கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐரோப்பியர் பார்வையில் இலங்கை

Page 1
夔 | .
ー。
出 窓、徐 空三玉冒リ *: 'F3: ニー நா.மயில்வாகனம், BA: 2
 
 


Page 2


Page 3

ஐரோப்பியர் பார்வையில் இலங்கை
நா. மயில்வாகனம் பீ. ஏ. ஆர்னஸ் 1 பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்,

Page 4
முதற்பதிப்பு டிசம்பர் 1974 First Edition: 1974 உரிமைபதிவு
CEYLON THROUGH EUROPEAN EYEs. 3. * ( / Synopsis) N. MYLVAGA NAM B. Ai (Irons)

முன்னுரை
இலங்கையைப் பற்றி எழுதிய நான்கு ஐரோப்பியர்களது நூல் களும், பதினேழாம் நூற்ருண்டில் எழுதப்பட்டது அல்லது எழுதி முடிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட பதினைந்து ஆண்டுகளுக்குள்ளேயே என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இவர்களுள் போர்த்துக்கீசரான குவைருெஸ் சுவாமிகளைவிட ஒல் லாந்தவரான வண. பிலிப்பு பால்தேயு, ஆங்கிலேயரான ருெபேட் நொக்ஸ், போர்த்துக்கீசப் படைத் தலைவனுன றிபேறியோ ஆகியோர் இலங்கையில் பல வருடங்கள் வாழ்ந்து நாட்டைவிட்டுச் சென்றதும் இந்நூல்களை எழுதியுள்ளனர்:
நொக்ஸ் பத்தொன்பது வருடங்களும், றிபேறியோ பதினெட்டு வருடங்களும், பால்தேயு எட்டுவருடங்களும் இலங்கையில் வாழ்ந்துள் ளனர். குவைருெஸ் சுவாமிகள் மட்டும் இலங்கைக்கு வரவில்லை:
பதினேழாம் நூற்ருண்டில் இலங்கை புவியியல் சமூக அடிப் படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கரை யோர மாகாணங்களில் றிபேறியோவும், கண்டியிராச்சியத்தில் நொக்சும், வடபகுதியில் பால்தேயுவும் வாழ்ந்து அவ்வப்பகுதிகளை ஆராய்ந்து எழுதியுள்ளனர்:
பால்தேயு இலங்கைக்கு மதச்சேவை செய்யவந்த மூன்ரும் ஆண்டு றிபேறியோ யுத்தக் கைதியாக பற்றேவியாவிற்கு அனுப்பப்பட்டார் றிபேறியோ நாட்டை விட்டுச் சென்ற அடுத்த ஆண்டில்ேயே ருெபேட்நொக்ஸ் இலங்கையில் கைதியாக்கப்பட்ட்ார். குவைருெஸி னது நூலில் றியேறியோவின் பெயர் கூடக் குறிப்பிடாதமை வியப்பிற் குரியதாகும்.
நான்கு நூல்களில் நொக்ஸினதும் பால்தேயுவினதும் உடனடி யாக வெளியிடப்பட்டன. றிபேறியோவினது நூல் 1836-ம் ஆண்டிலும் குன்வருெளினது நூல் 1916-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன.
இந் நூல்கள் இலங்கையின் சமூக சமய பொருளாதார வர லாற்றை அறிய விரும்புகிறவர்களுக்கும், பிரயாணக் கதைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விருந்தாகவுள்ளன. மாணவர்கள் மத்தியில் இந்நூல்களை அறிமுகப்படுத்தி ஆராய்வு மனப்பான்மையை வளர்ச் கும் நோக்கத்துடனேயே இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்:
மாணவர்களின் நன்மையைக் கருதி ஒவ்வொரு நூலுக்கும்
ஆசிரியர் அறிமுகம், நூலின் அமைப்பு பற்றிய விளக்கம், மதிப்பீடு என்பனவற்றைத் தொகுத்துச் சுருக்கமாக எழுதியுள்ளேன்; நூலின்

Page 5
sy
தன்மையையும் ஆசிரியரின் நடையையும் விளங்கிக் கொள்வதற்காகச் சில பகுதிகள் மொழிபெயரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு அணிந்துரைகள் வழங்கிய இலங்கைப்பல்கலைக்கழகக் கொழும்பு வளாகச் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. பி. பஸ்தியாம் பிள்ளே அவர்களுக்கும், எமது கல்லூரி அதிபர் திரு, கே. பூரணம் பிள்ளை அவர்களுக்கும் எனது நன்றி உரியது. பதிப்பாலோசனைகள் வழங்கிய யாழ்ப்பாண வளாகத் துணை நூலகர் நண்பன் ஆ. சிவநே சச்செல்வன் அவர்களுக்கும், எழுத்துப் பிழைகளைத் திருத்தியுதவிய ஆசிரிய நண்பர்கள் செ. கணபதிப்பிள்ளை, க. உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக. இந்நூலில் காணப் படும் சில சொற்பிரயோக அச்சுப் பிழைகளை அடுத்த பதிப்பில் திருத்தி யமைப்பதுடன் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நன்றியுடன் வரவேற்கின்றேன். இந்த நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்ட பூரீ லங்கா பதிப்பகத்தாருக்கு எனது நன்றி உரித்தாகுக.
பரியோவான் கல்லூரி,
யாழ்ப்பாணம். நா. மயில்வாகனம்
5-12-1974
O யாழ்ப்பாணக் கோட்டையில் ஒல்லாந்தருக் கெதிராக நடைபெற்ற சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுத் தண்டனைகள் வழங்கப்பட்ட முறையினை முன் அட்டையில் உள்ள சித்திரம் விளக்குகின்றது;
யாழ்ப்பாணக் கோட்டை கைப்பற்றப்பட்ட பின்னர் ஒல்லாந்தர் நாகபட்டினத்திற்குப் படையெடுத்துச் சென்ற போது யாழ்ப்பாணக் கோட்டையிலுள்ள ஒல்லாந்தரைக் கொன்று கோட்டையைத் திரும்பவும் கைப்பற்றச் சதித்திட் டம் உருவாக்கப்பட்டது. w
சதித்திட்டத்தை உருவாக்க மூலகர்த்தாக்களாக விளங்கிய டொன் லூயிஸ், மின்னுரைச் சேர்ந்த ஒருவர், போர்த்துக்கீசர் ஒருவர், தண்டனையளிக்க உபயோகிக்கப்படும் சட்டத்தில் பிணைக் கப்பட்டு கோடரியினுல் முதலில் தொண்டையிலும், பின்னர் மார்பிலும் வெட்டப்பட்டனர். பின்னர் அவர்களது இருதயம் வெளியே எடுக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கைத்துரோக முகங் களில் செலுத்தப்பட்டது சதித்திட்டத்தில் பங்குபற்றியவர் களில் பதினெரு பேர் தூக்கிலிடப்பட்டனர். மற்றையவர்கள் நாடுகடத்தப்பட்டனர் i.
(பிலிப்பு பால்தேயுவின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

யாழ்ப்பாணம், பரியோவான் கல்லூரி அதிபர் திரு. க. பூரணம்பிள்ளை அவர்கள் வழங்கிய
மதிப்புரை
எனது கருத்துப்படிதிரு. நாடு மயில்வாகனம் அவர்கள் எழுதிய 'ஐரோப்பியர் பார்வையில் இலங்கை" காலத்திற்கேற்றதும் உப யோகமானதுமாகும். ஜி.சி.ஈ. உயர்தர வகுப்பில் வரலாற்றைக்கற்கும் மாணவர்கள் தகவல் தேட்ட நூல்களை மூலமொழிகளின் மொழியை நன்கு தெரியாமையால் பயன்படுத்துவதில்லை. ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்களின் அறிவுக்கு ஏற்றதாக அமையவில்லை. தமிழில் எழுதப்பட்ட இந்நூல் தேவைக் கேற்ற விதத்தில் அமைந்துள்ளது. நொக்ஸ், பால்தேயு, றிபேறியோ குவைருெஸ் ஆகியோரின் நூல்களிலிருந்து தேவையான சுருக்கங்கள் தரப்பட்டுள்ளன.
உயர்தரவகுப்பு மாணவர்கள் தகவல் தேட்ட நூல்களை மதிப் பிடவும், அவற்றின் உண்மைகளை அறியவும், நம்பத்தகு தன்மையை அளவிடவும் ஒவ்வொரு நூலாசிரியர் பற்றிய திரு. மயில்வாகனம் அவர்களின் முன்னுரை உதவியாக அமைந்துள்ளது.
பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்காத மாணவர்களும் இந்நூலில் தரப்பட்டுள்ள சுவையான பகுதிகளை வாசிப்பதன்மூலம் தமது பிறந்த நாட்டினைப்பற்றிக் கூடிய விபரங்களை அறியக் கூடியதாக இருப்பதைக் கானலாம்.*
இந்நூலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுவர்ச கர்களுக்கும் இதயபூர்வமாகச் சிபார்சு செய்கிறேன்.
* மறுபக்கத்தில் இந்நூலிலிருந்து தெரிந்து தரப்பட்டுள்ள எடுத்
துக்காட்டுச் சுருக்கங்களைப் பார்வையிடவும்

Page 6
நொக்ஸ்:
கணவன் உண்ணும்போது மனைவியே பரிமாறுவாள்; மனைவி கணவனுடன் சேர்ந்து உண்பதில்லை. கணவன் உண்ட பாத்தரத்தில் எஞ்சியதையே மனைவி உண்பாள். சாப்பிடும்போது அதிகமாகக் கதைப்பதில்லை. (பக்கம் 14)
இறந்தவர்களுக்காகப் பெண்கள் புலம்பும்போது தலைமயிரைக் குலைத்துக் கீழே தொங்கவிட்டு இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னல் வைத்துக்கொண்டு பயங்கரமான சத்தத்துடன் இறந்தவர்களின் பெரு மையைக் கூறி அழுவார்கள். (பக்கம் 15)
பால்தேயு:
யாழ்ப்பாணப் பகுதியில் இளம் வயதுள்ள பெண் அல்லது ஆண் பெற்ருேர்களின் அனுமதியில்லாமல் ஒன்றுகூடுவதற்குச்சம்மதிக்கமாட்
டார்கள். இது மிகவும் புகழ்ச்சிக்குரியதாகும். (பக்கம் 87)
கணவனும் மனைவியும் ஒருமித்து உண்பதில்லை. கணவன் உண்ட பின் மனைவி தனித்து உண்பாள். \ (பக்கம் 28)
றிபேறிபோ:
சிங்களவர்கள் பணத்தில் பேராசை கொண்டவர்கள். இதனல் நம்பிக்கைத் துரோகமுடையவர்களாயுள்ளனர். இந்நோக்கத்துடனே கிறிஸ்தவமதத்தைப் பின்பற்ற முன்வந்தாலும் பின்னர் தமது மதங் களையே பின்பற்ற முயல்வர்: (பக்கம் 37)
காடுகளில் போதியளவு உணவைப் பெறுவதினல் விவசாயம் செய்வதில் சோம்பேறிகளாகவுள்ளனர். உப்பு மட்டுமே அவர்களுக்கு அருமையாகவுள்ளது. (பக்கம் 38)
குவைருெஸ்:
சிங்களவர்கள் கர்வமுள்ளவர்கள், ஆடம்பரமானவர்கள் சோம் பேறிகள். அவர்கள் தங்களைத் தேவலோகத்திய வம்சத்தவர்களென. வும், பண்டைய அரசவம்சத்தினரெனவும் எண்ணுபவர்கள். (பக்கம்48)
போர்வீரர்கள் குழந்தைகளை ஈட்டிமுனைகளில் எறிந்து ஏந்தி அக்குழந்தைகளின் அழுகுரலையும் பரிதாபத்தையும் பாராது கொன் றனர். ஆண்களை மல்வானைப் பாலத்திலிருந்து ஆற்றில் ஈர்றிந்து கொன்றனர். (பக்கம் 49)

இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வனாக் வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. பி. பஸ்தியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய
அணிந்துரை
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆசிரியராகவுள்ள திரு. நா. மயில்வாகனம் அவர்கள் இந்நூலில் இலங்கையில் நான்கு ஐரோப் பியர்கள் தாம் வாழ்ந்த காலத்தைப்பற்றித் தெரிவித்த அபிப்பிராயங் களை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கொத்லாந்து, ஒல்லாந்து, போர்த்துக்கல் நாட்டவர்களால் எழுதப்பட்ட இந்நூல்கள் போர்த் துக்கீசர் ஒல்லாந்தர் ஆதிக்கத்தின் கீழ் விளங்கிய இலங்கையின் கரையோர மாகாணங்களின் அரசியல், சமூக, பொருளாதார கலாச் சார நிலைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குரிய அடிப்படையான மூலா தார ஏது நூல்களாகவுள்ளன. பலமுறை அடிபணிய வைக்கமுயன் றும் சுதந்திரமாக விளங்கிய கண்டியிராச்சியத்திற்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையேயும் நிலவிய தொடர்புகளின் விபரங்களையும் அறியத்தருகின்றன. இவ்வகையில் நொக்ஸினது நூல் அடைபட்டுக் கிடந்த கண்டியிராச்சிய நிலைமைகளை அறிவதற்குரிய நிச்சயமான அத்தியாவசியமான நூலாக விளங்குகின்றது.
திரு. நா. மயில்வாகனம் அவர்கள் அத்தியாவசியமான அறிக்
கைகளையும் இலக்கியங்களையும் ஆராய்வதில் அதிக நேரத்தையும் சிரமத்தையும் பாராது முயன்றுள்ளார். இந்நூலில் தனது உழைப்பின் பெறுபேறுகளைப் புத்திகூர்மையாகவும் விளங்கக் கூடியதாகவும் விமர் சனக் கண்ணுடனும் சிறந்த நடையிலும் எழுதியுள்ளார்.
இந்நூல் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அத்தி யாவசியமானதாக இருப்பதுடன் இலங்கையின் வரலாற்றை அறிய விரும்புகின்றவர்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. நான் அறிந்த மட்டில் இத்தகைய பெறுமதிவாய்ந்த பயனுள்ள முயற்சி முன்னுெரு போதும் தமிழில்மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இத்தகைய சிறந்த நூலை ஆக்கியமையால் திரு. மயில் வாகனம் அவர்கள் எல்லோருடைய புகழ் மொழிக்கும் நன்றிக்கடனுக்கும் உரியவராகின்ருர்:
இலங்கை வரலாற்றைத் தமிழ்மொழி மூலம் அறிய விரும்பு வோருக்கு இப்படைப்பு ஓர் சிறந்த நூலென நான் மகிழ்ச்சியுடன் ஒபார்சு செய்கிறேன். திரு. மயில்வாகனம் அவர்கள் தமது முயற் ஒகளைத் தொடர்ந்து இலங்கையில் பிரித்தானியர் காலச் சமகால வரலாற்றை ஆராய்ந்து அறிந்து பணிபுரிவாரென நம்புகின்றேன்;

Page 7
பொருளடக்கம்
விடயம் பக்கம்
முன்னுரை iii மதிப்புரை у அணிந்துரை yii l. இலங்கையுடனன வரலாற்றுத் தொடர்பு 1
- ருெபேட் நொக்ஸ்
2. ருெபேட் நொக்வலின் நூலிலிருந்து.
3. இலங்கைத்தீவின் உண்மையான, நிச்சயமான வருணனை 16
- பிலிப்பு பால்தேயு
4. பால்தேயுவின் நூலிலிருந்து. . w 26 。
5. இலங்கைத்தீவின் வரலாற்றுத் துன்பியல் நாடகம் 29
- யோ றிபேறியோ
6. றிபேறியோவின் நூலிலிருந்து. 37
7 இலங்கையை ஆத்மீக இலெளகீகத்துறையில் வெற்றிபெறல் 40
* - பெனுன்டி குவைறெஸ்
8. குவைருெவயின் நூலிலிருந்து $ 8't . 48.

இலங்கையுடனுன் வரலாறுத் தொடர்பு
- ருெபேட் நொக்ஸ் -
;ዯ
ருெபேட் நெக்ஸ் எழுதிய இந் நூல் பதினேழாம் நூற் ருண்டின் இலங்கையின் சமூக பொருளாதார வரலாற்றை அறிய உதவி நூலாகவுள்ளது இந் நூல் இலண்டனில் 1881-ம் ஆண்டு முதலில் ரேசுரிக்கப்பட்டது. ருெபேட்ஃ நொக்ஸின் காலத்திலேயே ஒல்:ோந்து, ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளில் மொழி பெ8ர்த்து வெளியிடப்பட்டது. ஆனல் தொடர்ந்து இரண்டரை நூற்ருகண்டுகளாக இந் நூல் மதிப் பிழந்து 8 பைட்டது.
:பிரித்தானிய கிழக்கிந்திய கப்பெனியின் மாலுமியாக விளங்கி ருெடேட் நெக்ஸ் 1860-ம் ஆண்டு கண்டிய மன்னன் இரண்டாம் இராசசிங்களுல் கைதியாக்கப்பட்டு இருபது வருடங்கள் இண்டி இராச்சியத்தில் வாழ்ந்தார். கண்டியிராச்சித்திலிருந்து தப்பியோடியவுடன் கண்டியிராச் சியத்தைப் பற்றியும் தனது அனுபவத்தைப் பற்றியும் இந் நூலில் விபரித்துள்ளார். சிறந்த ஏது நூலாகவும் பிர யாணக் கதையாகவும் அமைந்துள்ளதால் இந் நூல் பெரிதும் பயனுடையதாக அமைந்துள்ளது.
ரூெபேட் நொச்ஸ் 1641-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8-ந் திகதி பிறந்தார். இளமையில் தனது தந்தையுடன் வியாபாரத்திலீடுபட்டிருந்தார். 1655 ம் ஆண்டு தந்தை யும் மகனும் தமது சொந்தக் கப்பலான 'ஆனில்' இலண் டனிலிருந்து இந்தியசவிற்கு வந்து வியாபாரம் செய்து இலாபத்துடன் திரும்பினர். இவர்களது விதியை நிர்ண யித்த இரண்டிாவது பயணம் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தினரின் சேவையில் தமது கப்பலில் வியா பாரத்திலீடுபல். போதே நிகழ்ந்தது. சென்னையிலிருந்து
இ வ. தொ

Page 8
一 2 一
பாண்டிச்சேரிக்கு இவர்களது கப்பல் செல்லுகையில் ஏற் பட்ட பெரும் புயலினுல் கொட்டியாரக் குடாவை 1659-ம் ஆண்டு நவம்பர் 19-ம் திகதியடைய நேரிட்டது.
இலண்டனுக்கு ருெபேட் நொக்ஸ் கைது செய்யப்பட்ட தைப் பற்றி அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் கொட் டியாரக் குடாவில் நான்கு மாதங்களாக அங்குள்ள மக்க ளால் நன்கு உபசரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவ ரது கப்பலிலிருந்த மாலுமிகள் பலர் உண்ணுட்டிற்குள் சென்று தேவையானவற்றைப் பெற்று வந்ததாக நொக்ஸ் கூறி யுள்ளனர். ஏற்கனவே கொட்டியாரக் குடாவிற்கு வந்த கப்பலின் மாலுமிகள் கைதாக்கப்பட்டமையை அறிந்தும் "ஆன்" கப்பலின் மாலுமிகளை இவ்விதம் நடமாட விட்டமை விந்தையாகயுள்ளது. "ஆன்" கப்பற்றலேவனுக்கு ஏற்கனவே கைதாக்கப்பட்ட மாலுமிகளேப் பற்றி விசாரவை செய்யும்படி விடுக்கப்பட்ட சட்டளையே இவ்விதம் செயற்பட்டமைக்குரிய காரணமாயிருக்கலாம், ஆணுல் ருெபெட் நொக்ஸ் தனது நூலில் இவ்விதகட்டளை விக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட வில்லை.
ஆங்கிலேயக் கப்பலொன்று கொட்டியாரக் குடாவில் தங்கியிருப்பதையறிந்த இரண்டாம் இராசசிங்கன் திசவை யொருவனை அனுப்பி கப்பலில் வந்தவர்களின் நோக்கம், எவ்வளவு காலம் தங்கியிருக்கப் பே8 கின்ருர்கள் என்பன வற்றை அறிந்து முடியுமானவரை கைதிகளாகவும் பலரைக் கொண்டு வரும்படி பணித் திருந்தான். இராசசிங்கனின் ஆட்சிமுடிவில் கிட்டத்தட்ட 500 ஐரோப்பிய கைதிகள் கண்டியில் இருந்தனரெனக் கூறப்படுகின்றது. இவ்விதம் இராசசிங்கன் கைதிகளை கண்டியிராச்சியத்தில் வைத்திருந் தமைக்கு ருெபேட் நொக்ஸ் இலாப நோக்கம் பணச் செருக் குக் காரணமல்ல வென்றும் அவர்களின் சேவையைப் பெற வேண்டுமென்ற இலட்சிய நோக்கே காரணமெனத் தனது நூலில் கூறியுள்ளார். ஆணுல் உண்மையில் நொக்ஸ் பின்னர் கூறியபடி இராசசிங்களுல் கைதாக்கப்பட்டமைக்குத் தமது வருகையை அரசனுக்குக் கடிதமூலம் அறிவித்து வெகுமதிகள் அனுப்பாமையே காரணமாயிருக்கலாம்.

