கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள்

Page 1
戴 W
"Ti" ់
鷗
W
להלן
.
W
WANN NNNN
AW
W
N
l.
*
W
TTTTTTTT
* ់
ട്ടു སྟོད་
:
r -
 

*
MDMMMMMMMMMMRAMMARRRRRRRRRRRRAMMARW BORDER
ug:
L
* REGTE Ea * 栉 lழி * T
| Elisi MWANA 戴鲇 All
P.
M
* Hill
■
: W
* W

Page 2


Page 3

ex
普
seva 洽
N 普
N 洽
SA
洽
ܓ 额
s
SY2E
ལྔ་
ܓ 数据
s
G)
f
6)
Gh
i
i
56)
J
ܓ 版
இனிய தொடர்புகள்
普
ஆய்வும்-தொகுப்பும் : ‘தமிழ்மணி மானா மக்கீன் (இலங்கை)
பதிப்பாசிரியர் : ‘இலக்கியச் சிந்தனாமணி’ லேனா தமிழ்வாணன், எம். ஏ.
& O மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 4. தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017.
தொலைபேசி : 4342926 தொலைநகல் : 044-4346082
Lâdir ses sdo : e-mail : tambhi (Q) md2.vsn!.net.in (MANIMEKALAI)
SySASAأحد
කිණි. බ්ඤ කිඛ. කි% කිණි. කි%. N%, බ්ඤ කිණි. ක්ඤ ක්%. N%. බ්ඤ ක්%. [æ. LL LL SL M L L L L SL L s S S SS

Page 4
*
( நூல் விபரம் )
R
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
WS
நூல் தலைப்பு " இலங்கை - கீழக்கரை
இனிய தொடர்புகள்
ஆசிரியர் சி" மானா மக்கீன் மொழி یا "اق Lflلا
பதிப்பு ஆண்டு பி" 1998 பதிப்பு விபரம் * முதல் பதிப்பு of GLD ' மணிமேகலைப் பிரசுரம் தாளின் தன்மை 12 கி.கி. நூலின் அளவு கிர்ெளன்
(124 x 18 செ.மீ.) அச்சு எழுத்து அளவு ? 10 புள்ளி
மொத்த பக்கங்கள் 교 O
நுாலின் விலை ரூ. 57.00
அட்டைப்பட ஓவியம் ? ஜனாப் ஜமால்
லேசர் வடிவமைப்பு ?" கிறிஸ்ட் டி.டி.பி. சென்டர்,
சென்னை - 24,
அச்சிட்டோர் = மலர் பிரிண்டர்ஸ்.
சென்னை-34,
தையல்
மணிமேகலைப் பிரசுரம்,
ിf്ഞ് - 17,

ஸாதாத் வழித்தோன்றல் இனிய இதயம், என்றும் மலர்ந்த முகம் ஸெய்யித் அலவி மவுலானா, எம்.பி. அவர்கள் இலங்கை காபினட் அமைச்சர் (உள்ளூராட்சித்துறை மாகாணசபைகள்). அத்துடன், இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகளில் "ராத்திப் ஜலாலிய்யா' வின் உலகளாவிய பிரதான கலீஃபா - (பிரதிநிதி). மேலும் விவரங்கள் ஆன்மிகப்பாலத்தில்.

Page 5

அர்ப்பணம்
சிங்கப்பூர் - 1996
இன்று நினைக்கையில் நேற்றே போல் நிகழ்வுகள்,
இல்லத்தரசியாரை மருத்துவமனையில் சேர்த்திட்ட மன உளைச்சலுக்கு மத்தியிலும், என் மகிழ்ச்சி ஒன்றையே பிரதானமாகக்கொண்டு நீடூர், நளபீம் சகோதரர்களில் சின்னவர், முனைவர், அ.அப்துல் பாரீ மனமுவந்து செயல்பட்டார்கள்.
அவர்களால் அறிமுகமான சகோதரர்தான் கே.எம்.எஸ். சதக் அப்துல் காதர் ஹாஜி. கீழக்கரை, மேலத்தெரு பெருமகனார். இங்கு பார்க்கும் படத்தில் என் சிங்கப்பூர் வைபவத்திற்கு தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Page 6
அப்புறம் அடுத்துவந்த ரமழானின் அனைத்துப் பிறைகளிலும் என் “குருவிக்கூட்டுக் குடும்பத்தில் அவர்களை நினைக்க அல்லாஹ் அருள் பாவித்தான்.
இதற்கு, உலகத்தமிழ் பண்பாட்டுத்தலைவர் டாக்டர் ஏறஃபியுத்தீன் அவர்களும் ஓர் உந்துசக்தியாக இருந்தார்கள்.
அத்தகு பெருமகனுக்கு என்ன நன்றிக்கடன் என யோசித்தபோது, நிச்சயமாகவே இந்நூல் அவர்களுக்கே அர்ப்பணிக்கப்படவேண்டும் ftfdt முடிவானேன். நிறைவேற்றிட இரண்டாண்டுகளுக்கு மேலானது.
இப்பொழுது, அன்புமிகக்கொண்டு, நன்றியுணர்வுடன் அர்ப்பணிக்கிறேன்.
அல்ஹாஜ் சதக் அப்துல் காதர் அவர்கள் ஏற்றிடவேண்டும்.
இன்னுமின்னும் என் எழுத்துப்பணிகள் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.
舜
窓
M
Øs
ό 2遂S

வாழ்த்துகிறேன்
இஸ்லாத்தையும் இன்பத் தமிழையும் இருகண்களாக கொண்டுள்ள எங்கள் நீடூர் நெய் வாசல் வாசிகளுக்கு மு ன் னு த ரீ ர ன மா க ஷ ம் மு ன் னே (ா டி க ள |ா க வர ம் திகழ்பவர்கள் கீழக் கரைப் பெருமக்கள்.
வர்த்தகரீதியில் அவர்களுள் பலருடன் உலகவலம் வருபவன் நான். பெரியவர், "பீ.எஸ்.எ. காக்கா முதற்கொண்டு, அருமை நண்பர் அல்ஹாஜ் கே.எம்.எஸ். சதக் அப்துல்காதர் அவர்கள் வரை நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. சுமார் முப்பது ஆண்டுகளாக அனைவருடனும் பழகிக்கொண்டிருக்கிறேன். அந்தவகையில் அவர்களது மண்ணின் மகத்துவத்தை அறிந்திருந்தாலுங்கூட, புதிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆவவில் - ஒரு எதிர்பார்ப்பில் இருந்துகொண்டிருந்தேன்.
இந்த நிலையில், எங்களில் பலரது இதயங்களிலும் இடம்பெற்றுள்ள சகோதரரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழக "முத்தமிழ் வித்தகர் விருது பெற்றவருமான இலங்கைத் தமிழ்மணி மானா மக்கீன் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக அவரது இலட்சிய முயற்சி ஒன்றைச் சொல்வி கொண்டேயிருந்தார்.

Page 7
அப்பொழுதே என் இதயத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
‘எழுத்தில் தாருங்கள்’ என்றார்.
‘எழுதி முடித்துக்காட்டுங்கள்’ என்றேன்.
அவரோ ஜெட்வேக ஆசாமி. ஆனால் இதில் மட்டும் சரக்குவண்டியாக செயல்பாடு இருந்தது!
இப்பொழுது இரண்டாண்டு முயற்சிக்குப்பிறகு “இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள்’ கிடைத்திருக்கிறது.
இலங்கைக்கும் கீழக்கரைக்கும் இப்படியெல்லாம் தொடர்புண்டா என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த நூற்றாண்டு முடிய இன்னும் ஓராண்டே இருக்கும் சமயத்தில், இப்படியொரு ஆய்வுநூல் இருகரைகளையும் தொட்டுத் தாலாட்டுவது பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. மாபெரும் வரலாற்றுப்பதிப்பு.
எங்கள் ‘மானா'வுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை வாரி வழங்குகிறேன் - அனைவரது சார்பிலும்.
டாக்டர் அல்ஹாஜ் அ றஃபீயுதீன் தலைவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகம்.
முகாம் : பாங்காக் (தாய்லாந்து), 01-12-1998 NIMO

வல்லவனை வேண்டுகிறேன்)
அருளும் அன்பும் நிறைந்த அல்லாலுறவின் திருநாமத்தால்.
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என நாளும் பொழுதும் வழியையும் மொழியையும் விழிகளாகக் கருத்தில் கொண்டிலங்கும் என் இனிய தம்பி, தமிழ்மணி மானாமக்கீன், இந்திய இலங்கை இலக்கியப்பாலத்தின் அசைக்க முடியாத, பிளக்க முடியாத தூண் ஆவார்.
மக்களுக்குப் பயனுள்ள பொருத்தமான நூல்களைத் தளராது தந்து கொண்டிருக்கும் அவரைப் பாராட்டுகிறேன். அவரின் நூல்களை எழிலாகப் பிரசுரித்தளிக்கும் பிரபலமான மணிமேகலைப் பிரசுரத்தார்களையும் பெரிதும் பாராட்டுகிறேன்.
MILLANEUM என்னும் ஆயிரம் (2000) ஆண்டு முடிவதற்குள் தம்பி மானா மக்கீனின் நூற்கள் நூறைத்தாண்டிவிடவேண்டும் என்று அவா உறுகிறேன்.
தமிழ் கூரும் நல்லுலகில் எல்லோர் கரங்களிலும் தம்பி மானாமக்கீன் எழுதிய நூற்கள் தவழ்ந்திடவேண்டும், அதற்குத் துணை புரிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரும் அவரின் இலக்கியத் தொண்டும் வாழ்க பல்லாண்டு! ---
来 செ. முஹம்மது யூனூஸ்) s தலைவர், இந்தியன் முஸ்லிம் அஸோஸியேஷன், (9-4-tbUრ, 1998. ஹாங்காங், சைனா.

Page 8
10
இவர்கள் இந்நூலாக்கத்திற்குத் தோன்றாத்துணை
டாக்டர், அல்ஹாஜ் அ. றஃபீயுதீன், தலைவர், உலகத் தமிழ் பண்பாட்டுக்கழகம், அல்ஹாஜ் எம். இத்ரீஸ் மரக்காயர் - கீழக்கரை, மேலத்தெரு. அல்ஹாஜ் கே.எஸ்.எ.அபூஸாலிஹ் - கீழக்கரை, மேலத்தெரு. (நிறுவனர், “ஜெம்மெக்ஸ்’, இலங்கை) அல்ஹாஜ் எ.எம்.எஸ். தைக்கா லெப்பை - கீழக்கரை, மேலத்தெரு, அமைப்பாளர். அனைத்துலக ராத்திபு ஜலாலிய்யா குழு. ஜனாப் ஏ.ஜி.எ. ரிஃபாய் - கீழக்கரை, மேலத்தெரு. திரு. ரவி தமிழ் வாணன், நிர்வாகப் பணிப்பாளர் - மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17
திரு. இரா. மோகன் - பிரசுர முகாமையாளர், மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17
அல்ஹாஜ் எஸ்.எம். கனி சிஸ்தி, அபிராமம். ஆசிரியர், முஸ்லிம் குரல். அல்ஹாஜ் எ.ஆர்.எம். யூனூஸ், கொழும்பு. அமைப்பாளர் - இலங்கை இன்சூரன்ஸ் கட்டுத்தாபனம். ஜனாப் ஜெ. ராஜா முஹம்மது. காப்பாட்சியர் - புதுக்கோட்டை, அருங்காட்சியகம். ‘பதுருல் மில்லத்’, அல்ஹாஜ் இஸட். எல்.எம். முஹம்மது, வெலிகாமம். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர் - ஓய்வில். 'கன்ஸ0 ல் உலூம் அல்ஹாஜ் முக்தார் ஏ. முஹம்மது வெலிகாமம். கல்வியாளர், எழுத்தாளர், ஒலிபரப்பாளர்.

11
வரவேற்கிறேன்
நாளும் பொழுதும் தமிழாகவும் எண்ண மெல்லாம் இனிக்கும் இஸ்லாமாகவும் இலங்கும் இதய சகோதரர் தமிழ்மணி, ‘முத்தமிழ் வித்தகர்’ மானா மக்கீன் அவர்கள் இப்போதைய இந்திய - இலங்கைப் பாலத்தின் தூண் ஆவார்.
அவர் எழுதி வெளியான பல நூல்கள் சிறப்பான்வை. பாராட்டப்பட்டவை.
இருநாட்டு மக்களுக்கும் பொருத்தமான நூல்களைப் பிரபலமான மணிமேகலைப் பதிப்பகத்தின் உதவியால் பிரசுரித்துத் தருவதில் தளராத ஈடுபாட்டுடன் செயல்படுவதை வரவேற்கிறேன்.
சுருக்கமான - ஆனால், தெளிவான நூல்கள் பல
இதுவரை வெளியாகி அவரின் இலக்கியத்திறமையையும் சாதனைகளையும் எடுத்தியம்பிக்கொண்டிருக்கின்றன.
தற்சமயம், “இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்’ என்ற நூல் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ந்து வரவேற்கிறேன்.
அவரின் இலக்கியப் தொண்டு தொடரட்டும் என்றும் விழைகிறேன்.
- முனைவர், அ. அய்யூப் "g ஆசிரியர், நம்ம ஊரு செய்தி சென்னை
டிசம்பர், 1998

Page 9
12
இந்நூல், 1998, டிசம்பர் 11-12-13 தினங்களில் புதுச்சேரி, கோட்டக் குப்பத்தில் நிகழ்வுற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 6-ஆம் ஆண்டுப் பெரு விழாவில் வெளியிடப்பட்டது.
 

13
பெருமைப்படுகிறோம்
னணி மே க  ைல ப் பிரசுரத்திற்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒரு பணியை எங்கள் தந்தையார் அவர்களை ஆசானாக வரித்த இலங்கைத் தமிழ்மணி மானா மக்கீன் அவர்கள்
நிறைவேற்றியுள்ளார்.
குறுகிய காலத்தில் தமிழக வாசகர்களது அபிமானத்தைப் பெற்ற அவர், ‘இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகளை
* வரலாறு
* வாணிபம்
* ஆன்மிகம்
* இலக்கியம்
எனத் தலைப்பிட்டு ஆய்ந்து அருமையான தகவல்களைக் கொண்ட ஒரு நூலாக உருவாக்கியுள்ளார்கள்.
அவருக்கேயுரிய பாணியில் - நடையில் பக்கங்கள் பறக்கின்றன!
இதனை, எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம். எந்த வரியிலிருந்தும் தொடரலாம். அப்புறம் நிச்சயம் அனைத்துப் பக்கங்களையும் படித்துச் சுவைக்க வேண்டும் என்கிற அவசியமும் ஆர்வமும் ஏற்பட்டுவிடும்.

Page 10
  

Page 11
16
干 سة
இலங்கை- கீழக்கரை இனிய தொடர்புகள்
தமிழ்நாடு
2(பாசிப்பட்திS *தொண்டி *SS ܬܠ* �" .
§ෂුදං?”
aairaut
S 'த, அனுராதபுரம்
ந்ேத்ர்வ همیم ټيمالونکيميا XX **வத்தத eysgrit: ஆகு \; புத்தளம் 3
* \{கில்ாபம் கண்டி
மாதமபை Ο
கொழும்புS இலங்கை கொழும்பு' سس پس இந்தியப் பெருங்கடல் வேர்வலை ? *
 
 
 


Page 12
யார் சொன்னர் இதைக் கீழக்கரை என்று
யார் சொன்னார் இதைக் கீழக்கரை என்று?
இது கீழக்கரையல்ல, மேலக்கரை! இதற்கோ ஞானத்தின் மேலக்கரை, தமிழ் மேலக்கரை!
அதனால்தான் சொல்லுகின்றேன் இதை மேலக்கரை என்று!
யார் சொன்னார் இதைக் கீழக்கரை என்று? இருந்தாலும் இதைக் கீழக்கரை என்று சொன்னாலும் தப்பில்லை. இதுவோ கிழக்கிலிருந்து கரையும் சூரியனூர். இந்திய நாட்டின் கிரகத்துவ சூரியன் இங்கேதான் உதித்தான். இந்தக் கரையிலிருந்து பார்த்தால் மட்டும் தான் அக்கரைப் பச்சை இல்லை.
இக்கரையே பச்சை, இரு வேறு உலகத்து இயற்கை!
திருவேறு தெள்ளியராவதும் வேறு என்ற - வள்ளுவனே வந்து பார் இங்கே.
உன்வாக்குப் பொய்யாவதைக் காண்பாய் இங்கே. பணத்துக்கும் பஞ்சமில்லை. அறிவு மணத்துக்கும் பஞ்சமில்லை. இங்கே கரத்தில் பொருளிருக்கும். திடத்தில் ஞானம் தங்கி இருக்கும்.
- கவிக்கோ அப்துல்ரகுமான்
 
 
 
 

இலங்கை
இன்று அமைதி குலைந்திருக்கலாம். இயற்கை அழகு குறைந்திருக்கலாம்.
நேற்று - ?
நேற்றைக்கு முன் தினம் - ?
முன்தினத்திற்கு முன்வந்த நாட்கள். மாதங்கள். வருடங்கள்-?
“முற்காலத் தமிழகத்தின் ஒரு பாகம்” - என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொன்னார்கள் பன்னூலாசிரியர், மர்ஹஸும் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்.*
அன்னாரின் எழுத்து என் பேனாவுக்கு உரம்.
அருமைத் தமிழ்வாணன் அவர்கள் நடை நான்பெற்ற
வரம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அந்தத் திருநாட்டுக்கு இதிகாச பாலம்’ ஒன்று இராமாயண காலத்தில் இருந்ததும் -
* 1. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் முன்னுரையின் முதல் பக்கம். (1970)

Page 13
20 ரிே இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இருபதாம் நூற்றாண்டில் இன்னொரு பாலத்தை அமைத்திட மகாகவி பாரதி தீவிரம் காட்டியதும் -
மிகமிகப் பிரசித்தம். ஆனால், அந்த எண்ணிக்கை ஒன்று, இரண்டல்ல, மூன்றுமல்ல மொத்தமாக நான்கு ‘பாலங்கள்’!
* வரலாற்றுப் பாலம்
* வானியப் பாலம்
* ஆன்மிகப் பாலம் * இலக்கியப் பாலம்
- இப்படி நான்கு பாலங்கள்.
இவற்றின் வயதோ பல நூறு ஆண்டுகள்.
மூத்தது, வரலாற்றுப்பாலம் தான்.
ox *வரலாறு என்பது, காலத்தின் சுவடுகள், இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், காலக்காசுகள், மரபுவழிக் கதைகள் என்பன போன்ற தடயங்களின் துணைகொண்டு அறிய முயல்வதே ஆகும்”
- என, ஆய்வறிஞர் இராமநாதபுரம் எஸ்.எம். கமால் அவர்கள் பதிந்து வைத்திருப்பது என் பேனாவுக்கு நல்ல உறுதுணை.
என்றாலும், நான், ‘அதையும் இதையும் பக்கம் பக்கமாகத் தந்து உங்களைப் பயப்படுத்த விரும்பாதவன். அபிமானிகளும் ஏற்கெனவே அறிந்தது தான்.
இங்கே நான், தமிழகத்தின் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஊர்களை எல்லாம் அப்படியே சிலபொழுது மறந்துவிட்டு ஒரேயொரு ஊரை மட்டுமே நினைக்கிறேன்.

மானா மக்கீன் 21.
அது எது என்பதற்கு கவிக்கோ அப்துற் றகுமான் அவர்களது மனிக்கவிதை உதவுகிறது.
அதனால்தான் ஆரம்பப்பக்கத்திலேயே அலங்கரிக்க வைத்திருக்கிறேன்.
‘அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஜந்தாம் மாநாடு’ எட்டாண்டுகளுக்கு முன் (1990, டிச. 29, 30, 31 உறி. 1411, ஜஆகிர் 11, 12, 13) எங்கே நடந்ததோ அங்கேயே அக்கவிதையை அரங்கேற்றினார் கவிக்கோ.
“கீழக் கரையல்ல, மேலக்கரை” என்றுகூடச் சொல்லி, அதிர்ச்சி கொள்ளச்செய்தார்! பாடலிலும் பதிலையும் வைத்திருந்தார். ‘ஞானத்தின் மேலக்கரை' என்பதை ஆன்மிகப் பாலத்திலும், ‘தமிழின் மேலக்கரை” என்பதை இலக்கியப் பாலத்திலும் நடக்கும்பொழுது நாம் புரிந்து கொள்ளலாம். இப்பொழுது இந்த வரலாற்றுப் பாலத்தில் வேறு சில கடமைகளை முடித்திடுவோம்.
இடையில் என் அபிமானிகள் சிலர், “ஏன் ஒரேயொரு ஊர் மட்டும் உங்கள் நினைவில்?’ என்பர்.
பதிலுக்குச் சிரமமே இல்லை:
தமிழகத்தின் வேறு எந்த ஊருக்கும் அத்தனை நெருக்கம் இலங்கையுடன் இருந்ததில்லை!
அதுதான்! அதுவே தான்!
அவ்வாறே வரலாறு பேசுகிறது. வாணிபம் சொல்கிறது. ஆன்மிகம் அழைக்கிறது. இலக்கியம் இளந்தென்றலாக வீசுகிறது.
முதலில், “மா பர்’ என்ற ஒரு சொல்லைப் புரிந்து கொள்வோமே!

Page 14
S., i
22 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
‘மஃபர்’ அல்லது 'மாபிர்’ என்பது அறபுச்சொல்.
இதற்கு, ‘கடந்து போகிற இடம்’ - பாதை’ - ‘கப்பல்துறை - ‘தோணித்துறை - ‘படகுப் பயணப்பாதை’ என்றெல்லாம் பொருள் கூறுவர். யாக்கூத் என்பவர் (கி.பி.1176 - 1229) இந்தியாவில் கிழக்குக் கடற்கரையைக் குறிக்க, தன் பூகோள அகராதியில் இதைப் பயன்படுத்தினார்.
அறேபியருங்கூட இலங்கைத் தீவிலிருந்து பாண்டி மண்டலத்திற்கு எளிதாகச்செல்ல வாய்ப்பாகவும் சமீபமாகவும் அமைந்த பகுதியினை “மாபர் பிரேதச’ மென வழங்கினர். நாளடைவில் கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலான கடற்கரையை மாபர் என்று பிரயாணிகள் அழைக்கத் தொடங்கினர்.
ஆகவே மாபார் வேறு. மலபார் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கருதக்கூடாது. மாபார் பகுதியின் வரைபடத்தை எதிர் பக்கத்தில் பார்க்கலாம்.
- இந்த ஆய்வுத்தகவல்களை எப்பொழுதோ தந்தவர் ஒரு பெரியவர். ஆனால் இன்று 98லும் 'இளைஞர்; கீழக்கரையின் புகழைப் பாடுவதையே பேச்சும் மூச்சுமாகக் கொண்டவர். ஆம். என் பேனா குறிப்பது எம். இத்ரீஸ் மரைக் காயர் ஹாஜி
Py
அவர்களையே!* ?
இத்தாலியின் வெனீஸ் நகர யாத்திரிகன் மார்க்கோபோலோ (கி.பி. 1254/1324) தன் பயண நூலில் பதிந்திருப்பது இப்படி:
oXo செய்லான் (Ceylon) தீவை விட்டகன்று மேற்கு வழியாக அறுபது மைல் கப்பல் பிரயாணம் செய்தால் “மஃபர்’ என்ற பெரும் நாட்டை அடையலாம். இத்திருநாடு இந்தியாவில் ஒரு பாகமே ஆகும். இது செல்வமும், வளமும் மிக்க நாடாக இருந்துவருகிறது. இந்நாட்டினை ஐந்து மன்னர்கள் அரசு புரிந்து வருகின்றனர். ஆயினும்,
* 2. "தமிழகத்தில் மார்க்கோபோலோ, இப்னு பதுர தா” பக்.26 மே, 1981

23
LDITsics/76 III6)IT
இபுனுபதுதா
LuuløOTÚ LITTØ235ót56ñí
-மார்கோபோலோ * இபுனுபதுதா
700 ஆண்டுகளுக்கு முன் மார்க்கோபோலோவும், இப்னு பதூதாவும் இலங்கையிலிருந்து காயல் - பதன் என்னும் கீழக்கரைக்கு வந்த பாதை. ('மாபர்’ என அழைக்கப்பட்ட பிரதேசத்தையும் கவனிக்கவும்)
படம் உபயம் : எம். இத்ரீஸ் மரக்காயர்.

Page 15
24 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அவர்களில் செந்தர் (சுந்தர்) பாண்டியன் என்றவனே முக்கியமான அரசனாவான். அவன் ஆளும் நாட்டின் எல்லைக்கும் செய்லானுக்கும் (Ceylon) இடையே முத்துக் குளிக்கும் இடங்கள் உண்டு. அது வளைகுடா போல் தோற்றமளிக்கும். அக்கடலின் ஆழம் 10-லிருந்து 12 பாகம் (ஒரு பாகம் 6 அடி) வரையிலிருக்கும். முத்துச்சிப்பிகள் மிகப் பெரும் அளவில் எடுக்கப்படும் இடம் வேதாளை (Betala). இது பெருநிலப் பரப்பில் கடற்கரையில் உள்ளது. அவ்விடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கடல் தொழில் நல்ல முறையில் நடந்து வருகிறது. *
- இதன்படி, அபிமானிகள் தெளிவுபெறவேண்டிய சில உண்டு:
oKo 13-ஆம் நூற்றாண்டு யாத்திரிகர் மார்க்கோபோலோ ‘ஸெய்லான்’ எனப்படும் இலங்கைத் தீவில் தலைமன்னாருக்குப் பக்கத்திலுள்ள 'அரிப்பு? என்னுமிடத்திலிருந்து மேற்குத்திசை வழியாக அறுபது மைல் கப்பல் பயணம் செய்து இந்தியப் பெருங்கண்டத்தின் தென் தமிழகப் பகுதியான தென்பாண்டிநாட்டுத் துறைமுகத்தினை அடைந்தார். அவர்,குறிப்பிடும் ‘செந்தர்பாண்டி’ மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனாவான், ‘பெட்டல்’ என்பது வேதாளைக் கரையைக் குறிக்கிறது. அந்த இடத்திலிருந்து கீழக்கரை கடல்வழியாக இருபது மைல் தொலைவே! (முன்பக்க வரைபடம் காண்க.)
இந்த மார்க்கோ போலோ மறைந்த ஆண்டுக்கு (1324) மறு ஆண்டு (1325) இன்னொரு இளைஞன் உலக யாத்திரை புறப்பட்டான். வட ஆப்பிரிக்காவில் உள்ள தான்ஜியர் என்கின்ற ஊரைச்சேர்ந்த இருபத்தியிரண்டு வயதுடைய இப்து பது தா என்ற முஸ்லிம்
* 3. ''The Travels of Marcopolo - Introduction by John Mansefield
Chapter XX of the province of Maabar. page 350.

மானா மக்கீன் 25
வாலிபனது பயணத்தின் குறிக்கோள்களும். இலட்சியங்களும் இஸலாத்தோடு இணைந்ததாக இருந்தன.
பலநாடுகளுக்கும் சென்றுவிட்டு, பின் இலங்கை வந்த இப்னு பது தா, அங்கு சில நாட்கள் தங்கி, இந்தியா புறப்பட்டான். செல்லும் வழியில் கப்பல் பழுதாகி ஆத்துக்காடு வந்தடைந்தான். அங்கிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள “பதன்’ என்கிற கீழக்கரையைக் கேள்விப்பட்டு நேருக்குநேர் காணவும் செய்கிறான்.
அவன் அங்கே கண்ட சிறப்பையும் இயற்கைத் துறைமுகத்தைப் பற்றிய குறிப்பையும் தமிழ்ப்படுத்தி தந்துவிட விருப்பம். * ‘. பதன் அழகியதொரு கரையோரப்பட்டனம். ஓர் அற்புதமான துறைமுகத்தைக் கொண்டது. உறுதியான மர உத்திரங்கள் மீது கட்டப்பட்ட விதானமண்டபம் (பவிலியன்) உள்ளது. பகைவர்கள் தாக்க வரும் அறிகுறி தெரிந்தால் கப்பல்களை அம்மண்டபத்துடன் பிணைத்து விடுவார்கள். வில் லாளிகளாலும், வீரர்களாலும் இம்மண்டபம் காவல் காக்கப்படுகிறது. எதிரிகள் இலகுவில் கைப்பற்றுவது என்பது நடக்க முடியாதது. ஊரில் பார்க்க அழகான பள்ளிவாசல் ஒன்றுள்ளது. அப்பள்ளியில், நிஷாப்பூர், மஜ்துாப் ஷேக் முகம்மது தர்வேஷ் முப்பது ஃபக்கீர்களுடன் தங்கியிருக்கக் கண்டேன். * *
தமிழ்நாடு, இராமநாதபுர மாவட்டத்திற்கான இந்திய கெஜட்டீரின் 7 ஆம்பக்கப் பதிவில் இவ்வாறு ஒரு குறிப்புள்ளது.
(d
* அறபு நாட்டிலிருந்து துவக்க காலத்தில் வந்த முஸ்லிம்கள் இந்த மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் முதலில் குடியமர்ந்த இடங்கள், குறிப்பாகக் கீழக்கரையும், மற்றும் தேவிப்பட்டினம்,
4. Ibn Battuta - Travels in Asia and Africa. Translated and selected
... by H.A.R. Gibb. P. 263–267

Page 16
26 ಪಿ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
மண்டபம், பாம்பன் உள்ளிட்ட சில இடங்களாகும். இவர்கள் வசிப்பதற்குத் தேர்ந்துகொண்ட இடங்கள் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புக்கு இடையூரில்லாத வசதி கருதியாகும். இதன்பின் தான் இவர்கள் படிப்படியாக இதர இடங்களுக்கும் பரவினார்கள்’.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘அறபு நாட்டிலிருந்து துவக்க காலத்தில் வந்த முஸ்லிம்கள்’ என்ற வரிகள் இலங்கைக்கும் அச்சொட்டாகப் பொருந்திவரும்.
d
* இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரே அறபு தீபகற்பத்திற்கும், இந்தியாவில் மேற்குக் கரைப்பிரதேசம் (கேரளக்கரை) ‘மஃபர்' என அரபிகள் அழைத்த கிழக்குக் கரைப் பிரதேசம், இலங்கைத் தீவு ஆகிய இடங்களுக்குமிடையில் வணிகத்தொடர்புகள் காணப்பட்டன.
பண்டைய அறபியர் பாவா ஆதம் (அலை) மலையும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் கவர்ந்தன. யாத்ரீகர்களாகவும், வணிகர்களாகவும் பெருமளவில் வந்தனர்.
ஏமன் தேசத்திலிருந்து மூன்று சுல்தான்கள் தலைமையில் இலங்கை புறப்பட்டனர். ஒரு கப்பல் வேர்வலைக் கரையைத் தொட்டது. அது, ஹிஜ்ரி 22 கி.பி. 642. அக்கப்பலின் தலைவர் சுல்தான் சத்ருத்தீன் என அழைக்கப்பட்டார். இந்நிகழ்வு இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா ஹஸரத் உமர் (ரலி) அவர்கள் காலமாகும்.
காலி - மாத்தறைப் பெருவழியில் கச்சிவத்தை இடத்தில் உள்ள பண்டையப் பள்ளிவாசல் கட்டப்பட்ட ஆண்டாக ஹி.303 - கி.பி.915 பொறிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான அடக்கத்தல காணியில் காணப்படுகின்ற ஒரு மீசான் ஹி. 425 - கி.பி. 1031-இல் நாட்டப்பட்டுள்ளதை காட்டுகிறது.

மானா மக்கீன் V 27
மேற்படி வேர் வலை, ‘கச் சிவத்தை’ என்ற இரு வார்த்தைகளும், முறையே, ‘பர்பரீன்’, ‘ஹாஜிவத்த’ என்பதன் திரிபுகளாகும் என்பர்.
இலங்கையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அறபுக்குடியேற்றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அல்-பலாளUTCரியின் குறிப்புகள் உட்பட பல வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்குடியேற்றங்கள் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக துறைமுகங்களை அணிந்ததாகக் கொண்டே அமைந்திருந்தன. இந்தக் கரையோரத் துறைமுகங்ககளைப் பொறுத்தளவில் ஆரம்பகாலப் பிரிவில் தாந்தை, திருகோணமலை போன்ற மேற்குக் கரையோரத் துறைமுகங்களும் முக்கிய இடத்தை வகித்தமையை வரலாற்று ஆவணங்களும் சிலாசனக் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 758 வாக்கில் (எட்டாம் நூற்றாண்டில்) மிகப்பெரிய முஸ்லிம் வணிகர் குடியிருப்பு இலங்கையில் இருந்ததாகத் தெரிகிறது.*
இந்த வணிகத் தொடர்பு காரணமாக, காயல்பட்டனம், கீழக்கரை ஆகிய பிரதேசங்களிலும். இலங்கையில் கேையாரப் பகுதிகளிலும் அறபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன.
இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர், கலாசார, பண்பாட்டு உறவாக வளர்ச்சி அடைந்தது. * °
'வரலாற்றுப் பாரம்பரியம்' கட்டுரை. கலாநிதி முனைவர்)
எம்.எ.எம். சக்ரீ 'மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்' - இலங்கை முஸ்லிம் அலுவல்கள் திணைக்கள இலாகா) வெளியீடு 1995 (լ /&. 28)
அறபுத்தமிழின் தோற்றமும் அதன் பன்பாட்டுப் பாரம்பரியமும்
என்ற ஆய்விலிருந்து கலாநிதி முனைவர் எம்.எ.எம். சக்ரீ இலங்கை, 'தினகரன்' வாரமஞ்சரி 1992, நவம்பர் 2/

Page 17
28 } இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
- இக்குறிப்புகளை அடியொற்றி, மற்றொரு இலங்கை ஆய்வாளரும், கல்வித் துறையில் உயர்பதவி வகித்தவரும், பிரபல எழுத்தாளருமான முகம்மது சமீம் அவர்களும் பின்வரும் குறிப்புகளைத் தந்திருக்கிறார்கள்: * பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் இந்து சமுத்திரத்தில் அறபியர்களின் வர்த்தகம் மேலோங்கியிருந்தது. சீனாவில் ஆன்டன் பிரதேசத்திலும், மலாயாவிலும், இந்தோனேஷியாவிலும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அறபுக்குடியேற்றங்கள் தோன்றின. இப்படித் தோன்றிய குடியேற்றங்கள்தான் காலியிலும், பேருவளையிலும், புத்தளத்திலும் முஸ்லிம் கிராமங்களாக வளர்ந்தன.
* அறபியர்கள் இலங்கைக்கு எக்காலப் பகுதியில் வந்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எவ்விதக்கருத்து வேறுபாடும் இல்லை. சர் அலெக்சாந்தர் ஜோன்சன் என்பவர், முஸ்லிம்கள் எட்டாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் சர் எமர்சன் தெனன்ட் என்ற வரலாற்றாசிரியர் அறபியர்கள் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று கூறுகிறார். ஆகவே, கணிசமான அளவில் அறபியர்கள், எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இலங்கை வந்தடைந்தார்கள் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. அற பியர்கள் தென்னிந்தியாவுடனும் இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இக்கால பகுதியில் இலங்கைக்கு வந்த வர்த்தகர்களின் பிரயாணக் குறிப்புகளிலிருந்து நாம் அறிய முடிகிறது.
* இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடன் அதிகமாகத் தொடர்பு வைக்கத் தொடங்கினார்கள். வர்த்தகம் காரணமாகத் தென்னிந்திய முஸ்லிம்களுடன்

மானா மக்கீன் 29
வைத்த தொடர்பு நாளடைவில் அவர்களுடைய மொழியாகிய தமிழையும் தமது தாய்மொழியாக இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு மதமும் ஒரு காரணம். * 7
இந்தவகையில், அக்காலத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த அறபியர் ஒருவரையும் அவரது மைந்தரையும் பற்றித் தெரிவிக்க வேண்டியது கடமையாகிறது. அந்த மகனை இலங்கையுடனும் தொடர்புபடுத்தி இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
ஸையிது ஜமாலுத்தீன் (ஈரானின் கீஷ் தீவில் சிற்றரசர்) என்பவருக்கும் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னருக்கும் (கி.பி. 1268-1310) வணிக உறவு ஏற்பட்டது. பாண்டியனுக்குத் தேவையான ஆயிரமாயிரம் குதிரைகளைக் கொடுத்து, மிளகு, முத்துக்கள் எனப் பண்டமாற்று செய்து சுல்தான் தொழில் புரிந்தார். இவருடைய முக்கிய வணிக கேந்திரம் டகீழக்கரையாக அமைந்திருந்ததோடு, ஏற்றுமதித் துறைமுகமாகவும் - அமைந்திருந்தது. அவரது புதல்வர் தகியுத்தீன் அங்கேயே நிலையாக தங்கி தந்தையின் தொழில் தொடர்புகளை மேம்படுத்தினார். பின்னர், பாண்டிய மன்னனின் படைத்தளபதியாகவும், கடல்பகுதி சுங்கக் காவலராகவும், அமைச்சராகவும், அதையும்விட மேலாக பாண்டிய மன்னனின் வம்சத்திலேயே பெண்ணொருத்தியை மணம் முடித்தார். 'ஆறாம் பாண்டியன்’ எனவும் பெயரெடுத்தார். *
* 7 முஸ்லிம் சிறுபான்மை இனம் இலங்கையில் தோன்றிய வரலாறு -4 ஆம் கட்டுரை ('ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' - நூல்) இலங்கை முகம்மது சமீம் பக். 71-73)
* 8. (அ) "சீதக்காதி திருமண வாழ்த்து’ - 47 - 48 - 49 - 50 - 51 - 55
ஆம் இலக்க கண்ணிகள்) (ஆ) கீழக்கரை, சேகாதி நெய்வார் புலவர் பாடிய திருமணக் காட்சியில் ஒரு பாடல். (1711 - ஆம் ஆண்டில் பாடப்பட்டதாக கேப்டன் என்.எ. அமீர் அலி குறிப்பு, வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும் நூலில் 88-ஆம் பக்கத்திலும், பாடல் 205-ஆம் பக்கத்திலும்)

Page 18
30 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அவர், கீழக்கரையிலிருந்து ஆட்சி புரிந்தவாறு, பாண்டிய மன்னனைப் பகைத்த இலங்கை வேந்தனை புத்தளத்தில் வீழ்த்தி, வட-இலங்கை ஆரிய சக்கரவர்த்தி ஒருவனை அரியாசனத்தில் அமர்த்தினார். * ?
ஆனால், தற்கால சிறந்த ஆய்வாளருள் ஒருவரும், “வரலாற்று ஆய்வுச்சுடர்’ என்னும் பெயர் பெற்றுள்ளவரும், அண்மையில் இலண்டன் மாநகர் சென்று ஆய்வுப் பணிகள் மேற்கொண்டவரும், புதுகை என்கிற புதுக் கோட்டை அருங்காட்சியாகக் காப்பாட்சியரும், “தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்திருப்பவருமான அன்பருள் அன்பர் ஜெ. ராஜா முகம்மது அவர்கள் இந்நூலுக்காக எனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கிய சில குறிப்புகளை இங்கே சமர்ப்பித்தல் என் கடமையாகிறது.
08 சையது ஜமாலுத்தீன் குறித்த தகவல், வரலாற்றாளர் வஸ்ஸாபின் குறிப்பில் மட்டுமே உள்ளது. அவருங்கூட இந்தியாவிற்கு வந்தவரல்லர். தன் நண்பர்கள் மூலமும் இந்தியா வந்துசென்ற வணிகர் குழாம் மூலமும் கேள்விப்பட்டதை எழுதியிருப்பதாக அவரே கூறியுள்ளார். துணைச்சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
oKo தக்யுத்தீன் படைத்தளபதியாக, ஆறாம் பாண்டியனாக, பாண்டிய மன்னனுக்காக இலங்கை அரியாசனத்தில் ஆரிய சக்கரவர்த்தியை அமர்த்தியது அனைத்திற்கும் துணைச்சான்றுகள் ஏதும் இல்லை. அவை, தொன்று தொட்டு முஸ்லிம் எழுத்தாளர்களால் மட்டும் சொல்லப்பட்டு வரும் செய்தியாக உள்ளது.”
- என அவர் தெரிவிக்கிறார்.
--
A.
8 9. ''Historical Sketches of Ancient Dehkan'- K. V. Subramaniya
İyer. 1917; P.P. 171 - 172.

மானா மக்கீன் 3
என்றாலும் -
* 'ஜமாலுத்தீன் அவர்கள் பாண்டியநாட்டு துறைமுகப்பட்டனங்களில் முக்கியப் பிரமுகராக, ஏற்றுமதி - இறக்குமதி வணிகராக இருந்திருக்கலாம். துறைமுகங்களில் சுங்கக் குத்தகைக்காரராகவும், ஏற்றுமதி - இறக்குமதி குறித்து மன்னருக்கு ஆலோசகராகவும் இருந்திருக்கக்கூடும். இந்த அளவில் அவர் பாண்டிய மன்னரின் அரசவையில் செல்வாக்கு மிக்கவராக இருந்திருக்க வாய்ப்புண்டு’
- எனத் தெரிவிக்கவும் அவர் தவறவில்லை என்பதையும் தகவலாகத்தரக் கடமைப்பட்டுள்ளேன்.
எவ்வாறாயினும் -
இவையெல்லாம் மென்மேலும் ஆய்வுகளை முனைப்பாக
நிறைவேற்றுவதற்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என எடுத்துக் கொள்வோம்.
நல்லது. இப்பொழுது நாம், மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் பீ.மு. அஜ்மல்கான் அவர்களைச் சந்திப்போம்.
அன்னாரிடம் உரையாட ஆரம்பித்தால் இப்படியெல்லாம் வரலாற்று ஆதாரங்களை வகைப்படுத்துவார்கள்:
* பாண்டிய நாட்டின் துறைமுகப்பட்டினங்கள் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் மேலை ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வாணிபத்துக்குக் கேந்திரமாக விளங்கின.

Page 19
: இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அவற்றுள் மிக முக்கியமாக விளங்கியது பவுத்திர மாணிக்கப்பட்டினம் என்னும் துறைமுகமே. அதற்கும் காரணம் இருந்தது.
மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள பவுத்திரமாணிக்கப் பட்டினம், ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடியுடன் முடியும் நீண்டு மெலிந்த தீபகற்பத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது. அதற்கு நேர்வடக்கில் அமைந்துள்ளது தேவிப்பட்டினம் என்னும் துறைமுகம். முந்தியதைத் தென்காயல் என்றும், பிந்தியதை வடகாயல் என்றும் கூட அப்போது அழைத்தனர். இவ்விரு துறைமுகங்களுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் இருபது மைல் மட்டுமே.
அது தமிழகத்தின் ஒரே இயற்கைத் துறைமுகமாக அமைந்திருந்தது. இதனால், பவுத்திரமாணிக்கப்பட்டினமே பாண்டியநாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு வியாபார அங்காடியாக அப்போது சிறந்திருந்தது. * "
இந்த இடத்தில் - அதாவது, இதை எழுதிக்கொண்டிருக்கும்
நேரத்தில் - டெல்லி, “தமிழ்நாதம்” ஒலிபரப்பில் கேட்ட ஒரு தகவலையும் சொல்லிவைக்கிறேன்.
தற்சமயம், அகில இந்தியர்விலும் பதினெட்டு பெரிய
துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களாக 181க்கு மேலும் உள்ளனவாம். (இதிலே, இயற்கைத் துறைமுகங்கள் எத்தனையோ)
சரி. எப்பொழுது இந்தப் பவுத்திரமாணிக்கப்பட்டினம்
“கீழக்கரை” யானது எப்பொழுது என்பதையும் பார்த்து விடுவோம்.
* 10 தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும்
பின்பும் முனைவர் பிமு. அஜ்மல்கான். 1985 பக். 7 - 18

மானா மக்கீன் s 33
“ஏறத்தாழ 370 ஆண்டுகள் முற்பட்டு அமைந்ததாகவே கருதவேண்டும்”
- எனப் பேராசிரியர் கேப்டன் என்.எ. அமீர் அலி அவர்கள் 1983-ஆம் ஆண்டிலேயே தெரிவித்துள்ளார்கள். * '
அந்தவகையில், இப்பொழுது 385 ஆண்டுகள் என்பதாகக் கொள்ள வேண்டும்.
* அரசினர் பதிவேடுகளில் இவ்வூர் பவித்திரமாணிக்க பட்டினம், நினைத்தது முடித்தான் பட்டினம், அனுத்தொகை மங்கலம் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகின்றது, “கீழக்கரை” என்னும் தொடர் “கீழ், 'கரை' என்னும் இரு சொற்களின் இணைப்பாகும். கீழ் என்பது கிழக்கு. கரை என்பது கடற்கரை. இன்றைய கீழக்கரையை யொட்டிய பகுதி முற்காலத்தில் மூன்று பிரிவுகளாக அமைந்திருந்தது. மேலக்கரை, கீழக்கரை, கேணிக்கரை என அவை அழைக்கப்பட்டன. முன்னைய இரு பகுதிகளும் கப்பல்கள் வருவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் ஏற்ற வசதிகளைப் பெற்றிருந்தன. கேணிக்கரையோ பயணிகளுக்கும் பிறருக்கும் தேவையான தண்ணிர் வசதிகளை உடையதாக இருந்தது. காலப்போக்கில் மேலக்கரையிலிருந்து கடல் உள்வாங்கிச் சென்றதால் அப்பகுதியிலுள்ள துறைமுகம் அழிந்தது. அதற்குப்பின் கீழ்க்கரை மட்டுமே அப்பெயருடன் துறைமுகப் பகுதியாக நிலைத்தது. கீழக்கரையில் மிக வசதியான துறைமுகம் இருந்தது பற்றியும் அதுவே ஜேம்ஸ் என்னும் போர்க்கப்பல் பழுது பார்ப்பதற்குப் பொருத்தமான இடமென்றும்
* 11. வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும் - பேராசிரியர் கேப்டன்
என்.எ. அமீர் அலி 1983 பக்.28

Page 20
34 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஆங்கிலக் கும்பினியார் தங்கள் பதிவேடுகளில் குறித்து வைத்துள்ளனர். * ?
- என மேலும் அவரே பல விவரங்களை அறியத்தந்துள்ளார்.
எனினும்,பவுத்திரமாணிக்கப்பட்டினம் என்று மேலும் சில ஊர்களும் தமிழகத்தில் அழைக்கப்பட்டு வருகின்றன என்பதும் பேருண்மை.
கீழக்கரையை வகுதை, காயல் என அழைப்பது பிற்கால மரபு. (சீதக்காதி நொண்டி நாடக இலக்கியத்தைப் புரட்டினால், ‘வகுதைவாழ் அவுதுல் காதிரு பிள்ளை (156), என்றும், “காய்லின் விசயரகுநாத பெரியதம்பி’ (157) எனவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் பல பெயர்கள் உள்ளன. இலங்கைக்கும் இவ்வாறே. இந்த வரலாற்றுப் பாலத்தின் 53-ம் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளேன்.
ஆக, இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட கீழக்கரை, உலக வரைபடத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டைக் குறித்திருக்கும் இடத்தில் கீழ்முனையில் இன்று காணப்படுகிறது. (அட்டைப்படத்தை மறுமுறையும் நோட்டமிடுக).
இ ன் னெ ரீ ரு வ  ைக யி ல் தெரிவிப்பதெனில், இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம் என்ற நகரம் சுமார் ஐம்பது கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து தெற்கே, பதினாறு கி.மீ. தொலைவில் கீர்த்திமிகு கீழக்கரை உள்ளது.
இவ்வாறு, அறபுவழித்தோன்றல்களான முஸ்லிம் சமுதாயம், கீழக்கரை போன்ற பல கரைகளிலும், இலங்கையின் பல இடங்களிலும் பண்பாட்டு ரீதியிலும் பலதொழில் ஈடுபாட்டிலும் இருந்ததற்கு
* 12. "வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும்' - பேராசிரியர் கேப்டன்
என்.எ. அமீர் அலி 1983 பக். 28

மானா மக்கீன் 35
இடையூறு பதினாறாம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே - நானூறு
ஆண்டுகளுக்கு முன்பே - ஏற்பட்டுப் போய்விட்டது.
0. தமிழகக்கரையோர முஸ்லிம்களுக்கு 150 - 1575
* இலங்கை தென்பகுதி முஸ்லிம்களுக்கு 1505 - 1656
Xo வட்புலத்து யாழ்ப்பாணத்
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் 1621 - 1658
அந்நிய ஆக்கிரமிப்பு என்பதா, அயல்நாட்டார் ஊடுவல்
என்பதா, எப்படி எழுதினாலும் சரியே,
ஏற்பட்டுப் போயிற்று - முதன்முதலாக
சோதனை மேல் சோதனை உண்டாயிற்று முஸ்லிம்களுக்கு
“போர்ச்சுக்கீசியர் போக்கிரிகள்” என்று புலம்பினர் தமிழக முஸ்லிம்கள் - குறிப்பாக, கீழக்கரை, காயல்பட்டினவாசிகள்.
“போர்த்துக்கேயர் பொல்லாத அட்டூழியக்காரர்கள்’ என அலட்டினர் இலங்கையில்.
‘போர்ச்சுக்கீசியர்’ அல்லது ‘போர்த்துக்கேயர்’ என அழைக்கப்பட்ட அந்நியர், அந்தக்கரையில் (தமிழ்நாடு) சுமார் 74 ஆண்டுகளும், இந்தக்கரையில்; தென்புல இலங்கைப்பகுதிகளில் 151 ஆண்டுகளும், வடபுல யாழ்ப்பாணத்தில் 37 ஆண்டுகளும் அட்டையாக ஒட்டி இயற்கை வளங்களை - உற்பத்திகளை உறிஞ்சினார்கள். ஆன்மிக உணர்வுகளுக்கு அணையிட்டார்கள். பண்பாட்டு விழுமியங்களை வெட்டிப்புதைத்தார்கள்.

Page 21
36 f இலங்கை - கீழக்கரை இனிய தொட்ர்புகள்
“இலங்கையர் பட்ட அவதி அவ்வளவு இவ்வளவில்லை.
தமிழ்நாட்டவரைவிட அதிகமதிகம்”
- என்கிறார்கள் அஃப்ஸலுள் உலமா முனைவர் தைக்கா சுஜபு ஆலிம் தங்கள் ஆய்வுப் பெருநூலில். * P
இருகரை சமுதாயத்தினருக்கும் ஏற்பட்ட இன்னல்கள் ஒரு வெளிநாட்டு சக்தியுடன் மட்டும் முடிந்ததா என்றால் அதுதான் மிகப்பெரிய துர்ப்பாக்கியம்.
அதன் பின்னும் ஹாலந்திலிருந்து ஒரு கூட்டம் கப்பல் கப்பலாக இறங்கியது. (1656 - 1796)
அவர்களை டச்சுக்காரர்கள்’ என்றும் 'ஒல்லந்தார்’ என்றும் பெயரிட்டனர் இந்தியர். (பரங்கிப்பேட்டையில் இன்றைக்கும் 'ஒல்லந்தார் தோட்டம்’ என அவர்கள் அமைத்த சாயத்தொழிற்சாலை அழைக்கப்படுகிறது). இலங்கையிலோ 'ஒல்லாந்தர்’ என்றனர்.
16 5 6 - ઊ do, போர்ச்சுகீசியரிடமிருந்து கொழும் பைக் கைப்பற்றிய பின், 1658-இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினர்.
சேதுநாட்டு இராமநாதபுரம்) அரசர், திருமலை சேதுபதி (1646 - 1678) மன்னரோடும் ஒப்பந்தம் ஒன்று செய்துகொண்டனர். (அதில் மன்னரை ‘தேவர்’ எனக்குறித்தனர்.)
இதன் பின்னர் தன் சுயலாபத்திற்காக, போர்ச்சுக்கீசியரிலிருந்து ஒரு மாறுபட்ட கொள்கையைப் பின்பற்ற விரும்பினர். மதத்திலும் மார்க்கத்திலும் வர்த்தகத் தொடர்புகளிலும் ‘ஈவுசோவாக
v. 13. Arabic, Arwi And Persian in Sarandib And Tamil Nadu - Chapter 3. Article: 'Portuguese Devastation In Sarandib - By: Afdalus Ulama Dr. Tayka Shu 'ayb Alim. P. 29.

மானா மக்கீன் 37
நடந்துகொள்ளத் தலைப்பட்டனர். இலங்கை முஸ்லிம்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மார்க்க நடைமுறைகளை பேணலாம் என்று அனுமதித்து அதிசயம் புரிந்தனர்!
அதேநேரத்தில், கீழக்கரையில் இவர்களது ஊடுருவல், ஒரு நல்ல வர்த்தக கேந்திரத்தையும் சக்திமிக்க கடற்படைத்தளத்தையும் அமைப்பதில் முடிந்தது. * "
1670 - களில் இந்திய - இலங்கை கடல் வாணிபத்தின் ஏகபோக உரிமையும் அவர்களுக்குப் போய்விட்டது.
1689 - 6) நாகப் பட்டினம் தலைநகராகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
மேலும், திருமலை சேதுபதி மன்னருடன் (1656 -இல்) செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் போலவே, செல்லமுத்து விசயரகுநாத சேதுபதியுடனும் (1759-ல்) ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அதன்மூலம் கீழக் கரையில் ஒரு நெசவு ஆலையையும், ஒரு பண்டகசாலையையும் அவர்களால் அமைக்க முடிந்தது. *
இந்த ஒப்பந்தத்திற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் கீழக் கரையில், யுத்த தளவாடங்களும், வெடிமருந்துகளும் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் கட்டிக்கொண்டதற்கு ஆதாரங்கள் இலங்கைப் பதிவேடுகளில் உள்ளன. (“பாட்டரி தெரு’ என்றே ஒரு வீதி கீழக்கரையில் இருக்கிறது). * "
w 14. Arabic, Arwi And Persian in Sarandib And Tamil Nadu - Article: Dl - “Dutch Strategy" - By: Afdalul Ulama Dr. Tayka Shu'ayb Alim. P. 39.
* 15. Lenin Social and Historical Research Institute - (Mana Madurai
1984) P. P. I64 & 165 -
w 16. Selections from the Dutch Records of the Government of Ceylon.
No. 4. Memoir of John Gideon Loten. Government of Ceylon. PP. I5 - 19.

Page 22
38 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இத்தனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொண்ட டச்சு ஊடுருவிகள், கீழக்கரை - இலங்கை முஸ்லிம்களுக்கு இடையில் ஓர் இணைப்பு பாலமாகவும் செயல்பட்டு ‘மாயாஜாலம்’ புரிந்தனர்! இரு பகுதி முஸ்லிம் சகோதரர்களது சமூக - பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
முக்கியமாக ஒன்றைச் செய்தார்கள் :
சன்மார்க்க அறிவு பெற இலங்கைச் சோனகர்களை தங்களது (பாய்மரக்) கப்பல்களிலேயே கீழக்கரைக்குக் கொண்டு வந்தும் இறக்கினர்! * 17
இந்த இடத்தில் கீழக்கரை மண்ணில் மனிதப்புனிதர்கள் சிலர் மனக்கண்களில் தென்படுகின்றனர்.
அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு 300 - 350 ஆண்டுகளுக்குப் பின்னர் உழன்று கொண்டிருக்கிற நமக்கு எப்படியோ எந்த வகையிலோ அவர்களை ஓரளவுக்குத் தெரியும்.
இங்கே, இலங்கை - கீழக்கரை தொன்மைத் தொடர்புகளில், அவர்கள் பலரது பங்களிப்பு பலநூறு எனத் தெரிவிப்பதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் நான் அடைவதைவிட என் தமிழ் பேனாவுக்கு அதிகம். Y ・
மேலும், அவர்களுள் கணிசமானோர் "கடல் வேந்தர்? களாகவும் திகழ்ந்துள்ளனர்.
& 17. 'Arabic/ Arwi And Persian In Sarandib And Tamil Nadu - Chapter 3. Article: “Dutch Strategy" - By: Afdalul Ulama Dr. Tayka Shu'ayb Alim. P. 4I.

மானா மக்கீன் 39
முக்கியமாக, “பெரியதம்பி மரக்கர்யர்’ குடும்பத்தினரைக் கண்டாகவேண்டும்.
என் உதவிக்கு பல ஆவணங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் அன்பருள் அன்பர் ஜெ. ராஜா முகம்மது அவர்கள். நான் ஏற்கெனவே அறிமுகம் செய்த புதுகை ஆய்வாளர்.
அன்னார், மரக்காயர்கள்’ பற்றிய ஆய்வுகளிலும். ‘போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் ஆவணங்களிலும் மூழ்கி முத்துக்குளித்துக் கொண்டிருப்பவருங்கூட
* டச்சு ஆவணங்கள் பெரியதம்பி மரக்காயர் குடும்பத்தினர் குறித்த விவரமான செய்திகளைத் தெரிவிக்கின்றன.
சேதுபதி மன்னர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏற்பட்ட வணிக ஒப்பந்தங்களில் சீதக்காதி மரக்காயர் குடும்பம் பற்றிய பல அரிய செய்திகளும் தெரிய வருகின்றன. “பெரியதம்பி’ என்பது ஒரு தனிமனிதரின் பெயரல்ல. அவர்களது குடும்பப் பட்டப்பெயர் இது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த பலபேருக்கு இப்பெயர் இருந்துள்ளது. டச்சுப் பதிவேடுகளில் 1682 முதல் 17 15 வரை மூன்று பெரியதம்பி மரக்காயர்கள் குறிப்பிடப்படுகின்றனர். (முதலாவது, பெரியதம்பி சுல்தான் அப்துல் காதர், இரண்டாவது, ஷேக் அப்துல் காதிர், மூன்றாவது, மாமுநைநா முகம்மது அப்துல் காதிரி ஒருவர் 1698 - ல் இறக்கிறார். இன்னொருவர் மேலும் பத்து ஆண்டுகள் (1708) கழித்து இறக்கிறார். இவர்களுள் இரண்டாமவர், ஷேக் அப்துல் காதர் என்ற செய்தக்காதிரு மரக்காயர் என்னும் சீதக்காதி ஆவார்.

Page 23
40 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
- என, 14-7-96 அன்று, ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்திய ‘சேதுநாட்டு கருத்தரங்கில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையில் முழங்குகிறார் பெருமதிப்பிற்குரிய 'ஜெ.ரா’.
முன்னரும், முக்கியமானவொரு ஆய்வுத்தொகுப்பிலும் தந்திருக்கிறார். * 18
அவர்தம் ஆய்வுத்தகவலில் “1682 முதல் 1715 வரையிலான பதிவேடு’ எனத் தெரிவிக்கிறார் அல்லவா! அத்துடன், இன்னொரு முக்கியத் தகவலையும் தந்துள்ளார்.
அதன்படி, 1682 - ல் தான் “பெரியதம்பி மரக்காயர்’ என்ற பெயரே டச்சுப்பதிவேடுகளில் குறிப்பிடப்படுகிறதாம். அதே கால கட்டத்து ஆங்கிலேயர் பதிவுகளிலும் அவ்வாறே காணப்படுகிறதாம். * "
அன்றையத் தமிழகப்பகுதியில், முஸ்லிம் சமூகத்தில், பெரியதம்பி மரைக்காயருக்கு முன்னும் பின்னும், அவர்போன்று அரசியல் செல்வாக்குடன் கூடிய பெரும் கப்பல் வணிகர்கள் எவரும் இருக்கவில்லை என்பதற்கு மாபெரும் சான்றாக பின்வருவனவற்றைப் பாருங்கள், அபிமானிகளே!
* கேப்டன் என்.எ. அமீரலி அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பேயே பதித்திருக்கிறார்கள் இப்படி:
* 1686 டிசம்பர் 2, 9 - 1687 ஜனவரி 13, 30 ஆகிய நான்கு தேதிகளில் வெளியான ஆங்கில கம்பனியாரின் கூட்ட
* 18 1990 டிசம்பர் 29-30-31 தேதிகளில் கீழக்கரையில் நிகழ்வுற்ற,
அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்தரங்கக் கோவை தொகுப்பு. பக். 320
* 19. Tamil Nadu Archives - Diary and Consultation Book, Agent
and Governor in Council of Fort Saint George, 1682 (ed) Arthur. T. Prigle, Madras 1894 PP-81 - 88.

மானா மக்கீன் 41
அறிக்கைகளில் கீழக்கரை பெரியதம்பி மரக்காயர் என்னும் சீதக்காதி பற்றிய குறிப்புகள் உள்ளன. * *
ஆக, ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது.
வள்ளல் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டுப் பிற்பகுதிதான் என்பது.
இராமநாதபுரம் கெஜட்டீர் 106 - ஆம் பக்கமும் இதையே சொல்கிறது.
இலங்கையுடனான அவரது தொடர்புக்கும் நல்ல தெளிவு.
'வாணிபம்’ என்ற அடுத்த பாலத்தில் நடைபோடும் பொழுது நிறைய நிறைய விவரங்கள் நமக்குக் காத்திருக்கின்றன.
ஆனால், அன்னார் எந்தெந்த ஆண்டுகளில் வாழ்ந்தார் என்பதை மட்டுமே அனுமானித்துக் கொள்ள வேண்டியதுள்ளது. அதற்கு உதவி புரிய, அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக வரலாறு சொல்லும் ஐவரது காலங்கள் ஓரளவு துணை வரும் என்று நான் கருதுகிறேன்.
இந்தப்பட்டியலைப் பரிசீலியுங்கள் :
(X- மாதிஹ"ர் ரசூல், ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா
- ஹி. 1042-115 / கி.பி. 1632 - 1703
08 இலங்கை, கண்டி மன்னன் இரண்டாம் ராஜ சிங்கன்
- S.G. 1635 - 1687
* 20 ‘வள்ளல் சீதக்காதி வாழ்வும் காலமும்' - பேராசிரியர், கேப்டன்
என்.எ. அமீரவி 1983. பக். 56.

Page 24
42 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ex- டச்சு (ஒல்லாந்து) க்காரர்கள்
- 8ી.LSો. 1656 - 1796
• இராமநாதபுர அரசர் (கிழவன்) ரகுநாத சேதுபதி
- i.G. 1674 - 1710.
• இலங்கை, கண்டி அரசன் (இரண்டாம்) விமலதர்ம சூரியன் (இரண்டாம் இராசசிங்கனின் மைந்தன்)
- é8.toil. 1687 - 1707.
மேற்கண்ட ஐவர் காலங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கிறபொழுது, 1640-ஐ ஒட்டிய காலத்தில் தோன்றி, 1710-க்கும் 1720-க்கும் இடைப்பட்ட காலத்தில் மறைந்திருக்க வேண்டுமென்று கொள்வதே பொருத்தமாக உள்ளது. * *
நாம், இப்பொழுது, அந்த நான்கு தேதிகளிலும் (1686, டிச. 2, 9 - 1687 ஜன. 13, 30) டச்சுக்காரர்கள் கூட்டிய கூட்டங்களில் என்ன தீர்மானங்கள் நிறைவேறின என்பதைப் பார்ப்போம்.
முதல் மூன்று தேதிகளின் அறிக்கைகளில், (பெரியதம்பி ஆகிய சீதக்காதி மரக்காயருடன் டச்சுக்காரர் நடத்திய) மிளகு வர்த்தக ஆலோசனைகளையும், செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் தெரிந்துகொள்ளும் அதே சமயத்தில் - கடைசியான தேதியில் - (1687, ஜன30) - பெரியதம்பி (சீதக்காதி) மரக்காயர் மூலமாக இலங்கை, கண்டி அரசனிடம் ஆகவேண்டிய ஒரு முக்கிய விடயம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் தெரிய வருகிறோம்.
என்ன அதிசயம் இது
*21.(அ)வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் வாக்கும்' - பேராசிரியர் கேப்டன்
என்.எ. அமீர் அலி 1983 பக்.62.
(g) 'Arabic, Arwi And Persian in Sarandib And Tamil Nadu - 'Abdul Qadir Vallal Seethakkathi"-Afdulul Ulama Dr. Tayka Shu'ayb Alim (P.508)

மானா மக்கீன் 43
ஒரு தமிழக (கீழக்கரை)ப் பிரமுகருக்கு வெளிநாட்டு அரசனுடன் அந்தளவுக்குத் தொடர்பா என வியக்க வைக்கும் இப்பதிவு மிக உண்மையே!
நெருக்கமாக இருந்த அரசன் யார் என்ற அவா ஏற்படும்பொழுது, இரண்டாம் இராசசிங்கனும், அவன் மகன் இரண்டாம் விமலதர்மசூரியனுமே வருவார்கள். வரவேண்டும். இவர்களது காலங்கள் முன்பக்கத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
ஆனால், ஆவணப்பதிவு பெயரைக் குறிக்காமல், 'சிறை வைத்த கண்டி அரசன்’ என்று மட்டுமே சொல்வதால், நாமேதான் காலக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு மேலதிகமாக இதையும் தேடவேண்டியதிருக்கிறது! (ஏற்கெனவே நம் கண்களில் வேறொன்றும் உண்டு) w
அந்த வகையில், ஏற்கெனவே குறிப்பிட்டபடி, 1635 - 1687 ஆண்டுகள் தந்தைக்குரியன. 1687 - 1707 தனயனுக்குரியன. இதன்படி, டச்சு ஊடுருவிகள் கண்டி அரசனது உதவியை வள்ளல் அவர்கள் மூலம் பெறத் தீர்மானித்தது 1687 பிறந்த முதல் மாதத்தில் - முப்பதாம் நாளிலே.
அவ்வாறாயின், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை அதற்கு முந்திய ஆண்டிலேயே இரண்டாம் இராசசிங்கன் அரசாண்டபொழுதே முனை விட்டிருக்க வேண்டும்.
அப்படி என்ன்தான் பிரச்சினை எனப்பார்த்தால் -
மலையகமாம் கண்டியிலோ அல்லது வேறொரு இடத்திலோ ஏதோவொரு குற்றத்திற்காக ஆங்கிலேயர் சிலரை - (ஐவர் எனக்குறித்துள்ளார் முனைவர் தைக்கா கஜபு ஆலிம் அவர்கள் தன் ஆய்வுப் பெருநூலின் 798-ஆம் பக்கத்தில்) - அரசன் சிறை வைத்தான்.

