கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்

Page 1


Page 2

மட்டக்களப்பு மக்கள்
QIQITJb QITij605uji
தொகுப்பர்திதிக். வித்துவான் F. X, C. நடராசா
மட்டிக்களப்பு இந்து வாலிபர் முன்னணி வெளியீடு
1980.

Page 3
பதிப்புரிமை:
இந்து வாலியர் முன்னணி, மட்டிக்களப்பு.
விலை: ரூபா 15/-
அச்சகம்:
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.

மட்டக்கவிப்1 இந்து வாலிபர் முன்னணி
பதித்து வழங்கும் பெருநூல்
LDL Lj 5 6T ÖL ID ö h 6 6l 6T typ i 6 TT jh jih 6) 35 LID
இந்நூல் நன்முறையிலமையக் கவிதை கட்டுரைகளை எழுதி உதவிய நல்லறிஞர்கள் அன்பர்கள் என்றும் போற்றப்படுகின்றனர்.
திமிலைக் கண்ணன் திரு. வித்துவான் F. X, C. நடராசா திரு. K. கணபதிப்பிள்ளை B.A., F. R. G. S. திரு. ம. சற்குணம் B. A. சிறப்பு M. A. வியாகரண சிரோமணி பூரண - தியாகராஜக் குருக்கள்
B. A. Split திரு. செ. எதிர்மன்னசிங்கம் B. A. சிறப்பு 35. 5. 5LUTFT B. Ed. Go M. A. திரு. வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா B, O, L. திருமதி. ப. பாக்கியராஜா B. Sc. கண்மணி அருஞசலம் திரு. க. மகேஸ்வரவிங்கம் B. A. பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
இவர்களின் கவிதை கட்டுரைகள் நூலில் இடம் பெறுகின்றன.
எங்கள் நன்றி என்றென்றைக்கும் உரியதாகுக.
எஸ். எஸ். சூரியகாந்தன் இந்து வாலிபர் முன்னணி அமைப்பாளர்.
-iii

Page 4
கிழக்கிலங்கை இந்து வாலிபர் முன்னணி (அரச பதிவு இல. ம. 42)
திரு. வி. சாம்பசிவஐயர் உ. அ. அ. (ம. வ.)
அமைப்பாளர்:
திரு. எஸ். எஸ். சூரியகாந்தன்
தலைவர்: திரு. ம. சச்சிதானந்தசிவம்
உப தலைவர்:
திரு. இ. சுப்பிரமணியம்
இணைச் செயலாளர்கள்: திரு. து. சிற்சபேசன், திரு. ப. மகாதேவா
உப செயலாளர்கள்;
திரு. அ. சிவசுப்பிரமணியம், திரு. மு. சுதர்சன்
நிதிச் செயலாளர்: திரு. க. ரவிரஞ்சன்
கணக்குப் பரிசோதகர்கள்: திரு. ச. சந்திரகுமார், திரு. பொ. மகேந்திரன்
பத்திராதிபர் குழு திரு. ந. சுந்தரேசன், திரு. தி. ரவீந்திரன், திரு. இ. துரைரத்தினம்
செயற்குழு: ம, வரதராஜன், மு. நடராசா, இ. கேசவன், சு. இராசவரோதயம்,
செ. செல்வரஞ்சன், சி. சிவசீலன், த. பூறிதரன்
-iv

தொகுப்பாசிரியர் உரை
இசையாற் திசைபோயது மட்டக்களப்பு மாவட்டம். அது கடலுங் காடுங் காவுஞ் செறிந்த நாடு. ஆறிடுமேடும் மட்டமான மலைப் பாங்கரும் நிறைந்த பிரதேசம். கடல்படு திரவியமும் காடுபடு திரவியமுங் கதித்த பேரிடம். வண்டு கள் பாடித் தேடின தேனை நிறைய உண்ட மீனினம் பாட ஆடுகள் மாடுகள் பால் சுரக்கும். தேனும் பாலுங் கலந் தோடும் ஆற்றலைகள், நாட்டை நோக்கிச் சடுகுடு போட்டு வரும் கடலலையினை எதிர்த்துப் போராடும் மெட்டிற்கிசைய மச்சங்கள் பாடியும் ஆடியுங் காட்டும். பாலுண்டுகளித்த நாகிளங்கன்றுகள் எட்டடி போட்டுத் துள்ளிக்காட்டும். பாட் டில் அகவலோசையைக் காட்டிய கலாபங்கள் தோகை விரித்து ஆடிக்காட்டும். மக்களோ கொட்டு மத்தளங் கொட்டி நாட்டுக் கூத்துக்களை
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தா தெய்ய தா தளங்கு திதிங்கிண
என்று ஆடிக் காட்டுவர். எனவேதான் இசையாற் திசைபோயது மட்டக்களப்புஎன்ரும்.
தேனடு, மீனுடு, நென்னடு, பானுடு என்று பன்னப் படும் குணதிசை மாநகரினை நெடுநீளம் பொருந்திய களப்பு சூழ்ந்திருப்பதினல் இங்குத் தேனுண்டு; மீனுண்டு; பாலுண்டு; நெல் உண்டு. மண்ணகமும் விண்ணகமுந் தந்த நீருண்டு எனவே கிராமங்கள் பல. கிராமங்கள் தோறும் கண்ணகி கோயில்கள் கூ த் து மேடைகள் மரத்தடிதோறும் மன் றங்கள்.
ஈழவளநாட்டின் குணபாலமைந்த களப்பு எனும் பெய ரால் வழங்கும் மாநிலம் கயமும் வயலும் நிறைந்த பிர தேசம் என்பர். கடலேரி பரந்தும் தொடர்ந்து மிருப்பதால் நெய்தலும் மருதமும் தம்முள் மயங்கியும் முயங்கியுந் திரிந் தும் பொலிந்திருப்பது எவருக்கும் புலணுகும். காரெருமை கயத்திற் பாயக் கயலினங்கள் வாழை, மா, பலா, தென்னை, கமுகு எனும் நறுங்கனி மரங்களிற் துள்ளிப்பாய தேனிரு கிழிந்திழிந்த மது நீரோடு கலந்து வயல் வழிச் சென்று இன் னினிமை நென்மணிகளைத் தோன்றச் செய்யும். எனவே அன் னம் பாலிக்குஞ் சிற்றம்பலம் போலாயது மட்டக்களப்பு. !
-V —

Page 5
இவ்வண்ணம் வளமும் வண்மையும் வாய்ந்த மட்டக் களப்பு மாநிலத்தின் சரித்திர வரலாறுகளையும், இவ்விடம் வாழும் பெருமக்கள் பாரம்பரியம், வாழ்க்கை முறை, கலா சாரம், பண்பாடுகள் இவற்றையும் உள்ளடக்கிய ஆதார பூர்வமான நூலொன்று எழுதப்படல் வேண்டுமென்ற கருத் தொன்றினை கிழக்கிலங்கை இந்துவாலிபர் முன்னணி படித் தறிந்தார் மத்தியில் வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நல்லறிஞர் பலர் பல்வகை நோக்கிற் கட்டுரைகளை வடித் துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டனர். தந்தார் கள் சிலர். பலர் ஏனுேதானே என்று வாளாவிருந்தனர்.
மட்டக்களப்பு என்னும்போது சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இருவரும் எவருக்கும் முன் னிற்பர். அவர்களிருவரின் மொழிபற்றிய கட்டுரைகள் இந் நூலுக்கு அணி செய்வனவாக அமைகின்றன.
இங்ங்னம் வந்த கட்டுரைகளை வகைதொகைப் படுத்தி அச்சுக்குக் கொடுக்கும் பொறுப்பு என்னிடம் விடப்படலா யிற்று. கட்டுரைகளை வகைதொகைப் படுத்தி அத் தி யாய முறையிற் பிரித்து முறைப்படுத்துவதில் அன்பர் திரு. ம. சற் குணம், திரு. செ. எதிர்மன்னசிங்கம் இருவரின் ஆலோசனை உறுதுணையாயிற்று. சரவைபார்த்துத் திருத்துவதிலும் ஒத் துழைத்தனர்.
கிழக்கிலங்கை இந்து வாலிபர் முன்னணியின் அமைப் பாளர் திரு. எஸ். எஸ். சூரியகாந்தன் நாளாந்தம் என்னைச் சந்தித்து அச்சேற்றும் பணியில் வெகுவாய்ச் சிரமப்பட்டு ழைத்தனர்.
இவ்வகையில் இந்நூல் நிறைவேற வழிவகுத்து கட் டுரை எழுதி உதவிய நண்பர்கள் அன்பர்கள் யாவருக்கும் இந்து வாலிபர் முன்னணி இதயபூர்வமான நன்றியைத் தெரி விக்கின்றது. கட்டுரையாளர் உதவியின்றி இந்நூல் உருப் பெற்றிருக்கமாட்டாது என்பது நூலினை வாசிப்போர்க்குத் தெள்ளிதிற் புலப்படும். −
இஃதிவ்வாருக இந்நூல் நிறைவேற உதவிய நண்பர் களுக்கும் இனிது அச்சேற்றிப் பேரூக்கமளித்த மட்டக் களப்பு கத்தோலிக்க அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி.
53, மத்திய வீதி, F. X. C. 5L J TssT
மட்டக்களப்பு.
-vi

உள்ளடக்கம்.
எங்கள் நாடு
திமிலைக்கண்ணன்
1. அத்தியாயம் 1
1. மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்
வித்துவான் F. X. C. நடராசா
i. மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல்
வரலாறும் இடப்பெயர்களும் 26 K. Svou S)ůlstv2am B. A., F. R. G. S. முன்னைநாள் அதிபர்.
i. மட்டக்களப்புத் தமிழ் மக்கள் 46
வித்துவான் F. K. C. நடராசா
2. அத்தியாயம் 2
சமூகம், குழுக்கள், சாதிகள், குடிகள் 49
Lo. agib356OSTúd B. A. Gaspt, M. A. சனசமூக நிலைய அதிகாரி
3. அத்தியாயம் 3 சமயம்
1. சிவசக்தியின் தனிப்பெருங்கருணை 61
வியாகரண சிரோமணி
பூரண - தியாகராஜக் குருக்கள் B. A. சிறப்பு சிவாநந்த வித்தியாலயம்
i. இந்து சம்யப் பண்பாட்டு முறைகள் 6S
செ. எதிர்மன்னசிங்கம் B. A. சிறப்பு கலாசார உத்தியோகத்தர்
i. மட்டக்களப்பு மக்களது சமய சமரசப் பண்பாடு 12
ந. நடராசா B. Ed. சிறப்பு M. A. வின்சன்ற் வித்தியாலயம்
-vii

Page 6
4. அத்தியாயம் 4 கலேயும் கலாசாரமும்
1. மட்டக்களப்பின் பாரம்பரியக் கலேகளும்
அவற்றின் சிறப்பியல்களும் S.
செ. எதிர்மன்னசிங்கம் B. A. சிறப்பு கலாசார உத்தியோகத்தர் i. மட்டக்களப்பின் மந்திர வழக்கம் 97. வித்துவான் பண்டிதர் வி. சி. கந்தையா B.O.L. முன்னேநாள் அதிபர் i. மட்டக்களப்பு மக்கள் வாழ்க்கையில் சாத்திரங்
கேட்டல், சகுனம் பார்த்தல், உபசரித்தல். 104
திருமதி ப. பாக்கியராஜா B. Sc. அதிபர் மட்/வின்சன்ற் வித்தியாலயம். iv. மட்டக்களப்பு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் கண்மணி அருளுசலம், அதிபர். 108
5. அத்தியாயம் 5 சைவாலய வரலாறு
1. திருப்பெருந்துறை பூரீ முத்துக்குமார
வேலாயுத சுவாமி கோயில் 111 ii, பூரீ மாமாங்கேஸ்வரப் பெருமான் கோயில் 15 i. கொத்துக்குளத்து மாரியம்மன் கோயில் 123
செ. எதிர்மன்னசிங்கம் B, A, சிறப்பு கலாசார உத்தியோகத்தர்
iw. திருக்கோயில் திருமுருகன் ஆலயம் 18 ம. சற்குணம் B, A, சிறப்பு M. A. சனசமூக நிலேய அதிகாரி
w. கொக்கட்டிச்சோலே தான்தோன்றீஸ்வரர் ஆலயம் 135
க. மகேஸ்வரவிங்கம் B, A. கிராம அபிவிருத்தி அதிகாரி
wi. சித்தாண்டிச் சித்திரவேலாயுத சுவாமி கோயில் 147 ம. சற்குணம் B. A. சிறப்பு M. A. சனசமூக நிலேய அதிகாரி
6. அத்தியாயம் 6 மட்டக்களப்புத் தமிழ்
i, சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும் 149
பேராசிரியர் சுவாமி விபுலானந்தப் i. மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் தமிழ்ச் சொற்கள் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே 157 அனுபந்தம் திருப்பதிகம் 164
-Wiii

முதலாம் அத்தியாயம்:
1. மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்
ET) · LiacTL17gir வரலாற்றுக்கு ஆதாரமான செய்திகளேக் கொண்ட நூல்கள் காலத்துக்குக்காலம் தோன்றியுள்ளன. அவற்றின் கண் பல ஐதிகக் கதைகளும் புராண இதிகாசக் கதைகளும் பொலிங் துள்ளன. இவ்வகைக் கதைகளேயும் அவற்ருற் பெறக்கூடிய வரலாறு களேயும் காலவரிசைக் கிரமத்தில் ஒழுங்குபடுத்திச் சுத்தமான புடமிட்ட வரலாற்றினே எழுதி அச்சிடல் வேண்டுமென்ற மனக்கிளர்ச்சிகள் காரணமாக மட்டக்களப்பின் வரலாறு எழுதுவதற்கு முற்பட்டோம்.
இவ்வகையில் உபகாரமாகவிருக்கும் நூல்கள்ேயும், ஏடுகளேயும், கல்வெட்டுகளேயும் காலமுறைப்படி வரிசைப்படுத்திக்காட்டுதல் நெறி படைத்து. அவையாவன:
மட்டக்களப்பு மான்மியம் முக்குவரின் சாதிவளமை 3. நாடு காட்டுப் பரவனிக்கல்வெட்டு
திருக்கோயில் கல்வெட்டுகள்
வீரமுனேச் செப்பேடு
சம்மான்துறைச் செப்பேடு சீர்பாதர் ரெப்பேடு Monograph of Batticaloa District
மட்டக்கிளப்புத் தமிழகம்
10. History of the Methodist Church of Ceylon 11 கண்ணகி வழக்குரை 12. பொற்புரு வந்த காவியம் 13. மகாமாரித்தேவி திவ்வியகாரி ld. Tennent Ceylon
岳
7
மட்டக்களப்பின் மகிம்ை பெருமைகளே எடுத்துக் கூறுவ "மட்டக்களப்பு மான்மியம்". இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்ெ அமைந்துகிடக்கின்ற பல கிராமங்களின் பெயர் வரலாறு, சரித்தி சாதிமக்கள் ஆலயங்கள், கல்வெட்டுகள், குடுக்கை கூறும் விபர முதலானவற்றை முறைப்படி எடுத்தியம்புகின்றது.
-l-

Page 7
எட்டுத் திசையும் இயற்கை எழில்தர, எங்கெங்கு நோக்கினும் மீனவர் தோணி ஆழ் மட்டமான சிறுவாவி நடுவிலே; மங்கா வளம்தரும் தீவுகள் தோன்றிடும்;
- எங்கள். கல்வி வளமும் கலைவன முஞ்செறி. காராளர் ஏருளக் கழனி செழிப்புறும்; செல்வத் தமிழ்நிலம் மட்டு நகரெங்கும்; தேசியப் பற்றிற் சிறந்த தமிழர்வாழ்
are 65956 . . . . .
அன்பில் மிகுந்தவர் இன்பம் பெருக்கிட ஆறுகடல் குளம் நீரால் நிறைந்திட துன்பம் மறந்து உழவர் களிப்புற தூய மழையும் நன்மாரி பொழிந்திடும்
H- 656,

முதலாம் அத்தியாயம்:
. மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்
鳍
பிட்டக்களப்பின் வரலாற்றுக்கு ஆதாரமான செய்திகளைக் கொண்ட நூல்கள் காலத்துக்குக்காலம் தோன்றியுள்ளன. அவற்றின் கண் பல ஐதிகக் கதைகளும் புராண இதிகாசக் கதைகளும் பொலிந் துள்ளன. இவ்வகைக் கதைகளையும் அவற்ருற் பெறக்கூடிய வரலாறு களையும் காலவரிசைக் கிரமத்தில் ஒழுங்குபடுத்திச் சுத்தமான புடமிட்ட வரலாற்றினை எழுதி அச்சிடல் வேண்டுமென்ற மனக்கிளர்ச்சிகள் காரணமாக மட்டக்களப்பின் வரலாறு எழுதுவதற்கு முற்பட்டோம்.
இவ்வகையில் உபகாரம்ாகவிருக்கும் நூல்களையும், ஏடுகளையும், கல்வெட்டுகளையும் காலமுறைப்படி வரிசைப்படுத்திக்காட்டுதல் நெறி யுடைத்து. அவையாவன:
மட்டக்களப்பு மான்மியம் முக்குவரின் சாதிவளமை நாடு காட்டுப் பரவனிக்கல்வெட்டு திருக்கோயில் கல்வெட்டுகள் வீரமுனைச் செப்பேடு சம்மான்துறைச் செப்பேடு சீர்பாதர் செப்பேடு . Monogramh of Batticaloa IDistrict 9 n' க்களப்புத் தமிழகம் 10. It story of the Methodist Church of Ceylo
கண்ணகி வழக்குரை 1. பொற்புரு வந்த காவியம்
3. மகாமாரித்தேவி திவ்வியகாணி ld. Tennent Ceylon
மட்டக்களப்பின் மகிம்ை பெருமைகளை எடுத்துக் கூறுவது "மட்டக்களப்பு மான்மியம்". இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துகிடக்கின்ற பல கிராமங்களின் பெயர் வரலாறு, சரித்திரம், சாதிமக்கள் ஆலயங்கள், கல்வெட்டுகள், குடுக்கை கூறும் விபரம் முதலானவற்றை முறைப்படி எடுத்தியம்புகின்றது.
-1-

Page 8
முக்குவரின் சாதிவளமை என்பது யாழ்ப்பானத்தில் வழங்கும் தேசவளமை" போன்றது. முக்குவர் என்போர் இங்கு வாழும் மக்களுள் பெரும்பான்மையாக வாழும் சாதியினராவர். தமிழ் ம்க்களுள் வழங்கிவரும் சாதிப் பெயர்களிலொன்றுகிய "முக்குவர் சாதி" என்ற சாதிமக்கள் இங்கு பெரும்பான்மையாக வாழுகின்றனர். இங்கு அவர் களின் மரபு வழி, வாழ்க்கை முறை சாதி முறைகள் இன்றும் மட்டக்களப்பு மாநிலத்தில் பெரிதும் போற்றிப் பேணப்பட்டு வர் துள்ளன. ஆகவேதான் மட்டக்களப்பு நாட்டை முக்குவதேசம்'
மட்டக்களப்பின் பல பாகங்களிலும் பரவலாக வசிக்கும் முக்குவர் சாதியினர் பெருமளவில் மண்முனே, கொக்கட்டிச்சோலே கோயிற்போர்தீவு, பெரியபோரதீவு, பாண்டிருப்பு, களுதாவளை புதுக் குடியிருப்பு முதலிய இடங்களிலே வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்குள் வன்னிமை, போடி என்ற மானிய அரசுமுறை quia]], [[Fil') பெயர்கள் வழங்கும். இவ்வாறு பெருமையுடன் வாழ்ந்த முக்குவர் தங்களுக்குள் வழங்கிய உரிமைக் கட்டுப்பாடுகளே முக்குவரின் சாதி வளமை என்று வழங்கிவந்தனர். இந்த வழமைகள் ஒரு காலத்தில் அரசாட்சியரால் அனுசரிக்கப்பட்டு வந்தன. இக்காலத்தில் இவை ஒதுக்கப்பட உரோமன் ஒல்லாந்த சட்டங்களே நடைமுறையிலிருந்து வருகின்றன. " முக்குவரின் சாதிவளமை' வருமாறு:
2. முக்குவரின் சாதிவளமை
1. உருமையின் வகை.
ஒரு தலமைக்காரனுக்கு இராசாக்களாலே கிடைத்திருக்கிற உறுதி ஒப்பிதங்களும் முதுசோமான ஊர்காணி உடமைகளும் அந்தத் தலைமைக்காரனுக்குப் பிற்காலம் அவன் சகோதரங்களுக்கும் மருமக் களுக்கும் அவன் தாய்வழிச் சனத்துக்கும் சேரும்: அவன் தானுசுத் தேடிய சோங்கள் அவன் பெற்ற பிள்ளேகளுக்குச் சேரும். அவன் சீத னம் பெற்ற சோங்களிலிருந்தால் அளின் பிள்ளைகளுக்குச் சேரும் அவன் பின்ளேயில்லாமயிருந்தால் அவன் முதுசோமாகக் கொண்டுவரப் பட்ட சோங்கள் அவன் சகோதரத்துக்கும் மருமக்களுக்குஞ் சேரும். அவன் பெற்றிருந்த சீதனமான சோம்கள் அவன் பெண்சாதிவழிச் சனத்துக்குச் சேரும் அவனும் தேடப்பட்ட சோம்களிருந்தால் அவன் வழிக் சனமும் அவன் பெண்சாதிவழிச் சனமும் rFILIÉ grintin Lor E ?r77 ĝis தெடுத்துக் கொள்ளுகிறது.
2. விதனம் கொடுக்கிற வகை,
அவனுற் தேடப்பட்டதுகளிலும் அவன் சீதனம் கொண்டு வந்ததுகளிலும் அவன் சம்மதியான மட்டும் ஒரு உடன்படிக்கையிற்
-2-

சகலதுங் கண்டெழுதிச் சீதனம் கொடுக்கிற வளமை, அவனுக்குப் பிற்காலம் சீதனம் கொடுத்ததுபோக அதிகமாக விடுக்கப்பட்ட சோம் சுள் சீதனம் பெற்றிருந்த பிள்ளேயும் இருக்கப்பட்ட பிள்ளேகளும் சரி பங்காகப் பிரித்துக்கொள்ளுகிறது.முண்டு.
அவன் கடன்பட்டிருந்தால் அவன் சீதனம் கொண்டுவந்த சோம்கள் விற்கக்கூடாது. அவனுற் தேடப்பட்ட சோம்கள் விற்கலாம்.
முதுசமாயிருக்கிற சோம்கள் அவன் சீவனுேடிருந்தால் விற்க லாம். அவன் செத்தால் அவன் சகோதிரி மருமக்கள் விற்கக்கொடுக்க மாட்டார்கள். மஞ்சள் நீர்ப்பிள்ளே ஆணுகினும் பெண்ணுகிலும் ஒரு பிள்ளேயை எடுத்து வளர்த்தால் வளர்த்தவன் சம்மதிக்க அந்தப் பிள் ளேக்குக் கொடுத்த சோம்களுக்கு உறுதிகொடுத்து அந்த உறுதிப்படி ஆட்சிபண்ணிவரும் உறுதி கொடாதுபோனுல் அந்தப் பிள்ளைக்குப் பிற்காலம் வளர்த்தவன் கொடுத்த சோம்கள் அந்தப் பிள் & பி ன் வயிற்றுவார்களுக்குச் சேரமாட்டாது உறுதி கொத்திருந்தால் வளர்த்த பிள்ளையின் வயிற்றுவார்களுக்குச் சேரும். வளர்த்த பிள்ளைக்குப் பிள்கள் பில்லாமல் மரணிக்கச் சம்பவித்தால் பிள்ளே வளர்த்தவரது அல்லது அவனது பிதிர்வளிக்குச் சேரும்.
3. காளி, பூமி, தோட்டம் முதலானதுகள் ஆட்சிப்படு விதங்கள்.
காணியுள்ளவனிடத்திற் காணியில்லாதவன் வந்து காளி கேட்டுத் தன் செலவாசுக் காணி வெட்டிச் செய்கை பண்ணின்தேயுண் டானுல் அவன் செய்த செய்கையிற் காணி உள்ளவனுக்கு ஒரு பங்கும் செய்கை பண்ணினவனுக்கு இரு பங்குமாகக் கையாடி ஆட்சிபண்ணு
TIGT
காணியுள்ளவன் தன்செலவாகக் காடு வெட்டி வேலி யும் அடைத்து ஒரு காணியில்லாதவறுக்குச் செய்கைபண்னக் கொடுத்த தேயுண்டாரு அவர் செய்த செய்கையில் காr உள்ளவனுக்கு அரைவாசியும் செய்கை பண்ணியவனுக்குச் சரி அரைவாசியுமாயிருக்கும். காளியுள்ளாரிடத்திற் செய்கை பண் ஈரினவின் கடன்வாங்கியிருந் தால் அங்கக் கடலுக்கு அவன் செய்த செய்கையை விஃவைத்துக் கொடுக்கிறது. இருவிதமும் செய்கை பண்ணினவன்மேற் புரோசன மேற்றுகொள்ளுகிறது. காணி அவனுக்குச் சோமாகமாட்டாது. அவன் செய்த செய்கை உள்ளமட்டும் மாருமல் புரோசனம் Talai II, IIT I 7 F'(r, GTIGT.
4. நன்கொடை வகை.
ஒரு காணியை ஒருதனுக்கு நன்கொடையாக அவன் பிரியத்தின் படி ஆட்சி பண்ணிக்கொள்ளவும் விற்கவும் நன்கொடை கொடுக்கவும்
-3-

Page 9
உறுதியுங் கொடுத்துக் காணி யு ங் கொடுத்ததேயுண்டாகுல் நன் கொடை பெற்றவன் பிரியத்தின்படி அவனும் அவன் வயிற்றுவார் களும் ஆட்சிபண்ணியும் விற்றுங்கொள்வார்கள். அந்தக் காணியை விற்காமல் அவனும் அவன்பிற்கிளமும் ஆட்சிபண்ணி அவர்கள் சகல ரும் அடியற்றுப் போனுல் அந்தக் காணி நன்கொடை கொடுத்தவன் அல்லது அவன் பிற்கிளங்களுக்குடையது.
5. கானி ஒற்றி பிடிக்கிற வகை.
தென்னந்தோட்டத்தை ஒருதனுக்கு ஒற்றிக்குக் கொடுத்துப் பணம் வாங்கிஞல் பனத்துக்கு வட்டியில்லே. அதுக்குச் சரியாக அதின் புரோசனத்தைக் கையாடிக் கொள்ளுகிறது. தவணேப்படிக்கு வட்யில் லாமல் முதல் கொடுத்து ஒற்றி மீண்டு கொள்ளலாம். தவனே தப்பி ஞல் வாங்கினவன் சம்மதிச்சவேளே பனம் கொடுத்தும் மீண்டு கொள்ளலாம்,
வயல் நிலத்தை ஒற்றி பிடித்தால் த வனே ப் படி பனங் கொடாமற் பின்னிட்டால் அந்தக் காணியில் வெள்ளாண்மை செய் கிறைேவே தொடக்கம் பண்ணுகிற வேயிேற் பணம் வாங்கியவன் பன்ங் கொடுத்தலே எடுக்கக்கூடாது. அந்தப் புரோசனம் கையாடிக் கொண்டு பனத்தை வாங்கிக்கொண்டு காணியைக் கொடுத்துவிடு கிறது. இதுவிதமாகப் புரோசனப்படுகிற காணிகளுக்கு இதுவே வளமை.
6. ஆண் சிறை பெண் ைேறகளின் வகைகள்
ஒருதர் ஆண்சிறை பெண் சிறை கொண்டிருந்தாற் கொண்ட வன் வேனுள்ளபோது இட்டம் பன்னி அவர்களுக்குக் கொ டு க் க வேண்டிய காணி ஆதனங்களுக்கு அந்த எசமானுடைய உறுதி கிடைத் திருந்தால் அந்த உறுதிப்படி கிடைக்கும்.
அப்படியிட்டம் பண்ணுதிருந்தால் அந்தக் கொண்டவனுடைய பிள்ளேகளுக்கும் அந்த உரிமைக்காறரும் சிறை.
7. வட்டிக்குப் பனம் கொடுக்கிற hi.
வட்டிக்குப் பணம் கொடுக்கிறது நூற்றுக்கு ஒன்று வழமை.
8. கோள்வனவு விற்பனவு வகை.
கொள்வனவு விற்பனவு தங்கள் பிரியத்துக்குக் கொள்ளவும் விற்கவும் கூடும். தோட்டம், வீடு, மாடு ஏதாகிலும் இவருடைய ராசிப்படிக்குக் கொடுக்கலாம்.

3. நாடுகாட்டுப் பரவனிக் ஜிஆகிழ்ச் சங்கம்
கொழும்புத்ரிசி" நாடு காடு என்பது நாதனே, நாதன் அனே என்பது திரிந்து நாதனே ஆயிற்று, நாடுகாட்டுப் பரவளிக் கல்வெட்டி 懿
ଝୁଣ୍ଟି) சித்தவாக்கையால் இந்த
ஈசுர வருஷம் தைமாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உச் சிக்குவர ஐந்தடி நீளமென்னச் சித்தவாக்கை நகரியாலே த எ வில் லுக்கு வந்தது. சிப்பத்தையும் மூன்று படித்துக்கொண்டு வந்தார்கள். அங்காலே வந்தது ஆரென்ருல் நிலமையிருளேயும் அவருடைய பெண் சாதி திரியெத்தணுவும் அவருடைய மகன் இராசபக்ஷ முதலியாரும்" அவருடன் பிறந்த லொக்கெத்தனுவும் அவ புருஷன் காளாஞ்சி அப்பு காமியும் நடு விலாக்கூடாக எத்தணுவும் இளேயவள் குமாரெத்தளுவு மாக வந்தது.
அவர்கள் வருகிறபோது கொண்டுவந்தது அடியாளாரென்டுல்கொம்பியும் முத்துவினும் - வண்ணுரில் அத்திவரனும் - வீரனென்கிற வனும் பெண் சாதியும் - முத்துவனும் பெண்சாதியும் - தட்டாரிற் செம் பனும் பெண்சாதியும் - சங்கரவரிற் குஞ்சனும் பெண்சாதியும் - குண் னறையரில் வதன்னும் பெண்சாதியும் ஒவியரிற் - பத்தனும் பெண் சாதியுமாக இப்படி ஆணும் பெண்ணுமாகக் கொண்டு வந்தது.
அதுபோக அவர்கள் வரக்கே கொண்டுவந்தது -எருமைமாடு பசுமாடுகளுங் கொண்டு அதுகளிற் பாலுங் கறந்துகொண்டு பாலுக்கு உறையுங் கொண்டுவந்தபர்கள். அவர்களின் மாட்டுக்குக் குறியென்ன வென்ருல் விலங்கு சம்மட்டியும் பசும்பையும் பசும்பைக்குமேல் தாம ரைப் பூவும் இரண்பிளம்பிறையும் கொழுக்குறியுமாக மாடு சாய்த் துக்கொண்டு வத்தார்கள் இவர்களுடைய பணிவிடையென்னவானுற் பணிய வாசலுக்குப்போப் இராசகுமாரனுக்குப் பால்கொடுத்து வளர்க் கிறது. பள்ளகொம்பை அதிகார வங்கி ஷ ம் கிரியெத்தணுவென்கிற மனுதியினுடைய பிள்ளேயொன்று தவழுகிற பருவம். அந்தப் பிள் ளேயை அடியா:ளப் பார்த்துக்கொள்ளச் சொல்விவிட்டுப் போட்டு பணியவாசலுக்கு இராசகுமாரனுக்குப் பால் கொடுக்கப்போனு,
தாவில்லேவிட்டு இறக்காமம் போதல்,
பாலுங் கொடுத்துப்போட்டு வருகிற தேரமந்தப் பிள்ளோனிய அடியாள் தேடாமல் விட்டபடியால் அழுதழுது இருந்தது. அதையோ வத்தை முகாந்திரங்கண்டு அந்தப் பிள்ளேக்கு வெள்ளிக் காண்டகத் தைக் கொடுத்துப் பழக்காட்டினுன். அதை அவ சுண்டு சோனகன் என் பிள்ளேயைத் தொடலாமோவென்று அந்தப் பிள்ளேயை பெடுத் தெறிந்து கொன்றுபோட்டு அந்தக் கோபத்தோடே பிறப்பட்டுத்தான்

Page 10
நாடுகாட்டு இறக்காமத்துக்கு வந்தது. அவ வந்து முப்பது வருஷத் துக்குப் பிறகுதான் - பிலபவ வருஷம் இராசபக்கிஷ முதலியாரும் அவ ருடைய சனங்களும் அவருடன் பிறந்தாள் இளமிப்பிள்ளையும் - எத்ணு வும் அவர் மருமகன் குமாரெத்ணுவும் முத்துவனென்கிற அடியானும் பெண்சாதியுமாக இறக்காமத்தில் வந்திருந்துகொண்டு உளா முஜன திருத்திக்கொண்டு இருந்து வருகிற காலத்தில் இராசபகதிஷ முதலியா ருடைய தங்கை குடா எத்தனவும் அவ புருஷனும் அடியானும் அடி யாளும் கொஞ்சச் சனங்களுமாகப் போய்க் கருந்தே கிழங்கொடிக் காடு வெட்டி யூர்முனை திருத்திக்கொண்டு வீடுவாசல்களுங் கட்டிக் கொண்டு இருந்துவருகிற காலத்திற் பெரிய பட்டியில் மாடுங் கட்டிக் கொண்டு நிலமை தலைமையும் ஆண்டுகொண்டு இருந்துவருகிற காலத் தில் என்று நிலமை யிருளையும் காளாஞ்சி அப்புகாமியும் கண்டி மகா ராசா ஆண்டவரிடத்திற்கு நகரிக்குப்போய் நிலமை தலமையும் பெற் றுங் கொண்டு ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிறபோது அவர் க ளொக்கிலாக வந்தார்கள் கோப்பி குடியார். அவர்களும் ஏவல் பணி விடை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இராசபக்சிஷ முதலியாரும் வன்னியரும்.
அதுபோகா இறக்காமம் நாடுகாடு முத்துந் திருந்திக்கொண்டு இருந்து இராசபக்கிஷ முதலியாரு அவருடைய சனங்களும் மாடு கட்டு கிறது; பட்டியவத்தளையிலும் வாடிமுனையிலும் மாடுகட்டுகிறது. முத் துவனென்கிற அடியான் அந்த மாடுசாய்த்த பாமங்கையிற் பால் முட்டியில் நெல்லு அள்ளிக்கொண்டு போய் அந் த ப் பாமங்கையில் விரைந்தான். அது நல்லாய் விளைந்து புதிருமுண்டுபோட்டு அதன்பின் இராசபக்கிஷ முதலியார் ஐந்து வெளி திருத்தி விரைத்தார். அதன் பிறகு இராசபக்கிஷ முதலியார் மருமகள் குமார எத்தணுவைக் கலியா ணம் பண்ணிக்கொடுத்து வாடிமுனையிற் குடியிருத்தினர். அதிலிருந்து கொண்டு விரைத்துக் தின்றுகொண்டு வருகிறபோது - திருவீரகுர (தம) பூலோக சங்காரனென்கிற வன்னிய விராசாக்கள் ஏழுபேர் இந்தச் செய்தி கேட்டு எங்களுக்குமொரு வெளிவெட்டித் திருத்தித்தரவேணு மென்று இராசபக்கிஷ முதலியாரிடத்திற் கேட்டனுப்ப அப்போ அவர் வேடரைக்கொண்டு வெட்டுவித்துக் கொடுத்தது. மேட்டுவெளியும் பள்ளவெளியுமிந்த இரண்டு வெளியும் வன்னிய இராசாவுக்கே கொடுத் தார். இந்த இரண்டு வெளிக்கும் முன்னீடு வேடரிற் சக்கிளையன் என்கிற வேடன். இந்த வெளி திருத்தின பிறகு ஏழு வெளியும் விரைக்கிறது. அதின்பிறகு சுங்கத் துறை வெளி வெட்டித் திருத்தினது அவருக்குப் பாயிளைத்துக் கொடுக்கிற குண்ணறையன்.
நாடுகாட்டு வயல் வெளிகள்
அதின் பிறகு அவருடைய அடியான் வலிப்பத்தன்சேனை வெட்டிக்கொண்டிருந்து வலிப்பத்தனிலிருந்துகொண்டு பத்திப்போடி
-6-

பள்ளவெளியோடோ ஒரு இறையாகக் கொடுக்கிறது. இரண்டு வெளிச் கும் உசரவேகாமம் வெட்டித் திருத்தினது முதலிக் குட்டிப்போடி. கடவத்தை வெளிவெட்டித் திருத்தினது சூரியகாந்த முதலியார் மகன் அறுமக்குட்டிப்போடி, திவிளானை வெளிவெட்டித் திருத்தினது சென் னஞ்சிப்போடி, பொத்தானை வெளி வெட்டித்திருத்தினது வேலாப் போடியார் சீயான் கந்திப்போடி. வம்மியடி வயல் வெட்டித்திருத் தினது பேராதனையப்பு பேய்களைக்கொண்டு வெட்டித் திருத்தினது. தெட்டிரும்வில் திருத்தினது மங்கலப்போடி. கொன்றைவட்டான் அரசடிப்பற்றுத் திருத்தினது பத்திப்போடி,
சோனகக் குடிகள்
இப்படியவர்கள் வெட்டித் திருத்திக் குடியிருக்கும் நாளில் அந்த நாளில் அந்த வெளிக்கு அந்தச் சனங்கள் சகலரும் நின்று விரைத்து ஆண்டனுபவிக்கும் வேளையில் இவர்களொக்கிலாக வந்த சோனகர்கள் ஆரென்ருற் பொன்னச்சி குடியான் அவக்கனும் அவ னுடைய சனங்களும் வந்தார்கள். அதின் பிறகு வரிசைநாச்சி குடியார். அதின் பிறகு முகாந்திரநாச்சி குடியார். அதின் பிறகு மாலைகட்டி குடியார். அதின் பிறகு கிணிக்கருதன் குடியார். அதின் பிறகு பணிய வீட்டுக் குடியார். இந்த ஏழு குடிக்கும் முன்னீடு பொன்னச்சி குடியான்.
இந்த ஏழு குடியும் வந்து அவர்கள் சொற்கீழமைந்து நடந்து வருகிற காலத்திற் கண்டியில் மகாராசா மட்டக்களப்பு நாடு பார்க்க வும் விகாரைகள் பார்க்கவும் எழுந்தருளி வருகிற காலத்தில் முதலி மாருங்கூட வந்தார்கள். சோனகரும் போய் விண்ணப்பஞ் செய்தார் கள். அப்போ இராசா குதிரைக்கு முன்னே ஒடத்தக்கவர்கள் ஆரென்று கேட்டார். எல்லாரும் பேசாமலிருந்தார்கள். அப்பேர் அவக்கன் நான் ஒடுவேன்ென்றன். ஒடச்சொல்லி ஓடினவிடத்திற் குதிரைக்கு முன்னுக விழுந்துவிட்டான். அப்போ முகத்திலே துவாய்ச்சீலை போட்டுச் சிரித்து உனக்கென்ன வேணுமென்று கேட்டார். அப்போ அவக்கன் நாயடி யேனுக்கு வயிற்று வளப்புக்கொன்றுமில்லை என்று சொல்லச் சுங்கத் துறை முத்தட்டு ஒன்றுக்குச் சீட்டுத் திருமுகமுங் கொடுத்தார்.
அவக்கன் - சிங்காரவத்தை வன்னியர்
அதன்பிறகு பட்டிப்பளைக்குப் போய்ப் பருத்திக்காவில் இரும்பு ஒழிச்சுக்கொண்டு வந்து சிங்காாவத்தையிலிருக்கிற ஏழு வன்னிய இராசாக்களிடத்திலும் வெளிப்பட்டான். அப்போ அவர்கள்தான் பொன்னுயமுங் கொடுத்து அவக்கனுக்கு அணு க்க ன் வெளியுங் கொடுத்து இந்த ஏழு குடிக்கும் முன்னீடு கொடுத்தார்கள். அதின் பிறகு கண்டியில் மகாராசா நகர சோதனைக்குப் பைக்கிருக கோலமாகப் புறப்பட்டுப் பைக்கிருகசேனைப் பள்ளியில் வந்திருந்தார். அப்போ அந்தப் பள்ளியில் மோதீன் அவர்களுக்கு உபகாரங் கொடுத்தான்
-7-

Page 11
அவன் மெத்த வழிபட்டபடியால் மாயக்காலிமலே வழியிற் பெருங் சிளர்க் கொடியை மந்திர வாளினுலே வெட்டிப்போட்டு நகரிக்குப் போய் வட்டேறெழுதி வரவிடுத்தார்.
வரிப்பத்தன்சேனேப் பள்ளிக்குப் பத்திப்போடி வெளியாலே யொரு இலவிசங் கொடுக்கச் சொல்விப்போ(ட) இராசபக்கிவு முதலி யார் கொடுத்துப்போட்டார். கல்மடுவிலுமிருக்கிறது இராசபக்கிஷ முதலியாருடைய மனுஷர்கள்தான். அவர்கள்தானே மற்றும் வெளிக ளெல்லாம் விரைத்துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப்படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோவென்று அவருடைய மனுவுரை விட்டுப்போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்துகொண்டு அந்த வனம் ஏழுக்கும் முன்னிடு காபமு அனுப்புகிறது வேடரிற் காடியன் கம்மாஞ்சி. அதன் பிறகு கந்தக் கம்மாஞ்சி - இவர்கள் முன்னிட்டுக் கம்மாஞ்சிமார்.
பட்டிமேட்டு அம்மன் கோயில்
அதின்பிறகு கோவில் மேட்டுக்கு அம்மாள் கொண்டு வந்தது ஆரென்ருற் சின்னத்தம்பிப்போடியென்கிறவன். மதுரைக்குப் போய் அங்கே வைத்துப் பணிவிடையாச்சுது நானிங்கே இருக்க நீயங்கே போகவேண்டாமென்று அப்போ வோருகாடைக் கல்விலேயிருந்தது - அம்புத் தெய்வம், கொம்புத் தெய்வம், வில்லுத் தெய்வம், அம்மா னேத் தெய்வம், இதுக்ளேயுங் கொண்டு அதுகளுக்குப் பூசை கட்டுகிறது. சிங்க ளக் கட்டாடியும் பெண்சாதியும் சிங்களப் பத்ததியுங்கூடக் கொண்டு வந்தார்கள். அதிலும் அந்தத் தெய்வத்தைப் பூசை பண்ணிக் கோவில் மேட்டிலே வைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் அந்தக் கோயிலுக்குப் பூசை செய்பவன் கட்டாடியா வெளியை விதைத்துத் திண்டுகொண்டு வருகிற காலத்தில் அவனுடைய பெண்சாதி ஒரு பெண்பிள்ள்ே பெற்ற இடத்தில் அவர்கள் இரண்டு பேருஞ் செத்துப் போஞர்கள். அவருடைய மகள் கந்தியென்கிற மனுதி தான் பிறகு பூசை செய்துகொண்டிருக்கிற காலம் அவை மழுவெடுத்த செட்டிகளி லொருவன் கல்யாணம் முடித்துக்கொண்டிருந்தான். அதிலும் பிள்ளே பிறந்தது. அந்தப் பிறந்த வழிக்குத்தானே அந்தத் தெய்வத்தைக் கொடுத்துப்போட்டார்கள். அவர்கள் பூசை பண்ணுகிறபடியால் அவர் களுக்கு இராசபக்கிஷ முதலியார் கட்டாடியா வெளியை அம்மாளுக்குக் கொடுத்துப்போட்டார்.
அவர்களாண்டு அனுபவித்து வருகிற காலத்தில் அந்த வங்கிஷம் காலற்று, அப்போ பட்டிமேட்டுக்கு இராக்கொண்டு தெய்வத்தையுங் கொண்டு போய்க் கோவிலுங் கட்டிக்குடியிருந்தார்கள். அதின் பிறகு இராசபக்கிஷ முதலியார் அம்மன் தெரிசனம் பண்னை வந்தபோது இவர்களைக் காணவில்லை. தேடிப் பார்த்தபோது பட்டிமேட்டில் இருக்

கிறதாக அறிந்தார். இனியிவர்களேத் தேடப்படாதென்று காரைக் காட்டில் வேளாளன் கருணுகரக் கட்டாடியையும் அம்மன் அடை பாளம் எடுத்துகொண்டு சனிக்சிழமை விசேஷ பூசைபண்ை வேணு மென்று ஒன்பது கா.அங் கட்டி அவர் சனங்களே அனுப்பினுர், அவர் களேக் கண்டவுடனே இதுவெல்லாம் வாங்கிக் காரைதீவுக் கோவிலில் வைத்துப்போட்டுத் தங்கள் குலதெய்வ அடையாளங்களும் எடுத்துக் கொண்டு போய்ப் படுகளச் சடங்கு செய்து அதில் அதிக புதினங்: காண்பித்து அவர்களுக்கு அந்தத் தெய்வத்தையும் அவர் தாரை வார்த்துக்கொடுத்தார். கோவில் மேடும் கட்டாடியா வெளியுஞ் சிறு வினமும் என்றென்றுங் காலந் தீவுஅம்மாளுக்கென்று இராசபக்கிஷ முதலியார் தாரைவார்த்துக் கொடுத்தார்.
பட்டங்கட்டின முதலிமார், பட்டங்கட்டாத முதலிமார்
இது தவிர இதற்கு முன்பு திருக்கோயிலுக்குப் பரிவ. வெளுக்கிற வண்ணுரில்லாத படிக்கு ஏழு வன்னியமாருங் கூடி இராச பக்கிஷ முதலியாரைக் கேட்க அப்போ அவர் (அரதிவர வண்ணுனும் வீரவண்ணும் குமானி வண்ணும் ஆணும் பெண்ணுமாக மூன்று குடி கொடுத்தார். அதின் பிறகு இவர் செய்தியெல்லாங் கேள்வி' பட்டு அப்போதான் மகராசா பட்டங்கட்டினது.
பட்டங் கட்டின முதலிமார் ஒன்பது பேர். era (7) இராசபக்கிவு முதலியார் (2) சிறிவர்த்தன முதலியார் (3) சூரிய காந்த முதலியார் (4) வணிகசேகர முதலியார் (5) குடா வேத்திமை முதலியார் (6) அதிகார முதலியார் (7) தளவில் முதலியார் (8) கனகரெட்டின முதலியார் (9) வாய்க்காம முதலியார் ஆக இந்த ஒன்பது முதலிமாரும் பட்டங்கட்டின முதலிமார், பட்டங்கட்டாத முதலிமார். (1) கல்மடு முதலியார் (8) துணுகம்ப முதலியா ( 3.J காளாஞ்சி அப்புகாமி (4) அக்கரைப்பத்றுத் திருத்தின நிலமையிருளே. இந்த நாலுபேரு பட்டங்கீட்டாத முதலிமார்,
நாடுகாட்டுத் தஃபைப் போடி மார், இறைகாரப் போடிமார்
அதின் பிறகு நாடுகாட்டுப் பகுதிக்குத் தலைம்ை செய்த போடிமார் (1) சின்னப்போடி (2) மன்னிப்போடி (3) கல்மடு முது வியார் மகன் மங்கலப்போடி (4) வேலாப்போடி (5) பத்திப்போடி (6) செம்பசுக்குட்டிப்போடி (7) கண்ணுப்போடி, இந்த ஏழுபேரும் தல்ேமை செய்த போடிமார்.
இனியிறைக்காரப் போடிமார் (1) கண்ணுப்போடி (2) சென் ஞஞ்சிப்போடி (3) செட்டிப்போடி (4) கதிர்காமப்போடி (5) பரப குட்டிப்போடி (6) கல்மடு முதலியார் மகன் (7) மன்னிப்போடி (8)

Page 12
மங்கலப்போடி (9) கனகப்போடி (10) முதலிக்குட்டிப்போடி I) கதிர்மாகப்போடி, இந்தப் பதினுெரு போடிமாரும் இறைகாறப் போடி .rrTחLn
அந்தக்காலம் இவர்களுக்கு ஊழியம் என்னவானுல் நக்கையில் விசாரைக்கு ஊழியஞ் செய்கிறது. மொண்டிருமவில்லிவிருக்கிற சனங் களுக்கு ஊழியம் என்னவானுல் விசாரைக்குக் கொடுத்துக்கொண்டு அந்த வெளிகளும் விரைத்துத் தின்றுகொண்டிருக்கிறது. வட்டிவிட்டி யாவது விசாரைக்கு அரிசி குத்திக்கொடுக்கிறது. அந்த ஊரவர்கள் புரோசனத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது- க ள்ளி யம்பத்தை யாரென்கிறது விகாரை செய்கிற சிற்பக் கொல்லனிருந்துகொண்டு விரைத்து ஊதிபந் திண்டுகொண்டிருக்கிறது. விசாரைக்குச் சேவிக்கிற பறையனுக்குப் பொன்னம்வெளியும் பறையனுேடை நின்று அவனுக்குத் தான் - அவருனேயென்கிறது கிளவியூரென்கிறது - முன் சிதம்பர காமம் - அதிலிருக்கிறது காரைக்காட்டு வெள்ளாளனிருக்கிறது - கிள வியூரென்கிறது கந்தம்மை மகள் மாதி. அவர்கள் பரவணி குறுனலப் புக்கை வாய்க்கால். செல்லம்மைக் கிழவி மாடு கட்டின இடம் பட்டிய வத்தளே.
கோட்டாஞ்சேனே
கோட்டாஞ்சேனேயென்கிறது கண்டியில் மகாராசா தம்பன் குளிகைக்குக் கஞ்சா மரத்தைக் கடலெடுத்தபடியால் அவன் கைவி! வெட்டிக் கெங்கைக் கரையிலே தள்ளிவிட அவன் வந்து பேராத்தங் கரையிலே ஒரு சேன்ே வெட்டிக்கொண்டிருக்கிற நாளேயிற் T। மகாராசா எழுந்தருளப்பண்ணி அவர் வந்தவிடத்திலே ஆண்டிகள் சோப்பிகள் எல்லாரையுங் கூட்டிக்கொண்டு போயச்சங் கூறினுன் அது ஆரென்று கேட்டார். அப்போ கஞ்சாமரம் வெட்டின ஆண்டி யென்ருர்கள். அப்போ என்னவேணுமென்று உத்தரவாச்சுது அப்போ கோட்டாஞ்சேனேயூருக்கு உத்தரவு கிடைக்க வேணுமென்றன். அப்போ அந்த ஊருக்கும் வெளிக்குஞ்சீட்டுந் திருமுகங் கிடைத்தது.
செல்லாப்பற்று வேடம்
அதுபோக சித்தவாக்கை நகரிக்குப் போய் நிலமையிருளேயும் அவர் பெண்சாதியுஞ் சனங்களுமாக நாடுகாட்டுக்கு வர விந்தனேயடிப் பாட்டாலே வந்தார்கள். வருகிறபோது செல்லாப்பற்று வழிப்பாட் டிலே ஒரு வேடுவிச்சி பிள்ளையொன்று பெற்று மாவுங் கொடியும்ருமல் வழிப்பாட்டிற் போட்டுவிட்டுப் போயிற்ருள். அந்தப் பிள்ளையை இவர்கள் கண்டெடுத்துக்கொண்டுவந்து வளர்த்தார்கள். மறுபடியந்த வேடுவிச்சி வந்து பார்த்தாள். பிள்ளேயைக் கானாவில்லே. வழியிலே சனங்கள் அதிகமாய்ப் போக்குவரவு பண்ணியிருந்தது. அவர்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று தன்பாட்டிலே போய்விட்டாள்.
-1)-

அவர்கள் அந்தப் பிள்ளேக்குப் பறைநாச்சி என்று பெயரி வளர்த்து முத்துவனுக்குக் கல்யாணஞ் செய்து கொடுக்கிறது. அ பதினுறு பெண்பிள்ளே பெற்ருள். அதிற் பதினேந்து பேருக்குங் கன் ணஞ் செய்து கொடுத்து இளையபிள்ளே சும்மாவிருந்தது. அப்போ இவர்களுடன் கூடவந்த வண்ணுனுடைய பெண்சாதி செத்துப்பே சுது, அவன்போய்ச் சும்மாவிருந்தான். அப்போ அவன்போப் ஆண்ட வரே முறைப்பாடு செல்கிறேன் அடியேன் என்ருன். 3: Tair வென்று கேட்க எனது பெண்சாதி செத்தபடியாற் கையினலே குத்தி பாக்கித் தின்றுகொண்டு வண்ணுண்மை செய்ய என்னுல் முடியா தென்று சொன்னன். அப்போது அந்த வேடுவிச்சி பிள்ளே fகளில்) இ2ளயபிள்ளையைக் கலியானம் பண்ணிககொடுத்தான். அதிலும் பிள்: பெருகுகிறது.
அதைச் செல்லாப்பற்று வேடர் கேட்டு வருவீர்ந்தோறுச்சி ,"עו பிடித்து விற்கத்தொடங்கினுள்கள். அது பரவரிலும் மூண்டும் சான்ரு ரிலும் மூண்டும் அப்படிச் செய்தபடியால் அந்த வேடருக்கு பண்ணவேண்டுமென்று காங்குத்துப்பட்டி பத்துமுளமும் வாங்கி நா ே முளமும் மூண்டு முளமுமாகக் கிழித்து வேடருக்குத் கொடுத்தார்.
இராசபக்கிஷ முதலியார் அதன்பிறகு பெரியவாசலுக்குப் போனுர். அப்பொழுது பட்டாளிகள் இரண்டு பேரென்றும் முகங் காட்டுகிறபோது ஆயுதம் வைத்துப்போட்டுப் போய் முகங்காட்டுவார் கள். அன்றைக்கு ஆயுதம் வையாதபடிக்குப் போய் முகங்காட்டி ஞர். ஆனபடியாற் கெங்கைக்கரையிலே தள்ளிப்போட்டார். அப்போ இராத பக்கிஷ முதலியார் அவர்களேக் கொண்டுபோனுவிந்த வேடரி: பிரனிக் குக் காவலுக்கு நல்லதென்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். கொண்டு வந்து பள்ளவேகாமத்தில் வேடருக்கு காவலாக வைத்தார்கள். அவர் கள் பேரென்னவென்ருல் தெருவெட்டியன், நன்ஞயன், வேடுவர்கள் சகலருக்கும் முன்னிடு காடியன். இவர்கள் ஊழியமென்னவென்முற் கக்கூசி வீடு கட்டுகிறது. தட்டுவேலி கட்டுகிறது. சங்கத்துறையிற் சேவுகவயல் சுட்டினுல் அந்தக் சுங்காணம் பார்த்துக்கொண்டு குடும் வைத்துப்போட்டு தலேக்கொரு கட்டு மடித்துக்கொண்டு போவார். எல்லாத்துக்கும் முன்னீடு வேடர்தான்.
புவியன் - புவிய ன்
இந்த ஏழு வனத்துக்கும் அதிகாரிமார் பரமனதிகாரி - மகன் கந்தனதிகாரி மகன் கந்தக் கம்மாஞ்சி மகன் வன்னியக் கம்மாஞ்சி. இப்படியிவர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று ஏழு வனத்துக்குக்கும் முன்னீடு புலியனென்கின்ற வேடன், அவன் அக்கரைப் பற்றுக்குப் போற வழியிலே புவியந்தீவு. அதிலிருந்துகொண்டு மெழுகு, தேன் சகவதும் எடுத்துக்கொண்டு அவருக்கும் முதலியாருக்கும் வாதித்

Page 13
களத்திற்கும் அனுப்புகிறது. புவியந்திவில் உலுவிசியென்கிற பறங்கிக் காறனும் இருக்கிறது. அக்கரைப்பற்று வனம் ஏழுக்குங் காப்பூ அனுப் பிக்கொண்டு இராசபக்கிஷ முதலியாரும் புலியன் என்கிற வேடனுக் குக் கந்தியென்பவளேக் கல்யாணம் பண்ணிக்கொடுத்துப் புலியந்திவி லிருக்கிறது.
இராசபக்கிஷ முதலியாரின் மறைவு
இராசபக்கிவு முதலியார் தளவில்லில் இருக்கிறபோது கல்ge ஞலே யுராலே நாட்டியிருகும், கல்வினுலே யுரல்மூன்று கல்விஞலே கட் டில் மூன்று, வெள்ளே வெற்றிலக் கொடியும் மூன்று. இப்படியாக அங்குமிங்குமாக ஆண்டுகொண்டு வருகிற காலத்திற் பேராதனையப்பு பேய்களே விட்டுக் கொல்லுகிறது. ஆகையால் ஏழு வன்னியமாரும் ஒன் பது முதலிமாருங் கூடிப் பேசிக்கொண்டார்கள் அவளேக் கொல்ல வேணு மென்று, அந்தச் செய்தியை அந்தப் பேய்கள் கேட்டுவந்து பேராதனே பப்புவுக்குச் சொன்னது. பேய்களே அப்போ பேராதனே அப்பு சொன் குனூன் அவர்கள் வந்து கொல்லமுன்னே நீங்கள் கொன்று போடுங்கோ என்று சொல்வி முழுகி மாத்துமுடுத்துக் கொண்டு போய்க் காவலிலே படுத்தான்.
அப்போ அந்தச் செய்தியை இராசகுல தெய்வம் நாதனேயில் வில்லைச் சயங்கில் நின்று அறிந்து வில்லேச்சடங்கு அன்றைக்கு முடிந்து இணேவடிவாக வந்து கோம்பாத்தைக் குடாவில் வந்து வே லி யை முறித்து அதிலுமொருபிடி வெள்ளாண்மை பிடுங்கித் தி ன் குனு மற் போட்டுவிட்டு மருட்டியாவெனிவேலியை முறித்துக்கொண்டு போய்ப் பேராதனையப்பு படுக்கிற அட்டாளேயைப் பிடுங்கிப்போட்டுப் பேரா தனே அப்புவையும் அடித்துக் கொன்று போட்டு அ ட் டா ளே யை முறித்து அது தானே கொண்டுபோய்ப் புதைத்துப் போட்டு நின்றது. அந்த ஆனேனயக் கொல்ல் வேணுமென்று முதலிமாருங்கூடி ஈட்டிக் காரர் 60 பேர், செல்லேக்காறர், 60 பேர், மந்துக்காறர் 60 பேர், பொல்லுக்காறர் 60 பேர், வில்லுக்காறர் 60 பேர் இப்படி யானயைக் கொல்லலிட்ட மனுஷர் எல்லாரும் ஒருவருக்கொருவர் குத்திவெட்டிக் கொண்டு எல்லாரும் பட்டுப்போனுர்கள். அந்தப் பேய் செய்த காரி பத்தாற் பட்டார்கள். நாடு காட்டிலுள்ள சனங்கள் எல்லாம் மாண்டு இறந்துபோஞர்கள்.
இது செய்தி மகராசா கேட்டு இந்தப் பகுதியிற் சனமெல் லாம் அழிந்து போச்சுதென்று இந்தப் பகுதிக்கு ஊழிய பா ழி யம் ஒரு காலமும் இல்லேயென்று கோட்டாஞ் சேனேக்கும் பள்ளச் சேனேக் கும் பொதுவிலே சுளா மரத்திலும் இலுப்பை மரத்திலும் பள்ளச் சேனேக்கும் சங்குசக்கரம் வெட்டியிருக்கிறது. அந்த மரத்திலிந்தச் செய்தியறியவும் பெரியோர்கள் நாடுகாட்டுப் பூருவ பரவணி முற்றும்.
- 12

நாடுகாட்டு எல்லேகள்
இதற்கு எப்போது வடக்கு நாதனேயடிப்பா, வேடர் குடியிருந்த தோட்டம் எழுவான்மூலே துலுக்கி மனல் சங்கத்தான் பள்ளம், கருவேப்பங்காடு. தெற்கு கழிகாமத்து மலே, மேற்கு ஏழு வனமுட்பட கொலுசாப்பழை சுல்லக்கை - ஆறு குறு வழையாறு, இந்த நான்கு எல்லேயும் ஆழப்பட்ட பகுதியானது ஆண்டனுபவித்திருந்து பட்டங் கட்டின முதலிமார் ஒன்பதுபேர், பட்டங்கட்டாத முதலிமார் நாலு பேர். தலைமை செய்த போடிமார் ஏழு பேர். இப்படிக் கிந்தப் பகுதி யாண்டிருந்தவர்கள் பூருவ பரவணி முற்றும்.
4. தம்பிலுவில் திருக்கோவில் கல்வெட்டு
ரீ சங் நீற்கு ஆ கொடுத் கைக்க த பொ ண்டுப த வொ ரையில் தி பற்ம த் தாவ வில் இ érfTsrfrthLI ரான தி தில்தை ன்ததன் சுவைக் றிபுவன மாதம் மத்துக் கொந்ற ச் சக்கிற உய திபதி கு அகி பாவத்ை வத்திக சிவஞன தம்செ த கொள் ள் பூரீவி சங்கரகர் தாணுகி எக்கடவ Ա Ա | h1IIT AG TIL ல் கொங் ாருகவும் குதெவ லுக்கு
t திருக்கோவில் அம்மன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியம் பற்றியதே மேற்காட்டிய கல்வெட்டு வேறிரு கல்வெட்டுக்களும் அங் குள்ளன. அவை பூரணமான நிலையில் இல்லை.
வீரமுனேக்குரியதான செப்பேடு ஒன்றுமுண்டு. அது அண்மை யில் வெளிவந்தது. அது வருவாறு
5. விரமுனைச் செப்பேடு முதற் பம்
ரகார்த்தம் 1537 ஆல் சய வருஷ் சம் தை மீ" 26 திகதி வெள்ளிக்கிள மை கூடிய சுபயொக சுபதினத்தில் லெங்கை ஆதிபதி ராசெந்திர சிம்மாசத்தெளுந்தருளி ய சமுக மதிரைப்பட்டணம் அருணுசலச் செட்டிக் ந்தப்பச் செட்டி அவருடன் - பக - செட்டிப் பிள்ளைமார்களும் குமாரத்திக்குதவியா கச் சிந்தாத்திரைப் Wair air ar J TIGNY Trwyth (Na), rrisT GE (ALF)
13

Page 14
இரண்டாவது
லங்கைத்திவு மட்டுகளப்பு விரமுனேயில் வத் திரங்கி பிள்ளேயாரையும் அவ்விடம் வை த்துப் பொட்டு செங்கடசுநகரி(ப)ண்னசுச ா லேயில் வந்து குமாரத்தியையும் கொ ண்டு செர்த்து ராசாயிடத்தில் பொய் முகதெரிசனே பண்ணி முட்டுக்குத்தி ெ தண்டம் பண்ண ராசாதிருமனதிரங்கி என்ன வெணுமெண்டு கெட்க்க மட்டுக்களப் பு விரமுனேயில் குடியிருக்கவும் வயிர்ரு வளப்புககு பூமிசம்பத்து கிடைக்கவெ ணு மெண்டதர்க்கு பிரங்கின பிடத்தில் குடி யிருப்பும் பள்ளத்துவெளியும் எத்தா வேவெளி முன்மாரிக்காடு நிலம்குளம் கொபுர ம் நிசமித்துக் கொடுக்கப்படும் பூமிக்கெல்கை பாவது கிளக்கு தகட்டுமுரிவளவு மெர்க்(கு)
பக்கம் நாள்பாத்த கல்லுகாமுச்சி-நு-வடக்கு வம்மி அடிப்புட்ட தெர்க்கு ஏறுகல்லுகாமுக்கி-உ- யிவளவு நிலத்தையும் -பட- செட்டிப்பிள்ளே ம்ார்களும் அவர்அவர் புள்ளHள்ள தலமுரைக் கும் ஆண்டனுபவித்து வரவும் குமாரத்திகொண்டு வந்த புள்ளேயாருக்கு காடுகட்டில் மள்வத் கபூரும் அதர்க்கு செர்ந்த குளம்வெளிகாடு ம் ம்ட்டுகளப்பு:நாடு முளுதிலும் ருருக்கும் பெண்பிளேகள் சகலரும் வருஷ்சம் பணம் அரை கொயிலுக்கு நிசமங்கொடுக்கவும் எண்டு நி சமித்து சிங்கமுத்திரையும் திருமுகமும் திருை கயும் கொடுத்தபடிக்கு கொச்சி கொல்லம் கொவை நாடச்சந்தவிர்ந்தரசாளும் புவனசி ங்க சுவாமி நமசித்தெ நமசித்து உ
சம்மான்துறையினைச் சார்ந்த செப்பேடும் ஒன்றுண்டு. அது வருமாறு:
6. சம்பாந்துறைச் செப்பேடுகள்
முதலாவது ஏடு
1805 ஆண்டு சித்திரை மீ" 29 திய தி புதன்கிளமை வி
-14

சாக நட்செத்திரமும் ப வர்ணமையும் கிரக னே புண்ணிய கா லத்தில் பரராச் செசு விர கண்வி பாண்டது சொ ளெந்திர றனகு ர விக்குறும் பிற தாபரா கிய ராசிங்க மகாராசா ஆண்டவர் திருக் கருனே புரிந்து மட்டக்களப்பு தெசத்தில் சம்பாந்து விறக் கடுத்த பண்டித்தி வு வெளிப்பத்துக்குச் செ ர்ந்த கொண்வட்டவா ன் வெளியும் கொட்ட ான் பத்து மிதுகளுக்க டுத்தி யிலவிசங்களுமு ஸ் பட ராமநாத பிராமண ஞருக்கு பிள்ஃாமள் ளே தல முறைக்கு தார ாதித் த மாசுக் கிடைதது இரண்டாவது ஏடு
இதில் யாதா மொருத் தர் தடைபண்ணினுல் காசிலெ ராமெசுவரத் திலெ சுநிர்காமத்தில் ம ானிக்க கெங்கையிலெ தீயிட்ட பாவத்தில் பொ வராகவும் யிப்படிக்கு செப்புப் பட்டையங் கெடைத்த பணி வி டைப் படியாகவும்
சீர்பாதர் குலத்துக்குரியதாகக் கருதப்படும் செப்பேடுகள் இரண்டு உள்ளன. அவை விருமாறு:
7. i. இர்பாதர் வரன்முறைக் கல்வெட்டு.
காப்பு
சீரார் பரதகண்டஞ் சேர்ந்துரிமை பூண்டொருக்கால் பாரார் புகழீழம் பண்டடைந்த - தாராரும் சீர்பாதத் தோர்பெருமை ச்ெப்பக் கணேசனிரு சீர்பாதம் வைப்பாஞ் சிரம்,
15

Page 15
பரதாண்டத்திற் பண்புடனரசாய்த் தரமுடனுண்ட சற்சன சோழன் தவப்புதவியாகத் தரையினிற் செனித்த நவமணி நேரும் மாருதப்புரவி வல்விதன் குதிரை வதனம்மாற எல்லேயிற் றீர்த்தம் இந்தியாமுழுதும் படிந்துதிரிந்து பயணிவதாக வடிவேற் பெருமான் வைகியகதிரை சென்றதன் குறையைத் தீர்ப்பது முறையென மன்றலங்குழவி வந்தனளிலங்கை கந்தன் சுழலடி காரிசுைவனங்க விந்தையதாக விரும்பும் யாழ்ப்பாண நாடதனே நண்ணி நகுலநன்மலேயின் மாடேதெற்காய் மல்கும் நதியில் முழுகிடவுந்தன் முற்பவவினேயால் தழுவிய குதிரைச்சாயல் தீர்ந்து விளங்குவாயென்று மெல்வியல் ଏigitsä! உள்மது உருக உவப்புடன் கண்டு கீரிமலையைக் கிட்டியே செல்வி நீரினிற்படிய நீத்தது மாமுகம் அச்செயல்தன்னே அறிந்திடும் மாது மெச்சிட ஒற்றரை விரைவில் உச்சிதமாக உவப்புடன் அனுப்பினள் அச்சமதில்ஃப் யென்றரசன் விருப்புடன் கந்தனுருவக் கனகச் சிலேதனே விந்தையதாக விரைவுடனுப்ப கச்சாய்த்துறையின் கரையதிற்கொண்டு மெச்சிட ஒற்றர் விட்டனர்படகை அவ்விடந்தன்னில் ஆயிழைவந்து செவ்வ்ைசேர் காங்கேயன் திருவுருவத்தன்னே நகுலமலைக்கு நடந்தனள் கொண்டு தகைமைசேர் கோயில் தையலாளியற்றிக் கொடித்தம்பம் நட்டுக்குற்றமில் விழாவைத் துடியிடைமங்கை சோர்வுற ச்செய்து காரனநாமங் கழறினளப்போ மாமுகவடிவம் மாறியவதகுல் மாமுகனுறைவது மாவிட்டபுரம் காங்கேயன் உருவதுகான சேர்இடமே காங்கேசன் துறையெனக் கழறியே மீண்டு தாய் நாடேகத்தைய விருந்தாள்
-1-

ஓயாப்புகழ்சேர் உக்கிரவீர சிங்கனறிந்த தெரிவையை வேட்டு பங்கா வால்சிங்கபெண் மகவைத் தரைதனிவீன்ருள் தற்பரனருளால் உரைதருபூர்வ உச்சிதமதியெனச் சிங்கன் வளர்ந்து தேர்ந்தான் கஃவகள் துங்கமார் தவசிகள் சூழுமாச்சிரமம் துணிவுடன் சென்று தொழுதவர் பதத்தை அணியெனுமாசியும் ஆகாயகமனமும் பயின்றினித்திருந்தான் பாத்திபன்மிக்க வயுர உடலும் மாற்ருர்போற்றும் வாஃநற்பருவமும் வாய்ந்திடுதன்மையில் வாலசிங்கனென எழுத்தினருலகோர் அன்னன் இலங்கையை அண்டியே கண்டி தன்னகர் தன்னே நலியாது பிடித்து அரசாய்ப்பல்கால் அமர்ந்தினிதிருந்து தாரமுடன் மன்றல் தான் செய்யவெண்ணி சோழவாசனின் தூமணியான ஆழியினமிர்தம் அது நிகர்சீர்பாதத்தை விதிப்படி மனந்து விளங் கிடும்நாளில் மதிமுக மங்கை மன்னடி பணிந்து காதல் நினது கார்வள நாடெனும் மாதல மனத்தையும் மகிழ்ந்து காட்டுதிரென்ன அரயனதற்கு அண்டியுன் பிதாவை வரமது கேட்டு வருகுதி யென்று கூறியே கண்டி குறுகினன் குருசில் ஏறினன் நிகர இவன் துலங்கிடுகால சீர்பாத தேவி சேர்ந்து தள் ருதைபால் ஏராரிலங்கை ஏகிடச் செலவு 距 பெற்ருள் படவிரி பேருவகையாகி உற்றதுணேயாய் உயிரின் தோழியாய் வெள்ளாகி யென்னும் மெல்லியல் தன்னுடன் மன்னருளியஞ் செய்மதில் நகர் கடக்க ஒற்றியூரி கட்டு மாவட்டப் பெருந்துறை நற்றவ நாட்டில் நாளும் வதிந்து அரசர் வினேயுரி அருளுடை மேலோர் வரணுறு சிந்தன. பழையன் மருவும் காங்கயன் காலதேவ னென்னுரவோர் பாங்காய வரவர் பன்மொழியாருடன் மேயினரன்றி வேளாண் மரபோர் ஆயிரவரின் அறைபுதல் விழைவின
- 17

Page 16
கார் வளநாட்டின் கண்ணப்ப முதலி பேருள முத்து நாயகச் செட்டி சமய நீட்சதர் சதாசிவச் செட்டி அமர் புகழ் சந்திரசேகர ஐயங்கார் அச்சுத ஐயங்காரரிவை பார்வதிப்பிள்ளை கச்சணி லட்சுமிக் கவினுடையாருடன் இன்னும் தேவையாம் ஏவலார் புடை-குழி கன்னிகை ஒடம் களிப்புட னேறினள் ஒதையின் வேகத்த்தால் உத்தியில் ஓடி மாதவர் போற்றும் வளம்பெறு கோயிலே குறியாய்க் கோை தயாளிருந்ந்தாள் பாயுறு மோடம் படர்ந்திலேயப்பால் அரசி மின்னிடை கண்டருந் துயராகி கரணமந்துடைக் கணேசனே நினைந்து சிந்த நீ படகின் கீழ் சென்று பாரென்ன சிந்தினுட் சிந்தனுஞ் சென்றனப்போது ஐந்து கரமுடைய ஐயனின் திருவுரு பந்தமகன்ருன் பார்வைக் கெட்ட உள்ளது சிந்தன் உரைத்தனனுக உளமிகப் பூத்து உம்பர்தம் நாயகனே பணிந்து தூக்கிப் படகதில் வையென்னக் கனிந்த விருதயக் கணேசனே ஆளும் ஆகுவாகனனே அன்பர்க்கெளியனே ஏகிடவந்த இன்பப் படகதில் இருத்தினன் நின்றேர் இன்கவிபாட மருவிடை அன்னம் மற்றிருசொல்லும் வாவியில் வணிதை யென்பட வி தாவியே யோடித் தரையிடைச் சேர்ந்தால் தட்டிய இடத்திற் சாசுபதமாக கட்டி நல்லாலயங் நாேர&னயிருத்தி விழாக் கொண்டாடி மேவுதும் பாமென தளர்விலா வாய்மை சாற்றிய பின்றை ஒடமுமோடி உறும் புகழ் நீங்க நீடுபுகழ் மட்டக்களப்பின் கரையாய் வளமிகு வீரமாமுனே பெனுமிடத்து அழகார் படகு அடைதீஇ' ப3ம ஐங்கரக் கடவுளுக் காலயமமைத்துத் துங்கமுடனே சொல்லருநிதியும் கிண்ணறையம் வெளி தரவைமுன்மாரி தண்ணிய மல்வத்தைக் குளவெளியெனும் செந்நெற் கழனியும் சேயிழை உதவி
- R

