கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாதும் ஊரே: ஒரு யாத்திரை

Page 1


Page 2

யாதும் ஊரே ஒரு யாத்திரை
அம்பி
Mithra Arts & Creations bvt. Ltd. s
சென்னை 0 சிட்னி 9 மட்டக்களப்பு

Page 3
))itbnta ਡ
issN 1876626925
Apart from any fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the publishers.
Mithra Publication books are published by Dr Pon Anura
Production Editor
Espo i
YATHUM OORIAE I ORU YATHRA
By
AMB
Thoughts on Recent Migrations of Thamils)
Mithra Books First Edition 16 December 2002
Layout M.Sridharan
- Made in India by Mithra Book Makers
س) \ //
Marc Ars Card Grecio
1/23 MUNRO STREET 375/8-0ARCOT ROAD EASWOOD 222 AUSTRAA 30. WANNAH STREET CHENINA 600 024 ENDA
Ph: (02) 9868 2567 BATTICALOA (EP) Ph: (o44) 372 3 182 c-mail: www.anuragmatra.com.au SRI LANKA e-mail: www.mithraamd4.com.in
Fax: (02) 9868 4205 Fax: 009-44-472336
மித்ர - 75 முதற் பதிப்பு : டிசம்பர் 2002
பக்கங்கள் : 224
 
 
 
 
 
 
 

பதிப்புரை
அப்பா காரணமாக, இலக்கியச் சூழலிலே வளரும் ஒரு வசதி எனக்கு வாய்ப்பதாயிற்று. இதன் காரணமாக ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் பலர் எனக்கு "மாமா' உறவு முறையாயினர். அவர்களுள் இன்றும் அந்த உறவினைப் பாலித்து வாழ்பவர் ‘அம்பி மாமா' இவர் கவிஞர் அம்பி என்று பிறரால் அறியப்படுபவர்.
ஈழத்தமிழரின் படைப்புப் பங்களிப்பாக கவிஞர் அம்பியின் குழந்தைப் பாடல்கள் காலத்தை எதிர்த்து நின்று நிலைக்கும். இத்துறையில் கவிஞர் அம்பி ஈழத்தின் தலைமைக் கவிஞர். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு இணையான வராய் மதிக்கப்படுகின்றார். ‘அம்பிப்பாடல்’, ‘கொஞ்சம் தமிழ்’, ‘அம்பி மழலை', 'பாலர் பைந்தமிழ்' ஆகிய அவரு டைய படைப்புகள் பலவும், அவருடைய கவிதா ஆற்றல் களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் நேசிப்புக்கும் சான்று பகரும். இவை அனைத்தும் ஒரே தொகுதியாக, ஒரு செம்பதிப்பாக, வெளிவருதல் வேண்டும் என்பது என் ஆசை. இது நிறைவேறக் காலம் இன்னமும் கனியவில்லைப் போலும், அம்பி மாமா எல்லோருக்கும் இனியவர். வித்துவச் செருக்குப் பாராட்டாதவர். ஞானத்தை எல்லோருடனும் பங்கிடும் இயல்பினர். புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார் தமது மொழியையும், கலாசார விழுமியங்களையும் நேசித்து முன்னெடுத்துச் செல்லுதல் வேண்டும் என்பதின் தீவிர அக்கறையாளர்; ஆராதனையாளர். அவுஸ்ரேலியத் தமிழ்ச் சிறார் தமிழ் கற்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ் பாட நூல்களின் தலைமைப் படைப்பாளி அவர் என்பதை நான் அறிவேன்.
நன்றி மறவாமை என்பது அம்பி மாமா கடைப் பிடிக்கும் இன்னொரு அற்புதமான பண்பாகும். யாழ்பாணம்

Page 4
2ானிப்பாய் கிறீன் மருத்துவமனையை அறியாதார் யார்? அதனை நிறுவிய Dr. Samuel Fisk Green 6TsirSO/Lo SyGuofflé கரே, மேலத்தேயம் போற்றும் விஞ்ஞானத்தையும், மருத்து வத்தையும் தமிழ்மொழி மூலம் கற்பித்தல் சாத்தியம் என்பதை நிறுவிய தீர்க்கதரிசியும் முன்னோடியும் ஆவர். அவருடைய சேவைகள் கனவாய், பழங்கதையாய் மறக்கப்பட்ட ஒரு காலத்திலே, 1967இல், "கிறீனின் அடிச்சுவடு என்கிற நூலை எழுதி வெளியிட்டு, அவருடைய நினைவுகளை மீட்டெடுத் தார். அவருடைய சேவைகளிலே ஈழத்தமிழருடைய கவனங் So ஈர்க்கச் செய்தார். கிறீனின் பங்களிப்பினை கெளரவிக்கும் முகமாக, அவர் நினைவு முத்திரை ஒன்றினை இலங்கை அரசு வெளியிடுதல் பண்பான செயல் என்று அம்பி மாமா முன்மொழிந்து வாதாடினார். இந்தக் Gastrfieosaoud Garup G65 Green Commemorative Committee ஒன்றினை உலகளாவியதாக உருவாக்கினார். அதிலே என்னையும் உறுப்பினராய் மகிமைப்படுத்தினார். அம்பி மாமாவின் அயராத உழைப்பினால், 1998 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 11 ஆம் நாளன்று இலங்கை அரசு கிறீனின் தபாற் தலையை வெளியிட்டது. அம்பி மாமாவின் தமிழ் அக்கறையும் நேசிப்பும் சாதிகள் கடந்தன; மதங்கள் கடந்தன; நாட்டு எல்லைகள் கடந்தன. அன்று தொட்டு இன்றுவரை அவருடைய தமிழ் ஊழியம் இதனை நிறுவும்.
அம்பி மாமாவின் உலகளாவிய தமிழ் நேசிப்பினதும் ஆராதனையினதும் இன்னொரு வடிவமே “யாதும் ஊரே ஒரு யாத்திரை’ என்னும் இந்நூல். இந்தியா, ஈழம், மலேசியா சிங்கப்பூர் உட்பட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் அன்பர்கள் வாங்கிப் பயனுறும் வகையில் இதனை மித்ரவின் வெளியீடாகப் பிரசுரிப்பதில் மகிழ்கின்றேன்.
/23 Munro Street பொன். அநுர
Eastwood 2122 Australia @:(02)98682567

அமரன் எஸ்.தி. அகிலன்
ஈழத் தமிழர்தம் உரிமைக் குரலென நாளும் ஆர்த்த அம் முரசொலி அடங்கின் போர்க்கொடி ஏந்திய பொடியள் மசிவரென்று தூர்மதி வாணர் துணிந்த அந்நாளில் முரசம் அறைந்த முனைவர் எஸ்தி யின் சிரசு தம் குறியெனத் தீர்த்தனர் வேட்டு
ஆனால்.
மைந்தன் அகிலன் தன் மார்பிலே ஏற்றதால்
தந்தை தப்பினன்
தனயன். அந்தோ
தந்தைக்காய் உதிர்ந்த இளந்தளிர் அகிலன் அடிகளில்
இந்நூன் மலர்
சமர்ப்பணம்

Page 5

அம்பி பொருத்தமானவர்
சிழத் தமிழர்கள் தங்கள் பிறந்த நாட்டில், தங்கள் சொந்த மண்ணில், தாங்கள் தவழ்ந்து வளர்ந்த வீட்டில் வாழ வழியின்றி வேருடன் பிடுங்கப்பட்ட மரங்களாகத் தமிழர்கள் சமுத் திரங்கள் தாண்டிப் பல்லாயிரக்கணக்கான மைல் களுக்கு அப்பால் தங்கள் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்க நேர்ந்தது வரலாறாகிவிட்டது.
ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்க்கையையும் வர லாற்றினையும் எழுத்தில் வடிக்கத் தவறியதால், ‘இவர்கள் யார்? எப்போது இலங்கைக்கு வந்தனர்?’ என்னும் கேள்விகள் தற்போது எழுப்பத் தொடங்கி யுள்ளனர். இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த பெரியார்களுள் முதன்மை பெற்ற மூத்த தமிழரான சேர் பொன் இராமநாதன் அவர்களைத் தேரில் அமர்த்தி வடம் பிடித்து இழுத்து நன்றி சொன்ன சிங்களப் பரம்பரையில் வந்தவர்கள், தற்போது எம்மைப் பார்த்து, ‘தமிழர்களுக்கு இலங்கையில் இடமில்லை’ என்று கூறத் துணிந் துள்ளனர்.

Page 6
எமது வரலாறு சரியாக எழுதப்படாது தவற விடப்பட்டதே இதற்குக் காரணம். இந்தத் தவறினை நாம் தொடர்ந்தும் விடவேண்டுமா? ஏழு லட்சம் ஈழத் தமிழர்கள் தற்போது மேற்குலக நாடுகளில் வசிப்பதாகத் கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுள் தொண்ணுாறு சதவீதமானவர்கள் அகதிகள் என்பது உண்மையான உண்மை. முந்தி வந்த சிலருக்கு இது கசப்பான பிரகடனம். இந்த உண்மையை ஏதாவது ஒரு வகையில் பதிந்து வைக்க வேண்டியது நிகழ் காலத்தாரின் வரலாற்றுக் கடமை.
கடந்த வருடம் (1998) தமிழர் தகவல் வருடாந்த விழாவில் தமிழ்ப் பணிக்கான விருதினைப் பெறுவ தற்காகக் கனடாவுக்கு வருகை தந்த கவிஞர் அம்பி அவர்கள், விழாவில் ஆற்றிய உரையின் அடி நாதம் மேற்கூறிய கருத்தினை வலியுறுத்துவதாக இருந்தது. ‘தமிழர் தகவல்’ ஆண்டு மலரில் அவர் எழுதிய சிறப்புக் கட்டுரையும் அதற்கு அடியெடுத்துக் கொடுத் தது. ஆதலால், இவ்வாறான ஒரு நூலினை இப்போது எழுதுவதற்கு கவிஞர் அம்பி அவர்களே பொருத்த மானவர் என்ற துணிபு நெஞ்சுள் விதை யானது.
இவ்வரிய பணிக்காகத் தமிழ் கூறும் நல்லுலகு என்றும் இவருக்கு உயிர்ப்புடன் நன்றி கூறும். அம்பி அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து உயர்ந்த தமிழ்ப் பணி புரிந்திட, நெஞ்சம் விரிந்த மகிழ்ச்சி வாழ்த் துகள்!
திரு எஸ். திருச்செல்வம்

*விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ?” என்ற பாரதியாரின் வேதனைக் குரலுடன் நூல் விரிகின்றது. இந்த விதி பற்றி அம்பி அவர்கள் பல காலமாகவே சிந்தனை செய்து நொந்த மனத்தவராய் உலக வலம் வந்திருப் பதைப் பலரும் அறிவர். அவரது சொற்பொழிவு களில் தமிழ்ச் சாதியின் தலைவிதி தலைதூக்காமல் இருப்பதில்லை. 1998 ஆண்டு கனடாவில் ‘தமிழர் தகவல்’ விருதினை ஏற்றுப் பதிலுரை நிகழ்த்து கையிலும் 'விதியே விதியே’ என்றுதான் தமது பேச்சைத் தொடங்கினார். பாரதியாரின் பாடல் அடிகள் அம்பியின் உள்ளத்தை நெடுங்காலமாக நோகவைத்துக் கொண்டிருக்கும் நூற்பொருளுக்கு மிகப் பொருத்தமான ‘கடப்பு’ ஆக அமைகின்றது.
"ஈழத் தமிழர் உலகளாவிய ஈழத் தமிழராகியது ஏன்? அந்நிலை எப்படி உருவாகியது? அவர்களின் எதிர்காலம் என்ன? பெயர்ந்த மக்களின் நிலைபற்றி உணர்ச்சிநிலைச் சிந்தனையை அடக்கி, உண்மை நிலைச் சிந்தனையுடன் ஆராய்தலும் சிந்திக்க வைத்தலுமே குறிக்கோள்.'
"கடப்பு’ என்ற சொற்றெரிவும் சிந்திக்கத்

Page 7
தக்கது. ஈழத்தமிழர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தி லேயே தமது பண்பாடுகளையும் சம்பிரதாயங் களையும் கடக்கத் தொடங்கிவிட்டார்கள். சொந்த வீட்டுக் கடப்பைக் கடந்து அடுத்தவர் வீட்டுக்குக் கூடத் தமது பிள்ளைகளைச் செல்ல விடாது கட்டுப்பாட்டோடு வளர்த்த தமிழ்ச்சாதி, இன்று தமது குழந்தை குட்டிகளைச் சொந்த நாட்டைக் கடந்து வேற்று நாடுகளுக்கு அனுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பன போன்ற கருத்துக்களை உள்ளடக்கி நிற்கின்றது தலைப்பு.
மேலும், இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்கள் ஈழத்தமிழர் வரலாறு பற்றின. தமிழர் ஆட்சி வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக ஈழத்தில் நிலவியதை எடுத்துக்காட்டி, தமிழர் வரலாறு எவ்விதம் திரிக்கப்பட்டது என்பதனை இரண்டாவது அத்தியா யமும் தமிழர் இறைமை ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த முறையையும் அந்த இறைமை 1972ம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றியதன் p GULD பறிபோனமையையும் மூன்றாவது அத்தியாயமும் விளக்குகின்றன.
இந்த இடத்தில் குப்பைக் கோழி நினைவுக்கு வருகின்றது. ஈழத்தமிழர் சரித்திரக் குப்பையை அவ்வப்போது பல ஆய்வுக் கோழிகள் கிண்டிக் கிளறிப் பல பருக்கைகளை எடுத்திருக்கின்றன. அந்தப் பருக்கைகளை மேலும் கழுவித் துடைத்து ஒழுங்காக உண்ண வைத்திருக்கின்றார் அம்பி. சரியோ பிழையோ, இதுதான் எங்கள் வரலாறு என்று இவர்போல இதுவரை எவரும் அடித்துச் சொல்லவில்லை.

இதுவரை ஈழத்தமிழரின் புலப்பெயர்வுக்கான காரணங்களை எடுத்து விளக்கியவர், அவர்களின் பெயர்வு, மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள், புதிய வாழ்வு, மாறி வரும் புறக் கோலங்கள் முதலாய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டத்துடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகின்றார்; ஆராய்கின்றார்.
அவ்வித ஆய்வுக்குப் பலவிதமான உதார ணங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றார். பல அனுபவம் சார்ந்தவை. சில கற்பனையானவை என்று ஒப்புக் கொள்ளும் நேர்மைத் திறத்தையும் காண்கின்றோம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது உண்மைதான். அதற்காக 'மனிதன் நாயைக் கடித்தான்’ என்னும் பரபரப்பான பத்திரிகைச் செய்தியை வைத்துக் கொண்டு அதுவே மனித இயல்பு என்று எவரும் முடிவு கட்டி விடுவதில்லை. ஆனால் நாம் வாழும் புதிய பல் கலாசாரச் சூழலில் எம்மைப் பற்றி நன்கு அறியா தவர்கள் அப்படி முடிவு செய்தற்கும் இடம் உண்டு என்று எச்சரிக்கின்றார் அம்பி. ஏன்? இதோ அவரே சொல்கிறார்:
“லண்டனில் ரயில் பயணத்தில் தமிழ் இளைஞன் ஒருவனைச் சந்தித்த "காப்பிலி’ இளைஞன் ஒருவன் மிக நட்புறவுடன் பழகினான். ரயில் நிற்கும் சமயம் தமிழ் இளைஞன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கி லியை இழுத்து அறுத்துக் கொண்டு பாய்ந்து சென்றான். அதன்பின் அந்த இளைஞன் குடும்பத்தவர், "கவனம், காப்பிலிகளை நம்பாதே’ என்று எனக்குக்

Page 8
கூறினர். "தனி ஒருவனின் செயல் ஒரு சமூகத்தின் விம்பத்தை எப்படி மாற்றியது என்பதை நான் உணர முடிந்தது."
இது கறுப்பு இனத்தவரைப் பற்றிய தமிழர் அபிப்பிராயம். இங்கு கனடாவில், தமிழரைப் பற்றிப் பிற இனத்தவர்கள் தவறான அபிப்பிராயங்களை வளர்க்கும் அளவுக்கு ஒருசில தமிழர்கள் பொறுப் பற்ற முறையில் நடப்பதும் அதனையே பொதுவான தமிழர் இயல்பு என்பதுபோலக் காட்டும்வகையில் பத்திரிகைகள் செய்தி போடுவதும் ஏற்கனவே நடந் துள்ள சங்கதிகள். அதனால், "நாம் சென்றடைந்த சூழலில் தொழில் பெறவும் சரி, சேர்ந்து வாழவும் சரி, சமூகத்தில் ஒன்றுதற்கும் சரி, இந்த ‘நம்பிக் கையானவர் என்ற விம்பம்’ அவசியமாகும். முதல் அபிப்பிராயமும் விம்பமும் தவறானதாகக் கூடாது. தனி நபர்களால் ஈழத்திலிருந்து வந்த ‘தமிழரின்’ விம்பம் பாதிக்கப்படக்கூடாது. இந்தப் புனிதமான கடமையைச் செய்ய முயலுதல் எதிர்காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, உறுதியான ஊன்று கோலாகச் சமுதாயத்துக்கு உதவும்” என்ற அம்பியின் கூற்று எம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றது.
கவிஞர் அம்பியின் உள்ளம் களங்கமற்றது. களங்க மற்றவர் வாழ்த்துக் காலாதிகாலமாகப் பலிக்க வல்லது.
வி. கந்தவனம்

என்னுரை
"புலம் பெயர்ந்த தமிழினத்தின் நேற்று - இன்று - நாளை பற்றி நீங்கள் எழுதத் திட்டமிட்டுள்ள நூலை, அகிலனின் பத்தாவது நினைவு வெளியீடாக வெளி யிட்டு மனநிறைவு பெற விரும்புகிறேன்” என்று நண்பன் எஸ்தி கூறிய வேளை, யானும் உடன்பட்டேன். அப்பத்தாவதாண்டு நினைவு வெளியீடு உலகளாவிய தமிழர் என வெளியிடப்பட்டது.
உலகின் பல்வேறு திசைகளிலும் சிதறுண்டுள்ள ஈழத் தமிழர் பற்றிய எண்ணங்கள், பல ஆண்டுகளாக என் மனசிற் சுமையாகி அழுத்தின. மனசில் பழுவாகி அழுத்தும் சுமைகளை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் ஓரளவு இறக்கி வைக்கலாம் என்பது உளவியல் வல்லுனர் கருத்து. அவ்வண் சுமையிறக்கும் முயற்சியே இந்நூலாகியது.
உலகளாவிய தமிழர் என்ற ஒரு சமுதாயம் உருவாகுவதற்குக் காரணிகளாக அமைந்த வரலாற்றுப் பின்னணி என்ன? ஈழத்தமிழர் இறைமை சூறையாடப் பட்ட பாங்கென்ன? ஈழத்தமிழர் எவ்வாறெல்லாம் உரிமைக்குரல் எழுப்பினர்? அக்குரல் ஒலிகளை அடக்கு வதற்கு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக, பேரின வாத அரசுகள் எடுத்த - நேர்மையற்ற, மனித தர்மற்ற - நடவடிக்கைகள் எவை? இவை போன்ற வினாக்களுக்கு ஒரளவு விடைதேட முயல்வது, ஒரு நோக்கம். அதே வேளை, அன்னிய நாடுகளில் ஏதிலிகள் என எறியப்

Page 9
பட்டு அல்லற்பட்டு ஆற்றாது அழுந்தும் தமிழ் மக்களின் சம காலப் பிரச்சனைகள் என்ன ? விதந்துரைக்கப்படும் மாற்றுவழிகள் என்ன? உள்ளத்து உணர்வுகள் என்ன? நாளைய எதிர்காலம் என்ன? இப்படியான சில வினாக்களை எழுப்பி, சமகாலச் சிந்தனைகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியும் இன்னொரு குறிக்கோள்.
அன்று யானை எப்படிப்பட்டது என வர்ணித்த குருடர்களின் நிலையே என்னுடைய நிலையும். அகப் பட்ட தகவல்களே எனது மூலவளம், என் பார்வைக்கு எட்டிய தகவல்களே இந்நூலுக்குக் கால்கோல்கள். ஆக, இதுதான் நிலை என்றோ, இது தவிர்த்த நிலையும் கருத்தும் நோக்கும் இல்லையென்றோ நான் நிலை நிறுத்த முனையவில்லை. ஏனென்றால் எனக்கிருந்த எல்லைப்பாடுகள் பல. ஈழத்தமிழர் அகதிகளாகச் சென்றடைந்த நாடுகள் சிலவற்றுக்கு நான் செல்ல வில்லை. ஆனால் அந்நாடுகளின் எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் பத்திரிகை, சஞ்சிகை காலத்துக்குக் காலம் வெளிவந்த மலர்கள் போன்றவை எனக்கு ஆதாரங் களாக அமைந்தன. எனவே, உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்ட எனக்கு உண்மை நிலைத் தகவல்களே கொழு கொம்பாகின.
நினைவு வெளியீடாக நண்பர்களுக்கு மட்டும் இலவசமாக விநியோகிக்கப்பட்ட நூல் பற்றிய கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியூட்டின.
சபாஷ் இன்று தேவைப்படும் நூல். அருமையான முயற்சி’ என்று ஈழத்திலிருந்து எழுதினார் என் உறவினரும் ஊரவருமான உருவகக்கதை முன்னோடி சு.வே.
“உங்கள் நூலை எஸ்தி தந்தார். மிகச் சுவையான தகவல்கள். சில பகுதிகளை எங்கள் மேகம் சஞ்சிகையில்

பிரசுரஞ்செய்ய உத்தரவு தாருங்கள்’ என, லண்டனில் இருந்து தொலைபேசியில் கேட்டார். நண்பர், மேகம் நிர்வாகி, டாக்டர் இந்திரகுமார். அவ்வண் பிரசுரஞ் செய்த பிரதிகளையும் அனுப்பிவைத்தார்.
முன்னோடி முயற்சி. எதிர்காலத்துக்கு உதவும் பதிவேடு’ என்றார் எழுத்தாளர் மெல்பன் நண்பர் லெ. முருகபூபதி. இப்படிப் பலர்! நினைவு வெளி யீட்டுப் பிரதி ஒன்று தாருங்கள்’ என்று கேட்ட பலருக்கு என்னால் உதவ முடியாமல் இருந்தது. இந்நிலையில் -
புலம்பெயர் இலக்கியத்துறை முன்னோடியும் ஆர்வலருமான ‘மித்ர எஸ்.பொ” இந்நூலின் அக்கறை கள் தமிழ் நேசர்கள் சகலரையும் சென்றடைதல் வேண்டும் என்றார். அத்துடன் புதிய தகவல்கள் சில சேர்க்கப்படுதல் வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். இவற்றை உள்வர்ங்கியும், புதுக்கியும் 'யாதும் ஊரே : ஒரு யாத்திரை’ உங்கள் கரங்களை அடைகின்றது. என் கருத்துகளின் முதலாவது பகிரங்கப் பிரசித்தமாக இந்நூல் அமைகின்றது.
நான் வரலாற்று மாணவன் அல்லன். அறிவியல், கவிதைத் துறை மாணவன். ஆனால், எஸ்.பொ என்றுமே வரலாற்று மாணவன். அவர் இந்நூலிலே நான் தெரிவித்துள்ள கருத்துக்கள் பல ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும் என்று தீவிர அக்கறை காட்டுதல் எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. என் பெரும்பேறுமாகும்.
7/40-42, Empress Street அம்பி
Hurstville, NSW 2220 Australia

Page 10
உள்ளுறை
<il
. வரலாற்றுத் திரிப்புகள் . ஈழத் தமிழர் இறைமை
இணைப்பின் பின். வசதி தேடிய புலப்பெயர்வுகள் ஒற்றை ஆட்சியில்.
. பெயர்வு - மாற்றம் - தொடர்ச்சி . முன்னோடிகளின் அடிச்சுவடு
புதிய சூழலும் புகுபவர் விம்பமும் . பொதுநலப்படியும் புது வாழ்வும் 11.
12.
3.
14.
15. 16.
சூழலும் கயமும் காட்சிகளும் கருத்துக்களும் தமிழர் தனித்தும் அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தல் மொரிசியஸ் த்மிழர் psivuorgsflur? எங்கிருந்தாலும் வாழ்க!
17
28
42
54
62
72
8.
96
106
127
137
161
169
183
199
28

1. கடப்பு
"விதியே விதியே தமிழச் சாதியை என்செய் நினைத்தாய் எனக்குரை யாயோ?”
பிறந்த நாடாகிய ஈழத்தில் வாழ்ந்து அல்லற் படும் தமிழ் மக்கள் பற்றியோ உலகளாவிய ஈழத் தமிழர் பற்றியோ சிந்திக்கும் பொழுது, ‘தமிழ்ச் சாதி’ என்ற தமது கவிதையிலே பாரதியார் எழுப்பிய இவ்வினா மிகப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. கடப்பைக் கடந்து உள்ளே செல்வதற்கு முன்பு, இப் பாடல் அடிகளைத் தரும்போது சற்றுச் சந்தேகம் எழுகின்றதா? ‘அச்சமில்லை, அச்சமில்லை; இச்செகத்து உள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சம் என்பது இல்லை’ என்று துணிவுக் குரல் எழுப்பிய அதே பாரதியார், விதியை விழித்து இப்படி ஒரு வினா எழுப்பினாரா என்று மூக்கின்மீது விரலை வைக்கத் தோன்றுகின்றதா?
ஆம்; ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பாரதியார் அப்படி ஒரு வினாவை எழுப்பினார். ஏன்?
unr-1 ካ7

Page 11
-- Φ -9 ιδιΦ --
அஃது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம். இந்தியா, இலங்கை போன்ற குடியேற்ற நாடுகளில் - குறிப்பாக இந்தியாவில் - தமிழ்ச் சமுதாயம் மாறி வந்த பாங்கையும், கூலித் தொழிலுக்காக இந்தியாவிலிருந்து குடி பெயர்க்கப்பட்ட மக்கள் அனுபவித்த இன்னல் களையும், அவர்தம் ஒலங்களையும் சித்தரித்த பாரதியார், தமது மனவேதனையை வெளிக்கொணர்ந்து, மக்களை வழிப்படுத்தப் பயன்படுத்திய ஓர் உத்தியே, விதியை விழித்து வினா எழுப்பிக் கருத்துக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகும்.
அவ்வாறெனின், அவர்தம் மனசை அலசிய வேதனைகள் என்ன? இந்தியாவிலிருந்து குடிபெயர்க்கப் பட்ட மக்கள் அனுபவித்த இன்னல்கள் என்ன? இந்தியத் தமிழ்ச் சமுதாயம் மாறிவந்த பாங்கு என்ன? அவற்றுள்ளே சிலவற்றை ஆராய்வோம். அவற்றுள்ளே பாரதியாரின் நெஞ்சை அழுத்தியது என்ன கோலம் என்பதையும் தெளிந்து கொள்வோம்.
பாரதியார் காட்டுங் காட்சிகளுள் ஒன்று இது:
"ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை அடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய
5sp& Firs----- இவ்வாறு, தமிழ்ச் சாதியினர் பல்வேறு நாடு களுக்குச் சென்று அல்லற்படுங் கோலத்தை வர்ணிக் கிறார். தமிழ்நாட்டிலிருந்து பெருந்தொகை மக்கள் கூலித் தொழிலுக்காக தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ்,
18

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பீஜி, இலங்கை போன்ற அன்னிய நாடுகளுக்கு ஆங்கிலேயரால் குடிபெயர்க்கப் பட்டிருக்கலாம். அந்நிலை கண்டு அவர் வருந்தினார். அவர்கள் அனுபவங்களை வர்ணித்தார்.
"தமிழச் சாதி, தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரிந்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதந் நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்----- 咒 இத்தனை இன்னற் காட்சிகளையும் சொல்லோ வியமாகக் காட்டிய பாரதியார், இன்று ஈழத்திலே வாழும் தமிழச் சாதி அனுபவிக்கும் துன்பங்களையும் அல்லவா அன்றே எழுதி வைத்தார். உலகளாவிய ஈழத் தமிழர்களுக்கும் இவற்றுட் 6) கோலங்களும் ஒலங்களும் பொருந்தும் அல்லவா?
இந்தக் கோலங்களைக் காட்டிய பாரதியார், உடனடியாகவே நம்பிக்கை ஒளிவிளக்கையும் தூண்டி விடுகிறார். எப்படி?
"இஃதெலாங் கேட்டும் எனதுளம் அழிந்திலேன் தெய்வம் மறவார் செயுங்கடன் பிழையார் ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும் இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்." இவ்வண்ணம் தமது நம்பிக்கையையும் அதிகான காரணத்தையுந் தெளிவுபடுத்துகிதெரி அக்க்விதையில்,
19

Page 12
-- Φ -9ιδιΦ «Φ-
என்ன துன்பம் வந்தபோதும் நேர்வழி நின்று நெறிமுறை ஒழுகின் இன்னலை வெல்லலாம், இன்பம் பெறலாம் என்ற நம்பிக்கை என் மனதில் வேரூன்றி இருக்கின்றது என அழுத்திக் கூறுகின்றார்.
அப்படியாயின், பாரதியாரின் சலனத்துக்குக் காரணம் யாது? அது பற்றி என்ன கூறுகின்றார்? இதோ பாடலடிகள்:
"இந் நாள் எமது தமிழ்நாட் டிடையே அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்." ஆமாம். அறிவுத் தலைமை எமது தலைமை என்று இரு சாரார் கூறுகின்றார்கள். அவர்கள் மக்களை இருதலைக் கொள்ளி ஆக்குகிறார்கள். அதனால் மக்கள் சலனமடைந்தும் பிளவுபட்டுச் சக்தி இழந்தும் துன்புறப் போகின்றனர் என்பதே பாரதியாரின் வேதனை.
கடந்த அரை நூற்றண்டுக்கு முன் இத்தகைய இருவகைத் தலைமைப் பீடங்கள் ஈழத் தமிழினத்தை இருதலைக் கொள்ளியாக்கி, இன்று விளைவை அறுவடை செய்கிறோம், அது அரசியல் துறையிலே. ஆனால், பாரதியார் இன்னொரு துறையில் ஏற்பட்ட இருவகைத் தலைமை பற்றியே இங்கு விவரிக்கின்றார். அவற்றுள் ஒருவகைத் தலைமை கூறுவதென்ன?
"மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினுஞ் சிறந்தன ஆதலின் அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் தமிழச் சாதி தரணிமீ திராது-----魏
20

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
இது ஒரு சாரார் வாதம். புதியன கண்டபோது, விடுவரோ புதுமை விரும்பிகள்? வெள்ளையர் வருகை யால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றம் பற்றியது. இந்தத் தாக்கம். நாட்டில் குடிவந்த வெள்ளையரின் நடை, உடை, பாவனைகளை மக்கள் பின்பற்றத் தொடங்கி யதும், சமூகப் பிளவு ஒன்று தோன்றுவது இயல்பே.
வேட்டி சால்வை அணிந்து, தலையலங்காரத்தில் குடுமி வகைகள் கட்டிய தமிழர், காற் சட்டை, கோட் அணிந்து, சிகையலங்காரமுஞ் செய்திருப்பர். அப்படி ஒரு மாற்றம் இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திலும் ஏற்பட்டது என்பதற்கு சான்றுண்டு.
அக்காலத்திலே தமிழ் மக்கள் எப்படித் தோற்றம் அளித்தார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கு படம் ஒன்றுள்ளது.
21

Page 13
மானிப்பாய் மருத்துவக் கல்லூரியிலே மேனாட்டு மருத்துவம் பயின்று 'டாக்டர்’கள் ஆகியோர் இவர்கள்! அன்றைய முடி அலங்காரங்கள் எத்தனை, உடை வகை எத்தனை என்பதைப் படம் தெளிவு படுத்துகிறது. டாக்டர் கிறீனின் மாணவர்கள், அவர் கண்முன்னேயே மாறினார்கள். தன்னிடம் பயின்ற மாணவர்களின் கோலம் மாறி நடை, உடை, பாவனை மாறத் தொடங்கியதை அவர் அவதானித்தார். உடைகள் மாறிய பாங்கினைப் பற்றி 1864 இல் பின்வருமாறு விவரித்து, அது பற்றிய தமது கருத்தையும் கூறினார்.
“இங்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும் - இவ்வாறே பிறவும் எதிர்காலத்தில் மாறிவரும் போலத் தோன்றுகிறது. இந்துக்கள் ஐரோப்பிய சால்பினர் ஆவதிலும் பார்க்க, கிறித்தவ இந்துக்களையே நான் காண விரும்புகிறேன்.” இந்த மாற்றத்தை டாக்டர் கிறீன் தொடர்ந்து அவதானித்திருக்க இடமுண்டு. யாழ்ப்பாண மக்களுடன் தாமும் ஒருவராக, தமிழ் மொழியிற் பேசி உறவாடியவர் என்பதை மறந்துவிடக் கூடாது.
1847இல் யாழ்ப்பாணம் வந்த அவர், 1848இலே மானிப்பாயில் மருத்துவ நிலையம் நிறுவி மிஷன் வைத்தியராகப் பணிபுரியத் தொடங்கினார். அதே வேளை, ஆங்கில மொழி மூலம் மருத்துவங் கற்பிக்கவும்
22

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
முயற்சி எடுத்தார். அவரிடம் மருத்துவம் பயிலத் தொடங்கிய தமிழ் மாணவருள் முதற் குழுவினரின் படம், முதலில் அவர்கள் அணிந்த உடைகளையும் தலைமுடிக் கோலத்தையும் காட்டுகின்றது.
காலப் போக்கில், ஏற்பட்டு வந்த மாற்றங்களை அவர் தெளிவாக அவதானித்த பின்பு தான், தனது மனக் கருத்தை அமெரிக்காவிலே வாழ்ந்த தனது சோதரருக்கு முன்பு குறிப்பிட்டவாறு எழுதினார். வேட்டி, சால்வை, தலைப்பாகை, குடுமி அணிந்த தமிழர் காற்சட்டை, மேற்சட்டை, தொப்பி அணிதல் தேசியத்தை இழப்பது போன்று அவருக்குத் தோன்றியது. மருத்துவக் கல்வியறிவு தமிழ் மொழியிற் பரவ வேண்டும், வளர வேண்டும் என்று கருதி, அதற்கான முன்னோடி முயற்சிகளை அன்று மேற்கொண்டு, கலைச் சொல்லாக்கி, தரமான மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து, மேலை நாட்டு மருத்துவத்தை 1860களில்ே தமிழிற் கற்பித்த அந்த அமெரிக்க மிஷன் மருத்துவ ஊழியர், தமிழ் மக்கள் தேசியம் இழந்து வருவதைக் கண்டு மனம் வருந்தியதில் வியப்பில்லை. தமிழ் மக்கள் தேசியத்தை இழக்கக் கூடாது என்று கருதியது புதுமையல்ல.
டாக்டர் கிறீன் அவதானித்தது 1850, 1860களில் ஏற்பட்ட மாற்றம். பாரதி விவரித்த நிலைமை 19001910களிற் கண்ட கோலம். 1850-1900இற்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்தல் சாலும். ஆயினும் தமிழர் வேர் அறவில்லை. சமூகம் பெயரவில்லை.
23

Page 14
-----eν εφ, ιδι9 ε
சுருக்கமாக, ஆங்கிலேயர் வருகையுடன் மக்கள் மாறத் தொடங்கினர். இத்தகைய மாற்றத்தை அவதானித்த பழைமை விரும்பிகள் என்ன கொள் கையை முன் வைத்தனர் என்று பாரதியார் கூறுகிறார்:
"நமது மூதாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரிகையுங் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு” இப்படியாக அவர்கள் கூறுகிறார்களே! அப்படித் தழுவுதல் இயன்றிடா வண்ணம் கலிதடை புரிவன். கலியின் வலியை வெல்லலாகாது’ என்றும் கூறுகின்றனர் அதனாலே,
"நாசங் கூறும் ‘நாட்டு வயித்தியர்' இவராம்! இங்கிவ் விருதலைக் கொள்ளியின் இடையே நம்மவர் எப்படி யுய்வர்? விதியே! விதியே! தமிழச் சாதியை யென்செயக் கருதி யிருக்கின் றாயடா?” விதியை விழித்து இப்படி வினா எழுப்பிய பாரதியார், விடை கூறாமல் விட்டிருந்தால், அது பாரதியாரின் பாடலாக அமையாது. இரு வேறுபட்ட முரணான கருத்துக்களை தலைவர்கள் முன் வைத்த நிலையில் மக்கள் அவதியுற்ற காலம். 'இருதலைக் கொள்ளி’யின் நிலையில், செல்லும் திசையறியாது திணறும் மக்களுக்குப் பதிலும் கூறுகிறார். விதியின் பதிலாக அமைகிறது, பாரதியாரின் பதில்: "மேலை நீ கூறிய விநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
24

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 43எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்று அவை தழுவி வாழ்வீ ராயின்
罗----------- «هomeof blo68pمg(aق إo ஆமாம். விநாசப் புலவர்கள் மக்களைத் தடுமாற வைப்பார்கள். அவர்கள் கூறவதற்கெல்லாஞ் செவி கொடுக்காமல் இகழ்ந்து தள்ளி விடுங்கள். அறிவு வழி நின்று சிந்தித்து, நன்மை தருங்கருத்து எதுவென்று தெளிந்து அதைத் தழுவி வாழுங்கள். யார் சொன்னார் என்பதை விடுத்து என்ன சொன்னார் என்பதைக் கருத்திற் கொண்டு சீர்தூக்கிப் பார்த்துச் செயற்படுங்கள் என்று தமது தனித்துவான முத்திரையைப்பதித்துள்ளார் பாரதியார்.
கடப்படியில் நிறுத்தி வைத்து இவற்றை எல்லாங் கூறவதன் நோக்கம் என்ன என்பதை விவரித்தல் அவசியமில்லை. ஆயினும் ஒரு வார்த்தை,
ஆங்கிலேயர் வருகையாலும் கலாசாரங்களின் இடைத் தாக்கங்களாலும் நமது தமிழ்ச் சமுதாயம் தன் சொந்த மண்ணிலேயே மாறத் தொடங்கியது. சால்புகள் மாறின; நடை, உடை, பாவனை மாறின. கலாச்சாரங் களும் தமிழரின் தனித்துவ அடையாளங் களுமே மாறின. சொந்த மண்ணிலேயே தனித்துவ அடையாளங்களை மாற்றிய மனித சமுதாயம், பிறிதொரு சூழலிலே வாழத் தொடங்கியதும் என்ன நிலை ஏற்படும்? அன்னிய சூழலிலே, தனித்துவ அடையாளம் எதையும் காப்பாற்றிப் பேண முடியுமா? ஆமாயின், எத்தனை தலைமுறைக்கு Ii] சாத்தியமாகும்?
25

Page 15
-- Φ -9 ιδι9 Φ-----
புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட ஈழத் தமிழருக்கு இன்றுள்ள சிக்கலும் சவாலும் இதுவே.
"வா” என்று வரவேற்ற நாட்டினரின் ‘செய்கையும் நடையும் தீனியும் முழுமையாகத் தமதாக்குவரா? தனித்துவத்தை முழுமையாக இழப்பார்களா அன்றேல் எதிர் நீச்சலிடுவார்களா?
தொழில் காரணமாக, தற்காலிகமாகப் புலம் பெயர்ந்த பலரை நான் அறிவேன். அல்வாயூர்க் கவிஞர் செல்லையா பாடியது போல், “சுளகை, முறுக்கை, சும்மாடு தன்னை, துடைப்பமதை, பழகும் இடியப்பத் தட்டை நிகர்க்கச் சிகை முடித்து இவை சரியல்ல என்று கத்தரித்த வேகத்தையும், சேலை சுருக்கிக் கட்டைப் பாவாடையான கோலத்தையும் அவதானித்துள்ளோம். ஆயின், நிரந்தரப் பெயர்வின் பின், 'ஊருட்ன்' இணங்கி வாழும் தேவை இருக்கின்றதே! ஆக, பிறந்த மண்ணையும் சொந்த பந்தங்களையும் வீடு, காணி, நிலபுலம் ஆகியவற்றையும் உதறி விட்டு அன்னிய நாடு ஒன்றிலே தஞ்சம் புகுந்து புதிய மண்ணிலே புதிய சூழலிலே வாழத் துவங்குதல், புதிய பிரச்சனையின் ஆரம்பக் கட்டம். பெயர்ந்து வாழ்பவரின் உண்மைப் பிரச்சனைகள் காலப் போக்கிலேதான் தலை தூக்கும்.
புதிய சூழலிலே தலை தூக்கும் சிக்கல்கள் பல. அவை பலதரப்பட்வை. அவற்றுட் சில உடலியற் பிரச்சனைகள், வேறு சில உளவியற் பிரச்சனைகள். அப்பிரச்சனைகளின் மொத்தத் தாக்கங்களும் பலவகை: பல்கோணத் தாக்கங்கள் அவை. அதனால் புலம்
26

--> யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பெயர்ந்த மக்கள் சில காலத்துக்கு, இரண்டு தலைமுறை காலத்துக்கு எனினும், இருதலைக் கொள்ளி’ போல அகத்திலும் புறத்திலும் இடர்ப்பட நேரிடும். எத்தனையோ ஆயிரமாயிரம் உள்ளங்கள் விதியை நினைந்து வேதனைப்படும்.
உலகளாவிய ஈழத் தமிழருக்கு நாட்டு வைத்திய நிவாரணம் கூறுதல் இந்நூலின் நோக்கமல்ல. உணர்ச்சி வசப்பட்ட சிந்தனைகளைச் சிதறுதலும் நோக்கமல்ல. வெந்த புண்ணிலே எண்ணெய் விடுதலும் நிகழ்வன வற்றுட் சிலவற்றைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் செய்வதுங்கூட நோக்கமல்ல. ஈழத் தமிழர் உலகளாவிய ஈழத் தமிழராகியது ஏன் ? அந்நிலை 6Tւնւսւգஉருவாகியது? அவர்களின் எதிர்காலம் என்ன?
பெயர்ந்த மக்களின் நிலைபற்றி உணர்ச்சிநிலைச் சிந்தனையை அடக்கி உண்மைநிலைச் சிந்தனையுடன் ஆராய்தலும் சிந்திக்க வைத்தலுமே குறிக்கோள். ஆக, இந்தப் பின்னணிச் சித்தரிப்பை மனதிற் கொண்டு கடப்பைக் கடந்து செல்வோம், வாருங்கள்.
27

Page 16
2. வரலாற்றுத் திரிப்புகள்
"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்-"
இலங்கை வரலாறு பலபடத் திரிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை உலகிற் பல நாடுகள் அறிந்திருக்க நியாயமில்லை. எனினும் ஈழத் தமிழர் அதனைப் பலகாலமாக அறிந்திருக்கின்றனர். வரலாறு புனித மானது. ஆயினும் இலங்கை வரலாறு அப்புனிதத்தை இழந்து விட்டது. இலங்கை தனிச் சிங்கள நாடு என்று உரிமை பாராட்டுதற்கு ஏற்ற முறையில் திரிப்புகளும் மறைப்புகளும் மல்கி மலிந்துவிட்டன.
அன்றொரு நாள் தற்செயலாக ஜனாதிபதி என்ற ஆசனத்துள் தள்ளப்பட்ட விஜயதுங்க 'தமிழர் உரிமையற்ற வர்கள்; மரத்திற் பற்றிப் படரும் குருவிச்சைகள்’ (1993) எனத் துணிந்தார். இன்று (1998) தமிழர் இலங்கையில் வந்தேறு குடிகள் என்ற பொருள்பட, தென்னா
28

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பிரிக்காவிலே திருவாய் மலர்ந்தருளினார். இக்கால ஜனாதிபதி ஈழத் தமிழரின் இறைமையை மறுக்கச் செய்யப்படும் இந்த ஈனத்தனம் நாட்டையே அழிவுப் பாதையில் திருப்பியுள்ளது. இனம், மதம், அரசியல், பொருளாதாரம் யாவும் ஒரே உலையில் வடிகட்டப் பட்டு நாடு அழியும் நிலை ஏற்படக் காரணம், தமிழர் இறைமையை மறுக்க எடுக்கப்பட்ட சூழ்ச்சிகளேயாம்.
வரலாற்றுப் புனிதம் உண்மைச் செய்திகளை ஆவணப் படுத்துவதன் மூலம் பேணப்படுகிறது. பொய்யான எழுதி வைத்தால், காலப் போக்கில் எழுதியவரே அதை முற்று முழுதாக நம்பிக் கொள்வர். இலங்கை அரசு இன்று உலகுக்குக் கூறும் வரலாறும் செய்தியும் என்ன தெரியுமா? ஈழம், ஈழநாடு, இலங்கை என்ற காலம் போய் இன்று பூரீலங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நாடு, ஈழம். பூரீலங்கா பற்றிய வரலாற்றுக் குறிப்பு இந் நாட்களில் எப்படி உலகுக்கு அளிக்கப்படுகிறது? இதை அறியும் ஆவலில் இன்றைய சாதாரணமான இணையம்’ (Internet) தரும் தகவலைப் படித்தேன். அவற்றுட் சிலவற்றை முதலில் குறிப்பிடுதல் பொருத்தமாகும் என்று எண்ணுகிறேன்.
மக்களியல் பற்றிய பகுதியிற் பின்வரும் தகவல் உள்ளது:
"பூரீலங்காவின் மக்கள் தொகை 18.5 மில்லியன். இவர்களுள் பெரும்பான்மையினர் சிங்களாவர் (74) மற்றைய இனப்பிரிவுகள் வருமாறு: பூரீலங்கா தமிழர் 126 இந்தியத் தமிழர் 5.5, முஸ்லிம்கள், மலேயர்கள், பறங்கியர். ஏனையோர் 7.9.
29

Page 17
-eν ειδιΦ «ο-
ஈழத்தில் வாழும் உரிமையும் வாக்குரிமையும் பெற்ற தமிழரில் ஒரு பகுதியினரை (5.5) இன்றும் இந்தியத் தமிழர் என்று பிரித்துக் கூறல் எவ்வகையிற் பொருந்தும்?
மொழியும் சமயமும் என்ற பகுதியில் உள்ள விபரம் இது:
"சிங்களமும் தமிழும் பூரீலங்காவில் அரச மொழிகள். இந்து-ஆரிய மூல மொழியான சிங்களம் பெரும்பான்மை மக்களின் மொழியாகும். ஆங்கிலம் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் புரிந்து கொள்ளும் மொழியாகவும் விளங்குகின்றது. இடப் பெயர்களும் பஸ், ரயில் பெயர்ப் பலகைகளும் வழமையாக மூன்று மொழிகளிலும் உள்ளன. சமய சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் பொருந்திய நாடு பூரீலங்கா."
இவற்றுள், உண்மைத் தகவல்கள் 66)6. என்பதைப் பலரும் அறிவர். உலக அரங்கிலே, தாம் உத்தம ஆட்சியினர் என்று வண்ணந் தீட்டுகின்றனர்.
வரலாறு என்ற தலைப்பில் உள்ள தகவல்களும் முக்கியமானவற்றை மட்டும் இனிப் பார்ப்போம்:
".வட - இந்தியாவிலிருந்து ஆரியர் வந்திறங்கிய துடன் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டது. இரும்பைப் பயன்படுத்தலையும் மேம்பட்ட விவசாய, நீர்ப்பாசன முறைகளையும் ஆரியர் அறிமுகப்படுத்தினர். அரச முறையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். ஆரிய குடியேற்றங்களுள் அனுராதபுரம் வலிமை மிக்க
30

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
இராச்சியமாகப் Lufigsløs unTuu அரசனின் கீழ் விளங்கியது.
"பந்துகபாயவின் பரம்பரையில் வந்த மன்னன் தேவநம்பிய தீசனின் காலத்தில், கி.மு. 247இல், இந்திய அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட-இலங்கையின் பெரும்பகுதி தென்னிந்தியா விலிருந்து படையெடுத்து வந்த ஒருவனின் ஆட்சிக்கு elt litt-gil.
"தென்னிந்தியப் படையெடுப்புகள் காரணமாக கி.பி. 10ம் நூற்றாண்டில் அனுராதபுர இராச்சியம் வீழ்ந்தது. முதலாம் விஜயபாகு படையெடுத்தவர்களைப் பின்பு விரட்டி பொலனறுவையிலே இராச்சியத்தை நிறுவினான்.
இந்த வரலாற்றுக் குறிப்புகளை நான் இங்கு முழுமையாகத் தரவில்லை. எமக்கு இங்கு அவை முக்கியமல்ல. ஆயினும், இறுதியாக உள்ள குறிப்பு நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதாகும்.
"படையெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்றதால், தலைநகரும் தொடர்ந்து மாற்றப்பட்டு, 1505ல் போர்த்துக்கேயர் வருகையுடன், மேற்குப் பிரதேச தாழ்நிலப் பகுதியான கோட்டேயில் பிரதான தலைநகர் நிறுவப்பட்டது. வியாபாரத்துக்காக வந்த போர்த்துக்கேயர், கரையோரப் பகுதியில் ஆட்சி நடத்தி 1656 வரை இங்கே தங்கினர். அதேபோல ஒல்லாந்தரும்
31

Page 18
----eν 9 ιδι9 «----
1656 முதல் 1796 வரை அரசோச்சினர். 1796இல் பிரித்தானியர் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆயினும் அக்காலத்திலும் கண்டியைத் தலைநகராகக் கொண்டிருந்த மலையக இராச்சியம், நாட்டின் ஏனைய பகுதியை ஆண்ட அன்னியர் தாக்குதல் பலவற்றைச் சமாளித்து தமது சுதந்திரத்தை இழக்காமல் இருந்தது. 1815இலே கண்டி இராச்சியமும் பிரித்தானியர் வசமானது. பிரித்தானியர் நாடு முழுவதையும் ஆட்சி புரிந்தனர். சமாதான முறையில், பூரீலங்கா 1948இல் சுதந்திரத்தை மீளப் பெற்று இன்று இறைமையுள்ள குடியரசாகத் திகழ்கிறது.”
இந்த வரலாற்றுக் குறிப்புகளில் கண்டி இராச்சியம் பற்றியும் கோட்டே இராச்சியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழர் பிரதேசத்தைத் தமிழர் ஆட்சி புரிந்தனர் என்றோ, கரையோரப் பகுதியை ஆண்ட போர்த்துக்கேயர் 1619இலேதான் தமிழர் ஆட்சியைக் கவிழ்த்து தமிழ் மன்னன் சங்கிலி ஆண்ட பிரதேசத்தைத் தமிழ் மன்னனிடமிருந்து கைப்பற்றினர் என்றோ எதுவித தகவலும் தரப்பட வில்லை. ஏதோ தமிழரையும் கோட்டே அரசு ஆண்டு வந்தது, தமிழர் கோட்டே இராச்சியத்துக்கு உட்பட்டி ருந்தனர் என்ற பாங்கிலே வரலாறு எழுதப்பட்டுள்ளது, திரிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்னவென்றால், அன்னியர் வருகைக்கு முன் ஈழத்தில் மூன்று அரசுகள் வெவ்வேறு பிரதேசங்களை ஆட்சி புரிந்தன: கோட்டே இராச்சியம், கண்டி இராச்சியம், தமிழ் இராச்சியம். கரையோரச்
32