Page 25
44 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அப்பொழுது இந்திய - இலங்கை வாணிபத்தில் ஏகபோக உரிமை கொண்டிருந்த டச்சு ஊடுருவிகள், எத்தனையெத்தனையோ வேண்டுகோள்கள் விடுத்தும் கைதிகளை விடுவிக்க இணங்கினான் இல்லை.
இறுதியில் கண்டி அரசனுக்கு நெருங்கியவர்கள் யார் என்று பார்க்கிறபொழுது, வணிகவேந்தரும், வள்ளல் பெருமகனுமான பெரியதம்பி மரக்காயர் (சீதக்காதி) தான் என்பதைப் புரிந்தனர். கூட்டம் கூட்டி தீர்மானித்து அவர்தம் உதவியை நாடினர். வள்ளலும் இசைந்தார். ஆனால், அதற்குள் மன்னன் மரணிக்க, மகன் அதே ஆண்டில் (1687) அரியாசனம் ஏறினான். தந்தையிடமிருந்த செல்வாக்கை தனயனிடமும் வள்ளல் செலுத்தினார். அவனும் அவரது வார்த்தைக்கு செவிசாய்த்தான். கைதிகள் விடுதலையாயினர்.
வள்ளலுக்கு நன்றி செய்ய நாடியது கிழக்கிந்தியக் கம்பெனி தன் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து கடிதம் எழுதியதோடல்லாமல், வள்ளலின் மிளகு ஏற்றுமதிக்கு இங்கிலாந்து நாட்டில் இறக்குமதி வரி பெறக்கூடாது எனவும் சலுகை வழங்கியது. இக்கடிதத்தில் கையெப்பமிட்டுள்ளவர், ஆளுநர் எலியாகு ஏல்.* ?
மேலும் -
வள்ளல் அவர்களுக்கு இவ்விரு அரசர்களுடனான தொடர்புகளை, முதுபெரும் புலவர் பனைக்குளம் மு. அப்துல் மஜீது அவர்களின் மூலமாகவும் அறிய முடிவதில் ஆனந்தம் மிகவாக ஏற்படுகிறது.
* 22'சிட்டி கூரியர் - (போர்ட் செயின்ட் ஜார்ஜ் கெஸட்டுக்கு முன்னோடியான பதிவேடு) - கிழக்கிந்தியக் கம்பெனியார் 1690 - ஜனவரி 30

மானா மக்கீன் 45
ox சீதக்காதியின் வங்கங்கள் (மரக்கலங்கள்) முதல் தடவையாக இலங்கை சென்றபொழுது கண்டி மன்னர் உத்தரவுப் படி குண்டுகள் போட்டு மரியாதைக செய்யப்பட்டது. * *
- என்றும்.
0x8 ‘சீதக்காதியின் கொடைத்திறனையும் தமிழ்ப்பற்றினையும் கேள்விப்பட்டு இதயம் பூரித்துப்போன கண்டி அரசர் விமலதர்மசூரியர் அவருக்குச் சிறப்புக்குரிய வரிசைகள் அனுப்பி இருக்கிறார்.”* *
- என்றும் எழுத்தில் பதித்திருப்பது வரலாற்றின் வைரமணிகளாக மின்னுகின்றன.
புலவர் அவர்களது முதல் குறிப்பு, இரண்டாம் இராசசிங்கனைக் காட்டுவதாகவே அமைய முடியும். மற்றது. (அவரே குறிப்பிடுவது போல) விமலதர்ம சூரியனே!
இதைப்போலவே, இன்னொரு கீழக்கரைவாசியும் இலங்கை வரலாற்றுடன் சம்பந்தப்பட்டு ஒரு பெரும் சரித்திரப் புருசராகத் திகழ்வதையும் தெரிவிக்க இந்த இடமே பொருத்தம்,
அவர், லெப்பை நெய்னார் மரக்காயர் (ஹி. 1105-1851கி.பி. 1693-1772).
வள்ளல் சீதக்காதி அவர்களுடைய காலத்திற்குப் பிறகு, அவர்தம் வழித்தோன்றல்களாய் பிரகாசித்த பலருள் ஒருவர். இவர், வர்த்தகரும் வள்ளலும் ஆவார்.
* 23 தமிழ்நாட்டு இஸ்லாமிகப் புலவர்கள்’ - பனைக்குளம் மு. அப்துல்
மஜீது புலவர் - 1979 பக். 163
* 24 மேற்கண்ட நூல். பக். 167

Page 26
46 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அருட்செல்வராகவும், ஆத்ம ஞானியாகவும் துலங்கிய மாமேதை செய்கு சதகத்துல்லா அப்பா (வலி) அவர்களது மகளார் (சாரா உம்மா) வயிற்றுப் பிள்ளையும், தற்சமயம் நம்முடன் வாழ்ந்து நல்லறிஞராக ஆன்மிகத் தொண்டாற்றி வரும் முனைவர் தைக்கா சுஜபு ஆலிம் அவர்களது கொள்ளுப்பாட்டனாரும் ஆவார்.
அன்னார், இலங்கை - பாக்கு நீரிணையில் ஒரு தீவுக்கே சொந்தக்காரராக இருந்திருக்கிறார்!
அதிசயமும் ஆச்சரியமும்
இரண்டுமே!
சிலப்பதிகாரம், மணிமேகலை காவியங்களிலும் இந்தத்தீவு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பு, சுமார்
ஆறேமைல் சுற்றளவு.
சிறந்த நாகரத்தினங்களுக்குப் பெயர்பெற்ற இடமாக இத்தீவு விளங்கிற்று. ரத்தினங்களைப்பெற பல்வேறு சண்டைகள் கூட இடம்பெற்றிருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. **
இன்று இரத்தினங்கள் இல்லை. இதிகாச கதைகள் உண்டு.
இலங்கை, வடபுலத்திலே இருக்கின்ற இதனை, அடியவர்கள் வாழ்வாங்கு வாழ வழிசெய்யும் அன்னை நாகபூஷணி அம்பாள் அருள் கொழிக்கும் தீவு' என தமிழ்ப்பெருமக்கள் உயர் அந்தஸ்து அளித்து அம்மன் தேர்த்திருவிழா நடத்துகின்றனர்.
* 25. நயினை நாகபூஷனி அம்மன் தேர்த்திருவிழா சிறப்புக்கட்டுரை.
'பகிராஜ்' எழுதியது. ('தினக்குரல்" நாளேடு 08 ஜூலை 1998)

மானா மக்கீன் 47
சிங்கள மக்களோ விகாரை கட்டி, ‘நாகதீப" எனப்பெயர் சூட்டி தலயாத்திரை செல்கின்றனர்.
ஒருகாலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடிமக்களாகிய நாகர்களோ ‘நாகதீவு’ எனச்சொல்லி நாக வழிபாடு புரிந்துள்ளனர்.
அப்பொழுது, 'நாகேஸ்வரம் - ‘நாகநயினார் தீவு’ - ‘மணி நாகத்தீவு’ - ‘மணித் தீவு’ - மணிபல்லவம் - மணிபுரி - என்றெல்லாம் பல பெயர்கள்.
ஆனால், நின்று நிலைத்திருப்பது அன்றிலிருந்து இன்றுவரை, ‘நயினா தீவு’ என்பது மட்டுந்தான். ('நெயினார்தீவு’ என்பதன் திரிபு என்பர் ஆய்வாளர் பலர்)
இந்திய அரசின் கெஜட்டீரில் - (1972, பக். 27) - 'பள்ளிவாசல் தீவு’ (MOSQUELAND) என்று குறிக்கப்பட்டுள்ளது. **
இந்த 1998-ஆம் ஆண்டில், இங்கே போகிறவர்களுக்குக் காட்சி கொடுப்பது, நாகபூஷணி அம்மன் கோயிலும், நாகதீப விகாரையும். இறை இல்லமாம் பள்ளிவாசல் ஒன்றும்!
இலங்கை வரைபடத்தில், வடக்கிலே இத்தீவு எங்குள்ளது என்பதைக்காண ஆசை வரும்
- அட்டைப்படத்தில் பார்த்துத் தீர்த்துக்கொள்ளுங்கள்
மன்னார் வளைகுடாவில், பாக்கு நீரிணைப்பகுதியைக் கண்ணோட்டம் இடுங்கள். யாழ் குடா நாட்டில் காரைதீவு - எழுவைதீவு - அனலைதீவு - புங்குடுதீவு - மண்டைதீவு - நெடுந்தீவு - என ஒரே தீவு கூட்டங்களாக இருக்கும். அதில் ஒன்றே இது:
w 26. Arabic, Arwi And Persian in Sarandib And Tamil Nadu - Arwi Overseas'. Afdalul Ulama, Dr. Tayka Shu'avb Alim". 1993 (P. 1 07)

Page 27
48 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஹி. 105 - 1851கி.பி.1693 - 1772 காலத்தை உடைய லெப்பை நைனார் மரக்காயர் அவர்கள், தமிழக இராமநாதபுரத்து சேதுபதி ஆட்சியில் வள்ளல் சீதக்காதி அவர்களது காலத்திற்குப் பிறகு அவர்தம் இடத்தை நிரப்ப முயன்றவர்.
ஒருநாள், வள்ளல் சீதக்காதி அவர்கள், ராமனாதபுரம் மாமன்னர் முன், இரு இளவல்களை அழைத்துச் சென்றார்கள். அவ்விரு செல்வங்களும் யார் என்ற அரசரின் கேள்விக்கு இப்படி பதில் சொன்னார்கள்.
“இவர்கள், எனது சற்குருநாதர் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் திருமகளார் (சாரா உம்மா) பெற்ற செல்வங்கள்! இவ்விருவரில் மூத்தவர், பெரிய மரைக்காயர் என்ற லெப்பை நயினா மரைக்காயர். இளையவர், சின்ன மரைக்காயர் என்ற அப்துல்காதிர் மரைக்காயர். பேரரசே! இவர்கள் தான், எனக்குப் பின்னால் நமது சமஸ்தானத்தில், என்னுடைய பதவியை ஏற்க வேண்டியவர்கள் என்பது எனது ஆசை. என்னுடைய ஆவல், மன்னர் தயவால் நிறைவேறும் என்று கருதுகிறேன்!”
வள்ளல் சீதக்காதியின் உள்ளம் நிறைந்த ஆவல் உடனே தீர்க்கப்பட்டது.
சேது மன்னர் அவர்களும், தமது திருவாயால், ‘பூரீமத் ஹரண்ய கர்ப்ப பாஜி, ரவிகுல, முத்துவிஜய ரகுநாத மார மார்த்தாண்ட பெரிய தம்பி மரைக்காயர்’ என்ற பட்டத்தை அந்த இளவல்களில் மூத்தவரான பெரிய மரைக்காயர் என்னும் லெப்பை நயினா மரைக்காயருக்குச் சூட்டினார்கள்.
அடுத்து, ‘பூரீமத், ஹிரண்ய கர்ப்பயாஜி, ரவிகுல, முத்து விஜய ரகுநாத மார்த்தாண்ட இளைய தம்பி மரைக்காயர்’ என்ற பட்டத்தை, சின்ன மரைக்காயர் என்ற அப்துல்காதிர் மரைக்காயர் ஆலிம் அவர்கட்கும் சூட்டினார்கள்.

மானா மக்கீன் 49
இப்பட்டங்களை வழங்கியதன் மூலம், இராமனாதபுர அரசர் பெருமான், அந்த இரு இளவல்களையும் தனது பெரிய தம்பியாகவும் இளைய தம்பியாகவும் ஏற்றுக்கொண்டார்கள்.
அப்பொழுது அரசரது ஆட்சி இலங்கை வடபகுதியின் சில இடங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தது. முக்கியமாக, மன்னார் - எருக்கலம்பிட்டி - அநுராதபுரம் முதலிய வரலாற்றுப் புகழுக்குரிய ஊர்கள்!
அச்சமயத்தில், இத்தீவுப்பிரதேசம், அவன் ஆளுகைக்குள் வந்திருக்க வேண்டும். தொழில்ரீதியில் விலை கொடுத்து சொந்தமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
. இலங்கையின் பிரபல தமிழ் - ஆங்கில எழுத்தாளரான மர்ஹலம் எ.எ. லத்தீஃப் அவர்கள் உருவாக்கிய ‘இன்ஸான்’ என்ற வார இதழ் பண்ணையில் விளைந்த எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ரஹீம், ("மதுகூரன்) யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலை வெளியிட்டு இவ்வாறு குறிப்புகள் தந்துள்ளார்.
“யாழ்ப்பாணக் குடா நாடெங்கணும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினா (ர்) தீவு, மண்டைத் தீவு, மன்கும்பான், காரைதீவு என்னும் தீவுகளிலும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு.”
X ‘நயினாதீவு, மண்கும்பான், மண்டைதீவு, காரைதீவு ஆகிய இடங்களில் பெரும்பாலும் முத்துக்குளித்தல், அம்பர் பெறல், சங்கு குளித்தல் ஆகிய தொழில்களில் கீழக்கரை இஸ்லாமியரின் செல்வாக்கே மிகுந்திருக்க வேண்டும்”.*?
*27. யாழ்ப்பான முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும். டிச '79 பக்.13-14

Page 28
50 . }్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
‘முத்துக்குளித்தல் - 'அம்பர் பெறல் - சங்கு குளித்தல் என இடம்பெற்றுள்ள வார்த்தைகளுக்கும், வணிக மன்னராகத் திகழ்ந்த லெப்பை நைனார் மரக்காயர் அவர்களுக்கும் எத்தகைய நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
அவர், பல வர்த்தகக் கப்பல்களை வைத்திருந்த வள்ளல். நிச்சயமாக நயினாதீவை முறையோடு சொந்தமாக்கித்தான் இருப்பார்!
மற்றொன்று - கீழக் கரை வாசிகளுக்கென்றே ஒரு “மண்வாசனை’ உண்டு!
மண்ணிலிருந்து பொன் வரை எதுவாகிலும், சூதும் வாதும் புரிந்து அபகரித்தல் என்பதோ, முறையற்ற வகையில் உரிமம் செய்வதென்பதோ அவர்கள் இரத்தத்தில் இல்லாதது.
ஆகவே, ஒரு தீவை கிரயமாக வாங்கிப் பரிபாவிப்பதென்பது அக்காலத்தில் அப்படியொன்றும் கஷ்டமானதொன்றல்ல.
அதுவும், சேதுபதி மன்னன் ஆளுகைக்குள் இருந்த ஒரு தீவு. அவருக்கோ அமைச்சர் பதவி.
மேலும், அவ்வாறு பெற்ற ஒரு தீவிலே, தொழில்துறை வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முஸ்லிம் சமுதாய மக்களின் சன்மார்க்க வாழ்வு சீராக இருக்கவும். செழிக்கவும் என ஒரு பள்ளிவாசலும் அமைத்து, ஓர் அறபுத்தமிழ் (அர்வி) பாடசாலையும் ஆரம்பித்தும் உண்டு. **
& 28. ''Arabic, Arwi And Persian in Sarandib And Tamil Nadu - ''Labbai Nayna Maraikayar ʼ ʼ - Afadalul Ulama Dr. Tayka Shu 'ayb Alim. P. 516-517 (1993).

மானா மக்கீன் 8 5
அத்தோடும் அவர் நின்றிடவில்லை என்பதற்கு இன்னொரு தகவலை, அப்ஸலுல் உலமா, முனைவர், தைக்கா சுஜபு ஆலிம் அவர்களைச் சிறப்பிக்க வெளியிடப்பட்ட மலர் ஒன்றின் கட்டுரையிலும் பார்க்கிறோம்;
* ’. பாக்கு நீரிணையில் தீவொன்றை உடமையாக்கி நெய்னா’ என்ற தன் பெயரையும் இண்ைத்து, ‘நெய்னாதீவு’ என வழங்கச் செய்தார். அங்கே, பள்ளிவாசலைக் கட்டியதோடு, ஒர் இந்துக்கோயிலையும், ஒரு பெளத்த விகாரத்தையும் கட்டுவிக்கச் செய்தார்.’**
அதுவும், ‘நயினாதீவுப் பள்ளிவாச’ லை, “காலத்தால் முந்தியது” என வர்ணித்துள்ளார் எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ரஹீம். 30
அதுமட்டுமல்ல -
* அப்பள்ளிவாசல், கீழக் கரையிலுள்ள பழம்பெரும்
பள்ளிகளின் அமைப்பிலேயே கட்டப்பட்டது. * '
- என அன்பர், முனைவர், பீ.எம். அஜ்மல் கான் அவர்கள் தெரிவித்துள்ளதும் நம் இதயங்களுக்கு இதமாக உள்ளது.
அவ்வாறே அமைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயத்திற்கிடமேயில்லை. தொழில் அதிபர், புரவலர், லெப்பை நெய்னா மரக்காயர் அவர்களது பின்னணி அப்படிப்பட்டதாயிற்றே!
w 29. ''The Secular Tradition of Dr. Tayka shuhaib's Forefathers' - An Article Published in 'Dr. Thaika Shuhaib And His Services - Souvenir, 1994. P. 22.
* 30, "யாழ்ப்பான முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும்” - எம்.எஸ் அப்துல்
ரஹீம் (1979) பக். 131
* 3. "தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும் பின்பும்' - முனைவர் பீஎம். அஜ்மல்கான் (1985) பக். 19

Page 29
52 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இங்கே, ஒரு விடயத்தை வலியுறுத்திக் குறித்துவிட பேனா விரும்புகிறது.
இலங்கை - கீழக் கரை தொன்மைத் தொடர்புகளில் வரலாற்றைச் சொல்லும்பொழுது வாணிபம் வரும்!
வாணிபத்தைக் குறிப்பிடும்பொழுது வரலாறு வரும்!
வில் வண்டி ஒன்றில் பூட்டப்பட்ட இரு காளைகள் போல்
இதுவரையில், அப்படித்தான் எழுத்துக்கள் என்கிற காளைகளை பேனா என்கிற வில் வண்டி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
இழுக்கட்டுமே இன்பமாக என்கிறீர்களா?
மகிழ்ச்சி. நன்றி.
எப்படியோ - V,
எந்தவகையிலுமோ -
கீழக்கரையின் “கூப்பிட்ட குரலுக்கு அல்லது இலங்கையின் அழைப்புக்குச் செவிமடுக்கிற கடலாகவே பிராந்தியமாகவே இந்துப்பெருங்கடல் அன்றும் இன்றும் அலை ஓசையிட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தனைநேரமும், ‘வரலாற்றுப் பாலத்தில் பயணித்த நாம், இந்தளவுக்கு பயணத்தை நிறுத்திக்கொள்ளல் போதுமானது.
ஏனெனில், ஏற்கெனவே தெரிவித்ததுபோல, நான்கு பாலங்களில் பயணிக்க வேண்டிய பொறுப்பில் ஒன்றுதான் நிறைவேறி இருக்கிறது.
எனவே, உடனடியாக 'வாணிபப் பாலத்திற்குள் அழைத்துச் சென்றிட விருப்பம்.
வாருங்கள், நுழைந்திடலாம்.

மானா மக்கீன்
53
இரண்டுக்கும் பெயர்கள். ஒன்றல்ல. இரண்டல்ல.
இலங்கைக்கும் கீழக்கரைக்கும் வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் வாழையடிவாழையாக பல 6)оиЈdfas6ї :- * ‘ஸெய்லான்” - ‘செரந்தீப் - “ஜஸ்ராத் அல் யாகூத்” இரத்தினக்கல் தீவு) - என்றெல்லாம் அறபியர்களால் இலங்கை அழைக்கப்பட்டது. 8 'தப்ரபேனா? - என கிரேக்க ரோமானியர்
அழைத்தனர். * 'ஈழம்" - தமிழ் இலக்கியங்களிலும் தமிழர்
வரலாற்றிலும் இடம்பெற்றிருப்பது. * 'சைலான்” - போர்ச்சுக்கீசியர் வழங்கியது. * 'சிலோன்” - ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. * இப்பொழுது ‘பூரீ லங்கா’ (சிங்களத்தில்), இலங்கை’
(தமிழில்). ‘சிம்ஹளத்வீபம்" - (வடமொழியில்) இதுபோல கீழக்கரைக்கு :-
* "கொற்கை" - "அணுத்தோகை மங்கலம்’ - ‘நினைத்தது முடித்தான் பட்டணம் - “பெளத்திர மாணிக்கப்பட்டினம்’ - ‘வச்சிரநாடு’ - 'வகுதை
- “செம்பி நாடு’ - “கேலிக்கரை" - "கிற்கிராப்பட்டினம்’ - “கிர்க்கிரி" - "காயல்" - "சாயல் நகர் - ‘தென்காயல்’ (ஆனால், "கொற்கை’ என்பது திருநெல்வேலி,
தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்தில் உள்ள ஊராகும் என்பது இப்போதைய ஆய்வாளர்களின் முடிவு)

Page 30
54
வரலாற்றில் தோரணமிடும் துணுக்குகள்.
ஆப்பமும் தேநீரும்பத்து சதம்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் காலைப் பசியாற ரொட்டி, ஆப்பம் ஏதாவதொன்றுடன் சால்னா (ஆணம்) அல்லது ஒரு தேத்தண்ணி இவ்வளவுக்கும் பத்தே பத்து சதம் தான்! பகல் சாப்பாடு 25 சதம் கறி
சாப்பாடு 30 சதம்!
- தகவல் : எம். இத்ரீஸ் மரக்காயர்.
யுத்தகாலத்தில் உணவுக்கப்பல்கள்
முதலாவது உலக யுத்தகாலத்தில் கீழக் கரைப் பாய்மரக்கப்பல்கள் அரிசியையும் நவதானியங்களையும் இலங்கைக்கரைகளில் கொண்டு வந்து இறக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தன. “உணவுக்கப்பல்கள்’ என்றே அழைத்தார்கள்!
இலங்கையில் மரைக்காயர்கள்
இலங்கையில் மரைக்காயர்கள் என்ற பெயர் புத்தளம் மக்களுக்கும் கீழக்கரை மக்களுக்கும் பொது. “மரைக்காயர் வாடி’ என்றே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி புத்தகத்தில் இருந்தது. தென்னிலங்கை - மாத்தறை மாவட்ட்த்தில் “மரைக்காயர்’ என்ற பதம் ஒரு காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற வேர்விலைப்பகுதியில் “மரைக்காயர்’ பெயரின் செல்வாக்கு அன்றும் உண்டு. இன்றும் உண்டு. "மாக்கார்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 

02 AATSwlwÚ WIBIÓ علت

Page 31

57
எண்ட கிளி எங்கிருந்து பேசியதோ
அக்கரைப் பற்றிலேயோ அதற்கங்காலே கரைவாகிலயோ காத்தான் குடியிலேயோ - அவர் கண்டியிலோ நானறியேன் கண்டி கொழும்போ கண்காணாத் தேசமாமோ கீழக்கரையோ - எண்ட கிளி எங்கிருந்து பேசியதோ!
- கிழக்கிலங்கை நாட்டார்ப் பாடல்

Page 32
58
1ெணிபப்பாலத்தில் கால்வைக்க எத்தனிக்கும் பொழுது எங்கிருந்தோ அந்த நாட்டார்ப்பாடல் நம்மை நிறுத்துகிறது. •
அக்கரைப்பற்று - கரைவாகு - காத்தான்குடி - கண்டி - கொழும்பு என்றெல்லாம் இலங்கை ஊர்களை பெண் குயிலொன்று கூவுகிறது!
கூடவே கீழக்கரையும்!
வாணிபப் பாலத்தில் ஏறாமல் இலக்கியப் பாலத்திற்குள்ளேயே நுழைந்து விடலாமா என்று கூட தத்தளிக்கிறது மனம்
பாட்டின் பொருளை பொறுமையுடன் புரிந்துகொண்டால், அதிலே வாணிபம் வண்ணக்கோலமிடுவது தெரிகிறது!
பேராசிரியர், கலாநிதி (முனைவர்) அல்லாமா ம. முகம்மது உவைஸ் மர்ஹ0ம் அவர்கள் நம்முடன் ஒட்டி உறவாடி இலக்கியக்கரும்புகள் பிழிந்து தந்த காலங்களில்

மானா மக்கீன் 59
ox 'தலைவனைப் பற்றித் தலைவி நினைக்கிறாள். தலைவன் பிரிந்து சென்றுவிட்டான். பொருள் தேடிப் பிரிந்து விட்டான். தலைவன் பொருள் தேடி எங்கு சென்றானோ தெரியாது. அயலூருக்குச் சென்று விட்டானோ? கடல் கடந்து அய்ல் நாட்டுக்குச் சென்று விட்டானோ? தலைவியால் முடிவு கட்ட முடியவில்லை. சிந்தனையைச் செலுத்துகிறாள் தலைவி. தனது இருப்பிடத்திலிருந்து வடக்கே நோட்டமிட்டுப் பார்க்கிறாள். ஒரு வேளை அக்கரைப்பற்றுக்குப் போயிருப்பாரோ? அங்கு போனால் இப்போதைக்கு வந்திருப்பார். ஆனால் அதற்கும் அங்காலே போயிருப்பார். ஒரு வேளை கரவாகுப் பிரதேசத்துக்குப் போயிருப்பாரோ. அங்கு சென்றாலும் இவ்வளவுக்கு இங்கு திரும்பி வந்திருப்பார். இல்லை அவர் அதற்கும் வடக்கே சென்றிருப்பார். அவர் காத்தான்குடிக்குப் போயிருப்பார். ஆனால் காத்தான்குடிக்குப் போனாலும் கூட அவர் தாமதமானதற்கு நியாயமில்லை. அந்தக் காத்தான்குடிக்கும் அப்பாலே சென்றுள்ளார். காத்தான்குடிக்கு மேற்கே உள்ள கண்டிக்கு ஒரு வேளை சென்றிருப்பாரோ? கண்டியிலும் தமது பணியை நிறைவேற்ற முடியாமல் அதற்கும் அப்பாலுள்ள கொழும்புக்குச் சென்று விட்டாரோ? கொழும்பு இந்த நாட்டிலேதான் இருக்கிறது. கொழும்புக்குச் சென்றாலும் சில நாட்களில் வந்துவிடுவார் தலைவன். ஆனால் வீடு வந்து சேரவில்லை இன்னும் அவர். ஒரு வேளை பொருள் தேடிக் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்துக்குப் போய் விட்டாரோ? ஆமாம், அவர் கீழக்கரைக்குப் போயிருக்கலாம். அவர் பேசியது எனக்குக் கேட்டது. அவர் எங்கிருந்து பேசினாரோ?
- என்று உரைத்ததோடு * முன்பக்கத்தில் பார்த்த பாடலையும் வழங்கி, பாடிய பைங்கிளியையும் அடையாளம் காட்டினார். அத்தோடும் விடவில்லை.
* . 'மருதை முதல் வகுதை வரை' - அல்ஹாஜ் கலாநிதி ம.மு. உவைஸ்
1990, լյծ. 12

Page 33
60 1 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
oKo மருதையிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம் பெண்களின் நாவில் தவழும் நாட்டுப் பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை சாதாரண பேச்சு வழக்கில் இருப்பதுபோல் தோன்றினும் அங்கே ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் காணலாம். இலக்கிய நயம் சொட்டுவனவாகவும் அவை அமைந்திருப்பதைக் காணலாம். இஸ்லாமிய கருத்துக்கள் கூட அவற்றில் அடங்கி இருப்பதைக் காணலாம். தாங்கள் வாழ்ந்த தமது சொந்த நில புலன்களை மட்டுமல்லாது தாம் அறிந்த பிறநாட்டுத் தலங்களையும் அப்பெண்கள் தமது நாட்டுப் பாடல்களில் இடம் பெறச் செய்யத்தவறவில்லை - எனச் சொல்லி ஊரையும் அறிமுகம் செய்கிறார். * *
ஆனால், 'மருதை’ என்று அல்லாமா ‘மமுஉ’ அவர்கள் தெரிவிக்கும் ஊரை மதுரையாகக் கற்பனை செய்துவிட வேண்டாம்! அச்சொட்டாக அது, கிழக்கிலங்கையில் உள்ள மருதமுனையின் சுருக்கம். அவ்வூர்ப் பெண்ணுக்கே கீழக் கரை வாணிபம் தெரிந்திருக்கிறதென்றால், நமது நடைப்பயணம் மிகவும் கம்பீரமாக இருக்கவேண்டியதிருக்கிறது.
இருக்குமா? இருக்கும்!
ஒரு விசேடம்: ஒவ்வொரு நடையையும் எடுத்து வைக்கும்பொழுதும், மரக்காயர்களைச் சந்திக்கப் போகிறோம்!
இவர்களது முன்னோர்கள் யார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
* 2. 'மருதை முதல் வகுதை வரை' - அல்ஹாஜ், கலாநிதி ம.மு.
உவைஸ் 1990 பக். 73

மானா மக்கீன் 6
இருந்தாலும் பின்வரும் தகவல்கள் சமர்ப்பணம்:
சங்க காலத்திலிருந்தே தென்னிந்திய துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து வாணிபத்தில் ஈடுபட்டவர்கள் அறபுக்கள். *
இலங்கையுடனான குதிரை வாணிபத்தின் ஒரு முக்கியத்துறையாக காயல் விளங்கியது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் அறபுக்குதிரைகள் காயல் ஊடாகவே இலங்கையின் வடக்குக் கரையோரத் துறைமுகமாகிய ஊராத்துறைக்கு (ஊர்காவற்றுறை) வந்துசேர்ந்தன் வடபகுதி, நெய்னாதீவில் 13-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு இதை உணர்த்துகிறது. **
(“காயல்’ கீழக்கரையின் பண்டையப் பெயர்களிலொன்று),
அறபுக்கள் இராமநாதபுர மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் முதலில் குடியமர்ந்த இடங்கள், குறிப்பாக, கீழக்கரையும் மற்றும் தேவிப்பட்டினம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட சில இடங்களுமாகும். இவர்கள் வசிப்பதற்குத் தேர்ந்துகொண்ட இந்த இடங்கள் இலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு வசதியைக் கருத்தில் கொண்டதாக அமைந்தன. அதன்பிறகே படிப்படியாக இதர இடங்களுக்குள்ளும் (தமிழகத்தில் பரவினர். *
●
P
Ke
●
5
மதுரைக்காஞ்சி - 327, 323 முல்லைப்பாட்டு - 54, 61
The Nainativu Tamil Inscription of Parakramabahu - I'Article by K. Indrapala, University of Ceylon Review. Vol. XXI. No. 1, I969. PP. 63
. இராமநாதபுர கெஸட்டீர் முன்னுரை. பக்.7

Page 34
62 § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இவ்வாறே, கேரள நாட்டின் துறைமுகப்பட்டினங்களான " கள்ளிக்கோட்டை, கொடுங்கலூர், கொல்லம் கடற்கரைகளில் வாழ்ந்தும் வாணிபம் புரிந்தும் சிறந்தனர் அறபுக்கள். * °
அவர்கள் கப்பல் வணிகர்களாகவும், கப்பல் உரிமையாளர்களாகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாகவும் விளங்கினர். அவ்வாறே அவர்களது வம்சாவளிகளும்.
அவர்களை, மலையாளக் கடற்கரையோரத்திலே, 'மாப்பிள்ளாக்கள்’ (மாப்பிள்ளைகள்) என்றனர்.
சோழமண்டலமாகத் திகழ்ந்த தென்கரையிலோ "மரக்காயர்கள்’ ஆகினர்.
இந்தப்பெயரின் அறிமுகம் எங்கே என்று பார்த்தால் -
போர்ச்சுகீசிய ஆவணங்களில் தான் முதன் முதலில் காணக்கிடைக்கின்றன. * 7 ஆனால், "மரக்கான்" - "மரக்கார்?
என்று
16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதன் முதலாக, "இஸ்மாயில் மரக்கார்’ (1504), “செரினா மரக்கார்’ (மம்மலே மரக்கார்’ (1512) ‘மெர்க்கார்’ (1553) - “படே மெர்க்கார்’ (1559) எனச்சில பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. (ஆங்கிலத்தில் MERQUAR, MERCAR, MARACAR, MARCAR) Gu (u Lib GJ GGófs fas GITT 5 Guid, GÜLução உரிமையாளர்களாகவும் இருந்ததை அறிகிறோம். "மரக்கான்’
&
6. "முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்” நூல் முன்னுரையில் பன்னூலாசிரியர், மர்ஹ"ம் எம்.ஆர்.எம். அப்துற் றஹிம். (1970)
*
z
கருத்தரங்கக் கோவைநூலில் ஆய்வாளர் ஜெ. ராஜா முகம்மது t jaj. 3/4 (1990).

மானா மக்கீன் 63
என்பதிலிருந்தே "மரக்காயர்’ பிறந்ததாக தமிழ்ச் சொல்லடைவு அகராதி கூறுகிறது. ஆகவே, தற்போது வழங்கப்படும், “மரைக்காயர்’ மரிக்கான்’ ‘மரிக்கார்" ஆகியவை எல்லாம் "மரக்கார்’ என்பதிலிருந்தே வந்ததே. * (என் பேனா இதில், "மரக்காயர்’ என்று குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கையிலோ 'மாக்கார்’ Qu'uQum (95jLb 6ugöögy GiT GIT5). (BAKIRMARKAR - IMTHIAZ MARKAR - MACAN MARCAR)
இப்பெயர் பற்றி மேலும் அரிய தகவல்களைத் தர ஆசை
மலையாள கடற்கரையில் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மலையாள மொழியில் பொதுவாக "மரக்கான்’ என அழைக்கப்பட்டனர். இச்சொல்லிற்கு ‘கப்பலோட்டி", ‘மாலுமி”, “படகோட்டி', 'மீன்பிடிப்பவரின் அந்தஸ்து உடையவர்" மாப்பிள்ளை முஸ்லிம்களின் பட்டப்பெயர் என மலையாள அகராதி பொருள் தருகிறது.
மேலும், இப்பெயர் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த செல்வாக்கு மிக்க மலையாள முஸ்லிம்களின் பட்டப்பெயர் எனவும், ஆசிய மொழிகளின் ஆய்வு அகராதி பொருள் தருகிறது.
ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் பள்ளு இன மீன் பிடிப்போர் "மரக்கல்லு" என அழைக்கப்பட்டனர். இச்சொல்லும் மரக்கான் என்ற சொல்லைப்போன்றதே.
மலையாள நாட்டில் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த சோனக மாப்பிள்ளைகளையும் மரக்கான் என
* 8. 'கருத்தரங்க கோவை' நூலில் ஆய்வு அறிஞர் ஜெ. ராஜா முகம்மது
Լյ&. 374 - 375 (1990)

Page 35
64 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அழைக்கும் மரபு இருந்தது. இவர்களுள் கப்பல் உரிமையாளர்களும், பெரு வணிகர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் மரக்கார்" என உயர்திணை பன்மை விகுதியிட்டு அழைக்கப்பட்டனர். (மரக்கான் ஒருமை, மரக்கார் - 'ஆர்' என்னும் உயர்திணை பன்மை விகுதிபெற்று மரக்கார் ஆனது).
இலங்கை வழக்கில் இச்சொல்லே 'மாக்கார்’ என மருவியதாகக் கொள்ளலாம்.
இத்தகைய மேன்மைமிக்கவர்களையே காலத்தால் முற்பட்ட போர்ச்சுக்கீசிய பதிவேடுகள் "மரக்கார்’ என குறிப்பிடுகின்றன. மேற்குக் கடற்கரை சோனக மாப்பிள்ளைகளுக்கும் கிழக்கு கடற்கரை சோனகர்களுக்கும் அக்காலத்தில் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்ததால் கிழக்குக் கடற்கரையில் (தமிழகத்தில் வாழ்ந்த கப்பல் உரிமையாளர்களையும், கடல் சார்ந்த தொழில்களில் சிறப்புவாய்ந்த முஸ்லிம்களையும் "மரக்கார்’ என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
1789-ஆம் ஆண்டு மலபார் இரண்டாவது கமிஷனின் டயரியும், மலையாள மத்திலகம் பதிவேடுகளும் மரக்கார் என்னும் பட்டப்பெயர் சமுதாயத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் மிக்க சிறந்த மாப்பிள்ளை முஸ்லிம்களுக்கு அன்னாட்டு மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டம் என தெரிவிக்கின்றன.
இவ்வாறாக, மரக்கான் - மரக்கார் என்னும் சொல் பிற்காலத்தில் மரைக்காயர் - மரக்காயர் - மரிக்கான் எனப் பலவாறாக வழங்கும் பழக்கம் ஏற்பட்டது. காரைக்கால் பகுதி மரக்காயர்களுள் பலர் இன்றும் “மரிக்கான்’ என்றே எழுதுவதைக் காண்கிறோம்.
ஆகவே, ‘மரக்கான்’ என்ற மலையாள மொழிச்சொல்லே *மரக் காயர்’ என்பதன் வேர்ச் சொல்லாகும் என்பதும், இச்சொல்லிலிருந்தே மரக் காயர் என்னும் சொல் தோன்றியிருக்கவேண்டும் என்பதும் நமது கருத்தாகும். மரைக்காயர்

மானா மக்கீன் 65
என்பதைவிட மரக்காயர் என்று அழைப்பதே மிக்க சரியாக இருக்கும். மரைக்காயர் அல்லது மரக்காயர் என்பது மிகவும் பிற்காலத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வழக்காகும்.
ஆனால் இச்சொல் ஒரு இனப்பெயரோ, சாதிப்பெயரோ அல்ல. தொழில் சார்ந்த சிறப்புப் பட்டபெயராகும்.* ”
போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு வந்த டச்சுக்காரர்களும், ஏன், ஐரோப்பியர்களுங் கூட, இப்படியே அழைத்தனர்.
என்றாலும், *மூர்’ என்ற ஆங்கிலச் சொல்லையும் பொதுவாக வழங்கினர் என்பதையும் மறப்பதற்கில்லை.
இலங்கையில், ‘கல்விப்பணிப்பாளர்’ என்ற உயர்பதவி வகித்தவரும், எழுத்தாளரும், ஆய்வாளருமான ஜனாப் முகம்மது சமீம் பதித்துள்ள ஒரு குறிப்பும் இவர்களுடைய வர்த்தகத் தொடர்பை நன்கு அடையாளமிடுகிறது. -
* பதின்மூன்று பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் பெரும்பாலும் தென்னிந்திய முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடன் அதிகமாகத் தொடர்பு வைக்கத் தொடங்கினார்கள். வர்த்தகம் காரணமாக வைத்த தொடர்பு நாளடைவில் அவர்களது மொழியாகிய தமிழையும் தம் தாய்மொழியாக இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு மதமும் ஒரு முக்கிய காரணம்.* "
ش
9.
தமிழகத்தில் இஸ்லாம் ஒரு வரலாற்றுப் பார்வை' - ஆய்வு அறிஞர் ஜெ. ராஜா முகம்மது கட்டுரையின் 12-ம் பகுதி இதயவாசல் சஞ்சிகை - ஐயம்பேட்டை (1996) *10 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' - கட்டுரைத்தொகுதி
முகம்மது சமீம் பக். 73, 100 ஆகியவை. (1997)

Page 36
66 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
0. இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் தம் வர்த்தகத்திற்கும் மதத்திற்கும் மதத்தொடர்புகளுக்கும் இந்திய முஸ்லிம்களையே நம்பியிருந்தனர். * '
ஜனாப் சமீம் தென்னிந்திய முஸ்லிம்கள் என விளிப்பது மரக்காயர் வணிகர்களையே குறிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது -
அந்த வகையிலே, இலங்கையிலிருந்து ஏராளமான யானைகள், தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை , நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்கு மரக்காயர்களின் கப்பல்களில் வந்திறங்கின. சோழமண்டல நாட்டு மன்னர்கள் இந்த யானைகளை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டனர். நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால், அதிராம்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதிலும் மரக்காயர் வணிகர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். * '
கீழக்கரைச் செப்பேடு ஒன்றிலிருந்து, கி.பி. 17 7 ஆம் நூற்றாண்டில் (300 - 350 ஆண்டுகளுக்கு முன்பு) கீழக்கரை, தொண்டி, பாம் பன், மண்டபம், வேதாளை, வாலி நோக்கம் ஆகிய துறைமுகங்களிலிருந்து இலங்கை, கேரளம், (மேற்குக் கடற்கரை) வங்காளம் ஆகிய பகுதிகளுக்கு நிறைய கப்பல் போக்குவரத்து இருந்துவந்தது. மேற்குக் கடற்கரையிலிருந்து மிளகு, பாக்கு அகியனவும், இலங்கையிலிருந்து பாக்கு, செம்பு, துத்தநாகம், ஏலம், கிராம்பு ஆகியனவும் தமிழகத் துறைமுகங்களுக்கு இறக்குமதியாகின. தமிழகத் துறைமுகங்களிலிருந்து, இலங்கைக்கு நவதானியங்கள், அரிசி, பட்டுத்துணி வகைகள், பருத்தித் துணிவகைகள்,
* 11. 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' - கட்டுரைத்தொகுதி
முகம்மது சமீம், பக். 77 100 ஆகியவை. (1997)
* 12. கருத்தரங்கக் கோவை கட்டுரைத்தொகுதியில் ஜெ ராஜா முகம்மது
கட்டுரை. பக். 320

மானா மக்கீன் 67
கருப்புக்கட்டி (கருப்பட்டி, புளி, இதர மளிகைப் பொருட்கள், தேங்காய், கடல்வாழ்ப்பொருட்கள் ஆகியனவும். வங்காளத்திற்கு சங்கும் ஏற்றுமதியாகின. *
இலங்கையிலோ, கிழக்குப்பகுதி முஸ்லிம்கள், இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் திருகோணமலை, கொட்டியாரம் (கொட்டியார்), மட்டக்களப்பு துறைமுகங்களிலிருந்தும் தென்னிந்திய முஸ்லிம் நகரங்களான காயல்பட்டனம், கீழக் கரை போன்ற இடங்களுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்திய முஸ்லிம்களின் சம்பான்கள் (தோணிகள்) கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்பான்துறை, போன்ற துறைமுகங்களுக்குப் பண்டங்கள் ஏற்றி வந்ததுடன், இலங்கை விளைப்பொருட்களான பாக்கு, கிராம்பு போன்றவற்றை ஏற்றிச் சென்றார்கள்.
இந்த இடத்தில் ஒரு நெருடல் ஏற்படலாம்.
சம்பான்துறையா? எங்கே?' - என்று எனது இலங்கை அபிமானிகளே கேட்பார்கள்.
மருள வேண்டாம். இப்போதைய கிழக்கிலங்கையின் சம்மாந்துறையே சம்பான்துறை!
இன்னும் ‘ஓர் அதிசயம்!
இன்று, ‘மட்டக்களப்பு’ என ஒரு பிரதேசத்தைக் குறிக்கும் பெயர் ஒருகாலத்தில், தென்கிழக்கில் உள்ள சம்மான்துறையைச் சார்ந்துள்ள களப்புப்பகுதியையே குறித்து வந்திருக்கிறது!
சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பே மிகப்பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும்
* 13. "சேதுமன்னர் செப்பேடுகள்' - எஸ்.எம். கமலல் பக்கம் 274 - 275 -
(1994. W

Page 37
68 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பிருந்தே வந்திருக்கின்றது. போர்த்துக்கேயர் புளியந்தீவில் தமது கோட்டையை (1628) அமைத்து அதனை மட்டக்களப்பு என்று அழைத்ததன் பின்பே மட்டக்களப்பு என்ற பெயர் பதம் சம்மாந்துறைக்கு 20 மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.
மட்டக்களப்புத் துறைமுகம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுவதும், யாத்திரிகர்களின் நினைவுக்குறிப்புகள் சொல்லுவதும் உண்மையில் தென்கிழக்கைச் சார்ந்த சம்மாந்துறை பகுதியையேயாகும். * '
மேலும், ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) இலங்கையில் முதல் முதல் காலடி எடுத்து வைத்த இடம் சம்மாந்துறையாகும் என்பது இங்கு கவனிக்கத் தக்கது. தேதி 31-3-1602 ஜோரிஸ்வான் ஸ்பில்பேர்கன் அவ்வாறு வந்தான். சம்மாந்துறையில் வாழ்ந்த முஸ்லிம்களோடு உறவாடி கண்டிப்பிரதேசத்தையும் கண்டி மன்னனையும் (விமலதர்ம சூரியன்) அறிந்துகொள்கிறான். அதே மக்களது உதவியோடு மன்னனையும் சந்திக்கிறான். *
அவ்வாறு சந்தித்தவன், போர்த்துக்கேயருக்கு எதிராகப் படைத்துணை வழங்குவதாகவும் சொல்கிறான். இப்படி வரலாறு தன் பாதையில் செல்கிறது.
இந்த வகையில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய தகவல் என்னவெனில் -
* 14. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்' - கட்டுரைத் தொகுதியில் முதலாவது கட்டுரை - எம்.எஸ்.எ.காதர் பக். 4 இலங்கை முஸ்லிம் தினைக்கள இலாகா) வெளியீடு (1997)
* 15. 'மேற்படி - பக். 27

மானா மக்கீன் 69
* கண்டி மன்னர்கள் சுதந்திரமாக வெளியுலகத்தோடு தொடர்புபடக்கூடியதோர் வழிப்பாதை சம்மாந்துறையில் தொடங்கி செயற்பட்டது.
* அவர்களது ஆளுகைக்கு மட்டக்களப்புப் பிரதேசம் உட்பட்டிருந்தது என்பதுடன், சம்மாந்துறை, கண்டி இராசதாணியின் கிழக்குக் கரையோர பிரதான துறைமுகமாக இருந்தது!
8. இப்பாதையை முற்றும் முழுதுமாக வர்த்தகத்திற்குப்
பயன்படுத்தி வந்தவர்கள் முஸ்லிம்களே!
ஆகவே, மருதை (மருதமுனை) மண்ணிலிருந்து நமக்கு நாட்டார்ப்பாடல் வழங்கியப் பெண்மணி அச்சொட்டாகக் கீழக்கரை வாசிகளின் வாணிப வளம் தெரிந்தவர்தான்! நேருக்கு நேர் கண்டவர்தான்.
இந்தவகையில் -
* கீழக்கரையிலே ஒரு பெரியதம்பி மரக்காயர் குடும்பத்தினர்
* காயல்பட்டினத்திலே ஒரு முதலிப்பிள்ளை மரக்காயர்
குடும்பத்தினர்
* தஞ்சாவூர்ப் பிரதேசங்களில் இன்னும் சில மரக்காயர்
குடும்பத்தினர்
- ஆகியோர் கடல்வாணிபம் புரிந்து கடல் வர்த்தக வித்தகர்களாக இருந்ததோடு அவ்வப்பகுதிகளில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களுடன் நெருங்கியவர்களாக இருந்துள்ளனர்.

Page 38
70 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
சேதுநாடாகிய இராமநாதபுர மாவட்டத்தில் சேதுபதி மன்னர்களுடனும், இலங்கைக் கண்டி அரசர்கள் இரண்டாம் ராஜசிங்கன், இரண்டாம் விமலதர்ம சூரியன் ஆகியோருடனும் நெருங்கிய தொடர்பு, கீழக்கரையில் ஒரு பெரியதம்பி மரக்காயர் குடும்பத்திற்குக் கிடைத்தது.
அக்கால கப்பல் ஒன்றினை - அதாவது, தென்னிந்திய கடல்வாணிபத்தில் முக்கியப்பங்கு வகித்து, கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான முதுமையை எட்டிவிட்ட கப்பலை - மனக்கண்ணில் கொண்டு வந்தால், அதன் பாய்மரக் கொடியிலே ‘பெரியதம்பி’ மரக்காயர், என்ற பெயர் பட்டொளி வீசிப் பளிச்சிடுவதைப் பார்க்கலாம்.
இவர்களுள் இரண்டாமவர், “ஷெய்கு அப்துல் காதிர் என்ற செய்தக்காதிரு மரக்காயர் என்னும் சீதக்காதி ஆவார்” என ஒரு குறிப்பை, 14-7-1996 - ல் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்திய ‘சேதுநாட்டுக் கருத்தரங் கில் ஆய்வாளர் ஜெ. ராஜா முகம்மது அவர்கள் வாசித்தளித்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை, ஏற்கெனவே வரலாற்றிலும் தந்துள்ளேன்.
அவர், மற்றிருவரது சொந்தப்பெயர்களையும் துல்லியமாகத் தெரிவிக்காது விட்டுள்ளார். அதற்கு ஒரு காரணம் இருக்கலாம். மற்றொரு ஆய்வில் தெளிவுபடுத்தக்கூடும்.
என்னைக் கொஞ்சம் அனுமானிக்கவிட்டால் - ஒருவர், சீதக்காதிப் பெருமகனாரின் தந்தை, மவுலா ஸாஹிப்,
மலிக் சுல்தான் அப்துல் காதிர் அவர்களாக இருக்கலாம் என்றும் -
மற்றவர், சீதக்காதியின் மூத்த தம்பி ‘மாமு நெய்னா’ என்கிற பட்டத்து முகம்மது அப்துல் காதிர் மரக்காயர் அவர்களாக இருக்கலாம் என்றும் சொல்வேன்!

மானா மக்கீன் 7 1
இது எப்படி சாத்தியம் என்றால் -
1685-ஆம் ஆண்டு டச்சு ஆவணப் பதிவொன்றில் பெரியதம்பி மரக்காயரையும், அவரது இரண்டு புதல்வர்களையும், அவரது தம்பி மற்றும் ஏனைய முஸ்லிம்களையும் குறித்த செய்தி இருக்கிறது. * 16
இதன்படி, பெரியதம்பி மரக்காயர் என்பது, மலிக் சுல்தான் அப்துல் காதிர் என்றும், இரு புதல்வர்கள் என்பது, சீதக்காதி அவர்களும் அவர் மூத்ததம்பி மாமு நெய்னாவும் என்பது தெளிவாகி விடுகிறது. 5 " اسم
டச்சு, ஆங்கிலேயப் பதிவாளர்கள், நீளமான முஸ்லிம் பெயர்களைக் குறிக்க சோம்பல்பட்டு பதிவுக்கு இலேசாக குடும்பப் பெயரை மட்டும் சகல இடங்களிலும் குறித்துள்ளனர் என்ற கருத்துக்கு நாம் வரலாம். மேலைய மரபும் அதுதான்.
ஏன், நம் தமிழ்ப்புலவர்கள்கூட செய்யது அப்துல் காதிர் மரக்காயர் என்றபெயரை தமிழின் சந்தத்துக்கு அமைக்க முடியாமல் “சீதக் காதி’ என்று சுருக்கி அதனையே வாழ்வாங்கு வாழச் செய்துவிடவில்லையாl * '
அயலவருக்குப் பெரியதம்பி! நம்மவருக்கு சீதக்காதி!
அப்படி, 1708-ஆம் ஆண்டுவரையில் டச்சுப்பதிவில் உள்ளது
பெரியதம்பி, அதன்பின் இல்லை. பதிலாக, 1709-இல் ஓர் இளைய பெரியதம்பி’ இடம்பெறுகின்றார். இவர்கூட, 30-5-1709 நாளிட்ட
ሦ*
• 16. Corpus Diplomaticum Neerlantio Indicum (Vol. III).
Ed. J. E. Heeres. P. 378
* 17 வள்ளல் சீதக்காதி - கலைமாமணி எஸ்.எம். உமர் எழுதிய
கட்டுரை. மகரந்தம் மாத இதழ். ஆகஸ்ட் 98

Page 39
72 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
டச்சுப்பதிவேட்டில் இருப்பதுடன் சரி. பெரியதம்பிப் பெயர் மறைந்து, ரீஜண்ட் ஆதம் லெப்பை, நெயினார் லெப்பை என்போர் அறிமுகமாகின்றனர். * °
இவற்றையெல்லாம் பின்பற்றியே இலங்கையின் முஸ்லிம், சிங்கள வரலாற்றாசிரியர்களும் ஆய்வாளர்களும் “பெரியதம்பி மரக்காயர்’ என்றே பதித்துள்ளார்கள். எந்த இடத்திலும் சீதக்காதி என்ற பெயர் இல்லை. முஸ்லிம் எழுத்தாளர்களாவது சற்று ஆர்வப்பட்டு இந்தக்குறையை நிவர்த்தி செய்திருக்கலாம் என்ற ஆதங்கம் என் பேனாவுக்கு.
நல்லது. நாம் இனி, அவரது இலங்கை - கீழக்கரை)
கடல்வாணிபத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்ப்பதில் கவனம்
செலத்துவோம்
«Х» அன்றைய நிலையில், அவர் வயதில் இளையவராக இருந்தாலும் வாணிப உலகில் மிகப்பெரிய சக்தியாக விளங்கி வந்தார். மலையாளக் கரையில் மிளகும், இலங்கையின் கொட்டைப்பாக்கும். சோழமண்டலத்தின் கைத்தறித் துணிகளும், சங்கு, முத்து முதலியவைகளும் அவரது ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன.
- என்கிறார் இராமநாதபுர வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம். ஜமால்“
பேருண்மைகளே!
* 18 டச்சுப்பதிவு ARA-OB- 1865 -folio 986. ஜெ. ராஜா முகம்மது தன் ஆய்வுக்கட்டுரையில், இன்னும் பிரசுரிக்கப்படாதது)
* 19 வரலாற்றில் வள்ளல் சீதாக்காதி - அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்தரங்கக்கோவை கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. பக். 308 1990

மானா மக்கீன் 1 73
சீதக் காதிப் பெருமகனாரின் மரக் கலங்கள் கீழக்கரையிலிருந்து புறப்பட்டு, தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய துறைகளைக் கடந்து இலங்கை செல்லும். வட - கிழக்குப் பருவகாற்று வீசுகின்ற காலத்தில் முத்து, இரத்தினங்களையும், மிளகு, இலவங்கம், ஏலம், இஞ்சி பாக்கு, தேக்கு முதலியவைகளை ஏற்றிக்கொண்டு செங்கடலுக்குள்ளேயே நுழைந்து விடும்! எகிப்து, அறேபியா போன்ற நாடுகளை அடையும். செங்கடல் துறைமுகம் - மலாயா - இலங்கை முதலிய இடங்களில் (துறைமுகங்களுக்கு அருகிலேயே) பல பண்டகசாலைகள் அவருக்கு இருந்தன.
பிறநாடுகளில் அவருக்கிருந்த ஆதிக்கத்தை “சீதக்காதி” திருமண வாழ்த்து 70 -71 - 72 - 73 - 74 கண்ணிகள் தந்துள்ளன.
* வங்களங்கர் நாடம் மலையாள முச்சீனம் சிங்களம் மராடம்
தெலுங்கு குருநாடம்
என, 70-ஆம் கண்ணி இலங்கைக்கும் அவருக்குமிருந்த தொடர்பைக் காட்டுகிறது.
முத்துவாணிபம்
முதலில், முத்து சலாபத்தின் கதையை முத்தாக தந்திட ஆயத்தம். s
முத்து சலாபம் என்பது, ஆழ்கடலில் ஆழ்ந்து முத்துக் குளித்தலையே குறிக்கும். “முத்து சிலாபம்’ என்றும் அழைப்பது வழக்கத்திலிருந்தது. இத ஒரு தனிக்கலை. இலங்கையில் இந்தப்பெயரையொட்டியதாக “சிலாபம்’ - “சிலாபத்துறை” என ஊர்கள் உள்ளன. இதில் பின்னையது, முத்துக்குளித்தலுடன் மிகவும் தொடர்புடையது.

Page 40
74 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
கீழக்கரை மக்களுக்கு இது ஒரு தனித்துவமான தொழில். குலத்தொழில் என்பார்களே அப்படி! அவர்கள் சேகரிக்கும் முத்துக்கள் உலகளாவிய ரீதியில் விலைபோயின. உயர்ரக முத்துக்களாக இருந்தன.
“கி.பி. 1532 - 1658 காலங்கள் முத்து சலாபத்திற்கும், நெசவுக்கும் இலங்கையுடனான வாணிபத்தொடர்புக்கும் சிறப்பான காலங்களாக அமைந்தன” என்பார் ஆய்வாளர் எஸ்.எம். கமால்.
அதில் தவறேதுமில்லை.
மன்னார்குடாக்கடலின் வளமான முத்து சலாபங்கள், மன்னார்ப்பகுதிக்கும் தமிழகக் கீழக் கரைக்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன.
இலங்கை, காத்தான்குடி கவிஞர் திலகம் அப்துல் காதிர் லெப்பை அவர்களது தவப்புதல்வரும், தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பேராசிரியராகப் பணிபுரிபவருமான ஜனாப் ஏ.சீ.எல். அமீரலி அவர்கள், 1800 - 1915 காலத்து இலங்கை முஸ்லிம்களின் ஏற்றுமதித் தொழிலை ஆராய்ந்த கட்டுரையொன்றில்- m
முஸ்லிம்களை முத்து வாணிபத்தில் பிரித்துப் பார்த்திட (LA - Lös. 1883 வரை அரசு ஆதிக்கத்தில் இருந்தாலும், இவ்வாணிபத்தின் பல பிரிவுகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
* உதாரணத்திற்கு: 1860-ஆம் ஆண்டிலே, கீழக்கரையிலிருந்து மட்டுமே இருநூறு படகுகள் முத்து சலாபத்திற்கு வந்திருந்தன. 1890-இல் முத்துக்குளிக்க வந்த 1300 - 1400 பேரில், 800 பேர் கீழக்கரை - பாம்பன் - தொண்டியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதே ஆண்டில் 300 இலங்கை முஸ்லிம்கள் எருக்கலம்பட்டி, மன்னார் பிரதேசங்களிலிருந்து

மானா மக்கீன் 75
வந்திருந்தார்கள். 1903-ஆம் ஆண்டில் எண்ணிக்கை மிகவாகப் பெருகிப்போயிற்று. வந்திருந்த 242 படகுகளில் 150 கீழக்கரையைச் சார்ந்தவர்களாகவும். முத்து சலாபக்காரர்களில் 7408 பேரில், 3732 தொகை கீழக்கரை வாசிகளாகவும் இருந்தனர். அடுத்த ஆண்டில், மேலும் அதிகரிப்பு ஏற்பட்டது. ‘தொழிலுக்கு முதுகெலும்பானவுர்கள் கீழக்கரையினரே என வர்ணிக்கப்பட்டது.
* அன்றைய 1856-ஆம் ஆண்டில், மன்னார்க் கடற்கரைப்பகுதி மனிதக் கூட்டமாக - சுமார் முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் - அயலவர் பிரதேசமாகவே காணப்பட்டது. அமைக்கப்பட்டிருந்த அங்காடிகள் (பெட்டிக்கடைகள்) 127-லில் 102 கீழக் கரை - தொண்டி - காயல்பட்டினம் வாசிகளுடையதாக இருந்தது. * *
- என, 1856-ஆம் ஆண்டின் மன்னார் கச்சேரியில் அரச நாட்குறிப்புகளையும், நிர்வாக அறிக்கைகளையும் ஆதாரம் காட்டித் தந்துள்ளார். s
திரு சி.ஆர்.டீ. சில்வா (இலங்கை) என்ற ஆய்வாளர் குறிப்பிட்டிருப்பதும் கல்லின்மேல் எழுத்துப்போன்றது:
* 16-ஆம் நூற்றாண்டில், இந்துமாக்கடலின் முத்துக்குளிப்பை பழைய காயலிலும், கீழக்கரையிலும் ஊர் தலைமையை வகித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். * '
多
* 20 முனைவர் (கலாநிதி) எம்.எ.எம். சுக்ரீ இலங்கை) தொகுத்த
Muslims of Sri Lanka - Avenues to Antiquity கட்டுரைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 8-ஆவது கட்டுரையின் சில பகுதிகள். தமிழாக்கம் என்னுடையது) பக். 238 - 239
* 21. C. R. de Silva, ''The Portuguese and pearlfishing of South India and Sri
Lankal South Asia, New Series, 1 (I) 1978, PP 15-16.

Page 41
f ரி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
கீழக்கரையின் கீர்த்திமிகு தலைவர் யார்?
* நன்மை விசயரது நாதப் பெரியதம்பி தன்மபரி பாலன் தமிழ்க்காய
லாதிபதி
".அவர் தமிழ்ஞானம் மிகுந்த கடற்கரை நகரமாகிய காபலுக்குத் (கிழக்கரை) தலைவர்” எனச் சீதக் காதி திருமணவாழ்த்தின் 18-வது கண்ணி பேசாமல் பேசுகிறது.
அத்துடன், முத்துக்களை விலை மதிக்கும் அரிய கலையை கற்றிருந்தவர்களும் விண்ணர்களும் அவர்களாகவே இருந்தனர்*
இந்தக்குறிப்புகள் எல்லாம் பெரியதம்பி மரக்காயர் என்ற ஒரு குடும்பத்தையே சுட்டுகின்றன என்றால் அது மிகையல்ல. (ஆனால் பழைய காயலில் வேறொரு தலைமை இருந்திருக்கலாம். அது. இந்த நூலுக்கு அப்பாற்பட்ட ஆய்வு.
1908 - ல் வெளியான அமெரிக்க நூலொன்றின் தகவலின்படி கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்கு முன் நடந்த மன்னார் முத்து சலாபத்தில் பங்கெடுத்த 318 தோணிகளில் 143 கீழக்கரையையும். 74 யாழ்ப்பானத்தையும் , 9 மன்னாரையும், ஏனையவை 5 கொழும்பையும், மற்றவை தமிழக ஊர்கள் சிலவற்றையும் சேர்ந்ததாகத் தெரிகிறது. தொழிலில் ஈடுபட்ட 4991 பேரில், 2849 தொழிலாளர் கீழக் கரை, 424 எருக்கலம் பட்டி (மன்னார். எஞ்சியோரில் 923 பேர் அறபுப்பிரதேசங்களை சேர்ந்தோரும் பிற தமிழக ஊர்களைச் சார்ந்தவர்களுமாவர். * F
* 22 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் முகம்மது சமீர் பக். 187
* 23 அமெரிக்க வெளியீட்டகமான தி செஞ்சுரி கம்பெனி வெளியிட்ட ""The Book Of The Pearl''" - C.F. K. C. H. Sterner som T Paige: || || 3.
9(8),

ஆழ்கடலில் முத்துக்குளிக்க ஆயத்தம்! மூச்சு விடுவதற்கு
அன்று அவர்கள் பின்பற்றிய நடைமுறையைக் கவனியுங்கள்.
இலங்கை - மன்னார்க் கடலில் முத்துக்குளிப்பு மும்முரமாக நடக்கிறது.