அந்நாள் கொற்றத்தின் படியேகி விழாக் கொண்டாடி விருப்புடனங்கு அழகுறுந் தலைவன் அமைந்த நன்மாடத்து சின்னுள் வதிந்து சிறந்த பூசைக்காய் நன்மலர் கொய்ய நாட்டினன் தொழிலும் மல்லல் கொழுமல்வத்தை மல்லிகைத்தீவு சொல்லருங்காவின் தொல்பெயராகும் சீர்பாததேவி திருவென நிலவி ஏர்பெறு வீரமுனேயிருபோது கண்டியிலிருந்து காதலன்சிங்கள் ஒண்டொடியுடனே உவகையோடு ஆகாயகமனமாய் அடிக்கடியிரவில் வாகாய் வருவதும் போவதும் வழக்கம் இப்படித் தோன்றல் இரவினில் வந்து ஒப்புடன் போவதை ஒருநாட்பழையன் அறிந்து துரத்தி அந்தோ ஈட்டியால் எறிந்திட அதுவும் எய்தவன்பால் ஈட்டி எதிர்க்க ஏந்தலும் பிடிசார்ந்த நாடிய பிடியும் நலமுடன் வீழ்க கெவுண மகிமையாற் கிளம்பிக் ககனத்து அவுனன் குரென அகன்றவினன் நம்பி அடுத்தநாள் வந்து அவ்விடந்தனக்கு மடுத்ததன் முனைதிருப்பி மனலெனவோதி பழையன் வங்கிசத்தார் பாரினிலென்றும் தளேயுமென் ருசித்து அந்தமிலாது வாழ்க நிதமென வாழ்த்திய பின்றை தம்முடன் வந்த சிந்தனே நோக்கி நாளுந் திருப்பணி நலமுடன் புரிகென ஆளுஞ் செங்கோல் அரவிந்தக் கொடியும் விருந்தென வீந்து விருப்புடன் தனது, வருபெயரென்றும் மறவாது வழங்கக் சீர்பாதத் தோரெனச் சீரிய நாமம் பேர்பெற உவகைப்பிளம் போடீந் ததன்றிக் கோயிலூழியம் குறைவிலாதியன்ற ஆயநன் மரபோர்க் காணேயிற் பணிந்து சேவகப்பற்று கல்லடி வட்டையென தாலசு மதளிற் தக்கநெற் பூமியும் பன்றித் தீவிற் பருமணிநேர் வயலும் ஒன்றிய செட்டிகள் நிகரில்வெளியும் மனமகிழ் பள்ளப்பற்றது மீத்தவன் தான் துதி வேலைத் தராயிற் துதிக்கப்

Page 17
பான் மொழியிந்து பத்தாவுடனே கண்டியை அடைந்து கருனேயே ததும்ப அண்டிய பொருள்கள் அன்பாயனுப்பிப்பின் தாய்நாடு சென்று தவமணியனயாள் ஆயதன் மாளிகை அமர்ந்தனளாக அரசியின் கட்டளைக் கியைந்து நடந்த வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவத் தங்கவேலதைத் தண்ணளியுடனே மங்காச் சிந்தன் வலுவுடனெடுத்து வடக்கு நோக்கி வந்தோரிடத்தில் திடமுடன் திவ்லே மரத்தில்வைத்து அங்குள்ள புதியிலுள்ளோர்க்குரைத்து துங்கமுடனவர்களேத் துண்வாய்க்கொண்டு கன்சுவேற் படையைக் களிப்புடனெடுத்து மனமுடன் கொத்து மண்டபமமைத்துத் தில்லவேற் கந்தனெனத் திருநாமமிட்டு வல்லே மற்றிடம் வதிந்தோர் தமையழைத்து உரிமை உங்களுக்கு உள்ளதென்ருேதினுள் வரிபடர் வழியாய் வந்த நாள்முதலாய்க் சுந்தனுக்கினிய கடிமலர் தூவலும் வந்தவர் பூசையை வழிகொடுத்து நடாத்தலும் திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே மருவார் கனிந்து மலரடி பணியும் மண்டூர்க் கோயிலின் வாய்மை புணரலாம் இன்றுங் கெளரவர் எழில் சீர்பாதத்தோர் வேளாண் குலத்தோர் வேறிலவரன்றி நாளாமிது போதும் நவிலுங் கோயிற்கண் உரிமையுடையாரோதற் குனரார் தெரிமின் தெளிமின் செப்பிடுமுண்மையை செல்வியின் பெயராற் திருமும் மரபினர் பல்கிட வெண்ணிப் புதுவுயர்மரபோர் வாழும் போதினில் வகுத்தனர் தலேவர் கேளும் யாரெனக் கிளத்ததுமீங்கு படையன், பரதேசி, பாட்டுவாழி, முடவன். உடையனருளின் உத்தமன் ஞானி ஆகுவாரிவரை அடிப்படையாக்கி வாகுமரபுடன் வதியச் செய்தனர் ஆதலானிவரும் அரிவை வங்கிசமென்று அகமகிழ்ந்து அறைதலுமொக்கும் நான்கு வருணமும் நலமுடன் பூனூல் தன் மார்பிலரிையுந் தகைமையை அறியாய்
-교()-

விப்பிரரன்றி வேருேர் பூனூல் இப்புவிதன்னிலிடாரென மதித்தும் பூனூலணிந்த பொருபுறு மரசரை ஆகாலனிந்த அந்தனரென்று கூறுவதிற் குவலயமீதிற
மாறுகொண் கூறுமிந்நாமந்த8ள விட்டு அரசியின் குலமென அழைப்பது சாலும் தரமுறு செங்கோல் தகைமைக் கொடியும் அரவிந்தமலரும் அமைந்தன வாயினும் மிங்கிலப் பொருளாய் வழங்கிடும் விருதையும் துங்கமுடன் பெற்றுத் துவங்குவதாலும் அரசர்க்குரிய அறுதொழில் திவாரு 'குற்றி வருவதினுலும் மன்னியே வாழும் மாபுகழ் சீர்பாதத்தோர் மின்குலமென்ை வகுத்தலே பொருந்தும்.
சிர்பாதத்தரைப்பற்றிக் கூறும் இன்ஞேர் கல்வெட்டு,
திருவருள் கைஜர் சிவனருள் புரிய மருவளரிவங்கை மன்னவனும் வாஸ் சிங்கனெனும் சிறந்த பேருடையான் சித்துவித்தையிற் செகமெச்சிய தீரன் கலைஞானம் அறுபத்துநாலும் கற்றுத் தேறினுேன் இருக்கு யசுர் சாபம் அதர்வனமென்னும் வேதம் நான்கும் விரும்பியுணர்ந்தோன் மேன குளிகையின் காரசக்தியால் நானுதேச வளவிகற்பங்களே நன்றுப் அறிந்தோன் ஈழதேசமென்னும் இலங்காபுரிக்கு இராசதானியெனக் கிண்டிமாநகரைக் கனம்பெற வகுத்து செங்கோல் செலுத்தித் தேசத்தையாளுகையில் மன்னனுமப்போ மணஞ்செய்யக் கருதி துன்னுதிரை கடல் துரிதமாய்த்தாண்டி மன்னு சோழன் மாதவப்புதல்வியை மணமாலே சூட்டி மகிழ்ந்திருக்கையில் இராசனும் தின்பவனுகிய ராணியாம் அம்மாளுடன் சனங்களைச் சேர்த்து சந்தோஷமாகத் தென்னிலங்காபுரி சேரவிரும்பி ஆரியநாட்டு அந்தணர் தம்மில் அச்சுத&னயங்கா அவர்மனேவி செந்திருமாது
தேவியருடன் திருவெற்றியூரின்
-31--

Page 18
சிவனடி மறவாச் சந்திரசேகர சமய தீட்சதர் தையலாள் பார்வதி கட்டுமாவடிக் கண்ணப்பமுதலி முத்துநாயக்கன் முதலியோருடன் கூடி மக்களையும் கூட்டிச்சேர்த்து கப்பலோட்டக் கைதேர்ந்தவரில் சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி இவர்களை யேற்றி இராசனும் இராணியுமேறி தென்னிலங்காபுரி திசைநோக்கி வருகையில் திரிகோணமலைத் திரைகடல் நடுவில் கட்டியதன்மையாய்க் கப்பலும் நின்றது நின்றிடுங் கப்பலைக் கண்டதுமரசன் காரணமேதெனக் கண்டறிவோமென ஏவலாளர்களைக் இறக்கிப்பார்க்கையில் ஐந்து கரமும் யானைமுகமும் அங்குவிபாஷமும் தாங்கிய கையுடன் எங்கள் பிரான் எழுந்தருளி இருக்கிருரெனவும் அவ்வுரைகேட்டு அரசனும் திகைத்து அந்தணர் தங்களை அன்புடன் பார்த்து ஐயனே நீங்கள் ஆழியிலிருக்கும் மெய்யனைக் கப்பலில் விரைவுடன் சேரென அவ்வார்த்தை கேட்ட அந்தணரானேர் கண்ணிர் சொரியக் கசிந்த மனத்துடன் வெள்ளமுதம் பொழி விநாயகபிரான உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று கணேசனை வாவெனக் கைகூப்பித்தொழ அவ்வுருவமும் ஐங்கரத்தண்ணல் திருவடிதன்னைச் சீக்கிரங் காட்ட கடலிலிருந்த கருணுகரனின் பாதாரவிந்தம் பற்றிச் சேர்ந்தனர் பற்றிய பொழுது பாராளுமன்னன் சித்தம் மகிழ்ந்து திருவடிவணங்கி ஐந்துகரனே இச்சிந்துயாத்திரையில் உன் திருவடிகாண எத்தவம் புரிந்தோம் ஏத்தினுேமென்று இறைஞ்சிப் பணிந்தேத்தி கருணுகரனே இக்கப்பலானது கண்டி மாநகர்க் கரையை அடைந்தால் ஆலயம் அமைத்து அவ்விடத்திவிருத்தி பூசை செய்விப்பேனெனப் பூபதிபேற்றினுள் இவ்வாய் திறந்து இராசனுந் துதிக்க செவ்வாய் மடலாள் சிரசிற் கைகூப்பி
-22

கணேசனருளால் கப்பலும் ஓடி சம்மான்துறையைச் சார்ந்திடும் நகரம் வீரமுனையென விளம்பிய நதிக்கரையில் கப்பல் சேரச்கண்டு எல்லாரும் கப்பலைவிட்டுக் கரையிலிறங்கி தச்சர் சித்தர் தட்டார் முதலிய குடிமக்களைக் கோவுமழைத்து ஐங்கரக் கடவுளுக்கு ஆலயமொன்று சீக்கிரம் அமையெனச் செலவுகொடுத்து அரசனுரைப்படி ஆலயம் அமைத்தனர் அந்தணராதியோர் அபிசேகித்து விநாயகப் பெருமான் வீழ்ந்தடிபணிந்து கோமானுரைப்படி கோயிலுள் வைத்தார் கட்டியரசன் கணேசப் பெருமானை சிந்துயாத்திரையுள் திருவடிகண்டதால் சிந்தாத்திரைப் பிள்ளையார் என்னும் நாமத்துடன் நித்திய பூசை நியமமாகச் செய்து விநாயகராலயம் விளங்கிடும் பொருட்டு செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும் தேவாலயத்தின் திருப்பணிச் சாமான் எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் தங்களை அரசனழைத்து பாசாங்கு சங்கரன் பாதாரவிந்தம் பாற்கடல்மீது பற்றிச் சேர்ந்ததனல் சீர்பாதமெனச் சிறந்த பெயர்சூட்டி அரசர்க்கும் தேவர்க்கும் அரும் விருந்தான வெற்றிக்கொடியை விரும்பிக் கொடுத்து வணிகர் தம்மையும் வரும்படி செய்து இருசாதியாரும் இசைந்தெக்காலமும் ஆட்சி புரியுமென்று ஆசீர்வதித்தி எழுத்தைப் பாரரசன் இவர்கட்கீந்து குடிசனங்களால் கோயில் சிறக்க சாதிக்காணிகள் சகலருக்குங் கொடுத்து செங்கோல் வேந்தனும் தேவியுமாக கண்டி மாநகரைக் கனம்பெறவடைந்தார்
و
(p565urtti S. O. கனகரத்தினம் 6TcpSugGol Monograph
of Batticaloa District. மட்டக்களப்பு மாவட்டத்தின் சரித்திரத்தைப் பற்றி எழுந்த முதனூலாகும். 1921ம் ஆண்டில் வெளிவந்தது. இதி லுள்ள சில பகுதிகள் ஏலவே மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி ஆண்டு
மலர்களில் வெளிவந்தன. நூற்பிரதிகள் பெறுவதற்கில்லை.
-23

Page 19
மட்டக்களப்புத் தமிழகம் என்ற நூல் அண்மையில் 1964ம் ஆண்டு வெளிவந்தது. வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா B.O.L. எழுதியது. பத்து இயல்களால் அமைந்தது. ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களையுடையது.
History of the Methodist Church of Ceylon Tairo Dires மெதடித்த சபை வரலாறு கூறுமுகத்தான் மட்டக்களப்பின் வரலாறும் ஆங்காங்கு அமைய எழுதப்பட்டிருக்கின்றது.
கண்ணகி வழக்குரை என்ற நூலிலும் மட்டக்களப்புடன் சேர்ந்த சங்கதிகள் பல செறிந்து கிடக்கின்றன. கோவலனர் கதை என்ற நூலிலும் மட்டக்களப்புச் சரித்திரம் துலங்கக் கிடக்கின்றது.
பொற்புரு வந்த காவியம் என்ற நூல் இருபத்துமூன்று செய்யுள்களாலானது. இங்கு மட்டக்களப்புக்குக் கண்ணகி வந்த வர லாறு கூறப்படுகின்றது. மகாமாரித்தேவி திவ்விய காணி என்ற நூலில் இக்காவியம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மகாமாரித்தேவி திவ்விய காணி என்ற நூல் அட்டப்பள்ளம் திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களால் 1971ல் பதிப்பிக்கப்பட்டது. பூர்வகாலம் முதல் வாய்மொழி மூலமாகவும், ஒலைச்சுவடிகள் மூல மாகவும் கோவில்களில் சேமித்து வைத்திருந்த தேவவழிபாட்டுப் பத்ததிகளிலுள்ள கிழக்கிலங்கைக் கவிதைச் செல்வங்கள் மூலமாகவும் வந்த அகவல், காவியம், தாலாட்டு, உலா, பள்ளு, தோத்திரம் முதலியன நூலிற் காட்டப்பட்டுள்ளன.
Tennent Ceylon என்ற நூலிலும் மட்டக்களப்பின் வரலாறு கூறப்பட்டிருக்கிறது. i. மட்டிக்களப்பு - பெயர்க்காரணம்
மட்டக்களப்பு மான்மியம் என்ற நூல் (பக். 6) மட்டக் களப்பு என்று பெயரமைந்த காரணத்தைத் தெரிவிக்கின்றது. அது ஐதிகக் கதைபோலும். எனினும் மட்டமான களப்பு என்பதிற் தவறு இல்லை. இந்நூலிற் பல இடங்களில்
"சீரிலங்கும் மட்டமெனுங் களப்பு நாட்டை" "மட்டக்கந்தமே சூழ்ந்த களப்பென வகுத்து" "மண்முனை மட்ட வாழ்வுறு களப்பு' மட்ட்மாநகர் தன்னில் மட்டமாங்களப்பை ஆண்டு என்று வருவதால் மட்டமாகிய களப்பு என்று பொருள்படும் மட்டக் களப்பு என்ற பெயர் வந்துள்ளது என்பது தெளிவு. களப்பு என்பது
-24

தூய தமிழ்ச்சொல். வடமொழிச்சொல்லன்று. மட்டுநகர் என்று இக் காலத்தவர் எழுதியும் வருகின்றனர். மட்டு, மட்டம் என்பன ஒரே பொருளன.
மட்டக்களப்பு என்ற பெயர் வழக்கு ஆதிகாலந் தொட்டே வழங்கிவந்ததென்பர். என்ருலும் அதற்கு இலக்கிய வழக்குண்டோ என்பார்க்கு இடப்பெயர்கள் வருகின்ற இலக்கியங்கள் தோன்றிய காலங்களிவிருந்து பெறுதலே சாலும் என்பாம். மட்டக்களப்பு மான் மியம் பல இடங்களில் மட்டமாங்களப்பு என்று கூறுகின்றது. அன்றி யும்கூ கண்ணகி வழக்குரை காவியத்திலே கப்பல் வைத்த காதையிலே தூரியோட்டு என்ற பிரிவில்
பன்றித்தீவு சல்லித்தீவு பாலமுனை பாசிக்குடா என்ற்ெக்கா லமும் வழங்கும் ஏருவூர் தனக்கடந்து சென்றப்போ புளியன்துறை சேரப்புறக் கிட்டோடி மன்றலொத்த தொடைமாரபர் மட்டக்களப்பில் விட்டார்
என்று கூறப்பட்டிருக்கிறது. கண்ணகிவழக்குரை என்ற காவியத்தை யார்த்தவன் சிங்கைச் செகராசசேகர மன்னணுவான். இவன் கி. பி. 1370 - 1417 என்ற காலத்தில் அரசியற்றினன்.
மேலும், கோவலனுர் கதை என்ற காவியத்தில் தூரி ஒட்டம் என்றபிரிவில்
விட்டனரே கெவுஸிமுனை விரைவாகப் பள்டித்தீவு மட்டசல்லித் தீவுடனே பாலமுனைதான் கடந்து “ விட்டபாசிக் குடாவுடனே வினையாற்றுக் குடாகடந்து மட்டுபுன்னைக் குடாகடந்து மட்டக்களப்பில் விட்டனரே
என்றியம்பப்பட்டிருக்கிறது .
மேற்கூறிய இரு நூல்களும் வெவ்வேறு பெயர்களுடையன வேனும் கதைப்போக்கால் பாக்களால் ஒற்றுமையுடையன. ஒன்றின்
பிரதிபேதமேமற்றது எனலாம்.
ஆகவே மட்டக்களப்பு என்ற பெயர்ப்பிரயோகம் பதினைந்தாம் நூற்ருண்டில் இலக்கியத்தில் ஏறியுண்டென்பது பெற்ரும்.
-25

Page 20
i. மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும் இடப் பெயர்களும்
Iட்டக்களப்பு மாநிலமானது இலங்கைத்தீவின் கிழக்குக்கரை யில் அமையப்பெற்றுள்ளதும் மிகவும் பழைய வரலாற்றினே உடையது மான ஒரு பரந்த நிலப்பரப்பாகும். மட்டக்களப்பு என்பது மட்ட மான கடலேரி அல்லது உப்பாறு எனப் பொருள்படும். களப் பு" என்னும் பதம் ஆழமற்ற கடலேரி எனவும் பொருள் கொண்டுள்ளது. இம்மாநிலம் வடக்குத் தெற்காக வெருகல் நதிமுதல் குமுக்கன் ஒயா வரை 35 மைல் நீளத்தில் அமைந்திருக்கிறது. மட்டக்களப்பு என்னும் கடலேரி - இதை வாவி என க் கொள்வாருமுளர் - ஏறக்குறைய, வடக்குத் தெற்காக, முப்பது மைல் தூரத்திற்கு மாத்திரம் அமையப் பெற்றுள்ளதாயிருந்துள்ளபோதிலும் இக்கடலேரியினது செல்வாக்கிளே இப்பிரதேசம் முற்றிலும் பெற்றுள்ளதாயிருப்பதன் காரணமாக இம் மாநிலம் இக்கடலேரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாயிருக்கின்றது. அதுமாத்திாமன்றி இம்மாநிலத்தில் பாந்து படியப்பெற்றிருக்கும் வண் டல் களிமண் செறிந்த தாழ்நிலமானது - இது பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 20 அடி உயரத்திற்கு குறைந்துள்ளது - முன்னுெரு கால். அதாவது புவிச்சரிதவியளின்படி "மயோசீன்" சுண்ணும்புக் கற் பாறைகள் தோன்றியுள்ள பூர்வகாலத்தில், பரவைக் கடலினுல் மூடப் பெற்றுள்ள களப்பாயிருந்தமையினுல் மட்டக்களப்பு" என்னும் பெய ரைப் பெறுவதற்கும் பொருத்தமானதெனக் கொள்வது தவருகாது. கடலும் கடல்சார்ந்த நிலமும், வயலும் வயல்சார்ந்த நிலமும் இம் மாநிலம் எங்கணும் காணப்படுவதால், இப்பிரதேசமானது மருதமும் நெய்தலும் மயங்கிய " மாண்பிற்கும், குறிஞ்சியும் முல்லேயும் முயங் கிய பாங்கிற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றது. இம்மாநிலத்தின் மிகக்கூடிய நீளம் 35மைல் ஆகும் அதன் மிகக்கூடிய அகலம் சுமார் 50 விமல் ஆகும். அதன் பாப்பு 27 2 சதுர மைல்களாகும்.
கண் பைத் தமது இராசதானியாகக் கொண்டு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குமுன் அரசாண்டுவந்த இலங்கை மன்னர்கள் இப் பிரதேசத்திற்கு மிகக்கூடிய மதிப்பிளேக் கொடுத்திருந்தனர். அக்கால மட்டக்களப்பு மாநிலத்தினே அம்மன்னர்கள் " மட்டக்களப்புவ "- சேற்றுவாவி - என்றழைத்தனர். அக்கால மட்டக்களப்பு மாநில ம் தனது மேற்குப்புற எ ல் லே யாக ஊவாக்குன்றுகள்டியைப்பெற்றுள்ள
-26

கிழக்கு ஊவா மலைத்தளத்தினேப் பெற்றுள்ளதாயும் கண்டிகா இராச்சி பத்துடன் போக்குவரவு. வர்த்தக கலாச்சார அரசியல் தொடர்புகள் கொண்டுள்ளதாயு மிருந்திருத்தல் வேண்டுமெனக் கொள்வதற்கும் பல சான்றுகள் உள. இம்மாநில மக்களின் சமய கலாசார வழக்கங்களும் கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் கண்டி இராசதானிவாழ் மக்களது கலாசார சமயவழிபாட்டு முறைகளுடனும், சமூகச் சம் பிரதாய ஒழுங்குகளுடனும் நெருங்கிய, இஃணபிரியா இனக்கங்கொண்ஞள்ளன வாயிருந்தன வென்பது ஆராய்ச்சிக்குரிய ஒரு பொருளாகும். கண்டி மக்கள் இப்பிரதேசத்தின் தலைநகரமாகிய மட்டக்களப்பினே மட்டக் கொழும்பு" எனவும் அழைத்தனர். எனவே புராதன இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புகொண்டுள்ள இம்மாநிலமும், இம்மாநிலத்தில் எதிந்து வந்துள்ள தமிழ், இஸ்லாமிய, சிங்கள மக்களும் மத்திய மலே நாட்டு மக்களுடன் அன்னியோன்னியமாகப் பழகிவந்தனரென்பதற்கு பல சான்றுகள் உள. அவற்றினே ஈண்டெடுத்து ஆராய்வது அத்துனே இயைபுள்ள தொன்றன்று.
இப்பிரதேசம் இப்பொழுது இருபெரும் ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுகளாவன மட்டக்களப்பு மாவட்டம் அம் பாறை மாவட்டம் என்பனவாம். எனவே இங்கு நாம் மட்டக்களப்பு மாநிலம் எனக்கருதுவது வங்காள விரிகுடாவாகிய கீழைக்கடலுக்கும், மத்திய மலைப்பிரதேசத்தின் இரண்டாம் புவிச்சரிதவியல் தளமாகிய ஆளவாக் குன்றுப் பீடத்திற்கும். இடையில் நீள அமையப்பெற்றிருக் கும் பரந்த, தட்டையான, தாழ்நிலப் பிரதேசமாகும். இதில் ஒன்பது பற்றுக்கள் அடங்கியுள்ளன. இவை பெரும்பாலும் ஆட்சிப்பிரிவுகளே பாம். அவை, பானமைப்பற்று. அக்கரைப்பற்று நிந்தவூர்- கரைவாகுப் பற்று, சம்மான்துறைப்பற்று, எ ரு போரதீவு-மண்முஃனப்பற்று (தெற்கு), விந்தனே பற்று. மண் மனப்பற்று (வடக்கு) ஏ ரு வூர் - தோற2ளப்பற்று, வேகம்பற்று என்பனவாம். இப்பிரதேசம் சிராமங் கள் மலிந்துள்ளதொன்ருகும். இங்கு 1926ம் ஆண்டுக் கணிப்பின்படி நானூற்றறுபத்தைந்து (165) கிராமங்கள் உள. சிறு குளங்கள் பலப்பல.
பூர்வப் பெளதிகப் புவிச்சரிதவியல்
மட்டக்காப்பு மாநிலம் பெருமளவில் தாழ்நிலமாகக் காணப்
பட்டுள்ள போதிலும் அதன் பூர்வப் பெளதிகப் புவிச்சரிதவியல் ஒர ளவு வேறுபட்டுள்ள தரைப்பாங்கினை உடையதாகவே அமையப் பெற் றிருக்கின்றது. இப்புவிச்சரிதவியல் வேறுபாடு இம்மாநிலத்தில் வதிந்து வந்துள்ள மக்களின் வரலாற்றினேயும், அதன் பொருளாதாரத்தின் தனிச்சிறப்புவாய்ந்த பாங்கினையும் நிச்சயப்படுத்துவதில் இடம்பெற லாயிற்று. இதனுல் இம்மாநிலத்தில் வாழ் மக்களின் சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளும் இலங்கையின் ஏ னே ய பாகங்களில் வதிந்துவரும் மக்களது பிரச்சினேகளும் வேறுபடலாயின.
-27--

Page 21
புவிச்சரிதவியல் அடிப்படையில் ஆராயப்புகின் F. D. zy Luisiou, D. N. n. anrriquJnr ( “The Tn ree Super posed Peneplains of Ceylon" - by D. N. Wadia - Geology of Ceylon" - Canadian Journal of Researchi - by F. D. Adams) at sirl rairia, affair garlia:4, புவிச்சரிதவியலமைப்புக் கொள்கைகளின்படி இலங்கைத் தீவானது பூர் வத்தில் அதாவது முற்கம்பிறியக் காலத்திற்தானே மூன்று வெவ்வேறு தடவைகளில் தளமுயர்த்தப்பட்டு தாழ்த்தப்பட்டுள்ளதாயிருந்தது. அங் ங்ேைம தளம் உயர்த்தப்பட்ட காலத்தில் தரையான் து வளிமண்டல் வானிக் அரிப்பினுல் சேதனப்படுத்தப்பட்டிருந்தது. அது உரிக்கப்பட்டு, அறுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, தேய்க்கப்பட்டு அங்குமிங்கும் மத்திய மலேப்பிரதேசச் சரிவுகளில் ஆற்றுப் பள்ளத்தாக்குகளேக் கொண்டுள்ள தாயிருந்தது. இப்பள்ளத்தாக்குகள் புரா த ன கொண்டலேற்றுப் பாறை " அ மை ப் பி ன் திசைப்போக்கினேப் பொறுத்துள்ளனவாய் அமைந்துவிட்டன. கொண்டஃற்று" பாறைப்படிவானது இலங்கையில் தென்மேற்கிலிருந்து வடகிழக்குநோக்கி வியாபித்திருப்பதுடன் அதன் முதுகென்டென பளிங்குச் சுண்ணக்கற்பாறைத் தொடர்களேயும் பெற் றுள்ளது.
ஆளுள் இவ்வமைப்புக்கள&னத்தும் மட்டக்களப்பு பிரதேசத் தி:ள அளித்தாகப் பெற்றுள்ளனவல்ல, மட்டக்களப்பு மாநிலம் முற் ருக L. J. T. பேர்ளுந்து அவர்களின் பட அமைப்பின்படி " விஜயன் நைசுக்" கருங்கற்பாறைகளே மேலரும்பப் பெற்றுள்ளதாக அவதானிக் கப்பட்டுள்ளது. இப்பாறை மாற்றம்பெற்றுள்ளதாயும், பளிங்கு, பெல்ஸ் பார், மைக்கா ஹோண்பிளண்டு போன்ற கணிப்பொருள்கள் உடைய தாயும், கரடுமுரடானதாயும் அமைந்துள்ளது. அது பெரும்பாலும் வளிமண்டல வானிலே அரிப்பாலும், சுT ல் நி லேத் தாக்கங்சாலும் அரிக்கப்பட்டு, "வற்றறைற்று, செம்மண், கிறவல் பரவுகளாகவும், சொறிக்கற்பாறைகளாகவும் மாற்றம்பெற்றுத் தென்படுகின்றது. எங் சுெங்கு இந் நைசுப் பாறையானது ' தனது ஆழமான படைகளில் உட்சென்றிருக்கும் நீரிகுல் தாக்கப்பட்டுள்ளதோ அங்கங்கெல்லாம் உக்கிய நைசுப்படிவுகள் நாய்க்களியாக" மாற்றமடைந்து காட்சி பளிக்கின்றது. எனவே மட்டக்களப்பிலுள்ள விந்தளேப்பகுதியில் தென் படும் குன்றுகளினுென்றின் குறுக்குவெட்டுமுக அமைப்பில் உள்ளமைப் பாகவும் ஆழமான படிவாகவும் நைசுக் கற்பாறை கானப்படுகின்றது. இதற்கு மேலங்கிப் படிவாக உக்கிய லற்றறைற்று " - செம்பாறை, அல்லது சொறிக்கற்படிவு - தென்படுகின்றது. அதன் மேலுளிறயாக உக்கிய நாய்க்களியும், அதன்மேல் செம்மண்கிறவல் அல்லது மக்கி செறிந்த இருமண் அதாவது மணலும் அல்லது பரலும் களியும் சேர்ந்துள்ள மண் ஒரு தனிப்படையாகவும் தென்படுகின்றன. ஆயினும் எங்கெங்கு பள்ளத்தாக்குகளும், குழிகளும், பாறைப்பிளவுகளும் பிதிர்வு களும் காணப்படுகின்றவோ அங்கங்கெல்லாம் வண்டற்படிவுகளும் களிமண் படிவுகளும், மற்படிவுகளும் கூளாங்கல் நாக்குகளும் கானப் படுகின்றன.
--

D, N. உவாடியா அவர்களின் கருதுகோளின்படி இலங்கை
பின் தரையமைப்பில் மேலுந்துதல்கள் ஏற்பட்டனவேயொழிய தாழ்த் தல்கள் ஏற்பட்டதில்லை. அவவுயர்த்தல் மூன்று வெவ்வேறு காலங் களில் ஒன்றன்பின்னுென்ருக உண்டாகியிருத்தல் வேண்டும். இம் மேலுந்துதல்களின் விளேவாக மூன்று தளங்கள் ஒன்றன்மேலொன்ருக நிகழ்ந்துள்ளன. மிகப் பூர்வத்தளமொன்று அமையப்பெற்றிருந்த காலத் தில் (முற்கம்பிறிய யுகம்) அதன்மேல் இரு தளங்கள் வெவ்வேறு காலங் களில் உந்தப்பட்டன. முதல் உந்துதலின் விளேவாக இரண்டாவது பெனிப்பிளேன்" தளமானது முதல் பெனிப்பிளேன் தளத்தின் மேலும், பின் உந்துதலின் வினேவாசு "மூன்றுவது பெனிப்பிளேன்" தளம் இரண் டாவது பெனிப்பிளேன் தளத்தின் மேலும் உயர்த்தப்பட்டிருந்தன. எனவே உவாடியாவின் சுருதுகோளின்படி இலங்கையில் மூன்று பெனிப்பிளேன்கள்" அல்லது வளிமண்டல அழிவினுல் செதுக்கப்பட்ட தளங்கள் உள்ளனவெனவும். அவை ஒன்றன்மேலொன்ருத புவியியல் உந்துதல்களின் தாக்கத்தினுல் உயர்த்தப்பட்டனவெனவும் கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. அத்துடன் இலங்கையின் அடித்தளப் பாறை களுக்கும் தக்கணபீடபூமியின் (Deccan) பாறை ஒழுங்கிற்கும் தொடர் புள்ளதெனவும், இலங்கையின் அடித்தளமானது இந்திய உபகண்டத் தின் கண்டத்திட்டில் அமையப்பெற்றுள்ளதெனவும் கொள்ளப்படு கிறது. இலங்கையின் கொண்டலேற்றுப் பாறைகள் சென்னே ஒறிசா மாகாணங்களிலுள்ள பாறைகளே ஒத்திருக்கின்றனவெனவும் கொள்ள படுகிறது.
மட்டக் களப்பு மாநிலத்தைப் பொதுத்தமட்டில் அங்கு மேலரும்பிக் கிடக்கும் பாறை "நைசுப்பாறையாகவே" (Gneiss) தென் படுகிறது. கரையோரப்பகுதிகளில் மாத்திரம், அதாவது மட்டக்களப்பு வாவியினே அடுத்துள்ள பிரதேசத்தில், பின்னெருகால் படிவுபெற்றுள்ள் வண்டற்படிவுகளும், களிமண், மனல் டரல் படிவுகளும் பெரும்பாலும் ஆற்றுப்படுக்கைகளிலும், வெள்ளப்பெருக்கெடுக்கும் பள்ளநிலங்களிலும் காணப்படுகின்றன. இம்மாநிலத்தின் கரையோரமாய் அமையப்பெற் றிருக்கும் உப்பேரிகளும், வாவிகளும், களப்புகளும், சதுப்புநிலங்களும், நச்சைகளும் "லிவாயாக்களும்", அவற்றுக்கும் கடலுக்குமிடையில் படிந்திருக்கும் நீண்ட மணல் நாக்குகளும் என்னத்தைக் குறிக்கின்றன வெனில், முன்னுெருகால் கடலுடன் சம்பந்தமுற்றுள்ள இப்பிரதேசம் பூர்வத்தில் அதாவது "மயோசீன்" (Miocene) காலத்துக்குப் பிந்திய காலத்தில் ஈயோசீன் காலத்தில் - கடலினுள் அமிழ்ந்திக் கிடந்தது. அந்நியிேல் அங்கே பவளப் பூச்சிகள் பவளப் பாறைகளே அமைக்க லாயின. பின்னுெருகால் இக்கரை கடல்மட்டத்திற்குமேல் உயர்த்தப் பட்டபின் கரையோர விளிம்பில் மணல் வார்க்கப்பட்டதால் இவ் விளிம்பிற்கும் உள்ளேயுள்ள சுரைக்குமிடையில், இங்கும் அங்கு ம் கடலேரிகள் அமைந்துவிட்ட அவை தொடக்கத்தில் ஆழமுள்ளன வாயிருந்தன. பின் அவற்றுள் வந்து பாயும் நதிகளினுள் கொண்டு
29.

Page 22
வரப்பட்ட வண்டற் செறிவினுல் அவை உப்புக் "கரச்சை'களாகவும், "லிவாயா’க்களாகவும் மாற்றம் பெற்றுவிட்டன. இன்னும் சில காலத் தில் அவை வெள்ளப்பெருக்காலும் வண்டற்படிவாலும் இன்னும் கூடிய மாற்றமடைந்து களிமண் செறிந்த வயல் நிலங்களாய் மாறி விட்டன. இக்காலத்தில் மட்டக்களப்பு மாநிலத்தில் காணப்படும் நெல் வயல்களனைத்தும் இதே புவிச்சரிதவியலொழுங்கிற்ருன் தோன்றி யிருத்தல் கூடும். va
முதிய பூர்வப் பாறைகளைக் கொண்டுள்ள இப்பிரதேசம் "முற் - கம்பிறியப் புவிச்சரிதவியற் புவியுகத்திற்ருன் தோன்றியிருத்தல் கூடுமென்பதற்கு மேலெடுத்துக்காட்டப்பட்டுள்ள பாறையமைப்பு ஒழுங்குகள் சான்றுபகர்கின்றன. புவிச்சரிதவியற் காலத்தொடர் கொண்டு பார்க்குமிடத்து, பூர்வப்பாறைகள் பெரும்பாலும் கொண்ட லைற்றுப் பாறைகளாகவும்", "நைசுப் பாறைகளாகவும் இலங்கையில் தென்படுகின்றன. பளிங்குச் சுண்ணக் கற்ருெடர்கள் (Crystaline Limestone) மாற்றம் பெற்ற (Metamorphic) பாறைகளாகத்தான் தோன்றியிருத்தல் கூடும். மேலே எடுத்து கூறப்பட்டுள்ள இருபெரும் பூர்வப்பாறைகளுள் நைசுப்பாறைகளே மட்டக்களப்பு மாநிலத்தில் பெருமளவில் கரையோர மணற் கட்டினைவிட ஏனைய பாகங்களில் அதாவது ஊவாப்பீடம் முதல் (விந்தனைப் பிரதேசம்) வாவிகளின் மேற்குக் கரைவரை மேலரும்பி வியாபித்திருக்கின்றன. கரையோரப் படிவுகள் வண்டற் பாறைகளாகவே (Sedimentary) அமைந்துள்ளன. அவற்றுள் வண்டற்படிவுகள், களிமண் படிவுகள், சுண்ணக்கற்படிவுகள், பவளப் பார்ப்படிவுகள் (Corals) மணற்படிவுகள் முக்கியமானவை.
இலங்கையின் பாறையமைப்பினை எடுத்து விவரிக்குமிடத்து அதை ஒரு வசனத்தில் கூறி மு டி க் கி ன் ரு ர் எட்வேட் சுவஸ் எ ன் னும் பேர்போன அவுஸ்திரிய புவிச்சரிதவியல் அறிஞர். அவர் கூறியுள்ளதாவது: "வளிமண்டல வானிலை உரிவால் மேலரும்பி யுள்ள பூர்வப்பாறையமைப்புகள் இந்தியத் தீபகற்பத்தின் மேற்பரப் பில் பெரும்பாகத்தில் வியாபித்திருக்கின்றன. அவ்வமைப்புகள் பெரும் பாலும் "நைசுப்பாறையைக் கொண்டுள்ளனவாயிருக்கின்றன. அவை இலங்கைத் தீவிலும் செறிவுற்றிருக்கின்றன. குமரிமுனை முதல் மேற்கு காற்ருடி மலைவரை (16°வ அவை மேலரும்பியுள்ளன. இந்நைசுப் பாறைத் தொடர் சாலி முனையிலிருந்து 19°வ நெடுங்கோடுவரை பரந் gair Garg. (Suess: “Face of the Earth. Vol. 1 - P. 102) புருெபொஸ் சுவஸ் அவர்களின் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய தொன்றுளது. அஃதென்னவெனில்: இலங்கையின் அடிப்படைப் பூர்வப் பாறைகளனைத்தும் நைசுப்பாறையின் வேற்றுமைப்பட்டுள்ள உருவாக் asniuasG36NT JUnTlifb.
-30

பாறை அமைப்பு முறை
பத்தி - நைசுப்பாறை தோன்றிய காலம்
a 'S i 磁 。 | மிதி 湛器 ዚ፡ወፅr 嘉|署函| 。一一。 Ջ. ICS : இற்றைக்காலம் -
ゴ 8 黑 •s Oy tisfah Girrgiair பணிக்கட்டியுகம் 0.4 GS
of Gurgait 0. 1 3 蔷菲 மயோசீன் SS சுண்ணும்புக்கல்
ான்றி O 置“全 ਭੋ 5 ஒலிகோசீன் ឌឹត្តិ 3. * 2
Gurrgas ༧༧༡ 4. Tgit Ga) egy II. 1687 器 RFUjunrag 607 J மண்டலக் காலநிலை 2.0
3. 6
Տ 器。 கிறிற்றேசியஸ் கடற்படிவுகள் 4 4 图号 s பரந்த பரவைக் கடல்கள் તે s ஜாழுசிக் உண்டாதல் Oes ”岛 பாலைவனங்கள் உப்புமணற்
び] திறியாசிக் படிவுகள் - 1 7
− 7
தென்கோள்ார்த்தத்தில் e Guri Slugër - ಟ್ವಿಲ್ಲ: 12 o உப்பேரிகள் - நிலக்கரிப் படி
காபோனிபெரஸ் கள் - சுண்ணக்கல் 2 离函 தெவோனியன் பழைய செம்பாறைப்படிவுகள் 2 Հi Ջ கடற்கழிகள்: மும் (6 E | o கள முமழக வணடற
PE சிலூறியன் படிவுகள் - ஆறுகளின் தொழில் 1 s 5 ཐུ ஆழமில்லாப் பரவைக் கடல்
ஓர்டோவிசியன் உண்டாதல் w 7
1. o | @)Jt- nrt it unref கம்பிறியன் Tiž : ܗܳܐ
வுகள 2 6
12 தீப்பாறைகள் உண்டாதல் - "முற் - கம்பிறியன் அடையற்பாறைகளின் உற் 00
(After Dr. Herbert H. Thomas)
-31 -

Page 23
இனி F. D. அடம்ஸ் (Adams) என்பாரின் கருதுகோளின்படி இலங்கைத் தீவானது பூர்வத்தில், முற் - கம்பிறிய யுகத்திற்றனே, புவிச்சரிதவியலின்படி சுமார் 16 யுகங்களுக்கு முன்பதாகத் தோன்றி யிருந்தது. அவற்றுள் மிகப் பழைய யுகமே முற் - கம்பிறிய யுகமாகும். இது ஏறக்குறைய 25 மிலியன் வருடங்களுக்கு முந்திய காலம். அத் துடன் முற்-கம்பிறியன் யுகம் 10 மிலியன் வருடங்களைக் கொண் டுள்ளதாயிருந்திருத்தல் வேண்டுமெனக் கொள்ளப்பட்டுள்ளது. முதற் பெருயுகம், இரண்டாம் பெருயுகம், மூன்ரும் பெருயுகம், நான்காம் பெருயுகம் என எடுத்துக் கூறப்பட்டுள்ள இக்காலங்கள், முதற்பெரு யுகம் 12 மிலியன் வருடங்களையும், இரண்டாம் பெருயுகம் 7 மிலியன் வருடங்களையும், மூன்ரும் பெருயுகம் 6 மிலியன் வருடங்களையும், நான்காவது பெருயுகம் சுமார் அரை மிலியன் வருடங்களையும் கொண் G6i 6MT GOT G6JGEST (Dr. Herbert Thomas) G36 spri Gud" H. (35nTuD6v 67 Gö தியம்பியுள்ளனர்.
இலங்கையில் தோன்றியுள்ள பூர்வ முற் - கம்பிறிய யுகப் பாறையானது வளிமண்ட வானியல் அழிவால் தாக்கப்பட்டமையின் காரணமாக, அரிக்கப்பட்டு, உரிக்கப்பட்டு, வெட்டுண்டு, முதலாம் "பெனிபிளேன்" தளமாக அம்ைந்துவிட்டது. இத்தளமானது பின் னெருகால் வெவ்வேறு இருகாலங்களில் கடலினுள் சுமார் 200 அடி வரை அமிழ்ந்திவிட்டது. பின் அது உயர்த்தப்பட்டது. பின்பும் ஒரு கால் மயோசீன் யுகத்தில் இலங்கையின் கரையோரப்பகுதியும் வடபுற சமநிலமும் (யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட) கடலினுள் அமிழ்ந்திக் கிடந்தது.இக்காலத்திலேதான் வடமாகாணத்திலும் கரையோரப் பாகங் களிலும் சுண்ணும்புக்கற் படிவுகளும் பவளப்பார்ப் படிவுகளும் அடை யற் பாறைகளாக படிவுபெறலாயின. மயோசீன் கால இறுதியளவில் மீண்டும் ஒரு மேலுந்துதல் கரையோரப் பகுதிகளிலும் வடபகுதியின் பெரும்பாகத்திலும் உண்டானது. பின் கடலலைகளின் முயற்சியினுல் இப்படிவுகளில் மணல் வார்க்கப்பட்டு அவை மூடப்பட்டுவிட்டன. கரையோர மணற்கட்டிற்கும் உள்ளேயுள்ள கரைக்குமிடையில் கட லேரிகள் உண்டாயின. அதன்பின் ஒருகால் தரையானது கடல் முயற்சி யினல் ஆக்கம் பெற்றதின் விளைவாக இலங்கையின் தென், தென் கிழக்கு, கிழக்குக் கரையிலும், வடமேற்கு வடக்குக் கரையிலும் ஆங் காங்கு கடலேரிகளும், வாவிகளும், உப்பளங்களும், லிவாயாக்களும், களப்புசஞம் உண்டாயின. இவை காலப்போக்கில் ஆற்றுப்படிவுகளால் முதிர்ச்சிபெற்று, மாற்றம்பெற்று; வண்டல், களிமண், பரல், மணல், ஆகிய படிவுகளைக் கொண்டுள்ள வண்டற்பரப்புகள் ஆகிவிட்டன. இக் காலத்தில் அவை களப்புக்களாகவும், உவர்ச்சதுப்பு நிலங்கள், கரச்சை கள், வயல் நிலங்களாகவும் காட்சிதருகின்றன,
இயற்கையின் இத்தனை நீண்டகால இடையரு முயற்சியினல் கட்டி எழுப்பப்பட்டு, வானில் அரிப்பால் செதுக்கி உருவாக்கப்
32

பெற்ற இம் மட்டக்களப்பு மாநிலமானது இக்காலத்தில்: கடற்கரை மணற்கட்டு, அதை அடுத்து உப்புச்சதுப்பு நிலங்கள், உப்பேரிகள், களப்புகள், வண்டற்படிவினையுடைய கழனிகள், ஆறுகனின் முகத் துவாரங்கள், செம்மண் மேடைகள், செங்கற்படைகள், நைசுப்பாறை அரும்பல்கள், நைசுப்பாறைக் குன் று க ள், மலையகப்பிரதேச ஊவா மேடைத்தளம், ஆற்றுப்படுக்கைகள், சல்லித்தீவுகள் ஆகிய பல்வேறு நிலஉறுப்பு அரும்புதல்களைப் பெற்றுள்ளதாய் விளங்குகின்றது. அத னல் அது மருதமும் நெய்தலும் மயங்கிய காட்சிகளையும் முல்லையும் குறிஞ்சியும் கொண்டுள்ளதாய்த் திகழ்வது ஆய்ந்தறிந்து கொள்வதற் குரிய புவிச்சரிதவியற் பொருளாகும். இது இனிமேல் எடுத்துக்கொள் ளப்படும் ஆய்வுகளினல் விரிக்கவேண்டிய ஒரு பொருளாகும்.
நில உயரம்
இம்மாநிலம் கிழக்கிலங்கையின் சம தரையினைப் பெருமளவில் அடக்கியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரத் தி ற்கு குறைந்த உயரத்தினையுடைய பாகமே இப்பிரதேசத்தின் முழுப்பரப் பிலும் ஏறக்குறைய * பங்கினதாகும். விந்தனைக் குன்றுகளை அடக்கி யுள்ள ஊவாத்தள பீடத்திலிருந்து - Uva oெwns - த ரை யா ன து கிழக்குநோக்கியும் வடகிழக்குநோக்கியும் சரிவுற்றிருக்கின்றது. ஊவாத் தளபீடக் குன்றுகளுள் பிரதானமானவை: பாம்பூதிமலை (2044) , குடும்பிமலை (Friar’s Hood) (2159 ) உவெஸ்ற்மினிஸ்றர்அபிமலை ( 1831 ) என்பனவாம். இவற்றினைவிட குவிந்தனவும் நீண்டனவுமான கருங்கற்பாறைகள் பலஉள. அவற்றின் மிகக்கூடிய உயரம் 2050 அடி uLurr(e95tb. ஊவாப்பீடத்தின் சராசரி உயரம் 200 அடியாகும் இக் குன்று கள&னத்தும் - ஒருசில 2000 உயரமுள்ளன - மேலரும்பித் தோன்றும் நைசுக் கற்பாறைக் குவிவுகளாகும். பெருவெப்ப அக்கினிச் சுவாலை யில் வெந்து உருகி வடிந்து உறைந்துவிட்டனபோல் அமையப்பெற் றிருக்கும் இப்பாறைப்படிவுகளைச் பாமரமக்கள் " கருங்கற்பார் " என் ப. அப்பாரில் பெரும்பாலும் பளிங்கு, மைக்கா, பெல்ஸ்பார், கோண் பிளண்டு போன்ற கணிப் டொருள்களே கலந்திருக்கின்றன. சிலிக்கேற் படிகப்படிவே பெருமளவில் தென்படுகிறது. பாணமை தம்பிலுவில் கரையோரங்களில் இலிமினற் படிவுகள் உள. சல்லிக் கற்படிவுகளும் முருகைக் கற்பார்களும் (Corals) அறுகாமம், அக்கரைப்பற்று, காரை தீவு, கல்லாறு மட்டக்களப்பு. கற்குடா, புன்னைக்குடா, பாசிக்குடா, வாகரை, பணிச்சங்கேணி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. அவற்றின தகாதமுறையில் அகழ்ந்தெடுப்பதனுல் கரையோரம் கட
லரிப்பில்ை பாதிக்கப்படுகின்றது.
வடிகால்கள் ஹவாப் பீடத்திலிருந்து கிழக்கு நோக்கியும் வடக்குநோக்கி, யும் இழிந்து செல்லும் நதிகளுள் பிரகானமானவை: மருதுஒயா, மகிழ
-33

Page 24
வட்டுவான் ஆறு, கல்லோயா, ஹெடஒயா, மியாங்கொள ஆறு முந் தனே ஆறு, போதிகொட ஆறு நம்புக்கன்ஒயா, என்பனவாம். இந் நதிகளுள் பெரும்பாலானவை பூர்வ த்தில் விஃளவுவடிகால் CL sequent Sகளாகவே உளவாத்தளத்திலிருந்து (விந்தனைப்பிரதேசம்) கிழக்குநோக் கியோ வடக்குநோக்கியோ (உ+ம் : மதுரு ஒயா) நிலத்தின் சாய்வின் திசையினைப் பொறுத்துள்ளனவாய்த் சமவெளியில் பாய்ந்து கடலே வந்தடைவதற்குமுன் மியாந்தர் ஜாவுக3ளயும் நீர்பிரிந்தோடும் ஓடை சுஐயும் கொண்டுள்ளனவாய் கடற்கழிகளின் வழியே சங்கமமாகின் றன. அவற்றின் பின்விளேவு வடிகால்களாகவும் (Subsequents) (ԼբՄն" விளேவு வடிகால்களாகவும் (Obsequents) பலப்பல அருவிகள் இலே நரம்பு ஒழுங்கில் - அதாவது பப்பாசி இல் நரம்பொழுங்கிலோ அவரி இ8ல நரம்பு ஒழுங்கிலோ, வாழையிலே நரம்பு ஒழுங்கிலோ - அமையப் பெற்றிருக்கின்றன. இவ்வடிகால்களின் ஒழுங்கு, பெரும்பாலும் அவை செல்லும் தரையின் சாய்வின் விதத்தினையும், அதிலுள்ள பாபி களின் பாங்கினேயும். ஓடும் நீரின் வேகத்தினையும், அவை ஏந்திச் செல்லும் பரல், மனல், வண்டலாகியவற்றின் தன் மைகளே யும் பொறுத்துள்ளதாய் அமைந்துவிடுகின்றது. உதாரணமாக குடாஒயா வின் பின்விகளவு வடிகால்ால் அவ்வாற்றினேப் பொதுவாக செங்குத் தாக வந்தினேகின்றன. இதற்குக் காரணமென்னவெனில் இந்நதிபாயும் விந்தனே வடிநிலம் சமாந்தர ஒழுங்கிலமைந்துள்ள பல வெளியரும்பற் பாறைகளேக் கொண்டுள்ளதாயிருப்பதேயாம்.
இனி, இந்நதிகளின் தாழ்நிலப்போக்கில் அ வை வளே ந் து ஃொந்து நெளிவுகளுடையனவாயும் தின் அவை நீர் பிரிந்தோடும் ஓடைகளாய் அமைந்துள்ளனவாயும், இறுதியில் அவற்றின் சங்கப் போக்கில், அவை வலேபின்னல் ஒழுங்கில் பல பக்கங்களிலும் பாய்ந்து கடற்கழிகளே - உப்பாறு அல்லது களப்புகளே - வந்தடைந்து, தாயாறு எது கிளே யாறெது என மதிக்கொணு ஒழுங்கில், முசுத்துவாரங்களின் வழியே கடலினுள் சங்கமமாகின்றன. இம் முகத்துவாரங்களினுல் கடல்நீர் வற்றுப் பெருக்கினுல் நீரரிப்பு நிகழாததின் காரணமாக மணல், வண்டல், களி நாக்குகளும், சதுப்பு நிலங்களும், தோணுக் களுல் தென்படுகின்றன. இவற்றுக்குதாரணமாக கோறளைப் பற்றி லுள்ள 'அம்ப உலின எல (அ:ள ஓடை) என்னும் நீர் பிரிவடி ஆகளாகப் பிரிந்து மீராவோடை-சீது அணித்தாய் வாழைச் சேனே ஆற்றினுள் சங்கமமாசி து நோக்குதற்குரியது.
இந் நதிகளின் புராதனப் பகுதிகளில் அவற்றின் கிஃாநதி சுளுடன் தொடர்புள்ளனவாய் நூற்றுக்கணக்கான சிறு கு ள ங் த ஸ் தூர்ந்துவிட்ட நிலையில் காளப்படுகின்றன. உதாரணமாக மதுரு ஒயாவின் புராதன மேற்பாகத்தில் இத்தகைய தூர்ந் துபோன குளங்
հեir | Itall B ETT :
34.

கரையோரக் காட்சிகள்
இம் மாநிலத்தின் கீழைக்கரையோரப் பிரதேசத்தின் அமைப் பில் முக்கிய உறுப்புக்கள் மூவகையின அவை :
கரையோர மTாற்கட்டு (DUNES )
இது மட்டக்களப்பு மாநிலத்தில் பெருமளவில் ெ ட க்கு தெற்காக அமையப்பெற்றிருக்கின்றது. மனால் பெரும்பாலும் கிடங் அஃகளின் தாக்கத்தினுலும் வளியின் ஏந்திச்செல்லும் வேகத்தினுலும் கரையோரமாய்க் குவிக்கப்பட்டிருக்கின்றது. கோமாரி, உகந்தை பானமை, தம்பிலுவில் சின்ன் முசுத்துவாரம் போன்ற இடங்களில் காற்றின் வேகத்தினுல் மணல் உந்தப்பட்டு மனற் குவியல்களாகக் காட்சிதருகின்றது. கடலினுள்ளும், களப்புக் கரைகளிலும், கரச்சை களிலும் பவளக்கற்பார் அமையப்பெற்றிருக்கிறது. சின்னாபாஸ், பெரிய பாஸ் (இராவணன் கோட்டைகள்) கோமாரிப்பவளக்கற்பார் போன் றன. பவளப்பூச்சிகளின் முயற்சியினுல் கடற்கீழ்ப் பாறைகளில் எழுப் பப்பெற்றுள்ள பவளப்பார்களாகும். சு ட ல் ஒர மணற்கட்டானது கல்லாற்றுக்கட்டு, சின்ன முகத்துவாரக்கட்டு, பெரிய புகத்துரைக் கட்டு, அமிர்தகளி முகத்துவர்ரக்கட்டு, டச் பார், பனிச்சங்கேணி மணல் நாக்கு, வெருகல் மணல் நாக்கு போன்றன, கடலுக்கும் களப்பு அல்லது உப்பேரிகளுக்குமுள்ள தொடர்பினே எடுத்துக் காட்டுகின்றன. ஆறுகள் கடலினேப் பெரும்பாலும் மணல் நாக்குகளைக் கொண்டுள்ள பாகத்துவாாங்களின் வழியே சென்றடைகின்றன. அறுகாமக்குடா, கோரைக்களப்பு முகத்துவாரம், வெளவாலோடை கத்துவாரர், களி யோடை மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரம், கல்லாற்று முகத்து வாரம், வாழைச்சேனேயாற்று முகத்துவாா கங்கை முகத்துவாரம், பனிச்சங்கேணி உப்பாற்று முகத்துவாரம், வெருகற் கங்கை கடற்கபூழி என்பன இம்மாநிலத்தின் கரையோாக் காட்சிகளுட் சிறந்தனவாம். எங்கெங்கு இம்முகத்துவாரங்கள் தென்படுகின்றனவோ அங்கங்கெல் லாம் நீண்ட மினல் நாக்குகளும், மணற்கட்டுகளும், கண்டல் தாவரத் கூட்டுறை வாங்களும், உப்புக் கரச்சைகளும், களப்புகளும், தோணுக் களும், பரந்த வண்டற்படிவுகளும், சாப்பை நானல் தாவரச் சேற்று நிலங்களும் சம்பந்தப்பட்டிருப்பது நோக்குதற்குரியது. கண்டல் தாவரச் சம்பந்தம் பெற்றுள்ள இடங்களில் நிலம், சதுப்புத்தன்மையும் உவர்த் தன்மையும் பெற்றுள்ளதாயும், சருநிறக் களியினையுடையதாயும் காட்சி யளிக்கின்றது. காலப்போக்கில் இத்தகைய கனியானது வண்டற் படிவாலும் சேதனப் பொருட்களின் சேர்க்கையினுலும் அதன் உவர்த் தன்மையினே இழந்துவிடுகின்றது. இதனுல் அது உக்கிய தாவரச் சேதனப் பொருட்களேக் கொண்டுள்ளதாயிருக்கின்றது. (களு கரு நிறம் என்னும் பகுதியைக் கொண்டுள்ள இடப் பெயர்களே நோக்குக
5

Page 25
மயோசின் யுகத்தில் கடலினுள் அமிழ்ந்தியிருந்து பின் மேல் தோன்றிய பாகமாகிய கரையோர மனற்சுட்டின் தரை நோக்கிய தாழ்ந்த நிலத்தில், உவர் சேர்ந்த கரச்சை வெளிகள்" உண்டாயின. இவை பெரும்பாலும் உப்பாறுகளேத் தம் அருகில் கொண்டுள்ளன. இத்தகைய வெளிகளில் படிந்திருக்கும் மண் பவளப்பார்களேயும் ஒரு வித நரை நிறக் களியினையும் சிப்பி ஊரி முதலிய கடல்வாழ் பிராணி களின் சேதன உறுப்புக்களயும் உடையதாய்க் காட்சி தருகின்றது. இக் காச்சைகள் சில இடங்களில் (காரைதீவு, பணிச்சங்கேணி, கல் லாறு, கதிரைவெளி) உப்புத் தரிசுத் தரைகளாகக் காணப்படுகின்றன. இந்நிலத்தில் ஊரி, சங்கு, சிப்பி, சல்விக்கல்பூச்சி போன்ற உயிரினங் களின் சேதனப்பொருட்கள் படிந்திருக்கின்றன. சத்துருகொண்டா னுக்கும் தன்னுமுஃனக்குமிடையில் உள்ள உப்புவெளியும், மட்டக்களப்பு வாவி, பெரியகளப்பு, கோரைக்களப்பு, அறுகாமத்து முகத்துவாரம், தாண்டியடி போன்ற இடங்களிலுள்ள தாழ்நிலங்களும் இத்தகைய உவர்நிலக் "கரச்சை" வெளிகளாம்.
3. கடற் பாக் குன்றுகளும் குடாக்களும்:
இம்மாநிலத்தின் கிழக்குக் கரையில் கற்குடா, பாசிக்குடா, பூலாவிக்குடா, தென்னேயடிக்குடா, வெண்டலூள் குடா கிளிக்குடா, புன்னேக்குடா, மாங்கேணி, உசுந்தை, பெரியகளப்பு, கோமாரி, புவி பாய்ந்த கல், மறிக்கட்டி புனே போன்ற இடங்களில் நைசுப் பாறை கள் கடலினே நோக்கிச் சாய்வுற்றிருப்பனநாய்த் தென்படுகின்றன. அவை பாறைத்தீவுகளாகவும் காணப்படுகின்றன. இவை இப்பிரதேசத் தின் அடித்தளப்பாறைகளின் மேவரும்புதல்களாம். மட்டக்களப்பு வானியினுள் உள்ள யாசீனக்கல்லும், ஆராய்ச்சியார் கல்லும் கிரான் துறையிலுள்ள மேலரும்பல் கற்பாறையும், கரடியனுறு, சாகாமம் கொண்ட வட்டுவான் குளங்களிலும் பட்டிமேட்டிலும், உகந்தையிலும் தென்படும் கற்பாறைகளும், இவையும் இவை போன்ற பிறவும், மேலரும்பிய அடித்தள நைசுப் பாறையின்பாற்படுவனவாம்.
இனி இலங்கையின் தென்மேற்கு மேற்குக் கரையில் உண் டாகிக்கொண்டிருக்கும் உக்கிரமான கடலரிப்பு போன்ற கடல் அலே அரிப்பு இம்மாநிலத்தின் கிழக்குக் கரையில் நிகழ்வதில்லே. எனினும் வருடாவருடம் ஒக்டோபர் மாதம் முதல் மாசி மாதம் வரையுள்ள மழைக்காலத்தில் இக்கரையில் கடலரிப்பு நிகழ்கிறது. அப்படியிருந்தும் மாரிப்பொழுதில் அரிக்கப்பட்ட கரையானது கோடைப்பொழுதில் கட்டி எழுப்பப்படுகிறது. இதனுல் கடலரிப்புத்தாக்கம் இக்கரையில் குறைவாகவே நிகழ்கிறதெனக் கூறும் தகவல் உார்ச்சிதப்படுத்தப்படு கின்றது. இனி மாங்கேணிக் கணித்தாயுள்ள கடலினுள்ளும் பாசிக்

குடாவின் வடபுறத்திலும் ஏறக்குறைய அரை மைல் தூரத்துக்குள் ஏழு பாறைத் தீவுகள் உள. இவற்றினேச் சூழ்ந்து சல்லிப்பார்கள் தென்படுகின்றன. இப்பாறைகள் பூர்வ நைசுப் பாறைகளுடன் சம்பந்த முற்றனவாயிருத்தல் கூடும் என ஊகிக்க இடமுண்டு. கற்குடாவில் தென்படும் பாறைப் பிதிர்வுகளும் நைசுப்பாறைத் துண்டங்களாம்.
ஊரும் பெயரும்
இயற்கை நில உறுப்புக்களுடன் இயைபுபெற்றுள்ள இடப் GALI JLJ riff, GIFTI, (GII பெரும்பாலன உள.
ஆரைப்பற்ண்ற :
காட்டருவி என்னும் பொருளில் வந்தது.
தீவுகள் :
அரசடித்தீவு, காரைதீவு, மான்தீவு, திமிலதீவு, முனேத்தீவு,
நாகவன்தீவு, வவுனதிவு, ஈச்சந்தீவு, சல்வித்தீவு, கரையாக்கின்தீவு,
சுருங்கொட்டித்தீவு, மல்லிகைத்தீவு போரதீவு, புளியன் தீவு, மகி
முடத்தீவு தேற்ருத்தீவு.
இவற்றுள் திமிலதீவு, வவுனதிவு போரதீவு, என்பன மக்கட் சரித்திர சம்பந்தத்தினேக் கொண்டுள்ளன. ஏஃனய பெயர்கள் தாவரங் கள் நில அமைப்பு உறுப்புகளுடன் தொடர்புற்றனவாயிருக்கின்றன.
குடியிருப்புகள் :
இவை பெரும்பாலும் சமீபகாலத்தில் குடியேற்றங்களாய் அமைந்துள்ள இடங்களாம். ஆறுமுகத்தான்குடியிருப்பு. குடியிருப்பு. சேஃனக்குடியிருப்பு, சித்தாண்டிகுடி, கல்முனேக்குடி, கழுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பட்டிருப்பு, பாண்டிருப்பு, பரவன்குடியிருப்பு, புதுக் குடியிருப்பு, நடுவுக்குடியிருப்பு. இவற்றுள் இரு பெயர்கள் அக்குடி யிருப்புக்களே ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களேக்கொண்டுள்ளன. காத்தான்குடி, ஆறுமுகத்தான்குடி சுழுவாஞ்சி என்பது கறுப்பு வஞ் சியின் குடி எனப் பொருள்படலாம். பட்டிருப்பு என்பதன் பொருள் தெரியவில்லை. பாண்டுவின் இருப்பிடம் பாண்டிருப்பாயிருத்தல் கூடும்.
இவை பெரும்பாலும் புதுக்குடியேற்றக் கிராமங்களாகவே இருந்திருத்தல் கூடும். சந்திவெளி கோராவெளி குறுமண்வெளி, மயிலம்பாவெளி, பன்குடாவெளி, படையாண்டவெளி, பண்டாரியா வெளி, பேரில் துர வெளி, தாண்டவன்வெளி, கதிரைவெளி, வெல்லா வெளி, நாவிதன் வெளி, பூலாவெளி வெளி என்பது வயல் நிலம் எனப்
Li

Page 26
பொருள்படும். ஒரு சில மக்கட் பெயரைக் கொண்டுள்ளன: நாவிதன் வெளி, தாண்டவன்வெளி; ஏனைய பெயர்கள் இயற்கையுடன் இயை புற்றுள்ளன: பன்குடா வெளி, குறுமண்வெளி, கோராவெளி,
துறை :
கடலும் வாவியும் மருவிய இம்மாநிலத்தில் துறைகள் இல்லா மற் போவதில்லை. சம்மான்துறை (சம்பான்: வள்ளம்), கொம்மாதுறை, சேனைத்துறை, அம்பிளாந்துறை (மரம்), வேப்படித்துறை (மரம்), சுங்கத்துறை, பெரியதுறை.
த வாய் என்பது
புல்வெளியாகும். சடையன் தளவாய், தளவாய், படியத் தளாவ.
கோவில்:
திருக்கோவில்.
ess.
சவளக்கடை. பொருள் தெரியவில்லை. சவளி: சீலையாகப் பொருள் கொள்ளலாம்.
+1}6ữTu!tử, :
செட்டிபாளயம். இந்தியத் தொடர்புடையது. "சேனை' எனப் பொருள்படுவது. ܢ ܗܝ
முனை :
p நில உறுப்புப்பெயர். சொறிக்கல்முனை, தன்னுமுனை, சீலா முனை, வீரமுனை, மண்முனை, பாலமுனை, கடுக்காமுனை, கல்முனை, கோட்டைமுனை, குறிஞ்சாமுனை, மண்டுக்கொட்டைமுனை, மருதமுனை, முள்ளாமுனை, நாய்ப்பட்டிமுனை, நொச்சிமுனை, பூநொச்சிமுனை, வீச்சுக் கல்முனை.
: +ILه
இடம் என்ற பொருளில் வருவது. கல்லடி, செங்கலடி, கிண்ணையடி மண்டபத்தடி, ஒட்டமாவடி, சவுக்கடி, தூணடி,
60).
பாறையமைப்பினைக் குறிப்பது. செங்கற்படை.
St-s :
கரையோரக் காட்சியுடன் சம்பந்தம் பெற்றுள்ள இடப் பெயர்கள்: சேற்றுக்குடா, புன்னைக்குடா, கற்குடா, பாசிக்குடா, கன்னன்குடா, காஞ்சுரங்கு.ா முதலைக்குடா, தாழங்குடா

வில்:
குளம் எனப் பொருள்படும்; எருவில், கோளாவில், ஒலிவில், தம்பிலுவில், ஒலு என்பது நீரல்லி, தபிலி என்பது குரும்பை, பொத் துவில், பொதுவில், பொத்துவில்லாகியிருக்கலாம்.
(Sъпнопії :
மாடு கட்டும் இடம்: கோமாரி எனப் பெயர் பெறுவதாயிற்று. பட்டிமேடு என்பதைப் போல.
дътtoto :
கமம் என்னும் பெயரின் திரிபு இது. வயல் எனப் பொருள் படும். இறக்காமம், உறுகாமம், பழுகாமம். கம < கிராமம்
மடு : −
சிறு நீர் நிலை: இத்தியடிமடு, கொடுவாமடு, களிமடு, வெற்றிலை போட்டமடு, கோரைக்கல்லிமடு, வட்டிபோட்டமடு. மருத நிலத்துடன் தொடர்புற்ற பெயர்கள் இவை: மருதையடிமடு, நெடியமடு, முடக்கு மடு, சீரங்கமடு, பிரப்பையடிமடு.
வளை :
பொருள் தெரியவில்லை. வெல: கால்வாய் எனப் பொருள் கொள்ளலாம். கழுதாவளை : கருநிற நீர் வாய்க்காலாயிருத்தல் கூடும்.
பூவல் :
ஊறுணி - ஊறுநீர் - கரடிப்பூவல், விளினைப் பூவல். எண்ணம் பாலைப்பூவல். இது துரவு எனவும் பொருள் கொள்ளும்.
வெட்டி :
இது வெட்டை வெளி எனப் பொருளபடும். கரவெட்டி.
கிரான் :
ஒருவிதப் புல் - கிரான், கிரான்குளம். கிரான் என்பது பறங் கியர் பெயராயுமிருக்கலாம்; ஓந்காச்சி என்பது போல.
தோணு :
உவர் சதுப்பு நிலம்: கீரித்தோணு, பாலையடித்தோணு, கீரி என்பது ஒருவிதக் கண்டல் தாவரம்: கீரிப்பற்றை.
• »ኳ;Ul :
கல்லாறு, சுண்ணப்பாறையினையுடைய களப்பு அல்லது உப் பாறு எனப் பொருள் கொண்டுள்ளது. கண்டியனறு, கோட்டைக் கல்லாறு, கரடியனுறு.
-39

Page 27
மரக்கூட்டம்: கொக்கட்டிச்சோலை-கொக்கட்டி மரத்தின் பெயர்;
தும்பாலஞ்சோலை; தும்பாலை: மரப்பெயர் கூமாச்சோலை; கூமா :
மரப்பெயர்; கணங்காடு, கணங்கா சப்புமரம். சண்பகம்: Champak.
வட்டுவான் :
வட்டை என்பது வழி. அது வெட்டை. அதாவது வெளி, புலம் எனவும் பொருள்படும். வட்டுவான், மகிழவட்டுவான், வெருட்டி வட்டவான், விளாவட்டுவான், மருதுவட்டவான்.
மருது :
மரம். சாய்ந்தமருது, மருதமுனை.
பள்ளி :
மாவடிப்பள்ளி - பள்ளிவாசலுள்ள இடம்.
ஊற்று :
கொறுக்காப்புளிஊற்று வம்மியடி ஊற்று. புலை :
இது "புலம்’ எனப் பொருள் கொள்ளலாம். கொத்தியாபுலை. மடம் : தங்குமிடம்
குருக்கள் மடம், ஓந்தாச்சிமடம். புராதன கிராமங்களில் இதர மக்கள் தங்குவதற்குமடங்கள் இருந்திருத்தல் கூடும்.
களி கழி:
வண்டல் சதுப்புநிலம்: மட்டிக்களி, அமிர்தகழி. கடற் "கழி? யாகவுமிருக்கலாம். மட்டி: சிப்பி.
உயர்நிலம்: மல்க்கம்பிட்டி வளத்தாப்பிட்டி; இவை சிங்களப் பெயராகவும் இருக்கலாம். மல்க்கம்: Malcom எனவிருத்தல் கூடும்.
தொடுவாய் !
நீாோடை - மஞ்சந்தொடுவாய். காடு :
மாங்காடு, பனங்காடு, வெட்டுக்காடு, நாவற்காடு, பூலாக் காடு, படுகாடு.
முன்மாரி :
முன்மாரி வேளாண்மை பயிரிடப்பட்ட இடத்தினைக் குறிக்கும். மாவடி முன்மாரி, குருந்தையடி. முன்மாரி, மருங்கையடி முன்மாரி.
-40

W A
மங்கிகட்டு, இதன் பொருள் விளங்கவில்லை. மாங்குகட்டா யிருத்தல் கூடும். மீனுேடைக்கட்டு, மாங்கு: சிறுதடி.
gęGool- :
மீராவோடை, திக்கோடை, காங்கயனேடை, முருவோடை, நடுவோடை.
tuża :
கால்நடைக்குரிய இடம். பட்டிப்பளை, மாட்டுப்பள்ளை.
நீலாவண :
பொருள் தெரியவில்லை. நிலாவணையாயிருக்கலாம். நீல அணை யாகவும் இருக்கலாம். சிங்களப் பெயராகவும் இருக்கலாம். நீலனின் அணையாகவும் இருக்கலாம்.
தாண்ழ :
பேய்த்தாழை. மர்ப்பெயர்.
மேடு : . -
பட்டிமேடு, துரைவந்தேறிய மேடு,
ஏரி :
வாகனேரி
கரை
வாகரை, கரைவாகு, கரைவெட்டி,
இறவு
இறக்கம்: வலையிறவு; வலைகட்டிறவு. ஆங்கிலம்: Ford.
மூலை
வந்தாறுமூலை - இது வந்துறு முள்ளவாகவுமிருக்கலாம். வந்துரு குரங்கு
வத்தை, 11 ல்வத்தை :
பூந்தோட்டம் எனப் பொருள்படும். கோணுவத்தை. இது தோணுவத்தையின் திரிபாகவிருக்கலாம்.
களப்பு:
மட்டக்களப்பு: மட்டமான களப்பு: கடற்கழி. ஊர் :
நிந்தவூர், ஏருவூர், மகிழுர், மண்டூர். முன்னிரு பெயர்களும் இதரப்பெயர்களாயிருக்கலாம்; ஏனைய இரு பெயர்களும் மரப்பெயர்கள். நிந்தம்: தனி உரிமை.
- 41

Page 28
புவிபாஞ்சகவ், அடைச்சகல். பாஞ்ச பாய்ந்த
பள்ளம்:
அட்டைப்பள்ளம், இங்கு இன்றும் ஒரு ஒடை உளது:
* זהד#;f*q
* வரிப்பத்தன்சேனே, மாவிலங்கையடிச்சேனே, பாற் சேனே, வாழைச்சேனே, முறக்கட்டான்சேகா, அட்டாளேச்சேனை "பாம்பன் சேனே, பன்சேன, அரசடிச்சேனே, ஆலயடிச்சேனே, இலுப்படிச்சேனை, இலுப்பையடிச்சேனை, கிளாக்கடிச்சேனை, கூழாவடிச்சேனை, நெடுஞ் சேனே, பொன்னுங்காணிச்சே8ன, பருத்திச்சேனே. இவற்றுள் " இவ் வணடயாளமிடப்பட்டவை மக்கட்பெயராயிருத்தல்கூடும்.
அன்னமலே, ஆயித்தமலே - (மரம்), புல்லுமன.
கேரி :
இந்நீர் நிலகளேப்பெற்றுள்ளன. இம்மாநிலத்தின் நீர்வளத்தினே இப்பெயர்கள் குறிப்பாய் எடுத்துக்காட்டுகின்றன. கருவேப்பங்கேணிஐயங்கேணி (மக்கட்பெயர்: ஐயன்) சாளம்பக்கேணி (மரம்), சுங்கான் கேணி (மீன்), கழுவின்கணி (கறுப்பன் எனப்பொருள்படும், வேடன்) அல்லது கருநீர்க்கேணி எனவும் பொருள்கொள்ளலாம் கறுவாக்கேணி, காயான்கேணி (மரம்), மாங்கேனி, தாமரைக்கேணி இனி வேகம் பற்று, விந்தனேப்பற்று, போன்ற வ்ெகளப்பிரதேசக் கிராமங்களின் இடப்பெயர்கள் இங்கு எடுத்தாளப்பெற்ற வல்ல,
1ற
அம்பாறை, அழகிய சுல் பொத்தன
னேசுட்டான் பொத்தனே - இது குளம் எனப்பொருளாகும்.
காக்காச்சிவட்டை (வயல்)
குளப்
கிரான்குளம், ஒல்லிக்குளம், மூக்கறையன் குளம்.
கரர்னர:
உவர்நிலம் - மவன் கரச்சை
தோட்டம் :
நரிப்புல்தோட்டம், பொன்ஞங்காணித் தோட்டம்.
-42

தப்பட்ட
இது சிங்களப்பெயராயிருக்கலாம்; தம்பலவத்தை.
மருதநிலப்பெயர்கள் :
வெளிகள், ஊற்றுக்கள், புலே, முன்மாரி, கட்டு, வில், பள் ளம், கேணி, வட்டை, வட்டவான், குளம், பொத்தனே, ஏரி, ஓடை
நெய்தல்நிலப்பெயர்கள் :
சுரச்சை, கேணி, களப்பு, குடா, துறை, கரை, இறவு, தொடுவாய், தோணு, தீவு, தாழை, முனே.
முல்பீலநிலப்பெயர்கள் :
புலே, பிட்டி, காடு. பண், பள்ளே, வத்தை, தளவாய், படை, ni,
குறிஞ்சிநிலப்பெயர்கள் :
பாறை, மலே, கல், மேடு, பிட்டி ,
ஏனய குடியிருப்புக்கள் :
இவை கரையோர மீன்பிடித்தொழில் சிராமங்கள், கரையோர வேளாண்மைத்தொழில், கிராமங்கள் கரையோரத் தோட்டவேஃலக் கிராமங்கள். இவை பெரும்பாலும் ஊர், ருடியிருப்பு, தீவு, முனே, துறை, மடம், பாளயம், கரை, மூலே எனப் பெயர்பெற்றுள்ளன.
மருதநிலக்குடியிருப்புக்கள்: வெள்சள், தீவுகள், துறைகள், முனே, பிட்டி, முன்மாரி, வத்தை, கேணி எனப் பெயர்கொண்டுள்ளன.
உப்பாறுகளே அண்மையில் கொண்டுள்ளன; களப்பு, தொடு வாய் ஒனட துறை கரை. இறவு, குடா, முனே, கரச்சை எனப் பெயர்பெற்றுள்ளன. இங்கு மக்களின் தொழில் மீன்பிடிப்பதும், வேளாண்மைச் செய்கையுமாகும்.
காட்டு நிலத்தினே அடுத்துள்ள கிராமங்கள் சேனே, மேடு, பண், கட்டு, காடு. பிட்டி, புலே, அடி என்னும் பெயரினவாம். இவற்றிலுள்ள கிராமவாசிகளின் முயற்சி சேனேசெய்வது, மந்தை மேய்ப்பது ஒரளவு மேட்டுநில வேளாண்மை, அதாவது முன்மாரி வேளாண்மை செய்வதாகும்.
போக்குவாத்து சம்பந்தப்படடுள்ள மக்கள் சந்திக்குமிடங்கள் :
துறைகள் முனேகள் கடை, கோவில், இறவு, மடம், ஹாரி, பற்று என்பன. இவை பெரும்பாலும் வியாபாரம், பண்டமாற்று நடைபெறுவதற்குரிய இடங்களாகும்.

