கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இறுதி மூச்சு வரலாற்று நாடகம்

Page 1


Page 2


Page 3

இறுதி மூச்சு
வரலாற்று நாடகம்
த. சண்முகசுந்தரம்
3.
வெளியீடு : வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம்
மாவிட்டபுரம்
கலியுகம் 5005 விசுவாவசு ஆண்டு ஆடித் திங்கள் 3 - 7 - 965

Page 4

பதிப்புரை
எல்லோருக்கும் விளங்கக்கூடிய எளிய நடையில், இலக் கண வரம்பை இகவாத தமிழில், பல்வகைச் சுவையும் அமைய நாட்கம் எழுதுவோர் இன்று மிகச் சிலரே உள்ளனர். அவர் களுடைய படைப்புக்களைப் பழமையில் கம்பிக்கை உள்ள வர்களும், புதுமையில் ஆர்வம் கொண்டவர்களும், இரண் டையும் ஆதரிப்பவர்களும் ஒருங்கே பாராட்டுகின்றனர். அத் "தகைய பாராட்டைப் பெறும் ஆசிரியர் வரிசையில் இடம் பெற்றுள்ளார் " இறுதி மூச்சு” என்னும் இந்நூலாசிரியர் திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள்.
இக் நூலாசிரியரால் எழுதப்பெற்ற * வாழ்வு பெற்ற வல்லி’ என்னும் காடகநூல் மக்களின் ஆதரவைப்பெற்ற தோடு இலங்கைச் சாகித்திய மண்டல நாடகநூற் பரிசை பும் பெற்றமை தமிழறிக்தோர் யாவரும் அறிந்த ஒன்ருகும். இவரது அடுத்த படைப்பாகிய * பூதத்தம்பி’ கற்றேரின் பாராட்டைப்பெற்றதோடு நூல் வெளியிட்டுப் பணியில் எமக்கு ஊக்கம் ஊட்டுவதாயும் அமைந்தது. அந்த ஊக்கத்தைப் பெற்ற எம்மால் அவர்தம் செந்தமிழ் ஆற்றலையும் உழைப் பின் பெருமையையும் விளக்கும் இந்நூல் வெளியிடப்பெறு கின்றது.
காடக அமைப்பு இதுதான் என்று காட்டுவதாய் அமைக் திருக்கும் இந்நூல், வரலாற்று நாடகங்களிற் கற்பனைத் தேனைத் துணிக் து கலப்பது நாடகத்துக்குச் சிறப்புத் தரும் என்போரின் சருத்தை ஆதரிப்பதாக உள்ளது. எத்தகைய பாத்திரத்தின் இயல்பையும், எழுதுவோன் தன் ஆற்றலினல் இலக்கிய வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டே விளக்கி விட முடியும் என்பதையும் இந்நூல் தெரிவிப்பதாய் விளங்கு கின்றது.

Page 5
iii
படைத்தலைவன் வரோதயசிங்கத்துக்கும் வள்ளியம்மைக் கும் ஏற்பட்ட காதல் உறவை காகரிகமான முறையில் இலக் கியச்சுவை ததும்பும் வகையில் அவர்களின் உரையாடல் மூலம் புலப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கின் றது. காதல் என்னும் மென்மைப்பண்பும் வீரம் என்னும் வன்மைப்பண்பும் வரோதயசிங்கம் என்னும் ஒப்பற்ற வீரன் மூலம் சுடர்விட்டு, நூலைக் கற்போர் மனத்தில் அவனுக்கு நிலையான இடத்தை வழங்குகின்றன. வள்ளுவன் வைரவன் கன்றிஉணர்ச்சியினுற் படைக்கப்பட்ட உயர்ந்த பாத்திரமாய்த்
திகழ்கிறன்,
* அம்மாடி! என் வயிறு கலங்குகின்றது. இது தமிழ ருடைய போர்ப்டறை ' என்று போர்த்துக்கேயன் கூறும் கூற்றினலேயே தமிழர் முரசுக்குப் பெருமை ஏற்படுத்திய தும், “ எனக்கும் ஒரு வேண்டுகோள்! மன்னர் பெருமானின் வெற்றுடலைப் புதைப்பீர்கள்; அவருடைய கால்மாட்டிலே தான் என்னையும் புதையுங்கள் ' என்ற எதிர்காயகத்தின் சொற்களால் அவரது அரச பக்தியைப் புலப்படுத்தியதும், * என் தலைகூட யாழ்ப்பாணத்து மண்ணிலேதான் உருள வேண்டும்’ என்ற பரராசசேகரத்தின் மொழியினுல் அரச னின் காட்டுப்பற்றைக் காட்டியதும் நினைக்து நினைக்து இன்புறத்தக்கவை ஆகும். இவைபோல் கயம்வாய்ந்த வசனங் கள் நூல் எங்கும் மலிந்துள்ளன.
இத்தகைய சிறந்த விருந்தினைத் தமிழ் அன்பர்க்குப் பரிமாறும் பொறுப்பினை ஆசிரியர் எமக்குக் கொடுத்துள் TT. எமது முன்னைய வெளியீடுகளை ஆதரித்த தமிழ் அன்பர் இதனையும் ஆதரிப்பர் என்னும் கம்பிக்கை உடையேம்.
கணேசையர் தமிழ்ச் சங்கத்தார்.

குறிப்புரை
* காட்டைப் பிடித்தல், கற்கிறித்தவத்தைப் பரப்புதல், கயம்மிகு வணிகத்தில் ஈடுபடுதல் ’ ஆகிய முப்பெரும் அவா விஞல் உந்தப்பட்ட போர்த்துக்கேயர், 1505 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வக்து சேர்ந்தனர் ; படிப்படியாக அவர்கள் இலங்கைக் கரையோரப் பகுதியைத் தமதாக்கினர். போர்த் துக்கேயரின் வருகைக்குப் பலத்த எதிர்ப்பு உருவாகியது. கோட்டையில் விதியபண்டாரன், சீத்காவக்கையில் மயா துன்னை முதலாம் இராசசிங்கன், கண்டியில் முதலாம் விமல தர்மதுரியன் ஆகியோர் காலத்திற்குக் காலம் தோன்றினர்.
யாழ்ப்பாண இராச்சியத்திலும் இந்தவிதமான எதிர்ப் பிற்குக் குறைவில்லை. 1544 ஆம் ஆண்டிலே செகராசசேகரன் என்னும் சங்கிலிமன்னன் இக்த எதிர்ப்பை உலகறியச் செய்தான். யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலி மன்னன் போர்த்துக்கேயராற் போரிலே 1819ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டான். அவனின் தலையைப் போர்த்துக் கேயர் நீதியின் பெயராலே கொய்தனர். மன்னனை இழந்து நின்ற யாழ்ப்பாண மக்கள் போர்த்துக்கேயரின் ஆட்சியை வேரோடு அகற்றுதற்குப் பலமுறை முயற்சி செய்தனர். இந்த விபரம் யாவும் குவெருேசுசாமியார் எழுதிய நூலிலே விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.*
இளவரசன் ஒருவனை அரசு கட்டிலில் ஏற்ற மக்கள் முயன்றனர். இந்த முயற்சி விடுதலைப் போராட்டம் என
The Temporal and Spiritual Conquest of Ceylon (Book IV, Page 633) Translation Fr. S. G. Perera.

Page 6
iV ,
லாம். மக்களின் ஒருமுகமான கிளர்ச்சியை அடக்கப் போர்த் துக்கேயர் துணைப்படையை காடவேண்டியிருந்தது. இவற்
றைப் போர்த்துக்கேய ஏடுகளிலே காணலாம்.
நிற்க, மயக்கத்தையே தன் சிறப்பான இயல்பாகக்
கொண்ட யாழ்ப்பாண வைபவமாலை " இந்தச் செய்தியை அறிந்த பரராசசேகரன் கையில் வாளுடனே வன்னிக்காட் ; டிற்கு ஓடிப்போனன். ’ எனக் கூறும். அக்
தணன் ஒருவனின் தழ்ச்சியால் அவன்தலை துண்டிக்கப்பட் ட்டது என்பது வைபவமாலையின் வாதம். ஆனல், குவெருேசு சாமியாரின் நூலின்படி, அந்தணன் வெள்ளைத் துண்டைப் பிடித்துச் சைகைகாட்டி அரசனைப் போர்த்துக்கேயரிடம் சிக்க வைத்த்ான். செவிவழி வந்துள்ள கதைப்படி போர்த்துக்கேயர் அந்தணனைக் கருவியாக வைத்துச் சூழ்ச்சி செய்து பரராச சேகரனைப் பிடித்தனர் எனத் தெரிகின்றது. தம் சூழ்ச்சியைப் போர்த்துக்கேயரின் ஏடு மறைப்பதில் விக்தையில்லை.
இதுவே நாடகத்தின் பொருள். இவ்வரலாற்றை விரிவாக ஆராய்ந்து பார்க்கவேண்டியது அறிஞர் கடன். இந்நூலை வெளியிடும் பொறுப்பையேற்ற கணேசையர் தமிழ்ச் சங்கத் தினர்க்கும், சிறந்த முறையில் அக்சிட்டுதவிய குகன் அச்சகத் தினர்க்கும் என் உளங்கணிக்த கன்றி உரித்தாகுக.
ஆக்கியோன்
யாழ்ப்பாண வைபவமாலே - பக்கம் 76 குல. சபாநாதன் பதிப்பு.

SAJSASJSAqS SSAeAeSLLLSS LLLLAAAAASSAASAASS SAqAqASAAASAAAAAAAAqS مسیر حسر محمرہ حصہ رحمہ SAASAASSAASAASSASSASSASSASASAAALSAALLSSLALASSSAAAAASASASSASSALAqASLLASLLALASASASSLASLLASeSJASMALALSLALLSAMSeSASASS
SqSSSS SSqqqSqqSSqSASS
- இறுதி மூச்சு
YYAeA A AeAeASAeAeAeAeAehA AhAhShASAhhhSAA Aehehe AeASAeASSSAAS SAShAYSSAASYASAYAASAhJ qASASqqAA ASAAAAAAASAASSAASSMA SAqASASLqASqS SqJA AAAS SSAAAAASSLA SAAS AAAAAALASAAA AAAA SAALALASqqqq

Page 7
நாடகத்தில் வரும் ஆடவர் அரிவையர்
தோன்றும் முறைப்படி
女 ஓமைக்கல் சேவியர் · பிலிப்பு
வள்ளுவன் வைரவன் mar
போர்த்துக்கேய வீரர்.
யாழ்ப்பாணத்தரசின்பிரசித்த
காரன்
பிலிப்பு தி ஒலிவீரோ ma
வரோதயசிங்கன் Kaas
பரராசசேகரன் ܚ
எதிர்காயகம் **aa
வள்ளியம்மை ല
போர்த்துக்கேயப் படைத் தலேவன் யாழ்ப்பான அரசனின் மெய்ப் பாதுகாவலன்
யாழ்ப்பான அரசிற்கு உரி மையாளன்
யாழ்ப்பாணத்து முதலி
உலகுடைகாயகியின் தோழிப்
பெண்
உலகுடைநாயகி -
அந்தணர் அருளுசலம் -
காலம் கி. பி. 1
பரராசசேகரனின் மனேவி
யாழ்ப்பாணத்தரசின் வேதி யர்
620 சுமார்
கதை நிகழ் இடம்
யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் கோட்டை.
வன்னிப்பகுதி நடுக் காடு.

களம் 1
காட்சி
(இடம் : யாழ்ப்பாணத்துப் போர்த்துக்கேயரின் தற்காலிக முகாம். யாழ்ப்பாணத்த ரசை வெற்றிகொண்ட போர்த்தக்கேயர் மதுவருந்திக் களிப் புற்று ஆடிப்பாடுகின்றனர். மைக்கல் என்னும் துனேத் தலைவன் கையிலே மதுப்புட்டியுடன் வருகின்றன்.)
ன்மக்கல் : மண்கெளவின தமிழ் வானரப் படை. இனி யாழ்ப்பாணத்தரசு ஒரு போதும் தலைதூக்காது. வெற்றி! வெற்றி! வெற்றி நமக்கே ! ( பாடிக்கொண்டு ஆடுகின்ருன். அவ *னத் தொடர்ந்து சேவியர், பிலிப்பு, மனுவல் ஆகிய வீரரும் ஆடுகின்றனர்.)
UFC வெற்றி வெற்றி என்று புட்டி மதுவை காடு வீரம் தீரம் கொண்ட எம்மால் பிறர்க்கு நாளும்கேடு தேடித் தேடி இவர்க்கு கன்ருய்க் கொடுக்கவேண்டும் ஆடு வெற்றி வெற்றி என்று புட்டி மதுவை நாடு.
( ஆடல் பாடலேக் குழப்பிக்கொண்டு முரசொலி ஒன்று கேட்கின்றது.)
மைக் ஆட்டத்தை நிறுத்து! ஏதோ சத்தம் கேட்கிறது. என்ன சத்தம்? உற்றுக் கேள்.
சேவியர் : ஓகோ ! சுதேசி முட்டாள்களின் பறை,
பிலிப்பு: ஆண்டவன் தான் எம்மைக் காப்பாற்ற வேண் டும். மீண்டும் போரோ? அம்மாடி! என் வயிறு கலங்கு கின்றது. இது தமிழருடைய போர்ப்பறை.
மனுவல் : இந்தத் தமிழ்ப் பிசாசுகளுடன் இனிப் போர் செய்ய என் உடம்பிலே தென்பு இல்லை.
மைக் பேச்சைக் குறையுங்கள். (உற்றுக் கேட்கின்ருன்) இது தமிழருடைய போர்ப்பறையில்லை.

Page 8
2 இறுதி மூச்சு
சேவி : யாழ்ப்பாணத்துத் தமிழனே ஒருபோதும் நம்பி கடக்கக் கூடாது. எடு துப்பாக்கியை. ( கான்கு போர்வீரரும் துப் பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு கிற்கின்றனர். முரசொலி இன்னும் பலமாகக் கேட்கின்றது.)
பிலி : படையெடுப்புப் போலத்தான் தெரிகின்றது.
மைக் : படையெடுப்பென்ருல் ஏன் உங்களுடைய தொடை நடுங்கவேண்டும் ? போர்த்துக்கல்லிலிருந்து இங்கு போர் செய்யத்தானே வந்தோம். (மீசையை முறுக்குகின் ருர். )
மனு : ( எட்டிப் பார்த்துவிட்டு ) யாரோ ஒருவன் தோளிலே ४பறையைத் தொங்கவிட்டு அதனை அடித்தடித்து வருகின் குன்.”
பிலி: கிட்டப் போகாதே! நம்மை ஆபத்து அண்டி வரும். கவனம், கிட்டப் போகாதே !
(நால்வரும் துப்பாக்கியை எடுத்து இலக்கு வைத்துக்கொண்டு நிற்கின்றனர்.)
மைக் அதோ, அதிலே வருபவன்தானே ! அவனைப் பார்த்தால் அப்பாவிபோலத் தெரிகின்றதே.
மனு : எப்பாவியாக இருந்தாலும் எமக்கென்ன? வீண் வம்பு விசப்பாம்பு. கிட்டப் போகாதே !
சேவி: தமிழ்ச் சாத்தான்! . டேய், தமிழ்ச் சாத்தான். வாடா இங்கே.
மைக்: தமிழ்ப். பிசாசு வாடா இங்கே,
(முரசையும் தூக்கிக் கொண்டு அக்த வழியாலே வள்ளுவன் வைர வன் வருகின்ருன். )
மனு என்னடா 1 வாய்க்குள்ளே மந்திரம் சொல்லு கின்ருயோ ?
வைரவன் : இது மந்திரமில்லை. இது பிரசித்தம். போர்த்துக் கேயத் துரைகாயகத்தின் கட்டளைப்படி பிரசித்தஞ் செய்து

இறுதி முச்சு 3
கொண்டு ஊர்சுற்றி வருகின்றேன். ( முரசைப் பலமாக அடிக்கின் கின் ருன் , போர்த்துக்கேய வீரர் தம் காதைப் பொத்துகின்றனர்)
மைக் நிறுத்தடா இதனை ; காது செவிடாய் விடும்.
'வைர நிறுத்திப் போட்டேன். (உரத்த குரலிலே) யாழ்ப்பா ணத்துத் தொல் பதியில் வாழும் தமிழ்ப் பெருமக்களே கேளிர் ! உங்களுக்குப் போர்த்துக்கேயத் தளபதித் துரைநாயகம் செய்தி ஒன்றை விடுக்கின்ருர். அதாவது 18 அகோ! பொதுமக்களே! உங்களைப் பலகாலமாகக் கொடுங்கோன்மை செய்து அடக்கி ஒடுக்கிய சங்கிலி இராசன் போரிலே தோற்றுப் புறமுதுகு காட்டி ஒடும்போது நாம் அவனைப் பிடித்துச் சிறையிலே அடைத்து விட்டோம். ஆதலால் முதுகுடி மக்களே! நீவிர் அடக்கமாக எமது கட்டளைக்கு அமைய நடந்தால் நாமும் உங்கள் தேச வழமைப்படி நீதிநியாயமாக ஆண்டு வருவோம். நிற்க, பரராசசேகரன் தப்பியோடித் தலைமறைவாக இருக்கின் ‘ருன். அவனே உயிரோடு பிடித்துத் தருபவருக்கு இருபத்தையா யிரம் பசும்பொன் பரிசாகத் தருவோம்,’ (மீண்டும் பறையை அடிக்கின்றன்.) ஆமாம் ! பசும்பொன் பரிசு.
மைக் இதனை ஏனடா எம் காதிலே வந்து உளறு கின்ருய்? போய் உனது சுதேசி நாய்களின் காதிலே ஊளை யிடு. இந்தச் செய்தி எமக்குத் தெரியும்.
சேவி : (வைரவனின் பறையை வாங்கி அடித்துக்கொண்டு தாளம் பிழைக்கின்றது.
வைர துரை இப்படிக் கொடுங்கள். பறையை வாங்கித் தோனிலே போட்டுக்கொண்டு அவர்களின் ஆட்டமெட்டிற்கு அடிக்கின் ரூன், கால் வரும் மீண்டும் ஆடிப்பாடுகின்றனர்.)
மைக்: இனிப் போதும். இவன் எமது இராச்சிய அலுவ லாகப் போகின்றன். இவனே மறித்து வைத்திருப்பது தவறு. டேய் ! நீ போ,
வைர : ( வணங்கிவிட்டு ) நல்லது, நான் வருகின்றேன். (மைக்கல், சேவியர், பிலிப்பு, மனுவல் ஆகிய நால்வரும் மீண்டும் மதுவைப் பருகிக்கொண்டு ஆடுகின்றனர். அப்பொழுது போர்த்துக்கேயப் படைத் தலைவன் பிலிப்பு தி ஒலிவீரோ உள்ளே வருகின்றன். நால்வரும் மரி யfதையாக ஒதுங்கி கிற்கின்றனர்.) w

Page 9
4. இறுதி மூச்சு
ஒலி உங்களுடைய கூத்தும் பாட்டும் பெரும் வேதனே. தமிழன் தரும் தொல்ல ஒருபக்கம் ; உங்களுடைய கும் மாள மும் குடியும் ஒருபக்கம்.
மைக் தன்னிகரற்ற எம் தளபதி நீங்கள் இருக்கும் போது தமிழன் என்னதான் செய்யமுடியும்? வெற்றி அன் றும் இன்றும் என்றென்றும் நமதே. வாழ்க, போர்த்துக்கேயப் பேரரசு, வீழ்க, யாழ்ப்பாணத்துக் குட்டி இராச்சியம். வீழ்க, யாழ்ப்பாணத்துக் குட்டிச்சாத்தான். -
ஒலி : மீ கினைப்பதுபோல அலுவல் இலகுவாக முடிந்து விடாது. யாழ்ப்பாணத்தரசிற்கு உரிமையாயுள்ள பரராசசேக ரன் தப்பியோடித் தலைமறைவாக இருக்கின் ருன். அவனைப் பிடித்தாலன்றி நாம் இங்கு அமைதியாக இருக்கமுடியாது.
பிலி: துரைநாயகம் கட்டளை தந்தால் அந்தப் பதரை நிர் மூலமாக்குவோம்.
மைக் பார் ஆளை. இப்பொழுது பிரசித்தப் பறையைக் கேட்டுப் போர்ப்பறை என்று பயந்து தொடை நடுங்குகின் ருய் பின்னர் வீரப்பிரதாபம் பேசுகின் ருய்.
ஒலி : மைக்கல் ! உன்னை நம்பித்தான் இருக்கின்றேன். சங்கிலியனைச் சதிசெய்து வென்றதுபோல இந்தப் பரராசசேக ரனேயும் பதுங்கியிருந்து பிடித்துத் தந்துவிடு.
மைக் : பழகிய யானையைக் கொண்டுதான் பழகாத யானையைப் பிடிக்கலாம்.
ஒலி : எமது ஒற்றரை அனுப்பி உளவு பார்க்கச் சொல். ( போகின் ருர், )
பிலி : தப்பியோடிய பரராசசேகரனைப் பிடித்துக் கொடுத் தால் தக்க சன்மானம் கிடைக்கும். அத்துடன் எமக்குப் பதவியேற்றமும் கிடைக்கும். அப்புறம் நானும் பெரிய ஆள்; நீயும் பெரிய ஆள்.
மைக்: பன்றியைச் சுட்டு வீழ்த்தமுன்னர் இறைச்சியைப் பொரிக்கச் சட்டியை அடுப்பில் வையாதே.