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
சிங்களவர் இராச்சியம் கோட்டேயிலும் மலையகச் சிங்களவர் இராச்சியம் கண்டியிலும் தமிழர் இராச்சியம் யாழ்ப்பாணத்திலும் தலைநகர் அமைத்தன. இலங்கையின் மூன்றிலொரு பாகத்தை - வட- கிழக்கு மாகாணங் களையும் SountuLib வரையிலான கரையோரப் பகுதியையும் தமிழர் ஆட்சி புரிந்தனர் என்ற வரலாற்றுண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஏன்?
இலங்கை ஒரே நாடாக இருந்த போதும், அங்கு மூன்று வேறு இராச்சியங்கள் நடத்தப்பட்டமை வரலாற்றுண்மை. அவை, வெவ்வேறு காலப் பகுதிகளில் அன்னியரால் கைப்பற்றப்பட்டன. பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேதான் மூன்று இராச்சியப் பிரதேசங் களும் ஒன்றாகக் கருதப்பட்டு "இலங்கை ஒரே நாடு" என்று அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரித்தானியர் வெளியேறும் நாளில், இம் மூன்று பிரதேச மக்களும் விழிப்பர்; தமது இன உரிமைகளை நிலை நாட்ட முயல்வர் என அரசியல் விவேகம் உள்ளவர்கள் மறந்ததில்லை. S.W.R.D. Lueisintg நாயக்கா கூட அக்கருத்தை மறைக்கவில்லை. சான்று தேவையா?
ஒக்ஸ்போட் (Oxford) பல்கலைக் கழகத்திற் பயின்று விட்டு இலங்கை திரும்பிய ஆரம்ப காலத்திலே தமது மனக்கருத்தை அவர் ஒளிவு மறைவு இன்றிக் கூறியுள்ளார். 1925இல், முற்போக்குத் தேசிய கட்சி (Progressive National Party) 676öıp Guuffici) şiir sıgâup கட்சியை அமைத்தார். இலங்கைக்குச் சமஷ்டி முறை அரசு தேவை; ஒற்றையாட்சி பொருந்தாது என்பதை of-2 33

Page 19
-- εν -9 ιδί9 «e-
வெளிப்படையாகக் கூறி, காரணங்களையும் கூட விளக்கினார். அவர் கூறியதன் சுருக்கம் இதுதான்:
"தமிழர், கரையோரச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் என்ற மூன்று பெருஞ் சமுதாயங்கள் ஆயிரம் ஆண்டுகளாக தனித்துவத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் என்றுமே ஒருங்கிணையும் பாங்கு காட்ட வில்லை. அவர் தம் மொழியை, தங்கள் வாழ்க்கை முறையை, மதத்தைப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இத்தகைய இன வேறுபாடு உள்ள நாட்டிலே ‘மத்திய அரச முறை அமைத்தால் பிரச்சனைகள் ஏற்படும்.அமெரிக்கர், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கனடா, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் உள்ளது போன்ற “மாகாண சுயாட்சி’ இலங்கையில் உள்ள மாகாணங்களுக்குத் தேவை. ஏதோ ஒருவித சமஷ்டி ஆட்சியே எமது பிரச்சனைக்குத் தீர்வு காண உதவும் என்று நான் நம்புகின்றேன்” (Ceylon Morning Leader 17/7/1926).
ஆமாம்; அவரின் ஆரம்ப காலத்திலே, அரசியல் நேர்மை உதிராக காலத்திலே, அவர் நம்பிய கொள்கை இது ஆட்சி புரியும் ஆசையுள்ளவர்களுக்கு அரசியல் நேர்மை எத்தனை காலம் உயிர்ப்புடன் இருக்கும்?
பிற்காலத்திலே, அவரின் பேச்சுத் தொகுப்புகளில் இருந்தும் இந்தப் பகுதி நீக்கப்படட்டு விட்டது; மறைக்கப்பட்டு விட்டது. பிற்காலச் சந்ததியினர் அவரின் ஆரம்ப காலக் கருத்துக்களை அறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
ஓர் ஓவியன் காட்சி ஒன்றையோ முகம் ஒன்றையோ வரைதற்கு முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 8Rєао கோடுகளையும் சில புள்ளிகளையும் தொட்டுச் செல்வான். அதே போல, இலங்கை வரலாற்றுத் திரிப்புகளுக்கும் சிலவற்றைத் தொட்டுக் காட்டினேன். உண்மை வரலாற்றின் படி, ஈழத் தமிழர் தாயகம் ஒன்று இருந்தது; அது எங்குவரை பரந்திருந்தது என்பதைப் பின்வருமாறு விளக்கினார் அமரர் மு. திருச்செல்வம். (ஈழத் தமிழர் இறைமை: Lሠé 83)
"புத்தளத்துக்கு வடக்கே, மோதரவம் ஆற்றிலிருந்து பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறு வரையும் பரந்த யாழ்ப்பாண நீதி மாவட்டம் தமிழ் ஈழநிலப்பகுதி என ஒல்லாந்தர் அறுதியிட்டு எல்லை வகுத்தனர். வளவை கங்கையின் கிழக்கிலிருந்து வடக்கு, கிழக்கு, வடமேற்கு நிலப் பகுதிகள் சிலாபம் (தெதுறு ஒயா) வரை தமிழரின் ஆட்சிக்குட்பட்டன என ஆங்கிலேயர் கூறினர்."
இந்த அடிப்படையில், 1984இலே ஜயவர்த்தனாஇந்திரா காந்தி’ பரிசீலனை செய்தற்குத் தமிழ்த் தலைவர்கள் ‘தமிழர் உரிமையும் இறைமையும் பற்றிய தமிழர் தாயகக் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். அதற்கு வரலாற்று ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு விளக்கங் கொடுத்தார்.
“வரலாற்றுக்கு முற்பட்ட காலந் தொட்டே, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு, ஒரு சுதந்திர ஆட்சி
35

Page 20
-அ அம்பி 49
இருந்தது. சிங்களவரின் வருகைக்குப் பின்பும் தமிழ் மன்னர்கள் சிலர் இலங்கை முழுவதையும் ஆண்டிருக் கிறார்கள். சிங்களவரின் வருகைக்குப் பின், இலங்கையின் ஆயிரம் வருட வரலாற்றில், தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி, இலங்கையை ஆண்டு வந்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் தான், தமிழர் தாயகம்' என்று கூறும் பிரதேசத்தில் 13ம் நூற்றாண்டில் ஒரு தமிழர் அரசாங்கம் தோன்றியது. தமிழர் ஆட்சி, வடமேற்குப் பிரதேசத் திலுள்ள சிலாபம் முதல், வட மாகாண பிரதேசத்தையும் உள்ளடக்கி, தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள 'யாலை வனவிலங்குப் பாதுகாக்குமிடத்திலுள்ள கும்புக்கன் ஆறு வரையிலுள்ள பிரதேசத்தைக் கொண்டதாக இருந்தது. ‘இலங்கையின் மூன்றிலொரு பங்கு - அதாவது, புத்தளம் மாவட்டத்தின் பாதியையும், வடமாகாணத்தையும், கிழக்கு மாகாணத் தையும் உள்ளடக்கிய - நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசத்தைத் தமிழர் ஆட்சி செய்தனர். இலங்கையின் ஏனைய பாகம் சிங்களப் பிரதேசமாக இருந்தது. எனவே, 1948ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை இரண்டு தேசங்களாகக் கணிக்கப்பட்டு வந்தது."
(ஆதாரம்: ‘ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சனைகள்’ IV - அ. முகமது சமீம் - 1998 Luis 200).
தமிழரின் கோரிக்கைக்கு வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான காமினி ஈரிய கொல்ல வழங்கிய விளக்கத்தின் ஒரு பகுதியே முன்பு தரப்பட்டது. இதிலே அவர் கூறுவது என்ன?
36

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக, ஈழத்தில் தமிழர்களுக்குச் சுதந்திர ஆட்சி இருந்தது.
சிங்களவர் வருகைக்குப் பின்பும் தமிழ் மன்னர் சிலர் இலங்கை முழுவதையும் ஆண்டிருக்கிறார்கள்.
13ம் நூற்றாண்டில் தமிழர் ஆட்சி சிலாபம் முதல், வட மாகாணம், தென் கிழக்குப் பிரதேசத்தில் “யாலை’ வரை விரிந்திருந்தது.
வட மாகாணம், கிழக்கு மாகாணம் மட்டுமல்ல; புத்தள மாவட்டத்தின் பாதிப் பகுதியையும் தமிழர் தாயகமாகக் கொண்டிருந்தனர்.
மொத்தத்தில், இலங்கையின் மூன்றிலொரு பங்கு தமிழர் தாயகமாக விளங்கியது.
1948 வரை இலங்கை இரண்டு தேசங்களாகக் கணிக்கப்பட்டு வந்தது.
இவற்றைப் பொறுத்த வரை ஈரிய கொல்ல சில உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளார். 1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெறும் வரை, பிரித்தானியர் இலங்கையை இரு’ தேசங்களாக, இரு வேறு தேசிய இனங்கள் வாழும் பிரதேசங்களாகக் கணித்தனர். (ஏனெனில், "ஒரே இலங்கையை அவர்கள் கைப்பற்றவில்லை. அது பற்றிப் பின்பு அவதானிப்போம்)
மேலே கூறியவற்றின் அடிப்படையில் நோக்கின் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தைப் படம் தெளிவாக்கு கிறது. தமிழர் தமக்குச் சொந்தமான பிரதேசம் எது என்று உரிமை கோரும் பகுதி எப்படிச் சிங்களப் பிரதேசம் ஆகியது? சிலாபத்திலும் நீர் கொழும்பிலும் வசித்த தமிழர்கள் என்ன ஆனார்கள்?
37

Page 21
அவை எல்லாம் பின்னைய வரலாறுகள். அப் பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் இன்றுமே உள்ளனர். ஆயினும் காலத்தின் கோலத்தால் சிங்களம் பேசும் மக்களாக மாறி வருகின்றனர். இன்றைய போக்கில் தமிழர் பிரதேசம் என்று ஒன்று மீதியாக இருக்குமோ என்று சந்தேகிக்கவும் இடமுண்டு. கடந்த கால நிகழ்வுகள் அத்தகைய கோலத்தைக் காட்டு
கின்றன. முகம்மது சமீம் அவர்களின் அதே நூலில் இருந்து (பக் 203) இன்னொரு சிறு பகுதியும் கீழே தரப் படுகின்றது.
"சிறிலங்கா வரலாறு” என்ற நூலில் 13ம் நூற்றாண்டின் சம்பவங்களைக் கூறப் புகுந்த பேராசிரியர் கே.எம்.டி. சில்வா பின்வருமாறு கூறுகிறார்: (பக்கம் 63)
"யாழ்ப்பாணக்குடா நாட்டில் குடியேறிய தமிழர்கள், யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரிக்குமிடை யிலுள்ள வன்னிப் பிரதேசத்திலும் குடியேறி னார்கள். இலங்கையின் மேல் படையெடுத்துவந்த இந்தியப்படை வீரர்களில், சிலர், இந்தயாவிற்குத் திரும்பிப் போகாமல், இப்பிரதேசத்திலேயே தங்கிவிட்டார்கள். 13th நூற்றாண்டளவில், இவர்கள் இப்பிரதேசத்திலிருந்தும் பின்வாங்க, யாழ்ப்பாணக் குடா நாட்டில், தமது
38
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
முக்கிய குடியேற்றத்தை ஸ்தாபித்தனர். ஒரு சிலர் கிழக்குப் பிரதேசத்திலும் குடியேறினார்கள். 13ம் நூற்றாண்டில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு தமிழ் அரசு ஸ்தாபிக்கப்பட்டது." (பக்கம் 63)
இங்கு, ‘13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு தமிழ் அரசு ஸ்தாபிக்கப்பட்டது என்கிறார் சில்வா.
‘தமிழர் தாயகம்’ என்று கூறும் பிரதேசத்தில் 13ம் நூற்றாண்டில் ஒரு தமிழர் அரசாங்கம் தோன்றியது என்கிறார் ஈரிய கொல்ல. தமிழர் ஆட்சி புரிந்த பிரதேசத்தை விபரித்தார் ஈரிய கொல்ல. சில்வா தமிழரை யாழ்ப்பாணப் பிரதேசத்துள் ஒதுக்கி விட்டார். 13ம் நூற்றாண்டின் முன்பு தமிழ் அரசும் தமிழ் மன்னரும் இருக்கவில்லையா? அன்றேல் ஆளும் உரிமை யைத் தம் வசப்படுத்துவதற்காக வரலாற்றுத் திரிப்பும் மோசடியும் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டனவா,
மேற்கூறிய சமீமின் நூலுக்கு எழுதிய ‘முன்னிடு’ என்னும் பகுதியிலே பிரபல எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான எஸ். பொ, வரலாற்று மோசடி பற்றி அழகாகச் சித்தரித்துள்ளார்.
“Zn+H2SO4=ZnSo4+H2 6Tair uglais e 6doraoLD60tu ஆய்வுக் கூடத்திலே எண்பித்துக் காட்டலாம். சரித்திரச் சான்றுகளை நிறுவுவதற்கு இத்தகைய வசதி இல்லை. இதனால் சரித்திரத் தகவல்கள் மங்கலானவையாகவும் சிதைந்தனவையாகவுமே நம்மை அடைகின்றன. ஆட்சியாளர்கள் தமது அதிகாரக் குவிப்புக்காகவும்,
39

Page 22
-سسسسهه کافا ی ههم-سسسس
ஆளப்படுவோரின் நிபந்தனையற்ற பணிவுக்காகவும், பண்டு தொட்டு வந்தன எனப் புதிய சோடிப்புகளை சாமர்த்தியமாகப் புகுத்துவர். மேட்டுக் குடியினரின் அதிகாரங்களைத் தக்க வைக்கும் தத்துவங்கள் சமய அநுட்டான முறைமைகளுடன் கலப்படம் செய்யப் படும். ஞானம் பாமர மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்ட நிலையில், இச்சோடிப்புகளும் கலப்படங்களும் சான்றாதாரங்களாய் வலிமை பெறும். வரலாற்றின் உண்மை ஆதாரங்கள் நைந்து, நொந்து, மறையும்! இலங்கை வரலாற்றினைத் துலக்கும் பணியிலே, இத்தகைய அறிவு மோசடிகளும், ஞானப் பிறழ்வு வேள்விகளும் பல நூற்றாண்டு காலமாகவே நிகழ்ந்து வந்துள்ளன. ஏடுகள் காத்தோரும், நாடு ஆண்டோரும் இணைந்து சாதித்த சதியினால், பழைமை பற்றிய ஞானம் பாமரருக்கும் பஞ்சைகளுக்கும் கிட்டாதாயிற்று உண்மை. இதற்காகச் சரித்திரம் என்கிற கற்கை நெறியைக் குப்பை மேட்டிலே வீசுவதா?”
உண்மை. ஏடுகள் காத்தோரும் நாடு காத்தோரும் இலங்கை வரலாற்றைத் திரித்தும் சில தகவல்களை இருட்டடிப்புச் செய்தும் சாதிக்க முயல்வதென்ன? இலங்கையின் இறைமை நமதெனச் சாதிப்பதற்கு ஏற்பத் தொடரும் திரிப்பே அது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தம்மைத் தாமே ஆண்டு வந்த ஈழத்துப் பெருங்குடி - பழங்குடி - மக்களின் ஆளும் இறைமையை மறுப்பதே! எனவே ஈழத் தமிழினமும் தன் சான்றுகளைப் பிரசித்தம் செய்து கொள்கை உறுதி நிலை நிற்க வைப்பதும் அவசியம்.
40

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அப்பொழுதுதான், சுதந்திர தாக உயிர்ப்பு நிலைக்கும்; பயன் தரும். சூழல் நெருக்கடியால் ஈழத் தாயகத்தை விட்டு இன்று உயிர் தப்புதற்காக உலகளாவிய தமிழினம், காலப் போக்கில் தமது பாரம்பரிய வேர் அறுவதைத் தடை செய்தற்கான பணியையும் மேற் கொள்ளும்.
41

Page 23
3. ஈழத் தமிழர் இறைமை
"ஈழத் தமிழ்க்குடி மக்கள் - அவர் ஈராயிரம் ஆண்டு ஆட்சி புரிந்தார் ஆளும் இறைமையின் றுண்டு - அவர் ஆளவும் ஈழத்தில் தாயகம் உண்டு”
"இலங்கையைக் குடியரசாகப் பிரகடனம் செய்வதற்கு யாக்கப்பட்ட அமைப்பை நிராகரிக் கின்றோம் என்று ஈழத் தமிழ் மக்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள். அத்துடன், ஏலவே தமக்கு உள்ள இறைமையையும் செயற்படுத்த முடிவு செய்துள்ளார்கள்"
1972இல், இலங்கைக் குடியரசு அமைப்பை எதிர்த்து, பாராளுமன்றப் பதவியைத் துறந்த தந்தை செல்வா, 1975இல் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு குறித்து அவர் உடனடியாக ஆற்றிய உரையின் பகுதியே மேலே a 6itang.
42

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 43
"புதிய அரசியல் அமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. தமிழ் மக்கள் விடுதலை பெற்ற மக்களாக வாழவே விரும்புகின்றார்கள்."
இந்த அடிப்படைக் கொள்கைகளை முன் வைத்தே அவர் தேர்தற் களத்துக்கு அரசை அழைத்தார். அரசும் 'இலவு காத்த’ கிளிகளுள் ஒன்றைக் களத்துக்கு அனுப்பியது. தந்தை செல்வா, மக்களின் அமோக ஆதரவு தமது கொள்கைக்கு உண்டு என்று நிரூபித்தார். மக்கள் தமது 'இறைமையைச் செயற்படுத்த எடுத்த முடிவே, தேர்தல் முடிவு என்று பெருமிதம் அடைந்தார். ஈழத் தமிழரின் இறைமை, ஈராயிரம் ஆண்டு களுக்கு மேலாக வந்த உரிமை. 13ம் நூற்றாண்டு முதல் 1619ம் ஆண்டிலே போர்த்துக்கேயரிடம் அரசை இழந்த காலம் வரையான வரலாறு ஓரளவு தெளிவாக உள்ளது. அதற்கு முந்தய கால வரலாறு தெளிவின்றியே உள்ளது என்பதும் உண்மை.
ஈழத் தமிழரின் இறைமை பற்றி அமரர் திருச்செல்வம் ஆணித்தரமாகக் கூறுவதற்கு ஏற்ற அரங்கம் இலங்கையில் மேல் நீதிமன்றத்தில் கிடைத்தது. 1976இலே தமிழீழம் அமைக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அமரர் அமிர்தலிங்கம் உட்பட்ட நான்கு தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான வழக்கே அந்த அரங்கை ஏற்படுத்தியது. 1972இல் நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்புச் செல்லுபடியாகாது என்று சட்ட மூதறிஞர் திருச்செல்வம் வாதாடினார். அந்த
43

Page 24
வேளையிலே, ஈழத் தமிழரின் இறைமையை நிலைபெறச் செய்தற்கு ஈழத் தமிழர் வரலாற்றையே எடுத்துரைத்தார். "2130 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாளன் கி.மு. 161 முதல் 17 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தான். துட்டகை முனு இளைஞனாக இருந்தும் முதுமை எய்திய எல்லாளனை “நேருக்கு நேர்’ தனிச் சமருக்கு அழைத்தே வெற்றி பெற்றான்” என்பதையும் "தமிழரசு தோல்வியுற அநுராதபுரத்தில் சிங்கள அரசு எழுந்தது " என்பதையும் சுட்டிக் காட்டினார். Y
"எல்லாளன் தோல்விக்குப் பின் சிலகாலம் சிங்கள மன்னர்கள் இலங்கையை ஆண்டனர் என்பதை ஏற்றுக் கொண்ட அவர், மீண்டும் தமிழர் ஆட்சி கி.மு. 103 முதல் தமிழ் ஈழத்தில் அமைக்கப்பட்டது என்றும் வாதாடினார். 1619இல் சங்கிலி மன்னனைக் கைது செய்ததுடன் தான் தமிழ் ஈழத்தின் இறைமை போர்த்துக்கேயரிடம் சென்றது" என்பதைத் தெளிவு படுத்தினார். (ஈழத் தமிழர் இறைமை பக். 55-77)
ஆக, ஈழத் தமிழரின் இறைமை எவரும் மறுக்க முடியாத வரலாற்றுண்மை என்பது தெளிவு. இருந்தும் வரலாற்று விபரங்கள் முழுமையாக ஆவணப் படுத்தப் படாத காலமும் உண்டு. தமிழ் அரசர் வரலாறு தெளிவின்றி இருப்பது ஏன்? அதற்குக் காரணங்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானது என்ன என்பதை, பேராசிரியர் சிற்றம்பலம் தமது ஆய்வு நூலிலே கூறுகிறார்: (யாழ்ப்பாணம்: தொன்மை வரலாறு - பக்:XI)
44

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
“சிங்கள மக்களின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்குரிய இலக்கியத் தொல்லியற் சான்றுகள் ஆராயப்பட்டது போலத் தமிழ் மக்களின் வரலாற்றினை விளக்கும் தொல்லியற் சான்றுகள் விரிவான முறையில் ஆராயப்படவில்லை. இந்நாடு சிங்கள-பெளத்தர் களுக்கே உரிய நாடு என்ற நோக்கில் எழுதப்பட்ட பாளி நூல்களிலே தமிழரின் வரலாற் றினைப் பற்றிய விரிவான தடயங்கள் காணப்பட வில்லை. சிங்கள அரசின் வரலாற்றிலே தமிழ் மக்களின் தலையீடுகள் ஏற்பட்ட போது தான் தமிழ் மக்கள் பற்றிய குறிப்புகள் இவற்றில் உள. இத்தகைய குறிப்புகள் தமிழ் மக்களின் வரலாறு பற்றி அறியப் போதிய சான்றுகளாக அமையவில்லை. தமிழ் நூல்களாகிய கைலாய மாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகியன நல்லூர் அரசின் எழுச்சிக் காலத்தில் எழுதப்பட்ட போதிலும் நல்லூர் அரசு பற்றிய விரிவான சான்றுகள் இவற்றிலும் இல்லை."
பேராசிரியர்கள் சி.க. சிற்றம்பலம், சி. பத்மநாதன், க. இந்திரபாலா போன்றோர் காலத்துக்குக் காலம் ஆராய்ச்சிகள் செய்து வந்தனர். அவை பற்றி விரிவாக ஆய்வு செய்தல் எமது நோக்கம் அல்ல. 13ம் நூற்றாண்டுக்கு முந்திய அரச சான்றுகள் பற்றியும் காலங்கள் பற்றியும் வையா பாடலை ஆய்வு செய்த கலாநிதி க. செ. நடராசா அவர்களின் கருத்துகள் என்ன? வையா பாடல் தரும் தகவல்களை வைத்து ஈழத் தமிழர் இறைமை பற்றிய சான்றுகளை உய்த்தறிய முடியுமா? இதைப் பலரும் அறியத் தருதலே குறிக்கோளாகும்.
菁5

Page 25
---eν 9 ιδιθ «ο -
வையா பாடலை எழுதியவர் வையாபுரி ஐயர். இந்நூல் ஏழாம் செகராச சேகரன் காலத்தில் எழுதப் பட்டது என்பது கலாநிதி நடராசாவின் முடிவு. செகராச சேகரன், பரராச சேகரன் என்பன, யாழ்ப்பான மன்னர்கள் மாறி மாறித் தமக்குச் சூட்டிக் கொண்ட சிங்காசனப் பெயர்கள். 13ம் நூற்றாண்டு முதல் சங்கிலி மன்னன் காலம் வரை 200 ஆண்டு களுக்கு மேலாக இத்தொடர் தொடர்ந்தது. அது பற்றிய குறிப்புப் பின்னர் உள்ளது. முதலில், 13ம் நூற்றாண்டுக்கு முந்திய அரசுகள் பற்றிய தகவல் எதுவும் வையா பாடலில் கிடைத்ததா எனப் பார்ப்போம்.
கலாநிதி நடராசா அவர்கள் மிகத் தெளிவாக ஒரு கருத்துக் கூறுகிறார். (வையா பாடல், கலாநிதி நடராசா பதிப்பு: 1) ノ
"இலங்கை அரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையினையும்” கூறும் நூல் வையா பாடல். எனவே, நூலாசிரியர் தமது காலத்தில் அரசு செய்த பரராச சேகரன், செகராச சேகரன் குலத்தைக் காட்டு முகத்தால் யாழ்ப்பாணத்து முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் குலத்தையும், அவன் மைத்துனியாய மாருதப் பிரவையின் வரவையும் முதலிற் கூறி, பின் வன்னியர் குடியேற்றம் பற்றிய செய்திகளையும், அவர்கள் அடங்காப் பற்றில் ஆதிக் குடிகளை அடக்கி ஆண்ட சம்பவங்களையும் விரித்துரைக்கும்."
நூலின் “நோக்கத்தைத் தரும் பாடல்கள்' வையா பாடலில் பின்வருமாறு உள்ளன:
46

-9) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
"இலங்கை மாநகர் அரசியற் றிடும் அரசன்றன் குலங்கள் ஆனதும் குடிகள் வந்திடு முறை தானும் தலங்கள் மீதினில் இராட்சதர் தமையடு திறனும் நலங்கள் ஆருநேர் நாடரசு ஆகிவந் ததுவும்
மன்னன் ஆண்கு ரியகுலத்து அரசனை மாற்றிப் பின்னர் மன்னவர் பிரிவுசெய்து அரசியற் றியதும் அன்ன போதினில் அவர்களுக் கடையிடை யூறும் இன்ன காரணம் என்றுயான் இசைப்பதற்கு எளிதோ?” தமது நீண்டகால ஆய்வுகளின் அடிப்படையில், 1966ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலே, கலாநிதி நடராசா ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். அதிலே அவர் வற்புறுத்திய கருத்தும் இதுவே:
“யாழ் வாசிப்பவன் ஒருவன். இலங்கையின் வட கடற் கரையிலே தனக்குக் கிடைத்த மணற்றிடரைத் திருத்தி நற்பயிர் செய்து சோலையாக்கி, ஆங்கு மண்டபம் அமைத்து, பின்பு “கோளுறு கரத்துக் குரிசிலைக் கூட்டி வந்து, சக்கரவர்த்திப் பட்டஞ் சூட்டி, அந்நாட்டிற்று யாழ்ப்பாணம் எனப் பெயரும் இட்டு அதனை அரசாள வைத்தான். அப்பொழுது கலியுக ஆண்டு 3000 ஆகியிருந்தது என்று இந்நூல் கூறும். இதுவே இதன் முதற் சம்பவமும் ஆண்டுக் குறிப்பும் ஆகும்.
"கலியுக ஆண்டு 3000 என்பது கி.மு. 10இற்குச் சமமானதாகும். அக்காலத்திலே யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசு இருந்தது. யாழ்ப்பாணம் என்ற பெயர் யாழ்
47

Page 26
-- Φ -9ι ιδιθ «Φ----
வாசிப்பவன் என்று வையா பாடலிற் கூறப் பட்டுள்ளவன் காரணமாகவே எழுந்தது. அக்கதை வையா பாடலில் இடைச் செருகலாகச் சேர்க்கப் பட்டதல்ல."
"A critical study of Tamil Documents pertaining to the History of Jaffna” (IATR - 1966) 6Taisrp si "Googu Slaj) 65lugLomas இக்காலம் பற்றித் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கலாநிதி நடராசா தமது வையா பாடல் ஆய்வுரையிலே வரலாற்றுத் தடுமாற்றங்கள் பற்றிப் பின்வருமாறு வலியுறுத்தி உள்ளார்:
"கூழங்கைச் சக்கரவர்த்தியைக் காலிங்கச் சக்கரவர்த்தி என்று வலிந்து கண்டும், “கோளுறு கரத்துக் குரிசில்’ ஆகிய கூழங்கைச் சக்கரவர்த்திக்கு விஜய கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைத் திணித்துக் கட்டியும் வரலாற்றைப் பெரிதுந் திரிவுபடுத்திய சரித்திர ஆசிரியர் சிலர், பெயர்த் தடுமாற்றங்களிற் சிக்குப்பட்டு, யாழ்ப்பாணத் திலே தமிழ் ஆட்சி கி.பி. 12ம் நூற்றாண்டின் பின்னரே ஏற்பட்டது என்று நாட்டப் பெரிதும் முனைந்துள்ளனர். "கூழங்கைச் சக்கரவர்த்தி வேறு, குளக் கோடன் வேறு, காலிங்கச் சக்கரவர்த்தி வேறு, ஆரியச் சக்கரவர்த்தி வேறு என்பதைக் காண முடியாத வரலாற்று ஆசிரியர்கள் வரலாறுகளைக் கலந்து அவிழ்க்க முடியாம சிக்கலாக்கி மலைப்புற்றுள்ளார்கள்."
இவ்வண் வலியுறுத்தும் கலாநிதி நடராசா மேலும் தொடர்ந்து 'கூழங்கைச் சக்கரவர்த்தியே யாழ்ப்
48

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பாணத்தின் முதல் அரசன் ஆவான். அவன் காலம் கி.மு. 101 வரையிலாம் என்று வையா பாடல் கூறும். வையா பாடல் நம்பத்தக்க வரலாற்று நூல் என்று நாம் கண்டபின், இதனை நம்பாது விட நியாயமில்லை. குளக்கோடனும் கூழங்கைச் சக்கரவர்த்தியும் ஒருவர் என்றோ அன்றி உறவினர் என்றோ எங்கும் கூறப்பட வில்லை" என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
இனி, வரலாற்றுக் குறிப்புள்ள இன்னொரு தமிழ் அரசனான அக்கிரபோதி மகாராசன் காலம் பற்றி “யாழ்ப்பாண வைபவ மாலை’ என்னும் தமிழ் நூலும் "மகாவம்சம்’ என்னும் பழைய பாளி மொழியிலான நூலும் ஒரே மாதிரியான செய்தி தருவதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
தென்னகத்திலிருந்து வன்னியர்கள் வந்தது உண்மை. வையா பாடல், கோணேசர் கல்வெட்டு ஆகியன அந்த வரலாறுகள் பற்றிக் கூறுகின்றன. அடங்காப் பதியில் ஆதிக்குடிகள் வாழ்ந்தனர் என்பதும் அவர்களை வன்னியர் அடக்கினர் என்பதும் வையா பாடல் தரும் செய்திகள். "யாழ்ப்பாண வைபவ மாலை" எனும் நூலும், மகாவம்சம் எனும் நூலும் கூறும் கருத்துகள் ஒத்து நிற்கின்றன என்கிறார் கலாநிதி நடராசா. (வையா பாடல் பக்கம் 22,23) அவர் தரும் விபரம்:
யாழ்ப்பாண வைபவ மாலையிற் பின்வருஞ் செய்தி உள்ளது:
"சாலிவாகன சகாப்தம் 515ம் வருஷத்தில் (கி.பி.593) இலங்கை அரசனாகவிருந்த அக்கிரபோதி மகாராசன்,
u-3 莓9

Page 27
-οι -3 ιδιΦ «ο-
வன்னியர்கள் தாமும் அரசரென எண்ணங் கொள்ளப் பார்த்ததை அறிந்து அவர்களின் அதிகாரத்தைக் குறைத்தான்."
யாழ்ப்பாண வைபவ "மாலை எழுதிய மயில்வாகனப் புலவர் பாளி மொழியில் இருந்த மகாவம்சம் பற்றி அறிய வாய்ப்பிருக்கவில்லை. எனினும் அக்கிரபோதி மன்னன் பற்றி குறிப்பு இரு நூல்களிலும் ஒத்திருக்கின்றன. மகாவம்சத்தில் உள்ள குறிப்பு இது:
"முதலாம் அக்கிரபோதி மன்னன் கி.பி. 568 முதல் கி.பி. 601 வரை அரசாண்டான்."
ஆக, கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயும் தமிழ் மக்கள் ஆட்சி செய்தனர் என்பது வெளிப்படை
இத்தகைய விபரங்களை இங்கு இன்னும் விரித்தெழுதுதல் பொருத்தமற்றது. ஆயினும், தமிழர் ஆட்சி செய்தனர் என்றும் அவர்கள் ஆட்சி செலுத்திய பிரதேசம் விரிந்து பரந்து கிடந்தது என்றும் உறுதி கொள்ள இவை பற்றிய அறிவு அவசியமாகிறது.
ஆக, கி.மு. 10இலே யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசு இருந்தது: கி.பி.500களிலும் இருந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. வரலாற்றுத் தொடர்ச்சி முழுமையாக இல்லாவிடினும், பிற்காலக் குறிப்புகள் சிலவும் அறிய வேண்டியவையாம்.
யாழ்ப்பாண அரசர்கள் "செகராச சேகரன்', பரராச சேகரன்’ எனக் கூறும் போது, அப்பெயர்கள் அரசர்கள் எடுத்துக் கொண்ட “சிங்காசனப் பெயர்கள் என்பதை முன்பு குறிப்பிட்டோம். “யாழ்ப்பாண வைபவ
50

-O Umgh ஊரே : ஒரு யாத்திரை 40
விமர்சனம்’ என்ற தமது நூலிலே, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் சில தகவல்களைத் தெளிவுபடுத்தி புள்ளார். அதில் உள்ளபடி, சில அரசர்கள் பெயர், அவர்களின் சிங்காசனப் பெயர், அவர்கள் ஆட்சிபுரிந்த
காலம் ஆகியன இங்கு தரப்படுகின்றன:
அரசன் பெயர் காலிங்க ஆரியச் சக்கரவர்த்தி குலசேகர சிங்கையாரியன் குலோத்துங்க சிங்கையாரியன் விக்கிரம சிங்கையாரியன் வரோதய சிங்கையாரியன் மார்த்தாண்ட் சிங்கையாரியன் குணபூஷண சிங்கையாரியன் விரோதய சிங்கையாரியன் சயவீர சிங்கையாரியன் குணவீர சிங்கையாரியன் கனகசூரிய சிங்கையாரியன்
சிங்காசனப் பெயர் sTGub áll.
முதலாம் செகராச சேகரன் 1242
முதலாம் பராச சேகரன் இரண்டாம் செகராச சேகரன் இரண்டாம் பராச சேகரன் மூன்றாம் செகராச சேகரன் மூன்றாம் பரராச சேகரன் நான்காம் செகராச சேகரன் நான்காம் பராச சேகரன் 1344 ஐந்தாம் செகராச சேகரன் 380 ஐந்தாம் பராச சேகரன் 1414 ஆறாம் செகராச சேகரன்
இந்த அரச வரிசையில் ஏழாம் செகராச சேகரன் காலத்திலே வையா பாடல் எழுதப்பட்டது எனவும், ஏழாம் செகராச சேகரன் சங்கிலி மன்னனுக்கு முன் யாழ்ப்பாணத்தை அரசாண்டான் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. s
இதுவரை கூறியவை ஒரு உண்மையைத் தெளிய வைக்கின்றன. 13ம் நூற்றாண்டின் முன்பு, கி.மு. 101இல் இருந்தே தமிழ் அரசர் ஆட்சி தொடர்ந்து வந்துள்ளது. இடைக்கால எல்லைகளின் வரலாறுகள் சில கிடைக்க
51

Page 28
வில்லை என்பது காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட துர்ப்பாக்கியம் எனலாம்.
திருகோணமலைக் கோணேசர் ஆலயம் பற்றியும் அதைப் பிரித்தே ஃபிரெட்டிறிக் கோட்டையைப் பறங்கியர் அமைத்தனர் என்பது பற்றியும் நாம் அறிவோம். கோணேசர் கோயிலில் இருந்த ஒரு கல்வெட்டு தெளிவின்றி இன்று இருப்பினும், அதிலிருந்து ஊகிக்கப் பட்டு மக்கள் செவி வழிச் செய்தியாகப் பாதுகாக்கும் பாடலைச் சிந்திப்பதுவும் இங்கு பொருத்தமானதே! (Gopaluuunt Lunt6iv: Lués. 29)
"முன்னே குளக்கோடன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள் பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின் தானே வடுவாய் விடும்" தமிழர் ஆண்ட பிரதேசத்தில் பாடல் பெற்ற தலங் களும் பல உள்ளன. திருக்கோணேஸ்வரம், திருக்கே தீஸ்வரம், முனிஸ்வரம் போன்ற பழம்பெரும் கோயில்கள் தமிழராட்சி உள்ளடக்கிய பிரதேசங்களில் உள்ள சான்றுகளாக இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன.
சுருக்கமாகப் பார்த்தால், ஈழத் தமிழர் ஈராயிரம் ஆண்டுகளாகத் தம்மைத் தாமே ஆட்சி செய்தார்கள். வரலாறு சிலகால எல்லைகளுக்கு மயக்கமாக இருப்பினும், ஈழத்தமிழர் இறைமை பறி போகுமுன், தொடர்ச்சியாக 500 ஆண்டுகள் அவர்களின் வரலாறு தெளிவாகவே உளளது.
1619இலே ஈழத்தமிழரின் இறைமை போர்த்துக்கேயர் ஈழத்தமிழர் இறைமையைத் தமதாக்கினார்.
போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தர் அந்த
52

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
இறைமையைத் தமதாக்கினார். பின்பு, பிரித்தானியர் வசம் அந்த இறைமை சென்றடைந்தது. 1815இல் கண்டிய அரசையும் பிரித்தானியர் கைப்பற்றியதுடன், முழு நாட்டிறைமையும் அவர்கள் வசம் அடைந்தது. அப்பொழுதும் அவர்கள் ஓர் உண்மையை மறுக்க வில்லை. ‘இலங்கை இரு வேறு இனங்களின் நாடு; அந்த இனங்கள் மதம், மொழி, வாழ்க்கை முறையால் வேறு பட்டவர்கள் என்பதே அது. பின்பு, கோல்புரூக் ஆணைக்குழுவே முழு நாட்டையும் ஒருங்கிணைத்தது.
தமிழர் இறையுரிமை உள்ள பிரதேசமும் சிங்களவர் இறைமையுள்ள பிரதேசமும் சங்கமித்தன. ஆயினும், தமிழர் இறைமை பிரித்தானியரிடமே இருந்தது. பிரித்தானியரிடம் இருந்து 1948இல் சுதந்திரம் பெற்ற போதும் அந்த இறைமை பிரித்தானியரிடமே இருந்தது. 1972ம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றியதன் மூலம் சிங்கள அரசு இறைமையைத் தமதாக்கியது. ஆனால், ஈழத் தமிழரின் இறைமை அவர்களுடையதே. அதை மீளப் பெறுதல் அவர்தம் கடமை, உரிமை. அதைப் பெறுவதிலே தான் இன்றைய கோலம் முளை கொண்டது.
இரு இறைமைப் பிரதேசங்களும் ஒருங்கிணைக்கப் பட்டதால், பின்பு சிக்கல் எழுந்துள்ளதை அறிவோம். அதற்கும் காரணம் உள்ளது. இரு பிரதேசங்களும் இணைக்கப்பட்ட பின், என்ன நடந்தது?
53

Page 29
4. இணைப்பின் பின்.
காலஞ் சுழன்றுவரக் காட்சிகளும் மாறிவர கோலம் புதிதுவரக் கொள்கைதடு மாறிவர ‘ஓர் இலங்கை’ என்றோர் ஒருங்கிணைத்த பாவத்தால் சேர்நிலத்தை மீட்கத் திருப்பலிகள் எத்தனையோ"
வேறு வேறு தேசங்களாகக் கைப்பற்றிய பிரதேசங்களை ஒரே இலங்கைத் தேசமென்று இணைத்து ஆட்சி செய்து, அபிவிருத்தி செய்ததன் விளைவே காலப் போக்கில் ஈழத்தமிழ் இனத்தை இன்றைய நிலைக்குக் கொணர்ந்து விட்டது. அன்று வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, மொழி, மதம், தனித்துவம் ஆகியவற்றை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் ஆட்சி முறைக்கும் தேவைக்கும் வசதியாக ஒருங்கிணைத்ததால் பின்னாளில் நிகழ்ந்தது என்ன?
4.

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அடுத்து வந்த ஒருநூற்றாண்டுக் காலம் அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை ஒரே தேசம் என்ற அடிப்படையில் அந்த அபிவிருத்தி முயற்சிகள் அமைந்தன. நாட்டின் காட்சிகள் மாறின, கோலங்கள் புதியன வந்தன. கொள்கைகள் தடுமாறி வந்தன. வாழும் சந்ததிகள் மாற, இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைமுறையினர் ஒரே இலங்கை என்ற கனவில் வாழத் தொடங்கினர்.
காடுகள் களனிகள் ஆகின; நாடுகள் நகரங் களாயின. நகரங்கள் வீதிகளால் இணைக்கப் பட்டன. எல்லைகள் கடந்து மக்கள் "ஊரிலே’ நடமாடும் நிலை இயல்பாகவே உதயமானது. படிப்படியாக "ஒரே நாடு’ என்ற எண்ணம் நிலை பெற்றது. அது பல காரணங்களால் தோன்றியது. அன்னியர் ஆட்சியில் அது நித்யம்’ என்ற கானல் நீர் தமிழர் மனக்கண் முன் தோன்றியது. அதை முழுமையாகப் பார்ப்பதற்கு வெவ்வேறு விருத்தி களையும் அவற்றின் விளைவு களையும் தனித்தனியே அவதானித்தல் தவிர்க்க முடியாததாகும்.
முதலில், எல்லை தாண்டிய மக்களின் பெயர்வை நோக்குவோம். நாட்டின் வெவ்வேறு பகுதிகளும் வீதிகளால் இணைக்கப்பட்டதும், போக்குவரத்துத் தடையின்றி நிகழும் வாய்ப்பு ஏற்பட்டது. மலையும் மடுவும் ஆறும் போட்ட தடைகள் நீக்கப்பட்டன; பாலங்கள் அமைக்கப்பட்டன.
மக்கட் பெயர்வு தேவைக்கேற்ப எல்லைகள்
55

Page 30
. . . . . . . . O) அம்பி ܩܿܦܵ
கடந்து நிகழ்ந்தது. வியாபாரஞ் செய்தலும் தொழில் பார்ப்பதும் நோக்கமாகக் கொண்ட மக்கள் எல்லைகள் தாண்டி வாழப் படிப்படியாக துவங்கினர்.
யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் வடக்கிலிருந்து தெற்கே சென்றார்கள். சிங்களக் கிராமங்களில் வியாபாரஞ் செய்து வாழ்க்கை நடத்தத் துணிந்தனர். சிங்களக் கிராமங்களில் மக்களுடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குச் சிங்கள மொழியறிவு தேவைப் பட்டது. ம்க்களுடன் மக்களாகப் பழகியவர்கள் சிங்களம் பேசும் திறனையும் இணங்கி வாழும் கலையையும் பயின்றார்கள்.
தென்னிலங்கைச் சிங்கள "ம்க்களும் வியாபார நோக்குடன் வடக்கே வந்தனர். தமிழர் தமது பிரதேச வளத்தால் - குறிப்பாகப் புகையிலை, சுருட்டு ஆகிய வற்றால் தெற்கே சென்று வியாபாரஞ் செய்ய முடிந்தது என்றால், சிங்களவர் “பேக்கரி’களை நிறுவி பாண் வியாபாரத்தைத் தமது ஏகபோக உரிமையாக்கி வாழ வந்தனர். கிராமம் கிராமமாகச் சென்று பாணும் றஸ்க்கும் விற்ற அவர்கள் மக்கள் மொழியாகிய தமிழையும் பேசிப்பழகினர்.
மொழி என்ற கடப்பைக் கடந்து மொழியால் வேறுபட்ட இனங்கள் வாழ்க்கை நடத்தும் சமுதாயம் உருவாகியது. அடுத்து, கல்வி விருத்தியினால் ஏற்பட்ட மக்கட் பெயர்வு முக்கியமான ஒன்றாகும். கல்வி விருத்தியும் இரவோடு இரவாக நிகழவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல், படிப்படியாக நிகழ்ந்ததாகும்.
56

--e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 46ஆரம்பத்திலே கல்வி நிலையங்கள் சமய அடிப்படையில் அமைந்தவையாக இருந்தன. சிங்களப் பகுதிகளில் பெளத்த பாரம்பரியப் பாடசாலைகளும் தமிழ்ப் பகுதிகளிலே இந்து சமயப் பாரம்பரியப் பாடசாலைகளுமே கல்வி போதித்தன.
போர்த்துக்கேயர் வருகைக்குப் பின்பே மேற்குத் தேசப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை கத்தோலிக்க மிஷனரிமாரின் நிர்வாகத்தில் கிறிஸ்த மத போதனைக்காக நிறுவப்பட்டன.
ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் ஆட்சி செய்த பிரதேசங்களைக் கைப்பற்றிய பின், தமது விருப்பத்திற் கேற்பக் கிறிஸ்த மத போதனையை விரிவாக்கப் பாடசாலைகளை நிறுவினர். ஆயினும் போதிய பாடசாலைகளை அவர்கள் நிறுவவும் இல்லை. அவர்கள் திட்டமிட்டபடி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை நிறுவும் வாய்ப்புப் பெறவும் இல்லை.
இத்தகைய கல்வி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போது "ஒரே இலங்கை' இல்லை என்பதையும் நினைவிற் கொள்ளல் வேண்டும். பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து ஆட்சியைப் பெற்று, பின் கண்டி மன்னனையும் வீழ்த்திய பின்பு தான் ‘முழு’ நாட்டிலும் வெளி நாட்டார் கல்வி முறை சாத்தியமானது. அதாவது "இலங்கை’ என்று இன்று கூறப்படும் பிரதேசம் முழுமையாக ஒரே ஆட்சிக்கு உட்பட்டது.
பிரித்தானியர் குடியேற்ற நாடாக இலங்கை மாறியதுடன் பல்வேறு கிறிஸ்தவ மிஷன்களும் தமது
57

Page 31
-o- as this 40
கிளைகளை அமைத்துச் சமயப் பிரசாரத்தையும் சமூகப் பணியையும் மேற்கொண்டன. இங்கிலாந்திலிருந்து வந்த பல்வேறு கிறிஸ்தவ மிஷன்களும், அதற்கு முன்பு வந்த கத்தோலிக்க மிஷனும் சமூகப் பணியிற் கவனஞ் செலுத்தின.
பல்வேறு மிஷன்களும் கல்வித் துறையில் ஆற்றிய சேவை குறிப்பிடற்பாலது. ஆட்சி புரிந்த குடியேற்ற நாட்டரசு கல்வி விருத்தியில் அதிக அக்கறை காட்டவில்லை. பணிவான பிரஜைகளும் மலிவான "கூலி’யாட்களுமே அவர்களுக்குத் தேவைப்பட்டனர்; அத்துடன் அவர்கள் திருப்தி எய்தினர். மலையகத்தில் தேயிலையும் இரப்பரும் மலிவாக உற்பத்தி செய்வதற்கு இந்தியர்களைக் கொணரத் தொடங்கியதும் அதற்கு நல்லதோர்சான்று.
ஆங்கிலக் கல்வியும் தேவை நோக்கி முதலிற் கொழும்பிலே துவக்கப்பட்டது. மிகச் சில பள்ளிகளி லேயே ஆங்கிலக் கல்வி வாய்ப்பிருந்தது. பின்பு மிஷன் பள்ளிகளே மாகாணங்களிற் கல்வி வசதியைச் சற்று விரிவாக்கத் தொடங்கின.
பிரித்தானியர் அமெரிக்க மிஷன் வரவை ஆரம்பத்திலே விரும்பவில்லை. இந்தியாவிற் புகுவதற்கே தடையிட்டிருந்தனர். இலங்கைக்கு வந்த அமெரிக்க மிஷனரிகளை வரண்ட பிரதேசமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தனர். கொழும்பில் அவர்கள் பணியாற்றத் தடையிருந்தது. யாழ்ப்பாணத் துக்கு அது பெரும் நன்மையை நல்கியது என்பதையும் மறுக்க முடியாது.
58

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
மிஷன் பாடசாலைகள், குறிப்பாக அமெரிக்க மிஷன் பாடசாலைகள், முதலில் தமிழ்ப் பாடசாலை களையும் பின்பு ஆங்கிலப் பாடசாலைகளையும் நிறுவினர். 1820இலேயே, மருத்துவ சேவையையும் அமெரிக்க மிஷன் ஆரம்பித்தது. அதனால், கல்வி வசதி, மருத்துவ வசதி போன்ற சமூக விருத்திச் சேவைகள் கணிசமான அளவு யாழ்ப்பாண மக்களுக்குக் கிடைத்தன. மதப் பிரசாரம் செய்ய வந்தவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டனர். அவற்றுள் முக்கியமானது மருத்துவ சேவை.
அமெரிக்க மிஷனின் மருத்துவ ஊழியராக டாக்டர் சயி கிறீன் 1848இல் மருத்துவக் கல்வி நிலையத்தை நிறுவியதுடன் யாழ்ப்பாண அபிவிருத்தி இன்னொரு பரிமாணம் பெற்றது. பிற நாட்டில் வளருகிற மருத்துவர் அறிவைத் தமிழிலே சேர்த்து, இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் இயற்றும் பணியை அவர் மேற்கொண்ட்ார். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதியார் ஆணையிடுதற்கு அரை நூற்றாண்டு முன்பு நிகழ்ந்த முயற்சி அது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு அது.
கல்வி வளர்ச்சிக்கு மிஷனரிமார்தான் உழைத்தனர் என்பதற்கில்லை. மத மாற்றத்தையும் கிறிஸ்தவ மதம் பரவுவதையும் கண்டு துடிப்புற்ற பூரீலழரீ ஆறுமுக நாவலர் இந்துப் பாடசாலைகள் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் காட்டி நிறுவிய பாதையில் சென்று 'சைவ பரிபாலன சபை' இந்துக் கல்லூரிகள் அமைக்கும்
59