Page 29
புராதன குடியிருப்புகளாவன :
*பிரவாகு நிந்தவூர், திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப் பற்று காரைதீவு, கல்முனே, பாண்டிருப்பு, பழுகாமம், சம்மாந்துறை, வீரமுனே நாய்ப்பட்டிமுனே, மண்டூர் கொக்கட்டிச்சோஜ், பெருந் துறை ஏருவூர், வந்தாறுமூவே சித்தாண்டிகுடி, PYGG FT GFDL rör LGT
பிரதான குடிசைக் கைத்தொழில்களுடன் தொடர்புகொண்டுள்
கிராமங்களும் FH - ה, והו
பித்தளவேலே
கம்மாலப்போரதீவு, முனேத்தீவு, ஓந்தாச்சிமடம், அன்ன்மன்,
இரும்பு உருக்கு:
வண்டிகளின் அச்சு, பட்டம், கலப்பைநாக்கு, சித்தி, கோடரி முதலியபொருட்கள் செய்தல் - சின்ன உப்போடை, அக்கரைப்பற்று, கல்முனே, மணற்சேனே.
சுண்ணும்பு சுடுதல், நீறு சுடுதல் :
ஒத்தாச்சிமடம், கல்லாறு, காரைதீவு அமிர்தகளி புளியந்தீவு புன்னேக்குடா, கற்குடா கிளிக்குடா, பனிச்சங்கேனி,
தென்னப்பிரயோசனங்கள் :
திருக்கோவில் காரைதீவு, பட்டிருப்பு, கழுவாஞ்சிகுடி, கற் குடா, தன்ஞமுனே, சத்துருகொண்டான், ஆரைப்பற்றை, கல்லாது. ஒந்தாச்சிமடம், பொத்துவில்,
நெசவுவேலே :
தாமரைக்கேணி, ஆரைப்பற்றை, காத்தான்குடி, பாஃப்முனே, அக்கரைப்பற்று, கோளாவில், மருதமுனே.
மருதமுனே, காத்தான்குடி, கரை வா கு, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஒவிவில்.
தச்சுவேல :
காத்தான்குடி, ஆரைப்பற்றை பெரிய உப்போடை, புளி யளிக்குடா.
மட்பாண்டம் சமைத்தல்:
பாண்டிருப்பு, ஏருவூர் செங்கல்லடி, வந்தாறுமூக்,
-44

பாற்பண்ணேத்தொழில்:
சாகாமம், பட்டிமேடு, வளத்தாப்பிட்டி, அம்பாறை உறு காமம். உச்னிச்சை பாடாவோடை, உசுனே, அக்கரைப்பற்று, பனங்
கிாடு,
மீன்பிடிதொழில்:
மட்டக்களப்பு ஆரைப்பற்றை கல்லாறு, பாஃவமுண், காரை தீவு, கரைவாகு பணிச்சங்கேணி, மாங்கேணி, புன்னைக்குடா, கற்குடா, பாசிக்குடா, வாழைச்சேன், பொத்துவில், அக்கரைப்பற்று, உறுகாமம்.
வேளாண்ாமர் செய்கை :
இப்பிரதேசத்தின் பிரதான தொழில் கமச்செய்கையாகும். ஏறக்குறைய இரண்டுலட்சம் ஏக்கர் நிலம் இம்மாநிலத்தில் செய்கை பண்ணைப்பட்டு வருகின்றது.
சேனப்பயிர்ச் செய்கை :
இது பெரும்பாலும் "காட்டு" நிலங்களில் நடைபெறுகின்றது. படியத்தளாவை எருவில் போரதீவுப்பற்று, ஏருவூர், கோறளைப்பற்று, வேகம்பற்று. விந்தனப்பற்று ஆகிய இடங்களில் நடைபெறும், இச் செய்கையினுல் காடுகள் அழிக்கப்படுகின்றன. இம்முறை தாட்டின் வளத்தினேச் சிதைத்துவிடும் ஒரு தொழிலாகும்.
வனச்சேதம் :
இம்மாநிலம் சுமார் : பங்கு காடுகளால் முடப்பட்டிருந்துள்ள போதிலும் அவற்றிலுள்ள விலேயுயர்ந்த மரங்களே அரசினரின் வ ஆட்சி கூட்டுத்தாபனமும் மரங்கொல்வி முதலாளிகளும், திருடர் களும் வெட்டிவீழ்த்தி வேறிடங்களுக்கு கொண்டுசெல்லுகின்றனர். கோடி ரூபாக்கள் பெறுமதியான மரம் இங்கிருந்து வருடாவருடம் வெட்டி ஏ ற் று மதி செய்யப்படுகின்றது. இதனுல் நாட்டின்வளம் குன்றிவிடும் பாலேநிலமாய் மாறிவிடவும் கூடும். 景
வக்கடை
வக்கடை என்பது கடவான். இவை கமத்தொழில் மக்கள் வழக்கு வக்கடை மட்டக்களப்பு மக்கள் வழக்கு. கடவான் தமிழக வழக்கு. ஆண்டு வக்கட்டை என்றும் வழங் குவர். நீர்மடை என்பது பொருள். அதிகம் நீர் வயலுள் வந்துற்ருல் அதனே வெளியே விடுவதற்கு வரம்பினூடே வெட் டப்படும் வாயினே வக்கடை என்பர். ஒரு வரவையிலுள்ள அதிக நீரை மற்றும் வரவைக்குப் பாய்ச்ச வரம்பினூடே வழி வெட்டினுல் அதனேயும் வக்கடை என்பர்.
- 45

Page 30
iii a D 556 i Líš5 தமிழ்
பிட்டக்களப்பு மாநிலத்தில் மக்கள் எப்போது தொடங்கி வாழ்கின்ருர்கள், அவர்கள் குடியேறியவர்களா, அவர்கள் எங்கிருந்து எப்போது வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வளம்மிக்க நாடுகளில் மக்கள் குடியேறுவது பேருண்மை, நீர் வளம், நிலவளம் பொருந்திய நாடுகளே மக்ாள் தேடிச்சென்று குடி யேறுவர். அமைதி குன்றிய நாடுகளிலிருந்து குடியேறுவதும் வழக்கம். இனசனத்தார் சென்று வாழும் நாடுகளில் தாமும் வந்து சேர்ந்து வாழ்வதுமுண்டு. திராவிட மக்கள் சிறப்பாகக் கடலோடிகள். கட லோடிக் குடிகள் கடல் மார்க்கமாக வந்து மட்டக்களப்புப் பகுதிகளிற் குடியேறியிருத்தல் வேண்டும். அவ்வகைக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இங்கு எந்த நாட்டுக்குமுள்ள வழமைபோல் வேடுவச் 卒r岛 பினர் இங்கு வாழ்ந்திருந்தனர் டோலும்.
தான்தோன்றீசுவரர் ஆலயமாகிய கொக்கொட்டிச்சோலேக் கோயில் வரலாற்றைக் கூறும் மட்டக்களப்பு மான்மியம் எயினர் கொக்குநெட்டி மரத்தைத் தேனுக்காக வெட்டியபோது இரத்தம் சிந்தியது என்கிறது. எனவே இங்கு ஆதியில் வேடர்கள் குடியிருந் தார்கள் என்பது பெறப்படுகின்றது.
இசி, மட்டக்களப்பு மாநிலப் பகுதிக்கு இடப்பட்ட- பெயர்கள் மூலம் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்த மக்கள் இங்கு பரவ வாசுக் குடியேறினர் GiīJT GJIT iii .
på Lrer f: LnåULIrf & HF TG ii r iffir இயக்கர்: நாகமுனே
வங்கர் மட்டக்களப்பு கலிங்கர் உன்னரசி கிரி
சிங்கர் மண்முனே
என்றும் வழங்கலாயினர். ஆகவே இங்கு மலேயாளர், வங்கர் திங்கர், சிங்கர் என்ற சாதிமக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்பது பெறப்படுகின்றது.
ம8லயாளத்தில் வாழ்ந்த தகர் என்பார் இங்கு வந்தார்க
ளென்பதற்கு மட்டக்களப்பில் வழங்குகின்ற தென்சேரி வடசேரிப் பிரிவும், மருமக்கள் தாயமுறையும் கன்னேக் குடுமியும், போடி என்ற
46

பெயர்ப்பிரயோகமும், குரவையிடும் வழக்கமும், தாய்வழிப் பாரம் பரியமும், மந்திரதந்திர முறைகளும் பெண்களுக்குக் கொடுக்கும் முதன் மையும், மனமுறைகளிற் சிலவும் சான்று பகருகின்றன. குடுக்கை கூறுவதிலும் சுந்தளே என்பது மலேயாள முக்குவர் என்று கூறப்பட் டுள்ளது.
நாகர், இழபக்கர் என்பார் வேடர்களேப்போல ஆதிக்குடிகள். கலிங்கர் இவர்களேத் தூரத்தித் தங்கள் தேசமாக்கின்ர் என்று மான் மியம் கூறுகின்றது.
வங்கர் என்போர் கடலோடிகள், வங்கம் என்ருல் கப்பல். கப்பல் வைத்துக் கடல்படுதிரவியஞ் சேர்த்தோர் வங்கர் எனப்பட்டனர். வங்கதேசத்தை அடுத்த கடலே வங்காள விரிகுடா மட்டக்களப்பின் கரைவாகு முழுவதும் வங்காள விரிகுடாக் கடலாகும். வங்கர், சுவிங் கர், சிங்கர் இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து இங்கு கலிங்கராயிஞர் என்பது மரபு சிங்கரின் சரிதம் கூறும் மகாவம்சமும் கலிங்கரையே மகாவம்ச அரசரெனக் கூறுகின்றது.
குடுக்கை கூறும் விபரத்தில் இங்கு வாழும் மக்களின் குல கோத்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
திருவாசல் என்பது கயிலேயங்கிரி
வேதம் - பிரமன்
நம்பி - விட்டுணு திருப்பாட்டு - ബr சரிசுைசன்னுசம் LGM Lurr, "Éil
தேசம் - சுவிங்கன் ரைன் என்னிமை கலிங்கவன்னியர்
குருநாதர் - குருஆதி பூபாலகோத்திரம் வேளாளர்
பூவசியன் - ேெரிகன்
புன்னுலே - பணிக்கன்வன்னிச்சி மண்முனே உலகிப்போடிகுலம் மட்டக்களப்பு தனஞ்செளுன்
நாடு - இராமநாட்டுவேடர் நகரம் வவுனியவேளாளர் கண்டி நிலேமை கதிரை - வேடப்பெண் சுந்தளே மலேயாளமுக்குவர் LDFr5res இடையர் அயோத்தி - மறவர்
-47

Page 31
இந்த அட்டவணையிலிருந்து மட்டக்களப் பில் அக்காலந் தொட்டு வாழ்ந்துவரும் மக்களின் சாதி குலங்கள் அறிதல் சாலும். மட்டக்களப்பு மாநிலத்தில் வசிக்கும் மக்களின் குடிவகைகளும், தெய் வங்கள், தொழில்கள், குலவிருதுகள், சமூகம் என்ற அத்தியாயத்தில் விபரிக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக் களப்பு மாநிலத்தின் பாங்கரில் சிங்கள மக்களும் வாழ்ந்து வந்திருக்கிருர்கள். இதன் காரணமாக சமயம், சாதி, மொழி மணம், பண்பாடு இவற்றில் கலப்புகள் ஏற்படலாயின. சமரசப் பண் பாடு மட்டக்களப்பு வாழ் மக்களின் பெருங்குணமாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னரும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கலந்து வாழத்தொடங்கிவிட்டனர்.
கண்டி மன்னர் காலத்தில் இது பெரிதும் வளர்ச்சியடைய லாயிற்று. கண்டிக்குக் கால்நடையாகப் போகும் வழியொன்றுமிருந்தது.
அட்டைகடியும் அரிய வழிநடையும் கட்டையிடறலும் காணலாம் கண்டியிலே.
என்ற கவியும் எழலாயிற்று. இவ்வகைத் தொடர்புகளிருந்ததை மட்டக் களப்பு மான்மியத்தில் பரக்கக்காண்டல் கூடும்.
யாழ்ப்பாணத்து மக்களுடனும் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தனர். கண்ணகி வழக்குரை காவியம் இதற்குச் சான்று பகரும். வெடியரசன் சரித்திரத்தின்படி யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் மட்டக்களப்பிற்கு வந்து குடியேறினர் என்று அறியக்கூடியதாக இருக் கின்றது.
யாழ்ப்பாண வைபவமாலையும் இதனை எடுத்துரைக்கின்றது. கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
மட்டக்களப்பு மான்மியத்தை நுணுக்கமாக ஆராய்ந்து படித் தால் மக்கள் இங்கு வந்துற்றமை இனிது விளங்கும். மாகோன் ஏற் பாடுகள், கண்டியரசன் ஏற்பாடுகள், சோனகமக்களின் குடியேற்றம் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இவர்களின் ஆட்சி போன்ற விபரங்கள் ஆண்டுக்காண்டல் கூடும்.
-48

இரண்டாம் அத்தியாயம்
சமூகம்
குழுக்கள் - சாதிகள் - குடிகள்
மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்ததையும் அவர்களுக்குள்ளே சாதிகள் குடிகள் என்னும் பிரிவுகள் அமைந்து இருந்ததையும்பற்றி இவ்வத்தியாயம் எடுத்துரைக்கும்.
புராதன சமுதாய அமைப்பானது குலமரபுக் குழுக்களின் அடிப்படையிலே அமைந்திருந்தன. ஒரூரில் வாழ்ந்த சிறு குழுவொன்று ஒரு சில விலக்குகளைக் கடைப்பிடித்துத் தனக்கு அயலே உள்ள மற் றைக் குழுவோடு கலக்காது இருந்து வந்திருக்கிறது. இவர்கள் குழு மாறிக் கலப்பு மணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பெருப்பாலும் இக்குழுக்கள் இரத்த உறவுடையோராகவே காணப்பட்டனர்.
சிறு சிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமக்கள் சிக்கனம் மிக்க பொருளாதார சமூக அம்ைப்பு முறையொன்ருேடு இணங்கி வாழ முனைந்தபோது அவர்கள் இயற்கையாக வகுத்துக்கொண்ட ஏற்பாடே சாதி அமைப்பு முறைக்கு அடிப்படையாய் இருந்திருக்கவேண்டும். குயவர், வண்ணுர், அம்பட்டர், வெள்ளாளர் (உழுதொழில் மேற் கொண்டவர்) நெய்தொழிலாளர் (கைக்கோளர்) தோற்றெழிலாளர் (சக்கிலியர்) போன்றவர்களின் தேவை தனித்தனி குழுவைச் சார்ந்து வாழ்ந்து வந்த மக்களுக்கு அவசியம் தேவைப்பட்டது.
குழுக்களாக வாழ்ந்த மக்கள் சாதியடிப்படையிலே கிளைக ளாகப் பிரிந்துகொண்டதும் அவர்களிடையே குடிகள் தானுகவே தோன்றலாயின. எனவே குலமரபுத் தொடர்ச்சியுடன் தொடர்பு பட்டதே குடிமரபு எனலாம். ஒவ்வொரு குழுவில் உள்ளோரும் இரத்த உறவுடையோராக விளங்கியபோது அவர்கள் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தோராக இருந்தனர். இதனுற் பொதுவாக யாவரும் ஒரு குழு முதல்வரை அல்லது முதல்விதை உடையவர்களாக விளங்கினர். இவ் வாறு குழுக்கள் கிளைகளாக குடிகளாகப் பிரிந்து இரத்த உறவுடை யோராக விளங்கியபோது மட்டக்களப்பிலே அவர்கள் தத்தியார், கத்தறையார் அல்லது வகுத்துவார் எனப்பட்டனர். இங்கு குறிப்பிடப் பட்ட வகுத்துவார் அனைவரும் தாய்வழியைச் சுற்றிப் படர்ந்தவராகவே காணப்படும் சிறப்பு வாய்ந்தவர்கள். குழந்தைப் பேற்றின் மூலம் தாய்
- 49

Page 32
தனது குடிமரபுத் தொடர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளுகிருள். தந்தை யின் குடிமரபு தன் குழந்தைக்குப் பதிலாக அவனது சகோதரியின் குழந்தையின்மூலமே தொடரப்படுகிறது. எனவேதான் மட்டக்களப்புப் பிரதேசத்துக் குழந்தைகள் தாய்வழிக் குடியைத் தம் குடியாகக் கொள்ளுகின்றனர். h
இக்குடியினரின் முக்கியத்துவம் மட்டக்களப்புப் பிரதேசத்திலே சமயம், திருமணம், மரணம் போன்ற நன்மை தீமை முதலான காரியங் களில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. திருப்படைக் கோயிலின் நிருவாகம் பராமரிப்பு மற்றும் தொண்டுகள் என்பவற்றைச் செய்ய வேண்டியவர்களாக குடிகள் வகுக்கப்பட்டன. அத்துடன் மட்டக் களப்புச் சிற்றரசரும் கண்டிச் சிங்கள மன்னரும் கோயில்களில் நடக்க வேண்டிய விழாக்கள் முதலியவற்றை அமைத்து அவற்றுக்கு மானியங் களை வழங்கியுள்ளனர். பண்டைய அரசரின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாக கருதப்பட்டன. மட்டக்களப்பின் தென் பாகத்திலமைந்த திருக்கோயி லில் உள்ள சித்திர வேலாயுத சுவாமி கோயிலே மட்டக்களப்ரல் உள்ள முதலாவது திருப்படைக் கோயிலாகும். இதனைத் தேசத்துக் கோயில் எனவும் வழங்குவர். மற்றைய திருப்படைக் கோயில்களாகக் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றியீஸ்பரன் கோயில், பெரிய போர தீவு சித்திரவேலாயுதசுவாமி கோயில், வெருகல் சித்திரவேலாயுதகவு கோயில், மண்டூர்க் கந்தசுவாமி கோயில் என்பனவும் கொள்ளப்படு கின்றன.
மட்டக்களப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் அவர்கள் மட்டக்களப்பில் வழங்கும் சாதியார்களிற் சிலரைப்பற்றிக் கீழ்வருமாறு வகுத்துக் காட்டியுள்ளார்.
1. வெள்ளாளர் 7. கைக்குளவர் 13. கொல்லர் 2. மடப்பள்ளி வெள்ளாளர் 8. சாணுர் 14. 95 Lmrř 3. as apturri 9. வண்ணுர் ls. 5digiri 4. முக்குவர் 10. அம்பட்டர் 16. 560) uuri 5. தனக்காரர் 1 I. Gall - rh; 17. பறையர் 6. பள்ளர் l2. nusivassaurit
இவர்களைப் பதினேழு சிறைகள் என மட்டக்களப்பு மான் மியம் கூறிஞலும் இந்தப் பதினேழு பேர்களில் வேறு சிலரும் இடம் பெற்றுக் காணப்படுகின்றனர். மாதுலர், கோயிலார், பண்டாரம், குசவர், முதலிகள், வாணிபன், நம்பிகள், கோவியர், தவசிகள் என் போரை மட்டக்களப்பு மான்மியம் மேலதிகமாக எடுத்துக் கூறியுள்ளது.
--50-س

மேலே குறிக்கப்பட்ட சாதியாரில் வெள்ளாளர் முக்குவர் முதலானேர் ஏழேழு குடிகளாக வகுக்கப்பட்டிருந்தார்கள் என அறிய முடிகின்றது.
**கண்டனெடு சருகுபில்லி கட்டப்பத்தன் கருதரிய கவுத்தனு மத்தியாயன் மண்டலத்தில் பொன்னுச்சி வயித்தியென்று
கோவசியர் மக்களிலே வருணமாக்கிப் பண்டுமுறை தவருமல் ஏழுகுடியாய். . . . . என மட்டக்களப்பு மாண்மியத்தில் உள்ள குடிக் கல்வெட்டுக் கூறுவ தால் (பக். 70) கண்டங்குடி, சருகுபில்லிகுடி, கட்டப்பத்தன்குடி, கவுத்தன்குடி, அத்தியாயங்குடி, பொன்னச்சிகுடி, வயித்திகுடி என்று மாகோன் வகுத்தான் என அறியமுடிகின்றது. இவை முறையே கண்டங் குடி, சருவிலிகுடி, கட்டப்பத்தங்குடி அல்லது சங்கரப்பத்தாங்குடி, கவுத்தங்குடி, அத்தியாகுடி, பொன்னச்சிகுடி என வெள்ளாளர் மட்டக் களப்பிலே வகுக்கப்பட்டார்கள் என அறிகின்ருேம். இவர்கள் "கலிங்க வெள்ளாளர்' என அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் (மட்டக்களப்பு மான்மியம் (பக். 101) முற்காலத்திற் சேரன், சோழன், பாண்டியன் இவர்களை முறையே நாயர்குலம் என்றும் பிள்ளைக்குலம் என்றும், காரளர் வம்மிசம் என்றும் விருது கொடுத்து வந்தார்கள் எனத் திருப்படைக்களஞ்சியம் கூறுகின்றது.
வயித்தியணுகுடி, அத்தியாகுடி, பெரியகவுத்தன் குடி, சின்னக் கவுத்தன்குடி, கோப்பிகுடி, சங்கரப்பத்தன்குடி, போக்கன்குடி என வெள்ளாளரும், உலகிப்போடிகுடி, காலிங்காகுடி, படையாண்டகுடி , பெத்தாண்டகுடி, பணிகசணுகுடி, கச்சிலாகுடி, பெத்தாண்ட படை யாண்டகுடி என முக்குவரும், வகுக்கப்பட்டிருந்தனர் என்றும் அதே போல முகமதியகுடியினருள்ளும் ஏழு குடிகள் இருந்தனர் என்றும் முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் கூறியுள்ளார். அவையாவன: பொன்னச்சிகுடி, உசவிடுமீரா லெப்பைகுடி, வரிசைநாச்சிகுடி, பூமாலை கட்டிகுடி, கினிக்கருடன்குடி, பண்ணையவீடுகுடி, முகாந்திரம் நாச்சி gig. 6 Taituatairg, b. (Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon p. 36)
* வெள்ளாளர் அல்லது வேளாளரைத் தொல்காப்பியம் உழுவித்து உண்போர் உழுது உண்போர் என வகுத்துரைப்பதாக நச்சிஞ்ர்க் கினியர் கூறுவர். (தொல், அகத்திணை இயல் சூத், 30) ஆனல் a tub. 9... gust 56.16ir 56.75 Tamil Culture in Ceylon - A General Introduction (பக். 132) என்னும் நூலில் யாழ்ப்பாணத்து வெள்ளாளர் பத்து வகையினராகப் பகுக்கப்பட்டிருந்ததைப்பற்றிக் 6su6i str7ri.
-51

Page 33
முன்பு கூறியபடி கலிங்க வெள்ளாளக் குடிகள் பகுக்கப்பட் டிருந்தாலும் மட்டக்களப்பு மாநிலங்கள் சிலவற்றில் கீழ்வருமாறும் இக்குடிகள் அமைந்து கானப்படுகின்றன. இப்பகுப்பிலே பொன்குச்சி குடிக்குப் பதிலாக மடவகுடி சேர்க்கப்பட்டிருக்கிறது. வயித்தினுடி அல்லது வச்சினுகுடி இங்கு வயித்தியனுகுடியாக அழைக்கப்பட்டு வரு கிறது. கவுத்தன்குடி பெரியகவுத்தன்குடி, சின்னக்கவுத்தன்குடி என்ற இரண்டும் கவுத்தன் என்ற குடிப்பகுப்பொனறில் அடங்குவதால் செட்டிகுடி என்ற இன்னுமொரு குடி சேர்க்கப்பட்டு ஏழு குடியாய் இப்பகுப்பு வழங்கவும்படுகிறது. இக்குடியினர் பெரும்பாலும் குருக்கள் மடம் என்னும் ஊரிலே வாழ்ந்து வருகின்றனர்.
அகத்தியன்குடி - அத்தியாகுடி வைத்தியன்குடி - வைத்தியணுகுடி
கவுத்தவன்குடி m கவுத்தன்குடி கண்டபத்தன்குடி கண்டன்குடி
பொக்கனன்குடி - போக்கன்குடி சருகொலியன்குடி சருவிவிகுடி
மடவன்குடி மடவகுபடி
இந்த ஏழு குடியினரும் சோழ நாட்டிலிருந்து வரும்போது அவரவர் வீட்டுழியப் பெண்களைக்கொண்டு வந்திருக்க ஊழியப் பெண் தன் விலகி முடித்த ஆடவர் பெயரிட்டு வந்த குடிகள் ஏழு. இவர்கள் வேடவேளாளர் குடிகள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கீழ்வரு மாறு அமைந்து காணப்பட்டனர்.
புத்தூர்க்குடி கொங்குநகரார்குடி காரைக்காட்டார்குடி மருங்கூர்குடி சந்தாப்பணிக்கன்குடி மரூவரசன்குடி வீரச்சோஃவகுடி
முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் அவர்கள் எடுத்துக் காட்டியபடியன்றி ஊருக்கு ஊர் குடிகள் மாறிமாறியும் காணப்படு கின்றன. முக்குகக் குடிகளிலே,
1. பணிக்கனூர்குடி மாளவன்குடி ,ே முரண்டன்குடி 2. சட்டினான்குடி 5. தனஞ்சயன்குடி 7. கச்சிலான்குடி 3. பெத்தான்குடி என்னும் ஏழு குடிகள் அமைந்து காணப்படுகின்றன.
சீர்தங்கு வில்லவரும் பணிக்கனூரும் சிறந்த
சட்டிலான் தனஞ்சயன்தான் கார்தங்கு மாளவன் சங்குபயத்தன் கச்சிலாகுடி
முற்குக ரினமேழே கான்"
-52

என இதனை முற்குகர் வன்னிம்ை கூறிச்செல்லுகிறது. இன்னும் சில ஊர்களில் இவை,
படையாண்டது. சங்கரப்பத்தன்கு கோப்பிகுடி உலகிப்போடிகுடி வில்லவராயன்குடி கச்சிலாகுடி பெத்தாண்டபடையாண்டகுடி
என்றும் முக்குகக் குடிப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. மலேயாளம், கலிங்கம், ஒரிஸ்ாநாடுகளில் இருந்து வெவ்வேறு குடிகளாய் மக்கட் சுட்டம் வந்து சேர இவர்கள் தம்முள்ளே கலந்து குடிப்பெயர்கள் எல்லாம் தாறுமாருகக் குழம்பிக் கொண்டன போலும். கலிங்க மன்னருக்கு மிக நெருங்கியோராய்ப் பணிபுரிந்தோரின் சந்ததியார் பிற்காலத்தே காலிங்காகுடி முக்குகர் என்றும் படைத்தவேவர் போன்று பணிபுரிந்தோரின் சந்ததியார் படையாட்சிகுடி அல்லது படையாண்டி குடி முக்குகர் என்றும் வழங்கப்பெற்றனர் எனக் கொள்ளலாம். மண் மு:ன என்ற சிற்றரசினே அமைத்து ஆண்ட உலகநாச்சி என்பவளால் ஒரிசாவில் இருந்து கொண்டுவரப்பட்டவரே பிற்காலம் உலகநாச்சிகுடி அல்லது உலகிப்போடி குடி என வழங்கப்பெற்றிருக்கலாம். இக்குடிப் பிரிவினரில் காலிங்காகுடி படையாண்டகுடி, உலகிப்போடிகுடி என்ற மூன்று குடியினருக்கும் சொக்கட்டிச்சோலேத் தான்தோன்றியிஸ்பரர் கோயிற் பரிபாலனம் சொந்தமாய் இருந்து வருகிறது." இம்மூன்று குடிப்பிரிவுகளிலும் இருந்து பதவிபெறும் வண்ணக்குமார் ஆயுள் முழு வதும் பதவியில் இருப்பர். இவர்களின் பொறுப்புகளேத் தனித்தனியே நோக்கும்போது காவிங்காகுடி தலேமைப் பதவிக்கும், உலகிப்போடி குடி பொருளாதார அலுவல்களுக்கும் படையாண்டகுடி நிருவாக அலுவல் களுக்கும் பொறுப்புடையனவாக இருந்து வந்திருக்கிறது. பொன்குச்சி குடி, வைத்தியணுகுடி, அத்தியாகுடி என்ற முக்குடியினரும் இக்கோயி லுடன் தொடர்புடையவர்களாய் இருந்திருக்கின்றனர். இவர் சு ஸ் இன்று பெரும்பாலும் பழுகாமத்தில் வதிந்து வருகின்றனர். (மட்டக் களப்புத் தமிழகப் பக். 31) கண்டங்குடி, சருவிவிகுடி, கட்டப் பத்தாங்குடி அல்லது சங்காப்பத்தாங்குடி என்று அழைக்கப்படும் மூன்று குடியினரும் திரு க்கோயிற் சித்திரவேலாயுதசுவாமி கோயில், தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோயில் என்பவற்றுக்கு உரியோராய் அங்கு தங்கி விட்டனர். கந்தசுவாமி கோயிலுக்குரியோர் மண்டூரிலும் பெரியபோர திவு சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்குரியோர் களுவாஞ்சிக்குடியிலும் பின்னர் பழுகாமத்திலும் பரந்து வாழலாயினர்.
* சு. மகேஸ்வரவிங்கம், "கொக்கட்டிச்சோலேத் தான்தோன்றியீஸ் வரர் கோயில்" திருக்கேதீச்சரம் திருக்குடத்திருமஞ்சன மலர், I{17 fi, Lā, I_{1},
-53

Page 34
"துரைபோர் விரகண்டன் சீர்பாதம் துடர்சிந் தாத்திரன்
நரையாவி வேளாவி மூடவனென்னும் நாடதனில்
பொட்டப்பறைச்சி குடி யேழே"
எனக் கூறப்பட்டிருப்பதால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் வாழும் சீர்பாகக்காரர்களிலும் குடிகள் ஏழாசுப் பகுக்கப்பட்டிருந்தது தெளி வாகின்றது. அவையாவன:
சீர்பாதன்குடி காலதேவன்குடி நரையாவிகுடி சிந்தாத்திரன்குடி காங்கேசன்குடி வேளாவிகுடி
போர்வீரகண்டன்குடி
இதனைச் சீர்பாத வரன்முறைக் கல்வெட்டு வேறுவிதமாகவும் வகுத்துள்ாேது.
படையன்குடி முடவன்குடி காஸ்தேவன்குடி பரதேசிகுடி ஞானிகுபு காங்கேயன் குடி பாட்டுவாழிகுடி
என்ற ஏழு குடிப்பகுப்புகளே ப்பற்றி
செல்வியின் பெயராற் நிகழும் மரபினர் பல்கிட வெண்ணிப் புதுவுயர் மரபோர் வாழும் போதினில் வகுத்தனர் தஃலவர் கேளும் யாரெனக் கிழத்தது மீங்கு படையன் பரதேசி பாட்டுவாழி முடவன் உடைய னருளினன் உத்தமன் ஞானி ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி வாகுமர புடன் வதியச் செய்தனர்"
என்று அக்கல்வெட்டுக் கூறிச்செல்லுகின்றது. இவ்வாறிருந்தபோதும் இக்குடிப்பிரிவினருள் ஊசாடிகுடி, சின்னமுட்டுவன்குடி, வெல்வேலன் குடி, சூரியநாதிகுடி, பெத்தபாலாச்சிகுடி என்ற குடிப்பிரிவினரும் சில கிராமங்களில் இருந்து வருவதாக அறியமுடிகிறது.
காலிங்கச் சக்கரவர்த்தி என்பவர் ஆரிய நாட்டிற் சென்று முத்துக்குளிப்பதற்காக இவர்களே இலங்கைக்குக் கொண்டு வந்து யாழ்ப் பாஷாக்குடா நாட்டிற் குடியேறினுன் இவர்கள் மீன்பிடிப்பதிலும் முத்துக்குளிப்பதிலும் ஈடுபட்டன்ர். கீரிமலேயில் இவர்கள் மீன் பிடித் துலர்த்தியபடியால் இவர்களேக் கீரிமலையால் அகற்றிவிட தொண்டை மாஞற்றிலும் மட்டக்களப்பிலும் குடியேறினர். இவர்கள் மட்டக் களப்பிற் குடியேறிய காலம் காலிங்க குமாரனுன மகேசனுடைய கால மாகும். மட்டக்களப்புத் திருக்கோயிலுக்கு அணித்தாயுள்ள கோரக்
-54
3, 29

களப்பில் மீன் பிடித்து உலர்த்தியபடியால் மகேசன் கோரக்களப்பாலும் அவர்களே அகற்றிவிடத் துறைநீலாவனேயிலும், மண்டூரிலும், வீரமுனே யிலும், குறுமண்வெளியிலும் குடியேறினர். இவர்களில் சீர்பாதன் வீரமுனேயிலும், சிந்தாத்திரன் துறைநீலாவனேயிலும், போர்வீர அண்டன் மண்டூரிலும், காலதேவன் குறுமண்வெளியிலும் குடியேறினர். காங்கேயன், நரையாவி, வேளாவி என்னும் மூன்று குடிகளும் யாழ்ப் பானம் தொண்டைமானுற்றிலும் குடியேறினர் என அறியக்கிடக்கிறது
"அரியகல மிடுமுதல் மீகான்கோடை அவுருளே
(BLDG FIT LI GirlGTT FIFT பெரியகல் மடுமுதலி முவாங்கல்லு பேர்களேழே"
எனக் கூறப்பட்டதிலிருந்து சிங்களக்குடி
கல்மடுமுதவி வங்கிசம் பள்ளச்சேண்ேமுதவி மியாங்கொடைமுதலி கொட்டான்சேனேமுதலி அபறஃனமுதலி மூவாங்கல்முதவி மேஃச்சேண்முதலி
என ஏழாக வகுக்கப்பட்டிருப்பதை அறியலாம். இதுபோல,
செட்டி மங்குச் செட்டி மாணிக்கன்
சங்குச்செட்டி சதாசிவன் சிங்கச்செட்டி சின்னவன் பங்குச் செட்டி பகுத்ததேழே!
எனக் கூறப்பட்டதிலிருந்து செட்டிகுடி
மங்குச்செட்டி சதாசிவச்செட்டி பங்குச்செட்டி மாணிக்கன்செட்டி சிங்கச்செட்டி சாம்பல்செட்டி சங்குச்செட்டி
என ஏழாக வகுக்கப்பட்டிருந்தனர் என அறியமுடிகின்றது.
+
கரையூரார் கம்பி னியா ராறுகட்டி
கருதுமுதலித் தேவன் வயித்தி வேலன்
தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான்
சுரையார்குடி ஏழாய்த் தரித்தான் பாரில்"
எனக் கூறப்பட்டிருப்பதால்,
கம்பிளியாகுடி வயித்திவேலன்குடி போற்றிகுடி
ஆறுகட்டியாகுடி வீரமாணிக்கன்குடி விசிறிப்பத்தினுச்சிகுடி முதலித்தேவன்குடி
எனக் கரையார் ஏழு குடிகளாக வகுக்கப்பட்டிருந்தனர் என அறியக் கிடக்கிறது.
- 5

Page 35
இவ்வாறு கம்மாளரும் கீழ் வருமாறு ஏழு குடிகளாக வகுக்கப் பட்டிருந்தனர்.
குரியடப்பன்குடி சும்மாடுகுடி குருட்டுமூத்தான்குடி ஆனந்திகுடி கட்டாடிகுடி வேலிவாளைக்குடி ஆட்டுவள்ளிகத்தறை
சாண்டாளரும் கீழ்வருமாறு ஏழு குடிகளாக வகுக்கப்பட் டிருந்தனர்.
கள்ளுவத்தைப்பணிக்கண்குடி கருப்பட்டினச்சிகுடி வேலாப்போடிகுடி குசக்குடி கறுத்தக்கண்ணிகுடி மூக்கறைச்சிகுடி பத்தினுச்சிகுடி
மட்டக்களப்பு மாநிலமெங்கணும் வாழும் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்களும் கொண்டும் கொடுத்தும் உறவாடிச் சகோதரர்களாக வாழ்ந்து வருவதால் தமிழ் மக்களின் கலாசார உறவு முறைகள் பல அவர்களின் கலாசாரத்தில் இடம் பெறலாயின. முக்குவர் திமிலரைத் துரத்தியடிக்க உதவிசெய்த பட்டாணியர்களுக்குப் பெண்கொடுத்து உறவாடி வந்த செய்திகள் மட்டக்களப்பு மான்மியத்தால் தெரிவ தால் தமிழரிடையே இருந்துவந்த முக்குவ மரபுகள் பல அவர்களிடம் பரவ ஏதுவாயின. இந்த வகையிலே தமிழரிடையே வழங்கிவந்த குலம் கோத்திரம் சாதி குடி முறைகளும் மட்டக்களப்பு வாழ் இஸ் லாமியரிடையேயும் புகுந்துகொண்டன.
முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் தனது ஆங்கில நூலில் முகமதிய குடிகளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இன்று இஸ்லா மியரிடையே குடிமைகள் பல்கிப்பெருகி இருப்பதை அவதானிக்கமுடி கின்றது. இராசாம்பிள்ளைக்குடி, வடக்களுகுடி, வெள்ளரசங்குடி, பணி யட்டுக்குடி, வட்டுக்கத்தறகுடி, மூத்தநாச்சிகுடி, ஒடாவிகுடி அலங் குடி முதலிய பல்வேறு குடிகள் காலவோட்டத்திலே பெருகியுள்ளன. எனினும் ஒரூரில் உள்ள குடிகளுக்கும் இன்னும் ஓர் ஊரில் உள்ள குடிகளுக்கும் இடையிலே பல்வேறு வித்தியாசங்களும் வேறு வேறு குடிப்பெயர்களும் காணப்படுகின்றன. முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் காத்தான்குடி மருத முனை, சம்மான் துறை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை ஆகிய ஊர்களில் ம.ஸ்ள சாதி குடிப்பிரிவுகளை விரிவு படுத் தி நோக்கும்போது இத்தன்மைகள் புலப்படுகின்றன. தமிழ ரிடையே தாதன்குடி குறவர்குடி என்றும், செட்டிகுடி சேனதிராசன் குடி என்றும் வழக்கத்தில் இருப்பதுபோல முஸ்லிம்களிடையே ஒடாவி குடி தச்சனுகுடி என வழங்கிவருகிறது. சம்மான் துறையில் உள் ள ஆராய்ச்சிகுடி அட்டாளைச்சேனையில் வெத்திசிங்க ஆராய்ச்சிகுடி என்
-56

றும், நற்பிட்டிமுனையில் வெத்திசிங்க பவளவைர ஆராய்ச்சிகுடி என் றும் அழைக்கப்பட்டு வருகிறது. காத்தான்குடியில் வழங்கும் மணவப் போடிகுடி, ஆலிம்குடி, சாயக்காரன்குடி, கன்னுரங்குடி என்பன பிற ஊர்களில் வழங்காத குடிப்பெயர்களாகவே காணப்பகின்றன.
86L6th LD56i
சிறைக் குடிகள் பதினேழும் வெள்ளாளரது நன்மை தீமை அல்லது வாழ்வு சாவு காலங்களில் ஊழியஞ் செய்யக் கடமைப்பட்ட வர்களே.* வெள்ளாளர் மேற்குறித்த பதினேழு சிறைக்குடிகளுக்குத் தலைமை பூண்டொழுகி சிறைகளைக்கொண்டு ஊழியஞ் செய்விப்ப தோடு பரிதிகுல கலிங்க மன்னனுக்கு மட்டும் பெறுப்பும் தூய்மையும் உள்ள தொண்டூழியங்களைச் செய்யவேண்டுமென மன்னன் கட்டளை யிட்டான் என்ற சாதித் தெய்வக்கல்வெட்டு கூறுகின்றது. பூபால வன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைக்குடிகளும் கலிங் கர் வெள்ளாளர் என்பாரோடு காலிங்ககுடி. படையாட்சி குலம், பணிக்கனர்குலம், உலகிப்போடிகுலம் என்பார்சளுக்கும் ஊழியஞ்செய்ய வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. இவர்களது கடமைகள் பின் வருமாறு கட்டளைபண்ணப்பட்டன.
மாதுலர் - அமுது சமைக்கவும். Gsfru$6ðm/ - சந்தனம் அரைக்கவும்.
பண்டாரம் - சந்தனம் தாம்பூலம் பகிரவும்
:
பண்டாரப்பிள்ளை - வீடு வீதி கூட்டிச் சாணம் போடுதல், கலம் மினுக்குதல், தண்ணிர் அள்ளுதல், எச்சிக்கல்லை எடுத்து எறிதல், கொடி கட்டல், வள்ளுவருக்கு இராச மேளம், இராசப்பறை எடுத்துக் கையில் கொடுத்தல், வீதி அலங்காரம் செய்தல். 5. குசவர் - குடம் முதலிய மட்பாண்டம் கொண்டுவருதல் 8. கொல்லர் - கோடரி கத்தி மு த லிய இரும்பாயுதங்கள்
கொண்டுவருதல். முதலிகள் - நூல் சீலை தீபச்சீலை கொண்டுவருதல். 8. வாலிபன் - எண்ணெய் கொண்டுவருதல், கொண்டுவந்து
தலைக்கிடுதல் தீபத்துக்குமிடுதல். 9. நம்பிகள் - தீவட்டி எடுத்தல்.
கோணேசர் கல்வெட்டு மூலமும் (பு. பொ. வைத்திலிங்கதேசிகர்பதிப்பு, 1916 பக். 16 - 18) நன்மைக்கும் தீமைக்கும் செய்யும் தொழும்புகள்பற்றி அறியமுடிகின்றன.
-57

Page 36
10. வண்ணுர் - துயில் தூசி நீக்கிக்கொண்டுவருதல், 11. அம்பட்டர் - மயிர் சவரம் பண்ணுதல். 12. சாணுர் - தெங்குப் பாளை குருத்து வெட்டுதல். 13. பள்ளர் - நன்மைக்குப் பாணி கொண்டுவருதல், தீமைக் குப் பிரேதம் எரித்தற்கு வெட்டிச் சுடலையையும் செப்ப னிட்டு வைத்தல். * を 14. பறையர் - பறைமேள மீட்டல், தீமைக்குப் பாடைகட்
டல், பிரேதம் எரித்தல். 15. கோவியர் - பிரேதம் காவுதல். 16. தவசிகள் - பூமாலை கட்டல், பந்தல் முதலானவிதானங்
கள் சோடிததல். 17. கடையர் - சுண்ணும்புநீறு கொண்டுவருதல்.
கோணேச சாசனத்தின் மூலம் குளக்கோட்டன் வகுத்த சில தொண்டூழியங்களை யும் அறிய முடிகிறது. அவன் மருங் கூரில் இருந்து 30 சோழக்குடிகளை அழைத்துவந்து ஏழு குடிகளுக்குத் தானத்தார் பட்டங்கொடுத்தான் அவர்கள் பரவணித்தொண்டு தினந் தோறும் திரிகோணமலை நாதருக்கு நிந்தியபூசைக்கு வரும் வரவுகளை யும் செலவாகும் செலவுகளையும் பதிவுசெய்வதாகும். அரன் தொழும்பு களுக்கு இன்னும் தேவையானேரை அழைக்கவேண்டிச் சோழநாட்டில் இருந்து கொண்டுவந்து 21 குடிகளுக்கு வரிப்பத்தார் பட்டங் கொடுத்து கீழ்வரும் தொழும்புகளைப் பகிர்ந்து கொடுத்தான். பட்டாடை கொய் தல், கட்டல், புஷ்ப பத்திரங்கள் எடுத்தல், மாலை தொடுத்தல், விளக் கேற்றுவதற்குத் தளிசை முதலியன விளக்கல், கொடி குடை பிடித்தல், நெல்லுக்குற்றல், சாணி மெழுகுதல், சந்தனமரைத்தல். ஆலயத்தை தூய்மையாக வைத்தல் முதலியனவாகும்.
கோயில்களின் நிருவாகம் பராமரிப்பு மற்றும் தொண்டுகள் என்பனவற்றைச் செய்வதற்காக இக்குடிப்பிரிவினரின் கடமைகள் தமிழ ரிடையே அமைக்கப்பட்டிருப்பதுபோல இஸ்லாமியரிடையேயும் இக் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. பள்ளிவாசல் நிருவாகம், நிருவாகி கள் தெரிவு என்பனவெல்லாம் குடிமுறைகள் மூலமே நடைபெறுகின் றன. எனவே பள்ளிவாசல்களே குடிமுறைகளின் மத்திய நிலையமாக விளங்குகின்றன எனலாம். ஒரு பள்ளிவாசலுக்கு எத்தனை குடிகள் ஜமாஅத்தாக இருக்கின்றனவோ அந்தனை மரைக்காயர்மார் தெரிவு செய்யப்படுவர். கூடுதலான சனத்தொகையை உடையவர்கள் பிரதம மரைக்காயரைத் தெரிவுசெய்யும் உரிமையுடையவர்களாவர். றம்ழான் மாதம் பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பதற்கான ஒழுங்கு, மெளலுது முதலானவை குடிமுறையிலே பகிர்ந்தளிக்கப்படும். இதுபோலவே வரு டாந்தக் கந்தூரி மற்றும் பள்ளித்தேவைகள் அனைத்தும் குடிமுறை யைச் சுற்றியே நடைபெறுகின்றன.
- S

கோயில் நிருவாகத்திலும் சமயச்சடங்கிலும் குடிமரபின் செய லாதிக்கம் மிக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதைச் சில குடி களு க் கென்றே தனித்தனி கோயில்கள் அமைந்திருப்பதைக்கொண்டு அறிய லாம். அத்துடன் சில சாதியார்களுக்கென்றே தெய்வங்களும் வகுக்கப் பட்டிக்கின்றன.
* உழவருக்குச் சிவனும் முரசர்க்குக் கன்னியாம்
நழவருக்கு வயிரவனும் நாடார்க்குக் கண்ணகியாம்
தொழுவருக்குப் பிதிராம் தொண்டர்க்கு வேலவனும்
மழுவர்க்கு வீரபத்திரன் மறையோர்க்கு நான்முகனே?
* வேந்தர்க்கு மாலாம் வேடர்க்குக் கன்னிகளாம்
ஏந்துபணி செய்வோர்க்குக் காளியாம் - நேந்துவைக்கின் முட்டன் முடுவன் முனிவரெவரார் வரினும் பட்டமது கட்டிவைத்தான் பாண்டிமன்னன் நிச்சயித்தான் " என்னும் பாடல்கள்மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.
சமயதாபனம் சமயச்சடங்கு முதலானவற்றில் குடிகள் ஏற் படுத்திய பாதிப்பைப்போலச் சமூகத்திலும் பல பாதிப்புகளைச் செய் துள்ளன. திருமணச் சடங்குகள், பூப்பு நீராட்டு மரணச்சடங்கு முதலானவற்றை எடுத்துநோக்கும்போது இதனை அறிந்துகொள்ள முடிகின்றது.
திருமண ஒழுங்குகளின்போது ஒரே குடியைச் சேர்ந்த பல குடும்பங்கள் உறவுமுறையிலே பெரும்பாலும் சகோதரமுறை கொண்ட வர்களாக இருப்பதால் கட்டாயம் வேறு குடியினைச் சேர்ந்தோரையே திருமணம் செய்யவேண்டியது அவசியமாகிறது. ஆனல் அம்பட்டர், வண்ணுர் முதலிய சில குடிமக்கள் தங்கள் சாதிக்குள்ளே திருமண ஒழுங்குகளைச் செய்துகொள்வர். ஏனெனில் திருமணத்தின் மூலம் குடி மரபிற் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெண்ணுெருத்தி தன்னிலும் உயர்ந்த அல்லது குறைந்த மதிப்புடைய குடியில் இருந்து மாப்பிள்ளை கொண்டால் அது பெண்ணின் குடிமரபில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனல் தாழ்ந்தகுடியைச் சேர்ந்த ஒருவன் உயர்குடியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை மணந்துகொண்டால் அவர்களுக்குப் பிறக் கும் குழந்தைகள் தாயின் உயர்குடியையே தனது குடியாகக் கொள்ளு கிறது. இகளுல் திருமணத்தின் பின் மாப்பிள்ளையின் குடிமரபு வலு வற்றுவிடுவதை அவதானிக்கலாம்.
மரணச் சடங்கின்போது குடிமரபுக்குத் தக்கவாறு பல சீர் வரிசைகளைக் கடைப்பிடிப்பதுபோலப் பூப்பு நீராட்டு விழாவின்போதும் நடைபெறுகிறது, இதனையே "நன்மைக்கும் தீமைக்கும் கும்பவரிசை" என்று மட்டக்களப்பு மான்மியம் கூறிச்செல்லுகிறது. "கூரைமுடி வைத்தல்" என்னும் குலவிருது கலிங்ககுலத்தாருக்குப் பின்வருமாறு கூறப்பெற்றிருக்கிறது.
سے 59-۔

Page 37
பார்பெற்ற பரிதிகுல கலிங்க மரபினேர் பதின்மூன்று கும்பமும் தேங்கினுயர் பாளைதணிப் பாவாடை மேற்கட்டி தாரை தவில் சூழல் வீணை பவனிபெறு பந்தலுள்ளிரண்டு நிறைகுட முயரவும் பஞ்சமலர் தூவவும் கஞ்சமலர் மேவவும் பாவாணர் பாடிவரவும் பட்டாடை பதின்மூன்று கொய்து மனமேலெறிதல்..."
அதாவது கலிங்க குலத்தார்க்குப் பதின்மூன்று கூரைமுடிமேற்கட்டி நிலபாவாடை தேங்குமலர் பதினெட்டு வரிசை மேளவகை வெள் ளாளர்க்கீந்த சிறைமுற்றும் ஊழியம் செய்யவேண்டும்.
அதுபோல படையாட்சி குலத்தார்க்கும் உலகிப்போடி குலத் தார்க்கும் வெள்ளாளர்க்கும் பதினேழு சிறைகுடிகளுக்கும் உரிய கும்ப வரிசை கூரை முடிவைத்தல் முதலிய வரிசை முறைகள் யாவும் கூறப் பெற்றிருக்கிறது. (மட். மான்மியம், பக். 88 - 92) மேற்கூறிய குல வரிசைகளைப்போல குலவிருதுகளும் மட்டக்களப்பு மக்களிடையே இருப் பதை அவதானிக்க முடிகிறது. ஒவ்வொரு சாதியினருக்கும் உரியதான குலவிருதுகளை அவரவர் மாட்டிலே குறி சுட்டிருக்கும் அடையாளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தோணி கரையார்க்குத் தொப்பி துலுக்கருக்கு காணி யுழுமேழி சுளி காராளருக்கு நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவருக்கு s எழுத்தாணி சுளி முற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு வண்ணுர்க்குக் கல்லு வாணிபர்க்குச் செக்கு சுண்ணும்பு சுடும் கடையர்க்குக் கூடையாம் - தொல்லுலகில் வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்குச் சேர்ந்த குயவர்க்குக் கும்பகுடம் செப்புவேன் !
(மட்டக். மான்மியம் பக். 87) என்றிவ்வாறு கூறிச்செல்லுகிறது. இதனல் கரையார்க்குத் தோணியும், துலுக்கருக்குத் தொப்பியும், வெள்ளாளர்க்கு மேழியும், காராளர்க்குச் சுளியும், வேடுவர்க்கு வில்லும் அம்பும், முக்குகர்க்கு எழுத்தாணியும், கோயிலார்க்குக் கமலமலரும் என்றிவ்வாறு குலவிருதுகள் இருந்ததை அறியமுடிகிறது. இவ்வழக்கம் இப்பகுதிவாழ் இஸ்லாமியரிடையேயும் இருந்து வருகின்றது. சூலம் இராசாம்பிள்ளைக் குடிக்கும், இளம்பிறை லெப்பைக்குடிக்கும். கெக்கி வடக்களு குடிக்கும், பால்முட்டித்துரக்கு வெள்ளரசங்குடிக்கும், எழுத்தாணி வட்டுக்கத்தற குடிக்கும், யானைத் துறட்டி படையான்குடிக்கும் காக்காக்கால் கதிரன் குடிக்கும் இருந்து வருகிறது என்பதை முஸ்லிம் பெரியார்கள்மூலம் அறியமுடிந்தது.
எனவே குழுக்களாகவும் கோத்திரங்களாகவும் பின்பு சாதி களாகவும் குடிகளாகவும் வாழ்ந்துவந்த மக்கட்சமூகம் காலகெதியிற் தமது கடமைகளை ஒன்றிணைந்து பகிர்ந்துகொண்டிருப்பதை அவதானிக் கலாம். ஒவ்வொரு சாதியினதும் குடியினதும் தொண்டுகளும் ஊழியங் களும் ஒவ்வொரு' க்கும் அவசியமாகத் தேவைப்பட்டிருக்கின்றன. இவை பின்பு கோய வ) நிருவாகம் சமயச் சடங்கு முதல் வாழ்க்கையின் பல்துறை நன்மை தீமைச் சடங்கு வரை பரந்துசென்று பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ளலாம்,
60

மூன்றம் அத்தியாயம்
i. சிவசக்தியின் தனிப் பெருங்கருணை
வேதம் மிகப்பழமையானது. வேதகாலத்து மக்கள் இயற் கைச் சக்திகளையே இறைவனுக வழிபட்டனர். சக்தியைப் போற்றி வழிபடுகின்ற முறையும் மிகப்பழமைவாய்ந்தது. "இப்படியன் இந் நிறத்தன் இவ்வண்ணத்தன் " என்று எழுதிக்காட்ட முடியாதவனக இறைவன், "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லையில்லாதானப் ' எங்கும் நீக்கமற நிறைந்துள் ளான் என்று முக்காலமுணர்ந்த தத்துவஞானிகளும் சமயகுரவர்களும் புகழ்கின்றனர். எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாய், ஒன்ருய் உள்ள அப்பரம்பொருளே, பலவாய்ப் பல்கிப்பெருகி இவ்வுலகெலாம் பரந்து விளங்குகின்றது. அதனை 'அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன் புடைய மாமனும் மாமியும் நீ" என இனமுறைகூறிக் கொண்டாட முனைகின்றபோது பேதைமனம், ஊர் பேரின் றி, குணம்குறியிலாது உள்ள அந்த இறைசக்தியுடன் சொந்தமும் கொண்டாட விளைகின்ற மக்கள் அதற்குப் பல பெயர்கள், ஊர், உறவு, உறையுள், உணவு ஆகியவற்றையளித்துப் போற்றுகின்றதுடன் மனத்தை ஒரு முகப்படுத் திப் போற்றித் தியானிப்பதற்காகப் அ த ற் கு உருவினைக் கற்பித்து ஒருருவம் நாமமொன்றுமில்லார்க்கு ஆயிரம் திருகாமம் கூறித்தெள் ளேனம் கொட்டாமோ' என்ற மணிவாசகரின் மணிமொழிக்கிணங் கப் பலவிதமான பெயர்களைக்கூறி வழிபடுகின்றனர். ஆலயமும் அமைக் கின்றனர். எங்கும் பரந்துள்ள சக்தியை ஓரிடத்திற் குவித்து அதன் அருளைப் பயனைப் பெறுவதற்காக அமைக்கப்படுபவையே திருவுருவங் களாகும்.
இறைவன் ஒலிவடிவினன். ஒலியலையானது விண்வெளியில் எங்கும் பரவியிருந்தபோதிலும், அதனை நாம் செவிமடுக்க வேண்டுமே யானல், அவ்வொலியை வாங்கி(பெற்று)த் தரக் கூ டி ய கருவிமூல மாகவே - அதாவது வானெலிக்கருவி மூலமே கேட்கின்ருேமல்லவா! வானெலி கேட்போரும் பல்சுவை நுகர்ச்சியாளராக உளர். சிலருக் குச் சங்கீதமென்ருல் உயிரி. வேறுசிலருக்கு நாடகம்கேட்பதில் ஆசை. மற்றும் சிலருக்கு கர்நாடகசங்கீதமெனில் மோகம். பலருக்கு மெல்லிசை, ாைப்படப்பாடல் என்ருல் விருப்பு. இவ்வாறு பல்வகை ரசனையுடைய
- 6

Page 38
மக்கள். தாங்கள் விரும்பியதைக் கே ட்டுரசிப்பதற்காக அதற்குரிய ' மீட்டர்களே" வானுெ விக்கருவி யில் பிடித்தால் (இயங்கி குனூல்) அநின்மூலம் விரும்பியதைக் கேட்டு மகி էք քլիք ம், ஒலியானது இசையொலி, பேச்சொலி, இன்பலுஷி, துன் ப ஒ வி எனப்பலவகைப் பட்டபோதும், ஒலி என்று பொதுவாகக்கருதின் ஒன்றேயல்லவா அது போலவே பொதுநோக்கில் ஒரேபொருளாயிருந்த இறைசக்தியும் மக் | க்குவ நிவேக்குத்தக பலவடிவங்களில் காட்சிதருகின்றது.
உருவமற்ற இறைவன், உருவப்பொருளேயே அறியும் ஆற்றல் உடையனவாகிய உயிர்களின் இயலாமையை உணர்ந்து, உயிர் கள் அன்னே வணங்கி உய்தல்வேண்டும் என்ற தனிப்பெருங்கருனே காரண மாகத் தன்னில்வேறின்றி நெருப்பிற்குடுபோல் இனேயிரியாது நிற்கும் சக்தியினுல் அளவற்ற திருமேனிகளேக்கொண்டு அருன்புரிகின்ருன். இறைவன் வேறென்றையும் நோக்காது தன்னிஜலயிற்ருனிருக்கும்போது ஒருவனுய்ச் சிவன் என்றிருப்பான். இந்நி3லயில் அவனுக்கு யாதொரு செயலுமில்: அதனுல் செயல் செய்வதற்கு வேண்டிய உருவம் முத விய எதுவும் இல்லை. ஒன்றும் செய்யாது அமர்ந்திருப்பவனே நோக்கி "உனக்கு சக்தியில்ஃபெனரி சிவனேயென்று சும்மாகிட' என்று கூறு எது இகனே ஓரளவு புலப்படுத்தும். தன்னிலையில் இருக்கும் சிவன் தனக்கு இயல்பாயுள்ள தனிப்பெருங் கருனேகாரணமாக உயிர்களே நோக்கி அவற்றின் பொருட்டு ஏதேனும் செயலைச் செய்யத்தொடங் கும்போது தானும், தனது சக்தியும் என இருகூருக்கி விளங்குவான்" சிவமும் சக்தியும் இரண்டாகியபோதும் இரண்டும் இரண்டு தனிப் பொருள்களல்ல.
மேலும் இறைவன் அஷ்டமூர்த்தி ஸ்வரூபமாக எங்கும் வியா பித்துள்ளான். இதனே 'இயமானன் இந்து இரவி எரிவான் நிலம் சவிலம் எறிகால் எனும் பகுதி இருநான் மயமான சுந்தரன்' (யஜ மாளன் - ஆன்மா, சந்திரன், சூரியன் அக்கினி, ஆகாசம், பிருதிவி, இலம் வாயு ஆகிய அஷ்டமூர்த்தி ஸ்வரூபமாக விளங்கும் சுந்தரேஸ் வரர்) என்று திருவிளையாடற் புராணம் கூறும்.
"மூவுருவின் முதலுருவாய் இரு நான் கான
மூர்த்தியே என்று முப்பத்து மூவர்" - என அப்பரும்.
'அட்டன் அழகாக அரைதன் மேலரவார்த்து" - என சுந்தரரும், "போற்றிநின் கருணைவெள்ளப் புது மதுப்புவனம்
நீர், தீக்காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே'
- என்று மாணிக்கவாசகரும் கூறியுள்ளனர்.
இத்தகைய பெருமைவாய்ந்த இறைவன் உயிர்கள் மீதுகொண்ட தனிப்பெருங்கருணையினுல் படிப்படியாக உ ருவ நி ஃவ பெறுகின்ருர்,
-52

வேதத்தில், ஆகாயத்திலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து அக்கினியும் அக்கினியிலிருந்து நீரும் நீரிலிருந்து பிருதிவியும் தோன்றுவனவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகாசம் சப்தகுணம் மாத்திரமே உடேயது எாபு சப்தம் ஸ்பரிசம் எனும் இருகுணமும், தேயு (அக்கினி சப்தம் ஸ்பரிசம், எனும் முக்குனமும், நீர் சப்தம், ஸ்பரிசம், ரூபம் ரசம் எனும் நாற் குனமும், பிருதிவி சப்தம் ஸ்பரிசம் ரூபம், ரசம், சுந்தம் சிதும் ஐந்து ଧ୍ବଂଶୟ୍ଯ மும் உடையன.
ஆகாசம் கண்ணுக்குப் புலனுகாத நிவிே, வாயு உருவின்றி கண்ணுக்குப் புலனுகாவிடினும் ஸ்பரிசத்தினுல் உணரும் நிலை. அத்தில் கண்ணுக்கும் புலனுகும் நி.ே இவ்வாறு இறைவன் சுட்புலனுக்கு விடய பாக தோன்றியனமையே பிரமவிஷ்ணுக்களின் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றிய வரலாறு சுட்டுகிறது. இவ்வாறு ஜோதிநிலையில் தோன்றி பமையே சிவலிங்கம். இது ஏதோ ஒரு பொருளாகக் மீண்ணுக்குத் தோன்றுவதானுல் உருவமாகவும் ஏனேய உரு பத்திருமேனிகள் போல் கை கால் முதலிய உறுப்புக்களின்மையால் அருவுருவமாகவும் உள்ளை காரணமாக அருவுருவத் திருமேனி எனப்பெயர்பெறுகின்றது. அடுத்து ஜலம் என்னும்திலே இது சப்தஸ்பரிச ரூபரசமுடைய நியோகும். இதி விருந்து சப்த ஸ்பரிசருப ரச கந்தமெனும் குணங்களேயுடைய பிருதிவி நிலையினே அடையும்கால் பல உருவங்களில் காட்சிதருதலேயும் அவ தானிக்கலாம். இதனேயே,
மண்ணதனிஃந்தை மாநீரினுன்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்திரண்டை விண்ணதனிலொன்றை விரிகதிரை" - எள் நாவுக்காசரும்
" பாரிடையைந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்ருய் விளைந்தாய் போற்றி"
- என மாணிக்கவாசகரும் சிறுவதின்மூலம் அறியவார்.
மலேயிலிருந்து நதி உற்பத்தி ஆகின்றது. அந்நதி பூமிக்கு வந்தாற்ருன் அதன்மூலம் மாந்தர் பயன் பெறலாம். வானிலே மேகங் சுள் நீரினேத் தாங்கி உலவுகின்றன. அவை மழையாக பூமியின் மீது பொழிந்தாற்ருன் பயிர்க்குலம் தழைக்கும். வான்மண்டலததில் சஞ் சரிக்கும் காற்று ஜீவராசிகளோடு கலந்து அவைகளின் நாசிவழியே நுழைந்து உடலுள் சென்ருற்ருன் அவை உயிருடன் உலவமுடியும். வெளியில் பரந்திருக்கும் சூரியகதிர்கள் பூமியை வந்தடைந்தாற் முன் பருவகாலங்கள் உண்டாகும். தட்பவெப்பநிலைகள் அமையும்.
հ3

Page 39
இவை தாமாக, இயற்கையாக நிகழக்கூடியவை. இதுபோலவே எங்கும் பரந்துள்ள உள்ளீடுபொருளாய் இருந்து இவற்றை இயக்கும் இறை வனின் தனிப்பெரும் சக்தியான திருவருளும் உயிர்கள் மீது கொண்ட தனிப்பெருங்கருணை காரணமாக பூமியிலே இறங்கிவந்து அருள்பாலிக் கின்றது. எல்லையில்லாத அருட்பெருஞ்சக்தியான உலகமாதாவுக்கு எல்லையிட்டு உருவமும் கொடுக்கிருேம். ஆலயமும் அமைத்து வழிபடு கிருேம்.
இவ்வாறு இறைவனைப் பல வடிவங்களில் வழிபடுவது நமது பாரம்பரியமாகும். சிவனை முழு முதலாகக் கொள்வது "சைவம்"; சக் தியை முதன்மைகொடுத்து வணங்குவது "ச்ாக்தம்': விஷ்ணுவைப் பரம்பொருளாகக்கொண்டு போற்றும் சமயம் "வைணவம்" கணபதியை முழுமுதலாக நினைந்து வணங்கும் சமயம் "காணுபத்தியம்"; குமாரன, முருகனை முழுமுதற்றெப்வமாகக் கொள்ளும் சமயம் "கெளமாரம்"; சூரியனைக் கண்கண்ட தெய்வமாக ஏத்தும் சமயம் "செளரம்" எனவும் அறுவகை உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது இந்துமதம்.
பாரதநாட்டில் கேரளத்தைப்போல் சக்தி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் "மட்டக்களப்புப் பிரதேசத்திலே சக் தியை மாரி, காளி, பேச்சி எனவும், கண்ணகி, திரெளபதை என்னும் பெண் தெய்வங்களையும் போற்றி வழிபடுதல் (வழமை) கண்கூடு.
*தேவீ பாகவதம்’ எனும் நூலில் தேவியானவள் "அசுரர்களை அடக்கி நல்லோரைக்காக்க பல உருவங்களிற்ருேன்றுவதாகவும் கொடிய அசுரர்களை அழிக்குங்கால் 'துர்க்கை" காளி எனவும், மழையின்றி வாடும்போது, வரண்ட நிலத்தில் நீரின்றித் தவிக்கும்போது பயிர்க் குலம் ஒஷதிகளைப் பாதுகாக்கும்வேளை 'சாகம்பரி" , மாரி எனவும், முனிவர்களை வருத்தும் அரக்கர்களை அடக்கும்போது "பீமாதேவி" எனவும் பல உருவங்களில் தோன்றுவதாகத் திருவாய் மலர்ந்தருளியமை கூறப்பட்டுள்ளது.
எனவே ஒன்ருயிருந்து பலவாய் விரிந்து, சில சக்தியாக, அட்டமூர்த்தியாக, மாறி அகில உலகினையும் புரக்கும் சக்தியானவள், ஆன்மாக்களின் பரிபக்குவ நிலைகளுக்குத்தக பல வடிவங்களில் காட்சி தரகீழ் நோக்கி இறங்கி உருவநிலைபெற்று மக்களால் பற்பல் வடிவங் களில் வணங்கப்படுகின்றமை தெளிவாகின்றது.
எனவே நாமும் பரிபக்குவ நிலைகளுக்குத்தக பற்பல உருவிக ளாயிருந்தபோதும் உள்ளீடு பொருளாயிருந்து ஆன்மாக்களை ஆட் கொண்டருளும் அன்னையினை வழிபட்டுப் பூரணமான ஆனந்தமான வாழ்வினைப் பெறுவோமாக.
-64

i. இந்து சமயப் பண்பாட்டு முறைகள்
Iட்டக்களப்பு மாவட்டத்தின் சமயப் பண் பா ட் டி னை ப் பொறுத்தளவில் பல்வேறுபட்ட மதங்களைச் சார்ந்தவர்களும் ஒருங் கிணைந்து வாழ்கின்றனர். இதன் காரணமாக ஒரு மதத்தினது தாக்கம் இன்னெரு மதத்தில் ஏற்படுவது தவிர்க்கமுடியாததொன்ருகும். மட்டக் களப்புப் பிரதேசத்தில் இந்துமதம், இஸ்லாமிய மதம் கிறிஸ் த வ மதம், பெளத்தமதம் ஆகிய மதங்களை அனுடிப்பவர்களே பெருந் தொகையாகக் காணப்படுகின்றனர். இவற்றுள் இந்துசமயப் பண் பாட்டு முறைகளை மாத்திரம் ஆய்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும் ஏனைய சமயங்களுடைய பண்பாட்டுமுறைகள் யாவும் த னித் தனி ஆராயப்படவேண்டியவையாகும்.
இந்துசமயப் பண்பாட்டு முறைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்வதற்கும் மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைப்பற்றி யும் விரிவாக ஆராயவேண்டியுள்ளது. வணங்கப்படும் தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என்று வேறுபடுக்தி நோக்குதல் சிறப்பானதாகும். பெருந்தெய்வங்களாக முருகக்கடவுள், விநாயகக்கட வுள், சிவன், பத்தினிதெய்வம் என்பன கொள்ளத்தக்கன. சிறுதெய்வ வழிபாட்டு முறையினுள் மாரியம்மன், பேச்சி அம்மன், செபமுத்து மாரியம்மன், கடலாட்சியம்மன், பத்திரகாளியம்மன், தி ரெளபதி அம்ம்ன் போன்ற பத்தினித்தெய்வங்களும், வீரபத்திரன், வைரவன், கிருஷ்ணன், நாகதம்பிரான், வேடத்தெய்வங்களான சுடலைகாளி, காட் டேறி என்பனவும், சிறிபகவான், சத்தியசாயிபாவா கோயிலும் வணக் கத்தில் உள்ளன.
பொதுவாக மட்டக்களப்பில் வாழ்கின்ற இந்துசமயத்தைச் சார்ந்தவர்கள் வேறுபாடின்றி எல்லாத் தெய்வங்களையும் வழிபாடு செய்கின்றவொரு தன்மையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எப்படி யிருந்தபோதும் முருகவழிபாடும், பிள்ளையார் வழிபாடும், சிவவழி பாடும், கண்ணகி திரெளபதி அம்மன் வழிபாமே பிரபல்யம் வாய்ந்த வையாக விளங்குகின்றன. ஒவ்வொரு தெய்வ வணக்கமுறையிலும் வேறுவேருண பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றிலிருந்தே பண்பாட்டுத்தாக்கத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
-65

