கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தளம் வரலாறும் மரபுகளும்

Page 1


Page 2

புத்தளம் வரலாறும் மரபு ரும்
ல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஒய்வு பெற்ற கல்வியதிகாரி இலங்கைக் கல்வித் திணைக்களம்

Page 3
உரிமை பதிவு செய்யப் பெற்றது. ". முதற்பதிப்பு 1992 ஆகஸ்ட்
ISBN 955 - 954-50 - O - 0
PUTTALAM
WARA LAAR U MI, MARAPU HIALUMI (HISTORY AND TRADITIONS)
A Luth O: ALHAJA. N. M. SHAJAHAN
Rtd. Education Officer, Dept. of Education, Shri Lanka.
Printed by: NPPON PRINTERS,
9-סad, Colombסy's RחסthחSt. A ,46
First Edition: 1992 AUGUST
Author's Address: 2014 A, Cassim Lane, Puttalam,
Shri Lanka.
PCE: Rs. 150/-

| || *、
隸醬
t
,
1985. 08, 25 அன்று மறைந்த
என் அன்புத் தந்தை
&DLD Liġi assifi
முகமமது அபூபக்கா
அசன மரைக்காயர்
நெய்னா "L"
எனது அன்புக் காணிக்கை

Page 4

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்கள் வழங்கிய
மதிப்புரை
"வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமூகத்தின் காலக் கண்ணாடி'
ஒரு பிரதேசத்தின் வரலாறு ஒரு நாட்டின் வரலாறாகும். ஒரு நாட்டின் வரலாறு உலகின் வரலாறாகும். தான் பிறந்த மண்ணின் வரலாற்றைச் சரியாகப் பதிந்து வைக்காத சமுதா யம் தனது வரலாற்றையே இழந்த சமுதாயமாகிவிடும்.
லெமூரியா" எனப்படும் குமரிக் கண்டம் முதற்கொண்டு எத்தனையோ நாடுகள், பிரதேசங்கள் மண்ணோடு மண்ணாகி மக்கி மறைந்திருக்கின்றன: கால வெள்ளத்தில் கரைந்து போயிருக்கின்றன; பெரும் பிரளயங்களும் பூகம்பங்களும் விழுங்கி ஏப்பமிட்டிருக்கின்றன.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை மிக்க நகரங்களான ஹரப்பா - மொஹஞ்சதாரோக்கள் சுமார் நூறு வருடங்க ளுக்கு முன்தான் கண்டுபிடிக்கப்பட்டன. "ஜோன்மார்ஷல்", என்ற புதைபொருளாய்வாளர்தான் புதைகுழியிலிருந்து இந்த நகரங்களைத் தோண்டியெடுத்தார். வாய்பிளக்க வைக்கின்ற நாகரிகத்தின் உச்சஸ்தாயைகளை இங்கு கண்டுபிடித்தார். இந்நகரங்கள் இன்றைய நவீன உலகுக்கே பெரும் சவாலாக அமைந்திருந்தமை அப்போதுதான் தெரியவந்தது.
எமது இலங்கை மணித் திருநாடும் பழம் பெரும் நாகரிகத் தின் ஊற்று வாயிலில் ஒன்றுதான். எகிப்திய, பாரசீக, பபி லோனிய, உரோம, கிரேக்க, சீன, இந்திய நாகரிகங்களுக் குச் சற்றும் சளைத்ததல்ல. இலங்கையின் நாகரிகம் 2500 ஆண்டு களுக்கு மேல் பழைமை மிக்க நாகரிகத்தைப் பூண்டுகொண்ட நாடுதான் நம் நாடும். ஸைலான், சிலோன், ஸரன்தீப், தப்ர பேன் என்று பல்வேறு மகுடங்களில் அழைக்கப்படும் இலங்கை உலக வரலாற்று நூலில் அழுத்தமாகப் பொறிக்கப்பட்ட ஒரு சின்னஞ் சிறு தீவாகும்3

Page 5
சுலைமான் நபிக்கு பல்கீஸ் ராணியினால் அனுப்பிவைக் கப்பட்ட பரிசுப் பொதியில் சிலாபத்துறை முத்தும், மணியும், யானைத் தந்தமும், ஏலம், கறுவா, மிளகு போன்ற வாச னைத் திரவியங்களும் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
இலங்கை வரலாற்றை ஆராயப் புகுபவர், வட புலத் தைப் புறக்கணித்துவிட முடியாது. மன்னார், மாதோட்டம், யாழ்ப்பாணம், புத்தளம், கல்பிட்டி என்பன முக்கியமானவை; பன்னூற்றாண்டு வரலாற்றைக் கொண்டவை.
மாபெரும் கடலோடியாகிய இப்னுபதுரதா இப்பிரதேசத் தினூடே பிரயாணம் செய்திருக்கின்றார். விசேடமாகப் புத் தளத்திலும் மன்னாரிலும் தங்கிச் சென்றிருக்கின்றார். இவை வரலாற்றுப் பொறிப்புக்களாகும். கிரேக்கர், யவனர், பாண் டியர் முதலானோர் மன்னார், புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றனர்; வணிகம் புரிந்திருக்கின்றனர்.
புகழ் பெற்ற பொன் பரப்பி முதற்கொண்டு, உள்ளளவும் நினைக்கவைக்கின்ற உப்பளங்கள், பெருக்கு மரங்கள், கீர்த்தி மிக்க கல்பிட்டிக் கோட்டை போன்றவை புத்தளத்தின் பெரு மையை எத்தளத்திற்கும் எத்திவைக்கின்றன.
இத்தகைய வரலாற்றுப் புகழ் மிக்க புத்தளத்தைப் பற் றிய ஒர் ஆராய்ச்சி நூல் வெளிவருவதையிட்டு, முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகத்தான் இருக்க முடியும். கார ணம், புத்தளத்தை மேற்பார்வை செய்ய மேதகு ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்ட எம். பி. என்ற வகையிலும், இத்தகைய வரலாற்றாய்வுகளில் மிக்க ஆர்வமுள்ளவன் என்ற வகை யிலுமே இது இப்புளகாங்கிதம்!
ஆய்வுகள் சரியாக எழுதப்படல் வேண்டும். ஏனெனில் இவைகள்தான் வரலாற்றுப் பதிவுகள். எழுத்தில் இருப்பவை தான் காலக்கிரமத்தில் உண்மையாகிவிடுகின்றன. ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பற்றிய உண்மைகள் அங்கு கண் டெடுக்கப்பட்ட செப்புத்தகடுகள், பொன், வெள்ளி, வெண்கல, மட்பாண்டங்கள் ஆகியவற்றின் பொறிப்புகள் மூலம் பெறப் பட்டவைகளேயாகும்.
எனவே அழியாத, செல்லரித்துப் போகாத, பழம் பதிவுகள் மட்டுமே ஒரு பிரதேசத்தின் இலாப நட்டங்களையும் இன்ப துன்பங்களையும் நிலைநாட்ட வல்லன. இந்த அடிப்படை

உண்மையை மனதில் கொண்டு மிகுந்த ஆராய்ச்சியின் மத்தியில் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
இந்நூலாசிரியர் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் அவர் கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர்; வரலாற்றாய்வாளர். முன்னாள் கல்வி அதிகாரியாக இருந்த இவர், புத்தளம் பற் றிய ஏராளமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்; நிறைய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
1991ல் எமது அமைச்சு வெளியிட்ட தேசிய மீலாத் விழா மலரில் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் எழுதிய ‘இப்னு பதூதாவும் புத்தளம் மன்னரும்" என்ற ஆய்வுக் கட்டுரை மூலம் ஷாஜஹானது மேதாவிலாசத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே ஒரு பிரதேசம் பற்றிய, அதிலும் தான் வாழ்ந்து வருகின்ற மண் பற்றிய ஆராய்ச்சி நூலை மிகுந்த சிரமத்தோடும், மிக்க அவதானத்தோடும், தக்க ஆதாரத் தோடும் எழுதுகின்ற வல்லமையும் மனோதிடமும் ஷாஜஹா னுக்குண்டு எனில் அது மிகைபட்ட கூற்றல்ல.
நிச்சயமாக இந்நூல் ஒரு வரலாற்றுப் பதிவாக அமையும்அமைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நூலின் வெற்றிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், பா. உ 19928---س 11
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.

Page 6
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் வழங்கிய
மதிப்புரை
வடமேற்கு பிரதேசம் பற்றிய வரலாற்று நூலொன்றை ஆய்வுநோக்கில் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் அவர்கள் எழுதியுள்ளமை கண்டு மகிழ்வடைகின்றேன். புத்தளம் பிரதேசத்தின் வரலாறும் மகிமைகளும் இந்நூலில் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.
புராதன காலந்தொட்டு வடமேற்குப் பிரதேசம் தமிழ் மொழியோடும், தமிழ்ப் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந் துள்ளது என்பதை வரலாறுகள் எமக்குத் தெளிவுபடுத்துகின் றன. மகாதித்தம், அரிப்பு, குதிரைமலை, கற்பிட்டி, புத்த ளம் ஆகிய பண்டைய பிரசித்தி பெற்ற துறைமுகங்கள் இப் பகுதியின் செல்வாக்கிற்கு ஆதாரங்களாய் விளங்கியமையைக் காண்கின்றோம். திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், போன்ற புண்ணியத் தலங்கள் இப்பகுதியில் அமைந்து அருள்பாலிப்ப தைக் கொண்டு தமிழ் மொழியும், சைவ சமயமும் தொன்று தொட்டு செல்வாக்கோடு மிளிர்ந்துள்ளமையைக் காண்கின் றோம். சிவச்செல்வன் இராவணேஸ்வரன் அமர்ந்து வீணைக் கொடி பறக்க செங்கோலோச்சிய அவனது தலைநகர் இலங்கா புரி உட்பட பரந்த இப்பகுதியின் நிலப்பரப்பு கடற்கோள் களினால் நீருள் ஆழ்ந்து மறைந்து போன நிகழ்வுகளையும் ஆசிரியர் இந்நூலில் சுட்டிக்காட்டுவதன் மூலன் இதிகாச புராண காலந்தொட்டு இப்பகுதி பிரதான இடத்தை வகித் துள்ளமையைப் பார்க்கின்றோம். கற்காலந்தொட்டு நாகரிகம் முதிர்ந்து மலர்ந்த தாமிரவருணிப்பொன்னாடும், அல்லி அரசி அரசாட்சி செய்த நிலமும், முத்துக்குளிப்பு கொடி கட்டிப் பறந்த பிரதேசமும் இதுவே என நூலாசிரியர் பல ஆதாரங்கள் மூலம் எமக்குத் தெரிவிக்கின்றார். தீர்க்கதரிசி சொலமன் அவர்களுடன் தொடர்பு கொண்ட "ஷிபா' இராணி வீற்றிருந்த பிரதேசமும் இதுவாயிருக்கலாம் எனவும் மேலும் எடுத்துக் காட்டுகின்றார். இப்பகுதி மக்களின்

தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ள மரபுகளையும், நிகழ்வு களையும் விபரித்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கவைக ளாகும். a
இந்நூல், வடமேல் பிரதேசத்திற்கும் தமிழுக்கும் உரிய ஆய்வுகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இத்தகைய நூல்கள் மேலும் சான்றுகளோடு வெளிவர வேண்டியது மிக வும் அவசியமாகும், இந்நன்முயற்சியை மேற்கொண்ட் ஆசிரி யரின் ஊக்கத்தைப் பாராட்டுகின்றேன்.
பி. பி. தேவராஜ் இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர்

Page 7

கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி ஈறாகவும், வெளிநாட்டுச் சேவையில் இலங்கையின் தூதுவர் வரை யும் பல நாடுகளில் சேவையாற்றி தற்போது இலங்கை வெளி விவகார அமைச்சின் பிரதான உபசரிப்பாளராகத் திகழும் ஜனாப் வை. எல். எம். ஸவாஹிர் அவர்கள் மனமுவந்து அளித்துள்ள
அணிந்துரை
* 'புத்தளம் வரலாறும் மரபுகளும்" என்ற இந்தப் பெரு நூலுக்கு நான் எப்படி அணிந்துரை எழுதலாம் என்று எனக் குள்ளே போராடிக் கொண்டிருந்தேன். இந்நூலை எழுதிய எனது ஆசான் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் அவர்கள் இந்நூலின் மூலப்பிரதியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே என் கையில் தந்து, அதனைப்பற்றி எனது அபிப்பிராயத்தைக் கூறும் படி வேண்டிக் கொண்டார். ஆயினும், நூலைப் படித்த பின்னரும் என்னால் இது வரை ஏதும் ஆலோசனைக் குறிப்புகள் கூற முடியவில்லை, அப்படி ஏதும் கூறமுடியாது என்னைத்தடை செய்தது அதை எழுதியவர் மீது நான் கொண்டிருந்த அளப்பரிய மரியாதைதான். நாற்பதாம் பத்துக் கடைசியில் பாலர் வகுப் பில் எனது சிறுவிரல்களைப் பிடித்து மண்ணிலே தமிழின் ஆரம்ப எழுத்துக்களை எழுதச் சொல்லிக் கொடுத்த எனது கல்வித் தந்தையாக இருக்கும் அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்களின் இந்த எழுத்து முயற்சிக்கு, "நான் எனது பண்டிதத் தன்மையைக் காட்டலாமா? அதனைப் பற்றி எழுதுவது சரியா? என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டேயிருக்கும்போது ஆசிரியர் அவர் கள் பலமுறை ஞாபகப்படுத்தியதால், "என்னதான் இருந்தா லும் இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவதில் பெருமை எனக்குத் தானே" என்ற சிந்தனையுடன் இந்நூலையும், இந்நூலை எழுத அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை யும் பற்றிக் குறிப்பிட முனைந்தேன்.
தென் ஆசிய, தென் கிழக்காசிய வரலாற்றினைச் சிறப்பாகப் பயின்று. அப்பாடநெறிகளின் மூலம் இலங்கை கடல் கடந்த சேவையில் சேர்ந்து, பல நாடுகளின் வரலாற்றினையும் சேவை நோக்கில் படிக்கும்போது 'புத்தளம் வரலாறும் மரபுகளும்" என்ற இந்நூல் ஒரு மாபெரும் முயற்சியே என்று கூறவேண்டும். பல வரலாற்று நூல்களைப் படித்து அலசி ஆராய்ந்து புத்தளம் மாவட்டம் பற்றிய செய்திகளைத் தேடி எடுத்திருக்கின்றார். புத்தளம் மாவட்டத்தில் நிலவுகின்ற பழைய வரலாற்று மரபு

Page 8
களைக் கஷ்டப்பட்டுத்தேடி எழுதியிருக்கின்றார். மனித நாக ரிகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே மனிதன் தன் கோத்திரத் தைப்பற்றி, குலத்தைப்பற்றி, ஊரைப்பற்றி, தான் அடைந்த வெற்றிகள் சாதனைகள் தனக்கு முன்னர் வாழ்ந்தோர் ஆற்றிய அளப்பரிய சேவைகள், நடைமுறைகள் பற்றியெல்லாம் பாது காத்து வைக்க முயன்றிருப்பதைக் காணமுடிகிறது. இதனை நாடோடிப் பாடல்களில், கர்ண பரம்பரைக் கதைகளில் பதித்து வைத் திருப்பதைக் காணமுடியும். இதன் மூலம் தங்களது இளைய தலைமுறையினரை வீரத்திலும் ஆற்றலிலும் அயலவர்களை விடச் சிறந்தவர்களாகக் காட்ட முயன்றிருப்பதையும் அறி கிறோம்.
உண்மையில் சொல்லப்போனால் புத்தளம் இலங்கையின் syrtu9 å (Gate Way to Shri Lanka) stsår 3D spGaysia Gub. Dav så கையில் குடியேறிய விஜய மன்னனும் அவனது சகாக்களும் “தம்மன்ன" என்ற இடத்தில் இறங்கியதாக இலங்கையின் பண் ட்ைய வரலாறுகளைக் கூறும் மகா வம்சம் சான்று பகர்கின்றது. மாதோட்டம் முதல் சிலாபம் வரை இடைப்பட்ட இப்பிரதேசத் தில் பண்டைய உரோமர்கள், கிரேக்கர்கள், அராபியர், ஐரோப் பியர், இந்திய துணைக்கண்டத்தவர்கள் வியாப்ார நோக்கமாக வந்துபோய் இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அவர்கள் விட்டுச் சென்ற பண்டைய நாணயங்களும, தொல்பொருள் களும் ஆதாரங்களாகின்றன. இலங்கைக்கு பதினான்காம் நூற் றாண்டில் வந்திறங்கிய புகழ்பெற்ற உலகப் பயணியான இப்னு பதூதா தான், புத்தளத்தில் வந்து இறங்கியதாகவும், அங்கிருந்த அரசனுடைய உதவியால் பரிவாரங்களுடன் "ஆதாம் மலையை" பார்க்கப் போனதாகவும் சான்று பகர்கிறார். அவரது பிரயா ணத்தின்போது பல முஸ்லிம் பெரியார்களின் அடக்கஸ்தலங் களைக் கண்டதாகவும் எழுதியிருக்கிறார். அவர் இலங்கைக்கு வரும்போது ஸலாஹ"த்தீன் என்ற அபிசீனிய நாட்டவர் (ஆபி ரிக்கக் கண்டத்தவர்களுக்கு கூறும் பொதுவான வார்த்தை) ஐந்நூறு ப்ேர் கொண்ட ஒரு சிறு கடற்படை வைத்து கரையோ ரப் பகுதிகளைக் கண்காணித்து வந்ததாகவும் கூறுகிறார்.
கண்டிய மன்னர்களின் வியாபாரத்தை, வெளிநாடுகளுட னான தொடர்பை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் முறி யடிக்க முயன்றபோது, கண்டி மன்னர்கள் புத் தளம் துறை முகம் வழியாக வெளியுலக வாணிபம் செய்திருப்பதை அண் மைக் கால ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன. பிரித்தா

னியர் காலத்தில் வளைகுடா நாட்டு அராபிய வியாபாரிகள் புத்தளம் - சிலாபம் கடலில் முத்தெடுப்பதற்காக வரிப்பணம் செலுத்தி முத்துக் குளித்திருப்பதைக் காண்கிறோம். இவ் வாறாக வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தளம் மாவட்டம் வெளிநாட்டவர்களுடன் தொடர்புபட்டிருப்ப தையும் இலங்கையின் வாணிபத்திற்கும், நாகரிக முன்னேற் றத்திற்கும் வாயிலாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. தமிழ் பேசும் முஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் ஒரு பாரம் பரியப் பிரதேசத்தின் வரலாற்றினையும் , அவர்களிடையே பரிமாறப்படும் கலாச்சார சின்னங்களையும், மரபுகளையும், வாழ்க்கை முறையினையும் பிறமாவட்டத்தினரும், பிற நாட்ட வரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள இப் பெரும் நூல் உதவும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. w V
இந்நூல் நம் நாட்டவருக்கு, விசேடமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்லதொரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகின்றேன். இந்நூல் நம்மவர் மத்தியில் நல்லதொரு வெற்றியைப் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
வை. எல். எம். ஸ்வாஹிர் (SLOS) V பிரதான உபசரிப்பாளர் 3-07-1992 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு-1

Page 9
வாழ்த்துரை
இலங்கையின் தமிழர் பிரதேசங்கள் பற்றிய வரலாற்று நூல்கள் தமிழில் ஒரு சிலவே வெளிவந்துள்ளன. குறிப்பாக வடமேற்குப் பிரதேசத்தைப் பற்றிய வரலாற்று ஆய்வு நூல் கள் தமிழில் இதுவரையிலும் வெளி வரவில்லையே என்ற மனக்குறை என்னைப் போல் பலருக்கும் இருந்து வருகிறது.
"புத்தளம் வரலாறும், மரபுகளும்" எனும் நூல் மிகப் பொருத்தமான நேரத்தில், தேவையான சமயத்தில் வெளி யிடப் படுகின்றது. இந்நூல் ஆசிரியர் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் அவர்கள் சிறந்த கல்விமான். அவரின் தமிழ், தமிழர் என்ற பற்றுதலின் நிலைப்பாடே இந்நூல் ஆக்கத்தி னால் வெளிப்படுகின்றது. வடமேற்குப் பிரதேசம் பாரம்பரிய மாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற வரலாற்று ரீதியாக தமிழ் செல்வாக்கு பெற்ற பிரதேசம் என்பதே யதார்த்த பூர்வமான முடிவாகும், மொழி, கலாசாரம், பண் பாடுகள், வரலாற்று நிகழ்வுகள் ஆதியனவற்றை ஆதாரப் பூர்வ மான ஆய்வுகளாக எம் முன் நிறுத்தியுள்ளார். அவரின் பெரும் முயற்சிக்கும், திறமைக்கும் எனது வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்,
இந்நூலின் ஆதிக்கத்தின் உறுதுணையாளன் என்ற ரீதியில் எனது வாழ்த் துரையை எழுத வாய்ப்பேற்பட்டமைக்கு பெரு மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் இந்நூல் பல குறைகளை எம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்நூலாசிரியரின் மன தில் உருவான எண்ணத்திற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரித்து தொகுத்துத் தந்துள்ளார். புத்தளம் பிரதேசம் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வதால் இஸ்லாமிய மதரீதியான கண்ணோட்டத்திலேயே உருவாக்கி விட்டார். மேலும் வட மேற்குப் பிரதேசம் தமிழர் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த மதரீதியான சண்ணோட்டத்தில் எழுதாமல் பொதுப்படையிலான கண்ணோட்டத்திலேயே எழுதப்பட வேண்டும் என்பது உண்மை. இருந்தாலும் அவரின் செய்திற னைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்நூலில் இருக் கும் குறையை நீக்கி முழுமை வடிவமான வரலாற்று நூல்கள்

இவரைப் போன்ற ஆற்றல் , படைத்தவர்கள் ஏன் இந்நூல் ஆசிரியர் கூட தொடர்ந்து எமது தாயகத்திற்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்திற்கும் உதவக் கூடியதாக உருவாக்கிக் கொண்டே இருக்கவேண்டும். அதற்கான உதவிகளைச் செய்ய என்றும் சித்தமாயுள்ளேன். இதுவே இந்நூலின் மூலம் எனக்கு ஏற்படும் அவா.
நன்றி
அன்புடன், ந. அன்பழகன் பாரிஸ், பிரான்ஸ்,
10-01-1992
N. A NBALAGAN 31, Avenue Normandie Niemen Appt. B 2, 93150, Le Blanc Mensil France.

Page 10
வாழ்த்துரை
இது ஒரு வரலாற்று நூல். இதனை ஆய்வு செய்கின்ற தன்மை வரலாற்று ஆசிரியற்குரியது. இதனைப் போலவே மேலும் இலங்கைத் தமிழர் சம்பந்தமான வரலாற்று நூல்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்கிற 'ஆசியா"வின் எண் ணத்திற்கு தனது முதலாவது வரலாற்று நூல் மூலம் உயிர் கொடுத்திருப்பவர் அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் அவர்கள்.
இதனைத் தொடர்ந்து மேலும் பல இலங்கைத் தமிழ் வரலாற்று நூல்களை தமிழ் அறிஞர்கள் கொண்டுவருவார் கள் என்றும், "ஆசியா" என்றென்றும் அவர்களுக்கு உறு துணையாக இருக்கும் என்றும் இதன் மூலம் தெரிவிக்க விரும்பு கிறோம். இந்நூலாசிரியரின் முயற்சிக்கு எமது பாராட்டுகள்.
சபா கோமதி ஆசியாவின் சார்பில்
சார் சேல்.
10-01-1992 SABA KOMATHY Asse ay S. 3, Alles Paul Leautaud 95200, Sarcelles France,

இறைவன் துணை
என்னுரை
இந்நூலை எழுதிய நோக்கத்தை தோற்றுவாய் என்ற அத்தியாயத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன். புத் தளம் பிரதேசத் தின் வரலாற்றுக் குறிப்புக்களை கண்ட, கேட்டவிடத்து அவற் றைக் குறித்துப்பேணி வைக்கும் ஆர்வம்' என்னிடம் நீண்ட கால மாக நிலவிவந்த பழக்கமாகும். நான் கல்வி கற்கும் காலத்து புவியியலும், வரலாறும் எனது விருப்புக்குரிய பாடங்களாக இருந்தன. ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் கற்கும்போது அங்கு சமர்ப்பிக்க வேண்டிய மூல சாதன வேலைக்காக 1948ம் ஆண் டில் என்னால் எழுதி சமர்ப்பிக்கப்பட்டது 'புத்தளம் பகுதி யின் பூமிசாத்திரம்" என்னும் நூலாகும். அந்நூலில் புத்தளம் பகுதியின் புவியியல் பின்னணிகள் அதன் வரலாற்றுக்கு அடிப் படையாக அமைந்துள்ளமை பற்றி விளக்கி வரலாற்றுக் குறிப் புக்களையும் சுருக்கமாகத் தெரிவித்துள்ளமையை நினைவு கூர் கின்றேன்,
புத்தளம் பகுதியின் வரலாறுகள் காலத்துக்குக் காலம் சிறு சிறு கட்டுரைகளாகப் பத்திரிகைகளில் சிலரால் தமிழ் மொழி மூலமாக வெளியிடப்பட்டிருப்பினும் நூலுருவில் வெளி வரா திருந்தமை பெருங்குறைபாடாக இருந்தது. சிறந்த வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட புத்தளம் பிரதேசத்தின் வரலாற்றை தமிழ்மொழியில் சிறு அளவிலாவது நூலாக வெளியிடவேண்டு மென்ற அவா நெடு நாட்களாக என்னுள் நிலவி வந்தது. ஆயி னும் எனது அவாவுக்குப் பக்கபலமாக வெளி ஊக்குவிப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. இதுபற்றி பல அமைப்புக்களுடனும் தனிப்பட்டவர்களிடமும் தொடர்புகொண்ட போதும் உற்சாக மான ஆதரவு கிடைக்கப் பெறாமையை வருத்தத்துடன் வெளி யிடக் கூடியவனாக இருக்கின்றேன். w
மேலும் நூலொன்றை எழுதிவிட்டால் மட்டும் போதாது. அதை அச்சிட்டு வெளியிடுவது இன்று தமிழ் மொழி எழுத்தா ளர்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சினையாகும். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு நான் பட்ட கஷ்டங்கள், மனஉளைச் சல்கள் விதி விலக்காக இருக்க முடியாது. எத்தனையோ சிறந்த எழுத்துப் பிரதிகளை அச்சு வாகனம் ஏற்ற முடியாது தூசுபடிய

Page 11
அடுக்கி வைத்து அவற்றை காணுந்தோறும் கவலையுறும் பல எழுத்தாளருக்கு உதவக்கூடிய நூல் வெளியீட்டு அமைப்புக்கள் புத்தளம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் உருவாக வேண்டும். . -
இந்நிலைமையில் என் முயற்சியை அறிந்து இந்நூலை எழுது மாறு தூண்டி உற்சாகமளித்தவர் எனது அன்புக்குரிய மாணாக் கரும், தமிழார்வம் உடையவரும், புத்தளம் நகரைப் பிறப்பிட மாகக் கொண்டவ்ரும் எனது அயல் வீட்டில் வசித்துவருபவரும், தற்போது பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழில் புரிப வருமான இந்நூலை அச்சிடுவதற்கான முழுச் செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டவருமான எனது மதிப்புக்குரிய திரு. ந. அன்பழகன் அவர்களாவார். மேலும் திரு.அன்பழ கன் அவர்களோடு இணைந்து எனது பணிக்கு உதவி யளித்துள்ளனர் பிரான்ஸில் சார்சேல் நகரில் வாழும் "ஆசியா" நிறுவனத்தின் உரிமையாளர்களான திரு. சபாலிங்கம் அவர் களும், அவர்களின் பாரியார் திருமதி. சபா கோமதி அவர்களு மாவார். அவர்களனைவர்க்கும் எனது மனப்பூர்வமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்;
இந்நூலில் குறைகள் இருக்கலாம்: பல தகவல்சள் விடுபட் டிருக்கலாம். புத்தளம் பகுதியின் முழுமையான தகவல்களைத் தெரிவிக்கும் நூலெனவும் இந்நூலை என்னால் கூறமுடியவில்லை. பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவரும் வடமேற்குப் பகுதியில் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ் லாத்தினதும், அதன் பின்பு கிறித்துவத்தினதும் செல்வாக்கு மேலோங்கியதன் காரணமாக இந்நூலில் அம்மதங்களோடொட் டிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளமை தவிர்க்க முடியாததா கும். இந்நூலை வாசித்து ஆய்ந்து இதன் தகுதியை மட்டிடுவது வாசகர்களின் உரிமையாகும் உங்களின் மதிப்புக்குரிய ஆக்க பூர்வமான ஆலோசனைகள் பிற பதிப்புகளில் இடம்பெற உதவு மென நினைக்கின்றேன். .
"எதிர்காலத்தில் புத்தளம் பகுதியின் வரலாறுகளை மேலும் ஆராய அவாவுறும் வரலாற்றுத்துறை மாணவர்க்கு வழி சமைத் துக் கொடுக்கும் சில கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருந் தால் அவையே எனது நோக்கம் நிறைவேறியுள்ளது என்ற மனத் திருப்தியை எனக்களிக்கும் என நம்புகின்றேன்" என இந்நூலின் தோற்றுவாயில் தெரிவித்துள்ள எனது கருத்துக்கள் எனது நூலாக்கத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இந் நூலைத் தொடர்ந்து மேலும் புத்தளம் பகுதியின் வரலாற்று

நூல்கள் வெளிவர வேண்டுமென விழைகின்றேன். ஆர்வமுள்ள வர்கள் இம்முயற்சியில் தங்களின் பங்களிப்புகளை நல்க முன் வருவார்களாக,
உசாத்துணை நூல்களின் பட்டியல் நூலினிறுதியில் தரப் பட்டுள்ளது. நூல்களுக்குரிய இலக்கங்களும் காட்டப்பட்டுள் ளன. இந்நூலின் இடையிடையே காணப்படும் இலக்கங்கள் எந்நூலிலிலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டனவென்பதைக் குறிப்பிடுகின்றன. குறித்த நூல்களின் வெளியீட்டாளர்களுக் கும், நூலாசிரியர்கட்கும் என் மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலின் கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பரிசீலனை கள் செய்வதில் உதவிய ஆசிரியர்களான ஜனாப் எம். ஐ. எம். ஹாலித், ஜனாப் எஸ். ஏ. ஏ. நெய்னா மரைக்கார், மெளலவி எம். ஏ. ஆர். எம். புவாத், எனது மைத்துனர் அல்ஹாஜ் எம். ஐ. எல். இஸட், ஆப்தீன், எனது தமைய னார் ஜனாப் ஏ. எம். எம். ஹனிபா ஆகியோருக்கும், குறிப் பாக இந்நூலை வெளியிடுவதில் சகல விடயங்களிலும் பக்க பலமாக நின்று உதவிய விஞ்ஞான ஆசிரியர் ஆலோசசர், ஜனாப் எம். ஏ. எம். ஜவாத் மரைக்கார் அவர்களுக்கும், எனது மருமகன் ஜனாப் இஸட். எம். றஸ்மி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
உசாத்துணை நூல்கள் தேவைப்பட்ட போதெல்லாம் மனப்பூர்வமாகத் தந்துதவிய புத்தளம் நகரசபை நூல்நிலை யப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் நன்றி கள் உரித்தாகட்டும்.
சகல புகழும், புகழ்ச்சிகளும், நன்றிகளும் உலகை இயங்க வைக்கும் இறைவனுக்கே உரித்தாகும்.
அவனைப் பணிவோம்; அனைத்தும் பெறுவோம்.
203. காஸிம் ஒழுங்கை,
புத்தளம். ܖ ஏ. என். எம். ஷாஜஹான் 04-08-1992 •

Page 12
பொருளடக்கம்
தோற்றுவாய் 2
வரலாற்றின் முக்கியத்துவமும், பயனும் - வரலாறு களைப் பதிவு செய்வதின் அவசியம்,-நடுவு நிலையில் எழு தப்படாத வரலாறுகள்-வடமேற்குப் பிரதேச வரலாறுகள் குறைவு-மேலும் ஆராய அவாவுறுவோருக்கு உதவும் நோக் கம்-இன்று கிடைக்கும் தகவல்களையாவது பதிவு செய் யாது விடின் காலப்போக்கில் அவை மறைந்துபோகும் நிலை. -
புவியியல் பின்னணி 5
வரலாற்றுக்குப் புவியியல் பின்னணி ஆதாரம்-தரை யமைப்பு-துறைமுகங்கள்- ஆறுகள்-இயற்கைத் தாவரங் கள்-விளைபொருட்கள் - நீர்ப்பாசனம் --குளங்கள்-வில் கள்-கடல் வளம்-உப்பு விளைவு-சங்கு, முத்துக்குளிப்புமீன் பிடி-இயற்கை அழிவினினறும் பாதுகாப்புப் பெறும்
மறைவுப் பிரதேசம்.
ஆய்வின் அடிப்படை 7
இந்திய உப கண்டத்தின் இணைந்த பகுதியே இலங்கை
குமரிக் கண்டம்-கடற்கோள்கள்.தாமிரவருணி ஆறு-தென்
னிந்திய பெருநிலப் பரப்பின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆராய்தல்.
*、 மனித உற்பத்தியின் மையம் 9
முதல் மனிதர் ஆதம் (அலை) உலகில் இறக்கப்பட்ட இடம் இலங்கை-ஆதம் மலை-ஆதம் அண்ை-நபிகள் நாய கத்தின் பொன்மொழி - நபித்துவத்தின் முதல் இல்லம் இலங்கை-ஹஜ்ருல் அஸ்வத் (சுவர்க்கத்தின் ஒளிக்கல்) இலங் கையில் இறக்கப்பட்டமை-மனித உற்பத்தியின் ஆரம்ப இடம் இலங்கை,
கடற்கோள்களின் தாக்கம் ” 13
முன்னைய சமுதாயங்கள் அழிந்தமை பற்றி திருக் குர்ஆன்-யுத் தகழிவுகள்-இராவணேஸ்வரன், அல்லி அரசி, பல்கீஸ் இராணி ஆகியோரின் ஆட்சியும், வீழ்ச்சியும்-கட

லின் அடியில் இராவணனின் அரண்மனைப் பொற்கலசம்**கோண்ட் வானா லேண்ட்"-"இராமணக" நிலப்பகுதிபண்டைய இலங்காபுரி கடற்கோளுக்குட்பட்டமை-லக் திவ'-லங்கா - இலட்சத்தீவுகள்-இலங்காபுரிக்கூடாக உலக நடுவரை-வடமேற்குப் பிரதேச நிலத்தைக் கடல் அபகரித் தமை-தீவுகள் பல தரைப்பர்கத்தோடிணைந்தமை
வடமேற்குக் கரையின் முக்கியத்துவம் 19
அறபிகள், பினீஷியர், சீனர் ஆகியோரின் புராதன
வணிகத் தொடர்பு-இராவனேஸ்வரனின் பெருமை-பிரசித்
தத்துக்குக் காரணிகள்-அறபிகளின் ஆதிக்கம்.
பெண்ணரசி ஆண்ட பொன்னாடு ' 23
பெண் மய அரசு-அல்லி அரசி-பல்கீஸ் இராணி (ஷிபா) ஆட்சி செய்த பிரதேசம் - திருக்குர் ஆனின் பின்னணியில் அதற்கான ஆதாரங்கள். "அரிம்" அணை உடைப்பு-இலந்தை மரச் சோலைகள், -
கடல் கொண்ட சோனகர் நாடும், பொன்பரப்பியும் 30
தமிழ்ப் பெயர்களின் சிதைவுகள்-பொன்பரப்பிப் பற் றின் நடுநாயகம் குதிரை மலை-பொற்றானியம் விளைந்த பொற்சமவெளி-ஈழத்துணவு-தாமிரவருணி, தம்பபாணி, தம்பபண்ணை-தாமிரவருணி ஆறு (பொருநை ஆறு)- 'தாப்பிரபேன்" -இலங்கைக்கூடாக தமிழகம் ஓடிய தாமிர வருணி ஆறு-குடியேற்றங்கள்-காயல் பட்டினம் சோனகர் பட்டினம்-கலாஒய்ாவே சோனகர் நதி-அறபுக் குடியிருப்பு கள்- காயலோடிணைந்த பொன்பரப்பிப் பிரதேசமே சோன கர் நாடு-மண்ணாறு மன்னாராகியது-முது மக்கள் தாழி. தாமிர வருணி ஆற்றின் படுக்கைகளில் தாழிகள்-கற்சவக் குழிகள்-பொன்பரப்பிப் புதை பொருளாய்வு-பொன்பரப் பிக்கும், தமிழகப் பொருநை ஆற்றுக்குமிடையே ஒற்றுமைசோனகர் நதிப் பிரதேசம் நிலங்களின் தாய்-பொன்பரப்பிப் பற்றின் வீழ்ச்சி-வில்பத்து.
குதிரை மலை 48
'ஹிப்பரஸ்"-அறபுக் குடியிருப்புப் பகுதி.புலவரின் பார் வையில் குதிரை மலை-"ஒபிர்", "தார்ஷிஸ்" துறை-வெளி நாட்டு வணிகர் தொடர்பு-குதிரை மலைக் கிணறு-அச்ச தகர்.

Page 13
10. விஜயனின் வருகை 53
11
விஜயனின் வருகைக்கு முன்பே வளமான சமுதாயம் இங்கே வாழ்ந்தது-விஜயனின் ஆதிக்கம்-பெளத்தத்தினதும் பாளி மொழியினதும் தாக்கங்கள்-இந்து, பெளத்த சமயங் களின் பின்னணிகளில் தமிழ், சிங்கள சமுதாயங்கள் தோன் றியமை-குவேனியை விஜயன் வரித்தமை-குவேனி கைவிடப் பட்டமை-குவேனியின் கொலை-பிள்ளைகள் தப்பியோடி னர்-தோணிக்கல் எல்லைக்கோடு - தம்மனாநுவர - மகுல் தொட்டமுனை-குவேனியைக் கைவிட்டமைக்குக் காரணி கள்-தமிழ் நாட்டிலிருந்து பாரிய குடியேற்றம்.
புத்தளம் 65
நிலையம்-குடியேற்றம்-பெருக்கமரம்-பள்ளிவாசல்கள் பெயரேற்பட்டமை-உப்பின் முக்கியத்துவம்-உப்பு வர்த்த கம்-தவள முறை-கண்டிப்பெருவழி-ஹார சீயப்பற்று-பெரு வழி ஆறு- வருடாந்த உற்சவம்-கொட்டுக் கச்சேரி-உப்புச் செய்கை அறிமுகம்-உப்பளங்கள்-உரிமை-புகழ். பூத்த தர மான உப்பு-பாரசீகர் செல்வாக்கு-புத்தளம் ஐரோப்பியர்
ஆட்சிக்குட்படல்-புத் தளம் கோட்டை-மக்கள் மனப்பாங்கு
சமுதாய அமைப்பு-வாடிகள்-கொழும்புச் செட்டிமாரின் செல்வாக்கு-வாடித் தலைவர்கள்-ஊர் மரைக்காயர்-ஊர்
முதலாளிமாரின் செல்வாக்கு.
12,
இபுனு பதூத்தாவும், புத்தளம் மன்னரும் 86
இபுனு பதூத்தா யார்?-அவரின் பிரயாண விவர நூல்இபுனு பதூத்தாவின் இலங்கை வருகை-புத் தளம் மன்ன ரின் விருந்தாளி-புத்தளம் நகரைப்பற்றி பதூத்தா அவர் களின் வர்ண்னை-ம அபார், மலபார். புத்தளம் மன்னரின் கடலாதிக்கம்-பாவாத மலைக்கு இபுனு பதூத்தா சென்று வர மன்னரின் உதவிகள்-புத்தளமிருந்து பதூத்தா அவர்கள் தென் இந்தியா புறப்படல்-புத்தளம் மன்னர் யார்?-ஆரிய சக்கரவர்த்தி என்பது வீர விருதுப் பெயர்-ஆரிய சக்கர வர்த்தி தக்கியுத்தீன் அப்துர் றஹ்மான் ஆறாவது பாண்டி யன்-இவரின் ஆட்சியின் தலைநகர் கீழக்கரை-சுல்தான் தக் கியுத்தீன் பாரசீக அரச பரம்பரையினர்-புத்தளம் மன்னர் பெயர் தலம் அகாலி ராஜா"-இவர் தன்னாதிக்கமுள்ள ஒரு குறுநில மன்னர்-செய்தக் காதிறு மரக்காயர் திருமண வாழ்த்து நூலில் சுல்தான் தக்கியுத்தீன் அவர்களைப்பற்றிய

மேற்கோள்கள்-இலங்கையுடன் அவருக்கிருந்த தொடர்பு கள்-பாரசீகரான இறைநேசச் செல்வர் செய்க் அபூ அப்துல் லாஹ் பின் கபீப்-பாரசீகர் செல்வாக்கு.
13; கற்பிட்டிக் குடா 10.
புத்தளத்தின் கடல் வாசல்-குடாவாக இன்றி தரைப் பிரதேசமாக இருந்தமை-அதன் தொன்மை-கார்டிவத்தீவு"கல்பென்டைன்"-அரசடி-கற்பிட்டிக் கோட்டை-ஏற்றுமதி பொருட்கள்-VOC-சென்ற் பீட்டர்ஸ் தேவாலயம்-மலா யர்-நாச்சியம்மன் கங்கை.
14. தமிழ்ப் பற்று - தெமழஹத் பற்று 109
எல்லை-தமிழ் மாகாணம், மலபார் மாகாணம்-தமிழ்ப் போர் வீரர்கள்-மலபாரிகள்-தமிழ்ச் செல்வாக்கு-முஸ்லிம் களின் மொழி தமிழ் மொழியானமை-பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.நீர்ப்பாசன அமைப்பின் தொன்மை-கலா ஒயா கல்லணை.
15. வன்னியர் 4
வன்னிப் பகுதி என்பதென்ன? - வன்னியர் என்ற
பெயர் ஏற்பட்டமை-வன்னிமைகள்-வன்னியர் குடியேற்றம்
முக்குவ வன்னிமை-வன்னியர்களின் மதிப்பும், ஆதிக்கமும்.
16. முக்குவர் 20
முக்குவரின் வலிமை-முக்குவர் யார்?-பெயர் வந்தமைமுக்குவர் பிரிவுகள்-முக்குவர் மலபாரிகளினத்தவர்-கரை யார், முக்குவர் போர்-முக்குவர் இஸ்லாத்திலிணைதல்காணியுரிமை-முத்திர கூடம் (மூத்தோர் கூட்டம்)-முக்குவத் தலைவர்கள்-திருமண சம்பிரதாயங்கள்-செப்புப் பட்டயங் கள் மூன்று.
17 காப்பிரிகள் 39
இலங்கைக்கு வருகை-போர்த்துக்கேயர், ஒல்லாந்த ரின் கீழ் சேவைகள்-போர் வீரர்களாசப் புத் தளம் வருகைகாப்பிரிகளின் கலகம்-அடிமைத் தீவு-*சிலேவ் ஐலண்ட்”*

Page 14
18.
19.
21.
22.
அபிஸினியர்களின் பலம்-ஆங்கில அரசின் கீழ் அவர்களின் வாழ்வு-காப்பிரிகளின் சங்கீதம்-பாடல்கள். காப்பிரிகளின் தொகை அருகியமை,
முத்துக் குளிப்பு-சலாபம் 45
முக்கியத்துவம்-சலாபக் காட்சி-முஸ்லிம்களின் பங்குகுளிப்பு முறைகள். R z . "
யானை பிடித்தல் I53
கையாழும் முறைகள்-துரத்திப் பிடிக்கும் துணிகர
மிக்க முஸ்ஸிம் பணிக்கர்கள்-தொழில் நடை முறைகள்
நுணுக்கங்கள்.
பண்டைய போக்குவரத்து 62
கண்டிப் பெருவழி-சிலாபத்துக்கூடாக புத்தளம்/குருநா கல் பாதை-குதிரை மலை / கண்டிப் பெருவழி-புத்தளம் / மன்னார்ப் பாதை-புத்தளம்/கொழும்புப் பாதை-புத்தளம் கற்பிட்டிப் பாதை-கற்பிட்டி/கொழும்புப் பாதை (மணிய காரன் வழி-புத்தளம்/ஏற்றாலை, புத்தளம்/கற்பிட்டி கடல் வழிப் பாதைகள். ஏற்றாலைகப்பலடிப் பாதை-ஏற்றா லைத் துறையின் சிறப்பு-அர்ச். அன்னம்மாள் கோயில் கப்பல் பாட்டு-கற்பிட்டி/யாழ்ப்பாணக் கடல்வழிப் பாதைபுத்தளம்/கொழும்பு நீர்வழி கால்வாய்ப் பாதை-புகை யிரதப் பாதை.
புத்தளம் முகையதின் கொத்துபாப் பள்ளிவாசல் 176
புத்தளத்தின் நில அடையாளம்-இன்றைய நிலைபள்ளிவாசலுக்குரிய பெரு நிலப்பரப்பு-வன்னியர் நன்
கொடை-நிலப்பரப்பு துண்டாடப்பட்டமை-தென் இந்திய
முஸ்லிம் வணிகர்களின் பங்களிப்பு. கண்டியரசரின் விஜயம்அவரின் அன்பளிப்பு-பரிபாலனம்-கூட்டு வழக்குட்விசார ணைக்குழு வருகை-புதிய பள்ளிவாசல் கட்டிடக் குழுதிறப்பு விழா - செலவினங்கள் - முன்னைய முகையதின் தர்ஹா-ஒரே ஜமாஅத்-சோக நிகழ்ச்சி.
கூடு எடுத்தல் வைபவம் 87
சந்தனக் கூடு-வைபவம் ஏற்பட்டமைக்குரிய காரணம்.
கூடு எங்ங்ணம் அமையும்-கூடு மாதம், றபீஉல் ஆகிர்

மெளலூது அன்னதானம்-கூடெடுக்கும் காலத்து தர்ஹா
23,
25.
26.
27.
28
வின் காட்சி-கூடு ஊர்வலம்.
பல்லக்குத் தூக்குதல், கொடி ஊர்வலம் 97
பல்லக்கு அமைப்பு-ஊர்வலம்-கொடிகளை ஊர்வல மாகக் கொண்டு செல்லுதல்-இன்றைய நிலைமை.
பஞ்சா எடுத்தல் 200
பஞ்சா என்றால் என்ன?-பின்னணியில் “கர்பலா சம் பவம் பஞ்சா எடுக்கப்பட்ட இடங்கள்-பஞ்சா வகைகள்அமைப்பு-ஊர்வலக் காட்சி.
தீ மிதிப்பு 208
இந்து மதக் கிரியையின் பிரதிபலிப்பு-உடப்பு மூதா தையரின் வழக்கம் - நடைபெற்ற இடங்கள் - புத்தளம் திரெளபதி அம்மன் ஆலயம்-உற்சவ முறைகள்-தைக்காப் பள்ளி மைதானம்.
பெருநாள் பந்தயங்கள் 217
தொன்று தெர்ட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சி-ஏற் பட்டமைக்குக் காரணம்-எங்கெங்கு நடைபெற்றன?- பந்தய நிகழ்ச்சிகள்-குறுகிய நேரத்தில் கூடிய நிகழ்ச்சி கள்-பொது மக்களின் பேராதரவு.
புகழ் பாடும் மாதங்கள் a22 அறபு மாதங்களும், அவற்றின் பேச்சு வழக்குப் பெயர் களும்-மாதங்களை நினைவூட்டக் கொடியேற்றும் வழக் கம்-மாதங்களில் புகழ்பாடும் அனுட்டானங்கள்-வழக்கம் அருகியமை-ஆசுர்ா மாதம்-சபுறுகளி-மெளலுத்து-முஹைய தீன் ஆண்டவங்க கந்தூரி-மிறார் கந்தூரி-நாவுரு கந்: தூரி-தோவத்து-விராத்து-நோன்பு-நோன்புப் பெருநாள்இடையிட்ட மாதம்-ஹஜ்ஜி மாதம்.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் 239
இஸ்லாமியத் திருணம்-காவின் முடித்தல் - திருமணம் ஒழுங்கு செய்தல்-பணம் வைத்தல்-மோதிரக் கடுததம்கடுத்தப் பதிவு-மோதிரமணிதல்-சீர் எடுத்தல்-நல்ல நாள்

Page 15
29.
30.
பார்த்தல்-ஊருக்குச் சொல்லல்-காவியஞ்சோறு-கல்யாணப் பந்தல்-ஊர் மரைக்காயரின் உத்தரவைப் பெறல்-மண மகனின் உடையலங்காரம்-மாப்பிள்ளை ஊர்வலம்பாலும் பழமும் கொடுத்தல்-குரவையிடுதல்-மருதோண்டி இடுதல்
கடுத்தப்பதிவு-மணமகன் மணப் பெண் வீட்டை அடைதல்
கைபிடித்துக் கொடுத்தல் - பெண்ணின் அலங்காரம்-சட் டைத் தலைப்பாகைக் கழற்றல்-பூதக்கலமும், சோறும்புலால் விடுதல் - தண்ணீரூற்றுதல்-மடிமாங்காய் சொரித்
தல்-மணஞ்செய்தல்-பெண் கூட்டிப் போதல்-பெண் வீட்
டில் குடும்ப வாழ்க்கை,
கல்வி. வரலாறு 257
சிங்கள, தமிழ்க் கல்வி முறைகள்-முஸ்லிம்களின் கல்வி முறையின் அடிப்படை-ஒதுகிற பள்ளிகள்-அறபுத் தமிழ்க் கல்வி-பலகைகளில் எழுதி ஒதல்-ஒதும் படி முறைகள்-திருக் குர்ஆன் ஓதக் கற்பித்தல்-ஜில்து" கட்டுதல்-'ஹம்சு" சொல் லுதல்-முஸாயிபு" பெட்டிகள்-பள்ளி நேரங்கள்-தண்டனை முறைகள்-சத்தமிட்டு திருப்பித்திருப்பி ஓதி மனனஞ் செய் தல்-திருக்குர்ஆனை ஆரம்பித்து வைக்கும் முறை-வாழ்க்கை யில் அறபுத் தமிழ் உபயோகம்-தமிழ்த் திண்ணைப் பள்ளிக் கூடம்-ஏட்டுக்கல்வி-செய்யுள் வடிவில் மனனம் செய்தல்ஏடுகளில் எழுதி வைத்தல்-முஸ்லிம்களின் கல்வியின் அடிப் படை இஸ்லாமே-இதற்குப் போர்த்துக்கேயர், ஒல்லாந்த ரின் பாதகமான போக்கு-இஸ்லாமியத் தனித்துவப் பாட சாலைகள் ஆரம்பம்-முன்னைய பாடசாலைகள்-கல்விக்காக உழைத்த அமைப்புக்கள்-முதல் அரசினர் ஆண்கள் தமிழ்ப் பாடசாலை-புத்தளம் நகரக் கல்வி நிலை-புத்தளம் அரசி னர் ஆண்கள் தமிழ்ப் பாடசாலை-பெண்கள் தமிழ்ப் பாட சாலை-சாகிராக் கல்லூரி-கற்பிட்டி அல் அக்ஸா வித்தியால யம்-பாடசாலைகள் மீளமைப்பு-ஒதுகிற திண்ணைப்பள்ளிக் கூடங்கள் புறக்கணிப்பு-இஸ்லாமிய மதக் கல்விக்கு இறை நேசர் செல்வர்களின் ஊக்குவிப்பு-புத்தளம் காஸிமிய்யா மதுரஸா-கற்பிட்டி றஹ்மானிய்யா மதுரஸா.
புழக்கத்திலுள்ள ஆபரணங்கள் 279
தலையிலனிபவை - காதுகளிலணிபவை - கழுத்திலனி பவை-மூக்கணிகள் - கைகளிலனிபவை-கால்களிலனிபவை. பொதுவான ஆபரணங்கள்.

3.
32,
நினைவில் நிலைத்த முன்னோர்கள் 286
நீதியரசர் அக்பர் - சைமன் காசிச்செட்டி-அல்ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில்-அல்ஹாஜ் எஸ்.எம்.அசன் குத்தூஸ்டாக்டர் வால்டர் தியடோர் ஹொலம்ஸ் - திரு. எல். ஈ. டேவிற்-திரு.ஜே.டப்ளிவ்.பீ.சேனாதிராஜா.திரு.டப்ளிவ்,ஏ. முத்துக்குமாரு-அல்ஹாஜ் சி. அ.க. ஹமீது ஹ"சைன் மரைக் கார் ஐனாப் சி. அ.மு.ஹனீபா மரைக்கார்-இ.செ.அ.மு. பழு லூன் மரைக்கார்-அல்ஹாஜ் ரீ. எஸ். எம். அப்பாஸ் மரைக் கார்-அல்ஹாஜ் ஏ. எம். அலி மரைக்கார்-ஜனாப் எம் எம். மதார் மரைக்கார்-கற்பிட்டி முஹம்மது தம்பி மரைக்கார். ஜனாப் ஏ. வீ. ஏ. பொன்னிமுத்து மரைக்கார்-ஜனாப் எஸ். எம். ஜலால்தீன் மரைக்கார்- அல்ஹாஜ் யூ. செ. முஹம்மதுதிரு. டி.டப்ளிவ்.எஸ். டீ. சில்வா-விக்கிரமதிலக்க-திரு. எல். பி.வேந்தக்கோன்-திரு என்.ஜே. அல்பிரட்-ஜனாப் எம்.எம். எம். ஒமர்,அல்ஹாஜ் எம்.ஓ. எம்.தாஹிர்-முகையதின் இபுறா கிம் உடையார்-மு.க.அ. அப்துல் மஜீது மரைக்கார் புலவர்கரைத்தீவு செய்குஅலாவுதீன் புலவர்-குறிஞ்சிப்பிட்டிசெய்கு இஸ்மாயில் மரைக்கார் புலவர்-அல்ஹாஜ் எம். எம். காதர் சாகிபு மரைக்கார்-ஜனாப் ப. த. மகுமூது-ஜனாப் எம். ஏ. சாலிகு-ஜனாப் எஸ்.எம்.எம். காசிம்-ஜனாப் எஸ் எம்.எம். இபுனு-இ.செ.மு. குடும்பம்-ஊர் மரைக்கார் குடும்பம்-வைத் தியர் குடும்பம்-விஷ வைத்தியர்கள்-கிராமத் தலைமைக் காரர் பரம்பரை. முன்னோடி ஆசிரியர்கள்-முஹல்லம்கள்மார்க்க அறிஞர்கள் - சம்மாட்டியார் - அம்பலகாரனார் குடும்பம்
இன்றைய புத்தளம் 31
முன்னைய சிறப்பு அருகியமை-பிற இடங்களுடன் தொடர்பு கொள்வதில் தாமதம்-ஒன்று கூடி நெருங்கி வாழ் வதில் நிம்மதி - கல்வியின் பின்தங்கிய நிலை - முரண்பட்ட பொருளாதார சமூகங்கள்-மத்திய வகுப்பாரின் தோற்றம் தாமதம் - வெளித்தாக்கங்களுக்கிலக்காகாத சமூக நிலைவெளித்தொடர்பு ஆரம்பம்-1976 வன்முறை-இயக்கங்களின் தாக்கங்கள்-பொருளாதாரத் துறையில் கவனம் வேண்டும்உயர்கல்வியில் ஊக்கம் தேவை.

Page 16
5.
APAUT "TW"A LAAVI HIST TOTDR Y AAWD) TT DIT TOTDAYS
Contents
Preface
importance of history and Uses-Why history should be recorded - Unbiased histories - insufficient history of North Western region - To help those who want to do further research-lf the data are not reCorded even at present, they may be forgotten in future.
Geographical back ground
History based on geographical back ground-Reliefports-rivers-Natural Vegetation-Crops-Irrigation-TanksVillus'-Resou recs from Lagoon-Sat production-ConchPearl fishery-Fishing-An area protected from natural disaster.
Basis of Research
Shri Lanka a part of Indian sub continent-Sea obstacles-River of Thamira Varuni". Research based on Shri Lanka as part of Indian sub continent.
Centre of Human Origin
The first human being Adam descented in Shri
Lanka - Adam's Peak-Adam's Bridge-Holy Prophet sayings-Shri Lanka the first place of prophecy-"Hajrul
Aswadh'- Stone of Light' was brought to Shri Lanka
Place of human beings.
Sea Obstacles
"Holy Our-aan" saying on destruction of Socie. ties of human beings-King Rawana-Oueen Ali-Queen

Balkis Their reign and defeat-King Rawana's golden
dome under the sea bed-'Gondwanaland" - Land of 'Ra- "
managa-Ancient Lankapura' affected by sea. ObstaclesLakdiva Lanka-Laccadires'-Equator of earth through Lanka-Sea erosion in Noth Western region-lslands joining the main land.
importance of the North Western Coast
Commercial connection with ancient Arabs, Phoenicians and Chinese-King Rawana’s fame-Why North Western Coast was famous-Arab domination
Golden Land under reign of Queen
Female Kingdom-Region under the reign of Oueen Alli or Oueen Baikis ('Sheba”)-Proof in Holy Our-aanBreach of dam 'Arim'-Thorn Apple (Jujupe tree) Orchards.
Land of the Moor and Ponparappi
Tamil names allised- “Ku thirai Malai" the centre of Ponparappi Pattu-The golden plain of the golden grainFOOd from * Belam”-Thamiravarumi, Thambapani, Tham bapannai-River of Thamiravaruni ( Porunai Aaru"). Taprabane-River Thamiravaruni flowed through Shri Lanka to Tamil Nadu-Colonization-Kayal Pattanam the town of Moors-Kala Oya the river of Moors-Arabic Colonization-Ponparappi Land adjoining the Kaya patta nam is the Town of Moors -Mannaru (the river of sand) bacomes Mannar - Funerary Urns -Urns found in the river bed of Thamirava runi - dolmans- Archaeological research on Ponparappi - Similarily between Porunai River in Tamil Nadu and Ponparappi - Mother of Lands is the Moors' River region - Fall of Ponparappi Pattu-Wilpattu
Kuthiraimalai (Horse Mountain)
"Hippuras' - Area of Arab Colonization-Kuthirai Malai as viewed by a poet - Ports of Ophir, 'Tarshish'- Connection of Foreign traders - Kuthirai Malai Well"Achcha Nagar'
vi

Page 17
10
11.
Arrival of Vijaya
Prosperous community prior ro the arrival of VijayaVijaya's - domination - How Hinduism and Buddhism influenced informing Tamil and Sinhala communityKuveni's Marriage-Kuveni's desertion - Kuvni's murderChildren escaped-Border Line of Thonigala - Thammana Nuwara - Magul Thota Munai-Reasons for desertion of Kuveni - Large colonization from Tamil Nadu
Puttalam
Its position-Colonization - Perukka Maram (Baobab Tree)-Mosques - Why it was named Puttalam-limportan ce of salt - Salt trade - 'Thavalam (Method of transport of goods by bulls)-Kandy main route-Haaraseeya PattuRiver of Peruvali- Annual feast-Kottukachcheri-introducing salt production - Salterns - Ownership-Famous high quality salt - Puttalam ruled by Europeans-Putta lam Fort-Attitude of people-Structure of Community“Wadies'-lnfluence of Jolombo Chetties - Wadi Cheifs
influence of Oor Marikayars and Oor Muda lalies
12.
Ibn Battuta and King of Puttalam
Who is bn Battuta- His Book of Travel - Arrival of Ibn Battuta - Guest of Puttalam King - Discription of Puttaham by Ibn Battu ta-Ma-abar, Malabar - Domination of sea by Puttalam King-Puttalam King's assistances to Ibn Battuta to visit Adam's Peak-Departure from Puttalam to South India-Who is Puttalam King - Arya Chakrawarthi the title of heroism Arya Chakrawarthi Thakkiyud een Abdurrahman is Pandian VI - H is capital is Keelai karai-Su ! tan Thakkiyudeen Abdurrahman from Persian King's family - The name of Puttalam King is Dalam Agali Raja- He is a lindependance King of smalli territory-Refrences from the book of * Seith akkat hiru Marakayer Thirumana Vaalthu” about Sulthan Thakkiyude en-Connection with Ceylon-Shaikh Abu Abdullah bin Khafit of Persia - influence of Persian.

3.
14.
15.
16.
17.
18.
Kalpity Peninsula
The sea gate to Puttalam - it being a land adjoin ing Puttalam-its antiquity - Cardiva Island - Calpentyn “Arasad i'-Kalpity Fort-Exports - VOC - St. Peter's Church - Malays - 'Na achchiAmman Gankai"-
Thamil Pattu -- Dhemalahath Pattu
Boundaries - Tamil Province, Malabar Provinces Tamil Soldiers-Malabaries-influence of Tamil - Tamilas the Language of Muslims-Ancient names were in Tamil-Antiquity of irrigation structure - Kala Oya dam.
Vanniyar
What is denoted by area of Vanni-Why they are named Van niyar-Vanni region-Colonization of Van niyarRegion of Mukkuwa Vanniya r-Domination and respect of Vanniyar.
Mukkuvar
Strength of Mukkuwa r-Who afe Mukkuvar-Why they are named Mukkuwar-Cast division among Mukkuvar-Mukkuvar belong to Mala barian Ethinic groupWar between Mukkuvar and Karayar-Mukkuvar embraced islam-Ownership of Lands-' Muthira Koodam' (Mooth thor Koottam-Council of Elders) Mukkuvar Cheifs-The marriage customs-Three copper plate.
Kaappiri halı (Kaffirs)
Arrival in Shri Lanka-Services under Portugese and Dutch-Arrival in Puttalam as soldiers-Revolt of KaffirsSlave Island-Strength of Abesenians - Life of Kaffirs under British Government - Music of Kaffirs - SongsTheir number dwindling.
Pearl Fishery-(Salapam)
its importance-Scenary of pearl fishery-Contribution of Muslim-Different methods of pear fishing.

Page 18
19. Capturing of Elephants
20.
21.
22.
23.
24
Different Methods of capturing elephants-Chasing and capturing elephants by Voliant Muslim PanikkarTheir routine-minutenes.
Ancient Transport routes
Kandy main route-Through Chilaw Puttalam/Kurunega la Road-Kurhirai Malai/Kandy main route-Puttalam/ Mannar Road-Puttalam/Colombo Road-Puttalam/Kalpity rout-Kalpity | Colombo Road (Through Maniyakaran bound) - Puttalam/Etalai Puttalam/Kapity Sea routeEtalai Kappaladi Road - important of Etalai-St. Anne's Church-Kappal' Song-Kalpity! Jaffna Sea route-Puttalam, Colombo canal route-Rail Road.
Puttalam Muhaiyadeen Kuthba Mosque
Land mark of Puttalam - Present situation - Vast land belonging to Mosque - Donation of Vanniya rThe land divided - Contribution of South Indian Muslim Traders - Kandyan King Visit - His donationsManagements - "Tinsellea Pagoda" case - Arrival of inquiring Commission - New Mosque construction Committee - Opening ceremony - Expenditures - Prio Muhaiyadeen Dharga - One community.
Tinselled Pagoda Ceremony
Sandalwood Pagoda why it was celebrated-How a Pagoda was made - Month of Pagoda, Rabiul Akhir - “Moulood” and Arm giving - Mosque's scenary during the Pagoda ceremony - Pagoda procession.
Palanquin and Flags procession
Construction of palan quin - Procession-Flags taken into procession - Present situation
Pancha Ceremony
What "Pancha' is - "Karbala" event as a back ground to Pancha ceremony-Places where ceremony is held-Different types of 'Pancha-Structure Procession Scenery.

25. Fire Walking
26.
27.
28.
Reflecting Hindu Religious customs-Customs of ancestors from Udappu - Places where held - Puttalam Throupathi Amman Kovil - Methods of Ceremony-'Thaikka Palli grounds.
Races of Festive Days
Traditional events-Reason for such events - Places where held - Events - Numerous events held in short periods - Public co-operation
Months of Praise
Arabic Months and their colloquel names-Traditional flags hoistning in memory of those months-Practices of singing hymns-This habbit is decreasingMonth of Asara - Saburukai-Moulood - Kanthoori of Muhaideen Andavar-Kanthoori of Mathar-Kanthoori of Nagoor-Thovath-Viraa th- Noan bu - Festival of NoanbuMonth of ldayatta - Month of Hadj.
Marriage customs among Muslims
Islamic marriage- Kavin' ceremony - Arrangements of marriages-Panam Keeping (Engagement ceremony)- "Mothirakkadutham" (Registration of marriage First step)-Presenting a ring to the bridegroom - Exchange. of "Seer' (gifts)-Fixing an auspicious day to marriageinvitation-'Kavin Soru” (A wedding feast)- Decorated shed for Wedding-Permission from “Oor Mari kayar” (area cheif)-Ceremonial dress of the bridegroom - The bridegroom in procession-Sharing milk and fruits-Chorus of joy by women - Applying hanna paste-Kaduttam" (Registration Marriage-second step) - Arrival of bridegroom at bride's residence-Entrusting the bride to the bridegroom-Ceremonial dressing of the bride - Ceremonial removal of the turban and coat of bridegroom“Poothakkalam" and Rice (Part taking the first meal by the couple immediately after the marriage ceremonyPart taking a meal consisting of fish-Ceremonial bathi

Page 19
29,
30.
31.
ng-Sprinking the bride with sweets-Giving cash gifts to the bride-Home Coming - Starting the life together at the bride's residence.
History of Education
Sinhala and Tamil Educational system - basis of Mustim Education - Schools for recital 'Our-aan-Arabic Tamil Education-Writing on wooden plank and readingDifferent stages in learning-Teaching recite Holy Ouraan- 'Jildh” binding ( Book)-" Hams” singing - "Mussaif” boxes-School time-Different punishments - Parroting in Chorus and memorising-Begining of the recita of AlOur-aan-Usage of Arabic Tamil in daily life - Tamil Verandah Schools-Education of ola inscription - Memo rising in form of poems-Writing in ola and preservation-slam as basis of Islamic Education-Opposing attitude on listamic education by Portugese and Dutch-Begining of islamic private Schools-Prior Schools-First Government Tamil School - Education in Puttalam TownPuttalam Government Boys Tamil School-Government Girls Tamil School - Zahira Collcge - Kalpity Al-Aqsa Maha Vidyalaya-Re-organization of Schools-Verandah Schools abandoned-Encouragement given by Islamic Religious Personalities - Puttalam Cassimiya Arabic Madrasa-Ka lpity Rahmaniya Madrasa
Ornaments in Vogue
Ornaments worn in Head-Ears-Neck-Nose-HandsLegs-Common Ornaments
Ancestors in Living Memory
Justice Akbar- Simon Casichetty- Alhaj H. S. IsmailAlhaj S. M. Assenkudhoos - Dr. W. T. Ohlmus- MRCS, LRCP (Lond) Mr. L. E. David-Mr. J. W. P. Senathirajah- Mr. W. A Muttukumaru - Alhaj S. A. K. Hameed Hussain Marikar- Mr. S. A. M. Haniffa Marikar - Mr. E. S. A. M. Faluloon Marikar-Alhaj T S. M. Abbas Marikar- Alhaj A. M. Ali Marikar - Mr. M. M. Madar Marikar- Kalpity Mr. Mohamed Thambi Marikar- Mr

A. V. A. Ponni Mattu Marikar- Mr. S. M. JalaldeenMarikar- Alhaj U. S. Mohamed- Mr. D. W. S. de Silva Wickramatillake-Mr. L. B. Vindargon- Mr. N J. AlfredFirst Teachers- Mr. M. M. M.Omer-Alhaj M.O.M. ThahirMr. Mohideen Ibrahim Udayar- M. K. A. Abdul Majeed Marikar Poet- Karativu Sheik Alavudeen Poet- Kurinchipity Sheik Ismail Marikar Poet- Alhaj M.M. Cader Sahib Marikar--Mr. P. T. Mahu mood - Mr. M. A. Salih - Mr. S. M. M. Cassim- Mr. S. M. M. Ibunu - E. S. M. FamilyVillage Marikars' Family - Family of Native PhysiciansNative Physicians who treats cases of poisoning-Family of Village Headman - Pilot Teachers, MuhallamsReligious Wisemen - Sammattiyars - Family of Ambala
karanars.
32,
Puttalam today
Its prominence in the past diminishing - Delay in communication with other places - Content in living closely together - Backward in Education-Economically opposite Societies - Delay in forming middle class societies-People not affected by outside changes - Begi ning of connections with outside - 1976 riots-influence
of different social and religious sectarian movements
Attention should be paid to economy - Encouragement needed in higher education .

Page 20
煞
பொன்ப்ரப்பி
\\~مسیسہ ح~-(sfgTتھ2
கொட் દોરી
தோனரி க்கல் ஆ)ஆன மடு
 
 
 
 
 
 
 
 
 

1. தோற்றுவாய்
வரலாறு என்பது கடந்த காலத்தின் பதிவேடாகும். வரலாற்றின் மூலம் மனித சமுதாயத்தின் வளர்ச்சி வேகத் ைெனயும், அதன் வாயிலாக பல படிப்பினைகளையும், வழி ாட்டுதல்களையும், பாரம்பரிய வழி முறைகளையும், மூதா தையர்களின் அடிச்சுவட்டின் தாக்கங்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், தமது எதிர்கால சந்ததிகளுக்காக வர்கள் ஆற்றிய பணிகளையும், அவர்களிட்ட அடித்தளங் 36ாயும், அவர்களால் வளர்க்கப்பட்ட கலை, கலாசாரம், மாழி, சமயம், வாழ்க்கை முறைகள் போன்ற பல அம் ாங்களையும் தாங்கள் அறியக்கூடியதாக உள்ளன. இன் 1றய சமுதாயத்தினர் தங்களின் எதிர்கால சந்ததிகளுக் ாற்ற வேண்டிய பணிகளைத் திட்டமிட்டுச் செயலாற்று வதற்குத் தூண்டுகோலாகவும் இவ்வறிவு உதவும்.
முன்னைய சமுதாயத்தினர் விட்ட பிழைகள், தவறுகள் இன்றைய சமுதாயத்தினரை எவ்வளவு தூரம் பாதித்துள் என் என்பதை அறிந்து, அவ்வாறான பிழைகள், தவறுகள் கிர்கால சமுதாயத்திற்கு வராமல் பாதுகாக்கக் கூடிய அடித் தளத்தை இட்டு, தியாகங்களைப் புரிவதற்கும் வரலாறுகள் உதவக் கூடியனவாகும். அவ்வாறே நம் முன்னோர்கள் செய்த நற்பணிகளின் பயனாக நாம் அனுபவிக்கும் நன்மைகனைப் போன்று எதிர்காலத்துக்காக நாம் புரியும் நற்பணிகள் அவர் ாளுக்கு உதவவும் வழி வகுக்கும். இந்த நன்னோக்கங்களுக் ' A வரலாறுகளை மறைந்துவிடாமல் பதிவு செய்யும் பாரம்பரிய வழக்கத்தை மேலும் சிறந்த முறையில் செய்து

Page 21
அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் Ա:
வைக்க வேண்டியது நமது பொறுப்பாகும் என்பதை நன்கு புரிந்து கொள்வோமாக.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் வரலாறுகள் பல வடிவங்களில் - பின்னணிகளில் எழுதப்பட்டுள்ளன என்பதை கற்போர்கள் நன்கு உணர்வர். மத, இன, மொழி. பிர தேச செல்வாக்குகள் போன்ற உந்து காரணிகளால் உண்மை கள் பல மறைக்கப்பட்டு, சார்பான தகவல்கள் மிகைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளமையையும் நாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மேலும் சில பிரதேசங்களில் வர லாறுகள் பல காரணங்களால் புறக்கணிக்கப்பட்டமையை யும், மறைக்கப்பட்டமையையும் மன வருத்தத்துடன் குறிப் பிட வேண்டியுமுள்ளது. அவ்வகையில் இலங்கையின் alமேற்குக் கரைப்பிரதேசத்தினைப் பற்றிய வரலாறுகள் பற்றி எழுந்த படைப்புக்கள் மிக மிகக் குறைவாகவே எமக்குக் கிடைக்கின்றன. எனினும் பரம்பரையாக வழங்கி வரும் பல தசவல்கள் எமது ஆய்வினுக்குத் தூண்டுகோல்களாகத் துணை புரிகின்றன. இத்தகவல்களைக்கூட இன்று நாம் புறக்கணிப் போமாயின் வருங்காலத்தில் இத்தகைய வாய்வழித் தகவல் சுள் கூட கிடைக்காமல் போய்விடும். ஏனெனில் எமது பெற் றாருக்குத் தெரிந்திருந்த தகவல்களில் ஒரு பகுதியே எமக் குத் தெரிகின்றன. இத்தகவல்கள் அடுத்த பரம்பரைக்கு இவற்றிலும் குறைவாகவே தெரியககூடும். காலகதியில் இன் றிருக்கும் தகவல்கள்கூட இன்னும் சில தலைமுறைகளுக்குப் பின்பு தெரியாத நிலைமையும் ஏற்படும். எனவே இன்று
எமக்குக் கிடைக்கும் தகவல்களைப் பதிவு செய்து வைப்ப தன் மூலம் எதிர்கால சந்ததியினரின் வரலாற்றை அறியும் அவாவுக்கும், ஆய்வுப் பசிக்கும் உணவாக, உEட்டமாக
அமையும் என்ற உந்துதலினாலேயே இவ்வரலாற்றை எழுதி வைக்க முனைந்தேன். இவ்வாறான பணிகளில் மேலும் பலர் ஈடுபட வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் பல, உசாத்துணை நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இந் நூலின் பின்னே உசாத்துணை நூல்களின் பட்டியலும், அந் நூல்களுக்குரிய இலக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்நூலின் கண் இடையிடையே காணப்படும் இலக்கங்கள் உசாத்துண நூல்களைக் குறிப்பனவாகும். அத்துடன் கேள்வி வாயில

புத்தளம் வரலாறும், மரபுகளும்
கப் பெற்ற தகவல்களும் அடங்கியுள்ளன. அத்தகவல்களின் அடிப்படையில் ஊகிக்கக்கூடிய அபிப்பிராயங்களும் சேர்ந் திருக்கலாம். சுருக்கமாகக் கூறின் எதிர்சுலத்தில் புத்தளம் பகுதியின் வரலாற்றை மேலும் ஆராய அவாவுறும் வர வாற்றுத்துறை மாணவர்க்கு வழி சமைத்துக் கொடுக் கும் சில கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றிருந்தால் அதுவே எனது நோக்கம் நிறைவேறியது என்ற மனத்திருப் தியை எனக்களிக்கும் என நம்புகிறேன். ஆயினும் "சட்டுக் கீதை கன்" இதில் இடம்பெற இடமளிக்கவில்லை G763 Le795 என்னால் நிச்சயம் கூற முடியும்.

Page 22
2. புவியியல் பின்னணி
ஒரு பிரதேசத்தின் வரலாறு அப்பிரதேசத்தின் புவியியல் பின்னணிகளின் தாக்கங்கட்குட்பட்டதாகவே அமைகின்றது என்பது உண்மையாகும். இலங்கையின் வட மேற்குக் கரை யில் அமைந்துள்ள புத்தளம் பிரதேசம் வரட்சியான சுவாத் தியத்தையுடைய பகுதியாகும். பண்டைய நாகரிகங்கள்கூட வரட் சியான சுவாத்தியமுடைய நதிக்கரைகளிலேயே உதயமாகின என்பது வரலாற்றுச் சான்றாகும். இதை உள்ளத்திலிருத்தி புத்தளம் பிரதேசத்தை ஆராய்வது மிகவும் அவசியமானதாகும்
இப்பிரதேசம் முக்கியம் பெறுவதற்கு இதன் புவியியல் காரணிகள் சாதகமாக அமைந்துள்ளமை கவனத்திற்குரியது. மக்கள் இலகுவாகக் கரையேறி குடியிருப்புக்களை அமைப் பதற்குரிய சாதகமான தட்டையான தரையமைப்பு இயற் கையாகவே அமைந்துள்ளது. இயற்கையான துறைமுகங்கள் குடாக்கள், நதிகள் இங்கேயுள்ளன. குதிரைமலை, கரைத் தீவு, கற்பிட்டி, புத்தளம் போன்ற துறைமுகங்கள் பண்டு தொட்டு பாவிக்கப்பட்டு வந்தமை நாம் அறிந்ததே. கீலா ஒயா, மீ ஒயா, அருவியாறு ஆகிய நதிகளும், அவற்றின் கிளைகளும் இப்பிரதேசத்தை வளம்பெறச் செய்கின்றன. அடர்ந்த காடுகளை உடையதாயினும் " நீண்ட கோை காலம் நிலவுவதன் காரணமாக காடுகளை அழித்து கழ களை உண்டாக்கவும், தோட்டந்துரவுகளை அபிவிருத்தி செய்யவும், சேனைச் செய்கைகளில் ஈடுபடவும் வசதியா இப்பிரதேசம் அமைந்துள்ளது. ஐதான காடுகளும், புல்வெ களும் தாராளமாக இருப்பதன் காரணமாக மந்தை வளர்ப்
 
 
 
 

புத்தளம் வரலாறும், மரபுகளும் OG
புக்கும் இது ஏற்புடைத்து. இயற்கையான வில்களும் (காட்டு ஏரிகளும்), குளங்களும் நீர்ப்பாசனத்துக்கு உதவு கின்றன. கமத்தொழில் பெருகுவதற்கு வற்றாத நீர்வள மும் பொன் கொளிக்கும் நிலவளமும் இப்பிரதேசத்தின் இயற்கை நன்கொடைகளாகும். கடல், தரைப் போக்குவரத் துக்கு வசதிகளுள்ளமையும், ஆசியாக் கண்ட பெரு நிலப் பரப்புக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதும் இப்பிரதே சத்தின் வியாபார விருத்திக்கு வாய்ப்பாக இருக்கின்றன. கடற் பிரதேசம் கற்பாரின்றி கடற்றொழில்களுக்கு சாதக மான மையங்கள் பன உள்ளன. பக்கத்திலுள்ள தீவுகள் மீன் பிடிக்கும், அதனோடு தொடர்புள்ள ஏனைய தொழில்களுக் கும் உதவி புரிகின்றன. கடற்கரைக்குச் சமீபத்தில் காணப் படும் முத்துச் சிப்பிப் பார்களும், சங்கு மையங்களும் முத் துக் குளித்தலுக்கும், சங்கு எடுப்பதற்கும் உதவுகின்றன. கடற்கரையை அடுத்துள்ள உவர் நிலங்களில் உப்புச் செப் கிையை நடாத் துவதற்கு இப்பிரதேச காலநிலை வாய்ப்பளிக் கின்றது. உவர் நீர், நந்நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்ப தற்கும் சாதகமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. சமுத்தி ரத்தை அடுத்துள்ள நிலப்பரப்பின் கீழ் நந்நீர் மட்டம் நில மட்டத்திலிருந்து மிகவும் அண்மையிலிருப்பதனால் |ւ ճն} #: பிலை, வெங்காயம், கிழங்கு வகைகள், மரக்கறி இனங்கள், பழ வர்க்கங்கள் போன்றவற்றை செய்கை பண்ணுவதற்கும் உகந்ததாக உள்ளது இப்பிரதேசம். இப்பிரதேசத்தில் காணப் படும் களிமண், வீட்டுப் பாவனைப் பொருட்கள் செய்வதற் கும், ஒடு, சிமிந்தி, கல் ஆதியன செய்வதற்கும் ஏற்புடைத் தது. தென்னை போன்ற பெருந்தோட்ட உற்பத்திக்கும் சிறந்தது.
இத்தகைய எல்லா வளங்களும் நிறைந்த பிரதேசமாக
புத்தளம் பிரதேசம் இருப்பது இறைவனின் அருட்கொடை பாகும். குறிப்பாக அடிக்கடி ஏற்படும் இயற்கையின் சீற்றங்
களினால் பாரதூரமான அழிவுகளினின்றும் பாதுகாப்புப் பெறும் மறைவுப் பிரதேசமாக புவியியல் ரீதியில் இப்பிர தேசம் அமைந்திருப்பது மனித வாசத்துக்கு அமைதியை
அளிக்கின்றது.

Page 23
3. ஆய்வின் அடிப்படை
ஓர் இடத்தின் ஆய்வை மேற்கொள்ளும்போது அவ்விடத் தின் இன்றைய அமைப்பை மட்டும் ஆதாரமாகக் கொள் ளாது ஆதியில் அவ்விடம் எவ்வாறமைந்திருந்ததென்பதையும், ஆய்வுகள் கூறும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். இவ்வடிப்படையில் புத்தளம் வடமேற்குக் கரைப் பிரதேசங்களை ஆராயப்புகும் நாம் பண்டைய சூழ்நிலை களையும் நோக்குதல் சிறந்தது.
நம் இலங்கை இன்று ஒரு தீவாக இருப்பினும் ஆதியில் பரந்துபட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே இருந்துள்ள மையை புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இலங்கைக்குத் தெற்கே இந்து மாக் கடலிருக்கும் பிரதேசம் கடலாகவன்றி நிலப் பிரதேசமாக இருந்ததென்பதையும், ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, கிழக்கிந்தியத் தீவுகள் யாவும் நீரால் பிரிக்கப்பட்டிராமல் ஒரே நிலமாக இணைந்திருந்த தென்பதையும், அந்நிலப் பிரதேசம் லெமூரியாக் கண்டம் எனவும், பின்பு குமரிக் கண்டமெனவும் வழங்கப்பட்டதென்
பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்நிலப்பகு தியே முதன்முதலில் மனித குலம் தோன்றிய தொன்னிலப் பகுதியாகும் என்ற கொள்கையையும் நாம் மறந்துவிடக் கூடாது. குமரிக் கண்டம் திராவிட நாகரிகத்தின் உறை
விடமாக இருந்தது மட்டுமன்றி சிந்து நதிப் பள்ளத்தாக்கின் ஹரப்பா, மொகட்சதாரோ போன்ற இடங்களின் அகழ்வா ராய்வுகளின் பிரதிபலனாக ஏற்பட்டுள்ள முடிவின்படி அவ்

புத்தளம் வரலாறும், மரபுகளும் 8
விடங்களும் திராவிட நாகரிகத்துக்குட்பட்ட இடமாகக் கரு தப்படுவதனால், இந்திய கண்டம் முழுவதுமே இந்நாகரிகத் துக்கு சொந்தமாக இருந்தது என்பது தெளிவு.
மூன்றுக்கு மேற்பட்ட கடற்கோள்களின் காரனETக தெற்கு நிலப்பகுதி கடல் வாய்ப்பட்டு சிற்சில தீவுகளே எஞ் சின. தெற்குப் பகுதி கடலினுள் அமிழ்ந்த போது வடக்கி லுள்ள இமயப்பகுதி உயர்ந்தது என்பது நில வல்லுனர் கொள்கையாகும். தெற்கு நிலப் பகுதி கடலால் விழுங்கப் பட்ட காலை அங்கு வாழ்ந்த மக்கள் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்தனர். இந்நிலையிலேயே தென்னிந்தியாவி னின்றும் இலங்கை பிரிந்து தனித் தீவாக ஆகியது. கிரேக்க அறிஞர் மெகஸ்தனீஸ் என்பார் இலங்கையை 'தாப்பிரபேன்" (Taprabane) எனக் குறிப்பிடுவதுடன், அஃது இந்தியாவி எனின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதெனவும் கூறு கிறார். இதிலிருந்து தாமிரபர்னி அல்லது தாமிரவருணி அல்லது பொருநை ஆறு இன்று கடலுள் மூழ்கியுள்ள நிலத் தினூடாக, அதாவது இலங்கைக்கு ஊடாகப் பாய்ந்துள்ள ஆறுகளிலொன்றெனத் துணியலாம். "
இச்சந்தர்ப்பத்தில் "எமது நாடும், தமிழும்" என்ற தலைப்பில் என்னால் யாத்த கவிதைகளில் இரண்டைத் தரு வது பொருந்துமென எண்ணுகின்றேன்.
"கல் தோன்றி மன் தோன்றாக் காலத்து முன் தோன்று தொல் மொழியாய் செந்தமிழைத் தொன்னூலார்
கூறுகின்றார் நல்லாய்வு செய்தவர்கள் நானிலத்தின் முசுடிமயக் கல் தோன்று முன் குமரிக் கண்டமதே தமிழென்பர்."
‘தேன் தமிழ்க் குமரியினோர் தேயமதாய் நம் ஈழம் வான் புகழத் தமிழ் வளர்த்த வரலாறும் பொய்யல்ல தோன்றிய பல் கடற்கோல்கள் தொலைத்தழித்த
கொடுமையினால் ஈன்றிடுமோர் தீவாக எம் நாடு குன்றியதே. ""
எனவே வரலாற்றாய்வுக்கு அடிப்படையாக இலங்கை யைத் தற்போதைய நிலைக்கேற்பத் தனித் தீவாகக் கருதா மல் வடக்கிலுள்ள பெரு நிலப் பரப்பின் தொடர்புள்ள நில மாகக் கணித்தல் உசிதம் எனக் கருதுகின்றேன்.

Page 24
4. மனித உற்பத்தியின் மையம்
உலகின் பெரிய மதங்களான கிறித்துவத்தையும், இஸ் லாத்தையும் பின்பற்றும் மக்கள், "ஆதாம் எனப்படும் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் மனைவி யாகிய "ஏவாள்' எனப்படும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் தங்கள் ஆதிப் பெற்றோர்களாக விசுவாசிக் கின்றனர். இறைவன் ஆதமை மண்ணினால் படைத்து உயி ரூட்டி அவரின் விலாப்புற என்பொன்றின் மூலம் ஹவ்வா வையும் உண்டாக்கி அவர்களை சொர்க்கத்தில் வாழச் செய்தபோது, இறைவனால் விலக்கப்பட்ட கனியொன்றை சாத்தானின் ஆசை காட்டலுக்கு மயங்கி உண்டதன் கார ணமாக இறைவன் சினத்துக்காளாகி அதற்குப் பிராயச்சித்த மாக அவர்கள் உலகத்திற்கு இறக்கி வைக்கப்பட்டனர் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறு ஆதி பிதா ஆதமை உலகத்தில் முதலில் இறக்கிய இடம் அமைந்திருக்கும் நிலப் பகுதி குமரிக் கண்டத்தினொரு பகுதியாகிய இலங்கை என் பதாகக் கொள்ளலாம். அதற்காதாரமாக இலங்கையில் பண்டுதொட்டு இன்றும் வழங்கி வரும் ஆதம் மலை, ஆதம் அணை என்பன போன்ற இடங்கள் அத்தாட்சியாக அமைந் துள்ளன. முதல் மனிதன் ஆதம் தம் நாட்டில்தான் இறக் கப்பட்டார் என்று வேறு எந்நாட்டவரும் இலங்கையிலுள் ளது போன்ற அத்தாட்சிகளை சமர்ப்பித்து உரிமை கோர வில்லை என்பதையும் நாம் குறிப்பிடல் பொருத்தமாகும்.
'தப்ளீர் - "ரூஹ"ல் பயான்" என்ற நூலின் முதல் வால்யூம் 111-112ம் பக்கங்களில் வரும் பதிவுகளை இங்கு காண்போம்:-

புத்தளம் வரலாறும், மரபுகளும் 10
"சுவனத்திலிருந்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர் களை முன்பு இந்தியாவுடனிணைந்திருந்த - தற்போது இலங்கையாகப் பிரிந்துள்ள நாட்டிலுள்ள *சரந்தீப்" மலையிலும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறபு நாட்டிலுள்ள ஜித்தாவிலும் அமரர்களின் துணை கொண்டு இறக்கி விடப்பட்டார்கள். ** 25
"மஸ்ஜிதுன் நபவி'யில் ஒருநாள் "அஸர்" தொழுகைக் குப் பின்பு நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹ" அலைஹிவRல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, "இந்தியா வின் தென் திசைப் பகுதியிலிருந்து ஆதி இஸ்லாத்தின் தென் றலை நான் நுகர்கிறேன்" என்று நவின்றுள்ளார்கள். 28 நபி கள் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இலங்கை யாக இருக்கலாம். நபி ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தி லிருந்து இலங்கையிலேயே இறங்கினார்கள் என்ற கூற்று சரி யாயின் முதலாவது "தாருன் நுவுவ்வத் - நபித்துவத்தின் முதல் இல்லம் நமது இலங்கை என்றும், இறுதி * தாருன் நுபுவ்வத் - நபித்துவத்தின் இறுதி இல்லம் அரேபியா என் றும் நாம் பெருமை அடைய முடியுமல்லவா! 29
நபி ஆதம் (அலை) அவர்கள் சரந்தீப்பில் (இலங்கை யில்) இறங்கிய பொழுது தமது வலக்கரத்தில் *ஹஜ்ருல் அஸ்வத்" என்ற சுவனத்து ஒளிக் கல்லையும், இடக்கரத்தில் நறுமணச் செடிக் கொத்தையும் தாங்கி இருந்தார்கள் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி ஸ்ாக்கிர் ஹ"சஸைன் அவர்கள் எழுதிய 'ஹமாரா இந்துஸ்தான்' என்ற உர்து நூலின் 210ஆம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளமையை காட்ட விரும்புகின்றேன். 25 ஆதம் நபி (அலை) அவர்கள் தமது மூன்றாவது மைந்தர் ஷிது நபி (அலை) அவர்களுடன் அரேபியா சென்று உலகின் முதல் இறைவனின் ஆலயமான கஃபாவைக் கட்டி அதன் தென்கிழக்கு மூலையிலே 'ஹஜ் ருல் அஸ்வத்" என்னும் புனித கல்லையும் பதித்தார்கள். உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை கோடானு கோடி மக்கள் அல்வாலயத்தைத் தரிசித்து சுவர்க்கத்தின் ஒளிக் கல்லையும் பக்தி சிரத்தையுடன் முத்தமிடும் வழக் கத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய பெருமை யுள்ள புனித சொர்க்கக் கல் இலங்கையிலே இறக்கப்பட்ட தென்னும்போது எம் நாட்டின் பெருமையை என்னவென்பது!

Page 25
அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஏகப்பரம்பொருளான இறைவன் புவியில் தேர்ந்தெடுத்த புனித பூமி எம் தாய்நாடல்லவா!
தென்னிந்தியாவைச் சேர்ந்த மெளலவி பாஸில், அல் ஹாஜ் G. M. S. ஸிராஜ் பாக் கவி அவர்கள் சிறந்த மார்க்க அறிஞரும், கவிஞரும் ஆவார்கள். இலங்கையில் D66 t. பெற்ற அகில உலக இஸ்லாமியத் 'தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டின் சார்பாக வெளியிடப்பட்ட “பிறைக் கொழுந்து எனும் நினைவு மலரில் கவிஞர் அவர்கள் "முதல் மனிதப் பயிர் வளர்த்த மூதிலங்கை’ எனும் தலைப்பில் வழங்கிய நாற்பத்தொன்பது கவிதைகளில் முத்தான கவிதைகள் மூன் றைத் தேர்ந்து வழங்கின் பொருந்தும் என நினைக்கின்றேன்.
ஆதத்தின் வலக் கரத்தில் கல்லை ஈர்ந்து
அருஞ் செடிகள் அதை இடமாம் கரத்தில் நல்கி போதருவீர் நிலம் நோக்கி என்றே சொல்லி
புண்ணிய நல்லமரர்களைத் துணைக் கனுப்பி ஆதத்தை ஹவ்வாவை அனுப்பலானான்
அவர் எங்கே இறங்கிட்டார் அதுதான் இந்தப் பூதலத்தில் பல இடங்கள் இருக்கும் போதில்
புகலிடமாய் *இதைத் தேர்ந்தான் அதனைச்
சொல்வேன்
(* இலங்கையை )
அன்றைக்கு முதல் மனிதர் உதித்ததிங்கே
அரும் மறையை முதல் கொணர்ந்த இடமும் ஈதே இன்னுமென்ன பெருமையினை உரைப்பேனிங்கு
முதல் இஸ்லாம் முளைத் ததுவும் இங்கே தானே அன்பான நபி நாதர் ஒரு நாள் மஸ்ஜித்
அருந்தொழுகை முடித்த பின்னர் அமர்ந்தபோது இந்தியத் தென்னிடத்திருந்து இஸ்லாம் தென்றல்
எழுந்து வந்ததை நுகர்ந்தேன் என்றாரன்றோ!
ஆதத்தின் மக்களுக்குத் தந்தை நாடு
அரும் இலங்கை என்னுங்கால் தாயின் நாடு
ஏதாம் அவ்வறபன்றோ! தாயின் பூமி
இரு நாடும் பின்னாளில் இணையக் கண்டோம்

புத்தளம் வரலாறும், மரபுகளும் I2.
ஆதத்தின் வழி வந்த மணத்தை நல்கும்
அருஞ் செடியை இலங்கையிலே வளர்த்ததாலே
ஆதாரமாய் இன்றும் இரு நாட்டிற்கும்
அரும் வணிகத் தொடர்பெல்லாம் அமையக் காணிர்.
எனவே மனித இனத்தின் முதல் உற்பத்திக்குரிய நிலம் இலங்கையுட்பட்ட குமரிக் கண்டமே என்பது பெறப்படும். இங்கிருந்து பல்கிப் பெருகிய மக்களின் மூலமே அவர்களின் மொழி, பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள், நாகரிகங்கள் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அவைகள் இடம், காலம், சூழல் போன்ற தாக்கங்களால் பல்வேறாகப் பிரிந்து ஒன்றுபட்ட சமுதாய உண்மை மறைந்து விட்டதென்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

Page 26
5. கடற்கோள்களின் தாக்கம்
காலத்துக்குக் காலம் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றங் கள் அல்லது இறைவனின் தண்டனைகள், யுத்தங்கள் போன் றவை உலகின் வரலாற்றினை மிகவும் பாதித்துள்ளன என் பது உண்மை. இவை பற்றி முன்னைய வேத நூல்களில் பல நிகழ்வுகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. புனித திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் பலவாகும். சிலவற்றை உங்கட்குத் தருகின்றேன்.
முன்னைய சமூகத்தார் வரம்பு மீறியும், பண்பாடற்ற வாழ்க்கையில் மூழ்கியும், தீவழி சென்றும், இறைவனின் தூதர்களின் நல்லுபதேசங்களைக் கேளாமல் அவர்களைப் புறக்கணித்தும் தன்னிச்சையாக வாழ்ந்தபோது இறைவனால் தண்டிக்கப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் விவரிக்கின்றது. (தீர்க்கதரிசி) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றாதோர் பூகம்பத்தினாலும், பலத்த இடி முழக்கச் சத்தத்தினாலும் அழிந்தனர்; நபி லூத் (அலை) அவர்க
ளைப் புறக்கணித்தோர் கல்மாரி பொழிந்து, அவர்கள் வாழ்ந்த நகரமும் தலைகீழாகப் புரட்டப்பட்டதனால் அழிந் தனர்; நபி ஷ"ஐப் (அலை) அவர்களை ஏளனஞ் Gର ଓFulti
தோர் பூகம்பத்தால் தொலைந்தனர்; நபி மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றாதோர் புயற்காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவைகளால் ஏற்பட்ட பஞ்சத்தினால் தாக்கப்பட்டார்கள்; நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மாறு செய்தோர் வெள்ளத்தால் நாசமாக்கப் பட்டனர்; நபி ஹஜூத் (அலை) அவர்களுக்கு வழி lle sf தோர் பெரும் புயலால் அழிந்து பட்டனர். இவ்வாறு புனித திருக்குர்ஆன் தெளிவுற எடுத்துக்காட்டி உலகிலுள்ளவர்களை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 14
எச்சரிக்கின்றது. உலக மகா யுத்தங்களினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் கொஞ்சமா நஞ்சமா! குறிப்பாக ஜப்பானில் ஏற்பட்ட மாபெரும் அழிவுகள் இன்றும் எம் நெஞ்சங்களைக் கசக்கிப் பிழிகின்றனவே! சிலுவை யுத்தங்களினால் ஏற்பட்ட நஷ்டங்கள் வரையறைக்குட்பட்டதா? புராதன பாரதத்தில் நடைபெற்ற பாரத யுத்தத்தால் விளைந்த கொடுமைகள் எத்தனை
இவ்வாறு உலகில் காலத்துக்குக் காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டு பல சமூகங்கள் இருந்த சுவடுகள் தெரியாமல் அழிந்துள்ளன. அத்தகைய ஒரு நிலைதான் புத்தளம் வட மேற்குக் கரையில் இருந்த புராதன நாகரிகத்துக்கும் ஏற் பட்டதென்பதை எடுத்துக்கூற விரும்புகின்றேன். "இங்கிருந்த சமூகத்தினர் வரம்பு மீறி நடந்ததன் காரணமாக பேராற் றின் குறுக்காக அவர்களால் அமைக்கப்பட்டிருந்த 960) 600T உடைந்து அவர்கள் அழிந்து பட்டார்கள்" என்ற கருத்தை அடுத்துவரும் அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் ஆதாரத் தோடு குறிப்பிட்டிருப்பதைக் காண்பீர்கள்.
இப்பகுதியில் பெருஞ் சிறப்போடும், ஆதிக்கத்தோடும் அரசாட்சி செய்ததாகக் கூறப்படும் பேரரசியினதும், 6 நாடுகளையும் தன்னாதிக்கத்தில் வைத்து பத்துத் தலை இராவணன் என்ற பெயருடன் கோலோச்சிய இராணேஸ் வரனினதும் எழுச்சியும், வீழ்ச்சியும் இன்று கதையாக மட் டும் பேசப்பட்டு வரக்கூடியவாறு மறைந்தொழிந்து போன மைக்கு இப்பகுதியில் ஏற்பட்ட பல கடற் கோள்கள் கார ணங்களாயமைந்துள்ளன. இப்பகுதியிலிருந்த பேரரசி தரை வழியாகவே கற்பிட்டிக்கு அருகிலிருந்த அரசகுமாரனின் அரண்மனைக்குச் சென்று வந்துள்ளாள் என வரலாறு கூறு கிறது. 3 இதிலிருந்து கற்பிட்டிப் பகுதியும், பொன்பரப்பிப் பிரதேசமும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டுமென்பது புலனாகின்றது. பின்பு நடைபெற்ற கடற் கோள்கள் காரணமாகவே இந்நிலப் பகுதிகள் கடலால் பிரிக்கப்பட்டுள்ளன. உயர்ந்த நிலப்பகுதிகள் தீவுகளாக நீர் மேல் தலைகாட்டி நிற்கின்றன.
* 'இலங்சையிலுள்ள ஒரு மலை முகட்டில், நடுப்பகல் வேளையில் நின்று இந்து மாக் கடலுள் நோக்கினால், கட லினடிப் பகுதியில் பொற் கலசமொன்று காணப்படுமென்

Page 27
புத்தளம் வரலாறும், மரபுகளும் 】5
றும், அஃது இராமாயண காலத்தில் இலங்கையின் மன்ன னாயிருந்த இராவணேஸ்வரனின் அரண்மனைக் கலசமென் றும் பலர் கூறக் கேள்வி. இக்கூற்று உண்மையேயாக பொய் யேயாக இந்து மாக் கடலில் ஒரு பரந்த நிலப் பகுதி அழுந்தியுள்ளது என்பதை இது குறிக்கும் என்று கொள்வ தனாலெய்தும் இழுக்கொன்றுமில்லை. கடல்களெல்லாவற்று ளும் இந்து மாக்கடல் ஆழம் மிகுந்ததென்பதும், பரந்த தொரு நிலப் பகுதி அக்கடனுள் ஆழ்ந்த காலத்தேதான் உலகில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்ற இந்திய வடவெல்லையாகிய இமயமலை மேலெழுந்ததென்பதும் மேற் கருத்துக்கு அரண் அளிப்பனவாகும்' என்று குமரிக் 6 டம் எனும் நூலில், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத் தாரின் பதிப்புரையில் குறித்துள்ளமை ஈண்டு நோக்கத்தக் கது. கடலுண்ட இந்நிலப்பரப்பே முதலில் உயிர்கள் தோன் றிய தொன்னிலப் பகுதியாக இருத்தல் வேண்டுமென்பதும் ஆராய்ச்சியாளர் பலர் கருத்துமாகும். சிந்து நதிப் பிரதே சம் கடலால் மூடப்பட்டிருந்த காலத்தில் இந்தியா, அவுஸ் திரேலியா, அண்டார்டிக்கா, மடகாஸ்கார் யாவும் இணைந் திருந்த நிலப்பகுதியை விஞ்ஞானிகள் *கோண்ட்வானா Csavciar” (Gondwana Land) i 6T6Irš stóu'uuri. 3
இந்து மாக் கடல் தோன்றுவதற்கு முன்னிருந்த நிலப் பகுதி லெமூரியாக் கண்டமெனவும், குமரிக் கண்டமெனவும் வழங்கப்பட்டதென்பதும், பின்பு ஏற்பட்ட கடற்கோள்களி னால் தென்பகுதி கடலுள் அமிழ்ந்து வடபகுதி மேலெழுந்த தென்பதும் நில வல்லுனர் முடிபு. இம்மாபெரும் d5L-fib கோள்களுக்குப் பின்பு சிறு அளவிலான கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுளொன்றினால் இலங்கையும், தென் னிந்தியாவும் பிரிந்தன, பின்பு பொன்பரப்பி, கற்பிட்டிப் பகுதிகள் பிரிக்கப்பட்டன. பந்துவாசன் என்ற இலங்கை அரசன் காலத்தில் ஏற்பட்ட கடற் கோளினால் தென்னிந் தியாவுக்கும், மன்னாருக்குமிடையிலிருந்து "இராமணக" என் னும் நிலப்பகுதியின் பெரும்பகுதி கடலுள் மூழ்கியதாகவும் வரலாறுண்டு. சுமார் கி. மு. 2400ம் ஆண்டளவில் இலங் கையின் அரைவாசி நிலப்பகுதி இராவணனின் தலைமையி லிருந்த இயக்கர், நாகர் ஆகியோரின் மித மிஞ்சிய குற்றச் செய்கைகளினால் கோபமடைந்த இறைவன் நீரில் மூழ்கடிக் கச் செய்தான் என்பதும் ஐதீகம். 3

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 16
'துவாபர யுகத்திலே இராவணனது பாவச் செயல் கார ணமாக மன்னாருக்கும், தூத்துக் குடிக்குமிடையிலிருந்த இராவணனது கோட்டையும், இருபத்தைந்து மாளிகைகளும் நான்கு இலட்சம் தெருக்களும் கடலால் கொள்ளப்பட்டன. அதே காலத்தில் களனி திஸ்ஸவின் துர்ச்செயல் காரணமாக ஒரு இலட்சம் கடற்றுரை நகரங்களும், தொள்ளாயிரத்து எழுபது மீனவர் கிராமங்களும், நானூற்று எழுபது முத்துக் குளிப்போரின் கிராமங்களும் கடல் வாய்ப்பட்டன" என்று W. T. கீபல் என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கின்றார். மேலும் 'கர்ண பரம்பரைக் கதைகளின்படி இலங்கை இன்று போல் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிந்திராமல் சேர்ந்து பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்துள்ளது. இரா வணன் இராமனுடன் மோதிய பகுதி இன்று ஆழமற்ற கட லாக மேற்குக் கரையில் இருக்கும் பகுதியிலிருந்த நிலப்பரப் பேயாகும். அதையே இலங்காபுரி என அழைத்தனர். அப் பகுதி நீண்ட பல தீவுகளை அடக்கிய நிலப் பகுதியாக இருந்தமையினாலேயே இலட்சத் தீவுகள் என்று பொருள் படும் "லக்திவ", "லங்கா" என்ற பெயர்கள் ஏற்பட்டுள்ள தெனக் கொள்ளலாம்" எனவும் குறிப்பிடுகின்றார். "
எகிப்திய கணித வல்லுநர் "க்ளோடியஸ் டொலமி " (Claudius Ptolomy) GT Gör Lumtri 6. 9. 1406äv GnuGongjš55 al av கப் படத்தில் இலங்கை இன்றைய அளவைவிட பதினான்கு மடங்கு பெரிதாகக் காட்டப்பட்டு தபரபேன்" (Taprobane) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 3
வடமொழி வான நூலார், இலங்கையின் தலைநகராக வும் பண்டு தொட்டு சிறப்பு வாய்ந்த நகராகவும் இலங்கிய இலங்காபுரியை உலக நடுவரையாகக் குறித்தனர். 17 அதன் படி இலங்காபுரி கிழக்குக் கிறீன்விச்சிலிருந்து 75 ல் இருத்தல் வேண்டும். அவ்விடம் தற்போதைய இலங்கையின் கரையிலி ருந்து மேற்கே நானூறு மைல் வரை செல்கின்றது. 3 குறித்த நடுவரை இன்று இலங்கையினூடாகச் செல்லாது கடல் வழிச் செல்வதிலிருந்து அக்கடற்பகுதி முன்பு இலங்கையைச் சேர்ந் திருந்ததென்பதை உய்த்துணரலாம். மாலைத் தீவுக் கூட்டங் களின் மக்களின் குண இயல்புகள், மொழியமைப்பு, நிறம், தோற்றம் இவைகளை நோக்கும்போதும் அத்தீவுக் கூட்டங்

Page 28
புத்தளம் வரலாறும், மரபுகளும்
கள் ஒரு காலத்தில் இலங்: கயோடினைந்த நிலப்பரப்பாசி
இருந்திருக்க வேண்டுமென்பது திண்னம்.
இலங்கையில் கடைசியாக நடந்த சுட பகரிப்பு ாள டிரி யிலிருந்து அரசாட்சி செய்த திஸ்ஸ மன்னனின் காலத்தில ரும், களனி விகாரை கடலிலிருந்து இருபத்தைந்து மைல் தூரத்திலிருந்ததாக முதியோர்களின் சுற்றுகள் தெரிவிக்கின்
றன. * ஆனால் இன்று அவ்விகாரை கடலிலிருந்து இரு மைலுக்குக் குறைவாகவே அமைந்துள்ளது. இதை து
யொட்டிப் பார்க்கும்போது இலங்கையின் தெற்கு, மேற்கு, வடமேற்குப் பிரதேசங்கள் கடற்கோள்களினால் பெரிதும் தாக்கிப்பட்டு அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளன.
மாறாகக் கடலால் மூடுண்டிருந்த புத்தனக் கடற்கரையை அண்டியிருந்த சில நிலப் பகுதிகள் தரையாக மாறியமையை யும் விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கின்றன. இன்று தரையோடிணைந்த சில இடங்களின் பெயர்கள் தீவு என்ற பெயருடன் வழங்கப்படுகின்றன. மணல்தீவு, சேவுகின்தீவு, கொத்தாந்தீவு, சுரைத்தீவு, ஆனாதீவு போன்ற இடங்களை உதாரணமாகக் கூறலாம். இந்நிலப்பகுதிகள் முன்பு சடல் சூழ்ந்த தீவுகளாக இருந்தமையினால் அப்பெயர்கள் பெற்று பின்பு கடல் வற்றின் காரணமாக நீவின் தன்மை நீங்கி நிலப் பகுதியுடன் இணைந்துள்ளன . எனினும் முன்பு தீவு என அழைக்கப்பட்டவாறே அவ்விடங்கள் இன்றும் அழைக் கப்படுகின்றன. புத்தளத்தின் வட புறத்திலிருந்து பத் துளு ஒயா வரையுள்ள நிலப் பகுதியின் கிழக்குப் புறத்தில் கடற் கரையிலிருந்து ஒரிரு மைலுக்குட்பட்ட தொடர்ச்சியான மண் திட்டு கானப்படுகின்றது. அத்திட்டுக்கள் கடவின் கரை பாகவும், அலைகளினால் மண் குவிந்த கடற்கரைாகவும் இருந்திருக்கலாமெனவும், பின்பு கடல் கீழ் நோக்கி நகர்த் துள்ளதெனவும் 2 கிக்க இடமுண்டு. இப்பகுதிகளில் ஆழ பான கிணறுகள் தோண்டும்போது, கடலில் கானப்படும் சங்குகள், சிப்பிகள், மட்டிகள் போன்ற விடல் வாழ் உயிரி னங்களின் எச்சங்கள் காணப்படுவதும் இதை வலியுறுத்தும்
சான்று எாயுள்ளன .

அல்ஹாஜ் ஏ. என். எம். பிராஜஹான்
எனவே கடற்கோள்களினால் மூழ்கடிக்கப்பட்டுள்ள வட மேற்குப் பிரதேசம் சரித்திர காலத்துக்கு முன்னுள்ள இலங் கையின் சிறப்பான செய்திகளை எடுத்துக் காட்ட வல்லது. கடல் வாய்ப்பட்ட பிரதேசங்கள் போக எஞ்சியுள்ன பிரதே சங்கள் இன்று காடு, கரம்பைகளால் போர்த்தப்பட்ட பிர யோசனப் படுத்தப்படாத நிலங்களாக ஆர்ப்பாட்டங்கள் அடங்கி அமைதியாக உறங்கிக் கிடக்கின்றன. அப்பிரதேசம் முழு அளவில் முனைப்புடன் சரியான முறையில் ஆராயப் படல் அவசியம், அதன் வாயிலாக நாம் அனுமானங்களை மட்டும் பேசிக்கொண்டிராமல் கடந்த கால இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளை நிச்சயமாக நிறுவ முடியுமென்க.

Page 29
6. வடமேற்குக் கரையின் முக்கியத்துவம்
இலங்கையின் வடமேற்குக் கரைப் பிரதேசம் மிகவும் தொன்மை வாய்ந்ததும், முக்கியத்துவம் பெற்றதுமாக விளங் கியுள்ளது. கி. மு. ஆறாம் நூற்றாண்டுகளிலேயே அறபிகள் இப்பிரதேசத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். 1 issF விரியர்களினதும், சீனர்களினதும் தொடர்புகளுமிருந்துள்ளன. இவர்களின் தொடர்புகள் யாவும் பிரதானமாக வியாபார நோக்கமாகவே இருந்தன. இப்பிரதேசம் முக்கியம் பெற்ற வியாபாரத் தலமாக விளங்கியமைக்கு இயற்கையான T || 311 காரணங்களுள்ளன. இலங்கையும், இந்தியாவும் கடலால் பிரிக்கப்படாத நிலத்தொடர்புடன் இருந்த காலத்திலேயே இரு பகுதிகளையும் இனனக்கும் வழியாக இப்பகுதி இருந் துள்ளது. தாமிர வருE எனப்படும் பொருநை ஆறு இந் நிiப்பரப்பினூடாகப் பாய்ந்து செழிப்புறச் செய்ததுடன் அவ்வாற்றுப் படுக்கையில் சிறப்பு மிகுந்த மனித நாகரிக மொன்றும் வளர்ந்து பொலிந்துள்ளது. இராவணன் எனும் பேரரசனின் காலத்திற்கு முன்பிருந்தே வன்மை மிக்க பேர ரசு ஒன்று இங்கு இருந்துள்ளது. பத்துத் தலை இராவணன் எனப் புகழ்பெற்ற மன்னன் பத்துக்கு மேற்பட்ட நாடுகEள் அடக்கி ஆண்ட மாமன்னனாக இருந்துள்ளான். சைவ சம (பத்தைத் தன் கண்ணேபோல் போற்றி வளர்த்து, BYFFL r. பத்தின் சிவத்தலங்கள் ஆயிரத்தெட்டில் ஒன்றான இராவ னேஸ்வரம் எனும் சிவத்தலமும் அமைக்கக் காரணமாகவும் இருந்த சிவ பக்தனாகவும் திகழ்ந்துள்ளான். வீணா கானத்

ன்ேஹாஜ் ஓ என் எம். விாஜஹான் Fiմ
திரிைசையினிவே விசிசடைக் கடவுளின் புகழ்பாடு, தன் ஆட் சிக் கொடியில் வீனைச் சின்னத்தையும் பொறுத்து மகிழ்ந்த வித்துகன் இராணேஸ்வரன். திரு நீற்றின் பெருமையைப் பாடவந்த திருஞான சம்பந்த சுவாமிகள் ஏனைய சிவ பக் தர்களின் திரு மேனிகளிலே திகழும் திரு நீறினும் 3. far னேஸ்வரனின் திரு மேனியிலே பட்டிருக்கும் திரு நீறே மேலானது எனக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். இத்தகைய வீரமும், விவேகமும், வித்தகமும், பக்தியும் நிறைந்த பேரர சனின் மனனமாள் மண்டோதரி பத்தினிமார்களில் ஒருவரா ாப் புழப்படுகின்றார். இத்தகைய மகிமைமிக்க மன்னாதி :ன்னன் அரசாட்சி செய்த பகுதி இந்த வடமேற்குப் பிர தேசம் என்பதை அறியும்போது எமதுள்ளங்கள் எத்துணை மகிழ்ச்சி அடைகின்றன. இப்பேரரசன் ஆட்சி செய்த நிலப் பகுதியிலிருந்த ஏராளமான நகரங்களும், கிராமங்களும் கடற்கோள்களின் கொடூரத்தினால் அழிந்து போயின என்
து ஆய்வாளர் கூற்றாகும்.
வடமேற்குப் பிரதேசம் பிரசித்தி பெற்றிருந்தமைக்கு பல காரணங்கள் பின்னணியாக அமைந்திருந்தன.
1. இந்நூலின் புவியியல் பின்னனி என்ற தலையங்கத்தில் இப்பிரதேசத்தின் இயற்கை அமைப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. வளங்கொளிக்கும் ஆறுகளின் நீர்ப் பாசன பரவல் காரணமாக "பொற்றானியம் விளையும் பூமி"யாக சிறந்து விளங்கியது வேறு தொழில்களும் சிறப்புற்றன. நீண்ட வரலாற்றையுடைய நாகரிகத்தின் உறைவிடமாக இப்பிரதேசம் திகழ்ந்தது.
2. ஆதமின் பாலம் எனப்படும் குறுகிய பாக்குத் தொடு வாய்க்கூடாக மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளுக் குச் செல்லும் இரு வழிப் பாதைகள் இப்பிரதேசத்தின் அண்மையில் அமைந்திருந்தன. பண்டைய தமிழ் நாட் டுத் துறைமுகங்களும், வடமேற்குப் பகுதியில் அமைந் திருந்த மாந்தை, பன்னார், குதிரைமலை, அரிப்பு போன்ற துறைமுகங்களும் ஏற்றிறக்குமதிப் போக்குவரத் துக்குப் பெயர் பெற்றவைகளாகத் திகழ்ந்துள்ளன. கப் பல்களைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கக் கூடிய இயற் கையான, வசதியான துறைகளாக இவை இருந்தன.

Page 30
2】
புத்தளம் வரலாறும், மரபுகளும்
தமிழ் நாட்டின் கரைகளிலும், வடமேற்குக் கரையிலும் நடைபெற்ற முத்துக் குளிப்புத் தொழிலும், அத்தோடு தொடர்புபட்ட வேறு உப தொழில்களும், வணிகமும் இப்பகுதியின் முக்கியத்துவத்துக்கு வழி வகுத்தன. மத் திய கிழக்கு, மேற்கு நாட்டு வணிகக் குழுவினர் இங்கு வந்து குவிந்தனர்.
அரிசி, மிளகு, சாயமூட்டும் மர வகைகள், பாக்கு, சங்கு, கறுவா, தந்தம், யானை, தேங்காயெண்ணெய், தும்பு ஆகியனவற்றையும், கருங்காலி போன்ற விலை பெற்ற மரங்களையும் இலகுவாகப் பெறக்கூடிய நிலை
யங்களாக வடமேற்குத் துறைகள் விளங்கின.
கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரும் பொருட்களைப் பண்டமாற்றுச் செய்யும் மத்திய நிலையமாக இப்பிர தேசத்துறைகள் செயலாற்றின. ஒரு பக்கம் எகிப்து, அரேபியா, பாரசீகம், ஆபிரிக்கா, மலபார் கரைகளிலி ருந்தும், மறுபக்கம் 'கொர மந்தல்" எனப்படும் சோழ மண்டலக் கரை, வங்காள விரிகுடாவின் கீழ்த் திசைக் கரைகள், மலாக்கா, சுமாத்திரா, ஜாவா, மொலுரக் காஸ், சீனா போன்ற நாடுகளிலிருந்தும் கப்பல்கள் இத் துறைகளை அடைந்து தங்களது பொருட்களைப் பரி மாறிக் கொண்டன.
கடற்கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங் களினால் பாதிக்க முடியாத கடற்பிரதேசமாக 6 மேல் நீர்ப்பரப்பு அமைந்திருந்தமை இன்னொரு விசேட காரணியாகும். அத்தகைய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கப்பல்கள் ஒதுங்கும் அல்லது புகலிடம் கொள்ளும் தலமாக வடமேற்குக்கரை அமைந்திருந்தது. இப்பகுதிக்கு வந்து சேர்ந்த இபுனு பதூத்தாவும் இந்
நிலைக்கு உட்பட்டவரேயாகும். அலை வாய்ப்பட்டு அலைந்து வந்த விஜயனும், அவனது தோழர்களும் ஏறி வந்த நாவாய்கள் வந்து ஒதுங்கிய இடமும் இதுவே.
குளோடியஸ் சக்கரவர்த்தியின் ஆட்சியில் செங்கடலில் ஆதிக்கமாயிருந்த "ஆனியஸ் லோக்கமஸ்" என்பானும் அலை வாய்ப்பட்டு அடைக்கலமடைந்த இடமும் குதிரை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 22
மலையேயாகும். 9 குறிப்பாக சீற்றமுள்ள தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் ஆதிக்கம் இப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை.
இத்தியாதி காரணங்களால் சரித்திர காலந்தொட்டு வட மேற்குக் கரை பெருமை மிக்க பிரசித்தமான இடமா கத் திகழ்ந்து வந்துள்ளது என்பது தெளிவு. பாக்குத் தொடு
வாயின் மூலமாக நடைபெற்று வந்த போக்குவரத்துக் களின் ஆதிக்கம் முஸ்லிம்களின் - அராபியர்களின் கையி லேயே இருந்ததென்பது வரலாற்றுண்மையாகும். Gourriřáš கருவிகள் கொண்ட கப்பல்கள் மூலம் தமது செலவால் கடற்பாதைகளைப் பேணி வந்தனர். அத்துடன் இப்பகுதி யில் விவசாயத்தையும் அவர்கள் பெருக்கியுள்ளனர்; է 16ծ குளங்களையும் அமைத்தனர். உதாரணமாக பெருங்குள மான இராட்சதக் குளத்தையும் புதுப்பித்தவர்கள் அவர்
களே. 19 போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்ற மேற்கு நாட்டு பலம்படைத்த கடலாதிக்கக் குழுவினரின் வருகை
காரணமாகவும், கப்பல் அமைப்புகளில் ஏற்பட்ட நவீன தொழில் நுண்கலை வளர்ச்சியின் காரணமாகவும் அரேபி யரின் கையிலிருந்த கடலாதிக்கம், வர்த்தகம், செல்வச்
செழிப்பு ஆதியன வீழ்ச்சியடைந்தன.