- 3 -
இராசசிங்களுல் அனுப்பி வைக்கப்பட்ட திசாவையின் தந்திரத்தால் ருெபேட் நொசீஸ் உட்பட பதினுறு மாலுமி கள் கைதாக்கப்பட்டாலும் கப்பற்றலைவனுக்குக் கடிதத்து டன் சென்ற இருவர் பின்னர் திரும்பி வரவில்லை. பதினுறு கைதிகளும் உண்ணுட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுத் தனித்தனியே ஒவ்வொரு கிராமங்களிலும் விக்டு வைக்கப் பட்டனர்.
கொட்டியாரத்திலிருந்து கண் டி க்குக் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டபின் நொக்ஸையும் அவரது தந்தையை யும் பண்டார கொஸ்வத்த என்ற வாரியப் பொலவிலுள்ள
கிராமம் ஒன்றில் விட்டனர். இங்கு நொக்ஸினது தந்தை
மலேரியா நோய்வாய்ப்பட்டு 1861 பெப்ரவரியில் இறந்தார். ருெபேட் நொக்ஸ் தன்னந்தனியணுகவே வாழ்ந்து வந்தார்.
1664-ம் ஆண்டு இரண்டாம் இராசசிங்கன் சென்னை ஆள்
பதியின் வேண்டுகோளின்படி கைதிகளை விடுதலை செய்ய
எண்ணித் தலைநகருக்கு வரவழைப்பித்தான். ஆணுல் கண்டி யில்:திடீரெனஏற்பட்டகிளர்ச்சியினைத் தொடர்ந்து திரும்ப வும்கைதிகளை வேறுபுதிய கிராமங்களுக்குஅனுப்பிவைத்தான். நொக்ஸ் கேகாலைக்குத் தென் கிழக்கேயுள்ள கிராமம் ஒன் றில் 1664-ம் ஆண்டு தொடக்கம் 1686-ம் ஆண்டு வரை காலம் கழித்தார். பின்னர் கம்பளயிலிருந்து ஐந்து மைல் தொலையிலுள்ள லெகுந்தெனியா என்ற கிராமத்தில் வாழ்ந் தார். 1869-ம் ஆண்டு கண்டிக்கு வடக்கே பத்துமைல் தொலையிலுள்ள எலடெற்ற என்ற இடத்தில் நிலத்துன் டொன்றினை விலைக்கு வாங்கி வீடொன்றினை அமைத்து வாழ்ந்தார்.
ருெபேட் நொக்ஸ் கப்பற்றலைவன் மகனென்றிராமல் கடின உழைப்பாலும் உள்ளூர் வியாபாரத்தாலும் அதிக பணத்தைச் சேகரித்தார். தன்னைப் போன்று பிரமச்சாரிக ளாக விருந்த வேறு மூன்று ஐரோப்பிய கைதிகளையும் அழைத்து எலடெற்றவில் வாழ்ந்து வந்தார். கிறிஸ்மஸ், தத் தார் தினங்களில் ஆங்கிலேயரையும் அவர்களது குடும்பத்தின ரையும் அழைத்து விருந்துபசாரங்கள் மேற்கொண்டிார்

Page 9
- 4 -
இலூசியன என்ற மூன்று வயதுப் பெண் குழந்தையைத் தனது வளர்ப்புக் குழந்தையாக்கிக் கொண்டார். கண்டி யிராச்சியத்திலிருந்து தப்பியோடும்போது எ ல டெற்ற வி லுள்ள செழிப்புள்ள தோட்டித்தினையும் வீட்டையும் இக் குழந்தையின் பெயரில் உயில் எழுதி விட்டுச் சென்ருர்.
நொக்ஸ் கண்டிய வாழ்க்கை முறையினை நன்கு பழகி யிருந்தாலும், நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டுமென்ற எண்ணம் அவர் மனத்தில் நிலைத்திருந்தது. நொக்ஸ் கண்டி யிலிருந்து கொண்டே தன்னை மீட்கும்படி உதவிகோரிச் சென்னை ஆள்பதிக்கு ஒல்ல?ந்தரது கம்பெனிக்கூடாகக் கடிதம் அனுப்பியிருந்தார். ஒல்லாந்த ஆள்பதியாகவிருந்த வான் கோயன்ஸ் கைதிகளில் இரக்கம் கொண்டு சிறு தொகைப்பணமும் "கடிதமும் கள்ளத்தனமாக அனுப்பிய தாகத் தெரிகின்றது. ஒல்லாந்தருக்கும் ஆங்கிலேயருக்கு மிடையில் நிலவிய வர்த்தக ஏகபேர்க உரிமைப் போல்டியே ஆங்கிலேயக் கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதில் தாமதத்தினை ஏற்படுத்தியது.
நொக்ஸ் உண்ணுட்டில் வியாபாரம் செய்வது போன்று அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு தப்பியோடுவதற் குரிய பாதைகளை, இடங்களை அறிவதில் கவனம் செலுத்தி ஞர். 1879-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18-ம் திகதி நொக்ஸ் தனது திட்டங்கள் பூர்த்தியானதும் அநுராத புரத்திற் கூடாக மல்வத்துஒபாக் கரையோரமாக அரிப்பி லுள்ள ஒல்லாந்தரது கோட்டையை யேடைந்தார். நொக்ஸ் கண்டியில் பத்தொன்பது வருடங்கள் ஆறுமாதங்கள் பதி னேழு நாட்கள் கைதியாகக் கழித்திருந்தனர். அரிப்பி விருத்து மன்னருக்கு ஒல்லாந்தரினல் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கொழும்பு சென்று பற்றேவியாவை யsைந்தார். பற்றேவியாவிலுள்ள மகாதேசாதிபதிக்குக் கண்டியிராச்சியத்தின் நிலைமைகளை விளக்கினர் எனப்படு கின்றது. பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று தொடர்ந்து கப்பற்றலைவனுகப் பதவி வகித்தார்.
இவரது நூல் வெளியிடப்பட்டிபோது இரண்டாம் சாள்ஸ் மன்னன் அதனை வாசித்துவிட்டு இவரை நேரில்

سیستا 5 -
அழைத்துப் புகழ்ந்தான் எனக் கூறப்படுகின்றது, நொக்ஸ் தனது சுய சரித்திரத்தில் இந்நூலை எழுதிப் பிரசுரிக்க வேண்டுமென்ற எண்ணம் ஆரம்பத்தில் தனக்கு இருக்க வில்லையெனக் கூறியுள்ளார். பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தில் இயக்குனர்களில் ஒருவரின் தூண்டுத விஞலேயே இதனைப் பிரசுரித்ததாகக் கூறியுள்ளார்.
இந்நூல் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று பகுதிகளும் நாட்டினை அரசனை, அரச சபையை சமூக அமைப்பை விபரித்துச் செல்கின்றது. நெரக் ஸினது தனிப்பட்ட வரலாறு கைதியாகியமை தொடக்கம் தப்பியோடியது வரை நான்காவது பகுதியில் கூறப்பட் டுள்ளது. முதல் மூன்று பகுதிகளிலும் நாட்டின் புவியியல், இயற்கையமைப்பு, விவசாயம் இரண்டாம் இராசசிங்கனின் ஆட்சி, நிர்வாகம், சமூக அமைப்பு, சட்ட அமைப்பு ஆகி யன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் முதலில் பிர சுரிக்கப்பட்டபோது "கண்டியிராச்சியத்திலிருந்து நொக்ஸ் தனது முதுகிலோ பணப்பையிலோ ஒன்றையும் கொண்டு வராவிட்டாலும் கண்டியிராச்சியம் முழுவதையும் தனது தலையில் சுமந்து வந்து விட்டார்" எனப் புகழப்பட்டார்.
நொக்ஸ் பியூறிற்ரன் மதத்தவராக விளங்கியதால் இங்கிலாந்தில் இவர் காலத்தில் காணப்பட்ட சமயத் தகராறுகளிலிருந்து விடப்பட்டிவராக விளங்கினர். பைபிளிலேயே நம்பிக்கை கொண்டு மற்றைய மதத்த வர்கள் கொண்டிருந்த துவேச மனப்பான்மைகளற்றுக் காணப்பட்டார். தனது சொந்தச் சமய நம்பிக்கைகள் அவரது நூலில் அடிக்கடி எடுத்தாளப்பட்டாலும் இவரது நூலில் காணப்படும் மதிப்பீடுகளில் அவை பாதிப்பை ஏற் படுத்தவில்லை. கைத்தொழிற் புரட்சிக்கு முந்திய இங்கி லாந்து சமூகத்தைச் சார்ந்தவராக அவர் விளங்கியமையால் கண்டிய சமூகத்தை நன்கு விளங்கிக் கொள்ளக்கூடியவராக விருந்தார்.
கண்டி இராச்சியத்தில் இருபது வருடங்கள் வரை வாழ்ந் மையால் கண்டியிராச்சியத்தினை நன்கு அறியக் கூடிய

Page 10
- 6 -
வாய்ப்பினைப் பெற்றிருந்தார். கிராமப் புறங்களிலும் தலை நகருக்கண்மையிலும் வாழ்ந்துள்ளார். குறிப்பிட்டளவு பிர தேசத்தில் அவர் சுதந்திரமாக நடமாடக் கூடியதாகவிருந் தது. கண்டியில் வாழ்ந்த இறுதியாண்டுகளில் சிங்களக் கிராமத்தவனுகவே மாறியிருந்துள்ளார். 1673-ம் ஆண்டு முதல் 1679-ம் ஆண்டுவரை உள்ளூர் வர்த்தகராக மாறிப் பலபகுதிகளை நேரடியாகக் கண்டறியும் வாய்ப்பைப் பெற் றிருந்தார். தப்பியோடியபின் இவரால் தயாரிக்கப்பட்ட படம் கண்டியிராச்சியத்தினைப் பற்றிய இவரது அறிவை நன்கு விளக்குகின்றது. சில வருடங்களுக்குள்ளேயே சிங்கள மொழியையும் நன்கு அறிந்திருந்தார். ஆகவே கண்டியிராச் சியத்தில் கைதியாக விருந்த காலம் இவருக்கு அவ்விராச்சி யத்தினை அறிவதற்குரிய வாய்ப்பை நன்கு ஏற்படுத்தியது.
இந் நூலை நொக்ஸ் எழுதவேண்டியதன் நோக்கம் தனது மனத்திருப்திக்காகவும் நிம்மதிக்காகவுமேயெனத் தனது சுயசரிதத்தில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்நூலைப் பிரசுரிக்கவோ விற்பனை செய்யவோ அவர் எண்ணியிருக்கவில்லை. கண்டியில் தனது செயல்களுக்கு வேறு யாருக்காவது நியாயம் கூறவேண்டிய நிலையில் இருக்க வில்லே. தான் கண்டவற்றைத் திரித்தோ அல்லது உண்மை களை மறைத்தோ எழுதவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கவில்லை. ஆதலினல் நொக்ஸினது நூலில் கூறப் பட்டுள்ள விபரங்கள் உண்வையானவையெனக் கூறலாம்.
கண்டிப் பிரதேசத்தில் தான் கண்ட அனுபவங்களை விபரிக்கும்போது தனது அபிப்பிராயங்களைப் பல சந்தர்ப் பங்களில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். சிங்களவர்கள் சோம்பல் மிகுந்தவர்கள் உழைப்பாளிகளல்லவென்று கூறி யுள்ளார். அவரது தந்தையிறந்தபோது அடக்கம் செய்வ தற்கு ஒருவரும் உதவ முன்வரசமையையிட்டு மனம் நொந்து எழுதியுள்ளார். இரண்டாம் இராசசிங்கனின் எதேச்சதிகார ஆட்சியினையும் மானிய முறையிலான சேவை முறையையும் இவர் கண்டித்துள்ளார்.
நொக்ஸினது அனுபவங்கள் பல காரணிகளால் கட்டுப் படுத்தப்பட்டிருந்தன வென்றும் கூறலாம். இலங்கையில்

- 7 -
வாழ்ந்த பத்தொன்பது வருடங்களும் நிலைமைகளை அவதா னிப்பதில் முழுமையாகக் காலங் கழித்தார் எனக் கூறமுடி யாது. ஆரம்பத்தில் 1660-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைதாக் கப்பட்டதைத் தொடர்ந்து நோய்வாய்ப்பட்ட தனது தந்தை யைக் கவனிப்பதிலும் புதிய சூழ்நிலையில் அவதிப்பட்ட நிலை யிலுமே வாழ்ந்துள்ளார். தந்தையிறந்ததைத் தொடர்ந்து பதினறு மாதங்களாகத் தொடர்ந்து இவர் நோய்வாய்ப் பட்டிருந்தமையினல் வெளியனுபவங்களைப் பெற்றிருக்க (tipo 49. Li f7 ĝi.
மொழிக் கஷ்டத்தினலும் நொக்ஸினது அனுபவங்கள் தடைபட்டிருந்தனiென்று கூறலாம். சிங்கள மொழி யினைக் கற்பதிலும் சிங்களவர்களுடன் தொடர்பு கொள்வ திலும் படிப்படியாகவே முன்னேற்றம் அடைந்துள்ளார். தனது நூலிலேயே பல வருடங்களாகச் சிங்கள மொழி யைப் பேசவோ அல்லது விளங்கaே: முடியாத நிலயில் இருந்துள்ளதாகக் கூறியுள்ளார். கைதாகிய ஐந்துவருடங் களுக்குப் பின்னரும் ஓரளவிற்குமட்டுமே சிங்கள மொழியைப் பேசக்கூடியதாகவிருந்தது என்று எழுதியுள்ளார். சிங்கள மொழியினை கைதியாகவிருந்த இறுதி ஆண்டுகளில் நன்கு அறிந்திருந்தாலும் ஆரம்பத்தில் சூழ்நிலைகளே அறிவதற்குத் தடையாகவேயிருந்தது எனக் கூறல் வேண்டும்.
நொக்ஸினது அனுபவங்கள் இவருக்கு விடுக்கப்பட்டி ருந்த கட்டுப்.ாடுகளினலும் தடைப்பட்டன. பண்டார கொஸ்வத்த என்ற இடத்தில் கைதியாக ஒன்றரை வருடங் கள் வாழ்ந்தபோது இவரது நடமாட்டங்கள் பெருங்கட்டுப் பாட்டிற்குள் அமைந்திருந்தன. 1669-ம் ஆண்டு தொடக் கம் 679-ம் ஆண்டு வரையுமே அதிக சுதந்திரத்துடன் எல்லாப் பகுதிகளுக்கும் போய்வர முடிந்தது. இவ்வொன் பது வருட காலத்திற்கூட கண்டியன் மேற்கு வடமேற்குப் பகுதிகளைப் பற்றியே நன்கு அறிந்திருந்தார் எனக் கூற முடியும். -
பலதரப்பட்ட மக்களுடனும் நெசக்ஸ் தொடர்பு கொண்டு வ8ழ்ந்தனர் எனக் கூறமுடியாது. இவரது நெருங்