Page 42
78 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
என்றாலும், எதிர்ப்புகளும் போராட்டங்களும் இல்லாமல் சாதனை கிடையாதே, வெற்றி பெற முடியாதே?
* கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் முத்துக்குளிப்பு, சங்குக்குளிப்பு உரிமைகளுக்கு போர்த்துக்கீசியரும், தமிழகத்து கீழைக் கடற்கரை முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்த்துப் போராடியுள்ளனர். * ?
17 - ஆம் நூற்றாண்டில் ஊடுருவிய டச்சுக்காரர்களும் என்ன சளைத்து விடுவார்களா? அவர்களுடனும் எதிர்நீச்சலே!
இலங்கை ஆய்வாளர், முனைவர் டீ.எ. கொத்தலாவளை என்பார், ஒரு கட்டுரையில் தந்துள்ள இந்தத்தகவல் ஒரு பதச்சோறு:
* 1697, முத்து சலாபத்தில் பெரியதம்பி மரிக்கார் பங்கு முக்கியமானது. விலைகளில் குறைவை உண்டாக்க அவரே முத்து வாங்கும் கொள்வனவுக்காரர்களை தயார்படுத்தினார். இது, டச்சுக்காரர்களின் லாபத்தை கணிசமாகக் குறைத்தது. அவர்கள், தூத்துக்குடி, புத்தளம், மன்னார் துறைமுகங்களிலிருந்த அவரது தோணிகளை
റ $
அபகரிக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கினர். * ?
இத்தகைய சூழ்நிலைகளில், இலங்கையின் எப்பகுதியில் முத்துக்குளிப்பு சிறப்பாக நடந்தது என்பதை அறிதலும் அவசியம்.
* 24 'வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும்' - பேராசிரியர் கேப்டன்
என்.எ. அமீர் அலி எம்.எ. பக்.97 1983
* 25 முனைவர் (கலாநிதி எம்.எ.எம். சுக்ரீ இலங்கை) தொகுத்த 'Muslims of Sri Lanka -Avenues to Antiquity" as 660 dai Glass65élusai இடம்பெற்றுள்ள 5-ஆவது கட்டுரை. பக். 172
 

மானா மக்கீன் 79
மன்னார் மாவட்டத்தின் மன்னாருக்கு நாற்பது கல் தெற்கே ஓர் ஊர். சிலாபத்துறை என்றே பெயர். (சலாபத்துறை என்பதன் மருஉவாக இருக்கலாம்). அதற்கும் தெற்கே, பதினாறு கல் தொலைவில் மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் என்ற ஊர்கள். இவ்வூர்ப் புறங்களிலிருந்து தான் முத்துக் குளிப்பதற்காகக் கடலுக்குச் செல்கிறவர்கள் புறப்படுவார்கள். அதற்குக்கு காரணம், முத்துப் படுகைகள் இருக்கும் இடங்களுக்கு கலங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்வது வசதியாக இருக்கும் என்பதால்.
அவ்வாறு கொண்டு வரப்படும் சிப்பிகளை சலாபத்துறை தொட்டிகளில் குவிப்பார்கள். அங்கேதான் பெரும் வணிகர்கள் கூடும் முத்துச் சந்தை நடக்கும். இங்கே, கீழக் கரை சங்கு குளித்தொழிலாளர்கள் கட்டிய பள்ளிவாசல் ஒன்றை ஊரவர்கள் சிறப்பாக நிர்வகித்தனர். * *
இதே மரிச்சுக்கட்டியில், நமது கீழக்கரை "இளம் வாலிபர் பெரியவர், உறாஜி எம். இத்ரீஸ் மரக்காயர் அவர்களும் இருந்திருக்கிறார்கள் - பதினைந்தாவது வயதில் அவர்களுடைய அனுபவங்கள் அறுசுவை!
* 1925 கடைசியில் இலங்கையில் மன்னாருக்குப் பக்கத்தில் உள்ள மரிச்சுக்கட்டியில் முத்து சலாபத்தை அரசாங்கம் ஆரம்பித்தது. காட்டை அழித்து இருபுறமும் கடைகளும், கடல் ஓரத்தில் சிப்பி போடும் தொட்டிகளும் கட்டி அரசாங்கத்தினர் ஏலத்தில் விடுவார்கள்.
*26. 'ஆயிரங்காலத்து அலைமோதல்' - மன்னார் மஃறுாஃப்: உலக இசுலாமிய தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டையொட்டிய கீழக்கரை மலர். 1990 பக் 48.

Page 43
80 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
* இருபுறமும் நூற்றுக்கணக்கான கடைகள் இருக்கும், அந்தக் கடைகள் மரங்களால் கட்டப்பட்டு, கூறை மூங்கில் சட்டங்களால் அமைக்கப்பட்டு, தென்னங்கீற்றால் வேயப்பட்டிருக்கும். மின்சார வசதியும், போலீஸ் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும்.
* முத்துக் குளிப்பவர்களும், வியாபாரிகளும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் போய் வருவது வழக்கம். இலங்கை அரசாங்கம் கடுமையான சட்டங்கள் போட்டதால் அவர்கள் இலங்கை செல்ல மறுத்துவிட்டனர். இதனை அறிந்த இலங்கை அரசாங்கம் ஒரு ஸ்டீமரை கீழக்கரை துறைமுகத்துக்கு அனுப்பி, முத்துக் குளிப்பவர்களையும், வியாபாரிகளையும் சமாதானப்படுத்தி சுமார் 300 முதல் 400 பேரை அழைத்துச் சென்றனர். அப்படிச் சென்ற வியாபாரிகளுள் நானும் ஒருவன்.
* இதில் விசேஷமாவது, ඊ5 t - මේ ගර්‍ முத்துக் குளிப்பவர்களும், தோணிகளும், வியாபாரிகளும், முக்கால் பகுதியினர் கீழக் கரையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். மற்ற இதர ஊர்களைச் சேர்ந்த முத்து குளிப்பவர்கள், தோணிகள், வியாபாரிகள் கால்பாகம்தான் இருப்பர். முத்துக் குளிப்பவர்களில் சில அறபிகளும், அறபி வியாபாரிகளும் கூட இருந்தனர்.* ?
இப்படி, மன்னார், சிலாபத்துறை, மரிச்சுக்கட்டி மட்டுமல்ல, மன்னார் வளைகுடா புத்தளம் பகுதியிலும் முத்து சலாபம் நடந்ததுண்டு. (இப்பிரதேசத்தின் வரைபடம் எதிர்ப்பக்கம்.)
*27 நினைவு மலர்கள்' - எம். இத்ரீஸ் மரக்காயர் சுயசரிதை, பக். 24
。一25 一26(7996层

மானா மக்கீன்
81
பிரதான
T606)
போக்குவர்த்துச்

Page 44
8 2
f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இலங்கையின் வடமேற்குக் கரை முத்துக்குளிப்புக்குப் பெயர்பெற்ற பிரதேசமாகும். இன்று காடாகவும் தரிசு நிலமாகவும் கிடக்கும் குதிரைமலை, பொன்பரப்பிப் பகுதி முன்பு முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்று, உலக நாடுகளை ஈர்க்கும் பகுதியாக மிளிர்ந்துள்ளன. கல்பிட்டியிலிருந்து மன்னார்க்கரை வரையுள்ள கடற்பரப்பில் முத்துபார்கள் காணப்படினும் குதிரைமலைக்கு எதிரேயுள்ள கடலிலேயே பிரசித்தமான பெரிய முத்து பார்கள் இருப்பதாக வரைபடங்கள் தெளிவுறுத்துகின்றன. * *
- என புத்தளம் எழுத்தாளர் தாஜூல் அதீப் அசன் நெய்னார் மரக்காயர் (ஏ. என். எம்) ஷாஜஹான் தன் ஆய்வு நூலில் அழகுபடத் தந்துள்ளார்கள்.
அப்படியானால் புத்தளம் பகுதிகூட கீழக்கரைவாசிகளின்
இனிய தொடர்புகளால் பெருமை பெற்றிருக்கவேண்டுமே!
பெற்றது
புத்தளத்துக்கும் தென்னிந்தியக் கரைகளிலுள்ள காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம்பட்டினம், தேவிபட்டினம், குலசேகரப்பட்டினம், முத்துப்பேட்டை
போன்ற, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும்
ஊர்களுக்கும், நெருங்கிய தொடர்புகள் பழங்காலந்தொட்டு நிலவியது. ஆரம்பத்தில் வர்த்தகர்களாக வந்தவர்கள் நாளடைவில் இங்குள்ள மக்களுடன் இரண்டறக்கலந்து மத வழிகாட்டிகளாகவும்
புத்தளம் - வரலாறும் மரபுகளும் - தாஜுல் அதீப் அசன் நெய்னார் மரக்காயர் (ஏ.என்.எம்) ஷாஜஹான் பக். 145-147 (1992)

மானா மக்கீன் 8 3
விளங்கினர். கிழக்குக்கரை, மேற்குக்கரை புத்தளத்திலும் இருந்தது! * ?
- என்ற ஒரு குறிப்பையும்,
* 'இலங்கைச் சுதந்திரம் அடைவதற்கு முன் கல்பிட்டியின் பெரும் வியாபாரங்கள் தமிழக முஸ்லிம்களிடமும், மலையாள முஸ்லிம்களிடமும் இருந்து வந்தன. சின்னக்குடியிருப்பு (கடைவீதி) அவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது எனலாம். பிரஜா உரிமைச் சட்டம் காரணமாக அவர்கள் தாயகம் சென்று விடவே வியாபாரம் கல்பிட்டி முஸ்லிம்களின் கைக்கு மாறிவிட்டது. * 30
- என்ற மற்றொரு குறிப்பையும் அறிய முடிகிறது.
‘தமிழக முஸ்லிம்களிடமும்’ என்ற வார்த்தையிலும், நிச்சயமாகக் கீழக்கரைவாசிகளே பெருவாரியாக இருந்திருப்பர்
என்பதில் ஐயமில்லை.
பருத்தித்துணியும் பாக்கும்
முத்து வாணிபம் போக, இவர்கள் இலங்கையில் மேற்கொண்ட வேறு தொழில்களை இனிக்காண்போம்.
அப்பொழுது -
*29. புத்தளம் - வரலாறும் மரபுகளும் - தாஜூல் அதீப் அசன் நெய்னார்
மரக்காயர் (ஏ.என்.எம்) ஷாஜஹான் பக். 74 1992)
*30 கல்பிட்டி, அல்-அக்ஸா மகா வித்தியாலய வெள்ளிவிழா (1980 மலரில் இடம்பெற்றுள்ள - 'கவின் கொழிக்கும் கல்பிட்டி' கட்டுரை - செல்வி சித்தி லாபிறா

Page 45
84 '' இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
தென்னிந்தியாவில் செய்யப்படும் ஆடைகளுக்குக் கண்டியில் பெரும் கிராக்கி இருந்தது. அதேபோன்று கண்டியில் விளையும் பாக்கு போன்ற பொருட்கள் தென்னிந்தியாவில் உடனடியாக விற்பனை ஆகின. போர்த்துக்கீசியருடைய காலந்தொட்டு இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் பாக்கு ஒரு முக்கிய நிலையில் இருந்து வந்தது. கண்டி இராச்சியத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் இப்பொருளிலேயே தங்கியிருந்தது. தென்னிந்தியாவில் போய் விற்று அதற்குப் பதிலாக தானியங்களும் ஆடைகளும் கொண்டு வந்து கண்டி மக்களுக்குக் கொடுத்தனர். பண்டமாற்று மூலமே வர்த்தகத்தை நடத்தினர். * '
இந்தவகையில், மன்னார் வளைகுடாவின் மேற்குக்கரைத் துறைமுகங்களுக்கு பெருமளவில் இந்தியத்துணிகளை அனுப்பி வாணிபம் புரிவதும் அதற்குப் பதிலாக கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்வதும் ஒரு பெரும் தொழிலாக சீதக்காதிப் பெருமகனார் குடும்பத்தாருக்கு இருந்தது.
அக்காலத்தில், புத்தளப் பிரதேசத்தைப்போல, கண்டியும் பாக்கு உற்பத்தி வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தது. அங்கே, இரண்டாம் இராஜசிங்கன், இரண்டாம் விமலதர்ம சூரியன், நரேந்திரசிங்கன் ஆகியோர் ஆட்சியில் செழிப்பாக இருந்த கண்டி முஸ்லிம்கள் அவர்களது ஏற்பாட்டில் பாக்கு உட்பட பல விளைபொருட்களையும் தமிழகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களது பிரதான ஏற்றுமதி துறைமுகங்களாக புத்தளம், கல்பிட்டி, கொட்டியாரம் (கொட்டியார்) ஆகியவை இருந்தன. அவற்றை ரைகிளப் வான்கோளன்ஸ் (1660-1675) என்ற ஆளுநர்,
* 31 ஒரு சிறுபாள்மை சமூகத்தின் பிரச்சினைகள்’- முகம்மது சமீம். 15-ஆவது 20-ஆவது கட்டுரைகள் பக். 135 - 167 - 168 (1997)

மானா மக்கீன்
85
வள்ளல் சீதக்காதி அவர்களுடனும், மற்றும் பல தமிழ்நாட்டு வர்த்தகர்களுடனும் நட்புகொண்டிருந்த இரண்டாவது இராஜசிங்கன்.

Page 46
86 ృత இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
டச்சு ஆதிக்கத்தில் வைத்த் திருந்தான். திருகோணமலை, மட்டக்களப்பு துறைகளும் அவ்வாறே, 8 32
1684-ல் வள்ளலும் மற்றும் இந்தியர்களும் கல்பிட்டியில் 15000 அமுனம் (மணங்கு போன்ற அளவு) கொட்டைப்பாக்குகளை (எண்ணிக்கையில் சுமார் 26,000) குறித்த விலைக்கு கொள்வனவு செய்வதென்றும், பதிலுக்கு சந்தைவிலையில் ஒருதொகை அரிசியைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதாகவும் டச்சுப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் கண்டனர். ஆனால், டச்சு மேலிடம் (அரசு) முடிவை மாற்றி விட்டது! நிறைவேற்ற விடவில்லை! **
அடுத்து அவர்கள் செய்தது அடாவடித்தனம்
கொட்டியாரம் (கொட்டியார்) - கல்பிட்டி - மட்டக்கள்ப்பு முதலாந்துறைகள் மூலம் கண்டிநாட்டினர் அவருடன் வியாபாரம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டது **
காரணம், ஒன்றே!
அவர்களால் வள்ளல் சீதக்காதிப் பெருமகனாரின் வாணிபச்
செழுமையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. போட்டி போடவும் முடியவில்லை!
ஆனால் எந்தக் காரணத்தினாலும் டச்சுக்காரர்களுக்குக் கட்டுப்படக்கூடாதென்ற கொள்கையில் கண்டிவாழ் முஸ்லிம்கள் இருந்தனர்:
*32. நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வம் - இரண்டாம் பாகம். பேராசிரியர் எஸ்.எ. போமன், ஜிஜி மெண்டிஸ் தமிழாக்க நூல்) Luč. 270 (1969) KM)
-33. "Muslims Under Dutch Rule In Sri Lanka - D.A. Kotelawela PP.
170 - 171 ("Muslims of Srilanka - Avenues to Antiquity) 1986
*34. நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் - பக் 210

மானா மக்கீன் 87
பாக்கு உள்ளிட்ட இலங்கை விளைப் பொருட்களை வள்ளலுக்கே விற்போம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தனர். **
முன் குறித்த கண்டி அரசர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினர் அவர்களது காலங்களில்.
எனினும், இரண்டாம் விமலதர்மசூரியனுடைய ஆட்சி முடிவுக்கு வந்து அவனது மைந்தன் நரேந்திரசிங்கன் (1707 - 1739) ஆட்சி பொறுப்பேற்ற முதலாம் ஆண்டிலேயே ஓர் அற்பத்தனம் நடந்தது.
கோர்னோலியஸ் சைமன் (1703) என்ற டச்சு ஆளுநர் புத்தளத்தையும், அப்பிரதேசத்தைச் சார்ந்த மற்றனைத்துத் துறைகளையும் மூடச்செய்துவிட்டான்! “ *
முக்கியமாக, “புத்தளத்தின் கடல்வாசல்” எனப் பெருமைப் படுத்தப்பட்ட கல்பிட்டி துறை மூடப்பட்டது. * '
அப்படி ஆகியும் கூட, வாணிபம் வளமாகவே நடந்தவண்ணமேயிருந்தது - வேறு வேறு துறைகளின் மூலம்
‘கடத்தல்’ என்ற ஒரு வார்த்தையையும் டச்சுக்காரர்கள்
அறிமுகப்படுத்தியது இக்காலத்தில்தான்!
*35. Memoir Henrik Zwaar de Croom, 1697 (Madras - 1911) PP.80,
I2I
*36. 'நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம்'- பக். 212
*37 ‘புத்தனம் வரலாறும் மரபுகளும்' - ஏ.என்.எம். ஷாஜஹான் பக்
` 707 - ա5, 107 - ա5.

Page 47
88 }్ళ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
“...FACTOTUMAND THE EVILGENIUS BEHIND THE THEVARSANTI DUTCHATTITUDES.
- என டச்சுக்காரர்களால் வள்ளல் வர்ணிக்கப்பட்டுள்ளார். *
இதை, என் பேனா தமிழ்ப்படுத்த முனையும் பொழுது அந்தக்கடமையை தயங்கித் தயங்கியே செய்யவேண்டியதிருக்கிறது.
‘தேவரது (சேதுபதி மன்னர்கள்) டச்சு எதிர்ப்புகளின் பின்னணியில் இருக்கிற, நிபுணத்துவம் மிக்க ஒரு தீயசக்தி என்பதாக டச்சுக்காரர்கள் வர்ணித்தனர்.
... அப்பொழுது வள்ளல், இராமநாதபுரத்து சேதுமன்னரின் அமைச்சர் - அரசு பிரதிநிதி - கடல்வரி அறவிடுபவர்.
இலங்கையின் முக்கியத் துறைகளையே மூடச்செய்தவர்கள்,
கல்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடைப்பட்ட கடலில் சங்கு (முத்து)
குளிக்கவா விடுவார்கள்?
கோரிக்கை மிகவும் மரியாதையுடன் மறுதலிக்கப்பட்டது°
இதேபோல, உப்பு உற்பத்தியிலும் தனது ஆதிக்கத்தைச்
செலுத்தி தனியார் உற்பத்திக்கும் விற்பனைக்கும் சட்டத்தினால் தடை போட்டனர்.
* ‘உப்புச் செய்கை தென்னிந்திய மக்களால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்பதை மறுக்க முடியாது.
«38. Heeres (ed) Corpus Diplomaticum Neerlando Indicum, 1 1 1. P. 378, Cited in ''A Note on Periatham by Marikar'' - (Byv. S. ARASA RATNAM) •
839. Memoir Henrik Zwaar de Croom, (Madras) PP.80, 121 (1911.)

மானா மக்கீன் s 89
குறிப்பாக, கீர்த்திமிகுக் கீழக் கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் வந்தவர்கள் இங்கு உப்பளங்களை உண்டாக்கி உப்புச் செய்கைக்கு வித்திட்டிருக்கலாம். ஏனெனில், கீழக் கரையிலும், காயல்பட்டினத்திற்குச் சமீபத்திலும் உப்பளச் செய்கை இன்றும் நடைபெற்று வருவதுடன் அங்கு நடைபெறும் உப்புச்செய்கை முறைக்கும் புத்தளததில் நடைபெறும் முறைக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.
- என்ற அரியதொரு ஆய்வையும் புத்தளம் எழுத்தாளர், தாஜூல் அதீப் ஏ.என்.எம். ஷாஜஹான் நமக்குத் தந்துள்ளார்கள். * "
இப்பொழுது நமது பார்வை, தென்னிலங்கையை நோக்கி - மாத்தறை மாவட்டம் - சற்று திரும்ப வேண்டியதிருக்கிறது.
«Х• தென்னிலங்கையுடனான வணிகத்தில் மலபார், காயல்பட்டினம், கீழக்கரை போன்ற வணிக, பண்பாட்டு மத்திய தலங்கள் முக்கிய இடம்பெற்றன. **
- என்ற குறிப்பை, முனைவர் (கலாநிதி) எம்.எ.எம். சுக்ரீ அவர்களிடமிருந்து பெறக்கூடியதாகயிருக்கிறது.
அதேநேரத்தில், இவ்வாண்டு (1998) ஹஜ்ஜில் இறையடி சேரும் பாக்கியம் பெற்ற எனதருமை நண்பர், மாத்தறை மாவட்டத்து எழுத்தாளர், கல்வியாளர், மர்ஹலம் எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்கள்.
v10. புத்தளம் வரலாறும் மரபுகளும் - ஏ.என்.எம். வடிாஜஹான்.
பக். 74. (1992).
$4 மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் - வரலாறும் பாரம்பரியமும் 1995 - ஆம் மீலாத் விழாவைச் சிறப்பிக்க, இலங்கை, முஸ்லிம் அமைச்சு வெளியிட்ட நூல். பக். 38

Page 48
90
$్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
மாத்தறை மாவட்ட வியாபாரத்துறையின் இன்னொரு
சிறப்பம்சம் கொள்முதல் வியாபாரமாகும். குறிப்பாக,
கொட்டைப்பாக்கு, கோப்பி, கராம்பு, கொறக்கா,
(ஒருவிதமான புளி வகை) மிளகு, ரப்பர், ஏலம், போன்ற
பொருள்கள் இதழில் முக்கியம் பெறுகின்றன. இந்த வியாபாரத்தில் சிறப்புப் பெற்ற கிராமங்களாக
கிருந்தை, கொடப்பிட்டிய, ஹொர கொட என்பன
விளங்குகின்றன.**
- என தன் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே மாவட்ட எழுத்தாளரான திக்குவலை ஸப்வான்
என்பவர்
•
16-ஆம் நூற்றாண்டின் பின் அறபியர் தொடர்பு குறையவே, தமிழ்நாட்டுச் சமய, கலாசார தொடர்புகள் வலுத்தன. குறிப்பாக, கீழக்கரை, காயல்பட்டினம், காரைக்கால், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து வந்த வர்த்தகர்கள் இங்கே குடியமர்ந்தனர். * ?
- என்றொரு குறிப்பைத்தந்துள்ளார்.
மூன்றையும் ஒப்புநோக்கும்பொழுது ஒன்றை நன்றாகப்
புரிகிறோம்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் - வரலாறும் பாரம்பரியமும். 1995 - ஆம் மீலாத் விழாவைச் சிறப்பிக்க, இலங்கை, முஸ்லிம் அமைச்சு வெளியிட்ட நூல். பக். 149 மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் -வரலாறும் பாரம்பரியமும். 1995 - ஆம் மீலாத் விழாவைச் சிறப்பிக்க, இலங்கை, முஸ்லிம் அமைச்சு வெளியிட்ட நூல் பக். 120

மானா மக்கீன் 9 1
* தென்னிலங்கையிலும் கீழக்கரை மண் வாசமிட்டிருக்கிறது. மேற்குப்பிரதேசத்திலும், மலையகத்திலும் கிடைத்த விளைபொருட்கள் இங்கும் கிடைத்து கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு வழி ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு, பெருமளவுக்கு சன்மார்க்கப்பணியையும் வர்த்தகர்களாக வந்தவர்கள் ஆற்றியுள்ளனர்!
,ஆம். இன்னும் கொஞ்சநேரம் பொறுப்பீர்களேயானால் ܀ ஆன்மிகப்பாலத்தில் அவர்களது சன்மார்க்க சேவையையும் பார்த்து விடலாம்.
அதற்குள், இப்பாலத்தில் எஞ்சியிருக்கும் நம் கடமையை இனிதே முடித்திடுவோம். - -
ஒரு வழியாக, போர்ச்சுக்கீசியருக்குப் பிறகு டச்சுக்காரர்களும் மூட்டை கட்ட வேண்டிய காலம் வந்தது. அவர்களது ஆதிக்கத்திலிருந்த இலங்கையின் பிரதேசங்களை - முக்கியமாக கொழும்பை - 15-2-1796 - இல், பிரித்தானியர் (பிரிட்டிஷார்) தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இதற்கு ஐந்தாண்டு கழித்து 1-7-1801-ல் தமிழகமும் அவர்கள் ஆதிக்கத்திற்குள்ளானது.
ஆனால், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள் போலன்றி பிரிட்டிஷார் இருபக்கக் கரைகளிலும் கடல் வாணிபத்தை புத்தெழுச்சிபெறச் செய்து தனியாருக்குக் கைகொடுத்தனர். கொழும்பு, காலி என ஒருபக்கத்திலும், கீழக்கரை, தூத்துக்குடி என மற்றொருபக்கமும் அடிக்கடி மரக்கலங்கள் வருவதும் போவதுமாக இருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மறுபடியும் முத்துக்குளிப்பு ஒரு முக்கியத் தொழிலாக ஆனது. பிரிட்டிஷ் அரசு முத்து சலாப உரிமையை தனியாருக்கு தாராளமாக ஏலத்தில் விற்றது. அதில், கீழக்கரைவாசிகளின் செல்வாக்கு கணிசமாகத் துளிர்த்தது. அந்நிலை,

Page 49
92 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து (1925) ஆண்டுகள் வரையில் நிலைத்தது.
இதேபோல, டச்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பாக்கு ஏற்றுமதியையும் பிரிட்டிஷார் தனியார் வசமாக்கினர். 19-ஆம் நூற்றாண்டில் அதுவொரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக வளர்ந்தது. கண்டி அரசின் பொருளாதாரமே பாக்கு ஏற்றுமதியிலேயே தங்கியிருந்தது. * *
இந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்களுடன் ஈடுபட்ட இன்னொரு வாணிபம் புகையிலை. அப்பொழுது அதன் உற்பத்தி யாழ்ப்பாணக் குடாநாட்டில்தான் பெரும்பாலும் இருந்தது. **
மேலும், ஆங்கிலேயர் ஆதிக்கத்தில், காயல்பட்டினத்தையும் கீழக் கரையையும் சேர்ந்த முஸ்லிம்கள் மலையகத்தில் பெருந்தோட்டங்களுக்குப் பக்கத்தில் சிறு சிறு கடைகளை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கி, தோட்டத்தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கினர். **
அவர்களுடன் ஏர்வாடி, தேவிப்பட்டினம், அம்மாபட்டினம், அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை போன்ற ஊர்வாசிகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இவர்கள் அனைவருக்கும் கண்டி, கம்பளை, மாத்தளை போன்ற நகரங்கள் தங்கள் சொந்த ஊர் போலாயின.
*44. 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' - முகம்மது சமீம்,
பக், 168 (21 -ஆவது கட்டுரை. பக் 168)
*45 - மேற்படி - பக் 167 *46 - மேற்படி 19-ஆவது கட்டுரை. பக். 153

மானா மக்கீன் 93
இவர்களது வருகை, இலங்கை முஸ்லிம்களின் தொகையை அதிகரித்தது.
வர்த்தகவளத்தைப் பெருக்கியது.
பண்பாட்டுத் துறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. -
சரி. முத்திலே ஆரம்பித்தோம். இரத்தினத்திலே முடிப்போமா?
வள்ளல் சீதக்காதிப் பெருமகனார் அவர்கள் பலதுறை வர்த்தக வித்தகராக விளங்கியதற்கு சிகரமாக பச்சை மரகதக்கல்லை வகைப்படுத் திச் செப்பனிடும் கலையையும் கை வரப் பெற்றிருந்தார்களாம்!
‘மரைக்காயர் பச்சை” என்றே ஒரு விதமான இரத்தினக் கல்லுக்கு பெயர் விளங்கி வந்ததாகவும், அது இலங்கையில் அபரிமிதம் என்றும் சொல்லப்படுகிறது.
இதை வைத்து ஒரு கதையும் உண்டு கர்ணபரம்பரையாக.
இதுவரை, கவிதைகளைத் தான் காட்டிக் கொண்டு வருகிறேன். கதை ஒன்று சொல்லவில்லையல்லவா?
கேளுங்கள் : வாணிபப்பாலத்தில் ஒரு ‘நொறுக்குத்தீனி’!
* வள்ளலாரது மரக்கலம் ஒன்று இலங்கை சென்று, பொருள் விற்றுத் திரும்பும்போது புயலில் அகப்பட்டுக் கொண்டது. ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவில் பாய்மரக்கப்பல் தத்தளித்தது. கலத்தை நிலைப்படுத்த வேண்டுமாயின்,

Page 50
94 § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இன்னும் கனத்தை அதிகப்படுத்தியாக வேண்டும். உடனே ஆட்களை கயிறு இணைப்புடன் கடலுக்குள் இறக்கி விட்டார்கள். அவர்கள் கடல் மண்ணையும் கல்லையும் அள்ளிக் கொண்டுவந்து மரக்கலத்தில் கொட்டினர். இப்படிப் பலமுறை செய்யச்செய்ய கலத்தின் கனம் அதிகரித்து நிலை கொண்டது. கரைக்கும் வந்து சேர்ந்தது. பின்னர், கல்லையும் மண்ணையும் அவசியமற்ற பொருள் என அள்ளிப்போடப்போனபோது அவை அத்தனையும் விலை மதிப்புமிக்க பச்சை மரகதக்கற்கள் என அடையாளம் கண்டனர்; அதன்மூலம் அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் பெரும்பொருள் கிடைத்தது!
இக்கதையில் எத்தனை உண்மை உண்டு என்பதை அறிய ஆதாரம் எதுவும் இல்லை. கர்ணபரம்பரைக்கதை என்பதே என் பேனாவின் பதிவு! ஆனால் “மரைக்காயர் பச்சை’ இப்பொழுதும் உண்டு எனக் கேள்விப்படுகிறேனே!
நல்லது.
எப்படியோ ஒரு மாபெரும் வாணிப சக்தி -
அதுவும் இறைகிருபை கொண்ட ஒரு மனிதப்பெருந்தகை
இலங்கையையும் கீழக் கரையையும் இணைத்திருந்த ஒருபாலம் -
மழைக்கும் வெயிலுக்குமாக தம் புகழுடம் பைக் காட்டியவாறு, அந்தப்பெருமைமிகு கீழக்கரை, குத்பாப் பள்ளிவாசலில் சயனித்த படி, தம் வழித்தோன்றல்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கத் தொடங்கி சில நூறு ஆண்டுகள் ஆகிப்போய்விட்டன.

மானா மக்கீன் 95
எட்டாண்டுகளுக்கு முன் (1990) என் பேனாவும் நானுமாக அந்த இடத்தில் கால் பதித்ததுண்டு. அப்பொழுது அடைந்த மெய்ச்சிலிர்ப்பு இப்பொழுதும் ஏற்படுகிறது.
எதிர்ப்பக்கத்தில் நான் நேரில் கண்ட வள்ளல் சீதக்காதியின் அடக்கத்தலத்தை இந்த நூற்றாண்டில் உள்ளவர்களும் அடுத்த நூற்றாண்டில் நூழையப் போகிறவர்களும் காண்பதற்காக வழங்கியுள்ளேன். அவர்களது கடைசி விருப்பத்திற்கு இணங்க கப்ரு (கல்லறை) கட்டப்படாமலும் மேற்கூரை அமைக்கப்படாமலும் இருப்பது தனிச்சிறப்பாகும். (பட உதவி பெரியவர் எம். இத்ரிஸ் மரைக்காயர் அவர்கள்)
மேற்கொண்டும் இந்த வாணிபப்பாலத்தில் எதையெல்லாம் குறித்துக்காட்டுவது என்ற வழிவகை அறியாதவனாக உள்ளேன்.
எவ்வாறாயினும், வள்ளல் அவர்களது தம்பி ஒருவர் பற்றியும் வேறு சில பிரமுகர்கள் பற்றியும் ஒருசில வரிகள் குறித்திடல் கடமை.
மாமுநெய்னா என்ற பட்டத்து முஹம்மதப்துல் காதிர் மரக்காயர் அவர்களே வள்ளலின் மூத்த தம்பி. வள்ளலின் காலத்தில் வாணிபத்தையும் அரச பரிபாலனங்களையும் இவரே அதிகமாகக் கவனித்து வந்ததாகத் தெரிய வருகிறது.
தன் தமையனாரது மறைவின்பின் அரசு பரிபாலனங்களையும் வாணிபத்தையும் விரிவாக நடத்தி வந்ததோடல்லாமல், சேதுபதியின் அரசவையில் அமைச்சராக இருந்தார். ரவிகுல ரகுநாத முத்து of:": ил பெரியதம்பி’ என்ற சிறப்புப் பட்டமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரும் ஷெய்கு இபுராஹிம் என்ற இரண்டாவது தம்பியும் எந்த அளவுக்கு இலங்கையுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கைக்குச் சென்றவர்களா என்பதனை அறியவும் மேலும் ஆய்வுகள் அவசியப்படுகின்றன.

Page 51
இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகள்
 

97.
வள்ளலின் வழியில் வாணிபம் தொடர்ந்தோரில் சிலர்.
இப்பொழுது வள்ளல் அவர்களது வழித்தோன்றல்கள் சிலரை அறிமுகப்படுத்திக் கொள்வோம்.
முதலில் -
#+ வள்ளல் லெப்பை நெய்னா மரக்காயர்
ஹறி. | 515 KL. 1593 - 1772
•? 'அவ்வாகாரு மரக்காயர்’ என்ற அப்துல் காதிர் மரக்காயர்
ஹி.105/1130 கி.பி. 1893 - 1766)
- இவர்கள் இருவரும் அண்ணனும் தம்பியும்.
இவர்களில் முதலாமவரை ஏற்கெனவே வரலாற்றுப் பாலத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு தீவின் சொந்தக்காரராக. (யாழ்க்குடாவில் நெய்னாதீவு
இங்கே மேலும் சில தகவல்கள் (வரலாற்றுப்பாலத்திலும் சொல்லாமல் இல்லை.
இவரும், இவரது சகோதரரும், வள்ளல் சீதக்காதி அவர்களது தம்பி மாமுநெய்னா என்ற பட்டத்து முஹம்மது அப்துல் காதிர் மரக்காயரது மகனார். பட்டத்து அபூபக்கர் மரக்காயரது புதல்வர்கள். சதக்கத்துல்லா அப்பா (வலி) அவர்களது கடைசி மகள் சாரா உம்மாவை அன்னையாக அடைந்தவர்கள்.

Page 52
98 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
நெய்னாதீவுப்பகுதி ‘நாகரத்தினங்களுக்கு’ப் பெயர் பெற்றதென தமிழ்ச் சகோதரர்கள் சொல்வார். அந்தவகையில் பெரும் இரத்தினக்கல் வியாபாரியாக மூத்தவர் திகழ்ந்திருக்கலாம். அதையும் விட, பல வர்த்தகக் கப்பல்களுக்கு உரிமையாளராக இருந்து வாணிபம் செய்தவர்.
இரண்டாமவரோ, பெரும் தொழிலதிபராக, இலங்கை - கீழக்கரை துறைமுகங்களில் கிளை அலுவலகங்கள் வைத்திருந்தார். கொழும்பு - காலி - திருகோணமலை ஆகிய இடங்களில் 'அவ்வாகார் மரக்காயர் பண்டகசாலைகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
இலங்கை மட்டுமல்ல, பர்மா, பங்களாதேஷ் என அவரது தொழில் பரந்திருந்ததோடு சன்மார்க்கப்பணியும் தொடர்ந்தது.
தரறைமுகத்தின் சொந்தக்காரர்!
v இவ்விருவருக்கும் அடுத்து வருபவர் இன்னொருவகையில் தனித்துவமானவர்.
இவர், இலங்கையில், ஒரு துறைமுகத்திற்கே சொந்தக்காரராக இருந்திருக்கிறார்! w
அதனை அறிதல் நல்ல சுவையான “லைட் ரீடிங்’
அந்தத்துறை அமைந்திருந்த இடம் நமக்கு ஏற்கெனவே பழக்கமான பிரதேசந்தான்!
புத்தளம்
அங்கே, ஏத்தாலை என்ற ஊர். அடையாளம் காணவேண்டியது அவசியம். எதற்கும் 81-ஆம் பக்ச
வரைபடத்தையும் ஒருமுறை நோட்டமிட்டுவிடுங்கள்.

மானா மக்கீன் 99
பிரதான கொழும்பு - புத்தளம் தரைவழிப் பாதையில், புத்தளத்தை அடைவதற்கு மூன்றரை மைல் தூரம் இருக்கையில், பாலாவி சந்தி ஜங்சன்) வருகிறது. அதிலிருந்து பிரியும் பாதை கல்பிட்டியை சென்றடைகிறது.
இந்தப்பாலாவிக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட ஊர்களாக திகழி - ஏத்தாலை - நுரைச்சோலை - ஆலங்குடா - பாலக்குடா - கண்டற்குடா - பள்ளிவாசல்துறை - குறிஞ்சிப்பிட்டி எனப் பல இருக்கின்றன. இப்பகுதி ஊர்களின் அமைப்பில் ஒரு விசேடம் உண்டு. ஒரு தமிழ் ஊருக்கு அடுத்து முஸ்லிம் ஊர் வரும். முஸ்லிம் ஊருக்கு அடுத்து ஒரு தமிழ் ஊர் வரும். (கிழக்கிலங்கையிலும் இப்படி காணலாம்).
ஒருகாலத்தில், இவற்றையெல்லாம் சென்றடைய இரு கடல்வழிப்பாதைகள் இருந்தன.
ஒன்று, புத்தளத்திலிருந்து நேராக ஏத்தாலை (திகழி) துறையை அடையும். மற்றது, கல்பிட்டி செல்லும். மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கும் படகுகள் செல்லும்.
இத்தகைய கல்பிட்டிக் குடாநாட்டில் வர்த்தக கேந்திரங்களாக செல்வாக்கு மிகுந்து விளங்கியவை திகழியும் கல்பிட்டியுமாகும்.
* திகழியின் இறங்குதுறையாக ஏத்தாலை விளங்கி மிகப்பிரசித்தமாக இருந்தது. அத்துறையின் அருகில் இருந்த பாரிய ஆலவிருட்சத்தின் அடிக்கு மக்கள் தங்கள் பொருட்களை படகுகளில் ஏற்றுவதற்காகக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். “பொருட்களை ஏற்றும் ஆலமரத்தடி என்னும் பொருள்பட அவர்கள் அவ்விடத்தை ஏற்றாலை (ஏற்று ஆலை) என்று வழங்கினர். அப்பெயரே ஏத்தாலை என்றாகியது. ஏற்றுதல் என்ற சொல்லைப் பேச்சு வழக்கில்

Page 53
ரி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஏத்துதல் என்று உச்சரிப்பது இப்பகுதியினரின் பழக்கமாகும். புத்தளத்திலிருந்து தென்னிந்தியத் துறைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஏத்தாலைத் துறையில் இறக்கப்பட்டு அங்கிருந்து தரைவழியாக நேர்த்திசையில் இந்து சமுத்திரக் கரையிலுள்ள கப்பலடி என்ற துறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. * '
இத்தகைய ஏத்தாலைத் துறையைத்தான் கீழக்கரை ‘ஹபீபு
அரசர்’ (ஹி. 1191/1232 - கி.பி. 1777 1816) அவர்கள் தன் சொந்தத் துறைமுகமாக வைத்திருந்தார்கள்;
கப்பல் கட்டுவதற்கு தனி இடமும் வைத்திருந்தார்
இத்துடன் முடிந்ததா தகவல்கள்? இன்னும் இருக்கின்றன.
அருமையான துணுக்குத் தகவல்கள்.
**
இவரும் சீதக்காதி வள்ளல் அவர்களது வழித்தோன்றலே.
அவ்வாகாரு மரக்காயர் என்ற அப்துல் காதிர் மரக்காயர் மகள் முஹம்மது இபுராஹிம் உம்மாவின் குமாரர்.
'இரண்டாவது சீதக்காதி" என்று அழைக்கப்பட்டார். இன்றும் அழைக்கப்படுகிறார். ‘வள்ளல் ஹபீபு அரசர்’ என புகழப்படுகிறார்.
சொந்தமாக நாற்பது கப்பல்களை வைத்திருந்ததோடு, *முதன்முதலாகக் கப்பலோட்டிய தென்னிந்தியர்' என வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
*47 'புத்தளம் வரலாறும் மரபுகளும்' - தாஜுல் அதீப் அசன் நெய்னார்
மரக்காயர் (ஏ.என்.எம். ஹாஜஹான் பக். 165 - 166 (1992)

மானா மக்கீன் 101
* மன்னார்-மரிச்சுக் கட்டி முத்து சலாபத்தை பிரிட்டிஷாரிடமிருந்து குத்தகைக்கு எடுத்துப்பெரும்சாதனை படைத்தார்.
«Х• அவரது பண்டகசாலையொன்று கொழும்பு, பேங்க்சால்
வீதியில் அமைந்திருந்தது.
«Х• வள்ளல் ஹபீபு மரக்காயர் அவர்கள் - மகன் ஷெய்கு சதக்கத்துல்லா மரக்காயர் அவர்கள் - தம்பி அப்துல் காதிர் மரக்காயர் அவர்கள் - ஆகிய மூவரது வள்ளல் தன்மைக்கும், வர்த்தக நேர்மைக்குமாக இலங்கை ஆளுநர் கொடுத்த நற்சாட்சிப் பத்திரங்கள் உண்டு. அவை, அடுத்தடுத்த பக்கங்களில் நகல்களாக அபிமானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
oKo இம்மாமனிதரை வர்த்தகராக மட்டும் வகைப்படுத்திவிட (tp tԳ ul T Ց]. அவர் ஓர் ஆன்மிக வாதி. சன்மார்க்க சேவையாளர். நல்ல இலக்கியப் புரவலர். அடுத்தடுத்து, ஆன்மிகம் - இலக்கியம் ஆகிய பாலங்களில் நடைபயிலும்பொழுது அவற்றை அறிந்து கொள்வோம்.
ஆன்மிகவாதிகள் ஆரம்பகால வர்த்தகர்களே!
கீர்த்திமிகு கீழக்கரை பல்லாயிரம் சன்மார்க்க சீலர்களையும் பலநூறு மார்க்க அறிஞர்களையும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது.
அவர்களுள் பெரும்பாலோர், தங்கள் முன்னோர்களான அறபுக்கள் போலவே ஆரம்பத்தில் வாணிபர்களாக வளம்பெற்றிருந்தனர். பின்னரே ஆன்மிகவாதிகளாகி அற்புதம் விளைவித்தனர்.

Page 54
· · 々***3飞2小心 、く**! 2
· -***も\~☆(*.*
••••••2-22-„4z^2)^|×2,\2%· oz. ozza-oé,22°•••••••••••yo
33년편지
fo/ zá o!*心心

103
-wezo~*~>~~<>. e2-zezo-~~~2^
• • •**''**ミマ*zo*%、 ~~~~~>əozzeo心~☆ ド**心
·gn4홍城rn n용니us高昌 南湖SDus8 モqQ* seae@ @s@sues。セnussaguaoops@$şşĢo @rnbeş, spoon pogreso ym use șúgı Hışıdīš (pie spre

Page 55
104
,reer چوہ محہ بن محمد مجمہ کرے
ރި44، ބީއި4ގعن44ޝީޝި4/4/ޓ44) fർീy aർ മർd be it drgീർ 7・// 4 ،محسوس ہستیش محس ھمیشہ محس، چیمہ 6 04 W ZZŽ2 Z 2'. ޝަޝަބީޕޯބި
ധീല ޝޯންތަޔެއް%ގޭ 士丝唸公-竺
(du سسو سب سمعہ &ބިޟިޢާއއޯ7.އޯ44ة و
選%。分勾リ
%'Z'); ് 46/ ;%%%^ޕާކިއްޓާ.ގޭޞީ=j.4
 
 
 
 

மானா மக்கீன் 105
வாணிபம் செய்துகொண்டே மார்க்க மேதையாக துலங்குவது அனைவராலும் முடிகிற காரியமல்ல.
நல்ல வர்த்தகராக இருந்துகொண்டே நானிலம் போற்றும் ஞானியாகத் திகழ்வதும் நடப்பதல்ல.
கீர்த் திமிகு கீழக் கரை அதனையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பெருமதிப்பிற்குரிய ஒரு செய்யித் முஹம்மத் அவர்கள் நம் கண்ணெதிரே தென்படுகிறார்கள்.
யோசிக்க வேண்டியதில்லை, யாரென்று?
குத்து புஸ்ஸமான், இமாமுல் அரூஸ், மாதிஹ"ஸ் எமிப்தைன், ஹஜ்ஜ"ல் ஹரமைன், அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களே! (ஹி. 1232 - 1316/கி.பி. 1816 - 1898).
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி -
நான்மாடக்கூடலான மதுரை மாநகரிலேயே முதன்முதலாக தோற்றுவிக்கப்பட்டிருந்த தைக்கா ஹார்ட்வெயார்ஸ் ஸ்டோர்ஸ் இரும்புக்கடையும், கீழக்கரையில், ஓடக்கரைப் பள்ளிக்குளத்திற்குக் கிழக்கில் அமைந்திருந்த பிரம்மாண்டமான 'தைக்காக்கடை என்ற பல்பொருள் அங்காடியும் அவர்கள் புரிந்த வாணிபத்திற்கு அடையாளங்களாகும்.
அவர்களுக்கு “முலவங்கூடு” என்ற பெயரில் ஒரு மரக்கலமும் இருந்தது. (இப்பெயர், கொச்சினுக்கு அருகிலுள்ள ஓர் ஊரினுடையது). இதன்மூலம், இலங்கையிலிருந்து கீழக்கரைக்கு இரும்புகளைத் தொகையாகக் கொண்டுவந்து இறக்கும் தொழிலும் நடத்தினார்கள்.

Page 56
106 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
சுமார் 1835-ஆம் ஆண்டளவில், முதன்முதலில் அன்னார் இலங்கைக்கு விஜயம் செய்தபொழுது இளைஞரே! பதினெட்டோ, பத்தொன்பதோ பராயம்
தீனுல் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் எனச்சொல்லிக் கொண்டோர், ‘வெறும் முஸ்லிம் பெயர்தாங்கி களாக இருப்பதையும், இஸ்லாத்தில் பற்று குறைந்த மக்களாய் இருப்பதையும் கண்டு பதைத்து வியாபார நோக்கத்திற்கு விடைகொடுத்தார்கள். பொன்னையும் பொருளையும் அள்ளிச்செல்லவேண்டியவர்கள் இஸ்லாமியப் பணியாளராக மாறிப் போனார்கள் - தங்கள் மூதாதையர்களைப்போன்று
வாணிபம் இரண்டாம்பட்சமாகப் போயிற்று
மேலும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களது வம்சக் கொழுந்துகளில் இரண்டாவது புதல்வரான அஹ்மது முஸ்தஃபா என்ற ஷாஹ0ல் ஹமீது ஆலிம் (ஹி. 1271 - 1339 கி.பி. 1854 - 1920) அவர்களும் அவ்வாறே
தந்தையார் அவர்கள் நிறுவிய மதுரை வர்த்தகத்தைப் பொறுப்பேற்றார்கள். இலங்கை வாணிபத்தை நிர்வகிக்கப் புகுந்தார்கள். ஒரு நிலப்பிரபுவாக ஜமீந்தார்) வெள்ளையராட்சியில் கணிக்கப்பட்டார்கள். நாளடைவில் அப்படியே ஆன்மிகப்பணிகளிலே ஆழ்ந்து போனார்கள்! “ஜல்வத்து நாயகம்" என இறைபக்தர்கள் பெயர் சூட்டினார்கள் அவர்களால் பெரும்பலன் இலங்கை முஸ்லிம்களுக்கே கிடைத்தது!
ஜல் வத்து நாயகம் அவர்களது வாரிசுகளுங்கூட வாணிபத்தில் வலம் பல வந்து வல்லோனின் பணியில்
சங்கமமானவர்களே!

மானா மக்கீன் 107
முக்கியமாக, முதல் துணைவியார் கதீஜா உம்மா அவர்களின் மூலம் உலகுக்குக் கிடைத்த மூன்று மாணிக்கங்களில் மூன்றாமவரான அல்ஹாஜ் தைக்கா அஹ்மது அப்துல்காதிர் நாயகம் (ஹி. 1309 - 1397/1891 - 1976) இலங்கை முத்து சலாபத்தில் முதன்மை மனிதருள் ஒருவராகத் திகழ்ந்தார்கள்.
1933 -ஆம் ஆண்டுக்கு முன்வரை இவர்களை இலங்கை முத்து சலாபங்களில் தான் யாரும் பார்த்திருக்க முடியும் **
அந்தளவுக்கு முத்து வாணிபத்தில் ஈடுபாடு கொண்டு, அதேநேரத்தில் பெரிய விளம்பரங்கள் எதுவுமில்லாமல், சலாபங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டுவிட்டு கீழக்கரை திரும்பி விடுவதே அவர்கள் வழக்கம்!
(மேலே குறிக்கப்பட்ட அனைவரும் ஆன்மிகப்பாலத்திலும் முக்கிய இடம் பெறுகின்றனர்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு பெண்மக்கள் மூவரும் இருந்தனர். பாலாமினா - செய்யித் ஃபாத்திமா - உம்மு ஸல்மா - ஆகியோரில், கடைசி மகளார் ஆண்குழந்தை ஒன்றுக்கு ஏங்கினார். அதற்கும் அல்லாஹ் அருள்பாலித்தான். அந்தக் குழந்தைக்கு மலபார் புஹாரி தங்ங் ள் அவர்களது பெயரிடப்பட்டு வளர்ந்து வாலிபரானதும் லெய்யித் முஹம்மது புகாரி ஆலிம் ஆனார்! * *
இந்தகப்புகாரி ஆலிம் அவர்கள் பிற்காலத்தில் ஒரு பிரபலமான முத்து வித்தகரானார்!
*48. 'ஸரன்தீவின் உரிமை' - ஏ.சி.எ. ஜப்பார் (ஷெய்கு நாயகம்
ժin)ւյւ ա960m: 1967) ւյé. 27
*49, 'பத்ஹாத் தயான்' கிரந்தத்தின் தகவலை அடியொற்றியது.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்)

Page 57
இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அபூர்வமான முத்துக்களுக்கு சரியான விலைமதிப்பதில் நிபுணர் எனப்பெயரெடுத்தார். 1925 - இல் நடந்த ஒரு மதிப்பீட்டில் அவர் பிரதான இடம் வகித்தார். * °
அன்னாருக்கு இரு புதல்வர்கள். இருவரும் இன்று உலகளாவிய ரீதியில் அறியப்படுபவர்கள்.
வள்ளல் அப்ஸலுல் உலமா தைக்காப்பா செய்யித் அப்துல் காதிர் ஒருவர். அடுத்தவர், "பீ.எஸ்.எ.’ என்ற மூன்றெழுத்துக்களால் அறியப்படும் செய்யித் அப்துல் ரகுமான் அவர்கள்.
இன்று, உலகத்தின் பெரும்பகுதியிலும் பெரும் பேறுடனும், புகழுடனும் பிரபல வணிகப்பிரமுகராக வாழ்ந்து கொண்டிருப்பவர் “பீ.எஸ். ஏ.” அவர்கள். கீழக்கரை ஹமீதிய்யா உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு அல்ஹாஜ் செய்யித் அப்துர் ரஹ்மான் அவர்கள் வாணிபத்திற்காகப் புறப்பட்ட முதல் பயணம் இலங்கைத் தலைநகர் கொழும்பு!
ஏற்கெனவே, கொழும்பில் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமையனார், அல்ஹாஜ் கே.டி.எம்.எஸ். அப்துல் காதிர் தைக்காப்பா அவர்களிடம் சென்று வியாபாரம் பழக ஆரம்பித்து விட்டார்கள்
1928-இல் பிறந்த மதிப்பிற்குரிய "பீ.எஸ்.எ. அவர்களுக்கு கொழும்பு வரும்பொழுது எத்தனை வயதிருந்தது என்பதை மட்டும் நான் ஆராயமல் விடப்போகிறேன். கொஞ்சம் சோம்பல்! மன்னியுங்கள்!
எவ்வாறாயினும், இளம் வாலிபரே! நிச்சயம்!
*50 ஆயிரங்காலத்து அலைமோதல் - கட்டுரை. மன்னார் ம.றுேரப் அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடு வெளியீடான' கிழக்கரை மலர் - 1790

வந்தார்கள் வாணிபத்திற்கு. ஆனால்.
மேற்குறிப்பிட்டவர்களது பண்டகசாலையில் இருந்தவாறு, முத்து, மரகதம், மாணிக்கம், என வாணிபம் புரிந்தார் ஒருவர். அவர், இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களது தக்கியாத் தோழர்களுள் ஒருவருங்கூட அப்துல் காதிர் நெய்னா லெப்பை ஆலிம் (ஹி.1269/கி.பி. 1852) என்ற பெயரைக் கொண்டிருந்தார். ஆனால் வாணிபம் புரியத் தொடங்கி மாபெரும் இலக்கிய வித்தகரானார்! ‘புதுக்குஷ்ஷாம் புலவர் நாயகம் சேகுநாப்புலவர்’ எனத் தமிழ்நாடும் இலங்கையும் போற்றத்தொடங்கின, இன்றும் போற்றிக்கொண்டே இருக்கின்றன!
இப்புல வரைப் போல பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் இலங்கைக்கு முத்து வாணிபத்திற்கு வந்த வர்த்தகருள் ஒருவர் அப்துல் மஜீது மரக்காயர். வள்ளல் சீதக்காதி அவர்களது ஒரே மகளான முஹியித்தீன் நாச்சியார் கொள்ளுப்பேரன் இவர், ஆனால், புத்தளம், கல்பிட்டி, திகழிப் பிரதேசங்களில் இவர் திகழ்ந்த விதமோ வேறு! அதனை இலக்கியப்பாலத்தில் நான்
ஆசாரமாகச் சொல்ல வேண்டும்!
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஷெய்கு நார்தீன் ஆலிம் அவர்களுங்கூட கொழும்பில் வாணிபம் செய்துகொண்டே தமிழறிஞராகிப் பெரும் புலவராக மாறிப் போனார்!

Page 58
110 `f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
தேடுவாரற்றிருக்கும் செ.நெ. சொத்து!
இலங்கையில் வாழையடி வாழையாக வாணிபம் செய்துவிட்டு பல சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டுப்போன மனிதர்களும் கீழக்கரையில் இருந்தனர்!
கீழக்கரையின் பெரிய குடும்பங்களில் ஒன்று, செ.நெ.ஷேக் முகம்மது மரக்காயர் குடும்பம் . இக் குடும் பத்தவரின் வணிகத்தலங்களும், அது தொடர்பான கடற்புறத்துச் சொத்துக்களும் வகைதொகையற்றவை ஆகும். இலங்கையின் மன்னார் மாவட்டம் உள்ளிட்டு வடபுலத்தின் கடற்கரை நெடுகிலும் இவர்களது பல சொத்துக்கள் தேடுவாரற்று சிதைந்து கிடக்கின்றனவாம்!*
வாடிகள் அமைத்து வாழவைத்தார்!
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கீழக் கரையில் உருவானவர் ஹ"சைன் ஹாஜியார் என்ற அதிசய மனிதர்.
கீழக்கரையின் இன்றைய சீமான்கள் சிலர் உருவாவதற்குக்
காரணகர்த்தா எனில் மிகையல்ல. * ?
இவரது இரத்தினக்கல் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் பங்காளிகளாக ஆக்கப்பட்டார்கள். அப்படி சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களெல்லாம் தனித்தனி வாணிபத்தைத் தோற்றுவித்து சீமான்களானார்கள்!
* 51. ஆயிரங்காலத்து அலைமோதல் கட்டுரை மன்னர் ம.றுேரப் அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடு வெளியீடான கீழக்கரை மலர் 1990 பக். 47
ரி 82, மேற்படி மலர் பக். 63 அதிசய மனிதர் - வகுதையூரான் கட்டுரை

மானா மக்கீன் 111
மன்னார் மாவட்டத்தில் பல சங்கு வாடிகளை அமைத்து பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து அதிசயம் புரிந்தார் ஷ"சைன் ஹாஜி
முஸ்லிம் லீக் பொருளாளரும் ஒர் இலங்கை வர்த்தகரே!
ஒரு கால இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பெரிய தானிய வர்த்தகராகத் திகழ்ந்த கீழக்கரை தை. அப்துல் ஹமீது ஆலிம் சாஹிப் அவர்களது புதல்வர் மர்ஹoம் தை.அ. செய்யிது அப்துல் காதிர் அவர்கள் சிலகாலம் தமிழ்நாடு முஸ்லிம் லீகின் பொருளாளராக சேவை புரிந்தார். அவர் வாணிபத்திற்காகத் தேர்ந்தெடுத்த இடம், கொழும்பு - குமாரவீதி தையன்னா ஆனா’ எனப்பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்! கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களது இலங்கை விஜய ஏற்பாட்டுக்குப் பின்னணியில் நின்றவரும் அவரே!
பண்டகசாலைகள் வைத்திருந்தார்கள் பலர்!
கொழும்பிலும், இலங்கையின் முக்கிய நகரங்களிலும் பண்டகசாலைகள் வைத்திருந்த கீழக்கரைவாசிகள் அனேகர். வள்ளல் சீதக்காதி, அவ்வாக்கார் மரக்காயர் முதற்கொண்டு, முஹம்மது காசிம் மரக்காயர், சேகு சதக்கத்துல்லா மரக்காயர் ஈறாகப் பலர், பலர்!
கடைசியாகக் குறிப்பிட்ட முகம்மது காசிம், சேகு சதக்கத்துல்லா இருவரும் சகோதரர்கள். வள்ளல் சீதக்காதியின் உடன்பிறந்தாராகிய மாமுநெய்னா அவர்களது வழித்தோன்றல்கள். அவர்களுக்குக் கொழும்பில் பெரிய பண்டகசாலை இருந்தது. இதுதான் ‘தைக்கா கிட்டங்கி’ என அழைக்கப்பட்டதா என்பதற்கு விவரம் தேவைப்படுகிறது.

Page 59
112
f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
நல்லது அபிமானிகளே!
நாலைந்து வரிகளில் மேலும் சில குறிப்புகளை வழங்கிவிட்டு,
கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கீழக்கரை வர்த்தகப் பிரமுகரை நேர்முகம் காண விழைகிறேன்.
0.
•
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகவே கீழக் கரையின் கப்பல் வாணிபம் நசித்துப்போனது. ஆங்கிலேயரது நவீன கப்பல்களுடன் போட்டிபோட இயலாத ஒரு நிலை ஏற்பட்டது.
முத்து சலாபத்திற்கு முடிவு 1925-இல் ஏற்பட்டது. அதன்பின் இலங்கையில் நடைபெறவேயில்லை.
அப்பொழுதும் இலங்கையை மறந்தார்களில்லை! பரம்பரைத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன, வேறு வேறு வர்த்தகங்கள் செய்வோம் என்று இலங்கையின் பல ஊர்களுக்குள்ளும் ஊடுருவினார்கள்.
அவற்றில் மிகமிக முக்கியமானது குருனாகலை என்கிற குருனாக்கல்!
கீழக் கரைக்குக் கேந்திரமாக இருந்தது கொழும்பு
ல்லவாம்! ணாக்கல் காமாம்! --- ტ(Uნ( }9تک

13
கீழக்கரைக்குக் கேந்திர இடம் குருனாக்கல்
மேற்படி தகவலைத் தெரிவித்தது, கீழக்கரை, மேலத்தெரு பெருமகனாரும், புறக்கோட்டை (பெட்டா) கெய்சர் வீதி ஸ்டார் எண்டர்பிரைசஸ்' (ஜெமெக்ஸ் நிறுவனத்தின் அதிபதியாகவும் திகழும் அல்ஹாஜ் கே.எஸ்.எ. அபூஸாலிஹ் அவர்கள்
ஒரு விடுமுறைநாளின் காலைப்பொழுதில் அவர்களது நேர்முகம் தித்திப்பான நிகழ்வு.
சரியாக அரைநூற்றாண்டை இலங்கையில் கழித்தவர்களாக
இருக்கிறார்கள்.
ஒரு பெரும் பணக்காரருக்குரிய படாடோபமோ, பகட்டோ இல்லாத எளிமை, இனிமை
பெரும்பாலான கீழக் கரைவாசிகளே இப்படித்தானே என்கிறீர்களா, உண்மை, உண்மை!
மேற்படி அபூஸாலிஹ் ஹாஜியார் அவர்களது ஆரம்பகாலம் பத்தாண்டுகள் - குருணாக்கலில் கழிந்துள்ளது.
அந்த அனுபவத்தை வைத்துத்தான் மேற்கண்ட நல்ல தகவலைச் சொன்னார்கள்.
முக்கியமாக, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து அப்படித்தானாம்

Page 60
n
114 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
நான், அதிசமும் ஆச்சரியமும் அடைந்தது உண்மை!
“பெரும்பாலானோர் கருதுவதுபோல பெரும் பெரும் வர்த்தகங்கள் கொழும்பில் ஆரம்பிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட நரற்றுக்கு எழுபத்தைந்தது விழுக்காடு வியாபாரங்கள் குருணாக்கலிலேயே ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தன!” என்றார்கள் அவர்கள்.
எனக்கு சட்டென்று, பெரியவர் இத்ரீஸ் மரைக்காயர் ஹாஜி அவர்கள், தங்களது ‘நினைவு மலர் களில் 36 ஆம் பக்கத்தில் குறித்திருந்த தகவல் நிழலாடியது.
«Х• *அங்கு குருனாக்கலில் எங்கள் ஊர் இன்பந்துக்கள் ஜவுளிக்கடைகளும், மற்ற மற்ற வியாபாரங்களும் செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வருவதைப் பார்க்க மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது”
“அவர்கள் குறிப்பு நூற்றுக்கு நூறு சரியானது” என்றார்கள் அபூஸாலிஹ் ஹாஜியார் அவர்கள்.
பாரதநாட்டுக்கு ஒரு ‘கேட்வே ஆஃப் இந்தியா டெல்லியில் இருப்பதுபோல, இலங்கைக்கு நுழைவாயில் குருணாக்கல் நகரமாகக் கீழக்கரை வாசிகளுக்கு இருந்துள்ளது. m
இதற்கு முக்கிய காரணம் - நினைத்தவுடன் கீழக்கரையில் பயணம் வைத்து, அறுபது அறுபத்தியிரண்டு கி.மீ. தூரமுள்ள ராமேஸ்வரம் வந்து, கப்பலில் பயணித்து, மன்னார் மண்ணில் கால்பதித்து, தொடர்வண்டியில் ஏறினால் அநுராதபுரம் - மாஹோ சிங்களப்பிராந்தியங்களைக் கடந்த முதலில் வரும் செழிப்பும், வணிகத்தொடர்புகளும் உள்ள நகரம் குருனாக்கலே என்பது அபூஸாலிஹ் ஹாஜியார் அவர்களது கணிப்பு.

மானா மக்கீன் 115
அக்காலத்தில் - அதாவது, இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் அங்கு செல்வாக்குடன் இருந்த நிறுவனங்கள் சிலவற்றின் பெயர்களையும் அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.
பார்க்கிறீர்களா!
oxo ரஹ்மானிய்யா ஸ்டோர்ஸ். (மு.அ.மு. அப்துர் ரகுமான்)
ஜவுளிக்கடை.
ぐ。 கே.எம்.எஸ். அபூதாஹிர் - ஜவுளிக்கடை.
0. ஜமாலிய்யா ஸ்டோர்ஸ் - ஜவுளிக்கடையும் நகைக்கடையும்.
இப்பொழுது நகைக்கடைமட்டும்.
ex- ஏ.எம்.எம். முஹம்மது சத்க் - இரும்புக்கடை.
-09 எம்.எம். மஸ்தான் - சாப்புக்கடை
o குமு.சி. கிதறு முகியத்தீன் - சில்லறைக்கடை.
09 லக்கி ஸ்டோர்ஸ் - (ஹசன் அப்துல் காதிர், லக்கீ சாவண்ணா
என்ற சாகுல்ஹமீது ஆகியோர் பங்காளிகளாக நடத்தியது.
எஸ்.கே.வி. ஜெய்னுலாப்தீன் கடை.
இந்தப்பட்டியல் ஓர் அவசரக் குறிப்பு என்பதைத் தாழ்மையுடன் குறிக்கக் கடமைப்ப்ட்டிருக்கிறேன்.
இன்னும் பல மணிநேரங்களைக் கழித்திருந்தால் பட்டியல் மிக நீண்டிருக்கும்.
அவர்களுக்கு சென்னை செல்லும் அவசரம். எனக்கு எழுதி முடிக்கும் அவசரம்.

Page 61
116 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஆகவே, விடுபட்ட நிறுவன நிறுவனர்கள் மன்னித்திடவேண்டும்!
கடந்த நூற்றாண்டு பொழுதுகளிலேயே, ஜவுளி - இரும்பு - சாப்புக் கடைகள் - நகைக் கடைகள் குருணாக்கலில்தான் அதிகமதிகமாக நிறுவப்பட்டுள்ளன.
மேலும், கீழக் கரையின் மேலத்தெரு, கீழத் தெரு (கிழக்குத்தெரு) மக்கள் ஜவுளிக்கடைகள் - நகைக்கடைகள் தவிர வேறெதுவும் நிறுவுவதில்லை வடக்குத்தெரு, தெற்குத்தெருவாசிகள் இரும்பில் கரும்பாகவும், சாப்புக்கடைகள் வைப்பவர்களாகவும் கொடிகட்டி சிறந்திருக்கிறார்கள்
கொழும்பை இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டியிருந்தாலும், அக்காலத்தில் முத்து - மாணிக்க வியாபாரம் செய்தவர்கள் கொழும்பில் தான் பெரிய கிட்டங்கி களில் தங்கியிருந்தார்கள்.
இன்றையத் தொழில் வித்தகர், "பி.எஸ்.எ. அவர்களது தந்தையார் புஹாரி ஆலிம் அவர்கள், தமையனார் கே.டி.எம்.எஸ். அப்துல்காதிர் தைக்காப்பா அவர்கள், முஹம்மது அப்துல் ஹமீத் துபாய் ஈடிஎ’ வர்த்தக சாம்ராஜ்யத்தின் நிர்வாகப்பணிப்பாளர் ஹாஜி செய்யித் எம். எலலாகுத்தீன் தந்தையார்) அவர்கள், கே.எம்.எம்.எ. அப்துல் காதர், அப்துல் கையூம் ஏ.எம்.எஸ். நைனா முகம்மது போன்ற பலர் நடத்திய மாணிக்க வியாபாரம் கொழும்பிலே தான் ஜொலித்தது.
இதேபோல, மூன்றாம் குறுக்குத் தெருவில் இரும்புக்கடை நடத்திய எ.எம்.எஸ். லெப்பை ஸாஹிப், நான்காம் குறுக்குத்தெருவில் சாப்புக் கடை நடத்திய எஸ்.வி.எம். முகம்மது ஜமால்தீன்
முதலியோரது வர்த்தக முயற்சிகள் கொழும்பிலே பிரபலமானவை.