Page 31
7. பெண்ணரசி ஆண்ட பொன்னாடு
புராண காலந்தொட்டு வடமேற்குப் பிரதேசம் 6uש லாற்றில் குறிக்கப்பட்டு வந்துள்ளமையை நாம் காண்கின் றோம். மகா பாரதத்தின் கதாநாயகர்களாகிய பாண்டவ ரைவருள் அருச்சுனன் என்பானை சம்பந்தப்படுத்திக் கூறப் படும் இராணியொருத்தியின் பெயர் அல்லி என்பதாகும். இவள் பெண்மைக்கே முக்கியமளித்து ஆண்மையை அடக்கி பெண்மய அரசு ஒன்றை நிறுவியவள் என புராணக்கதை கூறும். எனினும் ஆண்மைக்கு பெண்மை அடிபணிந்தது. அருச்சுனன் அவளை அடக்கி அவள் மனம் வென்று அவளை தன் மனைவியாகவும் ஆக்கினான். இத்தகைய அரசி, ஆட்சி செய்த பிரதேசம் புத்தளத்தின் வடக்கேயுள்ள கலா ஒயா வுக்கும், அருவி ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியே என்று நம்பப்படுகின்றது. குதிரை மலைக்கு அருகாமையில் இவளின் அரசிருக்கை அமைந்திருந்தமைக்கான பல தடயங் கள் உள்ளன. அவ்வரசியின் மாளிகைகள் கடலால் விழுங்கப் பட்டு எஞ்சிய சில சிதைந்த பகுதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. பண்டைய அரசாட்சியின் சிதைவுகள் பல, அடர்ந்த காடுகளினூடாக செல்வோருக்கு அகப்படுகின்றன. தேரோடு வீதி என்ற பெயரைப் பெற்ற ஒரு பகுதியே இன்று முள்ளது. எங்ங்ணமாயினும் சிறந்த நாகரிகமும், படைப்பல முங் கொண்ட பேரரசி ஒருத்தி இப்பகுதியில் தனது ஆதிக் கத்தைச் செலுத்தியுள்ளாள் என்பது பெறப்படும்.
இதை அடிப்படையாகக் கொண்டு வேறொரு கோணத் தில் ஆராயும்போது, இங்கே வேறொரு பெயரைக்கொண்ட

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 罗4
பேரரசியும் அரசாண்டிருக்கிறாள் என்று அறிய நேரிடுகின் றது. இதற்கான சில ஆதாரங்களைக் கீழே பார்ப்போம்.
சொலமன் என்றழைக்கப்படும் நபி சுலைமான் (அலை) அவர்கள் உலகை ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்த மன்னாதி
மன்னர் எனக் கூறப்படுகின்றது. அவர், தீர்க்கதரிசிகளுள் ஒருவராவர். 'டேவிட்" எனப்படும் வேதம் அருளப்பட்ட நபி தாவூத் (அலை) அவர்களின் குமாரர். சுலைமான்
நபிக்கு, காற்றை வசப்படுத்தித் தந்ததாகவும், உருகிய செம் பின் ஊற்றை அவருக்காக ஒடச் செய்ததாகவும், அவருக்கு ஊழியஞ் செய்யக்கூடிய "ஜின்”களை சாட்டியுள்ளதாகவும் இறைவன் கூறியுள்ளான். (திருமறை: 34; 12, 13) நபி சுலை மான் அவர்களுடன் தொடர்புகொண்ட பல்கீஸ் எனும் பேர சியை வரலாற்றாசிரியர் "ஷிபா - Sheba" எனக் குறிப்பர். அவள் "ஸ்பா" என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு யெமன் நாட்டில் இருந்து அரசாண்டதாகத் தெரிவிக்கப்படு கின்றது. ஆயினும் அவ்விடத்திலிருந்து அரசாட்சி செய்ததா கக் குறிக்கப்படுபவர் பல்கீஸ் இராணியாக இருக்க முடியாது என்ற சந்தேகத்திற்குக் கீழே தரப்படுகின்ற ஆதாரங்கள் சாதகமாக உள்ளன.
(i) நபி சுலைமான் அவர்களுக்கு சகல உயிரினங்களின் மொழிகளையும் அறியக்கூடிய மாபெரும் சக்தியை இறைவன் அளித்திருந்தான். அவர்களின் நாடு பாலஸ்தீனம், அவர்கள் பல்கீஸ் அரசியைப் பற்றி "ஹ"த் ஹ"த்" எனும் பறவை யொன்றின் மூலமே முதலில் அறிகின்றார்கள்.
'. நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். "ஸ்பா'வைப்பற்றி நிச்சயமான செய்தி யைக் கொண்டு வந்திருக்கிறேன்." (திருக்குர்ஆன்:27, 22)
என்ற திருக்குர்ஆனின் வசனப்படி "ஹ"த் ஹ"த்" என்ற பறவையின் கூற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆப்கானிஸ்
தான் போன்ற தூர நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவைகளை எல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த சுலை மான் நபி அவர்கள், தமது நாட்டுக்கு மிக சமீபத்தில்
யெமன் நாட்டில் இருந்து அரசாட்சி செய்த பிரபலமான

Page 32
புத்தளம் வரலாறும், மரபுகளும்
அரசியை ஒரு பறவை வந்து சொல்வித்தான் அறிந்தார்கள் என்பது நம்பகமான செய்தியன்று. அப்பேரரசி யெமனிலிருந் தல்ல - பாலஸ்தீனத்துக்கு வெகு தொலைவிலுள்ள வேறொரு நாட்டிலிருந்து அரசாட்சி செய்தவள் என்பதை நாம் நம்ப
(i) "மெய்யாகவே அ(த்தேசத்தவர்களை ஒரு பெண் ஆட்சி செய்வதைக் கண்டேன். சகல சம்பத்தும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாச னமும் அவளுக்கு இருக்கின்றது" (அல்குர்ஆன் 27:28) என்ற அப்பறவையின் தொடர்ந்த கூற்றின்படி பிரசித்த மான அரசியை உலக அரசர் சுலைமான் நபியவர்கள் அவள் பக்கத்து நாடொன்றில் இருந்திருப்பாளாயின் அறியாதிருக்க முடியாது.
(ii) சுலைமான் நபியவர்களுக்கு பறவையின் கூற்று சந் தேகத்தை விளைவித்துள்ளது. அக்கூற்றை மேலும் உறுதிப் படுத்த விரும்புகிறார்கள்.
"நீ மெய் சொல்கிறாயா, அல்லது பொய் சொல் கிறாயா என்பதை அதி சீக்கிரத்தில் நாம் சுண்டு கொள் வோம். என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டுபோய் அவர்கள் முன் போட்டுவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என் பதை நீ கவனித்து வா)" (அல்குர்ஆன் 27: 27, 38) என்று சுலைமான் நபியவர்கள் பறவைக்குக் கூறி அப்பறவை யிடமே தமது கடிதத்தையும் அனுப்பி வைக்கின்றார்கள். எனவே முதன் முதலில் பிரசித்தமான நாட்டையும், அத் நாட்டின் அரசினயயும் கேள்விப்பட்ட பிறகு அந்நாட்டையும் தன்னாதிக்கத்தில் கொண்டுவர விரும்பி நபி கலைமான் அவர்கள் எடுத்த முதல் முயற்சியே இக்கடிதம் அனுப்பிய நிகழ்ச்சி என்க.
(iv) அவ்வாறே கடிதத்தை பல்கீஸ் அரசி கண்டெடுத்து அதை வாசித்த பின்பே சுலைமான் என்ற அரசரைப்பற்றி அறிகின்றார். தனது கீழுள்ள மூக்கியஸ்தர்களுடன் கலந்து பேசுகின்றாள்.

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 盟配
"நாங்கள் பல வான்களாகவும், கடுமையாக யுத்தம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். இவ்விஷயம் fபற்றி முடிவுசெய்வது) உங்களைப் பொறுத்திருக்கின் றது" (அல்குர்ஆன் 27: 83) என முக்கியஸ்தர்கள் ஆர சியின் முடிவுக்கே விட்டு விடுகின்றார்கள்.
(W) " " அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஆதாரின் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்தே விடுகின்ற னேர். ஆகவே நான் அவர்களிடம் (உயர்ந்த பொருட் கிளைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பிவைத்து, (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமி குந்து என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.)" (அல்குர்ஆன் 27: 35,35) பல் ஸ்ே அரசி சுலைமான் நபி அவர்களுக்கு அனுப்பிவைத்த உயர்ந்த காணிக்கைப் பொருட்களில் முத்து, இரத்தினம், இந்தப் பதுமைகள், மயில், குரங்கு ஆதியனவும் அடங்கியி ருந்ததாக விவிலியமும், களபஸால் அன்பியாவும் குறிக்கின் 1ன. குறித்த பொருட்கள் அரேபிய, யெமன் நாட்டுக்குரிய கீத் தென்படவில்லை. அவை உண்மையிலேயே இலங்கை பின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள பொன்பரப்பிப் பகுதி யில் பெருமளவில் காணப்படுவதால் அரசியின் பிரதேசம்
பட மேற்குப் பிரதேசமெனக் கொள்ளலாம்.
(wi) சுவை மான் நபி அவர்கள் அக்காணிக்கைப் பொருட் 3ன ஏற்கவில்லை. பல்கீஸ் இராணியின் நாட்டுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கின்றார்கள். ாகிர்த்து நின்று நாட்டின் அழிவுக்குக் காரணமாக இருப் பதை விரும்பாத பல்கீஸ் இராணி சுலைமான் நபி அவர்க ருக்கு அடிபணிந்து அவர்களுடைய நாட்டையே அடைகின் ாள். இவையே சுலைமான் - பல்கீஸ் சம்பவத்தைப் பற்றி 'வித திருக்குர்ஆன் கூறும் சுருக்கமாகும்.
புனித திருக்குர்ஆனிலே பிறிதோரிடத்தில் பல்கீஸ் இரா கணியின் 'ஸபா (Saba) என்ற நகரைப்பற்றிக் குறிப்பிடப் படுவதையும் இனிக் காண்டோம். ஸ்பா நகரவாசிகளுக்கு வளமான சோலைகளையுடைய நகரத்தை நன்கொடையா

Page 33
7 புத்தளம் வரலாறும், மரபுகளும்
விக் கொடுக்கப்பட்டதாக இறைவன் தெரிவிக்கின்றான். ஆயி னும் அந்நகரத்தார் இறைவன் அருளைப் புறக்கணித்து பாபங்களில் ஆழ்ந்துவிட்டனர்.
"(அவர்கள் கட்டிவைத்திருந்த மகத்தான) "அரிம்" (அணையை உடைக்கக்கூடிய பெரும்) வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பி வைத்தோம்." (அல்குர்ஆன்: 34, 16) என இறைவன் தெரிவிக்கின்றான். இவ்வனை உடைப்பு சம்பவமொன்று யெமன் நாட்டிலும் நடைபெற் றுள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு "ஸ்பா" பகுதி யெமன் நாடென சரித்திராசிரியர்கள் நம்புகின்றனர். ஆயி னும் திருக்குர்ஆன் கூறும் அணை உடைப்பு சம்பவம் கிறிஸ் துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகும். மாறாக யெமனிலிருந்த அணை கி. பி. இரண்டாம் நூற் றாண்டிலேயே தகர்ந்திருக்க வேண்டுமென ஆய்வாளரான திரு. எட்வர்ட் கிளாஸ்ஸர் தெரிவிக்கின்றார். 2 இதிலிருந்து
ஏறத்தாழ சுலைமான் நபியின் காலத்தில் தகர்ந்ததாகக் கூறப்படும் அணை யெமன் நாட்டினதன்று என்று உஇர Ճt frւt .
எனவே குறிப்பிட்ட "அரிம்" அனை பொன்பரப்பிப்
பகுதியில் அருவி ஆற்றுக்குக் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பாரிய அணையாக இருக்கலாம் என ஆய்வாளர் நம்புவர். அருவி என்ற தமிழ்ச் சொல்வின் அராபியத் திரிபே 'அரிம்" என்ற பெயர் என்ற அனுமானத்தையும் நாம் புறக்கணிக்க முடியாது அருவி ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மிகப் புராதன அணையொன்று தகர்ந்து சிதைந்து போன மைக்கான அடையாளங்கள் இன்றும் தென்படுவது குறிப்பி டக் கூடியதாகும். மேலும் இத்தகைய பேரனையொன்று தகர்ந்து சிதைந்து போனதற்கான தடயங்கள் பொன்பரப்பி ஆற்றிலும் காணப்படுவதை இவ்விடத்தில் குறிப்பிடல் வேண் டும். ஆறுகளின் குறுக்காக பாரிய அனை அமைத்து நீர்த் தேக்கங்களையும், கால்வாய்களையும் அமைத்து நீர்ப்பாச னத்துக்கு வழி சமைத்து நிலத்தைப் பொன் கொளிக்கும் பிரதேசமாக மாற்றிய நாகரிக மேம்பாடுள்ள சமுதாயத்தி னர் இங்கு வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வணை கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பண்டைய ஆத்திETகி

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ருக்கு நிகரானவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்து ஈண்டு கவனத்திற்குரியதாகும். ே
இறைவன் திருக்குர்ஆனில் "அரிம்" அணையை உடைப் பெடுக்கச் செய்து அழித்தமைபற்றிக் கூறும்போது தொடர்ந்து '" ، = . . . . அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளை கசப்பும், புளிப்புமுள்ள பழங்களையுடைய மரங்களையும், சில இலந்தை பரங்களையும் உடைய இரு தோப்புகளாக மாற்றி விட்டோம்" (திருக்குர்ஆன் 34:18) எனவும் குறிப்பிடுகின்றான். கசப்பும், புளிப்புமான இலந்தை மரங்கள் இன்றும் பொன்பரப்பிப் பிரதேசத்தில் காணப்படு வது மிகவும் வியப்பூட்டும் ஆதாரமாகும். அத்தோடு அங்கே இலந்தை மரத்துடன் சம்பந்தப்பட்ட இலந்தையடி, இலந்தை வட்டான் போன்ற இடப் பெயர்களும் இருப்பது கவனிக்கத் நிகேது,
(wi) 'தாபரி" என்ற வரலாற்றாசிரியரின் கூற்றுப்பபு. பல்கீஸ் அரசி மத்திய கிழக்கைச் சேர்ந்துள்ள நாடுகள் ஒன்றின் அரசியல்ல என்றும் கீழைத்தேய அரசன் ஒருவனின் குமாரி யாக இருக்கலாம் எனவும் கூறுகின்றார். அத்துடன் சீன அர சனின் மகளாக இருக்கலாம் எனவும் அபிப்பிராயப் படுகின் றார். எனினும் பல்கீஸின் பிறந்தகத்தை பலரும் பலவிதம் கூறி நிற்கின்றனர். எனவே நாம் எண்ணுவதுபோல பல்கீஸ் எனும் ஷீபா அரசி இலங்கையைச் சேர்ந்த அரசியாக ஏன் இருக்க முடியாது?
இத்தியாதி காரணங்களைக் கொண்டு பல்கீஸ் அரசி பொன் பரப்பிப் பிரதேசத்திலிருந்து அரசாட்சி செய்தவளாகவும் இருக் கலாம். அருவி ஆற்றினதும், பொன்பரப்பி ஆற்றினதும் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பாரிய அணைகளின் சிதைவு களும் இங்கு காணப்படுகின்றன. பல்கீஸ் அனுப்பிய காணிக் கைப் பொருட்களும் பொன்பரப்பிப் பகுதிக்கே உரியவை. கசப்பும், புளிப்புமான இலந்தை மரங்களும் காணப்படுகின் றன. சிறப்பான நாகரிகமொன்று நிலவியமைக்கும், நல்ல ஆயுத பலத்துடன் கூடிய அரசொன்று இருந்தமைக்கும் ஆதா ரங்களுள்ளன. சுலைமான் நபி அறியப்படாத தூர தேசமா கவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது. அவர் அரசாட்சி செய்த காலமும், இப்பகுதி நாகரிகம் முதிர்ந்திருந்த Ffül)

Page 34
29 புத் தளம் வரலாறும், மரபுகளும்
மும் ஏறத்தாழ சமகாலமாகவும் இருக்கின்றது. எனவே பல் கீஸ் (ஷீபா) அரசி வீற்றிருந்து அரசாட்சி செய்த '6) Jnr. என்னும் பகுதி புத்தளத்துக்கு வடக்கேயுள்ள பொன்பரப் பிப் பிரதேசமே என்று நம்ப இடமுண்டு.
அர்ச்சுனன் என்ற மாபெரும் வீரன் அல்லி இராணியைக் கவர்ந்து சென்றுள்ளான்; பல்கீஸ் இராணியை நபி 6) மான் அவர்கள் சுவீகரித்துள்ளார்கள். இவ்விரு சம்பவங்கட் கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் கவனிக்கிறோம். சுலைமான் - பல்கீஸ் வரலாறு மத்திய கிழக்கு நூல்களில் பதி யப்பட்டுள்ளதாகும். அல்லி - அர்ச்சுனன் வரலாறு தூர கிழக் குக்கு உரியது. இருவேறு சூழ்நிலைகளில் இவ்விரு வரலாறு களும் எழுந்துள்ளன என்பதை நாம் எண்ண முடியுமல்லவா!

8. கடல் கொண்ட சோனகர் நாடும், பொன்பரப்பியும்
புத்தளத்தின் வடக்கே ஆறாவது மைலிலிருந்து tipsy னார் எல்லை வரை பரந்துள்ள நிலப்பகுதி பொன்பரப்பிப் பற்று என அழைக்கப்படும். பொன்பரப்பி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இன்று சிங்கள மொழியின் செல்வாக்கினால் சிதைந்து "பொம்பரிப்பு" என வழங்குவது வேதனைக்குரிய தாகும். இவ்வாறே புத்தளம் பிரதேசத்தினதும், அதைச் சூழவுள்ள இடங்களினதும் இடப் பெயர்கள் நாளாந்தம் சிதைக்கப்பட்டு வருகின்றன; அந்நிய மொழிப் பெயர்களைப் போல மாற்றப்படுகின்றன; தமிழ்ப் பெயர்களின் பிற மொழி பெயர்ப்புகள் அவ்விடங்கட்கு புதிதாகச் சூட்டப்படுகின்றன. பாரம்பரியமாக வழங்கப்பட்டுவந்த தமிழ்ப் பெயர்களை வேற்று மொழி எழுத்துக்களைக் கொண்டு உச்சரிப்பு மாறா மல் எழுதக்கூடிய வாய்ப்பிருந்தும் மனமெழுந்த 6aurtifluurre75 தமிழ் மரபைப் புறக்கணித்து எழுதுவது தமிழ் மொழியை உதாசீனம் செய்வதுபோன்ற மன உளைச்சல்களைத் தோற்று விக்கின்றன. எங்ங்ணமாயினும் இப்பகுதி இடங்களின் பெயர் கள் சிதையாவண்ணம் பாரம்பரிய தமிழ் மரபைப் Lrg காத்து வைப்பது இப்பகுதி மக்களின் நீங்காக் கடமையா கும். இல்லாவிடின் எதிர்காலத்தில் இப்பகுதி தமிழ் பேசும் சமூகத்தவர் வாழ்ந்தனர் என்று கூறுவதற்கே இடமில்லாது போகக் கூடும்.
பொன்பரப்பிப் பகுதியே புத்தளம் பகுதியின் புராதன நாகரிகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளது. அன்றைய

Page 35
புத் தாய் ரெஸ் Tதும், ரேட் கிருமி
பிரதான குடுமிருப்புகள் இப்பகுதியிலேயே இருத்துள்ள மன. அதற்காதாரமாக அப்பகுதியில் புராதன சிதைவுகள், தடை பங்கள் ஏரான மாகக் காணக் கிடைக்கின்றன. அடுத்த சீத்
நியாயத்தில் இடம்பெறும் குதிரை மலைப் பகுதி s. JT gå, பரப்பிப் பற்றி நடு நாயகமாகத் திகழ்ந்துள்ள : இதன்
சிறப்பை வலியுறுத்தும் அருவியாற்றுக்கும், கல் ஓயாவுக் கும் இடைப்பட்ட பிரதேசம் முன்பு சிறப்பான ஓரிட த்தப் பெற்றிருந்தமையை நாம் மறுக்கனோ மEறக்கவே Trif
|-
பொன்பரப்பியிங் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியையே வந்துள்ளனர் என்பதற்கு இப்பகுதியிலுள்ள இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே இருப்பது சான்றாகும். பொன் பரப்பி என்ற பெயரே தமிழ்ப்பெயர் என்பதை சொல் வித் தேசிய வேண்டியதில்லை. இப்பகுதிக்கு பொன்பரப்பி என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை அறியும்போது மேலும் இப்பகுதியின் சிறப்புகள் தெற்றேனத் தெரியும். "பொற்ச: வெளி' (Golden Plain), "பொற் றாணியம் விளையும் பூமி" (Land of the Golden Grain) at 53rs isn't, i. இப்பிரதே சத்தை வர்ணிப்பர். இப்பிரதேசத்தின் பரந்த நிலப்பரப்பில் அமோகமாக விளைந்துள்ள பயிர்கள் அறுவடை காலத்தில் முற்றிப் பழுத்திருக்கும்போது பொன்னையே பரப்பி வைத் தாற்போல் தென்படுவதன் காரணமாக இப்பகுதி பொன்
பரப்பி என்ற பெயரைப் பெற்றதாகக் கூறுவர். இதற்கு ஆதார ாேக இங்கு அழிந்தொழிந்து கிடக்கும் g TTiit ni Ta3. குளங்களும், வில்:ளும், கால்வாய்களும், ஆ31ரைக்கட்டு
களும், வயல்வெளிப் பிரதேசங்களும் காடுகளால் மறைக்கப் பட்டு கண்ணீர் வடித்து பழங்கதைகளைக் கூறி நிற்கின்றன. அறுவடைக் காலத்திலே பிரகாசமான சூரிய ஒனியிலே கன மல் கணக்காகப் பரந்து விரிந்து கிடக்கும் நெல் வயல்களின் கண்கவர் கற்பனாக் காட்சி, "பொன் சமவெளி என்று தத்
ரூபமான வர்ணனைப் பெtaர இப்பிரதேசம் பெற்றயை மிக மிகப் பொருத்தமானதேயாகும். இயற்: கயின் எழி விலே மூழ்கி எாழ்ந்த அன்றைய மருத நில மக்களின் இர சிப்புத் தன்மை நிறைந்த கற்பனா வளங்கொண்ட taாப்
பாங்கின ன போன் பரப்பி என்ற அழகுவாய்ந்த நீந்தமிழ்ச் சொற்கள் போலும் :ற சாற்றுகின்றன.

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 5.
- - - - - - - -
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காவின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென் பீடல் முத்தும் குண கடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் 3ாழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி எrளந்தவை மயங்கிய நனந்தலை மறுகி."
(பட்டினப் பாலை - 185-195)
என்று வரும் சங்கத் தமிழ்ச் செய்யுள் மூலம் தமிழ் நாட்டுத் துறைக்கு வந்திறங்கிய பொருட்பண்டங்களின் வரிசை கூறப்படுகின்றது. அவற்றுள்ளே இலங்கையிலிருந்து வந்திறங்கிய உணவைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதை ஜூன்றி நோக்கும்போது ஈழ நாடு, அயல் நாடுகளுக்கு தனது பொன் விலத்தில் விளைந்த மித மிஞ்சிய அரிசியை ஏற்றுமதி செய் மை புலப்படுகின்றது. இவ்வரிசியில் பொன் பரப்பிப் பகுதி பில் அன்று அமோக விளைச்சலின் பாபனும் உள்ளடக்கி யிருக்கும் என்பது நிச்சயம். இங்கு விளைந்த அரிசி அப்பகு தியிலுள்ள குதிரைமலை, காதோட்டம் ஆகிய துறைமுகங் கட்கூடாகத் தமிழகத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கு மென்பதில் ஐயமில்லை. பொற்றானியம் விளைந்து பொன் பரப்பிப் பகுதிக்குப் பொலிவூட்டியது.
இப்பகுதியில் பொன்னிற மண் - சிவந்த மண் பரந்து காணப்படுவதன் காரணமாக பொன்பரப்பி என்ற பெயர்
ஏற்பட்டதாகவும் தெரிவிப்பர். செப்பு நிறம் என்ற பொருள் கொண்ட தாமிரவருணி எனப்படுவதும், தம்பபாணி, தம்ப பண்ணை என்றழைக்கப்படுவதும் பொன் பரப்பிப் பகுதியையே என்பதும் ஈண்டு நாம் கவனித்தல் வேண்டும். இலங்கையும்,
இந்தியாவும் கடற்கோளினால் துண்டாடப்படாமலிருந்த காலத்து இப்பகுதியினூடாக தாமிரவருணி எனும் ·臀
பாய்ந்து வளங்கொளித்தது என்பது வரலாறு தரும் உண் மையாகும். 17 இவ்வாற்றைத் தமிழில் பொருநை ஆறு என்

Page 36
புத்தளம் வரலாறும், மரபுகளும்
பர். தாமிர வருணி ஆறு அல்லது தாமிரபரணி ஆறு பற்றி ஆராயும்போது பின்வரும் குறிப்புக்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
தென்னகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் பாய்ந்தே ? டும் செழிப்பான பொன் கொழிக்கும் ஆறு தாமிரவருணியா கும். இவ்வாற்றைத் தமிழ் நூல்கள் பொருநை, பொருநல்,
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்டி 34
தண்பொருநை, தண் பொருந்தம் என்றெல்லாம் குறுப்பிடு கின்றன. இவ்வாற்றின் கழி முகத்திலேயே பண்டைப் புகழ் பெற்ற கொற்கைத் துறை முகம் விளங்கியதாக ஒரு சாரார் கூறுவர்.
"கிரேக்க அறிஞர் "மெகஸ்தனீஸ்" என்பார் இலங்கையை "தாப்பிரபேன்" (Taprabane) எனக் குறிப்பிடுவதுடன் அஃது இந்தியாவினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென வும் கூறுகின்றார். அந்த ஆறே தாமிரவருணியாகும். இஃது இன்று கடலுள் மூழ்கியுள்ள நிலத்தினூடாக அஃதாவது இலங்கா புரிக் கூடாகப் பாய்ந்துள்ள ஆறுகளிலொன்றெனத் துணியலாம். தாமிர வருணி என்ற இவ்வாற்றின் பெயரே முழு இலங்கைக்கும் பெயராக வழங்கிவரக் Singaoor LDnta, அமைந்ததெனின் இதன் முக்கியத்துவமும், பிரசித்தமும் தெற்றென விளங்கும். 'தாப்பிரபேன்’ என மெகஸ்தனீஸ் தமது மொழியில் குறிப்பிட்டது தாமிர வருணி என்ற சொல் லின் திரிபேயாம். தமிழ்க் கலைக் களஞ்சியம் இவ்வாற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'இலங்கைக்கு தாப்ரபனே, தாம் பபன்னி, எனப் பெயர். இங்கிருந்து தென் தமிழ் நாட் டிலே குடியேறிய மக்கள் இந்த ஆற்றைத் தங்கள் தீவின் பெயரால் "தாம்பபன்னி" என்றனர். இது தாமிர பருணியா யிற்று" எனத் தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட கூற்றில் இலங்கை மக்களின் தென்னிந்தியக் குடியேற்றம் என்ற குறிப்பை மெகஸ்தனீஸ் அவர்களின் கூற்றின் அடிப்படையில் முரணாக நோக்க வேண்டியுள்ளது. இலங்கையும், தென்னக மும் இணைந்திருந்தபோது அந்நிலப்பரப்புக்கூடாக 29t ஒரே ஆற்றின் படுக்கைகளில் வாழ்ந்த ஓரின மக்களே பிற் காலத்தில் கடற்கோளினால் ஆறு துண்டாடப்பட்டபோதும் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கலாமேயொழிய இலங்கையி லிருந்து தென்னகத்துக்கு பின்பு குடியேறியவர்களல்ல என் பதை உய்த்துணர்ந்து சிந்தித்தல் வேண்டும். பொதுவாகப் பாரிய குடியேற்றங்கள் தென்னகத்திலிருந்து இலங்கைக்கு நடைபெற்றுள்ளனவே தவிர, இலங்கையிலிருந்து சென்று தமது தாயகத்தின் பெயரையே ஒரு ஆற்றுக்கு சூட்டி வாழக் கூடிய பாரிய குடியேற்றங்கள் நடைபெற்றிருக்குமென நம் புவதற்கு சிரமமாகவுள்ளது. தென்னகத்துடனும் இலங்கை யுடனும் தொடர்பு கொண்டு பாய்ந்து வளங்கொழித்த

Page 37
35 F புத்தளம் வரலாறும், மரபுகளும்
தாமிரவருணி ஆறு கடற்கோளின் தாக்கத்தினால் துண்டா டப்பட்டுவிட்டது. நெல்லை மாவட்டத்தில் இன்று பாயும் இவ்வாற்றின் தொடர்ச்சி அதற்கெதிரே இலங்கையின் வட மேற்குக் கரையில் புத்தளம் மாவட்டத்தின் வடக்கே பாயும் கலாஒயா என சிங்கள மொழியில் வழங்கப்படும் பொன்பரப்பி ஆறாக இருக்கலாம் என்பதை பின்வரும் சான்றுகள் நிரூபிக் கக் கூடியதாக அமைகின்றன.
தமிழ்க் கலைக் களஞ்சியத்திலே "காயல்" என்ற இடத்
ைேதப் பற்றி விவரிக்கும்போது, "காயல் நெல்ஜை மாவட் டத்திலுள்ள ஒரு கிராமம் ஒரு காலத்தில் மிகப் புகழ் வாய்ந்த துறைமுகப் பட்டினம் தாமிரவருணி நதி சங்கமமா
கும் இடத்தில் அமைந்த ஊர் மார்க்கோபோலோ இறங்கிய
நசீரம்' என அறிவிக்கின்றது. இதன் படி காயலுக்கும், புத்
தளம் பொன்பரப்பிப் பகுதிக்கும் தாமிரவருணி ஆற்றின் மூலம் புராதன நிலத் தொடர்பு இருந்ததென நம்பவும். காயல் அல்லது காயல் பட்டணம், "சோனகர் பட்டினம்"
எனவும் அழைக்கப்பட்டுள்ளது. 18 சுலா ஒயா அல்லது போன் பரப்பி ஆறு சோனகர் நதியென அழைக்கப்பட்ட காரனத் தால் தாமிரவரு5ணி எனவும் அழைக்கப்பட்ட அந்த ஆற்றின் கரையில் அமைந்திருந்த காயல் நகரும் சோனகர் பட்டினம் என அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. தாமிரவருணி தீரத் தில் இருந்த கொற்கைத் துறைமுகத்தை ஒட்டி "சோனகன் விளை" என்ற பகுதியும் இன்றும் இருந்து வருகின்றது. நினைவுக்கு எட்டாத கால முதற்கொண்டே தமிழர்கள் அற பிகளுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 18 இஸ்லாத்திற்கு முன்பிருந்தே அரபிகளின் தொடர்பு தாமிர வருணித் தீரத்திலேயுள்ள மக்களுடன் இருந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் சோனகர் பட்டினம் என்ற பண்டைய பெயரையுடைய காயல் பட்டினத்தில் அறபிகளின் குடியிருப் புகள் இருந்ததுபோல சோனகர் நதி எனப்பட்ட பொன் பரப்பி ஆற்றுப் பகுதியிலும் அறபுக் குடியிருப்புக்கள் இருந் துள்ளன எனக் காண்கின்றோம். குறிப்பாக குதிரைமலைப் பகுதியிலே பெரிய அறபுக் குடியிருப்புகள் இருந்துள்ளன. இவ் வடிப்படையில் காயல் பட்டணப் பகுதியோடினைந்திருந்த பொன்பரப்பிப் பற்றுப் பிரதேசங்கள் சோனகர்களுக்குரித் தான சோனக நாடாக ஏன் இருந்திருக்க முடியாது!

சுல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
"தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு' பிரணு நூலிலே அந்நூலாசிரியர் ஏ. கே. றிபாயி அவர்கள் பின்வருமாறு வரைந்துள்ளார்: "திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்குச் சுவற்றின் வெளிப்புறத்தில் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது. (A.ரி. No 132 of 1894) தமிழ் நாட்டுப் பேரரசனால் வெற்றி
கொள்ளப்பட்ட பிராந்தியங்கள் பலவற்றையும் பெயர் சொல்லிக் காட்டுகின்றது அக்கல்வெட்டு. "கொச3ம், துளுவம், குச்சரம், பொப்பளம், புண்டரம், கவிங்கம், Frthy கடாரம், தெலிங்கம், சோனகம் எனப் பல பிர தேசங்களைச் சேர்ந்த சிற்றரசர்களும் அத்தமிழ் மன்னனுக் குத் திறை செலுத்தினார்கள் என்று அக்கல்வெட்டு சிறு
கிறது" இதிலிருந்து தென்னகத்தில் "சோனகம்" என்ற தனி பான பிரதேசம் இருந்துள்ளது என்ற உண்மையைக் காண் கின்றோம். மேலும் அந்நூலில், 'தமிழ் நாட்டிலுள்ள பல ஃல்வெட்டுக்களில் "சோனகம்" என்ற வார்த்தை வருகின் நது. சோனகம் என்ற பகுதியைச் சேர்ந்த அரசனும், F) பந்தப்பட்ட சோழ மன்னனுக்கோ அல்லது பாண்டிய மன் னனுக்கோ நிறை செலுத்தினான் என்று அக்கல்வெட்டுக்கள் பறை சாற்றியுள்ளன. தமிழ் நாட்டில் சோனகம் என்றால் அது எங்கிருந்தது என்ற கேள்வி எழுகிறது. சாமந்தர் என்ற முஸ்லிம் வணிகர் பெருமக்கள் அந்தந்த காலங்களில் சம்பத் கப்பட்ட தமிழ் நாட்டு மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்துள்ளனர். சாமந்தர் (அதாவது சோனகர்கள்) வாழ்ந்த பகுதி அல்லது பிரதேசம் சோனகம் என வருணிக்கப்பட்டுள் ாது" எனவும் வருகின்றது. மேற்படி சுற்றில் சோனகம் என்ற பிரதேசம் எங்கிருந்தது என்ற வினாவையும் நூலா சிரியர் வினவியுள்ளார். அது தாமிரவருனி ஆற்றுடனும், பொன்பரப்பி ஆற்றுடனும் சம்பந்தப்பட்ட கடல் கொண்ட பிரதேசமாக இருக்க முடியுமல்லவா!
பொன்பரப்பி ஆற்றை சோனகர் நதி எனவும் அழைத்த தாக முன்பு குறிப்பிட்டோம் : மகா அலெக்சாந்தரின் கட்ட ளைப்படி கிரேக்க மாலுமியான "ஒனட்னி கிறிட்டஸ்" என் பார் வரைந்த வரைபடத்தில் "சோனாள்", "சோனாள் பொட்டமஸ்" என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. "சோனான்" என்பது சோனகர் என்ற தமிழ்ச் சொல்லின்
கிரேக்க டொழித் திரிபாயிருக்கவாம். "பொட்டமஸ்" TT

Page 38
37 புத்தளம் வரலாறும், மரபுகளும்
பது ஆற்றைக் குறிக்கும். எனவே "சோணாள் பொட்டமஸ் என்பதைத் தமிழில் சோனகர் நதி எனக் கூற முடியும், அவ் வரைபடத்திற்கிணங்க புத்தளம் மாவட்டத்தின் வடக்கெல்லை யாகிய மோதறகம ஆற்றுக்கும், தெற்கே சிலாபம் நகருக் கண்மையிலுள்ள மாயன் ஆறு என்று தமிழில் அழைக்கப் பட்ட தெதுறு ஓயாவுக்கும் இடைப்பட்ட பிரதேசம் சோணாள்கள் அதாவது சோனகர்கள் வாழ்ந்த பகுதியாக தெரிகின்றது. சிங்களவர்களின் முன்னோடி எனக் கருதப் படும் விஜயனும், அவனது சகாக்களும் தற்செயலாக புத்த ளம் பகுதியை கி மு. 544ல் வந்தடைவதற்கு வெகுகாலத் துக்கு முன்பே இப்பகுதியில் சோனகர்கள் வாழ்ந்துள்ள னர். 25 அவர்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தாம் வாழ்ந்த பிரதேசத்துக்கும், ஊர்களுக்கும் நதிகளுக்கும் தமிழ்ப் பெயர்களையே இட்டு அழைத்து வந் தமையைக் காண்கின்றோம். "சோணாள் அல்லது சோன கர் எனும் வார்த்தையானது இலங்கைச் சோனகரைக் குறிப்பிடத் தமிழ் மக்கள் வழங்கும் வார்த்தையாகும். தமிழ் நிசண்டில் அரேபிய மக்களைக் குறிக்கப் பிரயோகப்பட்டி ருக்கும் சொல் இதுவாகும்" என றொட்லரின் தமிழ் ஆங் கில அகராதி (1834) குறிப்பிடுகின்றது. தாமிரவருணிப் பிர தேசத்தில் பாய்ந்து வளங்கொழித்த சோனகர் நதி அல்லது பொன்பரப்பி ஆறு அல்லது கலாஒயா அல்லது காளாவி ஆறு அல்லது கல்லாறு என்றெல்லாம் அழைக்கப்பட்ட தொன்மை வாய்ந்த இவ்வாறு தாமிரவருணி எனவும் அழைக் கப்பட்டிருக்கலாம். இலங்கையும், தென்னகமும் இணைந் திருந்தபோது தாமிரவருணி என்றழைக்கப்பட்ட ஆறு நிலம் துண்டாடப்பட்ட பின்பு அப்பெயர் தென்னக நிலப்பரப்பில் பாய்ந்த பகுதிக்கு மட்டும் வழங்கலாயிற்று எனக் கருதலாம். இலங்கையின் நிலப்பகுதி ஏற்கனவே தாமிரவருணி என வழங் கப்பட்டமையினால் அவ்வாற்றின் பெயர் சோனகர் நதி, பொன்பரப்பி ஆறு எனப் பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம். இவ்வாற்றின் கிளை நதிகள் பலவும் கடல் வாய்ப்பட்டிருக்க லாம். எடுத்துக்காட்டாக "மண்ணாறு" என்ற பெயர் மரு வியே மன்னார் ஆகியது என்று சிலர் கூறுகின்றனர். அருவி யாற்றினதோ அல்லது தாமிரவருணி ஆற்றினதோ கிளை நதியான மண்ணாறு இப்பகுதியில் பாய்ந்திருக்கக் கூடும். கடற்கோளினால் பரந்த நிலப்பரப்பு கடல் வாய்ப்பட மண்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 38
ணாறும் மறைந்து அந்த ஆறு பாய்ந்த மீதி நிலப்பரப்பு மண்ணாறு என வழங்கப்பட்டு காலகதியில் மன்னார் என மருவியிருக்கவும் கூடும். அத்துடன் அருவி ஆறும், பொன் பரப்பி ஆறும் தாமிர வருணியுடன் தொடர்புகொண்ட ஆறு களாகவும் இருந்திருக்கலாம்.
இன்று கலாஒயா என சிங்களத்தில் குறிக்கப்படும் ஆற்றை புத்தளம் பகுதி மக்கள் பொன்பரப்பி ஆறு என்று அழைக்கின்றனர். இந்த ஆற்றை முன்பு கல்லாறு என்றும் அழைத்ததாக திரு சைமன் காசிச் செட்டி குறிப்பிடுகின் றார். இப்பெயர் தமிழ்ச் செல்வாக்கை மேலும் வலியுறுத்து கின்றது. காளாவி ஆறு என்றும் அழைப்பர். இந்த ஆற்றின் கிழக்குப் பகுதியை 'கற்காளாவி’ என இப்பகுதி மக்கள் கூறு வர்.* இந்த ஆறு மறிக்கப்பட்டு கலாவெவ என்ற காளா விக் குளம் அமைக்கப்பட்டபோது அக்குளத்தை சம்பந்தப் படுத்தி கலா ஓயா என சிங்கள மக்கள் அழைத்தனர். ஆயி னும் புத்தளம் பகுதி மக்கள் இந்த ஆற்றை பொன்பரப்பி ஆறு என்றும், காளாவி ஆறு என்றும் குறிப்பிட்டு அழைக் கின்றனர்.
*முதுமக்கள் தாழி’ எனப்படும் மிகப் புராதன சவ அடக்குமுறை நிலவிய நிலப் பிரதேசங்கள் பற்றி ஆராயும் போது தாமிரவருணி ஆற்றினதும், பொன்பரப்பி ஆற்றின தும் தொடர்பு மேலும் வலுப்பெறுவதைக் 57 Geor Gurlib. கி. மு. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னுள்ளதாக இவ்வடக்க முறை இருத்தல் வேண்டுமென ‘தென் இந்திய வரலாறு" எனும் நூலிலே டாக்டர் கே. கே. பிள்ளை அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். புற நானூறு, தொல்காப்பி யம், நற்றினை, பதிற்றுப்பத்து, மணிமேகலை முதலான பழந்தமிழ் நூல்களில் இவற்றைப்பற்றிய குறிப்புக்களைக் காணலாம். அன்றியும் இராமபிரானுடனே சென்ற வானரப் படைகளில் உள்ள வானரர் பலர் பிரேதக் குழிக் கட்டடங்
* பொன்பரப்பி ஆற்றுப்பகுதி மண் நிறைந்து காணப் பட இப்பகுதி கற்கள் நிறைந்து காணப்படுவதனா லேயே கற்காளாவி என்ற பெயரைப் பெற்றது.

Page 39
புத்தளம் வரலாறும், மரபுகளும்
களைத் தமக்கு விளையாடும் இடமாக்கிக் கொண்டனர் என இராமாயணம் கூறுவதும் நோக்கத்தக்கது. 29 நெல் போன்ற நன்செய் பயிர் சாகுபடி செய்து வாழ்ந்த முதிர்ந்த நாகரிகம் முற்றிய மக்களுக்குரித்தான முறை இது ETT தமிழ்க் கலைக் களஞ்சியம் வர்ணிக்கின்றது. "சமத்தாழி' என புறநானூறு கூறும். முதுமக்கள் தாழிகள், கற்கட்டடச் சவக்குழிகள் பொன்பரப்பி ஆற்றுப் படுக்கைகளில் காணப் படுவது போன்று தென்னகத்தில் தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இத்தகைய தாழி அடக்கம் புதிய கற்கால மக்களிடையே கானப்பட் டமை வரலாறாகும். 19 எனவே இலங்கையினூடாகத் தென் னகத்துக்கு ஓடிய தாமிரவருணி ஆற்றின் கரைகளிலே தொன்மையான நாகரிகமுடைய மக்கள் சமுதாயம் வாழ்ந்து வந்தமை புலனாகின்றது.
பொன்பரப்பிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சவ அடக் சுத் தாழிகள் இப்பகுதியின் தொன்மையை வலியுறுத்துகின் நன. இவைகள் தென்னிந்தியாவில் காணப்படும் தாழிகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. நான்கடி உயரமும், இரண் டரை அடி அகலமுங்கொண்ட மண்னாலான இத்தாழிகளுள் பிரேதங்களை வைத்து அடக்கஞ் செய்வது பண்டைய மர பாகும். தென்னிந்தியாவில் மேட்டுப் பாளையம், ■岳寺 செந்நெல்லூர் போன்ற இடங்களில் இவ்வகையான தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. "முதுமக்கள் தாழி" என்றழைக் கப்பட்ட இவைகள் பின்பு "மதமதக்கத் தாழி" எனவும் திரி பாக அழைக்கப்படுகின்றன. புத்தளம் பகுதி மக்கள் "சவை யாப்பினச் சாடி" என இதைக் கூறுவர். 1958, 1970ம் ஆண் டுகளில் பொன்பரப்பிப் பகுதியில் நடாத்தப்பட்ட புவிதி பொருள் ஆய்வுகளின் போது இத்தாழிகள் பல கண்டெடுக்கப் பட்டு தற்போது கொழும்பு தொல் பொருட்காட்சிச் சாலை பில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்க்கான உணவையும், நீரையும் வைத்து, அவர்களின் விருப்புக்குரிய பொருட்களை பும் உள்ளே வைத்து அடக்கஞ் செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பொன்பரப்பிப் பகுதியிலும், தென்னிந்தியா விலும் கண்டெடுக்கப்பட்ட இத்தாழிகளை நோக்கும்போது தென்னிந்திய மக்களின் சந்ததிகள் பொன்பரப்பிப் பகுதியில் வாழ்ந்து வந்தமை புலனாகின்றது. நாற்பது அடி நீளமும்,

அல்ஹாஜ் ஏ. எண். எம். ஷாஜஹான் 噬血
எட்டடி அகலமுங்கொண்ட நிலப்பரப்பில் நாலடி உயரமுள்ள பன்னிரண்டு தாழிகள் நிலத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் புதைந்திருந்தமையை பொன்பரப்பி ஆய்வில் காணக்கூடிய தாக இருந்தன. தாழிகளைவிட சரித்திர காலத்துக்கு முன் னுள்ளதெனக் கருதப்படும் கற்ற கடுகளில் பிரேதங்களை வைத்து அடக்கஞ் செய்யும் வழக்கமும் இருந்துள்ளதென பொன்பரப்பி ஆய்வில் அறியப்பட்டன. 3 இம்முறை தென் னிந்தியாவிலும் இருந்தமைக்கு சித்தூரில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய சவக்குழிகள் சான்றாகின்றன .கி. பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுவரை இச்சவ அடக்கு முறைகள் நீடித் ததாகத் தெரிகின்றது. ** இதிலிருந்து இரும்பு பயின்ற அக் காலத்திய மக்கள் இறந்தோரான ஆன்றோரை பேரடக்கம் செய்து வழிபட்டமை புலனாகின்றது.
1970ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெல்சில்வேனியா பல் கலைக் கழகத்தின் தொல்பொருள் காட்சியாக புதைபொருள் ஆய்வுக் குழுவினர் இலங்கைத் தொல் பொருள் ஆய்வுக் குழு வினருடன் இனைந்து நடாத்திய தொடராத ஆய்வில் அதன்
தலைவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 'இப்போது நாம் அறிந்துள்ள இலங்கை வரலாற்றை மாற்றியமைக்கக் கூடிய மேலும் சூடான பாரிய தகவல்களை இவ்வாய்வை
மேலும் பூர்த்தி செய்த பின்பு அறியக்கூடியதாக இருக்கும். இரும்பு பயின்ற யுகத்தினரால் இப்புனத குழிகள் உண்டா பின". இவ்வாய்வின் போது ஸ்தூபியும், புராதன வெள்ளி நாணயங்களும், பெண் சிங்க உருவம் பொறித்த செப்பு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. 9
பொன்பரப்பிப் பற்றிலே நன்கு நாகரிகமடைந்த மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துள்ளனரென்பதற்கு அங்கு காணப்படும் புராதனச் சிதைவுகள் ஆதாரங்களாயுள்ளன. அல்வி அர சியோ, அன்றி "ஷிபா' எனும் பல்கீஸ் அரசியோ வீற்றிருந்து அரசாட்சி செய்ததாக நம்பப்படும் காலத்து நாகரிகம் பிற நாட்டவரையும் வியக்க வைக்கக் கூடியதாக இருந்துள்ளது. அவர்கள் பாவித்த ஆயுதங்கள் இதற்குச் சான்று கூறுகின் றன. "பெண்ணரசி ஆண்ட பொன்னாடு' எனும் அத்தியா பத்தில் இவர்களின் படைப்பலத்தைப்பற்றிச் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு.

Page 40
4及 புத்தளம் வரலாறும், மரபுகளும்
உருக்கு ஆயுதங்கள் கிறித்துவுக்கு முன்னுள்ள நூற்றாண்டு களுக்குரியவை என "பார்க்கர்" என்பவர் கூறுகின்றார்? இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களில் சில கொழும்பு தொல் பொருள் காட்சிச் சாலையில் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் இரும்பு, உருக்கு உலோகங்களைப்பற்றித் தெரி வதற்கு வெகு காலத்துக்கு முன்பே இரும்பு, உருக்கு பயின் மக்கள் பொன்பரப்பிப் பகுதியில் வாழ்ந்துள்ளமை குறி பிடக் கூடியதாகும். 8
சமீபத்தில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களால் கடம்பூரில் மேற்கொள்ளப் பட்ட புதைபொருள் ஆய்வுகளில் தாமிரபரணி ஆற்றின் படுக்கையில் செம்மண் செறிந்த ‘பரும்பு" அல்லது பறம்புச் சரிவுகளில் முதுமக்கள் தாழிகள் பல கண்டெடுக்கப்பட்டமை யையும், அவைகளில் சில ஆய்வுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டமையையும் செய்திகள் மூலம் அறியக் கூடியதாகவுள் ளது. தாமிரபரணி ஆற்றுப் படுக்கையில் செம்மண் செறிந்த பரும்புகள் காணப்படுவது போன்று பொன்பரப்பி ஆற்றுப்
படுக்கையிலும் அத்தகைய பரும்புகள் காணப்படுகின்றன. தாமிரபரணி என்ற பெயர் வந்தமைக்கு செம்மண் செறிந்த நிலமே காரணமாக அமைந்திருந்தது என்பதை முன்பே
குறிப்பிட்டுள்ளோம். எனவே சவ அடக்கு முறையுடன் நில அமைப்பு முறையிலும் இன்றைய தாமிரபரணி ஆற்றுப் பிர தேசத்துக்கும், பொன்பரப்பி ஆற்றுப் பிரதேசத்துக்கும் இடையிலான ஒற்றுமையை நாங்கள் உணர்கின்றோம்.
திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் மிகப் பழைமையான மனித எலும்புக் கூடுகளும், தலை ஒடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நுணுகி ஆராய்ந்த அறிஞர் இவையே உலகின் மற்றெந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளையும் விடப் பழைமை வாய்ந்தவை என்றும், பெரும்பாலும் மனித தோற்றத்தின் தொடக்க காலத்தைச் சார்ந்தவையா கக் கூடுமென்றும் அறிவிக்கின்றனர். 7 எனவே இலங்கை யும், இந்தியாவும் இணைந்திருந்த ஆதி காலத்து நபி ஆதம் (அலை) அவர்களின் மூலம் மனித குலம் உற்பத்தியாகிய இடமாகவும், பூர்வீக மனித நாகரிகம் முதிர்ந்த பிரதேசமாக
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 42
வும் விளங்கிய தாமிரபரணி, சோனகர் நதிப் பிரதேசம் "நிலங்களின் தாய்" எனக் குறிப்பிடுவதில் தவறுண்டா! பாவாத மலை, ஆதம் அணை, ஆதம் நபி (அலை) அவர்க ளின் மக்களின் கல்லறைகள் ஆதியன இக்குறிப்புக்கு ஆதார மாகவும் உள்ளனவல்லவா!
தென்னகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அத் துடன் தொடர்புள்ள பொன்பரப்பி ஆற்றுப் படுக்கையையும் இணைத்து ஆராய்வது சிறப்புடையதாகும். ஏனெனில் முன்பு குறிப்பிட்டிருப்பது போல பொன்பரப்பிப் பிரதேசம் உரிய முறையில் ஆழமான ஆய்வு நடாத்தப்படாதிருக்கும் புராதன வரலாறுகள் மறைந்து கிடக்கும் "வரலாற்றுச் சுரங்கம்" என்ற நம்பிக்கையினாலாகும்.
பொன்பரப்பிப் பிரதேசத்தின் கடற்கரைகளில் முத்துக் குளிப்பு பிரசித்தி பெற்றிருந்தமை போன்று, தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரக் கடற் கரைகளிலும் முத்துக் குளிப்பு கொடிகட்டிப் பறந்ததென்பதை நாம் அறிவோம். சலாபம் என்றாலே முத்துக் குளிப்பு நடைபெறும் இடத்தையே குறிப் பர். அச்சிறப்பான பெயர்கள் தமிழ் நாட்டிலன்றி இலங்கை யின் வடமேற்குக் கரைகளிலுள்ள இரு இடங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிலாபம், சிலாபத்துறை என்ற இடங்களே அவையாகும். தாமிரபரணி, பொன்பரப்பி ஆற் றுப் பகுதிகள் முத்துக் குளித்தல் தொழிற்றுரையிலும் ஒற் றுமையுள்ளதாக விளங்குவதைக் காண்கிறோம்.
காயல் பட்டினத்தில் உப்பு வணிகம் சிறப்புடையது என குறிப்பிடப்படுகின்றது. அதுபோன்றே புத்தளம் பகுதியும் உப்பு உற்பத்தியிலும், உப்பு வணிகத்திலும் பண்டுதொட்டு சிறப்பான இடத்தை வகித்து வருவதைப் பார்க்கிறோம். உப்பை அடிப்படையாகக் கொண்டு பிறந்த புத்தளம் என்ற பெயரே இதை வலியுறுத்தும். பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டில் கொற்கை என்னும் துறைமுகம் பிரசித்தமானதாக இருந்தது. அதைப்போன்றே குதிரை மலைத் துறைமுகமும் புராதன சிறப்புடையதாகும். கிரேக்கர்கள் குதிரை 6 என்ற தமிழ் மொழிச் சொற்களை தமது மொழியில் மொழி பெயர்த்து "ஹிப்பரஸ்" என அழைத்துள்ளமையையும் நாம்

Page 41
43 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அறிவோம். சொலமன் என்ற பேரரசரின் கப்பல்கள் இரத்தி னமும், யானைத் தந்தமும், குரங்கும், மயிலும் ஏற்றிக் கொண்டு சென்ற வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒபிர், தார் ஷிஷ் என்ற துறைமுகம் குதிரைமலைத் துறையே என வணி கக் கடலோடி ஜேம்ஸ் ஸ்டுவர்ட் என்பவர் குறிப்பிடுகின் றார். மேற்குறிப்பிட்ட பொருட்கள் பொன்பரப்பிப் பகு திக்கே சொந்தமானவை என்பதையும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
செல்வச் செழிப்புடனும், நிறைந்த நாகரிகத்துடனும் விளங்கிய பொன்பரப்பிப் பற்று இன்று செல்வாக்கிழந்து, அங்கு நிறைந்திருந்த குடியிருப்புக்கள் அகன்று காடு கரம்பை கள் மூடி கவனிப்பாரற்றுக் கிடப்பதற்குப் பல காரணங் களைக் கூறலாம். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டதெனலாம். விரோதிகளின் விடாப் பிடியான ஆக்கிரமிப்புக்களின் காரணமாகவும், அவர்களால் பிரதேச வாசிகளின் நீர்ப்பாசன வசதிகளுக்கேற்பட்ட அழிவு களை மறுசீரமைக்க முடியாத காரணமாகவும், மழை காலங் களில் ஆற்று நீர்ப் பிரவாகத்தைத் தடுத்து நிறுத்த முடியா மல் பலத்த சேதங்கள் ஏற்பட்ட காரணமாகவும், நுளம்புத் தொல்லையினால் மலேரியா நோய் மனித உயிர்களைப் பலி யெடுத்தமை காரணமாகவும் இப்பகுதியில் மக்கள் நிம்மதி யுடன் வாழ முடியாத நிலைமைகள் ஏற்பட்டன. சதாவும் தொந்தரவளித்த யுத்தங்கள், உயிருக்காபத்தான சுவாத்திய நிலை, பயிர் விளைச்சல் பாதிப்பினால் ஏற்பட்ட பசி, பட் டினி ஆகியவைகள் இங்கிருந்த நகரங்களிலும், அவற்றைச் சுற்றியிருந்த கிராமங்களிலும் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள் அழிந்து போனமை துரதிஷ்ட வசமேயாகும். பலர் தமக்குரிய பாதுகாப்பைத்தேடி மலைநாட்டுக்குப் பெயர்ந்து செல்ல அன்றைய அரசும் வழி வகுத்தது. ஒரு சில குடும் பங்களே தமது பிறந்த பொன்னிலத்தை விட்டு அகல மன மின்றி சிறிய கிராமங்களில் சிறிய குளங்களையும், வயல் களையும் வைத்து சகிப்புடன் வாழ்ந்தனர். வைக்கோலினால் வேயப்பட்ட அவர்களின் மண் குடிசைகள் கறையான் போன்ற சிற்றுயிர்களாலும் இயற்கையின் சீற்றங்களினாலும் அழிந் தன. அத்தகைய குடிசைகள் நிறைந்த கிராமங்கள் இருந் தன என்பதற்கு அடையாளங்களாக அவர்களுடன் இணைந்து

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 44
வாழ்ந்த, அவர்கள் நட்டு உண்டாக்கிய அழிந்து போகாது நிலைத்து நிற்கும் வரண்ட பிரதேசத்துக்குரிய உறுதியான புளிய மரங்களே சாட்சிகளாக விளங்கி நிற்கின்றன. அன் றைய நகரங்களில் அமைந்திருந்த கல்லாலான கட்டிடங்கள் பெரிய மரங்களின் வேர்களினால் ஊடுருவப்பட்டு சிதைக்கப் பட்டும், யானை போன்ற காட்டு விலங்குகள் தம் உடலை உராய்ந்து சொறிந்து கொள்வதன் மூலம் வீழ்த்தப்பட்டும், மழை, வெள்ளம், புயல்களினால் புதைபட்டும் Gurru?aw. சில கட்டடங்களின் சுவர்களும், தூண்களும், சிதைவடைந்த கற்களுமே இன்று மிஞ்சிக் கிடக்கின்றன. மன்னர்களினாலும் மக்கட் தலைவர்களினாலும் கல்லில் செதுக்கிப் பதிவு செய் யப்பட்ட கற்பதிவேடுகள் புராதன சிறப்பு மிக்கத் தகவல் களில் சிலவற்றைத் தருகின்றன. அக்கற்பதிவேடுகள் சிலவே அகப்பட்டிருப்பினும் இன்னும் பல புதை பொருட்களாகவே உள்ளன.
வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கும் பொக்கிஷப் பெட்டகமாக விளங்கும் பொன்பரப்பிப் பிரதேசம் இன்னும் மனம் விட்டு சரியாக ஆராயப்படவில்லை என்பது மன வேத னைக்குரிய குறிப்பாகும். இடையிடையே சில சந்தர்ப்பங் களில் தொட்டும், தொடாமலும் புதை பொருளாய்வுகள் நடைபெற்றுள்ளனவாயினும் ஏனைய பிரதேசங்களில் நடை பெற்ற - நடைபெறும் ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது மிக மிக அற்பமே என்பது தெளிவாகும். முழு அளவிலான ஆய் வுகள் நடைபெறுவது மிக மிக அவசியமாகும்.
இன்று காடடர்ந்த இப்பிரதேசம் வனவிலங்குகள் வாழ் பாதுகாப்பு வலயமாகப் பேணப்படுகின்றது. அப்பிரதேசத்தி னுள் எவரும் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது வில்பற்று இடைநிலை வலயம் (Wilpattu inter mediate Zone) என அழைக்கப்படுகின்றது. வடமேற்குச் சமவெளிக் குப் பிரகாசமான அழகை அளிக்கும் இயற்கையான பல ஏரி கள் இருப்பதனால் இந்நிலப்பகுதியை வில் பற்று (Lake District) என அழைக்கின்றனர். நூற்றுக் கணக்கான சிறிய, பெரிய வில்கள் இங்கு பரந்து காணப்படுகின்றன. இயல் பாக அமையும் நீர்த் தேக்கத்தை வில் எனத் தமிழில் கூறு வர். மனிதர்களுக்கும், மற்றுமுயிர்களுக்கும் தாகத்தைத்

Page 42
主岳 - புத்தளம் வரலாறும், மரபுகளும்
தணிக்கும் உயிரூட்டிகளாக அமைதியான நீல வண்ண நீர் விரிப்புடன் அவைகள் திகழ்கின்றன. கொக்காரி என்னுமிடத் தில் சங்கிலித்தொடர்பாக ஐந்து வில்கள் அமைந்திருக்கின் றன. அவற்றுள் முதல் வில்லின் நீர் உவர்த்தன் ைஉள்ள தாக இருக்கின்றது. பண்டுதொட்டு வரும் தகவல்களின்படி அந்த வில்லுக்கும், சமுத்திரத்திற்கும் நிலத்துக்கடியில் கால் வாய்த் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அடுத் துள்ள வில் "நல்ல தண்ணீர் வில்" என்பதாகும், அதன் நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. உப்புவில், சின்ன நாகவில், பெரிய நாகவில், வண்ணாத்தி வில், ஆலம் வில், மகிழம் வில், இரணவில், கொக்காரி வில், தம் மனாவில், என் பன வில்களின் பெயர்களில் சிலவாகும். வில் எனப் பெயர் பெற்ற நீர் நிலைகள் வில் பற்றில் மட்டுமல்ல புத்தளம் மாவட்டத்தில் வேறு இடங்களிலுமுள்ளன. சின்னவில், பெரிய வில், பொத்துவில், அட்டைவில், தலைவில், தாராக்குடிவில் அடப்பனார் வில் என்பன சிலவாகும்.
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
இலவன் குளம் மாக்கிளான் மடு நடு நாவல் மூலைக்கண்டல் வெளி பொன்பரப்பி கருவாட்டுக் குடா 7 இலந்தை மோட்டை
தலைவில் கொம்பன் சாய்ந்த பூவல்
பணிக்கர் வில் 11 ஆலம் வில் 12 வீரக்குட்டி வில்
13 ஆத்தாள் வில் 14 நாவலடி ஊற்று 15 கொக்காரி வில் 18 மாணிக்கப்பளை காற்று 17 பட்சி ஒடை 18 மதுர ஓடை 19 பெரிய வில் 20 பெரிய நாசுவில் 31 பலகைத் துறை 22 காளிவில் 33 மரை வில் 24 மணவில்

Page 43
47 புத்தளம் வரலாறும், மரபுகளும்
25 ஒரு சாய்ப்புக் கல் 34 தலைவில்
26 மட்டிமடு 35 முள்ளிக் குளம் 27 மயில் வில் 36 மன்னாருக்கு 28 குதிரை மலை 37 கட்டக் கண்டல் 29 மாவலங்கை மோட்டை 38 கொக்கு மோட்டை 30 குதிரைமலை முனை 39 வனக் காப்பகம் 31 அமுதவல்லி வில் 40 அநுரதபுரத்துக்கு 32 தங்கை வில் 41 புத்தளமிருந்து 33 குமிழவில் 42 புத்தளத்துக்கு

9. குதிரை மலை
கிறித்துவுக்கு முன்பு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளி லிருந்து வடமேற்குக் கரையின் சிறந்த துறைமுகங்களாக மாதோட்டமும், குதிரை மலையும் விளங்கி வந்துள்ளன. உரோமரின் வரலாற்றாசிரியரான "பிளினி" என்பார் குதிரை மலையை "ஹிப்பரஸ்" (Hippuros) என அழைத்தனர். கீழைத் தேய ஆசிரியர்கள் ஹிப்பரஸ் எனும் சொல்லுக்கு, குதிரை யின் வால் எனப் பொருள் கொண்டனர். ஆயினும் ஆங்கி லத்தில் "ஹோர்ஸ் மெளன்டின்" (Horse Mountain) என்றே குறிப்பிடுகின்றனர். குதிரை மலை என்ற தமிழ்ச் சொற் களையே தமது மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளனர். கிரேக்க மொழியில் "ஹிப்பஸ்" என்பது குதிரையையும், "ஒரஸ்" என்பது மலையையும் குறிக்கும். இதுவும் தமிழின் கிரேக்க மொழிப்பெயர்ப்பேயென்க. 8
பேரரசர் "க்ளோடியஸ் ஆட்சியின்போது காற்றினால் அலைக்கப்பட்டு பதினைந்து தினங்களின் பின்பு தற்செய லாக இலங்கையின் வடமேற்குக் கரையில் வந்தடைந்த கட லோடியான "அணியஸ் லொக்கமஸ்” (Annius Plocamus) என்பான் ஒரு மலையின் அணித்தாய் பெரிய இஸ்லாமிய அறபுக் குடியிருப்புக்களைக் கண்டதாக ஆசிரியர் 96f 6f குறிப்பிடுகின்றார். 8 இவர் குறிப்பிடும் மலையடிவாரத் துறை முகம் குதிரைமலையைத் தவிர வேறொன்றும் வடமேற்குக் கரையில் இல்லை. இங்கு வசித்த மக்கள் இப்பகுதிக் கட லில் நடைபெற்ற முத்துக் குளிப்பின் பயனாகக் கிடைத்த அபரிதமான உயர்ந்த முத்துக்களை கொடுக்கல் வாங்கல்

Page 44
அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
செய்து செல்வமுள்ள பெரும் வணிகர்களாகத் திகழ்ந்தனர். அக்குடியிருப்புக்களிலிருந்தவர்களின் சோதரரர்களாய் மன் னாரிலும், மாந்தோட்டையிலும் இருந்தவர்கள் இவர்கட்கு முத்துக்களை அளித்தனர். குதிரை மலையில் இஸ்லாமிய ஞானப் பெரியார்கள் அடங்கப்பெற்ற மகிமைக்குரிய சமாதி கள் இருந்துள்ளன. இன்று கடற்கரையில் எஞ்சியுள்ளது ஒரு
சமாதியாகும். குதிரை மலையை ஒரு புனிதத் தலமாக மதித்து அங்கே தரிசித்து வருவது வழக்கமாக உள்ளது. புலவர்கள் பலர் அத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
சில பாடல்களே எமக்கு இன்று கிடைக்கின்றன. குறிஞ்சி மாநகர் எனப்படும் குறிஞ்சிப் பட்டியிலே வாழ்ந்த புலவர் ஆசனா மரைக்கார் செய்கு இஸ்மாயில் அவர்கள் தமது கப் பற் பிரயாணத் தொடர் பாவொன்றிலே குதிரை பைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"...வெற்றிக் குதிரை மலையும் கொடியும் தெரியுதே பத்திரமாகவே சாஹிபைப் போற்றி பாலுடன் கிச்சடியாக்கி
- அங்கே பாத்திஹா ஒதியே நேர்த்தியைப் பகிர்ந்து பார மலைவிட்டு நீங்கி
அருள் சித்திர முத்து சிலாபத் துறைமுகம்." எனத்
தொடர்ந்து கூறிச் செல்கிறார்.
இன்னொரு பாட்டிலே,
" . கூரான பார் முகம் குதிரை சேர்ந்து
குணமான கிச்சடியாக்கிப் பகிர்ந்து நேரான புனல் வாவி ஆற்றில் புகுந்து நேருன் கோட்டை மன்னாரைக் கடந்து. என்று குதிரை மலையைக் குறிப்பிடுகின்றார்.
இதிலிருந்து குதிரை மலைப் பகுதியால் போகும் கப்பல் கள் யாவும் அத்துறைமுகத்தில் கண்டிப்பாகத் தங்கிச் செல் துடன் அங்கு அடங்கியிருக்கும் இறை நேசச் செல்வரின் பேரில் "பாற் கிச்சடி" என்னும் பாங்கான உணவைத் தயா ரித்து, பிரார்த்தனைகளின் பின்பு அதைப் பகிர்ந்தளித்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன் மூலம் தமது சுடற் பிரயாணத்தில் தங்கடங்கள் ஏதும் ஏற்படாமல் பாது

புத்த இளம் வரலாறும், மரபுகளும்
ாப்புடன் போய்வர ஆசீர்வாதத்தைப் பெறாம் என்ற நம் பிக்கை இருந்துள்ளது. மேற்குறிப்பிட்ட பாக்கள் சமீப
ாலத்திலிருந்த புலவரால் பாடப்பட்டிருப்பினும், முன்பு பரிய குடியிருப்புக்களுடன் கூடிய பிரதேசமாக குதிரை எ) விளங்கி பின்பு காலகதியில் அழிவுற்றுப் போயினும் தன் மீ சித்துவத்தை பாரம்பரியமாக மக்கள் மறவாமல் புனிதத் தலமாகப் போற்றி வரும் பான்மையை எடுத்துக்
ாட்டுகின்றன.
சொலமன் மன்னரின் கப்பல்கள் பொன்னும், வெள்ளிை |ம், யானைத் தந்தமும், குரங்கும், மயிலும் ஏற்றிக் காண்டு சென்ற வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒபிர் (0phir) ார்ஷிஷ் (Tarshish) என்னும் துறைமுகம் காலி முனைத் றை (Point de Gale) எனக் கூறப்படுவதுண்டு. எனினும் ணிைகக் கடலோடியான ஜேம்ஸ் ஸ்டுவர்ட் (James Steபart) ான் பாரின் கூற்றுப்படி, கடற்கொந்தளிப்பு, மொன்சூன் ாற்றின் அலைக்களிப்பு ஆகிய தடைகள் அடிக்கடி ஏற்ப டும் மார்க்கத்திலுள்ள காளித்துறைமுகத்தைவிட அதனினும் பாதுகாப்பும், வசதியும் படைத்த வடமேற்குக் கரையிலுள்ள பிப்பரஸ்" எனும் துறையை மூன்றாண்டுக்கொருமுறை சாக்கேற்றிச் செல்ல வரும் சலமோனின் கப்பல்கள் அலட் யம் செய்திருக்க முடியாது. எனவே ஒபிர் - தார்ஷிஷ் என் தும் துறைமுகம் குதிரை மனல என்றே அவர் நம்புகின்றார். "முன்னைய இலங்கையில் மரக்கலங்கட்டு மிகச் சிறப்புடைய
ாற' என அவர் இதை வர்ணிக்கின்றார். 9
அல்வி அரசியோ அன்றி பல்கீஸ் பேரரசியோ தனது சிருக்கையாகக் கொண்ட குதிரை மலைப் பிரதேசம்
ன்று காடு மண்டிக் கிடப்பதுடன் பெரும் நிலப்பரப்பைக் டலும் விழுங்கியுள்ளது. வன விலங்குகளின் சொர்க்கமாக,
ாவகள் வசிப்பதற்கு பாதுகாப்புப் பிரதேசமாக பிரிட்டி ாரின் ஆட்சிக் காலத்திலிருந்து ஒதுக்கப்பட்டு ஆய்வாளரின் ானவ நோக்கி ஆவலுடன் மெளனமாகக் காத்துக் கிடக்
றது.
கிறிஸ்துவுக்கு முன்னுள்ள நூற்றாண்டுகளில் பினீஷியர், ாபியர், உரோமர், கிரேக்கர், சீனர் ஆகியோர் இலங்கை

Page 45
岛直 புத்தளம் வரலாறும், மரபுகளு
யுடன் தொடர்பு கொள்வதற்கு வடமேற்குக் கரையில் நன் ஸ்திரப்படுத்தப்பட்ட வர்த்தகத் துறைகள் நிச்சயமாக இரு தனவென்பதைத் துணிந்து கூறலாம். விஜயனும், கூட்டத்தினரும் கி. மு. 544ல் இலங்கையை வந்தடைவதற் பல நூற்றாண்டுகட்கு முன்பே இத்துறைகள் பிரசித்திபெற் விளங்கியுள்ளன. விஜயனின் இரண்டாவது மனைவியா தென்னிந்தியாவிலுள்ள மதுரை மன்னனின் மகள் தனது ப வாரங்களுடன் இலங்கையை வந்தடைந்த இடம் "மகாதித்த என மகாவம்சம் கூறுகின்றது. இதுவும் வடமேற்குக் பில் அமைந்திருந்த துறையொன்றேயாகும். 3
1923ல் இலங்கையின் புறவுருவப் படத்தை வரைந்துள்ள திரு. G. H. A. டீ. சில்வா என்பவர் குதிரை மலையை "புராதன துறைமுகம், கிணறு, சிதைவுகள்" எனக் கு பிட்டுள்ளார். இங்கேயுள்ள கிணறு பிரசித்தமான வியக்க தக்க கட்டுமானமாகும். களியாலான வட்ட வடிவா வளையங்கள் அடுக்கப்பட்டு அவைகளைப் பலப்படுத்துவத காக வார்ப்பிரும்பினால் நீண்ட சட்டங்கள் அமைக்கப்ப மூன்றடி விட்டத்தில் கிணறு கட்டப்பட்டுள்ளது. நன்னி மேல் மட்டத்திலும், உவர் நீர் கீழ்மட்டத்திலும் இருக்க
கிக் கொள்ள முடிகின்றது. வரண்ட நிலங்களில் நன்னீரை பெறுவதற்காக அவர்கள் கையாண்ட கிணறமைப்பு முன வியக்கக் கூடியதேயாம். இக்கிணற்றில் வரட்சியான கால களில் வன விலங்குகள் வந்து தங்களின் தாகத்தைத் தீர் துக் கொள்கின்றன. 3
ளமாகக் காணக் கிடைப்பதினால் ஒரு காலத்தில் இப்பகுதி முத்துக் குளித்தல் தொழிலுக்குப் பெயர் பெற்றதாக விளக் யுள்ளது. பொருளாதாரத்தில், செல்வத்தில் இப்பகுதி கள் சிறந்து விளங்கினர். இதனால் கடலோடிகளாலும், வன் கர்களாலும், துணிகரச் செயல்கள் புரிவோராலும், கள்வ களாலும் இம்மக்கள் ஏமாற்றப்பட்டனர்- துன்புறுத்தப்பட் னர் - அடிமைப்படுத்தப்பட்டனர் - கொள்ளையடிக்கப்பட் னர் என்பதை உணர முடிகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
தோணிக் கல் என்ற இடத்திலுள்ள வில் வெட்டில் குதிரை மலை "அச்ச நகர்" எனக் குறிக்கப்பட்டுள்ளது. "அச்ச" என்பது "அஸ்வ" என்பதன் மறு உச்சரிப்பாகும். ஆண் ம்ே என்பது குதிரையைக் குறிக்கும். "அச்சுவம்" என்னும் சொல்லும் குதிரையைக் குறிக்கும். குதிரை மலையை அண்டி மேற்குறிப்பிடும் அச்சநகர் அல்லது குதிரை நகர் அமைந்தி ருத்தல் வேண்டும்.

Page 46
10. விஜயனின் வருகை
வட இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, விஜயனும், அவனது சகாக்களும் கடல் அலை வாய்ப்பட்டு, அலைக் கழிந்து இறுதியாக இலங்கையின் வட மேற்குக் கரையில் புத் தளத்துக்குச் சமீபமாக வந்து சேர்ந்தனர் என்பது இலங் கையின் வரலாற்று நிகழ்வுகளிலொன்றாகும். விஜயனின் வரு கையினுடனேயே இலங்கையின் வரலாறு தொடங்குவதாக எண்ணும் முறையிலேயே முன்பு பாட நூல்களிலே வரலாறு வரையப்பட்டிருந்தமையை நாமறிவோம். கி. மு. 544ம் ஆண் டளவில் விஜயன் இலங்கையை வந்தடைவதற்கு முன்பே நாசரிகம் நிறைந்த கட்டுக்கோப்பான சமுதாய அமைப் பொன்று இங்கிருந்ததென்பதை நாம் மறக்கவோண்ணாது. தாமிரவருணி ஆறு பாய்ந்து வளம்படுத்திய புராதன நாக ரிகம் இப்பகுதியில் இருந்தன மயை நாம் மறக்க முடியுமா? பல நாடுகளை தன் வயப்படுத்தி ஆகாயவூர்தி மூலம் சஞ்ச ரித்த மாமன்னன் இராவனேஸ்வரன் கோலோச்சிய நாகரிகம் படைத்த சமுதாயத்தைப் புறக்கணிக்க முடியுமா? அல்வி இராணி அல்லது பல்கீஸ் இராணி அரசாட்சி செய்த பொற் காலத்தை அலட்சியப்படுத்த முடியுமா! கடற்கோள்களின் பின்பு தாமிரவருணி ஆறு தமிழகத்துடன் தனித்து துண்டா டப்பட்ட பின்பு பொன்பரப்பி ஆற்றுக் கரைகளிலும், அருவி யாற்றுக் கரைகளிலும் மலர்ந்து விளங்கிய முன்னேற்ற மிக்க சமூக வாழ்வை மூடி மறைக்க இயலுமா! விஜயன் வந்த காலத்திலேயே இப்பகுதியில் குவேனியும், அவளின் குடும்பத் தினரும் ஆதிக்கம் செலுத்திய அமைப்பை மறுக்க முடியுமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஆகவே விஜயன் இப்பகுதியை வந்தடைவதற்கு முன்பே வர லாறு படைத்த வளமுள்ள மக்கள் வட மேற்குக் கரைகளில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
ஆயினும் ஒரு தலைப் பட்சமான வரலாற்றாசிரியர்களின் பதிவுகள் எமக்கு வியப்பையும், விசனத்தையும் தருகின்றன. "விஜயன் தம்பபண்ணிக் கரையிலே சந்தித்த நாட்டு மக்க ளைப்பற்றி ஆராயும்போது அவர்கள் மானிடரல்லர் என்ப தையே வரன் முறை நூல்கள் தெளிவாக எடுத்துக் கூறுகின் றன எப்படியிருப்பினும் அவர்களை உயர்ந்த பண்பாடுடைய சாதியினர் என்று கருத நியாயமில்லை என்பது இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது ' ? (அத் 14) மானிடரல் லாத, உயர் பண்பாடற்ற சாதியினரே வடமேற்குக் கரை யிலே வசித்தனர் என்னும் கூற்று நியாயமாகப்படவில்லை. வரன் முறை நூல்கள் என்று இங்கே குறிப்பிடுவது மகாவம் சம் போன்ற நூல்களையேயாகும். "1984இல் அநுராதபுரத் தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் அண்மையில் தொடரப் பட்ட ஆய்வும் ஈழத்தின் ஆதிக்குடியேற்றவாசிகள் பற்றிய சுவையான தகவல்களைத் தந்துள்ளன. மகாவம்சம் போன்ற பாளி நூல்கள் இங்கு ஆரியர் வரமுன்னர் வாழ்ந்த மக்கள் அமானுஷ்யர்கள் என்று கூற இங்கு கிடைத்த சான்றுகள் இவர்கள் மனிதர்களே என்பதை உறுதி செய்துள்ளன. இவர் கள் தான் கற்கால மக்களாகும். இவர்கள் ஏற்படுத்திய கலா சாரம் கி. மு. 2800 ஆண்டளவில் ஈழத்தில் பரவியதை இச் சான்றுகள் உறுதி செய்கின்றன. சுற்கால கலாசாரத்திற் குப் பின்னர் கி. மு. 800ஆம் ஆண்டளவில் விவசாயம், மந்தை வளர்ப்பு, கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்களின் உபயோகம், இரும்பாயுதங்கள், குதிரையின் பயன்பாடு, நெல் உற்பத்தி ஆகியனவற்றில் தேர்ச்சியுடைய மக்கள் கூட்டம் இங்கு பரவியிருந்தமையை இங்கே கிடைத்த தொல்வியற் சான்றுகள் உறுதி செய்துள்ளன. இக்கலாசாரத்தை தொல் வியலாளர் பெருங்கற்காலக் கலாசாரம் என அழைப்பர். தமி ழகத்தின் சங்க கால நாகரிகத்திற்கு வித்திட்டது இக்கலா சாரமே." 32 மேற்படி கூற்றின் மூலம் விஜயன் வந்திறங்கிய சமயத்தில் வடமேற்குக் கரையில் வசித்த மக்கள் உயர் பண் பாடற்ற மனித வர்க்கத்தினரில்லை என்ற முடிவு பிழையா னது என்பது புலப்படும்.

Page 47
岳岛 புத்தளம் வரலாறும் மரபுகளும்
விஜயன் இலங்கையை வந்தடைந்த காலத்து இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் இயக்கர்கள் என்போர் யார் என் பதை ஆராயும்போது சுவாரஸ்யமான தகவல்கள் தமக்குக் கிடைக்கின்றன. "இயக்கர்கள் மகாவலி கங்கையின் படுக் கைகளில் வாழ்ந்தனர் என மகா வம்சம் கூறுகின்றது. கி. பி. 150ல் கினோடியஸ் டொலமி வரைந்த இலங்கை வரைபடத் தில் மகாவலி கங்கையை "Phasis-fluvius"-பாரசீகரின் ஆறு எனக் குறிப்பிட்டுள்ளார். மகாவம்சம் அவர்களை இயக்கர் எனக் கூற, அவர்களை பாரசீகர் என டொலமி அழைக் கின்றார். எனவே இயக்கர்களே பாரசீகர் எனக் கூறமுடிகி றது. பாரசீகரின் வரலாற்றை ஊன்றி நோக்கும்போது பார சீகருக்கும், இலங்கையிலிருந்த இயக்கர்களுக்குமிடையில் பல வகையிலும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கான லாம். பைசாசங்களை வணங்கி வழிபடும் வழிபாடு முறை இருத்திறத்தாரிடையும் நிலவி வந்துள்ளது. புராதன பாரசீகத் தில் உயர் நிலைமையிலிருந்த தாழ்ந்த குலத்தாரின் சடங்குச் சம்பிரதாயங்கள் இலங்கை றொடியர்களின் சடங்குச் சம்பிர தாயங்களைப் பெரிதும் ஒத்திருந்தன. இரு மாங்கட்கிடையே இராசத்துரோகிகளைக் கட்டி கிழித்தெறியும் வெறுப்பூட் டும் தண்டனை முறை புராதன பாரசீகரிடம் நிலவியது. கண் டிய நடனத்துடன் இணைக்கப்பட்டு சொந்தமாக்கப்பட்ட சடங்குகளும், பாட்டிலும், கூத்திலும் உள்ள சில மரபுகளும் இரு திறத்தாரிடையிலும் மிகப் பலமான தொடர்புகள் உள் ளேன என்பதைக் காட்டுகின்றன. இத்தகைய மனிதவியல் ஒரு மைப்பாடுகளும், இணைப்புகளும் மேலும் ஆராய்வு செய்யும் போது எமக்கு இத்தகைய தொடர்புகளைக் காட்டும். பந்து காபய மன்னன் மகாவலி சமவெளியில் இயக்கருடன் வாழ்ந்து அவர்களின் விழாக்களில் இயக்கர்களின் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றியுள்ளான் என்று மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவ்வரசன் இயக்கர்தலைவர்களின்தொழினுட்பத்தினை உபயோகித்து அநுராதபுர நகரை நிறுவினான் எனவும் மகா வம்சம் சான்று தருகின்றது. இலங்கையின் மன்னர்கள் இயக் கர்களின் உதவியுடன் பல அணைகளையும், கால்வாய்களை யும் கட்டினர் என்றும் மகாவம்சம் சொல்கின்றது. மேலும் இருபத்தெட்டு இயக்கர் தலைவர்களின் பெயர்களும் மகா தூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறின் மேற்

ல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
றிப்பிட்ட அம்சங்கள் நீர்ப்பாசன, பாரிய கால் வாய், கட் ட அமைப்புக்களில் இயக்கர்களிடம் இயற்கையாக அமைந் ருந்த நுண்ணறிவைப் புலப்படுத்துவதுடன், எகிப்தின் பிரமிட் களின் பாரிய தோற்றத்துடன் ஒப்பிடக் கூடிய தாகபக்க ளயும் நிறுவியதையும் எம்மை சிந்திக்க வைக்கின்றது.
தென் அரேபியாவிலுள்ள ஹழறல் மெளத், மொஸ்ப்பெட் டெமியா (ஈராக்), எகிப்து ஆகிய நாடுகளில் நிலவிய வெள்ள lர்ப்பாசன நாகரிகமும், பாரசீகத்திலுள்ள கனாட்ஸிலுள்ள Khanals) விந்தையான புவியீர்ப்பு நிர்ப்பாசன முறைகளும் இந்நாட்டில் சுவீகரிக்கப்பட்டு அதன் பலனாக நமது குள |lர்ப்பாசன முறைகளும் விருத்தியாயின. மாதுறு ஒயாவில் கண்டு பிடிக்கப்பட்ட நீர்க்கட்டுப்பாட்டு மடை (Suice) கி.மு. 1000 ஆண்டுகட்கு முந்தியது எனத் தெரிகிறது" 0ே (An Introductory Note-The Pre-Vijayan Scene in Sri Lanka by A, DEN IS N. FERNANDO),
மேற்கூறப்பட்ட தகவல்களிலிருந்து இலங்கையின் ரஜ ரட்டை பகுதிகளில் வசித்த இயக்கர்கள் பாரசீக செல்வாக் குக்குட்பட்ட சிறந்த நாகரிகம் படைத்த வகுப்பினர் எனத் தெரியவருகிறது. அவர்களின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட lர்ப்பாசன, கால்வாய், அணை, குளம், கட்டிடங்கள், நகர நிர்மாண வேலைகள் இலங்கையின் உன்னத செல்வாக்கின் பாரம்பரியத்துக்கு வழிசமைத்த பாரிய பங்களிப்புக்கள் என் பதை நாம் மறுக்க முடியுமா!
இத்தகவல்களின் அடிப்படையை வைத்து எனது நோக்கு மறுபுறத்தில் சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றது. இந்நூலின் நான்காம் அத்தியாயத்தில் மனித உற்பத்தியின் மையம் இலங்கை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆன்று இலங்கை தீவாகவன்றி லெமூரியா அல்லது குமரிக் கண்டத் தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. மனித குலம் இங்கு தோன்றி பல்கிப் பெருகியே உலகின் பல பாகங்கட்கும் பரந்துள்ளது. அவ்வாறு தோன்றிய மனித சமுதாயத்தின் நாகரிகம் முதலில் ஆரம்பித்திருக்க வேண்டியது இப்பிரதே ாத்திலேயேயாகும். அதன் பகுதியே இலங்கையிலும் புராதன

Page 48
57 புத்தளம் வரலாறும், மரபுகளும்
காலந்தொட்டு வளர்ந்திருக்க வேண்டும். மேற்கூறப்பட் நீர்ப்பாசன வியக்கத்தக்க முறைகள், குளங்கள், அணைக பாரிய கால்வாய்கள், நகர நிர்மாணங்கள் யாவும் இங்கேே வளர்ச்சி பெற்று மொசப்பெட்டேமியாவுக்கும், எகிப்து கும். தென் எமனுக்கும், ஏனைய நதிக்கரைகட்கும் இங் ருந்து குடியேறிய மக்களால் ஏன் அந்நாடுகளில் அறிமுகமா யிருக்க முடியாது என்பதை மேலும் ஆராய்வுக்கு ஆய்வு
ளர்கள் திசை திரும்ப வேண்டுமென்பதே என் அவாவாகும்
டொலமியின் வரைபடத்தில் சுட்டிக் காட்டியுள்ளவா பாரசீகர், அறபியர், எத்தியோப்பியர், கிரேக்கர் ஆகியே களின் பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆற்றுப் படுக்ை களில் வாழ்ந்தவர்கள் புராதன காலத்திலே இலங்கையி ருந்து பாரசீகம், அறாபியா, எத்தியோப்பியா, கிரேக்க ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களின் சந்ததி ளென ஏன் நினைக்க முடியாது அந்நாடுகளிலிருந்து பிற் லத்தில் வந்த மக்கள் தனித்தனி ஆறுகளை தம்வசத்தி வைத்து தமது நாகரிகங்களை வளர்த்தார்கள் என்று நிை பதற்குக் கஷ்டமாகவிருப்பதையும் உணர்தல் வேண்டும். கா ஓட்டத்தில் எல்லா சமூகத்தினரும் கலந்து பல குலப் பிரிவு கிள் மறைந்தொழிந்து சில பிரிவுகளே நிலைத்தன என்பன நம்பலாம்.
இயக்கர்களைப் பாரசீகத் தொடர்புள்ளவர்கள் என். நோக்கும்போது புத்தளம் பிரதேசத்திலும் அவர்களின் செல் வாக்கு நீண்ட காலம் நிலைத்திருந்தமையை நாம் பார்க்கி றோம். புத்தளத்தில் விஜயன் வந்தடைந்த காலை இப்பிர தேசத்தின் ஆதிக்கம் இயக்கர்களின் கைகளிலேயே இருந்தது. தலைவியாக குவேனி இருந்திருக்கிறான். பாரசீகரின் செ வாக்கு புத்தளம் பிரதேசத்தில் நீண்ட காலம் இருந்தமைக் 1845ல் இபுனுபதுTத்தா புத்தளத்துக்கு விஜயம் செய்தபோ இருந்த நிலைமையும் நல்ல சான்றாக அமைகின்றது. புத் ளத்திலிருந்த ஆரியச் சக்கரவர்த்திகூட பாரசீக மொழி பேச தெரிந்தவராக இருந்துள்ளமை ஊன்றி நோக்கத்தக்கது. பு தளம் பகுதியில் பாரசீகரின் செல்வாக்கு பற்றிய மேலும் வி ரங்களை இந்நூலின் புத்தளம் என்ற தலைப்பிலான அடுத் அத்தியாயத்தில் நீங்கள் பார்க்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 5
கி. மு. 544ல் விஜயன் இலங்கைக்கு வந்துள்ளான் , பெளத்த சமயம் கி. மு. மூன்றாம், இரண்டாம் நூற்றாண் டளவிலேயே இலங்கையில் அறிமுகமாகத் தொடங்கியுள்ளது. கி. மு. எண்ணுாறாம் ஆண்டளவில் தமிழகத்துடன் தொடர்பு கொண்டுள்ள சிறந்த நாகரிக, கலாசாரங்களையுடைய மக் கள் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு அகழ்வாராய்வுகள் சான் றாகவுள்ளன. அவர்கள் இந்து, சமன சமய நம்பிக்கைகளு டன் வாழ்ந்தனர். அச்சந்தர்ப்பத்திலேயே விஜயன் தற்செய லாக வட மேற்குக் கரையை அடைகின்றான். இங்கு வாழ்ந்த மக்களின் மத நம்பிக்கைகளுக்கு உடன்பட்டு ஒன்றி வாழ்ந்து அரசையும் கைப்பற்றி இந்து சமய நம்பிக்கையுள்ள தமிழ கீத்தை புகுந்த வீடாகவும் கொள்கின்றான். மூன்று நூற் றாண்டுகளுக்குப் பின்புதான் பெளத்தம் இலங்கைக்கு அறி முகமாகிறது. இந்து, சமண மத நம்பிக்கைகளிலிருந்து விடு பட்டு பலர் அம்மதங்களைப் பின்பற்றியிருக்கலாம். பெளத் தத்துடன், அம்மதம் ஆரம்பித்த வட இந்திய ஆரிய கலா சாரமும், வட இந்திய மத மொழியான பாளியும் இணைந்தே வந்தன. பாளி மொழியே இலங்கையில் பெளத்த சமயத் தைத் தெரிந்து கொள்ளும் கருவியாக இருந்தது. பெளத்த சமய நூல்கள் பாளி மொழியிலேயே அறிமுகமாயின. பெளத்த குருமாரும் பாளி மொழியைக் கற்றுத் தேறினர். அவர்களி டத்திலும், பெளத்த சமயத்தைப் பின்பற்றியவர்களிடத்தி லும் ஆரியச் செல்வாக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறவில்லை. அவர்களிடத்தில் முன்பிருந்த இந்து மத தமிழ்க் கலாசாரங்கள் மங்கி மறைந்தன. பெளத்த சமயம் இலங் கைக்கு வந்து ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு மகாவம்சம் போன்ற வரலாற்றுப் பதிவு நூல்கள் எழுந்தன. அதை எழுதியவர்கள் புத்த குருமார்கள். எழுதப்பட்ட மொழி பாளி, எட்டு நூற்றாண்டுகளின் பின்பு இலங்கையில் இரு வேறுபட்ட சமூக மக்கள் வாழ்ந்து வருவதாக அவர்கள் எண்ணிக் கொண்டனர். பெளத்த மக்கள் சிங்கள மொழி யைப் பேசி ஆரியக் கலப்பான கலாசாரத்தைப் பேணி வந் தமையும், இந்து மக்கள் தமிழ் மொழியைப் பேசி திராவிடக் கலாசாரத்தைப் பேணி வந்தமையுமே அந்நூலாசிரியர்கள் அவ்வாறு எண்னக் காரணமாயமைந்திருக்கலாம். இவ்வேளை யில் தமிழகத்திலிருந்து அடிக்கடி ஏற்பட்ட படையெழுச்சிகள்

Page 49
புத்தளம் வரலாறும் மரபுகளும்
பெளத்த, இந்து மக்களிடையே குரோத உணர்வுகளையும் தூண்டிக் கொண்டிருந்தன. இருதரப்பாரும் விரோதிகளாக மாறியிருந்தனர். இந் நிலையிலேயே "வரன்" முறை நூல்கள் தோன்றின. ஆரிய வம்சத்தவனாகிய விஜயனின் வருகையை யும் பயன்படுத்தி அவனே சிங்கள வம்சத்தின் மூதாதை என் வும், அவன் வருகைக்கு முன்பு இங்கு மனிதத்தன்மையுள் ளோர் வாழவில்லை என்றும், முதல் மனிதக் குழுவினர் அவ னும் அவனுடைய சகாக்களே எனவும் நம்பும்படியாக பதி யப்பட்டன. இந்த ஐதீகங்கள் காலங்காலமாக நம்பப்பட்டு வந்த காரணத்தினாலேயே சிங்களவர்க்கும், தமிழர்க்கும் இடையிலே ஏற்பட்ட உரிமைப் போராட்டங்கள் வலுவி டைந்து இன்று வேற்றுமைகளைத் தவிர்க்க முடியாத அள வுக்கு விரிவடைந்துள்ளன. உண்மையிலேயே இரு சாராரும் ஒரே மண்ணில் பிறந்து வளர்ந்த ஒரே சகோதரர்களேயா ijff T.
விஜயன் இக்கரையை வந்தடைந்தபோது இயக்க வம் சத்து இராணியாகிய குவேனி என்பாள் பூரண ஆதிக்கத்து டன் ஆட்சி செய்து வந்திருக்கின்றாள். அந்நிய நாட்டவர்க ளான விஜயனும், அவனது சகாக்களும் தனது நாட்டுக்கு வந்திறங்கியபோது, முதலில் விஜயனின் சகாக்களைக் கைது செய்து சிறையிலிட்ட குவேனி பின்பு விஜயனின் சாமர்த்திய மான நடத்தையினாலும், பேச்சுக்களினாலும் மனமிளகி அவ னரின் சகாக்களை விடுதலை செய்தது மட்டுமன்றி, விஜயனை மணஞ்செய்யவும் முன் வந்தாள். தனது அரசின் பங்காளி யாகவும் அவனை ஆக்கினான். சில காலம் இல்லற வாழ்வில் இணைந்து இரு பிள்ளைகளையும் பெற்றெடுத்தாள். ஆயி னும் விதியின் சதி வேறு விதமாக அமைந்தது.
குவேனியை திருமணஞ்செய்து சில காலத்தின் பின்பு அவளை யும், தன் பிள்ளைகளிருவரையும் விஜயன் கைவிட்டமை மனம் வருந்தச் செய்யும் துயர சம்பவமாகும். மனமின்றி வலுக்கட்டாயமாகப் பிரிந்த பள்ளத் தாக்கு எனப் பொருள் படும் "விலாக்கட்டு பொத்த" என்னும் பெயர் பூண்ட இடம் இச்சம்பவத்தை வலியுறுத்துகின்றது. இது குருநாகல் - புத்த ளம் பாதையில் உள்ளது. அத்தோடு இவ்விடத்தின் அருகி லுள்ள தோனிக்கல் என்ற இடமும் குவேனியுடன் சம்பந்தப்

Wல்ஹாஜ் ஏ. என். எம். ஜெஹான் til
படுத்திக் கூறப்படுகின்றது. தோணிக்கல் என்ற இடத்தை சிங்கள மொழியில் திரித்து "லத்தோணிகல" என்று குறிப் பிட்டு, விஜயனால் துரத்தப்பட்ட குவேனி தன் தந்தையிடம் புகலிடம் கோரி இம்மலையிலிருந்து புலம்பிக் கொண்டிருந்த மையினால் புலம்பல் மலை எனப் பொருள்படும் "லத்தோணி கல" என்ற பெயரைப் பெற்றதாகக் கூறுவர். 3 எனினும் தோணி போன்ற அமைப்பில் அக்குன்று அமைந்திருந்தமை யினாலே பண்டு தொட்டு "தோணிக்கல்" என அழைக்கப் பட்டு வந்துள்ளது. புத்தளம், யானைமடு பிரதேசம் எங்கும் தமிழ் பேசும் மக்களே வசித்து வந்தமையால் அப்பகுதியி லுள்ள புராதன இடப்பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்க னாலேயே வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடக் கூடியதாகும்.
விஜயனின் வெற்றி இயக்கர்களின் விதியை நிர்ணயித் தது. குவேனியின் ஆதிக்கத்திலிருந்த நிலப் பிரதேசத்தையும் அபகரித்து, அவளையும், தனது பிள்ளைகள் இருவரையும் விஜயன் கைவிட்டதனால் மனமுடைந்த குவேனி தனது தந் தையிடம் தஞ்சம் கோரி அவரின் ஆளுகை எல்லைக்குச் சென்
மாள். அவர், தன் வம்ச பாரம்பரியத்துக்கெதிராக எங் கிருந்தோ வந்த ஒருவனின் வலையில் சிக்கி ஏமாந்து -翠m சிழந்து வந்த தன் மகளை ஏற்க மறுத்தார். குவேனியை
அடையாளங் கண்டுகொண்ட தீவிர இயக்கனொருவன் தன் முஷ்டியினால் ஒரே குத்தில் அவளைக் கொன்றான் எனக் குறிப்பிடப்படுகிறது. பிள்ளைகள் தமது மாமனின் துணையு டன் காட்டுக்குள் தப்பியோடினர். சமணகூட என்ற இடத்தை அடைந்தனர். குவேனியின் மகளின் பெயர் திஸால மகனின்
பெயர் ஜீவ ஹத்த என்பதாகும். இருவரும் தமக்குள்ளே மணஞ்செய்து பரம்பரையை உண்டாக்கினர். 3' இவர்கள்
புளிந்தர்கள் எனப்பட்டனர். வேடர்கள் எனவும் இவர்களைக் 1றுவர். இவர்கள் "சபர' குலத்தவர் எனவும் பட்டனர். இப் தத்திலிருந்தே சபரகமுவ என்ற மாகாணப் பெயரும் ஏற் பட்டது. பண்டைய புராணங்களில் சபரகுலம் காட்டு வாசி களாகக் குறிக்கப்பட்டுள்ளது. "
குவேனியின் அரசுக்கும், அவளின் தந்தையின் அரசுக்கும் எல்லையாகத் தோனிக்கல் இருந்தது. இம்மலையில் காணப்

Page 50
புத்தனம் வரலாறும், மரபுகளும்
படும் கருமையான கோடுகள் இரு அரசுக்கும் எல்லைக் கோடாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அக்கோடு இன்றும் தோணிக்கல்வின் கிழக்கு பகுதியில் தென்படுகின் நறது. வெண் சிவப்புக் கல்லில் ஏறத்தாழ மூன்றங்குள அக லத்தில் கோணல் மாணலின்றி சரியான நேர் கோடாக இது அமைந்திருப்பது வியப்புக்குரியதாகும். அக் கோடுள்ள கற் பகுதி உடைக்கப்பட்டாலும் கூட அதன் ஆழத்திலும் மாறாத கருங்கோடு அழியாது செல்வதும் ஆய்வுக்குரியதாகும். லின் மேல் மட்டத்தில் ஏதோ வகையான அக்கால இரசா யனக் கரு நிறக் கலவையினால் பூசப்பட்ட எல்லைக் கோடு கல்லின் அடிப்பாகம் வரை ஊடுருவி எல்லாப் பகுதியையும் கருநிறமாக வைத்திருக்கிறது எனக் கூறுகின்றனர். இக்கல்வி லுள்ள இவ்வடையாளம் பற்றி நில நூலாய்வாளர்கள் ஆய்ந்து தெரிவிப்பதை எதிர்பார்ப்போம்.
விஜயன் தனக்காக புதிய தலைநகரமொன்றை அமைத் தான். அது "தம்மனா நுவர" எனப் பெற்றது. இந்நகரம் சமண சமயத்தவர்களோடு தொடர்புபட்டு தம்மனா நுவர என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிப்பர். 6 சமணம் என்ற தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் "தமன' என வரும். விஜ பன் சமனர்களை வரவழைத்து இப்பகுதியில் குடியேற்றிய போது அவர்களால் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்பர். இப்பகுதிக் காடுகளில் "தம்மனா" என்றழைக்கப்படும் வைர முள்ள மரங்கள் அதிகம் காணப்படுவதன் காரணமாக விஜ யனால் நிர்மானிக்கப்பட்ட நகரம் தம்மனா நுவர என அழைக்கப்பட்டிருக்கலாமென்பதும் மற்றுமொரு அனுமான மாகும். தம்மனா வெட்டி, தம்மனா வில் போன்ற பெயர்க ரூள்ள இடங்களும் இப்பகுதியிலுண்டு. தம்மபாணி, தாமிர பர்ணி என்ற பெயர்களால் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்த மையும் குறிப்பிடத்தக்கது.
புத்தளத்திலிருந்து கிழக்கே பத்து விண மல் தூரத்திலும், மீ ஒயாவிலிருந்து கிழக்கே அரை மைல் தொலைவிலும், உள்ள கண்டுகளி மலைக் காடு என்னுமிடத்தில் புராதன சிதைவுகள் இருப்பதை எடுத்துக்காட்டி இவ்விடமே "தம் மனா நுவர" என்ற முடிவுக்கு திரு சைமன் காசிச் செட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் ዕይ
அவர்கள் வருகின்றார்கள். ஆங்கிலத்தில் "Horse Hill Forest" என அவர் குறிப்பிடுகின்றார். சித்திராவெளிக்கூடாக மீஒயா வின் பகுதியான வாரியாகுண்டு என்ற ஆற்றின் aւյտ):Jյ: கரைக்கு மேலே வட கிழக்காகச் சென்று அவ்விடத்தை *டையலாம். புத்தளத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் தம் மீனாவில் என்ற குளம் ஒன்றுள்ளது. இக்குளத்தின் பெய ஈரக் கொண்டே அவ்வூரும் அழைக்கப்படுகின்றது. அக்குளத் நினருகிலேயே குவேனியின் வாசஸ்தலம் அமைந்திருந்ததா சுக் கர்ண பரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.
விஜயனும், அவனது தோழர்களும் வந்திறங்கி குவேனி யைத் திருமணஞ் செய்த சம்பவத்தை அடியொட்டி இப்பகு தியை "மகுல் தொட்ட முனை" (கலியானத் துறை) என சங்கேத மொழியில் வழங்கி வந்ததாகவும் வரலாறு கூறுகின் றது. 8 விஜயனின் கூட்டத்தார் வந்திறங்கிய இடத்தின் நிலப் பகுதி செந்நிறமாக இருந்தமையினால் அவர்கள் தாமிர வருணி, தம்பபாணி என வடமொழியில் அழைத்தனர். இப் பெயரே பொதுவாக இலங்கைக்கும் வழங்கி வந்துள்ளமையை வரலாற்றின் மூலம் நாம் அறிவோம். கிரேக்க, ரோம மொழி பில் தப்பரபேன் (Taprabane) எனக் குறிப்பிட்டனர். தென் எனிந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தனீஸ் - (Megasthanes) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் இலங்கையை தப்பரபேன் என்றே அழைக்கின்றார். அது இந்தியாவினின்றும் ஒர் ஆற் றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளர்ர். பினீஷி பரும் முற்காலத்தில் இலங்கையுடன் வர்த்தகம் செய்வதில் முன்னணியில் நின்றுள்ளனர். அவர்கள் இலங்கையை "தப் பர்வியம்" (Tapparriam) என அழைத்தனர். பரவியம் என்ற சொல் பரவர் என்ற சொல்லின் திரிபென்பர். "தப்போரா வன்" என்றுமழைக்கப்பட்டது. இராவணனது நாடு என்பது அதன் பொருள். சமஸ்கிருத சொல்லால் தபோவனம் என் றும் இலங்கையைக் குறிப்பிட்டனர். பாளி மொழியில் வெற் நிலையின் வடிவமுள்ள நாடு என்று பொருள்படும். 'தம்ப பண்ய" என்றும் இலங்கை அழைக்கப்பட்டதாகத் தெரிகின் றது. *

Page 51
புத்தளம் வரலாறும், மரபுகளும்
விஜயன் புத்தளக் கரையில் வந்திறங்கி அப்பகுதியின் தலைவியாகிய குவேனியை எவ்வகையிலோ தன் கைப்பொம் மையாக்கி அவளோடு இல்லறமும் நடாத்தி, இரு குழந்ை களையும் பெற்றெடுத்த பின்பு, அவனின் ஆனைக்குட்பட் டிருந்த இடத்தின் ஆதிக்கத்தையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு அடைக்கலமளித்து ஆதரித்து கணவனாக மதித்து வரித்துக்கொண்ட தனது மனையாளையும் இல்லறத்தின் பல னாகத் தோன்றிய தன் பிள்ளைகளையும் ஈவிரக்கமின்றி பலவந்தமாகத் துரத்திவிட்ட விஜயனின் செய்கை மிகவும் மனவருத்தத்துடன் நோக்கத்தக்க நிகழ்ச்சியாகும். விஜய ணுக்கு இத்தகைய மனோ நிலை வந்தமைக்கு - அல்லது சூழ் நிலை சாதகமாக அமைந்தமைக்குப் பின்னணிகள் நிச்சய மாக இருந்திருக்க வேண்டும். அதுவே இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் ஆதரவு விஜயனுக் கும், அவனது தோழர்களுக்கும் கிடைத்தமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் தான் அரசுரிமையை ஏற்ற பின் தனது இராணியாக இருக்கக் குவேனிக்குத் தகுதியில்லை என்றும், தனக்குப் பின்பு அரச வாரிசாக வருவதற்கு அவள் வயிற்றில் பிறந்த தனது பிள்ளைகள் அந்தஸ்தற்றவர்களென்றும் தூண் டப்பட்ட விஜயன் தன் இராணியாக இருக்கத் தகுதியுள்ள ஒருத்தியைத் தேடுகின்றான். வட இந்திய ஆரியனாயிருந்த விஜயன் தன் வம்சத்திலிருந்தே இராணியொருத்தியை மனை யாளாகத் தேர்ந்தெடுக்க அவனுக்கு முடியுமாயிருந்தது. எனி னும் தனது இராணியாக பாண்டிய மன்னன் களையே விஜயன் தேர்ந்தெடுத்தான் எனக் காண்கிறோம். பாண்டிய தமிழரசனும் தன் மகளை விஜயனுக்கு அளிக்க முன்வந்துள் ளான். இதிலிருந்து விஜயனுக்கும், பாண்டியனுக்கும் இடை யிலிருந்த நெருக்கமான நல்லெண்ண சகவாசத் தொடர்பு மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டுமென்பது புலப்படுகின்றது. அத்தகைய நெருங்கிய தொடர்பு விஜய னின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் பெருமளவில் வசித்து வந்த செல்வாக்குப் பெற்ற தமிழ்ப் பேசும் மக்கள் மூலமே ஏற்பட்டிருத்தல் வேண்டும். அங்கு வாழ்ந்த தமிழ் GLAF i மக்களுடன் இணங்கி வாழ முடியாத அல்லது தடையாக இருந்த குவேனியை இராணியாக வைத்து அரசியலை தன் னால் நடாத்த முடியாதென உணர்ந்தே தமிழ் அரச குலத்
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
துடன் சம்பந்தம் வைத்து தன்னாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட விஜயன் எத்தகைய கடினமான செயலையும் செய்யப் பின்வாங்கினானில்லை; பிள்ளைப் பாசம்கூட குறுக் காக நிற்கவில்லை மனைவியின் நன்றிப் பெருக்குடன் கூடிய காதல் சம்பந்தம்கூட மனதை உறுத்தவில்லை. தொடர்ந்து குவேனியுடன் விஜயன் வாழ்ந்திருந்தால் செல்வாக்கோடிருந்த தமிழ் பேசும் குடிமக்களின் நல்லெண்ணத்தை இழப்பதுடன் அவர்களின் விரோதியும் ஆகி தமிழ் மன்னர்களின் :- யெடுப்புக்களினால் விஜயனின் அரசே வீழ்ச்சியடைந்திருக்க லாம். அதனாலே தன்னுடன் வந்திருந்த எழுநூறுக்கு சற் றுக் கூடிய அல்லது குறைந்த தொகையுள்ள தன் சகபாடி களுக்கும் பாண்டிய நாட்டிவிருந்தே தமிழ்ப் பெண்மணிகளை மனைவிமார்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான். தன் இராணி யாகவும், தன் சகபாடிகளின் மனைவியராகவும் வந்த பெண் மணிகளுடன் அவர்களுக்காக சேவை செய்யக்கூடிய பலதரப் பட்ட ஆண், பெண் பணியாளர்கள், பரிவாரங்கள் அடங்கிய பெருந்தொகையினரையும் விஜயன் தன் நாட்டிற்கு அழைத்து வர நேரிட்டது. தமிழ் நாட்டிலிருந்து ஏற்பட்ட குடியேற்றங் கள் பலவற்றுள் இக்குடியேற்றம் மிகவும் முக்கியமானதாகும்.
இவற்றிலிருந்து ஒரு விடயத்தை நாம் அணுகிக்கலாம். அதாவது இந்திய வட மாநில மொழியொன்றை பேசிய விஜ யனும், அவனது சகபாடிகளும் இலங்கையையடைந்து குவே னியின் செல்வாக்கால் காலூன்றி, இங்கு வசித்த தமிழ் பேசும் மக்களுடன் நாளாந்த வாழ்விலீடுபட்டு அவர்களின் மொழியையும் பேசப்பழகி அவர்களுடன் ஒட்டி உறவாடி தமிழ் சமூகத்தைப் புரிந்து கொண்ட பின்பே தம் குடும்பத் தின் பங்காளிகளாக தமிழ் மக்களை இணைத்துக் கொண்டா னென்று கருத முடியுமல்லவா!

Page 52
11. புத்தளம்
வடமேற்கு மாகாணத்தில் புத்தளம் கடல் வாவியின் கிழக்குக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. மேற்குக் கரை யில் கற்பிட்டிக் குடா நாடு நீண்டு வளைந்து இவ்வாவியை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. இக்குடா நாட்டின் மேற் கில் இந்து மாக் கடலின் வெண்ணலைகள் தழுவிச் சென்று கொண்டிருக்கின்றன. புத்தனம் பிரதேசத்தின் புவியியல் நிலைமைகளைப் பற்றி முன்னைய அதிகாரமொன்றில் விளக் கிக் கூறப்பட்டுள்ளதை வாசித்திருப்பீர்கள். எனவே இனி இப் பிரதேசத்தின் வரலாற்று நிகழ்வுகளைக் காண்போம்.
புத்தளம் இலங்கையின் தொன்மையான குடியிருப்புகளில் ஒன்றாகும். கி. மு. மூன்றாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் வடக்கேயுள்ள பொன்பரப்பிப் பகுதி சிறப்பாக வினாங்கிய காலத்திலே புத்தளத்திலும் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. குதிரை மலைப் பிரதேசத்தின் செல்வாக்கு இழந்துபோய்க் கொண்டிருந்த கால கட்டத்தில் புத்தளத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
புத்தளத்தில் அராபியர்களின் தொடர்பும், குடியேற்ற மும் பண்டு தொட்டு இருந்துள்ளமையை அறியக்கூடியதாக வுள்ளது. விஜயனின் வருகை என்ற அத்தியாயத்தில் குறிக் சுப்பட்டிருப்பதைக் காண்க. குதிரை மலைப் பிரதேசத்தில் இருந்த அரேபியக் குடியிருப்புகளுடன் புத்தளத்திலிருந்த வர்த்தகம் உட்பட பல தொடர்புகளையுடையதாக விளங்கி

வந1) "ஜ் ஏ. என். எம். ஷோஜஹான்
ாந்துள்ளன, அரேபியர்கள் குதிரை பார்ப்பத் துறைமுகத்தை தங்கள் வர்த்தகத் துறையாகப் பாவித்தது போன்று புத்த ாம், கற்பிட்டி துறைகளையும் பயன்படுத்தினர். கி. பி. எட் டாம் நூற்றாண்டில் அரேபிய மன்னராகிய கலீபா மலிக் பின் மர்வான் காலத்தில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட குழப்ப
நிலையில் அரேபியாவில் வசித்த ஹாஷிம் வம்சத்தாரில் பெருந்தொகையினர் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகள்
ாரணமாக தாயகம் துறந்து வெளி நாடுகளுக்குச் சென்று
குடியேறினர். அக்குடியேற்றங்கள் பல இலங்கையிலும் நடை
பெற்றன. ஏற்கனவே இங்கு வசித்து வந்த அரேபியர்களின்
தொடர்பின் காரணமாக இவ்விடங்களில் வந்து குடியேறுவது
ர்ெகளுக்கு இலகுவாகியது.
அரேபியர்களின் செல்வாக்கு இப்பகுதியில் இருந்துள்ளது. ாான்றாக பெருக்க மரம் என்ற ஒருவகைத் தாவரம் விளங் ருகின்றது. இதை ஆங்கிலத்தில் "பெஒ-பப் (Ba0-Bபb) என் | Yrif. Ag, i'r gair yr ai? Ar y caffisio “Audan sonia Digiblata" ar gair வழங்கப் படும். இம்மரம் மத்திய கிழக்கிற்கே உரித்தானதாகும். அரே பியர் வாழ்ந்த இடங்களில் இம்மரத்தை நட்டு வளர்த்துள் எனர். புத்தளம், கற்பிட்டி பகுதிகளிலும், மன்னார்ப் பகுதி எளிலும் இம்மரங்கள் நின்றுள்ளன. காலகதியில் இம்மரங் எளின் மூக்கியத்துவம் குன்றி பராமரிக்கப்படாமல் அழிந்து
போயுள்ளன. இம்மரங்களின் இவைகள் ஒட்டகங்களுக்குத் நீணியாக இருந்தனவெனக் கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவச ாக கற்பிட்டிக் குடாவிலுள்ள திகழி என்ற பண்டைய
பிறப்பு மிக்க கிராமத்தில் உள்ள பள்ளிவாசலின் முன்னே இம்மரம் வாழ்ந்து வரலாற்றை நினைவு கூறும் சின்னமாகத் நிகழ்ந்தது. ஆயினும் 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இம்மரம் வேரோடு சாய்ந்து விட்டதை துரதிஷ்டவசமான ாகும். பெருக்க மரத்தைக் குறிப்பிட்டு வழங்கும் கிராமி ' பாடலொன்றைக் கீழே காண்க:
'ஊருக்கிலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கரம் காட்டுக்கலங்காரம் கலை மானும் குட்டிகளும் ஊட்டுக்கலங்காரம் விடி வெளக்கும் புள்ளைகளும் கடலுக்கீலங்காரம் கப்பலும் பாய்மரமும்"

Page 53
67 புத்தளம் வரலாறும், மரபுகளும்
காட்டுக்கும், வீட்டுக்கும், கடலுக்கும் அலங்காரங்களைக் கூற வந்தவர்கள் ஊருக்கலங்காரமாக பெருக்க மரத் தைக் குறிப்பிடுவதிலிருந்து அதன் பெருமையை உணரலாம். வரலாற்றில் குறிப்பிட்டுள்ள புத்தளம் நகரில் நின்றுள்ள பெருக்க மரமும், திகழியிலுள்ள பெருக்க மரமும் பள்ளிவாசல் வளவுகளிலேயே நின்றமையை நோக்கும்போது அம்மரங் களைப் பெரிதும் மதித்து முஸ்லிம்கள் தங்களின் வணக்கஸ் தலங்களில் நட்டு வளர்த்துள்ளமையை அறிகின்றோம். பண் டைய முஸ்லிம் குடியிருப்புக்களிலுள்ள பல பள்ளிவாசல்களில் இம்மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று நம்ப
இடமுண்டு.
இம்மரம் பாரிய ஒரு விருட்சமாகும். இதன் தோல் வளர வளர கீழ் நோக்கி வழிந்து மரத்தின் அடிப்பாகத்தை நாள டைவில் வந்தடைந்து கொண்டிருப்பதால் அதன் சுற்றளவு அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. மரம் வர வர பெருக்க மடைந்து வருவதன் காரணமாகவே இம்மரத்துக்குப் பெருக்க மரம் எனப் பெயரிட்டனர் போலும் . 1848ம் ஆண்டில் புத் தளத்திற்கு வருகை தந்த "டெனன்ட்" என்ற வரலாற்றாசிரி யர் புத்தளம் நகரிலும் அத்தகைய மரம் ஒன்று நின்றமை
யைக் குறிப்பிடுகின்றார். புத்தளம் முஸ்லிம்களின் 6) ) வாடியிலிருந்த பள்ளிவாசலின் பக்கத்தில் ஏறத்தாழ எழுபது அடி உயரமும், நாற்பத்தாறு அடி சுற்றளவுங் கொண்ட
பெருக்க மரமொன்று நின்றதாகவும், இதன் அடியில் கிண றொன்றைத் தோண்டும்போது இதன் வேர்சள் பழுதடைந்து
மரம் அழிக்கப்பட்டது என்றும் அவர் கூறுகின்றார். 'நகர மத்தியில் கடை வீதிக்கு அடுத்துள்ள பகுதியில் காணப்படும் பருக்க மரம் பிரயாணிகளை மிசவும் கவர்கின்றது" என
திரு. சைமன் காசிச் செட்டி அவர்களும் எழுதியுள்ளார்கள். குறிப்பிட்ட இம்மரம் இன்று பழைய கொத்துபாப் பள்ளி வாசல் வளவு என்று குறிக்கப்படும் நிலத்தில் நின்றதென்பது தெளிவாகும். வரலாறு படைத்த இம்மரத்தைப் பற்றியும், அதன் சூழ்நிலை பற்றியும் மேலும் சில தகவல்களை அவர் கள் தருகின்றார்கள்.
'இம்மரத்தைத் தமிழில் "பப்பரப்புளி (இராட்சதப் புளி) எனவும், தொதி எனவும் பெருக்க மரம் எனவும்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் Ax.: 68
அழைப்பர். மலைக் குன்றைப் போன்று கடுங்கருமை நிறத்து
டன் நாற்பத்தைந்து அடி சுற்றளவுக்குத் தோற்றமளித்தது. நிலத்திலிருந்து எட்டரை அடி உயரத்தில் இம்மரத்தினடிப் பாகம் இரு கவராகப் பிரிந்து நேர் உயரமாக வளர்ந்திருந்' தது. அக்கவர்களிலிருந்து பல கிளைகள் வளர்ந்து பெரிய பரப்பை உள்ளடக்கி இருந்தன. ஒரு கவரின் சுற்றளவு இரு
பத்திரண்டரை அடியாகவும், மற்றக் கவரின் சுற்றளவு இரு பத்தாறே கால் அடியாகவும் இருந்தன. கிளைகள் மெலிந்த இலைகளையுடையதாகக் காட்சியளித்தன. அதன் பெரிய உருவத்திற்கேற்ப உயரம் போதுமானதல்ல. எழுபது, எண்பது அடி உயரமேயிருந்தது. அம்மரத்தின் இலைகளை உடம்பில்
வரும் பருக்களுக்கும், கட்டிகளுக்கும் மருந்தாக உபயோகித்
தனர். ஆடுகளின் உணவாகவும் பயன்பட்டது. அதன் பூக்கள் வெண்மையாகவும், அழகு, மணம் இல்லாததாகவும் இருந்
தன. இதன் பழம் நீண்டதாகவும், ஐந்தாறங்குலமுள்ளதாக
வும், மூன்று, நான்கங்குலத் தடிப்புள்ளதாகவும் வெளிப்
பரப்பு கடினமானதாகவும், மிருதுவான மயிர் அடர்ந்ததாக
வும் இருந்தது. அப்பழத்தின் உள்ளேயுள்ள சுளைகள் புளிப் புக் கலந்த இனிப்புச் சுவையுடையதாக இருந்தன. உள்ளூர்
வாசிகள் இப்பழத்தை உண்கின்றனர். அம்மரத்தின் பக்கத்
தில் அழகுமிக்க பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது. இப்பள்ளி
வாசலைத் தவிர மேலும் பல பள்ளிவாசல்கள் இங்குள்ளன.
பிரதான தெருவின் இடப்பக்கம் கடற்கரையை ஒட்டி அழ
குள்ள பள்ளிவாசல் உள்ளது. அதைச் சுற்றி உயரமற்ற மதில் அமைந்துள்ளது. அதன் வாயில் மனாராக்களைப் போன்று
சில தூண்களையுடையதாக விளங்குகின்றது. இங்கே ஜ"ம் ஆத்
தொழுகை நடைபெறுகிறது.”** இங்கே கூறப்பட்டுள்ள
கடற்கரையை ஒட்டியிருந்த பள்ளிவாசல் இன்றைய முகைய தீன் கொத்துபாப் பள்ளிவாசல் நிலத்தில் இருந்த "முகையதின்
தர்ஹா' என அழைக்கப்பட்ட பழைய பள்ளிவாசலா
கும். அத்தோடு பழைய கொத்துபாப் பள்ளிவாசல் வளவில்
பெருக்க மரத்துக்குப் பக்கத்திலும் பள்ளிவாசல் ஒன்று இருத்
ததென்பதையும் அறிகின்றோம்.