Page 11
- 8 -
கிய தொடர்புகள் ஓரளவு கல்வியறிவுள்ள மக்களுடன் இருந்ததாகக் கூறமுடியாதிருக்கின்றது. விஜயனது வம்சத் தைப் பற்றிப் போர்த்துக்கீசன் ஒருவன் இவரிடம் கூறிய கருத் திற்கு விளக்கங் கூறக் கூடியதாக ஒரு சிங்களவரையும் தான் காணவில்லையெனக் கூறியுள்ளார். இவர் தொடர்பு கொண்ட மக்கள் பொருளாதார கலாசார நிலைகளில் பின் தங்கிய வர்களாயிருந்திருக்க வேண்டும். கண்டியிராச்சியத்தில் சாதி குறைந்தவர்களுடனேயே இவரி அதிகம் தொடர்பு கொண் டிருந்தார் எனக் கூறலாம். ஆங்கிலேயக் கைதிகள் அரச னுக்குச் சொந்தமான நிலங்களிலும் கபடகங்களிலுமே வாழ்ந்து வந்தனர். இவர்களே உபசரித்தவர்கள் பெரும் பாலும் அரசனது மந்தைகளைப் பராமரிப்பவர்களாகவும் பல்லக்குச் சுமப்பவர்களாகவுமே பிருந்துள்ளனர். உதாரண மாக நொக்ஸ் வ்ாழ்ந்த லெகுந்தெனியா என்ற இடத்தில் பயங்கரக் குற்றவாளிகளே விடப்பட்டிருந்தனர். எலடெற்ற என்ற கிராமத்தில் வாழ்ந்தபோது கள்வர்கள் அதிகம் என நொக்ஸ் கூறியுள்ளார். அத்துடன் வறுமை மிகுந்த வர்களாகக் காணப்ட்டனர் எனப் பல சந்தர்ப்பங்களில் நொக்ஸ் குறிப்பிடுகின் ருர், ஆகவே உயர்ந்த for Sugabor யுடைய, சமூக பொருளாதார நிலையில் மேம்பட்ட மக்க ளுடன் அதிகளவு தொடர்பு கொண்டிருந்தாரெனக் கூற முடியாதிருக்கின்றது.
கண்டிய மன்னனுலும் மக்களாலும் கிறிஸ்தவ மதத் தினர்களும் ஐரோப்பியர்களும் நன்கு கெளரவிக்கப்பட்டன ரென்றும், சுதேசிகளை விடக் கூடிய உரிமைகளை அனுப வித்தனரென்றும் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திறமைகளின் அடிப்படையில் ஐரோப்பியர்கள் சுதேசிகளை விட திறமை யானவர்களென இரண்டாம் இராசசிங்கன் கருதியிருக்க லாம். ஆனல் விசுவாசம் மிக்க ஐரோப்பியர்களுக்கு மட் டுமே இராசசிங்கன் உயர் பதவிகளை அளித்திருந்தானென் பதும் குறிப்பிடத்தக்கதாகும். கண்டிப் பிரதேசத்திலிருந்த கிட்டத்தட்ட முப்பது ஆங்கிலேயக் கைதிகளில் மூன்று பேருக்கு மட்டுமே உயர் பதவிகள் அளிக்கப்பட்டிருந்தன. இராசசிங்கனின் அதிகாரராக விளங்கியவர்களில் ஒருவன்

- 9 - /*
தென்னிந்திய வம்சத்தவனுயிருந்துள்ளான். ஐரோப்பியர் களுக்கு மட்டும் கூடிய அந்தஸ்து அளிக்கப்பட்டிது எனக் கருதுவது பொருந்துவதாகவில்லை யெனலாம்.
சமூகத்திற்கூட வெள்ளையர்களை மக்கள் அவ்வளவு மதிக்க வில்லையெனத் தெரிகில்றது. சாதி குறைந்த மக்கள் கூடி, நொக்ஸையும் அவரது சக கைதிகளையும் தமது தண்ணி ருள்ள மண் பாத்திரங்களில் தொட அனுமதிப்பில்லையென நொக்ஸ் தனது நூலில் கூறியுள்ளார். கைதிகளின் தேவை களைக் கவனிக்கவும் கண்காணிக்கவும் விடப்பட்டவர்களுக் குப் படுக்கப் பாய்களோ அன்றேல் உடுப்பதற்குத் துணி களோ கொடுக்கப்படவில்லை. இவற்றிலிருந்து நொக்ஸ் எத்த கைய சூழ்நிலையில் எவ்வித சுதேசிகள் மத்தியில் வாழ்ந் தார் என்பது தெளிவாகின்றது.
இரண்டாம் இராசசிங்கன நொக்ஸ் வர்ணிக்கும்போது தானே நேரில் அரசனைக் கண்டது போல் எழுதியுள்ளார். ஆனல் பற்றேவியாவிலுள்ள ஒல்லாந்த அதிகாரிகளின் முன் சாட்சியமளித்தபோது கைதியாகவிருந்தகாலம் முழுவதி லும் இரு முறைகளுக்கு மேலாக அரசனைக் காணவில்லை யெனவும், அரசனின் உடிைத்தோற்றத்தினை அவதானிக்க முடியாதளவு தூரத்திலேயே நின்று பார்த்ததாகவும் குறிப் பிட்டுள்ளார். நொக்ஸ் தனது நூலில் இரண்டாம் இராச சிங்கன் தனது மகனையே நஞ்சூட்டிக் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆணுல் 1687-ல் இராசசிங்கன் இறந்த போது அவனது மகன் இரண்டாம் விமலதர்மசூரியன் பதவி யேற்றன். நொக்ஸ் இவ்விதம் குறிப்பிட்டமைக்கு இரண் டrம் இராசசிங்கன் தனக்கெதிராக ஏற்பட்ட கலகத்தினைத் தொடர்ந்து பரப்பிய வதந்தியே காரணமாயிருந்தது. கலகக்காரர்கள் இவனது மகனைப் பதவியிலிருத்த விரும்பிய தஞலேயே அதற்கெதிரான வதந்தியை இராசசிங்கன் பரப் பியிருந்தான். இளவரசனை இரகசியமான இடத்தில் பாது காப்பாக வளர்த்ததுடன் கலகக்காரர்களின் தலைவர்களில் நால்வரைச் சிரச்சேதம் செய்து ஒருவனை ஒல்லாந்தரிடமே தண்டனை வழங்கும்படி அனுப்பியிருந்தான், இதன் மூலம்
இ. வ, தொ-2

Page 12
- 10' سے
க்ண்டி மக்களை ஒல்லாந்தர் தமது நண்பர்களெனவும் வேண் டிய தருணத்தில் தனக்கு உதவிக்கு வருவார்களெனவும் நம்பச் செய்தான். கொழும்பிலுள்ள ஒல்லாந்தர் கூட பல வருடங்களாக இராசசிங்கனுக்குப்பின் வாரிசு இல்லேயென்றே நம்பித் தமது கொள்கையை4:கி அதன் அடிப்படையில் மாற்றியமைத்தனர்.
நொக்ஸ் கலகம்பற்றி புதிய கருத்துத் தெரிவித்தமைக்கு இங்கிலாந்தில் நடிை பெற்ற உண்ணுட்டுயுத்த அடிப்படை யில் அவர் சிந்தித்ததே காரணமாயிருக்க வேண்டும். ஸ்ரூவார்ட் மன்னர்களின் எதேச்சாதிகாரத்தினை இவர் நன்கு அறிந்திருந்ததால் இராசசிங்கனிஷ் ஆட்சியை எதேச்சாதி காரம் மிக்கதெனவும், கொடூரமானதெனவும், கலகத்தை மக்கள் கலகம் எனவும் வர்ணிக்கச் செய்தது. எனினும் 1698-ல் நொக்ஸ் எழுதிய தனது சுயசரிதைக் குறிப்புகளில் தனது தவறைத் திருத்தி எழுதியுள்ளார்.
பதினேழாம் நூற்ருண்டின் பொருளாத ர நிலைமைகளே அறிவதற்கு நொக்ஸினது நூல் எந்தளவிற்கு உதவியாக உள்ளது என்பதும் சந்தேகமாகவுள்ளது. நெ7க்ஸ் கண்டி யில் கைதியாயிருந்த காலம் புழுவதும் ஒல்ல “ந்தர் கண்டி மீது பொருளாதார முற்றுகையை வெற்:றிகரமாக ஏற் படுத்தியிருந்தனர்கள். கண்டிய மன்னனின் அ3:னிய வியா பாரத் தொடர்புகள் தடைபட்டிருந்தன. கரையே ரப் பிர தேசங்களுடன் நடைபெற்ற வியாபாரங்கூடப் பல சந்தர்ப் பங்களில் தடைபட்டிருந்தது. கண்டியில் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட காலத்திலேயே நொக்ஸ் கண்டியில் வாழ்ந்துள்ளார் என்பது தெளிவ கிறைது.
நொக்ஸினது நூலின் முக்கியத்துவம் பிரித்தானிய நூதனசாலையில் அவரது கையெழுத்துப் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டமையால் அதிகமாயுள்ளன. இவரது நண்பர் களின் துரண்டுதலினல் தனது :தல் நூலே மேலும் விரிவு படுத்தி எழுதும் நோக்கத்துடன் இ:றை எழுதினர் என்று கூறப்படுகின்றது. ஆங்கிலேயரான நொக்ஸ் ஒல்லாந் தருக்கும் கண்டியருக்கு மிடையே நடைபெற்ற போராட் படித்தை நேசக்குவது ஒருபக்கச் சார்பாக அமையாது, அக் காலப் பகுதிக்குரிய நடுநிலமைக் குரலாக அமைகின்ற தெனலாம் -

ருெபேட் நொக்ஸின் நூலிலிருந்து . . . .
இரண்டாம் இராசசிங்கன்; ஆட்சிமுறை; வாழ்க்கைமுறை:
இராசசிங்கன் என்ற பெயர் சிங்க அரசன் எனப் பொருள் படும்; இவன் முறையான வம்சவாரிசு அல்லது இரத்த உரிமையுடைய வனல்லன்.
x 区 Σ உயரமான தோற்றம் உடையவனல்லன். கறுப்பு நிறத்தவன், எந்த
நேரமும் கண்களை அங்குமிங்கும் நோட்டம் விட்டபடியிருப்பான். பெருத்த வயிறினை யுடையவன்.
X
இவனது வயது எழுபதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்டதாகவிருந் தாலும் செயலிலும் முகத் தோற்றத்திலும் அவ்விதம் தோன்றவில்லை:
x Χ Χ இவனது அரண்மனை இரவுபகலாகப் பலத்த காவலுக்குட்பட்டிருக் கும். ஒவ்வொரு பிரிவினரதும் காவல் முறை முடிவடைந்ததும்
தாரை, பறையடித்து அரசனுக்கு மரியாதை செலுத்துவதுடன் மக்களையும் விழிப்பாகவிருக்கச் செய்வர்.
X Χ Σς X
வேலையாட்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர்களாகவும், பையன்களாகவும் இருப்பர். திசாவைகள் மூலம் நல்ல வாட்ட சாட்டமான உயர்ந்த வம்சத்திலுள்ள பையன்களைத் தெரிவு செய்வான்.
Χ x Σς X
அரண்மனையில் சமையல் செய்வதற்கு இளம்வயதினரான திருமண
மான, திருமணமாகாத பெண்களையே தெரிவு செய்வர். அவர்கள் . பின்னர் திரும்ப அனுப்பப்படுவதில்லை.

Page 13
- 12 -
"அரசனுக்கு உண்பதற்காகக் கொண்டுவரப்படும் உணவுகள் வெள் ளைத் துணியால் மூடப்பட்டிருக்கும். அவற்றினைப் பரிமாறுபவர் களின் வாய் துணியினல் கட்டப்பட்டிருக்கும்"
X ΣK X
அரசனைக் காண வருபவர்கள் அரசனின் முன் நிலத்தில் வீழ்ந்து பல முறை வணங்கிப் பின் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பார்கள். கிறிஸ் தவர்கள் தொப்பிகளைக் கழற்றி முழங்காலில் நிற்கும்படி பணிக்கப் படுவார்கள், \
X, * 区 X
தூதுவர்கள் பகட்டானமுறையில் அரசமரியாதைகளுடன் வரவேற் கப்படுவர். அவர்களுக்கான செலவுகள் யாவும் அரசனினுலேயே மேற் கொள்ளப்படும். தூதுவர்கள் கொண்டு வருகின்ற வெகுமதி களை அரசன் தனது ஆட்களைக் கொண்டு தூக்கிவரச் செய்வான்; தூதுவர்களுடன் மற்றவர்கள் கதைக்கவும் அனுமதிப்பதில்லை.
Χ X
கொடூரமான தண்டனைகள் அரசனுல் வழங்கப்படும். தண்டனை வழங் கப்படும் இடத்தில் சிலர் கம்பங்களில் கொல்லப்பட்டிருப்பர்; மரங் களில் தொங்க விடப்பட்டிருப்பர்; யானையால் கோல்லப்பட்டிருப்பர்.
Σκ Σζ
கைதிகள் பொதுச் சிறைச்சாலைகளில் வைக்கப்படுவர். சிலர் பிர பல்யமானவர்களின் பாதுகாப்பில் விடப்படுவர். அரண்மனையைச் சுற்றியுள்ள வீதிகளைச் சுத்தம் செய்வதற்கு கைதிகள் சங்கிலிக ளால் பிணைக்கப்பட்டுக் கொண்டுவரப்படுவர்;
XX Z 2
இவனது ஆட்சி கொடூரமானதும் தன்னிச்சையானது மாகும் தனது விருப்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ப ஆட்சிபுரிந்தான். தானே தனக்கு ஆலோசகனுக விளங்கினன்.
X Χ
தனது கொடூரமான ஆட்சிக் கெதிரான சதியாலோசனைகளையும் சதித் திட்டங்களையும் விழிப்புடன் அடக்கி வந்தான். இரவில் முரசுகளி னதும் பறைகளினதும் சத்தம் இவனையும் மக்களையும் விழிப்பாகவிருக் கச் செய்யும்

- 3 -
இரவிலேயே முக்கியமான கருமங்களை மேற்கொள்வான்; தூதுவர் களைச் சந்தித்தல்; கடிதங்கள் வாசித்தல், நியமனங்கள் வேலையுயர்வு கள் மேற்கொள்ளுதல், தண்டனைகள் வழங்குதல் போன்ற முக்கிய கருமங்கள் மேற்கொள்ளப்படும்.
x Χ Χ
கிறிஸ்தவ சமயத்தினரை அரசன் கெளரவித்தான், இவனது சகோ தரி யிறந்தபோது நாடு முழுவதும் சோகத்திலிருக்க கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலீடுபட்ட ஒல்லாந்தரைத் தண்டிக்கவில்லை.
X X 区
புதுவருடத்தினை யொட்டிய கொண்டாட்டத்தின் போது பிரதானி கள் பிரபல்யமானவர்கள், புதுவருட வெகுமதிகளையும் வரிகளையும் அரசனுக்கு அளிப்பார்கள்.
Χ • Х. X Χ
அதிகார்கள், திசாவைகள் குற்றம் செய்தவர்களை விசாரித்துத் தண்டனைகள் வழங்கினுலும், மரண தண்டனை அரசனலேயே வழங்கப் படும்,
x X Σζ х
யுத்தங்களுக்காக அல்லது வேறு கருமங்களுக்காகப் படைகளை அனுப் பும் போது அரசன் தூதுவர்கள் மூலம் கட்டளைகளைக் கூறி விடுவான், சில சமயங்களில் நேரே அழைத்துக் கட்டளைகளைப் பிறப்பிப்பான். எழுத்துமூலம் ஒருவித கட்டளைகளும் விடுக்கப்படுவதில்லை.
« x v Χ
போர் வீரர்களும் தளபதியும் சிலசமயங்களில் எந்த கோக்கத்திற் காகச் செல்கிருேம் என்பது தெரியாமலே படையெடுப்பார்கள். ፴GUj
குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருக்கும்படி கூறிவிட்டுப் பின்னர் அரசன் கட்டளைகளை அனுப்புவான்கு
Χ x Σς
பிரதம தளபதியாக ஒருவரும் நியமிக்கப்படுவதில்லை. போர்வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளாகத் தலைவர்களின் கீழ் செல்வர். இவர்கள்

Page 14
- 14 -
இணைந்து செயற்பட்டால் தனக் கெதிராகச் சதிசெய்வர் என்ற பயம் அரசனிடமிருந்தது.
SK X சிங்களவர்களை எங்கிருந்து வந்தவர்கள் எனக் கேட்ட போது அவர்களால் கூறமுடியவில்லை. தமது நாட்டில் பேய்களே முதலில் குடியேறியதாகக் கட்டுக்கதைகளையே கூறினர்:
X x மலைநாட்டிலும் தாழ்நாட்டிலும் வாழும் சிங்களவர்களின் இயல் புகள் மாறுபட்டவை, தாழ்நாட்டிலுள்ளவர்கள், இரக்கமுள்ளவர் கள், நேர்மையானவர்கள், உதவி செய்பவர்கள், அன்னியர்களை ஆதரிப்பவர்கள், ஆனல் மலைநாட்டிலுள்ளவர்கள் இதற்கு நேர்மாறன
வர்கள். s ༢.
ΣK X X
சிங்களவர்கள் செயலிலும் நடத்தையிலும் போத்துக்கீசரைப் போன்றவர்கள். அவர்களின் எண்ணங்கள் தந்திரமானவை. வஞ்சக முடையவை. பேச்சில் மரியாதையும் முகத்துதியும் நிறைந்திருக்கும்.
Σ.Κ. ΣK x
திருமணம் செய்யும்போது குறைந்த சாதியினரைத் திருமணம் செய்யமாட்டார்கள். குலப் பெருமையை நோக்குவார்களே தவிர செல்வத்திற்கு முக்கியம் கொடுப்பதில்லை.
XX XK X Χ
கணவன் உண்ணும் போது மனைவியே பரிமாறுவாள்; மனைவி கணவனுடன் சேர்ந்து உண்பதில்லை. கணவன் உண்ட பாத்திரத்தில் எஞ்சியதையே மனைவி உண்பா ள்; சாப்பிடும்போது அதிகமாகக் கதைப்பதில்லை
ΣΚ. Σζ ΣK X திருமணங்கள் பெற்றேர்களினலேயே நிச்சயிக்கப்பட்டன. பெண்
களும் ஆண்களும் பொதுவாக மூன்று நான்குதரம் திருமணம் செய்வார்கள். ۔۔۔۔
叉

கணவனும் மனைவியும் பிரியும்போது'பிள்ளைகளிருந்தால் ஆண் குழந்தைகளைக் கணவனும், பெண் குழந்தைகளை மனைவியும் பொறுப் பேற்கவேண்டுமெனப் பொதுக் சட்டம் விதித்தது.
Χ , X s ※
இரவில் அதிகம் நித்திரை கொள்வதில்லை. இரவில் பல தட வைகள் எழும்பி வெற்றிலை உண்பார்கள். புகையிலே புகைப்பார்கள். பின்னர் நித்திரையாகுமட்டும் பாடல்கள் பாடுவார்கள்.
, . x х Χ
இறந்தவர்களுக்காகப் பெண்கள் புலம்பும் போது தலைமயிரக் குலைத்துக் கீழே தொங்கவிட்டு இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னுல் வைத்துக் கொண்டு ப3ங்கரமான சத்தத்துடன் இறந்தவர்களின் பெருமைகளைக் கூறி அழுவார்கள்,

