கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் விஸ்வகர்மா

Page 1
국 Fr
- *
H
, -
9L t PR L. D. Gld's os IIIIIIIIIIIIIIIIIIIII
 

* *
I, IIIIIIIIIIIIIIIIIIIIII -ENG)
III:
ய்வதுரை
IIIIIIIII

Page 2

விஸ்வகர்மா
(வரலாற்று ஆய்வுக் கட்டுரை)
நாலசிரியார்: பூ ம. செல்லத்துரை
கிடைக்குமிடம்: இராசம்மா பதிப்பகம்
பெரிய போரதீவு, ട്രിബ).

Page 3
நூல்
நூலாசிரியர்
முதற்பதிப்பு
பக்கங்கள்
பிரதிகள்
வெளியீடு
உரிமை
எழுத்து அச்சகம் :
இலங்கையில் விஸ்வகர்மா
பூ. ம. செல்லத்துரை
: செப்டம்பர் 2000
: 130
1000
இராசம்மா பதிப்பகம் பெரிய போரதீவு,
இலங்கை.
ஆசிரியருக்கே
லகூஷ்மி அச்சகம் 195, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு-13.
ரூபா 150/=

உள்ளே.
போரூரின் புகழ்பூத்த மகாளியம்மையே!
காணிக்கை
மதிப்புரை
uTUIT (660)ij
என்னுரை
வாழ்த்துப்பா
விஸ்வகர்மா
விஸ்வகர்ம பிரமகுலம்
இலங்கையில் விஸ்வகர்மா
மாதோட்டம்
மாந்தையில் மலர்ந்து மாநிலம் எங்கும் மணம் பரப்பிய நாகரிகம்
மயன்
இலங்கையின் ஆதிக்குடிகள்
பெரு - மெச்சிக்கோ வாழ் மயோரிஸ் மக்கள்
சுமேரியர்களும் எகிப்தியர்களும்
12ம் நூற்றாண்டு விக்கிரம சலேமேபும் என்ற இன்றைய மாகல கல்வெட்டு
காளிவழிபாடும் கம்மாளரும்
விஸ்வகர்ம மக்களின் கொடி
அவந்திநாட்டு மாந்தையும் காந்தக்கோட்டையும்
இலங்கை மன்னர்களும் விஸ்வகர்ம மக்களும்
நகரமைப்பும் விஸ்வகர்மாவும்
II
III
IX
ΧIΙ
XV
O1
06
11
13
22
39
44
49
53
61
63
65
68
72
74

Page 4
அற்புதமாக அருங்கலைகளை வளர்த்த சிற்பகலைக் கழகம்
நீதிமன்றத் தீர்ப்புக்களும் விஸ்வகர்ம மக்களும்
தட்டானைத் தொட்டவனைத் தொட்டவனும் கெட்டான்
சிங்கள இனவளர்ச்சியில் விஸ்வகர்மகுல மக்களின் பங்களிப்பு
அழகுக்கணியும் ஆபரணங்கள் அரிய நோய்களைத் தடுக்கும் மாமருந்தாகும் விந்தை
விஸ்வகர்ம மக்களின் வீழ்ச்சியில் இளைஞர் பங்கு
விஸ்வகர்ம மக்களுக்குத் தமிழினம் செய்த தவறே தமிழினத் தாழ்வுக்குக் காரணமாகும்
சமஸ்கிரதம் ஆரியர் மொழியா? அல்ல ஆசாரிமார்களின் தொழில் சார்மறை மொழியா?
விஸ்வகர்ம மக்களின் அழகிய கைவண்ணமே கோயில்களும் சிற்பங்களும்
இயேசுகிறிஸ்து ஒரு விஸ்வகர்மா
ஆசாரி கல்வெட்டு
கொல்லிமைப் பாவையும் விஸ்வகர்மாவும்
விஸ்வகர்மப் புலவர்கள்
கம்மாளர் பற்றிய கவிதைத் தொகுப்பு
விஸ்வகர்மர்
விஸ்வகர்மா
விஸ்வகர்மாவுக்கு ஏன் விழா?
பெரிய போரதீவில் விஸ்வகர்ம ஆதீனம்
உசாத்துணை நூல்கள்
நன்றி
74
77
79
81
83
86
91
96
102
107
110
112
114
116
119
20
121
23
125
127

திரு. யூ. ம. செல்லத்துரை
அவர்கள்

Page 5

மலை அரசன் தவம் பூத்து மகளாக வந்தவளே. மதங்கமா முனிவர் தந்த மாணிக்கப் பெருநிதியே! மண்ணுலகில் சக்தியென்னும் மாதவத்துக் ஒரு மகளே! மாதவன் தன் சோதரியே மகுடனைக் கொன்றவளே! நிலையாகச் சிவனார் நெஞ்சில் நிறைந்தவளே! நித்திலும் அரனுடவில் பாதியாக நின்றவளே! நினைந்துருகும் அடியார் தம் நினைவாக நிற்பவளே! நீதி வடிவாக நின்று நிலவுலகைக் காப்பவளே! கலையரசர் கம்மியரின் குல தெய்வமானவளே! கம்மியர் தம்மடையலிலே ஆட்சியாய் நின்றவளே! காலத்தால் அழியாத காவியத்தின் கருப்பொருளே! கலங்கி நிற்கும் அடியாருக்குக் கருணைப்பால் சுரப்பவளே! தலை பணிந்தேன் நின் தாழில் தமியேனைக் காருமம்மா! தள்ளாதே சிறு பிள்ளை என்று என்னை பாராதே! தருவளரும் தன்நிழலில் நெற்சாலி தலைவணங்கும்! தகை சான்ற போரூரின் புகழ்பூத்த மாகாளி
அருட்கவியசு கண்மணிதாசன்

Page 6
எனை ஈன்று மண்ணுலகத்துக்களித்து
மறைந்து மண்ணுருப் பெற்றுள்ள என்னருமை அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வங்களான இராசம்மா பூபாலபிள்ளை ஆகியோரின் பொற்பாதங்கட்கு இந்நூலைக் காணிக்கை ஆக்கி வணங்குகிறேன்.
அன்பு யூ. ம. செல்லத்துரை
"இராசகம்"
பெரியபோரதீவு. 0.1-09-2000
 
 

சைவசித்தாந்த சிரோண்மணி திரு. ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்திJP
இளைப்பாறிய அதிபர் முன்னாள் தலைவர் பொருளாளர் கோட்டைமுனை ரீமகாமாரியம்மன் ஆலயபாலன சபை மட்டக்களப்பு
திரு. பூ. ம. செல் லத்துரை J.P அவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர். அவர் கைவண்ணத்தில் உருவான சில நூல்களைப் படித்துப் பயனடைந்தவர்களுள் நானும் ஒருவன். பரந்த அறிவும், பல நல்ல நூல்களை ஆழமாகக் கற்றிருந்த திறனும், எழுத்தாற்றலும் ஒருங்கே நிறைந்திருந்தமையினாலேயே இந்தநூலாசிரியர் தான் கற்றறிந்ததை மற்றயோரும் அறிவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
"விஸ்வகர்மா” என்னும் தலைப்போடு ஆரம்பித்து, தமிழர் பண்பாடு நாகரீகம், இலங்கையில் மூத்த குடியினர் என இழையோடி மாந்தையின் மாட்சியை நிழற்படம் போல் காட்டி விஸ்வகர்மாவுக்கு விழா ஏன்? என வினவி போரதீவில் ஆதீனம் அமைப்பதற்குரிய காரணங்கள் பல காட்டி நிறைவுசெய்திருப்பது பல நறுமணமலர்களை அழகான மாலையாகத் தொடுத்ததுபோல் இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் என் சிற்றறிவுக்கேற்ப சில தகவல்களை உங்கள் முன் வைக்கலாம் என விழைகின்றேன். மாந்தை என்னும் நகரப்பெயரை மஹா+சந்தை என பிரித்துப் பொருள் கொள்ளும்போது அது மிகப் பெரிய வணிக நடவடிக்கைகள் நடந்தேறும் இடத்தைக் குறிப்பிடும். மஹாசந்தை என்பதே காலப்போக்கில் மருவி மாந்தை என ஆனது எனபர் ஆய்வாளர். மாந்தை என்னும் பெயரில் வடஇந்தியாவிலும், தென்னிந்தி யாவிலும் நகரங்கள் இருந்துள்ளன. எனினும் இந்நூல் சிறப்பித்துக் கூறும் மாந்தை எஞ்சிய லெமூரியாக்கண்டத்தின் அதாவது இலங்கையின் வடமேல் பகுதியில் மன்னார் வளைகுடாவை மருவிக் கிடக்கும் பெருநிலப்பரப்பாகும். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றல் “மாந்தை” என்னும் பெயரில் எங்கெல்லாம் பாரிய நகரங்கள் காணப்பட்டனவோ, அவை எல்லாமே விஸ்வகர்ம

Page 7
குலத்தவர் வாழ்ந்த பகுதிகளாகவும் மாபெரும் வணிக நிலையங்களாகவும் இயங்கியுள்ளன.
உயிர் கூட்டங்கள் உதிக்கப்பட்டதாகிய மிகப் பழைய தமிழ்ப்பரப்பில் (மறைந்த லெமூரியாக்கண்டம்) ஆதி மனுச் சக்கரவர்த்தி ஆட்சி புரிந்து வந்தார். அவர் தன்னை அந்திய காலத்தில் தன் இருபிள்ளைகளாகிய சமன் என்பானுக்கு தமிழகத்தின் தென்னிலப்பரப்பையும், சமுன்னை, இன்றும் (இவனுக்கு "ஈழம்" என்ற பெயரும் உண்டு) என்பாளுக்கு வட நிலப்பரப்பையும் பாகம் பிரித்துக் கொடுத்தார் ஈழம்; என்னும் சமுன்னை என்றும் கன்னியாகவே இருந்தமையால் அவள் ஆண்ட நாடு “குமரிக்கண்டம்” எனப்பெற்றது. கடற் கோளால் அழிந்து போக எஞ்சிய ஒரு சிறு நிலப்பரப்பு தீவாகி இன்றும் "ஈழம்" என அழைக்கப்டுவது கண் கூடு சமன், சமுன்னை ஆகிய இருவர் வழிவகுத்த மக்கட்கூட்டமே "நக்கர்,” “நாகர்” “இயக்கர்”, என்னும் மூவகையினர் என்பர் பண்டிதர் R.S கந்தையா ஆச்சாரியார் இவர்களின் வழிவந்த மூவேந்தர்கள் முறையே பாண்டியர், சேரர், சோழாராவர். இவர்கள் முடியுடை மூவேந்தர்கள் தமிழகத்தின் எஞ்சிய பகுதியை ஆண்டனர்.
ஆதிமனுவிஸ்வகர்மாவின் வழித்தோன்றல் விஸ்வகர்மாவின் மக்களான மனுவின் பரம்பரையாக பாண்டியரும், மயனின் வழித்தோன்றலாக சேரரும், துவஷ்டாவின் பரம்பரையாக சோழரும் ஆட்சி செய்தனர் என்றும் இப்பாரம்பரியமே இலங்கையில் இராசரட்டை, மாயரட்டை, றுகுனுரட்டை என பிரித்து ஆட்சி செலுத்துவதற்கு ஏதுவானது என்பர்.
இந்த அரிய ஆராய்ச்சி நூலில் ஆசிரியர் “செங்கமல மாலையணி தேவனே! மாந்தைநகர்ப் புங்கவனே! காந்த மலைப் பூரணகெம்பீரமன்னா! என்று புலவர்களால் போற்றப்பட்ட மாந்தை நகரை ஆண்டதுவஸ்டா விஸ்வகர்மா, ஈழத்தின் வடமேற்கேயுள்ள மனனார் வளைகுடாவைக் கடலெல்லையாகக் கொண்ட மாந்தைப் பெருநிலப்பரப்பை பல ஆய்வாளர்களின் கூற்றை ஆதாரம் காட்டி அதன் பெருமையையும் வனப்பையும் , காந்தக் கோட்டையையும் திறம்படக் கூறியுள்ளமை நோக்கற்பாலது.
விஸ்வகர்மக்களாகிய மனு, மய, துவஸ்டா, சில்பி, விஸ்வக்ஞ் ஆகிய ஐவரும் அவர்வழிவந்த பரம்பரையினரும் சிவமயமா னவர்கள். சிவ வழிப்பாடு உடைவர்கள் என்பது வரலாற்றுச்
V

சான்று. இன்னும் ஆலயங்களை நிர்மாணித்தல், இராஜகோபுரம் அமைத்தல், வழிப்பாட்டுக்குரிய மூர்த்திகளை கல், செம்பு, பஞ்ச உலோகங்களில் உருவாக்குதல் அலங்காரத்திற்குரிய ஆபரணங்களையும், சித்திரத்தேரையும் உருவாக்கிகொடுத்தல் ஆகிய ஆலயத்திருப்பணிகளில் பஞ்ச கம்மியர்கள் ஈடுபட்டிருப்பது கண்கூடு. மேலும் ஏனையோர் கண்ணால் பார்த்து செய்வதை இவர்கள் மனதால் நினைத்து செய்யும் மாயம் வல்லவர்கள்.
மாந்தையை ஆண்ட துவஷ்டா விஸ்வகர்மா தனது வழிபாட்டிற்காக சிவாலயத்தை அமைத்த வரலாறும் அது பின்னர் தேவாரப்பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் ஆனதும். அந்த நகர் "துவஷ்டாநகர்” என பெயர்பெற்றதும் நாம் அறிவோம். மேலும் மா+தொட்டா+நகர் மாதோட்ட நன்னகர் எனப்பட்டது.
“சிற்பம் ஒவியரே மோகர் சித்திரகாரர் நாமம் அற்புதர் இயவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் கற்பின் கம்மியரே கண்ணுள் வினையர்
கண்ணாளர் நாமம் " என்பது சூடாமணி நிகண்டு” எனவே அவர்கள் ஐவரும் சிருஷ்டி கர்த்தாக்கள் என்பது தெளிவு இலங்கையை ஆண்ட இராவனேஸ்வரன் சிவபக்தன் -கைலயங்கிரியையே பெயர்த்தெடுத்தவன். ஆத்மலிங்கத்தைப் பெற்றவன். மஹாதுவஷ்டாவின் மகன் வீராதி வீரன் சூராதிசூரன் அவன் பட்டத்துராணி மண்டோதரிமயன் விஸ்வப் பிரம்மாவின மகள் அவளது பக்திக்கு உருகி சிவபெருமானே பள்ளிக்குப்
பாயத்தோடு அவள் அந்தப்புரத்திற்கு வந்த வரலாற்றை மணிவாசகர்
"ஏர்தரும் ஏழ் உலகேத்த
எவ்வுருவும் தன்னுருவாய்
ஆர்கவிசூழ் தென் இலங்கை அழகமர் வண்டோதவிக்குப்
பேர் அருள் இன்பமளித்த
பெருந்துறையே பிரான்”
எனக் குயில் பக்தில் கூறியுள்ளமை காண்க.
V

Page 8
சூரபன்மனின் மனைவிபதுமகோமலையும், குபேரன் மனைவி சித்திரரேகையும் தெய்வ கம்மியரின் மக்கள் என்பது புராண வாயிலாய்க் கிடைக்கின்ற செய்தி விஸ்வகர்மா நாடு நகரங்கள், கோட்டை கொத்தளங்கள், ஆயுதங்களும் ஆபரணங்களும் உருவாக்கிக் கொடுத்த செய்திகளை மகாபாரதம்,இராமயணம், புராணங்கள் என்பன பறை சாற்றுகின்றன. இவர்கள் இலங்கை யின் பூர்வீக வழித்தோன்றல்களே என்பது உறுதியானதும், இந்த நூலாசிரியரின் கூற்றாகும்.
தமிழர் தம் இல்வாழ்வைத் தொடங்கி சந்ததி தழைக்கவும், சம்பத் உண்டாகவும் நெறிப்படுத்தி வழிப்படுத்தி உதவுவதற்கு “தாலி" என்னும் மங்கலப் பொருளை உருவாக்கிக் கொடுப்பவர் விஸ்வகர்மாக்களேயாகும்.
தாலியை உருவாக்குபவர் இறைத்தன்மை வாய்ந்தவர். அவருடைய இதயத்திலே பிரம்மாவும், கைகளிலே சிவனும், விஷ்ணுவும், கண்களிலே சூரியன், சந்திரன் அக்னியும், உடலிலே சகல தேவர்களும் இடங்கொண்டிருக்கும் மகா புருஷர்.
" சில்ப்பீனோ உறிர்தயம் ப்ரஹற்மா
ஜூகரெள விஸ்ணு சங்கரெள
சந்திரார்க்க அக்னி நேத்ரஞ்ச
சரீரம் சர்வ தேவதா "
தாலி என்பது சாதாரண ஆபரணம் அல்ல. அழகுக்கு அழகு செய்யும் கற்பின் அணிகலன். இது பருத்தி நூலிலே கோர்க்கப்பட்டு மணமகன் மணமகளுக்கு முடிச்சு போட்டு அணிவிப்பது.
தாலியை உருவாக்கும் விஸ்வைக்ஞ விஸ்வகர்மா தன்னை பரப்பிரம்மமாக நினைத்துக் கொண்டு தனது அக்கசாலையில் ஓமத் தீயை முறைப்படி வளர்க்க அதிலே பத்தரைத் மாற்றுத் தங்கத்தை உருக்கி; பிரணவ சொரூபம் தாலியில் அகாரம் சதுர
V

வடிவாயும் தலையாகவும், உகாரம் சதுரவடிவாய் மார்பாகவும், மகாரம் முக்கோண வடிவாய் காலோடு சேர்ந்த மர்மத்னமாகக் கொண்ட விநாயகர் வடிவை மத்தியாக வைத்து இருமருங்கும் நாயகனின் பாதங்களும் சங்கு சக்கரம் கமலம், சந்திர சூரியர்களைக் கொண்டு விளங்கும் தாலியை வடிமைக்கின்றனர். இதுவே விஸ்வகர்மகோத்திர மக்கள் அணியவேண்டிய கொம்புத் தாலி என்பர். இதன் அமைப்பை விஸ்வகர்மீய சிற்பநூல்
"மாங்கல்யம் விஸ்வரூபம் பிரணவம் ஓங்கார ரூபேயோ:
அகார உகாரயோச் சைவ மகாரோதீய தேஸ்ருதீ;
அகாரே வர்த்துலாகாரம் உகாரே சதுரஸ்த்ததா:
மகாரேத் ரிகோணம்ஸ்யாத் துவீபாதம் ஏகத்வாரயே:
சோமார்க்க சக்ரபாணம் ஸ்யாத் மாங்கல்யம் விதீலட்சணம்"
ஒப்புயர்வற்ற தாலி விஸ்வைக்ஞ விஸ்வப் பிரமாவினால் மட்டுமே உருவாக்கப்படவேண்டியது. அப்போதுதான் சர்வ மங்கலங்களும் மணமக்களுக்கு உண்டாகும் என்பது உண்மை.
விஸ்வம்+கர்மம்=விஸ்வகர்மா, விஸ்வம் என்றல் அகிலம் எனப் பொருள்படும். கர்மம் என்றல் தொழிற்படுதல், இயக்குதல் என்று பொருள்படும். எனவே இந்த அகிலத்தின் இயக்கத்திற்கும் அதிலுள்ளி"உயிரினங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கும் மனு, மய, துவஷ்டா, சில்வி, விஸ்வைக்ஞ் என்னும் பஞ்சகம்பியரின் தொழிற்பாடுகள் அவசியமானதும் என்பது வெள்ளிடை மலை. மேலும் மனித வாழ்வின் மேன்மைக்குத் தேவையான, உணவு, உடை, உறையுள் நாடு, நகரம், பாதுகாப்பு, நல்லாட்சி, தொழில் வளம் சைவசமயம் சார்ந்த தொழிற்பாடுகள் ஆகிய இன்னோரன் னவற்றிற்கு உந்து சக்தியாக பஞ்சகம்மியரும் இருப்பது எக்காலத்தும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை. தொழில்நுட்ப வல்லுனரும், கடல் வான் தரை ஆகிய மூன்றிலும்
V

Page 9
நுட்ப வல்லுனரும், கடல், வான் தரை ஆகிய மூன்றிலும் இயங்க வல்லவர்களும், பொறியியல் விஞ்ஞானம் மருத்துவம் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்களுமாக திகழ்பவர் ஐவருமே என்பது இந்த ஆய்வுநூலின் தெளிவு. "மயக்கும் மாயம் வல்லவராகி வானோடு நீரும் இயக்குவோருக்கிறைவன் இராவணண்” என்னும் தேவாரவரியை ஆய்ந்துனர்க.
திரு. பூ, ம. செல்லத்துரை அவர்களின் ஒழுங்காக்கலும் எடுத்த பொருளை கூற விளக்குத்திறனும் நூல் எங்கும் பின்னிப் பிணைந்து கிடப்பதை நான் காண்கிறேன். அவர் முயற்சி பாராட்ட தக்கது. விஸ்வகர்மாவின் வழித்தோன்றல் ஒவ்வொறுவரும் தன் பூர்வீகம்,தான் செய்யும் தொழிலின் பெருமை, தன் மூதாதையரின் உலக நன்மை கருதிய செயற்பாடுகள், நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? எப்படி வாழவேண்டும் என்னும் பல விடயங்களை அறிவதற்கு இந்த நூல் ஒரு சிறந்த வழிக்காட்டி என்பது திண்ணம். ஒவ்வொறு வீட்டிலும் இருக்க வேண்டிய சிந்தனைக் கருவூலம். திரு. பூ, ம. செல்லத்துரை அவர்களின் ஆராய்ச்சிப்பட்டறையில் இருந்து மேலும் பல நூல்கள் உருவாக வேண்டும் எனப்கேட்டுக் கொள்வதோடு, அந்நபரின் செயற்கரிய முயற்சியைப் பாராட்டுகின்றோம். உலகம் உள்ளவரை நின்புகழ் நிலைக்கட்டும்.
அன்பன் ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி கோட்டைமுனை,
மட்டக்களப்பு.
VIII

முந்நாள் களுதாவளை மகாவித்தியாலய உப அதிபரும் இந்நாள்
மட்டுமாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளரான Lurific ilu. Lpiglifili B.COM. M.A.A.T. H.N.D.A. DIGA, SLACCs அவர்கள் உவந்தளித்த
ത്രങ്ങ
மீனே பாடும் தேனாடாம் மட்டுநகர் மாவட்டத்திலுள்ள சிறந்த ஆய்வாளர்களில் திருவாளர் பூம செல்லத்துரையும் ஒருவர் அவரின் பல ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரை களையும் நான் வாசித்து ரசித்துள்ளேன் ஆய்வில் ஒரு தனித்தன்மையும் எழுத்தில் ஒரு அழுத்தமும் நிறைந்து இருக்கின்றன. எடுத்த விடையத்தைத் தெளிவாகவும் விளக்கமாகவும் ஆதாரம் பல தந்து வலியு றுத்தும், தன்மை அது அவருக்கே கை வந்த தனிக்கலை யாகும். பள்ளிப்பருவ :::::::::::::::::::»...8.3 & " முதல் அவர் எழுத்துறையில் தன்னை ஈடுபடுத்தி வந்தார் வருகிறார். பாடசாலை விட்டு வெளியே வந்ததும் தாயகம் நேர்வழி, தேனாடு, சமநீதி, போன்ற மாதப் பத்திரிகைகளை நடத்தி தமிழர்களின் சுதந்திர உணர்வுக்கு ஆக்கமும், ஊக்கமும், ஊட்டிய தமிழர் தம் பூர்வீகத்தை ஆய்வு செய்து தன் பத்திரிகைமூலம் பல கட்டுரைகளை எழுதி எழிச்சி உண்டாக் கினார்.
சமீபத்தில் அவரால் எழுதி வெளியிடப்பட்ட இலங்கைத்தமி ழரின் வரலாறும் இன்றைய நிலையும் என்னும் நூல் தமிழர் வரலாற்றிலே ஒரு தாக்கத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி யுள்ளது என்றால் மிகையாகாது சரித்திர ஆசிரியர்களால் மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொணர்ந்து உலக
மக்கள்முன் உலவவிட்டுள்ளார் இது ஒரு துணிகரமுயற்சியாகும்.
இலங்கைத்தமிழர் வரலாற்றை எழுதி வெளியிட்ட கையோடு, ஆசிரியர் தமிழர் தம் கலைகலாசாரம் 5000ம் ஆண்டுக்கு முன் விட்ட இடத்திலே மேலே வளராது தேங்கி நிற்கும். இந்நிலையை யும் நினைப்பையும் இட்டு ஆராய முற்பட்டதன் விளைவே
இந்நூலாகும்.
நிழ்ச் சங்கி கொழும்புதமழசச

Page 10
தமிழர் வரலாற்றிலும், தமிழர் தம் கலை கலாசாரத்தின் தேக்க நிலைக்கும் தமிழ் அறிஞர்களே காரணம் எனக் கண்ட நூலாசிரியர் அதை இனம் காட்டி இருப்பதோடு தமிழ் கலை கலாசாரத்தைக்கட்டிப் பாதுகாத்து வளர்த்த படைப்பாளர்கள் யாரேன்றும் இனம் காட்டி அவர்கள் மீண்டு தமிழ் கலாச்சாரத்தும் கலைக்கும் , புத்துயிர்ரளிக்க முன் வரவேண்டும். என தட்டிக் கேட்டுள்ளாார். இதன் மூலம் படைப்பாளர் சமூகத்தின் முன்னோர் களது சாதனைகளையும், போதனைகளையும், வெளிக் கொணர்ந்து. அவர்களின் பின்னவர்கள் பின்னடைந்து போன நிலை நிலையைக் காட்டி சமூகம் தன்னிலையை உணர்ந்து தலை நிமிர வேண்டும் தமிழர் கலைக்கலாச்சாரம் விட்ட இடத்தி லிருந்து தொட்டுத் துலங்கவேண்டும் என்பது நூலாசிரியரின் வேண்ணாவாக இருக்கிறது.
இதை அவர் பெருங்காயம் வைத்தபாத்திரம் பெரும, காயமில்லாத நேரத்திலும் மணம் வீசும் என்பதன் மூலம் கோடிட்டுக்காட்டி அதே போல் படைப்பாளர் சமூகம் இன்று இந்த உணர்வுகள் ஆர்வங்களின்றி இருந்தாலும் அவர் களின் ஆழ்மனதில் இவ்வுணர்வுகளின் அலைகள் மண்டிக் கிடக்கிறது. அவ்வுணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். என முனைவது பாராட்டத்தக்கது நல்லார் கேட்டால் நாய்க்குதவாது என்பதுபோல நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்த கலைஞர் சமுதாயம் நலிந்து அழிந்து கொண்டிருக்கும் அபாயத்தை ஆசிரியர் வேதனையோடு நோக்கியுள்ளார். இவ்வாபத்திலிருந்து மீளவழியும் காட்டியுள்ளார்.
இன்று பாரெல்லாம் பரந்துள்ள தமிழினம் தன் பண்பாட்டையும் கலையையும், கலாசாரத்தையும், அங்கெல்லாம் வேரிட வைப ’பார்களானால் உலகெல்லாம் தமிழ்க் கலை கலாச்சாரம் வளரும் வாழும், ஆனால் இன்று தான் தமிழர் மேலை நாட்டு கலா சாரத்தை முற்றுமுழுதாக உள்வாங்கி உலாவுதலின் மூலம் தமிழ்க்கலை கலாச்சாரத்துக்கு கொள்ளிகுடம் உடைத்து வருகி றார்கள். இந்த நிலை மாறவேண்டும். பெண்ணுக்குக் கற்பு எவ் வளவு முக்கியமோ அதுபோல் ஒரு இனத்திற்கு அவர்கள் கலை கலாசாரம் முக்கியமானது என்பது ஆசிரியரின் கொள்கை இதை அவர் தமிழினத்திற்குப் பக்குவமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
ஒரு படைப்பாளி ஒரு விமர்சகர் என்ற நிலையில் நின்று நீங்கி சிறந்த ஒரு ஆய்வாளன் என்றவகையில் "இலங்கையில்
X

விஸ்வகர்மா" என்ற ஆய்வு நூல் வெளிவருவதற்கு ஆசிரியர் ஏராளமாக உசாத்துணை நூல்களை கோடிட்டுக் காட்டியுள்ளார் என்பது புலனாகின்றது.
இலங்கையில் விஸ்வகர்ம குலம், அவர்களின் பிரதேசம், தொழில், வழிபாடு நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் அவர்களாற்றிய தொண்டு, ஆட்சி, இனப்பரம்பலுக்கு ஆற்றிய பங்களிப்பு, இலங்கையில் மட்டுமல்ல உலக நாகரீகத்துக்கு அவர்களிட்ட முதலீடுகள், கலை கலாசாரப்பண்பாடு பாரெல்லாம் பரவ ஆற்றியபணி காளி வழிப்பாடு, இலங்கையாண்ட அரச பரம்பரைக்கும் விஸ்வகுல மக்களுக்கும் இருந்த உறவுகள் போன்ற பல விடையங்களை ஆசிரியர் தக்க ஆதாரங்களோடு ஆணித்தரமான வரலாற்று குறிப்புகள் முன் நிரூபிப்பது பாராட்டத்தக்கது.
இந்நூல் மூலம் ஆசிரியர் படைப்பாளர் சமூகத்திற்கு ஒரு பாரிய பங்களிப்பை நல்கி ஒரு நிலையான நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார் என்றால மிகையாது.
தமிழர்களின் இன்றைய தேவை உணர்ந்து வெளிவரும் நூல் இது.
தமிழ் மக்களினதும் விஸ்வகுல மக்களினதும் வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ள நூலாசிரியரின் சமூகப்பணியும் தமிழ்ப்பணியும் சிறக்கவும் இன்னும் பல ஆய்வு நூல்களைத் தமிழருக்கு தர எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டி வாழ்த்துகிறேன்;
அன்பன் பெ. முத்துலிங்கம் மாவட்டச்செயலகம் LDL LJ,6III
ΧΙ

Page 11
இந்நூலை எழுத என்னைத் தூண்டிய காரணிகள் பல. அவற்றுள் முக்கியமானது தாய்ப்பாலோடு என்னன்னை எனக்கூட்டிய தமிழ்பாலாகும். தமிழ் என்னும் அமுத மொழியின் மேல்ஏற்பட்ட தீராத காதலால், பற்றால், பாசத்தால் தமிழின வரலாற்றைக் கலையைக் கலாசாரத்தை துருவித்துருவி ஆராயும் அவா ஏற்பட்டது அதன் விளைவு ஏற்கனவே என்னால் எழுதி வெளியிடப்பட்ட "இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்" என்னும் நூலாகும். அந்நூலில் முடிந்தளவு இலங்கைத் தமிழர் வரலாற்றை அவற்றில் பலர் மூடி மறைத்த உண்மைகளை உலகமக்கள் முன்உலவ விட்டுள்ளேன்.
அடுத்த 5000ம் ஆண்டுகட்கு முன்பே அதாவது மேலை நாட்டார் கொத்துக்களையும் குலைகளையும் கட்டித் திரிந்த காலத்தே பட்டுடுததிப் பாரெல்லாம் பவனி வந்த பைந்தமிழக் பண்பாடு கலை கலாசாரம் நாகரிகம் மீண்டும் பரவாமல் பாதியிலே நிற்கும் பரிதாப நிலை என்னைப் பெரிதும் வாட்டியது. இதற் கான காரணம் தேடினேன். கலையைக் கலாசாரத்தைப் படைத்த படைப்பாளர்கள் பலர் மரத்திலிருந்து பெரும் பாறையில் விழுந்து. சித்தம் கலங்கி, தன்னிலை மறந்து, செய்வதறியாது திண்டா டியவன் நிலையில் இருக்கின்றார்கள். அவர்களை இனம் கண்டு, அவர்கள் நாட்டுக்கும், இனத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவும். மீண்டும் அவர்களின் ஆழ்மனதில் மண்டிக்கிடக்கும் கலை கலாச்சார உணர்வுகளை தூண்டி அதை தமிழினின் உடமையாக்க வேண்டும் என்ற நல்லெண் ணத்தின் விளைவே இன்னுரலாகும்.
“பெருங்காயம் வைத்தபானை என்றும் மணங்கும்” இதைப் போல காலம் காலமாக கலையைக் கலாசாரத்தை சிந்தித்து சிந்தித்து செப்பனிட்டு பேணி வந்த சமூகத்தினரின் அடி மனதில் அவ்வுணர்வுகள் கருவுளங்கள் மண்டிக்கிடக்கும் அதைத் தட்டி எழுப்புவதே நம் கடமை குலவித்தை கற்றுப்பாதி கல்லாமல் பாதி என்பார்கள் படைப்பாளர்கள் சமூகத்தின் ஆள்மனதில் பாதிவு ணர்வுகள் உண்டு. மீதியை கற்பதன் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணமே இந்நூலை எழுதத் தூண்டியது.
X
 

இந்த நல்லெண்ணம் நிறைவேற வேண்டுமேயானால் படைப்பாளர் சமூகம் தான் கைக்கொண்டுள்ள தீய பழக்கங்க ளிலிருந்து விடுதலை அடைந்து, தன் மூதாதையர் போல ஒழுக்கசீலர்களாகவும், மனித சமூதாயத்துக்கு பயனுள்ளவர்க ளாகவும் மாற வேண்டும்.
"அந்தணர் என் போர் அறவோர் மற்றெவ்வுயிருக்கும் செந்தன்மை பூண்டெழுகலால்" என்ற வள்ளுவர் வழியை படைப் பாளிகள் எற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்நிலை ஏற்படுமேயானால் மீண்டும் தமிழர் நாகரிகம் கலை கலாசாரம் வளரும், வாழும், நாடும், ஏடும் போற்றும் புகழும். உலகெங்கும் தமிழர் நிலையுயரும்.
தனை ஈன்ற தாய்க்கும், தந்தைக்கும் மக்கள் குலம் தன்னை ஈன்ற தமிழ்நாடு தனக்கு தினைளவாவுதல் பயனெற்படுத்த படைப்பாளர்கள்கள் முன்வர வேண்டும். பழமையை மட்டும் பேசிப்பயனில்லை புதுமை பூத்து குலுங்க வேண்டும் அதுவே ஆக்கத்தின் வெற்றியாகும்.
இந்நூல் வெளிவரப் பலவகையிலும் உதவியதுடன் நூலின் அச்சுப்பிரதியை ஒப்பு நோக்கி சரி பிழை பார்த்து பல ஆலோசனைகளும், வாழ்த்துப்பாவும், தந்துதவிய பெரிய போரதீவு விஸ்வகர்ம ஆதீனத்தின் பிரதம குருவும் பூரீ பத்திரகாளியம்மன் ஆலயம் முத்துவிநாயகர் ஆலயம் முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் பிரதமகுருவும் இலங்கையில் புகழ்பூத்த ஆத்மீகக்கவிஞரும் பேச்சாளருமான விஸ்வப்பிரமழநீவை.இ.எஸ் காந்தன் குருக்கள் ஐயா அவர்கட்கு என்னிதயம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்ளுகிறேன்.
பாராட்டுரை வழங்கியதுடன் முழு உதவியும் ஆலோசனையும் நல்கிய என் னினிய நண்பன் முந்நாள் களுதாவனை மகாவித்தியாலய உபஅதிபரும் இந்நாள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளருமான உயர்திரு. பெ. முத்துலிங்கம் அவர்கட்டு என்னிருதயம் நிறைந்த நன்றிகள்.
மதிப்புரை தந்து பலபுதிய தரவுகளை புகுத்தி நூலின் வடிவைப் பொலிவாக்க உதவிய அன்புமிகு நண்பரும், ஒய்வு பெற்ற படசாலை அதிபரும், முந்நாள் கோட்டமுனை பூரீ மாரியம்மன்
XIII

Page 12
ஆலய பாரிபாலன சபைத்தலைவரும், இந்நாள் பொருளாளரும், சைவ சித்தாந்த சிரோன்மணியான உயர்திரு ஏ. பாக்கியமூர்த்தி அவர்கட்கு என்னகம் நிறைந்த நன்றிகள்.
இந்நூலாக்கத்திற்கு வேண்டிய நூல்களை தந்துதவிய அன்னை கண்மணி நூலகத்தின் பொறுப்பாளரான திருமதி.பார்வதிகாந்தன் குருக்கள் அவர்கட்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்நூலை நன்முறையில் பதிப்பித்து உதவிய கொழும்பு லகூழ்மி அச்சகத்தாருக்கும் என்னிருதயம் நிறைந்த நன்றிகள்.
நூலைப் படித்து பயனுள்ள கருத்துக்களை தர இருக்கும் வாசகர்கட்கும் நன்றி! நன்றி!!
இந்நூலில் முன் அட்டையில் பாவிப்பதற்கு விஸ்வகர்மாவின் நிழற்படத்தைத் தந்துதவிய இலங்கை விஸ்வகர்ம சங்கத்தைலவர் உயர்திரு. A. S. தியாகராசா அவர்கட்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
இந்நூல் ஆய்வுக்குப்பயன்படுத்திய உசாத்துணை நூல்களின் முழுப்பட்டியலையும் இதில் வெளியிடவில்லை. ஒரு பகுதி மட்டுமே இதில் அடங்குகின்றன. காரணம் அவ்வவ் கட்டுரைகளிலே ஆய்வுநூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
அன்பு பூ. ம. செல்லத்துரை "இராசகம்"
பெரிய போரதீவு 01-04-2000
XV

அகில இலங்கை தர்மோதைய ஸ்தாபாகரும், தலைவரும் விஸ்வகர்ம ஆதீனப் பீடாதிபதியும், பிரம்மாத்ன குருகுல முதல்வரும், பெரியபோரதீவு றி பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், யூரி முத்துவிநாயகள் தேவஸ்தானம், முனைத்தீவு ரீ மாணிக்கவிநாயகர் தேவஸ்தனங்களின் பிரதம குருவுமான சித்தாந்த வித்தகர், செஞ்சொற் கொண்டல், ஆச்சாரிய தீபம், அருட்கவியரசு, விஸ்வப் பிரம்மறி
வை. இ. எஸ். காந்தன் குருக்கள் (கண்மணிதாசன், ஏரூரான்) அவர்கள் தந்த வாழ்த்துப்பா உலகை படைத்த பிரமத்தின்
உயிர்ப்பாம் தெய்வ ஐமுகங்கள் உண்மை உணர்த்தும் வேதத்தின்
உள்ளே பொதிந்த பொருள் மறைப்பாம் நலமே காட்டி உலகுயிர்க்கு
நன்மை பயக்கும் தெய்வீக ஞான போதத் துள்ளார்ந்த
நான்மறை காட்டும் பஞ்சவர்கள் பலமாய் புவிக்கு பயன் பூத்து
பஞ்ச தொழில்கள் நிறைவோங்க பத்திரை பாதம் ஏற்று முதல்
பாரில் குருவாய் பவனி வரு தலமே சிறக்க பல பணிகள்
தரணி போற்றச் செய்முதல்வோர் தகைசால் விஷ்வ கர்மாவின்
தனிநூல் ஒன்று பிறந்ததுவே பிறந்த இந்தப் பெருநூலை
பிரியமாக்கித் தந்தமகன் பெரிய ஊரென பேர் சிறக்கும்
பெருமைப் போரூர் நன்னலத்தான் சிறந்த பொன்செய் புலவர் குலம்
செய்மா தவத்தால் வந்ததறிஞன் திகழார் பூபால் இராசம்மா
சிந்தைக்கினிய நன்மைந்தன் மறைந்த விஷ்வ குலப் பெருமை
XV

Page 13
மண்ணில் நாட்ட நூல் வடித்தான் மாண்பார் நூல்கள் பலகற்று
மண்ணில் அறிஞர் சிந்தைகொள இறைவா நூலாய் இம்மண்ணில்
எழுந்த நூலின் நிறன் கண்டேன் இனித்த தமிழின் சொல்லாட்சி
இதயம் கனிந்து இனித்ததுவே.
தன்னை மறந்து தினம் துயின்ற
சமூகம் விழிப்பை காண்பதற்கு தன்னைத் துறந்து பணி செய்தான்
தகைசார் இந்தப் பெருமனிதன் முன்னைப் புகழர் வரலாற்று
முகிழ்ப்பில் மலர்ந்த இக்குலத்தார் முனைப்பாய் நினையா தன்னிலையால்
முடிவாய் வெறுமை நிலையடைந்தார் இந்நிலை கண்டு துடிப்புற்றே
இனியான் இவனோ சிந்தித்தான் எழுதும் விடயம் பலவெல்லாம்
இந்தச் சமூக குலப்பெருமை உன்னி பாக இவன் செய்த
உயர்ந்த பணிகள் பலவன்றோ உள்ளத்தாலே நினைக்கின்றேன்
உண்மை இவனோர் தனிப்பிறவி
வாழ்க செல்லத்துரை மன்னோ - நின்
வாய்மை சிறந்து நிலைபெறவே வாழ்க நினது பெருநூல்கள் - என்றும்
வையம் உள்ள வரை நீடு வாழ்க புகழால் நின் மண்ணும்
வாரித் தந்த நல்லோர்கள் வாழ்க உன்னைச் சிந்திப்போர் தாய் வல்ல காளி தன்னருளால்.
XVI

விஸ்வம் என்றால் உலகம். கர்மா என்றால் படைத்தல். எனவே உலகைப் படைத்தவரை "விஸ்வகர்மா” எனப் புராணங்களும் வரலாறுகளும் இதிகாசங்களும் கூறுகின்றன.
பரப்பிரம்மம் என்னும் ஒரு விபரீத விருட்சம். அதனுடைய வேர்கள் மேல் பாகத்திலும் கிளைகள் கீழ்ப் பாகமாகவும் அமைந்து மேலே தொங்கிக்கொண்டிருக்கின்றது. அண்டப்பிரமாணங்கள் எல்லாம் அம் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலி ருந்து திருமூர்த்திகளாகிய சிவன், பிரமா, விஸ்ணு ஆகியோர் முதல் கனியாகக் கனிந்தோம். இந்த விஸ்வப் பிரமத்திலிருந்து உண்டான முதல் கனிகள் நாங்களேயாகும். அந்த விருட்சமான விஸ்வேஸ்வரர் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும் செய்ய எங்களைப் பணித்தார் என ஸ்கந்த புராண நாககாண்டம் 11ம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. விஸ்வப் பிரமம் பற்றிய கேள்விகளை ழரீ சண்முகம் சிவனைக் கேட்க சிவனளித்த பதிலே மேலேயுள்ளதாகும்.
உபநிஷத்திலும் கீதையிலும் மேற்படி விருட்சம் பற்றி குறிப் (St.(6sir GTSITs, (sir C. P. R. SITsir 6Togglu "Phases of Religion and Culture" நூலில் 73ம் பக்கத்தில் கூறியுள்ளார்.
“ஞானானந்த மயம் தேவம் பஞ்சகிருதய பாராயணம் சர்வ வியாபின மீசானம் பூரீ விஸ்வகர்மானமாசரயே’
- பூரீ விஸ்வகர்மஸ்துதி பரிபூரண ஞானந்த மயமாகவும், சர்வவியாபியான இறை வடிவாயும், பஞ்ச தொழில்களையும், உலகங்களையும் படைப் பவரான ழரீ விஸ்வகர்மாவைப் போற்றி வணங்குகின்றேன்.
சகல அண்டங்களையும், அவற்றிலுள்ள கிரகங்களையும், தேவர்களையும், மனிதர்களையும், ஜீவராசிகளையும், படைத்தவர் விராட்விஸ்வப்பிரமத்திலிருந்து உதயமானவர். எனவேத நூல்கள் கூறுகின்றன. எனவே அவர் உதயத்தின் சின்னம். உற்பத்தியின்
O1