காட்சி II
(போர்த்துக்கேயரின் முகாமிற்கு முன்னுல் உள்ள வீதியால் வள்ளு வன் வைரவன் முரசறைந்துவிட்டுப் பிரசித்தஞ் சொல்லுகின் ரூன்)
வைர : கிற்க . . தப்பியோடிய பரராசசேகர மன்னன் தலைமறைவாக இருக்கின்ருன். அவனைப் பிடித்துத் தருபவ ருக்கு இருபத்தையாயிரம் பசும்பொன் பரிசாகத் தருவோம். \ முரச ைறகின் ருன்.)
அந்த வழியால் கொண்டி கொண்டித் தடியூண்டிக்கொண்டு பிச் ,ை சக்காரன் ஒருவன் வருகின் ரூன்.
பிச் : என்ன இது ?
வைர : இருபத்தையாயிரம் பசும் பொன் பரிசு தருவோம். ஆமாம், பசும்பொன் பரிசு இருபத்தையாயிரம்.
பிச் : என்ன சொல்லுகின் குய் ? எனக்குப் பிறவிச் செவிடு சிறிது உரக்கச் சொல்.
வைர : ( முரசையறைத்துவிட்டு ) இந்த முரசொலி உன் காதிலே விழுந்ததோ ?
பிச் : ( தலையை அசைத்துவிட்டு ) விழுந்தது, விழுந்தது. உனக் கும் இடி விழும். எனக்கும் இடி விழும். இந்த இடி விழுந்த கடவுள் என்னைச் செவிடாகப் படைத்தானே! சற்று உரக்கச்
வைர (உரத்து) அதாவது பரராசசேகரமன்னன் தப்பி யோடித் தலைமறைவாக இருக்கின்றன். அவனைப் பிடித்துத் தருபவருக்கு இருபத்தையாயிரம் பசும்பொன் பரிசாகத் தரு வோம்.
பிச். யாரது, இந்தத் * தருவோம் ? ” விளங்கவில்லையே !
வைர போர்த்துக்கேய இராசா தருவார். கண்டிப்பாகத் தருவார். ஆமாம் ! தருவார்.
பிச் யாரடா, இங்கே இராசா ? கறிச் சரக்கு வாங்கி விற்று வயிற்றுப் பிளேப்புக்கு வாய்புதைத்துக் கை ஏத்தி வந்த

Page 10
6 இறுதி முச்சு
பரதேசிப் பயல்களெல்லாம் இராசாவாகிவிட்டினமாம். இரப் பவன் இராசா ! காட்டை ஆண்டவன் ஆண்டி. நல்ல கால மடா இது.
வைர நல்ல பிச்சைக்காரனப்பா மீ தொ ழி லு க் கு ஏற்ற தந்திரமும் ஏமாற்றுக் கலையும் உன்னிடம் திகழ்கின்றன. என்ன காது கேளாதோ ?
பிச் : யாரடா ஏமாற்றுபவன் ? நேற்று வரையும் எமது மன்னர்பெருமானின் கஞ்சியைக் கை நீட்டி வாங்கிக் குடித்த நீயோ நானே ஏமாற்றுக் கலைஞன் ? உண்ட வீட்டிற்கு இரண் டகஞ் செய்வதும் தனிக்கலை. நீயோ நானே ஏமாற்றுக் கலை ஞன் ? ( தன் பொய்த்தாடியை அகற்றிவிட்டு) ஏன் தயங்குகின்ருய் ? சொல். வாயிலே கொழுக்கட்டையோ? இறுதி மூச்சுள்ள வரை யும் போராடுவேன் என்று நேற்று வெறுவாய் சப்பினுயே. இப் போது என்ன நடந்தது சொல்.
60) 61J . நடுங்கிக்கொண்டு ) ஐயா முதலியாரே ! மன்னிக்க வேண்டும். நீங்கள்தான் பரராசசேகர மன்னர் பெருமானின் மெய்ப்பாதுகாவலன் வரோதயசிங்கமுதலியார் என்று தெரி யாமற் பேசிவிட்டேன். காலில் விழுந்து கெஞ்சுகின்றேன்.
வரோ : பேடிப்பயலே! போர்க்களத்திலே நின்று தளரும் போர்வீரருக்கு ஊக்கமூட்ட முரசறையும் வள்ளுவர் பரம்பரை யில் வரவில்லேயோ நீ? இறுதி மூச்சிருக்கும் வரையும் யாழ்ப் பாணத்தரசைக் காப்போம் என்று நீ கண்டம் கிழியக் கதறி ணுய், பதரே ! உனக்கேன் மீசை ? (வைரவனின் மீசையைப் பிடித்து இழுக்கின் ருன்.) நீ செய்த பெரும் பிழைக்குக் குற்றம் கழிக்கும் முறையில் நான் சொல்லுகின்ற பிரசித்தத்தைச் செய்.
வைர : ( காலிலே விழுந்து வணங்கிவிட்டு ) உங்கள் கட்டளை ; அப்படியே செய்வேன்.
வரோ : “ சங்கிலி இராசன் சிறைப்பட்டிருக்கின்ருன் என் பது உண்மை. தமிழ்ப் பெருமக்களே பதரு தீர். தலைமறை வாக இருக்கின்ற பரராசசேகர மன்னன் படையைத் திரட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை விடுவிக்க வருவார்.” இதனை நீ முரசறைந்து சொல்.

இறுதி முச்சு 7
வைர இப்படிச் சொன்னல் இராசத்துரோகம் என்று போர்த்துக்கேயர் என்னைப் பிடித்துச் சித்திரவதை செய்வர். நான் என்ன செய்யலாம் ?
வரோ : இராசத் துரோகம் ! பிறந்து வளர்ந்த பொன்
ஞட்டை விடுவிப்பது இராசத் துரோகமோ ? பயந்தாங்கொள் ளிப் பேடிகளுக்குப் பிரசித்தகாரப் பதவி. கொடு இப்படி முரசை. {முரசைப் பறிக்கின்றன். )
வைர : ஐயா! அடியேன் செய்த பெரும் பிழையை மன் னிப்பீர்களாக. உங்கள் திருமேனியில் முரசு தொங்கலாமோ? அப்பப்பா! அதனை எப்படி நான் பார்த்துக்கொண்டு நிற்பேன் ? இதோ உங்கள் கட்டளைப்படி முரசறைந்து பிரசித்தஞ் செய் வேன். ( முரசை அறைந்துவிட்டு) யாழ்ப்பாணத்துத் தொல் பதி யில் வாழும் தமிழ்ப் பெருமக்களே! கேளிர். எங்கள் மாட்சிமை தங்கிய மன்னர் பெருமான் பரராசசேகரம் கண்டிக்கு ஓடிப் போய்த் துணைப்படை திரட்டிக்கொண்டிருக்கின்றர். பறங்கி யரின் கொடும் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க விரைந்து வரு வார். தமிழ்ப் பெருமக்களே ! பதரு தீர். அதுவரையும் அமைதி யாக இருப்பீர். வாழ்க, யாழ்ப்பாணத்தரசு. ஒழிக, பறங்கிகள். (முரசறைந்துவிட்டு)
* பகல் வெல்லும் கூகையைக் காக்கை
இகல் வெல்லும் வேக்தர்க்கு வேண்டும்பொழுது.”
என்பது வள்ளுவரின் வாக்கு, ஆனபடியால் தளரா திருப்பீர், தொல்குடி மக்களே ! ( மீண்டும் முரசறைகின் ரூன்.)
வரோ அற்புதம்! அற்புதம், திருக்குறள் கூட உன் வாயிலே தண்ணிர்பட்ட பாடு. இதோ உனக்குச் சன்மானம். ( காசை எடுக்கின் ருர் .)
வைர : யாழ்ப்பாணத்தரசைச் சேவிக்கச் சன் மா ன ம் எதற்கு? முரசறைந்து முடிந்தபின்னர் நான் என்ன செய்ய வேண்டும்?
வரோ : (தன் மாறுவேடத்தை மீண்டும் புனைந்துகொண்டு ) முடிக் ததும் மறவன் புலவிற்கு வந்துசேர். ஆங்காங்கு தலைமறைவாக இருக்கின்ற எமது வீரரைக் கண்டால் அங்கு வரச்சொல்.
வைர : அப்படியே. (போகின்ருன், )
s

Page 11
காட்சி II
[ அதே வீதியில் பிச்சைக்காரன் வேடத்தில் வரோதய சிங்கன் கொண்டி கொண்டி கடந்து வருகின்றன். வள்ளுவன் வைரவன் தன் முர சுக் கம்பை வைத்து வரிந்து கட்டுகின்றன்.)
வரோ : “ கறுவா வேண்டும்; கறிச்சரக்கு வேண்டும் ” என்று இரந்து வந்தவன் இன்று நாட்டை ஆள்கின்றன். மூவேந் தர் வழிவந்த தமிழ் மன்னன் தலைமறைவாக வாழ்கின் ருன். நல்லூர்க் கந்தனே ! உனக்குக் கண் கெட்டுவிட்டதோ ? வீர மாகாளி ! தாயே எம்மைக் கைவிட்டு விட்டாயோ? சட்ட நாதரே! கெட்ட பறங்கி எம் காட்டை ஆள்வதோ ?
ஒரு குரல் : சாணக்கியம், வள்ளுவம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த அரண்மனை மெய்ப்பாதுகாவலர் தன்னை மறந்து " மாறுவேடத்தில் வரும்போது வாய் புலம்பலாமோ ? இது சரியோ ? இது முறையோ ?
வரோ : ( பரபரப்புடன்) யாரிந்த மனிதன்? தெரிந்த குர லாயிற்றே! ஆமாம் . . மன்னர் பெருமானே! வாழ்க நும் தடம்தோள். குரலே மாற்றிப் பேசினல் அறிந்துகொள்ள மாட் டேன் என்பது உங்கள் எண்ணமோ ? (மற்றும் ஒரு கொண்டி வரு கின்றன்.)
கொ மைந்தா, நீ வேடத்தை மறந்து பேசாதே 1 வேடத் திற்கேற்ப நடிப்பு இருக்கவேண்டும். இப்போது உண்மையிலே காமிருவரும் இரப்பார்தானே ?
வரோ : மன்னர் பெருமானே! என் உடலில் ஒரு துளி செந்நீர் இருக்கும் வரையிலும் உங்களைப் பாதுகாப்பேன். (புதிய கொண்டி தன் மாறுவேடத்தைச் சிறிது நீக்குகின்ருன் , தன் மன்னன் பர ராசசேகரம்தான் மாறுவேடத்தில் வந்திருப்பதைக் கண்ட வள்ளுவன் வைரவன் விரைக்து வருகின்றன்.)
வைர : வாழ்க, பரராசசேகர மன்னர் பெருமான்! வாழ்க, யாழ்ப்பாணத்தரசு !

இறுதி மூச்சு 9
வரோ : ( வைரவனின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ) இங்கு கின்று உளறதே! எமது திட்டம் எல்லாம் பிழைத்துப் போகும். போ விரைந்து. நான் சொன்ன வேலையை முற்ருகச் செய்து முடி, தொண்டைமானுற்றுப் பக்கம் டோ.
வைர மன்னர் பெருமானே! சென்றுவர உத்தரவு தாரும்.
பர : சென்று வா. நீ வருவதற்கிடையில் என்ன கடக் குமோ யாருக்குத் தெரியும்? எங்கு இருப்பேன்; எப்படி இருப் பேன் என்று எனக்கே தெரியாது. மணிமுடியைத் தாங்கப் பிறப்பதிலும் பார்க்க மண்ணை உழுது வாழப் பிறப்பது மேல். பறங்கிப் படையின் கண்காணிப்பு வரவரக் கூடிக்கொண்டு வருகின்றது.
வைர : அப்படிச் சொல்லவேண்டாம் மன்னர்பெருமானே! நாம் இறந்து ஒழிக் தபின்னர்தான் பறங்கி இந்தநாட்டை ஆள முடியும். நான் வருகின்றேன். (போகின்ருன்/
வரோ : மன்னர் பெருமானே ! உங்களைப் பிடித்துக் கொடுப்பவருக்கு இருபத்தையாயிரம் பசும்பொன்னைப் பறங்கி பரிசாகக் கொடுப்பதாகப் பிரசித்தஞ் செய்வித்துள்ளான்.
பர : பறங்கியரின் கையில் அகப்படுவதிலும் பார்க்க இந்த உயிரை மாய்த்துக்கொள்ளுதல் உத்தமம். ܗܝ
• 8 KO “மயிர்நீப்பின் வாழார் கவரிமான் அன்னர்
உயிர்நீப்பர் மானம் வரின்.'
என்பதுதான் தமிழன் கண்ட மானப் பரம்பரை.
வரோ: ஆணுல், அதோ வள்ளுவர் பெருமான்தான் :
* கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.” எனவும் அருளிப் போக்தார். அரசே! தளராத நெஞ்சம் வேண் டும். உள்ளத்தில் உறுதியுண்டானுல் உடலில் உறுதி வரும். செயலில் உறுதி தொனிக்கும். இறுதி மூச்சுள்ளவரையும் செயல் புரிவோம்.
2

Page 12
O இறுதி முச்சு
பர பட்டம் பதவி, பெருவாழ்வு, தன் மானம் எல்லா வற்றையும் இழந்து இருக்கும் எனக்கு நீ ஊக்கமூட்டுகின்ருய், கண்பா ! உற்ருர் உறவினர் இன்றி வாடிவதங்கும் என் உள் ளத்தை உன் வீரமொழி குளிரச் செய்தது.
வரோ : சற்று விலகி நில்லுங்கள். ஆபத்து எம்மை அணுகுகின்றது.
(அந்த வழியால் போர்த்துக்கேய வீரர் மனுவலும் பிலிப்பும் சேவிய ரும் வருகின்றனர்.)
வரோ : மகா பிரபு 1 பிச்சை கொடுங்கள். கால் இல்லாத முடவன் நான். கருணை காட்டுவீர். ஐயா ! பிச்சை,
மனு: யாரடா பிச்சைக்காரப் பயல்கள் ? வழியை விட் டுத் தள்ளி கில் லடா.
பிலி : இரப்பானைப் பிடித்தாய் நீ. நாங்களும் பிச்சைக் காரர்தான். எமது சொந்த ஊரிலே சீருஞ் சிறப்புமாக வாழ முடியுமானுல் காம் ஏன் இந்தத் துப் பாக்கியைத் தூக்கிக் கொண்டு இங்கு அலையவேண்டும்? (வெறியிலே தள்ள ஈடுகின் ரூன்.)
மனு : நாம் இந்த காட்டு மன்னர் பரராசசேகரத்தைத் தேடு கின்ருேம். அந்தப் பதரைப் பிடித்துக் கொடுத்தால் எமக்குப் பரிசு வரும். அப்போது உமக்கும் பிச்சை தருவோம்.
சேவி : எமது பிச்சைக்கார நிலையும் அத்துடன் நீங்கும்.
வரோ ! உங்களன்பிற்கு எமது நன்றி. நீர் இப்போது செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஈடாகா. இத்தனை அன்பாகப் பேசிய உமக்கு நான் என்னதான் கைம் மாறு செய்யலாம் ? நான் வரும் காலத்தைச் சொல்பவன், அதாவது சோதிடன். இங்கு இருந்து வடக்குப் பக்கமாகப்
போனுல் ஐந்து காததுTரத்தில் கறுவல் முதலி ஒருவன் வீட்
டில் அந்தப் பரராசசேகரம் ஒளித்திருப்பதைக் காண்பீர்.
சேவி : நல்ல்து. நீ சொன்னதையும் மனத்திலே வைத்தி ருப்போம். ... "
/

இறுதி முச்சு 1
பிலி : பரராசசேகரத்தைச் சுட்டிக் காட்டி) இவன் ஏன் ஒன் றும் பேசாமலிருககின்றன் ?
வரோ : அவன் பிறவியிலே ஊமை; வாய் பேசமாட்டான். ஆல்ை, பெரிய ஞானி. ஊமையும் வாய் பேசமாட்டான். தன்னடக்கமுள்ள ஞானியும் வாய் பேசமாட்டான். அதுதான் ஞானிக்கும் ஊமைக்குமுள்ள ஒற்றுமை.
மறு: மதுப்புட்டி ஒன்றைத் திறந்தால் பேசாத வாயும் பேசும். வழி விலத்தி கில்,
( பரராசசேகரனும், வரோதய சிங்கனும் வழிவிலத்தி நிற்கின்றனர். மனுவலும் பிலிப்பும் சேவியரும் தள்ளாடித் தள்ளாடிப் போகின்றனர்.)
வரோ: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான். அடுத்த அலுவலேக் கவனிப்போம்.
பர: இனிக் கவனிக்க என்னதானிருக்கின்றது? தலைக்கு மேலே போன தண்ணிர் நான்கு சாண் போனல் என்ன ? நாற்பது பாகம் போனுல்தான் என்ன ?
வரோ : போவது போகட்டும். வருவது வரட்டும். நீங் கள் இந்த இடத்தில் நிற்பது ஆபத்து. விரைந்து கோப்பாய்க் குப் போய் அங்கு குதிரைமீது ஏறி மறவன்புலவிற்குச் செல்ல வேண்டும். எல்லா ஒழுங்கும் அங்கு நடைபெறும்.
பர அங்கு சென்று என்ன செய்யலாம் ? நான்தானே தேய்ந்துபோன செல்லாக் காசாகிவிட்டேன்.
வரோ : செல்லாக் காசோ பசும்பொன் காசோ தெரி யாது? அதனைப் பின்னர் பார்க்கலாம். இன்னல் வரமுன் னர் கவலுதல் வேந்தற்கு அழகன்று.
பர: ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.
வரோ : உண்மையான சுரை விதையை நட்டிருக்கின் றேன். கொடி படர்ந்து காய் காய்க்கும். இப்பொழுது போவோம். ( பரராசசிங்கன் தலை குனிந்தபடி முன்னே போக வரோ தயசிங்கன் பின்னே போகின்றர்}
* :

Page 13
đôT Lóf IV
(போர்த்துக்கேயரின் முகாம். ஒலிவீரோவும் மைக்கலும் அங்கும் இங்கும் உலாவுகின்றனர். ஒலிவீரோவின் முகத்தில் கோபக் குறி தெரிகின்றது. )
ஒலி எங்கே இந்தத் தரித்திரம் பிடித்த மட்டிகளைக் காண வில்லையே ?
மைக் : யாரைக் கேட்கின்றீர் என்பது எனக்கு விளங்க வில்ஃல. எமக்கு வரவேண்டிய துணைப்படையோ ?
ஒலி : (சீறிக்கொண்டு) யாரோ ? எவரோ ? ஏன் உனக்கு ஒன்றும் தெரியாதோ? கடல் கடந்து ஆயிரமாயிரம் காததுரத் தைத் தாண்டி எமது மூதாதையர் வந்தனர் இங்கு. ஆனல் இந்தத் தொண்டைமாறுை வர்ய்க்காலேக் கடந்து இந்தப் பர ராசசேகரன் என்னும் சுண்டெலியை உங்களாற் பிடிக்க முடிய வில்கலயே ? .
மைக் அதற்குத்தானே எம் போர்வீரர் முயற்சி செய்கின் றனர். சேவியர், பிலிப்பு, மனுவல் முதலியோர் சென்றனர்.
ஒலி : சென்றனர். சென்றனர். சென்றனர். சென்றுகொண்டே இருக்கின்றனர். ஆனுல் பயன் என்ன? பூச்சியம்; சூனியம்; ஒன்றுமில்லை.
மைக் : எமது ஒற்றர் படையையும் ஏவியுள்ளோம். விரைந்து திரும்புவர்.
ஒலி: ஏவியுள்ளோம். அனுப்பித்தொலே. ஏமாற்றத்துடன் அவரும் திரும்பி வெறும் கையுடன் வருவர். இன்னும் பத்து நாட்களுக்கிடையில் அவனைப் பிடிக்காவிட்டால் உங்கள் தலை யைக் கொய்து போடுவேன். அந்தப் பயல் மாறு வேடத்தில் தலமறைவாகத் திரிகின்ருன்,
(அப்பொழுது சேவியரும், பிலிப்பும், மனுவலும் சோர்ந்துபோய் முகாம் வாசலுக்கு வருகின்றனர்.)
மைக்: எம் வீரர் வந்துவிட்டனர். எல்லாவற்றையும் கேட் றியலாம்.

இறுதி மூச்சு 13
ஒலி : கேட்கவேண்டாம். நானே மறுமொழி சொல்வேன். * பரராசசிங்கத்தைப் பற்றிச் செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை. எமக்கு ஒன்றும் தெரியாது; தெரியவே தெரியாது’ என்று திறமையுடன் மறுமொழி சொல்லப்போகின்றனர். இருந்துபார்.
மைக் (உள்ளே வருகின்ற மூவரையும் பார்த்து ) என்ன, வெற் றியோ ? தோல்வியோ ? காயோ ? பழமோ ?
ஒலி : முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையோ? ஒருவன் ஆந்தைபோல விழிக்கின்றன். மற்றவன் ஆடுபோல அங்கு மிங்கும் பார்க்கின்ருன், மற்றவன் எருமைபோல ஏறஇறங்கப் பார்க்கின்ருன் ,
சேவி : எல்லா இடத்தையும் காடு மேட்டையும் சல்லடை போட்டுப் பார்த்தோம்.
பிலி : இறுதியிலே பிச்சைக்காரச் சோதிடன் ஒருவன் வக் தான். அவனிடம் ஆரூடம் கேட்டுப் பார்த்தோம். ஆளே க் காணவில் * .
ஒலி: உங்களுடைய மண்டையை உடைத்து விட்டால்! மதுவே கதி என்று இருக்கும் இந்த மட்டிகளுக்குப் படையில் என்ன வேலே , யாருக்குத் தெரியும் ? அந்தப் பிச்சைக்காரன் தான் பரராசசேகரனுே? மாறுவேடத்தில் வந்து உங்களை ஏமாற்றியிருப்பான். சரி போய் ஆறியிருங்கள்." ( மூவரும் தலை யைத் தொங்க விட்டுக்கொண்டு போகின்றனர். மைக்கலைப் பார்த்து, இந்த ஊர் வழக்கப்படி பறையறைந்து பிரசித்தஞ் செய்வித்த தாகச் சொன்னுய், என்ன நடந்தது?
மைக் பிரசித்தகாரன் போனவன் போன வன்தான். இன்னமும் வரவில்லை. நாளேக்கு வந்தாலும் வருவான். வந்த வுடன் உங்களுக்கு அறிவிப்பேன்.
ஒலி வருவான்; வருவான்; நல்லாகத்தான் வருவான். மைக்கல்! நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். இந்தச் சுதேசி அஞ்ஞானி ஒருவனேயும் செம்புக்கா சிற்கும் கம்பாதே. தங்கள் மன்னனே எமக்கு இலகுவிலே காட்டித் தரமாட்டார்.
மைக் காட்டித் தந்தவன் காக்கை வன்னியன், அவன் தானே சங்கிலியைப் பிடித்துத் தந்தான்.