Page 32
-o- 9 this 4oமுயற்சியை மெற்கொண்டது. இவை எல்லாம் வட இலங்கையில் நடைபெற்றன. . .
கிழக்கிலங்கையிலும் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை நிறுவிக் கல்வி வசதி அளிப்பதற்குப் பின்னாளில் சுவாமி விபுலானந்தர் முயன்று வெற்றியும் பெற்றார். சென்ற நூற்றாண்டின் இறுதியிலே முஸ்லிம் களுக்கான பாடசாலைகள் நிறுவ வேண்டுமென்ற ஆவலில் சித்திலெப்பையும் மி.ஸி. அப்துல் ரஹீமும் முயற்சி எடுத்தனர். இவை வரலாற்றுக் குறிப்புகள். - மேலே கூறியவாறு இந்துப் பாடசாலைகளை வட இலங்கையில் நிறுவும் முயற்சிகள் நடந்த காலங்களில், சிங்களப் பகுதியில் பெளத்த அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள வழிகாட்டினார் கேர்ணல் ஹென்றி ஒல்கொட் 1880இலே அவர் இலங்கைக்கு வந்து பிரித்தானிய அரசின் காலத்திற் சோர்வுற்ற பெளத்தர் களைத் தட்டி எழுப்பினார்.
1880களில் அவர் ஊட்டிய உணர்வே, பலரை விழிக்கச் செய்தது. பெளத்த பிள்ளைகளுக்கு மத போதனை செய்யப் பெளத்தப் பாடசாலைகள் தேவை என்றும் அவற்றை நிறுவுவதற்கு நிதியம் ஒன்றையும் 188இலே அவர் நிறுவினார். கிறிஸ்தவ ஆங்கிலப் பாட சாலைகளுக்கு இணையான ஆங்கிலப் பாடசாலைகள் பெளத்தர்களுக்கு அவசியம் என்ற கருத்துப் பரவியது.
1886இலே கொழும்பில் ஆனந்தாக் கல்லூரி நிறுவியதுடன் அந்த இலக்கின் முதற் படியைத் தாண்டினார். சிங்கள மக்களிடையே “பெளத்த"
60

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
மறுமலர்ச்சி ஏற்பட்டு, அது கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கங்களாக மாறத் தொடங்கியது. நாளடைவில், அந்த மறுமலர்ச்சி என்ற போர்வை இன-மத வெறியர்களின் கிளர்ச்சிகளாயின.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 1915இல் அது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் வெளிப் பட்டது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கே என்று சன்னதங் கொண்டுள்ளது.
ஐக்கிய இலங்கை’ என்றும், "நாம் இலங்கைமக்கள்’ என்றும் நம்பி ஏமாந்த தமிழினம் 'மூக்கின் மேல் விரலை வைத்தது. இலவு காத்த கிளி
ஆனது.
61

Page 33
5. வசதி தேடிய புலப் பெயர்வுகள்
"நாக்கு துளிக்கண் நறுந்தேனும் நெஞ்சகத்தே நீக்கரிய நஞ்சும் நிலைக்கொண்ட - தீக்குனத்தோன் இன்சொல் உரைக்கின்றான் என்றவனை நம்பாதே என்சொலினும் செய்வான் இடர்"
நாம் இலங்கையர் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் சந்தேகமின்றி வாழத் தொடங்கியது ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகும். சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் ஆகியோர் காலம் முதலாகப் பலர் நம்மவர்கள் "இலங்கையர்கள் என்று கருதிச் செய்த சேவைகளும் பல. சிங்கள மக்களுக்கும் பெளத்த மதத்திற்கும் உரிய மதிப்பளித்தமையும் ‘தேசியத் தலைவர்கள்’ என்று நடந்து கொண்டமையும் வரலாறு தரும் செய்திகள். எடுத்துக் காட்டாக முதலில் இரண்டை இங்கு கூறுவோம்.
62

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
“பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் கொழும்பிலே ஒரு பெளத்த கல்லூரியை அமைக்க முயன்ற காலமது. பெளத்தர்களுக்கான ஆங்கிலக் கல்லூரியை நிறுவுவதில் அந்த இரு இந்துத் தமிழர்களும் ஆர்வத்துடன் உழைத்தனர் என்று இலங்கையிற் கல்வி வளர்ச்சி பற்றி எழுதும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சேர் பொன். இராமநாதன் யாழ்ப்பாணத்திலே இரு கல்வி நிலையங்களை சைவத் தமிழருக்கு நிறுவினார் என்பதை நாம் அறிவோம். சிங்களவர்க்கு பெளத்த கல்வி நிலையம் அமைப்பதிலும் அவர்கள் அக்கறை காட்டித் தமது பங்களிப்பைச் செய்தமை ‘நாம் இலங்கையர்கள்’ என்ற காரணத்தினால் அன்றோ?
சேர் பொன். இராமநாதன் செய்த இன்னொரு செயல் என்ன? நாம் எல்லோரும் 'இலங்கை மக்கள்’ என்று நம்பியபடியால்தான் 1915இல் பிரித்தானிய ஆட்சியினர் சிங்களத் தலைவர் பலரைச்சிறட்ைபடுத்திய போது அவர்களை விடுவிக்கவும் அன்றைய கவர்னர் சாமர்ஸ் அவர்களை "திருப்பி அழையுங்கள்” என்று பிரித்தானிய அரசை வற்புறுத்தவுமென சேர் பொன். இராமநாதன் லண்டனுக்குத் தூது சென்றார்
சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் ஆகிய சகோதரர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்றவர்கள். அந்தச் சமுதாயத்தின் “பெரியவர்' களுடன் நட்புறவாடி மதிப்பும் பெற்றவர்கள். அதனால் 1915இன் இனக்கலவரத்தின் போது கைது செய்யப்பட்
63

Page 34
டோரை விடுவிக்கக் கூடிய தொடர்புகள் சேர் பொன். இராமநாதனுக்கு இருந்தது. ‘நானும் இலங்கையன்’ என்ற எண்ணம் அவரை அங்கு செல்லத் தூண்டியது. *- கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். உண்மையில் முஸ்லிம் வியாபாரிகள் நாட்டிற் பரவலாக வியாபாரம் செய்து தலை தூக்கியதை தடுக்கவே அந்தக்
கலவரம் கட்டவிழ்க்கப்பட்டது.
அப்படி இருந்தும், சேர் பொன். இராமநாதன், முதலாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலமென்றும் பயப்படாது, தன் உயிரைப் பணயம் வைத்து, குடியேற்ற நாடுகளின் செயலாளர் நெவில் சேம்பலினைச் சந்திக்கச் சென்று, சென்ற நோக்கங் களையும் வெற்றிகரமாக முடித்தார் என்பது வரலாறு.
அவர் திரும்பிய பொழுது அவருக்கு மகத்தான வரவேற்புக் கொடுத்தனர் சிங்களவர். அதே சமயம் அவர் போன்றோர் நம்பிய இலங்கைத் தேசியத்தை அழிக்கவும் தளம் அமைத்தனர். நாம் இலங்கையர் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தலைவர்கள் பலர் வாழத் தொடங்கிய காலம் முதலாகச் சிங்களத் தலைவர்களும் “தேசியம்’ பேசினார்கள். நா இனிக்கப் பேசினார்கள். ஆயினும், நாளடைவில் அவர்களது கொள்கைகள், உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதையாக மாறியது. எடுத்துக் காட்டாக -
‘மாணவர் காங்கிரஸ்’ ஒன்றை முன்னின்று அமைத்தும் வழி நடத்தியும் அறிஞர் ஹண்டி பேரின்ப நாயகம் போன்றோர் ‘ஒரே' இலங்கைக்காக

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பாடுபட்டதைச் சுட்டிக் காட்டலாம். அவர்கள் குறிக்கோள் புனிதமானதாக, ‘ஹண்டி’ அவர்கள் அணிந்த கதர் உடையைப் பிரதிபலிக்கும் காந்தீய அடிப்படையில் அமைந்ததாக இருந்தது.
அவர்கள் "பூரண சுதந்திரம்' இலங்கைக்கு வேண்டும் என்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டனர். அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையை மீட்பது மட்டுமல்ல; அதன் epaulb மக்களின் சமூக, பொருளாதார விடிவையும் SIT6R வேண்டும், கலாச்சார மறுமலர்ச்சி பெற வேண்டும், தாய் மொழி மூலம் கல்வி அறிவூட்டி, கல்வி பரவலாக்கப்பட்டு, மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று அவர்கள் பாடுபட்டார்கள். ‘சுதந்திர இலங்கை’ ஒன்றை நிறுவுவோம். ஒவ்வொரு குடிமகனும் சம உரிமை பெற்று வாழ வழி வகுப்போம் என்று திடசங்கற்பம் செய்து பணியாற்றினர்.
மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் ஆகி, தங்கள் அடிப்படைக் கொள்கைகளையும் எய்த எண்ணிய குறிக்கோளையும் நாட்டிற் பிரசாரஞ் செய்கையில், சிங்களத் தலைவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்த்தனர். காந்திஜி உட்பட, இந்தியத் தலைவர் சிலரையும், ஜீனியஸ் றிச்சட், சொலமன் வெஸ்ட், டி.எஸ், என். எம் போன்ற பலரையும் அழைத்து யாழ்ப்பாணத்திற் பிரசாரம் செய்தனர். தமது பூரண சுதந்திர இலட்சியத்தை நிலைநாட்டுதற்காக டொனமூர் திட்டப்படி நடக்கவிருந்த 1931ம் ஆண்டுத் தேர்தலிலே எவரும் போட்டியிடப் பங்கு பற்றக்கூடாது; பகிஷ்கரிக்க
T-4 65

Page 35
-----eν 9 ιδιθ «ο-
வேண்டும் என்று குரல் எழுப்பினர். வட மாகாணம் ஒன்றிலே மட்டும்தான் அந்தப் பகிஷ்கரிப்பு சாத்தியம் ஆயிற்று. ஏன்?
‘டொனமூர் திட்டத்தின் கீழ் நடந்த தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தீர்மானம் இன அடிப் படையில் எழுந்தது என்று பண்டார நாயக்கா விளக்கம் கொடுத்தார். அதை மறுத்து, ஐக்கியமான சுதந்திர' இலங்கையே தமது குறிக்கோள் என்று நம் தமிழ்த் தலைவர் ஹண்டி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பகிஷ்கரிப்பு இன அடிப்படையில் எழுந்தது என்ற விளக்கத்தை பண்டாரநாயக்கா ஏன் கொடுத்தார்? இலங்கை என்று தேசிய வாதம். அவரின் மனதில் இருந்தது இனவாதம். நம்மவர் தேசியம் பேசிய வேளையில், சிங்களத் தலைவர்கள் சிலரும் தேசியம் பேசினார்கள். ஆயினும், அவர்கள் வேறு நோக்கங் களுடன் தேசியப் போர்வை அணிந்தனர். தலைமைப் போட்டி அப்பொழுதே முளை கொண்டது. அதற்குக் காரணமும் பிரித்தானியர்தான்.
பிரித்தானியர் காலத்தில் அவர்களுக்கு உதவிய சிங்களக் 'கையாட்கள்’ சிலரே. அந்தக் கையாட்கள் செய்த ஏவல் தொழில்களுக்காகக் கிடைத்த பரிசு நமது நாட்டு வளமான நிலப் பரப்பில் கணிசமான பகுதியை தாரை வார்த்துக் கொடுத்ததாகும். அதனால் ‘வளவுவ’ முதலாளிகள் சிலர் உருவானார்கள். அந்த வகையில் இரவோடு இரவாக ‘வளவுவ முதலாளி ஆகிய சிலரின் சந்ததிகள் நாட்டின் தலைவர்களாவதற்கு தம்முள் போட்டியிட்டனர்.

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
மாமன்-மருமகன் உறவுடைய சேனநாயக்கா, ஜீனியஸ், கொத்தலாவல போன்றோரும் அந்த அணியினரும் ஒரு புறம்; சொலமன் றிட்க்வே மறுபுறம். நாடு சுதந்திரம் பெற்றவுடனேயே இந்தப் போட்டி வெளிவந்தது; விஸ்வரூபம் எடுத்தது.
அந்தப் போட்டியில் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள், “சிங்களம்” மட்டும் என்றும் 'இலங்கை பெளத்த நாடு' என்றும் “தேசிய மதம் பெளத்தம்’ என்றும் எதிரொலித்தன. பின்புதான் தமிழ்த் தலைவர்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களுமே சரிவரப் புரிய முடிந்தது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனுஷனைக் கடிக்கும் போது தமிழர்கள் அதைச் சரிவரப் புரிந்து கொண்டார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற 'வயம்பா’ தேர்தல் காலத்தில் “பெண்களை நிர்வாண மாக்கி அமிலம் ஊற்றித் துன்புறுத்திய வேளையில், சிங்கள மக்கள் சிலர் இன்னும் புரிந்திருப்பார்கள்! அது எமது பிரச்சனையல்ல. அரசியலில் ஒர் அங்கம் தான் பலாத்காரம், வன்செயல் என்ற காலம் போய் பலாத் காரத்தின் ஒர் அரசியல் என்ற காலத்தின் பிரதிபலிப்பே
அது.
ஒரே இலங்கை என்று தேசியம் பேசிய தமிழ்த் தலைவர்கள் இலவு காத்த கிளிகள் என்று தீர்க்க தரிசனம் கூறிய எமது தமிழ் மூதறிஞர் தந்தை செல்வா "சமஷ்டி" அரசு பற்றியும் பல இன மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு அதுவே ஒரே வழி என்றும் கூறிய வேளை, அது நாட்டைப் பிரிக்கும் என்று
67

Page 36
தமிழ்த் தலைவர்கள் சிலரே "செல்வநாயகம் வகுப்பு வாதி’ என்றனர். சமஷ்டி ஆட்சி முறை பிரிவினை அல்ல; அது வேற்றுமையில் ஒற்றுமை காணல் என்று தந்தை செல்வா நம்பிக்கையுடன் கூறினார். அதற்கு இணங்காத தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை "இருதலைக் கொள்ளி” ஆக்கினர். தந்தை சமஷ்டி முறை கேட்டது ஏன்?
ஒரு நூற்றாண்டு காலமாக, தமிழர் நாடெங்கும் வாழத் தொடங்கினர். நல்ல கல்வி வாய்ப்பு, குறிப்பாக ஆங்கில மொழிக் கல்வி, யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தமிழருக்கு கூடுதலாக இருந்தது. கிறிஸ்தவ மிஷன் பாடசாலைகளும் அவற்றுக்குப் போட்டியாக எழுந்த இந்து பாடசாலைகளும் கல்வி விருத்திக்கு ஏற்ற வாய்ப்பையும் வசதியையும் அளித்தன. பாடசாலை களின் தரமும் பெறுபேறுகளும் மற்றைய பகுதியினர் பொறாமைப்படும் அளவுக்குப் பரந்து விரிந்தன.
வட பகுதியில் ஆங்கில மொழிக்கல்வி மேனிலை அடைந்தது என்பதை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலே கோல்புறுாக் ஆணைக் குழுவே தட்டிக் காட்டியது. குறிப்பாக, அமெரிக்க மிஷன் பாடசாலை கள் பற்றிக் குறிப்பிடும் போது, “யாழ்ப் பாணத்திலுள்ள அமெரிக்க மிஷன் நடத்தும் பாட சாலைகள் மிகவும் நல்முறையிற் பரிபாலனஞ் செய்யப் படுகின்றன எனவும் அரசாங்க பாடசாலைகள் அவற்றுடன் போட்டியிட முடியாத நிலையில் உள்ளன’ எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மாறாக, கொழும்பில் ஆங்கிலக் கல்வி வசதி மிகச் சிலருக்கே அன்று கிடைத்தது என்பதையும்
68

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இப்படிக் கல்வி வசதி பெற்ற யாழ்ப்பாணத் தமிழர் குடியேற்ற நாட்டரசின் ஊழியராகப் பலகாலம் வேலை வாய்ப்புப் பெற்றனர். அரச சேவையில் பலதரப்பட்ட வேலைகளிலும் அவர்கள் இடம் பெற்றனர். இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையில் நிலை எப்படி இருந்தது என்பதை, நாஷனல் gGustSun Sé' (National Geographic Vol 191, No 1, Jan 1997, page 120) சஞ்சிகையில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் பின்வருமாறு வர்ணித்துள்ளார்:
"அமெரிக்க மிஷனரிமாரிடமிருந்து விரைந்து ஆங்கிலம் கற்ற தமிழரை பிரித்தானியர் உயர் நிலையில் அமர்த்தினர். அதனால் "சிங்கள’ சக்தி வலுவிழந்தது. 1947இலே, சிறுபான்மை இனமான தமிழர் அரச சேவையின் முக்கியமான வேலைகளில் 60% பதவிகளை வகித்தனர்."
“சிங்களம் மட்டும்" சட்டத்தை அமுல் செய்ததற் கான காரணம் இது என்பது அவர் கூறிய விளக்க மாகும். அரச சேவையில் சிங்களவர்க்கு இடம் பெறுவதாயின் அத்தகைய சட்டம் அவசியமென்பது அவர்கள் கருத்து. அரச சேவையில் இடம் கிடைத்த காலம் முதலாக, நம்மவர் கொழும்பிலும் சுற்றுப் பகுதியிலும் வாழவும் தொடங்கினர். இலங்கை ஒரே நாடு; அந்நிலை தொடரும் என்ற நம்பிக்கை ஊர் பெயர்ந்த தமிழருக்கு இருந்தது.
அரச சேவை காரணமாக, தமிழர் எப்படி நாடெங்கும் பரவி வாழ்ந்தனரோ, அதே போன்று, பெரு
69

Page 37
-——————O+ sub LS 4-o-------
வர்த்தகர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே சென்றனர். பொறாமைப்படத்தக்க அளவுக்கு அவர்கள் காலப் போக்கில் வெற்றி வாகையுஞ் சூடினர். கப்பல் சொந்தக்காரராக, ஏற்றுமதி, இறக்குமதி விற்பன்னராக, உற்பத்தித் தொழிலதிபராக, .இப்படி எந்தப் புது முயற்சியிலும் காலடி வைத்து உயர்ந்தவர்கள் கதைகளை யாமறிவோம். அவர்களும் கொழும்பிலே வாழ்ந்து புதியதோர் சமூகத்தை அமைத்தனர்.
ஆக, படித்த தமிழர் அரச சேவையில் நிர்வாகி களாகவும் எழுதுவினைஞராகவும் இன்னும் பல தொழில்களையும் நாடி அங்கே சென்றனர். வர்த்தகத் துறையில் ஈடுபட்ட தமிழரும் தமது அறிவுத் திறனையும் செல்வ வளம் இயற்றும் கலையையும் விருத்தி செய்தற்கு அங்கே சென்றார்கள். புதிய சூழலில் புதியன படைத்தனர்.
சாதாரண மக்களும் வாழாதிருக்கவில்லை. இலங்கையின் மற்றைய பிரதேசங்களில் தம்மால் இயன்ற சிறு வியாபார முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். காலப் போக்கில், தமிழரும் சிங்களவரும் கலந்து வாழத் தொடங்கினர். இனவேறுபாடு, மத வேறு பாடு, மொழி வேறுபாடு ஆகியன சமாதான சுகவாழ்வுக்குத் தடையாக நிற்கவில்லை. இலங்கை சுதந்திரம் பெறும் வரை மக்கள் சமாதானமாகவே வாழ்ந்தனர் என்பது வரலாறு. எனவே, சுதந்திர இலங்கையில் அத்தகைய வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும் 'அரசியல்’ முரண்களை விலக்குவதற்கு சமஷ்டி ஆட்சி முறையே விவேகமானது என்பதை
70

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40அவர் தெளிவுபடுத்தினார். அம்முறையிலே, -
சுயாட்சியுள்ள ஒரு தமிழ்ப் பிரதேசம் ஒரு மாநிலம்;
சுயாட்சியுள்ள ஒடு சிங்களப் பிரதேசம் இன்னொன்று;
இரு சுயாட்சி மாநிலங்களையும் இணைத்து ஒரு மத்திய அரசு.
இவ்வாறான சமஷ்டி அரசு முறை பிற நாடுகளில் வெற்றி அளித்திருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். உதாரணமாக, சுவிற்சலாந்து தேசத்திலே நான்கு மொழி பேசும் சுவிஸ் இனம், ஒரே குரலுடன் ஒரே தேசிய இனமாக வாழ்வதை எடுத்துக் காட்டினார்.
! இலங்கையிலும், ஒரே தேசிய இனமாக இரு மொழி பேசு மக்கள் வாழ்வதற்குச் சமஷ்டி அரசு வழி செய்யும் என்று பரிந்துரைத்தார். ஒற்றையாட்சி, பல்லின மக்கள் வாழும் நாடுகளிலே பொருத்தமற்றது என்று வாதாடினார். தமிழ்த் தலைவர்களும் சரி, சிங்களத் தலைவர்களும் சரி அவரது கருத்தை ஏற்கவில்லை. அவரவர் அபிலாஷைகள் அதற்குத் தடைபோட்டன. தன்னலம் பொது நலனைத் தாரை வார்த்துக் கொடுத்தது.
கடந்த ஐம்பது ஆண்டு கால ஒற்றையாட்சியில், நம்மவர் அனுபவித்த இன்னல்கள் எத்தனை? இழந்த உரிமைகள் எத்தனை? ஈழத் தமிழினம் உலகளாவிய தமிழினம் ஆகுதற்குத் தள்ளப்பட்ட நிலை உருவானது.
71

Page 38
6. ஒற்றை ஆட்சியில்.
"நாட்டுக்கு உழைத்தோர் நடுக்கடலில் நம் இனிய பாட்டன் நிலனோ பரர்கையில் பாட்டு இசைத்த செந்தமிழாள் நொந்து சிறையில்
தமிழருக்கோ
வந்தகுடி என்ற வடு"
இ2ம்பது ஆண்டு கால ஒற்றை ஆட்சியிலே, ஈழத்தில் இன ஒற்றுமை இற்றுச் சிதைந்து, மீள முடியாத நிலையை அடைந்துள்ளது. அந்நிலை, இனவாத சிங்கள அரசியல் தலைவர்களால், தமது சுய நலனுக்காக, எவ்வண் படிப்படியாக உருவாக்கப்பட்டது எனவும், அந்த முனைப்பில் தமிழர் பாதிக்கப்பட்டு உலகளாவிய தமிழர்களாவதற்கு எவ்வண் களம் அமைக்கப்பட்டது எனவும் மீளாய்வு செய்தால், வரலாறு தெளிவாகும்.
72

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
1948ம் ஆண்டு பிரித்தானியர் இலங்கைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அவர்கள் அரசியல் அமைப்பின் 29 (2)ம் பகுதி இன மத பாதுகாப்புகளை சிறுபான்மை இனத்தவர் யாவருக்கும் அளிக்கும் என்று கருதப்பட்டது.
1949இலே, நாட்டுக்கு உழைத்து நலிந்த மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. ‘இன்று அவர்களுக்கு அநீதி, நாளை எமக்கு’ என்றார் தந்தை செல்வா. சுயாட்சியுள்ள தமிழகம், சிங்கள மாநிலம் அமைத்துச் சமஷ்டி ஆட்சி மூலம் இலங்கையின் ஒற்றுமையைப் பேணி உரிமைகளையும் வழங்குதல் விவேகம் என்றார்.
1951 முதலாக, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழரின் பாரம்பரிய நிலன் பறிக்கப்பட்டது. படிப்படியாக, தமிழர் பிரதேசம் சூறையாடப்பட்டது. ‘சமஷ்டி’ ஆட்சிக்கு அடிப்படையான பிரத்தியேக நிலவுரிமை மறைமுகமாக அபகரிக்கப்பட்டது. உதாரணமாக,
OOOOO 80000
40000
20000
LCCLL LT STTTTLTLGLTT GGLTTLq S LLLLSLLLLLLLL LLLLLLL sexßG Gai. Der Gasw. Mosa. states BGoeun
73

Page 39
- -οι -9 ιδιΦ «----
திருகோணமலை மாவட்டத்தில் ம்ட்டும், 1953இற்கும் 1981இற்கும் இடையில், தமிழர் பிரதேசம் சிங்கள மயமான பாங்கை கீழேயுள்ள வரைபடம் காட்டுகிறது.
திருகோணமலை மாவட்டம் மட்டுமல்ல, அம்பாறை மாவட்டமும் இதே போன்று சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக்கப்பட்டது.
இத்தகைய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் தமிழர் பிரதேசங்கள் உரிமை இழந்தன. அப்பிரதேசங் களிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழர் அந்த வாய்ப்பை இழந்தனர். அப்பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்கள் ஆயின. இன்று அப்பிரதேசங்கள் எல்லாம் சிங்களப் பிரதேசங்கள் என்று உரிமை கொண்டாடும் நிலை!
1951இல், ஐ. தே. கட்சி அமைத்த அரசாங்கத் திலிருந்து பண்டார நாயக்கா வெளியேறியதுடன் “மொழிப் பிரச்சனைகளும் களம் அமைக்கப்பட்டது. அவரது பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப் பட்டதுடன் நாட்டின் தலைமைக்கான போட்டி சூடு பிடித்தது. சிங்கள மொழியை அரச மொழியாக்க வேண்டும் என்ற ஆயுதத்தை ஏந்துவதற்கு அவர் தயாராகினார்.
சிங்கள மொழியை அரச மொழியாக்க வேண்டும் என்று 1940களிலேயே ஜே. ஆர் முயன்றார். டொனமூர் அரசியல் திட்டம் நடைமுறையிலிருந்த பொழுதே அவர் அதற்கு முயன்றார். ஆயினும் அவரது வகுப்பு
74

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40வாதக் குரல் அன்று ஓங்கவில்லை; ஆதரவு பெறவில்லை.
பண்டாரநாயக்கா தமது கட்சியை வளர்க்கவும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறவும் முயன்ற போதுங்கூட, ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் என்ற குரலை எழுப்பவில்லை.
1954இல் பிரதமராகப் பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலை யாழ்ப்பாணம் வந்தார். நெடுந்தீவில் 'முடி’ சூட்டி வரவேற்கப்பட்டார். இதயம் குளிர்ந்த அவர் இரு மொழிகளுக்கும் சம உரிமை வழங்குதல் பற்றிய தமது முடிவை வெளியிட்டார். "தமிழும் சிங்களமும் நாட்டின் உத்தியோக மொழிகளாக, சம உரிமையுடன் ஆங்கில மொழியின் இடத்தை எடுக்கும்" என்று உறுதி அளித்தார். ஆனால் -
1955இல் பூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா, அரசியலில் வெற்றி பெற்று ஐ. தே. கட்சியை வீழ்த்தும் நோக்குடன் தனது மொழிக் கொள்கையை வெளியிட்டார். நாட்டின் அரச மொழி சிங்களம் மட்டுமே. தமிழுக்கு 'நியாயமான' அளவு உரிமை மட்டும் என்றார். அப்பொழுதே, இனப் பிரச்சனைக்கு உறுதியான அடித்தளமும் அமைத்தார்.
1956இல் நடைபெறவிருந்த தேர்தலில் பண்டார நாயக்கா தலைமையில் கூட்டணி சேர்ந்து, ஐ.தே. கட்சியை பதவியிலிருந்து வீழ்த்துதற்கு அணி திரண்டது. அதை எதிர்த்து வெற்றி பெறுதல் முடியாமற் போகும் என்று கருதிய சேர். ஜோன், தமது கட்சியும் சிங்களம்
75

Page 40
மட்டும் கொள்கையைக் கடைப்பிடிக்கு மென்று உறுதியளித்து, மக்களைக் கவர முயன்றார். அதனால், நாட்டின் இரண்டு பலம் வாய்ந்த சிங்களக் கட்சிகளும் தமது போராட்டக் கருவியாகத் தமிழரின் தமிழ் மொழியைப் பணயம் வைத்தன. இறுதியில், “சிங்களம் மட்டும் சட்டம் பண்டாரநாயக்காவின் அரசினால் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் நிறைவேற்றப் படும் நாள், தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்ற முன்றலில் சத்தியாக்கிரகம் செய்து, சட்டத்திற்கான தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது, அவர்கள் யாவரும் காடையர்களினால் தாக்கித் துன்புறுத்தப்ப ட்டனர். அன்றே, வெளிப்படையான வன்செயலை அங்குரார்ப்பணஞ் செய்து, சிங்கள அரசின் நிலை தெளிவுபடுத்தப்பட்டது, சாத்வீக அடிப்படையிலான எதிர்ப்பை நகுக்குதற்கும் பலாத்காரம் பிரயோகிப்போம் என்ற அடக்குமுறை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 1958இலே, மோட்டார் வாகனப் பதிவு இலக்கத்திற் சிங்கள பூரீயைப் பொறிப்பதன் மூலம், சிங்களம் மட்டும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. சாத்வீகமான சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திய தமிழரசுக் கட்சி 'பூ' அழித்துச் சிறை செல்ல" உறுதி பூண்டது. பலர் சிறை சென்றனர். அவ்வியக்கத்திற் பெண்களும் Lussé5 பற்றத் தொடங்கினர். கைதாகி, நீதிமன்றத்தின் தண்டனை பெற்றனர்.
1958இல், தமிழர் பிரச்சனையை ஆராய்ந்து, நியாயமான முறையில், தீர்வு காணும் முயற்சியில் 76

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பண்டாரநாயக்கா ஈடுபட்டார். அதன் பலனாக, பண்டா - செல்வா ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப் பட்டது. ஆயினும், தமது கட்சிக்கு ஆதரவு தேடிய ஜே. ஆர், பெளத்த குருமாரின் ஆதரவுடன் ‘கண்டிக்கு கால்நடை யாத்திரை’ என்று புறப்பட்டு, பண்டார நாயக்காவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி, ஒப்பந்தத்தை முறியடித்தார். இன உணர்வைக் கிளப்பி, நாடெங்கும் இனக் கலவரம் பரவ வழிவகுத்தனர். பல்லாயிரம் தமிழர் உயிரிழந்து, உடைமை இழந்து, ‘கப்பல் ஏறி" யாழ்ப்பாணம் வரும் அவல நிலை உருவாக்கப்பட்டது. தமிழரசுத் தலைவர்கள் தடுப்புக் காவலுள் வைக்கப் பட்டனர்.
1959இல், பண்டாரநாயக்கா படுகொலை செய்யப் பட்டார். திருமதி பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார்.
1961இல், தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரப் போராட்டம் ஒன்றை நடத்துதற்கும் தமிழருரிமைகளை மீடபதற்கும் முயன்றனர். தமிழ் மக்களின் ஏகோபித்த போராட்டமாக அது அமைவதற் காக மற்றைய தமிழ் அரசியற் கட்சிகளும் அதிற் பங்குபற்றின. சட்ட மறுப்புக்கு அறிகுறியாகத் தபால் முத்திரைகள் அச்சிட்டு விற்பனை செய்தனர். தமிழரின் இதயத் துடிப்பை ஒரே குரலில் எடுத்துக்காட்டிய அப்போராட்டத்தை முறியடிப்பதற்காக, աngoւն பாணத்துக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அடக்கு முறையில் ஆட்சி நடத்துவதற்கு இரும்புக் கரம் நீட்டப்பட்டது. ஒரு நாள் நள்ளிரவு இராணுவத்தினர் சத்தியாக்கிரகத்தைச் சீர் குலைத்தனர்.
77

Page 41
-- αεςλία ο ειδι9 ---
1964ம் ஆண்டு, “சிங்களம் மட்டும்’ சட்டம் செல்லுபடியாகாது என்ற கருத்து நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் முயற்சியால் “கோடீஸ்வரன்’ பெயரில் வழக்குத் தொடரப்பட்டது. திரு. மு. திருச்செல்வம் கியூ சி. வழக்கை நடத்தி வாதாடினார். ‘சிங்களம் மட்டும்’ சட்டம், அரசியல் அமைப்பு விதிகளின் 29(2)ம் பகுதியின்படி வலுவற்றது; விதிக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ஓ.எல்.டி. கிறெஸ்டர். அரசியல் அமைப்புச் சட்ட விதிகளை மாற்றித் தமது “சிங்களம் மட்டும்’ கொள்கையை நிலைநிறுத்தப் பேரினவாதிகள் அப்பொழுதே தீர்மானித்து விட்டனர். 1965இல், மீண்டும் ஆட்சிக்கு வந்த ஐ. தே. கட்சித் தலைவர் டட்லி - செனநாயக்கா தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன் டட்லி - செல்வா ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் என்றவாறு, எதிர்க் கட்சியினர் அதையும் முறியடித்தனர்.
1970இல், பதவிக்கு வந்த பூரீமா, 1972 இல் புதிய அரசியலமைப்பில் ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்று பிரகடனஞ் செய்து, பழைய அரசியலமைப்பை வலுவற்றதாக்கினார். பழைய அரசியலமைப்பின் 29ம் விதிமூலம் சிறுபான்மை இனத்தவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்று காட்டுவதற்காகவே தந்தை செல்வா 1972இல் பாராளுமன்ற உறுப்புரிமையைத் துறந்து, இடைத்
78

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40தேர்தலில் அமோக வெற்றியீட்டினார்.
1975ம் ஆண்டுதான் இடைத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தந்தை செல்வா, “சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோஷலிச தமிழ் ஈழ அரசை மீள்விக்க, தமக்கும் தமிழர் கூட்டணிக்கும் மக்கள் இட்ட கட்டளை" என்று பொறுப்பேற்றார்.
1976ம் ஆண்டிலே, தமிழர் கூட்டணி நடத்திய பிரபல ‘வட்டுக் கோட்டை மாநாட்டிலே ஒரு சுதந்திரமான இறைமையயுள்ள தமிழீழ அரசை' அமைப்பது பற்றிய கட்டளை என்று பொறுப்பேற்றார். 1977இல், ஆட்சிக்கு வந்த ஜே. ஆர், அடுத்த ஆண்டிலேயே முழு அதிகாரங்களும் கொண்ட தேசாதிபதியானார்.
கால் நூற்றாண்டுக் காலம் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபட்ட தலைமையில் இளந் தமிழ்ச் சமுதாயம் நம்பிக்கை இழந்தது.
சிங்களத் தலைவர்களுடன் மாறி மாறிச் செய்யப் பட்ட உடன்படிக்கைகள் பலன் தரவில்லை என்ற விரக்தி இளந் தமிழ்ச் சமுதாயத்திற் புரட்சி மனப் பாங்கை விருத்தி செய்தது. அதனால், அதை அடக்கும் எண்ணத்தில் இராணுவ நடவடிக்கைகள்!
1981 முதல் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை களால் எத்தனை அழிவுகள் - வீடுகள், நூலகங்கள், வியாபார நிலையங்கள், உயிர்ப்பலிகள்!
79

Page 42
-سسسسسسهه کا ظا یک «هستنسنس سنسس
1983இல், தமிழருக்கு எதிரான இனக்கலவரம். உயிர் இழப்புகளும் உடைமை இழப்புகளும் அகதி முகாம்களும். பலர் புலம் பெயர்க்கப்பட்டனர். பலர் புலம் பெயரத் தொடங்கினர்.
1987இல், இலங்கைக்கு வந்த இந்திய "அமைதிப் படை', 1989இல் பதவிக்கு வந்த ஜனாதிபதி பிரேம தாசா, 1994இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி சந்திரிகா குமாரணதுங்க எவருமே தமிழருக்கு விமோசனம் அளிக்கவில்லை. மாறாக, அழிவுகளும் உயிரிழப்புகளும தொடர்ந்தன. புலம் பெயர்ந்து வாழ்வதே பாதுகாப்பளிக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழத் தமிழரில் கணிசமான தொகையினர் உலகளாவிய ஈழத் தமிழினம் ஒன்றை உருவாக்கினர்.
உலகின் எல்லாக் கண்டங்களிலும் பரந்து புது வாழ்வும் பாதுகாப்பான சூழலுந்தேடிய ஈழத் தமிழினம் அங்கு நிம்மதியாக வாழ்கின்றதா? அவர்களின் உண்மைப் பிரச்சனைகள் என்ன? உள்ளத்துணர்வுகள் என்ன? ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் உள்ளத்தில் தெரிகிறதா? இவற்றைச் சற்று மதிப்பீடு செய்வோம்.

7. பெயர்வு - மாற்றம் - தொடர்ச்சி
“அலை கடலைத் தாண்டி அயல்நாடு சென்றவரும் கலை அறிந்தோர் நட்பாற் கனடாவைச் சேர்ந்தவரும் ஐரோப்பாக் கண்டத்தில் அடியழித்து நின்றவரும் ஊர்தேசம் விட்டேகி உலகிற் சிதறி விட்டார்"
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தன" என்று மதித்த இனம், ஈழத்தமிழினம். இந்த உணர்வுடன் வாழ்ந்த இனம் இன்று உலகளாவிய தமிழ் இனமாகி, பரந்த உலகிலே சிதறி வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலையைக் காண்கின்றோம்.
பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து, வேலை காரணமாகப் பிற ஊருக்குப் பெயர்ந்து செல்வதையே சகிக்கமுடியாத தலைமுறை ஒன்று அண்மைக் காலம் வரை இருந்தது. என் அனுபவத்திலேயே "ஊரை விட்டுப் பிரியும் வேதனையை அனுபவித்துள்ளேன். நடைமுறை வசதிக்காக, பிறந்த ஊராகிய நாவற்குழியை
Τ-5 81

Page 43
- eν ΦιδιΦ «ο -
விட்டுப் பிரிந்து பெற்றோர் சகோதரருடன் கோண்டா விலில் வாழச் சென்ற காலம் அது. அப்பொழுது என் பாட்டி எங்களுடன் வர மறுத்து விட்டார்.
"ஐயோ, ராசா, இது நீ பிறந்த மண், நீ வளர்ந்த மண். இது நீ பிறந்த குடிசை நீ, வளர்ந்த குடிசை. இதை எல்லாம் அழிய விட்டுப் போவதை என்னால் பொறுக்க முடியாது. நீயும் தம்பிமாரும் தண்ணிர் காவிச் சின்னக் கைகளால் ஊற்றி வளர்த்த தென்னம் பிள்ளைகளைப் பார். நாளைக்கு அதுகள் வளர்ந்து தாற இளனியைக் குடிக்கிறதுக்கும் கொடுத்து வைக்க மாட்டியள். நிலபுலனை விட்டு, மாடு கன்றை விட்டு, வயல் வெளியை விட்டு, சொந்த பந்தங்களை அறுத்துப் பரதேசி போலப் போறதை. வேரை அறுத்துப் போறதை நான் எப்படி 'ஓம்' எண்டு சொல்லுவன்.?” இவ்வண்ணம் என் பாட்டி எத்தனையோ சொன்னாள். முடிவில் தான் தனியாக என்றாலும் வீட்டில் இருந்து, வீட்டைப் பேணி, அது "அழியாமல் நான் இருக்கும் வரை” பாதுகாத்துத் தருவேன் என்று கண்ணிருடன் சொன்னாள். அவளது உள்ளத்தில் "ஊர்ப் பெயர்வு’ எத்துணை உணர்வைச் சுரக்கச் செய்தது என்பதை அந்த வேளை நான் உண்மையில் உணரவில்லை. ஏனென்றால் -
அன்றைய ஊர்ப் பெயர்வு, எனது தேவை ; எனது செளகரியம். படித்த பின், வெளியுலகு பற்றி அறிந்த பின், தேவை கருதி வேரை அறுத்துச் செல்வதில் உள்ள வேதனையை நான் அன்று பெரிது படுத்துவில்லை.
82

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 48--
ஆயினும், அந்த ஊரிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து, வெளியூர் எதிலும் என்றுமே வாழ்ந்து அறியாத பாட்டியின் உணர்வுகள் வேறு. அந்தப் பாட்டியைப் போலச் சொந்தம் எங்கள் மண் என்று வாழ்ந்த எத்தனை ஆயிரம் உள்ளங்கள் இரவோடு இரவாகப் புலம் பெயர நேர்ந்தது? அவர்களின் கண்ணிர் சொன்ன கதைகள் என்ன? நெஞ்சிலே உந்தி உந்தி நின்றும் எழுதாத காவியங்கள் எத்தனை? அவையெல்லாம் பிறிதொரு தொடர்கதை,
ஊர் பெயர்தலும் நாடு பெயர்தலும் இன்று நேற்றுத்தான் ஏற்பட்டதல்ல. சமூகப் பெயர்வு மனித சமுதாயத்தின் வரலாறு. திரை கடலோடியுந் திரவியந்தேடு’ என்று செயற்பட்ட தமிழனின் கதை, கப்பலோட்டிய தமிழனின் கதையாகும். பிறந்த நாட்டை விட்டுப் பிரிந்து, அலை கடலையும் அடர் வனங்களை யுந்த தாண்டி அன்னிய நாடுகளுக்குச் சென்று மக்கள் வாழத் தொடங்கியது வரலாற்றுக் காலம் முதலாக நிகழ்ந்துள்ளது. அது காலச் சுழற்சிக் கோலத்தால் ஏற்படுகின்ற ஒரு மாற்றம்’ ஆகும். காலச் சுழற்சியுடன் இணைந்து மாற்றமும் நிகழ்கிறது. எனின், மாற்றம் என்பது நிகழ்காலம்’, ‘எதிர்காலம்’ என்ற இரு காலங்களும் பற்றியது. நிகழ்காலம் இன்றுள்ள காலம்; எதிர்காலம் நாளைய சங்கதி. இன்றைய நிலை நாளை மாறுகிறது.
இந்த மாற்றம் நாடு பெயர்வதால் மட்டும் நிகழ்வதல்ல. சொந்த நாட்டில் வாழும் போதே மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதிகால மனிதனும் அதை
83

Page 44
எதிர் நோக்கினான்; இன்றைய மனிதனும் அதை எதிர் நோக்குகின்றான். நாளைய மனிதனும் அதை எதிர் நோக்குவான். பரம்பரையாக வாழ்ந்த இடத்தில்’ இருந்தும்மனிதன் மாற்றத்தை எதிர் நோக்கினான். இடம்’ பெயர்ந்தும் மனிதன் மாற்றத்தை எதிர் நோக்கினான். அதனாலேதான் மாற்றம் என்பது நிகழ்காலம்’, ‘எதிர்காலம்’ என்ற இரண்டு காலங்களும் பற்றியது ஆகிறது.
நிகழ்காலத்தில் - அதாவது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, அம்மக்களின் பண்பாடு போன்றவை, அவர்களின் நாகரிகம் எனப்படும். அந்த நாகரிகத்துக்கும் மக்களுக்கும் ஒரு தொடர்புண்டு. சிந்துச் சமவெளி நாகரிகம் என்கிறோம். எகிப்தியர் நாகரிகம் என்கிறோம், இந்திய நாகரிகம் என்கிறோம் - சமூகமாக வாழ்கின்ற மனிதர் தமது' என்று கண்ட ஒரு வளர்ச்சிப் பாங்கையும் பண்பாட்டையும் அவை பிரதிபலிக் கின்றன. ஆக, குறித்த ஒரு மனித சமூகத்துக்கும் அதன் உயிர்ப்புக்கும் முன்னேற்றத்துக்கும் 'மாற்றமே அறிகுறியாகும்.
மாற்றத்தினூடும் மனிதன் “தொடர்ச்சி ஒன்றைப் பேணி வந்துள்ளான். நாகரிகம் வளர, மாற்றம் துரிதம் பெறும். அங்கே “தொடர்ச்சி ஒன்றைப் பேண மனிதன் முயல்வான். எனவே, மாற்றம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியன பற்றியது என்றால், “தொடர்ச்சி’ என்பது "இறந்த காலம்’ பற்றியது. பழையன கழிந்து புதியன புகும் வேளையிலே பழையனவற்றுள்ளே மனிதன்
84

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பேணிக்காக்க வேண்டிய சில கூறுகளும் உள்ளன. அவற்றை இனங்கண்டு பேணுவதே தொடர்ச்சியை ஏற்படுத்தும். அதனாலேதான், தொடர்ச்சி என்பது கடந்த காலத்தோடு இணைந்ததாக, கடந்த காலம் பற்றியதாக இருக்கிறது.
மாற்றத்துக்குச் சில காரணிகள் உள்ளன. தொடர்ச்சிக்கும் காரணிகள் உள்ளன. இக்காரணிகளுக்கு இடையே நிகழ்கின்ற இடைத்தாக்கம் காரணமாக, பெரும்பாலும் முரண் ஏற்படுகின்றது. ஏன்?
மாற்றம் ஒன்று ஏற்படும் பொழுது, மனிதன் அதற்குத் துலங்குகிறான். அதை எதிர்கொண்டு, மாற்றத்துக்கு ஏற்ப, தான் இணங்கி வாழ முயல்கின்றான். அவ்வண் இணங்கி வாழ முற்படும் போது பழையன சில கழிதலும் புதியன சில புகுதலும் இயற்கை என ஏற்றுக் கொள்கிறான். ஆயினும், கழிக்கத் தக்கவை எவை? பேணப்பட வேண்டியவை எவை என்பதை இனங்காணும் முயற்சியின் போதுதான் முரண்கள் முளை கொள்கின்றன.
இக்காலத்திலே, மாற்றங்கள் பல மிக வேகமாக நிகழ்கின்றன. அவற்றை எதிர் நோக்கும் மனிதன், மாற்றத்தோடு இணங்கி வாழ முயற்சி செய்கிறான். அம்முயற்சி வாழ்க்கைப் போராட்ட நீச்சல் போன்றது. அதில் வெற்றி பெறவே மனிதன் முயற்சி செய்கின்றான். அதில் தவறின், பாதையோரத்தில் சாய்ந்து விழுவான் எனவும் அவன் அறிவான்.
ஆக, மாற்றங்கள் நிகழும் வேகம் அதிகரித்துள்ள
85

Page 45
-- Φ -9ιδιΦ Φ
இக்காலத்திலே, மாற்றங்களின் வேகத்திற்கு ஏற்ப மனிதனும் மாற வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அத் தேவையை செவ்வனே நிறைவு செய்யும் உபாயத்தை அவன் கையாள வேண்டும். அத்திறனைப் பெறுதலே அவனது ஜீவநாடியாகையால், எதிர் நோக்கும் சவாலை ஏற்று, பொருத்தமான முறையில் துலங்க வேண்டும். உலகளாவிய ஈழத் தமிழருக்கும், இந்த மாற்றம், தொடர்ச்சி என்பனவற்றுக்கும் என்ன தொடர்புண்டு எனப் பார்க்கும் போதுதான், அவர்களின் உடலியல், உளவியற் பிரச்சனைகள் புலனாகும்.
தொழிலுக்காகப் பிற நாடுகளுக்குச் சென்ற ஈழத் தமிழர் பலர். பல தசாப்தங்களாக அவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் தனித்தனிக் குடும்பங்களாக, தீர்மானித்தும் திட்டமிட்டும் சென்றவர்கள். பிற நாட்டுச் சூழலிலே வாழச் சென்றவர்கள் காலப் போக்கிலே அந்தச் சூழலிலே நிரந்தரமாக வாழ முடிவு செய்தவர்கள். சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று, தொழில் செய்து, மீண்டும் ஈழத் துக்குப் பென்ஷனியர்களாக வந்தவர்களும் உள்ளனர்; அந்த நாடுகளிலேயே தங்கி அந் நாட்டவ ராகியோரும் உள்ளனர். அதே போல, மற்றைய நாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே நிரந்தரமாக வாழ்ந்தவர்கள் பற்றிய வரலாற்றையும் நாம் அறிவோம். தொழிலுக் காகப் புலம் பெயர்ந்தவர்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் அந்த நாடுகளுடன் இணங்கியும் இணைந்தும், தமது தனித்துவம் இழந்து சங்கமித்தும் வாழுகின்ற கதையும் ஈழத் தமிழர் வரலாற்றில் உண்டு.
86

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
ஆனால், இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடைபெற்றது என்ன? ஏறக்குறைய இரண்டு தசாப்தங் களாக, ஈழத் தமிழர், பல்லாயிரக் கணக்கில் புலம் பெயர்ந்தும் புலம் பெயர்க்கப்பட்டும் அன்னிய நாடுகளிலே வாழ்கின்றார்கள். அவர்கள் ‘வாழ்கின்றார் களா’ அன்றேல் இருக்கின்றார்களா' என்பது பிறிதொரு சங்கதி.
ஈழத் தமிழர் இன்று பெருந்தொகையிற் சென்ற டைந்துள்ள நாடுகளாக, கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். அந்தப் பட்டியல் நீள்கிறது. பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் தொகையும் விரிகிறது.
சில நாடுகள் புள்ளியிட்டு ‘வடித்தெடுத்து’ ஏற்றுக் கொண்டவர்கள் தொகை சில ஆயிரம் எனலாம். ஆயினும், “அகதிகள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டோரும், 'திரிசங்கு” நிலையில் ஊசலாடுவோருமே ஏறக்குறைய நாலு லட்சம் என்று கூறப்படுகிறது. 'இல்லை, இல்லை’ ஐந்து லட்சத்துக்கு மேல் என்று அடித்துச் சொல்ல நினைப்பவர்கள் பலர் என்பதையும் உணருகிறேன். இது பற்றிய புள்ளி விபரம் பூரணமாக இல்லை என்பதையும் இவ்விடத்திலே நினைவு படுத்துதல் வேண்டும். சரியான புள்ளி விபரத்தை அறிதல் சிக்கலானதாகும். உதாரணமாக, அவுஸ்திரேலி யாவில் புள்ளி விபரஞ் சேகரிக்க முயன்ற ஒருவர் கூறுவதைக் கவனிப்போம்:
87