Page 15
இலங்கைத் தீவின் உண்மையான, நிச்சயமான வருணனை.
- பிலிப்பு புல்தேயு
இலங்கை வரலாற்றின் வடபகுதியிலுள்ள மக்களைப் பற்றி ஐரோப்பியர் ஒருவரால் எழுதப்பட்ட முதலாவது நூலாக வண. பிலிப்பு பால்தேயுவின் "இலங்கைத்தீவிஷ் உண்மையான நிச்சயமானவ்ருஷ்ணனை' என்ற நூல் விளங்கு கின்றது. இலங்கையில் புரட்டஸ்தாந்து சமய வரலாற்றில் பால்தேயுவின் பெயர் முக்கியம் பெறுகின்றது. இவர் இத் தீவின் வடபாகத்தில் தொடர்ந்து எட்டு வருடங்களாக மதப் பிரசங்கியாக வாழ்ந்தவராவர். மக்களுடன் நன்கு பழகித் தமிழ் மொழியையும் கற்றிருந்தமையினல் இப்பகுதி மக்க ளின் வாழ்க்கை முறையினை நன்கு அவதானிக்க முடிந்தது. பால்தேயு தனது நூலில் இலங்கையைமட்டும் எடுத்தாளாமல் தென்னிந்தியாவையும் அங்குள்ள இந்துக்களின் சமய நம் பிக்கைகளையும் வர்ணித்துள்ளார்.
பால்தேயு ஒல்லாந்து நாட்டில் 1632-ம் ஆண்டு பிறந் தார். இவர் நான்கு வயதிலேயே பெற்றேர்களை இழந்த மையினுல் இனத் தவர்களாலேயே வளர்க்கப்பட்டார். 1854-ம் ஆண்டு தனது 21 வயதில் வேத சசஸ்திரப் படிப்பை முடித்து ஒல்லாந்த திருச்சபையின் பிரசங்கியாக நியமிக்கப் பட்டார். கிழக்கத் திய நாடுகளுக்குப் பயணமாகுமுன் 1634-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனல் அடுத்த ஆண்டிலேயே தனது மனைவியையும் இழந்தார். 1656-ம் ஆண்டு மேமாதம் கொழும்பு ஒல்லாந்தர் வசம் சரண டைந்த செய்தி அறிந்தவுடன் பால்தேயு இலங்கைக்கு அனுப் பப்பட்டனர். இவர் இலங்கைக்கு வந்த சமயம் ஒல்லாந்தம் போத்துக்கீசரை விரட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். இவர்

-س- 7 1 --
காலியிலேயே முதலில் ஒருவருடி காலம் தங்கியிருந்தார். போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தை இலங்கையிலும் தென னிந்தி யாவிலும் நீக்குவதற்குரிய இறுதிப்படை யெடுப்பிற்குரிய ஆயத்தங்களில் ஒல்லாந்தர் ஈடுபட்டிருந்தமையால் சமய வேலைகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.
தென்னிந்தியாவிலும் இலங்கையின் வடபாகத்திலும் போர்த்துக்கீசருக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பில் பால்தேயு துருப்புக்களுக்கு மதபோதனை செய்வதற்காக தனிக்குருவாக அவர்களுடன் அனுப்பப்பட்டார். படையெ டுப்பு வெற்றிகரமாக முடிவெய்தியதும் பால்தேயு யாழ்ப் பாணக் குடாநாட்டிற்கும் அதனைச் சூழவுள்ள தீவுகளுக்கும் பிரசங்கியாக நியமனம் பெற்ருர். இவரிடம் இப்பகுதியி லுள்ள இந்துக்களையும் கத்தோலிக்கர்களையும் மதம் மாற் றிப் புரட்டஸ்தாந்து சமயத்திற்கு அத்திவாரமிடும் பெரும் பொறுப்பு விடப்பட்டது.
ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய போது நன்ருக ஒழுங்குபடுத்தப்பட்ட கத்தோலிக்க சமூகங்களை எதிர் நோக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு கிராமமும் ஒரு தேவா லயத்தையும், மதபோதனைக்காக ஒரு பாடசாலையையும் கொண்டிருந்தது. வடமாகாணத்தில் பிரான்ஸிஸ் சேவியரின் முயற்சியினுல் மற்றைய பகுதிகளை விட கத்தோலிக்க மதம் நன்னிலையிலிருந்தது. அத்துடன் நாற்பது வருடங்களுக்கு மேலாகப் போர்த்துக்கீசரின் ஆதிக்கம் வடபகுதியில் நிலைத்தி ருந்துள்ளது. 1608-ம் ஆண்டு ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய போது இப்பகுதியில் மட்டும் நாற்பது கத்தோ விக்கக் குருமார்கள் மதசேவையி வீடுபட்டிருந்தார்கள். இதனுல் பால்தேயு கடினமான சூழ்நிலையிலேயே தனது மதப் பிரசார வேலேகளே ஆரம்பிக்க வேண்டியவராக விருந்தார்.
பால்தேயுவின் மதச் சேவை யாழ்ப்பாணக் குடா நாட்டில் 1658-ம் ஆண்டு தொடக்கம் 1665-ம் ஆண்டு வரை நடைபெற்றது. தென்னிந்தியாவிற்குச் செனற போர்த்துக்கீசப் படையுடன் சென்றுவிட்டுத் திரும்பியதும் தெல்லிப்பளையில் 1658-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது
3== Drقته) usه e@

Page 16
- 18 -
முதலாவது பிரசங்கக் கூட்டத்தினை நடாத்தி நாற்பது கததோலிக்கக் குருமார்கள் பிரசார வேலைகளே மேற்கொண்ட பிரதேசத்தில் தனித்து நின்று செயற்பட வேண்டியவராக பால்தேயு காணப்பட்டார். எனினும் போர்த்துக்கீசர் வசமிகுந்த எல்லாத் தேவாலயங்களும் பாடசாலைகளும் ஒல்லாந்தரிடம் கையளிக்கப்பட்டமை இவரின் முயற்சியை இலகுவாக்கியது. தமிழ் போர்த்துக்கீச மொழிகளைக் கற்ப தில் பால்தேயு ஆரம்பத்தில் கவனம் செலுத்தினர். ஆசிய மொழிகளைக் கறறுச் சமயப்பிரசாரம் செய்ய வேண்டுமென வழிகாட்டி நிறைவர் பால்தேயு ஆவர். இவரைப் பின் பற்றி மற்றைய பிரசங்கிகளும் தமிழ் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்றனர். பால்தேயு போர்த்துக்கீச மொழியை அறிந்திருந்தமை ஆரம்பத்தில் பெரிதும் உதவியாக விருந் தது. யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீச மொழி தெரிந்த வர்கள் பலர் இருந்தனர். தமிழையும் தமிழ் இலக்கணத்தை யும் ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதிலும் தமது மதபோதனைகளே மேற்கொள்ள முடிய விலலை. இதனுல் இவர் பல நூல்களை எழுதிப் பாடசாலை ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட சுதேசிகள் மூலம் மதபோதனை களை மேற்கொள்ளுவித்தார். கர்த்தருடைய ஜெபம், பத்துக் கற்பனைகள் அப்போஸ்தருடைய விசுவாசப் பிரமாணம் ஆகிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன.
1658 ம் ஆண்டு தொடக்கம் 1661-ம் ஆண்டு வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேறு ஐரோப்பியர்களின் உதவியில்லாமல் மதச் சேவையிலிடுபட நேரிட்டது. 1661-ம் ஆண்டு பேரன்ஸ் ஏபெறெயிஸ் என்பவரும் இவருக்கு உதவி யாக மன்னரிலிருந்து அனுப்பப்பட்டார். தென்னிந்தியா வின் மீது மேற்கொண்ட இரண்டாவது படையெடுப்பு வெற்றி பெற்றதும் பால்தேயுவிற்கு உதவியாளராக யோன்ஸ் டொன்கர் என பவரும் அனுப்பப்பட்டார். தென்னிந்தியா போர்த்துக்கீசரின ஆதிக்கததின் கீழ் வந்ததும் பால்தேயு சமய வேலைகளுக்காக அங்கு செல்லவேண்டியவரானர். 1660-ம் ஆண்டு யூல மாதம் நாகபட்டினத்திற்குச் சென்று சமய சீர்திருதத நடவடிககைகளை மேற்கொண்டார். யாழ்ப்

- 19 -
பாணக் குடாநாட்டில் இம்மூன்று மதப்பிரசங்கிகளும் தனித் துப் பிரசாரவேலைகளை மேற்கொள்ள நேரிட்டது. பால் தேயு தனது அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று பிரசங்கங்களும், மற்றைய நாட்களில் ஒரு பிரசங்க மும் நடாத்தி வந்ததாகவும், அத்துடன் வெளியிடங்களிலுள்ள தேவாலயங்களுக்கும் சென்றுவர வேண்டியிருந்ததாகவும் கூறியுன்ளார்.
பால்தேயுவின் மதச் சேவை 1861-ம் ஆண்டு ஒல்லாந்த ரது படைகளுடன் கொச்சின் முதலான இடங்களுக்குச் சென்றதால் தடைபட்டது. பின்னர் அங்கி ருந்து திரும் பும் வழியில் இராமேஸ்வரத்திலுள்ள மக்களால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இவ் வித இடையூறுகளுக் கிடையிலும் பால்தேயுவின் மதச்சேவை வெற்றி பெற்றமையை அவரது சமகால ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பால் தேயுவின் மதச் சேவை நிலையான வெற்றிகளை ஏற்படுத்து வதற்குப் பல காரணிகள் தடையாகவிருந்தன கல்வின் மதம் கீழைத்தேய நாடுகளுக் கேற்றதாக அமைந்திருக்க வில்?ல. பைபிளையே அடிப்படையாகக் கொண்டு ஓரளவிற்கு கல்வியறிவும் அவசியமாகியது. திருமணத்தில் தாலிகட்டு தல், சைவ உணவு உட்கொள்ளல், ஆகியனவற்றை எதிர்த் தனர். அசைவ உணவு உண்டால் சாதியில் குறைந்தவர் க்ளென அக்கால மக்கள் நம்பினர். பெளத்தமதம். இந்து மதம், கத்தோலிக்க மதங்களில் காணப்பட்ட வெளிச்சமய அநுட்டானங்களும் கல்வின் மதத்தில் இடம் பெறவில்லை.
ஒல்லாந்த திருச்சபைக்கும் அரசாங்கத்திற்குமிடையே தோன்றிய தகராறுகளும் மதப்பிரசாரத்தில் உற்சாகமாக பால்தேயு போன்றேர் ஈடுபடத் தடையாகவிருந்தன. திருச் சபை சுதந்திரமாக அரசியலதிகாரம் கொண்டு செயற்படு வதை ஒல்லாந்து அரசாங்கம் விரும்பவில்லை. பால்தேயு புரட்டஸ்தாந்து திருச்சபைக்கு மத்திய மயமான அமைப்பை ஏற்படுத்தினர். 1659-ம் ஆண்டு கொழும்பில் பிரசங்கிகள் கூடி இலங்கையில் சமயப்பிரசார வேலைகளைத் துரிதப்படுத்

Page 17
- 20 -
துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்ள்ெண்டனர். மதக் கொள்கைகள், திருமணம், ஞானஸ்ஞானம் நடிாத்தும் முறைகள் பற்றித் தீர்மானிக்கப்பட்டது. பிரசங்கிகளின் கடமைகள் வரையறுக்கப்பட்டன. சுதேசிகளுக்கு ஒவ் வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரு தர ம் போதிக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர். கிழமை நாட்களில் சுதேச மொழிகளைக் கற்க ஒய்வு அளிக்கப்பட வேண்டு மெனக் கூறினர். இவ்விதம் யாழ்ப்பாணம், மன்னுர், காலி, கொழும்பிலுள்ள திருச்சபைகள் ஒன்ருக இணைந்து மத்திய மயமாக்கப்பட்ட திருச்சபை நிர்வாகத்தை ஏற்படுத்த மேற் கொண்ட நடவடிக்கையைப் பற்றேவியா அரசாங்கம் தடை செய்தது. இத்தீர்மானங்கள் திருச்சபை அரசுத் தகராற் றினைத் தோற்றுவிக்கக் காரணமாகியது.
பாடசாலை நிர்வாகத்திலும் ஒல்லாந்த திருச்சபைக்கும் அரசாங்கத்திற்குமிடையில் தகராறு ஏற்பட்டது. கம்பெனி யில் பொறுப்பிலேயே பாடசாலைகள் அமைந்திருக்க வேண் டுமென விரும்பித் திசாவைகளிடம் அவற்றினை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தினை விட்டுவைத்தது. 1664-ம் ஆண்டு வான்கோயன்ஸ் இரண்டாவது முறையும் ஆள்பதியாகப் பதவியேற்றபோது பற்றேவியா அரசாங்கம் பிரசங்கிகள் பாடசாலை மேற்பார்வை, நிர்வாகம் ஆகியனவற்றில் பங்கு கொள்ளக் கூடாதெனக் கட்டளையிட்டது. வான்கோயன்ஸ் இக்கட்டளையை நிறைவேற்ற முயன்றபோதே தகராறு தோன்றியது. பிரசங்கிகள் திசாவைகளின் அனுமதியுட னேயே செயற்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. கிரா மத்திற்கு, கிராமத்தலைவருக்கு, சுதேச உத்தியோகத்தர் களுக்கு கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது எனத் தீர்மா னிக்கப்பட்டது. மாணவர்களுக்குத் தண்டனை அளித்தல், தினப்பதியேட்டியிலிருந்து மாணவர்களை நீக்கல் ஆகிய அதிகாரங்கள் நீக்கப்பட்டன. வான்கோயன்ஸ் திசாவைகள் பிரசங்கிகளின் ஆலோசனையுடன் செயற்பட வேண்டுமெனக் கூறியிருந்த போதும் நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை. பிரசங்கிகள் பாடசாலைகள் மூலம் மதம் பரப்புதல் இலகு வெனவும், ஆசிரியர்கள் நியமனம், வேலே நீக்கம், பாடசாலை

- 2 -
களை கண்காணிக்கும் அதிகாரங்கள் தம்மிடம் விடப்பட்ட வேண்டுமெனவும் கோரி நின்றனர்.
பொருளாதார சிக்கனத்தைக் கருதியும் ஒல்லாந்த கம் பெனி பாடசாலையைப் பராமரிப்பதற்கும் ஆசிரியர்களின் வேதனத்திற்கும் பணம் அளிக்கவில்லை. பிரசங்கிகள் பாட சாலேயின் பராமரிப்புக்குப் பலமுறை பணவுதவி கோரியும் கம்பெனி மறுத்து விட்டது. மற்றும் வேதாந்த சாஸ்திரம் மட்டும் படித்த இளம் வயதுடைய திருச்சபை உத்தியோ கத்தர்களைக் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி அவர்களைப் பிரசங்கிகள் வரை பதவியுயர்வு பெற இடமளித்தனர். இத் திருச்சபை உத்தியோகத்தர்கள் உண்மையில் நோயாளி களைப் பரமரிப்பவர்களாகவே யிருந்தனர். அத்துடன் ஞாயிறு பாடசாலைகளையும் பைபிள் வகுப்புக்களையும் நடாத்தி னர். இவர்கள் இளைஞர்களாகவிருப்பதால் ஆசிய மொழி களை இலகுவில் கற்று முன்னேறுவர் எனப் பற்றேவியா அரசாங்கம் கருதியது. ஆணுல் சில சந்தர்ப்பங்களில் பற் றேவியா அரசாங்கமும் திருச்சபையும் கம்பெனி இயக்கு நர்களும் இவர்களின் பதவியுயர்வுக்கு அனுமதி வழங்கியும் இலங்கையிலுள்ள பிரசங்கிகள் அனுமதி யளிக்க மறுத்தனர்.
நீண்ட காலமாகப் பிரசங்கிகளுக்கும் ஒல்லாந்த கம் பெனிக்குமிடையிலேற்பட்ட தகராற்றில் திருச்சபைமீது குற் றம் முழுவதையும் கம்பெனி சுமத்தி மக்களிடம் நல்ல அபிமா னத்தைப் பெறமுயன்றது. பசல்தேயுவினுல் இத்தகராறு உச்சநிலையை அடைந்தது. பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் முறை திசாவைகளினுல் மற்றைய பகுதிகளில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் யாழ்ப்பாணப் பகு தியில் தீவீரமாகப் பின்பற்றப்படவில்லை. எனினும் திசச வைகள் பாடசாலைப் பரிசோதகர்களாகக் கடமையாற்ற லாம் என்ற கம்பெனியின் புதிய கட்டிளையை இவர் அங்கீ கரிக்க மறுத்தார். இத்தகராற்றினுல் பதவியை விட்டுச் செல்லவும் தயாராகவிருந்தார். 1885-ம் ஆண்டு பால்தேயு வின் பதவிக்கால ஒப்பந்தம் முடிவெய்தியதும் இலங்கையை விட்டுச் செல்வதற்கு அனுமதி கோரினர். கொழும்பிலுள்ள

Page 18
‘一 22 一
அரசியற் சபை அங்கத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து இவரை மனமாற்றம் செய்ய முயன்றும் தோல்வியடைந் தார். இலங்கையில் போதியளவு பிரசங்கிகள் இல்லாமை யில்ை மேலும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து பதவியி விருக்கும்படி கம்பெனி கோரியது. பால் தேடி தனது முடிபை மாற்றத் தயாராக இருக்கவில்ல, இவ்விதம் பால் தேயு பிடிவாதமாக மறுத்து நின்றமையை வான்கோயன்ஸ் தனது அரசியல் இறைமைக்கு எதிரான சவாலாகக் கருதினர்.
பால்தேயுவை வனஸ்கோயல்ஸ் ஆத்திர மேலீட்டால் ஐரோப்பாவிற்குச் சென்ற அடுத்த கப்பலிலேயே அனுப்பி வைத்தார். தனது நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டு வதற்காகப் பால்தேயுவின் மீது பலகுற்றங்களைச் சுமத்தினர். இவருக்கு அதிக வேதனம் அளிக்கப்பட்டதாயும் விருப்பப் V− படி விடும் உடைமைகளும் வழங்கப்பட்டதாயும் கூறிஞர். மற்றைய பிரசங்கிகளைவிட கூடிய உரிமைகளை அனுபவித்த தாகவும் கூறப்பட்டது. எனினும் பால்தேயு சர்வாதிகாரி போல் நடக்கத் தென்பட்டாரெனவும், நிதிவிடயத்தில் ஊழல் மிகுந்தவராக விளங்கினரெனவும் கூறினர். திருச்சபைக்கும் கம்பெனிக்கும் தகராறு தோன்றுவதைத் தவிர்க்கவே அவ் வித நடவடிக்கையிலிடுபட்டதாகக் கூறினர். பால்தேயு அனுபவித்த கட்டுப்பாடற்ற சுதந்திரமே இவ்வித தகராற் றிற்குக் காரணமாகியதெனலாம்.
ஒல்லாந்து நாட்டிற்குத் திரும்பியதும் இந்நூலை எழு தும் பணியிலீடுபட்டார். 1669ல் ஒல்லாந்தின தெற்குப் பகுதியிலுள்ள தீவொன்றில் பிரசங்கியாக நியமனம் பெற் றுத் தனது நாற்பதாவது வயதில் 1672ம் ஆண்டு இறந் தார். பால்தேயுவின திறமைகள் முழுவதும் இலங்கையில் பயன்படுத்தப்படவில்லை. அதற்குக் கம்பெனியே பொறுப் பாகவிருந்தது. கம்பெனியின் வர்த்தக நோக்கமும் பிரதேச ஆதிபத்தியக் கட்டுப்பாடும் சமய நடவடிக்கைகளைத் தடை செய்தன.
பால்தேயுவின் நூல் இலங்கையிலிருந்து போர்த்துக் ஐசரை விரட்டும் வரை அரசியல் வரலாற்றைக் கூறுகின்