Page 14
14 இறுதி முச்சு
ஒலி அதைத்தான் சொல்லவந்தேன். இந்த நாட்டிலே ஒரு சிலரைக் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பாக மாற்ற வேண்டும். காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியரை ஆங்: காங்கு உருவாக்குவோம். நாட்டைப் பிளவு படுத்தி நயவஞ் சனேயால் எம் எதிரியை வெல்வோம். அதுவே பீரங்கியிலும் பார்க்கப் பலமான ஆயுதம். கோட்டை இராச்சியத்தையும் அப்படியே வென் ருேம்.
மைக் அந்த வழியிலேதான் என் கவனத்தைச் செலுத்தி வருகின்றேன். இறுதி வெற்றி நமக்குத்தான்.
ஒலி இறுதி வெற்றி நமக்கு. அதில் எள்ளளவேனும் ஐயமில்லை. எமது பீரங்கிப் படைக்கு முன்பு எ தி ரி யி ன் மொட்டை வாளும் வேலும் ஈட்டியும் என்ன செய்யும்? சிங் கத்தின் முன்பு சிற்றெறும்பு எம்மாத்திரம்?
வள்ளுவன் வைரவன் கொண்டி கொண்டி உள்ளே வந்து தன் முரசை வைத்துவிட்டு ஓலமிடுகின் ருன்) -
மைக் . ஏன் இங்கு வந்து அழுகின்ருய் ? கடந்ததைச் சொல் ; என்ன நடந்தது?
வைர : (அழுதழுது) நான் ஊரிலே போன இடமெல்லாம் எனக்கு அடியும் உதையுந்தான். எமது படைவீரரிடம் முறை யிட்டேன் ; கெஞ்சிக்கேட்டேன் ; மன்ருடினேன். எனக்குப் பாதுகாப்புத்தர மறுத்துவிட்டனர்.
ஒலி நல்லது. இன்றுமுதல் நீள்மது கோட்டைக்குள் இரு. உனக்கு வேண்டிய பாதுகாப்பு எல்லாவற்றையும் தரு வோம்.
வைர பரராசசேகரனேப் பிடிக்கும் வரையுந்தானே பாது காப்பு. இந்த முரசு என் மைத்துனனிடம் இரவலாக வாங்கி யது. இதனைக் கொடுத்துவிட்டு உடனே வருகின்றேன். இனி எனக்கு நீங்கள் தான் தஞ்சம் : துணை ; ஆதரவு. என் இனத் தவர் என்னைக் கொன்று போடுவர். இங்கே வந்து உங்கள் நிழ லிலே வாழப்போகின்றேன். (போகின்றன்.) "
ஒலி : இந்த வைரவன் பெட்டிப்பாம்பு. கவனம். பரராச சேகரனத் தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படப்படாது.
:

đHT óf V
போர்த்துக்கேயரின் முகாமிற்கு முன்னுல் உள்ள அதே வீதி. வள்ளுவன் வைரவனும் வரோதய சிங்கனும் அவ்விடத்தில் கின்று ஏதோ பேசிக்கொண்டு கிற்கின்றனர். மாறுவேடத்தில் கிற்கின்ற வரோதய சிங்கன் தொஃலவிலே வருகின்ற சேவியரையும் பிலிப்பையும் கண்டுவிட்டான்.}
வரோ : வைரவன் 1 பார்த்தாயோ பறங்கியின் விளை யாட்டை ? மன்னர் பெருமானேப் பிடிக்க மீண்டும் புறப்பட்டு விட்டான் பறங்கி. பூனேயைப் பிடிக்க எலி திட்டமிட்டதாம்.
வைர மன்னரைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்தி னல் பறங்கித் தளபதி பிலிப்பு தி ஒலிவீரோ மனமுடைந்துபோய் இருக்கின்றன்.
வரோ : அவனுக்கு மனம் உடைந்தால் மட்டும் போதாது. மண்டையையும் உடைக்கவேண்டும். நாடுவிட்டு நாடுவந்த பர தேசி மிலேச்சர் எம்மை ஆட்டிவைக்கப் பார்க்கின்றனர்.
வைர : அதோ அவ்விருவரும் எம்மை நோக்கித்தான் வருகின்றனர். இந்த இடத்தைவிட்டு ஒடித் தப்புவோமோ ?
வரோ : இல்லை, வேண்டாம். இருவர் கையிலும் துப் பாக்கிகள் இருக்கின்றன. சுட்டுத்தள்ளிப்போடுவர்.
வைர ஐயப்பட்டு எம்மைப் பிடிக்க வந்தால் என்ன செய் u 6a) IT Lib ?
வரோ : நீ சற்றுப் பேசாமலிரு. நீ அந்தக் கட்டை யனைக் கவனி. நான் மற்றவனேக் கவனிக்கின்றேன். வாயா லே பேசு வோம். தேவையென்றல் கையாலும் பேசலாம்.
வைர : அப்படியே செய்வோம். அதற்குத் தயங்கமாட் டேன்.
பிலி டேய் ! போக்கிலிப் பிச்சைக்கா ரா ! ஆடாமல் அசையாமல் நில், ஒரு அடி எடுத்துவைத்தால் அப்படியே சுட் டுத் தள்ளிப்போடுவோம்.

Page 15
6 இறுதி முச்சு
வரோ : தயவு செய்து அந்தப் புண்ணியத்தை மாத்திரம் செய்யுங்கள். உற்றர், உறவினர், உலகபந்தம் ஒன்றுமில்லாத தனிக்கட்டை நான். பட்ட கட்டையாகிப் பரிதவிக்கின்றேன். (அழுகின்றன் ) ஐயனே ! சுட்டுத்தள்ளிவிடும். கோடி புண்ணியம் கிடைக்கும் உமக்கு. என்னைக் கொல்லும்,
பிலி : நல்லாகப் பேசுகின்ருய். (வள்ளுவனைப் பார்த்து) நீ எமது இராசாவிற்கு விசுவாசமானவன். இந்தப் பிசாசுடன் உனக்கு என்ன அலுவல் ?
வைர : இந்தப் பிச்சைக்காரனை எனக்குப் பலகாலமாகத் தெரியும். தப்பியோடித் தலைமறைவாக இருக்கின்ற பரராசசேக ரனைப் பிடிப்பது பற்றி இவனிடம் ஆருடம் கேட்கின்றேன் இவன் கினைத்தகாரியம் சொல்லுவான். அதுதான் நான் ..
பிலி : இவன் போன முறை வந்து எம்மையும் ஏமாற்றி விட்டான். உன்னையும் ஏமாற்றப் பார்க்கின் ரூன். கவனம். இவனே கம்பாதே.
சேவி: இந்த நாளிலே எவரையும் நம்பமாட்டோம். நேரடி யாக இவனைப் பிடித்துக்கொண்டு போவோம் எமது முகாமிற்கு.
வைர இந்த நாடோடிப்பயலைப் பிடிப்பதினுல் எமக்கு எந்த நன்மையும் ஏற்படாது. முடவனப் பிடித்து காம் ஏன் முட்டாள் தனமாக நடக்கவேண்டும்? W−
வரோ (சிரித்துவிட்டு) நான் ஏதோ பெரிய ஆள் என்று இவர் ஐயப்படுகின்றனர் போலும் 1 இல்க் யோ? காக்கை யைப் பிடித்து அன்னமாக்கலாமோ ? புல்லரிசி நெல்லரிசி யாமோ ? பதர் தானியமாமோ ? அல்லி தாமரையாமோ ? பூனை புலியாமோ ?
பிலி : உன்னுடைய வாய்ப்பேச்சினல் எம்மை ஏமாற்றப் பார்க்கின்ருய், அது இந்தமுறை கடக்காது. எட்டி நட எமது முகாமிற்கு. ( அடிக்கின்றன்.)
வரோ: எட்டி கடப்பது எப்படி? கான்தானே முடவன்.

இறுதி முச்சு 7
சேவி : எட்டி நடக்க முடியாவிட்டால் தத்தித் தத்தி நட. சேவியர் வரோதய சிங்கன உதைக்கின்றன் . கிலத்திலே விழுந்த வரோ தயசிங்கன் திடீரென்று பிலிப்பைத் தாக்கி வீழ்த்துகின்றன். வைர வன சேவியரைத் தாக்குகின்றன். போர்த்துக்கேய வீரரின் துப்பாக்கியை இருவரும் பிடுங்கி எடுத்துவிட்டனர்.)
வரோ : பறங்கிப் பிசாசுகளுக்கு கல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். (துப்பாக்கியை ஓங்கி அடிக்கப்போகின்றன்) தள்ளி கில்; கைகட்டு; மண்டியிடு. (இருவரும் அப்படியே செய்கின்றனர்.)
பிலி : ஐயா! நான் பாவம், தப்பிப்போக விடுவீர். சேவி : ஐயா! என்னை வதைக்காதீர். வரோ: பறங்கிப் பதர்களே ! உங்கள் கையிலே துப்பாக்கி இருந்தது. ஆனல் நெஞ்சிலே துணிவில்லை. நீவிர் கூலிக்கு மாரடிக்கின்றீர். நாம் தாய்நாட்டை விடுதலையாக்கத் துடிக்கின் ருேம்; தன்மானத்திற்காகப் போராடுகின்ருேம். நள்ளிரவிலே நரிகள் போலப் பதுங்கிப் பதுங்கி இந்தத் துப்பாக்கிச் சூத்தி ரத்தை ஏந்திவந்து தாக்கத்தானே உமக்குத் தெரியும். நேருக்கு நேராக நின்று காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் தோள் வலிமையை.
வைர : கூலிக்கு மாரடிக்கும் கழுதைகள். வந்துவிட்டின மாம் போர்க்களத்திற்கு. உமக்குத் தகுந்த இடம் மதுச்சாலை. (வரோதய சிங்கனப் பார்த்து) ஐயா! இவர்களே என்ன செய்யலாம் ? இந்தப் பேடிகளைக் கொன்று தொலைத்தால்தான் என் உள்ளம் அமைதியடையும்.
வரோ : இல்லை, வேண்டாம். இருவரையும் கையையும் காலையும் கட்டிப்போட்டு இதிலே உருட்டிவிடுவோம். பறங்கித் தளபதி வந்து பார்க்கட்டும். டேய் ! உங்களிருவரின் வீரத்திற் கும் விருதுதான் கிடைக்கும். (இருவரையும் வரைவன் தன் மேளத்தி லிருந்த கயிற்றை எடுத்துக் கட்டுகின்றன் / உமது வீரமெல்லாம் பீரங்கி பொருத்திய கோட்டைக்குள்ளேதான். இங்கே உமது வால் ஆடாது. இந்த நாட்டிலே உமது ஆட்சியை மக்கள் எப்படி விரும்பு கின்றனர் என்பதை உமது பெரிய துரைக்கு எடுத்தியம்புவீர். அதற்காகத்தான் உம்மைக் கொல்லாது விட்டோம். (வைரவன் கட்டிப்போட்டு உருட்டி உருட்டி உதைக்கின்ருன். போர்த்துக்கேய வீரர் இரு வரும் "ஐயோ! ஆ ஊ! ? என்று அலறுகின்றனர்.)
வைர டேய் ! வாழ்க யாழ்ப்பாணத்தரசு என்று சொல் லுங்கள். (அடிக்கின்றன்.)
சேவி : பிலி :
வாழ்க . க . யாழ்ப்பாணத்தரசு.
திரை R .

Page 16
களம் 11 காட்சி
(வன்னிப்பகுதியில் உள்ள நடுக்காடு. தப்பியோடிய பரராசசேகரனும் அவனுடைய வீரரும் குடிசையை அமைத்து மரக்குற்றிகளிஞல் அதனே அரண்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். ' குனித்த புருவம் ?? என்ற தேவா சத்தை வரோதயசிங்கன் வேய்ங்குழலிலே வாசிக்க அதனைக்கேட்டு வள் ளுவன் வைரவன் மகிழ்கின் ருன், பரராசசேகரன் அப்பொழுது உள்ளே வர இருவரும் மரியாதையாக எழுந்து கிற்கின்றனர்.
பர யார் மெய்மறந்து வேய்ங்குழலில் இசைத் தேனைப் பொழிந்தது? இந்தக் காட்டின் அமைதியில் அது கலந்து கன் னல்போல என் காதில் விழுகின்றது.
வைர : யாருமில்லை. மன்னர் பெருமானின் மெய்ப்பாதுகா வலர் வரோதயசிங்கமுதலியார்தான்.
Լ1U : இப்படியாக அவர் மூச்சிலிருந்து இன்னிசை பிறக்கு மென்பது எனக்கு இதுவரையும் தெரியாது. இந்த இசையைக் கேட்டு நான் மெய்மறந்து விட்டேன்.
வைர : இந்த இசை என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது.
பர : அரண்மனை வாழ்வும், அரசபதவியும், ஆடம்பரமும் எதற்கு ? இப்படி அமைதியாகப் பண்ணென எம் வாழ்வு பாய்ந்து சென்ருல் . (வரோதய சிங்கனைப் பார்த்து) கண்பா ! இப் படி உள்ளத்தை உருக்கும் உன்னதமான பண்ணை நீ பொழி வாய் என்று எனக்கு இன்றுதான் தெரியும். உடலுக்கும் உயி ருக்கும் உகந்தது இசை. மனிதப் பண்பாட்டின் உயர்ந்த
ஆக்கம் இசை,
வரோ : மன்னர் பெருமானே ! உங்கள் பாராட்டைப் பெறக்கூடிய இசைத் திறமை என்னிடம் இருக்கின்றது என்று நான் எண்ணவில்லை. என் கெஞ்சில் எழுந்த உணர்ச்சிப் பெருக்குத்தான் இந்தப் புல்லாங்குழல்மூலம் வந்தது.

இறுதி மூச்சு
பர: எங்கே? நான் மீண்டும் அக்பி புன்னக் கேட்க விரும்புகின்றேன். அதனை மீண்டும் வசிப்பாய். (வரோ தய சிங்கன் மீண்டும் அதே தேவாரத்தை வாசிக்கின் ருர்.)
வைர: அஞ்சன வண்ணன் கண்ணன் தான் இங்கு வந்து இப்படி இசையைப் பொழிகின்றனரோ ?
உன் கண் பனித்துவிட்டதே! இந்தத் ! ח560bru) : שנL தவப்பாடல் யாருடைய உள்ளத்தையும் தொடும். இல்லையோ?
வரோ : மன்னர் பெருமானே ! நான் சிறு பிள்ளையாக இருந்தகாலத்தில் எமது வேத்தவை இசைப் புலவர் மணிவா சகம் இந்தத் ‘தவப்பாடலேச்சட்டநாதர் கோயில் வசந்த மண்ட பத்தில் வாசித்தார். இன்று . இன்று சட்டநாதப் பெருமான் திருக்கோயில் முன்பு பறங்கியரின் அட்டகாசம் கூடிவிட்டது, அதனை நினைத்ததும் அழுகை தானுக வந்துவிட்டது.
பர: என் ஆருயிர் நண்பா ! வீணுகக் கலங்காதே. எல் லாம் நன்மைக்குத்தான். பொறுத்திருப்போம்.
வரோ : மன்னர்பெருமானே! எல்லாம் நன்மைக்குத்தான் என்கின்றீர்கள். அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி நமக்கு கன்மை ஏது? தீமை எது? அற நினைக்தவனுக்குக் கூத லேது ? குளிரேது ? இந்த வன்னிக்காட்டில் நாம் தலைமறைவாக வாழ்கின்றோம். மானம் இழக்தோம் ; மரியாதை இழந்தோம்: பட்டம் இழந்தோம் ; பதவி இழந்தோம். அதனேயிட்டு நான் துக்கப்படவில்லை. ஆனல், சட்டநாதர் கோயிலுக்கு முன்பாகப் பறங்கியர் முகாம்போடப் போகின்றனராம். இதனை எம் ஒற் றர்படைத் தலைவன் இன்றுதான் வந்து தெரிவித்தான்.
வைர: சிவசிவா ! இதனைக் கேட்கவோ நான் உயிருடன் இருக்கின்றேன். w
பர: சட்டகாதப் பெருமானே எவரும் ஒன்றுஞ் செய்ய முடியாது. அவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். பறங்கியர் கோயில் முன்பாக எதுவும் செய்யலாம். ஆணுல் எங்கும் கிறைந்துள்ள எம்பெருமானை அவரால் என்னதான் செய்ய ցքգպմ 2

Page 17
2O இறுதி முச்சு
வரோ : மன்னர் பெருமான் சொல்வதும் உண்மைதான். ஆனல், எமது ஆயனச் சிற்பியர் கண்கள் உடையக் கல்லடித்து எழுப்பிய மண்டபம் என்னவாகும் ? காவியம் பயிலும் அந்தத் தூண்களுக்கு என்னதான் நேருமோ யாருக்குத் தெரியும்?
வைர : (தன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு) கட்டாயம் சட்ட நாதர் அவர்களைக் கேட்பார். பெருமானே! கருங்கல்லுக்குள் மறைந்திருக்காதீர். கண்ணேத் திறந்து பாருமையா !
Lur : 5 tùLugs (5 iš G35 SU5b. எனக்கு இந்தக் காட்டு வாழ்க்கை நன்றப்ப் பிடித்துக்கொண்டது. "வாவி பெல்லாம் தீர்த்தம். மணலெல்லாம் வெண்ணிறு. காவனங்க ளெல்லாம் கணநாதர்” என்பது எம் மதம். அதோ அடிபருத்து முடிசிறுத்து வளர்ந்துள்ள வாகைமரத்திலும் சட்டநாதன்தான் இருக்கின்றர். சலசல என ஒடும் காட்டாறும் அவரின் புக ழைப் பாடும். காற்றிலே கலகலக்கும் இலைகூடப் பரம்பொரு ளின் பெருமையை ஒலிக்கும்.
வரோ: நான் அதனை மறுத்துப் பேசவில்லை. மெய்ஞ் ஞானிகள் கண்ட உண்மை அது. எப்படியென்ருலும் எமது பொன்னுன பூமியை, பிறந்த நாட்டை விடுதலை செய்யவேண் டும்.
பர அதற்காகத்தான் நான் இன்னும் உயிர் வாழ்கின் றேன். வெற்றி கிடைக்கும்; விடுதலையுண்டு; கவலையில்லை. உள்ளத்து உறுதியுடனிருப்போம். இறுதி மூச்சுள்ளவரையும் போராடுவோம்.
(அப்பொழுது பெண் உருவம் ஒன்று வருகின்றது. )
வைர (எட்டிப்பார்த்துக்கொண்டு) யாரோ ஒரு பெண் கேட் டுக்கேள்வியில்லாமல் இங்கு வருகின்ருள். ஏய் பெண்ணே ! மன்னர் பெருமானின் முன்னிலேக்கு உத்தரவின்றி வரப்படாது. நில் அங்கே. இல்லாவிட்டால் இந்தத் தடியால் உன் மண்டை யைப் பிளந்து விடுவேன். ( தடியை எடுத்து ஓங்குகின்றன். )
குரல் வள்ளுவனரே ! பறையடிக்கத்தான் உமக்குத் தெரியும் என்றிருந்தேன். உமக்கு மண்டையிலும் அடிக்கத்

இறுதி முச்சு 2
தெரியும் என்பதை இன்றுதான் உணர்ந்தேன். வெளித்தோற் றத்தைக் கண்டு மயங்காதீர். உலகம் போலி போலிதான் உலகம். ( பெண் மாறுவேடம் பூண்ட எதிர்நாயதம் வந்து குதிக்கின் ருர்)
பர: என்ன, எதிர்நாயக முதலியாரே! எம்மையும் ஏமாற்றி விட்டீரே. என்ன செய்தி கொண்டுவந்தீர்?
வரோ: விரைந்து சொல்லும் செய்தி ைப.
எதி: எங்கும் நல்ல செய்திதான். பறங்கியருடைய அதி காரம் எல்லாம் அவருடைய கோட்டைக்குள் தான். புறநகரம், கிராமப்பகுதி எல்லாம் எம் பக்கம்தான். - பொதுமக்கள் நம் பிக்கையை இழக்காதிருக்கின்றனர். நாம் துணப்படையுடன் குதித்தாற் போதும். பறங்கியரைப் பறந்தோடச் செய்துவிட ουιτιό.
பர நல்ல செய்தி. நம்பிக்கையை இழக்காமலிருப்போம். மன்னர் பெருமான் சங்கிலியின் கதி என்னவாயிற்று? அவர் எங்கே? V
எதி: ( அழுதுகொண்டு ) அதனை எப்படிச் சொல்லுவேன்? அவர் யாழ்ப்பாணத்துச் சிறையில் இருந்தால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என எதிரி பயந்தான். எனவே, அவரை எங்கோ பிறதேசத்திற்கு மரக்கலத்தில் ஏற்றிச் சென்றுவிட்டா ஞம்.
பர: ஐயோ! எங்கள் மன்ன! நாம் இனி என் செய்வோம். கண்ணை இமை காப்பதுபோல் எம்மைக் காத்து வந்தீரே. (அழுகின் ருர், ) −
வரோ : (அழுதழுது) சங்கிலி மன்னனுக்கு இந்தக் கதியோ? இனி என்ன செய்யலாம் ? இனிப் பரராசசேகர மன்னர் பெருமான்தான் யாழ்ப்பாணத்தவருக்குத் துணை. நீங்கள்தான் எமக்கு வழிகாட்டி.
ஐயா! உங்களுடைய பெருவாழ்விலேதான் யாழ்பாணத் தரசின் எதிர்காலம் தங்கிக் கிடக்கின்றது. நீங்கள் வாழ்ந்தால் யாழ்ப்பாணமும் வாழும்.
ci: ;

Page 18
காட்சி II
[ அதே குடிசை. புரராசசேகரனின் மனைவி உலகுடைநாயகியும் அவ ரின் தோழிப்பெண் வள்ளியம் மையும் கிற்கின்றனர்.)
வள்: இன்று எமக்கு நல்ல செய்தி வந்திருக்கின்றதாம். யாழ்ப்பாணப் பகுதியிலே பறங்கியருக்கு நாளுக்கு நாள் பொது மக்களின் எதிர்ப்புக் கூடுகின்றதாம். விரைவில் நீங்கள்தான் பட்டத்திற்குரிய அரசியாவீர். அப்பொழுது எம்மை மறந்து விடப்படாது. " ية
உல: எனக்குப் பட்டமும் வேண்டாம்; பதவியும் வேண் டாம்; மணிமுடியும் வேண்டாம். மடிப்பிச்சை எடுத்து வாழ்க் தாற் போதும்.
வள் : ஏனம்மா இன்று வெறுப்புடன் இருக்கின்றீர்? மன்னர் பெருமானுக்குக் கிடைத்த நற்செய்தியையிட்டு நாமும் மகிழத்தானே வேண்டும். கணவனின் இன்பதுன்பங்களில் பங்கு கொள்ளுதல்தானே கற்புடைய மகளிரின் கடமை.
உல: மூடு வாயை. பெரியதோர் உண்மையைப் புதி தாகக் கண்டு பிடித்துக்கொண்டாய் மீ. இல்லையோ ?
வள் : அம்மா ! ஏனம்மா சினக்கின்றீர்? நான் சொன்ன தில் ஏதும் பிழையும் உண்டோ ? உங்களுக்குத் தொண்டு செய்கின்றேன். உங்கள் நன்மைதான் என் வாழ்வு என்று நானிருக்கின்றேன். கிழல்போல உங்களைத் தொடர்ந்து இந்த அடவியில் வந்திருக்கின்றேன். என்மேல் ஏன் எரிந்து விழு கின்றீர்? நான் என்ன பிழை செய்தேன்? (அழுகின்றர்.)
உல: நான் ஏதோ என் கவலையில் எரிந்து விழுந்து விட்டேன். வள்ளியம்மா ! ஏனம்மா அழுகின்ருய்? நான் தெரியாமற் சொல்லிவிட்டேன். அதைப் பொருட்படுத்தாதே. (அழுகின் ருர்)
வள்: உங்களுடைய இன்பதுன்பம்தான் என் இன்பதுன் பம். நண்பரின் இன்பதுன்பத்தில் இரண்டறக் கலப்பதுதான் உண்மையான கட்பு. (மேலும் அழுகின்றர்.)