Page 40
முதலில் இங்கேயுள்ள சிறப்பான முருகவழிபாட்டுத் தலங் களையும், அவை அமைந்துள்ள கற்ருடல், மக்களுடைய சமய வாழ்க் கையில் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பவற்றை நோக்கலாம். பிரபல்யம் வாய்ந்த முருகன் ஆலயங்களுள் வெருகல் சித்திரவேலாயுத கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில், திருப்பெருந்துறை முருகன்கோயில், மண்டூர் கந்தசுவாமி கோவில், தாந்தாமலை முருகன்” கோவில், உகந்தமலை முருகன் கோவில், திருக்கோவில் முருகன் கோவில், போன்றன குறிப்பிடத்தக்கன. இவற்றைவிட ஒவ்வொரு கிராமத் திலும் கந்தசுவாமியென்ற பெயராலும் வேலாயுதர் சுவாமி என்னும் பெயரிலும் பல கோயில்கள் காணப்படுகின்றன.
பொதுவாக இங்கே காணப்படும் முருகவணக்கமுறையிஜன எடுத்துக்கொண்டால் பழந்தமிழ் மக்களைப்போல் முருகனை அழகுத் தெய்வமாகவும், வெற்றித்தெய்வமாகவும் வணங்குகின்றனர். ஆண்டு தோறும் முருகக்கடவுளுக்குரிய திருவிழாக்கள் ஆனிமாதம் தொடக் கம் புரட்டாதி முடிவதற்குள் அநேகமாக நடைபெறுகின்றது. உற்சவ காலங்களில் மக்கள் தம் நோய் துன் பங்களை ப் போக்குவதற்காக நேர்த்திகடன் வைத்து அசைச் செய்துமுடிக்கும்பொருட்டு, ஆலயத் திற்கு காவடி எடுத்துச்செல்லுதல் அங்கப்பிரதட்சணை செய்தல், கற்பூர விளக்கெரித்தல், தீக்குளித்தல் முதலான செய்கைகளில் ஈடுபடுவர். இதன்மூலம் அவர்களது மனபக்குவ நிலையைக் காண முடியும். முருக வழிபாட்டில் வருடாந்த திருவிழாவின் ஒருநாள் நிகழ்ச்சியான மதில் கட்டு என்னும் திருவிழா நிகழ்ச்சி முருகன் வள்ளியம்மையை திருக் கல்யாணம் செய்தல், மக்களுடைய வாழ்க்கைமுறையிலும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. சித்தாண்டிப்பகுதியிலே மயில்கட்டுத் திருவிழா வன்று ஏராளமான கல்யாணங்கள் நடைபெறும் வழக்கம் இன்றும் உள்ளதைக் காணலாம். இதேபோன்று மண்டூர்க்கிராமத்தில் அமைந் துள்ள கந்கவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின்போது குரவைத் திருநாள் என்று ஒருநாள் உற்சவம் அழைக்கப்படுகிறது. அன்று பெண்டிர் முருகக்கடவுளை வழிபடவேண்டி குரவை அயர்தல் நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெறுகிறது. இக்குரவையைப் போடும்பழக்கமும் மக்க ளது சமயப்பண்பாட்டுமுறையிலே இடம்பெற்றுள்ள ஒரு அம்சமாகும். முருகவழிபாட்டு முறையோடு தொடர்பான சூரன்போர் நிகழ்ச்சி முருகனை மனதில்இருத்தி அனுட்டிக்கும் விரதங்களான கந்தசஷ்டி, கார்த்திகைத் திருநாள் போன்றவை சமயவாழ்விலே தாக்கங்கஜ உண்டுபண்ணியுள்ளன. விரதகாலங்களில் அதைக்கைக்கொள்ளும் மக் கள் நோற்கின்ற நோன்பு முறைகள் சைவசமயங்களுடைய பண்பாட் டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதை நாம் காணமுடிகிறது. இக்காலங்களில் தூயசிந்தையுடன் மாமிசம்போன்றவை உண்ணுமலும், கெட்டசெயல்களை மனத்தாலும் எண்ணுமலும் விரதம் இருப்பர். இவ் வாருன சமய பண்பாட்டுமுறைகள் பழங்காலந்தொட்டே நடைமுறை யில் இருந்துவருகின்றன.
-66

அடுத்து விநாயக வழிபாட்டினை நோக்கின் சிறப்பாக குறிப் பிடத்தக்கலை யாக சங்கமான் கண்டிப்பிள்ளையார் கோயில், களுதா வளைப் பிள்ளையார் கோவில், ஆனைப்பந்திப் பிள்ளையார் G3gpsr u 50 g), மாமாங்கப் பிள்ளையார் கோவில் போன்ற தலங்கள் விளங்குகின்றன. இதில் அமிர்தகழி என்னும் "பதியில் அமைந்துள்ள சிறிமாமாங்கப் பிள்ளையார் என்னும் தலம் விநாயகக்கடவுளுக்குரிய வழிபாட்டுத் தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் மூலஸ்தானத்தில் இருப்பது சிவலிங்கமாகும். இங்கு இடம் பெறும் சிறப்பான உற்சவங்களும் சிவனுக்கேயுரியதாக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசையில் வரும் பெருந்திருவிழா சிவபெருமானுக்குரியதே. இங்கு அமைந்துள்ள மாமாங் கேஸ்வரர் என்னும் தலப்பெயர் எவ்வாறு வந்தது. பிள்ளையார் வழி பாடும், சிவவணக்கமும் ஒன்ருக இத்தலத்தில் இடம்பெறக்காரணம் யாவை என்பனபற்றித் தனியொரு கட்டுரையாக ஆய்ந்து விரிவாக எழுதப்படவேண்டும்.
எனவே அதைவிடுத்து பிள்ளையார் வழிபாட்டு முறைகளையும் சமயவாழ்க்கையில் இவ்வணக்கம், பெறும் பங்கினையும் பார்க்கின் முருக வணக்கத்தைப்போன்றே பிள்ளையார் வணக்கமும் மக்களிடத்தில் சிறந்த இடத்தைப் பெறுகிறது. பிள்ளையாரை வேண்டி அனுட்டிக்கும் விரதங் களும், சூரன்போர் முதலான நிகழ்ச்சிகளும் சமயவாழ்க்கையில் இடம் பெறுகின்றன. எந்தக் கருமத்தை ஆரம்பிப்பதற்கு முன்பும் பிள்ளை யாரை வணங்கி அக்கருமம் சிறப்பாக அமையவேண்டும் என்று தொடங் கும் வழக்கம் இப்பொழுது சைவசமயிகள் மத்தியில் காணப்படுவ தொன்ருகும். மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிள்ளையார் கோயிலாகுதல் இல்லாமலில்லை. திராவி. ருடைய வழிபாட்டு முறையில் விநாயகக்கடவுளுடைய வணக்கமுறை பிற்பட்ட காலத்தில் வந்து சேர்ந்தபோதும் நன்கு வளர்ச்சி கண்டு விட்ட வழிபாடாகியுள்ளது.
அடுத்ததாக சிவவழிபாட்டுத் தலங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குவது கொக்கட்டிச்சோலை என்னும் பதியில் அமைந்துள்ள தான்தோன்றிஸ்வரன் கோயிலாகும். அத்தோடு ஆங்காங்கே பல சிவன் கோயில்கள் காணப்படுகின்றன. சிவலிங்க வணக்கம் மக்களது வழிபாட்டு முறையிலே சிறந்த இடத்தினைப் பெறு கிறது. சிவன் அருளை வேண்டி அனுட்டிக்கும் விரதங்களான சிவராத் திரி, திருவெம்பாவை, மார்கழி நோன்பு, நடேசர் ஆருத்திரா தரி சனம், ஆடி அமாவாசை போன்ற நோன்புகள் மக்கள் சமய பண் பாட்டு முறைகளில் அதிக பாதிப்பினை உண்டுபண்ணியுள்ளன. சிறந்த கணவரையும், நல்ல மழையையும் தந்து நாட்டை வளப்படுத்தும்படி வேண்டி மணமாகாத பெண்டிர் அனுட்டிக்கும் திருவெம்பாவை எனப் படும் மார்கழி நோன்பானது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதொன்ருகும். இந்நோன்பு காலங்களில் காலை நேரங்களில் ஊர்கள்தோறும் திருப்
-67

Page 41
பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியவண்ணம் பெண்டிரும் ஆடவரும் திரள்திரளாகச் செல்வதைக் காணலாம். சிவனுக்குரிய நோன்பான சிவராத்திரி விரதமானது மிகவும் சிறப்பானதொன்ருகும். இத்தினத்தில் மக்கள் சிவனது அருளைப்பெறவேண்டி இரவிரவாகக் கண்விழித்து நான்கு சாமப்பூசையிலும் கலந்துகொள்வர். இவ்வாறு செய்வதன்மூலம் இறைவனது அருளைப் பெறலாமென்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
அடுத்ததாக பத்தினி அம்மன் வழிபாட்டினை எடுத்துக்கொண் டால் கண்ணகி வழிபாடே இதில் முதன்மைபெற்று விளங்குகிறது. சிறப்பான கோயில்களாக காரைதீவு கண்ணகி கோயில், (p5nt Loth கண்ணகி கோயில், குளக்கட்டு கண்ணகி கோயில், மகிழடித்தீவு கண்ணகி கோயில், அரசடித்தீவு, முனைக்காடு, கன்னன்குட அமிர்த கழி, விடத்தல்முனை போன்ற இடங்களில் அமைந்துள்ள கண்ணஇ அம்மன் கோயில்கள் குறிப்பிடத்தக் கன. பத்தினித்தெய்வமாதிய கண்ணகி அம்மன் வழிபாட்டுமுறையால் சமய பண்பாடானது அதிக பாதிப்பினைக்கொண்டுள்ளது. வருடாந்த சடங்கு உற்சவம் மக்கள் மு வாழ்க்கையில் பெரும்பங்கிணைக்கொண்டுள்ளது. கண்நோய், அம் முதலானவை வராமல் அம்மனை வேண்டி நேர்த்திக்கடன்களைச் செய் வர். கோயிற்கதவு திறக்கப்பட்டதும் மாமிசம் உண்பதை நிறுத்தி விரதம் அனுட்டிப்பர். நேர்த்திக்கடனக அங்கப்பிரதட்சணை செய்தல், கற்பூர விளக்கெடுத்தல், தீக்குளித்தல் போன்றவற்றைச் செய்வர். இக்காலங்களில் கொம்புவிளையாட்டு, குரவை அயர்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் கொம்புவிளையாட்டு இப்போது அருகத் தொடங்கிவிட்டதெனலாம். குரவைபோடும் வழக்கம் மாத்திரமே இப் பொழுதும் இருந்துவருகிறது. அம்மனக்குளிர்விப்பகற்காக குளித்திப் பாடல் பாடப்படும். தெய்வம் ஆடுதல், கட்டுச்சொல்லுதல் முத லானவை சடங்கு நடைபெறும் காலங்களில் இடம்பெறும். சில கோயில் களில் தெய்வம் ஆடும் முறை வழக்கொழிந்துபோய்க்கொண்டிருக்கிறது. மட்டக்களப்புப் பிரதேசத்திலேதான் கண்ணகி வழிபாடு மிகவும் பி. பல்யமாக விளங்குகிறது. பத்தினிதெய்வவழிபாடு சிங்கள மக்களது வழிபாட்டு முறையிலும் இடம்பெற்றுள்ளதை நாம் காணக்கூடியதாக M உள்ளது. அவர்கள் பத்தினித்தெய்யோ என்று வழங்குகின்றனர். கண்ணகி வழிபாடு பற்றியும், சமயவாழ்வில் அதன் முக்கியத்துவத் தைப்பற்றியும் விளக்கமாக ஆராய்வதானல் அதுவொரு தனிக்கட்டுரை யாக அமையுமாகையால் அதனைவிடுத்து மேலெழுந்தவாரியாக எல்லாத் தெய்வங்களது வணக்கமுறையையும் நோக்குவோம்.
அடுத்து மாரியம்மன் வழிபாட்டினை எடுத்துக்கொண்டால் பலவகையாக இத்தெய்வத்தைப் பெயரிட்டு வணங்குகின்றனர். செப
முத்து மாரியம்மன், கொத்துகுளத்துமாரியம்மன், பேச்சியம்மன்,
-68

கடலாட்சியம்மன் என்று பலவகைப்படும். இவ்வாருன பெண் தெய்வ வழிபாடு பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திராவிட மக்களின் தன்மையை வெளிக்காட்டுவதாகவுள்ளது. இவ்வழிபாட்டு முறையில் சர்க்கரையமுது படைத் த ல், தண்ணிர்சோற்றுப்பள்ளையம், கதவு அடைத்து மூன்ரும்நாள் வரும் பூச்சடங்கில் ரொட்டி சுட்டுவைத்தல் முதலான பழக்கவழக்கங்கள் சமய பண்டாட்டு முறையில் குறிப்பிடத் தக்க சிறப்பம்சம் பொருந்தியவையாகும்.
திரெளபதி அம்மன் வழிபாடும் மட்டக்களப்பு மாநிலத்தில் பல இடங்களில் சிறப்பிடம்பெற்று விளங்குகிறது. பாண் டி ரு ப் பு திரெளபதி அம்மன் கோயில், கல்லடித்தெரு திரெளபதி அம்மன் கோயில், மட்டிக்களி திரெளபதி அம்மன் கோயில் என்பன குறிப்பிடத் தக்கவாகும். இந்த வழிபாடு மக்கள் சமயவாழ்க்கையில் ஓரளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்கும் வைபவம் இவ் வணக்க முறையில் அதிவிசேடமானது. இந்நிகழ்ச்சியைக்காண பாண்டிருப்பு திரெளபதியம்மன் கோயிலுக்கு பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து குழுமுவர். வருடாந்த உற்சவ நிகழ்ச்சியில் இடம்பெறும் கல்யாணக் கால் நாட்டுதல், வனவாசம்போதல், தபசிநிலை. கன்னிக்ால் வெட்டு தல் ஆகியன மக்களது சமய பண்பாட்டுமுறைகளில் பல அம்சங்களைப் புகுத்தியுள்ளன. இக்காலங்களில் மக்கள் மிகவும் பயபக்தியுடனும், தூய உள்ளத்துடனும் நடந்துகொள்வர்.
அடுத்ததாகப் பழந்தமிழ் மக்கள் வெற்றித்தெய்வமாக வணங் யை கொற்றவைவழிபாடு.இங்கு காளி எனும் தெய்வவழிபாடாக விளங்கு கிறது. இதில் ஏருவூர் சிறிபத்திரகாளிகோயிலும், பெரியபோரதீவு ஒறிபத்திரகாளிகோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். இத் தெய்வத்துக்குரிய வணக்கமுறையில் பலிகொடுக்கும் ஒரு அம்சத்தை யும் காணலாம். ஆடுகளையும், கோழிகளையும் வெட்டிப்பலியிடுவர். நேர்த்திக்கடனக மக்கள் கோழிகளையும், ஆடுமாடுகள், மற்றும் திரைச் சீலை, சீலை, மற்றும் அடையாளச்சாமான்கள், நெல், சாராயம் முத லான பொருட்களேயும் கொண்டுசென்று கொடுப்பர். பலிகொடுக்கும் முறை பலஇடங்களில் அருகிவந்தபோதும் பெரியபோரதீவு பத்திரகாளி கோயில் இன்று வழக்கில் இருந்துவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. மக்களது சமய நம்பிக்கைகளில் தங்களது நோய் துன்பங் களைப் போக்கினுல் இவ்வாருண பொருட்களை தெய்வத்துக்கு கொண்டு செலுத்தும் வழக்கம் பழங்காலந்தில்இருந்தே கைக்கொள்ளப்பட்டுவந் துள்ளது. இதனைக் கோயிலுக்கு வருமானத்தை உண்டுபண்ணுவதற் காக அக்காலத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தி வந்திருக்கவேண்டும். பூசைசெய்யும் அர்ச்சகர்களுக்கு (பூசகர்களுக்கு) இதில் ஒருபகுதியை வேதனமாக வழங்குவர். இவ்வாருண பண்பாட்டம்சங்கள் பல அம்மன் வழிபாட்டுமுயையில் சிறப்பிடம் பெறுபவையாக உள்ளன.
-69

Page 42
அடுத்ததாக சிறுதெய்வவழிபாட்டினுள் வைரலன், வீரபத் திரன், கிருஷ்ணன், விஷ்ணு, நாகதம்பிரான் போன்ற தெய்வங்களும், வேடர்கள் வணங்கும் தெய்வங்களான காட்டேறி, சுட லை காளி போன்ற தெய்வங்களும் அடங்கும். நாகவழிபாடு மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தவொன்முக மக்கள்மத்தியில் காணப்படுகிறது. ஏனைய கோயில்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றிற்கருகாமையில் ஒரு நாகதம்பிரான் கோயில் இருப்பதை நாம்காணலாம். பண்டா ரியா வெளி என்னு கிராமத்திலுள்ள நாசுட்டு என்னும் இடம் மிகவும் பிர பல்யம்வாய்ந்தவொன்ருகும். இங்கு நடைபெறும் நாகதம்பிரானுக்குரிய பொங்கல்விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொள்வர். இவ் விதம் ஒவ்வொரு தெய்வத்துக்கு முரிய வணக்கமுறைகளினலும், சமயக் கிரியைகளினலும், அதன் மீது மக்கள்கொண்டுள்ள நம்பிக்கையினலும் இந்துசமயப் பண்பாட்டுமுறைகள் பெருமளவு பாதிப்பைப் பெற்றுள் 6T6.
இனி, இந்துமதத்தோடு தொடர்புள்ள சமயப்பண்டிகைகளைப் பற்றியும், அவற்றினல் பண்பாட்டு முறைகள் பெற்றுன்ள மாற்றங்களை யும் பார்க்கவேண்டும். சமயப்பண்டிகைகளாக தைப்பொங்கல்விழா, தமிழ் சிங் களப் புதுவருடம், சிவராத்திரிவிழா நவராத்திரிதினம், தீபாவளிப்பண்டிகை, கார்த்திகை விளக்கீடு போன்றவை கொள்ளத் தகுத்தவை. உழவர்திரு நாளாம் தைப்பொங்கல் தினத்திலே சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் சூரியபகவானுக்கு உதயத்திற் பொங்கல் செய்து ஒரு விழாவாகக் கொண்டாடுவர். இத்தினம் இப்பொழுது வீடுகளிலும், கோயில்களிலும், வயல்களிலும் நடைபெறுகின்றது. அத் துடன் பொதுநிலையங்களிலும் பரந்த அடிப்படையில் கலையம்சங்களை யும் புகுத்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனுல் சைவசமயத்தவருடைய பண்பாட்டுமுறைகள் அதிகளவு இவற்றில் பிரதிபலிக்கத்தொடங்கியது. தமிழ் புத்தாண்டுகாலமும் இந்து சமயத்த வர்களால் கொண்டாடப்படும் ஒரு பொதுக்கொண்டாட்டமாகும், இக்காலங்களில் கைக்கெள்ளும் முறைகள் பண்பாட்டுச்சிறப்புடையவை. தலைக்கு மருத்துநீர் வைத்து முழுகுதல், கைவிசேடம் பெறுதல், புத் தாடை புனைதல், ஆலயங்களுக்கு சென்று வழிபடல், பலகாரவகை கள் செய்து இனபந்துக்களுக்குப் பரிமாறல் போன்ற பல முறைகளைக் குறிப்பிடலாம்.
சிவராத்திரிவிழா, நவராத்திரி தின்ம் போன்றவையும் இவ் வாறே சிறப்புப்பொருந்தியவையாகும். நவராத்திரி தினமாகிய ஒன்பது தினங்களிலும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி. மலைமகள், திருமகள், கலைமகள் ஆகிய மூன்று பெண்தெய்வங்களுக்கும் வழிபாடு செய்கின் றனர். கலைமகளுக்குரிய விழாவினை இப்போது பரந்த அடிப்படையில் எல்லாச்சமயத்தவர்களும் செய்வதை நாம் காணமுடிகிறது. கல்விக்
-70

குரிய தெய்வமாகையால் எல்லா மதத்தவரும் இத்தினத்தைக் கொண் டாடுகின்றனர். அத்தோடு இத்தெய்வவழிபாடு இமயம்தொட்டு கன் னியா குமரி வரையும், சுமத்திரா, யாவா, தென்னபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களிலெல்லாம் வணங்கப்பட்டுவருவதை வரலாற்றுரீதியாக நாம் உணரமுடிகின்றது. இந்நாடுகளிலெல்லாம் வேறு வேறு பெயர்களில் இத்தெய்வத்தை வணங்குகின்றனர். இத் தோடு தீபாவளிப் பண்டிகைகையும், கார்த்திகை விளக்கீடும் இந்து மதத்தினருக்குரிய இரு பெரும் சமயப்பண்டிகைகளாகும். கார்த்திகை விளக்கீடு பழங்காலந்தொட்டே இந்துசமயப் பண்டிகைகளில் இடம் பெற்றுவரும் திருநாளாகும். கார்த்திகை நட்சத்திரமும், பூரணைத்திதி யும் கூடியநாளில் வீடுகள்தோறும் விளக்கிட்டு மகிழ்வர். சர்வாலய தீபம், குமாராலயதீபம் என்றும் இதனை வழங்குவர். ஆ ல யங் கள் தோறும் கார்த்திகைத் திருநாள் பூசை நடைபெறும். பழந்தமிழ் காப் பியமான சீவகசிந்தாமணியில் கார்த்திகைவிளக்கிட்டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார். 256. எனவரும் அடிகளில் கார் த் தி கை த் திருநாளைப்பற்றிய சிறப்பினைக்கண்டுதெளியலாம்.
இந்துசமயத்தவர்கள் கொண்டாடும் அடுத்த பொதுப்பண்டிகை தீபாவளியாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசித்தினங்களில் இடம் பெறும். தீபாவளி என்பதற்கு தீபங்களை வரிசைக்கிரமமாக வைத்தல் என்பது பொருளாகும். கிருஷ்ணபகவான் நரகாசுரனை வதை த் த பொழுது அவனது இறுதி வேண்டுகோளின்படி இவ்வாறு'ஆண்டு தோறும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடவேண்டுமென்பது கதையாகும். ஆனல் இதற்குப் புராணங்களில் ஆதாரம் எதுவும் இல்லை. இன்று பண்டிகையை பெரும்பாலான இந்துசமயிகள் மிகவும் சிறப்பா க க் கொண்டாடுகின்றனர். முழுகிக்குளித்து புத்தாடை புனைந்து, கோயி லுக்குச் சென்று வழிபாடுசெய்து மகிழ்ச்சியடைகின்றனர். இதுவரை நாம் பார்த்த இந்துசமய வணக்கமுறைகள், சமயவிழாக்கள், சைவ விரதங்கள் ஆகியவற்றிலிருந்து இந்துசமயப் பண்பாட்டுமுறைகளின் பல அம்சங்களை ஒரளவு கண்டுகொள்ள முடிந்ததெனலாம். 来
நட்டுமை
மட்டக்களப்பு மாநிலத்தில் கமத்தொழிலோடு சம்பந்தப் பட்ட வகையில் வழங்குஞ் சொல்லே நட்டுமை. நீர் பொசிதலைக் குறிக்கும். வரம்புகளின் நடுவில் கண்ணனுக்குப் புலப்படாத வகை யில் அமைந்துகிடக்கும், நீர் கசிந்து பொசியும் கண்ணறையினைக் குறிக்குஞ் சொல்லே நட்டுமை. நடு + உமி என்ற இரு பதங்களா லாயது. உமி என்பது உமிழ் என்பதன் கேடு. உமிழ்தல், உறிஞ் சுதல், கொப்பளித்தல், துப்புதல் என்பன ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள். நடு + உமி நட்டுமி ஆகிப் பின்னர் நட்டுமை ஆகிற்றுபோலும். இதனை உமி என்று வேறிடங்களில் வழங்குவர்.
-7 -

Page 43
i. மட்டக்களப்பு மக்களது
சமய சமரசப் பண்பாடு
Iட்டக்களப்பு மக்களின் சமய சமரசப்பண்பாடுபற்றி ஆரா யும்பொழுது, புவியியல் அமைவிலான தரைத்தோற்றம், அதற்கேற்ப ஊர்கள் அமைந்தமை முதலியன அடிப்படையான அம்சங்களை உளத் திலே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழர், இஸ்லாமியர், சிங்களவர், கிறிஸ்தவர் முதலியோர் பெருமளவு கூடிவாழுகின்ற இப் பெருநிலப்பிரதேசம் வெருகல் கங்கை தொடக்கம் தெற்கே பானதை சருகப் பரந்துகிடக்கின்றது. மிகவும் நீண்டும், அகலத்தில் ஒடுங்கியும் காணப்படும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் புவியியற் தரைத்தோற் றம், தரையியல்பு என்பன, இனரீதியிலே குடிகள் கலந்த மை ந்து வாழ்ந்த முறைக்கும், அவை தம் மி டையே சமரசப்பண்பாட்டை வளர்த்துக்கொண்டமைக்கும் அடிப்படை ஆதாரங்களாக அமைந்துள் ளன. மிகநெடுங்காலமாக தமிழரும் இஸ்லாமியரும் கலந்து வாழுகின்ற நாடு, மட்டக்களப்பு. ஒடுக்கமாய் அமைந்த நிலப்பரப்பில், தமிழ்க் கிராமமொன்றினையடுத்து முஸ்லிம் கிராமம்ொன்று அமைய, அத% யடுத்துத் தமிழ்க்கிராமம் ஒன்று அமையும்வகையில் மட்டக்களப்புப் பகுதியின் ஆதிக்குடியிருப்புக்கள் அமைந்துவிட்டன. மட்டக்களப்புக் குத் தெற்கேயுள்ள நீ லா வணை எனும் தமிழ்க்கிராமத்தையடுத்து மருதமுனையெனும் முஸ்லிம் கிராமமும் அதனையடுத்துப் பாண்டிருப்பு எனும் தமிழ்க்கிராமமம் அமைந்துள்ளன. தமிழ்மக்கள் வாழும் கல் முனைப் பிரதேசத்தையடுத்துத் தென்திசை நோக்கிக் கல்முனைக்குடியில் இஸ்லாமியரும் சாய்ந்தமருதில் தமிழரும், இஸ்லாமியரும், மாளிகைக் காடு என்னும் புகழ்மிக்க ஊரில் இஸ்லாமியரும், அதனையடுத்துக் கரைதீவு எனும் பழம்பெரும் பகுதியில் தமிழரும், நிந்தவூரில் இஸ்லாமி யரும், அட்டப்பள்ளம் எனும் பகுதியில் தமிழரும், சிங்காரத்தோப்பு எனும் பழம்பெரும் தமிழ் அரசிருக்கையில் தமிழரும், ஒலிவில் பால முனையில் இஸ்லாமியரும், அதற்குத்தெற்கே மீனேடைக்கட்டு எனும் ஊரில் தமிழரும், அடுத்து அட்டாளைச்சேனையில் இஸ்லாமியரும், அக் கரைப்பற்றில் தமிழரும் தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொண்ட னர். பிற்காலத்திலே சிங்களவரும் கிறிஸ்தவர்களும் கிராம அடிப் படையில் அல்லாது மட்டக்களப்பின் சகல இடங்களிலும் கலந்து, சேர்ந்து வசிக்கலாயினர். அடுத்தடுத்துப் பக்கத்துக்கொன்ருக அமைந்து விட்ட "ஆதிக்குடியிருப்புக்கள், ஒன்றுடனென்று சேர்ந்து நீளமான ஒரே நிலப்பரப்பில் அமைந்தமையால், ஒரூரிலிருந்து மற்ருேர் ஊருக்
-72

குப் பயணம் செய்வோர் ஒவ்வொரு கிராமத்தினையும், அவற்றினூ Lாகவே கடந்து செல்லவேண்டிய நிலைமிகத்தொடக்க காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டது. ஊர்களின் கிழக்கு எல்லை கடற்கரையாகவும், மேற் கெல்லை வயல்வெளியாகவும் காணப்படுவதனை இன்னும் நாம் கான முடிகின்றது. இத்தகைய புவியியல் அடிப்படையை மனதிற்கொண்டு மட்டக்களப்பிலே சமய சமரசப்பண்பாட்டின் தொடக்கம், அதன் வெளிப்பாடு, வளர்ச்சி என்ற அமைப்பின் கீழே ஆராயலாம். நெருப் பின்றிப் புகையில்லையென்பதுபோல, மட்டக்களப்பிலே தொடக்க நிலச் சமய சமரசப் பண்பாடு இன்றி, பிற்காலத்திலே சம ர சப் பண்பாட்டின் வளர்ச்சியைக் காண முடியாதென்பதனையும் நாம், மன தில் இருத்திக்கொள்ளுதல்வேண்டும். காலத்தினூடாக விருத்தியடைந்த் தொடக்கநிலைச் சமரசப்பண்புகள், இணைந்து பிற்காலத்திலே 'சமரசப் பண்பாடு" எனும் விருட்சமாகியது எனக்கொள்ளுதல் பொருத்த முடையதாகும -
சமய உணர்ச்சிபற்றிக் குறிப்பிடப்படும்பொழுது, பின்வரும் விளக்கம் கலைக்களள் சியத்திலே கொடுக்கப்பட்டுள்ளது. * புறநிலைச் சடங்குகளும் நம்பிக்கைகளும் சமுதாயநிலைக்குத் தக்கவயறு ஏற்படுவன வும், சமய உணர்ச்சியை வளர்ப்பதற்கு ஏற்ற சாதனங்களேயாகும். அவைகள் சாதனங்களாக உள்ளவரை புனிதமானவைகளே. அவையே குறிக்கோளாக அமையத்தொடங்குமாயின் அதர்ந்தமேவிளையும் " உண்மைச் சமயஉணர்வினையும் அவ்வுணர்வினல் ஏற்படக்கூடிய சம் ரசப் பண்பாட்டுநிலையினையும் மேற்கூறிய எடுத்துக்காட்டு நமக்கு ஆழ மாகப் புலப்படுத்துகிறது. மட்டக்களப்புப்பகுதியிலே மிகநெடுங்கால மாக ஒன்ருக வசித்துவரும் இருபெரும் இனத்தவர்களான தமிழரும் இசுலாமியரும் தத்தமது சமயச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் தம் இடையே வளர்த்தனரெனினும், அத்ககைய உணர்ச்சியினல் மற்றைய இனத்தவரோடு முரண்பாடுகொண்டு வாழ்ந்ததாகத் தெரியவில்லை. இருசமயங்களினதும் சார் பாக நடைபெற்ற, ஆலய கட்டிடவேலை களுக்கும், ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக்களுக்கும். இருஇனத்த வரும் நிதிஉதவியும், பொருள் உதவியும் வழங்கிய வரலாறு நாம் அறிந்ததே. தமிழர்கள் வாழ்ந்த ஊர்களுள் அட்டப்பள்ளம், காரை தீவு, நிந்தவூர், முதலிய ஊர்களில் இசுலாமியப் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு இந்நூற்றண்டின் தொடக்கத்திலே நிலம் கொடுக்கப்பட் டதும் புலனுகின்றது. காரைதீவில் உள்ள பக்கிரிச்சேனை, தைக் கா என்று சொல்லப்படுகின்ற இடங்கள் இசுலாமியரது சமயப்பண்பாட் டுடன் தொடர்புடையவை. மேற்குறிப்பிட்ட இடங்களிலே அமைந் துள்ள முசிலிம் பள்ளிவாசல்களை இன்றும் நாம் காணலாம். இப் பள்ளிவாசல்களிலே ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் தமிழர் கள் பங்குபற்றியதுடன் நிதியுதவியும் அளித்துள்ளார்கள். அட்டப் பள்ளம் எனும் தமிழ் ஊரில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கருகில், நாற்பது முழ அவுலியார் எனும் ஞானியாரது உடல் அடக்கம்செய்
7

Page 44
யப்பட்டதுமுதல், அவ்விடம் புனிததலமாகக் கருதப்பட்டு வருகின்றது. தமிழர்களும் அப்பள்ளிவாசலுக்கு தமது மரியாதையைச் செலுத் தி வருகின்றனர். சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நிந்தவூர் முதலிய ஊர் களிலே தற்போதும் சைவ ஆலயங்களைக் காணமுடிகின்றது. சரித்திரப் பிரசித்திபெற்று தற்காலத்தில் அழிந்துபோன சிவன் கோவில் ஒன்று சாய்ந்தமருதில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆகவே மட்டக்களப்புப் பகுதியிலே மிகப்பழையகாலத்திலிருந்து சமயப் பொதுநோக்கும் மாறு சமயத்தை மதிக்கும் பண்பாடும் காணப்பட்டது. என்பதற்கு மேற் கூறிய விடயங்கள் ஆதாரங்களாக உள்ளன.
நாம் முன்னர் கூறியதுபோல, மட்டக்களப்பிலே, சமரசப் பண்பாடுவளர்ந்த நிலைகளைத் தொடக்க நிலை, வெளிப்பாட்டுநிலை, என்னும் பகுப்புக்களின் கீழே ஆராயலாம். தொடக்கநிலைச்சமய சமரசப் பண்பாட்டு நிலையை ஆராயும்பொழுது, முக்கியமாக, மட்டக்களப்பு வரலாறு, சமரசப்பண்பாட்டுக்கு உதவியவகையையும், பழக்கவழக்கங் கள் உதவியமையையும், சுதேசியக்கல்வி உதவியவகையையும், தொழில் அமைப்புக்கள் உதவியமையையும் நாம் ஆராய்தல் வேண்டும்.
மட்டக்களப்பின் புவியியல் அமைவு, வரலாற்றுக்கு வழி வகுத்துநிற்க, வரலாறு சமரசத்துக்கு வழிவகுத்தது. மட்டக்களப்பின் வரலாற்றை வகுத்தும் தொகுத்தும் கூறும் நூல்களுள் காலஞ்சென்ற முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “Monograph of the Batticaloa District of the Eastern Province of Ceylon” எனும் நூலும், எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் வெளியிட்ட 'மட்டக்களப்பு மான்மியம்' எனும் நூலும், வி. சீ. கந்தையா அவர்கள் எழுதிய 'மட்டக்களப்புத் தமிழகம்' எனும் நூலும், கலா மிதி சி. பத்மநாதன் அவர்கள் வெளியிட்ட "நாடு காட்டுப் பரவ1.0விக்கல் வெட்டும்" முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன. தமிழரதும் இஸ்லாமியாதும் பிணைப்பு, மட்டக்களப்பின் பூர்வ சரி தத்தைக் கூறும் 'மட்டக்களப்பு மான்மியத்திலே' குலவிருது கூறும் பகுதியில் மறைமுகமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. "தோணி கரையார்க்கு தொப்பிதுலுக்கருக்கு' எனும் தொடரினை நோக்குக. நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டு, மட்டக்களப்பின் பழைய பிரிவு களில் ஒன்ருன நாடுகாட்டுப் பற்றின் வரலாற்றைக் கூறுவது. பிர தேச உணர்ச்சி காரணமாக எழுந்த இக்கல்வெட்டிலே, இசுலாமியரும் தமிழரும் கலந்து வாழ்ந்தமை கூறப்பட்டுள்ளது. இங்கு நாடுகாட்டுப் பற்றில் வாழ்ந்துவந்த இசுலாமியக் குடிகளைப்பற்றியும் அவர்களது தலைவர்களைப்பற்றியும் சில தகவல்கள் வந்துள்ளன. பொன்னச்சிகுடி, வரிசை நாச்சிகுடி, பணியவிட்டுக்குடி, முகாந்திர நாச்சிகுடி, மாலை கட்டிகுடி, கிணிக்கநாதன்குடி முதலிய ஏழுவகை இசுலாமியர் குடி களும் நாடுகாட்டிலே வந்திருந்தனவென்றும், அவையனைத்துக்கும்
-74

முதலீடு பொன்னச்சி குடியாரென்றும் கல்வெட்டிலே தரப்பட்டுள்ளது. இந்த ஏழு குடிகளும் மட்டக்களப்பிலுள்ள இசுலாமியரிடையே காணப் படுகின்றன. இசுலாமியரிடையே காணப்படும் குடிமுறையானது அவர் கள் கிழக்கிலங்கையில் வாழும் தமிழர்களோடு இனரீதியாகவும், சமு தாயரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. போர்த்துக்கீசர் இலங்கையை ஆண்டகாலத்திலே 1601ம் ஆண்டில் இலங்கையிலிருந்து, பல இசுலாமியர்களை அவர்கள் வெளியேற்ற முயன்றபொழுது கண்டியரசன் தலையிட்டு, மட்டக் களப்புப் பகுதியிலே அவர்களுக்குப் புகலிடவசதியும், பாதுகாப்பு வசதியும் செய்துகொடுத்தமைபற்றி "குவெய்ருேஸ்" சுவாமியார் தனது நூலிற் குறிப்பிடுகின்றர். சிங்களக்குடிகளின் வருகையும், அவர் கள் மட்டக்களப்பாருடன் கலந்து வாழ்ந்த வரலாறும் எமக்குத் தெரிந்ததே, நாடுகாட்டுப் பரவணிக்கல்வெட்டில், சீதவாக்கையில் இருந்து வந்து மட்டக்களப்பில் குடியேறி வாழ்ந்த சிங்கள நிலமை யிழுளை பற்றிய கதைகள் கூறப்பட்டுள்ளன. 'Society in Medialval Ceylon” எனும் வரலாற்று நூலிலே மட்டக்களப்புப் பிரதேசத்தில் திக்கனகா' எனும் விகாரை இருந்ததாகவும், கண்டியரசர்கள் பாவித்த தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் வாழிடமாக ஆக்கப்பட்டுவரும் தென்கீழ் இலங்கைப்பகுதியில், முற்காலத்தில் சைவ, வைணவக்கோயில்களும், பெளத்தவிகாரைகளும் இருந்த தற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே மட்டக்களப்பிலே தமது வாழ்வினை நிலைப்படுத்திக்கொண்ட தமிழரும் இசுலாமியரும் சிங்கள வரும் வரலாற்று முறையில் சகோதர மனப்பான்மையுடன் ஒன்முக பரஸ்பரம் உதவி செய்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது புலணுகின்றது. இவ்வரலாற்று வாழ்க்கை முறையை, பிற்கால சமய சமரசப் பண் பாட்டுக்கு முதற்படியாக அமைந்தது எனக் கூறலாம்.
மட்டக்களப்பு மக்களின் பழக்கவழக்கங்கள் சமரசப்பண்பாடு வளர்ச்சியடைவதற்கு மிகவும் உதவியுள்ளன என்றே சொல்வேண்டும். தமிழர்களும் இசுலாமியரும் பரஸ்பரம், "மச்சான்" உ ற வு முறை கொண்டழைக்கும் பண்பு, கிராமப்புறங்களிலே இன்னும் நிலவிவரு கி ன் றது. பாடுகேடான நோயடைந்தவர்கள் சைவக்கோயில்களுக்கு நேர்த்திக்கடன்வைத்து, அக்கடனை விழாக்காலங்களிலே நிறைவேற்றும் பழக்கம், இப்பொழுதும் மட்டக்களப்பின் தென்பிரதேசங்களிலே காணப்படுகின்றது தமிழரது வயல்வெளிகளில் அறுவடைகாலங்களிலே, இசுலாமியப் பக்கிரிமார் வருகைதரும்போது அவரைக் கெளரவித்து உபசாரம் செய்யும் வழக்கம் தமிழரிடம் இருப்பதுபோல சைவ ஆண்டி மார் முசிலீம்களது களவெட்டிகளுக்குச் செல்கையில் அவர் களைக் கெளரவிக்கும் பழக்கத்தை இசுலாமியரும் கைக்கொண்டொழுகுவதனைத் தற்காலத்திலும் காணலாம். "சங்கத்தார்மார்' என்றழைக்கப்படும் பெளத்த துறவியரும் வயற்களவெட்டிகளிலே தமிழர், முசிலிம்களால்
-75.

Page 45
உபசரிக்கப்பட்டனர். மேலும் சைவக்கடவுளுக்கு மடைவைத்து, குறி பார்க்கும் வழக்கம் இரு இனத்தவரிடையேயும் காணப்படுகின்றது. மி--க்களப்புவாழ் முக்குவ மக்க ளது. பண்பாட்டு பழக்கவழக்க சிேவிறகள் பல, அங்குவாழும் சிங்கள மக்களின் பண்பாட்டுமுறை *ளுடன் ஒத்துள்ளன என எச். டவூளியூ. தம்பையா அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இத்தகைய பழக்கவழக்க ஒற்றுமை உணர்ச்சிகள் மூன்று இனங்களையும் இறுக்கமாகப் பிணைத்திருந்தன. இவை பிற்காலத்திலே சமயசமரசம் பரவு தற்கு அடிப்படையாக அமைந்திருந்தன. இதே போல மட்டக்களப்பாரது தொழில் அமைப்புக்களும் சமயப்பொதும்ை உணர்ச்சிக்கு வழிவகுத்தன. பண்டுதொட்டு நிலவிவரும் கமத்தொழில் மட்டக்களப்பில் வாழும் தமிழர், இசுலாமியரது பரம்பரைத் தொழி லாக இருந்துவருகின்றது. அந்நாளில் தமிழரிடம் முல்லைக்காரன் வேலை செய்துவந்தனர், பல இஸ்லாமியர். அறுவடை நடைபெற்று முடிந் ததும் களவெட்டிப்பொங்கல் செய்யும் சமயப்பழக்கத்தினை இரு இனத்த வரும் பரஸ்பரம் கொண்டிருந்தனர். உதாரணமாக காரைதீவில் உள்ள பக்கிரிச்சேனைப்பள்ளி, தைக்காப்பள்ளி முதலியவற்றிலே தமிழர், கள வெட்டிப் பொங்கல் செய்தமை அண்மைக்காலம்வரை நிகழ்ந்துவந் துள்ளது. மீன்பிடித்தொழில்கருதி, மாத்தறை காலி முதலிய பகுதி களிலிருந்து மட்டக்களப்பிற் குடியேறிய சிங்களக்குடிகள் பலர், இங் குள்ள தமிப்பெண்டிரை மணந்து சைவரது பண்பாட்டைக் கடைப் பிடித்து வாழ்ந்துள்ளனர். பொத்துவில், பாணகை, அளிகம்பை முத லிய இடங்களில் வாழும் சிங்கள, தமிழ் மக்கள் கமத்தொழில் முறை யால் ஒன்றுபட்டு தமது பேச்சுவழக்கில் இருமொழிச் சொற்களையும் சமயக்கிரியைகளையும் தம்மையறியாது பேசியும், கைக்கொண்டும் வரு கின்றனர். ஆகவே மட்டக்களப்பு மக்களது தொழில் முறை க ள் சமய சமரசவழிக்கு மேலும் ஒருபடியினை எடுத்துக்கொடுத்ததென்று கூறுவது பொருத்தமுடையது.
வரலாற்றுமுறையாக மட்டக்களப்புப் பகுதியிலே நடைமுறை யிலிருந்த கல்வியமைப்பு சமரசசன்மார்க்க நெறிக்கு வழிவகுத்ததென்று கூறலாம். மட்டக்களப்பில் முசிலிம் அறிஞர்பலர் இருந்தனரெனினும் 19ம் நூற்றண்டின் தொடக்ககாலத்திலிருந்து, படிப்பித்தற் தொழிலிற் தமிழர்களே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். தமிழாசிரியரிடம் கல்வி கற்க முசிலீம்கள், தமக்கெனத்தனிப்பண்பாடு உடையவராகத் தற் பொழுதும் திகழ்வதன நாம் காணலாம். இவர்கள், தமிழர் ஆசிரி யரிடம் மதிப்பும், அன்பும் வைத்திருந்தனர். சைவசமய நூற்பயிற்சி யையும் இவர்கள் பெற்றிருந்தாரெனின் அவர்களது சமயப் பொது நோக்கை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. இதேபோல சைவர் களும் இசுலாத்தைப்பற்றியறிந்திருந்தனர். அக்காலத்திலே, தொழிற் துறைக் கல்வியைவிட சமய, பண்பாட்டுக்கல்விக்கே முக்கியத்துவம்
-76

கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சமரச மனப்பான்ம்ை இரு பெரும் இனத்தவரிடையே சுலபமாகவும், சு முகமாகவும் வளரத் தொடங்கியது எனக் கூறலாம்.
இதுவரைகூறிய விடயங்களினூடாக, சமரசப்பண்பாடு என் இணும் விருட்சம் மட்டக்களப்புப் பிரதேசத்திலே சிறப்புற முளைக்கத் தொடங்கியது என்பது தெளிவாத்தெரிகின்றது. தொடர்ந்து அடெலி பாண்டின் வெளிப்பாட்டினை, மட்டக்களப்பு மக்களது எழுத்தாக்கங் களிலே நாம் கண்டுதெளியலாம். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங் களுக்கு முன் இவர்களது எழுத்தாக்கங்களிற் பெரும்பாலானவை சமய அடிபடையாக்கங்களாகவே காணப்படுவதனை நாம் அவதானிக்க முடி கிறது. தமது பண்பாட்டினை வெளிப்படுத்தும் பாடல் நூல்கள், சம் யப் பற்றினை வெளிப்படுத்தும் பாடல் நூல்கள், சமூக உணர்வினை வெளிக்காட்டும் கவிதைநூல்கள், சமயப்பொதுமையுணர்வினை வெளிப் படுத்தும் சமய கீர்த்தனை நூல்கள், முதலியவற்றினை இவர்களது ஆக் கங்களிற் கண்டுகொள்ளலாம். முசிலீம் கவிஞர்கள் பல ர், தமிழ் இலக்கிய மரபினையொட்டிச் சயமகீர்த்தனை நூல்கள் இயற்றியுள்ளனர் இப்பகுதியிலே வாழ்ந்த தமிழ்ப்புலவர் பலர், கீர்த்தனை நூல்களையும்,” அம்மானை, சதகம், காவியம், அறவழி நூல்கள், வேண்டுதல் நூல். கள் முதலியவற்றையும் நூற்ருண்டுகளினூடாக ஆக்கியுள்ளனர். அது அவர்களுக்குக் கைவந்தகலை, மரபு வழிவந்த நெறி. ஆனல் ம்ட்டக் களப்பில் வாழும் இசுலாமியர்களும் தமிழரது இலக்கிய சமயநெறி. களைக் பின்பற்றித் தம்து படைப்புக்களை வெளிப்படுத்திவந்துள்ளனர். தஞ்சமயக்கடவுளைத் துதித்துப்பாடியிருப்பினும், தமிழ் இலக்கியச்சாய லையும், சைவசமய உணர்வுகளையும், சைவநெறியானது கடவுளை அணு கும் முறை களையும் தம்நூல்களிலேயே கைகொண்டுள்ளனர் எனக் கூறுவதும் பொருத்தமுடையது. எடுத்துக்காட்டாக, ஆனந்தமெய்ஞ் ஞானதீபம், மெய்யொளிவு ஞானமணிமாலை, மெளனமணித்தீபத் திரும்ாலை, ஞான ஒப்பாரி முதலியநூல்களைக் கூறலாம். இந்நூல்களிலே சமயப்பொதுமை உணர்வு இழைபோடியிருப்பதனைக் காணமுடிகின்றது. அவரது மகிமைகூறும் ஆஷிக்கு அவதாரமாலை, சைவசமய அவதார மகிமையுடன் தொடர்புறுவது. தமிழர்களுள்ளே எஸ். பொன்னுத் துரை அவர்கள் எழுதிய இஸ்லாமும் தமிழும் புலவர்மணி ஏ. பெரிய தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய திருஅவதார கீதங்கள், குருபரத் தரிசனத்திருவேட்கை, கிறிஸ்தவசபைத் துயிலுணர்ச்சி என்பன சமய பொதும்ை உணர்வினை வெளிப்படுத்துகின்றன. மேலும் சமரச சன் மார்க்கத்தின் அதீதநெறியில் நிற்கும் பகவத்கீதையின் சாரம், விவக்கம் முதலியனவும், பெரியதம்பிப்பெரியோன் ஊடாக மட்டக் களப்பு மண்ணிலிருந்தே தளைத்து வெளிப்பட்டது எனக் கூறுவதும் சாலப் பொருந்தும். இறசூல் சதகம், இது திரு என்னைச்சிந்து, மெய்ஞ்ஞானப் பாடல், செய்நம்பு, நாச்சியார் மான்மியம், நடைவழிச்சிந்து, பள்ள
-77

Page 46
யப் பாடல், வெள்ளக்காவியம் முதலியனவும், இறைவன் பேரில் மழை முதலியன வேண்டிப்பாடிய மழைக்கவி, மழைக்காவியம், மழைதேடிப் பாடிய மண்டாட்டக்காவியம், இறைவன்பேரில் வேண்டுதல் ஆகியன வும் சமரச உணர்வினை வெளிப்படுத்துபவனவாக உள்ளன. தமிழரது அறநூல் வழிகளில் அமைந்த, ஒருபாவொருபஃது, நன்மொழி நாற்பது, முஸ்லீம் மூதுரை முதலியன சமயப்பொதுநோக்கில் அமைந்துள்ளவை.
நூலுருவாக 1940ல் வெளிவந்த மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு, 1960ல் வெளிவந்த மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் முதலியவற்றின் பாடல் ஆசிரியர்களை நாம் அறிவதற்கு இயலாது எனினும் அவற்றினுள்ளே, சமூக, சமயப்பொதுநோக்கு உணர்விஜன நாம் கண்டுகொள்ளமுடிகின்றது.
இக்கட்டுரையின் இறுதிப்பகுதியாக அமைவது சமரசப்பண் பாட்டின் வளர்ச்சியாகும். 19ம் நூற்றண்டின் இறுதிவரை மட்டக் களப்பு பிரதேசத்திலே சமய சமரசப்பண்பாடு வளர்ந்தவகைக்கும், 20ம் நூற் ற ன் டி ன் காற்பகுதியிலிருந்து சமய சமரசப்பண்பாடு வளர்ந்தவகைக்கும் சற்று வித்தியாசம் உண்டு. குறிப்பாக 1924ம். ஆண்டுக்குப்பின்னர் மட்டக்களப்பாரின் சமரசப்பண்பாடு அறிவுசார்ந்த பண்டங்களாக மலரத்தொடங்கியமையை நாம் அவதானிக்கலாம். நாம் முன்னர் கூறிய, சமரசத்தொடக்க வெளிப்பாட்டு நிலை களின் மேல், வளர்ச்சிநிலையாகிய பேரமைப்பினை இராமகிருஷ்ண சங் கம் கிழக்கிலங்கையில் மேற்கொண்டுள்ளது. கல் வி யின் ஊடாக சமய சமரசஉணர்வு, சமூக உணர்வுகளை ஏற்படுத்திய பெருமை இராம கிருஷ்ண சங்கத்தினையே சாரும். இராமகிருஷ்ணாது சமய சமரசக் கொள்கையையும் மனிதாயதமும் மட்டக்களப்பிலே இலகுவாகப்பரவு தற்குக் காரணமாக இருந்தது, மட்டக்களப்பில் காணப்பட்ட சமயப் இதுநோக்காகும். விவேகானந்த சுவாமிகள், இந்துமதத்துக்கு விளக் கம் கொடுக்கும்போது சமயப் " பொதுநோக்கே இந்துமதம் ' என் இழுர், இலங்கையிலே இராமகிருஷ்ண சங்கத்தின் கொள்கைகளும் நோக்கங்களும் இலகுவாகப் பரவுதற்கு ஏ நீ ற பரிபக்குவ நிலையில், மட்டக்களப்புப் பிரதேசம் இருந்ததனலேயே, இச்சங்கத்தின் செயற் பாடு, யாழ்ப்பாணம், கொழும்பு முதலியவற்றைவிட, மட்டக்களப்பிலே விருத்தியடைந்தது. சமயப்பொறையினூடாக, சமயப் பொதுநோக் கக் கண்ட மட்டக்களப்பு மாந்தரின் உள்ளம், இருபதாம் நூற்ருண் டின் பிற்பகுதியிலே, சமரசசன்மார்க்க நெறியில் வளரத்தொடங்கியது. 1924க்கு முன்னர் இந்தியாவிலிருந்து காலத்துக்குக்காலம் இலங்கைக்கு வருகைதந்தத சமயப்பெரியார்களும் இராமகிருஷ்ண சங்க த் துறவி யரும் அடிக்கடி கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி முதலிய நகர மக்களின் தரிசனத்துக்குப் பாத்திரமானவர்களே தவிர, மட்டக்களப்புக் கும் அதனைச் சார்ந்த கிராமப்புறங்களுக்கும் வருகைதந்தாரல்லர். ஆனல் பிற்காலத்திலே இராமகிருஷ்ண சங்கத்தின் கோட்பாடுகளும்,
-78

சமரசசன்மார்க்க நெறியும், அவற்றிற்கு நிலைக்களமான இராமகிருஷ்ண
சங்கம் பாடசாலைகளும், ஆச்சிரமங்களும் அமைந்து வளர்ந்த மண் குகை, மட்டக்களப்புப் பிரதேசம் மட்டுமே ஈழத்தில் எஞ்சியுள்ளது. உண்மையிலேயே மட்டக்களப்புப்பகுதி, சமரசசன்மார்க்க நிலையினை விரும்பும் விடாயில் இருந்தது என்று கூறுவதினைவிட, சமய சமரசப் பண்பினை ஏற்று வளர்க்கும் பக்குவநிலையில் இருந்தது எனக் கூறு வதே பொருத்தமுடையதாகும்.
காலத்துக்குக்காலம் ஏற்படும் சமயப்பூசல்கள் மட்டக்களப்பு மண்ணினை அதிகமாக ஆட்கொள்ளவில்லையென்றே கூறவேண்டும். நாவலர்காலத்தில் யாழ்ப்பாணப்பகுதியில், கிறிஸ்தவ சைவ ச ம ய மோதல் நடைபெற்றது. அநகாரிகதர்மபாலர் முதலியோரால் பெளத் தரிடையே பெளத்தசமய மறுமலர்ச்ச்சி நடைபெற்றது. இவற்றல் மக்கள் மனதில் தனித்த சமயத்தின் உணர்வுகள் ஊற்றப்பட்டனவே தவிர, சமரச உணர்வு விதைக்கப்படவில்லை. இதே காலத்திலும் அதற்குப்பிந்திய காலத்திலும் மட்டக்களப்பு மண்ணில் சமய சமரச உணர்வுகளே எல்லோர்க்கும் சமயஉணர்வு இருக்கும்வகையில் விதைக் கப்பட்டது. தமிழரும், இசுலாமியரும், கிறித்தவரும், சிங்களவரும் கட்டிவளர்த்த நெறியாக, போற்றும் மொ ழி யாக இராமகிருஷ்ண சங்கச் சமய சமரசசமூகப் பொதுமை உணர்வுகள் விளங்குகின்றன.
1924ம் ஆண்டுக்குப்பின்னர் மட்டக்களப்புப் பிரத்ேசத்திலே சமய சமரசப்பண்பாடு நிலைபெற்றுவிட்டதற்கு முளை ஆதியிலேயே ஊன்றப்பட்டுவிட்டது, என்பதனை சற்று விளக்கினுேம். இனி இராம கிருஷ்ண சங்கத்தால் தற்காலம்வரை, சமரசப்பண்பாடு பல் வேறு வகைகளிலும் அவற்றினுாடாக வளர்ந்துள்ள நெறிபற்றி ஆராயலாம். திட்டமிடப்பட்ட வழிவளிலே சமரசநெறி இராமகிருஷ்ண சங்கத்தி னல் கிழக்கிலங்கையிலே நடைமுறைப்படுத்தப்பட்டது, உள, உடற் பயிற்சியடிப்படையிலமைந்த கல்வியினூடாகவும், மாணவரில்லத்தி லுறைந்து பெறும் பயிற்சியினூடாகவும், வணக்கமுறைகளினுடாகவும் சமரசப்பண்பாடு வளர்க்கப்பட்டது. 1920க்குப் பின்னர் இராமகிருஷ்ண சங்கத்தினூடாகக் கல்விப்பணி, கிழக்குப்பகுதிகளில் ஆரம்பமானது. நூற்றண்டுகளூடாக, கிறித்தவமதக்கல்வி போதிக்கப்பட்டமை காரண மாக அக்காலச் சூழலில் அதிகமாகக் கிறித்தவப் பாடசாலைகளே மட்டக் களப்புப் பிரதேசத்தில் நிலைபெற்றிருந்தன. 1921ம் ஆண்டு கிழக் கிலங்கையிலே 79008 இந்துக்களும், 60,740 இஸ்லாமியரும், 17468 சிறீத்தவர்களும் இருந்ததாகக் கணிப்புக்கள் கூறுகின்றன. இம்மக் களுக்குக் கல்வியையூட்டுதற்கென 128 கிறித்தவப் பாடசாலைகளும், 10 சைவப்பாடசாலைகளும், 45 இசுலாமியருக்கான குரான் பாட சாலைகளும் அமைந்திருந்தன. தொழில், சமூகக்கல்வியை நாடிய இசு லாமியர் பலர் சைவப்பாடசாலைகளை நாடிக் கல்வி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் 1924 முதல் இராமகிருஷ்ண சங்கப் பாடசாலை
--79ے

Page 47
களை சுவாமி விபுலானந்த அடிகள் ஆரம்பித்து நடத்திவைத்தார். இத் நற்பணிக்கு நிலைக்களமாக இருந்தவை, ஊர்தோறும் சைவமக்களால் நடத்தப்பட்டுவந்த இந்து பரிபாலன F6Mdu u urrifer பாடசாலைகளே
யாகும்.
மட்டக்களப்புப் பகுதியினைப் பொறுத்தவரையில் 1925 ஆண்டிலிருந்து இராமகிருஷ்ண சங்கத்தினூடாகக் கல்விப்பனி மலரத் தொடங்கியது. இவ்வாண்டிற் பிற்பகுதியில் ஆரைப்பற்றை, காரை தீவு, மண்டூர், ஆனைப்பந்தி முதலிய இடங்களில் இருந்த சைவப் பாடசாலைகளை, இராமகிருஷ்ண சங்கப்பாடசாலைகளாக ஏற்று, விபு லானந்த அடிகள் நடாத்தலானர். இதே ஆண்டு காரைதீவு பெண்கள் வித்தியாலயம், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயம் முதலிய நிறுவணங்களும் ஆரம்பிக்கப்பட்டன. மொருெக்கொட்டான்சேனயிலும் 1929ம் ஆண்டு இராமகிருஷ்ண சங்கப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1930 - 35 க்கு இடைப்பட்ட காலத்திலே இச்சங்கத்தின் கல்விப்பணி முன்னேற்றமடைந்து காணப்பட்டதனல் சாதி, சமய பேதமின்றிப் பலரும் உதவ முன்வந்தனர். கல்முனை, கொக்கட்டிச்சோலையிலும் ft. சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1944 க்கும் இடையில் களுதாவளை, பழுகாமம், சித்தாண்டி, அக்கரைப்பற்று முதலிய இடங்களில் இருந்த பாடசாலைகள் இராமகிருஷ்ண சங்கப்பொறுப்பில், அரச ஆதரவில் வளரத்தொடங்கின. மேற்கூறப்பட்ட கல்வித்தாபனங்கள் Այո6յւն வளர்ச்சியடைந்து, கிழக்கிலங்கையிலே குறிப்பிடத்தக்க அறிவியல் முறையிலான சமரசத்தன்மையைப் பரப்பின. 1927ம் ~2.6ôl G. g. Drrup கிருஷ்ண சங்கத்து அறிக்கையின்படி காரைதீவு, கல்லடி, ஆரைப் பற்றை, மண்டூர், ஈச்சந்தீவு, திருக்கோணமலை முதலியவற்றிலிருந்த பாடசாலைகளிலே 929 மாணவரும், 297 மாணவியரும் கல்விகற்றனர் எனத்தெரிகிறது. இம்மாணவர் தொகையிலும் முசிலீம்களும், சொற் பளவு பெளத்தமதத்தினரும், கத்தோலிக்கர்களும் அடங்குவர். மது பேதமின்றி இந்நிறுவணங்கள் மக்கள் யாபேரும் சேர்ந்து கல்வி கற்றதனை இங்கு நாம் காணமுடிகின்றது. திருக்கோணமலையைப் பொறுத்தவரை அங்கிருந்த இராமகிருஷ்ண கல்விச்சபை" சமரச நெறிக்கு மிகத் தொண்டாற்றியுள்ளது எனக் கூறவேண்டும். திருக்கோணமலை விவே கானந்த சபையும் சமரச நெறியினை வளர்க்கும் பணியில் முன்னின்று உழைத்தது. 1897 தை மாதம் 15ந் திகதி விவேகானந்த சுவாமிகள் இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து 1920ம் ஆண்டிலிருந்து திருக் கோணமலை, மட்டக்களப்பு முதலிய இடங்களிலே வாசிகசாலை வசதி கொண்ட விவேகானந்த சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. சர்வானந்தர் இலங்கைக்கு வந்து, இராமகிருஷ்ணரது போதனைகளை மக்களிடையே பரப்பியதன் பின்னர், சமயப் பொதுநோக்கில் புதியதொரு திருப்பமும், புத்துணர்வும் ஏற்படலாயிற்று.
-80

மட்டக்களப்பிலும், திருக்க்ோணமலையிலும் ஆசிரம வசதி களும், அனதை மாணவர் விடுதிகளும் இராமகிருஷ்ண சங்கத்தால் அமைக்கப்பட்டமை, எமது கல்விக்குப் புதியதொரு ஊக்கமளிப்ப தாகவும் சமயப் பொதுமை உணர்வினை ஏற்படுத்த வாய்ப்பினை இலகு வாகத் தருவதாகவும் இருந்தது. சிவானந்த வித்தியாலயம், காரைதீவு சாரதா வித்தியாலயம் முதலியவற்றிலே மாணவர் விடுதிகளும், அனதை இல்லங்களும் ஆரம்பிக்கப்பட்டன. வறிய மாணவர்களும், அனதை களும் கல்வியும், உணவும், உடையும்.பெற்றுச் சமுதாயத்தில் உணர்ந்து செல்ல தூய நெறியைக் காட்டின. விடுதிகளில் வசித்துக் கல்விப் பயிற்சியைப் பெற்றதனல் சமரசப்பண்பாடு, வருங்காலச் சந்ததியாரின், இளம் உள்ளங்களிலே சிலையில் எழுத்துப்போல அமையலாயிற்று. இங்கு உறைந்து கல்விகற்ற மாணவர் தன்னம்பிக்கை, துணிவு, எடுத்ததனைத் தாங்களாகவே செய்து முடிக்கும் திறன் முதலியவற்றைப் பெறக்கூடிய வகையிற் பயிற்சி பெற்றனர். உளத்துக்கும் உடலுக்கும் சமமாகப் பயிற்சி கொடுப்பதற்காக எல்லா மாணவர்க்கும் யோகா சனப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இம்மாணவரில்லங்களிலே உறைந்து கல்விகற்ற மாணவர், பிற்காலத்திலே சமய சமரசப்பண்பாட்டின் வழி நின்று, பல சமயங்களிலும் கூறப்பட்ட தூய சமயப் பொதுமை உணர்வுகளைப் பெற்று, நாட்டுக்கு நலன் தரத்தக்க பிரசைகளாக உருவாகிவருகின்றனர்.
அக்காலத்திலே, கிழக்கிலங்கையின் சமய சமரசப்பண்பாட்டு நிலையினை எடுத்துக்காட்டுதற்காக 1939ம் ஆண்டு வேதாந்த கேசரி எனும் ஆங்கிலப் பத்திரிகையிலே வெளிவந்ததோர் அறிக்கையின் மொழிபெயர்ப்பினை தந்து இக்கட்டுரையை நிறைவுசெய்யலாம். 'கிழக் கிலங்கையின் மத்தியில் உள்ள மட்டக்களப்பு என்னும் நகரிலே இராம கிருஷ்ண சங்கத்துச் சுவாமிகள், எதிர்காலத்திலே நவீன இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த சமுதாயத்தை, அமைதியோடும், திட சித்தத்தோடும் உருவாக்கி வருகின்ருர்கள். இதற்கான பெரும் நிறுவன மட்டக்களப்பு இராமகிருஷ்ண சங்க மாணவரில்லம் அமைந் துள்ளது. இங்கு இராமகிருஷ்ண பரமஹம்சரது போதனைகள் இடம் பெறுவதுடன் எல்லாச் சமயமும் மெய்ச்சமயமே எனும் கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்துக்களப் போலவே, பெளத்த மதத்து மாணவரும், முசிலீம் மாணவரும் தமது சமய ஆராதனைகளை ஒவ் வொரு அறையில் இங்கு நடத்துகின்றனர். அனதை இல்லத்துடன் சேர்ந்துள்ள வணக்கபீடம், மதபேதமின்றி எல்லோரது வணக்கத்துக் காகவும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனல் உளத்தினதும் உடலினதும் தூய்மை இங்கு கவனிக்கப்படுகின்றது.
-8-

Page 48
நாலாம் அத்தியாயம்
i. மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகளும் அவற்றின் சிறப்பியல்புகளும்
tழவள நாட்டின் கிழ்க்குப் பிரதேசத்திலுள்ள காரைதீவிலே தேன்றியவரான தவத்திரு விபுலானந்தர், இசைநாடகத் தமிழ்நூல் கள் மறுமலர்ச்சியடைவதற்கு அரும்பணிபுரிய ஆர்வத்தை ஆரம்பத்தில் உண்டாக்கியவை அவர் சூழலிற் பாடப்பட்ட கொம்புவிளையாட்டுப் பாடல்களும் கண்ணகி வழக்குரையும், வசந்தன் கூத்துப்பாடல்களும், நாட்டுக்கூத்துப்பாடல்களுமேயாகும். இதனை அவரால் இயற்றப்பிட்ட மதங்கசூளாமணியுள்ளே எடுத்துக்காட்டியுள்ளார். 1 இவ ற் று - ன் குரவை, கோலாட்டம், கும்மி, தாலாட்டு, கரகம், சுாவடி, அம்மானை போன்றவற்றையும் ஆராய்வோம்.
முதலில் மட்டக்களப்பு மாநிலமெங்கனும் பெரு வழக்காக ஆடப்பட்டுவரும் வடமோடி, தொன்மோடி. ஆகிய இருவகைக் கூத் துக்களின் சிறப்பம்சங்களையும் முக்கியத்துவத்தினையும் நோக்குவோம். இக்கூத்துக்கள்பற்றிய பண்டைய இலக்கிய காலங்கள் கூறியவற்றை ஆரம்பத்தில் சற்றுநோக்குதல் பொருத்தமுடையதாகும். ' இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து ' என்ற அ டி க்கு உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இருவகைப்பட்ட அகக்கூத்தென்று உரையெழு தினர். உரையாசிரியர் மேலும் தேசி, மார்க்கம் எ ன் றனர். அடி யார்க்கு நல்லாரே பலமாதிரியான இருவகைக் கூத்துக்களையும் கூறி யுள்ளார். அவையாவன:
1. வசைக்கூத்து - புகழ்க்கூத்து
2. வேத்தியல் . - பொதுவியல் 3. வரிக்கூத்து - வரிச்சாந்திக்கூத்து 4. சாந்திக்கூத்து - விநோதக்கூத்து 5. ஆரியம் - தமிழ் 6. இயல்புக்கூத்து - தேசிக்கூத்து 7. அகக்கூத்து - புறக்கூத்து
-82

இவற்றுள் ஆரியம். தமிழ் என்ற இருவகைக் கூத்துக்கள் தான் தற்காலத்து வடமோடி, தென்மோடி எனப்படலாயின. வட மோடி, தென்மோடி என்னும் கூத்துவகைகளில் வரும் " மோடி " என் னும் சொல், பகுப்பு, வகை, விதம் என்ற கருத்தில் மட்டக்களப்பு தமிழ் மக்களது பேச்சுவழக்கில் வழங்குகிறது. 2 மோடி என்பதற்கு பாணி (Style) என்றும் பொருள்கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் இவை கருநாடகம், நாடகம் எனவும் மன்னரில் வடபாங்கு, தென்பாங்கு எனவும் கூறப்படுகிறது.
நாகரிக வளர்ச்சியால் அதிகமாகப்பாதிக்கப்படாத மட்டக்களப் புப் பிரதேசத்தில் பொதுமக்கள் கலையாகிய இக்கூத்து மரபு நிலைத்து விட்டதில் ஒரு சியப்பும் இல்லை. 3 ஆடலும், பாடலும் சேர்த்து பார்ப் போருக்கும், கேட்போருக்கும் இன்பமூட்டவல்லதான இக்கூத்துக்கள் மட்டக்களப்பின் பட் டி தொட்டிகள்தோறும் ஆடப்பட்டுவருபவை யாகும். இந்நாட்டுக்கூத்தானது புத்தகம் படிக்க நேர மில் லாத வேளாண்மைசெய்யும் மக்களுக்கும், ஏனைய தொழிலாளர்களுக்கும் படிக்கத்தெரியாத பாமரமக்சளுக்கும் நல்லறிவு புகட்டுகின்றது. "நாட் டுக் கூத்துகள் நாட்டுவளத்தின் சின்னங்களாகும். ஒய்வுநேரங்களில் மக்கள் பாட்டிலும், கூத்திலும் பொழுதுபோக்கி இன்பங்காண்கின் ருiர்கள். இதனேடு கலையும் உடன்வாழ்கிறது. கலைஞர்களும் தோன்று கின்ருர்கள். நாடகங்களும் பல தோன்றுகின்றன. 4 ‘* கூத்து என் பது ஆடலும் இசையும் சேர்ந்தது. இது மக்க ள் நிலையில்வைத்து பயிலப்படும் ஒரு கலை. சமயச்சடங்குகளினிடையாகத் தோன்றிய இக் கூத்து பூர்வீக சமூக அமைப்பு மாறுங்காலத்து பொழுதுபோக்குதற் குரிய ஒரு சாதனமாக மாறும் உலக ப் பொதுவிதியாகவுள்ள இவ் வுண்மை தமிழ் நாடகங்கட்கும் பொருந்தும். துணங்கைக்கூத்து, குர வைக்கூத்து முதலியவற்றின் வளர்ச்சியை அறிந்தோர் இவ்வுண்மையை அறிவர், 5 ' நாட்டுக்கூத்து மக்கள் கலையாகும் "" இயற்கையோடு ஒட்டிவாழும் உள்ளத்தினையும், பண்பினையும் உடைய நாட்டுமக்களின் உணர்ச்சியை இவை பிரதிபலிக்கின்றன. 6
மட்டக்களப்பின் கிராமங்கள்தோறும் பழகி ஆடப்பட்டு வரும் வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்கள் வே ளா ண் மை செய்வோரும், மற்றும் தொழில்புரிவோரும் தம் ஓய்வுநேரங்களிலே கூத்துப்பழகி அறுவடை மு டி ந் து காசு கையில் புழக்கத்திலுள்ள நேரத்தில் அரங்கேற்றஞ்செய்து மகிழ்ச்சியடைவர். இக்கூத்துக்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்ற சத்தர்ப்பங்களிலே கிராமங்கள் தோறும் பல திருமணச்சடங்குகளும் நடைபெறும். திறமையாகக் கூத்தா டி புகழைப்பெறும் காளையரைக்கண்டு க ன் னி யர் காதல் சொண்டு பின்னர் திருமணத்தில்போய் முடிவுறும் , 7 அத்தோடு த மக்கு க் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கேற்றவாறு ஆடல் பாடல் நடிப்பு ஆகிய முக்கிய அம்சங்களில் திறமை முழுவதையும் வெளிப்படுத்திப்
-83

Page 49
புகழைப் பெறுபவர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத் தின் பெயராலே பின்னர் அழைக்கப்படுவதும் உண்டு. எடுத்துக்காட் டாக, தருமர் வையாபுரி, அருச்சுனன் சீனி, வால்மிகன், போன்ற பெயர்களைக் கொள்ளலாம்.
அடுத்து நாட்டுக்கூத்தின் முக்கிய இயக்குநர்களைப்பற்றியும், அவர்களது பொறுப்பு, கடமை, செயற்திறன் போன்றனபற்றியும் நோக்கலாம். **அண்ணுவியார்." இவரே நாட்டுக்கூத்தின் முக் கி ய இயக்குநர். சல்லாரியை (ஒருவகைத்தாளம்) கையில்கொண்டு கூத்தைப் பழக்குபவர். வடமோடிக்கூத்தோ, தென்மோடிக்கூத்தோ எதுவாகி னும், சிறப்பாக அரங்கேற்றம் பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தா அண்ணுவியாரே. இவர் பல கூத்துக்களை ஆடி அனுபவமுள்ளவராக வும் அ ல் ல து பல கூத்துக்களைப்பாடிப் பழக்கியவராகவும், நன்கு பாடக்கூடியவராகவும் விளங்குவார். இவர் ஏதாததொரு நா ட கத் தினத் தேர்ந்தெடுத்து அதை அவ்வூரிலுள்ள கூத்தாடுவதற்கு விருப்ப முள்ளவர்களைக்கொண்டு முதல்நாள் நிகழ்ச்சியாக சட்டங்கொடுத்தல் (சட்டமென்பது ஒலைச்சட்டம்) நடைபெறும் சட்டங்கொடுத்தல் என் பது நாடகத்தில்வரும் பாத்திரங்களுக்கேற்ப ஆள்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அப்பாத்திரங்களுக்குரிய பாடல்களை எழுதித்கொடுத்த லாகும். பெண்பாத்திரங்களுக்கும் பொருத்தமான ஆண்களே தேர்ந் தெடுக்கப்படுவர். இதில் குரல்வளம் நோக்கப்படும். இந்நிகழ்ச்சி ஒரு சமயச்சடங்குடன் ஆரம்பமாகும். கூத்துப் பழகுவதற்காக அமைக்கப் பட்ட களரியில் (கூத்தாடும் அரங்கு) வெற்றிலை, பாக்கு, பழம், மலர், தேங்காய் முதலியவற்றைக்கொண்டு மடைவைத்து (நிறைகுடம்) கருப் பூரம் கொழுத்தி தேவாரம்பாடி பின்னரே சட்டங்கொடுத்தல் நிகழ்ச்சி இடம்பெறும். அண்ணுவியாரை, கூத்தாடுபவர்கள் தம் குருவாக மதித்து அவர் சொற்படி அடங்கிநடப்பர். அண்ணுவியார் கூத்தைப்பழக்கி அரங்கேற்றஞ் செய்யும் வரை அவருக்குரிய வேதனம் எவ்வளவெனப் பொருந்தி தவணைமுறையில் அதனைக் கொடுப்பர். அத் தோ டு ஒவ் வொரு களரி பழகும்போதும் குடிப்பதற்கு மது முதலானவையும் நடி கர்களது செலவில் வாங்கிக்கொடுக்கப்படும். அத்தோடு அண்ணுவி யாரைச் சந்தோஷப்படுத்துதற்காகவேண்டி, வேட்டிசால்வை என்பனவும் வெகுமதியாக வழங்குவர். அடுத்து இடம்பெறுபவர் மத்தளம் என் னும் கருவியை அடிப்பவர். மத்தளத்திலும், சல்லாரியிலும் அடிக்கப் படும் (இசைக்கப்படும்) தாளத்திற்கேற்பவே கூத்தாடுபவர்களின் ஆட் டம் இடம்பெறும். மத்தளத்தினின்றும் எழும் ஓசை பார்ப்போர்க் கும் கேட்போர்க்கும் இனிய விருந்தாக அமையும். போர் முதலான காட்சிகளின்போது மத்தளத்தின் ஒலிவேகமும், தாளம் பிசகாமையும் மத்தளம் அடிப்பவரின் திறமையைப் பொறுத்தே அமையும். அப் போது பார்த்து இரசித்துக்கொண்டிருக்கும் அனுபவமுள்ளவர்கள் மத் தளம் நன்ருகப்பேசுகிறது என்று தமக்குள் கறிக்கொள்வதை அவ
-4-