Page 14
ஊந்து சக்தி, உலகின் மூலம் முதல்வன் முக்கண்ணுக்கு முந்தியவர். இக்கருத்தை மூலஸ்தம்பம் என்ற மிகப் பழைய கிரந்தம் "நபூமி நசலம் சைவ நசித்தஞ்சக் ராணநசப் ரஹ்மாத விஸ்ணு ஸ்ச்சநசருத்ராஸ் சோசர சர்வசூனியநலாம்பஸ் ஸ்சயம்புசதாரக விஸ்வகர்மண” எனக் கூறுகின்றது.
ஏக தெய்வம், கடவுள் ஒரே இலக்கணமுடையவர், உலகில் தருமத்தை நீதியையும் நிலை நிறுத்துபவர், அறநெறியில் ஒழுகுபவர்கட்கு நண்பர், அறிஞர் பலராகக் கூறுபவர், இப்பரம் பொருள் விஸ்கர்மா என அழைக்கப்பட்டார் என்று வடமொழி இலக்கிய வரலாறு கூறுகின்றது.
பிரஜாபதி, தேவகுரு, தெய்வீகக்கம்மாளர், இராசகுரு எனத் தமிழ் அகராதி கூறுகின்றது.
"விஸ்வகர்ம தெய்யோ புத்திர லோகாண சர்வேஸ்வரே தெய்யோ சிருஷ்டி ரூபன மகா விஸ்வகர்மனே ஈஸ்வரணா சர்வேஸ்வர தெய்யோ" எச் சிங்களவர்களின் கண்திறக்கும் மந்திரம் கூறுகின்றது. “தேவலோக சிற்பியான விஸ்வகர்மா தனிப் புகழ் வாய்ந்தவர். கைவினைக் கலைஞர்கட்கு இவர் குலத் தெய்வம். உலகிலுள்ள கைவினைத் தொழில்களுக்கு பொறுப்பானவர், மூலமானவர் என்ற பொருளில் இவருக்கு உலகைப் படைத்தவர் என்ற கருத்தமைந்த "விஸ்வகர்மா” என்ற பெயர் அமைந்தது.
படைப்புக்கடவுள் இவரேயாவர்.ஈஸ்வரனையே"விஸ்வகர்மா" என யசுர் வேதம் கூறுகின்றது. லலிதகலைகள், காவியங்கள் ஒவியங்கள், சிற்பம், சங்கீதம், நடனம், நாட்டியம் முதலான கலைகள் வளரவும் வாழவும் வழிவகுத்தவர் விஸ்வகர்மா. புராணங்கள் அனைத்தும் விஸ்வகர்மாவின் பெருமையைப் பேசு கின்றன. பாரதநாட்டில் சிற்பக்கலை செழித்து வளரக் காரணம் விஸ்வகர்மாவின் அருள்தான் எனழரீமத்பாகவதம் கூறுகின்றது. புராதன தர்ம கிரந்தங்கள் பிரஜாபதி, ஆத்தியதேவர் சிற்பி, தரிதசாசார்ய, பெளவன் என்றெல்லாம் விஸ்வகர்மாவுக்குப் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளது எனக் கலாநிதி பரமானந்த பஞ்சால்
02

என்பவர் "விஸ்வகர்மா” பற்றி எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.
சில்பஸம்ஹிதா என்னும் நூலில் மனுமகாராசன் கோரிக் கையை ஏற்று விஸ்வகர்மா "தூரதரிசனம்" என்ற தொலை நோக்குக் கண்ணாடியை உருவாக்கிக் கொடுத்தாரெனக் கூறப் பட்டுள்ளது.
சாரணப்யூகம் 4ம் காண்டத்தில் "விஸ்வகர்மா” இயற்றிய கட்டிடக்கலை பற்றிய நுணுக்கங்களைக் கொண்ட "அர்த்த வேதம்” என்னும் பகுதி அதர்வ வேதத்தின் பிரிவு எனக் கூறப் பட்டுள்ளது.
ஈசன் புகழ்பெற்ற "விஸ்வகர்மா” தேவர்கட்கு ஆசான். செல்வம் திறமைகட்கெல்லாம் வழிகாட்டி, துணைவர். தேவர் குருவான பிரகஸ்பதியின் மருமகன். இத்தகைய மகானை வணங்குகின்றேன் என்று போஜ மகாராஜா குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி வின்சிலோ அவர்கள் எழுதிய அகராதியில் "விஸ்வகர்மா” என்றால் ஜெகக்குரு எனக் குறித்துள்ளார்.
சென்னை கிறிஸ்துவ கல்லூரி சஞ்சிகையில் கலாநிதி எ. சி. பர்னல் என்பவர் "விஸ்வகர்மாக்களுக்கு அனாதி காலம் தொட்டே பிராமணத்துவம் இருந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.
காட்வால்டர் வாடி என்பவர் 2000 ஆண்டுகட்கு முன்பிருந்தே விஸ்வகர்மா இருந்து வருகின்றார். அவர்களே உண்மையான பிராமணர்களாகும் எனக்கூறியுள்ளார்.
சிங்களவர்கள் கலாநிதிப் பட்டத்தை "ஆச்சாரிய” எனக் கூறுகின்றார்கள். இது விஸ்வகர்மாக்களின் ஆச்சாரி என்னும் பெயரை நினைவு கூறுகிறது.
தாய்லாந்துபொறியியல் வல்லுனர்களை “விஸ்வகர்மா” எனப் பெர்ருள்படும் "பின்வகம்மிய" என அழைக்கின்றார்கள்.
ஆச்சாரி என்னும் பதம் ஆயகலைகள் அனைத்தையும் கற்றுத் தேறி ஆசாரத்தோடு ஒழுகலைக் குறிக்கும். * குறிப்பு:- இலங்கையில் சிறந்த தேசிய விருது "விஸ்வகர்மா”
விருதுவாகும்.
- 03

Page 15
இருக்கு வேதம் 10வது மண்டலம் 6வது அநுவாகம் 13 - 14, கிருஷண்ய யசுர் வேதம் 5 - 5 - 22ம் பக்கங்கள், யசுர் ஸம்ஹிதை 4-6-6ம் பாகங்கள், பிரபஞ்ச உற்பத்தி அனைத்தும் “ழரீ விஸ்வ கர்மாவே ஆதாரபூதர் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
"பஞ்சவக்த்ரம் ஜடாபாரம் தச பஞ்சவிலோசனம் ஸத்யோ ஜாதானனம் ஸ்வேதம் வாமதே வந்துக்ருஷணகம!! அகோரம் ரக்தவர்ணம் தத்புருஷம் ஹரிதப்ரபம் ஈசானம் ஸ்யாமவர்ணிஞ்ச சரீரம் ஹேமவர்ணகம!! தசபா ஹஸெமாயுக்தம், கர்ணகுண்ட சோபிதம் பீதாம்பரதம் தேவம் நாகயக்ஞஏகோப வீதிமை!! ருத்திராட்ச மாலாபரணம் வ்யாக்ரசர் மோத்தரியம் அட்சமாலாஞ்ச பத்மஞ்ச நாகசூல பிநாகிதம்!! மேரும் வீணஞ்ச பாணஞ்ச சங்கசக்ர ப்ரகீத்திகம் கோடி ஸர்ேயப் ப்ரதிகாசம் சர்வஜீவ தயாபரம!! தேவ தேவ மகாதேவம் விஸ்வப் பிரஹற்ம ஜகக்குரு” என கிருஷ்ண யசுர் வேதம் பூரீ விஸ்வகர்மாவின் பூரண வடிவத்தை விபரிக்கிறது.
இதன் பொருள் - ஐந்து முகங்களும் சடாமகுடங்களும் பதினைந்து கண்களும் உடைய அவருடைய சத்தியோஜாதம் என்னும் முகம் வெண்ணிறமானது. வாமேதவ என்னும் முகம் கருநிறமானது. அகோர முகம் சிவப்பு நிறமுடையது. தத் புருஷ முகம்மஞ்சள் நிறமுடையது. ஈசான முகம் பச்சைவர்ணமுடையது. சரீரமானது பொன்னிறமானது. இவர் பத்துக் கரங்களை உடையவர், பிரகாசிக்கும் குண்டலங்களை காதில் தரித்தி ருப்பவர், பொன் னாலான பீதாம்பரத்தை உடையாக உடுத்து நாகங்களை யக்ஞோபவிதமாய்க் கொண்டவராய், உருத்திராட்ச மாலையை ஆபரணமாய்க்கொண்டவர், புலித்தோலை அணிபவர், ஒரு கரத்தில் அட்சய மாலையையும் மற்றொரு கரத்தில் தாமரை மலரையும், நாகபாசம், சூலம், பினாகம் என்ற வில், மேரு என்னும் வீணையையும்,பாணம், சங்கு, சக்கரம் போன்றவற்றை கரங்களில்
04

உடையவரும், புகழும்படியான தோற்றமுடையவரும், கொடிய சூரியர்கள் ஒருங்கே உதயமானது போல் பிரகாசிப்பவரும், எல்லா ஜீவராசிகளிடத்திலும் கருணை உடையவரும், தேவர்கட்கும் மூவர்கட்கும் தேவனாகிய மகாதேவனும், "விஸ்வகர்மப்பிரம்மம்" என்னும் காரணப்பெயருடையவரும், ஜெகக் குருவாகவும் கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு ஆகாயம் என்பவற்றை நோக்கிய ஐந்து முகங்களுடைய சர்வ வியாபகருமாகிய ழரீ விஸ்வகர்மாவான கடவுளை நான் வணங்குகின்றேன் என்பதாகும்.
ழரீ விராட் விஸ்வப்பிரம்மா என்னும் மகாபுருஷன் இந்தப் பூவுலகத்தையும் ஈரேழு புவனங்களையும் தேவதைகளையும் மானசீகத்தால் படைத்தார் என ருக் வேதம் ஸ்ருதி என்னும் நூலும் அதி வீரராம பாண்டியனார் எழுதிய காசி காண்டமும் கூறுகின்றன.
0S

Page 16
விஸ்வகர்மாவின் பஞ்சமுகங்களிலிருந்து மனு, மய, துவஷ்ட, சிற்பி, விஸ்வக்ஞ என்னும் ஐந்து பிரமகுலத்தோர்
தோன்றினார்கள்.
பிரமகுலம் தொழில் வேதம் பூநூல்
LDS) இரும்பு ருக் வெள்ளி LDUL மரம் யஜ ெ தாமரை துவஷ்ட செம்பு, பித்தளை சாம தாம்பரம் சிற்பி கல் அதர்வண பருத்தி விஸ்வக்ஞ பொன் பிரணவ பொன்
விஸ்வகர்மாக்கள் மேலே கூறிய ஐந்து வேதங்களுடன் உப வேதங்களான ஆயுர்வேதம், அர்த்தவேதம், தனுவேதம், காந்தர் வேதம், இவற்றின் உப அங்கங்களான சிட்சை, வியாகர்ணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சதஸ் முதலியவற் றையும் தெரிந்தவர்களாவார். விஸ்வகர்மாக்கள் இவ்வாறு ஐந்து வேதங்களையும் கற்று உணர்ந்த காரணத்தால், விஸ்வப் பிராம ணர்களாகினர். எனவே அவர்கட்கும் அவர்கள் சந்ததியர்கட்கும் வேதபூர்வமாக யாகாதிகாரங்கள் ஏற்பட்டது. யக்ஞனத்தில் அவிர் பாகத்தைப் பெறும் தேவர் விஸ்வகர்மாவே என யசுர் வேதம் கூறுகின்றது.
ஸ்காந்தம் நகரகண்டத்தில் 7வது அத்தியாயம் 416 வது ஸ்லோகத்தில்,
“காச்யபோ ப்ரஹமுர்த்திஸ் சரேலாக ப்ரதம
பண்டித்யா அனந்த வேத கர்த்தாவை விஸ்வ
கர்மாக்ஷச ப்ராம்ஹண” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பொருள்:- அனந்த வேதங்கள் குறிப்பிடும் எல்லாவற் றுக்கும் விஸ்வகர்மா என்னும் பிராமணர்களே கர்த்தக்களாகும்.
06
 

விஸ்வகர்மாவின் சத்யோதகமெனும் கிழக்கு முகத்தியானத் தால் சாணக ரிஷி தோன்றி ருக்வேதத்தால் துதிக்கப்பட்டார். இவரே மனு விஸ்வகர்மா.
வாமதேவமெனும் தெற்கு முகத்தியானத்தால் சனாதன ரிஷி தோன்றி யசுர் வேதத்தால் துதிக்கப்பட்டார். இவரே மய விஸ்வகர்மாவாகும்.
அகோரமென்னும் மேற்கு முகத்தியானத்தால் அபுவன ரிஷி தோன்றி சாமவேதத்தால் துதிக்கப் பெற்றார். இவரே துவஷ்ட விஸ்வகர்மாவாகும்.
தத்புருஷமெனும் வடக்கு முகத்தியானத்தால் பிரத்னஸ ரிஷி தோன்றி அதர்வண வேதத்தால் துதிக்கப் பெற்றார். இவரே சிற்பி விஸ்வகர்மாவாகும்.
rigtsoTD என்னும் ஆகாயத்தை நோக்கிய முகத்தால் சுபனஸ ரிஷி தோன்றி பிரணவ வேதத்தால் துதிக்கப்பட்டார். இவரே விஸ்வக்ஞ விஸ்வகர்மாவகும்.
இந்த ஐந்து முனிவர்கள் மூலம் ஆளுக்கு 25 முனிவர்கள் மூலம் 125 ரிஷிகள் தோன்றினார்கள் என வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. இந்த 125 ரிஷிகள் மூலமே விஸ்வகர்மகுலம் தோன்றியது.
சானக ரிஷியின் மனைவி - ஆதிசக்தி சானத ரிஷியின் மனைவி - பராசக்தி அபுவன ரிஷியின் மனைவி - இச்சாசக்தி பிரத்தன ரிஷியின் மனைவி - கிரியாசக்தி சுபர்ணஸ ரிஷியின் மனைவி - ஞானசக்தி
உண்கின்ற உணவு முனது உழுகின்ற படைவுனது உடுக்கு நற்றுகிலுமுனது
உறைகின்ற அகமுநின் தறைகின்ற பறையும் நினது பருறை கோயிலும் நின்தென் கொடை கலையுனது மறையுனதியாவரு
மிறைஞ்சு விக்ரமமுனது ஏரியோடு வாவிநதியரணுனது நடனமுனது தேவரும் பார்த்து மகிழ்விழமுனது பார் வேந்தர்
புகழுனது வைசியர்கள் செட்டுனது பற்பலர் செய்தொழிலுமுனது வண் கொண்ட விலையலாற் சனைமாங்காலை கொடிவகிர் வாளுமுணதாகையால் வாயிலா நரருனைக்கான நீங்கியே
வாழ வழி யில்லை விஸ்வகுருவே.
07

Page 17
இப்பாடலின் பொருள்:- ஏ! விஸ்வகர்மாவே! மனித சமுதாயம் உயிர்வாழ உணவும், உறைவிடமும், உடையும் கிடைத்தது உன்னால், உழவுக்கு வேண்டிய கலப்பை, மண்வெட்டி ஆகிய ஆயுதங்கள் உன்னால் கிடைத்தவை. மறை போன்ற வாத்தி யங்கள், இசைக்கருவிகள், திருக்கோயில்கள், அவற்றிலுள்ள விசுவரேசதகர் மூலவர்கள் உற்சவர்கள், சிற்பங்கள் சித்திரங்கள். 64 கலைகள், மறை எனப்படும் வேதங்கள், சூரிய சந்திரர்கள், நதிகள், குளங்கள், கடலில் மிதக்கும் மரக்கலங்கள், கப்பல்கள், வானில் பறக்கும் விமானங்கள், பார் வேந்தர் புகழ் பரப்பும் கல்வெட்டுக்கள், சிலா சனங்கள், வியாபாரிகளின் அளவுகோல் இடைகள், மக்கள் செய்யும் பற்பல தொழில்கள் முதலிய எல்லாம் நீ கொடுத்து உதவியவை. மனிதர்கள் எவரும் நீயின்றி ஒரு கணமும் வாழ வழியில்லை விஸ்வரூபனே!
ஈஸ்வரனுக்குத் திரிசூலமும் விஷ்ணுவுக்குச் சுதர்சன சக்கர
மும் முருகனுக்கு வேலும் செய்து கொடுத்தவர் விஸ்வகர்மா வேயாகும் என விசுவகுருசதகம் என்னும் நூலில் 16வது பாடல் கூறுகின்றது.
"ஆழியான் ஆழி அயன் எழுத்தாணி என்பார்
கோழியான் குண் றெறிய வேல் என்பான் - பூமியான்
அங்கை மழு என்பான் அருள் பெரிய மாவண்டூர்ச்
சிங்கம் உலைக் களத்திற் சென்று."
எனச் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடியுள்ளார்.
விஸ்வகர்ம பற்றி வேதநூல்
"மநுப்ஹமனே உமா மகேஸ்வரப்யாம நம: மயப்ரஹ்மனே லட்சுமி நாராயணப்யாம்நம; துவஷ்டப்பிரஹற்மனே வாணி ஹிரண்யகர்ப்யா நம: சிலாப்பிரஹ்மனே சவிபுரந்தாப்யாம் நம: விஸ்வக்ஞ ப்ரஹ்மனே சவிதா பாஸ்தராப்யாம் நம:
இதன்படி விஸ்வகர்மாக்கள் தெய்வாம்சம் பெற்றவர்கள்.
08

“ரிக்வேதம் மநுஸ்சைவ யசுர் வேதம் மயஸ்தா துவட்டாநாம் சாமவேதாஞ்சா அதர்வணன் சில்பிகஸ்ததா பஞ்ச வேதந்து ப்ராஹ்மண”
என்ற வேத மந்திரங்களின்படி விஸ்வப்பிரமாக்கள் வேதாம்சம் பெற்றவர்கள். வேதமனைத்துக்கும் மூலபுருஷர்கள்.
"விஸ்வகர்ம குலே ஜாத, கெர்பய! பிராமண நிஸ்சயம்! ருத்ரத்வம் நாஸ்திதத்வம்சே ப்ராம்மானோ விஸ்வகர்மண!”
விஸ்வகர்ம வம்சத்தாருக்கு கர்ப்பத்திலே பிராமணத்தவம் நிச்சக்கப்படுவதால் அவர்களே உண்மையான பிராமணர்கள் என வேதநூல்கள் கூறுகின்றன.
மேலே தந்த வேதநூல் சுலோகங்களின்படி வேதங்களைப் படைத்தளித்த பெருமையும், சுலோகங்களையும், நீதி முறை களையும், வகுத்தளித்தவர்கள் விஸ்வகர்மாக்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. விஸ்வகர்மாக்களின் அறிவு, ஆற்றல், உழைப்பை, உடல் வலிமையாலும், சூழ்ச்சியாலும் அபகரித்துக் கொண்ட ஆடுமாடுமேய்த்து, மாட்டு வாலைப்பிடித்துக் கொண்டு இந்தியாவில் நுழைந்த இடையர் கூட்டமான ஆரியர்கள் அரசோச்சுகின்றார்கள். அத்தனையும் ஆக்கித் தந்த ஆச்சாரி பரம்பரை அழிவில் முழ்கிக்கிடக்கின்றது. காரணம் இந்து மக்களின் பாராமுகம். ஆட்சியைப் பிடித்த அன்னியரை அகற்றி விட்டோம். மதத்தைப் பிடித்த மதங்கொண்டவர்களை மதித்துப் போற்றுவதால் தமிழர் ஒற்றுமை சிதைக்கப்பட்டது. சாதிகள் விதைக்கப்பட்டது. சண்டைகள் சச்சரவு, என்றும் அமைதியற்ற நிலை. இதனால் தமிழர் நாகரிகம், கலை, கலாச்சாரம் விஸ்வகர்ம மக்கள் விட்ட இடத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. எம்மால் நாகரிகத்தை கண்டறிந்த மேலைநாடுகள் நாகரிகத்தின் உச்சிக் கொம்பில் மிதக்கின்றன. நாம் தாழ்ந்து விட்டோம். காரணம் அத்துறையில் தங்களைத் தியாகம் செய்து புதிய புதிய கண்டு பிடிப்புக்களைத் திராவிடர்கட்கு உரிமையாக்கிய விஸ்வகர் மக்களை அகற்றி ஆரியனை ஏற்றுக் கொண்டதேயாகும். நல்லது கெட்டால் நாய்க்கும் உதவாது என்பார்கள். நாடு, நகர்,
09

Page 18
நாகரிகம் தந்த விஸ்வகர்மாக்களை நன்றி சிறிதுமின்றி அகற்றியதால் ஆக்கப்பணி செய்த அவர்கள் தங்களையே அழித் துக்கொண்டார்கள். அவர்கள் மூலம் தமிழரும் தமிழ் சமுதாயமும் பெறவேண்டிய ஆக்கத்தை அரும்பெரும் பணிகளைப் பெற முடியாது போய்விட்டது.
விஷ்ணு சகஸ்ரநாமம் என்னும் நூலில் "விஸ்வகர்மனே நம:” என்றும் சகஸ்ரநாம பாஷ்யம் என்னும் நூலில் "பிரம்ம சிருஷ்டே ஹரிபிராக் ஹர்த்து வஞ்ச வித்தியாமானம் விஸ்வகர்ம ஜெகத்வியாபாரக" என்றும்,நிருத்தம் என்னும் நூலில் "விஸ்வஸ்ய ஜெககர்மா வியாபாரோயஸ்ய லட்சணம் பிராக்பிரம சிருடேஹறி ஹத்துவஞ்ச விஸ்வகர்மேமதிகத்யதே" எனவும், புருஷசூத்தி ரத்தில் விஸ்வகர்மணஸ்வத்தாதி” எனவும், பாரதத்தில் "புருஷம் விஸ்வகர் மாணம் ஆதி தேவம் அஜம்விபும்" எனவும், மூலதம்ப புராணத்தில் "பிதா சர்வேதவனாம் சர்வலோக பிதா மஹ சர்வலோக குருஸ் சைவ விஸ்வகர்ம பாசிவஹ” எனவும், விஸ்வ கர்ம புராணத்தில் பூத் வார்த்த புருஷாகரோ விஸ்வகர்மாதி பூருவிஹ பிரிதிகேஷிவா சுருஜதேவான் விஸ் வவோத்தி சக்ரிகையா” எனவும், விஸ்வகர்மோ பாக்கியானத்தில் "தர்மாந்த காமோகானாம் ஆச்சாரியோ வேத பகரகஹ ஏதற்கர்மா மகா மூர்த்தி விஸ்வகர்ம ஜெகத்குருஹரீ” என்றும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தீர்த்தமாடும் போது "சமுத்திராய வாயுனாய சிந்துநாம் பதையே நம! நதி நாகம் சர்வா சம்பித்ரேஜி கூதா விஸ்வகர்மனே விஸ்வாஹமர்த்திய கம்ஹவிஹி" என்னும் மந்திரத்தைக் கூறியே நீராடுவார்கள். எனவே இந்து மதத்தோடு விஸ்வகர்மாவுக்குள்ள தொடர்பு பந்தபாசம் எவ்வளவு என்பது சொல்லாமலே தெரிகின்றது. இந்து மதத்தின் மூலம், முதல்வர் விஸ்வகர்மா என்பது தெளிவாக விளங்குகின்றது.
விஸ்வகர்ம மக்கள் கிரேதாயுகத்தில் மனதால் நினைத்தே பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தார்கள்.
திரேதா யுகத்தில் மந்திரத்தால் பொருட்களை உற்பத்தி செய்தார்கள்.
துவராகயுதத்தில் கண்களால் உற்பத்தி செய்தார்கள்.
கலியுகத்தில் கைகளால் உற்பத்தி செய்கிறார்கள்.
காலமாற்றம் கம்மாளர்கள் தம் கைவண்ணத்தின் மூலம் கலை
களைப் படைகிறார்கள்.
10

இன்று நாம் வாழும் இலங்கை அன்றைய குமரிகண்டத்தில் கடற்கோள்களால் அழிந்துபோக மிஞ்சிய பகுதியாகும்.
குமரியில் அதியுயர் மலையாக இருந்த மேருமலையைச் சமன் செய்து இலங்காபுரியை வடிவமைத்தவர் விஸ்வகர்மா என வடமுனி வால்மீகியும் இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் கூறுகின்றன. இக்கூற்றைக் கவிச்சக்கரவர்த்தியாதியான கம்பர்.
பொன்னின் மால்வரை மேல்மணி பொலிந்தன பொருவ உன்னி நான்முகத் தொருவனின்று ஊழ்வினை உரைக்க பன்னிநாள் பல உழுந்து அரிதினில் படைத்தான் சொன்ன வானர் தச்சன்
இந்நகர் துதிப்போம்” என்றார்.
அடுத்த கவிச்சக்கரவர்த்தியான ஒட்டகக்கூத்தர்,
"இன்னதாய இலங்கையின் எழிலை நோக்கி எதிரில்லா மன்னு வீர மாலியவான் சுமலி மாலி என்றுரைக்கும் மன்னர் மூவர் மகிழ்ந்து அந்த ஆசாரிக்குப் பூசை செய்து ஒன்னாலர்க்கு இடம் துடிக்க
ஒளி நீர் இலங்கையில் புகுந்தனர்" என்றார்.
எனவே இலங்கையை வடிவமைத்தவர் விஸ்வகர்மா என்பதில்
இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை.
11

Page 19
இயக்கர்களான மாலியவான் சுமாலி, மாலி என்னும் சகோதரர்கள் தேவலோகத்தில் மிகவும் அட்டகாசமாகவும், அடாவடித்தனமாகவும் தேவர்கட்குத்தொல்லைகளைக் கொடுத் துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் நடவடிக்கைகளையும், அடாவடித்தனங்களையும் பொறுக்க முடியாத தேவர்கள் ஒன்று திரண்டு தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். தேவேந்திரன் தேவகுருவான விஸ்வகர்மாவிடம் முறையிட்டு இம்மூவரும் வாழத் தனியான நாடு ஒன்றை உருவாக்கித் தருமாறு வேண்டினான். தேவேந்திரனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டவிஸ்வகர்மா வளைத்து கடலால் சூழப்பட்டு நடுநின்ற மேருமலையே இவர்கள் வாழத் தகுதியான இடம் எனத் தெரிந்து அதையே சமன் செய்து நாடு, நகர் அமைத்து வழங்கினார். விஸ்வகர்மா தானுண்டாக்கிய நாட்டுக்கு இட்ட பெயரே இலங்காபுரியாகும். இது இவ்வாறு இருக்க இலங்காபுரியின் வடபகுதியை விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன் துவட்ட ஆச்சாரியார் சமன் செய்து நாடு நகர் அமைத்து அப்பகுதியை தாங்கள் வாழும் பிரேதசமாக்கினார். இவர் விஸ்வகர்மாவைப் போல் படைத்தல் தொழிலில் வல்லவர். சகலகலாவல்லவர்.
இதனால் இப்பகுதி துவட்டாபுரம் என அழைக்கப்பட்டது. அக் கால மக்களால், துவட்டாச்சாரியார் மனிதர்களில் உயர்ந் தவராகக் கணிக்கப்பட்டதால் மாதுவிட்டபுரம் எனப் பெயரிட்டு அழைத்தார்கள். மருவி மாதோட்டம் ஆனது என அறிஞர்கள் கூறுகின்றர்கள். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. திருக்கேதீச்சரம் ஆலயம் துவட்டாச்சாரியாரால் உருவாக்கப்பட்டது.
12

மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த நகரமாகக் கருதப் படுகின்றது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மன்னார் மாவட் டத்தில் பல கிராமங்களடங்கிய ஒருபகுதியை இன்றும் “மாந்தைப் பற்று" என்ற அழகிய தமிழ்ப் பெயராலே அழைக்கப்படுகின்றது. மாந்தை என்னும் பெயர் சங்ககால இலக்கியங்களிலும் மிக முக்கியமாகப் பதியப்பட்டுள்ளது.
மாந்தை அல்லது மாதோட்டம் என்னும் நகர் கம்மாளரால் கட்டப்பட்ட நகராகும். மிகப்பலம் பொருந்திய இச்சாதியார் பன்னெடுங்காலமாகப் இப்பகுதியை ஆட்சி செய்தார்கள் என ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பற்றலொக்கி தானெழுதிய “இலங்கை” என்னும் நூலில் கூறியுள்ளார்.
“கொள்ளா நரம்பினிமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய விடுக்கும் துறைஎகழு மாந்தை யன்ன”
என நற்றிணையும்,
"நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிரை கொணர்ந்த பாடு சேர் நன்கலம்" என அகநானூற்றிலும்,
“வண்டு பண்செய்யும் மாமலர் பொழில் மஞ்சை நடமிடும் மாதோட்டம்" எனச் சம்பந்தரும்,
13

Page 20
"வாழையாம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்"
எனவும்,
“பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டம்”
எனவும்,
"மானமும் பூகமும் கதலியும் நெருங்கிய
மாதோட்டம் நன்னகர்"
எனத் தேவாரங்களும் புகழ்ந்து பாராட்டிய நகர் மாதோட்ட நகராகும்.
இந்த மாதோட்ட நகரை, இலங்கையை வடிவமைத்த படைத்தல் கடவுளான விஸ்வகர்மாவின் மூன்றாவது மகனான துவட்டாச் சாரியாரே உருவாக்கினார். இவர் சிறந்த கட்டிடக் கலைஞர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. உலோகங்களை உருக்கி உருவங்களைச் செய்யும் ஆற்றல்மிக்கவர் ஆயகலைகள் அறுபத்தினான்கிற்கும் அதிபதி. விஞ்ஞான விற்பன்னர். வித்தைகள் பலதில் வித்தகர். சகலகலாவல்லவர். இதனால் மனிதரில் மாணிக்கம் என மக்கள் அழைத்தார்கள். இதன் பெறுபேறாக “மாதுவட்டா” என்னும் பெயர் மக்களால் வழங்கப் பட்டது. இக்காரணத்தில் அவரால் உருவாக்கப்பட்ட பகுதியை மாதுவட்டாபுரம் எனப் பெயரிட்டு அழைத்தார்கள். இது காலப் போக்கில் மாதோட்டம் என மருவியது. என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாற்றில் கூறியுள்ளார்.
ஈழநாட்டின் வரலாற்றை கூறும்பாளி நூல்களான மகாவம்சம், அதன் பின் தோன்றிய சூளவம்சம் போன்ற நூல்கள் மாதோட் டத்தை மகாதித்த என்று குறிப்பிட்டுள்ளன. மா என்றால் பெரிய என்றும் தித்த என்றால் பாளி மொழியில் இறங்குதுறையைக் குறிக்கும். சிங்கள மொழியில் "மாதொட்ட", "மான் தொட்ட" என்று அழைக்கப்படுகின்றது. சிங்கள இலக்கியங்கள் இதனை “மாவத்து தொட்ட” என அழைக்கின்றன. ஆனால் தமிழரும்
14

தமிழ் இலக்கியங்களும் “மாதோட்டம்” என்றே அழைத்து வருகின்றன.
கந்தபுராணத்திலுள்ள தகூரிணகைலாய மான்மியத்தில் இது மாதுவட்டாபுரம் எனக் கூறப்படுகின்றது. இது சம்மந்தமாக தட்சண கைலாய புராணத்தில் ஒருகதை கூறப்படுகின்றது. "அதாவது துவட்டாரச்சாரியார் பாலாவியில் நீராடி கேதீச்சுவரை பூசித்து தவமியற்றினார் என்றும் நீண்டநாள் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தோன்றி இன்று முதல் இத்தலம் "துவட்டாபுரம்" என அழைக்கப்படும் என கூறியதாக அக்கதை தொடர்கின்றது.
இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப்பட்ட மாதோட்டத்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறும் சான்றுகளாக, தட்சணகைலாய புராணமும் மாந்தைப் பள்ளும், முதலியார் சி. இராசநாயகம் எழுதிய "புராதன யாழ்ப்பாணமும் விஸ்வபுராணமும் கதிரை மலைப்பள்ளும்" இப்பொழுது காணப்படுகின்றன.
மாதோட்டத்தில் படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் சந்த தியிரான ஐவகைக் கம்மளார்கள் வாழ்ந்தார்கள் என்றும் மாந்தையை ஆண்ட அரசர்கள் கம்மாள வம்சத்தவர்கள் என்றும் முதலியார் சி.இராசநாயகம் தாம் எழுதிய"புராதன யாழ்ப்பாணம்” என்னும் நூலில் கூறியுள்ளார். அதையே தட்சண கைலாய புராணமும், மாந்தைப் பள்ளும், விஜயதர்ம நாடகம் என்னும் நூல்களும் கூறுகின்றன.
மாதோட்டம் பற்றிய மிகமிகப் பழைய குறிப்பு மகாவம்சத்தில் காணப்படுகிறது. அதாவது விஜயன் இலங்கை வந்து குவேனி யைத் திருமணம் செய்து அவளின் உதவியோடு காளிசேனன் என்னும் மன்னனைக் கொலை செய்து, அவனின் சிற்றரசையும் தன்னாட்சியுடன் இணைத்தவுடன் குவேனியைக் காட்டுக்குத் துரத்திவிட்டு பின் தனக்குப் பட்டத்து அரசியாக பாண்டிய நாட்டு இளவரசியை வரவழைத்தபோது, பாண்டிய மன்னன் தன் மகளையும் எழுநூறு தோழிப் பெண்களையும் அவர்களுடன் பதினெட்டுக் குடிகளையும் சேர்ந்த ஆயிரம் கம்மாளக் குடும்பங்,
களையுைம் அனுப்பினான். அவர்கள் வந்திறங்கிய அதாவது 15

Page 21
அவ்வளவு பெரிய திரளான பரிவாரங்கள் வந்திறங்கிய இடத்துக்கு மாதித்த என்று பெயருண்டாகியது என மகாவம்சம் கூறுகின்றது. இது கி. மு. 6ம் நூற்றாண்டில் நடைபெற்றது.
இக்கருத்து மிகவும் தவறான கூற்று என இலங்கை வரலாறு அறிந்தவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனில் மாதோட்டத்தில் ஒருபலம்மிக்க நாகராட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இயக்கர்களைப் பகைத்துக் கொண்ட விஜயன் பலமிக்க நாகராட்சியையும் பகைக்க விரும்பி இருக்கமாட்டான். மாதோட்டத்தில் தான் கம்மாளர்களின் ஆட்சியும் ஆட்பலமும் கூட இருந்தது. இலங்கையை ஆண்ட முன்னரசர்களான குபேரன், இராவணன்,பத்மாசூரன் போன்றோரும்பத்மாசூரனின் தந்தை பிரபாகரன் கம்மாள இளவரசிகளைத் திருமணம் செய்துள்ளார்கள். இதனால் விஜயன் இயக்கரின் எதிர்ப்பைச் சமாளிக்க பக்கத்திலுள்ள பலமிக்க ஆட்சியாளர்களின் உதவியைப் பெறும் நோக்கோடு மாந்தை இளவரசியைத் திருமணம் செய்தான் என்பதே உண்மையாகும். இதை அடிப்படையாக வைத்தே மாந்தை மன்னன் தன் மகளுக்குப் பாது காப்புக்கு 1000 கம்மாளக்குடும்பங்களை உடனனுப்பினான். அவ்வாறில்லாது பாண்டியனின் சம்மந்தமாக இருந்திருந்தால் பாதுகாப்புக்கு படைப்பிரிவை அனுப்பியிருப்பான். அதைவிட்டுக் கம்மாளரை ஏன் அனுப்பவேண்டும்? அவ்வளவு தொகையான கம்மாளர்கள் பாண்டியநாடு முழுவதையும் சல்லடை போட்டாலும் கிடையாது. எனவே பாண்டிய நாட்டு இளவரசி என்பது, மகாவம்சத்தாரின் கற்பனை. மாந்தை இளவரசி என்பது சரியானதாகும். மாந்தை இளவரசிகள் நாகர் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள். நாகர்களைப் பற்றிய மிகத் தாறுமாறான கருத்துக்களை அதாவது நாகர்கள் பேய் பிசாசுகள் என்ற கருத்துக்களை மகாவம்சம் கூறியுள்ளது. அதேநாக பரம்பரையில் விஜயன் பெண்ணெடுத்தான் என எழுதினால் மல்லாந்துபடுத்துக் கொண்டு எச்சிலைத் துப்பியவன் கதை தங்களுக்கும் ஏற்படும் என்றும் விஜயன் மூலம் ஒரு புனித இனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இயக்கப் பெண்ணான குவேனியைக் காட்டுக்குத் துரத்திய மகாவம்சத்தார் மீண்டும் நாகரோடு தொடர்பைக் காட்ட
16

விரும்பாததாலே பாண்டியநாட்டு இளவரசியின் கதை புகுத்தப் பட்டது. ஆனால் விஜயன் திருக்கேதீச்சரத்திற்குத் திருப்பணி வேலை செய்தான் என கியு. நெவில் கூறியுள்ளார். விஜயனுக்கும் மாந்தைக்குமுள்ள தொடர்பையே இது காட்டுகிறது. எனவே விஜயனின் இரண்டாம் தாரம் பாண்டிய இளவரசி அல்ல மாந்தை இளவரசியாகும் என அறிஞர் பொ. சங்கரப்பிள்ளை தானெழுதிய "நாம் தமிழர்” என்னும் நூலில் கூறியுள்ளார்.
விஜயன் கதை ஒரு கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களும் சிங்கள இனத்தின் உண்மையான ஊரறிந்த பூர்வீகத்தை மறைக்கவே கூடியளவு கவனம் செலுத்துகின்றார்கள். எனவேதான் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்கதையாகின்றது. விஜயன் தமிழன், ஒரு சைவன் எனப் பல ஆதாரங்கள் வெளிவந்த பின்பே விஜயன் கதை கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர் சிலர் கூற முன்வந்துள் ளர்கள். அப்படியானால் சிங்களவரின் உண்மையான மூதாதை இலங்கையின் பூர்வீகக் குடியளான நாகர், இயக்கர் என்பதை ஏன் அவர்கள் இன்னும் மறைக்க வேண்டும். இதைச் சிங்கள வர்கள் ஏற்றுக்கொண்டால் பிரச்சனையே தீர்ந்துவிடும். மறைந்து விடும்.
கி.மு. 161ம் ஆண்டில் எலேல மன்னனின் மாமன் மருமகன், எல்லாளனுக்கும் மருமகன் துட்டகைமுனுவுக்கும் நடைபெற்ற போரைக் கேள்வியுற்றுத் தன் மாமனாகிய எலேல மன்னனுக்கு உதவுவதற்காகப் பல்லுக்கன் என்ற இளவரசன் பெரும்படை யோடுமாதோட்டத்தில் வந்திறங்கினான். ஆனால் மாமன் இறந்து விட்டான் என அறிந்ததும் அவன் திரும்பிச் சென்றான். அதன் பின் கி. மு. 103ம் ஆண்டளவில் புலகத்தன் , பாகியன், பழைய மாறன், பிழைய மாறன், தாதிகன் என்போர் மாதோட்டத்தில் வந்திறங்கி அனுராதபுரத்தின் மேல் படை யெடுத்து வெற்றி
கொண்டார்கள் என மகாவம்சம் கூறுகின்றது.
கி.பி.38ம் ஆண்டளவில் ஈழநாகன் என்ற மன்னனைச் சிற்ற ரசர்கள் துன்புறுத்த, அவனது பட்டத்து யானை அவனைச் சுமந்து கொண்டு மாதோட்டத் துறைமுகம் மூலம் அக்கரைக்கு
17

Page 22
அனுப்பியது என மகாவம்சம் கூறுகின்றது.
அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் மாதோட்டத்தில் என்ன நடந்தது என்ற குறிப்புகள் சிங்கள வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. அக்கால கட்டத்தில் மாதோட்டம் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒருவர்த்தகத்தளமாக உருவெடுத்துக்கொண்டிருந்தது என்பதை பிறநாட்டு அறிஞர்களின் நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்திலிருந்துதந்தமும், ஆமை ஒடும், வாசனைத்திரவியமும் உரோமபுரிக்கு வந்தன என்று கி. பி. 1ம் நூற்றாண்டில் உரோம புரியில் வாழ்ந்த ஸ்ரூபோ (Strabo) என்னும் அறிஞர் கூறுகின்றார். அதே காலப்பகுதியில் வாழ்ந்த பிளினி என்னும் அறிஞர் இலங்கை யின் பிரதான நகரமான பலேசி முண்டல் ஒரு துறைமுகத்தை அடுத்திருந்தது எனக்கூறுகின்றார். இந்தப் பலேசி முண்டல் பாலாவி முண்டல் என்றும் அதற்குப் பக்கத்திலிருந்த மகாகூர்ப என்னும் பெரிய ஏரி இப்போது கட்டுக்கரை குளம் என்றும் சிலர் கருதுகின்றார்கள். மாதோட்டம் மூலம் வந்த முத்துக்களையும் பட்டாடைகளையும் அணிந்து வாசனைப்பொருட்களைப்பாவித்து ஆடம்பர வாழ்க்கையை உரோமர்கள் நடத்தினார்கள் என
பெரிபுளுஸ் (Periplus) நூல் கூறுகின்றது.
கி.பி. 1800 ஆண்டுகட்குமேலைத் தேசங்களோடு வர்த்தகம் நடாத்திய துறைமுகப் பட்டணம் மாதோட்டம் என்பது கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான தொலமி (Prolemy) தான் வரைந்த பூகோளப் படமொன்றில் இலங்கையின் அன்றைய நகரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மாதோட்டத்தை மாதொட்டு என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளதில் இருந்து அறிய முடிகின்றது. அது மட்டுமின்றி மாதொட்டுக்கு முன் பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். மாதோட்டத் துறைமுகம் மூலம் சீன மன்னர்களும் சிங்கள மன்னர்களும் தொடர்பு கொண்டார்கள் என்பதைச் சரித்திரம் கூறுகிறது.
கி.பி 5ம் நூற்றாண்டு வரை மாதோட்டம் பிரசித்தி வாய்ந்த வர்த்தகத் தளமாக விளங்கியது என்பதை பல நாட்டு அறிஞர்கள்
18

வாயிலாக அறிகின்றோம். மாந்தையில் வாழ்ந்த பஞ்ச தொழில கர்த்தாக்களான கம்மாளர்கள் தாங்கள் செய்யும் உலோக, மர, கல், கைப்பணிப் பொருட்களை மாதோட்டத் துறைமுகம் மூலமே வெளிநாடுகட்கு அனுப்பிப் பொருளிட்டினார்கள். அதுமட்டுமின்றி ஈழத்து உணவுவகைகள், முத்துபவளம், நவரெத்தினங்கள், யானை, யானைத்தந்தம், மயிற்றோகை, கறுவாய், மிளகு, ஏலம் போன்ற வாசனைத் திரவியங்கள் இங்கிருந்துவெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாட் டிலிருந்து பளிங்குப் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், மட்பாத்திரங்கள் அகில் சந்தனம் முதலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கி. பி. 4ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டின் இளவரசர் உலகநாதனும் இளவரசி உலகநாச்சியும் புத்தபிரானின் தந்தச் சின்னத்தைக் கொண்டு வந்தது மாதோட்டத் துறைமுகம் வழி யாகத் தான். அவர்கள் ஒரு இராப் பொழுதை அங்கே இருந்த சைவ ஆலயத்தில் கழித்தார்கள் என பாளி நூலாகியதாதவம்சம் கூறுகின்றது. இவ்வாலயம் பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் என அறிஞர்கள் கூறுகின்றனர்கள்.
இலங்கையில் ஆங்கிலத் தேசாதிபதியாக இருந்த சேர் எமர்சன் ரெனட்ன் என்பர் தான் எழுதிய “இலங்கை" என்னும் வரலாற்று ஏட்டில் மாந்தையில் பண்டுதொட்டு நுட்பமான கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்தது. அவை இரும்பாணி இன்றியே கட்டப்பட்டன எனக் கூறியுள்ளார்.
கி. மு. 231ம் ஆண்டில் இலங்கையை ஆண்ட சங்கதீசன் என்னும் மன்னன் தான் கட்டிய ரூபன்வெளி தாது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னலை தவிர்க்கக் கூடிய கருவி ஒன்றை மாந் ைகக் கம்மாளரைக் கொண்டு செய்து வைத்தான். மாந்தை யில் வாழ்ந்த கம்மாளருக்குக் காந்தத்தைக் கையாளும் திறமை மிகுந்திருந்தது என பெர்குசன் (Ferguson) என்னும் அறிஞர் தான் எழுதிய "சிலோன்” என்னும் நூலில் எழுதியுள்ளார்.
கி.பி.6ம்,7ம் நூற்றாண்டுகளில் மாதோட்டம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பலநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் இங்கு வந்து
19

