெளியேறினர்!
வெலவெலத்துப் போய்விட்ட நிலையிலிருந்த சகீலாவுக்கு ஒன்றுமே புரியவிலலை.
சகீலாவுக்கு நினைவு தெரிந்து அவள் நாலாம் வகுப்பு படித் துக்கொண்டிருந்த போதே அவள் தந்தை காதர் இறைவனடி சேர்ந்துவிடடார். அவள்தான் மூத்தவள் அவளை யடுத்து இரண்டு தங்கை +ளும், ஒரு தம்பியும் சொத்து சுகம், பொருள் பண்டம் என்று எதையுமே சேர்த்து வைக்காத நிலைமையில்,
-40

காதர் தன் கதையை மடித்துக்கொண்டபோது சகீலாவின் தாய்க்கு பாரிய பல பிரச்சினைகன் தோன்றின.
பல வீடுகளில் பல்வேறு வேலைகளைக் செய்தாள். உறவினர் கள் தெரிந்தவர்கள் என்று எவரிடமும் கையேந்தி நிற்காமல் இறைவன்முன் தன் சுமைகளை வைத்தாள்.
இயற்கையிலேயே நல்ல படிப்பாளியான சகீலா ஆசிரியை யானுள். பயிற்றப்பட்ட ஒரு ஆசிரியை. அவள் தம்பி ஒரு கடை யில் வேலை செய்கிருன் தங்கைகள் படிக்கின் ருர்கள்.
சிந்தனையே வசமாகப் பாடசாலையை அடைந்த அவளே முத லில் வரவேற்றது அன்ஸார் மாஸ்டரின் வாஞ்சையான "குட் மோர்னிங்" என்ற வாழ்த்துக்கள்தான்! s அவளும் பதில் சொன்னுள்! அந்தச் சில கணங்களில் அன் ஸாரின் முகத்தில் தோன்றிய எதிர்ப்பார்ப்புக்களைப் புரிந்து கொண்ட சகீலா திடீரென அவற்றை விழுங்கிக்கொண்டாள்! மனத்திலே எடுத்த தீர்மானத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று அவள் தவிக்க, நேரம் நகர்ந்துகொண்டிருந்தது.
இன்று அவள் எப்படியாவது தன் தீர்மானத்தைச் சொல் லியே ஆகவேண்டும்!
அன்ஸாரின் விருப்பத்தை சகீலா தன் தாயிடமும், தம்பி யிடமும் கூறிவிட்டாள். அவர்களும் அதற்கு விருப்பம் தெரிவித் திருந்தனர். ஆணுல், சகீலாவின் மனம்தான் இடம் கொடுப்ப தாயில்லை.
நாலாம் பாடவேளை சகீலாவுக்கு "ப்ரீ , மெதுவாக "ஸ்டாப் ரூமை நோக்கி நடந்தாள். அங்கிருந்த அன்றைய தினசரியைக் கையிலெடுத்துப் புரட்டினுள்..!
யாரோ கனைக்கும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள்! அன்ஸார் அங்கு நின்றிருந்தார்.
சில கணங்கன் அவள் செவிப்பறையில் பேரிரைச்சல் ஒலித் தது. வியர்வையால் கைகள் பிசுபிசுத்தன.
"ச.கீ.லா." என்ற அன்ஸாரின் குரல் அவளைத் தலை நிமிரச் செய்தது 'இன்றைக்கு ஒரு முடிவு சொல்லுவீங்களா?' என்ருர், உலகத்துக் கணிவை உலகத்து எதிர்பாாப்புகளை எல் லாம் ஒருசில சொற்களில் குழைத்துக் கேட்டுவிட முடியுமா?
-4-

Page 23
'நான். பிறகு சொல்கிறேன். முடிந்தால் வீட்டுக்கு வாங்க .' என்று மிகவும் பிரயாசைப்பட்டுச் சொன்னுள் சகீலா
சே. எடுத்த முடிவை சொல்லுவதற்கு என்ன தயக்கம்! அவளது உள்மனம் அவளையுமறியாது அன்ஸாரில் ஈடுபாடு. கொண்டுள்ளதா? ܫ
"எனக்குப் பாடம் இரிக்கி. பின்னேரம் உங்க வீட்டுக்கு வர்ரன்'. என்று கூறிவிட்டு அன்ஸார் வெளியேறியபோதுதான் சகீலாவின் படபடப்பு சிறிது குறைந்தது. அதன் பின் அவளால் பத்திரிகையிலே கவனம் செலுத்தமுடியவில்ல்ை.
மாலையில் அன்ஸார் வீட்டுக்கு வந்தால் தனது முடிவை எவ்விதம் வெளியிடுவது என்று அவள் நினைத்துக் கொண்டாள.
மாலை நேரம் நாலு மணியிருக்கும், மிகவும் உற்சாகத்துடன் வந்தார் அன்ஸார்.
பாடசாலையிலிருந்து வந்தவுடனேயே தாயிடம் ggøvrr 'இணடைச்கு சிலநேரம் அன்ஸார் மாஸ்டர் வந்தாலும் வர லாம" என்று கூறி வைத்திருந்தாள். மகளின் கண்களில் எத னையோ தேடினர் தாயார். சகீலா மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.
"மக. தேத் தண்ணிக்கு என்னமாவது தீன் செய்யனுமா?" என்று மறைமுகமாகவும் கேட்டார் தாயார்.
'இல்லம்மா அப்படி ஒண்டும் தேவையில்ல்..' என்று கூறி விட்டாள் சகீலா.
தாயுள்ளத்தால் ஒன்றையுமே புரிந்துகொள்ள முடியவில்லை! அன்ஸார் வந்தபோது முகம்மலர வரவேற்ருள் சகீலா !
அது பொருத்தமான ஜோடிதான் என்று தாயின் மனம் Opią 6, 35-19-gugy. w வெறுங்கையோடு வராது பெரியதொரு திண்பண்டப் பார்ச அலுடனேயே அன்ஸ் சர் வந்திருந்தார்.
சம்பிரதாயமான பேச்சுக்களிலிருந்து இருவரும் விடயத்திற்கு " வந்தனர். சகீலாவின் உடம்பில் மெலலிய நடுக்கம் விரவ. வியர்வை கசியத்தொடங்கியது.
"ச.கீ.லா." என்று மெதுவாக மெளனத்தைக் கலைத்தார் அன்ஸார்.
ー42ー