தானிக்கலாம். மாலைதொடக்கம் விடியும்வரையு நடைபெறும் கூத்து நிகழ்ச்சியில் இரண்டுமூன்றுபேர் மாறி மாறி மத்தளம் அடிப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும். ஏடுபடிப்பவர் அடுத்தபடியாக குறிப்பிடத் தக்கவர். நடைபெறும் கூத்தின் பிரதி ஏட்டில் அமைந்திருக்கும். பனை யோலையில் எழுதப்பட்ட ஏடுகளைக்கொண்ட பிரதியே மிகப் பழங் காலத்தில் உபயோகிக்கப்பட்டது. தற்போது அதைக் கூத்துக்கொப்பி யாக மாற்றியுள்ளனர். பெரிய கொப்பிகளிலே கூத்து எழுதப்பட் டிருக்கும். அதை வைத்திருப்பவருக்கு அநேகமாக எல்லாப் பாடல் சளும், விருத்தங்களும் மனப்பாடமாக இருக்கும். ஒரு கூத்து நடிகர் ஒரு பாடலைத் தவறுதலாகக் கூறும்பொழுது உடனே ஏடுபடிப்பவர் அந்த அடியினை எடுத்துக்கொடுத்து நிலைமையைச் சமாளித்துவிடுவர். அடுத்து பக்கப்பாட்டுப் பாடுவோரைக் குறிப்பிடலாம். நன்ருகப் பாடக் கூடிய இருவர் அல்லது மூவர் களரியில் இடம்பெறுவர். இவர்கள் பாட்டை இரட்டித்து தாளத்தை முடித்துவைப்பதற்கு அண்ணுவி யாருக்கு உதவியாக செயற்படுவர். எல்லோரையும் சேர்த்து சபையோர் என்று அழைக்கப்படுவர்.
இனி நடைமுறை அமைப்பு, களரி முதலானவற்றின் சிறப்பு என்பன பற்றி நோக்கின் கூத்தாடுபவர்களைக்கொண்டு நான்கு ஐந்து களரி பழக்கிய பின்னர் சதங்கை அணி விழா இடம்பெறும். இதில் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் காலில் சதங்கை கட்டப்படும். இதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவர். உறவினர்கள், நண்பர்களுக்கெல் லாம் அறிவித்து சதங்கை அணி விழா இடம்பெறும். உறவினர்களும் நண்பர்களும் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி, சால்வை கட்டி அல்லது மாலை போட்டு அல்லது வேறு சன்மானம் வழங்கி தங்கள் அன்பைக் காட்டுவர். இதைத்தொடர்ந்து இரண்டு மூன்று களரி பழகிய பின்னர் அடுக்குப்பார்த்தல் நிகழ்ச்சி இடம்பெறும. அதனைத் தொடர்ந்து நல்லதொரு தினத்தை தேர்ந்தெடுத்து தமது ஊரிலுள்ள கோயில் முன்றலில் அல்லது பொது இடத்தில் அரங்கேற்று விழா வைச் செய்வர். இதனை மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் செய் வர். கூத்தின் பெயரைக் கொண்டதாக அழைப்பிதழ் அச்சிட்டு தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவர். கூத்தாடு களரியை வட்டவடிவமாக அமைத்து வர்ணச் சேலைகளைக்கொண்டு மேற்கட்டி அமைத்து சருகைக் கடதாசிகளைக்கொண்டு களரியை அலங்கரித்து தூண்கள் தோறும் எண்ணெய் விளக்குகளைக்கொண்டு தீபமேற்றி பெரு விழாவாக இடம்பெறச்செய்வர். அரங்கேற்றம் முடிந்த அடுத்தநாள் ஊருக்குள் சென்று வீடுவீடாக ஆடி மகிழ்வர். அச்சந்தர்ப்பத்தில் கிடைக்கும் சன்மானங்களை அண்ணுவியாருக்கு வழங்குவர்.
இனி வடமோடி, தென்மோடி ஆகிய இருவகை கூடத்துக்
களினதும் முக்கிய வேறுபாடுகளை ஆராய்வோம். உடை, பாடல், தாளம், ஆட்டம் போன்றவற்றிலேயே இரண்டுவகைக் கூத்திற்கும்
-85

Page 50
வேறுபாடு காணப்படுகிறது. வடமோடிக்கூத்து ஆடும் நடிகர்கள் அணி யும் உடையினேக் காப்புடுப்பு என்று வழங்குவர். இது மிகவும் பார மானது கண்ணுடி (கணுேதா) சருகை, மணிகள் முதலியவை பதிக் கப்பட்டு பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கும். முடியைக் கெருடம் என்று கூறுவர். கிரீடம் என்பது கெருடமாயிற்று. முடிமரத்தில் செதுக்கப்பட்டுக் கண்ணுடிகள் பதிக்கப்பட்டிருக்கும். வெகு அகலமும், பாரமுங்கொண்டது. பாத்திரங்களின் இருகையிலும் ஆயுதம் இருக்கும். ஒரு கையில் உட்ாரி அல்லது அம்பு மறு கையில் வில் அல்லது வாள் இருக்கும். டாரியில் கிளி அல்லது சிங்கத்தின் தவே பொறிக்கப் பட்டிருக்கும். வில்லின் இருபக்கமும் சிங்கத்தின் தவே அல்லது பாம்புத் தலே அமைந்திருக்கும். கதாயுதமும் (சுெதை) சில நடிகர்கள் கையில் இடம்பெறும். போர் நிகழ்ச்சியின்போது தேர், குதிரை போன்றவற்றில் நடிகர்கள் வருவர். வடமோடியில் வரவுப்பாடலே நடிகர் தானே பாடிக் களரியில் வருவான். தென்மோடியில் சபையோரே இதனைப் பாடுவர். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. தென்மோடி ஆட்டம் மிகவும் கடினமானவையென்றும் அதனுல் வரவுத்தாளம் இடம்பெறும் போது தென்மோடி நடிகர்கள் க3ளத்துவிடுவர் எனவே சபையோரே அதனைப் பாடுவர். வடமோடி ஆட்டம் இலகுவானதால் நடிகர்கள் அதனேப் பாடுகின்றனரென்றும் கூறுவர். அத்தோடு தென்மோடி தமிழ்நாட்டாருக்குரிய கூத்துவகையென்றும் தமிழர் தங்களேத் தாங் களே புகழ்வதை விரும்பமாட்டார்கள். ஆகவேதான் சபையோர் அதனைப் பாடுகின்றனர் என்றும் கூறுவர். 8 இனி வடமோடியில் கருப் பாடுதல் இல்லே, தாளம் தென்மோடியில் இருந்து அதிகம் வேறுபாடு கொண்டது. ஒவ்வொரு பாத்திரத்திற்கேற்றவாறு மாறுபடும் எடுத்துக் காட்டாக எட்டடி, நாலடி, விசாணம் போன்றவற்றைக் குறிப்பிட லாம். நடிகர் வடமோடியில் வலப்புறமாகச் சுற்றியாடுவர்.
தென்மோடியின் உடை இலேசான உடை மணிகள், மாலே கள், பூக்கள் பொருந்தியவை. முடி பூமுடியாகும். பாரமற்றது. வரவுப் ாடல் சபையோரால் படிக்கப்படும். தென்மோடியில் பாடலுக்குமுன் தருப்பாடப்படும். சந்தத்துக்கிசைய பாடப்படும் இசைவரியே தரு எனப்படும். எடுத்துக்காட்டாசு அணுவுருத்திரன் வரவுத் தருவினே நோக்கலாம்.
தந்தன்ன தந்தன்னத் தானு சீன தந்தன்ன தந்தன்னனத் தான தந்தன்ன தந்தன்னத் தானு சீன தந்தன்ன தந்தன்னத் தானு '
தென்மோடிக்கூத்தில் நடிகர்கள் இடப்புறமாகச் சுற்றியாடுவர்.
காலமேற்றுதல் தென்மோடிக்கில்லே. களரியைவிட்டுப் போகும்போது ஆடப்படும் துரித ஆட்டத்திற்கே காலமேற்றுதல் எனப்படும். இனி
-86

தாளம், ஆட்டம் இரண்டிலும் இருவகைக் கூத்துக்களும் அதிக வேறு பாடுகளேக்கொண்டது. எடுத்துக்காட்டாக இருவகையான கூத்துக்சளி லிருந்து இரு தாளக்கட்டை நோக்கலாம். வடமோடிக் கூத்தில் அரசர் கொலு வரும்போது,
" தகதிசுதா தெய்யத் தெய்தெய்
தாத்தெய்யத் தோம் தகதிகதா"
என்று தொடங்கித் திகததிங்கனதோம் என்ற கடைசித்தாளம் இரண்டு அல்லது மூன்று தரம் இறுக்கி அடிக்கப்பட்டவுடன் முடிவடையும். வடமோடியில் இக்கொலுத்தாளம் வைக்கும்போது வீசானம் போடுதல், ஒருவர்பின் ஒருவராகப் பாம்புபோல் வளந்து ஆடும் ஆட்டம், எட்டுப் போடுதல் எட்டு என்னும் இலக்கத்தைப்போல் வளைந்தாடுதல், நாலடித்தாளம், வீரஆட்டம், வீரந்தொனிக்கும் குதிநடைகொண்டு கால்களேத் தனித்தனி முன்னும் பின்னும் நீட்டித் துரிதமாய் நான்கு விதமாக மிதித்துத்துள்ளி ஆடுதலே நாலடித்தாளமாகும். இத்தோடு சில சுடினமும், நுணுக்கமுமான ஆட்டங்களும் இடம்பெறும்.
பெண்களுக்குரிய தாளத்தைப் பார்க்கின்,
" தத்திமித் திமி தெய்ய நிமித்திமி
தாகிட சுந்தரி தோம் ததிங்கின "
எனத் தொடங்கிப் பின்னர் "த தீந்தாரத் தில்லாஞ" என்பது வரைக் கும் அதிக மாற்றமில்லே, நாலடி போடுதலுக்குப் பதிலாக பெண் களுக்கு குந்துதல் என்ற நடனநிலே சேர்க்கப்படுகின்றது. பின்பு,
" தாதீந்தத்தோ தீந்தத்தோ தீந்தோம்
தந்தகதா திந்தகதெய் தந்தகதா நிந்தகதெய்" என்று தாளந்தீர்த்து முடிக்கப்படும். இதேபோன்று ஒவ்வொரு பாத் திரத்திற்குமேற்ற வகையில் தாளம் இடம்பெறும். தென்மோடியில் வரவுக்குரிய தாளம்,
"ததித்தாளதக ததெய்யதிமிதக தாதிமிதத்தெய்யே
ததித்தாளதக ததெய்யதிமிதக தாதிமிதத்தித்செய்யே " எனத்தொடங்கிய இம் முற்பகுதி சுமார் 8 - 12 முறை திரும் பத் திரும்பப் படிக்கப்படும்போது வரவுக் கூத்தர் களரிமுகப்பில் நின்ற வாறே ஏற்றபடி ஆடுதல் நியதி. அப்பால் அரங்கி னு ன் இறங்கி ஆடும்போது, -
"தச்சோந்திமி தந்தரிகிட திமிதக
தாதெய்யதா தளங்கு ததிங்கின "
-S7

Page 51
எனத் தொடர்ந்துசென்று தகதக தகதக தகதக் தகதக - (முன் எடை) தாதெய்யத" தளங்கு ததிங்கின** என்பதுடன் முடிவடை uyib • கட்டியகாரன் தலையாரி, சேவகன், கும்ாரத்தி தோழி, முனி * வரவு முதலானவிை வேறுபட்- தாளங்களையும், ஆட்டங்களையும் கொண்டதாகி یےoq60) LDlLHاb • அரசகன்னியர் முதலான பெண்களுகடைய வரவின்போது தேதித்தளாதக' என்ற பொதுத் தாளக்கட்டு பெரும் பாலும் அப்படியே இடம்பெறுமாயினும், அவற்றேடு அவர்கள் ஆவேண்டிய நுணுக்க மான ஆடல்களுக்குரிய தாளக்கட்டுகளும் Gao மேலதிகமாகச் சேர்க்கப்படுகின்றன்" வீரர்களுக்குரிய துரிதமான e2,. டங்கள் பிரட்டிமிதித்தல்: துள்ளிமிதித்தல், குத்திமிதித்தல் முதலானவை பொதுத்தாளக்கட்டுக்குரிய ஆட்டங்களின்போதும் கொச்சக முடிவிலும், தருக்கள் படிக்கும்போதும் பொருத்தம்நோக்கி இடம்பெறும். இவ்வா முன பலவகையான தென்மோடிக்குரிய நுணுக்கம்வாய்த தாளங்களும், ஆட்டங்களுமே தென்மோடி ஆட்டக்காரர்களைக் களைப்படையச் செய் கின்றன. இருவகைக் கூத்துக்களிலும் படிக்கப்படும் பா ட ல் களி ன் மெட்டுக்கள் (grmstb) வேறுபாடு கொண்டவையாகக் காணப்படுகின் றன. வடமோடியில் விருத்தங்களே அதிகம் நீட்டி இசைக்காது படிப் பதும் தென்மோடியில் அவற்றை நீண்டஒசை புறப்பட இழுத்துப் பாடுவதும் வழக்கம் • வசனங்களும் அவ்வாறே. முத்திரைப் பல்லவம் வடமோடியில் சிலருக்குண்டு இது வரவுப்பாட்டின் பல்லவியை இரட் டித்துப் படிக்கும்பொழுது முத்திரை பிடித்து ஆடும் துரித ஆட்ட Drreg tb. மட்டக்களப்பு ாநிலமெங்கனும் ஆடப்பட்டுவரும் வடமோடி தென்மோடி நாட்டுக்க்கூத்துக்களுக்கும். மன்னர், இலாபம், யாழ்ப் பாணம் போன்ற பகுதிகளில் ஆடப்பட்டுவரும் நாட்டுக்கூத்துக்களுக் கும் இடையே ஒலகில வேறுபாடுகள் தாளம் இ ரா கம், பாட்டு
ன்பனவற்றிடையே ாணப்படுகின்றன
எமக்குக் இடைத்துள்ள நாட்டுக்கூத்துக்களுள் அநிருத்தநாகம் இணுவிற் ஒன்னத்தம்பி என்பவராலும் இராமநாடகம், தரும் 6TaiTU6ös மானிப்பாயைச்சேர்ந்த நாடக சுவாமிநாதர் فاكساrrكرويش r് പ്രഖUTജ് வாளபிமன் நாடகம் அலங்காரரூபன் நாடகம் என் பன கணபதி ஐயர் என்பவராலும் எழுதப்பெற்றன: ஏனையவை பல வும் நாட்டின் வேறு வேறு இராமங்களைச் சேர்ந்த அண்ணுவிமாரால் Lப்பட்டவையாகும் இவ்வகைத்தாள அரும்பெரும் மக்கள் கலை ፱ ዘፐ6ù፫ நாட்டுக்கூத்துக்களைக் கட்டிக்காத்து வளர்த்துப் பெருக்குதலோடு பிறநாட்டினரும் அவற்றின் அருமை பெருமையினை உணரச் செய்வதற் ன வழிவகைகளே மேற்கொள்வது எம் தலையான கடமையாகும்.
கொம்பு முறி வி?ளயாட்டுக்கள்:”
மட்டக்களப்பில் தேத்தாத்தீவு காரைதீவு களுதாவளை, மண்டூர் போன்ற பகுதிகளில் இவ்விளையாடல் ாணப்படுகின்றது"
-88

ஒரு கிராமத்தைச்சேர்ந்த மக்கள் இரு வேறு பிரிவுகளாகப் பிரிந்து இவ்விளையாடலைச் செய்வர். இக் கொம்பு விளையாட்டு கண்ணகி வழி பாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய சமயக்கலையாகவே விளங்கின்றது. அநேகமாக கண்ணகி அம்மன் சடங்குகள் நடை பெறும் காலப்பகுதியில் இவ்விளையாட்டு இடம்பெறும். இக் கொம்பு விளையாட்டு ஏன் எழுந்ததென்பதற்கு, நீதி தவறிக் கோவ ல னை க் கெஜலசெய்வித்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கியும், மதுரை மாநக ரிஜன எரியூட்டியும் சினந்தணியாத கற்புக்கரசி கண்ணகியின் சினத் தைத் தணித்து அவளைக் குளிர்விப்பதற்குமாக இடையர்குல இளைஞர் ஒரு காதல் கலந்த விளையாட்டாகக் கொம்பு விளையாட்டினைச் செய் தனர் எனக் கூறப்படுகின்றது. அதன் தொடர்பாக எழுந்த தே மட்டக்களப்பில் இடம்பெறும் கொம்பு விளையாட்டாம். கொம் பு வி%ளயாட்டு ஒரு கிராமத்திலே தொடங்குவதற்கு முன்னர் இரு பிரிவு களாக அக்கிராம மக்கள் பிரிவர். இதனை வடசேரி, தென்சேரி என அழைப்பர். வடசேரியைக் கோவலனுடைய கட்சி, சுவாமி கட்சியென் Apytib , தென்சேரியை கண்ணகியினுடைய கட்சி, அம்பாள் கட்சி என் றும் கூறுவர். அம்மை வைசூரி முதலான கொடிய நோய் நொடியி னின்றும் நீங்கி, மழைவளமும், செல்வமும் ஏற்படவேண்டுமென்பதற் காகவே இக்கலையாடலை மக்கள் கண்ணகி வழிபாட்டுடன் சேர்த்துச் செய்கின்றனர். 9 இதிற் போர்த்தேங்காய் உடைத்தல், கொம்பு முறித் தல், கொம்புத்தட்டு எடுத்தல், தேர்க்கல்யாணம், குளுத்திபாடுதல் என்பன அடங்கும்.
கொம்பு SMளையாட்டில் முதலில் முறிக்கப்படும் கொம் பு கொழுகொம்பு அல்லது விளையாட்டுக்கொம்பு என்று கூறப்படும். இத னைத் தொடர்ந்து கூடாரக்கொம்பு கொம்புத்தட்டுக் கொம்பு ஏடகக் கொம்பு தண்ணீர்க்கொம்பு என்ற நால்வகை நிகழ் ச் சி க ள் இடம் பெறும். இக் கொம்புகள் நன்கு உறுயான கரையாக்கு மரத்தினுல் ஆனவையாக இருக்கும். வடசேரிக் கொம்பு 90பாகை வளைவு உடைய தாகவும், தென்சேரி அதிலும் சற்று ஒடுங்கியதாகவும் இருக்கவேண் டியது பொது விதியாகும். இருசேரிக் கொம்புகளையும் அணைத்துக்கட் டும் இரு கம்புகளும் "பில்லி" எனப்படும். பில்லி கட்டப் பட்ட கொம்பே விளையாட்டுக்குத் தகுதியான கொம்பாகக் கணிக்கப்படும். ஒரு மரதிற்பூட்டிய "அரிப்பு" (சிறு வட்டம்) எனப்படுவதான கயிற் றில் தென்சேரியான் கொம்பு தொடுக்கப்படும். அக்கொம்பிற் கொழு விய வடசேரிக் கொம்பிலே இன்னேர் அரிப்பினைப் பிணைத்து அதிலே பெரிய வடமொன்றை மா ட் டு வர். அவ்வடத்தைப்பற்றிப் பலர் இழுக்கும்போது இரு சேரியையும் சேர்ந்த திறமையாளர் சிலர் தத்தம் கொம்புகளிற் "பல்வாய்" (கொம்பின் தலைப்பகுதி) குச்சி (கொம்பின் வளைந்த இடத்து நடு ஆணி) முதுகுமரம் (கொம்பின் தலைப்பகுதி) பில்லி (கொம்பின் இருபுறமும் அணைகட்டிய தடிகள்) என்னும் உறுப்புக்
-89.

Page 52
களையெல்லாம் முறைப்படி பிடித்துக்கொள்வர். அரிப்பிற் பிணைந்த பெருவடத்தினை இருசேரிப் பொதுமக்களும் இழுப்பர். அப் பலருடைய இழுவைப் பொறுப்பினல் இரண்டிலொரு கொம்பு முறியும். உடனே வென்ற பகுதியார், தமது வாரத்தின் பெயரைச் சொல்லி அதற்கு வெற்றியென்று கூவி ஆடிச்செல்வர். 10
அடுத்து இரு கட்சி யாரும் இரவுதோறும் அலங்கரிக்கப் பட்ட பூப்பந்தரிற் கொம்புகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல் வர். இதனேடு நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் சிலையை யும் வைத்து எடுத்துச்செல்வர். அவ்வேளையில் வென்ற கட்சியினரின் வெற்றிப் பாடல்கள், உடுகுச்சிந்து, ஊர்சுற்றுக்காவியம் எ ன் பன படிக்கப்படும். சந்திகள் தோறும் கொம்பு கொண்டுசெல்லும் பூப்பந் தரை நிறுத்தி வசந்தன்கூத்து முதலான ஆடல்களைச்செய்து மகிழ்ச்சி யடைவர். இதிற் கோலம் புனைவோர் வேடன், குறவர் போர்வீரர் முடிமன்னர், முனிவர், ஆண்டி, விகடன் போன்ற தோற்றங்களில் நடிகர்கள் வந்து மக்களைப் பெரு மகிழ்ச்சியிலாழ்த்துவர். இளைஞர்கள் வசந்தன் ஆட்டத்திலும், நாட்டுக்கூத்திலும் ஈடுபட, பெண்கள் குரவை அயர்தலிலும், கும்மி அடித்தலிலும் ஈடுபடுவர். 11 கொம்புகள் ஊர் வலம் செல்லும்போது நிறுத்திவைக்கப்படும் சந்திகள் இன்று நிலைத்து வழங்கிவருகின்றன. எடுத்துக்காட்டாக, களுதாவளைக் கொம் புச் சந்தி, காைதீவு சுெகம்புச்சந்தி என்பனவற்றைக் கொ ள் ள லா ம். மண்டூரிற் கொம்பு வம்மியடி என்னும் ஓர் இடம் உள்ளது. 12 கொம்பு விளையாட்டிற்சிறந்து விளங்கிய கல்லாற்றில் இன்னும் ஒல்லாத்தர் ஆட்சிக் காலத்திலிருந்து முறிக்கப்ாடாத கொம்பு ஒன்றுள்ளது. 13 மட்டக்களப் பின் கிராமங்கள்தோறும் இடம் பெறும் இக்கலையாடல் சிங்கள மக்க ளிடையேயும் உண்டு. போர்த்தேங்காய் அ டி த் த ல் "பொல்கெலிய" என்றும், கொம்பு முறித்தல் "அங்கெலிய" என்றும், தோடம்பழ விளையாட்டு தொடங்கெலிய" என்றும், பூவிளையாட்டு. "மல்கெலிய" எ ன் றும் மிகப்பிரபல்யமாக வழங்கப்படுகிறது. குருநாகற்பகுதியிலே காணக்கிடைக்கும் ஏட்டுப்பிரதியின்மூலமும் சிங்களத்தில் எழுதப்பட் டுள்ள பத்தினி தெய்வம் சம்பந்தமான இலக்கியங்களாலும் இதனை அறியமுடிகின்றது. 14 கொம்புவிளையாடல் நடைபெறும் சந்தர்ப்பங் களில் இரு கட்சியினராலும் பாடப்படும் பாடல்கள் மிகவும் இனிம்ை யும், பொருட்சுவையையும் வாய்ந்தனவையாகும். எடுத்துக்காட்டாக இரு பாடல்களை நோக்கலாம்.
* வடசேரியான் கொம்பு எங்கேயெங்கே
மணமுள்ள தாழையின் மேலே மேலே தென்சேரியான் கொம்பு எங்கேயெங்கே
செம்பர பற்றைக்குக் கீழே கீழே.
-90

வடசேரியான் கொம்பு எங்கேயெங்கே
வண்ணுண்ட சாடிக்குள்ளே உள்ளே
தென்சேரியான் கொம்பு எங்கேயெங்கே
சித்திரத்தேருக்கு மேலே மேலே "
இவ்வாறு ஒரு கிராமத்தில் இரவு பகலாக நடைபெறும் களிமிகு கொம்பு விளையாடல் குளுத்தியும் வாழியும் பாடி முடிதலோடு நிறைவு பெறும்.
வசந்தன்:
வசந்தன் அல்லது வசந்தன் கூத்து என்னும் கலையாடல் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ளதொன்ருகக் காணப்படுகிறது. பன்னிருவர் வட்டமாக நின்று கோல்கொண்டு தாள அமைதி பிசகாது ஆடுவர். ஆடும்போது மத்தளம் சல்லாரி என்பன இசைக்கேற்றவாறு அடிக்கப்படும். வெவ்வேருன சத்தங்கொண்ட பாடல்கள் வெவ்வேறு பெயருடன் படிக்கப்படுகின்றன. ஆடல்களின் செயலால் அப்பாடல்கள் பெயர் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக வேளாண்மை வெட்டு வசந்தன், பிள்ளையார் வசந்தன், அனுமார் வசந்தன், அம்மன்பள்ளு வசந்தன் போன்றவை குறிப்பிடத்தக்கன. வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலில் தி. சதாசிவஐயர் 15 வசந்தன் பாடல்களைத் திரட்டித் தொகுத்து அளித்துள்ளார். வசந்தன் கவிகளைப்பற்றி விபுலானந்த அடிகளார் குறிப்பிடும்பொழுது சங்ககாலத்து ஒழுக்கங்களும், ஆடலும், பாடலும் ஈழநாட்டிலே இன்றும் நின்று நிலவுகின்றன எனக் கூறி யுள்ளார். 16
வசந்தன் கூத்துக்களில் இடம்பெறுகின்ற தருக்கள் (பாட்டு) உடையணியும் முறை, காலில் சதங்கை அணிதல் போன்றவற்றைப் பார்க்குமிடத்து தென்மோடி நாட்டுக்கூத்து வகையினைச் சார்ந்து நிற் பதைக் கண்டுகொள்ள முடிகிறது. தற்காலத்தில் இதனை மக்கள் ஒரு கோலாட்டம் போலக் கருதிலுைம் பண்டைய வழிப்படி இதனை நாம் ஒரு கூத்து என்றே கொள்ளுதல்வேண்டும். வசந்தன் கவிகள் பாடப் படுமுன் படிக்கப்படும் தரு என்பது பள்ளுப்பாடப்படவேண்டிய சத்தத்தைத் தந்து நிற்பது. அது அளிக்கின்ற ஒசைப்படியே கவிகள் அமைந்து செல்லும்.17 வசந்தன் கூத்தில் இடம்பெறுகின்ற கவிகள் மிகவும் படித்து இன்புறத்தக்க வகை உள்ளன. வசந்தன் என்ற சொல்லாட்சியின் பொருள் என்னவென்பதனை நோக்கின்: வசந்த காலத்தில் ஆடப்படுதலே இப்பெயர்க்குக் காரணமாகப் பொருந்துவ தென்று சிலர் கூறுகின்றனர். நடுநிலைப்பகுதியினைச் சார்ந்து மாரியும் கோடையுமின்றி வேறு பருவபேதங்களை உணராத மட்டக்களப்பின் பிரதேசங்களுக்கு வசந்தகாலம் வருதல் நில இயல் அறிவுக்குப்பொருத்த மானதுபோலத் தெரியவில்லை. அம்மன்பள்ளு என்னும் வசந்தன் பாடல்
--91ح۔

Page 53
ஒன்றில் "அமிர்தம்சேர் சின்னப்புலவன் பாடலே" என்றிருக்கும் அடி பின் பாடபேதமாக "வசந்தன் சேர் சின்னப்புலவன் பாடவே" எனச் சில ஏடுகளில் இருப்பது வசந்தன் என்பது காலத்தை ஒட்டிய பெய ராய் இருக்காது என்ற கருத்தை ஒருபடி வலியுறுத்துகின்றது. "வசந் தன் என்ற சோல்லுக்கு நிறைந்த இன்பம் என்னும் கருத்து மட்டக் களப்பின் சில கிராமங்களில் வழங்குவதைக் காணலாம். 18 இப்பாடல் களின் சிறப்பிரேயும் தன்மையினேயும் விபுலானந்த அடிகளார் கூறு மிடத்து மருதம், நெய்தல், குறிஞ்சி நிலச் செய்திகளேத் தனித்தனி கூறுபவையென்றும் பொதுவாய் வருபவையென்றும் பிரித்துக்கூறியுள் ளார். 19 இவ்வாருன சிறப்புள்ள வசந்தன் கூத்துப் பாடல்களேப் பாடிய புலவர்கள் மட்டக்களப்பிலே காரைதீவு, தம்பிலுவில் முதலான கிராமங்களில் வாழ்ந்த பெரியோரேயாவர். எமக்கு கிடைக்கின்ற வசந்தன் கவிகள் யாவும் வசந்தன் கவித்திரட்டிலே தி. சதாசிவஐவர் அவர்களால் தொகுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஆறு பிரிவு களாக அவர் அவற்றை வேறுபடுத்தியுள்ளார். முதற்பாசும் நாலுக்கு தோற்றுலாபாகிய கட்டியம், 2ம் பாகம், தோத்திரப்பாடல்கள். ம்ே பாகம் சரித்திர சம்பந்தமானது, தீம் பாகம் தொழில் பற்றியது 5ம் பாகம் வினுேத சித்திரக்கவிகளும், நகைச்சுவை தரும் கவிகளும் சேர்ந் தவை, ம்ே பாகம் கும்மி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்கள் சேர்ந் தது. 20 இவை தவிர்ந்த இன்னும் ஏட்டுருவில் பல கிராமங்களில் மறைந்து கிடக்கும் ஏராளமான வசந்தன் சுவிகளே ஆங்காங்கு தேடிப் பெற்று அதன் பெருமையினேயும், சிறப்பினேயும் தமிழ் உலகிற்கு வெளிப்படுத்தவேண்டியது எம் பணியாகும்.
குரவை:
மட்டக்களப்பின் கிராமங்கள்தோறும் நடைபெறும் சமய விழாக்கள், மங்கல நிகழ்ச்சிகள் (கல்யான வீடு. பூப்பு நீராட்டு விழா காது குத்துக் கல்யாணம்) போன்ற நிகழ்ச்சிகளின்போது குரவை போடுதல் (அயர்தல்) இடம் பெறுகின்றது. குரவை, குலவை என மட்டக்களப்பு பேச்சுவழக்கிற் காணப்படுகிறது. கண்ணகி வழிபாட் டுடனேயே அதிகம் தொடர்புடையதாக குரவை கானப்படுகிறது. நேர்த்திக்கடனே நிறைவேற்றும்பொருட்டு பெண்கள் கண்ணகி அம்மன் சடங்கு நடைபெறும் காலங்களிற் குரவை அயர்வர். கிண்ணகி வழி பாட்டின் திருக்கல்யாண நிகழ்ச்சியன்று குரவைபோடுதல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம்பெறும். அத்துடன் நல்லாங்கு பொல்லாங்கு போன்ற செய்திகளே அண்டை அயலார்க்கு அறிவிப்பதற்கு கையாண்ட ஒலியே குரவையாய்ப் பொருள்பட்டு நிற்கிறது. 21 தமிழ் அகராதி குரவைபற்றிக் கூறும்போது குரவை முல்லே அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முட் கைகோத்தாடும் கூத்துவகை, மகளிர் விசேட காலங் களிற் நாவாற்குளறியிடும் மகிழ்ச்சியொலி குரவையொலி என்றே கூறி புள்ளது. 22 ஆணுல் இன்று கைகோத்தாடுதல் பாடுதல் முதலியவை
--

மங்கி மறைந்து, இன்னுெலி மட்டுமே மட்டக்களப்பில் வழங்கும் குரவையில் இடம்பெறுகிறது. குரவையிடுதல் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கு, குரவையிட்டுக் கூத்தாடும் கூத்தினைக் குரவைக்கூத்து என்று கூறினர் போலும், உவின்சுலோ அகராதியிற் கூறிய பிரகாரம் வாயொலியிட்டு ஆடும் கூத்து என்பதே குர வைக் கூத்தின் பொரு ளெனின் அதுவே சிறந்த இலக்கணமாக அமையும்.23
குரவையிடும்போது பெண் கள் தமது வலக்கையினே முன் மடித்து உயர்த்தித் தம் மேல் உதட்டிற்கும், மூக்சிற்கும் இடையில் வலது உள்ளங்கையை வ&ளத்துப் பிடித்துக்கொள்வர். இடது கையினே மடித்து வயிற்ருேடு வைத்துக்கொண்டு மேலே உயர்ந்திருக்கும் வலக் கையின் முழங்கையினேத் தாங்கிப் பிடித்துக்கொள்வர். சிலவேளைகளில் இடக்கையால் அருகே நிற்கும் பெண்ணின் தோளேப் பிடித்துக்கொள் வதும் உண்டு. வாயிதழ்கள் இரண்டையும் குவித்து நாவிளிம்புகளே மேல் நோக்கி வ8ளத்து நானுனியால் நுனி அண்ணத்தையும் குவிந்திருக் கும் இதழ்களின் உட்புறத்தையும் வாயின் உள்ளிருந்துவரும் காற்றின் வேகத்தோடு இணைய வருடும்போது ஒருவகையான குரல் ஒலி தோன்று கின்றது. 24 இவ்வோசையே குரவை எனக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள மண்டூர்க் கந்தசுவாமி கோயிலிற் கந்த சஷ்டி விரதம் தொட்ங்கிய மூன்று நாளில் வள்ளியம்மை திருமணம் நடத்துகிறர்கள். பொதுமக்கள் இதனைக் கல்யாணப்படிப்பு என்றும் குரவைத்திருநாள்" என்றும் கருதுகின்றனர். அன்றிரவு முற் றும் முருகனுக்கும், வள்ளிநாயகியாருக்குமான திருமண நிகழ்ச்சியும் அதற் குரியதெனக் கருதப்படும் குரவையிடுதல் வழிபாடும் நடக்கின்றன. 23 தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற இக் குரவைபோடும் கலேயானது மட்டக்களப்மில் ஆங்காங்குள்ள முசிலிம் கிராமங்களிலும் அம்மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது. அநேகமாக முசிலிம் பெண்கள் மங்கல நிகழ்ச்சிகளில் குரவையொலி செய்கின்றனர். மட்டக்களப்பில் தமிழ், முஸ்லீம் கிராமங்கள்தோறும் காணப்படும் இக் குரவைபோடும் க3லப்பண்பு இப் பிரதேசத்தின் தனித்துவத்தை உணர்த்திநிற்கிறது.
கரகம்:-
மட்டக்களப்பிலுள்ள கிராமங்களான பழுகாமம், எரு வில், வெல்லாவெளி, கோட்டைக்கல்லாறு ஆ கி ய வ ற் றில் இன்று கரக ஆட்டம் வழங்கிவருகிறது. பெரும்பாலும் அம்மன் கோயில் கடங்கு நிகழ்ச்சிகளிலும், மற்றும் திருவிழாக் காலங்களிலும், பொது வைபவங் களிலும் கரகாட்ட நிகழ்ச்சி இடம்பெறுகிறது. எழுவர் அ ல் வி து ஒன்பதின்மர் தலைமீது அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்து பாடலுக் கும் தாளத்திற்கும் அமைவாக ஆடுவர். மலர் மாலைகள், வேப்பம்
–93

Page 54
இலைகள் என்பன கரகத்தை அலங்கரிக்கும். எடுத்துக்காட்டாக காத்தவ ராயன் கதைப்பகுதியிலிருந்து சில பாடல்களை நோக்கலாம்.
தரு
நன்ன நன்னே நானே நன்ன நன்ன நானே நன்ன 1. எக்கேயடே கண்டுவந்தாய் மகனே கண்டுவந்தாய்
ஏழறையில் மாது பெண்னை மகனே மாது பெண்ணை 2. பாசிபடாக் கெங்கையிலே தாயே கெங்கையிலே
பவள நீர் ஓடையிலே தாயே ஒடையில்ே 3. கோது படா ம்ஞ்சள் கொண்டு தாயே மஞ்சள்கொண்டு
குளிக்கையிலே கண்டுவந்தேன் தாயே கண்டுவந்தேன் 4. வேணுண்டா என்மகனே காத்தான் என்மகனே
விறுமசூலப் பெண்ணுணங்கு மகனே பெண்ணுனக்கு.
காவடி
தமிழகத்தில் பலவகையான சாவடியாட்டங்கள் பன்னெடுங் காலந்தொட்டே இடம்பெற்று வ ரு கிள் ற ன. மட்டக்களப்பு கிராமங்கள்தோறும் உள்ள ஆலயங்களின் உற்சவகாலங்களில் நேர்த்திக் கடனை நிறைவேற்றும்பொருட்டே காவடியாட்டம் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டிலே இடம்பெறும் பாற்காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக் காவடி, ஆனந்தக்காவடி, சக்கரக்காவடி, சந்தனக்காவடி போன்ற பலவகையான காவடியாட்டங்களுள் பாற்காவடியும், முட்காவடியும்ே இங்கு நேர்த்திக்காக எடுக்கப்படுகின்றன.
பாற்காவடி
வாயில் அலகு பாய்ச்சி காவடியைத் தோழில்வைத்து நேர்த்தி வைத்துள்ள ஆலயத்திற்கு மேளதாளங்களுடன் செல்லுதல். இச்சந் தர்ப்பத்தில் காவடிப்பாடல்கள் (காவடிச்சிந்து) பாடப்படும். எடுந்துக் காட்டாக கழுகுமலைப்பத்திலிருந்து ஒரு பாடலை நோக்குவோம்.
'கழுகுமலை தனிலுறையும் முருகவேழே
கருத்துடனே வுன்பாதமலர் காக்கவேணும்
பழுதொன்றும் வராமல் காக்கவேணும்
பச்சைமால் தன்மருகா பார்வதியின் மைந்தா
வழுவாமல் அடியேன்முன் நிற்கவேனும்
வரும் பிழைகள் தனையகற்றி வழியைச் செய்வாய்
தெளிவாக வுன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே ??
س 94 م

முட்காவடி
காவடி எடுப்பவர் வாயில் அலகு பாய்ச்சுவதோடு முதுகிலே
நேர்த்திக்கடனுக்கேற்ப பத்துப்பதினைந்து கூட்டு முள் அலகுகளைப் பாய்ச்சி அதனை ஒருவர் செடிற்கயிற்றில் பிடித்துக்கொள்ள காவடி எடுப்பர். பாடலுக்கேற்ப உருவந்து ஆடிக்கொண்டு செ ல் வர். மட்டக்களப்பு பிரதேசத்திலே உள்ள வரலாற்றுப் புகழ்மிகுந்த தலங்கி ளான மண்டூர், கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை, பா ன் டி ரு ப் பு அமிர்தகழி. சித்தாண்டி, வெருகல் போன்றவற்றின் திருவிழாக்காலங் களின்போது இவ்வாறன காவடியாட்டம் மக்களைப் பக்திப்பரவசத்தி லாழ்த்துவதோடு கண்கொள்ளாக் காட்சியாகவும் விளங்கும்.
10.
ll.
உசாத்துணை விபரமும் அடிக்குறிப்பும்
பூபாலப்பிள்ளை செ, மட்டக்களப்பு நாட்டுக் கூத்து கலைப் பூங்கா’ பக் - 65 இலங்கைச் சாகித்திய மண்டலம் கொழும்பு. 1963 சித்.
நடராச எவ். எக்ஸ், சி. இலங்கை க் கலைச்சஞ்சிகை மலர் - 1
1960 LDfTriëë. வித்தியானந்தன் சு. தென்மோடிக்கூத்து அலங்காரரூபன் நாட கம் பக் - 3. இலங்கைப் பல்கலைக்களக தமிழ்நாடகக்குழு - 1962. பெரியதம்பிப்பிள்ளை ஏ. இராமநாடகம் அணிந்துரை பக் - 5. பிரதேசகலாமன்றம், மட்டக்களப்பு - 1969,
சிவத்தம்பி கா. மார்க்கண்டன் நாடகம், வாளபிமன் நாடகம் பதிப்புரை பக் - 1 1963.
. வித்தியானந்தன் சு. மேலது முன்னுரை பக் - 3.
கந்தையா வி. சி. மட்/தமிழகம் நாட்டுகூத்துக்கள். ஈழ கே ச ரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் - யாழ் - 1964,
கந்தையா வி. சி. செந்தமிழ் - மட்டக்களப்பு நாட்டுக்கூத்துக்கள்.
சற்குணம் ம. கொம்பு விளையாட்டு தினபதி ஆண்டுமலர் பக்.
121. - 1971
கந்தையா வி. சீ. மட்/தமிழகம் - கொம்பு விளையாட்டு.
12. 13. மேலது.

Page 55
4.
5.
6.
17.
18.
9,
20.
21.
23.
25。
சற்குணம் ம. கொம்பு விளையாட்டு தினபதி ஆண்டுமலர்.
விபுலானந்த அடிகளார். வசந்தன் கவி பூரீலங்கா பக் - 21. 1953 ஒக்.
விபுலானந்த அடிகளார். மேலது. பக் - 22. ஞானமாணிக்கம் வ. வசந்தன் இலக்கியம். பூரீலங்கா 1961. கந்தையா வி. சீ. மட்/தமிழகம். வசந்தன் ஆடல் ம்க் - 199, விபுலானந்த அடிகளார். வசந்தன் கவி பூரீலங்கா. 1954 பெப். சதாசிவ ஐயர் தி, மட்டக்களப்பு வசந்தன் கவி திரட்டு. 22. நடராசா. எவ். எக்ஸ். சி. குரவை பூரீலங்கா. 1954 டிச.
24. Rahavan M. D. The Koravai An-Ancient Folk Customs of the Eastern Province of Ceylon Today. Page 26 - 196.
கந்தையா வி. சீ. கண்ணகி வழக்குரை. பக் - 115. சுண்ணுகம் -
968,
* வில் ஈற்று இடிப்பெயர்கள்
"வில்" என்ற சொல்வினை ஈற்றிலுள்ள இடப்பெயர்களை ஈழத்தின் பல பாகங்களிலுங் காணலாம். இவ்விடப்பெயர்களில் வரும் வில் " என்ற சொல் தனித் தமிழ்ப்பதம் என்பதற்குச் சான்ருக,
வில்லிலே நிண்டகொம்பன் விடியளவும் புல்லருந்தி கல்லிலே முதுகுரஞ்சிக் கொம்பன் காடேறிப் போகுதுகா.
வில்லிலே தலைமுழுகி விரிச்ச கொண்டை தோளிலிட்டு புல்லிலே அடிவைத்துப் போற புள்ளிமான் கண்டே நீங்க
வில்லிலே நெல்லவிச்சு வெட்டையிலே காயவைச்சு கூடிக் குலவையிட்டு குத்திருங்க கத்த நெல்லு.
என்ற கவிகளில் வந்துள்ளது. குளத்தையும் அதனேடு அண்டிய செதுப்பு நிலத்தினையும் அதன் பாங்கரிலுள்ள மேட்டு நிலத்தையும் குறிக்கும் வயல்வெளியை "வில்" என்றழைப்பர். வெளி என்ற சொல் வில் என மருவிற்று போலும்,
-96

i. மட்டக்களப்பின் மந்திர வழக்கம்
திமிழ்ப் புலமையோடு கலைவளங்களும் நிறைந்து விளங்கும் மட்டக்களப்புத் தமிழகம் பண்டைநாளிலிருந்து மந்திரப் பயிற்சிகளா லேயே ஈழத்தின் ம்ற்றைய பகுதிகளில் கருதப்பெற்று வந்த ஒரு நாடு. மட்டக்களப்பாரின் மந்திர ஆற்றல் புகழ்பெற்ற ஒன்ருக விளங்கத் தக்கவாறு மந்திரவழக்கும், மந்திரம் கலந்த "மருந்துப் பயிற்சிகளும் இங்குள்ளாரின் நாளாந்த வாழ்க்கையிலே ஒருபோது பின்னிப் பிணைந் திருந்ததாக அறிகின்ருேம். அதனலே இந்நாட்டின் பழங் கலை கள் போன்றிருந்த அம் மந்திரம், மருந்து முதலானவற்றைப்பற்றித் தனிப் பட்ட நாம் இங்கு காட்டலும் வேண்டியதாயிற்று. இங்கு மட்டுமின்றி கல்வியறிவு பரவாத ஆதிகாலத்தில் மந்திரங்களினுட்சி உலகமுற்றும் பரவியிருந்திருக்கின்றதாகத் தெரிகின்றது. மக்கள் அவ்வாறு ம்ந்திரங் களிற் கெசண்டிருந்த அசையாத நம்பிக்கையானது கல்வியறிவு, நாக ரிகம் என்பனவற்றில் மிகுதியும் முன்னேற்றமடைந்துள்ள இக்காலத்திற் கூட இலகுவிற் துடைக்கப்படஒண்னத வொன்ருய்விட்டது. இதனலே எங்கும் நிலவிவரும் மந்திரப்பயிற்சிகள், மக்களிடையே அச்சம் கலந்த ஒரு நம்பக்கையின் தொடர்பாக இ ன் றும் வழங்கக்காண்தின்முேம்.
எல்லாச் சொற்களுக்கும் ஆற்றல் உண்டென்பதும், சரியான சொல்லை வேண்டியபடி அறிந்து உச்சரிப்பு வேருகாது சொன் ஞ் ல் தாம்கருதும் பலனை அது தவருது தரும் என்பதும், அதனல் அவை யெல்லாம் மந்திரங்களே என்பதும் மிகப் பழங்காலத்து மக்களுடைய கருத்தாகும். அக்காரணத்தினற் பழஞ்சொற்களின் உச்சரிப்பு முறைகளை யெல்லாம் அவர்கள் பெரிதும் போற்றிக் காத்தனர் என்றும், மொழி நடையிலோ உச்சரிப்பு முறையிலோ எவ்வித புது மாற்றத்தினையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மறுத்தனரென்றும், அத்தகைய கொள்கை யின் நீடிப்பு, காலச் செலவில் பழம்பெரும் மொழிகளெல்லாம் வழக் கொழிந்து போவதற்கு இலகுவாக இடமளிக்கலாயிற்று என்று மொழி வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த உச்சரிப்புவகையின் வலிமைபற் றிய குறிப்புக்களெல்லாம் மந்திர சக்தியின் மீது மக்களுக்கிருந்த நம்பிக் கையின் அளவினை நமக்குத் தெளிவறக் காட்டுவனவாகும்.
சொற்களின் ஆற்றலானது மந்திர சக்தியாய் விளங்கினமை யைச் சாபமிடுதல்" என்னும் சொல்வாயிலாகப் புராணங்கள் விளக்
கம் செய்கின்றன. மந்திர ஆற்றல் உள்ள சொற்களை வழங்குவோன்
-97

Page 56
மக்களிடைப் பெருமதிப்புடையவனுசு இருந்திருக்கின்ருன், "சாரனர்" என்ற சாதியார் வாழ்ந்த மலேப்புறத்து ஒது க் கி லே கலங்கவிழ்ந்து அடைகரைப்பட்டுச்சென்ற சாதுவனுக்குக் காட்டப்பேற்ற அரசன் அக்குழு மக்களின் தலைவனு ை"குருமகனே" என்று மணிமேகலே கூறுவத ஞலும், நாகரிக முதிர்ச்சிபெருத மக்களிடை, மந்திரங்களில் வல்லவர் களே தவேமைபூண்டு அரசுரிமை பெற்றுவிளங்கும் பெருமதிப்பினேப் பெற்று விளங்கினர் என அறிகின்ருேம்.
மந்திரம் என்பது மறைத்துச்செல்லப்படுவது. ஆற்றல்வாய்ந்த சொற்களின் கோப்பினைப் பலதடவை உருப்படுத்துதல்" (திருப்பித் திருப்பிச் சொல்லுதல்) மூலம் மந்திரவாதி தான் நி3னத்தவற்றைச் செய்துமுடிக்கிருன் என்பர். தனது எதிரியின் பெயரைப் பயன்படுத்தி அவனுக்கு மாந்திரிகன் "கெடுதல்" செய்கின்ருன் என்ற நம்பிக்கையும் வளர்ந்தது. இதனுற்போலும் "உனரைச் சொன்னுலும் பேரைச் சொல் வாதே" என்ற பழமொழியும் உண்டாவதாயிற்று. சிலர் தமது பெயரை மட்டுமன்றித் திட்டமான வயது முதலியவற்றையும் நன்கு பழகாத விருக்குச் சொல்லமாட்டார்கள். தீய விலங்குகள், கொடுநோய்கள் என்பவற்றின் பெயர்கஃாக்கூட மக்கள் மந்திரம் போலக் கருதினர். இரவிலே "பாம்பு" என்று சொல்வதற்குப் பயங்கொள்வர். அப்படிச் சொன்னுல் அச்சொல்லானது பவித்து உண்மையாகவே பாம்பு வந்து ஊறுசெய்துவிடும் என்ற அச்சம் அவருக்குண்டு. நாட்டுப்புறங்களிலே பேரும்பாலும் கொடிய நோய்களின் பெயர்களேக்கூட குழந்தைகள் உள்ள இடங்களிற் சொல்லுவதற்கு அஞ்சுவர். அதுபோலப் பேய் களின் பெயர்களும் வீடுகளிலே சொல்லப்பெரு. இதனுல், பேய்களே மந்திரங்களால் அழைத்து ஏவல் கொள்ளும் திறமைவாய்ந்தோர் மக்க ளிடையே அச்சத்தோடு மதிக்கப்படுவாராயினர். அவர் கூறும் பாடல் களும் மந்திரங்களாக மதிப்புப்பெற்றன.
மந்திரப் பாடல்களே ஆக்கும் வல்லமைகொண்ட புலவர்களும் முற்காலத்தே இருந்துள்ளனர். ஆநந்தக்குற்றம், மங்கல எழுத்து நச் செழுத்து முதலியன பற்றிய கருத்துக்களெல்லாம் இவர்களின் தொடர் பினவாய் மந்திரப்புலமைபற்றி வந்தனவேயாகும். காலவழக்கிலே செய் யும் வகையில் மந்திரம் எனவும் ஒன்று இடம்பெறலாயிற்று. இதனேப் பா ட்டுரை நூலே அங்கதம் பிசியே' என்னும் பழஞ்சூத்திரத்தினு வறியலாகும். "அறம் பொருளின்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல் களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும், சொகினமும், வக்கின் கிரந்த மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத்திரியமும், நிவேத்து நூலும், ஆயுத நூலும் பத்துவிச்சையும், ஆடைநுாலும், அணிகல நூலும், அருங்கலதுரலும் முதலாயவற்றுள்ள மறைப்பொருளும் உப தேசமும் வல்லாராயும், கவிப்பெருமையும் ஆவவும் கெடவும் பாடு மாறும், பாடப்பெறுவோருக்கு நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லார் வாய்க் கேட்டுனர்ந்துகொள்ள" எனவும், இவைகளெல்லாம்
-98

இருடிகளல்லா ஏனேயோராகி மனத்தது ஆகவும் கெடவும் பாடவல்ல பிஆர், பரார், கல்லாடர், மாமூலர், பெருந்தவேச்சாத்தனுர் இத் தொடக்கத்தாராலும், . " எனவும் வரும் யாப்பருங்கல உரைப் பகுதி களாலும் இது மேலும் விளங்குகின்றது. "புட்சுரனுர் என்பவர் செய்த மந்திரநூல்" ஒன்றுகூடப் பழந்தமிழரிடை வழங்கியிருக்கின்றது.
இச்சிர வாவி நிறைமதி முக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக்கர வட்டத்தும் புள்ளி என்பதே
புட்சுரனுர் கண்ட புனர்ப்பு '
என்னும் பாடலொன்றின்படி பழங்காலத்திலேயும் மந்திரங் களுக்கேற்றபடி கீறப்படும் சக்கரங்கள் வழங்கிவந்தன என்று தெரி சின்றது. முக்கோனம், ஐங்கோனம், ஆறுகோனம் முதலியனவாக இருந்து இச்சக்கரங்களே மட்டக்களப்பு நாட்டினர். "பந்திரங்கள்" என்றும், அச்சிரங்கள்" (அட்சரங்கள்) என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாருன அடிப்படையிலமைந்த மந்திரப்பயிற்சி இன்று கிழக்குலகிலேயே அதிகம் வழக்கில் உள்ளதெனினும் மேலே நாடுகளும் ፵ዕÜ காலத்தில் இவற்றினடிப்பட்டுக் கிடந்திருக்கின்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். மந்திர சக்திகளின் பெயரால் மனுேவசியங் தள் பல எங்கும் நடந்துள்ளன. மந்திரம் தெரியாத இடத்து அதன் பெயராற் பல தந்திரங்கள் செய்துள்ளார்கள். அதற்கு மருந்துகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனுள் மருத்துவக்கலேயும், இரசாயன அறிவும் நிலத்து வளர்ந்து வந்துள்ளன.
இவ்வாறு மக்கள் வாழ்விற் படிந்து ஊறிப்போன மந்திரப் பயிற்சிகள் காலமயக்கில் விஞ்ஞானக் கலேத்தொடர்பினுலே படிப்படி யாக மறைந்து வந்தாலும் மட்டக்களப்பிலே அவற்றின் சுவடுகள் அழிந்துபோகாது பதிந் துகிடக்கின்றன. இத்தமிழகத்தின் கிராமப் புறங்களிலே மந்திரவித்தை செலுத்துகின்ற ஆட்சியின் பிடி இன்றும் இருக்கின்றது. பேய்கள் அல்லது சுெட்ட ஆவிகள் பிடிப்பதனுலே பெருநோய்கள் உண்டாகின்றன என்ற நம்பிக்கை உயிர்வாழ்கின்றது. அப்படிப்பட்ட நோய்களே நீக்குதற்கு மருத்துவச் சாஃவகளேவிட மீந்திர ஒஃலகளேயே மக்கள் நாடுகின்ருர்கள். தமது தகுதிக்கேற்ற நல்ல மந்திர வாதிகளைக்கொண்டு இன்ன் பேயினுல் இந்த நோய் வந்திருக்கிறது என்று கண்டு அதற்கு மடைபோட்டும், பேயாட்டிக் கழிப்புச் செய்தும் பேயை ஒட்டிக் குணப்படுத்துகின்றனர். இவ்வாருன, மந்திரச் சடங் கிற்கு தொழில்' என்ற சிறப்புப்பெயர் மட்டக்களப்பில் வழங்கு கின்றது. "தொழிலாளி' என்ற சொல்லும் இங்கே மந்திரவாதிகளேயே குறிப்பிடுவதொன்று. மாலேக்காய்ச்சல் போன்றவையோ அல்லது கைப் பரிகார முறைகளுக்கு பாருத வேறு நோய்களோ வந்தால், மக்கள்
-டு-

Page 57
மந்திரவாதியைக்கொண்டு மந்திரஞ்சொல்லி, நாற்சந்தியிலே வைத்து மாஃவேளேயில் "திருநீறு போடுவார்கள், மந்திரவாதி நோயாளிக்குத் திருநீற்றை ஒதி" (மந்திரித்து) நெற்றியிற் பூசுவது "திருநீறு போடுதல்" என்று வழங்கப்பெறும். அத்தோடு மந்திரித்த தண்ணிரைக் குடிக்கவும் குளிக்கவும் கொடுத்தலும் உண்டு. இவ்வழக்கம் "தண்ணிர் ஓதுதல்" எனப்படும். இவைகளாலும் தீராதபோது மந்திரவாதி, குறித்த நோய் களுக்குரிய காரணத்தை அறிய, குறிபார்ப்பான். வாழை இலை ஒன்றில் நெல்லே அல்லது பச்சையரிசியைப் பரப்பி, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலே தேங்காய், எலுமிச்சம்பழம் என்பவற்றைக்கொண்ட "மடை" (படைப்பு) ஒன்றினே அதன்மேல் வைப்பான். சிறிய வில் லொன்றை அம்மடைக்குமேல் ஏந்தியவண்னம் பிடித்துக்கொண்டு அவ் வில்லின் நாணில் பாக்கு வெட்டி ஒன்றைக் கொழுவியபடி மந்திரத் தைத் தொழிலாளி முணுமுணுத்துக்கொண்டே இருப்பான். அந்த வில்லிலே, குறித்த பேயானது வெளிப்பட்டு நின்று நோயாளியை வருத்துவது என்ன என்று அவனுக்குக் குறிப்பிடும் என்பர். இருளன். மருளன், காடேறி, கரையாக்கன், குறும்பறையன், சுடலை வைரவன், கங்கை வைரவன், கலியான வைரவன், மோகினி, பிடாரி, பேச்சி, பிச்சி, பினந்தின்னி, பிள்ளைகொல்லி முதலிய பல பேய்களுள் எது நோயாளியை வருத்துகிறது என் பதைத் தெரியப்படுத்துவதோடு, பேயினுலன்றி விதிவசமான நோயினுலேயே துன்பம் நேர்ந்துள்ளதாயின் அதனேயும் குறி தெரியப்படுத்தும் என்பார்கள். இவ்வாருண மந்திரக் குறி பார்க்கப்பட்ட பின்னரே நாம் முன்னர்க் காட்டியபடி பேய்க்குச் செய்து சழிக்கும் "தொழில்" பெரும்பாலும் இங்கு நடக்கும்.
மட்டக்களப்பு நாட்டு மந்திரங்களுள்ளே பெயர்பெற்று விளங் குவது "சூனியம்" செய்யும் மந்திரம். ஒருவன் தன் எதிரியினே நோய்ப் படுக்கையிலோ, அன்றி மானக் குழியிலோ வீழ்த்தும் மந்திரச் செய் கையே சூனியம் எனப்படுவது. சூனியம் செய்தலே, செய்கை" என்ற சொல்லாலேயே இங்கு குறிப்பிடுதல் வழக்கு ஆட்டுச்செய்கை, படு சூனியம், சூனியம், ஏவல் என மேலும் பலவகைப்படுவது இச்செய்கை, எதிராளியின் நகம், தலேமயிர் முதலியவற்றைக் கொண்டன்றி வெறும் பெயரை மட்டுமே பயன்படுத்தித் தாம் நினைத்தவற்றை அவன் மீது சாதிக்கவும் வல்ல மந்திரவாதிகளுக்கு மட்டக்களப்பு நாடு பெயர் பெற்றது. தான் குறித்தவனது காலடி மண் சூனியச் செய்கைக்காக எடுத்துக்கொள்ளப்படும். அம்மண்ணேக்கொண்டு செய்யப்படும் படு சூனியம் முதலியவற்றில் மட்டுமன்றி, அம்மண்ணே ஒரு பெட்டியி லடைத்து நீண்ட கயிருென்றில் தொங்கவிட்டு மந்திரவலியினுல் அப் பெட்டியினே ஆடச்செய்யும் போதெல்லாம் எதிரியையும் பெருந்துன்பங் களில் மூழ்கி ஆடவைக்கும் ஆட்டுச் செய்கையிலும் இம் மந்திரவாதி கள் மிக வல்லுநராவர். காலடி மண் முதலியவற்றில் மந்திரவலியினே ஏற்றி இறந்த உடும்பு ஆமை முதலியவற்றின்மீது அவற்றுடன்
-100

மடைவைத்து நீர்க்கரையிலோ அன்றிச் சுடலையிலோ, எதிரியின் வீட்டு வாசலிலோ இரகசியமாகப் புதைத்து வைத்து அவனே மாருத பெரு நோய்க்குள் ஆழ்ந்தச் செய்வது படுசூனியம் ஆகும். இச் செய்கைக்கு ஆளானவனது எலும்புகள்கூடப் பூட்டு நெகிழ்ந்து தீராத இன்னலுக் குள் அவன் அழுந்துதல் உண்டு. கோழி, பன்றி என்பவற்றின்மீது மந்திரவவியூட்டி எதிரியை நோக்கி அவற்றை ஏவிவிட, அவை சென்று குறித்தவனைத் தாக்கிக்கொல்லவும், கொடிய பேய்களே அவ்வாறு ஏவி அவனைத் துன்புறுத்தவும்வல்ல ஏவற்குனியகாரர் மிகமிக அச்சத்தை விளேவிப்பவர்கள். ஒருவன் செலுத்திய இத்தகைய சூனியம் பேய்களே இன்னுெரு மந்திரவாதி அறிந்து தடுத்தலுங்கூடும். இச்சந்தர்ப்பங்களில் மந்திரவாதிகளிடையே பெரிய போட்டிகள் ஏற்படும். தம் (மயிர் போனுலும் சரி என்று இருவரும் போட்டியிற் சளேயாது எதிர்த்தி மந்திரப்போர் இடுதலைக் காணும்போது நமக்கு மயிர்க்கூச்செறியும்.
வேட்டையாடும்போது மந்திரவலிகொண்டு வேண்டிய விலங்கு களே மந்திரவாதி காட்டிடைச் சந்திக்கிருன். தன் எதிரி சுடும்வெடி குறிதவறிப் போவதற்கும், வெடிபட்டு வீழ்ந்த விலங்குகள் உயிர்பெற் ருேடுவதற்கும் செய்யவல்ல மந்திரவாதிகள் இங்கே உட்ள்ளனர். காடு களிற் செல்லும்போது கொடுவிலங்குகளால் தமக்கு ஊறுவராது காத் துக்கொள்ளவும் மந்திரங்கள் உண்டு. இவை உடற்கட்டு மந்திரங்கள் எனப்படுவன. கொலே குறித்து வந்த யானைகள் மந்திர வலியாற் கட் டுண்டு வலியிழந்து போகும் நிகழ்ச்சிகள் மட்டக்களப்பிலே இன்றும் நடைபெறுகின்றன. சண்டையிலே எதிர்த்தவனுக்கு மந்திரம் சொல்லி அறைதலினுல் அவனே இரத்தம் கக்கிச் சாகவைக்கும், 'நெட்டை" மந்திரங்கள் தனி வழிக்குத்துண் செய்வன, மந்திரம் வல்ல வலஞர். ஆறுகளிற் செல்லும்போது முதலேகளாற் தீங்குருதிருக்கவும், போதிய மீன்கள் தம் வலைகளிற் சிக்கவும் செய்கிருர்கள். பாம்புகள் மந்திர வலிக்கு அஞ்சி அகல்கின்றன. கடிக்கவரும் நாயினேக்கூட வாயைப் பிளந்தபடியே திரும்பிச்செல்ல வைக்கவல்ல உறுக்கும்" மந்திரங்கள் இந்நாட்டிற் சாதாரணமானவை. சில ஊர்களில் இன்னும் மந்திரத்தால் மாடு மேய்க்கிருர்கள். மந்திர ஏவுதற்படி எந்த விலங்கின் தீங்கும் உருது மாடுகள் காட்டிற்சென்று மேயவும், மந்திரம் சொல்வி அழைத்த வுடன் "பட்டி' (மாட்டுத் தொழுவம்) நோக்கி அவை மீண்டுவரவும் செய்யவல்ல மந்திர வல்லுநர்களான உழவர்களும், இடையர்களும் இன்னமும் மட்டக்களப்பில் உள்ளனர்.
பயிர்களேப் பூச்சி புழுக்கள் அழிவு செய்யாமலும், நெல் நிறைந்த பொவிகளங்களே, மழைபெய்து சேதம் செய்யாமலும், நெற் குவைக்:ளப் "பூதங்கள்" அள்ளிக் குறைவுபடுத்தாமலும் திருநீறு ஒதி நாற்புறமும் வீசுகிருர்கள். மந்திரம் ஒதிய திருநீற்றை எறிதலால் நெற் பயிர் சுன் நோய் நீங்சுப்பெறுதலோடு வாரி"யும் பெருகுகின்றன.
- O -

Page 58
என்பர். காளி, பேச்சி, வீரபத்திரன், என்ற தேவதைகளுக்குரிய கோவில்களில் மந்திரப்பயிற்சியே நிறைந்துள்ளது. உயிர்ப்பலி இடும் வழக்கம் இல்லாத மட்டக்களப்பின் இத்தகைய மந்திரக் கோவில்களிலே பூசினிக்காய் வெட்டுதலே பலிச் சடங்காக நடக்கின்றது, பெரிய நீற் றுப் பூசினிக்காயொன்றை மந்திரித்து இரண்டாக வெட்டி இரத்தப் பலி போலத் தன் திறமையால் மந்திரவாதி ஆக்குகின்றன். இதுவரை கூறிய யாவும் ஆக்கத்துக்கும், அழிவைத் தடுப்பதற்கும் மந்திரவித்தை பயன்படுமாற்ற முறையே காட்டுகின்றன வெனினும் மந்திரம் என்ற சொல் பெரும்பாலும், அழிவையும் அச்சத்தையுமே எங்கும் குறிப்பு தாயுள்ளது.
ஒருவன் தன் எதிரிகளுக்கு மட்டு மே மந்திரவலிமையினற் தீமை செய்கின்றனெனினும், பொதுவாக மந்திரம் பயின்றேன் தீமை களுக்கு உடையவன் எ ன் றே கருதப்படுகின்றன். முன்னுட்களிலே வெளியூரவர்கள் மட்டக்களப்பாரோடு உறவுகொண்ட காலத்திலும் மந்திரம் காரணமாக அச்சங்கலந்த ஒன்ருகவே அந் நட்பினை வளர்த் திருக்கிருர்கள். ஆயினும் மந்திரம் தெரிந்த இந்நாட்டு மக்களுங் கூட, தம்மோடு உளங்கலந்து உறவுபூண்டவர்களுக்கு அதன் தீயவலியிஜனச் செலுத்தாது, தாமும் அவரோடு நிறைந்த நட்புரிமை பாராட்டி யிருந்து புறந்தருதலிலேயே சிறந்து வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பு, என்றும் பழமொழிக்கு நாட்டை இலக்காக்கிப் பெருமை படைத்திருக் கிருர்கள். காலாகாலத்தில் தமக்கு ஊறுசெய்ய முயன்றேர்க்கு மட்ட்க் களப்பார் மந்திரங்களின் சுவையினை ஊட்டியிருத்தலும் உண்மையே turreyjLD.
நோய்கொண்ட ஒருவரிடமிருந்து பேயை விலக்கும் மந்திரவாதி நடு இரவிலே குறித்தவரது வீட்டிலிருந்து பேயைத் தூரத்திக்கொண்டு போய்க் காட்டிலே மந்திரத்தால் கட்டிவிட்டு வருதல் 'கழிப்புச் செய்கை"யாகும். அவ்வேளையில் வழி நெடுக எலுமிச்சங்காய்களை ஒதிப் போட்டு இரண்டாக வெட்டிக்கொண்டே செல்லுவர். பேயானது அக் காய்களைக் கடந்து மீண்டு வராமல் வழிமறிப்புச் செய்யும் இச்செய லுக்குக் "காய் வெட்டுதல்" என்று பெயர். காய் வெட்டும்போது மந்திர உச்சரிப்பின் வலிமையால் மடையிலிருக்கும் முதற்காய் அந்தரத் தில் தானே எழுந்து செல்லுதலும், சில வேளைகளில் நடக்கின்றது. "மந்திரம் சொன்னல் மாங்காய் விழுமா? என்று ஒரு பழமொழியிற் கேட்கிருர்கள். மட்டக்களப்பிலே அப்படி மாங்காயை மட்டுமன்றித் தேங்காய், பலாக்காய்களையும் விழச்செய்த எத்தனையோ மந்திரவாதி கள் வாழ்ந்திருக்கிருர்கள் என்பது உண்மையாகும்.
இந்த மந்திரத்தோடு தொடர்பு பூண்ட சோதிடம் போன்ற இன்னென்று 'அஞ்சனம் போடுதல் ஆகும். ஒரு களவு நடந்துவிட்டால் அதைக் கண்டுபிடிக்கவோ அன்றிச் சூனியச்செய்கை ஒன்று பற்றி
-102

ஐயம் பிறந்தால் அதனைத் தெளிவுசெய்து கொள்ளவோ 'அஞ்சனம்" என்ற ஒருவகைக் குறி பார்க்கப்படுகின்றது. வெற்றிலையில் தடவப் படும் ஒருவகை மையினுள் மந்திரவாதி அனுமனை அழைத்துத் தன் குல தேவதையை அவ்வனுமன்மூலம் கொண்டு வரச்செய்து வேண்டியதை உள்ளபடி அறிந்து கூறுகின்ருன், வெற்றிலையிற் தடவிய மையினை வேருெருவர் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்க மந்திரவாதி பக்கத்தி லிருந்து மந்திரங்களை முறைப்படி உச்சரிக்கின் முன், மந்திரங்களின் வலி கூடக்கூட வெற்றிலையில் உள்ள சிறிய அளவான அஞ்சனத்தி னுள்ளே தாம் அறிய நினைந்ததின் உண்மை நிகழ்ச்சி எல்லாம் நிழற் படம்போற் காட்டப்பெறும் என்று கண்டோர் கூறுகிருர்கள். இதற்குப் பன்படும் மை, தேவாங்கின் எலும்பும், இறந்த கன்னிப் பெண்ணின் மண்டை ஒடும், பச்சைக் கற்பூரம் முதலான சில மூலிகைகளும் சேர்த் துச் சுட்டு அரைத்துக்கொள்ளப்படுகின்றது என்று அறிகின்ருேம்.
விஞ்ஞான் வளர்ச்சியினல் மனித இயல்பினைக் கடந்த சக்தி களிலே கொள்ளும் நம்பிக்கை குறைவடைந்து வருதலை ஒட்டி எங்ங் னும் மந்திரப் பயிற்சி குறைந்து வந்தாலும் மட்டக்களப்பு நாட்டின் கலைச்செல்வங்களுள் ஒன்ருக இத்துறை மதித்துக் காக்கப்படவேண்டிய தாகும். பயிற்சிக்காக அன்றேனும், நழுது கலைச்சிறப்பின் காட்சிக்காக வேனும் இம்மந்திர ஏடுகளைத் தொகுத்துப் பேணுதல் வேண்டியதாகும். புதிதாக அமைக்கப்பெற்று வருவதும் கிழக்குலகின் கலைகளையெல்லாம் சிறப்புறக் காட்டப்போவதுமான பெரிய நூல் நிலையத்திலே இம்மந்திர ஏட்டுச் சுவடிகளுக்கான தனிப்பகுதி ஒன்று வகுக்கப்பட்டிருத்தலோடு அவற்றைத் தொகுத்தற்கென ஒரு கலைக்குழுவும் இடம்பெற்றிருந்தால் இத்துறையினைப் போற்றிக்காத்தற்கு மிகுதியும் பயன்படுவதாகும். *
கடுக்கென்றவன்
கடுக்கென்றவன் என்ருல் வளர்ந்தவன் என்பது பொருள்.
பெண்கள் புத்தியறிதல்போல ஆண்கள் கடுக்கென்றவர் ஆவார். கடுக்கெனல் என்ற பகத்திற்கு வளருதல் உயருதல், மிகுதல் என்ற பொருள்கள் தரப்பட்டிருக்கின்றன. உடலால், உயரத்தால், செல் தால், கல்வியால் மிகுதல இச்சொல் குறிக்கும்.
"" அவன் கடுக்கென்ன நாள் செல்லும். ??
"" அதற்குள் அவன் கடுக்கென்று விடுவான். ? ?
* கடுக்மகன்ற பயிர்."
என்ற பிரயோகங்களை நோக்குக. ஆகவே கடுக்கென்றவன் என்ருல் வளர்ந்தவன் என்பது பொருள். இச்சொல் வழக்கில் கடுக்கெண்ட வன் என்ருகிப் பின்னர் கடுக்கண்டவர் என் ருகிவிட்டது போலும்.
- 103.