இறுதி மூச்சு 23
உல வள்ளியம்மா! நான் அதனே எப்போதாவது மறுத் துள்ளேனே ? இந்த உலகுடைநாயகி எப்போதாவது உன்னே நம்பாமல் நடந்ததுண்டோ ? இன்று என் உள்ளத்தைப் பெரிய தோர் பாரம் அழுத்துகின்றது. (அழுகின் ஆர்,
வள் : அப்படியால்ை அதனை எனக்குச் சொல்லத்தான் வேண்டும். இயலுமானல் அதனை கான் தீர்த்து வைப்பேன்.
உல: இப்பொழுது சொல்ல நேரமில்லை. அதோ! மன் னர் பெருமான் வருகின்ருர். நீ சற்றுத் தள்ளிகில். (வள்ளி
யம்மை தள்ளிப்போகின்ருர்.)
பர: (உள்ளே வந்துகொண்டு) தேவி! எமக்கு மேலும் நற் செய்தி வந்துள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்தரசிற்கு விடுதலே கிடைக்கும். வெற்றி முரசு ஒலிக்கும். வெண் சங்கம் முழங்கும்.
உல உங்களுக்கு மணிமுடி கிடைக்கும். வெண்கொற் றக் குடைக்கீழ் இருந்து அரசாள மற்றெருத்தியையும் தேடிக் கொள்ளலாம்தானே.
பர : தேவி ! உங்கள் பேச்சு எனக்கு எள்ளளவேனும் விளங்கவில்லையே. என்ன சொல்லுகின்றீர்?
உல எப்படித்தான் விளங்கும் ? உடல் இங்கே, உயிர் அங்கே. ஆசையும் நேசமும் அங்கே, அறுசுவை உண்டி இங்கே. இல்லையோ ?
பர : செய்த பிழையைப் பொறுப்பாய். இந்த விடுதலைப் , போராட்ட வெறியில் உன்னே மறந்துவிட்டேன். வேறு ஒன்றும்
இல்லை. எல்லாம் எம் நன்மைக்குத்தான்.
உல என்ன முற்றும் முழுதாக மறந்துவிடுவீர். அதனைத் தான் நான் மன்ருட்டமாகக் கேட்கின்றேன்.
பர கான் மறந்தாலும் என் கெஞ்சம் மறக்காது. அங்கே பாருங்கள், தேவி! இந்த நடுக்காட்டில் என் பணியாளன் அலேந்து உங்களுக்காகத் தேடிவந்த வாழைப்பழக் குலையில் கடுவன் கைவைத்துப் பிடுங்குகின்றதே.

Page 19
24 இறுதி முச்சு
உல; அந்தக் காட்டு மந்திக்குள்ள அறிவு நாட்டை ஆளும் மன்னனுக்கு இல்லே. கடுவன் பழத்தை எடுத்துக்கொண்டு போய்த் தனது பெட்டைக்கும் குட்டிக்கும் கொடுத்துத் தின்றது.
பர நல்லது. நானும் அதனை வியப்புடன் பார்த்தேன். ஆனல் கடுவனைப் பார்த்துப் பெட்டை ஆதரவுடன் ஏதோ சொல்லுகின்றது. அது ஏன் உங்கள் கண்ணில் விழாதாம் ?
உல: (அழுதுகொண்டு) என்னே மறக்க எப்போது கற்றுக் கொண்டீர்? பெண் என்னும் கொடியைப் பொலிந்து பூக்கச் செய்வது ஆணின் அன்பு. அந்த அன்பைப் பெற்று இழந்த வள் ஒருபோதும் வாழவிரும்பாள். (அழுகின்ருள். )
(இவர்களுடைய பேச்சைக் கலைத்துக்கொண்டு பெரியதோர் குளறல் வருகின்றது.)
பர: இதேது, சண்டை முண்டு விட்டது. (எதிர் நாயகத்தின் குரல், பதரே! என்னடா வெடி வெடிக்கத் தான் இங்கு வந்தாயோ? இதோ வெடியை வைத்துக்கொண்டு தானே வீரம் பேசுகின்ருய்! எங்கே பார்க்கலாம், உன் திறமையை.
L போர்த்துக்கேய வீரன் சேவியரும் பெண் வேடத்தில் நின்ற எதிர் நாயகமுதலியும் ஒருவரோடொருவர் மல்லுக் கட்டிக்கொண்டு வந்து விழு கின்றனர். சேவியரின் கையிலிருந்த துப்பாக்கியை எதிர்நாயகம் பிடுங்கி எடுத்துவிட்டார். அப்போது அவரின் தலையிலிருந்த போலிக்குடுமி நிலத் தில் விழுகின்றது.)
எதி சரி, பறங்கிப்பயலே! நீ இப்பொழுது ஆயுதமின்றி. நிற்கின்ருய். நேருக்கு நேராக வா. தோள் வலிமையைக் காட்டு. சற்று மற்போர் செய். ( சேவியர் தனிநாயகத்தின் காலிலே விழுந்து சரணுகதி அடைகின்றன். பரராசசேகரமும் உலகுடைநாயகியும் கிட்ட வருகின்றனர். எதிர்நாயகம் பரராசசேகரத்தைப் பார்த்து) மன்னர் பெரு மானே! இந்தப் பறங்கி என் பெண்வேடத்தைக் கண்டு ஏமார்ந்து தகாதபடி நடக்கத் தலைப்பட்டான். இந்த நடுக்காட் டிலே இவனுக்கு என்ன வேலை ? இவன் எதிரியின் ஒற்றன்.

இறுதி முச்சு 25
பர: நல்லது, இவனை விசாரணை செய்வோம்.
( அப்பொழுது வரோதய சிங்கன் அங்கு வருகின்றன்.பரராசசேகரன் வரோதய சிங்கனப் பார்த்து இதனைச் சற்று விசாரியுங்கள். ( பரராச சேகரனும் உலகுடைநாயகியும் போகின்றனர்.)
வரோ: இது சற்று விசாரிக்கவேண்டிய அலுவல் இல்க் ; இது பெரிய அலுவல், இவன் ஒற்றன். மன்னர் பெருமானப் பிடிக்க வந்துவிட்டான். (சேவியரைப் பார்த்து) டேய் உள்ளதைச் சொல். எத்தனைபேர் வந்தீர்கள் ? எப்படி வந்தீர்கள் ? (பல மாக அடிக்கின்றன்.)
சேவி: (நடுங்கிக்கொண்டு) மூன்றுபேர் வந்தோம். இருவ ரைக் காட்டானே அடித்துக் கொன்று விட்டது. நான் மாத்திரம் தப்பித்துக் கொண்டேன்.
வரோ உண்மைதான் சொல்லுகின்றயோ?
(மீண்டும் அடிக்கின்றன். சேவியர் நடுங்குகின்றன்.)
வைர உள்ளே முரசுடன் வந்து) இவன் நடுங்குகின்றதும் தாளத்திற்குத்தான். எங்கே தொடர்ந்து நடுங்கு பார்க்கலாம்.
(முரசை எடுத்துக் கே லியாக மெல்ல அடித்துக்கொண்டு) வேதாளத்திற்கு ஏற்ற தாளம், தத்திம் . ததிகிண . ததிகிண .
வரோ : காட்டான அடித்தபின் என்ன நடந்தது? மறைக் காமற் சொல்.
சேவி : நான் யானைக்குத் தப்பி ஓடிவந்தேன். வரும் போது வழியில் .
வைர : இந்த மனிதக் கரடியின் கையிலே சிக்கிக்கொண் டாய். (சிரித்துவிட்டு, மரக்குற்றியில் இருந்து வாழைப்பழத்தை உரித்து மடமட ? என உண்கின்ற எதிர் நாயகத்தைக் காட்டுகின்றன்.) լքé(36ծTl
வெளிவேடத்தைக் கண்டு மயங்காதே.
வரோ : இவனைப் பிடித்துக் கட்டி வை. இல்லை. காட்டானே அடித்ததாக இவன் சொல்லுகின்ற இடத்திற்குக் கூட்டிச்செல்,
4.

Page 20
26 இறுதி முச்சு
இவன் சொல்வது உண்மையானல் பிரேதம் இரண்டையும்
அப்புறப்படுத்துவீர். வேறு பறங்கியர் தொடர்ந்து வந்தால்
அடையாளம் ஒன்றும் தெரியக்கூடாது.
(சேவியரை எதிர்நாயகமும் வைரவனும் பிடித்துக் கட்டிக்கொண்டு
போகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வரோதய சிங்கனும் போகின் ருர், அதேநேரத்தில் பரராசசேகரமும் உலகுடைநாயகியும் வருகின்றனர்.)
பர: எங்களுடைய பேச்சைக் குழப்பிக்கொண்டு அந்தப் பறங்கி வந்துவிட்டான். ஆணின் அன்பைப் பெற்று இழந்த வள் ஒருபோதும் வாழ விரும்பாள். இல்லையோ ? விளக்க மாகச் சொல், என்னன்பே ! என்னைக் கொல்லாமற் கொல்ல
வேண்டாம்.
உல: (வெட்கி காணிக்கொண்டு நான் ஏதோ தெரியாத்தன மாக உளறிவிட்டேன். இனிக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்ளுவீர்.
பர தேவிதானே எனக்குக் குரங்கின் கதையைச் சொன் ஞர். கோபத்தின் காரணத்தைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
உல சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோ இந்த மயிர்க் கற்றை எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. இதனே இவ்வள வோடு மறந்து விடுவீர். (பரராசசேகரம் மயிர்க்கற்)ையை எடுத்து (வத்துக்கொண்டு பலமாகச் சிரிக்கின் ருர், எதிர்நாயகத்தின் மாறு வேடத்தைக் கண்டு ஏமார்ந்து விட்டேன்.
பர: (மேலும் சிரித்துக்கொண்டு) என்ன ? எதிர்நாயகத்தைத் தேவிக்குத் தெரியாதோ ? வள்ளியம்மா ! இங்கே வா அம் மா; விரைந்து வா.
வள்: (எட்டிப்பார்த்துவிட்டு) வந்துவிட்டேன், மன்னர் பெரு Լpո (86ցr l -
பர வள்ளியம்மா ! இங்கே பார். எமது நாட்டிலே பாட்டி மார் கதை சொல்லுவதுண்டு. செந்தமிழ்ப் புலவர் கதை புனைவ துண்டு. இங்கு இந்த மயிர்க்கற்றை கதை புனைந்து சொல்லு மாம். தேவியைக் கேள். (மூவரும் சிரிக்கின்றனர்.)
3 :

காட்சி II
(அதே குடிசைவாயில். இருக்கைபோன்று கடைக்து எடுக்கப்பட்ட மரக்குற்றிகளை வைரவன் வட்டமாக உருட்டி விடுகின்றன்.)
வரோ : (உள்ளே வந்துகொண்டு) இங்குதானே மந்திராலோ சனேக் கூட்டம் தொடங்கப்போகின்றது?
வைர (கவலேயுடன்) இங்குதான் நடைபெறும்.
வரோ : வைரவன், உள்ளதைச் சொல்; மறைக்காதே. உன் உள்ளத்தில் இப்பொழுது என்ன் நினைவு தோன்றிற்று?
வைர மன்னர் பெருமானுக்கு இந்தக் கதியோ ?
வரோ: அரசு கட்டிலில் இருந்து ஐம்பெரும் குழாத்துட ணும் எண்பேர் ஆயத்துடனும் உரையாடிய மன்னர் பெரு மான் இன்று அரிந்தெடுத்த மரக்குற்றியிலிருந்து பேசுவதோ ? இந்தக் காட்டில் அவருக்குக் கட்டியகாரர் கருங் குரங்குதான். இந்த வேதனையை இனி என்னுற் பொறுக்கமுடியாது.
வைர ஆனல், மன்னர்பெருமான் சிறிதும் கலங்காமல் அமைதியாக இருக்கின்றர்.
வரோ : அது கலக்கமின்மை என்று எண்ணுதே! எல்லை யற்ற துன்பத்தினுல் ஏற்பட்ட அமைதி அது. அல்ல மோதாவிட் டாற் கடலின் ஆழம் குறைந்துவிடுமோ ?
வைர (மரஇருக்கையை உருட்டித் தள்ளிவிட்டு) உண்மைதான். மன்னர் பெருமான் தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் நடக் கின்ருர்,
வரோ: ஏன் இத்தனை இருக்கை ? (எண்ணுகின் ருர்) ஒன்று, இரண்டு, மூன்று, கான்கு, நான்கும் நான்கும் எட்டு.
வைர இன்று வன்னிமைத் தலைவர் சிலரும் கண்டி காட்டு மன்னனின் பிரதானியும் வருவார் என எதிர்பார்க்கின்ருேம்.

Page 21
28 இறுதி முச்சு
வரோ இந்த ஈழத்து மக்கள் ஒன்று பட்டெழுந்தால் பறங். கிப் படையை வேரோடு அழித்துவிடலாம். ஒற்றுமை உண்டா ஞல் நாடு உயரும். காடு உயர்ந்தால் நாமும் உயர்வோம். நாடு நலிந்தால் நாமும் கலிவோம். கண்டி இராச்சியமும் யாழ்ப் பாண இராச்சியமும் ஒன்று பட்டால் . .
வைர உண்மை. ஒத்துக்கொள்ளுகின்றேன். ஆனல், உங்களுடைய பேச்சு, ' குதிரைக் கொம்புள் விளைந்த மணி கொண்டுவா” என்ற கதையாக இருக்கின்றது. m
(அப்பொழுது பரராசசேகரன் உள்ளே வருகின் ருர், இருவரும் வழி விலத்தி நிற்கின்றனர்.)
ப்ர: வன்னிமையார் வருவார் என்ற கம்பிக்கை எனக்
கில்லை. கண்டி நாட்டு மன்னனுக்கு எதிர்பாராத தொல்லை ஏற்பட்டுள்ளது. *
வரோ - ஆனல், அவர் தானே எம்மைச் சந்திக்கவிரும்புவ தாகச் செய்தியனுப்பினர். w w
பர : அனுப்பினது உண்மைதான். ஆணுல், பறங்கியரின் பலம் கூடிவிட்டால் அவர் பேசாமலிருந்து விடுவர். வன்னி மைத் தலைவர் வரமாட்டார்.
வைர அவர் வராவிட்டால் நமக்கு என்ன ? நாம் எம் அலுவலைக் கவனிப்போம்.
(அப்பொழுது எதிர் நாயக முதலி உள்ளே வருகின்றர்.)
எதி : மன்னர் பெருமானே ! எமக்கு மேலும் நல்ல செய்தி கிடைத்துள்ளது. குருகுலத் தல்வர் எமக்கு உதவி தருவதாக ஒலையனுப்பியுள்ளனர்.
வரோ: பொறுத்தார் புவி ஆள்வார். எமக்குத்தான் இறுதி வெற்றி.
வைர எட்டுத்திக்கும் வெற்றிமுரசம் கொட்ட நான் இருக் கின்றேன்.

இறுதி மூச்சு 29
எதி : வன்னியரும் கண்டி நாட்டாரும் இங்கு வருவர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
வரோ: அவர் வந்தால் நல்லது. வரா விட்டால் இன்னும் நல்லது. ஆலமரத்தின் நிழலில் கிளி இளைப்பாறும். கிளியின் கிழலில் ஆலமரம் இளேப்பரறுவதில்லே.
எதி : மன்னர் பெருமானே ! தங்களை உயிருடன் பிடித் துத் தருபவர்களுக்கு முன்னர் இருபத்தையாயிரம் பொன் தருவ தாகப் பறங்கி தெரிவித்தான். இப்பொழுது அதனை ஐம்பதா யிரமாகக் கூட்டியுள்ளானம்.
வரோ: எத்தனையாகக் கூட்டினுலும் நமக்கென்ன ? ஆனல் காமும் கட்டுக்காவலாக இருப்போம். எமக்கு உதவியாகக் குருகுலத் துணேப்படை விரைவில் வந்து சேரும் இங்கு,
வைர மன்னர் பெருமானே ! தங்கள் கையிலிருந்த இராச்சிய முத்திரை பொறித்த மோதிரத்தைக் காணவில்லையே!
பர கையில் இருந்ததே! இப்பொழுதுதான் காணவில்லை.
எதி: தேடிப் பாருங்கள். பரம்பரை பரம்பரையாக வந்த பொருள் அது.
வைர : ஒருவேளை நாம் இங்கு சிறையிற் பிடித்து வைத்த பறங்கிதான் எடுத்திருப்பானே ?
வரோ: பட்டம் இழந்தோம்; பதவி இழந்தோம்; பிறந்த தாய்நாட்டை இழந்தோம். அதற்கு ஒரு கவலையையும் காண வில்லையே! துரும்பிற்கு நிகரான இந்த மோதிரத்திற்கு எத்தனை ஆரவாரம். துரும்பு பெரிதோ ?’ தூண் பெரிதோ ?
பர எல்லோருமாக அதனைப் பார்த்தெடுத்துத் தக்துவிடு வீர். அதுமட்டுமன்று. என் உள்ளத்தில் வேறும் ஒரு கவலை இருக்கின்றது.
எதி அதனைச் சொல்லுங்கள் மன்னர் பெருமானே,

Page 22
30 இறுதி முச்சு
பர : அரசனுக்குரியவை ஐம்பெரும் குழுவும் எண்பேர் ஆயமும். நீவிர் எனக்குத் துணேயாக இருக்கு போது கவலை யேது ? மார்கழிமாதத் திருநாள் வரப்போகின்றது.
எதி : ஓ ! அதுவோ ! உங்கள் உயிருக்குயிரான வரோதய சிங்கமுதலியார் அதற்கு ஏற்பாடு செய்கின் ருர். இந்தக் காட் டில் கருங்கல் ஒன்றை எடுத்துச் சிவலிங்கத்தைக் கடைந்து முடித்து விட்டார்.
பர: (வரோதய சிங்கத்தைப் பார்த்து) கண்பா ! என் விருப்பத் தைக் குறிப்பாலுணர்ந்து உழைக்கும் உனக்கு நான் என்ன கைம்மாறு தருவேன்? ஏன், எம் அரண்மனை அந்தணர் அருணு சலத்தை இங்கு அழைப்பித்தால் என்ன ?
வரோ : வேண்டாம். கண்ணப்பன் வணங்கியதுபோல நாமும் எம்பெருமானே இந்தக் காட்டிலே வணங்கினல் என்ன?
பர: என் விருப்பத்தைச் சொன்னேன். இனி உங்கள் விருப்பம்.
வரோ நல்லது, இன்றைக்கே அவரை அழைப்போம். உங்கள் விருப்பம்தான் எம் விருப்பம். '
எதி : அந்தப் பொறுப்பை எம்மிடம் விடுவீர். சேஆல கட் டிய மாதரை நம்பினுல் எல்லாம் கடக்கும். (சேலையை எடுத்துக் தன் மாறுவேடத்தைப் புனைகின் ருர்.)

db T fʼdf Iv
[ அதே குடிசை, வரோதய சிங்கம் பரபரப்பாகச் சிவலிங்கம் ஒன்றை வைத்துத் துடைத்துத் துப்புரவாக்குகின் ருர், 'சண்ணப்பன் ஒப்பதோர் ’ என்ற திருவாசகம் அவர் வாயிலிருந்து கிளம்புகின்றது. பரராசசேகரமும் உலகு.ைதேவியும் உள்ளே வருகின்றனர்.)
பர: என் மெய்ப்பாதுகாவலர் இப்பொழுது சிற்பியாக மாறிவிட்டார். (வரோதய சிங்கம் எழுந்து நிற்கின் ருர்.)
உல: நீங்கள் யாழ்ப்பாணத்தரசனனுல் இவருக்கு என்ன பதவியைக் கொடுக்கப் போகின்றீர் ? அமைச்சர் பதவியோ ? அல்லது ஆயனச் சிற்பிப் பதவியோ ?
வரோ : எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். கான் இந்தக் காட்டிலிருந்து கடும் மோன்பு நடத்த உத்தரவு தந்தாற் போதும்,
உல: நாம் உத்தரவு தருவோம். ஆனல், வேறு யாரும் உத்தரவு தர மறுத்தால் என்ன செய்யலாம் ?
வரோ : எனக்கு முதலாவது எசமான், ஆடும் தில்லை யம் பலவன். இரண்டாவது எசமான், மன்னர் பெருமான். நான் வேறு எவருக்கும் தொண்டு செய்யேன்.
உல வேறு யாராவது உமக்குத் தொண்டு செய்ய முன் வந்தால்.. ? -
வரோ அப்படி எவரும் இருப்பதாக எனக்குத் தெரியாது. இருந்தால் அதனைப் பின்னர் பார்க்கலாம்.
பர : அக்தனர் அருணுசலம் இன்னும் வரவில்லையே. அதுதான் எனக்குக் கவலையாக இருக்கின்றது.
வரோ : இல்லை எப்படியென்ருலும் எதிர் நாயகம் கூட்டிக் கொண்டு வந்து விடுவார். அதுபற்றிக் கவலை வேண்டாம். எம் பெருமான் மெய்யன் பரை ஒருபோதும் கைவிடமாட்டார். நம் பினவர் கலித்தலில்ல.