மானா மக்கீன் 117
இன்று - இதைப்படிக்கும் நேரத்தில் - கீழக்கரை மண்ணின் கீர்த்தி பேச இரு நிறுவனங்கள் மிகுந்த செல்வாக்குடன்
அதிலொன்று - ஏற்கெனவே அறிமுகப்படுத்திக்கொண்ட அபூஸாலிஹ் ஹாஜியார் அவர்களை நிறுனராகக்கொண்ட ஸ்டார் எண்டர்பிரைசஸ். (ஜெமெக்ஸ்) இதற்கு இருபத்தேழு வயதாகிறது. முத்துக்களாகவும், மாணிக்கங்களாகவும் திகழ்கிற புத்திரச் செல்வங்களான, ஹஸன்ஃபாயிஸ், ஹபீப் முஹம்மது, அப்துல்லா ஹாசிம் ஆகியோரது ஆர்வம் மிகுந்த உழைப்பினால் தொழில்துறையில் சிறப்புக்குமேல் சிறப்பு கண்டுள்ளது.
மற்றொன்று - ‘ஈடிஎ’ எனப் புகழடைந்துள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம்.
இது, அறபு ஐக்கிய அறபு எமிரேட்ஸில் தலைமையகமாகக் கொண்டு இயங்குவது.
ஆலவிருட்சம் என வர்ணிப்பது சாலவும் பொருந்தும்.
ஆணிவேராய்த் திகழ்வோர். ஏற்கெனவே நாம் தெரிந்துகொண்ட ஹாஜி பீ.எஸ்.எ.’ (பீ.எஸ். அப்துல் ரஹ்மான்) அவர்களும், இப்பொழுது அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டிய ஹாஜி செய்யித் எம்.சலாஹ"தீன் அவர்களும்.
இவர், இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்கள் வழித்தோன்றல்.
ஆனால், இலங்கை மண்
அதிசயந்தான்!

Page 62
Ед:
18 § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இவர் பற்றி மேலும் சில குறிப்புகள் அவரது படத்துடன் 124-ஆம் பக்கத்தில் தந்துள்ளேன்.
குடும்பத்தொழிலான மாணிக்க வர்த்தகத்துக்காக 1973-ல் துபாய் சென்ற ஹாஜி செய்யித் ஸலாஹ"த்தின் அவர்களுக்குக் கைகூடியதோ மிகமிக வித்தியாசமான துறைகள்.
கட்டட காண்ட்ராக்ட்கள் - மின்சார விநியோகம் - இரும்புகள், மரங்கள் விற்பனை - ஜப்பான் மிட்சுபிஷி எலிவேட்டரின் எமிரேட்ஸ் -ஏஜண்டு என அறபுச் சகோதரர்களையும் - அல் குரைரர் குடும்பத்தினர் - இனைத்து ஆரம்பித்தது தொழில்.
இன்று, "ஈடிஎ" - "அஸ்கொன் பெயர்களைத் தெரியாதோர் இல்லை. பதினேழு நகரங்களில் 65 கிளை அலுவலகங்கள். இதில் இலங்கையும் அடக்கம். "டயல் புல்" சிமெந்து இறக்குமதியும், "சிந்து பாத் தேயிலை ஏற்றுமதியும் செழிப்பாக நடக்கிறது. மிட்சுபிஷி எலிவேட்டர் விநியோகமும், பொருத்துதலும் இன்னொருபுறத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆக - அறபுநாட்டில் பெரும் வாணிபம் செய்தாலும், இலங்கை மண்ணை மறக்க முடியாமல் - ஏதாவதொரு வகையில் தொழில் தொடர்பு வைத்திருக்கும் கீழக் கரை மண்ணின் மைந்தர்களை மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
நல்லது. நடையைச் சற்று விரைவுபடுத்திடலாம். ஆன்மிகப் பாலம் நமக்காக அகலத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாருங்கள். வாருங்கள்.
sus sp. s. RSGGG
接

19
— FTA ASCON LIáMsÚLIIlli JóMU - -
துணைத் தளவவர் துனைத் தலைவர் பி.எஸ். அப்துல் நஹ்மான் அஹ்மத் அவ் ஆங்கரர்
பணிப்பாளர் பணிப்பாளர் ஆரிஃப் புஹாரி றஹ்மான் நஹ்மான் அவ் குரோ
பணிப்பாளர் ஹபீபுள்ளாஹ் அப்துள்ளாஹ் அல் குளிரர்

Page 63
120
இலங்கை மாணிக்க வாணிபத்தில் முன்னோடிகளான கீழக்கரைப் பெருமக்கள் பலரில் சிலர்.
தைக்காக் கோத்திரக் குடும்பத்தினர்
அல்ஹாஜ் மர்ஹஸும் புகாரி ஆலிம் அவர்கள். அல்ஹாஜ் கே.டி.எம்.எஸ். தைக்காப்பா அவர்கள். அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள். (தற்சமயம், இந்திய மண்ணின் ஒப்பாரும் மிக்காருமில்லாத கல்வித் தந்தை)
சேனா மூனா குடும்பத்தினர்
அல்ஹாஜ் மர்ஹலம் சேனா மூனா சதக் அவர்கள்.
அல்ஹஜ்மஹம்எல்எம்.ஜலாலுதீன் அல்லஜ்பங்எஸ்எம் ஹமீது அப்துல்காது
நிறுவனர், சதக் அறக்கட்டளை தலைவர், சதக் அறக்கட்டளை
 

121
சேனா மூன. குடும்பத்தினரில் மேலும் சிலர்.
அல்ஹாஜ் யூசுஃப் அவர்கள். அல்ஹாஜ் டாக்டர் தஸ்தகீர் அவர்கள். அல்ஹாஜ் டாக்டர் சேகு அபுபக்கர். அவர்கள். அல்ஹாஜ் எஸ்.எம்.பி. சித்தீக் அவர்கள். அல்ஹாஜ் சேனா மூனா சித்தீக் அவர்கள்.
இக்குடும்பத்தினரின் 'முஹம்மது சதக் அறக்கட்டளை கல்விச் சேவையில் மகத்தானது. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழிற் கல்லூரி, மருத்துவர் கல்லூரி என பரந்து வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது)
ஆலிம் செல்வன் குடும்பத்தினர்
அல்ஹாஜ் சேகு நூர்தீன் துபாய்) அவர்கள். அல்ஹாஜ் முஹம்மது ஹ"சைன் அவர்கள். அல்ஹாஜ் சம்சுதீன் (கவிஞர் 'ஆலிம் செல்வன்)
மேலும் பல கீழக்கரை மைந்தர்கள்
மர்ஹ"ம்களான -
ஏ.ஜி.ஏ. காதர்.
ஏ.ஜி.ஏ. அதாவுல்லா.
எஸ்.ஏ. அமீன் (முன்னாள் தலைவர், ஆங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்)
துரை ஹாஜியார்.
ஏ.எம். யாஸின் (சமாஸ் - ஆங்காங்)
ஹ"ஸ்ஸைன் தம்பி.

Page 64
122
மேலும் பல கிழக்கரை மைந்தர்கள்.
ஹாஜிகளான - V
‘மெஜஸ்டிக்’ கே.வி. அப்துல் கரீம். ‘ப்ேனா ஹானா எம். எஸ். ஹமீது (முன்னாள்
இந்திய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் - ஆங்காங்) கே.டி.எம்.ஏ. ஹஸ்சைன் அப்துல் காதர். சர்க்கார் ஹாஜியார். சதக் அப்துல் காதர் (தாருல் ஃபாத்திமா).
இன்ஜினியர் காதர்.
எச்.ஏ.சி. காதர். ‘இலக்கியச் செல்வர்’ கே. ஹசன் அலி. அமீர் ஃபாரூக்.
ஹஸன் தம்பி. மெஜஸ்டிக் கே.வி. சதக்கத்துல்லா. முஸ்தஃபா கே.எம்.எஸ். முஹம்மது சாலிஃ (சிங்கப்பூர்) ஹமீது நூஹ"
முஹம்மது இர்ஃபான் ஏ.கே.எம். அப்துல் கையூம் (ஜூவல் கிங்டம்). எஸ்.எம். யாஸின். என்.டி.எஸ். சதக் அன்ஸாரி. என்.டி.எஸ். அமீர் அலி. என்.டி.எஸ். ரஸித் அலி. முஜிபூர் ரஃமான் (துணைத்தலைவர் -
ஆங்காங் தமிழ் முஸ்லிம் சங்கம்)
பி.ஏ.எஸ். நூறுல் அமீன் (இந்திய முஸ்லிம் சங்க
செயலாளர் - ஆங்காங்)
ஹமீது ஜலால் (ஆங்காங், தமிழ் பண்பண்பாட்டுக்
கழக நிறுவனச் செயலர்)

123
இலங்கை - கொழும்புப் புறக்கோட்டையில் கீர்த்திமிகு கீழக் கரையின் வாணி பவளத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழும், அல்ஹாஜ் கே.எஸ்.எ. <やI_わ ஸாலிஹ் அவர்களது *ஜெமெக்ஸ்’ (ஸ்டார் எண்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் ஒரு தோற்றம். இதற்கு வயது 27!

Page 65
124
வாணிபத்தில் வலம் வரும் வளமான தகவல்கள்.
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது சகோதரியின் பேத்தி இவர்கள் அன்னையார். புத்தளம் பூர்வீகம், கொழும்பில் தந்தையார் முஹம்மத் அப்துல் ஹமீத் அவர்கள் மாணிக்க வியாபாரம் செய்ததால் கொழும்பில் பலகாலம் வாழ்ந்தவர். அப்பொழுதெல்லாம் 'தினகரன்’ இவரது அபிமான நாளிதழ். அப்படியானால் இதை எழுதும் பேனாவும் அவருக்குத் தெரிந்துதான் இருக்கும்!
 
 
 

125
அன்று பண்டகசலை இன்று மக்கட்
இலங்கைக் - காலி துறைமுகத்திற்கு அண்மிய வரிய மார்க்கட் அன்று அவ்வாக்கார் மரக்காயர் சந்ததிகளின் பண்டகசாலையாக அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் சங்கு கிட்டங்கி
அக்காலத்தில் யாழ்ப்பிரதேசம் சங்குத்தொழிலுக்குப் பிரதான இடமாகப் பிரகாசித்ததால், யாழ்ப்பாணம், பீச்ரோட்டில் ஒரு பெரிய பண்டகசாலை (கிட்டங்கி) கீழக்கரைவாசிகளுக்குச் சொந்தமாக இருந்தது.
காயலானவிதி
புத்தளம் நகரில் இன்று நாலாம்குறுக்குத்தெரு என அழைக்கப்படும் பகுதி அன்று காயலான வீதி' - என அழைக்கப்பட்டது. இங்கே மீனவர்களுக்காகக் கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டன. காயல்பட்டினம், கீழக்கரை வர்த்தகர்கள் அவர்களுக்கு வாணிபம் செய்தனர்.
Saint Gifu.
கீழக்கரை - காயல்பட்டன வர்த்தகர்கள், தங்கம் வெள்ளி - மாணிக்கக்கற்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு இந்தப் பொதுப்பெயரைச் சூட்டினர்.
தக்குத்தம்பி சிங்களருக்குப் பஞ்சயத்து
குருனாக்கலில் ஜவுளி வியாபாரம் செய்துவந்த க.மு. முகம்மது சதக்குத்தம்பி அவர்கள் பஞ்சாயத்து செய்வதிலும் புகழ்பெற்றிருந்தார். முக்கியமாக - சிங்கள மக்கள் மத்தியில்! ரொம்ப நல்லபெயர்! நிறைய மரியாதை!

Page 66


Page 67
128
'gn1n自守을 1니nn史學事역 KTH0LLJYLK KKKHLLL LLLLLL YYYLLL YYYYS YLLLYY LCTTYKHLLLS LKTJYS 표형5nmuak司, unmpup國: 日國學u4 mhauf월 hamus승환 &Misa*** m*10g 長安urm&aum平城; n院城트는 4史u昌 "관nhauf명 LYTYYK KKK YYYLLLYSLLLS YYY HKCs LLYYKKH KCL LLLYY YS0KKK KKTLsLLK 兵學事ursk國* :5hrmue u正들wahan gareh유, 황5armat3 홍u自同福宮高데, W 室書nush的", 長u事um "토*니nu長的愛仁堂日 '重uamurs國)
Not:|-|-...이T
 

ானா மக்கீன் 29
காணிர். காணிர்.
பூரண ஞானப் பொலிவின் செல்வர்
காரண ரப்துல் காதிர் ஜீலானி
குத்துபுல் அக்தாப் கோமக ருளத்தில்
சத்திய ஒளியாய்ச் சார்ந்தவவ் விறையே தப்பா வரத்தின் சதக்கத் துல்லா
அப்பா வகத்தும் அமைந்தனன் காண்க!
பொற்புறு ஞானி புஹாரித் துங்ங்கள்
அற்புத நெஞ்சில் அமைந்தனன் தெரிவீர்!
நின்றவல் விறைவன் நிறைபொரு விளாக
பின்றோன் றியவர் பெருமைக் குரியர்
ஆழக் கடலாம் அறிவின் நிறைவிடம்
கீழக் கரையின் கீர்த்திக் கொருமுதல்
தைக்கா ஸாஹிப் சற்குரு மனத்தில்
மிக்க நிறைந்து மேவினன் காண்க
மாப்பிளை யாலிம் மாப்பெறும் தவக்கடல்

Page 68
f இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகள்
கோப்பெரு வளத்தும் கோதறு வமர்ந்தான். இருகண் அவர்க்கென இலங்கிய மேதையர் பெருதவப் பயன்சேர் பெருமக ரெனப்படும் கல்வத் நாயகக் காரண ரகத்தும்
ஜல்வத் நாயகச் சாகரத் துளத்தும்
ஒளிச்சுட ராகி ஓங்கிய இறையே,
பளிச்சிட இந்நாள் படரிடம் யாதெனின் சற்குரு பீடம் ஜல்வத் நாயகம்
தற்கத ராகி தாரணி மீது
ஞான நெறியினை நத்திய மனத்தொடு
"தானம் நல்கென” த் தவத்தின் நிற்கும் எண்ணறு சீடர்க் கிதமளி நாவினர் மன்னிய தவத்தால் மாசறு நாயகம்
ஆண்டகை அஹ்மது அப்துல் காதிரு
காண்டது ஷெய்கின் கருத்தினிற் செயலிற்
காணுறுத் திகழ்தல் காணிர் காணிர்
வானுயர் புகழின் வல்லோன் அவனே!
தேங்கமழ் நெறிதரு ஷெய்குமா ரிடத்து ஓங்கிடும் இறைக்கே உரைத்தேன் காப்பு!
இது FTIGT

13

Page 69
132
இலங்கையிலும் கீர்த்திமிகு கீழக்கரையிலும் இஸ்லாம் கிளைத்தது எப்பொழுது?
- இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொண்டு தான் ஆன்மிகப்பாலத்தில் நடைபயில வேண்டும்.
அது ஒன்றும் கடினமானதல்ல.
என்று அறபுக்களது கலங்கள் தமிழகக் கடற்கரைகளையும் இலங்கைத்தீவினையும் கண்டனவோ அன்றே ஆரம்பித்து விட்டது!
இஸ்லாத்திற்குத் தமிழகத்தில் 1400 ஆண்டுகால வரலாறு உண்டு என்பது பல ஆய்வாளர்களும் எழுதிய உண்மை!
வாணிபர்களாக வந்து வரலாறு படைத்தார்கள் என்று வரலாற்றுப்பாலத்திலே என் பேனாவும் பதித்து மகிழ்ந்தது.
ox வணிகப்பொருட்களுடன் வான்மறையையும் ஏந்திவந்தனர். அவர்களுடையது ஒரு புனிதப் பயணமாகவும் அமைந்தது. அதில் வெகு எளிதாக வெற்றிபெறவும் செய்தனர்.
- என மேலும் பெருமிதத்துடன் பதிக்கவும் விரும்புகிறது.
இபின் சஹ்ரியர் என்னும் நூலாசிரியர், கி.பி. 953-இல் எழுதிய, "அஜாய் அல்-ஹிந்த்” என்னும் நூலிலே இப்படியொரு குறிப்பைத் தருகிறார்:

மானா மக்கீன் 133
இலங்கையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் வாழ்ந்த
மக்கள் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய
தூதினை அறிந்தபோது, தங்கள் மத்தியில் காணப்பட்ட ஆற்றலுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து இது சம்பந்தமாக
நேரடியான தகவல்களைப் பெற்று வருமாறு
அறாபியாவிற்கு அனுப்பினார்கள். இந்தத் தூதுவர் மிக நீண்ட கடினமான பயணத்தின் பின்னர் மதீனாவை அடைந்தபோது நபி (6m) 6)) அவர்கள் காலமாகிவிட்டிருந்தார்கள்.
கலீஃபா அபூபக்கர் (றலி) அவர்களுடைய ஆட்சி முடிவடைந்து கலீஃபா உமர் (றலி) அவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இலங்கையிலிருந்து சென்ற தூதுவர் உமர் (றலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய எல்லா விபரங்களையும் கேட்டறிந்தார். திரும்பி வரும் பயணத்தின் போது “மக்றான்” கரையிலே இலங்கைத் தூதுவர் காலமானார்.
ஆனாலும், அவருடன் துணைக்குச் சென்றிருந்த ஊழியக் காரன் இலங்கை க்குத் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதுவர் பற்றியும். காலஞ்சென்ற கலீஃபா அபூபக்கர் (றலி) அவர்களைப் பற்றியும் மதீனத்திலே தான் கேள்விப்பட்ட முழுவதையும் கூறினான். அத்துடன், சத்திய இஸ்லாத்தின் முழுமையான சாரத்தினையும் தெரிவித்தான். இந்தத் தகவல்களினாலே நல்ல பிப்பிராயம் பெற்றிருந்த இலங்கையர்கள் இஸ்லாமியர்களை இருகரம் நீட்டி வரவேற்க ஆயத்தமாக இருந்தனர்.
பாரசீக வரலாற்று நூலாசிரியரான பிறித்தே என்பார் இஸ்லாமியர்களுடைய இலங்கைத் தொடர்புகள், நேர்வழிவந்த கலீஃபாக்களுடைய காலத்திலேயே

Page 70
134 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஆரம்பித்துவிட்டதாக பதினாறாம் நூற்றாண்டில் கூறிப்போனார்.
• கொழும்பு அருங்காட்சியகத்திலே காணப்படுகிற பழம்பெரும் கல்லறைக் கற்கள் (மீசான்?) ஒன்றிலே அறபு மொழி வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பாக்தாதிலே ஆட்சி புரிந்த கலிஃபாவினால் கொழும்பில் வசித்த முஸ்லிம்களுக்கு மார்க்கப்போதகம் செய்ய
அனுப்பப்பட்ட மார்க்கமே தை அபூபக்க யா அவர்களுடைய அடக்கத்தலம் மீது வைக்கப்பட்டிருந்த கல் அது! *
இதேபோல, ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலேயே கீழக்கரையில் இஸ்லாம் தழைக்க ஆரம்பித்து xவிட்டது!
இதற்கு ஓர் ஆதாரமாக கீழக் கரை கடற்கரைக்கு அண்மியதான பழையபள்ளிவாசலில் கண்டெடுக்கப்பட்ட கல்லறைக்கல் (மீசான்?) உணர்த்துகிறது.
இவ்வாய்வுத் தகவலை, எட்டாண்டுகளுக்கு முன்வரை கீழக்கரையின் பிரபல எழுத்தாளராக, இதழாளராக ("பசுங்கதிர்’) இருந்தவரும், இறுதியாக நடந்த உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான ஆய்வாளர், மர்ஹoம் எம்.கே.ஈ. மல்லானா ("அபூ உமர்”) அவர்கள்
வழங்கியுள்ளார்கள். * *
* 1. 'சிறப்பான வரலாறு கண்ட இலங்கை முஸ்லிம்கள்' - கட்டுரை. மர்ஹCம் ஏ.எல். அப்துல் மஜீது முன்னைநாள் கிழக்கிலங்கை எம்.பி துணை அமைச்சர் 'பிறைக்கொழுந்து' கட்டுரைத் தொகுப்பு 1979 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நான்காம் மாநாடு வெளியீடு கொழும்பு 1979 பக். 174 -175 - 176
* 2. கலைமாமணி மணவை முஸ்தஃபா வெளியிட்ட மீலாத் மலர் 1982
பக். 25.
*

மானா மக்கீன் 135
இந்தப்பின்னணியில் இருகரைகளும் இஸ்லாத்தின் வளர்ச்சி கேந்திரமாக இருந்துள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் ஆன்மிக ரீதியான உறவுகொள்ள அறபு மொழி உறுதுணை புரிந்துள்ளது. இதை எழுதித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. அல்-குர்ஆனின் மொழி அமைந்தது முழுமுதற் காரணமாயிற்று. எக்காலத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் அம்மொழியைக் கைவிடக்கூடாதென்ற திடசங்கல்பம் பெற்றிருந்தார்கள். இது இன்று வரை. நாளையும்கூடத் தொடரும். இன்ஷா அல்லாஹ்.
அதேநேரத்தில், பல நாடுகளிலும் வாழ்ந்த மக்கள் இஸ்லாத் தைத் தழுவிய பொழுது, தமது தாய்மொழிக்கும் அறபுமொழிக்கும் பொதுவான ஒரு மொழியைத் தோற்றுவித்து மகிழ்வடையத் தலைப்பட்டார்கள். அதாவது, தங்கள் மொழியை அறபு லிபியில் எழுதத்தலைப்பட்டார்கள் உர்து இவ்வாறு தோன்றியதே
LuTyểs மொழியும், துருக்கி மொழியும் அறபு லிபியிலேயே எழுதப்பட்டன. ஆபிரிக்காவில் சுவாஹினி மொழியும், தமிழ்நாட்டில் அறபுத்தமிழும் இப்படித்தான் தோன்றின. *
இந்த வகையில், “அறபுத்தமிழ்” (“லிஸானுல் அர்வி”) இருகரை மக்களும் ஆன்மிகப்பாலத்தில் ஏறிச்செல்வதற்கு பலம் வாய்ந்த படிக்கட்டாய் அமைந்தது.
இந்த “அறபுத்தமிழ்” என்ன என்பது புரியாமலும் என் அபிமானிகள் சிலர் (இளையதலைமுறையினர்) இருக்கக்கூடும். அவர்களுக்காக ஒரு குறிப்பைப் பதித்துவிட பேரறிஞர்களும் பெரியவர்களும் அனுமதிக்க வேண்டும்:
* 3. "இலங்கை முஸ்லிம்களின் மதவழிபாடு” கட்டுரை. முகம்மது சமீம், "ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்’ தொகுப்பில் 5-ஆவது 1997 பக். 79

Page 71
136 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
* தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இந்திய - இலங்கை முஸ்லிம் மக்களுடன் மிக இலேசாக மொழிவழி உறவு
கொள்ளவும், ஆன்மிகத் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் அறபு எழுத்துக்களில் தமிழ் எழுதப்பட்டது. அதை வாசிக்க அறபு
தெரிந்திருக்கவேண்டும். அறபைக் கொண்டு தமிழ் வாசிப்பர்! அதாவது, அறபு எழுத்து. வாசிக்கும்பொழுது தமிழ் தமிழை வேற்றுமொழிகளில் எழுதுவது சங்ககாலம் முதற்கொண்டே உண்டு. பிராமித்தமிழ், பாளித்தமிழ், பிராகிருதத் தமிழ் என இருந்துள்ளன. *
இத்தகைய ஒரு புதுமையான மொழி எட்டாவது நூற்றாண்டிலேயே (ஹிஜ்ரி - 2) அறிமுகமாகி விட்டதென்ற குறிப்பும்* ஒன்பதாம் நூற்றாண்டு என மற்றொரு தகவலும் * ° நமக்குக் கிடைக்கிறது. இம்மொழி உபயோகததிலிருந்த முக்கிய ஆறு இடங்கள் காயல்பட்டனம் - கீழக்கரை -கொழும்பு - வேர்வலை - காலி - வெலிகாமம்.
அக்காலத்தில் எந்த மொழியிலும் வராத அளவுக்கு அறபுத்தமிழில் மட்டுமே ஆயிரத்திற்கு மேற்பட்ட மார்க்கநூல்கள் வெளிவந்துள்ளன. *
* 4. இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி மணவை
முஸ்தபா தொகுப்பு. 1991 பக். 19 * 5. "அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்” - அறிஞர் எ.எம்.எ அளிஸ்,
1966. L/4. 6. − * 6 உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலர் - 1978 எம்.எ
ரஹ்மான் பக். 106 * 7 'பிறைக்கொழுந்து’ - உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய நான்காம் மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பில் கவிஞர் எம். சேக்டீசேன் கட்டுரை பக். 203 (1979)

மானா மக்கீன் 137
இப்போதைக்கு இதன் தகவல்கள் இந்த இடத்திற்குப் போதுமானது.
காரணம், இன்னுமின்னும் வேறுபலவற்றை அறியவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
“மக்தப்” - “மத்ரசா” - கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கேள்விப்படாமலென்ன, இந்த இரண்டில், மத்ரசா தெரியும் அனைவருக்கும். “மக்தப்”, ஆரம்ப அறபுப் பாடசாலைகளைக் குறிக்கும். அக்கால மார்க்க அறிவு வளர்ச்சியில் மத்ரஸாக்கள் என்பவை மஸ்ஜிதுகளின் திண்ணைகளிலே தோன்றின என்பார்கள். பாக்தாதிலே அறிவொளி பரப்பிய மத்ரசாக்களின் அமைப்புமுறையையும் பாடத்திட்டங்களையும் பின்பற்றிய அதேவேளையில், மக்தப்களில் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். * “இவை, அன்று அறிவுக் கல்வியையும், அறிவியல் கல்வியையும் போதிக்காமல் விட்டுவிட்டனவே! ஒவ்வொரு நிமிடமும் ஐரோப்பியர்கள் அறிவு வளர்ச்சியில் முன்னேறிய காலகட்டத்தில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளை ஆழ்ந்த நித்திரையில் கழித்தார்களே”
- என வெகுவாக ஆதங்கப்படுவார், நமக்கு ஏற்கெனவே அறிமுகமாகிவிட்ட ஆய்வாளர், இலங்கை எழுத்தாளர் முகம்மது சமீம் அவர்கள். -
அதுமட்டுமல்ல, அறபைப் பேசவும், பொருளை உணர்ந்துகொள்ளவும் போதித்தார்களா?
அல்ல. அல்ல. இன்றைக்கும் இந்ததக்குறை பெரும்பாலான ஊர்களில் இருக்கிறதே! குறிப்பாக, இலங்கையில்
* 8 "ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' - முகம்மது சமீம்,
பக், 85

Page 72
Fs, 138 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
கசப்பு மாத்திரைகளைக் கண்களை மூடி விழுங்கிக்கொண்டு மேலே செல்வோமா? -
முஸ்லிம் சமுதாயத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட நான்கு மதுஹபுகளில் ஹனஃபியும், ஷாஃபியும் மட்டுமே இருகரை மக்களையும் ஆட்கொண்டவை என்பது இன்னொரு உண்மை.
அதிலும், கீழக்கரை நூற்றுக்கு நூறு ஷாஃபியே!
என்ன, குறிப்பது சரிதானே?
இவர்களுடன், மலையாளக் கரையோரமும் சேரும். தமிழகக் கடற்கரை ஊர்கள் பலவும் இணையும். இலங்கை முழுவதையும் பார்த்தால் ஷாஃபிய்யாக்கள் தான்! ஆனால் மேமன் சமூக மக்களால் ஹனஃபி) சிறிய விழுக்காடு ஏற்படும்.
தென் அறேபிய, யெமென், (ஹலரமவுத்) பிரதேச முஸ்லிம்களின் வாணிபத் தொடர்புகளின் காரணமாக
அவர்களுடைய மத்ஹப் (ஷாஃபி) இரு கரைகளிலும் மணம் வீசிய ஒரே காரணமே இங்கேயும் தாக்கம் என்றால் தவறல்ல.
இந்த இடத்தில் தரீக்காக்களின் சில விவரங்களையும் தந்திடல் வேண்டும்.
உலகில், ஞானவெளிப்பாட்டு வழிக்கு ‘முகத்துவார மாகிய
தரீக்காக்களை பதின்மூன்றாகச் சொல்லலாம் என்பார்கள்.
1. காதிரிய்யா 2. ஷாதரலிய்யா
3. சிஷ்தியா

மானா மக்கீன்
139
13.
நக்ஸபந்தியா சுஹரவர்திய்யா ஷத்தாதியா ரிஃபாயிப்பா இலாஹிய்யா கல்வதிய்யா அக்பரிய்யா
அலவிய்யா
உவைஸிய்யா
தப்காதியா
- இந்த எண்ணிக்கை கூடுமேயொழிய குறையாது. இவற்றில் இரு
கரைகளிலும் -
- என ஆறேழுத் தான் அதிகமாகப்
காதிரிய்யா
ஷாதுலிய்யா
ரிஃபாயிய்யா
சிஷ்திய்யா
நக்ஸ்பந்தியா
அலவிய்யா
LJU 6&lот.

Page 73
140 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இதிலுங்கூட, கீழக்கரை மக்கள் பின்பற்றுவது காதிரிய்யா ஒன்றை மட்டுந்தான்! ܐܝ
X “கீழக்கரை மக்களில் மிகப்பலர் தாங்கள் இன்னதென்று அறியாமலே கூட முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்களை தங்கள் ஞானத்தந்தையாகக் கொண்டு காதிரிய்யா தரீக்காவில் இருப்பவர்கள்”
- என எழுத்தில் பதித்துவிட்டு ஓய்வுறக்கத்திலிருக்கிறார்கள் மர்ஹoம் எம்.கே.ஈ. மவுலானா ("அபூ உமர்”) * "
தரீக்கா போட்டியே கிடையாத ஓர் ஊர் இருக்குமென்றால்
அது கீழக்கரை தானாம்! அத்தோடு, ‘குழப்பம் கிழப்பம் ஏற்படாத இடமும் அதுவேயாம்!
அறியும்போது ஆனந்தம், ஆனந்தம்!
இலங்கையிலோ சற்று வித்தியாசப்பட்டுக்கொள்வார்கள் அருமையான சமுதாய மக்கள்! ஆனால் ஐக்கியம் அதிகரிப்பு!
அவ்வளவே தெரிவிப்பேன்! அதிகப்படுத்தினால் அதுவே ஒரு நூல்.
வேண்டாமே!
எவ்வாறாயினும், தரீக் காக்களின் அறிமுகத்தினால் பள்ளிவாசல் தொடர்புகள் மக்களுக்கு அதிகம் ஏற்பட்டன. தைக்காக்கள், ஸாவியாக்கள், ஆங்காங்கு உருவாயின. தரீக்காக்களின் பெயரால் பல அறபுக் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
* 9 'அபூ உமர்” (எம்.கே.ஈ மவ்லானா) கட்டுரை. உலக இசுலாமியத்
தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடு, கீழக்கரை மலர். 1990.பக். 44

மானா மக்கீன் 1 41
சன்மார்க்கப் பயிற்சிகளுக்கு ஓரிடம் கிடைத்தது. பிறருடைய பண்பாட்டுத் தாக்கங்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க முடிந்தது.
இலங்கையில் பிரபலமாக உள்ள இரு பெரும் தரீக்காக்களின்
தகவல்மட்டும் தருகிறேன்.
d oXo
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஈராக்கில் வாழ்ந்த குத்புல் அக்தாப் ஷெய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களால் (ஹறி. 471-562 / கி.பி. 1078-1166) தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்கா, பதினைந்தாம் நூற்றாண்டில் முகம்மது கெளத் என்பவரால் இந்தியாவில் வேரூன்றியது. தென் தமிழ்நாட்டில், பரவுவதற்கு கேரள கள்ளிக்கோட்டையில் (காலிக்கட்) குடியேறிய, ஹழ்ற மவுத் - தாரீம் என்ற இடத்தைச் சோர்ந்த பேரறிஞர் ஸெய்யித் ஷெய்க் முகம்மது அல் - ஜிப்ரி அவர்கள் காரணமானார்கள். (ஹி.159/கி.பி.1746) * 10
இவர்களுக்கு அடுத்ததாக, கோட்டாறு, ஷெய்கு முஹியித்தீன் இப்னு சுலைமான் (மஸ்ஜிதுல் காதிரி) அவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இலங்கை, காலிமாநகர், கோட்டைப்பகுதிக்கு ஹி.1255/கி.பி. 1839இல் வருகை புரிந்த அவர்கள், கொழும்பு, மெசன்ஜர் வீதியில் முஹியித்தீன் மஸ்ஜித் தைக்காவை ஏற்படுத்தினார்கள். (ஹறி, 1263/கி.பி. 1846)
இலங்கை முஸ்லிம்களிடையே பரவிய இன்னொரு தரீக்கா ஷாதுலிய்யா, மஃரிப் பிரதேசத்தைச் சேர்ந்த குத்புல் அஃலம் அப்துல் ஹஸன் அஷ்ஷாதுலி அவர்கள் பதின் மூன்றாம் நூற்றாண்டில் (ஹறி.1196/கி.பி.1258) தோற்றுவித்தார்கள்.
, I 0.
"Muslims of Sri Lanka - Avenues to Antiquity' By Dr. M.A. M. Shukri. P. 351. 1986.

Page 74
142 ୍ଣ୍ଣ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
* இத்தரீக்கா வட ஆப்ரிக்காவில் மொராக்கோ முதல் எகிப்து
வரையிலும் பரவியது. பிறகு சிரியாவிலும் அறேபியாவிலும் பலர் பின்பற்றினார்கள். ஷெய்க் ஷாதுலியைப்பற்றிய வரலாற்று நூல்கள் அறபுத்தமிழில் தோன்றின. காயல்பட்டினம் நூஹ"லெப்பை ஆலிம் அவர்களும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் என்பவரும் எழுதினார். * '
இவை இரண்டும் தவிர, ரிஃபாயிய்யா, சிஸ்தியா, நக்சபந்தியா ஆகிய தரீக்காக்களும் இலங்கையில் பரவத்தான் செய்தன.
ஆக, அங்கும் இங்கும் இஸ்லாத்தின் செழிப்புக்கு அமைக் கப்பட்ட நிலையங்கள் “தக் கியாக்கள்’ என்றும், “ஸாவிய்யாக்கள்’ என்றும் பெயர் பெற்றன.
இருந்தபோதிலும், 16 - ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தங்கள் மதத்தைக் காக்கவும், மார்க்கத்தைப் பேணவும் இருகரை முஸ்லிம்களும் இரவும் பகலும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
ஏன் கஷ்டம் - ?
ஏற்கெனவே வரலாற்றுப் பாலத்தில் பார்த்துவிட்டோம். இருப்பினும், இங்கும் கொஞ்சம் நினைவூட்டலாம்.
கி.பி. 1498-ஆம் ஆண்டு மே 27, கடல் மார்க்கம் கண்டுபிடிக்க வந்த போர்த்துக்கேய வாஸ்கோடாகாமாவும், அவனைப் பின்தொடர்ந்தவர்களும் இஸ்லாத்தின் வளர்ச்சியை இல்லா தொழிக்கவும், முஸ்லிம்களின் வாணிப வளத்தை முறியடிக்கவுமே தீவிரமாக செயல்படத்தொடங்கினர்.
* 1 1. "Muslims of Sri Lanka - Avenues to Antiquity" by Dr. M.A. M.
Shukri. PP.352 (1986) .

மானா மக்கீன் 143
அப்படிச் செயல்பட்டு ஆட்டம் போட்டவர்கள்ை விரட்டியோட்ட ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) என்ற இன்னொரு அந்நிய சக்திக்குக் கரம்கொடுத்த பொழுதும் சமுதாயத்திற்குக் கிடைத்த பலன் மிகக்கேவலமானதுதான். -
நம்பிக்கைத்துரோகம் நடந்தது.
வாணிபத்தில்தான் தடை என்றால் ஆன்மிக வளர்ச்சிக்கும் சட்டங்கள் சில அமுலாகின.
8 A3 a un o வழங்கப்பட்ட “சில சலுகைகளைக்” கொண்டு மீண்டும் தரீக்காக்கள் தழைக்க வேண்டியதிருந்தது.
நமது ஆன்மிகப்பாலத்தில், கீழக்கரையோடு நூற்றுக்கு நூறு தொடர்புள்ள தரீக்காவான காதிரிய்யாவையே முன்னிலைப்படுத்த வேண்டியிருப்பதால் அவ்வாறே மேலே செல்வோம்.
அந்தவகையில், காதிரிய்யா தரீக்காவுக்கு நீர் ஊற்றியவர்கள் ஓர் அற்புதமான "அப்பா”
அவர்கள் தென்னகம் பெற்ற திரவியம்.
தீன் பயிருக்குக் கிடைத்த வான்மழை
பேரறிவாளராக - மார்க்க ஞானமேதையாக - மாதிஹ0ர் ரசூலாக ஷெய்கு சகத்கத் துல்லா வலியாக அழைக்கப்படுகிறார்கள். (ഇ.1042 - 11151.G. 1632 - 1703).
தமது நான்கு சகோதரர்களது உதவியுடன் தமிழக -
இலங்கை முஸ்லிம்களுக்கு அன்பிலும் அன்பான ஆன்மிக ஊழியரானார்கள்.

Page 75
144 }్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
“வெலிகாமப் பிரதேசத்தில் தமிழகக் கீழக் கரைப் பண்பாட்டின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்த கால கட்டமாக பதினேழாம் நூற்றாண்டு காலப் பிரிவைக் கருதலாம்’
என்கிறார் இலங்கை ஆய்வாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரீ **
இது ‘அப்பா’ அவர்கள் வீறு கொண்டெழுந்த காலமே!
போர்த்துக்கேயர்களாலும், டச்சுக்காரர்களாலும் வலுவிழந்துபோன ஒரு சமூகத்தின் ஆன்மிக உணர்வுகளை மீண்டும் தட்டியெழுப்புவதில் அப்பா அவர்கள் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஒருவழியாக அந்நிய சக்திகள் அகன்றதும், அவர்கள் ஆற்றிய முதல் கடமை, கீழக்கரையில் ஒரு மத்ரஸாவை நிறுவியதே
உறங்கிப் போயிருந்த ‘தீனியாத் நடவடிக்கைகளை விழிப்புறச்செய்தார்கள்.
அந்தப் பழம்பெரும் மத்ரஸாதான் “அப்பா கடம்’ (இப்பொழுது, பெண்மணிகள் தொழவும், மார்க்கப்பாடசாலை நடக்கவும் பயன்படுகிறது)
தனித்துவமான முஸ்லிம் சமய, சமூக, பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வில் கைக்கொள்வதற்கு உழைத்தார்கள்.
அழிக்கப்பட்டுப் போன பலநூறு மார்க்க நூல்களும், இலக்கியங்களும் மீண்டும் வலம் வந்திட உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்கள். -
やl2 'மாத்திரை மாவட்ட முஸ்லிம்கள்’-கட்டுரைத் தொகுதியில் 'வரலாற்றுப் பாரம்பரியம் கட்டுரை - கலாநிதி எம்.ஏ.சுக்ரீ பக். 34 f7995ル

மானா மக்கீன் 145
அந்தவகையில் அறபுத்தமிழுக்கு ஒரு மறு அறிமுகமும் நடந்தது. இவர்களே பலநூறு பாக்களை யாத்துப் பாடிப்பறந்து திரிந்தார்கள்.
மக்தப்கள் (ஆரம்ப மார்க்கப்பாடசாலைகள்) ஒருபுறம் நிறுவப்பட, உயர் அறபுக் கல்விக்கு மத்ரஸாக்களும் அமைக்கப்பட்டன.
அவர்கள் தங்கள் பெரும் செல்வமாக விட்டுச்சென்றுள் வித்ரிய்யா' வுக்கு இலங்கையில் ஒரு தனியிடமே வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப்பாலத்திலே விவரம் தர, இலங்கை, புத்தளம் முதுபெரும் எழுத்தாளர் அசன் நெய்னா மரக்காயர் (ஏ.என்.எம்) ஷாஜஹான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் “வேண்டும், வேண்டாம்” என விவாதமேடைக்கு தற்காலத்தில் வந்துள்ள "ஸ"ஸ்ப்ஹான மவுலிது’ ஆக்கத்தை இரு கரைகளிலும் அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும்!
அவர்கள் அதைக்கண்டெடுத்தது அறபுநாட்டில், மக்கா - மதீனா பயணத்திலிருந்து திரும்புகையில்!
தகவலை மூவருடைய நூல்களிலிருந்து பெற்றேன். * '
அருமையான அப்பா அவர்கள், கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜித் நுழைவாயிலில் ஓர் ஓரமாக யாருக்கும் சிரமம் கொடுக்காமல் ஓய்வுறக்கம் மேற்கொண்டது 75-ஆவது வயதில். (ஹி.1115/கி.பி.1703),
*13 (அ) தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும் பின்பும்' - டாக்டர் பிஎம். அஜ்மல் கான் பக். 45 1985) (ஆ) "இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்' - கலைமாமணி
மணவை முஸ்தஃபா. பக். 89 (1991) (3) Arabic, Arwi And Persian In Sarandib And Tamil Nadu PP. 487
488 (1993) Afalul Ulama Dr. Tayka Shuayb Alim. B.A. (Hons), M. A. Ph.D. MFA.

Page 76
*
146 ృ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அன்னவர்கள் விட்டுச் சென்ற அரும் பணிகளை சகோதரர்களில் மூத்தவர் ஷாம் ஷிஹாபுத்தீன் வலி (ஹி.1045 - 121/கி.பி. 1635 - 1709) இரு கரைகளிலும் தொடர்ந்தார்கள். இவர்களே ‘ரசூல் மாலையை அறபுத் தமிழில் அளித்தவர்கள்.
குறிப்பாக - இலங்கையில் அவர்தம் சீடர்களும், மாணவர்களும் ஆற்றிய மார்க்க சேவைகளுக்கு அளவில்லை.
அதேபோல, அப்பா அவர்களது மைந்தர் ஷெய்க் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்களும் அளப்பரிய பணி ஆற்றியுள்ளார்கள்.
இவ்வாறு, அப்பா அவர்களது சந்ததிகளும், வம்சத்தவர்களும், சீடர்களும் ஆற்றிய இஸ்லாமியப் பணிகளைத் தொடர்ந்து ஒரு ஹபீப் முஹம்மது மரக்காயர் அவர்களைப் பார்க்கிறோம்.
ஆம். வாணிபத்தில் பார்த்த வள்ளல் ஹபீப் அரசர்தான்! ஹி.1191-1232/கி.பி. 1777-1816).
அவ்வாகார் மரக்காயர் அவர்களது பேரப் பிள்ளையாகிய அவர்கள், நல்ல ஒரு சன்மார்க்க சேவையாளருமாவார்.
அப்பா அவர்கள் வழியிலும், பாட்டனார் அவர்களது வழியிலும், இந்தியா - இலங்கையுடன் நிறுத்திக்கொள்ளாமல் தூரகிழக்கு நாடுகளிலும் தீனியாத்தைத் தொடர்ந்தவர், இஸ்லாமிய நிலையங்களை நிர்வகித்தவர்கள்.
கொழும்பிலும், காலியிலும் பல மக்தப்களை அமைத்ததில் அவருக்கு நிகர் அவராகவே அமைந்தார்கள்!
மேலும் கல்கத்தா மச்சுவா பஸாரில் இன்றும் இலங்கும் “சோலியா மஸ்ஜித்’ இவர்கள் கட்டி வக்பு செய்ததே! இங்கே ஒரு

மானா மக்கீன் 147
விசேஷம் என்னவென்றால், ஷாஃபிய்யி மத்ஹபைச் சார்ந்த ஐந்து ஊர்க்காரர்களை நிர்வாகிகளாக நியமித்தது! அதில் ஒருவர் இலங்கை, காலிமாநகரைச் சேர்ந்தவர்! (எனினும், இப்பொழுதும் இந்த நடைமுறை இருக்கிறதா என்பதையறிய பேனாவுக்குப் பொழுதில்லை)
இந்த ஹபீப் அரசரை அடுத்து -
ஹி. 1162 கி.பி. 1748-இல், ஓர் உமர் வலியுல்லாவை காயல்பட்டினம் வழங்குகிறது. அவர்கள் காலத்தில் காதிரிய்யா தரீக்காவின் தலைவர். பின்னர். இவர்கள், ஸெய்யித் முஹம்மது புகாரி தங்ங்ள் அவர்களிடமிருந்து கிலாபத் பெறுகிறார்கள்.
அதே காயல்பட்டினத்திலிருந்து ஒரு ஷெய்க் அப்துல்காதிர் (ஹி. 1191/கி.பி. 1777) அவர்களும் அறிமுகமாகிறார்கள். இவர்கள் யாருமல்ல, உமர் வலி அவர்களது மைந்தரே!
இப்பொழுது, இன்னொரு ஆண்டு கழிகிறது. மற்றுமொரு ஷெய்கு அப்துல் காதிர், கண்ணாப்பிள்ளை அப்பா அவர்களது மகனாகப் பிறக்கிறார். (ஹி. 1192/கி.பி. 1778) சதக்கத்துல்லா அப்பா அவர்களது பெண்வழியில் தோன்றியவர்களாகிறார்.
இருவருக்குமே பெயர் ஒன்றாக அமைந்துவிட்டது ஓர் ஆச்சரியம்! அதனால், காயல்பட்டினம் தைக்கா சாஹிப், “பெரிய தைக்கா சாஹிப்’ என்றும், கீழக்கரை தைக்கா சாஹிப், “சின்ன தைக்கா சாஹிப்’ என்றும் அழைக்கப்பட்டனர்.
ஆனால் இந்நாளில், கீழக்கரை தைக்கா ஆலிம் சாஹிப் (ஆலிம்சா) என்பதே “சின்னவருக்கு’ நிலைத்துவிட்டது!
மேலும், “சின்ன தைக் கா சாஹிப் கீழக் கரைக்கு இளவயதிலேயே குடியேறினார் என்பதுடன், அவரது சகோதரியர் இருவர் ‘பெரிய தைக்கா சாஹிப் அவர்களது துணைவியரானார்கள்.

Page 77
48 བ་ லங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
g f
(அதாவது, முதலில், மூத்த சகோதரியுடன் விவாகம். பின், அவர் மறைவில் இளையவர்). * "
ஆக, இருவரும் மச்சானும் மைத்துனருமாவார் ஆஹா!
அத்தோடு, இவர்களுள் முதலாமவர், கேரள, கள்ளிக்கோட்டையில் (காலிகட்) புகழ் பரப்பிக்கொண்டிருந்த ஸெய்யித் முஹம்மத் அல்-ஜிப்ரீ அவர்களது கலீஃபாவாகவும், இரண்டாமவர், கண்ணனூர், புகாரி தங்ங்ஸ் அவர்களது கலீஃபாவாகவும் ஆயினர். *
இலங்கையில், இத்தரீக்காவை செழிக்கச் செய்வதில் இருவர் பங்களிப்பும் இமயமாகும். -
ஹி.1250/கி.பி.1814 வாக்கில் காயல்பட்டனம் தைக்கா சாகிபு (வலி) அவர்கள், தனது மாணவர்கள், சீடர்களது அழைப்பில் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள் என்றும், தெற்கே மாத்தறை வரை சென்று அவர்கள் அனைவரையும் சந்தித்தார்கள் என்றும் தகவல்கள் உள்ளன. * '
மேலும், அவர்களுக்கு நெருங்கிய சீடர்களெனக் குறிப்பிட வேண்டியவர்களாக, வேர்வலை, செய்கு முஸ்தஃபா வலி (ஆதம்பாவா அவர்களும், கஸாவத்தை (அக்குறணை - கண்டி) முஹம்மது லெப்பை ஆலிம் இபுனு ஷெய்க் அஹமத் ஆலிம் அவர்களும் திகழ்ந்துள்ளனர்.
அன்னார் ஓய்வுறக்கம் கொள்ளச் சென்றது கஸாவத்தை ஆலிம் அவர்களது மடியில் என்றும் ஆன்மிக வரலாறு பேசுகிறது."
* 14. Arabi, Arwi And Persian In Sarandib And Tamillnadu - by Afdalul Ulama Dr. Tayka Shuayb Alim. B.A. (Hons) M.A., Ph.D., M.F.A. PP. 487 (1993)
* . 15. Ibid. PP. 62 (1993) 16. Ibid. PP. 43 (1993). 17. Ibid. PP. 525 (1993)
*

மானா மக்கீன் 149
இவர்களைப் போன்று கீழக்கரை தைக்கா ஸாஹிபு வலியும் முக்கியத்துவம் உடையவர்களே.
காதிரிய்யா தர்க்காவின் கண்ணனூர் புஹாரி தங்ங்ஸ் அவர்களது கலீஃபாவாக நியமிக்கப்பட்ட கீழக்கரை தைக்கா ஸாஹிபு அவர்கள், இலங்கையில் தரீக்கா செழிப்பதில் முக்கியப்பங்கு வகித்தார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் நிறுவிய அறநெறிகூடமான அரூஸிய்யா இப்பொழுதும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.
மதிப்பிற்குரிய அப்பா அவர்களது ‘அப்பா கூடம் அமைந்திருந்த இடத்திற்கு தென்மேற்புறத்திலே ஒரு மத்ரஸாவாக அதனை நிறுவினார்கள். (ஹி. 1224 / கி.பி. 1809). அவர்களே தலைமை உஸ்தாதாக இருந்து 'அந்திமந்தாரைப் பொழுது வரை நடத்தினார்கள்.
அப்பொழுது தைக் கா. இப்பொழுது அறபுக் கல்லூரி. பழமையில் புதுமை!
அற வழித்துறையில் நெடுவழிப்பயணத்தில் எந்தவித இடையூறுமின்றி வீறுநடை
சமீபகாலத்தில், இதன் கிளையாக ‘மத்ரஸ்த்துல் மாவலி" வேர் விட்டுள்ளது
அரூஸிய்யாவில் ஒளி பெற்ற அறிவுக்களஞ்சியங்கள் ஆயிரமாயிரம்.
அதிகமாகப்பலனடைந்தோர் இலங்கைவாசிகளே!

Page 78
150 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அக்காலகட்டத்தில், உமர் வலி அவர்களிடமும், கீழக்கரை, காயல்பட்டினம் தைக்கா சாகிபுகள் இருவரிடமும் கல்வி கற்ற இலங்கைவாசிகள் ஏறத்தாழ ஆயிரம்பேர் இருப்பர்.
அப்பொழுது ஆதிக்கம் பெற்றிருந்த டச்சுக்காரர்கள்கூட. இலங்கை மாணவர் கீழக்கரை சென்று கல்வி கற்பதை “பெரிய மனதுகொண்டு அங்கீகரித்தனர். அவர்களது கப்பல்களிலேயே பயணம் செய்யவும் அனுமதித்தனர். அழகாக டச்சுக்குறிப்புகள் பேசுகின்றன. * 8
பிரிட்டிஷ் காலத்தில்கூட, அவர்களது கல்விப் பயணம் கீழக்கரைக்குத் தடையேதுமின்றி நிகழ்ந்துள்ளது. ஒரு சமயத்தில் 200 மாணவர்கள் அரூஸியாவில் அறிவு பெற்றுக்கொண்டிருந்தனர்."
மேலும், "தைக்கா கோத்திரக்குடும்பம்’ என்றொரு சிறப்புக் கோத்திரத்தையே உருவாக்கிய பெருமைக்கும் கீழ் கரை தைக்காசாகிபு (வலி) உரியவர்களாகிறார்கள்.
இப்பொழுது உலகளாவிய ரீதியில் புகழடைந்துவிட்டது இந்தக் கோத்திரம்.
அதற்கு இன்றையத் தலைமகனார் யார்? யார்?
உடனே பதிலை இங்கே என் பேனாப் பதிக்காது
அவர்கள்தம் மூதாதையர்களையும் தந்தையாரையும் முறையாகச் சொல்லிய பிறகே அது நிகழும்!
நிகழவும் வேண்டும்!
* 18 தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும்
பின்பும் - டாக்டர் பி.எம். அஜ்மல்கான் பக். 75 (1985)
* 19 மேற்படி நூல் - பக். 43

மானா மக்கீன் 151.
அந்தவகையில், இப்பொழுது, ஒரு மாபெரும் மார்க்க ஞானியை நினைவுகூர்ந்து பெருமை கொள்வோம்.
அஷ்ஷெய்குல் ஆலா ஆரிபுபில்லா மலிக்குஷ் ஷ"அரா அல்-இமாமுல் அரூஸ் ஹஜ்ஜ"ல் ஹரமைன் குத்புஸ்ஸமான் அல்லாமா மாப்பிள்ளை ஆலிம் வலியுல்லாஹ்!
இந்த மாமனிதர் பற்றி எழுதாதவர் இல்லை, இல்லை!
என் பேனாதான் தாமதித்துவிட்டது. ஒருவேளை, சரியான காலமும் நேரமும் பார்த்துக் காத்திருந்ததோ..?
அப்படித்தான்
வாணி பப் பாலத்தில் அன்னாரை ஒரு வர்த்தகராக அறிமுகப்படுத்திக்கொண்ட நாம், இங்கே முற்றிலும் மாறுபட்ட ஒரு மாமனிதராகப் பார்க்கும் பாக்கியத்தை அடையப் போகிறோம்.
இவர்கள் யார் - யாருடைய பிள்ளை - எங்கே பிறந்தார்கள் - எங்கே வாழ்ந்தார்கள் என்பதையெல்லாம் முதலில் சில வரிகளில் படித்து விடுவோம்.
இவர்களும் காயல்பட்டினமே! வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் (வலி), ஆமினா உம்மா தம்பதிக்குப் பிறந்த பன்னிரண்டு செல்வங்களில் ஒருவர்! இரண்டாம் பிராயத்திலேயே பெற்றோர்களுடன் கீழக்கரைவாசியாகி விட்டார். அரூஸிய்யாவில் சேருகையில் வயது பத்தோ, அதற்கு சற்று குறைவோ இருபத்தொரு வயது இளைஞராக ஆனபொழுது, தன் உஸ்தாதின் (குரு நான்காம் மகளாரான அருமை சாரா உம்மாவை துணைவியாக அடைந்து 'மாப்பிள்ளை லெப்பை ஆலிம்’ ஆனார்!

Page 79
152 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
தொடர்ந்து ஏணிப்படிகள் காத்திருந்தன!
மதிப் பிற்குரிய மாமனார் அவர்கள் காலத்திற்குப் (ஹி.1267/கி.பி.1850) பிறகு அவர்களது வழிவாறான தரீக்காவின் ஏகத்தலைவரானார்கள், அறபு - உர்து - பார்ஸி - தமிழ் நான்கிலும் ஆழ்ந்த புலமை. மலையாளம் 'சம்சாரிக்கும் சம்ஸ்கிருதமும் வரும்!
அன்னாருக்கு இலங்கை ‘இரண்டாவது தாயகம்!”
மிக நிச்சயமாக இரண்டாவது தாயகமே!
முதன்முதலில் கால்பதித்தபோது வயது பதினெட்டு
மொத்தமாக எண்பத்து நான்கு ஆண்டு வாழ்வில் (ஹி.12321316/கி.பி. 1816-1898) சுமார் அறுபது ஆண்டுகளை இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமியப் பணிகளுக்கே தியாகித்து, அவர்களுடனேயே உண்டு உறங்கி சேவையாற்றினார்கள்.
வந்தது வர்த்தக நோக்கத்திற்குத் தான். ஆனால், மார்க்கப்பற்றில், மார்க்க அறிவைத் தேடுவதில் மங்கித் தூங்கிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்ததும் அவர்களது வணிக ஆர்வம் வலுவிழந்து போய்விட்டது. ^.
திட்டங்கள் வகுத்து செயலில் இறங்கினார்கள். மார்க்கக் கிரியைகளில் மக்களை ஈடுபடுத்தினார்கள். வாகன வசதியோ பாதை வசதியோ இல்லாதிருந்த அக்காலத்தில் அவர்கள் கால்படாத இடம் இருக்கவில்லை. காடு மலை கடந்து காணாத குக்கிராமங்கள் குறைவு.
போர்த்துக்கீசியர் காலத்திலிருந்து குறிவைத்து அழிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் புனரமைப்பதில் அவர்கள் காட்டிய ஆர்வமும், அயராத உழைப்பும் இருக்கிறதே, அவை பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டியவை.

மானா மக்கீன் 153
ஒரு பதச்சோறாக ஒரு விவரத்தைக் குறிப்பிட முடியும்.
மரிச்சுக்கட்டி, கரடிக்குளி போன்ற அன்றைய முத்து சலாப்பகுதிகள் இன்றும்கூட மிகமிக ஆபத்து நிறைந்த, யானைகள், கரடிகள் வாழும் காட்டுப் பிரதேசமே. அப்படிப்பட்ட பகுதிகளையும் விட்டு விடாமல் அத்தனை துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டி முடித்தார்கள்! **
மஸ்ஜித் புனரிமைப்புகள் மட்டுமல்ல தக்கியாக்களை, மத்ராஸாக்களை நிறுவினார்கள். ஆங்காங்கே முரீதீன்களை உருவாக்கினார்கள். தாம் நிறுவிய நிலையங்களில் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் திட்டங்களை வகுத்துச் செயல்வடிவம் கொடுத்தார்கள். அவை, ராத்திபு மஜ்லிஸ்களாக, தி க்று மஜ்லிஸ்களாக, ஸலவாத் மஜ்லிஸ்களாக பரிணமித்தன. மக்கள் “துனியாவின்’ பக்கத்திலிருந்து ‘தீனின் பக்கம் தம்மையறியாமலேயே திரும்பிக் கொண்டிருந்தனர். *
இருந்தாலுங்கூட, இன்னொரு மாபெரும் குறையைப் பின்னர் உணரத் தலைப்பட்டார்கள். ஒரு சிறப்பான அறிவுக்கூடம் - அற புக் கலாநிலையம் இல்லாத தை உணர்ந்து வேதனைக்குள்ளானார்கள்.
ஹிஜ்ரி 1301/கி.பி.1884.
கொழும்பிலிருந்து கி.மீ. 144 (90 மைல்) தொலைவில், சிறந்து விளங்கும் முஸ்லிம் நகரமாம் வெலிகாமம் வரலாற்றில் வைரமாக மின்னிடல் வேண்டுமென்பது இறைவனது நியதியாயிற்று
*20 "தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும்
பின்பும்' - டாக்டர் பி.எம். அஜ்மல்கான் பக். 32 (1985)
*21, "மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" கட்டுரை ஏ.எச்.எம். யூசுப் வெலிகாமம்) மிஷ்காத்துல் பாரீநூற்றாண்டு விழா சிறப்பு மலர் - 1984. Luč. 104.

Page 80
154 ష్యా இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அதற்கு அல்லாமா அரூஸ் ஆலிம் (வலி) அவர்களே காரணஸ்தராக அமைந்திடல் வேண்டுமென்பதும் அவன் விருப்பமாயிற்று.
அங்கே, கல்பொக்கைப் பகுதியிலே, அமைதி பொங்கும் சூழலிலே, ஆற்றங்கரையோரத்திலே -
புகாரி மஸ்ஜித் முதல் நிகழ்வு. மத்ரஸத்துல் பாரீ இரண்டாம் நிகழ்வு.
அல்ஹம்துலில்லாஹ்.
“மத்ரஸத்துல் பாரீ - மஸ்ஜிதில் புகாரி அலன்னஹ்ரில் ஜாரி” என தேன்சொட்டும் கவிதைப்பாணியில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம், - காதிரிய்யா தரீக்காவின் அப்போதைய கலீஃபா - பெயரிடுகிறார்கள். அவர்களே அவற்றை ஸ்தாபிக்கவும் செய்கிறார்கள். ஆரம்ப ஆசிரியராகவும் இருந்துள்ளர்கள். **
அப்பொழுது அவர்கள், ‘பல்காம்’ என்ற வெலிகாமம், மாத்தறை, காலி, திக்வல்லை நகரார்களுக்கு அறபுத்தமிழில் அனுப்பிய ஒரு கடிதம் அற்புதமானது.
அருமையிலும் அருமையான அக்கடிதம் இலங்கையில் இன்று சிதைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் நிழற்படப் பிரதியை இங்கு தரக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கு
* 22 தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும்
பின்பும் - டாக்டர் பி.எம். அஜ்மல்கான்' பக்83 (1985)

ళ్కీ" *్ళ
8A ؟؟»ډ
:
笼
بني 4
驾惑

Page 81
15 6
அறிதுமப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவளது அரபுத்தமிழ்க் கத்தின் சில பகுதிகள்
*மிஷ்காத்துல் பாரீ நூற்றாண்டு விழா சிறப்பு மலரை (1984) அலங்கரிக்கும் மேற்கண்ட அறபுத் தமிழ் கடிதத்தை நன்றியுடன் மறுபதிப்பு செய்யும் அதேசமயத்தில், சில பகுதிகளை தமிழில் தருவதிலும் பெருமைப்படுகிறேன்.
ox- முஸ்லிம்களாகிய எனது உடன்பிறப்புகளே!
அல்லாஹPதஆலா உங்களுக்கும் ரஹ்மத்தும் மஃபிரத்தும் தவ்பீக்கும் ஹிதாயத்தும் தந்தருள்வானாக!
oKo உலமாக்கள் அருகி அறிவும் உதாசீனம் செய்யப்பட்ட இற்றை நாளில், மார்க்க கல்வியில் உறுதியாய் நிற்பது பர்ளு ஐனாகும். மஷ்ரிக்கு தொடக்கம் மக்ரிபு வரையிலாகவுள்ள பல்வேறு இடங்களில் மத்ரஸ்ாக்கள் அமைக்கப்பட்டு மார்க்கக் கல்வியூட்டப்படுகின்றதை நாம் கவனிக்க வேண்டும்.
o மக்கா, மதீனா, ஹிஜாஸ், மிஸ்ர், ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, தக்காணம், ஜாவா, சீனா, ஆர்மினியா ஆகிய தேசங்களில் எல்லாம் மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலும் சென்னை வேலூர், திருநெல்வேலி, காயல்பட்டனம் போன்ற இடங்களிலும் மத்ரஸாக்கள் நடைபெறுகின்றன. இங்கெல்லாம் ஆசிரியர் மாணவர் அனைவரதும் அனைத்துத் தேவைகளும் கவனிக்கப்படுகின்றன.
 