Page 54
69 புத்தளம் வரலாறும், மரபுகளும்
*புத்தளம்" என்ற பெயர் ஏற்பட்டமைக்கு ஒரே அடிப்படை யில் இருவிதமான விளக்கங்களைத் தெரிவிப்பர். *உப்பு என்ற சொல்லும், 'தளம்" என்ற சொல்லும் இணைந்து உப் புத்தளம் என்றாகி கால கதியில் புத்தளம் என்று அழைக்கப் பட்டதென்பர் ஒரு சாரார். இன்னொரு சாரார் ‘புது” என்ற சொல்லும், அளம்" என்ற சொல்லும் சேர்ந்து புத்தளம் என்றாயிற்றென்பர். "அளம்" என்பது உப்பு விளையும் இடத் தைக் குறிப்பதாகும். புதிதாக உப்புச் செய்கையை =劉功rth பித்து அளங்கள் தோன்றியமையால் புத்தளம் என்று அழைத் தனர். இலக்கணப் புணர்ச்சிக்கும் இது இசைந்ததே. இங்கு குறிப்பிட்ட இரு கூற்றுக்களில் பின்னைய கூற்றையே புத்த ளம் என்ற பெயர் தோன்றியமைக்கு சாதகமாகக் கொள்ள லாம். உப்பை அடியாகக் கொண்டு இந்நகருக்குப் பெயர் வழங்கியமை உப்புக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவத்தை தெற்றென விளக்குகிறது.
உப்பு பண்டு தொட்டு புனிதமான பொருளாகவும், வாழ் வுக்கு இன்றியமையாத பொருளாகவும், உணவுக்குச் c:-6ð) 6. பூட்டி உடம்பிற்கு உறுதியூட்டும் பண்டமாகவும் இருந்து வந் துள்ளது. உப்பை தமது ஆதிக்கத்தில் வைத்திருப்போர் பிற ரைப் பணிய வைப்பதற்குப் பிரதான ஆயுதமாகவும் உபயோ கித்தனர் என்பது வரலாற்றுண்மை. உப்பைக் கொண்டு சத்தி யம் செய்யும் வழக்கம் இருந்தமைக்கு புனித வேதாகமத்தில் குறிப்புண்டு. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை", "உப் பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பன போன்ற முது மொழிகளும், "அவரின் உப்பைத் தின்று வளர்ந்த நான் அவ ருக்குத் துரோகம் செய்யலாமா?" என வழங்கும் கூற்றும் உப்பின் மகத்துவத்தையும், "உப்பே உணவு" என்ற உண்மை யையும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
* களர் நிலத்துப் பிறந்தவுப்பினைச் சான்றோர் - விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் "
உப்பை இலங்கையின் பல பாகங்கட்கும் விநியோகிக்கும் நிலையமாகப் புத்தளம் திகழ்ந்தது. மலை நாடுட்பட உண் ணாடுகளுக்கு உப்பை வியாபாரிகள் கொண்டு சென்று வழங் கினர், இரண்டு மாடு பூட்டிய வண்டிகள் உப்பை ஏற்றிக்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 70
கொண்டு கூட்டமாக வரிசையாகச் செல்லும். இவ்வண்டியை இரட்டை மாட்டுக் கரத்தை என்பர். வண்டிகளின் கூரை களில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகளின் பல்வித மான ஒலிகள் பல திசைகளிலும் மைல் சணக்கில் பரவிநிற்கும். மாடுகளின் கழுத்துக்களில் கட்டியிருக்கும் மணிக் கோவை களிலிருந்து எழும் நாதம் மாடுகளின் களைப்பை மாற்றி வண்டியோட்டிகளுக்கு புதுத் தெம்பை அளித்துக் கொண்டி ருக்கும். வண்டியோட்டிகளின் வாய்களிலிருந்து கிளம்பும் தெம்மாங்குப் பாக்கள் இதயங்கட்கு இன்பமளித்துக் கொண் டிருக்கும். மாடுகளினதும், பயணிகளினதும் களைப்பைக் குறைப்பதற்காக இரவிலேயே பயணங்கள் தொடரும். வண் டிகளில் கட்டப்பட்டிருக்கும் விளக்குகளின் ஒளியும், அதன் மூலம் பலவாறான நிழல் விம்பங்களின் மாயா ஜாலங்களும் மனத்தை அள்ளக்கூடியன. வண்டிகளின் "கட புடா" என்ற சத்தம் வெகு தொலைவுவரை சென்று மறையும். நிலாக் காலங்களில் இவ்வண்டிகளின் பயண அநுபவங்கள் சொல்லுந் தர மன்று. இத்தகைய கலகலப்பு நிறைந்த சூழ்நிலை வன விலங்குகளினதும், வழிப்பறிக் கொள்ளைக் காரர்களினதும் தீங்குகளினின்றும் வண்டிக் கூட்டத்தினரைக் காத்துக் கொள்ள உதவியது. பத்து, பன்னிரண்டு மைல்கள் வரை பிரயாணஞ் செய்ததும் ஓய்வு எடுத்துக் கொள்ளுவதற்கான தரிப்பிடங்கள் இடையிடையே இருக்கும். அங்கே வண்டிகளை நிறுத்தி மாடுகளுக்குத் தீனி, நீர் கொடுக்கவும், தமது சமையல் வேலை களைச் செய்து கொள்ளவும் வசதிகள் இருக்கும். அவ்விடங் களை "கால' (GALA) என்பார்கள். தமிழில் காலை என வும் கூறுவர். அவைகளின் நிர்வாகம் அன்றைய உள்ளூர் ஆட்சி மன்றங்களினாலும், ஊர் மட்ட குழுவினராலும் நடாத் தப்பட்டன. அவ்விதமாகப் புத்தளம் நகரில் "கால இருந்த இடத்திலேயே தற்போது மஸ்ஜிதுல் ஹ"தா என்ற பள்ளி வாசல் அமைந்திருக்கின்றது. அருகில் செல்லும் போல்ஸ் வீதி "கால றோட் எனப்பட்டது. பக்கத்திலுள்ள இன்றைய பாத் திமா மகளிர் மகா வித்தியாலயம் அன்று அரசினர் ஆண்கள் பாடசாலையாக இருந்தது. அதை மக்கள் கால ஸ்கூல்" என அழைத்தனர்.
வண்டிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் முறையைவிட மாடுகளின் முதுகிலே பொதிகளை ஏற்றிக் கொண்டு கூட்ட

Page 55
7፤ புத்தளம் வரலாறும், மரபுகளும்
மாகச் செல்லும் வழக்கமும் இப்பகுதியில் நிலவியது. பொருத் தமான பாதை வசதியில்லாத ஏற்றிறக்கமும், மலைப்பாங் கான நிலமும் ஆறுகளின் வாய்க்கால்களின் குறுக்கீடும் கொண்ட பிரதேசங்களிலே இம்முறையின் மூலமே பொருட்கள் இடம் மாறின. மாடுகளின் முதுகில் பொதியை ஏற்றி வரிசையாகக் கூட்டங் கூட்டமாகச் செல்லும் இம்முறையை "தாவளம்' என்றழைப்பர். சுமக்கும் மாடுகளைத் தாவள மாடு என்று அழைப்பர். விசேட பயிற்சி பெற்ற மாடுகள் இவைகள் உரித்தாளர்களை தாவளக் காரர் என்பர். தாவளம் என்ற சொல்லை சில வேளைகளில் தவளம் என்றும் உச்சரிக்கின்ற னர். சரியான பெயர் தாவளமாகும். இம்முறை அரேபிய வணிகர்களால் அறிமுகப்பட்டதாகும். அறபிகள் ஒட்டகங் களின் முதுகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வியாபா ரத்தினிமித்தம் கூட்டங்-கூட்டமாக, வரிசையாக பாலை வனப் பரப்பில் செல்லும் வழக்கம் உள்ளவர்கள். இதைக் *கரவன்' என்றழைப்பர். இவ்வனுபவத்தின் அடிப்படையி லேயே இலங்கைக்கு வந்த அறபிகள் "தாவழம்" எனப்படும் முறையை இங்கு புகுத்தினர். தாவழப் போக்குவரத்து நிலை பங்களை மடிகே எனக் குறிப்பர்.
பொன்பரப்பி, புத்தளம் பகுதிகளிலிருந்து உள் நாடுக ளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல காட்டினூடாக பாதைகள் அமைந்திருந்தன. அவைகள் மறை பாதைகளா கவே இருந்தன. புதிய பாதைகள் அமைக்கப்பட்ட போது பண்டைய பாதைகள் பாவிக்கப்படாமல் அழிந்து விட்டன. ஆயினும் இப்பகுதியிலிருந்து மலை நாட்டுக்குச் சென்ற பாதையை இன்றும் "கண்டிப் பெரு வழி" எனக் குறிப்பிடுவர். இப்பாதை ஆற்றங்கரைகளை, நீர் நிலைகளை அண்டியே சென்றன. இப்பாதை சென்ற மீ ஒயாவின் ஒரு கிளை ஆறு இன்றும் பெருவழி ஆறு என்று அழைக்கப்படுகின்றது. அவ் வாற்றிலே அக்குறுணைப் பிட்டி, தாவளப் பிட்டி என்றழைக் கப்படும் இடங்களுமுள்ளன. அக்குறணை வியாபாரிகள் தங்கு மிடத்தையும் தாவளம் தங்குமிடத்தையும் அவை குறித்தன. நானுாற்றுக் குடும்பப் பிரிவு எனப் பொருள்படும் "ஹாறயே பற்று" என்று முன்பு வழங்கப்பட்டு இன்று ஹரிஸ்பத்து எனப் பெயர் பெற்ற பகுதியில் முதலாம் கஜபாகு மன்னன் சோழ

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 72
மண்டலக் கரையிலிருந்து அழைத்து வந்தவர்களில் நானூறு குடும்பங்களைக் குடியேற்றினான். அவர்கள் ஆரம்பத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்து வந்த போதிலும் பின்பு சமாதான மாயினர்.8 மலை நாட்டில் செல்வாக்கான செழிப்பான பிர தேசத்திலிருந்த இம்மக்கள் புத்தளத்துடன் நெருங்கிய வியா பாரத் தொடர்புகள் வைத்திருந்தனர். வியாபார பொருட்க ளில் உப்பு, தேங்காய், கருவாடு என்பன முக்கிய இடத்தைப் பெற்றன. கண்டிப் பெருவழி மூலம் பிரயாணஞ் செய்தவர் கள் மரணமடைய நேரிடின் அவ்வழிக்குப் பக்கத்திலிருந்த இடமொன்றில் அல்லது ஊரொன் றில் அடக்சஞ் செய்து விடு வார்கள். அத்தகைய அடக்கத்தலங்கள் இவ்வழியின் அருகில் அனேகமுண்டு. இறை நேசர்கள் அல்லது கூட்டத்தின் தலை வர்கள், அல்லது மதிப்பு வாய்ந்தவர்கள் காலமானபோது அவர்களுக்காக விசேட அடக்கஸ்தலங்களும் நிறுவப்பட்டன.
அவ்வடக்கஸ்தலங்களில் குறிப்பிட்ட பெரியாரைப் பற்றிய தகவல்களைக் கூறும் நடுகற்களும் நடப்பட்டன. இப்பகுதி யில் கண்டெடுக்கப்பட்ட அவ்வாறான கல்லறை நடுகல்
லொன்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொறொக்கோவுக்கே உரித்தான அறபு வனப்பெழுத்துக்கள் இக்கல்லில் பொறிக்கப்பட்டுள் ளன. அநேகமாக கி. பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண் டளவிலான காலப் பகுதியைச் சேர்ந்தது இக்கல்லெனக் கரு தப்படுகின்றது. அவ்வாறான புனித அடக்கத்தலமொன்று பெருவழி ஆற்றின் கிழக்கே அமைந்துள்ளது. பண்டுதொட்டு பெருவழி சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் அடக்கத்தல் மென அழைத்து சங்கைகள் செய்து வந்தனர். சமீப காலம் வரை புத்தளத்திலிருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக அவ்வாற் றுக்குச் சென்று குடும்பங்களுடன் விடுதி கட்டி நீண்ட நாட் கள் தங்கியிருந்து இறுதியில் ஒலியுல்லாஹ்வின் பெயரால் மெளலூது ஒதி அன்னதானங்கள் அளித்து வருவது மரபாக இருந்தது. புத்தளம் கங்காணிக் குளப் பகுதியில் வசித்து உப்பு வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களின் குடும்பங்களே குறித்த மெளலூதை நடத்துவதற்கு உரித்தா ளராக விளங்கினர். இறுதியாக மீராசாகிபு மரைக்காயர் ஜலாலுத்தீன் மரைக்காயர் என்பவரின் மறைவுக்குப் பின்பு கோலாகலமான இவ்வழக்கத்தைத் தொடர்ந்து நடாத்து

Page 56
புத்தளம் வரலாறும் மரபுகளும்
வதற்கு முடியாத நிலையில் நேர்த்தி, நிய்யத்துக்களை வைத் திருப்போர் தனித்தனியே குழுக்களாகச் சென்று கடன்களை நிறைவேற்றி வந்தனர். அவ்வழக்கமும் சிறிது சிறிதாக அருகி வருகின்றது. புத்தளத்திலிருந்து குருநாகல் பாதையில் ஒன்ப தாவது மைலிலுள்ள கொட்டுக்கச்சிய என்று சிங்கனத்தில் அழைக்கப்படும் கிராமத்திலிருந்து வட புறமாக மூன்று மைல்
வரை சென்று பெருவழி ஆற்றை அடையலாம். தமிழில் "கொட்டுக் கச்சேரி" என அழைப்பர். "கோட்டகச் சேரி என்ற பெயரே கொட்டுக் கச்சேரியாக மாறியிருக்கலாம்.
குளம், கோயில், பண்டகசாலை பொக்கிஷ சானல இருக்கும் இடங்களைத் தமிழில் கோட்டகம் என்பர். கோட்டகத்திலுள்ள குடியிருப்புக்களை கோட்டகச் சேரி என்றழைத்திருக்கலாம். கோடகம் என்பது நாற்சந்தியையும் குறிக்கும். 3, FTP, rf: எனப்படும் ஒரு சாதியினரும் இருக்கின்றனர். ஒருகாலத்தில் தீர்வை வரி பெறும் இடமாகவும், உப்பு வண்டிகள் வந்து தங்கிச் செல்லும் நிலையாகவும் இருந்துள்ளது. 1876i. கொட்டுக் கச்சேரி குளக்கட்டில் கிறித்துவுக்கு முன்னுள்ள காலத்துக்கான ஏராளமான வெள்ளிக் காசுகள் கண்டுபிடிக் ஃப்பட்டு கொழும்பு நூதன சாவைக்கு னுேப்பப்பட்டன. இக்காசுகள் துளையிடப்பட்டவையாகும். 9 இதைக் கொண்டு சீன அல்லது ரோம நாணயங்களாக இவை இருக்கலாமென நம்பலாம். போட்டர்ச் சேரி என்ற அழகான தமிழ்ப்பெயர் "கொட்டுக் கச்சிய' என்று திரித்து வழங்குவதன் மூலம் இப் பகுதியின் தமிழ்ப் பெயர்கள் அழிந்து வருவதை கொள்ளலாம்.
புத்தளம் உப்புச் செய்கையுடன் பிரிக்க முடியாதவாறு கலந்துவிட்ட நகரமாகும். அருகே அமைந்துள்ள புத்தளம் கடல் வாவியே உப்புச் செய்கையின் ஊற்றாகும். ஏறத்தாழ முப்பது மைல் நீளமும் ஒன்றிலிருந்து நான்கு மைல் அகல முங் விொண்டது இவ்வாவி, இவ்வாவியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி உப்பளங்களை உண்டாக்குவதற்கேற்ற என சுயில் அமைந்துள்ளன. உப்பு விளைவிக்கும் இடங்களை "அனம்" என தமிழ் கடறும். உப்பு வாய்க்கால் என்றும் உள்ளூர் மக் கிள் உரைப்பர். புத்தளத்தில் உப்பனங்கள் எக்காலத்தில் உண்டாயின என்று சரியாபித் தெரியவில்லை. எனினும் உப்

அல்ஹாஜ் ஏ. எஃ . எம். ரொஜஹான்
புர் செய்கை தென்னிந்திய மக்களால் இலங்கைக்கு அறி முகப்படுத்தப்பட்டதென்பதை மறுக்க முடியாது.
நெய்தல் நில மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் பங்ககால இலக்கியங்களில் உப்பு விளைவித் தலைப் பற்றி பும், அதைத் தொழிலாகப் புரியும் மக்களின் வாழ்க்கை யைப் பற்றியும் பேசப்படுகின்றன. உப்பு விளைவிப்போரை உமணர்" என்பர். பெருப்பாணாற்றுப்படை, அக நானூறு போன்ற நூல்கள் இவர் பற்றிய செய்திகளை அழகாக எடுத் துச் சொல்கின்றன. இலங்கையை நெருங்கிய தென்னிந்தியக் கரைகளில் உப்பு விளைவித்தல் தொழில் நிறைய நவிட பெறுவதைக் காண்கிறோம்.
புத்தளத்துக்கும் தென்னிந்தியக் கரைகளிலுள்ள காயல் பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம் பட்டினம், தேவி பட்டினம், குல சேகரம் பட்டினம், முத்துப்பேட்டை போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜனர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் பழங்காலந்தொட்டு நிலவி வந் நுமை வரலாற்றுண்மையாகும். ஆரம்பத்தில் வர்த்தகர்களாக வந்தவர்கள் நாளடைவில் இங்குள்ள மக்களுடன் இரண்டறக் கலந்து மத வழிகாட்டிகளாகவும் விளங்கினர். அவர்களே புத்தளத்தில் உப்புச் செய்கையை அறிமுகப்படுத்தியவர்களாக இருக்கலாம். குறிப்பாக கீழக்கரையிலிருந்தும், காயல் பட்டி ஒரத்திலிருந்தும் வந்தவர்கள் இங்கு உப்பளங்களை உண் டாக்கி உப்புச் செய்கைக்கு வித்திட்டிருக்கலாம். ஏனெனில் கீழக்கரையிலும், காபல் பட்டினத்திற்கு சமீபத்திலும் உப் புச் செய் ை இன்றும் நடைபெற்று வருவதுடன் அங்கு நடை பெறும் உப்புச் செய்கை முறைக்கும் புத்தளத்தில் நடை பெறும் முறைக்கும் நெருங்கிய ஒருமைப்பாடு கானப்படுகின் து. புத்தளத்தில் உப்புச் செய்கை ஆரம்பமாவதற்கு முன்பு இலங்கை மக்கள் உப்பை இந்திய வியாபாரிகளிடமிருந்தே பேற்றனர். புத்தளத்தில் விளையும் உப்பு ஏனைய இடங் களில் விளையும் உப்பைவிட தரங்கூடியதாகும். புத்த விளம் பிரதேசத்தில் எட்டு இடங்களில் உப்பளங்கள் அமைந்திருந் தன. புத்தளத்திலுள்ள கிழக்குக் கரை, மேற்குக் கிரே", பாலாவி, கரைத் தீவு, நாச்சிக்கரிே, கற்பிட்டித் தில்லையடி புத்தளம் தில்லையடி, கொம்பி முனை ஆகிய இடங்களே

Page 57
75 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அவைகள். அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டுள்ள இரு இடங்களில் இப்போது உப்பு விளைவிக்கப்படுவதில்லை. பாலாவி உப்பளத்தைத் தவிர ஏனைய தனிப்பட்டவர்களுக் குரியனவாக இருக்கின்றன. பாலாவி உப்பளங்கள் யனவாகும். இலங்கையின் ஏனைய இடங்களிலுள்ள உப்பு ளங்களும் அரசுக்கு உரியனவாகவே உள்ளன. இதிலிருந்து நாம் உளசிக்க வேண்டியது என்னவெனில் அரசு உப்புச் செப் கையில் கவனஞ்செலுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முன்பே, முன்னோடியாக புத்தளம் பிரதேச மக் கள் சுயாதீனமாக உப்பளங்களை அமைத்து உப்பை விளை வித்துள்ளனர். தங்கள் விருப்பப்படி சந்தைப் படுத்தினர். அத்தொழிவின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும், : னத்தையும் பின்பு அறிய வந்த ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் இத்தொழிலில் தலையிட்டு தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். செய்கையாளரிடமிருந்து உப்பை * மூலம் தாமே மிகவும் குறைந்த விலையில் பெற்று மிகக் கூடிய விலையில் சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் பெற்ற னர். இந்நிலை இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பும் சமீப காலம்வரை நீடித்தது. உப்புச் செய்கையாளரின் நீடித்த கோரிக்கையின் பேரில் உப்பை சந்தைப்படுத்தும் உரிமையை உற்பத்தியாளர்களுக்கு அரசு அளித்துள்ளது. இவ்விடயத்தில் முஸ்லிம், சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்ச ரும், புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதியுமான அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களின் முயற்சி குறிப்பிடத்தக்க தாகும். உப்பளத்தின் நில உரிமை பரம்பரையாக உள்ளூர் வாசிகளுக்கே சொந்தமானதாகும். அரசின் ஆதிக்க நிலை மையை உருவாக்கியவர்கள் ஒல்லாந்தரே.
இன்று செய்கை பண்ணப்படாமல் அழிந்துபோயுள்ள கொம்பி முனை என்ற இடத்திலுள்ள அளங்கள் புத்தளத்தி விருந்த அஹ்மத் நெய்னா மரைக்காயர் இபுறாஹிம் நொத்
தாரிஸ் என்பவருக்குச் சொந்தமானவைகளாக இருந்தன. இம்மாவட்டத்தில் பெரு முயற்சியுடன் நல்ல தரமான உப்பை உற்பத்தி செய்வதில் புகழ் வாய்ந்தவராக இவர் விளங்கி னார். 1870ல் இவரால் உற்பத்தி செய்யப்பட்ட உப்பின்
மாதிரி சேர் எச். ஜி. ஆர். றொபின்ஸன் தேசாதிபதி அவர்
கட்குப் பரிசீலனைக்கும், பார்வைக்குமாக அனுப்பப்பட்டது
 

Wல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
என அரசு தெரிவிக்கின்றது. 1888ல் சிறைக் கைதிகளைக் கொண்டு விஸ்தரிக்கப்பட்ட இவ்வுப்பனம் கால கதியில் செய்கை பண்ணப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. சி
ஒல்லாந்தர் தமது ஆதிக்கத்தை இலங்கையில் நிலை நாட்ட வேண்டுமென்ற விருப்பினால் உப்புத் தொழிலை கண்டி மன்னனுக்கு எதிராக தமது ஆதிக்கத்தை நிலை
நிறுத்தும் பலமுள்ள ஆயுதமாக உபயோகித்தார்கள். அவர் கள் உப்புத் தொழிலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனியாரின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் சட்டத்தின் மூலம் தடை விதித்தனர். விநியோக, விற்பனை உரிமை களை தமது ஏகபோக உரிமையாக்கிக் கொண்டனர். கண்டி இராச்சியத்துக்குரிய உப்பு விநியோகத்தையும் தாங்களே செய்தனர். விநியோகத்தின் பின்பு அவ்வாண்டில் மிஞ்சும் நடப்பையும் அழித்து விட்டனர். புத்தளத்தில் விளைந்த உப்பு இலங்கைக்கு எவ்வளவு முக்கியத்துவமும், தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலைமையும் வாய்ந்ததென்பதை எடுத்துக்காட்டும் முகமாக 1880ம் ஆண்டில் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை எடுத்துக் கூறலாம். இவ்வேலை நிறுத்தத்தினால் நாடெங்கும் உப்புத் தட்டுப்பாடு நிலவியது. இதை ஈடுசெய்யும் முகமாக அரசு உப்பை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து விநி யோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்
禺、T,
1536ம் ஆண்டில் போர்த்துக்கேயர் புத்தளத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் ஆக்கினர். உடனடியாக பெரிய கத்தோ விக்க தேவாலயமொன்றையும் கட்டினர். இதை மதப் பிரச் ாாரத் தலைமை அலுவலமாகவும், வருடாந்தி கூட்டங்களை குடாத்தும் இடமாகவும் உபயோகித்தனர். பின்பு போர்த்துக் கேயருக்கும், கண்டி அரசன் இராஜ சிங்கனுக்குமிடையில் நடைபெற்ற போரில் போர்த்துக்கேயர் சரணாகதியடைய அரசனின் ஆனைப்படி குறித்த தேவாலயம் இடித்தழிக்கப்பட் ц — 5/ - Ч

Page 58
77 புத்தளம் வரலாறும், மரபுகளும்
17ேேல் தளபதி இம்ஹொப் (Capt, Inhoff) என்பவரின் தலைமையில் புத்தளம் டச்சுக் காரர்களினால் கைப்பற்றப் பட்டது. அவர்கள் புத்தள நகரின் தென் புறத்தில் இருந்த தென்னந்தோப்புக்கு 800 யார் தூரத்தில் அகழிகளுடன் கூடிய மண் கோட்டை ஒன்றைக் கட்டினர். 9
1796 i GFf Gg Tsir Gu TGinAFř (Sir John Bows or ) GTGiro பிரிட்டிஷ் இராணுவத் தலைவரின் கீழ் வந்த படை புத்த ளத்தைக் கைப்பற்றியது. அவர்கள் இராணுவ முக்கியத்துவம் நிறைந்த இடங்களில் தளங்களை அமைத்தபோது, முன்பு டச்சுக் காரரினால் அமைக்கப்பட்டிருந்த கோட்டையிலேயே சில மாற்றங்களைச் செய்து கோட்டை அமைத்தனர். பிரிட் டிஷார் அமைத்த கோட்டையுள் ஆணை பிறப்பிக்கும் அலு வலரின் அலுவலகமும், காவலாளர் அறைகளுமிருந்தன. வெளி யார் தாக்குதலினின்றும் கோட்டையைப் பாதுகாக்க அவர் கள் எப்போதும் தயாராகவே இருந்தனர். 9
இக்கோட்டை பிரிட்டிஷாரின் கைக்கு வருவதற்கு முன்பு 178ல்ே புத்தளத்துக்கு விஜயம் செய்த "ஹாப்னர்" (Hafiner) என்பவர் புத்தளத்தைப் பற்றியும், கோட்டையைப் பற்றி பும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"கண்டியரசனுக்குக் கடைசியாகக் கைகொடுத்த துறை முகம் புத்தளமாகும். அம்மன்னன் உப்பு வியாபாரத்தைத் தன்னாதிக்கத்தில் வைத்திருந்தான். கோட்டை நல்ல நிலை மையிலேயே இருக்கிறது. படைவீரர் யாரும் அங்கில்லை. அக்கோட்டையை பிரஞ்சு மாதொருத்தியும், அவரின் ளூம் பரிபாலித்து வருகின்றனர். அவரின் பெயர் மாரினி (Madame de Marini). அழகுடன் விளங்கும் நான்கு உயர்ந்த புற அரண்களுடன் கூடிய சிறிய கோட்டை இதுவாகும். படைவீரர்கள் ஐம்பது பேர் வரை நகரத்தில் வசிக்கின்றனர். புத்தளம் அதிக குடிசனம் நிறைந்த பெரிய நகரமாகும். நக ரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சன நெருக்கம் குறைவாகவுள் னது. ஏராளமாக பாக்கு நிரம்பியுள்ளன. உள்ளூர் நீர் வழிப் போக்குவரத்துக்கான படகுகளையும், வெளிப் போக்குவரத் துக்கான கப்பல்களையும், தோணிகளையும், ஏனைய சிறிய இந்தியப் படகுகளையும் புத்தளத்தில் செய்கின்றார்கள். சி

அல்ஹாஜ் ஏ. என். எம். இராஜதிரான் 『
இன்று இக்கோட்டை தென்படவில்லை. கோட்டையின் மதிற்கவர்கள் அழிந்து, அகழிகளையும் மூடியுள்ளது. ஆயி றும் அகழிகள் அமைந்திருந்த இடம் தூர்ந்து ஆழமற்ற வாய்க்காலைப் போல காட்சி தருகின்றது. ஆணை பிறப் பிக்கும் அலுவலரின் வாசஸ்தலமும், அலுவலகமும் பொது வேலைத் திணைக்கள மாவட்டப் பொறியியலாளரின் உத்தி யோக வாசஸ்தலமாக இருக்கின்றது. குருநாகல் பாதையிலி ருந்து வாடிவீடு, அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் ஆகியவற் நிற்கு முன்னால் செல்லும் பாதை இன்றும் கோட்டை வீதி என்றே அழைக்கப்படுகின்றது.
1818ல் கண்டிப் புரட்சித் தலைவர்களில் ஒருவராகிய பிலிமைத்தலாவை என்பார் அநுரதபுரத்தைத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்து "வீர பாசுத்" (Wira Bah000) என்ற தமிழர் ஒருவரை அதன் அரசராக முடி சூட்டி வைக்க ஆயத்தஞ் செய்தார். ஆங்கிலப் படையினரின் வருகையினால் இது சாத்தியமில்லாமற் போக, வீர பாகூத் ஆங்கிலப் படை பினரால் கைது செய்யப்பட்டு புத்தளத்தில் கைதியாக வைக்
கப்பட்டான் என்பதும் சரித்திரக் குறிப்பாகும்.8
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் வாழ்ந்த புத் நனம் மக்களைப்பற்றி தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக் கையில், வரலாற்றாசிரியர் புறோஹியர் அவர்கள் பின்வரு மாறு கூறுகின்றார்கள்:- "அவர்கள் தங்களின் சமூக தனித் துவத்திற்கேற்றவாறு தாமே தேர்ந்தெடுத்துள்ள இடங்களில் ஒன்று குழுமி பண்டைய பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களாக வாழ்கின்றனர். இஸ்லாமிய கட்டடக் கலை அம்சங்களுடன் கூடிய மினாராக்கள், வளை மாடங் கள், கூரை குவி மாடங்கள் நிறைந்த பள்ளிவாசல்களில் தங் களது தொழுகைகளை நிறைவேற்றுவதுடன் பள்ளிவாசல் களின் முற்றவெளியில் விழாக்களையும் நடாத்துகின்றனர். இன்றைய நாகரிகத்தின் பாற்பட்ட அரசியலினாலோ, தொழிற்சங்கங்களினாலோ அல்லது வேறு எவ்வித இயல்பு களினாலோ பாதிக்கப்படாத சுயேச்சையான மக்களாக வாழ் வதைக் கண்ணுற்றேன். அவர்கள் கடின உழைப்புள்ள தொழிற்றிறமை வாய்ந்தவர்கள்"

Page 59
7) புத்தளம் வரலாறும், மரபுகளும்
இத்தைகைய சூழ்நிலையில் வளர்ந்து வந்த அசலான வர்த்தகக் குடியிருப்பான புத்தனம் மிக முக்கிய மாண அரச வருவாயுள்ள உப்பை விளைவித்தற்கும், அதை விநியோகிப்பதற்குமான நிலையமாக விளங்கியது. 1845ல் புதிதாக உருவாக்கப்பட்ட வட மேற்கு மாகாணத்தில் தலை நகரமாக புத்தளமே விளங்கியது. அங்கேயே மாகாண அர சாங்க அதிபர் அலுவலகம் இருந்தது, பின்பு 1856 ல் இம்மா காணத்தின் தலைநகரமாக குருநாகலை ஆனபோது புத்தளம் மாகாணத்தின் இரண்டாவது நகராக மாறியது. மாகாண அரசாங்க அதிபரின் அலுவலகம் உதவி அரசாங்க அதிபரின் அலுவலமாகத் தரங் குறைந்தது. பின்பு இது புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகமாக தொடர்ந்து இயங்கி வருகின்றது.
புத்தளம் நகரத்தின் ஆதிக் குடியேற்ற முறையை நோக் கும் போது, "வாடி' என்றழைக்கப்படும் தொழில் ரீதியி லான மக்கள் கூடி வாழும் தெருப் பகுதிகள் இருந்ததாகத் தெரிகிறது. சின்னக்கடை வாடி, கங்காணிக் குளம் வாடி, நெய்யக்கார வாடி, மரைக்கார் வாடி, படுக்குப்பற்று வாடி, வலைக்கார வாடி என்பவைகளே அவைகள்,
சின்னக் கடை வாடி என்பது தற்போதுள்ள பெரிய பள்ளிவாசவின் முன்புள்ள வட பகுதியாகும். இதில் கடை களும், கடைக்காரர்களின் குடியிருப்புக்களும் இருந்தன. அதை அண்டி பெரிய கடைத்தெருவும், "மார்க்கட்" எனப்
படும் சந்தையுமிருந்தன. அங்கு குடியிருப்புக்களிருக்கவில்லை. சின்னக் கடை வாடியில் வியாபாரிகளின் - குறிப்பாக இந்திய வியாபாரிகளின் கடைகள் இருந்தன. அக்கடைகளின் பின் புறத்திலேயே அவர்கள் குடியிருந்தனர். அவர்களின் மனைவி, மக்கள், குடும்பத்தார் தென்னிந்தியாவில் இருந்தமையினால் காலத்துக்குக் காலம் அங்கே சென்று வருவர். அன்று இலங் கையும், இந்தியாவும் ஒரே அரசின் கீழ் இருந்தமை காரண மாக இன்றைய நிலைபோன்று போக்குவரத்துக் கட்டுப்பாடு கீள் அதிகமிருக்கவில்லை. நினைத்த நேரம் சென்று வரக் கூடியதாக இருந்தது.
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் S.
சுங்கானிக் குளம் வாடியில் இருந்தவர்கள் பொருட் 1ள பல இடங்கட்கும் கொண்டு சென்று பண்டமாற்றுச் செய்பவர்களாக இருந்தனர். மாட்டு வண்டில்களை அவர்கள் பரவலாக வைத்திருந்தனர். முக்கியமாக உப்பு வியாபாரத்தில் சிறுத்து விளங்கினர்.
நெய்யக்கார வாடி அல்லது சின்னத்தெரு என்பது இரண் ாம் குறுக்குத் தெருவில் தைக்காப்பள்ளி அமைந்திருக்கும் பகுதியாகும் இங்கே புடவை நெய்வோர், சாயங்காய்ச்சு வோர், புடவைகட்கு சாயமிடுவோர், நூல் நூற்போர் போன்ற நெசவுத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட தொழில் களிலீடுபட்டோர் வாழ்ந்தனர். கண்டிப் பகுதியில் சந்தைப் படுத்துவதற்கான துணிமணிகளை உற்பத்தி செய்ததோடு உள்ளூர் தேவைகளையும் இவர்கள் பூர்த்தி செய்தனர்.
மரைக்கார் வாடி என்று குறிக்கப்படும் நிலப்பகுதியில்
இன்றைய மரைக்கார் தெரு, உடையார் ஒழுங்கை, செட் டித் தெருவின் வட, கிழக்குப் பகுதிகள் அடங்கியிருந்தன. இப்பகுதியிலிருந்த காணிகள் மரைக்காயர் மார்கள் GTIGHT"r
படும் செல்வந்தர்களுக்குரியனவாக இருந்தன. அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு ஊழியம் புரிவோரும், வேறு சிறு தொழில் புரிவோரும், வசதி பற்றோரும் குடியிருந்தனர். மரைக்காயர்மாரின் கட்டுப்பாட் டிலேயே அநேகமாக இவர்கள் வாழ்ந்தனர்.
படுக்குப் பற்று வாடி என்ற இடத்தில் படித்தவர்கள், மார்க்க அறிஞர்கள், வைத்தியர்கள் போன்றவர்கள் குடியிருந் தனர். புத்தளத்திலிருந்த ஆதித் திண்ணைப் பள்ளிக் கூட மும் அங்கேயே இருந்தது. கூறியது கூறி. நெட்டுருப் பண்ணி மண்ணில் எழுதிப் படிக்கும் கல்வி முறையே இருந்தது. கடை சியாக இப்பள்ளிக்கூட ஆசானாக இருந்தவர் "கந்தக்குப்பை அப்பா" எனப்படும் பெரியாராவர். இங்கு வசித்தவர்கள் தென்னிந்தியாவிலுள்ள படுக்குப் பற்று என்னும் ஊர்ப்பகுதி யில் இருந்து வந்தமையினால் அப்பகுதிக்கு அப்பெயர் ஏற் பட்டதெனக் கூறுவர். "பட்டுக்குப்பாயத்தார்" எனக் கூறப் படும் இறை நேசர்கள், அறிஞர்கள், மதிப்புக்குரியவர்கள் வாழ்ந்தமையினால் "பட்டுக்குப்பாயத்தார் வாடி' என அழைக்

Page 60
母正 புத்தளம் வரலாறும், மரபுகளும்
கப்பட்டு நாளடைவில் படுக்குப்பத்து வாடி என மருவியதா கவும் கூறுவர். அங்கிருந்த ஆலை அரசடிப் பள்ளிவாசல் அன்று பிரசித்தமான புனித தலமாகக் கொண்டாடப்பட்டது. அங்கே "அவுலியாக்கள்" எனப்படும் இறைநேசச் செல்வர்க களின் சமாதிகள் இருந்தன. அச்சமாதிகளில் மக்கள் கூடி "நேர்ச்சை-நிய்யத்துக்களை' செய்து பிரார்த்தனை செய் வது வழக்கமாக இருந்தது. பின்பு கட்டிடமும் அழிந்து பராமரிப்பும் குன்றியது. ஆயினும் இன்றும் வெள்ளிக்கிழமை இரவுகளில் விளக்கேற்றும் வழக்கமும், காணிக்கை போடும் பழக்கமும், கொடிகள் கட்டும் முறைகளும் நிலவுகின்றன. இப்பள்ளிவாசலின் எதிரில் "கப்படையார் குளம்' எனப் படும் குளமொன்றிருந்தது. அக்குளத்தின் கிழக்குக் கரையின் "அம்மா கபுறடி" என்றழைக்கப்படும் இறை நேசச் செல் ஒருவரின் சமாதியும் இருந்தது. இது தற்போது தனிப்பட் வீட்டாரின் காணிக்குள் அகப்பட்டுள்ளது. இன்று குளம் இருந்தமைக்கான எவ்வித அடையாளமுமின்றி வீடு வாசல் கள் நிறைந்துள்ளன. அக்குளமிருந்த இடத்தில் முன்பு முஸ் விம் பெண்கள் பாடசாலை அமைந்திருந்தது. இப்பாடசாலை மன்னார்ப் பாதைக்கு மாற்றப்பட்ட பிறகு இவ்விடத்தில் புத்தளம் நகர சபையின் நீர் விநியோகத் தாங்கிக் கோபுரம் அமைந்துள்ளது. நாலாம் குறுக்குத் தெருவும், செட்டித் தெருவின் மத்திய பகுதியும், மூன்றாம் குறுக்குத் தெருவின் வட கிழக்குப் பகுதியும் இவ்வாடியில் அடங்கின.
வலைக்கார வாடி என்பது கடற்கரையை அடுத்துள்ள மீனவர்கள் வாழ்ந்த பகுதியாகும். இவர்கள் கடற்றொழி லுடன் உப்புச் செய்கையிலும் ஈடுபட்டனர். இத்தகைய வாடி களின் பிரிவினை சமீப காலம் வரை கூட புத்தளத்தில் நில வியது. அவ்வாடிகளில் வாழ்ந்த மக்களும் வாடித் தலைவர் களின் சொற்படி கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். இவ்வாடி களிலுள்ளவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக புத்தளத் தில் வாழ்ந்த மரைக்காயர் மார்களும், முதலாளி மார்களும் விளங்கினர். வாடிகளுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைபிரச்சினைகளை அவர்கள் நீர்த்து நகரில் ஒற்றுமை நிலவச் செய்தனர். அவர்களின் தலைமைத்துவத்தை மக்களும் மதித் தனர். நல்ல, தீய காரியங்கள் எவை நடந்தாலும் அவற்றிற்குத் தலைமை தாங்குபவர்களாக இவர்கள் திகழ்ந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஒனர். இவர்களைக் கலந்து கொள்ளாமல் செய்யும் எக்காரி பங்களுக்கும் ஆதரவிருக்காது. அவைகள் புறக்கணிக்கப்படும்.
ாரைக்காயர் மாரின், முதலாளிமாரின் தலைமைத்துவத்துக்கு மக்கள் நல்ல மதிப்புக் கொடுத்தனர். அவ்வாறே அவர்களின் உதவிகளும் மக்களுக்குக் கிடைத்தன. அவர்களின் எந்த முடி வையும், தீர்ப்புக்களையும், ஆலோசனைகளையும் மறுப்புக் கூறாமல் ஏந்து கொள்ளும் மனப்பாங்கு குடிமக்களிடம் நில வியது. அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவதை மக்கள் தங்களின் கெளரவமாகக் கருதினர். தலைவர்கள் நாளாந்தம் தமது சகாக்கள் தொடர ஊர்வலம் வருவது வழக் ஈடாகக் கொண்டனர். அவ்வமயம் அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்று மரியாதை செய்யும் வழக்கமும் மக்களிடமிருந் தது. நார்வலம் வரும் நோக்கம் ஊரின் குறை, நிறைகளை அவ காணிப்பதற்காகும். அவர்களின் நிர்வாகத்தின் கீழேயே பள்ளி வாசல்கள் இருந்தன. கூட்டுத் தொழுகைகளின் முடிவில் பொது மக்களைக் கூட்டி ஆலோசனைகளையும், ஆனைகளையும், பிரச்சினைகளுக்குத் தீர்வையும் வழங்குவர். ஒவ்வொரு மரைக் காயர்மாருக்கும், முதலாளிமாருக்கும்" கணக்குப்பிள்ளை' எனப் படும் செயலாளரைப் போன்றவர்கள் இருப்பார்கள். இவர் களே பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் தொடர்பான வர்களாக விளங்கினர். இவர்கள் ஜார் நிலவரங்களை அறிந்து தம் தலைவர்களுக்கு அவ்வப்போது அறிவிப்பார்கள்.
புத்தளத்தில் வாடிகளாகப் பிரிந்த சமூக அமைப்பை நோக்கினோம். அவைகள் அங்கு வாழ்ந்த மக்களின் தொழி வின் அடிப்படையில் அமைந்திருத்ததெனலாம். இவர்கள் அனைவரும் முஸ்லிம்களே. முஸ்லிம் அல்லாதவர்களும் புத்த ாம் நகரில் புறம்பாக வாழ்ந்தனர். முஹையதீன் தர்ஹா வுக்குரிய பரந்த காணிக்கும், மெளலா மக்காம் பள்ளிவாச லுக்குரிய காணிக்கும் இடைப்பட்ட பகுதியில் செட்டிமார் சுன் வாழ்ந்தனர். இவர்கள் தென்னிந்திய பரம்பரையினர் ஆயினும் வட்டிக்கடை வைத்துத் தொழில் புரிந்த நாட்டுக் தோட்டை செட்டிமார் என வழங்கப்பட்ட சைவ சமய செட்டி மீார்களினதும் சிறிது வேறுபட்டவர்கள். இவர்கள் "கொழும் புச் செட்டிமார்" எனக் குறிக்கப்பட்டனர். இவர்கள் கிறித்து வர்களாயிருந்தனர். படித்தவர்களாகவும், அறிஞர்களாக வும், சட்டத்தரணிகளாகவும், நிலபுலன்கள் படைத்த செல்

Page 61
புத்தளம் வரலாறும், மரபுகளும்
வந்தர்களாகவும், சமு க அமைப்பில் அரசினரோடு தொடர்பு கொள்ளக்கூடிய ஆங்கில அறிவுள்ளவர்களாகவும் விளங்கினர். காசிச் செட்டி, முத்துக்குமாரு, பிறிட்டோ, றொன சறோ போன்ற குடும்பங்களின் சந்ததியினர் புத்தளத் தில் வாழ்ந்தனர். புத்தளம் மக்கள் கல்வியறிவில் பின்தங்கிய வர்களாகவும், குறிப்பாக ஆங்கிலக் கல்வி அறிவற்றவர்களா கவும் விளங்கிய காரணத்தினால் இச் செட்டிமார்களின் தய வையும் தலைமைத்துவத்தையும் நாடியே நின்றனர். புத்த ளத்தின் மரைக்காயர் மார்கள், முதலாளிமார்கள் இவர்களைத் தங்களின் வழி காட்டிகளாகக் கொண்டனர். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்தனர். புத்தளத் திவிருந்த மரைக்காயர் மார்களும், முதலாளிமார்களும் அது போல சுற்றுப் புறங்களிலுள்ள கற்பிட்டி போன்ற பகுதி களில் வசித்த பணக்காரர்களும் தங்களின் பலத்தையும் செல் விாக்கையும் கெளரவத்தையும் நிலை நாட்ட நீதிமன்றங் களில் வழக்குகளை நிறையப் பேசினர். அதற்காகப் பணத்தை வாரியிறைத்தனர். அற்ப விடயங்களுக்கெல்லாம் நீதிமன்றம் செல்வதை செல்வந்தர்கள் வழக்கமாகக் கொண்டனர். உள்ளூர் மக்களின் பூசல்களைத் தீர்த்து வைத்த இவர்கள் தங்களின் விடயத்தில் நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றங் களையும் நாடினர், இவ்விதமான வழக்கு வம்புகளிலேயே தங்களின் சொத்துக்களை அழித்து விட்ட செல்வந்தர்கள் அநேகர் இவர்களைப் போன்றவர்களுக்கு இச்செட்டிமார்கள் உதவும் தோரணையில் தூண்டுகோல்களாய் இருந்தனர். இச் செல்லாந்தர்களின் ஆதரவில் பெரும் பொருளிட்டினர். காணி உறுதிகள், கொடுக்கல் வாங்கல் உடன்படிக்கைகள், தரகர் தொழில், வட்டிக்காகப் பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய இவ்வாறான விடயங்களை இவர்களே செய்தனர். இச் செட்டி மார்களே இறுதியில் புத்தளம் நகரின் தலைமைத்துவத்தை யும் வகித்தனர். புத்தளம் உள்ளூர் சபை (Local Board) ஏற். பட்ட காலத்தில், நகரசபை ஏற்பட்ட காலத்திலும் அவர் களே சபைத் தலைவர்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. நட்புறவோடும், இசைவோடும் நடந்த காரணத்தினால் புத்தி தளம் தலைவர்கட்கும், இவர்களுக்குமிடையில் பெரும் பூசல் கள் ஏற்படவில்லை எனக் கூறலாம். எனினும் உள்ளூரில் ஒரு சில ஆங்கிலம் படித்தவர்களே தோன்றியபோது இச்செட்டி

ஸ்ேதிராஜ் ஏ. என். எம். ஷோஜஹான் 凸量
ார்களின் முக்கியத்துவமும், தலைமைத்துவமும் படிப்படி பாக மறைந்து போயின. இவர்கள் வாழ்ந்த தெருவையே செட்டித் தெரு என அழைத்தனர்.
சேவத் தமிழ் மக்கள் புத்தளத்தின் வடக்கே உப்பளத் துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையை அடுத்த குதிகளில் வாழ்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையா னோர் இன்றைய உடப்புக் கிராமத்தில் வசிப்போரின் சந்ததி பினர்களாகும். தீ மிதிப்பு என்ற அத்தியாயத்தில் இவர் ள்ைப் பற்றிய மேலும் விவரங்களை அறியலாம்.
இத்தகைய சமூக அமைப்பு புத்தளம் நகரில் மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களிலும் நிலவியது. 'தனால் ஒரு தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு தமது *சரின் நல்லுறவை-நற் பெயரைப் பாதுகாத்து வந்தனர். அடிதடி சண்டைகளோ, ஒழுக்கக் கேடான செயல்கனோ, ாணித் தகராறுகளோ, அபிப்பிராய பேதங்களோ, மார்க்கத் துக்கு முரணான செயல்களோ, அந்நிய ஊடுருவல்களோ ாதுவாயினும் அவைகள் நீதி மன்றம் செல்லாது பள்ளிவாசல் களின் மட்டத்திலேயே விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் பஞ்சா பத்து முறை போன்ற கிராமிய வழக்கம் இப்பகுதி எங்கும் நிலவியது. பள்ளிவாசலுக்கென அப்பள்ளிவாசலின் எல்லைக் குட்பட்டு வாழும் குடியானவர்கள் வசிப்பணம் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. பள்ளிவாசலின் கட்டுப்பாட்டுக்கு-நீர்ப் 'க்கு இணங்காத எவரும் நாளிலிருந்து விலக்கி வைக்கப்படு வேர். அவர்களின் எவ்வித நன்மை, தீமைகளிலும் மற்றவர்கள் Fiந்து கொள்ளக் கூடாது என்ற நீதியும் நிலவியது. குறிப் பாகக் கூறினால் அவர்களின் குடும்பத்தில் காலஞ்சென்றவர் ளைப் பள்ளிவாசல் காணியில்-பொதுவான அடக்கலத்தில் அடக்கும் உரிமையும் கூட மறுக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர் பள்ளிவாசவின் தீர்ப்புக்கு இணங்கியே நடக்க வேண்டும் என்ற நேருக்கடிக்கு உள்ளாகியே திருவார். அவர் பள்ளிவாச துடன் முரண்பட்டு வேறுரருக்கோ அன்றி வேறு பள்ளிவாசல் பகுதிக்கோ சென்றாலும், அவரைப்பற்றி அவர் சென்றுள்ள ஊர்ப் பள்ளிவாசலுக்கு அறிவித்து அவரை ஒதுக்கி வைக்கும் படி கோரப்படும். அதை அப்பள்ளிவாசலும் ஏற்றுக் கொள்

Page 62
புத்தளம் வரலாறும், மரபுகளும்
ளூம் புதிதாக ஒருவர் பள்ளிவாசலின் பகுதிக்கு வசிக்க வந் தாலும் கூட அவரைப் பற்றிய பூரண தகவல்களை அறிந்த பின்பே பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவராகக் கணிப்பர். இத்தகைய நரர் இணக்க முறை அக்கால மக்களை எவ்வளவு தூரம் அமைதியுள்ள கட்டுப்பாடுள்ள, ஒற்றுமையான சமூக வாழ்க்கையையுடைய மக்களாக வாழ உதவியுள்ளதென்பதை அறியும்போது, அக்கால கட்டத்தை, மக்களை மக்களாக வாழச் செய்த வளமான வாழ்வுக்காலம் என்று கூற முடிகின் றதல்லவா!
இதுவரை புத்தளம் நகரைப் பற்றிய பொதுவான குறிப் புக்களைக் கண்டோம். இந்நகரத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய பல செய்திகளை இந்நூலின் பல அத்தியாயங்களி லும் அங்காங்கே காணலாம்.

12- இபுனு பதூத்தாவும்,
புத்தளம் மன்னரும்
கடலோடி திரவியந்தேடும் கலையில் கைவரப் பெற்றவர் கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அறபு மக்கள். வட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். வரலாறு கண்ட காலந்தொட்டு இந்து சமுத்திரம் அவர்களின் விளையாட்டிடமாக விளங்கியது. ஆயினும் அத்லாந்திக் சமுத் திரத்தையும், பசுபிக் சமுத்திரத்தையும் அவர்களின் கப்பல் கள் விட்டு வைக்கவில்லை. கப்பலோடி புதிய உலகங்களைக் கண்டவர்கள் அவர்கள். மேற்கு நாட்டு வரலாற்றாசிரியர்களி
னால் பிரசித்தமாகியுள்ள கொலம்பஸ், வாஸ்கொடிகாமா பாத்தலொமிவ் டயஸ் போன்ற கடலோடிகளுக்கு முன்பே அறபு யாத்திரிகர்கள் உலகெங்கும் வலம் வந்தனர். மேற்
குறிப்பிட்டோர் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தங்கள் பிரயாணத்தை செய்துள்ளனர். ஆயினும் அதற்கு முன்பு ஒன் பதாம், பத்தாம் நூற்றாண்டுகளிலேயே புகழ்பெற்ற அறபு யாத்திரிகர்கள் தமது நீண்ட பிரயாணங்களைச் செய்து தம் அநுபவங்களைப் பதிந்து வைத்துள்ளார்களெனின் அவர்களின் பெருமையை என்னவென்பது அவர்களுள் சுலைமான், தாஜிர் அல் மஸஅதி, இப்னு ஷஹ்றயார், இப்னு வஹாப், இப்னு பதூத்தா ஆகியோர் நம் இலங்கை நாட்டுக்கு வந்து சென்று நம் நாட்டைப் பற்றிய அநேக செய்திகளைத் தந்துள்ள மதிப் புக்குரிய யாத்திரிகர்களாகும். அவர்களுள்ளும் இப்னு பதூத்தா அவர்கள் "இஸ்லாத்தின் மாபெரும் யாத்திரிகர்" என வர்

Page 63
புத்தளம் வரலாறும், மரபுகளும்
னிக்கப்படுகின்றார். இலங்கைக்கு விஜயம் செய்த யாத்திரி கர்களுள் இப்னு பதுTத்தா அவர்கள் மிகவும் முக்கியமான வர்களும், பிரபல்யமானவர்களுமாவார்கள். அவர்கள் இலங் கையில் வந்திறங்கிய இடம் புத்தளம் என்பதில் தாம் பெரு மையடைய முடியும். அவர்களின் ஞாபகமாக புத்தளம் கடற் கரை வீதிக்கு இபுனு பதூத்தா வீதி எனப் பெயரிடப்பட்
டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்னு பதூத்தா அவர்களின் முழுப்பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஆயினும் அவர்கள் இப்னு பதூத்தா என தமது வம்சப் பெயரினாலேயே பிரபலமாகினார் கன். மொறொக்கோ நாட்டில் "தான்ஜியர்" என்ற இடத் தில் 130கீம் ஆண்டு பெப்ருவரி மாதம் இருபத்து நான்காம் திகதி பிறந்தார்கள் எழுபத்து நான்கு வயது வரை வாழ்ந்து 1378ம் ஆண்டு மொறொக்கோ "பெஸ்" (Fez) நகரில் மறைந் தார்கள். தமது வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு காலத்தை
பிரயானத்திலேயே கழித்துள்ளார்கள். பிரவாசித்தோடும் நீரோட்டங்கள், கொதிக்கும் பாலை வனங்கள், செங்குத்
பாதைகள், முன் கண்டறியாத கொந்தளிக்கும் பயங்கரமான சமுத்திரங்கள் ஆகியவற்றுக்கும் முகங்கொடுத்து, கொள்ளை பர்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து பெரும் ஆபத்துக் கள் நிரம்பிய நம்ப முடியாத அவர்களின் பிரயாணத்தில் எழுபத்தேழாயிரத்து அறுநூற்று நாற்பது மைல்களை இப்னு பதூத்தா கடந்து சென்றுள்ளார்களெனின் அவர்களின் மாபெ ரும் சாதனையையும், துணிகரமிக்க அஞ்சா நெஞ்சத்தையும், "துணிந்த பின் மனமே துயரங்கொள்ளாதே" என்ற தத்து வத்தையும் கண்டு வியந்து நிற்கின்றோம் அவர்களை மதிக் கின்றோம். அல்வாஹ" தலோ அவர்கட்கு தன் அருள்மாரி யைச் சொரிவானாக. சகல கலா வல்லுனர், கல்விமான், மார்க்க விற்பன்னர், வீரமிக்கப் போராளி, சிறந்த மாலுமி, புனித யாத்திரைக்காரர், அரசியல்வாதி, நீதிபதி, வரலாற் றாசிரியர், புவியியலாளர், சட்ட நிபுனர் பக்தர், துணிகரச் செயல்வீரர் என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் அவர் களைக் காணமுடியும். மொறொக்கோ சுல்தான் அபூ இனான் மரீனி என்பவரின் பிரதம செயலாளராக இருந்த அபூ அப் துல்லாஹ் முஹம்மதி என்ற பெயருடைய இப்னு ஜ"ஸாயி
தான மலைக் கணவாய்கள், புழுதி படிந்த கரடு နှီ###
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் SS
அவர்களுக்கு இப்னு பதூத்தா அவர்கள் தமது குறிப்புக்களை யும், ஞாபகங்களையும், அனுபவங்களையும் சொல்ல இப்னு ஜ"ஸாயி பிரயான நூலை 13:55, 12. 09ம் திகதி எழுதி முடித்தார்கள். அந்நூல் "ரெஹ்லா" என சுருக்கமாகக் குறிப் பிடப்பட்டாலும் "துற்பத்துன் நுழ்ழார் பீ ஒறாயிபில் அம் ஸார் வ அஜாயிபில் அஸ்பார்" என்பதே அதன் முழுப் பெய ராகும். "வரலாற்றுச் சுரங்கம்" என இது வர்ணிக்கப்படுகின் றது. "பிரயாணங்களின் அதிசயங்களையும், நகரங்களின் அற் புதங்களையும் பற்றிய வாசகர்களுக்கான தலை சிறந்த நூல்" என இதைக் கூறலாம்.
1325-06-14ம் திகதி தமது இருபத்தோராவது வயதில் பிரயாணத்தை ஆரம்பித்த அவர்களின் நோக்கம் இஸ்லாமிய நாடுகளையும், அங்குள்ள புனித தலங்களையும், பெரிபார் களையும் பற்றி நேர்முகமாகத் தரிசித்து அறிந்து கொள்வ தாகவே இருந்தது என்று கொள்ளலாம். இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையிலுள்ள பாவா ஆதம் மலையின் புனிதத்தன்மையைப் பற்றி அரேபியர்கள் நன்கு அறிந்திருந்ததுடன் அதைத் தரிசித்துச் செல்வதையும் வழக்க மாகக் கொண்டிருந்தனர். இப்னு பதூத்தா அவர்களும் நபி ஆதம் (அலை) அவர்களின் அடிச்சுவடு பதிந்த மலையைத்
தரிசிக்க ஆவல் கொண்டே இலங்கை வந்தார்கள் எனத் தெரிகின்றது.
எகிப்து, பலஸ்தீன், ரியூனிஸியா, சீரியா, அரேபியா,
ஈராக், ஈரான், துருக்கி, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின் இந்தியாவை அடைந்த இப்னு பதூத்தா அவர்கள் டில்லியிலிருந்த முஸ்லிம் அரசவையில் பல
பொறுப்பான பதவிகளை வகித்தார்கள். பின்பு "தீபத் துல் மஹால்" எனக் குறிப்பிட்டுள்ள மஹல்லதீவு எனப்படும்
மாலைதீவுக்குச் சென்றார்கள். அங்கு ஒன்றரை வருடம் தங்கி விட்டு இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் நமது நாட்டுக்குத் தமது பரிவாரங்களுடன் விஜயம் செய்தார்கள்.
1845-09-12ம் திகதியன்று மாவதீைவிலிருந்து புறப்பட்ட பதுரத்தா அவர்கள் ஒன்பது தினத்துக்குப் பின்பு 1343-09-21ம் திகதி புத்தளம் துறைமுகத்தை அடைந்தார்கள். ஆகாயத்தி

Page 64
புத்தனம் வரலாறும், மரபுகளும்
salut - DTsang தீவுகள் மாலைத தீவுகள - இலங்கை இஸ்ங்க ைக - Lu> IT Lu Tipo
4 DT Lu rTJT - LAñ‘4 i iTyg
UD TÜLTü - üstan195 ****TT
புெனு புதாதாவின் பிரயாணம்
--- =ال
!--
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஜாடே புகைத் தம்பம் போன்று சொந்தீப் மலை (பாவாதி மலை) எழுவதைக் கண்ணுற்றதாகக் குறிப்பிடுகின்றார்கள். புத்தளத்தை அவர்கள் "பத்தள" எனக் குறிப்பிடுகின்றார் கள். இத்துறைமுகம் இந்நாட்டின் அரசனுக்குட்படாது புத்த ளேம் ஆரிய சக்கரவர்த்தியின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்ததெனவும், அவ்வரசன் கடற்கொள்ளைகளில் ஈடுபடும் கோடுங்கோலன் எனத் தான் கேள்விப்பட்டதாக தனது கப் பற்றளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் இபுனு பதூத்தா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் இது தவறான தகவலாகத் தெரிகிறது. இபுனு பதூத்தா அவர்கள் தனது தளபதியை சாந்தப்படுத்தி தன்னைக் கரையில் இறக்கி விடுமாறும் தான் மன்னரைக் கண்டு அவரிடமிருந்து பாது காப்புப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்கள். கீரை பிறங்கிய பதூத்தாவைக் கண்ட இங்குள்ள குடிமக்கள் அவ ரைப் பார்த்து நீர் யார்?" என வினவ தான் "மஅபார் மன் னரின் * சகலப்பாடி எனவும், அவரது நண்பரெனவும் புத்த ளம் மன்னரைச் சந்திக்க வந்ததாகவும் பதூத்தா அவர்கள் தெரிவித்தார்கள். குடிமக்கள் இச்செய்தியை மன்னரிடம் சென்று உரைத்து, மன்னரின் அனுமதியுடன் பதூத்தாவை அரசவைக்கு அழைத்துச் சென்றனர். *
"நான் சுல்தான் ஆரிய சக்கரவர்த்தியின் சமுகஞ்சென்ற போது அவர் எழுந்து வரவேற்று என்னைத் தன்னருகில் இருக்கச் செய்து இன்மொழி பகன்றார். “உமது தோழர்கள் பாதுகாப்புடன் இங்கு இறங்கலாம். அவர்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும் வரைக்கும் எனது விருந்தாளிகளாக இருப் பார்கள். ஏனெனில் நானும், மதுபார் சுல்தானும் நண்பர் கன்" என மன்னர் கூறினார். எனக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்குமாறு பணித்தார். அங்கே தினம் தினம்
* மதுரையிலிருந்து அரசாண்ட சுல்தான் கியாள"த் தீன் அவர்களும், இபுனு பதூத்தா அவர்களும் சுல் தான் ஷரீப் ஜலாலுத்தீன் அஹ்ஸன் ஷா அவர்க வின் புத்திரிகளை திருமணஞ் செய்தவர்களாவார் கள், 4

Page 65
புத்தளம் வரலாறும், மரபுகளும்
பெருகி வரும் உபசரிப்புடன் மூன்று நாள் தங்கினேன். மன் னருக்கு பாரசீக மொழி தெரிந்திருந்தது. ஏனைய நாடு களைப் பற்றியும், ஆங்குள்ள அரசர்களைப் பற்றியும் நான் கூறிய செய்திகளைக் கேட்டு மன்னன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்." இவ்வாறு தமது பிரயாண நூலில் இபுனு பதாத்தா குறிப்பிட்டுள்ளார்கள், 4
ஆரியச் சக்கரவர்த்தியின் தலைநகரான புத்தளம் அழ கிய சிறு நகரமென்றும், மரத்தாலான மதில்களும், கோபு ரங்களும் அதைச் சூழவுள்ளனவென்றும், அந்நகரின் கடற் கரையோரங்களில் கறுவா மலைபோல குவித்து வைக்கப்பட் டிருந்ததெனவும், மதுபாரிலிருந்தும், மலபாரிலிருந்தும் வரும் வணிகர்கள் இதைப்பெற்று அதற்குப் பகரமாக உடையும், அதைப்போன்ற வேறு பொருட்களையும் அரசருக்கு அளிப் பார்களென்றும் இபுனு பதூத்தா அவர்கள் குறித்துள்ளார் ஆன். சி
'ம'அபார்" அல்லது "மாபிர்' என்பது "மிஃபர்" என்ற அற பிச் சொல்லின் திரிபாகும். பாதை, வழி, மார்க்கம் என் பது இதன் பொருளாகும். பண்டுதொட்டு அறபிகள் சோழ மண்டலக் கரையை அதாவது தென்னிந்தியாவின் கிழக்கு கீரையை இவ்வாறே அழைத்தனர். இக் கரை இலங்கைக்கு மிக அண்மையில் அமைந்திருந்தது. இலங்கைக்கும், திTதி கிழக்கு, மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையில் கப்பல் போக் குவரத்துக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததன் காரணத்த லும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் செல்லும் மத்தி வழியாகவும், பிரயாணத்துக்குச் செளகரியமானதாகவும் இரு தீமையாலும் "மஅபார்" என்ற பெயர் ஏற்படலாயிற்று. ம பார் முடிவதும், "மஆபார்" தொடங்குவதும் குமரிமுனை விருந்து என 'அபுல் பிதா" என்ற வரலாற்றாசிரியர் தெரி விக்கின்றார். 18 மலபார் என்பது தென்னிந்தியாவின் மேற் குக் கீரைக்கு அராபியர்கள் வைத்த பெயராகும். முன்னை பெயர் கேரளம் என்பதாகும். மலை என்ற தமிழ்ப் பதத்தி னின்றும் தோன்றிய இப்பெயர் "பார்' என்ற அறபி அல் லது பாரசீகச் சொல்லுடனிணைந்தது. "பார்" என்பது அற பியில் பெரு நிலப்பரப்பையும் பாரசீக மொழியில் நாட்ை யும் குறிக்கும். "மலைபார்" என்ற சொல் நாளடைவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் ህ E
மலபார்" என்றாகியது. " மனலநாடு என்பது அதன் பொரு ளாகும். இலங்கையில் வாழ்ந்த தென்னிந்திய மக்களை மசு பாரிலிருந்து வந்தவர்களாயிலும், மலபாரிலிருந்து வந்தவர்க னாயினும் அனைவரையும் மலபாரிகளென்றே எழுதி வைத்
துள்ளனர் வரலாற்றாசிரியர்கள்.
தான் மதுபாரில் இருந்தபோது ஆரியச் சக்கரவர்த்தி என்று இம்மன்னனின் பெரியவையும், சிறியவையுமான கப் பங்கள் நூறுவரை அங்கு வந்திருப்பதைக் கண்டதாகவும், அவர் கடலில் வலிமையுடையவராக விளங்கியதாகவும் இபுனு பதுரத்தா அவர்கள் விளம்புகிறார்கள். புத்தளம் துறைமுகத் தில் சுல்தானின் கப்பல்கள் எட்டு நங்கூரமிட்டு பொருட் களை ஏற்றிக்கொண்டு யெமன் நாட்டுக்குச் செல்வதற்குத் தயாராக நின்றமை பற்றியும் பதூத்தா அவர்கள் கூறியுள் ாார்கள். இபுனு பதூத்தா பாவாத மலையைத் தரிசிக்கும் தனது ஒரே விருப்பத்தை மன்னருக்குக் கூறினார்கள். p៨r னர் அதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். காவிச் செல்வோருடன் பல்லக்கையும், யோகிகள் நால்வரை பும், உணவுப் பொருட்களைத் தூக்கிச் செல்ல மேலும் பதினைந்து பேரையும் கொடுத்துதவினார் மன்னர், இபுனு பதூத்தா அவர்கள் தம் பரிவாரங்களுடன் புத்தளத்திலிருந்து தெற்கு நோக்கிச் சென்று சிலாபத்தை அடைந்து அங்கிருந்து அன்று சிங்கள மன்னரின் இராசதானியாக இருந்த குருநா ாலை அடைந்தார்கள். அங்கிருந்து பாவாத மலுைக்குச் சென்று உச்சியிலிருந்த பாதச் சுவட்டைத் தரிசித்த பின்பு தெற்குப் புறமாக கீழிறங்கி தேவந்துறைக்கூடாக காலியை அடைந்தார். அங்கிருந்து கொழும்பு சென்று 1845-10-17ம் திகதி மீண்டும் புத்தளத்தை இபுனு பதுரத்தா அவர்கள் வந் தடைந்தார்கள். கொழும்பிவிருந்து புத்தளத்தை வந்தடைய முன்று நாள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு மன்ன பீடம் சென்று விடைபெற்ற பின் தென்னிந்தியாவுக்குப் பிர யானமாகினார் இபுனு பதூத்தா அவர்கள். புத்தளமிருந்து புறப்பட்டு இருபத்து நான்கு நாள் பிரயாணத்தின் பின்பு மீண்டும் புத்தளம் வரும்வரை தான் கண்ட காட்சிகளையும்
அடைந்த அனுபவங்களையும், சந்தித்த பெரியார்களையும் , இடங்களின் விபரங்களையும் விபரமாக, அழகாக சுவைபட விவரித்து இபுனு பதுரத்தா அவர்கள் தமது நூலில் விளக்கி

Page 66
Ա புத்தளம் வரலாறும், மரபுகளும்
யிருப்பது குறிப்பிடத்தக்கது. பதுரத்தா அவர்களின் குறிப் பின்படி புத்தளம் நகரத்தின் செல்வாக்கையும், பிரதானத் துவத்தையும், துறைமுகத்தின் முக்கியத்துவத்தையும், மன்ன ரின் தன்னாதிக்கத்தையும், அவரின் பிறமொழியறிவையும், பிறநாட்டுத் தொடர்புகளையும், பொருளாதாரச் சிறப்பினை யும், விருந்தோம்பும் பண்பையும் வெகுவாகத் தெரிந்துகொள் கின்றோம்.
இபுனு பதூத்தா அவர்கள் சந்தித்த புத்தளத்திலிருந்த ஆரிய சக்கரவர்த்தி என்ற மன்னர் பார் என்பதை இனிக் காண்போம். யாழ்ப்பாண அரசில் முன்பு ஆரியசக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் இருந்துள்ளனர். எனினும் புத்தளத்திலிருந்த மன்னரும் ஆரிய சச்கரவர்த்தி என அழைக்கப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பான அரசுக்குக் கீழ்பட்ட ஒருவரா என்பதில் ஐயப்பாடுகள் எழுகின்றன. இபுனு பதூத்தா அவர்களின் குறிப்பின்படி இம்மன்னர் இ நாட்டு மன்னருக்கு உட்பட்டவராக இருக்கவில்லை. மாறாக தன்னாதிக்கமுள்ள மன்னராக இருந்துள்ளார். 1987-8-17ம் திகதியைக் கொண்ட த சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகை யில் மொரீன்" என்பவர் எழுதியுள்ள பூரீ பாதமலை என்ற மகுடமுள்ள கட்டுரையில் புத்தளம் மன்னரை குறு நில மன் னன் என்றே குறிப்பிடுகின்றார். ? ஆரியசக்கரவர்த்தி என்ற
பெயரை வீர விருதுப் பெயராக அளிக்கும் முறை தமிழ் நாட்டில் இருந்ததென்பதற்கு ஆதாரமுள்ளது. "'.பாண்டி யன் குலசேகரனது தண்ட நாயகனாகிய சோனக மைந்த ஒருவர் கி. பி. 1288ல் ஈழத்தின் மீது படையெடுத்து
சென்று மூன்றாவது பராக்கிரமபாகுவைத் தோல்வியுற செய்து வலிமை வாய்ந்த சுபசிரிக் கோட்டையைச் சிதைத்து
வர்த்தி" என வீர விருதால் வழங்கப்பட்டுள்ளார். முஸ்லிம் வணிகர்கள் சமாந்தர் என அழைக்கப்பட்டனர். 1 ஆசிய சக்கரவர்த்தி என வீர விருதுபெற்ற சோனக சாமந் ரைப் பற்றி மேலும் பின்வரும் குறிப்பு நமக்கு விளக்குகி தது: "கி. பி. 1284ம் ஆண்டில் முதலாம் மாறவர்மன் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தளம் வரலாறும் மரபுகளும் Ձվ
சேகரன் இலங்கைக்குப் படையனுப்பி மூன்றாம் பராக்கிரம பாகுவை தோற்கச் செய்து அந்நாட்டை வெற்றி கொண் டான் என வரலாறு கூறுகிறது.அந்தப் பாண்டிய நாட்டுக் கடற் படைக்குத்தலைமைத் தளபதியாகச் சென்றவர் தக்யுத்தீன் அப் துர் ரஹ்மானே." 33 குலசேகர பாண்டியனின் தண்ட நாய சுனாகிய ஆரியசக்கரவர்த்தி தக்கியுத்தீன் அப்துர் ரஹ்மான் போரில் பெற்ற வெற்றிக்காக அன்றைய சம்பிரதாயப்படி புத்தளம் நிலப்பிரதேசங்கள் அவருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கக் கூடும். அவரோ அன்றி அவரின் வழித் தோன்றல்களோ ஆரியசக்கரவர்த்தி என்ற பெயருடன் இபுனு பதூத்தா புத்தளம் நகரை வந்தடைந்தபோது ஆதிக் கஞ் செலுத்தியிருக்கலாம். மேலும் இபுனு பதூத்தா அவர் களின் குறிப்பின்படி புத்தளத்திலிருந்த ஆரியசக்கரவர்த்திக்கு பாரசீக மொழி தெரிந்திருக்கின்றது. மேலே குறிப்பிட்ட ஆரியசக்கரவர்த்தி தக்கியுத்தீன் அப்துர் ரஹ்மான் அவர் கிள் பாரசீக நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் கொண்டு பார்க்கும்போது புத்தளத்தை அரசாண்ட அவருக்கோ, அவ ரின் வாரிசுக்கோ பாரசீக மொழி தெரிந்திருந்ததில் வியப்பே துமில்லை. "பாரசீக நாட்டின் ஒரு பகுதியான கைஸ்" பகுதியை மலிக்குல் இஸ்லாம் ஜலாலுத்தீன் என்பவர் அர சாண்டு வந்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த காயல் பட்ட னத்துடன் அந்த மன்னருக்கு வர்த்தகத் தொடர்புகள் இருந் தன. காயல் நகரில் கைஸ் அரசருக்கு Lissat L4 orrsN SVILS இருந்தது. இவற்றை மேற்பார்க்கவும் மேலும் ஏற்றுமதி, இறக்குமதிகளைக் கவனிக்கவும் மன்னர் ஜலாலுத்தீன் தமது சகோதரரான தக்கியுத்தின் அப்துர் ரகுமான் என்பவரைத் தமது பிரதிநிதியாக காயல் நகருக்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டு யாத்திரீகர்கள் இவரை "மர்ஸ்பான்" (எல்லைப் புற ஆளுநர்) எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்." 19 இதிலி ருந்து ஆரியசக்கரவர்த்தி தக்கியுத்தீன் அவர்கள் பாரசீக நாட்டின் அரச பரம்பரையினர் என்பது பெறப்படும். இங்கு குறிப்பிட்டுள்ள காயல் என்பது காயல் பட்டணம் அன்று. அது கீழக்கரையே என பல ஆதாரங்களின்மூலம் இப்போது நிறுவப் ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கீழக்கரையையே தலைநக ராகக் கொண்டு சுல்தான் தக்கியுத்தீன் அவர்கள் தமது அர சாட்சியை நடாத்தியுள்ளார்கள்.

Page 67
Գի அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
புத்தளத்திலிருந்து ஆரிய சக்கரவர்த்தியுடன் தான் கலந் துரையாடியது பற்றி இபுனு பதூத்தா தமது பிரயான நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"ஒரு நாள் நான் அவரிடம் சென்றபோது அவரது இராச்சியத்திலுள்ள முத்துக் குளிப்பிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான முத்துக்கள் அவரின் முன்னே குவிக் கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து சிறந்த முத்துக்களைப் பொறுக்குவதில் அரசரின் வேலையாட்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். "வரும்போது வேறு நாடுகளில் நீர் முத்துக் குளிப்பைக் கண்டிருக்கிறீரா?" என அவர் என் னிடம் விசாரித்தார். "ஆம், இபுனு ஸ்வாம்விக்குச் சொந்த மான அவற்றை கைவிலும், குயஸ் தீவுகளிலும் கண்டேன்! என்றேன். "நான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் என்றார் அரசர். பின்பு குவியலிலிருந்து சில முத்துக்களைப் பொறுக்கி, "நீர் அத்தீவுகளில் பார்த்த முத்துக்கள் இம்மா திரியானதா?" என வினவினார். "நான் பார்த்த முத்துக்கள் இம்முத்துக்களைவிட தரத்தில் குறைந்தவை" என விடை யளித்தேன். அரசர் மனமகிழ்ந்து, "இம்முத்துக்கள் உமக்கே உரித்தாகட்டும்; நீர் வெட்கப்பட வேண்டாம்: உமக்குத் தேவையானவற்றை என்னிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார். ' 4 மேற்கண்ட உரை பாடலில் ஆரிய சக்கரவர்த்தி தக்கியுத்தீனின் சொந்த ஊரும் அங்கு விளைந்த முத்தும் பேசப்பட்டிருப்பது உளன்றி உண ரத்தக்கது. புத்தளத்திலிருந்த ஆரியசக்கரவர்த்தியின் இயற் பெயரை இபுனு பதூத்தா அவர்கள் குறிப்பிடாது விட்டுள் ளமை எமது துரதிர்ஷ்டமாகும். ஆயினும் "இபுனு பதூத்தா வின் பிரயாணங்கள்" என்ற நூலை எழுதிய சாமுவேல் லீ அவர்களின் கூற்றுப்படி, (The Travels of Ibn Batuta, P. 186) இபுனு பதூத்தாவின் புத்தள விஜயத்தின்போது அங்கிருந்த மன்னனின் பெயர் "தலம் அகாலி ராஜா" (DBtam Agali Raja) என அறிய முடிகிறது. இவரின் பெயர் இலங்கை அரசர்களின் வரிசைப்பட்டியலொன்றில் இடம் பெற்றுமுள்ளது. 1327ம் ஆண்டிலிருந்து 1347 வரை இவர் அரசாட்சி செய்துள்ளார். இந்தியாவில் டில்லியிலிருந்து அர சாண்ட சுல்தான் முஹம்மத் பின் துக்ளக் அவர்களின் சம
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தளம் வரலாறும், மரபுகளும் ፵ዕ
காலத்தவர் இவர், துக்ளக்கின் ஆட்சிக்காலம் 1825லிருந்து 1351 வரையிலாகும். இபுனு பதூத்தா குருநாகலுக்கு விஜயம் செய்தபோது ஐந்தாம் விஜயபாகு மன்னன் அங்கிருந்து ஆட்சி செய்ததாக "டெனன்ட்" என்ற வரலாற்றாசிரியர் கணிக்கின் ாார். " நான்காம் புவனேகபாகு என்பவன் அவ்வமயம் அர சனாயிருந்தான் என்றும் பாடபேதமுள்ளது. 2 முன்பு இலங்கை ஒன்பது இராச்சியங்களை உள்ளடக்கியிருந்ததாக ரொபர்ட் நொக்ஸ் தமது "இலங்கை வரலாற்றுறவுகள்" என் னும் நூலில் தெரிவிப்பதையும் மனதில் கொண்டு புத்தளப் பகுதியும் அவற்றுளொன்றாக இருக்கலாம் என ஊகிக்கத் தோன்றுகின்றது.
தக்கியுத்தீன் அப்துர் றஹ்மான் அவர்கள் அன்று பாண் டிய நாட்டில் அரசாண்ட மன்னர்கள் அறுவரில் ஆறாவது பாண்டியனாகக் கருதப்பட்டார்கள். 19
சுல்தான் தக்கியுத்தின் அவர்கள் சிறந்த போர் வீரராக வும், படைத்தளபதியாகவும், பாண்டிய மன்னரவையின் அமைச்சராகவும், நிர்வாகத் திறன் படைத்தவரகசுவும் விளங் கியதன் காரணமாக பாண்டிய நாட்டின் கடலாதிக்கம் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாண்டிய மன்னரின் அன் புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரித்தான அவருக்குத் தனது மகளையே பாண்டிய மன்னர் மணஞ்செய்து கொடுத்து தக்கியுத்தீனை தன் அரச குடும்பத்துடன் இணைத்துக் கொண்ட வரலாற்று நிகழ்வை எட்டையபுரம் உமறு கத்தாப் புலவர் பாடிய "செய்தக் காதிறு மரக்காயர் திருமண வாழ்த்து என்னும் நூலிலே வரும் நானூற்று நாற்பத்தெட்டு பாடல் களில் பின்வரும் பாடல்கள் உறுதிசெய்கின்றன:
மை வருக்கஞ் சூழ்சோலை மாமதுரைப் பாண்டியர்கள் ஐவருக்கு மாறாக ஆறாம்பேர் கொண்ட பிரான்.
நில மகளுஞ் சயமகளும் நிற்ப வழுதி செல்வக் குல மகளைக் கைப்பிடித்துக் கொண்ட மணவாளன்,
மாறடங்கார் போற்றும் வழுதி மனையாட்டி வீறடங்க வேலைக்கு வேல் கொண்ட தாட்டீகன்.

Page 68
Q7 அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
விருப்பினானலங்காதம் மீனவன் பெண் வீடு மட்டுங் கருப்பினால் பந்தளிட்டுக் கல்யாணம் செய்தபிரான்.
இலங்கைக்கு படை நடாத்தி அந்நாட்டு
வெற்றி கொண்டு ஆரிய சக்கரவர்த்தியை அரசமர்த்திய சுல்
தான் தக்கியுத்தீனின் சிறப்பைக் குறித்து,
"வாரிதனிலேறியந்த வங்கம் விட்டிலங்கை பிடித் தாரியனை மிக்காயரியாசனத்தில் வைத்தோன்"
எனத் தெரிவிக்கின்றது. வடமேற்குக் கரையிலே அவரின்
ஆதிக்கம் இருந்தமைக்கு ஆதரவாக கீழ்வரும் பாடல் மேலும் வலுவூட்டுகின்றது:
எண்டிசையும் போற்றுமிரதக் கிணறுடனே தண்டரள வாரிச் சலாபத் துறையுமுள்ளோன்.
மேலும் அவரின் அரசாட்சிக்குரிய பகுதிகளைக் கூறவந்த புலவர்,
தென் மண்டலமுஞ் செழித்த செம்பி நன்னாடும் பொன் மண்டலமும் புரக்குந்துரைப் பெருமான்
எனவும்,
சொன்னாடும் பொன்னாடுஞ் சோணாடும் மேனாடும் எந்நாடுங் கொண்ட இறைவன் வச்ர நன்னாடன்
என்றும் கூறுகின்றார். தமிழ் நாட்டின் தென் பகுதியையும், கீழக்கரையை அண்டியுள்ள செம்பி நாட்டையும் குறிப்பிட்டு விட்டு பொன்மண்டலமென்றும், பொன்னாடு என்றும் குறிப்
பிட்டது வடமேற்குக் கரையிலுள்ள பொன் பரப்பிப் பிர தேசமே என்று கொள்ளலாமல்லவா இதிலிருந்து சுல்தான் தக்கியுத்தீனின் ஆதிக்கம் பாண்டிய நாட்டில் மட்டுமன்றி இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்திலும் பரவியிருந்த மையை அறியக் கூடியதாகவுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த முக்குவருக்கு உதவி, அவர்களின் பகைவர்களை அடக்கி அவர்களுக்கு வாழ்வளித்த செய்தியை கீழ்வரும் செய்யுள்
செப்புகிறது:
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
வெல் வீரர் மேவலரை விறடக்கி முக்குவர்க்கு நல் வீர மும்மூக்கும் நாக்கும் படைத்த பிரான்
இச்சந்தர்ப்பத்தில் புத்தளத்தில் முக்குவர்க்கும், கரையா ருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் முக்குவர்க்கு முஸ் லிம்கள் உதவியாகப் போர் புரிந்து முக்குவரின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்த செய்தியை இணைத்து நோக்கி உன ாத் தக்கது.
மட்டில்லா நானூறு வாசிக்கு மார்பேற்ற செட்டிகளையன்று சிறை மீட்ட புண்ணியவான் செட்டி சிறைமீட்டுத் தென்னிலங்கை தன்னிலுங்கோ முட்டி சிறைமீட்டு மூவுலகும் பேர் படைத்தோன்
என்னும் செய்யுட்களிலும் தக்கிபுத்தீன் அவர்கள் இலங் சிகாபுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமை புலப்படு கின்றது. தக்கியுத்தீனின் வழித்தோன்றலே வள்ளல் சீதக் நாதி என்ற ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
"மீனைக் கொடிப் புலியை வில்லை வென்று மேவலர்கள் சேனைத் திரள் முறிக்குஞ் சிங்கிக் கொடி வேந்தன்'
ான்ற செய்யுள் மூலம் சுல்தான் அவர்களின் கொடி சிங்கக் கொடியாகவிருந்ததென்பதைக் காண்கின்றோம். அறபு வணி ார்கள் கூட தங்களின் காலங்களில் சிவப்புச் சிங்கக் கொடி களையே ஏற்றி வந்துள்ளனர் என்பது வரலாறாகும். "சிங்கக் கொடி ஓர் அரேபிய அன்பளிப்பு" எனக்கூறி இக்கருத்துக்கு ஒரு மரபு வரலாறையும் எஸ். ஈ. என். நிக்கலஸ் என்ற
ஆசிரியர் விதந்துரைப்பது குறிப்பிடக்கூடியது. *
எனவே புத்தளத்திலிருந்து அரசாண்ட மன்னர் முஸ்லிம் என்பதும், அவர் பாரசீக அரச வம்சத்துள் வந்த பாண்டிய அரசருள் ஒருவராகவோ அன்றி அவரின் வழித்தோன்றலாகவோ
இருக்கலாம் என்பதும் ஆய்வுக்குரியதாம்.

Page 69
புத்தளம் வரலாறும், மரபுகளும்
மேலும் இபுனு பதூத்தா அவர்களின் குறிப்பின்படி இப் பிரதேசத்தில் செய்க் அபூ அப்துல்லாஹ் பின் கபீப் (Khaft) என்னும் பெயரைக் கொண்ட இறைநேசச் செல்வர் ஒருவர் வாழ்ந்துள்ளார்கள். அவர்களே பாவாத மலைக்குச் செல்லும் பாதையை முதலில் திறந்தவர்கள் என பதூத்தா கூறுகின் றார். மகான் கபீப் அவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந் வர்கள். பாரசீகம் முழுவதற்கும் சமயத் தலைவராகத் திசழ்ந் துள்ளார்கள். அவர்களின் சமாதி இலங்கையிலிருப்பதாக வர லாற்றாசிரியர்கள் சிலர் முடிவுக்கு வருகின்றனர். வேறு சில ரின் கூற்றுப்படி அவர்களின் சமாதி பாரசீக நாட்டிலுள்ள சிராஸ் நகரில் இருப்பதாகவும், பாரசீகர் அவர்களைத் தங்க ளின் செய்க் என அழைத்து மதிப்பதோடு அவர்களின் சமா தியை காலையிலும், மாலையிலும் தரிசித்து மரியாதை செய் கின்றதாகவும் தெரிகின்றது. கி. பி. 918இல் (ஹிஜ்ரி 337) அவர் ஈஸ் இலங்கை வந்துள்ளார்கள், 117 வயதுவரை வாழ்ந் 22-3-982ல் மறைந்துள்ளார்கள். அவரைப்பற்றி அற்புதமான வரலாறு உள்ளூர் மக்களுக்கிடையில் வழங்கி வந்ததாக இபுனு பதூத்தா குறிப்பிடுகின்றார். அம் மகான் ஒருமுறை பக்கீர் மார்கள் முப்பது பேருடன் பாவாதமலைக்குச் செல்லும் போது பாதை தவறி அல்லலுற்று பசியால் வாடும் நிலைமை ஏற்பட்டது. பக்கீர்கள் அம்மகானிடம் யானைக் குட்டியொன் றைப் பிடிப்பதற்கு அனுமதி கோரினர். அம்மகான் அதற்கு உடன்படவில்லையெனினும், பக்கீர்கள் அதை அலட்சியம் செய்து பசிக் கொடுமை காரணமாக அவர்கள் နှီးနှံ குட்டியொன்றைப் பிடித்து அறுத்துச் சாப்பிட்டனராம். மகா னவர்கள் அதைச் சாப்பிட மறுத்து விட்டார்கள். அன்றிரவு யாவரும் நித்திரை செய்யும் வேளை யானைக் கூட்டமொன்று
வந்து ஒவ்வொருவரையும் மோப்பம் பிடித்துப் பார்த்து யானை இறைச்சியை உண்ட அனைவரையும் அடித்து மிதித் துக் கொன்று விட்டதாம். மகானை மோப்பம் Li TriA
கொம்பன் யானையொன்று அவரைத் தூக்கித் தன் முதுகில் ஏற்றி வைத்து குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள ஊரார் முன்னிலையில் அம்மகானை தரையில் இறக்கிவிட்டு அவர்கள் முன் சாஷ்டாங்கமாகப் பணிந்து வணங்கிவிட்டு காட்டுக்குச் சென்றது. அங்குள்ளார் முஸ்லிம்களை மிகவும் வெறுத்து அவர்களைத் தம்முடன் அண்டவிடாது அநியாயங்கள் புரிந்து
 
 
 
 
 
 
 

வ்ேஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
பந்த நிரீஸ்வரவாதிகளாகும். அவர்கள் இவ்வற்புதத்தைக்
கண்டு பயபக்தியுடன் அம்மகானை அரசனிடம் அழைத்துச் சென்று நடந்த விடயங்களைக் கூறினர். அரசனும் அவரை ாரியானது செய்து கெளரவித்தான். அம்மகான் அவ்வூர் மக் களுக்கிடையில் சில காலம் தங்கியிருந்தார்கள். அவ்வூரார் தமது பெரிய ஷெய்க்" என அழைத்து அம்மகானைக் கொண்டாடி னர். மூங்கில் ஆறு எனப்பட்ட ஆற்றங்கரைக் கிராமத்தில் அம்மகான் வாழ்ந்தார்கள். அதன் பக்கத்தில் முத்துக்குளிக்கு மிடமொன்றும் இருந்தது. ஒரு நாள் அரசன் முன்னிலையில் அம்மகான் கடலில் மூழ்கி இரு கையையும் மூடிக்கொண்டு மேலெழுந்து எக்கையிலுள்ளதை நீர் விரும்புகிறீர் என அரச னிடம் கேட்க, அரசன் வலக்கையைச் சுட்டினார். அதிலே விலைமதிக்க முடியாத மூன்று இரத்தினக் கற்களிருந்தன. அவற்றை அம்மகான் அரசனுக்குக் கொடுத்தார். அம்மூன்று இரத்தினங்களும் அரசரின் அரச முடியில் பதிக்கப்பட்டு பரம் பரையாக அணியப்பட்டு வந்துள்ளது. இம்மகானின் அற்பு தத்தினால் இப்பகுதியில் அபரிமிதமாக வாழ்ந்து வந்த யானை கள் அன்றுமுதல் பிரயாணிகட்கு எவ்வித இடையூறும் செய்
தில்லையாம். 4
இதிலிருந்தும் புத்தளம் பகுதியில் பாரசீகரின் செல்வாக்கு இருந்தமையைப் புரிந்து கொள்ளலாம்.

Page 70
13. கற்பிட்டிக் குடா
"புத்தளத்தின் கடல் வாசல்" என்று கற்பிட்டியை Galer லாற்றாசிரியர்கள் வர்ணிப்பர். கடற்கோள்கள் பற்றி முன் னொரு அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. குதிரைமலைப் பகுதியுடன் இணைந்து கற்பிட்டிக் குடாநாடு ஒரே தரைப் பாகமாக இருந்துள்ளது என்பது தெளிவு. கடற்கோளின் பின்பு அத்தரைப் பாகத்திலிருந்த உயர்ந்த பகுதிகள் தீவு களாகவும், குடாப் பிரதேசங்களாகவும் எஞ்சி நின்றன. அன்று உயர்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகவே கற்பிட்டியும் இருந்திருத்தல் வேண்டும். அதனாலேயே இதற்கு அப்பெய ரும் வந்தது எனலாம். புட்டி என்பது திடரைக் குறிக்கும். அதையே பிட்டி என்று கூறுகின்றனர். முருகைக் கற்கள் நிறைந்த உயரமான இடமாக அது விளங்கியமையால் சுற் புட்டி என்று பெயரானது. பெரிய கடற்பெருக்கொன்று ஏற் பட்டதென்றும், அதனால் யானைகளும்கூட அள்ளுண்டு கற்பிட்டிக் கடற்கரையை வந்தடைந்தனவென்றும் இங்குள் முதியவர்கள் கூறுவர். இது பரம்பரையாக வாய்வழி வந்த வரலாற்றுக் கதை. அவ்வாறு யானை வந்தடைந்த இடத்தை இன்று யானை வாசல் என்று அழைப்பதையும் காண்கி றோம். பொன்பரப்பிப் பகுதிக்கும், கற்பிட்டிக்குமிடையிலிருந்த தரைப்பகுதி காடுகளால் நிறைந்திருந்தது. அங்கு வசித்த மக்களும், விலங்குகளும் கடற்கோளினால் அழிந்து பட்ட னர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற் பிட்டிக் குடாப் பிரசேதத்தின் நிலைபற்றி விவரிக்கும் "ரொபட் பேர்சிவல்" என் பார் இப்பகுதி காடுகள் நிறைந்த வனப் பிரதேசமாக இருந்ததெனத் தெரிவிக்கின்றார்.
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
சொலமன் என்ற பேரரசரின் காலத்தில் பண்டைய பினி ஷிய வணிகர்கள் கற்பிட்டியைப் பற்றி நன்கு அறிந்திருந் தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. 3 1826ம் ஆண்டு டிசம் பர் மாதத்தில், அன்று கற்பிட்டியின் முதலியாராக இருந்த மனுவல் டீ ரொசெய்ரோப் பிள்ளை என்பவரின் வாசஸ்தலத் தின் முற்றத்திலுள்ள மேட்டுப் பகுதியை துப்புரவு செய்து கொண்டிருந்த வேலையாள் ஒருவரால் புராதன இந்து சம பத்துக்குரிய வெண்கலச் சிலைகள் ஒன்பது கண்டெடுக்கப் பட்டதாகத் தகவல் கூறும் அத்துடன் இவ்வீட்டின் பக்கத் துத் தோட்டமொன்றில் மிகப் பழைய காலத்துக்குரிய தங்க, செப்பு நாணயங்களும் கண்டு பிடிக்கப்பட்டமை கற்பிட்டி யின் தொன்மையை மேலும் வலியுறுத்துகின்றன. 3 துணிகர முள்ள அராபியக் கடலோடிகளின் செல்வமிக்க வணிக நிலையமாக பண்டுதொட்டு விளங்கிய கற்பிட்டி முன்னொரு போதும் முகங்கொடுக்காத முப்பெரும் வல்லரசுகளின் சவா லுக்கிலக்காகியது.
போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கெதிராக அராபிய வணி கர்கள் தங்களால் நன்னிலைமைக்குக் கொண்டுவந்த கற்பிட்டி யைப் பாதுகாக்க போர்த்துக்சேயருடன் போரிடவுஞ் செய் தார்கள். எனினும் 1544ம் ஆண்டளவில் போர்த்துக்கேய மன்னனின் பெயரால் ஜெஸ் ஜியிட்ஸ் பாதிரிமாருக்கு இப்பகுதி நன்கொடையாக அளிக்கப்பட்டது. அவர்கள் இப்பகுதி மக் களை மதமாற்றஞ் செய்வதில் முனைந்து பல கிராமங்களி லும் கோயில்களை அமைத்தனர். 1644ல் கற்பிட்டி டச்சுக் காரரின் ஆதிக்கத்தில் வந்தபோது ஜெஸஉயிட்சுகள் வெளி யேற்றப்பட்டனர்.
கற்பிட்டிக் குடா முழுவதையும் "கார்திவத் தீவு" (Island of Cardiva) எனவும், அதன் முக்கியத் துறைமுகத்தை "கல்
பென்டைன்" எனவும் அவர்கள் அழைத்தனர். கார்டிவா என்பது கரைத்தீவு என்ற சொல்வினதும், கல்பென்டைன் என்பது கற்புட்டி என்ற சொல்வினதும் போர்த்துக்கேய
மரபு மொழித் திரிபாகும். கற்பிட்டிக் குடாவை தீவு எனக் குறிப்பிட்டமைக்கு காரணமுண்டு. ஆண்டிமுனைக்கும், புத்த எத்துக்கும் இடைப்பட்ட பகுதி மழைக்காலத்தில் நீர் நிரம்பி

Page 71
IOJ புத்தளம் வரலாறும் மரபுகளும்
கடலாக மாறிவிடுவதனால் கற்பிட்டிப் பிரதேசம் ஒரு தீவாக காட்சியளிக்கின்றது என முன்னைய பாதைகளை விளக்கி வந்த "பேர்சிவல்" குறிப்பிடுகின்றார்.
அரசடி என்றும் கற்பிட்டி அழைக்கப்பட்டதாகவும் வர லாறுண்டு. அங்கே பெரிய அரசமரமொன்று நின்றதாகவும், அம்மரத்தடிப் பிரதேசத்தை அரசடி என்று அழைத்ததாக வும் தகவல். ஆயினும் மக்கள் கற்பிட்டி என்ற பெயரையே பாவித்து வந்தனர். குதிரை மலை அரசி சந்திக்க வந்த தமிழ் அரசனின் மாளிகை அரசடி என்ற இடத்தில் இருந்த தாகத் தெரிவிப்பர். கடற்பெருக்கின் கோரத்தினால் Glமேற்குப் பிரதேசத்தின் பெரிய நிலப்பரப்பு விழுங்கப்பட்டு குறுகிய நிலப்பகுதியாக அரசடி எஞ்சி நின்றது. இந்த துர திர்ஷ்ட கோர சம்பவத்தினை இன்று ஆங்காங்கே நின்று கண்ணுக்கினிய காட்சிகளை அள்ளித்தரும் அழகிய தீவுகளும் சிே முந்தல் (Dutch Bay) போன்ற மனோரம்மிய குடாக் களும் நினைவுறுத்துகின்றன.
அநேகமாக எல்லா கப்பற்றுரைகளையும் ஏனையோரின் செல்வாக்கிலிருந்து விடுவித்து தமது ஆதிக்கத்தில் வைத்து பண்டமாற்று வர்த்தகங்களை டச்சுக்காரர்கள் செய்துவந்த போதும், கண்டியரசர்கள் புத்தளத்துறையை தமது செங் வாக்கிலேயே வைத்திருந்தனர். தமது நாடு முற்றுகைக்குட் பட்டு போக்குவரத்துத் தொடர்பு இன்றி இருந்தபோது கற் பிட்டியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர் கள்ஆயுதப் படையொன்றைபுத்தளத்தில் வைத்திருந்தனர். இத னால் டச்சுக்காரர் பலமான கோட்டையொன்றை கற்பிட்டி
யில் கட்டி ஆங்கே ஆயுதப்படைகளை வைத்துப் பாதுகாப் பைப் பலப்படுத்தினர். கோட்டையின் மேலே கடலை நோக்கி பீரங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இக்
கோட்டை 1887ம் ஆண்டு கட்டப்பட்டது. டச்சுத் தேசாதி பதி சிக் லொப் வான் கோயண்ஸ் (Rycklof van Goens) என் பவரே இக்கோட்டை அமைக்க வேண்டியதன் அவசியத்தை பட்டேவியத் தலைமைப் பீடத்துக்கு அறிவுறுத்தினார். துருப் புக்களின் இருப்பிடமாகக் கட்டப்பட்ட இக்கோட்டையைச் சுற்றி மரக்கம்பங்களாலான வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஜெஸஅயிட்ஸ் சங்கத்தினரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
வழிபாட்டுத் தலம் புதிய கோட்டையின் பாதுகாப்பு மதி லுடன் இணைக்கப்பட்டு வீரர்களின் படைவீடாக மாற்றப் பட்டது. ே
கோட்டை சாம்பர் நிறக் கற்களினால் கட்டப்பட்டுள் ளது. கோட்டையினுள்ளிருந்து வெளியேறுவதற்கு பிரதான வாசலைத் தவிர வேறு இரகசிய சுரங்க வழிகளும் இருந் தன. இன்று அவ்வழிகள் வெளவால்களின் உறைவிடமாகவும்: உள் நுழைய முடியாதவாறு இருள் சூழ்ந்து துர்நாற்றம் நிறைந்ததாகவும் அழிந்து கிடக்கின்றன. கோட்டையின் புல் நிறைந்த மேற்பரப்பில் காவற்கோபுரங்கள் நாலா திசைகளி லும் எழுந்து நிற்கின்றன. எதிரிகளின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக அக்கோபுரங்களில் இராணுவ வீரர்கள் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தனர். கோட்டையின் கிழ புறத்
திலிருந்து நோக்கும்போது இந்து சமுத்திரத்தின் குடாக் சுடல்களினதும், புத்தளம் கடல் வாவியினதும் கண்கவர் காட்சிகளும், அக்கரையில் காணப்படும் பசுஞ் சோலைகளும், கடற்கரை வெண் மணற் பரப்பின், செம்மண் பரப்பின்
விளிம்புகளும் எம்மைக் கடந்தகால நிகழ்வுகளைக் கற்பனாக் கனவுகள் மூலம் உசுப்பி விடுகின்றன. அன்று பல நாடுகளி Eன்றும் வந்த புகை கக்கும் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்த காட்சிகளும், பாய்க்கப்பல்களும், படகுகளும், தோணிகளும், வள்ளங்களும் ஆங்காங்கே நின்றும், நகர்ந்தும் உயிரூட்டிக் கொண்டிருந்த தோற்றங்களும், பல தரப்பட்ட மக்களின் சுறு சுறுப்புடன் கூடிய நடமாட்டங்களும் போக்குவரத்து களும், ஏற்றிறக்குமதிகளும் கற்பிட்டிக்கே பெருமை தேடித் தந்தவை. அவைகள் எம் மனதில் நிழலாடி IJs::Taa. LIII சிறப்பை நினைவூட்டுகின்றன.
கற்பிட்டியிலிருந்து தமிழகத்துக்கும், ஏனைய இடங்கட் கும் கொப்பறா, தேங்காய், எண்ணெய், பிசின், பாசி, சாயவேர், பனை மரம், சுறாப்பீலி, தும்புக் கயிறு, தேன், தேன் மெழுகு, நெய், மீன் எண்ணெய் தாவர நெய் ஆதி யன ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்குப் பகரமாக புடவை, நெல், அரிசி, பீங்கான் வகைகள், சணல் நூல், வாசனைச் சரக்குகள், கணிஜப் பொருட்கள், மருந்து வகைகள் ஆதியன இறக்குமதி செய்யப்பட்டன. இது பதினைந்தாம், பதினா

Page 72
புத்தளம் வரலாறும், ரபுகளும்
கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் கொப் பறா, மீன் சினை, உலர்ந்த இறால், கூனி இறால், நெய், மான் கொம்பு, நீறு ஆதியனவாகும். பாத்திரங்கள், புடவை, சீனி, ஈத்தம்பழம், பலாப்பலகை, ஓடு, செங்கல், இரும்பு. உலோக வகை போன்ற பொருட்கள் နှီးမြှို့နှီ၊
றாம் நூற்றாண்டு நிலைமையாகும்.
கொண்டு வரப்பட்டன. சீன வியாபாரிகள் சிங்கப்பூர், பினாங் துறைகளுக்கு இங்கிருந்து சங்கு வகைகளைக் கொண்டு சென் றனர்.
கோட்டையின் கிழக்கில் கடலை நோக்கி வளை மாடத் துடன் கூடிய கோட்டைச் சுவரின் உட்பக்க விளிம்பை ஒட்டி குழிவாக ஒரேயொரு கதவை அமைத்துள்ளனர். இவ்வாசவி னுள் சென்றால் உள்ளே சதுரமான முற்றம் மத்தியில் அமைந்திருப்பதைக் காணலாம். இது வீரர்களின் அணிவகுப் புக்குரிய இடமாக இருக்கலாம். அதன் மூன்று புறங்களில் படைவீடுகள் அமைந்துள்ளன. இன்றிவைகள் கூரைகளின்றி சிதைந்து கிடப்பதைக் காணலாம். சதுக்கத்தின் ஒரத்தில் நன்னீர்க் கிண்றொன்றுமிருந்தது. இக்கோட்டையின் பரப்பு சதுர வடிவத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். is 2 L-is தளபதியின் இருப்பிடமும், உப்பு, குடிவகை, அரிசி ஆகிய அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான பண்டசாலையும், ஆயுத சாலை, மறியற்கூடம், பொக் கிஷப் பாதுகாப்பறை என்பனவும் அங்கே அமைக்கப்பட் டிருந்தன.
பிரஞ்சுப் புரட்சியின் பின்பு டச்சுக்காரரின் வலிமை பிரஞ் சுக்காரரால் ஒடுக்கப்பட்டமை காரணமாக இந்து சமுத்திரத் தில் அவர்களின் ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஆங்கிலேயர் வசப்பட்டன. அவ்வேளையில் 1795 நவம்பர் மாத முற்பகுதி யில் இந்திய நாகப்பட்டணத்திலிருந்த பிரிட்டிஷ் படையின் ஐம்பத்தேழாவது பிரிவு டச்பேயை வந்தடைந்தது. அத்தரு ணத்தில் கோட்டையிலிருந்த டச்சுக்காரர் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதனால் டச்சுக்காரரின் கடைசி தேசாதிபதியான வான் ஏன்ஜல் பேக் (Van Angelbeck) என் பாரின் அறிவுறுத்தல்படி நிர்வாக அதிகாரியாக இருந்த அதி
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
காரம் சைமன் டி மொசைறோ அவர் நளினால் கோட்டை யின் சாவிகள் பிரிட்டிஷ் படைத் துணைத் தளபதி சேர் ஜோன் போவ்லர் (Sir John Bowser) என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டன. "
கற்பிட்டியிலுள்ள பழைய வீடுகள் டச் கட்டட அமைப் பின்படியே கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தகைய மிகச் சில வீடுகளே எஞ்சியுள்ளன. குறித்த அதிகாரம் றொசைறோ அவர்கள் வசித்த வீடு இன்றுமுள்ளது. டச்சுக் காலத்திய பாவனைப் பொருட்கள், வீட்டுத் தளபாடங்கள், "Woc" எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் இன்றும் சில குடும்பத்தவர்களால் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. சமீபத்திலே பண்டைய பொருட்களைச் சேகரிப்போர் "படை யெடுத்து" வந்து இப்பகுதியில் இருந்த "Wரc" பொறிக்கப் பட்ட பெறுமதிமிக்க பொருட்களை கவர்ச்சிகரமான விலை கொடுத்து வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதி மக்களும் பனத்துக்கு ஆசைப்பட்டு, அப்பொருட்களின் விலை மதிப்பற்ற பெறுமதியை அறியாது தரகர்களினதும், GALI FT பாரிகளினதும் ஆசை காட்டலின் வலையில் வீழ்ந்து மோசம் போனமை வருந்தக்கூடியதாகும். தொல் பொருள் காட்சிச் சாலைகளில் பேணிப் பாதுகாப்பாக வைத்து பரம்பரையாக பரமது வழித்தோன்றல்கள் அவற்றைப் பார்த்து பண்டைய வரலாறுகளை சுவைத்து ஆராயக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவறவிட்டமை மிக மிக வருத்தத்துக்குரியது. டச்சுக் காலத்து
எழுந்த தேவாலயங்கள் இன்று சிதைந்து கிடக்கின்றன. கோயிலைச் சுற்றியுள்ள புதைகுழிகளின் மேல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களும் சிதைந்து காணப்படுகின்றன. கற்பிட்டியி
லுள்ள சென்ற் பீட்டர்ஸ் தேவாலயம் 1839ல் திரு. சைமன் காசிச் செட்டி அவர்களால் கட்டப்பட்டது. 1870ல் புத்தளம் நகரில் சென்ற் கிளமென்ற்ஸ் தேவாலயம் கட்டப்பட்ட காலை
சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்தவிருந்தே மணிக்கூண்டும், கோயில் மணியும், பலி பீடப் பாத்திரங்களும், புனித
பொருட்களும் இத்தேவாலயத்துக்கு" கொழும்பு பிஷப் அவர் சுருளால் கொண்டுவரப்பட்டன.
பூர்வீகமாக சுற்பிட்டியின் மக்கள் தமிழ்ப் பேசும் மக்க ாாகவே இருந்துள்ளனர். காலத்துக்குக் காலம் வியாபார நோக்கமாக அற பிகளும், தென்னிந்திய முஸ்லிம்களும், தமி

Page 73
7 புத்தளம் வரலாறும், மரபுகளும்
ழர்களும், மலையாளிகளும் இங்கு வந்து குடியேறியுள்ளனர். காயற்பட்டினம், கீழக்கரை, அதிராம் பட்டினம் போன்ற தென்னிந்திய முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் வணிகர்களின் தொடர்பு நீண்டதொரு வரலாற்றைக் கொண்டதாகும். பேருவளைப் பகுதியிலிருந்தும் ஒரு சிலர் இங்கு வந்து குடி யேறியதாகவும் தெரிகிறது. டச்சுக் காரர் தமது படைப் பிரிவுகளில் மலாய் முஸ்லிம்களையும் வைத்திருந்தனர். டச் சுக்காரர் தமது தலைமைப்பீடமான பட்டேவியா (ஜகார்த்தா) இருந்த ஜாவாத் தீவிலிருந்து மலாயர்களைக் கொண்டுவந் திருந்தனர். டச்சுக்காரர் கற்பிட்டியிலிருந்து அகன்றதும் இங் கிருந்த மலாயர் பலர் இங்கு கோட்டையை அடுத்து தங்கி விட்டனர். மலாயர் விடுதிகள் என இப்பகுதி அழைக்கப்பட் டது. இன்றும் மலாயர் வீதி என்ற தெருவொன்றும் இருக் கின்றது. மலாய் சமூகத்தவரின் மாபெரும் தலைவரும், கல்வி மானும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான மர் ஹறும் M. T. அக்பர் அவர்கள் கற்பிட்டியில் பிறந்து வளர்ந் தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள அரசர்கள் புத்தளம் துறைமுகத்துக்குக் கொடுத் திருந்த முக்கியத்துவத்தைக் கற்பிட்டிக்குக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதனால் சிங்கள மக்களின் தொடர்பும், பெளத்த சமயத்தின் செல்வாக்கும் இப்பகுதியில் நுழைந்த மைக்கான ஆதாரங்கள் மிக அரிது. சிங்களவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் கிறிஸ்துவ மீனவர்கள் சமீப காலங் களில் இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் பெரும்பா லும் தமிழ் மொழியையே பேசுவர். கற்பிட்டியின் வணிகப் பொருளாதாரம் சமீப காலம் வரை முஸ்லிம்களினதும், மலை யாளிகளினதும் கையிலேயே இருந்ததென்பதைக் குறிப்பிடல் வேண்டும். இந்தியாவிலிருந்து இங்கு தொழில் வாய்ப்பு கருதி நெய்தல் நில மக்களான முக்குவர், மறவர், பரவர் போன்ற வர்களும் குடியேறியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்கள் வட மேற்குக் கரைகளிலும், தீவுகளிலும் ஆரம்பத்தில் குடியேறிய வர்களாவர். இங்கிருந்த இவர்களை போர்த்துக்கேயர் பல தொல்லைகட்குட்படுத்திய காரணத்தால் கற்பிட்டிப் பகு தியை விட்டு வேறிடங்கட்கு இவர்கள் பெயர்ந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் IOS
கற்பிட்டிக்குப் பக்கத்தில் தில்லையடி என்ற இடத்தில் உப்பு செய்கை பண்ணப்படுகின்றது. அதன் வருமானத்தைக் கணக்குப் பிள்ளை ஒருவர் சேகரிப்பார். அவரின் விடும் அங் கேயே இருந்தது. அதனால் அவ்விடம் கணக்கன் களி என வழங்கப்பட்டது.
கற்பிட்டிக்குப் பக்கத்திலுள்ள வெல்லங்கரை என்ற இடத் தில் அமைந்துள்ள நாச்சியம்மன் கங்கைப் பகுதி குறிப்பிடத் தக்க புராதன வரலாற்றுச் சிதைவுகள் காணப்படும் இட மாகும். அதைச் சுற்றி மண்மேடுகள் பல உள்ளன. பழைமை வாய்ந்த குடியிருப்புக்கள் இருந்துள்ளன. இராசதானி எனக் கூறக்கூடிய அளவில் மாளிகைகள், கோயில்கள், வீடுவாசல் கிள் இருந்ததெனக் கூறுவர். குதிரைமலை அரசி அடிக்கடி சந்திக்க வந்த தமிழ் இராசகுமாரனின் மாளிகை இங்கிருந் திருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. நாச்சியம்மன் கங்கை என்ற இவ்வாவி முன்பு நன்னீர் வாவியாக இருந்த கார னத்தைக் கொண்டு வெல்லம் போன்ற இனிப்புடைய வாவி பின் கரை என்ற பொருள் கொள்ளக்கூடிய வெல்லங்கரை என்ற கிராமப் பெயர் எழுந்ததாகத் தெரிவிப்பர். இக்கங்கை பின் கரையில் நாச்சியம்மன் என்றழைக்கப்பட்ட தெய்வத் நிள் ஆலயம் அமைந்திருந்தமையினால் இவ்வாவி இப்பெய ரைப் பெற்றுள்ளது. கங்கை என்ற பெயர் நன்னீர்த் தேக் கங்களையே சுட்டும் பெயராகும் என்பதும் கவனிக்கத்தக் து. துர்ச் செயல்கள் காரணமாக நன்னீர் வாவி உவர்நீர் ாவியாக மாறியதாக வரலாற்றுக் கதையுள்ளது. அவ்வாவி பின் மத்தியில் கடலுடன் சம்பந்தப்பட்ட சுரங்க நீர்ப்போக் குவரத்து வழியொன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வழி பின் மேற்பரப்பில் பயங்கரமான நீர்ச் சுழி இருக்கின்றது. கடல் பெருக்கு, எற்றுக் காரணமாக நீர் உள்ளேயும் வெளி யேயும் வேகமாகப் பாய்வதனால் இச் சுழி ஏற்படுகின்றது. அச்சுழியில் அகப்படுவோர் தப்பி வெளியே வருதல் அரிது. பவர் இத்தகைய அபாயத்தில் அகப்பட்டிருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுவர். அக்கங்கையை பல தேவதைகள் காவல் புரிகின்றனவாம். "இக்கங்கையில் சில காலங்களில் நீர் மட் டத்திற்கு மேல் பொற்கலசங்கள் தோன்றுவதாகவும், பல புதையல்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப் பகுதி ஆராய்வுக்குரிய முக்கிய நிலப்பகுதி என்பதில் சந்தேக மில்லை. பல உண்மைகள் வெளிவர சாத்தியமுண்டு.