Page 46
--οι -9 ιδιθ «Φ--
"அவுஸ்திரேலியாவில் இன்று 18690 தமிழர்கள் வாழ்கின்றனர் என்று கடந்த ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட குடித்தொகை மதிப்பீடு கூறகின்றது. 1991ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டுக்கு அமைய, 11,376 தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தனர். ஆனால் 1995ம் ஆண்டில் அவுஸ்திரேலி யாவிலுள்ள தமிழ் அமைப்புகள் வாயிலாக மேற் கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி அவுஸ்திரேலியாவில் இன்று 35,000 தமிழர்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித் தீவுகள், தென் ஆப்பிரிக்க, மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். இவர்களுள் தமிழ் பேசாத தமிழர்களும் உளர்.”
இங்கு தரப்பட்ட விபரத்தில், மற்றைய நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் தொகை மிகக்குறை வானதே எனவும் ஈழத் தமிழரே பெருந் தொகையினர் எனவும் கூறாமலே தெளிவாகும். அரசு சேகரிக்கும் புள்ளி விபரம் தரும் எண்ணிக்கைக்கும், மதிப்பீட்டுக்கும் உள்ள வித்தியாசம், மக்கள் “வீட்டு’ மொழி என்று குறிப்பிடும் மொழி காரணமாக எழுகின்றது என்பது பலரும் அறிந்ததே. பல்கலாசார நிலையில், இனவேறு பாட்டை அறிதற்காகப் புள்ளி விபரம் சேகரிக்கப் படுவதில்லை.
கனடாவில் எத்தனை ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள்? கட்டுரை ஆசிரிய்ர் ஒருவர் தமது கட்டுரையைப் பின்வருமாறு துவங்குகிறார்:
88

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
"கடவுள் கிருபையால் அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் கனடாவில் வந்து குடியேறியுள்ளனர். கடந்த பத்து முதல் பதின்மூன்று வருடங்களுக்குள்ளேயே கூடுதலானவர்கள் இங்கு வந்தனர்."
இவ்வாறு கூறும் கட்டுரை 1997இல் எழுதப் பட்டது. ‘இல்லை, கனடாவில் வாழும் ஈழத் தமிழர் தொகை ஒன்றரை லட்சம் வரை' என்பாரும் உள்ளனர். கனடாவில் ‘ஒன்றரை லட்சத்தை’ எய்துவதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன என்கிறார் ‘தமிழர் தகவல்’ ஆசிரியர். புள்ளி விபரம் மற்றைய நாடுகளிலும் இதே போன்று வழவழப்பாகவே உள்ளது. எனினும், அன்னிய நாடுகளில் “அகதிகள்’ என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர் தொகை நாலு லட்சத்துக்கு மேல் என்று கூறலாம். இவர்கள் திட்டமிட்டுப் புலம் பெயர்ந்தவர்கள் அல்லர். புது வாழ்வும் வளமும் பெறுதற்கு எண்ணி, முன்னேற்பாடுகளுடன் சென்றவர்கள் அல்லர். ஈழத்தில் வாழ முடியாத அவல நிலையில், உள்ளத்துணர்வுகளை அறுத்துக் கொண்டு சென்றவர்கள்; புலம் பெயர்க்கப்பட்டவர்கள்; எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் சென்றவர்கள். "ஈழமே எங்கள் நாடு; இங்கு தான் நாம் வாழப் போகிறோம’ என்று ஊரிலே காணி நிலம் வாங்கி, வீடு கட்டினார்கள். பரம்பரைக் காணியுள்ளவர்கள், தமது சொந்தக் காணியில் வீடு கட்டினார்கள். ஊர் பெயர்ந்து தொழில் செய்ய நேரிட்டாலும், ஊரிலே "விரிந்த குடும்பத்தினருடன் வாழும் உள்ளத்துடன் சொந்தமான ஊரிலும் குடும்பம்
89

Page 47
நடத்தியவர்கள். திரை கடலோடித் திரவியந் தேடி, சொந்த ஊரிலே இளைப்பாறியவர்கள் என்ன செய்தார்கள்? தாம் விரும்பிய 505 சூழலை அமைத்தார்கள். வீட்டுக் காணியிலும், தோட்டக் காணியிலும் தெங்கும் வாழையும், மாவும், பலாவும் நட்டு, நீரூற்றி உரமிட்டு வாழ்ந்தவர்கள். தமது பணத்தையும் உடல் உழைப்பையும் நிதியமாக முதலீடு செய்து, சொந்த வியர்வை சிந்தி வாழ்க்கை நடத்தியவர்கள். ஆனால் -
தமிழுரிமைப் போர் - அதை முறியடிக்கவென்று போர் முரசறைந்து அரசு மேற்கொண்ட வன்முறை - அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் இழப்பு - சந்தேக நபர் என்று கைதாகி அல்லற் பட்டோர் - காணாமற் போனோர் - இவை போன்ற காரணங் களால், அச்சத்துடனும் ஆறாத் துயருடனும் புலம் பெயர்க்கப்பட்டவர்கள், இரவோடிரவாக ஏதிலிகள் ஆனார்கள். சுட்ட வெடி ஒலி அதிர்ந்து எதிரொலிக்க, வாழ்ந்த ஊர்த் தெருவே சுடுகாடாக மாற, வீடுகளை யெல்லாம் கற் கும்பல்களாகக் குவிக்கப்பட, தேடி வைத்த பொருள் எல்லாம் தெருவில் சிதறப்பட, பட்டிப் பசுவையும் பால் கறந்த செம்பையும் விட்டு விட்டு ஒடியவர் எத்தனை எத்தனை லட்சம்? இவ்வாறு, வெறுங்கையோட பெயர்க்கப்பட்டவர்கள் உலகளாவிய ஈழத் தமிழருள் 90 வீதம் எனலாம். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரா “மாற்றத்தின்’ விளைவுகளையும் தாம் எத்தனை சிக்கலானவை! அந்தர நிலையில், உடைமை, பெயர்வு. சிந்தித்துத்
90

-o யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40திட்டமிடாது திடீரென ஏற்பட்ட ஒரு மாற்றம்.
அம்மாற்றத்தின் மூலம் பெயர்ந்தவர்களும் ஏதோ ஒரு வித நிறைவு பெறவே முயல்வர். அம் மாற்றம் ஏமாற்றம் - ஆகாமல் இருப்பதற்கு அவர்கள் விரைவிலே புது நிலனுடனும் சூழலுடனும் இணங்கி வாழ வேண்டிய தேவை உள்ளது. காலங்காலமாக வாழ்ந்து நிலைத்திருந்த மண்ணையும் சூழலையும் விட்டுப் பிரிந்த மக்கள், வேர் இழந்த மக்கள், புதிய சூழலுடன் இணைந்து வேரோடித் தழை வரும் வரையில், வாழ்க்கை போராட்டமாகவே அமையும்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி, அவன் தன்னவருடன் கூடிச் சமுதாயம் அமைத்து வாழ்பவன். சமுதாயம் அமைத்து வாழ்வதற்கு, தனது சமுதாயத் துக்குச் சொந்தமானது என்று கூறும் 'நிலம் அவசியம். அதிலேதான அவன் வேரூன்றுகிறான். அந் நிலப் பிரதேசத்துடன் தான் அவன் இனங் காணப்படுகிறான். தனி ஒருவனுக்கு எப்படி ஒரு நிலப்பரப்புச் சொந்தமோ, அதே போல ஒரு சமுதாயத்துக்கும் ஒரு எல்லை குறித்த நிலப்பரபுண்டு என்பதை நாம் அறிவோம். அதனை விட்டுப் பெயரும் போது, புதிய நிலத்திலே ‘நான் ஓர் அன்னியன்’ என்ற எண்ணம் தன்னியல்பாகவே எழும். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாவற்குழியில் இருந்து கோண்டாவிலுக்கு நான் சென்ற பொழுது, 'ஊர் பெயர்ந்த பொழுதுகூட அதை உணர முடிந்தது. சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து, சூழலையும் மக்களையும் பழகிக் கொண்ட பின்பும் அங்கு வாழ்ந்த
91

Page 48
- ο Φί ιδιΦ «Φ-
பலர் கண்ணில் ‘நான் ஒரு அன்னியன்’ ஆகவே பட்டேன். நான் மட்டுமல்ல; பிற ஊரில் இருந்து அங்க வந்து கல்யாணஞ் செய்தவர்கள் கூட அவர்தம் சொந்த "ஊர்ப் பெயர்’ மூலம் குறிக்கப்பட்டதையும் அறிவேன். உதாரணமாக, “அளவெட்டி’, ‘உரும்பராய்', 'கட்டுடை’ என்றவாறு இடப் பெயர்கள் மூலம் அந்த ஊர்களி லிருந்து வந்தவர்கள் குறிக்கப்பட்டார்கள். அதனால், அவர்கள் எல்லாருக்கும் ஏதோ தமதுரை விட்டுப் பிரிந்து வந்தவர்கள், அன்னியர்கள் என்ற மனோநிலை. அவ்வாறெனின், நாடு பெயர்ந்தோர் நிலை என்ன?
இயல்பான சூழலில் இருந்து பெயர்ந்தவுடன், புதிய சூழலின் கூறுகள் சிலவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். வாழ்க்கை முறை மாற்றமடைய வேண்டும். அந்நிலையில், அவர்களது தனித்துவ அடையாளம் நீர்த்த அமிலம்’ போலச் செறிவு குறைகின்றது. அதாவது, தனித்துவத்தை ஓரளவு இழக்க நேரிடுகிறது. தனித்துவத்தை முழமையாக இழக்காமல் இருப்பதற்கு, முன்னைய சால்புகளுட் சிலவற்றை மாறாது பாதுகாத்து, தொடர்ச்சியை நிலை நிறுத்துதல் அவசியமாகிறது. நிலத்தை விட்டு வேரனுந்த பின் பாதுகாக்கக் கூடிய கூறுகள் எவை என்னும் வினா இப்பொழுது எழுகிறது. அதை நிர்ணயிப்பதற்கு சமுதாயம் ஒன்றின் ஏனைய தனித்துவக் கூறுகளை ஆராய்வோம்.
மனித சமுதாயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாழ்க்கை முறை பாரம்பரியமாக உண்டு. அந்த வாழ்க்கை முறையை அச் சமுதாயத்தின் கலாசாரம்
92

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
என்பர் சமூக விஞ்ஞானிகள். உதாரணமாக, தமிழர் கலாசாரம் என்று கூறும் போது, எமது மனக்கண் முன் தோன்றுவன என்ன?
தமிழர் சமுதாயத்தில் உள்ளவர்கள் தம்முள்ளே தொடர்பு கொள்ளத் தமிழ் மொழியிற் பேசுகின்றனர். தமிழ் மொழியே தமிழர் கலாசாரத்தின் மூலவளம் ஆகும். தமிழ் மொழியூடாக முத்தமிழ் என்று - இயல், இசை, நாடகம் என்று - கலை வடிவங்களைக் காண்கிறோம். கவிதை, கதை, நாவல், காவியம் என்று இலக்கியங்கள் - அவற்றுள்ளும் நாட்டார் இலக்கியம் என்றும் நாட்டுக் கூத்து என்றும் நாட்டார் பாடல் என்றும் பொது மக்கள் கலை வடிவங்களைத் தனியாக வகுத்து இனங் காண்கிறோம்.
இவை தவிர, சில பழக்க வழக்கங்கள், செயன் முறைகள், மரபுகள், விழுமியங்கள் ஆகியனவற்றைப் பொதுவாகப் பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். அன்றாட வாழ்வில், இவை தனித்தன்மை காட்டுவன. தமிழர் என்று கூறும் போது, அவர்கள் என்ன மொழி பேசுகின்றனர்? எவ்வித உடை அணிகின்றனர்? எத்தகைய உணவு தயாரிக்கின்றனர்? விருந்தினரை எவ்வாறு வரவேற்கின்றர்? இத்தகைய பல வினாக் களுக்கு விடை தேடும் போது, தமிழர் கலாசாரத்தை - அதன் தனித்துவத்தை - இனங் கண்டு பிரித்தறி கிறோம். உதாரணமாக -
தமிழர்கள் ஒருவரை ஒருவர் வரவேற்கும் போது, வழக்கமாக இரு கை கூப்பி வணங்குவர். யப்பானியர்
93

Page 49
தலை சாய்த்துக் குனிந்து வணங்குவர். முஸ்லிம்கள் கை கொடுத்து - அவற்றை மெதுவாகத் தடவி - வரவேற்பர். ஐரோப்பியர் கை குலுக்கி வரவேற்பர். இப்படியே கலாசாரத்துக்கு ஏற்ப வரவேற்கும் முறை தனித்தன்மை உடையது. எனவே, இவர்கள் சேர்ந்து ஒரு சமூகத்தை அமைத்தால், அது பல்லின சமுதாயமாக அமைகிறது. இத்தகைய வேறுபாடுடைய பல்லின மக்கள் ஒருமித்து வாழ நேரிடும் போது ஒருவகை "இணக்கம் தேவைப்படுகிறது. ஒருவர் தமது தனித்துவ அடையாளங்களுள் ஒன்றைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதனால் அவரது கலாசாரத்தின் ஒரு கூறு உதிர்கிறது. காலப் போக்கில், இத்தகைய பல சந்தர்ப்பங்களைப் புலம் பெயர்ந்து பல்கலாசார சூழலில் வாழ்பவர் எதிர் நோக்குவர்.
பல்கலாசார சூழலில் வாழ நேரிடும் மக்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. தமது பிரச்சனைகளுடும், பெயர்ந்தும் பிரிந்தும் வாழ்வதால் ஏற்படும் உளவியல் தாக்கங்களும், அன்றாட வாழ்க்கை நிலைபெறாமை யால் அனுபவிக்கும் அமைதியற்ற நிலையிலும், புதிய சூழலின் இடைத் தாக்கத்தின் விளைவுகளினூடும், தம்மை ஏற்றுக்கொண்ட நாட்டுக்கும் விசுவாசத்துடன் வாழ வேண்டும். பல் கலாசாரச் சூழலை மாசுபடுத்தாத முறையிலே தமது இன அடையாளத்தை நிலை நாட்ட வேண்டும். இவை எல்லாம் புனிதமான பொறுப்புகள், அநேக சந்தர்ப்பங்களில், 'இருதலைக் கொள்ளி’ நிலை ஏற்படுவதும் புதுமையல்ல. அந்நிலையிலே, பாரதியார் கூறியது போல,
94

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 46
LSLLSLLLLLSLLLLLSLLLLCLLLLSCLLLLSLLLLLLSLவிநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை!-----------秀
இவ்வாறு நம்பிக்கைக் குரலுடன் புலம் பெயர்ந் தோரின் அனுபவங்கள் பற்றியும் பிரச்சனைகள் பற்றியும் இனிச் சற்று அவதானிப்போம்.
95

Page 50
8. முன்னோடிகளின் அடிச்சுவடு
"புலம் பெயர்ந் தேகிப்
புது நிலன் புகுந்து
நலன் பெற முந்திய
நம்மவர் சுவடுகள்
போதென மலர்ந்து
புதுவழி புலர்ந்தால்
யாதும் ஊரெனும்
ஞானமும் தெளியும்"
ரிழத் தமிழர் புலம் பெயர்ந்து பிறநாடுகளுக்குச் சென்று தொழில் தேடிய வரலாறு பற்றி நாம் அறிவோம். மலாயன் நீரிணை சென்ற நம்மவரை புலம் பெயர்ந்து தொழில் தேடிய முன்னோடிகள் என்று கூறலாம். அவர்களின் அடிச்சுவடு காலத்தரையிலே பதிந்து காலத்தாற் சாகாத சுவடுகளாக வழிகாட்டி நின்று ஏலத்திற்போகாமல் எமக்கு உதவி நிற்கின்றன. அவை, எமது நெஞ்சம் புதுவழி தெளிதற்கு உதவி "யாதும் ஊரே" என்று ஞானம் புலரவும் வித்திடும்.
96

--e) யாதும் ஊரே ! ஒரு யாத்திரை 40
நான் சிறுவனாக இருந்த காலத்தின் நினைவுகள் சில, இவ்வேளையில் மனத்திரையில் சுருள் விரிகின்றன. அவற்றிலே,
மலாயன் மணியம், சிங்கப்பூர்ச் செல்லையா, ரங்கூன் செல்லத்துரை, மலாயன் கபே. போன்ற சொற்றொடர்களும் இன்னோரன்னவும் என் கவனத்தை இன்று ஈர்க்கின்றன. ஏன்? வாசகர் பலரும் இத்தகைய சொற்றொடர்களை அறிந்தும் பயன்படுத்தியும் அனுபவப்பட்டிருப்பீர்கள். ஆதலால்,
இச்சொற்றொடர்கள் எவ்வாறு தோன்றின என்றோ அவற்றின் பொருள் என்ன என்றோ ஒரு விரிவுரை எழுதவேண்டிய தேவை இல்லை. அவை எல்லாம் வெளிப்படை
ஈழத்தமிழர் பலர் அன்றொரு காலத்திலே மலாயா, சிங்கப்பூர் போன்ற மலாயன் நீரிணைப் பிரதேசங்களுக்குச் சென்று தொழில் செய்தனர் என்ற கதையை நினைவூட்டும் சுவடுகளாக அச்சொற்றொடர்கள் இன்றுமுள்ளன. அவர்களே நாடு பெயர்ந்த நம்முன்னோடிகள்; புதுநிலன் தேடிச் சென்று நலன் பெறத் துணிந்த நம் முன்னோர்.
சரி, அவர்கள் எப்போது சென்றார்கள்? ஏன் சென்றார்கள்? புலம்பெயர்ந்து செல்லும் தேவை எவ்வாறு ஏற்பட்டது? பெயர்ந்தவர்கள் பின்னணி யாது? அவர்களின் அனுபவம் என்ன? இவற்றை நினைவுபடுத்துதல் இன்று எமக்கு பெயர்வு பற்றிய ஞானத்தைத் தெளியவைக்கும்.
புலம்பெயர்ந்த அம்முன்னோடிகளின் கதை,
97

Page 51
-- Φ -9 ιδι0 «Φ---
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கந்தாயத்திலே துவங்குகிறது.
இலங்கையைப் பொறுத்தளவில் 9.gif ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம். மலாயன் நீரிணைப் பிரதேசங்களும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த sItalib. Federated Malay States (FMS) - J. LIT SáGyll பட்ட மலே மாநிலங்கள் - என்று அந்த மலாயன் நீரிணைப் பிரதேசம் அன்று அழைக்கப்பட்டது. சுதந்திர மடைந்து, மலேஷியா சிங்கப்பூர் என இரு நாடுகள் தோன்றும் வ6 ” அவை FMS என்றே குறிப்பிடப் பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே, அரசசேவைக்கு ஒரளவு ஆங்கில மொழியைப் பயின்றவர்கள் தேவைப் பட்டனர். ஆனால் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கோ தரத்திற்கோ FMS பிரதேசத்தில் மக்கள் கல்வி நிலை முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. அன்றைய இலங்கையிலே, கல்வி அறிவும் ஒரளவு ஆங்கில மொழி அறிவும் உள்ள மக்கள் இருந்தனர். குறிப்பாக, யாழ்ப்பாணத்திலே ஆங்கில அறிவுள்ளவர் களும் கல்வி வசதி பெற்றவர்களும் பரவலாக இருந்தனர். அஃது எப்படி என்ற கேள்வி பலர் மனதில் ஏற்படலாம் அல்லவா? ஆதலால், அதைத் தெளிவுபடுத்துதல் அவசியமாகிறது.
ஆங்கிலேயர் இலங்கையைக் குடியேற்ற நாடாக்கிய காலம் முதலாக, கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கை வந்து செயற்பட்ட வரலாறு நாம் அறிந்ததே. அதன் விளைவாக, கல்வி வசதியும் ஆங்கில மொழிக் கல்வியும் சிறிது சிறிதாக மக்களுக்குக் கிடைத்தன. சமய தூதுவர்
98

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
என்று வந்த, கிறிஸ்தவ மதத்தைப் பரவலாக்க வந்த அந்த முன்னோடிகள், சமுதாயத்தை முன்னேற்றும் பணியையும் மேற்கொண்டனர். ஆதலால், கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு பிரிவினரும், கல்வி நிலையங்களை நிறுவிச் சமுதாயப் பணியில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தமட்டில், அமெரிக்க மிஷனின் சேவை சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியது. இலங்கை வாழ் தமிழினம் அமெரிக்க மிஷனுக்குப் பெரிதும் கடப்பாடுடையது என்று கூறுதல் மிகையாகாது.
பல்வேறு மிஷன் பிரிவினரும் சமுதாயப் பணியாற்றிக் கல்வி நிலையங்களை நிறுவிய போதும், அமெரிக்க மிஷனைக் சிறப்பாகக் குறிப்பிடக் காரணம் உண்டு. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப் பாணம் வந்த அவர்கள், கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கத்தான் வந்தார்கள்: ஆயினும், உண்மையில் நடந்தது என்ன? புதியதோர் உலகைப் படைக்கும் பணியில் ஈடுபட்டு, யாழ்ப்பாண மக்களுக்குப் புத்துயிரும் புதுத்துடிப்பும் எற்படுத்தினர் என்றே கூறலாம். சமய வேறுபாட்டால் பலர் இக்கருத்துக்கு முரண்படலாம். எனினும், உணர்ச்சி வசப்பட்ட நிலையைவிட்டு, உண்மை நிலையை உணர்வுடன் சித்தித்தால், அடிப்படை உண்மை ஒன்று தெற்றெனப் புலனாகும்.
அமரிக்க மிஷனின் சேவை கிறிஸ்தவமத போதனை மட்டுமின்றி, கல்விச் சேவை - சுகாதார சேவை - மருத்துவ சேவை - மருத்துவக் கல்வி - தொடர்புச் சாதன சேவை எனப் பல சமுதாய
99

Page 52
முன்னேற்றப் பணிகளாகப் பரிணமித்தன. 1800களின் ஆரம்பத்தில் இவை எல்லாம் யாழ்ப்பாணத் தமிழருக்குக் கிடைத்ததென்றால், அது எத்தகைய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கும்?
1816ஆம் ஆண்டிலே, அவர்களின் முதலாவது இலவச பாடசாலை தெல்லிப்பழையில் நிறுவப்பட்டது. விரைவிலே வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, உடுவில், மானிப்பாய் போன்ற இடங்களிலும் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன. கால் நூற்றாண்டு காலத்துள், நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நிறுவப்பட்டன. பெண் கல்வி, ஆங்கில மொழிக் கல்வி, வட்டுக்கோட்டையில் உயர்கல்வி என்பன சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.
முதலாவது அச்சகமும் அமெரிக்கன் மிஷனால் தெல்லிப்பழையிலே 1820இல் நிறுவப்பட்டது. சமய பிரசாரத்துக்குத் துண்டுப் பிரசுரங்களும் சிறிய நூல்களும் வெளியிட உதவிய அந்த அச்சகம், 184லே உதயதாரகை என்ற தமிழ்ச் செய்தித்தாளையும் MORNING STAR என்ற ஆங்கிலச் செய்தித்தாளையும் வெளியிட்டது. ஆக, -
சாதாரண கல்விச் சேவை, ஆங்கிலக் கல்வி வசதி,
சுகாதார - மருத்துவ சேவை, தொடர்புச் சாதனப் பத்திரிகை - அச்சகவசதி போன்றவற்றுடன், மருத்துவ நிலையங்களும் - ஏன்? மருத்துவக் கல்வி நிலையத்
தையும் 1800களின் நடுப்பகுதியிலேயே நிறுவியது. மற்றைய மிஷனரிகளின் கல்விச்சேவையை விட அமெரிக்க மிஷனின் சேவையால்தான் புலம் பெயர்ந்து 1800களின் பிற்பகுதியில் FMS இல் பணியாற்றவல்லவர்கள் யாழ்ப்
100

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பாணத்தில் தோன்றினர். எனக் கூறுதல் மிகையாகாது. இப்படிக் கூறும் போது, மற்றைய மிஷன்களின் கல்விச் சேவையை குறைத்து மதிப்படவில்லை. யாழ்ப் பாணத்தில் மட்டும் சேவையாற்றிய அமெரிக்க மிஷனின் சேவைக்குக் கூடிய மதிப்பு அளிக்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழர் மட்டும்தான் அன்று FMSகுச் சென்றனர் எனக்கூறுதல், உண்மைக்குப் புறம்பானது. உண்மையில், சிங்கள மக்களும் FMS இல் பணியாற்றிய இலங்கை முன்னோடிகளில் உள்ளனர். அவர்களின் பின்னைய தலைமுறையினர் இன்றுவரை அங்கு வாழ்கின்றனர் என்பதும் உண்மை. அது, மற்றைய மிஷனரிகளின் சேவையாலும், அரச கல்விச் சேவையாலும் சாத்தியமாகியது. அது வேறு கதை. ஆக, புலம்பெயர்ந்த தமிழ் முன்னோடிகள், எப்போது சென்றார்கள்? அந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது? அவர்கள் என்ன செய்தார்கள்? இப்படியான வினாக்கள் சிலவற்றை சிறிது ஆராய்ந்து விடைகாண முயல்வோம். யாழ்ப்பாணத் தமிழர்களே மலாயாவுக்குச் சென்ற தமிழ் முன்னோடிகள். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலே அரசசேவையில் தமிழர்கள் பணியாற்றியதை யாம் அறிவோம். அந்தத் தொடர்பு, யாழ்ப்பாணத் தமிழர் மலாயா செல்வதற்கும் வழி திறந்தது. மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை விருத்தி செய்வதற்கு முயற்சி எடுத்த குடியேற்ற நாட்டரசு, இலங்கையில் அரசசேவையில் அனுபவம் பெற்ற ஆங்கில அதிகாரி களை நாடியது. அவர்களே தமக்குப் பெரிதும் உதவிக் கூடியவர்கள் என அரசு அதிகாரிகள் நம்பினர்.
101

Page 53
-------eν 9 ιδιΦ «Φ------
இந்த நம்பிக்கையின் பெறுபேறாக மலாயா சென்ற ஒரு முன்னோடி அணியில் 200 வரையிலான இலங்கையர்கள் அடங்கியிருந்தனர். இரண்டாவது அணியில் 'கண்மூடி” சபாபதிப்பிள்ளை என்னும் பிரதம எழுதுவினைஞர், "கைப்பெரிச்சான்" சின்னத் தம்பி (எழுத்தாளர் சின்னத்தம்பி) என்ற பெயர்கள் சுவையூட்டும தகவல்களாக உள்ளன. PWD ஒவசியர்கள், எழுது வினைஞர்கள், நிலவளவையாளர்கள்தான் பெரும்பாலானோர் என அறிய முடிகிறது. (Hundred years of Ceylonese in MALASIA and SINGAPORE 67lgailub g|Tav5Gau, Tauri6rfu uti S. Durai Raja Singam Lu6 g566666p6 விவரித்துள்ளார்)
“எமது நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்த அளவில், இலங்கையர்கள் மிகச் சிறுபான்மையினரே. எனினும் எய்திய பெருவெற்றிகளிலும் நாட்டு விருத்திக் கான பங்களிப்பிலும் அவர்கள் மிகப் பெருமளவில் சாதனையீட்டியுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் வரலாற்றின் துவக்க காலத்திலே அரச சேவையிலும் Professional தொழில்களிலும் பெரும் தொகையான இலங்கையர்கள் பங்களிப்புச் செய்தனர். இன்றும் (1967) சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரித்தானியாவுக்கான தூதுவர், வெளிநாட்டு விவகார அமைச்சர் ஆகியோர் இலங்கையரே. நீதித்துறை, சிவில் அதிகார சேவை, மருத்துவ சேவை, பல்கலைக்கழகம் போன்றவற்றில் எல்லாம் அவர்கள் பதவி வகிக்கின்றனர். காரணம், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அல்ல; திறமையின் அடிப்படையில்."
102

-> யாதும் ஊரே : ஒரு யாத்திரை *-
நூலின் முன்னுரையிலே, அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ இவ்வாறு கூறிப் பெருமைப் படுத்தியுள்ளார்.
இன்றைய மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அபிவிருத்தியிலே நூறு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்கள், யாழ் தமிழர்கள். அவர்களுக்கு வேலை கிடைத்தது என்பது உண்மை; ஆனால் வேதனையும் சோதனையும் மலிந்திருந்தன.
மலேரியா, தொற்று நோய்கள் மலிந்தகாலம் அது, அநேகமானவர்கள் வனப்பிரதேசங்களிலே தான் தொழில் செய்ய வேண்டிய நிலை. புதிய ரயில் பாதைகளை அமைத்தபின் ரயில்நிலைய ஊழியர் களாகப் பணி ஆற்றியவர்கள், தமிழ் முன்னோடிகளே, யாழ்ப்பாணத்துத் தமிழர்களே.
அந்த முன்னோடிகள், உழைத்த பணத்தைச் சேமித்தனர். தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப, சிலர் சேமித்த பணத்தை ஊருக்கு அனுப்பினர். வேறு சிலர் மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலேயே முதலீடு செய்தும், சேமித்தும் தமது எதிர்காலத்தையிட்டுச் சிந்தித்தனர். -
ஒய்வுபெற்றபின் சிங்கப்பூரிலே தங்கி வசிப்பிடமாக்க விரும்பியோர், அங்கேயே நிரந்திரமாக வசித்தனர். மலேஷியாவிலும் அப்படியே. ஊருக்குத் திரும்பி, தம் இன சனத்துடன் கூடி வாழ விரும்பியவர்கள் சென்று அங்கு காணி நிலம் வாங்கி வீடு கட்டி நாட்டை வளப்படுத்தினர்.
அவர்கள்தான், யாழ்ப்பாணப் பகுதியிலே நல்ல
103

Page 54
----eν 9 δις «e-
வீடுகள் கட்டி, சமூகத் தொண்டாற்றி, காடு வெட்டிக் களம் அமைத்து, பல்வேறு அபிவிருத்திகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். முன்பு குறிப்பிட்ட மலாயன் மணியம், சிங்கப்பூர்ச் GoF6ivGOpGuvuurT, LurrLorr செல்லத்துரை போன்றவர்களும் சிங்கப்பூர் டிஸ்பென்சரி, மலாயன் கபே போன்ற வியாபார நிலையங்களும் புலம்பெயர்ந்து நாடு திரும்பிய முன்னோடிகளின் நினைவுச் சின்னங் களாகவும் அடிச்சுவடுகளாவும் நம்மகத்தில் பதிந்து நின்று பழைய கதைகளை நினைவூட்டுகின்றன. ஊருக்குத் திரும்பாமல், அங்கேயே வாழத் துணிந்தவர்கள் g5LDgil கலாசாரத்தைப் பேணி, மொழியை வளர்த்து, விழுமியங்களையும் அடையாளங் களையும் நழுவவிடாமல் காத்து, இளைய சந்ததி களுக்குக் கையளித்து வந்தனர்: வருகின்றனர். அங்கு கோயில்களும், கலை கலாசாரச் சூழலும் ஓரளவு பெருமைப்படத்தக்க அளவுக்கு உள்ளன.
ஊருக்குத் திரும்பாமல் அங்கேயே வாழ்ந்த தமிழரின் பின்னைய சந்ததிகள் தான் இன்றுமலேசியத் தமிழர் எனவும் சிங்கப்பூர்த் தமிழர் எனவும் செளகரியமாக வாழ்கின்றனர். நியாயமான அரசு நடாத்தி அடிப்படை உரிமைகளைச் சிறுபான்மையினருக்கு வழங்கும் தாராள மனம் படைத்த சிங்கப்பூரிலே, தமிழும் அரச மொழிகளுள் ஒன்று என்பதையிட்டு நாமும் பெருமைப்படலாம்.
இக்காலத்தில், "அகப்பட்டதை’ எடுத்துக்கொண்டு அந்நிய நாடுகளுக்குப் பெயர்ந்த தமிழர், மொழியைப் பேணி, கலை கலாசாரத்தை வளர்த்து, தமிழர் தனித் துவத்தை நிலைநிறுத்தி எதிர்காலச் சந்ததியினருக்குக்
104

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
கையளித்தால், 'யாதும் ஊரெனும் ஞானம் தெளியாமலா போகும்? அதற்கு -
அல்லற்பட்டு ஆற்றாது அனாதைகளாக அயல் நாட்டிலே தஞ்சம் புகுந்த நம்மவர்கள், ஏற்றுத் தழுவிய நாடு ஆதரவு தந்து அரவணைத்த நாடு. பெருமைப் படத்தக்க பிம்பத்தை குவியச் செய்தல் அவசியம். அவ்வண் செய்தால், இன்று எதிலிகள் என்று சென்றடைந்த நாடுகளிலேயே "மலேஷியாத் தமிழன்’ “சிங்கப்பூர்த் தமிழன்’ என்பவர்கள் போன்ற ஒரு சமுதாயத்தை நிலைக்கச் செய்யலாம். அதற்குப் புலம்பெயர்ந்த முதல் தலைமுறை ஏற்ற தளம் அமைத்தல் அவசியம். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வந்த தமிழர்கள், பாரம்பரியம் உள்ளவர்கள்: விரும்பத் தக்க பண்பாடு உடையவர்கள்: எமது நாட்டுக்கு வளம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை அந்நாட்டவர் மனசிலே பதிய வைத்தல் அவசியம்.
அத்தகைய விம்பத்தை ஏற்படுத்துவதற்கு, பல்கலாசாரச் சூழலிலே முரண் இன்றி இணங்கி வாழும் சால்பு வேண்டும். தங்கள் தனித்துவத்தைப் பேணும் அதே வேளை மற்றைய கலாசாரத்தின ரிடையே ஊடாடி உறவு பூண்டு வாழும் கலையையும் வளர்த்தல் வேண்டும். அதற்கு FMS சென்ற தமிழ் முன்னோடிகள் ஒரளவு வழிகாட்டி உள்ளனர்! அவர்களின் அடிச்சுவடுகளிலிருந்து இன்று புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் பாடம் பல பயிலலாம்; பயிலல் வேண்டும். இன்று புலம் பெயர்ந்து வாழும். தமிழருக்கு அம்முன்னோடிகளின், அடிச்சுவடு நல்லதோர் முதுசொத்து. ـــــ
105

Page 55
9. புதிய சூழலும் புகுபவர் விம்பமும்
"உண்ண உணவும் உறங்க ஒரு குடிலும் எண்ணின் முதற்தேவை ஏதிலர்க்கு - கண்ணென்ற கல்வி கலைகள் நம் கலாசாரம் அன்னபிற மெல்லவெழும் பின்பென்றால், மெய்"
Dனிதனின் முதற் தேவைகள் அடிப்படைத் தேவைகள் என்போம். உணவு, உடை, வீடு, என்று அவற்றைக் குறித்துச் சொல்லலாம். ஊரில் வாழும் போதுஞ் சரி, பெயர்ந்து வாழும் போதுஞ் சரி, இத் தேவைகளை நிறைவு செய்த பின்புதான் பிறவற்றை நாம் தேடுவோம். திட்டமிட்டுப் புலம் பெயரும் போது, இவை பற்றி எல்லாஞ் சிந்தித்து தீர்மானஞ் செய்வதற்கு அவகாசம் ap 6öoTGS). பெயர்வின் விளைவுகளை
ஆராய்ந்து, முடிவை மாற்றுதற்கும் வாய்ப்புண்டு.
1ffs

-> யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
எனது சொந்த அனுபவமொன்றை இங்கு கூறுதல் பொருத்தமானதாகும் என எண்ணுகிறேன். 1970களின் பிற்பகுதியின், நைஜீரியா, சம்பியா போன்ற பிறநாடு களுக்குத் தொழிலுக்காக நம்மவர் பெயர்ந்த காலம், அது. என்னையும் பெயர்வதற்குச் சந்தர்ப்பங்கள் நெருக்கின. ஆயினும் விளைவுகளைச் சற்று நிதானமாகச் சிந்தித்த போது, என் மனம் இசையவில்லை. ஏன்?
இன்று பெயர்ந்தால், தொழிலும் நிச்சயம் அதன் மூலம் பண வரவும் உறுதி. ஆனால், எனது மற்றைய ஈடுபாடுகள் என்னவாகும்? கலை இலக்கிய முயற்சிகள் என்னவாகும்? சமயச் சூழல் - சமய விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள், வானொலி நிகழ்ச்சிகள், எழுத்துலக வாழ்க்கை, நாடக, நாட்டியத் துறைகளுக் கான பங்களிப்புகள் - இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தபோது, பெயர்வின் மூலம் பணம் சம்பாதிக் கலாம் எனினும் பெயர்ந்து வாழும்போது மனநிறைவு பெற முடியாது என்ற ஒரு சலனம் என்னைத் தடுத்து நிறுத்தியது. அன்னிய சமுதாயம் ஒன்றிலே, பணம்’ என்ற ஒன்றிற்காக அல்லற்பட்டு வாழ்வதற்கு என் மனம் இசையவில்லை. ஆயினும் பின்பு, 1977ம் ஆண்டு ஏற்பட்ட அவதி நிலையும் அனுபவித்த இடர்களும், பார்வையிட்ட அகதி முகாம்களும் அகதிகள் கூறிய சோகக் கதைகளும் "அடுத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே’ என்று அடித்துக் கூறின. அதனால் 1981ம் ஆண்டு பப்புவா நியூகினியில் கிடைத்த தொழில் வாய்ப்பை ஏற்றுச் சென்றேன்.
107

Page 56
-9 ιδιθ «ο-
அப்படிச் செல்லுகின்றபோதும், தற்காலிப் பெயர்வு இது என்றே சென்றேன். சில ஆண்டுகளில் ஒய்வு பெற்று ஊருக்குச் சென்று வாழலாம் என்ற முடிவுடன் சென்றேன். ஆசிரியத் தொழிலுக்காக அங்கு சென்ற என்னை, கல்வித் திணைக்கள அதிகாரிகள் விமான நிலையத்திலேயே சந்தித்தனர். உடனடியாகவே “ஹோட்டல்’ ஒன்றிலே தங்க வைத்தனர். வெளி மாகாணம் ஒன்றிலே எனது வேலை என்றும் அந்தப் பாடசாலையிலே எனக்கென அவர்கள் நிச்சயித்த வீடு சில திருத்தங்கள் காரணமாக வசிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்றும் கூறி, "மூன்று நான்கு வாரங்கள் இங்கே தங்குங்கள்" என்றனர்.
உணவு வசதி அங்கே இருந்தது; ஆனால் நான் முன்பு பரிச்சயப்பட்ட பாங்கிலே அவை அமைய வில்லை. புதிய சூழலில் நான் இணங்கி வாழும் வரை, உணவு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. இருந்தும், அடிப்படைத் தேவைகளான உறைவிடமும் உணவும் அளிக்கப்பட்டன. எண்ணித் துணிந்த மாற்றமாகையால், யாருடன் நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் என்று மனசைத் தேற்றினேன்.
எனது சொந்த அனுபவத்தை இங்கே கூறுதற்கு ஒரு நோக்கம் உண்டு. என் சொந்தப் புராணத்தை விபரிப்பதல்ல. பெயர்ந்த வரலாறு, சொந்தத் தீர்மானத்தின் விளைவு. பெயர்ந்து சென்ற இடத்திலே, வீடு, உணவு, தொழில் என்பன உறுதி செய்யப் பட்டிருந்தன. சூழல் புதிது, உணவு வகை புதியன ஆயினும், நான் எடுத்த முடிவின் விளைவுகளை நானே அறுவடை செய்யத்
108

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
தயாராகினேன். ஆயின், எதிர்பாராப் பெயர்வால் பாதிக்கப்பட்டோர் நிலை என்ன? அங்கே சென்றதும் "வீடும் தொழிலும் மக்களை வரவேற்கின்றனவா? அவை ஒழுங்கு செய்யப் பட்ட நிலையிலா பெயர்ந்தோர் உள்ளனர்? அதனாலே தான், பெயர்வுடன் பிரச்சனைகள் தொடர்கின்றன.
புதிய சூழலில் வாழத் தொடங்கும் மக்களுக்கு முதலிலே தேவைப்படுவன உணவும் வீடும். "The first object of young societies is bread and covering. Science, culture and learning are secondary and subsequent" 6Tailg! மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் தொமஸ் ஜெவர்சன் என்னும் சமூக விஞ்ஞானி. உண்ண உணவும் உறங்கி ஆறுதல் பெற ஒரு இருப்பிடமும் ஏன் முதன்மைத் தேவைகள் என்று விளக்குதல் அவசியமில்னை அவற்றைப் பெறுவதற்கு வழி செய்யும் தொழில், அந்த முதன்மைத் தேவைகளை நிறைவு செய்தற்கு வழி செய்யும் இன்னொரு தேவையாக இணைந்து வரும். பின்பு, படிப்படியாகப் பல்வேறு தேவைகளும் பிரச்சனைகளும் தொடரும்.
புலம் பெயர்ந்து புதிய சமுதாயம் ஒன்றை அந்நிய நாட்டினிலே அமைத்தற்கு முயலும் மக்களைப் பல தேவைகள் தொடரும். அவர்கள் புத்தம் புதிய சூழலிலே வாழத் தொடங்குபவர்கள். அவர்களின் தேவைகளும் அத் தேவைகளை நிறைவு செய்வதில் உள்ள பிரச்சனை களும் பெருஞ் சோதனைகளாக அமையும். அந்நிய சூழலிலே, அங்கு நிலைபெற்ற ஒரு வேறுபட்ட சமுதாயத்துள்ளே வாழத் தொடங்கும் போது, புதிய
109

Page 57
கலாசாரத்தின் நெரிசல் ஒன்று ஏற்படும். அதனாலே உடலியற் பிரச்சனைகளுடன் கூடவே உளவியற் பிரச்சனைகளும் ஏற்படும். ஆக, அவற்றை எல்லாம் எதிர் நோக்கி எதிர் நீச்சலிட்டுக் கரை சேருதற்குத் தம்மை ஆயத்தஞ் செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். சூழல் மாற்றம் சோதனை பின் சோதனை ஆகும்.
உலகளாவிய ஈழத்தமிழரின் உடலியல், உளவியற் பிரச்சனைகள் பற்றிச் சிந்திக்கும் போது, அவை மொத்தமாக வாழ்க்கைப் பிரச்சனைகளாக உருவெடுப் பதை அவதானிக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நோக்கிய பயணமா என்ற மனச்சிக்கலை, பெயர்ந்த முதலாவது தலைமுறையினரின் நினைவுத் திரையில் நிறுத்தும். அவற்றுட் சிலவற்றை முதலிலே மேலோட்டமாகப் பார்ப்போம்.
உணவும் உறைவிடமும் பெறுதற்கும் மனநிறைவு தருவதற்கும், படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற தொழில் வேண்டும். படித்துப் பட்டம் பெற்றும் தொழில் நுட்பப் பயிற்சி பெற்றும் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், புகுந்த நாட்டிலே ஏற்ற தொழில் இன்றி வேதனைப்படுகின்றனர். மருத்துவர், பொறியிய லாளர், கணக்காளர், ஆசிரியர் - இவ்வண் வெவ்வேறு துறைகளிலே பணியாற்றிய ஈழத்தமிழ் அறிஞர்கள், பொருத்தமான தொழிலோ, கெளரவமோ இன்றி வேதனைப்படுவதைப் பல நாடுகளிலே காண முடிகிறது.
புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகள் சிலவற்றுக்குச்
110

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
சென்று, இப் பிரச்சனைகளுக்கு ஆளாகிய சிலரின் அனுபவங்களைக் கேட்கவும் அறியவும் நேர்ந்த பொழுது, அவர்கள் அனுபவித்த வேதனைகளின் தாக்கத்தை உணர முடிந்தது.
என்னைத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று, ஒர் இரவு பாதிக்கு மேல் தனது கதையை ஒரு அன்பர் கூறினர். "நான் உங்களை அழைத்து வரவேண்டும்; மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக ஒரு நாள் லீவு போட்டேன். இவ்வளவு கதைகளும் கேட்ட பின்பும் 'நீ என்ன வேலை செய்கிறாய்? என்று நீங்கள் கேட்கவில்லையே, ஸேர்!’ என்று அவ்வன்பர் ஆச்சரியம் தெரிவித்தார்.
மெளனமாக இருந்து சில நிமிடம் வரட்டுப் புன்னகை புரிந்தேன். ஆனால் நான் அதற்கு மேலும் மெளனம் சாதிக்க முடியவில்லை. எந்த நாட்டுக்குச் சென்றாலும், ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? என்று நான் எவரையும் கேட்பதில்லை’ என்று உண்மையைச் சொன்னேன். அதற்கான காரணத்தையும் கூறினேன்.
"பல நாடுகளிலே நான் பெற்ற கசப்பான அனுபவங்களே அதற்குக் காரணம். புலம் பெயர்ந்தவர் களையும் நான் சந்தித்துள்ளேன். புள்ளியிட்டு வடித் தெடுத்து நிரந்தர வாசிகளாகிய பலரே, படிப்புக்கேற்ற தொழில் இன்றி அலைவதையும் "அகப்பட்ட தொழில் செய்து ஏதோ இயன்ற வருமானம் சேகரிப்பதையும் நான் அறிவேன். பொறியியலாளர் "பேப்பர் போடுவதையும்’
111

Page 58
-eν Φ ιδιθ «ο -
விரிவுரையாளர் என விளங்கியவர்கள் நாள்' வேலை செய்வதையும் பெரு நிர்வாகம் செய்த அலுவலகப் பணியாளர்கள் "File Clerk’ தொழில் செய்வதையும், மிருக வைத்தியப் பட்டம் பெற்றவர்கள் solicitor இன் அலுவலர்களாகத் தொழில் பார்ப்பதையும் வாடகைக் கார், பெற்றோல் ஷெட் வேலை செய்பவர்கள் பற்றியும் அறிந்த பின், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று நான் கேட்பதில்லை” என்றேன்.
“ஸேர், நான் இங்க வந்து, என் முன்னைய தொழிலைச் செய்வதற்குத் தேவையான படிப்பை முடித்த பின்பும், தொழில் இன்னும் கிடைக்கவில்லை. ஏற்ற தொழிலைத் தேடுகிறேன்; ஆனால், வருமானத்துக் காக night Security இரவு நேரப் பாதுகாவலர்) தொழில் தான் செய்கிறேன்." என்றார் அவ்வன்பர். ‘என்னைப் போல் எத்தனை பேர்?’
இப்படி அவர் கூறியதும் “தேவையான படிப்பு’ என்பது பற்றிப் பேசினோம். எந்தத் தொழிலைச் செய்வதற்கும் அந்தந்த நாட்டிற் படித்துப் பெற வேண்டிய தகைமை ஒன்றுள்ளது. தகைமை பெற்றாலும் -ஏற்ற தொழில் கிடைப்பது உறுதியில்லை. இன்னொரு இளைஞர் தெரிவித்த கருத்து இந்த உண்மை நிலையை உணர்ந்த மனப்பாங்கைக் காட்டியது. பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட்சையை முடித்துக் கொண்டு, அறிவியற் கல்விப் பின்னணியுடைய அவர் கூறினார்:
"நான் இங்கு வந்தவுடனே நிலைமையைப் பார்த்தேன். ஏதாவது ஒரு தொழிற்கல்வி பயின்றால்
112

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
கனடாவில் தொழில் தேடி அலையத் தேவையில்லை. கந்தோர் வேலை என்று அலைவதிலும் பார்க்க (plumbing) வடிகாற் குழாய்த் தொழிலைத் தெரிவு செய்து பயின்றேன். தொடர்மாடி நிறுவனம் ஒன்றில் உடனடியாகவே தொழில் பெற்றேன். அந்தச் செயல் திறன் நாளடைவில் எதிர்பாராப் பலன் அளித்தது. காலப்போக்கில் பல தொடர் மாடிகளின் முகாமை யாளராக நியமனம் பெற்றேன். படிப்பறிவுப் பின்னணி யும் தொழில் ஒன்றில் திறமையும் அனுபவமும் எனக்களித்த வெற்றியது."
இப்படிக் கூறியவர், பட்டதாரியாகக் கனடாவை அடைந்த தமது உறவினருக்கும் ஆலோசனை கூறினார். 'நீங்கள் பட்டதாரி என்று கூறி இலங்கையில் பெற்ற தொழில்போல இங்கே எதிர்பார்க்க வேண்டாம். இன்னும் சில ஆண்டுகள் புதியன படித்துப் பட்டம் பெற்றாலும், தொழில் கிடைக்குமா என்பது பிரச்சனை தான். விரும்பினால், நானே plumbing வேலை பழக்கி விடுகிறேன்; வேலையும் தருகிறேன்’ என்று நம்பிக்கை கூறினார்.
முதலிலே உறவினரின் மனப்பாங்கு” சாதகமாக அமையவில்லை. பழைய அனுபவம், பழைய கெளரவம், அவற்றின் காரணமாக அமைந்த மனப்பாங்கு இடம் கொடுக்கவில்லை. ஆயினும் எவ்வளவு காலம் வேலை தேடலாம்? பட்டப்படிப்புடன் வேலை தேடி அலைந்த பின்பு, ஈற்றில் plumbing தொழிலைப் பயின்று வேலையும் செய்யத் தொடங்கினார்.
-7 113

Page 59
-9 அம்பி 40
ஈழத்தில் இருந்து அந்தர நிலையில் வெளியேறி அன்னிய சூழல் பலவற்றில் நம்மவர் சிதறி உள்ளனர். அவர்களுள் மூத்த தலைமுறையினரின் மனப்பாங்கு பழைய நினைவுகளில் ஊசலாடும். உண்மையான தரையில் நின்று (down to earth) சிந்திப்பதற்கு இடையூ றாகவும் இருக்கும் இந்த மனப்பாங்கை வென்றவர்கள் கடினமான உழைப்பை மேற்கொள்ளத் தயங்குவ தில்லை. உணர்ச்சிவசப்பட்ட சிந்தனையை விட்டு உண்மை நிலைச் சிந்தனையுடன் செயல் புரிபவர் களைப் பல நாடுகளில் காணவும் முடிகிறது. 'முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்ற ஒலி, எதிரொலிக்கும் உள்ளங்கள் பல, விமோசனத்துக்கான வழி தொடர்வது நம்பிக்கை தருகிறது.
சொந்த நாட்டிலே செய்யத் தயங்கிய அல்லது விரும்பாத தொழில் பலவற்றைப் புகுந்த நாட்டிலே செய்யத் துணிதல், எண்ணித் துணிதலாகும். தொழில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சாதிப் பெயர் சூட்டி, உயர்வு தாழ்வு பாராட்டி, வரட்டுக் கெளரவம் வளர்த்த வரலாறு எமக்குண்டு. தொழில் மகத்துவத்தைக் கெளரவிக்கவும் தவறியவர்கள் நாங்கள்.
நாம் புகுந்துள்ள நாடுகள் அத்தகைய பின்னணி உடையனவல்ல. "இந்த வார இறுதியில் எனக்கு நிறைய வேலையுண்டு. வீட்டுக் கூரையை அகற்றிப் புதுப்பிக்க வேண்டும். என் தம்பியரும் நானுமாக ஒரே நாளில் அதைச் செய்து முடிக்க வேண்டும்" என்று 1974இல் கொனக்ரிக்கட் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியர் கூறியது இன்றும் நினைவில் நிற்கிறது.
114