Page 23
32 இறுதி மூச்சு
பர : எதிர்காலத்தைப்பற்றி எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. அன்று அரசமுத்திரை பொறித்த மோதிரத்தை இழந்தேன். நந்தி முத்திரை பொறித்த உடைவாளை இன்று இழந்துவிட்டேன். இவையெல்லாம் நல்ல அறிகுறியல்ல.
உல: (திடுக்கிட்டுக்கொண்டு) என்ன ? உடைவாளை இழந்து விட்டீர்களோ ? ஆடும் தில்லையம் பலவன் தான் 6 ம் மைக் காப் பாற்ற வேண்டும். யாராவது இந்தப் பொருள்களைத் திருடு கின்ருர்களோ ?
வரோ இந்த நடுக்காட்டிலே நம்மைத்தவிர யார் இங்கு இருக்கின்றனர்? மன்னர் பெருமானின் மோதிரம் அவர் ஆற் றிலே குளிக்கும்போது கழன்று விழுந்திருக்கும். உடைவாளே மன்னர் பெருமான் வைத்துவிட்டு வரக் குரங்கு எடுத்துக் கொண்டு போனுலும் போயிருக்கும். மந்திக் கூட்டத்தின் தொல்லை இங்கு பெரும் தொல்லை. என்ன செய்யலாம்.
பர : இனியென்ருலும் கவனமாக இருப்போம். சரி, ஆற் றங் கரைக்குச் சென்று காலைக்கடனேக் கழித்து வருவோம (பரராசசேரனும் உலகுடைதேவியும் போகின்றனர். வள்ளியம்மை வந்து கூட்டுமாறு ஒன்றை எழுத்துக் கூட்டத் தொடங்குகின் ருர்.)
வரோ (சிவலிங்கத்திலுள்ள தூசைத் துடைத்துக்கொண்டு) சற்று மெதுவாகக் கூட்டினுல் நல்லது. தூசு கிளம்புகின்றது.
வள் : மன்னிக்கவேண்டும். தெரியாமற் செய்துவிட்டேன். இனிக் கவனமாகக் கூட்டுகிறேன். தூசு கிளம்பும் என்பதை மறந்தே போய்விட்டேன். -
வரோ : (நகைத்துவிட்டு) விளக்குமாற்றிலிருந்து தூசுதானே
கிளம்பும். தூசுக்குப் பதிலாக மகரந்தப் பொடியோ கிளம்பும் (மேலும் நகைக்கின்றர்.)
வள் : என் பிழையைப் பொறுத்துக்கொள்வீர்.
வரோ : நான் பிழைபிடிக்கும் நோக்கத்துடன் சொல்ல வில்லை. பெண்களுடன் பேச்சுக் கொடுப்பது தனிக்கலை. (வள்ளி யம்மை உள்ளே போகின் ருர், இதேது தொல்லை. இந்தப் பெண்

இறுதி முச்சு 33
வந்ததும் வராததும் சீறிக்கொண்டு போகின்றதே. பெண்கள் இப்படித்தான். எதற்காக, எப்போது, ஏன் கோபங்கொள்ளுவார் என்று அவர்களைப் படைத்த பிரமனுக்கே தெரியாது.
வள் : (உள்ளே சட்டியில் தண்ணீரைக் கொண்டுவந்து த்ெளித்துக் கொண்டு) பிரமனுக்குத் தெரியாமல் இருந்தால் இருக்கட்டும். உங்களுக்குத் தெரிந்திருக்தாற் போதும். அதுதான் நீங்கள் என்னிடம் பேச்சுக் கொடுப்பதில்லையோ ? (நீரைத் தெளிக்கின் ருர்)
வரோ: பேசுவதற்கு என்ன தான் இருக்கின்றது ? உங்க் - ளூக்கும் எனக்கும் கோபமும் இல்லை; உறவும் இல்லை. நட்பும் இல்லை; பகையும் இல்லை. வாள் ஏந்துவது என் வேலை. அறு சுவை அடிசில் ஆக்குவது உங்கள் வேலே. (குனிந்து பார்த்துவிட்டு) ஏன் சட்டியிலே உள்ள நீரைத் தெளித்தாற் போதாதோ ? பின்னர் ஏன் கண்ணிர்த் துளிகளையும் மணிமணியாக அள்ளிச் சொரிகின்றீர்கள் !
வள் : மெதுவாகப் பேசுங்கள். யாராவது கேட்டுக் கொண்டு வந்தால், சரி, நான் அழவில்லை. (சிரித்துக்கொண்டு) நான் ஒன்று கேட்கட்டுமோ ?
வரோ : (நகைத்துவிட்டு) நல்லது, கேளுங்கள். இப்பொழுது மழையைப் பொழியும் கார்மேகம் உங்கள் முகத்திலிருந்து அகன்றுவிட்டது. பனித்திரைக்குள் இருந்துகொண்டு பகலவன் முகத்தைக் காட்டுவதுபோலச் சிரிக்கின்றீர்கள்.
வள்: உங்களிடம்தானே வாள் ஒன்றிருக்கின்றது. பின் னர் ஏன் மன்னர் பெருமானின் உடைவாளேயும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ?
வரோ : (துள்ளிப்பாய்ந்துகொண்டு) ஐயோ! அம்மா ! தாயே! எப்படியம்மா அதனைக் கண்டு பிடித்தீர்கள் ?
வள் : நான் அம்மா, தாய் இல்லை. வயது அதிகம் போக வில்லை. இப்பொழுது உங்கள் ஆண்மை மிக்க அழகுமுகத்தில் ஏன் கருமேகம் கவிந்துவிட்டது ?

Page 24
வரோ : கும்பிடுகின்றேன்; கெஞ்சிக் கேட்கின்றேன். நான் எடுத்ததென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
வள் : (சிரீத்துவிட்டு) என்னை ஏன் கும்பிடுகின்றீர்கள் ? சிவ லிங்கத்தைக் கும்பிடுங்கள்.
வரோ : மன்னர் பெருமானிடம் இதனேத் தெரிவித்து விட்டீர்களோ ?
வள் : (தயக்கத்துடன்) இல்லை, இல்லை. சொல்ல உள்ளம் ஒருப்படவில்லை.
வரோ : உங்களைக் கெஞ்சி மன்ருடிக் கேட்கின்றேன். நான் எடுத்த இடத்திலே அதனைத் திருப்பி வைத்து விடுகின் றேன். அதுவரையும் சொல்லா தீர்.
வள் : சொல்வதற்கு முன்னர் உங்களைக் கண்டு ஒருமுறை கேட்கவேண்டும் என நினைத்தேன். பேசப் பயமாக இருந்தது.
வரோ : ஏன் ? நான் என்ன புலி, சிங்கமோ ?
வள் : புலி, சிங்கம் என்ருல் நான் பயப்படமாட்டேன். உங்களிடம் எப்படித் தனியாகப் பேசமுடியும் ? எப்படி என்ரு லும் உங்களைக் கேட்காமல் மன்னர் பெருமானிடம் சொல்வ தில்லை என்று முடிவு செய்துவிட்டேன். சொன்னல் அவர் உங்களைத் தண்டித்தாலும் என்ற பயம் என் உள்ளத்தைப் பிடித் தது. அதனுலே அழுதும் விட்டேன்.
வரோ : எனக்காகக் கவலைப்படவும் ஒருவரிருக்கின் ருர், கேட்கக் காது குளிர்கின்றது. இந்தச் சிவலிங்கத்தின் மீது ஆனே. நான் அந்த வாளேக் கெட்ட நோக்கத்துடன் எடுக்கவில்லை. இந்த அலுவலை எவருக்குஞ் சொல்லமாட்டேன் என்று சத்தியஞ் செய்து தாருங்கள். அப்படியென்ருல்தான் என் உள்ளம் அமைதிப்படும்.
வள் : பெண்களிடம் ஆண்கள் பேசுவதும் தனிக்கலை. பேசத் தொடங்கிவிட்டால் முடிக்கமுடியாமல் தத்தளிப்பதும் தனிப்பெரும் கலே,

م
இறுதி மூச்சு 35
வரோ அம்மா! ஆண்டவன் உங்களுக்கு அருள் புரி வான். உறுதி செய்யுங்கள்.
வள் : எனக்கு ஆண்டவன் அருள் செய்வான். எனக்கும் அருள் உண்டு. ஆணுல், கான் ஒருபோதுஞ் சொல்லமாட்டேன்.
வரோ : சிவனறிய என்று சொல்லி உறுதி செய்யுங்கள்
வள் : நான் சிவனேக்கொண்டு சத்தியஞ் செய்யமாட்டேன். அப்படி வழக்கம் எமக்கில்லை.
வரோ பின்னர் எதனேக்கொண்டு சத்தியஞ் செய்வீர்?
வள்: ஆனயிடமாட்டேன். என்னே நம்புங்கள்.
வரோ நல்லது, அப்படியே. இந்தக் கதை வெளியானுல் உடனே காட்டாற்றில் விழுந்து இறப்பேன்.
வள்: ஐயோ! அப்படி ஒன்றுஞ் செய்துபோடா தீர். நான் சொல்லமாட்டேன். உங்கள்மீது எனக்கு மட்டில்லாத நம் பிக்கை உண்டு. பிழையான எதையும் செய்யமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனுலேதான் உங்களை நம்பி னேன்.
வரோ : என்னேப் பற்றி அதிகமாகத் தெரிந்துவைத்து விட் டீர்கள். என் வாழ்விலே என் அன்னேயைத் தவிர வேறு எத் தப் பெண்ணிடமாவது கெஞ்சிப் பேசியது கிடையாது.
வள்: உங்களுக்கு இப்போது வயது ஐம்பது இல்லேயோ ?
வரோ இல்லை, இல்லை. இருபத்தெட்டு.
வள் : அப்படியானல் கெஞ்சிப் பேசவேண்டிய காலம் வரும்.
வரோ வரும் என்றுதானே சொல்லுகின்றீர். அது ஒரு போதும் என் வாழ்விலே வராது. அதற்கு இடம் இல்லை.

Page 25
36 இறுதி முச்சு
வள் : (அழுகையை அடக்கிக் கொண்டு) அப்படியே இருக்கட் டும். நல்லது ; அதுதான் நல்லது.
வரோ : அதற்கு ஏன் அழவேண்டும் ? தயவாகக் கேட் கின்றேன். என்னை இப்படிக் கலக்காதீர்.
வள்: நான் கலங்கவில்லை. என் கண் கலங்கிற்று. அதற் காக மற்றவர் ஏன் கலங்கவேண்டும்? மன்னர் பெருமானிடம் நான் அதனைச் சொல்லாவிட்டால் உங்கள் அலுவல் முடிந்து விட்டது. அவ்வளவுந்தானே ? அத்துடன் என்னை உங்களுக் குத் தேவையில்லை.
வரோ : நான் முரட்டுப் போர்வீரன் என்பதுதான் உங் கள் முடிவு. கற்பாறைக்குள் தண்ணிர் ஊற்றெடுப்பதுபோல என் முரட்டு உடலுக்குள் மெல்லிய நெஞ்சுண்டு. நான் போர் வீரன். அபாயத்தைத் தழுவுபவன். மரணத்தின் விழிம்பில் கம்பங் கூத்தாடுபவன். எனவே, என் உணர்ச்சியைச் சாம்ப ராக்கி விட்டேன். நெஞ்சை மரமாக்கிவிட்டேன்.
வள் : நீங்கள் எதனையுஞ் செய்யலாம். ஆணுல், என் உள் ளத்தின் உணர்ச்சியை ஒன்றுஞ் செய்யமுடியாது. மலையில் ஊற் றெடுத்த ஆறு ஓடியே தீரும்.
வரோ : என்னுல் இனி ஒன்றுஞ் சொல்லமுடியாது. உங் கள் உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இறுதி மூச்சு இருக்கும் வரையும் மறவேன்.
வள் : என்னுல் உங்களையே மறக்க முடியாது. நெஞ்சிலி ருந்து கினைவு நீங்காது.
வரோ: ஆண்டவன் என்னேயும் இப்படிச் சோதிக்கின் ருன். எனக்கு மரணம் இன்றைக்கோ நாளைக்கோ ஏற்படலாம். போர்க்களம் என்ன ' வாவா ’ என்று அழைக்கின்றது. மலேச் சாரலிலிருந்து உருளும் பாறைக்கு முன்னுல் நிற்கலாபோ ?

இறுதி மூச்சு 37
வள் : காலையில் மலர்ந்த தாமரை மாலையில் வாடுகின் }து. அகற்காக எவரும் தாமரைன்ய வெறுப்பதும் உண்டோ ?
வரோ : கல்வாழ்வு வாழவேண்டிய்வர் வாழ்ந்தே ஆக வேண்டும். பிறர் வாழ்வைக்கண்டு அகமகிழ்வதுதான் பண்பு. அதனுலேதான் . .
வள் : ஒருவரின் அன்பு பெரிதோ? பண்பு பெரிதோ ?
வரோ: அதற்கு என்னல் மறுமொழி கூறமுடியாது. அந்த ஆற்றல் எனக்கில்லை, ஆனல், அன்பில்லாமல் பண்பு சிறக் *ாது. சரி, இந்த இடத்தைக் கூட்டுங்கள். மன்னர் பெருமான் வரப்போகின்றர். எடுத்த வேலையை முடியுங்கள். (வள்ளியம்மை தஃலகீழாக விளக்குமாற்றைப் பிடிக்கின் ருர், வரோதய சிங்கன் சிரித்துவிட்டு i நான் கூட்டுகின்றேன். ஆறுதலாக இப்படி இருங்கள்.
வள் : உங்களுக்கு அருகில் இருப்பதே ஆறுதல். ஈசனே எல்லாவற்றையுஞ் செய்வேன். (கூட்டுகின் ருர்)

Page 26
đT óf V
(அதே குடிசை. சிவலிங்கம் அப்படியே இருக்கின்றது. பூசைக்கு வேண்டிய பூ, பழம் முதலியவைகளிருக்கின்றன. பரராசசேகரனும் உலகுடை தேவியும் உள்ளே வருகின்றனர்.)
உல; எங்கே ? வரோதய சிங்கஃனக் காணவில்லையே!
பர: ஏதாவது அலுவலைக் கவனிக்க ஒடித்திரிவார். அவ ரைப்போல என் மீது எல்லையற்ற அன்பு கொண்ட ஒருவரைக் காணமுடியாது. சிறுவயது தொட்டு நாமிருவரும் ஒருமித்துத் தான் வளர்ந்து வருகின்ருேம். எங்கள் தோற்றமும் சாயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான்.
உல: நான் அதனே மறுத்துப் பேசவில்லை. உடைவாள் களவு போய்விட்டது என்றதும் அவரின் முகஞ் சுண்டிவிட்டது. அவருக்குத் தெரியாமல் அது எப்படி மறைந்திருக்கும் ?
வரோ: யாரைக் குறை சொன்னுலும் சொல்லலாம். ஆனல், என் உயிருக்கு உயிரான நண்பனைப்பற்றி யாரும் எதுவும் குறையாகப் பேசப்படாது. s
உல; எனக்கு மாத்திரம் உங்கள் நன்மையிலே நாட்டம் இல்லையோ? சகுனப்பிழை ஏற்பட்டால் நான் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்? நேற்று இந்த வாகை மரத் திலே இடியேறு விழக் கனவு கண்டேன்.
பர: மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். எனக்கு இந்தச் சகுனத்தில் நம்பிக்கை இல்லாமற் போய்விட் டது. நான் பிறந்த அன்று மன்னுரிலே ஆயிரமாயிரம் முத்துச் சிப்பிகளும் வலம்புரிச் சங்கும் அகப்பட்டனவாம். ஆனல், இப் பொழுது என் வாழ்வு. -
உல உங்களுக்கு என்ன குறை ? அடவியில் வாழ்ந்தா லும் அரச மரியாதையுடன் வாழ்கின்றீர்கள்

இறுதி மூச்சு 39
பர எனக்கு அரச மரியாதை வேண்டாம். இந்த அட வி யில் அமைதியாக வாழ்ந்தாற் போதும். அரண்மனை வாழ்வில் எத்தனை ஆடம்பரம்? எத்தனை போட்டி பொருமை ; வீண் வேடிக்கை, கேளிக்கை. இந்த அடவியில் நிலவும் அமைதியில் ஆண்டவனேக் காண்கின்றேன். அதுவே போதும்.
உல; ஏன் சட்டநாதர் கோயிலில் ஆண்டவன் இல்லையோ?
பர : யார் சொன்னது இல்லேயென்று ? ஆஞல், நல்வாழ் விற்குப் பெரும்பதவி முட்டுக்கட்டை. பதவியிருந்தால் ஆண வம், ஆசை, தற்பெருமை எல்லாம் தாமாக வந்துவிடும்.
உல: பட்டம், பதவி, பெருமைக்காக உங்களே நாம் வாழச் சொல்லவில்லே. யாழ்ப்பாணத்தரசின் எதிர்காலத்திற்காக வாழுங்கள் என்று தானே கேட்கின் ருேம். நீங்கள் பெருவாழ்வு வாழ்ந்தால் யாழ்ப்பாணத்தரசு வாழும். தமக்கென வாழா விட்டாலும் பிறர்க்கென வாழவேண்டும்.
பர : அதனே நான் மறுத்துப் பேசவில்லை. ஆனல், எமது விடுதலைப் போராட்டம் வெற்றிதருமோ ? நாட்டை விடுதலே செய்யவேண்டும் என நாம் துடிக்கின்ருேம், மக்கள் வீறுகொண்டு எழுகின்றனர். ஆனல் பறங்கியரின் பீரங்கிப் படைக்கு முன் ஞல் நாம் என்ன செய்யலாம் ?
உல: போர்க் களத்து அலுவலைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்தக் காட்டில் வாழும் பறவையும், விலங்கும் சுதந்திரமாக வாழ்கின்றன. சுதந்திரமான வாழ்வே இன்பம் தரும். சுதந்திரம் எமது பிறப்புரிமை என்று என் தந்தையார் பல முறை சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
பர: சுதந்திரம் எமது பிறப்புரிமை, சுதந்திரம் எமது உயிர்ப்பு. சுதந்திரம் எமது மூச்சு. ஆனல், காட்டிக் கொடுக் கும் காக்கைவன்னியர் போன் ருர் எம்மை வாழ விட மாட்டார். எம் இறுதி மூச்சிலும் சுதந்திரம் ஒலிக்கவேண்டும்.
வரோ : (உள்ளே வந்துகொண்டு ) காக்கை வன்னியரின் தொகை அணுவிலும் சிறியது. மக்களின் அன்பும், ஆதரவும்,

Page 27
40 இறுதி மூச்சு
அபிமானமும் எம்பக்கம்தான். பெருங்காற்றடித்தால் துரும்பு என்ன..செய்யும் ! (திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டு தன் துண்டை உதறிவிட்டு) காட்டிக்கொடுக்கும் காக்கைவன் னியரைக் கதறி ஒடச் செய்வோம். பரதேசிப் பறங்கியரை இருந்த இடம் தெரி யாமல் பறக்கச் செய்வோம்.
(அப்பொழுது தொஃலயில் மணியோசை கேட்கின்றது. அதனைத் தொடர்ந்து 'பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் தருகினத்தால் பின்னும் அரவத்தால்?’ என்னும் திருஎம்பாவைப் பாடலும் கேட்கின்றது.}
பர : அதோ, அந்தணர் அருணுசலத்தின் குரல். அமை யாக ஆண்டவனைத் தொழுவோம் வாரீர்.
(அந்தணர் அருணுசலம் மணியை அடித்துக்கொண்டு பொட்டலம் ஒன்றுடன் வருகின் ருர், அவருக்குப் பின்னல் எதிர் நாயக முதலி சேலே ஒன் றைத் தோளிலே போட்டுக்கொண்டு பாடிப்பாடி வருகின் ருர்)
பர: (சிரித்துவிட்டு) விடுதலைப் போராட்டம் முடிந்த பின்னர் இந்தச் சேலையை என்ன செய்யலாம் ?
எதி : அதற்கும் திட்டம் உருவாக்கியுள்ளோம். பேடிக ளுக்குத் தக்க பரிசு. ஆண்மையின்றிப் பெண்மையுடன் வாழும் காட்டிக் கொடுக்கும் காக்கைவன் னியருக்கு இதில் ஒருபாதி சன்மானமாகும். மற்றப் பாதி பேடிப் பறங்கித் தளபதிக்குப் பரி சாகும.
(அந்தணர் அருணுசலம் பொட்டலத்தை அவிழ்த்துத் தீபதூபங்களை எடுத்து வைத்துக்கொண்டு மணியடிக்கின்றர். 1
 

đ) T{ '' đ” VI
[ அதே குடிசையின் வாயில். மரக்குற்றி ஒன்றிலே இருந்துகொண்டு சிறு தடியை வரோதய சிங்கம் ஆத்திரத்துடன் சீவித்தள்ளுகின் ருர், வள்ளி பம்மை மெதுவாகப் பின்புறமாக வந்து அவ்விடத்தில் தாமரைப்பூ ஒன்றை எறிகின் ருர்)
வரோ : (பூவை எடுத்துக்கொண்டு) இது என்ன ?
வள் தாமரைப் பூ.
வரோ : தெரிகின்றது. கடவுள் என்ன இப்படியும் சோதிக் கின்ருர், அறிந்தும் அறிந்தும் ஏனம்மா கருங்கல்லிற் கலத்தை மோதுகின்றீர்?
வள் : ஒருபோதாயினும் என்னுடன் அன்பாகப் பேசினுல் ଶt ମୈr ଟ୪t ?
வரோ : அன்புடன் அமைதியாகத்தான் பேசுகின்றேன். வாழப் பிறந்தவர் பாழடைந்த கிணற்றிலே குதிக்கலாமோ ?
வள் : என்ன ? நீங்கள் பாழடைந்த கிணருே ? அன்பும், அறிவும், அமைதியும், வீரமும் உங்களிடம் தேங்கிக் கிடக்கின் றன. மன்னர் பெருமான் தொடக்கம் முரசறையும் வள்ளுவன் வரை உங்கள் நற்பண்பைப் புகழாதார் இல்லை.
வரோ : அத்துடன் நீங்களும் எனக்குப் புகழ்மால் ஒன் றைச் சூட்டுகின்றீர். அதனேயும் யாம் பெருமையுடன் ஏற்கின் ருேம்.
வள்: ஏற்ருல் என்ன, ஏற்காவிட்டால் என்ன எனக்கு ஒன்றும் இல்லை. என்னே உங்கள் உடமைப் பொருளாக்கி விட் டேன். முதலாவதாகத் தில்லையம்பலவன் காட்டும் வழி. இரண் டாவதாக அவ்வழியில் நடப்பதற்கு உங்கள் துணை.
வரோ : என் உள்ளத்தில் உள்ள உணர்ச்சியை நான் எடுத்துக் காட்டவில்லை. உண்மையைச் சொன்னுல் உங்களை
6

Page 28
42 இறுதி மூச்சு
நான் தெய்வமாக மதிக்கின்றேன். ஆனல், கடமை ஒன்றிருக் கின்றதே. சிறுவயது தொடக்கம் மன்னர் பெருமானின் தய விலேதான் வளர்ந்து வருகின்றேன். இப்பொழுது அவருக்கு ஆபத்துக் கூடிக்கொண்டு வருகின்றது. அவரின் மெய்ப் பாது காவலன் நான் . கண்ணை இமை காப்பதுபோல அவரைக் காக்க வேண்டும். என் வாழ்விலே காதலுக்கும் கலியாணத் திற்கும் இடம் இல்லை. காதல் பெரிதோ ? கடமை பெரிதோ ? வாழவேண்டிய எழிலியைப் பாழாக்கி விடலாமோ ?
வள்: நீங்கள் இல்லாவிட்டால் நான் வாழமுடியாது. அது தான் என் முடிவு.
வரோ : ஏன் இந்தப் பிடிவாதம்? கண்ணே ! என்னை மறந்துவிடு.
வள்: உங்களை மறப்பது இயலாத அலுவல். பெண்ணின் உள்ளம் மென்மையானது. அதிலே ஆழப் படிந்த உணர்ச்சி ஒருபோதும் அழியாது.
வரோ : செவிடன் காதிலே யாழை இசைக்காதே. குரங் கிற்குப் பூமாலை எதற்கு ? என் திட்டம் இதுதான். இன்னும் ஒருவாரத்தில் நான் மாறுவேடம் பூண்டு யாழ்ப்பாணத்திற்குப் போவேன். அங்கு ஆபத்தான வேலே என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. தப்பி வந்தால் என் உயிரும், உள்ளமும், உடலும் வேறு ஒருவருக்குஞ் சொந்தமா கா. மன்னர் பெருமானை அரசு கட்டிலில் ஏற்றிவிட்டு நாம் இருவரும் இந்தக் காட்டிலே ஒதுங்கி வாழலாம். சிவலிங்கத்தின் மீது ஆணே. இனி என் னிடம் இந்தப் பேச்சை எடுக்கக்கூடாது.
வள் : இனி நான் பேசுவதற்கு ஒன்றுமில்லையே. நீங்கள் இட்ட பணியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக் கோள்.
வரோ: அப்படியோ ? நல்லது. நான் திரும்பி வராவிட்டால் இனிது வாழவேண்டும்.