Page 59
i. மட்டக்களப்பு மக்கள் வாழ்க்கையில் சாத்திரங்கேட்டல், சகுனம் பார்த்தல், உபசரித்தல்
ஒரு நாட்டின் கலாசாரம் அங்கு வாழும் மக்களின் 56). முறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் பிரதிபலிப்பதை நாம் காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் பிரிவுகளிடையேயும் பொதுமைப் பாடுகள் பலவிருப்பினும் நடைமுறை வேறுபாடுகளும் இல்லாமலில்ஜ தம் நாட் டி ற்கு ம், தம்மினத்திற்கும் உரியவையெனப்படும் சம்பி தாயங்களும் மரபுகளும் நகர்ப்புறங்களிலே அருகிக்கொண்டு வருகின்ற போதும், கிராமப்புற மக்களிடையே அவை இன்னும் பேணப்பட்டு வருகின்றமை மகிழ்வுக்குரியவொன்று.
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் மையமாகத் திகழ்வது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை. சாத்திரம் கேட்பது, சகுனம் பார்ப்பது என்பனவெல்லாம் நம்பிக்கைமீது அவர்கள் வளர்த்துள்ள பற்றினலேயாகும்.
நல்லது கெட்டது எது நடப்பினும் சாத்திரம் கேட்பது அவர் களுக்கு மனத்திலே ஒரு திருப்தியை உண்டாக்குகிறது. சாத்திரம் கேட் கும் சந்தர்ப்பங்கள் பலவாக இருப்பினும், அவர்கள் சாத்திரியாரைத் தம் வீட்டுக்கு அழைக்கும்போதோ வெற்றிலையை அழகாசு வட்டா விலே அடுக்கி, அவற்றின் நடுவில் முழுப்பாக்குகளை வைத்து அதன் மீது சாத்திரியாரின் தட்சணையையும் இட்டு ஒரு வெள்ளைச் சீலைத்துண்டி ஞல் மூடிய வெற்றிலை வட்டா சகிதமாகவே செய்வார்கள்.
குழந்தை பிறந்த ஓரிரு நாள்களில் வெற்றிலை வட்டாவுடன் சாத்திரியாரை அடைந்து பிறப்பு நேரத்தை அறிவித்ததும், சாத்திரி யார் கிரகங்களின் நிலைக்கேற்ப குழந்தையின் தேகசுகம், கல்விப்பரி மளிப்பு, செல்வநிலை என்பனவற்றைக் கூறுவதுடன் குழந்தையினுல் பெற்றேர், சகோதரர், தாய்மாமன், பேரன், பேத்தி அடையவிருக் கும் பலன்களை எடுத்துக்கூறுவர். சாத்திர பலனின்படியே குழந்தைக் குரிய நாமத்திற்கும் முதலெழுத்தையும் சிலவேளைகளிற் குழந்தைக்குச் சூட்டிய சுவாமி பெயரொன்றையும் சாத்திரியாரே கூறி விடுவர். குழந்தைக்கு கிரகதோஷம் ஏதாவது உளதெனச் சாத்திரியார் கூறு மிடத்து அர்ச்சனை செய்வித்தும், தேங்காய் வெட்டியும் தோஷ நிவர்த்தி செய்ய முயல்வர்.
-104

தீராத நோயுற்ற வேளைகளிலும் சாத்திரம் கேட்பது வழக் கம். தீரக்கூடிய வியாதியென்பதையும், எந்தப்பக்கக்திலுள்ள வைத்தி யரை அழைத்து மருந்து செய்வதன் மூலம் சுகப்படுத்தலாம்ென்பதை யும், நோயாளிக்குப் பகையுள்ள கி ரக ங் கள் எவையென்பதையும், சாத்திரியார் அறிந்து சொல்வார், எனும் நம்பிக்கை இ ன் றும் சில ம்க்கள் மனதிலே ஊறியுள்ளது. இதன்படியே மருத்துவரையும் தெரிவு செய்து கோயிலிலும் கிரகசாந்தி செய்விப்பர்.
பொருள்கள் காணுமற் போனல் சாத்திரம் கேட்பது படித்த மனிதர்களிடத்தும் தாராளமாகக் காணப்படுகிறது. பொருள் மீண் டும் கிடைக்குமா, எவ்வளவு காலத்திற் சிடைக்கும், எடுத்தவர் எத் திசையில் உள்ளார், அவரது அங்க அடையாளங்கள் எவை, எங்கு அதனை ஒளித்து வைத்துள்ளார் போன்ற விபரங்களைச் சாத்திரியார் கூறுவர். சாத்திரத்தின்படி கூறப்படும் தகவல்கள் சிலவேளைகளில் மெய் யாகவே நிகழ்வதினுலும் த மத நி விற் காப்பாற்றப்பட்டவொன்றை உணர்ந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பிலும் சாத்திரம் கேட்கும் வழக்கம் மக்களிடையே மங்காதுள்ளது.
பொருள்கள் மட்டுமன்றி சிலவேளைகளில் ஆள்கள் காணுமற் போய்விட்ட போதும் சாத்திரத்தின் துணைகொண்டே தேடும் முயற்சி களில் ஈடுபடுதலும் உண்டு.
நோயுற்ற சமயங்களில் நோயின் காரணத்தையும் சாத்திரம் கூறுகிறது. உடலில் ஏற்பட்ட வியாதியா, கிரகங்களின் பகையா அல் லது செய்வினைய்ா என்பதிற் கவனமாக இருப்பர். மட்டக்களப்பு மக்க ளிடத்தில் மந்திரத்தின் மீதுள்ள நம்பிக்கை செய்வினை, குனி யம் என்பனவற்ருல் ஒருவர் தீராத வியாதிக்குட்படுவர் எனக் கருத வைக் கிறது. செய்வினையின் காரணமாக ஏற்படும் பிணிகளைப் பிரித்தறியச் சாத்திரமே ஏற்றது, என்பது அவர்கள் எண்ணம்.
பெண் குழந்தைகள் பருவமடையும்போது அவர்களின் எதிர் காலப் பலன்களை அறிய சாத்திரம் கேட்பது வழக்கம். இதனை க் குறிப்புப்பார்த்தல் என அழைப்பார்கள். இக்குறிப்பிலிருந்து அப்பெண் ணின் விவாக சம்பந்தமான தரவுகளைப் பெறமுடியும் என்பதை நம்பு கின்றர்கள். இந்த நம்பிக்கை ஒரு பெண்ணின் திருமணம் தடைப் பட்டுக் காலதாமதமேற்பட்டுக்கொண்டே இருப்பின் அவரது உருதுவான குறிப்பை வைத்து இக்காலதாமதத்துக்கான கிரகத் தடைகளையறியவும் அதற்கான நிவாரணத்தைத் தேடவும் வழிசெய்யும் என நம்புகிறர்கள்.
ஒருவருக்கு நல்ல பலன் நடைபெருது துன்பமும் தோல்வி யும் தொடர்ந்து இடம்பெறும்போது கிரகங்களின் பகையே அதற்குக்
காரணம் எனும் நம்பிக்கை ஆழமாகவுள்ளவர்கள் சாதகக் குறிப்பைக்
- 105.

Page 60
காட்டுவார்கள் அல்லது சாத்திரங்கேட்கும்போது அடி அளந்து கூறு வார்கள். இவற்றைக்கொண்டு சாத்திரியார் சம்பந்தப்பட்டவர்களின் இடருக்குரிய காரணங்களை விளக்குவர்.
சாத்திரம் கேட்கும்போது வெற்றிலை வைத்துக் கேட்ப து போல் மற்ருெரு வழக்கம் சாத்திரியாரிடம் சென்று கெடுதி கூறும்படி கேட்பதாகும். அவ்வாறு கேட்டதும் சாத்திரியார் அடி அளக்குபடி பணிப்பார். அந்த விபரங்களை வைத்தே தம்மையடைந்தவர் மனதில் உள்ள துன்பம் எதுவென்பதையும், அது நீங்குவதற்கேற்ப உபாயங்
களையும் சாத்திரியார் கூறுவர். இதற்கேற்ப தட்சணை சாத்திரியாருக்கு வழங்கப்படும்.
ஒரு காரியத்தின் நிமித்தம், வெளியே செல்லும்போது சகுனம் பார்ப்பது ஒரு வழக்கம். காரியம் கைகூடுவதற்குச் செல்லும் பாதை யிற் சிலவற்றை விலக்குவார்கள். மொட்டைத்தலை, முக்காடிட்டவர், கைம்பெண் ஆகியவற்றைக் கண்டு சென்ருல் அலைச்சலும் கா ரிய க் கேடும் என்பதுடன் பசுமாடு, அரிசிப்பொதி, வெற்றிலை ஆகியவற்றைக் கண்டு செல்வதனல் காரியம் வெற்றியுடன் கைகூடும் என்பதையும் நம்புகிறர்கள். அவ்வாருன துர்ச்சகுனம் எதிர்ப்பட்டால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று சிறிது நேரத்தின் பின்னரே புதி தாகப் புறப்பட்டுச்செல்வர். அதேபோன்று புறப்படும் வேளையில் தலை யில் அல்லது நெற்றியில் வாசற்படி போன்றவை அடித்தல் கால் இடறு தல் வெளியேறும்போது பின்னுற் கூப்பிடுதல் என்பனவும் துர்ச்சகுனங் களாகக் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு நேரும்போது வீட்டிற்கு வந்து சிறிது நேரம் தாமதித்திருந்து மீண்டும் புறப்படுவதால் துர்ச்சகுனத்தின் தாக்கம் நீங்கப்பெறும் என்பது நம்பிக்கை.
சாத்திரத்திலும், சகுனத்திலும் உள்ள நம்பிக்க்ை பல கருத்து களினின்றும் புலப்படுகின்றன. ஏதாவதொன்றைச் சொல்லும்போது பல்லி கத்தினுல் அது உண்மை என்று நம்புகிறர்கள். உண்மையென் பதை ஊர்ஜிதப்படுத்தவே பல்லியும் சொல்கிறதென்பது அவர்கள் கருதது.
நாய் ஊளையிடுவதும், காகங்கள் பறந்து பறந்து கூட்டமாகக் கரைவதும், கண்ணுடி விழுந்து நொறுங்குவதும் போன்ற நிகழ்ச்சிகள் வீட்டில் நிகழவிருக்கும் துர்ச்சம்பவத்திற்கு முன்னேடியாக இடம் பெறுபவை என்பதும் பலரது எண்ணமாகும். அதேபோன்று வீட்டருகில் ஆந்தை கோட்டான் என்பவை அலறுவதும் அமங்கலகரமான நிகழ்ச்சி களுக்கு முன்நிகழும் துர்ச்சகுனங்களாகக் கருதப்படுகின்றன. இதே போன்று கனவுசளும் பின்னல் நடைபெறவிருக்கும் செயல்களுக்கு முன்னுேடியாக இடம்பெறுபவை என்பது பலரது எண்ணமாகும்.
இந்நாட்டு மக்களின் பண்பாடு விருந்தினரை உபசரிப்பதிற் துல்லியமாகப் பரிமளிப்பதைக் காணலாம். பண்டைய முறைகள் மங்
- 106

காத இடங்களில் இன்றும் விருந்தினரை வாருங்கள் என வாயார அழைத்து, பாய் விரித்து வெற்றிலை வட்டாவும், எச்சிற் படிகமும் பக்கத்தில் வைத்து உபசரிப்பதை இன்றும் காணலாம். சிற்றுண்டிகள் பரிமாறும்போது தண்ணீர்ச்செம்பு கொடுத்து அவர்களுக்கு வாய் அலம்ப உதவுவது வழக்கம், இந்த உபசாரம் கல்யாண வீடுகளில் மேலுஞ் சிறப்பாகவும், சம்பிரதாயங்க:ைாக் கடைப்பிடித்தும் நடைபெறுவதைக் காணலாம்.
திருமண வைபவங்களின்போது மிகவும் விசேடமாகச் சம்பந்தி விட்டார் உபசரிக்கப்படுதல் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உப டிரம் நிகழத் தவறிவிடும் சமயங்களில் கல்யாண வீட்டிற் குழப்பம் ஏற்படுவது சகஜம், கல்யாண வைபவங்களின்போது மாப்பிள்ளையின் பெற்றேர், சகோதரிகள் மிகவும் கெளரவிக்கப்படவேண்டிய விருந் தினர்கள் ஆவர். இவர்களைப் பெண்ணின் தாய்தந்தையரே முன்னின்று வரவேற்று வெள்ளை விரித்த பாயின்மேல் அமரச்செய்தல் வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டை அடைந்ததும், பட்டாசு வெடித் தத் தமது வருகையை அறிவிக்க, அதனை ஏற்றுக்கொண்ட பெண் விட்ாரும் மேலுமதிகப் பட்டாசு வெடித்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டழைப்பர். சம்பந்திமார் பாயில் அமர்ந்தபின்னரே கூடச் சென்ற சபையோர் பாயில் இருப்பர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுவேருக இருப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். முதலில் மாப் பிள்ளையின் தந்தைக்கும், தாய்க்கும் முன்னிலையில் வெள்ளையால் மூடிய வெற்றிலை வட்டாவும் துப்பற் படிகமும் பெண்ணின் தந்தையும் தாயும் முறையே வைக்கவும், ஏனைய உறவினர் இதர சபையினருக்கு இதே போன்று உபசரிப்பை வழங்குவர், பெண்ணின் தந்தை மாப்பிள்ளையின் தந்தைக்கும் பெண்ணின் தாய் மாப்பிள்ளையின் தாய்க்கும் வெற்றி&ல மடித்துக் கொடுப்பர், அதன்பின் இதே முறையிற் வெள்ளையால் மூடிய தண்ணீர்ச்செம்பும், சிற்றுண்டி வகையருக்களும் சம்பந்திகளுக்கு வழங் கப்படுவதைத் தொடர்ந்து ஏனைய சபையோரும் உபசரிக்கப்படுவர். இவ்வேளையிற் சம்பந்திகள் ஏதோ பிணக்கு காரணமாக சிற்றுண்டிகளை உண்ணவில்லையானல் சபையினர் யாருமே அவற்றைத் தொடாது விட்டுவிடுவது வழக்கம். வைபவம் முடிந்த பின்னரும் சம்பந்திகளை வாயில்வரை கூடவே சென்று வழியனுப்பி வைப்பர். திருமண வீட்டிற் பரிமாறப்பட்ட உணவு வகைகள் அத்தனையிலும் ஒரு பகுதி அன்றைய தினமே மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் தாய் அல்லது மிக நெருங்கிய உறவினர் மூலமாக அனுப்பிவைப்பது சம்பந்திகளைக் கெளர விக்கும் ஒழுங்காகும்.
கல்யாண வீட்டில் மூன்ரும் நாள் அல்லது ஐந்தாம் நாள் பெண்பார்க்கவரும் நிகழ்ச்சியை சம்பந்தி வருதல் என அழைக்கப்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்கள் மட்டுமே வருவதால் பெண்களுக்கான உபசாரம் கல்யாண வீட்டில் நடைபெறு வதைப் போன்றே முதன்மை பேணி இடம்பெறும். இத்தினத்தில் வீட்டில் வெள்ளை அவிழ்ப்பதுடன் மாப்பிள்ளை வீட்டாருக்கும், வீட்டுக் குடியுரிமை வண்ணுர்க்கும் விருந்து கொடுத்து உபசரிக்கப்படும்.
- 107

Page 61
iv. மட்டக்களப்பு மக்களின்
பண்பாடு பழக்க வழக்கங்கள்
வித்தகன் விபுலானந்தரை ஈன்று உலகுக்களித்து உயர் சிறப் புப் பெற்றது, ஈழத்தின் கீழ்க்கரையமைந்த மட்டக்களப்பு சோலை களில் மயில் ஆட, வயற்களத்தில் மயிலனையார் கவி பாட, மரச் சோலைகளில் தேன் சொரிய, களப்பில் மீன் பாட, ஆவினம பால் சொரிந்த பண்டைப் புகழ் அமைந்தது மட்டக்களப்பு. ஏறக்குறைய 130 மைல் தூரம் நீண்டு ஒடுங்கி மகாவலிகங்கையையும் குமுக்கஞற்றை யும் வடதென் எல்லைகளாக உடையதாய் 70 மைல் அகன்று ஐந்திணை நிலத்தின் வகுப்புமுடையதாய் அமைந்த இந்நாடு பல இன மக்களும் பல குடிகளாக பண்பு மொழியாட்சியும் உடையோராக வாழ்ந்த பெருமையுடையது. இவர்களது வாழ்க்கை பழமையோடு தொடர் புற்று மிளிர்ந்ததை பல சான்றுகள் வலியுறுத்துகின்றன. காலவெள் ளத்தால் அள்ளுண்டு போகாது, அந்நியர் வருகையால் மாற்றமடை யாது நாகரிக மோகத்தால் அழிவுருது நிலைத்திருக்கும் பல பழக்க வழக்கங்களை கிராமமக்களின் வாழ்க்கை பறைசாற்றுகின்றது.
மட்டக்களப்பு மக்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையுள்ள வாழ்க்கைக் காலம் பல பழைய பழக்கவழக்கம் என்னும் கொம்பர் களில் பின்னிப் படர்ந்ததைக் காணலாம். சமயம் சுகாதாரம் மரபு என்பன கலந்து வேறற்ற ஒர்வகை வாழ்க்கை இயலைப் படைத்தனர். மட்டக்களப்பு வாழ் மக்கள், குழந்தை பிறந்ததும் மாமனர் குழந் தைக்கு கண்ணுரறு சுழித்தல், குழந்தையைப் பெற்றவர் இருக்கு ம் வீட்டு வாசலில் இரும்புக்கம்பி காவலுக்காக இடல், தீச்சட்டியில் பல முகிலிகை புகைத்த்ல், சிரசு உதயநேரம் கணித்துச் சாதகம் எழுது வித்தல், பிறந்த நட்சேத்திரத்திற்கேற்ப எழுத்து ஒழுங்கில் பிள்ளைக்கு நாமமிடல் மருங்கை என்னும் ச ட ங் கு செய்து மருத்து வம் பார்த்தோருக்கு உபகாரமளித்தல் ஆகிய கருமங்கனைச் செய்துவரு வதை நாம் இன்றும் காணலாம். பெண் கருப்பவதியானுல் அவளது கணவன் வீடுகட்டுதல், மரங்கள் நடுதல், சவத்தின் பின்செல்லல் என்ப வற்றை தவிர்த்துக்கொள்வர். பெண் குழந்தை பிறந்தால் கூரையின் மேலாக விளக்குமாறு ஒன்றையும் ஆண் குழந்தை பிறந்தால் உலக்கை ஒன்றையும் மாமனே மாமியோ எறியும் வழக்கம் வழங்கியது. முப்பத் தோராம் நாள் துடங்கும் (ஆசௌசம்) கழிக்கும் நாளில் குழந்தை யின் தலைமையிர் வழித்தல், காது குத் து த ல் தொட்டிலேற்றுதல்
-108

என்பன நடைபெறுவது வழக்கமாயிருக்கிறது. குழந்தை வளர்ந்து ஐந்து வயதடைந்ததும் வித்தியாரம்பம் செய்தல் (ஏடுதொடக்கல்) சிறப்பாக நடைபெறும். பெண் குழந்தை வளர்ந்து பூப்படைந்ததும் பெரியபிள்ளையாகிவிட்டதெனக் குறிப்பிட்டு மஞ்சள் நீராட்டும் வழக்க மும் பெண்கள் வட்டமாகச் சேர்ந்து குரவை இடுதலும் வழங்கிவரு கிறது. புதிய நாகரிகப் பழக்கங்ளும் மேல்நாட்டுப் படிப்புகளும் வளர வளர இத்தகைய பண்டைக்கலைகள் அருகி மெள்ளமெள்ள விடைபெறு கின்றனவாயினும் கிராமமக்கள் இவற்றைப் பேணிக்காக்கின்றனர்.
நமது வீட்டிற்கு வரும் விருந்தினரையோ விருந்து வேளை (விவாக வீட்டுக்கு) வரும் உறவினரையோ உபசரிப்பதில் இம் மக்கள் வாழையடி வாழையாகப் பண்பு குறையாதவர்கள். தண்ணீர்ச் செம்பு வழங்கி உண்ணவரும்படி அழைத்தல் மரபு. மணவினை நிகழ்ச்சியில் மாப்பிள்ளை வீட்டாருக்கு தண்ணீர்ச்செம்பு வெள்ளையால் மூடப்பட்டது வழங்கி அன்னவரைக் கட்டியணைத்து வருவது கெளரவமாகவும் கருதப் பட்டது. விவாகவீட்டுச் செய்தி சொல்லும்போது தாம்பூலம் வைத்த தட்டுடன் சென்று தாம்பூலமெடுக்கச் சொல்லும் ஒர்வகை உபசார மும் திருமணம் மாமன் முறையானவராலே நடத்தப்பெறுகிறது. குடி மக்கள் (வண்ணுன், அம்பட்டன்) அறியக் கலத் தி லி டு த ல் கூறை கொடுத்தல் என்னும் நிகழ்ச்சிகளுடனேயே பெரும்பாலும் நடைபெற்று வந்தது. அன்றியும் பெண் வீட்டிலேயே மணமகன் வதித்தல் பெண் வீட்டார் ஒரு வருட உணவு அளித்தல் என்பன மலையாள நாட்டு முறையோடொப்ப மருமக்கள் தாயபாகம் - என்னும் சீதனவழக்கு என்பன இங்கு நடைமுறையில் இன்றுமிருப்பதைக் காணலாம். உண் கலங்களாகிய சேர்வைக்கால் வட்டி என்பன மெள்ளம்ெள்ள மறைந்து மட்பாண்டங்களும் வெள்ளிப் பொருள்களும் இடம்பெறுகின்றன.
அன்றியும் இப்பகுதியில் மருந்தும் மாந்திரிகமும் மிக விசே டம் பெற்றவை. நோயுற்றபோதுகூட வைத்தியரை நாடும்முன் பூசாரி யையும், மாந்திரிகனையுமே நாடினர் பண்டையோர். திருநீறு ஒதுதல் நூல்கட்டுதல், தண்ணிர் ஓதிக்கொடுத்தல், பேய்பார்வை நீக்கல், செய் வினைக்குக் காய் வெட்டல் போன்றவற்றில் விஞ்ஞானம் மலிந்த இக் காலத்திலும் மனம் ஊறிப்போயிருத்தலை இன்றும் காணலாம். முறிவு வைத்தியத்தில் மந்திர தந்திரம் இடம்பெற்றது. உருக்கு மருந் து எலும்புகள்சேர ஒட்டுமந்திரங்கள் பிறரைத் தம்பக்கம் இழுக்க வசியம் என்னும் மருந்துக்கலவை மலிந்திருந்ததேயாயினும் அது மெல்ல மெல்ல மறைந்தொழிவதைக் காணலாம். A.
இன்னும் மரண வீடுகளில் நிறைமுட்டிகளும் சீலை களும் கட்டப்படுதலும் துக்கம் விசா ரிக்க வருவோரைக் கட்டியழுதலும்
பிணத்தை பாடையில் வைத்து இனத்தவர் சுடுகாட்டிற்குத் தூக்கிச்
- 109

Page 62
சென்று புதைத்தலும் எட்டு நாள்களுக்கு உறவினர் உணவு வழங்கு தலும் இன்றும் அழியா வழக்கமாகும்.
தொற்று நோய்கள் ஏற்படும்போது கொம்புத் தட்டு எடுத் தல், பள்ளயங்கள் வைத்தல் காளி, வைரவர் போன் ற தேவதை களுக்கு நேர்கடன் செலுத்துதல் பலி கொடுத்தலும் வழக்கிலிருந்த தாக அறிகின்ருேம் . நோய் நீக்கத்துக்காக அலகு (செடில்) பாய்ச் சிக் காலடி எடுத்தல் இப்பகுதியில் பெருங்கலை மலிந்த நேர்த்திக்கட ணுகும.
இப்பகுதிகளிலுள்ள கோயில்கள் பெரும்பாலும் சங்கம்ார் என் னும் வேளாளராலே பூசை முடிக்கப்படும். பூசகர்கள் கப்புகன் எனப் படுவர். இவர்கள் சீலையாலே வாயை மறைத்து மெளனமாகப் பூசை செய்வர். அம்மன் கோயில்களில் சந்நதங்கொண்டு தெய்வம் ஆடுதலும் வழக்கிலுண்டு.
விடுமனைகளைக் கட்டும்போது சாத்திரமுறையிலமைத்தலும் ஒவ் வோர் கருமமும் இ னி து முடிவடைய சகுனம்பார்த்தல் பொருள் களை இழந்தாலும் சாத்திரம் கேட்டல் என்பன படித்த மக்கள் மத்தி யிலும் இடம்பெறுகின்றன.
வழிப்போக்கர்களுக்கும் யாத்திரிகருக்கும் உதவும் வண்ணம் தெருக்களில் அம்பலங்கள், தலைவாசல்கள் அமைத்தல் சுமைதாங்கிகள் கட்டுதல் தாகவிடாய் தீர்க்க வீட்டு வாசல்களில் தண்ணிர்ப்பானைகள் வைத்தல் என்பன சிறந்த தொண்டுகளுடன் சேர்ந்த பழக்கங்களாகும். படிப்பறிவற்ற மக்கள்கூட விளங்கும்வண்ணம் ஒய்வுநேர காலத்தில் இதிகாசங்கள் புராணம் படித்து (ஏடுகளில்) பயன் கூறுதலும் இவற் டன் தொடர்பான நாடகங்களை நாட்டுக்கூத்து ஆடி மக்கள் பலன் பெறச் செய்தலும் நம் மக்கள் வழக்கங்களாகும்.
இவ்வாறு எண்ணரிய பழக்கவழக்கங்கள் காலகதியில் மறைந்து விடாது கட்டிக்காத்து பழைமையில் மறுமலர்ச்சியுறச்செய்து நமது நாட்டு மக்கள் குணஇயல்பாகும்.
எனவே கற்றறிந்தோர் இவற்றைத் துருவி ஆராய்ந்து பண் டைப் பண்புகளை புதுமெருகூட்டி வருங்காலச் சந்ததியினர் அறியும் வண்ணம் நிலைநிறுத்துவது செயல்வீரர்களின்மீது சுமத்தப்பட்ட சுமை என்பதை மறுக்கமுடியாது.
- 10

ஐந்தாம் அத்தியாயம்
சைவ ஆலய வரலாறு
Iட்டக்களப்பு மாநிலத்தில் ஆங்காங்கு புராதன சைவ ஆலயங் களை பார்த்தல் கூடும். மிகப் பழங் காலந் தொடங்கியே இவ்வாலயங் கள் அமைந்துள்ளனவாக அறியக்கிடக்கின்றது. உகந்தை மூ ரு ** கோயில், சங்கமான் கண்டி பிள்ளையார் கோயில், திருக்கோயில் சித்திர வேலாயுதசுவாமி கோயில், பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில், பனங்காடு சிவன் கோயில், காரைதீவு கண்ணகி அம்மன் கோயில்: மடத்தடி மீனுட்சி அம்மன் கோயில், பாண்டிருப்பு திரெளபதை அம் மன் கோயில், பெரிய போரதீவு பத் தி ர காளி அம்மன் கோயில் மண்டூர் கந்தசுவாமி கோயில், தாந்தாமலை முருகன் கோயில், கொக் கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், பண்டாரியா வெளி நாக தம்பிரான் கோயில், அமிர்தகளி மாமாங்கேஸ்வரர் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதசுவாமி கோயில், கொத்துகுளத்து மாரியம்மன் கோயில், திமிலைதீவு கிருஷ்ணன் கோயில், திருப்பெருந்துறை பூரீ முத்துக்குமார வ்ேலாயுதசுவாமி கோயில் என்பன இவற்றுள் சிறப்பானவை. இக் கோயில்கள எல்லாவற்றிற்கும் பாரம்பரியக் கதைகளில் பொதிந்த வர லாறுகளை நாம் அறியக்கூடியதாக இருக்கின்ருேம். ஆனல் இவ் வரலாறு களை கோயில் அதிகாரிகளும், வண்ணக்குமாரும் இலகுவில் வெளியிட மாட்டார்கள். எனினும் ஒருசில கோயில்களின் லரலாறுகளை, ஐதிகக் கதைகளை ஒரளவு அறிந்துள்ளோம். அவ்வாறு அறிந்த ஒருசில கோயில் களின் வரன்முறையை இங்கு எடுத்துக்காட்ட விழைகின்ருேம்.
i திருப்பெருந்துறை பூரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி கோயில்.
மட்டக்களப்பு மாநகரம் 2 களப்பால் சூழ்ந்தது. ஒரு காலத் தில் மட்டக்களப்பு துறைமுகமாகவும் அமைந்திருந்தது. துறை முக வழியாக வந்து களப்பினுரடே ஓடத்தைச் செலுத்தி மக்கள் வந்து இறங்கிய இடமே பெருந்துறையாம். இப்பெருத்துறை மாந்தீவிற்கு எதிரே கிழக்குத் திசையில் வலையிறவுத் துறைக்கும், வேப்படித்துறைக் கும் இடைநடுவில் அமைந்திருந்தது. ஆகவே களப்பினுள் அமைந்த இந்த துறை பெரியதாக இருந்தபடியால் அதற்குப் பெருந்துறையென பெயர் வந்துள்ளது போலும். மேலும் பெருந்துறையை அடுத்து உள்ள நிலப்பரப்பில் மக்கள் புழங்குவதும், வதிந்திருப்பதும் வழக்கமான
- 1 l 1 -

Page 63
செயலாகும். பெருந்துறையை அடுத்து மக்கள் வாழத்தொடங்க அவர் கள் தங்கள் சமய வாழ்க்கையினையும் அனுட்டிக்கத் தொடங்குவர். அவ்வாறு அனுட்டிக்கத் தொடங்கவே கோயிலும் தோன்றும். அவ் வகையில் தோன்றிய கோயில்தான் திருப்பெருந்துறை முத்துக்குமார சுவாமி கோயில். ஆகவே பெருந்துறை திருப்பெருந்துறையாக மாறி 6ill-gil.
மக்கள் வதியும் இடங்களில் பாடசாலைகளும் தோன்றுவது இயல்பே. அவ்வகையில் திருப்பெருந்துறையில் பாடசாலையொன்று இயங்கியதாக 1807ம் ஆண்டுக்குரிய வரலாற்றுக்குறிப்பு எடுத்துக் கூறுகின்றது. அக்குறிப்பில் காசிநாதர் என்பார் ஒருவர் அப்பாடசாஜல யில் படிப்பித்ததாக அறியக்கிடக்கின்றது. அவரின் சொந்த இருப்பிடம் கொத்துக்குளம் என்பர். கொத்துக்குளம் அயலிலுள்ளவொரு ஊர். இப்பாடசாலையில் படிப்பித்த காசிநாதர் பதினைந்து வயதுடையவராக இருந்தார் என்றும், அவர் சிறந்த ஆசிரியராகக் கடமையாற்றினர் என்றும், 3 கோடினர் (Cordiner) கூறியுள்ளார். பிள்ளைகள் கன்னக் கொண்டை உடையவர்களாக இருந்தார்களாம். கன்னக்கொண்டையும் சிலருக்கு வலது பக்கத்திலும், மற்றும் சிலருக்கு இடது பக்கத்திலும் இருந்தது. தலையின் முன்பக்க மயிர்களை முன்பக்கமாக இழுத்திருப்பர். பின்புறம் மயிர் வழிக்கப்பட்டிருக்கும். உடையும் பார்க்க அழகாக இருந்தது. புத்தி அறிந்த பிள்ளைகளுக்கு கொண்டை பின்புறத்தில் அமைந்திருந்தது. செல்வம் படைத்த பெற்றேரின் பிள்ளைகள் கழுத்தில் சரடும், கைகால்களில் மோதிரமும், கரணையும் அணிந்திருந்தனர். பாய்களில் அமர்ந்து படிப்பு வேலைகளைச் செய்தனர். எழுதுவதும், படிப்பதும் இராகத்துடன் அமைந்ததாக இருந்தது.
மாப்பாணர் முத்துப்பிள்ளை என்பவர் கோயில் மணியகாரனுக அக்காலத்தில் அதாவது 1809க்கு முன் கடமையாற்றியதாகச் செய்தி கிடைக்கின்றது. அவரின் மகன் விஞசித்தம்பி (மணியகாரன்) என்பார் மேற்படி பாடசாலை ஆசிரியரும், வைத்தியரும், சோதிடரும் ஆகிய காசிநாதரின் மகளாகிய சின்னம்மா என்பாரை திருமணம் செய்ததாக அறியக்கிடக்கின்றது. வினசித்தம்பியின் மகன் 4 வாரித்தம்பி அடுத்து ம்ணியகாரணுக வந்தார். இவர் கார்த்திகேசு என்பவருடைய (மாமன்) மகள் தங்கநாயகத்தை 1881ம் ஆண்டு வதுவை செய்ததாக அவர் களின் சீதன உறுதிதருகிறது. (29 ஆவணி 1881) வாரித்தம்பிக்கு மக்கள் இருவர். அவர்களில் ஐயாத்துரை ஒருவர். மற்றவர் பொன்னுத் துரை. ஐயாத்துரையின் மக்கள் சாரங்கபாணியும், அரங்கநாயகியும் ஆவர். பொன்னுத்துரை பரியாரியாரின் மக்கள் காந்திமதியும், காந்தி யடியானும் ஆவர். இக்காந்திமதியை வதுவை செய்தவரே எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் செ. பூபாலப்பிள்ளையாவர். இவர் களே இப்பொழுது முத்துக்குமாரசுவாமி கோயிலின் 5 மணியகாரர் களாகக் கடமையாற்றி வருகின்றர்கள்.
- 12

இக்கோயிலுக்கு பெரியதுறை, வலையிறவு, வேப்படித்துறைச செங்கலடி, துரைவந்தியமேடு (துரை வந்து இறங்கிய மேடு) என்ற இடங்களின் பெயரால் மணியகாரர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்றும் அறியக்கிடக்கின்றது.
நாட்டில் நிலவிய தொற்றுநோய்கள் காரணமாகவும், வீசிய புயல்காற்று காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும் பெருந்துறை யில் வாழ்ந்த மக்கள் அவ்விடத்தைவிட்டு குடிபெயர வேண்டியதா யிற்று. மக்கள் குடிபெயரவே கோயிலும் பாழடைந்தது. இந்த நில, வரம் 1882ற்கு பிற்பாடுதான் நடந்திருக்கவேண்டுமென்று பெரியதுறை திருமுருகன் பதிகத்தின்மூலம் அறியக்கிடக்கின்றது. ஆகவே அழிவு 1907ம் ஆண்டு வீசிய புயற்காற்றினல் ஏற்பட்டிருக்குமென ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. அன்றியும் 1902ம் ஆண்டு மணியகாரணுகிய விசிைத்தம்பி வாரித்தம்பி மரணத்திரையால் மறைக்கப்பட்டார். அவருக்குப்பின் மணியகாரனக 1972 மட்டும் எவரும் இருக்கவில்லை. 1972ம் ஆண்டு மீண்டும் இக்கோயிலில் அற்புத நிகழ்ச்சிகள் ஏற்பட்ட தின் காரணமாக கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு ஏற்றவகையில் திருப்பணிகள் செய்து 6 நிருவாகங்கள் பரவலாக்கப்பட்டு நித்திய நைவேத்தியங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் சீரும்கிறப்புமாக அமைந்துகிடந்த திருமுகன் கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததொன்ருக இருந்ததென்பதற்குச் சான்முக மட்டுநகர் வித்துவான் ச. பூபாலபிள்ளை அவர்கள் சொன்ன பதிகம் அமைந்திருப்பதை நாம் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆகவே அதனை ஈண்டுத்தருவது மிகையல்ல. அனுபந்தம் பார்க்கவும்.
குறிப்பு:-
1. இக்கோயிலை ஸ்தாபிதம் செய்தவர் தமது பெயரும், தன் மகனது பெயரும் வரத்தக்கதாக கோயிலில் எழுந்தருளியிருக்கும் முருகனின் திருநாமமாக வைத்தமை குறிப்பிடத்தக்கது. فو
2. மட்டக்களப்பு என்பது மட்டம் - களப்பு என்ற சொற்களால் ஆனது. ஆகவே இது தனித்தமிழ் சொற்ருெடர் பெயர். சிங்கள மக்கள் இதனை தீக - மதுள (Diga Madula) என்பர். மகாவம்ச சிங்கள மொழிபெயர்ப்பில் இதனைப் பார்த்தல் கூடும் என்று முதலியார் எஸ். ஓ, கனகரெத்தினம் தமது நூலில் கூறியுள்ளார். பக். 5.
3. Cordiner - Vol. I page 258.
-1 13

Page 64
4. வாரித்தம்பி உண்மையில் நல்ல தமிழறிஞர். சிறந்த புலவருமா வார். தனது மகன் வைத்தியர் ஐபாத்துரை பிறந்தபொழுது அவரின் சாதகக்கிரக நிலையை செய்யுளாகப் பாடியுள்ளார்.
5. மட்டக்களப்பு மாநிலத்தில் உள்ள கோயில்களில் வண்ணக்கு என்ற பிரயோகம் பெருவழக்காயிருக்க இக்கோயிலில் மாத்திரம் தொடக்கம் இருந்து மணியகாரன் என்ற சொற்பிரயோகம் இருந்து வந்துள்ளது.
6. நிருவாகக்குழு மணியகாரன்-ஐ சாரங்கபாணி அதிபர், நிருவாகப் பொறுப்பாளர்: மட்டுநகர் விவாகப்பதிவாளர் டாக்டர் செ. Աւմno) பிள்ளை J.P., திருப்பணிச்சபை: தலைவர்: திரு. கு சோமசுந்தரம் O.A. கணக்காளர்: செ. எதிர்மன்னசிங்கம் கலாசார உத்தியோகத்தர், உதவிக்கணக்காளர்: திரு. அ. துரைராசா இளைப்பாறிய இலிகிதர்.
Guп ug:
"வேலிக்கட்டைக்குப் பிறந்தாலும் போ டிப் பட்டம் போகாது" என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் பழமொழிகளில் ஒன்று. ஆகவே போடி என்பது ஒரு பட்டம்; வரிசை. வன்னிபம், போடி, பாளையக்காரர், படையாட்சி, நாயுடு, நாயக்கர் என்ற வரிசையெல்லாம் தமிழகத்திற் பயின்ற மானியமுறை ஆட்சியில் வந்த தலைமைப்பட்டங்கள்.
போடி என்பது மலையாளப்பகுதி முக்குவர்களுள் வழங் கும் தலைமைப்பட்டம். போடி நாயக்கனூர் என்றேர் கிராமம் மதுரையிலுண்டு. ஆங்கு பதினெட்டாம் நூற்றண்டளவில் போடி நாயக்கர் சிலர் தமது பாளையப்பட்டுக்குத் தலைவராக இருந்தார் என்று இந்தியச் சரித்திரம் கூறுகின்றது.
போடிநாயக்கனூரிலுள்ள கணிகை ஒருத்தி, வேதியன் ஒருவன் தோள் மேலேறி மலர் கொய்தபோது அதனை வியந்து இராமசாமிக் கவிராயர் பாடலொன்று சொன்னதாக எழுதப் பட்டிருக்கிறது.
மட்டக்களப்பிலும் ஒல்லாந்தர் காலத்தில் இரு வர் போடியாக நியமிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
ஆகவே போடி என்பது ஒரு பட்டம். இப்பட்டம் பெற்றவர்கள் அதிக நிலபுலங்களுக்கு உரிமையாளராக இருந் தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கும் போடிப்பட்டம் வர லாயிற்று. ஆகவேதான் நிலபுலங்கள் உள்ளவர்களை இன்றும் போடியார் என்று வழங்கும் பழக்கம் நிலைபெறலாயிற்று போலும்,
- 14

i. யூனி மாமாங்கேஸ்வரப்
பெருமான் கோயில்
கிழக்கிலங்கையிலே வரலாற்றுப் புகழ் மிக்க கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றுள் உகந்தைமலை முருகன், சங்கமான் கண்டி பிள்ளையார், திருக்கோயில் சித்திரவேலாயுதர், தாந்தாமலை முருகன், மண்டூர் கந்த சுவாமி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிற் போரதீவு சுப்பிரமணியர், சித்தாண்டி முருகன் கோயில், திருப்பெருந்துறை முத்துக்குமாரசுவாமி கோயில், அமிர்தகழி மாமாங் கேஸ்வரர் கோயில் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுளே வங்காளவிரிகுடா கடலோடு மட்டுநகர் வாவி சங்கமமா கும் இடத்திலே அமையப் பெற்றுள்ள அமிர்தகழி என்னும் கிராமத் தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரர் பெருமானுடைய சிறப்பினையே ஈண்டு நோக்கலாம். கிழக்கிலே அவிமுத்தி தீர்த்தம் என்னும் தீர்த் தக் கரையினையும், வடக்கில் மதுமலர்க்காவினையும், தெற்கிலும், மேற் கிலும் குருந்தை, கொக்கட்டி, வம்மி போன்ற மரங்களாலும் சூழப் பெற்று இத்தலம் விளங்குகின்றது. அமிர்தகழி, புன்னைச்சோலை, கருவேப்பங்கேணி, நாவலடி, பாலமீன்மடு, மட்டிக்களி என்னும் ஏழு ஊரவர்களும், கோட்டைமுனை வேளாள பகுதியிலுள்ளோரும் சேர்ந்தே இவ்வாலயத்தினை நிர்வகித்து வருகின்றனர். வருடந்தோறும் வருகின்ற ஆடி அமாவாசையிலே கோயிற் பெருவிழா இடம்பெறும். அத்தோடு எல்லா சைவசமயத் திருவிழாக்களும், விரதங்களும், இத்தலத்திலே மிகவும் சிறப்பாகவும், விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகின் றன. ஏறக்குறைய ஒரு நூற்றண்டுகால பழைமைவாய்ந்ததாக இத்தலத் தின் வரலாற்றுத் தன்மையினை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. 1880ம் ஆண்டிற்குப் பின்னரே ஆலயத்தைப் பரிபாலித்துவந்த விபரங் களை ஒரளவு நாம் அறிந்துகொள்ளக் கிடக்கின்றது. அதற்கு மு ன் உள்ள வரலாற்றை கன்ன பரம்பரைக் கதை களை அடிப்படையாக வைத்தே நோக்கவேண்டும்.
இனி இத்தலத்தின் பழைமையைக் காட்டுவதற்கு வழங்கப்பட்டு வரும் கன்னபாம்பரைக் கதைகளை நோக்குவோம். இத்தலத்தினை இரா மாயண காலத்திற்கு முற்பட்டதாகக் காட்டுவதற்கும், இராமாயண் காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் காட்டுவதற்கும் கதைகள் வழங்குகின் றன. அதில் ஒன்று.
-15

Page 65
ஒதையைத்தேடி இலங்கையிலுள்ள அ சோ க வன த் தை அடைந்த அனுமான் இலங்காபுரியைத் தனது வாலினல் எரியூட்டிய பின்னர், வாலிலே பற்றிக்கொண்டிருந்த நெருப்பையணப்பதற்கு இந்த மாமாங்கத்தலத்திலுள்ள தீர்த் தக் குளத்திலே வாலை விட்டதாகக் கூறப்படுகின்றது" இது எதைக்காட்டுகின்றதெனின் இலங்கையில் இராவணன் ஆட்சி நடைபெறுவதற்கு முன்பே இத்தலம் இருந்ததென்ப தேயாகும்.
மற்றயது, "சீதையைக் காத்துவந்த இராவணனை அழித்து சீதையைச் சிறைமீட்ட பின்னர், இராமர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்ற வழியில் இக்கிராமத்தினூடாகச் சென்றதாகவும் அந்நேரம் சோர்வடைந்து இப்பகுதியிலே இளேப்பாறும்போது இலிங்க பூசை செய்யவேண்டிய விருப்பம் ஏற்பட்டதும், அனுமான இலிங்கம் எடுத்து வருவதற்கு இந்தியாவிற்கனுப்பியதாகவும், அனுமார் வரு வ தற்கு தாமதம் ஏற்பட்டதும் இராமர் ஒருபிடி மண்ணை எடுத்து இலிங்கம் சமைத்து அதற்கு அபிஷேகம் செய்வதற்குத் தீர்த்தம் தேவைப்பட்ட தால் தனது கோதண்டவில்லை எடுத்து பக்கத்தில் ஊன்றியதும் அத ஞல் 6Jfbu 'l- பள்ளமே நீர் சுரந்து குளமாகி அதுவே அவிமுத்தி தீர்த்தக்குளமாகியது." எனவும் கதை வழங்குகிறது.
இக்குளம் அமைந்தமைக்கு இன்னுமொரு கதையும் இவ்வூர் வாழ் வயது முதிர்ந்தோர் கூறக் கேட்கக்கூடியதாகவுள்ளது.
鱗 線 இந்தியாவுக்குச் சென்று இலிங்கத்துடன் வே க மா கப் பாய்ந்து வந்த அனுமானுடைய பாதங்கள் பட்ட இடமே இத் தீர்த் தக்குளம் எனவும் கூறப்படுகின்றது. இத்துடன் சேர்ந்த அனு மா னுடைய பாதங்கள் பட்ட ஏழு தீர்த்தங்கள் இப்பகுதியில் இருப்ப தாகவும் கூறுகின்றனர். இக்காலங்களில் இருந்து இத்தலம் பழைமை வாய்ந்தது என்பதை உணரக்கூடியதாக உள்ளதேயொழிய அதனை வரலாற்று முறையில் நிறுவுவதற்கு எதுவித பட்டயங்களோ,கல்வெட்டுக் களோ, புதைபொருட் சான்றுகளோ எமக்குக் கிடைக்கவில்லை. எனவே இக்கோயிற் சிறப்புக்களையும் தலப்பொருள்களையும் நாம் அறிந்து கொள்வதற்குக் கன்னபரம்பரைக் கதைகளே பெரிதும் உதவுகின்றன.
இவ்வாறு இராமாயண காலப்பகுதியைச் சார்ந்ததெனக் கருதப்படும் இம் மாமாங்கேஸ்வரர் காலத்தின் வரலாறுபற்றி இன்னும் சுவையான பகுதிகளை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இராமரால் வைத்து வணங்கப்பட்ட இலிங்கமானது காலப் போக்கில் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்ததாகவும், விந்தனை ப் பகுதியில் வாழ்ந்த வேடர்கள் தேன் எடுப்பதற்காக இப்பக்கமாக வரும்பொழுது, ஒரு நாவல் மரத்தில் தேன் இருப்பதைக் கண்டவொரு
-1 16

வேடன் அதனை எடுக்க நாவலைக் கோடரியால் வெட்டும்போது கோடரி தவறி இலிங்கத்தின்மேல் விழுந்ததாகவும் அதனை வேடன் கவனியா மல் தேனை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடியில் இளைப்பாறியதாகவும், அவன் சற்று கண்ணயரும்போது இறைவன் கனவிலே தோன்றி, உன் னுடைய கோடரியால் அடியுண்ட எனது உடல் வலியெடுக்கின்றது னவே சுடுதண்ணீர் வைத்து வார்க்கும்படி கூறியதாகவும், வேடன் விழித்தெழுந்து ஓடிச்சென்று பார்த்தபோது இலிங்கமொன்று இருப்ப த%னயும், அதிலே கோடரி பட்ட தடம் இருப்பதையும் கண்டு பய பக்தியுடன் சுடுதண்ணீர் வைத்து அபிஷேகம், பூசை முதலியன செய்து இலைகளாலும், குழைகொடிகளாலும் பந்தல் ஏற்படுத்தி பக்தியுடன் வணங்கிவந்தான் என்றும் அறிய முடிகின்றது. வேடுவர்களால் ஒக்க பட்டுவந்த இத்தலம் காலப்போக்கில் இதனையண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களால் பூசிக்கப்பட்டு, வேடர்களை இங்கிருந்து ஒரு மைல் கல் தொலைவிலுள்ள ஊத்துமடுவு என்னும் பகுதிக்கு அப்புறப்படுத்தி அவர்களுக்கு அங்கொரு குமாரகோயிலையும் வழிபாட்டிற்காக அமைத் துக் கொடுத்ததாகவும் கதைகள் வழங்குகின்றன.
இனி இத்தலத்தின் மூலஸ்தானத்திலமைந்துள்ள சிவலிங்க மாகும். ஆனல் இதனை மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் என்றே மக்கள் வழிபட்டு வருகின்றனர். மாசி மாதத்தில் இதனைக் கண்ட தனல் மாமாங்கவாசர் என நாமமிட்டு அழைத்தனர் என்று கூறப்படுகிறது. பன்னிரண்டு வருடத்திற்கு ஒருதடவை வரும் புண் ணிய கர ல மாமகம் - மகாமகம் - மாமாங்கம் என வழங்கப்படுகிறது. மூர் த் ஒ தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள சிறப்பு இத்தலத்திற்குண்டு. மாமாங்கப் பிள்ளையார் எனப் பெயர் பெறும் இக்கோயிலின் மூலஸ்தானத்திலமைந்திருப்பது சுயம்புலிங்க மாகும். சிவனையும் பிள்ளையாரையும் ஒன்றென இப்பகுதி வாழ் மக்கள் கருதி வழிபட்டனர் என்பதை இது காட்டிநிற்கிறது. மாமாங்கரைப் பற்றிப் பாடப்பட்டுள்ள பல தோத்திரங்களும் இதனை வலியுறுத்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பாடலை நோக்குவோம்.
கொக்கட்டி மரநிழலிற் கோயில் கொண்டாய் குணமான நீரூற்று நதியும் கொண்டாய் சொக்கரவர் தன்னருளால் வந்த மூர்த்தி சோபிக்கும் சுயம்புலிங்கம் ஆன மூர்த்தி விக்கினங்கள் அகற்றிடுவாய் விநாயகமூர்த்தி வீரமுள்ள கயமுகனைக் காய்ந்த மூர்த்தி மக்கள் துயர் தீர்த்திடும் மாமாங்க மூர்த்தி - சுவாமி மங்காத செல்வமெல்லாம் தருவாய் நீயே ??
என மாமாங்கப் பிள்ளையார் பெயரிற் பாடப்பட்டுள்ள காவடிப் பாட லில் இருந்து அறிந்துகொள்ளலாம். காவடிப்பாடலொன்றின் இன்னு
- 7

Page 66
மோரிடத்தில், 'கைகூப்பித் தொழவும் நான் அறியேன் மார்க்கம், காருமையா அடியேனை கைலை நேசா." என வருவதும் மனங்கொள் ளத் தக்கது. எனவே மாமாங்கப் பிள்ளையார் கோயில் சிவ னு ம், பிள்ளையாரும் சேர்ந்தவொரு வழிபாட்டுத்தலமாக விளங்குகின்றது. இங்கே நடைபெறுகின்ற வருடாந்த மகோற்சவமான ஆடி அமாவாசைப் பொழுதிலே இறுதி நாளன்று தீர்த்தமாடுதற்காக சிவன், சக்தி, பிள்ளை யார் ஆகிய மூன்று தெய்வங்களும் வீதிவலம் வருவதனையும், நிகழ் கின்ற பூசை சிவனுக்குரியதாக இருந்த போதும், பிள்ளையாரையும் சேர்த்தே சகல வழிபாடும் இடம்பெறுவதும் இதனை க் காட்டிநிற் கின்றது.
தொடக்ககாலத்தில் இத்தலத்திலுள்ள கோயில் களிமண்ணுல் ஆக்கப்பட்டிருந்ததாகவும் ஆயிரத்து எண்ணுாற்று எண்பத்தெட்டாம் ஆண்டில் கொடித்தம்பம் கட்டப்பட்ட பின்னரே பெரிய அளவிலான கோயில் அமையத்தொடங்கியதெனவும் அறியக்கிடக்கின்றது. கோயிலை குருகுலக் கரையாரும் கோட்டைமுனை வேளாளரும் நிருவகித்து வந் துள்ளனர். அமிர்தகழியில் முதன்முதலாக கோயில் நிருவாகத்தை ஏற்று நடத்திய வண்ணக்கராக ஆனந்தர் முத்துப்பிள்ளை விளங்கு கின்ருர், அவரைத் தொடர்ந்து கணபதியாரும் அவரின் பின்னர் அவர் மருகன் மார்க்கண்டர் வண்ணக்கரானுர். அவரைத் தொடர்ந்து சின்னத்தம்பி என்பவரும், பின்னர் செல்லப்பா, செல்லப்பாவின் மூத்த மகன் வீரசிங்கம், அவரைத்தொடர்ந்து சின்னத்துரை ஆசிரியர், அவரின் பின்னர் * சிதம்பரப்பிள்ளைக் கிளாக்கர் இவரின் காலத்தில் உதவி வண்ணக்கராக பொன்னம்பலம் என்பவரும், பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆசிரியர் சின்னத்துரை வண்ணக்கராகவும், பொன்னம்பலம் உதவி வண்ணக்கராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தற் பொழுதும் கடமையாற்றி வருகின்றனர்.
கோட்டைமுனை வேளாளர் பகுதியிலிருந்து ஆரம்பத்தில் பரி காரியார் சின்னத்தம்பியும் அவரைத்தொடர்ந்து அவரின் மைத்துனர் நெல்லிநாதப்பிள்ளை, அதன்பின் அவரது மகன் நெ. க. இராசா பரிகாரியாரும் அவரின் மருமகன் அருநாதப்பிள்ளையும், அதன்பின் அவரின் சகோதரர் குருநாதபிள்ளையும், அவரின் மைத்துனர் சிவகுருவும் வண்ணக்கராகத் தெரிவுசெய்யப்பட்டு கடமையாற்றி வந்தனர். சிவகுரு வண்ணக்கர் தேர்தல் மூலமும் நியமனம் பெற்று காலஞ்செல்லுமட்டும் வண்ணக்கராக இருந்தார். இவரைத் தொடர்ந்து வண்ணக்கராக நெ. சிறிஸ்கந்தராசா என்பவர் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தற் பொழுதும் கடமை பார்த்து வருகிருர். இவருடன் உதவி வண்ணக்
* வண்ணக்கர், உதவி வண்ணக்கர் பதவிகள் இக்காலம் தொடக்கம்
மக்கள் வாக்களிப்பதன்மூலம் தெரிவு நடைபெற்றது.
- 18

கராக கதிரவேலு (மணியம்) முன்னுள் நகரசபை உறுப்பினரும் கடமை
பார்த்து விருகின்ருர், இரு பகுதியிலிருந்தும் கணக்காய்வாளர்களாக கணபதிப்பிள்ளை, பாக்கியராசா ஆகிய இருவரும் தற்பொழுதும் பணி புரிந்து வருகின்றனர்.
இனி மாமாங்கேஸ்வரப் பெருமானுடைய முக்கிய உற்சவத் தொடக்க காலத்தில் ஒரு நாள் திருவிழாவாக நடைபெற்றதாகவும், பின்னர் பதினைந்து திருவிழாவும் தீர்த்தமும் இடம்பெற்றதெனவும், அதன்பின்னர் ஒன்பது திருவிழாவும் தீர்த்தமும் ஏற்பட்டு தற்போதும் அதுவே வழக்கில் இருந்து வருகின்றது. பூசை முறைகள் யாவும் பிராமணக் குருக்கள்மாராலேயே செய்யப்பட்டு வருகின்றன. மகோற் சவம் நடைபெறும்போது நிகழும் கொடியேற்றும் வைபவம், கொடி இறக்கும் வைபவம் இரண்டும் மிக விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. இவற்றை வடமொழியில் "வாஸ்து சாந்தி", "கிராம சாந்தி" எனக் கூறப்படுகின்றது. இவை இரண்டு பூசை நிகழ்ச்சிகளும் கோயில் நிரு வாகத்தினுலும் ஏனைய திருவிழாக்கள் ஊர்ப் பொதுமக்களாலும் நடாத்தப்பட்டு வருகின்றன.
திருவிழா நடைபெறும் காலங்களில் நாட்டின் பல பாகங் களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வந்து கூடுவர். அக்காட்சியானது கண்கொள்ளாக் காட்சியாக அமையும், கோயிலையும் சுற்றுவீதிகளையும் கடைத்தெருக்கள் அணிசெய்து நிற்கும். பக்தர்கள் தங்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக உற்சவம் தொடங்கிய நாள் முதல் தீர்த்தம் முடியவுள்ள நாள்வரை திரள் திரளாக கோயிலுக்கு வந்துகொண்டிருப்பர். மாமாங்கப் பிள்ளையாருக்கு அரோஹரா, அரோஹரா என்னும் பக்தியொலி வானைப் பிளப்பதாக எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும். பல பக்கங்களிலிருந்து காவடி எடுத்துவரும் அடியார் கூட்டமும், கற்பூரவிளக்கெடுக்கும் மாதர் கூட்ட மும், அங்கப்பிரதிஷ்டை செய்யும் பக்தர்களும் தம்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பர். இச்சந்தர்ப்பத்திலே பக்தர்களது. வாயிலிருந்து தோத்திரப் பாடல்களும், காவடிப் பாடல்களும் அம் மானை, கும்மிப் பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். எடுத்துக் காட்டாக மாமாங்கப் பிள்ளையாருக்குப் பாடப்படும் இரண்டொரு பாடல்களை நோக்கலாம். மாமாங்கத்து அம்மானை என்னும் பாடற் ருெகுதியிலிருந்து
" நன்ருன தம்பியரே நானுரைக்க நீர்கேளும்
உண்டானதோர் மாசி மாதமதில் உத்தமரைக் கண்டதனுல் மாமாங்க வாசரென நாமமிட்டார் அண்டர்பிரான் வந்தவித அறிந்தாயே - தம்பியரே."
- 19

Page 67
மாமாங்கப் பிள்ளையார்மேல் பல கும்மிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து ஒரு பாடலை நோக்குவோம்.
* சீராகவே சிறிராமரும் இவ்விடம் பேராக வைத்திடும் லிங்கமது
பாரதில் எத்தனையோ வருஷம் இதை நேராய் உரைத்திடும் மன்னவரே எட்டு லெட்சத்து எழுபது ஆயிரம் ஆண்டுக்கு முன்னேதான் இப்பதியில் திட்டமதாகக் சிறிராமர் வைத்த சிவலிங்கம் என்றறி சேயிழையே ""
என்பது பெண்கள் கும்மி அடித்துப்பாடும் பாடல்வகையைச் சார்ந்தது. இதேபோல் தோத்திரப் பாடல்கள், காவடிப் பாடல்கள் பல மாமாங்கேஸ்வரருடைய மகிமையினையும், சிறப்பினையும் காட்டுவதற் காக இப்பகுதிவாழ் புலவர்களாலும், கவிஞர்களாலும் பாடப்பட்டு வந்துள்ளன.
அடுத்து, மாமாங்கேஸ்வரரை தஞ்சமென வழிபட்டுநின்ற 6ોes) பக்தர்களுக்கு ஏற்பட்ட அற்புதங்களையும், அதிசயங்களையும் பற்றிய பல விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் இரண்டொரு நிகழ்ச்சி களைப் பார்க்கலாம். "முன்பு ஒரு சமயம் மாமாங்கப் பிள்ளை யாரு டைய பக்தன் ஒருவன் தனது கொடிய நோ யை க் குணப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இத்தலத்திற்கு வந்து சுவாமி வெளி வீதிவலம் எழுந்தருளும்போது தீர்த்தக்குளப்பக்கமாக இருந்த ஒரு தென்னை மரத்தின்மீதேறி சுவாமி அருகாமையில் வரும்பொழுது கீழே குதித்ததாகவும், உணர்வற்ற நிலையில் கிடந்த அவனைத் தூக்கியெடுத்து கோயிலுக்குள் கொண்டுபோய்வைத்து சொற்பநேரத்தில் அவன் பழைய படி புத்துணர்வுடன் எழுந்து தன்னைப் பிடித்திருந்த கொடியநோய் பறந்துபோய்விட்டதாகவும் மேலே இருந்து கீழே விழுந்த த ஞ ல் தனக்கு எதுவித வலியோ துன்புமோ தெரியவில்லை எனவும், தனது நோய் தீராவிடின் மரத்திலிருந்து கீழே விழுந் து இறக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் அவ்வாறு செய்ததாகவும் கூறினன் என அறியமுடிகின்றது." அடுத்த சம்பவம் வருமாறு:
" பெண்ணெருத்தி தனது நோயின் கொடுமையைப் பொறுக்க முடியாமற் கோயில் மூலஸ்தானப் பின்புறமாகச் சென்று தனது கழுத்தைக் கத்தியால் அறுத்துக்கொண்டதும் உணர்வற்ற நிலையிற் கிடந்த அவளை வெளியே எடுத்துவந்து நாகதம்பிரான் Gagnrufev (p6ör பாக வைத்தபோது எதுவித ஆபத்தும் இல்லாமல் இருக்கக்காணப் பட்டதோடு அவளுக்கு இருந்துவந்த தீராத பிணியும் நீங்கிப்போயிற்று எனவும் கூறப்படுகின்றது."
- 120

அற்புதக்கதை தொடர்பாக கூறப்படும் இன்னும் ஒரு சம்ப வ்த்தில் ஓரளவு வரலாற்றுத்தன்மையைக் காணக்கூடியதாக இருக் கிறது. " முன்னெரு காலத்தில் மட்டக்களப்பு இராச்சியத்தின4ம் உன்னரசுகிரியையும் ஆடகசவுந்தரி என்னும் அரசியொருத்தி ஆட்சி செய்து வந்ததாகவும், அவளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாகக் கழுத்தில் ஒரு பொய்மறு (மச்சம்) இருந்ததெனவும், அத்தோடு அவள் விண்னக இருந்தபோதும் ஆண்களுக்குரிய தன்மைகளை உடைய வளாகக் காணப்பட்டாள். எனினும் பெண்களுக்குரிய நாணம் முதலான குணங்கள் அவளிடம் காணப்படவில்லை எனவும் அறியமுடிகிறது. இல் பி7று ஆட்சிசெய்துவந்த ஆடகசவுந்தரி ஒருசமயம் குளக்கோட்டு மகா ராசா கிழக்கிலே வந்து ஆலயம் அமைக்கத் தொடங்கியுள்ளான் என் பதைக் கேள்வியுற்றதும், அவனை அடித்து விரட்டுவதற்காகத் தின் படைகளுடன் கிழக்கே செல்லும்போது இந்த அமிர்தகழிப் பகுதியில் கூடாரம் அடித்து தீர்த்தக்கரையோரமாக இளைப்பாறிஞள் எனவும் இச்சந்தர்ப்பத்தில் தோழியருடன் சேர்ந்து தீர்த்தக்குளத்தில் நீராடிய தாகவும் அப்போது அவளது கழுத்தில் இருந்த மச்சமும் மாயமாக் மறைந்ததோடு அவளிடமிருந்து வந்த ஆண் தன்மை மாறி, பெண் களுக்குரிய மெல்லியல்புகள் யாவும் தானகவே வந்தடைந்தன என வும் கூறப்படுகின்றது. இது எதனைக் காட்டுகின்றதெனின் அவ்வளவு சிறப்பும், அதிசயமும் வாய்ந்த தீர்த்தமும், தலமும் இதுவென்பதே யாகும். இக்கதையில் உண்மை பொய் எவ்வளவுதூரம் இருந்தபோதும் மாமாங்கத்தலத்தினது மகிமையை அக்காலத்திலிருந்தே பெரியோர்கள் போற்றிவந்துள்ளனர் என்பது தெளிவாகப் புலனுகிறது.
இறுதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுள் ஒன்ருன மாமாங்கேஸ்வரப் பெருமானுடைய புகழையும், சிறப்பையும் பற்றி வெளியுலகிற்கு இதுவரை எடுத்துக்காட்டுவதற்கான முயற்சிகள் அதிகம் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை. இது மிகவும் வேதனைக் குரியதொன்ருகவுள்ளது. வருடாந்த உற்சவங்கள் நடைபெறும் காலங் களிற்தானும் இத்தலத்தின் மகிமையையும், கீர்த்தியையும் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்காட்டுவதற்கு அறிஞர்கள். பெரி யோர்கள் முயற்சிகள் மேற்கொள்வதாகவில்லை. எனவே இத்துறையில் மாம்ாங்கேஸ்வரப் பெருமானப்பற்றி ஒருசில விடயங்களைச் சேகரித்து எழுதுவதற்கு உதவிசெய்த பெரியார்களுக்கு நன்றி செலுத்தாமல் இருக்கமுடியாது. மேலும், இத்தலம்பற்றிய பல அரிய உண்மைச் சம்பவங்களையும், வரலாற்றுத் தன்மைவாய்ந்த விடயங்களையும் வெளிக் கொணரவேண்டியது சைவப் பெருமக்களாகிய எம் தலையாய பணி யாகும்.
121

Page 68
உசாத்துணைகள் :-
1. சிதம்பரப்பிள்ளை. மா. மாமாங்கப் பிள்ளையார்பேரிற் கும்மிப்
பாட்டு.
2. சிதம்பரப்பிள்ளை. மா. மாமாங்கப் பிள்ளையார்பேரிற் தோத்
திரப் பாட்டு.
3. நெல்லை ராஜு. மாமாங்கப் பிள்ளையார் காவடிப் பாட்டு,
4. சோமநாதர். எஸ். வி. ஒ. அமிர்தகழியில் நடக்கும் தீர்த்த
6pmr, ofurGesFifi 28-7- 1954.
5. சிதம்பரப்பிள்ளை. மா., மாமாங்கத்து அம்மானை.
6. கங்கேஸ்வரி கந்தையா (திருமதி). அரசன் ஆணையும் ஆடக்
சவுந்தரியும்.
7. நடராசா. எவ். எக்ஸ். சி. (பதிப்பாசிரியர்), மட்டக்களப்பு
மான்மியம்.
8. பெரியதம்பிப்பிள்ளை. ஏ. (புலவர்மணி), மாமாங்க்ப் பிள்ள்ை
யார் பதிகம்.
கிள்ளைவடு
கிள்ளைவடு என்பது கரண்டகம். சுண்ணும்புக் கரண்டகம் என்றுங் கூறுவர். கிள்ளைவடு பல சித்திர வடிவங்களில் சங்கிலிக் காம்புடன் பொருந்தியது. இச் சொல்லின் உற்பத்தி யாது? தெரிந்திலது. கிள்ளோட் என்று சிங்கள மக்கள் வழங்குவர். எப்படி இந்தச் சொல் ஆயிற்று என்று அவர்களுக்குந் தெரியாது.
-122

i கொத்துக்குளத்து மாரியம்மன் கோயில்
மட்டக்களப்புப் பிரதேசத்திலே பத்தினி வழிபாடு மிகவும் பிர பல்யம் அடைந்து காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக கிராமங்கள் தோறும் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயில்களையும், மாரியம் மன் கோயில்களையும், திரெளபதியம்மன் கோயில்களையும், காளி கோயில் களையும் குறிப்பிடலாம். இவற்றுள் புகழ்மிக்க ஆலயங்களாகக் காரை தீவு கண்ணகி அம்மன், பாண்டிருப்பு திரெளபதியம்மன், பெரிய போரதீவு பத்திரகாளியம்மன், கொத்துக்குளத்து மாரியம்மன் என்ப னவே மிளிர்கின்றன. இக் கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலைப் பற்றி மட்டுநகர் வித்துவான் ச. பூபாலபிள்ளை அவர் பாடிய மட்டு நகர்க் கொத்துக்குளத்து மகாமாரி அம்மன் அந்தாதிக்கு எழுதியுள்ள முகவுரையிலே குறிப்பிட்டுள்ளதை ஈண்டு நோக்குவாம்.
"வளம் பல கெழுமிய மட்டுநக்ரின் இட திசைக் கண்ண காய்க் கொத்துக்குளமெனப் பெயரிய சிறந்த ஒரு கிராமமுண்டு. அங் நனம் கோயில் கொண்டருளிய மகாமாரி அம்மனுக்குரிய நித்திய பூசை முதலியனவும், வருட விழாக்களும் கிரமமாகச் செவ்வனே நடைபெற்று வருகின்றன. மருங்கு சூழ்ந்துள்ள கிராமங்களினும் பட்டணத்தினு மிருந்து அநேக சனங்கள் இக் கோயிலுக்குச் சென்று வந்தனை வழி பாடுகள் ஆற்றி இஷ்ட சித்திகளைப் பெற்று வருவார்கள். ஆதிலாரங் களினும் திருவிழாக் காலங்களினும் திரளான சனங்கள் குழுவுவதுண்டு.
இங்ங்ணமாயினும் முழு முதற் கடவுளாகிய சிவபிரானேடு சொல்லிடம் பொருந்திய பொருள் போலுந் துணைவியாய்க் கெழுமி யாண்டும் நிறைந்தருள் பராசக்தியாகிய இத் தேவியாரை அநேகர் வரன்முறை தெரியாது பரிகலத் தலைவியராகவும், உக்கிர சோபமுகத் தினராகவும், அம்மை, பேதி முதலிய கொடிய நோய்களை முத்தெ றிந்து விளைவிப்பவராகவும் பேதகமாய் விளங்கி, இடர்ப்படுவர். விநா யகரையும், சுப்பிரமணியரையும் போன்று சிவமைந்த முகூர்த்தங் கொண்டருளிய வீரபத்திரர், வயிரவர்களையும் இன்னணமே மயங்கிப் பேய் வகுப்பிற் சேர்ப்பர். அன்றியும், திரெளபதியம்மன், கண்ணகை அம்மன் முதலிய பத்தினித் தெய்வங்கள் சேர்ந்துள்ள வகுப்பிலே முழு முதற்றேவியாராகிய இப் பெரும் அம்ம்னையும் சேர்த்து மயங்குவர்.
இவ்வம்மனது (தாமஞ்சிய) கோபத்தைத் தணிக்குமாருே பிற என் கருதியோ வருடச் சடங்கின் இறுதி நாளில் ஆடு, கோழி முத லியவற்றை அறுத்துப் பரிகலப் பலி இடுவர். இவ்வழக்கம் பண்டு "
-123s

Page 69
தொட்டுப் பல தேசங்களில் பயின்று வந்தும் இக் காலத்தில் ஒழிக்கப் பட்டு வருகின்றது.
ஒரு தேவதைக்கு உயிர்க் கோழியை அறுத்துப் பலியூட்டுதல் பாவமென்றஞ்சி மாவினல் ஒரு கோழியைச் செய்து பலி கொடுத்த வேந்தொருவன் மாக் கோழியை வதைத்த அக் குற்றத்திற்காக அநேக புன் பிறப்புக்கள் எய்தி வருந்தினனென்று சரித்திரங் கூறும். அன்றி யும் வேள்வியின் பொருட்டு பசு வதை முதலியன பண்டைய யுகங் களுக்கமைந்தன வென்றும் இக் கலியுகத்திலே எவ்வகை உயிர்க் கொலை யும் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் எல்லாத் தரும சாஸ்திரங்களும் வற்புறுத்திக் கூரு நிற்கும்.
ஆதலின் கொத்துக்குள வாசிகள் இவ்விடயத்தை ஆலோசித்து இது காறுஞ் செய்து வந்த கொடுந் தொழிலாகிய உயிர்ப் பலி கொடுத் தலை இனியாவது நீக்கிவிடுவாராக. குளிக்கப்போய்ச் சேறு பூசுவாரில்லை. தேவாலய வழிபாட்டால் பவக்குவையைக் குறைக்க நினைந்து முயன்று செய்கை விகற்பத்தால் அதனை வளர்த்துக் கொள்வது பேதமையே யாம், அம்மனுக்கென்று நினைந்து கைலஞ்சங் கட்டுவதுபோல் பிணி நீக்கற்பொருட்டு ஆடு கோழி முதலியவற்றை நேர்ந்தனுப்புவோர் அப்பெரும்ாட்டிக்கு இவைகள் வேண்டுவனவல்ல என்பதை உணர்வா grns, 6767ä கூறியுள்ளார். இதிலிருந்து இக் கோயில்பற்றிய பல விப ரங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆனல் வித்து வான் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆடு, கோழி என்பன பலியிடும் வழக் கத்தை இன்று பொது மக்கள் நிறுத்திவிட்டனர். இக் கோயிலின் வரு டாந்தச் சிறப்புச் சடங்கு நிகழ்ச்சி வருடந்தோறும், கண்ணகி அம் மன் குளுத்தி முடிந்து அடுத்து வருகின்ற ஆணிப் பெளர்ணமி தினத் தையொட்டியதாக இடம் பெற்று வருகின்றது. இச் சந்தர்ப்பத்திலே சிறப்பு நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்று வெகு விமரிசையாக உற் சவம் நடைபெறும் கொத்துக்குளத்து மாரியம்மன் பேரில் வித்து வான் பூபாலபிள்ளை அவர்களால் பாடப்பட்டுள்ள அந்தாதித் தொடை யில் அமைந்துள்ள நூறு பாடல்களிலுமிருந்து அம்மனுடைய குணுதி சயங்களையும் அற்புதங்களையும் சிறப்பினையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு பாடலை ஈண்டு நோக்கு 6×ntd.
வந்தெனக் கேற்ற வரமருளாது வருந்தவிடிற் சந்ததந் துக்கச் சலதியின் மூழ்கித் தளருவல்யான் கொந்தலர்க் காநிறை கொத்துக் குளத்துயர் கோயிலின்கண் வந்தமர் தேவி மகமாரி தெய்வ மலர்க் கொடியே." இவ்வாறு பல சிறப்புக்கள் மிக்க இவ்வாலயம் இன்னுமொரு விசேடம் வாய்ந்ததாகவுள்ளது. மீன் பாடும் தேனுடாகிய மட்டக் களப்பு வாவி கிழக்கிலே அமைந்துள்ளதோடு நாற்புறமும் கழனியாற் சூழப்பட்டு, எழில் மிகு மட்டுமா நகரின் ஆரம்ப எல்லையில் அமை யப்பெற்று இருப்பதேயாகும். w
-124

iv. திருக்கோ வில் திருமுருகன் ஆலயம்
கினிதூங்கும் முந்திரிகை மரக்காவின் அயற்புறத்தே கதிரின் செந்நெல் நுனிதூங்கும் வளப்பம் நிறைந்த மட்டக்களப்பு மாவட்டத் தின் தென்கோடியில் அமைந்த அழகிய கிராமம் திருக்கோயில் என்று மட்டக்களப்பின் முதுதமிழ்ப் பெரியார் ஒருவர் சில வருடங்களின் முன்பு கூறிச்சென்றமையை நாம் மனத்திருத்திக் கொள்ளும்போது திருக்கோயிலின் சிறப்பு விளங்கும். இவ்வழகிய ஊர் மட்டக்களப்பின் தென்கோடியில் அமைந்திருந்தாலும் இன்று அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரிவில் ஒரு பகுதியாய் விளங்கிவருகிறது.
தமிழகத்திலும் ஈழத்திலும் ஊர்ப்பெயர்கள் பல்வேறு வித மாக அமைந்திருந்தபோதும் திருக்கோயில் என்னும் ஊர் அங்கு அமைந் துள்ள முருகன் ஆலயத்தின் பெருமையால் பெயர்பெற்றிருப்பதும் அதன் சிறப்புக்குக் காரணமாய் அமைகின்றது. திருக்கோயில் அமைய முன்பு திருக்கோயில் ஊருக்கு வேறு பெயர்கள் இருந்திருக்கிறது. இவ்வூரின் முதற்பெயர் வெள்ளை நாவற்பதி என்று வழங்கிவந்ததாகவே அறியமுடிகிற்து. R
வெள்ளைநாவற்பதி என்னும் பெயர் திருக்கோயிலுக்கு அமைந்த தற்கு ஐதிகங்களும் உண்டு. கடற்கரைக்கு அணித்தாய் சுவைதரும் நீர் நிறைந்த சுனையும் பக்கத்தே வெள்ளை நாவல் மரமும் அமைந்த இயற்கைத் தங்குமிடமாக இந்த இடம் விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று முதியோர் சொல்லக் கேட்க முடிகிறது. பண்டைநாளில் போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமல் இருந்ததால் நடைவழியாகச் சென்ற மக்கள் தங்களுடைய ஆறுதல் இடங்களை அல்லது தங்கும் இடங்களை அங்குள்ள ஏதாவது சிறப்பினைக் குறித்துப் பெயரிட்டுவந்தனர். உதாரணமாக மரம் சாய்ந்துநின்ற இடமாய் இருந்தால் அம்மரத்தின் பெயரால் ஊர்ப்பெயர் தோன்றியுள்ளது. சாய்ந்தமருது என்னும் ஊர்ப்பெயர். மருதமரம் சாய்ந்துநின்ற இட மாய் இருந்திருக்கவேண்டும். கல் இருந்த இடம் கல்முனை என்றும், கல்லடி என்றும் பெயர்பெற்றன. மண்டு மரங்கள் நிறைந்த இடம் மண்டூர் எனவும், கொக்குநெட்டி மரங்கள் சோலையாக இருந்த இடம் கொக்கட்டிச்சோலை என்றும் பெயர் பெற்றதும் இவ்வாறேயாகலாம். இப்படி ஊர்ப்பெயர்கள் அமைவது இயற்கையானது. அதுபோலவே
-25

Page 70
திருக்கோயில் ஊருக்கும் வெள்ளை நாவற்பதி எனப் பெயர் கிடைத்த மையும் இயற்கையானது என்றே கொள்ளவேண்டும்.
திருக்கோயிற் பகுதியில் வாழ்ந்துவரும் முதியோர் கூறக் கேட்ட ஐதிகக் கதைகளில் ஒன்று பின்வருமாறு அமைந்திருந்தது.
"காடு சுற்றிவந்த வேடர்கள் ஒருநாள் ஒளிவீசும் தங்கவேல் ஒன்று நாவற்கிளையில் ஊடுருவிப் பிரகாசிப்பதைக் கண்டு கொத்துப் பந்தலிட்டு அவ்வேலைக் கும்பிட்டுவந்தனர். பின்பு இவ்விடயத்தை விபரம்ாக வேந்தனுக்குத் தெரியப்படுத்தினர். வேந்தனும் செய்தியினை அறிந்து வியப்புற்று அவ்விடத்துக்குத் தானே வந்து தங்கவேலைக் கண்டு தரிசித்து அந்த இடத்திலே ஆலயம் அமைப்பித்து ஆலயப் பணிக்கென மக்களையும் குடி யேற்றி மானியங்களும் வழங்கினன்"
இந்த ஐதிகக் கதையில் உண்மை இல்லாமலும் இல்லை. கோயிற் பணிக்கென மன்னன் குடியேற்றிய மக்கள் வாழும் இடங்கள் இன்றும் தனித்தனியாகவே அமைந்து காணப்படுகின்றன. பகுதி பகுதியாக வாழும் மக்கள் தலைவர்களும், அவர்களின் வாரிசுகளுமே கோயிலின் ஊழியங்களிற் பங்கெடுத்துக்கொள்ளுகிறர்கள்.
முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நடைபெற்ற போரிலே (மருகன் எறிந்த வேலானது அவரது ஆணைப்படி சூரனின் தெஞ்சைத் துளைத்தும் அவன் உதிரத்தைக் குடித்தும் வெற்றியுடன் உக்கிரத்தோடு வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூர மலையைப் பிளந்து கடலில் மூழ் கியபின் மூன்று கதிர்களைச் சிந்திச்சென்றதென்றும் வேலுருக்கொண்ட அக்கதிர்கள் மூன்றும் முறையே உகந்தமலை உச்சியிலும், மண்டூரில் தில்லைமரம் ஒன்றிலும், திருக்கோயிலில் வெள்ளைநாவல் மரத்தின்மீதும் வந்திருந்தன என்ற ஐதிகமே அப்பகுதிவாழ் மக்களிடையே பேசப் பட்டு வருகிறது. இதற்குக் கீழ்வரும் பாடலை உதாரணமாகக் காட்டி விளக்கம் கொடுத்தார் ஒரு முதியவர்.
ஆதிநாளிற் கதிர்காமத் தலந்தன்னில்
ஐயன்சிலை குனிந்து எய்ததோர் அத்திரச் சோதிபறந்து கயாமுகன் நெஞ்சைத் துளைத்து.
உதிரங் குடித்து இருபதிசெய்து முக்குளங்கல்லி
பட்டதோர் வாகுரைக் கல்லைப் பிளந்து ஒதக்கடல் ஒலிதீர்த்து வெண்நாவலில் உற்றபதி என்று உலகறியாதோ,
-26

வெள்&ள நாவல் மரத்திலே இருந்த வேலைக்கண்டு கோயில் அமைத்தபின்பு அவ்வூருக்குக் கண்டபாணத்துறை என்ற பெயர் ஏற் Lதெனத் தெரியவருகிறது. கிழக்கிலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததும், கண்ணகை கோயில்களில் தவருது படிக்கப்பட்டுவரும் வழக்குரை ஏடுகளிலும், யாழ்ப்பாணம் மந்திகைக் கண்ணகை அம்மன் கோயிலிற் படிக்கப்பட்டுவரும் கோவலனர் கதையிலும் இப்பெயர் கண்டபாணம், கண்டபாணத்துறை என்றே வழங்கிவருகிறது. எனி னும் இப்பெயரினைக் கந்தன் பாணம் துறை எனக்கொண்டு கந்தப் பாணத்துறை என எழுதியும் வருகிருர்கள்.
திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும், திருவெண்ணிறனியாத திருவிலூரும் பிறவும் ஊரல்ல அடவி காடே என்று அப்பர் சுவாமி கள் கூறியதற்கு அமைய அழகிய திருக்கோயில் அமைந்த திருக்கோவில் என்னும் இவ்வூர் திருவும் கல்வியும் நிறைந்த ஊராக பண்டுதொட்டு இன்றுவரை விளங்கிவருகிறது. அங்கு திருவும் உண்டு. திருக்கோயி லும் உண்டு. எனவேதான் மட்டக்களப்பு உணர்ச்சிக் கவிஞன் "ஊர் என்றல் திருக்கோவில் ஊர்" என்ற தலைப்பில் கீழ்வருமாறு கவிதை
Doop பொழிந்தான்.
சேயோனின் ஈழத்துச் செந்தூர் திருக்கோவில்! தூயதமிழ்த் தெய்வத்தைத் தொழுவோர் ஆயிரவர் ஆயிரவர் இங்கே! கவிஞருக்குத் திருக்கோவில் கற்பனைக்குள் அடங்காது ஊர்என்ருல் திருக்கோவில் ஊர்". w
திருக்கோயில் என்ற பெயர் மாற்றத்துக்கும் ஐதிகக் கதைகள் உண்டு. கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள விண்ணுேர்சிறை மிட்ட லோனது வடக்கு முகமாய் இருந்து கிழக்கு முகமாகத் திரும் பியதால் திருக்கோயில் (திரும்பியகோயில்) என்னும் பெயர் ஏற்பட் டது எனச் சர்வசாதாரணமாகப் பேசப்பட்டு வந்தாலும் முருகன் அருளால் வயது முதிர்ந்த பாட்டி ஒருத்தியின் இளமைப்பருவம் மீண் டும் திரும்பிவந்ததால் திருக்கோயில் எனப்பட்டது என்ற ஐதிகத்தை யும் முதியோர்களிடம் இருந்து கேட்கமுடிந்தது. அந்த ஐதிகக்கதை வருமாறு :-
**ஆலயப்பணிக்காகக் குடியேற்றப்பட்ட மக்களுள் ஆராத்தி எடுக்கும் பெண்ணுெருத்தி சிறுவயதில் இருந்தே அறநெறியும் பக்திப்பெருக்கும் உடையவளாய்ப் பணிசெய்துவந்தாள். பருவ மடைந்தும் பல ஆண்டுகள் சென்றபோதும் அவளின் மனப் போக்கிலே பக்தியின் ஏற்றமே மிகுந்து நின்றது. பருவ எழுச்சி யும், ஆசாபாசங்களும் அவள் உள்ளத்தை மாற்றவில்லை. முருகன் பணியே முழுப்பணியாகக் கொண்டு கந்தன் காலடி
- 127.