-س- 23 --
றது. 1858ம் ஆண்டிற்குப் பின் சமுதாய சமய வரலாற் றையே அறிய உதவுகின்றது. 1858ம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை வேறு ஆதாரங்கள் மூலம் பெற்றே எழுதியுள்ளதால் அவற்றை அவதானத்துடன் கற்கவேண்டி யுள்ளது. 1656ம் ஆண்டுக்குப் பின்னர் தான் நேரே அவ தானித்தவற்றை எழுதியுள்ளதால் பெரும்பாலும் உண்மை யெனக் கூறலாம். 1656ம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் இந்நூலின் முதல் நாற்பது அத்தியாயங்களி லும் கூறப்பட்டுள்ளன.
முதல் அத்தியாயத்தில் இலங்கையின் அடிப்படை வர லாறும் ஆதிகாலம் முதல் போர்த்துக்கீசர் வருகை மட்டு மான வரலாறும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் அத்தியா யம் தொடக்கம் ஏழாம் அத்தியாயம்வரை போர்த்துக்கீச ரின் வருகை தொடக்கம் ஒல்லாந்தரின் முதல் வருகை வரை கூறப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு போர்த்துக்கீசரது ஆதார நூல்களையே பயன்படுத்தியுள்ளார். எட்டாம் அத்தி பாயம் தொடக்கம் நாற்பதாவது அத்தியாயம் வரை ஒல் லாந்தர் வருகை தொடக்கம் 1656ம் ஆண்டு மேமாதம் போர்த்துக்கீசரிடமிருந்து கொழும்பைக் கைப்பற்றும் வரை கூறப்பட்டுள்ளது. இவ் முப்பத்திரண்டு அத்தியாயங்களிலும் கூறப்பட்டுள்ளவைகள் கம்பெனியின் ஆவணங்களுடன் ஒத் துக் காணப்படுகின்றன. 1655ம் ஆண்டுதொடக்கம் 1856ம் ஆண்டுவரை கொழும்பைக் கைப்பற்றியது பற்றிய நீண், வருணனை அவரது சமகாலத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தாகும
இந்நூலின் கடைசிப் பத்து அத்தியாயங்களிலும் பால் தேயு தான் நேரே அவதானித்தவற்றை விளக்கியுள்ளார். இப் பகுதியில் மன்னர், யாழ்ப்பாணம், ஒல்லாந்தரினுல் எவ் வாறு கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. ஒல்லாந்த போர்வீரர்களுடன் பால்தேயு மதபோதகராகச் சென்றதால் அவர் வருணனைகள் உண்மையானவையெனக் கூறலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களிள் வாழ்க்கை முறை யினையும், புரட்டஸ்தாந்து சமயம் இலங்கையில் முதன் முத

Page 19
۔اس سے 24 سس
லில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும் இப் பகுதியில் விளக்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பற்றிய இவரது மதிப்புரைகள் நம்பக்கூடியனவாக உள்ளன. அப்பகுதியில் எட்டு வருட காலம் மக்களுடன் நெருங்கிப்பழகி வாழ்ந்து இலங்கையை விட்டுச் செனறதும் அவற்றை மறக்காது உடனடியாக எழுதியுள்ளார். இவரது தமிழ் மொழியறிவும் இந்துசமய நம்பிக்கைகளை ஆராய்ந்தமையும், பதினேழாம் நூற்ருண் டின் வட இலங்கையின் சமுதாய அமைப்பையும் அறிய உதவுகின்றது.
பால்தேயு ஒல்லசந்தவராக இருந்தமையினுலும், ஒல் லாந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியஞகப் பணிபுரிந் தமையினலும் தமது இனத்தவர்களின் மேமபாடு அவரின் எழுத்துக்களில் காணப்படுகின்றது. இலங்கையின் கரையோ ரப் பிரதேசங்களை ஒல்லாந்தர் கைப்பற்றிய வர்ணனைகளை எழுதும்போது போர்த்துக்கீசர், தமிழர் சிங்களவரிடம் அனு தாபம் இருந்ததாகத் தெரியவில்லை. சமய அடிப்படையிலும் இவர் புரட்டஸ்தாந்து சமயப் போதகராயிருந்தமையினல் மற்றைய சமயங்களில் அனுதாபம் கொள்வதற்கு அவசியம் ஏற்படவில்லை.
கத்தோலிக்க மதப்பிரசார முறைகளை இவர் பின்பற்றி ஞலும் கத்தோலிக்க மதத்தை வெறுத்தார். சுதேசிகளின் சமயங்களிலும் அவர் அநுதாபங் கொள்ளவில்லை. இந்து சமய உண்மைகளை அறிய ஆர்வங்காட்டினலும் அச்சமயத் தின் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களே அறிய முயலவில்லை. இவரது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் ஆத்மா வேறு சரி ரத்தில் செல்லுதல்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பல கிறிஸ்தவவேத எடுகோள்களைக் கொண்டு விளக்கமுற்பட் உார். ஆனல் இவை அக் கேள்விக்கு விடையாக அமைந் திருக்க முடியாது.
பால்தேயுவின் மதசேவை வடபகுதியில் முழுமையாக வெற்றி பெறவில்லை யென்பதை அவரே கூறியுள்ளார். கத்

- 25 -
தோலிக்கர்களை மதம் மாற்றுவது கடினமான செயலாக விருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களுக்கும் கத்தோ விக்கர்களுக்கும் பழக்கப்பட்டி உருவ வழிபாடு புரட்டஸ் தாந்து சமயத்தில் இல்லாமையிஞல் அவர்களைக் கவரமுடிய வில்லை. கரையோரப் பிரதேசங்களில் புரட்டஸ்தாந்து மதத் திற்கு மதம் மாற்றுவது வெற்றிபெறவில்லை யென்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். பால்தேயு தமிழ் மொழி யையும் பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்திருந்தாரெனக் கூறமுடியா திருக்கின்றது. சிறிதளவு அடிப்படை இலக்கண அறிவையும் தமிழ்மொழியையும் அறிந்திருந்தார் என்றே கூறலாம். குறுகிய காலம் மட்டுமே இப் பகுதியில் வாழ்ந் தமையால் தமிழ் மொழியை நன்கு கற்கச் சந்தர்ப்பம் ஏற் படவில்லை. எனினும், புரங்டிஸ்தாந்து சமயத்தை இலங்கை யில் அறிமுகம் செய்து அத்திவாரம் இடவேண்டிய பெரும் பணி பால்தேயுவிடம் விடப்பட்டிருந்தது. இவர் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினைப் பூரணமாகச் செய்துமுடிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படிாவிட்டாலும் மற்றைய மிசனிமார் கள் இவரின் அத்திவாரத்திலேயே சமய வேலைகளைக் கஷ்டி யெழுப்பினர்.
வ: தொ

Page 20
பால்தேயுவின் நூலிலிருந்து . . . . .
சமூக அமைப்பு, சமயம்: வாழ்க்கைமுறை
யாழ்ப்பாணம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன் நீளம் 12 மைல் தூரப்பிரயாணமும் அகலம் 6 மைல் தூரப் பிர யாணமுமாகும், தெருக்களின் அருகே கிராமங்களும் தேவாலயங் சளும் உள்ளன. \
X ΣΚ.
அதன் பகுதிகளாவன; வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி. வலிகள்மப் பகுதியில் பதினலு தேவாலயங்களிருந் தன. அவற்றுள் முக்கியமானது தெல்லிபபளையிலிருந்தது. இங்கு தான் முதன்முதலில் 1658-ம் ஆண்டு ஆகஸ்டில் எனது சமயக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினேன்.`
W Σς X
தெல்லிப்பளைப் பகுதியில் வாழும் மக்கள் கூர்மையானவர்கள்; கபடமற்றவர்கள் அடிக்கடி புதுமையான கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். உலகத்தின் தோற்ற சி , முடிவு, உயிர்களின் பாவங் கள், நரகலோகம் போன்ற பல விடயங்களைப் பற்றியதாக அவை அமைந்திருக்கும்:
ΣΚ ΣΚ X X
யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து இரண்டு மனிைத்தியாலம் நடந்து சென்ருல் வட்டுக்கோட்டைத் தேவாலயத்தை அடையலாம். இங்கு மக்கள் போதனைகளைக் கேட்பதல் ஆர்வமுள்ளவர்கள் மக்கள் தொகை 2000 ஆகவிருந்தது.
ΣK ΣΚ. X
யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையிலிருந்த சுண்டிக்குளியில் வாழ்ந்தமக்களில் பெரும்பாலான வர்கள சிவியார்களாகும். இங்கு 450 பாடசாலை மாணவர்களிருந்தனர். ஆனல் போதனைகளில் அக்கறை கொள்வதில்லை. பெற்றேர்களுடன் மீன்பிடிக்கச் சென்று விடுவார்கள்,
X Χ X

தென்மராட்சிப் பகுதியில் ஐந்து தேவாலயங்களிருந்தன அவற் றுள் சாவகச்சேரியிலுள்ள தேவாலயமே பெரியதாகும். சாவகச்சேரி யிலுள்ள பாடசாலையில் 1000 மாணவர்கள் கல்விகற்றனர்
X Σζ Σκ
வடமராட்சிப் பகுதியில் மூன்று திருச்சபைகளிருந்தன. இவற் றுள் பருத்தித்துறையிலிருந்த திருச்சபையே மிகப் பெரியதாகும்: பருத்தித்துறையில் ஏழு அல்லது எட்டுமாதங்களுக்குக் கப்பல்கள் தங்கி நிற்கக்கூடியதாகவிருந்தது; ר , :
Χ Χ
பச்சிலைப்பள்ளிப் பகுதியில் நான்கு தேவாலயங்களிருந்தன. இப் பகுதி வரண்டதாகவும், மணற்பிரதேசமாகவும், நல்லதண்ணிர் அற்ற தாகவும், யானைகளின் அழிவிற்கு அடிக்கடி உட்பட்டதாகவும் இருந் 5.
B
வேளாளரே சாதியில் உயர்ந்தவர்களாவர். காற்சட்டை அணி வதைப் போன்று வேட்டி உடுத்துக்கொள்வார்கள். உடுத்துக் கொள் ளும்போது இடுப்பிற்கு முன்புறத்தில் மடியொன்றினை அமைத்து பாக்கு வெற்றிலை வைத்துக் கொள்வார்கள். எழுதுவதற்கு இரண்டு ஏடு களையும் தம்முடன் எடுத்துச் செல்வார்கள்
X Χ
வேளாளர் அற்ப விடயங்களுக்கும் நீதிமன்றத்திற்குச் செல்ல விருப்பமுடையவர். பொருமையுடையவர்கள், பிதற்றல்காரர்கள். தங்களைவிட மேலானவர்கள் இல்லையென வாதாடுவார்கள்
ΣΚ. Χ Σκ
பெண்கள் இளமையிலேயே திருமணம் செய்துகொள்வர். 10 அல் லது 11 வயதில் திருமணம் செய்து 13 அல்லது 14 வயதில் தாயாகி விடுவார்கள்.
Σζ Χ v
யாழ்ப்பாணப் பகுதியில் இளம் வயதுள்ள பெண் அல்லது ஆண் பெற்றேர்களின் சம்மதமில்லாமல் ஒன்று கூடுவதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். இது மிகவும் புகழ்ச்சிக்குரியதாகும்.
Σ.Κ. Χ x c சிவியார் யாழ்ப்பாண அரசனுக்குச் சேவை செய்தவர்க்ள். இப்
பொழுது எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலம் நடந்து சென்று தண்ணீர் விநியோகிப்பார்கள்

Page 21
t . ཅ 塞 SS
வேளாளர்களின் அடிமைகளாக நளவர்கள் உள்ளனர். இவர் களின் முக்கிய தொழில் மரங்களில் கள்ளுத் தயாரிப்பதாகும். நிலத் தைப் பண்படுத்துதல், மந்தைகளைப் பராமரித்தல் மரங்களுக்கு நீர் பாய்ச்சுதல், இவர்கள் மேற்கொள்ளும் மற்றைய தொழில்களாகும்;
·X X ΣK Χ
உயர்ந்த சாதியினரைத் தாழ்ந்த சாதியினர் சந்திக்கும்போது நிலத்தைநோக்கித் தாழ்ந்து வணங்கி மரியாதை தெரிவிப்பர்.
х Σζ X Χ
- ܐ
Y
கணவனும் மனைவியும் ஒருமித்து உண்பதில்லை. கணவன் உண்ட பின் மனைவி தனித்து உண்பாள்.
x х x Σκ
,િ *
முதிர்ந்த வயதினையுடையவர்களிடையே விக்கிரக வழிபாடு, பேய்
வழிபாடு தொடர்ந்து நிலவின. இவ் விநோதமான கோட்பாடுகளை யுடைய நூல்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன:
Z
உண்ணுட்டுச் சட்டங்களைப்பற்றி அறிவுடைய பலர் இப் பகுதி யிலிருந்தனர். உரத்த சத்தத்தில் வழக்கறிஞர்கள் போன்று நீதி மன்றங்களில் பிரசங்கம் செய்வர்.
. . . . . .
K s
வைத்தியர்கள் அதிகம் இருந்தனர். ஆனல் உடற்கூறு சாஸ்திர அறிவற்றவர்களாகவிருந்தனர். அவர்களது வைத்தியம் அனுபவ அடிப்படையிலும், மூதாதையர்கள் விட்டுச்சென்ற எழுத்துச் சுவடி களின் அடிப்படையிலும் அமைந்திருந்தது.
x Χ
யாழ்ப்பாணக் கோட்டையில் ஒல்லாந்தரைக் கொன்று கோட் டையைக் கைப்பற்ற முயன்ற சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு, பங்கு பற்றியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டத்தை உருவாக்கிய மூவரும் தண்டனையளிக்க உபயோகிக்கும் சட்டத்தில் பிணைக்கப்பட்டு, கோடாலியினுல் முதலில் தொண்டையிலும் பின்னர் மார்பிலும் வெட்டப்பட்டனர். பின்னர் அவர்களது இருதயம் வெளியே எடுக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கைத் துரோக முகங் களில் செலுத்தப்பட்டது.

இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல்ாாடகம் - யோ, றிபேறியோ -
இலங்கை வரலாற்றில் றிபேறியோ எழுதிய "இலங் கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல்நாடகம்" என்னும் நூல், குவைருெஸ் சுவாமிகள் எழுதிய அதே காலப் பகுதியையே விபரித்துச் செல்கின்றது. குவைருெஸினது நூலைவிட நியே றியோவின் நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். குவைருெஸ் இலங்கைக்குக் காலடியெடுத்து வைக்காமலே தனது நூல் யெழுதி முடித்தார். ஆனல் றிபேறியோ பதி னெட்டு வருடி காலம் இலங்கையின் கரையோரப் பிரதே சங்களில் போர்வீரனுக வாழ்ந்து தான் பெற்ற அநுபவங் களத் தனது நூலில் நன்கு விளக்கியுள்ளார்.
யோ றிபேறியோ இலங்கைக்கு 1640-ம் ஆண்டு போர்த் துக்கீசப் போர்வீரனுக வந்தார். இலங்கையில் போர்த்துக் கீசரால் ஒல்லாந்தருக்கெதிராகவும், சிங்களவருக் கெதிராக வும் மேற்கொள்ளப்பட்டி எல்லாயுத்தங்களிலும் பங்குபற்றி ஞர். 1843-ம் ஆண்டு காலியை முற்றுகையிட்டதிலும் அக் குரஸவில் வெற்றியீட்டியதிலும் 1845-ம் ஆண்டு நான்கு கோறளைகளைக் கைப்பற்றுவதிலும் இவரது திறன் நன்கு வெளிப்பட்டது. கொழும்பை முற்றுகையிடுேக் கைப்பற்று வதிலும் பங்கு கொண்டு காயமடைந்தார். 1658-ம் ஆண்டு கொழும்பை இறுதியாக ஒல்லாந்தர் கைப்பற்றியவுடன் நாக பங்டனம் தப்பியோடியவர்களில் இவரும் ஒருவராவர். இலங் கைக்கு மீண்டும் திரும்பிவந்து மன்னுரிலும் யாழ்ப்பாணத் திலுமுள்ள போர்த்துக்கீசச் கோட்டைகளையும் அரண்களை யும் பாதுகாத்து நின்று இறுதியில் பற்றேவியாவிற்கு யுத் தக் கைதியாக அனுப்பப்பட்டார்.
இலங்கையில் தனது பதினெட்டு வருடகால சேவையில் மூன்றுமுறை படைத்தலைவனுகப் பதவியுயர்வு பெற்றர்.