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
எமக்குத் தரவிருந்த நூல்கள் பலவற்றைப் பெட்டி ஒன்றில் அடுக்கி, பதினைந்து இருபது கிலோ பெட்டியைத் தமது தோளிலே சுமந்து வந்த பேராசிரியரையும் அங்குதான் முதன் முதலாகப் பார்த்தேன். அமெரிக்கா மட்டுமல்ல 560 ft, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போல பல்வேறு நாடுகளிலும் - நமது மக்கள் புகுந்துள்ள எல்லா நாடுகளிலும் இதே மனப்பாங்கை அவதானிக்கலாம். எனவே, நம்மவர் அந்த நாடுகளில் தலைதூக்கி வெற்றி பெறுவதற்குப் “பழைய பாதை’ மாறுதல் அவசியமாகும். அதாவது, “கிளாஸ் ரூ' வுக்கு தரம், வாத்தியாருக்கு ஒன்று, டாக்குத்தருக்கு வேறொன்று தச்சருக்கு ஒன்று, என்றவாறு தொழில் சார் தரம் பிரித்து புகுந்த நாட்டிலே வாழ முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் விடிவு காணலாம்.
அந்நிய சூழலில் இந்த மனப்பாங்கு பெரிதும் மாறிவருவது கண்கூடு. நம்மவர் கடும் உழைப்பால் உயர முயல்வதும் அதனால் நிவாரணம் பெறுதலும் நல்ல அறிகுறிகளே, ஆயினும் உயர் படிப்புள்ளவர்கள் இரவோடிரவாக மனம் மாறுவது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். அதற்கும் ஒருவர் தம்மைத் தயார் படுத்துதல்வேண்டும். அந்த நிலையை ஏற்படுத்துவது 'அனுபவமே எனலாம்.
‘சொல்லுவது யாவர்க்கும் எளிதாகும். ஆனால், மாற்றத்தை எதிர் நோக்குபவர் நிலையையும் நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும். இளம் பருவத்திலே, இளமைத் துடிப்பிலே கண்ட கனவுகள், எண்ணிய
115

Page 60
ത്സമ-m- அம்பி ബത്തിയമ്മ,
எதிர்பார்ப்புகள் இலகுவில் மறையும் என்று சொல்வதற் கில்லை. இவை எல்லாவற்றையும் புள்ளி விபரஞ் சேகரித்து ஆய்வு செய்த முடிவுகளும் நம்மிடம் இல்லை. ஆங்காங்கே கண்டனவும் கேட்டனவும் (subjective) சொந்த அபிப்பிராயங்களே.
புள்ளி விபரம் சேகரித்துச் சில நிலைமைகளை வெளியிடும் நிலையங்கள் உள்ளன. ஆயினும் அவை ஈழத் தமிழர் என்று ஆய்வு செய்வதில்லை. அறுபது எழுபதுக்கு மேற்பட்ட வெவ்வேறு இனப்பிரிவினர் முதல் நூறு இனப்பிரிவினர் வரை பல நாடுகளில் வசிக்கின்றனர். கனடாவில் வந்து சேர்ந்த இனப் பிரிவினர் பற்றிய பொதுவான ஒரு குறிப்பு - படிப்புக் கேற்ற தொழில் பற்றிய குறிப்பு கீழே தரப்படுகிறது.
படிப்புக்கேற்ற தொழில் தேடுதல் பற்றி அண்மையில் ‘தமிழர் தகவல்' சஞ்சிகையில் வெளியான செய்தி ஒன்றை நினைவூட்டல் சில உண்மைகளைச் சுட்டிக் காட்ட உதவும்: - "கனடிய குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் 1995ல் மற்றுமொரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. 'மிக அண்மைக் காலங்களில் கனடாவில் குடியேறி வருகின்ற சிறுபான்மை இனத்தவர்கள் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள. கனடியர்களின் கல்வித் தராதரங்களிலும் பார்க்க மிகக் கூடிய கல்வித் தகைமைகளை இந்தச் சிறுபான்மையின் மக்கள் கொண்டுள்ளனர். முக்கியமாக, professional எனப்படும் டாக்டர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள்
116

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
போன்ற கல்வித் தகைமைகளை உடையவர் அனேகர், ஆனாலும் இவர்களது தராதரத்துக்குரிய பதவிகள் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, குறைந்த தராதர - குறைந்த சம்பள வேலைகளே இவர்களுக்கு கிடைத்துள்ளன’ என்ற அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது"
சிறுபான்மையின் மக்கள் என்று பொதுவாகக் கூறினும், ஈழத்தமிழர்களுக்கும் அது மிகப்பொருத்த மானதே. குறைந்த தராதரமும் குறைந்த சம்பளமும் உள்ள வேலைகளே அவர்களுக்குக் கிடைக்கின்றன. கனடாவில் மட்டுமல்ல, மற்றைய நாடுகளிலும் அதே நிலைமைதான். அத்தகைய நிலைக்குக் காரணம் இனத்துவேஷம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, அதே சஞ்சிகையில் பின்வரும் செய்தியும் உள்ளது.
“எனக்குத் தெரிந்த பட்டதாரி நண்பர் ஒருவர், அலுவலகப் பதவி ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். இரண்டு வாரத்துக்குப் பின்னர் அலுவலக அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில மேலதிக தகவல்களை இதுவும் கூட ஒருவகை நேர்முகப் பரீட்சை தான்) பெற்றார். கல்வித் தகைமை, பயிற்சி, அனுபவம் ஆகியவைகளை அறிந்து பாராட்டினார். இறுதியில், "எந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெறப்பட்டது” என்ற கேள்வியின் மூலம் நண்பரின் பிறந்த நாட்டை அறிந்ததுடன், "மீண்டும் தொடர்பு கொள்வோம்" என்று கூறித் தொலைபேசி உரையாடலை முறித்து விட்டார் அந்த அதிகாரி"
117

Page 61
-- Φ -9 ιδιθ «ο-
இது பற்றிக் கூறும்போது, "விண்ணப்பதாரி எல்லாவகையாலும் அந்த வேலைக்கு பொருத்த மானவராக இருந்த போதிலும், அவர் சிறுபான்மை இனத்தவர் என்பதால் அப்பதவி கிடைக்கவில்லை’ என்ற குறிப்பும் உள்ளது. இத்தகைய எண்ணமும் சந்தேகமும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அநேகம்; இனிமேலும் ஏற்படும். ஆனால், சட்டரீதியாக இவற்றை நிறுவுதல் இலகுவானதல்ல. இனமத அடிப்படையிற் பாகுபாடு காட்டி நியாயமாகச் சேர வேண்டிய தகைமையும் பதவியும் நீதியும் மறுக்கப்படுதல் 'இனத்துவேஷம்’ என்று சட்டம் இருப்பினும், கடுந் தண்டனை வழங்கச் சட்டம் இருப்பினும், அவற்றால் நிவாரணம் வழங்க முடியாது. சந்தேகத்துக்கிடமின்றிக் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமல்லவா?
மறுதலையாக, “அவர்கள்’ நிலையையும் நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும். அதாவது, பதவி ஒன்றைத் தருவதற்குத் தயங்குகின்றனராஅல்லது துவேஷமா என்பதை ஆராய்தல் வேண்டும். என் சொந்த அனுபவத்திலிருந்தே ஒரு உதாரணங் காட்டுதல் பொருத்தமுடைத்து.
பப்புவா நியூகினி சென்ற நான் மூன்று நான்கு வாரம் ஹோட்டலில் தங்க நேரிட்டது என்று முன்பு கூறினேன். ஹோட்டலிலே தங்கி ஒரு வTர காலத்துள்ளேயே, ‘தொலைக் கல்விக் கல்லூரிக்குச் சென்று வேலை செய்யுமாற பணித்தனர், கல்வித் திணைக்களத்தினர், தொலைக் கல்வி அல்லவா அங்கே பணி? ஆகப், பாடத்தை வகுப்பிலே கற்பிப்பதல்ல;
118

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
எழுத்திலே பாடத் திட்டங்களும் பாட அலகுகளும் திட்டமிட்டு எழுதுதல் வேண்டும்.
அங்க நான் சென்ற போது, தொலைக் கல்வி நிலைய அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் எனது பின்னணியை அறிதற்குச் சில படிவங்களை நிரப்பச் சொன்னார்கள். ஏழு, எட்டுப் பக்கங்கள் கொண்ட அப் படிவங்களை நிரப்பிக் கொடுத்த பின், நேர்முகக் கலந்துரையாடல் ஒன்று நான் எழுதிக் கொடுத்த விபரங்களின் அடிப்படையில் நிகழ்ந்தது. இறுதியில், அங்கே வேலை செய்யும்படி என்னை கல்வித் திணைக்களம் பணித்தது. அங்க வேலை செய்யத் தொடங்கிய போதுதான் இன்னொரு இலங்கையரின் பரிதாப நிலை பற்றி அதிபர் எனக்குக் கூறினார். அவர் கூறியது இதுதான்:
“உங்களுக்கு இங்கு வேலை கொடுக்க முடியுமா” என்று கல்வித் திணைக்களம் என்னைக் கேட்டது. அப்போது நான் சற்றுத் தயங்கினேன். காரணம், எனது கசப்பான அனுபவமே. கடந்த மாதம் வேலையிற் சேர்க்கப்பட்ட இலங்கையர் ஒருவர், அடுத்த மாதம் திருப்பி அனுப்பப்படவுள்ளார். காகிதத் தாளிலே உள்ள தகைமைகளும் பட்டங்களும் ‘எழுத்திலே பிரதிபலிக்கப் படவில்லை. அதனால், ஒப்பந்தப்படி "திருப்தியாக வேலை செய்யாதபடியால் திருப்பி அனுப்பப் போகிறோம்” என்று கூறிய அதிபர், ஓர் அவுஸ்திரேலியர்; வெள்ளையர். அத்துடன் அவர் நிறுத்தவில்லை.
119

Page 62
- -e -9 ιδιθ «ε--
"இங்கு வேலை செய்பவர்களுள் பெரும்பான்மை யானவர்கள் அவுஸ்திரேலியர். ஓர் இலங்கையரைத் திருப்பி அனுப்பும் போது, சந்தேகங்கள் சிலவேளை எழலாம். துவேஷ மனப்பான்மை என்று சிலர் கூறலாம். அந்த அதிகாரி எழுதிய பாடத்தை வாசித்துப் பாருங்கள்" என்று என்னிடம் ஒரு பிரதியைத் தந்தார். வாசித்தேன், அதிபரின் முடிவை எதிர்த்துப் பேசவில்லை; பேச முடியவில்லை. பதிலாக, இந்த மனுஷன் எங்கள் ஊரிலே எப்படி வேலை செய்ததோ!’ என்று ஆச்சரியப்பட வைத்தது.
இவ்வாறு மூன்று மாதத்திலே ஒருவரையும் முதலாவது ஒப்பந்த முடிவிலே வேறு இருவரையும் திருப்பி அனுப்பிய நியூகினி கல்வித் திணைக்களம், பின்பு இலங்கையரை ஆசிரிய வேலைக்கமர்த்துவதையே நிறுத்தியது. அவுஸ்திரேலியாவிலிருந்து ‘தெரிவு செய்து’ ஒப்பந்தஞ் செய்த வேறு இரு இலங்கையர்கள், ஒப்பந்தம் முடியுமுன், முன்னறிவித்தலின்றித் திடீரென மறைந்த, பின்புங் கூட அறிவிக்காமல் இருந்தனர். அதனால், அந்தத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையரில் நம்பிக்கை இழந்தனர்.
முன்னைய மூவரும் கொடுத்த 'மாதிரி’ ஆங்கில மொழித்திறன் போதாமையால் ஏற்பட்ட துர்ப்பாக்கியம். பின்னைய இருவரும் கொடுத்த 'மாதிரி' நடத்தை அலட்சியத்தால், பொறுப்புணர்ச்சி இன்மையால் ஏற்பட்ட துர்ப்பாக்கியம். காரணம் எதுவாயினும், "இலங்கையர் இப்படித்தான் இருப்பாரோ!” என்ற ஒரு மனச் சந்தேகத்தை ஏற்படுத்திய சம்பவங்களாக அவை
120

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
அமைந்தன; சிந்திக்க வைக்கும் சால்பின.
"நோர்வேயில் மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு, சில காலம் தொழில் புரிந்து விட்டு நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ள மருத்துவர் ஒருவர், நியூசிலாந்து மருத்துவக் கவுன்சிலின் பதிவு நிபந்தனை களைப் பூர்த்தி செய்யும் படிப்பை மேற்கொள்ளும் முயற்சியுடன், “ரெஸ்ரோறன்ற்’ ஒன்றை நடாத்துகிறார். "வெண்ணிலவு’ என்ற சஞ்சிகையில் அவர் கூறிய ஒரு கருத்து இது. "நியூசிலாந்தில் வாய்ப்புகள் நிறையவே தென்படுகின்றன. உரிய முறையில், கிடைக்கும் வளங்களை நாம் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். அதற்கு முன், எம்மைத் தயார்’ செய்ய வேண்டும். ஆங்கிலம் எமக்குத் தெரியாதா என்பதல்ல; அவர்களுக்குப் புரியும்படி எமக்குப் பேசத் தெரியுமா என்பதே கேள்வி" மருத்துவக் கலாநிதியின் இக்கூற்று உணர்ச்சிவசப்படாமல் உண்மை நிலையில் ஆராயப் படல் வேண்டும். புலம் பெயர்ந்தவர்களுக்கு உள்ள பிரச்சனைகளுள் ஒன்று புதிய சூழலுக்குத் தம்மைத் தயார்’ செய்வது; சூழல் மொழி மூலம் தொடர்பு கொள்ளவும், எழுத்திலும் பேச்சிலும் கருத்துப் பரிமாறவும் தயார்’ செய்தலும் அவற்றுள் அடங்கும்.
ஆசிரியப் பணி புரிவதற்குப் புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவிலுள்ள டாவினுக்குச் சென்ற நண்பர் ஒருவர், சிறிது காலத்திலே எழுதிய கடிதத்திலே 'வகுப்பறை அனுபவங்களை எழுத முடியாது; எண்ணிப் பார்க்கையில் அழுகைதான் வருகிறது’ என்று ஒப்புக் கொண்டார். பப்புவா நியூகினியில், "International High
121

Page 63
-o- 9) this 4o
School" ஒன்றிலே ஆசிரிய நியமனம் பெற்ற இந்தியப் பெண்மணி ஒருவர் இரண்டே நாட்களில் வேலையை விட்டுச் சென்றார். இவற்றுக்கு எல்லாம் அடிப்படைப் பிரச்சினை மொழிப் பிரச்சனையே. நம்மவர் ஆங்கிலம் பேசும் முறைக்கும் உச்சரிக்கும் கோலத்துக்கும் பயன்படுத்தும் சொற்களஞ்சியத்துக்கும் வேறுபாடுண்டு. அதனால், வகுப்பறையில் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ளுவதிலும் அலுவலகங்களிற் சக ஊழியருடன் கருத்துப் பரிமாறுவதிலும் இடர்ப்படுதல் இயற்கையே. அந்நிய நாட்டை தாய்நாடாகக் கொண்ட "ஆங்கிலம்’ பேசும் பிள்ளைகள், ஊழியர் மட்டுமல்ல; அந்நிய மண்ணிலே பிறந்து வளரும் ‘நமது பிள்ளைகளின் ஆங்கில மொழியும், சொற்களஞ்சியமும் பேசும் முறையுமே கருத்துப் பரிமாற்றத்துக்கு இடர்ப்பாடுகள் ஆகுவதை அதிகம் விவரிக்கத் தேவையில்லை.
புலம் பெயர்ந்து வாழும் தமிழினம் எந்த நாட்டில் வாழ்ந்து “தொழில்’ தேடினுஞ் சரி, தம்மைத் தயார்’ செய்ய வேண்டிய கூறுகள் சில உள்ளன என்பதை மனதில் நிறுத்த வேண்டும். சேர்ந்த நாட்டின் சூழல் மொழியைச் சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப் பழகுதல் அவசியமானவொன்று. அதே போல, சூழலிற் பழகும் முறையும் ஒன்றுண்டு.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவிலே பயிலும் நாளில் வீதியில் நடந்து பெற்ற அனுபவம் ஒன்று குறிப்பிடத்தக்கது. என்னை எவரெனத் தெரியாத சிறுவருஞ் சரி, வளர்ந்தோருஞ் சரி, ‘ஹாய்’ என்றோ, "குட்டே’ (Good day) என்றோ முறுவலுடன் சொல்லிச்
122

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
செல்வர். எங்கள் நாட்டிலோ "தம்பி துலைக்கே?" என்று விடுப்பு வினாக்கள் கேட்பதும் தமது மனச்சுமையை இறக்கும் கதைகள் சொல்வதுமே சாதாரணம். அவுஸ்திரேலியாவிலேயும் ‘ஹாய்', 'குட்டே' என்ற பலரை நான் வீதிகளிலே சந்தித்த துண்டு. அந்தத் தன்மையை - மனப்பாங்கை - மெச்சியதால், ஒரு சிறுகவிதையிலே.
*.இங்கோ
நடைபாதை ஒரம்
நடக்கும் கிழமும்
குட்டே என்ப தென்ன கொடை"
என்று எழுதி ஏதோ ஒருவித மனநிறைவு பெற்றேன். இதே கருத்தை ‘தமிழர் தகவல்' சஞ்சிகையில், மிக அண்மையில் ஓர் அன்பர் பின்வருமாறு எழுதியிருந்தார்."
"இலங்கையில் இருக்கும் வரை நேர்முகப்
பரீட்சைக்கு செல்லும் போது மட்டும் தான் good morning Gynraipa வ்ந்தோம். ஒருவருக்கு ஒருவர் 200d morning சொல்லும் வழக்கம் குறைவு. வெளிநாடு ஒன்றில் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் சென்று இருந்தேன். அந்த நாட்டில் ஒருவர் மற்றொருவரை காலையில் சந்தித்தால் வாழ்த்த நேரம் மூன்று நிமிடம் எடுக்கும். முதல் நாள் இரவு எப்படி என்று தொடங்கி, வீட்டில் இருப்பவர்கள் பற்றி அறிந்து, பின்னர் வீட்டு மிருகங்களின் சுகம் விசாரிப்பதில் முடியும். இப்படி வாழ்த்தத் தெரியாதவர்கள், முடியாதவர்கள் அங்கு பழகி வந்த எனக்கு கனடாவில் பழகுவது சுலபமாக
123

Page 64
— ട്രി 4--—
இருந்தது. 9)55 good morning 96i6g Hai 36i தொடங்கி How are you today என்று கேட்டு, பின்னர் காலநிலை பற்றிக் கதைத்து, Take Care இல் முடிக்கலாம்." வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்தச் சொந்த உறவு (PR) மிக அவசியமான ஒன்று. நற்சாட்சிப் பத்திரம் வழங்கும் போது, இந்த உறவு முறை ஒருவரில் எந்த அளவு இருக்கிறது என்பதைக் கூறத் தவறு வதில்லை. அந்தப் பழகும் முறை இனியதாக இருந்தால் மட்டுமே தமது ஆளுமையை ஒருவர் நிலைநிறுத்த முடியும். மற்றையவரின் நன்மதிப்பை பெற முடியும். பெயர்ந்த முதலாவது சந்ததியினர், என்ன தகைமை இருப்பினும், பதவி வகித்து ஊரிலே மதிப்புப் பெற்று வாழ்ந்திருப்பினும், சென்றடைந்த நாட்டிலே பொருத்தமான தொழில் வாய்ப்பும் இன்றி மனச் சோர்வடைதல் புதுமையல்ல. மருத்துவரும் பொறியிய லாளரும், பேராசிரியரும் “சாதா” தொழில் செய்யும் நிலையில் உளம் நோகும் போது பட்டதாரி என்றும் பயிற்றப்பட்ட பட்டதாரி என்றும் “பழைய நிலையில் வைக்கும் தொழிலை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. ஊருக்குத் தேவையான தராதரப் பத்திரம்’ பெற்றாலும் மன நிறைவு தரும் தொழில் வாய்ப்பு அருமையாகவே இருக்கும்.
தொழில் கிடைத்த பின்பு கூடத் தம்மிலும் குறைந்த வயதினர், தராதரம் குறைந்தவரின் கீழ் பணியாற்றும் உபத்திரவமும் தொடரும். நிச்சயமற்ற தொழில், தொழிலைப் பாதுகாத்து ‘ஆட்குறைப்பு களுக்கு உள்ளாகாமல் தப்பிக் கொள்வது எப்படி என்ற
124

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
உபாயம், சொந்த உறவு முறையை வளர்த்தல், சூழலுக்கு ஏற்ற மொழிப் பிரயோகம் எல்லாம் தாண்டுதற்குச் சிரமமான தடையங்களாகும். இந்த இடத்தில், அறிவியல் தமிழ் முன்னோடி கிறீன், தமது தமையன் பிறநாடு சென்ற போது எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியைத் தருவது ஒர் உண்மையை எடுத்துக் காட்டும்.
Dear Brother Andrew,
I want to say a few words to you now, even after you have left me far behind, together with all your earthly friends. You are now among strangers, who have comparatively but little interest in you, and who not having known you before, take you as you first appear to them
ஆம், அந்நிய சமுதாயத்துட் புகும்போது, அங்குள்ளவர் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவர் என எதிர்பார்த்தல் எப்படி? உங்களை முன்பின் எவர் என்று அறியாதவர்கள் உங்களைப் பற்றி முதலிற் கொள்ளுகின்ற விம்பமே செம்மையானதாக அமைதல் அவசியம். அதுவே நிலைபெறும். அதை மாற்றுதல் எளிதல்ல.
இந்தக் கருத்தை தன் சோதரனுக்கு அறிவுறுத்தினார் டாக்டர் கிறீன். ஆய்ந்து ஓய்ந்து நாம் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், பெரியதோர் உண்மை அதில் இருக்கிறது. நாம் எமது அனுபவத்திலேயே அந்தவிதமான 'முதல்’ அபிப்பிராயங்களைத் தனியாட்கள் பற்றியும் சில 'ஊர்' வாசிகள் பற்றியும், சில நாட்டு வாசிகள் பற்றியும் கொண்டிருந்ததுண்டு. அவை எல்லாம் சரி என்பதற்கும் இல்லை. ஆயினும்
125

Page 65
--O+ 9 bis 4o
சரியான அபிப்பிராயம் பரிச்சயத்தால் வெளிப்பதற்குக் காலந் தேவை.
புதிய சமுதாயத்திலே புதுமுகமாக உள்ள ஒருவர், மற்றவர் மனதிலே ‘நம்பிக்கையானவர்’ என்ற விம்பத்தை அமைத்தல் வேண்டும். தனியாட்களும் சரி, சமூகங்களும் சரி ஏற்படுத்தும் விம்பம் தப்பிப் பிராயங்களை ஏற்படுத்தக் கூடாது. லண்டனில் ரயில் பயணத்தில் தமிழ் இளைஞன் ஒருவனைச் சந்தித்த காப்பிலி’ இளைஞன் ஒருவன் மிக நட்புறவுடன் பழகினான். ரயில் நிற்கும் சமயம் தமிழ் இளைஞன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இழுத்து அறுத்து கொண்டு பாய்ந்து சென்றான். அதன்பின் அந்த இளைஞன் குடும்பத்தவர் "கவனம், காப்பிலிகளை நம்பாதே" என்று எனக்குங் கூறினர்.
தனி ஒருவனின் செயல் ஒரு சமூகத்தின் விம்பத்தை எப்படி மாற்றியது என்பதை நான் உணர முடிந்தது. நாம் சென்றடைந்த சூழலில் தொழில் பெறவும் சரி, சேர்ந்து வாழவும் சரி, சமூகத்தில் ஒன்றுதற்கும் சரி, இந்த ‘நம்பிக்கையானவர் என்ற விம்பம் அவசியமாகும். முதல் அபிப்ராயமும் விம்பமும் தவறானதாகக் கூடாது. தனி நபர்களால் ஈழத்திலிருந்து வந்த ‘தமிழரின்’ விம்பம் பாதிக்கப்படக் கூடாது. இந்தப் புனிதமான கடமையைச் செய்ய முயலுதல் எதிர்காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி உறுதியான ஊன்றுகோலாகச் சமுதாயத்துக்கு உதவும்.
126

10. பொதுநலப்படியும் புது வாழ்வும்
"நல்லெண்ணத் தோடு நமக்குதவி செய்தவரை வெல்லுதற்குச் சூழ்ச்சி வினையன்றோ -
தொல்லுலகில் எந்த வினைக்கும் எதிர்வினைஒன் றுண்டென்னல் விந்தையல்ல நியூற்றன் விதி"
இதோ, அந்தரப்பட்டு இங்கே வந்தோம். இப்ப என்னடா எண்டால், “காப்பற்’ போட்ட வீட்டிலே இருக்கிறம், காசும் தவறாமல் கிரமமாய்த் தாறாங்கள். கடவுள் கண்முழிச்சிருக்கிறார். குளிரின்ரை உபத்திரவத்தை எண்ணினால், ஊர் பறவாய் இல்லை எண்டு யோசிக்கிறனான். இந்த வசதியளை அங்கை ஆர் தருவினம்?"
உலகளாவிய ஈழத்தமிழ் மூதாட்டி ஒருவரின் உள்ளத்தை பிரதிபலிக்கிறது, அவரது நன்றி ததும்பும்
127

Page 66
கூற்று. நியூசிலாந்திலே, குளிரும் குளிர் காற்றும் வருத்திய போதிலும், ஊர் நினைவுகள் இடையிடையே உள்ளத்தை தொட்ட போதும், கிடைத்த பொதுநலப் படியின் ஆறுதலை மதிக்கும் நெஞ்சம் அது.
“வேலை இல்லை என்ற வேதனைதான். என்ஜினியர் என்று ஊரிலும் நைஜீரியாவிலும் வாழ்ந்தது ஒருகாலம். இங்கே அந்த நிலை இல்லை. என்ஜினியர்த் தொழில் இனித் தேவையில்லை. பிள்ளைகள் படிக்கிற வயது. மேற்படிப்புக்கும் வசதியும் வாய்ப்பும் உண்டு. நல்ல நேரம் இங்கே வந்தது. இங்கே வந்திராவிட்டால், p
இவ்வாறு பெருமூச்சுடன் தேசிய நண்பரின் பேச்சில் புதியதொரு நம்பிக்கையும் நிம்மதியும் தொனித்தது. பல ஆண்டுகளுக்கு ஊருக்குப் போவதும் உற்றார் உறவினரைப் பார்ப்பதும் உறவாடுவதும் முடியாது என்றாலும், பிள்ளைகளின் படிப்புப் பாதிக்கப்படாமல் இருக்க வழி கண்டதில் அவரது உள்ளம் ஒரு நிறைவு கண்டது. லண்டன் குளிர் பற்றி அவர் கவலைப்படவில்லை.
"அவங்கள் தாறFலை நாங்கள் சீவிக்க முடியுது. நாங்கள் இரண்டு பேரும், இந்த வயதிலை இப்பிடிச் சீவிக்கக் கொடுத்து வைச்ச நாங்கள். அங்கை இருந்தால், என்ன பென்சனும் இல்லை; வரும்படியும் இல்லை. தம்பிதான் ஏதும் அனுப்ப வேணும். இப்ப அவனுக்கும் நிம்மதி. தான் சம்பாதிப்பதை தன்ரை குடும்பத்தைப் பார்க்கச் செலவிடலாம். நாங்கள் எங்கடை பாடு. தாற
128

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
காசிலை நாங்கள் திருத்தியாய்ச் சீவிப்பதோடு அங்கை ஊரிலை உள்ளவளுக்கும் ஏதும் மாதம் மாதம் அனுப்ப முடியுது”
கனடாவில் தமது நிம்மதியான வாழ்வு பற்றிய நிறைவைக் கூறிய நெஞ்சம் இது.
இப்படியாக, இன்னும் எத்தனை லட்சம் உள்ளங்கள் - உலகளாவிய ஈழத்தமிழ் உள்ளங்கள், பொதுநலப்படி பற்றியும் அதன் மூலம் பெற்றுள்ள புது வாழ்வு பற்றியும் பெருமையுடன் கூறுகின்றனர். ஆம், வளர்ச்சி அடைந்த நாடுகளிற் புகலிடம் பெற்ற அகதி’களின் நல்வாழ்வு, பொதுநலப்படியிலே பெரிதும் தளிர் விடுகிறது. ஈழத்தில் வாழ்ந்த காலத்திலே அறிந்திராத இந்த உதவி பற்றியும் அதனால் வாழ்வு புத்துயிர் பெறுதல் பற்றியும் நம்மவர் மனமார வாழ்த்துதல் இயல்பானதே.
நாட்டிலே வாழும் மக்கள் நலமுற்று வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வழங்கப்படுகின்ற "படி, இந்தப் பொதுநலப்படி (welfare). அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு போன்றவற்றை, நாட்டின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்பப் பெற்று வாழ வழிசெய்வது இப்படி; தொழில் அற்றோர், முதியோர், அகதிகள் என அனுமதிக்கப்பட்டோர் எனப் பல பிரிவினருக்கு இந்தப் பொதுநலப்படி வழங்கப்படுவதியல்பு. இந்தப் படியைப் பெறுதற்கும் பல நிபந்தனைகள் உள்ளன. அந்தந்த நாட்டுச் சட்டத்தின்படி, பெறும் தகுதி உடையவர்க்கு அது மறுக்கப்படுவதில்லை.
uT-8 129

Page 67
----οι -9 ιδιg o----
நியாயமான முறையில் அதைப் பெறுதற்குத் தடைகளும் இல்லை. சிரமமின்றி அதைப் பெறுதற்கான நிலையான ஒழுங்குகளும் வளர்ச்சியுற்ற நாடுகளில் உண்டு. அதனாலேதான் மற்றைய நாட்டவர், பொதுநலப்படி என்ற உதவி இல்லாத நாட்டவர் அந்நாடுகளை நாடுகின்றனர். ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று அள்ளிக் கொடுத்து அந்த நாடுகளை அடைதற்கும் அகதியென ஏற்றுக் கொள்ளப்படுதற்கும் ஈழத்தில் இருந்து செல்பவர்கள் பற்றி நாம் அறிவோம். ஆனால் அங்கே சென்ற பின்பு நிகழ்வதென்ன, இப்பண உதவியை எவ்வாறு கூடுதலாகப் பெறலாம் என்ற சூழ்ச்சிச் செயல்களில் பலர் இந் நாட்களில் ஈடுபடுகின்றனர்.
நம்மவர் மட்டும்தான் என்று எவரும் கூறவில்லை; நம்மவரும் அப்படி ஈடுபட்டு, நமது விம்பத்தைப் பிறழ்வடையச் செய்கின்றனர் என்பதுதான் இன்றைய நிலை. நேர்மையற்ற உபாயங்களை மனங் கோணாது செய்து முயல்கின்றனர். “ஏதோ வகையில் இப்பணத்தைப் பெற்று வாழ முனைபவர், வருமானம் இல்லாதவர் என்றும் ஒற்றைப் பெற்றோர் என்றும் விவாகச் சிக்கல் அல்லது பிரிவு என்றும் இன்னும் பல வழிகளிலும் முயல்கின்றனர். பொதுநலப்படியை நம்பிக் குடும்பங்கள் கூடப் பிளவுபடுகின்றன. அரசு வழங்கும் உதவிப் பணம் எமது சமூகத்தின் கடந்த கால வாழ்வு முறைகளைத் தலைகீழாக மாற்றுவதுடன், சமூகத்தின் விழுமியமும் பணத்தினை மட்டுமே கருத்திற் கொண்டு வருகின்றது” என்று எழுதியுள்ளார், கனடாவிலுள்ள ஓர்
130

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
அவதானி. குடும்ப உறவுகள் முறிதற்கும் இவ்வுதவி தூண்டுகிறதென்பாரும் உள்ளனர்.
இது கனடாவில் மட்டுமல்ல; வேறு நாடுகளிலும்
அவதானிக்கப்பட்டுள்ள ஒரு நிலை. 'இப்படியும் ஒரு விவாகரத்து’ என்ற தமது சொல்லோவியம் ஒன்றிலே கலைச் சுவையுடன், இக் கருப்பொருளைத் தொட்டுக் காட்டுகிறார் அன்னலட்சுமி இராஜதுரை: தமது மகனின் குடும்பம் பிரிந்து விட்டது என்று அறிந்த தாய் தமது கவலையைக் கொட்டி மகனுக்குக் கடிதம் எழுதினாள். ஆனால், அன்பு மகனின் பதில், அம்மாவுக்குத் தாளாத சந்தோஷம். இதோ அந்தப் பதில் ;
"--அருமை அம்மாவுக்கு
கவலையே வேண்டாம்
காரணத்தோடு தான்
என் மனைவி சுகுணாவை
விவாகரத்துச் செய்தேன்
இந் நாட்டில்
சட்டப்படியாக நாம்
இணைந்து இருந்தால்
ஒரே ஒரு அலவன்சு
இரண்டாக இருந்தால்
இரண்டு அலவன்சு---
இதற்காகத் தானம்மா
இந்த ஏற்பாடு------
இங்கு வேறு சிலரும்
இப்படித்தான் செய்தார்கள்
இதிலே என்ன பிழை?"
131

Page 68
இதை வாசித்த அம்மா, அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. மகிழ்ச்சி மட்டுமல்ல, பிள்ளையின் கெட்டித் தனத்தையும் பாராட்டிச் சந்தோஷப்படுகின்றனர் என்கிறது சொல்லோவியம், ‘என்ன இருந்தாலும் என் பிள்ளை புத்திசாலி என்று புளகித்தனர்’ என்றால், சமூகத்தின் வாழ்வு முறையும் விழுமியங்களும் பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு வழிபிறழ் கின்றன என்று கனடிய ஆய்வாளர் கூறிய கருத்துத் தவறானதல்ல.
ஏதோ ஒரு விதத்திற் பணஞ் சேர்க்க வேண்டும் என்ற தேவை, பெயர்ந்த பலருக்கு உண்டு. ஊரை விட்டு விரட்டப்பட்டு, எல்லாம் இழந்தவராகப் பெற்றோரும் மற்றோரும் கொழும்பு “ஹோட்டல்’களிலும், மற்றும் சிங்கள வீடுகளின் சந்துகளிலும் பொந்துகளிலும் தவித்திருப்பது 26oT GOoto. பெயர்ந்து சென்ற பிள்ளைகளும் குடும்பமும் தாமுஞ் சீவனஞ் செய்து மற்றோருக்கும் அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது உண்மை. அதற்காகப் பல குடும்பத்தினர், கணவனும் மனைவியும் வேலைக்கு விரைதல் பல நாடுகளிலும் காணும் ஒரு காட்சி. காலை முதல் மாலை வரை மனைவி வேலைக்கு; மாலை முதல் காலை வரை கணவன் வேலைக்கு வார இறுதியிலும் எங்கோ பகுதி நேர வேலை. இப்படி அலைபவர் கனடாவில் உள்ளனர்; அவுஸ்திரேலியாவில் உள்ளனர், நியூசிலாந்தில் உள்ளனர். எங்கும் உள்ளனர். "ஐயோ, ஸேர்! நாங்கள் எட்டுப் பேர் சகோதரர்கள். எல்லோரும் இங்கே வந்து விட்டோம். பட்ட கடன் இன்னும் தீர்த்த பாடில்லை.
132

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
அவர் போனால் மூன்று நான்கு நாட்களின் பின்புதான் வருவார். இரவும் பகலும் வேலை-” என்றார் லண்டனில் உள்ள என் மனைவி ஒருத்தி. “அவரையும் என்னையும் ஒருமித்து வீட்டிலே பிள்ளைகள் காணுவது வார இறுதியில் ஒரே ஒரு நாள்” என்றார் ரொறன்ரோவில் வசிக்கும் இன்னொரு தாய்.
புலம் பெயர்ந்து ஈழத் தமிழர் வாழும் எந்த ஒரு நாட்டிலும் காணும் காட்சிகள் இவை. இவர்கள் எல்லோரும் தம்மை வருத்தி, தமது உடம்போடு உயிர் நிலைக்கப் பாடுபடுவதுடன், தமது நெருங்கிய உறவினர் ஊரில் வாழவும் நேர்மையாக உழைப்பவர்கள். சிலர் வழி பிறழ்வதால், எல்லோருமல்லவா முகம் இழக்கின்றனர்!
இன்னொரு வகையிலும் இத்தகைய சமூக விரோதச் செயல் நிகழ்கிறது. பொதுநலப்படியைப் பெறுதற்கு 'ஸ்பொன்ஸர்' செய்யப்பட்ட வயோதிபப் பெற்றோர்களும் கருவிகளாகப் பயன்படுத்தப்படு கின்றனர். ஸ்பொன்ஸர் மூலம் வரவழைக்கப்படும் பெற்றோருக்குச் சில குறிப்பிட்ட கால எல்லைக்குப் பொதுநலப்படி வழங்கப்படுவதில்லை என்பது ஒப்பந்தம். ஸ்பொன்ஸர் செய்பவர் தாமே, தாம் அழைப்பவரைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பராமரிப்பர் எனக் கூறி உறுதி செய்தே வரவழைக்கின்றார். ஆனால் வரவழைத்துச் சில மாதங்களுக்குள்ளேயே உறவு முறிந்தது அல்லது கடமை தவறியது போன்ற காரணங்களைக் காட்டிப் பொதுநலப்படியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் உண்டு.
133

Page 69
----eν 3 ιδιΦ
சில மாதங்களுக்கு முன், அவுஸ்திரேலியக் குடிவரவு அதிகாரிகள் கருத்தரங்கு/நிருபர் மாநாடு ஒன்றிலே முன்கூறிய பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அப்பொழுது கூறப்பட்ட கருத்து இது:
"ஸ்பொன்ஸர் செய்யப்பட்டு இங்கு வருகின்ற வர்கள், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். பொதுநலப்படி உள்ள நாடுகளில் இருந்தும் வருகின்றார்கள். பொது நலப்படி இல்லாத நாடுகளில் இருந்தும் வருகின்றார்கள். புள்ளி விபரங்களை ஆராயும்போது, ஒர் உண்மை தெளிவாகின்றது. அது என்னவென்றால், பொதுநலப்படி உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் சிறிது காலத்தின் பின் திரும்பிப் போய் விடுகிறார்கள். ஆனால் பொதுநலப்படி இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்கள் திரும்பிப் போவதில்லை. அது மட்டுமல்ல, அங்கீகரிக்கப் பட்ட கால எல்லைக்கு முன்பே பொதுநலப்படி பெறுதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுகின்றார்கள்."
இதைக் கேட்டபின், அவையிலிருந்த ஒருவர் ஒரு வினா எழுப்பினார்:
"அப்படிப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவது பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?”
பதில் கூறிய அதிகாரி, அது பற்றி ஆராயப் படுகிறது என்றும், வருமுன்னரே எவ்வாறு நிபந்தனை களை எவ்வண் கட்டுப்படுத்தலாம் என்றும் கூட ஆலோசனை நடைபெறுகிறது என்றும் கூறினார். ஒரு சிலரின் தவறான செயலால், சட்டங்களும் நிபந்தனை களும் கூட எவ்வாறு இறுக்கமடைகின்றன என்பதை
134

-> யாதும் ஊரே : ஒரு யாத்திரை 4மேலும் விவரிக்கத் தேவையில்லை.
கடந்த ஆண்டு முதல் கனடாவுக்குச் செல்வதற் கான விஸா வழங்குவதிலும் சில ‘நெருக்குதல்’ முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை ‘தமிழர் தகவல்’ மூலம் அறிய முடிகிறது. கொழும்பிலே மூன்று, நான்கு முறை வைத்திய சோதனைகளுக்கு அழைக்கப் பட்டும் விஸா வழங்கப்படாமல் இருப்பவர்களைச் சந்தித்துள்ளேன். ஸ்பொன்ஸர் செய்யப்பட்ட பலரது பெற்றோர்கள், வைத்திய காரணங்கள் காட்டி விஸா மறுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன் வயோதிப வயதில் அவர்கள் அலைந்து திரிதல் பல மாத காலமல்ல; இரண்டு மூன்று வருடங்கள். எதுவித துணையும் இன்றி, கொழும்பிலே தங்கி உடல் தேய உளங்குமுற வேதனைப்படுபவர் தொகை எத்தனையோ தெரியாது!
வயோதிபர் மட்டுமல்ல; ஸ்பொன்ஸர் மூலம் மனைவி பிள்ளைகளை அழைக்க முயலும் தந்தையர் ‘அங்கே’ ததும்ப, தாயும் சேய்களும் இங்கே தவிக்கும் நிலையும் நாம் காண்பதொன்று. காரணம் யாது?
ஒவ்வொருவரும் சமர்ப்பிக்கும் "பத்திரங்கள்’ எவை ஆயினும் அவற்றை முழுமையாகச் சரி பார்த்தலாலே தாமதம் என அறியப்படுகிறது. மூலப் பத்திரங்களைப் பரீசிலனை செய்து அங்கீகரிக்காமல், விஸா வழங்கப்படுவதில்லை. ஏன் என்பதை இங்கு விவரித்தல் தேவையற்றது என்பது என் நிலை. அத்தகைய நம்பிக்கையினத்தை நாமே ஏற்படுத்தினோம்
135

Page 70
என்பதே உண்மை. y
எந்தத் தாக்கத்திற்கும் ஓர் எதிர்த் தாக்கம் உண்டு என்பது நியூட்டனின் பெளதிக விதி. மனிதனின் எந்த வினைக்கும் எதிர் வினை ஒன்றுண்டு என்பது சமூகவியல் நியதி. பல்வேறு நாடுகளும் “பெயர்வு' விஸா, 'ஸ்பொன்ஸர்' விஸா என்பவற்றை மட்டுமல்ல, சாதாரண ‘விடுமுறை” விஸா, ‘குடும்பத்தினரைச் சந்திக்கும் விஸா’ போன்றவற்றைக்கூட இலகுவிற் பெற முடியாத நிலைக்குக் கொணர்ந்தது யார் என்று மனச்சாட்சியைக் கேட்டாற் பதில் கிடைக்கும்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைத் தெரிந்தவர்கள் நாங்கள்; தெளிந்தவர்கள் நாங்கள். மற்றவர்களும் அப்படித்தான் மதிப்பீடு செய்வர் என்பதை மறந்துவிடல் ஆகாது!
136

11. சூழலும் சுயமும்
"பல்கலா சாரச் சூழலிற் பலவாய்த் தொல்லைகள் தொடரும் சுயந்திரி படையும் சுயந்திரி படைகையிற் சுய அடை யாளத்தை நயம்படப் பேணலும் நம்மவர்கடனாம்."
புலம்பெயர்ந்து உலகளாவிய ஈழத்தமிழர், சென்றடைந்த நாடுகளிலே, பல்கலாசாரச் சூழலில் வாழ்கின்றனர். ஆண்டாண்டு காலம் வாழ்ந்து உறவாடிய சொந்தமும் சூழலும் கனவாகி, புதியதோர் உலகில் வாழத் தொடங்குகையில் பலவகையான தொல்லைகள் தொடரும். பேசும் மொழியால், அணியும் உடைவகையால், உண்ணும் உணவால், வாழும் வீட்டமைப்பால், சூழ உள்ள கால நிலையால், பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால், விழுமியங்களால் இன்னும் பலவற்றால் இத் தொல்லைகள் உருப்பெறும்.
137

Page 71
-e 9 ιδιΦ 4ο ---
அதனால், எமக்குச் சொந்தமென இருந்து வந்த சில கூறுகள் திரிபடையும்; சில கைவிடப்படும். தொல்லை களைச் சமாளிப்பதிற் சிரமம் ஏற்பட நேர்ந்தால், தேவைக்கேற்ப இணங்கி வாழ முடியாமலிருந்தால், உளவியல் தாக்கங்களுக்கும் ஆளாக நேரிடும்.
புதிய சூழலுடன் இணங்கி வாழுவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அம்மாற்றம், எமது பாரம்பரிய வழக்கில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். தமிழ் பேசிப் பழகிய நாம் சூழல் மொழி ஒன்றைப் பேச வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல, அணியும் உடையும், உண்ணும் உணவும், வாழும் வீடும், அன்ன பிறவும் சிக்கல்களை ஏற்படுத்தும். பெற்றோர், பிள்ளைகள் இந்தச் சிக்கல்கள் தொடரும். அதன் காரணமாக, சூழலுடன் இணங்கி வாழுதற்காகச் சில புதிய கூறுகளை ஏற்றும் எமது பழைய கூறுகள் சிலவற்றை கைவிட்டும் வாழ நேரிடும். தமிழ்ச் சமுதாயத்திலே வாழ்ந்த அனுபவத்தால், முதியோரும் முதிர்ந்தவரும் பழைய நினைவுகள் அழுத்தும் நிலையில் வாழும் வேளை, இளைஞரும் சிறுவரும் புதிய சூழலுடன் இணங்கி வாழ முயலுவர். குறிப்பாக, மிக இளம் பருவத்திலே அந்நிய சூழலில் வாழ நேர்ந்தவரும் அந்நிய மண்ணிலே பிறந்தவர்களும் “பழைய கோலத்தை அறியாதவர்கள். ஆகையால் ‘அந்தக் கோலங்கள்’ பற்றி வளர்ந்தோர் பேசும் போது, எது பற்றிப் பேசுகின்றனர் என விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அதனாலேதான், மாற்றத்தினூடு தொடர்ச்சி பேணல் சற்றுச் சிரமமாகிறது.
138

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அப்பாவும் அம்மாவும் இடியப்பம் - சொதி என்று சுவைத்துச் சாப்பிடுகையில், பிள்ளைகள் "மக்டொனல்ட் ஹம்பேர்க்கர்’ என்று அடம்பிடிக்கும் நிலையை நேரில் பார்த்திருக்கிறேன். எனக்குப் 'பிஸா’ தான் வேண்டும் என்றும் “கேஎப்சி சிக்கன்’ என்றும் பிடிவாதஞ் செய்த பிள்ளைகளையும் பலர் அறிந்திருத்தல் கூடும். இளம் பருவம் முதலாக அந்நிய சூழலில் அனுபவம் பெற்றும், பள்ளியிற் கூடிப் பழகியும் பார்த்து அறிந்தும் 'அளவு கோல்களை’ அவர்கள் இளமையிலே அமைத்துக் கொள்வர். ஆனால், முதியோராகிய நாம்?
நாம் வாழ்ந்த தமிழ் மண்ணில் எமக்கெனச் சில முறைகளை வகுத்து, அனுபவங்களைப் பெற்று, அளவு கோலையும் நிர்ணயித்துப் பயன்படுத்தியவர்கள். வீட்டு வாழ்க்கையிலும் வெளி அனுபவத்திலும் பாரம் பரியமாகக் கையளிக்கப்பட்ட அளவுகோலை, எமது தனித்துவ அடையாளங்கள் என்றவர்கள். தமிழர் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடி மகிழ்ந்தவர்கள் நாங்கள். எமது பண்பாடு, எமது கலாசாரம் என்று கட்டிக் காத்தவர்கள் நாங்கள். எமது அன்றாட நடத்தையிலே அவை பிரதிபலித்தன. இவற்றை ஒரே சொல்லில் எமது நாகரிகம் என்று பெருமைப்பட்ட அனுபவம் உள்ளவர்கள். அந்த அனுபவம் மனதிலும் புற நடத்தையிலும் பிரதிபலித்தல் இயல்பாக நிகழ்வது. அதுவே எமது வாழ்க்கை முறையை நிர்ணயித்தது. எமது கலாசாரம் என்று பேணப்பட்டது. எமது நம்பிக்கைகள், எமது விழுமியங்கள், எமது வழமைகள், எமது மொழி,
139

Page 72
--O- அம்பி
எமது கலைகள் எனப் பல கூறுகள் ஒருங்கிணைந்து எமது கலாசாரம் எனப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் எமக்கெனச் சில அளவுகோல்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். இது சரி - அது பிழை; இதைச் செய்யலாம் - அதைச் செய்யக்கூடாது; இத்தகைய முடிபுகளைச் செய்வதற்கு அந்த அளவுகோலைப் பயன்படுத்தினால் என்ன நிகழும்? இரண்டு உலக வாழ்க்கை அவலம்; இரு கலாசாரங்களுக்கிடையே இழுபறிப்படும் நிலை.
கனடிய நிலையை விளக்கிய ஆய்வாளர் (எஸ். பத்மநாதன்: ‘தமிழர் தகவல்) ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வரும் சமூக - உளவியல் மாறுதல்கள் போன்று கனடாவிலும் தாக்கங்களை அவதானிக்க முடிகிறது. வேறுபாடுள்ள வயதமைப்புகள், பால் வேறுபாடுகள், கல்வித்தர வேறுபாடுகள், தொழில் வேறுபாடுகள் போன்றவற்றின் கூறுகளும் சமூக விழுமியங்களும் சங்கமமாகி புதிய வடிவங்களில் வாழ்வியலிலும் மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றது’ ள்ன்று கூறுகின்றார். பிள்ளைகளின் நடத்தை மாற்றம் பற்றிக் கூறும் அவர் “தொலைக் காட்சியில் வருகின்ற விவாதச் சண்டைகள் வீடுகளிலும் எழுகின்றன’ என்கிறார்; "மாற்றங்களை நியாயமான முறையில் ஏற்க மறுக்கின்ற பெற்றோர்கள், இளவயதினரின் பிரச்சனை களை விளங்கிக் கொள்ளல் வேண்டும். இரட்டை நாட்டு கலாசாரப் பின்னணியில் வாழ்ந்து வரும் எமக்கு இந்தச் சம்பவங்கள் புதிய உணர்வுதான்; எனினும் உறை முறை முறியாமல் இருப்பதுவும் அவசியம்; அதற்கு வழி
140