Page 71
பிலே காலத்தை அவள் கடத்திவந்தான். காலமும் கடந்தன கந்தன்மேல் அவள் கொண்ட காதலுல் வளர்ந்தது. உடல் பொருள் அனேத்தையும் தங்கவடிவேலனுக்கு அர்ப்பணித்த தங்கம் என்னும் அப்பெண்ணும் முதிர்ச்சி வயதடைந்தாள்.
தங்கம்மாப் பாட்டிக்கு எண்பது வயதும் தாண்டிற்று. முன்புபோலப் பணிசெய்ய அவளது உடல் இடம் கொடுக்க வில்லே. சாம பூசைக்கு ஆராத்தி எடுக்க அவளால் ஒழுங்காக வரமுடியாதுபோகவே ஆலய நிர்வாகிகள் ஆராத்தி வேலயை வேறு ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டனர். மனமுடைந்த தங்கம்மாப்பாட்டி வேஃலநீக்கம் செய்யப்பட்ட அன்றிரவே யாரு மறியாது ஆலயத்து ட் புகுந்து மூலஸ்தானத்தில் முருகன் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து மூர்ச்சித்தாள்.
ܕܡܐ
பொழுது புலரமுன் சாமப் பூசைக்குரிய வேலேகள் நடந்து கொண்டிருந்தன. இளம் பெண்ணுெருத்தி ஆராத்திக்கான ஆயத்தங்களுடன் ஆண்டவன் சந்நிதியில் நின்றுகொண்டிருந் தாள், கண்டவர் ஆச்சரியமடைந்தனர். தங்கம்மாப்பாட்டி கந்தவேல் சுருனேயால் இளம்பெண்ணுக உருவெடுத்த செய்தி ஊரெங்கும் பரவியது. இந்த மாறுதலுக்குப்பின் கண்டபாணத் துறை என்னும் பெயர் மறைந்து திருக்கோயில் என்னும் பெயர் நிலேபெறலாயிற்று".
இந்த ஐதிகத்தைப் பொருளாகக் கொண்டு கீழ்வரும் பாடல் அமைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
" கேளடிமின்னே கிழவி இருமலும்
கிண்கிண்ணென வயது எண்பது சென்றவள்
ஆதிநாள் வேலவர் கோயில் அன்றவள்
ஆராத்தி பின்னிடவே
சூழ்ந்தலத்தோர் முனிந்திடக் கண்டவள்
சொன்ன பலிபீடம் முன்னே விழுந்தழ
ஏழுவயது இளம்பிள்ளேயாய் வர
ஈன்ற திருக்கோயில் என்றறியாயோ'.
மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என வழிவழியாக வழங்கி வரும் மட்டக்களப்பு மான்மியத்திலே இக்கோயிலைப்பற்றிய பழைய வரலாறுகள் சில இடம்பெற்றுள்ளன. இதுவே முதலாவது திருப் படைக் கோவில் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டது. எனவே, இது தேசத்துக் கோயில் என்றும் பொதுவாக அழைக்கப்பட்டுவரு கின்றது. கலிபிறந்து 3110ம் வருடம் வாகூரன் புத்திரன் பிரசன்ன சித்துவின் காலத்தில் இக்கோயில் திருத்தப்பட்ட செய்தியை மட்டக்
- 128

களப்பு மான்மியம் தருகின்றது. பிரசன்ன சித்து மட்டக்களப்பை ஆட்சி செய்துவரும்போது புவனே பகயவாகு என்னும் ஒரு கலிங்க குமரன் சோழநாட்டு மன்னன் திருச்சோழனுடைய மகள் தம்பதி நவ்லாள் என்பவளேத் திருமணம் செய்து சிலகாலத்தின் பின் புத்திர ரின்மையால் இராமேஸ்வரம் தெரிசனே செய்து பின்பு இலங்கை வந்து திருக்கேதீஸ்வரம் தெரிசனே செய்து பின்பு கோணேஸ்வரம் தெரிசனே செய்து நிற்கும்போது மணிபுரத்தை அரசுபுரியும் நாகர்குலத்துச் சிற் றரசனின் மந்திரி கொட்டாயன் என்பவன் புவனேயசுயவாகுவோடு போரிட்டான். போரிலே கொட்டியன் முதலிய நாகர்குலப் பிரதானிகளே யெல்லாம் வெட்டிக்கொன்ற புவனே பகயவாகு சோழநாட்டு வீரியர் களே தெட்சணுபதிக்குக் காவல்வைத்து மட்டக்களப்புக்கு வந்தான்.
மட்டக்களப்பிலே புவனேயசுயவாகுவும் அவனது மனேவியும் பிரசன்னசித்துவுடன் குலமுகமன் கொண்டாடி தெட்சணுபதியை ஒப் புக்கொடுத்துச் சிலநாள் இருந்து தன் நாடு செல்லக் கருத்துற்ருன், அப்போது பிரசன்னசித்து நாகர்முனேயில் பண்டுநாளில் சுப்பிரமணியர் ஆலயம் பாழடைந்திருப்பதால் நாட்டுச் சிற்பிகளே அழைத்துச் செப்ப னிட்டுத் தரும்படி வேண்டினுன், அதனே உணர்ந்த புவனே பகயவாகு வும் தனது மாமன் திருச்சோழனுக்குத் திருமுகம் அனுப்பி சிற்பிகளும் . திரவியங்களும் பெற்ருன், சிற்பிகள் ஆலயத்தைச் செப்ப்னிட்டுப் புவனே பகயவாகுவிடம் ஒப்புக்கொடுத்தனர். புவனே பகவாகு அந்த னர் புத்தியின்படி அபிஷேகம் செய்து திருக்கோயில் என நாமம் சாற்றிப் பிரசன்னசித்துவிடம் ஒப்புக்கொடுத்துச் சிலநாள் இருந்தான். இதேவேளேயில் தம்பதி நல்லாள் கற்பவதியானுள்.
பிரசன்னசித்து மனம் மகிழ்ந்து பு:னேயசுயவாகுவுக்கு ஒரு நாடு உண்டாக்கக் கருதி வடக்கு மக்கனல் வெட்டு வாய்க்கிாலும், தெற்கு மாணிக்ககங்கையும், பேற்கு கடவத்தையும், கிழக்குச் சமுத் திரமாயுள்ள ஒரு கிராமத்தை உண்டாக்கி கடைாமலேயில் மாளிகை உண்டாக்கி கவிபிறந்து 3130ம் வருடம் உன்னரசுகிரி என நாமம் சாற்றிச் கல்விலும் விெட்டி புவனேயகயவாகுவுக்குக் கைலஞ்சமாகக் கொடுத்தான். புவனேயசுயவாகு ஆட்சிசெய்து வரும்போது தம்பதி நல்லாளுக்குப் பிரசவம் ஏற்பட்டது. பிறந்த பிள்ளேக்கு மேகவர்னன் என்றும், மனுனேயசு யாகு என்றும் நாமம் சாற்றிப் பின்பு வங்க தேசத்துக் குலசந்திரனுடைய அழகு வல்வி யை மனம் முடித்துக் கொடுத்து உன்னரசுகிரியைப் பட்டங்கட்டிச் சில காலத்தின் பின் புவனேயசுயவாகு தேசுவியோகம் அடைந்தான்.
கவிபிறந்து 310ம் வருடம் மனுனேயகயவாகு பட்டத்துக்கு வந்தான். அவன் பிரசன்னசித்துவின் மகன் தாசகனேச் சிநேகம்கொண்டு தந்தையால் இயற்றிய நாகர்முனே ஆலயத்தை அந்தனர் புத்தியின்படி செப்னிடக் கருதிச் சோழநாட்டுச் சிற்பிகளே அழைத்து ஏழு தட்டுத்
-129

Page 72
தூபியும், மதில் மண்டபங்கள், மாதர்சாலை, வாகனவிடு, கோபுர வாசல், தங்கத்தகடு பூட்டிய கொடித்தம்பம், தூபியின்மேலே ஏழு தங்கக் குடமும் நிறைத்து ஆறு வீதியும் அலங்கரித்து அந்தணரால் அபிஷேகஞ் செய்வித்துத் தனது மாதா பிதா வம்சத்தாருக்கு வங்க தேசம், சிங்கபுரம், சோழநாடு, கலிங்கநாடு, இராமநாடு இவைகளை அரசுபுரியும் புரவலர்களுக்குத் திருமுகம் அனுப்பிஞன். அதனை வாசித் தறிந்து அரசர்கள் மாணிக்கம், முத்து, இரத்தினம், நாகமணி, தங்கத் தட்டு, பாரிசாதம், சரிகைப்பட்டு இவைகளை ஏழு இராசர்கையிற் கொடுத்துத் தங்கள் தங்கள் பந்துக்கள் நாற்பது திறைகுடிகளையும் அனுப்பிவிட்டனர். மனுனேயசுயவாகு வந்தவர்களை ஆசீர்வதித்து அறுசுவையுடன் அமுதளிப்பித்து அபிஷேகம் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும்படி ஏழு இராசர்களையும் படையாட்சி குலத்தில் மூன்று வன்னியர்களையும் வகுத்து இருபாகை முதன்மையாகக் கலிங்க குலத்து பிரசன்னசித்துவினுடைய சந்ததிகளே வரவேண்டும் என்றும் ஐந்து பண்டாரங்களும், அந்தணர் முதன்மை இராசர் இவர்களுடைய ஊழியர் என்றும் பதினறு சிறைகளும் காராளருடைய ஊழியர் என்றும் மனுனேயகயவாகுவும் தாசகனுக்குக் கற்பித்தனன்.
மட்டக்களப்பு மான்மியம் கூறும் இந்தப் பூர்வ சரித்திர வர்ணனைகளில் இருந்து நாகர் மனை என்னும் பெயரும் திருக்கோயிலுக்கு இருந்ததையும் புவனேயகயவாகு காலத்திலும் அவன் மகன் மனுனேய கயவாகு காலத்திலும் இருமுறை இத்திருத்தலம் சோழநாட்டுச் சிற்பி களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகின்றது. பின்னர் பாண்டியராலும் ஒருமுறை இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள் ளது. கி. பி. 1315க்குப் பின்பு பாண்டியநாட்டினருக்கும் மட்டக் களப்புத் திருக்கோயிலுக்கும் கலையுறவுபற்றிய நேரடித் தொடர்புகள் ஏற்பட்டமைக்குச் சான்றுகள் இருக்கின்றன.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக்கொண்டு சிறப்புடன் விளங்கி மட்டக்களப்பில் மட்டுமன்றி ஈழம் முழுவதிலும் புகழ்பரப்பிவந்த திருக்கோயில் போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்டதாக அறியமுடிகின் றது. ஈழத்தில் போர்த்துக்கேயர் தகர்த்த பல நூற்றுக்கணக்கான கோயில்களைப்பற்றி வன. பிதா. குவேரோஸ் சுவாமி பிரஸ்தாபிக்கை யில் திருக்கோயிலையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (Conquesta, 1931, P. 351). திருக்கோயிலைப்பற்றிக் குவேரோஸ் தரும் குறிப்புகளில் இருந்து அங்கு மூன்று கோபுரங்கள் இருந்தன என்றும் அவை மூன்றும் போர்த்துக்கேயத் தளபதி அஸ்வீடோவினல் அழிக்கப்பட்டன எனவும் அறியமுடிகின்றது.
இக்கோயிலிலே மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இதில் ஒன்று தம்பிலுவில் அம்மன் கோயிலில் இருந்து கிடைக்கப் பெற்றது. இக்கல்வெட்டிலே சிவஞானசங்கரர் கோவில் குறிப்பிடப்
-130

பட்டிருப்பதால் இது திருக்கோவிலில் உள்ள கல்வெட்டு எனக் கருதிய கியூநெவில் அதனைத் திருக்கோவிலில் உள்ள கோயில் மண்டபத்தின் வாசலிலே சேர்த்துக் கட்டுவித்துத் தப்பிரபேனியன் என்னும் சஞ்சிகை யிலும் வெளியிட்டுவைத்தார். இதன்பின்பு இக்கல்வெட்டின் பாடப் பிரதியை முதலியார் எஸ். ஒ. கனகரத்தினம் தனது நூலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டார். இதன்பின் Historicus என்னும் yðar ou uiuif@asraðar L- Suðurf Ceylon Literary Register GT Görgpji சஞ்சிகையில் இக்கல்வெட்டின் பாடப்பிரதியை 1934ல் வெளியிட்டார், இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு அமைந்து காணப்படுகின்றது.
1. பூரீ சங் 14. தில் தை 27. தம் செ 2. கபொ 5. Loir Sid 28. தாணுகி 3. தி பற்ம 6. உய தியதி 29 ல் கொங் 4. ரானதி 17. சிவஞன 30. கைக் க 5. றிபுவன 18. சங்கரகர் 31, ரையில் 6. ச்சக்கிற 32. Grrrrrubu 7. வத்திக 29. லுக்கு 33. சு வைக் 8. ஸ் பூரீ வி 21. கொடுத் 34. கொந்ற 9. Fuu surf 22. த வொ 35. பாவத் ை 10. கு தெவ 23. வில் இ 36. தச்ொள் 11. ந்கு ஆ 24. டி ன்த தன் 37. ளக்கடவு 12. 67G tu 25. மத்துக் 38. எருகவும் 13. த் தாவ 26. கு அகி
இக்கல்வெட்டு ஏறக்குறைய 5 அடி உயரமுள்ள தூண் ஒன்றில் இருபக்கங்களிலே பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற இருபக்கங்களிலும் ஒரு வயிரவர் சூலமும் ஒரு மயிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டிலே எல்லாமாக முப்பத்தெட்டு சிறுவரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டின் முதலாவது வரிக்குமேலே சூரியனும் சந்திரனும் பொறிக் கப்பட்டுள்ளன. இதன் பொருள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டுள்ள மானியம் சந்திர சூரியன் நிலைக்கும்வரை நிலைக்கவேண்டும் என்பதாகும்.
முதலாவது வரியிலும் எட்டாவது வரியிலும் வரும் பூரீ என் னும் எழுத்தைத் தவி கல்வெட்டின் எழுத்து தமிழாகும். இது பதினரும் நூற்ருண்டைச் சேர்ந்த எழுத்து. எனவே கல்வெட்டின் காலம் கி. பி. 1519ம் ஆண்டாகும். இக்கல்வெட்டு பூரீ சங்கபோதி பர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீ விசயவாகு தேவருடைய பத்தாவது ஆட்சியாண்டிலே தை மாதம் 20ம் திகதி பொறிக்கப்பட்ட தெனக் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் நோக்கம் சிவஞானசங்கரர் கோயில் என்ற கோயிலுக்கு வோவில் என்ற இடத்தை யாரோ மானியமாக அளித்ததைப் பதிவுசெய்வதாகும். கொடுத்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
- 31

Page 73
திருக்கோயிலின் தெற்கு மதில் ஒரமாகச் சார்த்தி வைக்கப் பட்டிருக்கும் மற்றைய இரு கல்வெட்டுகளும் திருக்கோயிலுக்கு உரிய தாகும். இதில் ஒன்று 2 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டது. பதினுன்கு வரிகளில் எழுத்துக்களேக் கொண்டுள்ளபோதும் கல்வெட்டு பெரிதும் பாழடைந்திருப்பதால் எல்லா வரிகளேயும் செவ்வனே வாசிக்க முடியவில்லே, முதல் எட்டு வரிகளிலும் உள்ள எழுத்துக்களே மட்டுமே ஒரளவு வாசிக்சுமுடிந்தது. இது பதிஞரும் நூற்ருண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு அமைந்து காணப்படுகின்றது.
1. .சங்க பொதி (வர்மரான்) 3. திறிபு:ன சக்கரவர்த்திகள் 3. (ான) சிவஞானசங்கர (ாசார) 4. பூரீ விசயவாகு தெளரு (க்கு) யா 5. கண்டு. வதில் தைமா (தத்தி . 8. திருக்கொயில் சித் (திர) வெ 7. வாயுத சுவாமி கொயி. ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ زانیہnl GTT = 8
இக்கல்வெட்டு சங்கபோதி வர்மரான திரிபுவனச்சக்கரவர்த்தி சுள் பூரீ விசயவாகு தேவர் எனப்பட்ட ம்ே விஜயபாஹாவின் காலத் தில் எழுதப்பட்டது. கல்வெட்டு எழுதப்பட்ட ஆட்சி ஆண்டும் மாத மும் குறிப்பாக எழுதப்பட்டிருக்கின்றபொழுதிலும் ஆட்சியாண்டைக் குறிக்கும் எண் அழிந்துபோய்விட்டது. தைமாதம் என்பது மட்டும் தெளிவாயுள்ளது.
கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதன் நோக்கத்தை அறியமுடிய வில்லே, திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில் குறிப்பிடப் பட்டிருப்பதால் அக்கோயிலிலே செய்யப்பட்ட ஏதோவொரு திருப் பணியைப்பற்றிய செய்திகளேயே இது கூற முனேந்துள்ளது என்று மட்டும் ஊகிக்கலாம்.
அடுத்த கல்வெட்டு ஒரு சிறிய தூணிலே பொறிக்கப்பட்டுள் ளது. இத்தூண் ஏறக்குறைய 4 அடி உயரமும் 8 அங்குல அகலமும் உடையதாய் இருக்கிறது. இதிலே பொறிக்கப்பட்டவை ஒரு தெல் வயலின் அரைவாசி எல்வேயைக் குறிப்பிடுவதனுல் கல்வெட்டுப் பொறிக் கப்பட்ட தூண் ஓர் எல்லேக் கல்லாகும் எனத் தோன்கிறது. இது கோயில் வாசவில் கற்பூரம் வைத்துக் கொழுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுல்வெட்டின் எழுத்துப் பிற்பட்ட காலத்ததாய்த் தெரிகிறது. இதில் ஆறு சிறிய வரிகள் உண்டு. முதலாவது வரிக்குமேல் சூரியனும்
2

ஆரும் வரிக்குக்கீழ் பிறைச்சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கல்வெட்டிலே குறிக்கப்பட்டுள்ளவை. சந்திரகுரியர் நிலைக்கும்வரை நிகிலக்கவேண்டும் என்பதைக் குறிக்கும்.
1. சகார்த்தம் 4. கு நெல்லு 墨,T齿 5. க்கு அரவா 3. 74 ஆண்
என்ற வாசகங்களே கல்வெட்டில் உண்டு. இதில் முன்பு வேருெரு கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்திருக்கவேண்டும். பின்பு அவ்வாசகம் அழிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அழிந்த நிலேயில் உள்ள இன்னும் சில தூண்அள் கோயிலேச் சுற்றித் தேடுவாரற்றுக் கிடக்கின்றன. அவற்றில் உள்ள எழுத்துக்கள் வாசிக்கமுடியாதவை. சிற்ப வேலேப் பாடுகள் அமைந்த பல கற்தூண்களும் உடைந்த நிலயில் அதிகமாய் அங்கு காணப்படுகின்றன.
கல்வெட்டின் காலம் சகார்த்தம் 1874ம் ஆண்டு எனக் குறிக் கப்பட்டுள்ளது. சகார்த்தம் என்பது சகாப்த ம்என்பதாகும். சகாப்தம் 1874 என்பது கி. பி. 1752ம் ஆண்டைக் குறிக்கும். எனவே இச் சிறிய கல்வெட்டு 18ம் நூற்ருண்டில் எழுதப்பட்டது எனலாம்.
திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமிமீது பல தோத்திரங் சுளும் பாடப்பட்டுள்ளன. இவை சித்திரவேலாயுதன்மேல் பக்தர்கள் கொண்ட இடையரு அன்பைக் காட்டுவன. பண்டிதர் குஞ்சித்தம்பி பினுல் திருக்கோவில் சிவசுப்பிரமணியக் கடவுள்மீது வருக்கமாலே பாடப்பட்டுள்ளது. இது 13 கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்களா லமைந்து ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் முருகனது வேல் அடிய வர்களுக்கு நிரந்தரமான இன்பம் அளிப்பதற்கே அமைந்தது என்னும் உயர்ந்த கருத்தைக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு வருக்கமாலேயில் இருந்து ஒரு பாடலே மட்டும் நோக்குவோம்.
கேளிருற வினர்கள்பகை கொண்டார் மற்றுக்
குணமிகுத்த வினியமனத் தீன்ருள் மாண்டாள் கோவில்வலி யன்பகைத்துக் கொண்டா னத்திாற்
குறுகுதுயர் தமையிசைக்சுக் காலம் போதா மீளில்துயர் எனினு முந்தன் முகைப்பூம் பாதம்
முன்னிடுவோர் தமக்கறுக்கும் மூர்த்தி வாவா ஐந்ாழிசுசு மெனக்களிக்க ஒகை யோடே
இலங்கிலேவேல் பிடித்துவிளே யாடும் கோவே"
மொட்டைவேலாப் போடியார் பாடிய திருக்கோயில் ஊஞ்சல் என்னும் பாடற்ருெகுதியும் இங்கு நோக்கத்தக்கது. தாட்டு மக்களின்
33

Page 74
பேச்சு மொழியினக் கையாண்டதோடு எளிய சந்தமும் தாளக்கட்டும் கொண்டதாக அமைந்து நல்ல சொற்கோப்பு முறையினைக்கொண்டு இது விளங்குவதற்கு வேலாப்போடியாரின் கவித்துவம்ே காரணமாகும். ஊஞ்சற் பாடல்களின் சாயலை ஒத்து முருகன்மேற் காதல்கொண்ட ஒரு பெண்ணின் விரகதாபங்களையும் அவளது உடல்நல வளர்ச்சிகளை யும் இணைத்துக் கவி புனைந்துள்ளார். உதாரணத்துக்குக் கீழ்வரும் ஊஞ்சற் பாடலை நோக்கலாம்.
தந்தன்ன தந்தன்ன தந்தன்ன தந்தன்ன
தந்தன்னத் தானஞ - தன
செம்பவ ளப்பொருள் திங்கள் முகத்துதி தேன்மொழி யாளுடைய - நல்ல
கும்பமு லைக்கிணை வெங்கட கக்கிரிக்
கோடென ஒதிடலாம்
ஆசை மிகுந்தஎன் நேசஞ் சிறந்தபெண்
ஆடர வப்பதுமை - நல்ல
மோகந் தணிந்தனன் நேசம் மிகுந்ததனல்
முலையில் தேமலுமாம்.
தங்கத் தகடும் குவளைக் குமையும் சரிந்த இளமுலையாள் - அந்த
மங்கைக் கொருவர் வடுவுகள் சொல்ல மனதில் முடியாதாம். ميم
வேறு
பாஆப் பழித்தசொல் லாளைச் சிறந்த
பதியில் மணம் முடித்து
வேலப்பர் தன் திருக் கோயிலிற் பூசை
விரும்பி நடத்தினராம்"
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை கிழக்கு மாகாணத்தில் அமைந்த இந்துக்கோயில் பலவற்றுக்குப் பதிகம் பாடிய சிறப்பினைப் பெற்றவர். ஆனைப்பந்தி மண்டூர், சிற்ருண்டி, கொக்கட்டிச்சோலை ஆகியவற்றுக்குப் பதிகம் பாடியதுபோலவே திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமிக்கும் பதிகம்பாடியுள்ளார் என அறியமுடிகின்றது. தில்லை மண்டூர்ப் பதிகமும் (1922, 1965) கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரர் பதிகமும் (1969) வெளிவந்துள்ளன, ஏனையவை வெளிவந்ததாகத் தெரியவில்லை.
திருவாளர் வ. இராசையா திருக்கோவில் சித்திரவேல் செம்மல் பேரில் தமிழ்மொழி அனுதாபப்பத்து பாடியுள்ளார். இது 1956ல் அக்கரைப்பற்று ஆதம் பிரஸ் மூலம் வெளிவந்துள்ளது.
سے 134 سے

V. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில்
மட்டக்களப்புத் தமிழக மெங்கணும் தொன்மை வாய்ந்த இந் துக் கோயில்கள் பல இன்றும் காணப்படுகின்றன. இக் கோயில்களில் ஒரு பகுதியின. 'திருப்படைக் கோயில்கள்" அ ல் லது “தேசத்துக் கோயில்கள்" என்று பெயர் பெற்று வருகின்றன. 'திருப்படை' என் பது பல்வேறு சாதி மக்களினதும் ஒன்றியம் எனப் பொருள் கொள் ளத்தக்கதாக உள்ளது" தேசம் என்பது ம்ட்டக்களப்பைக் குறிக்குமா யினும் அது இன்றைய மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தையே குறிக்கும். எனவே "திருப்படைக் கோயில்கள் அல்லது "தேசத்துக் கோயில்கள் என அழைக்கப்பட்டு வருபவை மட்டக்களப்புத் தேசம் முழுவதிலுமுள்ள பல்வேறு சாதி மக்களுக்கும் உரிமையுள்ள கோயில் கிள் எனப் பொருள்படும். இத்தோடு குளக்கோட்டு வேந்தண்து திவ் விய திருப்பணியைப் பெற்ற பெருமையும் இக் கோயில்களுக்கு உரிய தாகும். பண்டைக்கால மன்னரது மதிப்பும் மானியமும் பெற்றவை யாகவும் இக் கோயில்கள் அமைந்து காணப்படுகின்றன. இவற்றில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலும் ஒன்ருகும்.
மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே மண்முனையினுடாக ஒன் பது கல் தொலைவில் கொக்கட்டிச்சோலை என்னும் கிராமம் அமைந் துள்ளது. பண்டைக் காலத்தில் கொக்கட்டி அல்லது கொக்கு நெட்டி என்னும் மரங்கள் நிறைந்திருந்தமையால் இக் கிராமத்துக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இயற்கை எழில் மிக்க இக் கிராமத்தின் நிழல் மரங்கள் நிறைந்த திருவீதியின் மத்தியில் தான்தோன்றி ஈஸ்வரர் கோயில் கொண்டுள்ள இத் திருக்கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் இறைவன் சுயம்புலிங்கமாகத் தோன்றி அருள் சுரந்து வருவதால் தான்தோன்றி ஈஸ்வரர் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். ஈழத்தின் ஒட்டு சுட்டானிலும் தான்தோன்றியீஸ்வரர் கோயிலொன்று அமைந் திருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இக் கோயிலுக்கு இரண்டு சுற்று மதில்கள் அமைந்துள்ளன. வெளிப்புற மதிலோடு தொடர்பு படுத்தி நான்கு சிறு மடங்கள் நாற்’ புறங்களிலும் உள்ளன. உள்புறத்தில் சிவன் கோயிலின் பக்கங்களில் பார்வதியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு, நவக்கிரகங்கள், நாகதம்பிரான், வைரவர் என்னும் தெய்வங்களுக்குரிய
-13S

Page 75
கோயில்கள் காணப்படுகின்றன. இவை காலத்துக்குக் காலம் தனிப்பட் டவர்களாற் கட்டிக் கொடுக்கப்பட்டவையாகும். சிவன் கோயில் சிக ரத்தையுடைய கர்ப்பக்கிருகத்கையும் நான்கு மண்டபங்களையும், கோபு ரம் இல்லாத முகப்பு எனும் முன்புறத்தையும் கொண்டுள்ளது. இதன் தம்ப மண்டபம் மிக அண்மைக் காலத்திலே கட்டப்பட்டது. அறுப தடி உயரத்தையுடைய கொடிக்கம்பம் ஒன்றை இங்கு கண்டுகொள்ள லாம். இக் கொடிக் கம்பத்திலும் பார்க்கக் கர்ப்பக்கிருகச் சிகரம் பதி வாகவே அமைந்துள்ளது. தம்ப மண்டபம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் காலத்தால் முற்பட்டவையாகும். இங்குள்ள மூன்ருவது மண்டபத்தில் பார்வதி அம்மன் கோயிலுக்கு முன்புறமாக இடபத்தின் கற்சிலை ஒன் றுள்ளது. இக் கோயிலைத் தகர்க்க வந்த போர்த்துக் கேயரை உயிர் பெற்று எழுந்து நின்று விரட்டிய எருது இதுவாகும். கர்ப்பகிருகம் சுயம்பு லிங்கத்தைவைத்தே அமைக்கப்பட்டதென்பர். ஆனல் இது வெளியிற் தெரிவதில்லை. மூல ஸ்தானத்தில் உள்ள பீடத்தில் உமா மகேஸ்வரர் விக்கிரகம்ே தாபிக்கப்பட்டுள்ளது. s'
இக் கோயிலின் வழிபாட்டு ஆரம்பம் பற்றிச் செவிவழி மரபுக் கதை யொன்று இங்கு நிலவி வருகிறது. தேன் தேடிச் சென்ற வேடர் இங்கிருந்த கொக்கட்டி ம்ரமொன்றில் தேன் இருக்கக் கண்டு அம் மரத்தை வெட்டினர், அவ் வெட்டு வாயிலிருந்து இரத்தம் வெளி வந்தது. இவ்வதிசயத்தைக் கண்டு அக்கம் பக்கங்களை அவதானித்த போது அம் மரத்தடியில் லிங்கம் ஒன்றிருக்கக் கண்டனர். அன்றுமுதல் கொத்தால் பந்தலிட்டு வேடர் வழிபாட்டு முறையில் இங்கு வழிபாடு ஆரம்பமாயிற்று எனக் கூறப்படுகிறது. கதிர்காம யாத்திரைக்காக வந்த கொக்கட்டியார் என்னும் தபோதனர் இங்கு சமாதி இருத்தப்பட்ட தாயும் அச் சமாதியில் இருந்து தோன்றிய லிங்கமே இங்குள்ள சுயம்பு லிங்கம் என்றும் இந்த லிங்கத்தை முதன் முதற் கண்ட வேடன் திடகன் என்றும் மட்டக்களப்பு மான்மியம் (1962, பக், 43) கூறும்.
இக் கதையைக் கொண்டு இக் கோயில் வழிபாடு எப்போது ஆரம்பித்தது என க் கூறமுடியாதெனினும் இப்பகுதிகளில் வேடர் வாழ்ந்த காலத்திலே இந்த சுயம்பு லிங்க வழிபாடு ஆரம்பித்திருக்க லாம் என ஊகிக்க முடிகிறது.
வேடராற் கொத்துப் பந்தலிட்டு நீண்ட காலமாக வழிபட்டு வந்த இடத்தில் நிலையானதொரு கோயிலைக் கட்டியது யார் என்ப தையும் அறிந்துகொள்ள முடியவில்லை இதுபற்றி மட்டக்களப்பு மான் மியம் வேறுபட்ட மூன்று தகவல்களை எமக்குத் தருகிறது.
1. மண்முனையைத் தலைநகராகக் கொண்டு சிற்றரசியாக இருந்த உலக நாச்சி என்னும் கலிங்க அரசியாற் கட்டப்
பட்டது:
جي 36 سب

2. இந்தியாவிலிருந்து கதிர்காம யாத்திரை வந்த செட்டியார்,
ஒருவராற் கட்டப்பட்டது.
3. பொல்லநறுவையில் (தோப்பாவை) அரசனக இருந்த சேனன் என்பவனற் பாண்டிய நாட்டுக்கு அனுப்பப்பட்ட படையின் தளபதியும் மட்டக்களப்பின் நிதியதிபனுமாகிய தருமசிங்கன் என்பவனுற் கட்டப்பட்டது. −
இத் தகவல்களில் எந்தளவு வரலாற்றுண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை. இவற்றுள் செட்டி திருப்பணியை இக் கோயில் பெற்றுள்ளதென்பதற்கு வேறு ஆதாரங்களும் உண்டு.
பங்கு கூறும் கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளபடி செட்டி குலத் தோர்க்குத் தேர்த் திருவிழாவுக்கு முதல் திருவிழா கொடுக்கப்பட்டிருந் தது என்பதனையும், இத் திருவிழாவைச் சுமார் கால் நூற்ருண்டுக்கு முன்வரையில் செட்டி குலத்தார் நடத்தி வந்தனர் என்பதனையும் அறிய முடிகிறது. இதேைல இத்திருவிழா இன்றும் " செட்டி திருவிழா " என்று அழைக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
குளக்கோட்டு மன்னஞலே இக் கோயில் கட்டப்பட்டது என் பது இக் கோயிலுடன் தொடர்புடைய அனைவரதும் நம்பிக்கையாகும். இக் கருத்து கோணேசர் கல்வெட்டு இப் பகுதிகளிற் பெற்ற செல்வாக் கினல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சிலர் கருதுகிருரர்கள். குளக்கோட்ட னது திருப்பணியைப் பெற்று ஒழுங்கு படுத்தப்பட்ட கோயில்கள் பற் றிய கல்வெட்டுப் பாடலொன்று பின்வருமாறு அமைந்து காணப் படுகின்றது.
சீர்மேவு இலங்கைப்பதி வாழ்வு தரு
செல்வமும் சிவநேச இரு சமயமும்
செப்புதற் கரிதான மாணிக்க கெங்கையும்
செகமேவு கதிர மலையும்
ஏர் பெறும் தென்கயிலை வாழ் கோணலிங்கம்
மேன்மை தான் தோன்று லிங்கம்
வெற்றிபுனை மயூர சித்திர சங்கார வேல்
வெள்ளை நாவற் பதியதாம்
பேர்பெறும் தென்திருக் கோயில்
சிவாலயம் சிவபூசை தேவாரமும்
செய்முறைகள் என்றென்றும் நீடூழிகாலமும்
தேசம் தளம் பாமிலும்
-137.

Page 76
ஏர் பெருகு பரிதி குலராசன்
குளக் கோட்டர் எவ்வுலக முய்வதாக
ஏழு கோபுரம் கோயில் தொழுவார் தினம் தேட எங்கெங்கு மியற்றினரே."
என்னும் இப் பாடலிலே குளக்கோட்டனது திருப்பணியைப் பெற்ற ஏழு கோயில்களின் பெயர்கள் கூறப்பெற்றிருப்பதை அறிய முடிகிறது. அவையாவன கதிர்காமம் (மாணிக்க கெங்கை) கதிரமலை, கோணேஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர், போர தீவு சித்திரவேலாயுத சுவாமி, வெருகல், திருக்கோயில் என்பனவாகும். திருப்படைக் கோயில்கள் அல்லது தேசத்துக் கோயில்கள் என்னும் தொகுப்புகளுக்குள்ளும் இக் கோயில்களே கூறப்பட்டு வருகின்றன. 6. இதிலிருந்தும், இப்பகுதிகளில் நிலவி வரும் மரபு வழியான தகவல்களில் இருந்தும் குளக்கோட்டன் இக் கோயிலைப் புதுப்பித்தான் அல்லது புதிதாக அமைத்தான் என்றும் அறியமுடிகிறது. அத்தோடு நிருவாகத்தைப் புதிய முறையில் அமைத்தும், தொண்டூழியங்களையும் அவற்றுக்கு உரியோரையும் வகுத்தும் பூசை புனற்காரங்களைத் திட் டஞ் செய்தும் மானியங்களை வழங்கியும் இக் கோயில்களுக்குத் திருப் பணி புரிந்தான் என்றும் அறிய முடிகிறது.
இம் மன்னன் யார்? எக்காலத்தவன் என்பது வரலாற்றியலிற் தீர்வு காணப்படாததொன்ருகவே இருந்து வருகிறது" சோழகங்கன் என இவனது மறு டெயர் கூறப்பட்டபோதும் குளமும் கோட்டமும் கட்டியவன் என்று கூறுவதே பொருத்த முடையதாய் அமைகிறது. இம் மன்னன் பொதுவாகப் பத்தாம் நூற்றண்டின் பின்னரே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. திரு மஜலக் கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டிற் கூறப்படுகின்ற இ.பி. 1223ல் ஈழம் வந்த சோழகங்கனே கோணேசர் கல்வெட்டுக் கூறும் குளக்கோட்டன் என்று வரலாற்றுப் பேரறிஞர் கலாநிதி சி. பத்மநாதன் ஐயுறுகிருர், பேராசிரியர் கா. இந்திரபாலா குளம் கட்டி வளம் பெருக்கிய மஹாசேன மன்னன் அல்லது கோணேஸ்வர ஆல யத்தைத் திருத்திக் கட்டிச் சிற்றரசனக ஆட்சிபுரிந்த கலிங்கத்துச் சோடகங்கன் ஆதல் கூடும் எனக் கருதுகிருர், தான்தோன்றியீஸ்வரர் கோயிலில் வழங்கிவரும் மரபு வழியான செய்திகளும் பாடல்களும் குளக்கோட்டன் பற்றிப் பொதுவான சில முடிவுசஞக்கு வர உதவு கின்றன. இவர் கலிங்கர் இலங்கையில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத் தில் வாழ்ந்தவர். ஓர் இந்தியர். கலிங்கத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர். வீர சைவநெறியில் நம்பிக்கை கொண்டவர்.
கோயில்களின் கட்டிட அமைப்பை நோக்கினும் இப்பகுதி களிலே கலிங்கரது செல்வாக்கு அதிகரித்திருந்த 13ம் நூற்ருண்டிலே
-T38.

இவை கட்டப்பட்டிருக்கவேண்டும்போலத் தெரிகிறது. திருக்கோயிலின் கட்டிட அமைப்பைக்கொண்டு அது திட்டவட்டமாக 13ம் நூற்ருண் டைச் சேர்ந்ததே என முடிவுகட்டியுள்ளனர். தான் தோன்றியீஸ்வரர் கோயில் சுண்ணத்தாலும் சாந்தினலும் அமைந்திருக்கிறது . இதனற் கட்டிட அமைப்பிற் காலத்துக்குக்காலம் சிற்சில மாற்றங்கள் செய்யப் பட்டு வந்திருப்பதை அறியமுடிகிறது. என்ருலும், திருக்கோயிலினதும் தான்தோன்றியீஸ்வரர் கோயிலினதும் கட்டிட அமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் கோயில் அமைப்பு விதிகளும் ஒரே பாணியில் அமைந்திருப்பதை உணரலாம்.
இக்கோயிலின் பரிபாலனம் பழைமை வாய்ந்ததாகக் காணப் படுகின்றது. மூன்று வண்ணக்குமாரைக் கொண்டதாக இப்பரிபாலனம் அமைந்திருக்கிறது. கோயிற் பரிபாலகரை "வண்ணக்கர் அல்லது "வண்ணக்கு" என்று அழைப்பது enட்டக்களப்பிலே சிறப்பாகக் காணப் படுகிறது. இவ்வழக்கினை தொல்காப்பியம் எழுத்ததிகார உரையில் நச்சினர்க்கினியர் கையாண்டுள்ளார். (தொல் - எழுத்து - சூத் - 13, 330 உரை) கண்டி இராச்சியத்தில் பெளத்த ஆலயப் பரிபாலகரை வண்ணக்கு நிலமை" என்று கூறும் வழமை இருந்துவந்திருக்கிறது. எனவே இவ்வழக்கம் சிங்கள மக்களிடம் இருந்து மட்டக்களப்பாரிடம் புகுந்ததோ அன்றி நச்சினர்க்கினியர் ஆட்சியில் இச்சொல் ஆளப்பட் டிருப்பதால் தமிழில் இருந்து சிங்களவரிடம் சென்று புகுந்ததோ தெரியவில்லை.
தான்தோன்றியீஸ்வரர் கோயிலில் மூன்று வண்ணக்குமாரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புகளுக்குப் பாத்திரமானவர்க ளாகக் காணப்படுகின்றனர். இவ்:ெண்ணக்குமார் மட்டக்களப்பு அம் பாரை மாவட்டங்களிற் பரந்து வாழுகின்ற "முற்குகர்" என்னும் சாதி யைச் சேர்ந்தவர்கள். இச்சாதியினருள்ளே காலிங்காகுடி, உலகிப்போடி குடி, படையாண்ட குடி என்னும் மூன்று குடியினருக்குமே இக்கோயி லின் பரிபாலனம் சொந்தமாக இருந்துவருகின்றது. இம்மூன்று குடிப் பிரிவுகளிலும் இருந்து பதவிபெறும் இவ்வண்ணக்குமார் ஆயுள் முழு வதும் பதவியிலிருப்பர். இவ்வண்ணக்குமாருடைய பொறுப்புகளைத் தனித்தனியே நோக்கும்போது காலிங்காகுடி தலைமைப் பதவிக்கும், உலகிப்போடி குடி பொருளாதார அலுவல்களுக்கும், படையாண்ட குடி நிருவாக நடைமுறைகளுக்கும் பொறுப்புடையனவாகக் காணப் படுகின்றன.
இக்கோயிலிற் பூசைசெய்யும் குருக்கள் பரம்பரையினர் சைவ சமயத்தைச் சேர்ந்த 'சங்கமர் ஆவர். சங்கமம் என்பது முழுமை
139

Page 77
பெற்ற அல்லது இலட்சியத்தை அடைந்து விட்ட ஆன்மா எனப் பொருள்படும். அதாவது சீவன்முத்தர் நிலையிலுள்ளவர்களே சங்கமர் இச்சங்கமக் குருமார் லிங்கத்தை அணிந்திருப்பர். பிராமணர்களுக்கும் சங்கமர்களுக்கும் இடையே சில ஒழுக்கநெறிகளில் முரண்பாட்டைக் காணலாம், சங்கமம்பற்றிக் கூறும் நூல் "வீராகம்" எனப்படும். இந்தி யாவில் கர்நாடக பிரதேசத்திலும் சங்கமரைக் காணலாம் என்பர். இவர்களை "நாகார்ச்சுனயுரம்" என்னும் இடத்தில் இருந்து குளக்கோட் டன் கொண்டுவந்து தன் திருப்பணிகளைப் பெற்ற கோயில்களிற் பூசை செய்ய அமர்த்தியதாகக் கூறப்படுகின்றது. சங்கமர் இப்பிரதேசத்திற் குடியேற்றப்பட்ட இடம் 'தம்பட்டை" என்னும் கிராமமாகும். இக் கிராமத்தில் இன்றும் இவர்கள் வழிவந்தோரைக் காணலாம். பண் டைய கிழக்கிலங்கைக் கோயில்களிலெல்லாம் சங்கமர்களே பூசகர்க ளாக அமர்த்தப்பட்டிருந்தனர் என அறியமுடிகின்றது. ஆனல் இன்று தான்தோன்றியீஸ்வரர் கோயில் மட்டுமே இம்மரபினர் பூசை செய்யும் ஒரேயொரு பெரிய கோயிலாகும்.
இங்கு பதினெட்டுச் சிறைகள் செய்யவேண்டிய தொண்டூழி யம்பற்றி மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரம் கூறும் ஏட்டுப் பிரதிகள் கூறுகின்றன. இச்சிறைகளுக்குத் தலைமை பூண்டொழுகி ஏனைய சிறை களின் சேவையைப் பெற்றுக்கொடுப்பதோடு பொறுப்பும் தூய்மையும் கொண்ட தொண்டூழியங்களையும் வேளாளர்களே செய்யவேண்டும் என்பது நியதி. இவ்வாறு இவர்கள் செய்யவேண்டிய சேவைகள் அகக்கடமை, புறக்கடமை என இரண்டாக வகுக்கப்பட்டுள்ளன. இச்சேவைகளை இன்னெருவகையில் தினசரித் தொண்டூழியம், விழாக் காலத் தொண்டூழியம் எனவும் பிரிக்கலாம். இக்கோயில்களிற் திருப் பணிகளைச் செய்வதற்காக வேளாளரை மருங்கூரிலும் பின் காரைக் காலிலும் இருந்து குளக்கோட்டன் அழைத்துவந்ததாயும் இவர்களுக்கு முறையே தானத்தர், வரிப்பத்தர் எனப் பெயர் வந்ததென்றும் கூறப் படுகிறது. வேளாளரிலே பொன்னச்சிகுடி, வைத்தியணுகுடி, அத்தியா குடி என்ற மூன்று குடிகளும் இக்கோயிலுடன் தொடர்புடையோ ராகவுள்ளனர்.
நீண்டகாலப்பகுதிக்கு முன்பு இக்கோயிலின் உற்சவம் பங்குனி உத்தரத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. பின்னர் காலப்போக்கில் இது மாற்றப்படவேண்டிய அவசியம் உணரப்பட்டு தற்போது ஆவணி மாதத்தில் வரும் முதற்பிறையிற் கொடியேற்றப்பட்டு அதனை அடுத்து வரும் பூரணைக்கு அடுத்த திங்களில் தீர்த்தமும் அதற்கு முதல் நாள் ஞாயிறு பிற்பகல் தேர்த்திருவிழாவும் இடம்பெற்றுவருகிறது. சில ஆண்டுகளில் புரட்டாதி மாதத்தில் தேர்த்திருவிழாவும் தீர்த்தமும்
- 40

இடம்பெறுவதுமுண்டு. கொடியேற்றத்தில் இருந்து தேர்த்திருவிழா வரையும் இரவுதோறும் பதினைந்துக்கு மேற்பட்ட திருவிழாக்கள் நடை பெறுகின்றன. இவற்றின் இறுதி ஏழு திருவிழாக்களும் முக்குகர் ஏழு குடியாராலும் நடாத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு முதல்நாள் திருவிழா இங்கு தொண்டுழியம் செய்வோரால் நடாத்தப்பட்டுவரு கிறது. முதற்பகுதித் திருவிழாக்கள் கோயிலின் பொதுக்கணக்கில் நடைபெற்றுவருகின்றன.
இக்கோயிலில் நடைபெறும் தேர்த்திருவிழாவை மட்டக்களப்பு மக்கள் "தேரோட்டம்" என்று போற்றிவருகின்றனர். மட்டக்களப் பிலே தேரோடுகின்ற கோயில் இதுமட்டுமே உள்ளது. சித்திரத்தேர் எனப்படும் பெரிய தேரில் சிவன் பார்வதி பாகராயும், air arturtr எனப்படும் சிறிய தேரில் விநாயகர் முருகப்பெருமானேடும் எழுந்தருளு வார். தீர்த்த தினத்தன்று திருவேட்டை நடைபெறும். இதனையடுத்து கோயிற் பரிபாலகர்களையும், தொண்டூழியர்களையும், விழாவிற் கலந்து கொண்டோர்களையும் கெளரவிக்கும் சீர்வரிசையாக "குடுக்கை கூறுதல்" என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இவற்றின் விபரங்களைப் பங்கு கூறும் கல்வெட்டு, திருப்படைக் களஞ்சியம் முதலியவற்றில் இருந்து அறிந்து
(asmrasir 6mravaruh. 枣
வண்ணக்கு
கோயில் முகாமையாளரை மட்டக் களப்பு மாநிலத்தில் வண்ணக்கர் என்பர். இப்பிரயோகம் யாழ்ப்பாணத்தில் இல்லை. அங்கு மணியம் என்பர். வரும் வண்ணக்கன் என்ற உதாரணம் தொல்காப் பியத்தில் வந்துள்ளது. நாணயப்பரிசோதகனையும் வண்ணக்கன் என்ற பதம் குறிக்கும்.
سے 141۔

Page 78
wi. சித்தாண்டிச் சித்திர வேலாயுதசுவாமி கோயில்
ஆலய வழிபாட்டின் தொடர்பாகவே ஈழநாட்டிலும் பல் வேறு இந்துக் கடவுளர்க்கும் பண்டுதொட்டுப் பல கோயில்கள் எழுந் துள்ளன. இந்த வரிசையில் சித்தாண்டிச் சித்திரவேலாயுத சுவாமி கோயிலும் அழியாப் புகழ்பெற்று விளங்குவதோடு சமய முக்கியத்து வம் பெற்ற திருத்தலங்களில் ஒன்ருகவும் திகழ்ந்துவருகின்றது. வான ளாவி ஓங்கியும், கம்பீரமாகவும் எழுந்துநிற்கும் இக்கோயிலின் எடுப் பான தோற்றமே இதன் பழைமையினையும் சிறப்பையும் எமக்கு எடுத்துரைப்பதாக அமைந்து காணப்படுகின்றது. ஈழநாட்டின் பல் வேறு இடங்களிலும் எழுந்துள்ள சந்நிதானங்கள் செப்பேடுகள் வழி யாகவும், ஒலைச்சுவடிகள் மூலமாகவும், கர்ணபரம்பரைக் கதைகள் வாயிலாகவும் சரித்திரத் தொடர்புடையதாகக் காணப்படுவதைப் போலவே பேரும் சீரும் கொண்டு விளங்கும் ஆலயங்களுள் சித்தாண் டிச் சித்திரவேலாயுத சுவாமி கோயிலும் ஒன்ருகும். இது மட்டக் களப்புப் பட்டினத்துக்கு வடக்கே சுமார் பதின்மூன்று மைல் தூரத்தே அமைந்துள்ளது.
ஈழத்தின் குணபாலமைந்த திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் போன்ற பெரும் புகழ்பெற்ற திருப்படைக் கோயில்களுக்கு உள்ளதுபோன்ற சரித்திரச் சான்றுபெற்ற கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு இல்லையாயினும் மரபு வழியாக வழங்கிவரும் ஐதிகக் கதைகளும் கர்ணபரம்பரை வரலாறும் இத்திருத்தலத்துக்கும் உண்டு. இவற்றினைச் சித்தாண்டி நகரில் வாழ் கின்ற முதியவர்களிடம் இருந்து பெறக்கூடியதாயிருந்தாலும் அவ்வூரில் வாழ்ந்துவரும் பெரியார் ஒருவரிடம் இருந்த ஒலைச்சுவடி ஒன்றின்மூலம் சிலபல பரம்பரைக் கதைகளை அறிய முடிந்தது.
பரம்பரைக் கதைகளும் ஐதிகக் கதைகளும் பொதுவாக எல்லாக் கோயில்களின் வரலாற்றேடும் பின்னிப் பிணைந்து காணப் படுகின்றன. இக்கதைகள் காலங்காலமாகப் பொதுமக்களாற் புனையப் பட்டிருக்கவேண்டும் அல்லது சிறிதளவு உண்ம்ைகளை வைத்துக் கற்பனை செய்யப்பட்டிருக்கவேண்டும். இத்தகைய பரம்பரைக் கதைகள் சித் தாண்டிச் சித்திர வேலாயுதருக்கும் உண்டு. அதாவது:
- 42.

"ஆண்டி ஒருவன் பலகாத வழியைக் கடந்து காட்டு மார்க்க மாகச் சென்றபோது அவனை மதயானையொன்று வழிமறித்தது. அவ் வேளையிலே ஆண்டி முருகனை நினைத்து அபயக் குரல் கொடுத்தான். அபயக்குரல் கேட்டதும் முருகன் அழகான வேடன் உருக்கொண்டு ஆண்டி முன்தோன்றி மதயானையைக் கொன்று மறைந்தருளினன். தனக்கு வர விருந் த அபாயத்தை விலக்கி அபயமளித்த சித்திர வேலாயுதனைத் தன் உள்ளக் கோயிலிலே பூசித்து வந்த ஆண்டி வேலாயுதத்தினை வைத்துத் தன் வழிபாட்டையும் செய்து வந்தான். இவ்வாறு இருந்து வரும்பொழுது அந்தச் சித்திர வேலானது பல அற்புதச் சாதனைகளைச் செய்ததினல் சித்திரவேலாயுத சுவாமி என்ற காரணப் பெயர் இச் சித்தாண்டி முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது" என்பர். ኣ
ஆண்டியின் வாழ்வுக்குப் பின்னர் அவன் வாழ்ந்த இடத்தில் வேல் வைத்து வணங்கிய பகுதியைச் சுற்றிப் பல இடங்களில் இருந்தும் மக்கள் குடியேறினர் என்றும், அவர்களுக்குத் தலைவனுக வேட வன்னி யன் பேரிலாவெளியில் இருந்தும் அதிகாரம் செலுத்தினன் என்றும் சொல்லப்படுகின்றது.
கர்ணபரம்பரைக் கதை தொடர்பாக இன்னுமொரு கதையும்" அப்பகுதிகளில் வாழ்ந்து வரும் வயது முதிர்ந்தோரிடம் இருந்து கிடைத்தது.
"சிகண்டி என்னும் அருந்தவ முனிவர் தமிழ்மீது மிக்க ஆர்வ முற்றுச் செந்தமிழ்ப் பிரமாசாரியராகிய சுப்பிரமணியக் கடவுளைத் தியானஞ்செய்து திருவேங்கட கிரியிற் தவஞ்செய்தார். பின்னர் அவர் முத்தமிழ்முனிவர் அகத்தியரை அணுகித் தீந்தமிழ் பருகி மகிழ்ந்தார். அப்போதுதான் கதிரைத்தலம் என்னும் கதிர்காமத்தைத் தரிசிக்கும் ஆவல் சிகண்டிக்கும் அவர் தம் சீடர்களுக்கும் ஏற்பட்டது. சிகண்டி தன் சீடர்களுடன் உடனே புறப்பட்டு ஈழநாட்டை அடைந்து கதிர் காம யாத்திரை மேற்கொண்டார். அடர்ந்த காடுகளும் கொடிய மிருகங்களும் வாழும் காட்டினுTடே இவர்கள் யாத்திரை செய்யும் போது மதங்கொண்ட யானையொன்று இவர்களை வழிமறித்துக் கொல்ல எத்தனித்தது. உடனே சிகண்டி முனிவிர் கதிரை வேலாயுதக் கடவுளைத் தன் உள்ளத்திலே தியானித்து சடக்கர மந்திரமுரைத்துச் சமீபத்தி லிருந்த வெற்றிலையொன்றைப் பிடுங்கித் தன்கையில் ஏந்தி 'முன்னர் தேவர்களையெல்லாம் வென்றது உண்மையாயின் அறுமுகன் உத்தம் பக்தராயும், அவர் தம் திருவடி த் தாமரையே பற்றுக்கோடாகக் கொண்டமையாலும் இவ்விலையே வேலாகச் சென்று மத யானையை அழிக்குக' என்று சபித்து எறிந்தார். உடனே அவ் வெற்றிலை சுப்பிர மணியக் கடவுளின் திருவருளினுல் வேலாகச் சென்று மத யானையைக் கிழித்துக் கொன்றது. இத்தீரச் செயலைக்கண்ட சீடர்கள் வேலின் மகிமையைத் துதித்து நின்றனர் என்பது பரம்பரைக் கதை.
-143

Page 79
சிகண்டி செய்த அற்புதச் செயல்களால் அவர் வீற்றிருந்த இடங்கள் அவர் பெயராலே அழைக்கப்பட்டு வந்தது என்றும் சிகண்டி என்னும் பெயரே சித்தாண்டி என்ருகியது என்றும் கூறிவருகிருர்கள். மேலே காட்டப்பட்ட இரு பரம்பரைக் கதைகளும் ஆண்டியோடும் சிகண்டியோடும் தொடர்புபெற்றிருப்பதும் இதனை அரண் செய்வதாக அமைகின்றது.
பத்தியிற் ருேய்ந்து ஞானப் பரமஞர் கருணை மேவிச் சித்துகள் மனத்தாற் செய்த சிகண்டியா மாண்டியானேர் முத்தியிற்கலந் தேயீங்கு முறையுற வடங்கலாலே இத்தலமுயர் சித்தாண்டி யெனும்பெயர் பெற்றதன்றே
என்னும் சித்தாண்டித்தல புராணச் செய்யுளும் இதனையே தருகிறது. அத்துடன் இரு கதைகளிலும் மதயானை ஒன்று வந்து வழிமறிப்ப தாகக் கதை கூறப்பெற்றிருப்பதும் ஒரே கதையே காலகெதியில் இரு வேறு ஐதிகங்களைத் தோற்றுவித்திருக்கவேண்டும் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
சித்தாண்டி பூணூரீ சித்திரவேலாயுத சுவாமியின் வருடாந்த மகோற்சவம் ஆண்டுதோறும் ஆவணி மாதங்களிலே வருகின்றது. இதனை,
"ஆண்டியார் தவஞ் செய்த பதிவிளங்க
ஆலயத்து விழாவெடுக்கும் வசந்த காலம் பூண்டுவருமா வணியின் மாத வோரை
பொருந்து பிரதமை நாளிற் கொடியு மேற்றி வேண்டுபல கிரியைகளும் விதியினேடு
வேள்விகளும் மூவைந்து நாட்களாற்ற ஆண்டருளும் வேலரும் வீதிவந்தே
யருள்பொழிந்து மலமகலத் தீர்த்தம் தோய்வார்" என்பதனுல் அறியலாம். அக்காலங்களிலே நாட்டின் பல பாகங்களிலும் இருந்து அன்பர்களும் அடியார்களும் வந்து கூடித் தம் பத்தியைச் செலுத்திக்கொள்ளுகிறர்கள். இந்த வருடாந்த மகோற்சவத்தின் இறுதி மூன்று நாளும் அங்கு விசேட நிகழ்ச்சியாக மயில்கட்டுத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இத்திருவிழா நிகழ்ச்சிகள் வெகு விமர்சை யாகக் கொண்டாடப்படுவதோடு தவருது சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் அக்காலங்களில் நடைபெறும். இறுதியாகத் தீர்த்தோற்ச வத்துடன் வருடாந்த மகோற்சவம் முடிவுறும்.
" என்செயலென்றே யிதயத்திலூறு மிருள் மலத்து
வன்செயல் போக்கி வாய்மையுஞ் சீலமும் வான்பொருளும் இன்சொலுமீகையும் நேர்மையும் தூய விரும் பொறையும் உன்பெருங் கருணையு மீந்தருள் சித்தாண்டியுறை பதியே"
-144

என்னும் வாழ்த்துக்கவியோடு ஆரம்பித்துச் செல்லும் சித்தாண்டித் திருத்தல புராணம் ஆரையூர் நல். அழகேச முதலியாரால் இயற்றப் பட்டு வெளிவந்துள்ளது.
இந்நூல் பாயிரவியலில் விநாயகர், சிவபிரான், குமரக்கடவுள், உமாதேவியார், விஷ்ணு, கலைவாணி ஆகியோருக்கு வணக்கம் கூறிச் செல்லும். பின்பு சித்தாண்டிப்பதியின் இயற்கைவளச் சிறப்பு, மக்கள் தொழில் கலைவளச்சிறப்பு, திருத்தலச்சிறப்பு முதலியன கூறப்பெற்றதும் சிகண்டி முனிவர் வருகை இயலிலே சிகண்டி முனிவரின் வருகையோடு ஆரம்பித்துச் செல்லுகின்றது.
* பன்னகம் பூண்டிலங்கும் பரமனுர் கருணை யுன்னித்
தென்னக மிருந்தே ஈழத் திருத்தலங் கண்டிறைஞ்சி மன்னனை யணுகி யன்பால் மதிக்க வெண்குடையும் பெற்று இந்நகர் வந்துறைந்த இருடியின் சரிதை சொல்வாம்'
** முந்தொரு ஞான்று தன்னில் முருகவேள் வதுவை வேட்ட
செந்திரு வள்ளியம்ம்ை சீர்கெழு மரபாரென்று வந்திடு குடிகளிங்கு வளமொடு வாழுநாளிற் கந்தவேல் கையிற்ருங்கிக் களிப்பொடு முனிவன் வந்தான்"
என்றிவ்வாறு சிகண்டி முனிவரின் வருகையோடு சித்தாண்டித்தல வரலாறு கூறப்பட்டுள்ளது. இப்புராணம் பெரியகழுவன், சின்னக் கழுவன் முதலிய வேடுவச் சகோகார் முனிவரை உபசரித்தல், வேடுவர் .அத்தி மரமொன்றின் கீழ் குடிசை அமைத்துக் கொடுத்தல், அக்குடிசை யில் சிகண்டியார் வேலாயுதத்தைப் பிரதிஷ்டை செய்து பூசை செய்தல், அடியார்களுக்குத் திருவெண்ணீற்றினுல் தீவினைகளை நீக்கிப் பல சித்து களை முனிவர் செய்தல், அவர் நிஷ்டையில் இருந்த தோற்றம் முதலிய வற்றைத் தொடர்ச்சியாகக் கூறிச் செல்லும்.
சித்தாண்டி மக்களின் குடிவரிசைப் பெயர்ச் சிறப்பு, சித் தாண்டி முருகனுக்குக் கற்கோயில் அமைக்கக் கல் எடுக்கச் சென்ற காட்சி, சித்தாண்டிச் சித்திரவேல் மகத்துவம் முதலியனவும் பிறவும் நூலாசிரியரின் கற்பனை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. இந்நூலின் இறுதியிலே சேர்க்கப்பட்டுள்ள சித்தாண்டி முருகன் மீது முறையீட்டுப் பத்து என்னும் தோத்திரங்கள் அழகேசமுதலியாராலே பாடப்பட்டுள்ளன. பத்துப் பாடல்களைக் கொண்ட இம்முறையீட்டுப் பத்திலே சித்தாண்டிச் சித்திரவேலாயுத சுவாமியின் திருவிளையாடல் களையும் அற்புதங்களையும் கூறுவதோடு நூலாசிரியர் தனக்குள் ள வறுமை, கவலை, நோய், பிணி முதலியவற்றை நீக்கியருளும்படி சித்தாண்டி முருகனிடம் வேண்டுதல் செய்கின்றர்.
-145.