'நீங்க. சொன்ன விஷயமா நான் யோசிச்சேன் ! உங்கட விருப்பத்த நான் ஏற்றுக்கொள்ள முடியாம இரிக்கி." என்று கூறிய சகீலா வின் தொண்டைக்குழிககள் அழுகை அழுத்தியது. அவள் எவ்வளவுதான் கட்டுப்படுத்தியும் கணணிரை மறைக்க முடியவில்லை.
எழுந்து ஜன்னல் பக்கமாக நின்று வெளியே பார்ப்பது போல் கண்களைத் துடைத்து, தன்னைச் சுதாகரித்துக்கொண்டாள் அவள்.
அதிர்ந்துபோய் தவித்தார் அன்ஸார். “ச. கீ .லா. என்னில நீங்க என்ன குறையைக் காண்றிங்க.." என்று கேட்டபோது அன்ஸாரின் குரல் உறைந்து, துயரம் நெஞ்சுக்குள் இறுகியது?
சில நிமிடங்கள் சகீலாவினல் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. "ஒ. அன்ஸார். நீங்கள் கணவராக வர நான் கொடுத்து வைத்திருக்கவேண்டுமே. அமைதியும், எளிமையும் அன்பும் கொண்ட உங்களிடம் என்ன குறையைத் தான் காணமுடியும்?" என்று சத் தமிட்டுச் சொல்ல வேண்டும் போல் ஆவேஷம சகீலாவுக் குள் பிறந்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
*உங்சளில். ஒரு குறையுமில்ல. ஆன உங்கட மனைவி யாகிற பாகதியம் எனக்கு இல்லை என டுதான் நான் நினைக் கிறன .' என ருள் சகீலா மிக நிதானமாக,
*ச. கீ , லா. நீங்க என்ன. என்ன சொல்றீங்க..” என்று அதிர்ந்தார் அன்ஸார்.
மெதுவாக நாற்காலி ஒன்றில் அமாந்தாள் சகீலா.
"நான் உண்மையைத் தான் சொல்றேன். இப்போ நீங்க. என்னையும், என் குணத்தையும், அழகையும் கண்டு கலியாணம் செய்துகொள்ள விரும்புநீங்க. உணமையிலேயே இவைதான் துணை விக்கு இரிக்கவேண்டிய பண்புகள்! ஆன . ஆன. நான் ஒரு ஏழை . எந்தவித வசதிகளும் இல்லாதவள்." என்று தொடர்ந்தாள்.
'சகீலா - நான் பணத்தை மதிக்கிறவணு இருந்தா உங்கள அடைய விரும்பியிருக்கவே மாட்டேனே' எனறு இடைமறித் தார் அன்ஸார்.
'உண்மைதான். ஆஞ. உங்கட இன்றைய மனநிலையில இப்படிச் சொல்றீங்க. உங்களுக்கு இரிகAற பொறுப்புக்கள யோசிச்சுப் பாருங்க. உங்களயே நடிபி இர்ககிற உங்கட குடும்பம்.
س-43-س

Page 24
உங்களுக்குப் பின்ஞல நாலு தங்கச்சிமார். ஒருத்தரையும் இன் னும் முடிச்சிக் கொடுத்ததில்ல. இத்தப் பொறுப்ப நீங்க எப்படி முடிக்கப்போநீங்க.." என்று கேட்டாள் சகீலா.
'ச.கீ.லா. அவங்க இப்போ சின்னப் புள்ளைகள்தானே.” என்ருர் அன்ஸார்.
'நெசந்தான். ஆனல். நாளைக்கு உங்கட புள்ளைசளும் பெருகி. எல்லாச் சுமைகளையும் எடபடித் தாங்குவீங்க. இப்போ ஒண்டையுமே எதிர்பார்க்காம என்னை நீங்க முடிக்கிறீங்க. ஆன நாளைக்கே பிரச்சினைகள் பெருகிட்டா. என் குணமும் அழ கும் அங்கே பெரிசா தெரியாது. இந்த உடம்போட வார உறவு காலப்போக்கில கசப்ப உண்டாக்கும்! இப்போது இறிக கிற வேகம் தணிஞ்சு போச்செண்டா உங்கட மனசு ஆயா சப்படும் போது இழபபுக்கள்தான் பூ தாகாரமா கரிக்கு ’ என்று மிகமிக நிதானமாகப் பேசிய சகீலா தெளிவான முகத்துடன் அன்ஸா ரை நிமிர்ந்து பார்த்தாள்.
"யோசிச்சுப்பாருங்க. எனக்கும் எந்த வசதியும் இல்லை. நிச்சயமாக நீங்க நல்ல வசதியுள்ள குடும்பத்தில ஒரு பெண்ணை முடிக்கலாம்! அந்த வசதிகள் உங்கட குடும்பத்துக்கும் தேவை! ஒணடுக்கும் இல்லாட்டியும் உங்கட தங்கச்சிகள்ட வாழ்க்கைக்கு அது தேவை என் அழகும், குணமும், படிப்பும் நிச்சயமாக உங்க குடும்பத்தை வாழவைக்காது." என்று சகீலா உறுதியாகக் கூறி குறள்.
அன்ஸார் பதில் ஒன்றும் சொல்லவில்லை. சிறிதுநேரத்தில் மெளனமாக எழுந்து சென்ருர்,
சகீலாவின் மனம் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல்
ஓலமிட்டது! ஆனலும் மனதில் ஒரு திருப்த தாயின் சாரமாரி யான கேள்விகளுக்கு அவள் அமைதியாகப் பதில் கூறினுள்.
'உம்மா. எனக்கெண்டு ஒருத்தர் இல்லாமற் போகமாட்டா ரும் மா. பெரிய குடுப்பச் சுமைகள் இல்லாத நேர்மையான ஒரு ஏழை எங்காவது எனக்கு இரிப்பார்.’’ என்ருள் மகள். அமைதி யுடன் அவளை நோக்கினர் தாயார்.
'விந்தாமணி” - 6-7-1986.
一44一

ஊமைகள் பேசுகின்றனர்!
அவரது வாழ்க்கையிலே முதன் முறையாக அவரைத் தட் டிக்கேட்கும வார்த்தைகளின் ஆக்கிரமிப்பு தாங்காது ஹாஜியார் திடுக்கிடடே போனர்!
ஆத்திரம், அவமானம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி அவருள்ளே பெருங் கொந்தளிபபை உண்டுபண்ணின.
உடம்பெல்லாம் இரத்தம் கொதித்து அப்படியே இரு கண் களிலும் வந்து நின்றதைப்போல கண்கள் இரண்டும் இரத்தச் சிவப்பாயின; ஹ ஜிபாரின் உடல் முழுவதும நடு நடுங்கியது.
அவரது ஆதரவாளர்கள் அவரைப் பார்த்தனர். அந்தப் பார்வைகள் எரிகின்ற நெருப்பில் எணணெய்யைப் பாய்ச்சின. ஹாஜியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உட்கார்ந் திருந்த அத்தனை பேரையுந் தாண்டி வெளியேறத் தொடங்கினர்.
"நில்லுங்கள்" பலகுரல்கள் ஒருங்கே ஒலித்தன. "எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டுப் போங்கள், அதே குரல்களின் ஏகோபித்த ஆரவாரம்,
திரும்பிப் பார்த்த ஹாஜியார் உரத்துக் கூவினர்.
"எந்தப் பயலுடைய கேள்விக்கும் பதில் சொல்ல நான் தயாராய் இல்லை".
"பதில் சொல்லத் தயாராக இல்லாத நீங்கள் ஊரின் பொது விஷயங்களிற் தலையிடத் தேவையிலலை'.
ஹாஜியாரின் அதிகாரத்தொனியிலும் பார்க்க சற்று உரத்தே அதுவும ஒலித்தது. .
"என்னைக் கட்டுப்படுத்த எந்தப் பயலுக்குமே முடியாது. நான் நினைத்ததைச் செய்தே தீருவேன்'. தொடர்ந்து உரக்கக் கத்தினர் ஹாஜியார்.
-45

Page 25
அமர்ந்திருந்த இளைஞர் ஈளிற் பெரும் பகுதியினர் எழுந்து
விட்டனர். "சரி, செய்த தீருங்கள் பார்க்கலாம".
ஹாஜியார் விர்ரென்று சென்று வெளியே நிறுத்கியிருந்த தனது புதிய பென்ஸ் காரில் ஏறித் தனது கோபத்தை எல்லாம் கார்க் கதவில் காட்டிச் சடாரெனக் காரைத் திறந்து மூடினர்.
காரின் கதவு மூடப்பட்ட அதே நிமிஷத்தில் அந்தப் பிர
மாண்டமான காரைச் சுற்றிப் பள்ளிவாசலுககுள் இருந்த கூட்
டம் வந்து சூழ்ந்துகொண்டது. அதைக் கண்டதும் ஹாஜியார் அதிர்ந்தே போய்விட்டார்.
வெளியே கூடி நின்றவர்களிடம் ஒருவித கொந்தளிப்பும் உத்வேகமும் பெருகத் தொடங்கியது. வெளியே நின்றவர்களின் சார்பாக முபாரக் துணிச்சலுடன் துடிப்பாகப் பேசத் தொடங் கினன்.
'ஹாஜியார், ஆற்றுக்கு அக்கரையிலுள்ள சின்னலெவ்வை யின் வீடடைப் பள்ளிவாசலிலிருந்து விலக்கி வைக்கவேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் செய்வது எந்த வகையிலும் சரியான தல்ல. அவர்களுடைய நிலமையில்."
ஹாஜியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரெனக் கூட்டததைத் தாணடி அசுரவேகத்தில் காரிற் போய்விட்டார்.
இ%ளஞர் கூட்டம் திகைத்து நின்றது. முபாரக் கைத் தொடர்நது மீண்டும பள்ளிவாசலுள் புகுநதனர் அவர்கள். சிறிது நேரம் அங்கு மெளனம் ஆட்சி செலுத்தியது.
முபாரக்கின் பக்கத்தில் இருந்த சுபைர் மெதுவாகச் செரு மிக்கொண்டு பேசத்தொடங்கினர்.
"நண்பர்களே, சின்னலெவ்வையின் நிலைமையை இவ்வளவு காலமும் பள்ளி நிர்வாகத்தினர் அறியாயலா இருந்தனா ? இப் பொழுது பெரிய சட்ட திட்டங்கக்ளப் பேச மு ைவருபவர்களில் ஒருவராவது அந்தக் குடும்பத்துக்கு ஒருநேரக் கஞ்சிக்குத்தானும் வழி செய்திருப்பார்களா ?"
சுபைரின் இந்தக் கேள்வி எல்லோரது உள்ளங்களையும் ஊசி முனையாய்த் தைத்தது.
"நான் உதவி செய்தேன ?" என்று ஒவ்வொருவரும் தமக் குள்ளேயே கேட்டுக்கொண்டனர்.
س-46 سے

'ஊரின் ட்ரஸ்ட்டிகளாம். பெரிய ட்ரஸ்ட்டிகள். ஊரா ரின் குற்றங்களை மாத்திரம் கவனித்துக் கண்டிக்கத் தான் தெரியும். பட்டினியாற் செத்தாலோ, நோயாற் செத்தாலோ கூட அவர் களது கணணுக்குத் தெரிவதில்லை." சுபைர் பேசிக்கொண்டே இருந்தான்.
ஆற்றின் அக்கரையிலே, அச்சிறிய மண்குடிசையிலே கிழிந்து போன பாய்த்துண்டில் எண்சாண் உடம்பையும் ஒரு சாணய்ச்7 சுருக்கி, முடங்கிப் படுத்துக்கொண்டிருக்கும் சின்ன லெவ்வையை யும, அவரது மனைவி சு ஹொவையும, அவர்களது குடுமபத்தை யும் பள்ளியில் இருந்து விலக்கிவைக்கவேண்டும் எனபதுதான் ஹாஜியாரின் ஏகோபித்த முடிவு ரஹீ ஹ ஜிபார்தான் பள்ளி வ சல் நிர்வாகக் குழுவின் தலைவர். ஹ ஜி பாரின் அந்த ஏ கோ பித்த முடிவுக்கு நிாவாகக் குழுவினரும பூரண ஆதரவு அளித் தனர்.
ரஹீம் ஹாஜி பார் தலைமையிற் கடிய குழு சின்னலெவ்வை யின் குடும்பத்தைப் பள்ளிவாசலிலிருந்து ஒதுக்கிவைப்பதென்று முடிவு செய்தது. இந்த முடிவைக் கேட்டு இளைஞர்கள் குமுறி எழுந்தனர்.
ஒரு முடிவை மக்கள் இப்படி எதிர்த்தது இதுவே முதல் தடவையாகும். பொதுமக்களின் ஏகோபித்த இந்த எதிர்ப்புத் தமது பரமபரைக்கே மாசேற்படுத்திவிட்டதென ஹ ஜியார்? நினைத்தபோதுதான் அவரது இரத்தம் கொதித்தது.
சின்னலெவ்வையின் ம்கள் தமீனு பக்கத்துத் தோட்டத்தில் இருந்த இக்பாலுடன் ஒடிப்போய்விட்டாள். இதுதான் அவர் களை - அதாவது சின்ன லெவ்வையின் குடும்பத்தினரை ஊரி லிருந்து, ஊர்ப்பள்ளியிலிருந்து விலக்கிவைக்கவேண்டும் என்ப தற்கு அவர்கள் காட்டும் காரணம்.
'ஒடிப்போனது" உண்மை தான். அதற்காக அந்த வீட்டை விலக்கிவைக்கவேண்டும் என்பதும் நியாயம்தான்.
ஆணுல் - சின்ன லெவ்வையின் மகள் ஏன் ஒடிப்போஞள் ? என்பதுதான்) 13g sjFða.
சின்னலெவ்வையின் காலொன்றையும் கையொன்றையும், ஒருபக்க வாயையும் பாரிசவாதம் பதம பார்த்தது. ஏழு வருடங் சளுக்கு மேல க அவர் கிழிந்த பாய்த்துண்டே சதமென எனணி வழவேண்டிய நிர்ப்பந்தம ஏற்படலாயிற்று.
-47- -

Page 26
தமீன மூத்தவள். அவளுக்குப்பிறகு பிறந்த ஆணும் பெண்ணு மாக ஆறு பிள்ளைகள். மொத்தம் ஒன்பது உயிர்கள்! இந்த ஒன்பது உயிர்+ளும் வாழக் a வு. ப்பட்டு உழைப்பவள் தமீனு வின் த ய் சுலைஹாதான. அவர்களின் வீட்டில அடுப்பெரிந்த நாட்களை விட அடுப்பு எரியாத நாட்களே அதிகம்.
செல்வத்தையும் சீரான வாழ்க்கையையும் கொடுக்க மறந்த ஆண்டவன், தமீனுவிடம் பேரழகை வாரி வழங்கி இருந்தான். காட்டில் எறிக்கும நிலவின் கதிதான் தமீனுவின் அழகிற்கும் நேந்திருந்தது. -
கல்யாணம் பேசிவந்தவர்கள் கேட்ட மூவாயிரத்தைத்தானும் தமீனுவின் தாயால் கொடுக்கமுடியாமற் போன தெல்லாம சோக மயமான கதை. அப்படியான சந்தர்ப்பங்களில் எத்தனை பணக் காரர்களிடம் கையேந்தி அந்தத் தாய் கேட்டிருப்பாள் ? எவ ருடைய மனமும் கசியவில்லை.
தமீஞ என்ற இள மலரின் இதயத்திற் பூத்த இனிய கனவு கள் அத்தனையும் பலமுறை பணம் என்ற அரக்கனல் இராட் சதத்தனமாய் நசுக்கப்பட்டன.
வாடிய மலருக்கு வான் மழையாய் வந்தான் அடுத்த தோட் டத்திற்கு இக்பால் என்ற இளஞன். அந்த இளைஞனே டு தான் தமீஞ ஓடிப்போய்விட்டாள். உணமையிலேயே அவள் இப் டி ஒடிப்போனது பற்றி சின்னலெவ்வைக்கோ, அவரது மனைவிக்கோ சிறிதும் கவலையிலலை. எப்படியோ தங்களது ஒரு பாரம் குறைந் தது என்ற திருப்தியின் சாயல் தான் அவர்களது இதயத்தில் பதிந்துகிடந்தது.
தமீனுவும் இக்பாலும் இப்படிப் போனது சட்டப்படி குற்றமே என்று சாதித்த பள்ளிக் கமிட்டியினரிடம் முதலில் முபாரக்தான் கேள்விகளைத் தொடுத்தான்.
'திருமணம் செய்து கொடுக்க ஏதாவது உதவுங்கள்" என்று கேட்டபோதெல்லாம் கையை விரித்த அத்தனை பேரும் இப்போது நியாயம் பேசவருவதில் நியாயமே இல்லை" என்று அடித்துக் கூறிஞன் முபாரக்!
முபாரக்கின் பேச்சிலும் உண்மை இருப்பதை உணர்ந்த ஊர்மக்களிற் பெரும்பாலானுேர் முபாரக்குடன் சேர்ந்துகொண் டனர்.
முபாரக்கின் தலைமையில் ஹாஜியாரின் போக்கை மாற்று வது எப்படி என்பதைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
ー45ー

விவாதத்தின் பின்னர் ஒரு நல்ல முடிவோடு அவர்கள் வீடு திரும்பினர் இரவிரவாய் முபாரக்கும் அவனது நண்பர்களும் அதே வேலையாய் இருந்தனர்.
மறுநாட் காலை -
ரஹீம் ஹாஜியார் தமது வர்த்தக நிலையத்தை நோக்கிப் புதிய காரில் புறப்பட்டார்.
என்ன அதிசயம் !
அவரது வீட்டிற்குச் செல்லும் பாதையிற் பெரிய கூட்டம், ஹ" ஜியாரால் காரை எடுக்கவே முடியவில்லை. நாலைந்துபேர் பாதைக்குக் குறுக்கே படுத்திருந்தனர்.
"சின்னலெவ்வையின் மகளைப்பற்றிப் பேசுபவர்களே! அவர் களுக்கு இதுவரை நீங்கள் என்ன உதவிகளைச் செய்திருக்கின்றீர் கள் ! " -
'ஹாஜியா ரே! லண்டனுக்குப் படிக்கப்போன உமது மகன் அங்கு நடந்துகொண்ட முறை சரிதான ?"
'உமது மகன் ஹோட்டல்களில் நடனமாடுவது எந்தச் சட்டப் டி சரியானது ?"
ஒரே கூச்சல் 1
ஹாஜியார் 'ஸ்டீயரிங்'கில் முகத்தைப் புதைத்துக்கொண் nti.
ஊமைகள் பேசத் தொடங்கினல், ஆண்டுகள் பலவாக அடுக்கப்பட்டிருந்த அவர்களது எண்ணங்கள் மடைதிறந்த பெரு வெள்ளமாய்ப் பாயும் என்பதை பெரிய புள்ளிகள் உணரத் தொடங்கினர்.
அவர்களது தலைகள் ஏனே நிலத்தை நோக்கிக் குணிகின்றன.
*சிந்தாமணி” - 30-10-1977.
ー49