Page 23
கூடினார்கள். உலகின் பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட் டத்தில் வந்து குவிந்தன எனக் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இன்டிக்கோ பிளஸ்தேஸ் தமது நூலில் கூறியுள்ளார். வர்த்தக விருத்தியால் மாதோட்டத்தில் செல்வம் சிறப்புப் பெருகியது. மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மாந்தை நகரைச் சுற்றிப் பெரிய மதிலும் நான்கு வாசல்களும் இரண்டு அகழிகளும் இருந்தன. அகலமான தெருக்களும் மாடமாளிகைகளும், கூடங் களும் மாடங்களும் நிலா முற்றங்களும், நீச்சல் தடாகங்களும் இருந்தன. திருகேதீச்சரம் புகழ்வாய்ந்த ஆலயமாக இருந்ததால் சுந்தரரும் சம்மந்தரும் பாடிப்பெருமைப்படுத்தினார்கள்."பாலாவி யின் கரைமேல் திடமாக உறைகின்றான் திருக்கேதீச்சரத் தானே” என்றும் “வறிய சிறை வண்டு யாழ் செயு மாதோட்ட நன்னகர்” என மாதோட்டத்தின் இயற்கை அழகைப் பாடு கின்றார். திருக்கேதீச்சரம் பற்றி கதிர்காம கல்வெட்டொன்றில் பெளத்த ஆலயத்தின் பரிபாலினத்துக்குரிய விதிகளைக் குறித்துவிட்டு அவற்றை மீறுவோர் மாதோட்டத்தில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார் எனக் கூறுகின்றது.
கி. பி. 935ம் இராசசிம்ம பாண்டியன் சோழர்கட்குப் பயந்து ஈழ மன்னன் உதவியை நாடி மாதோட்டத்தில் வந்து தங்கினான் என்றும் உதவி கிடையாததால் கேரள நாட்டுக்குச் சென்றான் எனச் சூளவம்சம் கூறுகின்றது. கி. பி. 947ம் ஆண்டில் பரந்தாக சோழனின் படை இராசசிம்ம பாண்டியன் விட்டுச்சென்ற மகுடத்தை மீட்டுச்செல்ல மாதோட்டம் வந்து வெற்றி பெற்று மகுடத்துடன் திரும்பிச் சென்றது. பின் 998ம் ஆண்டு இராசராச சோழன் படைகள் மாதோட்டத்தில் வந்திறங்கி மாதோட்டத் தையும் உத்தராட்டை என்ற வடபகுதியையும் தம்வசமாக்கி னார்கள். அதன்பின் இராசேந்திர சோழன் ஈழம் முழுவதையும் கைப்பற்றி 77 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். திருக்கேதீச்சரக் கல்வெட்டு ஒன்று மாதோட்டம் பற்றிய அரிய விடயங்களைத் தருகின்றது. மாதோட்டத்தில் ஒரு பெரிய தெருவும் கம்மாளர் சேரியுமிருந்தது எனக் கூறுகின்றது. மாதோட்ட மாந்தையை ஆண்ட மயன் இராவணனுக்காக லங்காபுரியையும் வானவூர்தி
20

ஒன்றையும் செய்து கொடுத்தான் என இராமாயணம் கூறு கின்றது.
போதிய பலமுடைய தமிழ்குடிகள் அருகில் இருந்திராவிட்டால் எல்லாளன் அன்னியரான சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டி ருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி ஏற்பட்ட குடிவரவுகளால் அக்காலத்தில் வடபகுதி தமிழ் நாடாகவே இருந்தது. மன்னார் மாவட்டத்தில் சிங்களப் பெயர்களோ அல்ல இனங்களோ! முற்றாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என வரலாற்று ஆசிரியர் எச். டபிள்யு. கோடிறிங்கன் கூறுகின்றார்.
இக்கூற்றின்படி மன்னார்ப் பகுதி மாதோட்டத்தை உள் வாங்கிய பகுதியாகும். மாதோட்ட ஆட்சியின் சிறப்பும் வலிமையும் புலப்படுகின்றது.
ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாட்டின் நடுநாயகமாகவும் நாகரிக தீவகமாகவும் வர்த்தக வாணிபநிலைய மாகவும் உயர்ந்து ஈழத்தின் கலாச்சாரத்தை கடல் கடந்து பரப்பிய மாதோட்டம் இன்று புதைபொருள் ஆராச்சியின் ஆய்வின் மையமாகியுள்ளது. 1981ம் ஆண்டு யப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரும் வென்சவேனிய அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்து கொடுத்த ஆய்வறிக்கையை இலங்கை தொல்பொருள் திணைக்களம் வெளியிடாது மறைத்துக் கொண்டிருக்கின்றது. அது வெளிவந்தால் மாதோட்டத்தின் மகிமை நாடறியும், ஏடறியும் நல்லவர்கள் உள்ளம் எல்லாம் துள்ளி விளையாடும்.
பன்னூறு ஆண்டுகளாக ஈழமக்களின் வாழ்க்கையிலும் சரித்திரத்திலும், கலாசாரத்திலும், நாகரிகத்திலும் முக்கிய முதலிடத்தை வகுத்த மாதோட்டம் இன்று மறைக்கப்பட்டுள்ளது. இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டிய பொறுப்பும் கடமையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கரங்களுக்கே உண்டு.
இக்கடமை காய்தல் உவர்த்தலின்றிநிறைவேறுமேயானால் உலக நாகரிகத்தின் பிறந்தகம் மாதோட்டம் என்ற உண்மை உலகெல்லாம் பரவும். வான்முட்ட இலங்கையின் புகழ் விளங்கும்.
21

Page 24
மாதோட்டம் அல்லது மாந்தை என்னும் துறைமுகம்
மன்னாருக்கு சமீபத்தில் இருந்த பண்டைய சிறப்புமிக்க நகராகும்.
இந்த நகரை விஸ்வகர்மாவின் மூன்றாம் மகனான துவட்டா என்பவரே நிர்மாணித்து அவரும் அவர் சந்ததியினரும் அதிலி ருந்து ஆண்டு வந்தார்கள். நகரை மாந்தை என்று அழைத்தார் கள். இது மாதோட்டப்பகுதியின் இராசதானியாகும். இதன் கண் அமைந்த ஆலயத்தைத் திருக்கேதீச்சரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். இத்தலமே பேர்பெற்றதும் பாடல் பெற்றதுமான தலமாகும்.
இந்நகர் பற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த யாத்திரிகரான பெற்றலோக்கி (Battiokki) என்பவர் மாந்தை அல்லது மாதோட்டம் கம்மாளரால் கட்டப்பட்ட பெருநகரமாகும். இந்நகரில் பராக்கிரம மும் செல்வமுமிக்க மக்கள் பல காலமாக வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறியுள்ளனர்.
துவட்டா தெய்வீகத்தச்சரும் தேவகுருவும், ஜகக்குருவுமான படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் மகனாவார். நாடு நகர் அமைப்பதில் கைதேர்ந்த சிற்பி. சகலகலாவல்லவன் திரிகால முணர்ந்தஞானி, கட்டிடக்கலை வல்லவன், கற்றுணர்ந்த மேதை. மக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் ஆற்றலும் அறிவும் மிக்க சாதனையாளர். இதனால் மக்கள் அவரை மாதுவாட்டா என அழைத்தார்கள். அவரால் வடிவமைக்கப்பட்ட
பகுதியை மாதுவட்டபுரம் என்றும் அழைத்தார்கள்.
மாதுவட்டபுரம் காலத்தால் மருவிமாதோட்டம் ஆகியது எனப்
22
 

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கூறுகின்றார். அன்றும் இன்றும் மக்களுக்குத் தொண்டாற்றிய மகான்கள் சாதனையாளர்கள் தியாகிகள் பெயர்களை நினைவில் நிறுத்தும் வகையில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த நாட்டுக்கு, நகருக்கு, தெருவுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அதே நடைமுறை யில் மாதுவட்டாவின் பெயரையே அவரால் உருவாக்கப்பட்ட நாட்டுக்கோ அல்லது நகருக்கோ வைத்ததைத் தவறாகக் கொள்ளமுடியாது. பழந்தமிழர்களின் நன்றி உணர்வின் வெளிப்பாடே அதுவாகும்.
மாதோட்டம் பற்றி சிங்களவரலாற்று நூல்களான மகாவம்சம். ராஜவாளிய என்பன மாதித்த, மாதோட்ட என அழைக்கின்றனர். மா - பெரிய, தோட்ட என்றால் சிங்களத்தில் இறங்கு துறையென பொருள்படும். மாந்தையை அண்டியபகுதிகளில் வாழ்ந்த மக்களை நாகர்கள் என தட்சண கைலாச புராணமும் முதலியார் சி. இராசநாயகமும் கூறுகின்றார்கள்.
மாதோட்டத் துறைமுகம் இலங்கையில் முதல் முதல் அமைக் கப்பட்ட துறைமுகமாகும். இத்துறைமுகம் மூலம் திரைகடல் ஒடித்திரவியங்களைக் குவித்து செல்வச் செருக்குடன் சிறப்பா கவும் சீராகவும் நாகர்கள் வாழ்ந்தார்கள். நாகர் நாகரிகம் என்ற சொற்கள் நாகர்கள் மூலமே கிடைக்கப் பெற்றது என்பது முதலி யார் சி. இராசநாயகத்தின் கருத்தாகும். முதல் முதல் நகர் வாழ்க்கையை அறிமுகமாக்கியவர்கள் நாகர்கள் ஆகும்.
மாந்தை திட்டமிட்டு சிறப்பாகவும் சீராகவும் அமைக்கப்பட்ட நகராகும். பாதுகாப்பு அகழிகள், பரந்து விரிந்த வீதிகள், பாதுகாப்பு அரண்கள், கூடங்கள், மாடங்கள், மாளிகைகள், கோபுரங்கள் நிலாமுற்றங்கள். நீர்த்தடாகங்கள், நீச்சல் குளங்கள் போன்ற இன்னோரன்ன பல அமைப்புக்களை தன்னகத்தே கொண்டி ருந்தது. அதுமட்டுமல்ல காந்தத்தால் கோட்டை அமைத்து அதில் இருந்து கோலோச்சினார்கள் நாகர்கள். இதைச் சீன யாத்திரி கரான குவான்சியாங் தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார். அக்காலத்தில் உலோகங்களால் நகர் அமைப்பது வழக்கில் இருந்திருக்கின்றது. திரிபுரம் என்பது செம்பு, வெள்ளி,
23

Page 25
இரும்பாலமைந்த நாகர்களின் கோட்டையாகும். தமிழ் இலக்கி யங்களில் புறநாநூற்றில்
“செம்பு புனைந்தியற்றிய சென்டும் புரிசை
ஊலாராக விகைத்துவரா” எனக் கூறுகிறது. இதன் மூலம் துவாரகையின் செம்பிலான கோட்டை ஒன்று இருந்தது என்று புலப்படுகின்றது.
“ஒன்னாருக்கும் கடும் தறற் தூங்கையில் எறிந்த நின் நுங்க நேர்ந்த நினைப்பின்” என்றும்.
சிறுபானாற்றுப் பாடலில் "தூங்கையில் எறிந்த செம்பியன்” என்று வரும் அடிகள் உலோகநகரங்கள் அன்று இருந்ததை உறுதிசெய்கின்றன.
"விண்தோய் மாடத்தே விளங்கு சுவர் உடுத்த” என்று பெரும்னாற்றுப்படை செய்யுளிலும்
மாடமோங்கிய மல்லன் மூதூர் என்று நெடுநல் வாடையும் மாந்தையைக் குறிப்பிடுகின்றனர்.
மாந்தைநகர் உறைவோருள் லோகத்தில் வாணிபமே புரிவோர்.
காந்தை மலைக்குரியோன் பாஞ்சாலரின் கண்ணுவர் தோன்றினாரே என்றும்,
காந்தமும் தடமதிலும் கமலப்பொழிலும் உள்ள மாந்தை.
முனா அதி யின் குறிப்பில் காணலாம். “பெருந்தோட்ட மன்னார் பிசைவரோ குட்டுவான் மாந்தை” என்ற பாடல்கள் இந்நரில் இரும்புக்கோட்டை இருந்ததைக் குறிக்கின்றது. உறுதிசெய்கின்றது. இந்த இரும்புக் கோட்டையை காந்தக் கோட்டை என மக்கள் அழைத்தர்கள். இது சம்பந்தமான குறிப் புக்கள் அராபியக் கதைகளிலும் வருகின்றது.
24

காந்தக்கோட்டை
இது இரும்பிலானது. சதா சுழன்று கொண்டிருக்கக்கூடியது. பகைவர்கள் இலகுவில் கோட்டையைக் கைப்பற்ற முடியாத வகையில் காந்த சக்தியினால் இயங்கக்கூடியதாக சிறந்த தொழில் நுட்பத்தோடு இக்கோட்டை கட்டப்பட்டது. காரணம் அக்கோட்டையில் வாழ்ந்தவர்கள், கைத் தொழிலில் வல்லவர்களான கம்மாளர்களாகும். இவர்கள் தங்கள் கைவினைத் திறத்தால் உலோகங்களிலும், மரங்களிலும், கற்களிலும், சிறந்த உகந்த நேர்த்தியான பொருட்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் பெரும் செல்வத்தைக் குவித்தார்கள். செல்வ வளம் அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கைத் தரமும், தகுதியும், உயர்ந்தது. சிறந்தது. இதனைக்கண்ட வெளிப்பகுதியினர் போட்டி, பொறாமை,பொச்ச ரிப்புக் கொண்டார்கள். இவர்கள் பொருட்களைக் கொள்ளை அடிப்பதிலும், நாட்டை அடிமையாக்குவதிலும் சகல பகுதியைச் சேர்ந்த ஆளும்வர்க்கம் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமித்து செயற்படத் தொடங்கினார்கள். மாற்றாரின் எதிர்ப்புகளுக்கு அஞ்சியே இவர்கள் உலோகங்களினால் கோட்டை கட்டி வாழ்ந் தார்கள். திரிபுரம் அவ்வாறு கட்டப்பட்டது. அது சிவன் என்னும் மன்னனால் எரிக்கப்பட்ட பின் இந்தக் காந்தக் கோட்டையைக் கட்டினார்கள். அதன் உள்ளிருந்து தங்கள் செயற்பாடுகளைச் சிறப்பாகவும், சீராகவும், செய்து வந்தார்கள். மாந்தையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் மாதுவாட்டவாகும். அவர் பின் மகன் வித்தைகள் பலதைக்கற்றுத் தேறிய வித்தகன் விஸ்வேஸ்வரன் ஆட்சியை ஏற்றுச் சிறப்பாகச் செய்துவந்தார். அவரின் மகனே இராவணனின் தந்தையான விச்சிரவசிவாகும். பிரபாகரன் இவனை விச்சிராவணன் எனவும் அழைப்பார்கள். இவன் ஆட்சியை நாடாது குலதர்மத்தின்படி தவம் செய்து முனிவராகவே வாழ்ந்தான். இந்த விஸ்வேஸ்வரன் முதுமை அடைந்ததும் காசிக்குச் சென்று சமாதியானான்.காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் இவரின் சமாதியில் கட்டப்பட்டது எனப் புராணங்கள் கூறுகின்றன. இலங்கையில் முதலாவது ஆங்கிலேய தேசாதிபதியான சேர். எம்ச்சன்றெனன்ட் என்பவர்தான் எழுதிய இலங்கை என்னும் வரலாற்று நூலில் பண்டுதொட்டு நுட்பமான
25

Page 26
கப்பல் கட்டும் தொழில் மாந்தையில் இருந்து வந்தது என்றும் அவை இரும் பாணி இல்லாமல் கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார். கி.பி231ம் ஆண்டில் இலங்கையை ஆண்ட சங்கதீச என்னும் மன்னன் தான் கட்டிய றுவன்வெளி தாதுகோபுரத்தை இடி மின்னல் தாக்காது பாதுகாக்கும் வகையில் கண்ணாடியில் கருவி ஒன்றைச் செய்து கோபுரத்தின் நுனியில் இணைத்திருந்தான். அக்காலம் மாந்தையில் வாழ்ந்த கம்மாளருக்கு காந்தத்தைத் தொழில்படுத்தி ஆளும் திறமை இருந்தது என பேர்குசன் (Ferguson) என்னும் அறிஞர் தான் எழுதிய “இலங்கை” என்ற வரலாற்று நூலில் குறித்துள்ளார். காந்த சக்தியைச் சரியாகப் பயன்படுத்தும் ஆற்றலை அறிந்திருந்த காரணத்தினால்தான் காந்தக்கோட்டையைகம்மாளர்கள் கட்டி வாழ்ந்தர்கள் என்பதை நம்பக் கூடியதாக இருக்கிறது.
கிரேக்கர்கள் (Palasimandu) உலகில் சிறந்த வியாபார நகரென மாந்தையை அழைத்தார்கள்.
“செங்கமல மாலை அணிதேவனே! மாந்தை நகர்ப் புங்கனே! காந்தமலை பூரண கெம்பீர மன்னா”
என விஸ்வகர்மா துதிக்கப்படுகின்றார்.
“காந்தமலை மேவிய காவன் மன்னவன் புகழ் கூறவே! என விஸ்வகர்ம நாடகத்தில் கூறப்பட்டுள்ளது.
இது மிகப் பழமையும், பெருமையும் வலிமையும் வாய்ந்த தமிழ் நாட்டு நகரில் ஒன்றாகும். இந்நகரில் மாயாவித்தை காட்டும் கருவிகளும் இரகசிய வாய்கள், தொழிற் கூடங்கள், பாரிய பண்டகசாலை முதலியன இருந்துள்ளன. நுட்பமான போர்த் தளபாடங்களும் திறமையான வேலைப்பாடுடைய துணிவகை களும், முத்தும் சங்கும் இரத்தினங்களும் இருந்திருக்கின்றன.
பிறநாட்டவரின் மட்பாண்டங்கள், உள்நாட்டு யானைத்தந்தம், மயிற்றோகை, பலவித வெளிநாட்டு மதுவகைகள், பலவித விளக்குகள் எல்லாம் குவிந்தது. மாந்தை சோ மாந்தை என்றும் சோவரன் என்றும் அழைக்கப்பட்டது.
பிளினி, தொலமி போன்ற அறிஞர்களும் பாலாவிக்கரையில்
சோமண்டலம் உள்ளது எனக் கூறிப்பிட்டுள்ளார்கள்.
பேறிப்பிளஸ் (Peripilas) என்பவரும் மாந்தையைப் பழைய
26

சோ மண்டலம் என்றே குறித்துள்ளார். சோமாசி (சோ மலை - கிழக்கு ஆபிரிக்கா), சவுதி அரேபியா (சோ - உதி அரேபியா), சோமாலிந்து (சோமலை - வந்து), கிழக்கு ஆபிரிக்கா மொகஞ் சோதாரையிலுள்ள சோ வும் இப்படியே வந்திருக்கலாம்.
மாந்தையில் பல நாட்டுக் கப்பல்களும் வந்து தங்கி பண்ட மாற்றுச் செய்து செல்வர். பருவக்காற்று வரும் பட்சத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் இங்கே தங்கிப் போகும்வரை வெளி நாட்டார் மாந்தைவாசிகளுக்கும் கூலிவேலை செய்துள்ளார்கள். இவ்வாறு தங்கியவர்களில் அரேபியர்கள் அநேகராகும். அவர்களை இச் சோ நகரில் தங்க வைத்தார்கள். சோ என்றால் செம்பாலான நகர். எனவே இந்த நகரில் தொடர்ந்து வாழ்ந்த அரேபியர்களை சோ நகர் வாசிகள் என அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் இலங்கை வாழ்முஸ்லீம்களின் இன அடையாளப் பெயராக மாறியுள்ளது. இன்றைய சோனகர் என்ற பெயர் வந்த காரணம் அதுவேயாகும்.
“உத்திரதிக்கனமிக்க ஊசிக்காந்தத்தினாலே சுற்றிலும் அகல நாலைந்து யோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருஷ்டித்தார்கள். முத்தினத்தில் மாந்தைத் துறைமுகத்தின் மேலே சதா சுழன்று கொண்டிருக்கக்கூடிய காந்த விசிறி ஒன்று இயங்கிக் கொண்டே இருந்தது. இதன் மூலம் கடலில் பிரயாணம் செய்யும் வெளிநாட்டுக் கப்பல்கள் எல்லாம் இழுக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட்டது என்று முதலியார் சி. இராசநாயகம் குறித்துள்ளார். நாகர்களில் ஒரு பகுதியினர் கடற்கொள்ளையர் களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
இவர்களின் செயற்பாடுகளிலும் பல நாட்டு அரசர்களில் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கக் காரணம் உண்டு. மாந்தை பற்றி சங்க இலக்கியமாகிய அகநாநூற்றில் மாமூலனார் என்னும் சங்கப் புலவர்.
நன்னகர் மாந்தை முற்றதத் தொன்னர் பனி திறை கொணர்ந்த பாடு சால் நன்கலம் பொன்செய் பாவை வைரமொடாம்ப லொன்வாய் நிறைய குவை இயன்றவன் நிலத்தினத் துறந்த நிதியத் தன்ன.
(அகம். 127) எனப் பாடியுள்ளார்.
27

Page 27
மற்றொரு சங்கப்புலவரான பரணர்,
நந்தூம்புள்ள யளக்கொடி மயக்கி வன்போட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய துயத்தவை முடக்கிரார் தெரிக்கும் பொற்பு குரங்குகள் புறவிக்குட்டுவன் மாந்தையன்ன வெண்ணலம் தந்து சென்சென்மே.
(அகம். 176) சங்க காலத்துக்கு முன்பே மாந்தை சிறப்புப் பெற்ற நகராக இருந்திருக்கின்றது என்பதை இலக்கியங்கள் உறுதி செய்கின் றன. “சித்திர ரேகை என்னும் தனதன் மகிர் தேவியே தெய்வக் கம்மியன் பெண்ணேன்றே கூவாய்குயிலே" என மாந்தைப் பள்ளு. அக்காலத்தில் இலங்கை ஆண்ட மன்னர்களில் புகழ் பூத்த குபேரன், எத்திசையும் புகழும் இசை மன்னன் இராவணன் "இருபது கையுடையான்றனக்கு மண்டோதரி ஈந்தருளும் மாயனார் பண்ணைப் பள்ளியிரண்டே" என மாந்தைப் பள்ளு.
நெற்றிக்கண்ணனின் புதல்வனோடு நேருக்குநேர் நின்று போராடிய பத்மாசூரன், வில்வித்தையில் வேந்தனான விஜயன், அஞ்சா நெஞ்சன் அடல் ஏறு மேகநாதன், மூத்த சிவனின் மனைவி தேவநம்பியதீசனின் தாய் மாந்தை ஆண்ட விஸ்மகரும நாகவகுப்பைச் சேர்ந்த பெண்களேயாகும். இயக்கரும் நாகரும் கொண்டான், கொடுத்தான் உறவுகள் தொடர்புகள் இருந்தன என முதலியார் சி. இராசநாயகம் கூறியுள்ளார். இராவணனின் நாட்டையும், நகரையும் அமைத்துக் கொடுத்தவர் மாந்தை மன்னனான மயனாகும். மயனின் மகள் மண்டோதரியையே இராவணன் மணந்தான். இவனுக்காக வானவூர்தியும் மயனால் செய்து கொடுக்கப்பட்டது. “சூரபன்மன் மனைவி பதுமேகலை தந்தை சூரர் புனைவற் பணிந்து கூவாய் குயிலே" என மாந்தைப் பளளு.
அதுபோல் குபேரனுக்கு நகரையும் புஸ்பவிமானத்தையும் செய்து கொடுத்தவர் மயனின் தந்தையான விஸ்வகர்மாவாகும். இலங்கையை முதல் வடிவமைத்தவரும் விஸ்வகர்மாவேயாகும். மாந்தையில் வாழ்ந்த விஸ்வகரும மக்களே சைவ புத்த ஆலயங் களைக் கட்டியவர்கள். மாந்தையில் வாழ்ந்த ஒவிய நாகர்களின் கைவண்ணமே. சிரிக்கும் சிகிரியா சித்திரங்கள் பல குகைக் கோவில் விஸ்வகர்மாவின் படைப்பு எனச் சிங்கள சரித்திரம் கூறுகின்றது.
28

ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த சரித்திர ஆசிரியர் டி கோற்றோ (Decauto) ஆரம்ப காலத்தில் உரோமர்கள் இலங்கை யுடன் தொடர்புடையவர்களாகக் காணப்பட்டார்கள். உரோமர் களின் கட்டிடங்கள் இருந்த இடங்களில் தடையங்கள் காணப்படு கின்றன. கி.பி. 1585 என்பது பிழையாக 1575 என எழுதப்பட்டது. ஜோவாடெ மெல்லோ டெசாபாயோ இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் தளபதியாக இருந்த காலத்தில் தன் அடிமைத் தனத்தை நீக்கிக்கொண்ட அணனியஸ் பிளக்காமல் கண்டெடுத்த நாண யங்கள் மாதோட்டப் பிரேதசத்தில் சில கட்டிடங்களை வெட்டிப் பரிசோதித்தபோது அங்கே கிடைத்தவையே ஆகும். அப்பிரேத சத்தில் இன்னும் அங்குமிங்கும் உரோமர்களின் சுண்ணாம்புக் கட்டிடங்கள் அழிந்துகிடப்பதைக் காணலாம். சிப்பந்திகள் நிலத்திலிருந்து கற்களைத் தோண்டி எடுக்கும்போது ஒரு கட்டிடத்தின் அத்திவாரப் பகுதி காணப்பட்டது. அதை அகழ்ந்துபோகும்போது இரும்பினால் செய்யப்பட்ட சங்கிலி ஒன்று அகப்பட்டது. இச்சங்கிலியைப்போல் இன்னுமொரு சங்கிலியைச் செய்துதரக்கூடிய ஒரு தொழில் நிபுணனாவது இந்தியா முழுதும் தேடியும் கிடைக்கவில்லை என எழுதியுள்ளார். எனவே மாந்தையில் வாழ்ந்த கம்மாளர்களின் கைத்திறன் தொழில் நிபுணத்துவம் எத்தகையது என்பது புலனாகிறது.
திருக்கேதீஸ்வரம்
திருக்கேதீஸ்வரம் என்பது திருகேதீச்சரம் என்னும் சொற் களானது திரு என்பது மேன்மை மதிப்பு கண்டோரால் விரும் பப்படும் நோக்கம் என்பார் போராசிரியர். கேது நவக்கிரங்களில் ஒன்று. பாம்பைக் குறிக்கும். ஈச்சரம் என்பதன் பிரிவு இதன் பொருள் ஈசன் எழுந்தருளி இருக்கும் இடம். கேது பாம்பு வழிபட்ட இடம் எனவும் பொருள் படும். மாதுவிட்டாவினால் கட்டப்பட்ட இத்தலம் சிறப்பும் கீர்த்தியும் மகிமையும் வாய்ந்தது. உலக மக்களின் கவனத்தை தன்பால் இழுத்த தலம். திருஞான சம்பந்தநாயனாரால் பாடிப் புகழப்பட்ட தலம். நாகர்களின் குல வழிபாட்டுத்தலம்.இராவணன், விஜயன்,பாரக்கிரமபாகு போன்ற மன்னர்களால் புனருத்தாரணமும் நன்கொடையும் அளித்து பாதுகாக்கப்பட்ட தலம். போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் புது வாழ்வு அளிக்கப்பட்டது.
29

Page 28
காந்தக்கோட்டை வீழ்ச்சி
காந்தக்கோட்டை வாசிகள் பெரும்பாலும் கற்றுணர்ந்த மேதைகள் சித்தர்களாகவும் ஞானிகளாகவும் திகழ்ந்தவர்கள். வானசஸ்திரம் வைத்தியம் கட்டிடக்கலை ஆகமங்கள், சாஸ்தி ரங்கள் சகல கைத்தொழில் வல்லவர்களாக இருந்து தங்கள் உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றிச் செல்வம் சேர்த்து சீராக வாழ்ந்தார்கள். இவர்களுக்குத் தெரியாமல் நாகர்களின் ஒரு பகுதியினர்கள் நடத்திய கடற்கொள்ளைகளால் பாதிக்கப்பட்ட மாற்று அரசர்கள் ஒன்று திரண்டு நாகர்களை அடக்கத்திட்டம் தீட்டிச் செயற்பட்டனர். இவர்களின் திட்டங்கள் செயற்படமுடியாத நிலையைக் கண்டு வேதனை அடைந்த வேந்தர்கள் தானதரும கைகொடுக்காததால் முடிவில் சூழ்ச்சிக ளைக் கைக்கொண்டார்கள்.
சூழ்ச்சியை நிறைவேற்ற மக்கத்தில் இருந்து பெண்களை வரவழைத்து அவர்களுக்குப் புத்திகளையும், யுத்திகளையும் கூறி காந்தக் கோட்டையின் காவலாளிகளை மயக்கி காந்தக் கோட்டையின் இரகசியத்தை அறிந்துவர அனுப்பினார்கள்.
கலைஞர்களுக்குப் பொதுவாகக் கன்னியர்களில் ஒரு மயக்கமும், தயக்கமும் ஏற்படுவது இயற்கை. இப்பலவீனம் சகல கலைஞர்களுக்கும் பொதுவான விதி. கலைஞர்களான காவலா ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அழகிய ஆரணங்கு களை அனைத்து மகிழக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது காவலர்களும் காதல் மயமானார்கள். தொட்டு விளையாடி சுகம் கண்டு மோகத்தின் தூக்கத்தில் காவலாளி இருக்கும்போது காசுக்கு உடலை விற்றேகும் கன்னியர் பத்தா பத்தா காந்தக் கோட்டை பற்றுகின்றது என்றாள். தூக்க மயக்கத்தில் திடுக்கிட்டு எழுந்த காவலாளி துரோகிகள் வரகு வைக்கோலைப் போட்டு எரித்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டு எழுந்தான். பார்த்தான், காந்தக் கோட்டை எரியவில்லை. அவள் நித்திரை யைச் சோதிக்கவே இவ்வாறு கூறினேன் என மழுப்பினாள். சோரம்போன காவலாளி ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என நினைத்து மன்னரிடம் சென்றான். அவளோ வெற்றிப்புன்ன
30

கையோடு தன்னை ஏவியவர்களிடம் சென்று கோட்டையை சுற்றி வரகு வைக்கோலைப் போட்டு தீவைத்தால் கோட்டையைப் பிடித்துவிடலாம் என்றாள்.
மாற்ற அரசன் கோட்டையை எரிக்க தீட்டம் தீட்டும் முன்பே தங்கள் ஞானத்தால் நடப்பதை உணர்ந்து கொண்ட மன்னரும் மற்றவர்களும் விமானம் கப்பல் மூலம் இரகசிய வழியால் வெளியேறினார்கள்.
மாந்தை நகரின் கோட்டை தீ வைத்து எரிக்கப்பட்ட செய்தியைக் கம்பராமாயணம்,
“சோவரனும் போர் முடிய தொல் இலங்கை கட்டழித்த சேவகன்” என்றும்
“வெய்யில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெறிந்த இயல்பே கொற்றமும்” என்றும் சிலப்பதிகாரமும்,
"தூங்கெயில் எறிந்த தோடி தோற் செம்பியன்” என மணிமேகலையும் கூறுகின்றன.
"தூங்கெயில் மூன்றெரித்த சோழன் காண் அம்மானை" எனச் சிலப்பதிகாரம் வாழ்த்துக் கதை கூறியுள்ளது. உலகில் முதல் முதல் நாகரிகம் மலர்ந்து மணம் பரப்பிய மாந்தை மாற்றாரின் பொறமை பொச்சரிப்பால் அழிந்து மண் ணோடு மண்ணாகி விட்டது. அழிந்த மலர்களில் மகரந்தத்தின் தொடர்பால் பல நாடுகளில் வித்தூன்றி விளைந்த விளைவுகளே இன்று உலகில் மிளிரும் நாகரிகங்களாகும். இந்த நாகரிகம் அனைத்திற்கும் தாய் மாந்தை நாகரிகம் என்பதை வரலாறு வாய் திறந்து கூறுகிறது.
சிந்து வெளிநாகரிகம், சமோரியநாகரிகம், எகிப்தியநாகரிகம் அமெரிக்க பெரு - மெக்சிக்கோ நாகரிகம் போன்ற நாகரிகங் களுக்கும் மாந்தை நாகரிகங்கத்துக்கும் இணைந்த தொடர்புகள் உண்டு.
31

Page 29
மாந்தை நாகரிகத்தை வித்திட்டு விளைவித்தவர்கள் நாகர் களான கம்மாளர்கள். இவர்கள் நாக, லிங்க வழிபாட்டுக்காரர்கள். ஈஸ்வர ஆட்சிமுறையை கைக்கொள்ளுபவர்கள். கட்டிடத் தொழிலிலும், உலோகத் தொழிலிலும் கைதேர்ந்த நிபுணர்கள். நாடு நகர் அமைப்பதில் வல்லவர்கள்.
மாந்தை அழிவின் பின் கப்பலில் சென்றவர்கள் சமோரியா விலும், விமானத்திலும் சென்றவர்கள் அமெரிக்க பெரு - மெக்சிக்கோவிலிலும் அமர்ந்தார்கள். சமோரியர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இவர்களின் தொழில் கட்டிடக்கலை, வழிபாடுநாகலிங்க வழிபாடு எனவே இவர்கள் மாந்தையில் இருந்து சென்ற பரம்பரை என்பது உறுதியாகின்றது. பெரு-மெக்சிக்கோவில் வாழ்கின்ற மயோறிஸ் மக்களை எடுத்துக் கொண்டால் நாக, லிங்க வழிபாட்டுக்காரர், கட்டிடக்கலை நிபுணர்கள், ஸ்வாவணக்காரர்கள். மாந்தையில் திரு.புஸ்பரத்தினம் செய்த ஆய்வின்படி பல கிணறுகளில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது நாகர்கள் தெய்வங் களுக்கு நரபலிகொடுக்கும் நிலையைக் காட்டுகின்றது. இவ்வா றான கிணறுகள் பல பெரு - மெக்சிக்கோ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டன. மாந்தையில் வாழ்ந்த மயன் மக்களையே மேல் நாட்டார் மயோறிஸ் மக்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் பாவிக்கும் மொழி தமிழைப் போன்ற ஒட்டு மொழியாகும் என இந்து நாகரிகம் என்னும் நூலை எழுதிய சமண் லால் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர்களும் மாந்தை வாசிகளே.
பிளன்ட் கக்ஸிலி ஆகியோர் கூறுவதாவது எகிப்தியரும் திராவிடரும் ஒரே குலமறையில் வந்தவர்களாக இருக்கவேண்டும். முன்னாளில் கறுப்பு என்றும் வெள்ளை என்றும் சொல்ல முடியாத பொது நிறத்தவரும் மிகவும் சீர்திருத்தம் பெற்றவர்களாக விளங் கிய ஒரு சாதியார் கிழக்குப் பகுதிகளிலும் எகிப்திலும், இந்தியா முழுவதிலும் சீனாவிலும் பசுபிக் சமுத்திர ஒரங்களிலும் அமெரிக்கா வில் பெரு - மெக்சிக்கோ பகுதிகளிலும் பரவி இருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பத்தையும் சமயக் கொள்கையாகப் பயன்படுத்துகின்றார்கள். இன்று இந்தியாவில் உள்ள சுவஸ்திக் அடையாளத்தை சமயச் சின்னமாக கொண்டிருந்தார்கள்.
32

பாண்ட் என்னும் நாட்டையும் அதில் உள்ள ஒவீர் என்னும் துறைமுகத்தையும் தங்களின் தாயகம் என எகிப்தியர்கள் கூறுகின்றார்கள். ஒவீர் துறைமுகம் என்பது நாகர் வாழ்ந்த மாதோட்டத்துறைமுகத்தைக் குறிக்கும். என சேர். பொன். அருணாசலம் கூறியுள்ளார். இதன்படி இந்த அடையாளங்களைக் கைக்கொண்டு வந்தவர்கள் நாகர்கள் என்பது வரலாறு கண்ட உண்மை.
எகிப்தின் நைல் நதிக் கரையோரத்தில் உள்ள நிப்பார் எல் இல் என்னும் கடவுளின் பெயர் தமிழ்ப் பெயராக உள்ளது என்று சுவாமி விபுலானந்தர் தான் எழுதிய உலகபுராணத்தில் கூறியுள்ளார்.
கப்பல் வடக்கு நோக்கிச் செங்கடல் வழியாகச் செல்கிறது. இக்கரையில் பரந்துகிடப்பது பூர்வீக எகிப்துதேசமாகும். இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டு தேசத்தில் இருந்து வந்து இந்நாகரிகத்தை வளர்த்தார்கள். இவர்கள் சுருள் காதணி உடையவர்களாக, சுத்த வெள்ளை வேட்டி அணிந்திருந்தார்கள். இவர்கள் கருநிறமும் நீண்ட பெரிய மூக்கும் கரிய விழியும் கொண்ட சாதியார். எகிப்திலும் பவிலோனியாவிலும் வசித் தார்கள். இச்சாதியார் இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தி யாவிலும் வசித்து வருகின்றார்கள். இவர்கள் திராவிடர் எனப்படு வார்கள். என சுவாமி விவேகானந்தர் தன் பயணக்குறிப்பில் கூறியுள்ளார்.
கடல் கொண்டலெமூரியாவான குமரிகண்ட மக்களே முதல் தோன்றினார்கள். கடற்கோள் ஏற்பட்டபோது குமரி மலைக்கு வடபுறத்தே (இன்றைய தென்னிந்தியா) சென்று தங்கினார்கள். இன்னொரு பிரிவினர் மத்திய தரைக்கடல் பகுதியைச் சார்ந்த ஐரோப்பாவின் பல பகுதியில் சேர்ந்து ஆரியர் ஆகினர். எஞ்சியோர் ஆசியாவில் பல பகுதிகளில் குடியேறி துராணியர் அல்லது மங்கோடியர் அல்லது சிந்தியர் ஆகினர் என அறிஞர் ஸ்லேற்றர் கூறியுள்ளார். இக் கருத்தை அறிஞர் கால்பிட் கெபாட் என்பவரும் ஏற்றிருக்கின்றார்.
குமரிகண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் தென்னாட்டில் திராவிட நாகரிகமாகி, சிந்துவெளி நாகரிகமாக மலர்ந்து,
33

Page 30
சமேரிய நாகரிகமாகி, அரேபிய நாகரிகமாக வளர்ந்து, அமெரிக்க பெரு - மெக்சிக்கோ நாகரிகமாக உயர்ந்து கனிந்து காட்சி தருகின்றது என இந்தியாவில் நீண்ட நெடிய காலமாக ஆய்வு செய்துவரும் அருட் தந்தை ஈராஸ் பாதிரியார் கூறியுள்ளார்.
சமேரியர், எகிப்தியர், பபிலேனியர், கிரேக்கர், பழைய பிரித்தானியர், ஆசிரியர், எபிரேயர், அராபியர் என அனைவரது மதநூல்களும் மக்கள் இனம் எங்கு தோன்றியது என்பதை அறிவு பூர்வமாகக் கூறமுடியாத பிணைப்புக்களையே நம்பாத ஆய்வா ளர்கள் அறிஞர்கள் ஒரேமுகமாக ஆசிய குமரிக்கே வந்தார்கள்.
கிழக்காபிரிக்கா, மத்தியதரைக்கடல்பகுதி,கிழக்குத் தீவுகள், இந்தியா முதலியவற்றை உள்வாங்கியதாக பெரிய நிலப்பரப்பு ஒன்று இந்தியப்பெருங்கடலில் இருந்தது. இது முழ்கிப்போயிற்று. அங்கே தான் மனித இனம் தோன்றுவதற்கு அடிப்படையான பெருங்குழுவினர் தோன்றி இருந்தனர். என சரித்திர வெளி வட்டம் எனனும் நூலை எழுதிய ஏச். ஜி. வெல்ஸ் கூறுகின்றார். உலக அடிப்படையில் தமிழரல்லாத முதல் இனமாகப் பேசப்படும் சுமேரியர்களே தமிழரிடமிருந்து பிரிந்து சென்று பாரசீகத்தின் மேற்கே குடியேறிய சிறு கூட்டத்தினராகக் காணப்படுகின்றனர். ஆனால் எல் அல்லது எல்லம் என்றும் பிற்காலத்தில் ஈழம் என அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை (அதாவது குமரி கண்ட அழிவில் எஞ்சிய தீவு) அதிலிருந்து போனவர்களின் பரம்பரையே என பண்டிதர் சவேரியார் கூறுகின்றார்.
புவியலாளர், மக்களின ஆராய்ச்சியாளர், மொழியாளர். தொல் பொருள் ஆராய்ச்சியாளர் தொடர்ந்த பெரும் உழைப்பினால் உலகின் பழைய வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவ்வரலாறுகளை நோக்குமிடத்துத் திராவிடர் எனப்படும் பெருங்கூட்டத்தினரே உலக வரலாற்றில் பழைமை பெற்று விளங்குவதைக் காணலாம் எனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கூறியுள்ளார்.
மேலே கூறிய ஆய்வாளர்களின் முற்றும் முடிந்த ஆய்வு முடிவுகளிடின்படி, இன்றைய தென்நாட்டுக்குத் தெற்கே இருந்த
34

பூபாகத்தில் இருந்தே மனித இனமும் நாகரிக வளங்களும் பிறந்து வளர்ந்து பரந்து விரிந்தன என்பது தெளிவு. அந்தப் பூபாகம் இலங்கை என பண்டிதர் சவேரியரும் இங்கல்ஸ்சார்ல்பும் இஸ்லாம் மதத்தவர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுள்ளார்கள்.
திராவிடப் பண்பாடு முதன் முறையாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாவின் இருமருங் கிலும் உள்ள கரையோரப்பகுதிகளில் தோன்றி வளர்ந்தது என்கிறார் அறிஞர் கமில்வி. சுவவெல அறிஞர் மாலோனி என்பவர் சங்ககாலப் பாண்டியர் ஆட்சியும் பண்பாடும் வளர இந்து மாநிலத்திலிருந்து மன்னார் வளைகுடா வரை வளர்ந்த வர்த்தகமே காரணம் என்கிறார்.
மாந்தையில் குறுணிக்கற்காலக் கருவிகளோடு மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துக் காட்டும் தடையங்களும் கிடைத்துள்ளன என்பது தெரனியாலவின் கருத்து.
அறிஞர் ஸ்லெட்டரினதும் அருள் தந்தை ஈரோஸ் பாதிரி யாரின் குறிப்புக்களை அடியொற்றிப் பார்க்கும்போது அறிஞர் கமில் வி. சுவலெபிலும் அறிஞர் மாலோனியும் சுட்டிக் காட்டும் உலக நாகரிகத்தின் பிறப்பிடம் மன்னார் மாந்தையே என்பதை
அறுதியிட்டு உறுதியாகின்றது.
தமிழர்களின் பழைய வரலாற்றை ஐயம் திரிபுற விளக்கவல்ல புதைபொருட்கள் மாந்தையில் புதையுண்டுள்ளன. இது சம்பந்த மான அவ்வறிக்கைகளை யப்பான் நாட்டைச் சேர்ந்த புதை பொருளாளரும் வென்சிவெனிய பல்கலைக்கழக ஆய்வாளர் களும் 1981ம் ஆண்டு இலங்கை வந்து மாந்தையை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்திடம் சமர்ப்பித்தார்கள். கடந்த 18 வருடங்களாக இந்த அறிக்கையை வெளியிடாது அது சம்பந்தமான உண்மை நிலைமையை மக்களுக்கும் நாட்டுக்கும் ஏட்டுக்கும் தராது ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் உலகின் மூத்த முதல் நாகரிகத்தின் சொந்தக்காரர்க்ள் தமிழரென்பது
35