 

மானா மக்கீன் 157
இதற்காக செலவிடப்படும் பணம் ஒன்றுக்கு பத்தாக நூறாக, எழுநூறாக, ஆயிரமாக, ஏழாயிரமாக அதிகரிக்கும். மார்க்கக் கல்விக்காக உழைப்பதும் செலவிடுவதும் மிகமிக மேலான அமலாகும்.
இப்படியான வசதிகரமான மத்ரஸாக்கள் இலங்கையிலில்லை. கொழும்பு புதிய தெரு பள்ளியில் மாதம் மூன்று பவுன் சம்பளத்தில் ஓர் ஆலிம் நியமிக்கப்பட்டு மத்ரஸா ஒன்று இயங்கி வருகிறது. காலி, வெலிகம, மாத்தறை, திக்வல்லையைச் சேர்ந்த சீதேவிகள் காலியில் ஓர் மத்ரஸா அமைக்க வேண்டிவிரும்பினர். அதற்கிணங்க மேற்படி நாலு நகரங்களுக்கும் ஒரு தாயகமாகவும் ஸாதாத்மார்களின் வசிப்பிடமாகவும் உள்ள கல்பொக்கை ஆற்றங்கரை பொருத்தமாக காணப்படுகின்றது. மேற்படி புகாரி மத்ரஸா
ஏற்பட -
1. ஸெய்யித்-மீரான் லெப்பை மரைக்கார் உமர்
லெப்பை மரைக்கார்.
2. செய்கு சுலைமான் லெப்பை செய்யிது முஸ்தபா
நொதாரிஸ்.
S. ஐதுரூஸ் லெப்பை மரைக்கார், உஸ்மான் லெப்பை
மரைக்கார் நொதாரிஸ்.
4. மெளலானா வஹாதீனா ஸெய்யிது முஹம்மதுல் புகாரி ஆகியோர் பல்வேறு வகையிலும் காரணமாயிருந்தார்கள்.
பல்வேறு வகைப்பட்ட இல்முகளிலும், தற்கால அறிவிலும் தகுதிபெற்ற செய்கு முஹியத்தீன் ஆலிம் சாஹிப் ஹாஜியார் அவர்களின் குமாரர் செய்கு முஹம்மது இபுறாஹிம் ஆலிமுல்பல்காமி

Page 82
t
158 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
என்பவர் - முதற் றிஸாக நியமிக்கப்படுகின்றார். மேற்படி ஆசிரியருக்கும் அங்கு பயிலும் மாணவர்க்கும் தேவையான நூல்களுக்கும் ஆய சகல செலவினங்களுக்குமாக இதன் கீழ் கையொப்பமிடப்பட்டவர்கள், தாங்கள் பெயரையும் தங்களது மாதாந்த கொடுப்பணத்தையும் குறிப்பிடவும்.
இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் இன்னும் சில பிரமுகர்கள் அவருக்கு உறுதுணை நின்றார்கள் என்ற வரலாறும் பதியப்பட்டுள்ளது. அவர்களையும் இக்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு.
* அலியார் மரக்காயர் ஹாஜியார்.
* கதீப் தம்பி லெப்பை ஆலிம்.
* தையிப் லெப்பை மஹல்லம் ஆலிம்.
令 23
* ஸெய்யித் அபூபக்கர் குத்லி மவுலானா.
அல்லாமா இமாமுல் அரூஸ் ஆலிம் (ஒலி) ஏற்றிவைத்த அறிவு விளக்கு அணையாமல் பிரகாசித்தது. 1984-லில் நூற்றாண்டும் கண்டது.
இவ்வறிவுக்கூடத்தின் முதல்வராக பதினேழு ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்த “சின்ன ஆலிம்” முஹம்மத் இப்ராஹிம் பின் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் பற்றியும் ஓரிரண்டு குறிப்புகள் பதிக்க வேண்டும்.
* 23. Arabic, Arwi And Persian In Sarandib And Tamil Nadu - by Afdalul Ulama Dr. Tayka Shuyub Alim, B.A., M.A., Ph.D M.F.A. PP. 527. (1993)

மானா மக்கீன் -- 59
அவர், தென்னிலங்கை - வெலிகழ் ஓதிரினின் மைந்தர். கீழக்கரை போய் அரூஸிய்யாவின் தயாரிட் பீபுடம்போடப்பட்டு வந்தவர். அதற்கான முழு ஏற்பாடுகளும் இமாமுல் அரூஸ் அவர்கள்தான் அவர்களது பிரதம சீடராக அமைந்தார்கள். பின்னர், இலங்கைக் காதிரிய்யாவின் கலீஃபாகவும் ஆக்கப்பட்டார்கள்!
இதே காலகட்டங்களில் இன்னொரு நிகழ்வும் வெலிகாமத்தில் நடந்தது.
பாரீ மத்ரஸா வை விட இந்தியாவுக்குப் போய் கீழக்கரையிலோ, வேலூரிலோ அல்லது அதுபோன்ற ஊர்களிலோ அறபு அறிவு பெறுவதும் ஆலிம்களாக, மவ்லவிகளாக வருவதும் மிக விசேஷம் என்ற கருத்து நிலவியது.
இந்தச்சம்பவத்தை, அங்கு பயின்ற மாணவருள் ஒருவரான மல்லவி ஏ.எஸ்.எம். அப்துல் காதிர் பாகவி, பாஜில் ஜமாலி இப்படி வர்ணித்துள்ளார்கள்:
0.
இப்படியொரு எண்ணம் வளர்வது தேசீய உணர்வைக் குறைக்கும் என்று மாமேதை மாப்பிள்ளை ஆலிம் அவர்கள் கருதினார்கள் போலும். அந்த எண்ணத்தை மிகவும் நளினமான முறையில் நிறைவேற்றவும் செய்தார்கள். கீழக்கரையில் பயின்று கொண்டிருந்த தனது பேரப்பிள்ளைகளை வலிகாமம் கல்பொக்கை மத்ரஸாவுக்கு அனுப்பி அங்கே அவர்கள் பயிலும்படி செய்தார்கள். இந்தச் செயலால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உள்ளத்தில் வலிகாமம் கல்பொக்கை மத்ரஸா பற்றிய மதிப்பு உயர்ந்தது. தங்கள் பிள்ளைகளும் வலிகாமம் கல்பொக்கை மத்ரஸாவில் பயின்று நல்ல மார்க்க மேதைகளாக முடியும் என்ற

Page 83
160 f லங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
A g
நம்பிக்கை வளர்ந்தது; இலங்கை முஸ்லிம்களின் தேசிய உணர்வும் ஓங்கியது.* ?
இன்னொரு மாணவர் - அவர், அலைகடலுக்கு அப்பால் பல நாடுகளிலும் அழைக்கப்பட்டவராக, ஆயிரமாயிரம் நெஞ்சங்களில் அபிமானியாக உலாவருபவர். “கண்டி மவுலானா' எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். அங்கே ஜாமிஉல் அஃலம் பேஷ் இமாம். மவ்லவி அல்ஹாஜ் எச். ஸ்லாஹ"த்தீன் என்னும் குழந்தை உள்ளம் பாரீயின் ஓர் உன்னத தயாரிப்பு. அவர்கள் இப்படி உள்ளம் நெகிழ்கிறார்கள்:
ox “மாணவர்களாகிய நாம் ஒரு பிற ஊரில் வேற்றிடத்தில் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. 'பள்ளிப்பிள்ளை, பள்ளிப்பிள்ளை' என்று செல்லமாகவும் அன்பாகவும் அழைக்கப்பட்டோம். பெற்றோரின் துணையின்றித் தனிமையிலிருக்கும் மாணவர்களுக்கு வெலிகாமம் முஸ்லிம் மக்களின் விருந்தோம்பல் பெரிதும் ஆறுதலாக இருந்தது. அங்கே கற்ற மாணவர்களுக்கு பாரீ தந்த பயிற்சிகள் ஒன்றிரண்டல்ல. அவை காலத்தால் அழியாதவை. கடைசிவரை பின்பற்றத்தக்கவை.”
இதேபோல, வெலிகாமம் நகரத்துப் பேரெழுத்தாளர்களுள் ஒருவரும், கல்விமானுமான, 'கன்ஸoல் உலூம் அல்ஹாஜ் முக்தார் ஏ. முஹம்மது அவர்களது குறிப்பும் காலத்தை கடந்து நிற்பவை.
ox “மத்ர் ஸத் துல் பாரீ 110 ஆண்டுகள் மூப்புடையது. இலங்கைத்தீவிலே அறபு மத்ரஸா வரிசையிலே முதலில் தோன்றியது என்ற முத்திரையைப் பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை எவ்விதத் தங்கு தடையுமின்றி சீரும் சிறப்புமாக வீறுநடை போடுகின்றது. பலநூறு உலமாக்கள் இங்கு பயின்று
*24. அதே பாக்கியம்' கட்டுரை. ஷெய்கு நாயகம் சிறப்பு மலர் பக்.
44. 1967.

மானா மக்கீன் 161
நாட்டின் நாற்புறங்களிலும் பணிபுரிந்து வருகின்றார்கள். ‘தீன் எனும் பயிர் இந்நாட்டிலே செழித்தோங்குவதற்கு வகைசெய்த அறிஞர் அல்லாமா அரூஸ் ஆலிம் ரஹ்மத்துள்ளாஹி அவர்களை நாம் நன்றிக்கடனோடு ஞாபகப்படுத்துவது முறையாகும். அல்லாஹ்வுக்கே ஷ0க்ரு.”
உண்மை. உண்மை. இந்த இடத்தில் சொந்தக்குறிப்பு ஒன்று: மேலே அறிமுகமான இரு பெரியார்களும் என் பேனாவின் வலிமைக்காக அனுதினமும் இறைநாட்டத்தை இறைஞ்சுபவர்களுங்கூட அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
அல்ஹாஜ் முக்தார் எமுகம்மது அவர்கள் வழங்கிய பாரீயின் ஆரம்பகால அழகிய தோற்றம் ஒன்றை இதன்கீழ் வழங்குகிறேன்.

Page 84
62 தி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஒரு பாரீ கலாபீடத்துடனும் அல்லாமா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களது பங்களிப்பு முடிந்து விடவில்லை. வேறு பல ஊர்களிலும் பல அறிவு நிலையங்களும், அறநிலையங்களும் நிறுவப்பட்டன.
அவ்வாறு உருவான அறிவுநிலையங்களில் தக்கியா) ஒன்றான மஃனமுஸ்ஸஸ் அதா (159, பழைய சோனகர் வீதி) வில், “அரூஸிய்யத்துல் காதிரிய்யா’ அமைப்பும் அரும்பு விட்டது! (ஆண்டு: 1848)
அதன் தலைவராக, இலங்கையின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத்தலைவர்களுள் ஒருவரான மர்ஹ0ம், அல்ஹாஜ் ஸேர் ராஸிக் பரீத், எம்.பி.ஜே.பி.யூ.எம்.ஒ.பீ.ஈ. தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இணைச்செயலாளர்களாக மூவர்(ஏ.எம்.எம். ராஜி, ஏ.சி.எ. ஜப்பார், எம். மன்சூர் எஸ். தீன்) நியமிக்கப்பட்டனர். நிர்வாகச் செயலாளராக அல்ஹாஜ் ஃபுர்க்கான் எம். மன்சூர், (காலி) அவர்களும், பொருளாளராக அல்ஹாஜ் எம்.கே.எம். யூசுஃப் அலவி (கொழும்பு) ஆகியோர் தேர்வாகினர்.
அவ்வமைப்பின் மூலமாக, அக்கீதா - பிக்ஹஸ் - ஷரீஅத் - தரீக்கத் ஆகியவற்றில் ஆன்மிகப் பயிற்சி போதிக்கப்பட்டது.
ஆரம்பகால முயற்சியாக, கொழும்பு - பாணந்துறை - களுத்துறை - மக்கூன் மேக்கொன) - வேர்வலை - சீனன்கோட்டை - அளுத்காமம் (தர்ஹாநகர்) - பலப்பிட்டி - கிந்தோட்டை - காலி - கல்பொக்கை - வெலிப்பிட்டி - கப்புவத்தை (இம்மூன்றும் வெலிகாமத்தில்) ஆகிய இடங்களில்,
மாத்தறை - கந்தறை - திக்வல்லை - தங்காலை - அம்பாந்தோட்டை - மட்டக்களப்பு - யாழ்ப்பாணம் - இரத்தினபுரி - மாவனல்லை - கண்டி - கம்பளை - நாவலப்பிட்டி - அக்குறணை

மானா மக்கீன் 163
- மாத்தளை முதலிய நகரங்களில் எல்லாம் கிளைகள் உருவாகின. பலகாலம் சிறப்பான சேவையாற்றின.
அன்னார் அமைத்த பல அறிவுக் கூடங்கள் - அறநிலையங்களிலிருந்து ஒருசிலவற்றை நிழற்படங்களாக பக்கங்கள் 198 முதல் 205 வரை அளித்திட வசதி கிடைத்தது பெரும்பாக்கியமே!
அபிமானிகளது பார்வை செல்வதாக.
குத்பாப் பிரசங்கத்தில் அதிரடி மாற்றம்
இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் சம்பந்தப்பட்ட இலங்கை நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்
அவற்றில், அவர்களுக்கு க சப்பும் இனிப்பும் கிடைத்திருக்கின்றன.
இருசுவைகளும் விரும்பி ஏற்றிருக்கிறார்கள்.
மிகமிக முக்கியமான ஓரிரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே பதித்திடப் பக்கங்கள் இருக்கின்றன.
அக்கால இலங்கையில், ஜூ ம் ஆப் பிரசங்கங்கள் அறபுமொழியில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்தன. தமிழ் மட்டும் தெரிந்த பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் பொருள் விளங்காமல் த வித்தனர். அந்நிலையில் ஜூ ம் ஆ குத் பா தமிழில் நிகழ்த்தப்படவேண்டும் என ஒரு 'ஃபத்வா' வை வழங்கினார்கள்!

Page 85
164 } இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அப்பொழுதுதான் அறியாமையில் உழலும் மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்ற காரணத்தையும் முன் வைத்தார்கள். **
ஆனால், சில மார்க்க மேதைகளால் ஜீரணிக்க இயலவில்லை!
லக்னோவைச் சேர்ந்த ஓர் அறிஞரிடமிருந்தே எதிர்ப்பு ஏவுகணைபோல் வந்தது! (மவுலானா அப்துல்ஹை).
பொருட்படுத்தினார்களில்லை!
அப்பொழுது இந்திய - இலங்கை இமாம்களின் கரங்களிலிருந்த “குத்பா நஃபதிய்யா' வின் அறபுப் பிரசங்கத் தொகுப்பை அழகு தமிழில் அளித்திட்டார்கள்.
இந்த அதிரடி முயற்சிக்கு உறுதுணையாக இதழாளர், எழுத்தாளர், அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அளவீஸ் என்ற பெரியார் நின்றார். இவர் அறிஞர் முஹம்மது காசிம் சித்தி லெப்பை (ஆசிரியர் “முஸ்லிம் நேசன்) அவர்களுக்கு ஏற்பட்ட பல எதிர்ப்புகளுக்கும் துணை போனவர் * *
இன்று. இலங்கையின் சகல பாகங்களிலும் குத்பா தமிழில் ஒலிக்கிறது. அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தம் அற்புதமாக அமைந்து விட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
s 25. கலாநிதி (டாக்டர்) எம்.எ.எம். சுக்ரீ கட்டுரை. மறக்க முடியாத மாமேதை - செய்குநாயகம் நினைவு மலர் பக். 71 (1997)
* 26 தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும் பின்பும் டாக்டர் பி.எம். அஜமல்கான் பக். 79 - 80 (1985)

மானா மக்கீன் 165
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகள் இலங்கை க்குள் 'உள்நுழைந்த அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் இறையில்லமாக இருந்த ஒரு பாரிய பள்ளிவாசல் - இப்பொழுது பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படுவது - புதிய சோனகர் தெருவில்தான் இருந்தது. இது, கொழும்புப் பன்னிரண்டாம் வட்டாரம்.
மற்றுமொரு பிரதான பகுதியானது மருதானை. அங்குதான் முகம்மதுகாசிம் சித்திலெப்பை - வாப்புச்சி மரக்காயர் முதலியோர் நிறுவிய “ஸாஹிரா மத்ரஸா நிறுவப்பட்டது. பின்னர் கல்லூரியாகி இன்றும் முஸ்லிம் கல்விப்பசிக்குத் தீனி போடுகிறது. இந்தப்பாரிய வளாகத்திற்குள்ளே ஒரு மஸ்ஜித் அமைதல் அவசியமென, கொழும்பு முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையாளர் - தலைவர் - ஷேகாதி மரக்காயர் நினைத்தார். அத்திவாரம் யாரால் இடப்படவேண்டும் என்பதையும் முடிவு செய்தார். அழைப்ைேப ஏந்திக்கொண்டு ஒரு குழுவே கீர்த்திமிகு கீழக்கரை புறப்பட்டுப் போனது தைக்கா ஸாஹிபு (வலி) அவர்களை - இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களது மாமனாரை - அன்புடன் அழைத்தது.
ஆனால், அன்னார் தமது கலீஃபாவாக (பிரதிநிதி) மருகனார் அவர்களையே அனுப்பி வைத்தார்!
அல்லாமா அவர்களும் அதனை நிறைவேற்றி வைத்தார்கள்
எவ்வாறாயினும், இந்த உன்னதமான வரலாற்று நிகழ்வு, ஒரு பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் ஸ்தாபனத்தின் ("எம்ஐசிஹெச்"

Page 86
166 ரி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
OTLLT SLLLOT TTOLL TLLL TTLSS OOOOLLLTOLLS அதனை எழுதிய எழுத்தாளர் முஹம்மது ஸ்மீர் ஹாஜி இஸ்மாயில் 6.Ioo 66ö6Jõi ob? LIII(666. * 27
இது, அறியாமையால் நடந்ததா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதை, எல்லாம் வல்லவனே அறியக்கூடியவன்.
நானும் ஸாஹிராவின் மாணவர்களுள் ஒருவன். லுஹர் பொழுதுகளில் தவறாமல் தலை தாழ்த்திய இறை இல்லத்திற்கு அத்திவாரக்கல் நாட்டியவரது பெயர் நாமத்திற்கே இப்படியென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என ஆதங்கப்படுகிறேன்.
இறைவனே காப்பு.
எனினும், பள்ளிவாசல் புணரமைப்பு ஏழாண்டுகளுக்கு முன் - 13-6-1991 - நடந்திட்டபொழுது மற்றுமொரு அடிக்கல்லை நாட்ட நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் வேறு யாரையும் அழைத்திடவில்லை.
இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களது கொள்ளுப்பேரனார் அப்தலுல் உலமா, டாக்டர்
(கலாநிதி) தைக்கா ஷ"ஐபு ஆலிம் அவர்களையே!
அனைத்துப்புகழும் அவனுக்கே உரியதாகிறது.
w 27. Arabic. Arwi And Persian In Sarandib And Tamil Nadu - by Dr. Tayka Shuayb Alim. B.A. (Hons) . M.A., Ph.D. M. F.A. PP. 609, 708 - 709. (1993)

மானா மக்கீன் 167
சில படிப்பினைகள்
ஒரு சமயம், இலங்கை மாத்தறை, கட்டுக்கொடை தைக்கா அடிக்கல்நாட்டு விழாவுக்கு சீடர்களுடன் புறப்பட்டார்கள். அப்பொழுது வெற்றுக் குடம் ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஒரு பெண் செல்வதைக் கண்ட சீடர்கள் முகம் சுளித்தார்கள். ‘அபசகுனம்’ என்று அவர்கள் சொல்வதைக்கேட்ட ஆலிம் அவர்கள், “அந்தப் பெண்மணி தண்ணீரை அள்ளிவரச் செல்கிறாள். அதுபோல நாம் நன்மைகளை அள்ளிவரச் செல்கிறோம்” என்று கூறி சீடர்களைத் தெளிவித்தார்.
ککنگھ
'துராப் சாகிபு தர்கா என்று கூறி ஒரு திடீர் சமாதியை அல்லாமா உண்டர்க்கினார்கள். நாளாவட்டத்தில் அந்த சமாதி மக்களிடையே பிரபலம் அடைந்துவிட்டது. அன்றாடம் வரும் மக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். பெரும் நிதி சேர்ந்துவிட்டது. ஈயாத உலோபிகள்கூட காணிக்கையாக உண்டியலில் பணம் போட்டார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அல்லாமா அவர்கள் பொதுமக்களைக்கூட்டி, அந்த தர்கா தம்மால் உருவாக்கப்பட்டது என்றும், எந்த அவுலியாவும் அங்கே அடக்கமாகியிருக்கவில்லை என்றும் சொன்னார்கள். வெறும் மரக்கட்டையைப் புதைத்திருப்பதாகச் சொல்லி, துராப் சாகிபு’ என்றால் மண்ணை உடையவர் என்றுதான் பொருள் என விளக்கிச் சொன்னார்கள். அத்துடன், சமாதியையும் தோண்டச் சொல்லி தங்கள் கூறியதை ஆதாரபூர்வமாக மெய்ப்பித்தார்கள். காணிக்கையாகச் சேர்ந்த பணத்தை பொதுமக்களின் வேண்டுகோள்படி தைக்கா நிர்வாக நிதிக்குச் சேர்த்துவிட்டார்கள்.
6
ثم ثم
.asz ثم

Page 87
168
f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அவர்கள் இலங்கை மாத்தறைப் பள்ளியில் சொற்பொழிவாற்றி, தாம் கைப்பட எழுதிய 'ஃபத்ஹ"ஸ் ஸலாம் என்ற நூல்களின் சில பிரதிகளை அங்கு விற்பனை செய்துவிட்டு திக்வல்லைக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது தீன் லெப்பை என்பவர், “என்ன பிரமாதமாக எழுதிவிட்டார்? நானும் என் கையாலேயே எத்தனையோ நூல்களை இதைவிட அழகாக எழுதி பிரதி எடுத்துள்ளேனே’ என்று கூறி இழித்துரைத்தார். இவ்வாறு கூறிவிட்டு குளிக்கச் சென்ற அவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுவிட்டது. பின்னர் அவரின் உடல் கரையில் ஒதுங்கியபொழுது அதில் வலது கையை காணோம். உடலை முறைப்படி அடக்கம் செய்து விட்டு அந்த முதலையைப் பிடித்து மக்கள் கொன்றபொழுது அதன் வயிற்றில் தீன் லெப்பையின் வலது கை இருப்பதைக் கண்டு அதனை என்ன செய்வதென அறியாது திணறினர்.
அப்பொழுது ஒருவர், தாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் வாங்கிய 'ஃபத்ஹoஸ். ஸலாம்’ என்ற நூலைக் கொணர அதில் இத்தகு சூழ்நிலையில் எவ்வாறு செயலாற்றுவது என்று பொறிக்கப்பட்டிருந்தது. உடனே அவர்கள் கையை எடுத்து முழு உடலையும் அடக்கம் செய்வதற்கான அத்தனை சடங்குகளையும் செய்து அதனை அடக்கம் செய்தனர். இதன் பின்னர் அவ்வூர் மக்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாண்பினை உணர்ந்து தீட்சைப் பெற்று அவர்களின் ஆன்மிக மாணவர்களாயினர்.
இலங்கையைச் சேர்ந்த அதே திக்வல்லையில் தங்கியிருந்த சமயம், தங்கள் ஊருக்கு வருகையளிக்குமாறு தங்கல்லையை சேர்ந்த இவர்களது ஆன்மிக மாணவர்கள் அழைத்தார்கள். அப்பொழுது அந்த ஊரில் வாந்தி பேதி பரவியிருந்ததால் அவர்கள் போகக்கூடாது என்று திக்வல்லை மாணவர்களும், பெண்மணிகளும் சொன்னார்கள். என்றாலும், அவர்கள்

மானா மக்கீன் 169
புறப்பட்டார்கள். வழியில் ஒரு முயல் தென்படவே, “முசலும் வந்தது; நசலும் (நோய்) போயிற்று” என்று சொன்னார்கள். அதன்படி அவ்வூரைப் பீடித் திருந்த வாந்திபேதி
மறைந்துவிட்டது.
شہر کوئٹہ
அவர்களின் துணைவியார் ஒருநாள் அவர்களை அண்மி, அக்கம் பக்கத்தில் வாழும் செல்வ சீமாட்டிகள் அணிந்திருப்பதுபோன்ற காசு மாலை ஒன்று தமக்கும் செய்து தரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அதற்கு அவர்களும் இணங்கி சில மணி நேரத்துக்குள் அறிவுரைகள் கொண்ட முப்பத்து மூன்று செய்யுட்களைக் கோத்த பாமாலை ஒன்று யாத்துத் தம் மனைவியிடம் வந்து, "இதோ நான் உனக்கு ஒரு காசு மாலை செய்துகொண்டு வந்துள்ளேன். இதில் முப்பத்து மூன்று பொற்காசுகள் உள்ளன. அவற்றில் பத்தில் காசு ஒன்றுக்கு நான்கு மணிகள் வீதம் நாற்பது மணிகளைப் பதித்துள்ளேன். மற்ற அணிகலன் போன்று உடலுக்கு மட்டுமின்றி ஆன்மாவுக்கும் அழகையும் வனப்பையும் வழங்கக் கூடியது. இதனை என்னுடைய “ஹத்யா (அன்பளிப்பு) ஆக ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி கொடுத்தனர்.
அறபுத் தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த பாமாலையைத் தம் இரு கைகளாலும் ஏந்திக் கண்களில் ஒற்றிக் கொண்ட அம்மையார், ”நான் விரும்பிய வண்ணம் மதிக்க முடியாத மாலை ஒன்றை எனக்கு அன்பளிப்புச் செய்தீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறி அதனைப் படித்து மனனம் செய்ததோடு மட்டுமல்லாது அதில் கூறியுள்ள வண்ணம் செயலாற்றி இறைநேசச் செல்வியாக ஆனார்.
شخص ثم

Page 88
கிரி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ፍ9 (Ù நாள் அவர்கள் அமைதியாக அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு வான்கோழி அங்குமிங்கும் பெரும் சப்தமிட்டுக்கொண்டு ஓடியது. அதன் இரைச்சல் தாங்கமுடியாத அவர்கள் "இதென்ன வான்கோழியா? வீண் கோழியா?’ என்று எரிச்சலோடு கூறினார்கள். அக்கணத்திலிருந்து அதன் இரைச்சலும் ஓய்ந்தது. அது முட்டையிடவும் இல்லை. வான்கோழி வீண் கோழியாகிவிட்டது. முட்டையிடாத கோழி வீண்கோழியாக அன்றி வேறென்ன?
گٹ گئے
மகான் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த ஆரம்ப காலத்தில், இஸ்லாமியப் போதனைக்காக களுத்துறை நகருக்குப் போனார்கள்.
வழமைபோல் அவ்வூர்ப் பள்ளிவாயிலுக்குப்போய் அன்று பகல் தொழுகைகளை எல்லாம் முன்னின்று நடத்தி அன்றிரவு இஷாவுக்குப்பின் சன்மார்க்கப் போதனை செய்ய எழுந்தபோது அந்த ஜமாஅத்தின் தலைவர் “இங்கு பயான் செய்ய வேண்டாம்” என்று தடுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த மகான் அவர்கள் மறுநாள் காலை அப்பள்ளியைவிட்டுப் புறப்பட்டார்கள். புறப்படும்போது அவர்களின் நயமான மொழி வளத்தால் பள்ளிச்சுவரில் பின்வருமாறு எழுதி வைத்தார்கள்.
“கான கதீமன் களித்துறை
அல்ஆன சாற பழித்துறை” இது அன்னவர்களின் தலைஃபாத்திஹாவின் அறபுத்தமிழ்
மொழிநடையாகும். அறபும் தமிழும் கலந்த இனிய வசனம். ஆயினும் மனம் நொந்து எழுதிய வாக்கியம்.

மானா மக்கீன் 171
களுத்துறையைக் களித்துறை என்று முதல் வரியில் குறிப்பிட்டதானது, முன் பெல்லாம் (களுத்துறை) களித்துறையாக மகிழ்ச்சிமிக்கதாக இருந்தது. தற்போது பழித்துறை என இழிந்துவிட்டது என்பதாகும்.
இச்சம்பவம் நிகழ்ந்த மறுநாள் காலை ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு அவளின் தங்க அணிகலன் கழட்டப்பட்ட நிலையில் அவ்வூர் ஆற்றோரமாக பிரேதம் காணப்பட்டது.
“இதைச் செய்தவர் யார்?’ என்பது ஊர் மக்களின் வினாவும், ஏக்கமுமாகும்.
அதே நேரம், அங்கு வந்த புதிய மனிதரையும் அவர் பள்ளிச் சுவரில் எழுதிவைத்த வாசகத்தையும் கருத்திற்கொண்டு மகானையே அவர்கள் சந்தேகித்தார்கள். உடனே அவ்வூர் மக்கள் ம கானைத் தேடிக் கண்டுபிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, அக்கொலையை அவருடன் இணைத்து நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருந்தும் அவர்களிடம் குசுகுசுப்பும் சலசலப்பும் குறையவில்லை.
அடுத்த நாள் காலை அப்பள்ளி முஅத்தினார் ஆற்றுப்பக்கம் இருந்து வந்ததைக்கண்ட ஊரார் அவரில் ஐயப்பட்டு அவரை விசாரணை செய்தபோது அவர் பயந்து நடுங்கி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்பின் அவ்வூர் மக்கள் அனைவரும் மகான் மாப்பிள்ளை
லெப்பை ஆலிம் அவர்களிடம் மன்னித்தருளுமாறு மன்றாடினார்கள். மகான் அவர்களும் மன்னித்துவிட்டார்கள்
SSSR

Page 89
172
எவ்வகையில் பார்த்தாலும் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்கள் 'இருள் ஒளி அளித்தவர்களே!
இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் மிக இருள் சூழ்ந்த காலகட்டத்தில் அல்லாமா இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களின் பணி நிகழ்ந்தது.
«Х» வேதத்தின் மறைபொருளுணர்ந்த மெய்ஞ்ஞானியாக -
X- அரும்பெரும் நூல்களைத்தந்த ஆசிரியராக, -
0x8 நல்லென பணித்து அல்லன் தவிர்த்து மக்களை இஸ்லாமிய
நெறிமுறை பேணி வாழச்செய்த ஷைகு நாயகமாக -
oxy படைத்துக் காப்பவனைத் தொழும் பள்ளிவாசல்களும், கல்வி வளர்க்கும் கலைக்கூடங்களும் உருவாகப் பெருங்காரணமாக இருந்த மேதையாக -
இலங்கை) பெருமக்களும் பேரறிவாளர்களும் போற்றியவண்ணம்
உள்ளனர் என்கிறார் பன்னூலாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், வானொலி - தொலைக்காட்சி ஊடகர் (சிங்கப்பூர்) ஜே.எம்.சாலி.**
அந்தப் 'பொன்னாடை பொருத்தமானது தான் என்பது G3u frano -
* 28 தமிழகத்துத் தர்ஹாக்கள்' - ஜே.எம். சாலி பக். 261 (1981)
 

மானா மக்கீன் 173
* “பெருமானார் (ஸல்) அவர்களது திருப்புதல்வியார் பேரிலுள்ள “தலைஃபாத்திஹா”, இலங்கையில் இசை பெறும் காலம் வரை, இலங்கைப் பள்ளிகளில் ஜலாலியா ராத்தி’ பின் ஓங்கார ஒசை ஒலிக்கும்வரை, அஷ்ஷெய்குல் காமில் இமாமுல் அரூஸ் ஹஜ்ஜுல் ஹரமைன் மலிகுஷ் ஷ"அரா மாப்பிள்ளை ஆலிம் நாயகம் அவர்களின் திருநாமம் எங்கள் நெஞ்சங்களில் நிலைபெற்றிருக்கும்” என்று பதித்துப் பரவசப்படுத்துகிறார் இலங்கை ஆய்வாளப் பெருமகனார், அன்பர், கலாநிதி எம். எ. எம். சுக்ரீ அவர்கள். * *
ஆயிரத்திலொரு வார்த்தை இலங்கை முஸ்லிம்களிடையே அவர்களது மகத்தான செல்வாக்கும் சேவையும் இன்றும் பசுமை, என்றும் பசுமை!
இந்த இடத்தில் என் பேனா பதித்திட வேண்டிய ஒரு கருத்து உள்ளது.
இதுவரையில் நாம், இந்த ஆன்மிகப் பாலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்ட மதிப்பிற்குரிய சதக்கத்துல்லா அப்பா (வலி) அவர்கள் முதற்கொண்டு, அல்லாமா அறிஞர் பெருமகனார் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் வரையில் ‘காஹிரா’ என்கிற காயல்பட்டினத்து மண்ணிலே மலர்ந்தவர்களே! பின்பு கீழக்கரையைத் தாயகமாகக் கொண்டு அதிலே மணம் வீசி தலைசிறந்திருக்கிறார்கள்.
“எமக்கு எல்லாமே ஊர்; எல்லோரும் நம்மவரே” என்ற பொருளில், 'யாதும் ஊரே,யாவரும் கேளிர்’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன் குரல் கொடுத்த கணியன் பூங்குன்றனாரை நினைவில் கொள்வோம். அவருக்கு நன்றி செலுத்தி காயல்பட்டின மண்ணுக்குப் பூமாரி பொழிதல் அவசியம்
گئش
* 29 'ஷெய்கு நாயகம் சிறப்பு மலர்' கட்டுரை பக். 72 (1967)

Page 90
74 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் கட்டப்பட்ட அறிவு நிலையங்கள்
மஃனமுஸ்ஸுஅதா - கொழும்பு பழைய சோனகத் தெரு
.
1881 .p.?ی ۔۔۔۔۔۔ புகாரித் தைக்கா - மருதானை -1883 புகாரி மஸ்ஜித் - வெலிகாமம், (பாரீ மத்ரஸா) -1884
அருளபியா தைக்கா - வெலிகாமம் வெலிப்பிட்டி -1885 மஆலுல் கைராத் அருளபியாத் தைக்கா
- மாத்தறை, கோட்டகொடை -1886 6. முஹியிதின் மஸ்ஜித் - மிலிதுவ, காலி -1887 7. மல்ஹருஸ்ஸலாஹ் அரூஸியாத் தைக்கா
- மாத்துறை கடை வீதி -1888 8. மஃனமு அப்கல் ஹம்து அருளியாத் தைக்கா
- கட்டுகொடை, காலி -1889 9. ஹஸ்ஸைன் தைக்கா - கிந்தோட்டை, காலி -1894 10. புகாரிப் பள்ளி - வெலிகாமம், கல்பொக்கை
அவர்கள் காரணமாயமைந்த அற நிலையங்கள் மருதானைப் பள்ளிவாசல் - கொழும்பு - 10. ஜும்ஆப் பள்ளிவாசல் - பம்பலப்பிட்டி - கொழும்பு -04. லெயட்ஸ் புரோட்வே பலாமரச் சந்தி பள்ளிவாசல்
- கொழும்பு - 12. ஜூம்ஆப் பள்ளிவாசல் - திக்குவல்லை. வலஸ்முல்ல பள்ளி வாசல் மாளிகாவத்தைப் பள்ளிவாசல் - கொழும்பு - 10. புதுக்கடைப் பள்ளிவாசல் - கொழும்பு - 12 养 养 புகாரி மஸ்ஜித் - வெள்ளை மணல்.
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மானா மக்கீன் 175
இலங்கையில்
இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது கலீஃபாக்களில் சிலர்
“கலீஃபா’ என்ற சொல்லுக்குப் “பிரதிநிதி” எனப்பொருள். இந்தவகையில், இமாமுல் அரூஸ் அவர்களால் இலங்கையில் நியமிக்கப்பட்ட பலருள் சிலரது பெயர்கள் :
* வேர்வலை ஷெய்கு முஸ்தஃபா வலி அவர்கள்.
(தந்தை பெயர் : ஆதம்பாவா) ஹி. 1252 - 1305 / கி.பி. 1836 - 1887)
ox ஜமாலிய்யா ஸெய்யித் முகம்மது மவுலானா அவர்கள் (ஹி. 1254 - 1371 / கி.பி. 1838 - 1951) வெலிகாமம்.
ex- முஹம்மது இப்ராஹிம் அல்-பல்காமி. அல்மத்ரஸத்துல் பாரீ கண்ட முதலாவது முதல்வர் வெலிகாமம், ஹி1319 / கி.பி. 1901 -இல் ஓய்வுறக்கம்.
0. எல"பைறு லெவ்வை மஹல்லம் ஆலிம் அவர்கள் - வெலிகாமம். (ஹி.1311 - 1406 /கி.பி. 1890-1985)
* முஹம்மது அலி நாநா. காலி, சோலை.
* முஸ்தஃபா மவுலானா-சாய்ந்தமருது (கிழக்கிலங்கை
令 அப்துல் காதிர் ஆலிம் - கிழக்கிலங்கை.

Page 91
176
f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது சீடர்கள் சிலர்
அருள்வாக்கி அப்துல் காதிர், தெல்தோட்ட - (கண்டி - கலஹா பகுதி). (ஹி. 1283 - 1337 / கி.பி. 1866 - 1918)
வாப்புச்சி மரக்காயர் பாஸ் - (ஹி. 1344 I கி.பி. 1925) மாபெரும் இலங்கை முஸ்லிம் தலைவர் ஸேர் ராஸிக் பரீத் பெருமகனாரின் பாட்டனார். முஹம்மது ஹனிஃபா பாஸ் - மருதானை, புஹாரி மஸ்ஜித் நம்பிக்கைப் பொறுப்பாளர் (டிரஸ்டி). ஹாஜிகளான ஐதுரூஸ், நாஹ் - ஆகியோர் பிற்காலத்தில், மாத்தறை, மழ் ஹ ருஸ் ஸலா அறபுக் கலாசாலைப் புரவலர்கள். (இங்குதான் நமது அன்பருள் அன்பர், கலாநிதி எம்.எ.எம். சுக்ரீ அவர்கள் அறபு வித்தகராகப் பரிணமித்தது)
ஜனாப் அப்பாஸ் மரக்காயர் - முந்தல் கிராமத்தில்
நிறுவப்பட்டு தற்சமயம் புத்தளம் மாநகரில் இயங்கும் மத்ரஸத்துல் காஸிமிய்யாவின் அக்காலப் புரவலர்களுள்
ஒருவர்.
திக்வல்லை, அஹமத் சகோதரர்கள் - ("கட்டை ஹாஜியார்’ - ‘நெட்டை ஹாஜியார்’ என அழைக்கப்பட்டவர்கள்)
லெவெனா மரக்காயர், காலி. கட்டுகொடை, காலி, குஞ்சி பாபாவின் புதல்வர் அப்துல் ரஹ்மான்.
 

மானா மக்கீன்
177
இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது போதகர்கள் faf
முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள். அல்லாமா இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது மூத்த சகோதரர். குருனாக்கலுக்கு அருகில் உள்ள மந்திராவையில் இப்போதைய பானாகம) ஓய்வுறக்கம்.
பாளையம் ஹபீப் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள். ஹி. 1300-கி.பி.1882-இல் ஓய்வுறக்கம். புத்தளம், கல்பிட்டியில்.
“பல்லாக்கு அவ்லிய்யா” (ஹி.1268 - 1360/கி.பி. 1851 - 1941) எனப் புகழ்பெற்ற ஹபீப் முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் (வலி) அவர்கள், அல்லாமா இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது உடன்பிறப்பாரின் மகனார். புத்தளம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
இலங்கை வடபகுதியில் - ஏ.எம்.எஸ். ஹபீப் முஹம்மத்
சதக்கத்துல்லா ஆலிம் அவர்கள். (ஹி. 1301-1372/கி.பி.
1883-1952) கல்பிட்டியில் ஓய்வுறக்கம்.
‘அரூஸ் மவுலானா' என பிரசித்தமான அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள். கண்டி - கெலிஒயாவில் ஓய்வுறக்கம். (ஹி.1412 - துல்காயிதா 22 (25-5-1992)

Page 92
178
அறப்பணிகளைத் தொடர்ந்த வழித்தோன்றல்கள்
இனி, இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை
ஆலிம் (வலி) அவர்களுக்கு அடுத்ததாக இருவரது சேவைகளை
னைவில் கொண்டுவந்து இதயத் ன்றியைச் செலுத்திட வேண்டும்.
நது இதயதது ந @岛
* அஹ்மது முஸ்தஃபா என்ற ஷாஹ"ல் ஹமீது ஆலிம்
ஹி. 1271-1339/கி.பி. 1854-1920)
* அல்லாமா தைக்கா அஹ்மது அப்துல் காதிர்
ஹி. 1509-1397/கி.பி. 1891-1976)
இவ்விருவரும் யார் என்பதனை கீர்த்திமிகு கீழக்கரையுடன் இலங்கை, தென்பகுதி மக்களும் புரிவர்.
மதிப்பிற்குரிய இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது இளைய மைந்தரே முதலாமவர்
அந்த இளையவரது மகனாரே இரண்டாமவர்
ஆரம்பத்தில், “வணிகத் திலகமாகவே வாழ்வைத் தொடங்கிய ஷாஹ"ல் ஹமீது ஆலிம் அவர்கள், வர்த்தகப் பொறுப்புகளைச் சுமந்தவண்ணம், ஆன்மிக அறப்பணிகளையும் முன்னெடுத்துச் சென்றார்கள்.
ஒருபொழுது, தன் மூத்தமகனார் அப்துல் கையூம் (தைக்கா
தம்பி) ஆலிம் சாஹிப் அவர்களுக்கே வாணிபத்தின் முழுப்பொறுப்பையும் அளித்துவிட்டு முழுநேர ஆன்மிகவாதியானார்கள்! அப்பொழுது, அவர்கள் ஜல்வத் நாயகம்
 

மானா மக்கீன் 179
என்ற பெருமைக்குரிய பெயரால் பல ஆயிரக்கணக்கான முரீதீன்களினால் அழைக்கப்படலானார்கள்.
இதற்கிடையில், அவர்களது அருமைத் தந்தையார் இமாமுல் அரூஸ் (வலி) அவர்களும் ஓய்வுறக்கத்திற்காக (ஹி.1316/கி.பி. 1898) விடைபெற, தரீக்காவின் கிலாபத் பொறுப்பை ஏற்றார்கள். தமிழகம் - இலங்கை - கேரளம் மூன்று இடங்களிலும் ஆலவிருட்சமாகப் படர்ந்துவிட்ட அரூஸிய்யத்துல் காதிரிய்யா நிறுவனங்களை நிர்வகிக்கத் தொடங்கினார்கள்.
அதற்கு முன்பெல்லாம் இலங்கைக்கு ஒரு வாணிபராக வருவதே வழக்கம்.
ஆனால், 1905-இல், அவர்கள் வருகை முக்கியத்துவம் பெற்றது. அவ்வாறே 1920-லும் வெலிகாமம் நகர் அடைந்த பெருமிதத்திற்கு அளவே இல்லாமலாயிற்று.
இவ்விரண்டு விஜயங்களும் அறப்பணிகளுக்கே அர்ப்பணமாகின.
«Х» மாளிகாவத்தை “மும்பிஹ0ல் காபிலீன்’
0. காலி, கோட்டை பூக்காக்கா தக்கியா போன்ற பல மதரஸாக்கள் (மக்தபுகள்) அவர்களால் அமைக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் காதிரிய்யா சங்கத்தை நிறுவினார்கள்.
* “ஜல்வத் நாயகம் அவர்களது சேவைகளில் மிகச் சிறப்புடைய அம்சம் அவர்கள் வழங்கிய ஃபத்வா என்னும் மார்க்கத் தீர்ப்புகளாகும். மார்க்கத் தீர்ப்பளிக்கும் முஃப்திகளின் - நீதியாளர்களின் - அமீராக அவர்கள் விளிங்கினார்கள்”

Page 93
180 |్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
- என எ.எ. அப்துல்லாஹ் எம்.எ. அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். * 9
இலங்கையிலும் ஃபத்வாக்கள் வழங்கப்பட்டதுடன், பல ஊர்களில் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் பணியையும் புரிந்தார்கள்.
இது, அக்காலத்தில் ஒரு மகத்தான பணியாக அமைந்தது.
தந்தையாரது கலீஃபாக்களுள் ஒருவராக இருந்த ஷேக் முஸ்தஃபா ஹாஜியாரது மகனார் ஷேக் முஹம்மது ஹாஜியார் அவர்களை தனது கலீஃபாவாக நியமித்துக் காரியமாற்றினார்கள்.
இவர்களது பிரதான சீடராக ரைட்ஹானரபிள் அப்துல் ரஹ்மான் அவர்கள் திகழ்ந்தார்கள். இவர், இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது சீடர்களுள் ஒருவரான வாப்புச்சி மரக்காயர் அவர்களது மைந்தர்.
மேலும், ஜல்வத்நாயகம் அவர்களது இலங்கை விஜயங்களின் பொழுது அவர்களுடனே வந்து அவர்கட்கு உதவியாளராக விளங்கிய முஹியித்தீன் அப்துல் காதிர் ஆலிம் என்ற சட்டைக்கார மரக்காயர் பங்களிப்பும் மறக்க முடியாதது. அவர், அவர்களது மைத்துனர்.
இப்பொழுது ஜல்வத் நாயகம் அவர்களது நிரந்தர இடமாக அமைந்து விட்டது மக்கமாநகர். ஹஜ்ஜின் பொழுது ஓய்வுறக்கம் பெற்றார்கள். (ஹி. 1339/கி.பி. 1920)
*30 மேதையின் வெளிப்பாடு' - கட்டுரை. ஷெய்கு நாயகம் சிறப்புமலர்
լ յ5, 109, (1967)

மானா மக்கீன் 18
இவர்கள் விட்டுச்சென்ற வம்சவாரிசுகளில் ஒருவரே அல்லாமா தைக்கா அஹ்மது அப்துல் காதிர் அவர்கள். ஹி. 1309/1891) அன்னார், அவர்களுக்கு இரண்டாவது புதல்வர்.
இவர்களுக்கும்,
‘பரம்பரைப் பழக்கப்படி ஆன்மிகமே ஓங்கி, வாணிபம் தொலைவுக்குப் போயிற்று
ox பாட்டனார் - அல்லாமா இமாமுல் அரூஸ் (வலி) அவர்கள்.
* பெரிய தந்தை - கல்வத்து நாயகம் அவர்கள்.
ox தந்தை - ஜல்வத் நாயகம் அவர்கள்.
- ஆகிய முப்பெரும் ஞானமேதைகளின் ஆத்மஞானப் பயிற்சிகள் ஆட்கொண்டுவிட அற்புத மனிதரானார்கள். இரு நூற்றாண்டுகளிலும் வாழ்ந்து சிறந்த பெருமைக்குரியவர்களானார்கள். (ஹி. 130913971 S.L. 1891-1976).
இளமையிலிருந்து இறுதிமூச்சு வரை இவர்களின் காலங்கள் கல்விக்கான பணியிலேயே செலவழிந்தது.
* அறபுக்கல்வியின் பேராசிரியராக -
* கல்லூரி முதல்வராக -
* இந்தியா - இலங்கையில், அறிவுக்கூடங்கள், அறப்பணி
நிலையங்களில் போஷகராக -
VM
09 சின்னஞ்சிறு நாளைய சந்ததிகளுக்குக் குர்ஆன்
ஓதிக்கொடுக்கும் ஆசானாக -

Page 94
182 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
X புதிதாக இஸ்லாத்தில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு நடை, உடை, பாவனை, பேச்சு ஆகியவற்றைப் போதிக்கும் நல்லாசானாக -
* முதியோருக்கு அறபு எழுத்துக்களையும், தனித்தமிழையும்,
அறபுத்தமிழையும் போதிக்கும் ஆசிரியராக -
தொழுகை முறை, ஒலுச்செய்தல் முதலானவற்றை செய்துகாட்டி விளக்கம் அளிக்கும் போதகராக -
0- ஆதாரப்பள்ளியின் ஆசிரியராக -
0x8 ஆசிரியர் சங்கத் தலைவராக -
ox- சீடர்களுக்கு ஞான அமுதை அள்ளி அளிக்கும் ஷெய்குல் காமிலாக இவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.°
vn மஜ்லிஸ0ல் உலமா சபை, ஹிபாஜத்துல் இஸ்லாம் சபை
ஆகியவற்றிலும் பணிகள், சென்னை மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர், சமூக சேவைகளில் தலைசிறந்தவர். (ஊரில் கொள்ளை நோய் பரவும் நேரமெல்லாம் அங்கே ஷெய்கு நாயகம் நடுநாயகமாக நின்று கடமையாற்றுவார்களாம்!)
அனைத்துக்கும் சிகரமாக அவர் ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்!
அபிமானிகள் இங்கே ஒன்றை அவதானித்திருப்பீர்கள். ‘தைக்கா அஹ்மது அப்துல் காதிர்’ என எழுதிக்கொண்டுவந்த பேனா திடீரென ‘ஷெய்கு நாயகம்’ எனப் பதிக்கிறது அல்லவா!
அதிலேதும் தவறுமில்லை!
* 31, ஹத்யா ஷரீப் - முன்னுரை குறிப்பு மில்லத் வெளியீடு.
 

மானா மக்கீன் 183
எப்படி மக்கள், அஹ்மது முஸ்தஃபா என்ற ஷாஹுல் ஹமீது ஆலிம் அவர்களுக்கு “ஜல்வத் நாயகம்’ எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்களோ, அதேபோல அவர்களுடைய மைந்தருக்கும் ”ஷெய்கு நாயகம்’ எனப்பெயர்சூட்டி ஆனந்தப்பட்டனர்.
இந்தப் பெருந்தகையைப் பாராட்ட நினைத்தார்கள் பல சிஷ்யர்கள், தமிழகத்தில், 1967-இல்.
மதுரைமாநகரைத் தேர்ந்தெடுத்தார்கள். செப்டம்பர் - 20 என்று நாளைக் குறித்தார்கள். இந்துப் பெருமகனார் ஒருவரை - மதுரைப் பல்கலைக்கழக உபவேந்தர் திருமிகு தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - தலைமை வகிக்கச் செய்து மதநல்லிணக்கம் அன்றே காட்டினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஒப்பற்ற தலைவர் காயிதேமில்லத், அல்ஹாஜ் எம். முஹம்மத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் முதற்கொண்டு, சமுதாயக்காவலர் அல்ஹாஜ் ஆ.கா. அப்துஸ்ஸ்மத் அவர்கள் ஈறாக பலர் முன்னிலை வகித்தார்கள். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அரூஸிய்யாவின் இலங்கைக் கிளைத் துணைத் தலைவர் “ஜெம் ரிச்’ ஜமீல் முஹம்மது, இணைச்செயலாளர்கள் எ.எம்.எம்.ராஜி, எம்.மன்சூர் எஸ். தீன் ஆகியோரும் சமூகமளித்தனர். இதற்கென ஒரு சிறப்பு மலரும் வெளியானது.
அதில் இடம்பெற்றுள்ள வாழ்த்துச்செய்திகள், கட்டுரைகள் முதலியன "ஷெய்கு நாயகம் என்பவர்கள் யார்?’ என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன.
இங்கே, ஒருசில “பதச்சோறுகள்!”:
முதலில், காயிதேமில்லத் அவர்கள் தங்கள் கைப்படவே
எழுதிய ஒரு வாழ்த்து அருமை அருமையாக, அழகுத்தமிழில் அபூர்வமானிது அது. அப்படியே பிரசுரிக்கிறேன்.
- (கடிதத்தின் நகல் பிரதி - அடுத்தடுத்த பக்கங்களில்

Page 95
】84
M. MUHAMMAb ISMAIL, Sosy
“DAYA MANzian CHRoMEPEr. MA DRAS-40,
Á 7-7 . 'לייז
*NCoAst unepot Misri Laag
ဟိုးဂဲ၊ /*ww? Aနှံ) ဖဲ့ ഠം08 (,
:::ಪಿ: Cീഖ მცმ-Nox_>*ouე'éბაro ஆCடிm ప్లే శస్క్రి A லேஸ்லிம்க் "قالمة . Cنهايو، 6 يوليو 000خهياسية لإ x: (Gun ಫ್ಲಿ? 缴 *\^} ಫ್ಲಿಫ್ಟಿ: ိဗ္ဗိန္ဓီ ህራ શ્રે) ઉપ, rஉைள்: d இஜ02ல்பாதை) Gზუას!წიგსი გუ, ??ಹ್ಲಿ Слобucos A co \\ومت శ్రీ-N 参リ○ リ。 0^'(( ابوالا یجظ ChN) 6^ل 06لهخه) ميرلا 6 ساعة\oت, 缆 ဇို့စ္စံ2၇၅ லpயெ) క్ష్ 20 ర; #ಸಿ های بهٔ از جیمی دهکده) C8) ۸O" ‘မွို”ီမိဳိင္ငံမ္ဘိဇ္ဇိမ္ပိန္တိမ္ပိန္တိဒ္ဓိန္တိဖို့ 6v GGY, βιαιοιμή ○* 34a86No 6Ло4:
losur !"A/プ 象 ငါ့ဇုံဏ္ဌန္တိဌိဇုံ(၄)2% မှီခို့အံ δ (ဋ္ဌိစ္ထိ? >ሽዽ ሳ
7ᎪᏁ ↑ᏉᏈ c, 1? ܠܬ̇ܣܢܽܐ؟Jo, cj/ܟܐ̈ܬ݂ܶܐ ܐܳܬ݂ܶܐ క్రిప (N6 ود\ن چتر G ‘မွိုးနှီ ဇိုရှိ်န္ထမ္ပိ ရွီး 88 997 ميجي) بكر احدي ఉత@Nఉష్ణో శy-$Ch %ჰი ბაჟიეს, (ဎွိန့်ချီ Âါပ္ဖ္ရစ္ပါယှိ၊ မွို\üဂ်'ိါဂ္ဂီ 66 #### ே ుళ్లటాగి 份、当至X。 co a w M P زیاد ۱۸۸) را ۱/ه .YY け意 సి۔ با خالو ، « له هاوکئا #? ಗಿಣ್ಣಿ'ನಿಷ್ಠಿ: შNწuიჭწწ.),
P. T. O.

185
tenrrro hoGèsQJ Qn &4Qvn?''/8 リ\突 وعا ஈ الج لم2Yی لازم\ و لدلالة هG\fلاهيا يهمها بو ح\6 醬 ಆಶ್ಲೆ క్లిష్టిగ్రీ ဣန္ၾပ္ဖု% ، مهلهم Nv త్తరYగి@ دنا، ماJN بكلام6N Xஃை6ல்Y Nர்டCேேலஜும்-4 ఉm. დაგშპი, L— იყ6თQ3Yიიw /﴿؟ھ جاتح (6 & ہvہY . gاهی ۵بندرعباسYin M دوم به بالرح ، مسموم ತೇಸ್ತು VN VNo»G' 4டிைய Systடுdெமர் ဇွဲစိhရ်ဂဲ\l၇ င့နုံ့ဖြိုဖွဲ့ 6 غا 6 ماي@Nنهلاج سوش இ26/டி.டின : 65 6 فهوفينةs^rsiے ہAG'ه له^X? *::::::::::: Θιν όλύμό
W4ĵnmC>vx6\M À Cஆல், SNடுமுரி @ტvg- Áၾား၏ :: / لارن ۱هٔ «میم بلاC%0 O(Ng Cهٔ مه ۹ لوبC &Nரும்பல் Oண்டுங்கNம் வMம்.Ovது (Nix/
::::::: @్ళగీణి.

Page 96
186 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இலங்கைப் பங்களிப்பாக, அரூஸிய்யத்துல் காதிரிய்யா துணைத்தலைவர், காலி, எஸ்.எ. ஹம்மாது ஜே.பி. (சமாதான நீதவான்) அவர்களுடைய வாழ்த்திலிருந்து:-
* சங்கைக்குரிய தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகம் அவர்கள் சுமார் 35-ஆண்டுகளுக்கு முன் சரந்தீவின் மண்ணில் முதன் முதலாகக் காலடி பதித்தபோது அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் அளித்த கண்ணியமான - சூதுரகலமிக்க வரவேற்பு வைபவங்கள் இன்றும் எனது நினைவில் தெளிவாகப் பளிச்சிடுகின்றன.
* முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு துறைகளிலே அவர்கள் செய்துவந்துள்ள எண்ணற்ற பணிகள், அனைவராலும் புகழப்படுகின்றன. சிறப்பாக, அவர்களும், அவர்களது மூதாதையர்களும் இங்கு வந்ததன் பயனாகவேதான், இலங்கை முஸ்லிம்களாகிய எங்களது வாழ்க்கை, மார்க்கத்துறையிலும் ஆன்மிகத்துறையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத
32
உண்மையாகும். * *
இதே போல், இலங்கை வானொலி, முஸ்லிம் நிகழ்ச்சி முன்னைநாள் பணிப்பாளர் அல்ஹாஜ் இஸட். எல். எம். முஹம்மது (வெலிகாமம்) அவர்கள் அளித்துள்ள பாராட்டிலிருந்து பின்வரும் பகுதியைப் பார்க்கும்பொழுது பரவசப்படுகிறோம்.
* ‘நமது இலங்கையின் சன்மார்க்கச் சின்னமாகவும், மார்க்க அறிவு விருத்திக் கோர் மகத்தான வித்தகராகவும், பேரன்பின் பேரொலியாகவும் மிளிர்கிறார்கள்.
&
* 32 செய்கு நாயகம் சிறப்பு மலர் - 1967 பக் 12

மானா மக்கீன் 187
இலங்கையிலுள்ள பல பிரசித்தி வாய்ந்த அறபு மதரஸாக்கள், தைக் காக்கள், பள்ளிகள் உருவாகி உயர்வுபெற்றுத் திகழ நமது ஷெய்குநாயகம் அவர்கள், தனிப்பட்ட முறையில் செய்த முயற்சியே முழுமுதற் காரணமாயிருக்கிறது என்பதைப் பூரிப்புடன் இங்கு குறிப்பிட்டுக் களிப்பெய்துகின்றேன். ܐܝ
* கீழக்கரைக்கும் எமது இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்த அரூஸ் நாயகத்தின் சங்கிலிக் கோவையை சரிவர கோர்த்துவைத்து, தீனுல் இஸ்லாத்தின் போதனைகளைப் பேணிக்காப்பதில் இரு தேசங்களுக்கிடையே இணையில்லாத் தொடர்பு நீடிக்க மேலும் மெருகூட்டி வருகிறார்கள்” * ?
இன்னொரு நற் சான்று, இவ்விரண்டுக்கும் மகுடம் சூட்டுவதுபோல் அமைந்துள்ளது.
* “ஷெய்கு நாயகம் அவர்களும், அவர்களின்
மூதாதையினரும் இலங்கை வந்திராவிட்டால்,
os) GUTLD|UL 6 95 G) ானம (oபறறவாகள மகசசலuர
LE ல்வி ஞ ெ ற்ற *தி C
ப்பார்கள் என் fra 6 Ls) s dos 55 f
இருந்திருட் ா என்று கூறுவது மறுக்க முடியாத உண்மையாகும்!”
- மவ்லவி எ.எ.எம். சித்தீக் நூரி) அதிபர்.
- அல்ஹாஜ் எ.எச்.எம். ஹஃபீள் முகாமையாளர்.
மத்ரஸத்துல் பாரீ அறபிக்கலாசாலை புகாரி மஸ்ஜித் வீதி, வெலிகாமம். * *
* 33. இலங்கை மறக்குமோ கட்டுரை. இஸட் எல்.எம். முஹம்மது.
மேற்படி மலர். 1967 பக். 97-98
$ 34. செய்கு நாயகம் சிறப்புமலர் - 1967 வாழ்த்துப்பகுதி

Page 97
188 ఖ్యత இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இலங்கையில் இவர்களது பணி எவ்வாறு பரந்த ரீதியில் அமைந்திருந்தது என்பதற்கு ஒரு குறிப்பை, அரூஸிய்யத்துல் காதிரிய்யா இணைச்செயலாளராக இருந்த ஜனாப் எ.ஸி.எ. ஜப்பார் தந்துள்ளார்.
ox “இலங்கையில் சின்னஞ்சிறு கிராமங்கள், பெரு நகரங்கள், ஏழைத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதிகள் பலவற்றில் பள்ளிகள், தைக் காக்கள், பள்ளிக்கூடங்கள் பல தோன்றுவதற்கு நமது ஷெய்குநாயகம் காரணமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, போளானை, மலாயர் கொலனியிலுள்ள மஸ்ஜிதுல் அரூஸிய்யா, காலி, கட்டுகொடை மஸ்ஜிதுல் அரூஸிய்யா, திக்குவல்லை கடைவீதியிலுள்ள அரூஸிய்யா தைக்கா, நிலம் போன்றவை அவர்களின் முயற்சியாலானவை. கதிர்காமத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளி கட்ட முதன்முதலில் அஸ்திவாரமிட்டவர்கள் நமது நாயகமேயாவார்கள்.”**
1964-ஆம் ஆண்டு நவம்பர் 17-லில், கொழும்பு மாநகரத்தில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கெளரவம், இந்த நூற்றாண்டில், இதுவரையில் எந்தத் தமிழ்நாட்டவர்க்கும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை!
அது, சங்கைக்குரிய அல்லாமா தைக்கா அஹ்மது அப்துல்
சாதிர் ஷெய்கு நாயகம் அவர்களுக்கு, கொழும்பு மாநகராட்சி அளித்த மகத்தான பொது வரவேற்பு
பின்னாளில் அமைச்சரான, அந்நாளின் கொழும்பு நகர மேயர் அமரர் வி.எ. சுகததாஸா அவர்களால் அந்த ‘சிவிக் ரிஷப்சன்’ நடத்தப்பட்டது
* 35. 'ஸரந்தீவின் மகிமை - ஷெய்கு நாரயகம் சிறப்பு மலர் பக் 28
(፲967)

மானா மக்கீன் 189 ܖ
* “தங்களின் அறபிக்கல்விக்கூடம், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இஸ்லாமியர்க்கு மிக்க பயன் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் நாங்களும்கூட தங்களின் இந்தத் தாராளத் தன்மையால் பயனடைந்துள்ளோம். தங்கள் பாட்டனாராலும், தந்தையாராலும் இலங்கையிலே நிறுவப்பட்டுள்ள எத்தனையோ நிறுவனங்களுக்கு இன்றும் தாங்களே டிரஸ்டியாக இருக்கின்றீர்கள். எனவே, இத்தகையத் தொடர்புகளால், தாங்கள் எங்கள் நாட்டுக்குப் புதியவரல்லர். உண்மையிலே, தாங்கள் இந்த நகரின் பிரதான பிரஜையாகத் திகழ்கின்றீர்கள்!” **
- என மேயர், தான் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டது நேற்று போல் உள்ளது.
அவ்வாறான மிகச்சிறப்பான காலங்களில், ஷெய்கு நாயகம் அவர்களது பிரதான சீடராக இருந்தவர்கள் இலங்கையின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராவார்கள். அன்னார் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மனிதராக இலங்கை முஸ்லிம்களை வழிநடத்திச் சென்றார். அவர்கள்தம் சேவை இன்றில்லையே என ஏங்காத நெஞ்சமும் நெஞ்சமல்ல!
அன்னவரே, அல்ஹாஜ் ஸேர் ராஸிக் பரீத் எம்.பி. ஜே.பி.யூ.எம். ஒ.பீ.ஈ.
பிற்காலங்களில், இலங்கை அமைச்சர்களுள் ஒருவராகவும் திகழ்ந்த அவர்கள், இலங்கை, அரூஸிய்யத்துல் காதிரிய்யா என்ற ஞானவழியின் பாதுகாவலராக, அமைப்பின் தலைவராக இறுதி மூச்சு வரையில் இயங்கினார்கள். (அடுத்தப் பக்கத்தில், அரூஸிய்யாவின் கடிதத்தலைப்புப்பார்வைக்குத் தரப்பட்டுள்ளது).
च । * 36. "ஷெய்கு நாயகம் சிறப்பு மலர்' - 1967 பக். 78

Page 98
190 RN இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
Phote 91s53
AroOsiyathul Quadiriya Association
A purely religious Order which endeavours to create Muslims worthy of the highest traditions of Islatin in
Ceylon, India, Malaysia, Thailand etc. .
(Founded 1848)
Ceylon Headquarters MAGNAMUS SUADA THAKYA 159, Old Moor Street COLOMBO.12
Founder-Patron:
ALLAMA ALHAJ His Holiness THAKIYASEYD MUHAMMAD IMAMUL AROOS (Maadihus Sibthalo Sheikh Mapillai Alim Al-Quadiri)
Life Patron:
nes ALHAJ SHEIKH THAKIYA AHMAD ABDUL QUADIR ALIMUL KIRKARI
Patront :
His Holiness ALHAJ SHEIKH THAKASHUAIB ALEM
President .
ALHAJ SIR RAZIK FAREED M.P., J.P. U.d. o...
 