இறுதி மூச்சு 43
வள்: ஐயோ! அப்படி ஒன்றும் நடவாது. நீங்கள் கட் டாயம் திரும்பி வருவீர்கள். யாழ்ப்பாணம் போனுல் எனக்காக ஒரு உதவி செய்வீர்களோ ? கீரிமலையில் குமாரத்தி பள்ளத்தில் என் பெற்றேர், உடன்பிறந்தோர் வாழ்கின்றனர். நான் நற்சுக முடையேன் என்று என் தந்தைக்குத் தெரிவிப்பீர். அத்துடன் நீங்கள் யார் என்பதையுஞ் சொல்லலாம்.
வரோ தவருமற் சொல்வேன். நான் யார் என்பதைப் பின்னர் சொல்லலாம்.
(அப்பொழுது வள்ளுவன் வைரவன் உள்ளே வருகின்றன். வள்ளி யம்மை ஒரு மூக்லயில் ஒதுங்கப் பார்க்கின்றர்.)
வைர : அவர் சொல்லாவிட்டால் நான் சொல்லுவேன். நானும் யாழ்ப்பாணம்தான் போகப்போகின்றேன். எல்லா அலுவல்களையும் முடிவாகப் பேசிக்கொண்டுதான் வருவேன்.
வரோ : ஏன் வைரவனுரே! ஐயனர் கோயில் மடைக்கு முரசு வாசிக்கிறதில்லையோ ?
வைர இதென்ன கேள்வி? ஐயனரின் மடையிலே இந்த வைரவனின் முரசு கலகலத்துப் பேசும்.
வரோ : அப்படியானுல் * கற்பூரம் கொழுத்த முன்னர் சன்னதமாடாதே ’ என நான் சொல்லவும் வேண்டுமோ ?
வைர என் துரையே இங்கு இந்த மெல்லிய பூங் கொடி உங்கள் ஆதரவிற்காக ஊசலாடுகின்றது. உங்கள் உள்ளத்தையும் நான் அறிவேன். வீணுக ஒருவரை ஒருவர் வாட்டி வதைக்காதீர். மாசு மறுவில்லாத இந்த மாணிக்கத்தை நினைத்தால் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து குதிக்கலாம்.
வரோ : அப்போது நான், என் பணி .
வைர மன்னர் பெருமான் கூட உங்களிருவரையும் கவ னித்து வருகின்றர். அதோ அந்தத் தாமரைக்குளப் பக்கம்

Page 29
44 இறுதி மூச்சு
போய்ச் சிறிது இருவரும் பேசிவிட்டு வாருங்கள். மெல்லிய
பூங்காற்று அங்கு வீசுகின்றது. (இருவரும் அமைதியாக அவ்விடத்தை விட்டுப் போகின்றனர்.)
இளமைக்காகவே கடவுள் மனிதனைப் படைக்கின் ருர், இளமையில் உள்ள நல்ல அனுபவம் முதுமையைப் பொலி வுறச் செய்யும். காதலின்றி வாழ்பவர் நாதமிழந்த முரசு போன்றவர்.
( அப்பொழுது பரராசசேகரன் உள்ளே வந்து தன் கைத் தடியினலே வைரவனத் தட்ட அவன் திடுக்கிடுகின்ருன்.)
பர : வைரவனரே! நீ சொல்வது முற்றிலும் உண்மை. காதலின்றி வாழ்பவர் நாதமிழந்த முரசு போன்றவர்.
வைர : ( வணங்கிவிட்டு ) உண்மை; மன்னர் பெருமானே! உண்மை.
பர : அது சரி. வரோதயசிங்கம் இப்பொழுது சரியாக உண்பதுமில்லை; உடுப்பதுமில்லை; உறங்குவதுமில்லை.
வைர : அதற்குக் காரணம் உண்டு. அன்பை ஏற்பதோ விடுவதோ என்பதுதான் அவரின் உள்ளத்தில் கிகழும் போராட்டத்தின் சாரம். அதைவிட எங்கள் நாட்டு விடுத% ப் போராட்டம் ஒருபுறம்.
ԱՄ : யார்? வள்ளியம்மையைத்தானே குறிப்பிடுகின் ருய்?
வைர: ஆமாம், மன்னர் பெருமானே. அவரே தான்.
பர: நல்லது. நாமே எல்லா அலுவலையும் கவனிப்போம்.
வைர மன்னர்பெருமான் அரசு கட்டில் ஏறிய பின்னரே எல்லாவற்றையும் பார்க்கலாம் என முதலியார் நோன் பு பூண்டுள்ளார்.

இறுதி மூச்சு 45
பர : பாவம். கடமைக்காகக் காதலைப் பலியிடலாமோ?
உட்ல : (உள்ளே வந்துகொண்டு ) அந்தப் பாவம் உங்களுக் குத்தான். வள்ளியம்மா படும் வேதனையை இனி என்னுற் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
வைர இனி அவர் வேதனைப்படமாட்டார். துன் பத்தின் பின் இன்பம்; இருட்டின் பின் நிலவு.
உல; அப்படியோ? நல்லது. உண்மை அன்பிற்கு அழி வில்லை. மாசு மறுவற்ற அன்பு வெற்றியடையும். ஏன் வள்ளுவ ஞரே! அதனை முரசறைந்து சொல்லமாட்டீரோ?
வைர சொல்லத்தானிருக்கின்றேன். நல்லூரிலே மன்னர் பெருமானே அரசு கட்டில் ஏற்றிய பின்னர் வரோதய சிங்க முதலி யாரின் திருமணம் நிகழும். யானே முதுகிலிருந்து நான் தான் மாநகரிற்குத் திருமண அறிவித்தல் கொடுப்பேன்.
s
ஒ
制

Page 30
dis 'd' VII
[ அதே குடிசை. கள்ளிரவுவேளை, வள்ளியம்மை சிவலிங்கத்தின் முன்பு வந்து குத்து விளக்கேற்றி நின்று வணங்குகின் ருர், வரோதய சிங்கம் பின்புறமாக வந்து மரக்கிளை ஒன்றை எறிகின் ருர். )
வள் : (திடுக்கிட்டுக்கொண்டு) யாரிது? ஐயோ! ஆய்ச்சி தாயே!
வரோ (சிரித்துவிட்டு) குமாரத்தி பள்ளத்தாக்கிலிருக்கின்ற ஆய்ச்சி இங்கு எப்படி வரமுடியும் ?
வள் : யார்? நீங்களோ ? கெஞ்சு வலித்துவிட்டது. காட்டு மிருகமோ, கள்வரோ என்று நான் ஏங்கிவிட்டேன்.
வரோ : ஏன் ? இந்த நள்ளிரவில் இங்கு வந்த காரணம்
என்ன ?
வள் : தீக்கனு ஒன்று கண்டேன். திடுக்கிட்டெழுந்தேன். எம்பெருமானேக் கும்பிடலாம் என எண்ணி இப்பொழுதுதான் இங்கு வந்தேன்.
வரோ : எம்பெருமானப் பார்த்து என்ன தான் வேண்டிக் கொண்டீர்கள் ?
வள் : என் அன்பிற்குரியவருக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்று எண்ணமுன்னர் இங்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்.
வரோ : ஒரு நாளிகைக்கு முன்னர் எழும்பினேன். சொல் லாமல் பேசாமல் யாழ்ப்பாணத்திற்கு ஒடிப்போகலாம் என்ருல் உள்ளம் இடம் கொடாதாம். பேசாமல் இங்கு மரவேரிலே இருந்தேன். காரிருளேப் பிளந்துகொண்டு விளக்கின் ஒளி வந்தது. எம்பெருமான்தான் உங்களை இங்கு வருவித்தார். விளக்கின் ஒளியிலே சந்திரமண்டலம் போன்ற உங்கள் முகத் தைக் கண்டேன்; களிப்படைந்தேன்; துள்ளிப் பாய்ந்து வந் தேன்.

இறுதி மூச்சு 47
வள் : என்ன இரவோடு இரவாகப் புறப்பட்டு விட்டீர் களோ ? ஏன் மன்னர் பெருமானுக்குச் சொல்லவில்லையோ ?
வரோ : (சிரித்துவிட்டு) எனக்கு மன்னர் பெருமான் நீங்கள் தான். போகமுன்னர் உங்களைப் பார்த்தால் என உள்ளம் துடித்தது. நேற்று உங்களைக் கண்டு என் முத்துமாலேயைத் தந்தேன். அப்போது அதனைச் சொல்ல வாயெடுத்தேன். ஏதோ என் உள்ளத்தை அழுத்தியது. தொண்டை வரண்டது. சொல்ல முடியாமற் போய்விட்டது. பேசாமல் ஓட முயற்சித்தேன் ; அதுவும் முடியவில்லை.
வள் கெட்ட கனவு காணச்செய்து நித்திரையிலிருந்து எம்பெருமான்தான் என்னே எழுப்பி விட்டார்.
வரோ: வள்ளியம்மா ! என் அன்பான அன்பே ! இது தான் எமது இறுதிச் சந்திப்பாக இருந்தால்.
வள் : (வரோதய சிங்கத்தின் காலில் விழுந்து அழுது கொண்டு) ஐயோ! அப்படிச் சொல்லாதீர். சட்டகர் தப் பெருமான் எம் மைக் கைவிடமாட்டார். நான் பிறந்து வளர்ந்து இதுவரை காலமும் எவ்விதமான தீமையையும் எவருக்கும் கனவிலும் செய்ய நினைக்கவில்லே. பின்னர் எனக்கு ஏன் கேடு வரும் ?
வரோ : என் ஆருயிரே ! நாமிருவரும் இந்தப் பிறவியிலே சந்திக்காமலிருந்தால்,
வள் : அது எப்படி முடியும் ? ஆண்டவன் விருப்பப்படி எல்லாம் கடக்கும். நீங்கள்தான் என் வாழ்வின் இருளேப் போக்கிய துரண்டாமணி விளக்கு. கனிர் என்று மணிடோ ல உங்கள் வாயிலிருந்து பிறக்கும் குரலைக் கேட்கக் கோடி புண் னியம் செய்திருக்கவேண்டும்.
வரோ என் அன்பே ! என் ஆவி பிரிய நேர்ந்தாலும் என் இறுதி மூச்சுக்கூட வள்ளியம்மா என்றுதான் ஒலிக்கும். கான் போய்வரலாமோ ?

Page 31
48 இறுதி மூச்சு
வள் : இருங்கள். இதோ ! இந்தச் சிவலிங்கத்தில் உள்ள சந்தணத்திலிருந்து ஒரு பொட்டு. (சந்தணத்தை எடுத்து வரோதய சிங்கத்திற்குப் பொட்டிடுகின்றர்.)
வரோ : என் கண்மணியே! ஏன் கை நடுங்குகின்றது?
வள் அளவுகடத்த இன்பம்தான் காரணம். உங்களிடம் பேச்சுக் கொடுத்தால் கன்னத்தில் அறைந்து போடுவீர்கள் என்று நான் பயந்த காலமும் உண்டு. இப்போது உரிமையுடன் பொட்டிட்டு ஆண்டவனத் தொழுது வழியனுப்புகின்றேன். எல்லாம் சிவன் செயல். எம் செயலால் ஒன்றும் ஆகாது. ஆண்டவனின் பெருமையை எடுத்தியம்பவும் முடியுமோ ?
வரோ : நான் சரியாகப் பத்து நாட்களில் வருவேன். வராவிட்டால் நான் தான் மன்னர் பெருமானின் உடைவாளே யும், மோதிரத்தையும் எடுத்ததாக அவரிடம் சொல்லவும்.
வள் : நீங்கள் கட்டாயம் வருவீர்கள். நான் சொல்ல வேண்டிய தேவையும் வராது.
வரோ இதோ ! என் அன்பின் அடையாளம். ( தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்கின் ருர்,) என் வாழ்வைக் குளிரச் செய்த கற்பகமே ! நான் . நான் . திரும்பி வராவிட்டால்.
வள்: கட்டாயம் வருவீர்கள். வரும் வழியைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். என் உடல் இங்கே, உயிர் அங்கே இந்தப் பத்து நாளும் நான் தோன்பிருப்பேன். நீங்கள் வரத் தவறினுல் கணப்பொழுதும் உயிர் வாழேன். இது சத்தியம்.
வரோ: நானும் தோன் பிருப்பேன். போய்வரலாமோ ?
வள் : போய் வாருங்கள். மருதடியிற் பிள்ளையாரே! நீர் தான் துணை ஐயா !
女

đ) TL'ớ° VIII
! அதே குடிசை. பரராசசேகரன் கோபத்துடன் அங்கும் இங்கும் உலா வுகின் ருர், அவரின் கோபத்திற்கு இலக்கான வைரவன் அடிபட்ட நாப்போல் ஒதுங்குகின்ருன் :)
பர மட்டி . மடையன். ஏமாற்றுக்காரன். அவன் உனக்குச் சொல்லாமல் எங்கும் ஒடியிருக்கமாட்டான். உள்ள தைச் சொல். இன்று வருவான், நாளை வருவான் என்று காத் திருந்தது போதும். அவன் போய்ச் சரியாகப் பதின் நான்கு நாட்களாகிவிட்டன. என் வாளும் மோதிரமும் அவனிடந்தான் சிக்கிக்கொண்டன.
வைர மன்னர் பெருமானே! அவர் உயிருடன் இருக் தால் எப். டியென்ருலும் இங்கு விரைந்தோடி வந்துவிடுவார். யானே, சிறுத்தை, கரடி நிறைந்த இக் காட்டில் அவருக்கு ஏதாவது 5டக் திருந்தால்...
பர நன்றிகெட்ட நயவஞ்சகக்காரன். அவனே யானே கொன்றிருந்தால் நான் அந்த யானைக்குக் கரும்பு கொடுப்பேன்.
( அப்பொழுது எதிர்நாயகமுதலி இசிலாமியன்போல மாறுவேடம் பூண்டு கொண்டு உள்ளே வருகின்றர்.)
எதி : எல்லோருக்கும் ஆண்டவன் அருள் கிட்டும். சலா மிடுகின்றேன் சாயுபு.
பர (மாலுமிவேடத்தில் வந்துள்ள எதிர் நாயகத்தைப் பார்த்துவிட்டு) இதென்ன மாறுவேடம்? நேர்மையற்ற உங்கள் உள்ளம் நேரத் திற்கு நேரம் மாறுவதுபோல உங்கள் உடையும் மாறுகின்றது. உள்ளத்தின் அழகு உடையிலே தெரியும். போ வெளியே. என் கண் முன் நில்லாதே. நன்றிகெட்ட நயவஞ்சகளிலும் பார்க்க எட்டிக்காய் நல்லது.
எதி : மன்னர் பெருமானே ! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே. நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள் ?
ך

Page 32
50 இறுதி முச்சு
பர: செய்வது இராசத் துரோகம். அதற்குப் பின்னர் ஒரு விளக்கம். ஏன் உன் நண்பனைக் கேள். (வைரவனக் காட்டுகின் ருர்.) இராசா திராச இராச மார்த்தாண்ட அதிஉக்கிர சங்கிலி மன் னனின் கண்ணியமிக்க பிரசித்தகாரனைக் கேள். இங்கே வந்து கபட நாடகம் நடிக்காதே.
வைர மன்னர்பெருமான் . அதாவது . மன்னர் தயங்கு கின்றன்.)
பர இருவரும் இங்கு நில்லாதீர். நச்சு மரத்திற் பட்டு வீசும் காற்றும் நஞ்சைத்தான் உமிழும். போ, இந்த இடத்தை விட்டுப் போ. இருவரும் போகின்றனர். அப்பொழுது உலகுடை நாயகியும் வள்ளியம்மையும் வருகின்றனர்.)
உல: அடி பருத்து முடி சிறுத்துள்ள வாகை மரத்தில் ஆண்டவனேக் காணும் அரசரேறு இப்படியும் கோபம் கொள்ள லாமோ? ஆறுவது சினம்.
பர : பெண்டிரை மந்திராலோசனை நடக்கும் இடத்துக்குள் விடப்படாது.
உல: எங்களுக்கு மந்திராலோசனையைப் பற்றித் தெரி யாது. ஆனல், சாதாரண ஆலோசனை சொல்லுவோம். ஆத் திரப்படுபவரின் புத்தியிலும் பார்க்கப் பெண் புத்தி நல்லது.
பர எங்கே! இந்த வள்ளியம்மையை வரச்சொல். (வள்ளி யம்மை இரண்டு அடியெடுத்து வைத்து முன்னுக்கு வருகின் ரூர்.) வள்ளி யம்மை ! உள்ளதைச் சொல். எங்கே வரோதயசிங்கன் ? சொல்.
வள்: (விக்கிக்கொண்டு) எங்கோ போய்விட்டார். எனக்குத் தெரியாது. விரைவில் வருவார்.
உல: அதற்கு ஏன் இப்படிச் சீறுகின்றீர்கள் ?
பர இங்கே நடக்கின்ற இராசத் துரோகத்தைப் பார்த்து இன்பமாக இருக்கச்சொல்கின்றயோ ? எல்லாம் உங்களுடைய தொல்லேதான். யாழ்ப்பாண இராச்சியம் எனக்காக ஏங்கு கின்றது; தவிக்கின்றது; துடிக்கின்றது என்று நீங்கள்தானே

இறுதி மூச்சு 5
தூபம்போட்டது. செய்கன்றி மறந்தவர் மத்தியில் இருப்பதிலும் பார்க்கக் காவியை உடுத்துக்கொண்டு துறவியாக ஓடிவிடலாம்.
எதி : (தன் தொப்பிபைக் கழற்றிக்கொண்டு உள்ளே வந்து நான் ஒரே ஒரு சொல் பேச உத்தரவு கொடுக்கவேண்டும்.
பர: பேசித் தொலை.
எதி : வரோதய சிங்கமுதலியார் யாழ்ப்பாணப்பகுதியிலே மாறுவேடத்தில் திரிந்து ஊர்ஊராக உங்களுக்கு உதவி தேடு கின்றர். உறங்கிக் கிடக்கின்ற மக்களேத் தட்டி எழுப்புகின்ருர், ஆபத்தான வேலை என்றபடியால் சொல்லாமற் பேசாமல் ஓடி விட்டார். அதற்கு எங்கள் அந்தணர் அருணுசலம் சான்று பகர்வர்.
எதி : அந்தணர் அருணுசலம் இங்கு இருக்தால் உடனே அழைத்துவா,
அரு (உள்ளே வந்துகொண்டு) வரோதயசிங்க முதலியார் மாறுவேடத்தில் ஊர் சுற்றித் திரிகின்றனர். உங்களுடைய உடை வாளேயும் மோதிரத்தையும் மக்களுக்குக் காட்டிச் சத்தியம் பெறு கின் ருர், மக்களும் மனமுவந்து உங்களுக்கு விசுவாசமாக இருப்பதாகச் சத்தியஞ் செய்கின்றனர். இனி நீங்கள் போய் இறங்கவேண்டியதுதான். (தலையைத் தடவுகின் ருர்)
பர நல்லது. பின்னர் ஏன் தயங்குகின்றீர்.
அரு சட்டநாதர் கோயிலில் மடை வைத்தோம். மடைக் குப் படையல் செய்த இளநீர், திருநீறு, சந்தனம் இதோ.
(பொட்டலத்தை அவிழ்த்து எடுத்து வைக்கின்ருர், எல்லோரும் ‘சிவ சிவ? என்று சொல்லித் திருநீற்றை எடுத்துப் பூசுகின்றனர்.)
திரை

Page 33
களம் III
காட்சி
(யாழ்ப்பாணத்துப் போர்த்துக்கேயரின் தற்காலிக முகாம். போர்த்துக் கேயப் படைத் தலேவன் பிலிப்பு தி ஒலிவீரோ பெருஞ் சினத்துடன் நிற்கின் ருன். மைக்கல் உருவிய வாளுடன் வருகின்றன். )
ஒலி எங்கே நீங்கள் பிடித்த அந்தப் பிராமணனை இப் படிக் கொண்டுவரலாம்.
மை : பிலிப்பு, மனுவல் . கொண்டுவாருங்கள் அந்தப் பிராமணனை.
(பிலிப்பும் மனுவலும் வாள் முனையால் இடித்துத் தள்ள அக்தனர் அரு ரூசலம் ஒலிவீரோவின் முன்பாக வந்துவிடுகின் ருர்.)
ஒலி : (நகைத்துவிட்டு) என்ன, அந்தணர் திலகமே! வந்த தும் வராததுமாக எனக்கு வணக்கம் தெரிவிக்கின்றீரே ! ஒய், எழுந்து கில்லும் காணும்.
அரு: {எழுந்து வணங்கிவிட்டு) நல்லது. மகாபிரபு அப்படியே.
ஒலி : என்ன காணும் எப்படி? உங்களுடைய அதிவீர அதிமார்த்தாண்ட அதிகெம்பீர பரராசசேகர மன்னர் பெருமான் எங்கு இருக்கின்ருர் ?
அரு : உண்மையைச் சொல்லுகின்றேன். எனக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது மகா பிரபு.
ஒலி : எங்கே, உனது கெஞ்சிலிருக்கின்ற அந்தக் கயிற் றைப் பிடித்துக்கொண்டு ஆஃணயிடு. (பூநூலேக் காட்டுகின்றன்.
制 ぜ物@: (தயக்கத்துடன் முப்புரி நூலைப் பிடித்துக்கொண்டு 15டுக்கத் துடன்) எனக்கு ஒன்றுமே தெரியாது.
ஒலி ; நீ போகலாம் போ.