Page 74
14. தமிழ்ப் பற்று தெமழ ஹத் பற்று
தமிழ்ப் பற்று - தெமழ ஹத் பற்று என்பது புத்தளத் தின் கிழக்கேயுள்ள ஆனமடு (யானை மடு) பிரதேசங்களைச் சூழவுள்ள பரந்த நிலப்பரப்பாகும். "ஏழு தமிழ்ப் பிரிவுகள்' என இதைக் கூறலாம். பற்று என்ற தமிழ்ச் சொல்லை பத்து என வழங்குகின்றனர். பற்று என்பது சிறிய நிலப்பகுதி களைக் குறிக்கும். பண்டைய இலங்கையின் நிலப் பகுதிகள் பற்றுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தன. தமிழ்ப் பற்றில் ஏழு உப பற்றுக்கள் அடங்கியிருந்தன. அவைகளாவன: பள்ளம் பற்று, குமார வன்னிப் பற்று. பண்டித பற்று, பெருவழிப் பற்று, கரம்பைப் பற்று, கிரிமெட்டியாப் பற்று, இராஜவன் னிப் பற்று என்ற ஏழுமாகும். 1888 ஜனவரி முதலாந் திகதி யிலிருந்து அமுலுக்கு வந்த அரசு பிரகடனத்தின்படி தமிழ்ப் பற்றில் எட்டு உப பிரிவுகள் அடங்கின. பள்ளம் பற்று நீக் கப்பட்டு பதிலாக முன்னேஸ்வரம் பற்றும், ஆனை விழுந் தான் பற்றும் சேர்க்கப்பட்டன.
பழைய காலத்தில் இப்பகுதி தமிழ்த் தலைவர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. அதனால் இப்பகுதியை தமிழ் மாகா ணம் = மலபார் மாகாணம் - தமிழ்ப்பற்று என அழைத்தனர். கலிங்கத்து மன்னன் இலங்கைக்கு படையெடுத்து வந்த போது பெருந்தொகையான தமிழ்ப் போர்வீரர்களை அழைத்து வந்துள்ளான். அவன் இராஜரட்டையைக் கைப்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
பற்றி தனது ஆதிக்கத்திவாக்கினான். தமிழ் வீரர்களுக்கு சன் மானமாக நிலங்களை வழங்கி குடியிருக்கச் செய்தான். 14 அல் விதம் ஆட்சியுரிமைப் பெற்றவர்கள் தமிழ்ப் பற்றில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். பொதுவாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் இவர்களின் செல்வாக்கு மிகவும் பவமுள்ளதாகவும், முக்கியத்துவமுடையதாகவும் விளங்கிய மையை வரலாற்றில் பரக்கக் காண்கின்றோம். தென்னிந்தியா விலும் நிலப் பகுதிகளை பற்றுக்களாகப் பிரிக்கும் முறை இருந்தது. அதையொட்டியே இங்கு குடியேறிய தமிழர்கள் இங்குள்ள நிலப் பகுதிகளையும் பற்றுக்களாகப் பிரித்தனர். இவர்கள் இலங்கையின் துறைமுகம் பகுதிகளிலும், உட்பிர தேசங்களிலும் அதிகமாகக் காணப்பட்டனர். டெனன்டின் "இலங்கை" என்னும் வரலாற்று நூலிலிருந்து மேற்கோள் காட்டின் தமிழ் பேசுவோரின் (மலபாரிகள் என இவர் குறிப் பிடுகின்றார்.) செல்வாக்கு நன்கு விளங்கும்.
'ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரையிலான ஏறத்தாழ நானூறு ஆண்டுக்கான சிங்கள வரலாற் நில்சிங்களமன்னர்களின் வீரதீரச் செயல்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை விட மேலான பகுதி மலபாரிகளின் தீரச் செயல்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதம அமைச்சரின் அலுவலகம் உட்பட சகல அலுவலகங்களிலும் மலபாரிகள் நிறைந்து வழிந்தனர். அரச பதவிக்குப் போட்டியிடும் வேட் பாளர்களைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை அவர்களுக்கிருந் தது. வலிமை குறைந்த மன்னர்கள் எவராலும் அவர்களை அநுராதபுரத்திலிருந்து வெளியேற்றுவது சாத்தியமில்லை என்ற நிலை தோன்றியது. காரணம் அவர்களின் எண்ணிக்கை அவ்வளவு தூரம் பெருகியிருந்தமையே" 15 மேலும் டெனன்ட் கூறுகிறார்:
"கி. பி. 1023ல் படையெடுத்து வந்த சோழர்கள் இலங்கை அரசனை இந்தியாவுக்கு சிறை பிடித்து செல்லுங் கால் பொலன்னறுவையில் மலபாரி ஒருவரையே இராசப்
பிரதிநிதியாக நியமித்துள்ளனர். அவன் வெளிநாட்டுப் படை யின் உதவியுடன் தனதுரிமைக்கப்பாற்பட்ட அப்பதவியை முப்பது ஆண்டுகள் வகித்து வந்தான். பத்தொன்பது மன்

Page 75
புத்தளம் வரலாறும், மரபுகளும்
னர்களின் எண்பத்தாறு ஆண்டு ஆட்சி முழுவதும் மலபாரி கள் இலங்கையில் எல்லாக் கிராமங்களிலும் படிப்படியாக பரவும் வரை சிங்களவருடன் போர் தொடுத்த வண்ணமே யிருந்தனர்" 15
"சிலாபத்திற்குத் தெற்கேயுள்ள கம்மல் பற்றுக்கும், களனி கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் முதலாம் கஜபாகு மன்னனால் சோழ மண்டலக் கரையிலிருந்து கைதி சுளாகக் கொண்டுவரப்பட்ட மலபாரிகளில் (தமிழர்களில்) ஒரு பகுதியினர் குடியேற்றப்பட்டனர். இவர்களில் பெரும் பாலோர் மீனவர்களாவர். இன்று சிங்களவர்களின் ஆடை அணிகளுடன் காணப்படினும் தமது மலபார் மூதாதையரின் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு வாழ்கின்றனர். 18148 ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பில் அப்பகுதியில் அவ்வாறான மக்கள் 29645 பேர் வாழ்ந்தனர்" என்று திரு. சைமன் காசிச் செட்டி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனைவிழுந்தான் பற்றில் அன்று வாழ்ந்தோரில் ஐந்திலொரு பங்கினர் மவி பாரிகள் என மேலும் அவர் குறுப்பிடுகின்றார்.8
எனவே மலபாரிகள் என வரலாற்றாசிரியர் குறிப்பிடும் தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் முழுச் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். புகழ்வாய்ந்த அறபிக் கடலோடியான சிந்த்பாத் என்பவரையும் வரவேற்ற வர்கள் தமிழ் பேசுவோரே என்பது வரலாற்றுப் பதிவாகும்." அவ்வாறே அறபிகளையும் வரவேற்று உறவாடியவர்களும் அவர்களே. சிந்த்பாத் முதலாந்தடவை இலங்கைக்கு வந்த போது அவரை வரவேற்ற உள்ளூர் வாசிகளில் ஒருவர் அறபி மொழி பேசத் தெரிந்தவராக இருந்துள்ளார். அவர்கள் JL போது தங்கள் நெல் வயல்களுக்கு குளமொன்றிலிருந்து நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள் ளது. 15 குளங்களிலிருந்து நீர்ப்பாய்ச்சும் வழக்கம் வடமேற் குப் பிரதேசத்தில் அதிகம் இருந்தமையால் சிந்த்பாத்தை வரவேற்க தமிழ்பேசும் மக்கள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்களாகவும், சிந்த்பாத் இறங்கிய துறைமுகம் குதிரை மலையாகவோ அல்லது புத்தளமாகவோ இருந்திருக்கலாம் என்பதில் தவறில்லை.
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் TE
இலங்கையின் தனிச் சிங்களம் பேசும் பகுதிகள் உள்பட
எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் முஸ்லிம்கள் தமிழையே பேசிவருகின்றார்களென்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும். அறபிகள் இலங்கையை அடைந்தபோது அவர் ாளை வரவேற்று உறவாடியவர்கள் தமிழ் பேசிய சமூகத்
தினரே. அதனால் அறபிகள் தமிழ் பேசக் கற்றதுடன், தமிழ் பேசியோர் அறபியையும் கற்றனர். பெரும்பாலோரின் மொழி
யான தமிழ் மொழியே நாளடைவில் அறபிகளின் வழித் தோன்றவின் மொழியுமாகியது. கரையோரங்களில் செறிந்து வாழ்ந்த தமிழ் பேசும் மக்களுடன் முஸ்லிம்கள் நெருங்கி
உறவாடி தொடர்பு கொண்டிருந்தது போல, வியாபாரத் தில் அக்கறையின்றி, வெளிநாட்டவரின் தொடர்புக்கு விருப்ப மின்றி, உள்நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு அமைதியுடன் வாழ்ந்த சிங்கள மக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டி ராமையே முஸ்லிம்கள் சிங்கள மொழியைவிட தமிழ்மொழியை பேச்சு மொழியாகக் கொண்டமைக்குக் காரணமாகும். அத் துடன் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தினர் தமிழ் மொழி பையே தாய் மொழியாகக் கொண்டிருந்தனராதலின் அவர் களுடனுள்ள சமூக, கலாசார, மதத் தொடர்புகளும் இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் மொழியாக
நிலைத்தமைக்குக் காரணமாகியது.
தெமழஹத் பற்று எனப்படும் தமிழ்ப்பற்று விவசாயப் பகுதியாகும். புத்தளம் பிரதேசத்தையும், குருநாகல் பிரதே சந்தையும் தொடர்புறுத்தும் பிரதேசம் இதுவாகும். ஏராள மான புராதன கிராமக் குளங்கள் இங்கு காணப்படுகின்றன. நூற்று இருபதுக்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு. இன்று இங்கு வாழும் மக்களின் மூதாதையர் தமிழ் மொழியையே பேசி வந்துள்ளனர். இன்று தமிழ் மொழியின் இடத்தை சிங் ாள மொழி பிடித்துள்ளது. இங்குள்ள பழைய கிராமங்கள், குளங்கள் ஆதியன தமிழ்ப் பெயர்களாலேயே அழைக்கப்படு
கின்றன. யானைமடு என்ற பெயரே தமிழ்ப் பெயராகும். இன்று அது சிங்கள மரபில் "ஆனமடுவ" என அழைக்கப்படு ன்ெறது. குளங்களுக்கான பெயர்கள் அவைகள் இருக்கும்
ஊருக்குமாயின. இப்படியான ஊர்கள் பலவுள்ளன. ஆத்திக் குளம், கற்குளம், புளியங்குளம், கச்சிமடு, காவபன் குனம்,

Page 76
புத்தளம் வரலாறும், மரபுகளும்
கொக்கிச்சான் குளம், கள்ளன் குளம், மாங்குளம், மதவாக் குளம், நாய்க்குளம், பெரிய குளம், பெரிய மடு, இராமன் குளம், சந்தனன் குளம், சங்கட்டிக் குளம், செம்புக் குழி, சின்னக் கட்டைக் காடு, கரைக்குளம், முதலைக் குழி, கொல்லன் குளம் என்பன அவற்றுள் சிலவாகும். முன்பு நில விய தமிழ்ப் பெயர்கள் பல சிங்கள மொழிபெயர்ப்புக்குள் ௗாகியும், சிங்கள மரபுக்கேற்ப திரிபுபட்டும், சிங்கள மொழி யுடன் தமிழ் மொழியைச் சேர்த்தும் வழங்கப்படுகின்றன. முன்பு கூறப்பட்ட பற்றுக்களின் பெயர்களும் தமிழ்ப் பெயர் களாக இருப்பதைக் காண்க,
தமிழ் மாகாணமான தெமழ ஹத் பற்று உட்பட His ளம் பிரதேசம் ஒருகாலத்தில் சன நெருக்கம் நிறைந்த செல்வ வளமிக்க உற்பத்திப் பிரதேசமாக விளங்கியுள்ளது. நீர்ப்பா சனத் துறையில் மிக முன்னேற்றங் கண்டிருந்தது. பண்டைக் காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய கோயில்களின தும், நகரங்களினதும், கிராமங்களினதும், குளங்களினதும் சிதைவுகள் இப்பகுதியின் தொன்மைச் சிறப்பினை வலியுறுத் துகின்றன. பின்பு பல காரணங்களினால் இப்பகுதி மக்கள் கூட்டமாக வெளியேறியுள்ளதாகப் புலப்படுகின்றது. இங்கி ருந்த நகரங்களும், கிராமங்களும், கோயில்களும், குளங் களும், நீர்ப்பாசன அமைப்புக்களும் மீட்க முடியாதபடி சிதைவுபட்டு அனுமானத்தின் மேல் ஊகிக்க வேண்டிய நிலைமையிலுள்ளன. 1826ல் கெப்டன் போர்பஸ் (Forbes) என்பவர் குருநாகலிலிருந்து அநுரதபுரம் செல்லும் வேளை யில் பொன்பரப்பி ஆற்றின்மீது அமைக்கப்பட்டிருந்த சுல் லணையின் சிதைவுகளைக் கண்டுபிடித்தார். தேனுடன் தொடர்புள்ள கால்வாய் அமைப்புகளையும் கண்டு வியந்துள் ளார். இவ்வனை இந்தியாவில் அமைக்கப்பட்டிருந்த புராதன அணைகளைப் போன்றதாகுமென்கின்றார். கற்கள் ஒழுங் கான வரிசையில் அடுக்கப்பட்டும், பெரும் நீரோட்டத்தைத் தாங்கக் கூடியவாறு கற்கள் இணைக்கப்பட்டுமுள்ளன. அனை நீர் மட்டத்திலிருந்து பதினெட்டு அடி உயரம்ாகவும், தரை மட்டத்திலிருந்து ஆறடி உயரமாகவும் உள்ளது. GROGRART பின் அடிவாரத்திலுள்ள மலைக் குன்றின் பரப்பில் துளைகள் இடப்பட்டு ஆதனுள் கற்றூண்கள் நட்ப்பட்டிருந்தன. கட்டு மானத்தை இணைப்பதற்கு நீண்ட சுற்றுரண்கள் அல்லது நீருக்கிறக்காக வைரமுள்ள மரங்கள் உபயோகிக்கப்பட்டுள்
TTT ..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15. வன்னியர்
வன்னியர் என அழைக்கப்படுவோர் இலங்கையில் வடக்கு, வடமேல், வடமத்திய, கிழக்கு மாகாணப் பகுதிகளில் பர வலாக வசித்து வந்துள்ளனர். புத்தளத்திலும் வன்னியர்க எரின் செல்வாக்கு இருந்துள்ளது. வன்னியர்கள் யார், அவர் களுக்கு அப்பெயர் வந்த காரணம் யாது, அரசியலில், சமூக வாழ்வில் அவர்களின் பங்கு எங்ங்ணமிருந்தது என்பதைப் பற்றி சிறிது நோக்குவோம்.
வன்னி என்று குறிப்பிடும்போது சாதாரணமாக நாம்
காட்டுப் பகுதியையே கருதுகின்றோம். உண்மையிலேயே வன்னி என்பதற்கும் காடு என்பதற்கும் சம்பந்தமேயில்லை. வன்னியர் என்ற ஒரு வகுப்பார் இலங்கையில் குடியேறி
அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டிய பகுதிகளை வன் னிப் பகுதி என அழைப்பார்கள். அவர்களின் வன்னிமைகள் வடக்கு, வடமத்திய பகுதிகளில் பலமாக இருந்தமையினா லும், அப்பகுதிகளில் பொதுவாகக் காடுகள் நிறைந்திருந்தமை யினாலும் வன்னிப் பகுதி எனக் குறிப்பிட்டனர்.
வன்னி என்ற நிலப்பகுதியிலிருந்து வன்னியர் அப்பெய ரைப் பெற்றனரா, அன்றி வன்னியர் வாழ்ந்து வந்தமையி னால் அந்நிலப்பகுதிக்கு வன்னி என்ற பெயர் வந்ததா என் பது ஆய்வுக்குரிய விடயமாகும். பெயரின் மூலத்தை அறிவ தற்குப் பல ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. வன்னி என்ற பதம் நெருப்பைக் குறிக்கும். வன்னியர்கள் தம்மை அக்கி

Page 77
புத்தளம் வரலாறும், மரபுகளும்
னிக் குலத்தவர் என்கின்றனர். அக்கினிக் கடவுளுக்கும் மன்னி நாதன் என்ற பெயர் இருப்பதையும் அறிவோம். அவ்வகுப் பார் வாழ்ந்த பகுதி வரட்சியான, சூடான சுவாத்தியமுள்ள பகுதியாக இருப்பதால் வரட்சியைக் குறிக்க நெருப்பெனப் பொருள்படும் வன்னி நாடு எனப் பெயர் ஏற்பட்டிருக்கவும் கூடும். தம் குலப் பெயரைக் கொண்டு தம்மை வன்னியர் என்றும், தம் நாட்டை வன்னி நாடு என்றும் அழைத்திருக்க லாம். காடுகள் நிறைந்த பிரதேசமாக இருந்தமையால் இயற் கையாகவோ, செயற்கையாகவோ அடிக்கடி தீப்பற்றி எரி யும் நிலையும் இருந்தமை கவனத்திற்குரியதாகும்.
'குஸ்தாவ் ஒப்பேர்ட்" என்பார் தமது, "இந்தியாவின் ஆரம்பவாசிகள்" என்ற நூலில் பின்வருமாறு வன்னியர்களைப் பற்றிக் கூறுகின்றார்: "நெருப்பைக் குறிக்கும் சமஸ்கி குதச் சொல்லான "வஸ்னி" என்பதிலிருந்து வன்னி என்ற சொல் பிறந்துள்ளது. அக்கினிச் சக்கரத்தை ஏந்திய அக்கினிக் கட ளிென் வழித்தோன்றலென அவர்கள் தம்மைக் கூறிக்கொள் வர். அக்கினிக் குலத்தவர் அல்லது வஹனிக் குலத்தவரான வன்னியர் இந்தியாவின் வடக்கிலும், தெற்கிலும் குறிப்பிடத் தக்க முறையில் பரந்து வாழ்ந்தனர். ரஜ புத்திரர் எனப் படும் வீர பரம்பரையினரில் ஆரியரும், ஆரியரல்லாதோரும் இருந்துள்ளனர். தென்னிந்தியாவில் வாழ்ந்த வன்னியரே ஆரி பரல்லாத ரஜ புத்திரர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.7 இக்கூற்றிலிருந்து வன்னியரின் வம்சத்தையும், அதன்மூலம் அவர்கள் வன்னியர் என்ற பெயரைப் பெற்றமையும், அவர் கிளின் வீரத்தன்மையினையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
வனம் என்ற சொல் காட்டைக் குறிக்கும். வனப்பகுதி யில் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்து வந்தமையினால் அச் சொல்வின் அடியாக வன்னியர் என்ற பெயர் வழங்கப்பட்டி ருக்கலாம் என்ற ஊகமும் உண்டு. வன்னி என்ற பதம் பாளி மொழியில் "என்ன" என்று வழங்கப்படும். வண்ண என்பது உயர் அந்தஸ்திலுள்ள மக்களை அல்லது முக்கியத்துவம் பொருந்திய நிலப்பகுதியைச் சுட்டும் பதமாகக் கொண்டால் வண்ண என்ற சொல்லிலிருந்து வன்னியர் என்ற பதம் உண்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
டாகியிருக்கவும் கூடும். முடிவாக வன்னியர் என்ற குலப்பெய
பிலிருந்தே வன்னி நாடு என்ற பெயர் அவர்கள் வசித்த இடப்பரப்புக்கு ஏற்பட்டு அவர்களின் ஆட்சிப் பிரதேசம்
வன்னிமை என வழங்கப்பட்டதெனத் துணியலாம். '
வன்னியர் என்ற வகுப்பினர் போரில் வல்லவராக விளங் கினர். வன்னியர் என்ற பெயரே "வன்மை" என்ற பண்பின் அடியாகப் பிறந்திருக்கலாம். போரில் ஈடுபடுவதும், போர்ப் பயிற்சி அளிப்பதுமே அவர்களின் குலத்தொழிலாக இருந்துள் ளது. இலங்கையிலும், இந்தியாவிலுமிருந்த படை அணிகளில் வன்னியர் என்பார் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமையைக் விாண்கிறோம். காலத்துக்குக் காலம் இலங்கையில் இடம் பெற்ற தமிழர் படையெழுச்சிகளின் போது வன்னியர் என் போர் பெருமளவில் போர் வீரர்களாக வந்துள்ளனர். அவர் கள் தமது அரசர்களிடத்தில் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டவர்கள். இன்றைய இராணுவ அமைப்புக்களிலுள்ள தற்கொலைப் படைக்கு ஒப்பானவர்கள். தமது தலைவர் இறந்துபடின் தாமும் உயிர் துறப்போம் என்ற உறுதியுடன் போரில் ஈடுபடும் தன்மையினர். 14
படையெழுச்சிகளின் போது விசுவாசமாகப் போர் செய்து வெற்றிகளைப் பெற்றுத் தந்தமைக்காக அரசர்கள் வன்னியர் களுக்கு நிலப் பிரதேசங்களை நன்கொடையாகக் கொடுத் தனர். அவர்களின் அப்பிரதேசங்களின் தலைவர்களாகி 'வன்னி நாயகர்" எனப்பட்டனர். 14 சிங்களத்தில் வழங்கும் 'வன்னி நாயக்க" என்ற பெயர் இதன் திரிபேயாம். ஆதிக் கத்திலிருந்த அரசர்கள் வலுவிழந்து போன காலத்தில் இவர் கள் அவ்வவ்விடங்களின் குறுநிலமன்னர்களாக தம்மைப் பிரக டனஞ் செய்து கொண்டனர். இத்தகைய நிலை இலங்கை யில் மட்டுமன்றி, இந்தியாவிலும் ஏற்பட்டது. சோழர்களின் காலத்தில் போர்வீரர்களாக இருந்தோர், படைத் தலைவர் கனாகி படிப்படியாக அமைச்சர்களாகவும் அமர்ந்தனர். அவர் களின் நிலப்பகுதிகள் மானியங்களாக அளிக்கப்பட்டன. சோழர் வலிமை குன்றிய காலத்து வன்னியர்கள் ஆங்காங்கே தம் சுய ஆதிக்கத்தை நிலைநாட்டி குறுநில மன்னர்களாக ஆகினர். பொலன்னறுவை ஆட்சிக் காலத்தின்போது வன்னி

Page 78
II 7. புத்தளம் வரலாறும், மரபுகளும்
யர் படைப்பிரிவுகள் பல இலங்கைக்கு வந்துள்ளன. பொலன் னறுவை ஆட்சிக்காலம் கி. பி. 993க்கும் 1215க்கும் இடைப் பட்டதாகும். பொலன்னறுவையின் வீழ்ச்சியின் பின்பு அர சின் கீழ் ஆங்காங்கே நிலப்பிரதேசங்களின் தலைவராக இருந் தவர்கள் குறு நில மன்னர்களைப் போலாயினர். வன்னியரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களை வன்னிமை, வன்னிப் பகுதி, வன்னிப் பற்று, வன்னி நாடு என்றெல்லாம் அழைத்தனர்.14
வன்னியர்கள் இலங்கையை வந்தடைந்த காலம் பற்றி திட்டமாக வரையறுத்துச் சொல்ல முடியாவிட்டாதும் வன் னியர்கள் தொடர்பு பண்டுதொட்டு இருந்து வந்துள்ளமையை சில குறிப்புகளைக் கொண்டு அறியக் கூடியதாகவுள்ளது. இராம - இராவண யுத்த முடிவிலே இராவணனின் தம்பி விபீஷணன் இலங்கையின் மன்னனானான். அவனின் மரணத் தின் பின்பு அவனது வழிவந்த சிங்கன் என்பான் தனக்கு மனையாளாக இராச குமாரத்தியொருத்தி இருக்க வேண்டு மென விரும்பி மதுரை மன்னனிடம் தூது அனுப்பினான்.
மதுரை மன்னன் "சமதுரதி' என்னும் பெயருடைய இராச குமாரத்தியை அரச வம்ச "தரனிபர்" குலத்தைச் சேர்ந்த வன்னியர்களின் பொறுப்பில் சிங்கனிடம் அனுப்பி வைத்
தான். இச்சம்பவம் கலியுக காலத்தின் மூவாயிரம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாசிரியர் திருஇராகவன் அவர்கள் குறிப் பிடுகின்றார்கள். இச்சம்பவத்தின் பின்பு தொடராக இந்தியா விலிருந்து குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பின்பு மதுரை மன்னன் இலங்கையைத் தரிசிக்க வந்தபோது தன்னுடன் பல சாதியினரையும் சேர்ந்த குடியேற்ற வாசிகளை அழைத்து வத்துள்ளான். இதன் மூலம் பரவலான குடியேற்றங்கள் நடை பெற்றுள்ளமையைக் காண்கின்றோம். "
இலங்கையிலிருந்த முன்னைய அரசியல் பிரிவுகளான இராஜரட்டை, மாயரட்டை, உருகுனை ஆகிய மூன்று பிர தேசங்களிலும் வன்னிமைகள் இருந்துள்ளன. 14 அவ்வாறே புத் தளம் பிரதேசத்திலும் வன்னியர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர். புத்தளத்தில் இருந்த வன்னிமை முக் குவ வன்னிமை எனக் கூறப்படுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள இராஜவன்னிப் பற்று, குமார வன்னிப் பற்று, இராஜகுமார
 
 
 
 
 
 
 
 

வன்னிப் பற்று ஆகிய நிலப் பிரிவுகளின் பெயர்கள் வன்
மையின் ஆதிக்கத்தினரை வலியுறுத்துகின்றன. வென்னப்புவ என்ற பெயரே வன்னியர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மைக்கு சான்று பகரும், வன்னி என்ற சொல் பாளி வழக் கில் வண்ன என வரும் என முன்பே கண்டோம். முன்பு அங்கே வெண்ணார் என்ற வகுப்பார் வாழ்ந்து விந்ததாக
இப்பகுதியிலுள்ளார் இன்றும் கூறுவர். வன்னியர், வண்ணர் ஆகி வெண்னார் எனப்பட்டனர். அங்கு குளம் ஒன்றுமிருக் கின்றது. குளத்தைத் தமிழில் பூவில் என்பர் வன்னிப் பூவல், வெண்ணார் பூவல் ஆகி கால ஓட்டத்தில் சிங்கள மரபுப்படி வென்னப்புவ என்றாகிவிட்டது என ஊகிக்கலாம்.
இலங்கையில் அரசாட்சி செய்த சிங்கள வம்ச மன்னர் களின் இராசதானிகன் காலத்துக்குக்காலம் பல இடங்கட்கும் மாற்றப்பட்டன. அக் காலகட்டங்களில் வன்னியர்கள் அர சர்களின் ஆதிக்கத்திவிருந்து விடுபட்டு சுதந்திரமாகவும், தம் இஷ்டப்பிரகாரமும் தமது நிலப்பகுதிகளில் தலைமைத் துவம் அடைந்து வாழ்ந்தனர். கால கதியில் பலம் படைத்தவர் களாக சிறந்த போர்ப்பயிற்சி பெற்ற படைவீரர்களைக் கொண்டவர்களாக விளங்கினர். வடக்கிலே இருந்த தமிழ் மன்னனுக்கும், மலையகத்திலும், தெற்கிலுமிருந்த சிங் சீன மன்னர்களுக்குமிடையில் இணைப்பாளர்களாக அன்றி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இவர்கள் விளங்கினர். சிங்கள, தமிழ் மன்னர்கள் வன்னியரை தத்தமது கைக்குள் வைத்திருப்பதை பலமாகக் கருதினர். கண்டியரசர்களால் வன்னியர்கள் மதிக்கப்பட்டனர். வன்னியர் என்ற பட்டமும் அவர்களால் அளிக்கப்பட்டன. " புத்தளம் வன்னிமை இந் நிலைமையிலேயே இருந்ததெனலாம். பிரதேச ஆட்சியாள ா ரக விளங்கிய வன்னியர்கள் சிங்கள அரசர்க்குத் திறை செலுத்தி வந்தமையும் அறிகிறோம். ஐரோப்பியர்களின் ஆட்சியின் போது வன்னியர்களின் முக்கியத்துவம் Lb 5àp॥ வில்லை, டச்சுக்காரர் வன்னிப் பகுதியை நல்ல வருமானத் தைத் தரும் இடமாகக் கருதினர். அவர்களின் வருமானம் யானை வியாபாரத்தினால் பெரிதும் பெறப்பட்டது. இவ்வரு மானத்தை அடைவதற்காக வன்னரியை பல மாகாணங்களாக வகுத்துக் கொண்டனர். ஆண்டுதோறும் நாற்பத்திரண்டு

Page 79
புத்தளம் வரலாறும், மரபுகளும்
யானைகளை டச்சு அரசுக்கு அளிக்க வேண்டுமென்ற நியதி யையும் அவர்கள் வகுத்தனர். "
இயக்க வம்ச ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள் முக்குவர் வர்கள் என்ற வகுப்பாரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது ஆங்காங்கே சிறு சிறு குறு நிலங்களில் பிரிந்து வாழ்ந்த வன் னியர்கள் தமது குலத்துக்கு ஆபத்து நேரலாம் என்று எண்ணி யாவரும் ஒன்று பட்டு ஒரே தலைமையில் வாழும் அவசியத்தை உணர்ந்தனர். அவர்கள் சிங்கபாகு என்ற ஒருவனின் தலை மையில் ஒன்றுபட்டு கூளங்கை ஆரியனிடம் சென்று உறுதிப் படுத்துவதற்காக கடல் வழியாகச் சென்றனர். கால நிலைக் கோளாறின் காரணமாகக் கப்பல் கவிழ்ந்து அனைவரும் உயிர் துறந்தனர். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் உயிர் துறந்தோரின் மனைவியரான வன்னச்சியர் "செல்வி வாய் கீால்" என்ற இடத்தில் சிதைமூட்டி உடன் கட்டை ஏறி உயிர் துறந்தனர். இதன் காரணமாக வன்னியரின் ஒற்றுமை எண் ணம் சீர்குலைந்தது. குறு நில ஆதிக்கமே தொடர்ந்தது. வன் வியர் என்ற சிறப்பான கெளரவப் பெயரை முக்குவர்களும், வேடர்களும் பீட தமக்குச் சூட்டிக் கொள்ளுவதில் பெருமை யடைந்தனர். 7 எனவே வன்னியர் என்ற பட்டப் பெயரைச் குட்டிக்கொண்ட தலைவர்களை வன்னியர் பரம்பரையெனக் கூறமுடியாது. ஏனெனில் "வன்னிய" என்ற பட்டத்தைச்
ங்கள மன்னன் முக்குவர்களுக்கும் அளித்துள்ளான்.
 
 
 
 
 
 
 
 

16, முக்குவர்
முக்குவர் என்போர் புத்தளம் வரலாற்றில் முக்கிய பங் கெடுத்துள்ள சமூகத்தினராகத் திகழ்ந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. பொது வாழ்விலும், பொருளாதாரத்திலும், ஆட் சித்துறையிலும் அவர்கள் பல தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக புத்தளத்தில் வன்னியர்கள் என்ற பட்டத்துடன் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். புத்தளத்திவிருந்த வன் னிமையை முக்குவ வன்னிமை எனலாம்.
ஆரம்ப காலத்தில் புத் தளம் பகுதியின் ஆகிக்கம் இயக்க வம்சத்தவர்க்குரியதாக இருந்துள்ளது. அவ்வம்சத்தினரின் வன்மையை முக்குவ வகுப்பாரின் எழுச்சி அடக்கி விட்டதாகத் தெரிகின்றது. முக்குவரின் செல்வாக்கு மேலோங்கி விரிவடைந்து வந்தமை பிரிந்து வாழ்ந்த வன்னியர் குலத்தவர்களிடையே ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையை உண்டாக்க வேண்டு மென்ற உந்துதல் ஏற்படக் காரணமாயிருந்ததென்றால் முக்கு வர் குலத்தின் வலிமையை நாம் உய்த்துணரலாம் ,
முக்குவர் என்ற வகுப்பார் யார்? அவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டமைக்குக் காரணம் என்ன? அவர்கள் எப்போது, எங்கிருந்து வந்தனர் என்ற வினாக்களுக்கு விடைகள் காண் பதில் பல தரப்பட்ட அபிப்பிராயங்களும், வரலாறுகளும், குறிப்புகளும் காணப்படுகின்றன. இந்நூலின் வன்னியர் என்ற தலைப்பில் பாண்டிய இராச குமாரத்தி சமதூதியின் வருகையை யும் அச்சம்பவத்துடன் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தமிழர் குடி

Page 80
2. புத்தளம் வரலாறும், மரபுகளும்
யேற்றங்களையும் அறிந்தோம். மதுரை மன்னனின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு குலத்தவர்களையும் கூட்டிவந்து குடியேற்றினான் என்ற செய்தியையும் கண்டோம். அக்குலத்த வர்களுள் முக்குவர் என்ற வகுப்பாரும் வந்துள்ளமையை அறி யக் கூடியதாகவுள்ளது. இக்குடியேற்றங்கள் காரணமாக அப் பகுதிகளில் அமைதியுடன் வாழ்ந்த ஆதிவாசிகள் தங்களின் பாதுகாப்பு நாடி இடம்பெயர்ந்து உள்நாடு சென்றனர். இந் நிலையிலே சமூக வாழ்வில் புதியதோர் வகுப்பாராக முக்குவர் முக்கியம் பெற்றனர். வேதி அரசன் என்பானின் தலைமையில் ஆதிக்கமும் அடைந்தனர்."
முக்குவர்கள் சைவ சமயத்தவர்களாகவே வந்தனர். அவர் களுடன் பரவர், மறவர், தேவர், கரையார், சாணார் போன்ற சாதிப்பிரிவினரும்பரவலாக வடமேற்குக்கரைகளில்குடியே றினர் ஒவ்வொரு பிரிவினரும் பல்வேறு துறைகளில் தனித்தனி செல் வாக்கீடைந்ததாகத் தெரிகின்றது. பரவர், கரையார், என் போர் கடற்றொழிலில் ஈடுபட்டு, செல்வாக்கோடு வாழ்ந்த னர். மறவர் கடற்றொழிலுடன் வீரத்திலும் சிறப்புற்றனர் தேவர்கள், சானார் ஆகியோர் வியாபாரத்துறையில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டினர். சாணார்களில் வேறு சில பிரிவினர் மரமேறிகளாகவும் தொழில் செய்தனர். சானார் கடைச் சந்தி என்றழைக்கப்படும் இடமும் புத்தளம் நகரில் உள்ளது. முக்கு வர் மீன் பிடித்தலில் மாத்திரம் நின்றுவிடாது வியாபாரம், விவசாயம் போன்ற பல துறைகளிலும் நாட்டம் செலுத்தி செல்வாக்கடைந்து தலைமைத்துவமும் பெற்றனர். காணி, பூமிகளுக்கு உடைமைக்காரர்களாகினர். முக்குவர், பரவர், மறவர் ஆகிய முத்திறத்தாரும் முத்துக் குளித்தலிலும், முத்து வியாபாரத்திலும் ஈடுபட்டனர். குறிப்பாகக் கூறப்புகின் இலங்கையின் வரலாற்றில் பொது வாழ்விலும், பொருளா தாரத்திலும் பல தாக்கங்களை வட மேற்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்திய சமூகத்தினர் முக்குவர்கள் விTETEU Tம்.
தென்னிந்தியாவில் மலபார்க் கரையோரங்களில் இவர்கள் இப்பெயருடன் வாழ்ந்துள்ளனர். மலையாள நாட்டின் "குச் என்னுமிடத்திலிருந்து வந்தமையால் “கொச்சியார்" என்றும் அழைத்தனர். இவர்கள் சமூக வாழ்விலும், நீதி நெறிமுறை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 22
களிலும் சிறப்புற்று விளங்கியதோடு கடின உழைப்பும், அபி விருத்தி மனப்பாங்கும் உடையவர்கள். கல்வியறிவும், செல்வங் களும் பெற்றவர்களாக குறிப்பாக புத்தளம் பிரதேசங்களிலும், மட்டக்கங்ாப்புப் பிரதேசங்களிலும் வாழ்ந்து தங்களின் முக்கிய பங்களிப்பினை நல்கியுள்ளனர். மலபாரிகள், மலையாளிகள், கொச்சியார் என்றழைக்கப்பட்டவர்களில் முக்குவர்கள் பெரும் பான்மையாக இருந்தனர். வரலாற்றாசிரியர்கள் தமிழர் விளையே மலபாரிகள் எனக் குறித்துள்ளனர். மகா ஓயா வரை பரவியிருந்த புத்தளம் வன்னிமை முக்குவர்களின் கீழ் இருந்த துடன் தெமழஹத் பற்று என்ற பிரதேசம் மலபார் மாகாணம், அல்லது தமிழ் மாகாணம் எனக் கூறக்கூடிய அளவுக்கு முக்குவர் களின் செல்வாக்கு மேலோங்கியிருந்துள்ளது.6 ஒரு காலத்தில் இலங்கையின் வியாபார முக்கியத்துவம் பெற்ற கரையோரப் பிரதேசங்கள் அனைத்திலும், குக்கிராமங்களிலும் கூட மல பாரிகள் நிறைந்து வழிந்தனர். இதனாலேயே 'காக்கை இல் லாத இடமும் இல்லை மலையாளிகள் இல்லாத இடமும் இல்லை" என்ற நாடோடிப் பழமொழியும் உருவாகியது. அரேபிய முஸ்லிம் வணிகர்களுடன் உண்டாகிய நெருங்கிய தொடர்புகளின் காரணமாக மலபார்க் கரைகளிலும், இலங்கை பின் கரைகளிலும் வாழ்ந்த இவர்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாயினர். இவர்கள் தமிழையே தங்கள் தாய்மொழியாகப் பேசி இலங்கையில் வாழ்ந்துள்ளனர். இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக முழுக்க முழுக்க சிங்கள மொழி வழங்கிய பகுதிகளிலும் கூட வாழ்ந்துள்ள முஸ் லிம்களின் மொழி தமிழ் மொழியாக இருந்துவருகின்றன மக்கு இவர்களே காரணமாயிருந்தார்களென்பது வரலாற்றுண்மை | rrgh. 15
இராம பிரானையும், அவர் மனைவி சீதையையும், தம்பி இலட்சுமணனையும் கங்கையாற்றைக் கடக்க உதவிய பட கோட்டிகளின் தலைவனாகிய குகன் என்பானின் பரம்பரையில் 0க்குவர்கள் வந்தவர்களெனவும் கூறுவர். முற்கு கர், முன்குகர் என்று வழங்கிய சொற்களிலிருந்தே முக்குவர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் காரணம் தெரிவிப்பர். மலபார் பகுதியில் வசிக்கும் நாயர் என்ற வகுப்பாரைப் போன்ற பழக்க வழக் கங்களை உடையவர்களாயிருப்பதனால் இவர்கள் மலபாரி களில் ஒரு சாராரே எனக் கூறுகின்றனர்.

Page 81
3. புத்தளம் வரலாறும், மரபுகளும்
"முக்கு" என்ற சொல் மூழ்குதல், முக்குளித்தல் என்ற சொற்களுடன் சம்பந்தப்பட்டது. தென்னிந்தியாவின் பேச்சு வழக்கில் "முக்கு" என்று கூறுவது "மூழ்கடி" என்ற பொருளைச் சுட்டும். இதன் அடிப்படையில் முக்குவோர் எனக் கூறப்படு வோரை மூழ்குவோர் எனப் பொருள் கொள்ளலாம். இவர்கள் கடற்கரையோரங்களில் வாழ்ந்து ஏனைய தொழில்களுடன் மீன் பிடித்தவிலும், முத்துக் குளித்தவிலும் ஈடுபட்டவர் களென்ற முறையில் கடலில் மூழ்கி முத்தெடுத்தல் முயற்சியில் சிறப்பானவர்களென்று இனங்காட்ட முக்குவோர் என அழைக் கப்பட்டு கால சதியில் முக்குவர் எனப்பட்டனர்எனக் கிருதவும் இடமுள்ளது. மலையாளத்திலுள்ள "கோலாங்" என்ற இடத்தில் வாழ்ந்தவர்கள் முத்துக்குளிப்பில் ஈடுபடுவோர்க்கு பயிற்சியளிப் பதில்வல்லவர்கள். முத்துக் குளித்தலிலும், முத்து வணிகத்திலும் ஈடுபட்டு பெரும் பொருளிட்டி செல்வமும், செல்வாக்கும் அடைந்து அதன் பலனாக ஆதிக்கமும் பெற்றிருக்கக்கூடும். முக் குகர், முக்கியர் என்பனவும் சாதிப்பெயர்களாகும். பிரதா னம், மேன்மை என்ற பொருள்களைத் தரும் முக்கியம் என்ற சொல்வின் அடியாகவும் முக்குவர் என்ற பதந்தோன்றியிருக்க லாம். முக்கியர், முக்குவர் என்று மாறியும் இருக்கலாம். சமூ சுத்தில் முக்கியமானவர்களாக விளங்கியமையினால் அப்பெயர் வந்திருக்கவும் கூடும்.
முக்குவர்களினுள்ளே மூன்று குடிப்பிரிவினைகள் இருந் துள்ளன. காளிங்கர், உலகிப்போடி, படையாட்சி என்றழைக் சிப்பட்ட குடிகளே அவைகள், காளிங்கர் குடியினர் மன்னர் களாகவும், உலகிப் போடிக் குடியினர் அமைச்சர்களாகவும், படையாட்சிக் குடியினர் சேனைத் தலைவர்களாகவும் இருந்த னர்." மேற்கூறிய முக்குலங்களை உடையோராதலின் முக்குவத் தார் என அழைக்கப்பட்டு கால கதியில் முக்குலர், முக்குவராக மாறியிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு. குறிப்பிட்ட மூன்று குடிகளும் பின்பு ஏழு குடிகளாயினர். ஒவ்வொரு குடிக் கும் ஒவ்வோர் அடையாளமிருந்தது. கீால்நடைகட்கு சொந்தக் காரரின் முதல் எழுத்துக்களுடன் குடிக்குரிய அடையாளத்தை யும் குறியாக சுட்டனர்." மேற்கூறிய குடிப்பிரிவுகள் யாவும் இஸ்லாமிய மத மாற்றத்துடன் பெரும்பாலோர்க்கிடையில் இல்லாதொழிந்தன. இஸ்லாத்திலினை யாதோரிடத்து இக்குடிப் பிரிவு தொடர்ந்து வந்ததெனினும் நாளாவட்டத்தில் அவை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 24
பும் மறைந்து போயின. தென்னிந்திய மேற்குக் கரையில் வாழ்ந்த மலபாரிகள் பலர் முஸ்லிம்களானபோது, அதை விரும்பாதவர்கள் தாமாகவே அங்கிருந்து குடிபெயர்ந்து முதன் முதலில் குதிரை மலையில் வந்திறங்கி புத்தளத்திலும், தமிழ் மாகாணமான தெமழ ஹத் பற்றிலும் வாழ்ந்து பின்பு இலங் கையின் பல பாகங்களிலும் குடியேறி பரந்து வாழ்ந்து வந்த னர் என்ற திரு. சைமன் காசிச்செட்டி அவர்களின் கூற்றையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
முக்குவர் புத்தளம் பிரதேசத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இவ்விடத்தில் குறிப் பிடுவது பொருந்தும். புத்தளம் வடக்குப் பகுதியில் முக்குவர் தலைவனாக இருந்த வேதிஅரசன் என்பவன்தென்பகுதியில் கரை யார்களின் தலைவனாகஇருந்த மாணிக்கத் தலைவனுடன் பகை பானான். மாணிக்க தலைவன் தன் மகளை மணமுடித்து வைக்க வேதிஅரசனிடம் தூதனுப்பியபோது, வேதியரசன்மறுப்புக் தெரி வித்தமையால் இரு பகுதியினரும் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்நேரம் முக்குவரின் படைப்பவம் குறைவாக இருந்தமையினால் குதிரைமலையிலிருந்த அராபியர்களின் உதவியை முக்குவர் கோரினர். உடன்பட்ட அராபியர் முக்
குவர்களுடன் சேர்ந்து கரையார் தலைவனுடன் மோதினர். இப்போர் மங்கள வெளிக்கும், கட்டைக் காட்டுக்கும் இடை
பிலுள்ள சமவெளியில் நடைபெற்றது. இப்போரில் மாணிக் சுத் தலைவன் கொல்லப்பட்டான். அவனைப் புதைத் த இடத் தின் அருகில் கறையான் புற்று ஒன்றிருந்தது. அப்புற்றை இன்றும் "மாணிக்கன் புற்று' என்றழைக்கின்றனர். இப்போரில் புக்குவர் முழு வெற்றியையடைந்தனர். இப்போரில் அறபி முஸ்லிம்கள் செய்த பேருதவிக்காக நன்றிக் கடப்பாடுடன் முக்குவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர். எனினும் பின்பு வந்த போர்த்துக்கீசரின் நன்மதிப்பையும், சலுகைகளை பும் விரும்பி முக்குவரில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக li fir issir ri .
முக்குவர் தமது வெற்றிக்குப் பின்னர் தமது தாதுக்குழு வொன்றை பல விலைமதிப்பு மிக்க பொருட்களுடன் சீத வாக்கை அரசனின் சமுகத்துக்கு அனுப்பி வைத்தனர். இத னால் முக்குவர் மேல் மதிப்பும், மகிழ்ச்சியும் கொண்ட மன்

Page 82
5 புத்தளம் வரலாறும், மரபுகளும்
இனன் முன்பு மாதம்பை மன்னனால் கொடுக்கப்பட்ட நில மானியத் துக்கு மேலதிகமாக பல பிரதேசங்களை முக்குவர் கீளுக்கு செப்புப் பட்டயத்தில் பதிந்து சன்மானமாக அளித் தான். குறித்த இரு செப்புப் பட்டயங்களின் தமிழ் மொழி பெயர்ப்பை இவ்வதிகாரத்தின் இறுதியில் காண்க. மன்னன் கற்பிட்டியையும் முக்குவர்களின் மேற்பார்வையில் இருக்கச் செய்தான். முக்குவர்கள் தமது பரிபாலன நில எல்லைகள்ை மரங்களின் கொப்புகளை நட்டி தளிர்க்கச் செய்து பேணி உரிமையாக்கினர். இதையே "கொப்பு மறி பரவெளி" எனக் கூறுவர். சிங்களத்தில் "அத்துஹன் பரவனி" என்பர். அத்தகிளை ஹன-அடையாளம் பரவன்-உரிமை எனப் பொருள் படும். ே
"முத்திர கூடம்"* என்றழைக்கப்படும் அரச நீதிமன்றமொன் றையும் அமைத்து அதன் உறுப்பினர்களாக பதினெட்டு முக்கு வத் தலைவர்களை மாவட்ட அதிகாரியான முதலியாரின் தலைமையின் கீழ் நியமித்து அவ்வுறுப்பினர்களுக்கு "ராஜ வன்னியர்" என்ற பட்டங்களையும் மன்னன் வழங்கினான். மேலும் அவ்வன்னியர் பல சிறப்புரிமைகளையும் பெற்றனர். வழிவழியாக அவர்கள் முத்திர கூட நீதிமன்றத்தில் உறுப் பினர்களாக இருப்பதற்குரிய உரிமையையும், வரிகளைச் செலுத்தும் பொறுப்பிவிருந்து விடுபடும் சலுகையையும், குற் றங்கள் செய்யின் அவற்றிற்கான தண்டனைகளை அநுபவிக் காத வாய்ப்பினையும், அவர்களும், அவர்களுடைய உறவினர் களும் அரச ஊழிய கட்டாய சேவைக்கு உட்படாத அவகா சத்தினையும் பெற்றிருந்தனர். முத்திர கூடம் என்ற நீதிமன் நம் புத்தளம் நகரில் இன்று பழைய மார்க்கட் என்று அழைக் கப்படும் இடத்தில் இயங்கியதாகக் கூறுவர். இந்த நீதிமன்ற முறையைப் பின்பற்றி ஒல்லாந்தரும் "லேண்ட்ராட்" (LandT83d) என்ற தமது நீதிமன்றத்தை தொடர்ந்து நிர்வகித்த னர். புத்தனம் கோட்டைக்கும், நகரத்திற்குமிடையில் இருந்த பெரிய அரசு சுட்டிடமொன்றே லேண்ட்ராடாக அமைந்தது. எல்லா அரச அலுவல்களும் அங்கேயே நடைபெற்றன. பிரிட் டிஷாரிடம் புத்தளம் சரணடைந்த பிற்பாடு அவர்கள் இக்கட்டி
*"மூத்தோர் கூட்டம்" என்ற பெயரே ஆங்கிலம் போன்ற பிற மொழியில் எழுதியபோது முத்திர கூடம் என ஆகியிருக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. எங். எம். ஷாஜஹான் Efö
டத்தை இடித்துவிட்டு பக்கத்தில் இரு கட்டிடங் களைக் கட்டினர். ஒன்றைக் கச்சேரியாகவும், மற்றதை வாடி வீடாகவும் பாவித்தனர். இன்றும் இக்கட்டிடங்கள் உள் ான, ஒவ்லாந்தர் முத்திர கூட நீதிமன்ற முறையில் சில மாற் ரங்களைப் புகுத்தினர். உறுப்பினர்கள் அதிகம் எனக் கருதி பன்னிரண்டாகக் குறைத்தனர். கற்பிட்டியிலிருந்த பிரதான அதிகாரியின் கீழ் இது இயங்கி வியாபாரம் சம்பந்தமான விட பங்களையும் கவனித்தது. ராஜவன்னியர் அனுபவித்த உரிமை ஈளில் விவசாய ராணிகளுக்கு வரியிறுக்கத் தேவையில்லை என்ற உரிமையைத் தவிர ஏனைய உரிமைகளை நீக்கினர். பிரிட்டிஷாரின் ஆட்சியில் ஒல்லாந்தர் ஆட்சிமுறை மாற்றப் பட்டதன் காரணமாக வன்னியர் பதவிகள் அகற்றப்பட்டு, வன்னினம இல்லாதொழிந்தது.9 முதலியார், உடையார், கங் காணி, ஆராச்சி, விதானை போன்ற பதவிப் பெயர்கள் வன் னிமையுடன் சம்பந்தப்பட்டதாகும்.
வன்னியனார்களின் குடும்பத்தினர் பொது வாழ்வில் கெளர விக்கப்பட்டனர். அவர்கள் செல்வாக்கும், அதிகாரமும், தலைமைத்துவமும்,பொருளாதாரச் சிறப்பும் பெற்றவர்களாக விளங்கினர். பண்டைய மன்னர்களும், பின்பு வந்த ஒல்லாந் தர் தவிர்ந்த ஆட்சியாளர்களும் அவர்கட்கு உயர்ந்த அந்தஸ் தைக் கொடுத்தனர். சிங்கள அரசர்கள் வன்னியத் தலைவர் கட்கு விருதுகளும், பதாதைகளும், அடையாளச் சின்னங் கரும், பதக்கங்களும், வாட்களும் அளித்துக் கெளரவித்தனர். இன்றும் இவைகள் சில குடும்பத்தினரால் பெரிய பொக்கிஷங் கனாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. பல குடும்பங்களி விருந்த இம்மாதிரியான நினைவுப் பொருட்கள் ஐரோப்பிய சின் ஆட்சிக்காலத்தில் அரசின் சொத்தாகக் கருதிப் பறிக்கப் பட்டு அவர்களின் நாடுகளில் வியாபாரப் பொருட்களாக விற் கப்பட்டன. சில அந்நாட்டுத் தொல்பொருட்காட்சிச் சாலை 1ள அலங்கரித்தன. பொருளிட்டுவதில் கண்ணாயிருந்த சில வியாபாரிகளாலும் இப்பெறுமதிமிக்க சின்னங்கள் பணத்தைக் காட்டி கபனிகரஞ் , செய்யப்பட்டன. புத்தளம் நகரத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் முகையதின் கொத்துபாப் பள்ளிவாசலுக்குரிய பரந்த நிலப்பரப்பு வன்னியனார் குடும்பத் தினாலேயே அன்பளிப்புச் செய்யப்பட்டமையையும் ஈண்டு குறிப்பிடக்கூடியதாகும்.

Page 83
I 『 அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
முக்குவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தலேயாயி னும் சிறப்பாகக் கற்பிட்டிப் பிரதேசத்தில் வாழ்ந்தோர் புை யிலை, மிளகாய்ச் செய்கைகளிலும், தென்னந்தோட்டங்கை உண்டாக்குவதிலும் ஈடுபட்டனர். புத்தளம் பகுதி உப்பள களிலும் தொழில் புரிந்தனர். மத மாற்றங்கள் காரணமாக பரம்பரை பழக்க வழக்க மரபுவழிகனினின்றும் விடுபட்டு வித்தி TIL FT JF || II FT GAY GIT rrjedh G37 arī முறைகளையும், தொழில்களையும் இடத்துக்கிடம் முக்குவர்கள் கைக்கொண்டனர். ஆயினும் முக்குவர்களினால் கைக்கொள்ளப்பட்டு வந்த மரபுச் சம்பிர தாயங்களின் தாக்கங்கள் சமீப காலம் வரை புத்தளம் மக்க னின் வாழ்க்கையில் பிரதிபலித்தன. குறிப்பாக திருமண் வைபவ சம்பிரதாயங்களில் நன்கு உணரக் கூடியதாகவுள்ளன்
கிறித்தவ முக்குவர்களிடையே நிலவிய திருமண வைபவ சம்பிரதாயங்களை திரு. எம். டி. ராகவன் அவர்கள், "Ceyl0ா A Pictorical Survey of The Peoples and Arts' GT airp sing நூலில் குறிப்பிட்டிருப்பதைக் காண்போம். மனப்பேச்சு வார்த் தைக்கு "சம்பந்தம் கலத்தல்" என்று கூறுவர். சம்பந்தம் எ பது திருமணத்தைக் குறிக்கும். இது மலையாளச் சொல் என்பதைக் கவனிக்குக. பேச்சு வார்த்தையில் சீதனம் முக்கியத் துவம் பெறும். மணம் நிச்சயிக்கப்பட்டு நாளும் குறித்த பின்பு மாப்பிள்ளை வீட்டார் மோதிரமொன்றை பெண் வீட்டாருக்கு கொடுப்பர். மனம் நடைபெறும் வரைக்கும் மணமகனும், மன் மகளும் சந்திக்கவோ, கதைக்கவோ கூடாது என்பது விதியா கும்.
முதலில் பந்தல் அமைத்தல் முக்கியமானதாகும். உறவின
வினரொருவரோ நாவல் மரத்தின் துளிர்விட்ட இலைகளுடன் கூடிய கினையொன்றைக் கொணர்ந்து வீட்டின் மத்தியில் பிர தான வாசலின் முன்பு நடுவார். கிளையை வெண் சீலையா போர்த்தி அலங்கரிப்பர். இதை "அரசாணிக் கால்" என கூறுவர். அதன் பக்கத்தில் கலியான அரங்கமாகத் திகழும் பந்தவை அமைத்து அலங்களிப்பர். சகல மனச் சடங்கு வை வங்களும் அதிலேயே நடைபெறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் I ፰$
பெண் வீட்டிலிருந்தும், மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண், பெண்ணைக் கொண்டT இரு சோடியினர் மன அழைப்பு விடுக்க வீடு வீடாகச் செல்வர். ஆண்களிருவரும் வெற்றிலை, தேங்காய் வைக்கப்பட்ட தட்ட மொன்றை ஏந்திச் செல்வர். இதை "வெற்றிலை வைத்தல்" util
மண நாளன்று உறவினர்கள், நண்பர்கள் சூழ இரு பெண் "ள் வெற்றிலை, தேங்காய் கொண்ட தட்டங்களை ஏந்திவர மணமகனும் மணமகளும் வெவ்வேறாகக் கோயிலை அடைவர். அங்கே மணப்பதிவும், பாதிரியாரினால் சமய ரீதியான திரு மணமும் நிறைவேறும். மணத் தம்பதியர் தமது முழங்காவில் நின்று வந்தோர்க்கு வணக்கஞ் செலுத்துவர். வந்திருப்பவர்கள் வெற்றிலையில் வெள்ளிக் காசுகளை வைத்து தம்பதியர்க்களிப் பர். வந்திருப்போர்களுக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு அனை வரும் ஊர்வலமாக மணப்பெண்ணின் வீடு செல்வர். மணத் 'தம்பதியர்" "மேற்கட்டி" எனக் கூறப்படும் வெண் ஜிலை படாம் ஒன்றின் கீழ் செல்வார்கள். இச்சீலையின் நான்கு மூலை களிலும் கம்பங்கள் கட்டப்பட்டு அவற்றை ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் தாங்கிச் செல்வர். ஊர்வலத்தின் முன்னே அவர் எளின் குடிக்குரிய அடையாளப் பதாகைகள் பிடித்துச் செல்லப்படும். ஞான செளந்தரி, நொண்டி நாடகம் பாக்கள் பாடப்படும். தம்பதியர் "பாவாடை" என்னும் வெண்ணிற நி3 விரிப்பின் மேலேயே நடந்து செல்வர். ஊர்வலம் செல்லும் வழியிலுள்ள உறவினர்களினதும், நண்பர்களினதும் வீடுகளின் முன்பு தம்பதியர்கள் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு "பாலும்-பழ மும்", பரிசுகளும் கொடுப்பர். ஊர்வலம் பெண் வீட்டை Wடைந்ததும் முதியோர்களின் அனுமதியைப்பெற்று பெண்னின் மாமா முறையானவர் புதுத் தம்பதியரைப் பாலும், பழமும் கொடுத்து வரவ்ேற்று உள்ளே அழைத்துச் செல்வார். அங்கு ால்லா சடங்குகளும் முடிந்ததும் பெண்ணை அவரின் வீட்டி லேயே விட்டுவிட்டு மாப்பிள்ளை மட்டும் தனித்து ஊர்வலமா கத் தன் வீட்டை அடைவார்.
பின்பு நல்ல நாளொன்றில் மணமகன் பெண் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தங்கள் நடைபெறும். முதலில் "முகச்சவர "டங்கு நடக்கும். குல வழக்கப்படி அச்சடங்கிற்கு முன்பு

Page 84
39 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அந்நாளன்று மாப்பிள்ளை முகச்சவரம் செய்ய அனுமதிக்கப் பட மாட்டார். குறித்த நாள் சுப நேரத்தில் வெண் சீலை விரிக்கப்பட்ட கதிரையில் மாப்பிள்ளையை இருத்தி மயி வினைஞர் முகச் சவரச் சடங்கை நிறைவேற்றுவார். 虚m கலந்து வைக்கப்பட்டிருக்கும் பால் பாத்திரத்தில் சமுகமளித் திருப்போர் வெள்ளிக் காசுகளைப் போடுவர். இக்காசுகள் மயிர் வினைஞருக்கே சொந்தமாகும். சவரம் முடிந்ததும் மாப்பிள்ளையை நீராட்டுவார்கள். அவ்விடத்தில் வெள்ளிச் காசுகள் சுற்றப்பட்ட ஏழு வெற்றிலைகளும், ஏழு தேங்
படும்.
இச்சந்தர்ப்பத்தில் மணமகன் அணியும் மண உடுப்பு எ தகையது என்பதைக் காண்போம். வெண்ணிறத்தாலான வேட்டியும், தலைப் பாகையும், நீண்ட கையையுடைய மேல் சட்டையும் அணிந்திருப்பார். நீல நிறத்தாலான பட் யொன்றை வலது தோளிலிருந்து முதுகுப் புறமாகச் சுற்றி இடப்புற விலாப் பக்கமாக கட்டி அதில் குறுகிய வாளொன் றையும் தொங்க விட்டிருப்பார்.அவ்வாறே இடப்பக்கத் தோளி
றியை மறைத்து கண் புருவம் வரை இருக்கும். தொங் விட்டுள்ள வான் அவர்களின் குலச் சின்னமாகும். வலக்கை யில் சீலையால் சுற்றப்பட்ட சுருளின் மேலே வெற்றிலையின் நுனிப்பக்கங்கள் வெளியே தெரியும்படியாக பிடித்திருப்பார்
மணமகள் றோசா வர்ணத்தில் பட்டுச் சீலையை உடம் பைச் சுற்றி அடுக்கடுக்காய் பாவாடைபோல அணிந்திருப் பார். இதைச் "சுற்று உடுப்பு" என்பார்கள். நிலத்தில் படும் படி கால்வரை ஆடை அமைந்திருக்கும். வர்ணச் சட்டை யுடன் முகத்தை மறைக்காமல் தலையை மூடி வலைப் பிட வையை முழங்கை வரை போட்டிருப்பார். மலர்களால் தலை அலங்கரிக்கப்பட்டிருக்கும். கழுத்தில் காறை எனப்படும் ஆபு ரணத்தையோ, பதக்கத்துடன் கூடிய அட்டியலையோ அணி திருப்பார். "உக்கட்டு" (உள்கட்டு) எனக் கூறப்படும் கழுத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ஒட்டிய ஆபரணமுமிருக்கும். வேறு மணிக் கோவைகளும் எழுத்தை அலங்கரிக்கும். காவில் பாத சரங்களும், கொலுசு களும், கால் விரல்களில் "விரல்பிடி' எனப்படும் மிஞ்சிகளும் அணிவர். ஐந்து விதமான காதணிகள் அலங்கரிக்கும். உருக்கு பணி, வைரமணி, சுவடிக் கடுக்கன், மொட்டைக் கடுக்கீன், காதுப்பூ என்பவைகளே அவ்வைந்து காதணிகளுமாகும். கூட் டுக் காப்பு எனப்படும் இரட்டைக் கைவளைகளைப் போட் டிருப்பார்.
மணமகன் தனக்குரிய மணவாடைகளை அணிந்துகொண்டு பெண் வீடு செல்ல ஆயத்தமாகுவார். மணமகனின் சகோதரி ஒருவர் அலங்காரமான ஆடையணிகள் அணிந்து அவருடன் செல்வார். மணப்பெண்ணுக்குரிய உடைகளிரண்டுடன் ஒவ் வொன்றிலும் நூற்றியொரு தொகையைக் கொண்ட நான பங்கள், வெற்றிலைகள், இனிப்புப் பண்டங்கள் முதலியன வும் அடங்கிய பெட்டியொன்றை வெண் சீலையால் முடி சகோதரி உடன் கொண்டுசெல்வார். இதைத் "தாவிப்பெட்டி" என்பர். மாப்பிள்ளை வீட்டார் மனப்பெண்ணின் வீட்டு வாச வில் போய் நின்றதும் மாப்பிள்ளையை மட்டும் மேற்கட்டி பிடித்து வரவேற்பர். பெண் வீட்டிலுள்ள முதியவர்கள் முன் வந்து மாப்பிள்ளையுடன் கூட வந்தவர்களை வரவேற்பர் இதனை தரகு" என்று சொல்வர். இச்சொல்லும் மலையாளச்
சொல் என்றுணர்க.
பெண்ணின் சகோதரி தாலிப் பெட்டி கொண்டு வந்த
வருக்கு மோதிரமொன்றை அணிவித்து பெட்டியை பார மெடுப்பார். வரவேற்புகள் முடிந்ததும் முதியோர்கள் முன் செல்ல வாழ்த்துப் பாக்களைப் பாடிக்கொண்டு மாப்பிள்
ளையை பந்தலுக்கு அழைத்துச் செல்வர். இதை "ஒரு வீட் டில் விடுதல்" என்று வழங்குவர். வெள்ளை விரிக்கப்பட்ட பாயொன்றில் மணமகளுக்குப் பக்கத்தில் மணமகனை அவ சின் சகோதரி அழைத்து வந்து அமர்த்துவார். ஏழு கறிகளு டன் கூடிய சோற்றை மணப்பெண் முதலில் மாப்பிள்ளைக் குத் தர அவர் அவற்றுள் ஏழு கவளங்கள்ை உண்பார். பின்பு

Page 85
3. புத்தளம் வரலாறும், மரபுகிளும்
மீதியில் மணப்பெண் தன் பங்கைச் சாப்பிடுவார். இந்நேரத் தில் சமுகந்தந்திருப்பவர்களுக்கும் உணவு பரிமாறப்படும் வெண் விரிப்பில் அமர்த்தி வாழையிலையில் உணவு பரிமா றப்படும். எவராவது உணவை முதலில் உண்டு முடித்துவிட் டாலோ, அல்லது மற்றவர்கள் எழும்புவதற்கு முன்பு எழுந்து விட்டாலோ, அல்லது அங்கு நடப்பட்டுள்ள அரசாணிக் காலில் சாய்ந்து விட்டாலோ அவர் வந்திருப்போர்களுக்கு ஏதாவது தண்டம் கொடுக்க வேண்டுமென்று விதி வைத் திருந்தார்கள். யாவரும் ஒரே நேரத்தில் உண்டு முடிந்து ஒருமித்து ஒழுங்கு முறையாக எழுந்து செல்வதற்குக் கை யாண்ட தந்திர விதியாக இதைக் கூறலாம். விருந்தின் பின்பு சமுகமளித்தோர் மணத்தம்பதியரை வாழ்த்தி விடைபெறுவர்
மணமகன் ஏழு தினங்கள் மணமகள் வீட்டில் தங்குவார். அந்நாட்களில் ஏழு கறிகளுடன் கூடிய உணவு மாப்பிள் ளைக்கு அளித்து உபசரிக்கப்படும். மணத்தம்பதியர் அந் நாட்களில் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்ப மாட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் தாலிப் பெட்டி கொண்டுவந்தவரின் தலைமையில் ஏழு பெண்கள் மணமகன் வீட்டிலிருந்து புதுத் தம்பதியரைப் பார்க்க வருவார்கள். அன்று யாவரின் முன்பும் தாவிப் பெட்டி திறக்கப்பட்டு கொண்டுவந்திருந்த பொருட்கள் யாவும் சரியாவெனக் கணக் கிட்டு எல்லாரும் பார்வையிடுவர். அதிலிருக்கும் ருசியான பண்டங்கள் பெண் வீட்டாருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்
ஏழாம் நாள் உறவினர். நண்பர்கள் சூழ வெண்ணுடை சுள் தரித்த தம்பதியரை நீராட்டுவதற்காகக் கிணற்றடிக்கு அழைத்துச் செல்வர். தேங்காய்ப் பாலும், முட்டையும் கலந்த மஞ்சளை தம்பதியரின் உடம்பெங்கும் பூசி ஏழேழு வாளி நீரூற்றி நீராட்டுவர். மாப்பிள்ளையின் சகோதரி மணப்பெண்ணையும். மணப்பெண்ணின் சகோதரன் மாப் பிள்ளையையும் நீராட்டி விடுவார்கள். நீராடி முடிந்தது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் உடையையும். மணப்பெண் மாப்பிள்ளை வீட்டாரின் உடையையும் உடுத்துவர். இதை "கூறை" என்று கூறப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
பின்பு ஒருநாள் புதுத்தம்பதியரை மாப்பிள்ள்ையின் வீட் டுக்கு மேற்கட்டி கட்டி அழைத்துச் சென்று பெரிய விருந் தொன்றை நடாத்துவர். சமூகமளித்தோருக்கு மஞ்சள் நீர் தெளிக்கப்படும். முன்பு பெண் வீட்டுக்குக் கொண்டு செல்
வப்பட்ட தாலிப் பெட்டியில் இனிப்புப் பலகாரங்களை வைத்து உறவுப் பெண்ணொருவர் மாப்பிள்ளையுடன் கொண்டு வருவார். அதன் பின்பு மனமக்கள் உறவினர்.
நண்பர் வீடுகளை நேரம் கிடைத்த நாளில் தரிசித்து வரு வர். இது முக்குவரின் திருமண வைபவ சம்பிரதாயங்களின் சுருக்கமாகும்.

Page 86
IB புத்தளம் வரலாறும், மரபுகளும்
செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட அரச நில மானியம்
(மொழிபெயர்ப்பு)
நல்லதிர்ஷ்டம்
சக வருடம் 1467 எசல மாதம் பிறை ஐந்து புதன் கிழமை அன்று இராஜ வன்னியனார்? மாதம்பை 3 அரச
மாளிகையில் பெற்றுக்கொண்ட முப்பது சோடி பானைத் தந்தம், நாவற்காடு கிராமம், சித்திராவெளி 4, புத்தளம் ஆகியவை அவருக்கு மானியமாக அளிக்கப்பட்டன. அத்து டன் குதிரை மலைக்கு இப்பக்கமும், கலா ஒயாவிலுள்ள ஊலுவகு குபுக்கவுக்கு இப்பக்கமும், திவுரும் கனவுக்கு 6 இப் பக்கமும், பரமா பிந்த மலைக்கு இப்பக்கமும் அடங்கும், சமக் கட்டாக" முத்திரை மோதிரமொன்றும், கழுத்துப் பட்டியைச் சுற்றி கொசுவம் வைக்கப்பட்ட கையுள்ள மேலங்கியும், வெள்ளி வாளொன்றும் அவருக்குக் கொடுக்கப்பட்டன.
மரங்களின் கிளைகளை ஒடித்து அடையாளமிடப்பட்ட இக்கிராமங்கள் உரிமையாக அளிக்கப்பட்டன.
இதை மீறுவோர் காகங்களாக, நாய்களாகப் பிறக்கக் கடவர்,
சூரியனும், சந்திரனும், எத்து கலவும், ஆந்த கலவும் நீடிக்கும் காலமனவும் இராஜ வன்னியனாருக்கு நிரந்தரத் தன்மையாக இம்மானியம் இருக்கும்படியான சிறப்பான பிர கடனமாகும்.
மாதம்பை தனி வல்ல பாகு 11 மன்னனின் காலத்தில்
இந்த சிறப்பான பிரகடனம் மூலமாக மானியமளிக்கப்பட்
-
மேற்குறிக்கப்பட்ட பிரகடனத்திலுள்ளவைகளுக்கான விளக்கக் குறிப்புக்களையும் கீழே தருகின்றேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
I .
சக வருடம் 1467 - கி.பி. 1545 வருடத்தைக் குறிக்கும்.
புத்தளத்திலிருந்த முத்திர கூடம் என்ற நீதிமன்ற உறுப் பினருள் ஒருவரே இராஜ வன்னியனார். இவரின் ஆணை யின் பேரில் இவரின் பரம்பரையினருள் ஒருவர் சில அதி காரங்களுடன் ஆண்ட தமிழ் பற்றின் ஒரு பகுதி இராஜ வன்னிப் பற்று என அழைக்கப்பட்டது. ("மூத்தோர் கூட்டம்" என்ற பெயரே முத்திர கூடமென எழுதப்பட் டிருக்கலாம். - ஆசிரியர்)
பெரு நகரம் எனப் பொருள் கொண்ட மகா தம்ப என்
றதே மாதம்பையாகும். சிங்கள மக்கள் வாழ்ந்தனர். கண்டு பிட்டி மாதம்பை" எனவும் வழங்கப்பட்டதாக வலண்டைன் கூறுவார். இந்நகரின் பக்கத்திலிருக்கும்
மாளிகைக்காடு என்ற இடத்திலே அரசனின் மாளிகை பும், பொதுவான பெரிய கட்டிடங்களும் இருந்தன.
சித்திராவெளி புத்தளத்துக்கண்மையிலுள்ள ஒரு கிராமம். அதன் அயலிலேயே தம்மனா நுவர இருந்ததாகக் கூறு .ITFה&
"உலுவாகு குபுக்க நுவர கலாவ பிரதேசத்திலுள்ள சிற் நூர். கதவு நிலை எனப் பொருள் தரும் உலுவகு என்ற விசித்திரப் பெயரைப் பெற்றது. குபுக்க மரமிரண்டு அடுத்தடுத்து கதவு நிலை போன்று வளைந்து வளர்ந்தி ருந்தமையால் அவ்வாறு பெயர் ஏற்பட்டது.
திவுரும் கல, மகுல் கோறளைக்கும், தமிழ்ப்பற்றுக்கும் எல்லையாகவுள்ள குன்றாகும். சத்தியம் செய்யும் குன்று எனப் பொருள் கொண்டது. மேற்கூறப்பட்ட இரு பிர தேசத் தலைவர்களும் இவ்விடத்தில் ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவரையொருவர் ஆக்கிரமிப்பதில்லை என்று சத்தியம் எடுக்கும் இடம் எனக் கூறுவர்.
அரசனின் அன்பளிப்புக்களை சமக்கட்டு என்பர்.

Page 87
Iјат.
புத்தளம் வரலாறும், மரபுகளும்
மரக் கிளைகளை வெட்டி நட்டி நில அடையாளமிடு வதை கொப்பு மறி பரவணி என்பர். முன்பு விளக்கப் பட்டுள்ளது.
அரச ஆணையை மீறுவோர்களை ஈனப் பிறவிகளாகக் குறிப்பதற்காக நாயாக, காக்கையாகப் பிறக்கட்டும் என சாபமிடுவது வழக்கமாகும்.
குறிப்பிட்ட இரு மலைகளும் ஏழு கோறளையிலுள்ளதா கும். நிரந்தரத் தன்மையின் அடையாளமாக இவற்று டன் சூரிய, சந்திரனையும் குறிப்பார்கள்.
கோட்டை இராச்சியத்தின் மன்னன் தர்மபால பாகு என் பவனின் தம்பியே தனிவல்லபாகு மாதம்பைப் பிரதே சத்தை சிறிய அரசாட்சிப் பகுதியாக தனிவல்ல பாகு வுக்கு அளிக்கப்பட்டது. டொன் ஜோன் தர்மபாலவின் தகப்பன் விதிய பண்டார, மாதம்பை அரசன் தனிவல்ல பாகுவின் பேரனாகும் ஏழாம் புவனேகபாகுவின் சகோ தரனாகும். தனிவல்ல பாகு, தாமவல்ல அபய srirodh பட்டான்.
( " " Ceylon Gazetteer" - by Simon Casie Chetly mod
(ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு)

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் If
செப்புப் பட்டயம் (மொழி பெயர்ப்பு)
நல்லதிர்ஷ்டம்
சக வருடம் 169 நிகினி மாதம் புதன்கிழமை பொன்பரப்பி யிலுள்ள ஏழு வில்களும், கிராமங்களும், லுணுவில் சேனைக் குடியிருப்பு, மகா நபந்தவல. மைல பொத்தானை ஆகிய இடங் களும், அவற்றின் வரண்ட, நீர்ப்பாசனக் காணிகளுட்பட்ட நிலங்களும் லுணுவில நவரத்தின வன்னியனாருக்கு சீதவாக்னிசு அரசன் காலத்தில் மானியமாக அளிக்கப்பட்டது. இரு வெண் கொற்றக் குடைகளும், நீண்ட ஈட்டியொன்றும் ஒரு வாளும், கழுத்துப் பட்டியினைச் சுற்றி கொசுவம் வைக்கப்பட்ட மேல் சட்டையும், முத்திரை மோதிரமும், இரு சோடி யானைத் தந் தங்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடவைகளிரண்டும் மேலும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டதன் மூலம் இந்நிலங்கள் உடைமையாகின்றன.
எத்துகல, அந்தகல நீடிக்குமளவும், சூரியனும், சந்திரனும் நிலைக்குமளவும் இதை எவரேனும் மீறுவோராயின் அவர்கள் நாய்களாகவோ, காக்கைகளாகவோ பிறக்கட்டும்.
நிரந்தரமாக நவரத்தின வன்னியனாருக்குரிய மானியமாக இச்சிறப்பான பிரகடனம் இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட பட்டயத்தின் சில விளக்கக் குறிப்புக்கள் கீழேயுள்ளன
1. பொன்பரப்பியிலுள்ள ஏழு வில்கள்:- மயில் வில், பெருவில், மரவில், கொளுஞ்சிவில், அட்டைவில், காளி வில், தலைவில்.
காலத்தைப் பற்றிய ஆய்வில் சீதவாக்கை அரசன் புவ னேகபாகுவாக இருக்கலாம்.

Page 88
37 புத்தளம் வரலாறும், மரபுகளும்
(''Ceylon Gazetteer'-Simon Cassi Chetty Modliar) (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு)
வன்னியனார்களுக்குக் கொடுக்கப்பட்ட இரு செப்புப்பட்ட பங்களின் மொழிபெயர்ப்பைக் கண்டீர்கள். சூரியசெட்டி என்ற முகாந்திரம் ஒருவருக்கு அளிக்கப்பட்ட பட்டயத்தின் மொழி பெயர்ப்பும் மேலதிகமாக இங்கே தரப்படுகிறது.
செப்புப் பட்டயத்தில் பொறிக்கப்பட்ட அரச மானியம் (மொழிபெயர்ப்பு)
நல்வதிர்ஷ்டம்
சக ஆண்டு 1467 எனபல மாதம் புதன்கிழமை இச்சிறப்பு குரிய சன்னாஸ் " மானியமாக அளிக்கப்பட்டது. கரையை அடைந்து புருதுவெல9 எனுமிடத்தில் வந்து தங்கியிருந்த சூரிய ஹெட்டிக்கு மஹாராஜா ஆணையொன்றை இட்டார். பின்பு (மாதம்பைக்கு வந்திருந்தபோது ஏழு பட்டிகளிலிருந்து பாலை வரியாக வசூலிப்பதற்கு அவரை முஹாந்திரமாக நியமித்து இன்னொரு ஆணை அனுப்பப்பட்டது. வரியாக வசூலித்த பாலை (மஹாராஜாவுக்கு)க் கொண்டு வந்தபோது அவருக் காக மாரம்பேயில் தனிப்பனைமரம் நின்ற அந்தரகஸ்பிட்டிய கிராமத்துடன் இப்பக்கமும், ஹல் பத்தவன் தொட்டவிலுள்ள கற்றுணுக்கு இப்பக்கமும், உல்ல மடயாவவிலுள்ள கற்றுரணுக்கு இப்பக்கமும், போகமுவ குளத்துக் கட்டிலே சூரிய, சந்திரன் பொறிக்கப்பட்ட குன்றுக்கு இப்பக்கமும், மாதம்விலவிலுள்ள சுற்றுாணுக்கு இப்பக்கமும், ஏழு ாேவிகளும், உயர்ந்த, தாழ்ந்த பிரதேசங்களுட்பட்ட திமுல்பிட்டிய குளக் கட்டுக்கு இப்பக்கமும் சிறப்புக்குரிய சன்னாளில் நிரந்தரமாக் கப்பட்டது. போகமுவவிலிருந்து மூன்று அமுணம் நெல்லும், உலுவரிசிகமளிலிருந்து இரண்டு அமுணம் நெல்லும், ஹல்பன் வில்லிலிருந்து பன்னைப் பெறுவதற்கும் அவருக்கு உரிமையா கின்றது.
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
சூரியனும், சந்திரனும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் இதை மறுப்போர் காக்கைகளாகவும், நாய்களாகவும் பிறக்கக்
கடவர்.
மாதம்பை அரசன் தனிவல்லபாகுவின் காலத்தில் இச்சிறப் பான சன்னாஸ் மானியமாக்கப்பட்டது.
■
齿。
பட்டயத்தின் சில விளக்கக் குறிப்புக்கள்:
சன்னாள் சாசன என்ற சமஸ்கிருதச் சொல்வைப் போன்றது. அரசர்களால் எழுத்தில் தரப்படும் உறுதி இப்பெயரைப் பெறும். ஹெட்டி தமிழில் செட்டி எனப்படும். புருதுவெல் புழுதிவயல் கிராமம். முகாந்திரம் முதலியார் பதவிக்கு அடுத்த வரி வசூல் அதிகாரி. பால்வரி பசுக்களையும், எருமைகளையும் வைத்திருப் போர் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு பாலை அர' சுக்கு அளித்தல் மரபாகும் உள்ளூர் வரியாகும். டச் சுக்காரர் பாலுக்குப் பதில் நெய்யைப் பெற்றனர். இவ் வரி பிரிட்டிஷாரின் ஆரம்ப ஆட்சிவரை நீடித்தது. 1800ல் நோர்த் தேசாதிபதியின் பிரகடனப்படி, புத்த விளம், மன்னார் மாவட்டத்திலிருந்த கால் நடைகள் நோயினால் அழிந்தமையால் இவ்வரி நீக்கப்பட்டது. மாரப்பே கட்டைக்காடு.
(СеуӀоп Gazetteer —Siппоп Casie Chetty} (ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு)

Page 89
17. காப்பிரிகள்
ஆபிரிக்க நீக்ரோ இனத்தைச் சேர்ந்த இவர்களை உள்ளூர்க் காரர்கள் "காப்பிரிகள்" அல்லது "காப்பிலிகள்" என அழைத் தனர். சுருண்ட மயிரும், தடித்த உதடுகளும், இருண்ட தோற் றமும், வைரம் பாய்ந்த தேகக்கட்டும் இவர்களின் முக்கிய இலட் சனங்களாகும். காப்பிரிகள் என்ற இவ்வினத்தார் இலங்கைக்கு வந்த வரலாறு பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஐரோப்பியர் கிழக்கு நாடுகளில் தமது வியாபாரத்தொடர் புகளை ஏற்படுத்திக்கொண்டபோது அபிவிருத்தியடையாத நாடுகளையும், ஆங்கு வசித்து மக்களையும் தங்கள் வசதிக்கான கருவிகளாகப் பயன் படுத்திக்கொண்டனர்: அடிமைகளைப் போல நடாத்தினர். அவ்வாறே காப்பிரிகள் இனத்தினரையும் பொருட்களைச் சுமந்து செல்லும் காவிகளாகவும், கூலிப்படை பினராகவும், பாசறைகளை அமைக்கும் எடுபிடிகளாகவும், பொதுவாக அவர்களை உழைக்கும் இயந்திரங்களாகவும் பாவித் தனர்- மலபார் கரைகளில் போர்த்துக்கேயர் தமது ஆதிக்கத்தை செலுத்தியபோது காப்பிரிகளில் அதிகமானோர் அவர்களால் அங்கு கொண்டுபோகப்பட்டனர். பின்பு இலங்கையின் கரை யோரப் பகுதிகளைப் போர்த்துக்கேயர் கைப்பற்றியபோது கோவாவிலிருந்து 1623ம் ஆண்டு வாக்கில் காப்பிரிகள் முதலில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.7 நூற்றைம்பது ஆண்டு களுக்குப் பின்பு இலங்கை டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்பு காப்பிரிகள் கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகி
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷொஜஹான்
அழைந்தனர். அச்சமயத்தில் டச்சுத் தளபதிகள் தங்களின் கோட்டை கொத்தளங்களை, மாளிகைகளை அமைத்தற்குக் கூலியாட்களாக இவர்களை உபயோகித்தனர். தனது கையின் ேேழ ஏறத்தாழ நாலாயிரம் காப்பிரிகள் ஊழியம் செய்ததாக "வான்கோயன்" என்ற டச்சுத்தளபதி குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பலமிக்க செயற்றிறனைக் கண்ட டச்சுக்காரர் தங் கனின் நெல்வயல்களில் வேலை செய்வதற்கும் இவர்களை ஈடு படுத்தினர். பலர் தனிப்பட்டவர்களின் வீடுகளில் வேலைக் காரர்களாகவும், காவலாளிகளாகவும், ஆஸ்பத்திரி சிற்றுாழி பர்களாகவும், கோட்டைக் கூவிகளாகவும் காலங் கடத்தினர். பொதுவாக உள்ளூர் மக்கள் இவர்களை விரும்பி அணுகிய நாகத் தெரியவில்லை. இலகுவாக இசைய வைத்துக் கையா ாக் கூடியவர்களாகவோ, நல்ல தொழில்களில் ஈடுபடுத்த முடியாதவர்களாகவோ இவர்களின் சுபாவம் இருந்தமையே ಡಾ.
ஆங்கில அரசினராலும் காப்பிரிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் படைப்பிரிவுகள் நான்கினுள் மூன்றாம் படைப்பிரிவில் பெரும்பான்மையோர் காப்பிரிக ாகவே இருந்தனர். இப்பண்டப் பிரிவு "இலங்கை ரைபின் on lifa (Ceylon Rifle Regiments) at saf gri LP55 பட்டது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர். 1815ம் ஆண்டில் அல்விஸ் ஜெமாதர் Alwis Jamada) என்பவரால் போர் வீரர்களாக இவர்கள் |Ålwရြ႕စားႏွစ္ခ်ိဳ႕; இவர்களிலொரு பகுதியினரே புத் தளத்திலிருந்த கோட்டையின் காவல் வேலைகளில் ஈடுபட்
T" .
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் ருந்த காப்பிரிகளின் தொகை அதிகரிக்கவே அவர்களின் டிட்டுப்பலமும் கூடியது. இப்பலமே கொழும்புக் கோட்டை பினுள்ளேயே கலகத்தை உண்டாக்குவதற்குக் காரணமாய ாமந்தது. அத்துடன் விதிகளில் பலாத்காரச் செயல்களில் டுபட்டு பொதுச் சொத்துக்களுக்குச் சேதங்களை விளைவித் வர் காப்பிரிகள். இதன் உச்சக் கட்டமாசி அன்றைய சிறைச்

Page 90
புத்தளம் வரலாறும், மரபுகளும்
சாலை அதிகாரியாக இருந்த "பெரண்ட் வாண்டர் ஸ்வான்" என்பவரையும் அவரின் மனைவியையும் அவர்களின் படுக்கை பிலேயே ஓரிரவில் கொலை செய்த நிகழ்ச்சி அமைந்தது. 8
இக் கலகக்காரர்கள் அரசினரால் அடக்கப்பட்டனர். கோட்டையிலிருந்த எல்லாத் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடத்தில் பிரித்து வைத்தனர். கொழும்பு பேரை ஆற்றுக்குப் பக்கத்தில் இவர்களின் தங்குமிடமனமந்தது. ஆற்றைக் கடந்து செல்லக் கூடிய "தீவு" போன்ற இடமாக இருந்தமையால் ஆங்கிலத்தில் அவ்விடத்தை "சிலேவ் ஐலண்ட்" (Slave Island) அடிமைகளின் தீவு என்ற பொருள்பட அழைத் தனர். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தின் கீழ் இலங்கை நிர்வாகம் இருந்த போது, கம்பனியார் இப்பகுதியில் இருந்த மையினால் இதை "கம்பனித் தெரு' எனத் தமிழிலும், சிங்களத்திலும் அழைத்தனர். இங்கிருந்த அடிமைகளில் அநே கீர் அங்கு ஏற்பட்ட சுவாகாசய நோயினால் பிடிக்கப்பட்டு மாண்டு போயினர். அடிமை முறை இலங்கையில் 1845ம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. *
சிங்கள மன்னர்களின் காலத்திலும் இவ்வினத்தார் அடிமை களாகவும், கூவிப்படையினராகவும் இருந்துள்ளனர். அவர் கள் அஞ்சா நெஞ்சம் படைத்த தைரியமுள்ள போர் வீரர் கனாக இருந்துள்ளனர். போர்த்துக்கேய, ஒல்லாந்த, 呜呜 கிலேய படைப் பிரிவுகளில் இராணுவ வாத்தியக் கோஷ்டிப் பிரிவிலும் இவர்கள் கடமை புரிந்தனர். இவ்வினத்தைச் சேர்ந்த அபிளவீனியர்கள் இலங்கையில் பலம் வாய்ந்தவர் களாக விளங்கியுள்ளமையை வரலாற்றில் காண்கின்றோம். இப்து பதூத்தா அவர்களின் பிரபான குறிப்பில் கடற்படை 赫 தளபதி ஜூலஸ்தீ’ என்பவனின் தலைமையின் கீழ் அபிஸினி யர் ஐந்நூறு பேர் வரை கொழும்பில் அதிகாரத்துடன் இருந் தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆங்கில அரசின் கீழ் புத்தளத்திலிருந்த படைப்பிரிவி விருந்த காப்பிரி வீரர்களின் தொகையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்த போது சிலர் தமது தாய் நாட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். விஷாஜஹான்
டுக்குத் திரும்பிச் சென்றனரெனினும் பலர் இங்கு தங்கிவிடவே விரும்பினர். அவர்களுக்கு உப்பளத்தில் வேலைகள் கொடுபட் துடன் அரசு சிற்றுாழியர்களாகவும் நியமனமாகினர். முன் னைய அரசு படையினருக்கும், ஊழியர்கட்கும் உதவிப் பணம் அரசால் வழங்கப்பட்டது. இவர்களுக்கென குடியேற்றக் காணி ளை செல்வங்கண்டல் இடத்தில் ஒதுக்கி இவர்கள் விவசா பத்தில் ஈடுபட வசதியுமனிக்கப்பட்டது. இவர்கள் அதிகமாக புத்தளம் சேனைக் குடியிருப்புப் பகுதியிலேயே வசித்தனர். "
இவர்கள் போர்த்துக்கேய மொழியைக் கொச்சையாகப் பேசினர். றோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றினர். இதனால் சில சந்தர்ப்பங்களில் போர்த்துக்கேயருடன் திரு மணத் தொடர்புகளும் ஏற்பட்டதுண்டு. இவர்களின் பாட் டும், சுத்தும் பிரபல்யமானவை. சங்கீதக் கருவிகளுடனும், தாள நயங்களுடனும் இவர்கள் எழுச்சியுடன் பாடும் பாடல் ஆளும், பலவித அபிநயங்களுடன் ஆண்களும், பெண்களும். சிறுவர் சிறுமியரும் ஆடும் நடனங்களும் எவரும் கேட்டு, பார்த்து இரசிக்க க் கூடியதாகவும், கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தன. இவர்களின் சங்கீதமும் நடனமும் நீக்ரோவரின் சங்கீதத்தையும், நடனத்தையும் ஞாபகப்படுத் தின. இவர்களின் பாடல்கள் "காப்பிரிஞ்ஞா "சிக்கோத்தி" (Chikothi) என்றழைக்கப்பட்டன. இது இன்று "பைலா" என்றழைக்கப்படும் தாள அமைதியுடன் கூடிய துள்ள விசையாக விளங்கியது. முன்பு புத்தளத்தில் இவர்களின் இசைக்கு நல்ல மவுசும், வரவேற்பும் இருந்தன. பலரின் வாய்கள் இவர்க ரின் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். வீடுகளில் சிறுவர்களும், பெரியவர்களும் இரசித்துப் பாடுவர். அப் பாடல்கனில் "சிங்கிலி நோனா சிங்கிலி நோனா சீப்புக் கொண்டைக் காரி" என்று தொடங்கும் பாடல் பிரசித்த மானதாகும். இது அவர்கள் பாடும் போர்த்துக்கேய மொழிப் பாடலின் தமிழ் வடிவாகும். போர்த்துக்கேய மொழி மூல முள்ள இரு பாடல்களையும், அதன் தமிழ் மொழி பெயர்ப் பையும் கீழே காண்போம்:

Page 91
புத்தளம் வரலாறும், மரபுகளும்
சிங்கன் நோனா சிங்கவி நோனா
ாயோ சுர Tj TTIT போர்ட்ட நிங்கேரா ஒர்ட்ட நிங்கேரா
பி(f)கா நமாஸ் டா பி(f)கா நமாஸ் டா நோனா
பி(f) நமாஸ் டா. ' "
தமிழ் மொழி பெயர்ப்பு பின்வருமாறு அமையலாம்:
"சிங்கள நோனா சிங்கள நோனா
மணஞ் செய விருப்பம்
வீடுகள் வேண்டாம் காணிகள் வேண்டாம்
மகளை மட்டும் தா
மகளை மட்டும் தா நோனா
மகளை மட்டும் தா"
இன்னொரு பாடல்:
"அண்ணா ந ஒரு
செட்டி பெதர் ஜ"ன்டு
குயென் கேர அனலா
கால மின்ஹா ஜ"ன்டு" "
தமிழில் பின்வருமாறு:
"தங்க மோதிரம் முண்டு
ஏழு நகை "செட்" உண்டு
அந்த மோதிரம் வேணுமா
எனை மனந்தால் பெறுவாய்",
இவ்வாறான பாடல்கள் ஏராளமுண்டு. தாளத்துட
இவைகளைப் பாடப்பாட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் d
தாளம் தப்பாமல் யாவரும் ஒருமித்து கை தட்டிப் பாடுதல் இதில் முக்கிய அம்சமென்க. இன்று இலங்கையில் வைபவங் களிலும், வேடிக்கைகளிலும் ஜனரஞ்சகமாக விரும்பப்படும் பைலா" என்ற சங்கீத முறை காப்பிரிகளின் "காப்பிரிஞ்ஞா" என்ற சங்கீதத்தின் தான முறையிலிருந்தே தோன்றிற்றென லாம். எனினும் "காப்பிரிஞ்ஞா" உண்மையிலேயே போர்த்துக் கேயரின் இசை முறையாகும. இத்தோடு காப்பிரிகளின் இசை பும் கலந்து "பைலா ' தோன்றியது. "காப்பிரிஞ்ஞா" இசை யுடன் கூடிய ஒருவகை நடனமாகும். இது காப்பிரியரின் பரம்பரை நடனமன்று. இந் நடன முறையை தங்களது என ஸ்பானியர் உரிமை கொண்டாடுவர். "சுெபர்" (Caper) என அழைக்கப்படும் ஸ்பானிய ஆட்டு நடனத்தைப் பின்பற்றி எழுந்ததென்பர். "
புத்தளத்தில் வாழ்ந்த காப்பிரி இனத்தினர் இங்குள்ள உள்ளூர் மக்களுடன் இணைந்து, வாழ்ந்து நாளடைவில் மணத் தொடர்புகளும் ஏற்படவே தங்களின் தனித்துவத்தையும் இழந்து தாம் பேசி வந்த போர்த்துக்கேய மொழியையும் மறந்தனர். இவர்களின் சந்ததியினருள் சிலர் இன்றும் புத் தளத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் தேக அமைப் புக்களும் படிப்படியாக மாறி வருவதை அவதானிக்கக் கூடிய நாகவுள்ளது.

Page 92
18. முத்துக் குளிப்பு-சலாபம்
இலங்கையின் வடமேற்குக் கரை முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற பிரதேசமாகும். இன்று காடாகவும், தரிசு நிலமாகவும் கிடக்கும் குதிரைமலை, பொன்பரப்பிப் பகுதி முன்பு முத்துக் குளிப்புக்கு பெயர் பெற்று உலக நாடுகள்ை ஈர்க்கும் வளங்கொளிக்கும் பகுதியாக மிளிர்ந்துள்ளன. முத் துக்கு எல்லா நாடுகளிலும் பெரிதும் மதிப்பிருந்தது. விய பாரப் பெறுமதியும் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஐரோ பியர் கீழ்த்திசை நாடுகளின் முத்துக்களுக்காகப் பேயா அலைந்தனர். எவ்வளவு பணமாயினும் வாரியிறைக்க அவர் கள் தயங்கவில்லை. ஏராளமான முத்துக்களை குறிப்பாக உரோமர்கள் வாங்கிச் சென்றனர். உரோமிலுள்ள பெண்கள் முத்துக்களில் மிகவும் பிரியமுள்ளவர்களாக விருந்தனர். தங் களின் மேனிகளில் முத்துக் கோவைகளை அணிந்து அவை ஒன்றோடொன்று உராய்ந்து ஒலி எழுப்புவதை மிகவும் பெரு மையாகவும், தங்களின் உள்ளப் பூரிப்பாகவும் கொண்டனர் அவர்களனியும் காற் செருப்பு வாரில் கூட முத்துக்களை பதித்து அலங்காரஞ் செய்தனர். "கயஸ் குளோடியஸ் எனும் உரோம இராசனின் இராணி "உலோலா" என்பவ மூன்று இலட்சம் தங்க நாணயம் மதிப்புள்ள முத்துக்கை அணிந்திருந்தாள் எனக் கூறப்படுகிறது. "கிளியோபத்திர எனும் எகிப்து நாட்டு எழிலரசி விலைமதிப்பற்ற முத்துக்கள் இரண்டை தன்னிடம் வைத்திருந்தாளாம். அம் முத்துக்க முன்பு கிழக்கு நாட்டரசர் ஒருவருக்கு சொந்தமாக இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். எாஜஹான் I星的
வையாம். அம்முத்துக்களில் ஒன்று என்பதிலாயிரம் தங்கி நானயம் பெறுமதியெனக் கூறப்படுகிறது. அம்முத்தை அவள் வினாகிரியில் கரைத்துக் குடித்தாளாம். மற்ற முத்தையும் கரைத்துக் குடிக்க ஆயத்தமானது தனது தோழியினால் தடுக் கப்பட்டாள் என்று கூறப்படுகிறது. 18 இவ்விதமாக முத்துக் களில் மோகங்கொண்ட பிறநாட்டவர் முத்துவியாபாரத்தை வருவாய் தரும் பிரதான தொழிலாகக் கொண்டனர். இதன் மூலம் முத்துக் குளிப்புத் தொழிலும் மிக வேகமான முறை யில் வளர்ச்சி பெற்றது ஊக்குவிக்கப்பட்டது; வியாபாரத் நிலும் முதலிடத்தைப் பெற்றது. ஆயினும் காலகதியில் செயற்கை முத்துக்கள் இயற்கை முத்துக்களுக்குப் போட்டி ாாக வியாபாரச் சந்தையில் பிரசித்தி பெற்றபோது முத் துக் குளிப்பும் படிப்படியாக வேகங்குன்றி இன்று அத்தொழி வில்லை என்று சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது. எனினும் எமது வடமேற்குக் கரையில் ஒருகால் ஆக்கிரமித்திருந்த இத்தொழிவைப் பற்றி அறிமுகஞ் செய்வது பொருத்தமென நம்புகின்றேன்.
சலாபம் என்றாலே முத்துக் குளித்தல் என்று பொருள் படும். முத்துச் சலாபம் என்றும் கூறுவர். முத்துக் குளிப்பு நடைபெறும் பருவ காலமுண்டு. அக்காலத்தில் சுறுசுறுப்பு நிறைந்த சன நெருக்கடியுடன் கூடிய துறைமுகப் பிரதேசங் சுள் இங்கிருந்தன. பல நிறத்தவரும். பல நாட்டவரும், பல சாதியினரும், குடிமக்களும் அங்கு நிறைந்து காணப்பட்ட னர். நிறைந்த முத்துச் சிப்பிகளுடன் கரையனுகும் தத்தமது கலங்களை எதிர்கொள்ளத் துடித்தோடும் கலச் சொந்தக் காரர்களும், அக்கலங்களில் பணியாற்றும் தொழிலாளரின் வருகைக்காக அவர்கள் முகங்களைக் காண ஏங்கி நிற்கும் குடும்பங்களும், பலவிதமான உடைகளையணிந்து பல வண் னங்களும், பல தோற்றங்களுமுள்ள நகை வணிகர்களும். கரகர்களும், முத்து வணிகர்களும், முத்துச் சிப்பிகளை தெரிவு செய்து வகைப் படுத்துவோரும், அவைகளைக் கூடை களில் அள்ளிச் சுமந்து செல்வோரும், முத்துக்களை ஆய்ந்து நிறுத்துப் பார்ப்போரும், தரத்திற்கேற்ப முத்துக்களின் பெறுமதியை நிர்ணயிப்போரும், சிப்பிகளை - முத்துக்களை

Page 93
7 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அறுப்போரும், ஒளியூட்டுவோரும் ஆக பல தரப்பட்ட அலு இல் ஈனையும் புரியும் மக்கள் எம் மனக் கண்முன்னே நிழலா டுகின்றனர். அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் வியாபார நிலையங்களும், உணவுச் சாலைகளும், கடை, கண்ணிகளும் நிறைந்து கலகலப்பாக விளங்கும் காட்சி மனதை அள்ளக் கூடியன. சனக் கூச்சவினால் அப் பிராந்தியமே களை கட்டிக் கொண்டிருக்கும். அமைதியை நிலைநாட்டும் அரசு காவலர்களும் அங்கே நடமாடுவர்.
கற்பிட்டியிலிருந்து மன்னார்க்கரை வரையுள்ள 5. பரப்பில் முத்துப் பார்கள் காணப்படினும், குதிரைமலைக் கெதிரேயுள்ள கடலிலேயே பிரசித்தமான பெரிய முத்துப் பார்கள் இருப்பதாக வரைபடங்கள் தெளிவுறுத்துகின்றன. முத்துக் குளித்தல் தொழிலில் ஈடுபடுவோருக்கு முத்துச் சிப்பி கள் இருக்கும் இடங்களும், எவ்வகையான சிப்பிகளுள்ளன என்பதும் அவைகள் குளிப்பதற்கு முதிர்ச்சி பெற்றுள்ள னவா என்பதும் நன்கு தெரியும், எல்லாப் பார்களிலும் எல் லாக் காலங்களிலும் முத்துக் குளிப்பு நண்டபெறாது. முத் துச் சிப்பிகள் வளர்ச்சியடைவதற்குரிய கால இடைவெளி விட்டு உரிய காலத்தில் அப்பகுதிகளில் முத்துக் குளிப்பார் கள். முத்துச் சிப்பிகள் தகுந்த வளர்ச்சியடைய ஏறத்தாழ ஏழு ஆண்டு செல்லுமெனக் கூறுவர். எனினும் சில வேளை அக்கால கட்டத்திற்கு முன்பும் நிலைமைக்கேற்ப மாறி மாறி ஆண்டுதோறும் சலாபங்களை நடாத்துவர். ஏனெனில் முத் துச் சிப்பியானது தனது வயிற்றினுள்ளிருக்கும் முத்து முற்றி விட்டால் அது அதனையே வெளியே உமிழ்ந்துவிடும் தன் மையுடையதாகும்.
சலாடம் நடத்தும் பருவம் மாசி மாதத்தில் ஆரம்பித்து சித்திரையில் முடிவடையும். முத்துக் குளிப்பில் பல சாதியின ரும் பல மதத்தவரும் ஈடுபடுவதனால் அவர்களின் பெரு நாட்கள் விடுமுறை நாட்களைக் க ைவித்து தொழில் நடை பெறும் உள்ளூர் மக்களுடன் தென்னிந்தியாவிலிருந்து வரும் மறவர், பரவர், முக்குவர் போன்ற சாதியாரும், LOT LITT ளத்திலிருந்து வரும் முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தொழி லாளராகப் பணியாற்றுவர். மலையாளத்திலுள்ள "கோலாங்"
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
என்ற இடத்திலிருந்து வரும் "லெப்பைகள்' என அழைக்கப் பட்ட முஸ்லிம்கள் மூழ்குவோருக்குப் பயிற்சியளிப்பதில் வல் லுனர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் சலாபக் கரைகளில் இருந்து பயிற்சி கொடுப்பர். முத்து வியாபாரம் அராபியர் களிடமிருந்து ஐரோப்பியரின் கைக்கு மாறிவிட்ட பிறகும் முத்துக் குளிக்க ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, முஸ் லிம்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. காரணம் அவர்களி டம் குடிப்பழக்கம் இல்லாதிருந்தமையேயாகும். தமது மதத் தைப் பேணி வந்த முஸ்லிம்கள் மது அருந்தாது தவிர்த்து வந்ததால் அவர்களால் கடலுக்குள் அதிக நேரம் மூச்சுப் பிடித்து இருக்க முடிந்தது. ஏராளமான சிப்பிகளைச் சோ ரிக்க முடிந்தது. இதற்காகவே முஸ்லிம் சுழியோடிகளுக்கே முதலிடம் அளிக்கப்பட்டிருந்ததென்பதை வரலாற்றாசிரியர் களின் குறிப்புக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 19
முத்துக் குளிப்புக்காகச் செல்லும் எல்லாப் படகுகளும் ஒன்றாகவே புறப்பட்டு ஒன்றாகவே திரும்பி வந்து சேரும். இரவு பத்து மணி மட்டில் புறப்பட்டு வைகறைப் பொழுதில் முத்துப் பார்களிருக்கும் இடத்தை அடைவர். சூரியோதயத் நுடன் தொழில் ஆரம்பித்து இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறும். கடற்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு தொழிலை முடிக்க வேண்டுமென்பதற்காக சுறுசுறுப்புடன் வேலை நடக் கும். நண்பகல் ஆனதும் வேலையை முடித்துவிட்டு படகுகள் யாவும் ஒன்றாகவே கரையை நோக்கித் திரும்பும். படகுகள் கரையை அடைந்ததும் பொழுது மறையுமுன்பு அப்படகுகளி லுள்ள சிப்பிகளை இறக்கி முடிக்க வேண்டுமென்பதற்காக அவசரமாக அலுவல்கள் நடைபெறும். மீன் பிடிப்போருக்கு மீன்கள் சில நாட்களில் கூடியும், சில நாட்களில் குறைந் தும் கிடைப்பதைப் போன்றே முத்துச் சிப்பிகளும் அகப்ப டும் அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் சகஜமாகும். ஒவ்வொரு குழுவினராலும் அவர்கட்குரிய மதகுருமார்களின் அனுசரணை யுடன் மதச் சடங்குகளும், பிரார்த்தனைகளும், ஆசீர்வாதங் களும், நேர்ச்சை, காணிக்கைகள் கொடுத்தலும் நடாத்தப் படும். தொழில் ஆபத்தின்றி நல்லதிர்ஷ்டமுடன் சிறக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இவைகள் நடாத்தப்பட்
T.

Page 94
149 புத்தளம் வரலாறும், மரபுகளும்
ஒன்வொரு படகும் "தண்டபோல்" எனும் படகுத் தலை வனுடன் இருபது பேரைத் தாங்கிச் செல்லும், அவர்களுள் பதின்மர் மூழ்குவோராகவும், மீதிப் பதின் மர் மூழ் குவோருக் குதவும் கயிறு தாங்குவோராகவும் பணி புரிவர். ஒரு நேரத் தில் ஐவர் கடலினுள் மூழ்குவர். அவர்கள் மேலே வந்ததும் மற்ற ஐவர் மூழ்குவர். இவ்வாறு தொடர்ச்சியாக மூழ்கு தலும், மீழுதலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
மூழ்குவோர் துரிதமாக அமிழ்ந்து செல்வதற்காக சிவந்த சுருங்கற்கள் ஒவ்வொரு படகிலும் ஐன வந்து இருக்கும். அக் கல்லின் மத்தியில் கயிறு புகக்கூடிய துவாரமொன் றிருக்கும். மேலும், கீழும் வட்ட வடிவமான காயும், கூர் நூதிக் கோபுர வடிவுடையதாயும் தோற்ற விளிக்கும். சிலர் பிறை வடிவான கற்களையும் பாவிப்பர். குழிவான வளைவிலே தமது பாகங் களை வசதியாக வைத்துக்கொள்ள இது உதவும்: இத் தொழிஐைப் புரிவோர் இளம் பருவத்திலிருந்தே இருபத்து நான் கடி முதல் அறுது அடிவரை ஆழமுள்ள நீரினுள் பய மின்றி மூழ்கி முத்துச் சிப்பிகளைத் தேடும் பழக்கத்தை el_ffiti, டாக்கிக் கொள்வர். கயிற்றைப் பற்றிப் பிடித் து குறிப்பிட்ட கல்லின் மேல் வலது காலின் விரல்களை வைத்துக்கொண்டு இடது கால் பெருவிரவில் வலையிலான பையொன்றை வைத் துக்கொண்டு மூழ்குவர். சாதாரண மனிதர்கள் தப்து விரல்களால் புரியும் கருமங்களை மூழ்குவோர் தமது கால் விரல்களால் இலாவகமாக துரிதமாக செய்யக்கூடிய திறமை யும், சாதுரியமும் உள்ளவர்களாக பயிற்சி பெற்றிருப்பர் நிலத்திலுள்ள மிகவும் சின்னஞ்சிறிய பொருட்களையும் தம் கால் விரல்களால் எடுக்கும் திறமை அவர்களுக்குண்டு மூழ்கு வோர் தமது வலது கையில் இன்னொரு கயிற்றைப் பிடிக் துக் கொண்டு இடது கையினால் நாசித் துவாரத்தைப் பொத்திக் கொண்டு கல்லின் துணையுடன் விரைவாக அடிப் பாகத்தை அடைவர். இயன்ற அளவு துரிதமாகவும்: சாமர்த் தியமாகவும் வலைப் பையை தம் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு குறுகிய நேரத்தில் தம்மாவியன்ற அளவு முத்துச் சிப்பிகளை சேகரிப்பர். சாதாரணமாக ஒருவர் இரு நிமிட நேரமே நீருள் மூழ்கி இருப்பார். பின்பு கயிற்றின் மூலம்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷொஜஹான் I ht)
அவர் சைக்கினை செய்ய படகிலுள்ளவர்கள் விரைவாக அவரை அவர் எரின் வலது கையிலுள்ள கயிற்றின் மூலம்
மேலே தூக்கி படகினுள் விடுவார்கள். அவருடன் சென்ற கில் பின்பு மேலே தூக்கி எடுக்கப்படும். மரணத்தை விள விக்கக் கூடிய கடின தேக முயற்சியின் பின் படகுக்கு மீண்டு வரும் சுழியோடிகளின் பொப் , காது நாசித் துவாரம் ஆகிய வற்றுள் புகுந்துள்ள நீரை வெளியேற்றுவதற்கான சிகிச்சை களும் நடைபெறும். சில வேளை நாசி, காதுகளினால் இரத்தமும் வெளியேறுவதுண்டு. இந்நி:ை அவர்களின் அடுத்த சுழியோடலுக்கு எவ்விதத்திலும் தடையாக இருப்பதில்லை. சுழியோடிகள் சாதாரணமாக தினமொன்றுக்கு நாற்பது. ஐம் பது முறை பிள் இவ்வாறு மூழ்கித் திரும்புவர். ஒவ்வொரு முறையிலும் நூறு முத்துச் சிப்பிகள் வரை கொண்டு வரு வார்கள். சிலர் தமது தேகத்தில் எண்ணெய் பூசிக் கொள் வதும், நீர் உள்ளே புகா வண்னம் நாசித் துவாரங்களை பும், காது களையும் அடைத்துக் கொள்வதுமுண்டு. எனினும் பலர் எவ்வித பாதுகாப்புமின்றி பயமுமின்றி சுழியோடுவர். முன்பு கூறியதுபோல ஒருவர் நீருள் இரு நிமிட நேரமே தங்கியிருப்பரெனினும் ஐந்து நிமிடம் வரை தங்கியிருக்கக் கூடிய வல்லுனர்களும் இருந்துள்ளனர். 1797ம் ஆண்டில் மல பார்க் கரையிலுள்ள அன் ஜங்கோ (Anjango) எனுமிடத்திலி ருந்து வந்த சுழியோடி ஒருவர் முழுமையாக ஆறு நிமிடம் நீரினுள் இருந்து சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துக் குளித்தல் மிகவும் அபாயம் நிறைந்த அசாதார னமான தொழிலாக எமக்குத் தென்படினும் மிகவும் இளம் வயது தொட்டு அவர்களுக்குத் தரப்படும் பயிற்சியினால் அவர்களின் அவயவங்ாள் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு வளைந்து கொடுக்கும் இயல்பை உடையனவாக அமைந்து விடுகின்றன. நீருக்கடியில் தங்கியிருக்கும் போது சுறா மீன்களினால் ஏற் படக்கூடிய அனர்த் மும், ஆபத்துமே அவர்களுக்கு பயங்க ரத்தை ஏற்படுத்துவனவாகும். சில சுழியோடிகள் சுறா மீன் களினால் வரக்கூடிய அபாயங்களினின்றும் தப்பக் கூடிய ஆற் றல்கள் உள்ளவராகவும் இருப்பார்கள். அவர்கள் சுழிபோ டச் செல்லும் முன்பு குருமார்களினதும், மந்திரவாதிகளின்

Page 95
புத்தனம் வரலாறும், மரபுகளும்
தும் ஆலோசனைகளைப் பெற்று அவர்கள் கூறும் என தயும் ஆட்சேபனையின்றி ஏற்று அவ்வாறே நடப்பார்கள். தமது சாதி, வகுப்பு, மத அடிப்படையில் பெரிய அளவில் மதச் சடங்குகளைச் செய்வர். சுழியோடச் செல்வதற்கு முன்பு அவர்கள் உணவுண்ன மாட்டார்கள், சுழியோடி திரும்பி வந்த பின் நன்னீரில் நீராடுவர்.
முத்துக் குளிப்புக்காகக் கடலுக்குச் சென்றுள்ள கள் திரும்பி வரும் மட்டும் மந்திரவாதிகள் அடற்கரையில் தமது உடம்பினை பல கோணங்களிலும் வளைத்து நெளிந்து நடுநடுங்கி மந்திரங்களை முணுமுணுத்து ஜெபித்த விண்ணம் உண்ணாது பருகாது நிற்பார்கள். ஆயினும் நீண்ட நேரம் நின்று ஜெபிப்பதற்கான வலிமை பெறுவதற்காக அவர்கள் இடைக்கிடை பனங்கள்ளை அருந்துவதுமுண்டு. சில மந்திர வாதிகள் சுழியோடிகளுடன் படகுகளில் சென்று வருவார்
முத்துக் குளிப்போர் பிரத்தியேகமாகப் படகு சொந்திக் காரர்களுடன் ஊதியம் சம்பந்தமாக ஒப்பந்தஞ்செய்து கொள் வர், சிலர் கிடைக்கும் சிப்பிகளில் குறிப்பிடும் ஒரு பங்கை தனதியமாகப் பெறுவர். பொதுவாக முத்துக் குளிப்பு அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போன்றதாகவே அமையும். பெறுமதியான மு துக்களை களவாக மறைத்து வைத்திருப்பது பற்றி அல்லது கையாடியது பற்றி ஏதும் சந்தேகம் ஏற்படின் சம்பந்தப்பட் டவர்களை களவு போன பொருட்கள் கண்டு பிடிக்கப்படும் வரை அடைத்து வைத்து கடினமான தண்டனைகளையும் வேதனைகளையும் பொருட்களுக்குரித்துள்ள வினிகர்கள் சொந்தக்காரர்கள் அளிப்பார்கள்.
படகுகள் கரையை அடைந்ததும் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமக்குரித்தான் சிப்பிகளை படகுகளிலிருந்து எடுத்து
சுமந்து சென்று தங்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலுள்ள குழிகளில் கொட்டுவார்கள். இக்குழிகள்
சுமார் இரு அடி ஆழமானதாக இருக்கும். நீள அகலங் னைத் தம் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்வர். அக்குழி களைச் சுற்றி வேலியுமுண்டு. நிலத்தோடு சிப்பிகள் தொடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
புறாதவாறு பாய்களைக் கீழே விரித்திருப்பர். பின்பு சிப்பி களின் மேல் படிந்துள்ள பாசிகளையும், கூளங்களையும் அகற்றி சுத்தமாக்குவர். சிப்பிகள் காய்ந்ததும் அவற்றைத் திறந்து சதையுடன் சேர்ந்திருக்கும் முத்தைப் பிரித்து எடுப் பர்,
முத்துக் குளிப்பு முடிவடையும் வரை அச்சூழல் அழுகிய துர்வானட நிறைந்ததாகவே இருக்கும். தென்மேற்குப் பரு வப் பெயர்ச்சிக் காற்று வீசி அச்சூழற்பரப்பை சுத்தமாக்கும் வரை இந்நிலை நீடிக்கும். முத்துக் குளிப்பு முடிந்து வியா பாரிகள் சென்ற பிறகு அங்குள்ள மக்கள் அப்பகுதி Աք [ւք வதையும் சுற்றித் தேடுதல்களை நடாத்துவார்கள். விட்டுப் போன தவறிப்போன சிப்பிகளைக் கண்டு பிடித்து அதில் பெறுமதியான முத்துக்கள் இருக்குமா என்பதைக் கண்டு பிடிக்கவே அல்வாறான தேடுதல்கள் நடக்கும். பல தடவை களில் அவ்வாறான அதிர்ள்டங்கள் பலருக்குக் கிடைத்துள் துள்ளன. ஐரோப்பியர்கள் வெண்ணிற முத்துக்களுக்கே முக்கியத்துவமளிப்பினும், உண்ணாட்டவர் தங்க நிற, மஞ் சள் நிற முத்துக்களையே மதிப்பர்.
முத்துக்களை வெட்டும், சானை தீட்டும் கருமங்களும் நடைபெறும். அதற்காக மரத்தினாலான சிறு கருவிகள் அவர்களிடமுண்டு. முத்துக்களை வட்டமாகவும், பளபளப் பாகவும் ஆக்குவார்கள். *

Page 96
19. யானை பிடித்தல்
யானை பிடித்தல் முஸ்லிம்களின் கை வந்த விலையாகும் புத்தளத்தில் யானை பிடித்தலில் ஈடுபட்ட பலர் வாழ்ந்து
ானர். யானை கட்டும்" குடும்பத்தினரே இங்கு வாழ்ந்து இத் தொழிலை பரம்பரையாக செய்து வந்தமைபற்றி அ கிறோம். யாரை பிடித்தலை "யானை கட்டுதல்" என்றும் குறிப் பிடுவர். யானைகளைப் பிடித்தற்கான பல வழி முறைகள் உலகின் பல நாடுகளில் கையாளப்படுகின்றன. யானைக் காடு களின் மத்தியில் சுமாரான பரப்பில் பலமான வேலிகளை சுற்றிவர அடைத்து பலமான சுதலொன்றையும் மேலே தூக்கி வைத்திருப்பார்கள். அக்கதவுகளை தேவையானபோது கீழே இறக்கி அடைத்து விடுவதற்கான வசதியும் உண்டு. மேே அதற்கென ஆட்கள் தயாராக இருப்பார்கள். யானைக் கூட் டங்களை வெடி, கூச்சல் இவற்றின் மூலம் பலர் கலைத்து வந்து குறிப்பிட்ட கூண்டுக்குள் புகச் செய்வார்கள். பின் கதவுகள் அடைக்கப்பட்டு யானைகள் சிறையிடப்படும். கால கதியில் அவைகள் கண்ணிவைத்து கிட்டப்பட்டு பழக்கப்படும். இதை 'யான்னக் காலை" என அழைப்பர். இது யானை களை சாதாரணமாகப் பிடிக்கும் முறையாகும் சில இட களில் பயிற்றப்பட்ட யானைகளின் உதவியுடன் காட்டான களைப் பிடிக்கும் வழக்கமும் உண்டு.
அடுத்து யானைகள் செல்லும் வழியில் கண்ணிகள் படு குழிகள் அமைத்து அவைகளைப் பிடிக்கும் வழக்கங்களும் உண்டு. வழியில் யானை கடக்கக் கூடிய பெரிய மரங்களிைல்
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
குறுக்காகப் போட்டு வைப்பார்கள். அவ்வழியால் வரும் யானைகள் அம்மரத்தைக் கடப்பதற்காகக் காலைத் தூக்கி மறுபக்கம் வைக்குமிடத்தில் கண்ணியை பொறியுடன் தயா ராக வைத்திருப்பர். காலை வைத்தவுடன் பொறி தட்டுப் பட்டு கண்வி யானையின் காலை இறுக்கி விடும். பின்பு கண்ணியில் அகப்பட்ட யானைக்கு மேலும் கண்ணிக் கயிறு கிளையிட்டு கட்டி தங்களுக்குத் தேவையான முறையில் யானை யைக் கையாளுவார்கள். இம்முறையிலும், படுகுழிகளில் யானைகளை வீழ்த்திப் பிடிக்கும் முறையிலும் இரு வித நஷ் டங்கள் ஏற்பட வாய்ப்புக்களுள்ளன. முன் கால்களில் கண்ணி இறுகுவதனாலும், படுகுழிகளில் முன் பக்கம் சரிந்து வீழ் வதனாலும் யானைகளுக்கு முறிவுகளும், பலத்த நோவுகளும், காயங்களும் ஏற்படுவது ஒரு நஷ்டமாகும். தாங்கள் எதிர் பார்த்த யானைகள் சிக்காதிருப்பது மற்றதொரு நஷ்டமாகும். எனவே இம்முறைகளை ஒரு சிலரே கையாளுவார்கள்.
ஆயினும் பயிற்றப்பட்ட யானைகளின் உதவியின்றி தனி யொருவர் காட்டானையின் கால்களில் கண்ணியிட்டுப் பிடிக் கும் முறையைக் கையாளும் ஒரே ஒரு நாடு இலங்கை ாட்டுமே, துணிகரமிக்கி தீரச் செயல் நுணுக்கமுள்ள இத் தொழில் பல நூற்றாண்டு காலமாக புத்தளம் பகுதி மக்க ளால் பரம்பரையாகப் பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. பானை பிடித்தவில் ஈடுபட்டு வருபவர்கனை "பணிக் சுர்" என அழைப்பர். சுதந்திரமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை டச்சு அரசின் கட்டுப்பாடுகள் தலையிட்டு அவர் கிளின் வேகத்தைக் குறைத்தன. டச்சு அரசு சில சட்டதிட் டங்கட்குட்பட்டு பானை' பிடித்தற்காக பணிக்கர்களை நிய பித்தனர். இவர்களைத் தவிர வேறெவருக்கும் யானை பிடித் தல் தடைசெய்யப்பட்டது. தொடர்ந்து வந்த ஆங்கில அரசு இத்தொழிலை ஊக்குவிக்கவில்லை. இதனால் இத் தொழி வில் ஈடுபடுவோரின் தொகை அருகிக் கொண்டே வந்தது. அத்துடன் யானை வியாபாரிகளிடமிருந்து முன் பணம் வாங்கி அதைக் கொடுக்க முடியாத கடன் பழுவினால் நலிவடைந் தோர் பலர். இவ்விதமாக இத்தொழில் ஊக்குவிக்கப்படாத முறையில் புறக்கணிக்கப்பட்டமையால் நுணுக்கமான தொழில் வல்லுநர்களும் மறைந்தனர்.