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
செய்யும் வகையில் தீர்மானங்கள் அமைதல்’ என்கிறார். குறிப்பாக அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
“பாடசாலைகளில் கல்வி கற்கின்ற எமது பிள்ளைகளின் மத்தியிலும் இரட்டைக் கலாசாரத் தன்மை பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. பாடசாலைகளில் மேலைத்தேய நாகரிகமும் வீடுகளில் கீழைத்தேய நாகரிகமுமாகக் குழப்பத்தை ஏற்படுத்து கின்றன. கட்டுப் பாடற்ற பாலியல் தொடர்பு முறையுள்ள பல்கலாசார சமுதாய அமைப்பில் எமது பிள்ளைகள் தவறி விடுவார்களோ என்ற பயமும் பெற்றோர்களுக்கு ஏற்படவே செய்கிறது. சந்திப்பு உறவு (dating) எமக்குப் புதியதொன்று. அவற்றையெல்லாம் அன்றாடம் சந்திக்கும் எமது பிள்ளைகள் அவை சரியானவை என்று பெற்றோருடன் வாதிடுவதனை அவதானிக்க முடிகிறது’ என்கிறார்.
ஆமாம்; இருவேறு அளவுகோல்களைப் பயன்படுத்தி இருவேறு உலகங்களில் வாழும் எம்மவர் தொல்லை களுக்கு உள்ளாகின்ற நிலையை ஆய்வாளர் கூறுகின்றார். வளருஞ் சிறுவரை அவர்கள் வாழும் சூழல் வழிப்படுத்தும் என்பது உளவியற் கோட்பாடு. பிள்ளைகள் சடப்பொருள்கள் அல்ல; புலனறிவும் சூழலைத் துருவும் இயல்பும் உடையவர்கள். சூழலைக் காண முடியாத காட்சிகள் சிலவே, அவற்றையும் “ரிவி’ வீட்டிற் காட்டுகிறது. விழித்திருக்கும் நேரத்தில், வார நாள் என்றால் மூன்று மணிநேரமும், வார இறுதி என்றால் ஆறு மணிநேரமும் “ரிவி’யின் முன்னே தவமிருக்கும் பிள்ளைகளுக்கு, இன்று வெளியுலகை
141

Page 73
- εν ΦιδιΦ. « - -
நன்கு தெரியும். கிடுகு வேலியின் பின்னால் நின்று ஒட்டைகளுடாக வெளியுலகைப் பார்த்தது ஒரு காலம் - வேறொரு களம். ஆனால் இன்றைய காலத்தில் நிகழ்கின்ற சில உண்மையான சம்பவங்கள் இங்கே தரப்படுகின்றன.
பெற்றோர் மட்டும் பார்வையிட்டுக் கருத்துக் கூறவென திரைப்படமொன்று ரிவியில் காண்பிக்கப் படுமென்று அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. வோஷிங்டன் டி.சி இலுள்ள நண்பர் வீடொன்றில் அன்று நான் தங்க நேரிட்டது. ‘அந்தப் படத்தை நானும் பார்க்க வேண்டும்’ என்று பிடிவாதம் செய்தாள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மகள். பெற்றோருக்கு மட்டுமே என்று கூறி அனுமதிக்க மறுத்தனர் பெற்றோர். மகள் உடனே மிக உணர்ச்சிவசப்பட்டுக் கூறினாள்; 'வகுப்புப் பிள்ளைகள் எல்லோரும் பார்ப்பார்கள், அவர்களின் பெற்றோர் அனுமதி வழங்கி விட்டனராம். நான் மட்டும் பார்க்கக் கூடாது என்கிறீர்கள் நீங்கள். நான் நாளைக்கு அந்தப் பிள்ளைகளுடன் சேர்ந்து வகுப்பிற் படிப்பதில்லையா? என்னைப் பற்றியும், எனது பெற்றோர் பற்றியும் அந்தப் பிள்ளைகள் என்ன எண்ணுவர்? இப்படி வெட்கப்பட வைப்பதிலும் பார்க்க என்னை 'ஊரிலேயே விட்டிருக்கலாம். என்னை அழைத்துப் போங்கள் என்று நான் கேட்டேனா? உங்கள் நலன் கருதி இங்கே வந்து, பின்பு எனக்கு ஏன் அவமானம் தருகிறீர்கள்?" இப்படிப் பிள்ளை வாதிப்பதைப் பெற்றோர் “சின்ன விஷயம்’ என்று தட்டிக் கழிக்க முடியாது. பிள்ளையின் நிலையை,
142

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
இரட்டைக் கலாசாரத்தின் இடைத் தாக்கத்தை தெளிவாக உணரலாம். அந்தப் பிள்ளை பிறிதொரு சூழலில் வளர்கிறது. பெற்றோர் பழைய அளவுகோலைக் கைவிட விரும்பவில்லை. இப்படி எத்தனை பிள்ளை களோ!
அவுஸ்திரேலியக் கவிஞர் மாவை நித்தி தன் அவதானிப்புகளைச் solo கவிதையாக்கி, கற்பனையும் சேர்த்துத் தருகிறார். முன் கூறியவை ‘உலகளாவிய கோலம் என்பதை உறுதிப் படுத்துவது போல அமைகிறது கவிதை:
"வெள்ளை மக்களின் சமுத்திரத்தில் இரு புள்ளி போலவே வந்து விழுந்த பின் திக்கி னை அறி யாது வாடியே முக்கு பூழித்த பிள்ளைகள் இருவரும் மூன்று மாதம் கடக்க முன்னரே இந்த நாடுதான் சொந்தம் என்றனர்! மக் டொனால்ட்சும் நின்ஜா Turtle ம் பற்ப லவாய்க் கவர்ச்சிப் பொருள்களும் சொர்க்க வாயிலைத் திறந்து காட்டின சுக்கு நூறாய்ப் போனது சொந்த ஊர்" சரி, பிள்ளைகளைப் புதிய சூழலிலே 'வளருங்கள்' என்று விட்டு விட்டோம். பிள்ளைகள் சூழலை ஆய்ந்தறிந்து வளரத்தானே வேண்டும். அந்த வேளையிலே enculturation என்னும் கலாசார உள்வாங்கல் தவிர்க்கப்பட முடியாது. இரட்டைக் கலாசாரச் சூழலும் வீட்டிலே பெற்றோர் காட்டுகிற போலி வாழ்க்கையும் பற்றிக் கவிஞர் தொடர்ந்து கூறுகிறார்:
143

Page 74
- --e -3 ιδιΦ «ο- -
"வந்தவர்களின் வரட்டு வாழ்க்கையும் தந்தை காட்டிய போலி வாழ்க்கையும் பிள்ளை மனங்களைப் பிய்த் தெறிந்தன பள்ளிகள் புதுப் பாதை திறந்தன வீட்டிலே பண் பாடு மறைந்ததால் நாட்டிலே அதைத் தேடல் ஆயினர்" பிள்ளைகள் மனத்தைப் பிய்த்தெறிந்து, புதிய சூழல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதையும் கவிஞர் சுவைபடக் கூறுகிறாார்; வாலிப வயதிலே இளைஞன்,
"காதிலே ஒரு கடுக்கன் பூட்டினான் கழுத்திலே கருங் கல்லை மாட்டினான் பாதி மயிரில் சிவப்புத் தீட்டினான் மீதியை அடியோடு வெட்டினான் கோதியே ஒரு குடுமியும் கட்டினான்"
எழில் பூத்துக் குலுங்கிய இளையவள், இளமை மதுவை வார்த்து,
"விழிகளில் ஒரு மந்திரம் ஏற்றினாள் இளைஞரில் விசைப் பம்பரம் சுற்றினாள் ஆடையிற் பல வண்ணம் இயற்றினாள் கோடையில் அதிற் சிக்கனம் கூட்டினாள் வாலிபர் அவள் காலடி போற்றிட நாளும் ஓர் புது நட்பினைத் தோற்றினாள்" மெல்பனில் வெளிவரும் "உதயம்’ பத்திரிகையிலே, அவுஸ்திரேலியக் கவிஞர் மாவை நித்தி 'மாறிவரும் கோலங்கள் சிலவற்றைச் சுவையும் நகைச்சுவையும் ததும்பக் காட்டுகிறார் என்றால், நியூசிலாந்தில் உள்ள
144

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40ஹமில்ரன் கவிஞர் ஜெயசிங்கம், “வெண்ணிலவு' சஞ்சிகையிலே பின்வருமாறு தன் மனச்சுமையை இறக்குகிறார்:
*கார் சூழலைக் கத்தரித்த காரிகையைக் காணும் - இரு காதுகுத்தித் தோடுவைத்த காளையரைக் காணும் பூவாடை காணாத பூமகளின் கூந்தல் - அதில் புதிய பல வண்ணத்தில் பூச்சுகளைக் காணும்
"பெரியோரை வணங்காத இளையோரைக் காணும் -
அவர்
பெரியோரைப் பெயர் சொல்லும் பெரியதுயர் காணும்
கண்டதெலாம் போதுமென்று கதறியழும் தமிழே -
தான்
கொண்டதுயர் போதுமென்று கொள்ளும் மீளாத்
துயிலே" நடையுடைகளில் காணும் மாற்றங்களும்
பெரியோரை மதிப்பதை விடுவோம் - பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமும் கவிஞரின் மனவேதனையாகி அழுத்துகின்றன. மாற்றங்கள் பலபட நிகழ்கையில், நாவிலே தமிழ் நடமாடாமல் உறங்குகிறது என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார். ஸேர் என்ற சொற்களைக் கைவிட்டு, “முதற் பெயரால் அழைக்கும் வழக்கம் இளைய பரம்பரையினரில் பரவு வதையும் அது “பெரியோருக்குத் துயரமாகி வருகிறது என்பதையும் கூட அவர் கவனத்துக்குக் கொண்டு வருகிறார். நாம் சென்றடைந்த சூழல்களில் அது சாதாரண கோலம் எனக் கூறத் தேவையில்லை.
T-9 45

Page 75
இதுவரை விவரித்ததெல்லாம் மாறிவரும் புறக்கோலங்கள் பற்றிய, உண்மையும் கற்பனையும் இணைந்த ஆக்கங்கள். இனி, சில உண்மைப் பிரச்சனைகளையும் பார்ப்போம். பெற்றோர் மனநிலை காரணமாகவும் மாற்றங்களை அவர்கள் ‘புரட்சி’ எனக் கொள்வதாலும் சமூக உளவியல் சரிவர அறியப் படாததாலும் குடும்ப உறவுகள் சிதைகின்றன.
ஜேர்மனி அவதானியான ‘தேவா’ என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. (மெல்பன் - உதயம்)
"அன்று என்னை அம்மா அப்பா அடித்து வளர்த்ததினால் தான் நான் இன்று நல்லாய் இருக்கின்றேன்" இப்படி தாய் தந்தையர் தம் பிள்ளைகளுக்கு அடிப்பதற்கு நியாயம் தேடுவதை புகலிடத்திலும் கேட்க முடிகிறது. "துன்புறுத்தப் பட்டோரே மற்றவர்களை துன்புறுத்துவதில் சளைப்ப தில்லை” என்பது மன ஆராய்வாளரின் கருத்து. தண்டனைக்கும், வன்முறைக்கும் பிள்ளை வளர்ப் பிற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவானது. பிள்ளை களை பெற்றோர் தம் ‘அதிகாரத்துக்குட்படுத்தல்’ தொடர்ந்து நடைபெறுகிறது உலகம் பூராவுமே. புகலிடங்களில் அநேக தமிழ்ப் பிள்ளைகள் இளைஞர் சமூக நல இல்லங்களில் தஞ்சமடைகின்றனர். பாலியல் இம்சை, வன்முறைக்கு உள்ளாகியவர்களை இளைஞர் சமூகநல இல்லங்களிலே சேர்க்கப்பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைமை இங்கு அதிகரித்து வருகிறது.
146

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பிள்ளைகள் ஏன் நம்மை விட்டுப் பிரிந்து அந்நியரிடத்தில் தங்கிவிடுகின்றதை பெற்றார் உணர முயல்வதில்லை. பிள்ளைகளின் மனநிலை வளர்ச்சியை கவனிப்பதில்லை. அவர்களை இன்னும் ஒன்றும் தெரியாத குழந்தைகளாக கணக்கிடுகின்றனர். அல்லது யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்ததை பிள்ளைகள் ஒப்புவிப்பதாக குருட்டுத்தனமாக நம்புகின்றர். பிள்ளை களுக்கு சுயசிந்தனை இல்லை என நினைத்தால் அவர்களின் - பெற்றோருக்கு இயைந்த சிந்தனைகள் வெளிப்படும் போதும் அது பிள்ளைகளின் சொந்த சரக்கில்லை என்றாகி விடாதா?”
பெற்றோர் - பிள்ளைகள் உறவு பிரிவடை வதையும் அதன் விபரீத விளைவுகளையும் இந்த அவதானி எடுத்துக் காட்டுகிறார். சூழலாற் பாதிக்கப் பட்டு இரட்டைக் கலாசார நெரிசலால் அவதியுறும் பெற்றோர் பழைய சங்கதிகளை மனதில் நிறுத்தித் தமது அளவுகோலாற் பிள்ளைகளின் நடத்தைகளை அளவிடும் போது, பிரச்சனை உருவாகிறது. நம்மவர் புகுந்த நாடுகள் பலவற்றிலே, பெற்றோருக்கு எதிராகப் பிள்ளை தனது குற்றச் சாட்டைக் கூறுதற்கு 'ஒரு தொலைபேசி தூரமே தேவை. மூன்று இலக்கத்தைச் சுற்றியதும் பிள்ளையைத் தேடி வருதற்கெனக் காத்திருப்பவர்கள் வந்து சேருவர். ‘எங்கள் அப்பா அம்மா’ வளர்த்த முறை புதிய சூழலிலே ‘கைகொடுக்க' மாட்டாது.
வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் ஒருவன் பற்றிய கதையை இனியும் சூல் கொள் - பிரான்ஸ்) 'ஆத்மன்’ கூறுகின்றார், இப்படி:
147

Page 76
----e -ε ιδι0 « - -
"இங்கு கலை-இலக்கிய நிகழ்வுகளை முன்னின்று நடத்திவரும் எனது குடும்ப நண்பரின் மனைவி எமது தொலைபேசியில் அவசரமான எனது அழைப்பை வேண்டி பதிவு செய்திருந்தார். இவ்வழைப்பு வழமை போன்றுதான் (நீண்ட வார முடிவு நாட்களில்), எனது குடும்பத்தை மதிய விருந்துக்கு அழைக்கின்றார்கள் எனக்கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, தமது ஒரேயொரு மகன் “ஞானி’ வீட்டை விட்டு ஒடிச் “சிறுவர்களுக்கான விடுதி” ஒன்றிற்குச் சென்றுவிட்டார் எனவும், எனது உதவியை எதிர்பார்ப்பதாகவும் (ஞானி என்னுடன் கூடுதலாகப் பழகுவதன் காரணமாக) அவரின் இந்த நடவடிக்கைக் கான காரணங்கள் ஏதாவது எனக்குத் தெரியுமா என வினவினார்கள். அவரைத் தாய் தண்டிக்கப் போவதில்லையெனக்கூறி, மீண்டும் வீட்டுக்கழைத்து வரமுடியுமா என என்னை வேண்டி நின்றனர். சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதிக்குச் சென்று விடுதியின் பொறுப்பாளரிடம் என்னை அறிமுகப் படுத்தி, ஞானி பற்றிக் கூறி அவரைச் சந்திப்பதற்கு விடுதியின் பொறுப்பாளரிடம் அனுமதியைக் கேட்டேன். என்னை அருகிலிருந்த விருந்தினர் வரவேற்பறையில் அமரும்படி கூறி அவரை அழைத்து வந்தார். ஞானியின் எதிரிலிருந்த கதிரையில் அமர்ந்து அவனுடன் உரையாடிய பொழுது, வீட்டில் தனக்கும் தந்தை யாருக்கும் இடையேயான பிரச்சனைகள் வீட்டிற்கு வருபவர்களால் தான் என்று கூறி சம்பவங்களை விபரித்தான். அதாவது தம் தாய் நாட்டுப் பிரச்சனை
148

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
குறித்து என்னைக் கிண்டலாக கேள்விகளைத் தொடுப் பார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நானும் கிண்டலாகவே பதிலளிப்பேன். இதனால் வீட்டிற்கு வருபவர்களுடன் வாய்ச் சண்டை ஏற்படுவதுண்டு. இவ் விடயங்கள் தனக்கு மானக்கேடாகக் கருதி அவர்கள் முன் அடித்து, அவமானப்படுத்துவார் என் தந்தையார். ஆனால் என் மனநிலைகள் பற்றி எதுவித வெளிப்பாடு களையும் அவர்கள் அவதானித்தது கிடையாதென்றான்.
இவற்றை நான் விளக்கமாகக் கூறும்படி கேட்ட பொழுது ‘எம் நாட்டு நிலைமை குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்பார்கள். நானும் ‘எந்த நாட்டைப் பற்றிக் கேட்கின்றீர்கள்’ என்பேன். “உமது தாய்நாடு தமிழீழத்தைப் பற்றித்தான்” என்பார்கள். வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் இதே கேள்வி களைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுத் தொல்லை தருவார்கள். "நான் பிறந்ததோ Italy (இத்தாலி)யில், வளர்ந்ததோ Alemagne (ஜேர்மனி)யில், தற்பொழுது படித்துக் கொண்டிருப் பதோ France இல், நாளை மேற்படிப்புக்கு Angletere இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டுமென்பதே எனது பெற்றோரின் விருப்பம்" என்று கூறி பெருமூச்சுடன் தோள் மூட்டுகளை அசைத்துக் கொண்டான்.
தற்பொழுது Franceggi) நம்மவர்களின் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறி விடுதிகளில் வசிப்பதை நான் கேள்விப்பட்டிருந்தும், முதல் முறையாக நேரடியாக எனது வட்டத்தில் நடந்ததினால் நான் பார்க்காத ஒரு பகுதியின் முரண்பாடுகளை
149

Page 77
-- Φ -9 ιδιΦ Φ --
அறியக் கிடைத்தது. எனது கேள்விகளுக்கு ஞானியிட மிருந்து எதிர்பாராத பதில்கள் எனது வெறுமையை உணர்த்தியது மட்டுமல்லாது, அவனின் எண்ணப் பாடுகளை பக்குவத்துடன் கிரகித்துக் கொள்ளவும் செய்தது. இரு சமூகத்துள் வாழ்ந்து கொண்டிருக்கும் தனது அவல நிலையை ஞானி எடுத்துரைத்தான். "நான் வாழும் சமூகத்தில் எனக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து எவரும் விசாரிப்பர் கிடையாது. ‘தமிழீழப் பிரச்சனை’ குறித்து நான் எப்படிப் பதில் கூறுவேன்" என்ற வினாவுடன் தொடர்ந்தான். Alemagne (ஜேர்மனியில் நாமிருந்த வேளை குருவிக் கூட்டத்தினர் பாக்கி (குறவர்) என்று எம்மைப் பார்த்து காறியுமிழ்ந்ததும், அங்கு வாழ்ந்த அண்ணைமாருக்கு அடித்ததையும், நாம அங்கு வாழப் பயந்து எனது ஏழு வயதில் வந்து, இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கூறுவதா? இந்நிலையில் நீங்கள் எனக்குக் கூறும் எனக்குத் தெரியாத தமிழீழம் சார்ந்த மொழி, மத, கலை, கலாசாரப் பிரச்சனைகள் எனக்கு அவசியமற்றதாகவே தோன்றுகின்றனன.
அந்நிய நாட்டிலே பிறந்து வளரும் குழந்தை களைப் புரிந்து கொண்டு. அவர்களின் உளவியல் தாக்கங்களை விளங்கிச் செயற்பட நம்மவர் தவறுகின்றனர். இரண்டு உலக வாழ்வின் தாக்கம் இப்படி எத்தனை ஞானிகளை உருவாக்கும்? w
அந்நிய நாட்டிலே பிறந்து வளர்ந்த ஞானி மட்டுமல்ல, ஈழத்திலே பிறந்து வளர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ நேர்ந்த ரமறாவின் கதை என்ன தெரியுமா?
150

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
சிறுமியாக ஈழத்திலிருந்து சென்றவள். முன்பு சென்ற தாய், தந்தையருடன், பதினொரு வயசில் சேர்ந்து கொண்டவள். எட்டு ஆண்டுகள் சுவிஸில் வாழ்ந்து உயர்தர வகுப்பு வரை படித்தவள். அலுவலகம் ஒன்றிலே பயிலுநராக வேலையும் பெற்று, சுவிஸ் ஜேர்மன் மொழியில் வேலை செய்பவள். வீட்டிலே பெற்றோருடன் வாழ முடியாது என்று கூறி, வீட்டை விட்டு வெளியேறி, சுவிஸ் குடும்பம் ஒன்றுடன் வாழத் தொடங்கினாள். அவர்களுடைய தமிழ் மனப் பாங்குடன் இணைந்து இனிமேலும் வாழ முடியாது என்பதே காரணம்.
தமிழர்களுக்கு குடும்பம் மிக முக்கியம். ஒருவர் விஷயத்தில் எல்லோரும் தலையிடுவர். எல்லோரும் கருத்துக் கூறுவர். அவர்கள் தன் வாழ்வில் தலையிடுவதை, தனது திருமணம் பற்றிய பெற்றோர் முடிவு செய்வதை அவள் விரும்பவில்லை. வெளி நாட்டுச் சூழல் சிறுமியாக வந்த பிள்ளையையே மாற்றியது எனின், அந்நிய நாட்டிலே பிறந்து வளர்ந்த குழந்தைகள் நிலை என்ன என்று கூறாமலே விளங்கும். அவுஸ்திரேலியச் சூழலில் வாழும் பிள்ளைகள் சிலரில் அவதானித்ததையும் கனடாவிலே பிறந்து வளர்ந்து வாழும் சிறுவருடன் நான் பெற்ற சில அனுபவங்களையும் இங்கு கூறுதலும் பொருத்தமென எண்ணிகிறேன்.
படித்துப்பட்டம் பெற்று ஓரளவு உயர் பதவி வகிக்கின்றாள். அவள், பெற்றோர் கல்யாணம்
151

Page 78
பேசுகின்றனர். அவள் மறுக்கிறாள். அவளின் நிலையை மம்மி மற என்ற கவிதை தருகிறது
கல்யாணம் பேசி கனடாவால் வந்தவன் முன் நில் கழுத்தை நீட்டென்றால் நீதியோ -
இல்லை மம்மி டேற் பண்ணல் வாழ்வில் டிபக்ரோக்கள் ஏதறிவாய் ஏற்கும் நிலையில் இல்லை என் மனசு -
ஈற்றினிலே என் மனசுக் கேற்ற எவனும் வரும் வரையும் மம்மி அதைநீ மற. அந்த நிலைக்கான காரணத்தையும் அவள் தாயாரிடம் கூறினாள்.
"நான் யாரையும் கல்யாணம் செய்யப் போகிறேன் என்று வேலைத்தலத்தில் கூற, நண்பர்கள் யார் அவர்? எவ்வளவு காலம் தெரியும்? எவ்வளவு காலம் பழகி ஆளை அறிந்துள்ளாய்? இப்படி கேட்பார்கள், நான் அவர்கள் கண்ணில் பின்பு எப்படி முழிப்பது? என் சுயவிம்பம் அவர்கள் முன் 6T6T607 alsTeli P - How can I stick my neck into the hands of a stranger? (அந்நியன் ஒருவனின் கைகளுள் என் கழுத்தை எப்படி நீட்டுவேன்? அவள் நிலையில், உளவியலும் தன்னுரிமையும சுய கெளரவமும் தொனித்தன. பெற்றோர் அதை விளங்கி இணங்காவிடின் முரண் விரிவடையும் குடும்ப உறவு முறியவுங்கூடும்.
இனி, இளம் பருவத்தினரும் தமது விருப்பு வெறுப்புகளைத் தயங்காமற் சொல்லுகின்ற பாங்கினைக் காட்ட, தமது சுயத்தை இழக்க விரும்பாத நிலையை
152

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
விளக்க, மூன்று சந்தர்ப்பங்களை குறிப்பிடுகின்றேன்.
அவன் எட்டு, ஒன்பது வயதுச் சிறுவன். தனக்கு ஒரு புதிய ‘கவெற்றர் வாங்க வேண்டும் என்று தந்தையைக் கேட்டிருந்தான். தன்னை அழைத்துச் சென்று, ஒன்று வாங்கித் தருமாறுதான் அவன் கேட்டான். ஆனால், மலிவு விற்பனை ஒன்றிலே நல்ல தரச் சுவற்றரைக் கண்ட தந்தை, தாமே தெரிவு செய்து ஒன்றை வாங்கி வந்தார். பெருமையுடன் தன் மகனுக்கு அதைக் காட்டினார். அவன் அதைப் பார்த்து விட்டு, வெறுப்புடன் கூறியதென்ன தெரியுமா? -
I didn't ask you to select one for me. What if I don't want to wear this? I asked you to take me... (6T607 die5 66iraopg5 G5ifa செய்யுமாறு நான் கேட்கவில்லை. இதை அணிய நான் விரும்பாவிடின் என்ன செய்வீர்கள்? என்னை அழைத்துச் செல்லுமாறுதான் கேட்டேன்)
தனக்கு வேண்டிய சட்டையைத் தாமே தெரிவு செய்தல் வேண்டும் என்றும், எதை வாங்குவது என்று தானே முடிவு செய்ய வேண்டுமென்றும் அவன் வலியுறுத்திய சம்பவம் அது. தனது சுயத்தை நிலைநாட்டவே அவன் விரும்பினான்.
அவனுக்கு ஏழு எட்டு வயதிருக்கும். என் நண்பரின் பேரன் அவன். அவர்கள் வீட்டுக்கு நான் சென்றபோது, அவன் ரிவி பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடன் பேசிய என் நண்பர், பேரனை அழைத்து, Say helo to uncle என்றார். அவன் என்னை ஒரு பார்வை பார்த்தான், ஒன்றும் பேசவில்லை. என் நண்பர் BaiTGSub Ji, g560Titfit. 'I said say hello to uncle' (gyrise dig
153

Page 79
ஹலோ சொல்லு என்றேன்) சிறுவன் அவருக்கு என்ன agaOTrTait G5sful DIT? He is not my uncle, he is a stranger to me. இவர் எனது அங்கிள் அல்ல, அன்னியர்)
தமக்கு கற்பிக்கப்பட்ட நடத்தை முறையை அவன் நடைமுறையிலே காட்டினான். பாட்டா Unce என்றாலும் தமக்கு Stranger என்ற முடிபை தான் சொல்லத் தயங்கவில்லை!
அடுத்து முன்பே நான் பார்த்து பாவாக்கிய ஒரு காட்சி.
"இன்று குளிர் நாள் எது நல்ல புள் ஒவர் என்றாய்ந்த பத்து வயதினளை - சென்றனைத்து அன்னை தனதன்பால் ஆஷா இதைப் போடேன் என்று சொன்ன சொல்லைச் சகியாமல் - சின்னவளோ லெற் மீ எலோன் மம்மி, லெற் மீ டிசைட் என்றாள் சற்றே மயங்கினாள் தாய்" அம்மாவின் தலையீட்டால், அம்மாவே சகல முடிவுகளையும் செய்து, பிள்ளையின் ஆளுமையை மழுக்கிய கதைகளை - பழைய கதைகளை புதிய உலகில் மறந்து விடல் வேண்டும், பிள்ளை சிந்தித்துச் செயற்படத் தடையிட்டிருக்கக்கூடாது. அதை அவர்களும் சகிக்கத் தயாரில்லை என்பது தெளிவு.
சுயமாக இயங்கிச் செயற்பட நாம் சமுதாயத்திலே காணமுடியும். படிப்பை வெறுப்பதும், தனிமையை விரும்புவதும், பெற்றோர் மற்றோருடன் பேச மறுப்பதும், ஆவேசத்துடன் பேசுவதும், தனது
54

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
அறையுள்ளே பூட்டிக் கொண்டு இருப்பதும், உண்ண மறுத்தும், பொருள்களை உடைத்து நொருக்கியும், தமது உளவியல் தேவையை வெளிப்படுத்துவர். ஏற்ற நிவாரணம் உரிய காலத்திற் கிட்டாதாயின், அவர்கள் மனநோயாளராதல் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.
பொதுவாக, புதிய சூழலில் வாழ்க்கை நடத்துதற்கு, சூழலுக்கும் சுயத்துக்கும் இடையே ஒரு முரண், ஒரு மோதல் நிகழும். அதை எதிர்கொண்டு வெல்லுதல் வாழ்க்கைச் சவால். தொல்லைகள் தொடர்ந்து சுயம் தடுமாறி விடாது காப்பாற்றத் தெளிவான சிந்தனையும் விரிவான நோக்கும் அவசியம். சமூகத்தின் உளவியல் தேவை நிறைவு செய்யப்படல் அவசியம். மனம் திறந்து பேசும் நிலை, அச்சமின்றிக் கருத்து மோதினும் அன்புறவை இழக்காத நிலை வேண்டும். பிளவு ஏற்படின், ஆரம்பத்திலேயே பொருத்த மான உளவியல் ஆலோசனை பெறும் வாய்ப்பு உள்ளது. எல்லா நாடுகளிலும் அவ்வசதி உள்ளது. எமது பழைய வாழ்க்கை முறையில் ஒன்றிய மனங்கள் சுமை இறக்கி ஒய்வு பெற அவை ‘சுமைதாங்கிகளாக நிற்கும். அவற்றைப் பயன்படுத்துதல் பல தொல்லைகளை நீக்கும். உதாரணமாக, “ஞானி’யின் அந்தர மனதைக் கேளுங்கள். முன்பு குறிப்பிட்ட பிரான்ஸ் “ஞானி’ தம்முடன் பேசிய நண்பர் ஆத்மனுக்கு மனம் திறந்து கூறியவற்றின் ஒரு பகுதி இங்குள்ளது. சக மாணவரின் 'கிண்டல்’களால் மனம் நொந்த அவன் உள்ளத் துடிப்பைப் பாருங்கள்:
"கடந்த கால பாடசாலை அனுபவத்தில், எனது
155

Page 80
Origine (சுய அடையாளம்) Tamoul (தமிழ்) எனும் பொழுது அவர்கள் என்மேலான ஏளனப் பார்வையும், a 60-gi GupGpITff Economique Refugee' (Guit (D56TITg5ITT அகதிகள்) ஆகவும், Tourist' (உல்லாசப் பிரயாணிகளாக) ஆகவும் இங்கு வந்தவர்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்கும் பொழுதும், பெற்றோரின் தொழிலைக் கேட்கும் பொழுதும் (Nettoyage - Bureau cleaning) நான்படும் வேதனையைக் கூறுவதா? விளையாடும் பொழுது "நீ ஊத்தையன்', ‘Gitan'(குறவன்) என்று சக மாணவர்களால் அழைக்கப்பட்டு ஒதுக்கப்படுகையில், புரியாது வெதும்பிய வேளையில்.
எனது பெற்றோரிடம் இது பற்றி விளக்கம் கேட்ட பொழுது அவர்களுக்கும் விளக்கம் தெரியாது “அதெல்லாம் வளர வளரச் சரியாகிவிடுமெனக்’ கூறினார்கள். ஒவ்வொரு வருடமும் புதிய வகுப்புகள் ஆரம்பிக்கும் பொழுது ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்குமிடையே 'அறிமுகம் செய்தல் நடைபெறும். சென்ற முறை எனது ஆசிரியை ஒருவர் எமது Origin (சுய அடையாளம்), Language (மொழி), Religion (மதம்) பற்றிக் கேட்ட பொழுது, எனது Religion 'சைவம்' என்று கூற, ஆசிரியை அதற்கு விளக்கம் கேட்க எனக்குத் தெரியாதென தெரிவித்த பொழுது ஆசிரியைக்கு வந்த கோபத்தில் என்னைப் பேசி நீயொரு Hindu (இந்து) எனச் சொல்ல நான் மறுக்க, எனது பெற்றோரிடம் சைவம் பற்றி, விளக்கம் கேட்டு வரும்படி சொல்லி விட்டார். மறுநாள் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி Cypg56urr62g| 5L606)Jurrés Conseil du classe dI (Conseil du classe
156

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
என்பது ஒவ்வொரு மாணவரினதும் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் பற்றி அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும், பெற்றோர் - மாணவர்களுக்கு மிடையே நடைபெறும் ஆலோசனை - கலந்துரை யாடல் ஆகும். இது மாணவனின் ஆரோக்கியக் கல்வி முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக அமையும்) அழைத்துச் சென்ற பொழுது, எனது ஆசிரியை அவர்களிடம் சைவம் பற்றி விளக்கம் கேட்ட பொழுது அவர்கள் அனைத்து பெற்றோர்கள் - மாணவர்களின் முன் முழித்தமை, எனக்கு இன்னமும் எனது பெற்றோரின் மொழியறியாமை குறித்து வேதனைப்படுவதைக் கூறுவதா?” எனக்கூறி ஒரு சில வினாக்களுக்கு விளக்கத்தையும் தர எத்தனித்தான்."
அந்நிய நாட்டிலே பிறந்து, அச் சூழலில் வாழ்ந்து வளர வேண்டிய அவனுக்கு, தன் நிலையை சரிவரப் புரிந்து பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பெற்றோர் மனப்பாங்கு சாதகமாக இருக்கவில்லை என்ற பிரச்சனை ஒன்று, சக மாணவர் தன்னைப் பார்த்த பார்வையும் அளித்த தராதரமும் இன்னொன்று. பெற்றோர் வந்து சேர்ந்த முறை, தன் நிலை ஆகியன அவனுக்கு - அடி மனதில் கொதிக்கின்றன.
இங்கு குறிப்பிட்ட ஞானி’ போன்ற இளைஞர்கள் பற்றிய கதைகளையும் எனது அனுபவங்கள் என்று முன்பு கூறியவை போன்ற பல சந்தர்ப்பங்களையும் புலம் பெயர்ந்த பலரும் அனுபவித்திருப்பர். அவை எல்லாம் பிள்ளைகள் தாம் வாழ்ந்து வளர்கின்ற சூழலுடன் இணங்கி வாழுதற்கு எடுக்கும் "சிறு
157
y

Page 81
-- Φ -ε ιδιθ «ο ---
அடிகள். அவர்கள் ‘அடி’ சறுக்கினால், சக நண்பரிடையே வெட்கி வாழவும், அவமானம் அடையவும் கூடும். அந்நிலையும் வளரும் பிள்ளைகளுக்குப் பாதகமான விவுைகளை ஏற்படுத்தும். ー "ஏளனத்திடையே வளரும் பிள்ளை
வெட்க உணர்வுடன் வாழப் பழகும். அவமானம் அடைந்து வளரும் பிள்ளை குற்ற உணர்வுடன் வாழப் பழகும்." இது சிறுவர் உளவியல் உண்மைகள். ஏளனஞ் செய்யும் சூழலிலே, குறிப்பாகப் பிறர் முன்னிலையில், ஒரு பிள்ளை ஏளனஞ் செய்யப்படுமானால், வெட்க உணர்வு பிள்ளையைப் பாதிக்கும். குற்ற உணர்வு பெற்றுப் பிறழ்வடைவதுடன் ஆளுமையும் திரிபடையும். அந்நிலை ஏற்படாது தடுத்தலும் பெற்றோருக்குள்ள ஒரு பெரும் பொறுப்பாகின்றது. அதேவேளை, தமக்கு ஏற்காத வகையில் பிள்ளைகள் நடப்பதை அவதானிக்கும் பெற்றோர், பிள்ளைகளை கண்டனஞ் செய்தும் தண்டித்தும் திருத்த முற்படுவதும் பிரச்சனை களை ஏற்படுத்தும். கண்டனமும் தண்டனையும் எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்தும்.
"கண்டனத் திடையே வாழும் பிள்ளை கண்டனஞ் செய்யவே பழகிக் கொள்ளும் பகைமைச் சூழலில் வாழும் பிள்ளை பகைத்து வாழவே பழகிக் கொள்ளும்" இதுவும் உளவியற் கோட்பாடுகளே. அதனாலே தான் வளரும் பிள்ளைகளின் பிரச்சனைகளை ஆய்ந்தறிந்து பொருத்தமான அணுகுமுறையைக் கையாளல் அவசிய
158

-9 யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
மாகிறது. ‘வெறும் கண்டனம் மெளன ஏக்கங்களின் பின் புரட்சி மனப்பாங்கையும் உயிர்ப்பிக்கலாம். பிற நாட்டுச் சூழலில் வாழும் நாட்களில், “ரிவி" பார்க்கும் போது முத்தமிடும் காட்சிகள் வந்தால் 'றிமோற்’ கட்டுப்பட்டால் ‘தணிக்கை செய்து வந்த தந்தையார் பெற்ற அனுபவம் என்ன? வேலை நிலையத்திலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டு மகள் வேற்றுார் செல்ல வைத்ததே. தன் விருப்பத்தைப் பெற்றோர் எச் சந்தர்ப்பத்திலும் ஏற்க மாட்டார்கள் என்ற உணர்வே அவ்வாறு செயற்பட அவளைத் தூண்டியது. இவை போல இன்னும் எத்தனை, எத்தனை!
உலகளாவிய ஈழத்தமிழர், வா என்று ஏற்ற நாட்டிலே தஞ்சம் புகுந்து விட்டனர். அங்கு பெறும் ஆதரவும் கிடைக்கும் வசதிகளும் ஒரு புறம் ஆறுதல் தர, புதிய சூழலில் இணங்கி ‘சுயமாக வாழ முயலும் பிள்ளைகள் பல வகையிலே திரிபடைவர். இரு கலாசாரச் சூழலில் அவர்கள் தலை தூக்க முயலும் போது ஆதரவான வழி காட்டல் அவசியமாகிறது. &nt Gós &Qpa025ufair sig55Sprub (freedom of the wild ass) வழங்காமல் பார்ப்பதுடன் சுதந்திரம் ஒரளவு வழங்கி வழிப்படுத்துதல் 'முரண்’களைக் குறைக்கும். இளம் பருவம் முதல் போராட்டம் பலவற்றிலே தலை தூக்க முயலும் பிள்ளைக்கு வீடும் போர்க்களமாகி விடக் கூடாது; நம்பிக்கையுடன் சேரும் நிலையமாதல் வேண்டும்.
பல்கலாசாரச் சூழலிலே நீந்திக்கரை சேர முயலுகின்ற பிள்ளைகள் சகவாச தோஷத்தால் பல்வேறு
159

Page 82
-- Φ -9 δις «e----
வகையிலே திரிபடைந்து தமக்கெனச் சில ‘சுய’ முறைகளை வகுத்துக் கொள்வர். சகவயதினருடன் கூடிப் பழகிக் கலந்துரையாடித் தமது தீர்மானங்களை எடுப்பர். பிள்ளைகள் பெற்றோரில் எத்துணை நம்பிக்கை வைத்துள்ளனர், எத்துணை ஆரோக்கியமான உறவு அவர்களிடையே மலர்ந்துள்ளது என்பது அவர்களின் மனப்பாங்கை நிர்ணயிக்கும். அந்த மனப்பாங்கின் விளைவே அவர்களின் நடத்தைக்குக் காரணமாகும். மெளன ஏக்கங்கள், அடிமன ஆசைகள், சூழல் அனுபவத்தால் விருத்தியாகும் எதர்பார்ப்புகள் போன்றவை, பிள்ளை - பெற்றோர் உறவு வீழ்ச்சியால் அல்லது முறிவால் பிள்ளை பின் நின்று தள்ளும். ஆக, பிள்ளை - பெற்றோர் உறவு ஆரோக்கியமானதாக இருத்தல் மிக அவசியம். ‘நாங்கள் தான் தீர்மானம் செய்பவர்கள்’ என்ற அடக்குமுறை மனப்பாங்கைக் கைவிட்டு பெற்றோர் அன்புறவை வளர்த்துப் போராட்டத்தில் வெற்றி பெற மிக அவசியம். தனித்து நின்று எதிர் நீச்சல் செய்ய வேண்டி ஏற்படின், சுழிகளுடன் செல்வதைத் தவிர்த்தல் சிரமமாகும். சுய அடையாளம் முழுமையாக இழக்கப்படுதலைத் தடைசெய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
160

12. காட்சிகளும் கருத்துகளும்
"எத்திசை சென்றவர் ஏனும் - என்றும் என்னவர் என்னவர் அன்றோ? புத்தம் புதியதோர் வாழ்வு - நாளை பூத்துக் குலுங்குதல் வேண்டும்"
த்ெதிசையிலே சென்று, எந்த நாட்டிலே வேரூன்ற முயலினும், ஈழத்தமிழர் ஈழத்தமிழரே. சென்றடைந்த நாட்டினிலே, சீர் சிறப்புப் பெற்று, சிந்தைத் தெளிவுபெற்று, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி விரைதல் வேண்டும், அதற்காக, பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை விளக்கும் முயற்சியில் சில காட்சிகளையும், மனக் கருத்துகளையும் இப்பொழுது பார்ப்போம்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
Lor-10 161

Page 83
-eν Φ{ιδι9 ε
என்பது எமது ஆன்றோர் மொழி. அதற்கமைய, சென்ற இடமெல்லாம் முயன்று சைவ ஆலயங்கள் அமைத்து வாழ்கின்றார்க்ள் நம்மவர்.
கனடா, றிச்மண்ட் ஹில் முருகன் ஆலயத்தில் இரதோற்சவம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. பிரான்சிலே பரிஸ் நகரில், பூரீ மாணிக்க விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழாவில் ஒரு காட்சியை, கீழே உள்ள படம் காட்டுகிறது.
பல நாடுகளில், சைவ ஆலயங்களும், தியான
மண்டபங்களும் அமைத்து சமயாசார வாழ்க்கையில்
தொடர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகள் புனித
பணியாக மேற்கொள்ளப்படும் காட்சிகள் இனியவை.
தேர்த் திருவிழாவும் தீர்த்த விழாவும் மட்டுமல்ல; தமது
162
 
 
 
 

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
நேர்த்திக் கடனை நிறைவு செய்தற்கு, "பறவைக் காவடி" எடுத்த பக்தரும் சரித்திரம் படைத்துள்ளார் றிச்மண்ட் ஹில் ஆலயத்திலே. நாம் சென்றடைந்த சூழலிலே இத்தகைய முயற்சிகளும் காட்சிகளும் புதியவை. ஆகவே ஆலயம் அமைக்கும் சூழலும் மக்கள் உளப் பாங்கும் ஆராயப்படல் வேண்டும். அந்தச் சூழலில் புதிய காட்சிகளைப் புகுத்தும் போது, நாம் 'பிரச்சனை’கள் எழாதவாறு முன்கூட்டியே 'பின்னணி’ அறிவை அவர்களுக்கு அளித்தல் அவசியம். இருவேறு கலாசாரங்கள் மோதும் நிலையை ஏற்படுத்தாமற் செயற்படல் விரும்பத் தக்கதாகும். ởrrruớìLum Linr பக்தர்கள், ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா பக்தர்கள் போன்ற பலவற்றில் வெளிநாட்டவர் பங்கு பற்றுதல் நாம் அறிந்ததே. குறிப்பாக, சர்வமத ஒற்றுமையை வலியுறுத்தும் சாயிபக்தரும், அவர் தம் அமைப்புகளும் ஆலயம் இல்லா நாடுகளில் சாயிபக்தரும், அவர் தம் அமைப்புகளும் ஆலயம் இல்லா நாடுகளிலும் காணலாம். ஆக, விழாக்கள் எடுப்பதுடன் எமது சமய சன்மார்க்க அடிப்படை அறிவு அந்நாட்டவர்க்கு விளங்குமாறு செய்தல் வேண்டும்.
“கிறிஸ்தவருக்கு பைபிள்; இஸ்லாமியருக்கு குர்ஆன். இந்துக்களுக்கு யாது?” என்று அம்மாவிடம் கேட்டவன், மகன்; அதற்கு விடை அளிப்பதற்கு அம்மா முயற்சித்தாள்; முடியவில்லை. மகனுக்குத் திருப்தி யானதும் விளங்கக்கூடியதுமான விடையை எமது சமுதாயம் இலகுவில் அளிக்க முடியாது. எனவே தான், சென்றடைந்த நாடுகளிலே சமய அடிப்படை அறிவு
163

Page 84
----eν 9 ιδιΦ ---
தரும் வெளியீடுகள் பரவுதல் அவசியம்.
சைவர்கள் மட்டுமல்ல; ஈழத்திலிருந்து கிறிஸ்தவத் தமிழரும் பெயர்ந்தார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், சிக்கல் இல்லை எனலாம். ஏனெனில் சென்றடைந்த நாட்டில் எல்லாம் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. "நாங்கள் அவுஸ்திரேலியரின் ஆலயங்களுக்குச் சென்று வழிபட முடிகிறது. அதனால் கிறிஸ்தவர் என்ற வகையில் ஒற்றுமை ஏற்பட இடமுண்டு. அதேவேளை, "சிட்னி தமிழ் கிறிஸ்தவ ஒன்றியம்’ என்ற அமைப்பின் ஆதரவில் தமிழ் கிறிஸ்தவர்கள் காலத்துக்குக் காலம் கூடித் தமிழிலும் பிரார்த்தனை நடத்துகிறோம்’ என்றார் அந்த ஒன்றியத்தின் தலைவி.
புலம் பெயர்ந்த முதியவர்கள் நிலை பற்றிய சில காட்சிகளையும் நாம் சற்று அவதானித்தல் வேண்டும். தனியாக ஒர் அறையில் இரவும் பகலும் வேதனைப் படும் 88 வயதுப் பாட்டி, "நான் ஏன் இருக்கிறன் ?” என்று கண்ணிர் விடுவதையும், தொலை பேசியில் அழைக்கும் போது "நான் இப்ப வீட்டோடை தான்; எங்கையும எவரிடமும் போறதில்லை." என்று பதில் தரும் முதியோர் பற்றியும் அதிகம் எழுதத் தேவையில்லை.
முதியோரில் சிலர் தனியாக வாழுகின்றனர். சிலர் தமது பிள்ளைகளின் குடும்பங்களுடன் வாழ்கின்றனர். ஆனால் - முதியோர் விவகாரம் என்ற தலைப்பில், மெல்பன் 'உதயம்’ பத்திரிகையில் வெளியான "கடிதம்’ ஒன்றைப் பாருங்கள்.
164

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை *--
"சமீபத்தில் சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும். இன்பத் தமிழ் ஒலியில் ஒரு சிறுகதையின் பாத்திரம் தொடர்பாக விவாதித்தார்கள். மெல்பனில் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினர் சினிமா பற்றி விவாதித்தனர். பாரதி பள்ளியின் உயர் வகுப்பு மாணவர்கள் திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகலாமா கூடாதா? என்று வாதிட்டார்கள்.
இந்த விவாத அரங்குகளை உற்சாகமாக நடத்துபவர் களுக்கு வாழ்த்துக்கள்.
இது ஒருபுறமிருக்க - இன்னும் விவாதிப்பதற்கு பல பிரச்சனைகள் நம்மவர் மத்தியில் புரையோடிப் போயிருக்கின்றன. முன்பும் தங்கள் உதயம் இதழில் இங்கு வாழும் எமது முதிய பெற்றோர்களின் பிரச்சனை யை இலேசாக தொட்டுக் காட்டியிருந்தீர்கள். மீண்டும் அதே விவகாரத்துக்கு வருகிறேன். அவுஸ்திரேலியா - கனடா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழும் இளம் தம்பதியருக்கு பிள்ளை பிறக்கப் போகிறது என்றால் - தாயகத்திலிருந்து தாயோ - தந்தையோ அழைக்கப்படுவார்கள். அதிகமாக - தாய்மார்கள் இப்படி வருகிறார்கள். பிள்ளை பராமரிப்பு முடிந்து பிள்ளையும் வளர்ந்து விட்ட பின்பு மிகவும் நாகரிகமாக அருகே ஒரு fat எடுத்து அவர்கள் தனிக்குடித்தனம் நடத்துவார்கள். அவர்கள் பின்பு முதியவர்களாகி நோயுற்றுவிட்டால் பழைய கார்களை wreckers yard இற்கு தள்ளுமாப் போன்று முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவார்கள். இதில் வியப்பென்னவென்றால் மனைவிமாரின் தாய் தந்தையர் Car போன்று அதிகூடிய
165

Page 85
காலம் பிள்ளை களுடன் சீவிக்கிறார்கள். ஆனால் கணவர்மாரின் பெற்றோர் வெகு சீக்கிரமே சாதாரணகார்கள் போன்று முதியோர் இல்லத்துக்கு அனுப்பப் படுகிறார்கள்."
முதியோரின் “தேவை முடிந்ததும், அலட்சியப் படுத்தப்படுதல், பலரும் அறிந்த ஒன்றாகி வருகிறது. வளரும் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்யவே நேரமில்லாப் பெற்றோர், தமது பெற்றோரை எப்படிப் பார்ப்பர்? இது நாம் சென்றடைந்த நாட்டுக் கோலம். முதியோர் எங்கு வாழினும், தனிமை, போக்குவரத்துப் பிரச்சனை, உடலியல் தேவைகள் இன்மை, உளவியல் தேவைகள் இன்மை, பிள்ளைகளின் அந்தரங்க வாழ்க்கை, பேரரின் அலட்சியம் போன்றவற்றால் வேதனைப்படுகின்றனர். அதனால் 'ஏன் இருக்கிறேன்’ என்று ஏங்குவதும் இயல்பே !
சூழலின் காலநிலையும் மாறித் தொடர்ந்து வரும் கால நிலை மாறுதல்களும் முதியோருக்கும் சரி இளையோருக்கும் சரி ஒரளவு பிரச்சனையே. ஆயினும், முதியோருக்கு அது 'இணங்குதற்கு இயலாத பிரச்சனை எனலாம். முதியோர் பிரச்சனைகள் பல என ஏற்பதும் இயன்றளவு நிவர்த்தி செய்ய முயல்வதும் சமுதாயத்தின்
st 600.
முதியோர் பழைய நினைவுகளில், அடைபட்ட கூண்டுகளில் மனஞ் சோர்ந்து தவிப்பர். பெறாத மகவல்ல; பெற்ற மகவையே என்றாலும், “கிறானி’ ஹவுசே கிழவயசில் ஏற்றது என்பர் ueuri.
166

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
எங்கிருந்தாலும், அவர்களுக்கு சமுதாய உதவி அவசியம். மனிதநேய உதவியென அவற்றைக் கருதி, நாம் வழி செய்யத் தவறக்கூடாது. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? ஆகையால், உயிருடன் இருக்கும் போது அவர்கள் ‘மனிதராக’ மதிக்கப்படல் அவசியமாகிறது.
இதற்கு எமது அறிவும் ஆற்றலும் அல்ல, மனப்பாங்கு மாறுதல் வேண்டும். சாதகமான மனப்பாங்கு வளர்க்கப்படல் வேண்டும். முதியோர் மட்டுமல்ல; வாலிபரும், இளைஞருமே மனச்சுமை களால் பாதிக்கப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது மனநோய்களுக்கு ஆளாகி வருதல் கண்கூடு. புலம் பெயர்ந்தோர் கவனத்துக்கு, கனடா சமூக விஞ்ஞானி பத்மநாதன் தரும் காட்சிகளையும் கருத்துகளையும் சிந்தித்துப் பார்த்துச் செயற்படுங்கள். அவர் கூறுகின்றார்; (தமிழர் தகவல்)
*-மறைமுகமாக அதிகரித்து வரும் கவலைகள் படிப்படியாக நம் உள்ளத்தினை அரித்து வருகின்றன. வெளியிட முடியாத மெளன உணர்வுகள் அழகினைச் சிதைத்து வருகின்றன. அங்கலாய்ப்பு - குழப்ப உணர்வுகள்; மனநோயாளிகளை உருவாக்கி வருகின்றன. அறிவு சார்ந்த, மன எழுச்சி சார்ந்த, நடத்தை சார்ந்த தன்மைகளைக் கொண்டு எழுகின்ற மனப்பான்மை துரிதமாக மாற்றமடைந்து வருவதினால் e அழுத்தமும் பிழையான பொருத்தப்பாடும் தோன்றக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம். அன்றாடம் நடைபெறும் வாழ்க்கைச் சம்பவங்கள், வேலைக்குரிய சூழ்நிலை,
167

Page 86
---eν 9 ιδιθ «ο ---
திருமண தாமதங்கள், காலநிலை போன்ற காரணிகள் நிரந்தரமான மனநோயாளிகளைத் தோற்றுவிக்கக்கூடும். புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் தாய்நாட்டு உறவினர்கள் பற்றிய கவலைகளுடன் இங்குள்ள எதிர்காலம் பற்றிய ஏக்கம் இடம்பெறும் சூழ்நிலையில் பல தேவைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான சூழ்நிலைகளும் உருவாகின்றன என்பதை மறுப்பதற் கில்லை. இச் சமயத்தில் எம்மத்தியில் உதவி வழங்கும் மன்றங்கள், அமைப்புகள், சங்கங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூலகங்கள் தோன்றும் போது மனம் நிம்மதி பெறுகின்றது. அதேசமயம், எம்மவர் மத்தியில் இடையிடையே எழுந்து வருகின்ற போட்டியுணர்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.
“எம்மவர்க்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கவேண்டிய கடமை தொடர்புச் சாதனங்களுக் கேயுண்டு. மாறிவருகின்ற சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், பாராட்டும் உள்ளமும் கொண்டவர்களாக எம்மவர்கள் மாறவேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல, "அதிகம் பேசுவதனை விடுத்து இதயங்களைத் திறந்து கொள்ளும் மனம் படைத்தவர்களாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாறவேண்டியதே இன்றுள்ள தேவையாகும்.”
168

13 தமிழர் தனித்தும்
"இடம்பெயரும் நாளில் இதயசுமை ஏறி இனநினைவு தடுமாறி னும் நடையுடைகள் மாறி நமதுணவு மாறி நமதுபுலம் தினம்மாறி னும் விடோமிதென வாழும் விரி உலகிற் பேணும் விரதம் எழுந் தெமர்நெஞ்சிலே தொடருவது யாது தமிழரடை யாளம் சுழலுலகில் அதுவாகுமே"
கிட்டவிழ்த்த எலுமிச்சை மூடைபோல, ஈழத்தமிழினம் உலகிற் பரவிச் சிதறிவிட்டது. நூறு ஆயிரம் அல்ல; பல நூறு ஆயிரம் தமிழர் அந்த நிலைக்கு உள்ளாகி விட்டனர். அரசியற் சூழ்நிலை பெரும் காரணமாகவும் பொருளாதாரக் காரணம் துணையாகவும் உநதி, அந்த நிலை தவிர்க்க முடியாததாயிற்று; இன்னும் தொடர்கிறது. ஒரு
169

Page 87
----e -9 ιδιΦ «ο-
வகையில், இந்தப் பெயர்வு ‘அபிவிருத்தி’ போன்றது; அதன் தன்மை உடையது. என்ன பொருளில் இவ்வாறு கூறுகின்றேன் என்பது பலருக்குப் புதிராக இருக்கலாம். அபிவிருத்தி என்பது சாய்தள நிலனில் தடையின்றி உருளும் ‘புல்டோசர்’ போன்றது. எவரும் நிறுத்த முடியாத பாங்கில் தொடர்வது.
இன்று, ஈழத்தமிழரைப் பொறுத்தளவில், பெயர்வு ஒரு நாகரிகமாகி விட்டது என்றால் தவறாகாது. Foreign மாப்பிள்ளை வேண்டும் என்பவரும், "இங்கை இருந்து என்ன செய்வது' என்பவரும் ஏராளம். சென்றவர்கள் படும்பாடும், "foreign மாப்பிள்ளை தேடியவர்கள் எத்துணை விரைவில் விவாகரத்துச் செய்தனர் என்பதும் அவர்களின் பெயர்ச்சி விடாயைத் தணிக்க வில்லை. அவை பற்றி ஆராய்தல் இவ்விடத்திற் பொருந்தாது. ஆயின், வெளிநாடு செல்லும் தாகம் தணியவில்லை; ஈழத்தமிழர் இதய தாகம் இன்னும் பலரை வெளியே தள்ளுகின்றது. அதனால், பல ஆயிரம் தமிழ்ச் சிறார்கள் அந்நிய நாடுகளிலே, பல்கலாசாரக் சூழலில் வாழ்ந்து வளருகின்ற நிலை இன்றுள்ளது. இத்தகைய வளருஞ் சிறாரின் பெற்றோர், புலம் பெயர்ந்த முதலாவது தலைமுறையினர். பாரம்பரிய தாயகத்திலே வாழ்ந்த பின்பு பெயர்ந்த அவர்கள், நன்கு நிலை நிறுத்தப்பட்ட தமிழர் தனித்துவ அடையாளம் உள்ளனர். தமிழ்மொழி, கலைகள், கலாசாரம், விழுமியம், நடத்தை, வாழ்க்கை முறை எனப்பல கூறுகள் அந்தத் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
தாம் தமது சொந்த ஈழத்தில் பாரம்பரியமாகப்
170

-o யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பெற்று அந்தத் தனித்துவ அடையாளத்தைப் பேணுவதற்கு, பெயர்ந்த முதலாவது தலைமுறையினர்
பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். &5607 LIT, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே இப்படி எந்த நாட்டை
எடுத்தாலும் அம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுதலை அவதானிக்கலாம். அந்தத் தனித்துவ வாழ்க்கை முறை தலைமுறை தலைமுறையாக் கையளிக்கப்பட்ட முது சொத்து, அவற்றைப் பாதுகாத்து இளைய சமுதாயத் திற்குக் கையளிக்க முயல்வதோடு, பெயர்ந்த முதலாவது தலைமுறையினரும் ஒருவகை ஆத்ம திருப்தி அடைகின்றர். ஊரிலே பெற்ற அனுபவத்தால், வளர்ந்தவர்கள் இந்த மன உந்து பெறும் அதே வேளையில், பிற நாட்டில் வளரும் சிறார், அன்னிய நாட்டிலே வளரும் சிறார், பெற்றோரின் நடத்தையின் அர்த்தத்தைப் புரியாது மயங்குகின்றனர். ஏன்?
ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு கலாசாரம் உண்டு. ஆனால், பிறக்கின்ற பிள்ளை அக்கலாசார அறிவுடன் பிறப்பதில்லை என்பது உளவியல்/கல்வியியல் உண்மைகள். தமது சமுதாய சூழலிலே வாழ்ந்து வளரும் போது பெற்றுக் கொள்ளும், உள் வாங்கித் தமதாக்கிக் கொள்ளும் பாரம்பரியம் அவை. தமது மொழியின் துணை கொண்டும் பண்பாடு, கலாசாரம், கலைகள், விழுமியங்கள், நடத்தை என்பன போன்றனவற்றின் துணை கொண்டும் தமிழர் தனித்துவம் பாரம்பரிய முது சொத்தாகக் கையளிக்கப்பட்டு வந்தது. தனித்துவம் என்பது, ஒரு தனி மனிதன் தன் இனத்தவருடைய
171

Page 88
-- Φ -9ιδι9. « -
தெனத் தொடர்ந்து பேணும் ஒருவகையான ஒருமைப் பாடு எனலாம். அது சுய எண்ணக் கருவாக மனதில் உயிர்க்கிறது. தமதுசூழல் அனுபவத்தால் வளர்கிறது. முதலில் வீட்டிலும், பின்பு படிப்படியான நண்பர், சம வயதினர், சமுதாய உறுப்பினர் ஆகியோர் மூலம் விரிவடைகிறது. இந்த விரிவடைதலிலே, சிறு வயது முதல் பெறும் சூழல் அனுபவத்தால் வளரும் பிள்ளை தனது இன அடையாளத்தை உள்வாங்குகிறது. சொந்த நாட்டில் வாழும் சிறுவர் இதை உள்வாங்கிப் பேணும் சந்தர்ப்பம் இயற்கையாக ஏற்படுகிறது. ஆயின் -
பல்கலாசார சூழலில் வளரும் பிள்ளை, அன்னிய சூழலில் வளர்கின்றது. தனது சூழலில் உள்ள தன்போன்ற மற்றும் சிறார் பேசும் முறை, அவர்களின் மனப்பாங்கு, விழுமியம். இவை போன்ற யாவும் பிள்ளையின் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன. அதுவும் இயற்கையே. தன் நாட்டிலே, தமிழர் சமுதாயத்தில் வளரும் பிள்ளை எப்படித் தமிழர் தனித்துவத்தை அடையாளம் கண்டு தனதாக்கிக் கொள்கிறதோ, அதே போலப் பல்கலாசாரச் சூழலிலே வளரும் பிள்ளை தனது ‘உலகின்’ அடையாளத்தைத் தனதாக்க முனைகிறது. வயது முதிர்ச்சியுடன் இந்தக் கோலம் மாறும் நிகழ்ச்சி பல நடத்தைகள் மூலம் வெளிப்பாடாகிறது. அங்கேதான் முரண்பாடுகள் தோன்றுகின்றது.
தமிழ்ச் சூழலிலே சிலகாலம் வாழ்ந்து, பின்பு பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளின் சிக்கல் ஒருவகை. ஆனால், புலம் பெயர்ந்த பின் அன்னிய சூழலிலே 172

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
பிறந்து வளரும் சிறாரின் சிக்கல் இன்னொரு வகை. பொதுவாக, பெற்றோர் கருதும் தனித்துவ அடையாளங் களைச் சூழலிலே காண முடியாத சிக்கல் இரு வகையினருக்கும் பொது எனினும் அன்னிய நாட்டிலே பிறந்து வளர்பவர்களுக்கு அது வெறும் கற்பனையே. அன்னிய சூழலில் வளரும் பிள்ளைக்கு எமது தனித்துவ அடையாளம் என்று எவற்றைக் கூறினும் தெளிவாக விளங்கும் பக்குவம் ஏற்படுவது சிரமமாகும்.
தமிழ் இனத்தவன் என்ற தனித்துவ அடையாளம் எதிர்காலத் தமிழ்த் தலைமுறையினருக்கு அவசியமா என்பது இன்றைய கேள்வி அல்ல. பல்கலாசாரச் சூழலிலே தமிழர் வாழத் தொடங்கிய காலம் முதலாக, இக் கேள்வி எழுந்தது. ஏதோ ஒரு தனித்துவ அடையாளத்தால், புலம் பெயர்ந்த தமிழர் இணைக்கப் பட்டு, ‘நாம்’ என்று உரிமை பாராட்டுதற்கு ஒரு சமூகம் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா.என எந்த நாட்டுக் கடவுச் சீட்டு (passport) இருப்பினும், நாம் "அவர்கள்’ ஆகிவிட முடியாது. நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்ற சந்தர்ப்பங்கள் பல ஏற்படலாம். இன, மத அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்ற சட்டம் இருப்பினும், மறைமுகமாக அது உள் நின்று தொழிற்படும் நிலையைப் பலர் ஏலவே அனுபவித்துள் ளனர். ‘தமிழர் தகவல் தந்த செய்திகள் அதை ஊர்ஜிதம் செய்கின்றன.
"அண்மையில் கல்வித்துறை வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் கவலையளிப்பவையாக
173

Page 89
- - eν Φιδιθ «ς-
உள்ளன. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இனத்துவேஷ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அறிய முடிகின்றது. ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகை சமீபத்திய நாட்களில் இது விடயமான பல சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
நிறம், இனம், மதம் ஆகியவைகளின் அடிப் படையில் எவர் ஒருவருக்காவது கிடைக்க வேண்டிய நீதி, நியாயம், தகுதி புறக்கணிக்கப்படுவதை இனத்து வேஷம் என்று கனடியச் சட்டம் கூறுகின்றது. வளர்ச்சி பெற்ற அல்லது அபிவிருத்தியடைந்த சகல நாடு களிலுமே இனத்துவேஷத்தை ஒழிப்பதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன. கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய புகார்களை விசாரிக்க நிரந்தர ஆணைக் குழுக்கள் (Human Right Commissions) sey Goo LDéisessu u "GGTGTGOT. ஆனாலும், புற்றுநோயைப் போன்று இனத்துவேஷ மானது வளர்ந்து கொண்டேயிருக்கின்றது."
சிறு குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், வேலை புரிபவர்க்ள், வேலையில்லாதவர்கள், முதியோர், ஓய்வூதியக்காரர், தொழிலாளர், பெண்கள் என்று பல்துறையினருமே இனத்துவேஷத்தினால் தினசரி பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணுகின்றோம். ஆனால் இது சில வேளைகளில் எங்களது கண்களுக்குத் தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றது.”
கனடாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இதே கோலம் தான். ஆக, பெயர்ந்தவர்களைத் ‘தமிழர்”
174

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
என்று இணைப்பதற்கு ஏதோ ஒரு வகைத் தனித்துவ அடையாளம் பேணப்படல் வேண்டும். அவ்வாறாயின், அந்த அடையாளம் அல்லது அடையாளங்கள் எவை?
ஒவ்வொரு இனமும் ஆரம்ப காலம் முதலாக, பெயர்கள், மொழி, உணவு, மதம், கலை, கலாசாரம், வழமை, சமூக நடத்தை முறை, குடும்ப அமைப்பு முறை, உடை, விழுமியம், விழாக்கள், சடங்குகள்.என எத்தனையோ கூறுகளைத் தனித்துவ அடையாளங் களாகப் பேணிக் காத்து வந்துள்ளது. இவையெல்லாம் பாரம்பரிய நிலனுடனும் நில வளத்துடனும் இணைந்தும் தொடர்புற்றும் இருந்தன. தமிழர் புதிய சூழலில் வாழ நேரும் போது இவற்றுள் எதைப் பேணல் சாத்தியம்?
எமது சொந்த நாட்டிலேயே இவற்றுட் சில மாறிவந்துள்ளன. கிறிஸ்தவ வருகையுடன் 8Rєu குழுவினர் மேற்கூறியவற்றுட் சிலவற்றைக் கைவிட்டனர். ஆயினும், பல கூறுகள் பொதுவாகி இணைப்பை நிலைநாட்டின. இன்று புலம் பெயர்ந்த நிலையில், தனித் துவத்தைப் பேண என்ன செய்வது? எந்த அடையாளங் களைப் பேணுவது? எப்படிப் பேணுவது? "சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்’ என்னும் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆசி. கந்தராசா, பின்வருமாறு கூறுகிறார்:
"ஈழத் தமிழினம் கடந்த நான்கு தசாப்தமாக முகமிழந்த இனமாக இருக்கிறது. வாழ்கிறது அல்ல, இருக்கிறது. மனித அடிப்படை உரிமைகளே மறுக்கப்
175

Page 90
---- eν φιδιΦ «Φ--
பட்ட ஒரு மானிடக் கும்பலாக பூமிப் பந்தின் சகல திசைகளிலும், புதிய நாடுகளிலே தஞ்சம் புகுந்து வாழும் நியதியை தற்போது அவர்கள் ஏற்றுள்ளனர். ஏற்ற போதிலும், தமது தனித்துவ அடையாளங்களை இழக்காது, தமிழ் முகங்களை தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கின்ற ஒர்மத்தை தம் வசப்படுத்தினர். இதனால் தமது மொழியையும், கலையையும், பாரம்பரிய விழுமியங்களையும் புதிய சூழலிலே தக்க வைத்துக் கொள்ளம் யக்ஞம் அவர்களுக்கு உரித்தாயிற்று. இந்த யக்ஞத்தினை உரிய முறையிலே முடிக்க “சங்கம்” அமைத்து உழைத்தல் வசதியான உபாயமாகும்."
எமது தனித்துவ அடையாளம் மட்டுமல்ல; எந்த ஒரு இனத்தின் அடையாளமும் அவர் தம் மொழியுடன் ஒன்றி இணைந்துள்ளது. எமது அடையாளமும் தமிழ் மொழியுடன் இணைந்து நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். மொழியின் அடிப்படையிலே தான் கலைகள் எல்லாம் உயிர்க்கின்றன. ஆகவே, தமிழ் மொழி அறிவு ஓரளவு உறுதியான வகையிலே எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்கப்படல் அவசியமாகிறது. ஆனால், சிலர் அதில் அக்கறை காட்டத் தவறுகின்றனர் போலும்.
புலம் பெயர்ந்தவர்கள், பல் கலாசாரச் சூழலிலே, தமிழரின் பாரம்பரியக் கலைகளைப் Gugoof வளர்க்கவும் இளைய பரம்பரையிைனருக்குக் கையளிக்கவும், தமிழ் மொழி அறிவு தேவையா? இவ்வினாவுக்கு விடை தேட புலம் பெயர்ந்த மக்கள்
176

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
வாழும் சில நாடுகளில் அண்மைக் காலத்திலே பெற்ற அநுபவங்களையும் அவதானித்த மனப்பாங்குகளையும் முன்வைத்து, ஆராய்தல் மிகவும் பொருத்தமாகும்.
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் மிசிசாகா நகரிலே தமிழ்ப் பள்ளி ஒன்றின் விழாவில், பள்ளி அதிபர் தம் உரையில் பின்வருமாறு கூறினார்:
"தேவாரம் பாடவும் இசை பயிலவும் தமிழ் அறிவு நமது பிள்ளைகளுக்குத் தேவை இல்லை என்று சிலர் இங்கு கூறுகிறார்கள். ஆனால், அது தவறான கருத்து என்பது என் நிலை. ஆகவே, இசையும் சைவமும் கற்பிக்கும் எமது நிலையத்தில் தமிழையும் கற்பிக்கின்றோம்."
இந்தக் கூற்றிலிருந்து, நாம் உய்த்தறியும் உண்மை நிலை யாது? இரண்டு நேர்மாறான கருத்துகளும் மனப்பாங்கும் அச் சமுதாயத்தில் நிலவுவதை நாம் காண்கின்றோம். இனி, பரதம் பயின்று அரங்கேறிய நர்த்தகி - இளம் மாணவி - ஒருவர் லண்டனில் கூறிய ஒரு கருத்தை அவதானிப்போம்.
"எனக்கு நல்ல தமிழ் அறிவு இல்லை. சாகித்தியங்களின் பொருளை எனது குரு ஆங்கிலத்தில் கூறுவார். அரங்கேற்றத்துக்குப் பயன்படுத்திய சாகித்தி யங்களுள் சில தமிழ் மொழிச் சாகித்தியங்கள். ஒன்று தெலுங்கு மொழிச் சாகித்தியம், இன்னொன்று சமஸ்கிருத மொழிச் சாகித்தியம். இந்த மொழிகளின் அறிவும் எனக்கில்லை. பாடல்களின் பொருளை ஆங்கிலத்தில் தெளிவாகவும் விபரமாகவும் விளக்கிய
uT-11 177

Page 91
-- Φ -ΦιδιΦ --
பொழுது, பாவனை செய்து ஏற்ற அபிநயஞ் செய்ய முடிந்தது."
இங்கு நாம் உய்த்தறியக் கூடியதென்ன? தமிழ்மொழி அறிவு நர்த்தகிக்கு இல்லாவிடினும், தமிழ்மொழி அறிவுள்ள ஒருவரின் உதவி தேவை என்பது மறுப்பதற்கில்லை.
இனி, லண்டனில் கண்டறிந்த இன்னொரு நிலை இது:
ஒன்பது வயதுச் சிறுமி வயலின் வாசிக்கிறாள். காகிதத்தாள் ஒன்றிலே S R GM - என்பன போன்ற குறியீடுகளைப் பார்த்து வாசிக்கின்றாள். விளக்கம் கேட்ட பொழுது, அவற்றின் பொருள் ச ரி க ம - என்றவாறு கூறுகிறாள்.
சங்கீத ஆசிரியர் தமிழ் அறிவுள்ளவர். பிள்ளையுடன் தொடர்பு கொள்ளுதற்கு, பிள்ளையின் சூழல் மொழியறிவைப் பயன்படுத்தும் யுக்தியைக் கையாளுகின்றார்.
இதுவரை கூறியவற்றின் பின்னணி அறிவுடன், தமிழ் அரங்கக் கலைகளுக்கும் தமிழ்மொழி அறிவுக்கும் இடையிலான தொடர்பு என்பதைச் சற்று நோக்குவோம்.
முன்பு கூறியது போல, ஒரு சமுதாயத்தின் மொழி, கலைகள், விழுமியங்கள், உணவு, உடை என்பன போன்ற பல கூறுகளின் தொகுப்பு, அச் சமுதாயத்தின் கலாசாரம் என்கிறோம். ஒரு சமுதாயத்தின் கலாசாரம், அச் சமுதாயத்தின் பாரம்பரிய மண்ணிலே,
178

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
சமுதாய மொழி மூலம், அச் சமுதாய மக்களின் திறன்களால் மலர்ச்சி அடைகிறது. ஆக, தமிழர் தம் தாய்மொழி, கலைகள் உட்பட, கலாசாரக் கூறுகள் பல இணைந்ததே தமிழர் கலாசாரம். ஈழத் தமிழர், தமது சொந்த நலனிலே, தனித்துவமுள்ள கலாசாரமொன்றை உருவாக்கினர். அது, பாரம்பரிய மண்ணிலே வளமுடன் வளர்ந்து செழிப்புற்ற பெரு நிதியம். அச்சிறந்த, தனித்துவமான கலாசாரம் படைத்த ஈழத் தமிழர், புலம் பெயர்ந்து வாழும் போது என்ன நிகழ்கிறது?
பிறந்த நாட்டையும் சூழலையும் விட்டுப் புலம் பெயரும் போது, வேர் பெயர்க்கப்படுகின்றது. பிறநிலம் ஒன்றிலே "நாற்று" நடப்படுகிறது. அந்த நிலனிலே " வேரூன்றி, வளர்ந்து, வாழ வேண்டிய தேவை பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுகின்றது. புதிய குழவிலே, பல்கலாசார மத்தியிலே இணங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
“கலாசாரமும் சூழலும் நெருங்கிய தொடர்புடையன; இடைத் தாக்கம் புரிவன. இவற்றுள் சூழலே ஆதிக்கம் உடையது என்கிறார் கிளார்க் விஸ்லர்’ என்ற சமூக விஞ்ஞானி. புலம் பெயர்ந்தவர்கள் புதிய சூழலிலே வாழும்போது, பிறிதொரு கலாசாரத்துள்ளே சென்று, அச் சூழலிலே வாழுகின்றார்கள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் அவர் தம் முன்னோர் அளித்த கலாசார நிதியத்தை உடையவர்கள். ஆயினும் இங்கே வந்த பின்பு, கலைகளை எல்லாம் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டி ஏற்பட்டது என்கிறார் தோமஸ் ஜெபர்சன்
179

Page 92
என்ற சமூக விஞ்ஞானி. இவை யாவும், புலம் பெயர்ந்து, பிற நாடுகளில் புது வாழ்வு தொடங்கும் முதலாவது ஈழத் தமிழ்ச் சந்ததியினருக்கும் பொருந்துவனவாம்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறநாடுகளில் வாழச் சென்றதும், தமது கலாசாரத்தைப் புதிய சூழலில் உருவாக்க வேண்டும். தமது தனித்துவத்தின் அடையாளமான தமிழ்க் கலாசாரத்தை வளர்த்துப் பாதுகாத்தல் வேண்டும். அங்கேதான் பிரச்சனை எழுகின்றது. புதிய சூழல் மொழி தமிழ்மொழி அல்ல. இரண்டாம் தலைமுறையினருக்கு முதல் மொழி ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன் போன்ற அன்னிய மொழி. தமிழ்மொழி அவர்களுக்கு இரண்டாவது மொழி. எனவே மொழி அடிப்படையில் அமைந்த கலைகளை அவர்கள் வளர்ப்பதற்கு இரண்டாவது மொழியான தமிழில் கணிசமான திறன் பெறல் இன்றியமையாதது. தமிழ் அரங்கக் கலைகளுக்கு தமிழ் மொழியே அடித்தளமாக அமைகிறது என்பது தெளிவு. இங்கு, தமிழ் அரங்கக் கலைகளுள் நாடகக் கலை, நாட்டுக் கூத்து ஆகியவற்றைப் பொறுத்தவரை, தமிழறிவு அவசியம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. நடனத்துறை, இசைத் துறை ஆகியவற்றில் தான் மனப்பாங்கு வேறுபடுகிறது. தமிழறிவு அதிகமின்றி அரங்கேறலாம் என்பது ஒரளவு உண்மை. தனியொரு நர்த்தகி அரங்கேறலாம் எனினும், அடுத்த தலைமுறையினருக்கு “கையளிக்க” முடியுமா எனின், இல்லை என்றே கூற வேண்டும்.
நடனக்கலை உயிர்த் துடிப்புள்ளது. நவரஸங்
180

-o யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
களையும் அபிநயம், பாவனை என்பன மூலம் வெளிக் காட்டுவது. எழுத்திலே உள்ளதை வாசகன் அனுபவங்கள் வழி நின்று பாவனை செய்து ஆராய்ந்துணர்ந்து கொள்கிறான். நர்த்தகி நிலையும் அது போன்றது தான். சாகித்தியத்தின் பொருளை உள்ளுணர்வுடன் வெளிப்படுத்தும் போதுதான், நடனம் முழுமை பெறும். இத்திறனை விருத்தி செய்வதற்கு, மொழி பெயர்த்தறிதலிலும் பார்க்க, தமிழ் மொழியை விளங்கி அறிதல் விரும்பத்தக்கது.
நடனக் கலைக்குப் புராதன வடிவம் ஒன்றுண்டு. ஆனால் "மாறிவரும் சமுதாயத்துடன் ஒன்றியதாகத் தோன்றும் கலை வடிவமாக நடனக் கலை உருவாக்கப் படின், மேலும் அக் கலையின் வளர்ச்சிக்கு உயிர் ஊட்டுவதாக அமையும்" என்கிறார், அனுபவம் மிக்க ஒரு நடனாசிரியை. உண்மை. சமகாலத் தேவைகளை நிறைவேற்றி, நாட்டிய நாடகம் ep6b ஏற்ற கருத்துகளைப் பரிமாறுதற்கும் உணர்ச்சி ஊட்டுவதற்கு மான ஊடகமாக - மேடை நாடகம், நாட்டுக் கூத்து போன்ற ஜனரஞ்சக ஊடகமான - நடனக் கலை அமைவதற்க, இத்தகைய வளர்ச்சி அவசியம். சில ஆண்டுகளுக்கு முன், சிட்னியில் மேடையேற்றப்பட்ட "தாகம்” என்னும் நாட்டிய நாடகம் அதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும் என்பதை, அதைப் பார்த்தவர்கள் உணர்வார்கள். நாட்டிய நாடகம் ஒன்றை அமைப்பதற்கும் எத்துணை தமிழறிவு தேவை என்பது வெள்ளிடைமல்ை. ஏகலைவன் என்ற நாட்டுக் கூத்துக்கும் எழுத்துப் பிரதிக்கும் சொந்தக்காரஇசf அண்ணாவியார் இளைய
181

Page 93
- εν ειδιΦ Φ --
*பத்மநாதன் கூறியதை இங்கே குறிப்பிடுதல் மிகப் பொருத்தமாகும். "ஏகலைவன் கூத்துக்காக முழுப் பாரதத்தையும் படித்தேன். வில்லி புத்தூர் பாரதமும் படித்தேன்” என்கிறார் - அண்ணாவியார். நாடகம், மேடைக் கூத்து மட்டுமல்ல; இசை, நடன, நாட்டிய நாடகம் ஆகியனவற்றை வளர்க்கவும் வாழ வைக்கவும், பழையனவற்றைப் படித்தறிந்து தெளிதல் வேண்டும். புதியன படைத்தற்கு அத்தகைய ஆய்வுகள் தேவை. அந் நிலையில், தமிழறிவு எத்துணை அவசியமென விரிந்துரைத்தல் சொல்லாமலே தெளிவுபடும்.
அக, தமிழர் தனித்துவ அடையாளங்களில் அடிப்படையானது தமிழ்மொழி அறிவு. நவீனத்துவம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தினும், இன அடையாளங்கள் பல திரிபு படினும், தனித்துவத்தை நிலைபெறச் செய்வது தமிழ்மொழி அறிவுதான். புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினருக்கு தமிழ் மொழியறிவைக் கையளித்து, இளைய தலைமுறையினரை வழிப் படுத்துதல் ஒர் புனிதக் கடமை. அதுவேதமிழரென்ற தனித்துவ அடையாளத்தைப் பேணுவதற்குப் பாலமாக அமைந்து, மொழி வாழவும் தனித்துவம் நிலை பெறவும் வழி வகுக்கும்.
182

14. அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தல்
"ஓடிடுந் தமிழர் நில் நீ
ஒருகணம் மனசைத் தட்டு வீடுநின் னுருன் சொந்தம்
விளைநிலன் நாடு விட்டாய் தேடிய தெல்லாம் விட்டுத்
திசைபல செல்லும் வேளை பாடிய தமிழை மட்டும்
பாதையில் விட்டி டாதே"
ல்ெலாம் இழந்து ஏதிலிகளாகி அன்னிய நாடுகளிலே தஞ்சம் புகுந்த ஈழத் தமிழ் மக்கள், பல பிரச்சனைகளைச் சமாளித்துப் புது வாழ்வு வாழப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். அந்த நெரிசலில், அழைத்துச் சென்ற சிறாரையும் தஞ்சமடைந்த நாடுகளிலே பெற்று வளர்க்கும் குழந்தைகளையும்
183

Page 94
----e -9 ιδιΦ «e-
பேணி வளர்த்தல் ஒரு பிரச்சனை. ஆனாலும், அன்னிய சூழலில் வளரும் தமது குழந்தைகள் ‘தமிழர்களாக வாழ வழி செய்தலும் தமிழன் என்ற அடையாளத்தை எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளித்தலும் பெரியதோர் கடனாகும்.
ஒரிரு தலைமுறைகளின் பின்னர், என் “வேர், "அடி', 'உறவு’ என்று எதையும் அறியாத பிள்ளை, உலக அரங்கிலே யார்? அவன் வாழும் சூழல், இவ்வினாவை எழுப்பும். அப்பொழுது பதிலளிக்கும் பொறுப்பு அவனுடையது. ஊர், பெயர், உடைகள் அல்ல; ஒண்டமிழ் மொழியே சாட்சி பகரும்; ஊன்று கோலாகும்.
அன்னிய சூழலிலே வாழ்ந்து வளரும் பிள்ளைகள், அந்தந்த நாட்டு மொழிகளிலே - ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன் எனப் பல்வேறு மொழிகளைப் பயில்கிறார்கள். அந்தந்த நாட்டு மொழிகளிலே கல்வி கற்கிறார்கள்; பேசுகிறார்கள். தமிழ்மொழி அவர்கள் நாவிலே நடமாடுவதில்லை, அந்தந்த நாட்டு மொழியே அவர்களின் முதன் மொழி; சூழல் மொழி. ஆக, தமிழ்மொழி அறிவின் தேவையை அவர்கள் உணர்வதில்லை.
ஈழ நாட்டிலே சில காலம் வாழ்ந்த பின் பெயர்ந்த ‘முதலாவது தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகள், ‘ஒரளவு தமிழறிவுடன் சென்றவர்கள், சிலகாலம் தொடர்ந்து தமிழ் பேசுவர். வீட்டிலே தமிழ் பேசும் சூழல் இருப்பின், பேச்சுத் தமிழ் சற்று வளரும்.
184

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அன்னிய நாட்டிலே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பும் குறைவு; ஆனால், தன் பிள்ளை தமிழ் பேச வேண்டுமென அங்கலாய்க்கும் பெற்றோர் தமிழைக் கற்பிக்கப் பலவாறு முயல்கின்றனர். கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சில நாடுகளிலே, தமிழ்ப் பாடசாலைகள் நிறுவி வார இறுதிகளிலே தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. அங்கு நடைபெறும் வகுப்புகளையும், மாணாக்கர் மனப்பாங்கையும், ஆசிரியர் பிரச்சனை களையும் கூட நேரில் கண்டறிந்துள்ளேன்.
அங்கு எழுகின்ற முதலாவது பிரச்சனை,
மொழியும் அதன் பொருத்தம் அல்லது தேவையும் பற்றியது. ஒரு தேவையை உணர்ந்தால், பிள்ளை அம் மொழியைப் பயிலும்; பயில்வதற்கு ஆர்வம் கொள்ளும். ஆனால், தாம் வாழ்ந்து வளரும் சூழலில் தமிழ் மொழி தொடர்பு கொள்ளவும் கருத்துப் பரிமாறவும் பயன் படுத்தப்படும் மொழியல்ல எனவும் அன்றாட வாழ்க்கையிலே தேவை அற்ற மொழியாகவுமே பிள்ளை உணருகிறது. பால பருவத்தில் வீட்டு மொழியும் அன்னிய மொழியாகி விட்டால், புறச் சூழலில் சென்ற பின்பு பிள்ளைக்கு தமிழ், தன்னைப் பொறுத்தவரையில் தேவையற்றதாகிறது.
"சூழல் மொழியே வாழும் மொழியாய்
சுவைபட வளர்கிறது
வாழும் மொழியாய் வளரும் மொழியாய்
வாயில் தவழ்கிறது"
அந்தச் சூழலை எங்கே அமைக்கலாம்? வீட்டிலா,
185

Page 95
-- Φ -9ιbις «e-
பள்ளியிலா, நாட்டிலா? வசுவில், ரயிலில், வழியில், தெருவில் தமிழ் தேவையா? இசையும் கலையும் ஈர்க்கப் பார்த்து இரவும் பகலும் ரசிக்கும் “ரிவியின் மொழி தமிழா? சொந்த மன உணர்வுகளைப் பகர முதல் வரும் மொழி தமிழா? ஆகவே, வீட்டுச் சூழல் ஒன்றை மட்டுமே நாம் அமைக்கலாம். எத்தனை குடும்பங்களில் இந்த உணர்வுடன் பெற்றோர் தீர்க்கதரிசனத்துடன் செயல்படுகின்றனர்? நெஞ்சைத் தொட்டு ஒவ்வொரு 'வரும் கேட்க வேண்டிய கேள்வி இது!
தமிழ்ப் பாடசாலைகள் நிறுவி, வார இறுதிகளிற் கற்பிக்க முயலும் போது பரீட்சைக்குப் படிக்கும் t urTLé9Fnr60)6Ulu பாடவிதானத்தில் இல்லாத ஒரு மொழியாக - பாடமாக - பிள்ளைக்குத் தமிழ் தோன்றுகிறது. பரீட்சிக்கப்படும் பாடமாகத் தமிழ்மொழி இருப்பின், குறிப்பாக கட்டாய பாடமாக இருப்பின், பிள்ளைக்கு ஒரு தேவையாக அது அமையும். பழைய காலத்திலே, லத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை அவ்வண் கற்றவர்கள் உள்ளனர். ஈழத்தில் இன்று உள்ள பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும், சர்வதேசப் பள்ளிகளில் பிரஞ்சு, ஜேர்மன், பாஷா மலேசியா போன்ற மொழிகளைக் கற்பதும் கூட, சில பரீட்சைகளில் அவை கட்டாய பாடங்களாக அமைவதனாலேயே, அச்சந்தர்ப்பங்களில் ‘வெற்றியும் பரிசும் (Success and reward) உள்ளதால், கற்பதில் ஆர்வம் ஏற்படுகின்றது என்பது கல்வியுள் நூல்கள் தரும் விளக்கமாகும். அந்த நிலை எத்தனை நாடுகளில் உள்ளது? இது தமிழ் கற்பிக்க முயல்கையில் ஏற்படும் இரண்டாவது
186

-e) யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
பிரச்சனை. மூன்றாவதும், மிக முக்கியமானதுமான பிரச்சனை, வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளின் “பாடத் திட்டமும் கற்பித்தல் முறையும். பொதுவாகக் கூறின், பாடத் திட்டம் ஒன்று இல்லாமல் 'வசதியான சில புத்தகங்களைக் கையில் வைத்துத் துணை கொண்டு, தமது சொந்த அனுபவத்திற்கு ஏற்ப ‘வார இறுதிப் பாடசாலை' ஆசிரியர்கள் கற்பிக்க முனைந்தனர். சிட்னி, மெல்பன், ரொறன்ரோ, லண்டன், ஒக்லாந்து போன்ற நகரங்களிலே பாடத் திட்டம் தயாரித்துக் கற்றல் அனுபவங்களை திட்ட மிட்டு வழங்குதற்கு இப்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும், சிலர் வகுப்புகள் நடத்தும் ஆர்வம் இருந்தும் வழி தெரியாது அவதியுறுகின்றனர். உதாரணமாக:
“சிங்கப்பூர் பாடசாலைகளுக்காக எழுதப்பட்ட தமிழ் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் வளரும் பிள்ளைகளுக்கான தமிழ்ப் பாடத் திட்டம் ஒன்று தயாரித்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?*
மெல்பனில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றிலே, இப்படி ஒரு கேள்வி எழுப்பினார், தமிழ் ஆர்வலர் ஒருவர். எங்கோ உள்ள பாடப்புத்தகம் ஒன்றைப் பின்பற்றிப் பாடவிதானம் அமைத்தல் பொருத்தமற்றது. எந்த நாட்டில், எந்தச் சூழலில் உள்ள
பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் போகிறோம் என்பதிலேதான், பொருத்தமான பாடத்திட்டம் பொறுத்துளது.
187

Page 96
-- Φ -9 ιδι9. « -
பாடவிதான அபிவிருத்தியில் பாடத் திட்டம் தயாரித்தல் ஒரு முதன்மையான, முக்கியமான கட்டம். கற்கப் போகும் மாணவர்களின் தேவை என்ன என்பதை 'தேவை ஆய்வு' (need analysis) ஒன்றின் மூலம் நிர்ணயித்து, அதன் அடிப்படையிலே பாடத்திட்டம் தயாரித்தல்தான் கல்வியியல் துறையினர் மேற் கொள்ளும் நடைமுறை. கற்றல் மூலம் மாணாக்கர் பெறவேண்டிய அறிவு விருத்தி என்ன? திறன்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்துவது பாடத்திட்டமே. அவற்றை எய்துவதற்கு உதவும் சாதனங்களுள் ஒன்றுதான் பாடநூல். ஆக, பாடத்திட்டத்தின் பின்பு தான் பாடநூல் என்பதும், பாடநூலுக்கு அடித்தளம் பாடத்திட்டமே என்பதும் தெளிவு. சிங்கப்பூர்ப் புத்தகம் அல்ல. எந்த ஒரு நூலின் அடிப்படையிலும், அன்னிய சூழலில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்குப் பொருத்த மான பாடத்திட்டம் தயாரித்தல் பொருந்தாது.
அவுஸ்திரேலியாவிலே, விக்ரோறியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநில அரசுகள் இத்துறையில் ஆற்றி வரும் சேவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உடையது. முன்னோடி முயற்சி என்றும் கூறலாம்.
GTLDS) பிள்ளைகள் போல, பல்வேறு இனமொழிகள் பேசும் பிள்ளைகள் இந்த நாட்டில் வளர்கிறார்கள். அவர்கள் யாவரும், ஆங்கிலம் அல்லாத 5(5 GILDITyfs - Language Other Than English (LOTE) கற்பதற்கு, இந்த நாட்டரசு பல ஆண்டுகளாக உதவி வருகிறது. ஆரம்ப காலத்திலே, பல்வேறு பள்ளிகளும், ஒருமைப்பாடற்ற பாடத் திட்டங்களைத் தயாரித்துப்
188

-> யாதும் ஊரே : ஒரு யாத்திரை 43
பின்பற்றினர். அத்தகைய நிலையை மாற்றிச் சீர் செய்வதற்காக, இன்று இரண்டு வழிகாட்டிகளை, இரு மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
1. LOTE 1-10: Curriculum and Standards Framework
2. K-6 Generic Syllabus Framework
முதலாவது விக்ரோறியா மாநில -9!Té97 வெளியிட்ட வழிகாட்டி, இரண்டாவது, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் வெளியீடு. (வேறு மாநில அரசுகளும் வெளியிட்டுள்ளனவா என்பது பற்றி அறிய நான் முயற்சிக்கவில்லை) ஆயினும், மேற்கூறிய இரண்டு வழிகாட்டிகளும் ஒரே அடிப்படைக் கொள்கைகளில் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை:
1. சமுதாய மொழி இனமொழி) பிள்ளையின்
இரண்டாவது மொழி. 2. தொடர்பு கொள்ளவும் கருத்துப் பரிமாறுதற்கு மான மொழியாகச் சமுதாய மொழி கற்பிக்கப் படுதல் வேண்டும்.
3. மையப் பொருள் (theme) அடிப்படையில் பாடத்திட்டங்களை விருத்தி செய்தல் வேண்டும். ஏறக்குறைய 70 சமுதாய மொழிகளைக் கற்பித்தற்கு, ஒருமைப்பாடான பாடத்திட்டங் களைத் தயாரிப்பதை இலகுவாக்க, இந்த வழிகாட்டிகள் உதவும். அவற்றுள் தமிழ்மொழியும் ஒன்றாகும். எனவே, எந்த ஒரு பாடநூலின் அடிப்படையிலும், தமிழ்ப் பாடத்திட்டம் தயாரிக்க வேண்டிய தேவை இன்றில்லை.
189

Page 97
அது மட்டுமல்ல; அத்தகைய முயற்சி பொருத்தம் அற்றதும் ஆகும். சரி, எமது தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழறிவு ஊட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன், தமிழ்ப் பள்ளிகள் துவங்கி நடத்துகின்றனரே! பல அக்கறையுள்ள ஆசிரியர்கள், ‘சமுதாய சேவை, தமிழ்ச் சேவை" என்று கருதி, அப்பள்ளிகளில் கற்பிக்கின்றாரே! பாடநூல் இன்றி எப்படிக் கற்பிப்பது? என்று சிலர் கேட்கலாம்.
'நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பு சில ஆண்டுகளுக்குமுன்பே இவ்வினாவை எழுப்பியது. பொருத்தமான பாடநூலை ஆக்குதற்கென, பாடநூலாக்கக் குழு ஒன்றை நியமித்து, முன்னோடி முயற்சியை மேற்கொண்டது. இது செய்தால், எனக்கு என்ன இலாபம்? எனக்கு ள்ைன வருவாய்? என்ற எண்ணங் கொள்ளாமல், தமது தேரத்தையும் பணத்தையும் தியாகஞ் செய்த அவர்கள், ஆலோசகர் சிலர் வழி காட்டலில், ஏற்ற பாடநூல்கள் எழுதும் பணியில் ஈடுபட்டனர்.
NSW Ethnic Schools Board, 69&Gurirgunasaysir Languages and Multicultural Education Resource Centre gSuoupg5air முயற்சிகளை ஆராய்ந்து, அந்த நிறுவனங்கள் செய்த ஆய்வுகளின் பெறுபேறுகளையும் சென்ற திசையையும் அறிந்து செயற்பட்டனர். அதனால், அவர்கள் வெளியிட்டுள்ள தமிழ் , தமிழ் 2 என்ற பாடநூல்களும், இனி வெளியிடவுள்ள தமிழ் 3, தமிழ் 4 என்ற பாடநூல்களும், இந்த நாட்டில் வளரும் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி கற்பித்தற்கு ஏற்ற
190

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
நூல்களாக அமைகின்றன.
அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் இந்நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன; பலனளித்துள்ளன. இது போன்ற முயற்சிகள் பல்வேறு நாடுகளிலும் தேவை என்பதை வலியுறுத்தத் தேவையில்லை.
“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்போம். பேசுந்திறனே மொழித் திறன்களுள் அடிப்படையானது. எழுத்து - சொல் - வாக்கியம் ஆகியவற்றை அறியுமுன்பே வாய்மொழி மூலம் தமிழைப் பேசவும் கேட்டுப் பொருள் தெளியவும் முடியும். இந்த உபாயத்தைப் பயன்படுத்தி, இனிய - சிறிய - தமிழ்ப்பாக்களை மனனஞ் செய்து மாணவர் இசைக்க வைத்தல், முதன் முயற்சியாக வேண்டும். சில காலம் இந்தப் பயிற்சி அளித்தால், பிள்ளைகள் கூச்சமின்றிப் பேசுவர். சரியாக உச்சரிப்பர். நம்பிக்கை பெற்று முன்னேறுவர். இந்த நம்பிக்கை இல்லாத பிள்ளைகள் தமிழ் பேச வெட்கப்படுகின்றனர் என்பது ஆய்வுகளின் முடிபு. இதைவிட்டு, ஆரம்பம் முதலாக “எழுது, எழுது என்று துன்புறுத்தும் ஆசிரியரால், பிள்ளை பாடசாலை செல்ல மறுத்ததையும் நான் அறிவேன்.
"If I go to the class, the teacher writes-G, LDITG, வீடு, ஒடு and wants me to write. I don't want to write.....its hard" 6T6ipstair ஒரு சிறுவன்.
ஆக, கற்பிப்பதற்கு ஏற்ற வழி, பேச்சு, கேட்டல் என்ற அனுபவங்களை முதலிலே வளர்த்து, பின்பு
191

Page 98
----eν Φ ιδι9 o----
வாசிப்பு, எழுத்து என விரிவாக்குதலேயாம்.
ஈழத்தை விட்டுச் சென்று, தமிழ் பேசியும் எழுதியும் தமிழ் வளர்த்து வாழும் சூழலிலே, எதிர்பாராச் சிக்கல் இன்னும் ஒன்று ஏற்படலாம். ஈழத்தமிழரும், தமிழ் நாட்டுத் தமிழரும் இணைந்து முயற்சி செய்யும் போது இந்தச் சிக்கல் -
Pu sastСан kdo Buñum-Platoad at Lauwич
மொழிச் சிக்கல் - தலை தூக்கலாம். ஏன்? பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் இரு நாடுகளிலும் சற்று
வேறுபட்டவை. சொற்களஞ்
சியமும் அவ்வாறே அதனால் இல் ஏற்படுஞ் சிக்கலை 1994ல் முதன் முதலாக எதிர் நோக்கினேன்.
A திரைகடலோடினும் தீத்தமிழ் பேஜ்
நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாடநூலாக்கக் குழுவின் பிரதம ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கிய காலம். தமிழ் நாட்டில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய தமிழர்கள் பிள்ளைகளுக்கும், ஈழத்திலிருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய தமிழர்களின் பிள்ளை களுக்கும் பொதுவான தமிழ்ப் பாடநூல் ஒன்றை எழுதுதற்கு முயற்சி மேற்கொண்ட காலம், அது. முதற் புத்தகம் எழுதும் வேளையிலே எதிர்நோக்கிய வெளிச்
சிக்கலைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க வழி கண்டேன்.
192
 
 
 

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40ஆயினும், எந்த விதத்திலும் எனக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. சிக்கல் தீர்ந்தது என்ற நிலையும் இல்லை. காரணம், அந்தச் சிக்கல், இது சரி, அது பிழை" என்று முடிவு செய்யும் அறிவுசார் பிரச்சனை அல்ல; பதிலாக, மொழி மாற்றத்தை எதிர் நோக்கும் வேளையில் ஏற்படும் பொதுவான மனப்பாங்குப் பிரச்சனை ஆகும். அதை விளக்கச் சிறு எடுத்துக் காட்டுகள்: தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்,
0 ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்கள் 9 நாற்காலியில் உட்கார்ந்தார்கள் O sirúa sTú9l"Lriscir
ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய பழங்களை விரும்பினார்கள் 9 டி.வி. பார்த்தார்கள் 9 ஆபிசுக்குச் சென்று வேலை செய்தார்கள். இங்குள்ள சொற்கள், தமிழ் நாட்டு மொழி வழக்கில் உள்ளவை. ஈழத்திலிருந்து வந்தவர்கள்,
9 அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள் 9 கதிரையில் இருந்தார்கள் 0 கோப்பி குடித்தார்கள் அேப்பிள், தோடை ஆகிய பழங்களை விரும்பினார்கள் 0 ரி.வி. பார்த்தார்கள் 0 கந்தோருக்குச் சென்று வேலை செய்தார்கள்.
இங்குள்ள சொற்கள், ஈழத்தமிழ் மொழி வழக்கில்
666)6.
இரு நாடுகளிலும், தமிழ் மொழிதான் பேசப்
ur-12 193

Page 99
-- Φ -9 ιδιΦ «-------
படுகிறது. ஆயினும், வழக்கில் இருக்கும் சில அடிப்படைச் சொற்கள் வெவ்வேறாக இருந்தன. தமது சொந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில், தமது சொந்த மொழி வழக்குக்கு மதிப்பளித்து, பரிச்சயப்பட்டவர்கள். அவரவர் நாட்டிலே பாடநூல் எழுதும் போது, இத்தகைய ‘மொழிச் சிக்கல் ஏற்பட இடமில்லை.
புலம் பெயர்ந்த இரு சமூகத்தவரும் ஒன்றிணைந்து பாடநூல்களை எழுதும் போது, சிக்கல் தலைதூக்குகிறது. * 。
ஆஸ்திரேலியா சரியா? அவுஸ்திரேலியா சரியா? இது இறுதி வரை தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருந்தது. காரணம், மொழி மாற்றத்துக்கு மக்கள் காட்டும் பாதகமான மனப்பாங்கு மட்டுமே.
"நாம் வழங்கி வந்த சொற்களே சரியானவை; மற்றையவை பிழையானவை" இந்த மனப்பாங்கு தனி ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. பேச்சு மொழியாக இருக்கும் போது சிக்கல் அத்துணை தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், எழுத்து வழக்கில் வரும் போது, இந்த வேறுபாடு பிரச்சனையாகத் தலை தூக்குகிறது!
எந்தச் சிக்கலையும் தீர்க்கச் சாதகமான மனப்பாங்கு அவசியம். இவ்விடயத்திலும் அப்படியே. இனி, தமிழ் படிக்கும் பிள்ளைகளுக்கு கேட்டறிதல், பேச்சு மட்டுமல்ல; எழுத்தும் வாசிப்பும் தேவை. ஆனால், அவை நாளடைவில் விருத்தி செய்யப்பட GaraisTiguaoau. Twinkle, Twinkle Little Star aTaipilib Ba Ba
194