Page 31
வெளிவந்தால் தாங்கள் இலங்கையில் இது காலவரை ஏற்படுத்தி வந்த பெளத்த நாகரிகமே இலங்கையின் நாகரிகம் என்ற போலி நிலையும் நினைப்பும் பாழாகிவிடும் பழுதாகிவிடும். தாங்களும் தங்களினமும் இரண்டாந்தரப்பிரசை. அதனால் இன்று பிடித்தி ருக்கும் அதிகாரக் கடிவாளம் அறுந்துவிடும் என்ற பயத்தால் வெளிநாட்டறிஞர்கள் பலநாள் முயன்று உழைத்து உருவாக்கிக் கொடுத்த அறிக்கையை ஆழக்குழிதோண்டிப் புதைத்து அடை காக்கின்றார்கள்.
இவர்களின் கூடாத, குள்ளநரிகுறுகிய செயலால் தாய்த்திரு நாடான இலங்கை, உலக அரங்கில் பெறவேண்டிய பேரையும் புகழையும் கூட மறைக்கின்றார்கள். மறுக்கின்றார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் இல்லை என நினைக்கும் நிலையினர். எதிரிக்குச் சகுனப் பிழை ஏற்படவேண்டும் என்பதற்காகத் தன்மூக்கை அறுக்கும் மூடர்கள், மடையர்கள்.
திருக்கேதீஸ்வர குறிப்புக்கள் என்ற ஆய்வில் திரு. என். சண்முகநாதன் என்பவர் தான் மாந்தையில் நடத்திய அகழ்வாய்வின் போது கிடைத்த மனித சடலத்தையும் அதனுடன் கிடைத்த மட்பாண்டத்தையும் ஆராய்ந்து அவை வரலாற்றுக் காலத்தானவை எனக் கூறுகின்றார். அவற்றை ஆய்வு செய்த ஜெயவர்த்தனாவும் இவ்வுடல் தற்காலத் தென்னிந்திய மக்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது எனக் கூறியுள்ளார்.
தமிழருடைய நாகரிகம் மிகமிகப் பழமையானது. உலகத்தி லேயே தமிழரே முதல்முதல் நாகரிக வாழ்க்கை எய்தியவர்கள் என்பதற்கும் கடல் கடந்து தங்கள் நாகரிகத்தை பற்பல நாடுகளிலும் பரப்பினர் என்பதற்கும் வணிகத்துறை, கணிதநூல், வானநூல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதற்கும், பல சான்றுகள் கிடைத்துள்ளன என சுவாமி விபுலானந்தர் தான் எழுதிய உலக புராணத்தில் கூறியுள்ளார். எனவே எவர் எப்படி மூடிமறைத்தாலும் ஊர் வாயை மூட உலைமூடி கிடையாது. உண்மை உறங்காது. மேலே தந்த அறிஞர் பெருமக்களின் ஆய்வு முடிவுகள் உலகின் மூத்த முதல்
36

நாகரிகத்தின் பிறந்தகம் இலங்கையின் மாந்தையே ஆகும் என்பதும் அதுபோல அந்த நாகரிகங்களின் சிற்பிகள், சிந்தனை யாளர்கள் நாக இனத்தைச் சேர்ந்த படைத்தல் கடவுளின் பரம்பரையினரான கம்மாளரே என்பது உறுதியாகிவிட்டது. இலங்கைச் சிங்கள இனவெறிகொண்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொறாமையால் பொச்சரிப்பால் ஆமை போல ஆய்வறிக்கையை அடக்கி அடைகாத்தாலும் அவர்கள் அடையப்போவது ஏமாற்றமேயாகும்.
ஆய்வறிக்கையின் பல உண்மைகள் வெளிவந்துவிட்டன. நாடும் ஏடும் அறிந்து விட்டது. இந்த ஆய்வின் மூலம் தமிழர்களே உலகில் முதற்றோன்றிய மூத்தகுடியினர் என்பதும் தமிழ் மொழியே உலகில் மூத்த முதல் மொழி என்பதுவும் தமிழர் நாகரிகமே உலகில் முதற்தோன்றிய பரவிய நாகரிகம் என்பதும் இலங்கையே ஆதி மனிதன் பிறந்தகம் என்பதும் தெளிவாகி விட்டது. அதுபோல உலகம் எங்கும் தனி சிறந்த நாகரிக விழுமியங்களை அள்ளி வீசியவர்கள் இலங்கைத் தமிழர் தான் என்ற தேனினுமினிய செய்தியை அறியும் போது நம் நெஞ்ச மெல்லாம் பூரிக்கின்றது. புளகாங்கிதமடைகிறது. பலருக்கு வாழ்வை வளத்தை வளங்கிய தமிழினம் வாழாவெட்டியாக வாழ்விழந்து வதைபடும் நிலையை, நினைப்பை நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது. இருந்தும் ஈழம் எங்கள் தாயகம் இனிமை கொஞ்சும் தமிழகம் என்பதை நினைக்கையில்,
“செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயிது காதினிலே”
என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாட்டு தாலாட்டு கிறது.
இலங்கைத் தமிழர்கள் உலக மனித குல வளர்ச்சிக்கு வாழ்வுக்கு வேண்டிய சகல விழுமியங்களையும் வழங்கியவர்கள் என்ற வரலாற்றை அறியும் போது,
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
37

Page 32
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்தது இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே”
என்று பாவேந்தன் பாரதி பாடியது இலங்கையின் வரலாற் றைத் தெரிந்து புரிந்ததாற் தான்.
"தென்னாருடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி"
என்ற திருவாசக அடிகள் இலங்கையை மையமாக வைத்தே பாடப்பட்டது என்பதை பேராசிரியர் கல்கியும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதன் அவர்களும் ஏற்றுள்ளார்கள். எனவே சிங்களவர் என்ன சொன்னாலும் இலங்கை தமிழரின் பூர்வீகத் தாயகம்.
38

மயன் மாந்தையை ஆண்ட மன்னன் தெய்வீகக் கம்மாளன் என்றும் அசுரத்தச்சன் என்றும் கூறப்படுபவன். தென்னி லங்கையை ஆண்ட இராவணனின் மாமன், மண்டோதரியின் தந்தை, கட்டிடக் கலை நிபுணன், நாடு நகர் அமைப்பதில் திறமை மிக்கவன், திரிகாலமுணர்ந்த ஞானி, மனையடி சாஸ்திரத்தை உலகுக்குத் தந்தவன், ஒப்பற்ற கைத்தொழில் வல்லவன், விஸ்வகர்மாவின் புதல்வன்.
"மாநீர் வேலி வச்சிர நல் நாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும் மதக நல்நாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் சுவஸ்திவேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் பொன்னிலும் மணியிலும் புனைந்த வகையாகினும் நுண்வினைக் கம்மியர் காணாமரபினை துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின - இவைதாம் ஒருங்குடன் புணர்ந்து - ஆங்கு - உயர்ந்தோர் ஏத்தும் அரும் பெறல் மரபின் மண்டபம்" எனச் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதையில் (பக்கம் 72, 73) இளங்கோவடிகள் மயனின் சிறப்பை வியந்து பாராட்டியுள்ளார்.
வச்சிரநாட்டு மன்னன் தந்த முத்துப் பந்தலும், மகத நாட்டு வேந்தன் தந்த பட்டி மண்டபமும், அவந்தி மன்னன் உவந்தளித்த தோரண வாயிலும், பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்ட வையாக இருந்தபோதிலும் அவை தொழில்நுட்ப நிபுணத்துவமும்
39

Page 33
கைத்தொழில் திறமையும் மிக்க கம்மியர்கள் - காணாத நுட்பமான வேலைப்பாடுகள், அதாவது நகாசு வேலைகள் நிறைந்தவை யாகும். இவற்றை மயனென்னும் தெய்வீகக் கம்மாளனே செய்தான் என இளங்கோவடிகள் கூறுகிறார்.
இளங்கோவடிகள் சிலம்பில், கம்மாளரை காரசாரமாகக் கண்டித்துள்ள கவிஞராவார். கடுமையும், கொடுமையும் பொருந்திய வார்த்தைகளால் வாய்க்கு வந்தபடி பாடியுள்ளவர், வாழ்த்துகிறார் என்றால் போற்றிப் புகழ்கிறார் என்றால் மயனின் திறமை பெருமைக்குரியதாகும். வசிட்டன் வாயால் பிரம்மரிஷி எனக்கூறப்பட்டதைப் போன்றதாகும்.
சிலம்பில் இளங்கோவடிகள் கம்மாளரைச் சாடியது திட்டமிட்ட செயலாகும். அதுவும் நூறு பேருக்குத் தலைவனான இராச தட்டானை, அவர் கூனிக் குறுகி நடந்தான் என்றும், நெட்டூரான் என்றும், குனிந்து போகக்கூடிய குடிலில் வாழ்ந்தான் என்றும் கூறியுள்ள வார்த்தைகளே அவர் அந்த இனத்தின் மேல் கொண்ட கோபத்திற்குச் சாட்சியாகவுள்ளன.
முற்காலத்தில் அரசர்கட்டு இராசகுருவாக இருந்தவர்கள் கம்மாளர்கள். அவர்கள் திரிகாலமுணர்ந்து கூறும் ஆற்றலும் அறிவுமுடையவர்களாக இருந்தார்கள். இதனால் அவர்கள் இராசகுருவாக இருந்து வந்தார்கள். இராசகுருவின் முடிவே அரச சபையின் முடிவாக ஏற்கப்படுவது வழமை.
சாஸ்திரி ஒருவன் இளங்கோ தான் மன்னனாவான் என்று கூறிய கூற்றை, மன்னன் சேரலாதன் இராசகுருவை அணுகித் தமையனிருக்கத் தம்பிக்குப் பட்டம் சூட்டுவது தர்மமா? எனக் கேட்டான். அதற்கு நீதியை உணர்ந்த இராசகுரு, அரசுரிமை மூத்த மகனுக்கே அன்றி இளைய மகனுக்கல்ல. மூத்தமகன் அப்பதவியைப் பார்க்க முடியாத சித்த சுயாதீனமற்றவனாக இருந்தால் மட்டுமே இளைய மகன் அரசுரிமைக்குரியவனாவான். எனவே அரசுரிமை மூத்த மகனுக்குத்தான் உரியது எனத் தீர்ப்பு அளித்தான்.
இந்தத் தீர்ப்புத்தான் இராசகுருவை இராசதட்டானாக்கி விட்டது மட்டுமன்றி நூறு பொற்கொல்லருக்குத் தலைவனான கம்மாளனை - கட்டிடக்கலையில் சிறந்த பரம்பரையில்
40

வந்தவனைக் குனிந்து செல்லும் குச்சுக் குடில் வாசியாக்கி வாய்க்கு வந்தபடி வைது தீர்த்திருக்கிறார் இளங்கோ.
இளங்கோ அரச பதவியில் நாட்டமில்லாதவராக இருந்தி ருந்தால் தமையனுக்கு உதவியாக உபஇராசாவாக இருந்தி ருக்கலாம். மதம் மாறியிருக்கவேண்டிய அவசியமில்லை. சிலம்பில் முன் ஜென்ம வினைகளால் தான் கோவலன் கொலையுண்டான் எனக் கூறும் இளங்கோ அந்தப் பழியையும் பாவத்தையும் தட்டான் தலையிலே கட்டிக் குட்டி விளையாடுவது ஏன்? பாவத்திற்கும் பழிக்கும் பலியான பாராண்ட மன்னனான நெடுஞ்செழியன்
L?
"ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” எனக்கூறப்படும் பாண்டிய மன்னன். ஆரியர்களையும், ஆரிய வேதத்தையும், பலி கொடுக்கும் யாகங்களையும் எதிர்த்தவன், துரத்தியவன், தூரவெருட்டி மானங்காத்த மறவேந்தன் நெடுஞ்செழியன். ஆரியர்களை அன்று முதல் இன்றுவரை எதிர்த்தவர்கள். எதிர்ப் பவர்கள் கம்மாளர்களே. ஆரியரை ஆரிய வேதத்தை ஆதரிப்பவர் இளங்கோ. ஆரியரை எதிர்த்த வேந்தன் நீதி தவறியவ னாக்கப்பட்டான். வேந்தனுக்கு உதவி, சைவத்தை, தமிழர் மரபைக் காத்த கம்மாளன், கள்ளனாக்கப்பட்டான் இளங்கோவடி களால். கண்ணகி வரலாறு கற்பனைக் கதை என்பது பல அறிஞர்களின் ஆய்வின் முடிவாகும்.
கண்ணகி வழிபாடு, காளி வழிபாட்டுக்கு எதிராக இளங்கோ வால் புகுத்தப்பட்ட ஒன்றாகும். இளங்கோவின் கூற்றுப்படி பார்த்தால், பிழைசெய்த மன்னன் இறந்துவிட்டான். பூர்வவினை காரணமாக கோவலன் கொல்லப்பட்டது நியாயமானது எனக் கவியே கூறுகிறார். அப்படியிருக்க மதுரை எரிவதற்குச் செய்த தவறென்ன?
தெய்வம் முற்பிறப்பின் வினை என்று கூறியும் சீற்றம் தணியாத கண்ணகி. மதுரையை எரித்தாள் என்றால் இதில் மறைந்தி ருக்கும் இரகசியம் என்ன? பின்னணி என்ன?
இங்கேதான் முக்கிய உண்மை வெளிவருகிறது. திரிபுரம் எரிக்கப்பட்டது. தாண்டகாரணியம் தகனம் செய்யப்பட்டது.
இலங்கை அனுமானால் அக்கினிக்கிரையானது. மதுரை
41

Page 34
நெருப்பால் பொசுக்கப்பட்டது ஏன்? எல்லாம் திட்டமிட்ட சதி. திராவிடர்களின் நாகரிகம் செழித்து வளர்ந்த அத்தனை இடங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கின்றன. ஏன்? திராவிடர்களின் வரலாற்றுத் தடயங்களைச் சுவடுதெரியாமல், பூண்டோடு அழிக்கும் சதிச்செயலாகும். இது ஆரியர்கள் கையாண்டு வரும் சிறந்தவழி. திராவிடர் வாழ்விடங்களை
தீக்கடவுளின் உதவியுடன் ஆரியர்கள் அழித்தார்கள் என்பதை ரிக்குவேதம் கூறுகிறது.
ஆரிய வேதத்தையும், ஆரிய நடைமுறைகளையும் முழுமை யாக ஏற்றுக்கொண்ட இளங்கோவடிகள், ஆரியர் கையாண்ட தீவைக்கும் முறையைக் கண்ணகி மூலம் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார். இதனால் தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இல்லை. கண்ணகிக்குக் கோயில்களுமில்லை. தமிழினம் தன் நாகரிக முதிர்ச்சியை வெளிக்கொண்டு வரக்கூடிய தடயமான மதுரை நகரமைப்பை இழந்தது. வரலாற்றைத் துறந்து நிற்கிறது. இது சம்பந்தமாக விபரமான நூலொன்று வெளிவர இருப்பதால் இதனை இத்துடன் நிறுத்தி விடயத்திற்கு வருவோம்.
மணிமேகலையில் கூறப்படும் விசித்திரமான “பதுமைபீடிகை" மண்டபத்தையும் மயனே நிர்மாணித்தான் என மணிமேகலை மலர்மனைபுக்க காதையில் (75ம் பாடல்) கூறுகிறது.
"செய்வினை இன்றெனில் யாவரும் “எய்தா தென் போர்க்கேது வாகவும் மயங்கெழு மாமலரிட்டுக் காட்ட
மயன பணடி ழைத்த மரபினது தான்”
இந்த உபவனத்திலுள்ளது ஒரு மண்டபம். அது விசித்திரமான மண்டபமாகும். உள்ளெழு ஒசை வெளிக்காட்டாது. ஆனால் உள்ளிருப்பவர்களின் உடலினை மட்டும் புறத்தே காட்டும். பளிங்கறை மண்டபம். அதனுள்ளே இரத்தினக்கற்களாலான "பதுமை பீடிகை" ஒன்றிருக்கிறது. அது மிக மிக அதிசயம் மிக்கதாகும்.
எவ்வாறு எனில் நாம் எந்தத் தெய்வத்தை நினைத்து பூவை
42

அந்தபீடிகையில் வைக்கிறோமோ-அம்மலர் நாம் நினைத்த தேவ தையின் திருப்பாதங்களில் சென்றடைந்துவிடும். எந்தத் தேவதை யையும் நினைக்காது பூ வைத்தால், அப்பூ அவ்விடத்திலே தங்கி இருக்கும். இத்தகைய விசித்திரம் அற்புதமுமிக்க மண்டபங்களை அமைத்தவர் விஸ்வகர்மாவின் மகனான மயனாகும். ஏலவே காந்தக்கோட்டையின் வீழ்ச்சிபற்றிக் கூறியுள்ளேன்.
அத்தவறு நிகழ்ந்தபோது காந்தக்கோட்டைக்குள் இருந்த மேதைகளதும். தொழில் நிபுணர்களதும், ஆற்றல் வாய்ந்த அறிஞர் களதும், தங்கள் தங்கள் கைக்கு அகப்பட்ட போக்குவ ரத்துச் சாதனங்களைக் கைக்கொண்டு பல திசைக்கும் சென்று, தங்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவகையில் குடியமர்ந்தார்கள். விமானத்தில் பறந்தவர்கள் அமெரிக்காவில் பெரு-மெச்சிக்கோ பகுதியில் அமர்ந்தார்கள். கப்பலிற் சென்றோர் சுமேரியா, எகிப்து போன்ற பகுதியில் தங்கினார்கள். ஊர்தியில் ஊர்ந்தவர்கள் சீனாவைச் சென்றாலும் கலவளர்ச்சியினால் மொழியில் சில மாற்றங்கள், வேற்றுமைகள் தோன்றினாலும் மொழியின் வேர் திராவிடத்தில் இருந்து மாறுபடவுமில்லை, வேறுபடவுமில்லை.
வழிபாடு சர்ப்பம், லிங்க வழிபாடாகும். மொழி தமிழைப்போல் ஒட்டுமொழியாகும். தொழில் கட்டிடக்கலை, கைத்தொழில். எனவே மாந்தைவாசிகளின் கலை காலாச்சாரச்சாயல்களே பெரு - மெச்சிக்கோவிலும், சுமேரியாவிலும் காணப்படுகிறது. ஆகவே அவர்கள் மாந்தை அழிவில் வெளியேறிவேறிடம் புகுந்த மாந்தை மயன் மக்களேயாகும் என்பதே அந்த மாற்றமாகும்.
அதுபோல் ஐயாயிரம் கோடி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை மயன் மக்கள் உலகத்திற்கு நன்கொடையாக்கியுள்ளார்கள் என கடவுளின் தெரிவு என்ற நூலில் எலியெட் என்பவர் எனக்கூறி யுள்ளார்.
இவை போல இந்தியப் புராணங்கள் கந்தபுராணம், பாரதம், இராமாயணம் போன்றவையும், மணிமேகலை, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, குறுந்தொகை, நெடுந்தொகை போன்ற இலக்கிய நூல்களும், பூர்வீக யாழ்ப்பாணம், திருக்கேதீஸ்வர மானியம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற வரலாற்றுநூல்களும், விஸ்வகர்ம மக்களின் கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை வார்ப்புக் கலைகளின் சிறப்பையும் நுட்பத்திறனையும் போற்றிப் புகழ் கின்றன.
43

Page 35
இலங்கையின் வரலாற்று ஆசிரியர்கள், அனைவரும் ஆதிக்குடிகள் நாகர், இயக்கர் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார்கள். இதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. சிங்கள வரலாறு கூறும் மகாவம்சம் கூட இந்த உண்மையை
மறுக்காது வெறுக்காது ஏற்றிருக்கிறது.
நாகரும் இயக்கரும் இந்த நாட்டை உருவாக்கிய விராட் விஸ்வகர்மாவின் மூத்த மகனான மனுவின் மக்களான சமன், சமனையில் வாரிசுகளாகும்.
ஆண் பிள்ளை சமனின் வாரிசுகள் நாகர்களாகவும், பெண்பிள்ளை சமனையின் வாரிசுகள் இயக்கர்களுமாகும். இருபகுதியினருக்கும் இடையில் திருமணத்தொடர்புகள் இருந்து வந்தது.
மணிமேகலை "நக்கர்,சாரணர், நாகர் மலைப்பக்கம் சார்ந்து" என்பதிலிருந்து நாகர்கள் மலைவளமிக்க பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. இயக்கர் நீர், நிலம், வானம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தன்மை பெற்றிருந்தார்கள். இதை சுகப்பொருள் "காவிற் சேறலும் காலத்திற்சேரலும் - ஊர்விதியிற் சேரலும் நீதியாகும்” என்றும் தேவாரம்
"மயக்கும் மயாம் வல்லராகி வானொடு நீரும் இயக்கியவற்கிறை வனான இராவணன்” எனவும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இயக்கர் இயங்கும் தன்மையுடையவர்கள். தொழில்வல்லார். (இய - இயங்குதல் - தொழில், வினை, கருமம், கம் அச்சம், படைப்பு - ஆட்டல், செய்தல்.
இராவணன் இயக்க அரசன், இவனை துவட்டா மரபினன்
எனக்கூறுவர்.
44
 

கந்தபுராணத்தில் வரும் ஒருசில பாடல்கள் இதை வலியு றுத்துகின்றன.
“இளைய தன்மையுந் நல்கியே மனுவின் றாதை வருதலும்” என்றும், “தொட்டா மனுத் தொன்மயனைத் தனது சுதரென்ன முன்னமுதவி
என்று வருதலால் இராவணன் துவட்டா வழிவந்தவன் எனக் கூறுகிறார்கள்.
விஸ்வகர்மாமனு. மாய, துவட்டா, சிற்பி, விஸ்வங்க என்பவரும் ஐந்து குழந்தைகளின் தந்தையாகும். அவற்றில் மனு, மாய, துவட்டா என்னும் மூன்று பேரின் மரபுகள்தான் பிற்காலத்தில் சேர,சோழ,பாண்டியர் என்னும் முப்பிரிவானார்கள் எனப் பண்டி தர் கந்தையா, மாந்தைநகர் என்ற தமது நூலில் கூறியுள்ளார்.
தொல்குடி மரபினரான பாண்டியர் இவர்களில் முதன்மை பெற்று விளங்கினர். இவர்களது கோட்டை முதுமதில், திரிபுரம், மூவெயில், தூங்கெயில் என அழைக்கப்பட்டது. தென்பகுதியில் தோன்றி ஆண்டபடியால் இவர்களைத் தென்னவன் என்றும், தென்னர், பூழியர் என்றும் அழைத்தார்கள்.
சேரர்கள் (நாகர்) மலைவளம் மிக்க பகுதியை ஆண்டார்கள். இவர்கள் இலங்கையின் பல பகுதியை ஆண்டவர்கள். இவர்கள் காலத்தில் இலங்கை மூன்று பிரிவுகளாப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. இராஜரட்டை, மாயாரட்டை, உருகுணுரட்டை ஆகும். இராஜரட்டையை மனு (நக்கர்) வழி பாண்டியரும், மாயரட்டையை (மய - நாகர்) சேரர்களும், உருகுணுரட்டையை (துவட்டா - இயக்கர்) சோழர்களும் ஆண்டார்கள். திரைகட லோடுவதிலும் கடலாட்சியிலும் பாண்டியர் சிறந்தவராகையால் "இரட்டை மீன்" சின்னத்தைப் பாண்டியர் பெற்றார்கள். மலையையும் காடுகளையும் அண்டிய பகுதியை ஆண்ட சேரர்கள் மிருகங்களை அடக்க "நாணேற்றிய வில்லை" சின்னமாக்கி னார்கள். நிலத்தையும் நீர்வளத்தையும் கொண்ட பகுதியை ஆண்ட சோழர்கள் வீரம்மிக்க “புலி'யைச் சின்னமாகக் கொண்டார்கள் எனக் கதிர். தணிகாசலம் அவர்கள் தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும்” என்னும் நூலிற் கூறியுள்ளார்.
45

Page 36
சோவரண்
செம்பு (Copper) என்னும் உலோகம் சிவப்பு நிறமுடையது. அது சிவப்பு - சோ, சோப்பு என மாறித்திரிந்து, சோவரண் - சோப்பரண் ஆகியது. சிவப்பு ஒளி, எரி நெருப்பு சிவனென்ற பெயரை இது தந்து நிற்கிறது.
மாந்தையில் செம்பால் செய்யப்பட்ட நகர் ஒன்றிருந்ததாகப் பலர் கூறியுள்ளார்கள். இந்நகரின் கோட்டையில் சூரிய காந்தம் மூலம் இயங்கவல்ல பொறியொன்று பொருத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் கடலில் போகும் வெளிநாட்டுக் கப்பல்களை மாதோட்டத் துறைமுகத்திற்கு இழுத்தார்கள் என முதலியார் சி. இராசநாயகம் எழுதிய "பூர்வீக இலங்கை” என்ற நூல் கூறுகிறது. அது மட்டுமின்றித் தங்கள் பகைவருக்கு எதிராகவும் இச்சக்தியைப் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இந்நகர் “சோவரண், சோப்பட்டணம்” எனப் பெயர் பெற்றது.
பிளணி, தொலமி (Pliny,Tolemy) ஆகிய அறிஞர்கள்பாலாவிக் கரையில் பழையசோமண்டலம் இருந்தது எனக் கூறியுள்ளார்கள். பொறிப்பிளஸ் (Periplus) என்னும் நூலாசிரியரும் இதையிட்டு விபரமாகக் கூறியுள்ளார்.
கி. மு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் வாணிபம் செய்த அராபியர்கள் கடற்காற்று மாற்றத்தினால் பிரயாணம் தொடர முடியாமல் ஆறுமாதங்கள் இந்த சோவரணில் தங்கியிருந்தே காற்றுமாறியதும் தங்கள் நாட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட காலத்தில் அராபியர்கள் மாந்தைக் கம்மாளர்களின் பணியாளர்களாகத் தொழில்புரிந்திருக்கிறார்கள்.
“மக்கத்துலக்கர் மாந்தைக் கண்ணாளர்
பக்கத்திற்கேய்ந்தபள்”
என்னும் மாந்தைப்பள் உறுதி செய்கிறது.
மாந்தையின் வீழ்ச்சிக்கு மக்கத்து மாதர்களே காரணம்
என்பது ஏற்கனவே சொல்லியுள்ளேன். மக்கத்துப்பெண்களுக்கும்
மாந்தைக் கம்மாளக் காவலர்கட்கும் பிறந்த குழந்தைகளும் இந்த
46

சோவரணில் அதாவது சோநகரிலே வாழ்ந்தார்கள். இதனால் இவர்களை சோநகர்வாசிகள் என அழைத்தார்கள். அதுமருவித் திரிந்து சோனகர் ஆகியது என்பது வரலாறு. இப்பெயர் மூலமே இலங்கையில் சோனகர் என்ற இனம் வளர்ந்தது. இதைக் குறிக்கும் முகமாக "மக்கத்து சோனகத்தியும் மாந்தைக் கம்மாளரும்” என்ற பழமொழி வழக்கிலுள்ளது. இன்றும் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் கம்மாளரை "அப்பு" என்றே அழைப்பார்கள். அவர்களின் தொழில்களைச் செய்கிறார்கள்.
பண்டைய சுமேரியாவே இன்றைய ஈராக்காகும். எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கும், இலங்கை மாந்தை வாசிகளுக்கும் தொடர்புகள் உண்டு. மாந்தைவாசிகளே அந்நாடு களில் சென்று குடியேறினார்கள் என்ற வரலாறு உண்டு. அதைப் பின்னர் விபரிப்போம்.
மாந்தை நகர் எரியுண்ட வரலாற்றை ஏற்கனவே தந்துள் ளேன். அதுபற்றிக் கம்பராமாயணம்,
“சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டவிழ்த்த சேவகன்” என்றும் “வெயில் விலங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெறிந்த இகழ்வேற் கொற்றமும்” என்று சிலம்பும், "தூங்கெயில் எறிந்த கொடித் தோட் செம்பியன்” என மணிமேகலையும் குறிக்கின்றன.
மாந்தையில் குறுணிக்கற்காலக் கருவிகளோடு மக்களின் அன்றாட வாழ்க்கை அம்சங்களை எடுத்துக்காட்டும் தடயங்களும் கிடைத்துள்ளன என்பது தெரணிகலவின் கருத்து. எனவே மாந்தை நாகரிகம் உலகிலுள்ள நாகரிகங்கள் அனைத் திற்கும் தாய் நாகரிகம் என்பது மறைக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளி வந்ததும் உலகம் கண்டுகொள்ளும்.
இலங்கையின் வரலாறு 2500 வருடங்களுக்கு முற்பட்ட இடைக்கற்கால பண்பாட்டுடன் தொடங்குகிறது என்கிறார்
சு. சந்தா பொன்சேகா. இலங்கையின் ஆதிமனிதனின்
47

Page 37
1,25,000 வருடங்கட்கு முன் வாழ்ந்தான் என்பது தெரணி கலயின் கருத்து. எனவே இலங்கையில் மக்கள் கற்காலத்திலே வாழ்ந்திருக் கிறார்கள் என்பது அறிஞர் முடிவு.
இரண்டு ஆய்வாளர்களும் சிங்கள பெளத்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இரண்டு பேருக்கிடையிலும் வேறுபட்ட, மாறுபட்ட கருத்தை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னவர் சிங்கள இன ஆரம்பத்தோடே இலங்கை வரலாறு தொடங்குவது போன்ற பிரமையை ஏற்படுத்த முயல்கிறார். மற்றவர் உண்மையைக் கூறுகிறார். எனவே இலங்கையின் வரலாறு மிகமிகத் தொன்மை வாய்ந்தது. பழமை வாய்ந்தது.
ஆகவே இலங்கையில் தமிழர்களின் மூதாதையினர் பெரும் கற்காலம் தொடக்கம் வடபகுதிகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும், இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களோடும் தென்னிந்திய மக்களோடும் தொடர்பு கொண்டி ருந்தார்கள் என்ற உண்மையை அகழ்வாய்வுகள் நடத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் விளக்கியி ருக்கிறார்கள் என மு. சமீம் அவர்கள் “ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள்” என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.
48

இலங்கை மாந்தையில் வாழ்ந்த மயன் பரம்பரைக்கு விமானம்
செய்யவும், கப்பல் கட்டவும், மின்சாரத்தையும் காந்தத்தையும் தொழில்படுத்தும் திறமையைப் பெற்றிருந்தார்கள் என்பதை ரொனாட் ரெனைட் என்பவரும் பேர்குசன் என்பவரும் எழுதிய இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. இராவணன் வைத்திருந்த வானவூர்தியும், குபேரனிடமிருந்த புஷ்பவிமானமும் மாந்தை வாசிகளான விஸ்வகர்மாவாலும் மயனாலும் செய்யப்பட்டவை என இராமாயணம் காட்டுகிறது.
எனவே மாந்தைவாசிகளிடம் விமானங்களும், கப்பல்களும் இருந்தன என்பது உறுதி. சடுதியாக ஏற்பட்ட விபத்திலிருந்து தப்ப விமானங்களையும், கப்பல்களையும் அவர்கள் பாவித்தி ருக்கலாம்.
விமானத்தில் சென்றவர்கள் விரைவாக வெகுதூரம் சென்று குடியேறி இருக்கலாம். அவ்வாறு சென்ற மயன் சந்ததியினரே அமெரிக்காவில் பெரு - மெச்சிக்கோவில் குடியமர்ந்த இலங்கை யராகும்.
அவர்கள்தான் அமெரிக்காவின் மூத்த முதல் குடியினர் என்பது கடலோடியான கொலம்பஸின் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து தெரிந்து, புரிந்துகொள்ளலாம்.
கொலம்பஸ் செவ்விந்தியர் என்றும், வரலாற்றாசிரியர்கள் மயோரிஸ் மக்கள் என்றும் அழைப்பவர்கள் வேறுயாருமல்ல, மாந்தையில் வாழ்ந்த மயன் பரம்பரையே ஆகும். மயன் மக்களை மயோரிஸ் என ஆங்கிலேயர் வழங்குகிறார்கள்.
சங்கலால் எழுதிய (Hindu America) “இந்து அமெரிக்கா" என்னும் நூலில் பின்வரும் முக்கிய தடயங்கள் தரப்படுகின்றது.
49

Page 38
1. இம்மக்கள் சர்ப்ப - லிங்க வழிபாடு உடையவர்கள். 2. மொழி - தமிழைப் போன்ற ஒட்டுமொழி. 3. ஸ்வர ஆட்சி முறை. 4. பெரு-மெச்சிக்கோ பகுதிகளில் பெரிய நாக கோயில்
களும், சிவாலயங்களும் உண்டு. 5. தேவதைகட்கு கன்னிமாரைப் பலியிடும் வழக்கமுடைய
வர்கள். - 6. தொழில் - கட்டிடக்கலை, நாடு நகரமைப்பதில் சிறந்த
வர்கள்.
இலங்கை மாந்தையில் வாழ்ந்த கம்மாளர்கள் நாக இனத் தைச் சேர்ந்தவர்கள். சர்ப்ப - லிங்க வழிபாட்டை உடையவர்கள். மொழி - தமிழ், ஸ்வர ஆட்சி முறையைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இலங்கையில் இன்றுமிருக்கின்ற ஸ்வர ஆலயங்களே அழியாத சாட்சியாகும். மாந்தையில் கண்டுபிடித்த கிணறும் பெரு-மெச்சிக்கோ பகுதியில் காணப்பட்ட கிணற்றில் பெறப்பட்ட தடையப் பொருட்களை ஒப்புநோக்கில் இவை இரண்டும் ஒரே தடையப் பொருட்கள் நிறைந்தவையாகவும், அவை தேவதை கட்குரிய பலிபீடங்களாகவும் இருக்கின்றன. தொழிலைப் பொறுத்தவகையில் மாந்தைவாசிகளும், பெரு-மெச்சிக்கோவாசி களும், கட்டிடக்கலையிலும், நாடு நகர் அமைப்பதிலும் சிறந்தவர் களாக இருக்கிறார்கள்.
மாந்தையை உருவாக்கிய மாதுவட்டா, சகலகலாவல்லவர். வானசாஸ்திரம், வைத்தியம், சிற்ப, ஒவிய, கட்டிடக்கலைளில் எல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பதை தட்சண கைலாய புராணமும், விஸ்வபுராணமும் எடுத்துக்காட்டுகின்றன. இதையே பட்டணத்தாரும் சுட்டிக்காட்டியுள்ளார். மாதுவட்டாவைப் போன்றே விஸ்வேஸ்வரனும், மயனும் ஆற்றல், அறிவு, திறமை மிக்கவர்களாக விளங்கினார்கள் என வரலாற்று ஏடுகள் வாய்திறந்து பேசுகின்றன.
மாந்தைநகரின் நாகரிகச் சிறப்புக்களை அறிந்து தெரிந்து, புரிந்து, தெளிவு கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கியங்கள், இலங்கை வரலாற்று நூல்கள், தட்சண கைலாயபுராணம், விஸ்வ
50

புராணம், மாந்தைப்பள்ளு, திருவாளர் சி. இராசநாயகம் எழுதிய "பூர்வீக இலங்கை", அருள் செல்வநாயகம் எழுதிய "சீர்பாதகுல வரலாறு" என்ற நூல்கள் இருப்பது போல, அமெரிக்காவின் பெரு - மெச்சிக்கோ நாகரிகத்தை அதன் அடிச்சுவடு தெரியாமல், அழித்தொழிக்க முயன்ற ஸ்பானிய, பிரான்ஸ் கத்தோலிக்க பாதிரிமாரும், மயன் மக்களின் விலைமதிக்க முடியாத கலைச் செல்வங்களையும், பெறுமதிமிக்க நூல்களையும் ஒன்றுதிரட்டி எரிக்க முனைந்த “யுகேதன் நாட்டின்” ஆயரான “டைகோடி லாண்டா” என்பவரும், மயன் மக்களின் நாகரிகச் சிறப்புக்கள் அனைத்தையும் பதிவுசெய்து வைத்திருந்தார்கள்.
அழிவிலும், அகல்விளக்கு கிடைத்தது. பெரு - மெச்சிக்கோ வில், ஆனால் சிந்துவெளியில் வந்த ஆரியர்கள். திராவிடர்களின் விலைமதிப்பற்ற கலைச்செல்வங்களை எல்லாம் அழித்ததுடன், ஆற்றல், அறிவு நிறைந்த நூல்கள் அனைத்தையும் தம்மொழிக்கு மாற்றிவிட்டுத் திராவிடர்களின் நூல்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கினார்கள். அதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள், சரித்திர ஏடுகளில் தரித்திர மக்களாக்கப்பட்டார்கள். வந்தவன், இருந்தவனை அழித்தான், ஒழித்தான், துரத்தினான், வாழ்வைத் தனதாக்கிக் கொண்டான். வாழ்ந்தவன் வாழ்விடம் மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்தான். அரசிழந்தான், ஆண்ட பிரதேசம் இழந்தான், ஆயகலைகள் பலதை இழந்தான், அம்மண்ணில் வாழ்ந்த வரலாற்றையும் இழந்தான். வரலாற்றுக்கு வேண்டிய தடையப்பொருள் அனைத்தையும் ஆரியர் சாம்பலாக் கியதால், சிந்து சிரிக்கவில்லை, சிணுங்கிக் கொண்டிருக்கிறது.
பெரு - மெச்சிக்கோ மக்களின் உன்னத நாகரிகம் பற்றி, அவர்கள் வாழ்ந்த உயர்ந்த வாழ்வு பற்றி " த மொடேன் என் சைக்கிளோ பிடிய ஒப் பிரிட்டானிக்கா" என்னும் கலைக் களஞ்சியம் பின்வருமாறு கூறுகிறது.
“ஐரோப்பியர் காட்டுமிராண்டித் தன்மையில் மூழ்கி இருந்த போதுமயன் மக்களின் துறவிகளும் அறிஞர்களும் வானத்திலுள்ள கோள்களிலிருந்து நுணுக்கங்களையும், அதன் துல்லியமான அளவுகளையும் திரட்டிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில்
S1

Page 39
அன்றிருந்த கணிதமுறைகளை விடச் சிறந்த முறையில் காலத்தைக் கணிக்கவும், பஞ்சாங்கங்களை உருவாக்கினார்கள் அவர்களின் கணித அறிஞர்கள்.
அவர்களின் கட்டிடக்கலைஞர்கள் அழகும் அதிசயமும் பொருந்திய கட்டிடங்களை நிர்மாணிப்பதில் ஒப்பிலா நிபுணர் களாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
சிற்பிகள் எழுத்துக்களையும் உருவங்களையும் கல்லில் குடைந்து வரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைவர்கள் மிகமிக சாமானிய மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கையைச் செப்பனிட்டு அமைப்பதில் திறமை பெற்றிருந் தார்கள். தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அறிவுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு வந்தார்கள் எனக் குறித்துள்ளார்கள்.
“எரிக்குவான்” என்னும் அறிஞர் தான் எழுதிய "த சொய்ஸ் ஒப் கோட்" என்னும் நூலில் "மயன் மக்கள் சிறந்த உயர்ந்த கணிதமேதைகள். அவர்கள் பூமியின் ஆண்டை365.225 நாட்கள் எனக் கணித்தார்கள். இன்றுவரை 365.235 எனச் சிறுமாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஐயாயிரம் ஆண்டுக்கான பஞ்சாங் கத்தைக் கணித்து உலக மக்களுக்கும் விட்டுச் சென்றுள்
ளார்கள்.
52

பிரபல ஐரோப்பிய அறிஞர்களாகிய சேர். H. H. ஜான்ஸ்டன், H. G உவெல்ஸ் உலிஸ் விறட்ஸ்காவன, பிளின்ற், ஹக்ஸ்வி ஆகியோர் கூறுவதாவது "உலகத்திற் முதல் முதல் கட்டிடக் கலையும் பட்டணங்களையும் உருவாக்கியவர்கள் சுமேரியராவர். இவர்கள் யூத வகுப்பு ஆரியரல்ல. எங்கிருந்து வந்தவர்கள் என்பது தெரியவில்லை.
இவர்களின் பாஷை பலுக்கில் தானிஷல் சில பகுதிகளிலும் காக்கேய மலைத் தொடரில் சில இடங்களில் பாவிக்கப்படும் “ஸ்பாணிக்" என்னும் பாஷையையும் ஒத்திருக்கின்றது. இப்பாஷை கள் அனைத்தும் திராவிட மொழியுடன் ஒத்திருக்கின்றன. சுமேரியர்கள் கோபுரத்தோடு கூடிய கோயில்களைக் கட்டி னார்கள். "நிப்பூர்” என்னும் இடத்தில் தங்கள் தெய்வமான “எல் வில் என்னும் சூரிய தேவனுக்குக் கோயில் கட்டி இருந்தார்கள். எல் ஒளி சிவன் எனப் பொருள்படும்.
பிளன்ற் ஹக்ஸ்வி கூறுவதாவது எகிப்தியரும் திராவிடரும் ஒருகுல முறையில் வந்தவர்களாக இருக்க வேண்டும். முந்நாளில் கறுப்பென்றும் வெள்ளை என்றும் சொல்லமுடியாத மங்கிய நிறத்தையுடையவரும் மிகவும் சீர்திருத்தமுடையவருமாகிய ஒரு சாதியார் ஐரோப்பா, பிராஞ்சு, இங்கிலாந்து, ஸ்பானியா என்பவற்றிலும் மத்தித்தரைக்கடலின் இரு பக்கங்களிலும் எகிப்து, இந்தியா சீனா பசுபிக் சமுத்திரக் கரைகளிலும் அமெரிக்கா பெரு மெக்சிக்கோ பகுதிகளிலும் பரவி இருந்தார்கள்.
இவர்கள் சூரியனையும் சர்ப்பத்தையும் கடவுள் கொள்கை களாகக் கொண்டிருந்தார்கள். இன்றும் இந்தியாவில் வழக்கத் திலுள்ள "சுவஸ்திக்” அடையாளத்தை சமய அடையாளமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் கி. மு. 15000 ஆண்டுகட்கு முற்பட்டவர்கள் அது முதல் கி. மு. 1000 ஆண்டுவரை அதாவது 14000 ஆண்டுகட்கு இவர்களுடைய நாகரிகம் நிலைபெற்றிருந்தது. கி. மு. 10000
53

Page 40
ஆண்டுகட்கு இவர்கள் மொழிமேல் நாடுகளில் வழக்கிலிருந்தி ருக்கின்றது. ஆரியர்களின் மொழிவளர்ச்சிஓங்கியதும் இம்மொழி அழிவுற்றது.
பல வருடங்களுக்கு முன் கீறீட் என்னும் தீவில் கண்டெ டுக்கப்பட்ட கற்சாசனத்திலுள்ள மொழியை ஆராய்ந்த மேலை நாட்டறிஞர் சேர் H. H. ஜான்ஸ்டன் கி. மு. 3000 ஆண்டுகட்கு முன்னுள்ள சாசனத்தில் எழுதப்பட்ட மொழி திராவிட மொழி யோடு சம்மந்தப்பட்ட மொழியாகும். என்கின்றார்.
உற்றும் நோக்கும் போது நீல நதிக்கரையாகிய நிப்பூர் எல், வேல் என்னும் கடவுள் பெயர்கள் தமிழ்மொழியாக இருக்கின்றன. இன்னும் யவன மொழி எழுத்துக்களின் வடிவமும் தமிழ் எழுத்துக் கோடும் கிரந்தலிபியோடும் தொடர்பு உடையனவாகக் காணப் படுகின்றன எனச் சுவாமி விபுலானந்தர் தான் எழுதிய“மேற்றினச் செல்வம்" என்ற கட்டுரையில் கூறியுள்ளர்.
எகிப்தியர் நீல நதிக்கரையை அடைவதற்கு முன் கிழக்கிலி ருந்து கடல் கடந்து வந்ததாக அவர்களின் பூர்வீக சரித்திரம் கூறுகின்றது.
எகிப்தியர் தங்கள் மூதாதையர் நாடு"பண்டு என்றும் அழைத் தார்கள். என்றும் திராவிடரும் எகிப்தியரும் ஒரே குலமுறையில் வந்தவர்கள் என்றும் ஹர்க்கிஸ் என்னும் சரித்திர ஆசிரியர் கூறுகின்றார்.
ஆசியாவின் தென்மேற்கில் டைகிரஸ் யுபிரட்ஸ் நதிகட்கு இடைப்பட்ட நாடாகிய மொஸப்டோனியாவில் வழங்கப்படும். "ஈழம்" (Elam) பெரும்பாலும் அங்கே குடியமர்த்தப்படுவர்களும் அந்த நகரிக வளர்ச்சிக்கு பொறுப்பானவர்கள் இலங்கை யருக்குரியவர்கள் எனத் "தமிழர்களின் தோற்றமும் வரலாறும்" என்னும் நூல் (84,85ம் பக்கம்) இந்தியச் சரித்திர ஆசிரியரான தீட்சகர் கூறியுள்ளார்.
இவற்றைக் கொண்டு ஆராயும் போது குமரி நாட்டைப் பிறப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த மக்கள், பல கடல் கோள்களின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க வடக்கு நோக்கி அகன்ற வரலாறு ஒன்று தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
54