Page 97
புத்தளம் வரலாறும், மரபுகளும்
பணிக்கர்கள் யாவரும் முஸ்லிம்களே. மட்டக்களப் ஏறாவூர் பகுதியிலும், மன்னார், முசவி, மறிச்சுக்கட்டிப் பகுதியிலும் இவர் ள் அதிகம் வாழ்ந்தனர். ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையுள்ள கோடை காலப் பகுதிலேயே யானை பிடித்தல் நடைபெறும். ஏனைய காலங்களில் பணிக்கர்கள் விவசாயத்திலும், வர்த்தகத்திலும், ஏனைய தொழில்களிலும் ஈடுபடுவர். பணிக்கர் ஒருவர் தன் னுடன் இத்தொழிலில் ஈடுபடக்கூடிய தைரியசாலிகளான பன்னிருவரை ஒரு குழுவாகச் சேர்த்துக் கொள்வார். உரிய காலம் வந்ததும் காட்டில் தங்கியிருப்பதற்கான தேவையான பாவனைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் சேகரித்து எடுத்துக் கொள்வதுடன், ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள கண்ணிகளையும், கயிறுகளையும் எடுத்துக் கொள்வார். அவர்களுள் ஒருவர் "மொட்டக் காரன்" : "நேத்திச்காரன்" எனப்படுவார். அவரே அக்குழுவினரின் நிர் வாகியாக இருப்பார். இன்னொருவர் சமய, மந்திர, தந்திரச் சடங்குகளைச் செய்யும் அண்ணாவியாக இருப்பார். பிடிக் கப்படும் யானையை விற்று வரும் பணத்தில் 20 % பணிக்க ருக்கும். 20% மொட்டக் காரணுக்கும், 12 % அண் னாவியாருக்கும், 5 % சமயச் சடங்குகளைச் செய்பவருக் கும் 5% உதவி நன்கொடைகளுக்கும் கொடுக்கப்பட்டு மீதிப் பணம் தலைவருட்பட ஏனையோருக்கிடையில் பிரித் துக் கொடுக்கப்படும்.
அபாயமும், துணிகரமும் நிறைந்த இத்தொழிலுக்குச் செல்வதற்கு முன்பு திருக்குர்ஆனிலுள்ள வசனங்கள் பாரா பணம் செய்யப்படும். வன தேவதைகளைத் திருப்தி படுத்து வதற்காக அண்ணாவியார் மூலம் காட்டின் தொடக்கத்தில் தேங்காய்கள் உடைத்து சில கிரியைகளைச் செய்வது வழக்கத் திலிருந்தது. வேறுபல பிரார்த்தனைகளும் நடைபெறும்.
எருங்கலம் பிட்டியைச் சேர்ந்த பக்கீர் புலவர் பாடியுள்ள தாகக் கூறப்படும் "யானைக் காதல்" என்ற தலைப்பிலான கவிதைக் கோவையிலிருந்து இரு செய்யுளைக் கீழே தந்துள்
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ளேன். காட்டுக்கதிபதியென மக்கள் கருதியுள்ள நபி ஹிழ்று (அலை) அவர்களிடம் காத்தருளும்படி வேண்டும் பிராார்த் தனையே இது.
. கோட்டானையைப் பிடிக்கக்
கொள்கையுடனே மகிழ்ந்து வீட்டாளிடத்தில் விடை
பெற்றகலும் வேளையிலே காட்டேறி காளியினால்
கட்டுந்தடை வாராமல் காட்டாமரைத் துனையைத்
தந்துதவும் நாயகமே. (கால் -- தாமரை - காட்டாமரை)
- நெஞ்சம் மிகத் துணிவாய்
நீண்ட தடக் கோட்டுடைய குஞ்சரத்தின் காலில்
குனிந்து கயிறேந்துகையில் வெஞ்சினத்தினாலுதவி வீசியடியாதிருக்க தஞ்சம் வைத்துக் காத்தருள்வீர்
தக்க ஹிழ்றுல்லாஹ்வே,
காட்டில் தங்கியிருந்த இடத்திலிருந்து பானைகளைத் தேடிப் புறப்படும் நாளன்று காலையில் பணிக்கர் சிறிதளவே டனவுண்பார். ஒடுங்கிய வெண்ணிறச் சிலையினால் கச்சை fட்டி இடுப்பிலுள்ள வாருடன் இறுக்கமாக இணைத்திருப் பார். கண்ணிக் கயிற்றைத் தோளில் தாங்கியிருப்பார். அக் 1ண்ணிக் கயிறு அரைப்பங்கு மான் தோலினாலும், அரைப் பங்கு மரைத் தோலினாலும் முறுக்கப் பட்டதாக இருக்கும், இருபது, இருபத்திரண்டடி நீளமானதாகவும், மூன்றரை அங் குலத் தடிப்புள்ளதாகவும் இக்கயிறு ஆக்கப்பட்டிருக்கும். கண்ணியின் இரு முனைகளையும் இணைத்தும் பெரிய முடிச் சொன்று போடப்பட்டிருக்கும். இரண்டடி சுற்றளவுடன் அது சோர்ந்து விழாது இரும்பு வளையம் போன்று விறைப்பாக நிமிர்ந்து நிற்கக் கூடியவாறு கண்ணியைச் செய்திருப்பர்.

Page 98
புத்தளம் வரலாறும், மரபுகளு
யானையின் காலிவிட்டு இழுக்கும்போது இலகுவாக இறுக் கூடிய விதத்திலும், பலமாக இழுக்கப்படும்போது பூட்டு போட்டதுபோல பிடி இளகாத முறையிலும் கண் ணியை உரிய செயல் நுணுக்கங்களுடன் ஆக்கியிருப்பார்கள். பணிக்கருடன் செல்வோர் ஏனைய கயிறுகளைக் கொண்டு செல்வதுடன், யானையின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக துப்பாக்கிகளை யும் ஈட்டிகளையும் வைத்திருப்பார்கள். யானையைத் துரத் திப் பிடிப்பதற்கு இலகுவாக ஓடக்கூடிய ஐதான காடுகே
சிறந்ததாகும். அடர்ந்த, முட்செடிகளுடன் கூடிய காடுகளில்
பணிக்கர் யானைக்குக் கண்ணியிட முனையமாட்டார்.
முதவில் யானைக் கூட்டங்கள் சென்றுள்ள வழியைக் சுண்டு கொள்வார்கள். இவ்வழியை "அதிர்" எனக் குறிப்பி வர். அவ்வழிச் சென்று யானைக் கூட்டம் நடமாடும் இடத்தை அறிந்து கொள்வார்கள். தைரிய சாவிகளான இரு வ டன் பணிக்கர் காடுகளினூடாக ஒளிந்து, பதுங்கி, புகுந் சென்று யானைகளின் நிலைமையை ைேவு பார்ப்பரர் யானைக் கூட்டத்தில் அரை வளர்ச்சியுள்ள நல்ல இலட்சன மான இளம் யானையைக் கண்டு கொள்வார். பணிக்க வலது கையில் கண்ணியையும், இடது கையில் மற்றக் கயிறு விண்ளேயும் தயாராக வைத்துக் கொள்வார். யானைகளின் அண்மை, அவைகளின் நடமாட்ட சுபாவ நி:ை ஆதியன திருப்தியெனக் கண்டதும் பணிக்கரின் சமிக்ஞையின் பேரில்
துப்பாக்கி வெடிச் சத்தமொன்று எழுப்பப்படும். கூட்டமா நிற்கும் பானைகள் திடீரெனக் சேட்ட வெடிச் சத்தத்தினா அதிர்ச்சியடைந்து ஒன்றும் புரியாமல் ஆங்காங்கு ஓடும் பணிக்கர் உடன் அம்பு போல் விரைந்து பாய்ந்து தான் பிடி கீத் தேர்ந்தெடுத்துள்ள யானையின் இடது பின்னங்காலி குதிகாவை அணுகுவார். அதைத் தொடர்ந்து சென்று அவ் யானையின் காலில் கண்ணியைத் திடீரென இலாவகமா இட்டு இறுக்கி, யானையைத் தன் பாட்டில் ஓடவிடுவார் நீளமான ஏனைய கயிறுகளையும் இழுத்துக் கொண்டு யான ஒட அதைத்தொடர்ந்து பணிக்கரும் ஒடிச் செல்லுவார். கயிற்றைச் சுற்றிக் கட்டக் கூடிய பலமான மரமொன்று எதிர்ப்பட்டதும் கயிற்றை அம்மரத்தில் சுற்றிக் கட்டி விடு
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 直岳岛
வார். யானை இழுபட்டு ஓட முடியாமல் தடுமாறி சிறிச் சிந்து ஒலமிட்டு அங்கலாய்க்கும். அவ்வேளை மற்றவர்கள் சுருக்கிடப்பட்டுள்ள விாலுக்கு மேலும் பல கயிறுகளைப் போட்டு அறுத்துக்கொண்டு போக முடியாதவாறு கட்டி விடு ார்கள். யாவை தம்மை தாக்க வரும் சந்தர்ப்பங்களிலெல் ார் மிகவும் எச்சரிக்கையுடன் மாறிக் கொள்ளும் பயிற்சி அவர்களிடத்திலுண்டு. சில பலமுள்ள யானைகள் #யிறுகளை அறுத்துக் கொள்வதுமுண்டெனினும், அவ்வாறு நிகழா வண் னம் நிலைமைக்கேற்ப புதிது புதிதான பல கயிறுகளைக் ாவில் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒடிக் கொண் டிருக்கும் பாதையின் காவில் ஒருவர் கண்ணியையிட்டு யானை யைப் பிடிப்பாராயின் அன்று முதல் அவர் "பணிக்கன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றுக் கொள்வார்.
யானைக்குக் கண்ணியிடுவதில் இரு விதமான அபாயங்கள் இருக்கின்றன. பிடிக்கும் யானைக்குப் பின்னே பணிக்கன் தொடர்ந்து ஒடிச் செல்லும் போது அவருக்குப் பின்னால் வேறொரு யானையும் அணுகி ஓடி வர நேரிடும். அவ்வமயம் அவ்வானை ஓடி வரும் பாதையை விட்டு அகன்று விலகி நான் குறி வைத்துள்ள யானையைத் தொடர்ந்து செல்ல பும் வேண்டும். அடுத்ததாக உண்டாகும் அபாயம், குட்டி ானையொன்றைப் பிடிக்கும் போது கோபாவேசத்துக் கரளான அதன் தாயினால் தாக்கப்படும் சந்தர்ப்பமாகும். அவ்வேளைகளில் மற்றவர்கள் துப்பாக்கியினால் அதைச் சுட்டுப் பயமுறுத்தி அதை விரட்டி விடுவர். சில வேளை அந்த
| iii இறந்துவிடுவதுமுண்டு.
பல கயிறுகளையும் இட்டு யானை தப்பி ஓடாதபடி செய் ததன் பின்பு அதிலீடுபட்டோர் நிம்மதியாக மூச்சு விட்டு அமர்ந்து சிறிது ஓய்வு கொள்ளுவர். அந்நேரம் யானையா ாது அங்குமிங்கும் அடித்து, ஒடித்து, நொறுக்கி, மிதித்து நாலாபக்கங்களிலுமுள்ள மரஞ் செடிகளை வீழ்த்தி அவ் டத்தை வெளியாக்கி விடும். அதன் மூலம் யானையை வசதி யாகக் கட்டிக் கையாளுவதற்கு ஏற்ற இடமும் அவர்களுக்குக் ைெடத்து விடும். பின்பு கண்ணியொன்றை நிலத்திலிட்டு, அக்கண்ணியினுள் யானை தன் முன் காலொன்றை அதில்

Page 99
5 புத்தளம் வரலாறும், மரபுகளும்
வைக்கும் சந்தர்ப்பத்தில் இறுக்கி முன், பின்னாலுள்ள மரங் களில் இழுத்துக் கட்டி விடுவர். இதனால் யானைத் தன் துதிக்கையால் வீசி, ஆவேசமாக தாக்குவதற்கு 5si l. IIT-i. இருக்கும்.
பலமான முரட்டுக் கயிறுகள் யானையின் காலை எலும்பு வரை அறுத்துக் காயத்தை ஏற்படுத்தி விடுமானகயால், அவ் வாறான கயிறுகளை நீண்ட நேரம் காவில் இட்டு வைத்தி
ருக்க மாட்டார்கள். எப்பக்கமும் அசைய விடாதபடி பல கயிறுகளைக் கால்களுக்கு இட்டுக் கட்டிவிடுவதன் பயனாக அந்த யானை நிலத்தில் வீழ்ந்து சாய்ந்து படுத்துவிடும்.
உடனே தான்கைந்து பேர் ஒடிச்சென்று அதன் தலையின் மீது ஏறி உட்கார்ந்து அதை எழும்ப விடாமல் செய்துவிடு
வர். துதிக்கையால் தாக்க முடியாதபடி இன்னும் Laնո அதைச் சுருட்டிப் பிடித்துக்கொள்வர். பின்பு அதன் கழுத் தில் பலமான கயிறுகனையிட்டுக் கட்டி விடுவார்கள். முன் கால்களிலுள்ள கயிறுகளை அகற்றி பின் கால்களில் மட்டும்
தனித்தனிக் கயிறுகளை இடுவர். பின்பு ஏழெட்டுப் Lu நீளமான கழுத்துக் கயிற்றைப் பிடித்து நிற்க, பணிக்கனும் இன்னொருவரும் பின் கால்களிலுள்ள கயிறுகளைப் பிடித் துக் கொள்வர். சமிக்ஞை கொடுபட்டதும் யானையின் தலை மீதிருந்தவர்கள் குதித்துப் பாய்ந்து யானையின் இரு பக்கங் களிலும் ஈட்டிகளுடன் சுமாரான தூரத்தில் தயார் நிலை யில் நிற்பார்கள். அந்நேரம் யானை தலையை நிமிர்த்தி எழுந்து நிற்கும். கழுத்துக் கயிற்றைப் பிடித்து நிற்போர் கூச்சவிட யானை ஒட ஆரம்பிக்கும். யானையின் ஒவ்வோர் அசைவையும் அவதானித்தபடி பின் கால்கனின் கயிறுகளைப் பிடித்திருக்கும் பணிக்கனும், மற்றவரும் யானது யின் தாக்கு தலுக்கு உள்ளாகாதவாறு பாதுகாப்புடன் கருமமாற்றுவர் யானையைத் தாம் விரும்பும் திசைப் பக்கம் நடாத்திச் செல்வதற்கு இரு பக்கங்களிலும் ஈட்டிகளுடன் இருப்பவர்கள் துணைபுரிவர். முடியாத நிலை ஏற்படும் இக்கட்டான வேளை வருமாயின் பின் கால்களின் கயிறுகளைப் பிடித்திருப்போர் அவற்றைப் பெரும் மரங்களில் சுற்றிக் கட்டி JT GIGITE : அடக்குவர். தாங்கள் விரும்பிய திசையில் செல்ல யானை தயாராக இருக்கும் வேளை மரங்களில் கட்டியிருக்கும் கயிறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 1ED
களைத் தளர்த்த யானை செல்வத் தொடங்கும். இவ்வா நாக சத்தமிட்டும், தாக்கியும் யானையை தங்களின் முகா
புக்குக் கொண்டு செல்வார்கள்.
புதிய யானையொன்றை இவ்வாறு கொண்டு செல்வது கஷ்டங்களும், அபாயங்களும் நிறைந்த நீரச் செயல் TiT LI தில் சந்தேகமேயில்லை. ஆயினும் இத்தொழிலில் ஈடுபட்டவர் களின் பயிற்சியால் அபாயங்கள் நிகழ்வது மிகவும் அபூர்வ
மாகும். யானையைக் கொண்டு செல்லும்போது அதன் அசைவுகளை, நடத்தைகளை மிகவும் நுணுக்கமாக அவதா னித்துக் கொள்வர். பானையிடம் புதுமையான நடத்
தையோ, அன்றி படுத்துக்கொண்டு எழும்பாதமை போன்ற பிடிவாதக் குணங்களோ, அன்றி ஒரே பக்கத்தாலேயே தப்பி யோடுவதற்கு முனையும் நிலையோ தென்படும். சில வேளை ஆவேசங் கொண்டிருந்த யானை திடீரென அமைதி அடை பும். இவ்வாறான நிலைமைகளில் சுற்றி நிற்போர்களுக்கு இந்த யானைக்கு என்ன நடக்கப் போகிறதென்பது தெரிந்து விடும். எனவே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வெறுமனே நிற்பார்கள். குறுகிய நேரத்தில் யானை ேேழ வீழ்ந்து புரண்டு செத்துவிடும். ஆவேசமாக இழுபறிப் பட்டு போராடியதன் காரணமாக யானையின் உள்ளுறுப்புக் ாளில் ஏதோ பழுதடைந்தமையே இச்சாவுக்குக் காரணமா பமையும். யானை பிடிப்போர்க்கு இது துரதிர்ஷ்டமாகவே இருக்கும். முயற்சிகள் யாவும் வியர்த்தமான நிலையே இது.
உரிய இடத்துக்கு யானையைக் கொண்டு வந்து சேர்த்த தும் பின் கால்களில் இலாஸ்டிக் போன்ற கயிறு கிளையிட்டுக் கட்டி விடுவார்கள். தீனியும், பெரிய மர உரல்களில் நீரும் வைப்பார்கள். எனினும் யானை அதிர்ச்சியினாலும், களைப் பினாலும் சுமாரான காலம் கழிந்த பின்பே உணவுண்ண வும், நீர் பருகவும் தொடங்கும். யானையின் தோற்றத்தை யும், பருவத்தையும், அங்க இலட்சனங்களையும் கொண்டு அதன் பெறுமதியைக் கணிப்பார்கள். யானை பிடிப்போர்க்கு அதன் அதிர்ஷ்ட அல்லது துரதிர்ஷ்ட அடையாளங்கள் நன்கு தெரியும். தலையில் புதுமையான வடிவங்களில் வெண்தழும்

Page 100
I. G. I புத்தளம் வரலாறும், மரபுகளும்
புகளும், புள்ளிகளும், கால்களில் வழமையான தொகைக்கதி கமான நகங்களும், நாக்கில் கரும்புள்ளிகளும் இருப்பின் அதிர்ஷ்ட ஈனமானதாகக் கணிப்பர். பிடிக்கும்போது போராட்டத்தின் பலனாக இறக்கும் பா:னகளைப்போஸ் , பிடித்த பின்பு புதிய சூழ்நிலைமைக்கேற்ப மாற முடியாமை காரணமாகவும், காவில் ஏற்பட்டுள்ள காயங்கள் காரண மாகவும் சில மாதங்களில் நோய் வாய்ப்பட்டு இறந்துவிடும் யானைகளுண்டு. பெரிய முத்துக்கள் கொம்புகளில் இருப்ப தாகக் கருதப்படும். "முத்துக் கொம்பன்" பானைகளையும், வளையம் வளையமாக அமைந்துள்ள கொம்புகளையுடைய தராசுக் கொம்பன்" யானைகளையும் பிடிப்பதை பணிக்கர் பிள் தங்கனின் பேரதிர்ஷ்டமாகக் கருதுவர். யானை பிடிப்பு தில் ஈடுபடுவோருக்கு தமது கவலையீனங்களினாலோ, தற் செயல் நிகழ்வுகளினாலோ சுகக் குறைகள், காயங்கள் ஏற். படுவதுண்டு. 19
இலங்கைக்கே சிறப்பான யானை பிடிக்கும் Li: J. L. K வீரதீரமிக்க துணிகரத் தொழில் இன்று கேட்டு வியப்புறும் கதையாக மாறிவிட்டது. இது யானைகளின் அதிர்ஷ்டமா?.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20. பண்டைய போக்குவரத்து
புத்தளம், ஒரு துறைமுகமாக விளங்கி வந்தபோது பல தேசத்துக்கப்பல்களும் இங்கே வந்து ஏற்றிறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவி விருந்து வந்த மக்களின் தொடர்பு புத் தளத்தை சுறுசுறுப்பு நிறைந்த இடமாக, துறைமுகமாக ஆக்கியுள்ளது. இலங்கை பின் கரையோரப் பகுதிகளின் முக்கிய துறைகள் அந்நியரின் ஆதிக்கத்திலான போது மலை நாட்டு ஏற்று இறக்குமதிக்குக் கை கொடுத்துதவிய துறைமுகம் என்ற வகையில் புத்தளத் துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மலை நாட்டுக்கும் புக் தளத்திற்கு மிடையில் தொடர்கள் அதிகமிருந்தமை காரண மாக இலகுவாகவும், பாதுகாப்பாகவும் பிரயாணஞ் செய்யக் கூடிய பாதைகள் உண்டாயின. அப்பாதைகளில் முக்கிய மானது "கண்டிப் பெருவழி" என அழைக்கப்படும் பாதையா கும். இப்பாதை மீ ஒயா அல்லது விலுக்கை ஆற்றின் படுக் கையை அண்டிச் சென்றது. இப்பாதை சென்ற நிலப் பிர தேசத்தை "பெருவழிப் பற்று" என்றழைக்கின்றனர். பெரு வழிப்பற்று தமிழ்ப் பற்றின் உப பற்றுக்களே பூழில் ஒன்றாகும். கூட்டங் கூட்டமாக மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற் றிக் கொண்டு செல்வார்கள். அத்துடன் தவளம் எனப்படும் மாடுகளின் முதுகில் பொருட்களை ஏற்றிச்செல்லும் முறையும் நிலவியது, கண்டிப் பெருவழி குருநாகலையடைந்து, மாத்

Page 101
புத்தளம் வரலாறும், மரபுகளும்
தளை சென்று அக்குறணைக்கூடாக கண்டிக்குச் சென்றது. மீ ஒயாப் படுக்கையை அண்டிச்சென்ற இப்பாதையில் அநேக முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருப்பதைக் காண்கிறோம். மீஓயா மாத்தளைக் குன்று எளிலிருந்து உற்பத்தியாகி வட மேற்குக் கரையை அடைகின்றது.
இன்னொரு வழி, புத்தளத்திலிருந்து சிலாபம் சென்று தெதுறு ஒயா அல்லது மாயவன் ஆற்றின் படுக்கைக் கூடாசு குருநாகலை அடைந்தது. இவ்வழியாகவே இபுனு பதூத்தா புத்தளத்திலிருந்து பாவாத மலைக்கு பல்லக்கில் சென் றுள்ளார்.
கண்டிப் பெருவழியோடு பழைய காலத்தில் குதிரைமலைத் துறையிலிருந்து புறப்பட்ட பாதைகளிலொன்றும் இணைந்தது. குதிரை மலையிலிருந்து புறப்பட்ட பாதை யாழ்ப்பானகண்டி பழைய வீதியை சென்றடைந்தது. புத்தளத்திவிருந்து வடக்கு நோக்கி பொன் பரப்பிப் பிரதேசத்தை ஊடறுத்து மன்னாருக்கும். யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் வடக்குப் பாதையும் பிரசித்தமானது. இன்றும் புத்தளமிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையை மன்னார் பாதை அல்லது யாழ்ப்பான பாதை என்றே அழைக்கின்றனர். இப்பாதை இன்றைய பாதையிலல்லாது கடற்கரையை அண்டியே சென் றள்ளது. புத்தளத்திலிருந்து சென்றவர்கள் முதலில் அம்பலம் என்ற கிராமத்தை அடைந்தனர். அம்பலம் என்றாலே பிர யாணிகள் தங்குமிடம் என்ற பொருளைத் தரும் இவ்விடம் இன்றைய இஸ்மாயில் புரம்-வட்டக் கண்டல் கிராமத்தை அண்டி கடற் கரையில் அமைந்துள்ள பண்டைய குடியிருப் பாகும். வட்டக் கண்டவில் குடியேற்றக் காணிகள் கொடு பட்ட போது அம்பலத்தில் வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள் வட்டக் கண்டலுக்குச் சென்று குடியேறியுள் ர்ை. அம்பலம் கிராமத்தில் தங்கிப் புறப்படுவோர் அடுத்து கரைத் தீவு கிராமத்தை அடைந்து இனைப்பாறினர். அங் கிருந்து முரண்டன் வெளி பொன்பரப்பிக் கிராமம், மார தோட்டை மறிச்சுக்கட்டி, கல்லாறு அரிப்பு, ଈ fråå fTଶୟ୍ଯ ஆகிய இடங்களில் தங்கி இளைப்பை ஆற்றிக்கொண்டு மன் னாரை அடைந்தனர். இப்பாதை வழி புத்தளமிருந்து மன்னா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
ருக்கு பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது தபால்களை எடுத்துச் செல்ல எடுத்த நேரம் இருபத்தைந்து மணித்தியாலமாகும். ஒவ்வொரு தரிப்பிலும் மாறி மாறி தபால்களைப் பொறுப் பேற்று எடுத்துச் செல்லுவதற்கு தபால் ஊழியர்கள் தயாாரசு நின்றனர். ே
புத்தளத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் பாதையும் பிரசித்தமானது. மன்னாரிலிருந்து கொழும்புக்குச் செல்லும் தரை வழிப்பாதையும் இதுவேயாம். புத்தளத்திலிருந்து புறப் படுவோர் பின்வரும் தரிப்புக்களில் தங்கிச் செல்வர். உண்ா வெளி, ஆண்டிப்பனை, கருக்குப் பனை, சிலாபம், தொடுவாய் மாரவில, உளவெட்டி, கம்மல், நீர்கொழும்பு, தண்டுகமத ஜா-எல, மாபோளை, கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களினூடாக கொழும்புக்குச் செல்வர். தபால் சேவைக்காக எடுத்த நேரம் ஐம்பத்தேழு மணித்தியாலமாகும். பிரிட்டிஷாரின் ஆட்சிவரை புத்தளத்திற்கும், கொழும்புக்குமிடையில் குறிப்பிடக் கூடிய தகுதிவாய்ந்த பாதையொன்றுமிருக்கவில்லை. போர்த்துக் சேரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷாரும் தங்களது படைக்கலங் களை சுமந்து கொண்டும், சதுப்பு நிலங்களில் முழுப் பலத் துடன் இழுத்துக்கொண்டும் மிகவும் கஷ்டத்துடனும், விடா முயற்சியுடனும் இலங்கையில் காலூன்றினர். மக்கள் நடந் தும் பல்லக்குகளிலும், குதிரைகளிலும் பிரயாணஞ் செய்தனர். தேவைப்படும் பொருட்களை சுமந்து சென்றும், மாட்டுவண்டி களிலேற்றியும் தமக்குரிய இடங்களில் சேர்த்தனர். 188ம்ெ ஆண்டு அரசு அறிக்கையில், "கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரை பாலங்களுடன் கூடிய கற்பாதையும், சிலாபம் வரை கிரவல் பாதையும், அங்கிருந்து கோடை காலத்தின் போது மாத்திரம், பிரயாணஞ் செய்யக்கூடிய காட்டுமார்க்க வண் டிப் பாதையுமே இருந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது காண்க. யாழ்ப்பாணத்திற்கும், கொழும்புக்கும் இடையே யிருந்த ஒரேயொரு வடமேற்குக் கரையோரப்பாதை மிகவும் பயங்கரமான வனப் பிரதேசத்துக் கூடாகச் சென்றது: இதை "வடக்குப் பாதை" என அழைத்தனர். *
புத்தளத்திற்கும், ஆண்டிப் பனைக்கும் இடையிலுள்ள பகுதி மழைகாலத்தில் நீர் நிறைந்து சேறும், சகதியும் நிறைந்த

Page 102
புத்தளம் வரலாறும், மரபுகளும்
தாக மாறி விடுவதனால் போக்குவரத்தச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன்னாரிலிருந்து புறப்படுவோர் மழை காலத்தில் பின்வரும் பாதை வழி பயணஞ்செய்வர். மன்னாரிலிருந்து பொன்பரப்பிக்கு வந்து கடல் வழியாகக் கற்பிட்டியை அடைவர். அங்கிருந்து ஏத்தாலை, நரக்களி தேத்தாப்பளை ஆகிய தரிப்பிடங்கட்கூடாக ஆண்டிப்பனையை அடைவ்ர். அங்கிருந்து ஏற்கனவே கூறியுள்ள மார்க்கமாகக் கொழும்பை அடைவர். பொன்பரப்பியிலிருந்து ஆண்டிப் பனையை அடைய தபால் காலம் பதினாறரை மணித்தியால மாகும். மணல் நிறைந்த காட்டுப் பகுதிக்கூடாக இவ்வழி சென்றதாகக் கூறுவர். 2 தேத்தாப்பளையிலிருந்து ஆண்டிப் பனைவரை சென்ற பாதையை "மணியகாரன் வவுன்" என் றழைத்தனர். விசாரணை செய்பவரை மணியகாரன் என்பர். வவுன்" என்பது "bourn" என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபா கும். எல்லையைக் குறிக்கும். பொன் பரப்பியிலிருந்தும் புத்தளத்திலிருந்தும் அநுராதபுரம் செல்வதற்குக் காட்டுப் பாதைகள் இருந்தன.
புத்தளத்திலிருந்து கற்பிட்டிப் பகுதிக்குச் செல்ல இரு கடல் வழிகளிருந்தன. ஒன்று புத்தளத்திலிருந்து ஏத்தாவை என்ற துறையை அடையும். மற்றது நேரே கற்பிட்டி செல்லும் இவ்விரு பிரதான மார்க்கங்களைத் தவிர கற்பிட்டிக் குடா கொட்டுக் கிழக்குக் கரையிலுள்ள நுரைச்சோலை, ஆலங் குடா டா விக்குடா கண்டற்குடா பள்ளிவாசல் துறை, குறிஞ்சிப்பிட்டி ஆகிய இடங்கட்கும் படகுகள் சென்று வந்தன எத்தாலை இறங்கு துறையும் பிரசித்தமானதாயிருந்தது. முற்
யங்களாக செல்வாக்கு மிக்கு விளங்கியவை கற்பிட்டியும், திசழியுமாகும். திசழியின் துறையாக விளங்கியது ஏத்தாவை யாகும். அத்துறையின் அருகில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் தங்கள் பொருட்களை பட களில், ஏற்றுவதற்காக அவ்வாலமரத்தடியில் கொண்டுவந்து சேர்ப்பார்கள். பொருட்களை ஏற்றும் ஆலமரத்தடி'என்னும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என் எம். ஷாஜஹான்
பொருள்பட அவர்கள் அவ்விடத்தை ஏற்றாலை (ஏற்று + ஆலை) என்று வழங்கினர். அப்பெயரே ஏத்தாலை என்றா கியது. ஏற்றுதல் என்ற சொல்லை பேச்சு வழக்கில் ஏத்து தல் என்று உச்சரிப்பது இப்பகுதியினரின் பழக்கமாகும் ஏத் தாலைத் துறைமுகத்தின் சிறப்பைக் கூறும்போது, மாபெ ரும் மெய்ஞ்ஞானியும், கொடை வள்ளலுமான "ஹபீபு அர சர்" எனப் புகழப்பட்ட கீழக்கரை ஹபீபு முஹம்மது மரைக் காயர் அவர்களை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. இரண் டாவது சீதக்காதி என்று சிறப்பிக்கப்படும் அவர்கள், வள் ளல் சீதக்காதி என்கின்ற ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் அவர்களின் வழித்தோன்றலாவர். நாற்பதுக்கு மேற்பட்ட கப்பல்களின் சொந்தக்காரராயிருந்த அவர்களின் கப்பல்கள் நியூசீலந்துவரை சென்றுவந்துள்ளமைக்கு வரலாற்று ஆதார முள்ளது. முதன் முதலாக கப்பலோட்டிய தமிழர் ஹபீபு அரசரேயாவர். 20 இவர்களின் சொந்தத் துறைமுகமாக ஏத் தாலை விளங்கியது. அவர்களின் கீழப்பண்டக சாலை கொழும்பு பேங்க்ளாஸ் வீதியிலமைந்திருந்தது. மரிச்சுக்கட்டி யில் முத்துச் சலாபம் நடாத்தி முத்து சங்கு வியாபாரத்தில் சிறந்து விளங்கினார். கீழக் கரை வள்ளல்களின், வணிகப் பெருமக்களின் சந்ததிகளுடன் ஏத்தாவை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமைக்கு திகழும் திகழி என்ற திரு ஆரில் அடங்கப்பட்டிருக்கும் நீந்தமிழ்ப் புலவர் பெருமான் அப்துல் மஜீது மரைக்காயர் அவர்களும் சான்றாக உள்ளார் கள். இப்புலவர் அவர்கள் வள்ளல் சீதக்காதியின் ஒரே மக ளான முஹையதீன் நாச்சியாரின் கொள்ளுப்பேரனென்பது குறிப்பிடத்தக்கது. புத்தளத்திலிருந்து தென்னிந்தியத் துறை களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஏத்தாலைத் துறையில் இறக்கப்பட்டு அங்கிருந்து தரை வழியாக நேர்த்திசையில் இந்து சமுத்திரக் கரையிலுள்ள கப்பலடி என்ற துறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அது இரண்டு அல்லது மூன்று மைல் தூரம் இருக்கும். கப்பல்கள் தங்குமிடம் என்று பொருள் பட கப்பலடி என அழைத்தனர். இவ்விடம் கப்பல் குடா என்றும் அழைக்கப்பட்டது. இந்தியத் துறைகளிலிருந்து அவ் விடத்தை அடைந்துள்ள கப்பல்கள், அங்கிருந்து கொண்டு வந்த பெருட்களை இறக்கிவிட்டு இங்குள்ள பொருட்களை அங்கு ஏற்றிச் சென்றன. கப்பலடியிலுள்ள பொருட்களும்

Page 103
17 புத்தளம் வரலாறும், மரபுகளும்
இவ்வாறே ஏத்தாலைக் கூடாக புத் தளத்தை அடைந்தன. கப்பலடியில் கப்பல் கட்டும் தொழிலும், பழுதுபார்த்தலும் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. புத்தளத்தை வந் தடைந்த பொருட்கள் இலங்கையின் உள்நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கற்பிட்டித் துறைமுகத்தை பிற நாட்டவர் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தபோது புத்தளம்ஏத்தாவை - கப்படிப்பாதை மிகவும் கீர்த்தி வாய்ந்ததாக விளங்கியது. திசழியும் சிறப்புடன் திகழ்ந்தது. கண்டியரச ணுக்கும், மலையக, உள்நாட்டு மக்சளுக்கும் கைகொடுத் துதவிய மார்க்கம் இதுவென்பதில் சந்தேகமேயில்லை. அத் துடன் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கிறித்துவர்களின் புனித யாத்திரைத் தலமாகக் கருதப்படும் தலைவில் சந்தன மாதா கோவில் என்றழைக்கப்படும் சாந்த அன்னம்மாள் கோவிலின் (St Annes' Church) பிரசித்தமான விழாக்களுக் குச் செல்லும் பிரயாணிகள் அன்று புத்தளத்திலிருந்து ஏத் தாலைக்குக் கடல் வழி சென்று தலைவில்லை அடைந்தனர். கற்பிட்டிப் பாதையிலுள்ள பாலாவிப் பாலம் கட்டிய பின்பு தொகையான வண்டிகள் தரை மார்க்கமாக, தலைவில்லுக்கு வந்தன. ஆண்டு தோறும் அங்கு நடைபெறும் திருவிழாக் கள் இரண்டுக்கும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், இந் தியக் கரைகளிலிருந்தும் ரோமன் கத்தோலிக்கர்கள் வருகை புரிவர். அக்காலங்களில் ஏத்தாலைத் துறையும், கப்பலடித் துறையும் சனக்கூட்டம் நிறைந்து சந்தடிமிக்க இடங்களாகத் திகழ்ந்தன. பல் வகைப்பட்ட வியாபாரிகளும் அங்கு படை யெடுத்து வந்து தங்கள் கடைகளைப் பரப்பியிருப்பர். இத னால் ஏத்தாலையும் திகழியும் செல்வமிக்க இடங்களாகத் திகழ்ந்தன.
இச் சந்தர்ப்பத்தில் தலைவில் அர்ச். அன்னம்மாள் தேவா லயத் தோற்றம் பற்றி சிறிது நோக்குவோம். கி. பி. 17ம் நூற்றாண்டில் ஏழ்மை நிலையிலிருந்த போர்த்துக்கீசர் ஒருவர் வாழ்க்கை வசதிதேடி மன்னாரிலிருந்து கொழும்பு சென்று வாய்புகள் கிட்டாத காரணத்தால் திரும்பி கடலோரமாக வரும் சமயம் தலைவில்லில் நின்ற பெரிய மரத்தடியில் தங்கி நித்திரையானார். அவரின் கனவில் அம்மரத்தடியில் இரு பக்கங்களிலும் மெழுகுதிரிகள் எரிய பிரதிமையொன்றிருப்ப

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
தாகக் கண்டார். விழித்துப் பார்த்தபோது கனவில் சுண்ட அதே பிரதிமை உண்மையாகவே மரத்தினடியில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார் குழப்ப நிலையடைந்து உணர்ச்சி வசப்பட்ட அவர் சத்தமிட்டு நீண்ட பிரார்த்தனையில் ஈடு பட்டார். அவ்வேளை சுண் கூசும் ஒளி வீச அவரின் முன்பு அர்ச் அன்னம்மான் உடம்போடு தோற்றமளித்தார். "பொருத் தமான நல்லவை அனனத்தையும் புரிவாயாக" என்ற அசரீரி ஒலியும் கேட்டது. குறித்த இடத்தில் கோயிலொன்றை அமைத்து அதில் அப்பிரதிமையை பிரதிஷ்டை செய்யு மாறு அக்கோயிலுக்குத் தனது பெயரைச் சூட்டுமாறும் தெரிவித்து அர்ச், அன்னம்மாள் மறைந்தார். அப்போர்த்துக்கீசர் குறிஞ்சிப் பிட்டி நீளர் சென்று கிட்டிடத்துக்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்து சிறிய கோவி லொன்றை அமைத் து அர்ச் அன்னமாள் தேவாலயம் (st, Amnes' Church) என்ற நாமமுமிட்டார். பின்பு அவ ருக்கு மேலும் இருமுறை அர்ச். அன்னம்மாள் தோற்றமளித்து சில தங்கக் காசுகளுமளித்து அவ்வாலயத்தைப் பெருப்பித்துக் கட்டுமாறும் தூண்டினார். அவ்வாறே போர்த்துக்கல் வரை சென்று பனந்திரட்டி பெரிய தேவாலயத்தைக் கட்டினார். ஆயினும் தற்போதைய கட்டிடம் கோவாவைச் சேர்ந்த சுவாமியொருவரினால் 1880ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இன்று இத்தேவாலயத்தில் உள்ள பிரதிமை அன்று போர்த் துக்கீசரால் கண்டெடுக்கப்பட்ட பிரதிமையின் மாதிரி உருவ மாகும் எனக் கூறப்படுகிறது. в குறிப்பிட்ட போர்த்துக்கீசரின் பெயர் வரலாறு பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் தலைவில் பிரதேசம் யாவும் முஸ்லிம்களின் சொத் தாக இருந்ததை அறிகின்றோம். கப்பலடியும் அவ்வாறே பிர தான இடமாகக் கணிக்கப்பட்டது. அன்றைய கற்பிட்டிக்குச் செல்லும் தரைவழிப்பானத இன்றைய பாதை அமர்ந்திருக் கும் மார்க்கமாகச் செல்லவில்லை. பெருங்கடலை அண்டியோ குடாநாட்டின் மத்திக்கூடாகவோ அப்பாதை சென்றது . ஏத்தாலை, திகழி, முதலைப் பாழி, முசல் பிட்டி, வெல்லங் கரை, கண்டற்குழி வழியாக அப்பாதை கற்பிட்டிக்குப் போனது. கப்பலடிக்கும், கண்டற் குழிக்குமிடையில் உப வழியு மொன்றிருந்தது. இவ்விதமான உபவழிகள் பல இருந்தன.

Page 104
69 புத்தளம் வரலாறும், மரபுகளும்
பாலாவியிலிருந்து கற்பிட்டிக்கு இன்று செல்வது போல பாதை இருக்கவில்லை. பாலாவி மதகு பின்பே அமைக்கப்பட்டது. எனவே கற்பிட்டிக் குடாநாட்டுக்கான சகல தொடர்புகளும் புத்தளத்திலிருந்து கடல் வழியாகவே நடைபெற்றன. கப்பல டியுடன் தொடர்பாக அடுத்துள்ள கிராமம் கண்டற்குழி, குறிஞ்சிப் பிட்டி என்பனவாகும். குறிஞ்சிப்பிட்டியை குறிஞ்சி மாநகர் என புலவர்கள் குறித்துள்ளனர். கப்பலடித் துறை சிறப்பாக இருந்த காலத்து இக்கிராமங்கள் முக்கியமான இடங்களாகக் கருதப்பட்டன. இங்கே புலவர்கள் பலர் வாழ்ந் துள்ளனர். இப்பகுதியில் கப்பல் கட்டும் தொழிலும் நடை பெற்றது என்பதைக் காட்ட குறிஞ்சி நகர் சேகு இஸ்மாயில் புலவர் பாடியுள்ள பாடலை சான்றாகக் காட்டலாம். அசனா மரைக்காயர் முதலாளிக்காகக் கட்டப்பட்ட கப்பலைச் சுட்டி இதைப்பாடுகின்றார். இதில் கப்பல் அமைப்பு மட்டுமல்ல; அக்கப்பலில் ஏற்றிச் சென்ற பொருட்களையும் வர்ணிக்கின் pfrrř. L Rauti i
ஆதி ஒளிர்வாய் உதித்தோர் - இல்லல்லாஹ் ஆல நபிதனை உகந்தோர் - இல்லல்லாஹ் நீதி புகழ் ஒலிமார்கள் - இல்லல்லாஹ் நிறைந்த மலர் தாள் பணிந்தோர் இல்லல்லாஹ்.
சோதி மறை நீதி புகழ் பகுதாதில் வாழும் சுல்தான் முகையதின் தோன்று துணையாக சோதி மறை நீதி புகழ் சகலோரும் வாழ்க சங்கை நெறி கப்பல் ஒலி சாஹிபு துணையாக வாதி புகழ் குறிஞ்சி மா நகர் தன்னில் "தீனோர்" வரிசையுடன் மெளலூது ஒதி ஒன்றாக மதி சந்ர வடிவான வங்கம் சமைக்க வரிசை புகழ் எங்கும் நிறை வல்லவனே காப்பு.
( லாயிலாஹ.. ) ( வங்கம் = மரக்கலம் )
சங்கையுள்ள கப்பலுக்கு - இல்லல்லாஹ் சடைந்த வங்கு சந்தனமாம் - இல்லல்லாஹ்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 70
மங்காத மணி பவளம் - இல்லல்லாஹ் வைரத்தினார் ஏராவும் - இல்லல்லாஹ்
( ஏரா-மரக்கலத்தினடி மரம், வங்கு-மரக்கலத்தறி)
சிங்கார மணி முத்து வாரிகள் பரப்பி செம்பு வைரத்தினால் பூந்தாரும் வைத்து தங்காமல் ஒடுகிற சாயம் பரப்பி சரியான பித்தளைச் சங்கிலி தொடுத்து தங்கமது வெள்ளித் தகட்டினால் கப்பி சரியான வெண்கலச் சுக்கான் தொடுத்து திங்கள் ஒளிவான மறை தீனோர் கட்டி சீரான கப்பல் உண்டர்க்கினாரய்யா. (லாயிலாஹ.)
வெற்றியுள்ள கப்பலுக்கு இல்லல்லாஹ் வேர் பளிங்கு பாய்மரமாம் - இல்லல்லாஹ் சக்தியுள்ள தள மரமாம் - இல்லல்லாஹ் சாதி லிங்க காவியாலாம் - இல்லல்லாஹ்
( காவியா - மரக்கலத்தைத் தரிக்க விடுங்கல் )
சித்திர ஒளிவான கமர் பந்து தூக்கி சீராணி முத்தினால் சிங்கம் உண்டாக்கி முத்து ஒளிவான நங்கூரம் உண்டாக்கி முறை பன்னீர் கஸ்தூரி வாசம் தோய்த்து சாத்திரம் பார்த் தொரு நாளைக் குறித்து சரி கிடாய் வெட்டி நல் கந்தூரியாக்கி "காத்திமுல் அன்பியா" பாத்திஹா" ஓதி கடல் மீது கப்பலை இறக்கினாரையா. (லாயிலாஹ..)
(கமர் பந்து-ஒளியூட்டும் விளக்கு காத்திமுல் அன்பியா - முஹம்மத் நபி (ஸல்) :) நற்றவங்கள் பெற்று வந்தோர் - இல்லல்லாஹ் நபி கிருபை தாள் பணிந்தோர் - இல்லல்லாஹ் ஒற்றைப் பாலை தணில் உறைந்தோர் - இல்லல்லாஹ் "ஒலி"பாதம் தினமுகந்தோர் - இல்லல்லாஹ் t
(ஒலி-இறைநேசச் செல்வர்)

Page 105
7.
புத்தளம் வரலாறும், மரபுகளும்
விஸ்தாரமான ஊர் கற்பிட்டி வாழும் வேந்தர் "ஒலி ஆபத்து சாகிபைப்" போற்றி சுத்தாங்கமாகவே தீனோர்கள் கூடி சொல் நளினமான ஓர் "பாத்திஹா" ஒதி குற்றம் அணுகாமலே தீபம் காட்டி கூரான தூண்டாமணி விளக் கேற்றி எத்தலம் போற்றும் "நபி இறசூலை வாழ்த்தி ஏற்றம் உடன் நல் சரக்கேற்றினாரைய்யா
( லாயிலாஹ.)
சோட்டு முத்து கல் நகையும் - இல்லல்லாஹ் சொகுசான ஆணி முத்தும் - இல்லல்லாஹ் கூட்டு வர்க்கமான பச்சை - இல்லல்லாஹ் குங்குமப் பூ நிறைந்த பட்டும் - இல்லல்லாஹ் ,
மட்டிலடங்காத சூரிய காந்தி மங்காத கிங்கிணிப் பட்டுக்கள் ஏற்றி தொட்டால் மழுங்காத துத்திப்பூ வெள்ளை தொகையான மாதுளம் பூ நிரப்பிடும் வட்டமதி போல வைடூரியக் கல்லும் வளமான மத யானைக் குஞ்சரக் கொம்பும் திட்டமாய் ரத்தினக் கல் நாணயத்தால் சீரான கப்பலை நிறைத்தார்களப்யா. (லாயிலாஹ.)
சிந்தை மனப் புத்திடையோர் - இல்லல்லாஹ்
திறமதிகப் பெலமுடையோர் - இல்லல்லாஹ்
வந்த கொண்டல் தெரிந்துரைக்கும் - இல்லல்லாஹ்
வரிசை "நபி தீனு கந்தோர்" -இல்லல்லாஹ்
(தீன் - இஸ்லாம்)
சொந்தக் கிளாசுகள் தொண்ணுாற்றியாறு சூரனாம் தண்டயல் மாலுமியும் கூட விந்தை செறி வேத நூல் சாத்திரக்காரர் வேந்தர் அசனா மரைக்கார் முதலாளி சந்திரன் போல சக லோரும் ஒன்றாக

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 172
தண்ணிரும் அரிசி தீன் சாமான்கள் ஏற்றி சந்தேகமில்லாமல் பீரங்கி தீர்த்து சாதாரணப் பாய் விரித்தோடினாரையா. (லாயிலாஹ.)
சீரான குறிஞ்சி நகர் - இல்லல்லாஹ் செல்வமுள்ள தேசம் விட்டு - இல்லல்லாஹ் நேரான கற்பிட்டியூர் - இல்லல்லாஹ் நிறையான தலமும் கண்டு - இல்லல்லாஹ்
கூரான பார் முகம் குதிரை மலை சேர்ந்து குணமான கிச்சடியாக்கிப் பகிர்ந்து நேரான புனல் வாவி ஆற்றில் புகுந்து நேருள் கோட்டை மன்னாரைக் கடந்து தோதான யாழ்ப்பாணம் துறை முகம் சேர்ந்து குதான வெண்கலப் பீரங்கி தீர்த்து வீரனாம் தண்டயல் முதலாளி சொல்ல விலை பெற்ற முத்துக்கள் இறக்கினாரய்யா
(லாயிலாஹ .
சொன்ன விலை சரக்கிறக்கி - இல்லல்லாஹ் துரை அரசா வீடு புக்கு - இல்லல்லாஹ் மன்னவர்கள் தனக் கிணங்கி - இல்லல்லாஹ் வைரம் விற்றுப் பணம் வாங்கி - இல்லல்லாஹ்
பன்னீர் பல பல சரக்குகள் ஏற்றி பாங்கான யாழ்ப்பாணம் விட்டுப் பிரிந்து உன் நிர்த்தமான மன்னாரைக் கடந்து ஒளிவான் குதிரை மலை சாஹிபைப் போற்றி சொன்ன மொழி தவறாத குறிஞ்சி மாநகரம் துறை சேர்ந்து தீனோர்கள் வாழ்ந்திருந்தார்கள் சொன்னேன் இக்கவிதன்னை செய்கு இஸ்மாயில் சுகம் பெற்று எந்நாளும் வாழ்ந்திடவே வாழி.
(லாயிலாஹ.)
அடுத்துக் குறிப்பிட வேண்டிய பிரதான பாதை நீர் வழி யாகக் கொழும்புக்குச் செல்லும் பாதையாகும். புத்தளம்

Page 106
புத்தளம் வரலாறும், மரபுகளும்
டச்சுக் கால்வாய் என இதை அழைப்பர். கற்பிட்டியிலிருந்து புத்தளம் கடல் வாவிக்கூடாக இது செல்லும், IL FITTA DIFT GT - பொருட்களை ஏற்றிச் கொண்டு பெரும் படகுகள் செல்வதற் கேற்றதாக கடல்களில் ஆழமற்ற பகுதிகள் தோண்டப்பட்டன. கடல்களை இணைக்கும் கால்வாய்களும் ஏற்ற ஆழமும், அகலமும் உடையதாக அமைக்கப்பட்டன. கொழும்புக்கும் புத் தளத்திற்கும் இடையிலிருந்த பாதை சேறும், சகதியும் நிறைந்த கஷ்டமான காடுகளுக்கூடாகச் சென்றமையால் அதனினும் இலகுவாகவும், செலவு குறைவாகவும் போக்கு வரத்துச் செய்யக் கூடிய நீர் வழியை ஒல்லாந்தராகிய டச்சுக் காரர் அமைத்தனர். நெதர்லாந்துக்காரர் என்பவரும் அவர் களே. அவர்களின் நாடு கடல் மட்டத்திலிருந்து இரண்டு முதல் பதினைந்து அடி வரை தாழ்ந்து இருப்பதன் காரணமாக கால்வாய்களை அமைத்து கடல் நீரை உள்ளே வரச்செய்து அதன் மூலம் உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை நடாத் தினர். இவ்வனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தளத் திலிருந்து கொழும்பு வரையுள்ள சிறு கடல்களையும், நதிக ளையும் கால்வாய்களின் மூலம் இனைத்து புத்தளம் டச்சுக் கால்வாய் என்றழைக்கப்படும் நீர் வழியை அமைத்தனர். அதில் பாரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு போக்கு வரத்துச் செய்யக் கூடியதான அடிப்பாகம் சமமானதாயும், அகலமானதுமான தமிழில் "பாரை" என்றழைக்கப்பட்ட "Lull—r" LJL (3453) GIT (Paddal-boats; Catteponels) soupagL' படுத்தினர். இக்கால்வாயினால் மேற்கு, வடமேற்குக் கரை யோரம் செழிப்புற்றது. இப்பகுதியிலுள்ள விளை பொருட் களையும், உற்பத்திப் பொருட்களையும் கொழும்புக்குக் குறைந்த செலவில் அனுப்பி அவ்வாறே தேவையான பொருட் களையும் தருவிக்க பெரிதும் உதவியது.
முதலில் போர்த்துக்கேயரே களனி கங்கையிலிருந்து வடக்கே அவர்களினாதிக்கத்திலிருந்த கொழும்பு எல்லைவரை நீர் வழியொன்றை அமைத்தனர். கொழும்புக்கும், நீர்கொழும் புக்குமிடையில் அமைந்துள்ள நெல் வயல்கள் வெள்ளத்தினால் அமிழ்ந்து அவ்வயல்களின் பசளை அடித்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கும் முகமாகவே அவர்கள் இதை அமைத்தனர். சமுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 1曹叠
திரக் கரையிலுள்ள மணல் மேட்டின் கிழக்கே மைல் கணக்கில் பரந்துள்ள இந்நெல் வயல் பிரதேசத்தை "முத்துராஜவெளி' என அழைத்தனர். முத்து இராச வயல் என தமிழில் கூறலாம். முத்துச் சம்பா என்ற உயரின நெல் ஆண்டு தோறும் அமோக விளைச்சலைத் தந்ததன் பலனாகவே இப்பெயர் எழுந்திருக்கலா மென்பதில் ஐயமில்லை. ஆயினும் டச்சுக்காரர் புத்தளம்கொழும்பு கால்வாயை அமைத்ததன் பின்பு அவ்வயற் பிரதே சத்தினுள் கடற்பெருக்கின் காரணமாக உவர் நீரேறி பாதிப்பை ஏற்படுத்திவிட்டது."
இக்கால்வாயின் முக்கியத்துவத்தை ஆங்கிலேயர் மெது வாகவே உணரத்தொடங்கினர். கொழும்பிலிருந்து நீர்கொழும் பிலிருந்த கோட்டைக்குச் செல்வதற்கான இருவழிக் கால்வாய் முறையை ஏற்படுத்தும் நோக்கமாக களனி கங்கையின் முகத்து வாரத்திலிருந்து டச்சுக்கால்வாயை அண்டி பிறிதொரு கால் வாயை 1803ம் ஆண்டில் அமைத்தனர். இக்கால்வாய் ஹமில்டன் கால்வாய் (Hamilton Canal) எனப்பட்டது. இக்கால்வாய் கனின் அமைப்பினால் அமோக நெல் விளைவைத்தந்த எண்ணா பிரம் ஏக்கர் வரையுள்ள முத்துராஜவெல விவசாயக் காணி பராதீனப்படுத்த முடியாத சதுப்பு உவர் நிலமாக வினே பரந்து கிடக்கின்றமை வருந்தத்தக்கது.
இக்கால்வாய் வழியாக பாரையில் கொழும்பிலிருந்து புத்த னம் செல்ல ஏறத்தாழ ஒரு வாரம் பிடித்தது. மேற்கு வட மேற்கு, மத்திய பிரதேசங்கனிலிருந்து கொழும்பு செல்வோர் களனி கங்கையின் கரையை அடைந்து அங்கிருந்து பாலம் போன்ற மிதவையில் ஏறி நதியைக் கடந்து செல்லவேண்டும் இம் மிதவைப் பாலம் இருந்த இடமே "கிராண்ட் பாஸ்" (Grandpass) பாலத் துறை எனப்பட்டது. 1895ல் விக்டோரியா பாலம் கட்டி முடிக்கும்வரை மிதவைச்சேவை தொடர்ந்தது. இப்பாலத்தை அமைப்பதற்கு அன்று அரை மில்லியன் ரூபாவுக்குமேல் செல வாகவில்லை. பின்பு அமைக்கப்பட்ட புதிய களனிப்பாலத்துக்கு அப்போது ஆறரை மில்லியன் ரூபாவுக்குமேல் செலவாகியுள் ளது. இன்று விக்டோரியா பாலத்துக்குப் பதிலாகக் கட்டப்பட்

Page 107
I常岳 புத்தளம் வரலாறும், மரபுகளும்
டுள்ள களனிப் பாலத்துக்கு எழுபத்தைந்து கோடி ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1926ம் ஆண்டில் புத்தளத்துக்கு புகையிரதப்பாை அமைத்ததனாலும் தரைவழிப் பாதை போக்குவரத்துச்சுேற் தாக திருத்தப்பட்டதனாலும் டச்சுக் கால் வாயின் முக்கியத் வம் குறைந்து பாவிப்பும், கவனிப்பும், பராமரிப்பும் அற்றதாக நாளடைவில் தூர்ந்துபோய்விட்டது. திரும்ப இக்கால்வானிய புனரமைப்புச் செய்ய வேண்டுமென்ற நோக்கமும் அரசுக்கிருப்பு தாகத் தெரிகின்றது.
 
 
 
 
 
 

21. புத்தளம் முகையதின் கொத்துபா பள்ளிவாசல்
AF GT75 Fair g) sy'G') I LLJ IT GIT NITFG (Land Mark ) är go விளங்குவது புத்தளம் முகைய தீன் கொத்துபாப் பள்ளிவாசலா கும். வெளியிடங்களிலிருந்து வருவோரை நகருக்குள் நுழையும் போது கம்பீரமாக எழுந்து நின்று வரவேற்கும் இறைமாளிகை இதுவாகும். புத்தளம் வரலாற்றோடு இப்பள்ளிவாசவின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது.
பழைய கொத்துபாப் பள்ளிவாசல் என அழைக்கப்படும் வளவு புத்தளம் செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன் னிட்டு மீலாத் ஷரீப் கூட்டங்களும், வேறு மத சம்பந்தமான கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீப காலத்தில் இவ்வளவில் பள்ளிவாசல் பேஷ் இமாமுக்குரிய வீடொன்றும், மேற்கெல்லைப் புறத்தில் செட்டித் தெருவின் அருகில் கடை களும் கட்டப்பட்டுள்ளன. இவ்வளவின் பரிபாலனம் முகைய கொத்துபாப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் களின் சைகளிலுள்ளது. முன்பு இவ்வளவில் அமைந்திருந்த பள்ளிவாசலிலேயே ஜும்ஆத் தொழுகைகள் நடைபெற்று வந்துள்ளன. அப்பள்ளிவாசலைச் சுற்றி முஸ்லிம்களின் அடக் கத் தலமும் இருந்தது. இப்பள்ளிவாசலுக்கு மேற்கே கடவை

Page 108
77 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அண்மி மு ைகயதின் தர்ஹா என்றழைக்கப்பட்ட மற்றொரு பள்ளிவாசலும் இருந்தது. அங்கு ஆண்டுதோறும் றபீஉல் ஆகிர் மாதத்தில் "சந்தனக் கூடு" என்றழைக்கப்படும் கூடெடுக் கும் வைபவங்களும் நடாத்தப்பட்டன. இந்த தர்ஹாவின் பரிணமிப்பே புத்தளம் முகையதின் கொத்துபாப் பள்ளிவாச லாகும். பழைய கொத்துபாப் பள்ளிவாசல் வளவில் இருந்த மிகப் பழைய பள்ளிவாசல் பழுதடையவே, அவ்வளவிலேயே இன்னொரு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. இதை "மீரா லெப்பை பள்ளிவ்ாசல்" என அழைத்தனர். "மீரா மகாம் பள்ளிவாசல்" என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். அதே
தெருவில் இப்பள்ளிவாசலுக்கு சொற்ப தூரத்தில் : மகாம் பள்ளிவாசல்" என அழைக்கப்படும் பள்ளிவாசல் ஒன்
றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மீராலெப்பை பள்ளிவாச லுக்கும், முகையதின் தர்ஹாவுக்கும் இடைப்பட்ட நிலத்தில் முஹர்றம் மாதத்தில் தீ மிதிப்பு வைபவமும், "பஞ்சா" எடுத் தலும் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. ே
முகையதின் தர்ஹா மீராலெப்பை பள்ளிவாசல், கங்கா ணிக் குளம் பள்ளிவாசல் ஆகியன அமைந்திருக்கும் பரந்த நிலப்பரப்பு ஒரே காணியாகவே இருந்துள்ளது. அக்காலத் தில் சிங்கள மன்னர்களால் செப்புப் பட்டயங்கள் வழங்கி வன்னியனார் என்ற பட்டங்களை அளித்துக் கெளரவிக்கப் பட்ட செல்வமிக்க குடும்பத்திலுதித்த மீரா உம்மா என்னும் திருநிறைச் செல்வி 1494ம் ஆண்டளவில் இக்காணியை பள்ளி வாசல் உபயோகத்துக்கென பொதுச் சொத்தாக - (வக்பு) அன்பளிப்புச் செய்துள்ளார். ஆண்டு தோறும் சந்தனக் கூடு எடுப்பதற்காக இக்காணியில் "தர்ஹா" ஒன்றைக் கட்டி கொடுத்துள்ளார். அன்று தொட்டு சந்தனக் கூடு வைபவம் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக, நகரத்தின் ஆண்டுத் திரு நாளாக நடைபெற்று வந்துள்ளது. 1933ம் ஆண்டில் நிறு தப்படும் வரை ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் இவ்விடத்தி கூடெடுக்கும் வைபவங்கள் நடாத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்பு புத்தளத்தில் கூடு எடுக்கும் நிகழ்ச்சிகள் வேறு இட களில் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என் று எண்ண இடமுண் ஏனெனில் இந்நிகழ்ச்சிக்கு மிக முக்கியத்துவம் "கொடுத் முஸ்லிம்கள் பிரதானமாக வாழும் பல ஊர்கள் தோறு கூடெடுத்தல் நடைபெற்று வந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ெஹாஜ் ஏ. எவன். எம். ஷாஜஹான் I
வடக்கே இன்று முதtாம் குறுக்குத் தெருவென அழைக் கப்படும் "பழைய மீன்கடைத் தெருவும்", தெற்கே கங்காணிக் குளத்திலிருந்து கடலுக்கு நீர் வழிந்தோடும் "இரேகு அடிக் கால்வா யும், மேற்கே புத்தளம் கடல் வாவியும், கிழக்கே கங் காணிக் குளமும் சீமாட்டி மீரா உம்மா அளித்த நிலப்பகுதியும் எல்லைகளாகும். ஒரே காணியாக இருந்த இப்பெரும் நிலப் பரப்பு பிற்காலத்தில் அமைக்கப்பட்ட செட்டித்தெரு, துரு நாகல் பாதை, கங்கானிக் குளத்தெரு, கடைத்தெரு போன்ற பிரதான பாதைகளினாலும், வேறு உப வழிகளினாலும் துண் டாடப்பட்டு விட்டது. அக்கானியில் எதேச்சையாக நடை பெற்ற குடியேற்றங்களும், எழுப்பப்பட்ட கடை கண்ணிக ரூம் இக்காணியின் பெரும்பகுதியை விழுங்கியுள்ளன. பள்ளி வாசலுக்குச் சொந்தமாயிருந்த நூற்றுக்கணக்கான கடைகளும் காணிகளும் "பல காரணங்களினால்" தனிப்பட்டவர்களின் சொத்துக்களாக மாறியுள்ளமை வருந்தக் கூடியதாகும். வக்புக்குரிய" பொதுச் சொத்துக்கள் இவ்வாறு மாறியமை பெரிய புதிராகும். இன்று முகையதின் கொத்துபாப் பள்ளி வாசல் அமைந்துள்ள காணியும் சூழவர மதிலால் மறிக்கப் பட்டமையாலும், அடக்கத்தலமாகப் பாவிக்கப் பட்டமையா லும் தப்பியிருக்கும் பழைய கொத்துபாப் பள்ளிவாசல் காணி பும், கடைத் தெருவுக்கு மேற்குப் புறம் கடற்கரையை அடுத்து அமைந்திருக்கும் கடைகளுமே பள்ளிவாசலின் சொத் துக்கள் எனக் கூறுவதற்கு இன்று எஞ்சியுள்ளன. மேற்கூறப் பட்ட கடைகளிலும் பெயரளவில் பள்ளிவாசலுக்குரியதென இருப்பினும் தனிப்பட்டவர்களின் பரம்பரை சொத்தைப்போல பராநீனப்படுத்தப்படுகின்றன. பள்ளிவாசலுக்கென மிகக் குறைந்த தொகைப் பணமே வாடகையாகக் ) TT 1 வத்திருப்போர் கொடுக்கின்றனர்.
முன்னைய பள்ளிவாசல்களையும், தர்ஹாவையும் அவை களைச் சுற்றி கடைகளை வைத்திருந்த தென்னிந்திய வியா பாரிகளே பராமரித்து வந்துள்ளனர். அவர்கள் இறை இல்லங் கட்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் பல ஆரம்பத்தில் உள் ளூர் வாசிகளுக்கு பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு ஊக்கமும், உதவியுமளித்து அவற்றைப் பராமரித்தற்கான வசதிகளையும்

Page 109
79 புத்தளம் வரலாறும் மரபுகளும்
செய்தனர். பள்ளிவாசல்களில் பணி புரியக் கூடிய இமாம் களையும், லெப்பைமார்களையும், "முஅத்தின் களையும்" தென் னிந்தியாவிலுள்ள தமது ஊர்களிலிருந்து அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத் தனர். அவ்வாறு கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம் பட் டினம், குலசேகரன் பட்டினம், தொண்டி போன்ற இடங்களி விருந்து வந்தோர் பலர். அத்தோடு மலையாள நாட்டி லிருந்தும் பலர் மார்க்க சேவைக்காகவும், பள்ளிவாசல்களில் பணிபுரிவதற்காகவும் வந்தனர். அக்காலத்தில் வட இந்தியா விவிருந்தும், அறபு நாடுகளிலிருந்தும் பெரியார்கள் பவர் அடிக்கடி வருகை தந்து பள்ளிவாசல்களில் தங்கிச் செல்வார் கள். அவர்களை ஊர் மக்கள் பெரிதும் மதித்து கெளரவித் துள்ளனர். பலர் இறை நேசச் செல்வர்களாகவும் - ("அவுவி யாக்கள்") விளங்கினர். ஊர் மக்கள் அவர்களைத் தங்கள் ஞான குருக்களாக ஏற்று தீட்சையும் பெற்றனர். அன்றைய மக்கள் இஸ்லாத்தின் கட்டுக் கோப்புக்களிலிருந்து விலகிச் செல்லாதவாறு பல உத்திகளையும், மார்க்கக் கிரியைகள் இழையோடும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கையாண்டு சமய அறிவை அம்மகான்கள் ஊட்டினர். அதற்காகப் LUGU அறபுத் தமிழ் நூல்களையும் அறிமுகப்படுத்தினர். அறபுத் தமிழையும் சுற்றுக் கொடுத்தனர்.
1720ம் ஆண்டு ஜூன் மாதம் நாலாந் திகதி, இப்பள்ளி வாசலினதும், புத் தளம் நகரத்தினதும் வரலாற்று முக்கியத் துவம் பெற்ற தினமாகும் கண்டியரசராகிய குண்டசாலை மன்னர் என்றழைக்கப்பட்ட பூரி வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் புத்தளத்திற்கு விஜயம் செய்தமை அத்தினத்திலே யாகும். இவரே கண்டியரசின் சிங்கள பரம்பரையின் கடைசி மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பின்பு மதுரை நாயக்கர் வம்சத்து தமிழர் வழித்தோன்றிய மன்னர் கள் ஆட்சி பீடமேறினர். புத்தளம் பெருங்குடி மக்கள் நரேந்திர சிங்க மன்னருக்கு இராச மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பொன்றினை அளித்தனர். அன்று புத் தளம் பிரதேசத்தின் திசாவையாக இராம நாத செட்டியார் என்பவரிருந்தார். வரவேற்பினால் மகிழ்ச்சியடைந்த மன்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
தன்னைக் கெளரவித்த புத்தளம் மக்களை தானும் கெளர விக்க நாட்டங்கொண்டார். ஏராளமான பரிசில்களை அளித் ததுடன், அம்மக்களின் மகிமைக்குரிய பள்ளிவாசலுக்கு அரச சின்னங்கள் பலவற்றையும் அன்பளிப்புச் செய்தார். உத்தி யோக பூர்வமான கொடியொன்றும், இரு வெண் சாமரை களும், பதினெட்டு வெள்ளிக் குஞ்சங்களும், பாரிய ஊது குழல் ஒன்றும், மற்றும் ஆல வட்டங்கள், தோரணங்கள், கொடி ஆள் ஆதியனவும், "காழா விளக்கு" எனப்படும் பெரிய பூமணி ளேக்குகளும் அவ்வன்பளிப்புக்களில் அடங்கியிருந்தன. றபீடேல் ஆகிர் மாதத்தில் நடாத்தி வந்த சந்தனக் கூட்டு வைபவங் களின் போது இவ்வரச சின்னங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விசேட சந்தர்ப்பங்களிலன்றி சாதாரணமாக இத்தகைய அரச சின்னங்கள் மன்னர்களால் நேராக ANGT பனிக்கப்படுவதில்லையாகையால் கண்டி மன்னர் புத்தளம் பெருங்குடி மக்களுக்கு அளித்த பெரும் கெளரவமாக இவ் வன்புக் காணிக்கைகளை மதிக்கலாம். இச்சின்னங்களில் ஊது குழவின் ஒரு பகுதியும், வெண் சாமரையுமே பள்ளிவாசவில் காணக்கூடியதாக இருக்கின்றன. ஏனைய பொருட்களுக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. சில விளக்குகள் விற் பனையாகியுமுள்ளன. கண்டி மன்னர் அளித்த விளக்குகளைத் தவிர பக்தர்களினால் பள்ளிவாசலுக்குத் தம் நேர்த்திக் கட னுக்காகச் சமர்பித்த பாரிய குத்து விளக்குகள் பலவும் இருந்தன.
பழைய கொத்துபாப் பள்ளிவாசல் வளவில் அமைந்திருந்த மீரா லெப்பை பள்ளிவாசல் பழுதடையவே அதை மீண்டும் சேப்பனிடுவதில் பயனில்லை எனக் கண்ட பரிபாலகர்கள் பக் கத்தே மறைந்திருந்த முகைய தீன் தர்ஹா கட்டிடத்திலேயே ஐவேளைத் தொழுகைகளையும், ஜும்ஆத், தொழுகைகளை பும் நடாத்தி வந்தனர். இதுவே முகை பதின் கொத்துபாப் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது. பள்ளிவாசல் பரிபாலனம் புத்தளத்திவிருந்த செல்வாக்கு பெற்ற தலைவர்களாக விளங் கிய மரைக்கார் குடும்பத்தினராலேயே சமீப காலம் வரை நடாத்தப்பட்டு வந்தது. எனினும் 1877ம் ஆண்டிலிருந்து இங் குள்ள "முதலாளி குடும்பம்" என அழைக்கப்பட்ட செல்வச் சீtான்கள் குடும்பத்தினரும் உப பரிபாலகர்களாக இணைந்து

Page 110
B புத்தளம் வரலாறும் மரபுகளும்
பள்ளிவாசலைப் பராமரித்தனர். ஆங்கில அரசு இப்பள்ளிவாச
வின பிரதான நிர்வாகியையே முஸ்லிம் தலைவராக (Head
Moorman) நியமித்தனர். பின்பு செல்வாக்கு படைத்த பிறரை யும் முஸ்லிம் தலைவராக நியமிக்கும் வழக்கமும் நிலவியது.
பள்ளிவாசலின் பரிபாலகர்களாக விருந்த மரைக்காயர் குடும்பத்தின் உ.சி. ம.மு. முகம்மது காசிம் மரைக்காயருக்கும் முதலாளி குடும்பத்தின் இ.செ. மு. முகம்மது காசிம் மரைக் காயருக்கும் இடையில் கூடு எடுப்பது சம்பந்தமாக அபிப்பி ராய பேதம் ஏற்பட்டது. உ. சி. ம. மு. கூடு தொடர்ந்து எடுக்கப்படவேண்டு மென்றும், இ. செ. மு. எடுக்கக் கூடா தென்றும் வாதாடினர். இதன் காரணமாக 1913ம் ஆண்டு தொடக்கம் 1915ம் ஆண்டு வரை இரு தரப்பாருக்குமிடையில் புத்தளம் நீதி மன்றத்திலும், இலங்கை உயர் நீதி மன்றத்தி லும் நடந்த "கூட்டு வழக்கு" என்றழைக்கப்பட்ட பிரசித்த மான வழக்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே இரு குடும்பத்தினரின் கெளரவப் பிரச்சினையாகவும், பலப் பரீட் சையாகவும், உரிமைப் பிரச்சினையாகவுமே இவ்வழக்கு நடை பெற்றதெனக் கூறலாம். வழக்கமாக நடைபெற்று வந்த சந்தனக் கூடு வைபவத்தை மரைக்காயர் குடும்பத்தினர் தொடர்ந்து நடத்தலாம் என்ற தீர்ப்பே வழக்கின் முடிவாக அமைந்தது.
தர்ஹாவை உடைத்து புதிய பள்ளிவாசல் கட்டிடமும், கூடு வைப்பதற்கான பிரத்தியேக இன்னொரு கட்டிடமும் கட்டுவதென்ற முடிவிலே ଈଏ୬ தரப்பாருக்கும் இடையில் கருத்து வேறு பாடுகள் எழவே, ஊர் மக்கள் புத்தளம் உதவி அரசாங்க அதிபருக்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்தனர். அதன் பலனாக 1927ம் ஆண்டு ஜூலை மாதம் பத்தாந்திகதி தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட சமரசக் குழுவினர் புத்தளத் துச்கு விஜயம் செய்து விசாரணைகளை நடாத்தினர். இவ் விசாரணை பழைய பொலிஸ் நிலையத்துக்கடுத்து அன்று வாசிகசாலையாகவும், தற்போது அரசாங்க விளையாட்டுக் கழகமாகவும் இருக்கும் கட்டிடத்தில் நடைபெற்றது. விசா ரனைக் குழுவில் நால்வர் இடம் பெற்றனர். ஜனாப்களான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
M. T. அக்பர், T. B. ஜாயா, N. H. M. அப்துல் காதர், சேர் முகம்மது, மாக்கான் மரைக் காயர் ஆகியோர்ரே அந்நால்வ ராகும். இந்நான்கு கனவான்களும் முதுபெரும் தலைவர்க ளாக முஸ்லிம் சமுதாயத்தில் மிகவும் பிரபலமானவர்களா வர். ஜனாப் அக்பர் அவர்கள், புத்தளம் மாவட்டம் கற்பிட் யில் பிறந்து வளர்ந்து இலங்கை உயர் நீதி மன்ற நீதியரச ராகவிருந்து "ஜஸ்டிஸ் அக்பர்" எனப் புகழ் பெற்றமகானாகும். கலாநிதி ஜாயா அவர்கள் கொழும்பு சாகிராக் கல்லூரியின் அதிபராகவிருந்து, பின்பு அமைச்சர் பதவிகளையும் இலங் கைத் தூதுவர் பதவியையும் வகித்த பிரபல கல்விமானாகும். ஜனாப் - அப்துல் காதர் அவர்கள் சட்ட நிரூபண சபையி லும், கொழும்பு முனிவிப்பல் கெளன்ஸிலிலும் உறுப்பினராக அங்கம் வகித்து, பிரபல வழக்கறிஞராகவும், செல்வந்தராக வும் வினங்கியவர். இவர் கெளரவ அமைச்சர் அல் ஹாஜ் ஜாபிர். ஏ. காதர் அவர்களின் தந்தையாராகும். சேர் மாக் கான் மரைக்காயர் அவர்கள் அரசாங்க சபை உறுப்பினராக அம், முதல் முஸ்லிம் அமைச்சராக போக்குவரத்து அமைச்ச ராகவும், செனட் சபை உறுப்பினராகவும், பிரபல மானிக்க வியாபாரியாகவும் விளங்கியவராகும். விசாரணையின் பின்பு, முகையதின் தர்ஹாவை உடைப்பதில்லையென்றும். பழைய 4ொத் துபாப் பள்ளிவாசல் வள வில் புதிய பள்ளிவாசல் கட்டிட மொன்றைக் கட்டுவதென்றும் விசாரணைக் குழுவினர் முடி வுக்கு வந்தனர். இதன் பின்பு தர்ஹா இருக்குமி-த்திலேயே அதை இடித்துப் புதிய பள்ளிவாசல் சுட்டவேண்டு மென்ற கோரிக்கை வலுப் பெற்றது. 1933ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் திகதி முன்னாள் சபாநாயகர் மர்ஹ9ம் அல் ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில் அவர்களைத் தலைவராகவும், முன்னாள் நிதியமைச்சர் அல்ஹாஜ் எம். எச் எம். நெய்னா மரைக்காயர் அவர்களின் தந்தையார் மர்ஹ உம் ஜனாப் சி. அ. மு. ஹனிபா மரைக்காயர் அவர்களை செயலாளராகவும் கொண்ட புதிய பள்ளிவாசல் அமைப்புக் குழுவொன்று நிய மிக்கப்பட்டது. அவ்வமைப்புக் குழுவில் முன்பு குறிப்பிட்ட இருவருடன் பின்வருவோர்களும் இடம் பெற்றனர்: மர்ஹூம் கனான எம். சி. எம். முகம்மது நெய்னா மரைக்காயர் இ. செ. மு. இபுறாகிம் நெய்னா மரைக்காயர், சி. அ. க. ஹமீது

Page 111
புத்தளம் வரலாறும், மரபுகளும்
ஹ"லைன் மரைக்காயர், த.செ. மு. அப்பாஸ் மரைக்காயர், எஸ். எம். ஏ. ஜலாலுத்தீன் மரைக்காயர், த. இ. நெ நெய்னா மரைக்காயர், இ. பிச்சைத்தம்பி மரைக்காயர், யூ. செய்யது முகம்மது, ப. த. தம்பி மரைக்காயர், செ. இ. மு. அசன்குத்தூஸ் ஆகியோராகும்.
1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தேழாந் திகதி பன்று முகைய தீன் தர்ஹா இடிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து புதிய கட்டிட வேலைகள் நடைபெற்றன. 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தோராந் திகதி "புத்தளம் முகைய்யதின் கொத்துபா பள்ளி' என்ற பெயருடன் தற் போதைய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மிகவும் கோலாகல முடன் திறந்து வைக்கப்பட்டது. அன்று அன்னதானம் அளிக் கப்பட்ட பைகள் படிகத் தாள்களில் அழகாக அச்சிடப்பட்டு அதன் மேல் இலாஹி என்ற சொல்வின் கீழ் பள்ளிவாசலின் முகப்புப் படமும், பெயரும், திறப்பு விழா, 21-9-1938 என்ற சொற்களும் நீல நிறத்தால் அச்சிடப்பட்டிருந்தன. கொழும்பு ராபாட் பிரஸ் லிமிடெட்டில் இவை தயாரிக்கப்பட்டன. புதிய பள்ளிவாசல் எழுந்ததும் பண்டுதொட்டு நடைபெற்று வந்த கூடு எடுக்கும் வழக்கமும் பிரச்சினையின்றி தானாகவே நிறுத் தப்பட்டது. புத்தளத்தில் இப்பள்ளிவாசலில் மட்டுமே ஜும் ஆத் தொழுகை நடைபெற்று வந்துள்ளது. பழைய கட்டி டம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் திறக்கப்படும் வரை சுமார் ஆறு ஆண்டுகள் ஜ"ம் ஆத் தொழுகைகள் புத்தளம் மன்னார் வீதியிலுள்ள "புதுப்பள்ளி' என்றழைக்கப்படும் ஜதுரூஸ் பள்ளிவாசலில் நடாத்தப்பட்டன.
புத்தளம் முகையதின் கொத்துபாப் பள்ளிவாசலை அன்று கட்டுவதற்கு ஏற்பட்ட செலவினங்களைச் சுருக்க மாகக் காண்போம். 1935-04-11ம் திகதி கேள்விப் பத் திரங்கள் நான்கு கட்டிடக் குழுவினரால் பரிசீலிக்கப்பட் டன. ஜனாப் M. 1. முஹம்மது என்பவர் ரூபா 49498/25 சதத்துக்கும், ஜனாப் சுலைமான் என்பவர் ரூ. 5284350 சதத்துக்கும், திரு. ரத்னாயக்கா என்பவர் ரூ. 4875535 சதத்துக்கும், ஜனாப் M.B. முகம்மது என்பவர் ரூ. 5193882
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
சதத்துக்கும் தங்களது கேள்விப் பத்திரங்கள் சமர்ப்பித் திருந்தனர். 1935-05-17ம் திகதி நடந்த கட்டிடக் குழுக் கூட்டத்தில் ஜனாப் M 1. முகம்மது என்பவரின் கேள்விப் பத்திரம் ரூ. 507391 சதமாகத் திருத்தப்பட்டு ஏற்கப் பட்டது. இப்பள்ளிவாசலின் மாதிரிப்படம் வரைந்த திரு. B, பில்மோரியா என்பவருக்கு ரூ 1600/- கட்டணமாகக் கொடுபட்டது. பழைய பள்ளிவாசலை இடிக்க 225ரூபாவுக்கும், 995- ரூபாவுக்கும் இடைப்பட்ட கேள்விப் பத்திரங்கள் ஒன்பது வந்திருந்தபோது ஆகக் குறைந்த 225- ரூபாவுக்குரிய கேள்விப் பத்திரம் ஏந்து கொள்ளப் பட்டது. ஆயிரம் செங்கல் ரூ. 850 சதமாகவும். ஒரு "கியூப்" மணல் ரூ 30 சதமா சவும், ஒரு "கியூப்" கொங் ஹீட் செலவு ரூ. 1750 சதமாகவும் இருந்தமை குறிப்பிடத் தக்கது.
(இச் செலவுத் தகவல்கள் மர்ஹாம் ஜனாப் எம் ஏ. ஸாலிஹ் அவர்களின் தினக் குறிப்பேடுகளிலிருந்து திரட்டப்
பட்டவையாகும்.)
முகையதின் தர்ஹாவைச் சுற்றி அதற்குரித்தான காணி பில் பல கடைகளிருந்தன. இதைச் சுற்றியே பெரிய கடைத் தெருவும், சின்னக் கடைத் தெருவும் இருந்தன. அன்றைய பெரிய கடைத்தெரு தர்ஹாவிலிருந்து வடக்கே மன்னார்யாழ்ப்பாணப் பாதையில் 'சாணான் கடைச் சந்தி" வரை இருந்தது. அச்சந்தி மூன்றாம் குறுக்குத் தெரு மன்னார்ப் பாதையைச் சந்திச் கும் இடமாகும். ஊர் மக்கள் இப்பள்ளி வாசலை பெரிய பன்னி" என்றே அழைத்தனர். ஜும்ஆப் பள்ளிவாசல் வீதி என்றும், சின்னக் கடைத் தெரு என்றும் அழைக்கப்படும் வீதியிலும், முதலாம் குறுக்குத் தெருளிலும்
சின்னக் கடைத் தெரு அமைந்திருந்தது. பெரிய பள்ளி வாசலை அண்டி கொழும்புப் பாதையிலும் பெரிய கடைத் தெருவுக்குரிய கடைகளிருந்தன. ஆரம்பத்தில் ஒலையால்
வேயப்பட்டிருந்த பள்ளிவாசல் கடைகள் பின்பு பள்ளிவாசல் செலவில் கல்லால் சுட்டப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டன. பள்ளிவாசலின் வடக்குப் புறமாக வளவிலிருந்த கருவாட்டு

Page 112
Ej புத்தளம் வரலாறும், மரபுகளும்
வியாபாரம் செய்து வந்த சுமார் எட்டுக் கடைகள் புதிய பள்ளிவாசல் கட்டும்போது இடிக்கப்பட்டன. பழைய தர்ஹா வுக்குத் தென் புறமாக இருந்த வெற்றுக் காணி வண்டில் களை நிறுத் தும் இடமாக ஒருகால் பாவிக்கப்பட்டுள்ளது: அதனால் வரும் ஊதியமும், கடைகளின் வாடகைகளும், பள்ளிவாசவின் வருமானமாகப் பெறப்பட்டன.
இன்று புத்தளம் நகரத்தின் குடிசனத் தொகையும், செறி வும் கூடியும், பரந் தும் காணப்படுவதன் காரணமாக பல புதிய பள்ளிவாசல்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. பாரியப் பாப் பள்ளிவாசல், மெளலா மக்காம் பள்ளிவாசல், நாகூர்ப் பள்ளிவாசல், சுங்காணிக் குளம் பள்ளிவாசல், ஐ துரூஸ் பள்ளிவாசல், கொப்பறாப் பள்ளிவாசல், வெட்டுக்குளம் பள்ளி வாசல் ஆதியனவே பழைய பள்ளிவாசல்களாக மதிக்கக் கூடி பனவாகும். இன்று இருபத்து நான்கு பள்ளிவாசல்கள் புத் தளம் நகர சபை எல்லைக்குள் இருக்கின்றன. ஒரே ஒரு ஜும்ஆ நடைபெற்று வந்த புத்தளத்தில் இன்று மூன்று பள்ளி வாசல்களில் ஜும்ஆத் தொழுகைகள் நடைபெறுகின்றன. பண்டு தொட்டு புத்தளம் நகர மக்கள் புத்தனம் முன் கிய தீன் கொத்துபாப் பள்ளிவாசலுக்குரிய ஒரே கூட்டத்தின் ராகவே ஜமாஅத்தாராகவே) இருந்து வந்துள்ளனர். ஆயி னும் இன்று பல பள்ளிவாசல்களின் கூட்டத்தினராகப் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சகல பள்ளிவாசல்களினதும் கூட்டத்தினரையும் பெரிய பள்ளிவாசலின் கீழ் இணைத்து புத்தளம் மக்களிடையே ஐக்கிய உணர்வையும், ஒருமித்த மத வழிபாட்டு முறைகளை பும், சமூக கலாச்சார வாழ்க்கையினனயும் கட்டியெழுப்புதற் கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்மென்ற அபிப்பிராயங் களும் நிலவுகின்றன. இது கண்டிப்பாக செயல்படுத்த வேண் டிய கஷ்டமான காரியமாகும் என்பதில் சந்தேகமில்லை.
பெரிய பள்ளிவாசலில் இட நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அதில் பல விஸ்தரிப்பு வேலைகள் நடந்துள்ளன. ஆயினும் திட்டமிடப்படாத விஸ்தரிப்புகள் காரணமாக இப் பள்ளிவாசலின் அழகிய அமைப்பும், தோற்றமும், அமைதியும், கலையழகும் அகன்று விட இடமளிக்கக் கூடாதென்பதே
 
 
 

அல்ஹாஜ் ஓ என். எம். ஷாஜஹான் ISÉ
பலரின் விருப்பமாகும். ஏனெனில் புத்தளத்தின் பண் டய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள இப்பள்ளி வாசல் புத்தளம் மக்களின் - வருங்காலச் சந்ததிகளின் கலாச் சாரத்தின் ஆளற்றுக் கண்ணாக விளங்கி பண்டைய பெருமை களை நினைவூட்டி அழகுடன் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அல்லாஹ் துஆலாவின் அருள் மாரி இப்பள்ளிவாசலின் பொருட்டால் புத்தளம் நகர மக்க ருக்கும் சொரிந்து பாதுகாத்துக் கொண்டிருக்குமென்பதில் சந்தேகமில்லை. 1978ம் ஆண்டில் புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் காரணமாக பெப் ருவரி மாதம் இரண்டாம் திகதியன்று இப்பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை நோக்கி பொலிஸ் படையினர் துப்பாக்கியால் சுட்டதன் காரணமாக எழுவர் பள்ளிவாசலி னுள்ளேயே (ஷஹீதான) மரணமான சோக நிகழ்ச்சி இப்பள் வாசவின் வரலாற்றில் கறைபடிந்த மறக்கமுடியாத சம்பவ
ETகும் ,

Page 113
22. கூடு எடுத்தல் வைபவம்
புத்தளத்தில் பரம்பரையாக பல விளையாட்டுக்கள், விழாக்கள் நடைபெற்று வந்துள்ளன. கூடு, கொடி, பல்லக்கு ஊர்வலங்கள். தீமிதிப்பு, பஞ்சா எடுத்தல், பெருநாள் பந்த பங்கள் ஆகியவைகளைப் பிரதானமாகக் குறிப்பிடலாம். இவற்றில் பெருநாள் பந்தயங்களைத் தவிர ஏனைய மறைந்து போயுள்ளன. கூடு எடுத்தல் வைபவம் பற்றி இவ்வதிகாரத் தில் சிறிது விவரிப்போம்.
கூடு எடுத்தல் வைபவங்கள் புத்தளம் நகரில் மட்டுமன்றி இப்பகுதியிலுள்ள பல கிராமங்களிலும் நடைபெற்று வந்துள் ளன. புழுதிவயல், பள்ளிவாசல்துறை, திகழி, கொத்தாந்தீவு கரைத்தீவு ஆகிய கிராமங்களைப் பிரதானமாகக் கூறலாம். முகையதின் ஆண்டவர் மாதம் அல்லது முகைய தீன் கந்தூரி மாதம் என்றழைக்கப்படும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் கூடு எடுத்தல் விழாக்கினை நடாத்துவர். இவற்றுள் புத்தள நகரில் நடைபெற்று வந்த கூடு எடுத்தல் வைபவம் பற்றிக் காண்போம்.
ஆரம்பத்தில் மு ைசுயதின் தர்ஹாவுக்குக் காணியை அன் பளிப்புச் செய்த வன்னியனா னொருவரின் மகள் மீரா உம்மா என்பவரின் விருப்பத்திற்கிணங்க அங்கே "சந்தனக் கூடு" என் றழைக்கப்படும் கூடு ஆண்டு தோறும் விமரிசையாக எடுக்கப் பட்டு வந்தது. இது புத்தளத்தின் ஆண்டுத் திருவிழாவாகக்
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
கணிக்கப்பட்டது. இவ்வழக்கம் தொடர்ந்து 1938ம் ஆண்டு வரை நடைபெற்று வந்துள்ளது. இக்கூடு எடுக்கும் வழக்கம் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்று வந்துள்ளதா யினும் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசவில் நடைபெற்ற கூடு எடுத்தல் வைபவம் மிகவும் பிரசித்தமாகத் திகழ்ந்தது. கண்டி தலதா மாளிகையில் ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்ல பெரஹராவைப் போன்று மிக விமரிசையாக கோலா கலத்துடன் கண்டி நகரத்தில் நடத்துவதில் இப்பகுதி முஸ் விம் மக்கள் மிகக் கரிசனையுடன் முயற்சி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மத ஊர்வலங்களில் புனித சின் னங்களை அல்லது அவர்கள் வணங்கும் தெய்வங்களின் சிலை களை அல்லது பொருட்களை அலங்கரிக்கப்பட்ட வாகனங் களில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாகும். ஆயினும் முஸ்லிம்களிடத்தில் அவர்களுடைய பள்ளிவாசல் களில் அத்தகைய புனித சின்னங்களோ, உருவச் சிலைகளோ எதுவும் இல்லை. எனவே ஏனைய மத ஊர்வலங்களைப் போல தாமும் நடத்த வேண்டுமென்ற நோக்கில் கூடு வைப வத்தை நடத்தத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாத்தில் எத்தகைய இடமும் இல்லை எனினும் முஸ்லிம் பொது மக்கள் ஏனைய மத வழிபாட்டுத் நலங்களில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்றி அம்மதத்த வர்கள் செய்வது போன்ற மதக் கிரியைகளையும், நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றும் பழக்கத்தைக் கைவிடுவதற்கும், அவர்களை இஸ்லாம் மத வழிபாட்டுத் தலமாகிய பள்ளி வாசல்களின் மேல் கவனத்தை ஈர்ப்பதற்கும், கோலாகல ான, கவர்ச்சிகரமான, வெளிரங்கமான பக்திப் பரவசங் கிளை நாடி நின்ற பாமர மக்களைத் திருப்திப் படுத்தி திசை திருப்புவதற்கும் அன்றைய முஸ்லிம் தலைவர்கள், மத குரு மார்கள் கையாண்ட யுக்தியாக இவ்வைபவங்களைக் கருத லாம். இவைகள் இந்திய முஸ்லிம்களால் அறிமுகப் படுத்தப் பட்டவையாகும். ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாட்களில் அத்தலத்துக்குரிய நிருவிழாக்கள் நடாத்தப்படுகின்றன. ஆயினும் இஸ்லாமிய
வழிகாட்டுத் தலங்களான பள்ளிவாசல்களில் அத்தகைய

Page 114
B புத்தளம் வரலாறும் மரபுகளும்
ஆண்டுத் திருவிழாக்கள் நடாத்தப்படுவதில்லை. அங்ங்னம் நாடத்துவதற்குரிய காரணமும் இல்லை. ஆயினும் பள்ளி வாசல்களில் இத்தகைய விழாக்களை நடாத்தும் போது அவை களை விரும்பி வரவேற்று முன்னைய மக்கள் பக்தி சிரத்தை யுடன் மும்முரமாகப் பங்குபற்றினர். பள்ளிவாசலுக்கு வரு மானங்கள், நன்கொடைகள் அதிகரித்தன. காலாகாலத்தில் இஸ்லாமிய சமூகத்திடையே தமது மார்க்கத்தைப் பற்றிய அடிப்படை அம்சங்களும், நம்பிக்கைகளும், தத்துவங்களும், மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகள் எவை என்ற அறிவு மலரவே மார்க்கத்தின் அடித்தளத்தையே அசைத்து வந்த மேற்கூறிய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் யாவு மறைந்து போயின.
அவ்விதமே இந்து சமயத்தவர்கள் வாழ்ந்து வந்த ஊர் களிலும், அவர்களது கோயில்களிலும் அவர்களின் சமய அடிப் படையிலான புரானங்களும், மகா பாரதம், இராமாயணம் போன்ற காவியங்களும் பாடி சுவை ததும்ப விரிவுரைகளை கதாப் பிரசங்கங்களை மக்கள் ஓய்வாக இருக்கும் இராக் காலங்களில் நடாத்துவது வழக்கமாக விருந்தது. அங்கு மக் கள் கூட்டமாகச் சென்று கூடி கதை கேட்பதை விரும் னார்கள். கதைகளைக் கூறி ஊர் மக்களை இரசிக்க வைப் பது மட்டுமன்றி சமய, தெய்வீக நம்பிக்கைகளையும் மனங் களில் வளர்ப்பதற்கும் இம்முறையை ஆன்றோர் கையாண்டு வந்துள்ளனர். இத்தகைய சபைகளுக்கு இந்து சமய மக்கள் மட்டுமன்றி ஏனைய சமயத்தவர்களும் சென்று கதைகளை கேட்டு தமது சமய அடிப்படைகளினின்றும், நம்பிக்கைகளி னின்றும், அனுட்டானங்களிலிருந்தும் விலகிச் செல்லும் சர் தர்ப்பங்கள் பல உண்டாயின. எனவே இத்தகைய நிலைமை களை நீக்கி இஸ்லாமிய சமயத்தை அடியொட்டிய காப்பியங் களை, கதைகளைக் கூறி இஸ்லாமிய வழிகளில் மக்களை ஈர்ப்பதற்காக சீறாப் புராணம், முகை பதின் புராணம், இராஜ மணி மாலை, புதுகுஸ்ஸாம், இராஜ நாயகம் போன்ற இஸ்லாமிய இலக்கிய நூல்களை வாசித்து நயம்பட விரிவுை கள் கூறும் சபைகளை நடாத்தினர். இத்தகைய சபைகள் புத்தளத்திலும், புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் புலவர்களினாலும், அறிஞர்களினாலும் நடைமுறைப்படுத்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் I ԳԱ
பட்டு வந்தமையை நாம் காண்கின்றோம். இத்தகைய சபை கள் பொது இடங்களில் மட்டுமல்ல விசேட வைபவங்கள் நடைபெறும் வீடுகளிலும் நடாத்தப்பட்டன. திருமணம், விருத்த சேதனச் சடங்கு ஆகிய வைபவங்கள் நடந்த இடங் களில் இச் சபைகள் விசேடமாக நடாத்தப்பட்டன. அன்றைய கால கட்டத்தில் வசித்த மக்களின் அறிவு நிலைக்கேற்ப மார்க்க வழியிலிருந்து நம்பிக்கைகளிலிருந்து வழி தவறிப் போகாமல் தடுப்பதற்காக மார்க்க அறிஞர்கள். தலைவர்கள் கையாண்ட உத்தி முறைகளாக இவ்வைபவங்களைக் கருதலாம்.
கூடு என்பது இருவகைப்பட்ட வடிவங்களில் அமைந்திருந் தது. ஒன்று உயரமான சதுர வடிவிலும் மற்றது மாறிச் சுழன்று வரக்கூடிய இரண்டு, மூன்று தட்டுக்களைக் கொண்ட வட்ட வடிவத்திலும் அமைந்திருந்தது கூடுகளின் அடி வட்டம் அல்லது சதுரம் ஏறத்தாழ ஒன்பது அடிக்குக் குறைவாகவே இருந்தது, உயரம் பதினைந்து அடிவரை இருக்கும். வட்ட வடி வான கூடு, கூம்பு வடிவத்தில் உச்சி வரை ஒடுங்கிச் செல்லும் தேர் வடிவில் இருக்கும். சதுர வடிவக் கூடும் உயரச் செல்லச் செல்ல ஒடுங்கி கோபுர வடிவில் இருக்கும். அதை அழகுள்ள வண்ண வண்ண பளபளக்கும் கடதாசிகளால், புடைவைகளால் அலங்கரித்திருப்பார்கள். கண்கவர் நிறக் குஞ்சங்களையும், பட் டுச் சரிகைகளையும், மணி வகைகளையும் கட்டித் தொங்க விட்டிருப்பர். சூழ வர சிறிய பெரிய விளக்குகளையும் தூக்கி யிருப்பார்கள். அக்கூடுகளை அமைப்பதற்கென்றே நிபுணத்து வம் படைத்த பலர் அன்று இருந்தனர். தென்னிந்தியாவிலிருந் தும் கூடு அமைக்கும் நிபுணர்களை வரவழைப்பதும் உண்டு. அக் கூட்டினுள் எவ்வித சின்னங்களும் இருக்காது. அதைத் தூக் ச்ெ செல்ல இரு பக்கங்களிலும் நீண்ட மரச்சட்டங்களிருக்கும் பலசாலிகள் பலர் அதைத் தோளில் வைத்து சுமந்து செல்வர். சுமப்போரின் ஆறுதலுக்காக அல்லது கூடுகளை நிறுத்த வேண் டிய இடங்களில் தாமதிப்பதற்காக அதை நிலத்தில் வைக்காது "ஆயக்கால்கள்" என்ற கவருள்ள மரக்கால்களை நான்கு முனை களிலும் வைத்து ஏந்திக் கொள்வர். சுமந்து செல்வோர் "ஆயக் கால் - ஆயக்கால்" என்று கூப்பிட்டவுடன் அதைக்கொண்டு
செல்வோர் ஒடிச்சென்று அதை உரிய இடத்தில் வைத்துப்பிடித்

Page 115
Iք I புத்தளம் வரலாறும், மரபுகளும்
துக்கொள்வர். சுழன்று வரும் கூட்டினை ஆடு கூடு" என்று கூறுவர். கூடுகளை வைப்பதற்கு பள்ளிவாசலை அடுத்து கூடு வைக்கும் உயரமான கொட்டில்கள் இருந்தன.
றபீஉஸ் ஆகிர் மாதம் த ைiப்பிறை பிறந்ததும் பள்ளி வா வில் கொடியேற்றுவார்கள். "கூடு மாதம்" எனவும் கூறுவ கொடியேற்றியதும் வைபவத்துக்கான ஆயத்தங்களும் களை ஈட்டத் தொடங்கும். "நேர்ச்சை - திப்பத்துகள்' - அதாவது தங்கள் எண்ணங்கள் நிறைவேற பள்ளிவாலுக்குக் கொடுப்பு தாகப் பிரதிக்ஞை செய்யும் ஆடு, மாடு, கோழிகள் உட்ப பொருட்கள் பள்ளிவாசலுக்கு வந்து சேரத் தொடங்கும். பள்ளி வாசலைச் சுற்றியுள்ள பகுதிகள், படிப்படியாக விழாக்கோல பூணும்-பள்ளிவாசல்களில் "கத்தம்", "பாத்திஹா' என்ற ஒதல் களும், 'மெளலுரது" என்ற அறபுப் புகழ் பாக்களும் ஒதப்படும் சாம் பிறரணி, சந்தனக் குச்சிகள், பால், பழங்களும், ரொட் யும், துவையும் அல்லது தேங்காய்த் துருவல் இனிப்புத் துவை லும் வேறு இனிப்புப் பண்டங்களும், எண்ணெய், வெள்ளி பொருட்கள், காணிக்கை காசுகள், தென்னங்கன்றுகள் ஆதி யனவும் நார் மக்களால் பள்ளிவாசலுக்குக் கொண்டு வந்து காணிக்கைகளாகக் கொடுக் கப்படும், தேங்காய்ச் சோறும் உணவுப் பண்டங்களும் ஒவ்வோர் நாள் இரவிலும் ஓதல்கள் முடிந்ததும் ஊரவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். பள்ளிவாசல் களில் பகிர்ந்தளிக்கப்படும் உணவு, இனிப்பு, பழவகைகை "நாரிஸா' என்றழைப்பர். பழங்களில் பேரீத்தம்பழமே முத விடத்தை வகிக்கும். "நாரிஸா' பகிரும் நேரம் வந்ததும் பள்ளி வாசவிலிருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்படும். கண்டி மன்னராய் புத்தனம் முகையதின் தர்ஹாவுக்குக் கொடுக்கப்பட்டிருந் நனது குழல் மூலம் சத்தமெழுப்பி சமிக்ஞை செய்யும் வழக்கமே கூடு நிறுத்தப்படுமளவும் நிலவியது. அளப்பரிய ஊதுகுழை தூக்கி ஊதக்கூடிய பலசாலிகள் அன்று பலர் இருந்தனர். அவ் வொலியைக் கேட்டதும் சிறு சிறு பெட்டிகளுடன் ஆண்களும் பெண்களும் சிறுவர்களுடன் அவசரமாகப் புறப்பட்டுப் பள்ளி வாசலில் கூடுவர். அங்கே அனைவர்க்கும் "நாரிஸ்" வழங்க படும். இத்தகைய உணவுப் பொருட்களில் சோற்றை பள்ளி வாசலிலேயே தயாரித்து வழங்குவர். அதற்காக ஒவ்வோர் இர வும் ஒவ்வொரு பகுதியாருக்கு பொறுப்புகள் ஒதுக்கப்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷொஜஹான் IE
தலை மெளலுது, பட்டறை மெளலூது, மரைக்காயர் வீட்டு மெளலூது, முதலாளி வீட்டு மெளலுாது, கடைத்தெரு மெளஒரது, மீன் மார்க்கட் மெளலுTது என்ற பலவாறான பெயருடன் கூடு எடுத்து முடியும்வரை - அதாவது நபிஉல் ஆகிர் பிறை பன்னிரண்டு வரை நடைபெறும். தர்ஹாவைச் சுற்றி தற்காலிகக் கடைகள் பல தோன்றிவிடும். உணவு. இனிப்புப் பண்டங்கள், தேநீர், இனிப்புப் பானங்கள், (சர்பத்) கடலை கள் விற்போரும், மணிக்கடைகள், காப்புக் கடைகள், விளை பாட்டுப் பொருட்கள் விற்போரும் கூடுவர். கொடி மரம் நாட் டப்பட்ட இடமே வைபவத்தின் மத்திய நிலையமாக இருக்கும். அதைச் சுற்றி தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவோர் குழுமி இருப்பர். தீராத குறையுள்ளோரும், மனப் பேதலிப் புடையோரும், செய்வினை சூனியங்கள் செய்யப்பட்டோரும் வேறு குறைகளுள்ளோரும் அவர்களின் உறவினரால் கொடி மரத்தடியில் சேர்க்கப்படுவர். அங்கே பலவிதமான ஒதல் களும், பிரார்த்தனைகளும் அதற்கென உள்ள லெப்பை மார் களினால் செய்யப்படும். பேய், ஷெய்த்தான் (சாத்தான்) பிடித்தவர்கள் எனக் கூறப்படுவோர் பலவிதமான ஆவேசங் களுடன் ஆடிப்பாடி கூக்குரலிடுவதும், அழுது மண்ணில் புரளு வதும் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கும். ஒரு பக்கம் "பக்கிரிசாக்கொட்டு" (பக்கீர் சாகிப்மார் கையாளும் சிறிய நபான்) எனப்படும் தோற்கருவிகளை வைத்து அறபு தமிழ்ப் பார்கள் ET தாளத்துடன் அழகாக உரத்த குரலுடன் இணைந்து முழங்கும் பக்கீர் மார்களையும் அவர்களின் சாகச சித்து விளையாட்டுக்களையும் காணலாம். அவர்கள் பலவித கோஷங்களுடன் ஆவேச நிலையில் குத்து வாள்களினாலும் கூரான ஆயுதங்களினாலும் தங்களின் தலை, கை, கால், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் வெட்டியும், குத்தியும் கொள்வது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். தமது ஒதல்கள், பாக்களின் மூலம் கைகளால் தடவி விட்டு அக் காயங்களை இல்லாமல் செய்யும் சித்து சாகசங்களைப் புரி வது அற்புதமாக இருக்கும். இவர்கள் குழுக்களாக இருந்து இக்கருமங்களைச் செய்வர். பார்த்திருப்போர் காணிக்கை களை அவர்களுக்களிப்பர். இன்னொரு பக்கம் தெமழஹத் பற்றிலிருந்து வந்துள்ள சிங்கன மேளக்காரர்களின் மேன ஒலி ாள் வானை முட்டும். தமிழ்ப் பறைகளும் முழங்கும். இத்

Page 116
புத்தளம் வரலாறும், மரபுகளும்
தகைய ஆரவாரங்கள், தீவட்டி வெளிச்சங்கள், புழுதிதி தூசி களிடையிலே தர்ஹாவின் சூழ் நிலை இலங்கிக் கொன் டிருக்கும்.
றபிடல் ஆகிர் பிறை பத்தன்று முதலில் கூடு தூக்குவர் இதைத் தலைக் கூடென்பர். அன்று கூட்டை வெளியே எடுத் துத் தூக்கிக் கொண்டு தர்ஹாவையும், கொடி மரத்தையும் சுற்றி மீண்டும் கூட்டுக் கொட்டிலில் வைத்து விடுவர் அடுத்த நாள் தர்ஹாவிலிருந்து கூடு புறப்பட்டு புத்தளத்தின் வடக்கே மன்னார்ப் பாதையில் உப்பளத்திற்கு அருகாமை யில் அமைந்திருக்கும் "பாரியப்பா பள்ளிவாசல்" வரை சென்று அங்கு பிரார்த்தனைகள் முடிவுற்றதும் திரும்பும். இந்த "பாரியப்பா பள்ளிவாசலே புத்தளத்தின் முதற் பள்ளிவா லாக இருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றது. அப்பள்ளி வாசலைச் சுற்றியே ஆரம்பக் குடியிருப்புகள் பல இருந்திருச் கின்றன. மேற்கிலே உப்புச் செய்கையும், கிழக்கிலே விவசாய மும் நடைபெற்றன. புத்தளத்தின் பெரிய குளமான நெடு குளமும், ஏனைய சிறு குளங்களும் இப்பள்ளிவாசலை அண் டியே இருக்கின்றன. வியாபாரத்தின் மத்திய நிலையமாக இன்றைய புத்தள நகர்ப்புறம் விருத்தியடையவே மக்கள் இப் பள்ளிவாசல் பகுதியிலிருந்து படிப்படியாகக் குடி பெயர்ந்த னர். அப்பழைய பள்ளிவாசலை நினைவு கூர்வதற்கும், கெளர விப்பதற்காவுமே கூடு இரண்டாம் நாளன்று அப்பள்ளிவாசல் வரை சென்று வருவது வழக்கமாகவிருந்தது. அங்கிருந்த பழைய பள்ளிவாசல் இடிந்து தகர்ந்துள்ளது. அதன் அத்தி வாரம் மட்டுமே எஞ்சியிருந்தது. பக்கத்தில் "பாரியப்பா" என்ற பெரியாரின் அடக்கத்தலமும் கூரையினால் வேயப்பட்டிருந்தது இன்று அவ்விடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டடமொன் எழுந்துள்ளது. சமாதியும் உள்ளே உள்ளது.
பிறை பன்னிரண்டாகிய மூன்றாம் நாளே கூடு வைபவ தின் முக்கிய நாளும், இறுதி நாளுமாகும். கூட்டின் நக ஊர்வல நாள் அன்றேயாகும். தர்ஹாவிலிருந்து புறப்படு ஐர்வலம் முதலில் அன்றைய ஆட்சியாளரினால் புத்தளம் பகுதியின் தலைவராக நியமனம் பெற்றவரின் இல்லத்துக்கு செல்வது வழக்கமாகும். பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
அன்று புத்தளத்திலிருந்து அரசாங்க அதிபரின் இல்லத்துக்குச் சென்று ஊர்மக்களின் மரியாதையை அவருக்குத் தெரிவிப்பர். அரசாங்க அதிபர் பதவி புத்தளத்திலிருந்து குருநாகல் சென்ற பிறகு புத்தளத்திலிருந்த உதவி அரசாங்க அதிபருக்கு அக் கெளரவமளிக்கப்பட்டது. அதன் பின் கூடு நகரின் பிரதான வீதிகளில் ஊர்வலமாகச் செல்லும். அன்று முகையதின் தர்ஹா வுக்கு யானையும் இருந்தது. கடைசியாக இருந்த பானை யின் பெயர் "முகையதின் பாச்சா" (Mohideen Batcha) என்ப தாகும். தர்ஹாவின் யானையும், முதலாளி வீட்டு, மரைக் காயர் விட்டு யானைகளும் வேலைப்பாடுகளுடன் கூடிய வண் னப் புடைவைகளால் போர்த்தப்பட்டு ஆடி அசைந்து கம் பீரமாக பின்னே வர பதாகைகள் ஆல வட்டங்கள், கொடி சுள் முதலியவற்றைப் பிடித்துக் கொண்டு பலர் முன்னே செல் வர். அவற்றுள் கண்டி அரசரால் தர்ஹாவுக்கு அன்பளிக்க்ப் பட்ட இராச சின்னங்கள் யாவும் இடம் பெறும் தெமழ ஹத் பற்றிலிருந்து வழக்கமாகப் பங்கு கொள்வோர் பேரிகை சுள், மத்தளங்கள், ஊது குழல்கள் ஆதியனவற்றை முழங்கிக் கொண்டு செல்வார். அவர்களுடன் சாதாரண பறையர்களும் பறைகளை அடித்துக் கொண்டு செல்வார்கள். இடை யிடையே வானவேடிக்கைகளும், வெடிகளும் முழங்கும். பலர் உண்டியல் முட்டிகளை குலுக்கிக் கொண்டு வீடுகள் தோறும், கூடு பார்க்க வந்தவர்களிடமும் காணிக்கை சேகரிப்பர். பின் னாலே வண்டில்கள் வரும். குடி மக்களால் தரப்படுக நேர்ச்சை காணிக்கைப் பொருட்கள் அவ்வண்டில்களில் சேக ரிக்கப்படும். சாதாரணமாக எல்லா வீடுகளின் முன்பும் கூடு வரும்போது காணிக்கைகளைக் கொடுத்து, பதிவாக நாரிளாக்
களைப் பெற்றுக் கொள்வர். கரணிக்கை கொடுப்போருக்கு
"ந்தனமும் பூசப்படும். இவ்வாறு சந்தனம் வழங்கப்படுவது பிரதான கிரின் யயாக இருப்பதினாலேயே இக் கூட்டை "சந் தனக் கூடு" எனக் கூறுவர். சிறியவர்களும், பெரியவர்களும், ஆண்களும், பெண்களும் சந்தனத்தை அள்ளி கழுத்திலும், கைகளிலும் உடம்பிலும் பூசிக் கொள்வர். கவரிமான் முடி யினாலான வெண் சாமரையை வீசிக் கொண்டு வருபவர் ஈளை அணுகி, நோய் நொடிகளைப் போக்கிக் கொள்வதற் காகவும், ஆசீர்வாதத்துக்காகவும் அவர்களின் கையினாலேயே வெண் சாமரையை உடம்பில் தடவச் செய்து காணிக்கை
"آي -

Page 117
195 புத்தளம் வரலாறும், மரபுகளும்
களை வழங்குவர். பள்ளிவாசலின் வெண் சாமரையால் தட வினால் தங்களது கஷ்டங்கள், நோய்கள் நீங்கும் என்ற நம் பிக்கை மின்று பலமாக இருந்தது. பக்தி சிரத்தையோ, மன உறுதியோ, நம்பிக்கையோ அல்லது தெய்வீக அற்புதங் கனோ எதுவாயினும் மக்களின் நாட்டங்கள் இக்கூட்டு வைபவ நிகழ்ச்சி மூலம் நிறைவேறியுள்ளமையை பலர் கதை கதையா கக் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியாதாகவுள்ளது.
ஒரு முறை கூடு ஊர்வலம் கங்காணிக் குளத்தின் அருகில் வரும் போது எண்ணெயின்றி விளக்குகள் அணைந்து போகும் நிலை உண்டர்னபோது கூடு ஊர்வல்த்தின் முக்கியஸ்தர் "முகைய தீன் ஆண்டவர்களின் பெயரைச் சொல்லி குளத்து நீரை அள்ளி ஊற்றுங்கள் அவர்களின் "பறக்கத்தால்" விளக்குகள் எரியும்" என்று உத்தரவிட்டாராம். அவ்வாறே கங்காணிக் குளத்து நீரை அள்ளி விளக்கு ஈளுக்கு விட்டதும் - அவைகள் பிரகாச மாக எரிந்து ஒளி வீசின என்று ( அல்லாஹ"த ஆலாவின் அரு ளால்) முகையதின் ஆண்டவர்களின் காரண மகிமையை வாயார வாழ்த்தியுள்ளனர். இது பற்றி அன்றைய புலவர் ஒருவர் யாத்துள்ள புகழ்க் கவியொன்று எமக்குக் கிட்ைத் துள்ளது.
"பொங்காரப் பூச் சந்தனக் கூடு சொலுப்பவனி வரும்போதும் டிங்காத தீபத்துக்கு வார்க்க எண்ணெயில்லாமல் கங்காணியார் குளத்து காண்டமுதம் அள்ளி விட சிங்காரமாபெரியச் செய்தீர் முஹையித்தீனே"
(பொங்காரம் - பொங்குகின்ற காண்டம் - நீர், தீர்த்தம்)
பயமற்றவர்களாக, தைரியவான்களாக, நோய் நொம் பலங்கள் இல்லாதவர்களாக வளர வேண்டுமென்பதற்காக தமது பிள்ளைகளை ஊர் வலத்தில் வரும் யானைகளின் முன், பின் கால்களுக்கிடையிலுள்ள வயிற்றுப் பகுதிக் கூடாக புகச் செய்து எடுத்துக் கொள்வதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. புகுந்த பின் யானையின் கீழுதட்டை பாகன் தட வுவார். யானை பிளிறும். சில பிள்ளைகள் அதனால் பயந்து வீறிடுவதும் உண்டு! ஊர்வலத்தில் வாள் வீச்சு, சிலம்படி,
"آي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் IIIի
சீனடி, கழிகம்பு ஆதியனவும் இடம் பெறும். வெளிச்சமிடுவ தற்காக இரும்பாலான கூடைகள் போன்ற பெரிய பந்தங் களை ஏந்திச் செல்வார்கள். அப்பந்தங்களை எரியவைக்க கொப்பறாவைப் போடுவார்கள். சிலர் பல் தீப்பந்தங்களை பல வேறு வடிவங்களில் கைகளால் சுழற்றிக் குதித்து தமது திற மைகளைக் காட்டுவார்கள். அதிகாலை வரை இக்கூடு ஊர்வலம் நீடிக்கும். இக் கூட்டு ஊர்வலத்தை நோக்குங்கால் கண்டி பெரஹராவின் சிறிய அளவிலான ஊர்வலத்தை உரு வகிக்கலாம். புத்தனம் உள்ளூர் ஆட்சிச் சபையினால் வீதி களுக்கே மின்சாரக் கம்பிகள் முதலில் இட்டபோது கூடு தூக்கி வரும்போது அவற்றில் படாமலிருக்கக் கூடிய உயரத்தில் போடப்பட வேண்டுமெனத் தீர்மானித்தமை அன்று கூடு வைபவத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும்.