-er யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
Black Sheep என்றும் பாடும் தமிழ்ப் பிள்ளை, எழுத்தும் சொல்லும் தெரிந்தா படித்தது? ரிவியிலும் ரேடியோவிலும் கேட்கும் பாடல்களைப் பிள்ளை எழுத்தும் சொல்லும் தெரிந்தா மண்ணஞ் செய்தது? அது போல, சிறிய தமிழ்ப் பாடல்களை தாளத்துடன் இசைக்கச் செய்தல் முதலிலே தேவை; பிள்ளைகளின் இன்றைய “ஊடகம்’ ‘மேலும் உதவி புரியும். ஏனெனில், இக்காலம் வேறு; நமது காலம் வேறு.
"என்ன, நாங்கள் சொல்லும் கதைகளையும் பாடல்களையும் பிள்ளைகள் கேட்கிறார்கள் இல்லையே!” என்று கவலைப்பட்டார் நண்பர் முருகபூபதி. பாட்டி சொன்ன கதையைக் கேட்டவர்கள் நாங்கள்; அது அன்றைய கோலம். இன்று வீடியோவும் ரிவியும் கணணியும் அல்லவா? மெல்பனில் பாரதி பள்ளி நித்தியானந்தனும் ரொறன்ரோவில் குரு அரவிந்தனும் தமிழில் ஒலியிழை நாடாக்கள் சில தயாரித்து கற்றல்கற்பித்தல் சாதனங்களாக அறிமுகப்படுத்தியுள்ளனர். அவை போன்ற முயற்சிகள் பல தேவை. வேறு நாடுகளிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.
எந்த முயற்சிகளை யார் மேற்கொள்ளினும், பெற்றோர் ஆதரவின்றி எதுவும் பயன் தர முடியாது. பாட்டன் தமிழ்ப் பள்ளி வாத்தியார். பேரன் அவருடன் தமிழ் படிக்கப் போவதில்லை. பேரனின் தாயைக் கேட்டேன். "மகன் படிக்கப் பாட்டனுடன் ஏன் Guitagseigoda)?” 676örgy "He is not interested; I don't want to press him"இது தமிழ் வாத்தியாரின் மகள் தந்த பதில்,
195

Page 100
இப்படி எத்தனை பேரின் பிள்ளைகள் எத்தனை காரணங்களுக்காகத் தமிழ் படிப்பதைக் கைவிடு கிறார்கள் என்பது கவலை தரும் செய்தி.
"கனடாவிலும் ஏனைய பிற நாடுகளிலும் பெற்றோர் ஆர்வமின்மையே தமிழ்ப் புறக்கணிப்பிற்குப் பிரதான காரணமாகும். உதாரணமாகக் கனடாவில் தமது பிள்ளைகளைத் தமிழ் படிக்கவிட்டால் அவர்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி குறைந்து விடுவார்கள் எனப் பெற்றோர் கருதுகிறார்கள்” என்கிறார் கவிஞர் கந்தவனம். ஆனால் ஜேர்மனி பற்றிக் குறிப்பிடும் போது "ஜேர்மனியில் வாழும் தமிழ்ப் பெற்றோர் மொழிப்பற்று மிகுந்தவர்களாகக் காணப்படுகிறாாக்ள். தமிழை வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வமும் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது" என்கிறார் கவிஞர் (தமிழர் தகவல் 1985) எல்லா நாடுகளிலும் மேற்கூறிய "இரு வகையினரும்" உள்ளவர் என்பதுதான் உண்மை. தமிழ் கற்பித்தல் தலையாய பணி எனச் சேவை ஆற்றுபவர்கள் உள்ளனர். அலட்சியமாக நடந்து கொள்பவரும் உள்ளனர்.
தமிழ் கற்பித்தலில் மட்டுமல்ல; தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ் ஆர்வலர்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும். உதாரணமாக, சிட்னியிலுள்ள பாடசாலைக் கல்வித் திணைக்களம். சுற்று நிருபம் ஒன்றைத் தமிழிலும் அனுப்பியது. அதை மொழி பெயர்ந்த எவரோ, என்பதை 'அவசுத்திரேலியா’ என்றும் Australia 14 July 1995 என்பதை 1995 ஆடி மாதம் 14 ஆம் தேதி என்றும் 16 ஆக்ஸ்ட் 1995 என்பதை 1995 ஆவணி மாதம் 16 தேதி ான்றும் “மொழி பெயர்ந்திருந்தார். ஜூலை தான் ஆடி
196

-அ யாதும் ஊரே : ஒரு யாத்திரை 40
என்றால், ஆடிப்பிறப்பு ஜூலை முதல் தேதியா? தைப் பொங்கல், ஜனவரி முதல் தேதியா? சித்திரை வருடப் பிறப்பு ஏப்ரல் 1 திகதியா? பிழையான மொழி பெயர்ப்புகளை பணத்துக்காக மொழி பெயர்ப்பவர்கள் அன்னிய அதிகாரிகளை மட்டுமல்ல, நமது சமுதாயத்தையே அவமானத்துக்கு ஆளாக்குகிறார்கள். இப்படியான தமிழ்ச் சீரழிவு புலம் பெயர்ந்த நாடுகளில் நிகழாது விழிப்பாக இருந்து செயலாற்றலும் தமிழ் ஆர்வலரின் பெருங்கடமையாகும். ஏனெனில், அன்னிய சூழலில் வாழும் பிள்ளைகள் பிழையானவற்றை நம்பிவிடக் கூடாது.
இனி, &560TL-IT, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே தனியார் பாடசாலைகளிற் படித்து உயர் கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சை எடுக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளமை, மகிழ்ச்சிக்கு உரியது. ஆயினும் கற்பிப்பவர் - கற்பவர் -பரீட்சிப்பவர்கள் தமது தொழிலின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படல் அவசியம். “பிள்ளைகளிடம் என்ன தரத்தை எதிர்பார்க்க வேண்டும்?” என்ற குறிக்கோள் தெளிவாக இருப்பின் மட்டுமே, இந்த வாய்ப்புப் பயன்தரும்.
எந்தப் பரீட்சைக்குப் படித்தாலும், தமிழ் பேசும் பொழுதுதான், தமிழ் வளர்கிறது. சிங்கப்பூரிலே, அரச மொழிகள் நான்கு, அவற்றுள் தமிழும் ஒன்று.
அங்கு கூட தமிழ் மொழி வாரம் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. பிள்ளைகள் தமிழ் பேசும் வழக்கம் குறைந்து வருகிறது என்பதனாலே
197

Page 101
இனிய தமிழில் எந்தசளும் பேசுவோம் LOVE TAMIL SPEAK TAMIL Z}
7 ANANDABHAVAN RESTAURANT
༢༦མ་ཕན། SYYLYLLLSLLLLLSLYYLLYLLLLYYY
அந்த முயற்சி என்கின்றனர். மூத்தவர்கள் உச்சரிப்பில் பிழை காண்பதுவும், வெட்கமுமே காரணம் என்கிறார். தமிழ் முரசு ஆசிரியர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தமிழால் பொருளாதார ஆதாயம் பெற முடியாது; சமுதாயத்திற் கெளரவம் பெற முடியாது. அதனால், அரச மொழியாக இருக்கும் தமிழுக்கே நம்மவர் அங்கு மதிப்பளிக்கவில்லை என்றால், மற்றைய நாடுகளிலே நிலைமை என்னவாகும்? மனப்பாங்கு என்னவாகும்? ஆனால் ஒன்று -
"அமிழ்ல் தெனும் தமிழே அவனியில் எமக்கு அருந்தமிழ் அடையாளம் எமதருந் தமிழே எந்தையர் சந்ததி இயல்புசொல் சுடர் தீபம் தமிழ் மொழி மறந்தால் தமிழினம் என்றெம் சந்ததி வாழாது குமிழெனும் வாழ்வில் குற்றம் புரிந்தவர் குறுகுறுப் பழியாது
198
 
 
 

15. மொரிசியஸ் தமிழர் முன்மாதிரியா?
"அன்பு வளர்சைவ ஆலயம் பூசைகள் ஆசி புரிதல் இன்பம் - எங்கள் இன்பத் தமிழ்ப் பெயர் சொந்தப் பரம்பரை சொல்லி வளர்தல் இன்பம் - ஆயின் என்பிலே ஊறிய செந்தமிழ் நாவினை ஏய்த்துத் திரிவ தென்னே! - தமிழ் மன்பதை வாயை மறந்து தமிழ்மொழி மாயம் புரிவதென்னே"
ந்து சமுத்திரத்தில் நின்று வளருகின்ற மொரிசியஸ் தீவு 1800 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மட்டுமுள்ள சிறு தீவு. இன்றைய மக்கள் தொகை அண்ணளவாக 1.1 மில்லியன்; அவர்களுள் தமிழ் பேசும் மக்கள் அண்ணளவாக 75000 எனலாம். இந்து மதத்தவர் (52%) உள்ள அந்நாட்டிலே முஸ்லிம்கள், சீன - மொரிசியர்கள், நாட்டில் பாரம்பரியமாக பிளவு
199

Page 102
-- Φ -9 ιδιΦ --
படாமல் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.
1598இல் அங்கு சென்ற ஒல்லாந்தர் “மொரிசியஸ்’ என்று பெயரிட்டனர். 1710 இல் ஒல்லாந்தர் அங்கிருந்து விலகிச் சென்ற பின்பு, அங்கு வந்த பிரெஞ்சுக்காரர் 1715இல் ஐல் - டீ - பிரான்ஸ் எனப் பெயரிட்டு ஆட்சி நடத்தினர். 1730களில், புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டிட - கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்துச் வந்தனர். தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்கால், மலபார் ஆகிய தென் இந்தியப் பிரதேசங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழரே நாட்டின் அபிவிருத்திக்கு உழைத்த தொழிலாளர் ஆவர். 1810இல் பிரித்தானியர் ஐல் - டீ - பிரான்ஸைக் கைப்பற்றுவதற்கு சென்னையிலிருந்து பெருந்தொகை யான தமிழ்ப் போராளிகளைக் கொணர்ந்தனர். பிரித்தானியர் “மொரிசியஸ்’ என்று மீண்டும் பெயரிட்டு, குடியேற்ற நாடாக ஆட்சி செய்தனர். 1968இல் சுதந்திரம் பெற்று இறைமையுள்ள சுதந்திர நாடாகிய மொரிசியஸ், 1992இல் குடியரசு ஆகியது.
"இந்நாட்டில் குடியேறிய தமிழர்களுள் பெரும் பாலோர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்கள். இவர்களுள் சிலரே ‘ஒரளவு’ கற்றவர்களாக இருந்தனர். பெரும்பாலோர் முறையாகக் கல்லாதவர்கள். இவர்கள் இத்தீவுக்கு வந்தபோது தங்கள் பழம் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளையும் தெய்வ பக்தியையும் கூடவே கொணர்ந்தனர். அவை அவர்களது பாரம்பரியத்துக்குக் கட்டியம் கூறி இன்றளவும் நிற்கின்றன."
200

--e) யாதும் ஊரே ஒரு யாத்திரை -40
இப்படிப் பெருமையுடன் கூறுகின்றார் மொரிசியஸ் தமிழ் அறிஞர் உலகநாதன் சொர்ணம் (மொரிசியஸில் தமிழும் தமிழரும்). அருள்மிகு பூரீ சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோயில், அவரது கூற்றுக்கு ஆதாரம் வழங்கும் எழில்மிகு கோயில்களுள் ஒன்றாகும்.
மொரிசியஸ் தீவிலே, எல்லாமாக நூறு ஆலயங்கள் வரை உள்ளன. சில "பெரிய ஆலயங்கள். சில சற்றுச் சிறியன. எல்லாப் பிரதேசங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன. மொரிசியஸ் தமிழ்க் கோயில் களின் கூட்டமைப்பு, ஆலயங்களின் இணைப்புச் சபையாக, சமய சம்பவங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக செயற்பட உதவுகிறது. அந்தக் கூட்டமைப்பில் 95 ஆலயங்கள் உள்ளன. அது தவிர இந்து மகாஜன சங்கம் என்ற அமைப்பில் ஏழு ஆலயங்கள் உள்ளன.
இன்னொரு அம்மன் கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கீழே உள்ள படத்திற் காணலாம்.
201

Page 103
இதன் அமைப்பு வேறுபட்டது. அநேக கோயில்கள் இத்தகைய அமைப்பு உள்ளன. சாதாரண பூசகர்’கள்
பூசை செய்யும் கோயில்கள் இவை.
"எமது மதம் ‘தமிழ்’. பிறப்புச் சாட்சிப் பத்திரம், திருமணப் பதிவுப் பத்திரம்” ஆகிய பத்திரங்களில் எமது மதம் ‘தமிழ்’ என்று தான் பெருமையுடன் எழுது கிறோம். குடிசனத்தொகை மதிப்பீட்டுப் படிவங்களிலும் நாம் ‘தமிழ்’ மதத்தவர் என்றுதான் குறிப்பிடுகின்றோம்" என்று கூறுகின்றார். மகாத்மா காந்தி கல்வி நிறுவன அதிகாரி கே. சொர்ணம் அவர்கள். இங்கு, சைவமும் தமிழும் ஒரு பொருட் கிளவிகள் போற் பாவனையில் உள்ளது போலும். சைவம் எந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கையில் இணைந்துள்ளது என்பதை விளக்கப் பல உதாரணங்கள் காட்டலாம். அவற்றுள் ஒன்று, நேர்காணல் ஒன்றிலே பெற்ற தகவல்கள். பூவாணி வேலுப்பிள்ளை (Poovanee Veloupilay) என்பவரை நான் சந்தித்தபோது முதலமைச்சர் அலுவலகத்திலே
2O2
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
செயலாளராகப் பணியாற்றியவர். ஜேர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் டியற்றர் காப் அவர்களுடன் பூவாணியைச் சில விபரங்கள் கேட்டேன் (1989) அவர் கூறியவை கீழே தரப்படுகின்றன:
"வீட்டிற் பேசும் மொழி “கிறியோல்". அரச மொழிகளான ஆங்கிலமும் பிரெஞ்சும் நன்றாகத் தெரியும். தமிழ் தெரியாது. கோயிலுக்குக் கிரமமாகச் செல்வதுண்டு. முருகன், திரெளபதி அம்மன், கணேசர், சிவன் கோயில்களுக்கே பெரும்பாலும் செல்வதுண்டு.”
"உங்களுக்குத் தமிழ் தெரியாது. பூவாணி என்ற பெயரை உங்கள் பெற்றோர் எப்படி வைத்தனர்?" என்று கேட்ட பொழுது, அவர் பின்வருமாறு கூறினார்:
"வழக்கமாக, குழந்தை பிறந்ததும் கோயிற் குருக்களிடம் பெற்றோர் செல்வர். அவர் நட்சத்திரம் பார்த்து, அதற்கு ஏற்ற முதல் எழுத்துக்களைக் கூறுவார். அதற்கமையப் பெயர் ஒன்றைப் பெற்றோர் தெரிவு செய்வர். அப்படி வைத்த பெயர் தான் பூவாணி" என்று பதில் கூறினார்.
சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக்
203

Page 104
-eν 3 ιδιΦ Φ --
கலாசாரத்தைப் பேணுகிறது. சமய ஆசார விரத நாட்களை மக்கள் அறியும் வகையிலே ஆண்டுதோறும் பஞ்சாங்கம் ஒன்று அச்சிட்டு விநியோகிக்கப்படுகிறது. தமிழர்கள் தான் அதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது என்ன மொழியில் உள்ளது?
FETESTAMOULES POUR
1998 - 1999
孟 చేulక 玩|要 Mois | 5 觀 囊引漆|篷|要
3 || 2 |i5' E to 5 VARUSHA PRAPU 14 AVR AvRL 9827 - 24262g . . . STTIRAICAVADEE MA MA. 25 T11 24 25 T2s go VAIGHASIVISAGAM 08 JUIN JUN 12 og 22 || 2:27.123 c5 107 AANITIRUMANJANAM 0. JUN JULLET is op 21 j2327 j29 fosfor AADPOORAM 27 JUIL on so, it is AAD PERUku 03 AouT S AADIKRTHIGAICAVIADEE 15 AOUT Bf-11-8 - 184 242 428 402 49 AADIKAJNY 16 AoÚT OC-9805 - 18 - 202828-1898 -VINAYAGAR SADURTHI 25 AOÚT NOV 05081, 1822s 290 AVANIMOULAM O SEPT DEC 23003 17, 1822, 29.30KRISHNAJAYANTH 12 SEPT AN 199926 13 f6 7. 21 23 2729 MALAIPATCHAM 20 SEPT FENRIER22 - 14 S 19226 27 SARASPATHEE POSSA 29 SEPT MARS 2 13i 16 17 212 27 29 JVIJAYA DASAMI 30 SEPT AVRI - - - - - - - - - DEEPAMAL 19 OCT HLE DEHUT DUMOISTAMOULLS}hosesnu STIRA) 14.04á 14.05 | AYEPASSl. 18.10 á 16.11 ANNABHSAGUM 03 NOW VAIGASI 15.05 á 14.06 | KARTHIGAI 17.11 á 1512 |KARTHGAI DEEBA 02 DÉC AAN 1506á 1607 | MARGAzH| 1612á 1401 |VlNAYAGARSHASTH! 24 DÉC AAD 1707 á 16.08 | THA so zo SWARGAVAASAIEKADASI 29 DÉC AMAN 17.08 á 16.09 || MAAS 13.02 á 14.03 ಙ್ಗಟ್ಝDARSAM Jಣ್ಣ 'RA'AS'709á 1710|PANGUN 1508 á 1304]r:AlpoosAMcAVADEE 3 器
Kaium I yema Kandun MAHASWARATREE 14 F Jou
s heure boue roxhorbimoto8x MASMAGA O1 MARS Dimanche 15.00-16.30 ||1630-18.00 ||12.00-13.30
PANGUN UTTRA 31 MARS Lundsi 13.30-15.00 07.30-09.00 10.30-12.00 Mardi 12.00-13.30 1500-16.30 0900-10.30 CARME GOVINDEN 1998 Merced fí030-1200 fí20-1330f073090117 SEPTEMBER á 17OCTOBER Jeudi 109.00-1030 || 1330-15.0006.00-0730 (5 Sumedis) Veuldredi 107.30-09.00 || 10.30-12.00 15.00-16.30 19 Septembre - 26 Septembre Samedi 06.00-07.30 0900-10.30 13.30-15.00 03 Octobre – 10 Octobre – 17 Octobre
lmp. par Stella Printing, 34, Rue Deschartes, Fort-Louis - Telephone 2124956 (COPY FREE)
204

-9) யாதும் ஊரே ஒரு யாத்திரை 43
பிரெஞ்சு மொழியில் அமைந்த பஞ்சாங்கத்திலே, கார்த்திகை, பெளர்ணமி, அமாவாசை முதலான பல விரத நாட்களும், வருடப் பிறப்பு, சித்திரைக் காவடி, வைகாசி விசாகம் தொடக்கம் மாசி மகம், பங்குனி உத்திரம் வரையான பல பெரு நாட்களும் ராகு காலம், குழிகை காலம் போன்ற விபரங்களும் உள்ளன என்றால், 250 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நம்பிக்கைகள் எவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வந்துள்ளன என்பது தெளிவு. இந்தப் பஞ்சாங்கமே அவர்க்ளின் பெருநாட்களையும் விழாக் காலங்களையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
“முருகன் விழாக்கள் தேசரீதியாகக் கொண்டாடப் படுகின்றன. தைப்பூச காவடி நாள் அரச விடுமுறை நாள். எல்லாத் தமிழருமே முருக பக்தர்கள். தீமிதி, கஞ்சி, கோவிந்த பூஜை, பொங்கல் விழாக்கள் போன்றவை கொண்டாடப்படினும், முருகன் வழிபாட்டின் மூலம் தமிழரது அடையாளம் பேணப்படுகிறது என்கிறார் கல்வி அதிகாரி சொர்ணம்.
205

Page 105
முருகன் வழிபாட்டின் அறிகுறியாக தைப்பூசக் காவடி, சித்திரைக்காவடி ஆகியவை பெரிய அளவில் நிகழ்கின்றன. கோவிந்தன் பூசையும் புரட்டாசி மாதத்தில் 30 நாள்கள் அனுஷ்டிக்கப்படும் விரத காலமாகும். ‘கோவிந்தன்’ மாதத்திலே கூட்டுப் பிரார்த்தனைகள் ஏராளம் நிகழும்.
திருக்கார்த்திகை அன்று "சொக்கப்பனை’ எரிக்கும் வழக்கம் அங்கு இன்றும் தொடர்கிறது. கார்த்திகை மாதக் கார்த்திகை நாள் வரும் விரத நாள் அது. நான் மொரிசியஸில் நின்ற காலத்தில் முத்தையன் பிள்ளை (Mootien Pillai) என்னும் ஒய்வு பெற்ற அதிகாரி வீட்டிலே தங்கி இருந்தேன். அவரது சகோதரர் "கருமாரி அம்மன்’ கோயில் முதல்வர். திருக்கார்த்திகைத் தினத்தன்று என்னையும் தம்முடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சொக்கப்பனை எப்படி உருமாறி உள்ளது என்பதையும் தமிழ் இன்றியே தமிழில் பஜனை நிகழ்வதையும் காணுதற்கு அது வாய்பளித்தது.
'திரியணன்’ மாரியம்மன் கோயிலில் பஜனை
நடைபெறுகிறது.
கேட்பதற்கு இனி மையும் பக்திப் பரவச மும் ஊட்டிய பஜனை அது. பஜனைப் புத்தகம் ஒன்று கைக்குக் கிடைத் தது. பார்த்துப் பாடலா னேன்.
Govindan Pugajh Maalei
2O6
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
(கோவிந்தன் புகழ் மாலை) என்று நூலிலே ஆங்கில
எழுத்துகளிலே தான் பாடல்கள் இருந்தன.
Hari Om Ananda Narayana Narayana Hari Narayana
Narayana Namo Narayana Triloga Nadhane Narayana.”
பஜனை முடிந்து, பூசை முடிந்து, சொக்கப்பனை எரிக்கப்பட்டது. சொக்கப்பனை, கம்பம் ஒன்றிலே வெண்துணி சுற்றி, நெய்யில் ஊறவைத்து நாட்டப்
பட்டது. எரியும் சொக்கப்பனையின் கோலத்தையும் படம் காட்டுகிறது. இப்படி வசதிக்கும் சூழலுக்கும் ஏற்ப உருவில் மாற்றம் பெறினும் சமயாசாரத் தொடர்ச்சி நிகழ்கிறது.
மொரிசியஸிலே சைவம் வளர் கிறது. தமிழ் மொழியின் நிலை என்ன? 195 ஆரம்பப் பாடசாலைகளிலும் 12 உயர்தர பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. 215 தமிழ் ஆசிரியர் கள் ஆரம்பப் பாடசாலை களிலும் 10 பட்டதாரிகள் உயர்தர பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கின்றனர்.
மொரிசியஸில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் சிலருடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவத்தை அறிய முயன்றபோது பின்வரும் தகவல்களை அறிய முடிந்தது:

Page 106
“பெரும்பாலான பிள்ளைகள் வீட்டிலே தமிழ்
பேசுவதில்லை; கிறியோல் தான் பேசுகிறார்கள். படிப்பிலே ஆர்வங் காட்டினும், குறிக்கோள் கவர்ச்சியாக இல்லை. ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர்தரப் பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்கான பரீட்சையில், தமிழ் ஒரு பாடமல்ல. அதனால், உயர்வகுப்புக்கு அனுமதி பெற உதவுகின்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், அறிவியல் ஆகிய பாடங்களிலே பிள்ளைகள் கவனஞ் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர் விரும்புகின்றனர். ஆதலால் எமது பணி மிகவும் சிரமமானதாக உள்ளது."
இவ்வாறு கூறியவர்கள், மொரிசியஸிலுள்ள மகாத்மா கல்வி நிறுவத்திற் பயிற்சி பெற்றவர்கள். தமிழ்க் கல்விக்குப் பெரும்பணி ஆற்றும் அந்த நிறுவனம்
208
 

-e) யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
கர்நாடக சங்கீதம், நாட்டியம் போன்ற கவின்கலை
வகுப்புகளும் நடத்துகிறது. அதனால், இசை - நாட்டிய திறன்களும் வளர்க்கப்படுகின்றன.
Y
கிராமிய நடனக் காட்சி ஒன்றைப் படத்திற் காணலாம். இதே போல இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு. காலத்துக்குக் காலம் தமிழ் நாட்டில் உள்ள இசைக் கலைஞர்களை அழைத்துச்
ॐ* ॐॐ
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மக்களின் இசை ஆர்வம் தாபரிக்கப்படுகிறது; வளர்க்கப்படுகிறது.
இனி மொரிசியசில் தமிழ்ப்பணி செய்யும் ஆர்வலரும் கல்வி அதிகாரியுமான தமிழ் அறிஞர் ஒருவரின் கருத்துகளை நோக்குவோம். 6) ஆண்டுகளாகத் தமிழ்வளர்க்க உழைக்கும் அருணாசலம் புஷ்பரதம் அவர்கள், மகாத்மா காந்தி கல்வி நிறுவன ар шигт அதிகாரி. அவர்களிடம் நான் கேட்ட கேள்விக்களும் அவரது விடைகளும் இங்கே தரப்படுகின்றன.
ur-13 209

Page 107
ത്ത அம்பி mത്തm
1 தமிழ்ப் பிள்ளைகளின் வீட்டு மொழி தமிழ் மொழி
என்று கூறுவீர்களா? - இல்லை. 2. தமிழ்ப் பிள்ளைகளுட் பெரும்பாலானவர்கள்
தமிழை நன்கு பேசுவார்களா? - இல்லை. 3. மொரிசியஸில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் முதன் மொழி, தமிழ் எனக் கருதுகிறீர்கள்? - இல்லை. 4. தமது பிள்ளைகள் பாடசாலையிலே தமிழைக் கற்க வேண்டுமெனப் பெற்றோர் உற்சாகம் ஊட்டுகின்ற னரா? - ஆம். 5. ஆரம்பப் பாடசாலையில், தமிழ்மொழி கட்டாய
பாடமாக உள்ளதா? - இல்லை. 6. ஆரம்பப் பாடசாலையில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாணவரைத் தெரிவு செய்கையில், தமிழ்மொழியிற் பெறும் புள்ளி, கவனத்திற் கொள்ளப்படுகிறதா? - இல்லை. 7. உயர்நிலைப்பள்ளிகள் யாவற்றிலும், தமிழ்மொழி
கற்பிக்கப்படுகிறதா? - இல்லை. 8. பெரும்பான்மைத் தமிழ்ப் பிள்ளைகள் பற்றிக்
கூறும்போது, பின்வருவன பற்றி யாது கூறுவீர்கள்? 1. தமிழ் பேசுவார்களா? - இல்லை 2. தமிழ் வாசிப்பார்களா? - ஆம். 3. தமிழ் எழுதுவார்களா? - ஆம். 9. தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் கற்பிக்கும் (Tamil in Roman Script) &ngs5uédigi Luppis syairaopu 5665
210

-40 யாதும் ஊரே ஒரு யாத்திரை جمــ
அமைச்சர் பரசுராமன் ஆராய்ந்தார். அது பற்றி, நடைமுறையில் ஏதாவது.? - இல்லை. 10. பிற மொழிச் சூழலில் வாழ்ந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தற்கு, தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர், LoG36av6Fu unr போன்ற நாடுகளிற் பயன்படுத்தப்படும் பாடநூல்கள் பொருத்தமற்றவை என்பது என் கருத்து.
இந்தப் பிள்ளைகளுக்கு, வேறு “மொழியும் வேறு அணுகுமுறையும் தேவை உங்கள் கருத்து? -ஆம்! 1. ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிலே தமிழ்மொழி கற்பித்தலில் எய்தியுள்ள முன்னேற்றம் யாது? - புதிய பாடத்திட்டத்தின் படி, புதிய / திருந்திய பாட நூல்கள் எழுதி வெளியிடப் படுகின்றன. 12. வேறு ஏதாவது குறிப்புகள்? - பிறமொழிச் சூழலில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு "இரண்டாம் மொழி’ கற்பிக்கும் கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் (தாய்மொழி அல்ல) நூல்கள் அமைதல் வேண்டும்.
மொரிசியஸிலே அரசமொழி ஆங்கிலம் - ஆனால் மிகப்பரவலாக உள்ளமொழி பிரெஞ்சு. பொதுமக்களின் சமுதாய மொழி கிறியோல். கற்பித்தல் மொழி ஆங்கிலம். ஆனால் எழுத்துமொழி பரவலாக பிரெஞ்சு மொழியே. பெரும்பாலான மொரிசியர்கள் தமது இனமொழியும் பேசுவதுண்டு - இந்தி, சீனமொழி, உருது போன்றவை.
211

Page 108
பல்லின மக்கள் வாழும் மொரிசியஸில் தமிழர் மிகவும் கெளரவமாக வாழ்ந்துள்ளனர்; இன்றும் அப்படியே. இப்பொழுது கதிரேஸ்பிள்ளை, மூர்த்தி சந்நாசி ஆகிய இரு தமிழர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்கிறார்கள். நாட்டின் உதவி ஜனாதிபதியாக கெளரவ ஆவி செட்டியார் பதவி வகிக்கிறார். பிரதம நீதியரசராக கெளரவ அரிரங்கப் பிள்ளை விளங்குகிறார். ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டிலே ஒரு லட்சம் தமிழர் கூட இல்லை எனினும் அவர்கள் கெளரவமாக வாழ்ந்து நாட்டின் அபிவிருத்திக்கும் அரசியலுக்கும் அளிக்கும் பங்கு மிகவும் போற்றுதற்குரியது. அரசும் அவர்களுக்குக் கெளரவம் அளிக்கிறது. உதாரணமாக, தலைநகரின் பல வீதிகளின் தமிழ்ப் பெயர்கள் அதற்குச் சான்று.
வீதிகள் மட்டுமல்ல; தலைநகரில் உள்ள கண் வைத்தியசாலையுமே தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பெயரைத் தாங்கி நிற்கிறது என்றால் பலர் வியப்படையலாம். கண் வைத்திய சாலைக்கு அப்பெயர்
212
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை *--
சூட்டி சிலை அமைத்த வைபவத்திலே மக்களின் ஆர்வத்தையும் பெருமிதத்தையும் நேரில் கண்ட வாய்ப்பும் உணர்வும் சொல்லில் அடங்கா.
மொரிசியஸில் காலடி வைத்த காலம் முதலாகத் தமிழர் தம் சமய கலாசார அடையாளங்களையும் பாரம்பரியத்தையும் நிலை நாட்டினர் என்கிறார் ரி. அம்மிஜன் என்னும் எழுத்தாளர். கல்வி அமைச்சின் கலை கலா சாரப் பிரிவு, மகாத்மா காந்தி 'கல்வி நிறுவனம் ஆகியன தமிழ்க் கலாசார விருத்தியில் குறிப்பிடத் தக்க பங்களிப்புச் செய்
கின்றன.
1876ஆம் ஆண்டு முதலாக காசுத்தாள்களில் ‘தமிழ்’ இடம்பெற்றுள்ளது என்பதைப் பலர் அறிந் திருக்க மாட்டார்கள்.
அன்று 1 ரூபா, 5 ரூபா, 10 ரூபாத் தாள்களில்
இருந்த தமிழ் இன்று 5
213

Page 109
ரூபா, 10 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 200 ரூபா, 500 ரூபாத் தாள்களில் உள்ளது. தமிழ் எழுத்து மட்டுமல்ல; தமிழ் இலக்கங்களும் (உதாரணம் 50) தாள்களில் உள்ளன என்பதை இங்கு தரப்பட்டுள்ள படம் காட்டுகிறது. அண்மையில் 'இந்தி எழுத்துக்குப் பின்னாலே தமிழை அச்சிட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப் பட்டது என்றும் ‘தேசிய எதிர்ப்பு’ மேற்கொள்ளப்பட்டு, அம்முயற்சி தடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றார் அங்கு கல்வி அதிகாரியாக உள்ள கே. சொர்ணம். தமிழுணர்வு அத்துணை உயிர்ப்புடன் உள்ளது!
1985 ஆண்டிலே, மொரி சியஸிற்குத் தமிழர் வந்த 250 ஆவது ஆண்டுவிழா மிகவும் புனிதமான முறையிலே கொண்டாடப்பட்டது. கம்பீர மான உயர்ந்த "தமிழ்க் கோபு b” (Tamil Monument) 6iņu றோஸ் - ஹில் பிளாசாவில் நிறுவப்பட்டதே அப்புதின DfT67 முறையாகும். 250 ஆண்டுகளுக்கு முன்பு வந்து மொரிசியஸைத் தாய்நாடாக மதித்து வாழும் தமிழ் பேசும் இந்தியர்களின் நினைவுச் சின்னமாக அது எழுந்து நிற்கிறது.
214
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
அன்று மொரிசியஸிற்குச் சென்ற முதலாவது’ தலைமுறையினரின் வழித்தோன்றல்களே இன்று அங்கு வாழ்கின்றனர். அன்று சென்றவர்களுக்கும் இன்று ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவருக்குமிடையே பல வித்தியாசங்கள் உண்டென்பது ஏதோ உண்மைதான்.
அன்று சென்றவர்கள் சாதாரண தொழிலாள ராகச் சென்று அபிவிருத்தி அடையாத சூழலிலே உழைத்தார்கள். 250 ஆண்டுகளுக்கு முன் உலக நிலை வேறு. இன்று சென்ற ஈழத் தமிழர் அபிவிருத்தி அடைந்த நாடுகளுள்ளே சென்று தொழில் தேடி வாழ வேண்டிய நில்ையில் உள்ளனர். இன்று உலக நிலை வேறு. அன்று மொரிசியஸிற்குச் சென்றவர்கள் தமது பெயர்களை மாற்றவில்லை; ஆலயங்கள் ஏராளம். சமய விழாக்கள் தாராளம். காலத்தால் அழியாதவாறு சமய ая6ртағтлт அடையாளங்களைக் கட்டிக் காத்து வந்துள்ளனர். அன்றைய சூழலும் அவர்கள் வாழ்ந்த சமூகமும் அதற்குச் சாதகமாக அமைந்தன. ஆனால், இன்று 250 ஆண்டுகளின் பின் உலகுள்ள நிலை வேறு. அபிவிருத்தி அடைந்த நாட்டுச் சூழல் வேறு ஆக, மொரிசியஸ் தமிழர்களுக்குக் கிடைத்த சாதகமான சூழல் இக்காலத்திற் சென்ற ஈழத்தமிழருக்கு இல்லை என்றே கூறல் வேண்டும். சென்ற மக்களின் குறிக்கோள்களும் வேறாக அமைதல் எதிர்பார்க்க வேண்டியதே. அதனால் இன்றும் ஓர் அரை நூற்றாண்டின் பின், உலகளாவிய ஈழத்தமிழரின் தலைமுறையினர் எப்படி வாழ்வார்கள் என்று தீர்க்க
215

Page 110
-- Φ -9 ιδι9 ---
தரிசனம் கூறுதல் இலகுவல்ல.
1989இல், ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மொரிசியஸில் நடைபெற்றது. அன்றைய கல்வி கலை கலாசார அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் மாநாட்டை முன்னின்று நடத்தினார். அவருடன் ஒரு மணி நேரம் தனியாகக் கலந்துரையாட நேர்ந்தது. அப்பொழுது, தன் சட்டைப்பையில் வைத்திருந்த தங்க 'வேல்’ ஒன்றைக்காட்டி, “முருகனே என் காவலன்’ என்று பக்தி ததும்பச் சொன்னார். மேலும் அவர் கூறிய ஒரு கருத்து, நாம் இன்று சற்று உன்னிப்பாக ஆராயத் தகுந்தது.
நான் தமிழன், எனது சமயத்தை நான் கைவிடவில்லை. FOI I அனுஷ்டானங்களை மறந்து விடவில்லை. ஆனால், தமிழ் பேச முடியாத நிலையில் உள்ளேன். அது
எனக்குக் கவலையாக இருக்கிறது. பேச்சுத் தமிழை வளர்ப்பதற்கும் கற்பதை இலகுவாக்கு வதற்கும் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தினால் என்ன? பாஷா மலேசியா, பாஷா இந்தோனேஷியா அவ்வாறு மொழியை இலகுவாக்கிப் பெற்ற பயன் பெரிது. நாமும் அவ்வண் செய்தல் சாத்தியமா?”
216
 

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
இவ்வாறு அவர் கேட்ட நாள் முதலாக அந்தக் கருத்துப் பற்றி நான் சிந்தித்ததுண்டு. 'தமிழில் உள்ள எழுத்துக்கள் அதிகம். அதனால் தான் எனக்குத் தமிழ் படிப்பது சிரமமாக இருக்கிறது என்று ‘அன்னிய மண்ணில் பிறந்து வளரும் பல சிறுவர்கள் கூறியதை நான் அறிவேன். ஆக, அன்னிய சூழலில் வாழும் இளைய தலைமுறையினர் தமிழ் பேச வைப்பதற்கு அந்த உபாயத்தைப் பயன்படுத்துதல் உதவுமா? பேச்சுப் போட்டிகளிற் பிள்ளைகள் பங்கு பற்றுவதற்கு அதே உபாயம் நாடுகளிற் கையாளப்படுவதும் உண்மை. அதை விரிவுபடுத்துதல் தவறாகுமா?
217

Page 111
16. எங்கிருந்தாலும் வாழ்க!
ஈழத் தமிழ்மகனே என் அருமைச் சோதரனே வாழப் பிறந்ததமிழ் வாரிசுவே கேளப்பா கேளப்பா கேள்நின்று கேளாமல் ஓடாதே கூழுக்குப் பாடவந்த கூத்தாடி நான் அல்லன்.
கூத்தாடி நான் அல்லன் கொல்லும் தமிழ் உணர்வால் ஆத்தாள் அன்றுாட்டிவிட்ட ஆரமுதப் பாற்சுவையால் சொல்லிற் சிலபொருளும் சொற்சுவையிற் பல்பொருளும் சொல்லி அழி நெஞ்சின் சுமை இறக்கும் பாவலன்யான்.
நெஞ்சிற் சுமந்து என்நினைவிற் கனத்தவற்றை கொஞ்சம் பகிர்வதற்கே கூப்பிட்டேன், வா கண்ணா வா கண்ணா என்றவுடன் வந்தென் எதிரினிலே ஆவலுடன் நிற்கின்றாய், ஆமாம் நீ உத்தமனே!
வாசற் படிதாண்டி வா உள்ளே வந்துட்கார் ஆசை முகங் கண்டவுடன் அந்தரத்திற் சொல்லுகிறேன் தாவடியைச் சேர்ந்த எங்கள் தாமோரி சங்கூதக் காவடியைத் தூக்கி அன்று கந்தனிடம் சென்றதுபோல், பாவடியைத் தூக்கிமனப் பாரம் இறக்குகிறேன் ஏ, விடு என்று பாதியிலே எழுந்தோடிச் செல்லாதே காலஞ் சூழன்று வரக் காசினியே மாறிவர
218

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
காலஞ் சூழன்று வரக் காசினியே மாறிவர கோலம் புதிதுவரக் கொள்கைதடு மாறாமல்,
ஞாலத்துக் கேற்றபுது ஞானத் தெளிவுடனே வாலை வடித்தெடுக்கும் வம்மிசத்தில் வந்தவர்யாம் நாலுபத்து மந்திரிக்கு நாற்காலி தூக்கிவைத்தும் காலணியின் தூசுதட்டிக் கைகட்டி ஏவல் செய்தும்
ஆலவட்டம் ஆட்டி அடிதழுவி ஆசிபெறக் கூலிக்கு மாரடித்த கும்பலுகள் போலன்றி. சிந்தைத் தெளிவாலும் செந்தமிழாள் ஈர்ப்பாலும் உந்தும் உணர்வாலும் ஊரிற் குரலெழுப்பி,
"வாழப் பிறந்துள நாம் வாழத்தான் போகின்றோம் ஆளப் பிறந்த தமிழ் ஆளத்தான் போகுதென்று" சொந்தமென நின்ற எங்கள் சுந்தரியை வாழவைக்க வந்ததெலாம் ஏற்றுநின்ற வம்மிசத்தில் வந்தவர்யாம்.
வம்மிசத்தை விட்டிடுவோம் வாழ்வியலைப் பார்த்திடுவோம் -
ஊர்தேசம் விட்டேகி உலகிற் சிதறுண்டோர் நேருக்கு நேர் இல்லை நெஞ்சில் தொடருகிறார் புத்தம் புதுச் சூழல் புரிந்தாங் கிணங்குதற்கு எத்தனையாய்த் தேவைபல எம்மவரை மாய்க்கிறது? பெற்றெடுத்த செல்வர் பிறராய்த் திரிகின்றார் கற்ற தமிழ் மெல்லமெல்லக் காம்பொடித்து வீழ்கிறது பரந்து விரியுலகில் பலநாட்டில் நம்மவர்கள் சரிந்து விழுஞ் சந்ததியைத் தாங்கத் தவிக்கின்றார்!
இந்த நினைவுகளில் ஈடாடி, சோதரனே சொந்தம்நீ என்றுன் துணைதேடும் வேளையிலும் சொந்தம் எங்கள் மண்ணென்று சொல்லியவர் வீரத்தால்
219

Page 112
நந்தமிழாள் சந்ததியில் நம்பிக்கை உண்டெனக்கு அந்த ஒரு நம்பிக்கை
ஆதரவாய் நிற்கையிலே, கண்ணி வெடியதிரக் காதலியாள் கட்டி யழ மண்ணை மதித்திருந்தோர் மாத்திரையில் என்னானார்? சுட்ட வெடியூரைச் சுடுகாடாய் மாற்றுகையில் எட்டுத் திசைகளிலும் எதிரொலித்து மீளுகையில்
வீடுகளோ கற்கும்பல் வீதிகளோ பாலைவனம் தேடிவைத்த சொத்தெல்லாம் தெருவில் சிதறிவிழ பட்டிப் பசுவைவிட்டுப் பால்கறந்த செம்புவிட்டு நட்ட பயிரைவிட்டு நாற்றுவைத்த மேடைவிட்டு
முட்டையிட்ட கோழிவிட்டு மூட்டை முடிச்சுடனே கட்டி அழும் பாலருடன் கால்நடையாய்ச் சென்றார்கள் ஈற்றில் அவர்கள் எலாம் ஈடேறிச் சென்றாரா? ஆற்றில் கடலில் அலையுடனே சென்றாரா?
சாற்று தற்கு ஏற்ற நல்ல
சாட்சி எதும் இல்லாமல்
தேற்றத் துணையும் இன்றித் தேம்புவர் எத்தனைபேர்? இத்தனையும் நான் எண்ணி இன்னும் பல எண்ணி அத்தலத்தில் நின்றே அடி சாய்ந்தோர் சால்பெண்ணி ஊர்தேசம் விட்ட உலகர் நிலை எண்ணிச் சேரும் தமிழைச் சிறைவைத்து ஈற்றினிலே
ஆற்றாமல் நெஞ்சழுத்தம் ஆர்கலிபோல் உந்துகையில் தேற்றித் துணைபுரியத் தேடிவந்தாய் சோதரனே! தேடிவந்தென் வாயிலிலே செந்தமிழன் என்றுணர்த்தி
ஓடாமல் கேட்டுநின்றாய் உள்ளக் கொதிப்படங்க!
உள்ளக் கொதிப்படங்க
220

-அ யாதும் ஊரே ஒரு யாத்திரை 40
உற்றென்னை கேட்டதனால், என்கமையிற் பாதியைநீ இன்றேற்றாய் கைம்மாறாய் என்செய்ய வல்லேன் இதயத்தால் வாழ்த்துகிறேன் எங்கிருந்தும் வாழியநி என்கண்ணா, நீ வாழ்க அங்கென்றோ இங்கென்றோ ஆ. நின்னூர் யாதென்றோ
சங்கத் தமிழானை சத்தியமாய்ப் பேதமில்லை எங்கிருந்தும் வாழியரீ எப்படியும் வாழியநீ வாழியநீ என்றவுடன் வழிதொடர எண்ணுகிறாய் ஈழத் தமிழ்மகனே இன்னொன்று கேட்கின்றேன்.
போகமுன்னே ஆமென்று பொன்பூச் சொரிந்தாற்றான் தாகம் தணியுமடா சந்ததியும் வாழுமடா!
தமிழரென எங்கள் சந்ததியார் வாழ்வதற்கு அமிழ்தத் தமிழே அடையாளம் ஆகையினால் - சொந்தத் தமிழாளும் சுந்தரியாள் சால்புகளும் சந்ததியார் கையில் சமர்ப்பித்தல் நின்கடனாம்! நின்நிதியம் என்று நீ வளர்த்த செல்வத்தை சின்னவரின் நாவில் திரியவழி செய்யப்பா!
இங்கிதமாய்ச் சொன்னேன் இனியென்ன, போய்வா நீ எங்கிருந்தும் வாழ்கவென இதயத்தால் வாழ்த்துகிறேன்!
221

Page 113
2.
14.
. சிற்றம்பலம், கலாநிதி. சி.க.
. நடராசா, கலாநிதி க. செ. (பதிப்பாசிரியர்
ஆதார நூல்கள்
2.
யாழ்ப்பாணம், தொன்மை வரலாறு University of Jaffna Publication, Thirunelvely (1993)
4.
speALTUTLsò (1980) The colombo Tamil Sangam, 7, 57th Lane, Colombo 6
இராசதுரை, அன்னலட்சுமி (யாழ் நங்கை 6. இரு பக்கங்கள் (கவிதைத் தொகுப்பு) 1992 குறிஞ்சி வெளியீடு, 12925, ஜெம்பட்டா வீதி, கொழும்பு - 13
"அம்பி" மருத்துவத் தமிழ் முன்னோடி . டாக்டர் கிறீன் (1995) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,
8.
சொர்ணம், உலக நாதன். B.A மொரிசியஸில் தமிழும் தமிழரும் (1989) கலைமகள் பதிப்பக வெளியீடு, வாலே தே பிரத்து,
ரூபாட்லுாயி.
S. Durai Raja Singam A Hundred Years of Ceylonese in Malaysia and Singapore (1867-1967)
The Australian Encyclopedia (vol J)
Encyclopedia Americana (vols)
222
0.
13.
15.
திருச்செல்வம். மு. ஈழத் தமிழர் இறைமை (தமிழில்: க. சச்சிதானந்தன்) “காந்தளகம்", 213, காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம் (1977) 247, கிருட்டினவேனி வீதி, சென்னை - 600 029.
ankò, p. pasioLog, B.A. (Hons)
(I, II, III, IV) (1998)
றிசான பப்ளிஷர்ஸ், அப்துல்லா ஷொப்பிங்
கம்ப்ளக்ஸ், கொழும்பு 11
கனகசபாபதி, பொன்னையா பெற்றோர் பிள்ளைகள் உளவியல் (1998) அகிலன் அசோஷியேற்ஸ், PO Box 3, Station F; Toronto, ON
Amwigan, T.
Tamils in Mauritius (1989)
Proag Printing Ltd, Port Louis. Mauritius
The New Encyclopedia Poritanica (vol. 3)
The World Book Encyclopedia (vo4)
பாரதி பாடல்

ஆதார சஞ்சிகைகள் மற்றும் வெளியீடுகள்.
1. தமிழர் தகவல்
மாத சஞ்சிகை (பல இதழ்கள்) ரொறன்ரோ, கனடா.
இருபது ஆண்டு நிறைவு மலர் (1997) சிட்னி, அவுஸ்திரேலியா,
. GaGineiasa (ayouga 1997)
தமிழ்ப் பதிப்பகம் ஆக்லாந்து, நியூசிலாந்து.
தமிழ் முரசு (வாரமலர்) சிங்கப்பூர் (பல இதழ்கள்) ஆக்லாந்து, நியூசிலாந்து.
. நம்நாடு
வாரப் பத்திரிகை (பல இதழ்கள்) ரொறன்ரோ, கனடா.
2. இருபதாம் நூற்றாண்டுத் தமிழன்
கிழக்கும் - மேற்கும் (1997) தமிழர் நலன்புரிச் சங்கம், லண்டன்.
. இனியும் சூல் கொள்
23வது இலக்கியச் சந்திப்பு மலர் (செப் 1997) Garges Les Gonesse. France
. உதயம்
மாத சஞ்சிகை (பல இதழ்கள்) மெல்பன், அவுஸ்திரேலியா.
8. உதயன்
வாரப் பத்திரிகை (பல இதழ்கள்) ரொறன்ரோ, கனடா.
10. தமிழ் அரங்கக் கலைகள்
‘ஆய்வரங்கு வெளியீடு (1998) சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் இலக்கியப் பவர் சிட்னி, அவுஸ்திரேலியா.

Page 114
அம்பியின்
5.
நூல்கள்
கிறீனின் அடிச்சுவடு (வரலாறு)
யாழ் இலக்கிய வட்டம் (1967)
அம்பிப் பாடல் (சிறுவர் பாடல்) வட இலங்கை தமிழ் நூற்பதிப்பகம் (1969)
வேதாளம் சொன்ன கதை செய்யுள் களம், கொழும்பு (1970)
கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்) கொழும்புத் தமிழ்ச் சங்கம் (1992)
Ambi's Lingering Memories Poetry in English, (1993) College of Distance Education, Papua New Guinea
அம்பி கவிதைகள்
மித்ர வெளியீடு, 1994
மருத்துவத் தமிழ் முன்னோடி (வரலாறு)
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1995)
10.
Ambi's Lingering Memories
Revised and Enlarged (1996)
Scientific Tamil Pioneer (Research)
Dhuhlasi Publications, Colombo (1998)
World Wide Tamils (Research)
Ahilan Associates, Toronto (1999)
11.
12.
A String of Pearls (Poetry in English)
Dhuhlasi Publications, Papua New Guinea (2001)
அம்பி மழலை (அச்சில்)
224


Page 115