Page 22
- 30 -
பிறப்பினை யடிப்படையாகக் கொண்டே அக்காலத்தில் பதவி
gயர்வுகள் வழங்கப்படங்டதால் இவை நிரந்தரமாகவிருக்க
வில்லே. 1640-ம் ஆண்டு தொடக்கம் 1658-ம் ஆண்டுவரை
நடைபெற்ற யுத்தங்களை மிக விரிவாகத் தமது நூலில் விளக்
கியுள்ள குவைருெஸ் றிபேறியோவின் பெயரைக்கூடத் தனது
நூலில் குறிப்பிடாதமை வியப்பிற்குரியதாகும். பற்றேவி
யாவில் யுத்தக் கைதிகளை வைத்திருப்பதால் ஒல்லாந்தருக்
குப் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இறுதியில் கைதிகளுக்கு
விடுதலையளிக்கப்பட்டபோது றிபேறியோ 1860-ம் ஆண்டு. போர்த்துக்கலுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தொடர்ந்து போர்வீரனுகப் பதவி வகித்து 1880-ம் ஆண்டு ஓய்வு பெற்
ருசி. தனது நூலில் நாற்பது வருடிங்களாக ஒரு நாளையேனும்
தவருது பணிபுரிந்ததாகக் கூறியுள்ளார். இக் காலத்தில்
தான் 'இலங்கைத்தீவின் வரலாற்றுத் துன்பியல்நாடகம்'
என்னும் நூலே எழுதிமுடித்து போர்த்துக்கல் மன்னன் இரண்
டாம் பீட்ரோவிற்கு 1883-ம் ஆண்டு அர்ப்பணித்தார்.
றிபேறியோவினது நூலில் அத்தியாயங்கள், சம்பவங் கள் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை குவைருெஸினது நூலில் காணமுடியர்தவையாகும். இவர் தனது நூலில் எங்கு கற்ருர் யாரிடம் கற்றர் என் பதை ஓரிடத்திலும் கூறவில்லை. யுத்தகாலத்தில் காடுகளி லும் முற்றுகைகளிலும் கற்றிருக்கமுடியாது. இலிஸ்பனில் பெற்ற ஆரம்பக்கல்வியே இவருக்கு உதவியாகவிருந்திருக்க வேண்டும். இவரது நூலினது நடை போர்வீரனது நடை: யைப் போன்று நேரடியாக எழுதப்பட்டுள்ளது.
குவைருெளினது நூலின் அமைப்பை யொட்டியே இவ ரது நூலும் அமைந்துள்ளது. மூன்று பகுதிகளாகப் பிரிக் கப்பட்டுள்ளது. முதலாம் பகுதியில் இலங்கையின் அமைப்பு, மாகாணங்கள், கோட்டைகள், மக்களைப் பற்றிய வர்ணனை கள், சடங்குகள் விழாக்கள், பழக்க வழக்கங்கள் என்பன வும் போர்த்துக்கல் அரசனுக்குத் தர்மபாலன் அளித்த அரசுரிமையும் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில் இலங்கையில் மேற்கொண்ட w புத்தங்களின் போக்குகள் பற்றிக் கூறப்ப&டுள்ளது. 1627-ம்

- 31 -
ஆண்டு தொடக்கம் சிங்களவர்களுடன் மேற்கொண்ட யுத்தங் *கள் பற்றியும், 1638-ம் ஆண்டு தொடக்கம் ஒல்லாந்தரு டன் மேற்கொண்ட யுத்தங்கள் பற்றியும், 1658-ம் ஆண்டு போர்த்துக்கீசர் விரட்டப்படும் வரை நடைபெற்ற யுத்தங் கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
மூன்ருவது பகுதியில் போர்த்துக்கீசரின் கீழைத்தேய சாம்ராச்சியம் சீர்குலைந்தமைக்குரிய காரணங்களை ஆராய்ந் துள்ளார். ஏன் தனது நாட்டவர்கள் இலங்கையைப் பாது காக்க முடியாமல் விட்டுவிலகினர் என்பதையும் விளக்கியுள் ளார். இலங்கையை மட்டும் முழுமையாகக் கைப்பற்றி ஆதிக்கத்திளை நிலைநாட்டுவதைவிட்டு இந்தியாவைக் கைப் பற்றுவதில் ஏற்படுத்திய ஈடுபாடுகளைக் கண்டித்துள்ளார். கீழைத்தேய சாம்ராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கு எதிரிக ளின் பலத்தைவிட தாங்கள் செய்த பாவங்களே காரண மெனக்கூறியுள்ளார். றிபேறியோவின் நூல் முழுவதும் சுவா ரஸ்யமாக எழுதப்பட்டிருப்பினும் முதலாம் மூன்றும் பகுதி களே முக்கியமானவைகளாகவுள்ளன.
இலங்கையில் றிபேறியோ பதினெட்டு வருடகாலம் சேவையிலீடுபட்டிருந்தாலும் தனது நூலைக் கிட்டத்தட்டி கால்நூற்ருண்டுக்குப் பின்னரே எழுதியுள்ளார். யுத்தங்கள் முற்றுகைகள் பற்றிய குறிப்புக்கள் விபரங்கள் பல பிழை களைக் கொண்டுள்ளன. இவரது நூலில் குறிக்கப்படும் ஆண் டுகள் பெரும்பாலும் சரியானதாயிருக்கவில்லை. தனது வய தைக்கூடச் சரியாக அறிந்திராதவராக இவர் இருந்துள் ளார். இலங்கையை வந்தடையும்போது தனது வயது பதி னைந்து எனக் கூறியுள்ளார். ஆனல் உண்மையில் இவரின் வயது பதினெட்டாயிருந்திருந்தது.
ருெபேட் நொக்ஸ் கண்டியிராச்சியத்தை யறிந்திருந்தது போன்று இவரது அநுபவங்கள் கரையோரப் பிரதேசங்களி லேயே அமைந்திருந்தது. றிபேறியோவை நொக்ஸினுடன் ஒப்பிடுமிடித்து இவர் கடினமான வாழ்க்கையே வாழ்ந்துள் ளார். நொக்ஸ் தனது நூலிலோ அல்லது சுயசரிதையிலோ இலங்கைக்குச் சுதந்திரமனிதனுகத் திரும்பி வருவது பற்றிக்

Page 23
-- 92 ܚ
குறிப்பிடவில்லை. ஆனல் றிபேறியோ இலங்கையின் இயற் கையழகில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். இலங் கைத்தீவின் வசீகரத் தை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
றிபேறியோ நொக்ஸைப்போன்று சிங்கள மொழியை அறிந்திருக்கவில்லை. ஆனல் சிங்களமொழியின் சிறப்பு இரு வரையும் கவர்ந்துள்ளதைக் காணலாம். றிபேறியோ அவரி களது வழக்கப்படி சிறந்த கவிஞர்களாகவிருந்தனர் என்றும், அவர்களின் பாடல்கள் இனிமையானதாகவும் மகிழ்வளிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்தது எனவும் கூறியுள்ளார். றிபே றியோ மேலும் குறிப்பிடுமிடத்து "அவர்கள் கூறுவது விளங்காவிடினும் நாங்கள் செய்யும் தொழில்களையே மறந்து அவற்றை அவதானிப்போம்' என்றுள்ளார். ரொக்ஸ் சிங் கள மொழியை உழ்வர்கள் பேசும்போது நேர்த்தியான தாக வும் புகழுரைகளுடன் கூடியதாகவும் அமைந்திருக்கும் என் றுள்ளார். '.
சிங்களவர்களின் தோற்றம் ஐரோப்பியர்களை ஒத்துக் காணப்பட்டதென நொக்சும் றியேறியோவும் கூறியுள்ளனர். றிபேறியோ அவர்களது இயல்புகள் போர்த்துக்கீசரினதைப் போன்றவையென்று கூறியபோது நொக்ஸ் அவர்கள் செய லிலும், நடத்தையிலும் போர்த்துக்கீசர்களைப் போன்றவர் களே யெனக் கூறியுள்ளார். சிங்களப் பெண்களில் அவலடி சணமானவர்கள் அருமையாகவே உள்ளனர் என நியே றியோ கூறியுள்ளார். அவர்கள் எல்லோரும் அழகான கன் களை உடையவர்கள், சுத்தமானவர்கள்; ருசியாகச் சமையல் செய்வார்கள். தலைமயிரில் அதிக கவனம் செலுத்துவார்கள்; இவர்களின் உடிை இந்தியப் பெண்களின் உடையைவிடிச் சிறந்தது எனக் கூறியுள்ளார்.
கிராமிய அமைப்பு முறைகளைப் பொறுத்தமங்டில் நொக்ஸ் குவைருெஸ் ஆகிய இருவரும் றிபேறியோவைவி, கூடிய விபரங்களைத் தந்துள்ளனர். சிங்களவர்களின் நாளாந்த வாழ்க்கையை நொக்ஸ் நன்கு படம் பிடித்துக் காட்டியூன் ளார். கரையோரப் பிரதேசங்களிலுள்ள முக்கிய நிகழ்ச்சி

களையே ஹிபேறியோ தனது நூலில் எழுதியுள்ளார். அரிப் பில் நடைபெற்ற முத்துக்குளிப்பு, யானைகள் பிடித்தல், கறுவா எண்ணெய் வடித்தல், இரத்தினக்கற்கள் பெறுதல் ஆகியனபற்றிய குறிப்புக்கள் ருசிகரமானவையாக உள்ளன.
நொக்ஸைப் போன்றே நியேறியோ இலங்கையிலுள்ள மக்களைச் சோம்பேறித்தனமானவர்களென மதிப்பிட்டா லும், தமது நூலின் பல விடங்களில் இதற்கு நேர்மாமுன கருத்தைக் கூறியுள்ளார். சிங்களவர்கள் நீண்டகாலம் எண் பது வயதிலும் திடகாத்திரமாக வாழ்வதை இவரும் நொக்சும் ஆச்சரியத்துடன் நோக்கியுள்ளனர். நொக்ஸ் நூறு வயதுடைய மனிதரைக் கண்டதாகக் கூறியுள்ளார். ஆனல் றிபேறியோ 120 வயதுடைய தந்தையையும், 30 வயது டைய அவருடைய மகனையும் தனக்குத் தெரியுமெனவும், அவர்களுடன் கதைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சாதி வேற்றுமை பற்றி றியேறியோ சுருக்கமாக ஆணுல் தெளி வாகக் கூறுகின்ருர், சிங்களவரின் வழக்கமான கொதிக் கும் எண்ணெயில் சத்தியப் பிரமாணம் செய்வதை மிகைப்
டுத்திக் கூறியுள்ளார். Ws
றிபேறியோ போர் வீரனகவிருந்ததால் யுத்தங்கள், இராணுவ அமைப்புப்பற்றிய விபரங்களே முக்கியமாக விவ ரிக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலுள்ள போர்த்துக்கீசப் போர் வீரர்களில் திருமணமானவர்களுக்கும் திருமணமாகாதவர் களுக்கும் கடமைகள் வேருகவிருந்தன. திருமணமாகாத போர்வீரர்கள் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் முத்தத்திலீடுபடத் தயாராகவிருக்கவேண்டும். மற்றவர் கள் உண்ணுட்டுப் பாதுகாப்புச் சேவைக்கும் விசேட es சரகாலச் சேவைக்குமே அழைக்கப்படுவர்.
இலங்கையில் பெரும்பாலும் 700 போர்த்துக்கீசப் போர் வீரர்களே இருந்துவந்துள்ளனரென றிபேறியா கூறியுள் ளார். ஆனல் கூலிப் படையினரின் தொகை 15000 呜5 விருந்தது. இவர்கள் நான்கு பாசறைகளில் பிரித்து வைக் கப்பட்டனர். ஏழுகோறளை, நான்குகோறளை, சப்பிரகமூவா,
இ வ. தொ-ச

Page 24
--سے 34 سے
ம்ாத்தறை ஆகியவிடங்களிலும், இறுதியாக ஒல்லாந்தர் வந்திறங்கிய பின்னர் காலியிலும் ஒருபாசறை அமைக்கப் பட்டது. போர்த்துக்கீசப் போர் வீரர்கள் 36 அல்லது 37 பேர்களைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு வேதனம் வருடத்தில் இருமுறை அளிக்கப் படும். கிறிஸ்மஸ்ஸிற்கும் கோடையிலும் வேதனம் வழங் கப்பட்டது. ஒரு குழுவில் கட்டாயமாகச் சேவைசெய்ய வேண்டியகாலம் ஆறுமாதம் மட்டுமே யாகும். தமது விருப்பத்தின் படி வேறுகுழுக்களுக்கு மாறிச் சேவை செய்யக் கூடியதாகவிருந்தது. போர்வீரர்களாகச் சேவை செய்பவர் கள் பிரதம தளபதியின் அனுமதியுடனேயே நாட்டை விட்டு வெளியேற முடியும். இக்கட்டுப்பாட்டை மீறுபவர் கள் மரண தண்டனைக்குட்படுவார்கள் என நியேறியோ கூறியுள்ளார்.
போர்த்துக்கீசப் போர்வீரர்களின் ஒழுக்கம் உண்மை யில் அவர்கள் பெறும் வேதனத்திலேயே தங்கியிருந்தது. வேதனம் கொடுபடாவிட்டால் ஒழுக்கயினங்களில் ஈடுபட்டு நாட்டுப் புறங்களில் குறையாடல்களில் ஈடுபட்டனர். இலிஸ் பனில் சிறைச்சாலைகளில் கைதிகளாக உள்ளவர்களே இங்கு பெரும்பாலும் போர் வீரர்களாக அனுப்பப்பட்டதால் ஒழுக்கவீனம் மலிந்திருந்தது.
போர் வீரர்களுக்குரிய உணவுப் பண்டங்கள் பெரும் பாலும் கிராமத்தவர்களாலேயே வழங்கப்பட்டு வந்தன. போர்வீரர்கள் ஓரிடத்திலிருந்து மறுவிடததிற்குச் செல்லும் வழியில் தங்குவதற்குரிய வசதிகளைக் கிராமத்தலைவர்களே செய்து கொடுப்பர். போர் வீரர்களின் பாதுகாப்பில் கிரா மத்தலைவர்கள் அதிக கவனமெடுப்பார்கள். ஏனெனில் ஒரு போர் வீரனின் உயிர் முழுக்கிராமத்தின் அழிவிற்கே காரண மாகவிருக்கலாம்.
காடுகளில் யுத்தங்களிலீடுபடுமபோது அதிகாலை மூன்று மணிக்கே காலை யுணவை முடித்துக் கொண்டு யுத்தத்திற் குத் தயாராகுவார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், பாம்புகள் இருந்தும் தனித்தனியாகவே பாதணிகளின்றிச்

- 85 -
செல் வர். கூலிப்படிையினரே உணவு வெடிமருந்துகள் போன்றனவற்றை எடுத்துச் செல்வர். போர்த்துக்கீசப் போர் வீரர்கள் ஆயுதங்களை மாத்திரம் எடுத்துச் செல்வர். கரம் வெட்டும் தொழிலாளர்களிலிருந்து தெரியப்படும் கூலிகளே நம்பிக்கையானவர்களெனவும், தோல்வி யேற்பட்டாலும் தமது உயிரையே தியாகம் செய்வார்களெனவும் றிபேறியோ கூறியுள்ளார்.
இந்நூலின் இரண்டாம் பகுதி போர்த்துக்கீசர் ஒல்லாந் தருடனும் சிங்களமன்னர்களுடனும் மேற் கொண்டிருந்த யுத்தமுறைகளைக் கூறினலும் மற்றைய பகுதிகளைப் போன்று சுவாரஸ்யமானதாக விருக்கவில்லை. றிபேறியோ 1640-ம் ஆண்டு தொடக்கம் 1658-ம் ஆண்டுவரை எல்லா யுத்தங் கள் படையெடுப்புகள் முற்றுக்கைகள் ஆகியனவற்றில் பங்கு கொண்டிாலும் குவைருெஸின் நூலிலுள்ள விபரங்களை விடக் குறைவாகவே யுள்ளது. யுத்தவிபரங்கள் நம்பமுடியாதவை களாகவுள்ளன. சிங்களவர்களிலும் ஒல்லாந்தர்களிலும் காய முற்றவர்கள் என்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுகின்ருர்,
றிபேறியோ போர்த்துக்கீசரிடம் யுத்த இரகசியங்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை யெனக் கூறுகின்றர். இதுவே போர்த்துக்கீசரின் தோல்விக்கு மூலகாரணமாக விருந்தது என்றுள்ளார். 1638-ம் ஆண்டு : முதல் 1658-ம் ஆண்டு வரை போர்த்துக்கீசர் ஒல்லாந்தருக் கெதிராகவும், இரண் டாம் இராசசிங்கனுக் கெதிராகவும் முக்கோண யுத்தத்தி வீடுபட்டிருந்தமையால் தோல்வியடையவேண்டி நேரிட்டது எனக் கூறியுள்ளார்.
ஒல்லாந்தரினல் கொழும்பு முற்றுகையிடிப்பட்டுக் கைப் பற்றியது பற்றிய விபரங்கள் நம்பமுடியாதவைகளாயுள்ளன. ஒல்லாந்தர் கொழும்பு கைப்பற்றப்பட்டபின் சரணடைந்த மக்களை நன்கு நடாத்தினரென்பது மற்றைய போர்த்துக்கீச ஒல்லாந்த ஆசிரியர்களின் கூற்றுக்கு முரணுகவுள்ளன. ஆனல் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபின்னர் ஒல்லாந்தரின் முறை கேடான செயல்கள் பற்றிய விபரங்கள் மற்றைய ஆதாரங் களுடன் ஒத்துக் காணப்படுகின்றன.

Page 25
m 96 -
மூன்ருவது பகுதியில் போர்த்துக்கீசரின் கீழைத்தேய குடியேற்ற நா ஃடுக் கொள்கையை விமர்சித்துள்ளார். இந்நூல் 1836-ம் ஆண்டுவரை வெளியிடப்படாம லிருந்த மைக்கும் இவரது கருத்துக்கள் காரணமாகவிருக்கலாம். போர்த்துக்கீசர் தம்மால் நிர்வகிக்க முடியாதளவிற்கு சாம் ராச்சியத்தை விஸ்தரித்திருந்தமையே சீர்குலைவிற்குக் காரண மெனக் கூறியுள்ளார். கோவா ஒர்மஸ் மலாக்கா ஆகியவற் றுடன் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டி இலங்கையைக் கைப்பற்றிக் குடியேற்றங்களை ஏற்படுத்து வதில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். குவைருெஸ் சுவாமிகள் கூறிய கருத்துக்களு டன் றிபேறியோவின் கருத்தும் ஒத்துக்காணப்படுகின்றது.
போர்த்துக்கல் மன்னன் நான் காம் யோன் நோயுற் றிருந்தமையாலும் ஆலோசகர்களின் ஆலோசனையின்மை யாலும் இலங்கைன்யத் திரும்பவும் கைப்பற்ற எண்ண வில்லையெனக் கூறியுள்ளார். ஆனல் வேறு சமகால ஆதா ரங்கள் எதிர்மாறன கருத்தைத் தருகின்றன. இலிஸ்பனி லும் கோவாவிலுமுள்ள வரலாற்று ஆவணங்களே ஆழ்ந்து நோக்கினல் அங்குள்ள நிர்வாகிகளும் அரசனும் இலங்கை யின் விதியை யெண்ணி அதிக அக்கறையும், செயற்பாடும் கொண்டிருந்தனரென்பது தெளிவாகும்.
இரண்டாம் இராசசிங்கன் 1658-ம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்தர்களின் நடித்தைகளால் வெறுப்புற்று போர்த்துக் கீசரைத் தனது நண்பர்களாக்க விரும்பினுனெனக் கூறுகின் ருர், கண்டியிராச்சியம் சுயதேவைப் பொருளாதாரத்தை யுடையதெனவும் கரையோரப் பிரதேசத்திலுள்ள கறுவா வியாபாரத்தில் அவன் அக்கறை கொள்ளவில்லையெனவும் கூறியுள்ளனர். ஆனல் இராசசிங்கன் ஒல்லாந்தரைப் போர்த் துக்கீசரைவிடி அபாயம் குறைந்த எதிரியாகக் கணித்துள் ளான். அவனது ஆட்சியின்போது ஒல்லாந்தர் கண்டியைத் தாக்க முன்வரவில்லை; ஆனுல் போர்த்துக்கீசர் பலமுறை சிங்களவர்களுடன் மேற்கொண்ட யுத்தங்களில் கண்டிக் கிராமங்கள் பலவற்றை எரித்தும் சூறையாடியும் இராச சிங்கனின் வெறுப்பைப் பெற்றிருந்தனர்.
றிபேறியோவின் நூல் மற்றைய மூன்று நூல்களைவிட சிறியதாகவிருந்தாலும் புதிய நடையைக் கொண்டது; அதிக விபரங்களையுடையது; சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டுள்ளது.