மானா மக்கீன் 191
இலங்கை, அரூஸிய்யத்துல் காதிரிய்யாவின் 1967-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஷெய்கு நாயகம் அவர்கள், முதல்முறையாக தனது 42-ஆவது வயதில் (1933) இலங்கை வந்துள்ளதாகத் தெரிகிறது. அதன்பின், 41 - 50 -53 - 54 - 58 - 64 ஆண்டுகளில் விஜயம். அன்னாருடன் உடன் வந்தவர்கள், மூத்த சகோதரரான தம்பி அப்துல் கையூம் ஆலிம் ஸாஹிப் ஹாஜியாரும், மைத்துனர் முஹம்மது சுலைமான் லெப்பை அவர்களுமாகும். * '
64 - க்குப் பிறகு (ஓய்வுறக்கம் கொள்ளச் சென்ற) 76 - ஆம் ஆண்டு இடைக்காலத்திலும் அவர்கள் வந்திருக்கக்கூடும். கணனி இயந்திரம் படுத்துகிற அவசரத்தில் அறிவதற்குப் பொழுதில்லாமல் போனேன்!
எவ்வாறாயினும், அதன்பின்னரும் அவர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள் என்பதை நிச்சயமாகப் பதிக்கலாம்.
நல்லது. நாம் இப்பொழுது, இந்த ஆன்மிகப்பாலத்தின் நடைப்பயணத்தில் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
நம்மை உபசரித்து, அன்புடன் விடைதர, நம் காலத்து ஒரு பெருமகனார் நெடுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் - அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் டாக்டர் தைக்கா ஷ"ஐடி ஆலிம் பி.ஏ. (ஆனர்ஸ), எம்.எ, பி.ஹெச்டி, எம்.எஃப்.எ.
நாம் சற்றுமுன் பழகிக் கொண்ட, ஷெய்குநாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்களது இளையபுதல்வர்.
V
* 37 ‘செய்குநாயகம் சிறப்பு மலர்' பக். 112 (1967)

Page 99
192 ష్యా இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இதே ஆன்மிகப் பாலத்தில், முன்னொரு பக்கத்தில், “இன்றைய தலைமகனார் யார்?’ என்று கேட்டுவிட்டு பதிலைப் பின்னால் தான் பதிப்பேன் என்றேனே, அவர்களே தான்! அவர்களே தான்
அவர்களைப்பற்றி என் பேனா எதையெல்லாம் பதிப்பது என்று என்னையே பரிதாபமாகப் பார்க்கிறது!
தமிழகத்திலே, சிலபல நூற்றாண்டுகளாக ஒரு சிறப்புக் கோத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிற தைக்காக்கோத்திரக் குடும்பத்தின் முப்பாட்டனார் (இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலி) வழிப்பேரனாகத் திகழ்கிறார்!
அன்னார், உலகின் அனைத்துப் பாகங்களுக்கும் பறந்து பறந்து கீர்த்திமிகு கீழக்கரைக்குப் பெருமை சேர்ப்பதைக் குறிப்பதா?
ஆன்மிகத் தென்றலாக அனைத்து முரீதீன்களுக்கும் அமைதியும் ஆனந்தமும் அளிப்பதைச் சொல்வதா?
ஞானத்தில் சுட்ரிடும் மேதையாக, ஆராய்ச்சித் திறன்கொண்ட அறிவுப்பெட்டகமாக இருந்தும்கூட இலைமறைகாயாக வாழ்கிறாரே, என்பதா?
புரியவில்லை! புரியவில்லை!
எவ்வாறாயினும், இந்த ஆன்மிகப் பாலத்திலிருந்து அபிமானிகளை அடுத்த இலக்கியப் பாலத்திற்குக் கூட்டிச்செல்லும் காலமும் நேரமும் மிக நெருங்கிவிட்டதால், கடமை உணர்விலே, என் சக்திக்கு உட்பட்ட அளவிலே சில நறுக்குத் தகவல்களை ‘சுய பிரலாபத்துடன் தர விருப்பம். தங்கள் அனைவர் ஒப்புதலும் G8 ou GaoT 06 Lio!

மானா மக்கீன் 193
எனக்கு பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கும்பொழுது, அரூஸிய்யா செயலகம் இயங்கிய கொழும்பு, பழைய சோனகர் தெரு மக்னமுஸ்ளUTCஅதாலில் மக்ரிபு கிடைக்கும் - திருநெல்வேலி, சாத்தான்குளம் தோழர்கள் புடைசூழ! அப்பொழுது, ஆணழகர் ஒருவர் - இளைஞர் - ஆண்டுக்கு ஒரிரு தடவை அபூர்வமாகக் காட்சி தந்து இமாமத் 6) a tü6)) (ri ! அப்பொழுதெல்லாம் தைக்கா கோத்திரக்காரர்களையோ அவர்களது அறப்பணிகளையோ சற்றும் அறியாத அப்பாவி நான். இன்றோ அதிலேயே மூழ்கிப் போயிருக்கிறேன்! ஆய்வே செய்கிறேன்! யார் அன்று எங்களுக்குத் தொழுகை நடத்தினார்களோ அவர்கள் ஒருபெரும் தரீக்காவில் (காதிரிய்யா) கிலாஃபத் பொறுப்பைச் சுமந்திருக்கிறார்கள் (1976) என்பதைத் தெரிகிறேன். இறைவனது நியதிகள் என்னைப் புல்லரிக்க வைக்கின்றன.
சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல். முப்பதாண்டுகள் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார்களே ஒர் ஆய்வு - சரந்தீவிலும் தமிழகத்திலும் அறபு, அறபுத் தமிழ், பார்ஸ்பிமொழிப் Te L° lx” (“Arabic, Arvi And Persian in Sarandib And Tamil Nadu) நூலின் நிறையை மூன்று நான்கு கிலோ எடைபோடலாம். ஆனால் தரம்? எத்தனை ஆயிரம் கிலோக்களோ, யார் அறிவார்? அமெரிக்க, கொலம்பியாப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த அந்த 824 பக்கப் பெரு ஆய்வே என் பேனாவைத் தொய்வில்லாமல் கொண்டு சென்றது. அது இந்திய - இலங்கை முஸ்லிம்களின் கடந்தகாலத்துக் கண்ணாடி இரு சமுதாயத்திற்கும் அன்னை மொழியாம் தமிழுக்குச் சிறப்புச் சேவை!
அவர் இரத்தின வணிகர் தான்! ஆனால் முழுநேரமும் ஆன்மிகவாதி! ஞான வழிகாட்டி, போதகர், பொதுச்சேவையாளர்! அது எப்படி?

Page 100
9. § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
* அவர்கள் காதிரிய்யா தரீக்காவின் நாற்பதாவது சற்குரு. முந்நூறுக்கு மேற்பட்ட ஞானவான்களைத் தந்துள்ள் பாரம்பரியத்தில், நாம் வாழும் காலத்தில் "பட்டென வீசிப் பளிச்சிடும் வைர மாக ஜொலிக்கிறார்கள். அவர்கள் இலங்கை வரும் நேரமெல்லாம் மருதானை, போர்பஸ் பாதை புகாரித்தக்கியாவில் கூட்டம் அலைமோதுகிறதுதே, அது ஏன்?
இதை எழுத்தில் பதிக்கும் நேரம்வரையில் புரியவில்லை எனக்கு
அந்த நிலையிலேயே, பாரத நாட்டின் ஜனாதிபதிகளுள் ஒருவரான டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்களிடம் அன்னார் தனது ஆய்வுப் பெருநூலுக்காகக் கவுரவிக்கப்படும் காட்சியின் மாட்சியின் எதிர்ப்பக்கத்தில் தந்துள்ளேன் - 7.5.1994
மேலும், அண்மைக்காலங்களில், என் தமிழக வாழ்க்கையில், என் இதயத்திற்கு இதமானவர்களாக, நெருங்கியவர்களாக ஒரு மார்க்க அறிஞரை - மனமேடை அமைத்து கன்னியரைக் கரைசேர்க்கும் சேவையாளரை - குழந்தை மனமே கொண்ட பள்ளப்பட்டி பண்பாளரை, மதுரை, "குர்ஆனின் குரல்” பிரதம ஆசிரியராகப் பார்த்துப் பழகிக்கொண்டிருக்கிறேன். மவ்லவி, முஃப்தி அல்ஹாஜ் அ. முற்றம்ாது அஷ்ரஃப் அவி மன்பாபி அவர்களை அறிமாதோரும் உண்டா?
சமீபத்தில், ஒரு நேர்முகத்தில் என் ஆய்வுப்பணியைத் தெரிவித்து, "என் முயற்சியின் வெற்றிக்கு தங்கள் கரங்கள் உயரவேண்டும்” என்றேன்.
அவ்வாறே செய்தார்கள்.


Page 101
196 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அத்துடன் “டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் பற்றியும் ஒரு வார்த்தை வழங்கிவிடுங்கள். ஆன்மிகப் பாலத்தில் அதைப்பதித்துவிட வேண்டும்’ என்றேன்.
புன்னகை பூத்தார்கள்!
சொன்னார்கள் இப்படி : கேட்டது நானல்லவா!
00 “நம்நாட்டில் ஆலிமாக இருக்கும் ஒருவர் ஆங்கிலமேதையாக - ஆய்வறிஞராக - இருப்பது அரிதிலும் அரிது. அப்படி ஒருவரைப் பார்த்தாலுங்கூட அவர்கள் உலகைச் சுற்றி வந்து ஆன்மிகப்பணி செய்வது என்பதும் மிக அபூர்வம். கீழக்கரை, அல்லாமா இமாமுல் அரூஸ் (வலி) மாப்பிள்ளை லெப்பை வழித்தோன்றல் அதைச் செய்கிறார்கள். அதிலே, இலங்கைவாசிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தாங்கள் அனைவருக்கும் தைக்காக் கோத்திரத்தார் நிறையவே செய்து விட்டார்கள்”
அனைத்துப்புகழும் இறைவனுக்கே. இனி, இலக்கியப்பாலம் நோக்கி இதமாக நடப்பதற்குமுன், இலங்கையில் துயில் கொள்ளும் கீழக் கரை ஞானவான்கள்,
போதகர்கள் யார் யார், எந்தெந்த இடத்தில் என்பதைப் பார்த்து, அவர்கள் ஆன்ம ஈடேற்றத்திற்குக் கையேந்திடுவோம்.
ஆனால், இப்பட்டியல் முழுமையான ஒன்றல்ல. என்னையும் தவறி பெயர்கள் சில விடுபட்டிருக்கலாம். அவ்வாறு நேர்ந்திருப்பின் மன்னிப்பு.
சரி. நினைவஞ்சலி செலுத்துங்கள் அபிமானிகளே.
(کونکوئٹہ

மானா மக்கீன் 197
இலங்கையில் ஓய்வுறக்கம்
(கீழக்கரை ஞானவான்கள் / போதகர்கள்)
* முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் - (ஹி. 1283) மந்த்ராவ என அழைக்கப்பட்ட இப்போதைய பானகமவில் (குருநாகல் பகுதி). * காதி கியாதுத்தீன் அவர்கள் - (ஹி. 1235 - 1296/கி.பி. 1819 - 1878) கொழும்பு - சிலாபம் - புத்தளம் பிரதான பாதையில் மாதம்பை என்ற ஊரில் அறபு மதரஸாவை நிறுவிய இவர்கள், காஜிமார்களைக் கொண்ட குடும்பத்தில் கீழக் கரையில் பிறந்தவர். இவரது பரம்பரை, ஹஸரத் அபூபக்கர் (ரலி) வழித்தோன்றல்களாவர். மதரஸா வளவிலேயே ஓய்வுறக்கம்.
* சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் - (ஹி.1298) மாத்தளை.
* பாளையம் ஹபீப் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் (ஹி.1300 - ஸபர் 13/கி.பி.1882) கல்பிட்டி (புத்தளம் பகுதி)
* முஹம்மது ஹ0 சைன் (வலி) அவர்கள் - (ஹி.1303).
கிந்தோட்டை,
* முஹம்மது ஸதக்கத்துல்லா ஆலிம் அவர்கள் - (ஹி. 1322)
கொழும்பு - 12. (பெரிய பள்ளிவாசல் வளாகம்)
* ஏ.எம்.எஸ். ஹபீபு முஹம்மது சதக்கத்துல்லா ஆலிம் அவர்கள் (ஹி.1301-1372/கி.பி.1883-1952) கல்பிட்டி (புத்தளம் பகுதி)
* அப்துல் மஜீத் ஆலிம் என்ற அரூஸ் மவ்லானா அவர்கள்.
கண்டி - கெலிஒய. (25.5.1992)

Page 102
98 இலங்கையில் தைக்காக் கோத்திரத்தார் கட்டியெழுப்பிய இறை இல்லங்கள், தக்கியாக்கள், அறநெறிக்கூடங்கள்
ட்சிகள்
罹
அப்துர் ரஹ்மான் கம்பெனி மஸ்ஜித் மஆலுல் கைராத் தக்கியாப்பள்ளி,
புதுக்கடை - கொழும்பு கொட்டுவகொட - மாத்தறை
முஹ்யித்தீன் பள்ளி, ஷேக்பரீத் தக்கியா,
மிலுதவை - காலி டெம்பள்ரோடு - கொழும்பு
 
 

gy
s மல்ஹருஸ் எபலாஹ் தக்கியா, ஷெய்கு கலந்தர் சாகிப் தக்கியா, L- கடைவீதி - மாத்தறை மருதானை - கொழும்பு
니王 ார்ப்பள்ளி, கர்பொக்கை - வெலிகாமம்
மத்ரஸ்துல் LunTri - வெலிகாமம்

Page 103
ஹுஸைன் வலியுல்லா தக்கியா - கிந்தோட்டை
மஃஹதுல் புகாரி, யோர்ட்ஸ்புரோட்வே - கொழும்பு
 
 
 
 
 
 

2O1
புகாரித் தக்கியா, பம்பலபிட்டி போர்பஸ் லேன் - கொழும்பு ஜூம்ஆப் பள்ளி - கொழும்பு
கட்டகல ம்ரத்தடி தக்கியா, மும்பிஹல்ே காஃபிலீன் பள்ளி, கிளிப்டன் லேன் - கொழும்பு மாளிகாவத்தை - கொழும்பு
- -m -
-m

Page 104
மக்னமுஸ் ஸ"அதா தைக்காப்பள்ளி - கொழும்பு
மக்தபதுல் அருவிய்யா, புதுத்தெரு - வெலிகாமம்
மஸ்ஜித் முஹியித்தீன் தக்கியா, தெமட்டகொடை - கொழும்பு
பூக்காக்கா தக்கியா,
கோட்டை - காலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
ニ 証 エリ
ܵ
அருவிய்யாப்பள்ளி, மத்ரவியதுல் அக்குரஸ்எம் ரோடு = நுகதுவ அருளபிப்யா - கொழும்பு
鹭 曇
懿
:
韃 婷荔
リ ங்ே " 發 == s 鄰 *「軒 羲
口 fo': ['ol', 韃
器
".
அருவியாப் பள்ளிவாசல், மலாயர் காலனி - அம்பாந்தோட்டை
பத்ருப்பள்ளி - வெலிகாமம்

Page 105
: Սմ
அரூஸிய்யத்துல் காதிரிய்யா சங்கத்
கந்தரைப் Lucil Gafleur i át தக்கியா - ஹம்பான்தோட்டை
 
 
 

? Ա5
용u田 - 「nue트馬8&나n*
武國m河世 정교n에 mu長康wn

Page 106
206
மனியான மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) துணுக்குத் தோரணம்
எந்த ஆலிம் சாஹிப்
மாமனாரவர்கள் (தைக்காசாகிபுவலி) தங்கள் மருமகனாரை அழைத்து வரும்படி மாணவர்களிடம் ஏவும்போதெல்லாம் ‘ஆலிம் ஸாஹிபை அழைத்து வாருங்கள்’ என்று ஏவுதல் வழக்கம். ஒருபோது, ‘எந்த ஆலிம் ஸாஹிபை என்று ஒரு மாணவர் கேட்க ‘நமது மாப்பிள்ளை ஆலிம் அவர்களை’ என்று கூறினார்கள். அன்று தொட்டு நம் அல்லாமா அவர்களுக்கு மாப்பிள்ளை லெப்பை ஆலிம்’ என்ற சிறப்புப்பெயர் வழங்கலாயிற்று.
aITUqb luTuqi
இலங்கையில் பலபிட்டியாவில் அலிமரிக்காரின் வீட்டில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் அருள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த அறையில் விரிக்கப்பட்டிருந்த பாய் ஒன்றின் அழகும் வேலைப்பாடும் ஆலிம் (வலி) அவர்களுடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. உபதேசத்தின்போது அங்கு கூடியிருந்தவர்களுடைய கண்ணும் கருத்தும் ஆலிம் (வலி) அவர்களுடைய அருள்மொழி உதிர்க்கும் வாயில் பதிந்துள்ளதையும், அவர்களுடைய கண்ணும் கருத்தும் வண்ணப் பாயில் பதிந்து விட்டதையும் குறித்து முடிவுரையில்,
'அலிமரிக்காவின் கண் என் வாயிலே
என் கண் அவர் பாயிலே’
 
 
 
 
 
 
 

மானா மக்கீன் 2O7
என்று குறிப்பிட்டார்கள். அந்தப் பாயை அலிமரிக்கார், ஆலிம் (வலி) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட அரூஸிய்யாத் தைக்காவை வந்தடைந்தது! அனைவர் பாவனைக்கும் உரித்தானது.
இலங்கை மன்னனுக்கு இரங்கற்ப
1284 - 1287 ஆண்டுகாலங்களில் இலங்கையின் ஒரு முஸ்லிம் அரசனுக்கு ‘மர்தியா’ (இரங்கற்பா) யாத்தார்கள் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி). S.
அந்த அரசன் குருநாகலை பகுதியை ஆண்ட கலேபண்டார!
இவ்வரசன் பின்னாளில் அவ்லியா அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.
விருந்துக்கு முன் வில்ை
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது நூலொன்றினை வாங்கிய காலிப் பிரமுகர், அதற்கு விலை கொடுக்கத்தவறிவிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரில்லத்தில் விருந்து.
“தாங்கள் பெற்ற என் நூலுக்கு இன்னும் விலை கிடைக்கவில்லையே! விருந்து அதற்கு வட்டியாகி விடுமே!” எனக்குறிப்பிட்டபொழுது விருந்துக்கு முன் விலை கிடைத்தது!
ஒரு நெருங்கிய தோழர்
கிழக்காசியாவிலேயே அல் - குர்ஆனை அறபுத்தமிழில் முதன்முதல் மொழிபெயர்த்த வேர்விலை, செய்கு முஸ்தஃபா ஆலிம் (வலி) அவர்களை ஒரு நெருங்கிய தோழராக வரித்திருந்தார்கள்.
அவர்கள்து வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக உருவாக்கிப் பெருமைப்பட்டார்கள்.

Page 107
208 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
சிறப்புக்குரிய இரு ISIOlá
லி ஜமாலிய்யா ஸெய்யித் யாஸின் மவ்லானா
(52. கொழும்பு ஆலிம் செய்யிது முஹம்மது - இருவரும் அன்னாருக்கு சிறப்புக்குரிய இரு இலங்கை மாணவர்கள்.
கை லெப்பை, கைர்
திக்குவல்லை பள்ளிப்புனருத்தாரணம் நடந்த அன்று குத்பாப் பிரசங்கம் மர்ஹ0ம் அப்துல் வஹாப் கதீப் அவர்களுடையதாக அமைந்தது. அற்புதமான பிரசங்கமாக இருந்ததை உணர்ந்த சிறப்பு அதிதி இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்கள், அன்னாரது தோளிலே தட்டியபடி, ‘கைர் லெப்பை, கைர்’ என்று பாராட்டினார்கள்.
அன்றிலிருந்து பெரியார் அப்துல் வகாப், கைர் லெப்பை யாக ஆனார்! அவர் வாழ்ந்த இல்லம் ‘கைர் வில்லா வாக ஆயிற்று!
கைர்!
(அடிக்குறிப்பு: அன்னார், இதழாளர் எம்.எச்.எம். சம்ஸ் அவர்களது தாயாரின் தந்தையார் உடன்பிறப்பு)
OĞLI pi gjigi
மி இலங்கையில் ஒப்பற்ற முஸ்லிம் தலைவர் ஸேர் ராஸிக்
ஃபரீத் அவர்கள் செய்கு நாயகம் சீடர்
லி அன்னாரது தந்தை ஹொரைபிள் அப்துல் ரகுமான்
ஜல்வத் நாயகம் சீடர்
 
 
 

மானா மக்கீன் 209
லி அவர்தம் பாட்டனார் வாப்புச்சி மரிக்கார் இமாமுல்
அரூஸ் ஆலிம் (வலி) அவர்கள் சீடர்!
முலவங்கூடு கப்பலில் சித்தி லெப்பை
கண்டி அறிஞர், சித்திலெப்பை முகம்மது காசிம் “அஸ்ராருல் ஆலம் நூலால் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழகம் செல்ல வேண்டி வந்தது. அச்சமயம் அவர் பயன்படுத்திக்கொண்ட கப்பலின் பெயர். “முலவங்கூடு
இது, இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களுக்குச் சொந்தமானது! அன்னாரும் கூடவே பயணித்தார்!
Gupt, Liu BSG W
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள், தங்கள் காலத்திலேயே தங்கள் அருமைப் புதல்வர்கள் இருவரில் ஒருவர் “கல்வத்து காத்த தவச்செம்மலாகவும், மற்றவர் பாரெல்லாம் சுற்றிப் பரமார்த்திகச் சுடரை வெளிப்படுத்தும் ஐல்வத்து நாயகமாகவும் விளங்குவதைக் கண்டார்கள். அத்துடன், தங்கள் பேரர் ஷைகு நாயகம், தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகம், ஒன்பது வயதிலேயே திருக்குர்ஆனை ஓதி முடித்து மனத்தில் இருத்திக் கொண்ட ஹாபிஸாகத் திகழ்வதையும் கண்டார்கள்.
சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை, கர்நாடக நவாபு தமது அரசவைக்கு அழைத்து மலிக்குஷ் ஷ"அரா’ -கவியரசர் - என்ற விருதை அளித்து சிறப்பித்தார். \ அப்பொழுது அவர்கள் திப்புசுல்தான் அமர்ந்த அரியணையில் அமர்த்தப்பட்டார்கள். மாமனார் தைக்கா சாகிபு வலியுல்லாவின் வாய்மொழி பலித்துவிட்டது. இதன் மூலம்

Page 108
̈ሩ8,
210 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) இந்தியாவிலும் இலங்கையிலும் அமைத்த 375 பள்ளிவாசல்களில் சுமார் 350 இலங்கையில் கட்டப்பட்டன.
தகவல்: டாக்டர் தைக் கா சுஐபு ஆலிம் (ஆய்வுநூல். Ljš. 341)
Esisjj). Ta5 Lg6 gjigj Galis), ITILI
இலங்கையில், உதவி அரசாங்க அதிபராகப் பணிபுரிந்தவர் LAMESURE என்ற வெள்ளையர். கொழும்பு, மருதானை முகம்மது ஹனிஃபா அவர்கள் இல்லத்தில் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களால் நவமுஸ்லிமானார். அரசு பதவியைத் துறந்தார்! கிழக்கிலங்கைக்கு வாழச்சென்றார். தமிழ் எழுதப்படிக்கத்தெரியாத அவர், தமிழைப்பேசவும் அறபை எழுதவும் தெரிந்ததால் அறபுத்தமிழ் வித்தகரானார்.
(இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) நாட்குறிப்பிலிருந்து. தற்சமயம், கீழக்கரை மாவலி நூலகத்தில் உள்ளது.)
ஹஸ்பிரப்பி ஜல்லல்லாஹ்
ஹஸ்பீ ரப்பீ ஜல்லல்லாஹ் மாஃபி கல்பீ கைருல்லாஹ் நூரு முஹம்மது ஸல்லல்லாஹ் லாயி லாஹ இல்லல்லாஹ்
- என்பது இன்று உலகப்புகழ்பெற்ற கலீதா. எவர் நாவிலும்
இலகுவாகத் தவழ்வது. இதனை இயற்றித்தந்தவர்கள் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களே!

2 11
ஷெய்கு நாயகம் துணுக்குத் தோரணம்!
தைக்க ஜவுளிக்கடை
தமது குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய வர்த்தக அமைப்புகள் பல இருந்தும், தமது தந்தையார் அவர்களிடம் பொருளுதவி பெற்று ஷெய்கு நாயகம் அவர்கள், முதன்முதலாக தனக்கென்றே உரிமையுள்ளதாக ஒரு ஜவுளிக் கடையை ஆரம்பித்தார்கள்.
ஒருசமயம், கொள்முதலான ஜவுளிரகங்களுடன் உயர்ந்த அத்தர் ரகங்கள் சிலவற்றையும் அனுப்பிவைக்குமாறு பம்பாய்க்கு எழுதியிருந்தார்கள். இரண்டும் ஒரே சிப்பத்தில் வந்தன. சிப்பத்திலிருந்த அத்தர் பாட்டில்கள் பல, உடைந்து தூளாகியிருந்தன. அதனால் உடைந்த சீசாத் துண்டுகள் சில ஜவுளிச் சீட்டிகளில் குத்தி, சிறு ஓட்டைகளும் ஏற்பட்டிருந்தன.
சரக்கு வாங்க வருபவர்களிடம் ஷெய்கு நாயகம் அவர்கள். முதலிலேயே, ஜவுளிகளில் பட்டுள்ள அத்தர் கறைகளையும், கண்ணாடித்தூள்கள் ஏற்படுத்திய நுண்ணிய ஓட்டைகளையும் காட்டிவிடுவார்கள்.
அதன் பலன்? சரக்குகள் ஒன்றுக்குக் கால் வீதம் விலை போயின வர்த்தக நஷ்டம் ஓரளவுக்கு ஏற்பட்டபோதிலும், வாடிக்கை காரர்களின் தம்பிக்கைக்கு ஏற்ற ஜவுளிக்கடை, கிழக்கரையில் தைக்கா ஜவுளிக்கடைதான் என்ற புகழ் ஏற்பட்டது.
தகவல் ஏ.எம்.ஸி. (ஷெய்குநாயகம் மலர் 1967)

Page 109
22 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
Gil Gil Gi!
“டும் டும் டும்! டொரியான் பழம் வந்திருக்கு பார்க்கோணுங்கிறவுக எல்லாம் அரூஸியா தைக்காவுக்கு வாங்கோ
டும் டும் டும்!”
‘டொறியான்’ என்ற பெயரில் சுவை மிக்க பழம் ஒன்று தூரக் கிழக்கு நாடுகளில் உள்ளது என்பதை மட்டும், கீழக்கரை அறிந்திருந்த காலம் அது! அப்பழத்தைப் பார்த்தவர்கள் மிகச்சிலரே உண்டு.
கொழும்பிலிருந்து காலி - தாஹிர் புரக்டர், ஷெய்குநாயகம் அவர்களுக்கு அன்பளிப்பாக டொரியான் பழங்கள் சில அனுப்பியிருந்தார். ஷெய்கு நாயகம் அவர்கள் ஒரு தண்டோராக்கரனை அழைத்து, ஊர் முழுவதும் தண்டோரா போடச் செய்தார்கள். அதன்படி போடப்பட்ட தண்டோரா ஒலிதான் மேலே உள்ளது.
ஆயிரமாயிரம் மக்கள் திரண்டுவந்து, அதிசயப் பழத்தைக் கண்டு ஆனந்தித்துச் சென்றார்கள்!
கடன்தீந்தது
‘நான் அப்பொழுது பத்து வயதுப்பாலகன், வாப்பா மதுரை சென்றார்கள். நானும் உடன் சென்றேன்.
இராமனாதபுரம் ரயில் நிலையத்தில், ‘மதுரைக்கு இரண்டரை டிக்கெட்டு வாங்கி வரும்படி ஆள் அனுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. புக்கிங் கிளார்க்கும் இரண்டு முழு டிக்கெட்டும் ஒரு அரை டிக்கெட்டும் கொடுத்தனுப்பினார். வாப்பா அவர்கள்
 

மானா மக்கீன் 213
டிக்கெட்டுகளை சரியாக உற்று நோக்கிவிட்டு ஒரு முழு டிக்கெட்டை கிழித்துத் தூர வீசி எறிந்துவிட்டார்கள்
'ஏன் டிக்கெட்டைக் கிழிக்கிறீர்கள்?’
இது என் குழந்தை உள்ளம் துடித்து எழுப்பிய கேள்வி
'தம்பி நம் இருவருக்கும் ஒரு முழு டிக்கெட்டும் ஒரு அரை டிக்கெட்டும் போதும். தெரிந்துதான் இரண்டரை டிக்கெட்டு வாங்கினேன். முன்பு ஒரு சமயம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் டிக்கெட் எடுக்காமல் மதுரைக்குச் சென்றேன். அங்கு ஸ்டேஷனில் பலவாறு முயன்றும் ஈடுசெய்ய முடியாது போயிற்று. நான் ரயில்வே கம்பெனிக்கு ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டாமா?
பால்யப் பருவத்திலிருந்த எனக்குத் தந்த படிப்பினையாகவே அந்தப் பதிலைக் கருதுகிறேன்.
தெரிவித்தவர் : டாக்டர், தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள்,
நன்றி. ஷெய்கு நாயகம் மலர் (1967)
எது நல்ல நாள்
‘இன்று நல்ல நாளா?
ஒருசமயம், ஷெய்கு நாயகம் அவர்களிடம் ஒரு நண்பர் இந்தக் கேள்வியை விடுத்து பதிலுக்காக ஆவலோடு காத்திருந்தார். அப்பொழுது காலை 9 மணி இருக்கும். புன்னகை தவழும் முகத்துடன் நமது ஷெய்கு நாயகம், அந்த நண்பரிடம் ஒரு கேள்வியைப் போட்டார்கள்.
M இன்று காலையில் தாங்கள் ஸoபுஹமத் தொழுகையை நிறைவேற்றிவிட்டீர்களா?’

Page 110
214 ష్యా இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
"ஆமாம், நிறைவேற்றிவிட்டேன்’
‘அப்படியானால் தங்களைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளேயாகும்’
இந்தப் பதிலைக் கேட்டதும் அந்த நண்பர், “தொழுகை எனும் கடமையை விடாது நிறைவேற்றிவரும் நாளெல்லாம் நல்லநாளே!’ என்ற தெளிவு பெற்றுச் சென்றார்.
(இந்த முறையே, தன் பாட்டனாராகிற தைக்கா ஸாஹிப் வலியுல்லா அவர்கள் கையாண்ட முறை என்று ஷெய்கு நாயகம்
பெருமையுடன் கூறுவார்கள்.
தகவல்: மு.க. அப்துர் ரஸ்ஸாக்
 

215
துள்ளிவரும் துளித் துணுக்குகள்
கிழக்கிலங்கைக்கே முதலிடம்!
கீழக்கரை, அரூஸிய்யா தைக்காவில் அதிகமதிகம் அறநெறி அறிவைத் தேடி குழுமிய இலங்கை வாசிகளில் முதலிடம் கிழக்கிலங்கை, மட்டக்களப்புக்கு அண்மிய முஸ்லிம் ஊரான காத்தான்குடிக்கே முஹம்மது இப்ராஹிம் ஆலிம் நீண்ட காலம் கல்விப் பயின்றவர்.
பள்ளிப் பணியாளர்கள்
19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டு மத்தி வரையிலும் இலங்கையின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்களாகவும், லெப்பைமார்களாகவும், முஅத்தின்களாகவும்
பணிபுரிய வந்தவர்களுள் கீழக்கரைவாசிகள் கணிசமானோர்.
அவ்வாறே, காயல்பட்டினம் - அதிராம்பட்டினம் - தொண்டி - நம்புதாளை போன்ற இடத்தோரும்.
ஆதாரம்: ‘புத்தளம் - வரவாறும் மரபுகளும் நூல் பக். 179.
கீழக்கரை மண் மிதித்த இருவர்
டச்சுக்காரர்களின் கொள்கை மாற்றத்தின் காரணமாக,
சன்மார்க்க அறிவுபெற அவர்களுடைய கப்பலிலே கீழக்கரை மண்ணை மிதித்த இருவரைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Page 111
216 } இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
புத்தளம், செய்க் அலாவுத்தீன் ஆலிம் மரக்காயர்.
நாவலப்பிட்டி, அப்துர் ரஹ்மான் ஆராச்சியார்.
ஆதாரம்: டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம் ஆய்வு நூல். பக். 45.
நாற்றுக்கு நூறு ஷாஃபிய்யி
கீழக்கரை மக்கள் நூற்றுக்கு நூறு ஷாஃபிய்யி மத்ஹபைப் பின்பற்றுபவர்களே! கேரளா முழுதும் அப்படியே. இலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும்பாலோர் அவ்வாறே.
சம்மாங்கோட்டுப் பள்ளியில் கீழக்கரை!
கொழும்பின் பிரதான வர்த்தகக் கேந்திரமாக விளங்கும் பறக்கோட்டை (பெட்டா) யில் சம்மாங்கோட்டுப் பள்ளிவாசல் (இரண்டாம் குறுக்குத்தெருவில்) உள்ளது. இப்பள்ளியின் நிர்வாகிகளாக காலங்காலமாக கீழக்கரை - காயல்பட்டினம் - அதிராம்பட்டினம் வர்த்தகப்பிரமுகர்களே இருந்துள்ளனர். இப்பொழுதுங் கூட கீழக் கரையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேலத்தெரு, கே.எஸ்.எ. அபூஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் சேவையாற்றுகிறார்கள்

மானா மக்கீன் 217
அளுத்கமை ஆத்மஞானியின் ஆசான்
வேர்விலைக்கு அடுத்த அளுத்காமத்தைச் சேர்ந்த செய்கு ஹஸன் இப்னு உதுமான் (வலி) என்ற ஆத்மஞானிக்கு ஆசானாகத் திகழ்ந்தார்கள் செய்குனாலெப்பை அவர்கள். V
அரூஸிய்யாவுக்கு பெண் புரவலர்கள்
இரண்டு நூற்றாண்டுகளைத் தாண்டியுள்ள அரூஸிய்யா அறபுக்கலாசாலையின் அன்றைய வளர்ச்சிக்கு இலங்கை மாத்தறைப் பெண்மணிகள் இருவர் புரவலர்களாக இருந்துள்ளனர்: ஹஸ்சைன் சாகிபுவின் மகளார் ரைஹானாவும், மற்றும் உம்மு ஹபீபாவாகுமாகும்.
மதரஸ"த்துல் மாவலி
இலங்கை, மாவலி கங்கையின் பெயரை நினைவூட்டும் இந்த மதரஸா, அரூஸிய்யாவின் ஒரு கிளையாக, கீழக்கரைக்கு அண்மிய ஏர்வாடி நெடுஞ்சாலையில் ஆயிஷா நகரில் இயங்கி வருகிறது.
இதை நிர்வகித்துவரும் டாக்டர் (கலாநிதி) அல்ஹாஜ் தைக்கா சுஐபு ஆலிம் ஒர் அற்புதமான நூலகத்தையும் நிறுவி உள்ளார். பார்வையிட்ட கண்கள் பாக்கியம் பெற்றவை
பெண்களுக்குத் தனி மஸ்ஜிதுகள்
கீழக்கரையில் உண்டு! இவற்றில்; பெண்கள் தொழும்நேரம் போக, மற்ற நேரங்களில் அல்-குர்ஆன் பாடசாலையாகவும் பெண்களின் மார்க்க அறிவை வளர்க்கும் பக்கா கட்டடங்களாகவும் உள்ளன!

Page 112
218 *్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
முஹியத்தீன் பள்ளியும் அப்துல் காதிரும்
காதிரிய்யா தரீக்கா நிறுவிய கெளசுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களைக் கண்ணியப்படுத்தவும், கெளரவப்படுத்தவும் என 'அப்துல் காதிர்’ எனப்பெயரிட்டுக் கொள்வது கீழக்கரையில் பல நூற்றாண்டுப் பழக்கம்.
ஒரு குடும்பத்தில் ஒருவராவது அந்தப் பெயரில் இருப்பார்!
இதேபோல், தரீக்காப் பிரமுகர்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிவாசல்கள் - தக்கியாக்களில் முகியத்தீன் நாமம் இருக்கும்.
உதாரணத்திற்கு, இலங்கை அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிவாசல்களின் பெயர்களைக் கவனியுங்கள்
முகியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் - அநுராதபுரி. முஹிதீன் பள்ளிவாசல் - மதவாச்சி. முஹிதீன் மஸ்ஜித் - ரம்பட்டவெவ. முஹிதீன் பள்ளிவாசல் - மரதன்கடவெல. முஹிதீன் பள்ளிவாசல் - தலகஹவெவ. முஹிதீன் பள்ளிவாசல் - மஹரவில. முஹிதீன் பள்ளிவாசல் - கரடிக்குளம். முஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் - கெப்பிட்டிகொல்லாவ. முஹிதீன் பள்ளிவாசல் - கொமரங்கவெல. முஹிதீன் பள்ளிவாசல் - மஹா சியம்பலகஸ்கட. முஹிதீன் பள்ளிவாசல் - கல்லங்குட்டிய, முஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் - மரக்கல அடுவ.
(இது போல் இன்னும் பல மாவட்டங்களிலும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.)

மானா மக்கீன் 219
ஆயிரத்திலொரு வார்த்தை!
O ‘மன்னர்கள் வரலாற்று ஏடுகளின் பக்கங்களில்
மறைந்திருக்கிறார்கள். ஆனால், நம் வள்ளல்களும், வலிமார்களும்
சமய வேறுபாடுகளின்றி மக்களுடைய உள்ளங்களிலே தாங்கள்
ஊற்றிய நல்லிணக்க வித்துக்களிலிருந்து நல்ல விளைச்சல்களை எற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.”
ஆய்வறிவாளர்,
ஏம்பல் தஜம்முல் முகம்மது,
(புதுக்கோட்டை)
அவர்கள் நேரில் குறிப்பிட்ட ஆயித்திலொருவார்த்தை
இவர்கள் ஓய்வுறக்கம் 75-க்கு மேல்தான்!
தி ஜமாலிய்யா ஸெய்யித் முகம்மது மவுலானா
(வெலிகாமம்) o 117 பி. அப்துல் காதிர் (வலி) 92 பி பல்லாக்கு வலி 92. சி. லெப்பை நைனா மரைக்காயர் 80 சிம் அவ்வாக்கார் மரைக்காயர் r 75 பி காயல்பட்டினம் தைக்கா சாகிப் (வலி) 81 பி. கீழக்கரை தைக்கா சாகிப் (வலி) 75 தி இமாமுல் அரூஸ் (மாப்பிள்ளை லெப்பை)
ஆலிம் (வலி) 84
சி. ஷெய்கு நாயகம் (வலி) - 88 பி, ஷாம் ஷிகாப்தீன் (வலி) 76 மி செய்யித் யாஸின் மவ்லானா
இலங்கை - வெலிகாமம்) 79 மி ஸ"பைறு லெவ்வை மஹல்லம் ஆலிம்
(இலங்கை - வெலிகாமம்) 95

Page 113


Page 114
222
பாவையர் திலகம் ஃபாத்திமத்தே.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மது
யாறப்பி ஸல்லி அலைஹி வஸல்லம் பீபுத்இ தலைபாத்திஹா முனழ்ழம்
பிஸ்மி அல்ஹம்து ஸலாத்தை சொல்வோம். பாவையர் திலகமதான பைங்கிளி
பாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்
காடு மலைகடல் கானகங்களில்
தேடும் பொருளுமைப் பொல காணோம் மைக்கா ரிருளதிலே மதியை
மன்னன் மாலிக்கவர்க்காய் வருத்திடும் ஹக்கான தீன்பயிரேற்றுங் காரணர்
கண்மணி பாத்திமத்தை கவல்வோம் நற்றிரு மேனியர் நல்கதிஜா
புத்திரி பாத்திமத்தை புகழ்வோம்
GV 3;

223
பைங்கிளியே ஃபாத்திமத்தே
சூரியனும் சந்திரனும் சொல்லும் அபுலாக்கனைத்தும் வாரியெனும் பஹ்றதுவும் வாழ்த்து மெங்கள் பாத்திமத்தே மக்கள் குர்ஆனெழுத்தில் வரும்தர்க்க மாற்றிவிக்க ஹக்கனனுப்பும் கனியால் கல்புமகிழ் பாத்திமத்தே
சொர்க்கத்தின் பாலகரும் சோபனிக்கும் ஹாறுெகளும் பற்கது மத்ஹுசெய்யும் பைங்கிளியே பாத்திமத்தே பிள்ளை பசியதனால் பாதிரவில் அலீசொல்லுக்காய் தள்ளையிடம் சென்றுகொள்ளை சாத்தானை வெறுத்ததனால்
ஸைலான் சரன்தீபில் சகலர்களும் நும்புகழை கமைலாக ஒதுவதை மனங்குளிரும் பாத்திமத்தே இம்மனையில் தாம்வருக இன்பமுற தான்வருக ாம்மத்ஹை ஏந்துகொள்வா யெங்கள் சித்தி பாத்திமத்தே
காயல்பதி பிறந்தோர் காமில் அஹ்மதுல் ஆலிம் சேயாம் முஹம்மதென்போன் செய்கின்ற இந்த துஆ நூயன் கபூலருள தும்சே சிபாரிசுவை ழயாமல் கேட்குகிறேன் உண்மையுள்ள பாத்திமத்தே

Page 115
224
buò ஏறிப்பார்க்கப் போகும் இறுதிப்பாலம் இது. முன் கண்ட வரலாற்றுப் பாதையிலே அலைஓசை கேட்டது. வாணிபத்திலே இரைச்சல் இருந்தது. ஆன்மிகத்திலே அமைதி அடைந்தோம். இங்கேயோ இலக்கிய மலர்கள் மணம் பரப்பப்போகின்றன. வாசத்தை நுகரமு ன் அபிமானிகளுக்கு நினைவூட்ட வேண்டியது ஒன்றுள்ளது.
போர்ச்சுக்கீசிய டச்சுக்காரர் ஆக்கிரமிப்புகளினால் முஸ்லிம் சமுதாயம் பற்பல பண்பாட்டுச் சிதைவுகளுக்குள்ளானது. ஒலைச்சுவடிகளாலான இலக்கிய ஆக்கங்களும் அழிந்தன. இரு அந்நியர்களும் அகன்று மீண்டும் சமூகம் புத்துயிர் பெற்றபொழுது தன் முது சங்களில் மிகமிகச் சிலவற்றைக் கண்டெடுத்தது. வரிசைப்படுத்தவும் செய்தது.
* பல்சந்தமாலை (12 ஆம் நூற்றாண்டு)
* யாக்கபடி சித்தர் பாடல் (15 ஆம் நூற்றாண்டு)
d
* ஆயிர மசலா (1572)
(d ()
8.
0
மிகுறாசு மாலை (1590)
* திருநெறிநீதம் (1693)

மானா மக்கீன் 225
* சக்கூன் படைப்போர் (1686)
* முதுமொழிமாலை (17 ஆம் நூற்றாண்டு) * திருமக்காப்பள்ளு (7 ஆம் நூற்றாண்டு)
oxo 660IJIJI îGB%3D6060 (1648) * சீறாப்புராணம் (1703)
* திருமணக்காட்சி (1710)
* fsöIGT FOT (1732) * இராஜநாயகம் (1807)
oso (bLTu_1.3GD (GE) (1810) * திருக்காரணப்புராணம் (1812) * குத்புநாயகம் (வ) (1814) * முகியித்தின் புராணம் (1816)
* திருமணிமாலை (1816)
* இறவுசுல் படைப்போர் (1818)
* புதுகுஷ்ஷாம் (1821) * தின்விளக்கம் (1821)
* நவமணிமாலை (1855)
* நாகூர்ப்புராணம் (1882)
* ஆரிபுநாயகம் (1894)
- இப்படி இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை அட்டவணைப்படுத்தினார்கள் மறைந்த
தமிழறிஞர், அல்ஹாஜ் அல்லாமா ம. முஹம்மது உவைஸ் பெருமகனார் அவர்கள். '
* இஸ்லாம் வளர்த்த தமிழ் - டாக்டர் ம.மு. உவைஸ் உள்ளடக்கம்
(1984)

Page 116
226 ఫ్యి இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அதே நேரத்தில், 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கீர்த்திமிகு கீழக்கரையில் அறிமுகமான ஆன்மிக அறிஞர்கள் தலைசிறந்த இலக்கியவாதிகளாகவும் இருந்தனர். அற்புதமான ஆக்கங்கள் பல படைத்தனர். இலங்கை மக்களையும் ஈர்க்கச் செய்தனர்.
அவர்கள் ஏற்கெனவே எமக்கு அறிமுகமானவர்கள்தான், வழங்கிய இலக்கியங்கள் சிலவற்றை விவரிக்க முன் வழங்கப்பட்ட மொழிபற்றிச் சொல்லவேண்டும்.
தமிழ் ஒன்று, அறபுத்தமிழ் மற்றொன்று.
ஆன்மிகப் பாதையில் நடை பயின்றபொழுது இந்த அறபுத் தமிழ் அறிமுகத்தை கொஞ்சமாகச் செய்தேன் - ஒரு கோணத்தில்.
இங்கே இன்னொரு கோணத்திலும் அதன் செல்வாக்கை அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவசியம் இந்தப் பாலத்திலே இருக்கிறது.
எனக்கு இதிலும் மர்ஹலம் அல்லாமா டாக்டர் ம.மு. உவைஸ் அவர்கள் நல்ல உதவி!
«Х• அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழைப் பேசக் கற்றறிந்த போதிலும் எழுதத் தெரியாதவர்களாக இருந்திருத்தல் வேண்டும். அதே நேரத்தில் அல்-குர்ஆனை ஒதக் கூடியவர்களாக இருந்திருத்தல் வேண்டும். அதன் பயனாக அறபு எழுத்துக்களை வாசிக்கும் ஆற்றலை அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
0- அந்த வகையில் தமிழ் பேசத் தெரிந்து அறபு வாசிக்கத் தெரிந்திருந்தவர்களுக்காக இஸ்லாமியத் தமிழ் நூல்களை

மானா மக்கீன் 227
அறபு மொழி பாண்டித்தியம் பெற்ற தமிழ் அறிஞர்கள் எழுத முற்பட்டனர். t
அவ்விஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களே அறபுத் தமிழ் இலக்கியங்கள் என வழங்கப்படலாயின. முஸ்லிம்களின் நாளாந்த வாழ்க்கையில் அத்தகைய நூல்கள் அறபுத் தமிழில் எழுதப்பட்ட நூல்களாகக் கருதப்பட்டன. உரைநடை மாத்திரமின்றி, தலைசிறந்த கவிதை நூல்களும் இயற்றப்பட்டன.
- மேற்கண்ட ஆய்வுத் தகவல்கள், பதினான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னை, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தார் சீதக் காதி அறக்கட்டளை அமைப்பின் நிதியுதவி கொண்டு ஏற்படுத்திய 'இஸ்லாமும் தமிழும் அறக்கட்டளை ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டவை.* *
இதைவிட மிகமிக விவரமாக லிஸானுல் அர்வி’ என அழைத்து அற்புத்தமிழ் செல்வாக்கை பல கோணங்களிலும் ஆராய்ந்து வழங்கிய பெருமை அப்தலுல் உலமா, டாக்டர் (கலாநிதி தைக்கா சுஜபு ஆலிம் பி.ஏ., எம்.ஏ.பிஎச்.டி.எம்.எஃப்.ஏ அவர்களைச் சாரும். இவர்களை ஒரு பெரும் ஆன்மிக சேவையாளராக ஆன்மிகப் பாலத்தில் பதித்திருக்கிறேன். இங்கு ஆராய்ச்சி அறிஞராகப் பதித்திடல் கடமை.
அவர்கள் தங்கள் ஆய்வுப் பெருநூலான, ‘சரந்தீவிலும் தமிழகத்திலும் அறபு, அறபுத்தமிழ், பார்ஸிப்பங்களிப்பு’ (ARABIC, ARWI, AND PERSIAN INSARANDIBANDTAMIL NADU) என்பதில் ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து இருபதாம் அத்தியாயம் வரையில் சுமார் 610 பக்கங்களில் அறபுத் தமிழின் பங்களிப்பை ஆய்வு செய்து அற்புதம் புரிந்திருக்கிறார்கள்.
●
* 2. 'இஸ்லாம் வளர்த்த தமிழ்’- டாக்டர் ம.மு. உவைஸ் பக். 15 1984)

Page 117
228 Èd இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இங்கே, என் பேனாவின் பணி இரு கரைகளிலும் அன்றிலிருந்து இன்றுவரை மங்காமல் மறையாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கிற சில படைப்புகளை அடையாளம் காட்டுவது மட்டுமே.
குவிந்துள்ள முத்துக்களில் மூழ்கப்போன பொழுது என் இல்லத்து 'நிழல்’, ‘தலைஃபாத்திஹாவை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று எடுத்துத் தந்தார்
பெண், பெண்ணின் பெருந்த கையைத் தானே முதன்மைப்படுத்துவார்? அதனால், நானும் இலக்கியப் பாலத்தின் ஆரம்பப் பக்கத்தையே ஃபாத்தி முத்து ஸொ ஹராவின் புகழ்மாலைகள் சிலவற்றால் அலங்கரித்து விட்டேன்!
‘தலை ஃபாத்திஹா’ என்கிற ஒன்றையே அங்கீகரிக்க விரும்பாத ஒரு சிலர் வாழ்கிற காலத்தில் இதைச் செய்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல, அதனை ஓர் இலக்கியமாகவே காட்ட நினைத்து விட்டேன். அந்தச் சிலர் அதனையும் அங்கீகரிப்பார்களா? அத்துடன் என்னையும் அருகில் சேர்ப்பார்களா?
ஐயமே
அதற்காக தெரிந்தபெயர். தெரியாததகவலைச் சொல்லாமல் விடுவது என் பேனாவின் இயல்பல்ல.
அலிகார் பட்டதாரியான இலங்கைப் பேரறிஞர்களுள் ஒருவரும், தலைசிறந்த சமுதாயத் தலைவரும், ஒருகால கல்வி அமைச்சருமான கலாநிதி (முனைவர்) மர்ஹ9ம் அல்ஹாஜ் பதியுத்தீன் முஹம்மத் அவர்கள் ‘வெட்டொன்று துண்டு இரண்டாக ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்.

மானா மக்கீன் 229
9 ‘ஸெரந்தீப் பெண்கள் தலை பாத்திஹாவை ஒழங்காக ஒதி வந்ததன் காரணத்தால் அவர்களை அது பாதுகாத்தது
உண்மை! முற்றிலும் உண்மை!
பல்வேறு அந்நிய கலாசாரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் ஈர்க்கப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண்களை இஸ்லாமிய நெறி முறைகளைக் கைக்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாடல் தொகுப்பே தலைஃபாத்திஹா.
“மிகவும் கலை நயமிக்க ஒரு பாடல் இலக்கியம்’ என இந்நூலுக்காக விசேடக் குறிப்பு வழங்கினார் அன்பர் எம்.எச்.எம். ஸம்ஸ்.
இவர் ஆன்மிகம் தழைத்தோங்கும் திக்வல்லை - வெலிகாமப் பிரதேச எழுத்தாளர், கவிஞர், தற்சமயம் 'தினகரன்’பிரதி ஆசிரியர்.
உரைநடையும், பாடலுமாக அமைக்கப்பட்ட அந்நூல், நம் பெண்களால் பண்ணிசைக்கப்படுகின்ற ஒவ்வொரு சமயத்திலும், நபிகள் (ஸல்) அவர்களது புதல்வி ஃபாத்திமா நாயகி அவர்களது பரிசுத்த வாழ்க்கை நெறியால் கட்டுண்டனர்.
‘முஸ்லிம் பெண்ணே, உனக்கென்று ஒரு தனித்துவம் solet (6. அதைக்கொண்டு நீ தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமேயொழிய தலை குனிந்தல்ல" என்று ஒதும் ஒவ்வொரு நேரமும் உணர்த்தியது.
அதுமட்டுமல்ல, பருவம் எய்தும் வரையில் அறபு மொழியை மட்டும் கசடறக் கற்றுவிட்டு இல்லத்திற்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப்ப் பெண்ணுக்கு ஒரு தோன்றாத் துணையாகத் துலங்கியது.

Page 118
230 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
எளிய இனிய சந்தத்தோடு அமைந்தது. நான்கைந்து வயதுக் குழந்தைகள்கூட அந்தச் சந்தத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வர்.*
ரமழான் - முஹர்ரம் மாதங்களில் ‘தலைஃபாத்திஹா’ ஒலிக்காத ஓர் இல்லத்தை இலங்கையில் காண்பதரிது. முக்கியமாக ரமழான் 12-ஆம் இரவிலும் (ஃபாத்திமா நாயகி ஓய்வுறக்கம் கொண்ட நாள்) முஹர்ரம் 12-ஆம் நாளிலும் அறபும் தமிழும் அற்புத ஒலி எழுப்பி, இந்து - பெளத்த சகோதரர்களை நின்று கேட்க வைக்கும்.
தமிழகத்தில் இப்படியொரு காட்சியைக் காண முடியாது.
oKo இலங்கை அநுராதபுர மாவட்டம் முழுக்க தலைஃபாத்திஹா ஒதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருந்துள்ளது. இது பெண்கள், பெண்களுக்காக நடத்தும் பிரார்த்தனை நிகழ்ச்சியாகும். பெரிய நிய்யத்து என்பது கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக ஒதப்படும் தலை ஃபாத்திஹாவாகும். வயதான இரு மூதாட்டிகள் இரட்டை முக்காடிட்டு வாய் பேசாது இலை குழைகளால் வீட்டைத் துப்புரவு செய்கின்றனர். அன்றைய தினம் வீட்டில் மச்சம் மாமிசம் சமைக்கப்படுவதில்லை. கீரை வகைகள் மட்டுமே சமைக்கப்படுகின்றன. அன்று சுடப்படும் முக்கிய பணியாரம் வலுப்பானாகும். இத்தலைஃபாத்திஹாவை பெரும்பாலும் பெண்கள் சேர்ந்து ஒதுகின்றனர். 'பிள்ளைத்தாச்சிக்காக ஒதப்படும் நிய்யத்து’ என்றும், அல்லது ‘நாச்சியார் நிய்யத்து’ என்றும் இது கூறப்படுகின்றது. *
*3. இஸ்லாமிய குழந்தை இலக்கியம் - புலவர் அ. அஹமது பஷிர்
எம்.ஏ. பக். 770 (1980)
*4 அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் - கட்டுரைத் தொகுதியில்
5-ஆவது - எம்.எஸ்.எம். அனஸ், பக். 65 (1992)

மானா மக்கீன் 231
சில பகுதிகளில் - ரமழான் 27-ஆம் இரவான லைலத்துல் கத்ரில் ஆண்களே ஒதுவார்களாம்** அது இலங்கையா, தமிழகமா என்ற விவரம் தெரியவில்லை.
மேலும், தலைஃபாத்திஹா இலக்கியம், அதி விசேடமாக இலங்கைப் பெண்களுக்கென்றே, அவர்களது வேண்டுகோளுக்காகவே உருவான ஒன்று. போர்த்துக்கேயர் - டச்சுக்காரர் உருவாக்க முயன்ற ஒரு கலாசாரப் பண்பாட்டுச் சீரழிவுக்குள் உட்பட இருந்த அருமைப் பெண்களைக் காக்கும் கேடயமாகவும் அது பயன்பட்டது. இஸ்லாத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளிலிருந்தும் மீட்டெடுத்தது. *
அனைத்துப் புகழும் இறைவனுக்கே
இத்தகையப் பெருமை வாய்ந்த தலைஃபாத்திஹா’ இலக்கியத்தைத் தந்து சென்ற இலக்கியவாதி யார்?
வேறு யாராக இருக்க முடியும்? அறிஞர் பெருமகனார் இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலம் (வலி) அவர்களே!
அன்னாரை ஆன்மிகவாதியாக மட்டும் பார்த்துப் பாராட்டிட முடியாத அளவுக்கு அவர்களது இலக்கியப் பங்களிப்பு உள்ளது.
முன்னர் குறிப்பிட்ட, அப்தலுள் உலமா டாக்டர் (முனைவர்) தைக்கா சுஜபு ஆலிம் அவர்களது பெருமைக்குரிய நூலில் ஓர் அத்தியாயமே (இல.17) அன்னாரது இலக்கியப் பங்களிப்பை
*5. "Arabic, Arwi And Persian In Sarandib And Tamil Nadu" - Afdalul Ulama Dr. Tayka shu 'ayb Alim, B.A. (Hons) M.A., Ph.D. M.F.A., PP. 74. (1993)
*6. Ibid. PP. 75.

Page 119
t
232 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அற்புதமாக ஆய்வு செய்துள்ளது. அவர் ஒரு நாவலாசிரிபுdருங்கூட அந்த விவரத்தைச் சற்று தாமதித்து தருகிறேன்.
இப்பொழுது இந்த இடத்தில், தலைஃபாத்திஹாவுக்கு முன்தோன்றி, தமிழக - இலங்கை முஸ்லிம்களை ஈர்த்த மற்றும் இரண்டு இலக்கியப் படைப்புகளுக்கு - பாமாலைகளுக்கு - இடம் வழங்கிடுவோம்.
அவற்றை வழங்கியவர் தமிழகத்தின் மாபெரும் இஸ்லாமிய
ஞானமேதை சதக்கத்துல்லா அப்பா (வலி) அவர்கள். (ஹி. 1042 - 11151 S.G. 1632 - 1703)
ஒன்றை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
மற்றொன்றை ஆக்கம் செய்தளித்தார்கள்.
அறிமுகம் செய்த படைப்புக்குப் பெயர் “ஸ்”ப்ஹான மவ்லூத்”
ஆக்கத்திற்குப் பெயர் “வித்ரிய்யா"
என் பேனாவைப் பொறுத்த வரையில் இவையெல்லாம் இலக்கியம் சார்ந்தவையே! f -
மாற்றுக் கருத்து இருக்கும் என்று தெரிந்தே ‘இலக்கியம்’ என்கிறேன.
'அல்ல’ என்பவர்களை நான் மதிக்கிறேன்.
வாதிடுவதை இன்னொரு சமயம் வைத்துக் கொள்கிறேன்.

மானா மக்கீன் 233
ஏனெனில், மூன்று பாலங்களில் (வரலாறு - வாணிபம் - ஆன்மிகம்) ஏறி இறங்கிய அசதியை என் பேனாவும் நானுமே அறிவோம்.
மன்னிக்கவேண்டும்.
‘ஸPப்ஹான மவ்லூத் - அப்பா அவர்களுக்கு அறபு நாட்டில் கிடைத்தது. மக்கா - மதீனாவிலிருந்து திரும்பும் பொழுது பெற்று பெரிதும் உவந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் மீது பேரன்பை ஊட்டுவதில் அதற்கு இணையான நூல் இல்லை என்று கருதிய அப்பா அவர்கள் அதனை இங்கு கொண்டு வந்து மக்களிடையே பரவச் செய்தார்கள்.”*
'வித்ரிய்யா' என அழைக்கப்படும் ‘களnதத்துல் வித்ரிய்யா" கவிதைப் படைப்புக்கு ஈடுமில்லை, இணையுமில்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இலங்கையில் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கேரளத்திலும் இதன் புகழ் இமயமலைக்கு ஒப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இதுவும் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் புகழ்பாடும் ஐந்து அடி பாக்காளாலான (தக்மிஸ்) 4205 வரிகளாகும்.
ஏற்கனவே இரு பாலங்களில் (வரலாறு - வாணிபம்) சந்தித்த புத்தளம் ஆய்வாளர், எழுத்தாளர் தாஜூல் அதீப் எ.என்.எம். ஹாஜகான் அவர்கள் தம் பகுதியில் வித்ரிய்யாவின் செல்வாக்கை விவரிக்கும்பொழுது இப்படிப் பதித்துள்ளார்கள்.
* 7 தமிழகித்தில் முஸ்லிம்கள் - போர்த்துக்கீசியர் வருகைக்கு முன்பும் பின்பும் - நூல் டாக்டர் பிஎம் அஜ்மல்கான், எம்.ஏ, பிஎச்டி,பக்45)

Page 120
f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
7
புத்தளம் கடற்கரையிலுள்ள மிஹ்றாஜ் பள்ளிவாசலில் வழக்கமாக ஆண்டுதோறும் மிஹ்றாஜ் மெளலிது ஒதுவது வழக்கமாகும். மிஹ்றாஜ் மெளலிதுக்கு மேலதிகமாக இம்மாதம் முழுவதிலும் “வித்ரிய்யா' என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரிலுள்ள மாபெரும் புகழ்மாலை ஒதுவது வழக்கமாகும். பானத் சுஆத், புர்தா போன்ற பிரசித்தி பெற்ற அறபு இலக்கிய நூல்களிலுள்ள ஈரடிச் செய்யுட்களுக்கு ஐந்தடிச் செய்யுட்களமைத்து கீழக்கர்ை இமாம் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் பாடிய அறபிக் காவியமே “வித்ரிய்யா' வாகும். அப்பா அவர்கள் இயற்றியுள்ள மட்டிலடங்கா புகழ்ப் பாக்கள், மர்த்தியாக்கள், இறை வேட்டல்கள் ஆகியவற்றுள்ளே தலைசிறந்ததாகக் கருதப்படுவதும், உலகிலேயே மிகப்பெரிய கஸிதாவாக விளங்குவதும் இவ்வித்ரிய்யா காவியமே யாம். இதனாலேயே சதக்கத்துல்லாஹ் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் மாதிஹ"ர்றசூல் (மாநபியின் புகழ்ப்பாவாணர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இச்சிறப்பான காவியத்தையே றஜபு மாதத்தின் எல்லா நாட்களின் இரவுகளில் பள்ளிவாசல்களிலும். வீடுகளிலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஓதி முடித்து முடிவில் றாத்திபு, மெளலிது ஒதி ‘தமாம்” முடித்து வைப்பார்கள் சிறப்பான விருந்து வைபவமும் நடைபெறும்.*
●
や
புத்தளம் - வரலாறும் மரபுகளும் - எ.என்.எம். ஹாஜஹான். լյծ. 234 - 235 (1992)

235
ပြို့ဦးအံ့........ . . . . " . . . . . தைக்கா சாஹிபு (his) கைகொடுத்த யாழ் வித்துவான்
ஆன்மிகப் பாலத்தில் நடக்கும்பொழுது கீழக்கரை தைக்கா சாஹிபு (வலி) அவர்களை நாம் சந்தித்த விதமே வேறல்லவா?
இங்கே. தமிழபிமானியாகப் பார்த்துப் பரவசப்படப் போகிறோம்.
அவர்களது ஒரு கண்ணிலே தமிழ் இருந்தது.
ஆன்மிகப் பணிகளுக்கு மத்தியில் அன்னை தமிழுக்கு அளித்த கெளரவம் ஒரு கண்ணியமான வரலாறு.
குணங்குடி மஸ்தான் (அப்துல் காதிர்) சாகிபு, புலவர் நாயகம் சேகனாப் புலவர் (செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம்) மாப்பிள்ளை லெப்பை (செய்யது முகம்மது) ஆலிம் ஆகியோர் தமிழில் பெரும் புலவர்மணிகளாக ஆனதற்குத் தோன்றாத் துணை
அவர்களும் ஒரு கவிஞரே அன்னாரது ‘பன்னிரண்டு மாலை" -ஒரு முக்கியத் தொகுப்பு.
யாழ்ப்பாண மண்ணினைச் சேர்ந்த வரும், மகாவித்து வானுமான புலவர் மணி பத்ருத்தீன் அவர்கள் முஹியத்தீன் புராணம் பெருங்காப்பியத்தை நான்காயிரம் பாடல்களில் பாடுவதற்கு அவர்களே காரணமாகவும், உதவியாகவும் விளங்கியதை அறிகின்றபொழுது மெய் சிலிர்ப்பு.
அக் காப்பியத்தின் 19-ஆம் பாடலில் பத்ருத்தீன் புலவர் பதித்துள்ள வரிகள்:-

Page 121
236 #్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
'மருவிரி கமல வாவி வகுதையம் பதியின் வாழ்வோர் குருநெறி பதினா லில்முங் குரைகட விகர்ப்பக் கற்றோர் அருமறை யப்துல் காதி நாலிமு மகிழ்ந்து தேர்ந்து வருங்குலா சத்துல் முபாகிர் கிதாபுரை வழங்கச் சொன்னார்
'அப்துல் காதிர் ஆலிம்’ என்பது கீழக்கரை தைக்கா ஸாஹிபு ஆலிம் (வலி) அவர்களே என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
மீண்டும் இமாமுல் அருஸ் (வலி) அவர்களிடம்
ஆம்! அடிக்கடி அல்லாமா, இமாமுல் அரூஸ் செய்யது முகம்மது ஆலிம் (வலி) அவர்களிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது
அதாவது - கீழக்கரை தைக்கா சாகிப் (வலி) அவர்களது மாப்பிள்ளை அவர்களிடம்!
அன்னார் ‘தலைஃபாத்திஹாவுடன் நின்று விட்டவரல்லர்.
தெரியும் உங்களுக்கு
மாபெரும் ஆக்கங்களாக எண்பத்து இரண்டு நூல்கள் தந்திட்டவர் என்பதும், சிறியவையாக இருபத்தேழும், அச்சாகாமல் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் நூற்றுக் கணக்கில் என்பதும் ஆதார பூர்வமாகத் தரப்பட்டுள்ள விவரங்கள். *
நாம், நமது திட்டப்படி இலங்கை இதயங்களுடன் தொடர்புள்ள சிலதை மட்டும் பார்ப்போம். w 9. "Arabic, Arwi And Persian In Sarandib And Tamil Nadu" - Afdalul
Ulama Dr. Tayka Shu'ayb Alim, B.A. (Hons) M.A. Ph D. M. F.A. PP. 610-626 (1993)

237
அற்புதங்கள் புரியும் ராத்திப் ஜலாலிய்யா!
எப்படிப் பெண்களிடம் தலைஃபாத்திஹா தனி இடம் பெற்றுள்ளதோ, அதுபோல இது ஆண்களிடம்
இந்த ராத்திப் ஞானவான்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் செய்யிதுனா கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (வலி) அவர்களின் ஞானவழியாகிய காதிரிய்யா தரீக்காவைச் சார்ந்தது. இதில், ஹத்தாது ராத்திபின் பகுதியும் அல்குத்பு செய்யித் முஹம்மதுல் புகாரிய்யில் ஜலாலிய்யி தங்ங்ள் அவர்களின் ராத்திபும் இணைக்கப்பட்டுச் சிறப்புற்று விளங்குகிறது.
இந்த ராத்திப் ஜலாலிய்யாவில் 'இஸ்முல் அஃலம் இருக்கிறது என மெய்ஞ்ஞானிகள் பலரும் கருதுகின்றனர். குறிப்பாக பிளேக், காலரா, வைசூரி போன்ற தொற்றுநோய்கள் பரவும் காலத்திலும், கலவரங்கள் ஏற்படக்கூடிய அபாயமான காலகட்டத்திலும் இதனை ஓதினால் பாதுகாப்பு கிடைக்கும் என்பதுவும், வீட்டில் ஓதி அதை ஹதிய்யாச் செய்வதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நலம் பயக்கும் என்பதுவும் கண்கூடாகக் கண்டறிந்த உண்மை.
கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம், கேரளம், கர்நாடகப் பகுதிகள், ஆந்திராவின் பகுதிகள் மற்றும் இலங்கை முழுவதும் இந்த ராத்திப் ஓதிப்பயன் பெற்று, அல்லாஹ்வின் அருளுக்கு அனைவரும் பாத்திரமாகி உள்ளனர்.
ராத்திபு என்றால் என்ன? ஜலாலிய்யா என்பது என்ன?