இறுதி மூச்சு 53
அரு : உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும். {போகின் ருர்.)
ஒலி : (போகின்ற அருணுசலத்தைக் கூப்பிடுகின் ருர்) ஒய் பிரா மணு! பிராமணு மட்டி வா இங்கே,
மைக் ஒய் பிராமனு, பிராம.ணு.
அரு (திரும்பி வந்துகொண்டு ) வணக்கம் ஐயா, கூப்பிட்டீர் களோ? இதோ வந்திட்டேன். (வணங்குகின் ருர், )
ஒலி: ஆமாம். கூப்பிட்டேன். உங்களைப் பார்க்க எனக் குப் பெரும் ஆவலாக இருக்கின்றது. (நகைக்கின் ருர், அது சரி, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? --
三W@: இரண்டு பிள்ளைகள், பிரபு,
ஒலி : எத்தனை பெண்? எத்தனை ஆண்?
அரு இரண்டும் ஆண். பிரபு !
ஒலி ; வேறு பிள்ளைகள் இல்லே யோ ?
அரு : இல்லைப் பிரபு,
ஒலி. அதோ எட்டிப் பார். (இரு சிறுவர் சங்கிலியாற் பிணக்கப் பட்டு இருக்கின்றனர். அவரை மனுவல் உள்ளே இழுத்துக்கொண்டு வரு கின் ருன்.)
۔ اور
அரு : (எட்டிப் பார்த்துவிட்டு) ஐயோ! என் செல்வமே. நல்லூரானே! நான் என்ன செய்ய?
ஒலி நல்லூரான் இங்கு வரமாட்டான். நாம்தான் இருக் கின்ருேம்.
அரு: ஐயா ! என் இரு கண்மணிகளையும் இங்கு சங்கி லியிற் பூட்டி வைத்திருக்கின்றீர்கள். ஐயோ ! உங்கள் காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்கின்றேன். என்னைப் பிடித்துச் சிறையி லிடுங்கள்; சித்திரவதை செய்யுங்கள்; கொலை செய்யுங்கள், என்

Page 34
54 இறுதி முச்சு
செல்வங்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பீர். (நிலத்தில் விழுந்து கதறி அழுகின் ருர், பிள்ளைகளும் பலமாக அழுகின்றர்கள்.)
ஒலி பிள்ளைகளை நேற்று உன் வீட்டிலிருந்து நான்தான் பிடிப்பித்தேன். அவர்கள் இங்கு இருக்கட்டும். நீ போய் வீட்டி லிரு. உனக்கு இந்த நாட்டிலே பெரிய செல்வாக்கு இருந்த தாகக் கேள்வி. எனவே பரராசசேகரனுடனே, அவனுடைய ஆதரவாளர்களுடனே எந்த விதமான தொடர்பும் உனக்கு இருக்கப்படாது. அப்படி இருந்தால் உன் பிள்ளைகளே இப் பிறப்பிலே காண மாட்டாய். சரி போ. ஒலிவீரோ சொன்னுற் சொன்னதுதான். தெரியுமோ? போ என்ருல் போ, ஏன் நிற்கின்ருப்?
அரு : மகாபிரபு. நான். வந்து
ஒலி ; நீ வரவேண்டாம். போ. நல்லாக நடிக்கின்ருய். மைக்கல் இவனைப் பிடித்துத் தள்ளு. (மைக்கல் தள்ளிவிட அருணு சலம் வந்து விழுகின் ருர், பிள்ளைகள் "ஒ?வென்று அழுகின்றனர். ஒலிவீரோ முன்னே செல்ல ஏனைய போர்த்துக்கேய வீரர் பிள்ளைகளே இழுத்துக்கொண்டு போகின்றனர்.)
அரு: { விழுந்து கிடக்துகொண்டு ) பாவிகளே! உங்களை ஆண் டவன் கேட்பான். முருகனே ! உன் கோயில் வாயிலில் கின்று மணியடித்து உன்னைச் சேவித்த பிஞ்சுக்கையில் சங்கிலி பிணிக் கப்பட்டுள்ளதே. ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளுக்குச் சரி. பறங்கிப்படையை ஆண்டவன் கேட்காமல் விடமாட்டான்.

đồT Lóf II
| காலம் நள்ளிரவு. போர்த்துக்கேயரின் முகாமிற்கு முன்னுல் உள்ள வீதி, துறவிபோன்ற மாறுவேடம் பூண்ட வள்ளியம்மை சோர்ந்து வாடிவதங்கி அவ்வழி கடந்து வருகின்ருர்.)
சந்திரனே ஏழையேன் முகத்தைப் பாராய் தந்திரமாய்ப் பேசியவர் ஒருவர் என்னை அந்தரத்தே கைவிட்டுப் போனர் அன்னர் சுந்தரமா முகமென்று காண்பேன் ஐயா. (பிராமணன் போல மாறுவேடம் பூண்ட வரோதய சிங்கத்தின்மீது வள்ளி பம்மை வந்து மோதிக்கொள்கின்றர்.)
வரோ : (மோகிய வள்ளியம்1ை பைக் கையிலே பிடித்துக்கொண்டு) யாரது? உள்ளதைச் சொல். இல்லாவிட்டால் இந்த வாளுக்கு இரையாகி விடுவாய்,
வள் : (குரலே மாற்றிக்கொண்டு) களவெடுத்த வாள் கூராகத் தான் இருக்கவேண்டும்.
வரோ : என்ன கேலிப் பேச்சுப் பேசுகின் ருய்? ( வாளே ஓங்குகின் ருன்.)
வள் : (உண்மையான குரலில் ) சற்றுப் பொறுங்கள். உள் ளத்திலே உங்களுக்கு முரட்டுக் குணம் அதிகம். கூர்மை இல் லாத முளையும் கூர்மையான வாளும் ஒன்று சேர்ந்தால் அது தான் பேராபத்து. தப்பித் தவறி என்னைக் கொன்ருலும் கொன்றுபோடுவீர். அழுது கொண்டு உங்கள் கையாலே இறப் பதற்கு முற்பிறவியிலே கொடுத்துவைக்க வேண்டும்.
வரோ: ஐயோ! வள்ளியம்மா ! என் ஆருயிரே ! ஏன் இங்கு வந்தாய் ? எப்படியம்மா வந்தாய்? வா விரைந்து, ஒடிப் போவோம். இங்கு நிற்பது ஆபத்து, கொடும்புலியின் குகையை ஒத்த பறங்கிக் கோட்டை அதோ.
வள் என் அன்பான அன்பன் முன் நான் நின் ருல் எனக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது.

Page 35
56 இறுதி முச்சு
வரோ: உரத்துப் பேசாதே கண்மணி. ஏன் வன்னியி லிருந்து ஓடிவந்தாய்? மன்னர் பெருமானுக்கு என்ன கடந்தது?
வள் : எல்லோரும் சுகமாகத்தா னிருக்கின்றனர். நீங்கள் கபடன், துரோகி, நயவஞ்சகன் என மன்னர் பெருமான் ஏசி னர். அந்த ஆத்திரத்திலே சொல்லாமற் பேசாமல் புறப்பட்டு விட்டேன். உங்களைத் தேடித்தேடி அடர்ந்த காட்டில் அஃலங் தேன்.
வரோ : நல்ல அலுவல் செய்தாய். இப்பொழுது நான் என்ன செய்யலாம்? என் வல்லிக்கொடிக்கு யார் ஆதரவு தரு வார்? பெண் புத்தி பின்புத்தி என்பது சரியாகிவிட்டதே.
வள் : எனக்கு ஒன்றும் இல்லே. உங்களைக் கண்டதே போதும். நான் கீரிமலைக்குப் போய் அப்பு ஆய்ச்சியோடு இருப் பேன். இதற்கு இப்படி ஏன் பதைபதைச்கின்றீர்கள்?
வரோ : எனக்கு அந்த யோசன வரவில்லையே.
வள்: ஆண் புத்தி வீண் புத்தி. இப்படிக் கையைக் கொடுங்கள். கால் நடக்கமுடியாதாம்.
வரோ : (குனிந்து வள்ளியம்மையின் காலேத் தடவிப் பார்த்துவிட்டு) கால் எல்லாம் பொங்கிவிட்டதே !
வள் : (கொண்டிக்கொண்டு) பொங்கில்ை பாலை விட்டு அரி சியைப் போடலாம். பத்து நாளிலே வருவதாகச் சொன்னவர் இருபது நாளாகியும் வராவிட்டால் கால் பொங்காமல் என்ன செய்யும் ? காட்டில் நான் கடந்து கடந்து கல்லும் முள்ளும் இடறி நான் பட்டபாடு. y
வரோ : இந்த ஒருமுறை மாத்திரம் என்னை மன்னித்து
விடு கண்ணே. இந்தப் போர் முடியட்டும். உன் நிழலே விட்டு நான் நீங்கேன்.
வள் : ( நகைத்துவிட்டு) அதுவும் வேண்டாம். அப்படி நடக் தால் ' பெண்டிலுக்கடங்கியவன் ' என்று உங்களை ஊரார்

இறுதி மூச்சு 57
கேலி செய்வர். என்னே இப்போது கீரிமலைக்குக் கூட்டிச் செல்லுங்கள்.
வரோ நல்லது. இன்னும் ஒரு நாளிகையில் என் அலுவல் எல்லாம் முடிந்துவிடும். எங்கே, இரு கண்ணே. (வள்ளியம்மை இருக்க வரோதய சிங்கம் தன் சால்வையைக் கிழித்து அவருடைய காலிலே சுற்றிக் கட்டுகின் ருர், விடிந்ததும் மருந்து போடலாம். அதோ அங்கு இடிந்த மண்டபம் ஒன்றிருக்கின்றது. நான் கூட்டிக் கொண்டுபோய் விடுவேன், சற்றுத் தங்கிநின்ருல் நான் திரும்பி வந்ததும் இருவரும் போகலாம் கீரிமலைக்கு.
வள்: நீங்கள் என் வீட்டிற்கு வந்ததும் உங்களை யார் என்று தான் அறிமுகஞ் செய்வது ?
வரோ : கான், நான்தான். அதனை நான் சொல்வேன்.
வள் : (எழுந்து கின்றுகொண்டு) இப்போது நடக்கலாம்.
வரோ : இல்லே. நான் கூட்டிக்கொண்டு போகின்றேன்.
வள்: அங்கு தனியாக நிற்க எனக்குப் பயம். இரு நாழிகை யில் வர விட்டால் உயிரை விட்டுவிடுவேன்.
வரோ: (சிரித்துவிட்டு) பத்து நாளாகக் காட்டிலே யானை, புலி, கரடிக்குப் பயப்படாமல் அலையமுடியும். இப்பொழுது ஒரு நாழிகைநேரம் இருக்க முடியாதோ ?
வள் : உங்களுக்குக் கிட்ட வந்ததும் ஏதோ செய்கின்றது. நெஞ்சிலே இனம் தெரியாத பயம். உடலிலே ஏதோ உளைச் சல். அதுதான் கான் . .
வரோ : அப்படி ஒன்றும் கடவாது. ஒரு நாழிகை தானே; பறந்தோடிவிடும். நான் பாய்ந்து வருவேன்.
வள் : இனி உங்களை நான் காணமாட்டேன் என்று என் நெஞ்சு சொல்கின்றது. என்னுடன் வந்தால் என்ன கெட்டு விடும் ?
வரோ: எம் ஒற்றர்படைத் தலைவன் செய்தி கொண்டு வருவான். அது கிடைத்தால் எமக்கு நிச்சயம் வெற்றி. யாழ்ப்
8

Page 36
5S - இறுதி முச்சு
பாணத்தரசிற்கு வெற்றி என்ருல் நான்தான் சேனதிபதி. அப் புறம் நீங்கள்... எங்கள் மகன்.
வள்: ஆசைப் பேச்சுப் பேசி என்னே ஏமாற்றப் பார்க் கின்றீர்கள். எனக்கு இந்த அரண்மனை வாழ்வு பிடிக்காது. நான் அரண்மனைக்கு வந்தது பெரும் கதை. என்னேக் கண்டு என் மைத்துனர் ஒருவர் மையல் கொண்டார். அவரிடமிருக் து என்னை என் தந்தையார் தப்புவிக்க விரும்பினுர், எங்கள் மாமாதான் மயிலிட்டி உடையார். அவரின் வீட்டிலே அப்பு என்னை அடைக்கலமாக விட்டார். எதிர்பாராத விதத்தில் மகாராணியார் என்னைக் கண்டார். கண்டு தன் தோழியாக்கி
னர்.
வரோ : எனக்குத் தாயுமில்லை, தந்தையுமில்லை. தக்தையார் போரில் இறந்தார். தாயார் நோய்வாய்ப்டடடு இறந்தார். இனி நீங்கள்தான் எனக்குத் தந்தையும் தாயும். நீங்கள்தான் என் உலகம். என் நெஞ்சம் நிறைந்தவளே !
வள்: நல்ல அழகாகப் பேசுகின்றீர்கள். என்னுடன் வரச் சொன்னுல் முடியாது என்று பிடிவாதம் பிடிக்கின்றீர். இந்த ஒருமுறை மாத்திரம் நான் சொல்வதைக் கேட்டால் என்ன குறைந்துவிடும் ?
வரோ: என் வாழ்நாள் முழுவதும் உங்கள் சொல்லைக் கேட்டு கடப்பேன். (செல்லமாக அவரின் தலையில் தட்டுகின்றர்)
வள் : எனக்குப் பிடிவாதம் பிடிக்கத் தெரியும். ஒரு நாழிகை, இல்லை ஐந்து நாழிகை முடி யமுன்னர் திரும்பி வரா விட்டால் என் உயிரை மாய்ந்துவிடுவேன். இது சத்தியம் (வரோதய சிங்கனின் கை இரண்டையும் கண்ணிலே ஒற்றுகின் ருர்) வரா விட்டால் பெண்பாவம் உங்களுக்குத்தான். பெண்பாவம் பொல்லாதது.
வரோ : நான் வந்துவிடுவேன். இது சத்தியம். வள் : (திரும்பிப் பார்த்துக்கொண்டு போகையில் ) வந்துவிடுங் கள். வழிமேல் விழி வைத்திருப்பேன். நில்லுங்கள். (போகின்ற வரோதய சிங்கனிடம் தாவி வந்து அவன் கைகளைக் கண்ணிலே ஒற்றிவிட்டு) இனி எனக்குப் பயமில்லை. நீங்கள்தான் துணை. பிள்ளையாரே! எம்மைக் காரும் ஐயா. (வள்ளியம்மை போகின்றர்.)

இறுதி முச்சு 59
வரோ : (தனிமொழி) வள்ளியம்மா ! உன் அன்பு மாசு மறுவற்றது. அதற்கு இந்த மாநிலமே ஈடாகாது. கடவுளின் அதி உன்னத படைப்புப் பெண். அந்தப் பெண்ணுள்ளே தோன்றும் அன்பு புனிதமானது. அதற்கு நிகர் எதுவும் இல்லை. அந்த அன்பைப் பெற்றவன் அமரன். காதலின்றி வாழ்பவர் நாதம் இழந்த முரசு போன்றவர் என்பது வைரவனின் கூற்று. அன்பு இன்றி வாழ்பவர் துருப்பிடித்த வாளைப் போன்றவர். (சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றர்.)
மைக்: ஆடாமல் அசையாமல் கில், இல்லாவிட்டால் எம் துப்பாக்கிக்கு இரையாகி விடுவாய். (மைக்கலும், பிலிப்பும், மனுவலும் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு மெதுவாக வருகின்றனர்.)
வரோ என் அன்பான அன்பே ! என் கெஞ்சுள் நிறைந்த தேனே ! நீ போன வழியை இந்தக் குள்ளநரிகள் மணம் பிடித் தால். இல்லே. உன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டேன். நீ போன வழியை என்ருலும் காக்கவேண்டும். இந்தக் கொடிய பாதகர் கைப்பட்டு நீ மடியலாமோ? தாமரையின் அருமையைக் குளத்துள் மேயும் எருமை அறியுமோ? நான் தானே மன்னர் பெருமானைப் போன்று உடலமைப்பில் இருக்கின்றேன். அரச முத்திரை பொறித்த வாளும் மோதிரமும் என்னிடம் இருக் கின்றன. நான் தான் அரசின் என இவர்களை ஏமாற்றில்ை, என் வள்ளியம்மா தப்பினர். மன்னர் பெருமானுக்கும் ஆறு தல் உண்டு.
மைக் கவனமாகப் போங்கள். அவன் ஏதோ விசரன்
போன்று உளறி எம்மை ஏமாற்றப் பார்க்கின்றன். அலியன் யானை போன்ற தோள்வலி இவனுக்குண்டு. மாறுவேடத்தில் நிற்கின்றன். கவனம். கவனம். (பதுங்கிப் பதுங்கி மூவரும் முன்னே வருகின்றனர்) கையை உயர்த்து; மண்டியிடு; சரணு கதியடை.
வரோ : சற்று மரியாதையாகப் பேசு. நான்தான் யாழ்ப் பாணத்தரசன் பரராசசேகரம்.
மைக் : (வியப்புடன்) ஓகோ ! அப்படியோ !
பிலி : * நல்லது, நல்லது. கரிமுகத்தில் விழித்தோம்.
மனு : ) கம்பமுடியவில்லையே!

Page 37
60 இறுதி முச்சு
வரோ : நான்தான் அரசன். இதோ அரசமுத்திரை.
(மோதிரத்தையும் வாளேயும் காட்டுகின் ருர்.)
மைக் மாறுவேடத்தில் வந்து எம்மிடம் சிக்கிக்கொண் டாய். உன்னுடன் வேறு யார் கின்ருர்கள் ? (வரோதய சிங்கன் ஒரே பாய்ச்சலாகப் பாய்க்து மைக்கலே அடித்து வீழ்த்துகின் ருர். பிலிப்பை உதைக்கின் ரூர். அந்தப் பரபரப்பில் மனுவல் தன் துப்பாக்கியிஞல் அடித்து வரோதய சிங்கனை வீழ்த்துகின்ருன்.)
மைக்: (எழுந்துகொண்டு) அடித்தால் இறந்துவிடுவான் அடிக்காதீர். கைகால மடக்கிக் கட்டுவீர். உயிரோடு கொண்டு போனுல் எமக்குச் சன்மானம் பசும் பொன் ஐம் பதிஞயிரம்.
பிலி : அப்படியே செய்வோம்.
மைக் கொம்பன் யானையைப் பிடித்துவிட்டோம். ஒடின
தேவாங்கு ஒடட்டும். (மயங்கி விழுந்த வரோதய சிங்கன மூவரும் பிடித்துக் கட்டுகின்றனர்.)

காட்சி II
(போர்த்துக்கேயரின் முகாம், கதிரை ஒன்றிலே இருத்தி வரோதய சிங் கத்தைக் கயிற்றினல்வரிக் து கட்டியிருக்கின்றனர் போர்த்துக்கேய வீரர். மைக்கல் காவலாகப் பக்கத்தில் துப்பாக்கியுடன் கிற்கின்றன். அறிவு மயங் கிய வரோதய சிங்கம் வாய் புலம்புகின் ருர்.)
வரோ : பாழடைந்த மண்டபத்தில் நிற்கும் உன் வாழ்வும் பாழாகிவிட்டது. இரண்டல்ல, மூன்றல்ல, இருபது நாழிகை யாகிப் போயின. அன்பின் பிறப்பிடமே ! நீ சொன்ன சொல் தவறமாட்டாய். இறைவனுடன் இதுவரையில் இரண்டறக் கலந்திருப்பாய். இங்கு நான் உயிரோடு இருக்கின்றேன். அன்பே இந்தத் தரித்திரத்தின் மீது உன் புனிதமான அன்பை ஏன் சொரிந்தாய் ? (சோர்ந்த தலே சரிகின்றது.)
எதிரொலி : முதலாவதாகத் தில்லையம் பலவன் காட்டும் வழி. இரண்டாவதாக அவ்வழியில் நடப்பதற்கு உங்கள் துனே. உங்களே மறப்பது இயலாத அலுவல். பெண்ணின் உள்ளம் மென்மையானது. காதலின்றி வாழ்பவர் நாதமிழந்த முரசு போன்றவர். என் அன்பிற்குரியவர்க்கு ஒரு தீங்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கமுன்னர் நீங்கள் வந்துவிட்டீர்கள். சட்டநாதப் பெருமான் எம்மைக் கைவிடமாட்டார். பெண் பாவம் பொல்லாதது. வழிமேல் விழி வைத்திருப்பேன்.
முரசின் ஒலி மென்மையாகக் கேட்கின்றது.)
வரோ : (மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு தலையைத் தூக்கி) என் வாழ்நாளில் உனக்கு உதவமுடியாமற் போய்விட்டது. என் கற்பகமே. ஒருநாள் ஒரு நொடிப்பொழுதிற்காயினும் உன்னை அன்பாக ஆறுதலாக வைத்திருக்க முடியாத தரித்திரம் நான் . உன்னைக் காக்கத் தவறிவிட்டேன். நீ போன வழியை என்று லும் காத்துவிட்டேன். நானே காத்தேன் ? இல்லை, இல் ஃ . சட்டநாதர் காத்தார். அவர்தானே தோன்ருத்துணை.
(அப்பொழுது ஒலிவீரோ பரபரப்புடன் உள்ளே வருகின் ருர். அவரைத் தொடர்ந்து பிலிப்பும் மனுவலும் வருகின்றனர்.)
மைக்: (வணக்கம் தெரிவித்துவிட்டு) இன்றுதான் அதிட்டம் எம்மை வந்தடைந்தது.

Page 38
62 இறுதி மூச்சு
ஒலி - சரியாகப் பார்த்தீர்களோ ? இவன் தான் யாழ்ப் பாணத்தரசனுே ?
மைக் ஆம், எள்ளளவேனும் ஐயப்பாடில்ஃல.
ஒலி : கிட்ட வந்து பார்த்துவிட்டு) இவன் தான். அப்பாடி! சற்று ஆறுதலாக இருக்கலாம். (வரோதய சிங்கத்தைப் பார்த்துக் கேலியாக) சொல்லாமற் பேசாமல் விருந்தாளியாக வந்தால் நாத் என்ன செய்யலாம் ? அரச மரியாதையுடன் உம்மை வர வேற்க முடியாமற் போய்விட்டது. பிணிக்கப்பட்டுள்ள கயிற்றைக் கேலியாகப் பிடித்துச் சுண்டிப் பார்த்துவிட்டு நகைக்கின் ருர்.)
வரோ : நாமும் விருந்து வைக்கத்தா னிருந்தோம். கான் இறந்துபோனுல் ஒன்றும கெட்டுவிடாது. யாழ்ப்பாணத்து மக்கள் உங்களுக்கு நல்ல விருந்து வைப்பர். காரசாரமாக இருக்கும். ஏலம், சாதிக் காய், கராமபு, கறுவா, மிளகு எல்லாம் போட்டு விரைந்து உமக்கு விருந்து. இறுதி மூச்சு உள்ள வரையும் .
ஒலி நல்லது, நாமும் அதனை உண்போம். மைக்கல் 1 மன்னர் பெருமானுக்கு மகத்தான வரவேற்பிற்கு ஒழுங்குசெய்! அவரைப் பஞ்ச கல்யாணிக் குதிரையில் வைத்துக் கட்டி ஊர்வல மாக அனுப்பு. சக்திசந்தியாக அதிவீரமார்த்தாண்டன் பொன் விலங்குடன் பவனி வரட்டும்.
வரோ : பவனி வருவோம்; வந்தகாலமும் உண்டு. என் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு நீங்கள் தலைதெறிக்க ஒடிய காலத்தை மறந்துவிடாதீர்.
ஒலி : (கோபித்துக்கொண்டு) உள்ளதைச் சொல். எத்தனே முதலிமார் உன் பக்கம் ?
வரோ : முதலிமார் அத்தனைபேரும் என் பக்கம்தான். ஏன், காட்டிக் கொடுத்த காக்கைவன்னியனுர்கூட உமது அட்ட காசத்தைக் கண்டு வெகுண்டு கழிவிரக்கப்படுவதாகக் கேள்வி. (இருமுகின்றர்.)
ஒலி ; உம் !" அரண்மனை வைத்தியரை அழைப்பிக்கலாம். அல்லது எங்கள் வைத்தியர் வரலாமோ ?