Page 80
*" என்பு தோல் போர்த்த சீவரிலொன்ருய்
என்னையும் புரிந்திடா யிலையேல் பின்பு யாரிடத்துப் போய் முறையிட்டுப்
பிறவியின் தொல்லையைத் தீர்ப்பேன் மன்புவி போற்று வயங்கு சித்தாண்டி
வான்பதி யுறைந் தருளரசே அன்புளங் கொண்டு இன்னலைப் போக்கி
ஆதரித் தாள்வதுன் கடனே"
என்னும் ஒரு பாடலை மட்டும் இங்கு உதாரணத்துக்குக் கொள்வது பொருத்தமாகும்.
சித்தாண்டி நகரிலுறைகின்ற பூரீ சித்திரவடிவேல் முருகர்மீது 103 ஊஞ்சற் பாடல்களைக் காரைதீவைச் சேர்ந்த சீ. கதிரமலை பாடி 1954ல் மட்டக்களப்பு அர்ச். அந்தோனியார் அச்சகம்மூலம் வெளி யிட்டுள்ளார். இப்பாடல்கள் மூன்று வகை ஊஞ்சற் பாடல்களின் தருக்களைக்கொண்டு ஆக்கப்பெற்றுள்ளது.
** சீர்பெற்று ஒங்கிய சிற்றண்டி நகர்தனில்
திறமையுட னமர்ந்த செல்வனும் சித்திர வடிவேலர் தன்மேற் சிந்து மிகப் பாட**
என்று தொடர்ந்து செல்லும் இந்த ஊஞ்சற் பாடல்கள் கோயிலின் அழகுபற்றிக் கூறுவதை நோக்கமாகக்கொண்டு அங்கு அமைந்துள்ள கோபுரத்தின் சித்திர வேலைப்பாடுகளைக் கூறிப் பின்னர் அங்கு நிழல் தரும் ஆலமரத்தின் அழகு, தெய்வானை அம்மன் கோயில், வள்ளி யம்மை கோயில் முதலியனவற்றின் அழகு பற்றியும் கூறப்பெற்றுள்ளன.
** இருந்தது சுற்றிலும் அறுபத்து மூவரின்
சித்திர மானதுவும் எங்கும் தரிசித்து வந்தவுடனே என்ன சொல்வேன் மகிமை"
* மகிம்ை செறிதரு மூலஸ் தானத்தில்
மங்காத தீபமுடன் வடிவேல் துலங்கவே தீப ஆராதனை தன்னையும் கண்டேனே"
என்றிவ்வாறு கூறிச் செல்லும் இவ்வூஞ்சற் பாடல்கள் வள்ளிக்கும் முருகனுக்கும் நடைபெற்ற களவொழுக்கத்தினை நிலைக்களமாகக் கொண்டு கதை கூறிச் செல்லுகின்றது. முருகன் கிள வேடங்கொண்டு
- 46

வள்ளியிடம் சென்று நடத்தும் திருவிளையாடல்க்ள் யாவும் அழகாகப் புனையப்பெற்றுள்ளன.
*" வடிவுசேர் வள்ளிமானித
மணந்திட மனது கொண்டு அதிசய சரவண பவகுக சண்முக அறுமுகவன் சென்றனரே" v,
" சென்றுமே வள்ளிதன்னைத்
தினைப்புனந் தனிலே கண்டு தேவர் கன்னிகையே மாதிவளென்று தியங்கி மனம் வியந்தனரே'
என்னும் ஊஞ்சற் பாடல்களால் இதனை அறிந்துகொள்ளலாம்.
செட் டி பாளையத்தைச் சேர்ந்த க. உ. சின்னவப்புலவர் "சிற்ருண்டிமுருகையின் கோயிலைப்பற்றிப் பாடியதும் அவர் கோபுர வாசல் அழகும்" என்னுந் தலைப்பில் இருபது எண்ணிகளைக் கொண்ட பதங்களை வெளியிட்டுள்ளார். இப்பாடல்கள் கல்முனை மொடேண் அச்சகம்மூலம் வெளிவந்துள்ளன.
*" எங்கும் முருகன் அருளுண்டு பாரம்மா
இவ்வாண்டு சிற்ருண்டி போய் வருவோமம்மா தங்கும் மடங்கள் அதிக முண்டம்மா
சுவாமி திருவிழா பார்த்து வருவோம்நீாம்"
** முருகனைக் காண எல்லோரும் வாருங்கோ
முன்னும் பின்னுமாக றெயிலடி வாருங்கோ
தருவார் வரம்து வாங்கிக் கொள்ளுங்கோ
சன்னதி வாயிலைச் சுற்றிப் போற்றுங்கோ'
என்று தோத்திரஞ் செய்து இப்பாடல்கள் சித்தாண்டி முருகையனைப் பற்றியும் அவர் கோயில் அழகு பற்றியும் கூறிச்செல்லும்,
பதின்மூன்று செய்யுள்களை உடையதாகச் "சித்தாண்டிக் கந்தசுவாமி பேரில் தோத்திரப் பத்து" அமைந்துள்ளது. இத்தோத் திரப் பத்துக்கள் யாவும் முருகையனிடம் மன்ருடித் தோத்திரஞ் செய்துகொள்வதாகவே அமைந்துள்ளன.
- 147

Page 81
*** மண்டலத்தில் உனையல்லால் எனக்கு வேறு
தந்துதவி செய்வாரைக் காணேனையா
கன்றிழந்த பசுப்போலக் கலங்கிறேன் யான்
காருமையா கருணைவைத்துக் கார்த்திகேயா
பண்டுமறை சிறந்திலங்க உனது பாதம்
பணிந்தேன்யான் பலநாளும் டாரும் கண்ணுல்
சென்றெனது மனத்துயரம் அகற்றியாள்வாய் - சுவாமி
சிற்றண்டி நகரிலுறை தேவா போற்றி"
** மாதாப் பிதாவுன்னை யன்றி வேறு
வையகத்தி லெனக்கு ஒருவரில்லை என்று வேதாந்தமான சிவனுர்தன் மைந்தா
விரும்பினேன் உன்பதத்தை யானும் வேண்டிச் சூதாடிப் பஞ்சவர்கள் தோற்ற வண்ணம்
துயர்கொண்டேன் துணையில்லாப் பாவிேயானேன். சீராகவுன் பாதந்துதிப்பேனையா - சுவாமி
சிற்றண்டி நகரிலுறை தேவா போற்றி"
என்னும் இரு செய்யுட்களை மட்டும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
இவ்வாறு சித்தாண்டி முருகையன் மீது அன்பர்கள் தமக்குள்ள பக்தி மேலீட்டினல் தோத்திரங்களையும், ஊஞ்சற்பாடல்களையும் பாடிச் சென்றுள்ளபோதும் அவற்றுள் ஒரு சில மட்டுமே இங்கு எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. சித்தாண்டி முருகையன் மீது வெளிவந்துள்ள தோத்திரங்கள் காவியங்கள் என்பன பலப்பலவா யிருந்தபோதும் அவை முழுவதும் இங்கு காட்டப்படவில்லை. புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை பாடிய "சிற்றண்டிக் கந்தசுவாமி பதிகம்" மிகவும் விரைவாக அச்சுவாகனம் காணவேண்டும் என்பது எமது உள்ளக்கிடக்கை. 景
கப்புகளுர்
ஆலயத்தின் மூலத்தானத்தைக் கர்ப்பக்கிருகம் என்பர். கர்ப்பூரம் > கருப்பூரம் > கற்பூரம் ஆனதுபோல் கற்பக்கிருகம் ஆயிற்று. கற்பக்கிருகத்தினுள் எல்லாரும் போக முடியாது. பூசை செய்பவர் மாத்திரம் போகலாம். ஆகவே அவரைக் கற்பகஞர் என்றனர். அது காலக்கிரமத்தில் கப்பு கஞர் ஆயிற்று. அதுவுஞ் சைவக்குருக்கள்மாரையே குறிக்கும். கதிர் காமப் பூசாரியும் "கப்புருளை" எனப்படுகின்ருர். கர்ப்பக் கிருகத்தினைக் கற்பம் என்றுங் கூறுவர்.
-1 48

ஆரும் அத்தியாயம்
1. சோழமண்டலத்துத் தமிழும் ஈழமண்டலத்துத் தமிழும்
s) நாட்டிலிருந்து வெளிவரும் "மாடர்ன் ரெவ்யூ" என்னும் ஆங்கில மாசிகை யொன்றிலே "தமிழ் மொழி ஒலியியல்" (The Phonetics of the Tamil Language) at air glib urg air upsis 905 வியாசம் எழுதி வெளியிட்டேன். தென் மொழிச் சார்பாகிய பொரு ளினை மேற்றிசை மொழியில் எழுதி வடநாட்டு மாசிகையில் வெளி யிட வேண்டிய காரணம் என்னவென்று அன்பர்கள் வினவலாம். கார ணம் உண்டு ஆணுல் அதைச் சொல்லத் தொடங்கினுல் இலக்கண நூலார் கூறிய "மற்றென்று விரித்தல்" ஆகும், ஆதலினலே .அதனை விடுத்து, எடுத்துக் கொண்ட விஷயத்தோடு தொடர்புடைய பொருளை மாத்திரம் பேசலாம் என்று எண்ணுகின்றேன். குறித்த வியாசத்திலே, தமிழ் நாட்டு மக்கள் இக்காலத்திலே, திண்ணையிலும், தெருவிலும், கடை வீதியிலும், தொழிற் சாலையிலும் வழங்கும் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள் சிலவற்றை எடுத்துக் காட்டினேன். அ ஃ த ன் றி யும் பூரீமான் டி. கே. சிதம்பரநாத முதலியாரையுள்ளிட்ட தமிழன்பர் கள் தமிழ் மக்களது வழக்கு ம்ொழியாகிய உயிர்த்த தமிழினது அழ கினையும் ஆற்றலையும் தீர விசாரித்து ஆவன செய்தல் வேண்டுமென விண்ணப்பித்துக் கொண்டேன்.
ஈழ நாட்டில் பிறந்தேனுயினும் ஈழத்து வழக்குத் தமிழில் எனக்கு அதிக பழக்கமில்லை. கற்றது புத்தகத் தமிழ், கலந்து பழகி ஒரு சிறிது பயின்று கொண்டது சோழநாட்டு தமிழ். இலங்கையிலே நான் நண் பரோடு உரையாடும்போது, என் உரையைக் கேட்டோர். " சாமி பேசுவது வடக்கத்திய தமிழ் ' என்று சொல்ல நான் பலமுறை கேட் டதுண்டு. இலங்கையிலுள்ளோர் தென் நாட்டுத் தமிழரை வடக்கத் தியர் என்பது வழக்கம்; தென்னடு ஈழத்துக்கு வடநாடுதானே, இஃது இப்படியிருக்க ஒரு நாள் சென்னை ஜார்ஜ் டவுனிலே ஒரு கடைக்கா ரன் என்னை நோக்கி "சாமிக்கு ஊர் பாலைக்காடா' என்று வினவிய துண்டு. உயிர்த் தமிழுக்கும் புத்தகத் தமிழுக்கும் உள்ள எழுத்துத் திரிபு வேறுபாடுகளைக் காட்டுவதற்கும் நான் கைக்கொண்ட மேற் கோள்கள் பொதுவாகத் தென்னிந்தியத் தமிழில் இருந்து எடுக்கப்பட் டவை. "தமிழ் மொழி ஒலியியல்" என்னும் வியாசத்திலே யாழ்ப் பாணத்து வழக்குத் தமிழை அதிகம் எடுத்துக் காட்டவில்லை.
- 49

Page 82
இந் நிலையிலே என் மாணவரும் நண்பருமாகிய பேராசிரியர் - கணபதிப்பிள்ளை தாம் எழுதி வெளியிட்ட "நானுடகம்' என்னும் புத்தகப்பிரதியொன்று அனுப்பிவைத்தார் " உடையார் மிடுக்கு "" "முருகன் திருகுதாளம்" "கண்ணன் கூத் து" நாட்டவன் நகர வாழ்க்கை" என்னும் நான்கு ஈாடகங்களின் தொகுப்பு 'நானுடகம்" எனப் பெயர் பெற்றது. ஆக்கியோனது முன்னுரையிலிருந்து சில பாகங்களை இங்கு தருகின்றேன். .
'நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உன்ௗபடி காட் டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசவேண்டும் . . . . . . . . . . . . கொடுந் தமிழ்மொழி அவ்வந்நாட்டிற்கே உரிய மொழியாம். ஆகவே சோழமண்டலத்துத் தமிழர் ஈழமண்டலத்துத் தமிழை அறிவதற்கு வழி யாது? அன்றியும் உயிருள்ள மொழியெல்லாம் இடைவிடாது மாறிக்கொண்டே வரும் ஆண்பாலாருக்கும் பெண்பாலாருக்கும் பருவம் ஏழு என வகுத்தார் ஆன்ருேர். அப்படியாயின் ஒவ்வொரு பருவத்திலும் படம் பிடித்தல் விரும்பத்தக்கது. அது போலவே அவ்வக்காலத்துக் கொடுந்தமிழையும் தீட்டி வைத்தல் வேண்டும். இற்  ைறக் கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னே யாழ்ப்பாணத்திற் பேசிய தமிழோ இன்று நாம் பேசும் தமிழ்? இங்ங்ணம் நாம் கூறுவது சொல்லைமட்டும் எண்ணியன்று. சொல் லின் வடிவம் மாற மாற இலக்கணமும் மாறும், பொருளும் மாறும், ஆகவே அவ்வக்காலத்துச் சொல்லின் வடிவும் பொருளும் இலக்கண மும் தீட்டிவைத்தல் இன்றியமையாதவை. இதன் உண்மை ஆங்கிலம் முதலிய மேனுட்டு மொழி வல்லுநர் அறிவர். நம் தமிழ் மொழி வல்லுநரும் இவ்வுண்மையை அறிவரோ?
இந் நான்கு நாடகத்திலும் வழங்கிய பாஷை யாழ்ப்பாணக்குடா நாட்டுக்குப் பொதுவாயும் பருத்தித்துறைக்குச் சிறப்பாயும் உள்ளது.
புத்தகம் கிடைத்ததைக் குறித்து நான் எழுதிய மறுமொழி வருமாறு:-
பேரன்புவாய்ந்த திருவாளர் க. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு,
"நானுடகமும், காதலி ஆற்றுப்படையும் கிடைத் தன. முற்றும் படித்து மகிழ்வுற்றேன்." "பொருளோ பொருள்' நாடகம் அண்மையில் அரங்கேற்றியதாக ஈழ கேசரியில் படித்தேன். மட்டக்களப்பு வழக்கு மொழியினை யும் ஓரிரண்டு நாடகங்களிலே படம் பிடித்து வைப்பது நன்று. விஜயதசமி வாழ்த்துரை கூறி முடிக்கின்றேன்.
இங்ஙனம்
விபுலாநந்தர்
-150

மட்டக்களப்பு நான் பிறந்த நாடு. ஈழத்தின் கிழக்குப் பாகத் தில் உள்ளது. அந் நாட்டு வழக்கு மொழி யாழ்ப்பாணத்து வழக்கு மொழியினின்றும் வேறுபட்டது. அவ்வேறுபாடுகளுள் ஒரு சிலவற்றை இக் கட்டுரையில் குறிக்கின்றேன்.
ஆங்கிலத்தில் சிறந்த நாடக நூல்கள் பலவற்றை இயற்றித் தந்த ஜார்ஜ் பெர்னட்ஷா என்னும் பேரறிஞர் எழுதிய பிக்மாலியன் என்னும் நாடகத்திலே "மொழியொலியியல் (Phonetics) நூலினை ஆராய்ந்துணர்ந்த பண்டிதனெருவன் பூவிற்பவளாகிய ஏழைப் பெண் னெருத்தியை ஆறுமாத காலம் பேசப் பயிற்றி உயர்குடிப்பிறத்த சீமாட்டி (Duchess) சுளுடைய குழுவிலே சேர்த்துவிடுகின்றன். அவ ளது பேச்சின் திறம் உயர்குடியோரது பேச்சினை ஒத்திருந்தமையின் அவள் ஏழைக் குடும்பத்துப் பெண் என்பதை யாரும் அறிந்து கொள்ள வில்லை. ஒருவர் பிறந்த தாலூகா ஜில்லா அவரது குலம், கோத்தி ரம், தொழில், பொருணிலை என்னுமிவற்றை அவரது மொழியினின்று அறிந்துகொள்ளுகிருேம். ஆதலினலே எல்லாரும் எவ்விடத்தும் உயர்ந் தோர் வழக்கையே கைக்கொள்ள வேண்டும் என்பது எனது. கருத் தன்று. தாம் தாம் வழங்குகின்றி வழக்கு மொழியையே நயம்பட உரைக்கப்பயின்று கொள்ளவேண்டும். சம்பாஷணையிலே சொல் நயத் \3தாடு பொருள் நயமும் அமையவேண்டும்.
நண்பர் கணபதிப்பிள்ளை லண்டன் மாநகரிலே டாக்டர் (Doctor of Philosophy) பட்டம் பெறுவதற்காகக் கல்வெட்டுச் சாசனங்களி லுள்ள வழக்கு மொழியினது இலக்கணத்தினை ஆராய்ந்தவர். கம்பன் இராமாயணம் அரங்கேறிய காலத்திலே’ எல்லோரும் கம்பராமாயண நடையாகப் பேசினர்களெனக்கொள்வது மயக்கவுணர்வாகும். அக்கா லத்து வழக்குத்தமிழ் அக்காலத்தில் ஏற்பட்ட கல்வெட்டுச் சாசனங் களிலே படம்பிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. சங்கம் மருவிய கலித் தொகையென்னும் அழகிய தமிழ் நூலிலே உலகநடையும் வழக்கு மொழியும் சிற்சில இடங்களிலே அழகாகப் படம் பிடித்து வைத்தி ருக்கின்றன. அவற்றைப்படிக்கும் போது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் னிருந்த தமிழ் நாட்டு மக்கள் நம்மின் வேறுபட்டவரல்லர் என அறிந்து உளமகிழ்வெய்துகின்ருேம்.
இவ்வாராய்ச்சியின் இன்றியமையாமையையும் இதனது பொது வியல்பையும் இதுவரையும் காட்டினேன். இனி வடநாட்டு மாசிகை யிலே யானெழுதிய முடிவுகளையும் நானுடகத் தொகுதியினை ஆராய்ந்து கண்ட முடிபுகளையும் தருகின்றேன்.
(1) வழக்குமொழி எழுத்துத் தொகையிலும் மாத்திரையளவிலும்
சுருக்கி நடத்தலை விரும்பும். தேவை இல்லை - தேவல, நிரம்ப - ரொம்ப பயல் - பய, வாருங்கள் - வாங்க, கேட்கிருர் - கேக்கார்,
مما 15 م.

Page 83
இருக்கிலது - இருக்கு (ஈற்றுகரம் குற்றிய - ஆலுகரம் இனி மேற்காட் டும் வழக்கு மொழிக் குற்றியலுகர ஈறுகளை இருதலைப் பிறையி னுள் (-) அடைத்துக்காட்டுவாம். போகவிட்டு - போட்டு, (இடைக் காலத்துச் சீவகசிந்தாமணி முதலிய நூல்களிலே போகவிட்டு என்பது போகட்டு என்று வருவதை பல விடங்களிலும் காணலாம்) ஏன் அடாஏண்டா ( தமிழ் நாட்டுப் பிராமணர் வழக்கு ) ஏன் அடா - ஏன்ற்ரு (ஈழநாட்டு வழக்கு) (Attack) என்னும் ஆங்கில மொழியில் உள்ள இணை tt யினது ஓசையை ஒத்தது "கற்ருர்" "பெற்ருர்" என் னும் மொழிகளில் வரும் இணை " ற் ற் " ஒசை. கணபதிப்பிள்ளை இவ் வோசையினைத் தனி 'ர' வினலே குறித்து "ஏன்ரா" என்று எழுது கிருர், இணை "ற்ற் ஒசையிலுள்ள அழுத்தம் தனி 'ர' வுக்கு இல்லை ‘ஏண்டா" "ஏன்ற்ரு" என்னும் இரண்டினையும் ஒப்பு நோக்குமிடத்து இரண்டும் அகரம் கெட ஒன்றில் நிலைமொழி நகர வொற்று வரு மொழிற்கேற்ப ணகரமாகத்திரிந்ததெனவும், மற்றையதில் நிலைமொழி திரிபின்றி நிற்க வருமொழி டகரம் நிலைமொழி யீற்றுக்கு இனமாகத் திரிந்ததெனவும் காணலாம்.)
(2) செந்தமிழ் "டகரம்" கொடுந்தமிழில் (றகரம்) ஆதலும்.
(3) செந்தமிழ் 'நகரம்" கொடுந்தமிழிலே "தகரம்" "மகரம்"
sg,591 D.
(4) செந்தமிழ்த் 'தகரம்" கொடுந்தமிழிலே 'சகர'மாதலும் விதி.
இம்மூன்று திரிபும் எய்தும் ஓர் உதாரணத்தை முதலிலே தரு கிறேன். 'போய் விட்டது" 1ஆம் விதியினலே "போயிட்டுது?" என் ருகும். தென்பாண்டி நாட்டாரும் ஈழ நாட்டாரும் 2ஆம் விதியை மேற்கொண்டு "போயிற்றது" என வழங்குவர். முஸ்லீம் மக்களுள் ஒரு சாரார் 3 ஆம் விதிக்கிணங்கப் "பேய்த்தது" என்பர். 4 ஆம் விதியினலே இத்தொடர் 'போச்சு" என்ருகும். இம்முறையே "ஆகி விட்டது "ஆச்' (சு) என்றதாகும். வெற்றிலை - வெத்திலை. சற்றேசத்தை, விற்று - வித்து வைத்த - வைச்ச, தெரிந்துவிட்டது - தெரிஞ் சிச்(சு) என ஆகும்.
(5) உயிர்பின்னுேஇடையின் ஒற்றின் பின்னே வருகிற உயிரேறிய ககரம் வடமொழி "ஹ" போன்ற ஓசையுடையது. இத்தகைய ஹ" ஒசை பெற்ற ககரம் வழக்குமொழியிலே கெடும். கெட்டபின் முன்னின்ற உயிர் நீயூதலும் உண்டு. அலைகிருய் - அலைருய் - அலைறே. அகத்துக்காரர் ஆத்துக்காரர் (தமிழ்நாட்டுப் பிராமண மகளிர் வழக்கு) அகமுடையான் ஆம்பிடையான் (மற்றையோர் வழக்கு)
(6) மெல்ல்ொற்றின் பின்வரும் ககரம் வடமொழி வருக்கத்து மூன்ரு
மெழுத்தின் ஒசை பெறும். என்ருர்கள் - என்கிருங்க, போய்
விடுங்கள், போங்க ஏனைய வல்லொற்றுக்களும் இனமெல்லெழுத்தாகும். வேண்டும் என்ருல் - வேணும்னு.
-152

(7) வருமொழி வல்லொற்றுக்கு இனமாக ஈற்றில் நின்ற மெல் லொற்றுத் திரியும், ஆண்பிள்ளை-ஆம்பிள. பெண்பிள்ளை பெம் பிள, பெண்டாட்டி - பொம்மனுட்டி.
(8) ழகரம் சென்னையில் யகரமாதலும், தென்பாண்டி நாட்டிலும் ஈழத்திலும் ளகரமாதலும், சென்னை ரிக்ஷா வண்டிக்காரர் வாயில் யெகரமாதலும் உண்டு. வாழைப்பழம் வாயப்பயம், வாளப் பளம். இழுத்துக்கொண்டு இஸ்துக்கினு.
(9) குற்றியலுகரம் வல்லொற்றுார்ந்து மொழியீற்றில் வருவது செந் தமிழ் இலக்கண விதி. கொடுந்தமிழிலே குற்றியலுகரம் மெல் லொற்று இடையொற்று ஊர்ந்து ஈற்றில் வருதலும், வற்லொற்றுார்ந்து இடையில் வருதலும் உண்டு. ஐயர் - ஐய(ரு), யார் -யா(ரு), நெல் நெல்(லு), கள் - கள்(ளு), பெண்-பெண்(ணு), இருக்கும்-இருக்(கு)ம்.
(10) உடம்படு மெய் யகரம் மொழி முதலில் நிற்கும் ஏகாரத்தின் முன் வருதலுண்டு. ஏன் ஐயா - யேங்யா. r
(11) மொழி முதல் வகரம் உகரமாதலுண்டு. வீடு - ஊடு. (2) இகரம் எகரமாகத் திரிதல் உண்டு. நிறைய-நெறைய.
(13) "ஐ' 'எய்" ஆதல் உண்டு. வைகிருர் - வெய்கிருர்.
(14) எகரம் ஒகரமாதலுண்டு. பெண்பிள்ளை - பொம்பிள.
இத்திரிபுகள் ஏன் நிகழ்கின்றன என்பதற்கு "மொழியொலி யியல்" ஆராய்ச்சியிலிருந்து காரணம் காட்டலாம். உரை பெருகு மாதலின் அது செய்வதையொழித்து யாழ்ப்பாணத்து வழக்கு மொழி யியல்பு சிலவற்றை ஆராய்வாம்.
(15) யாழ்ப்பாணத்து வழக்கு மொழியில் ஐகாரம் குறுகுவதில்லை. நெட்டெழுத்திற்கு உரிய இரண்டு மாத்திரையையும் பூரண மாகக்கொண்டு ஒலிக்கும்.
(16) ஆல், ஒடு. இல் என்னும் வேற்றுமையுருபுகளும் போல் என்
னும் உவமையுருபும் ஏகாரம் பெற்று, அவ்வேகாரம் ஐகார
மாகத் திரியப் பெறுவன. மேலைய விதியின்படி ஐகாரம் பூரணமாக ஒலிக்கும்.
மெய்கெட்டு 'உகரம்" "அகர'மாகும். இரண்டாம் விதி யின்படி டகரம் றகரமாகவும் பெறும் .
-153

Page 84
(18) ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபாகிய "இடத்திலிருந்து" என்பது "இடத்திலையிருந்து", "இட்டையிலிருந்து" என ஐகா ரம் பெறும். அவ்வைகாரமும் பூரணமாய் ஒலிக்கும்.
(19) விளிவேற்றுமை ஏகாரமும் வின ஏகாரமும் பூரணமாய் ஒலிக் கிற ஐகாரமாகும். தொகுத்து நோக்குமிடத்து முதலாம் நான்காம் வேற்றுமையொழிந்த வேற்றுமைகளிலெல்லாம் ஐகாரம் நிறை வாக ஒலிக்கும். மேலை விதிகள் பெற்றுவரும் இவ்வு தாரணங்களை நோக்குக.
அவனேடு-அவனுேடை, எங்களுடைய-எங்கடை, நேரத்திலே நேரத்திலை, எங்கேகிடக்கிறது - எங்கைகிடக்கு, என்னுடைஅப்பன் என்ற்றையப்பு அவனைப்போல் - அவனைப்போலை, அவனுல் - அவனுலை, அவனிடத்திலிருந்து - அவனிடத்திலையிருந்து. உங்களத்தான் (ஐகாரக் குறுக்கம்) உங்களைத்தான் (ஐகாரம் பூர்ணவொலி) மட்டக்களப்புத் தமிழில் ஐகாரம் அகரமாய் நடக்கும் மேற்காட்டிய உதாரணச் சொற் கள் முறையே எங்கட, நேரத்தில, எங்க கிடக்குது, அவனப்பெல (ஒகாரம் எகரமாயினமையும் நோக்குக) அவனல. அவனிட்டெருந்து, ஒங்களத்தான் (உகரம் ஒகாரமாயினமையும் நோக்குக)
(20) ஒன்று முதல் ஒன்பது வரையுமுள்ள எண்கள் யாழ்ப்பாணத்தில் ஒண்டு, இரண்டு (சிறுபான்மை ரண்டு) மூண்டு, நாலு, ஐஞ்சு, ஆறு, ஏளு, எட்டு, ஒன்பது என நிற்பன. மட்டக்களப்பில் ஒண்டு, ரெண்டு, மூணு, நாலு அஞ்சு, ஆறு, ஏளு, எட்டு, ஒன்பது என நிற்பன.
(21) யாழ்ப்பாணத்தில் அகரவீற்றின் பின்னும் யகரம் உடம்படு
மெய்யாகும். காணவில்லை. காணயில்லை. மட்டக்களப்பில்
'கானல்ல" யாழ்ப்பாணத்திலே யகரத்தின் முன்னிற்கும் அகரம் ஐகாரமாதல் உண்டு. காணையில்லை.
(22) "ஏன்? விகுதி 'அன்' ஆகும். இருக்கிறேன் இருக்கிறன்
வருகிறேன் வாறன்.
(23) ஒகாரவினவின் முன்னிற்கும் ஆகாரம் இகரமாகும். பண்ணு
கிருயோ - பண்ணுகிறியோ விட்டாயோ - விட்டியோ.
(24) மட்டக்களப்பிலே மொழி முதல் ஒகர ஒகாரங்கள் எகர ஏகாரங்கள் ஆவதுண்டு. சொல்லுங்கள்-சொல்லுங்க, போய் விட்டார் - பேய்த்தார், (பெரும்பான்மை முஸ்லீம்களிடையே காணப் படுவது) மட்டக்களப்புத் தம்பிலுவில் என்னும் கிராமத்திலே மொழி முதல் ஐகாரம் எகரமாதலுண்டு. மைத்துனன் - மைத்துணி, மெச்சான்மெச்சி.
- 54

(25) நன்னூலார் கூறிய 'கா' என்னும் அசைநிலை இடைச்சொல் மட்டக்களப்பிலே வழக்கிலுளது. இதனை அதிகமாகப் பெண் கள் வழங்குவார்கள். இதனை அவதானித்த ஒரு புலவன் "ஆடவர் தோளிலுங்கா, அரிவையர் நாவிலுங்கா" என்று கூறினன் என்பதாகக் கேள்வி. ஆடவர் பாற்குடங்களை உறியில் வைத்து காத்தடியின் இரு தலையிலுங் கட்டித் தோளில் எடுத்துச்செல்வர். மகளிர் உரையாடும் , போது "என்னகா சொல்ரு? ஏங்கா நீ வரல்லை? எலக்கா இங்கே சத்து வந்திற்றுப்போ' என்று இப்படிக் "கா" அசைத்துப் பேசுவது அந்நாட்டு வழக்கம். "எலக்கா" என்பதிலே கலித்தொகையில் வரும் "எல்லா' திரிந்து நிற்பதை நோக்குக.
மேற்காட்டிய விதிகளோடு ஒரு புடையொத்தும் ஒவ்வாதும் வருகின்ற சில வழக்குகளை உதாரணமூலம் விளக்குவாம். யாழ்ப் பாணத்திலுள்ள சில வழக்குகள் வருமாறு. அங்கே பங்க, இங்கே பிஞ்ச, உங்கள் ஐயா - கொய்யா, உங்கள்ஆச்சி - கோச்சி, மகன்-மோன், ம்கள் மோள், மேள் - தகப்பன்-தோப்பன், மேல் 5ம் விதியிலே உயிர் பின் வரும் உயிரேறிய ககரம் வடமொழி "ஹ" போன்று இசைக்குமெனக் காட்டினும். அது வடமொழி விசர்க்கம் (:) போன்றும், தமிழ் ஆய்தம் (ஃ) போன்றும் இசைக்கும் என்பது வெளிப்படை. "மஃன்" எனப் பன்முறை விரைந்து சொல்லின், வடமொழி விசர்க்கத்தைப் போலத் தமிழ் ஆய்தமும் உகரவியற்கை பெற்று, முன்னின்ற அகரத் தோடு கூடி ஒகாரமாதல் ஒலியியலுக்குப் பொருத்தமேயாம் என்பதை மேலை உதாரணங்கள் காட்டுகின்றன. 11ம் விதியிற் கூறியபடி மொழி முதல்வகரம் உகரமாதல் யாழ்ப்பாணத்தில் இல்லை, மட்டக்களப்பி லுண்டு. வீட்டிலே (யா) வீட்டிலை (ம) ஊட்டில, ஊட்ட வயிற்றுக்குள் (யா) வயித்துக்கை (ம) வகுத்துக்க, பறஞ்சது என்னும் மலையாள மொழி யாழ்ப்பாணத்து வழக்கில் உண்டு. "எழுஞாயிறு" "படுஞாயிறு” போன்ற "எழுவான்' 'படுவான்' மட்டக்களப்பு வழக்கில் உண்டு. போதும் போரும் என்பது தென்னிந்தியப் பிராமணர் வழக்கு.
இட வேறுபாட்டாலும், குழு வேறுபாட்டாலும் கொடுந் தமிழ் விகற்பங்கள் பல வேரும் எனக்கண்டாம். இனி, தமிழ் நாடக நூலோர் சுவை, குறிப்பு, சத்துவம், அபிநயம், பொருள், சாதி, யோனி, விருத்தி, சொல், சொல்வகை, வண்ணம், வரி, சந்தி, சேதம் என நாடக உறுப்பு பதினன்கு என்பர், வட நூலார்க்கும் இவை ஒப்பனவே. தசரூபகம் இரண்டாம் அதிகாரம் 58ம் சூத்திரம், "உலக வழக்கினை நுணுக ஆராய்ந்துணர்ந்து, நாடகக் கட்டுரை நடந்தேறிய தேசத்தாருக்குரிய பாஷை, வேஷம், கிரியை என்னும் இவற்றை மாறு பாடின்றி வழங்கவேண்டும்" 60ம் சூத்திரம் 'சமஸ்கிருதம் ஆடவருள் உயர்ந்தோராலும், தவத்தாராலும் ஒரோ வழித் தவமூதாட்டியா ராலும், பட்டத்தரசியாராலும், மந்திரி புதல்வியாராலும், கணிகை மாதராலும் பேசுதற்குரியது. பிராகிருதம் பெண்பாலாருக்குரியது.
- 155

Page 85
செளரசேனி, ஆடவருட் கீழாயினருக்குரியது. பைசாசம் கடை பா யினருக்குரியது." இந்த விதியினை தமிழுக்குக் கொள்ளுங்கால் சடஸ் கிருதம் என்ற மொழி நின்றவிடத்துச் செந்தமிழ் எனவும் ஏனைய விடத்துக் கொடுந்தமிழ் எனவும் கொள்க.
ஆசிரியர் தொல்காப்பியனர் காலத்தில் 'சேரி மொழி"யெனக் குறிப்பிட்டதும் உரையாசிரியராற் 'பாடிமாற்றங்கள்" என வழக்கப் பட்டதும் ஆங்கிலத்திலே Dialect8 என்று குறிக்கப்பட்டதேயாகும். இஃது இடவேறுபாட்டினலும், குழு வேறுபாட்டினலும் வேறுபடும் மரபினை மேலே காட்டினும்,
** சேரி மொழியாற் செவ்விதிற்கிளந்
தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணந் தோரே' என்பது தொல்காப்பியர் சூத்திரம். 'சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள். அவற்ருனே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணுமைப் பொருட்டொடரானே கொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முத லாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க' என்பது உரை. கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டினைச் செந்துறை மார்க்கத்தன என்பர். சேரி மொழிச் செய்யுளினை வெண்டுறை மார்க்கமென்ருர், இதனுற் செந் தமிழ் கொடுந் தமிழ் என வகைப்படுத்தியது செந்துறை வெண்டுறை என்னும் வகுப்பினேடு ஒரு புடையொக்கும் என அறிகின்ரும்.
"நாடக நூலுக்குக் கொடுந்தமிழ் வழக்கு வரும் என்பது go unrantas, 9 DUiTái) (Ethics and Law) Gurrogirai) (Natural and Social Science) gaövu 5|Táj (Fine Arts) 69 GB) 5íTáv (Religion and Philosophy) என அறிஞர் வகுத்துரைத்த நூல்களைச் செந்தமிழில் எழுதுவது முறையா? கொடுந்தமிழில் எழுதுவது முறையா? என்னும் வின எழுகிறது. ஆராய்ந்து கற்கும் அறிவுடையோருக்கு உரியவாத லானும், இட வேறு பா டு, பா ல் வேறு பா டு, வருண வேறு பாடு என்னும் வேறுபாடுகளை இகந்து நிற்பவாதலானும் அறிவு நூல்கள் செந்தமிழ் மொழியிலே ஆக்கப்படவேண்டும் என்பது முடி வாகின்றது. அஃதன்றியும் கோட்டமுடைய தமிழ் கொடுந்தமிழ் எனப் பெயரெய்தி நின்றது. நூலோவெனின் மனக்கோட்டத்தைத் தீர்ப்பதற் காக அமைவுற்றது.
* உரத்தின் வளம் பெருக்கியுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந்தீர்க்கு நூலஃதே போன்மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு" என்பவாகலின், தான்கோடியது பிறிதொன்றினது கோட்டத்தைத் தீர்க்கும் ஆற்றல் இலதாதலின் கொடுந்தமிழிலே நூல் அமையாதென
அறிகின்ரும்.
க்லைமகள் 1941, பக்கம் 18 - 25.
-56- .

i. மட்டக்களப்பில் சிதைந்து
வழங்கும் தமிழ்ச் சொற்கள்
சிதைந்து வழங்கும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. முழுவதும் சிதைந்த சொற்களாலாகிய மொழிகளும் உள்ளன. இவ் வாறு சிதைந்த சொற்களால் நடக்கும் மொழி வடமொழியிலே பாகத பாஷை என வழங்கப்படும். தமிழ் மொழியிலும் சிதைந்த சொற்கள் பல வழக்கில் உள்ளனவேனும் சிதைந்த சொற்களாலாகிய தமிழ் நடை யொன்றில்லை. தமக்கென்ற தனிச்சொற்களில்லாமல் பிறமொழிகளில் சிதைந்த சொற்கள் கொண்டு நட்க்கும் மொழிகளும் உள்ளன. இவை களை மிசிர பாஷை என்பர் வடநூர்லார். கலப்பு மொழிகள் என்றும் இவற்றை வழங்குவீர். இத்தகைய மிசிர பாஷை இலங்கையிலும் உண்டு.
உலக வழக்கில் உள்ள மொழிகளுள் சிதைந்த சொற்கள் பல புகுவது இயல்பேயாகும். ஆயினும் அச் சொற்கள் வரம்பு கடந்து ஒரு ம்ொழியிற் புகுதல் அம்மொழியின் இயல்பான அழகைக் கெடுத்து விடுவதற்குக் காரணமாகும். இதனுற் காலந்தோறும் அறிஞர்கள் இச் சொற்களைக் கட்டுப்படுத்தி இருக்கிருர்கள், தொல்காப்பியர் காலந் தொடக்கம் சிதைந்த சொற்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் இயற்றப் பட்டுள்ளன. இனிமேலும் கட்டுப்பாடு அவசியமாகும். குடும்பக்கட்டுப் பாடு போல இந்தச் சிதைந்த சொற்களின் கட்டுப்பாடும் இக்காலத் துக்கு மிக மிக அவசியமாகின்றது.
சிதைந்த சொற்கள் மொழியில் இடம் பெறுவதற்குப் பல கார னங்கள் உள்ளன. நேரச் சுருக்கம், விரைவு, அச்சம், அவலம், மகிழ்ச்சி, சோம்பல், அறியாமை முதலிய காரணங்களால் சொற்கள் சிதைவு படுகின்றன. சொற் சிதைவுகள் இடவேறுபாட்டால் மொ ழி க ள் தோறும் வெவ்வேறு வகையாக வழங்கப்படுவதை நாம் காணலாம். தமிழ் வழங்கும் நாடுகளிலே தென்னுட்டில் ஒருவகைச் சிதைவும், யாழ்ப்பாணத்தில் பிறிதொருவகைச் சிதைவும், மட்டக்களப்பில் மற் ருெருவகைச் சிதைவும் காணப்படுகின்றன. இச்சிதைவுகளுட் பல பழைமையினை நினைவூட்டி நகைச்சுவையினையும் விளைவித்து நிற்கின் றன. இந்த நேரத்தில் மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் தமிழ் வழக்குச் சொற்கள் சிலவற்றை அறிந்து பொழுது போக்கி இன்புறு G6) i Tudfres.
- 157

Page 86
இங்கே பழைய சம்பவம் ஒன்று எனது நினைவுக்கு வருகின்றது. 1914ம் ஆண்டு நான் கல் முனையில் ஆங்கிலக் கலாசாலையிற் படித்துக் கொண்டிருக்கும் போது வாரத்துக்கு இருமுறை மட்டக்களப்பு வாவி யைக் கடக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் மண்டூரில் இருந்து துறையைக் கடக்கும் பொழுது வலப்பக்கமாகத் திரும்பிப் பார்க்கை யில் இதன் பக்கத்தே கிடக்கும் வாவியின் நீர்ப்பரப்பு எனது கண் ணுக்குப் புலப்படாமல் மறைந்து கிடப்பதை அவதானித்தேன். தென் பக்கத்தே கிடக்கும் மட்டக்களப்பு வாவியின் பகுதி அவ்வாறு மறைந்து கிடக்கும் நிலப்பரப்புக்குக் கவடாதீவு என்னும் பெயர் வந்த கார ணத்தை நான் அறிந்து கொள்ளவில்லை. நான் வளர்ந்த பின்பு ஊர்ப் பெயர்களின் காரணங்களை ஆராயும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது கவடாதீவு என்னும் பெயர்க் காரணத்தை அறிந்ததில் எனக்கு மகிழ்ச்சி கரலாயிற்று. வாவியின் தென்பாகத்தை அதன் வடக்கே இருப்போர்க் குக் காணுது மறைத்தும் வடபாகத்தைத் தென்பாகத்தில் இருப்போர்க் குக் காணுமல் மறைத்து வைத்தும் இடையே ஒர் கபாடம் இட்டது போல் கிடக்கின்ற விசாலமான நிலப்பரப்பு கபாடதிவு என்பதன் சிதைவு என உணர்ந்த போது தமிழ் வளர்த்த கபாடபுரம் இந்த இடத்தில் தான் அமைந்துள்ளதோ என கற்பனை செய்து பார்க்கும் நிலையும் எனக்கு உண்டாயிற்று. நான் ஆங்கிலக் கலாசாலையில் பயின்ற காலத்தில் இன்னுமோர் அனுபவம் உண்டாயிற்று. ஒருநாள் சாயங் காலம் ஒரு நரை மூதாட்டி அங்கு வந்தார். வந்தவர் என்னை நோக்கி "மனே, எருமையனைப் பார்க்க வந்த நான் அவன் எங்க' என்று என்னைக் கேட்டார். நான் உடனே விளங்கிக் கொண்டேன். அங்கே படித்துக் கொண்டிருந்த அருமையன் என்ற மாணுக்கனைக் கூட்டிக் கொண்டு வந்து அந்த அம்மையாருக்குக் காட்டினேன். மகன் என் னும் சொல் எட்டாம் வேற்றுமையில் மனே என்று நின்றது. அரு மையன் எருமையன் ஆகியதுபோல் அரிசி எரிசி எனவும் நல்லரிசி நெல்லரிசி எனவும் திரிந்து வழங்கும் சில வழக்குகள் கல்லாத மக்க ளிடையே வழங்கி இன்று பெரும்பாலும் வழக்கு வீழ்ந்துள்ளன. எனி னும் இவ்வழக்குச் சொற்கள் இவ்வாறு திரிந்து வழங்குவதை வட மொழி முடிவோடு பொருத்திக் காட்டி இலக்கண அமைதி கூறுவர் இந்நாட்டின் நல்லறிஞர். ஜயம் ஜெயம், ஜன்மம் ஜென்மம், ஜகம் ஜெகம் என்னும் வடமொழி மரபும் அரிசி எரிசி என்பன போன்ற தமிழ் மரபும் தம்முள் ஒற்றுமை உடையனவாகக் காணப்படினும் வட மொழி வழக்குப்போல இவ்வழக்குகள் நன்மக்களால் வழங்கப்படுவன
δ. ώύ6) . . . . .
இன்னும் தம்பியை அம்பி என்னும் வழக்கமும் காணப்படுகின் றது. ஆண்டில் இளையான் ஒருவனை ஒருவர் காணும் போது என் னம்பி எப்படிச் சுகம் என்று வினவும் வழக்கம் இன்னுட்டிலே கற் ருேர் இடத்திலும் உண்டு. அன்றியும் முறைப்பெயர்களுள்ளே பாட்
-158.

டன், பேரன் என்னும் சொல் பெத்தப்பன் எனவும், போத்தப்பாட்டி என்னும் சொல் பெத்தம்மை எனவும் மட்டக்கள்ப்பில் வழங்கப் பெறும். பெற்றப்பன் பெற்றம்மை என்பனவற்றின் திரிபாக உள்ள இச் சொற்கள் தந்தையை அல்லது தாயைப் பெற்ற அப்பன் அம்மை என்னும் பொருள் உடையனவாகும். வீட்டில் உள்ள கிளிகளும் பெத் தம்மை என்னும் சொல்லைத் தம் மழலை மொழியால் இசைப்பதை இன் னும் கேட்கலாம். மைத்துணியை மதனி என்றும், உனது அப்பன் என்பதைக் கொப்பன் என்றும், உனது அம்மை என்பதைக் கொம்ம்ை என்றும் உனது அண்ணன் என்பதைக் கொண்ணன் என்றும், உனது அக்கையைக் கொக்கை என்றும் வழங்கும் வழக்குகள் மட்டக்களப் புக்கே சிறப்பாக உரியனவாகும். கிராமிய வழக்கில் உள்ள இத் தொடர்கள் உனது தந்தை என்பதை உந்தை என்றும், உனது தம்பி என்பதை உம்பி என்றும், எனது தம்பி என்பதை எம்பி என்றும் கூறு கின்ற இலக்கண வரம்புக்குட்பட்டவையாகக் காணப்படுகின்றன.
வகர உயிர் மெய்வரிசையிலே வி. வீ. என்பவற்றை முதலாக வுடைய ஒரு சில சொற்கள் அவற்றுக்குப் பதிலாக உகர ஊகாரங்களை முதலாக வைத்து உச்சரிக்கப்படுவதையும் இங்கே காணலாம். விடு என்பதை உடு என்பர், விழுந்து என்பதை உழுந்து என்பர். வழிப் பாடு என்னும் சொல் அழிப்பாடு என வழங்குவதும் இதுபோன்றதே. வி. வீ. என்னும் எழுத்துக்களை டகர உகரங்களோடு சேர்த்து உச் சரிப்பது வசதிக்குறைவு ஏற்பட்டமையினல் இந்தச் சிதைந்த வழக்கு உண்டாயிற்ருே தெரியவில்லை). இன்னும் அந்தா பார் என்பதை அன்ன பார் என்றும், இந்தா பார் என்பதை இன்னுபார் என்றும் வழங்கு வர். இவைகள் கிராமிய வழக்குகளாகும். மட்டக்களப்பிலே கிராம மக்களிடையே பழந்தமிழ் இலக்கியச் சொற்கள் சிதைந்து விளங்கும் வழக்கினை இனி நோக்குவோம்.
பிழைப்புக்காகவும் பொழுது போக்குக்காகவும் மீன் பிடிக்க உப யோகிக்கப்படும் மீன் பிடிக்கும் கயிறு கட்டிய கம்பு "கழை" என வழங் கப்படும். இந்தத் தூண்டிற் கழையின் கயிற்றில் உள்ள தூண்டில், நீரின் கீழே சென்று நில மட்டத்தை அடையாமல் நடுநீரில் நிற்கு மாறு கயிற்றில் ஒரு மிதப்புக் கட்டப்பட்டிருக்கும். இந்த மிதப்புக்கு மப்புலி என்பது பெயர். இது மயில் இறகினல் ஆனது. அடிப்புற மாக வெட்டப்பட்டு இரண்டாக மடித்துக் கயிற்றுடன் சேர்த்து இரு நுணியும் மேலே நேரே இருபிரிவாக நிற்குமாறு ஒரு மயில் இறகுத் துண்டு கட்டப்பட்டிருக்கும். மயிற்பீலி என்பது மப்புலி எனச் சிதைந்து விட்டது. "நாய்க்குடலுக்கு நறணை தங்கா" என்று இங்கே ஒரு பழ மொழி உண்டு. நறணை என்னும் சொல் நல்ல நெய்யைக் குறிக்கும். பசிநறணை என்பது பெருவழக்கு. நறுநெய் என்னும் இலக்கிய செந். தமிழ் நறன என்ருயிற்று, இந்நாட்டுத் தமிழரின் சொல்லாட்சிக்கு இது உதாரணமாகின்றது. எங்கேயும் தூரத்தில் அல்லது சமீபத்தில்
-159م-

Page 87
யாதாயினும் எதிர்பாராத ஆரவாரம் கேகும்போது வீட்டில் உள்ள பெண்கள் மக்களைப் பார்த்து ஏதோ சத்தம் கேட்கிறது. பொருப் பத்திப் பாருங்கள் என்று சொல்லுவார்கள். பொருட்படுத்தல் என் பது பொருப்பத்தல் என்று சிதைந்து வழங்குவதை மட்டக்களப்புக் கிராமப்புறத்துப் பெண்கள் மத்தியில் இன்றும் கேட்கும் போது இந் நாட்டின் சொல்வளம் தெளிவாகின்றது. இன்றியமையாத அருமை யான பொருளை இழக்க நேர்ந்தால் மட்டக்களப்புக் கிராமத்துக் கல்
லாத மகளிர் எங்கள் குடுதியம் பொருள் போயிற்றே என்று இரங்கு வார்கள். இன்றியமையாத உயர்ந்த தத்துவப் பொருளைக் குறிக்கும்
குடிலையம் பொருள் என்னும் தொடர் கிராம மகளிர் மத்தியில் குடு தியம் பொருள் எனச் சிதைந்து வழங்கும் நிலையினைக் காணும் பொழுது,
அங்கு வாழ்ந்த புராதன மகளிரின் பண்டைக்காலத் தத்துவ வாழ்க் கையை நாம் அனுமானித்தல் எளிதாகின்றது. இன்னும் கிராமியப் பெண்கள் ஏதும் திடுக்கிடும் சம்பவங்கள் நேரும்போது என் "சத்துரு
சங்காரக் கடவுளே' என்று அபயம் இடுவர். ஒரு பெண் இன்னுெரு பெண்ணின் மகனை வைதால் அல்லது அடித்தால் அப்பெண்ணை, இப்
பெண் நோக்கி எனது மகனுக்கு ஏச உனக்கென்னடி தத்துவம் என்று வற்புறுத்திக் கேட்பாள்.
இத்தொடர்களும் இன்றைய சாதாரண மகளிரின் முன்னேர் சிறந்த சமயவாழ்வு வாழ்ந்தார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகின் றன. குடுதியம் பொருள் என்பது குடியைம் பொருள் என்பதின் 66o5(36) unrub.
கோயிற்பூசகர் கப்புகளுர் என அழைக்கப்படுகின்ருர். கப்புகஞர் என்பது கற்பகஞர் என்பதின் சிதைவேயாம். கற்பகஞர் என்பது கற் பகநயினர் என்னும் தொடரே மருவு மொழியாக அமைந்து காலப் போக்கில் கப்புகளுர் எனச் சிதையலாயிற்று. சிங்கள மொழியில் உள்ள கப்புருளை என்னும் சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை. கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைக் கொடுக்கின்ற இயல்புபற்றிக் கற்பகநயினர் என்னும் பெயரி கோயிற் குரவர்களுக்கு வழங்குகின் றது. "கற்பகநயினர் காரணமிதுவென' என்னும் பிள்ளையார் கதைச் செய்யுளடியும் இதனை வலியுறுத்தி நிற்கின்றது. கருணபரம்பரையும் இதனை ஆதரிக்கின்றன. ஆலய பூசனையில் தீபாராதனை என்னும் சொல் தீபரெனவும் புனர்க்காரம் என்பது புனக்காரம் எனவும் அபி ஷேகம் அவிள்சகம் எனவும் வழங்கும். மட்டக்களப்பில் உள்ள ஆல யங்களின் பண்டகசாலைகளைக் கவடாவீடு என்றும் பண்டகசாலைக் காவலனைக் கவடாக்காரன் என்றும் வழங்கப்படும். கவடாக்காரனைச் சில கோயில்களிற் திறப்புக்காரன் என்றும் கூறுவர். கவடா என்பது கபாடம் என்பதன் சிதைவாகும். கபாடம் கதவென்னும் பொருளு டையதாய் கபாடக்காரன் என்னும் தொடர் கவடாக்காரன் என்று சிதைந்து வழங்கும் பிரயோகம் இந்நாட்டின் சொல்லாட்சிக்கு ஒரு
-160

எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. வீட்டுப் பாவிப்புக்குரிய சில பொருள்களின் பெயரைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். காய் கறி முதலியவற்றை வெட்டுவதற்குரிய அரிவாள் ஏற்றப்பட்ட பலகையை அருவாமணை என வழங்குவர். அரிவாமனை என்பது அருவாமணை எனச் சிதைந்து வழங்குகின்றது. ம ணை என்பது குறிப்பிடத்தக்க பழந்தமிழ்ச் சொல்லாகும். பலகை என்பது அதன் பொருள். அரிச ரிக்கும் பாத்திரத்தை அரிக்கிமிலை என்பர். அரிக்கமலை என்பது அரிக் கிமிலையாகச் சிதைந்துவிட்டது. அரி என்பது அரிசி. கமலை என்பது பாத்திரம். பெரிய வெட்டுக் கத்தியை அருவாக்கத்தி என்பர். அரி வாள் கத்தி அல்லது அரிவாட்கத்தி அருவாக்கத்தியெனத் திரிந்து வழங்குகின்றது. தும்புக்கட்டு தூப்பாங்கட்டு என வழங்கப்படுதலும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஒருவரின் அவலட்சணத்தைப் பழிக்கும் போது அவரின் ஒசிலைப் பார் என்று கூறுவார்கள். ஒசில் என்பது ஒயில் என்பதன் சிதைந்த மொழியாகும். இங்கே குறிப்பாக அவலட்சணம் என்னும் பொருளைக் குறிக்கும். "முருகர் ஒயிற் கும்மி" என ஒரு சிறுபிரபந்த மும் உள்ளது. ஒருவரின் நாகரீகப் போக்கு பார்வைக்கு வெறுப்புக்குரியதாய் இருந் தால் அவரைச் சுட்டிக்காட்டி இவரின் சீத்துவத்தைப் பார் என்று சொல்லுவார்கள் சீத்துவம் என்பது சீர்த்துவம் என்பதின் சிதைந்த வழக்காகின்றது. நாகரீகப் பண்பு என்பது இதன் பொருளாகும்" குறிப்பாக நாகரீகம் இன்மையை விளக்கி நிற்கின்றது. ஒருவனத நடை அவனது உயர் குடிப் பிறப்புக்குப் பொருந்தாதிருந்தால் அவனை நோக்கி உமது குடுவாக்கை கூடாதென்று கடிந்து கூறுவார்கள், குடு வாக்கை என்பது குடிலாழ்க்கை என்பதன் சிதைவாக வழங்கப்படுகின் றது. சந்ததி என்னும் சொல்லைக் குறிப்பதற்கு மட்டக்களப்பிலே வகுத்துவார் என்னும் சொல் வழங்கப்படுகின்றது. வயிற்றுவார் என் பது வகுத்துவார் எனத் திரிந்து நிற்கின்றது. இந்த வகுத்துவார் என் னும் சொற்பிரயோகத்தில் ஒரு நுட்பம் அமைந்துள்ளது. மட்டக்களப் பிலே சுரைப்பருப்பு நாட்ட பாகற்பருப்பு முளைக்கின்ற அற்புதம் இது தான். வகுத்துவார் என்பதன் உட்பொருள் ஒருவனின் தந்தை எக் குடிப்பிறந்தவனுனலும் யாராணுலும் அவன் தன் தாயின் குடிப்பிறப் புக்கே மதிக்கப்படுகின்றன். மட்டக்களப்பிலே தந்தையின் குடியுரிமை மைந்தனுக்கு இல்லை. "வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது" என்னும் பழமொழி இந்த வகுத்து வார் வரன் முறையை நன்கு விளக்குவதாகும்.
நாட் சம்பளத்தை அத்தைக் கூலி என வழங்குவர். அற்றைக் கூலி என்பது அத்தைக்கூலி என வழங்குகின்றது. ஆப் என்னும் சொல் ஒம் என்று கிராமங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. கிராமிய வாழ்க் கையில் நன்கு திழைத்தவர்கள் ஓங்கா எனக் கூறுவதையும் கேட்க
- l6t

Page 88
லாம். மிகச்சிறிய அளவினேக் குறிக்க எ ள் ஆளுப் போல் என்னும் தொடர் மட்டக்களப்பில் ஒள்ளுப்பம் என வழங்கும். சிறிது தா என் பதற்கு ஒள்ளுப்பம் தா என்பர் ஒள்ளுப்பம் தாகா எனவும் பேசுவர். ஒள்ளுப்பம் என்னும் சொல் ஆட்களுக்கும் பெயராகக் காணப்படுகின் றது. ஒல்லாது என்னும் சொல் ஒண்ணுது எனவும், ஒல்லும் என்பது ஒண்ணும் என்றும் சிதைந்து வழங்குகின்றன. சுத்தரிக்காய் என்பது சிறு பான்மை வழக்கு வழுதிலங்காய் என்பது பெரும்பான்மை. வழுது னேக்காய் என்பது வழுதிலங்காய் என மருவிற்று.
நெல்வயல் சம்பந்தமான சில வழக்குகளேயும் நோக்குவோம். பெரிய வயவில் பிரிவிட்ட ஒரு பகுதியைக் கீத்து என வழங்குவர். கீத்து என்பது கீறிப் பிரிவிடப்பட்டது என்னும் பொருளுடையது. கீற்று என்பது கீத்து எனச் சிதைந்து வழங்குகின்றது. வ ய லி லே விதைத்துப் பயிரேறிய பின்பு வரம்பின் அளவுக்கு வரவைகளில் தண் ணிைரை நன்கு நிறைத்துக்கட்டி குறித்தநாள் எல்லேக்குள் அதனைத் திறந்து நில்லாது அளவிற் குறையுமானுல் அத்தண்ணீர் வெயிலின் வெப்பத்தாற் கொதிக்கும். இதனுல் இளம் பயிர் அழுகும். ஆதலினுலே நன்கு நிலம் குளிர, பயிர் குளிர வரம்பின் அளவாகக் கட்டிவைத்துக் கழற்றிவிடும் தண்ணிருக்குக் கங்களவு தண்ணீர் என்பது பெயராயிற்று. கங்கு என்னும் சொல் வரம்பின் பக்கத்தைக் குறிப்பதாகும். கங்களவு தண்ணீர் என்னும் தொடரை நன்கு அறிந்து அமைத்துக்கொண்ட தமிழரின் பரம்பரையை எண்ணும்பொழுது ஒரு புது உணர்ச்சி உண்டா கிறது. நமது பழைமையில் நமக்கும் பெருமிதமும் உண்டாகிறது. நெல்லரியும் அரிவாளே தாக்கத்தி என்பர். தாட்கத்தி என்பது தாக் கத்தி என்பதாயிற்று.
சாதாரணமான ஒரு பெண்ணே இன்னுெரு கிராமப் பெண் அவளே முகங்கோடற்பொருட்டு இலக்கா என்று அழைப்பாள். இது வும் ஒரு பழந்தமிழ் சொல்லின் சிதைவாசு இந்நாட்டுக் கல்லாத மகளிரிடையே காணப்படுகிறது. எல்லா என்னும் சொல் தோழியைக் குறித்து பழங்காலத்தில் வழங்கி பிற்காலத்தில் சாதாரண மகளிரையும் குறிக்கும் சொல்லாக அமைந்துவிட்டது. மட்டக்களப்பிலே கட்டுரை சுவைப்படுதற்பொருட்டு "கா" என்னும் இடைச்சொல்ஃப் பெயர் வினேகளின் இறுதியில் வைத்து வழங்குவர். 'கா' என்பது எல்லா விடத்திலும் வழங்கும் ஒரு இடைச்சொல்லாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது. இச்சொல் மட்டக்களப்பில் இன்றும் வழக்கில் உள்ளது. பழைமைக்கு எடுத்துக்காட்டாக உள்ள 'கா' என்னும் இடைச்சொல் எல்லா என்பதோடு சேர்ந்து எல்லாகா என வழங்கிக் காலப்போக்கில் மாறுபட்டு இன்று இலக்கா என வழங்குகின்றது. பெண்னே என்பது இதன் இக்காலப் பொருளாகும்.
- 12

இந்தக் காவைப்பற்றி நகையாடுபவர்களும் உளர். ஆடவர் தாளிலும் கா, அரிவையர் வாயிலுங்கா என்ருர் ஒரு இரசிகர். இன்னுெரு பெரியார் காவைப்பற்றி என்னுேடு நிகழ்த்திய சம்பாஷ்ணே யையும் இயைபுபற்றி இங்கே கூற விரும்புகின்றேன். மட்டக்களப்பில் ஒரு காலாட்சேப நிகழ்ச்சியில் சமூகமாயிருந்த ஒரு நண்பர் என்ஃனப் பார்த்து ஐயா, இதென்ன கா: இந்தக்கா மட்டக்களப்புக்கு எவ்வாறு வந்த தென்பதை எனக்கு விளக்கத் தொடங்கிஞர். இங்கே தமிழரும் முஸ்லீம்களும் கலந்து வாழநேர்ந்தமையால் இங்குள்ள தமிழர்கள் முஸ்லீம்களிடம் உள்ள காக்கா என்னும் இரண்டு காவில் ஒரு காவை தாங்கள் காவிக்கொண்டு தங்கள் நாட்டுப் பேச்சிலே புகுத்தியிருக்க வேண்டும் என நினேக்கிறேன் எனக் கூற முடித்தார். எனக்கு வந்த சிரிப்புக்கு அளவே இல்லே. காலாட்சேபத்தில் இது பெரிய காலாட் சேபமாயிற்று. நான் அவரை நோக்கி பக்கத்தில் வருமாறு கூறினேன். ஐயா, இந்தக்கா தமிழ்க்கா, இது தொங்காப்பியர் காலத்திலே எல்லா விடத்திலும் வரும் இடைச்சொல்லாக இலக்கணத்தில் இடம் பெற் றுள்ளது. பன்னிரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த நன்னூலாரும் இந்தக் காவை ஆதரித்து இலக்கணம் செய்திருக்கிருர், முஸ்லீம்கள் கி. பி. ம்ே நூற்றுண்டளவில்தான் இங்கு வந்து குடியேறியவர்கள். கி. மு. 4ம் நூற்றுண்டளவில் வழங்கிய தமிழ்க் காவுக்கும் முஸ்லீம்களின் காக்காவில் உள்ள இரு "கா"வில் ஒரு காவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இது தமிழ் இலக்கணப் பழங்காவென்று நகையும் உவகையும் தோன்றக் கூறினேன். அவரும் மகிழ்ந்தார். எனக்கும் பெருமிதம்.
தோணுமுகம்
மட்டக் களப்பென்னு மாநாடாந் நாட்டினிடைப் பட்டினப் பாங்கர்ப் பரந்ததோ னு முகமாய் ஐங்கரன் கோயில் அமிர்த கழிக்கனித்தாய்ப் பொங்கு கடலுட் புகும்நீர் நிலேயொன்று என்ருர் சுவாமி விபுலானந்தர். தோணுமுகம் என்ற சொற்பிரயோகம்
இங்கு வந்துண்டு. இதன் பொருள் யாது? சூழ்கழியிருக்கை என்பது பொருளாம். இதனேக் கோணுமுகம் என் பாரு முளர்.
மட்டக்களப்பு மக்கள் கடற்கள் ரகளிற் தோன்றிய சிறு உவர் நீர் நிலைகளைத் தோணு என்பர். தோணு என்பதனுடன் முகம் என்ற சொல் சேர்ந்ததும் அச்சொற்ருெடர் கடற்கரைப் பட்டினத்தைக் குறிப்பதாயிற்று. பட்டினமும் உவர்நீர்க்களப்பாற் குழப்பட்டுமிருத்தல் வேண்டும். அஃது அரங்கம் எனவும் பெயர்பெறும். நானூறு கிரா மங்களைக் கொண்ட மாவட்டத்தின் தலைநகரமே கோணுமுகம் என்று
கூறுவர்.
- 1 հ3- t

Page 89
அனுபந்தம் 1
மட்டுநகர் வித்துவான் ச. பூபாலபிள்ளை
இயற்றிய
பெரியதுறைத் திருமுருகர் பதிகம்
பெருகு மேன்மைப் பெரிய துறையுறை முருக வேளை முறையினிற் பாடிடப் பொருளில் யானைப் புகர்முகத் தைங்கரன் றிருவி னல் லடி சிந்தையிற் சேர்த்துவாம்.
நூல்
சீரேறு கமலமலர் மீதேறு பகவனரி
தேடரிய விமல னயனஞ் சிந்துபொறி மூவிரண் டொன்றுபட வந்துநற்
சிறுவனப்ச் சரவணத்தில் பேரேறு மின்னமுத நேரேறு தன்னியம் பெட்பினெடு கார்த்திகைப்பேர்ப் பெண்ணுதவ வுட்கொண்டு பண்ணவர்கள் போற்றநனி
பிரியாத வருளின் மருவி போரேறு பொற்றடந் தேரேறு சூரனுயிர் போக்கிலிற நூக்கியிதமாய்ப் புத்தேளிரைத் தானம் வைத்தஜய சிங்கமே
பரணு நந்தவடிவே வாரேறு கொம்மைமுலை யேரேறு மம்மைகுற
மங்கைக் குடிந்த கணவா மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே.
-164

விண்ணினுறை பண்ணவரி னெண்ணரிய கின்னரர்கள்
வேதசிவ நாதகணமும் வித்தியா தரரியக்கர் சித்தரொடு மற்றுமுள
வீரபுய ஞதிவிறலோர் எண்ணிறவ நாதர்ந:ம சண்முகப ராதியென
விணையடிக டொழுதுபரவ இறைவிசுர கயவல்லி குறவரரு வியவள்ளி
யிருமருங் கினிதுவிரவ வண்ணமிகு மோராறு சென்னியூடி சூடியே
வனசகர மரபினுெளிர வட்டமிட் டாடுமயி லட்டதிக் கேPவரு
வாலவடி வானபதியே மண்ணுலக பாசவிரு டன்னினலே யாமலே
மாட்சிமிகு காட்சி தருவாய் மிதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (2)
Hதியநறை யமிழ்தொழுகு மினியமொழி புகல்குறவர்
பூவையவ ளன்றுவெருவ பொற்பினுயர் வள்ளிமலை யுற்றுவரு தந்திமுக
புங்கவற் கிளையகுழகா அதிகபல னரவினுயர் கொடியனடி யரிகடமை
யமரினிடை வீட்டவெண்ணி அறமதலை முதலரச ருறவுதவி புரியரித
னன்புக் கிசைந்தமருகா கதிமருவு விசைகொண்டு முதுகனக மேருகிரி
கடகடென் றதிரவன்பர் கடிதினுள நெக்குருக நடனமிட் டாடிவரு
காலமயி லேறுகுருவே மதியினெளிர் திருவதன வரைமகண்மு னருளவரு
மைந்தனே கந்தவெந்தாய் மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே, (8)
கங்கைமதி யணியரனை யின்றியொரு தக்கஞர்
கடிதுபுரி வேள்விதன்னைக் கறுவுட னழிக்கவென விறைவனவ னுட்கொண்ட
கரிசறு குறிப்பறிந்தே துங்கமிகு மயிலேறி யங்கைசிலை வேல்கொண்டு
துய்யவிறல் வாகுமுதலோர் தொடரவிரை வுடனேகி யடல்புரிந் தவன் மகிழ்வு
தோன்றவுறை செய்கைநீத்தே
- 65.

Page 90
பொங்குசின வுக்கிரனை யங்குதவ வைத்தவொரு
புனிதசிவ குமரபரனே பொன்னட ரெந்நாளு மன்னேவல் செய்யவுயர்
பொற்றவி சிருக்குமிறையே மங்கைகுற வஞ்சிகய நங்கையொடு புல்லவரு
மன்ற லணி கின்றடியனே மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (4)
எந்தநிதி முந்துமணி வந்துதவி னுந்திருவி
விந்தவுல கெய்துமெனினும் ஈசசுத னேசிறிதுன் மாசிலரு வின்றெண்ணி
லென்னபய னன்னவற்ருல் முந்தவொரு குரனவ னந்தமறு மண்டங்கண்
முதல்வணு பாண்டுமுடிவின் மூர்க்ககுண மிஞ்சிநின் வேற்கிரைய தாயினன்
முந்தியருள் சுத்தசோதீ பந்தவிரு ணிக்கிநனி யுப்ந்துகடை யேழையேன்
பற்றுசிவ ஞானமுற்றே பரமகுரு வரவுனது சீரடிய ஞகவருள்
பாலிக்க வேண்டுமையா வந்தவிரை வெட்சிமல ரிந்துள முடித்தகுக
மாறுக் குவந்தமருகா மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவு சிவ திருமுருகனே. (5)
ஆசைபெண் மீதுபொன் ஞசைமண் னசைமற்
றழகுவலி தைரியத்தில் ஆசைகள வாதிபல நீசர்தொழி லாசைமலி படியேனை யிவைகள் செய்யும் பாசவினை நீக்கியுன் னுசை மேற் கொண்டிடப்
பண்ணுவாய் பண்டைநாளிற் பத்தியுடனே தொழுத நக்கீர தேவனிடர்
பாறவருள் பரமபதியே மோசமிகு நாயடிய னேதுயிழை செய்தாலு
முந்துமரு டந்துதவுவாய் மொய்தினைப் புனமதனி லெய்துகனி யெனவள்ளி
முன்னுரு வெடுத்தமுதல்வா மாசறு ந லுபதேச மீசனர னுக்கன்று
மகிழ்வொடு புரிந்தமணியே மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (6)
166

ஆலையிடு கன்னலென வென்னைநோ யனவரத மச்சப் படுத்திவரவும் V. அளவற்ற பலகோடி யுளமுற்ற கவலைபல
வங்கிங் கலைத்துவிடவும் காலினதி தூரமிக வோடியே செல்லினுங்
கருதுபய னடைதலிலதாய்க் காசுபண மின்றியே கடனுதவி னேர்முனிவு
காணலா லச்சமுறவும் கோலநிரு பாலரிறை கொண்டுவரு கெண்ணவுங்
கொண்டமனை யண்டுமிளையோர் கூடுபசி தீரென்ட ரேதுகொ லியற்றுவேன்
குறுவிழி விழிப்பதல்லால் வாலறிவ வேலிறைவ மேலான நின் கருணை
வள்ளலே யுதவவேண்டும் மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (7)
கல்வியது கற்பதூஉங் கவலைமேற் கற்றதைக்
காப்பதுTஉங் கவலையன்றிக் கல்வியில் லாவிடினு மல்லலுறு கவலைமனை
காணிபொரு டேடல் கவலை வல்வினைகள் சேரினுங் கவலையவை நீங்கினும்
வருமென வஞ்சு கவலை வறுமையது செறியினுங் கவலையது போயினும்
வந்தபொருள் போற்று கவலை தொல்லைவடு கவலையெனும் வெள்ளமதி லாழ்ந்தனன்
றுாக்கிவிடு துணையுமிலையே * சுத்தநின தருளின்றி யித்தமிய னேன் கவலை
தொலையுநெறி யில்லையையா மில்லடு புயந்தமுவி நல்ல கய வல்லிகுற வல்லிதொழ நின்றபதியே மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (8)
L-1606) ob) de கவலையெனு மசனிநண் குமுறிடப்
பாவமழை தோய்ந்துதளராப்
பாசவிரு ணீடுபுவி யானவிக் காட்டினிற்
பரவுபிணி மிருகநடுவே
விலகிவழி படர்பரிசை யறியாத வேலையினில் வேட்கை யென் பூட்கையொன்று
விரைவினெடு தொடருதலு மரியமா யைக்குழியில்
வீழவங் கிறுதிநாகம்
167.

Page 91
அலகிலதி சினமருவி நனிசீற நியதியெனு
மறுகுவேர் பற்றவதனை அறுத்திடக் காலவெலி யாங்கூறு மின்பமது
வள்ளிக் குடிக்குமுறைபோல் மலவிருளி னலைகின்ற தமியேனை யாட்கொண்டு
மான் கருணை பீண்டுதவுவாய் மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே. (9)
செங்குருதி தோனரம் பென்புதசை யோடிலகு
சீரிலா விந்தவுடலைச் சிற்றுணவு தத்தமக் கென்றுநரி நாய்கூளி
சிந்தைசெய் தேயிருப்பத் தங்கமொடு முத்துமணி சங்கினுறு நற்பணிக
டகுதியென வேதரித்துத் தாழ்வொருவர் சொல்லாது வாழ்வமெனு மூடருட
முன்பிரியி னேதுபரிவார் அங்கையினில் வேல்கொண்ட வையனே யேழையெஜன
யாண்டடிமை கொண்டுமகிழ்வால் ஆதரித் தேயுலகி லேதுபயன் வேண்டுறுவ னவையெலாந் தந்துமுடிவில் மங்கல மிகுந்தபத மங்கருளு வாய்வள்ளி
மங்கைகய வல்லிகணவா மதுவேறு பூம்புறவ மஞ்சேறு பெரியதுறை
மருவுசிவ திருமுருகனே, (10)
திருமுருகர் பதிகம் முற்றிற்று.
 

அனுபந்தம் 2
வி. நமசிவாயம்
இயற்றிய
அம்பாரை மாணிக்க விநாயகர்
3.
திருப்பதிகம்
வானுயர் பொழில்வாய் மதுகரம் பாட மதகரி முழவெனப் பிளிற தேனலர் கமலம் திருவிளக் கெடுப்பத்
தெண்டிரை எழினியிற் றிகழ கானக மயிலார் களிநடம் புரியக்
கற்பக வாரணக் கடவுள் ஆனனம் மலர அருள்தர வுவந்தே அம்பாரை நகரமர்ந் தாரே.
துங்க முயர்ந்தே வெண்கல சங்கள்
தொடர்பணி மலையெனத் துலங்க சங்கர னுமையாள் பங்கின னுகச்
சண்முக னருகினி திருப்ப எங்கணு மடியார் இன்னிசை பாட
ஏர்தரு மறையவ ரியம்ப ஐங்கர னுவந்தே அருளொளி தரவே
அம்பாரை நகரமர்ந் தாரே.
ஆலையிற் கருப்பஞ் சாறலை மோத
அரிதலைப் பாளையின் தேறல் சாலையின் கழுநீ ராறென வோடத்
தண்டலை வாளைகள் தாவும் ஓலமிட் டழைப்பா ருரைதடு மாற உடல்புள கங்கொள உகுநீர் ஆலிக்கு மறையோர் அடியினை யலைப்ப
அம்பாரை நகரமர்ந் தாரே
a 69

Page 92
வரையெனப் பொலியும் மரமரி துகளும்
வளவயல் நெல்லுமி மலையும் இரைவொடு பொறிவாய் பிழிபடு கரும்பும்
இமவரைத் தொடரென இலங்கும் வரையுரங் கிழித்தோன் மலரயன் திருமால்
வணங்கிட அருளொளி வடிவாய் அரைமணி அசைய ஐங்கரக் கடவுள்
அம்பாரை நகரமர்ந் தாரே.
ம்ேவலர் புரங்கள் வெந்தழ லாக
மேருவெஞ் சிலைகுணித் தவன்றன் பூவியல் தடத்தேர் அச்சது பொடிசெய்
போதமெய்ஞ் ஞானநற் பொருளாய் மூவரும் வாழ்த்த மூஷிக மேறி
மும்மத வாரணக் கடவுள் ஆவணந் தோறும் அடியவர்க் கருள
அம்பாரை நகரமர்ந் தாரே.
பொற்பென வெழுந்த புகர்முக அவுணன்
பொடிபடக் கோடொடித் தெறிந்து
கற்பக வரசன் கழலிணை பணியக்
கவின்மணி முடிபுனைந் திருத்தி
கற்றிடு மடியார் புத்தியி லுறையும்
கற்பக வாரணக் கடவுள்
அற்புத மாக அடியவர்க் கருள
அம்பாரை நகரமர்ந் தாரே.
ஞானநற் கனியை நாரத னளிக்க
நாயகன் மதலையர்க் கருள வான மொ டகிலம் வலம்வரு கெனவே மாமயி லவன் மிக விரைய மோனநன் முதல்வன் மூஷிக மேறி
முதல்வனை வலம்வர முடிவில் ஆனநற் கனியை அருந்திட உவந்து
அம்பாரை நகரமர்ந் தாரே.
-70

0.
l.
அங்குச பாசம் கொம்புட னேந்தி
அவல்பொரி கடலைமுப் பழம்பால் செங்கரும் பிளநீர் தேனுட னருந்த
தெண்டிரை வாவியி னயலாய் சங்கின முரலச் சதிரிட மடவார்
தமனிய வாசனத் தமர்ந்தே ஐங்கணை மதன ரயனரி போற்ற
அம்பாரை நகரம்ார்ந் தாரே.
கலசங் கவிழ்த்தே காவிரி தந்த
கரிமுக னடியிணை பணிய அலையுங் கடல்போ லடியவர் வருவார்
அமரரு மடியிணை யணைவார் உலையின் புகைவான் உடுநிரை மறைய
உயர்மணி மாளிகை ஒளியால் அலரும் கமலம் இரவினிற் றெரிய
அம்பாரை நகரமர்ந் தாரே.
கானவர் மகளைக் கருதிய குமரன் கடகளி றெனவுனை நினைய வானவர் பணிய மதகரி வடிவாய்
வதுவையை யருளிய மணியே! கானமும் மதம்பாய் ஞானநற் குருவே!
கவிமழை பொழியுநற் கணியே! ஆனநன் முகத்து அரனருள் சுதஞய்
அம்பாரை நகரமர்ந் தாரே.
கற்பக மொடுசெந் தமிழிசை ஞானம்
கவினுறு கார்திரு மூதூர்
நற்றமிழ் நமச்சி வாயனின் நாவில்
நவின்றிடு மருந்திருப் பதிகம்
அற்புத மாயம் பாரையி லுறையும்
ஆனையைப் பாடிடு மடியார்
கற்பக நிழலில் கணபதி பருளால்
கவலையை மறந்திருப் பாரே.
திருச்சிற்றம்பலம்.
- 17

Page 93


Page 94
*u |- 真。, , |- :
i
*
த்தோலி
萤
LL L TLTLLLLLLLL0LLLLL L L LS KSLLSLLLLLLLYSqS