Page 118
■
கொடி ஊர்வலம்
கூடு எடுக்கும் வைபவம் நடக்கும் 'றபீஉல் ஆகிர்" மாதத் தில் பல்லக்கு எடுத்து ஊர்வலம் வரும் வழக்கமும் புத்தளம் நகரில் நிகழ்ந்து வந்துள்ளது. இவ்வழக்கம் புத்தள்த்தில் மட்டு மல்ல யாழ்ப்பாணம் போன்ற ஏனைய இடங்களிலும் நடை பெற்றதாகத் தெரிகின்றது. இவ்வழக்கமும் தென்னிந்திய முஸ்லிம்களால் இங்கு அறிமுகப்படுக்தப்பட்ட கிரியையாகும். இவ்வைபவங்கள் புத் தளம் முஹைதீன் தர்ஹாவிலும், செட் டித் தெருவில் அமைந்திருந்த 'ஆலை அரசடி அப்பா பன்னி வாசலிலும்" நடைபெற்றுள்ளன.
பண்டைய அரசர்கள், அரசிகள், பிரதானிகள், குருமார் கள், மதிப்புக்குரியவர்கள் ஊர்வலமாகச் செல்வதற்கோ, பிரயாணஞ் செய்வதற்கோ பல்லக்கு எனக் கூறப்படும் சிவி சைகளை உபயோகித்தனர். உயர்ந்த மகிமைக்குரிய சின்ன மாகப் பல்லக்கு மதிக்கப்பட்டது. இங்கே எடுக்கும் பல்லக் கில் எவரும் ஏறி உலாவருவதில்லை. இறை நேசச் செல்வர் கள் பவனி வருவதாகக் கற்பனை நோக்கில் இவ்வூர்வலம் நடாத்தப்பட்டது. றபீஉல் ஆகிர் பிறை ஏழில் இவ்வூர்வலங் கள் நடாத்தப்பட்டன.
பல்லக்கு செய்வதில் அநுபவமான பலர் பல நாட்கள் முயற்சி செய்து இதை அமைப்பார்கள். நீளமான இரு Gh
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 고
பங்களின் மேல் பல்லக்கு இருக்கும். பல்லக்கினுள் ஆசனமொன்று வெண் சீலையால் போர்த்து வைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் பல்வேறு மலர்களைத் தூவியிருப்பார்கள். பல்லக்கு அழகிய நிற சரிகைத் தாள் களினாலும், புடைவைகளினாலும் அலங்கரித்து மன்னிற மணிகள், குஞ்சங்கள் தொங்கவிடப் பட்டிருக்கும். ஓரங்கள் யாவும் அலங்கார நிறச் சித்திரங்கள் அழகு செய்யும் ஆயினும் உருவச் சித்திரங்கள் இடம் பெறாது, பல்லக்கை பலர் தூசுகிச் செல்வார்கள். நிறுத்த வேண்டிய இடத்திலும், தூக்கிச் செல்வோர் ஆறுதல் பெற வேண்டிய சந்தர்ப்பத்திலும் "ஆயக்கால்" என்று அழைக்கப்படும் சுவர்க் கிம்பங்கள் மேல் பல்லக்கு வைக்கப்படும். பல்லக்கு நகரின் எல்லா வீதி வழியாகவும் செல்லும் அது வரும் நாளில் தங் சுள் தங்கள் வீட்டின் முன்னே கூட்டிப் பெருக்கி இடங்களை சுத்தமாக வைத்து பல்லக்கை வரவேற்க பக்தியுடன் ஆபத்த மாக இருப்பார்கள். பல்லக்கின் கூடவே காணிக்கை சேகரிக் கும் "நாரிசா" வண்டில்களும் செல்லும், ஒவ்வோர் வீட்டி லிருந்தும் காணிக்கையாக பணமும், வருவோர்க்குப் பாலும், பழி மும், பானமும் வழங்குவர். வீட்டாருக்கு வண்டியிலுள்ள "நாரிஸாக்கள்" வழங்கப்படும், பல்லக்கின் முன்பு "முனாஜாத் துக்கள்" எனப்படும் புகழ்ப்பாக்களை ஒதிச் செல்வார்கள்; ஊரில் ஏற்பட்டுள்ள நோய், நொடிகள், கெடுதிகள் இப்பல் லக்கு ஊர்வலம் மூலம் நீங்கும் என்ற நம்பிக்கைகளும் அன் றைய மக்களிடையே இருந்தது. பிற மதத்தாரின் ஊர்வலத் தில் முஸ்லிம் மக்களின் ஈடுபாட்டை நீக்கவே இப்பல்லக்கு ஊர்வலமும் ஏற்பாடாகியது என்று கூறலாம். கூடு எடுக்கும் வழக்கம் நின்ற பிற்பாடு பல்லக்கு ஊர்வலமும் மறைந்து போயிற்று.
இச்சந்தர்ப்பத்தில் பல்லாக்கு ஒலி என்ற ஹபீப் முகம்மது சீதக்கத்துல்லாஹ் (ஒலி) என்றழைக்கப்படும் இறை நேசச் செல்வரைப் பற்றியும் நினைவு கூருவது பொருந்தும். அம் மகானவர்கள் புத்தளத்துக்கும் வந்து சென்று பரிச்சயமானவர் களாவார்கள். அவர்களின் சீவிய காலத்தில் கீழக்கரையிலும், அக்கம் பக்கத்து ஊர்களிலும் காலரா, வைசூரி போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்ட காலங்களில் இவர்களை சாய்வு நாற்காலியில் அமர்த்தி வியாதி கண்ட இடங்களில் வலம் வந்

Page 119
199 - புத்தளம் வரலாறும், மரபுகளும்
தால் உடன் அவ்வியாதிகள் அகன்று சுகமேற்பட்டதை வர லாறு மூலம் அறிகின்றோம். இவ்வழக்கின் பின்பற்றலே புத் தளத்தில் நடைபெற்ற பல்லாக்கு ஊர்வலமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
பல்லக்கின் கூடவே கொடியும் எடுக்கப்பட்டது. சில இடங் களில் பல்லக்கு, கூடு இன்றி தனியே கொடியும் எடுக்கப் பட்டது. முகையதின் அப்துல் காதிர் ஜீலானி என்ற இறை நேசச் செல்வரின் பேரால் இக் கொடிகள் எடுக்கப்பட் டன. மேளதாளங்களுடனும் பச்கீர்களின் புகழ்ப் பாக்க ளுடனும் கோலாகலமாக இவ்வூர்வலம் செல்லும். மக்கள் அதன் பின் குழுமிச் செல்வார்கள். வீடுகள் தோறும் காணிக் கைகள் கிடைக்கும். அன்று கொடி புறப்படும் பள்ளிவாசல் விழாக் கோலம் பூணும். பள்ளிவாசலைச் சுற்றி பல்வேறு கடை கண்ணிகள் நிறைந்திருக்கும். கூடு எடுக்கும் பள்ளிவா சலில் நடைபெறும் சகல கிரியைகளும் அங்குள்ள கொடி மரத்தடியில் நடைபெறும். அத்தலத்தில் அடங் கப்பட்டிருக்கும் இறை நேசச் செல்வர்களின் சமாதியையும் தரிசித்து வருவர். இன்று இவ்வழக்கம் புத்தளம் பகுதியில் நல்லாந்தழுவை என்ற இடத்தில் மட்டும் விமரிசையாக நடாத் தப்படுகின்றதெனினும் இதை நிறுவுவதற்கான முயற்சிகளும் மறுபக்கம் நடைபெற்று வருகின்றன. காரணம் இத்தகைய நிகழ்ச்சிகள் இஸ்லாமிய அடிப்படை மூல் தர்மத்துக்கும், ஏகத்துவக் கொள்கைக்கும், இறைவனுக்கு இணைவைக்கச் கூடாதென்ற ஆணைக்கும் எதிரானதினாலென்க.

24 பஞ்சா” எடுத்தல்
"பஞ்சா" என்ற சொல், "பஞ்ச் தன் பாக்" என்ற உர்து மொழிச் சொற்களின் திரிபாகும் "பரிசுத்த குடும்பத்தினர் ஐவர்" என்பது அதன் பொருளாகும். இறைவன் தூதர் முஹம் மத் நபி (ஸல்) அவர்களும், அவர்களது மருகர் அலீ (றழி) அவர்களும், மகள் பாத்திமா (றழி) அவர்களும், பேரர்க ளான ஹசன் (றழி), ஹ"ஸ்ைன் (றழி) அவர்களும் அடங் கிய இவ்வைவருமே பரிசுத்த குடும்பத்தினர் என அழைக்கப் படுகின்றனர். இவர்களின் உயர்வை, தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியாகத் தொடங்கப் பட்டதே "பஞ்சா" என்ற இவ்வைபவம். இது இஸ்லாமிய வரலாற் றுடன் இணைந்த அரசியல் ஆதிக்க உரிமையின் அபிப்பிராய பேதங்களினால் எழுந்த வாதங்களின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்க ளுக்குப் பின்பு தலைமைத்துவம் அவர்களின் மருகர் அலீ (றழி) அவர்களுக்கும், அவர்களின் புதல்வர்களான ஹஸன், ஹ"ஸைன் (றழி) ஆகியோருக்கும் முறையே வந்திருக்க வேண் டும் என்று வாதிப்பவர்களினால், விசுவாசங் கொண்டவர் களால் ஏற்படுத்தப்பட்ட ஞாபக நிகழ்ச்சியாக இது உள்ளது.
இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி -- அறுபத்தோராம் ஆண்டு (கி.பி. 641) முகர்றம் மாதம் பிறை பத்தில் ஈராக் நாட்டின் டைகிரிஸ் நதி தீரத்தில் “கர்பலா" என்னுமிடத்தில், நபிகள்

Page 120
201 புத்தளம் வரலாறும், மரபுகளும்
நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பேரனார் ஹாஸைன் (றழி) அவர்களின் தலைமையில் வந்த நூற்றிப் பன்னிரண்டு பேரைக் கொண்ட சிறு குழுவினரை டமஸ்கஸ்ளிலிருந்து அர சாண்ட எளிது என்ற கலீபாவின் பெரும் படையினர் தாக் கியதன் விளைவாக ஹ"ஸைன் (றழி) அவர்களும், அவர்க ளின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் பலியானார்கள். இச்சம்பவம் இஸ்லாமிய உலகில் பல தாக்கங்களை ஏற்படுத்| தியது. தீராத கொடுமையென இதைப் பெரிதுபடுத்தி இரத் தக் களரிகளை ஏற்படுத்தினர். முஹர்றம் மாதம் பிறை பத் தாந் தினத்தை "ஆஷ9றா" என அழைப்பர். இது புனிதம் வாய்ந்த நாளாகும். இந்நாளிலேயே, துயரம் நிறைந்த "கர் பலா சம்பவம்" நடைபெற்றது. கலீபா அலீ (றழி) அவ களை ஆதரிப்போர் அவர்களது மகன் ஹ"லைன் (றN) அவர்கட்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் அத்தினத்தில் பலவிதமான உணர்ச்சிகளைக் கிளறும் ஆவேச ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய நிகழ்ச்சிகளை நடாத்து வார்கள். இதன் ஓர் அம்சமாக எழுந்ததே பஞ்சா எடுத்தல் வைபவமும் எனலாம்.
இத்தகைய நிகழ்ச்சிகள் ஈரான், பாக்கிஸ்தான், இந்தியா ஈராக் போன்ற நாடுகளில் முஹர்றம் மாதத்தில் விசேடமாக நடைபெறும். "விதியா", "ஹாபிழ்" எனக் கூறப்படும் வகுப்பி னர்கள் இதைத் தங்களின் முக்கிய தினமாக அனுட்டிக்கின் றனர். பரவச மேலீட்டால் ஆவேசம் மேலிட மக்கள் தங்கள் முகங்களிலும், மார்புகளிலும் அடித்துக் கொண்டு கதறி அழு வார்கள். அப்போது இரத்தம் பீறிட்டுப் பாய்வதையும் கான லாம். ஆயினும் புத்தளத்தில் "பஞ்சா" எடுக்கும் போது இத் தகைய கோர நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. "கர்பலா" சம்பவத்தை நினைவூட்டக் கூடிய சில நிகழ்ச்சிகள் நடை பெறும்.
புத்தளத்தில் இரு இடங்களில் பஞ்சாக்கள் எடுக்கப்பட் டதாகத் தெரிகிறது. முன்பு "உப்பளவழி" என அழைக்கப் பட்ட ஜாவுலம் பள்ளி ஒழுங்கையின் சந்தியில் அமைந்துள்ள புத்தளம் நகர சபையின் நன்னீர்க் கிணற்றுக்கருகில் இருந்த
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 2.
ܘܠܐ
யாஹ"ஸைன் பள்ளிவாசலில்" ஒரு பஞ்சா எடுக்கப்பட்டது. "பாஹ"ளிைன் பள்ளி' என்ற பெயரே மருவி "ஜாவுளம் பள்ளி" என்றாகியது. மற்ற பஞ்சா புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள "தைக்காப் பள்ளி" என்றழைக்கப் படும் புத்தளம் முஸ்லிம் அபிவிருத்திச் சங்கக் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்டது.
முஹர்றம் முதல் பிறை தென்பட்டதும் கொடியேற்றம் நடைபெறும். பிறை, பத்து வரையும் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன், ஹ"ஸைன் (றழி) அவர்களின் பேரால் ஆக்கப்பட்ட 'மெளலிது" எனும் புகழ் மாலை அறபியில் ஒதப் படும். இம்மெளலீத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஒலியுல்" லாஹ் அவர்களால் யாக்கப்பட்டதாகும். காணிக்கைகள், நேர்ச்சை, நிய்யத்துக்கள் ஊர்மக்களிடமிருந்து வந்து சேரும். ஓதலின் முடிவில் அவைகள் சமுகமளித் தோருக்கிடையில் பங் கிடப்படும்.
பஞ்சாவில் இருவகையுண்டு. ஒன்றை "ஐந்து விரல் பஞ்சா" என்றும், மற்றதை "குடைப் பஞ்சா" என்றும் அழைப்பர். ஐந்து விரல் பஞ்சா என்பது வெள்ளியால் அல்லது ஐம்பொன் என்ற கலப்பு உலோகத்தினால் ஏறத்தாழ கையின் வடிவத் தில் செய்யப்பட்ட காம்புடன் கூடிய ஒரு பூவடிவென இதைக் கூறலாம். பூவின் காம்பு போன்ற வடிவத்தின் மேலே பூவும், பூவின் மேலே ஐந்து விரல்களைப் போன்று இதழ்கள் ஐந்தும் அமைந்து கையைப் போன்று தோற்றமளித்தமையினாலேயே "ஐவிரல் பஞ்சா" என்று அழைத்தமைக்குக் காரணமாகும். உண்மையில் அது கையின் உருவமல்ல. உள்ளங்கை போன்ற பூவின் பரப்பிலும், ஐந்து இதழ்களின் பரப்புக்களிலும் அறபி மொழியில் வசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். முன்பு குறிப்பிட்டதுபோல பரிசுத்த குடும்பத்தினர் ஐவரையும் சுட்டிக் காட்டவே இதழ்கள் ஐந்தும் அத்தகட்டில் ஏற்பட்டிருக்கலாம். வலமிருந்து இடமாக முதலாம் இதழில் "பிஸ்மில்லாஹிர். ' என்று தொடங்கி ஐந்தாம் இதழில் ". றஹ்மானிர் றஹிம்' என்று முடியும். "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்" என்பது பொரு

Page 121
புத்தளம் வரலாறும், மரபுகளும்
ளாகும். வலமிருந்து இரண்டாவது இதழில், "யா அலிய்யு, யா வலிய்யு, யா அபல் ஹஸன்" என்ற வசனமுள்ளது. "ஓ அவியே, ஓ அதிகாரியே, ஒ ஹஸனின் தந்தையே" என்பது அதன் அர்த்தமாகும். வலமிருந்து மூன்றாம் இதழில், 'யா'அபூதுராப் ஹல்லு முஸ்கின் சர்வரணி நீரு" என்ற வசனங்களுள்ளன. "ஓ புழுதியின் தந்தையே (இது அலி (றழி) அவர்களின் புனை பெயர்களுள் ஒன்று), கஷ்டங்களைக் களையும் எனது தலை வரே" என்பது அவ்வசனங்களின் பொழிப்பாகும். வலமிருந்து இடமாக நான்காம் இதழில், "யா ஷாபிஉ யவ்மல் ஹிஸாப்" என வரையப்பட்டுள்ளது. "கேள்வி கணக்கு நாளிலே மன்றாட் டம் செய்பவரே" என்பது அதன் கருத்தாகும். இதழ்களுக் கும், காம்புக்கும் இடைப்பட்ட பூப்பபரப்பில் பின்வரும் அறபு வசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்
"அல்லாஹாம்ம ஸ்மதி மின் இன்திக்க மததி வ அலைக்க முஃதமதீ நாதீ அலிய்யன் முழ்ஹிறல் அஜாயிபி சஜ்த்ஹ" பி ஹக்கி அவ்னன் லக்க பின்னவாயிபி குல்ல ஹம் மின் வ ஒம்மின் எபயன்ஜவி. பி கறபிக்க பா அல்லாஹா பி நுபுவ்வத்திக்க யா முஹம்மது பி விலாயத்திக்க யா அலீ, லா பத்தய இல்லா அலிய லா ஸப்ப இல்லா துல்பக்கார்"
'ஹிஜ்ரத் துன்னபி ஸல் - அழ் - 3000000"
இதன் பொருளாவது:
"இறைவனே தேவையற்றவனே உன்னிடத்திலேயே தான் எனது ஆதாரம். உன் மீதே தான் நான் தாங்கி நிற்கிறேன். உனது உண்மையைக் கொண்டு புதுமைகளை வெளியாக்கக் கூடிய அலீயை அழைத்துக் கொள். பீடைகளிலிருந்து கை தாங்கக் கூடியவராக, முன் பின் வெளியாகக் கூடிய எல்லா சுக துக்கங்களிடையேயும், முக்கிய கருமங்களிடையேயும் உனக்கு உதவியாக அவரைப் பெற்றுக் கொள்வாய். பா அல் லாஹ் உன்னுடைய கொடையினாலும், முஹம்மதே உங்களின் நபித்துவத்துவத்தினாலும், யா அலியே உங்களின் அதிகாரத் தினாலும், அலீயைத் தவிர வாலிபமில்லை; துல்பிகார் எனும் வாளைத் தவிர வேறு வாளில்லை.
| ஹிஜ்ரி 1030

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
குறிப்பு: 30/00/000 என்பதில் கடைசி மூன்று பூஜ்யங்க ளூம் ஆயிரத்தையும், அடுத்துள்ள இரு பூஜ்யங்களும் நூறாம் தானத்தையும், முப்பது என்ற இலக் சத்திலுள்ள "சைபர்" பத் தாம் தானத்தையும், மூன்று ஒன்றாம் தானத்தையும் குறிக்கும்.)
இன்று ஹிஜ்ரி 1410ம் ஆண்டானபடியால் இத்தகடு ஏறத் தாழ முன்னூற்று எண்பது ஆண்டுகட்கு முன்பு தயாரிக்கப் பட்டதாகும் எனக் கொண்டு புத்தளத்தில் ஏறத்தாழ 59.ம்ெ ஆண்டளவிலிருந்து "இப்பஞ்சா" எடுக்கும் வழக்கம் இருந்து வந்ததாகக் கூறலாம். அவ்வுலோகத் தகட்டின் காம்புபோன்ற அடிப்பாகப் பூணில் நன்கு புனையப்பட்ட கழியொன்றைச் சொருகி உயர்த்தி வைப்பர். தகட்டையும், சுழியையும் பல அலங்காரங்களைச் செய்து அழகு படுத்தி ஆபரணங்களையும் அணிவிப்பர். "குடைப் பஞ்சா" குடை வடிவில் இருக்கும். அதற்குக் குஞ்சங்கள் கட்டி அலங்கரிப்பர். இது, தலைமைத்து வத்தின் அடையாளமான வெண் கொற்றக் குடையை ஞாபகப் படுத்துகிறது. இரு பஞ்சாக்களையும் அருகருகே வைப்பார் கள். குடைப்பஞ்சாவை ஆனாகவும், ஐவிரல் பஞ்சாவை பெண்ணாகவும் கருதுவார்கள் எனக் கூறப்படுவதும் உண்டு, இப்பஞ்சாக்களைச் சுற்றி போர் வாள்களை பரப்பி வைத் நிருப்பார்கள். உரிய நேரம் வந்ததும் அப்பஞ்சாக்களை விசேடமாக மாங்கிளைகளினால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிலில் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வார்கள். அம் மாங்கிளைகளினால் பாரம்பரிய உள்ளூர் இனிப்புப் பண்டங் கள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். சில வண்டிகளில் சிறுவர்களையும் ஏற்றிக் கொள்வார்கள். "கர்பலா" புத்த களத்திலே அலீ (றழி) அவர்களின் இளைய மகன் ஹ"ஸைன் fறழி) அவர்களுடன் வந்திருந்த இளம் பாலகர்கள் தாகம் மேலீட்டால் அவதியுற்றபோது பக்கத்தில் பிரவாகித்தோடும் யூபிரட்டீஸ் நதியிலிருந்து நீரைப்பெற்றுக் கொள்வதற்கும் கூட எதிரிகள் தடுத்தனர். செய்வதறியாது இரு பாலகர்க ளைக் குதிரையிலேற்றி எதிர்தரப்பினரிடம் அனுப்பினர். அப்பாதகர்கள் அப்பால் கார்க்கு. நீரைக் கொடுக்காமல் அம் பெய்து கொன்றனர். இக்கொடிய செயலை நினைவூட்டுவதற் சிாகவே வண்டில்களில் சிறார்களையும் ஏற்றிச் சென்றனராம்,

Page 122
புத்தளம் வரலாறும், மரபுகளும்
பெரியவர்கள் வாள்களை ஏந்தி நாலாபக்கங்களிலும் வீசிச் சுழற்றிக் கொண்டு போர் வீரர்களைப் போல "ஜாவுளே ஜாலிமா" "அஸ்ஸே - உஸ்ஸ்ே" என்று பெருத்த கோஷமிட் டுக் கொண்டு முன்னே செல்வார்கள். வாளின் நுனிகளில் எலுமிச்சம் பழங்களையும் குத்தித் தூக்கிச் செல்வார்கள். ஹ"ஸைன் (றழி) அவர்களின் கூட்டத்தாரை படுகொலை செய்து அவர்களின் தலைகளை ஈட்டியில் குத்தி ஊர்வலம் வந்த எதிரிகளின் அடாவடித்தனத்தை நினைவூட்டவே இவ் வாறு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. "ஜாவு ஸ்ே-ஜா விமா" என்ற பதங்கள் யா ஹ"ஸைன் யா அலீ இமாம்! என்ற தொடரின் மருவுதலேயாகும். "அஸே - உஸே" என்பது "ஹஸன் - ஹ"லைன்" என்பதன் திரிபாகும். "ஒ ஹ"ஸைனே! ஒ வழிகாட்டி அலீயே ஹஸனே! ஹ"ஸைனே" என்பதே அப் பதங்களின் அர்த்தமாகும்.
கொட்டு மேளங்களின் சப்தமும், மக்களின் கோஷமும் வானை முட்டும். "ஜின் ஜினிகான் தப்பு - தப்பு" என்ற மேளச் சந்த நாதம் முதலில் மெதுவாகவும் போகப் போக விரைவையும் அடையும் "ஜின் ஜினுக்கான் ஜினுக்கு ஜினுக்கு என்னும் அத்தாள அமைதியைச் சொல்வர். அந்த தாளத்துக் கேற்ப பாய்ச்சல்களும், நடனங்களும், கோசங்களும் உச்சக் கட்டத்தை அடையும். நீண்ட அற்பி பைத்துக்கள் எனப் படும் புகழ்ப் பாக்களும் பாடப்படும். உர்தூ மொழியில் தெரிந்தோ தெரியாமலோ பல கோஷங்கண்ன சொல்லிக் கொண்டு செல்வார்கள். புலிகளைப் போல வேடந்தரித்த பலர் அங்கு மிங்கும், பாய்ந்து உறுமிக் கொண்டும், கர்ச்சித் துக் கொண்டும், பார்ப்போரைப் பயமுறுத்திக் கொண்டும் செல்ல அனைவரையும் பரவசப்படுத்தும். பார்த்துக் கொண்டு நிற்போரும், பங்கு பற்றுவோரும் தலையிலும், முகத்திலும், மார்பிலும் அடித்துக் கொண்டு ஆவேசத்தால் அழுது புலம்பு வோர்களும் இருப்பார்கள். இது உண்மையிலே போர்களத் தின் பின்னணியில் ஏற்படுத்தப் பட்ட நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்ச்சியில் வீரத்துக்கே முக்கிய இடமளிக் கப்படுகின்றது. கோழைத்தனமான கொடூர செயல் கள் கண்டிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியின் பின்னணியிலே

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் :D5
இலங்கை முஸ்லிம்களிடையே போர் ஆற்றலின் வீரக் கிவை கள் வளர்ந்துள்ளமை குறிப்பிடக் கூடியதாகும்
அவற்றுள் வாட்சண்டை, மல்யுத்தம், சிலம்பம், சீனடி ஆகியவைகள் அடங்கும். மேற்குறிப்பிட்ட போர்க் கலைகள் இலங்கை முஸ்லிம் சுட்கே சொந்தமானதாகும். சிலம்பம், சீனடி போன்ற விளையாட்டுக்களில் பல பேர்களை தனி நபர் எதிர்த்துச் சமாளிக்கும் திறன் வெளிப்படுகின்றது. இவ் விளையாட்டுக்களில் பிரசித்தமான பலர் புத்தளத்தில் விளங்கி யுள்ளனர். அவர்களுக்கு நல்ல மதிப்பும் சமூகத்தில் பிரதான இடமும் இருந்தது. அவர்கள் இக்கலையைத் தங்களின் பரம் பரைப் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்தனர். ஊர்ச் சச்சரவுகளில் இவர்களின் பிரசன்னம் அமைதியை ஏற்படுத்தி யது. தைரியவான்களாக, கட்டான உடலமைப்புக் கொண் டவர்களாகத் திகழ்ந்தனர். ஆங்காங்கே பயிற்சிக் கூடங்களை வைத்து இக்கலைகளை வளர்த்த்னர், ஆனால் இன்று அக் கலைகள் மறைந்து கொண்டிருக்கின்றன. தங்கள் தந்தை மார், மூதாதையர் போற்றிப் பேணிவந்த இக்கலையில் வழிவந் தோர் ஆர்வமற்றுப் போய்விட்டனர். சமூகமும் இக்கலை கட்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதில் தவறிவிட்டது. புதிய புதிய பாணியில் புதிய பெயர்களில் இவைகள் அந்நியரின் சையில் சிக்கி காட்சி விளையாட்டாக இன்று மாறியுள்ளது. மனித பலமல்ல துப்பாக்கிகளும், ரவைகளும், கைக்குண்டுக ரும் இவர்களை ஆட்டிப் படைக்கின்றன. உலகம் அவற் நிலேயே நம்பிக்கை வைத்துள்ளது.
நகரத்தின் எல்லா பிரதான வீதிகள் வழியாகவும் பஞ்சா ஊர்வலமாகச் செல்லும், வீடுகளிலிருந்து காணிக்கைகளைச் சேகரிப்பதில் பலர் ஈடுபடுவர். ஊர்வலம் முடிவுற்றதும் புத் தளம் நகரிலுள்ள நெடுங்குளம் என்ற "குளத்துக்கு" பஞ் சாக்கள் எடுத்துச் செல்லப்படும். அங்கே பஞ்சாக்களை நீராட்டுவார்கள். பின்பு ஊர்வலமாக பஞ்சாக்கள் புறப்பட்ட இடத்தை அடையும் அந்நேரம் ஒப்பாரி வைப்ப வர்களும், தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுது ஒசை எழுப்புவோர்களும் பற் பலர் "யா

Page 123
s புத்தளம் வரலாறும் மரபுகளும்
அலிஹ"தாயே!" என்றஉருதுச் சொற்களும் இடம் பெறும். இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள தைக்காப் பள்ளியை பஞ்சா வந்தடைந்ததும் பஞ்சாவை நீராட்டிய நீரினால் ஒரு வகையான பானம் தயாரித்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட வர்களுக்குப் பகிர்வார்கள் அத்துடன் பஞ்சாவை பயபக்தியு டன் அதற்கென உள்ள பெட்டியில் பக்குவமாக வைத்து அதைப் பாதுகாத்து வைக்கும் பொறுப்பாளரிடம் ஒப்படைப் பர். அடுத்த ஆண்டு வைபவம் வரை அவர் தம்முடன் கவனமாக வைத்திருப்பார்.
இவ்விதமான பஞ்சாவொன்று யாஹ"லைன் பள்ளிவாச லிலும் இன்னொரு கோஷ்டியினரால் எடுக்கப்பட்டு வந்துள்ளது. கால கதியில் இவ் வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கும், கிரியைகளுக்கும் முற்றும் முரணானது என உணர்ந்தமையே காரணமாகும். கூடு, கொடி எடுத்தலுக்கு ஏற்பட்ட நிலையே பஞ்சா எடுத்தலுக்கும் ஏற்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

25. தீ மிதிப்பு
தீக்குளித்தல், பூ மிதித்தல் என்றும் இந்நிகழ்ச்சி அழைக் கப்படும். அனல் கக்கும் நித் தணவின் மேல் பக்திப் பரவசத் துடன் வெறுங்கால்களால் நடந்து குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து செல்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய செயற்பாடாகும்: இந்து சைவ மக்களில் ஒரு சாராரின் சமயக் கிரியைகளில் ஒன் றாக இது நிகழ்கின்றது. பண்டு தொட்டு வழக்கத்திலிருந்து வந்த மூதாதையரின் பல கிரியைகள் கால மாற்றங்கட்கேற்ப மறைந்து வருகின்றன. ஆயினும் இத் தீமிதிப்பு வைபவம் இன்றும் புத்தளத்திற்குத் தெற்கே இருபது மைல் தூரத்தில் உள்ள உடப்பு என்ற கிராமத்தில் நடைபெற்று வருவதைக் கீாண்கின்றோம். அக்கிராமத்தில் அமைந்துள்ள பூரீ திரெள பதா தேவி அம்மன் ஆலயம் தற்போது இலங்கையிலுள்ள இரு ஆலயங்களில் ஒன்றாகும். மற்றொன்று மட்டக்களப்பு மாவட்டம் பண்டிருப்புவில் உள்ளது. இவ்வாலய உற்சவங் களிேன் பின்னணி மகா பாரதக் கதையையே தழுவி நிற்கின் றது ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசையைச் சேர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். ஆலய விழா பதினெட்டாம் நாளன்று தீ மிதிப்புடன் நிறைவுறும். இந்நாட்களில் இயல், இசை, நாட கம் என்ற முத்தமிழ் முழங்க மகாபாரதக் கதை அரங்கேறும் , இறுதி நாளில் மிகவும் கோலாகலத்துட்ன் நடைபெறும் தீ மிதிப்புத் திரு விழாவுக்கு தீவின் எல்லாப் பாகங்களிலிருந்

Page 124
புத்தளம் வரலாறும் மரபுகளும் #۔
தும் பக்தர்களும், பார்வையாளர்களும் உடப்புக் கிராமத்தில் வந்து குழுமுவர். உல்லாசப் பிரயாணிகளையும் இவ்வுற்சவம் கவர்ந்தீர்க்கும், சக்தி வழி பாட்டின் அடிப்படையில் அமைந் துள்ள இவ்வுற்சவம் உடப்புக் கிராமத்துக்கே உரித்தான தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. தமிழகத்தின் தெற்கு மாநிலங்களிலும் பூரீ திரெளபதி அம்மன் கோயில் களில் தீ மிதிப்பு உற்சவங்கள் நடைபெறுவதைக் காண் கிறோம்"
உடப்பு மக்கள் தென்னிந்திய மறவர் குல மக்களின் பரம் பரையினரெனக் கூறப்படுகின்றது. இவர்கள் நெய்தல் நிவ மக்கள். வீரம் செறிந்தவர்கள். தங்கள் குலக் கட்டுப்பாட்டி விருத்தும் தெய்வ நம்பிக்கையிலிருந்தும் பிறழாது, பிரியாது ஒன்றாகக் கூடி வாழும் தன்மையினர். இதை இவர்களின் குடி பெயர்வுகளிலிருந்து நிச்சயிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வூர் மக்களின் வாழ்க்கை முறையும், கலாச்சாரப் பின்னணிகளும் ஏனைய இலங்கை இந்து மக்களைவிட சிறிது வேறுபட்ட தனித்துவம் நிறைந்ததாக விளங்குவதைக் காண்கின்றோம். இவர்கள் எங்கெங்கு சென்று குடியேறினும் அங்கங்கெல்லாம் தங்கள் குல தெய்வமான பூரீ திரெளபதி தேவி அம்மனுக்கு ஆலயம் அமைக்கத் தவறினார்களில்லை. வடமேற்குக் கரை வளம் பெற்று வான் புகழ் விளங்கி வந்த காலத்தில் இம்மக் கள் மன்னாருக்கும், புத்தளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத் தில் வந்து குடியேறியுள்ளனர், மீன் பிடித்தவிலும், முத்துக் குளித்தலிலும் ஈடுபட்ட இவர்கள் பின்பு வடமேற்குக் கரை செல்வாக்கிழந்து போன காலத்தில் புத்தளத்திலும், கற்பிட் டிப்பகுதியிலும் வந்து குடியேறியுள்ளனர். கற்பிட்டியில் அவர் கள் வாழ்ந்த காலத்து அங்கே பூரீ திரெளபதி தேவி அம் மனுக்கு ஆலயம் அமைத்தனரா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. எனினும் புத் தளத்தின் வடக்கில் அம்மக்க குடியேறி வாழ்ந்த காலத்தில் அங்கே பூரீ திரெளபதி தேவி அம்மனுக்கு ஆலயம் அமைக்கத் தவறவில்லை. அவர்களில் சிலர் நில புலன்கன் படைத்தவர்களாக செல்வாக்கோடு வாழ்ந்தனர். திடகாத்திரம் நிறைந்த இவர்கள் வருந் யுன்ழத்து உப்பளங்களில் தொழில் புரிவதில் சிறப்பானவ களாகத் திகழ்ந்துள்ளனர். புத்தளத்தின் வடக்கிலிருந்து தெய்
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
குப் பகுதிக்கு பல காரணங்களினிமித்தம் உடப்புக்குக் குடி பெயர்ந்த போதும் கூட இன்றும் உப்புச் செய்கை தடை பெறும் காலங்களில் தொழிலுக்காக புத்தளம் வந்து செல்வ தைக் காண்கிறோம். இவர்கள் இங்கிருந்து குடிபெயர்ந்து சென்ற பின்பு இவர்களால் அமைக்கப்பட்டிருந்த பூஜி திரெளபதி தேவி அம்மன் ஆலயமும் கவனிப்பாரற்று அழிந்து விட்டது. இன்று உடப்பில் பூரீ திரெளபதி தேவி அம்மன் ஆலயத்துடன் பூரீ முத்து மாரியம்மன் ஆலயமும், பூரீ வட பத்திர காளியம்மன் ஆலயமும், பூறி ஐயனார் கொலுவும் இருப்பதைக் காண்கிறோம். இதைப் போன்றதொரு அமைப்பு புத்தளத்திலும் அமைந்திருந்த தென்பதற்கு ஆதாரங்களும் தென்படுகின்றன. பூரீ திரெளபதி தேவி அம்மன் ஆலயம் அமைந்திருந்த தலத்திற்கு மேற்கே 'களி மாங்குண்டு" என்றழைக்கப்படும் இடமொன்றுள் ௗது. அங்கே மேட்டுப் பகுதியுமுள்ளது. 'களிமாங்குண்டு என்ற திரிபுப் பெயர் "காளி அம்மன் குன்று" என்ற பெயரி லிருந்து வ்ந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயமாகும். அதில் பூரீ காளியம்மன் ஆலயமொன்று இருந்திருக்கக் கூடும். "களி மண் குன்று" என்றதே 'களிமங்குண்டு" எனத் திரிபு பட்ட தாகவும் சிலர் கூறுவர். நில அகழ்வாராய்வு இதற்கு சரியான விடையைத் தரலாம். கிழக்கே பூரீ முத்து மாரியம்மன் ஆல! முள்ளது. இன்று இவ்வாலயம் நிலைத்து நின்று இப்பகுதி சைவ மக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திற்கின்றது. இவ்வாலயத்தில் நடைபெறும் நவராத்திரி விழாக்களும், விஜய தசமி அன்று அம்மன் ஊர்வலமும் பண்டு தொட்டு கையாண்டு வரும் சிறப்பான நிசழ்ச்சிகளாகும். வடக்கே புத்தளம் நகரி லுள்ள நெடுங்குளத்தின் ஒரு பகுதி "அயினா குளம்" என அழைக்கப்படுகிறது. ஐயனார் குளம் என்ற பெயரின் திரிபே
அது. பூரீ ஐயனார் கொலு வீற்றிருந்த இடமும் குளத்தருகில் உள்ளது. இவைகளை அடியொட்டி நோக்கும்போது உடப்பு மக் களின் முன்னைய சந்ததியினர் புத்தளம் நகரின் வடக்குப் பகுதி பில் வாழ்ந்தபோது தங்களின் சக்திவழிபாட்டினை இன்றுபோல் அன்றும் பேணிப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளமை தெரி கிறது. வட பகுதியில் சைவமக்களின் குடியிருப்புக்கள் பல இருந் துள்ளன. மணல்திவுக்கு அருகிலுள்ள ஆளியாவெளிக் குளத்

Page 125
g புத்தளம் வரலாறும், மரபுகளும்
துக் கருகில் சிதைந்து போன இந்துத் தேவாலயமொன்றும் இருப்பது தெரிகிறது. கரடிப் பூவல் கிராமத்திலும் சைவ மக் களின் குடியிருப்புகள் இருந்துள்ளன.
புத் களக்திலிருந்தும் கற்பிட்டியிலிருந்தும் உடப்புக்கு மக் கள் குடிபெயர்ந்து செல்வதற்கான காரணங்களை ஆராயும் போது சிலவற்றை ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்து சமய த் தவர் கிளாகிய முக்கு வர்கள் இப்பகுதியில் செல்வாக்குப் பெற்று அதிகார முள்ளவர் மீளாக இருந் தபோது மறவர்களும் இவர்களோடு ஒன்று பட்டு வாழ்த் துள்ளனர். முக்குவர்களுக் கும், கரை யார்களுக்கும் நடந்த போரின் பலனாக முக்குவர்கள் இஸ்லாத்திலினைந்த காலை அவர்களோடு இசைந்து வாழ முடியாத சூழ் நிலையில் யாவரும் கூட்டாகவே தமது தொழி லோடு சம்பந்தப்பட்ட பொருத்தமான இடத்தைத் தேர்ந்து புத்தளத்தின் தெற்கேயுள்ள முந்தல் பகுதியில் குடியேறினர். அங்கிருந்து சிறு கடலிலும், பெருங்கடலிலும் தொழில் செய்யும் வாய்ப்புள்ள உடப்பில் குடியேறினர். அதுமட்டுமன்றி போர்த் துக்கீசர் காலத்தில் நடைபெற்ற மதமாற்றங்கட்கும் இவர்கள் உடன்பாடின்றி முற்றாகவே கற்பிட்டியிலிருந்தும் புத்தளத்தி லிருந்தும இடம்பெயர்ந்து தனித்துவமாக வாழக்கூடிய முந்தல், உடப்புப் பிரதேசத்தை நாடினர் எனலாம்,
புத்தளத்தில் பூரீ திரெளபதி தேவி அம்மன் ஆலயம் சிறப்
புடனிருந்த காலத்தில் அங்கும் தீமிதிப்பு உற்சவம் நடந்திருத் தல் வேண்டும். புத்தளம் வாழ் முஸ்லிம் மக்களுக்கு அவ்வுற் சவம் மூலம் தீ மிதிப்பு அறிமுகமாகி இருக்க வேண்டும். இதை அடியொட்டி புத்தளம் முஸ்லிம் மக்களை பள்ளிவாசல்களின் பால் ஈர்ப்பதற்கு பள்ளிவாசல் தலங்களிலும் தீமிதிப்பு உற் சங்களை நடாத்த ஆரம்பித்திருக்கலாம். அன்றைய மக்க ளின் மனங்களில் தீ மிதிப்பு நிழ்ச்சி ஆச்சரியகரமானதாகவும், தெய்வ பக்திப் பரவசத்தை ஊட்டக் கூடியதாகவும், அச்ச மளிக்கக் கூடியதாக அம், நம்பிக்கை கொள்ளக் கூடிய உந்து சக்தியாகவும் விளங்கியது.
இத்தீமிதிப்பு அல்லது பூ மிதிப்பு புத்தளம் நகரத்தில் இரு இடங்களில் முஸ்லிம்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளனவென அறிகின றோம். அன்று முஹையதீன் தர்ஹாவுக்கும், மீரா

அல்ஹாஜ் ஏ. எண். எம். ஷாஜஹான்
லெப்பை பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் அவ்வா றான தீமிதிப்பு நடைபெற்றுள்ளது. இன்று இந்நிலப்பகுதி யில் கடைகளும், வீதிகளும் நிறைந்துள்ளன. அடுத்து இரண் டாம் குறுக்குத் தெருவிலுள்ள தைக்காப் பள்ளி மைதானத் திலும் தீமிதிப்பு நிகழ்ச்சியை நடாத்தினர். இங்கேயே பஞ்சா வும் எடுத்தனர். உடப்பில் சைவ மக்களால் தீ மிதிப்பு வைப வம் இன்றும் நடாத்தப்பட்டு வருவதனால் அதைப்பற்றிய நடைமுறை விபரங்களை விளக்கந் தேவையில்லை என எண்ணி, முஸ்லிம்களால் நடாத்தப்பட்டு இன்று மறைந்து போன தீ மிதிப்பு நிகழ்ச்சியினை சிறிது விவரிக்கலாமென நினைக்கின்றேன்.
தீ மிதிப்பு நிகழ்ச்சி இஸ்லாத்துடன் எவ்வகையிலும் சிறி தும் சம்பந்தப்பட்டதல்ல. கூடு எடுத்தல் வைபவத்தினைப் பற்றிய அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல முஸ்லிம்கள் பிற மதி அனுட்டானங்களிலும், நம்பிக்கைகளிலும், கிரியைகளி ஜிம் ஈர்க்கப்படாமல் பாதுகாத்தற்காக, பிற மதத்தவரைப் போன்று அக்கிரியைகளின் அடிப்படையில் இஸ்லாத்தை சம்பந் தப்படுத்தி கையாண்ட ஒரு யுக்தியாகவே இதைக் கருதலாம். அறபி மாதத்தின் முதல் மாதமான முஹர்றம் மாதத்தில் பஞ்சா எடுப்பதைத் தொடர்ந்து "பூக்குழி இறங்குதல்" எனப் படும் தீ மிதிப்பும் நடைபெற்றது. கர்பலா சம்பவம் நடை பெற்ற "ஆஷி"றா" தினமான முஹர்றம் மாதம் பிறை பத் நில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் திருப் பேரர் ஹஸ்ரத் ஹ"ஸைன் (றழி) அவர்களின் ஞாபகார்த்த விழாவாக இதை அனுட்டித்தனர். இவ்வனுட்டானம் அறி வாளிகள், செல்வந்தர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற வில்லை. சாதாரண குடி மக்களின் மத்தியில் மிகவும் பிரபல் யம் பெற்று அவர்களில் சிலரின் முயற்சியாலேயே இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிவாசல்களைச் சேர்ந்த லெப்பைகன்" (மதகுருமார்) இந்நிகழ்ச்சியில் நேரடியாக சம்பந்தப்படவில்லை யெனினும், நிகழ்ச்சியின்போது நடைபெறும் பிரார்த்தனை களையும், ஒதல்களையும் இவர்களே செய்தனர். ஏனெனில் மிதிப்பை நடாத்தியவர்களுக்கு பிரார்த்தனைக்குரிய ஒதல் களை செய்யக்கூடிய அறிவு இருக்கவில்லை. நாடத்தியவர் கள் பரம்பரையான வாரிசுகளாகவே இருந்தனர். புழுதிவயல்

Page 126
21Ꮽ புத்தளம் வரலாறும், மரபுகளும்
கிராமத்தைச் சேர்ந்தோரின் வாரிசுகளே இதை நாடத்தினர். தீ மிதிப்புக்குரிய ஆயத்தங்கள் கிரியைகளைச் செய்வதில் இந்து சமயத்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் சிறிய வித்தி யாசங்களிருந்தன.
முதலில் "துஆ” - பிரார்த்தனையுடன் தீக் கிடங்கு துப் புரவு செய்யப்படும். அதன் பக்கங்களில் குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். சாம்பிறானிப் புகையும், சந்தனக் குச்சுகளின் புகையும் எங்கும் பரந்து பணம் வீசும். பன்னீர்ச் செம்புகள் மூலம் பன்னீர் தெளிக்கப்படும். கிடங்கில் புளிய மரக் கட்டைகள் ஒழுங்காக அடுக்கப்படும். ஒதல்கள் பிரார்த் தனைகளுக்குப் பின்பு விளக்குத் திரி மூலம் கட்டைகளுக்குத் தீ மூட்டுவர். கட்டைசி ஸ் எரிந்து தணல் மயமானதும் உப் பளங்களில் உப்பை இழுத்துச் சேகரிப்பதற்காக உபயோகப் படும் "பரவை" என்றழைக்கப்படும் நீண்ட கழியுடன் இணைந்த பலகைகளின் மூலம் தணலை சமப்படுத்துவார்கள். நள்ளிர வானதும் தீக்கிடங்கில் இறங்குபவர்கள் குளித்து முழுகுவார் கள். அவர்களின் வருகையை எதிர்பார்த்து பார்வையாளர் கள் திரண்டு, கிளர்ச்சி பொங்கும் மனங்களுடன், பய பக்தி யுடன் பரவசத்துடன் வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். ஏற்கனவே சலுகமளித்து நள்ளிரவு வரும் வரை ஆங்காங்கே உறங்கிக் கிடப்போரும் தூக்கம் கலைய ஓடோடி வந்து பூ மிதிப்புக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருப்பர். ஆண் களும், பெண்களும், சிறுவர்களும் வியப்பு மேலிட நிசப்தம் நிலவ நிற்பார்கள். "யாஹ"ஸைன்! யா இமாம்!" என்று ஆவேசம் பொங்கும் குரல்களை எழுப்பிக் கொண்டு தீ மிதிப் புக்குத் தலைமை தாங்குபவர் முன்னே வர அவரின் பின்பு பலர் தொடர்ந்து வரிசையாக வருவார்கள். அவர்களனை வரும் தாங்கள் ஏற்கனவே பூக்குழி இறங்குவதென நேர்த்திக் கடன் வைத்தவர்களாகவே இருப்பார்கள். தலைவர் நீண்ட வெண்ணிற அங்கியை அணிந்திருப்பார். அவர் முன்னே மயிற் றோகைக் கட்டுக்களும் கொண்டுவரப்படும். தீமிதிப்போர் தீங்கிடங்கை தலைவரின் கீழ் பல தடவைகள் சுற்றி வருவர். முடிவில் தீங்கிடங்கின் தலைமாட்டுப் பக்கம் அவர்கள் வந்து நிற்பார்கள். பள்ளியிலுள்ள லெப்பை பல ஒதல்களையும், "துஆ பிரார்த்தனையையும் புரிவார். இந்நிலையே இக்காட

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 214
சியின் முக்கிய முக்கிய கட்டமாகும். வெண்ணிற உடை யணிந்த தலைவர் முன்னே நிற்க அவரைப் பின்பற்றி வரிசை யாக மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கையில் பிடித்த வண்ணமும், நடக்க முடியாதவர்களை தோளில், சையில் தூக்கிய வண்ணமும் சமிக்ஞையை எதிர்பார்த்துக் காத்திருப் பர். பார்வையாளர்களின் முகங்களில் திகைப்பும், அதிர்ச்சி யும், பயமும் தாண்டவமாடும். லெப்பை அறபியில் சத்த மாகப் பிரார்த்தனை புரியும் போது அவர் மூச்சு விடத் தாமதிக்கும் தரிப்பிடங்களிலெல்லாம் அங்கு குழுமியிருக்கும் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் "ஆமீன்' என்று ஒரே குரலில் முழங்கிய வண்ணம் இருப்பர். "ஆமீன்' என்பது "இறைவா! எங்கள் பிரார்த்தனைகளை ஒப்புக் கொள்வா யாக!" என்ற பொருளைத் தரும் அறபுச் சொல்லாகும். பிரார்த்தனை முடிந்ததும் தலைவர் 'தீன் - தீன் (DheenDheen) எனக் கூவிக் கொண்டு கிடங்கில் இறங்கி தீத் தண லின் மேல் நடந்து செல்ல அவரைப் பின்பற்றி மற்றவர்களும் நடந்தும், ஓடி யும், பாய்ந்தும் தீங்கிடங்கைத் தாண்டுவர். இவ்விதம் தீ மிதிப்போர் ஆண்களேயாவர். பெண்கள் தீ மிதிப் பில் கலந்து கொள்வதில்லை. பதிலாக நேர்த்திக் கடனை இறுப்பதற்காக வந்துள்ள பெண்கள் குளித்து முழுகி தீக்கிடங் கின் பக்கத்தில் குந்தியிருக்க முகாமையாளர் தட்டு சளில் தணலை வாரி எடுத்து நீர் வார்ப்பது போல அவர்களின் தலையிலும், கழுத்திலும் கொட்டுவார்கள். உடன் அத்தண லினை உதறி விட்டு அவர்கள் எழுந்து செல்வார்கள். பூக்குளித் தல் எனவும் இதை குறிப்பர்.
இந்த தீமிதிப்பு உற்சவம், பஞ்சா ஊர்வலம் முடிந்த பின் நடாத்தப்படும். தைக்காப் பள்ளியின் தீச் கிடங்கு, இன்று அதன் முன்னே தெருவோரத்தில் நிற்கும் பழைமை வாய்ந்த அதிவயதுடைய புளிய மரத்தின் பக்கத்திலிருந்ததாகக் கூறு வர். இத்தீக் கிடங்கு பத்தரை அடி நீளமும், ஐந்தடி அகல மும், ஒன்றரை அடி ஆழமும் கொண்டதாகும். உடப்பில் கொடியேற்றி தீமிதிப்பு நடைபெறும் வரையுள்ள நாட்களில் பாரதக் கதையின் சில கட்டங்கள் நாடகமாக மேடையில் நடித்துக் காட்டப்படுகின்றன. அதே போல தைக் காப் பள்ளி மைதானத்திலும் முஹர்றம் பிறை முதல் தினம் கொடியேற்

Page 127
岛直岳 புத்தளம் வரலாறும், மரபுகளும்
நிறப்பட்டதுடன் தினமும் இஸ்லாமிய சரித்திரங்களுடன் சம்பத் தப்பட்ட கதைகள் நாடக ரூபத்தில் மேடை யேற்றப்படும். அலி பாதுஷா நாடகம், அப்பாஸ் நாடகம், தையார் சுல் தான் நாடகம் போன்றவை அவற்றுள் சிலவாகும். இந்நாட கங்களை தென்னிந்கிய முஸ்லிம் புலவர்களினாலும், அறிஞர்களி னாலும் தொடர்ச்சியாகப் பல இரவுகள் நடைபெறக் கூடிய
வாறு ஆக்கப்பட்டவையாகும். இந்நாடகங்களை ஆண்டு தோறும் நாடாத்தும் உள்ளூர் நாடகக் குழுவினர் புத்தளத் தில் இருந்தனர். இந்நாடகங்களைக் கண்டு களிக்க பொது மக்கள் ஏராளமாக வருகை தருவர். தைக் காப் பள்ளியின் முன்பு இரண்டாம் குறுக்குத் தெருவும், கங்காணிக் குளம் வீதியும் சந்திக்கும் சந்திவரை மல்ை நிறைந்த
பெரிய மைதானம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இன்று அம்மைதானம் பாதைகளினாலும், கால்வாய்களினா லும், ஆக்கிரமிப்பினாலும் துண்டாடப்பட்டு இருப்பதைக் காண்கிறோம். அன்று இது "தைக் காத் தெரு மைதானம்" என வழங்கப்பட்டது. அம்மைதானத்தை சுற்றி சில வீடுகளே இருந்தன விசேட தினங்களைத் தவிர ஏனைய நாட்களில் மாலை, இரவு நேரங்களில் கூடிக் கதைத்துக் கொண்டிருப் போரும், விளையாடுவோரும், கிராமக் களியாட்டங்களில் ஈடுபடுவோரு மாக மக்கள் கூடி இருப்பர். பலரும் கூடிக் கலந் துரையாடும் இடமாக இருந்தமையால் தர்பார் சந்தி எனவும் பட்டது. கிளித்தட்டு மறித்தல், வாரோட்டம், கு கொண் டோடுதல், மட்டிவிடுதல், கிட்டியும் புள்ளும் பீச்சுதல், போளை அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவர். தெருவுக்குத் தெருவுள்ள கோஷ்டி களுக்கிடையே பலத்த போட்டிகளும் நடக்கும். மட்டி விடு தல் போன்ற விளையாட்டுக்கள் பெருஞ் செல்வர்களின் தலை மையில் வாழ்வு, தாழ்வு, கெளரவப் பிரச்சினையாக பெரு மளவில் நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியூர், உள்ளூர் மந்திரவாதிகள், அண்ணாவிமார்கள் இரு பக்கக் கோஷ்டிகளுக்கும் உதவுவதற்காக மந்திர, தந்திர, உச்சாட ன்ங்களை செய்து கொண்டிருப்பர். பசாசுக் கணங்களை ஏவி விடுவர். இதனால் பல அனர்த்தங்களும், அடிதடி சண்டை களும் ஏற்பட்டன. மகிளி எடுத்தல் என்ற மந்திர தந்திர விதி

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
தைகள் மந்திரவாதிகளின் கோஷ்டிகளுக்கிடையில் நடை பெறும் - தத் தமது மந்திர பலத்தைக் காட்டி ஒரு வரை ஒருவர் முறியடிக்கும் முயற்சியாக இது விளங்கியது. மகிடி என்ற பதமே மகிணி ஆனது.
பெண்கள் ஆண்களுடன் கலக்காமல் பெரிய முற்றமுள்ள வீட்டு வளவு சுளினுள் கூடி கும் மியடித்தல், களச்சி விளை யாட்டு, பசுவும் புவியும் பிடித்தல் "த பால் வருவுது கியாகியா" விளையாட்டு, பாண்டி விளையாட்டு எனப்படும் பல்லாங்குழி, சூ விளையாட்டு, போன்றவைகளை விளையாடிக் களிபபர். அவ்விளையாட்டுகளுக்கான பாடல்களையும் பாடுவர். நிலாக் காலங்கள் இவ் விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிக்கும் காலங்க னாகும். நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விசேட தினங்களில் விரிவான முறையில் களியாட்டங்கள் இடம் பெறும். தைக்காப் பள்ளி மைதானத்தில் மட்டுமன்றி தெருவுக்குத் தெரு இவ்விதமாக மக்கள் குழுமி களிக்கும் மத்திய நிலையங் களிலிருந்தன. மரைக்காயர் தெருவிலும், டடுக்கு பத்து விாடி யிலும் கீரையார் கெருவிலும் இருந்த பொழுதுபோக்கு மத்திய நிலையங்களைக் குறிப்பிட்டுச் ரொன் லலாம். மேலும் "சேம் கோடு" என்றழைக்கப்பட்ட மாதிரி நீதிமன்றங்களும் நடாத் தப்பட்டன. கதைகளை, புராணங்களைக் கருவாகக் +ொண்டு கதா பாத்திரங்களையே வாதி, பிரதிவாதி. காட்சிகளாக உரு வகித்து வழக்காடப்பட்டன, உதரணமாக அரிச்சந்திர புராணத் தில் அரிச் சந்திர மன்னனை வாதியா அவும் விகவாமித்திர முனி வனர பிரதிவாதியாகவும் உருவகித்து சதா பாத்திரங்களை காட்சிகளாக வரவழைத்து சட்டத்தரணிகள் வழக்காடுவர். கதா பாத்திரங்கள் உரிய வேடங்களில் தோற்றுவர் நகைச் சுவைகளும், விவாதங்களும், வினாவிடைகளும் பெரிதும் இர சிக்கக் கூடியதாக விளங்கின.

Page 128
26. பெருநாள் பந்தயங்கள்
நோன்புத் திருநாளும், ஹஜ்ஜ"த் திருநாளும் முஸ்லிம்க ளின் முக்கியமான பெருநாள் தினங்களாகும். அத்திருநாட் களைக்கொண்டாடுவதில் புத்தளம் முஸ்லிம்கள் பண்டு தொட்டு முக்கிய கரிசனை காட்டி வந்துள்ளார்களென்பதை அவர்கள் பாரம்பரியமாக நடாத்தி வரும் பெருநாள் பந்தயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. இப்பந்தயங்ககளை நகரின் முக்கிய திரு விழாக்களாகக் கணிக்கலாம். இப்பந்தயங்கள் புத்தளத்தில் எப்போதிருந்து ஆரம்பித்துள்ளன என்பதற்கு சரியான பதிவு கள் எமக்குக் கிடைக்கவில்லையாயினும் ஏறத்தாழ இரு நூற் றாண்டுகளுக்கு மேலாக இந்நிகழ்ச்சிகள் நடந்து வந்துள்ளதாக வாய்வழித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்ங்ணமாயினும் புத்தளம் நகருக்கே சொந்தமான பாரம்பரிய நடைமுறை யொன்று இன்று பேணப்பட்டு வருகின்றமை பெருமையைத் தருவதாகும், இத்தகைய தொன்மை வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏனைய பகுதிகளில் முஸ்லிம் மக்க ளால் அவர்களின் கிராமங்களிலோ அன்றி நகரங்களிலோ நடத்தப்படுவதில்லை என்பதைத் துணிந்து கூறலாம். 1990.04.28ம் திகதியன்று புத்தளம் நகரில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் இரண்டாம் தின பந்தய நிகழ்ச்சிகளில் பிரதான அதிதியாகக் கலந்து கொண்ட புத்தளம் தேர்தல் தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியும், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான கெளரவ அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அவர்கள் இந்நிகழ்ச்சியின்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 218
நடைமுறைகளை அவதானித்து, இரசித்து மைதானத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்களின் முன்னிலையில் ஆற்றிய நீண்ட உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்;
"பல நூற்றாண்டு காலமாக புத்தளம் முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டு வரும் இப்பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி கள் எம்மை வியக்க வைக்கும் முறையில் அமைந்திருப்பதைக் காண்கிறேன். குறுகிய நேரத்தில் சங்கிலித் தொடர் டோல் பல்வேறு வகையான சுவையான நிகழ்ச்சிகளை எத்தகைய சிரமங்களுமின்றி ஒற்றுமையுடன் நடத்தி முடிக்கும் பான்மை புத்தளம் மக்களிடையே ஊறிவிட்ட ஒன்றெனத் தெளிவா கின்றது. இது தொடர்ந்து பேணப்படல் வேண்டும். எதிர் காலத்தில் முஸ்லிம்களின் பெருநாள் தேசிய விழாவாகப் புத் தளம் நகரில் கொண்டாடுவதற்கு மேன்மை தங்கிய ஜனாதி பதி ரணசிங்க பிரேமதாஸ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் நடவடிக்கை எடுப்பேன்".
மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் இப்பந்தயங்களின் முக்கி யத்துவத்தை வற்புறுத்துவதாக அமைகின்றன. கெளரவ அமைச்சர் அவர்களின் அபிப்பிராயம், அதற்கான முயற்சி எதிர்காலத்தில் வெற்றியடைய வேண்டுமென புத்தளம் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாரம்பரிய இந்நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து நிறுத்தி விடாமல் தொடர்ந்து நடாத்துவதற்கு ஆவன செய்தல் எதிர்கால சந்ததியினரின் கடமையாகும்.
பெருநாள் தினம் காலை வேளையில் பள்ளிவாசல்களுக்குச் சென்று மதக் கிரியைகளை நிறைவேற்றிய பின்பு உற்சவ பூர் வமாக யாவரும் மாலை வேளையில் கூடி அத்தினத்தை மகிழ்ச் சிகரமாகக் கழிப்பதற்கு இப்பெருநாள் பந்தயங்கள் உதவுகின் றன. அதிலும் குறிப்பாக இளம் சிறார்கள் புத்தாடைகளைப் புனைந்து தமது பெற்றார், இனத்தாருடன் கூடிச் சென்று தங்களின் நண்பர்களைக் கண்டு அளவளாவி, பந்தயங்களில் பங்குபற்றி மகிழ்வதை சிறந்த ஓர் சந்தர்பமாகக் கொள்ளுகின் றனர். இத்தகையதொரு மகிழ்ச்சிகரமான பொழுது போக்கு நிகழ்ச்சியில்லாவிடின் பெரியவரும், சிறியவரும் தமது மன

Page 129
219 புத்தளம் வரலாறும், மரபுகளும்
மெழுந்த வாரியாக தவறான பல நிகழ்ச்சிகளிலும், செயல் களிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. நமது முன்னோர் இந்நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்தியமைக்கு பல காரணங்களிருக்கலாம். அவர்களை அனாச்சார, மடமை வாதிகள் எனப் புறக்கணிப்பதில் இன்றைய சந்ததியினர் மிக வும் கவனமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் வளர்த்து விட்ட - விட்டுச் சென்ற பாரம்பரியங்கள் போற்றப்படல் வேண்டும்; மதிக்கபடல் வேண்டும்; ஞாபகப்படுத்தப்படல் வேண்டும். எல்லாவற்றையுமே தவறுகள் எனத் தள்ளிவிடு தல் அழகாமோ!
பெருநாள் பந்தயங்களை "பெருநாள் றேஸ்" என்றும், அவைகளை நாடாத்தும் மைதானங்களை *றேஸ் தரவை' என்றும் பொதுமக்கள் அழைப்பர். இம்மைதானங்கள் பிர தானமாக இரண்டு இருந்தன. ஒன்று மன்னார் வீதியில் முத்து மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே நெடுங்குளக் கட்டின் ஒரத் தில் நீண்டு கிடந்த மைதானமாகும். இதை "பெரிய தரவை' என அழைத்தனர். மற்றது கங்காணிக் குளம் பள்ளிவாச லுக்கு முன்பாயுள்ள கண்காணிக் குள மைதானமாகும். இதை "சின்னத் தரவை' என அழைத்தனர். பெருநாள் தினத்தை முதற்பெருநாள் எனக் கூறுவர். இத்தினத்திலேயே பெரிய தரவையில் பந்தயங்கள் நடாத்தப்பட்டன " இப்பந்தயங்கள் புத் தளத்திலுள்ள "இ. செ. மு. " என விலாசமுள்ள முதலாளி குடும்பத்தினரின் ஆதரவில் நடைபெற்றன. சின்னத் தரவை பந்தயங்கள் கங்காணிக் குளம் வாடியின் தலைமைக் காரர் களாக விளங்கிய மீசி மரைக்கார் என மருவி வழங்கப்பட்ட மீரா சாகிபு மரைக்காயரின் முன்னோர்களினாலும், வழிவந் தோராலும் நடாத்தப்பட்டன. இவர் மர்ஹகும் ஜலாலுத்தீன் மரைக்காயரின் தகப்பனாராகும். இன்று இத்தலைமைத்து வக் கட்டுக் கோப்புகள் மறைந்து போய் பிட்டன. பெரிய தரவைக் காணிகள் துண்டாடப்பட்டு பலாத்காரக் குடியேற் றங்கள் ஏற்பட்டமையினாலும், அங்கு நடாத்துவதற்குத் தூண்டுதலும், உற்சாகமும் அளிக்கப்படாத காரணத்தாலும் அங்கு நடைபெற்று வந்த முதற் பெருநாள் பந்தயங்கள் நிறுத் தப்பட்டன. பகரமாக முதற்பெருநாள் பந்தயங்களும், அடுத்து வரும் இரண்டாம் பெருநாள் பந்தயங்களும் சின்னத்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 220
தரவை எனப்படும் கங்காணிக்குளம் மைதானத்திலேயே நடாத்தப்பட்டு வருகின்றன. சில காலங்களில் அப்பந்தயங்கள் நெடுங்குளத்துத் தரவையிலும் நடைபெற்றுள்ளன. தரவை என்பது உவர் நில வெளியைக் குறிக்குமென்க. பெருநாளை அடுத்து வரும் இரண்டாம் பெருநாள் தவிர்ந்த நாட்களில் தற்போது புத்தளம் வெட்டாளைத் தரவையிலும் தில்லை யடிக் கிராமத் தரவையிலும் புதிதாகப் பெருநாள் பந்தயங் கள் நடாத்தப் படுகின்றன. எனினும் அவைகள் முதல், இரண் டாம் பெருநாள் தினங்களில் நடாத்தப்பட்டு வரும் பந்தயங் கட்குத் தடையாக அமைவதில்லை.
இப்பந்தயங்கள் இன்று தனிப்பட்ட விளையாட்டுக் கழகங்
களால் நடாத்தப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிச் சார்புகள் இந்நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் சமீப காலங்களில் கலந்திருப்பதை உணர முடிகின்றது.
இந்நிலை பாரம்பரிய இப்பந்தய நிகழ்ச்சிகளுக்கும், ஒற்று மைக்கும் பாதகமாக அமைந்து விடுமோ என்று பொதுமக் கள் அஞ்சுவதாகவும் தெரிகின்றது. பெருநாள் தினம் வந்ததும் பந்தயத்தை நடாத்தும் குழுவினர் புத்தளம் நகர கடைக்காரர் களிடமிருந்தும், பிரமுகர்கள், செல்வந்தர்கள் நண்பர்களிட மிருந்தும் பணத்தையும், பரிசுப் பொருட்களையும் சேகரிப் பார்கள். இதற்காக எவ்வித தயக்கமுமின்றி அனைவரும் தாராளமாக உதவுவது வழக்கமாகும். பிற்பகல் நேரத் தொழு கையாகிய "அஸர்" தொழுகை முடிந்ததும் ஆரம்பமாகும் பந்த யங்கள் அஸ்தமன நேரத் தொழுகையாகிய "மஃரிபு" தொழு கைக்கு முன்பு முடிந்து விடும். ஏறத்தாழ இரு மணித்தியால நேரம் இப்பந்தயங்கள் நடைபெறும். யானை, குதிரை, மாட்டு வண்டி, சைக்கிள் ஒட்டப்பந்தயங்களும், சிறுவர், சிறுமியர், வளர்ந்தோர்க்கான ஒட்டப்பந்தயங்களும், முட்டியுடைத்தல், கயிறிழுத்தல், தலையணை அடித்தல் போன்ற விளையாட் டுக்களும் நடாத்தப்படும். மாட்டின் மேல் ஆள் ஏறி ஒட்டு தல், ஆளை ஆள் தூக்கி ஓடுதல், தடைதாண்டி ஓட்டம் ஆதியனவும் இடம் பெறும். சமீப காலத்திலிருந்து மோட் டார் சைக்கிள் ஓட்டங்களும் இடம் பெறுகின்றன. பந்தயத் துக்கெனவே பயிற்சியளித்து பழக்கப்படும் மாடுகளும், குதிரை களும் இருக்கின்றன. ஊள்ளூரில் யானைகள் இருந்த காலத்

Page 130
22及 புத்தளம் வரலாறும், மரபுகளும்
தில் யானைப் பந்தயங்கள் நடந்தனவாயினும் தற்போது இப் பந்தயம் நடைபெறுவதில்லை. பந்தயங்களில் பலத்த போட் டிகள் நிலவும். சண்டை சச்சரவுகளும் நிகழ்வதுண்டு. ஆயி னும் ஊர் மக்களே பொலிஸ் தலையீடின்றி தங்களுக்குள் சமா தானம் செய்து தீர்த்துக் கொள்வது வழக்கமாகும். உள்ளூர் வெளியூர் மக்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் பந்தயங்க ளைப் பார்க்க வந்து கூடுவர். அத்தனை பேரையும் ஒழுங்கு படுத்தி பந்தயங்கட்குப் பாதகம் ஏற்படாத வாறு பல தொண் டர்கள் ஆங்காங்கே திரிந்து கூட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அதற்காக பொலிஸாரை உதவிக்கழைப்பது எப்போதுமே வழக்கமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத் தாழ இரு மணித்தியால குறுகிய நேரத்தில் இப்போட்டிகள் யாவும் முடிவடைந்துவிடும். போட்டியில் பங்கு பற்றுவோர் நிகழ்ச்சியை அறிவித்ததும் காலதாமதமின்றி சுயமாகவே பங்கு பற்றும் தன்மை இப்போட்டிகளின் சிறப்பம்சமாகும். முன்பு இப்போட்டிகளைக் கண்டு களிக்க நகரத்திலிருந்து சிறிது தூரத் திலுள்ள பெரிய தரவைக்கு ஆண்கள் மட்டுமே தம்பிள்ளைகளு டன் செல்வதுண்டு. ஆனால் சின்னத் தரவை நகரின் குடி யிருப்புப் பகுதியில் அமைந்திருப்பதனால் பெண்மணிகளும் வந்து பந்தயங்களைப் பார்ப்பதைப் பழக்கமாக்க் கொண்டுள் ளனர். இதற்கும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. தொன்று தொட்டு புத் தளத்தில் நடந்து வந்த பல நிகழ்ச்சிகளில் இது மட்டுமே இன்றும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது குறிப்பிடக் கூடிய தொன்றாகும்.
நகரின் பிரதான இடத்தில் அமைந்துள்ள பந்தயங்களை நடத்திவரும் கங்காணிக் குளம் மைதானமும் பிற தேவை களுக்காகக் கூறு போடாமல் பாதுகாத்து அழகு மிளிரும் நவீன விளையாட்டரங்காக வைத்துக் கொள்வது சிறந்ததாகும். கங் காணிக் குளம் பள்ளிவாசலுக்குரிய காணியாக இது பாவிக்கப் பட்டு அப்பள்ளி வாசலின் நிர்வாகிகளின் மேற்பார்வையில் இருப்பதனால் பந்தயங்கட்குப் பாவிக்கப்படாத காலங்களில் பள்ளிவாசலுக்கு வருமானத்தை அளிக்கும் வேறு உபயோகர மான தேவைகட்குப் பாவித்தற்கு நிர்வாகத்தினர் முன் யோச னையுடன் நல்ல திட்டமொன்றை மேற் கொள்வார்களென எதிர்பார்க்கலாம்.

27. புகழ் பாடும் மாதங்கள்
முஸ்லிம்களின் தினசரி வாழ்க்கை இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றது. அவர்கள் தங்களின் கால நேரங்களை பிறைக் கணக்கின்படியே கணித்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர். சந்திர ஆண்டே இதற்கு அடிப்படையாகும். சந்திர ஆண்டுக்குரிய மாதங்கள் பன்னி ரண்டுக்கும் அறபுப் பெயர்கள் இருக்கின்றன. ஆயினும் புத் தளம் மச்கள் பேச்சு வழக்கில் வேறு பெயர்களால் அம்மாதங் களைக் குறிப்பிட்டனர். ஒவ்வொரு மாதத்திலும் நடை பெறும் இஸ்லாமிய விசேஷ நிசழ்ச்சிகளை அடியொட்டி அப் பெயர்கள் அமைந்தன. அறபு மாதங்களையும், அம்மாதங் களுக்குரிய பேச்சு வழக்குப் பெயர்களையும் கீழே காண்போம்:
முஹர்றம் - ஆசரா (ஆஷஜூறா)
ஸபர் - சபுறு களி
றபீஉல் அவ்வல் - மெளலுத்து (மெளலிது)
றபீஉல் ஆகிர் - முகையதின் ஆண்டவங்க கந்தூரி/சந்தனக்
கூடு
ஜமாதுல் அவ்வல் - மிறார் கந்தூரி (மதார்)
ஜமாதுல் ஆகிர் - நாவுரு கந்தூரி (நாகூர்)
ይወ9U - தோவத்து | மிஹ்றாஜ் கந்தூரி
ஷஃபான் - விராத்து (பறா அத்)
றமளான் - நோன்பு

Page 131
፶፪ቆ புத்தளம் வரலாறும் மரபுகளும்
ஷவ்வால் - பெருநாள் துல் கஃதா - இடையிட்ட துல் ஹஜ் - ஹஜ்ஜி
மேற்குறித்த மாதங்களில் ஆறு மாதங்கள் ஏதோ வகையில் புகழ் பாடும் மாதங்களாக, அதாவது 'மெளலிது" ஒதும் மாதங்களாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். முஹர்றம், றபீஉல் அவ்வல், றபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், றஜப் ஆகியவைகளே அவ்வாறு மாதங்களாகும். மெளலிது என்பது பிறந்த நாள் என்பது பொருளாகும். இறை நேசச் செல் வர்கள் பிறந்த நாளில் அவர்களின் புகழைப்பாடுவது வழக்காதலின் இப்பெயர் ஏற்பட்டது. மெளலிதுக்கு "சுந்தூரி" என்றும் கூறுவர். "கந்தூரா" என்ற பார்விச் சொல்லிலிருந்து இப்பெயர் வந்துள்ளது. தோலாலான அல்லது துணியாலான மேசை விரிப்புக்கு சந்தூரா என்பர். உர்துரவில் மகான்க ளின் பெயரால் நடக்கும் விருந்து வைபவத்துக்கு கந்தூரி என்று கூறுவர். உரிய மாதங்களுக்கென அமைக்கப்பட்ட மெளலிது களை ஒதுவதன் மூலமும், மெளலிதுகள் தவிர்ந்த ஏனைய மாதங்களில் வரும் விசேஷ தினங்களை அனுட்டிப்பதன் மூல மும் ஆண்டு முழுவதும் அறபு மாதங்களையும், பிறை எண் னிக்கையையும் நினைவூட்டி தங்களின் வாழ்க்கை நிகழ்ச்சி களை கடைப்பிடித்தனர். மிாதந்தோறும் தலைப்பிறையைக் காணுவது அவர்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது. தலைப் பிறையைக் கண்டதும் அம்மாதத்துக்குரிய அடையாளமாகக் கொடியை பள்ளிவாசல்களில் ஏற்றுவதன் மூலம் ஊர் மக்கள் மாதங்களை நினைவு கூர்ந்து அனுட்டானங்களை நடாத்தி னர். இவ்வனுட்டானங்கள் எல்லாவற்றுக்கும் இஸ்லாமிய மார்க்க, வரலாற்று நிகழ்வுகளே அடிப்படையாக அமைந் திருந்தன என்பதை ஈண்டு குறிப்பிடுதல் அவசியமாகும். மெளவீதுகளை புகழ் பாக்களை பக்தி சிரத்தையோடு பாடு வதன் மூலமும், அதன் விளக்கங்களைக் கேட்பதன் மூலமும், இறைவனிடம் இறைஞ்சுவதன் மூலமும் அம்மாதங்களின் சிறப் புக்களை அறிந்து, சம்பந்தப்பட்ட இறை நேசர்களின் வாழ்க் கையையும், போதனைகளையும் தெரிந்து கொள்ள மக்கட் குத் தூண்டு கோல்களாயமைந்தன. தூர தரிசனம் படைத்த இறை நேசர்கள் முஸ்லிம் மக்களை சூழலின் தவறான தாக்

அல்ஹாஜ் ஏ. என். எம். கடிாஜஹான் 24
கங்களிலிருந்து திசை திருப்பி இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்கு மாதாந்த கிரியைகளை ஏற்படுத்தியமை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. அவற்றின் மூலம் அடிக்கடி அன்னதானங்கள் அளிப் பதற்கும் கட்டாய வாய்ப்புகள் ஏற்பட்டன. அத்தகைய நிகழ்ச் சிகள் நடைபெற்ற காலங்களில் வீடுகள் தூங்கிக் கிடக்க வில்லை. பன்னிரண்டு மாதங்களிலும் உரித்தான ஒதல்களை ஓதி, இறைவனின் நாமத்தை முழங்கி, அவனின் திருத்தூத ரின் வாழ்த்துக்களை செபித்து, இறை நேசர் அளின் புகழ்ச்சி களைச் சொல்வி வீடுகளெல்லாம் கலகலப்புடன் விளங்கி வந் தமையை நாம் கேள்விப்படுகின்றோம், வீடுகளிலே , வீதி களிலே ஏன் ஊரெங்குமே மனங்கமழ்ந்து கொண்டிருந்தது.
இன்று இவ்வழக்கங்கள் அருகியமை காரணமாக காலத் தின் சிறப்புக்களை உன்னிப்பாக உணர்ந்து செயல் புரியாது கவலிை பீனமாகக் காலங்கழிவதற்கு இடமளித்து விட்டதைக் காண்கிறோம். "இது என்ன இஸ்லாமிய மாதம்?", "இன்று எத்தனையாம் பிறை?", "இம்மாதத்தின் விசேஷம் என்ன?" என்று வினவினால் விடை கூற முடியாத பரம்பரை உருவாகி விட்டதே கண்ட பலனாகும் அந்நிய கலாச்சாரம், g நேரம் இவைகளைப் பயன்படுத்தும் நிலைமையும் உண்டாகி வருவதைக் காண்கிறோம்.
மெளலிதுகள் மட்டுமன்றி, வியாழன் மாலை வெள்ளிக் கிழமை இரவுகளில் இஷா நேரத் தொழுகைக்குப் பின்பு செபித்தல், புகழ் பாடுதல், இறைஞ்சுதல் போன்ற அம்சங் களைக் கொண்ட "றாத்திபுகள்" எனப்படும் புகழ் மாலை &ளைப் பாடுவது எல்லாப் பள்ளிவாசல்களிலும் வழக்கத்தி லிருந்தன. பல வேறுபட்ட 'றாத்திபுகள் ஒதப்பட்டன தங் களின் நோக்கங்கள் நிறைவேறியமைக்கும் தங்களின் பிரதிக் ஞையின் பிரகாரம் வீடுகளிலும் 'றாத்திபுகள்" சிறப்பாக நடாத்தப்பட்டன. கடுஞ் சுகவீனமாயுள்ளோர். உயிருக்கா சுப் போராடிக் கொண்டிருப்போர் ஆகியோர் சுகம் பெறுவ தற்காக இமாம் பூஷரி (றற்ற அவர்களினால் இயற்றப்பட்ட அறபு இலக்கிய நூலான "புறுதா ஷரீப்" என்னும் புகழ்ப் பிரார்த்தனை மாலையைப் பல நாட்கள் பாடுவதும் வழக்கத் இலிருந்தன. பள்ளிவாசல்களில் நடைபெறும் றாத்திபுக்கு பல

Page 132
E.
புத்தளம் வரலாறும், மரபுகளும்
வீடுகளிலும், கடைகளிலுமிருந்து ஈத்தம் பழம், வேறு பழங் கள், பால், தீன் பண்டங்கள், சந்தனக் குச்சி, சாம்பிறானி ஆகிய பொருட்கள் வந்து சேரும். றாத்திபு முடிந்ததும் அவைகள் சமுகந் தந்திருப்போர்க்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இனி சந்திர ஆண்டின் பன்னிரண்டு மாதத்தைப் பற்றி
யும், அம்மாதங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் காண்போம்.
1. ஆசரா மாதம் இதுவே முஹர்றம் மாதமாகும். இம் மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் புனிதமானதாகும், அதை "ஆஷ"ஆறா" என்பர். "ஆஷஇறா" என்பதே பத்தாம் நாளைக் குறிக்கும் சொல்லாகும். இப்புனித நாளைக் குறிப்பிட்டே முஹர்றம் மாதத்தை "ஆசரா" என மருவி அழைத்தனர். உலகம் படைக்கப்பட்ட நாளான இந் நாளுக்கு நீண்ட பாரம் பரியம் உண்டு. தீர்க்கதரிசிகள் பலருக்கு இறைவனிடமிருந்து பல நல்லருள்கள் இம்மாதத்தில் கிடைத்துள்ளன. இஸ்லாத் திற்கு முன்பிருந்தே இந்நாளில் நோன்பு நோற்கும் பழக்கம் இருந்தது. இறைஞ்சியோரின் பாவங்களை இந்நாளில் மன்னித் தருள்புரிவான் இறைவன் என்பது அசையாத நம்பிக்கை யாகும். இந்நாளில் இஸ்லாமிய வரலாற்றில் நெஞ்சங்களை ஒடிய வைக்கும் சோக நிகழ்ச்சி யொன்று நடைபெற்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்றவப் பேரர் இமாம் ஹ"லைன் (றழி) அவர்களும், அவர்களின் நெருங்கிய உற வினர்களும் ஈராக் தேயத்திலுள்ள கர்பலா என்னுமிடத்தில் கலீபா பளtதின் படைகளால் ஷஹீதாக்கப்பட்ட (கொல்லப் பட்ட) நிகழ்ச்சியே அஃதாகும். நபிகளாரின் பேரர்களான ஹஸன், ஹ"ளிைன் (றழி) அவர்களை ஞாபகப்படுத்தும் முக மாக பத்தாம் நாளன்று அன்னார்களின் பேரில் மெளவீதெள் னும் புகழ் பாடி விருந்தளித்து வந்தனர். கர்பலா சம்பவதி தின் ஞாபகமாக புத்தளத்தில் "பஞ்சா" ஊர்வலமும், நெரு புக் குண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன முஹர்றம் முதற் பிறையன்று கொடி ஏற்றி பத்தாம் பிறை வரை மெளலீது ஒதி அன்றைய ஆஷ"றா தினத்தன்று மெளவீதை முடித்து வைத்து - "தமாம்" செய்து அன்னதானம்
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
செய்வார்கள். புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தைக்காவிலும், மறைந்துபோன யாஹ"ளிைன் பள்ளிவாசலிலும் இம்மெளவீது வழமையாக நடைபெற்று வந் தமை குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் றகுல் (ஸல்) அவர் களின் திருமகளார் பாத்திமா (றழி) அவர்களின் புகழ் பாடும் தலைப் பாத்திஹா" என்னும் புகழ் மாலையை வீடுகள் தோறும் பெண்கள் கூடி ஒதி மகிழ்வார்கள். இதற்காக விசேஷ் மான மாப்பண்டங்களை செய்து வழங்குவது மரபாகும்: விளக்கு வடிவங்களில் மாவால் கொழுக்கட்டை போல் அளிப் Lg| வழக்காகும். தலைப்பாத்திஹாவையும், ஹனபின் ஹாஸைன் (றழி) மெளலீதையும் யாத்தவர்கள் சங்கைக்குரிய மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் அவர்கனாவார்.
2. சபுறு களி: "ஸ்பர்" மாதத்தை இவ்விதம் அழைப்பர். இம்மாதம் பீடையுடையதென்பர். "இம் மாதம் பீடையுடைய மாதம் என்று கூற இஸ்லாத்தில் இட மில்லை" என்ற நாயக வாக்கின் மூலம் மேற்குறித்த அபிப் பிராயம் வலிமை இழக்கின்றது. முஹர்றம் மாதத்தில் சண்டை. சச்சரவுகளிலிருந்து ஒய்வு எடுத்துக்கொண்ட முன்னைய அறபு சமுதாயத்தார் இம்மாதத்தில் பன சுமையைப் புதுப்பிக்க பிர யாணம் செய்ய ஆரம்பிப்பதனால் பிரயாணம் எனப் பொருள் படும். "ஸ்பர்" என்ற பெயரை இம்மாதத்துக்குச் சூட்டினர் என்பர். இலை உதிர் காலத்தில் வருவதனால் இப்பெயர் வந்ததெனவும் சொல்வர். இம்மாதத்தின் கடைசிப் புதன் கிழமையை ஒடுக்கத்துப் புதன்" என்றழைத்து விசேஷ தின மாக புத்தளம் மக்கள் அனுட்டித்தனர். இவ்வழக்கம் இலங்கை யுட்பட வேறு நாடுகளிலும் இருந்தன. இத்தினத்தில் ஆயிரக் சணக்கான பீடைகள் உலகுக்கு இறங்குகின்றன என சிலர் விவாதிப்பர். ஒடுக்கத்துப் புதனன்று அதிகாலையில் எழுந்து குளித்து முழுகி ஏற்கனவே லெப்பைமார்களினால் வாழை இலைகளில் கலமென்னும் எழுத்தாணி கொண்டு சாயத்தினால் அறபியில் எழுதித் தரப்பட்ட வசனங்களை வெறும் வயிற்றில் கரைத்துக் குடிப்பார்கள். இந்தியாவில் மாவிலை, பனை யோலை என்பவற்றிலும் எழுதி கரைத்துக் குடிப்பது வழக்கத் திலுள்ளது. "இஸ்ம்" கரைத்துக் குடித்தல் என்று கூறுவார்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் தங்களது நோய்கள் தீரும் என்ற

Page 133
ዷ27 புத்தளம் வரலாறும், மரபுகளும்
நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனர். அன்று மீன் உணவு சாப்பிடமாட்டார்கள். இறைச்சிக் கறியாகவேயிருக்கும். அன்று நோய்களை, காயங்களை வருத்தக் கூடிய் எந்தவித கடினமான கருமங்களிலுமீடுபடாமல் கவனமாக இருந்து கொள்ளும் வழக்கமுமிருந்தது. அன்று நோய்கள் இறங்கும் நாளாக மக்கள் நம்பியமையே இவ்ழக்கத்துக்கு காரணமா கும். ஒடுக்கத்துப் புதனை அனுட்டிக்கும் மரபு இன்று அருகி விட்டது. ஒடுக்க நாளென்பது இடைஞ்சலான நாள் என்பது பொருளாகும்.
3. மெளலுத்து: றபீஉல் அவ்வல் மாதத்தை "மவ்லுத்து மாசம்’ என்று குறிப்பிடுவர். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமாகையினால் இம்மா தத்தை சிறப்பாகக் கொண்டாடுவர். இம்மாதம் அணுகி வரும் போதே வீடு வாசல்களை சுத்தப்படுத்தி, புதிதாக வெள்ளை யடித்து துப்புரவாக வைத்துக் கொள்வார்கள். இம்மாதத்துக் கடையாளமாகப் பல இடங்களிலும் கொடியேற்று வார்கள். பொதுவாக எல்லாரினதும் வீடுகளில் "சுப்ஹான மெளலிது" என்ற புகழ்ப் பாமாலையை ஒதி மனம் நிறைவடைவார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர் நகரின் சரித்திரம், சிறப்புக்கள், பிரார்த்தனைகள் ஆதியன இப்புகழ் மாலையில் இடம் பெற் றுள்ளன. அறபியிலும், தமிழிலும் விளக்கங்கள் அளிக்கப் படும். சுப்ஹான மெளலிது என்ற செய்யுள் நூலை இபற்றி யவர் யார் என்பதில் இரு விதமான குறிப்புக்கள் உள்ளன. மதீனாவில் வாழ்ந்த கவிஞர் அஷ்ஷெய்கு கதீப் முஹம்மத் மதனி என்றும் , சிந்தனைக் கருவூலம் ஹ"ஜ்ஜத் துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களென்றும் அறபி இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது. கீழக்கரை இமாம் ஷெய்கு ஸ்தக்கத் துல்லாஹ் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் மக்கா, மதீ னாவில் ஈராண்டு காலம் கல்வி போதித்துக் கொண்டிருந்து விட்டு தமிழ் நாடு திரும்பும்போது அறபு நாட்டில் பிரபலமாக இருந்த சுப்ஹான மெளலிது எனும் நூல் அப்பா அவர்களை மிகவும் கவர்ந்தது. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது பேரன்பை ஊட்டுவதில் அதற்கு இணையான நூல் இல்லை என்று கருதிய அப்பா அவர்கள் அதனை இங்கு கொண்டு

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 223
வந்து மக்களிடையே நன்கு பரவுமாறு செய்தார்கள். 20 அப்பா அவர்களின் அடிச்சுவட்டில் வந்த வலிமார்கள் இலங்கையிலும் அம்மெளலீதை பிரபலப் படுத்தினார்கள்
மெளலீதின் முடிவில் பலரை அழைத்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மெளலூது சாப்பாடு அளிக்கப்படும். வெறுஞ் சோறன்றி தேங்காய்ச் சோறாகவே இது இருக்கும். இந்த மெளலிது புத்தளத்திலும், சுற்றுப் புறங்களிலும் மிகவும் பக்தி சிரத்தையுடன் பெருமளவில் நடத்தப்பட்டு வந்துள்ளது. வீடு , கள் கட்டுவதற்கான வரை படங்கள் தயாரிக்கும்போது மெள லீதுக் களரி நடைபெறக் கூடிய நீண்ட மண்டபங்கள் அமை யுமாறு பார்த்துக் கொண்டார்களென்றால் அன்று மெளலீ துக்கு இருந்த முக்கியத்துவம் தெற்றெனப் புலனாகும்.
புத்தளம் நகரிலுள்ள முதலாளி வீட்டிலும், மரைக்காயர் மார்களின் வீடுகளிலும் நடைபெற்று வந்த மெளலிதுகள் பிர சித்தமானதாக இருந்தன. இ. செ. மு. E. S. M. என்றழைக் கப்படும் முதலாளி வீட்டு மெளலிது குறிப்பிடக் கூடியதாக விருந்தது. இதற்கு புத்தளம் நகரிலுள்ள அனைவரும் பக் கத்து ஊர்களிலுள்ளவர்களும் அழைக்கப்பட்டு இரவும், பகலும் விருந்து வழங்கப்பட்டது. முதலாளியின் உத்தரவுப்படி இவ் வழைப்பை பள்ளிவாசல் "முஅத்தின்" ஒருவர் வீடு வீடாகச் சென்று சொல்வார். "இந்த வளவுக்குள் இருக்கும் எல்லாரை யும் முதலாளி அவர்கள் சலாம் சொல்லி மெளலூதுக்கு வரும் படி அழைக்கிறார்கள்" என்று சொல்லுவது வழக்கமாக விருந் தது. இம்மெளலிதுக் களரிக்காக இந்தியாவிலிருந்து கப்பல் களில் ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக் கது. அத்தோடு மன்னார்ப் பகுதியிலிருந்தும் ஆடுகள் கூட் டங் கூட்டமாக வந்து சேரும். மாடுகள் அறுக்கமாட்டார்கள் . இந்த மெளலிதுக்கு தேவைப்படும் சகல விதமான பீங்கான் கோப்பைகள் யாவும் இ.செ.மு.மு. என்ற விலாசம் பொறிக்கப் பட்டு விசேஷமாக இங்கிலாந்தில் தயாரித்து இறக்குமதி செய் யப்பட்டவையாகும். ஐவருக்குரிய சோற்றை வைக்கக்கூடிய 'சஹன்கள்" எனப்படும் பெரிய பீங்கான்கள், ஒவ்வொருவரும் தனித்தனியாக சாப்பிடக் கூடிய "காப்பிளான்கள்" எனப்படும் பீங்கான்கள், கறி வகைகள் வைக்கூடிய சிறிய,பெரிய தட்டைப்

Page 134
229 புத்தளம் வரலாறும், மரபுகளும்
பீங்கான்கள், பீரிசுகள், நீர் வைக்கும் "போஸ்" கோப்பைகள், அவை ஒவ்வொன்றிலுமிருந்த நீரை அள்ளும் சிறிய கோப் பைகள் என் பன போன்ற களரிக்குத் தேவைப்படும் எல்லாம் பாத்திரங்களிலும் விலாசம் பொறிக்கப்பட்டு குறைவில்லாமல் இருந்தன.
அன்று அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் களில் பாவிக்கப்பட்டுள்ளவை போக மேலதிகமானவை இன் னும் புதிதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இஃதன்றி சோறு கறிகள் சமைத்தற்கான கடாரங்கள் எனப்படும் உலோ கத்திலான பானை சட்டிகளும், இரும்பு அடுப்புகளும், அகப் பைகளும், கோடரி கத்திகளும , துடுப்பு எனப்படும் மரத்தி னாலான கருவிகளும் விலாசம் பொறிக்கப்பட்டு அவர்களி டமிருந்தன இவ்விதமாக பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர் களின் பெயரால் அளிக்கப்படும் மெளலிது விருந்துகள் பாரம் பரியமாக மிகச் சிறப்புடன் நடைபெற்றன. ஊரிலுள்ள ஒதக் கூடிய பெரியவர்களும், சிறுவர்களும் Dெள வீதில் கலந்து கொண்டு ஒதுவார்கள். பெரியவர்கள் தாங்கள் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் ஏற்கனவே மனப்பாடஞ் செய்த மெளலிது களை நூலைப் பாராது ஒதுவார்கள். சிறுவர்கள் மெளலிது நூல்களுடன் (கிதாபுகள்) சென்று பார்த்து ஒதுவார்கள் மெளலிது முடிந்த தும் ஒதியவர்கள் அனைவர்க்கும் சன்மா னங்கள் பணமாகக் கொடுக்கப்படும். உலமாக்கள், லெப்பை மார்களுக்கு கூடிய பணம் கொடுக்கப்படும். ஒதமிடத்தில் மேற் கட்டிப் பந்தல் வெண் சீலையால் கட்டி அவற்றின் ஒரங் களை பல வர்ண அலங்காரக் கரைச் சீலைகளால் அலங் கரித்து அப்பந்தல் சீலையில் பல விதமான சுவையான தின் பண்டங்கள், பொருட்கள், பண முடிப்புகள் போன்றவை நூலால் கட்டித் தொங்கவிடப் டும். மெளலிது முடியும் தறு வாயில் யாவரும் எழுந்து நின்று ஓதவேண்டிய புகழ்ப்பாவை பாடி முடிந்ததும் அனைவரும் குதித்துத் குதித்து தொங்க விட்டிருப்பவைகளை தங்களால் முடிந்தவரை பிய்த்துப் பிடுங்கி எடுத்துக் கொள்வார்கள். அந்நேரம் ஒரே குதூகல மாக இருக்கும். மெளலிது நிறைவேறிய பின்பு சாப்பாடு களை சமுகமளித்திருக்கும் எல்லாரினதும் முன்பும் கொண்டு

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 230
வந்து வைத்து முடிக்கும் வரை பலர் இஸ்லாமிய பதங்க ளைப் பாடுவார்கள். இவைகள் தமிழ் இராகங்களிலான இஸ் லாமிய கீதங்களாகவே இருக்கும் ஏடடிசகுப் போட்டியாகப் பாடுவோரும் பலர். பிரசித்தமான பாடகர்களும், புலவர்க ளும் பங்கு பற்றி தாமே பதங்களை இயற்றிப் பாடுவார்கள். மெளலிது ஒதும் போது தனித்தனியாகவன்றி இருவர், மூவ ராக இணைந்து அறபு இசையைத் தழுவிய இராகங்களுடன் உரத்து முழங்குவர், அழகாக, இனிமையாக குரல் வளமுடை யவர்கள் ஒத்த ஸ்தாயையில் சேர்ந்து ஒதும்போது கேட்க மிகவும் பரவசமாக இருக்கும். பிற்காலத்தில் இசைத் தட்டு இராகங்கள் கூட இடம் பெற்றன. எவ்வளவு தொகை கூடிய சபையாயிருப்பினும யாவருக்கும் சாப்பாடு பூரணமாக வைத்த பின்பே ய வரும் ஒரே நேரத்தில் சாப்பிட ஆரம்பிப்பார்கள். களரிக்குப் பொறுப்பான வர் சட்ையினர் முன்வந்து 'பிஸ்மில் லாஹிர்நஹ்மானிா றஹீம்" இறைவன் பெயரால் ஆரம்பியுங்கள் என்று செர்ன்னதன் பின்பே சாப்பர்டு சாப்பிட ஆரம்பிப்பர். அதேபோல யாவரும் சர்ப்பிட்டு சையலம்பியதும் இறை பிராத்தனையின் பின்பு யாவரும் ஒன்றாகவே எழுந்து கலைந்து செல்வார்கள். -
இவ்வாறான மெலிதுகள் இ. செ. மு முதலாளி வீட்டில் மட்டுமன்றி அவ்வளவு ப்ெரிய அளவில் இல்லாவிடினும் ஏனைய மரைக்காயர் மார்களின் வீடுகளிலும் நடைபெற்றன. ஊர் மரைக்காயர், அப்பாஸ் மரைக்காயர், மஜீது மரைக்கா யர், ஜலாலுத்தீன் மரைக்காயர், சி. அ. க. ஹமீதுசைன் மரைக்காயர் ஆகியோர்களின் வீடு Oல் நடந்துள்ள மெளலீ துகள் குறிப்பிடத்தக்கன. புத்தளம் பிரதேசத்திலுள்ள ஏனைய முஸ்லிம்கள் ஊர்களிலெல்லாம் ஆங்குள்ள ஊர்த் தலைவர்களின் வீடுகளில் மெளலிது ஓதி விருந்தளிப்பது வழக் கமாகும். பொதுவாக. பொதுவாக எல்லரினதும் வீடு சளி லும். அவரவர்களின் நிலைமைக்கேற்ப மெளலிது 1ளை ஒதி உற்றார், உறவினருக்கு விருந்தளிக்கும் வழக்கம் பரவலாக இருந்தது. இத்தகைய வைபவங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள் ஒன்று சந்தித்து அளவளாவி முகமன்

Page 135
2$1 புத்தளம் வரலாறும், மரபுகளும்
கள் கூறி தங்களின் இணைப்பைப் பலப்படுத்திப் புதுப்பித்துக் கொள்ளவும், சின்னஞ்சிறு மன வேறுபாடுகளைக் களைந்து அன்பு பாராட்டவும் உதவின.
மெளலிது மாதமென்றாலே தேங்காய்ச் சோற்றுணவின தும், கறிகளினதும் மணமும் சாம்பிராணி, ஊதுபத்தி புகை வாசமும் கம கம என்று வீதியெங்கும் வியாபித்துக் கொண் டிருக்கும் மக்களின் மனங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் தாக்கத்தின்ால் கஷ்டமான வாழ்க்கை நிலைமை ஏற்பட்டதன் காரணமாக மெளலிது ஒதி விருந்தளிக்கும் வழக்கம் குறைந்து விட்டது மன்றி, 'மெளலிது ஒதுவது முக்கியமான மார்க்கக் கடமையல்ல; அது வீண்" என்ற எதிர்ப்புகளும் இவ்வைபவம் அருகிச் சென்றமைக்கான காரணங்களாயின.
இம்மாதத்தின் பன்னிரண்டாம் நாளன்று அதாவது நபி கள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாத் தினத் தன்று புத்தளம் பழைய கொத்துபாப் பள்ளிவளவில் யாவரும் கூடி மீலாத் ஷரீப் விழாவைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. சிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு உபந்நியாசங்களை செய்விப்பார்கள். மாணவர்கட்கிடையில் பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி பரிசில்களை வழங்கு வர். முன்பு புத்தளம் நகரின் வீதிகளை மெல்லிய பன்னிறப் பட்டுக் கடதாசிகளைக் கொண்டு பந்தல் போன்று அலங்க ரித்து இடையிடையே பூந்தாக்குடை" என்றழைக்கப்பட்ட அலங்காரக் கம்பங்களையும் நாட்டி பிரகாசமான விளக்கு களினால் ஒளியூட்டி வைப்பார்கள். ஆங்காங்கே சந்திகளில் அப்பகுதி மக்கள் மீலாத் தினத்தன்று சோறாக்கிப் பகிர்வார் கள். இன்று இத்தகைய காட்சிகளைக் காண்பது அருகி விட்டது.
4. முஹையதீன் ஆண்டவங்க கந்தூரி: சந்தனக்கூடு மாத மெனவும் இதை அழைப்பர். இம்மாதத்தில் புத்தளம் முஹையதீன் தர்ஹா வில் சந்தனக்கூடு எடுக்கும் வைபவம் நடைபெற்ற காரணத்தி

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 232
னாலேயே இப்பெயர் பெற்றது. அறபி மாதத்தின் நான்கா வது மாதமான 'றபீஉல் ஆகிர்" ஆகும். மெய்ந்நிலை கண்ட ஞானி மஹ்பூபு சுப்ஹாணி முஹ்யித்தீன் அப்துல் காதிா ஜெய் லானி (றழி) அவர்களின் மறைவை நினைவு கூரும் முகமாக இம்மாதத்தில் அவர்களின் பெயரால் மெளலிது ஒதுவர். அவர்களின் வரலாற்றை, புகழை, போதனைகளை போற்றிப் பாடுவர். இம்மாதம் பிறந்ததும் பள்ளிவாசல்களில் கொடி யேற்றுவர். இதை முஹையதீன் கொடி" என்று சொல்வர். பதினொரு நாட்கள் ஓதுவது வழக்காகும். பள்ளிவாசல்களிலும், வீடு சளிலும் இம்மெளலிது நடைபெறும். நபிகள் பெருமா னார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பேரில் புகழ்பாடும் சுப்ஹான மெளலிதுக்கு அடுத்தபடியாக அதிகம் ஓதும் மெள வீது முஹையதீன் மெளலிதா கும். புத்தளம் பகுதியில் இம் மகானின் பெயரால் பல பள்ளிவாசல்கள் எழுந்துள்ளன. பழம் பெரும் பள்ளிவாசலான புத் தளம் பெரிய பள்ளிவாசல் முன்பு முஹையதீன் தர்ஹாவென்றும், பின்பு புத்தளம் முஹையதீன் கொத்துபாப் பள்ளிவாசல் என்றும் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இம்மாதத்திலே புத்தளம் பள்ளிவா சலில் மட்டுமன்றி ஏனைய ஊர்களிலும் கூடு வைபவங்கள் நடைபெற்றன. சடுதியாக எவர்க்கும் ஆபத்துக்கள் நேருங் காலத்து ‘யா முஹையதீன்" என்று நினையாமல் தன்னியக்க மாக அழைக்கும் மரபு இப்பகுதி மக்களிடையே இருந்து வரு கின்றது. எனினும் முஸ்லிம்கள் அல்லாஹ் த ஆலாவைத் தவிர வேறு எவரிடமும் பாதுகாக்க உதவி கோருவது தடுக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5. மிறார் கந்தூரி: மதார் கந்தூரி என்பதே மிறார் கந் தூரியென மருவி வழங்கப்பட்டது. ஜமாதுல் அவ்வல் மாதத்தை இவ்வாறு அழைப்பர். யாழ்ப்பா ணப் பகுதிகளில் மிஸ்கின் கந்தூரி மாதம் என்று வழங்குவர். சிந்தா ஷேக் மதார் வலியுல்லாஹ் அவர்களின் பெயரால் இம் மாதத்தில் மெளலீது ஒதப்படுவதன் காரணமாக இம்மாதம் இப்பெயரைப் பெற்றது. மாபெரும் இறை நேசச் செல்வரான இவர்கள் ஹலப் ( அலப்போ) நகரில் பிறந்தார்கள். முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களையும், காஜா முயீனுத் தீன் சிஸ்தி (றஹ்) அவர்களையும் சந்தித்த இவர்கள் இந்தியர்

Page 136
2岛3 புத்தளம் வரலாறும், மரபுகளும்
வில் சுற்றுப் பிரபாணஞ்செய்து இஸ்லாமிய ஒளியைப் பரப்பி னார்கள். 1442 கலீபாக்களும் எண்ணற்ற முரீதீன்களும் (தொடர்ந்தோர்) இவர்களுக்கிருந்தனர். இவர்களின் ரீதக் காவை ஞான வழியை "மதாரிய்யா' அல்லது 'தபகாத்தியா' என்று அழைப்பர் ஹிஜ்ரி 848 ஜமாதுல் அவ்வல் மாதம் பதினே ழாம் நாள் அவர்கள் மறைந்தார்கள். அதனால் இம்மாதத்தை மதார் கந்தூரி மாதமென அழைத்து பிறை பதினேழில் கந்தூரி கொடுப்பார்கள். கான்பூர், மக்கன்பூரில் அவர்களின் அடக்க விடம் உண்டு. பாதுஷா ஒளரங்கசீப் அவர்களால் அங்கு 'ஆலம் கீரி மஸ்ஜித்" கட்டப்பட்டுள்ளது. புத்தளத்தில் வடக்குத் தெரு வில் அமைந்துள்ள கொப்பறாப் பள்ளிவாசல், சிந்தா ஷேக் மதார் பள்ளிவாசல் என அழைக்கப்படும். இங்கே மதார் மெளலிது நடந்து வந்துள்ளது.
6. நாவுரு கந்தூரி: நாகூர் கந்தூரி என்பதே சரியான பெயராகும். ஜமாதுல் ஆகிர் மாதமே இது. வட இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறந்த ஷேய்க் ஷாகுல் ஹமீத் மீரான் அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் அவர்கள் தமது அறுபத் தெட்டு ஆண்டு வாழ்வில் நீண்ட காலம் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மார்க்கப் பணி புரிந்து நாகூரில் அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நாகூர் ஆண் டகை, ஷாகுல்ஹமீது நாயகம், நாகூர் மீரா நாயகம் என் றெல்லாம் மக்கள் அழைப்பார்கள். அவர்களின் பெயரால் கொடி, கூடு, கந்தூரி நடாத்தப்படும் மாதம் ஜமாதுல் ஆகிர் ஆனமையால் இம்மாதத்தை நாகூர் கந்தூரி மாதம் என அழை த்தனர். மீரா கந்தூரி என யாழ்ப்பாண முஸ்லிம்கள் சொல் வர். புத்தளத்தின் வடக்கே கடற்கரையில் அமைந்துள்ள நாகூர்ப்பள்ளி வாசலில் இக்கந்தூரி விசேடமாக நடைபெற்று வந்துள்ளது. இஸ்லாமிய மார்க்கம் குறித்து தமிழ் நாட்டில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பெருமையும், இச்சமு தாயம் பல மடங்கு பெருக்க வழி வகுத்துக் கொடுத்த சிறப் பும் இந்த ஒலியுல்லாஹ் அவர்களுக்கே உரியது. தமிழ் முஸ்லிம் களின் வரலாற்றில் அவர்கள் மகோன்னதமானதொரு இடத்தை வகிக்கிறார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேக

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 23A
மில்லை; டி என்ற கூற்று முழுக்க முழுக்க உண்மையென்பது அவர்களின் தொண்டைப்பற்றி அறிவோருக்குத் தெற்நென விளங்கும். இலங்கைக்கும் விஜயம் செய்துள்ள இம்மகானின் சிறப்பும், மகிமையும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்விலும் ஊடுருவிச் சென்றுள்ளமை ஜமாதுல் ஆகிர் மாதத்தையே அவர்களின் பெயரால் அழைத்துள்ளமையிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.
7. தோவத்து: றஜப் மாதமான இதை மிஹ்றாஜ் கந்தூரி மாதமென்றும் அழைப்பர் இம்மாதத்தின் இருபத்தேழாம் பிறையில் வருவது "மிஹ்றாஜ்' எனப்படும் புனித இரவாகும். இவ்விரவின் மகிமையைக் குறித்தே இம் மாதத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது. இறைவன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் அழைப்பின் பேரில் அவனின் சமுகத்தை அடைந்து, அவனுடன் வசனித்து, சுவர்க்கம், நரகங்களுட்பட அநேக ஆத்மீகக் காட்சிகளையும் கண்டு, முன்னைய இறை தூதர்களுடன் அளவளாவி, நாளொன்றுக்கு ஐந்து வேளை அல்லாஹ்த ஆலாவை வணங்கும் தொழுகைகளையும் பரிசாகப் பெற்றுத் திரும்பிய சம்பவமே மிஹ்றாஜ் என்பதாகும். அழைப்பு என்பதற்கு அறபிப் பதம் "தஃவத்" என்பதாகும். அல்லாஹ்த ஆலா தனது அருமைத் தோழர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்களை தனது சமுகத் துக்கு வருமாறு அழைப்பு விடுத்தது இம்மாதத்திலேயே என்ப தால் அழைப்பு என்று பொருள்படும் தஃவத் என்ற அறபுப் பதமே பேச்சு வழக்கில் தோவத்து என்று மருவி அழைக்கப்பட்ட தெனக் கூறலாம். இம்மாதத்திலும் பள்ளிவாசல்களில் கொடி யேற்றி சில பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் மிஹ்றாஜ் மெள வீதை ஓதி விருந்தளிப்பார்கள். புத்தளம் கடற்கரையிலுள்ள மிஹ்றாஜ் பள்ளிவாசலில் வழக்கமாக ஆண்டு தோறும் மிஹ் றாஜ் மெளலிது ஓதுவது வழக்கமாகும். மிஹறாஜ் மெளலிதுக்கு மேலதிகமாக இம்மாதம் முழுவதிலும் "வித்திரியா" என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரிலுள்ள மாபெரும் புகழ்மாலை ஓதுவது வழக்கமாகும். பானத் சுஆத், புர்தா போன்ற பிரசித்தி பெற்ற அறபு இலக்கிய நூல்களிலுள்ள ஈரடிச் செய்யுட்களுக்கு ஐந்தடிச் செய்யுட்களமைத்து கீழக் கரை இமாம் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா ஒலியுல்லாஹ்

Page 137
புத்தளம் வரலாறும் மரபுகளும்
அவர்கள் பாடிய அறபிக் காவியமே "வித்ரியா" வாகும். அப்பா அவர்கள் இயற்றியுள்ள மட்டிலடங்கா புகழ் பாக்கள், மர்தி
யாக்கள். இறை வேட்டல்கள் ஆகியவற்றுள்ளே தலை சிறந்த
தாகக் கருதப்படுவதும், உலகிலேயே மிகப்பெரிய க எரீதாவாக
விளங்குவதும் இவ்வித்ரியா காவியமேயாம். இதனாலேயே
சதக்கத் துல்லாஹ் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் "மாதி
ஹ"ர்றசூல் (மாநபியின் புகழ்ப்பாவாணர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இச்சிறப்பான காவியத்
தையே ஹஜபு மாதத்தின் எல்லா நாட்களினதும் இரவுகளில் பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் ஒவ்வொரு அத்தியாயமாக
ஓதி முடித்து முடிவில் றாத்திபு, மென வீது ஒதி "தமாம்!
முடித்து வைப்பார்கள். சிறப்பான விருந்து வைபவமும் நடை பெறும்.
8. விராத்து ர்ேஃபான் மாதத்தை இங்ங்னம் குறிப்பர்
விரTத்து என்பது "பறாஅத்" என்ற அறபிச் சொல்லின் திரியாகும். இம்மாதத்தின் பிறை பதி னைந்தாம் இரவில் வரும் மகிமைக்குரிய "பறாஅத்" எனப்படும் புண்ணிய இரவைக் கொண்டு இம்மாதத்தை விராத்து மாதம் என்றழைத்தனர். மறைந்தோர்களின் பெயரால் திருக்கு ஆனின் "யாளபீன்" சூறாவை - அத்தியாயத்தை ஓதி அன்பளித்து வருகிறார்கள். இதை "சுத்தம்" ஓதுதல் என்பர். நோன்பு தோற்று பல விதமான தொழுகைகளில் ஈடுபடுவர். பாவ களைப் போக்கிக் கொள்ளவும், அடுத்த ஆண்டிற்கான பாக் கியங்களைப் பெற்றுக் கொள்ளவும் ஓதல்களில், பிரார்த்த னைகளில் ஈடுபடுவது வழக்காகும். ஒரு மனிதனின் ஆயுளில் அடுத்த ஆண்டு வரை நடைபெறவுள்ள நன்மையான, தீமை யான காரியங்களனைத்தும் "பறாஅத்' இரவிலேயே இை வனால் நிர்ணயிக்கப்படுவதாகக் கொள்ளப்படுகின்றது.
9. நோன்பு: றமழான் மாதம் இதுவாகும். இஸ்லா
தின் கட்டாயக் கடமைகள் ஐந்தினுள் இம்மாதம் முழுவதும் பகல் காலங்களில் உண்ணாது, பருகாது இறைவனுக்காக நோன்பிருப்பதும் ஒன்றாகும். அக்காலங்களில் இரவிலும், பகலிலும் விசேஷ வணக்கங்களில் ஈடுபடுவதும்,

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
இறைவனைத் துதிப்பதும், குர்ஆன் ஓதுவதும் வழக்கமாகும். றமழான் மாத இரவுகளில் தொழப்படும் "தறாவீஹ்" என்னும் கூட்டுத் தொழுகை முக்கியமானதாகும். இதை திறா பியா என்று பேச்சு வழக்கில் சொல்வர். ஆங்காங்கே வீடுகளில் பெண்களுக்கென்றே நடாத்தப்படும் இக் கூட்டுத் தொழுகை யில் பெண்களும், சிறுமிகளும் கலந்து கொள்வர். பள்ளிவா சல்களில் இத் தொழுகைக்குப் பின்பு "ஹிஸ்பு' ஒதுதல் எனப் படும் குர்ஆன் பாராயணஞ் செய்தவில் பலர் ஈடுபடுவர் இதன் மூலம் திருக்குர்ஆனைப் பிழையின்றி திருத்தமாக இராகத்துடன் ஒதிப் பழகுவதற்கு அரிய சந்தர்ப்பம் வாய்க் கின்றது. மகத்துவம் மிக்க றமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் வரும் சிறப்பு மிக்க சீர் இரவு "வைலத் துல் கத்ர்" என்பதாகும். கண்ணியம் வாய்ந்த இரவு என்பது இதன் பொருள். திருக்குர்ஆன் இறக்கப்பட்டதும் இம்மாதத்திலே யாகும். லைலத்துல் கத்ர் இரவில் விழித்திருந்து வணக்கங் களில் ஈடுபட்டு பாவமன்னிப்புத் தேடுவது வழக்கமாகும். இவ்விரவில் பாவமன்னிப்புக் கோருபவர்களின் பாலங்கள் அல்லாஹ் த ஆலாவினால் மன்னிக்கப்படும் என்பது மக்களின் திடமான நம்பிக்கையாகும். "இவ்விரவு ஆயிரம் மாதங் களைவிட சிறந்தது" என திருக்குர்ஆனும் சான்று பகர் கின்றது. இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான "ஸ்க்காத்' எனும் ஏழை வரியை இம்மாதத்தில் கிடைக்கும் அதிகப்படி பான நன்மைகளைக் கருத்தில் கொண்டு குறிப்பாக 681லவத் துல் கத்ர் இரவில், கொடுப்பதற்கு உரிமையுள்ளோர் கொடுப் பார்கள். அத்தகையோரின் வீடுகளுக்கு எபக் காத் பெற உரிமை யுள்ளோர்கள் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் கூட்டங் கூட்டமாகச் சென்று பெற்றுக் கொள்வார்கள்
10. நோன்பு பெருநாள் ஒரு மாத முழுவதும் நோன் பிருந்து முடிந்ததும் பெருநாள் கொண்டாடுவதனால் "ஷவ்வால்" மாதத்தை நோன்புப் பெருநாள் மாதமென்று அழைப்பார்கள். ' சதுல் பித்ர்" என்று பெநாளை அறபியில் குறிப்பர் "ஈத்" என்பது பெருநாளை யும், "பித்ர்" என்பது தர்மத்தையும் குறிக்கும். பெருநாள்

Page 138
237 புத்தளம் வரலாறும், மரபுகளும்
காலைத் தொழுகைக்கு செல்லுமுன்பு பித்ரா என்னும் தர்மம் செய்வது அவசியமாகும். ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை யைக் கண்டதும் ஆனந்தம் பொங்க வெடி கொளுத்தி மகிழ் வார்கள். எல்லாரும் குதூகலமாக இருப்பர். அதிகாலையிலேயே குளித்து முழுகி நோன்பு காலத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள புத்தாடைகளை அணிந்து நறுமணம் பூசி துப்புர வுடன் விளங்குவர். ஆண்களும், சிறுவர்களும் காலையில் பள்ளிவாசல்களில் நடைபெறும் பெருநாள் கூட்டுத் தொழு கைகளிலும், குத்பாப் பிரசங்கங்களிலும் கலந்து கொள்வர்: பெண்கள் ஆங்காங்கே வீடுகளில் நடைபெறும் தொழுகை களில் கலந்து கொள்வர் பின்பு உறவினர் வீடுகளுக்கு விஜயம் செய்வர் மாலை நேரத்தில் நீண்ட காலமாக பாரம்பரியமாக நடாத்திவரும் பெருநாள் பந்தயங்களில் கலந்து கண்டு களிப் பது புத்தளம் மக்கட்கே உரித்தான சிறப்பு அம்சமாகும். பெருநாளன்றும், அடுத்த நாளும் இப்பந்தயங்கள் நடக்கும். நோன்புப் பெருநாள் முடிந்து அடுத்து வரும் நாட்கள் ஆறில் தொடர்ந்து நோன்பிருப்பது மிக மிக நன்மை பயக்கும்.
11. இடையிட்ட மாதம் "துல் கஃதா" எனும் அறபி
மாதத்தை இவ்விதம் அழைப்
பார்கள்; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய
இரு பெருநாள் மாதங்களுக்குமிடையில் இம் மாதம் வருவத னால் இம் மாதம் இப்பெயரைப் பெற்றது.
12. ஹஜ்ஜி மாதம்: இம்மாதத்தில் இஸ்லாமியக் கடமை களிலொன்றான மக்கா நகர் சென்று "ஹஜ்" நிறைவேற்றப் படுவதனால் இப்பெயர் ஏற் பட்டது. இம்மாதம் பத்தாம் நாளன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும். இப்பெருநாளை "ஈதுல் அழ்ஹா' என் பர். "உளுஹய்யா" என்னும் "குர்பான்" - பலி கொடுக்கும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சியை தர்மம் செய்வத னாலேயே இப்பெருநாளுக்கு இப்பெயர் வந்தது. நபி இபுறா கிம் (அலை) அவர்கள், தங்களின் ஒரே மகனார் நபி இஸ்மா யில் (அலை) அவர்களை இறைவன் பாதையில் அறுச்துப் பலி யிட முன்வந்த தியாக நிகழ்ச்சியை நினைவூட்டும் பெருநாள்

அல்ஹாஜ் ர. என். எம். ஷாஜஹான் 238
இதுவாகும். இம்மாதம் இஸ்லாமிய ஆண்டின் இறுதி மாத மாகும். நோன்புப் பெருநாளைப் போன்றே புத்தளம் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளையும் சிறப்பாகக் கொண்டாடுவர். பெருநாள் பந்தயங்களும் நடைபெறும். இஸ்லாமிய ஆண்டு, "முஹர்றம்" எனும் இறை தியாகத்திலேயே பிறந்து "துல் ஹஜ்" எனும் இறை தியாகத்திலேயே முடிவடைவது என்னே அற்புதம்! இறைவனுக்காக எம்மை முற்றும் முழுதாக அர்ப் பணித்து தியாகம் செய்வதின் அடிப்படையில்ேயே இஸ்லாம் வானளாவ விரிந்து பரந்து வியாபித்துள்ளது என்பதை சிந் திக்க வேண்டும். இஸ்லாமிய வரலாறே தியாகம் தேேன!