Page 122
೩. இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
சிரிப்பார்கள் தைக்காக் கோத்திரத்தார்
முக்கியமாக, ரித்திப் ஜலாலியாவின் அனைத்துலக
அமைப்பாளர், பெரும் சமூக சேவையாளர், மதிப்புக்குரிய அ.மு.செ. தைக்கா லெப்பை ஹாஜிய்யார் (எ.எம்.எஸ்.முஹம்மது அப்துல் ஹாதர்) அன்னார் மேற்படி ஜலாலிய்யா குழுவின் தூண்களில் ஒருவர்
என்ன செய்வது? இன்றைய இளைய தலைமுறையினர்
சிலரை உத்தேசித்து சில குறிப்புகள் :
d oKo
d
4)
இப்பெயர் ஜலாலிய்யத்’ என்னும் ஜோதிப் பிரகாசமுள்ள அல்லாஹ்வின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகும். ஜலாலியத்துடைய நாயனின் குத்புமார்களில் ஒருவரான கண்ணனூர் புகாரிய்யில் ஜலாலி நாயகம் அவர்களின் நினைவாகவும் இப்பெயர் வைக்கப்பட்டதாக பல நாதாக்கள் கருதுகின்றனர்.
பர்லு ஷர்த்துக்களில் பேணிக்கையாய் இருப்பவர்கள் இலேசான பயிற்சி முறையில் மன ஓர்மையும், தக்வாவும் பெற்று ராத்திபு என்னும் நியமத்தை தொடர்பாக செலுத்தி வந்தால் அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் கூட்டத்தில் இடம்பெற முடியும். இதுவே ராத்திபு எனும்
நோக்கமாகும்."
முழுக்க முழுக்க ஸலவாத்தும், தி க்ரும், ஒளராதும் நிறைந்திருப்பதுடன், இஸ்லாமிய இலக்கிய வரிசையில் நீங்காத நெடும் புகழுடையது. இறைவனுடைய புகழையும் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் மாண்பையும் எழிலுற
(10.
ராத்திபுஜலாயிய்யா - கட்டுரை, கதீபு டிஎல்.எம். ஸுபைர் லெப்பை ஆலிம் (செய்கு நாயகம் சிறப்பு மலர்) - (1967)

மானா மக்கீன் 239
விளக்கும் இசையமுதம், காதிராகிய நாயகனுடைய கருணையை நாடி ஞானிகள் புரிந்த கடுந்தவம் பற்றி அழகுற க் கூறும் ஆரமுதம், ஆன்மிக வாழ்வின் அடிப்படையையும் அதனை அடையும் படித்தரங்களையும் தெள்ளிதின் விளக்கும் தேனமுதம். ஆன்மிக வழிகாட்டிகளான ஷெய்குமார்களின் அழியாப் புகழ்கூறும் சுவையமுதம். இறுதிநாளைப் பற்றிய அச்சுறுத்தலும் ஈடேற்றத்திற்குரியது ஆக்கமும் நிறைந்த பாலமுதம்: '
அல்லாஹ்வுடைய திக்ரினால் மட்டுமே மனத்துக்கும் வாழ்வுக்கும் அமைதியைப் பெறமுடியும் என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. எந்த ஒரு ஹலாலான ஹாஜத்தும் நிறைபெறுவதற்காக தொடர்ந்து திக்ர் மஜ்லிஸில் ஆஜராகி, அல்லாஹ்விடம் முறையிட்டால், அது நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
'திக்ரு’ என்பது எல்லோருக்கும் பொதுவானது. வயது வரம்பு கிடையாது. ஓதத்தெரியாத்வர்களும் கலந்து கொள்வதால் அதில் ஒதுபவர்களைப்போலவே அவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.
மேலும், இலங்கையில் இந்த ராத்திபுவைபவத்தின் பிரபலத்தைச் சொல்ல, இலங்கை வானொலியின் எழுத்தாளர் திக் வல்லை, ஸஃப்வான் அவர்களை என் உதவிக்கு இங்கே அழைக்கிறேன்.
X
w வெலிகாமம், கபுவத்த பகுதியில் நடைபெறும் ரிபாய்க் கந்தூரி மிகவும் பிரதானமானது. இவ்வூர் மக்கள் இக் கந்தூரியை முன்னிட்டுச் செய்யும் ஏற்பாடுகளைப் பார்த்து வெளியூரவர்கள் ‘கபுவத்த மக்களின் மூன்றாம் பெருநாள்'
够
11. ஷெய்கு நாயகம் சிறப்பு மலர் - ஆசிரியர் குறிப்பு

Page 123
240 H్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
எனச் சொல்வார்கள். முன்பு இக் கந்தூரிக்காக தேங்காய்க் குலைகளினால் பாதையில் பந்தல் அமைப்பார்கள். கந்தூரிக்காக வருகை தரும் ரிஃபாய் மெளலானாவை ஊர்வலமாகப் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். தேங்காய் வாண வேடிக்கைகள் போட்டிக்கு நடைபெறும்.
இவை இன்று அருகிவிட்டன.
* கபுவத்த கொடப்பிடிய போன்ற பகுதிகளில் இடம்பெறும் ரிபாய் ராத்தீபு நிகழ்ச்சி பிரபல்யம் பெற்ற கலாசார நிகழ்ச்சியாகும். பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் கிராமிய ஊர்வலங்களிலும் இந்நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடத்தப்படுகிறது. இன்று தேசிய வைபவங்களிலும் நாட்டுத் தலைவர்களின் வரவேற்பிலும் ரபான் முழக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.* ?
சமீபத்தில் - மிக மிகச் சமீபத்தில் வேருவலையில், அம்மண்ணின் தலைமகனாரும், இலங்கையின் ஒப்பற்ற முஸ்லிம் தலைவர்களுள் ஒரு வரும், அமைச்சரும், ஆளுநரும் , சபாநாயகருமாகத் திகழ்ந்து, என் போன்ற எண்ணற்றவர்களது வளர்ச்சிக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவரும், அதே ஊரில் மருதானை என்கிற பகுதியில் ஒய்வுறக்கம் கொண்டுள்ளவருமான அல்ஹாஜ் எம்.ஏ.பாகீர் மாக்கார் பெருமகனார் அவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுற்ற வைபவத்தின் இறுதியில் சிகரமாக அமைந்தது ‘ரிபாய் ராத்திபு’ நிகழ்ச்சியே! (அக்டோபர், 1998).
8 (ஒர் இடைக்குறிப்பு: உங்களுடைய இந்த எழுத்தாளன், அவர் இதய சுத்தியுடன் ‘அன்பளித்த இல்லத்திலே இருந்தவாறுதான்
* 12. "வாழ்வியலும் பண்பாடும் - கட்டுரை. திக்வல்லை ஸப்வான். (மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் - கட்டுரைத் தொகுதி) பக். 126, 138 (1995) இலங்கை அரசின் முஸ்லிம் இலாகா தினைக்களம்) வெளியிட்டது.

மானா மக்கீன் 241
இதைப்பதிக்கிறேன். அல்லாஹ் அவருக்கு எந்தக் குறையும் வைக்கக்கூடாதென இறைஞ்சுகின்றேன்.)
- இவ்வாறெல்லாம் சிறப்புகள் பெற்ற படைப்போவியத்திலிருந்து பார்வைக்குச் சில தரவேண்டியது கடமையல்லவா! அடுத்தப் பக்கத்திலேயே தந்துவிட்டேன்.
மேலும், இலங்கையின் மத்திய பகுதி - கிழக்கு - தெற்கு - வடக்கு என ராத்திப் ஜலாலிய்யா பிரபலமாகிவிட்டது என்பது
வரலாறு.
தற்சமயம், கொழும்பு மாநகரைப் பொறுத்த வரையில்
மருதானை, புஹாரி தக்கியா
Ko
மாளிகாகந்தை அரூஸிய்யா மதரஸா
0.
X
மாளிகாவத்தை, மஸ்ஜிதுன் நூர்
0
Φ
Ko
கிளிப்டன் லேன், கட்டகல மரத்தடி தக்கியா
Ko
பழைய சோனகத்தெரு மக்னமுஸ்ஸoஅதா தைக்காப் பள்ளி.
0.
தெமட்டக்கொட மஸ்ஜிதுல் மினன்
0.
பம்பலப்பிட்டி, ஜூம்ஆப் பள்ளி ஆகிய இடங்களில் கிழமைதோறும் “ராத்திப் ஜலாலிய்யா ஒலித்த வண்ணமே உள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.
அத்துடன், இல்லங்கள் தோறும் சென்று ராத்திப் நடத்துவதும் கொழும்பில் வழக்கத்திலுள்ளது.
அனைத்துக்கும் மகுடமாக -
இப்போதைய இலங்கை அரசின் தூண்களுள் ஒன்றாக
விளங்குபவரும் காபினெட் அமைச்சரும் (உள்ளூராட்சி, மாகாண சபைகள்) ஆன்மிக ஈடுபாடுகளில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

Page 124
242
كة جلالتة
ராத்திபு ஜலாலிய்யா
*7 * ܐ ܐܝ  ܼ ܀ 11 ܐ با ۶ محل م از همه ee عين ع هي عند ه من اِن لادن اِطراپیٹی n مثال دیتطازی نا ہو # تَبَت نتھیمرن ویسائیل # مُکابینڈا آبنی اق
2 مم مر
钢 1( " :, * عے~ ~ 、"」いヘ * ノイ・大でf ・.*て
a * - .هم تر ه تر هر ه وی با * مع في 4 من ما لهم في ص “一ー .."や、V: اورذاقوبت تنقیدی# وروح روتھی وجہتیں به ويخهذق وفتحقيى 4 مالى وللخف الاست
می با حمام مسم
ாான் வரம்பு கடந்து புகழ்ந்து விட்டேனென்று கடறி, துாற்றலேயே தொழிலாகக் கொண்ட கும்பலைச் சார்ந்தவர்கள், என்னதான் ஏசினுலும் 96 i 766ff6fir 5 grbo, Girsör முதுகுப்புற ாைக வீசியெறிந்துவிட்டுத்தங்க3 புகழ் கின் ற என் இசையைத்
தொடர்ந்து கொண்டே இருப்பேன்.
(தங்களுடைய புகழ் மாஜல ைேடப் பாடிக்கொண்டே இருப்பதால்) எனது இறைவன், தனது வற் ருத அருளைக் கொண்டு, நான் விரும் பும் பயனயெல்லாம் திரும்பத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கிருன், இதனுல், கான் தங்கள் மீது கொண் டுள்ள காதலும் வளர்ந்துகொண்டே யிருக்கிறது. இப்படி யிருக்க, கான் எப்படி (அந்த இதய கீதத்தை) கிறுத்த முடியும்?
எனது ஊனிற்கு உணவாகி உயிருக்கு வேராகி ஐயறிவும் அதுவே யாகி (ஒன்றித்துள்ள பெரு நட்பை) nsfr 6ír ஒன்றிற்கு ஐக்து முறை கல் லுறுதியுடன் உடன்பாடு கொள்வதை (உண்மை நட்பை) மறத்தற்கு எப்படி முடியும்? அதன் புகழைப் Lmlqé, களிக்கா மலிருக்கத்தான் எவ்வாறு
(փtդtւյմ) ?
گلیف لا و نیز بین به
می

மானா மக்கீன் 243
இனிய இதயமும், என்றும் மலர்ந்த முகமும் கொண்ட ஸாதாத் வழி செய்யித் அலவி மவுலானா எம்.பி. அவர்கள் ராத்திப் ஜலாலிய்யா குழுவின் உலகளாவிய கலீஃபா(பிரதிநிதி)வாகத் திகழ்கிறார்கள்.
மிக மிகச் சமீபத்தில், 22-9-98 ல் குத்புஸ் ஸமான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவும், நாகூர், ராத்திப் ஜலாலிய்யாவின் 50-ஆம் ஆண்டு விழாவும் நாகூர் தர்கா ஷரீஃப் வளாகத்தில் அன்னாரது தலைமையில் மிகச்சிறப்பாக நிகழ்வுற்றது.
இலங்கையில் அவசரகாலம் பிரகடனப் படுத்தப்பட்டு, அரசின் அதிமுக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.க்கள்) அலைகடல் கடக்கக்கூடாது என மேதகு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்டளை பிறப்பித்திருந்த நிலையிலும், ராத்திப் ஜலாலிய்யா மஜ்லிசுக்காக மாண்புமிகு செய்யத் அலவி மவுலானா அவர்கள் மட்டும் சென்றிடலாம், நாட்டின் சுபிட்சத்திற்கு இறைஞ்சிடலாம் என இலங்கைத்தலைவி இணக்கம் கண்டார்.
இங்கொரு குறிப்பு. இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது இந்த இறவாத ஆன்மிக இலக்கியத்திற்குக் கேரளக் கரையோரத்தில் வயது 75 அவர்களும் கடந்த 3-11-1978-ல் (ஹி1419ரஜப்-13) மாபெரும் விழா கண்டார்கள்.
இவ்விரு வைபவங்களையும் வெற்றிகரமாக நடத்திப் பெருமிதப்பட்டவர்கள் உலகளாவிய அமைப்பாளராகிய அல்ஹாஜ் எ.எம்.எஸ். தைக்கா லெப்பை அவர்களே.
பொதுவாகவே, தமிழ்நாடு - கேரளம் - இலங்கை ரத்திப் ஜலாலிய்யா குழுவினரின் முக்கிய நோக்கமே, உலகம் முழுவதும், ரத்திப் நடைபெற்று, மக்கள் வாழ்வில் அமைதியும், திம்மதியும் ஏற்பட்டு, ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

Page 125
244 ష్యా இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இந்த வகையில் அதில் ஆர்வப்படும் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து அவர்கள் முயற்சிகளுக்கு “சகோதரக்கரம்’ நீட்டுவோமாக.
அல்லாஹ்வின் அருட்கொடை
அன்பிற்குரியவருக்கும் இலங்கைக்கும்
‘மின்ஹத் ஸ்ரந்தீப் ஃபீ மவ்லிதில் ஹபீப்” - எனப் பெயர் சூட்டி ஓர் இலக்கியம் படைத்துள்ளார்கள் இமாமுல் அரூஸ் ஆலிம்(வலி) அவர்கள்.
இது, பின்னர் ‘மின்ஹத் ஸ்ரந்தீப்” என்று பிரபல்யம் பெற்றது.
தமிழாக்கம் செய்தால் மேலே குறிப்பிட்டுள்ளபடிதான் நீண்டு வரும். (அன்பிற்குரியவர் - அண்ணல் நபி (ஸல்). ஸரந்தீப் - இலங்கை)
தமது 64-வது வயதில் இலங்கை வந்தபொழுது அது ரபியுல் அவ்வல். இல்லந்தோறும் ஒலிக்கும் மவ்லிதின் நபியின் இனிமையும், மீலாத் கொண்டாட்டங்களும் அவர்களை மெய்மறக்கச் செய்திட அந்த இலக்கியம் பிறந்தது. இலங்கை முஸ்லிம்களுக்காகவே உருவானது. : :
மவ்லிதாகவே மலர்ந்தது. ஆனால் பலதரப்பட்ட தஸவ்வுஃப்களை - இஸ்லாமிய இறைநிலை இணைவுப் பண்புகளைசட்டதிட்டங்களோடும் சரித்திரச் சான்றுகளோடும் மேற்கோள் காட்டி படைக்கப்பட்ட மிக உயரிய ஓர் இலக்கியமாகும்.
நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில் ஆசிரியர் அவர்களே மேற்கண்ட தகவல்களைத் தந்திருப்பதுடன், இலங்கையின் இயற்கை
 

மானா மக்கீன் · 245
வளத்தையும் அழகு கொழிக்கும் அற்புதத்தையும் வர்ணித்து மெய்மறக்கிறார்கள்.
19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் (1878) இலங்கைத் தீவை நேருக்கு நேர் பார்த்த உணர்வுகளை வைத்து இமாமுல் அரூஸ் (வலி) அவர்கள் படைத்திட்டத்தைப் போன்றதொரு உரைநடை இலக்கியத்தை, பாமாலையை, இன்னொருவர் தந்திருப்பின் அன்புகூர்ந்து எனக்குத் தெரிவிக்கட்டும்.
அந்தப் பகுதி மட்டும் 293 பக்கத்தில் மறுபதிப்புக்குள்ளாகிறது.
fr! அறபுத் தமிழைப் பேணாது போனோமே!” - எனப்-ا-اہوے“ பலரும் ஆதங்கப்படுவார்கள், நிச்சயம்!
ஃபத்ஹத் தய்யான் என்ற பாரியப் பங்களிப்பு
oKo ‘இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் போதனைகளையும் எளிய முறையில் இலகுவான பாணியில் விளக்கப்படுத்தும் நன்னோக்குடனேயே இதை எழுதுகின்றேன்.”
- மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
'ஃபத்ஹ9த் தய்யான்” - என்ற மாபெரும் படைப்பினைத் தந்தபொழுது தரப்பட்ட குறிப்பு மேலே உள்ளது.
இவ் விலக்கியத்திற்கு முன், ஷா பிய்யீ மத்ஹப் அடிப்படையிலான மார்க்கச் சட்டங்களை (பிக்ஹ்) விளக்க, 'ஃபத்ஹ"ல் மதின்’, ‘பத்ஹ"ஸ் ஸ்லாம்’ என்ற நூல்களை உருவாக்கினார்கள். அதன் விரிவாக்கமே இந்தத் தலைப்பில் பெரும் நூலானது.

Page 126
246 凶動 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மலாய் முஸ்லிமான இலங்கையர் ஒருவர் - ஸாஹிராப் பாடசாலையின் தலைமை ஆசிரியர் - ஸைபுத்தீன் ஜே.அனிஃப் தொரை - 1963-இல், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொழும்பிலேயே அச்சுப்பதித்தார். பின்னர் இன்னொரு பதிப்பை 1978-இல் இஸ்லாமிய செயலகம் வழங்கியது. இப்பதிப்புகளினால் இலங்கையர் பெரும் பயன்பெற்றனர்.
இதேபோல, உரை நடையிலான மற்றொரு நூலின் பெயர் “மஞானி’.
இவ்விரண்டின் செல்வாக்கைப் பற்றிய ஒரு குறிப்பு இது:
ox ரமழான் நோன்பு தினங்களில் முந்நேர உணவுக்குப் பின்னர் மஞானி, பத்ஹமத்தையான் (மார்க்க சட்ட நூல்கள்) போன்ற நூல்களையும் கசசுல் அன்பியா, ராஜமணிமாலை போன்ற பலவகை இஸ்லாமிய இலக்கியங்களையும் சஹர்வரை வாசிக்கும் வழக்கம் மடவளையில் இருந்துள்ளது. (மடவளை - கண்டியை அண்மிய ஓர் ஊர்)
என்றாலும், இவ்வழக்கங்கள் முற்றாக இன்று மறைந்து விட்டன என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஆய்வாளர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள். ' .
ஆனால், 'மஞானி’யைப் பொறுத்த வரையில், அதன் மகிமையை தமிழக இளைய தலைமுறை உணர்ந்திருப்பதாகப்படுகிறது. சமீபத்தில் வெளியான புதிய பதிப்பு அவர்களது கரங்களில்
* 13. ‘வாழ்வியலும் பண்பாடும் - கட்டுரை இல. 5 எம்.எஸ்.எம். அனஸ் ('கண்டி மாவட்ட முஸ்லிம்கள் கட்டுரைத் தொகுதி-இலங்கை அரசின் முஸ்லிம் இலாகா திணைக்களம்) வெளியிட்டது. பக் 137 (996)

Os(60s மக்கீன் 247
மற்றொரு நூல் : "நுனிமதுஸ் ஸாலிகீன்’.
இந்நூல், மார்க்கச் சட்டம், தத்துவம் (பிக்ஹ், தஸவ்வுப் பற்றிச் சொல்வது! ஆன்மிகப் பாதையில் வீறுநடைபோட விரும்புபவர்கள் கரங்களில் இருக்க வேண்டிய இலக்கியம்.
\
யாழ்ப்பாணம் ஷெய்கு மஹ்ருப் லெப்பை உமர் லெப்பை அவர்களால் அச்சிடப்பட்டது. இக்காலத்தைப் போல் அக்காலத்திலும் முதல் பிரதி (முதல் படிவம்)யை முக்கியமான ஒருவருக்கு வழங்கும் சம்பிரதாயம் இருந்துள்ளது.
அந்த வகையில் ‘ங்ணிமதரஸ் ஸாலிகீன்", கட்டுகொடை, காலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (குஞ்சி பாபாவின் மகனார்) கரங்களுக்கு முதன் முதலாகச் சென்றடைந்தது. "
தமிழுக்கு முதல் நாவல் கீழ்க்கரையிலிருந்து.
இன்றைய நாளேடுகளின் மவுசே அவை போடும் பரபரப்பான தலைப்புக்களில் தான்.
நம் நூலிலும் ஒரு தலைப்பு அப்படி அமையட்டுமே என்று பார்த்தேன். போட்டிருக்கிறேன்.
வெறும் ‘உல்டாப் அல்ல!
மேலும், இதுவரை நாம் பார்த்து வந்த இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் ஒரு நாவலாசிரியராகவும் மிளிர்ந்திருக்கிறார் என்பதை நம்புவதும் கஷ்டமானது. அந்த நாவலுக்கு இலங்கையில் புரவலர் ஒருவர் இருந்தார் என்பதும் அப்படியே!
wa l-f. "Arabic, And Porsian In sarandib And Tamil Nadu ”. Aifadalu i Wiama Dr. Tayka Shu : ayb Alin. B.A. (Hons) M.A., Ph.D. M. F.A. PP. 606 (1993)

Page 127
248 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
மிகவும் நல்லது. முதலில் நாவலின் பெயரை பதித்து நிரூபிக்கிறேன் :
மதீனத்துன்னுஹாஸ் - தமிழில் “தாமிரப் பட்டணம்
* தமிழிலும் சரி, அறபுத் தமிழிலும் சரி, இந்த நாவலே முதலாவது பிரதாப முதலியார் சரித்திரம்தான் தமிழ் மொழியில் முதலாவது நாவலென 28/12/1991 தினமணி நாளேட்டின் ‘தமிழ்மணி’ பகுதியில் வந்துள்ள தகவல் தவறானதெனக் கொள்ள வேண்டும் என்பார்கள் ஆய்வறிஞர் அப்தலுள் உலமா, முனைவர் தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள்.* 18
e ‘தமிழ் மொழியின் முதல் நாவலாசிரியர் கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய பி.ஆர். ராஜம் அய்யர் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது தவறு. ‘ஹஸன்பே சரித்திரம்’ என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்தி லெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே, “தாமிரப் பட்டணம் நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆகையால், அதுவே முதல் நாவல் எனவும், தமிழ் மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே எனவும் இப்போது உறுதியாகிறது. அறபி லிபியில் எழுதப்பட்டாலும் அந்நாவலின் மொழி தமிழே ஆகும்.’
- og மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் தமிழியல் துறைத் தலைவராக உள்ள முனைவர் பீ.மு. அஜ்மல்கான் எம்.ஏ., பி.எச்.டி, 1985-ஆம் ஆண்டில் பதித்துள்ளார். "
* 15. “Arabic, Arvivi And Persian In Sarandib And Tamil Nadu" - Afdalul Ulama Dr. Tayka Shu'ayb Alim, B.A. (Hons) M.A. Ph.D. M.F.A. PP. 620 é& 786(1993)
* 16. தமிழகத்தில் முஸ்லிம்கள் - போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும்
பின்பும் நூல் பக். 79.

மானா மக்கீன் 249
இவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பன்னூலாசிரியரும், ஆய்வாளருமான வழக்குரைஞர் ஆர்.பி.எம். கனி அவர்கள் பதித்துள்ள கருத்து ‘அறபுத்தமிழ்’ எது என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துவிடும்.
* அறபுத்தமிழ் புதிய ஒரு மொழி அன்று. அது தமிழ்தான். அது கண்ட இலக்கியமும் முற்றும் தமிழையே சாரும்’ "
இந்த வகையில் முன் குறிப்பிடப்பட்ட இரு பேரறிஞர்களும் அறபுத் தமிழ் என்பதைத் தமிழில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதவர்களாக இருப்பதுடன் முதல் தமிழ் நாவல் என்பதிலும் ஒத்த கருத்துள்ளவர்களாகவும் உள்ளனர்.
இந்நாவலை, ஹிஜ்ரி 1275 கி.பி. 1859 - இல் படைத்திட்ட மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்களது கருத்தும் இதே.
அன்னார் அதற்கு எழுதிய முன்னுரை இது:
8 கடந்த காலங்களின் நிகழ்ச்சிகளாக அறிஞர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாறுகள் மிகப்பல. அவற்றில் தாமிரப்பட்டணத்தின் வரலாறு ஒன்றாகும்.
இந்த அதிசயப்பட்டணத்தைப் பற்றி பாரஸிக வாசியாகிய
“பாகிர்யுளியீது இபுனு மாலி கித்தாயிப்பி’ என்பவர் தொகுத்திருந்ததை தமிழ் கூரும் மக்கள் அறிவான்
வேண்டி தமிழாக்கினோம். இச்சரித்திரத்தைப் படிக்கும்
மாந்தர் சிந்திப்பார்களானால் இறைவனின் எல்லையற்ற
சக்திக்கு அத்தாட்சியைக் கானுவார்கள்.
* 17 'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - ஆர்.பி.எம்.கனி (பக் - 210

Page 128
250 § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
w
காலங்கள்தோறும் நிலமெங்கும் வாழும் மனிதர்கள் அபூர்வ நாகரிகங்களைப் படைப்பது நிகழ்ந்து வருகிறது. நிலங்களை ஆட்சி புரியும் அரசர்களும் மக்களும் கால மாறுதல்களால் மாண்டு மடிகின்றனர். அவர்கள் நிர்மானித்த கோட்டை கொத்தளங்களும். மாடமாளிகைகளும் இடிந்து பொடிந்து போகின்றன. ஆகவே, அடுத்த தலைமுறையினரும், பிற்காலத்தவரும் கண்டு தெளிவான் வேண்டி அவைகளைப் பற்றிப் பேசுவதில் பொருத்தம் இருக்கிறது. ஆகையால்தான், ‘மதீனத்துன்னுஹாஸ்’ தாமிரப்பட்டணம் என்கின்ற வரலாற்றைச் செய்யுள்களாக இருந்ததை தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது.
இதில் ‘தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தமிழில் எழுத வாசிக்கத் தெரியாமல் அறபு மட்டுமே தெரிந்த தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு கருத்துமிக்க நாவலை அளித்திட வேண்டும் என்ற நோக்கம் புலப்படுகின்றது.
அவரது அவாவைப் பூர்த்தியாக்கி நூல் வடிவில் வழங்கிய பெருமை ஓர் இலங்கையருக்குச் சேருகிறது. ஆனால், எழுத்தாளர் நிரந்தர ஓய்வுறக்கத்திற்குச் சென்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதன் முதல் டி.முஹம்மத் சுலைமான் என்பவரால் கொழும்பில் 92, இரண்டாம் குறுக்குத் தெரு, 'மத்ய அத்துஸ்ஸுலைமானிய்யா’வில் அச்சானது. (ஹிஜ்ரி 1318/கி.பி. 1900.)* 18 r
பின்னர் மறுபதிப்பொன்று ஹிஜ்ரி 1321 கி.பி.1903 இல், இமாமுல் அரூஸ்ஆலிம் (வலி) அவர்களது சகோதரர்களுள் ஒருவரான
* 18. “Arabic, Arnvi And Persian In Sarandib And Tamil Nadu - Afdalul Ulama Dr. Tayka Shu'ayb Allim B.A. (Hons) M.A., Ph.D. M.F.A. PP. 786 (1993)

மானா மக்கீன் 251
முஹம்மத் அப்துல் காதிர் லெப்பை ஆலிம் புத் திரரும் பிரதிநிதியுமாகிய முஹம்மது ஆலிம் அவர்களால் வெளியிடப்பட்டது. என்ற தகவலை, மர்ஹoம் எம்.கே.ஈ. மவ்லானா தந்துள்ளார்கள். "
இந்த மவ்லானா அவர்கள் என் பேனாவுக்கு அந்நியரல்லர்.
ஹிஜ்ரி 1411/1990-இல் கீழக் கரையில் அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டை மற்றவர்களுடன் இணைந்து நடத்தி முடித்த ஆயாசத்தில் “சற்றே ஓய்வு எடுக்க வேண்டும்’ என்று என் போன்றவர்களிடம் கீழக்கரை மேலத் தெரு, நூலகவாசலில் சொல்லி விடைபெற்ற அன்றிரவே, அவர்கள் நிரந்தரமான ஓய்வுறக்கத்திற்குச் சென்றார். அந்தத் துன்பத்தை ராமநாதபுரத்துத் தொடர் வண்டியில் வைத்துத் தான் கேள்விப்பட்டேன்.
ஊர் ஊரென்று வாழ்நாளெல்லாம் கீழக்கரையை கீர்த்தி மிக்கதாக உலகுக்குக் காட்டிய ஒப்பற்ற ஓர் எழுத்தாளர் அவர் 'ஆபூ உமர் தான் நான் அறிந்த வரையில் தெரிந்த புனைப் பெயர்.
ஆனால், பசுங்கதிர் மவ்லானா’ என்று ‘பசுங் கதிர்’ இதழாலும், அச்சகத்தாலும் இலங்கைக்கு தெரிந்தவராக இருந்ததோடு, அடுத்த வீடாக அமைந்ததும் இலங்கையே! (குறிப்பாக - கொழும்பும் மரிச்சுக்கட்டியும்)
அத்தகைய மனிதரிடம் ‘தாமிரப்பட்டணம்’ நாவல் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான நிகழ்வு 78-79-களில் ஏற்பட்டது. கீழக்கரை லெ.செ.நாஹ் தம்பி மரக்காயர், தான் பாதுகாத்திருந்த நூலை வழங்கினார்கள். 'பசுங்கதிர்’ இதழில் தொடராக வர ஆரம்பித்து 23 அத்தியாயங்கள் பூர்த்தியானது.
* 19 தாமிரப் பட்டணம்'- தமிழ் நாவல். எம்.கே.ஈ மவ்லானாவின்
'என்உரை' (1979)

Page 129
.. 252 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது பேரர்களில் ஒருவரும், வாழும் வள்ளலுமான அல்ஹாஜ், அப்ஸலுல் உலமா, கே.டி.எம்.எஸ். அப்த்துல் காதிர் தைக்காப்பா (தொழில் வித்தகர் பி.எஸ்.ஏ - அவர்களது மூத்த சகோதரர் அவர்களைத் தாளாளராகக் கொண்டு தனது "பசுங்கதிர் அச்சகத்திலேயே மர்ஹாம் எம்.கே.ஈ. மவ்லானா நூலாகப் பதிப்பித்தார்கள்.
அன்னார், நாவலுக்கு எழுதிய “என்உரையின் கடைசி மூன்று பந்திகளும் இப்படி அமைந்து மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
## இந்நூல் மதிக்கத்தகுந்த பெருமைக்குரியதும் புதையுண்ட உவக மீனிததுவ வரலாற்றை வெளிப்படுத்துவதுமான சிறப்பைச் சுமத்திருக்கிறது என்று வாசகர்கள் கருதுவார்களானால், அந்த மதிப்பு பெருமை, சிறப்பு அத்தனையும் மாதிர"ஸ்ளிப்தைன் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆளில் அவர்களுக்கே உரித்தாகும்.
அவர்களுக்கு மாபெரும் ஞ் சீர்தி நிரதம் தீட்சண்யத்தை/ம் அருளிய அல்லாவுக்கே புகழனைத்தும் உரித்தாகும்.
ஆம் ஆத்ம ஞானி ஒருவரை ஓர் எழுத்தாளராகவும், கவிஞராகவும் கீழக் கரையிலும், இலங்கையிலும் கேரளக் கரையோரத்திலும் உலவ விட்ட இறைவனே புகழுக்குரியவன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், தாமரப்பட்டனம்’ நாவலின் முகப்பினை எனது அன்பார்ந்த அபிமானிகளுக்கு அளிப்பதில் பேருவகையும் பெரும் மகிழ்ச்சியும் பெறுகின்றேன். இதற்கு உதவிய இலங்கையின் பிரபல எழுத்தாளரும் இதழாளராகவும் திகழ்கின்றவரான அன்பர் எம்.எச்.எம்.சம்ஸ் (வெலிகாமம் அவர்களுக்கு இதயத்து நன்றியறிதலைத் தெரிவிப்பது எனது கடமை.
இதோ படம்.


Page 130
254 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது அனைத்துப் படைப்பிலக்கியங்களையும் ஆராய்வதற்கு பல அத்தியாயங்களையும் பல பாகங்களையும் எடுத்துள்ளார்கள் அப்தலுல் உலமா, டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள்.
இங்கே, நமது இலக்கிய பாலம் சிறியதே. தாமதிப்பதோ சிலபொழுது. அனைத்து விவரங்களையும் மிகவும் சுருக்கியே சொல்ல வேண்டிய இக்கட்டு.
இந்த நிலையில், அபிமானிகளுக்கு ஒன்றையே என் பேனா பதிக்க முடியும்.
0 பிக்ஹ் மார்க்கச் சட்டம் 0 தஸவ்வுப் தத்துவம்
9 சீறா வாழ்க்கை வரலாறு
• தாரீக் சரித்திரம் 0 மவ்லிது புகழ்ப்பா 0 மர்த்திய்யா - இரங்கற்பா 0 களிதா கவிதை
சு கிஸ்ஸா NA கதை நாவல்)
• அவ்ராது a திரட்டு (தொகுப்பு)
- ஆகிய இத்தனை அம்சங்களிலும் வீராதி வீரராக, சூராதி சூரராக, அல்லாஹ்வின் அருட்கொடையாகக் கிடைத்த 'அல் - கலத்துடன் புகுந்து புறப்பட்டவர்களே அம்மாபெரும் அறிஞர் திலகம்.
நல்ல நல்ல இலக்கியங்களை உருவாக்கியதுடன்
ன்றுவிடாமல் கன்னைப் போன்று சிார் படைப்புகளைத்
g 5 று சிறநத ளத தந்தவர்களுக்குப் பக்கபலமாக நின்ற மகானும் அவர்களே.

மானா மக்கீன் 255
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு முஹம்மது காசிம் சித்திலெப்பை
தனக்கு 'முஹம்மது காசிம்’ எனச் சொந்தப் பெயர் இருந்தும் தந்தையின் பெயராலேயே (சித்தி லெப்பை) புகழடைந்துள்ள அவர், ஆரம்ப காலத்தில் வழக்கறிஞர். பின்னர், முதல் தமிழ் முஸ்லிம் இதழாளர். (முஸ்லிம் நேசன் - ஞானதீபம்) நல்ல நூல்களின் ஆசிரியர், நாவலாசிரியர். முஸ்லிம் கல்விக்கு உயிர் ஊட்டியவர்.
இவரது “அஸ்ராருல் ஆலம்’ ஆக்கம் அன்று பலத்த கண்டனத்திற்குள்ளான பொழுது, அவருக்குப் பக்கபலமாக நின்றது. இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களே!
பிரச்சினையைத் தோற்றுவித்த அந்த நூல் வருவதற்குப் பின்னணியில் நின்ற, கொழும்பு வாப்புச்சி மரக்காயர் அவர்களும், தஞ்சாவூர், வல்லம் வள்ளல் குலாம் முகைதீன் சாகிப் அவர்களும் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது சீடர்களாக இருந்தனர் என்பதை அவதானிக்கும் பொழுது, குருநாதர் ஆலோசனை இல்லாமல் அதைச் செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு யாரும் நிச்சயமாக வரலாம்.
இன்னொன்றும் குறிப்பதற்கு இருக்கிறது. இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) முஹம்மது காசிம் சித்திலெப்பை இருவரிடமும் ஓர் ஒற்றுமை.
இருவருமே அவரவர்கள் வாழ்ந்த இடங்களில் மிகவும் துணிவுடன் அச்சுக்கூடங்களை நிறுவினார்கள்!
அச்சுப் பணிபுரிந்து வருமானம் தேடும் நோக்கமல்ல, என்றில்லாமல் இதழ்களும், நூல்களும் வெளியிடவே நிறுவினார்கள்.
முன்னையவர் நிறுவியது தமிழகத்திற்கே முதலானது - முஸ்லிம் நூல்களைப் பொறுத்தளவில்

Page 131
256 ష్యా இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
பின்னையவருடையது, இலங்கை - மலையகத்திற்கே முதலானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கீழக்கரையில் அரூஸிய்யா மதராஸாவுக்குப் பின்புறம் பறக்கதிய்யா அச்சுக்கூடம் அமைக்கப்பட்டது.
பிரசுரகர்த்தாவாகவும் அச்சக அதிபராகவும் விளங்கி, பல நூற்றுக்கணக்கான நூல்களை வெளிக்கொணர்ந்தார்கள்.
அது வரையில், அறபு நூல்களை வெளியிட பம்பாய்க்கும், ஹைதராபாத்துக்கும் போய்க் கொண்டிருந்த நிலை மாறி, தென்னகத்தில் கீழக்கரைக்கு வரவேண்டிய நிலையைத் தோற்றுவித்து சாதனை படைத்தவர்களும் அவர்களே!
இந்தப் பறக்கத்திய்யா பிரஸில் முஹம்மது இபுராஹிம் என்ற திக்வல்லை (தென்னிலங்கை) ஊர்வாசியும் கடமை புரிந்துள்ள தகவலையும் அறிகிறோம்.
சுமார் எட்டாண்டுகள் ‘பைண்டர் (ஏடு கட்டுபவர்) பதவியில் இருந்த அன்னார் நமது எழுத்தாளர், இதழாளர், கவிஞர் எம்.எச்.எம். சம்ஸ் அவர்களது தாயார் (ரஸினா உம்மா) வழிப்பாட்டனாராவார். திக்வல்லைக்கு மீண்ட பிறகும் அத்தொழிலை தொடர்ந்தாராம். "மாப்பிள்ளை ஆலிமிடம் ஜிந்து கட்டியவர்” என ஊர்க்காரர்கள் அழைப்பராம் (பைண்டருக்கு என்ன அழகான தமிழ் பாருங்கள்)
இனி, நாம் மகான் அவர்களைத் தொடர்ந்து இலக்கிய முத்துக்குளிப்புச் செய்தவர்களையும் இனிய நிகழ்வுகளையும் பார்த்துப் பரவசப்படுவோம்.

257
கிழக்கரை இலக்கிய நெஞ்சங்களுக்கு
இலங்கையர் உதவி
1. புலவர் நாயகம் சேகனாப் புலவர் பெற்றது
நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ள புலவர் நாயகம் சேகனாப்புலவர் (ஷெய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் முன்பு குறிப்பிட்டபடி கொழும்பில் வாழ்ந்தவர். மாணிக்க வியாபாரியாகப் பிரகாசிக்க நினைத்தவர்.
நான்கு காப்பியங்களை வழங்கி சாதனை படைத்த இப்புலவர், தனது சுய இலக்கிய முயற்சிகளுடன் "சீறாப் புராணத்தை ஏட்டுப் பிரதிகளின் உதவியால் அச்சிட முனைந்த பொழுது, (ஹிஜ்ரி 1258/கி.பி. 1842) அவருக்குத் துணையாக நின்று, கூட்டு முயற்சியில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணத்துப் ஃபக்கீர் முஹியத்தீன் அவர்களாகும். இன் பத் தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்த அவர், யாழ்ப்பாணத்துப் பரிகாரி (வைத்தியர்) என்கிற உதமான் லெப்பை அவர்களின் புதல்வர்.
எனினும், நூலின் கொடை நாயகர் கீழக்கரை வள்ளல் ஹபீபு அரசர் என்ற ஹபீபு மரக்காயர் அவர்களாகும்.
மேலும், பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் (ஹிஜ்ரி1271/கி.பி. 1854) புலவரது ‘குத்பு நாயகம்’ என்னும் முஹியத்தீன் புராணத்தையும் பதிப்பித்தவரும் ஃபக்கீர் முஹியத்தீன் அவர்களே! அது, சென்னை முத்தமிழ் விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

Page 132
258
இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஆனால், அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பேயே புலவர் நாயகம் ஓய்வுறக்கம் பெறச் சென்றுவிட்டதை (12/9/1852) அறியும் பொழுது அனுதாபப்படுகிறோம்.
2. செய்தக்காதி நொண்டி நாடகப் புலவர் பெற்றது
மேற்படி நொண்டி நாடகம் ஒரு நாட்டுப்புற இலக்கியம், சீதக்காதி அவர்களது வள்ளல் தன்மையைக் கூறுவது.
தான் செய்த திருட்டுக்காக காலை இழந்த நொண்டி ஒருவன் வள்ளலின் உதவியால் உய்வுபெறுவதும், அவர்களது வழிகாட்டலில் மகான் சதகத்துல்லா அப்பா அவர்களிடம் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்து தொழுகை பேணி நோன்பு நோற்று, பின் ஹாஜியாகவும் ஆகி, இறையருளால் இழந்த காலைத் திரும்பப் பெறும் வரலாற்றை விரிந்துரைப்பதுமாகும்.
எழுதியர் பெயர் தெரியவில்லை. அதனால் மயக்கம் உண்டு.
80 கதையில் வரும் நொண்டி மட்டுமல்ல, இயற்றிய நூலாசிரியரும் புதிதாக இஸ்லாமிய நெறியை ஏற்றவராகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வெகு எளிதாக வர முடிகிறது.
- என கலைமாமணி மணவை முஸ்தஃபா தெரிவிக்கிறார்கள். அன்னார் இந்த இலக்கியத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்தவராவர். *
இதன் முதல் அச்சுப்பதிவு 1873-இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி முதலியாரின் பிரபாகர் அச்சுக்
* 20 நொண்டி நாடகம் - மணவை முஸ்தஃபா கருத்தரங்கக் கோவை
கட்டுரைத் தொகுப்பு பக்156-160 (1990)
 

மானா மக்கீன் 259
கூடத்தில் நடந்தது. இதற்குப் பெரும்முயற்சி எடுத்து முன்னின்றவர் யாழ்ப்பாணம் அலாவுதீன் சாய்பு அவர்களாகும்.
ஆய்வாளர்கள் இந்த அலாவுதீன் சாய்பு பற்றி ஆராய முயன்றால் நொண்டி நாடகத்தின் ஆசிரியரை எளிதாக அடையாளம் கண்டுவிட வாய்ப்பு உள்ளது.
3. ஆசாரக்கோவை அப்துல் மஜீத் புலவர் அடைந்தது
'மாட்டும் வல்லிரும் பான கோடரியுள் மரமிருந்து மரத்தை யழித்திடும் கூட்டும் கண்ணியிற் கட்டிய பார்வையின்
குருவி தன்குலம் கூவி நுழைத்திடும் ஈட்டும் நற்குடி தன்னில் இருந்து கொண்டு)
இனத்தைத் துச்சனர் ஈட்டி யழிப்பார்களே தாட்டி கத்திரு மேட்டி முஹம்மதுத்
தம்பி மாமரைக் காய சகாயனே? - (82)
இந்த எட்டு அடிப்பாடலின் பொருளை உணர்ந்தால் அப்படியே சொக்கிப் விடுவீர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் பாடப்பட்டு ஒரு நூறு ஆண்டு கழிகின்ற இச் சந்தர்ப்பத்திலும் மனிதனுக்குச் செய்தி இருக்கிறது. நாளைய மனிதனுக்கும் உள்ளது.
* ஒரு கோடரியின் உள்ளிருக்கிற மரமே மரத்தைக் கொல்கிறது. (அதாவது கண்டதுண்டமாக வெட்டுகிறது)
* ஒரு கண்ணியிற் கட்டப்பட்ட பார்வைக் குருவியே மற்ற குருவிகளையும் கூவி அழைக்கிறது. (அதாவது கண்ணி வைத்தவனிடம் பிடித்துக்கொடுக்கிறது)

Page 133
260 GŞ11 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
* நற்குடியிற் பிறந்த தீய மக்கள் தம் இனத்தையே அழிக்கப்
புறப்பட்டு விடுகின்றனர்.
பாடலின் இந்த விளக்கம் நமக்குத் தெரிவிக்கும் முக்கிய செய்தி:-
எவ்வாறு ஒர் இனம், தன் இனத்தையே அழித்துக் கொள்கிறது என்பதாகும்.
எத்தகைய அற்புதமான கருத்தும் தத்துவமும்!
கீழக்கரை கண்டெடுத்த பல இலக்கிய முத்துக்களில் ஒரு நல்ல முத்து மூனா கானா அப்துல் மஜீது புலவர். ‘ஆசாரக் கோவை’அவரது அருந்தொகுப்பு,
* தமிழில் இனிய இசுலாமிய நீதி நெறிகளை - ஒழுக்கவியலை- ஆசாரங்களை - பொதுப்பண்பாடுகளை நாளும் கண்டுபிடித்து ஒழுக வேண்டியவைகளைப் பாடியுள்ளார். அல் - குர்ஆனின் அறிவுரைகளும், ஹதீது நபி மொழிகளும் இதனுள் மணக்கக் காணலாம்.**
- என்கிறார் தக்கலை எம்.எஸ். பஷீர் எம்.ஏ.
அன்னார் வள்ளல் சீதாக்காதி வழிவந்தவர். வள்ளலின் ஒரே மகளான முஹியித்தீன் நாச்சியார் அவர்களது கொள்ளுப்பேரன் என்பதுடன் ஹக்கீம் முகம்மது அப்துல் கரீம் மரக்காயரின் புதல்வராவர்.
இலங்கையின் வளம் அறிந்து வாணிப நோக்கிலே கல்பிட்டியில் கால் பதிக்கிறார்கள் அப்துல் மஜீது புலவர் அவர்கள் இளைஞனாக, கடந்த நூற்றாண்டின் இறுதியில்.
*
*21. ஆசாரக் கோவை - ஆய்வுக் கட்டுரை. கீழக்கரை சிறப்பு மலர்
Ly. 49 (7990)

மானா மக்கீன் 261
இந்தக் கல்பிட்டியை (புத்தளம் பகுதி) போதியளவு வாணிபப் பகுதியிலே விவரித்துவிட்டேன். "
அந்தத் துறைமுகப் பட்டினத்திலே ஒரு வணிகராக வலம் வருகின்ற பொழுது அவரை ஒரு வர்த்தகராகப் பார்க்க முடியாமல் தத்தளிக்கிறார் ஓர் உள்ளூர் மனிதர். அவரே, முகம்மது தம்பி மரக்காயர் இவர் உமறு கத்தாபு மரக்காயரது புதல்வர். பெரும் செல்வந்தக் குடும்பம். ‘நல்ல நூலொன்றை இயற்றித் தாருங்கள், நான் கொடை நாயகனாக கரம் நீட்டுகிறேன்’ என்கிறார் முகம்மது தம்பி மரக்காயர்.
1902-ஆம் ஆண்டில் ஆசாரக் கோவை தமிழ் மக்களுக்குக் கிடைக்கிறது.
மொத்தமாக நூறு கட்டளைக் கலிப்பாக்களைக் கொண்ட பாடல் ஒவ்வொன்றிலும் நாளும் கடைப்பிடித்து ஒழுகுவதற்குரிய நற்போதனைகளை அள்ளி வழங்கியிருக்கும் அதே சமயத்தில், புரவலர் முகம்மது தம்பி மரக்காயர் அவர்களையும் மறக்க விரும்பாமல் பாடல்களின் இறுதி இரண்டு அடிகளையும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர் - விதவிதமாக,
'தந்தமுந்த தயாள முகம்மதுத் தம்பி மாமரைக்காய சகாயனே?
0 ‘தண்ணந்தங்கிய செல்வ முகம்மதுத் தம்பி மாமரைக்காய
சகாயனே?
இந்த நல்லிலக்கியத்தின் கருத்துக்களால் கவரப்பட்ட நாகூர், குலாம் காதிறு நாவலர், திருச்சி, பிச்சை இபுறாகிம் புலவர் ஈறாக கண்டி - தெல்தோட்டை அருள்வாக்கி அப்துல்காதர் புலவர் வரை சிறப்புப் பாயிரங்கள் பாடியுள்ளனர்.

Page 134
262 న్ళీ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
அவர்களும், அவர்களைப் போன்ற பல வித்தகர்களும் அவரிடமிருந்து இன்னுமின்னும் பல பங்களிப்புகளை எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் துயரத்தின் உச்சமொன்று ஏற்பட்டது.
எல்லாம் வல்லவனின் அன்பின் அழைப்பு மிகமிக இளவயதில் - முப்பத்து நான்கில் - கிடைத்துவிட சிறகடித்தார்.
அவரது ஓய்வுறக்கம் - 1904.
எந்தக் கல்பிட்டியிலிருந்து கவிதை பாடினாரோ அதற்கு அருகேயே இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த இறை
செயலை எவ்வாறு வர்ணிப்பதோ!
திகழி (ஏத்தாளை தான் அந்த இடம். ஒரு கால கீழக்கரைத்
துறைமுகம் (மேலும் விபரங்களை வாணிபப் பாலத்தில் கண்டிருப்பீர்கள்)
எவ்வாறாயினும். “கீர்த்தன மஜீது’ என மற்றொரு நூல். அவர் மறைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (1907) கொழும்பு நடராஜா அச்சியந்திரசாலையில், வேதாளையூர் வித்துவான் செ.செ. முகம்மது செய்கு முகியத்தீன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டதற்கு ஆதாரம் உண்டு. ‘இரண்டே அணா விலை - இரண்டாயிரம் பிரதிகள் - இரண்டாம் பாகம் - முதலாம் பதிப்பு’ என்றெல்லாம் பதித்துள்ளனர்.
எதிர்ப் பக்கத்தில் படம்.

263
نیم تا 3
*
8 f கீர்த்தனமஜீது.
: -(ġ) u 3i, L- rih Tasa
, لکھے ہ@
கீழக்கரை: ஹக்கீம் பரீமத் முகம்மது அப்துல்கரீம் மரைக்காயர் குமாரர் இயற்றமிழ்வித்துவான் ரீமத் மு. க. அ. அப்துல்மஜீது அவர்கள் இயற்றியது.
& வேதாளையூர்: "வித்துவான் 叢 செ. செ. முகம்மது செய்குமுகியித்தீன் அவர்களாற்
3. age. GasrgůL: %Da5
கேடராஜ? அச்சியந்திர சாலையில்
அச்சுப்பதிப்பிக்கப்பட்டது.
<米比
─
Gk povarů - 8ůu. 2000 Coples,
米
907, Registered Copy-Right.
懿 இதன் வில்: . . . அணு 2. வி
పచేరేపచేచే

Page 135
264 $ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
4. ஷெய்கு நார்தீன் ஆலிம் புலவருக்குக் கிடைத்த
வாய்ப்பு
கீழக்கரையின் இலக்கியச் செல்வர்கள் அறபிலும் தமிழிலும் நல்ல புலமை வாய்ந்தவர்கள் என்பதால் மார்க்க அறிஞர்களாகவும் (ஆலிம்) திகழ்ந்ததில் ஆச்சரியமில்லை. VA
மிகப் பலரில் ஒருவர், ஷெய்கு நார்தீன் ஆலிம் புலவர். இலங்கை - கொழும்பில் வாணிபத்தில் வளம் கண்ட அதே நேரத்தில், சந்தக்கவிகள் இயற்றக்கூடிய தமிழறிஞராகவும் இருந்தார்கள்.
ஆனந்தக் களிப்பில் ஆலிம் புலவர் பாடிய ஒரு சந்தக்கவி மணிப்பிரவாளமாக அமைந்தது. அதிலேயே லயிக்க வைத்து விடக்கூடியது.
மங்காத ராஜராமடி - மாதிஹoர் ரசூல்
மங்காத ராஜராமடி பொங்கும் மெய்யானவரடி எங்கும் சிங்காரரடி துங்கி மனம் தங்கி மனம் கும் கும் கும், கும்
குருவைத்தேடி கம், கம் கம். கம் கரைந்து வாடி தும் தும் தும் தும்
சுந்தர மாமயில் சந்தேகமே தடி சிந்தை மகிழடி சேவடி போற்றினி கூவடியே சலாம் (மங்காத)
- இதே பாணியில் இன்னும் மூன்று சீர்கள் இருக்கின்றன.
நூர்தீன் ஆலிம் புலவரது ஆற்றலைக் கண்டு மலைத்தார் மற்றொரு புலவர். நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், இலங்கை - கம்பளையிலும் சிங்கப்பூரிலும் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.

மானா மக்கீன் 265
இவர், ஆயிரக்கணக்கில் இஸ்லாமிய கீதங்கள் இயற்றி இதயங்களைக் கவர்ந்தார். இசைமுரசு ஹனிபா ஹாஜியும், இசைமணி யூசுப் அவர்களும் நாடெங்கும் தெரிய இவரும் ஒரு காரணம்
என்பேன்.
புலவர் ஆப்தீன் என்று குறித்தால் அபிமானிகள் புரிவீர்கள்.
ஆரம்பகாலத்தில் தனது இஸ்லாமிய கீதங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரஆசைப்படாத இவர், நூர்தீன் ஆலிம் புலவரது பாடல் தொகுப் பொன்றை வெளியிட்டிருப்பதை விசித்திரமென்பதா? வினோதம் என்பதா?
தீர்ப்பு உங்களுடையது
5. சதக்குத்தம்பிப் புலவர் பெற்ற பேறு
ஏனைய கீழக்கரை வாசிகளைப் போலவே வாணிபராக வந்தார்கள் ச.த.மு. (எஸ்.டி.எம்) சதக்குத்தம்பி, மலையகத்தில் மாத்தளையை (கண்டிக்குச் சமீபமான நகர்) வணிக இடமாகவும், வாழ்விடமாகவும் தேர்ந்தெடுத்தார்கள்.
சில காலத்தின் பின் வணிகர் சதக்குத் தம்பி’க்குப் பதிலாக ‘புலவர் சதக்குத்தம்பி”ஜொலித்தார்!
மாத்தளை முஸ்லிம்களும் மற்றோரும் அவரை ‘புலவர் என்றே அழைத்தனர்.
ஏராளமான கவிதைகளையும் பதங்களையும் இயற்றியுள்ளார். அழகாக பாடக்கூடிய திறன் பெற்றிருந்த இவர் தன் பாடல்களை இலங்கை வானொலியிலும் பொது மேடைகளிலும் பாடியுள்ளார்.

Page 136
266 ரிே இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இவர் இயற்றிய கவிதைகளில் சில, 'சன்மார்க்கச் சங்கீத மாலை’ ‘இலங்கை இன்னிசைப்பூங்கா’ ‘கீதா மிருதச் சோலை’ எனும் பெயர்களோடு நூல்களாக வெளிவந்துள்ளன. இந்நூல்களில் காணப்படும் பாடல்கள் யாவும் இஸ்லாமியத் தொடர்புடையவையாகும்.
பாவலர் அவர்கள் இஸ்லாமிய நூல்களை இயற்றுவதோடு மாத்திரம் திருப்தியடைந்துவிடவில்லை. இலங்கையை நேசித்த புலவர், இலங்கை சுதந்திரம் பெற்றபோது பாடிய கவிதைகள், சிறிலங்கா சுதந்திர கீதம் அல்லது மரதன் ஒட்ட மணி ஒலி என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. இக் கவிதைகள் கவிஞரின் தேசப்பக்தி, தொலைநோக்கு கற்பனா சக்தி, கவித்துவம் போன்றவற்றை நன்கு வெளிப்படுத்துகின்றன.
தேசத்தை தேசங்கள் ஆளவிடோம் - எங்கள் தேவியின் மேனியைத் தீண்டவிடோம் நேசக்கரம் நீட்டி நின்றிடுவோம் -ஆனால் நீச பாசக்காரர் நெருங்கவிடோம்.
மாத்தளை முஸ்லிம் மக்களால் மிக கெளரவமாக மதிக்கப்பட்ட இப்புலவர் அவர்களை, ஏனையோரும் நன்கு மதித்தனர் என்பதை அவரது நூல்களில் ஒன்றான மரதன் ஒட்ட மணி ஒலி’ என்பதற்கு, இஸ்லாமியப் பேரறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதி, வித்துவான் பெரியதம்பி போன்றோர் எழுதியுள்ள வாழ்த்துரைகள், அணிந்துரைகள், சிறப்புரைகள் என்பன எடுத்துக்காட்டுகின்றன. **
* 22 இலக்கிய முயற்சிகள் - அத்தியாயம் 11 மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இலங்கை, முஸ்லிம் திணைகளஇலாகா) வெளியீடு - எ.எ.எம். புவாஜி பி.ஏ. டிப்-இன். எட் பக். 789 (1992)

மானா மக்கீன் 267
- என, கல்வியாளர், கலாபூஷணம் எ.எ.எம். புவாஜி அவர்கள் அற்புதமான அறிமுகம் ஒன்றைத் தந்துள்ளார்கள்.
புலவர் அவர்களது நூல்களுலொன்றான 'சன்மார்க்கச் சங்கீதமாலை’க்கு அணிந்துரை வழங்கியுள்ள அறிஞர் பெருமகனார் யார் என்பதை அறிந்தால் அசந்துவிடுவீர்கள்.
முதலில், அணிந்துரையைப் படித்துப் பாருங்கள், ஆனால் உரைநடையில் அல்ல, நேரிசை வெண்பா
ஏழிசைப்பூக் கொண்டினது யாழ்நரம்பாம் நன்னாரிற் சூழ்கருதி யெனுந் தொடைவாய்ப்பக் கீழக் கரைக் கவிஞன் செய்பன் கனிமாலை யேக பரப்பொருள்தே ரன்பின் பணி
கொன்மலரை யுன்பென்று நாரிற் தொடுத்தெங்கும் சன்மார்க்க மென்னுந் தனிமணத்தால் துன்னவே நம்பிநபி நாயகர்க்குக் சூட்டினான் நற்சதகுத் தம்பியிசை மாலைத் தமிழ்.
- எ. பெரியதம்பிப்பிள்ளை d குருக்கள்மடம், மட்டக்களப்பு.
சந்தேகமே வேண்டாம்! நம் காலத்தில் வாழ்ந்து புகழ்பரப்பி, பல தமிழ் -முஸ்லிம் புலவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அதே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்களே! இப்பொழுது இலக்கியக் கலாநிதி என அழைக்கப்படும் அவரை வித்துவான் என சதக்குத்தம்பிப் புலவர் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

Page 137
268
bost eszale2e92anez Golgirie2.Rogie 2are2.Galesez Re226Ry
நவரீம்
份
சன்மார்க்கச் சங்கீத மாலை.
ܗܚܚܚܗܡܘܐܞܐܝܬܝܗܘܚܘܝܚ-- கீழக்கரை N ச. த. மு. சதக்கு தம்பி சாஹி பாடியது.
2
后
!) தி  ை
தமிழ்ச் சங்க வித்வ சிரோண்மணி
செ. மு. செய்யிது முஹம்மது ஆலிம் புலவர் அவர்கள் 象 பார்வையிட்டு அரங்கேற்றப்பட்டது.
காப்ைொட் 2000 r
கொழும்பு, ராபர்ட் பிாஸ் அச்சியங்கிரசா?லயில் பதிப்பிக்கப்பட்டது.
లzసెలzణలeడాలzడాక్టిలzణలడల్లాడలzణలzడా
x 8. ,
* Pi:346ಠ)}
S அல்ஹாஜ் ஹாபீஸ் S
黑
 
 

மானா மக்கீன் 269
முன் பக்கத்தில் நூலின் முகப்பை அபிமானிகள் பார்த்தீர்கள்.
'சன்மார்க்கச் சங்கீதமாலை'யில் அவரது முகவரி 28, முகாந்திரம் ரோடு, மாத்தளை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதக்குத்தம்பிப் புலவர் மீது அன்பும் அபிமானமும் கொண்ட கீழக்கரைவாசிகள் மாத்தளையிலேயே வீடொன்றை அன்பளிப்புச் செய்தார்கள் என்றும், புலவர் அந்த இல்லத்திலேயே ஓய்வுறக்கம் பெற்றார் எனவும் தகவல்கள் உண்டு. அந்த வகையில், மேற்படி இல்லம் அதுவாக இருக்கலாம்.
அவ்வாறாயின், அவ்வில்லத்தில் இப்பொழுது வாழ்வோர் ஒரு தமிழ்ப்புலவர் பெருமகனின் இல்லத்திலே குடியிருக்கும் பெருமையைப் பெற்றவர்களாகியுள்ளார்கள்.
ஆஹா!
6. அல்ஹாஜ் செய்யது முஹம்மது ஆலிம் புலவருக்குப்
புத்தளத்தில் பெருமை!
* தென்னிந்தியாவைச் சோந்த புலவர் செய்யது முஹம்மது
ஆலிம் அவர்கள் முத்து வியாபாரத்திற்காக மறிச்சுக்கட்டியில் தங்கி நின்றபோது, புத்தளத்துச் செல்வந்தர் முஹம்மது காசிம் மரைக்காயர் வீட்டில் தொடர்ச்சியாக பல நாட்கள் சுலைமான் நபி சரிதை கூறும் இராஜநாயகத்திற்கு இலக்கிய உரையாற்றியுள்ளார்ஃ
- என ஒரு தகவல், கண்டி - பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறை முதுநிலை விரிவுரையாளர், ஜனாப் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களிடமிருந்து கிடைக்கிறது. இவரும் புத்தளத்து மண்வாசனை உடையவரே.
* 23 வரகவி செய்கு அலாவுதீன் - தொகுப்பும் ஆய்வும் - எம்.எஸ்.எம். அனஸ் வெளியீடு முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு, இலங்கை, பக். 35 (1991)

Page 138
270 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
ஆனால், ‘தென்னிந்தியா’ என்றும், ‘புலவர் செய்யது முஹம்மது ஆலிம்’ என்றும் மேலோட்டமாகப் பதித்துள்ளது கொஞ்சம் மயக்கத்தைத் தருகிறது.
உண்மை நிலை வேறு.
* இவர் தமிழ்ச் சங்கப் பெரும்புலவர். அறபில் சனது பெற்ற ஆலிம்: அல் - குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிஸ்; புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹாஜி. நல்ல வர்த்தகர் இந்நூற்றாண்டில் தென்னகத்தில் இப்படி ஐந்து வகையிலும் சிறப்புப் பெற்ற முஸ்லிம் புலவர் இவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லையெனச் சான்றோர் கூறுகின்றனர்.
- என, மேற் காணும் புலவரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள் பெரியவர், எம், இத்ரிஸ் மரக்காயர் அவர்கள்.*
உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட ‘கீழக்கரை மலர்” இதையும் விடப் பன்மடங்கு மேலாக, “இந்த நூற்றாண்டின் இணையில்லா அறிஞர் எனப் புகழ்ந்துரைத்துள்ளது.
மலர் வழங்கியுள்ள வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:
«Х• கீழக்கரைக்குப் பெருமை சேர்க்கின்ற தலைமக்களின் இந்த நூற்றாண்டின் தலைமகனார் மெளலானா மெளலவி அல்ஹாஜ் ஹாடபில் செய்யது முஹம்மது ஆலிம் புலவர் ஆவார்கள். 'ஆலிம் புலவர்’ என்று மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் இந்தப் பெருமகனார்
* 24. நானிலம் போற்றும் நன்னகர்' - எம். இத்ரீஸ் மரக்காயர் பக். 137
(1880

மானா மக்கீன் 271
அவர்கள் ஹி1298 ஜமாத்துல் ஆகிர் பிறை 17 (கி.பி.105.188) இல் கீழக்கரை, நடுத்தெரு, ஹாபில் முகம்மது சதக்குத் தம்பி மரக்காயரின் குமாரராகப் பிறந்தவர்கள். இவர்கள் மிகச் சிறு வயது முதலே மார்க்க விளக்கங்களிலும், தமிழறிவிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தார்கள்.
ஆலிம் புலவர் அவர்கள், மார்க்கம் அறிந்த ஆலிமுக்கு ஆலிமாகவும், தமிழறிஞர்களுக்கு அறிஞராகவும் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் காலத்தில் தமிழ் கூரும் நல்லுலகில் அவர்களுக்கு நிகரானவர் இல்லையெனும் அளவுக்கு பெருமேதையாக விளங்கினார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவராகவும் திகழ்ந்தார்கள்.
ஆலிம் புலவர் அவர்கள், புலவராகவும் ஆலிமாகவும் இருந்த நிலையிலேயே அவர்களின் முன்னோர் செய்து வந்த முத்து வணிகத்தில் ஈடுபட்டு திறம்பட நடத்திப் பெரும் பொருளிட்டினார்கள். இதற்கு ஊடேதான் அவர்களது மார்க்கப் பணியும் தமிழ்ப்பணியும் போட்டியிட்டுத் துளிர்த்துக் கொண்டிருந்தன. அறபியிலும் தமிழிலும் சில தேன்சுனை ஊற்றெடுத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது பிறந்தவைகளிற் `கீர்த்தனா மாளிகை’ ‘சதானந்தமாலை 'ஏக தெய்வ ஸ்தோத்திர மாலை ‘குதுபு நாயக மான்மியம்’ ‘கசீதத்துல் புர்தா பரிசுத்த தூதுவர் ‘பரிசுத்த இஸ்லாம் * பிதாய துல்ஹிதாயா’. முதலியன. ஒரு முழுமையான வாழ்வுவாழ்ந்து ஹிஜ்ரி 1387 ஸ்பர் பிறை 17-ல் கி.பி. 25/7/1967இல் நித்திய வாழ்வில் சென்றடைந்தார்கள்.**
25.
மேற்படி, கீழக்கரை மலர் - பக். 68 (1990) தொகுப்பாளர்கள்! ஹாஜி எம். இத்ரிஸ் மரக்காயர் எம்.கே.ஈ மவ்லானா.