Page 27
காலம்பல கடந்தாலும்.
ஆத்திரம் பொங்க வீட்டிற்குள் நுழைந்தான் மஹ்ரூப். அவன் வந்த வேகத்தில் வீடடில் ஏதோ விபரீதம் நடக்கப்போவ தாக எல்லோரும் எண்ணிஞர்கள்.
மஹ்ரூப் எவருடனும் பேசாது நேராகச் சமையற் கட்டினுள் நுழைந்தா னன்.
*ஸக்கியா. இங்க வா. சுருக்க டீ கொஞ்சம் ஊத்து.' அவனது குரலில் கோபக்கனல் தெறித்தது.
ஸக்கியா அவனது தங்கை. இருபத்தாறு வயதாகி யும் வாழ்க்கையென்னும் சொன் மலரை சுவைக்க முடியாமல் வீட்டிற் குள்ளேயே முடங்கிக் கிடப்பவள்.
மஹ்ரூப்பின் குரலால் அவள் உடல் பதறியது.
"ஒரு நிமிஷத்திலே ஊத்தித்தர்ரேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் பரபரவென்று அடுப்பை மூட்டினுள். அவளது தாய் வந்து தேயிலையையும் சீனியையும் எடுத் துவைத் தான். சின்னவள் பர்ஹானு வந்து கோப்பையைக் கழுவிவைத்தாள்.
உண்மையிலேயே இரண்டு நிமிடங்களில் கேனீர் மஹ்ருப்பின் கைசளுக்குச் சென்றுவிட்டது. இரண்டே நிமிடங்களில கேனி ாைக் (? டித்த மஹ்ரூப், கோப்பைபை வீசாத குறையாக மேசை மீது போட்டான்.
நேராக முன் அறைக்குப் போன்ை. அங்கேதான் அவனது தந்தை "ஈஸிச்சேரில்" முடங்கிக்கிடக்கிருர், ஆறு வருடங்களுக்கு முன்னர் வநத பாரிசவாதம் அவரை இப்படி ஆக்கிவிட்டது.
மகன் மஹ்ரூப் போடும் அட்டகாசம் எதற்காக என்பதை அவரால் ஊகித்துக்கொள்ள முடிந்தது. அவரது ஊகிப்பு அலி ரது உள்ளத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மஹ்ருப் திடுதிப்பென்று அவர் முன்னுல் நி ைமுன்,
அவர் இலேசாகக் கண்களை மூடிக்கொண்டார்.
-50

'வா. ப். பா...'
அவர் அதிர்ந்து போய்விட்டார்.
மஹ்ரூபே கொடர்ந்தான். "வாப்பா. இண்டைக்கு நான் கரீம் மொதலாளிகிட்ட ரெண்டில ஒண்ட பாத்திடப் போறேன். நீங்க என்ன *ொன்னலும் சரி." அவர் என்ன பதிஆத் சொன்னலும அவனை அது - அவனது முடிவிலிருந்து மாற்றி விடாது என்பதையே அவனது கடைசி வசனம் காட்டியது.
"இங்க பாருப்பா. மஹ்ரூ." தந்தையார் மிகவும் டவ் வியமாகப் பேசத் தொடங்கனர். 'கரீம் மொதலாளி இந்த ஊரிலேயே பெரிய மனுஷன். அவர் விெரலை அசைச்சா."அது படி ஆட இந்த ஊரே காத்துக்கொண்டிருககிறது." m
"அவரைப்போய். நாம். ஒண்டுக்கும் வழியில்லாத நாம. பகைச்சிக்கலாமா ? அவரு நெனச்சா. நாளைக்கே எங்கள் இந்த ஊரவிட்டே அனுப்பிடுவாரு . நானும் ஏலாத மனுஷன். கொ மருப்புள்ள கள சுட்டிக்கிட்டு நாங்க என்னப்பா செய்யலாம். எங்கே போவலாம் ?*
அவர் சிறிது நிறுத்தி, ஆழமானதொரு பார்வையைத் தன் மகன் மீது பாச்சினர்.
கம்பீரமானதோற்றத்துடன் நின்றுகொண்டிருந்தான் மஹ் ரூப். அவர் கூறியதெல்லாம அவன் கேட்டுக்கொண்டிந்தானே வேறு சிந்தனையில் இருந்தானே என்பது சந்தேகமாகவே இருந்த 1 அவனது பாவனையும், முகபாவமும் அவன் வேறு சிந்தனையில் இருப்பதையே காட்டிக்கொண்டிருந்தது.
அங்கு சில நிமிடங்கள் மெளனம் நிலவியது.
"வாப்பா. நான். டவுனு க்கு ப் போயிட்டுவர்ரேன் அவனது பேச்சு முடியுமுன்பே அவரது தொண்டைக்குழியிலிருந்து வார்த்தைகள் வேகமாக வெளிப்பட்டன. ---
'மஹரூப். இப்ப. நீ. என்னப்பா செய்யப்போற. ஆண்டவனுக்காகப் பொறுத்துக்கோ. அவசரப்பட்டு எதையும் செய்திடாதேப்பா ." அவரது குரல் மாத்திரமல்ல. உடல்
முழுவதுமே நடுங்கியது.
மஹ்ரூப் கோபத்தோடு இன்னெரு நாற்காலியில் தொப் பென்று உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படிப்பார்த்தாலும் அவனுடைய தந்தையின்
-51

Page 28
ஆலோசனைப்படி வெற்றிபெற முடியாதென்பதை அவன் நன்முக உணர்ந்திருந்தான்.
உண்மைதான். கரீம் முதலாளி அந்த ஊரில் ஒரு பெரிய புள்ளிதான். பணப்பலமும் செல்வாக்கும் அவருக்குப் பக்க பலமாக இருந்தன.
அவரது வர்த்தக நிறுவனமொன்றில் தான் மஹ்கபும் வேலை செய்து வருகின் ருன். கரீம் முதலாளின் கார் டிரைவராக வேலை செய்தவர்தான் மஹ்ரூபின் தந்தையும்.
பாரிசவாதம் அவரைப் பற்றிப் படரத் தொடங்கவே வேறு வழியின்றி பஹ்ரூப் தன் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு தையல் வேலைசெய்து உழைக்க முற்பட்டான். இன்றும் சரீம் முதலாளியின் நிறுவனம் ஒன்றில் இந்த வேலையைத்தான் செய் கிருன்.
மஹ்ருப் சிறுவனக இருந்தபோது அவனுடைய தாய்க்கு ஏற் பட்ட கடுமையான நோய் சாரணமாக ணமுடை ஏற்படவே, அவர்களுக்கென இருந்த கால் ஏக்கர் காணியையும் அவன் தந்தை கரீம் முதலாளியிடமே அடகு வைத்தார். −
அவனது தாய் பூரண சுகமடைய நாட்கள் பல சென்றன. காலம் ல கடந்து சென்றபோதும் காணியை மீட்க வழிபிறக்க வில்லை. முதலாளியே தெரிந்தும் தெரியாதவர் போல் இருந்தார். தன் மீதுள்ள நல்லபிப்பிராயத்தினுல் இப்படி அவர் பொறுத்துக் கொண்டிருக்கிருர் என்று நினைத்தார் அந்த அப்பாவி மனிதர்.
இந்த நிலையில்தான் மஹ்ரூபின் தாயின் சகோதரர் ஜாபீ ருச்கு சுவீப்பில் முதலாம் பரிசாக ஒரு கணிசமான தொகைப் பணம் கிடைத்தது. அவர்தான் சகோதரிக்கு அதில் ஒரு தொகை யைக் கொடுத்தார். உடனடியாக அந்தப் பணத்தைக்கொண்டு காணியை மீட்கவேண்டும் என்றே எல்லோரும் தீர்மானித்தனர்.
மறுநாள்கரீம் முதலாளியின் வீட்டிற்குச் சென்ற மஹ்ரூபின் தந்தை மெதுவாகப் பேச்சைத் தொடங்கினர்.
O "மொதலாளி. நான். ஓங்ககிட்ட ஈடுவச்ச காணித் துண்ட மீட்டிடலாம் என்று தான் வந்தேன். கொஞ்சம். தயவு. செய்து. நான் எவ்வளவு தரவேண்டும். என்று சொல்லுங்க."
一52一