இதையே இலங்கையின் முன்னாள் சரித்திர ஆசிரியரான பேராசிரியர் கலாநிதி ஜி. சி. மெண்டிஸ் "அவ கெரிட்ரேஜ்" (Our Heritage) Part I, Colombo 1935 p. 8 Sloits CLDITD gp5uisitsTITrf.
"The people who lived there were called sumerians. Some people think the Tamil of Ceylon came from the Sunerians".
பபிலோனியாவில் முதல் முதல் வாழ்ந்தவர்கள் சுமேரியர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்களின் வழித்தோன்றல்களே இலங்கைத் தமிழர் எனச் சிலர் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
சுமேரியர்கள் இலங்கையின் பழந்தமிழர்கள் என்பது தான் பல நாட்டு அறிஞர்களின் முடிந்த முடிவு. இதையே பேராசிரியர் கல்கியும் பாம்பு வழிபாடு என்னும் நூலை எழுதிய கலாநிதி ப. அறவாணரும் பல ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.
பபிலேனியாவிலும் அதையண்டிய தேசங்களிலும் ஊர், ஈழம், காளித்தேசம் போன்ற தமிழ் சொற்கள் உருமாறி இடம் பெற்றி ருப்பதைக் கொண்டுதான் அறிஞர்கள் சுமேரியர்கள் இலங்கை யிலிருந்து சென்ற தமிழரெனக் கூறியுள்ளார்கள். முற்காலத்தில் இலங்கை காளிதேசம் எனப்பட்டது. என்பதை முன் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
சுமேரியர்களின் முக்கிய தொழில் கட்டிடங்களை அமைத்தல், கோபுரங்களை உருவாக்குதல், பட்டணங்களை நிர்மாணித்த லாகும். வழிபாட்டுமுறை சர்ப்ப, லிங்க வழிபாட்டு முறையாகும். மொழிதிராவிட மொழி. உலோகங்களை உருக்கி ஆயுதங்களைச் செய்துள்ளார்கள்.
மாந்தையில் வாழ்ந்த மக்களும், சுமேரியரும் மொழி, வழிபாடு, தொழில் ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்படுகின்றார்கள். அதே போல அமெரிக்க பெரு-மெக்சிக்கோவில் வாழ்ந்த வாழ்கின்ற “மயோரிஸ்” என மேலை நாட்டாரால் குறிக்கப்படும் மயன் மக்களும் ஒரே கலை, கலாச்சாரம், மொழி, தொழில் உடைய வர்களாகவே வரலாற்று ஆசிரியர்கள் அடையாளம் காட்டு கின்றார்கள். இவற்றைக் கொண்டு நோக்கும் போது இலங்கை மாந்தையிலிருந்து காந்தக் கோட்டை அழிவின் பின் சிதறிய மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரே சுமேரியாவில் குடியேறிய
S5

Page 41
வர்கள் என்பது தெளிவாக உறுதியாகிறது. காளி வணக்கத் திற்கும் கம்மளாருக்கும் இருக்கும் தொடர்பு நாகலிங்க வழிபாட் டுடன் அவர்கள் கொண்டிருந்த பற்றும், பாசமும் இவற்றைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இந்த மூன்று நாகரிகங்களில் கிடைத்த தடையப் பொருட் களே சிந்து வெளியிலும் கிடைத்திருப்பதால் இந்த நான்கு நாகரிகமும் ஒரே குழுவினரிடமிருந்தே பரவி இருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மை தெளிவாகத் தெரிகின்றது.
அந்தக் குழுவினர் திராவிடரான விஸ்வகர்மா மக்களேயாகும். குமரிகண்டம் பல கடற்கோள்களால் சிதைந்துசின்னாபின்னமாக உருமாறி நிலைகுறுகி, எஞ்சி இருக்கும் நிலப்பகுதி இலங்கை. இந்நிலம் உலக மக்களின் தாயகமட்டுமல்ல தமிழ்மொழி, சைவ மதமாகியவற்றின் பிறப்பிடமாகும். உலக நாகரிகம் முளை கொண்டு தத்தித் தவழ்ந்து விளையாடி உயர்ந்து இடம் மாந்தை தான் என்பது உறுதியாகும் காலம் வெகுதூரத்தில்லை.
காய்தல் உவர்ந்தலின்றி தன்னினப் பற்றும் பாசமும், மறந்து, துறந்து, உள்ளத்தூய்மையோடும், உயர்ந்த சிறந்த நோக்கோடும் ஆராய்ந்தால்மாந்தையை உலக நாகரிகங்களின் பிறப்பிடம் என்னும் உண்மை வெளிவரும்.
உலகில் முதல் முதலில் தோன்றிய பகுதி “லெமூரியா” என்று மேல்நாட்டவரால் அழைக்கப்படும் குமரிகண்டமாகும். மற்ற ஏனைய பகுதி நீரால் சூழப்பட்டிருந்தது ஊழிப் பெருவெள்ளமும் கடற்கோளங்களும் குமரிகண்டத்தை தாக்கிச் சிதைத்த பின்பே ஆசியா, ஐரோப்பா அமெரிக்கா, ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, ஆசியா போன்ற தேசங்கள் மிதந்துள்ளன. ஊழிப் பெரு வெள்ளத்தின் தாக்கத்தால் மக்கள் பலதிசைக்கும் சென்று குடியேறியுள்ளார்கள் என்பதை உலக வரலாற்று ஏடுகள் மறுக்கவும் மறைக்கவுமில்லை. அதுபோல் உலகநாகரிகம் பிறந்து வளர்ந்த பழம்பெரும் பகுதியை ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.
"திராவிடப் பண்பாடு முதன் முறையாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாவின் இரு கரையிலும் தோன்றி வளர்ந்தது என அறிஞர்கமில் வி. சுவலெவில கூறுகின்றார். மாலோனி என்ற மற்றுமொரு அறிஞர் "சங்ககாலப்
56

பாண்டியர் ஆட்சியும் பண்பாடும் வளர சிந்து மாநிலத்திலிருந்து மன்னார் வளைகுடாவரை நடைபெற்ற வாணிபமே காரணம் என்கின்றார்.
எனவே உலகின் மூத்த முதல் நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்பதை யாரும் மறக்கமுடியாது. மாதோட்டத்திலிருந்து சிந்து அதாவது சிந்துவெளிக்கு தொடர்பு இருந்திருப்பது தெளிவா கின்றது. எனவே சிந்துவெளி நாகரிகத்திற்கும் மாந்தை நாகரிகத்திற்கும் ஒட்டுறவு உண்டு. அங்கே வாழ்ந்த மக்களின் வழிபாட்டுமுறை தொழில் அனைத்தும் மாந்தை வாழ்ந்த விஸ்வகர்ம மக்களோடு நீண்டநெடிய தொடர்புடையதாயிருந்தது. குமரிக்கண்டத்தில் குமரியின் எஞ்சிய மிஞ்சிய பாகம் இலங்கை. இலங்கையிலிருந்தே மக்களினதும் நாகரிகம் பரவியது. இலங்கை யின் சிவனொளிபாத மலையிலுள்ள எழுத்துக்களும் சிந்துவெளி எழுத்துக்களும் ஒரே மாதிரியானவவை என வணக்கத்துக்குரிய ஈரொஸ் பாதிரியார் கூறியுள்ளார். எனவே சிந்துவெளிநாகரிகம் ஒரே இனத்தவர்களால் படைக்கப்பட்டது தெளிவாகின்றது.
சுமேரியா, அமெரிக்கா பெரு-மெக்சிக்கோ, சிந்துவெளி நாகரிகத்தை சர்ப்பலிங்க வழிபாட்டுமுறை. தொழில் - கட்டிடக் கலை, உலோகவேலை, நாடு நகர் அமைத்தல், நுண்கலை மாந்தை நாகரிகத்தை வளர்த்த விஸ்வகர்ம மக்களின் வணக்க முறை தொழிலிலும்கூட ஒத்துவருகின்றன. எனவே உலக நாகரிகத்தைத் திட்டமிட்டு செம்மைப்படுத்தி வளர்த்தவர்கள் விஸ்வகர்ம மக்களேயாகும்.
"Ceylon in paranoiac was called 'Ilam' and we finds a great kingdom on the Frontier of Babylonia with purely Sumerian civilization. It is clear from the traditions recorded in the Ramayanam and the Mahawamsam that for the larger part of Ceylon (11, 12ths) had gone under the sea. It is not than probable that Sathiyavara then or mam, king of Dravida who reached Malaga (in Malabar) after the deluge escaped from one of the submerged portions of Ceylon? This theory explains the Indian Tradition that Indian come from Ela Virutam. This explains the
57

Page 42
Sumerian tradition that they went from Elam. This explains the Babylonian and Indian story of duel". "Our place in the civilization of the ancient world". Hon. K. Balasingam.
"பூர்வீக உலக நாகரிகத்தில் எமது இடம் என்ற நூலில் கெளரவகே.பாலசிங்கம் கூறுவதாவது" புராண இதிகாசங்களின் படி இலங்கை ஈழமென வர்ணிக்கப்டுகின்றது. அது பபிலோனி யர்கள் முன்னணியாக அமைந்துள்ள பெரிய இராச்சியமாக இருந்ததாகவும் சுமேரிய கலாச்சாரத்தோடு தொடர்புடைய தாகவும் காணப்படுகின்றது. இராமாயணம் மகாவம்சத்தில் கூறப்படும் கருத்தப்படி இலங்கையின் 11/12 பகுதி கடலில் மூழ்கிவிட்டது. திராவிட அரசன் சத்திய வரதன் அல்லது மனு தப்பியோடியமலையாளம் (இன்றைய மலைபார்) சேர்ந்தது என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று. இந்தியர் ஈழத்திலிருந்தே இந்தியாவைச் சென்றடைந்தனர். அதுபோல் சுமேரியரும் சென்றார்கள் என்பது உறுதி. இந்த அடிப்படையில் இந்திய சுமேரிய கலாச்சாரங்கள் ஈழத்தின் கலாச்சாரங்களேயாகும் என்பதே கடந்தகால உலக ஆய்வாகும் என கே. பாலசிங்கன் கூறுகின்றார்.
கடல் கொண்ட லெமூரியா அல்லது குமரி கண்டமக்களே முதலில் தோன்றினார்கள். கடற்கோள் ஏற்பட்ட போது ஒரு பிரிவினர் குமரிக்கண்டத்தின் வட பகுதியிலிருந்தே (இன்றைய தென்னிந்தியாவில்) தங்க, மற்மொரு பிரிவினர் மத்தியதரைக் கடல்பகுதியைச் சேர்ந்துபோப்பாவின் பல பகுதிகளிலும் குடியேறி ஆரியர் ஆகினா. எஞ்சியவர்கள் ஆசியாவின் பல பகுதிக்கும் பரவி துராணியர் மங்கோரியர் இல்லது சித்திராயார்கள்" என என அறிஞர் ஸ்வோட்டர் (Staller) கூறியுள்ளார். இக்கூற்றை அறிஞர் காலிவின் கொபாட் என்பவரும் ஆதரிக்கின்றார்.
"குரங்கினத்தில் ஒத்ததுவும் மாந்தரை ஒத்துவமான இனம் 20 இலட்சம் ஆண்டுகட்கு முன்னே தோன்றினது என்றாலும் தற்கால மாந்தரை ஒத்தவர்கள் இன்றைக்கு ஒருஇலட்சம் ஆண்டுகட்கு முன்தோன்றி இருக்கவேண்டும். தற்கால மாந்தரை ஒத்த ஒருவனுடைய எலும்புக்கூட்டின் கல்வடிவம்
58

(Fossi) அண்மையில் இலங்கையில் வடதொம்பலேனா (Badadcmba Lena) 6T6örggJL6ll-ġg6l6v G56oT(6Siņji3G,ŮLJL (66T6ITgl. இது பழைய திராவிடன் எச்சம் என்பதில் ஐயமில்லை. இது ரேடியோ கார்பன் முறைப்படி இன்றைக்கு 28,000 ஆண்டு 5, 5 (pibglug.) 6T60T Kenneth A. R. Kennedy and siran D. Denraniyagale "Possible remains of 28,000 years old Humanoid from Sri Lanka. pp. 394 -398 of current an theopolocy Volume 30, NO. 3 June 1989.
இன்றைக்கு 10,0000 ஆண்டுகட்கு முன் மொழி தோன்றி யிருக்க வேண்டும். இது தோன்றிய இடம் ஆபிரிக்கா அல்லது தமிழ் நாட்டையொட்டி தென்பால் இருந்த கடல் கொண்ட தென்னாடு ஆகும். மொழி தோன்றிய சிலகாலம் கழித்த கி. மு. 40000, 30000 காலகட்டத்தில் மாந்தர் இனம் இடம் பெயர்ந்து வட ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்ரேலியாவுக்கும் சென்றிருக்க வேண்டும். எனவேதான் மாந்தரினத்தின் முதல் மொழியான தமிழுக்கு அமெரிக்கா மொழிக்குமிடையே ஆண்டுகள் கழிந்த பின்பும் ஒப்புவமை g,T6OOTůU(6f6őTADg 6T6IOT Bengt. Danielsson Lovein the South SeaS Alen and Union 1956 as P. 5.7.
குமரிகண்ட நாகரிகமே மூத்த முதல் நாகரிகம். இங்கே இருந்துதான் நாகரிகம் உலகின் பல பாகங்களுக்கும் பரவியது என்பது வணக்கத்துக்குரிய ஈரோஸ் பாதிரியார் கூற்றாகும்.
ஏற்கனவே திராவிட நாகரிகம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாப் பகுதியின் இருகரையிலும் தோன்றியது என்ற அறிஞர் கமிலசுவெலையின் ஆய்வு தந்துள்ளேன். அது இலங்கையிலிருந்து பரவியதற்குரிய ஆதாரங்கள் மேலே தந்துள்ளேன். சிந்துவெளி எழுத்துக்களும் சிவனொளி பாதமலையிலுள்ள எழுத்துக்களும் ஒரே மாதிரியா னவை என்ற கூற்றுப்படி மாந்தை நாகரிகம் உலகில் மூத்த நாகரிகமாகும். சிந்துவெளி சுமேரியா, எகிப்து, பபிலோனியா, அமெரிக்கப் பெரு-மெக்சிக்கோ நாகரிகங்களை ஏற்படுத்திய மக்களின் தொழில், வணக்கமுறை, மொழி ஆகியவை மாந்தையில்
59

Page 43
அன்று வாழ்ந்த விஸ்வகர்ம மக்களின் தொழில், வணக்கமுறை, மொழியோடு தொடர்புடையதாக இருக்கின்றது. கடல் கொண்ட குமரிகண்டத்தின் எஞ்சிய மிஞ்சிய பூமியே இலங்கை என்பது ஆதாரங் களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பண்டிதர் சேவியர் உறுதி செய்கின்றார்.
"சுமேரியர்கள் ஆதி இருப்பிடம் அவர்களின் செவிவழி மொழிப்படி கிழக்கிலுள்ளது. பெறோஸ் என்னும் பபிலோனியா குரு சுமேரியாவின் நாகரிகத்தை எழுத்தைக் கொண்டு பரப்பிய இரு பெருமக்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் உவண்ணா மற்றவர் ஒடக்கோன். சுமேரியரின் மொழி தமிழைப் போல் ஒட்டு மொழியாகும். என ந. சி. கந்தையாபிள்ளை "தமிழர் யார்?" பக்கம் 35ல் கூறியுள்ளார்.
60

இன்றைய மாகலப் பகுதியில் 12ம் நூற்றாண்டளவில் கம்மாளர், வண்ணார். ஐஞ்ஞாற்றொருபர், வீரக்கொடி, வீரமகாளர் ஆகியோர் வாழ்ந்தனர் என்பதை அங்கே கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் சாசன மூலம் அறியமுடிகிறது. இவர்கள் வண்ணர் தவிர்ந்த ஏனையோர் வணிநகரின் விருத்தியோடு தொடர்புடைய வர்கள். ஒருசமயம் வண்ணாருக்கும் கம்மாளருக்குமிடையே இருந்த பரஸ்பர உறவுகள் முறிந்து தகராறு ஏற்பட்டது. இத்தகராற்றைக் கேள்வியுற்ற அனுராதபுரத்தை ஆண்ட மன்னன் மானாபரணன், தன் அதிகாரிகளை அங்கே அனுப்பி இருபகுதி யினரையும் விசாரணைசெய்து தீர்ப்பு வழங்குமாறு பணித்தான். மானாபரணனின் அதிகாரிகள் இரு பகுதிகளையும் விசாரணை செய்து அளித்த தீர்ப்பே மாகல கல்வெட்டாகும்.
“ஸ்வஸ்தி ழரீ அபைய சலாமேக சக்கரவர்த்திகள் பூரீஜயபாகு தேவர்கட்கு ஆண்டு எட்டாவது பங்குனி முன் நாலாம் பக்கம் பூரீ வீரபாகு தேவர் பஞ்ச பிரதானிகள் பூர்வாசாரம் விசாரணை பண்ணிக்கம்மாளருக்கு கோட்சஞம் பாவாடையும், முக்தீடும் ஏறுகைக்குக் காரணங்கள் உண்டு. வண்ணாரை விட்டுச் செய்வித்தமையால் எங்கள் நாயனார் பூரீ வீரபாகுத் தேவர் எழுத்து யுகாந்தரம் அளவும் நிற்பதாக அருளி கல்வெட்டுவிச்சேன் - மகாலிங்கக் கணபதியே.
கம்மாளர்களின் இழவு வீடுகளில் வழமையாகச் செய்துவரும் பணிகளைச் செய்ய வண்ணார் மறுத்தார்கள். இதன் மூலம்
ஏற்பட்டதகராற்றை விசாரணை செய்த அனுராதபுரத்தை ஆண்ட
61

Page 44
வீரபாகு என்ற பட்டப் பெயருடைய மானாபரணனின் பஞ்ச அதிகாரிகள், விசாரணை நடத்தி, வண்ணாரின் செயல் தப்பானது. தவறானது எனக்கண்டு கம்மாளர்களின் பிரேதங் கட்கு முகமூடி கோட்சஞ (காலுக்கு மேல் போடும் துணியைக் குறிப்பது) மேற்கட்டி பாவாடை இடவேண்டும் எனத் தீர்ப்பளித் தார்கள். அத்தீர்ப்பை அரசன் தன் அழியா ஆணையாகக் கல்வெட்டில் பொறித்தான்.
இச்சாசனம் செய்யப்பட்ட காலத்தில் அது விக்கிரம சால மேகபுரத்தில் அமைந்திருந்தது என அறியப்படுவதால் கம்மாளர் கோயிலோடு தொடர்புடையவர்களாகவும், அதன் சுற்றாடலில் வாழ்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே அவர்கள் விக்கிரம சலா மேகபுரத்தில் நகரத்துவாசி கள் உலோகத் தொழிலாளரான கம்மாளர் ஐஞ்ஞாற்றொருவரான வணிகர்களோடு கூடியவர்கள் என்பது உறுதிசெய்யப்படுகிறது.
62

கம்மாளர்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபட பல காரணங்கள் உண்டு. விஸ்வகர்மாவின் ஐந்து முகத்திலிருந்து தோன்றிய ஐந்து புதல்வர்களின் மனைவிமாரும் சக்திகளே ஆகும். "தாயிற்சிறந்த கோயிலில்லை" என்பதற்கொப்ப அவர்கள் சக்தியை வழிபட்டார்கள். சூரிய சர்ப்ப வழிபாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வழிபாடு தாய் வழிபாடாகும். கலைகளோடு தொடர்பு டைய கலைஞர் சமுதாயம் கம்மாளர்கள், கலைத்தெய்வத்தை
குலதெய்வமாக்கிக் கொண்டார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஒரு போட்டி நடைபெற்றது. அதாவது அழகில் சிறந்தவர் யார் என்பதே அப்போட்டியின் தொனிப்பொருள். பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டிக்கு நடுநின்று தீர்ப்பு வழங்கத் தேவர்கள் முன்வரவில்லை. பிரமனும், விஷ்ணுவும், போட்டிக்குத் தீர்ப்பு அளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டார்கள். எனவே தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பை தேவகுருவான விஸ்கர்மாவிடம் ஒப்படைத்தார்கள். விஸ்வகர்மா நிலைமையின் கடுமையைப் புரிந்துகொண்டு ஒரு நிலைக்கண்ணாடியை உருவாக்கிக் கொடுத்து இதில் உங்களை நீங்களே பார்த்து முடிவைத் தெரிந்து தெளிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார். பரசிவன் பார்த்தார். கண்ணாடியில் தன் உருவம் காட்டிய கோலம் கண்டு தலைகுனிந்தார். பார்வதி கண்ணாடியைப் பார்த்தார். பரவசத்தால் குதித்தார், குதூகலித்தார். போட்டி என்றால் பொறாமை எழாதிருக்காது. அது பரமசிவனையும் பாராது பார்த்திபனையும் பாராது. வெட்கித் தலை குனிந்த
வேதனை ஒரு பக்கம், எதிரியின் கேலிக்கையால் ஏற்பட்ட
63

Page 45
தாக்கம் ஒரு பக்கம் வாட்டி வதைக்கத் தன்னை மறந்தார் பரமன். கோபக்காரனுக்குப் பாவம் புரிவதில்லை, பழிபாவத்திற்கு அஞ்சமாட்டார்கள் என்பதைப் பரமனே காட்டினார், சினந்தார், சீறிப்பாய்ந்தார்.தன்னைப் படைத்த விஸ்வகர்மனுக்கே பிடி சாபம் என்றார். “உன் குலம் என்றும் ஒற்றுமை இன்றி வாழும்" என்றார். சாபத்தைப் பெற்ற சாது சும்மா இருப்பாரா? விஸ்வப்பிரம்மம் அல்லவா? "உடனே பிடி சாபம்" என்றார். இன்று முதல் என்றும்
நீ அரூபியாகவே இருப்பாய் என்றார்.
இவ்வாறு இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாபப் போட்டியைப் பார்த்த பார்வதி, தன்னால் ஏற்பட்ட சாபத்தை தீர்ப்பதற்காக விஸ்வகர்ம குலமக்களைக் காக்கும் காவல் தெய்வமாகத் தன்னை அர்ப்பணித்தார். அன்று முதல் விஸ்வகர்ம குலமக்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபடத்
தொடங்கினார்கள்.
64

தமிழினம் தன் கொடியையும் முடியையுமிழந்துள்ள கால கட்டத்தில் அன்றும், இன்றும், என்றும் கொடியோடு வாழுமினம் விஸ்வகர்மவினமாகும்.விஸ்வகர்மப்பிராமணர்களின் கொடிஐந்து வர்ணங்களைக் கொண்டது. மனு, மாய, துவட்டா, சிற்பி, விஸ்வக்ஞ ஆகிய ஐந்து மூல புருஷர்கட்கும் முறையே வெள்ளை, கருநீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களைக் கொண்டதாகக் கொடி அமைந்தது. இக் கொடி பற்றி ஸ்கந்த புராணம், நகர காண்டத்திலும் மூலஸ்தம்ப நிர்ணயத்திலும் விபரமாக விளக்கப்பட்டுள்ளது. மூலஸ்தம்ப நிர்ணயத்தில்
'மனுஸ்படிக வர்ணஞ்ச LDurt6öTTüD 56J6)iri 60öTC3uT! தவஷ்டருகம் தாம்பரவர்ணஞ்ச சில்பினாம் தூம்ரவர்ணயோ! விஸ்வக்ஞ்ச ஸ்வர்ணஞ்ச பஞ்சசதாக்ய வர்ணயோ! பஞ்சப்ரம் ஹயுதே ரூபம் தவிதீயே ஜன்ம நிர்ணயம்”
என்றும் ஸ்கந்தபுராண நாகர காண்டத்தில்,
“மனுஸ்படிக வர்ணஞ்ச நீலவர்னா மயாஸ்தா த்வஷ்டா ரக்தவர்ணகம் சில்பி தூம்ரவர்ணம் தகூர்கோ ஹேம வர்ணஞ்ச
இந்த ஐந்து வர்ணக் கொடியின் மத்தியில் அநுமானுடைய உருவம் இடம்பெற்றது பற்றி ஸ்கந்தபுராணம் நகர காண்டம் 12ம் அத்தியாயத்தில் கிரேதா யுகத்தில் சில மகாரிசிகள் குமாரக் கடவுளை வணங்கி தேவசிரேஷ்டராகிய விஸ்வகர்மாவுக்கு அநுமக்கொடி எப்படி அமைந்தது எனக் கேட்டார்கள். அதற்கு சிவகுமாரன் " பிரமரிஷி கெளதமர், அகலிகையின் புத்திரியான
65

Page 46
அஞ்சனாதேவியை வாயுதேவன் மணந்து கொண்டான். அஞ்சனை கர்ப்பமுற்றாள். கர்ப்பத்திலிருந்த சிசு பிறக்கத் தாமத மாகியது. தாய்க்கு வேதனை அதிகரித்தது. மனைவியின் துன்பநிலையைக் கண்ட வாயுதேவன், மும்மூர்த்திகளையும் பிரார்த்தித்து வேண்ட அவர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் விஸ்வகர்மாவைத் தியானித்து தன் குறையைக் கூறினார். விஸ்வகர்மா நினைவிழந்து கிடந்த அஞ்சனாதேவியை சிரஞ்சீவி மூலம் மூர்ச்சை தெளிவடையச் செய்து கர்ப்பத்திலிருந்த சிசுவை, வெளியில் வரத்தாமதம் ஏன் என வினாவினார். அதற்கு, அச்சிசு விஸ்வர்காவை வணங்கி “என்னைச் சுமந்துள்ளதாயின் கருவறையில் நான் நிர்வாணமாக இருக்கின்றேன். அதனால் என் தாயின் யோனி வழியே நிர்வா ணமாக வரமாட்டேன். எனக்குப் பொன்னாலான கெளமீனம், பொற்பூநூலும், குண்டலங்கள், கமண்டலம் ஆகியவற்றைத் தந்துதவ வேண்டும் என்றும், என்னுடல் மிகவும் பருத்திருப்பதால் என் தாய்க்கு மிகவும் வேதனை இல்லாதபடி நான் வெளிவர என்னுடலைச் சுருக்கவேண்டும். அது உங்கள் ஒருவராலே முடியும். அப்படி நீங்கள் செய்தால் நான் நன்றி மறவாது о-Iѣ. களுக்கு ஏவல் செய்வதுடன் உங்கள் கொடியில் அமர்ந் திருப்பேன்’ எனச் சத்தியம் செய்தார். அதைக் கேட்டவிஸ்வகர்மா அவ்வாறே செய்தார். இதன்படியே அநுமன் கொடி விஸ்வகர்மாக் களுக்கு உரியதானது என்றார்.
இலங்கை கோட்டை மன்னன் புவனேகபாகு தன் முடிசூட்டு விழாவை நடத்தி முடித்த பூரீதேவநாராயண ஆச்சாரி என்பவ ருக்கு அநுமன் கொடியை விருதாகக் கொடுத்தான். (இது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.)
இராமர் அணை
இராமர் தன் மனைவி சீதையைத் தேடி இலங்கைக்கு வரவேண்டி ஏற்பட்டது. அதற்கு கடலைக் கடக்க ஏற்பட்டதால் இலங்கைக்கும் இந்தியாவிக்குமிடையில் அணை கட்ட ஏற்பாடு செய்தார். அணையைக் கட்ட ஒரு விஸ்வகர்மாவின் உதவி தேவைப்பட்டது. அவர்கட்கு நள விஸ்வகர்மா உதவிக்கு முன் வந்தார். அநுமான் மலைகளைப் பிடுங்கி வந்து கொடுக்க அதை நளன் சாந்தகப்பையால் வாங்கிக் கொண்டே இருந்தார். தான்
66

இத்தனை பாடுபட்டுக் கஷ்டப்பட்டு மலைகளைப் பிடுங்கிவரத் தன் இடதுகையால் வாங்கித்தன்னை அவமதிப்பதாக அநுமான் உணர்ந்தார். இம்முறைப்பாட்டை இராமரிடம் கூறிக்குறைப் பட்டார். இராமனுக்கோ அணை கெதியில் முடியவேண்டும். அநுமான் கோபித்துவிட்டால் அணை வேலை தாமதமாகிவிடும் நளவிஸ்வகர்மாவையும் நோக முடியாது என இருவரையும் சமாதானம் செய்து அணையை முடிக்க ஏற்பாடு செய்தார். அன்று மாலை நளனும் அநுமானும் ஆற்றுக்கு நீராடச் சென்றார்கள்.
நீராடப் போகும் முன் தன் கமண்டலத்தைக் கழற்றி ஒரு மரத்தடியில் வைத்தவிட்டு நீராடினார் நளன். நீராடி முடிந்தும் கமண்டலத்தை மறந்து விட்டதுபோல விட்டுவிட்டுவந்தார். இருப் பிடம் வந்ததும் கமண்டலத்தை மரத்தடியில் விட்டுவிட்டு மறந்து வந்ததாகவும் அதைப்போய் எடுத்துவரும்படி அநுமானிடம் கூறினார். அநுமான் ஆற்றங்கரைக்குச் சென்றுகமண்டலத்தைக் கண்டு எடுக்க முயற்சி எடுத்தார். எவ்வளவுதான் முயன்றும் கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. மலைகளையும், மரங்களை யும் வேரோடு பிடுங்கி வந்த அநுமானுக்கு நளனின் கமண்ட லத்தை எடுக்க முடியவில்லை. தன்பலம் அறியாது அம்பலம் ஏறிய தன்னிலையை எண்ணிவேதனைப்பட்டார். பூர்வஞான பலத்தால் தான் தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவர முடியாதபோது தன்னை வெளிவர உதவி ஒத்தாசை புரிந்த விஸ்வகர்மாவேநள விஸ்வகர்மா என உணர்ந்தார். தான் அகந்தையால் குறைப் பட்டதை எண்ணி வேதனைப்பட்டார். தன் தவறை உணர்ந்து நளவிஸ்வகர்மாவிடம் மன்னிப்புக் கேட்டார். இது இராமாயணம் தரும் கருத்து. இதையொட்டி ஒரு நாடோடிப்பாட்டு பின்வருமாறு கூறுகின்றது.
உலகம் பிறந்தது உன்னால் ஊரும் கணக்கு உன்னால் கலகம் பிறந்தது உன்னால் கடவுளானது உன்னால் ஓங்கி அநுமன் உதயகிரி பிடிங்கி வர வாங்கி இடது கையால் வைத்தவா ஆவரணமனைத்தும் உட்ன்னால் அழகுமணித்தாலி உன்னால் கோபரணச் செங்கோல் கொடுப்பது உன்னால் யாளிபரி ஏறி வரும் காளிவரம் பெற்ற கண்ணாளா!
67

Page 47
டில்லி நகரை அடுத்திருந்த அவந்தி நாட்டில் காந்தக் கற்க ளால் கட்டப்பட்ட மதில்களைக் கொண்ட கோட்டைகளால் சூழப்
பட்ட “மாந்தை” நகரத்தில் விஸ்வகர்ம பிராமணர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
விஸ்வபுராணம் பஞ்சகிருத்திய காண்டம் 4ம் செய்யுளில் "சித்திர மேடை சூழ்ந்த டில்லி நகரடுத்தவத்திரத்தின் மிக்கள ஊசிக் காந்தத்தினாலே சுற்றிலுமகல நாலைந்து யோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத் தினத்தில்” என்று கூறப்பட்டுள்ளது.
இக்கோட்டை மதில்கள் காந்தக் கற்களாலானபடியால் மாற்றார்களின் ஆயுதங்கள் பயனற்றுப்போயின. காரணம் காந்தக் கற்கள் ஆயுதங்களைத் தன் வசம் இழுத்து அழித்து விடுவதால் காந்தக் கோட்டையை அழிப்பது இலேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. இருந்தும் மாந்தைக்கருகிலிருந்த பத்தலகிரி என்னும் பகுதியை ஆண்ட ஹிரி என்னும் மன்னன் காந்தக் கோட்டையைப் பிடிப்பதிலும் அழிப்பதிலும் வன்மம் கொண்டி ருந்தான். பலமுறை படை நடத்தினான். பகல் பொழுதில் படை நடத்திப் பார்த்தான். விஸ்வகர்மாக்கள் சூரியனின் கதிர்களை திருப்பி எதிரிமேல் பாய்ச்சி ஒடவிட்டுத் துரத்தினர். இரவுப் பொழுதில் சந்திரனின் கதிர்கள் எதிரிகள் மேல் பாயவிட்டு துரத்தி அடித்தனர். இவ்விதமான மோசமான தாக்கங்களால் பலமுறை பலமாகப் பாதிக்கப்பட்ட பத்தலஹிரி மன்னன் தான தரும தண்டத்தால் முடியாததைச் சூழ்ச்சியால் சாதிக்க முன் வந்தான். கண்ணைக் கவரும் வண்ண ஒவியங்களான ஒற்றாட லில் கைதேர்ந்த கன்னிகள் தேர்ந்தெடுத்து மாந்தை நகருக்குள் அனுப்பி வைத்தான். பெண் என்றால் பேயும் இரங்கும் சூழலில் சில விஸ்வகர்ம வாலிபர்கள் வனிதையர்களின் வாய் வீச்சிலும் விழிவீச்சிலும் விழுந்து விட்டார்கள். கண்ணாலே பேசி தன்
68
 

கட்டழகு மேனியைத் தொட்டுச் சுகம் பெற மெத்தையாக்கியதால் காந்தக் கற்களின் காந்தத்தை நிறுத்தும் இரகசியத்தை போதையில் புலம்பிவிட்டார்கள் இளைஞர்கள். இளைஞர்களின் அற்பஆசை ஆயிரம் கோடித் தத்துவத்தை அழித்தது போல காந்தக் கோட்டை அழிந்தது. விபரீதம் முற்றிவிட்ட நிலையில் காந்தக் கோட்டைக்குள்ளிருந்த அறிஞர்கள், ஆற்றல் அறிவு வாய்ந்த சான்றோர்கள், சரித்திரநாயகர்கள் விமானம் மூலமும், இயந்திரப் பொறிமூலமும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் மட்டும் சுரங்கப் பாதை மூலம் வெளிவந்து அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள மாரண பீஜாட்சர உச்சாடனம் செய்து பத்தலஹிரியையும் நகரையும் அழித்தார்கள். இவ்வாறுடில்லி அவந்திநாட்டு மாந்தை அழிந்தது.
சோழநாட்டு மாந்தை
தஞ்சாவூர், ஜில்லா, நன்னிலம் தலுக்காவில் மாந்தை நகர் இருந்திருக்கின்றது. இந்த மாந்தை நகரிலும் விஸ்வகர்ம மக்களே வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டு மாந்தையிலிருந்தே திருகோணமலை கோணேசர் ஆலயம் கட்டுவதற்கு ஆசாரிமார் வந்ததாகக் கோணேச்சர் கல்வெட்டுக் கூறுகின்றது. “சோழவள நாட்டில் மாந்தையம்பதியார் அக்கசாலை தலைவர்மார் இவர் களைக் கொண்டு குளக்கோட்டு மகாராசாசிரிகைலாயா சிலம்பி லிருந்த ஆலயங்களும் சகல திருப்பணிகளையும் திருக்குளத்து மதகும் விதிமறையாயச் செய்த ஆசாரிமார்களான உலகுரு ஆச்சாரி, சித்திரகுருவாரிச்சாரி, வேதகுருவாச்சாரி, அட்சணா குருவாச்சாரி, வாமதேவகுருவாச்சாரி ஆகியோர். இவர்கள் 5பேரும் மனதில் நினைத்தபடி கையால் செய்த விசித்திர குருவாச்சாரிமார் எனக் கூறப்பட்டுள்ளது.
மாந்தைவாசிகளின் மகிமை
மாந்தையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வல்லவர்களான கம்மாளர்களாகும். அவர்கள் உலோகங்களிலும் கல்லும் மரத்திலும் பல ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்த சாதனையாளர்கள்.
69

Page 48
இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கதிரை மலையிலிருந்து ஆட்சி செய்த குமண மன்னன் தான் தவம் செய்யும் நோக்கோடு காட்டுக்குப் போக அவன் தம்பி ஆட்சிக் கட்டிலேறினான். ஆட்சி செய்த குமணனின் தம்பி தன் தமைய னின் தலையைக் கொண்டு வருபவர்கட்கு 1000 பொற்காசு தருவதாகக் அறிவித்தான். வறுமையிலும் கொடுமையிலும் வாடி வதங்கிய ஒப்பிலாமணிப்புலவர் தன் வறுமையைப் போக்கவும் குமணனைக் காக்கவும் இதைப் பயன்படுத்த முனைந்தார். குமணன், அரசன் மட்டுமல்ல கொடை வள்ளலும் கூட. எனவே காட்டுக்குச் சென்று குமணனைக் கண்டார். தன் வறுமையைக் கூறி வாழ வழி செய்யுமாறு கேட்டார். குமணன் புலவரின் வறுமையைப் போக்க முடியாத நிலையில் தானிருப்பதை நினைத்து வேதனைப்பட்டான். இவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது தன் தம்பியின் அறிவிப்பு நினைவில் வந்தது. உடனே புலவரை நோக்கி ஐயா நான் மன்னனாக இருக்கும்போது நீங்கள் வரவில்லை. பொருளனைத்தையும் துறந்து முடியையும் துறந்து தவம் செய்யக் காடு வந்தபோது வந்தீர்கள். என்னிடம் உள்ளது உயிரொன்றே. என் தம்பி என் தலையைக் கொண்டு தன்னிடம் சேர்ப்பவர்கட்கு 1000 பொற் காசுகள் தருவதாகக் கூறியுள்ளான். நீங்கள் என் தலையைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ஆயிரம் பொற்காசுகளைப் பெற்று வறுமையைப் போக்கி வாழ்வாங்கு வாழ்க என்றான்.
புலவர் அதிர்ச்சியடையவில்லை. குமணனை நோக்கி ஐயா! உங்கள் தலையை எனக்குத் தந்து விட்டீர்கள். மீண்டும் வந்து பெறும்வரை காத்திருக்க வேண்டியது உங்கள் கடமை எனக் கூறிவிட்டு உடனே மாந்தைக்குச் சென்று விஸ்வகர்ம ஆச்சாரி மாரைக் கண்டு தத்துருவமான குமண மன்னனின் தலை ஒன்றைச் செய்து தரும்படி வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆச்சாரி உடனே குமணனின் தத்துரூபமான தலை ஒன்றைச் செய்து கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு குமணனின் தம்பியிடம் சென்று வாதிட்டார். தமையனின் தலையைக் கண்டதம்பிதமையன் உண்மையில் இறந்துவிட்டான் என நினைத்து வேதனைப்பட்டு அழுது புரண்டான். ஆட்சியை
70

விட்டகன்றான். பின் புலவர் காடு சென்று குமணனை அழைத்து வந்து தனக்கு வழங்கப்பட்ட தலைக்கு முடிசூட்டினார். மாந்தை வாசிகளின் கைத்திறனை மெச்சி,
"மாந்தையிலே வாழும் மகுடத்தியாகியுனக் கேந்து தழும் போவிரண்டுள்ளது - வேந்தர் முடித்தழும்புன் காலிலே முத்தழிழருக்கீயும் படித்தழும்புன் கையிலே பார்."
என பாராட்டிப் புகழ்ந்து பாமாலை செய்தார். தருமம் தலை காக்கும் என்ற பழமொழி குமணன் வரலாறு மூலம் கிடைத்த தாகும்.
பெரும் பணக்காரராக இருந்து பணத்தைத் துறந்து முற்றும் துறந்த முனியான பட்டினத்தார் "ஒரு நான்கு சாதிக்கும் மூவகைத் தேவர்கட்கும் உன் பார்க்கும் திரு நாளும் தீர்த்தமும் வேறுள்ளதோ - வந்திசைமுகனார் வருநாளில் வந்திடும் மாந்தைக் கண்ணாளர் வகுத்தல்லால் குருநாதர் ஆனை கண்டீர் பின்னையேதுக் குவலயத்தில்"
எனப் பாடி மாந்தைக் கண்ணாளர்களின் முக்கியத்தவத்தை முழங்கியுள்ளார்.
71

Page 49
இலங்கையில் திருகோணமலையில் சுமார் 400 ஆண்டு களுக்கு முன் பூரீ கோணேசர் - மாதுமை ஆலயம் கட்டப்பட்டது. மேற்படி ஆலயத்திலுள்ள கல்வெட்டில் கலியுகம் 512ம் ஆண்டு அவ்வாலயம் கட்டப்பட்டது. எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இவ்வாலயத்தைக் கட்டிய ஐந்து ஆச்சாரிமாருக்கும் அஞ்சவன விதைப்புத்தரையும் கொடுத்து எக்காலமும் கோயிற் றொழும்பு களைச் செய்திருக்க வேண்டும் என்றும் கோயிலுக்குள் இவர் கட்கு ஒரு தலைமையும் கற்பித்தபடி அறிக என்றுள்ளது. சுமார் 430 ஆண்டுகட்கு முன் ஆட்சிசெய்த குளக்கோட்டன் இவ்வால யத்தின் திருப்பணி வேலைகளைச் செய்ததாக வரலாறு கூறுகிறது.
1379ம் ஆண்டளவில் இலங்கையை ஆண்ட பண்டிதர் பாராக்கிரமபாகு என்னும் மன்னர் இந்தியாவிலிருந்து "புலவத் யுத்திரா" என்ற புகழ் பெற்ற சிற்பாச்சாரியரை வரவழைத்து மன்னேசுவரா என்ற பெளத்த ஆலயத்தைக் கட்டி வைத்ததாகவும் மேற்படி சிற்பாச்சாரியாரின் திறமையை மதித்து முதுகுலராஜ கருணாதி வீரவர்த்தன“விஸ்வகந்தாச்சாரியர்” என்ற பட்டத்தை வழங்கியதாகவும் தெரிகின்றது.
1664ம் தேவசிம்ம மூலாச்சாரியார் என்பவரை இந்தியாவி லிருந்து அழைத்து அவர் மூலம் பல ஆலயங்கள் கட்டியதாகவும் அவர் மன்னருக்கு தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றையும், மணியார்க்கும் கண்ணாடி ஒன்றையும், பரிசாக வழங்கினார். அதைப் பெற்ற மன்னர் அவர் வேலைத் திறனைப் பாராட்டி அவருக்கு “மண்டல வல்லி" என்ற பட்டத்தையும் "மங்கல நாம” என்ற கிராமத்தையும் வழங்கியதாக கூறப்படுகின்றது.
72
 