Page 139
28. முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்
திருமணம் சம்பந்தமான வழிமுறைகள் இஸ்லாமிய சமய சட்டத்தில் திட்டமாகவும், தெளிவாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளன. அதைப் பின்பற்றியே இஸ்லாமியத் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்துடன் சம்பந்தப்பட்ட கட் டாயக் கடமைகள் நிறைவேற்றப் படுகின்றன. மணமுடித் தற்கு இன்றியமையாதவை நான் குண்டு. முதலாவது, "ஈஜாபும், கபூலும்" ஆகும். இது அறபுச் சொற்கள். மணமுடித்துத் தந்த செய்தியை வலிகாரன் அல்லது வக்கீல் மணவாளனிடம் கூறுவதை "ஈஜாபு" என்றும், மணவாளன் அதை ஒப்புக்கொள் வதை "கபூல்" என்றும் கூறப்படும். இவ்விரண்டும் தாமதமின்றி தொடர்ந்து நடைபெறல் வேண்டும். இரண்டாவது மணவா ளேனும், மணவாட்டியும் இஸ்லாமிய சட்டப்படி தகுதியுடைய வர்களாக இருத்தல் வேண்டும். மூன்றாவது மணவாட்டிக் குரிய வலிகாரன் அல்லது வக்கீல் இருத்தல் வேண்டும். நான் காவது இஸ்லாமிய சட்டத்திற்கிணக்கமான சாட்சிகள் இரு வ்ர் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கு நிபந் தனைகளும் பூர்த்தியாயிருந்தால் திருமணம் நிறைவேறும்.
ஆயினும் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப் படுவ்துடன், சூழ் நிலைகளுக்கேற்ப அந்நியரின் கலாச்சார சடங்குகளும் திருமணங்களில் புகுந்து அவைகளும் கட்டாயம்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
என்று கொள்ளும் அளவுக்கு செல்வாக்கைப் பெற்றுள்ளன. முன்பு புத்தளத்தில் நடைபெற்று வந்த திருமண சம்பிரதா யங்களை கீழே இனி விவரிக்கும் போது அத்தகைய சமயத் துக்கு அப்பாற்பட்ட சடங்குகளைக் காண்பீர்கள். ஆயினும் இன்று பல தேவையற்ற, சமய விதிகட்கு மாறுபட்ட சம்பிர தாயங்கள் கைவிடப்பட்டு வருவதைக் காண்கின்றோம்.
புத்தளம் முஸ்லிம் மக்களிடையில் முன்பு நடைபெற்ற திருமண சம்பிரதாய முறைகளை இனிக் காண்போம். திரு பணத்தை "காவின் முடித்தல்" அல்லது "காவின் எழுதுதல்" என்று சொல்வார்கள். "நிக்காஹ்' என்பதும் இதனையே சுட்டும். இவைகள் அறபுச் சொற்கள். பெண்வீட்டார்களே மாப்பிள்ளையைக் கேட்டு அவரின் வீட்டை அணுகுவார்கள். அன்று "குடும்ப முறை" செல்வாக்குப் பெற்றிருந்தது. ஒவ் வொரு குடும்பத்துக்கும் மூத்த குடும்பத் தலைவர்களிருந் தனர். அவர்களின் சொல்லுக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து குடும்ப விவகாரங்கள் பேணப்பட்டு வந்துள்ளன. அவ்வடிப் படையில் குடும்பத்தின் தலைவர்கள் சந்தித்து திருமண ஒழுங் குகளைச் செய்வது வழக்காகும். எனினும் அவர்களுக்கிடை யில் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அன்று ஊரின் தலை மைக்காரர்களாக விளங்கிய மரைக்காயர் மார்களிடமும், முதலாளி மார்களிடமும் தமது பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் ஆலோசனைகளையும், தீர்ப்பையும் இணக்கத் ைேதயும் பெறுவார்கள். அத்தலைமைக்காரர்கள் இரு சாரா ரையும் தமது இல்லத்துக்கு வரவழைத்து விசாரித்து முடிவு செய்வார்கள். "கொடுக்கல் வாங்கல்களில்", "செலவு சித்தா பங்களில்" ஏதும் கஷ்டங்கள் ஏற்பட்டால் அவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதிலும் தலைமைக்காரர்கள் ஒத் தான ச புரி வார்கள். திருமணம் நிச்சயமாகி விட்டால் குறிப் பிட்ட நல்ல நாளொன்றில் - நல்ல நேரம் பார்த்து பெண் வீட்டார் நெருங்கிய உறவினர் சூழ மாப்பிள்ளையின் வீட்டை அண்டவர். தமது வருகையைப் பற்றி முன் கூட்டியே மாப் பிள்ளை வீட்டாருக்குத் தெரிவித்திருப்பர். உத்தியோக பூர்வ மான மன நிச்சயதார்ததமான இந்தி ஈழ்ச்சியை "பணம் வைத் தல்" எனக் கூறுவர், இந்நிகழ்ச்சிக்கு ஊரிலுள்ள தலைமைக்

Page 140
புத்தளம் வரலாறும், மரபுகளும்
காரர்கள், முக்கியத்தர்கள், பள்ளிவாசல் லெப்பை மார்கள் முஅத்தின்மார்கள் யாவரும் அழைக்கப்பட்டிருப்பர். பெண் வீட்டின் சார்பில் பேச்சாளராக வந்துள்ள முக்கியஸ்தர், இன் னாரின் மகளுக்கு இன்னாரின் மகனை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கும்" செய்தியை சபையின் முன்பு பிரகடனஞ் செய் வார். அதன்பின்பு இரு தரப்பாருக்குமிடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெறும். இதில் கொடுக்கல், வாங்கல் களே முக்கிய இடத்தைப் பெறும், பெண்வீட்டார் மாப்பின் ளைக்காகவும். பெண்ணுக்காகவும் கொடுக்க வேண்டிய வீடு வாசல்கள், காணி பூமிகள், நகை நட்டுக்கள், ரொக்கப் பணம், மாடாடுகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் முதலிய சகலவற்றையும் தனித்தனியாக விளக்கி ஏந்து கொள்ளப் படும். அத்துடன் மணமகன் மணமகளுக்குக் கொடுக்க வேண் டிய 'மஹர்' எனப்படும் ரொக்கப் பணமும் எவ்வளவு என எழுத்து மூலம் தீர்மானஞ் செய்யப்படும். இதை "மோதிரக் கடுத்தம்" என்பர்.
"கடுத்தம்" என்பது முஸ்லிம்களின் சீதன உடன்படிக் கைப் பதிவாகும்: மோதிரக் கடுத்தப் பதிவின் மாதிரி யொன்றை இன்றைய வசன நடையில் கீழே தருகின்றேன்: அதில் வந்துள்ள பெயர்கள் கற்பனைப் பெயர்களாகு மென் பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
'ஹிஜ்ரி 1250 ஜமாதுல் அவ்வல் பிறை11ல் புத்தளத் தைச் சேர்ந்த, அவக்கல மரைக்காயர் பட்டாணி சாகிபுவின் மகன் முகம்மது இபுறாகிம் என்பவருக்கு அதே ஊரைச்சேர்ந்த முகம்மது சாலிபு முகம்மது காசிமுடைய மகள் முத்து மீரா நாச்சியாவை "ஹலால்' பெண்சாதியாகக் கொள்ள ஒத்துக் கொள்ளப்பட்டது. மஹர் தொகையாக அறபு நாட்டின் நாணயம் 200 விராகன் பொன்னை பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகின்றது. குறித்த முகம்மது சாலிபு முகம்மது காசிம் ஒப்புக் கொண்ட பிரகாரம் 500 ரூபாவை இனாமாசுக் கொடுக்க வேண்டும். அத்தோடு ஒரு விடும், வளவும், 10 ஏக்கர் தென்னத்தோட்டமும், ஒரு கடை யும், இரண்டு பசு மாடுகளும், ஒரு பெட்டகமும், ஒரு குத்து

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான்
விளக்கும். இரு வெற்றிலைத் தட்டங்களும், தாம்பாளங் களும், ஒரு நீண்ட பெரிய படிக்கனும், அரிசி போட்டு வைக் கும் ஒரு பாத்திரமும் ஒரு சவ்வாரிப் பாத்திரமும், ஒரு சேர் வைக் காலும், ஒரு விறாகன் நிறையுள்ள ஒரு பொன் மோதி ரமும் கொடுக்க வேண்டும், குறித்த 500 ரூபாவில் 250 ரூபாவை மாப்பிள்ளை முகம்மது இபுறாகிம் பெற்றுக்கொண்டார்.
சாட்சிகள்:- ஆார்த்தலைவர் (Head Moorman) ஒப்பம்:
ப்ள்ளிவாசல் லெப்பை, ஒப்பம் ே
ஏற்கனவே கையொப்பங்களிடப்ப்ட்ட மேற்குறித்த கடுத் தம் தட்டமொன்றில் வைத்து "வெள்ளை" என்று கூறப்படும் அலங்கர்ர மூடு துணியினால் மூடப்பட்டு சபையோரின் முன்பு மணப் பெண்ணின் தகப்பனார் கொண்டு வந்து வைப்பார்: அவ்வாறே வேறு பல தட்டங்கனில் மூன்று முத்து மூன்று பவனம், ஒரு வராகன் பொன் ஆதியனவும் நூறு வெற்றிலை, நூறு தேங்காய்ச் சீவல்கள், பொன் மோதிரம் என்பனவும் இருக்கும். "மஹல்லி" என அழைக்கப்படும் லெப்பை மோதி ரத்தை எடுத்து யாவரிடமும் காட்டுவதுடன், மற்றவர்களும் அதைக் கையிலெடுத்துப் பரிசீலனை செய்வதற்காகக் கொடுப் பர். யாவரும் பார்த்த பின்பு "பிஸ்மில்லாஹ்" என்ற இறை வனின் பெயரைக் கொண்ட பிரார்த்தனையுடன் மஹல்வி மாப்பிள்ளையின் விரவிலே அணிவார். பின்பு இறை வேண்டு தல்-'துஆ" இரக்கப்படும். மாப்பிள்ளையும், அவரின் தகப்ப னாரும் கடுத்தத்தில் தங்களின் கையொப்பங்களை இடுவர். பூரணமான இக்கடுத்தத்தைப் பாதுகாப்பாக பள்ளிவாசலில் வைக்கும்படி லெப்பையிடம் சபையோர் ஒப்படைப்பர். மன நிச்சயதார்த்தம் - பனம் வைத்தல் சடங்கு அத்துடன் முடிவு டையும். பெண் வீட்டார் கலந்து கொண்டவர்களுக்கு வெற் றிலை-பாக்குக் கொடுத்து சந்தனமும் பூசி விடுவர். அத்து டன் யாவரும் விடைபெற்றுச் செல்வர். மாப்பிள்ளைக்குக் கொடுக்கத் தீர்மானிக்கும் பணத்தை "கைக்கூவி" என அழைப்பர்

Page 141
易4夺· புத்தளம் வரலாறும், மரபுகளும்
திருமண நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்குமிடை யில் "சீர் எடுத்தல்" எனப்படும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பப்படும் அன்பளிப்புக்களை அவ்வாறு கூறுவர். பழவகைகளும், பலகா ரங்களும், முட்டைகளும் நூறு வெற்றிலை, நூறு தேங்காய், நூறு அளவுப் பால், சந்தனக் கோப்பை ஆதியன அன்பளிப் புக்களில் அடங்கும். இவ்வகைகளை பல தட்டங்களில் வைத்து அலங்கார 'வெள்ளை" கள் இட்டு ஆட்கள் தலைமேல் சுமந்து வர கொட்டு மேள தாளங்களுடன் பெண்கள் கூட்ட மாகச் செல்வார்கள். அவர்களை மணமகன் வீட்டில் வர வேற்று விருந்தளிப்ப்ர். சில நாளின் பின்பு மணமகன் வீட்டி லிருந்து பொருட்களைக் கொண்டு வந்த பாத்திரங்க ளில் பலகர்ரங்களை வைத்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் பெண் வீட்டுக்குக் கொண்டு போவர் இப்பலகாரத்தில் 'அடை' எனக் கூறப்படும் உணவுப் பண்டம் பிரதான இடத்தை வகிக்கும். 'அடை' பலகர்ரத்தில் பல வகைகள் உண்டு. இவ்விதமான தொடர்புகளை 'கலியாணக் குலாவுகள்" எனக் குறிப்பர். சாதாரண தரத்தை விட மிகச் சிறப்பாகப் பெரியளவில் செய்து "பெருஞ்சீர் எடுத்தோம் எனக் கூறிப் பெருமை அடைவோரும் இருப்பர். முன்பு பாவனையிலிருந்த பலகார வகைகளின் பெயர்களைப் பார்ப்போம். அடை மஸ்கத், தொதல், பொரி விளாங்காய், பொரிக்கஞ்சட்டி, கொழுக்கட்டை, கைவீச்சு, அல்வாக்கட்டி, தேன் குழல், விவ் வீக்கம், சீனிமா, பயற்றுப் பணியாரம், நெய்ப் பணியாரம் கொண்டைப் பணியாரம், பூசணிக்காய் தோசி எனப் பெயர் பெற்ற பலகாரங்களும் பிறவும் அவற்றுள் அடங்கும். இனிப்பு வகைகளே அவைகள்.
பின்பு இரு திறத்தாரும் சேர்ந்து திருமண நாளை நிச்ச யிப்பர். எல்லா வைபவங்களையும் நடாத்துவதற்கு நல்ல நாள், சுப நேரம் பார்க்கும் வழக்கம் அன்று நடை முறை யிலிருந்தது. இதைப் பார்ப்பதற்கென்றே அறபு முறைகளை யும், பஞ்சாங்கங்களையும் தெரிந்த பெரியவர்கள் இருந்தனர். இதில் புத்தளம் பரம்பரை முஸ்லிம் வையித்தியர்கள் பிரசித் தம் பெற்று விளங்கினர். அவர்களின் ஆலோசனைக் குறிப் பின் படி திருமணத்துக்கான நாளும், நேரமும் தீர்மானிக்கப்

அல்ஹாஜ் gv: என் எம். ஷாஜஹான் 244
aanmamama
படும் அறபு மாத பிறைக் கணக்கின்படி இவை அமைந் திருக்கும். சில வேளைகளில் அந்நேரங்கள் நடு நிசியாகவோ, அதிகாலையாகவோ அமைவதும் உண்டு. திருமணங்கள் இரவு நேரங்களிலேயே நடந்தேறின. திருமண நாளைத் திர்மா னித்த பின்பு மாப்பிள்ளை, பெண் வீட்டார் இணங்கி ஊருக் குச் சொல்வார்கள். இதுவே திருமண அழைப்பாகும். ஒவ் வொரு வீட்டினர்க்கும் நேரில் சென்று வாய் மூலம் அழைப்ப தையே கெளரவமாகக் கருதப்பட்டது; முறையாகவும் இருந் தது. நேரில் சென்று அழைக்காவிட்டால் குறையாகக் கொண்டு திருமணத்துக்கு வருகை தரமாட்டார்கள். அழைப் பிதழ் அனுப்பும் வழக்கு அன்றில்லை. அது அவமதிப்பாகக் கருதப்பட்டது. ஆண்கள் புறம்பாகவும், பெண்கள் புறம்ப்ாக வும் வீடு வீடாகச் சென்று அழைப்புக் கொடுப்பார்கள். ஆண் களுக்குச் சொல்லாவிட்டால் பெண்கள் வைபவங்கட்குப்போக மாட்டார்கள்.
திருமணத்திற்கு முந்திய நாள் பகல் வேளையில் மாப் பிள்ளை வீட்டில் விருந்தொன்று நடைபெறும். இதைக் "காவி யஞ் சோறு" என அழைப்பர். இதற்குக் கிட்டிய உறவினர் கள் அழைக்கப்படுவர். மறைந்து போன பெற்றார், மூதா தையர்களை நினைவு படுத்தி அவர்களுக்காக திருக்குர்ஆனி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட - வழக்கமாக ஒதும் "யாஸின் சூறாவின் திருவசனங்களை ("கத்தம்") ஓதி பிரார்த்தனை கள் புரிவார்கள். இந்த விருந்துக்காகத் தாயாரிக்கப்பட்ட உணவுகளைப் பெண்வீட்டாருக்கும் அனுப்பி வைப்பார்கள். அவ்வுணவுப் பொருட்கள் பெண் வீடு வந்து சேர்ந்ததும் மணப் பெண்ணே சென்று அவற்றைப் பார மேற்று தனது தாயிட மும், மற்றவர்களிடமும் கொடுப்பார்.
திருமண வீடுகளில் கலியாணப் ப்ந்தல்கள் அமைக்கும் முறைகளும் இருந்தன. முதலில் பந்தலின் கிழக்கு மூலையில் பல சடங்குகளைக் கையாண்டு "கன்னிக்கால்" என்றழைக்கப் படும் மரக்காலொன்றை நடுவர். எதிர்கால நன்மைகள் பாதிக் கப்படா வண்ணம் நல்ல நேரம் பார்த்து அக்கன்னிக்காலை நடுவதுடன் பந்தலுக்கு நடவேண்டிய மொத்தக் கால்களையும் கணித்துக் கொள்வர். சாதாரணமாக இருபத்

Page 142
245 புத்தளம் வரலாறும், மரபுகளும்
தொரு கால்கள் நடுவது வழக்கமாகும். கன்னிக்காலை நன் றாகக் கழுவி, சந்தனம் பூசி மஞ்சள் நீர் தெளித்து, சாம்பி ராணி, சந்தனக் குச்சிகள் மனங்கமழ பிரார்த்தனையுடன் நடுவர். நடும் குழியினுள் முத்து, பவளம், நெல் ஆகியவை களை வெண் சீலையில் முடிந்து பால் வார்த்து அதனுள் இடு வர் கன்னிக்காலை நட்டு முடிந்ததும் மேலும் பாலை வார்த்து நிலத்தில் வழிந்தோடச் செய்வர். இது மணமக்களின் எதிர் கால சிறப்பான வாழ்வுக்கு நன்னிமித்தமாகக் கொள்வர். எல்லா பந்தல் கால்களும் நடப்பட்ட பின்பு பந்தல் வெண் சீலைகளினாலும், தென்னோலை, தென்னம் பூ இவைகளி னால் அலங்கரிக்கப்படும். மாப்பிள்ளைக்காக * மரவனை" எனப்படும் உயர்வான ஆசனமும் அமைக்கப்படும். அதை செயற்கைப் பூக்களும் சரிகைத் தாள்களும் அலங்கரிக்கும்.
திருமண இரவுக்கு முந்திய மாலை நேரத்தில் தாம்பா ளத்தில் வெற்றிலை, பாக்கு வைத்து ஊரிலுள்ள தலைவராக மதிக்கப்படும் மரைக்காயர் வீட்டுக்குச் சென்று அவரிடம் தமது வீட்டுத் திருமணம் நடைபெறுகின்ற செய்தியை உத்தியோக பூர்வமாகத் தெரிவித்து அவரின் உத்தரவை திருமண வீட் டார்கள் பெறும் வழக்கமிருந்தது. ஊர் மரைக்காயர் தன் னிடமுள்ள மணமகன் அணியும் விசேட உடைகள், ஆபரணங் கள் ஆதியனவற்றை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கையளிப் பார். மாப்பிள்ளைமார் அவ்வாடை அணிகளை அணிந்து செல்வதையே சிறப்பாகக் கருதினர். சரிகை வேலைப்பாடு கள் கொண்ட தலைப்பாகையும், மேற்சட்டையும் மாப்பிள் ளையின் உடையாகும். பொன்னாலான பல பட்டுக்களை யுடைய மாலையையும் மாப்பிள்ளை அணிவதற்காகத் தரப் படும். சில சந்தர்ப்பங்களில் ஊர் மரைக்காயரின் குதிரை வண்டியும் மாப்பிள்ளை ஊர்வலம் போவதற்4ாக உதவப் படும். தரப்படும் பொருட்கள் யாவும் கலியாணத் தேவைகள் முடிந்த பிற்பாடு திரும்ப மரைக்காயர் வீட்டில் ஒப்படைக் கப்படும்,
பொதுவாக அன்று மணமகளின் ஆடை அலங்காரம் எவ் வாறிருந்ததென சிறிது நோக்குவோம், முதலில் முகச் சவரம் செய்யும் கிரியை நடைபெறும். உறவினர்கள், நண்பர்கள்"

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 246
அழைப்பு விடுக்கப்பட்டோர் முன்னிலையில் மாப்பிள்ளையை பந்தலுக்கு அழைத்து வந்து நாவிதன் மூலம் முகச்சவரம் செய் விக்கப்பட்டு முகம் கழுவப்படும். அவரின் மணவாடைகள் யாவரும் பார்ப்பதற்காக அங்கு வைக் கப்பட்டிருக்கும். அவ ரின் மேற்சட்டை நீண்ட கைகளையுடைய வெண் சட்டை யாகும். அது கழுத்திலிருந்து கணுக்கால் வரை நீண்டிருக் கும். அதியுயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய இடைக் கச்சை யொன்றைக் கட்டி அதன் ஒரு பக்கத்தில் வெள்ளி வாள் அல் லது பிச்சுவா ஒன்று செருகப்பட்டிருக்கும். இரு முனைகளை யும் இணைத்துக் கட்டப்பட்ட சால்வையை இறுக்கமின்றி தோளில் போட்டிருப்பார். தங்க நூலால் கரையிடப்பட்ட தலைப்பாகையை அணிந்திருப்பார். அதன் முன்புற வலது பக்கம் தங்க நிறத் தகட்டாலான ஆபரணமொன்றை அணிந் திருப்பார். இதை "மந்தூலி” என்பர். பல மாலைகள் கழுத் தில் அணிவிக்கப்படும். விரல்களை மோதிரங்கள் அலங்கரிக் கும். கண்களுக்கு "சுறுமா" எனப்படும் கருஞ்சாயப் பொடி இடப்பட்டிருக்கும். நகங்களுக்கு மருதோண்டிச் சாயம் இட் ருப்பர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இலங்கையில் துருக்கித் தொப்பி அணிவது கெளரவமாகக் கருதப்பட்ட நேரத்தில் மர்ப்பிள்ளைமார் தலைப்பாகைக்குப் பகரமாக துருக்கித் தொப்பி அணிந்து, மாப்பிள்ளைச் சாரம் " எனப் பட்ட கம்பிக் கோடிட்ட "முகதலை"யுள்ள வெள்ளைச் சாரம் அணிந்து "சிங்கப்பூர்" வார் எனப்படும் செவ்வண்ண அகல மான இடுப்புப் பட்டியைக் கட்டி புதிதாக திருமணத்துக் கென தைக்கப்பட்ட ஷேர்ட்டையும், கோட்டையும் அணிந் தார்கள். காலில் கிறிச் - கிறீச் என சத்தமிடக் கூடிய புதிய செருப்பையோ, சப்பாத்தையோ அணிந்தார்கள். விசேடமாக புதிய குடையொன்று எப்போழுதும் மாப்பிள்ளையின் கையில் வைத்திருப்பது வழக்கமாகும். மாலைகளையும் போடு Gautrfi és6íT.
திருமண இரவன்று மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு முன்பு மணமகனில்லத்திலிருந்து பெண்கள் பெண்ணுக்கு மருதாணி இடுவதற்காக (மருவண்டி இடுதல் என்பர்) குழுவாகச் செல் வார்கள். அக்குழுவிற்கு மணவாளனின் சகோதரி அல்லது நெருங்கிய உறவுப் பெண் தலைமை தாங்குவார். அவர் தட்

Page 143
புத்தளம் வரலாறும் மரபுகளும்
டத்தில் நெய்யும், சந்தனமும் கொண்டு செல்வார். அத் தோடு பெண்ணுக்குரிய புடைவையும் இருக்கும். வெண் சீலை பால் ஆன "மேற் கட்டி" நான்கு கம்பங்களில் கட்டப்பட்டுதி தூக்கிவர அதன் கீழ் அப்பெண்கள் செல்லும் வழக்கமுமிரு தது. ஊர்வலத்தின் முன்னே பறையர்கள் கொட்டு முழக்கம் செய்து செல்வர். மணவாட்டியின் வீட்டில் அவர்கள் சிறப் பாக வரவேற்கப்படுவார்கள். அச்சந்தர்ப்பத்திலும் பயிற்சி பெற்ற பெண்கள் நின்று குரவையிடுவர்" வாயில் விரல்களை விட்டும். நாக்கை பல கோணங்களில் சுழற்றியும் பல வித மான ஒலிகளை எழுப்புவர். இவ்வழக்கம் அறபு தேசத்திலும் இருந்துள்ளது. மணமகன் வீட்டிலிருந்து வந்த பெண்கள் மனப் பெண்ணுக்குத் தாம் கொண்டு வந்த புடைவையை உடுத்துவார்கள். அதன்பின்பு பெண்ணுக்கு மருதாணியிட்டு கடமையை நிறைவேற்றிய பின்பு வீடு திரும்புவர். அதன் பின்பே மாப்பிள்ளையின் ஊர்வலம் தொடங்கும்.
மணவாளனின் அலங்காரங்கள் முடிவடைந்ததும் ஊர்வலம் புறப்பட ஆயத்தங்கள் நடைபெறும். குதிரை வண்டி, குதிரை, பல்லக்கு அல்லது பொருத்தமான வேறு வாகனம் தில் மாப்பிள்ளையை ஏற்றி இசை முழங்க, வெண் குடை கள், கொடிகள் சகிதம், குலத்துக்குரிய சின்னங்களுடனும் நார்வலம் செல்லும். சில மாப்பிள்ளைமார் தூரத்தைப் பொறுத்து நடந்தே செல்வதும் உண்டு. அறபிக் கீதங்கள் புகழ்ப் பாக்களை கூட்டத்தினர் முழங்கிச் செல்வர். ஊரி வலம் உறவினர்களின் வீடுகளைத் தாண்டிச் செல்லும்போது அவ்வீட்டிலுள்ள பெண்கள் குரவையிட்டு மாப்பிள்ளையை வரவேற்று பாலும்-பழ மும் கொடுப்பார்கள். பாலில் வாழைப் பழத்தை நறுக்கிப் போட்டிருப்பார்கள். ஆரத்தியும் எடுப் பார்கள். ஊர்வலம் பெண் வீடிருக்கும் தெருவை அடைந்த தும் வாகனத்தில் ஏறி வந்த மாப்பிள்ளை இறங்கி பெண் வீட்டு வாசல் வரை விரிக்கப்பட்டிருக்கும் வெண் விரிப்பின் மேல் நடந்து வருவார். மாப்பிள்ளை பந்தலை அடைந்த தும் பல தடவைகள் பெண்கள் குரவையிடுவர். இக்குரவை யிடும் முறைகளையும், எண்ணிக்கைகளையும் கொண்டு திரு மனம் எந்த நிலையில் இருக்கிறதென்பதை நார் மக்கள்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் : El
தெரிந்துகொள்வர். மணமகளுக்கு மருதாணி இட மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் வந்து விட்டார்கள். மாப்பிள்ளை வந்து விட் டார், கலியாண்ம முடிந்து விட்டது போன்ற சந்தர்ப்பங்கள்ை எல்லாம் குரவையிடும் முறைமூலம் கேட்டு ஊரார் அறிந்து கொள்வர். சில வீடுகளில் மாப்பிளை வந்து சேர்ந்ததும் வெடி போடுவதும் உண்டு,
மாப்பிள்ளையுடன் மாப்பிள்ளையின் தோழர்களும் இரு மருங்கிலும் ஊர்வலத்தில் வருவர். பெண் வீட்டில் கொட்டு முழங்கும். விசேட பயிற்சி பெற்ற பெண்கள் 'றபான்' எனப் படும் கொட்டை வளைத் திருந்து கைகளால் தாளத்துக்கேற்ப பல விதமாக அடிப்பார்கள் கொட்டின் அடியில் தீச் சட்டியை வைத்திருப்பர். மற்றப் பெண்கள் வெறுங் கையால் அடிக்க ஒருவர் தென்னங்குச்சு களைக் கையிலெடுத்து தாளத் துக்கேற்ப அடித்து மெருகூட்டு வார். ஒவ்வோர் கொட்டுக் கொட்டும் முறைக்கு பெயர்களும், தாள அமைதிக்கேற்ப சொல்வடுக் குப் பாக்களு முண்டு. மாப்பிள்ளை பெண் வீட்டை அடைவ தற்கு முன்பே அவரின் மேலதிக உடைகள் பாவனைப் பொருட் கள் அடங்கிய பெட்டி அங்கே போய்ச் சேர்ந்துவிடும. மாப் பிள்ளை பெண் வீடு வந்ததும் அவரை வீட்டின் தலை வாச வில் நிறுத்தி "ஆலாத்தி" ( ஆரத்தி) எடுப்பர். திருஷ்டி கள் கழித்த பின்பு உள்ளே மாப்பிள்ளையை அளைத் து வந்து சபையின் மத்தியில் அமைந்துள்ள விசேட விரிப்பின் மேல் அமரச் செய்வர். அவருக்குப் பின்புறத்தில் இடுப்பை ஒட்டி விசேட தலையனைகளை வைத்திருப்பார்கள், மாப்பிள் கேளத் தோழர்களும் பக்கத்திலேயே இருப்பர்.
பெண்ணின் உடை அலங்காரத்தை சுருக்கமாகக் காண் போம். பந்தலுக்கு மாப்பிள்ளை வந்து சேர்ந்த பின்பு பெண்ணுக்கான அலங்காரங்கள் நடக்கும். தலைமயிர்களை நேர்த்தியாக வாரிப் பின்னி பின்புறம் கொண்டை முடிவர். கொண்டை முடிச்சியில் பொன்னாலான அல்லது வெள்ளியா லான பூவேலைப்பாடுகள் செய்து சுற்கள் முத்துக்கள் பதிக் கப்பட்ட அழகு வாய்ந்த கொண்டைக் கூர்களை குறுக்காகக் குத்துவார்கள. காதுகளில் "அலுக் குத்து" எனப்படும் காதணி

Page 144
849 புத்தளம் வரலாறும், மரபுகளும்
களை அணிவிப்பர். காது நிறைய இது குத்தப்பட்டிருக்கும்; மூக்கிலும் முத்து மூக்குத்தியும் குத்தியிருப்பர். கழுத்தை பல ஆபரணங்கள் அலங்கரிக்கும். கைகளிலும் பல் வகையான வளையல்களிருக்கும். கைவிரல்களில் பொன் மோதிரங்களும், கால் விரல்களில் வெள்ளி மோதிரங்களும் போடப்படும். கணுக்காலில் தண்டை, கொலுசு, பாதசரம் ஆதியனவும் அணிவித்திருப்பர். பொன்னிறப் பூக்கள் போட்ட பட்டுப் புடைவையை உடுத்தி இருப்பர். கண்ணுக்கு "சுறுமா" எனப் படும் கருநிற சாயத்தூள் இடப்பட்டு நகங்கட்கும், உள்ளங் கைகளுக்கும் மருதாணி மூலம் சிவப்பு நிறமூட்டப்ப்ட்டிருக் கும். பெண்கள் ஆண்களின் தொடர்பின்றி வீட்டின் பின் புறங்களிலேயே நடமாடுவர்.
பின்பு நிச்சயதார்த்தத் தினத்தில் எழுதப்ப்ட்ட மோதிரக் கடுத்தம்" வாசிக்கப்பட்டு அதை இரத்துச் செய்து புதிய் திரு மணக் கடுத்தம் பதியப்படும். அக்கடுத்தத்தின் வாசகம் பின் வருமாறு அமையும் (பண்டைய வசன நடையல்ல)
ஹிஜ்ரி 1251 றபீஉல் அவ்வல் பிறை ஐந்தில் அவக்கல மரைக்கார் பட்டாணி சாகிபுவின் மகன் முகம்மது இபுறாகிம், முத்து மீரா நாச்சியாவின் தகப்பனாராகிய சாலிபு முகம்மது காசிமிடமிருந்து கைக் கூலியாகப் பொருந்திக் கொண்ட பணத் தின் மீதியையும் பெற்று மொத்தமாக ஐந்நூறு ரூபாவை பெற்றுக்கொண்டதாக ஏற்றுக் கொண்டார். மேலும் மோதிரக் கடுத்தத்தில் கூறப்பட்ட காணி, பூமி, பொருட்கள் யாவற் றையும் பட்டாணி சாகிபு முகம்மது இபுறாகிம் பெற்றுக் கொண்டதுடன் முகம்மது சாலிபு முகம்மது காசிமை எல்லா வித நிபந்தனைகளினின்றும் விடுவிக்கப்பட்டது.
சாட்சிகள்: ஊர்த்தலைவர் ஒப்பம்.
பள்ளிவாசல் லெப்பை ஒப்பம்
இச்சந்தர்ப்பத்தில் மணப் பெண்ணிடம் திருமணத்திற்குச் சம்மதமா எனக் கேட்கும்படி பெண்ணின் தகப்னாரை அல் லது வலிகாரனை சபையோர் அனுப்புவார்கள். அவர் பெண்ணி டம் சென்று சம்மதம் கேட்க,பெண் வெட்கத்தால் தலைகுனிந்து

அல்ஹாஜ் ர. என். எம். ஷாஜஹான் 250
மெளனமாக இருக்க பக்கத்திலிருக்கும் நெருங்கிய உறவுப் பெண்கள் 'சரி சரி பெண் சம்மதம்” என்று கூற அதை சபை யோருக்கு வந்து தெரிவிப்பார். பின்பு கலியான கொத்துபாப் பிரசங்கம் நிகழ்த் தப்படும். அவ்வேளையில் நல்ல முழுத்த மான"-வாழ்வுச் சிறப்புடைய பெண்ணொருவரைக் கொண்டு மணப் பெண்ணின் கழுத்தில் “கறுப்புமணி-பூசாந்தரம்" எனப் படும் கழுத்தணியை அணிவிப்பர். இது கறுப்புப் பாசி மணி களும், இடை இடையே பொன் மணிகளும் சேர்க்கப்பட்டு நடுவில் ‘பூசாந்தரம்" எனப்படும் பொன் மணியும் கோர்க்கப் பட்ட கழுத்தோடொட்டிக் கட்டும் ஆபரணமாகும். திரு மணம் முடித்த பெண்களுக்கு அடையாளமாக இதைக் கொள் வர். திருமணக் கொத்துபாப் பிரசங்கமும், உபதேசங்களும் முடிந்து மணமகனிடம் கலியாணத்தையும் மஹரையும் ஒப்புக் கொண்டதற்கான உறுதி மொழியும் வாங்கப்படும். கலியா ணத்தை முடித்து வைக்கும் லெப்பை திருமணம் நிறைவேறிய தாக சபையோருக்குப் பிரகடனப் படுத்துவார். பின்பு பெண் ணின் தகப்பனார் மணமகனை எழச் செய்து கைபிடித்து "சலாம்" கூறியதன் பின்பு மோதிரமொன்றை மணமகனுக்கு அணிவிப்பார். பின்பு அவர் மணமகனின் தகப்பனார், நெருங் கிய உறவினர், மற்றுமுள்ள ஊர்ப் பெருமக்கள், சபையோரி டம் மணமகனைப் பெண்ணுக்குக் கைபிடித்துக் கொடுப்பதற்கு அனுமதி கோருவார். அதற்கு முன்பு மாப்பிள்ளை அங் கிருக்கும் சபையோருக்குத் தனித்தனி கைபிடித்து "சலாம்" கொடுப்பார். மாப்பிள்ளையைக் கூட்டிச் சென்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணின் கையை மாப்பிள்ளையின் கையில் பிடித்துக் கொடுப்பார்: அல்லது பெண்ணின் முன் தலைமயி ரில் சிலவற்றைப் பிடித்துக் கொடுப்பதும் உண்டு. கைபிடித் துக் கொடுத்து முடிந்த தகவலை சபைக் குத் தெரிவித்ததும் "துஆ" பிரார்த்தனையொன்று நடைபெறும் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டுவார். தாலி சாதாரணமாக "சவடிக் கொடி" என அழைக்கப்படும் பொன் கம்பியினால் பின்னப்பட்டு முகப்பு வைக்கப்பட்ட ஆபரணமாகவே இருக் கும். சிலர் கடுகு மணிக் கழுத்தணியையும் கட்டுவர். "கை பிடித்த கைக்கு மோதிரம் போடல்" என்ற மரபுப்படி மாப்பிள்ளை பெண்ணுக்கு மோதிரம் அணிவிப்பார்.

Page 145
251 புத்தளம் வரலாறும், மரபுகளும்
பின்பு கட்டிலிலோ அல்லது கதிரையிலோ அல்லது விசேட மாக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார ஆசனத்திலோ மண மக்களை இருத்தி பாற்சோறும், பாலும்-பழமும் கொடுப் பார்கள். நெருங்கிய உறவான பெண்கள் யாவரும் கொஞ் சங் கொஞ்சமாகக் கொடுப்பர். மாப்பிள்ளை குடித்த மிச்சப் பாலை பெண்ணுக்குக் கொடுப்பதும் வழக்கு. கலியாண வைபவம் முடிந்ததும் வந்தவர்களுக்கு ஒரு கை வெற்றிலை யும், (சுமார் இருபது வெற்றிலை அடங்கிய தொகுதி) பாக்கு கள் ஐந்தும் வைத்துக் கொடுப்பார்கள். அத்துடன் சமுக மளித்தவர்கள் தங்களில்லம் ஏகுவர். பாச்கு-வெற்றிலை கொடுக்கும் வழக்கமே முன்பு இருந்த தெனினும் பின்பு பல காரமும் கோப்பி அல்லது தேநீரும் அளிக்கும் வழக்கமும் உண்டாகியது. இன்று உணவு விருந்தளிக்கும் பழக்கம் புகுந்து விட்டது. "கோப்பி கொடுத்தல்" என்பது உணவு விருந்தன்றி பலகாரமும், பானமும் கொடுப்பதையே குறித்தனர்.
திருமணம் முடிந்து வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பின்பு மண0சனுக்கு அணிவித்திருக்கும் விசேட சட் டையையும் , தலைப்பாகையையும் கழற்றவே மாட்டார்கள். அவ்வாறு கழற்றுவது பெருங்குறையாகக் கருதப்பட்டது. இதை மாப்பிள்ளை வீட்டிலிருந்து புறப்பட்டு வரும் பெண் களே செய்தல் வேண்டும். "சட்டைத் தலைப்பா" கழற்று வதற்கென மாப்பிள்ளையின் சகோதரி தலைமையில் பெண் கள் வந்து மாப்பிள்ளை அணிந்திருக்கும் தலைப்பாகையை யும், சட்டையையும், மாலையையும் கழற்றி ஆங்குள்ள தாம் பாளத்தில் வைப்பார். கழற்றியவருக்கு நூறு வெற்றிலையை யும், நூறு பாக்கும் கொடுப்பது வழக்கமாகும். அத்தோடு அக்கிரியை முடியும். பின்பு மாப்பிள்ளையை ஒய்வு எடுக்கும் படி அறையில் விடுவார்கள். "சட்ட சலப்பா கழற்றுவது" என பேச்சு வழக்கில் இதைக் கூறுவர்.
அதன் பின்பு 'பூதக்கலமும், சோறும் கொடுக்கும் கிரியை நடைபெறும். பூதக்கலம், பூதாக்கலம் எனவும் கூறப்படும் "பூதக் கலம்" என்பது மாப்பிள்ளைக்கு மணப் பெண் சோறி டும் பாத்திரத்தைக் குறிக்கும். "பூதக் கலம் பணிதல்"என்பது

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 252
புது மணத் தம்பதியர் முதன் முறை ஒரே பாத்திரத்தில் புசித்தலைக் குறிக்கும். சோறாக்கி, முட்டை பொரித்து மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஒன்றாக வைத்து ஒரே பீங்கானில் உண்ணச் செய்வதையே இக்கிரியை குறிக்கும். மாப்பிள்ளை பொரித்த முட்டையை சோற்றிலிட்டுப் பிசைந்து பெண்ணுக்குக் கொடுக்க மணப்பெண் அதில் மூன்று கவளம் உண்ணுவார். பின்பு மாப்பிள்ளையும் அவ்வாறே மூன்று கவளம் உண்ணுவார். மாப்பிள்ளை கையலம்பியதும் அப் பாத்திரத்தில் சில நாணயங்களைப் போடுவார். செல்வந்த மாப்பிள்ளைமார் தங்கப் பவுணையும், பொன் மோதிரங்களை யும் போடும் வழக்கமுண்டு. அவைகள் சோறு தயாரித்துக் கொடுத்தவருக்கே சொந்தமாகும். பின்பு மாப்பிள்ளை சோறு தின்ற கைக்கு மோதிரம் போடல்" என்ற வழக்கத்திற்கேற்ப பெண்ணின் விரலில் மோதிரமொன்றைப் போடுவார். இக்கிரி யையுடன் மண நாள் இரவன்று நடைபெறும் சடங்குகள் நிறைவு பெறும்,
நிலைமைக்கேற்ப மூன்று நாள் தொடக்கம் ஏழு நாள் வரையும் மணப்பெண்ணின் வீட்டிலிருந்து மாப்பிள்ளையை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். குறித்த நாட் கள் கழிந்த பின்பு பெண்ணின் இளைய சகோதரனுடன் அல் லது நெருங்கிய உறவுக்காரப் பையனொருவனுடன் முதலில் மாப்பிள்ளை தனது தாயார் வீட்டிற்குச் செல்வார். அங்கு அவர் வரவேற்கப்பட்டு அன்று பகல் சாப்பாடும் விசேட மாகத் தயாரித்துக் கொடுப்பார்கள், ஏழு நாள் கழியமட் டும் பெண் வீட்டில் மாப்பிள்ளைக்கு "புலால்" எனப்படும் மீன்கறி கொடுக்கமாட்டார்கள் என்பதால் தாயார் அவருக்கு நல்ல உயர்ரக மீன் சமையல் செய்து கொடுப்பதுமுண்டு. இது பெண் வீட்டாருக்குத் தெரியாமல் இரகசியமாக நடக்கும்: பகல் சாப்பாட்டின் பின் மாப்பிள்ளை பெண் வீட்டுக்குத் திரும்பி வருவார். அதன் பின்பு மணமகன் வீட்டிலிருந்து "பந்திளி" என்றழைக்கப்படும் உணவுப் பொருட்களுடன் கூடிய தாம்பாளத் தொகுதி பெண் வீடு வரும். அவற்றுள் பழ வகை, இனிப்புப் பலகார வகைகள், வெற்றிலை, பாக்கு வகையறாக்கள் அடங்கும்.

Page 146
253 புத்தளம் வரலாறும், மரபுகளும்
ஏழு தினம் கழிந்ததும் மணத் தம்பதிகளுக்கு புலால் உணவு கொடுக்கும் சடங்கு நடக்கும். "புலால் விடுதல்" என இதைக் கூறுவர். இச்சடங்கிற்கான அனைத்துச் செலவுகளும் மாப்பிள்ளையின் வீட்டாரே செய்வர். சாதா ரணமாகப் பேச்சு வழக்கில் சொல்வது போன்று 'உப்பு முதற் கொண்டு முப்பத்திரண்டு சாமானும் மாப்பிள்ளை வீட்டி லிருந்து பெண் வீட்டுக்கு வந்து சேரும். சிறப்பாக உயர் ரக மான பெரிய மீன்களை வாங்கி அனுப்புவார்கள். அவை களை பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து சமைத்து மிகக் கிட்டிய உறவினர் சூழ உண்டு மகிழ்வர். இவ் விருந்து பகல் வேளையிலேயே நடைபெறும். இந்நிகழ்ச்சி யுடன் புதுத் தம்பதியர் புலால் தின்னக் கூடாதென்ற நியதி யும் மறைந்து விடும்.
ஏழு, ஒன்பது பதிமூன்று அல்லது இருபத்தொரு நாட் கழிந்து மணத் தம்பதியருக்கு "தண்ணிரூற்றல்" என்ற நிகழ்ச்சி நடைபெறும், பெண் வீட்டாரின் அழைப்பின் பேரில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்கள் அங்கு செல்வார்கள். மஞ்சள், பலமணம், பலகாரப்பெட்டி, நல்லெண்ணெய்த் தக ரம், இலுப்பை விதைகள், வெற்றிலை நூறு, பாக்கு நூறு, உடைகள் ஆதியனவற்றை மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனுப்பி வைப்பார்கள். மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் செல்லும் போது விசேடமாக "கூறைச் சேலை" எனப்படும் இருபத்தொரு முழ வெண் சீலையையும், “அஞ்சாறப் பெட்டி" எனப்படும் ஓலையால் இழைக்கப்பட்ட பெட்டியையும், பெண் ணுக்காக பட்டாலான புடைவையும், சட்டையும், உள்ளா டைத் துணிகளையும் கொண்டு போவார்கள். கூறை என்பது மணவாட்டி உடுக்கும் புதுப் புடவையைக் குறிக்கும். அஞ்சா ரப் பெட்டி என்பதன் மருவுதலே அஞ்சறாப் பெட்டியாகும். அஞ்சறைப் பெட்டியெனப்படுவதும் இதுவே பல வர்ணத்தில் தோய்க்கப்பட்ட பனை ஓலையால் செவ்வகத்தில் இப்பெட் டியை அழகாக இழைத்திருப்பார்கள். ஏறத்தாழ ஒன்றரை அடி அளவையும், முக்கால் அடி உயரத்தையும் கொண்டதாக இது இருக்கும். இப்பெட்டியினுள் இரு தட்டுக்கள் உண்டு. அடிப்பாகத்தில் ஆறு அறைகளுண்டு. பிரித்தெடுக்கக் கூடிய மேற்றட்டில் ஒன்பது அறைகளுண்டு. இவ்வறைகளில் இலா

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 254
மிச்சை வேர், நாற்றப் பாக்கு (மணப்பாக்கு), கூட்டுக் காசிக்கட்டி, இங்கிரியக் கிழங்கு, அரைப்பு, பலமணத் தூள், மஞ்சள் காவித்தூள் என்பன வெல்லாம் இருக்கும். அத்து டன் பிள்ளை பெற்ற தாய்க்குக் கொடுக்கும் "காயம்" என் றழைக்கப்படும் அரைப்பு மருந்திற்கான மருந்து மூலிகை களும் வைத்திருப்பர். குழந்தைகளுக்கு இடுப்பிலனியும் அரை நாண் கொடியும் (அறனாக் கயிறு) பெட்டியிலிடம் பெறும். பிள்ளைச் செல்வத்தையே யாவரும் எதிர்பார்க்கின் றனர் என்பதைச் சூசகமாகத் தெரிவித்துக் கொள்வதே இதன் நோக்கமாகும். மேற்றட்டில் சீப்பு, கண்ணாடி, பொன் மோதிரங்கள் இரண்டு. வெள்ளி மோதிரங்கள் ஐந்து ஆதியன அடங்கியிருக்கும் செப்பொன்றையும் வைத்திருப்பர். இவை களை மணவாளனின் சகோதரியே கொண்டு செல்வார். அவ ருடன் உறவுப் பெண்களும் செல்வார்கள்.
முதலில் பெண்ணை கீழே இருத்தி வைத்து மடிமாங் காய்-சொரித்தல்" எனும் நிகழ்ச்சி நடைபெறும். மடிமாங்காய் போடுதல்’ எனும் தொடரின் பொருள் பொய்க் குற்றம் சார்த்துதல், பரிதானங் கொடுத்தல் என்பனவாகும். இந்நிகழ் வில் அத்தகைய அர்த் தத்தில் எதுவும் நடை பெற்றதாகத் தெரியவில்லை. முறுக்கு, பலகாரத் துண்டுகள், தென்னம் பூக்கள், காசுகள் அடங்கிய தொகுதியை பெண்ணின் தலை யில் மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் சொரிவார்கள். மணப் பெண்ணின் மடியிலும், பக்கங்களிலும் அவைகள் சொரியும். இவைகளைப் பொறுக்குவதில் பிள்ளைகளும், பெண்களும் குது கலத்துடன், கும்மாளத்துடன் முண்டியடித்து கொண்டு ஈடுபடுவார்கள். இவ்வேளையில் பெண்ணின் வலது கையில் பதினொரு வெள்ளிக் காசுகளும், இடது கையில் ஒன்பது வெள்ளிக் காசுகளும் வைப்பார்கள். பின்பு பெண்ணுக்கு பாற் சோறு உணவூட்டி பழமும் கொடுப்பார்கள். பின்னி முடிந் திருக்கும் மணப் பெண்ணின் தலை மயிரைப் பிரிக்கும்படி மாப்பிள்ளை வேண்டப்படுவார். அவரும், அவருடைய சகோ தரிமார்களும், மச்சாள்மாரும் சேர்ந்து அப்பின்னல்களைப் பிரிப்பர். பிரிக்கும் வேளையில் பெண் வீட்டாரும், கூடியிருப் போரும் அவர்களுக்குப் பல விதமான குறும்புத்தனங்களையும், சிரிப்பூட்டும் கதைகளையும் கூறி வெட்கமுறச் செய்வார்கள்.

Page 147
255 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அவர்களின் மேல் பல பழைய பொருட்களையும், சுளகு, தட்டு போன்றவற்றையும் வீசி எறிவார்கள். அதனால் எவ் வித கோபதாபங்களும் உண்டாவதில்லை. இந்த வேடிக்கை யான நிகழ்ச்சி முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருக்கும் நெய்யையும், சந்தனத்தையும் மாப்பிள்ளை பெண்ணின் தலையில் பூசுவார். பின்பு கூறைச் சேலை யெனும் நீண்ட வெண்ணிற ஆடையின் ஒரு முனையை பெண் ணுக்கு அணியக் கொடுத்து மறு முனையை மாப்பிள்ளை அணிவார். பின்பு இருவரையும் வீட்டு வளவிலுள்ள கிணற் றடிக்கு அழைத்துச் சென்று குளிக்க வைப்பார்கள். முன்பு கூறைச் சேலை அணிந்த புதுத் தம்பதியரை குழுவாக புத்த ளம் நகரிலுள்ள நெடுங்குளத்துக்கு அழைத்துச் சென்று நீரா டிய பின்பு வீட்டுக்கு அழைத்து வருவதுமுண்டாம் குளித்து முடிந்து வீடு திரும்பியதும் விருந்து நடைபெறும், தண்ணி ரூற்று நிகழ்ச்சி முடிவடைந்ததும் தம்பதியர் சுதந்திரமாக எங்கும் சென்று வர அனுமதிக்கப் படுவார்கள்.
திருமணம் முடிந்த நாளிலிருந்து இரு வீட்டடு உறவினர் களும், நண்பர்களும், திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர் களும் நாளாந்தம் பெண் வீட்டுக்கு வருகை வருவர். பெண் ணின் கையில் தமது பொருளாதாரத் தகுதிக் கேற்ப பணத் தொகை யொன்றை தரிசிக்கும் பெண்கள் கொடுப்பதே நோக் கமாகும். இதைப் "பணஞ் செய்தல்" என்று கூறுவார்கள். சேரும் பணமெல்லாம் பெண்ணின் தாயாருக்கே சொந்தமா கும். இன்றைய காலத்தில் போல பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கமல்ல. அங்ஙனம் பணஞ் செய்யவருவோர் எல்லாரினதும் முன்னிலையில் மணப் பெண்ணை விசேட விரிப்பொன்றில் அலங்காரமாக உடுத்திப் பார்க்க வைப்பது மரபாகும் பின்பு வந்தவர்களுக்கு பலகாரங்களும், பானமும் வழங்கப்படும். புதுத் தம்பதியரின் படுக்கை அறையையும் வந்த பெணகளுக்குக் காட்டுவதும் முறையாகவிருந்தது.
தண்ணீரூற்று நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு, புது மணத் தம்பதியரை முதலில் மாப்பிள்ளையின் வீட்டுக்கு "பெண் கூட்டிப் போகும்" நிகழ்ச்சி நடைபெறும். முதன் முதலில்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 256
தம்பதிகளாய் சமுகமளிக்கும் அவர்களுக்கு சிறப்பான வர வேற்பு ஒழுங்குகளைச் செய்வார்கள். பெண் கூட்டிப் போதல் இரவிலேயே நடைபெறும். இராவிருந்து பாற்சோறாகவே இருக்கும். அடுத்த நாள் பகலிலே நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு சோற்று விருந்து நடைபெறும். பெண், மாப் பிள்ளை வீட்டில் மூன்று தினங்கள் தங்கி மீண்டும் மாப்பிள் ளையுடன் தன் வீடு திரும்புவார். மணவாளனின் வீட்டுக்குப் பெண் கூட்டிப் போனதன் பின்பும் கிட்டிய உறவினரும், நண் பர்களும் தம்பதியரை தம் வீடுகளுக்கு "பெண்கூட்டிச் சென்று" தகுதிக் கேற்ப பலரை அழைத்து விருந்துகள் நடாத்துவர்,
புதுத் தம்பதியர் தமது இல்லற வாழ்வை பெரும்பாலும் பெண்ணுக்குச் சீதனமாக அளிக்கப்பட்ட வீட்டிலேயே தொடர் வர். மாப்பிள்ளையின் வீட்டில் வசிப்பது மிக மிக அபூர்வ மாகும். இதனால் பல பெண் பிள்ளைகளைப் பெற்றவர்க ளின் பாடு பெருங் கஷ்டமாக அமைகிறது. காரணம் ஒவ் வொரு பெண் பிள்ளைக்கும் ஒவ்வொரு வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். வீடு வாசலில்லாது தமது பெண்களை மணஞ்செய்து கொடுக் முடி யாமல் திண்டாடும் பெற்றார்கள் பலர். வீடில்லாது பெண் ணெடுக்க முன்வரும் மாப்பிள்ளைமார் ஒரு சிலரேயாகும்.

Page 148
29. கல்வி வரலாறு
சிங்கள அரசர்களின் ஆட்சிக் காலத்திலும், போர்த்துக் கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களிலும் புத்தளத்தின் கல்வி நிலைமை பற்றி அறிவதற்கான பதிவுகள் இருப்பதாகத் தெரிய வில்லையெனினும் இப்பகுதியிலிருந்த மக்கள் - குறிப்பாக முஸ் லிம்கள் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியிருந்தமையை ஊகிக் கக்கூடியதாகவுள்ளது. இலங்கையின் ஏனைய பகுதிகளில், குறிப் பாக சிங்கள, தமிழ் மக்களிடையே பண்டைய கல்வி முறை யொன்று இருந்து வந்துள்ளமையை நாம் அறிவோம். புத்த குரு மார் சிங்கள மக்களிடையே புத்த சமய அறிவை ஊட்டுவதன் மூலம் கல்வி கற்பித்தலை நடாத்தி வந்தனர். ஆசிரியருடைய as L-60 to as sir பிக்குமார்களிடம் ஒப்படைக்கப் பட்டன. திகதியை அறிவதற்கும் கூட பொதுமக்கள் பிக்குமார் களை நாடினர். அவ்வாறே தமிழ் மக்களிடையேயும் குருகுலக் கல்வி வளர்ச்சி பெற்றது. தமிழ்க் கல்விமான்கள் தமது வீடு களில் வசதியான திண்ணைகளில் சைவ சமயத்துடன் இணைந்த கல்வியைக் கற்பித்தனர். இத்தகைய கல்வி மன்றங்கள் குருகுலங் கள் எனப்பட்டன. தென்னிந்திய தமிழ் அறிஞர்களின் செல் வாக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உதவின.
ஆயினும் முஸ்லிம் மக்களிடையே கல்விப் போதனை வேறு விதமாக அமைந்திருந்தது. சிங்களவர்க்கு சமஸ்கிருத, பாளி மொழிகளுடன் சம்பந்தப்பட்ட சிங்கள மொழி சமய மொழி யாகவிருந்தது. தமிழருக்கு சமஸ்கிருதத்துடன் இணைந்த தமிழ் மொழி சமய மொழியாக இருந்தது. அவ்விரு சாராருக்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 258
கும் தாம் பேசும் மொழிகளே சமய மொழிகளாக வாய்த்தன. முஸ்லிம்களின் சமய மொழி தமது பேச்சு மொழியிலும் வேறு பட்ட அறபு மொழியாகவிருந்தது. அவர்களின் சமய நூலான திருக்குர்ஆனும் அம்மொழியிலேயே அமைந்திருந்தது. சமயக் கிரியைகளின்போது ஒதப்படுவன அறபு மொழியிலேயே இருக்க வேண்டுமென கடமையாக்கப்பட்டவையும் உள. தமிழில் மொழி பெயர்த்து ஒதுததற்கு முடியாதவையும் இருந்தமையினாலேயும் பொதுமக்கள் அறபு மொழியின்மீது வைத்திருந்த பக்தி சிரத்தை யின் காரணமாகவும் மார்க்க விடயங்களை அறபியிலேயே ஒது வதில் மனத் திருப்தியடைந்தார்கள். எனவே திருக்குர் ஆனே அவர்களின் கற்றலின் அடிநாதமாக விளங்கியது. அன்று முஸ் லிம்களின் கல்வி திருக்குர்ஆனிலேயே ஆரம்பித்து அதிலேயே முடிவடைவதாக அமைந்தது. இறைவனின் கட்டளைக்கே அடி பணிந்து சுத்தமான இஸ்லாமிய வாழ்க்கையில் நின்று, மறுமை யில் இறைவனின் நல்லடியாராக ஆகுவதற்குரிய கல்வியையே ஒரு முஸ்லிம் தேடி நின்றான். ஏனைய கல்விகள் வீணானவை என நம்பினான்.
இவ்விதமான புனித கல்விவைப் பெறுவதற்கு உகந்த இடங் களர்க பள்ளிவாசல்களேயிருந்தன. பள்ளிவாசல்களிலிருந்த பக் கத் திண்ணைகள் குர்ஆன் பள்ளிக்கூடங்களாகத் திகழ்ந்தன. அவையன்றிதணிப்பட்டவர்களின் வீடுகளிலும் இவ்வாறான பள் ளிக்கூடங்கள் நடாத்தப்பட்டன. இவற்றை ஒதுகிற பள்ளிகள்" என இப்பகுதி மக்கள் அழைத்தனர். இவற்றில் படிப்பித்த ஆசிரி யர்கள் ஆழமான அறிவுள்ள மார்க்க மேதைகளாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படவில்லை. ஒரளவு இஸ்லாமிய மார்க்க அறிவுகளைப் பெற்றவர்கள் தமது சுயவிருப்பின்படி கற் பித்தனர். அவர்களை ஊரவர்கள் பள்ளி மாமா, பள்ளி அப்பா, லெப்பை மாமா, (லெப்பாமா) லெப்பை அப்பா, (லெப்பப்பா) என்றெல்லாம் அழைத்தார்கள். பெண்ணாசிரியர்களை பள்ளி மாமி, பள்ளிக் கண்ணா என்றும் அழைத்தனர். வயது முதிர்ந் தவர்களை அப்பா, கண்ணா என்றும், வயது குறைந்தவர் களை மாமா, மாமி என்று கூறுவர். இவர்களுக்கு சமூகத் தில் நல்ல மதிப்பும், மரியாதையும் அன்று இருந்தன. ஆயி னும் ஊதியம் மிகவும் குறைவாகவேயிருந்தது. வாரத்தில்

Page 149
259 புத்தளம் வரலாறும், மரபுகளும்
வியாழக்கிழமை தோறும் ஒதும் பிள்ளைகள் 'நாலு சல்லி" கொண்டு வந்து லெப்பையின் முன்னால் வைக்கப்பட்டிடிக்கும் பெட்டியில் அல்லது. பாத்திரத்தில் போடுவார்கள். அன்று "சல்லி" என்பது அரைச் சதத்தைக் முறிக்கும். வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாகும். கம்சு காசி" எனவும் சொல் படும். "யவ்முல் கமீஸ்" என்பது வாரத்தில் ஐந்தாம் நாளான வியாழக்கிழமையைக் குறிக்கும். அந்நாளில் கொடுக்கப்படும் பணத்தை கம்சுக்காசி எனக் குறிப்பிட்டனர்.
முஸ்லிம்களின் வீட்டு மொழி தமிழாக இருந்தமையாலும் சமயமொழி அறயி மொழியாக இருந்தமையாலும் அறபி அரிச் சுவடியைக் கற்று அவ்வெழுத்துக்கள் மூலம் தமிழ் மொழியை எழுத, வாசிக்கப் பழகிக் கொண்டார்கள்" அதன் மூலம் அறபுத் தமிழ் என்னும் மொழியொன்று உருவாகி வளர்ந்தது. இதற்கு தென்னிந்திய மார்க்க அறிஞர்கள். அங் கிருந்து இங்கு வந்த "லெப்பைமார்கள் பெரும் பங்களிப்பை நல்கினர். தென்னிந்தியா விலிருந்து ஏராளமான அறபுத் தமிழ் நூல்கள் அச்சாகி வெளிவந்தன. தேர்ச்சி பெற்ற உள் ளூர் வாசிகளும் அறபுத் தமிழில் நூல்களை எழுதி வெளியிட வும் செய்தாகள். மார்க்கப் பள்ளிக் கூடங்களையும் நடாத் தினார்கள். எவ்வாறாயினும் தென்னிந்திய லெப்பைமார்கள் பலர் இங்கு வந்து குடியேறி பள்ளிவாசல் கிருத்தியங்களில் ஈடுபட்டு, மார்க்க வகுப்புகளையும் நாடாத்தினர். தமது தொழிலாகவே இதைப் புரிந்தனர். வழிவழியாக இவ்வேலை யைச் செய்து வந்தமை காரணமாக லெப்பைமார்களின் குடும் பங்கள் தோன்றின ஊரில் நடைபெறும் மார்க்க சடங்குகனை நிறைவேற்றுவதிலும், பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடாத்தி வைப்பதிலும், ஒதும் பள்ளிகளை வைத்து மார்க்கத் தைப் போதிப்பதிலும் அவர்களே உரித்துப் பெற்றவர்களாக விளங்கினர். இக் கடமைகளைப் புரிவதன் மூலம் ஊர் வருமா னத்தையும் பெற்றனர்.
அச்சான நூல்கள் வெளிவருவதற்கு முன்பு ஒதும் பள்ளி களில் மரத்தாலான பலகைகளைப் பாவித்தனர். 'ஒதும் பலகை" என வழங்கப்பட்ட இவைகளில் லெப்பைமார்கள் தமது கைப்பட ஒவ்வொரு மாணாக்கருக்குமுரிய பாடங்களை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 260
எழுதிக் கொடுப்பார்கள். அப்பாடங்கள் சரியாக ஒப்புவிக்கப் பட்டபின் புதிய பாடங்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொடுக் கப்படும். எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதற்காக ஒருவகை வெண் கழி மண்ணை நீரில் குழப்பி மரப்பலகையில் பூசுவார் கள். அவ்வெண் கழியை "மாலா" என்பர். பூசும்போது கை அசை வினால் ஏற்படும் கோடுகள் தெரியாவண்ணம் பக்குவமாக பூசி அப்பலகையைச் சுற்றி அழகில் அலங்காரங்களையும் கைவிரல் களால் தீட்டும் வழக்கமுமிருந்தது. பலகையில் பூசப்பட்ட கழிப் பூச்சு காயும்வரை வெய்யிலில் வைத்தெடுப்பார்கள். காய்ந்ததும் பலகை வெண்ணிறமாகவிருக்கும். அதில் கருஞ்சாயம் கொண்டு எழுத்தாணியால் எழுதுவர். அரிசியை ஒட்டிலிட்டுச் கருக்கி அதைப் பொடியாக்கி நீருடன் கலந்து சாயத்தைத் தயாரிப்பார் கள். இச்சாயத்தைப் பிள்ளைகளே தங்களது வீட்டில் பெற்றார் களைக் கொண்டு தயாரித்து பள்ளிக்கு எடுத்துச் செல்வர். அங் கேயுள்ள சாயம் வைக்கும் பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி விட்டு சிறிது மீதி வைத்துக்கொள்வார்கள். அதை பிள்ளைகள் தாம் எழுத பாவிப்பர். மூங்கிலினால் அல்லது பன்சூர் என்ற மரக்குச்சியினால் அல்லது வேறு பொருத்தமான மரக்கொம்பை பக்குவமாக சீவி எழுத்தாணிகளைத் தயாரித்துக்கொள்வர். இவ்வெழுத்தாணியைக் "கலம்" என்றழைப்பர். "கலம்" என்பது எழுது கருவிக்குரிய அறபிச்சொல்லாகும். பிள்ளைகள் தூக்கிச் செல்லக்கூடியவாறு அவர்களின் வயதுக்கேற்ப சிறிய, பெரிய ஒதும் பலகைகள் இருந்தன. இரு வகையான மரப்பலகைகளை உபயோகித்தனர். சிறிய அளவிலான பலகைகள் "கத்துப் பல கைகள்" எனப்பட்டன. "கத்து" என்பது அறபியில் எழுத்து என் பது பொருளாகும். எழுத்துப்பலகை எனலாம். அப்கலகையில் பிள்ளைகள் மனனம் செய்யக்கூடிய விடயங்களை லெப்பைமார் கள் எழுதிக் கொடுப்பதுடன் அதிலேயே பிள்ளைசளும் எழுதிப் பழகுவார்கள். பெரிய பலகைகளில் பிள்ளைகளுக்குரிய பாடங் களை எழுதிக் கொடுத்து ஒதச்செய்வார்கள். திருக்குர்ஆனின் பல வசனங்களையும் எழுதக்கூடிய பெரிய பலகைகளும் இருந் தன. ஆரம்பத்தில் அறபி அரிச்சுவடியும், பின்பு எழுத்துக்களுக்கு குறியீடுகளையிட்டு உச்சரிக்கும் எழுத்துக்களும், அதன் பின்பு அவ்வெழுத்துக்களை சொல் வடிவில் சேர்த்து எழுதி வாசிக்கும் முறையும் கற்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து குர்ஆன் வாக்கி யங்கள் கற்றுக் கொடுக்கப்படும். அதே நேரம் ப்டிப்படியாக

Page 150
26 புத்தளம் வரலாறும் மரபுகளும்
தொழுகைக்கு வேண்டிய ஒதல்களும் மெளலுாது, றாத்தீபு, பைத்துக்கள் ப்ோன்ற அறபுப் பாக்களும் போதிக்கப்படும். இவை யாவும் பலகைகளில் எழுதியே கற்பிக்கப்பட்டன. அறபு வசனங் களை நன்கு வ்ாசித்துப் பழகிய பின்பு தமிழ் உச்சரிப்புக்குரிய மேலதிக குறிப்பீடுகளுடன் கூடிய அறபுத் தமிழ் வாசிப்பு பயிற்று விக்கப்படும், கலீமாக்கள், அறபு பைத்துக்கள், மெளலூதுகள் போன்றவற்றை ஏற்கனவே மனனஞ் செய்தவர்களைக்கொண்டு உரத்த சத்தத்துடன் சொல்லிக் கொடுக்க, பிள்ளைகள் திரும்பத் திரும்பக் கூறி மனனஞ் செய்வார்கள். மனனஞ் செய்யும் வன்மை அன்று நன்கு வளர்ச்சி பெற்றிருந்ததெனக் கூறவேண்டும். குர் ஆனையும் மனனம் செய்யும் பழக்கமும் இருந்தது. அறபுத் தமிழை வாசிக்கக் கூடிய பக்குவத்தை அடைந்தபின் தஜ்விது" எனப்படும் உச்சரிப்பு முறைத் தொகுப்புப் பாடமொன்று எழு திக் கொடுத்து பயிற்றுவிக்கப்படும். அதன் பின்பு கீழ்வரும் அறபுத் தமிழ் வசனத் தொடர் எழுதிக்கொடுப்பது மரபாகும்.
"எங்கள் நெய்னார் முஹம்மது நபி மக்கத்திலே பிறந்து மதீனாவிலே ஒபாத்தாகி அடங்கப்பட்டார்கள். அவர்களின் தாயார் பெயர் ஆமீனா உம்மா. தகப்பனார் பெயர் அப்துல்லா. பாட்டனார் பெயர் அப்துல் முனாபு. முப்பாட் டனார் பெயர் ஹாஷிம்"
இதன்பின்பே, "அவூது","பிஸ்மி"யுடன் சூறத்துல் பாத்திஹா --குர்ஆனின் தோற்றுவாய் வசனங்கள் முதலில் எழுதிக் கொடுக் கப்பட்டு குர்ஆனை ஆரம்பித்து வைப்பர். பின்பு குர்ஆனின் முப் பதாம் பாகத்தின் கடைசியிலுள்ள சிறு சிறு அத்தியாயங்களிலி ருந்து படிப்படியாக பாடங்கள் தொடர்ந்து நடைபெறும். தொழுகை அடைவு, தக்க சூறத்து போன்றவற்றைக் கற்பிப்ப துடன் பெண் பிள்ளைகளுக்கு தலைப் பாத்திஹா, பெண்புத்தி மாலை போன்ற நூல்களையும் படித்துக் கொடுப்பர். குர்ஆன் அச்சுப்பிரதிகள் பரவலாக வெளியாவதற்கு முன்பு கையினால் எழுதப்பட்ட குர்ஆன்கள் ஓதுவதற்காகப் பாவிக்கப்பட்டன. அழகாக அச்சுக் கோர்த்தது போல எழுதும் கைவன்மை வரப் பெற்ற எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். எழுதுகோலாக பன் சூர் மரக்குச்சிகளையும், மையாக ஹிப்றுல் அறப் என்ற கருஞ் சாயத்தையும் பாவித்தனர். குர்ஆனின் முதல் கடைசிப் பக்கங்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 262
களையும், பாகங்களின் ஆரம்பப் பக்கங்களையும் அழகிய அலங் காரச் சித்திரங்களைக் கொண்டு அலங்கரிக்கும் முறைகளும் இடம்பெற்றன. நூல்களை நீண்டகாலம் பருவிக்கக் கூடியவாறு தோலாலும், தடித்த மட்டைத் தாள்களினாலும் அட்டைகள் இட்டு அவ்வட்டைகளை அலங்காரச் சித்திரங்களைக் கொண்டு அலங்கரிக்கும் முறைகளும் நிலவின. நூல்களின் தாள்களை ஒன்று சேர்த்து உறுதியாக இறுக்கமாகக் கட்டும் வல்லுநர்களும் இருந்தனர். இதை "ஜில்து கட்டுதல் எனக் கூறப்படும்.
ஒதும் பள்ளிகளில் கற்கும் பிள்ளைகள் ஒவ்வொரு தரத்தி லும் புதுப் பாடங்கள் ஆரம்பிக்கும்போது லெப்பைக்கு பணம் அன்பளிப்பது போல ஏனைய பள்ளிப் பிள்ளைகட்கும் உணவுப் பண்டங்கள், பழவகைகள் பகிர்ந்தளிப்பர். விசேடமாக குர்ஆன் ஆரம்பிக்கும்போது இது நடைபெறும். இரு பெருநாட்களின் முன்புள்ள நாட்களில் பள்ளிப் பிள்ளைகள் பைத்துக்கள்-பாடல் களைப் பாடிக்கொண்டு ஊர்வலம் செல்லும் வழக்கமும் இருந் தது. இதை 'ஹம்சு சொல்லுதல் என அழைப்பர். இதற்காகப் பள்ளிகளில் பல நாட்கள் பயிற்சிகள் நடைபெறும் பிள்ளைகள் யாவரும் தங்களின் பெருநாள் உடுப்புக்களை அணிந்து கொண்டு பெருநாள் தினத்துக்கு ஓரிரு நாளுக்கு முன்பு ஊர்வலமாக 'தக் பீர் முழக்கத்துடன் பைத்துக்களையும் பாடிக்கொண்டு பள்ளி யில் கற்கும் எல்லா பிள்ளைகளினதும் வீடுகட்டும் விஜயம் செய் வார்கள். ஏற்கனவே பயிற்சியளித்திருக்கும் விசேட கம்ஸை" அங்கே இசைப்பார்கள். முன்னே நிற்கும் பிள்ளைகள் முதலில் பாடமற்றவர்களும் அதைப் பாடுவார்கள். அநுபல்லவிகளை முன்னிற்போர் பாடுவதும் பல்லவியை கூட்டாக ஏனையவர் பாடு வதும் வழக்கமாகும் அந்தப்பாடல்களில் இறைத் துதியும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும், தொடர்ந்தோர் மீதும் ஸல வாத்துக்களும், து ஆக்களும்-பிரார்த்தனைகளும் விசேடமாக பள்ளி லெப்பைமாரின் வேண்டுதலும், தமது கஷ்டமான வாழ்வைக் கூறி பண உதவி கோருவதும் அடங்குவதுண்டு. ஒவ் வொரு வீட்டிலிருந்தும் அவ்வீட்டிலுள்ளோரின் தரத்திற்கேற்ப பணம் அளிக்கப்படும். அப்பணத்தை அக்குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்லும் சட்டாம்பிள்ளை சேகரித்து, யார் யார் எவ் வளவு பணம் தந்தார்கள் என்ற விவரத்துடன் கம்சு ஊர்வலத் தின் முடிவில் லெப்பையிடம் பாரங்கொடுப்பர். வீடுகளில்

Page 151
26s புத்தளம் வரலாறும், மரபுகளும்
பிள்ளைகளுக்கு தாக சாந்தி அளிப்பதற்காகப் பானங்கள் வழங் குவதுமுண்டு வாரத்தின் ஐந்தாம் நாளில் லெப்பைக்கு கொடுக் கப்பட்ட பணம் "கம்ஸ் காசு" என வழங்கப்பட்டதென ஏற் கனவே கூறப்பட்டது. பெருநாள் தினங்கட்காக லெப்பைக்காக அறவிடும் பணத்தையும் "கம்ஸ் காசு" எனக் குறிப்பிட்டு அக்காசு அறவிடும் ஊர்வலத்தையும் கம்ஸ் சொல்லுதல் என வழங்கினர்.
படிமுறையாக அறபு வரி வடிவங்களை அச்சிடும் அச்சுப் பொறிகள் பாவனைக்கு வந்த பின்பு திருக்குர்ஆனும், அறபுத் தமிழ் நூல்களும் அச்சுப் பிரதிசளாக வெளிவரத் தொடங்கிய போது பலகைகளின் மூலம் எழுதிக் கற்பிக்கும் முறை ஆரம்ப படி மாணவர்கட்கு மட்டும் வழக்கத்திலிருந்தது. சமீப காலத்திலி ருந்து படிப்படியாக பலசையின் பாவிப்பு மறைந்து வந்துள்ளது ஆயினும் இன்றும் சில ஒதும் பள்ளிகளில் பண்டைய பலகை முறைக்கல்வி நடந்து வருவதைக் காண்கின்றோம். குர்ஆனை யும் வேறு சமய நூல்களையும் பள்ளிக்கு சுமந்து செல்வதற்கு ஒலையிலான பெட்டிகள் உபயோகிக்கப் பட்டன. தலையில் வைத்து சுமந்து செல்வதையே அருளாகக் கருதினர். இப்பெட் டிகளை "முஸாயிபுப் பெட்டிகள்" எனக் குறித்தனர். "முஸ்ஹப்" என்பது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆன் வைக்கும் பெட்டி எனப் பொருள்படஅவ்வாறு அழைத்தனர்.
t
இவ்வோதும் பள்ளிகளின் கல்வி முறை எங்ங்ணம் இருந்தது என்பதை நோக்குவோம். பிள்ளைகள் ஒருநாளில் மூன்று முறை ஒதப்போவார்கள். அவற்றை காலம்பறப் பள்ளி (காலை நேரப் பள்ளி) உச்சிப் பள்ளி (உச்சி வேளைப் பள்ளி) அந்திப் பள்ளி எனக் குறிப்பிடுவர். அதிகாலை நிலம் வெளுத்த வேளை தொடங்கி காலை எட்டு அல்லது ஒன்பது மணிவரை நடைபெறு வது காலைப்பள்ளி. முற்பகல் பத்து மணி மட்டிலிருந்து லுஹரி வேளை வரை நடைபெறுவது உச்சிப் பள்ளி. பிற்பகல் இரண்டு மணி மட்டிலிருந்து ஐந்தாறு மணிவரை நடைப்ெறுவது அந்திப் பள்ளியாகும். சனிக்கிழமையை முதல் நாளாகக் கொண்டு வியா ழன் வரை வாரத்தில் ஆறு தினம் பள்ளி நடைபெறும். வியாழன் அன்று மாலைப்பள்ளி நடைபெறாது. வெள்ளிக்கிழமை முழு நாள் விடுமுறையாகும்.
மாணவர்கள் லெப்பைமார்களுக்கு முற்றும் அடிபணிந்து மிகவும் பய பக்தியுடன் கற்றலில் ஈடுபடுவர். அன்று கடுமை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 264
Y
யான தண்டனை முறைகளிருந்தன. பிரம்படித் தண்டனை கள், தாராளமாக வழங்கப்பட்டன. பாடந்தராத அல்லது பள்ளிக்கு வராத அல்லது குழப்பம் செய்யும் பிள்ளைகளை பள்ளியிலே "துலங்கக் கட்டை" என்ற பொறியில் பூட்டி வைத்து நீரோ, உணவோ கொடாது காலை முதல் மாலை வரை அழுதழுது கண்ணிர் வழிய பள்ளியில் வைத்திருப்பது சாதாரண தண்டனையாக இருந்துள்ளது. துலங்கக் கட்டை என்பது இருந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ கால் கள் இரண்டையும் பாரமான இருபாதி மரத்தின் துளைகளி லிட்டு சங்கிலியால் பிணைத்து பூட்டி விடுவதாகும். லெப்பை மார்கள் வழங்கும் தண்டனைகளுக்கு பெற்றார் ஆட்சேபனை தெரிவிப்பது மிக மிக அரிதாகவே இருந்தது. பிள்ளைகளை எதிர்காலத்தில் நல்லவர்களாகத் திகழச் செய்வதற்கு இத்தண் டனை முறைகள் அவசியந்தான் என பெற்றார்கள் உடன்பட் டனர். குழப்படி செய்யும் பிள்ளைகளை இழுத்து வந்து லெப்பைமாரின் முன்னிலையில் விட்டு “இவனுடைய கண்ணை மட்டும் வைத்து விட்டு மற்ற எல்லாவற்றையும் உரித்து விடுங் கள்" என்று ஒப்படைத்துச் செல்லும் பெற்றார்கள் அநேகர். அதனால் பள்ளி லெப்பைமார்க்கு பிள்ளைகள் மிகவும் அஞ்சி னர். வீட்டில் பிள்ளைகள் குழப்பம் செய்தால், "லெப்பை மாமாவிடம் சொல்லிக் கொடுத்து உனக்கு செருப்படி வாங் கித் தருகிறேன்" என்று தாய் தந்தையர் சொன்னால் போதும் பிள்ளைகள் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார்கள்.
பிள்ளைகள் நிலத்தில் அமர்ந்தவாறே உரத்த சத்தத்து டன் உடம்பை முன்னும் பின்னிம் சாய்ந்தாட்டி ஓதுவார்கள். பள்ளியில் கற்றல் நடைபெறும் அளவு மட்டம் சத்தத்தின் உயர்வு தாழ்வைக் கொண்டே கணிக்கப்பட்டது. பெரிய பாடக் காரப் பிள்ளைகள் சின்ன பாடக்கார பிள்ளைகளுக்கு ஒதித் தரும் முறைகளும் பின்பற்றப்பட்டன. ஏனெனில் ஒரு பள்ளி யின் பொறுப்பாளியாக ஒரு ஆசிரியரே இருப்பதனாலேயே கும். திரும்பத் திரும்ப ஒதவைத்தலே கற்பித்தல் முறையா யிருந்தது. இப்பள்ளிகளில் மூன்று வயதில் பத்துப் பன்னி ரண்டு வயது வரையுமுள்ள பிள்ளைகள் ஆண்களும், பெண்

Page 152
265 புத்தளம் வரலாறும், மரபுகளும்
களுமாக கலந்து ஓதினார்கள் இவ்வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளும் தொடர்ந்து "தப்ளிர்" போன்ற குர்ஆன் விரி வுரைப் பாடங்களையும் காற்றனர்.
ஒதும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போதும் அறபு அட்சரங்களை அறிந்து பின்பு திருக்குர்ஆனை ஆரம்பிக் கும் போதும், திருக்குர்ஆனின் ஒவ்வொரு பாகங்களையும் முடித்து புதிய பாகங்களை ஆரம்பிக்கும் போதும் குறித்த பிள்ளைகள் லெப்பைமார்களுக்கு தட்சணையாகப் பணமும், பொருளும் அளிப்பதுடன் சக மாணவர்க்கு இனிப்பு, பழவகை கள், பாற்சோறு, சோறு போன்றவற்றையும் பகிர்வது வழக் காயிருந்தது. செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் லெப்பைமா ருக்கு உடுப்புகளும் வழங்குவர்.
இவ்வகையாக் ஒதுகிற பள்ளிகளில் கற்று முடிந்தவர்கள் வசதியிருப்பின் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அங்குள்ள அறபி மத்ரஸாக்களில் ஏழெட்டு வருடங்கள் கற்று மெளலவி என்ற பட்டம் பெற்று திரும்புவர். எனினும் அவர்கள் திரும் பியதும் லெப்பைத் தொழில் புரிவது மிகவும் அரிதாகவே இருந்தது.
முன்பு அறபுத் தமிழ் மூலமாகவே எழுதி வாசிக்கும் முறை இருந்து வந்தமையை அறிகின்றோம். கடிதப் போக்கு வரத்து, ஒப்பந்தப் பத்திரங்கள், உறுதிச் சீட்டுகள் கடைகளில் பொருள் வாங்குவதற்குரிய சிட்டை - பேரேடு கணக்கு விபரங் கள், சலவைத்துணிக் குறிப்புக்கள், டைரிக் குறிப்புகள், ஏனைய எழுத்துக் கருமங்கள் யாவும் அறபுத் தமிழிலேயே முஸ்லிம்களிடையே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. கற்றவர்கள் தமது கையொப்பங்களை அறயிலேயோ அல்லது அறபித் தமிழிலேயோ இட்டனர்.
காலஞ்செல்லச் செல்ல தமிழ் மொழி தெரிந்த தென்னிந் திய முஸ்லிம்கள் குறிப்பாக வியாபார நோக்கமாக இங்கு வந்தபோது தங்களின் கொடுக்கல், வாங்கல் கணக்கு வழக்கு களைத் தமிழில் பதிய வைக்கும் நிலையிலிருந்தனர். அதைப் பின்பற்றி செல்வந்தர்கள் தமது கணக்கு வழக்குகளைப் பார்ப்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 366
பதற்கு தமிழ் தெரிந்த கணக்குப்பிள்ளைகளை இந்திய முஸ் லிம்களிடமிருந்து தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம் கடைகளிலிருந்த உள்ளூர்க்காரர்கள் அந்தக் கணக்கு வழக்குகளை காலகெதியில் தாங்களும் பழகி கணக்கு வழக்குகளை எழுதக் கூடிய கணக்குப் பிள்ளைகளாக மாறி னர். அதே நேரம் தமிழ் தெரிந்த ஒரு சில பேர் தமது வீடு களில் திண்ணைப் பள்ளிக் கூடங்களை வைத்து எழுத்து, வாசிப்பு, எண் போன்ற பாடங்களைக் கற்பித்தனர். இவை விறாந்தைப் பள்ளிக் கூடங்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அப்போதனைகள் அதிகமாக நிலத்தில் கை விரல்களினால் எழுதுவதைக் கொண்டு நடைபெற்றன. நல்ல பரிச்சயம்பட்ட அழகிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் பனையோலை தளப்பத்து ஒலை என்பவற்றில் எழுத்தாணியால் எழுதியும் படித்தனர். இவ்வாறானவர்கள் மிகவும் சொற்பமாகவே இருந் தனர். இதனையே "ஏட்டுக் கல்வி என்பர். எண் பாடங்கள் வாய்ப்பாடுகளாக மனனம் செய்யக் கூடிய முறையில் கற்பிக்கப் பட்டன. அவைகள் மனனம் செய்யக் கூடிய முறையில் செய்யுள் வடிவாக இருந்துமுள்ளது. பொதுவாக கல்வியின் பெரும்பங்கு மனனஞ்செய்தலையே அடிப்படையாகக் கொண்டதாகும்.
இத்தகைய திண்ணைப் பள்ளிக்கூடமொன்று புத்தளத்தில் அன்று "படுக்குப்பத்து வாடி" என்றழைக்கப்பட்ட நான்காம் குறுக்குத்தெருவில் நடைபெற்றதாக அறிகின்றோம். அப்பள்ளிக் கூடத்தை "கந்தக் குப்பை அப்பா" என்று அழைக்கப்பட்ட தமிழ் மூதறிஞர் தமது வீட்டில் நடாத்தி வந்துள்ளார்.
வைத்தியத் தொழிலில் ஈடுபட்டோர் ஒலையாலான ஏடு களில் பதிவுகளைச் செய்து தமது மருத்துவ முறைகளை பரம் பரை பரம்பரையாகப் பாதுகாத்தனர். வணிகர்கள் தமது கடைக் கணக்குகளையும், செல்வந்தர்கள் தமது நில புலன் களின் உரிமைச் சான்றுகளையும் ஒலை ஏடுகளில் பதிவு செய்துள் ளார்கள் என அறிகின்றோம். ஒலையில் பதியும் எழுத்தாளர் கள் அன்று பெருமதிப்புடன் தமது தொழிலைச் செய்தனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் மக்களாகவே இருந்தனர். அத் துடன் தென்னிந்திய வியாபாரிகளின் வரவும் குறிப்பாக செட்டி மார்களின் வரவும் புத்தளம் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு பெரி தும் உதவியுள்ளன. அத்துடன் அரசாங்க அனுமதியுடன் நில

Page 153
267 புத்தளம் வரலாறும், மரபுகளும்
புலன்களின் உரிமையைப் பதிய வைக்கும் நொத்தாரிஸ்மாரி களின் வருகையும் தமிழ் மொழியின் நடைமுறையை, அவசி யத்தை அதிகமாக்கின. ஒல்லாந்தர் காலத்திலிருந்து நொத்தா ரிஸ்மார்களால் எழுதப்பட்ட நில உரிமைச் சீட்டுக்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் திண் னைப் பள்ளிக்கூடங்களில் கற்றுத் தேர்ந்தவர்கள் பின்பு இங்கு வந்த தமிழ் நொத்தாரிஸ்மார்களின் இலிகிதர்களாகப் பணியாற் றியமையையும் அறிகின்றோம். நொத்தாரிஸ்மார்களில் உள் ளூர்க்காரர்கள் ஒரிருவர் இருந்துள்ளனர்.
முஸ்லிம்கள் தமது இஸ்லாமிய சமயக் கல்விக்கு முக்கியத் துவம் அளித்ததைப்போன்று பொதுக்கல்விக்கு இடமளிக்க வில்லை. சமயக் கல்வியைத் தவிர்ந்த ஏனைய கல்விகள் தங்களை இஸ்லாமிய வழிமுறை கிளிலிருந்து வழி கெடுத்து விடும் என நம்பினர். போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சியாளர் கள் மக்கட்கு பல சலுகைகளை அளித்து ஏனைய சமூக மக்களை தம்பால் ஈர்த்தமை போன்று இஸ்லாமிய மக்களை அவர்களால் கவர முடியவில்லை. மாறாக தங்களின் சமயத்தினதும், வணிக சம்பாத்தியனதும், ஆதிக்கத்தினதும். பரம விரோதிகளாக முஸ்லிம்களை அவர்கள் கருதினர். ஏனைய சமய மக்கள் தமது சமயங்களைவிட்டு கிறித்தவ மதத்துக்குப் பரவவாக வந்தமை போன்று முஸ்லிம்களிலிருந்து சிறு தொகையினரையேனும் மத மாற்றம் செய்ய அவர்களால் முடியவில்லை. எதையும் இழக்கத் தயாராயினும் தமது சமயத்தை-சமயப் பாரம்பரியத்தை இழக் கவோ அல்லது பிறரால் அழிபடுவதைப் பார்த்துக் கொண்டிருக் கவோ முஸ்லிம்களால் சகிக்க முடிவதில்லை. இத்தகைய நிலை யில் முஸ்லிம்களைத் தம்பால் ஈர்க்க எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியடைவதைக்கண்டு அவர்கள் மனங்குமுறி 6.srpř.
உதாரணத்துக்காக பின்வரும் குறிப்பை எடுத்துக் காட்ட aAy trub:
*பாடசாலைகளை நிறுவிய பிரதான நோக்கத்தைப்பற்றித் தேசாதிபதி மாட்செளக்கர் பின்வருமாறு கூறியுள்ளார்:- இம் மாவட்டங்களில் நாம் ஒரு சில பாடசாலைகளை நிறுவியுள்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 268
ளோம். இந்நாட்டு மக்களிடையே கிறித்தவ மதக் கொள்கை யைப் பரப்புவதும், கடவுளின் மகிமையைப் போற்றுவதும். ஏழைகளின் ஆன்ம ஈடேற்றத்திற்குச் சேவை செய்வதும். புறச் சமயங்களை வேரோடு அழித்து, நாட்டில் நச்சு நோய் போற்பரவி வரும் இஸ்லாமிய வேதப் புரட்டைத் தடுப்பதுமே எம்முடைய நோக்கங்களாகும். "" ( (22)-பக்கம் 369 )
இக்கூற்றிலிருந்து பின்வரும் மூன்று அம்சத்தை நாம் ஊகிக்க Gavinth
* இஸ்லாமியர்களை மதமாற்றம் செய்ய அவர்களால்
முடியாதிருந்தமை.
iர். தமது மதமாற்றம் பிரசார வேலைகட்கு முட்டுக்கட் டையாக இருப்பது முஸ்லிம்களும், அவர்களின் சமய மான இஸ்லாமுமென்பது.
iர். இஸ்லாம் தானாகவே நாடெங்கும் விரைவாக பரவி
வருகினறமை.
இச்சூழ் நிலையில் முஸ்லிம்கள் தமது தனித்துவமான இஸ் லாமிய சமுதாய அமைப்பின் கீழ் நிறுவி, நிர்வகித்து வரும் தனி யார் முஸ்லிம் பாடசாலைகளுக்கே தமது பிள்ளைகளை அனுப் பினரேயொழிய தமது பிள்ளைகளை வழி கெடுக்கவும், மதமாற் றம் செய்யவும் அமைக்கப்பட்டதாக எண்ணக் கூடிய பிற மதச் செல்வாக்கிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்பவே யில்லை. இதனால் முஸ்லிம் சமூகத்தின் பொதுக்கல்வி பின் தள் ளப்பட்டது. ஏனைய சமூகத்தினர் கல்வியில் வளர்ச்சிடைந்த வேகத்துடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கினர்.
போர்த்துக்கேய, ஒல்லாந்தரின் ஆட்சிக் காலங்களில் கோயில் பற்றுப் பாடசாலைகள் இப்பகுதியில் சில இருந்தன. இப்பாடசாலைகள் சிலாபத்திலிருந்த மதபீடத்தினால் மேற் பார்வை செய்யப்பட்டன. புத்தளம், கட்டைக்கர்டு, நாவற் காடு, தேத்தாப்பளை, நரக் களி, கற்பிட்டி ஆகிய இடங்களி லுள்ள பாடசாலைகள் பழைமை வாய்ந்தவையாகும். இவை களில் தமிழ் மூலம் கற்பித்தல் நடைபெற்றன. இதைத்

Page 154
269 புத்தளம் வரலாறும், மரபுகளும்
தொடர்ந்து புத்தளம், திசழி, கற்பிட்டி, புழுதிவயல் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் தனிப்பட்ட முஹம்மதிய பாடசாலை கள் நிறுவப்பட்டன. அவற்றில் சிறு அளவில் தமிழும், பெருமள வில் அறபும், மத பாடங்களும் நடைபெற்றன. ஆயினும் கிறித் தவப் பாடசாலைகளைப்போல ஒழுங்குபடுத்தப்பட்ட மேற் பார்வை முறை, கல்வி முறை இருந்ததாகத் தெரியவில்லை.
புத்தளத்திலிருந்த பழைய பாடசாலைகள் எனக் குறிப் பிடக் கூடியவை புத்தளம் செட்டித் தெருவில் அமைந்திருந்த சென்ற் அன்ரூஸ் ஆண்கள் பாடசாலையும், சேனைக்குடியிருப் பில் இருந்த சென்ற் மேரிஸ் பாடசாலையும் எனலாம். அவற்றிற் குச் சிறிது பிந்திய காலத்தில் சேனைக் குடியிருப்பு சிங்களப் பாடசாலையும், புத்தளம் அநுராதப்புரப் பாதையில் சென்ற் ஆன்ஸ் பெண்கள் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாட சாலைகட்கு ஆரம்பத்தில் முஸ்லிம் பிள்ளைகள் செல்லவில்லை. எனினும் 1880ம் ஆண்டளவில் முஸ்லிம்களிடையே வாழ்ந்த சில எழுச்சியுள்ள முஸ்லிம் அறிஞர்கள் தமது சமூகத்தில் ஒதுங்கியிருக் கும் பிற்போக்குத் தன்மையையும் எதிர்கால அபாயங்களையும் சுட்டிக்காட்டி பரந்த அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது அவை புத்தளத்திலும் எதிரொலித்தன இதற்கு மத அறிஞர்களிடையேயிருந்து பலத்த எதிர்ப்புகள் எழும்பினவாயி னும் பொதுக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த செல்வந் தர்களின் பிள்ளைகளிற் சிலர் பிற மதப் பாடசாலைகட்குச் சென்றனர்.
செல்வந்தரல்லாத ஏழைப் பிள்ளைகளின் கல்வி மிகவும் பின்னடைந்தது. அவர்கள் தனிப்பட்ட முஹம்மதிய பாட சாலைகள் எனப்படும் பாடசாலைகட்கு சென்றனர். இவைகள் பின்பு தன்னிச்சைப் பிரகாரம் அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. புத்தளம் மாவட்டத்தில் முதலாவதாகத் தொடங்கப்பட்ட அரசின் தமிழ்ப் பாடசாலை கரைத்தீவுக் கிராமத்திலுள்ளதெனத் தெரிகின்றது. புத்தளம், கடையா மோட்டை, பள்ளிவாசல்துறை, மதவாக்குளம், புளிச்சாக் குளம், உடப்பு ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளும் படிப் படியாக தொடக்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசினர் பாட

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 270
சாலைகளெனலாம். இவைகள் 1920ம் ஆண்டிற்கும், 1925ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நிறுவப்பட்டவை யாகும்,
இப்பகுதியின் பொதுக் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் றோமன் கத்தோலிக்க மிஷனரி செய்த சேகைள் குறிப்பிடத் தக்கனவாகும். தமது சமயத் தையே கருவாகக் கொண்டு அவர்களின் கல்விப போதனை அமைந்திருப்பினும் ஏனைய சமயத்தவர்களும் அவர்களின் கல்வி நிலையங்கள் மூலம் பயன் பெற்றமையை மறுக்க முடி யாது. மிஷனரிப் கல்வி நிலையங்களைப் பின்பற்றியே முஸ் லிம்களின் தனிப்பட்ட பாடசாலைகளும், அரசினர் பாட சாலைகளும் இப்பகுதியில் தோன்றின. குறிப்பாக இப்பகுதி யில் பெரும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களின் கல்வி முன் னேற்றத்திற்கு புத்தளத்திலும், கற்பிட்டியிலும் தோன்றிய பல அமைப்புக்கள் தம் பங்களிப்பினை நல்கியுள்ளமையைக் காண்கின்றோம். அவற்றுள் பின்வரும் அமைப்புக்களைக் குறிப்பாக சுட்டிக் காட்டலாம். அவைகளின் சில மறைந்து போன அமைப்புக்களாகும். புத்தளம் முஸ்லிம் வாலிபர் சங் கம், புத்தளம் ஜன ஆசார சங்கம் எனத் தமிழில் அழைக் கப்பட்ட புத்தளம் சோஷல் சேர்விஸ் லீக், புத்தளம் மாகாண முஸ்லிம் லீக், புத்தளம் முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம். அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க புத்தளம் மாவட்டக்கிளை, புத்தளம் டவுன் டெவலப்மென்ற் சொஸைட்டி, புத்தளம் இஸ்லாமிய முன்னணி இயக்கம், புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்+ம், கற்பிட்டி கல்விச் சபை, புத்தளம் ஜமா அத்தே இஸ்லாமி இயக்கம், அஹதியா இயக்கம் என் பவைகளே அவைகள். ஹிந்து போர்ட்" என்றழைக்கப்படும் இலங்கை இந்து கல்வி அமைப்பும் இப்பகுதியில் சில இந்து சமயப் பாடசாலைகளை நிறுவியமையையும் கூறலாம். அரசு ரீதியாக புத்தளம் லோக்கல் போர்ட், கல் பிட்டி சுகாதார சபை, புத்தளம் உள்ளூர் மாவட்ட சபை, புத்தளம் நகர சபை, கல்பிட்டி பட்டின சபை, புத்தளம், பொன்பரப்பி, உடப்பு, கற்பிட்டி கிராமசபைகளும் கல்விக்காகச் செய்துள்ள தொண்டுகளை அறிந்து நினைவு கூரல் வேண்டும். கடந்த காலங்களில் புத்தளம் பாராளுமன்ற, மகாண, பிரதேச சபை

Page 155
37 புத்தளம் வரலாறும், மரபுகளும்
களின் பிரதிநிதிகளும் இப்பகுதியின் கல்வி அபிவிருத்திக்காகச் செய்த சேவைகள் அவை பெரியனவாயினும், சிறியனவ"யி னும் பாராட்டப்பட வேண்டியவைகளேயாகும். r
புத்தளம் கல்வி நிலைபற்றி பின்வரும் குறிப்புக்கள் நமக்கு ஒருவாறு புரிய வைக்கின்றன.
1907ம் ஆண்டில் புத்தளம் உதவி அரசாங்க அதிபரின் கூற்று பின்வருமாறு:
"புத்தளம் பற்றிலும், கற்பிட்டிப் பகுதியிலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலைகள் பன்னிரண்டும், சில முஸ்லிம் பாடசாலைகளுமுள்ளன. அப்பாடசாலைகளி லேவே இப்பகுதியின் கல்வி தங்கியுள்ளது"
1913ம் ஆண்டில் புத்தளம் உதவி அரசாங்க அதிடீர் பின்வரூ
orp Gaffrów6łu Girstrii,
*"புத்தளம் மாவட்டத்தில் 1383 நபர்களுக்கொரு பாட சாலையும் சிலாப மாவட்டத்தில் 1056 நபர்களுக் கொரு பாடசாலையும் இருக்கின்றது. இரு மாவட்டத் திலும் போதிய பாடசாலைகளிருப்பினும் புத்தளம், கற்பிட்டிப் பற்றுக்களின் நிலை வேறுபட்டது. முஸ் லிம்களே வசிக்கும் இப்பிரதேசங்களில் கற்பிட்டியிலும் புத்தளத்திலும் அரசாங்கப் பாடசாலைகள் அமைத்தல் வேண்டும்.""
1914ம் ஆண்டின் அறிக்கையில், "புத்தளம் மர்வட்டத்தி லுள்ள பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள் முப்பத் தொன்றில் எட்டு அரசினர் பாடசாலையாகும். முஸ் லிம் பிள்ளைகளின் கல்வி அநேகமாக உள்ளிவாசல் களோடொட்டிய பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது:
புத்தளம் உதவி அரசாங்க அதிபர் மேலும் எழுதினார்:
" "புத்தளம் நகரத்தில் வசிப்போர் முஸ்லிம்களே. அங்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 272
குள்ள பாடசாலைகளில் போதிய இடவசதியில்லை. பல நூற்றுக் கணக்கான பிள்ளைகட்கு இடவசதி செய் தாக வேண்டும். கல்விப் பணிப்பாளர் ஒரு பாடசாலை யையும், அதற்குரிய தளபாடங்களையும் தர சம்மதித் துள்ளார் ஆனால் அதற்கு புத்தளம் மக்கள் இடத்தை யும், கட்டடத்தையும் அமைத்துத்தர்ல் வேண்டும். இதற்கு ஊரவர் சம்மதமளித்தனர். 1916-11-29 அன்று கல்விப் பணிப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்தது. கட்டடம் கட்டுவதற்கு ரூபா 9000/- தர ஊரார் வாக்களித்தனர். இத்தொகை போதா தாயின் மேலும் தர உறுதியளித்தனர். அரசின் பிரதிநிதிகள் இதை மகிழ்வுடன் ஏற்றனர். கூடிய விரைவில் அரசினரின் இணக்கத்துடன் இடத்தைத் தெரிவு செய்து கட்டடம் அமைக்கப்படும்."
1920ம் ஆண்டின் குறிப்பில் உதவி அரசாங்க அதிபர், ". அங் குள்ள (புத்தளத்தில்) முஸ்லிம்கள் 795 ரூபாவைத் திரட்டி கச்சேரியில் கட்டியுள்ளனர். மேலும் 1805 ரூபாவைத் தருவதாக வாக் சளித்துள்ளனர். இப்பணம் இன்னும் சேகரிக்கப்படவில்லை. இடம் தெரிவு செய் யப்படடுவிட்டது. ஊரவரின் மீதிப் பணமும், பணிப் பாளரின் விசேட நன்கொடையும் வந்து சேரும்" எனக் கூறியுள்ளார்.
1926ம் ஆண்டின் அறிக்கையில் அவர் கூறுவதாவது:
"புத்தளம் மாவட்டத்தில் அரசின் பாடசாலைகள் பன்னிரண்டும், தனியார் பாடசாலைகள் இருபத் தெட்டும் உள்ளன. புத்தளத்தில் அரசினர் பாட சாலையொன்று அயசியம் தேவைப்படுகின்றது. அங் குள்ள முஸ்லிம்கள் 10990 ரூபாவை அறவிட்டு வைத் திருக்கிறார்கள். அரசினர் 5000 ரூபாவை அளித்துள் ளனர். 500 பிள்ளைகளுக்குப் போதுமான பாடசாலை யொன்று கட்டப்பட்டு வருகின்றது. "
மேற்குறிப்பிட்ட அறிக்கையில் குறிப்பிடும் பாடசாலை புத்தளம் போல்ஸ் வீதியில் அமைக்கப்பட்ட புத்தளம் அரசி

Page 156
27s புத்தளம் வரலாறும் மரபுகளும்
னர் ஆண்கள் பாடசாலையாகும். இதன் முதல் ஆசானாக எனது மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய ஆசிரியர் மறைந்த திரு. என். ஜே. அல்பிறட் அவர்கள் அரசினரால் நிய மிக்கப்பட்டு அருந் தொண்டாற்றினார்கள், என்பது குறிப் பிடத்தக்கது. அவர்களின் பரந்த மனப்பான்மையின் காரண மாகவே புத்தளத்தில் ஆரம்ப ஆசிரியர்கள், ஏனைய அரசாங்க ஊழியர்கள் உருவானார்கள் என்பதைக் கூறாதிருக்க முடி யாது. 1962-02-01ம் திகதியிலிருந்து அப்பாடசாலை புத்த ளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயமாக இயங்குகின் றது. அங்குள்ள 145 x35 அளவைக் கொண்ட பிரதான கட்டிடமே ஊரவர்களால் அமைக்கப்பட்டு அரசினருக்குக் கையளிக்கப்பட்டதாகும். அக்கட்டிடத்தில் பாடசாலை அதி பருக்குரிய வீடும் இணைத்துக் கட்டப்பட்டது. 1921ம் ஆண் டில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு 1925ம் ஆண்டு வாக்கில் புத்தளம் அரசினர் பெண்கள் பாடசாலை புத்தளம் செட்டித் தெருவில் தற்போது நகரசபையின் தண் ணிர் விநியோகத் தாங்கிக் கோபுரம் அமைந்துள்ள காணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முன்பு "கப்படையார் குளம்" என்ற பெயருள்ள குளமொன்றிருந்தது. 1938ல் புத்தளம் மன்னார் வீதியில் புதிய கட்டடமொன்று கட்டப்பட்டு அங்கு பெண்கள் பாடசாலை மாற்றப்பட்டது. இக் கட்டடத்தில் தற் போது சாகிரா மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு நடை பெற்று வருகின்றது.
1945-1946ம் ஆண்டு வரை புத்தளம் பிரதேசத்தில் உயர் கல்வி பெறக்கூடிய முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமை பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களின் பெருங் குறைபாடாக இருந்தது. செல்வந்தர்களைத் தவிர சாதாரண பொதுமக்கள் கல்வித்துறையில் மிகவும் பின்தங் கினர். இந்நிலைமையில் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு சாகிராக் கல்லூரியின் கிளைக் கல்லூரியும், கற் பிட்டியில் தொடங்கப்பட்ட அல்-அக்ஸா மகா வித்தியாலய மும் முஸ்லிம்களின் கல்வி விழிப்புணர்ச்சிக்கு வழிகோலின 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-அக்ஸா வித்தியாலயத் தின் உயர்ச்சிக்கு காலியைச் சேர்ந்த ஜனாப் A. R. M. அப்துல்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் • 974.
காதிர் ஆற்றிய சேவை அளப்பரியது. கலாசாலை யின் தந்தை என இவர் விவரிக்கப்பட்டார்.
1961ம் ஆண்டு வரை புத்தளத்தில் இருந்த பாடசாலை கள் பின்வருமாறு:
1. சேனைக் குடியிருப்பில் புத்தளம் சென்ற் மேரிஸ்
கலவன் தமிழ்ப் பாடசாலை
2. சேனைக் குடியிருப்பில் புத்தளம் சென்ற் மேரிஸ்
கலவன் சிங்களப் பாடசாலை.
3. புத்தளம் சென்ற் அன்ரூஸ் ஆண்கள் பாடசாலை
4. புத்தளம் சென்ற் ஆன்ஸ் பெண்கள் பாடசாலை:
53 புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலை,
6 புத்தளம் அரசினர் பெண்கள் பாடசாலை,
7. புத்தளம் சாகிராக் கல்லூரி.
இவற்றுள் முதல் நான்கும் கத்தோலிக்கத் திருச்சபையால் நடாத்தப்பட்ட உதவி நன்கொடைபெறும் பாடசாலைகளா கும். கடைசியாகக் காட்டப்பட்ட சாகிராக் கல்லூரி உதவி நன்கொடை பெற்ற தனிப்பட்ட பாடசாலையாகும். இப் பாடசாலைகள் யாவும் அரசின் தனிப்பட்ட பாடசாலைகளின் சுவீகரிப்புத் திட்டத்தின் கீழ் 1962-02-01ம் திகதியிலிருந்து பின்வருமாறு மீளமைக்கப்பட்டு அரசின் பாடசாலைகளாக இயங்கி வருகின்றன.
1. சேனைக் குடியிருப்பு - புத்தளம் சென்ற் மேரிஸ் தமி
மகா வித்தியாலயம்.
2. புத்தளம் சென்ற் அன்ரூஸ் சிங்கள மகா வித்தியாலயம்
3. புத்தளம் ஆனந்த சிங்கள மகா வித்தியாலயம்.

Page 157
275 புத்தளம் வரலாறும், மரபுகளும்
4. புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம்.
5. புத்தளம் சாகிராக் கல்லூரி.
புத்தளம் இந்து வித்தியாலயமும், வெட்டாளை முஸ்லிம் வித்தியாலயமும், தில்லையடி முஸ்லிம் வித்தியாலயமும், மணற்குன்று முஸ்லிம் வித்தியாலயமும் மீளமைப்புக்குப் பின்பு தொடங்கப்பட்ட பாடசாலைகளாகும்.
புத்தளம் முஸ்லிம் மக்களின் சமயக் கல்வியைக் கட்டிக் காத்து வந்த திண்ணைப் பள்ளிக் கூடங்கள் அரசினரின் பாட சாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் கவனத்திலிருந்து படிப்படியாகப் பின் தள்ளப்பட்டன. பிள்ளை களைப் பாடசாலைகளில் சேர்க்கும் வரை அறபு அட்சரங் களை அறிந்து திருக்குர்ஆனின் ஆரம்பப் பகுதிகளை ஒதக் கூடிய தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ளும் இடமாக ஒதும் பள்ளி கள் உபயோகப்படுகின்றன. இப்பள்ளிக்கூடங்கள் பின் தள் ளப்பட்டமைக்குப் பாடசாலைகளில் அறபும், இஸ்லாமும் பாடங்களாகப் போதிக்கப்பட்டமையும் இப்பள்ளிகளின் முக்கி யத்துவத்தைக் குறைத்தன. எனினும் அறபு மொழி, பாடத் திட்டத்திலிருந்து இடைக்காலத்தில் நிறுத்தப்பட்டமையால் பாடசாலைகளில் பிள்ளைகள் சேரும்வரை அறபு எழுத்துக் களை அறியும் ஆரம்பப் பள்ளிகள்ாக மட்டும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
ஒதும் பள்ளிகளில் திறமையுடன் கற்ற மாணவர்கள் வசதி யிருப்பின் மேலும் உயர் கல்வி பெறுவதற்காக இந்திய அறபி மதுரஸாக்களுக்குச் சென்றனர் என முன்பு குறிப்பிட்டோம் சமயத்தில் ஆர்வமிக்க கெட்டிக்கார ஏழைப் பிள்ளைகள் சமய உயர் கல்வியை உள்ளூரில் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. காலத்துக்குக் காலம் புத்தளத்திற்கு விஜயம் செய்த வலிமார்சளும், மார்க்க ஞானிகளும் இக்குறை பாட்டை இங்குள்ள செல்வந்தர்களிடம் சுட்டிக் காட்டி மார்க்கக் கல்வியை ஊட்டக் கூடிய மத்ரஸாக்களை ஏற்படுத் தும்படி வற்புறுத்தினர். மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என்றழைக்கப்பட்ட இமாமுல் அரூஸ் செய்யிது முஹம்மது

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 多76
ஆலிம் வலியுல்லாஹ் அவர்களினதும், அவர்களின் மருமகனார் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களினதும் வழிகாட்டுதல்கள், புத்தளத்தில் மத்ரஸா ஒன்று ஏற்ப்ட வழிவகுத்தன: இலங்கை முஸ்லிம்கள் தங்களுடைய மார்க்க, ஆத்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்படி தமிழக முஸ்லிம் களைக் கேட்டுக் கொள்ளத் தொடங்கினர். அன்று முதல் இலங்கையைத் தமது இரண்டாவது தாயகமாகக் கொண்டு சுமார் அறுபதாண்டு தமது இறுதிக்காலம் வரை தமிழகம், இலங்கை இருபகுதிகளிலுமே சுற்றி வந்து இணையற்ற முறை யில் மார்க்கப் பணி புரிந்தார்கள் மாப்பிள்ளை ஆலிம் அவர் கள். இலங்கைக்கு மாப்பிள்ளை ஆலிம் அவர்கள் சென் றிராவிட்டால் அந்நாட்டின் முஸ்லிம் சமுதாயம் எத்திசை யில் சென்றிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாக வுள்ளது. என்னும் குறிப்புக்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் சமய, ஆத்மிக, கல்வித் தொண்டு 556) er கோடிட்டுக் காட்டுசின்றன.26 பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் இலங்கை, மலாயா, ஜாவா,பர்மா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்கும் மார்க்கப் பணிக்காகச் சென்றதும், தள்ளாத நிலையில் மற்றவர்கள் அவர்களைத் தூக்கிக் கொண்டு சென்ற நிலையிலும் சேவை புரிந்தார்க ளென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பல்லாக்கு வலியுல்லாஹ் கி. பி. 1941 ஆம் ஆண்டில் இவ்வுலகை நீத்தார்கள்."20 மேலே குறிப்பிட்ட மகான்களின் பிரார்த்தனையின் அருளைக் கொண்டு புத்தளத்திலும் அறபி மதுரஸா ஒன்று ஆரம்ப மானது. மாப்பிள்ளை ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் காலம் கி. பி. 1816 தொடக்கம் 1900 ஆம் ஆண்டு வரையி லாகும். இமாமுல் அரூஸ், ஆலிமுல் அரூஸ் என்றெல்லாம் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். வலிகாமம் மதுரஸ்ாவை ஆரம்பித்தவர்களும் அவர்களே. அன்று புத்தளத்தில் இ. செ. மு. என்ற மூன்றெழுத்துடன் அழைக்கப்பட்ட செல்வச் சீமான் களின் குடும்பம் மிக மதிப்புடன் வாழ்ந்து வந்த காலமாகும். அக்குடும்பத்திலே உதித்த அப்துல் ஹமீது மரைக்காயர், இஸ் மாயில் மரைக்காயர் ஆகியோர்களின் மனங்களிலே மதுரஸா அமைக்க வேண்டுமென்ற திர்மானத்தை இறைவன் உருவாக்கி விட்டான். அதன் பிரதிபலனாக இன்றும் "புதுப்பள்ளி" என அழைக்கப்படும் ஐதுரூஸ் பள்ளிவாசலின் வெளித்திண்ணையில்

Page 158
277 புத்தளம் வரலாறும், மரபுகளும்
காஸிமிய்யா அறபிக் கலாசாலை மலர்ந்தது. 1884 ஆம் ஆண்டு இம்மதுரஸா ஆரம்பமானது. ஐதுரூஸ் பள்ளிவாசல் இ.செ.மு. குடும்பத்தில் உதித்த ஐ துரூஸ் மரைக்காயர் அவர்களிளால் கட்டப்பட்டதாகும். இன்று மதுரஸத்துல் காஸிமிய்யா அமைந் துள்ள காணி ஆறு ஏக்கரையும், அதைப் பராமரித்தற்காக முந்தலில் 125 ஏக்கர் தென்னந் தோட்டத்தையும் மர்ஹஅம் இ. செ. மு. முகம்மது காசிம் மரைக்காயர் அவர்கள் "வக்பு" செய்தார்கள். இவர்கள் இன்றைய மதுரஸா முகாமையாளர் ஜனாப். . N. M. முகம்மது காசிம் மரைக்காயரின் பாட்ட னாராவார். அவரின் பெயரைக் கொண்டே “காஸிமிய்யா" பெயர் இம்மதுரஸாவுக்கு சூட்டப்பட்டது. மேலும் இம்மதுர ஸாவுக்காக கரைத் தீவில் 100 ஏக்கர் தென்னந் தோட்டமும், அண்ணாவி சேனை என்னுமிடத்தில் 42 ஏக்கர் தென்னந் தோட்டமும் வக்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1950ம் ஆண்டில் இன்றைய மதுரஸா கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 1957ம் ஆண்டில் இம்மதுரஸா அர சாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. இம் மதுரஸாவிலிருந்து பல நூற்றுக்கணக்கான "உலமாக்கள்" கற்றுத் தேறி பல இடங்களிலும் மார்க்கப் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக் 4து. இம் மதுரஸாவில் தென்னிந்திய உலமாக்களும், இலங்கை உலமாக் ளும் அதிபர்களாசவும் ஆசிரியர்களாகவும் இருந்து சீரிய பணிகளை ஆற்றியுள்ளனர். காயல் பட்டினத் தைச் சேர்ந்த உலமா மிஸ்கீன் ஆலிம் என்பவர்களே இம்மதுர ஸாவின் முதல் அதிபராகும். அதிராம்பட்டணம் யூசுப் ஆலிம் அவர்கள், புத் தளம் மெளலவி சேகு இபுறாகிம் அவர்கள் (சேவறயப்பா ஆலிம்), மெளலவி பாஸில் ஹக்கீமுல் யூனாணி முகம்மது அபூபக்கர் ஆலிம் (சித்தங்குட்டி ஆலிம்), வெலிகம ஹ"ஸைன் ஆலிம அவர்கள், அதிராம் படடினம் பாக்கிர் ஆலிம் அவர்கள், வேலூர் ஹ"ஸைன் ஆலிம் அவர்கள் நிந்த வூர் மெளலவி S. L. M. இஸ்மாயில் ஆலிம் அவர்கள் புத்தளம் மெளலவி அல்ஹாஜ் ஏ. எம். மஹ்மூத் ஹஸ்ரத் அவர்கள், மெளலவி ஏ. எம். செய்கு மதார் அவர்கள் ஆகியோர் இம் மதுரஸாவின் அதிபர்களாகக் கடமை புரிந்தவர்களுள் முக்கிய மானவர்களாகும். இம் மதுரஸாவின் "பொற்காலம்" என வர் ணிக்கப்படக் கூடியது "பெரிய ஹஸ்ரத்" என்று பக்தி சிரத்தை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 278
யோடு யாவராலும் மதிக்கப்பட்டு வந்த மர்ஹஅம் மெளலவி அல்ஹாஜ் மகுமூத் ஹஸ்ரத் அவர்களின் தலைமைத்துவம் இருந்த காலமாகும். அவர்கள் தங்கள் சீவிய காலம் முடியும் வரை இந்த மதுரஸாவுக்காக சேவை புரிவதிலேயே செலவிட் டார்கள், புத்தளத்தில் அண்மைக் காலத்தில வாழ்ந்த ஆத்ம ஞானிகளில், அறிவாளிகளில் முதல்வராக இன்றும் புத்தளம் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகின்றார். இன்று இம்மதுர லாவை "பெரிய ஹஸ்ரத்தின் மகனார் அல்ஹாஜ் அப்துல் லாஹ் ஹஸ்ரத் அவர்கள் பொறுப்பேற்று புதுப் பொலிவுடன் நாடாத்த முயன்று வருகின்றார்கள்.
புத்தளம் காஸிமிய்யாவுக்கு அடுத்த படியாக அண்மைக் காலத்தில் கற்பிட்டி நகரிலும் 'மதுரஸத்துல் றஹ்மானிய்யா" என்ற பெயரில் ஒரு மதுரஸாவை ஆரம்பித்து அங்குள்ள பெருமக்கள் நல்ல முறையில் நடாத்தி வருவதும் ஈண்டு குறிப்பிடக் கூடியதாகும். அதிபர் ஹஸ்ரத் செய்னுல் ஆப்தீன் அவர்கள் செய்து வரும் சேவை மறக்கற்பாலது புத்தளம் பகுதிக்கு ஒதும் திண்ணைப்பள்ளிக்கூடங்களும், மதுரஸாக் களும் செய்து வந்த திருப்பணிகள் மறக்க முடியாதவைகளா கவும், முஸ்லிம்களின் பாரம்பரிய தனித்துவத்தைக் காப்பாற்றி வந்த கேடயங்களாகவும் விளங்கியதை என்றும், எவராலும் மறுத்துரைக்கவும் முடியாது. எத்துணைப் பொதுக் கல்விக் கூடங்கள் ஏற்பட்டாலும் முஸ்லிம்களின் அடி நாதமாக விளங் கும் ஒதும் பள்ளிகளும், மதுரஸா க்களும் அலட்சியம் செய்யப் படாமல் அவற்றுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது தலை யாய கடன் என்று குறிப்பாக முஸ்லிம் சமூகம் உணர்தல் வேண்டும்.