சரீம் முதலாளி இப்படியான பணக் கொடுக்கல் வாங்கல், களில் கொஞ்சம் வட்டியும் வாங்குவார். அதாவது அவரது பரி பாஷையில் 'சந்தோஷம்' வாங்குவார். அதஞலதான் கணக் சைக் கேட்டார். w
கரிம் முதலாளி துள்ளி எழுந்தார்.
"என்னப்பா. டிரைவர். நீ. என்னதான் சொல்லு?ற . ஒன் கிட்ட இருந்து நான் காணியை ஈடாகவா எடுத்தேன. பணத்துக்குத்தானே வாங்கினேன் '' முதலாளியின் இந்த வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவருக்கு இருக்கவில்லை. உலகமே தன் முன்னுல சுற்றுவதுபோல் தெரிந்தது. உடமபெல்லாம் நடுங்கி வியர்த்துக் கொட்டியது.
"மொ.த.லா.வி. ' அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.
"இருப்பா. கொஞ்சம் இரு. நீ. அண்டைக்கு காணியை விற்கத்தானே வந்தே. நெடத்தாரிசு முன்னலேயும் அப்படித் தானே சென்ன்ே. எனக்கு நீ. காணியை வித்திட்டதாக எழுதினதுக்கு நீயே கையெழுத்தும் போட்டிருக்கியே. கொஞ்சம் இரி. கொண்டுவந்து காட்டுறன" அவர் உள்ளே போனர்.
"ஆண்டவனே, இது என்ன சோதனை" என்று அவர் இடிந்து போய் விட்டார்.
உள்ளே சென்ற கரீம் முதலாளி வந்தார். அவரது கையில் காணி உறுதிப்பத்திரம் ஒன்று இருந்தது. அதில் சில பக்கங்களைப் புரட்டிக் காட்டினர்.
ஆங்கிலத்தில்தான் யாவும் எழுதப்பட்டிருந்தன. அதிலே அவரது கையெழுத்தும் இருக்கத்தான செய்தது. அவருக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே.
"இந்தாப்பா. டிரைவர். ஒனக்கு இங்கிலீஸ் தெரியா விட்டால் இங்கிலிஸ் படிச்சவங்களிடம் சொண்டுபேய் இத வாசிச் சிப் பாத்தியெண்டால் எல்லாம் தெரியும்."
அவர் அப்படியும் செய்து பார்த்தார். உண்மைதான். அவர் வில்க்கு விற்றதாகத் தான் எழுதப்பட்டிருந்தது. அவரும் கையெ ழுத்து போட்டிருக்கிருர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங் கிலம தெரிந்த கரீம் முதலாளி அன்று நொத்தாரிசிடம் ஆங்கி லத்திலேயே பேசி செய்துவிட்ட 'திருவிளையாடல்" தான் இது!
س-53--

Page 29
பல நாட்களாகக் கரீம் முதலாளியின் முகத்தைக்கூடப் பார்க்க விரும்பாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ர் அவர். இன்னும் பல நாட்களாக வேறு எங்காவது வேலை கிடைச் குமா என்று அலைந்தார். கடைசியாக மீண்டும் கரீம் முதலாளியிடமே போய்ச் சேர்ந்தார்.
பணம் இல்லாதவர்சளுக்கு மனச்சாட்சி இருந்தாலும் அதன் படி நடக்கப் பசிக்கொடுமை விடுவதில்லை. பணக்காரர்சளு கோ மனச்சாட்சியே இருப்பதில்லை. இந்த உண்மையை நிதர்சன மாக்கிய சம்பவம் தான் அது. காலம் கடைசியில் மஹ்ருபையும் அங்கேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது.
மஹ்ரூப்போ இளம் இரத்தம் ஊறிப்பாயும் இளைஞன். அநீதி களைப் பொறுக்க முடியாதவன். தொடர்ந்துகொண்டிருந்த கரீம் முதலாளியின் அநியாயங்களுக்கு முடிவுகட்ட முனைந்துவிட்டவன்.
சிந்தனையிலிருந்து விடு ட்ட அவன் திடிரென எழுந்தான். யாராலும தடுக்க முடியவில்லை.
தனது சகாக்களையும் அழ்ைத்துக்கொண்டு கரீம் முதலாளி யின் மாடிவீட்டை நோக்கி விரைந்தான் மஹ்ரூப்.
அவர்களது உரிமைக் குாலுக்கும், நி யா ய பூர் வமா ன கோரிக்கைகளுக்கும் கரீம் முதலாளி என்ன ப தி லைத் தான் சொல்லப்போகினருரோ ?
*சிந்தாமணி” - 17-6-1979.
一54一