இலங்கை மன்னர்கள் மூலம் மானியங்கள் பெற்றவர்கள்:
ஆண்டுகள்
1279
1556
1640
1664
1708
1763
1772
1790
தேவநாராயண ஆச்சாரியார் ஒரு மாவட்டத்தில் தலைவராக
பெயர்கள்
விஸ்வகர்மாகந்த ஆச்சாரி உல்லந்த பிடிய மூலாச்சாரி சின்கா நாராயணா பாதோடாழரீ சத்துநாய்டே ஆபரணாச்சாரி வடுவவார தேவசின்கா மூலாச்சாரி முதலீவுண்ட சிம்மாச்சாரி எலதேனியா ஆச்சாரி
பணியாற்றி அநுமக் கொடியைப் பரிசாகப் பெற்றார்.
விஸ்வகர்மா ஒருவர் இலங்கையரசியலில் பெரும் பதவிகள் பார்த்து போரிலும் வெற்றி பெற்று மக்களுக்காக குளங்கள், சாலைகள் ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்காக அரசு அவருக்கு மகா முதலியார் என்ற பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துக் கெளரவித்தது.அவரின் இயற்பெயர் விளங்கவில்லை.
அவரை மகா முதலியார் என்றே சரித்திரம் கூறுகின்றது.
gig Tjid "Viswakarmaltis Decendams' by Alfred Edward
RoberlS.
73

Page 50
இலங்கை நகரை அமைத்தது போல விஸ்வகர்மா அன்று
பல நகர்களை அமைத்தார். விண்ணில் விண்ணவர்கட்காகச் சொர்க்கத்தை அமைத்துக் கொடுத்தார். கிருஷ்ண பரமாத்துமா வேண்டிக் கொண்டதற்கிணங்க துவாரகாபுரி என்னும் பட்டணத்தை உருவாக்கிக் கொடுத்தார். தேவேந்திரனுக்காக அமராபதி நகரை உருவாக்கிக் கொடுத்தார். தருமபுத்தர் தங்கட்கு ஒரு நகரை உருவாக்கித் தருமாறு பகவான் கிருஷ்ணனை வேண்ட, கிருஷ்ணன் தேவேந்திரன் விஸ்வகர்மா இந்திரப் பிரஸ்த நகரை அமைத்தக் கொடுத்தார் எனப் பாரதம் கூறுகின்றது.
திரிபுரத்துக்குச் செல்ல இரதம் வேண்டும் என பரமசிவன் வேண்ட விஸ்வகர்மா அருமையானதொரு இரதத்தை செய்து கொடுத்தது பற்றி சிவமகா புராணம் கூறுகிறது.
வரலாற்றுக் காலத்திற்கும் முன்னர் நாகரிகச் சிறப்பும் கலை கால கலாசார மேம்பாடும் உடைய ஒரு இனம் இலங்கையில் வாழ்த்தது. அவர்களை நாக இனத்தைச் சேர்ந்த விஸ்வகர்ம மக்கள் என்று சரித்திரம் அடையாளம் காட்டுகிறது. விஸ்வகர்மா வின் வழித் தோன்றல்கள் அவர்கள்.
அந்த விஸ்வர்கமா பற்றி வடமொழி இலக்கிய வரலாறு பின்வருமாறு கூறுகின்றது.
“ஏக தெய்வம் கடவுள் எல்லோருக்கும் ஒரே இலக்கணம் உடையவர் அவர் தேவர். ஒளியுடையவர் உலகில் ஒழுங்கையும், தருமத்தையும் நிலை நிறுத்துபவர். அறநெறியில் ஒழுகுபவர்க்கு நண்பர் அறிஞர் பலராகக் கூறுவர். இப்பரம்பொருள் விஸ்வகர்மா (எல்லாவற்றையும் படைப்பவர் எனப்பட்டார் இவரே "பிரஜாபதி”
74
 
 

உலகைக் காக்கும் தர்மம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார் என்று கூறுகின்றது.
அந்த விஸ்வகர்மாவின் வழித்தோன்றல்கள்தான் மன்னாரில் உள்ள மாந்தையை அமைத்து ஆட்சிசெய்தவர்கள். மாதோட்டம் இவர்களால் கட்டப்பட்ட பெருந்துறைமுகமாகும். மாந்தையின் முக்கியத்துவம் பல்வேறு துறைகளில் அதிகரிக்க அதிகரிக்க விஸ்வகுலக் கலைஞர்கள் மாந்தையை விட்டகன்று வேறு இடங் கட்கு செல்ல வேண்டி வந்தது.
அந்தச் சூழலில் மாந்தையில் இருந்து அநுராதபுரம் செல்லும் பாதையில் 16மைலுக்கு அப்பாலுள்ள தாராபுரம் என்னும் இடத்தில் இக்கலைஞர்கள் குடியேறி வந்தார்கள். தாராபுரம் இயற்கை ஏழில் கூடிய இடமாக இருந்தது.
இந்த தாராபுரம் தற்சமயம் செட்டிகுளமென அழைக்கப் படுகின்றது. பொற்தொழிலாளர்கள் நிறைந்து வாழ்ந்த பகுதி இதனால் அங்கே பல நாட்டவர்களும் வந்து பொற் தொழிலாளர் களின் அற்புதமும், அழகும் நிறைந்த பொன், வெள்ளி ஆபரணங் களை வாங்கிச் சென்றார்கள்.
அத்தோடு அங்கே வாழ்ந்த விஸ்வகர்ம அறிஞர்கள் தங்கள் தொழிலை தம்பிற்சந்ததியினருக்கு சாஸ்திர ரீதியாகவும்,தொழில் நுட்பத்தோடும் பயிற்றுவதற்கு ஒரு சிற்பக் கலைக்கழகத்தை ஏற் படுத்தினர்.
இக்கலைக்கழகத்தில் விசபெருமானுக்குரிய பல்வேறு அற் புதமான அருள் வடிவங்கள் துருவித்துருவி ஆராயப்பட்டு கருங் கல்லிலும், பொன்னிலும், பஞ்சலோகத்திலும் வார்க்கப்பட்டன.
இக்கலைக்கழகம் உளி பிடித்து வேலை செய்யும் வாய்ப்பை இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்த மாணவர்கட்குமட்மன்றி உலகின் பாகங்களில் இருந்துவந்த மாணவர்களுக்கு கலையைக் கற்க வாய்ப்பளித்தது. தென்இந்தியாவில் பல பாகங்களில் இருந்து விஸ்வகுல மக்கள் இங்கே வந்து கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார்கள்.
நுண்கலைச் செல்வம் ஒன்றின் மூல கேந்திரமாக விளங்கிய தாராபுரத்தின் உடக்கெல்லையில் பாலாவி ஆற்றோரத்தில் உயர்ந்த மதில்களும் பசும் சோலைகளுக்கு மத்தியில் ழரீ சந்திர சேகரமூர்த்திக்கொரு ஆலயமும் ஈழமாதேவி பாண்டியர் கோன் பாவைக்கோர் ஆயலமும் அமைந்துள்ளது.
75

Page 51
லங்காபுரிவேந்தனாகிய மாணவர்மனும் அவன் மூத்த மகனும் ஆனுராதபுரத்தில் இருந்தார்கள். அவனுடைய மனைவியும் இரண்டாவது மகனாகிய கீர்த்தி சிவனும் தாராபுரத்தின் இருந்த இரண்டாவது அரண்மனையில் வாழ்ந்து வந்தார்கள்.
தாராபுரத்தில் இருந்த தேவியின் விருப்பத்துக்கிணங்கவே மாணவர்மன் சந்திரசேகர மூர்த்தி ஆலயம் கட்டுத்தான். இந்த ஆலயத்தை கட்டியவர்கள் சிற்பக் கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான். அவர்களின் அற்புதமான கைத்திறத்தைக் கண்ணுற்ற மன்னன்.
உங்கள் கரங்கள் எலும்புகளும் தசைகளும் கொண்ட சாதாரண மனிதர்களின் கரங்களல்ல. மந்திரங்களும் தந்திரங் களும் ஜாலங்கள் செய்யும் மாந்தை நகர் விஸ்வகர்ம சிங்கமாகிய துவட்டா முனிவரின் தத்ரூபமான கரங்களே” எனப் பாராட்டி உற்சாகப்படுத்தி அவர்களுக்கு வெகுமதியும் அளித்தான்.
அவற்றுடன் மட்டும் மன்னன் திருப்திப்படாது விஸ்வகர்மகுல மாணவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று உண்டியும், உறைவிடமும் கொடுத்து அநுராதபுரத்தில் ஒரு சிற்பக் கலைக் கழகம் அமைக்க வேண்டிய பொருள் அனைத்தும் வழங்கும்படி அமைச்சருக்கு கட்டளை இட்டான். இதன்படி அநுராதபுரத்திலும் ஒரு சிற்பக்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
இந்தச் சிற்பக்கலைக்கழகத்தின் உதவியுடன் அரசன் பல ஆலயங்களையும், புத்தவிகாரைகளையும் அமைத்தான். இன்று நாட்டின் அரும்பெரும் செல்வங்களாக நிற்பவை அனைத்தும் விஸ்வகர்மகுல மக்களின் கைவண்ணங்களாகும்.
உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு கவர்ந்து இழுக்கும் பழைமையும், பெருமையும், அற்புதங்களும் நிறைந்த கட்டி டங்கள், சிரிக்கும் சிகிரியாச் சித்திரங்கள், கண்ணை மயக்கும் மலைக் கோயில்கள், சித்தத்தை சிந்திக்கத் தூண்டும் சிற்பங்கள் அத்தனையும் விஸ்வகர்மகுல மக்களின் உழைப்பின் சின்னங்கள். _ நாட்டுக்கு காலத்தால் அழியாத கலைச் செல்வங்களை ஆக்கித்தந்த கலைஞர் சமுதாயம்.
இன்று காலச் சூறாவளியில் சிக்கி சீரழிந்து நிற்கின்றது. காப்பாற்ற யாருமில்லை. காப்பாற்ற வேண்டிய அரசு கவலை யற்றிருப்பதால் கலைஞர் காலனின் பாசக்கயிற்றை நோக்கி ஏங்கியுள்ளனர்.
76

ஆதிகாலத்தில் ஆலயங்களைக் கட்டி மூல விக்கிரங்களைச்
செதுக்கி ஆலயங்களில் வைத்து ஆலயங்களை பரிபாலித்தவர்கள் விஸ்வகர்ம மக்களே. விஸ்வகர்ம முனிவர்களிடம் பூப்பறித்துக் கொடுத்து எடுபிடியாக வந்த ஆரியர்கள் ஆச்சாரிமாரின் மறை மொழியான சமஸ்கிரதத்தைக் கற்றுப் பூசாரி வேலையைத் தமதாக்கினார்கள். அதற்குச் சில அரசர்களும் துணை போனார்கள். அதனைத் தொடர்ந்து ஆச்சாரிமாருக்கும் ஆரியருக்கும் இடையில் பல வழக்குகள் கோட்டில் இடம் பெற்றது. அதில் எந்த வழக்கிலும் ஆரியர் வெற்றி பெறவில்லை.
1. சித்துார் ஜில்லா நீதிமன்றத் தீர்ப்பு:
1814 வருடம் இவ்வழக்கு பண்டிதர் மார்க்க சகாய ஆச்சாரி களுக்கும் ஆரியரான பஞ்சாயக் குண்டையருக்கும் இடையில் நடந்தது. விடையம் விஸ்வகர்ம மக்கள் திருமணத்திற்கான சமயச்சடங்கு செய்யத் தகுதியில்லை என்று ஆரியர் வாதிட் டார்கள். திருமணத்திற்கான சமயச் சங்குகளை விஸ்வகர்ம புரோகிதர்கள் செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (இது சித்துார் கோட் தீர்ப்பு) என நூலாக வந்துள்ளது.
2. சேலம் ஜில்லா நீதிமன்றத் தீர்ப்பு (1843ம் வருடம்):
சுப்பராயன், ராமசாமி, படையாச்சி முதலிய 8 பேர்
இராமலிங்க ஆச்சாரியின் பூநூலை அறுத்தெறிந்ததை குற்றம்
என்று தீர்ப்பளித்து நஷ்டஈடு வழங்கக் கட்டளையிட்டது.
3. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு (1885ம் வருடம்):
திருக்கோயில் கர்ப்பகிரகத்திற்குள் விஸ்வகர்ம மக்கள்
77

Page 52
செல்வதற்கும் பூசை செய்வதற்கும், அபிஷேகம் செய்வதற்கும், உரிமையுண்டு எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
4. மசூலிப்பட்டணம் அபிஷேகத் தீர்ப்பு (1894ம் வருடம்):
சிவகோடி வீரபத்திரன் என்னும் விஸ்வகர்மப் பிராமணர் மகாசிவராத்திரியன்று காசி விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் பிரவே சித்து லிங்க அபிஷேகம் செய்ததால் லிங்கம் பரிசுத்தம் இழந்து விட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
5. வேலூர் நீதிமன்றத் தீர்ப்பு (1938ம் வருடம்):
வாதிவெங்கடசுப்பாச்சாரியார் என்ற விஸ்வகர்மப்பிராமணர் புரோகிதம் செய்யும் வைதீக காரியங்களில் பிராமணர்கள் தலை யிடக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. VA
இன்னும் ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புக்களும் உண்டு. முக்கியமான தீர்ப்புகளே இங்கே தரப்பட்டுள்ளன.
நன்றி "விஸ்வகர்மா”
78

"தட்டானைத் தொட்டவன் கெட்டான்" என பழமொழியைச் சிலர் வழக்கில் கொணர்ந்து விஸ்வகர்ம மக்களைக் கேலி செய் வதை நாம் இன்றும் காண்கின்றோம். இது அறியாமை மட்டு மல்ல ஒரு ஆணவமும்கூட இதைப் படித்தவர்கள் முதற் கொண்டு பாமரர் வரை கையாண்டு வருவதைக் காணக்கூடிய தாக இருக்கின்றது. இதன் உண்மை என்ன? "தட்டானைத் தொட்டவன் கெட்டான்" என்ற வார்த்தை முற்றும் பிழையான தாகும். அதன் முழுமையான தோற்றம் “தட்டானைத் தொட்ட வனைத் தொட்டவனும் கெட்டான்" என்பதேயாகும். இது மார்க்கண்டேயர் புராணத்தோடு தொடர்புடைய பழமொழி இதை இடையில் வெட்டி குறுக்கி பழமொழியாக்கியது சில
வசைபாடும் வம்பர்களின் வழியாகும்.
எனவே இப்பழமொழியின் கருத்தினை, உண்மைத் தன் மையை நாம் ஆய்வு செய்வோம். மார்க்கண்டேயர் தன் 16 வயதுடன் தன் ஆயுள் முடிவதை அறிந்துகொண்டவர். தான் தொடர்ந்தும் பூமியில் வாழ ஆசைப்பட்டார்.
அதற்கான வழியை நாடி நல்லவர்களை, வல்லவர்களைத் தேடி ஓடினார். நிறைமொழி மாந்தர்கள் சிவனைத் தொழுதால் இடைக்கால இடர்கள் நீங்கும், நீடித்த ஆயுள் கிடைக்கும் என்றார்கள். தேனினிலும் இனிய இச்செய்தி அவர் சிந்தையில் பதிந்தது. சிவனே கதி என லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். மார்க்கண்டேயரின் காலமும் நேரமும் நெருங்கக் காலன் கயிற்றோடு வந்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாட் டுக்குக் கட்டுப்பட்ட காலன் தன் பாசக் கயிற்றை மார்க்கண்டே யரை நோக்கி வீசினான். பாசக் கயிறு லிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயர் கழுத்திலே விழுந்தது.
79

Page 53
  

Page 54
ஆகவே விஜயனும் அவன் தோழர்களும் பெண்ணெடுத்தது மாந்தையில்தான் அவர்களும் அவர்களோடு வந்த ஒவியர்களான விஸ்வகர்ம மக்களின் 1000 குடும்பங்கள் மூலமே சிங்கள இனம் பரவியது. இதன் பின்பு கூட பெளத்தத்தை இந்த நாட்டுக்கு இறக்குமதி செய்த தேவநம்பியதீசனின் தாயும் மூத்த சிவனின் மனைவியும் கூட மாந்தை இளவரசிகளேயாகும்.
"விஜயன் மூலமே சிங்கள இனம் தோன்றியது என வரலாறு கூறுவதால் விஜயன் ஒரு திராவிடன். விஜயனோடு வந்தவர்களும் திராவிடர்கள். விஜயனோடு முதலில் சேர்ந்தவர்களும் பின்னர் சேர்ந்தவர்களும் திராவிடர்கள். எனவே அடிப்படை நோக்கில் சிங்களவர் திராவிடரேயன்றி ஆரியரல்ல என அறிஞர் W. F. குணவர்த்தனா கூறுகின்றார்.
எனவே சிங்கள இனத்தின் மூதாதையர் விஸ்வகர்ம மக்களில் ஒரு பகுதியினர் ஆகும். இதன் அடிப்படையில் விஸ்வகர்ம மக்களின் குல தெய்வமான காளியின் சிங்கத்தை இவர்கள் தங்கள் குலச் சின்னமாக ஏற்றுள்ளார்கள்.
82

ஆபரணங்கள் ஆடம்பரச் செலவை ஏற்படுத்துபவை அனா வசியப் பொருள், பணம் படைத்தவர்கள் தங்கள் பணச் செருக்கைக் காட்டும் செயல் என்றெல்லாம் வாதிடுவோரை நாம் இன்றும் காண் கின்றோம். இத்தகையோர் எட்டாத பழம் புளிக்கும் என வாதிடும் நரியின் பண்பினர். ஆபரணக்கலை ஒரு ஆட்ம்பரக்கலையல்ல. அது ஒரு அழகுக்கலை, அற்புதக்கலை, தெய்வீகக் கலை, அருங் கலை இன்னும் சொன்னால் நம்முடம்பிலே ஏற்படுகின்ற, ஏற்பட இருக்கின்ற நோய்களைத் தடுக்கும் ஆக்குபஞ்சர் மருத்துவக்கலையாகும்.
ஆபரணங்களில் அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அப்புள்ளிகள் நம்முடம்பிலுள்ள சிறப்புப் புள்ளிகளை அழுத்தித் தூண்டுவதால் சக்தி நட்டம் உடலில் சீரடைகின்றது. இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்படுகின்றது. நோயுள்ளவர்கள் நோயன்று குணமாவார்கள். நோயற்றவர்கள் மேலும் பயமின்றி ஆரோக்கி யமாக இருப்பார்கள். எனவே ஆபரணங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் குடும்ப வைத்தியராகும்.
இந்தச் சிறப்புப் புள்ளிகள் எவ்வாறு தூண்டப்படுகின்றது. நாம் அணியும் அணிகலங்களிலுள்ள முனைகளின் அழுத்தத்தால் தூண்டப்படுகின்றது. அக்குபஞ்சர் முறை உடலிலுள்ள முக்கிய உறுப்புக்களின் பாகங்களில் ஊசியைக் குத்துவதன் மூலம் உடலி லுள்ள சிறப்புப்புள்ளிகளை இயக்கி நோயை அகற்றுவதாகும்.
அதே வேலையைத்தான் இந்த ஆபரணங்களும் செய் கின்றன. இத்தகைய பெருங்காரியத்தை விளம்பரமில்லாது அழகுக்கலைக்குள்ளே புகுத்தி நம்முடலைப் பாதுகாத்திருக்கும்
83

Page 55
திறமையை எப்படிப்பராட்டுவது, எவ்வாறு போற்றுவது. அன்றைய விஸ்வகர்ம மக்கள் இன்றைய கம்மாளர்கள் எனக் கூறப்படுவோர் எத்தனை சிறப்பு வாய்ந்த உடற்கூறு வைத்திய நிபுணர்களாக நுட்பயில்பினராக இருந்திருக்கிறார்கள். மக்களின் நலத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டியுள்ள நுண்ணறிவு மெச்சத்தக்கது போற்றத்தக்கதாகும்.
எந்த விடத்தில் எந்த விதமான நகையை அணிவதன் மூலம் உடலில் அந்த இடத்தின் மறைவிலிருக்கின்ற சிறப்புப்புள்ளிகளை அழுத்தி இயங்க வைக்கும் என்ற நுண்ணறிவை ஆபரணத் தொழிலாளர்கள் நன்கு அறிந்தே அத்தகைய ஆபரணங்களை அவைக்கேற்றவையிலும், அணிவதன் மூலம் அழகுக்கு மெரு கூட்டும் வகையிலும் ஆபத்துக்கு அடவு வைத்துப் பணம் பெறும் வகையிலும் செய்திருக்கின்றார்கள். நோயைத் தடுக்கும் நோய்வராமல் பாதுகாக்கும் இதை அணியுங்கள் என்றால் யாரும் மதிப்பளிக்கமாட்டார். அழகுக்கு என்றால் அள்ளிவிழுந்து அணிவார்கள். அழகை முன் வைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது ஆபரணங்கள்.
நம்முடலிலுள்ள கை, கால், காது, கழுத்து, இடுப்பு, விரல் போன்ற பாகங்களில் நாம் ஆபரணங்களை அணிகின்றோம்.
அவை மூலம் நம்முடலில் ஏற்படும் பாதுகாப்பையும் நோய் வராமல் முற்கூட்டி எவ்வாறு தடுக்கப்படுகின்றது என்பதையும் சற்று ஆழமாகப் பார்ப்போம். நாம் ஆபரணங்களைச் செய்ய தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களையும் வைரம், வைடூரியம் பவளம் முத்துப் போன்ற கற்களையும் பயன் படுத்துகின்றோம். அவை அனைத்தும் தனித்துவம் வாய்ந்த சக்திமிக்க மருந்துகளாகும். இவை அனைத்தையும் பஸ்பங் களாக்கினால் அவை மிகமிகப் பயங்கர வியாதிகளை அகற்றும் மாமருந்தாகும். காது குத்தி கம்மலோ அல்லது மின்னியோ போடுகின்றோம். காதை அண்டியுள்ள கண்ணுக்கான சிறப்புப் புள்ளிகள் அழுத்தப்படுகின்றது. இதனால் கண்பார்வை துலங்குகின்றது. கண்ணுக்கான நோய்கள் தடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல விதவாய்வு, அண்ட வாய்வுகள் வராமல்
84

தடுக்கப்படுகின்றது. இடுப்பில் அருணாக் கொடி போடுவதன் மூலம் இடுப்பிலுள்ள புள்ளிகள் அழுத்தித் தூண்டப்படுவதால் கேணியாதடுக்கப்படுகின்றது.விரல்களில் மோதிரம் அணிவதன் மூலம் இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் தடுக்கப்படுவதுடன் இனவிருத்தி உறுப்புக்களுக்குச் சக்தி கூடுகின்றது.
மேலும் வளையல் அணிவதன் மூலம் தூக்கமின்மை, மன அழுத்தங்களை அகற்றுகின்றது. கழுத்தில் அணியும் அட்டியல் குரல் கரகரப்பு, திக்குவாய், இருமல் போன்றவற்றை அகற்று கின்றது. செயின், காசுமாலைகள் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளைப் போக்கும் விசேட புள்ளிகளைத் தூண்டு கின்றது.
இடுப்பில் அணியும் ஒட்டியாணம் இடுப்பிலும், வயிற்றிலுள்ள புள்ளிகளையும் தூண்டுவதால் இடுப்புவலி, கர்ப்பப்பை கோளாறு கள், வயிற்றுவலி வயிற்று உப்பிசம் மலச்சிக்கல் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகின்றது. காலில் அணியும் கொலுசு சிறுநீரகம், மண்ணிரல், கல்லீரல் சிறுநீர்பை, பித்தப்பை, இரப்பை போன்ற உறுப்புகட்குரிய விசேட புள்ளிகளைத் தூண்டுகின்றது. இதனால் இந்த உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட இன விருத்திக் கோளாறுகள் ஜீரணக் கோளாறுகள் வாந்திபேதிப் பிரச்சனைகள் தீரும்.
மெட்டி அணிவதால் கருப்பைக்குரிய புள்ளிகள் தூண்டப் படுகின்றது. இதன் மூலம் கருப்பை பலப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு விஸ்வகர்ம மக்கள் தங்கள் தொழில் மூலம் மனித சமூதாயத்திற்கு எத்தனையோ அளப்பெரிய சேவைகளை, வசதிகளைச் செய்து வருகின்றார்கள்.
85

Page 56
இத்தனை சிறப்பும் சீரும் வாய்ந்த விஸ்வகர்ம இனம் விழ்ச்சியடைவதற்குக் காரணமென்ன? ஆற்றல் வாய்ந்த இனம். அறிவு மிக்க இனம் பார்போற்றும் படைப்புக்கெல்லாம் சொந்தம் பாராட்ட வேண்டிய பரம்பரை ஏன் இப்படி விழுந்தது. உலக வரலாற்றில் இனம் ஏழ்ச்சி பெற இவ்வின இளைஞர்கள் மூல காரணமாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் விஸ்வகர்ம இனத்தைப் பொறுத்தவரை கதை வேறாக அமைந்துள்ளது.
இந்த இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்கள் இவ்வினத்தின் தங்கக்கம்பிகளான இளைஞரே என்பதை அறியும் போது வேதனையும் துக்கமும் நெஞ்சை அடைக்கிறது. வரலாற்றின் பக்கங்களை ஒளி மயமாக்கி உலக மக்களெல்லாம் மதித்துப் போற்றிப் புகழ்வதும் பாமாலையும், பூமாலையும் அணிந்த இனத்தை அனாதையாக்கியவர்கள், அகிலமெல்லாம் ஒட உதவியவர்கள் வேறுயாருமல்ல அக்குலத்தின் சொற்கேளாப் பிள்ளையால் குலத்துக்கே அழிவு வந்தது.
முதலடி ஜகக்குருப் பதவிக்கு விழுந்தது. விஸ்வகர்ம மக்களுக்கு பூர்வீக காலம் தொட்டு ஆச்சாரிய குரு பீடங்கள் பல இருந்தன. சில மடாதிபதிகள் பிரம்ச்சாரியத்தை அனுஷ்டித் தார்கள். சிலர் இல்லற வாழ்க்கையோடு மாடதிபதிகளாக இருந்தார்கள்.
மடாதிபதிகள் விஸ்வகர்மப் பிராமணர்கட்கு தரும உபதேசங் களைச் செய்து யாகாதி கிருத்தியங்களைச் செய்தும் குல தருமம் குன்றும் போது அவற்றுக்குப்புத்துயிர் அளித்தும் வந்துள்ளார்கள். தமது கட்டளையை மீறுபவர்கட்குத் தண்டனை வழங்கியும் வந்துள்ளார்கள்.
இத்தகைய மடாதிபதிகள் கல்வி அறிவும் தவ வலிமையும் உடையவர்கள். சித்த புருடர்களாகவும் இருந்தார்கள்.
86
 

"கருதேது வேங்கடாசார்யஸ்த்ரேதாயாம் நரகேசரி
வாபரே சோட விக்யாத காளஹஸ்தீ காலளயுகோ"
இச்சுலோகம் ஆச்சாரிய குருபரம்பரை என்னும் சமஸ்கிருத நூலிலுள்ளது. கிரேத யுகத்தில் திருவேங்கடச்சாரியர் சுவாமி களும், துவாரக யுகத்தில் ஜோடாச்சாரிய சுவாமிகளும், குருமகா சன்னிதானங்களாக இருந்தார்கள் என உறுதி செய்கின்றது.
ழரீ காளகஸ்திமுனிவர் காசியில் தவம் செய்தபோதுகாசியை ஆண்ட மன்னன் சுவித்ரமகாராசா அவரிடம் உபதேசம் பெற்றதா கவும் அதன் மூலம் விஸ்வகர்ம புராணம் உண்டாகியது எனக் கூறப்படுகின்றது.
ựồ காளகஸ்தி முனிவர் விஸ்வகர்ம ஆச்சாரிய வித்தியா நகரம் காசி, சிருங்கேரி ஆகிய இடங்களில் விஸ்வகர்ம குரு பீடங்களை ஆரம்பித்து வைத்தார். அவற்றில் விஜயா நகரத்தில் அமைக்கப்பட்ட பீடம் அன்றிலிருந்து இன்றுவரை விஸ்வகர்ம மக்களிடமிருந்து வருகின்றது. காசிமடாதிபீடமும் சிருங்கேரியும் கைமாறி விட்டது.
1. சிருங்கேரிழரீவிஸ்வரூபாச்சாரியர் பரம்பரை ஜெகக்குரு
சங்கரச்சாரியர் சுவாமிகள் 2. போதுலூர் பூரீ வீரப்பிரமேந்திராசுவாமிகள் 3. ஆனேகுத்திழரீவீரயோக வசந்தராயச்சாரியர் சுவாமிகள் 4. வீயூதி ழரீ மத்வெங்காடச்சாரிகள் சுவாமிகள் 5. நந்தி கொண்ட பூரீ சிவசங்கரரையா சுவாமிகள் இன்னும் பல இடங்களில் விஸ்வகர்ம மக்களின் குருபீடங்கள் உண்டு.
சிருங்கேரி மடம் ஆதியில் துவட்டச்சாரியரின் மகன் விஸ்வ ரூபனால் அமைக்கப்பட்டது. அவரே அதன் ஜெகக் குருவாக இருந்தார். அவர் பின் ஞானயோக விஸ்வரூப ஆச்சாரியார் இவர் 90 வயதில் ஒரு ஆண்மகனுக்கு தந்தையானார். இதனால் விஸ்வகர்ம மக்கள் வேதனை அடைந்தார்கள். அக்குழந்தைக்குச் சங்கரன் எனப் பெயரிட்டார்கள். சங்கரன் தன் தந்தையைப் போல சகல கலை வல்லவனாகவும் சித்துக்கள் செய்யும் சித்தனா
87

Page 57
கவும் தவலிமையுடையவனாகவுமிருந்ததால் அவரே பீடாதிபதி யாக அமர்த்தப்பட்டார். இவர் தன் சீடராக விஸ்வகர்ம மக்களையும் ஆரியர்களையும் வைத்துக் கொண்டார். இவர் சமாதியடையும் நேரம் வந்தபோது ஜெகக்குருவாக வரக்கூடியவரைத் தெரிவு செய்ய ஒரு பரீட்சை வைத்தார்.
தான் ஆற்றில் நீராடித் திரும்பும் போது தனது பாதரட்சையை ஆற்றோரத்தில் விட்டு விட்டு வந்து தனது மாணவனாக இருந்த விஸ்வகர்மகுல மாணவனிடம் அதை எடுத்துத் தரும்படி கூறினர். அந்த இளைஞன் குரு பக்தி இன்றி விசுவாசமும், அடக்கமும், பணிவுமின்றி அந்தப் பாதரட்சையைத் தன் காலிலே போட்டுக் கொண்டு வந்து வைத்தான். இதைப் பார்த்த சங்கராச்சரியார் இவருக்கு அத்தகுதி இல்லை என முடிவெடுத்து அடுத்த நாள் மற்ற இன இளைஞனிடம் கூறினார்.
அந்த இளைஞன் மிகவும் பக்தியுடனும், பணிவுடனும் சென்று பாதரட்சையை ஆற்றிலே கழுவி தன் மேலாடையில் வைத்து சுற்றித் தன் தலையிலே சுமந்து வந்து குருவின் பாதத்தில் வைத்தான். ஜெகக்குருவின் கோல் பிராமணப் இளைஞனின் கைக்கு மாறியது. சங்கரச்சாரியார் விஸ்வகர்ம இளைஞனின் பொறுப்பற்ற தன்மையால் விஸ்வகர்ம மக்களுக்குரிய ஜெயகுரு பீடம் பறிபோனது.
அது மட்டுமல்ல, காந்தக் கோட்டை ஆழிவுக்கு விஸ்வகர்ம இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தான்தோன்றி நிலை யுமே காரணமாக அமைந்தது. இது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
எனவே இளைஞர்களே! உங்களின் அடக்கம் இன்மை, பொறுப்பற்ற தன்மை, ஆழ்ந்து சிந்தியாத போக்கு, மூத்தோரை மதியாமை போன்ற தன்னிச்சைப் போக்குகளால் வரலாற்றுப் புகழ்மிக்க இனத்தை புண்படுத்தி புழுதியில் தள்ளிவிட்டீர்கள். இன்னும் இன்னும் இத்தவற்றை விடாது தக்கோர் மதிக்கத்தக்க வரையில் சொற்கேட்டு குலப் பெருமையை மீட்டெடுக்க கடுமை யாக உழையுங்கள்.
நாடும், ஏடும் நல்லவர்களும் உங்களிடமிருந்து பல வல்லமை களை எதிர்பார்க்கிறார்கள். உன் மூதாதை உலகில் பல சாதனை கள் படைத்தவர்கள். அதை நினைத்துப் பார். அவர்களால்
88

முடிந்தது. உன்னாலும் முடியும். அவர்கள் சிந்தையை அடக்கிச் சிந்தித்தார்கள் சித்துகள் பெற்றார்கள். உனக்குப் பெரும் வரலாற்றுச் சிறப்பை மூலதனமாக்கிச் சென்றார்கள் நீ உன் எதிர்காலச் சந்ததிக்கு என்ன செய்யப் போகிறாய் சிந்தி. உன் சினத்தால் அழிவு ஏற்பட்டது. நீ சிந்தித்தால் சிறப்பை நிலை நாட்டலாம்.
எனவே இளைஞனே! மட்டங்கள் சேர்த்து நட்டங்கள் ஆக்கியது போதும். இனி நாடு சிறக்க நானிலம் போற்ற செயற்கரிய செய்யும் செயல் வீரனாக உன்னை நீயே மாற்று. உழை. காலத்தை பொன்னேனப் போற்று.பொறுப்புடன் செயல்பட முன் வா.
அன்று உன் மூதாதை ஆற்றிய சேவை உன்னை அழைக் கின்றது. உலகின் முதல் விஞ்ஞானியும் மெய்யானியுமான வித்தைகள் பலதின் வித்தகர் விஸ்வகர்மாவின் வழித்தோன்ற லல்லவா நீ! நட்டுவன் பிள்ளைக்கு நொட்டிக் காட்ட வேண்டிய தில்லை. எனவே நீஉன்னையே உணர்ந்துகொண்டால் உலகம் உன் காலடியில் தவமிருக்கும் சரித்திரம் விரியும் தரித்திரம் மறையும்.
சகாவரம் பெற்ற கலைச் செல்வங்கள் உன் முயற்சியால் வள்ரும். உயரும் நாடு போற்றும் நல்லவர்கள் வாழ்த்துவர்கள். ஏடுகள் உன் எழிச்சியை ஏற்றத்தை ஏடுத்தியம்பும். பாமாலையும் பூமாலையும் உன்னினத்திற்கு கிடைக்கும்.
அன்று நீ இழந்ததை கலியுகத்தில் மீட்டு விஸ்வகர்மாவின் கனவை நனவாக்க நல்லவனே நலமுடன்வா! நெஞ்சில்
உறுதியோடு நேர்மை திறத்துடன் எழுந்துவா!
அன்றும், இன்றும், என்றும் உன்னலமே தன்னலமாக கொண் டுழைக்கும் நல்லவர்கள் அழைக்கின்றார்கள். உன்னினத்தவர் களால் படைக்கப்பட்ட எத்தனையே கலைச் செல்வங்கள் இன்று அந்த நாடுகட்கு நலமாக அன்னியச் செலவாணியை அள்ளிக் கொட்டுகின்றன. இதை அனுபவிக்கும் அரசு உன்னினத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உனக்காக எதுவுமே செய்வதில்லை.
எனவேதங்கத்தொழில் புரியும் தங்கக்கம்பிகளான தம்பிகளே! சரித்திரத்தில் வடுபல பெற்ற நீங்கள் அத்தவறுகட்கு மன்னிப்பாக
89

Page 58
இனத்தின் ஏழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழியும் வகையும் காண ஓடி வாருங்கள்.
உங்களுக்காக வாசல் கதவுகளும் இருதயக் கதவுகளும் திறந்திருக்கின்றது. எந்தையும் தாயும் மகிழ்ந்து விளையாடிய இந்த மண். அவர் சிந்தையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் தோன்றிப்பூத்துக் குலுங்கிய இந்த மண்ணை விண்ணில் சொர்க் கத்தையும், மண்ணில் மாடமாளிகையையும் விஸ்வகர்மாவின் உழைப்பால் படைப்பால் பார் போற்ற பரணி பாட தரணி சிறக்க உன் சேவை தேவை நாடிவா? நல்லவனே! வல்லவனே! நீ படைத்தல் கடவுளின் பரம்பரை மறந்து விடாதே அன்று உன் மூதாதை படைத்த அத்தனையும் இன்று வரலாற்றுச் சின்னங்கள்.
வரலாற்று ஆசிரியர்களை வாய்திறக்க வைத்துள்ளது. காலம் உன் வரவுக்காக காத்திருக்கின்றது. கடமை உன்னை அழைக் கின்றது. உன் மூதாதைகளின் தொழில் நுட்பமும், ஆழ்ந்த அறிவும், பரந்து விரிந்த நோக்கும் உன்னோடு உறவாடத் துடித்து அழைக்கின்றது. சிரிக்கும் சிகிரியாக்களையும் அழகு சிந்தும் அஜந்தா ஒவியங்களையும் தந்தவனே தங்கமகனே! தரணியில் சிந்திக்க வைத்தவன் நீ! பாவேந்தர் முடியும் தமிழ் புலவருக்கீயும் படியும் உன் மூதாதையின் உழைப்பல்லவா?
நாடு தந்தவன் நகர் அமைத்தவன் வித்தைகள் பலதின் சொந்தக்காரன் நீ! நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எனப் பரமனுக்கே பதில் கொடுத்த பாட்டுக்கொரு புலவன் நக்கீரன் பரம்பரையே ஒடிவா! உன் மூதாதை உனக்காக விட்டுச் சென்றிருக்கும் சேவையை திறம்படச் செய்யும் திறமை உள் வாங்கப்பட்டுள்ளவன் நீ! உலக மக்களுக்கு கடவுளைக் காட்டியவனின் இளவல்களே!
விழுமின் எழுமின் ஏற்றம் பெறும் நாளை நமதாக்க வாரீர்!
90

"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து வாழடா" என்ற
நிலை நினைப்பை தமிழினத்துக்குதன் செயலாலும் சொல்லாலும் ஏற்படுத்தியவர்கள் விஸ்வகர்ம குல மக்களாகும்.
விஸ்வகர்மகுல மக்கள் உலக மக்களின் வாழ்வுக்கு வளத் திற்கு தங்களையே உரமாக்கியவர்கள் நாடு நகர் அமைத்தல் உழவுக்கு வேண்டிய ஆயுதங்களை ஆக்கித்தருதல் மாடமாளிகை கள் கோபுரங்களும் சிற்பங்கள், ஒவியங்கள், வானசாஸ்திரம், வைத்தியம் திரிகால உணர்ந்து கூறி நல்வழிப் படுத்தல், ஆலயங்களை அமைத்தல், ஆண்டவனையே படைத்துக் காத்தல் போன்ற செயல்களிலும் ஆட்சியை வழிநடத்த இராசகுருவாக இருந்தும் சேவையாற்றியதுடன் விதம் விதமான ஆய்வுகளை நடத்தி தொழிலை மேன்படுத்தினார்கள்.
காலத்தால் அழியாத கல்லணைக் கட்டு உலக நீர்ப்பாய்ச்சல் துறை பொறியியல் விற்பன்னர்களையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றது. சதா நீர் ஒடிக் கொண்டிருக்கும் காவேரி சதுப்புநிலத்தில் பக்கத்தில் கற்பிடார்களோ மலைகளோ இல்லாத சமதரையில் கல்லையும் சாந்தையும் கொண்டு இற்றைக்கு 1300 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது தான் இந்தக் கல்லணைக் கட்டாகும். ஒரு வெடிப்போ, கசிவோ இன்றி இன்றும் அசையாது இருக்கிறது என்றால் விஸ்வகர்ம மக்களின் தொழில்நுட்பத்தின் திறன்தான் என்னே? இந்தப் பெருமை விஸ்வகர்ம இனம் தமிழினத்திற்கு அளித்த மாபெரும் நன்கொடையாகும். இக் கல்லணைக்கட்டின் கட்டுமான திறமையைக் கேள்விப்பட்ட எகிப்து பரோ மன்னர்கள் இக்கட்டுமானத் தொழிலாளர்களைக் கொண்டே நைல் நதிக்கும் கட்டுக்கள் கட்டி நீரைத் தேக்கி நாட்டை வளப்படுத்தினார்கள் என்ற வரலாறு தமிழினத்தின்
91

Page 59
தலையை நிமிர வைத்தது. நீர்ப்பாய்ச்சல் துறைக்கும் உழவுத் தொழிலுக்கும் விஸ்வகர்ம மக்கள் ஆற்றிய ஆற்றும் சேவையைக் கண்ட கவியரசரான கம்பர்
“காரளர் பெருமையெல்லாம் கண்ணாளர் கைத் தொழிலே என்று ஏர் எழுபதில்" கூறியுள்ளார்.
"தொழிலில் மகன் மறுக்கின் ஏர் மகற்குக்கேடு" எனபது தமிழர் பழமொழியாகும். தஞ்சைப் பெரிய கோயில் அமைப்பு ஆயிரம் ஆண்டுகட்கு மேற்பட்டது. ஆலயத்தின் சிகரத்தில் வைக்கப்பட்ட கல் 80 தொன் எடையுடையது. அப்படியான கல்லைக்கூடப் பாரம் தூக்கிகள் இல்லாத அக்காலத்தில் 261 அடிக்கு மேலுள்ள சிகரத்தில் ஏற்றி வைத்த தொழில் நுட்பம் விஸ்வகர்ம மக்கள் உலக மக்களுக்களித்த தொழில்நுட்ப அனுபவ முத்தாகும். இதே போன்றே செயல்பாடுகள் அமெரிக்க பெரு - மெக்சிக்கோவிலும் இடம்பெற்றுள்ளது.
கல்லைக் கவிபாட வைத்தவர்கள். கல்லிலே ஒவியம் தீட்டிக் காவியம் படைத்தார்கள். கடல் கடக்க கப்பலைக் கட்டினார்கள். வானத்தை வலம் வர வானவூர்திகள் செய்தளித்துச் சிறப்புச் செய்தார்கள். விஸ்வகர்ம மக்களின் தொழில் நிபுணத்துவத்தால் ஆற்றல் அறிவு அனுபவச் செயற்பாடுகளால் உலகமே தமிழினத் தைப் போற்றிப் பாராட்டத் தமிழிலக்கியங்கள் பாமாலை மூலம் புகழ் மாலை சூட்டின.
அன்று அவர்கள் தீட்டிய ஒவியங்கட்கு பூசப்பட்டுள்ள வர்ணங் களின் செயற்பாட்டு முறைமட்டும் இன்று நமக்கிடைக்குமேயா னால் உலகமே நம் காலடியில் தவமிருக்கும் காலத்தால் கலங்காத மங்காத மறையாத அழியாத அற்புதமான வர்ணங்களை அவர்கள் செயல்முறையில் பெற்றிருந்தார்கள். இவையெல்லாம் உலக விஞ்ஞானிகளை வியப்பில் விழிபிதுங்க வைத்துள்ளன.
சீனாவின் “காண்டன்” மாநகரில் பழம் தமிழர் பண்டசாலை கண்டறியப்பட்டுள்ளது. அங்கே தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தெற்கே நியூஸ்லாந்தில் கடலில் முழ்கிக் கிடந்த கப்பலொன்றிலிருந்து தமிழ் மொழி பதித்த கப்பல் மணி ஒன்று
92

கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பா வரை தமிழர்கள் வணிகத் தொடர்போடு வளமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
தமிழன் தன் அறிவியல் அறிவை தொழில் நுட்பத் திறனை கிழக்காசிய நாடுகளான கம்போடியாவில் "அங்கோவாட் ஆலய” அமைப்பிலும் இந்தோனேசியாவிலும் "போரோர் புதூர் படைப்புச் சிற்பங்களிலும்” வெளிப்படுத்தியுள்ளதை உலகப் புகழ் வாய்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வியப்படை கின்றார்கள். இத்தனையும் தமிழருக்காக விஸ்வகர்மகுல மக்கள் ஆக்கித்தந்த அருங்கலைச் செல்வங்களாகும். அது மட்டுமா அமெரிக்காவில் பெரு - மெக்சிக்கோ நாகரிகம் தமிழரின் நாகரிகமேயாகும்.
இவ்வாறு தமிழர் கலைகலாசாரப் பண்பாட்டுக்காகத் தன்தொழிலில்நுட்பம் அறிவியல் ஆற்றல் அனைத்தையும் அல்லும் பகலும் அள்ளி வழங்கிய விஸ்வகர்ம மக்களைத் தமிழினம் காப்பாற்றத் தவறிவிட்டது. தமிழ் மன்னர்கள் கலை கலாச்சாரத் தின் காவளாளியும் படைப்பாளியுமான கம்மாளரை கைவிட் டார்கள். வந்த காகம் இருந்த காகத்தை தூரத்திய கதையாக ஆரியர் ஊடுருவலை ஏற்றுக்கொண்டு விஸ்வகர்ம மக்களை அகற்றினார்கள். ஆதாள பாதாளத்தில் தள்ளினார்கள். அன்னியப் படுத்தினார்கள். அதன் முடிவு தமிழர் கலை கலாச்சாரம் நிறுத் தப்பட்ட இடத்தில் தொடராது நிற்கின்றது.
நாட்டை இழந்தோம். நாட்டாட்சியை இழந்தோம். நாகரி கத்தை இழந்தோம். கொடியை இழந்தோம். கோலை இழந்தோம். முடியை இழந்துள்ளோம். முறையான வாழ்வையே இழந்து தவிக்கின்றோம்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகட்கு" என்பது வான்மறை தந்த வள்ளுவர் வாக்கு இந்த வாக்கு இன்று பலித்துள்ளது.
விஸ்வகர்ம குல மக்கள் தாங்கள் படைத்த எதையும் தங்கள்
93

Page 60
உடைமையாக்கியதில்லை. அத்தனையும் திராவிடர் பொதுச் சொந்தமாக்கினார்கள் என வரலாறு வாய் பேச வைத்தார்கள். தங்கள் உழைப்பை ஊதியத்தை ஏன் உதிரத்தையே தமிழினத்தின் வாழ்வுக்கும், வளத்துக்கும் உரமாக்கிய உழைப்பாளிகளை உதறிய தமிழினம் வரலாற்றின் பக்கங்களில் தன்னையே உதறிக் கொண்டிருக்கின்றது. இது காலத்தின் கட்டளை தமிழினமே! தரணியின் தலைமகனே! படைப்பாளியைப் பாராட்டுவோம். அவன் பங்களிப்பை நம்மின வளர்ச்சிக்கு வாழ்வுக்கு உரமாக்குவோம். உழைப்பாளி உன்னத கலை கலாச்சாரத்தின் பிறப்பிடம் அவன்.
அவனை ஒன்றிணைப்பதன் மூலம் கட்டிக்காக்கும் விதத்தில் உலக மக்களுக்கு அவனுாடாகக் கிடைக்கக்கூடிய பயனைப் பெற வழிசெய்வோம்.
தமிழரால் கைவிடப்பட்ட படைப்பாளி விரக்தியின் விளிம்பில் தள்ளப்பட்டான், மதுவை அனைத்தான், மதியை இழந்தான், நல்லது கெட்டால் நாய்க்காகாது என்ற நிலைக்குத் தள்ளப் பட்டான், படைப்பில் மனம் நாடவில்லை, ஆய்வை அகற்றினான். ஆக்கங்கள் அகன்றன, உலக விஞ்ஞானிகளே வியப்பில் விழிபிதுங்கி நிற்கும் செயற்பாடுகளை அறிமுகப்படுத்திய விஸ்வகர்ம பக்கள் இன்று வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
இவர்களைத் தட்டி எழுப்பி தன்னிலை உணர வைத்து மந்த நிலையை மாற்றுவோம். பெருங்காயம் வைத்த பானை நாறும். கற்றுப்பாதிகுலவித்தை கல்லாமல் பாதி என்ற பழமொழிக் கொப்ப மீண்டும் படைப்பாளிகளைத் தன்னுணர்வு ஏற்பட வைத்துத் தானும் தன்னினமும் உலக சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய அரும்பெரும் சேவையை ஆழ்மனதில் வைப்போமானால் இருபத்தொராம் நூற்றாண்டில் தமிழன் தலை நிமிர வழிபிறக்கும். பழமையை மட்டுமே பேசிப் பெருமை கொள்வதைவிடப் பல புதுமைகள் படைத்து விஞ்ஞான யுகத்தில் வாழ வழி காணப்பட வேண்டும். இதுவே இன்றைய தமிழினத்தின் தேவை.
உலக மக்களின் பார்வையும் வரலாற்றேடுகளின் பக்கங்களும் நம்மையும் நமது சந்ததியையும் மறக்காதிருக்க புதிய சாதனைகள் பதியப்பட வேண்டும். அதற்குப் படைப்பாளியின் பங்களிப்பு
94

வேண்டும். அவர்கள் இன்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அற்பசொற்ப ஆசைகளின் மோகத்தைத் துறந்துகுலத்திக்கேற்ற ஆசாரத்தை ஏற்று முன்வந்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடைந்த வரலாறே இல்லை.
அடுத்தடுத்து முயன்றால் ஆகாத காரியமொன்றில்லை. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியே நகருமென்பார்கள்.
படைப்பாளிகள் தன்முயற்சியில் தயங்காது தளராது ஊக் கத்தோடு முயற்சி மேற்கொண்டால் விஞ்ஞான உலகத்தையே வியப்பில் ஆழ்த்தும் சாதனையைப் படைக்கமுடியும். போதனை கள் தமிழில் பதியப்பட தமிழ் உலக மொழியாக்கப்படும். தமிழ்நாடு நோக்கி உலகின் பல நாடுகளின் கண்கள் திரும்பும். மீண்டும் தமிழர் தலை நிமிரும். தரணி புகழ்பாடும்.
எனவே தமிழினம் தான் விட்ட தவறை உணர்ந்து கலைஞர் சமுதாயத்தைக் கட்டிக்காக்க முன்வர வேண்டும். அவர்கட்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்க வேண்டும்.
95

Page 61
சமஸ்கிரதம் வட மொழி ஆரியர் மொழி. இது ஆரம்பமொழி. திராவிட மொழிக்கெல்லாம். முந்திய மொழி எனச் சிலர் கூறிப் பெருமைப்படுவதுண்டு. ஏட்டிலும் வரைந்து ஏற்றம் செய்திருக் கின்றார்கள். பல தமிழ் பண்டிதர்களும் நுனிப்புல் மேய்ந்து அவற்றை ஒத்தூதி இருக்கின்றார்கள். பாவம் தமிழ் பண்டிதர்கள் தாங்களும் படித்தவர்கள் என்பதற்காகவும் உண்மையைக் கண்டறிய விருப்பமில்லாததாலோ அல்லது சோம்பல் தனத்தாலோ ஆய்வென்னும் நிலைக்குத் தங்களை ஆட்படுத்தாது அரைத்த மாவையை அரைத்துக் கொண்டு காலத்தைக் கழித்தார்கள். எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வான்மறை தந்த வள்ளுவன் வாக்கை மறந்து துறந்து வாய்க்கு வந்தவாறு எல்லாம் வாழ்த்திப் போற்றிருக்கின்றாார்கள்.
நாமாவது நம் வான்மறை தந்த வள்ளுவரை ஏற்று அவர் காணச் சொன்ன மெய்ப்பொருளை காண்போம். முதலில் சமஸ்கிரதம் ஆரிய மொழியா? என்பதை அலசிப் பார்ப்போம். சமஸ்கிரதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்பது பொருளாகும்.
இந்த மொழியை வடக்கே வாழ்ந்த ஒரு மக்கள் குழுவினர் பேசி வந்தார்கள், வருகின்றார்கள். எனவே சமஸ்கிரதம் அவர்களின் தாய்மொழியா? அல்ல தத்துப்பிள்ளையா? என்பதே நாம் கண்டறிய வேண்டிய உண்மை! மெய்ப்பொருளாகும்.
முப்பதிற்கு மேற்பட்ட சமஸ்கிர நூல்களை எழுதிசமஸ்கிரதம் தான் மொழிகளின் தாய் எனக்கூறி ஐரோப்பா எங்கும் தவறான கருத்துக்களைப் பரப்பியவர் மாக்ஸ்முல்லராவார். இவர்
96
 

நூல்களைப் படித்தறிந்த பல அறிஞர்கள் பல தவறான மொழி ஆய்வுகளேயே செய்து அறிவித்தார்கள். எனினும் மாக்ஸ்முல்லர் தன் கடைசிக் காலத்தில் உண்மையைக் கண்டறிந்தார். அவர் பின்வருமாறு தன் டயறியில் குறித்து வைத்தார். "நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருக்கும் போது அதிர்ச்சியூட்டும் பல செய்திகள் கிடைத்தன. அவை உண்மையானவை என்றும் தெரிந்து கொண்டேன்” “சமஸ்கிரதம் ஒரு செய்யப்பட்ட மொழி என்றும், அதனிலும் அறப் பழைமையான தமிழ் மொழியே இந்திய மொழிகளின் தாய் மொழி" என்றும் அறிந்தேன். ஆனால் என் வயோதிபமும் நோயும் நான் செய்த தவறுகளைத் தவறு என்று கூறவும் உலகுக்குத் தமிழின் பழமையை அறிமுகம் செய்யவும் இடங்கொடுக்கவில்லை. ஒரு குற்றவாளி நெஞ்சுடன் இருக் கின்றேன். இக்கருத்தை உள்ளடக்கிய ஒரு பதிப்பு வெளிவந்தது. இரண்டாம் பதிப்பை வெளிவராமல் தடுத்து விட்டார்கள். இருந்தாலும் உண்மையை மூட உலை மூடி கிடைக்கவில்லை. எனவே யார் சமஸ்கிரதத்தைத் தூக்கிநாவிலும் தோளிலும் காவி உலகெல்லாம் பறைசாற்றினாரோ இந்த மாக்ஸ்முல்லரே மிகமிகப் பழைமையான மொழி தமிழ் என ஒத்துக் கொண்டார். அவர் கணிப்புப் பிழை என்பதையும் சமஸ்கிரதம் தமிழைவிடப் பிந்திய மொழி என மொழிந்து விட்டார்.
வட இந்தியாவில் அன்று வழங்கிவந்த தமிழும் தென்னிந்தி யாவில் வழங்கிவந்த தமிழும் சற்று வேறுபட்டிருந்தபடியால் இரு பகுதியினரையும் இணைக்க வடஇந்தியாவில் திரிந்து வழங் கப்பட்ட பேச்சுத் தமிழை அப்படியே எடுத்துக் கொண்டு தமிழின் இலக்கணக் கூறுகளை இணைத்து ஒரு இணைப்பு மொழி செய்தனர். இம்முயற்சியில் ஈடுபட்டோர் வடஇந்தியாவை ஆண்ட குப்த மன்னர்களும் பல்லவ மன்னர்களும் சங்ககால இறுதியில் பாண்டிய மன்னர்களுமாவர்கள். தொடக்க காலத்தில் இது தமிழாகவே இருந்தது.
வரருசி என்பவர் சற்று மாற்றி இலக்கணம் செய்தார். அவரைத் தொடர்ந்து பாணினி காலம் ஏற்பட்டது. இக்காலத்தில் கிரேக்கப் படையெடுப்புகளும் ஆட்சியும் வட இந்தியாவில் ஏற்பட்டது. இதனால் சொற்களால் தமிழாக இருக்கும் சமஸ்கிரதம் இலக்கணத்தால் சறுக்கி கிரேக்கமாக மாறிவிட்டது
97

Page 62
எனப் பன்மொழி அறிஞர் சாத்தூர் சேகரம் தான் எழுதிய இடைக்காலத் தமிழ் என்னும் நூலில் பக்கம் 45இல் கூறியுள்ளார்.
சமஸ்கிரதம் தமிழிலிருந்து செய்யப்பட்ட மொழி. வேத மொழிச் சொற்கள் தமிழ் இலக்கணம் கிரேக்க சாயல். எனவே ஆரியமொழியல்ல.
"ஆரியரல்லாதவர்களுடைய கலைப் படைப்புகளும் கருத்துப் பாடுகளும் தொழில் நுட்பங்களும் சமஸ்கிரதத்தில் காணக் கிடைக்கின்றன. ஆனால் வேத இலக்கியத்தில் இது காணப் படவில்லை. இதனால் ஆரியரல்லாத பழங்கால மக்களின் சிந்தனைகளும், கருத்துக்களும், பழங்கதைகளும் (Legends) திராவிடர்களின் இலக்கியங்களில் நிறையக் கிடைக்கின்றன. இவை ஆகமங்களையும் வேதங்களையும் விடப்பழைமையும் வேறுபாடுமுடையனவாகத் திகழ்கின்றன. மறைமொழிகள் ஆகமங்களில் அடங்கவில்லை” என அறிஞர் கலாநிதி ஆனந்த குமாரசாமி கூறுகின்றார்.
இக்கூற்றை ஆராயப்புகின் பல உண்மைகள் உலகத்திற்குக் கிடைக்கும். ஆரியர்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாகத் திரிந்தவர்கள். நிலையான வாழ்க்கை வாழச் சூழ்நிலை இடந்தரவில்லை. அவர்கள் கூடாரத்தில் வாழ்ந்த வர்கள். மந்தைகளுக்கான புல் முடிந்தது. கூடாரத்தை எடுத்துக் கொண்டு வேறு புல்லுள்ள இடந்தேடி நகர்வர்கள். எனவே இவர்களிடம் தொழில் கட்டிடக்கலை கலைநுட்பங்கள், வான சஸ்திரம் போன்ற அருங்கலைகள் வளரவும் வாழவும் எந்தவித மான சூழ்நிலையும் ஏற்பட வசதி இல்லை என கலாநிதி ஆனந்த குமாராசாமி எடுத்துக்காட்டுவது சிறப்பான உண்மையாகும்.
சமஸ்கிரத மொழியை வளர்த்தவர்களும் ஆக்கியவர்களும் நாகர்களில் ஒரு பகுதியிரான கைத்தொழில் வல்லோர்களான விஸ்வகர்ம மக்களாகும். இவர்களே வேத மக்களாவர். அவர்களே வேதங்களை ஆக்கியவர்கள். கட்டிடக்கலை தொழில்நுட்பங்கள் சிற்ப சாத்திரம், ஒவியங்களை, வைத்தியம் போன்ற அருங் கலைகள் வளத்தவர்கள். அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புக் களையும், தொழில் நுட்பங்களையும் மாற்றினத்தவர் அறியாத வாறுதன் சந்ததியினர் அறியக்கூடியவகையில் தங்கள் குலத்தின்
98

தொழில்சார் மொழியாக, மறைமொழியாக சமஸ்கிரதத்தைக் கையாண்டு வந்ததார்கள். இன்றும் விஸ்வகர்ம மக்கள் சம்மந்தமான வரலாற்று உண்மைகள் அனைத்தும் சமஸ்கிரத நூல்களில் சுலோகங்களாகவுண்டு.
விஸ்வகர்ம ரிஷிகளுக்குப் பூப்பறித்துக் கொடுத்துத் தொண்டு செய்து கொண்டிருந்தவர் வியாசராவார். அவர் கலையில் வல்ல விஸ்வகர்ம ரிஷிகள் ஒதும் மந்திரங்களையும் சுலோகங்களையும் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்து கொண் டார். வியாசர் நல்ல ஞாபகசக்தி வாய்தவர். ஞாபகசக்தியின் வல்லமையாலும் அடக்கத்தாலும் விஸ்வகர்ம ரிஷிகளின் நல்லெண்ணத்தைப் பெற்றுச் சமஸ்கிரத மொழியைக் கற்றார். ஆனால் எழுத்தை அவர் கற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் ஆரியரிடம் எழுத்து வடிவமில்லாத மொழியாக இருந்து வந்தது. சமஸ்கிரதத்துக்குரிய வரிவடிவு நாகர்களே அமைத்துக் கொடுத்தார்கள் என பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவர்கள் கூறியுள்ளார்.
"இந்து மதம் ஆரியர் மதமல்ல". இது சம்மந்தமான அறிஞர் சார்லஸ் எலியட் கூறுவதைப் பார்ப்போம். "இந்து மதம் இந்திய மதம் என்பதை திராவிட சமயம் எனக்கூறுவது மிகப்பொருந்தும். பக்கம் சாராமல் நடுநின்று பார்க்கில் இந்த உண்மை விளங்கும். ஆரியர்கள் வாழும் பாரசீகத்திலோ அல்லது கிரேக்கத்திலோ இந்து சமய நெறிகள் கிடையாது. எனவே திராவிடர்களின் சமயத்தைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டார்கள். இக்கருத்தை அறிஞர் சடாஜியும் கலாநிதி ராதாகிருஷ்ணனும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
எனவே இந்து சமயம் திராவிட சமயம். சமய அடையாளங் களான விபூதி, உத்திராட்சைமாலை, பூநூல், திலகமெல்லாம் திராவிடக் கலாச்சாரச் சின்னங்கள். தங்கள் வயிறு வளர்ப்புக் காகத் திராவிடர்களின் கலையும், கலாச்சாரத்தையும் தம தாக்கிக் கொண்டுள்ளார்கள் ஆரியர்கள்.
ஆலயத்தின் பூசை புனக்கார விதிகள், சமயம் சம்பந்தமான தத்துவங்கள் எல்லாம் அன்று ஆச்சாரிகளால் வரிவடிவில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. இந்த நூல்களின் சொந்தக்காரர்கள்
99

Page 63
அவற்றை ஆக்கியவர்கள் தங்கள் பெயர்களை கோபாலாச்சாரி கிருஷ்ணாச்சாரி போன்று ஆச்சாரி என்று பெயரின் இறுதியில் வரக் கூடியதாகப் பெயர்களை வைக்கத்தொடங்கினார்கள். இதை விஸ்வகர்ம மக்கள் நீதிமன்றங்களில் வழக்காடித் தடுத்து மிருக்கின்றார்கள்.
அன்று தொடக்கம் இன்று வரை விஸ்வகர்ம மக்களே ஆலயங்கள் அமைப்பதும் சிற்ப வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். சிற்ப சாஸ்திரமும் கட்டிடக் கலை நூல்களும் சமஸ்கிரதத்தில் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பத்தின் மூல புருஷர்கள் விஸ்வகர்ம மக்கள். ஆரியர்கள் அல்ல. எனவே இந்த மொழி விஸ்வகர்ம மக்களின் மறைமொழி. தொழில் சார் மொழி என்பது உறுதி.
இன்று வடமொழியிலுள்ள நூல்களைக் கொண்டு அவை அனைத்தையும் ஆரிய நாகரிகத்தின் பெருமையைக் காட்டு வதாகக் கொள்ளக் கூடாது. இதற்கு மாறாக அக்காலத்தில் இருந்த மக்களின் நாகரிக வாழ்வில் கண்டவற்றைக் கருத்தாகப் போற்றிப் பற்பல நூல்களாக ஆக்கிய முயற்சியின் சிறப்பைப் போற்ற வேண்டும். இவ்வாறு எழுத்து வடிவில் பலநூல்களைப் பெற்று வடமொழி சிறப்பு எய்தியபின் இருந்த திராவிட அறிஞர்களும் அம்மொழியைக் கற்று தம் சாதனையையும் அம்மொழியிலே எழுதி வளமாக்கினர்கள் என பேராசிரியர் மு. வரதராசன் அவர்கள் தான் எழுதிய மொழி வரலாற்றில் கூறுகின்றார்.
சமஸ்கிரத மொழியை தம் மறை மொழியாகவும் தொழில் சார் மொழியாகவும் கையாண்டு வந்த ஆச்சாரிமார் பல்லிடங் கட்கு பிரிந்து சென்றாலும் வியாசருடைய கதைகளை நம்பி அரசர்கள்ஆச்சாரிமார் பார்த்துவந்த இராசகுரு, பூசகர் போன்ற பதவிகளை வியாசரின் சந்ததிக்கு வழங்கியதால் ஆத்திரமும் அவமானமும் அடைந்த ஆச்சாரிமார் நாடுகளை விட்டகன்ற தாலும் அவர்கள் தொழிலின்றி கஷ்டப்பட்டதாலும் கல்வியை இழந்தார்கள். பல தொல்லைகட்கு ஆளானார்கள். இன்றும் சிறப்பாச்சாரிமார் அனைவரும் சமஸ்கிரதம் கற்றவர்களாகவே
100

இருக்கின்றார்கள். ஆலயக்கட்டடங்களை சிற்பம் சம்மந்தமான சகல கலை நுட்பங்களும் சமஸ்கிரதத்தில் தானிருக்கின்றது. எனவே வடபகுதியில் வாழ்ந்த கைத்தொழில் வல்லவர்களான நாகர்களான விஸ்வகர்ம மக்களின் மறைமொழி தொழில் சார் மொழியாகும். ஆரியர்கள் இதை ஆச்சாரிமாரிடமிருந்து தத்தெடுத்துக்கொண்டார்களே ஒழிய இது அவர்களின் சொந்த மொழியல்ல. இன்றும் சிற்பாச்சாரிமார்களும் தவசிமார்களும் சமஸ்கிரதத்தைத் தம் தாய் மொழியாகவே கொண்டுள்ளார்கள்.
நாகரிகமடைந்த திராவிடப் பண்டிதர்கள் சமஸ்கிரதத்தை தேவ நாகரிக எழுத்தில் எழுதியதோடு கல்வி அறிவில்லாத மக்களுக்கும் படிப்பித்தனர் என மாக்ஸமுல்லர் கூறுகின்றார். இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் ஆரியர்கள் சமஸ்கிரதத்தை அறிந்து தெரிந்து புரிந்தவர்களாக இல்லை. சமஸ்கிரதத்தில் விஸ்வகர்ம சம்மந்தமான விடயங்களும் நுணுக்கங்களும் சமய சம்மந்தமான விடயங்களும் நிறைய உண்டு. ஆரியர்கள் இந்திரனை வழிபடுகின்றவர்கள். அப்படிப் பட்டவர்கள் விஸ்வகர்ம மக்கள் சம்மந்தமான வரலாறுகளை தொழில் நுட்பங்களை தங்கள் மொழியில் எழுதிப் பாதுகாப் பார்களா? இல்லை. எனவே தான் சமஸ்கிரதம் ஆரியர் மொழியல்ல ஆசாரிமார் மொழியாகும்.
ஆரியரின் சூழ்ச்சியால் அரசர்கள் ஆசாரிமாரை அவமானப் படுத்தியதால் நாட்டை விட்டு ஆசாரிமார்களின் குருமாரும் கற்றோரும் சென்று விட்டதால் மற்றவர்கள் மொழியைப் பாதுகாக்காததால் மொழியைத் தாம் ஏற்று ஆரியர் தமதாக்கி னார்கள். உண்மையில் சமஸ்கிரதம் அவர்கள் மொழியல்ல.
101

Page 64
கோயில்களும், கோபுரங்களும் அவற்றிலுள்ள விக்கிரங்களும், சிற்பங்களும், கல்வெட்டுக்களும் தான் தமிழர்களின் தொன்மை வரலாற்றை, நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தை நாடறிய ஏடறியச் செய்துகொண்டிருக்கின்றன. ஏடுகளும், கவிஞர்களும், கலைஞர்களும், கலைஞனாம் மிக்கவர்களும் ஏற்றிப்போற்றும் அளவுக்கு காலத்தாலும் கடற்கோள்களாலும் கரையானாலும், அழிக்கவும், ஒழிக்கவும், மறைக்கவும் முடியாத கலைக் கருவூலங் களாக மிளிர்கின்றன.
இன்று ஆலயங்கள் இறைவணக்கத்தலமாக மட்டும் இருந்த வையல்ல. இயல், இசை, நாடகம் பயிலகமாகவும் மருந்தகமாகவும் கல்விக் கூடங்களாகாவும் அமைந்தன. பூசகர், ஊழியர், மாலை கட்டுவோர். பூவிற்போர், நாதஸ்சுரக்கலைஞர்கள், எடுபிடிகள், ஏவலாளர்கள் போன்ற தொழிலாளர்கட்கும் வாழவழிகாட்டும் இடமாகவும் அமைதி தேடுவோருக்கும் ஆன்மீகம் நாடுவோரின் சாந்தி சமாதான நிலையமாகவுமிருந்தது.
பண்டைநாள் முதல் இற்றை நாள் வரை விஸ்வகர்ம மக்களின் படைப்பின் நுணுக்கத்தையும், தொழில்நுட்பத்தையும் உள்வாங்கி உயர்ந்து நிற்பவை ஆலயங்கள்.
இக்காலத்தில் உள்ள பொறியியல் வல்லுனர்கள் கட்டிடக் கலை வல்லோர்கள் எல்லாம் வரைபடங்கொண்டும் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தியும் மாமாளிகை கூட கோபுரங்களை அமைக்கிறார்கள். அனால் இந்த வசதி வாய்ப்பும் இல்லாத அக்காலத்தில் தான் மாபெரும் ஆலயங்களையும், வான்முட்டும் கோபுரங்களையும், சிற்பங்களையும், ஒவியங்களையும் மனதில் திட்டமிட்டு ஆக்கித் தந்த விஸ்வகர்ம மக்களின் ஆற்றலை,
102
 

அறிவை, திறத்தை, திறனை எப்படிப் பாராட்டுவது போற்றுவது புகழ்வதென்றே புரியவில்லை. இற்றைய கட்டிடக்கலை உயர் வுக்கு உரமானவர்கள் அன்றைய விஸ்வகர்ம மக்களாகும். உலகத்தின் அன்றைய உயர்வுக்குவித்திட்டவிஸ்வகர்ம மக்களை சரித்திரம் காட்டவில்லை. வரலாறு வாய்திறக்கவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்கள் பாராட்டப்படுகின்றன. பார்போற்ற வைக்கின்றன.
மூடிக்கிடந்த மொகஞ்சரோ ஹாரப்பா, தலை நிமிர்ந்து நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில், அழகு சிந்தும் ஆவுடையார் ஆலயம், மகிழ்ச்சியூட்டும் மதுரை நான்மாடக்கூடல், தித்திக்கும் திருச்செந்தூர், மனதைக் கவரும் மகாவலிபுரம், ஹளபீடு, பேளூர், சரவணபெளலா, அழகு சிந்தும் அஜந்தா, சிரிக்கும் சிற்றன்னை வாசல் எல்லோரா, கஜீராஹோ, இலங்கையில் புகழ் பெற்ற ஐந்து ஈஸ்வரங்கள், புனிதம் மிக்க புத்த விகரைகள், டம்புல்லைக் குகைக்கோயில், சிந்தனையைக் கொள்ளை கொள் ளும் சிகிரியா, இந்து ஆலயங்கள் சிவனொளிபாத மலை, பெரு - மெக்சிக்கோ எகிப்து சுமோரியா போன்ற இடங்களிலுள்ள எண்ணற்றப் படைப்புக்கள் அனைத்தும் விஸ்வகர்ம மக்களின் கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் காட்டும் காலக் கண்ணாடியாகும். இன்று வினாடிக்கு வினாடி விந்தை பலதை வித்திட்டு மகிழும் விஞ்ஞானிகள் வியப்பால் விழிபிதுங்கும் வித்தைகள் பலதை படைத்தளித்திருப்பவர்கள் விஸ்வகர்ம மக்கள்.
இன்று நம்மிடையே உள்ள சாமவேதம் என்னும் இசைநூல், இசைவேந்தன், இலங்கை அரசன் இராவணனால் பாடப்பட்டது. அவன் விஸ்வகர்மாவின் பேரனின் மகனாகும்.
சிற்பாச்சாரியாரின் திறன் பற்றி விட்விம்சப் பிரமாணம் 5ம் அத்தியாயத்தில் 10ம் சுருதியில் குறிக்கப்பட்டுள்ளது. அது சிற்ப சாஸ்திர விதிமுறைப்படி கட்டப்பட்ட தேவாலயங்கள் சிற்பாசாரி யின் சொல்லுக்கு நடுங்கும் ஆடும். பிரதிமை ரூபமாகவுள்ள தெய்வங்கள் சிரிக்கும், விக்கிரங்கள் அழவும் செய்யும், பாடு என்று ஏவினால் பாடும், நடனமிடும் வாய்களைத் திறக்கும், மூடும், நடந்துசெல்லும் அக்காலத்தில் போஜராஜனின் சிம்மாசனப் பதுமைகள் கதைகள் பேசியதாக நாம் படித்துள்ளோம்.
103

Page 65
சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் விஸ்வகர்ம மக்களால் கட்டப்பட்ட மடம். இம்மடத்தில் சூரிய கிரகணத்தால் 12 மாதங் களை அறிந்து கொள்ளத்தக்கவாறு சரியான நாளிகையை உணர்த்தவும் சூரிய கடிகாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரத்தை இன்றைய விஞ்ஞானிகள் பார்த்து விழிபிதுங்கி வியப்படைகின்றார்களே ஒழிய அவ்வாறு ஒரு இயந்திரத்தைச் செய்ய அவர்களால் முடியவில்லை. தஞ்சைப் பெரிய கோயில் மூலஸ்தான சிகரத்தில் நிழல் எப்பக்கத்திலும் விழுவதில்லை. இந்த அதிசயச் செயலை விஸ்வகர்மாவால் அன்றி வேறு யாரால் செய்ய முடியும்?
தமிழ் நாட்டில் சில ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ள விந்தை யைப் பாருங்கள். சில குறிப்பிட்ட நாளில் சூரிய கிரகணங்கள் மூலஸ்தான லிங்கங்களில் படும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. அவை.
1. கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம், சித்திரை மாதம்
11ம் 12ம் 13ம் திகதிகளில்.
2. திருக்கண்டியூர் ஆலயம், மாசி 13ம் 14ம் 15ம் திகதிகளில்
3. திருவேதிக்குடி ஆலயம், பங்குனி 13ம் 14ம் 15ம் 16ம்
திகதிகளில்.
4. கன்னிப்பிரம்பூர்ஆலயம், ஆவணி21ம் திகதியும் புரட்டாதி
1ம் 2ம் திகதியும்.
5. குன்றத்தூர் சேக்கிழார் ஆலயம், மற்றும் பூவிருந்தவல்லி ஆலயம் மாசி மாதம் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரை.
கர்நாடக மாநிலத்திலுள்ள பேளூர் என்னும் ஊரில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில் வளாகத்தில் 40அடி உயரமும் 20 ஆயிரம் கிலோ எடையுமுள்ள பிரமாண்டமான கற்தூண் எவ்வித ஆதாரமில்லாது பல நூறு ஆண்டுகளாக அந்தரத்தில் நிண்டு கொண்டிருப்பதை இன்றும் காணலாம். இன்றைய விஞ்ஞானிகளோ அல்லது கட்டிடக்கலை நிபுணர்கள் எனத் தம்பட்டம் அடிப்பவர்களால் செய்யமுடியுமா? இது குலவித்தை. கற்றுப் பாதி கல்லாமல் பாதி கம்மாளருக்கு மட்டுமே வரும். இத்தூணின் அடிப்பாகத்தில் ஒரு பாத்திரத்தைத் திணித்தால் மறுபக்கத்தில் வரும். ஒருவித பிடிப்புமின்றி எவ்வாறு அந்தரத்தில்
104

நிற்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை. இது விந்தையிலும் விந்தை இவ்வாறான கற்றுாண் தர்மாபுரி மாவட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலுமுண்டு.
கற்கள் உயிர் உள்ளவை. அவை விழித்திருக்கும் நேரமுண்டு தூங்கும் நேரமுண்டு எனச் சிற்பிகள் கூறுகின்றார்கள்.
கோபுரங்களின் சிகரத்திலுள்ள ஆடவர் ஆரிவையர் சிலை களுக்கு அணிகலங்களையும் ஆபரணங்களையும் செதுக்கி அழகுக்கு அழகு சேர்த்துள்ள நேர்த்தியை என்னென்று கூறுவது! எப்படிப் பாராட்டுவது!
அஜந்தாக் குகைகளில் அனைத்திலும் புத்தபகவானின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 17ம் குகையிலுள்ள புத்தரை நேரே பார்த்தால் சாந்தம் தவழும், சரிந்து நின்று பார்த்தால் புன்சிரிப்புத் தவழும், மறுபுறமிருந்துபார்த்தால் வருந்தும் முகம் தெரியும். ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே சிலை பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது பல்வேறு நிலைகளை தன்மைகளைப் பாவங்களை தோற்றுவிக்கிறது என்றால் அதைச் செதுக்கிய விஸ்வகர்ம சிற்பியின் கலைநுணுக்கத்தை கைத் திறனை எவ்வாறு பாராட்டினாலும் தகுமன்றோ! அதைப்போல டம்புல்லை குகைக்கோயில் படுத்து நிற்கும், புத்தர் சிலைகள் பல்வேறு முகபாவனைகளையும் குணங்களையும் காட்டும் முகப் பொழிவுடன் இருக்கின்றன. இத்தனைக் கலைச் செல்வத்தையும் நாட்டுடமையாக்கிச் சென்றவர்கள் காலத்தால் அழியாத கலை நெஞ்சங்களான விஸ்வகர்ம மக்களேயாகும்.
அக்காலத்தில் விஸ்வகர்ம மக்களை, மன்னர்கள் அரசகுரு வாகவும், ஆலயப் பூசகர்களாகவும், அந்தணர்களாகவும், சிற்பிகளாகவும், தவசிகளாகவும் பாவித்து மானியங்கள் வழங்கிப்பாதுகாத்தார்கள். அதனால் கட்டிடக்கலை, வைத்தியம், சோதிடம், வான சாஸ்திர சிற்ப ஒவியங்கள், பல்வேறு ஆய்வு களில் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னர்கள் சிற்பிகளையும், ஆச்சாரி மாரையும் ஆதரித்து மானியம் வழங்கியதால் அவர்களைக் கொண்டு ஆலயங்களையும், கோபுரங்களையும், குகைக் கோயில்களையும், சிகரங்களையும் செய்து சிற்பங்களையும் ஒவியங்களையும் தீட்டினார்கள். அன்று மன்னர்கள் விஸ்வகங்ம,
105

Page 66
மக்களுக்கிட்ட மானிய முதலீடு மூலம் விஸ்வகர்ம மக்கள் படைத்தளித்த காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் இன்று இந்தந்த நாடுகளுக்கு செல்வத்தைச் சேர்க்கின்றன.
விஸ்வகர்ம மக்களின் கைவண்ணத்தையும் கலை நுணுக் கத்தையும் கேட்டறிந்து கண்டு களித்த கடல் கடந்த நாடுகளிலி ருந்து வரும் உல்லாசப் பயணிகள் அன்னியச் செலவாணியை அள்ளிக் கொட்டுகிறார்கள். இதனால் வரண்டு கிடந்த அரசாங்க கஜானாக்கள் நிறைந்து வழிகின்றன. ஆனால் அக்கலைச் செல்வத்தைப் படைத்த விஸ்வகர்ம மக்களின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடுகின்றார்கள். தாய் தந்தையரின் தேடல் பிள்ளைகளுக்குத்தான் உரியவை என்பது நாட்டின் சட்டம். ஆனால் விஸ்வகர்ம மக்களின் மூதாதையரின் படைப்பால் கிடைப்பவை அனைத்தும் நாட்டுடமையாகிவிட்டது. அரசோ அம்மக்களின் வாரிசுகளைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.
இதனால் நாட்டில் முதலீடுகளை விஸ்வகர்ம மக்கள் அன்று படைத்தளித்து போல் வியக்கத்தகும் மாபெரும் வித்தைகள் சத்தான ஒவியங்கள் போன்ற எண்ணற்ற படைப்புகள் கலைச் செல்வங்கள் மீண்டும் விதம் விதமான தோற்றங்களில் வளராமல் போய்விட்டன. விஸ்வகர்ம மக்கள் விட்ட இடத்தில் தான் இன்று திராவிடர் கலைகலாச்சாரம் தொங்குகின்றது. மீண்டும் வளர வேண்டுமேயானால் அரசு படைப்பாளார் சமூகமான விஸ்வகர்ம மக்களை ஒன்று திரட்டி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மானியங்கள் வழங்கி கலைப்படைப்புக்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.
கற்றுப்பாதிகல்லாமற்பாதிகுல வித்தை பெருங்காயம் வைத்த பாத்திரம் நாறும் எனவே விஸ்வகர்ம மக்கள் இயற்கையாகவே கலையுள்ளம் நிறைந்தவர்கள். அவர்கள் ஆழமனத்தைத் தட்டி எழுப்பி விட்டால் பல அம்சங்கள் தலை காட்டும் நாட்டில் அழிந்துபோன கலைச் செங்வங்களை மீண்டும் துளிர்க்கும். அது எதிர்காலச் சந்ததிக்கு முதலீடாகவும் பெரும் பொக்கிச மாகவும் நிறையும்.
106

கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்துப் பரப்பிய இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வகர்மா என அறிஞர் எம். எஸ். இராமசாமி ஐயர் பல ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.
அவர் 1936ம் ஆண்டு ஆனி மாதம் நடைபெற்ற ஆசிரியர்கள் கழக மகாநாட்டில் பின்வரும் தலைப்புக்களில் இதை வலியுறுத் தியுள்ளார்.
(1) Christ is not a Greek but an Indian.
(கிறிஸ்து கிரேக்கரல்ல, இந்தியனே!)
(2) Was Tamil the mother tounge of Jesus Christ? (இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழா?)
(3) Vas Jesus Christa Visvakarma Brahmans?
(இயேசு கிறிஸ்து ஒரு விஸ்வகர்மப் பிராமணனா?)
இந்த ஆய்வுக்கட்டுரைகளை அவர் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகங்கட்கும் அனுப்பியுள்ளார். அவர் தனது ஆய்வுக்கு ஆதாரமாக புனித பைபிளில் இருந்து ஆதாரங் கள் காட்டியுள்ளார்.
இயேசு கிறிஸ்து ஒரு தச்சுத்தொழிலாளியின் மகன். அவரும் தந்தையுடன் சேர்ந்து தச்சுத்தொழில் செய்துள்ளார். அந்தவகை யில் அவர் ஒரு விஸ்வகர்மாவாகும். ஜீசஸ் அல்லது ஜெசுவா என்பது கேசவா என்பதன் மருவு ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி தமிழ். அவருடைய தாய் மேரி என்பதுமரியம்(மாரியம்மை) என்பதன்மருவுவாகும்.அவரின் சகோதரியின் பெயர் (Tamfr)தமர். இதுதாமரை என்ற சொல்லே தமர் என மருவியது. அதுபோல் பள்ளிஸ்தானம் என்பதே பாலஸ்தீனமாக மாறியுள்ளது. இயேசுவின் நிறம்"மெட்ராஸ் கலர்" என பைபிளில் குறிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் இந்தியரேயாவார், அவரின் குலத்தொழில்
107

Page 67
தச்சுத்தொழிலாகும். அவர் குலத்தால் விஸ்வகர்மாவாகும்.
விஸ்வகர்ம மக்களே ஆரம்பத்தில் மதங்களோடு மிகத்தொடர்
புடையவர்களாக இருந்தவர்கள். இந்து, இஸ்லாம், பெளத்த மதங்களை ஆரம்பித்தவர்கட்கும், விஸ்வகர்ம மக்களுக்கும் தொடர்புண்டு. அவர்கள் படைப்புக் கடவுளான உலக முதல்வன் விஸ்வகர்மாவின் பரம்பரையினர் பிறப்பால் தெய்வசம்பந்தமுடைய வர்கள். உலக நாகரிகங்களை வித்திட்ட மக்கள் அனைவரும் கட்டிடக்கலையைத் தங்கள் தொழிலாகவும், சர்ப்ப, சூரிய வழி பாட்டைத் தங்கள் குலவழிபாடாகவும் கொண்டவர்கள்.
இலங்கை மாந்தையை ஆண்ட ஒவிய நாகர்கள் விஸ்வகர்ம குலத்தவரும் அதே தொழில், அதே வணக்கங்களை உடைய வர்கள். உலக நாகரிகம் இந்தியாவுக்கும் மன்னார் வளைகுடாக் கரைகளிலே தோன்றியது என அறிஞர்கவில்விமல் கூறியுள்ளார். பாண்டி நாட்டுக்கும், மாதோட்டத்துக்கும் இடையில் நடைபெற்ற வாணிபத்தினாலே நாகரிகம் தோன்றியது என அறிஞர் மாசோனி கூறுகிறார். மாந்தைக் காந்தக்கோட்டை அழிவின் பின் விஸ்வகர்ம மக்கள் பல நாடுகட்கும் சென்றார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.
சுமேரியர் இலங்கையிலிருந்து சென்றவர்கள். மாந்தை வாசிகளின் தொழிலையும், வணக்கமுறையையும் உடையவர்கள். அதேபோல் எகிப்தியரும் பாண்டு என்னும் நாடே அவர்களின் பூர்வீகமாகும். அதே தொழில் அதே வணக்கமுறையுடையவர்கள். அமெரிக்க பெரு - மெச்சிக்கோவாசிகளை மயோரிஸ் மக்கள் என அழைக்கிறார்கள். அது மாந்தையை ஆண்ட மயன் சந்ததியினரையே அவ்வாறு அழைக்கிறார்கள். மயன் மக்கள் மயோரிஸ் மக்களாக அழைக்கப்படுகிறார்கள். தொழில் வணக்க முறையிலும் மாந்தைவாசிகளை ஒத்தவர்கள். அரவம் என்றால் - பாம்பு - பாம்பை வழிபடுபவர்கள். அரவர்கள் (தமிழரை அரவர் என அழைப்பதுண்டு) அரவர்கள் வாழும் நாடு அரபியா. அதுவே அரேபியா என அழைக்கப்படுகின்றது. அரபு மொழியின் தாய்மொழி தமிழ் என அறிஞர் மருதூர் மஜித், தான் எழுதிய "மத்தியதரைக் கடலிலிருந்துமட்டக்களப்புவரை” என்னும் நூலில்
108

கூறியுள்ளார். அரபுமொழி என்றால் பாம்புமொழி எனப் பொருள்படும். அரபு எழுத்துக்கள் பாம்பைப் போன்று நெளிந்து நெளிந்திருக்கின்றன. “மாந்தைக் கம்மாளனும் மக்கத்துச் சோன கத்தியும்" என ஒரு பழமொழி தமிழிலுண்டு. எனவே மாந்தை அழிவில் சிதறிச் சென்றவர்கள் நாகர்களே இஸ்லாத்தின் ஆரம்ப கர்த்தாக்களாகும்.
அதுபோல் கபிலவஸ்துவில் வாழ்ந்தவர்களும் நாகர்களாகும். புத்தர் ஒரு நாகர் என்பது நிரூபணமாகியுள்ளது. இதை அறிஞர் ஒக்பாம் பல ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் அதாவது ஆரியர் இந்தியாவுக்குள் நுழையும் வரை மதத்தை வளர்த்தவர்கள் விஸ்வகர்ம மக்கள்.
இவற்றை நோக்கும்போது கிறிஸ்துவும் ஒரு விஸ்வகர்மா என்பது தவறல்ல.
109