இறுதி மூச்சு 63
வரோ எனக்கு வருத்தம் ஒன்றுமில்லே. ( மேலும் பலமாக இருமிவிட்டு வாந்தி எடுக்கின் ருர், சிறிது நேரத்தில் அவரின் ஆவி பிரி கின்றது. எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிப் பரபரப்படைகின்றனர்.)
ஒலி : (குனிந்து பார்த்துவிட்டு) இறந்தவன் திரும்பி வரமாட் டான். கதிரையோடு இவன் உடலை அப்புறப்படுத்தி வையுங்கள்.
(அப்பொழுது அக்தனர் அருணுசலம் வருகின் ருர்)
அரு அதிபராக்கிரமம் நிறைந்த தேசாதிபதியைப் பார்த் துப் போகலாம் என வந்தேன்.
ஒலி வந்த காரணம் என்ன ?
அரு ஒன்று மில்லை, சும்மா..
ஒலி : யாழ்ப்பாணத்தவரின் பேச்சிலே ஒன்றுமில்லை, சும்மா என்ருல் கிறைய உண்டு என்பது கருத்து.
அரு: என்னைச் சிறைப்பிடித்து வையுங்கள். என் செல் வங்களை விடுதல செய்யுங்கள் ஐயா !
ஒலி : (நகைத்துவிட்டு) இனி எல்லோருக்கும் விடுதலே தரு வோம். மைக்கல்! கொண்டுவா அந்த உடைவாளையும் மோதி
ரத்தையும்.
மைக்: (வந்துகொண்டு) இதோ இங்கு இருக்கின்றன.
ஒலி : இவற்றை இந்தப் பிராமணனுக்குக் காட்டு.
மைக் : அப்படியே, நல்லது. (காட்டுகின்றன்.}
ஒலி : ஒய் பிராமண! நல்லாகப் பார்.
(அருணுசலம் அவற்றைப் பார்த்துவிட்டு விம்முகின் ருர்.)
மைக் ஐயர் சிறிது விம்முகின்றர். கவலை யின் எதிரொலி விம்மல்.
ஒலி : இவை யாருக்குச் சொந்தமானவை ?
அரு (விம்மிக்கொண்டு) மன்னர் பெருமானுக்கு,

Page 39
64 இறுதி முச்சு
ஒலி நல்லது, நாமும் அப்படியே முடிவுசெய்தோம். இப் பொழுது விம்முகின்றீர். அப்படி எட்டிப் பார்த்தால் அழுது புலம்புவீர். மைக்கல் ! ஐயரை அப்படி அந்தக் கதிரைக்குக் கிட்டக் கொண்டுபோ. (வரோதய சிங்கத்தின் உடன்லக் காட்டுகின் ருர்.)
மைக் உம், போய்ப்பார். (கையைக் காட்டுகின்றன்.) எட் டிப் பார். நல்லாகப் பார்.
அரு (எட்டிப் பார்த்துவிட்டு) ஐயோ! மன்னர் பெருமானே! ஐயோ! மன்னர் பெருமானே! பாராண்ட வேந்தனை நாராலே பிணைத்துவிட்டார்களே.
ஒலி : நாம் பிணைக்கவில்லை. அவர்தான் அரசுகட்டிலில் கொலுவிருக்கின்றர்.
அரு : (அழுதுகொண்டு) மன்னர் பெருமானுடன் சிறிது பேச அனுமதி தாரும் ஐயா !
ஒலி நல்லாகப் பேசு; கிட்டப் போய்ப் பேசு; நிறையப் பேசு. அவர்தான் பேசுவாரோ தெரியாது. (அந்தணர் அருணு சலம் கதிரைக்குக் கிட்டப் போய் மரியாதையாக நிற்கின் ருர்) உங்கள் மன்னர் பெருமான் பிணிப்புண்டு கிடக்கவில்லை. உலக பந்தங் களில் இருந்து தன்னைத்தானே விடுதலை செய்துகொண்டார்.
அரு : (திடுக்கிட்டுத் தரையில் இருக்து கொண்டு) ஐயோ! மன் னர் பெருமானே ! எம்மைக் கதிகலங்கவிட்டு எங்கு சென்றீர்? கண்ணே இமை காப்பதுபோலக் காத்தீரே! இனி எம்மை யார் காப்பார் ? (எழுந்து நின்று முகத்தைப் பார்த்துவிட்டுக் கடகட வென்று நகைக்கின்ருர்)
ஒலி : என்ன பிராமணரே! அழுதீர், பின்னர் சிரிக்கின்றீர்.
மைக் ஐயருக்கு மூளையில் தட்டிவிட்டதுபோலும்.
அரு: எனக்கு மூ&ளயிலே தட்டவில்லை. உங்களுக்குத் தான் தட்டிவிட்டது. இது மன்னர் பெருமான் இல்லை. இது மன்னர் பெருமானின் மெய்ப்பாதுகாவலன்.
ஒலி (துள்ளிப் பாய்ந்துகொண்டு) ஒய், கவனமாகப் பாரும்.

இறுதி முச்சு 65
அரு : கவனமாகப் பார்ப்பதற்கு என்ன இருக்கின்றது? உங்களுக்குப் பீரங்கி வெடிமருந்தைப்பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவு எனக்கு என் மன்னர் பெருமானத் தெரியும்.
ஒலி (மைக்கலேப் பார்த்து) முட்டாள் ! இந்த மெய்ப் பாது காவலனைப் பிடித்துவந்து இங்கு தம் பட்டம் தட்டுகின்ருய். எலி வேட்டைக்குத் தவிலடித்த கதை. −
அரு : அவரை ஏசா தீர். மன்னர் பெருமானும் இந்த மெய்ப் பாதுகாவலனும் உருவத்திலும் தோற்றத்திலும் கிட்டத் தட்ட ஒரேமாதிரித்தான். மஞ்சள்காயும் மாலை வெய்யிலில் நாம் கூட ஆள் அடையாளம் பிடிக்கத் தவறியது உண்டு. (மைக்கல் தலே குனிந்துகொண்டு கிற்கின்றன்.)
ஒலி பிராமணப் பயலே ! நீ வந்ததும் நல்லதாயிற்று. உங்கள் மன்னர் பெருமான இந்த இடத்திற்குக் கொண்டுவா, சண்டைக்கல்ல; சமாதானப் பேச்சிற்கு.
அரு : இந்தப் பாவிப் பிராமணனல் என்னதான் செய்ய முடியும்? இது ஏழை.
ஒலி அதிகமாகப் பேசாதே. இப்பொழுதே போ. பரராச சேகரன் தலமறைவாக வாழ்கின்றன். போர்த்துக்கேயப் பேரரசு போரை விரும்பவில்லை. சமாதானத்தை விரும்புகின் றது. உங்கள் அரசன் திறை கொடுத்து ஆளவிரும்பினுல் ஆளட் டும். அதுபற்றி உங்கள் மன்னர் பெருமானுடன் நாம் பேச விரும்புகின்ருேம். எமது நோக்கம் நல்லது. ஆனபடியால் உதவிசெய். பத்துநாள் தவணை தருகின்றேன். தவறினல் உன் பிள்ளைகளே உயிருடன் காணமாட்டாய்.
அரு : நான் ஏழை. இராச்சிய அலுவல்களில்.
ஒலி : உங்கள் அரசன் வரவேண்டும். எங்கள் சார்பிலே மைக்கல் பேசவருவார். போ, போ, போ வெளியே.
அரு : (தயக்கத்துடன் வெளியே போய்க்கொண்டு) நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? (போகின் ருர்.)
ஒலி: (மைக்கலைப் பார்த்து) அம்பினுலே சாதிக்க முடியா ததை அண்டிக் கெடுத்தலினலே சாதிப்போம்.
※

Page 40
காட்சி IV
(அதே முகாமின் வீதி, அந்தணர் அருணசலம் பொட்டலம் ஒன்றுடன் ஒற்றைக் காலிலே நிற்கின்றர்.)
அரு : இன்னும் சிறிது வேளையில் மன்னர் பெருமான் இங்கு வந்துவிடுவார். பறங்கிகளின் கிபந்தனையை அவர் ஏற் றுக் கொண்டால், கானும் வாழ்வேன்; என் குடும்பமும் வாழும்; யாழ்ப்பாணத்தரசும் வாழும். (அப்பொழுது எதிர் தாயகமும், சாதாரண உடையணிந்த பரநிருபசிங்கமும் வருகின்றனர்.)
அரு : மன்னர்பெருமானே! வாழ்க நும் தடம் தோள்.
பர : நீர் குறித்தபடி நாம் காலதாமதமின்றி வந்து விட்டோம். பறங்கித்தலேவனும் வந்துவிட்டால் எல்லாவற்றை யும் பேசி முடிக்கலாம், இரத்தஞ் சிந்தி ஆட்சிப்பிடத்தில் ஏன் அமரவேண்டும் ? என் குடிகள் படும் பாட்டை என்னுல் காணமுடியாது. இடைவிடாத போரினலே உற்ரும் உறவினரை இழந்து எம் குடிகள் பரிதவிக்கின்றனர்.
அரு: மன்னர் பெருமானே! சிற்றமுற்ற பறங்கிகள் சங்க வேலி வயல்களுக்குத் தீக்கொழுவினர். கேற்றுத்தான் இது கடந்தது. எதிர்ப்பைக் கைவிடுவோம். எதிரியுடன் சேர்ந்து கடப்போம்.
எதி: ஓய் ஐயரே! மடை பரவமுன்னர் மணியை அடிக் காதீர். பறங்கியர் வரட்டும். பேச்சு வார்த்தையைப் பார்த்துச் செய்வோம்.
அரு பறங்கியர் வரமுன்னர் இதோ பிரசாதம். (தன் பொட்டலத்தை அவிழ்த்துத் திருநீறு, சக்தனம் கொடுக்கின் ருர், இருவரும் வாங்கிப் பூசுகின்றனர். இளநீர் ஒன்றைக் கையில் எடுத்து வைத்து அங்கு மிங்கும் பார்க்கின் ருர்)
எதி : இதோ என் உடைவாள். இந்த வாளால் இள நீரைத் திறந்து மன்னர்பெருமானுக்குக் கொடுப்பீர். வழி

இறுதி மூச்சு 67
கடந்து அவர்தான் இளைத்துவிட்டார். (அருணுசலம் வாளே வாங்கி இளநீரைத் திறந்து எலுமிச்சம்பழம் ஒன்றை அரிந்து அதற்குள் பிழிந்து விடுகின் ருர்.)
பர : நாம் இங்கு வந்தது எவருக்கும் தெரியாதுதானே!
அரு : ஒருவருக்கும் தெரியாது. எனக்கும், உங்கள் இரு வருக்கும், பறங்கிப் படைத் தலைவருக்கும்தான் தெரியும்.
எதி: இதில் சதிமோசம் இருப்பதாக என் அடிமனத்தில் ஏதோ சொல்கின்றது.
அரு : ( இளநீரை மன்னரிடம் கொடுத்துக்கொண்டு ) ஒன்றும் இல்ஃல. நாம் சமாதானத்தை விரும்புவதுபோலப் பறங்கியரும் விரும்புகின்றனர். (எட்டிப் பார்த்துவிட்டு ) அதோ நிலவினிலே பறங்கியர் வெள்ளைக் கொடியைப் பிடித்துக்கொண்டு வருகின் றனர். சமாதானப் பேச்சுத்தான். சந்தேகமில்&ல. (மூவரும் எட் டிப் பார்க்கின்றனர்.)
பர: சமாதானப் பேச்சுத்தான். இன்றுதான் என் குடி களின் இன்னல் தீரும். நான் எக்கேடு கெட்டாலும் பரவா யில்லை. (மைக்கல் முன்னே வரப் பிலிப்பு வெள்ளைக் கொடியைப் பிடித் துக்கொண்டு வருகின்ருன் , அவனைத் தொடர்ந்து மனுவலும் வருகின்ருன்.)
மைக் : மன்னர் பெருமானே! சமாதானப் பேச்சு. இங்கு கழுகு வரவில்லை; மாடாப்புருத்தான் வந்துள்ளது.
பர: உங்களைக் காண்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின் ருேம்.
மைக் சரி பேச்சுவார்த்தை நடக்கட்டும். மனுவல், தோன்" பேச்சைத் தொடங்கு. (மனுவலும் பிலிப்பும் தம் உடையுள் மறைத்து வைத்திருந்த சிறு துப்பாக்கியை விரைந்து எடுத்து மீட்டுகின்றனர்.} ஆடா மல் அசையாமல் நில்லுங்கள். அணுவளவேனும் ஆடினல் அரச மரியாதையுடன் உம்மை அடுத்த உலகம் அனுப்புவோம். (அருணசலத்திடமிருந்து வாளைத் தட்டி வீழ்த்துகின்றன்.)
அரு: ஐயா! நாம் சமாதானம் பேசத்தானே இங்கு வந்தோம்.

Page 41
68 இறுதி முச்சு
எதி : ஒய் பிராமணு ! உன் சொல்லை நம்பி வந்தோம், உன் கைக்கு எழுத்தாணிதான் ஏற்றது. வாள் எதற்கு?
பர: வா யாலே பேசமாட்டார்கள். நஞ்சு தோய்ந்த செய லாலே பேசுகின்றர்கள்.
மைக்: மூவரும் கையை உயர்த்துங்கள்; மண்டியிடுங்கள். (மூவரையும் பறங்கியர் பிடித்து விலங்கை மாட்டிக் கயிற்றிாேல் கட்டிக் கொண்டு பிலிப்பு தி ஒலிவீரோவின் முன்பாக நிறுத்துகின்றன .)
ஒலி : அதி பராக்கிரமம் நிறைந்த மன்னர் பெரும்ானைக் காண்பதில் நான் மட்டில்லாத மகிழ்ச்சியடைகின்றேன்.
பர : மகிழ்ச்சியுடன் எம்மீது இகழ்ச்சியையும் கக்குகின்றீர். அதனை நாம் சிறிதும் பொருட்படுத்தமாட்டோம். உங்கள் திறமையைக் கண்டுகொள்ள இதுவும் அரியதோர் வாய்ப்பு. சமர் செய்வீர்கள் ; அது இயலாவிட்டால் சமாதான பேசு வீர்கள் ; பின்னர் சதிமோசம் செய்வீர்கள்.
ஒலி : நிதானமாகப் பேசு. இப்பொழுது மீதிமன்றத்தின் ܖ முன் நிற்கின்ருய்.
பர : நீதி மன்றம்.ஒகோ நீதி மன்றம். அநீதி புரிந்த வர்கள் வாயிலிருந்துதான் நீதியைப்பற்றிய பேச்சு 6 (ழம்பும். இன்னல் புரிந்தவர்தான் பெரும்பாலும் இரக்க பற்றிப் பேசுவார். இதுதான் உலகம்.
ஒலி : மக்களின் இயல்புபற்றி உங்களுக்குத் தெரியும், இல்லையோ ?
பர எமக்கு மக்களின் இயல்பும் தெரியும். மாக்களின் இயல்பும் தெரியும். பரதேசி மிலேச்சரின் இயல்பும் தெரியும்.
ஒலி : நீதி விசாரணை நடக்கும் இடத்திலே மரியாதை
யாகப் பேசு.
பர: மரியாதையாக உள்ளதைச் சொன்னேன். உண்மை"
தான் வாளிலும் பார்க்கக் கூரியது. உண்மை உங்கள் உள்
ளத்தை உறுத்தினுல் அதற்கு நான் என்ன செய்யலாம் ?

இறுதி மூச்சு 69
ԼlՄ : உங்கள் விசாரணையைத் தொடங்குங்கள். எனக்கு கேரமாகிவிட்டது.
ஒலி : எங்கு போகப்போகின் ருய்?
பர மண்ணை ஆண்ட வேந்தன் விண் உலகம் போகப் போகின்றன். - . . .
எதி உங்களுடைய நீதி வழங்கும் முறை எங்களுக்குத் தெரியும்.
(எதிர்நாயகத்தை மைக்கல் அடிக்கின்றன்.)
எதி : (அடியை வாங்கிக்கொண்டு பொறுமையாக) இதோ இது நல்ல தீர்ப்பு. கல்லாக நீதி வழங்குகின்றீர்கள். செங்கோன்மை என்ருல் இதுதான்.
ஒலி (மைக்கலைப் பார்த்து) சரி விசாரணை தொடங்கட்டும்.
மைக்: (பத்திரத்தை எடுத்து வாசிக்கின்றர்) யாழ்ப்பாணத்து நல்லூரைச் சேர்ந்த பரராசசிங்கம் என்பவர், எங்கள் அதி பராக் கிரமமும் அன்பும் கெம்பீரமும் நிறைந்த மாட்சிமைதங்கிய போர்த்துக்கேய மன்னர் பெருமானுக்கு எதிராகச் செய்த சூழ்ச்சி
667.
எதி சூழ்ச்சி! எம்மைச் சூழ்ச்சிசெய்து பிடிக்கவில்லையோ ? (மைக்கல் எதிர்க்ாயகத்தை மீண்டும் அடிக்கின்றன்.)
பர: சற்றுக் குழப்பர் கே. நீதி விசாரணை நடக்கின்றது. ஒலிவிரோவைப்பார்த்து) மன்னிக்கவேண்டும். அவன் மடையன். எதனையோ அநியாயமாக உளறுகின்றன். நீங்கள் உங்கள் வழக்கைத் தொடர்ந்து கூறுங்கள்.
மைக்: முதலாவதாகப் ப்ோர்த்துக்கேய மன்னர் பெருமா னின் தளபதிக்குக் கீழ்ப்படிய மறுத்தது. இரண்டாவதாக அவ

Page 42
70 இறுதி மூச்சு
ருக்கு எதிராகக் கலகக்காரரை கிழப்பிவிட்டது. மூன்ருவதாக இந்த 5ாட்டின் முறையான அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்தது.
ஒலி : (கெம்பீரமாக) இதற்கு என்ன சொல்லுகின்ருய்? பர : நான் சொல்வதற்கு என்னதான் இருக்கின்றது?
ஒலி : வழக்கை விசாரணை செய்த பின்னரே தீர்ப்புச் சொல்வோம்.
பர: எனக்கு எதிராக வழக்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை. நான் என் கடமையைச் செய்தேன். அதில் ஏதாவது குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, முதலாவது குற் , றச் சாட்டு, போர்த்துக்கேய மன்னர் பெருமானின் தளபதிக்குக் கீழ்ப்படிய மறுத்தது. என்னேப் பொறுத்தவரையில் போர்த்துக் கேயத் தளபதி அத்துமீறி எம் நாட்டிலே புகுந்தான். அத்து மீறி வருபவனுக்கு அடிபணிவது எங்கள் அரசர் பரம்பரையிலே கிடையாது. இரண்டாவது குற்றச்சாட்டு, அவருக்கு எதிராக கலகக்காரரைக் கிளப்பிவிட்டது. எங்கள் நாட்டிலே கலகக்காரர் இல்லை. இன விடுதலைப் போராட்ட வீரர்கள் தான் இருக்கின் ருர்கள். எங்கள் பொன்னை பூமிக்குள் எவரையும் காலெடுத்து வைக்க விடமாட்டோம். முன்ருவதாக, முறையான அரசாங்கத் தைக் கவிழ்க்க முயற்சி செய்தது. நீங்கள் இக்த நாட்டிலே புகுவதற்கு எந்த முறையைக் கையாண்டீர்கள்? நீங்கள் இங்கு வந்த காலம் தொடக்கம் இற்றைவரையும் முறைதவறி நடந்தீர் கள். இப்பொழுது நான் குற்றவாளியாக இங்கு நிற்கின்றேன். குற்றவாளியாக இருக்க வேண்டியவர்கள் நீங்கள். காலம் மாறிப் போய்விட்டது. அவ்வளவுதான். ஆனபடியால் அடிபணிய மறுக்கின்ருேம். அநீதியை எதிர்க்கின் ருேம். அன்னியரை விரட்ட முயற்சிக்கின் ருேம்.
ஒலி : மன்னிப்புக் கேட்டால் கருணை காட்டுவோம்.
பர: மன்ருடி மரியாதை கெட்டு வாழ விரும்போம்.

இறுதி முச்சு 71
ஒலி : மரண தண்டனை விதிக்கப்படும்.
பர மரணதண்டனே கிடைத்தாலும் மதிகெட்டு நடக்க மாட்டோம். நீங்கள் தண்டனையை வழங்கலாம்.
ஒலி ; உன் மணிமுடி எங்கே? சொல்.
பர என்னேப் பொறுத்தவரையில் நான் பொன் னுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மண்ணிலே தான் பொன்னும் தோன்றும் , மண்ணிலேதான் மனிதனும் தோன்றுகின்ருன்.
ஒலி : முடியட்டும் உன் மலட்டு வேதாந்தம். சரி, வழக்கு முடிந்துவிட்டது. இவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட் டுள்ளது.
பர நல்லது, ஒரு வேண்டுகோள் .
ஒலி : இப்பொழுதாவது மன்னிப்புக் கேட்டால் மரண தண்டனையை நீக்கிவிடுவோம்.
பர: நீங்கள் பிழையாக விளங்கிவிட்டீர்கள். மன்னர் பெருமான் சங்கிலியை நாடு கடத்திச் சென்று நீதியின் பெய ரால் கொலைசெய்தீர்கள். ஆணுல், இங்கேயே வைத்து என் தலையைக் கொய்யுங்கள். என் தலைகூட யாழ்ப்பாணத்து மண்
லேதான் உருளவேண்டும். எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் தலைக்காவது கிடைக்கட்டும்.
எதி : எனக்கும் ஒரு வேண்டுகோள். மன்னர் பெருமா னின் வெற்றுடலேப் புதைப்பீர்கள். அவருடைய கால்மாட் டிலே தான் என்னேயும் புதையுங்கள்.
(அப்பொழுது முரசொலி பலமாகக் கேட்கின் Tது.)
மைக் ஐயோ ! இது தமிழரின் போர்ப் பறையோ ? காடுங்கள் ஆயுதத்தை.
(பரபரப்புடன் எல்லோரும் துப்பாக்கியை எடுக்கின் நனர்.)

Page 43
72 இறுதி மூச்சு
வைரவனின் குரல் : (மறைவில்) ஆதலால், தொல்குடி மக் களே ! கேளுங்கள்! கெட்ட பறங்கிச்சாதி மோசஞ் செய்து எங்கள் மன்னர் பெருமானப் பிடித்துவிட்டது. ஆதலால் விரைந்தெழுங்கள், வீரரே ! போர்க்களம் உம்மை மகிழ்ந்து வரவழைக்கின்றது.
மைக் இது இந்தச் சுதேசி நாய். சுடுங்கள். (போர்த்துக்கேய வீரன் பிலிப்பு சுட வள்ளுவன் வைரவன் பேர்து முர சுடன் விழுகின்றன்.)
ஒலி: எங்கே, வள்ளுவரே ! முரசறையும்.
வைர ( மார்பிலே ஏற்பட்ட காயத்தைப் பொத்திக்கொண்டு ' முரசறையத்தான் போகின்றேன். அதனை உங்கள் துப்பாக்கி வேட்டுச் சற்றுக் குழப்பிவிட்டது. (ஒரு கையாலே முரசை அறைந்து கொண்டு) உடலில் ஒரு துளி இரத்தம் இருக்கும்வரையும் போராடுங்கள். விரோதியை விரட்டுங்கள். இறுதி மூச்சுள்ள வரையும் போரிடுங்கள் . இறுதி . மூ . ச்சு . உள்ள . வரை . வரை . தாய் காட்டை .
(திரை)
முற்றும்.


Page 44


Page 45
= F---"-" (gy, I3T - JF-F-F- بنا =============== سیمیایی