சின்ன விழிகள் சிரித்தன.
நாளை விடிந்தால் நோன்புப் பெருநாள். அந்த ஊரெங்குமே அதனை வரவேற்கும் பட்டாசு சத்தம் வியா பிக்கத் தொடங்கி விட்டது.
சுலைமானுக்கு வீட்டிற்குப் போகவே மனமில்லை. அவனுடைய மூன்று வயதுடைய நஹிம் தான் அவனது மனமெங்கும் வியா பித்து நின்றன். அவனது கெஞ்சும் விழிகள். அதிலே தெரியும் நம்பிக்கைச் சுடர். ஒ! எப்படிப் போய் அவனை பார்ப் து? சுலேமான் வீட்டிற் சச் செல்லும் வழியில் நடக்காமல் திரும்பி வேறு வழியாக நடக்கலாஞன்.
சுலைமான் சாதாரண கூவி வேலைக்காரன். அதிகாலை முதல் மாலை வரை. அவன் உழைப்பான். அப்படி அவன் உழைத்தும் அவனுடைய குடும்பம் இழுபறியில் தான் காலத்தை ஒடட வேண்டியிருந்கது. அவனுடைய மனைவி ராஹிலாவும் அவனுக்கு ஆரம்பகாலத் கில் கை கொடுத்துக்கொண்டிருநதாள். பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு மாவிடிப்பது, நெல் அவிப்பது, என்று அவள் உதவி, அந்த வருமானத்தையும் குடுப்பத்திற்காகச் செல வழித்த காலத்தில் வாழ்க்கை வண்டி சிரமமின்றி ஓடியது.
ஆனல் வருடா வருடம் அவள் தாய்மைப் பே ற் றை ேொடர்ந்து அடைந்ததால், உடல் பலவீனம் அளவுக்கதிகமாகி எட்டாவது பிள்ளையைப் பெற்ற படுக்கையிலிருந்து எழும்பவே முடியாத நோயாளியாகி சுலைமானுக்கு ஒரு சுமையாகிவிட்டாள். குடும்பச் செலவை மிஞ்சும் ர ஹில வின் மருந்துச் செலவு இவற்றுடன் சுலைமானின போராட்டம். அவனது சக்தி க்கு அப்பாற்பட்ட போராட்டமாகவே இருந்ததில் வியப்பில்லையே.
இம்முறை நோன்பு தொடங்குவதற்கு முன்னரேயே அவனது சின்ன மகன் றஹிம் அவனிடம் தினநதோறும் கெஞ்சியது "வாப்பா ! எனக்கு "பெல்ஸ்" ஒண்டு வேணும்'
அந்த பிஞ்சுக்கு "பெல்பொட்டம்ஸ்" பற்றிச் சொல்லிக் கொடுத்தவர்களை இழுத்து நான்கு உதை உதைக்க வேண்டும்
-55

Page 30
போன்ற உந்தல், அவனுக்கு மகனின் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் எழுவதுணடு. "ம். இந்தக் காலத்தில பொறக் கும் போதே பெல லாம், எல்ல மகனுங்கட்டியும் தெரிஞ்சு தான் இரிக்கி" என்று அவனே அவனே சமாதானப்படுத்தி அடக்கிக் கொள்வான். பால் வடியும் றஹிமின் பிஞ்சு வதனத் தின் முன்னுல் அவனுல் சுடிந் கொள்ளவும் முடிவ ல்லே. சதா வும் துரு துருக்கும் அவனது விழி+ளின கெஞ்சுதலுக்கு முன்னுல் அவன் மகனே. பெரு5 ஞக்கு எப்படியும் வாங்கித் தர்வேண்டா ராஜா" என்று சரணடைந்து விடுவான்,
ராஹறிவாவுக்குச் சுஃமானேப் பார்க்கவும் பரிதாபமாக இருக் கும். "சே! நானுவது நல்ல சொகீமா இருந்தா, நாலுபத்து எடத்திலே வேளே வெட்டிகளேச் செய்து இவனட ஆசையைத் திர்க்கலாமே" என்று அவள் தன்னேயே நொந்து கொள்வாள். இப்படியான வேளகளில் எல்லாம் அவள் அடையும் துயரம் கொஞ்ச நஞ்சமில்லே,
அவளுடைய மருந்து முடிய அடுத்த மருந்தை வாங்க, சுஃபமான் பனந்தேடித் தடுமாறும் போதெல் லாம் ராஹிவா அழுதே விடுவாள், "ஆண்டவனே. இவர் எனக்காகப் படுற சஷ்டத்துக் காசிவாவது எனக்கு நல்ல சொகத்தைத் தா" என்று அவள் ஆண்டவனிடம் மனம்விட்டு கெஞ் சிக் கேட்பாள்.
இந்த முறை பெருநாள் வருமட்டும் வீட்டில் பலரது உடைகள் கருதலாகி இருந்தபோதும் மாற்றுடை வாங்காது, சுஃமான் சுணக்கிக் கொண்டிருந்தான். இடையில் வாங்கினுல் டெருநாளுக்குத் திரும்ப வாங்கவேண்டிய நிர்பபந்தத்தை அவனுல் தாங்கிக்கொள்ளமுடியாது. எப்படியோ அங்,ே இங்கே ஒடித் திரிந்து, இரவு டாகலாய் மாடாய் உழைத்து மூன்று மாதங்க ளாக மிச்சப்படுத்தி அவன் தன் மனே விக்கென்று ஒரு வொயில் சேஃவயும், பிள்ஃளகளுக்கு மிகவும் சாதாரன ரகங்களில் ஒவ்வொரு உடையும், தனக்கு ஒரு சாரமும் வாங்கி விட்டான். பெருநாள் தினத்தின் செலவுக்காகவும் ராஹறிலாவிடம் ஓர் ஐம்பது ரூபாவைக் கொடுத்து விட்டான்.
ஆணுல் ?
றஹறிமுக்கான "பென்ஸ்" தான் இன்னமும் முடியாத காரிய மாகவே நிற்கிறது. அவனுக்காக அரைக் கால்சட்டை ஒன்றும் சட்டை ஒன்றும் கொண்டு போய்க் காட்டியபோது அவன 'ம. இது வானும் எனக்கு "பெல்ஸ்" தான் வேணும்" என்று அழுத
-56

அழுகை, அவன் சுஃலமான் கொண்டுபோன உடைகளேக் கைக ளால் தொடவும் இல் ஃ. அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அத்தகைய பிடிவாதமா என்று சுலேமா னும், ராஹிலா வும் வியந்தனர்.
நாளேக் காஃலயில் பெருநாள். இன்று "பெல்ஸ்" கொண்டு போகா விட்டால் நல்ல நாளும் பொழுதுமாய் றஹீம் அழு து அடம் பிடிப்பான். அவனது பச்சை மனம் வேத&னப்படும். அகஃனக்கண்டு ர ஹிலாவும் கண்ணிர் வடிப்பாள். சுஃலமானின் சிந்தனே தொடர்கிறது.
இந்த நேரத்தில் யாரிடம் போய்க் கடன் கேட்பது, சுலே மானின் ஒரு கொள்கை அநாவசியமாக கடன் படாமல் இருப்பது அதாவது புடிந்த அளவு உழைத்து அந்த உழைப்பின் ஊதியத் திலேயே வாழ்க்கையை ஒட்ட வேண்டும் என்பது தான் அவனுக்கு விருப்பமான விடயம். இப்பொழுது கடன் படாமலும் இருக்க முடியாத ஓர் இக்கட்டான நிைேம.
அவன் நடந்துசென்றுகொண்டிருக்கும்போதுதான் 'இஷா" வுக்கான பாங்கோசை கேட்டது. பள்ளிவாசஃல நோக்கி சாரி சாரியா சுச் செல்லும் மக்களே எல்லாம் கவனியாதவணுய் அவன் நடந்துகொண்டிருந்தான்.
'பாங்கொவிக்சும்போது கேட்கும் து-ஆக்கள் ஆண்டவனுல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன" என்று யாரோ எங்கோ கூறியது நிஃசு புெ ஈகு வரவே, அவன் அவசர அவசரமாக ஆண்டவனிடம் மா : சீகமாகக் கண்ணிர்விட்டு கேட்டுக்கொண்டான். "ஆண்ட வரே எனது சின்ன மகளின் சின்ன ஆசையைக் கூட நிறை வேற்ற முடியாதவனுக இருக்கும் எனது நிஃமையை நீ அறிவாய். எ வாம் வல்ல ஆண்டவனே! நீதன் எனக்கு தவவேணடும். யாரிடமாவது நான் கடன் கேட்டாலாவது கடன் கிடைக்க வழிசெய் ஆண்டவனே."
சுஃமான் நடந்துகொண்டிருந்தான். தனக்கு தெரிந்த யாசின் முதலாளியிடமாவது போய் சுடன் கேட்கலாமென்ற நினைப்பில் சிறிது வேகமாகவே நடந்தான். "கிறீஸ்" என்ற சப்தத்துடன் அவனே உரசினுற்போல் வந்துநின்ற பெரிய டொயாட்டா காரின் சபதத்தால் அவன் சிந்தனே தடைப்பட்டது. "மனுசன் போற து தெரியாம பெரிசா காரோட்டரார்" என்று மனதுககுள் நொந்த வாறு அவன் தொடர்ந்து நடக்கலாஞன்.
"சுஃலமான் சுலே மான்' என்று காருக்குள் இருந்தவர் வெளியே தலையைப் போட்டுக் கூப்பிடவே அவன் திரும்பி, கார் அருகில் வந்தான்.
--