Page 68
சீர் பெற்றிலங்கு வேதமொடு ஆதியும், திருவுற்ற மெய்ஞா னமும், தேடரிய ஏழுசுரம் பரவு நாசசுனையையும், தினமுயர் அறுகாலம் செய்யவென சோழ என அரசேரிட்ட சுரர் திருப் பணியும் வளர்சிறைகள் பற்பல கிரணமுறைமையோடு ஐந்தைந்து குடிகளும் மதியநவஇரு சிறைகளும் பாருற்றெழுந்து சுரர்ஆலயத் தூபியும், பணிகள் பற்பல மதில்களும் பரிதிகுல அரசனென வருதீர சேரனோடு, பாங்குபெறும் அக்கசாலை பத்தியோடு திருப்பணிக் காதாரமாக்கியே பதிஉயர்வு சித்திரவே பண்டு செய் தொண்டு துறவு என்று வரைந்து குடிபணிகள் செய்தும் அகமகிழ்வே தாருற்ற எக்கலம் வாழ்த்தவும் ஆசாரி நாமம் சாற்றுவேன் தங்கி வளந்தட மேவும் உலககுரு, சித்திரகுரு தட்சினாதங்குகுரு, வேதகுருதாதிநம வேதகரு ஆசாரிமார்கள் எனச் சுற்றி உலோ கோர் அறியத் சத்திய ஒளி பெற்று கிட்ட திருப்பணி சகலதும் இயற்றிவரவும், ஏற்றுற்றிவாளிழ்வெள்ளியொன் வங்கமும் இலங்கு செம்பைநடனே இட்டுண்டு வாழ மரவு தருபரிதிகுல குகன் ஏற்றி, ஈழங்கரமனுகி எங்கெங்கும் உயர் கொடி எழுதவும் சாற்றறிய இந்துமறை மறைகண்டு பணிய இரதவடி எங்கள் குலமுன்பு தொடும் என்றசன் பட்டமிது அறியவே பட்டமோடு தவள வெண்குடைகளும், பலபீட பஞ்சகமும், பரிதி குமிழும் பாவாடை, மேற்தட்டு, எத்தரம் தீவெட்டி பறைமேளம்சங்கு வீணை, பஞ்சகம் அமைத்து சில தேக்குமலர், நான்கு வழிப் பந்தல், பதினெட்டு வரிசை பவுசு பெற்று உலகிலுயர் காரளர், வரிசையும் பகுதியே பகுதி அறிவீர்.
சட்டசன் அத்திகுரு, விக்கிரகதாபனம், சரிகை சனக்னாச முறைகள், சாந்திமுறைகள், நற்குல அந்தணர்கள் தங்க ளோடு தக்கசபை ஏற்று வரவும், தளிர் பூணுால் அணிதல், வெண்துயில் கட்டுதல், சந்தனம் நுதலில் இடல் தொட்டு
110
 

வளர்தனவரிசை குகனேவல் செய்யவும், தொல்லுலகில் வாழ்ந்து வரவும், துடக் கறுத்து உடலில் பட்டாடை சுற்றவும் , தொழிற்கிரிகை செய்து வரவும், இட்டு வைத்திட்ட குகன் பின் ஊழிய முடிவிலே இதுவிருது தரணி அறிய எக்காலமுயர் சாலை நன்மக்களாய் இளமை பெற்று உழவருடனே ஈசனடியார் என வரிசையது மாறாமல் எப்போதும் உயர்வு தளரர் இந்துமத
சந்ததி சந்ததிகளாக உலகு வாழும் என்று வைத்திட குகனே.
நன்றி மட்டக்களப்பு மான்மியம்
111

Page 69
கொல்லிமலை என்பது தமிழ்நாட்டில் சேலம் ஜில்லாவிலுள்ள ஒருமலை இம்மலைப்பிரதேசத்தில் சித்தர்களும் ஞானிகளும் இன்றும் வாழ்கிறார்கள். பலஅரிய மூலிகைகள் நிறைந்தமலை, இதனால் பலரின் கவனத்தை தன்பால் ஈர்த்த மலையாக இன்றும் மிளிருகிறது. பதினெண் சித்தர்களின் நூல்களிலும் சங்க நூல்களிலும் இம்மலை பற்றிய பாடல்கள் பல உண்டு. பதினெண் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட அரியமருந்துகள், தைலங்கள், காயகற்பமருந்துகள், மூப்பு சுண்ணங்கள் எல்லாம் புதைப் பொருளாக இம்மலையில் புதைக்கப்பட்டதாக காலாங்கி நாதர் தான் எழுதிய மலைவறம் என்னும் நூலில் கூறியுள்ளார்.
கொல்லிமலை செழுமை மிகுமலை அங்கே தேன் பலா, தோடை, கொய்யா, போன்றவை நிறைந்த மலை அமைதி நிறைந்த இடம் காய கற்பம் மூலிகைகள் இயற்கையாகவே வளரும் இடம் அதனால் சிததர்களும் ஞானிகளும் இம் மலையைத் தங்கள் இருப்பிடமாக்கினார்கள். இதை தெரிந்துக் கொண்ட அசுரர்கள் இந்த மலைக்கு அடிக்கடி போய் தொல்லைகள் கொடுக்க முற்பட்டார்கள். முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தார்கள்.
இதனால் பெரிதும் கலவரம் அடைந்த தேவர்கள் முனிவர்கள் அசுரர்களை அழிக்கவும் அடக்கவும் வழியும் வகையும் தெரியாது கவலைப்பட்டார்கள் கஸ்ட்டப்பட்டார்கள். பின் சகல கலா வல்ல வரும் தேவகுருவுமான விஸ்வகர்மாவிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள்.
சித்தர்கள் முனிவர்கள் தேவர்களின் குறைகளையும் முறையீடுகளையும் கேட்டறிந்த விஸ்வகர்மா இக்குறைகளை தீர்ப்பதற்கு கல்லால் ஒரு அழகிய பாவையைச் செய்து அதற்குப் பல சக்தியை ஊட்டி அசுரர்களின் வாடைப்பட்டதும் பாவை நகைக்கவும் கண் சிமிட்டவும் காண்பவர்களின் காமஇச்சையை வரவித்து பாவையைத் தொட்டதும் அழிந்து போகக்கூடியமாய சக்தியை ஊட்டி அசுரர்கள் வரும் வழியில் நிறுத்தினார்கள்.
112
 

இந்த மாயப்பாவையை நிசப்பெணி என நம்மிய அசுரர்கள் பலர் அதன் மாயசக்தியால் மயக்கப்பட்டு மரணமடைந்தார்கள் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் தேவர்களும் நிம்மதியாகத் தங்கள் தவங்களை ஆற்றி எத்தனையோ எண்ணக்கரு வுலங்களை தமிழ்மக்களுக்கு உரிமையாக்கியுள்ளார்கள் சித்த வைத்தியம் கிடைத்தது பல நோய்களை அகற்றும் காயகற்ப மூலிகைகள் நெந்தூரங்கள் இலேகியங்கள் பஸ்பங்கள் தமிழர் உடமையாகின. இவை கிடைக்க தன் படைப்புச் சக்தியை பயன்படுத்தி உதவிய விஸ்வகர்மாவை தமிழ் மக்கள் நினைத்துப் பார்ப்பதே அரிதாகவுள்ளது. தமிழர் தம் நாகரீகத்தின் முது கெலும்பு அவர் வித்தைகள் பலதின் வித்தகர் அவர். இதைப்பற்றி சித்திரமடல் பின்வருமாறு கூறியுள்ளது. “திரிபுரத்தைச் சென்றவனும் செரும்பாவையும் நகைக்க கற்தெல்லாம இந்த வகை கண்டாயோ”எனப்பட்டிருப்பதால் அறியலாம்.
இந்த கொல்லிமலைப்பாவை காற்று மழை இடி மின்னல் பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவாறு சிறந்த உகந்த தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது. என்பதை பரணர் என்ற சங்கப்புலவரின் நற்றினைப்பாடல் 201ன் மூலம் அறியலாம்.
“மலையுறைக்குறவன் காதல் மடமகன் பெறவரும் குறையன் அருங்கடி காப்பினன் சொல்லெதிர் கொல்லான் இறையன் அனையரேன் உள்ளக்கூடாதென் றோய் மற்றுஞ் செய்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
தெய்வங் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு
அவ்வென் அருவிக்குடவவரை அகத்துச் காலபொருது இடிப் பினுங் காதமூறைக் கடுகினும் உருமுடன்று எறியினும் உறுபல தோடன்றினும் பெருநில குன்றினும் திருநகம் உருவில் மாயா வியற்கைப் பாவையிற் போதல் இல்லாணென் நெஞ்சத்தானே”
இதுமட்டுமல்ல இப்பாவைபற்றிசங்க இலக்கியங்கள் பலதிலும் பலவேறு புலவர்கள் பாடியுள்ளார்கள். இம்மலையை அண்டிய பகுதியயை கடை எழுவல்லல்களில் ஒருவனான ஒரிஆண்டதாக வரலாறு கூறுகிறது. நெஞ்சிலும் நாவிலும் நினைவிலும் நிலையாகவும் சிலையாகவும் என்றும் நிற்கவேண்டியவர் விஸ்வகர்மாவாகும். அவரை நினைப்பதன் மூலமே நாம் நமது தொழில்நுட்பத்தைக்கலைக்கலாச்சாரத்தை மீண்டும் நமதுடமை ஆக்க ஊக்கமும் ஆக்கமும் கிடைக்கும்.
113

Page 70
உறையூர் ஏணிச் சேரி முட மோசியார் குட்டுவன் கீரனார் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர் குடவாயிற் கீர்த்தனார் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் தங்கால கொற் கொல்லனார் வடமவண்ணக்கன் தாமோதனார் பொருத்தில் இளங்கீரனார் மதுரை நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மோசி கீரனார்
மதுரை வேளாசான்
(புறநாநூறு)
அத்தில் இளங்கீரனார் இடையன் நெடுங்கீரனார் உமட்டூர் கிழார் மகனார் இளங்கீரன் எயினந்தை மகனார் இளங்கீரன் கழாக்கீரன் எயிற்றியர் (இவர் பெண் புலவர்) செல்லூர்கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார் செயலூர் இறம் பொன் சாத்தன் கொற்றனார் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணகனார் இடையன் சேதங் கொற்றனார் இம்மென் கீரனார் உவர்க் கண்ணுார்ப் புல்லங்கீரனார் குடவாயிற் கீரத்தனார் பறநாட்டு பெரும் கொற்றனார் நக்கீரர்
(அகநாநூறு)
இளங்கீரந்தையர் இருந்தையூர் கொற்றன் புலவன் உறையூர் முது கூத்தனார்
114
 

இளங்கீரன் உறையூர் முது கொற்றன் முது கூத்தனார் கொல்லன் அழிசி குறுங்கீரன் கோழிக் கொற்றன் கொற்றன் கச்சிப் பெட்டி பெருந்தச்சன் சேத்தன் கிரன் முடக் கொல்லனார் வினைதொழிற்சேர் கீரனார் மூலங்கீரனார் மதுரைக் கொல்லன் வெண்ணகனார் நற்றம் கொற்றனார் பாலங் கொற்றனார் தும்பி சேர்கீரனார் குடவாயிற் கீரத்தனன் பெருங் கொற்றனார் கீரங்கண்ணனார் காசிப்பன் கீரனார் கணக்காயனார் கண்ணன் கொற்றனார் கண்ணகாரன் கொற்றனார் கந்தரெத்தனார் பெரூந்தச்சனார் எயினந்தையார் இளங்கீரன் அல்லங்கீரனார் குமரனார் மோசிக் கொற்றன் வெண் கொற்றன் பெருங் கொல்லன் கொடங் கொல்லன் கிரந்தை
(குறுந்தொகை)
நன்றி "விஸ்வகர்மா”
115

Page 71
1."ஒரு நான்கு சாதிக்கும் மூவகைத் தேவர்க்கும் உண்பார்க்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோ - வந்திசை முகனார் வருநாளில் வந்திடும் மாந்தைக் கண்ணாளர் வகுத்தல்லால் குருநாதர் ஆணைகண்டீர் பின்னையயேது இக்குவலயத்தில்” "துறவபிபட்டணத்தர்”
2."செல்வன் புதல்வன் திருவெண்கடவன் ஜெகக்குருவாம்
கொல்லன் கவியைகுறை சொன்ன பேரைக் குறடு - கொண்டு பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாட்டி பகைவர் முன்னே அல்லும் பகலுமடிப்பேன் கவி இருப்பாணி கொண்டே"
"திருவெண்கட ஆச்சாரியர்"
3. “மாந்தையில் வாழும் மகிடத்தியாகி உனக்
கேந்து தழும்போ இரண்டுள்ளது வேந்தர் முடித்தழும்பு உன் காலிலே முத்தமிழர்கட் ஈயும் படித்தழும்பு கையிலே பார்”
"ஒப்பிலேமணிப்புலவர்"
4. “மருக்கலம் மொழிபழன நெல்லை
வளம் பதினாலு மறை வேதத்தின் உருக்கலந்து கருத்தரித்து சிவஞான வடிவாகி உலகில் எங்கும் திருக்கறுக்கும் பரசமய சிங்கமெனும் பெயர் படைத்துத் தெளித்து வைக்கும் குருக்ககும் குருவாகி குவலயத்திலேயுஞ்
ஜெகக்குரு வாகு மென்றே"
"பரமசமய கோளரிநாதர் பிள்ளைத்தமிழ்” 5. தனமரையோர் குலகுரு ஆச்சாரி சங்கரச்சாரி
கன துவட்டாமகன் விஸ்வகர்மப் பிராமணனே - மனமையம் வேண்டாமென மேன் மக்களுரை - மழைக்குறிகள் தினமுறவே யுணர்ந்து வுழத்தியர் மகிழ்ந்து கிழத்தவரே”
"மாந்தைப் பள்ளு”
116
 

6.
10.
“நாடோறு நாடுக மன்னன் வினை செய்வான் கோடாமை கோடாதுலகு"
"திருவள்ளுவர்"
“மணிவுதர வளமெல்லாம் தருதிரு தென்னாட்டில் மருவு ராசாதிராசா வைகலும் நிறைந்தலவு மாந்தைப் பதியை நன்மனத்துடன் செங்கோல் - செய்யும் பணிபெற்ற விஸ்வகுல ராசன்”
"மாந்தை நகராதி சதகம்"
“பாராலும் உலவாலும் பயிராக்கி உயிர்வளர்க்கும் பேராளர் தம்மாலே பிறருடைய பெருமையெல்லாம் ஏராலேண்டிசை வளர்க்கும் எழுபத்தொன்பது நாட்டில் காராளர் பெருமையெல்லாம் கண்ணாளர்கைத்தொழிலிலே” “ஏரெழுவதில் கம்பர்"
“தொழில் மகன் தன்னோடு மாறாகின் என்றும் உழுமகனுக்குக் கேடு என்றுரை”
"சிறுபஞ்சமூலம்"
உலகம் பிறந்தது உன்னால் ஊரும் கணக்கு உன்னால் கலகம் பிறந்தது உன்னால் கடவிளர்வது உன்னால் ஓங்கி அனுமான் உதயகிரி பிடுங்கி வர வாங்கி இடது கையால் வைத்தவா ஆபரணமனைத்தும் முன்னால் அழகு மணித்தாலி முன்னால் கோபரணச் செங்கோல் கொடுப்பது முன்னால் யாளி பரியேறிவரும் காளி வரம் பெற்ற கண்ணாளா
"தனிப்பாடல்”
117

Page 72
11.
12.
13.
14.
15.
விஸ்வனாம் வேத கம்மாள சித்தன் வேண்டியபடி செய்து மல்லோ சூட்சுங்காண் பான் பசுவுடனே கணேசார்ந்த கதையைப் போல் கருத்தறியார் முழு மூடர் காண்பரொ தான் முசுருடைய இரும்புத்துனில் காந்தம் சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோத வித்தை நசுருண்டால் சூட்சாதி சூட்ச மார்க்கம் நாமுரைத்த படியாரும் கண்டிடாரே
“போகமுனிவர்"
"குணங்களாற் குறிகளாலும் கூறிய வேதத்தாலும் இணங்கு சாதியார் கட்கெல்லாம் ஏற்றேதார் - தெய்வமாகும் மணங்கமிழ் சோலை சூழும் மாந்தை நகர் கோவே வணங்கினா லணங்கு நில்லாள் - வணங்கினிரிதற் கென் செய்வேன்
"கவியரசர் கம்பர்"
அம்மான் மகளே அடியென் றாற்சீயென்பாள் கம்மாளன் தாலி கழுத்திலேறிற் - செம்மான் செருப்பாலடித்து தைத்துச் சீறி மிகவைதாலும் இருப்பளிவிறைவ னற்று
“ஒளவையார்”
வாலி பிறந்து அமிர்த முண்டாயிற்று வலைகடலில் மூலி பிறந்தது அமிர்த முண்டாயிற்று முத்தமிழ் நூல் வேலி பிறந்தது பயிருண்டாயிற்று விஸ்வகர்மர் தாலி பிற்நதல்லவோ தந்தாரந் தமக் கென்றதே
"சங்கப் புலவர்"
அழியான் ஆழி அயன் எழுத்தாணி என்பார் கோழியான் கண்று எறிய வேல் என்பான் - பூமியான் அங்கை மழு என்பான் அருள் பெரிய மாவண்டுர்க் சிங்கன் உலைக்களத்தில் சென்று
“gGòILIT”
118

உலகையெங்கள் உளிசெதுக்கும் கோயிலென்போமே - அதை உருவை யெங்கள் மனதிலுள்ள கனவ தென்போமே சலவைக்கல்லில் கலைமணக்கும் சிலையமைப்போமே - ஒரு
சடமரத்தின் வாழ்வினுக்கும் உயிரளிப்போமே
எளியவர்க்கும் செல்வருக்கும் வீடமைப்போமே எல்லவரும் வாழுகின்ற நாடமைப்போமே உளங்குவிந்து கடவுள்வழி பாடுகள் செய்ய ஓங்கிவளர் கோயில்களை ஒளிரச் செய்வோமே
தச்சர் கொல்லர் தட்டா ரென்பர் தரணி மாந்தரே தளர்வரிய கரும வீரர் புலவர் நாங்களே உச்சமா மலைவிளக்கும் எங்கள் விளக்கே - இசை ஓங்கு நாட்டுக் கொடியும் நாங்கள் தாங்கும் வெற்றியே.
அறுசமயக் கோயிலெங்கே அறநிலை யெங்கே அறிவுடனே தொழில் வளர்க்கும் ஆலய மெங்கே விறுவிறுப்பாய்க் கலைவளரும் வித்து வானெங்கே வேகப் பொறிகள் எங்கே யெங்கள் வேலை யில்லையேல்
அயனுலகை அமைத்தவர்கள் விசுவகர்மாக்கள் அழகுக் கலையை வளர்ப்பவர்கள் விசுவகர்மாக்கள் வியனுலகை இலகுவிப்பேர் விசுவகர்மாக்கள்
விசுவகரும வீரர் நீடு வாழ்க வாழ்கவே.
- யோகி சுத்தானந்த பாரதியார் -
119

Page 73
விஸ்வகர்மா
நங்கையர் தம் அழகினுக்கு அழகு கூட்ட
நல்லணிகள் பலவற்றைப் படைத்துத் தந்தார் அங்கவர் தம் காதலுக்க அணையைப் போட்டு
அறக்கற்பு விளைவதற்கு வேலியிட்டு மங்கலமாய் மனையின்பம் துய்ப்பதற்கு
மாநிலத்தார் போற்றுகின்ற வதுவை நாளில் தங்கத்தில் தாலி செய்து தந்தார் அந்தத்
தட்டாரைத் தாட்டாரே தமிழகத்தார். இரும்பாலும் செம்பாலும் இயற்றித் தந்த
எண்ணில்லாப் பொருளெழுத இடமிங்கில்லை கரும்புதரு சுவைக்காட்டித் தித்தித்துாறும்
கடவுளர் தம் படிமங்கள் பட்ைததுக் காட்டி அரும்புகின்ற கலையாவும் விரிந்தொடுங்கி
அமைதற்கு இடனாக ஆடுங் கூத்தன் பெருங் கூத்தைக் கண்முன்னே நிறுத்திக் காட்டிப்
பேசாமற் பேசுகின்றார் விஸ்வகர்மா. கல்லுக்கு உயிர் கொடுத்துப் பேச வைத்தார்
கற்பனையில் தொடுமுடியில் குடியிருந்தார் எல்லையில்லா அண்டத்தைப் படம்பிடித்து
எழிலான ஒவியத்தை எழுதித் தந்தார் சொல்லுக்கு மெரு கூட்டிப் பாட்டிசைத்து
சுவையான கவிதையினை ஆக்கித் தந்தார் வல்லவராய் வித்தகராய் வாழ்ந்தார் இன்று
வறியவராய் வாய்மூடி வாழ்கின்றாரோ. உழுதுண்டு வாழ்கின்ற குடிகளுக்கும்
உழுபடையைத் தந்துதவி உலகில் இங்கு தொழுதுண்டு பின் சென்று வாழ்வார் யார்க்கும்
தொழிற்கருவி கொடுப்பவரும் அவரேயன்றோ எழுதுகின்ற ஆணியினைத் தந்தார் காளை
எறிகின்ற வேலியினையும் தந்தார் மெலும் பழுதின்றிக் கடனாற்றி உழைத்தார் இன்று
படிப்படியாய் முன்னேறித் திகழ்கின்றார்.
"சா. கிருஷ்ணமூர்த்தி"
120

"விஸ்வகர்மா” படைத்தல் கடவுள் சைவத்தின் மூலமும் முதலுமானவர், பஞ்ச தொழில் கர்த்தர் பார் போற்றும் படைப்பாளி விண்ணிலும், மண்ணிலும் வித்தைகள் பலதை வித்திட்ட வித்தகர். காலத்தாலும், கரையானாலும் ஏன் கடற்கொள்களாலும் அழியாத அசையாத கலைக் கோயில்களை கட்டித்தந்த கனவான். சட மரத்துக்கு உயிர் கொடுத்து தெருவெல்லாம் ஒட்டிய உத்தமர். உயர் கலை அனைத்தையும் தந்தவர். நாடு தந்தவர் நகர் அமைத்தவர்.நாகரிகம் வளர்த்தவர்.நாலிலத்தார் நம்மை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள நல்லது பலதைச் செய்த வல்லவர். நாடும் ஏடும் போற்றும் நாயகன். கல்லைக் கவிபாட வைத்தவர். ஒவியம் படைத்து நல்ல காவியம் தந்தவர். இன்றைய விஞ்ஞா னிகள் வியப்பால் விழிபிதுங்கி நிற்கும் நிலையை நினைப்பை ஏற்படுத்தி வைத்த முதல் விஞ்ஞானி மெய்யானத்தின் மூத்த முதல் முத்து. கடல்கடக்க கப்பல்களையும் வானத்தில் ஊர வானவூர்திகளையும் தந்தவர். மக்கள் வாழ்க்கையோடு முற்றும் முழுதாக இணைந்தவர், பிணைந்தவர், காலத்தை வென்றவர். கடவுளானவர். அதி உயர் அற்புத அழகுக் கலைக்கு ஆசான், அதிபர் வளர்த்தவர்.
அன்றும் இன்றும் என்றும் பூமியில் வாழ்ந்த வாழ்கின்ற வாழப்போகின்ற மக்களினத்திற்கும் அவர்தம் வாரிசுகளும் பார்த்து மகிழ்ந்து பிரமிக்கத்தக்க சாதனை படைத்த சாதனையாளரான விஸ்வகர்மவை நினைவு கூறவும். அதன் மூலம் அவர் சாதித்த வைகளை மீளாய்வு செய்யவும் அவ்வித ஆற்றல் அறிவு துணிவு தெளிவு மிக்க சமூதாயத்தைப் படைக்கவும் விழா அவசியமாகும்.
இன்று வாழும் பரம்பரைக்கு விஸ்வகர்மா என்றால் யார் என்று தெரியாது. அவர் ஆற்றிய அற்புத படைப்புக்கள் புரியாது. ஆக்கங்கள் உள்மனதில் பதிந்து ஊக்கமுள்ள சமுதாயம் உருவாகாதிருக்கிறது.
இந்த நிலை மாறவும் நினைப்புஆழியவும் ஆக்கமும் ஊக்கமும் மலர விஸ்வகர்மாவுக்கு விழா எடுக்கவேண்டும். அவர் சாதனை கள் மக்கள் மத்தியில் போதனைகளாக வேண்டும். போதனை களை ஆழ்மனதில் பதிப்பதன் மூலம் உள்வாங்குவதன் மூலம் பல விஸ்வகர்மாக்கள் தோன்ற வழியும் வாய்ப்பும் ஏற்படும். அதற்காகவே விழாவேண்டும். ஆண்டுதோறும் உண்டிகொடுத்து உயிர் காக்கும் உத்தமர்களாம் உழவர்கட்கு தைப்பொங்கல்
121

Page 74
விழாவெடுத்து தரணி போற்றப் பரணி பாடுகின்றோம். சகல தொழிலாளர்கட்கும் மேயில் விழாவெடுத்து பாராட்டுகின்றோம். எந்தத் தொழிலுக்கும் மூலமான கைத்தொழிலாளர்கட்கு விழா எடுப்பதை மறந்து விடுகின்றோம்."காராளர்" பெருமையெல்லாம் கண்ணாளர் கைத்தொழிலிலே என்ற கவிச்சக்கரவர்த்தி கம்ப னின் கூற்றுப்படி முதல் போற்றப்பட வேண்டியவர் கைத்தொழி லாளரான கம்மாளரேயாகும். இதன் காரணமாகத் தான் படைப் பாளிகளை பாராட்டவும் போற்றவும் படைப்பனைத்தக்கும் மூலமான முத்து வித்தைகளின் வித்தகர் விஸ்வகர்மாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாதி மாதம் வருகின்ற அமாவாசைத் தினத்தில் தமிழகத்தில் விழா எடுகின்றார்கள்.
விஸ்வகர்ம இலங்கையை உருவாக்கித் தந்தவர் மன்னார் மாந்தையிலிருந்து ஆட்சி செய்தவர் அரும்பெரும் கலைகளைப் படைத்து அகிலமெல்லாம் பரப்பியவர். உலக நாகரிகம் மன்னார் வளைகுடா வழியாகவே பரவியது என அறிஞர்கள் கூறுகின் றார்கள். விஸ்வகர்மாவின் சாதனை பலதைப் பெற்றுயர்ந்த இந்த நாடு அவர் சிந்தையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் மலாந்து உயர்ந்தது இந்நாடே. எனவே அவருக்கு விழா எடுக்கும் தகுதியும் தரமும் இந்நாட்டுக்கே உரியதாகும்.
இதைக் கருத்தில் கொண்டு 1995 ஆண்டு புரட்டாதி மாதம் அமாவாசைத் தினத்தில் பெரிய பேரதீவில் இலங்கைப் பொற் தொழிலாளர்கள் சமாசத்தலைவர் திருமிகு, பூ, ம. செல்லத்துரை அவர்கள் விஸ்வகர்மா விழாவை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் விஸ்வகர்ம விழா ஒவ்வொரு ஆண்டும் இலங்கையிலும் நடைபெறுகின்றது.
இவ்விழா மூலம் மரத்தால் விழுந்து மாடு மிதித்து மயங்கித் தன்னிலையை நினைப்பை மறந்த விஸ்வகுல மக்களிடையே தன்னைத்தான் உணரவும் தன் தகுதியைத் தரத்தை மீளாய்வு செய்யவும் தானும் தன்னினமும் வீனே உண்டு உறங்கி உலவி மடிய வந்த வர்களல்ல, உலக மக்களுக்கு அவர்தம் உயர்வுக்கு உழைக்க வந்த உழைப்பளிகள் படைப்பாளிகள் என்ற உணர்ச்சியை உணர்பு பூர்வமான எண்ணத்தை இதயத்தில் ஊன்ற உதவியுள்ளது.
எதிர்காலம் சிற்பிகளும் சிந்தனையாளர்களும் தோன்றவும் வளரவும் விழா வித்திடும். ஒவ்வொரு ஆண்டு புரட்டாதி அமாவாசைத் தினத்தில் விஸ்வகர்மாவுக்கு விழாவெடுத்து கலைகளைக் காப்போம். கவலையை மறப்போம்.
122

இந்தியாவில் பல இடங்களில் விஸ்வ கர்ம மக்கள் தங்கள் குல ஆசாரங்களைப் பேண பல ஆதினங்கள் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் இலங்கையில் அப்படிப்பட்ட ஒரு ஆதின முமில்லாததால் விஸ்வகர்ம குல மக்கள் தங்கள் குல ஆசாரங்களை சரியாகத் தெரிந்து கொள்ளமுடியாமல் தான் தான் நினைத்தபடி செயல்பட்டு சமுதாயத்தை கெடுத்துவிட்டார்கள். ஆசாரம் அழிக்கப்பட்டு அநாகரிகப்
பழக்கவழக்கங்கள் மண்டியிட்டு மலிந்து விட்டன.
அந்தணர் என்றும், அறவோர் என்றும், ஆய கலைகள் அனைத்திற்கும் அதிபர் என்றும், அழகுக்கலையை வளர்ப்போர் என்றும், அவனிமக்கள் போற்றிய, புகழ்ந்த இராசகுரு பரம்பரை, தன்னைத்தானே அழித்தக் கொண்டு, அடாத செயல் அனைத் துக்கும் ஆளாகியுள்ள நிலையை மாற்றவும் நினைப்பு அழிக்கவும் வழிகாணப்பட வேண்டும். மீண்டும் விஸ்வகுல மக்கள் தங்கள் குல ஆசாரங்களை ஏற்று, குல விளக்குகளாக மாறவேண்டும் என்ற நன்நோக்கில் 1996 ஆண்டு புரட்டாதி மாதம் நடைபெற்ற விஸ்வகர்ம விழாவில் கூடிய பொதுமக்களின் வேண்டு கோள்படி விஸ்வகர்ம ஆதினத்தின் தலைமை குருவாக விஸ்வப்பிரம ழரீ வை. இ. எஸ். காந்தன் குரு அவர்களையும் உபகுருவாக சிவழிந் சற்குணராசா அவர்களையும் தெரிவு செய்தார்கள்.
இவ்வாதீனம் இன்னும் முழுமையாக இயங்கவில்லை. தற்சமயம் சில பணிகளை மட்டுமே உள்வாக்கிச் செயற்படு கின்றது. காலக் கிரமத்தில் இவ்வாதீனம் சிறந்த உகந்த சமூக வியல் ஒழுக்கங்களை உள்வாங்கிய ஆசாரங்களையும் ஆய
கலைகளையும் அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட ஆச்சாரியப்
123

Page 75
பரம்பரையை நாட்டுக்குத் தர முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்படும்.
குலவித்தை, கற்றுப்பாதி கல்லாமல் பாதி வித்தைகள் அனைத்தும் அறிந்த வித்தகர் மூலம் மீண்டு குல வித்தைகளைக் கற்பித்துமக்கள் சமுதாயத்துக்கு முன் விஸ்வகர்ம மக்கள் ஆற்றிய பணிகளைத் தொடரவைப்பதே இவ்வாதீனத்தின் முக்கிய முதல்
நோக்கமாகும்.
இப்பணிக்கு உதவ நினைப்பவர்கள், ஆக்கமும் ஊக்கமும் தர விரும்புவோர் விஸ்வகர்ம ஆதீன நிருவாக அமைப்பாளரும் இலங்கை பொற் தொழிலாளர் சமாசத் தலைவருமான சமூக ஜோதி பூ ம. செல்லத்துரை J. P பெரிய போரதீவு என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆதீனம் ஐந்து வயதுடைய சகல விஸ்வகுல சிறார்களை ஒன்றிணைத்து அவர்களை ஆண் பெண் சிறார்களை தனித்தனியாக வைத்து உரிய கல்வி வழங்கி, அத்துடன் தொழில் பயிற்சியும் சமயப்பயிற்சியும் வழங்கப்படும். கட்டுப்பாடு ஒழுக்கங்கள்
பேணப்படும்.
இதன் மூலம் விஸ்வகர்மா கூறிய கலிகாலத்தின் கடைசிக் கட்டத்தில் விஸ்வகுல மக்கள் தங்களினம் உலக சமுதாயத்திற்கு முற்காலத்தில் எவ்வாறு சேவை செய்ததோ அவ்வாறு சேவை செய்து "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகால்” என்ற நிலையை நினைப்பை அடையும் விஸ்வகர்மாவின் தீர்க்கதரிசனம் நிறைவு பெற
இவ்வாதீனம் உதவும், உழைக்கும்.
124

விஸ்வகர்ம ஆதின கர்த்தாவான விஸ்வப்பிரமழரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள்

Page 76

விஸ்வகர்ம ஆதின ஆரம்ப விழாவில் ஆதீன பிரதம குருவுடன் உதவிக்குருவும் போசகரும் அமர்ந்திருக்கும் காட்சி; இடமிருந்து வலம் பூரீலறி. செ. பொன்னம்பலப் பூசகள் ஆதின உபகுரு. சிவகுரு சிவபூரி சற்குணராசா குருக்கள், ஆதீன பிரதமகுரு விஸ்வப் பிரமழரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள்

Page 77

விஸ்வகர்ம ஆதின கர்த்தாவான விஸ்வப்பிரமழரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள்

Page 78

விஸ்வகர்ம ஆதின ஆரம்ப விழாவில் ஆதீன பிரதம குருவுடன் உதவிக்குருவும் போசகரும் அமர்ந்திருக்கும் காட்சி; இடமிருந்து வலம் பூரீலழரீ. செ. பொன்னம்பலப் பூசகள் ஆதின உபகுரு. சிவகுரு சிவபூர் சற்குணராசா குருக்கள், ஆதீன பிரதமகுரு விஸ்வப் பிரமறர் வை. இ. எஸ். காந்தன் குருக்கள்

Page 79

10.
11.
12.
13.
14.
15.
16.
சிலப்பதிகாரம் - உ. வே. சாமிநாதஐயர் சென்னை - 1978 தேவாரம் - சதாசிவச் செட்டியர் - கழகம் சென்னை - 1973
நாலாயிரத்திவ்விய பிரபந்தம் - தேசநாதன் சென்னை -
1971
தமிழர் வளர்த்த அழகுக்கலை - வெங்கடசாமி - மைலை
சீனி சென்னை 1969
விஸ்வகர்மோபதேச வீர காண்டரமணி - பிரம்மழநீ பாகவத பாதரேணு மதுரகவி முத்துகிருஷ்ண இராமானுஞர் - 1910 உத்தமச் சித்து - வைத்திரிங்க ஆச்சாரி - சென்னை - 1911
பிரத்நோத்ராத் மாலிகா - பூரீ சங்காராச்சாரய சுவாமிகள் - சென்னை - 1921
விஸ்வப் பிரம புராணம் -அ. முத்துச்சாமி பகரதி - சென்னை - 1894
யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன் - 1963
யாழ்ப்பாண வைபவம் விமர்சனம் - சுவாமி ஞானப்பிரகாசர் - 1928
யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆ. முத்துப்பிள்ளை புராதன யாழ்ப்பாணம் - C. இராசநாயகம் சங்கநூல்கள் வெடியரசன் வரலாறு - மு. ச. சிவப்பிரகாசம் - 1988 தமிழர் வரலாறு இலங்கையின் இடப்பெயர் ஆய்வும் - கதிர் தணிகாசலம் - 1992 - சென்னை விஸ் வகாம்ப் பிராம்மண வம்சப் பிரகாசிகை T. M. தேவசிகாமணி ஆச்சாரியார்
12S ܫ

Page 80
17.
18.
19.
20.
21.
22.
23.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
சீாபாதகுல வரலாறு - அருள் செல்வநாயகம் மட்டக்களப்பு மாண்மியம் - வித்துவான் F.A.C. நடராசா சிந்தைக்கினிய சிற்பக்கலை - இராசு காளிதாசு அ. வேலுச்சாமி சந்திரன் த. சந்திரகுமார் பழந்தமிழர் கட்டிட கலையும் நகரமைப்பும் நா. பார்த்தசாரதி கதிரைப்பள்ளு - வ. குமாரசாமியால் தொகுக்கப்பட்டது - சென்னை - 935
இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றையநிலையும் பூ, ம. செல்லத்துரை இருக்கு வேதம் - ராகுல சாங்கிருத்தியாயன் சிந்தாமணி - வரப்பதிப்புக்கட்டுரைகள் நாவலர் நூற்றாண்டு மலர் - சென்னை - 1991 விசுவகன்மீயம் - கட்டிடக்கலை சம்மந்தமாக நூல் விசுவம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் விசுவசாரம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் மயமதம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் துவட்டதந்திரம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் மனுசாரம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் விசுவகாசியம் - கட்டிடக்கலை சம்மந்தமான நூல் மனைடி சாஸ்திரம் - கட்டிடக்கலை சம்மச்தமான நூல் காசிகாண்டம் - அதிவீரராமபாண்டியன் "Phase of Reliqion and Culture Sri C. R. R. "Viswakamaltis Decendams' by Alfred Edwara.
126

f چاته &Ꮤ£ YᏜᏃ 独 NSY Vý%22% 幼 2%
இந்நூலகத்திற்காக பல இடங்கட்கு நேரிலே சென்று பல்வேறுபட்ட ஆய்வுகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டதால் பாரிய செலவுகள் ஏற்பட்டன. செலவுக்கு வேண்டிய பணத்தை இன்முகத்தோடுதந்துதவிய என்னினியபின்வரும் நண்பர்கட்கு என்னிருதயம் நிறைந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இவர்கள் அனைவரும் இந்நூலாள் கிடைக்கு பலனனைத் துக்கும் பங்காளியாவர்கள்.
6|LIuř முகவரி
விஸ்வப்பிரம ழரீ வை. ஈ பட்டாபுரம் பெரியபோரதீவு
எஸ் காந்தன் குருக்கள்
திருமிக ந. தருமநிதி
திரு. திருமதி. தியாகராசா பூமணி தம்
பரியபோரதீவு
திருமிகு எல். எம். எஸ் இராசேந்திரன் & 46.கிரான்பாஸ் றோட்கொழும்பு 14.
105.நீயு செட்டியார் வீதி கொழும்பு
•ኛ ரளிகைகளுவாஞ்சிக்குடி வு பெரியபேரதீவு ார் வீதி, கொழும்பு-11. திருமிகு. க. நல்லதம்பி 137, செட்டியார் வீதி,கொழும்பு-11. திருமிகு. சி. மணிவண்ணன் 59,செட்டியார்தெரு, கொழும்பு-11. திருமிகு. பெ. இராசேந்திரம் பட்டாபுரம் பெரியபேரதீவு
திருமிகு. வி. அழகரெத்தினம் : 188/190, செட்டியார் தெரு, கொழும்பு-11.
127

Page 81
திருமிகு. அ. புஸ்பராசா
அ. கருணாகரன் திருமிகு. வே. சிவ. ஜெயராசா நித்திய கல்யாணி நகைமாளிகை
திருமிகு. T. நமசிவாயம்
திருமிகு. மு. குபேரன் திருமிகு. மா. கோகிலன் திருமதிகு. எஸ். சித்திரவே நிலோகா நகைமாளிை திருமிகு. K. ஞானவேல்
திருமிகு. ரி. இராசு ஆர்த்தி நகைமாளிக்ை
ப. சபரெரத்தினம் சுபாஜினி நகை மாளிகை
திருமிகு. அருளம்பலம் திருமிகு. ப. விசுவையா
அம்மன் நகைமாளிகை
திருமிகு. பெ. முத்துலிங்கம்
128
கோல்ப்கட்டிங்சென்றர்கொழும்பு-11. 64.சிவிச்றோட்,கொழும்பு-11. பட்டபுரம் பெரியபோரதீவு
கொழும்பு-11. 96. செட்டித்தெரு, கொழும்பு-11.
கிநகைமாளிகை கொழும்பு-11.
மகள் செட்டியார் வீதி கொழும்பு-11. 22.மெயின் வீதி, மட்டக்களப்பு தலைந்ேது இளைஞர்மன்றம்ஐந்தாச்சிமடம் மட்டக்களப்பு
முனைத்தீ பெரியபோரதீவு
கொழும்பு-11.
19.கௌவ்வேர்ஸ்லேன்கொழும்பு1.
பட்டாபுரம் பெரியபோரதீவு
மட்டக்களப்பு
கணக்காளர், கச்சேரி மட்டக்களப்பு.
 
 
 
 
 
 
 
 
 


Page 82
ஆசிரியர்
பூம செல்வத்துரை அவர்கள் பெரிய இராசம்மாதம்பதிகளின் இரண்டாவதுபு மட் அரசடிப்பாடசாலையிலும், உய வித்தியாலயத்திலும் பெற்றார்.
பாடசாலைக்காலத்திலிருந்தே தி. இயங்கியவர்.
பாடசாலை விட்டகன்றதும் இலங் கிளைச் செயலாளராகவும் சிலகாலம் ம
ளராகவும் செயல்பட்டார். அக்காலத்தி பத்திரிகைகளை நடத்தினார். தமிழர் செய்து எழுதி தமிழர்களின் சுதந்திர ஆண்டு சமநீதி மாதாந்தப் பத்திரிகைை 1956, 1957 1959ம் ஆண்டுகளில் விழா. தமிழுக்குதலை தந்த மன்னன். க என்ற சமூக நாடகங்களை எழுதி நடித் தடுக்கப் பலிகொடா இயக்கமே நடத்தி இவரின் சிறுகதைகளான விதவை. சமூக சீர் கேடுகளை அம்பலப்படுத்திய ச யரின் வெளிவந்த நூல்கள் தமிழனே ே தமிழர் வரலாறும் இன்றைய நிலையும் எ தாக்கத்தையும். ஊக்கத்தையும் ஏற்படுத் இவர் மட்டக்களப்பு மாவட்டத்திலு காலமாக சமூக சேவையிலிருப்பவரா: பொற்தொழிலாளர் சமாசம் கிராமேதை வீடமைப்புச் சபைகளில் தலைவராக இ ஆண்டு பெரிய போரதீவு முத்தமிழ் இன நலஜோதி எனப்பட்டமளித்து பொன்னாக ஆண்டு பெரிய போரதீவு பூரீ பத்தி பொன்னாடை போற்றிப் பொற்கிளி கொழும்பில் சிலோன் யுனைட்டட் ஆர்ட் இவரையும் பாராட்டிக் கெளரவித்தார்: விஸ்வகுல பிரமகுல ஆதினத்தார் பொன் வைத்தியசாலை ஆலோசனைச ஆலோசனைசபை, பனை அபிவிருத்திச் 1990ம் ஆண்டு பனை அபிவிருத்திச்சபைட சிறந்த ஆய்வாளர். இவரின் ஆய்வுக்கட்டு பத்திரிகைகள் அனைத்திலும் வெளி வரு
MMLLLH LLLLLL LLLLL S LLLLS LLLLLLOLLL LLLLLL
 
 

ர் பற்றி.
பபோரதீவு திரு.திருமதி.பூபாலப்பிள்ளை தல்வனாகும். இவர்தன் ஆரம்பக்கல்வியை Iர்கல்வியைப் பழுகாமம் கண்டுமணி
மு. கழகத்தின் பால்பற்றுக் கொண்டு
கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புக் ட்டக்களப்பு மாவட்ட நிருவாகச் செயலா ல் தாயகம், நேர்வழி என்ற மாதாந்தப் பற்றிய சரித்திர ஆதாரங்களை ஆய்வு உணர்வுக்கு ஆக்கமுட்டினார். 1971ம் ய நடத்தினார்.
யார்குற்றவாளி. கடவுள்யார்?, வெற்றி ட்டைவிரல் காணிக்கை, இசை வேந்தன் தார். ஆலயங்களில் பலி கொடுப்பதைத் வெற்றி கண்டார். கற்பழிப்பு. குடிகாரன். மறுந்துவிடு என்பன 4ாத்திரமான சிறுகதைகளாகும். ஆசிரி கள். தாத்தாவும் தமிழரும். இலங்கைத் ன்னும் நூல்கள் தமிழர்கள் மத்தியில் ஒரு தியுள்ளன. ள்ள சமூக சேவையாளர்களில் நீண்ட வார். கி.மு. சங்கம் அகில இலங்கை யசபை, வட்டாரச்சுகாதாரசபை, பகுதி ருந்து நற்சேவையாற்றியதனால் 1988ம் ளைஞர் இந்து கலாமன்றத்தினர் சமூக டை போற்றிக் கெளரவித்தார்கள். 1995ம் ரகாளியம்மன் பரிபாலனசபையினர் வழங்கினார்கள். 12-09-1999ம் திகதி ஸ்டேஜ் நடாத்திய பாராட்டு விழாவில் கள். 1995ம் ஆண்டு பெரிய போரதீவு னாடை போர்த்திக் கெளரவித்தார்கள். பை, கிழக்கிலங்கை போக்குவரத்து - சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் தில் தலைவராகவும் கடமை யாற்றியவர். ரைகள் இந்த நாட்டின் முன்னணி தமிழ் நகின்றன.
பதிப்பகத்தார்
alambo-13. Tul: 48545458273 Tele FIX: 11588