Page 159
30. புழக்கத்திலிருந்த ஆபரணங்கள்
புத்தளம் பகுதியில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்து வந்த ஆபரணங்களைப்பற்றி சிறிது நோக்குவோம். பொதுவாக இவைகள் தென்னிந்திய முஸ்லிம்களின் ஆபரணங்களை அடி யொட்டியதாகவும், சில தமிழர்களின் ஆபரணங்களுடன் தொடர்புள்ளனவாகவும் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இவ்வாபரணங்களில் பெரும்பான்மையானவை தங்கத்தினா லன்றி பொன்னாலும், வெள்ளியாலும் ஆக்கப்பட்டவையாகவே இருந்தன. பெருநாள் காலங்களிலும், குடும்பத்தில் வீட்டில் நடைபெறும் கலியாணம், காது குத்து, சுன்னத்து சடங்கு போன்ற விசேட தினங்களிலும், கூடு எடுத்தல் போன்ற ஊருக் குரிய விழாக் காலங்களிலும் பொன் ஆபரணங்களைப் பொற் கொல்லர்களிடம் கொடுத்து மினுக்கி எடுப்பது வழக்காயிருந் தது. இதைப் 'பழுப்பில் போடல்" என்று கூறுவர். தமிழில் பழுக்கச் சுடுதல் என்னும் பதம் பொன்னணிகளைப் பழுப்பாக் கலைக் குறிக்கும். ஆபரணங்களைச் செய்வதற்கு உள்ளூர் பொற்கொல்லர் பலர் இருந்தனர். அவர்கள் குலத் தொழிலாக அன்றி ஊதியந்தேடும் தொழிலாகக் கற்று பொற்கொல்லர் களாகத் திகழ்ந்தனர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த பொற்கொல்லர்களிடம் தொழினுட்பங்களைக் கற்றனர்.
புத்தளம் பகுதியில் புழக்கத்திலிருந்துவந்த ஆபரணங்களை பற்றி கீழே நோக்குவோம். அவற்றை அணியும் அங்கங்களை

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் :280
நோக்கி தலையணி, காதணி, மூக்கணி, கழுத்தணி, கையணி, காலணி என்ற தலையங்கங்களின் கீழும் ஏனையவற்றைப்பொது வாகவும் கூறுவோம்:
1. தலையணி
(i) கொண்டைக்குச்சி அல்லது கொண்டைக்கூர் இல் வாபரணம் பொன், தங்கம், வெள்ளி என்பவற்றால் செய்யப் படும். வெள்ளியால் செய்யப்பட்டவைகளுக்கு தலைப்பாகத்தில் தங்கம், பொன்னால் அலங்காரம் செய்வதும் உண்டு. அதில் பண்ணிறமான கற்களைப் பதித்து கண்ணைக் கவரும் அலங் கார வேலைப்பாடுகளை செய்திருப்பர். இவை மூன்று அங்குலம் தொடக்கம் ஆறு அங்குலம் வரை நீளமுள்ளதாக இருக்கும் பெண்கள் தங்கள் கூந்தலை கொண்டையாக முடிந்து கட்டிய பின்பு அக்கொண்டை அவிழ்ந்து போகாமல் இதை சொருகிவிடுவார்கள் அத்தோடு தலையை அழகுபடுத்தவும் உத வும். ஒரு தலையில் பல கொண்டைக் கூர்களையும் அணிந்து கொள்வர்,
(i) கொண்டைக்காய் அல்லது கொண்டை மாலை; இது பெரும்பான்மையாக வெள்ளியால் செய்வார்கள். முப்பது தொடக்கம் ஐம்பது மணிகள் வரை அழகாகச் செய்து, முடிக் கப்பட்ட கொண்டையின் அடிப்பாகத்தில் சுற்றிக்கட்டுவார்
கள்.
2. காதணிகள்:
(i) அலுக்குத்து வெள்ளியாலும், பொன்னாலும் செய்து காதில் அணியப்படும் ஆபரணம் இது. தங்கத்தினாலும் அரிதாக செய்யப்படும். கன்னிப்பெண்கள் பொன்னாலான ஆபரணத்தை அணியமாட்டார்கள். வெள்ளியால் செய்த அலுக்குத்தையே அணிவார்கள். காதின் தோடுகளில் வரிசையாகத் துளையிட்டு அத்துளையுள் வளைவான கம்பிகளை நுளைத்து முனையை பூட்டிவிடுவார்கள். தொங்கியிருக்கும் பகுதியில் அழகிய அலங் காரம் செய்யப்பட்ட பூவரும்புகள் இருக்கும். ஒரு காதில் இத்த கைய அலுக்குத்துக்கள் பதினாறை அணிவது வழக்காகும்,

Page 160
念8凰 புத்தளம் வரலாறும் மரபுகளும்
(i) கொப்பு: இது பொன்னாபரணம். அம்பு வடிவத்தில் இருக்கும். காதின் மேல் தோட்டுப் பகுதியில் அணிவர்.
(ii) காதுப்பூ: காதில் பூவைப்போல் சோனையில் அணி யும் பொன்னாபரணம் இது. இதில் எதுவும் தொங்கவிடப்பட்டி ருக்காது. -
(iw) கும்மத்து; காதுப்பூவின் கீழ் கூடுபோல தொங்க விடப்பட்டிருக்கும் பொன்னாபரணம்.
(w) அஞ்சியரசலை: இது ஒரு பொன்னாபரணம். இரு காதிலும் காதுப்பூவுக்கு சற்று மேலே அணியப்படுவதாகும்.
(wi) அலுக்கறா, கொப்புக்குக் கீழே காதுகளில் அணியும் பொன்னாபரணம்
3. மூக்கனி
பன்னிறக் கற்கள் பதிக்கப்பட்டவைகளும், கற்களின்றி பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பாவனை யிலிருந்துள்ளன. ஆயினும் புத்தளம் பகுதியில் மூக்குத்திகளனி யும் வழக்கம் மிகமிகக் குறைவாகவே இருந்தது. பொன்னாலும் தங்கத்தாலும் இவைகளாக்கப்பட்டன.
4. கழுத்தணிகள்:
(i) பின் கொக்கித் தாலி: சிறு சிறு சதுரத் தட்டுகளாக அலங்கார வேலைப்பாடுகளின் கூடிய துண்டுகளை கெட்டி யான பல பட்டுக்களுள்ள கறுப்பு நூலில் பதித்துப் பின்னி கழுத் தைச் சுற்றிக்கட்டும் பொன் நகை இது.
(i) பவள உக்கட்டு; பொன்னாலானது. பகள உக்கட்டு என்றும் சொல்வர். பவளம் எனப்படும் ஒரு வகை மணியுடன் கெட்டியான நூலில் கோர்த்து பின் கொக்கித் தாலி மாலைக்குக் கீழே கழுத்தில் அணிந்து கொள்வர்.

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 282
(ii) கறுப்பு மணி கறுப்பு, சிவப்பு பாசி மணிகளுடன் பொன் மணிகளைக் கலந்து கோர்த்துக் கழுத்தைச் சுற்றிக் கட் டப்படும் அணிகலன் ஆகும். திருமணத்துக்கான கொத்துபா ஒதப்படும்போது மணமகளின் கழுத்தில் கட்டுவது வழக்கமாக இருந்தது.
(iv) கடுகுமணி: கடுகுமணி என்னும்போது கடுகைப் போன்ற சிறிய மணியெனக் கருதலாகாது. குண்டுமணியிலும் பெரிதாக பொன்னால் செய்யப்படும் மணிகள் இவைகள் மணிக் கோவைகள் பெரிய அளவிலும், சிறிய அளவிலும் அமையும். உள் கழுத்துக் கொடியென்னும் ஆபரணத்துக்கு மேலே அணி
• ז56&rfתח עם.
(v) உள் கழுத்துக்கொடி கீழே காட்டப்படும் "சவடி" என்ற நகையை விட சிறிய உருவமுள்ளது. பொன்னாற்செய் யப்படும். பொன் கம்பியால் பின்னப்பட்டிருக்கும் கடுகுமணிக்கு கீழே அணியும் ஆபரணமாகும்.
(vi) திருக்கண்டாமணி உள் கழுத்துக் கொடிக்குக்கீழே அணியும் மணிக் கோவையாகும்.
(vii) சவடி சீன மணிக்கு மேலே அணியப்படுவது. அகத் திக்காய் போன்ற வடிவுடைய பொள் கம்பியால் பின்னப்படும் ஆபரணம் இதுவாகும்,
(vii) சீனமணி; மகிழம்பூ பின்னல் கொடி எனப்படும் ஆபரணத்துக்கு மேலே டோடும் கழுத்தணியாகும். பொன்னா லான மணிகள் கோக்கப்பட்டிருக்கும்.
(ix) மகிழம்பூ பின்னல் கொடி: சவடியைப் போன்று வேறு விதமான பின்னலைக் கொண்ட பொன்னாபரணம் இது வாகும்.
(x) மசோகா மணி: முத்தாமணக்குக் காயைப்போன்ற வடிவமைந்த பொன்மணிகள் கோக்கப்பட்ட ஆபரணம்.

Page 161
283 புத்தளம் வரலாறும், மரபுகளும்
(xt) மெழுகு பின்னல் கொடி பொன்னாலான தடித்த சங்கிலி போன்ற பின்னலையுடை அணியாகும்.
(xi) பெரிய சங்கிலி சவடி: இதை அச்சு முகப்பு சவடி எனவும் கூறப்படும் பொன்னாலானது.
(xi) வைரமணி; மசோகா மணியைவிட சற்றுப்பெரிய உருவமுடையது. பொன்னணி
(xiw) பவளம் கோத்த வைரமணி; சிவப்பு பவளத்துடன் பெர்ன்மணிகளைச் சேர்த்து கோத்து அணியப்படும் நகை,
(XV) காறை ஆண் பிள்ளைகளனியும் கழுத்தணி. முகப் புக் கொக்கியுடன் வெள்ளியால் வளையம் போன்று செய்யப படும் இவ்வாபரணம் கழுத்துக் காறை எலும்பு அதன் அசைவு களால் வலிமையடைய அணியப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
5. கையணி:
(i) மோதிரம்: பொன்னாலும், வெள்ளியாலும் செய்து அணிவார்கள். தங்கத்திலும் செய்வதுண்டு. கற்கள் பதித்து பல வடிவங்களில் அணிவர். கல் பதிக்காமல் ஒரே அமைப்பு டைய பதினான்கு மோதிரத்தை ஒரு கை விரல்களில் பின்வரு மாறு அணிவார்கள். சின்னி விரலில் இரண்டும் அதற்குப் பக்க விரலில் இரண்டும் சுட்டு விரலில் இரண்டும் மீதியான இரு விரல் களில் தலா நான்கும் அணிதல் வழக்காகும்.
(ii) கைக்கட்டுப் பொன் மணி: சிவப்பு பாசி மணியு டன் கலந்து மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் பொன் மணி ஆபரணம் இதுவாகும்.
(ii) கடையம்: அரையங்குல அகலத் தகட்டில் அலங் கார வேலைப் பாடுகளைப் பதித்து கீல் வைத்து முகப்புப் பூட்டில் ஓடாணி எனப்படும் திருகாணியால் கையில் அணி யும் ஆபரணமே கடையம் எனப்படும். இது பொன்னாலும்,

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 284
வெள்ளியாலும் ஆனது. முகப்புப் பக்கம் ப்ெருத்தும் கீழே யுள்ள கீல் பக்கம் வர வர ஒடுங்கியும் இது செய்யப்படும்.
(iv) சரிசி: ஒன்று, இரண்டு, அங்குல அகலங்கொண்ட கடையம் போன்ற கையாபரணம்: அலங்கார வேலைப்பாடு களுடன் கூடியது. பொன், வெள்ளியால் இது செய்யப்படுவ துண்டு. சரிசு என்பதே சரியான சொல்லாகும்.
(w) சந்து காறை: காறை என்பது கழுத்தணியொன் றைக் குறிக்குமாயினும் சந்து காறை கையிலனியும் ஆபரண மாகும்.
(wi) முத்துச் சரி: சரி என்னும் சொல் கைவளையைக் குறிக்கும். கடையத்தை விட மெல்லிய ஆபரணம்.
(vi) தாயித்துக்காய் இடது பக்கத்துக் கையின் முளங் கைக்கு மேலுள்ள கைப் பகுதியில் அணியப்படும் ஆபரணம். பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்படும், வெள்ளைப் பூடைப்போன்ற தோற்றமுடையது.
(vii) எரிசி: சிவப்புப் பவளங்களைக் கோர்த்து வலது முன் கையில் அணியும் பொன், வெள்ளியாலான ஆபரணம்.
6. Sren) TuysyTib;
(i) முந்தாங்கி; கால் விரல்களுக்கிடப்படும் மோதிரம் போன்ற ஆபரணத்தை மிஞ்சி என்றும் கூறுவர். முந்தாங்கி என்ற மிஞ்சி காற் பெருவிரலின் பக்கத்து விரலுக்கு அணியப் படுவதாகும்.
(i) நிக மூடி காலின் பெருவிரலுக் கணியும் மிஞ்சி.
(ii) சுத்துப் பீலி: காலின் மூன்றாவது விரலான நடு விரலுக்கு அணியும் ஆபரணம்: -
(iv) இடைப் பீலி: காலின் நான்காவது விரலில் அணி யப்படுவது?

Page 162
385 புத்தளம் வரலாறும், மரபுகளும்
(w) மீன் குஞ்சி: காலின் சின்ன விரலுக்கு அணிவது.
(wi) கொலுசு வெள்ளி மணிகள் தொங்கும் சங்கிலி யாபரணம். கணுக்காலில் அணிவதாகும்.
(wi) தண்டை பெரிய காப்பு போன்று கணுக்காலில்
அணியப்படும் வெள்ளியாலான உருண்டையான ஆபரணம்.
கொத்துத் தண்டை, வாழைக்காய்த் தண்டை என இரு வகை யுண்டு. கொலுசுக்கு மேலே அணிவதாகும்.
(wi) பதக்கம்: இரு கணுக்காலிலும் அணியும் வெள்ளி штитезотић .
7. பொதுவானவை:
(i) திறப்புச் சங்கிலி: வெள்ளியாலான பொய்த் திறப் புக்களும், பற்குத்தும் ஊசியும் காதழுக்கெடுக்கும் கருவி யொன்றும். காலில் தைத்த முட்களை இடுக்கி இழுத்தெடுக் கும் முள்ளிடுக்கி யொன்றும் இக்கொத்தில் அடங்கியிருக்கும். வெள்ளிச் சங்கிலியுடனும் கோத்து இடுப்பில் சொருகிக் கொள்ளுவர்.
(i) அரை மூடி சிறுமிகளின் பாலுறுப்பை மறைத்து இலை வடிவில் செய்யப்பட்ட வெள்ளித் தகட்டாலான ஆபர ணம். அத்த கட்டில் அலங்காரப் பூவேலைகளும் செய்யப்பட் டிருக்கும். கிண்கிணிச் சத்தமிடும் மணிகளும் பக்கத்தில் கோர்க்கப்பட்டிருக்கும். கறுத்த நாடாவில், அல்லது வெள் ளிச் சரத்தில் கோர்த்து இடுப்பில் கட்டுவர் சிறுமிகள் அசைந் காடி வரும்போது இதன் நாதம் முன்னே வரும்.
(i) தம்பித் தோழன்; சிறுமிகளுக்கு அரையில் அணி யப் படும் அரை மூடிக்குப் பதிலாக ஆண்களின் பாலுறுப் பைப் போன்ற வடிவில் வெள்ளியால் செய்து நூலில் அல்லது வெள்ளி நாடாவில் கோர்த்து சிறுவர்களுக்கு அணியும் ஆபரண மாகும். பக்கத்தில் இரு மணிகளும் கோர்க்கப்பட்டிருக்கும், இதற்கும் அலங்கார வேலைப்பாடுகளைச் செய்திருப்ார்.

31. நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள்
புத்தளம் பிரதேசத்தில் பல துறைகளிலும் பிரபலம் வாய்ந்த பல பெரியார்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். இப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்களிப்புக்கள் மறக்க முடியாதனவாகும். அம் முன்னோர்களில் குறிப்பிடக் கூடிய சிலரின் தகவல்கள் சுருக்கமாகக் கீழே தர முயன்றுள் ளேன். இவர்களை விட வேறு பலரும் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல தொண்டுகளை, சேவைகளை செய் திருக்கக் கூடும். அவர்களின் தகவல்கள் சரியாகக் கிடைக் காத காரணத்தினால் அவர்களின் பெயர்கள் இடம் பெறா மைக்கு வருந்துகின்றேன்.
நீதியரசர் அக்பர்
இவரின் தாயகம் கற்பிட்டி நகராகும். இலங்கை உயர் நீதிமன்றத்தின் முதலாவது முஸ்லிம் நிதியரசராகப் பதவி வகித்து "ஜஸ்டிஸ் அக்பர்" என்று புகழ் பெற்றவராவர். மலா யர் சமூகத்தில் தோன்றிய இவர் சிறந்த கல்விமானும், சமூ கத் தொண்டரும், சட்ட, பொறியியல் வல்லுநருமாவார். "முஹம்மதியர்" என்ற சொல்லுக்குப் பதிலாக "முஸ்லிம்கள்" என்ற சொல்லை அரசு ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டு மென கோரி வெற்றி கண்டவர். பேராதனை இலங்கைப் பல் கலைக் கழகத்தின் தோற்றத்திற்குப் பெரிதும் உழைத்தவர்.

Page 163
287 புத்தளம் வரலாறும், மரபுகளும்
முஸ்லிம்களின் சொத்துரிமை, "வக்பு ஆகியன சம்பந்தமான புதிய சட்டக் கோவைகளை ஆக்குவதில் இவரின் பங்களிப்பு முக் கியமானதாகும். இவர் சிறந்த மத பக்தியுடையவராகத் திகழ்ந் தார். பேராதனைப் பல்கலைக் கழக அக்பர் மண்டபம், வத்தளை "அக்பர் டவுன்" என்பன இவர்களின் ஞாபகச் சின் னங்களில் சிலவாகும்.
சைமன் காசிச் செட்டி
கற்பிட்டியில் பிறந்த இவர் பிரபல கல்விமானும், வரலாற் றுத்துறை ஆசிரியருமாவார். புத்தளம் மணியகாரராகவும், மாவட்ட முதலியாராகவும், இலங்கை சட்ட நிரூபண சபை உறுப்பினராகவும், சிறந்த நீதிபதியாகவும் விளங்கினார். வர லாறு, சமூகவியல், மெய்யியல், சமயம், இலக்கியம் ஆகிய துறைகளில் பல கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட் டுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றைத் தெரிவிக்கும் முதல் நூலாகக் கருதப்படும் "தமிழ் புளூட்டாக்" என்ற நூலும்" "சிலோன் கெஸட்டியர்" என்னும் தொகுப்பு நூலும் இவரின் ஆக்கங்களுள் குறிப்பிடத்தக்கன. இவரின் தொண்டுகளை பிறநாட்டுப் பேரறிஞர்களும் போற்றியுள்ளனர்.
அல்ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில்
புத்தளம் சென்ற் அன்ரூஸ் ஆங்கிலப் பாடசாலையிலும், கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் பயின்று சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டத்தரணியானார். சட்டக் கல்லூரி இறுதித் தேர்வில் முதலாவது பரிசைத் தட்டிக் கொண்ட முதல் முஸ் லிம் மாணவர் என்ற பெருமை இவரைச் சாரும். புத்தளத்தில் நம்பிக்கையுள்ள, நீதி தவறாத சட்டத்தரணியாகப் பிரசித்த மானார். புத்தளத்தின் முதல் முஸ்லிம் சட்டத் தரணியும் இவரே. புத்தளம் உள்ளூர் சபையிலும் (லோக்கல் போட்), உள்ளூர் மாவட்ட சபையிலும் (U D.C.), நகரசபையிலும் உறுப்பினராகவும், உப - தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்தார். அரசுடன் சம்பந்தப்பட்ட பல சபைகளில் கடமை புரிந்துள்ளார். இலங்கையின் அழகிய பள்ளிவாச லாகக் கருதப்பட்ட புத்தளம் முகையதின் கொத்துபாப் பள்ளி

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 288
வாசலின் கட்டிடச் சபையின் தலைரவாகவும், அதன் நம்பிக் கைப் பெறுப்பாளராகவும் பணியாற்றினார், M.B.E.,O.B.E. போன்ற பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. புத்தளம் முஸ் லிம் மக்களின் தூங்கிய வாழ்க்கையில் விழிப்புணர்ச்சியைத் தூண்டும் பல தாபனங்களை உண்டாக்கினார். கூட்டுறவுத் துறைக்கு இவர் ஆற்றிய பணி மகத்தானது. அரசியலில் ஈடு பட்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு முதல் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற பெரு மையையும் பெற்றார். பொதுவாக பாராளுமன்றத்தினரால் கெளரவமாக மதிக்கப்பட்டு உப சபாநாயகராகவும், ஈற்றில் சகல கட்சிகளும் ஒரே மனதாக போட்டியின்றி தெரிவு செய்த சபாநாயகராகவும் பாராட்டத் தக்கவகையில் கடமையாற்றி அரசியலிருந்து ஒய்வு பெற்றார். "பைத்துல்மால் நிதியின்" தாபகரும் இவர்களே. புத்தளத்தில் தோன்றிய பெரியார் களில் முதல்வராக என்றும் மதிக்கப்படக்கூடிய கண்ணியத்திற் திற்குரியவர் "இஸ்மாயில் ஐயா" என்றழைக்கப்பட்ட இஸ்மா யில் ஹாஜியார் என்பதில் தவறில்லை.
அல்ஹாஜ் S. M. அசன் குத்தூஸ்
எஸ். ஈ. எம். என்றும், "சறுவர்" என்றும் அழைக்கப் பட்ட இவர் அசாதாரணமான முயற்சியும், உழைப்பும் நிறைந்த முன்னோக்குவாதியாக வாழ்ந்து உயர்வடைந்தார். கொழும்பு வெஸ்லிக் கல்லூரியில் பயின்று பின்பு நில அளவை யாளரானார். உத்தரவு பெற்ற நில அளவையாளராகவும் மதிப்பீட்டாளராகவும், ஏல விற்பனைக்காரராகவும். தொழி லாற்றினார். புத்தளம் பகுதியில் பல இடங்களில் வியாபார நிலையங்களை ஏற்படுத்தி பல நிறுவனங்களின் முகவராகக் கடமையாற்றி பிரபல வணிகராக விளங்கினார். பல சமூக சங்கங்களிலும் பணியாற்றினார். இறுதியாகப் புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யபபட்டு அப்பத வியிலிருக்கும் போதே காலமானார்.
டாக்டர் வால்டர் தியடோர் ஹொலம்ஸ் MRCS, LRCP
கொழும்பு றோயல் கல்லூரியிலும், இங்கிலாந்திலும் கல்விபயின்ற இவர் புத்தளத்தில் பொதுமக்களால் மதிக்கப்

Page 164
புத்தளம் வர வாரம், மரபுகளும்
பட்ட பிரசித்தமான மருத்துவக் கலாநிதிய வார். புத்தளம் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் மருத்துவ அதிகாரி பாகப் பதவி வகித்து இறுதியாக மாகாண ரணவைத்திய ராகப் பணியாற்றி ஓய்வு பெற்று புத் தளத்திலேயே இறுதி வரை வாழ்ந்தார். விளையாட்டு வீரராகவும், வேட்டைப் பிரிய ராகவுமிருந்தார். முதலாம் உலக மகா யுத்தத்தின் போது தன் தாய் நாட்டிற்கு சேவை புரியும் நோக்கமாக இராணுவ் மருத் துவ மனையில் சேர்ந்து தொண்டாற்றித் திரும்பினார். அவர் வாழ்ந்த வீடு புத்தளம் சேர்விஸ் வீதியில் இன்றுமுளது.
நிரு. எல். ஈ. டேவிற்
புத்தளத்தில் பிரசித்தமான சட்டத்தரணியாக விளங்கிய இவர் கட்டைக்காடு ஊரைச் சேர்ந்தவராவர். சென்ற் பென டிக்ட் கல்லூரியில் கல்வி கற்று பின் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பரீட்சையில் முதலாவது மாணாக்கராகச் சித்தி பெற்று புத்த ளம் நீதிமன்றத்தில் முடிக்குரிய சட்டத்தரணியாகக் கடமை புரிந்தார், புத்தளம் நகரசபைக்கு உறுப்பினராகத் தேர்வு பெற்று சபையின் உப தலைவராகவுமிருந்தார். அவ்வேளை நகர சபையின் தலைவராக இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள் இருந்தார்கள். இவர்களிருவரும் மிகவும் நெருங்கிய அத்யந்த நண்பர்களாக வாழ்ந்தனர். இஸ்மாயில் ஹாஜியாரின் அரசியல் வாழ்க்கையின் வலது கரமாக திரு. டேவிற் அவர்கள் இறுதி வரை இருந்தார்கள். திரு. டேவிற் அவர்களின் பாரியார் திரு மதி தர்மசுந்தரி மேசி எமல்டா அவர்கள் சென்ற் அன்ரூஸ் கல் லூரிக்கென ஆறு ஏக்கர் நிலத்தை அன்பளிப்புச் செய்தவரா வார். இவரது ஒரே மகன் புத்தளம் அசோகா சினிமாவின் உரி மையாளரும், பிரமுகருமான திரு. அசோகா டேவிற் அவர்களா
T.
திரு ஜே. டப்ளிவ் , பி. சேனாதிராஜா
இவர் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். முடிக் குரிய சட்டத்தரணியாக நியமனம் பெற்று புத்தளத்தில் சுடமை யாற்றினார். "காட்டுத் துனர" என வழங்கப்பட்டு வந்த கேட் முதலியார் கோல் டீ கொஸ்தா அவர்களின் தங்கையை மணந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் , :gt)
புத்தளத்தையே தமது வசிப்பிடமாகக் கொண்டார். திரு. சேனாதிராஜா அவர்களின் பெயரில் புத்தளம் சென்ற் அன்ற் ரூஸ் கல்லூரியின் பிரதான மண்டபம் அமைந்துள்ளது. அக்கல் லூரியின் அருகேயுள்ள "காட்டுத்துரை" அவர்களின் விடும், வள வும் புத்தளம் சென்ற் மேரிஸ் தேவாலயத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதெனத் தெரிகிறது.
திரு. டப்ளிவ் ஏ. முத்துக்குமாரு
கொழும்புச் செட்டிகள் எனப்பட்ட கிறிஸ்துவ செட்டிமார் வாழ்ந்து வந்த வீதியே இன்று புத்தளத்தில் செட்டித்தெரு என அழைக்கப்படுகின்றது. இவ்வீதியிலேயே திரு. முத்துக்குமாருவும் அவரது அண்ணரும், குடும்பத்தவரும் வாழ்ந்துள்ளனர். இன் றைய கூட்டுறவுப் பண்டகசால்ை வனவில் அமைந்திருந்த சென்ற் அன்ரூஸ் ஆங்கிலப் பாடசாலையைச் சுற்றி அவர்களின் விடுகள் இருந்தன. சட்டத்தரணியான இவர் புத்தளம் நகர சபையின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவரின் குடும்பத்தின் நிலச் சுவாந்தார்களாக இருந்தனர். ஆங்கிலம் படித்துப் பட்டம் பெற்ற உள்ளூர் வாசிகள் இல்லாதிருந்தபோது இவர்களின் தலைமைத் துவத்திலேயே புத்தளம் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ள னர். இவரின் வாரிசுகளான இம்மானுவேல் முத்துக்குமாரு, ஹியூகோ முத்துக்குமாரு ஆகியோர் புத்தனம் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாகக் கடமை புரிந்துள்ளனர்.
அல்ஹாஜ் சி. அ. க ஹமீது ஹசனஸன் மரைக்கார்
"சீனானாக்கானா" என வழங்கப்பட்ட இவர் புத்தளத்தின் "ஹெட்மூர்மென்" ஆகவும், காதியாராகவும் பணிபுரிந்து மக்க எளின் மிதிப்பையும், கெளரவத்தையும் பெற்ற பெரியாராவார். மதபக்தி நிறைந்த இவர் புத் தளம் மெளலா மக்காம் பள்ளி வாசவின் நம்பிக்கைப்பொறுப்பாளராக இருந்து வந்தார். இவ ரின் அருங்கொடைகளில் குறிப்பிடக்கூடியது புத்தளம் மன் னார் வீதியில் அவர்களால் நிர்மாணித்து அரசுக்கு நன்கொடை செய்த தாய்மார், சிசு மருத்துவ சிகிச்சை நிலையமாகும். புத்த ளம் அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்குரிய ஒரு பகுதி நிலத்தையும் அன்பளிப்புச் செய்துள்ளார். புத்தளம் முஸ்லிம்

Page 165
29. w புத்தளம் வரலாறும், மரபுகளும்
லீக்கின் தலைவராகவும், இலங்கை முஸ்லிம் லீக்கின் உறுப் பினராகவும், இருந்துள்ளார் தேசாதிபதி சேர் வில்லியம் மன்னிங் அவர்கள் இவரை 1923ல் இரண்டாவது "ஹெட்முர் மென்னா க" நியமித்து சிறிது காலத்தின் பின்பு முதல் ஹெட் மூர்மன்னாக ஆகினார். அரசினரின் நன்மதிப்பையும், நம்பிக் கையையும் பெற்றவராக விளங்கினார். இவரின் மகனாரே' அல்ஹாஜ் எச். எம். சாலிஹ் மரைக்கார் அவர்களாவார்.
ஜனாப் சி. அ. மு. ஹனிபா மரைக்கார்
சி. அ. க. வின் தம்பி சி. அ.மு. ஆவர். கானா" என்றும், *மூனா" என்றும் சுருக்கமாக இருவரையும் சுட்டி அழைப்பர். ஆங் கில அறிவுள்ள இவர்கள் பல பொதுத்தாபனங்களில் பங்குபற்றி சேவை புரிந்துள்ளார்கள். கல்வியில் அக்கறையுள்ள முற்போக் காளராக இருந்த காரணத்தால் தமது ஒரே மகனாராகிய முன்னாள் நிதியமைச்சர் அல்ஹாஜ் நெய்னா மரைக்கார் அவர் களை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்கவைத்து 'பாரிஸ்டராக" விளங்கச் செய்தார். புத்தளம் பெரிய பள்ளிவாசல் கட்டிடக்குழு வின் செயலாளராகக் கடமையாற்றினார், செல்வந்தராகவும், ! வணிகராகவுமிருந்தார். சொழும்பு இரண்டாம் குறுக்குத்தெரு வில் இவரது வியாபாரத் தலமிருந்தது. புத் தளம் 'லோக்கல் போட்டின் உறுப்பின் ராகவும் இருந்துள்ளார். பொதுமக் களின் நன்மதிப்பைப் பெற்ற கெளரவமுள்ள தலைவர்களில் ஒருவராக இவர் விளங்கினார். பல தர்ம கைங்கரியங்களைச் செய்துள்ளார். -
இ. செ. ه گ )Lp • பழுலூன் மரைக்கார்
"சின்ன முதலாளி" என்று மக்களால் அழைக்கபபட்ட இவர் இ செ. மு. இபுறாகிம் நெய்னா மரைக்காரின் சகோ தரர் ஆவார். இ. செ. மு. என்ற தமது குடும்ப விலாசத்தில் ஆனாவையும் சேர்த்துக் கொண்டு "E. S. A. M." என தன்னை அழைத்துக் கொண்டார். அன்றைய புத்தளம் குடியிருப் பிலிருந்து சிறிது தூரத்தில் தமது வசிப்பிடத்தை அமைத்து அமைதியாக வாழ்வில் ஈடுபட்டிருந்தார். கல்வி, சமூக விடயங்க ளில் தமது பங்களிப்பை நல்கியுள்ளார், செல்வந்தர். இவரின்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 292
மகளையே அல்ஹாஜ் கலாநிதி பதீஉத்தீன் மகுமூது அவர்கள் ஆரம்பத்தில் மணம் புரிந்து கொண்டார். அம்மணத்தொடர்பு மூலம் பிறந்த மகளை S. E. M. அவர்களின் மகனும் பிரபல பட்டயக் கணக்காளருமான ஜனாப் லத்தீப் மண முடித் துள்ளார்.
அல்ஹாஜ் ரி. எஸ். எம். அப்பாஸ் மரைக்கார்
புத்தளம் லோக்கல் போட்டின், உறுப்பினராகவிருந்த ரீ. எஸ். சேக்கு மரைக்கார் என்பவரின் புதல்வரே இவர் புத்தளம் வடக்கு வீதியிலுள்ள "கொப்டறாப் பள்ளி" எனப் படும் சிந்தா ஷா மதார் பள்ளிவாசலை நிர்மாணித்து பரி பாலித்து வந்தார். பெரிய பள்ளிவாசல் கட்டிடக் குழுவின் உறுப்பினராகவுமிருந்தார். தரும காரியங்களுக்கு உதவுவதில் முன்னின்ற மத பக்தியுள்ளவராக இருந்தார். இவரது மூத்த மகன் அல்ஹாஜ் முஹம்மது. ஏ. காதர் அவர்கள் புத்தளம் நகர சபையின் தலைவராகவும், புத் தளம் சாகிராக் கல்லூரி யின் முகாமையாளராகவும் விளங்கினார். இவரின் மற்ற மகன் அல்ஹாஜ் முகையத்தீன் சட்டத்தரணியாகவும் நகர சபையின் உபதலைவராகவும் செவையாற்றினார். முகையதின் ஹாஜியாரின் புதல்வர் ஜனாப் ஸக்ரப் முகையதின் அவர்களே இன்றைய நகர சபையின் தலைவராக இருக்கிறார்.
அல்ஹாஜ் ஏ. எம். அலி மரைக்கார்.
புத்தளத்தில் "ஹாஜியார்” எனக் குறிப்பிட்டால் இவரை யே குறிக்குமளவுக்கு முக்கிய பிரமுகராக விளங்கினார். செல் வந்தர் குடும்பத்திலுகித்த இவர் சி. அ. க. அவர்களின் மகளை மணந்தார். தீவிர அரசியல் வாதியாகவும், பின்னணி யிலிருந்து அரசியல் வாதிகளை தனது ஆதரவு மூலம் உரு வாக்கக் கூடிய பலம் வாய்ந்தவராகவும் இருந்தார். துணி வும், நெஞ்சுரமும் உள்ள இவர் நேரடியாக அரசியலில் இறங் கினாரில்லை. அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு கல்வி, கலாச்சார, மத, சமூகத்துறைகளில் பெரும் பங்காற்றி யுள்ளார். அவரின் முயற்சியினால் உருவானவைகளில் மஸ்

Page 166
293 . * புத்தளம் வரலாறும், மரபுகளும்
ஜிதுல்ஹ"தாவும், சாற்ா நெசவு நிலையமும், புத்தளம் சாகி ராக் கல்லூரி விஞ்ஞான கூட மும் குறிப்பிடத்தக்கனவாகும், பாத்திமா மகளிர் மகா வித்தியாலய நூல் நிலையக் கட்டி டத்தை இவரின் தலைமையிலியங்கிய "புத்தளம் டெவலப் மென்ற் சொஸைட்டி" மூலம் நிர்மாணித்துள்ளார்கள். அட்டவில் இளைஞர் காணி அபிவிருத்தித் திட்டமும் இவரின் முயற்சியின் பரற்பட்டதேயாம். புத்தளம் மாவட்டத் திலும், அதற்கு வெளியிலும் இவர் பிரபலமான பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.
ஜனாப் எம். எம். மதார் மரைக்கார்
சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த பிரபலமான சமூக சேவையாளராவார் சிறப்பாக கல்வி, சமூக, நகர அபிவி ருத்தித் துறைகளில் இவர்களாற்றிய சேவைகள் பல. கற்பிட் டியின் கல்வி ஊற்றாகத் திகழும் அல்-அக்ஸா மகா வித்தி யாலயத்தின் தோற்றத்திற்கு அரும்பாடு பட்டார். கற்பிட்டி கிராமச் சபையின் முதற்றலைவரும் இவரே, நீதியரசர் அக்பர் வாழ்ந்த இல்லமே இவரின் இல்லமாகும்.
கற்பிட்டி முஹம்மது தம்பி மரைக்கார்
கற்பிட்டி மரைக்கார் குடும்பத்திலுFத்த இவர் கொடை நாயகராகப் பிரசித்தமானார். கீழக்கரை அப்துல் மஜீது மரைக்கார் புலவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் அப்புலவர் யாத்துள்ள ஆசாரக் கோவை என்ற நீதிச் செய் யுள் நூலின் கொடை நாயகராக இருந்த காரணத்தால் அந்நூலிலுள்ள அனைத்து செய்யுள்சளின் இறுதியிலும், முஹம் மது தம்பி மா மரைக்காயர் சக்ாயனே? என்று பாடி முடித் துள்ளார் புலவர் தம்பி மர்ைக்காரின் மகனே கற்பிட்டியில் பிரசித்தமாக வாழ்ந்த உ. மு. மரைக்கா ரென்ற செல்வந் Sprmenisrf.
ஜனாப் ஏ. வீ. ஏ. பொன்னி முத்து மரைக்கார்
கற்பிட்டிப் பிரதேசத்தில் திசழி என்ற இடத்தைச் சேர்ந்த வாப்பா சாகிப் மரைக்காரின் புதல்வராகும். அவ்வூரின்

அல்ஹாஜ் ワド என். எம். ஷாஜஹான் 294
தலைமைத்துவம் உடைய ஊர் மரைக்காயராக இருந்தார். புத்தளம் சென்ற் அன்ரூஸ் கல்லூரியிலும், சிலாடம் சென்ற் மேரிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஆங்கிலம் தமிழ், அறபு மொழிகளில் தேர்ந்தவராகவிருந்து சடுதி மரண விசாரணை அதிக ரியாகவும் கடமை புரிந்தார். குறிப்பாக திசழிப் பிர தேசத்தினதும், பொதுவாக புத்தளம் மாவட்டத்தினதும் சமூக, கலாச்சார விடயங்களில் முன்னின்றுழைத்தார் கொழும்பு சாகிராக் கல்லூரியின் பிரபல கிரிக்கட் வீரராகத் திசழ்ந்து சென்னை, பம்பாய், அலிகார் ஆகிய இடங்களில் விளையாடி புகழ் பெற்ற ஜனாப் ஜெஹ்பர் மரைக்கார் இவரின் புதல்வ ராவார். இவர் கைப்பந்தாட்டக் கெப்டனாகவும்" இருந் துள்ளார்.
ஜனாப் எஸ். எம். ஜலால்தீன் மரைக்கார்
பிரபல உப்புக் கொந்தறாத்துக் காரர் சீ. மீரா சாகிபு மரைக்கார் (மீசி மரைக்கார்) அவர்களின் மகனாகிய இவ , ரும் தந்தையாருக்குப் பின்பு கொந்தராத்துத் தொழிலைச் செய்து வந்தார். கங்காணிககுளப், பகுதியின் தலைவராகவும், மரைக்காராசவும், கங்காணிக்குளம் பள்ளிவாசல் பரிபாலக ராகவும் விளங்கினார். புத்தளம் நகரசபையின் உறுப்பின ராகவுமிருந்தார். இவரின் இல்லத்திலேயே இவரின் மருகர் இஸ்மாயில் ஹாஜியாரின் இளமைப்பருவம் மலர்ந்தது. ஜலால் தீன் மரைக்க்ார் சமூக, மத சேவைகளில் முன்னின்று உழைத்த தலைவர்களில் ஒருவராவார்.
அல்ஹாஜ் யூ. செ. முஹம்மது
"யூவணன்னாச்சேனா" என்றழைக்கப்பட்ட இவர் பிரபல மான வணிகராகவும். பிரமுகராகவும் திகழ்ந்தார். 1936இல் புனித ஹஜ்ஜை நிறைவேற்றித் திரும்பி வந்த சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார். புத்தளம் சென்ற் அன்ரூஸ் கல் லூரியில் பயின்ற இவர் புத்தளம் "லோக்கல் பேர்டில் பல ஆண் டுகள் உறுப்பினராக இருந்தார். போட்டியின்றியே இவர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பல பொதுநல

Page 167
295 புத்தளம் வரலாறும், மரபுகளும்
வேலைகட்கு நன்கொடைகளை நல்கியுள்ளார். அரசியல்வாதி யான எஸ். எம். ஏ. கபூர், சட்டத் தரணி எஸ். எம். ஏ. அளிஸ், எஸ். எம். ஏ. காதர் ஆகியோர் இவரின் புதல்வர்களாவார்கள்.
go. D. W. S. டி சில்வா விக்கிரமதிலக்க
புத்தளத்தைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர் வில்லி யம் டீ சில்வா விக்ரமதிலகாவின் மகனாகிய இவர் புத்தளம் சென்ற் அன்ரூஸ் ஆங்கில ஆண்கள் பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். தாழ்ந்த நிலைமையிலிருந்த இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு தளரா மன உறுதியுடன் தன் வாழ்வையே அர்ப்பணித்த கல்விமான். சாரண இயக்கம், குத்துச் சண்டை, இல்லமுறை ஆகியவைகளை அறிமுகப்படுத் திய இவர் சிறந்த பல்துறை விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்.
திரு. எல். பி. வேந்தக்கோன்
யாழ்ப்பாணம் திரு. சீமான்பிள்ளையின் புதல்வரான இவர் சிறந்த கல்விமானாவார். யாழ்ப்பாணம் சென்ற் பெற்ரிக் கல்லூரி, சென்ற் பெனடிக்ட் கல்லூரி, சென்ற் ஜோசப் கல் லூரி ஆகிய கல்லூரிகளில் பயின்று 1913ம் ஆண்டு தொடக் கம் 1923ம் ஆண்டு வரை புத்தளம் சென்ற் அன்ரூஸ் பாட சாலையின் தமைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின்பு புத்தளம் மக்களின் சமூக நலன்களுக் காக தம்மை அர்ப்பணித்து சேவை புரிந்தார்.
திரு. என். ஜே. அல்பிறட்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவ்வாசிரியர் பெருந்தகை புத்தளத்தையே தமது சொந்த ஊராக வரித்துக் கொண்டார். இப்பகுதியில் முதலில் தோன்றிய அரசினர் பாடசாலைகளி லொன்றாகிய கரைத்தீவு பாடசாலையிலும், புத்தளம் அரசி னர் ஆண்கள் பாடசாலையிலும் தலைமை ஆசிரியராக தமது இளமைப் பருவத்திலிருந்தே கடமையாற்றி இப்பகுதி மாண வர்களின் கல்வி வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 296
சேவை புரிந்த ஆசானாவார். உய்ர் வகுப்புக் கல்வியைத் தொடராது திறமையான பல மாணவர்கள் கல்வியை இடை நிறுத்தி விலகிச் செல்லும் அவல நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். அவ்வாறு விலகிச் சென்று கடைகளில் விற்பனை யாளர்களாகவும், வேறு சிறு தொழில்களிலிடுபட்டு காலங் கழித்த பலரை வயதைக் கணக்கிடாது மறுபடியும் பாட சாலையில் சேர்த்து உயர் கல்வியைப் போதித்து பகிரங்க தேர்வுகளுக்குத் தோற்றச் செய்து சித்திபெறச் செய்த பெருந்
தகை இவர். இவரின் சேவையின் பின்பே இவரின் மாணவர் களாகிய சிலர் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியாகினர். ஆசிரியர்களான எச். எம். சேகுலாப்தீன் , ஏ. கே. ஏ. ஹனிபா, ஏ. எம். ஐ. நெய்னா மரைக்காயர், ஏ. எம். எஸ். இபுறாஹிம், ஏ. கே. ஜெகுபர், என். பீ. உவைஸ் ஆகியோருடன் நானும் அவ்வாசிரியத் தந்தையால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள் என் பதை சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். ஆசிரியர் அல் பிறட் அவர்கள் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். இவரின் மனைவியும் புத்தளம் பெண்கள் பாட சாலையில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். ۔۔۔۔
ஜான்ாப் எம். எம். எம். ஒமர்
முகம்மது முகையதின் குப்பை ஹாஜியாரின் ம்கனாகிய இவர் நில அளவையாளர் தேர்வில் சித் திபெற்று மட்டக். களப்புப் பகுதியில் சேவையாற்ற நியமனம் கிடைத்கது. அன்று அவ்வளவு தூரம் சென்று வேலை செய்வதை விருப்பாத இவர் கள் புத்தளம் வந்து சமூக சேவைகளில் தம்மை அர்ப்பணித் துக் கொண்டார். முற்போக்குவாதியாகவும், சமூகத்தின் கல்வி அபிவிருத்தியில் ஆர்வமுள்ளவராகவும் இருந்த இவர் கற்பிட்டியில் "ஆங்கிலக் கல்வி போதனாபீடமொன்றை அமைத்து கல்வியூட்டினார். அதே வேளை புத்தளத்திலும் எழுச்சியுள்ள வாலிபர்களைத் திரட்டி "முஸ்லிம் வாலிபர் சங் கம்" என்ற அமைப்பை உண்டாக்கி மெளலா மக்காம் பள்ளி. வாசல் வளவில் நிரந்தர கட்டிடமொன்றை நிறுவுவதிலும் வெற்றி கண்டார். இச்சங்க அமைப்பில் இவருடன் ஒத் துழைத்தவர்களில் மு. இ. மு. அப்துர் றஹ்மான், கே. எம். இபுறாகிம், த. இ. அப்துல் ஹமீது வா. சாகுல் ஹமீது, எம். .

Page 168
297 புத்தளம் வரலாறும், மரபுகளும்
ஏ. சாலிஹ் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அச் சங்கத்தினருக்கும், பள்ளிவாசல் பரிபாலகருக்கும் இடையில் நடைபெற்ற போராட்டங்கள் சுவாரஸ்யமானவை. அன்றைய் இளைய தலைமுறையினரின் புரட்சிகரமான பயிற்சிக் όλα - மாக முஸ்லிம் வாலிபர் சங்கம் விளங்கியது. இஸ்மாயில் ஹாஜியாரின் ஆதரவும் இச்சங்கத்துக்கிருந்தது. இன்றைய படித்த சமுதாமொன்று . அச்சங்கத்தின் உறுப்பினர்களின் வழித் தோன்றல்களிலிருந்தே பெரும்பாலும் உருவாகியது எனக் கூறின் அது மிகையன்று.
அல்ஹாஜ் எம். ஓ. எம். தாஹிர்
ஜனாப் எம். எம். எம். ஒமர் அவர்களின் குமாரராகிய இவர் சட்டத்தரணியாவார். இஸ்மாயில் ஹாஜியாரைத் தொடர்ந்து சட்டத்தரணியாக வந்த இவர் தமது தொழிலை குருநாகல் நீதிமன்றத்தில் ஆரம்பித்து அப்பகுதி மக்களி டையே பிரபலமானவராகத் திகழ்ந்தார். குருநாகல் தெலியா கொன்னை முகாந்திரம் ஆராய்ச்சியார் ஹமீது அவர்களின் மகளை மணஞ் செய்ததன் மூலம் குருநாகல் நகரையே தமது வசிப்பிடமாக ஆக்கிக்கொண்டார். எனினும் தமது பிறப் பிடத்தை மறக்கவில்லை. புத்தளம் மக்களின் அபிமானத்தை யும், கெளரவத்தையும் பெற்றதோடு அவர்களின் சுக துக்கங் களில் தவறாது பங்கு கொண்டு அவர்களுக்கு மறக்க முடி யாத சேவைகளைப் புரிவதில் முன் நின்றார். புத்தளத்தில் விசேட மருத்துவ, சத்திர சிகிச்சை வசதிகள் இல்லாதிருந்த மையால் இங்குள்ள மக்கள் மருத்துவ உயர் சிகிச்சைகளுக் காக நம்பிக்கையுடன் சென்ற இடம் குருநாகல் நகரமாகும். காரணம் அல்ஹாஜ் தாஹிர் அவர்கள் புத்தளம் பகுதியின் பிரதிநிதியைப் போல அங்கு வதிந்தமையேயாகும், நோயா ளிகளை வரவேற்று அவர்களுக்குரிய மருத்துவரிடம் அழைத் துச் சென்று உரிய சிகிச்சைகளை செய்வித்ததுடன், தமது இல் லத்திலே "புத்தளம் ஹோல்" என்ற பகுதியை ஒதுக்கி நோயா ளிகளையும், அவர்களுடன் கூட வருவோரையும் தங்க வைத்து உணவு வசதியையும், உபசரிப்புக்களையும் செய்து வந்த பெருங் கொடையாளராக இவர் திகழ்ந்தார். சாதி, மத பேதமின்றி தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் மனம் கோனாது இத்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் M 298
தொண்டை மிக விருப்புடன் தனது இறுதிக் காலம் வரை செய்து வந்தார். குருநாகல் பகுதி காதியாராகவும், முடிக் குரிய சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். இவரின் பணியை இவரின் புதல்வர் முஹம்மது மர்குக் தொடர்ந்து செய்தா ராயினும் அவரின் மறைவின் பின்பு தாஹிர் ஹாஜியாரின் மூத்த மகள் ஹாஜியாணி லணிஸா உவைஸ் அத்தொண்டை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முஹையதீன் இபுறாகிம் உடையார்
இவர் புத்தள்ம் பொன்பரப்பிப்பற்றின் உடையாராக இருந்த அசன் மீரா லெப்பையின் புதல்வராவார். 1895ம் ஆண் டில் யாழ்ப்பாணம் சென்ற் பெற்ரிக் கல்லூரியில் ஆங்கில மொழிமூலம் ஈ. எஸ். எல். சீ. வகுப்பு வகுப்பு வரை பயின்று 1910ம் ஆண்டு தொடக்கம் புத்தளம் உடையாராக நியமனம் பெற்றார். 1940ம் ஆண்டுவரை இவரின் சேவை நீடித்தது. சிலகாலம் சடுதி மரணவிசாரணை அதிகாரியாகவும் கடமை புரிந்தார். ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் இவரின் சேவையைப் பாராட்டி இலாஞ்சனையும், பாராட்டிதழும் வழங்கப்பட்டன. இவரின் வீடு இருந்த வீதி இன்றும் உடையார் ஒழுங்கை என வழங்கப்படுகின்றது. இவரது சகோதரர் நாகூர் பிச்சை என் பவர் பாலாவி உப்பளத்தின் மேற்பார்வையாளராக சேவை புரிந்துள்ளார்.
மு. க. அ. அப்துல் மஜீது மரைக்கார் புலவர்
இவர்கள் தமிழ்நாடு கீழக்கரை வள்ளல் சீதக்காதியின்
கொள்ளுப்பேரனாவார். இவர்கள் பாடியுள்ள பாடல்களும்,
பிரபந்தங்களும் அநேகமாயினும் தற்போது கைக்கெட்டியவை
கள் ஆசாரக்கோவையும், மஜீது மஞ்சரியுமாகும். மணிகர் குடும்
பத்திலுதித்து இலங்கை வந்து கற்பிட்டிப் பகுதியிலுள்ள தி சுழி
என்ற ஊரில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்கள். கற்பிட்டி
முஹம்மது தம்பி மரைக்கார் ஆசாரக் கோவையின் கொடை நாயகராவார்.

Page 169
299 புத்தளம் வரலாறும், மரபுகளும்
கரைத்தீவு செய்கு அலாவுத்தீன் புலவர்
புத்தளம் பொன்பரப்பிப்பற்றின் பேரூராகத் திகழும் கரைத் தீவு. இப்பெரும் புலவரின் பிறப்பினால் மேலும் பெருமை பெறு கிறது. பார்வையிழந்த கடாட்ச் வித்வ சிரோண்மணியான நா. செய்கு அலாவுதீன் அவர்களின் பாடல்கள் கவி, பொருள், ஒலி நயங்கள் நிறைந்தவை தனது பாட்டின் மூலம் தென்னிந்தியப் " சவ்வாதுப் புலவரின் செருக்கடக்கி அப்புலவர் பெருமகனாரின் பாராட்டைப் பெற்றார். இவர்களை "செய்கு அலாவுத்தீன் வலி யுல்லாஹ்" என கீழக்கரை உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மகாநாட்டின்போது வெளியிடப்பட்ட நானிலம்
போற்றும் நந்நகர் எனும் நூல் குறிப்பிடுகிறது
குறிஞ்சிப்பிட்டி செய்கு இஸ்மாயில் மரைக்கார் புலவர்
இவரை "தெள்ளப்பா புலவர்" என அழைப்பர். இவரின் கப்பல் பாட்டும், கும்மிப் பாடல்களும், கோலாட்டப் பாடல் களும் சிறப்பு வாய்ந்தவை. இந்து சமயத்தின் பாற்பட்ட மாரி யம்மன் தாலாட்டு, காளி தோத்திரம், அநுமார் மந்திரம் போன்ற நூல்களையும் யாத்துள்ளார். பாடகர், இசை அமைப் பாளர், கோலாட்டத் தலைவர், ஊர்ப் பள்ளிவாசல் தலைவர், நட்டுவனார், நடிகர் போன்ற பல நிலைகளில் இவரின் பணிகள் , சிறப்புற்றன. சிலப்பதிகாரத்தை கோவலன் கதை என்று நாடக மாக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். நாற்பது வயதில் எதிரி யொருவரால் கொலை செய்யப்பட்டமை துரதிர்ஷ்டமே.
அல்ஹாஜ் எம். எம். காதர் சாஹிபு மரைக்கார் அவர்கள்
கற்பிட்டி காதர் சாகிபு மரைக்கார் எனப் பிரசித்தமான வர். பொன்பரப்பிப்பற்று மக்களின் மத, சமூக, கல்வி நலன் களுக்காக தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட தலை வர். கரைத்தீவு கிராமச் சங்கத் தலைவராக பல காலம் பணி யாற்றினார். கரைத்தீவு, இலவன்குளம் மக்கள் இவரை தங்கள் தலைவராகவும், மரைக்காராகவும் மதித்தனர். துணிவுடன் செயலாற்றும் வீரரெனக் கூறலாம். இறுதியில் தப்லீக், இயக்கத் தில் தம்மை ஐக்கியமாக்கிக் கொண்டார். இவரின் மகன்

அல்ஹர்ஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 00
'ஜித்தா மரைக்கார்" எனக் குறிக்கப்படும் அப்துல் அளிஸ் மரைக்கார் ஹாஜியார் அவர்களாகும். ஹஜ்ஜாஜிகளை ஆத ரித்து உதவுபவர். காதர் சாகிபு மரைக்கார் ஹாஜியாரின் சகோதரர் கற்பிட்டி ஜனாப் எம். எம். தம்பி நெய்னா, மரைக் கார் சிறந்த கொடையாளர். கற்பிட்டி அல்-அக்ஸா மகா வித் தியாலயத்திற்கு பெறுமதி மிக்க தனது எட்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவ்வித்தியாலயம் மலர வும், உயரவும் உழைத்துவரும் பெருந்தகையாளர்.
J. 5. D(5upg5
**பானாத்தானா" என வழங்கப்பட்ட பிரபல வணிகர் ப. தம்பி மரைக்கார் அவர்களின் புலவர்களுள் ஒருவர். சமூக நலன்களில் தமது பணிகளைச் செய்துள்ளார். புத்தளம் அரசி னர் வைத்தியசாலையில் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பல அறைகள் கொண்ட கட்டிட மொன்றைக் கட்டி அன்பளித்துள்ளார். புத்தளம் மகளிர் அற பிக் கல்லூரியொன்றை உருவாக்குவதற்கு தமது தென்னந் தோட்டத்தின் வருமானத்தைப் பாவிக்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை எழுதி வைத்தார். அதன்படி இப்போது மன்னார் வீதியில் ஈ. எஸ். எம். முகம்மது காசிம் மரைக்காயர் அன்பளித்த காணியில் முஸ்லிம் மகளிர் அறபிக் கல்லூரி உருவாகி வருகின் றது. இதற்கான முயற்சியில் இவரது சகோதரர் ஜனாப் ஹனிபா மரைக்காரின் புதல்வர்களான ஜனாப் நிஸார், அல்ஹாஜ் நவவி ஆகியோரின் பங்களிப்புகள் இருக்கின்றன.
ஜனாப் எம். ೮. சாலிஹ்
புத் தளத்தில் "உடையார்’ எனப் புகழ்பெற்ற முகியித்தீன் இபுறாகிம் உடையாரின் புதல்வர்களுள் ஒருவர். துடிதுடிப்புள்ள புரட்சிக்ரமான நோக்கங்கள் கொண்ட முற்போக்குவாதிய்ா வார். எப்போதும். பழைமைவாதிகளை நியாயமாக சாடுவதில் பின்னின்றதில்லை. சரியெனப் படுவதை எவருக்கும் தலைசாய்க் காது கூறுவது, எழுதுவது இவரின் போக்காயிருந்தது. கடந்த கால வரலாறுகளை எழுத்தில் பதிவு செய்யும் வழக்கம் இவரிட மிருந்தமையால் அவரின் குறிப்புக்கள் வரலாற்றை எழுது வோர்க்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆங்கில அறிவில்

Page 170
30 புத்தளம் வரலாறும், மரபுகளும்
தேர்ச்சியுள்ளவர். முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் செயலாளராக கடமை புரிந்தார் இறுதியில் கரைத்தீவு உப தபால் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
ஜனாப் எஸ். எம். எம். காசிம்
புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த இவர் புத்தளம் நீதி மன்றத்தில் முடிக்குரிய சட்டத்தரணியாகக் கடமை புரிந்தார். காதியாராகவும், புத்தளம் நகரசபையின் தமைவராகவும் பணி யாற்றியுள்ளார். இவரின் மன்னவி யாழ்ப்பாணம் அறிஞர் ஏ. எம். ஏ. அளிஸ் அவர்களின் நெருங்கிய உறவினராவார். Glintai டர் கரீம் அவர்களின் மனைவி இவரின் சகோதரியாவார்.
ஜனாப் எஸ். எம். எம். இபுனு
இவர் சட்டத்தரணியாவார். புத்தளம் சேகுமதார் மீராப் பிள்ளையின் புதல்வர்களுள் ஒருவராவார். புத்தளம் சாஹிராக் கல்லூரியின் அதிபராகவும், புத்தளம் நகரசபையின் தலைவராக வும் கடமை புரிந்துள்ளார். பிரபல சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். அபூத்தாஹிர் அவர்களின் தம்பியாவார்
இ. செ. (P. குடும்பம்
புத்தளத்தில் நொத்தாரிஸாகவிருந்த இபுறாகிம் என்பவ ரின் வாரிசுகளே "இ. செ. மு" (E. S. M.) என்ற விலாசதா ரர் குடும்பமாகும். இவர்கள் "முதலாளிகள்" என அழைக்கப் பட்டனர். நில புலன்கள், பணம் படைத்த பெருஞ் செல் வந்தர்களாகத் திகழ்ந்தனர். இபுறாகிம் நொத்தாரிஸின் புத் தளம் கொம்பி முனை வாய்க்கால் பிரசித்தமானது. மீ ஒயா விலிருந்து விலுக்கை வயல்களுக்கு நீர்ப்பாச்சுவதற்காக அவ ரால் வெட்டப்பட்ட கால்வாய். 'நொத்தாரிஸ் அளை" என இன்றும் வழங்கப்படுகின்றது. இக்குடும்பத்தினர் புத்தளத்தில் ஆதிக்கமும், தலைமைத்துவமும் உடையவர்களாக விளங்கி

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 302
னர். இக்குடும்பத்திலுதித்த ஜனாப் முகம்மது காசிம் மரைக் கார் "மதுரஸத்துல் காஸிமிய்யா" என்ற அறபிக் கல்லூரிக்கு நிலமளித்து. கட்டிடங்களைக் கட்டி, அதன் பராமரிப்புக்காக தென்னந் தோட்டங்களை அன்பளித்தவராவார். ஜனாப் ஐதுரூஸ் மரைக்காயர் அவர்கள் புதுப்பள்ளி எனப்படும் ஐது ரூஸ் மஸ்ஜிதைக் கட்டி வக்பு" செய்தவராவார். கொழும்பில் இரண்டாம் குறுக்குத் தெருவில் ஜனாப் இ. செ. மு. இபு றாஹிம் நெய்னா மரைக்கார் அவர்களுக்கு கொப்பறா வணிக நிறுவனமிருந்தது. இவரின் தந்தையாரால் கொழும்பு சம்மாங் கோட்டுப் பள்ளிவாசலுக்கு இருபதினாயிரம் ரூபா நன்கொடையும், எட்டு பாரிய முதிரைத் தூண்களும் அன் பளிப்புச் செய்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இபுறாஹிம் நெய்னா மரைக்கார் அவர்கள் புத்தளம் பிரபல வர்த்தகர் ப. த. தம்பி மரைக்காரின் மகளை மணந்தார். இவரின் மகளையே இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் அல்ஹாஜ் எம். எச். எம். நெய்னா மரைக்காயர். அவர்கள் மணந்தார்கள்.
ஊர் மரைக்கார் குடும்பம்
இவர்களின் மூதாதையர் கற்பிட்டியைச் சேர்ந்தவர்க ளாகும். ஊரின் தலைமைப் பொறுப்பும், பெரிய பள்ளிவாச லின் நம்பிக்கைப் பொறுப்பும் இவர்களின் கைகளிலிருந்தமை யால் ஊர் மரைக்கார் எனப்பட்டனர். இந்நூலின் முன் னைய அதிகாரங்களில் இக்குடும்பத்தினதும், முதலாளி குடும்பத்தினதும் முக்கியத்துவங்கள் தரப்பட்டுள்ளமை காண்க. இவர்களின் வீடாகிய "காசிம் பெலஸ்" கட்டிடக் கலையழகு நிரம்பிய பொக்கிஷமாகும். இன்று அக்கட்டிடம் பிரிக்கப்பட்டு தகுந்த பராமரிப்பின்றி இருப்பது துரதிர்ஷ்டமாகும். பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து மறைந்த அல்ஹாஜ் எல். சி. எம். முகம்மது நெய்னா மரைக்கார் அல் லது செல்ல மரைக்கார் அவர்களே ஊர் மரைக்காருள் இறு தியானவர் எனலாம். இவர்களின் தகப்பனார் முஹம்மது காசிம் மரைக்கார் அவர்களே புத்தளத்தின் முதலாவது

Page 171
303 புத்தளம் வரலாறும், மரபுகளும்
"ஹெட்மூர்மன் ஆவார். செல்ல மரைக்கார் அவர்கள் சிறந்த சமூக சேவையாளரும், புத்தளம் சாகிராக் கல்லூரிக்கு நிலத்தின் ஒரு பகுதியை அன்பளிப்புச் செய்தவருமாவார்,
வைத்தியர் குடும்பம்
தென்னிந்தியா கீழக்கரையிலிருந்து சீதக்காதி என்ற பெய ருடைய வைத்தியர் புத்தளம் வந்தடைந்து தமது வைத்திய பரம்பரையை உண்டாக்கினார் என அறிகின்றோம். அவரின் வழிவந்த எட்டுத் தலைமுறையினர் இத்தொழிலை பிரசித்த மாக செய்துள்ளனர். தகவல் தெரிந்தவரை கப்ப நெய்னா பரி யாரி, சேகுத்தம்பி பரியாரி, செய்தக்காதிப் பிள்ளைப் பரியாரி. என்ற முத்தலை முறையினரே அறிமுகமாகின்றனர். அன்று உள் ளூர் வைத்தியர்களை பரியாரிமார் என்றே அழைத்தனர். நோய்க்குப் பரிகாரம் செய்பவர் என்ற பொருள்பட்ட சொல்லே பரியாரி என மருவியது. இவர்கள் வைத்தியத்துடன் சுப காரி யங்களுக்கு நாளும் நேரமும் பார்த்துக்கூறும் நாட்கணிப்பு வல் லுநர்களாகவும் இருந்தனர். தம் இல்லம் வரும் ஆட்களின் சாடை, நடத்தை. சொற்கள் ஆகியவற்றின் குறிகளைக் கொண்டு சிகிச்சை பெறவுள்ளவரின் சாதக, பாதகங்களை முன் கூட்டியே அறியும் திறமையுள்ளவர்களாகவும் விளங்கினர். செய் தக் காதிப்பிள்ளை பரியாரிக்குப்பின்பு அத்தொழிலைச்செய்து வந்த அவரின் தம்பி 'சின்னப் பரியாரி" என்றழைக்கப்பட்ட செகு முஹம்மதுஹ"ஸைன் பரியாரி சமீபத்தில் காலமானார். இவரை இப்பரம்பரையின் இறுதியானவராகக் கொள்ளலாம். இவ்வைத்தியப் பரம்பரையினரரல் தயாரிக்கப்கப்பட்ட மருந்து கள் பிரபல்யமானவையாகும்.
இவ்வாறே புத் தளம் அம்பலத்தில் தோன்றிய பிச்சைப் பிள்ளை பரியாரியும் சிறந்த வைத்தியராகும். அவரின் மகன் முஹம்மது இபுறாஹிம் அவர்களும் புத் தளத்தில் குறிப்பிடத் தக்க வைத்தியராக சேவையாற்றியுள்ளார்.
வட மேற்கு மாகாண சபை உறுப்பினராக இருக்கும் டாக்டர் இல்யாஸ் அவர்களின் பரம்பரையும் வைத்தியர்க ளுடையதாகும். நான்கு தலைமுறையினர் வைத்தியர்களாக

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 304
விளங்கியுள்ளனர். இத்ரீஸ் பரியாரி எனப்பட்ட முஹம்மது இத்ரீஸ் டாக்டர் இல்யாஸ் அவர்களின் தந்தையாராகும். அவரின் தந்தை முகையதின் பிச்சைப் பரியாரியாவார்: இத்ரீஸ் பரியாரி புத்தளத்தில் பிரபலம் பெற்று கைபிடி வைத்தியத்தில் சிறந்திருந்தார். இவரின் தம்பி ஹமீது ஹ"சைன் பரியாரி அவரை விட நாடி பிடித்து நோயாளியின் முடிவைக் கூறும் திறன்படைத்தவராக இருந்துள்ளார்.
ஆங்கில வைத்தியத்துக்கு மக்களும், அரசும் முதலிடம் கொடுத்த காரணத்தால் மகத்துவமிக்க ஆயுர்வேத, யூனாணி வைத்தியப் பரம்பரைகள் பொருளாதார சிக்கலில் மங்கி மறைந்து போனமை வருந்தக் கூடியதாகும்.
விஷ வைத்தியர்கள்
புத்தளத்தில் விஷ, வைத்தியத்தில் பிரசித்தமாக் விளங் 'கியவர் காசி முகையதின் என்பவராவார். அவர் இந்திய விஷ வைத்தியர் ஒருவரிடமிருந்து இவ்வைத்தியத்தைக் கற்று குரு மொழி பெற்று எவ்வித ஊதியமும் பெறாது மக்கள் சேவை யாகவே செய்து வந்துள்ளார். அவரின் பின்பு அவரது மகன் முகம்மது காசிம் அவர்கள் பிரபலம் பெற்று விளங்கினார்கள். அவரின் பின் தற்போது அவரின் மகன் ஜனாப் அகமது மாஸ்டர் அவர்கள் இவ்வைத்தியத்தை அமைதியான முறையில் செய்து வருகின்றார்கள்.
கிராமத் தலைமைக்காரர் பரம்பரை
ஏழு தலைமுறைகளாக பொலிஸ் விதானை மாராகவும், கிராமத் தலைமைக்காரர்களாகவும், கிராம சேவையாளராக வும் கடமைபுரிந்த பரம்பரையினர் புத்தளத்திலுள்ளனர். இவர் so விதானை யார் குடும்பம் என அழைப்பர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலம்தொட்டு இவர்களின் பரம்பரை வளர்ந்து வந்துள் ளதாகக் கூறப்படுகிறது. அறிந்த அளவில் இப்பரம்பரையின் முதலாவது விதானையார் நாகூர்ப்பிச்சை என்பவராகும். அவ

Page 172
305 புத்தளம் வரலாறும், மரபுகளும்
ருக்குப் பின்பு முறையே முகையதின் பக்கீர், காசிம் முகையதின் முகையதின் இபுறாகிம் அல்லது முகம்மது அப்பாஸ், பீர் மரைக்கார், அப்துல் ஹமீது மரைக்கார் ஆகியோர் விதானை மார்களாக இருந்துள்ளனர், அவ்விதானை பரம்பரையின் கடைசி வாரிசாக சமீபகாலம் வரை கிராம சேவையாளராகப் பதவி வகித்து ஓய்வுபெற்று வாழ்ந்து வரும் ஜனாப் ஏ. எச். அப்பாஸ் விதானையார் அவர்களாவார். இவர் பத்து வருட காலம் இப்பதவியை வகித்து சிறந்த விதானையார் என்ற பட் டத்தை 1952லும், 1954லும் பெற்றமை குறிப்பிடத்தக் கது. பீர் மரைக்கார் விதானையாருக்கு விக்டோரியா மகாராணியாரின் முடிசூட்டு விழாவின் நிமித்தம் பதக்கம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.
முன்னோடி ஆசிரியர்கள்
புத்தளத்தின் முன்னோடி ஆசிரியர்களாக மூவரைக் குறிப் பிடலாம். யூசுப் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட சேகு அலி, கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த காதர் சாகிபு (காறுசா மாஸ்டர்), மலே இனத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஐன் மாஸ்டர் ஆகியோரே அவர்களாவார். தராதரப் பத்திரமற்ற இவர்கள் அன்றைய ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரளவு படித்தவர்களிடமிருந்து அரசினால் தெரிவு செய்யப்பட் டார்கள். புத்தளத்தில் ஆரம்பக் கல்வியை ஊட்டி மாணவர் களை வழி நடாத்திய முன்னோடி ஆசிரியர்களாக இவர்களை மதித்து நினைவு கூரலாம். -
""முஹல்லம்கள்"
சமய சம்பந்தமான சகல விடயங்களிலும் ஆலோசனை. கூறக் கூடியவர்களாக புத்தளத்தின் மூன்று பகுதிகளில் (முஹல் லாக்கள்) மூன்று பெரியார்கள் இருந்தனர். அவர்கள் "முஹல்லம்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்தனர். சமய சம்பற் தமாக இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பொதுமக்களால் ஏந்துகொள்ளப்பட்டன. புத்தளம் மேற்குப் பகுதிக்கு முஹல் லம் நாகூர் இபுறாகிம் லெப்பை அவர்களும், மத்திய பகுதிக்கு முஹல்லம் முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அவர்களும்,

Sydbamp nr gy. GT6ör. Tub. antgsprésir 306
கிழக்குப் பகுதிக்கு முஹல்லம் சேகு சுலைமான் லெப்பை அவர்க ளும் முஹல்லம்களாகவிளங்கினர். முஹல்லம் முஹம்மதுஅப்துல் லாஹ் லெப்பை அவர்களின் வழித்தோன்றல்களே புத்தளம் பெரிய பள்ளிவாசல் கதீப்களாக இருந்த சக்கரிய்யா லெப்பை மதீனா லெப்பை ஆகியோராவர். சேகு நெய்னா லெப்பை எனப்பட்ட இன்னொரு மகன் பிரபல புடைவை வணிகராக விளங்கினார். முஹம்மது அப்துல்லா லெப்பையின் மருமக னார் லெப்பை நெய்னா லெப்பை "கதீப்" ஆகவும், சிந்தனை வாதியாகவும் இருந்தார். சேகு சுலைமான் லெப்பையின் குமா ரர் கண்ணுவாப்பு லெப்பை, முதலியார் லெப்பை ஆகியோர் லெப்பைத் தொழிலைச் செய்து வந்தனர். கண்ணுவாப்பு லெப்பையின் புதல்வர்களில் ஒருவரே அல்ஹாஜ் மெளலவி கே. வீ. எல். அப்துல் ஹமீது பஹ்ஜி அவர்களாவார்.
மார்க்க அறிஞர்கள்
மெளலவி சேகு இபுறாகிம் ஆலிம் அவர்கள் காயல்பட்ட ணத்தில் கல்வி பயின்று பட்டம்பெற்றவ்ர். புத்தளம் காளி மிய்யா மதுரஸாவிலும் ஆசிரியராக இருந்துள்ளார். மாண வர்கள் மார்க்க விடயங்களை இலகுவில் அறியக் கூடிய விதத் தில் அறபுத் தமிழில் வினா விடைப் பாடல்களை யாத்துள் ளார்கள். இவரின் புதல்வர்கள் டாக்டர் கரீம் அவர்களும், முகம்மது தமீம் அவர்களுமாவார்கள். டாக்டர் கரீமின் புதல் வரே டாக்டர் ஹபீல் அவர்களாவார்.
மெளலவி யூசுப் ஆலிம் சிறந்த மார்க்கப் பெரியாரும், அறி ஞருமாவார். தமிழிலும், அறபியிலும் பாண்டித்தியம் பெற்ற வராக இருந்த இவர் கும்மிப்பாடல்கள், மார்க்க வினா விடைப் பாடல்கள், மெய்ஞ்ஞானக் குறவஞ்சி ஆகிய நூல்களை யாத்த னர். மதுரஸத்துல் காசிமிய்யாவிலும் ஆசிரியப் பணிபுரிந்தார். இவரின் மகனே மறைந்த அப்துஸ்ஸலாம் ஹாஜியார் அவர்களா a mrtř.
மெளலவி முகம்மது அபூபக்கர் ஆலிம் பொதக்குடி, லக்னோ ஆகிய மதுரஸாக்களில் கல்வி கற்று அரபு, தமிழ் மொழிகளில்

Page 173
907 புத்தளம் வரலாறும், மரபுகளும்
அறிஞராகத் திகழ்ந்தார். "சித்தங்குட்டி ஆலிம் ஷா" என அழைக்கப்பட்டார். சிறந்த சிந்தனைவாதியென இவரைக் கூறலாம். தென்னிந்திய மதுரஸாக்களிலும் ஆசிரியராக இருந் துள்ளார். பல நூல் களையும். பிரசுரங்களையும் வெளியிட்டுள் ளார். திருக்குர்ஆனின் "அஸர்" என்ற அத்தியாயத்திற்கு இவர் எழுதியுள்ள விரிவுரை குறிப்பிடத்தக்கது. W
மெளலவி மகுமூது ஹஸ்ரத் புத்தளம் மதுரஸத்துல் காளி மிய்யாவின் ஜீவ நாடியாகவும், மதிப்புமிக்க அதன் அதிபராக வும். சுமார் அரை நூற்றாண்டு காலம் பணிபுரிந்த மகானா வார். தென்னிந்தியா மதுரஸாக்களில் பயின்ற இவர்கள் பல மெளலவிமார்களை உருவாக்கியவரர்வர் . "பெரிய ஹஸ்ரத்" என யாவராலும் அழைக்கப்பட்ட அவர்கள் பணிவைப் பூஷண மாகவும், மெளனத்தைக் கேடயமாகவும் கொண்டு நிறைகுட மாகத் திகழ்ந்தார்கள். ஒழுக்க விடயங்களில் மிகவும் கண்டிப் புள்ளவராக இருந்த இவர்கள் தன்னை நாடி வரும் எவர்க்கும் எச்சமயத்திலும் தன்னிலை பாராது ஈந்துவக்கும் ஈகையாளராக இரவு வணக்கங்களில் ஈடுபாடதிகம் உள்ளவராக விளங்கினார் கள். அன்னாரோடு நெருங்கிப் பழகினோர் அவர்களை வலியுல் லாஹ் (இறைநேசச்செல்வர்) என வர்ணித்தனர். காஸிமிய்யா மதுரஸாவின் இப்போதைய அதிபர் மெளலவி அப்துல்லாஹ் மஹ்மூது ஆலிம் பெரிய ஹஸ்ரத் அவர்களின் மகனாவார்.
மெளலவி சேகு மீரான் லெப்பை ஆலிம் காலி மதுரஸா வில் கற்றுப் பட்டம் பெற்றவர். பள்ளிவாசல்களில் "கதீப்" ஆகவும், குர்ஆன் பாடசாலைகளில் ஆசிரியராகவும் இருந் துள்ளார். இறுதியில் அரசினர் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இளமைக் காலத் தில் முஸ்லிம் அபிவிருத்திச் சங்கத்திலிணைந்து சமூக, சமயப் பணிகளுக்குதவினார். சிறந்த குரல் வளம் படைத்த இவர் நல்ல உபந்நியாசகர். இவர்களிடம் ஒதிப்படித்தவர்கள் பல ருளர். எனது ஆசிரியராகவும் இருந்தார்.
மெளலவி முஹம்மது அப்துல் காதர் ஆலிம் - காலி மதுர ஸாவில் கற்றுப் பட்டம் பெற்றார். இவரின் தகப்பனார் த, இ. குடும்பத்தைச் சேர்ந்த அகமது என்பவராவார். மார்க்க

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 908
学
சம்பந்தமான ஆழமான அறிவை ஆலிம் அவர்கள் பெற்றிருந் தார்கள். இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டத்தில் நிபுணத் துவ முள்ளவராக விளங்கினார்கள். நீதிமன்றங்களில் இவரின் தீர்ப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களால் வழங்கப் பட்ட "பத்வாக்கள்" (மார்க்கத் தீர்ப்புகள்) பெரும்பாலும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. யோகாசனப் பயிற் சிகளில் ஆர்வமுள்ளவராக இருந்த ஆலிம் அவர்கள் சிறந்த சிந்தனை வாதியாவார்.
சம்மாட்டியார்
புத்தளத்தில் மீன் பிடித்தலும் பலரின் தொழிலாக இருக் கின்றது. அன்று மீனவர்களுக்கிடையே ஐக்கியமான தனியான சமூக அமைப்பு இருந்துவந்ததைக் காண்கின்றோம். ஏதாவது பிரச்சினைகள், சமூக விஷயங்கள், சண்டை சச்சரவுகள் ஏற் படுங் காலை மீனவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தைரியமாக முகங்கொடுக்கும் வழக்கம் சமீப காலம்வரை இருந்து வந்துள் ளது. இத்தன்மை பண்டு தொட்டு ஒரு தலைமையின்கீழ் இயங்கி வந்த சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். மீனவர்களின் தலை வர்களை சம் மாட்டியார் என அழைத்தனர். அவர்களின் சொல் லுக்கு அடிபணிந்து நடக்கும் சுபாவம் மீனவர்களிடமிருந்தது: அவர்கள் ஆண்டு தோறும் சம்மாட்டியார் மெளலூது" என்ற பெரிய அன்னதான் சமய நிகழ்ச்சியை நடாத்தினர். புத்தளம் முகையதின் தர்ஹாவின் - அதாவது பெரிய பள்ளிவாசலின் நம் பிக்கைப் பொறுப்பாளர்களுள் ஒருவராகவும் சம்மாட்டியார் இடம் பெற்றனர். அவ்வாறு சம்மாட்டியாராகக் கடைசியாக இருந்தவர் ஜனாப் வாவா நெய்னா என்பவராவார். அவரின் தந்தை மீரா நெய்னா என்பவரும் சம்மாட்டியாராக இருந்துள் ளார். அவருக்கு முன்பிருந்த தலைமுறையினரின் பெயர்களை அறிய முடியவில்லை. இச்சம்மாட்டியார்களிடம் பெருந்தொகை யான தோணிகளும், வள்ளங்களும் இருந்தன,
அம்பலகாரனார் குடும்பம்
இலங்கை மக்களுக்கு நெசவுத்தொழிலை அறிமுகப்படுத்
தும் நோக்கமாக இலங்கை அரசரின் இணக்கத்திற்கும், விருப் புக்கும் உட்பட்டு தென்னிந்திய பட்டினங்களிலிருந்த முஸ்லிம்

Page 174
309 புத்தளம் வரலாறும், மரபுகளும்
நெசவாளர்கள் முஸ்லிம் வணிகர்களின் உதவியுடன் இந்நாட் டின் சில பிரதேசங்களில் குடியேறினர். அப்பிரதேசங்களில் புத் தளமும் ஒன்றாகும். இந்த நெசவாளர்கள் இங்கு வாழ்ந்து இப் பிரதேசத்தினதும், மலைநாட்டினதும் புடைவைத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர் என அறிகின்றோம். நெசவாளர் குடும் பங்கள் வசிப்பதற்காக செட்டித்தெருவுக்குக் கிழக்கே இரண் டாம் குறுக்குத்தெருவுக்கும், மரைக்கார் தெருவுக்கும், இடைப் பட்ட போல்ஸ் வீதிவரை இருக்கும் பரந்த நிலப்பரப்பு ஒதுக்கப் பட்டிருந்தது. இதன் வடக்குப்பகுதி பெரிய பாவோடித் தெரு வென்றும், தெற்குப்பகுதி சின்னப்பாவோடித் தெருவென்றும் அழைக்கப்பட்டன பாவோடுதல் என்பது நெசவுத்தொழிலைக் குறிக்கும் அவ்வாறு நெசவாளர்களாக வந்த குடும்பத் தலைவர் களே அம்பலகாரனார் எனப்பட்டனர். மேலும் இவர்கள் "காயலார்" எனவும் அழைக்கப்பட்டனர். இப்பகுதி "காயலார் வீதி" என்றும் அழைக்கப்பட்டது.
காயல் என்பது கீழக்கரையைக் குறிக்குமாதலின் இவர்கள் கீழக் கரையிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என நம்ப லாம் இலவத்தம்பி அம்பலகாரனார், சேக்காலி அம்பலகார னார் என்ற இரு சகோதரர்சளும், அவர்களின் மைத்துனர் செய்யது என்பவரும் தமது ஏனைய குடும்பத்தினருடன் முதலில் புத்தளம் வந்து சேர்ந்தனர். முன்னவர் பெரிய அம்பலகாரனார் எனவும், பின்னவர் சின்ன அம்பலகாரனார் எனவும் வழங்கப்பட் டனர். இவர்கள் அரசு ஆதரவுடன் செல்வாக்குடன் வாழ்ந்த னர் எனத் தெரிகின்றது. பொன்பரப்பி ஆற்றில் இவர்களின் குடும்பத்தினர் கோடை காலங்களில் சென்று தங்கியிருந்து வரு வதற்கான பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. "அம் பலகாரனார் விடுதி" என இப்பகுதி இன்றும் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புத்தளம் நகரினுள் வான் வீதி அமைந்திருக்கும் பகுதியில் இவர்களால் தோண்டப்பட்ட அம்பலகாரனார் குளமும் இவர்களின் பெயர்களைப் பிரபல் யப் படுத்துகின்றது. இன்று இக்குளம் படிப்படியாக தூர்க் கப்பட்டு வீடு வாசல்களினால் நிரம்பியுள்ளது. அம்பலகார னாரின் மைத்துனர் செய்யது அவர்கள் பிரபலமான குடும்பத் தலைவராகவும். பணிக்சர்களை அமர்த்தி யானைகளைப் பிடித்து வியாபாரம் செய்பவராகவும் விளங்கினார். இவரின் வழித்தோன்றல்களை "செய்யது குடும்பத்தினர்" என அழைத்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 310
தனர். செய்யது அவர்களின் மகனார் செய்யது இபுறாகிம் என்பவர் பிஸ்கால் அதிகாரியாக விளங்கியுள்ளார். பிஸ்கால் இபுறாகிம் அவர்களின் சகோதரர் அசன் நெய்னா பிள்ளை என்பவர் மதிப்புமிக்க தலைவராகவும், அரசினால் மதிக்கப் பட்டவராகவும் இருந்துள்ளார். அன்றைய ஆங்கில அரசு இவர்களின் மறைவு தினத்தை புத்தளம் பகுதியிலுள்ள அரசு தனிப்பட்ட நிறுவனங்கட்கு விடுமுறை அளித்து கெளரவித் தமை குறிப்பிடத்தக்க நிசழ்வாகும். இவர் எனது பாட்ட னாராகிய முத்தப்பா என அழைக்கப்பட்ட முகம்மது அபூ பக்கர் அவர்களின் மைத்துனர் ஆவர். முத்தப்பாவின் மனை வியார் முத்துப் பாத்தும்மா அவர்களை அவர்களின் மகளும், அசன் நெய்னாப் பிள்ளையின் சகோதரியுமாவார்,

Page 175
32. இன்றைய புத்தளம்
புத்தளம் பிரதேசம் நீண்ட வரலாற்றைக் கொண்ட தென்பதைக் கண்டோம். தொன்மை வாய்ந்த நாகரிகம் வளர்ந்த பிரதேசமாகவும், பிற நாட்டவர் இலங்கையுடன் தொடர்பு கொள்வதற்கேற்ற சிறந்த பாதுகாப்பான துறை முகங்களையுடைய இடப்பரப்பாகவும் புவியியல் பின்னணியில் சமுதாய வாழ்வுக்குரிய வசதிகள் கொண்டதாகவும், இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்த வரலாற்றின் ஆரம்ப முன்னணிப் பிரதேசமாகவும், வர்த்தகத் துறையின் கேந்திர நிலையமாகவும் புத்தளம் பகுதி விளங்கி வந்தமையை நாம் அறிவோம். முத்துக் குளிப்புத் தொழிலின் முக்கியத் துவம் அருகியமை, அந்நியர்களின் ஆதிக்கத் தாக்கம், கப்பல் போக்குவரத்துக்களில், கப்பல் அமைப்புக்களில் ஏற்பட்ட பாரிய மாற்றம், நோய்களின் தொல்லைகள், மக்களின் அழிவு, வெள்ளப் பெருக்குகளின், கடற்கோள்களின் தாக் கங்கள், சுகாதாரக் குறைவு போன்ற காரணிகளால் இப் பிரதேசத்தின் பூர்வீகச் சிறப்பு மங்கிப் போய் விட்டது. சூழ வர காடுகள் மண்டி பிற பிரதேசங்களுடன் தொடர்பு கள் துண்டிக்கப்பட்டன. புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வெளிப் பிரதேச மக்களுடன் நெருக்கமான உறவுகள் அற்றவர்களாக தனித்துவமான வாழ்க்கை அமைப்பைக் கடைப்பிடித் தமையைக் காண முடிகிறது. இதனால் இப் பகுதியின் முன்னேற்றம் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 312
போது மிகவும் பின் தங்கிய நிலையில் நீண்ட காலமாக தேக்க நிலையில் இருந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
இற்றைக்கு எழுபது, எழுபத்தைந்து ஆண்டுகட்கு முன்பு புத் தளம் மக்களின் சமுதாய அமைப்பைப் பற்றி வரலாற் றாசிரியர் திரு. புறோஹியர் அவர்கள் குறிப்பிடும்போது, "அவர்கள் தங்களின் சமூகத் தனித்துவத்திற்கேற்றவாறு தாமே தேர்ந்தெடுத்துள்ள இடங்களில் ஒன்று குழுமி பண்டைய பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களாக வாழ்கின்றனர். எத்தகைய வெளித் தாக்கங்களினாலும் பாதிக்கப்படாத சுயேச்சையான மக்களாக வாழ்வதைக் கண் ணுற்றேன்" எனத் தெரிவிக்கின்றார். இக்கூற்று புத்தளம் பிரதேச மக்களின் இயல்பை தெளிவாகக் காட்டுகின்றது,
புத்தளம் மக்கள் தங்களின் வதிவிட எல்லைகளுக்குள் ளிருந்து அகன்று வாழ விரும்பினார்களில்லை. தங்கள் வள வுக்குள் தங்களின் பிள்ளைகட்கும் வீடுகளை அமைத்து ஒன் றிணைந்து வாழவே விரும்பினர். வெளியூர் மக்களுடன் விவாக சந்பந்தம் கூட வைத்துக் கொள்ள விரும்பவில்லை, அவ் வாது சம்பந்தம் வைத்துக்கொள்வதைத் தாழ்வாகக் கருதினர். பொருளாதார ரீதியில், குடும்ப ரீதியில் தங்களுக்கேற்ற தரத்தாருடன் தொடர்பு வைத்தனர். படித்தவர்கட்கு மதிப் பளிக்காது எவரையும் பொருளாதார ரீதியிலேயே மதிப்பிட் டனர்; அல்லது குலத் தொழில் ரீதியிலேயே அணுகினர். பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலத்துக்கிருந்த முக் கியத்துவத்தைக் கவனித்தார்களில்லை. ஆங்கிலம் கற்பது செல்வந்தர்களுக்கே முடியும் என்ற கருத்து நிலவியது. ஆங் கிலக் கல்வி தமது வேதத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் கருவி யென்ற மனோ நிலையும் பரவலாக இருந்தது. இதையும் மீறி வசதிபடைத்த சிலர் தமது பிள்ளைகளைக் கொழும் புக்கு அனுப்பி படிப்பித்தனர். பெரும்பான்மையானோர் கொழும்பு சாகிராக் கல்லூரியில் சேர்ந்து படித்தனர். சிலர் மிஷன் கல்லூரிகளிலும் சேர்ந்தனர். ஆயினும் கல்வியைத் தொடர்ந்து படித்து சான்றிதழ் தரத்தை அடைந்தவர்கள் விரல் விட்டெண்ணக் கூடிய சிலர் மட்டுமே. அதிகமானோர்

Page 176
33, புத்தளம் வரலாறும், மரபுகளும்
இடை நடுவில் தமது கல்வியைக் கைவிட்டு ஊர் திரும்பினர். கல்வியைக் கற்று முதலில் சட்டத்தரணியாக ஊர் திரும்பிய பெருமை இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாய கர் மர்ஹஅம் அல்ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில் அவர்களுக்கே உரித்தாகும். புத்தளம் மக்களிடையே விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த பல முயற்சிகளை இப்பெரியார் செய்தமையைக் காண்கின்றோம். ஆங்கிலம் கற்றவர்களும், விழிப் புணர்ச்சி கொண்ட அன்றைய இளம் சமுதாயத்தினரும் இவரின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். சமூக சேவைக்குரிய இயக் கங்களை ஆரம்பித்தனர். புத்தளம் மெளலா மக்காம் பள்ளி வாசல் வளவில் அமைந்துள்ள முஸ்லிம் வாலிபர் சங்கம் இதன் முன்னோடியாய் அமைந்தது. அந்நியரின் ஆதிக்க வரம்புக்குட்பட்டு அவலப்படும் நிலையின் இழிவை எடுத்துக் காட்டி புத்தளம் பகுதி மக்களிடையே - குறிப்பாக பணக்காரர் களிடையே நிலவிய தவறுகளைச் சுட்டிக் காட்டி உணர்ச் சிகளைத் தட்டி யெழுப்பிய இச்சங்கத்தின் பணிகள் பாராட் டக்கூடியனவாகும். சமூக, கல்வி கலாச்சார விடயங்களில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்ய இவர்கள் விழைந்தனர். அதனால் தலைமைத்துவம் வகித்த செல்வந்தர்களுக்கும், இவர்களுக்கு மிடையே மோதல்களும், அகன்ற இடைவெளி யும், ஆதர வின்மையும் நிலவியமையைக் காண்கின்றோம். தங்களின் முக்கியத்துவம் அல்லது தலைமை பறிபோய் விடுமோ என்ற அச்சமே செல்வந்தர்கள் இவர்களுடன் கருத்து வேறுபாடுகொள்ள காரணமாக அமைந்திருக்கக் கூடும்.
இந்நிலையில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய நிலை வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளை புத்தளத்திலிருந்த சென் அன்ரூஸ் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தனர். இப் பாடசாலை, செட்டித் தெருவில் இன்றைய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் இருக்கும் வளவில் அமைந்திருந்தது. எழுச்சி பெற்ற தீவிர வாத முஸ்லிம்கள் சிலர் பாரிய எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தமது பெண்பிள்ளைகளை போல்ஸ் வீதிக்கும், அநுரதபுரப் பாதைக்கும் இடையில்

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 34
அமைந்திருந்த சென்ற், ஆன்ஸ் பெண்கள் ஆங்கிலப் பாடசா லைக்கு அனுப்பினர். இப்பாடசாலை தற்போது சென்ற். அன் ரூஸ் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாக உள்ளது. வசதியற் றவர்களின் பிள்ளைகள் புத்தளம் போல்ஸ் வீதியில் இன்று பாத் திமா மகளிர் மகா வித்தியாலயமாக இருக்கும் "கால இஸ்கூல்" என அழைக்கப்பட்ட அரசினர் ஆண்கள் பாடசாலைக்குச் சென்று கற்றனர். பெண் பிள்ளைகள் செட்டித் தெருவில் புத் தளம் நகரசபை நீர் விநியோகக் கோபுரம் அமைந்துள்ள காணியில் இருந்த பெண்கள் பாடசாலைக்குச் சென்றனர். இப் பாடசாலை பின்பு மன்னார் வீதியில் இன்று சாஹிராப் பாலர் பாடசாலை இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இவ்விரு ஆண், பெண் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூலம் மட்டுமே கற்பித்தல் நடைபெற்றது.
புத்தளம் பகுதி மக்களின் சமுதாயத்தில் பணக்காரர்களும் ஏழைகளுமாக இரு முரண்பட்ட பொருளாதார சமூகங்கள் வாழ்ந்தனர். இவ்விரு சாராரையும் இணைக்கும் பாலமாக அமையக்கூடிய, சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வல்ல மையுடைய தூண்டு கருவிகளாக அமையக்கூடிய மத்திய வகுப்பாரின் தோற்றம் மிக மிக மெதுவாகவே உண்டாகியது. இம்மத்திய வகுப்பாரிலேயே சட்டத்தரணிகளும், வைத்தி யர்களும், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அரசாங்க ஊழியர்களும், வியாபாரிகளும் தோன்றினர். செல்வந்தர்களில் அநேகர் தமது காணி பூமிகளையும், "சொத்துச் சோந்திரங் களையும்" வைத்துப் பராமரித்து அவற்றின் வருமானத்தில் சுக போகமாக தமது வாழ்வைக் கழிப்பதையே நோக்கமாகக் கொண்டனர். அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டதும் வேலை வாய்ப்புக்களை மக்களுக்கு அளிக்கக் கூடியதுமான துறைகளில் மூலதனமிட்டு தமது செல்வத்தை அபிவிருத்தி செய் பும் நோக்கங்கள் இவர்களிடமிருக்கவில்லை. செல்வம் பரம் பரையாகத் தமக்கும், தமது பிள்ளைகட்கும் வாழ்வளிக்கும் என நம்பியிருந்தனர். எனவே விருத்தி செய்யப்படாத அவர் களின் சொத்துக்கள் தங்கள் வழிவந்தோர்களின் பெருக்கம் காரணமாகப்பிரிந்து நலிவடைந்தபோது அதிகமான பரம்பரைச் செல்வர்கள் தங்களது செல்வாக்கை இழந்து நின்றனர். அத் தோடு முன்பொரு அதிகாரத்தில் குறிப்பிட்டதுபோல அநியாய

Page 177
3.15. புத்தளம் வரலாறும், மரபுகளும்
மான வழக்கு வம்புகளிலும், தவறான பாவனைகளிலும், அந்நியரின் பிழையான வழிகாட்டுதலிலும் இவர்கள் பலியாகி தவிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டமை துரதிர்ஷ்ட மேயாகும். முன் யோசனையுள்ள, புத்திசாலிகளான ஒரு சிலரே இந்நிலைமையிலிருந்து தப்பினர்.
பிற பிரதேச மக்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்துவமாக வாழும் பண்பு புத்தளம் மக்களுக்கிருந்தது என்று முன்பு சுட்டிக் காட்டப்பட்டது. அது போலவே அவர் கள் தமது எல்லைக்கு வேளியே பிரிந்து சென்று குடியேறி வசிக்கக்கூட அவர்களால் இயலவில்லை. உதாரணமாக கொட் டுக் கச்சேரி, குட்செட் பாதை தில்லையடி போன்ற புத்தளத் துக்கு அணித்தாயுள்ள இடங்களில் அவர்களுக்கென குடி யேற்றக் காணிகளும், வீடமைப்பு உதவிகளும் கொடுபட்ட போதும் கால கதியில் அவைகளைக் கைவிட்டு தமது மூதா தையர் வாழ்ந்த இடங்கட்கே திரும்பினர். இத்தகைய மனப் பாங்கு இப்பகுதி மக்களின் விரிவான, விரைவான முன்னேற் திறத்தை மிக வன்மையாகப் பாதித்தது. பொருளாதாரத்தில், கல்வியில், சமூக வாழ்வில், தொழிற்றுறைகளில் பின் தங்கிய நிலையை அடையக்கூடிய குழ் நிலைகளை உருவாக்கியது. இவ்விதமான தேக்க நிலை மிகவும் மெதுவாகவே நீங்கத் தொடங்கியதெனலாம். இந்நிலைமையில் பிற பிரதேச மக் கள் பல துறைகளிலும் எவ்வளவோ முன்னேற்றமடைந்து விட்டனர்; புத்தளம் மக்கள் பின்னடைந்து விட்டனர். இவ் விடைவெளியை நிரப்ப இரட்டை வேக துரித முன்னேற்றத் துக்குரிய வழிகள் கைக்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் இப்பின்தங்கிய நிலை ை10 படிப்படியாக மாறிவரும் சூழ் நிலை கள் ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கில்லை. அகன்று சென்று தூரத்தில் தங்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தத் துணிவில்லை என்றாலும் சமீப காலத்தில் தற்போதுள்ள குடியிருப்புக்களின் பரப்பு அவர்களைச் சுற்றி துரிதமாக விரி வடைந்து வருவதைக் காண்கிறோம். சிறிய மூலதனங்களுடன் புதிய வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட பலர் பெரிய வர்த்த கர்களாக மாறி செல்வந்தர்களாகவும் விளங்குகின்றனர் வெளி நாட்டு வேலை வாய்ப்புக்களின் மூலம் சம்பாதித்த பணத்தை விவசாய வியாபார, தொழில் துறைகளில் மூல

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 战丑6
தனமிட்டு தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொண்டுள்ள னர் பலர். கல்வியில்மட்டும் அத்தகைய வளர்ச்சி வேகம் காணப் படவில்லை எனினும், புதியதொரு எழுச்சிமிக்க சமுதாய மொன்று மலர்வதைக் காண முடிகின்றது.
புத்தளம் பிரதேசம் பிற பிரதேசங்களுடன் மிகக்குறைவான தொடர்புகளையே கொண்டிருந்த நிலைமை சில நன்மைகளை யும் விளைவித்தமையை மறுக்க முடியாது. வெளியில் ஏற்பட்ட விரும்பத்தகாத வீண் நாகரிகங்கள், புரட்சிச் சிந்தனைகளால் ஏற்படும் மோதல்கள், குழப்பங்கள், தொழிற்சங்க கூச்சல்கள், பல விதமான இயக்க சண்டைகள், சாதி, சமய, மொழி துவே சங்கள் போன்றவைகளின் தாக்கங்கள் பெரிதும் பாதிக்கவில்லை அத்தோடு மதத்தோடு சம்பந்தப்பட்ட "தரீக்காக்கள்" எனப் படும் பிரிவினைகள் இப்பகுதியை அணுகவில்லை. தலைமைத் துவம் காரணமாக பள்ளிவாசல்கள் பல தோன்றினவாயினும் அங்கே சமயக் கிரியைகளில் மாற்றங்கள் அல்லது பேதங்கள் ஏற்படவில்லை. விரும்பிய பள்ளிவாசல்களில் பொதுமக்கள் சென்று தமது மதக் கடமைகளை நிறைவேற்றினர். இவர்களில் தீவிர கரிசனையின்றி தங்கள் பாட்டில் அமைதியாக வாழும் நிலைமை அவர்களின் அருட்கொடையாக இருந்ததெனலாம். இயற்கையும் அவர்களுக்கு உறுதுணையாயிருந்தது. மழை, புயல் வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களால் வேகமாக பாதிக் கப்படாத மறைப்புப் பிரதேசமாக புத்தளம் பிரதேசம் இருக் கின்றது. பிற பிரதேசங்களுடன் தொடர்புகொள்ள முடியாத வாறு இயற்கை அரண்கன் போல் காடுகள் நீண்டு கிடந்தன.
இத்தகைய பாரம்பரிய அமைதியான வாழ்க்கை, சுதந்திரத் துக்குப் பின்னுள்ள காலத்திலிருந்து படிப்படியாக மாற்றமடை யத் தொடங்கியது. பிற பிரதேச மக்களுடனுள்ள தொடர்புகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டனவென்று கூறக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் உருவாகின. தொழிற்சாலைகள் ஏற் படுத்தப்பட்டமையும், காணிப் பங்கீடு, தொழில் வாய்ப்பு, குடி யேற்றங்கள் என்ற பேரில் வெளியாரின் கட்டுக்கடங்காத வரு கையும் இப்பகுதி மக்களின் நிம்மதியான அமைதி வாழ்வை தினம் தினம் குலைத்தது. தனித்துவமாக தன்னாதிக்க சுபாவத் துடன் பாரம்பரியமாகப் பழகியவர்களுக்கு மிகவும் மனச் சங்க

Page 178
S17 − புத்தளம் வரலாறும், மரபுகளும்
டத்தையும், கிலேசங்களையும் தோற்றுவித்தன. பரம்பரையாக வாழ்ந்த மக்களின் பெரும்பான்மை, சிறுபான்மையாக்கப்பட் டது. இதனால் கருத்து வேறுபாடுகளும் புரிந்துணர்வற்ற தன் மையும், சந்தேக மனப்பான்மையும், மொழிப் பரிச்சயமின்மை யும் தோன்றி இரு தரப்பார்களுக்கிடையில் மோதல்களை ஏற் படுத்தின. இதன் உச்சக்கட்டமே 1976ம் ஆண்டு புத்தளம் பிர தேசத்தில் நடந்த வகுப்புக் கலவரமாகும். மிகவும் பயங்கர மான, வெறுக்கத்தக்க அனுபவமாக இச்சந்தர்ப்பத்தில் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுடன் ஏற்பட்டுள்ள கல்வி, வேலை வாய்ப்புத் தொடர்புகளின் காரணமாக, அந்நாடுகளில் தலை தூக்கியுள்ள பல இயக்கங்களின் செல்வாக்குகளினால் இப்பகுதி மக்களை பல கூட்டத்தினராகப் பிரித்துவைக்கும், மோத வைக் கும் கைங்கரியங்களும் நடைபெற்று வருகின்றமை விசனத்துக் குரியதாகும். ஒவ்வொரு இயக்கமும் பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகளினால் பொதுமக்கள் செய்வதறியாது திணறும் நிலை உருவாகி வருகின்றதென்பதை மறுக்கமுடியாது. மேலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் மக்களின் கூட்டுறவு செளஜன்ய சக வாழ்வை சீர் குலைக்கும் கருவியாக இருப்பதை யும் கூறாதிருக்க முடியவில்லை. இவைகளை அவதானத்துடன் அணுகி ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை இனங்கண்டு பாதுகாக்க, அரசியலுக்கும் இயக்கங்கட்கும் அப்பாற்பட்ட சக்திமிக்க பொது நிறுவனங்களை - தலைவர்களைத் தோற்று விக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
புத்தளம் பகுதி பின்தங்கிய நிலையில் இன்றும் இருந்து கொண்டிருப்பதனால் துரிதமான முன்னேற்றம் அவசியமாகி யுள்ளது. அதற்காக உயர்கல்விக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப் படல் அவசியம். அதற்காக சகல வசதிகளுமுள்ள கலா பீடங்கள் பல உருவாகி பெயரளவிலன்றி அவைகளின் சேவைகளை முழு அளவில் ஆற்றவேண்டும். பொது மக்களும் தமது மக்களின் கல்வி வளர்ச்சியில் பூரண அக்கறையைச் செலுத்தியாக வேண்டும். பல தொழில் நிலையங்கள் தோன்றி தொழில் வாய்ப்புக்களை - தொழில் பயிற்சிகளை அளித்தல் அவசிய

அல்ஹாஜ் ஏ. என். எம். ஷாஜஹான் 38
மாகும். சும்மாயிருந்து குடும்பத்தில் ஒருவர் தேடும் வருமா னத்தைக் கொண்டு அரை குறை வாழ்வை நடாத்தும் நிலை மாறி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஏதாவது நல் முயற்சியில் ஈடுபட்டு உழைக்கும் மனப்பக்குவம் ஏற்படல் வேண்டும். வர்த்தக முயற்சிகளில் மேலும் முன்னேற்றம் வேண்டும். குறுகிய வட்டத்தினுள் வாழும் நிலைமையை மாற்றி விரிவான முறையில் பல இடங்களிலும் குடியேறி அபி விருத்தியைக் கைக்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியடைய வேண்டும் நாட்டின் சமபங்காளிகளாக நாம் முன்னணியில் செயல் ப்டல் அவசியம். பொருளாதாரத்தில், கல்வியில், சமூக வாழ்வில் முன்னணியிலுள்ள பிரதேசமாக புத்தளத்தை மிளிரச் செய்வது ஒவ்வொரு குடிமகனினதும், மகளினதும் நீங்காத கடமையாகும்.

Page 179
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
உசாத் துணை நூல்கள்
Ceylon Beaten Track - W. T. Keble. An Account of The Island of Ceylon - Robert Percival. Discovering Ceylon - R. L. Brohier. The Rehla of Idn Battuta - Mehdi Husain. Ancient irrigation Works in Ceylon - R. L. Brohier,
Manual of the Putta am District of The North Western Province of Ceylon - Frank Modder.
Ceylon A Pictorial Survey of The People and Arts - M. D. Raghavan.
Ceylon Gazette er - Simon Casie Chitty Modliar.
Gazetteer of The Puttalam District of The North Western Province of Ceylon - Frank Modder.
Sports in The Low Country of Ceylon - Alfred Clark, History of Kingship in Ceylon - Tilak Hettiarachy. An Historica Relation of Ceylon - Robert Knox. Cast in Modern Ceylon - Bryce Ryan. வன்னியர் - சி. பத்மநாதன் இலங்கைச் சோனகர் இன வரலாறு - ஐ. எல். எம். அப்துல் அவSஸ். தமிழர் சரித்திரம் - ந. சி. கந்தையா பிள்ளை குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு - K. அப்பாத்துரைப் பிள்ளை. முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் - எம். கே. செய்யிது அகமது. தமிழகத்தில் இஸ்லாமிய வரலாறு - ஏ. கே. றிபாயி. தமிழகத்தில் முஸ்லிம்கள் - P. M. அஜ்மல்கான் இலங்கையில் பெளத்தமும், தமிழும்-கட்டுரை, ஆ.தேவராசன் இலங்கையில் கல்வி - நூற்றாண்டு விழா மலர். கலையும் பண்பும் - சு. வித்தியானந்தன். சென்னை தமிழ் வளர்ச்சிக் கழக கலைக் களஞ்சியம்.

25.
26.
27.
28.
29.
30.
31
32.
33.
பிறைக் கொழுந்து - நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகா நாட்டு நினைவு மலர். திருக்குர்ஆன். இலங்கைச் சோனகர் பற்றிய கடந்த கால நினைவுகள் - சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய வெளியீடு. இஸ்லாமிய கலைக்களஞ்சியம். தென் இந்திய வரலாறு - 1 - K. K. பிள்ளை.
An Ethnological Survey of The Muslims of Sri Lanka from Earliest Times to independence - Sir Razik Fareed Foundation, Colombo.
The People of Ceylon - Dr. N. D. Wijesekera. அநுராதபுரத்து 96T60) pu அகழ்வாராய்ச்சி - கட்டுரை: கலாநிதி சி. க. சிற்றம்பலம் (வீரகேசரி 27-5-90) இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு - கலாநிதி 6Ttib. 6rib . உவைஸ், கலாநிதி பீ. எம். அஜ்மல்கான்

Page 180

பக்கம்
07
及5 16
20
40
55 62
65
71
71.
98.
Ι 15
65
180
83
9. 194 198
198
199
213 213
26
26
232
233 243
245
255
260
262
.264 280 296
298
39
வரி
23
12
08 O6
02
5
18 26
23
2
22
22
01.
22
27
3.
28
23
10 20
20 32
21
25
፵5
O3
32
19
07
24
32
09 15
26
05
பிழை திருத்தம்
பிழை
மொகட்சதாரோ
ஈர்ந்து அக்கடனுள்
கடற்றுரை
பொறுத்து காட்சியாக
மாங்கட்கிடையே
Tappar riam
திருத்தம் மொகஞ்சதாரோ ஈந்து . அக்கடலினுள் கடற்றுறை பொறித்து காட்சியக மரங்கட்கிடையே Tapparviam
வர்த்தகம் உட்பட பல குடியிருப்புகள் வர்த்த
கம் உட்பட வேறு
அறிமுகப்பட்டதாகும் அறிமுகப்படுத்தப்பட்ட
தாகும்
மறை காலங்களில் LAe 6ów Gorf கொட்டுக் மறைந்திருந்த 52843 50 அளப்பரிய தரப்படுக மன்னிற சுவர்க்கம்பங்கள் நிறுவுவதற்கான சலுகமளித்து தீங்கிடங்கை காட்சிகளாக காட்சிகளாக
இந்தியர்
ரீதக்காவை
வையித்தியர்கள் மணமகளின் வருவர் அழகில்
பாடமற்றவர்களும்
வயதில் பண்ணிறமான நிதியரசராகப் மணிகர்
din
LD6007 fib கலங்களில் வன்னி நாட்டுக் அமைந்திருந்த 52843 || 58 அப்பாரிய தரப்படும் பன்னிற கவர்க்கம்பங்கள் நிறுத்துவதற்கான சமுகமளித்து தீக்கிடங்கை சாட்சிகளாக சாட்சிகளாக g)55)uu mr தரீக்காவை வைத்தியர்கள் மணமகனின் தருவர் அழகான பாட, மற்றவர்களும் வயது முதல் பன்னிறமான நீதியரசராகப் வணிகர் Ibn

Page 181


Page 182
ஏ. என். எம். ஷாஜஹ அசன் நெய்னா மரைக்கார் ஷாஜஹா
புத்தளம் நகரைப் பிறப்பிடமாகக் கெ வர் நாட்டின் பல பிரதேசங்களில் தமிழ் யராக பாடசாலை அதிபராக, கல்வி அ யாக சுமார் 42 ஆண்டுகள் பணிபுரிந்த பின் ஆம் ஆண்டில் அரசசேவையிலிருந்து பெற்றாலும் கல்வி, கலாசார, சமூகப் களில் இன்னும் ஒய்வின்றி இயங்கிக் கெர் ருப்பவர் அகில இலங்கை முஸ்லிம் : மாநாட்டின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒ{ அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் த்தின் ஆரம்பகால உறுப்பினராக இளை நிர்வாக சபை உறுப்பினராகவும் மாவ கிளைச் செயலாளராகவும் இயங்கி ஹிஜ்ராக் கமிட்டியின் புத்தளம் மாவ செயலாளராகப் பணிபுரிந்தவர்; பாட்ச களில் தற்போது நடைமுறையிலுள்ளஇஸ் பாடநூல்களின் எழுத்தாளர் குழுவில் ஒரு இசைஞானமுள்ளவர் வானொலிப் பா எழுத்துத் துறையில் கால் பதித்திருப்பவர்.
அகில இலங்கை முஸ்லிம் எழுத்த பேரவையால் நடத்தப்பட்ட அகில இல எழுத்தாளர் போட்டியில் சிறந்த எழுத் ராகத் தெரிவு செய்யப்பட்டமை, முள் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சி நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழாக் கவி போட்டியில் ಕ್ಲಿಕ್ಟಿ வைகள் முதற்ப ஈட்டியமை, தேசிய மட்டத்திலான வேறு கவிதைப் போட்டிகளில் பாராட்டுப் பெற்ற என்பன இவரது திறமைக்கு நிகர் சாட்சி వీ சஞ்சிகைகள் சிறப்பு மலர்ச இவரது கட்டுரைகளும் கவிதைகளும் வென் துள்ளன. 'இஸ்லாமியப் பொது அறிவு ெ விடைகள் 1000", "வாழ்வளிக்கும் வான் . வரலாறு" என்பன இவரது அச்ே பிறநூல்கள். "வள்ளல் நபியின் வரல நிகழ்வுகள்" கவிதைநூல் அச்சேறத் த அளளது. *,*
1991ஆம் ஆண்டில், புத்தனம் மத்திய மீ மன்றத்தினரால் "கலை விற்பன்னர்" விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட "எ ஹான் மாஸ்டர்" அவர்களின் நீண்டக கடும் உழைப்புக்கும் ஆய்வுத் திறனுச் நீங்கள் கைகளிலேந்தியுள்ள "புத்த வரலாறும், மரபுக ளும்" என்னும் இந் சான்றுபகரும், புத்தளப் பிரதேசம் தொடர் ஆய்வுகள் தொடர்வதற்கு இந் அடிக்கல்லாக அமைகிறது.
- ஜவாத் மரைக்க

விம் னால்
தைப்
hథాP சில
1) RTL
கள். வில் சிவத் பினா
Üüfığı சறிய שתT HJ TTT
லாத் ானற 'ಡ್ತಿ? T35 க்கும் நீளம் நூல் TT நூல்
ார்.
ISBN 955-9
Printed at Nippon Printers
46, St. Anthony's Road
Colombo-9