Page 31
கூப்பிட்டது யார் என்று சுலமானுக்கு இப்பொழுது புரிந்து விட்டது. அந்த ஊரிலேயே பிறந்து, வளர்ந்து இ போது கொழும் பில் பெரிய வியாபாரியாக இருக்கும் தஸ்லிம ஒற ஜியார்தான் எவ்வளவோ காலத்திற்கு பிறகு வநதிருக்கிருர்,
"மொதலாளி சொகமா இரிக்கிறீங்களா?" என்று கேட்ட சுலேமா அளின் நெஞ்சின் ஓர் ஒாத்தில் இவரிடம் ஓர் ஐம்பது ரூபா கடனுக கேட்டுபபார்த்தால என்ன? வசதி கிடைக்குமபோது அவ ரது விலாசத்திற்கு அனுப்பிவிடலாம்தானே" என்ற உந்தல்.
"என்ன சொகம் அப்பா எண்ட கண்மணியான மகனே ஆண் டவன் பறிச்சிக்கிட்டானப்பா" என்றவரின் தொண்டை அடைப் பட்டது. அவரது கண்கள் கலங்கின.
"மொதலாளி"
"கலோன் மூன்று வயசு மகனே வேலேகாரியோடு விட்டு விட்டு பயணமொண்டு போயிருந்தோம். அடுப்பு 'காஸ்ை" முடா மல் அவள் புடவை கழுவ போயிருக்காள், புள்ள குசினியில விளேயாடிகிட்டு இருந்திருக்கு, காஸ்" நல்லாப் பரவி ஏன் புள்ள யையே பறிச்சிக்கிட்டுப் போயி நிச்சி" என்றவர் அமுதே விட் டார். சுலேமானது கண்களும் கலங்கிவிட்டன.
ஊரிலும் இதைப்பற்றி ஒருவரும் பேசிக்கொண்டதாகச் சுலே மானுக்குத தெரியவில்லே. பெரிய மனிதர்களது விவகாரங்களே அவனேத் தேடிவந்தா சொல்லப்போகிறர்கள்?
மகனே இழந்தவரிடம் தன் மகனுக்கு உடுப்பு வாங்க பணம் தாருங்கள் எனறு கேட்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லே.
"சுலைமான்' என்ற தஸ்லிம் ஹாஜியாரின் குரலால் அவனது சிந்தனே தடைப்பட்டது.
"சுசீலமான் இந்தா. இத உன்ட தனட்டுக்கு எடுத்துக்கிட்டு போ, ஏன்ட மகனுக்குப் புதிசா எடுத்த பெல்ஸ் டீஷோட்டு களுடன் கொஞ்சம பழையதுகளும் இசிக்கி, உனக்குத்தான் அந்த வ சில ஒரு புள்ள இருக்கிறதா ரெண்டு, மூனுபேர் சொன் இங்க" என்றவாறே காருக்குள் இருந்த பெரிய பார்சலொன்றை அவனிடம் கொடுத்தார். சுலைமான் மறுக்காமல் வாங்கிக்கொண் I for for.
"மொதலாளி. மிச்சம் சந்தோஷம். ஆண்டவன் ஓங்கலுக்கு நல்லது செய்யட்டும்" என்ருன் சுசீலமான்,
--

"சுவேமான், இந்தா நூறு ரூபா. இதையும் வைச்சிக்கோ, உண்ட பிள்ஃளகளுக்கு எதையாவது வாங்கிக்கொடு", அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சுலேமா னின் கைகள் நடுங்கின.
"மொதலாளி' அவனுல் எதுவுமே பேசவும் முடியவில்லே.
'சுலேமான் நான் வாரேன்" தஸ்லிம் ஹாஜியார் காரில் போய் விட்டார்.
சுலேமான் தன் கையிலுள்ள பார்சலேயும், பணத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருக்கான் என்ன நடந்த
தென்பதையே அவனுல் நிச்சயித்துக்கொள்ள முடியவில்க், கனவா? நனவா? என்ற நினைப்பு,
"யா அல்லாஹ்! எல்லாம் உன் செயல்தான்" என்று அவனது மனம் நன்றி கூறியது.
மகிழ்ச்சி பொங்கும் தன் மகன் றஹீமின் துருதுருத்த விழி கள் சிரித்தன.
"தினகரன்" - 19-8-1979,
- ܒ ܩ 1 11

Page 32

lith best compliments
from
S. S. K. HAJJAR & Co.
WHOLFS ALE & RETAIL
TEXT|LE DEALFRS
99, SECOND CROSS STREET, COLOMBO - 11.
| eleրի () mes ! ! ! ? ,
N.
༈ g|| L || ||

Page 33
Dith beste
- C A
Over 1 ()
Co ciali:
El val priced R
Llp W
With gu
Age
TAI-PAN TR 2/ I, Seco 96, Princi
COLOM
| - | | 54 til 17: T
Si Joseph's Catholic Press. Balt

ompliments
, models
Lula toTS
a hle
S. 17/- 4 Ids
: T-Itti
t
ADING Co.,
nd Floor, e Street,
B, O - |.
, ; 515, TA 1 'AN
licillo,