றிபேறியோவின் நூலிலிருந்து . . . . .
சிங்களவர் வாழ்க்கைமுறை; போர்த்துக்கீசர் போர்முறை
'கோட்டையரசனே இலங்கைத் தீவினுள் எம்மைச் செல்வதற்கு அனுமதித்தவன். கோட்டை இராச்சியத்தில் சிலாபத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திற்குப் பரந்திருக்கும் பகுதிகள் கறுவாக் காடு களாகவுள்ளன. இவை அடர்ந்து காணப்படுவதால் அதற்குள்ளால் நடப்பது இயலாத தொன்ருகும்"
X X x
"சிங்களவர்களின் பாடல்கள் இனிமையானதாகவும் மகிழ்
வளிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்தன. அவர்கள் கூறுவது விளங்
காவிடினும் நாங்கள் செய்யும் தொழில்களையே மறந்து அவற்றை அவதானிப்போம்"
X Χ X X
"அவர்களின் திருமணம் சிரிப்பிற்கிடமானதாகும். ஒரு பெண் தனது சாதியிலுள்ள இனத்தவரைத் திருமணம் செய்ய விரும்பி ணுல், இனத்தவர்கள் திருமணத்தை நடாத்தி வைப்பர். அடுத்த நாள் மணமகனின் சகோதரன் அப்பெண்ணை மனைவியாக்குவர். மணமகனுக்கு ஏழு சகோதரர்களிருந்தாலும் அவள் ஏழு பேருக்கும் மனைவியாக வாழ்வாள். '
Χ х
"சிங்களப் பெண்களில் அவலட்சணமானவர்கள் அருமையாகவே யுள்ளனர். எல்லோரும் அழகான கண்களை யுடையவர்கள் சுத்த மானவர்கள்; ருசியாகச் சமையல் செய்வார்கள் தலைமயிரில் அதிக கவனம் செலுத்துவார்கள். '
Χ x
சிங்களவர்கள் பணத்தில் பேராசை கொண்டவர்கள்; இதனல் நம்பிக்கைத் துரோகமுடையவர்களாயுள்ளனர்; இந் நோக்கத்துடனே

Page 26
- 38 -
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற முன்வந்தாலும் பின்னர் தமது மதங்களையே பின்பற்ற முயல்வர். w
Χ Χ X
'காடுகளில் போதியளவு உணவைப் பெறுவதினல் விவசாயம் செய்வதில் சோம்பேறிகளாகவுள்ளனர். உப்பு மட்டுமே அவர்களுக்கு அருமையாகவுள்ளது. "
Χ R \
"சிங்களவர்கள் அதிக வயதிற்கு வாழ்வார்கள்; ஒரு தந்தை யையும் மகனையும் எனக்குத் தெரியும்; அவர்களுடன் கதைத்துள் ளேன்; தந்தை 120 வயதும் மகன் 90 வயதும் உடையவர்கள். '
ΣΚ. • Χ ΣΚ. Χ
போர்வீரர்கள் தமது தலைவர்களின் தீர்மானங்கள் பற்றி ஆலோ சிக்கக் கூடாது; அவற்றிற்கு உடன் கீழ்ப்படிதல் வேண்டும். கீழ்ப் படிய மறுத்த போர்வீரர்கள் மரத்தினடியில் சிரச் சேதம் செய்யப் படுவர்.
x
"போர்வீரர்கள் சேவையை விட்டுத் தப்பியோட முயன்றல் மரணதண்டனை வழங்கப்படும்; பிரதம தளபதியின் அனுமதியுட னேயே வெளியேற முடியும். ஆனல் பெரும்பாலும் அனுமதி வழங் கப்படுவதில்லை. ”*
Σς Σκ Σκ х
"போர் வீரர்கள் பதவியுயர்வு கோருவதில்லை; பிரதம தளபதி படைத்தலைவர்கள் மூலம் போர் வீரர்களின் விசேட சேவைகளை யறிந்து பதவியுயர்வு அளிப்பார்.
X Χ Χ x
**கண்டிய மன்னன் யுத்தத்திலீடுபடும் போது தனது படையின் முன்னே யானைகளின் துதிக்கையில் பெரும் வாள்களை, கத்திகளைப் பொருத்தி ஏவிவிடுவது வழக்கமாகும். '
X Σς 率

- 39 -
'யானைகள் எம்மீது ஏவப்பட்டால் யானைகளின் கண்களுக்கு பிரகாசமான ரோச் வெளிச்சங்களைக் காட்டவே அவை எதிர்த்து வரமுடியாமல் தனது பக்கத்துப்படை வீரர்களிடையே ஒடி அழிவை ஏற்படுத்தும் , '
Χ Z 篇
"போர்த்துக்கீசப் பிரதம தளபதியான கொன்ஸ்ரான்டிசா கண்டியுத்தத்தில் திசாவைகளினுலும் சுதேசிப்படைகளினலும் ஏமாற் றப்பட்டாலும் தோல்வி நெருங்கிக் கொண்டிருந்த கடைசித் தரு ணத்திலும், ஒரு கை துண்டிக்கப்பட்டாலும் மற்றக் கையில் வாளு டன் சுதேசிகளை மலைக்கணக்காகக் கொன்று குவித்தான். இறுதியில் ஈட்டிகளாலும், இரவைகளினுலும் கொல்லப்பட்டான்.

Page 27
இலங்கையை ஆத்மீக இலெளகீகத் துறையில் வெற்றிபெறல்
-@Lyà1) ತ್ರಿ ಐ வருெஸ்
W
இலங்கை வரலாற்றில் போர்த்துக்கீசர் காலப் பகுதி யினைக் கற்பதற்கு பெனல் 4 கு2ைருெஸ் சுவாமிகள் எழுதிய இலங்கையை ஆத்மீக இலெளகீகத் துறையில் வெற்றி பெறல்" என்னும் நூல் சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றது. அக் காலப் பகுதியின் அரசியல் சமுதாய சமய நிலைமைகளே அறி வதற்குச் சிறந்த உதவி நூலாகவுள்ளது. м
குவைருெஸ் சுவாமிகள் 1617-ம் ஆண்டு போர்த்துக் கலில் பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பின்னர் மதசேவை செய்யும் பொருட்டு 1635-ம் ஆண்டு இந்தியாவிற்கு அனுப் பப்பட்ட முப்பது பேர்களில் இவரே வயதிற் குறைந்தவ ராக விளங்கினர். இவர் கோவாவில் தங்கியிருந்தபோது தத்துவஞான சாஸ்திரம் வேதசாஸ்திரம் ஆகியனவற்றில் திறமை மிக்கவராக விளங்கினர். பின்னர் வேதசாஸ்திரப் ப்ேராதிரியராகத் தெரியப்பட்டார். மதஞானியாக மட்டுமி ஒறந்த நிர்வாக ஆற்றலும் பொருந்தியவராக விளங் ஒயதால் கோவாவிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகியாகவும் தலைவராகவும் கடமையாற்றும் பேறு பெற் (ydf. 1688-ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 10-ம் திகதி இவர் இறக்கும் வரையிலான 53 வருடங்களையும் இந்தியாவிற் கழித்தார்.
மதசேவையைவிடச் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவரா கவும் விளங்கினர். இவரால் எழுதப்பட்ட நூல்கள் பல, 1664-ம் ஆண்டு சென்போல் கல்லூரியில் ஏற்பட்ட தீவிபத் தில் இக்கிரையாகின. தீவிபத்தின் போது சுவாமிகளுடன் வாழ்ந்த வண. சகோதரர் ஒருவர் இவரது அறைக்குச்

- 41 -
சென்று சில குறிப்புக்களைத் தீயிலிருந்து காப்பாற்றினர். இதுவே பின்னர் பீட்ரோடி, பஸ்ரோவின் சுயசரிதையை எழுத உதவியாகவிருந்தது. குவைருெஸ் தனது நூலில் இதுபற்றிக் குறிப்பிடுகையில் "இறைவனின் விசேட அற்பு தத்தினலேயே இது நிகழ்ந்தது’’எனக் கூறியுள்ளார்.
ஒல்லாந்தரால் கொச்சின் 1663-ம் ஆண்டு கைப்பற்றப் பட்டபின் வண, சகோதரர் பீட்ரொ டி பஸ்ரோவின் வாழ்க்கை வரலாற்றினை எழுதும் பணி இவரிடம் விடப் பட்டது. பஸ்ரோவின் அந்தரங்கமான கடிதங்கள், உயரி கள், சத்தியப்பிரமாணங்கள் ஆகியன குவைருெஸ் சுவாமி களிடம் ஒப்படைக்கப்பட்டின. இந்தியாவில் போர்த்துக் கீசரின் எதிர்காலம் பற்றியும் இலங்கையில் போர்த்துக் கீசரின் தேய்வுநிலை பற்றியும், எழுதிய பஸ்ரோவின் கருத் துக்களில் இவர் அசையாத தம்பிக்கை கொண்டிருந்தார். இலங்கையில் போர்த்துக்கீசரின் வரலாற்றினை மேலும் ஆரா யக் குவைருெஸ் தலைப்பட்டார். கொழும்பு ஒல்லாந்தரினல் கைப்பற்றப்பட்ட பத்து வருடங்களுக்குள்ளேயே இம் முயற்சி ஆரம்பமானது.
இலங்கையில் போர்த்துக்கீசர் ஆட்சியின் ஆரம்பகால வரலாற்றை அறிவதற்கு பருேஸ் கூற்ருே ஆகியோரின் நூல் களே உதவியாகவிருந்தன. குவைருெஸ் தனது சலியாத உழைப்பாலும் ஆராய்வுகளாலும் இவர்களிலும் கூடிய விப ரங்களைப் பெற்ருர் இலங்கைக்கு ஒருதடவைகூட வராம லிருந்தும் தனியாகவே வரலாறு எழுதக்கூடிய ஆதாரங்களைப் பெற்ருர், இந்நூலினை அவர் எழுதுவதற்கு மூன்று காரணங் களைக் கூறலாம்.
இலங்கையில் போர்த்துக்கீசர் ஆக்சிபற்றி வண. சகோ தரர் பஸ்ரோ கூறியவை உண்மையென நம்பினர். இலங் கையைக் கிழக்கிந்திய நாடுகளின் தலைநகராக்காமல் விட் டி.து தவறு எனக் கண்டார். இலங்கையிலுள்ள கத்தோ விக்கர்கள் ஒல்லாந்தரினல் துன்புறுத்தப்படுவதைக் கண்டு அவர்களைப் போர்த்துக்கீசரே பாதுகாக்க வேண்டுமென விரும்பினர். இம்மூன்று நோக்கங்களும் இவரது நூல் முழுவதும் பரவியிருத்தலேக் காணலாம். V இ வ: தொகை 6

Page 28
س- 49 - ه
இந்நூலக் குவைறெஸ் சுவாமிகள் 1687-ம் ஆண்டு ஒக்ரோபரில் எழுதிமுடித்தார். 1688-ம் ஆண்டு ஜனவரியில் தணிக்கைச் சபையால் அனுமதியளிக்கப்பட்டது. இந்நூலின் தலைப்பே இது எழுதப்பட்டதன் நோக்கத்தினை தெளிவாக் குகின்றது. இலங்கையை மீண்டும் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்ற கொள்கையில் நம்பிக்கை கொண் டிருந்தனர். இதனை நிறைவேற்ற போர்த்துக்கீச மன்னனை யும் மக்களையும் தூண்டும் முயற்சியாக இந்நூல் அமைந் துள்ளது. போர்த்துககிசர் எக்காரணங்களினுல் இலங் கையை இழந்தனர், அப்பிழைகளுக்கு யார் பொறுப்பாளி களாக அமைந்தனர், இலங்கையைத் திரும்பவும் எவ்வாறு இலகுவாகக் கைப்பற்றலாம், என்பன போன்ற கருத்துக்கள் இந்நூலில் பொதிந்து காணப்படுகின்றன.
ஆறு பகுதிகளாக இந் நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி இலங்கையின் சுவாத்தியநிலை, மக்களது வாழ்க்கை முறை, பொருளாதாரநிலை வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியனவற்றைக் கூறுகின்றது. இரண்டு, மூன்று நான்கு ஐந்து ஆகிய பகுதிகள் இலங்கையில் போர்த்துக்கீசரின் அரசியல் சமய வரலாறுபற்றிக் கூறுகின்றது. ஆருவது பகுதியில் இலங்கையில் போர்த்துக்கீசர் செய்த அட்டூழியங் கள் நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையைத் திரும்பவும் கைப்பற்றி ஆளலாம் என்பதுபற்றியும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையைப் போர்த்துக்கீசர் இழப்பதற்குப் போர்த் துக்கல் மக்களோ அல்லது அரசனே பொறுப்பல்லவென் றும் இலங்கையில் சேவை புரிந்த போர்த்துக்கீசப் போர் வீரர்களும் அதிகாரிகளுமே காரணம் என்றும் கூறியுள்ளார். அவர்களது திறமையின்மையும் ஊழல்களும் கொடுமைக ளும் மதம்பரப்பும் நோக்கத்திற்குத் தடையாக விருந்த துடன் போர்த்துக்கலின் நன்மதிப்பையும் பாதிப்பதாக அமைந்திருந்தது எனக் கூறியுள்ளார். V
மல்வான உடன்படிக்கையில் உறுதியளித்தபடி நாட்டின் நிர்வாக முறைகளுக்கும் வழமைகளுக்கும் மக்களது வாழ்க்கை

- 43 -
முறைகளுக்கும் ஏற்ப போர்த்துக்கீசரின் ஆப்ஃசி நடைபெற வில்லையெனக் கூறியுள்ளார். மக்களின் விருப்பு வெறுப்புக்களைக் கவனியாது மதத்துவேஷம் கொண்டு துன்புறுத்தினர்களென வும் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் மேற்கொண்ட தண்டனைகளினுல் மக்களில் வெறுப்பிற்குள்ளாக நேரிட்டது எனக் கூறியுள்ளார். ஈட்டிமுனையில் குழந்தைகளை எறிந்து ஏந்திக் கொன்றமை, ஆண்களை மல்வானையிலுள்ள பாலத் திலிருந்து ஆற்றில் உயிருடன் எறிந்து கொன்றம்ை, தாய் மாாைக் கொண்டு அவர்கள் பிள்ளைகளே உரலில் போபீடு இடிப்பித்தமை, பெண்களைச் சிரச்சேதம் செய்வித்தமை போன்ற கொடுமைகளே முடிவில் இறைவன் ஒல்லாந்தர் வடிவில் வந்து போர்த்துக்கீசரிடமிருந்து இலங்கையைக் கைப் பற்றக் காரணமாகியது எனக் கூறியுள்ளார்.
குவைருெஸ் சுவாமிகள் இந்நூலை எழுதுவதற்குப் பல தரப்பட்ட மூலாதாரங்கள் உதவியாகவிருந்தன. முன்னரே குறிப்பிட்டபடி வண. சகோதரர் பஸ்ரோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்குக் கிடைத்த ஆதாரங்களும், இலங் கையைப் பற்றிப் போர்த்துக்கீசரால் எழுதப்பட்டுபி பிர சுரிக்கப்பட்ட நூல்களும் உதவியாக அமைந்தன. இவ்வகை யில் பருேஸ் கூற்ருேவின் நூல்கள் முக்கியத்துவம் வாய்நீ தவையாக விளங்குகின்றன. கூற்றேவின் நூல் பரோஸின் நூலைவிட அதிகம் வரலாற்றுண்மை வாய்ந்தனவென்று கூறலாம். பரோஸின் இலக்கிய நடையைப் போர்த்துக்கீசரி புகழ்ந்தாலும் கூற்ருேவின் நூல் உண்மைச் சம்பவங்களை ஒளிவு மறைவின்றி நேரடியாக எடுத்துக் கூறுவதாய் அமைந் துள்ளது. பிரசுரிக்கப்படாத நூல்களில் புகோ, அந்தோனி யோ டி பின் கய்ரோ, டாலொம்பா, பிரான்சிஸ்கோ, நிக ரட்சோ ஆகியவர்களின் எழுத்துக்களைக் குறிப்பிடலாம். இலங்கையிலுள்ள கத்தோலிக்கக் குருமார்களால் அவ்வப் போது எழுதப்பட்ட விண்ணப்பக் கடிதங்களையும் தமது நூலிற் சேர்த்துள்ளார். இலங்கையில் பணிபுரிந்து கோவா விற்கு ஒய்வு பெற்றுச் சென்றுள்ள நிர்வாகிகள், தளபதி கள், போர்வீரர்கள் ஆகியோரைப் பேட்டிகண்டு சேகரித்த விஷயங்களையும் தனது நூலிற் சேர்த்துள்ளார்.

Page 29
- 44 -
குவைருெளினது நூல் எழுதப்பட்டுள்ள நடையே குறைபாடுடையதாக விளங்குகின்றது. பல வசனங்கள் விளங்கிக் கொள்ள முடியாதவாறு சிக்கலானதாக அமைந் துள்ளன. பல சந்தர்ப்பங்களில் முடிவில்லாத வசனங்கள் வாசகர்களின் பொறுமையைச் சோதிக்கின்றது போல் அமைந்துள்ளன. ஒரு வசனத்தைப் பலமுறை வாசித்துத் தெளிந்தே அதன் கருத்தை அறியக் கூடியதாகவுள்ளது. பிற ஆதார நூல்களிலிருந்து சில பகுதிகளே நேரடியாகவே தமது நூலில் சேர்த்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் பல விடயங்கள் பற்றிய சுவாமிகளின் தெளிவற்ற தன்மை வெளிப்பட்டு நிற்கின்றது.
இலங்கை வரலாற்றில் பதினேழாம் நூற்ருண்டில் புத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் அளிக்கப்பட்டி முக்கியத் துவம் இவரது நூலில் காணப்படவில்லை. போர்த்துக்கல் நாட்டில் பற்றுடிையவர் என்பதனலும், கத்தோலிக்கப் பாதிரியாகவிருந்தமையாலும் இலங்கை மக்களின் கண் களினூடாக ஆராய முற்படவில்லை யெனலாம், கத்தோ விக்க மதத்தின்மீது மக்கள் அதிருப்தி கொண்டிமைக்கு அதிகாரிகளின் கொடூரமான ஆக்சியே காரணமெனக் கூறு கின்ருர். ஆனல் போர்த்துக்கீசரின் மதக் கொள்கையையும் பிரசார முறையினையும் ஆழ்ந்து நோக்கினுல் இக் கருத்து எந்தளவிற்கு உண்மையானது என்பது புலனுகும். குவை ருெஸ் தனது நூலில் சமயக் குருமார்களைக் கண்டிக்காமல் விஃs.தில் வியப்பெதுவும் இல்லையெனக் கூறலாம்.
இவரது நூலில் பல உண்மைக்குப் புறம்பான விடயங் கள் கூறப்பங்டுள்ளன. 1840-ம் ஆண்டு நீர்கொழும்பில் உண்மையில் 3000 கண்டிப் போர்வீரர்கள் போர்த்துக்கீச ரால் தாக்கப்பட்டதை 20,000 போர்வீரர்கள் தாக்கப் பட்டினர் எனக் கூறியுள்ளார். ஒரு நாள் முழுவதும் நடை பெற்ற யுத்த மொன்றில் ஏராளமான சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டு இரண்டொரு போர்த்துக்கீசர் மாத்திரமே இறந்தனர் எனவும் கூறியுள்ளார். அசவிடோவின் கண்டிப் படையெடுப்பின் போது இறந்த போர்த்துக்கீசப் போர்வீரர்

- 45 -
களின் எண்ணிக்கை ஒரு சிறிய தொகையேயெனக் கூறு கின்றர். போர்த்துக்கீசரின் ஆட்பலம் குன்றியிருந்த காலத் தில் இவ்வெண்ணிக்கை மிகுந்த நஷ்டமாகவிருந்திருக்கும். இவ்விதம் கூறுவதிலிருந்து போர்த்துக்கீச ஆவணங்களை இவர்ஆராய்ந்திருக்க வில்லையெனக் கூறவேண்டியதாக வுள்ளது.
நூலின் முதல் ஐந்து பகுதிகளிலும் தம்மைப் போர்த் துக்கல் தேசத்து ஊழியனுகக் கருதும் குவைருெஸ் சுவாமிகள் ஆருவது பகுதியில் தமது நாட்டைச் சேர்ந்தவர்களைக் கண்டிக்கும் போது சங்கடமானநிலை அவருக்கு ஏற்படுகின் றது. இச்சந்தர்ப்பத்தில் பல முரண்பாடுகள் அவரது நூலிற் காணப்படுகின்றன. இவரது நூலில் நாலாவது பகுதியில் புகழப்பட்ட டயகோடி மெல்லோ ஆருவது பகுதியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளார். கண்டியமன்னன் ஒல்லாந் தரின் உதவியை நாடியமைக்கு இத்தளபதியே காரணம் எனக் கூறியுள்ளார். ஆனல் நான்காவது பகுதியில் இதே தளபதி கண்டியமன்னனுடன் செய்து கொண்ட உடன் படிக்கைக்காகப் புகழப்பட்டுள்ளார். போர்த்துக்கீசர் இலங் கையை இழந்தமைக்கு ஆண்டவனின் அதிருப்தியே கார ணம் எனப் பழிபோடுகின்றர். அத்துடன் ஒல்லாந்தர் வராமலேயே போர்த்துக்கீசர் இலங்கையை இழந்திருப்பர் எனக் கூறியுள்ளார். இவ்விதம் கூறும்போது ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் பலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிச் சிறிதும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
இலங்கைைையக் கைப்பற்றி ஆட்சிபுரிந்தமையிலுள்ள குறைபாடுகளை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். அத்து டன் எல்விதம் சிறந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் அங்கு மீண்டும் ஏற்படுத்தலாமெனவும் கூறியுள்ளார். போதியளவு போர்த்துக்கீசப் படையை இலங்கையில் வைத்திராமையி ஞல் அந்நியராட்சியை ஏற்கச் செய்வதற்கும், கண்டிக் கலகக் காரர்களின் ஊடுருவல்களைத் தடுக்கவும் இயலாது

Page 30
- 46 ܗܝ
போய்விங்டதென்றும் கூறியுள்ளார். படைத்தலைவர்கள் ஒவ் வொருவரும் போதியளவு அனுபவம் பெற்றிருக்கவில்லை. அவர் களின் திறமை, அனுபவம், பதவியுயர்வு அளிக்கப்படும்போது கவனிக்கப்படவில்லை. அசவிடோமட்டுமே அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளித்தார் என்றுள்ளார். கலகக்காரர்களுக் குப் போதியளவு தண்டனைகள் வழங்கப்படாமையினல் மற்ற வர்களும் துணிந்து கலத்திலீடுபட்டனர். அத்துடன் ஒத்து ழைத்தவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினர். தாழ்நாட்டில் போதியளவு ஆயத்தங்க ளின்றிக் கண்டிமீது படையெடுப்புக்களை மேற்கொண்ட தால் எண்ணற்ற போர்த்துக்கீசப் போர் வீரர்களை இழக்க நேரிட்டது. எனக் கூறியுள்ளார். இலங்கை முழுவதையும் தமது ஆணைக்குள் கொண்டுவருவதில் ஏற்பட்ட தாமதத் தினையும் சுட்டிக் காட்டியுள்ளார். கண்டியர்கள் நவீனயுத்த முறைகளை விளங்கிக் கொள்ளாத நிலையில் கரையோரப் பிரதேசங்களில் அமைதி நிலவிய லத்தில் இந்தியாவில் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கண்டி யைக் கைப்பற்றியிருக்கலாம் எனக் கூறுகின்ருர், குவைமுெஸ் இலங்கையில் போர்த்துக்கீசர் ஆட்சி பற்றித் தெளிவான அறிவைப் பெற்றிருந்தார் என்பதில் ஐயமில்லை.
குவைருெஸினது நூலில் போர்த்துக்கீசரது ஆட்சியின் இறுதிக்காலம் விபரமாகக் கூறப்பட்டிருக்கின்றது. கிட்டத் தட்ட சம காலத்தில் எழுந்த நூலாதலால் உண்மையான விஷயங்கள்பல அடிங்கியிருக்கின்றன. உண்ணுட்டில் போர்த் துக்கீசர் ஆட்சி சீர்குலைந்தமைக்குரிய காரணங்களைக் கூறும் விதம் அனுபவ உண்மை வாய்ந்தனவாகவும் பாராட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளன. போர்த்துக்கீச நிர்வாகிகளின் போக்கு, நிர்வாக ஊழல்கள், நிர்வாகத் திறமையின்மை கட லாதிக்கப் பலக் குறைவு, போர்த்துக்கலிலிருந்து உதவிகள் கிடைக்காமை, ஆகியன மிகவும் விரிவாக ஆராயப்பட்டுள் ளன.யுத்தகாலத்திலும் சமாதானகாலத்திலும் சிங்களவர்கள் கொடுமைப்படுத்தப்பக்டு எதிரிகளாகவே நடாத்தப்பட்ட னர் எனக் கூறியுள்ளார்.

- 47
குவைருெஸ் சுவாமிகள் தமது நூலில் சில பகுதிகளை மிகைப்பட வர்ணித்தாலும் இந்நூல் இலங்கையில் போர்த் துக்கீசரின் வரலாற்றையறிய இன்றியமையாத நூலாக விளங்குகின்றது. இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களே இக் காலத்தைப் பற்றியெழுந்த மற்றைய நூல்கள் வேறு பாஷையில் கூறுகின்றன. இலங்கையில் போர்த்துக்கீசர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தின் ஆத்மீகத் தலைவராகக் குவைறெஸ் சுவாமிகள் விளங்குகின்றர்.

Page 31
குவைருெஸின்
சமுதாய அமைப்பு, ஆட்சிமுறை; குறைபாடுகள்
லொறன்ஸோ டி அல்மேடாவினல் அனுப்பப்பட்ட தூதுக்குழு சிங்களவர்களின் தந்திரத்தால் திரும்பத்திரும்ப ஒரேயிடத்தையும் ஒரே நதியையும் பலதடவைகள் கடக்க நேரிட்டது. ஆனல் கப்பலி லிருந்து கேட்ட பீரங்கிச் சத்தம் அவர்களுக்கு உண்மையான தூரத்தை உணர்த்தியது.
k ་་ ,
சிங்களவர்கள் கர்வமுள்ளவர்கள், ஆடம்பரமானவர்கள், சோம் பேறிகள். அவர்கள் தங்களைத் தேவலோகத்திய வம்சத்தவர்களென வும், பண்டைய அரசவம்சத்தினரெனவும் எண்ணுபவர்கள்.
x Χ Σκ தமது நாட்டிலுள்ள செல்வங்களினல் விவசாயத்தில் அக்கறை யின்மையும் பணம் சேகரிக்க வேண்டுமென்ற அவாவின்மையும் உடையவர்களாயிருந்தனர். மூன்று லறின்கள் கிடைத்தவுடன் தம் மைச் செல்வந்தர்களாக நினைத்துப் பெரும் எண்ணங்களைக் கொண் டிருப்பர்;
寂
சிங்களவர்களது உடை தகுதிக்கேற்ப அமைந்திருக்கும். சிவப்பு நிறத் தொப்பியையும், போர்த்துக்கீசரின் மேல் சட்டையையும் விரும்பி அணிவர். தொப்பிகளில்லாத விடத்து வெள்ளைத் துணியால் தலைப்பாகை போன்றவிதத்தில் அணிவர்.
X
சுதேச அரசர்களுக்குச் சிங்களவர்கள் கீழ்ப்பணிந்து நடப்பர் ஆனல் அந்நியராட்சியை ஏற்க இணங்காதவர்கள். போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தவுடன் தமது எதிர்காலத்தையும், அடிமைத்தனத் தையும் உணர்ந்து சுதந்திரத்தைத் திரும்பவும் பெறக் கலகங்களி லீடுபட்டனர்.

-- ف4 --
களவுகள் நடைபெறுவதில்லை. வீட்டுக் கதவுகளுக்குப் பூட்டுக் களை உபயோகிப்பதில்லை. இவர்களின் நேர்ண்மயைச் சோதிப்பதற்கு முதலாம் இராஜசிங்கன் மந்தைகளை வயலில் தங்கவளையல்கள் கழுத்திலனியும் ஆபரணங்களுடன் உலாவ விட்டான் என்று கூறப் படுகின்றது.
Σ. «
சிங்களவர்களது பிரதான தொழில் ப்ோர்புரிதல்ாகும். தற் காலிகமாகவே சமாதானத்தை அனுபவிப்பர் யுத்த ஈடுபாடுகளால் சாவுக்குப் பயமில்லாதவர்களாக வீரம்மிக்க ஒழுக்கமுள்ளவர்களாக மாறியுள்ளனர். போர்த்துக்கீசருடன் மேற்கொண்ட இடையருயுத் தங்களினல் சிங்களப் போர்வீரர்கள் ஐரோப்பிய யுத்த முறைகள்ல் பயிற்சி பெறக் காரணமாகியது. இதனுல் அவர்களால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு வலிமைபெற்றுள்ளனர்.
X 堂 塞
யுத்த காலங்களில் சிங்களவர் கிளர்ச்சிக்காரர்கள் அடிமைகள் போன்று நடாத்தப்பட்டனர். தாய்மார்க்ளைக் கொண்டு அவர்களது குழந்தைகளை உரலில் போட்டு அக்குழந்தைகளின் பரிதாபத்தையும் பாராமல் இடிப்பித்தார்கள்.
X X 葛
போர்வீரர்கள் குழந்தைகளை ஈட்டிமுனைகளில் எறிந்து ஏந்தி அக்குழந்தைகளின் அழுகுரலையும் பரிதாபத்தையும் பாராது கொன்
றனர். ஆண்களை மல்வானைப் பாலத்திலிருந்து ஆற்றில் எறிந்து கொன்றனர்.
சிங்களவர்கள் சில சமயங்களில் கைப்பற்றிய போர்த்துக்கீச சிங்கள யுத்தக் கைதிகளின் காதுகள் மூக்குகளை வெட்டி அங்கவீனம் செய்தாலும் கிறிஸ்தவ கோட்பாட்டிற் கமையப் பழிக்குப் பழி வாங்குதலைத் தவிர்த்திருக்க வேண்டும், V
#。 * 冀 英>
இலக்கையிலுள்ள போர்த்துக்கீசர் தம்மை அரசர்களாகவும் வரையற்ற இளவரசர்களாகவும் கருதி ஒழுக்கயினம், களவுகள், கொடுமைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர்g
இ வ. தொ. 7

Page 32
- 50 -
போர்த்துக்கிசர் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டியவுடன் ஒவ் வொரு திசாவணியிலும் ஒரு சிம்களவரை விதானையாக நியமித் மாகாண நிர்வாக அலுவல்கள் சிலவற்றை யளித்தனர்:
༤ X。
நான்கு திசாவைகளின் கீழும் போர்த்துக்கீசர் ஆட்சியின் இறுதி யாண்டுகளில் 4700க்கு மேற்பட்ட போர்வீரர்கள் அல்லது கூலிப் படையினர் இருந்தனர். மாத்தறையில் 1500 பேரும், சப்பிரக மூவாவில் 200 பேரும் ஏழுகோறளையில் 1800 பேரும், நான்கு கோறளையில் 1200 பேருமிருந்தனர்; மாத்தறையிலுள்ள கூலிப் படையினரே யுத்தங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இலங்கை முழுவதையும் போர்த்துக்கீசர் இழப்பதற்கு மேலதிக அபிலாசையும், முறையற்ற ஆட்சியுமே காரணமாகவிருந்தது.
பெரும்பாலான தளபதிகள் தமது பதவிகளை நீடித்துப் பாதுகாப்ப திலேயே அதிக கவனம் கொண்டிருந்தனர்.
x
இலங்கையில் அனுபவமுள்ள போர்வீரர்கள் இருந்தும் தலைமைப் பதவிகள் ஒரு சிலருக்கே வழங்கப்பட்டன. உயர் பதவிகளைத் தமது நண்பர்களுக்கும், அறிமுகமானவர்களுக்குமே தளபதிகள் வழங்கினர்;
*“ X
இலங்கையைக் கைப்பற்றியதில் விட்ட பிழைகள் (சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன)
போதியளவு போர்த்துக்கீசப் படையை இலங்கையில் வைத்திருக் காமை. அந்நியராட்சியை ஏற்கச் செய்வதற்கும் கண்டியக் கலகக் காரர்களை அடக்கவும் இது அவசியமாயிருந்தது
படைத் தலைவர்கள் போதியளவு அனுபவம் பெற்றிருக்கவில்ல; தலைமைப் பதவிகள் அனுபவம், திறமை யடிப்படையில் வழங்கப் படவில்,ை கொன்ஸ்தான்டிசாவின் தோல்விக்கு இதுவே காரண

ー öl ー
மாகவிருந்தது. அசெவிடோ மட்டும் அனுபவத்திற்கு முக்கியத் துவம் அளித்தார்.
Οι
கலகக்காரர்களுக்குப் போதியளவு தண்டனைகள் வழங்கப்பட வில்லை. இதனல் மற்றவர்களும் துணிந்து கலகத்தில் ஈடுபட்டனர்; அத்துடன் ஒத்துழைத்தவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்படவில்லை
ʼ xc
கண்டிமீது படை யெடுப்புக்களை மேற் கொண்டபோது போதிய
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இத் தவறு களால் எண்ணற்ற போர்த்துக்கீசப் போர்வீரர்களை யிழக்க நேர்ந்தது:
xc
போர்த்துக்கீசர் போதியளவு பாதுகாப்புப் படையைக் கொண் டிருக்கவில்லை. இதனல், கண்டியரின் எதிர்ப்புக்களையும், கலகக்காரர் களையும் இலகுவில் அடக்க இயலாமற் போய்விட்டது: s
t 如
போர்த்துக்கீசத் திறைசேரியையே நம்பியிருந்தமை, போர்த்துக் கீச அரசனிடமிருந்தே, ஆட்பலம், பணம், யுத்தகாலத்திலும், சில சமயங்களில் சமாதான காலத்திலும் எதிர்பார்த்திருந்தமை, ஆனல் அரசனது திறைசேரிக்கு இலங்கையிலிருந்து போதியளவு பணம் அனுப்பப்படவில்லை
A ።
இலங்கை முழுவதையும் கைப்பற்றுவதில் போர்த்துக்கீசர் தாம தத்தை ஏற்படுத்தினர். கண்டியர்கள் நவீனயுத்த முறைகளை நன்கு அறியமுன்னர், கரையோரப் பிரதேசங்களில் ஸ்திரமான ஆதிக்கம் நிலவிய காலத்தில், இந்தியாவில் யுத்த ஈடுபாடுகளைத் தவிர்த்துக் கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவில்லை;

Page 33
أسس فرقة سد
பிழை திருத்தம்
பக்கம் வரி சொல் திருத்தம்
saws w வரலாற்றுத்
5 31 6 வாழ்ந்த
6 23 3. உண்மை
7 28 3. கண்டியின்
7 4° அனுமதிப்பதில்லை 0 , 20 4 அந்நிய Η 5 2 வயிற்றினை
3 7 e நோக்கத்திற்
3 22 4 கீழ்ச்
3 8 பொதுச்
7 31 ஒல்லாந்தப் 8 31 l ஒல்லாந்தரின் 20 2. தினப்பதிவேட்டிலிருந்து 26 5 4 பதின்னங்கு 34 6 3 ஒழுக்கவீனங்களிற் 47 2 1. மிகைபட
அடுத்த வெளியீடு!
இலங்கை வரலாற்றில்” ஐந்து நூற்ருண்டுகள்
16-ம் நூற்றண்டு தொடக்கம் 20-ம் நூற்றண்டு வரை
பன்னிரண்டு விடயங்கள்
விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஜீ லங்கா அச்சகம், 234, கே. கே. எஸ், வீதி, யாழ்ப்பாணம்


Page 34