Page 139
272 6Şf இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இத்தகு பெருமை வாய்ந்த புலவர் புத்தளத்து மண்ணின் வாசனையை மிக அறிந்தவர். இதே தமிழ்ச்சங்க வித்வ சிரோண்மணி ஆலிம் புலவர் அவர்கள்தான் நாம் ஏற்கெனவே அறிமுகப்படுத்திக் கொண்ட மாத்தளை ச.த.மு. சதக்குத் தம்பி சாஹிபு அவர்களுடைய 'சன்மார்க்க சங்கீத மாலை’ என்ற நூலைப் பார்வையிட்டு அரங்கேற்றம் செய்தவரும்
இந்தத் தகவலை அங்கே தராமல் இங்கு தருவதற்குக் காரணம், இதுவே பொருத்தமான இடமென நினைப்பதால்
ஒரு வணிகராக இலங்கை வந்து, மன்னார் - மறிச்சுக்கட்டியில் முத்து சலாபம் செய்து விட்டுப் போயிருக்க வேண்டிய ஒரு தமிழ் அறிஞரை இப்படி புத்தளமும் மாத்தளையும் பயன்படுத்திக் கொண்டது! அதற்கு உறுதுணை நின்ற நெஞ்சங்கள் வாழ்த்த வார்த்தைகளைத் தேடுகிறேன்.
அந்த வகையில், புத்தளம் முகம்மது காசிம் மரக்காயர் அவர்களைப் பற்றியும் இரண்டொரு தகவல்:
(X- இ.செ.மு. குடும்பம் (E.S.M) புத்தளத்தில் ஆதிக்கமும், தலைமைத்துவமும் உடையதாக விளங்கியது. அதிலுகித்த ஜனாப் முகம்மது காசிம் மரக்காயர் 'மதுரஸ்த்துல் காஸிமிய்யா' அறபுக் கல்லூரிக்கு நிலமளித்து கட்டடங்கள் கட்டி, அதன் பராமரிப்புக்காக தென்னந்தோட்டங்களை அன்பளித்தவராவர். *
அக்காலச் செல்வந்தர்கள் இஸ்லாமிய இலக்கியம் வளர்த்த விதத்திற்கு ஒரு பதச்சோறு இந்த நிகழ்வு.
இப்பொழுது அப்படிப்பட்டவர்களைத் தேடி அலைய வேண்டும். அலைவோம்!
*26. புத்தளமும் வரலாறும், மரபுகளும் - தாஜ“ல் அதீப்
ஏ.என்.எம்.ஷாஜஹான் பக் 307-302 (1992)

273
கீழக்கரை அரவணைத்த இலங்கை இலக்கியவாதிகள்
கீழக்கரை இலக்கிய நெஞ்சங்களை இலங்கை மண் நேசித்ததுபோல் அங்கேயும் நடந்தது.
கிழக்கிலங்கை, மட்டக்களப்பில் ‘காத்தநகர்’ (காத்தான்குடி) இலங்கையின் மிகப் பரந்த ஒரு முஸ்லிம் கிராமம். இங்கே 160 ஆண்டுகளுக்கு முன்னால் 'இசுவத்து நாச்சி” தமிழ் இலக்கியமாகப் பிறந்தாள் ஹிஜ்ரி 1260/கி.பி. 1839) ரபியுல் அவ்வல் முதல் திகதி கோரளையூர் பள்ளிவாசலில் நிகழ்ந்தது.* '
அதற்குப் பொறுப்பு அகமது குட்டிப் புலவர் மாமுநைனாவின் மகன், நைனாப்பிள்ளையின் பேரன்.
"இசுவா அம்மானை' என்பதே நூலின் தலைப்பாக இருந்தது. ஆனால் கிழக்கிலங்கை கிராமப் புறங்களில் 'இசுவத்து. நாச்சியார் சரிதம்’ என்று புகழடைந்தது.
இந்த அம்மணி அலைகடலுக்கு அப்பால் கால் மிதித்த பொழுது காயல்பட்டனம், கண்ணகுமது, மகுதூம் முகம்மதுப் புலவர் அவர்களால் 'இசுவத்து நாச்சியுடைய கிஸ்ஸா’ (1895) என அழைக்கப்பட்டார். அவரால் வசன ரூபியாகக் காட்டப்பட்டார். ஆனால் களஞ்சியப் புலவர் நாடகக் கதாநாயகியாக்கினார். **
*27 இசுவா அம்மானை' - அரங்கேற்றப்பகுதி 10 ஆம் 11 ஆம் கண்ணிகள் பதிப்பாசிரியர் அலியார் முஸ்ஸம்மில் பக்.27 (1990
*28 நாகூர் முகம்மது புலவர் தகவல், குத் புநாயகம்
காப்பியத்திற்குப்பாயிரம் பாடியவர்.

Page 140
274
}్య இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இசுவாவின் கதை ரொம்ப ரொம்பச் சுவை.
அலெக்ஸாந்திரியா நகரின் பக்கம் வாழ்ந்த லாஃபீர் என்னும் ஆலிமின் மகள் இசுவா. கபீபு என்னும் வணிகன் அவளைப் பெண் கேட்டுவர, ஆலிம் ஒருவனுக்கே மணமுடித்துக் கொடுப்பேன் என; தந்தை சொல்ல அதன்படி ஆறு ஆண்டுகள், ஒதி முடித்து அவளைத் துணைவியாக்கிக் கொள்கிறான். ஒருசமயம், இசுவாவைத் தன் தம்பியின் பொறுப்பில் விட்டு வெளியூர் சென்றபொழுது அனர்த்தம் விளைகிறது. தன் இச்சைக்கு இணங்காத இசுவாவை சோரம் போனவளாகக் காட்டி பகிரங்கமாகக் கல்லெறிந்து கொல்கிறார்கள். ஆனால் இறைவன் மாயத்தோற்றமாக்கி இசுவாவைக் காப்பாற்றி காட்டுக்கு அனுப்பி விடுகிறான்.
அங்கும் ஒருவனால் துன்பம்! அவனிடமிருந்து தப்பி வேறொரு இடம் சென்ற பொழுதும் இன்னொரு மனிதனால் பலாத்காரம் எனினும், இசுவா கற்பைக் காப்பாற்றிக் கொள்கிறாள். பின், ஒரு கப்பல்காரனுக்கு விற்கப்படுகிறாள். அவனாலும் கற்புக்குக் கஷ்டம்!
இறுதியில் இறைவனிடமே மீண்டும் உதவிக்கு இறைஞ்ச, புயல்வீசி கப்பல் உடைகிறது. கரை சேருகிறாள் இசுவா - கப்பலில் இருந்த பெரும் செல்வங்களுடன்!
இப்பொழுது இசுவா தன் நிலையைச் சிந்தித்தபொழுது அனைத்து இடையூறுகளுக்கும் காரணம் தான் பெண்ணாக இருப்பதே எனக் கருதுகிறாள். ஆணாக மாறுவதைத்தவிர வேறு வழியில்லை என்று, ஆலிம் போல ஆண் வேடம் பூண்டு "ஷெய்கு இசுவா ஆகிறாள்'

மானா மக்கீன் 275
உடைந்த கப்பலில் கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் அந்நாட்டு அரசனுக்கு அன்பளித்து, அவனையும் மக்களையும் கவர்கிறாள். அந்நிய அரசனின் படையையும் அழித்துதவுகிறாள். ஆண் உடையில் பெண்மையைக் காத்து செல்வாக்குடன் வாழ ஆரம்பிக்கிறாள்.
இதே நேரத்தில், வெளியூர் போய் திரும்பிவந்த கணவன் கபீபுஆலிம் மனைவி கல்லெறிந்து கொல்லப்பட்ட தயரத்தில் மூழ்கிக் கிடக்க, இசுவாவுக்கு இன்னல் கொடுத்த அத்தனைபேரும் ஒர் இனந்தெரியாத நோய்க்கு ஆட்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
இதையறிந்த ‘ஷெய்கு இசுவா' தான் வாழும் நாட்டு அரசன் மூலம் பிணி தீர்க்க தன்னால் முடியும் என அறிவிக்கின்றாள்
அனைவரும் அவள் காலடிக்கு வருகின்றனர். அரச சபையில் மக்கள் சூழ்ந்திருக்க, நோயுற்றவர் தாம் செய்த தீவினைகளைக் கூறச் செய்து தவறுகளை உணரச் செய்கிறாள். இறைவனிடம் அவர்களது நல்வாழ்வுக்குக் கையேந்தி நோய் தீரவைக்கிறாள். இறுதியில் கைப்பிடித்த கணவனுடன் இல்லத்தரசியாகிறாள்.
- இந்த விசித்திரமான கதையில் தொக்கிநிற்கும் பிரதான அம்சங்கள் இறை விசுவாசமும் கற்பின் மாண்புமே.
கண்டிக்கப்பட வேண்டிய, வரவேற்கப்படக் கூடாத ஆண்வேடம் அணிந்தது தன் கற்பைப் பேணவும், தனக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கவுமே என்பதைக் கருத்தில் கொண்டு கதையை வரவேற்கலாம்.
நாட்டார் இலக்கிய மரபில் வந்த படைப்புக்கும் ஒரு மூலக்கரு உண்டென்றும், அது எப்படி தன் கைவண்ணத்தில்

Page 141
276 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
உருவானது என்றும் காத்த நகர் அகமது குட்டிப் புலவர் கவிதைகளாகப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்கள்.
V
அவர் பெருந்தன்மை அவருக்கே சொந்தம்.
பாடல்களை அப்படியே தந்துள்ளேன்.
தேமருவுஞ் சோலைசெறி தென்காயல் நன்னாட்டில் காமருவுங் கீழக் கரையா மெனும்பதியில் மிகுதி யிறையோனை மென்மேற் றவம்புரியும் மகுதூம் கிளையில் மருவுதலாய் வந்துதித்தார்
வேத நெறிதவறார் வேண்டுவதெல் லாமுணர்ந்தோர் ஆதியரு எளிபுறாகீ மாலிமவர் தன் தவத்தால் மானிலத்திற் தீனின் வழியை விளக்கிவைக்கும் சீனி முகம்மதென்னுஞ் சொந்தத் திருநாமமுள்ள 2
ஆலி மவர்கள் அறபிக்கிதா பதனில் வேலியென்னுங் கற்புடைய மெல்லியிசு வாகதையை புன்சொற் றமிழாற் புகலுமுரை செய்ததனை நன்சொற் கவிபாட நாடியதைக் கேட்பதனால் 3
எனது விருப்ப மிளகாம லவர்களும் தனது மனம்விரும்பித் தந்தனர்கள் தப்பாமல் பூமணக்கும் வாவிபொருந்து மிலங்காபுரியில் மாமணக்கும் வாவிசெறி மட்டுக் கொழும்பதனில் 4
கதலி யிளந்தெங்கும் கமுகுபலா மாதளையும் விதமதிக மாகமிகு காத்த மாநகரில் தீனவரில் மிக்க சிறுநயினாப் பிள்ளைமைந்தன் மாண்புறும் புதல்வர் மாமுநயி னாமதலை 5
 

மானா மக்கீன் 277
அகுமதெனுஞ் சிறியே னன்புவைத்துப் பாடுகின்றேன் செகமதி லுள்ளோர் தெளிவாகக் கேட்டருளிர் சின்னுாலும் பாட்டியலுந் திவாகர நன்னூலும் பன்னுால் நிகண்டும் பலநூலும் பார்த்துணர்ந்து 6
பாடுங்கவி வாணர்முன்னே பாவறியான் சொன்ன புன்சொல் கோடுதிகழ் யானையின்முன் குறும்பூனை நின்றதொக்கும் அண்டகூடங்க ளதிர்ந்தயிடி யேறதின்முன் சுண்டி விரலாற் சொடித்தநொடிக் கொப்பாகும் 7
துலக்கமுறுஞ் சூரியனைத் தோற்கவெல்லு வேனெனவே இலக்குதீப் பந்தம் எதிரிசொன்ன வாறதொக்கும் மின்னும் நிறைமதியை வெருட்டிடு வேனெனவே சின்னமினிப் பூச்சி சினந்தெதிரில் சொன்னதுபோல் 8
பாவறியான் சொல்லிற் பழுதாம் பதர் நீக்கி நாவலர்கள் கற்றோர் நலவாகச் சேர்த்தருள்வீர்
மக்கத் திருந்து முகம்மதிற சூல்நெயினார்
தக்க மதினத் தெழுந்துவந்த நாட்துவங்கி 9
ஆயிரத் திருநூற் றறுபதா மாண்டதனில் தோயும் றபீயுல் அவ்வல் துவங்கும் முதற்திகதி கற்பு நெறியுடைய கன்னியிசு வாகதையை சொற்பெரிய செந்தமிழாற் சொல்லுமிந்தப் பாமாலை10
பாடி முடித்துப் பரிவாம் மட்டக்களப்பு நாடதனில் கோறளையூர் நன்னகரில் வாழ்ந்திருக்கும் தீனோர்கள் கண்ட சிறந்தபள்ளி வாசல்தன்னில் தானோ னருளாலே தானரங்க மேற்றினனே. 11

Page 142
278 f இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
- மேற்கண்ட முதலாம் இரண்டாம் கண்ணிகளில் தென் காயல் - கீழக் கரை, சீனிமுகம்மது ஆலிம் அவர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
அவர், அறபுக் கிதாபில் கிடைத்த கதையை இவருக்குச் சொல்லச் சொல்ல கவிதை உருக்கொண்டாளாம் இசுவா.
இரு துறையினருக்கும் எப்படியெப்படித் தொடர்புகள் காலம் 150யும் தாண்டி 159 ஆகிப் போய்விட்டன!
அந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் இந்த இலக்கியம் ஓர் ஏட்டுச் சுவடியாக (கிழக்கிலங்கையில்) சாய்ந்த மருதூரில் இரண்டாம் குறிச்சி கலந்தர் லெவ்வை முகம்மது காசிம் அவர்களிடம் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஒரு சமயம் அதே ஊர்வாசியும் (கிழக்கிலங்கை) கல்முனை சாகிராக் கல்லூரித் துணைஅதிபராக இருந்தவருமான ஜனாப் அலியார் முஸ்ஸம்மில் அவர்களது பார்வைக்குப்பட அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஏட்டிலிருந்து தாளுக்குக் கொண்டு வந்தார். 1979-இல் ஆரம்பித்த பணி 1989- இல் முடிவு பெற்றது. அடுத்தாண்டு கீழக்கரையில் உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடும் வந்தது. மீண்டும் அரங்கேற்றம் நிகழ கீழக்கரை மு.கி.மு. முஹம்மது ஹசன் தம்பி அவர்கள் கொடை நாயகரானார். அன்னார் வேதபுராணம் இயற்றிய நூஹ் (வலி) அவர்களது பரம்பரையைச் சார்ந்தவர்.
மகிழ்ச்சி, மகிழ்ச்சி. கலந்தர் லெவ்வை முகம்மது காசிம் அலியார் முஸ்ஸம்மில் - முஹம்மது ஹசன் தம்பி மூவருக்கும் நன்றி பாராட்டுவோம்.
இப்பொழுது செய்கு இப்ராஹிம் காசிம் அவர்களை அறிமுகம் செய்துகொள்ளும், நேரம்.

மானா மக்கீன் s 279
இவரும் புலவரே! கீர்த்திமிகு கீழக் கரைக் காரரே! புத்தளத்தில் தங்கிய காலத்தில் வரகவி செய்கு அலாவுதீன் அவர்களை அறிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் பெற்றவர்
அச்சமயம் அங்கே இலக்கிய வட்டத்தில் ஒரு ‘கசமுசா
செய்கு அலாவுதீன் புலவர் செல்லத்தம்பி என்பவரை குறைவாகப் பாடிவிட, அவருக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி விடுகிறது.
- கீழக்கரையின் அதிதி, செய்கு இபுராஹிம் சாகிப் புலவரை அணுகிய செல்லத்தம்பி, செய்கு அல்ாவுதீன் புலவர் அவர்களை தூஷித்துப் பாடலொன்று பாடித்தருமாறு கேட்டுக் கொண்டார்.
புலவரும் இசைந்து பாடினார் படுபிரமாதமாக!
பாடற் சுவையறியாக் காடை கடப்புளிகாள் மோடக் கவியுரைத்தோ னாரடா மாடா மானமுங் கெட்டமூடா காட்டிலுறும் வேடா உனக்குரைத்ததாரடா - பன்றி (பாட)
முத்திரை அடி அணியாச்
சுத்தப் பிழையுள்ள கவி
முனைந்தெழுதிய பயல் ஆரடா சினந்து சபை வராததேனோடா நித்திரையோ அக்கவிதான் புத்திமதியற்றவனே நேரினிலே வந்து மொழிகூறடா - பன்றி (Uaru.-)

Page 143
s 28O இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
செய்கலாவுதீன் செப்பிய கவியெனவே ஒப்புடன் சொல்லியே நடந்தாயடா - நீயப்ப தப்பித மொழியை விள்ளலாமோடா ஆதலால் அன்னவரிந்த வசவுரைக்கமாட்டார் அப்புலவர் புகழ் கேளடா - பன்றி (பாட)
சந்திரனிலா வானிலே வந்திருள் சூழ்கையிலே சந்திரன் வந்தவுவமை போலும் மாந்தர் ஒதுங் கலையற்ற கரைத்தீவிலே வந்துதித்தார் இத்தரையின் சுந்தரக் கலையிலங்க செய்கு அலாவுதீன் புலவர் தாமடா - நாயே (U6 C-)
ஊழ்வினையால் இந்நகரில் புகழுறவே வந்துதித்த ஒதுங்கலை வல்லணராமடா - அவர் நீதிக் கவி உரைப் போரடா நீள்பாரத நாட்டில் நிபுணர் பிறக்கவேண்டும் நின்றிலங்கும் அவர் பெருமையடா - நாயே (Uac )
செந்தமிழ்க் கவியறியான் செய்திபுறாகீம் பிழை செயத்தைப் படைத்தோனே மன்னித்தனன் - இந்த இகத்தில் எந்தன் வினையைத் தீர்த்த நல் செந்தமிழ் வித்தகர்கள் வந்த பிழையைத் திருத்தி சிந்தை மகிழ்வுறச் செய்வாரடா - பன்றி (பாட)
எப்படி தூஷணை? எதிர்பாராதது! பன்றியும் நாயும் மாறி மாறி வலம்!
வரகவி செய்கு அலாவுத்தீன் அவர்களை இகழ்வதற்குப் பதிலாகப் போற்றியும், அவர்களை எதிர்த்தவர்களை ஏசியும் பாடல்!
புத்தளம் - கரைத்தீவு அந்தகக்கவி அலாவுதீன் புலவர் அவர்கள் (1890 - 1938) பற்றி முழுமையாக அறிய விரும்புவோருக்கு,

மானா மக்கீன் 281
பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர், இளைய தலைமுறை ஆய்வாளர், எம்.எஸ்.எம். அனஸ் அவர்களது வரகவி செய்த அலாவுதீன்' நூலை (1991) பலமாக சிபாரிசு செய்கின்றேன்.
இங்கே, வரகவி அவர்கள் பாடிப்பறந்த ஒரு கீர்த்தனையை மட்டும் பதிக்கிறேன்.
இது, கீழக்கரை, பல்லாக்கு (வலி) என அழைக்கப்படுகின்ற ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்களுக்காகப் பாடப்பெற்றது.
கண்ணிகள்
பல்லாக்கொலியுல்லா நாயகமே உங்கள் பாதாரம் நம்பினேன் பேர் ஜெயமே நல்வாக்கருளும் என் தாயகமே திருஞான தயாநிதி தூயகமே (பல்லாக்)
தொகையறா
தவராஜ சிங்கமே சச்சுதானந்தமே சற்குரு பதம் தங்கமே சாலோப சாமீப சாருப சாயுட்ச்ய சாது மாமறை பொருள் விளங்குமே (பல்லாக்)
கண்ணிகள்
ஆளைத் தெரிந்திடும் காரணமே திரு வாதி ரஹ்மானின் பூரணமே கீழக்கரை நகர் ஆரணமே என்னில் கிருபை செய்தாளும் தராதரமே (பல்லாக்)

Page 144
282 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
தொகையறா
மங்காத மாணிக்கமே மாசற்ற தீபமே மதிக் கொணாத ஆணி முத்தே மக்கள் பெரியாருடன் சொர்க்க வழிகாட்டவே மாநிலத்தோர் புகழும் வித்தே (பல்லாக்)
கண்ணிகள்
சாகரம் சூழ் புவியின் தீன் வழியே யார்க்கும் தந்து கதி பெற செய்விழியே செய்கலாவுதீன் பா மொழியே எந்தன் சொந்த மனைக் குற்றே காண் விழியே (பல்லாக்)
இலங்கை - கீழக்கரை இனிய நிகழ்வுகளில் காணப்படுகின்ற எண்ணற்ற முத்துக்களில் மேலே கண்டதும் ஒரு நல்முத்து!
இனி, இலக்கியப் பாலமாகிய இறுதிப்பாலத்தில் நடைபயின்று முடிக்க இன்னும் சில மணித்துளிகளே!

283
தமிழகத்தில் இலங்கை முஸ்லிம்களுக்குப் பெருமை சேர்த்த ஐவர்
கொழும்பு ஆலிம் ஸாஹிப் என்ற ஸெய்யித் முஹம்மது அவர்கள். (ஓய்வுறக்கம்: ஹி.1331 ஜமாத்துல் ஆகிர் - 8 ! é. S. 1912)
ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது என்ற அஸ்ஸெய்யித் முகம்மது பின் இமாமுல் அஸ்-ஸெய்யித் ஜமாலுத்தீன். அவர்கள். (ஹி.1254 - 1371 / கி.பி. 1838 - 1951)
ஸெய்யித் ஜமாலிய்யா யாஸின் மவ்லானா அவர்கள். (பிறப்பு: ஹி 1307 - 1386 / கி.பி. 1889 - 1966)
முஹம்மது காசிம் சித்தி லெப்பை. (ஹி. 1254 - 1515 கி.பி. 1838 - 1897)
பாவலர் திலகம் அருள்வாக்கி அப்துல்காதிர் (ஹி. 1283 - 1337 / S.L. 1866 - 1918)
- இந்த ஐவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழகத்தில் ஆன்மிகஇலக்கியத் துறைகளில் முத்திரை பதித்து இலங்கை முஸ்லிம்களுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
கீழக்கரையும் காயல்பட்டினமும் செய்த சேவைகளுக்குப்
பிரதியுபகாரமாக இவர்கள் பணி அமைந்தது என்றும் பதிக்கலாம்.

Page 145
284 இதி இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
1. கொழும்பு ஆலிம் அவர்கள்
காரைக்காலைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தோனேஷியாவைச் சேர்ந்த தாயாருக்கும் புதல்வராக இலங்கை - காலியில் கி.பி. 187075 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த ஸெய்யித் முகம்மது அவர்கள் பின்னர். “கொழும்பு ஆலிம்', 'கொழும்பு ஹஸ்ரத்” எனப்பெரும் புகழடைந்தார்கள்.
காலி - காயல்பட்டினம் - வேலூர் - கீழக்கரை என அவர்கள் ஆன்மிகக்கல்வி பெற்றார்கள். இமாமுல் அரூஸ் (வலி) அவர்களது மாணாக்கராகவும் இருந்து ஞானவிளக்கங்கள் பெற்றார்கள். சில ஆண்டுகள் அரூஸ்ஸியாவின் முதல்வராகவும் திகழ்ந்தார்கள். தாம் பிறந்த காலிக்குத் திரும்பி, அன்றும் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘பஹ்ஜத்துல் இப்ராகிமிய்யா? அதிபராகவும் ஆகி அற்புத சேவையாற்றினார்கள்.
இவ்வாறெல்லாம் உயர்பதவிகள் வகித்தும்கூட, தமிழக முஸ்லிம் கிராமங்களில் இருந்தோருக்கு அடிப்படை மார்க்கக் கல்வியறிவு இல்லாதது அவர்களை மிகவாகப் பாதித்தது. அதில் அக்கரைப்படுவோர் சிலராக இருப்பதைக்கண்டு மனம் நொந்தார்கள். அதற்கென ஓர் அமைப்பையும் ஏற்படுத்த விளைந்தார்கள். (தர்பியத்துல் அத்ஃபால் ஃபீ ரஸ்தில் அமல்)
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், நடைப்பயணமாகவும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்து ஊர்த்தலைவர்களை அணுகி மக்தபு (ஆரம்பப்பாடசாலைகள்) இல்லாத ஊர்களில் புதிதாக உருவாக்கிட உதவினார்கள். இயங்கிக் கொண்டிருந்தவைகளைச் சீர்செய்தார்கள்.
இல்லற வாழ்க்கையை ஏற்காமல், கஞ்சியையும் துவையலையும் தன் அன்றாட உணவாகக் கொண்டு அறப்பணி புரிந்தார்கள்.

Osses மக்கீன் 285
அவர்களால் கிட்டத்தட்ட 666 மக்தபுகள் - மதரஸாக்கள் உருவாகின!
திண்டுக்கல்லுக்கு அருகில் கோவிலூர்ப் பள்ளிவளாகத்தில், சுமார் 40 - 45 வயதிற்குள்ளேயே ஓய்வுறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட அவர்களது நினைவாக அங்கே, கொழும்பு செய்யது முஹம்மது ஆலிம் மேனிலைப்பள்ளி’ இப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இன்னும் பல ஊர்களில் அவர்களது நினைவாகத் தோன்றிய பள்ளிகள், அநாதை இல்லங்கள் உள்ளன. **
அன்னாரது சீடராக இருந்த கீழக்கரை, மவ்லா முஹியித்தீன் ஆலிம் அவர்கள், கொழும்பு ஆலிம் விட்டுச்சென்ற பணிகளை, சென்னை, அல் - மஸ்ஜிதுல் மாமூர் பள்ளி வளாகத்தில் தொடர்ந்தார்கள் என்றும், அங்கேயே வராந்தாவில் ஒவ்வுறக்கம் கொண்டுள்ளார்கள் என்றும் அப்ஸலுள் உலமா முனைவர் தைக்கா சுஐபு ஆலிம் அவர்களது ஆய்வு நூலில் தகவல் உள்ளது.**
2. ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது மவுலானா
பாக்தாத்தைச் சேர்ந்த அஸ்-ஸெய்யித் முகம்மது பின் இமாம் அஸ்-ஸெய்யித் ஜமாலுத்தீன் இளவயதில் வெலிகாமத்தில் வாழ்ந்தவர்கள். இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது மாணாக்கர். ஷரீயத், தரீக்கத் சேவைகளில் முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் ஈடுபட்டார்கள் என்ற தகவலையும் தந்துள்ளார்கள் நமது மதிப்பிற்குரிய முனைவர், அப்ஸலுல் உலமா தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள். * ' −
* 29 'கொழும்பு சையிது முஹம்மது ஆலிம் (ரஹ்) வரலாறு' -
வேல்வார்க்கோட்டை மவ்லவி காதிர் முஹம்மது.
*30-31, மேற்கண்ட இரண்டு தகவல்களுக்கும் ஆதாரக் குறிப்புகள் மேற்படி முனைவரது ஆய்வு நூலின் பக், இல. 302இல்

Page 146
286 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
இவ்வாறு, கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சன்மார்க்கப் பணி புரிந்த இலங்கையர் எவருமிலர்!
இவர்கள் ஓய்வுறக்கம் செல்ல விழைந்தபொழுது வயது 117 (ஹிஜ்ரி கணக்குப்படி) இராமநாதபுரம், தொண்டிக்கு அண்மிய சாம்பைப்பட்டனத்தில் இடம் கிடைத்தது என்கிறபொழுது தமிழ்நாட்டு மண் இவர்களை நேசித்துள்ள விதம் புரிகிறது.
இத்தகவலும், அப்ஸலுல் உலமா, முனைவர் தைக்கா சுஐபு ஆலிம் வழங்கியுள்ளதே.* *
3. ஜமாலிய்யா ஸெய்யித் யாஸின் மவ்லானா
இவர், இதற்குமுன் குறிக்கப்பட்ட ஜமாலிய்யா ஸெய்யித் முகம்மது மவ்லானா அவர்களது மைந்தர். அறிவுத்துறையிலும் ஆன்மிகத்துறையிலும் ஒரு கலங்கரை விளக்கமாக தென்னிலங்கை திக்குவல்லையில் பிறந்தார்கள். ஆரம்பக்கல்வி வெலிகாமம் பாரீ மத்ரஸா, வெலிப்பிட்டியில் திருமணம். அறபுமொழித்துறையில் - குறிப்பாக இலக்கிய ஆய்வில் - தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள். 1911-இல், தமிழ்நாட்டில், மேலப்பாளையம் மஃனல் அஸ்பிய்யாவில் அறிவு தேடினார்கள். இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது நேரடி சிஷ்யரான, அஹ்மது அலி ஆலிம் என்ற ‘இலக்கணப்புலி யிடம் மாணாக்கராக விளங்கினார்கள். மவ்லானா யூஸுஃப் வலியுல்லாஹ் அவர்களிடம் தஸெளஃப் (மெய்ஞ்ஞானம்) கற்றார்கள். தமிழகத்தில் அறநெறி அறிவு வளர்ச்சிக்கு இவர்களது சிறந்த சேவை கிடைத்தது. வட - இந்தியாவிலும் அன்னாரது சேவை பெறப்பட்டது. அங்கே, தேவ்பந்த் தாருல் உலூமில் (உத்தரப்பிரதேசம்) ஐந்தாண்டுகள் முதுநிலைப்
* 32 மேற்கண்ட தகவலுக்கு ஆதாரக் குறிப்பு மேற்படி முனைவரது
ஆய்வு நூலின் பக். இல. 802-இல்,

மானா மக்கீன் Y 287
பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார்கள். அறபு - தமிழ் - சிங்களம் - உருது - பார்ஸி - ஆங்கிலம் - மலையாளம் முதலிய மொழிகளில் ஆளுமைபெற்றிருந்த அவர்கள், பேச்சுத்துறையிலும் வல்லவர்கள். தென் தமிழகத்திலும், வட இந்தியாவிலும் தமது செல்வன்மையால் மிகப் புகழடைந்தார்கள்.
இறுதிக்காலங்களில், வெலிகாமம், கல்பொக்கையில் குடியமர்ந்த போதிலும், இவர்களுக்கு ஓய்வுறக்கத்திற்கான இடத்தை, தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருமுல்லைவாசலில் தீர்மானித்திருந்தான் அனைத்தையும் செயல்படுத்துபவன்!* ?
4. முஹம்மது காசிம் சித்தி லெவ்வை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் வழக்கறிஞர், இதழாளர், கல்வித்தந்தை சித்திலெவ்வையின் (ஹி. 1254-1315/கி.பி. 1838 - 1897) உண்மைப்பெயர் (ஏற்கெனவே தெரிவித்தபடி) முஹம்மத் காசிம். தந்தை பெயரால் அழைக்கப்பட்டு அதுவே நிலைத்து நிற்கிறது. தமிழகத்துடன் அவர்கள் தொடர்பு அதிகம். ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும் பாலம் அமைத்தார்கள். (என் பாலம் எல்லாம் என்ன பாலம்! சாதாரணம்) காயல்பட்டனம் - கீழக்கரை - வல்லம் (தஞ்சாவூருக்கு அண்மியது) - ஆகிய இடங்களில் அறபும் அறபுத்தமிழ் அறிவும் ஊட்டினார்கள். ஹிதாயத்துல் காசிமீய்யா பீஷஹீலில் சியாத்தில் அறபிய்யா (1891 - மே - 15) என்ற அவர்களது பாடநூல் பல இடங்களில் அறபு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியில் அறபுத்தமிழ் செல்வாக்கை இழக்கிற வரை இந்நூலுக்குச் சிறப்பிடம் இருந்தது.
* 33. அ) மஸாஜித் - கட்டுரை. முக்தார் ஏ. முஹம்மது மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் கட்டுரைத்தொகுப்பு) இலங்கை அரசின் முஸ்லிம் இலாகா திணைக்கள) வெளியீடு பக் 62 1995 ஆ 'அறபு மொழி மேதை துணுக்குத்தகவல். - இப்னுமுக்தார் (மிஷ்காத்துல் பாரீநூற்றாண்டுவிழா சிறப்பு மலர் பக். 114. 1984

Page 147
竺器墨 § இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
மேலும் கீழக்கரை தைக்கா ஸாஹிபு (வலி) அவர்களது சீடராக இருந்த வல்லம் ஊர் வள்ளல் குலாம் முகியத்தீன் அவர்களும் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி அவர்களது சீடராக இருந்த கொழும்பு வாப்பிச்சி மரக்கார் பாஸ் அவர்களும் கொடைநாயகர்களாக விளங்கி வெளியிட்ட அன்னாரது "அஸ்ராருல் ஆலம்" (1897 - டிச - 23 இரு கரைகளிலும் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குட்பட்டது மிகப்பிரசித்தமாகும்.
தற்சமயம் இது "மெய்ஞ்ஞானப்பேரமுதமாக மர்ஹும் ஆர்.பி.எம். கனி அவர்களது தொகுப்பில் தமிழகத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது. இலங்கையிலும், அரசு நூல் வெளியீட்டுச் சபை மூலநூலை அப்படியே பிரசுரிக்க தற்சமயம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
5. பாவலர் திலகம் அருள்வாக்கி அப்துல் காதிர்
இறுதியாக - இந்த இலக்கியப் பாலத்தில் நாம் விடைபெற்றுப் பிரியப்போவது, 'அட்டாவதானி - "அருள்வாக்கி" - "வித்துவதீபம்’ என்றெல்லாம் பல நாமங்களை தன்னகத்தே வரித்துக்கொண்ட ஒரு "புலமை மலை யைச் சந்தித்து விட்டு
அன்னாரை எதிர்பக்கத்திலே கண்டு ஷலாம் சொல்லுவோம்.
இலங்கை - கண்டி மாவட்டத்தில் அக்குறனை - மாத்தளை நகரங்களுக்கு நேர் எதிர்த்திசையில் உள்ளது தெல்தோட்டை
జ్మె= "புலவர் மலை" யில் ஒரு "புலமை மலை யையே தன்னகத்தே கொண்டு புகழ்பூத்து விளங்கும் தெல்தோட்டை "பாட்டால் விளக்கிகரித்துப் பாட்டாலே விளக்கனைத்து" பாவலர் திலகம் அருள்வாக்கி அப்துல் காதிர் எனும் அந்தப் பாவலரையே தமிழுக்குத் தந்த நல்லூராகும்

:
38
ஆ.பி. அப்துல் காதிர் புலவர் அவர்கள் உபயம் அரசு வெளியீடு எம்.ஏ. ரஹ்மான்,
* - ." . | வித்துவ தீபம்' மெய்ஞ்ஞான அருள் வாக்கியப்
19

Page 148
290 Af இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
- என்பார்கள் கல்ஹின்னை கவிமணி, ‘நஜ்முல் ஸ0ரா’ எம். சீ. எம். சுபைர் அவர்கள். *
இங்கே, பட்டியகாமம் பிரதேசம், போப்பிட்டிய கிராமம் புலவர் அவர்களது பிறந்த மண் (ஹி. 1283 - 1337 / கி.பி. 1866 ஆகஸ்ட் -30 - 1918). மதுரை - திருப்பத்தூர் ஆதம்பிள்ளைராவுத்தர் பேரன் தந்தையார் ஆ.பி. அல்லா பிச்சை,
திருப்புகழ் - கலம்பகம் - பிள்ளைத்தமிழ் மாலை - பதிகம்புஞ்சம் திரட்டு - எனப்பல்வகைப் பா வடிவங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிதை, வசன நூல்களை ஆக்கித் தந்தவர் அருள்வாக்கிப்புலவர்.
இவரது.முதல்நூல் எனக்கணிக்கப்படும், “செய்ஹப்துல்லாஹ் நாதரவர்கள் பேரில் பதிகம் 1887-ஆம் வருடம் வெளிவந்துள்ளது. சென்னையில் ஆச்சுப் பதிவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரில் முனாஜாத்து, எண்கலை வண்ணம், வன்மெல்லிசை வண்ணம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, அருள்மணிமாலை, அடைக்கலமாலை ஆகியவை அடங்கிய “பிரபந்த புஞ்சம்’ 1901-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. திருவாங்கூர், சுல்தான் முகியத்தீன் வெளியிட்டுள்ளார்.
இதே போல், 'தன்பிஹ" ல் முரீதீன் (ஞானதீட்சை பெறுபவன் அறியவேண்டியது 1911-ஆம் ஆண்டில் இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது தூண்டுதலில் உருவான உரைநடை நூல்.
அன்னாரது சீடர்களுள் இவரும் ஒருவர்.
* 34 ‘கண்டி மாவட்ட முஸ்லிம்கள்' - அத்தியாயம் 7 பக். 162 (1996)
இலங்கை அரசின் முஸ்லிம் திணைக்கள இலாகா) வெளியீடு

மானா மக்கீன் 291
அத்துடன், தனது குருநாதரது மாமனாரான கீழக்கரை தைக்கா சாஹிபு (வலி) அவர்கள் மீது ‘தைக்கா சாஹிபு வலியல்லா அவர்கள்பேரில் பிள்ளைத்தமிழ்’ பாடியும் பெருமைகொண்டார் புலவர் மலையில் புலமை மலை! இந்நூல் 1908-இல், சென்னை *35
முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.*
நல்லது அபிமானிகளே!
நல்ல களைப்பாக இருக்கிறது!
நான்கு பாலங்கள் என்றால் இலேசா
நான் விடைபெறும் வேளை நெருங்கிவிட்டது.
தயவுசெய்து பக்கம் திருப்பிடுக.
* 35. 'சுவடி ஆற்றுப்படை' - முதலாம் பாகம். அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.
ஜெமீல் பக். 28 (1994)

Page 149
292
இலக்கியப்பாலத்தில் துளித்துணுக்குகள்.
வள்ளலுக்கு நெருங்கிய தமிழ்ப் புலவர்கள்
படிக்காசுப்புலவர் - கந்தசாமிப் புலவர் - நமச்சிவாயப் புலவர் போன்றவர்கள் எப்பொழுதும் சீதக்காதி வள்ளல் அவர்களுடன் இருந்தவாறு இலக்கியச்சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.
பாடலில் ஆதம் மலையும் கலிமாநகரும்
புலவர் நாயகம் என்ற சேகனாப்புலவர், கிட்டத்தட்ட 186 ஆண்டுகளுக்கு முன் (1812) உருவாக்கிய நாகூர் ஆண்டகை காப்பியத்தில் பாவா ஆதம் மலை வருகிறது. காலிமாநகரைப் பற்றியும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
திக்குவல்லைக்குக் களித
இமாமுல் அரூஸ் ஆலிம் (வலி) அவர்களது ஆண்மக்களுள் இரண்டாமவரான ஜல்வத்து நாயகம் (சாகுல்ஹமீது ஆலிம் - வலி) தென்னிலங்கை - திக்குவல்லை மீது அழகிய கஸிதா யாத்துள்ளார்கள்.
தைக்க சகிபு மாலை"
சிற்றிலக்கிய வரிசையில் 175 ‘மாலைகளை பேராசிரியர் மு.சாயபு மரக்காயர் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதிலொன்று, ‘தைக்கா சாகிப் மாலை' உருவாக்கியவர் செ. அ. செய்யது ஹசன் மவ்லானா.
கிராமங்கள் தோறும் தலைஃபத்திஹ
கிழக்கிலங்கையில் கிராமங்கள்தோறும் ‘தலை ஃபாத்திகா’ ஒதும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

293
‘மின்ஹத் ஸ்ரந்தீப்”
அறபுத்தமிழில் இலங்கை பற்றிய அழகுமிகு வர்ணனை
ال الینی الجوگر وي از طهٔ الله الئون، شائویی الجزیی اسرائیب مهبط اکدام علیه الكلام الشبكة بكائيرتديه في 3ئقة جتلي الیا رافائلی ایهٔ انفعالیغ مضيّة، كأنها يظعة من سهامشيبة، ومنیگبهٔ بالکنار و ضبهٔ پلی القاجار مسيلة أنهائها، ومكانة أثقائقامهمة أنوارها، ومنظمة القرارها، منغالية قواورها
وتشتيتة بالأبقار أطنانكا، وفيها على ما تمكائك الطرق إلياس علي يملككم وقال ريالي الغيب نجكوعين في القناكم ویرایی آباد و بغضی کنایی بالا فلام
يتكوّإخياوالي الأولي، وقاوتؤيد اللئي الأفضل، والتضدّي على اتجه للأغلى والأشهل، ثم أمل الربيع الأول، مكة
معركة
یونی آشنال فقام، و یشعوی فلکیتاب
f سے یہ رسم I.. سمر سمھ2_, 1: بم په بس 2 ك الأطيمة والأكام ويضعشرؤن وامنيةشلوا 7 سے بے. ان هي سر ut I"ہ مؤلي سيب الأنام ويؤلمؤكها خالفايق و
*,* p - 15 *1/ العاة، نقااخل کارونها غنا فراوانلو تلخلستاریخولی الشتی ، تتھین لینےکا A.
A. ع هم تی % * な *重1へ -乙<* *142 字。”ム。 أخيؤيت، ولعلّك بعض ماشية تكت،

Page 150
"இளைஞர்’ இத்ரீஸ் மரைக்காயர்
கண்டி - மாத்தளை கண்டவர்
எண்பத்தெட்டு வயதிலும் இறையருளால் இளைஞராக சென்னையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தைக்காக்கோத்திர இத்ரீஸ் மரைக்காயர் பெரியவர் அவர்கள் என்னைப் பொறுத்தவரையில் இணையற்ற ஓர் ஆய்வாளர். இலக்கிய வாதி. அப்பப்பா! எத்தனையெத்தனை ஆராய்ச்சிகள்! என்னென்ன இலக்கியக்கண்டுபிடிப்புகள்!
கீழக்கரை கீர்த்திமிக்கது’ என்பதைக் காட்ட அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகள் பலநூறு.
ஆனால் அத்தனையும், கீழக்கரை சரித்திரத்தை முறுக்காக எடுத்துக்காட்டும் வெள்ளை முறுக்கு என்பதா, அல்லது கலகலாப் பலகாரம் என்பதா! நிச்சயமாக ஏதோ ஒன்று! இரண்டுமே கீழக்கரைப்பலகாரங்கள்
தனது மிக இளவயதில் - பதினாறு வயது வாக்கில் - ஊர்க்காரர் ஃபக்கீர் சதக் தம்பியுடன் இலங்கை - கண்டி, கொழும்பு வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர். காயல்பட்டினம் கே.வி.எஸ். செய்யிது அஹ்மது மாத்தளைக் கடையில் ஒன்னரை ஆண்டுகள் இருந்துள்ளார்கள்.
A. Sodi
C)
AO AO SAN
 

295
விடைபெறும் வேளை.
கீர்த்திமிகு கீழக்கரை மக்கள் ஒரு விடயத்தில் ஆழ்ந்த
நம்பிக்கை உடையவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘ஒருவனுக்கு ஒன்றைப் பெறுவதற்குத் தகுதியிருக்குமானால், உலகமே எதிர்த்து நின்றாலும் திண்ணமாக அவன் அதை அடைந்தே தீருவான்’
- என்பதாம் அவர்கள் உறுதிப்பாடு!
இது, இந்த ஆய்வுக்கும் தொகுப்புக்கும் சரியான உதாரணம்.
என்னை, இப்பணி ஆற்ற, படைப்புக்களின் அதிபதி எப்பவோ தேர்ந்தெடுத்துவிட்டது போல காரியங்கள்!
நான், 1990-ஆம் ஆண்டில் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிப் பெருமகனார் ஒய்வுறக்க இடத்தில் நின்றவனாக அவர்கள் கோலம் கண்டு கண்ணிர் சொரிந்தேனே, அப்பொழுது யாரோ முன்பின் தெரியாத ஒருவர், என் தோளினைத்தட்டி, ‘இனி இந்தப் பேனாவினால் தான் எழுதவேண்டும் நீங்கள்’ என ஒரு பேனாவைத்தந்து மறைந்தாரே, அப்பொழுதே ஒர் உந்துதலையும் ஊக்குவிப்பையும் பெற்றேன் என்பதை இப்பொழுது உறுதியாக நம்புகிறேன்.
அறிஞர் பெருமக்களும் நுழைய அஞ்சக்கூடிய ஓர் இடத்தில் முட்டாள்கள் முன்பாய்ந்து செல்வதுபோல இப்பணியில் ஈடுபட்டேன். ஆரம்பித்த நாள்தொட்டு அற்புதங்கள் தான்! அதிசயங்கள்தான்!

Page 151
296 tiŞf இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
நூலாய்வுக்குச் செய்திகள் கிடைக்குமா என்று அஞ்சி மருண்டதற்குப் பதிலாக “நூல் பெரிதாகப் போய்விடக்கூடாது தகவல்களைச் சுருக்க வேண்டும். என் அபிமானிகள் என் மீதுள்ள கொண்டுள்ள அபிமானம் குறைந்து விடக்கூடாது. உதவிசெய் இறைவனே’ எனக் கையேந்தும் நிலையாகிவிட்டது!
இத்தனைக்கும், இலங்கையில் என் ‘குருவிக்கூட்டு' க்குள் இருந்தவாறே குருவியைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டேன். ஆனால், எல்லாம் வல்லவனோ, எங்கெங்கெல்லாமிருந்தோ எத்தனையெத்தனையோ விடயங்களைக் குவிக்கச் செய்தான்.
இறுதிப் பொழுதுகளில் உலகத் தமிழ் பண்பாட்டுக்கழகத் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் ஏ. றஃபீயுதீன் ஆற்றிய அளப்பரிய ஒத்துழைப்பு நள்ளிரவையும் தாண்டியது. நன்றி மறக்கமாட்டேன்.
ஆய்வுச்சுமையைத் தாங்க முடியாமல் இடையிடையே இதயமும் நோவு கண்டது.
அப்பொழுதெல்லாம், என் நிழல்' என்னைக் கண்ணாகக் கவனித்து, துணைவி என்பதற்கு இலக்கணம் சொன்னார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்! பேனாவைச் சில நாட்களுக்கு ஒய்வெடுக்க அனுமதிக்கிறேன்.
அனைத்துப்புகழும் அவன் ஒருவனுக்கே!
நீங்க கட்டாயம் என்னோட தொடர்பு வைக்கணும். நன்றி.
54-1/2 என்ஹெச்.எஸ்.
தேசிய வீடமைப்பு வளாகம், கொழும்பு - 10 இலங்கை,
gf தொலைபேசி: 332225 رهارac]A ض)رb ଜ୍ଞ

297
ஆய்வில் பார்வை பதித்த நூற்பெயர்க்கோவை
BBLOGRAPHY
தமிழ்
1. இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (1997) - எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம்
(UT5th 2) (மர்ஹ9ம்) 2 இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்(1963) - ஆர்.பி.எம்.கனி
(மர்ஹ9ம்) 3. இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு (1986/96) - பேராசிரியர் மு.சாயபு
மரைக்காயர்
4. இஸ்லாம் வளர்த்த தமிழ் (1984) - கலாநிதி ம.மு.உவைஸ் 5. இஸ்லாமிய குழந்தை - புலவர் அ. அகமது
இலக்கியம் (1980) பஷர் எம்.எ.
6. இஸ்லாமும் தமிழும் (1975) - எஸ். பொன்னுத்துரை 7. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய
மாநாட்டு மலர் (1978)
-
8. இளைஞர் இஸ்லாமிய
கலைக்களஞ்சியம் (1991) - கலைமாமணி மணவை
முஸ்தஃபா
9. இசுவா அம்மானை (1990) - அகமது குட்டிப்புலவர்
(மர்ஹலம்) அலியார் முஸ்ஸம்மில் w (பதிப்பாசிரியர்) 10. இதயத்தில் வாழ்வோர் (1996) - அ.லெ.மு. ராசிக் 1. தமிழகத்தில் மார்க்கோபோலோ
இபுனு பதூ தா (1981) - எம். இத்ரீஸ் மரைக்காயர் 12. கீர்த்திமிகும் கீழக்கரை (1986) - எம். இத்ரீஸ் மரைக்காயர்
13. நானிலம் போற்றும் நன்னகர் (1990) - எம். இத்ரீஸ் மரைக்காயர்

Page 152
ਅ 298 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
14. நினைவு மலர்கள் (1996) - எம்.இத்ரீஸ் மரைக்காயர் 15. சீதக்காதி நொண்டி நாடகம் (1873?)
(பதிப்பாண்டு - 1953 - டாக்டர் எஸ்.முகம்மது
ஹ0 சைன் நயினார் (பதிப்பாசிரியர்) 16. சீதக்காதி திருமண வாழ்த்து (?) - எட்டயபுரம் உமறு
கத்தாப் புலவர் (பதிப்பாண்டு - 1953) - பதிப்பாசிரியர் டாக்டர்.
எஸ்.முகம்மது நயினார் 17. சீதக்காதி திருமண வாழ்த்து (1996) - பேராசிரியர் மு.இ.அகமது
உரைநூல் மரைக்காயர்
(உரையாசிரியர்) 18. சீதக்காதி வள்ளல் (1953 - டாக்டர் எஸ்.முகம்மது
ஹ0 சைன், நயினார் 19. வள்ளல் சீதக்காதி வரலாறு (1981) - 560)Goldstuogof
கா.மு.ஷெரீஃப் 20. வள்ளல் சீதக்காதியின் வாழ்வும்
காலமும் (1983) - கேப்டன் பேராசிரியர், கேப்டன் என்.எ.அமீர்
அலி எம்.எ.
21.
22.
23.
24.
ஈதலறம் பேணிய சீதக்காதி (1960) - முகம்மது முஸ்தஃபா தமிழில் இஸ்லாமிய இதழ்கள் (1994 - முனைவர் அ.மா. சாமி தமிழக தர்காக்களும்
பள்ளிவாசல்களும் (1996) - முகவை முஸ்தஃபா தமிழகத்தில் முஸ்லிம்கள்-போர்ச்சுக்கீசியர் வருகைக்கு முன்பும் பின்பும் (1985) - டாக்டர் பி.எம். அஜ்மல் கான் எம்.எ, பி.ஹெச்.டீ

மானா மக்கீன்
299
25
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
54. 35.
36.
37.
தமிழகத்துத் தர்காக்கள்
தாமிரப்பட்டனம்
பாண்டியர் வரலாறு
பிறைக்கொழுந்து
கீழக்கரை சிறப்பு மலர்
கருத்தரங்ககோவை
மாத்தளை மாவட்ட மலர்
அநுராதபுர மாவட்ட மலர்
மாத்தறை மாவட்ட மலர் கண்டி மாவட்ட மலர்
அம்பாரை மாவட்ட மலர்
புத்தளம் வரலாறுகளும்
மரபுகளும்
மருதை முதல் வகுதை வரை
(1981)
(1979)
(1979)
(1990)
(1990)
(1992)
(1992)
(1995)
(1996)
(1997)
(1992)
(1990)
- ஜே.எம்.சாலி
- எம்.கே.ஈ.மல்லானா
(மூல ஆசிரியர்: இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி)
- டி.வி. சதாசிவப்
பண்டாரத்தார்
- அ.இ.தமிழிலக்கிய 4ஆம் மாநாட்டு கட்டுரைத் தொகுப்பு
- மேற்படி 5ஆம் மாநாட்டு
கட்டுரைத்தொகுப்பு.
- மேற்படி 5ஆம் -
மாநாட்டுக் கட்டுரைத்தொகுப்பு.
- இலங்கை அரசின்
முஸ்லிம் திணைக்கள இலாகா) வெளியீடு
- மேற்படி
- மேற்படி
- மேற்படி
- மேற்படி
- தாஜுல் அதீப்
ஏ.என்.எம். ஷாஜஹான்
- அல்ஹாஜ், கலாநிதி
ம.மு.உவைஸ்:

Page 153
300 இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
நம் முன்னோர் அளித்த அருஞ்
செல்வங்கள் (2ஆம் பாகம்) (1969) -
யாழ்ப்பாண முஸ்லிம்கள்
வரலாறும் பண்பாடும் (1979) -
சேதுமன்னர் செப்பேடுகள் (1994) -
வரகவி செய்கு அலாவுதீன் (1991) -
மிஷகாத்துல் பாரீ நூற்றாண்டு
சிறப்பு மலர் (1984) -
மீலாத் மலர் (1982) -
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (1997) -
சுவடி ஆற்றுப்படை
(முதலாம் பாகம்) (1994) -
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் (1970) -
கல்பிட்டி (இலங்கை) அல்-அக்ஸா மகா வித்தியாலய வெள்ளிவிழா மலர் 1980
ஹத்யா ஷரீப்
செய்கு நாயகம் சிறப்பு மலர் (1967)
டாக்டர் தைக்கா சுஐபு அவர்களின் சேவைகள் மலர் (1994)
பேராசிரியர் எஸ்.எ. பேக்மன் ஜி.ஸிமெண்டிஸ்
எம்.எஸ்.அப்துல் ரஹீம்.பீ.எ.
டாக்டர் எஸ்.எம்.கமால்
எம்.எஸ்.எம். அனஸ்
பிரதம-ஆசிரியர் :
முத்தார் ஏ.முகம்மது. பி.எ. சி.ஈ.எஸ்.
கலைமாமணி மணவை
முஸ்தஃபா
முகம்மது சமீம்
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.
ஜெமீல்.
எம்.ஆர்.எம்.
அப்துற்றஹீம்
எம்.எ.எம். ஜவாத்
மரைக்காயர்
மில்லத் வெளியீடு
தேசிய ஒருமைப்பாட்டு இயக்கம்

மானா மக்கீன் 301
நாளேடுகள் / வார இதழ்கள்
தினகரன் (இலங்கை) தினகரன் வாரமஞ்சரி (இலங்கை) தினக்குரல் (இலங்கை)
இதய வாசல் (ஆய்யம்பேட்டை - தமிழகம்)
ஆய்வுப்பிரதிகள் (இன்னும் அச்சில் வராதவை)
ஜனாப் ஜே.ராஜா முஹம்மது -பீ.எஸ்.சி. எம்.எ. (சரித்திரம்),
எம்.எ. (தொள்) எம்.எ, பீ.ஜி.எல். காப்பாளர் அரசு அருங்காட்சியம். - புதுக்கோட்டை
ENGLISH
l.
Arabic, Arwi And persian In
Sarandib And Tamillnadu (1993) - Afdalul Ulana Dr. Tayka Shuayb Alim B.A.(Hons), M.A., Ph.D., M. F.A.
Muslims of Sri Lanka -
Avenues to Antiquity (1986) - Dr. M.A.M. Shukri
(Sri Lanka) , Muslims in Ceylon (1964) - S. Arasaratnam. Muslims of Sri Lanka under the British. - Dr. Kamil Asad
(Sri Lanka) Muslims in the Kandyan Kingdoms - Lorna Devaraja
(Sri Lanka)

Page 154
3O2 ಘ್ವಿ இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
10.
1.
2.
14.
15.
16.
A History of Sri Lanka (1981) - K.M. de. Silva
(Sri Lanka)
History of Ceylon (1932) - Fr.S.G. Perera.
(Sri Lanka) Discovering Ceylon (1981) – R.L. Brohier. (Sri Lanka)
Monograph of the Batticaloa District of the Eastern province
of Ceylon (1921) - S.O. Kanagarathnam
(Sri Lanka)
True and Exact Description of the Greater Island of Ceylon. (1672) - Riverend Philipps
Baladus.
The portuguese policy in Ceylon(1972) - Dr. Colvin R.DeSilva.
1617-1638 (Sri Lanka) Portuguese policy Towards Muslims. (Ceylon Journal of Historical and Social studies) (1966) - Dr. Colvin R.DeSilva
(Sri Lanka)
. The portuguese and pearl Fishing
off south India and Sri Lanka. (1978) - Dr. Colvin R.De. Silva.
The portuguese Seaborne
Empire. 1415-1825 (1969) - C.R. Boxer.
The portuguese Rule in Ceylon.
(1594-1612) (1966) - Tikiri Abeysainghe
(Sri Lanka)
The Foundation of Dutch power in Ceylon 1638-1658 (1958) - Prof. K.W. Goonewardene
(Sri Lanka)

厦0仔6顶J மக்கீன் 303
17. Glimpses from the past of the
Moors of Sri Lanka (Moors in the Dutch period) (1976) - Prof. K.W. Goonewardene
(Sri Lanka)
18. Secret Minutes of the
Dutch political council (1954) - J.H.O. Paulusz.
19. Dutch power in Ceylon
(1658-1687). (1958) - S. Arasaratnam.
20. Indian Economic and Social History
Review. Vol.IV.No.2. (Dutch Commercial Policy and its effects on Indo-Ceylon Trade 1690-1750. (1967) - S. Arasaratnam.
21. Tamil Culture. Vol.XI.No. 1.
('A Seventeenth Century Commercial Magnate -Periathamby
Marikar”) (1964) - S. Arasaratnam.
22. University of Ceylon Review Vol.XXI.
No.l. (The Nainativu Tamil Inscription of Parakramabahu I) (1963) - Dr.K. Indrapala.
(Sri lanka).
23. The Travels of Marcopolo (1958) R.E. Latham (London)
24. Ibn Battuta - Travels in Asia
H.R. Gibbs.
and Africa (1325-1354) (1957) - 25. Historical Sketches of
Ancient Dehkan (1917) - K.V.Subramainya Iyer.
26. Prince of poets and ports.
Chitakkathi the Maraikayar Shalman David and and Ramnad Subramaniyam Sanjay.

Page 155
з04 ఫ్ళి இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்
27. South India and Her
Muhammadan Invaders (1921) - S. Krishnaswami
Ayyangar.
28. The Book of the Pearl. (1908) - George Frederic K.C.H.
Stevenson.
29. Fathud Dayyan Fi Fiqhi
Khayril Adyan - Imamul Arus (Wali)
Translation - Saifudin J. Durai. (Sri Lanka) 1963.
RECORDS / DOCUMENTS
1. Ramanathaapuram District Gazetteer. (1886)
2. Imperial Gazeteer of India.
3. Gazetteer of the Puttalam District of the North Western province of
Ceylon. - Frank Modder.
4. Selection from the Dutch Records of the Government of Ceylon. No.4.
(Memori ofJohn Gideon Loten).
5. Lenin Social and Historical Reserach Institute (Mana Madurai- 1984).
6. Tamil Nadu Archives- Diary and consultation Book Arthur T. Prigle.
1894.
7. City Courier” - Dutch Record. 1690-January, 30.
Dutch Power in Ceylon Documents - (1602-1670) Paul E. Pieries.
9. TNA - Dutch Record. No. 352/29-8-792. 30-8-1792 / General
Catalogue. 1671-1856.


Page 156


Page 157
வரலாற்றை இழக்கலாமா? ஒரு சமூகததி: கடந்தகால வாாப்ாற்றுப Lil FT PL fil Lr பற்றிப் பேசுதல் கருத்தற்ற ஒரு வீன செய&ோறும அது பழங்கதைகள் பேசி மகிழ்வதில் :ெமே 5 அனுபவம் போன்றது எனறும் கடநதகாலத்தை ட ானோகக்ப பாக்காது முன்னேறிச செ: வேண்டுப arah si: gai Islui -'
வரலாற்றுப பாரம் பசிபும் பரநிய டெனாவுேம பிக்ஞையும் ஒவபொரு மிளிதறுகதம அங்: 415: சமூகத்திற்கும் மிக அவசியமானதாகும் தE Eர்தலுக்! TttTTLTTS LLLLSL LLLLLyATTTS STAAT ATA 0E - # x # # :: ±z, s-ro « Jr Ajmigu ĝi ĝiaF1-S?TCL Tropo«r: ke? இந்: பூரிகள் நடைப்பிரமாகக் காட்சியளிப்பார் அங்வா:ே
பா:றனர இழந்த சமூகமும்
HTMASu u TTEM KTtTTHJ S S aLL LL LHHLSLTSaS அறிவியாரும் ஆங்ா அவா த&து வாலாரது E* ஆனாரு பாதிய அணி: துரு:ளில் காவிய கடந: *r. 11 po 18134 i பயணத்தி: பாதர் சுவடுகள் என்றழைத்தா அதி: அவ1
SLLLLLLeu uTT LLS T T TT kaaT Taa AAAAS அவள் நடந்து செல்லும்போது, தனது ப"த" REALIF, 3-3. Er ஆண்ணில் பதித்துவிட்டுச் செல்வது போல க181 என்னும் பயணியும் தன் பாதச உப4ேளைப i: -
I al 1 CE. I TETI E fick TTF.
3 Gran GIEJ TIET FÅ 183 34 eur*** மிக அழகா Hal i å samt
ஆாழ்வு அதன் கடநத சிங் al 7 si riu i tri-ciri. முதுகில் நடந்து கொண்டே முன்னேறிச் செல்கின்றது எந்தவொரு சமூகமும் அதன் ###1 FJ ಕ್ಲಿಕೆ: உருவாக்கிய கடந்தகாழ் வரலாற்றை تفنن ليتيتيا நிராகரித்தல் முடியாது"
Sir P. Tu s situšu ligio Go opo šo கடநஐகார நிகழ்வுகளைத் தொகுத்து கூறும் சமபங் EL, FT k i - K-IT -- - - - - -ti: r r roll: Fjell PJ IP, rf: பதிவேடாகும். அறிவுத் தேவைகளில் ஒன்றாக அ e al GT. Ju 1931 u பற்றி மூாபRம் முன்னோா ந:ள் அறிந்திருந்தார். இஸ்ஜாம் அதற்கே சிறப்பாக உரிய arாநறுத ஆபத்தைக் கொண்ள்ேளது
இநத யாகயில் "வரலாற்றை இழங்கப்ாமா? 19 கேள்வி கேட்டு பதிலும் சொல்ல முனைந்திருககிற எ! § mann a srgy , piai l i III ETF :* fi" - Elf- " முயறசியைப் பாராட்டுகிறேன. துள்ளாாது சேபை சமூகம் மறந்திடப்ாகாதெனவும் வேண்டி நிறகிறேன்
முனைவர் (கலாநிதி, எம்.எ.எம். சுக் பணிபபாளர் நாயகம், ஜாமிஆ நளியேயா, துேர்வன: இங்கே

: