கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு

Page 1
அ ஆ இ
25లాలీ IT Tశక్తి
 

|--# =|-|×|-|×| | ||- -„, , , , , ! ! ! ! . Nosae) : ( )
|-| \,||-! | _No|
---- _ _
DokoTDITöö
另

Page 2


Page 3

யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு
சி. க. சிற்றம்பலம், எம். ஏ., பிஎச். டி.
தலைவர், வரலாற்றுத்துறை
LITILIGIII பல்கலைக்கழக வெளியீடு
திருநெல்வேலி
1 S9 S9 GB

Page 4

YALPPANAM TONMA VARALARU)
(Jaffna - Ancient History)
S. K. Sitrampalam, M.A., Ph. D.
Head, Department of History
University of Jaffna Publication Thirunelvely 1993

Page 5
யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு
ஆக்கியோன் : சி. க. சிற்றம்பலம், எம். ஏ., பி எச். டி.
முதற்பதிப்பு: 1993 - 10 - 01
c யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு  ெயாழ்ப்பாணம் ISBN : 955 — 91194 — 06 — 2 அச்சுப்பதிவு : மஹாத்மா அச்சகம்,
ஏழாலை,
யாழ்ப்பாணம்,
பூனி லங்கா.
அட்டைப்படம் : சசி
விலை : ரூபா
Y AL. P P A N A M — T O N M A I V A R A L7AR U (JAFFNA - ANCIENT HISTORY)
AUTHOR : S. K. SITRAM PALAM, M. A., Ph. D.
FIRST EDITION : 1993- 10 - 01
University of Jaffna Publication - JAFFNA
I S B N : 955 - 91.94 - 06 - 2
PRINTERS: MAHATHMA PRINTING WORKS,
EARLALAI, JAFFNA, SRI LANKA.
COVER DESIGN : SASI
PRICE: Rs.
 

சமர்ப்பணம்
மங்குல்படி தெங்குபலாத் தாளி சோலை
பல்வளஞ்சூழ் நவாலிநகர்ப் பதியிற் றோன்றிச் செந்தமிழும் ஆங்கிலமும் சிறக்கக் கற்றெம்
சிந்தைதனை மகிழ்வித்தோன்; வரலா றென்னும் அந்தமிலாப் பாற்கடலைக் கடைந்தே முன்னாள்
அமிழ்தனைய நூலளித்தோன் முதலியாரெம் சிந்தனையா ளன் (இ) ராச நாய கச்செந்
திருவடிக்குக் காணிக்கை யாகு மிந்நூல்

Page 6

Ja psih
அணிந்துரை
நம்முரை
வரலாற்று அறிமுகம்
வரலாற்றுக்கு முற்பட்ட
வரலாற்றுதய காலங்கள்
வரலாற்றுக் காலம் 1
வரலாற்றுக் காலம் 11
வரலாற்றுக் காலம் II
மக்களும் மொழியும்
வாழ்வும் வளமும்
சமூகமும் சமயமும்
உசாவியவை
விளக்கப் படங்களின் அட்டவணை
விளக்கப் படங்கள்
சொல்லடைவு
计
iii - vi
vii - xviii
6S
168 ـــــے 644
,265 ۔۔ 69
266 - 396
397一44名
14 5 --سے 443
515 -59:9 ܥ
600一6盛&
623 - 6 29
63 - 741
743 - 764

Page 7

அறிமுகம்
நமது பல்கலைக்கழகம் தன்னைச் சூழவுள்ள சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை தொடர்பான சிறப்பியல்பு களையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதிலும் நூல்களை வெளிக் கொணர்வதிலும் முனைந்து நிற்பது யாவரும் அறிந்ததே இந்த வகையில், நமது வரலாற்றினை மீட்டெடுத்து உறுதி செய்யும் முயற்சி இன்றியமையாத ஒன்றாகும். ஏற்கனவே நமது அறிஞர்களின் பங்களிப்புகளைத் தொகுத்து அமைக்கப் பட்ட யாழ்ப்பாண இராச்சியம் என்னும் நூல் வெளிவந்து விட்டது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொட்டு, கி. பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசோச்சிய யாழ்ப்பாண அரசின் வரலாறே அந்த நூலில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
மேற்கூறிய நூலின் பதிப்பாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி சி * சிற்றம்பலம் அவர்கள் ஆவர். அவர் இப்பொழுது, யாழ்ப்" இராச்சிய காலத்துக்கு முன்னருள்ள வடபகுதி வரலாற்றை *யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு" என்னும் நூலி" எழுதியுள்ளார். இந்த நூல் நமது பல்கலைக்கழக வெளியீ டாக இப்பொழுது பிரசுரமாகின்றது. இந் நூற்றாண்டில் முதலி யார் இராசநாயகம், நல்லூர் ஞானப்பிரகாசர் போன்றோர் இக்காலப் பகுதி பற்றி ஆராய்ந்துள்ளனராயினும், காலத்திற் கிடைக்காத பல தொல்லியற் சான்றுகளின் துணை புடன் இப்பகுதி ஆராயப்படுவது இப்போதைய நூலுக்குரிய சிறப்பமிசமாகும்.
இத்தகைய பங்களிப்புகள் தொடர வேண்டும். அப்பொழுது பெருமைகளை
அவர்கள்
தான் நம்மவர் நம் பண்பாட்டின் அருமை
அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.
பேராசிரியர் , அ. துரைராஜா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் துணைவேந்தர்
திருநெல்வேலி.
l993 - O - 01.
( i)

Page 8
அணிந்துரை
கடந்த சில ஆண்டுகளாக நமது துணைவேந்தர் பேராசி ரியர் அ. துரைராஜா அவர்கள் ஆரம்பித்து வைத்த ஆராய்ச்சி நிதியத்தின் மூலமாக நமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல ஆய்வு நூல்களை அச்சு வாகனமேற்றும் வசதி கிடைத்துள் ளது. நமது வரலாற்றில் மிகமிக நெருக்கடியான காலகட்ட மிது. இக்காலகட்டத்தில் இத்தகைய ஆய்வுகள் முன்னெடுத்
துச் செல்லப்படல் மிகமிக அவசியமானது. இத்தகைய முயற்சிகளில் நமது பிரதேசத்தின் வரலாறு பற்றிய ஆய்வில் அக்கறை காட்டுவது நமது கடமையாகும். இப்பணியை
நிறைவேற்றும் பணியில் நமது பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முனைந்து செயற்படுவது வரவேற்கத்தக்கது.
போத்துக்கேயர் ஈழம் வந்தபோது இது மூன்று அரசுக ளாகத் துண்டுபட்டிருந்தது. இவை முறையே யாழ்ப்பாணம்,
கோட்டை, கண்டி அரசுகளாகும். இத்தகைய அரசுகளில் ஒன்றாகிய நமது பிரதேசத்தில் மேன்மைபெற்று விளங்கிய யாழ்ப்பாண அரசின் வரலாற்றினைக் கடந்த ஆண்டு
யாழ்ப்பாண இராச்சியம் " என்ற தலையங்கத்திற் பதிப்பித்த நமது பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராகிய கலாநிதி சி. க. சிற்றம்பலம் அவர்கள், இவ்விராச்சியத்தின் தோற்றத்திற்குப் பின்னணியாகவுள்ள வரலாற்றினை இவ் வாண்டு யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு" என இந் நூலுருவிலே தந்துள்ளார்.
இப்பணியை நிறைவேற்றுவதிற் கலாநிதி சி. க. சிற்றம்பலம் அவர்கள் சகல விதத்திலுந் தகுதி வாய்ந்தவர் ஆவர். இத் தகைய ஆய்வு எதிர்காலத்தில் இப்பகுதி பற்றிய விரிவான ஆய்வுகளுக்குக் கால்கோளாக அமையும் என நாம் எதிர் பார்க்கலாம். இத்தகைய முயற்சிகளுக்கு நமது பல்கலைக் கழகம் என்றுந் துணைநிற்கும்.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலைப்பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
1993 - 10 - Ol.
( ii )

நம்முரை
நாம் ஏற்கனவே பதிப்பித்த “யாழ்ப்பாண இராச்சியம்" என்ற நூல் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு எழுச்சி பெற்றுப் பின் னர் கி. பி. 1619இல் போத்துக்கேயரிடம் ஆட்சியுரிமையை இழந்த யாழ்ப்பாண அரசு பற்றியதாகும். பிரித்தானியரால் 1873ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தற்போதைய வட மாகாணப் பகுதி இவ்வரசின் மேலாணைக்கு உட்பட்டிருந்தது. நமது இந்நூலோவெனில் இவ்வரசின் காலத்திற்கு முன்ன ருள்ள இப்பகுதியின் வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண் டுள்ளது. எனினும் இப்பிராந்தியம் பெளதீக ரீதியாக மூன்று பிரதான கூறுகளான யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதி, பெருநிலப்பரப்பு (வன்னி) ஆகியனவற்றை உள்ளடக்கிக் காணப்படுவதால் இம்மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான தலைப்பை இதற்களிப்பது சிரமமான பணியா கின்றது. எனினும் வடபகுதியைப் பொறுத்த மட்டில் *யாழ்ப்பாணம்" என்ற சொல் உள்ளூரில் மட்டுமன்றிச் சர்வ தேச ரீதியிலும் நன்கு பரீட்சியமான பதமாகக் காணப்படுவ தாலும், தேவை ஏற்படும்போது பொதுவழக்கிற் குடா நாட்டை மட்டுமன்றி அதற்கப்பாற் பெருநிலப் பரப்பில் வாழுந் தமிழ் மக்களையுங் குறிக்குங் குறியீடாகப் பயன் படுத்தப்பட்டு வருவதாலும் இந்நூலுக்கு ' யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு ' எனப் பெயரிடப்பட்டுள்ளது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது.
இந்நூல் நமது மக்கள் பல்வேறு இன்னல்கள் மத்தியில் நமது தனித்துவத்தினைக் காக்க முனைந்து செயற்படும் இக்
காலகட்டத்தில் வெளி வரு வ து அப்பரம்பொருளின் கடாட்சந் தவிர வேறொன்றுமில்லை. பல்வேறு சவால்கள் மத்தியில் தளராத, உறுதியான உள்ளப்பாங்கினை
நல்கி நிழல்போல் நம்மைத் தொடரும் நமது அராலியூர்க் கரைப்பிட்டி விநாயகரின் அருட்கடாட்சமும், தினமும் நமக்
( iii )

Page 9
குத் திசைகாட்டியாக் நின்று நம்மை இயக்கும் பரமேஸ்வர
னின் அருட்கருணையும் நம்மை வழிகாட்டின, வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன என்றாற் புனைந்துரையன்று. நம்மை
மட்டுமன்றி நம்மனைவரையுங் காத்து நிற்பது அப்பரங் கருணையே.
இந்நூல் வெளிவருவதற்குக் கால்கோளாக அமைந்தவர் நமது பெருமதிப்பிற்குரிய துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களே என்றால் மிகையாகாது. இதற்கு முன்னர் நாம் பதிப்பித்த "யாழ்ப்பாண இராச்சியம்" என்ற நூலைத் தயாரிக்கும்படி அவர் கூறியபோது அவ்விராச்சியத் திற்கு ஒரு பின்னணியாக அமைந்த கட்டுரையே பின்னர் இந்நூலாக மலர்ந்துள்ளது. இது நமது துணைவேந்தரின் ஆராய்ச்சி விருப்பின் அறுவடையாகும். என்றும் ஆய்வுப்பணி களை ஊக்குவிக்குந் துணைவேந்தர் அவர்களுக்கு, இதனை எழுதுவதற்கு அளித்த உற்சாகத்திற்கும், இதற்குரிய அறிமுக வுரையை நல்கியதற்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு நமது கலைப்பீடாதிபதி பேராசிரி யர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் இந்நூலின் ஆக்கத் திற்குக் காட்டிய கரிசனை அளப்பரியது. அது மட்டுமன்றி இதற்குரிய அணிந்து  ைர  ைய நல்கிய அவருக்கும் நமது நன்றிகள்.
அடுத்து இந்நூல் பிரசவமாகும் வரை இதனை ஆக்கிப் படைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்தல் நமது தலை யாய கடமையாகின்றது. கைப்பிரதியாக இருந்த இதனை எதுவித மறுப்புமின்றிக் காலநேர அட்டவணையுமின்றிக் கடமையுணர்வுடன் தட்டச்சிற் பொறித்த செல்வி சுமித்திரா குமாருவுக்கு முதலில் நமது நன்றிகள். கைப்பிரதியோடு தட்டச்சுப் பிரதிகளை ஒப்பிட்டு நோக்கும் பணியை ஆரம்பத்திற் செல்விகள் உமாசங்கரி முத்துக்குமாருவும் பின்னர் இதன் முழுப் பொறுப்பையும் ஏற்று நிறைவேற்றிய யசோதா பத்மநாதன் ஆகியோருக்கும் நமது நன்றிகள். இவர்கள் இரு வரும் நமது துறையைச் சேர்ந்த கட்டுரையாசிரியர்களாவர். தட்டச்சுப் பிரதி பல்கலைக்கழக வெளியீடாக அங்கீகாரம்
( iv )

பெறுவது அடுத்த கட்டமாகியது. இப்பரிசீலனைக் குழுவின் அங்கத்தவர்களாக இருந்து வேண்டிய ஆலோசனைகளை நல்கி, இந்நூல் இவ்வுருவில் மலருவதற்கு அச்சாணியாகவிருந்த மதிப்பிற்குரிய பேராசிரியர்கள் சு. சுசீந்திரராசா, வி. சிவசாமி ஆகியோருக்கு நமது உளங்கனிந்த நன்றிகள். தட்டச்சுப் பிரதி அச்சுவாகனமேறுவது இலகுவன்று. இப்பணியில் உதவிய நமது சிரேஷ்ட உதவிப் பதிவாளர் திரு. இ. முருகையன் அவர்களுக்கு நமது நன்றிகள். எனினும் இப்பிரதியைத் திறம்பட அச்சுவாகனமேற்றிய பெருமை மஹாத்மா அச்சகத் தாருக்கும் அதன் உரிமையாளர் திரு. ந. தெய்வேந்திரன் அவர் களுக்குமே உரியது. போர்மேகங்கள் சூழ்ந்துள்ள இக்கால கட்டத்திற் பல்வகை நெருக்கடிகள் மலிந்த இவ்வேளையிலே தளராது உறுதியுடன் இப்பணியை நிறைவேற்றித் தந்த அச்சக உரிமையாளருக்கும், விசேடமாக இப்பணியிற் சுறுசுறுப் பாகவும் விழிப்பாகவுஞ் செயற்பட்ட ஊழியர்களுக்கும் நமது நன்றிகள்.
அச்சுயந்திரசாலையிற் பிரதி இருக்கும் போது மூலப்பிரதி யுடன் அச்சுப்பிரதியை ஒப்புநோக்கும் பணி கடும் பணியாகும். இப்பெரும் பணியை உறுதியுடன் நின்று ஒப்பேற்றி வைத்த திரு. வ. கோவிந்தபிள்ளைக்கும், செல்வி யசோதா பத்மநாத னுக்கும் நமது நன்றிகள். யசோதாவின் பணி இத்துடன் முற்றுப் பெறவில்லை. இந்நூலுக்குரிய சொல்லடைவைச் சிறப்பாகத் தயாரித்தது மட்டுமன்றி இந்நூல் முழுமை பெறு வதற்கு எதுவித சளைப்புமின்றிப் பலவாறு பங்களிப்புச் செய்த யசோதா பத்மநாதன் நன்றியுணர்வோடு நினைவு கூர வேண்டியவராவார். சொல்லடைவினை ஒப்பு நோக்கும் பணி யில் உதவிய நமது துறையைச் சேர்ந்த கட்டுரையாசிரியரான திரு. கி. சிவகணேசனுக்கும் நமது நன்றிகள்.
இறுதியாக, இந்நூலின் ஆக்கத்திற்குப் பலவாறு உதவி யோரை நன்றியுணர்வுடன் நினைவுகூருவதும் நமது கடமை யாகின்றது. இதற்குரிய அட்டைப்படத்தினையும், இதில் இடம் பெற்றுள்ள வரைபடங்களையுஞ் சிறப்பாகப் படைத்த நமது
( v J)

Page 10
மாணவன் சசீதரன், புளொக்கில் சேர்க்க வேண்டிய படங் களை உருவாக்கிய மழலைப்பட நிறுவனத்தினர், புளொக் கைத் தயாரிப்பதில் உதவிய கொழும்பைச் சேர்ந்த பிரேம தாஸா நிறுவனத்தினர், ஈழநாத நிறுவனத்தினர், இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள சில "புளொக்குகளைத் தந்துதவியதுடன் பல்வேறு உதவிகளைப் புரிந்த நமது துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ப. புஷ்பரட்ணம், இதன் ஆக்கத் திற்குப் பலவாறு உதவிய நமது நூலகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ரோகினி பரராஜசிங்கம், நமது பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திரு. ஏ. ஜே. கனகரத்தினா, வடமொழித்துறையின் தலைவர் பேரா சிரியர் வி. சிவசாமி, கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் வ. ஆறுமுகம், மொழியியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி இ. கைலைநாதன், இந்து நாகரிகத்துறைத் தலைவர் க லா நிதி ப. கோபாலகிருஷ்ணன், இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் திரு. ப. கணேசலிங்கம், புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் செ. பாலச்சந்திரன், புவியியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் திரு. இரா. சிவச்சந்திரன், திரு. எஸ். ரி. பி. இராஜேஸ்வரன், திரு. எ. சூசை, இத்துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தி ரு வா ளர் க ள் க. இராஜேந்திரம், த. இரவீந்திரன் ஆகியோருக்கும் நமது நன்றிகள். மேலும் இந்நூலினை யாழ்ப்பாணம் பற்றிப் பல ஆய்வுகளையும் வெளியீடுகளையும் படைத்த வரலாற்று மூதறிஞர் நவாலியூர் முதலியார் செ. இராசநாயகம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்ய நாம் எண்ணியபோது அதற்குரிய ஒரு சமர்ப்பணப் பாவினை ஆக்கித் தந்த நண்பர் திரு. வ. கோவிந்தபிள்ளை அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்.
கலாநிதி சி. க. சிற்றம்பலம் திருநெல்வேலி.
• 1993 سے 10 ح= l
(vi)

வரலாற்று அறிமுகம்
தற்போதைய வடமாகாணம் ஏறத்தாழ 79 - 50 - 81.0 கிழக்கு நெட்டாங்குக்கு இடையிலும், வட அகலாங்கு 8.50 - 9.50' க்கு இடையிலும் அமைந்துள்ளது. இதன் பரப்பு ஏறத்தாழ 8687.6 சதுர கிலோ மீற்றராகும். பெரும்பாலும் 750 மில்லிமீற்றருக்கும் (மி. மீ) - 2000 மில்லிமீற்றருக்கும் (மி. மீ) இடைப்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறும் இப்பிராந்தியத்தின் வெப்பநிலை 25° செல்சியஸ்க்கும் 28° செல்சியஸ்க்கும் இடைப் பட்டுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிர தான கல்வகையாகச் சுண்ணாம்புப் பாறை வகை காணப்பட, வன்னிப் பகுதியிற் குறிப்பாக வவுனியா மாவட்டப் பகுதியின் பிரதான பாறை வகையாகக் கருங்கற் பாறைவகை காணப் படுகின்றது. மண்வகையைப் பொறுத்த மட்டிற் குடாநாட்டில் வலிகாமம், வடமராட்சியின் சில பகுதிகளிற் சுண்ணாம்புத்தன்மை கொண்ட செம்மஞ்சள் மண்வகை காணப்படுகின்றது. இத் தகைய மண்வகை விவசாய நடவடிக்கைகளுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இவ்வாறே கரையோரப் பகுதிகளிலுந் தென்ம ராட்சியை அண்டிய பகுதிகளிலுங் கரையோர மண்படிவும், நரைமண் வகையுங் காணப்படுகின்றன. நெற்பயிர்ச் செய்கை, தென்னைமரச் செய்கை ஆகியனவற்றிற்கு இவை உகந்ததாக அமைந்துள்ளன.
வன்னிப் பகுதியின் பிரதான மண்சேர்க்கையாகச் செங் கபில நிற மண் காணப்படுகின்றது. இது வவுனியா மாவட் டத்திற் குறிப்பாக முழங்காவில், பல்லவராயன் கட்டு ஆகிய பகுதிகளிற் பரந்து காணப்படுகின்றது. இவ்வாறே நரைமண் பரம்பல் பூநகரிப் பகுதியிலும் மன்னார் மாவட்டத்திற் குறிப்பாகக் கரையோரப் பகுதியிலுங் காணப்படுகின்றது. கரையோர மணற்படிவுகள் பூநகரிப் பகுதியில் மட்டுமன்றி வடபகுதியின் கிழக்குப் பகுதியிலுங் காணப்படுகின்றன. பொதுவாக இங்கு காணப்படும் இயற்கைத் தாவரத்தினை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன வரண்ட
(vii)

Page 11
வலயக் காடுகள் (பற்றைக் காடுகள் ), உலர்வலயக் காடுகள் (பெருங் காடுகள்) ஆகும். இவை இரண்டும் பெருநிலப் பரப் பிற் காணப்படுகின்றன. குடாநாட்டிலோவெனில் இங்கு காணப்பட்ட தொடர்ச்சியான மனித நடமாட்டத்தினால் இயற்கையாக அமைந்த பற்றைக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வடபகுதி வரலாற்றிற் குறிப்பாக அதன் பண்பாட்டு வளர்ச்சியில் அதன் பெளதீக அம்சங்களான காலநிலை, மண்வளம், இயற்கைத் தாவரம் மட்டுமன்றித் தரைத்தோற்ற மும், அதனைச் சூழவுள்ள கடலுங் காத்திரமான பங்கினை வகித்துள்ளன என்றால் மிகையாகாது. பொதுவாக இப்பகுதி 500 மீற்றருக்குக் குறைவான ad. Ll T வேறுபாட்டினைக் கொண்டிருந்தாலுங்கூடப் பெரும்பகுதி 100 மீற்றருக்குக் குறை வான பகுதியாகவே விளங்குவதாற் கரையோரச் சமவெளிக் குரிய தரைத் தோற்றத்தினையே இது பெற்றுக் காணப்படு கின்றது. குடாநாட்டிற் கீரிமலை, தெல்லிப்பழை, கந்த ரோடை போன்ற பகுதிகள் உயரமான தரைத்தோற்றத் துடன் காணப்படுவது போலப் பெருநிலப் பரப்பில் வவுனியா மாவட்டத்தினை உள்ளடக்கிய பகுதிகள் இத்தன்மையைக் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய தரைத்தோற்றத்திற் காணப்படும் மண் வகையின் செழுமைக்கேற்ப ஆதி நாகரிகத் தின் எச்சங்கள் இங்கு காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. பொதுவாகவே, மக்களின் குடிப்பரம்பல் கரையோரங்களை அண்டியே - மணற்பிரதேசங்களின் நீரை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிவதால் ஆரம்பமாவது வழக்காறாயினும் மக்கள் மத்தியிற் காணப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளே உள்ள பகுதிகளிற் காணப்பட்ட மண்வளம், பிற பொருளா தார வாய்ப்புகள் ஆகியன மக்களை உள்நோக்கி ஈர்த்ததும் ஈழத்து வரலாற்றிற் காணப்படும் ஒரு நியதியாகவுள்ளது.
ஈழத்து வரலாற்றில் இதனைச் சூழவுள்ள கடல் நீர்ப்பரப்புத் தாக்கத்தினை ஏற்படுத்தியது போன்று வட பிராந்தியத்தின் மூன்று பக்கங்களையுஞ் சூழவுள்ள கடல் அதன் வரலாற் றோட்டத்திற் பெரும்பங்கினை வகித்துள்ளது எனலாம். இக் காலத்தினைப் போல் ஆதிகாலத்திலும் இப்பகுதி மக்களின்
(viii) :

பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் அமைந்திருந்தாலுங் கூடக் கடலிற் கிடைத்த மீன்வகைகளும் பிற கடல்படு பொருட்களும் இப்பகுதி மக்களின் உணவு வகையில் இணைந்து கொண்டன. இதுமட்டுமன்றி மன்னார்க் குடாவிற் கிடைத்த சிப்பிகள், முத்துகள், வடபகுதியிற் கிடைத்த சங்குகள், ஆகியன இப்பிராந்தியத்தில் முத்துக்குளித்தல், சங்குகுளித்தல் ஆகிய தொழில்களை ஊக்குவித்ததன் மூலம் பிறநாட்டு வணி கரையும் இப்பகுதி நோக்கி ஈர்த்தன. முத்துகள் பற்றியுஞ் சங்கினால் ஆக்கப்பட்ட அணிகலன்கள் பற்றியும் இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி அகழ்வாராய்ச்சி மூலம் பெறப்பட்ட தடயங்களும் அதிகம் 2d 6 on 607. இக்கரையோரங்களின் இயற்கை அமைப்பு, கேந்திர முக்கியத்துவம் ஆகிய தன்மை களுக்கேற்பப் பல துறைமுகப் பட்டினங்கள் வளர்ச்சி பெற்றன. ஜம்புகோளப்பட்டினம் பற்றிய பாளி இலக்கியச் சான்றுகள் குடாநாட்டில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டினாலும் இதன் கிழக்குக் கரையில் வல்லிபுரம், நாகர் கோயில் ஆகியனவும் இக்காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியிருக்கலாம். ஜம்புகோளப்பட்டினம் கடற்கோளின் பாதிப்புக்குட்பட்டவாறு, வல்லிபுரம், நாகர் கோயில் ஆகியன கரையோர மண்படிவுகளால் இன்று கடற்கரைக்கப்பால் உள் நோக்கிக் காணப்படுகின்றன. இவ்வாறே தீவுப்பகுதிகளில் ஊர்காவற்றுறை, சாட்டி நயினாதீவு, பெருந்துறை (நெடுந்தீவு) போன்ற பகுதிகள் துறைமுகங்களாக விளங்கியிருக்கலாம். ஈழத்துத் துறைமுகங்களில் வளர்ச்சி பெற்ற துறைமுகமாக மாந்தை காணப்படுகின்றது. பல்வேறு காலங்களிற் பல்வேறு அறிஞர்களாலும் அமைப்புக்களாலும் இதன் பழைமையை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பூரணமற்ற நிலையில் அரை குறையாகக் கைவிடப்பட்ட நிலை ஒரு துர்அதிஷ்டமே ஆகும். மாந்தை, முல்லைத்தீவின் கிழக்குப் பகுதி போன்ற பகுதிகளுந் துறைமுக வளர்ச்சி கண்ட பகுதிகளாகக் காணப்பட்டிருக்கலாம். வருங்கால ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தலாம்.
பாக்கு நீரிணையாற் பிரிக்கப்பட்ட ஈழத்தின் வடபகுதி
பிறபகுதிகளைவிடத் தமிழகத்திற்கு அண்மித்துக் காணப் படுவதாலே தமிழகத்தின் தாக்கம் ஈழத்தின் ஏனைய
( ix )

Page 12
பகுதிகளையும்விட வடபகுதியில் விதந்து காணப்பட்டதை வரலாற்றுக்கு முற்பட்ட காலந் தொட்டு அவதானிக்க முடி கின்றது. இப்பகுதித் துறைமுகங்கள் தமிழகத் துறைமுகங் களோடு இணைந்திருந்த வரலாற்றை எதிர்கால அகழ் வாராய்ச்சிச் சான்றுகள் நிச்சயம் உறுதிப்படுத்தும் என எண்ணுவது வெறும் யூகமன்று.
வடிகாலமைப்பைப் பொறுத்தமட்டில் வடபகுதி ஆறுகள், முழுக்க முழுக்கப் பருவமழைக் காலத்திற் குறிப்பாக வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் மழையைப் பெறுவனவே. பெருநிலப்பரப்பில் மட்டும் பத்துப் பிரதான ஆறுகள் காணப் பட்டாலும் ஈழத்தின் பிற பகுதிகளில் ஆறுகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினைப்போல் இவை ஏற்படுத்தவில்லை எனலாம். இவ்வாறுகள் பெரும்பாலும் குளங்களுக்கு நீரை இட்டுச் செல்ல உதவுவதோடு ஆற்றுப் படுக்கைகளில் வண்டல் மணலையும் விட்டுச் செல்வதால் செழிப்பான இம் மண்வகை விவசாய நடவடிக்கைகளுக்கு உகந் ததாகக் காணப்படுகின்றது. அத்துடன் மக்கள் கரையோரத்தி லிருந்து உள்நோக்கி நகரவும் அவை ஏற்ற சாதனங்களாக அமைந்துள்ளன. " குடாநாட்டிலோவெனில் ஆறுகளுக்குப் பதி லாக ஒரு சில வெள்ளவாய்க்கால்களே காணப்படுகின்றன. குளங்கள் இங்கு காணப்பட்டாலும் இப்பகுதியின் நீர்த்தேவை நிலத்திற்கடியிற் கிடைக்கும் நீர் மூலமே பெறப்படுகின்றது. இத்தகைய நீர், கிணறுகள் மூலம் வெளிக் கொணரப்படுகின் றது. இதனாற் பெருநிலப்பரப்பிற் குளங்கள் முக்கியம் பெறு வதைப் போலக் குடாநாட்டிற் கிணறுகள் முக்கியம் பெறு கின்றன (படம்  ை43).
மேற்கூறிய பண்புகள் கொண்ட வடபகுதியின் பெளதீக அமைப்புப் பண்டு தொட்டு இப்பகுதி வரலாற்றினை நிர்ணயிப் பதில் முக்கிய பங்கினை வகித்துள்ளன எனலாம். இப்பகுதி ஈழத்தின் ஒரு பகுதியாகக் காணப்பட்டாலுங்கூட, இதில் அநுராதபுரம் பொலநறுவை நாகரிகங்களின் தாக்கத்தினை விடத் தமிழக நாகரிகத்தின் தாக்கமே விதந்து காணப்படுவது மட்டுமன்றி ஸ்திரம் பெற்றுக் காணப்படுவதும் இதன் பெளதீக அமைப்பின் தாக்கமே எனலாம். இதனால் அன்று மட்டுமன்றி
s x )

இன்றும் பெளத்த சிங்கள கலாசாரத்தில் அமிழாது, அக் கலாசார அலைகளுக்கும் முகங்கொடுத்து அதே நேரத்திலே தனது தனித்துவத்தைப் பேணிய பெருமை மட்டுமன்றி, இன் றும் அத்தகைய தனித்துவத்தினைப் பேண முனைந்து நிற் பதும் இப்பகுதிக்குரிய தனித்துவமான பண்பாகும்.
எனினுஞ் சிங்கள மக்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளுவதற்குரிய இலக்கியத் தொல்லியற் சான்றுகள் ஆராயப் பட்டது போலத் தமிழ் மக்களின் வரலாற்றினை விளக்குந் தொல்லியற் சான்றுகள் விரிவான முறையில் ஆராயப்பட வில்லை. இந்நாடு சிங்கள-பெளத்தர்களுக்கே உரிய நாடு என்ற நோக்கில் எழுத்தப்பட்ட பாளி நூல்களிலே தமிழரின் வரலாற் றினைப் பற்றிய விரிவான தடயங்கள் காணப்படவில்லை. சிங்கள அரசின் வரலாற்றிலே தமிழ்மக்களின் தலையீடுகள் ஏற்பட்டபோதுதான் தமிழ் மக்கள் பற்றிய குறிப்புகள் இவற்றில் உள. இத்தகைய குறிப்புகள் தமிழ் மக்களின் வரலாறு பற்றி அறியப் போதிய சான்றாதாரங்களாக அமையவில்லை. தமிழ் நூல்களாகிய கைலாயமாலை, வையர்பாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகியன நல்லூர் அரசின் எழுச்சிக் காலத்தில் எழுதப்பட்டபோதிலும் நல்லூர் அரசு பற்றிய விரிவான சான்றுகள் இவற்றிலும் இல்லை. அது மட்டுமன்றி இவ் வரசுக்கு முன்னருள்ள காலப்பகுதி பற்றி அங்குமிங்குமாகத் தொடர்ச்சியற்ற முறையிலேதான் குறிப்புகள் சில உள. தொல்லியற் சான்றுகளை நோக்கும்போது சிங்கள அரசுகள் நிலைத்திருந்த பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடபகுதி பெரும் பாலும் தொல்லியலாளரின் கவனத்தினை ஈர்க்காத பகுதி யாகவே விளங்கியுள்ளது. இந்நிலையில் ஈழத்து வரலாற் றினை எழுதியோர், பாளி நூல்களை மூலாதாரமாகக் கொண்டு எழுதியதாலே தமிழ் மக்கள் இன்று செறிந்து வாழும் பிரதேசங்களில் அவர்களின் வரலாற்றுக்குரிய பங்கினை அளிப்பதற்குப் பதிலாகச் சிங்கள தலைநகர்களுக்கே முக்கியத் துவங் கொடுத்தனர். தமிழ் மக்களின் பிராந்தியங்களுக்குரிய இடத்தினை அவை நல்கவில்லை. இருந்துந் தமிழ் மக்களின் பங்களிப்புப் பற்றியும் வடபகுதி ஈழத்து வரலாற்றிற் பெற். றிருந்த முக்கியத்துவம் பற்றியும் இந் நூற்றாண்டின் இருபது களிற் சேர் போல் பீரிஸ் கந்தரோடையில் மேற்கொண்ட
( xi )

Page 13
மேலாய்வுகளும் இதனைத் தொடர்ந்து இராசநாயக முதலி யார், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இப்பகுதி வரலாறு பற்றி எழுதிய நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந் திருந்துங்கூட ஈழத்து வரலாற்றிலே தமிழ் மக்களின் பங்கையுங் குறிப்பாக வடபகுதிக்குரிய இடத்தினையுஞ் சிங்கள வரலாற் றாசிரியர்கள் அங்கீகரிக்கவில்லை,
இவ்வாறான கண்ணோட்டத்திற்கு அடிப்படையான காரணம் இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் சிங்கள மக்களின் மூதாதையினர் என்ற பாளி நூலோர் கற்பித்த இலக்கிய அணுகு முறையும் ஈழத்தின் அரசமுறை பற்றிய ஐதீகங்களும், ஒற்றையாட்சி ஈழத்து வரலாற்றேடுகளிற் பெற்றிருந்த முக்கியத் துவமுமேயாகும். எனினும் இற்றைக்குக் கால் நூற்றாண்டுகட்கு முன்னர் 1969 இல் அநுராதபுரத்திலும், இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற் கந்தரோடை, புத்தள மாவட்டத்திலுள்ள் பொம்பரிப்பு ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் பற்றிய புதிய சிந்தனையைத் தந்தாலுங்கூட 1980 இல் இவ்வாய்வுகளை மதிப்பீடு செய்த நமது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வு ஈழத்து நாகரிக கர்த்தாக்கள் இன்று சிங்கள - தமிழ் மொழி களைப் பேசுவோரின் மூதாதையினர் என்பதை உறுதி செய் துள்ளது. ஈழத்தின் பெருங்கற்காலப் பண்பாடு என்ற தலைப் பில் மேற்கொள்ளப்பட்ட நமது ஆய்வு, தென்னிந்தியாவிலே எவ்வாறு ஆதித் தென் திராவிடத்திலிருந்து தற்காலத் தென் னிந்திய மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், தமிழ், மலை யாளம் ஆகியன துளிர்த்தனவோ அவ்வாறே இத் தென் திரா விட மொழியிலிருந்து ஈழத்துத் தமிழும், சிங்கள மொழியின் மூதாதை மொழியாகிய 'எலு" வும் துளிர்த்தன என்பது எடுத்துக் காட்டப்பட்டது.
அத்துடன் வடஇந்தியாவிலிருந்து பெளத்தத்துடன் ஈழம் புகுந்த அதன் மதமொழியாகிய பாளியின் செல்வாக்கினாலே திராவிட மொழியாகிய எலு (பழைய சிங்கள மொழி) வட இந்திய மொழிச் சாயலைப் பெற்று உருமாறப் பெளத்த மத ஜாதகக் கதைகளைக் கருப் பொருளாகக் கொண்டு ' வட
(Χii)

இந்தியக் குடியேற்றம்" என்ற ஐதீகம் வளர்க்கப்பட்டது. இக் கதை வெறும் ஐதீகமெனப் பலர் உணர்ந்திருந்தபோதும் அண்மைக்கால ஆய்வுக்ள்தான் இது ஐதீகமென்பதை உறுதிப் படுத்தியதோடு ஈழத்திற் காணப்பட்ட பெருங்கற்காலக் கலா சாரத்திற்குரிய திராவிட மக்களின் குடிப்பரம்பலுக்கு இவ் வைதீகத்தின் மூலம் விளக்கங் கொடுக்கப்பட்டதும் நமது ஆய்வால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகச் சிங்கள - தமிழ் மொழிகளுக் கிடையே நிலவும் அடிப்படை ஒற்றுமைகள், இரு சமூகங்க ளிடையே நிலவும் பொதுவான அம்சங்கள், சமூக வழக்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியன அமைகின்றன. இதனாற் பாளி நூலோர் கூறுவதுபோற் சிங்கள மக்கள் மட்டுந்தான் இந் தாட்டின் ஆதிக் குடிகள் அல்லவென்பதுந் தமிழ் மக்களும் இவர்களோடு ஒத்த பழைமையையும் வரலாற்றையுமுடைய வர்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.
ஈழத்து நாகரிகத்தின் தோற்றம் பற்றி அகழ்வா ராய்ச்சிச் சான்றுகள் மூலங் கிடைத்த மேற்கூறிய புதிய பரி மாணம் ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகள் பற்றியும் புதிய முடிவுகளைத் தந்துள்ளது. முன்னரெல்லாம் இக்கல்வெட்டுகள் வடஇந்தியாவிலிருந்து ஈழத்திலேற்பட்ட சிங்கள மக்களின் மூதாதையினராகிய ஆரிய ரின் குடியேற்றத்திற்கான ஆதாரமாகக் கொள்ளப்பட்டது. ஆனாற் கடந்த கால்நூற்றாண்டுகளாக இக்கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள் இக்கல்வெட்டுகள் இந்துக்களாக விளங்கிய சிங்கள மக்களின் மூதாதையினர் பெளத்தத்தைத் தழுவியபோது பெளத்த சங்கத்தினருக்குக் குகைகளைத் தானமாக அளித் ததை எடுத்து விளக்குவனவாக உள்ளன. இத்தகைய குகைத் தானங்களை எடுத்துக்காட்டும் இக்கல்வெட்டுகளின் வரிவடிவம், இவற்றிற் காணப்படும் பெயர்கள் ஆகியன இக்கல்வெட்டுகளில் இருவித படைகள் உள என்பதைத் துலாம்பரப்படுத்தியுள்ளன. முதலாவது படை ஈழம், தமிழகம் ஆகிய பிராந்தியங்களிற் கி. மு. 6ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த திராவிட வரி வடிவம் ஆகும். இவ்வரிவடிவம் இவ்விரு பிராந்தியங்களிற் செல்வாக்குற்றிருந்ததை எடுத்துக்காட்டும் பல பழைய கல்வெட்டுகள் சிங்கள அறிஞர்களான சத்த மங்கல கருணாரத்
fK iii

Page 14
தினா, பெர்னாண்டோ போன்றோரால் இனங் காணப்பட் டது. இவ்வரிவடிவஞ் சிங்கள - தமிழ் மக்களின் மூதாதையினர் மத்தியிற் பயின்றிருந்த காலையிற்றான் பெளத்தம் வட இந்தியாவில் இருந்து கி. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் அறிமுகமானது. பெளத்தத்தோடு அதன் மதமொழி யாகிய பாளி மட்டுமன்றி வட இந்திய பிராமி வடிவடிவமும் அறிமுகமானது. இதனாற் பழைய திராவிட மொழிகள் பயின்ற நாட்டிற், பாளிப் பிராகிருதத்தின் செல்வாக்கால் வட இந்தியக் கலாசாரத்தினைப் பிரதிபலிக்குஞ் சொற்கள் வழக்கில் வர, பழைய திராவிட வரிவடிவங்கள் மட்டுமன்றிப் பழைய திராவிட கலாசாரத்தின் எச்சங்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. இத்தகைய மறைவு கிறிஸ்தாப்த காலத்திற் பெருமளவு பூர்த்தியானது. திராவிட மொழியாகிய எலுவைப் பேசிய மக்கள் மத்தியில் இவ்வாறு பெளத்த கலாசாரம் ஏற் படுத்திய தாக்கத்தினால் வட இந்தியக் கலாசாரம் மேலோங் கியது. எனினும் பிராமிக் கல்வெட்டுகளில் இன்றும் பழைய திராவிட கலாசாரத்தின் எச்சங்களாக விளங்கும் பழைய வரி வடிவ எழுத்துகளும், ஆய், வேள், பரத, பருமக (பெருமகன்) போன்ற திராவிடக் குழுப் பெயர்களும், விருதுப் பெயர்களும் இவர்களின் இந்துமத நம்பிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டும் இந்துக் கடவுளரின் பெயர்களும் பெளத்த கலாசாரம் எலுமொழியைப் பேசிய சிங்கள மக்களின் மூதாதையினரை வென்றெடுத்ததை உறுதிசெய்கின்றன.
பெளத்தஞ் சிங்கள மக்களின் மூதாதையினரை வெற்றி கொண்டதுபோலத் தமிழ் மக்களை இதனால் வெற்றி கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைப்போலத் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இதனைத் தழுவினாலுங் கூடப் பல்லவர் காலத் தில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சியின் தாக்கத்தினால் இந்து மதம் மேலோங்கிய நிலையிற் காணப்பட்டது. அநுராதபுர அரசர் வடபகுதியிற் காணப்பட்ட பெளத்த நிறுவனங்களைச் சிற்சில காலங்களிற் பெரிய இடை வெளிக்கிடையிற் போஷித் தாலுங்கூட அவர்களினதோ பொலநறுவைக் கால அரசர்களி னதோ அரசியல் ரீதியான மேலாணை மிக அருகிக் காணப்பட்டதால் இந்து மதம் முதன்மையான இடத்தினை
(χίν)

வடபகுதியிற் பெற்றது. தமிழகத்தோடு இப்பகுதி கொண் டிருந்த தொடர்புகளும் இத்தகைய முதன்மைக்கு வழி வகுத்தது.
இவ்வாறு கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஈழத்துத் தொல்லியற்றுறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வடபகுதி வரலாறு பற்றிப் புதிய சிந்தனையைத் தந்துள்ளது. இந் நூற் றாண்டில் முதற் காற்பகுதிகளில் முதலியார் இராசநாயகம் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் ஆகியன குடா நாட்டின் வரலாற்றுக்கு முதன்மை கொடுத்து எழுதப்பட் டாலும் பாளி, தமிழ் நூல்கள், சிங்கள நூல்கள் ஆகிய 6னவற்றை மையமாக வைத்தே தமக்குக் கிடைத்த சான்று களின் அடிப்படையில் அவை எழுதப்பட்டன. இருந்தும் இந் நூல்கள் தருங் கருப்பொருளை நோக்கும் போது வட பகுதிதான் பாளி நூல்கள் கூறும் நாகதீபமாகும். இதுதான் தமிழ் நூல்கள் கூறும் நாக நாடுமாகும். நாகர்களாகிய திரா விடர் இங்கு வாழ்ந்ததால் இது இவ்வாறு பெயர் பெற்றது. இதன் அரசியற் தலைமைப்பீடங் கந்தரோடை (கதிரை மலை) என இனங் காணப்பட்டதோடு தமிழ் நூல்களிற் கூறப்படும் உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதை, யாழ்பாடி கதை ஆகியனவற்றோடு வடபகுதி வரலாறு இணைக்கப்பட்டது. இத்தகைய ஒரு மேலெழுந்த வாரியான வடபகுதி வரலாற்றுக்கு ஈழத்தின் ஆதிக் குடிகள் பற்றிய புதிய பரிமாணம், பிராமிக் கல்வெட்டுகள் ஆகியன புதிய வடிவத்தினைத் தந்துள்ளன. அண்மைக் காலத்திற் கலாநிதி பொ. இரகுபதி யாழ் குடா நா ட் டி ல் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகள், திரு. ப. புஷ்பரட்ணம் பூநகரிப் பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகள் ஆகியன வடபகுதி வரலாற்றினைப் பொறுத்தமட்டில் மைற்கற்களாகவே அமைந்துள்ளன. இத் தகைய மேலாய்வுகளை அகழ்வாய்வுகள் தக்கவாறு உறுதி செய்ய வேண்டுமெனினும் இந்நூற்றாண்டில் முதற்காற்பகுதி களிற் சேர். போல் பீரிஸ் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய் வுக்குப் பின்னர் கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஈழத்துத் தொல்லியற்றிணைக்களம் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வு
(Xv)

Page 15
களோடும் ஒப்பிடும்போது கலாநிதி பொ. ரகுபதி, திரு. ப. புஷ்பரட்ணம் ஆகியோரது ஆய்வுகள், வடபகுதியின் நாகரிகத் தின் தொன்மையையும், தொடர்ச்சியையும் அறிவதற்குத் தொல்லியலின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன. இதனால் இனி வருங் காலங்களில் வடபகுதி வரலாற்றிலே தொல்லியற் சான்றுகள் தான் பிரதான இடத் தினை வகிக்க இருக்கின்றன என்று இவை கட்டியங் கூறி நிற்கின்றன என்றால் மிகையாகாது.
இத்தகைய பின்னணியிற்றான் இற்றைவரை வடபகுதி வரலாற்றுக்குரிய சான்றுகளான தமிழ் நூல்கள், பாளி சிங்கள நூல்கள், தொல்லியற்சான்றுகள், தமிழக வரலாற்றுத் தடயங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இப்பகுதி பற்றிய ஆய்வுத் தொகுப்பாக இந்நூலை எழுதும் முயற்சி நம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி எதிர்காலத்தில் இப்பகுதி பற்றி விரிவான ஆய்வுகளுக்குக் கால்கோளாக அமையும் என்பது நமது அசையாத நம்பிக்கையாகும். எவ்வாறு இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தினால் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்ட ? இலங்கை வரலாறு " அப்போதைய ஈழ நாட்டின் வரலாறு பற்றிய ஒரு கைநூலாக விளங்கியதோ அவ் வாறே நமது இந்நூலும் வட பகுதி பற்றிய விரிவான ஆய்வுக்கு அடிப்படையாக அமையும் என்பது நமது நம்பிக்கை. இதனால் ஐதீகங்கள் மட்டுமன்றிப் பழைய வரலாற்று நூல்கள் பல பலருக்குக் கிட்டாத, பரிச்சயமாகாத நிலையில் அவற்றில் இருந்து நீண்ட மேற்கோள்களும் சில சமயம் சந்தர்ப்பத்திற்கேற்பத் திரும்பத்திரும்பவும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. ஆராய்ச்சி நூலில் இவை தவிர்க்கப்பட வேண்டிய தொன்றாயினும் நம்மவருக்கு நமது பிரதேச வரலாறு பற்றிய அறிமுகம் என்ற கோணத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன. எவ்வாறு விரிவான வேறு நூல்கள் இல்லாத காலத்தில் ஐதீகங்களையும் பிற தொல்லியற் சான்றுகளையும் இணைத்து ஈழத்துச் சிங்கள மக் களுக்கு ஒரு வரலாற்றினை இலங்கைப் பல்கலைக்கழகம் அளித் ததோ அவ்வாறே இதுவரை நமக்குக் கிடைத்த பல்வகைச்
(Xνi)

சான்றுகளை அலசி ஆராய்ந்து இப்பகுதித் தமிழ் மக்களின் பழைமை பாரம்பரியம் பற்றி எடுத்துக் காட்டும் நோக்குடன் நமது நூலும் எழுதப்பட்டுள்ளது.
நமக்குக் கிடைக்குஞ் சான்றாதாரங்கள் பூரணமான நிலை யில் இப்பகுதி அரசியல், நிருவாக, பொருளாதார, சமூக, சமயம் பற்றித் தொடர்ச்சியான வரலாற்றை எழுதுவதற்குப் போதாமல் இருந்ததால் தமிழக, ஈழத்துச் சிங்கள அரசு களின் அரசியல், நிருவாக, பொருளாதார, சமூக, சமயப் பின்னணியில் இப்பகுதி வரலாற்றைக் கட்டி எழுப்பும் நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. இத்தகைய அணுகு முறையைத் தவிர வேறொரு மாற்றுமுறையும் நமக்குத் தென்படாததாற்றான் இவ்வாறு வடபகுதி வரலாறு நம்மால் அணுக்ப்பட்டுள்ளது.
இவ்வாறே ஈழத்து வரலாற்றையும் இதன் பழைய தலைநகர்களை மையமாகக் கொண்டு நிரைப்படுத்தும் மரபும் பலராற் கையாளப்பட்டு வந்துள்ளது. இத்தகைய மரபுக்குள் நமது நூலின் காலப்பகுதி சிங்கள அரசின் தலைநகர்களாக விளங்கிய அநுராதபுரம், பொலநறுவை அரசுகளின் காலத் திற்குள் அடங்குகின்றது. எனினும் இத்தகைய தலைநகர் களைக் கொண்டு வடபகுதி வரலாற்றினை நிரைப்படுத்து வது யதார்த்த பூர்வமாக அமையாது என்பது நம்மால் உணரப்பட்டது. இதனால் வடபகுதித் தலைநகர்களின் பெய ரைக் கொண்டு இதன் வரலாற்றினை நீரைப்படுத்தலாமோ என்று நம்மாற் சிந்திக்கப்பட்டது. இப்பகுதித் தலைநகர்களில் முதலில் நமது நினைவுக்கு வருவது கதிரைமலையாகும். எனினும் அநுராதபுரம் அல்லது பொலநறுவை போன்று வட பிராந்தியம் முழுவதிலுந் தொடர்ச்சியாகத் தனது மேலாணை யைச் செலுத்திய தலைநகர் / தலைநகர்களை இற்றைவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றாதாரங்களைக் கொண்டு இனங் கண்டு இப்பகுதி வரலாற்றினை நிரைப்படுத்துதல் சிரமமாகக் காணப்பட்டதாலே, தலைநகர்களின் பெயருக்குப் பதிலாகக் கால அடிப்படையில் அவ்வக் காலங்களில் ஏற்பட்ட அரசியல்,
பொருளாதார, சமூக உருவாக்கங்களுக்கேற்ப இந்நூலின்
(xvii)

Page 16
அத்தியாயங்களை வகுக்கும் முறை நம்மால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
வரலாற்றுக் காலத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள காலப்பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுதய காலங்க ளாகும். இவற்றைத் தொடர்ந்து வரும் வரலாற்றுக் காலப் பகுதியின் அரசியல்வரலாறு, வரலாற்றுக் காலம் 1, II, II என நிரைப்படுத்தப்பட்டுள்ளதோடு இக்காலப் பகுதிக்குரிய பொருளாதார சமூக, சமய வரலாறுகளும் இவற்றைத் தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் ஆராயப்பட்டுள்ளது. இவ் வாறு கற்காலந்தொட்டு நல் இாரைத் தலைநகராகக் கொண்டு எழுச்சி பெற்ற யாழ்ப்பாண இராச்சிய காலம் வரையுள்ள வட பகுதியின் வரலாற்றுப் பாரம்பரியம் இற்றைவரை இடைத்துள்ள சான்றாதாரங்களின் அடிப்படையில் நம்மால் நிரைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அணுகு முறை ஒரளவு திருப்திகரமாக அமைந்துள்ளது. எதிர்காலத்திற் புதிய ஆய்வுகள் மூலங் கிடைக்குஞ் சான்றுகள் இதனை மறு பரிசிலனைக்கு உள்ளாக்கலாம். மறுபரிசீலனையும், மறுமதிப் பீடும் ஆராய்ச்சியின் அடிநாதங்களே.
(xV}ii )
 

6.
அதிகாரம் ஒன்று
வரலாற்றுக்கு முற்பட்ட
வரலாற்றுதய காலங்கள்
வரலாற்றுப் பின்னணி
ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் புவியியற் சக்திகளின் தாக்கத்தினால் மட்டுமன்றி அதன் புவியியல் அமைவிடத்தினா லும் மாற்றத்திற்குள்ளாகின்றது, வழி நடத்தப்படுகின்றது என்பது பொதுவிதி. நமது நாடாகிய ஈழமும் இத்தகைய பொதுவிதிக்கு விலக்கானதல்ல. இது ஒரு தீவாக இருப்பது மட்டுமன்றி இந்து சமுத்திரத்தின் மத்தியில் கிழக்கு-மேற்கு வர்த்தகப் பாதையின் மையத்தில் அமைந்திருப்பதும் இதற் குரிய சிறப்பம்சமாகும். இவ்வாறு இது தீவாக அமைந்திருப் பதாற் பல பண்டைய விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதறி கான வாய்ப்பும் வசதியும் இதற்கதிகமுண்டு. அத் துட ன் பாக்குநீரிணையால் இந்தியாவிலிருந்து இது பிரிக்கப்பட்டிருப் பதும் இந்தியாவுக்கருகில் அமைந்திருப்பதும் இதற்குரிய மற்று மொரு சிறப்பம்சமாகும். இந்தியா - ஈழம் ஆகிய நாடு கட் கிடையே உள்ள மிகக் குறைந்த தூரம் 36 கிலோ மீற்ற ராகும்.
இப்பாக்குநீரிணை, பண்டைய காலத்திலிருந்தே இரு நாடு களுக்கிடையில் அரசியல், வர்த்தக, கலாசாரப் பரிமாற்றங் களுக்குத் தடையாக விளங்கவில்லை. இதனை ஈழத்துப் பழைய பாளி நூல்கள் தரும் சான்றுகளில் மட்டுமன்றிக் கிரேக்க அறிஞர்களின் குறிப்புகளிலுங் காணமுடிகின்றது. பாளி நூல்கள், இந்தியாவின் தமிழகக் கரையை அக்கரை ", * எதிர்க்கரை ? என்ற பதங்கள் மூலமே அழைக்கின்றன. கி. மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியா வத்த கிரேக்க அறிஞரான மெகஸ்தினிஸ் இந்தியா-ஈழம் ஆகிய நாடுகளை
1 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 17
ஒரு ஆறு பிரிக்கின்றது என்று கூறியதன் மூலம் இரு பிராந் தியங்களும் புவியியல் ரீதியில் அண்மித்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். எனினும், பாக்குநீரிணையின் இரு கரை களிலும் ஏற்பட்ட அரசியல், வர்த்தக, கலாசாரப் பரிமாற் றங்களை நோக்கும்போது பெருமளவுக்கு இத்தகைய பரிமாற் றம் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஈழத்தின் வடமேற் குப் பகுதியை நோக்கி ஏற்பட்டதை அவதானிக்க மூடி கின்றது.
பாக்குநீரிணைப் பிரதேசம் பெறும் முக்கியத்திற்கு இதன் அமைவிடம் மட்டும் காரணமல்ல. இப் பகுதி யிற் கிடைத்த முத்துஞ் சங்கும் வர்த்தகத்துறையில் இப்பகுதி யினை மேலோங்க வைத்தன. பாண்டி நாடும் மன்னார்க் குடாப் பகுதியும் முத்துக் குளிப்பில் முக்கிய பங்கினை வகித் தன. சங்கு வடபகுதிக் கடலிலே தாராளமாகக் கிடைத் தது. இவற்றோடு ஈழத்திற் கிடைத்த வாசலைத் திரவியங் களும், இரத்தினக் கற்களும் பாக்குநீரிணை வழியாகவே வெளிநாடுகளுக்குச் சென்றன. பண்டைய காலத்தில் இப்பகுதி பெற்றிருந்த வர்த்தகச் சிறப்புப் பற்றித் தமிழ் நூ** மட்டுமன்றிக் கிரேக்க அறிஞர்களின் குறிப்புகளும் எடுத்தியம்பு கின்றன. மெகஸ்தினிஸ்கூட இந்தியாவைவிட ஈழத்திற்றான் பொன், யானைகள், முத்துக்கள் என்பன சிறந்து கணப் பட்டன எனக் கூறியுள்ளார்.2 இ த ை ன மையமாகக் கொண்டே “ ஈழம்" என்ற பதத்திற்குப் பொன்’ என்ற விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கலாம். பண்டைய காலத்தில் வாணிபத்திலே தமிழக - ஈழப் பிரதேசங்களின் ஈர்ப்புமையமா கப் பாக்குநீரிணை விளங்கியது. தென்னிந்தியா வெளிநாடு களுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தாலும் இதினால் மேன்மைபெற்ற பிரதேசமாக வளர்ந்த பிரதேசம் தமிழக மாகும். தென்னாட்டில் தமிழகம் போல் ஈழத்திலும் இதன் வட, வடமேற்குப் பகுதிகள் வாணிபச் சிறப்பால் மேன்மை பெற்றன. இத்தகைய வாணிபத் தொடர்புகள் இரு நாடு களினதும் நாகரிக வளர்ச்சியை விரைவுபடுத்துவதிற் பிரதான பங்கினை வகித்தன என்று கூறினால் மிகையாகாது. (படம்-1)
யாழ். - தொன்மை வரலாறு 2 இ

புவிச்சரிதவியலாளர் ஈழம் முன்பொருகால் இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளனர். இரு பகுதிகளையும் இராமர் அணை இணைத்தது எனக் கூறும் இவர்கள், இத்தகைய அணை கி. மு. 7000 ஆண்டுவரை நீடித் திருந்தது எனவும் அபிப்பிராயப்படுகின்றனர்.3 இவ்விராமரி அணை பற்றிய ஐதீகம் தமிழ் நூல்களிலும், ராஜவலிய போன்ற சிங்கள நூல்களிலும் கடற்கோள்கள் பற்றிக் காணப்படும் குறிப்பு களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.4 தமிழகத்தின் வட - தென் எல்லைகளை வடவேங்கடம், தென்குமரி எனக் குறிக்குந் தமிழ் நூல்கள் கடற்கோள்களினால் அழிந்த பிரதேசங் களாக ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ் குறும்பனைநாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் வரும் ஏழ் என்பது " ஏழ் " என்ற எண்ணைக் குறிப்பதற்குப் பதிலாக ஈழ என்ற பதத்தில் வரும் ஈகாரமே ஏகாரமாக மருவி “ ஈழ " என்ற பதத்தினைக் குறித்து நிற்கின்றது எனவும் அபிப்பிராயம் உண்டு. அவ்வாறாயின் கடற்கோளினால் அழிந்த பிரதேசங் களின் எஞ்சிய நிலப்பகுதியே ஈழமும் அதனைச் சுற்றியுள்ள, தீவுகளுமாக இருக்கலாம்.
இச்சந்தர்ப்பத்தில் நாகரிகம் பற்றிச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகின்றது. நகரவாழ்வும், உறுதியான அரசியற் பொரு ளாதார அமைப்பும் இதன் ஆச்சானியாக விளங்கினாலும் கூட, எழுத்தாதாரங்கள் தொட்டுக் கட்டிடங்கள் வரையிலான சான்றுகளும் இ தன் பிரதான கூறுகளாகி விடுகின்றன. பொதுவாகவே தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் நாகரிகம் 6 ன்பது வரலாற்றுக் காலத்துடனே ஆரம்பமாகின்றது. வர லாற்றுக்காலம் கி. மு. 500 ஆண்டளவில் இவ்விரு பிரதேசங் களிலும் ஆரம்பமாகிவிட்டது எனக் கொள்ளுவதற்கான தடயங்கள் அண்மைக் காலத்திற் கிடைத்தாலுங் கூடப் பொதுவாக கி. மு. 3 ஆம் நூற்றாண்டளவிலே தான் இது ஆரம்பமாகியுள்ளது எனக் கொள்ளப்படுகின்றது. இதனால் ஈழத்தின் வரலாற்றுக் காலம் இந்நூற்றாண்டின் நடுப்பகுதி யில், தேவநம்பியதீசனது ஆட்சியோடு ஆரம்பமாகின்றது என
O 3 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 18
நம்பப்படுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதி வரலாற் றுக்கு முற்பட்ட காலம் எனப்படுகின்றது. இவ்வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சான்றுகளை ஆராய்ந்த அறிஞர்கள் இதில் இரு பிரிவுகளை இனங்கண்டு கொண்டுள்ளனர். இதிலொரு பிரிவு மனிதன் எழுத வாசிக்கத் தெரியாது நாடோடியாக, காட்டுமிராண்டியாகத் திரிந்த காலம். இவை பெருமளவுக்குக் கற்காலங்களையே உள்ளடக்கும். மற்றைய பிரிவு வரலாற்றுக் காலம் மலருவதற்கு வழி வகுத்த வரலாற்றுதயகாலமாகும். கற்காலங்களைத் தொடர்ந்துவரும் பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலத்தின் பெரும்பகுதி இதனுள் அடங்கும். இப் பெருங்கற்காலக் கலாசார அம்சங்கள் கிறிஸ்தாப்தகாலம் வரை நீடித்திருந்தமையும் இங்கே கவனிக்கத்தக்கது. k
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (படம் 2 - 5)
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் இந்தியாவில் இற்றைக்கு ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முன்னரே தோன்றிவிட்டது. ஈழத்திலோ எனில், இற்றைக்கு ஒரு இலட்சத்து இருபத்தையா யிரம் ஆண்டுகட்கு முன்னர்தான் இது ஆரம்பமாகியிருக்கலாம் எனக் கொள்ளப்படுகின்றது.6 எனினும், இந்தியாவிற் கற்காலத் தின் பல்வேறு பிரிவுகளுக்குக் கிடைக்கும் சான்றுகள் போல ஈழத் தில் இவை காணப்படவில்லை. பொதுவாகவே கற்காலம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: பழையகற் காலம், இடைக்கற்காலம், புதியகற்காலம் ஆகும். பழையகற் காலமும் முப்பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. அவையாவன: கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம், மேலைப் பழங் கற்காலம் ஆகும். ஈழத்தில் மேலைப் பழங்கற்காலத்திற்குரிய தடயங்கள் இன்றுவரை வெளிக் கொணரப்படவில்லை. கிடைத்த தடயங்களும் பெரும்பாலும் கீழை, மத்திய, பழங்கற்காலத்திற் குரியன எனக் கொள்ளப்படுகின்றன. இத்தகைய தடயங்கள் ஈழத்தின் தென்பகுதியில் மட்டுமன்றி வடமேற்குப் பகுதியிலுள்ள புவிச்சரிதவியற் படைகளிலும் காணப்படுகின்றன. இப்புவிச்சரித வியற் படையை இரணைமடுப் புவிச்சரிதப் படையென ஆராய்ச்சி யாளர் அழைத்துள்ளனர். பரற்கற்களாலான இப்படையில் இக்காலத்திற்குரிய கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி. மு. 125,000 எனக் கொள்ளப்படுகின்றது.7 இப் படைக்கு
யாழ். - தொன்மை வரலாறு 4 O

மேலுள் ள மணற்சேர்க்கையுள்ள படையிற்றான் மேலைப் பழங்கற்காலக் கருவிகளுக்குப் பதிலாக இடைக்கற்காலக் கருவிகள் காணப்படுகின்றன. குறு னிக் கற்க ளா ல் இவை ஆக்கப்பட்டதால் இவற்றைக் குறுணிக் கற்காலக் கருவிகள் என அழைப்பதும் வழக்கம். இவற்றை ஆக்குவதற்குக் குவாட்ஸ்” எனப்பட்ட கல்லின வகைகள் பயன்படுத்தப்பட்டன. இக்காலக் கருவிகள் முக்கோணம், பிறைவடிவம், நீள்சதுரம் போன்ற பல
வகையான வடிவ அமைப்புகளைக் கொண்டனவாய் விளங்கு
கின்றன.
இடைக்கற்காலத்திற்குரிய சான்றுகள் யாழ். குடாநாட்டுப் பகுதிகளைத் தவிர்ந்த ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்படு கின்றன. சிறப்பாக இவற்றுள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மேலாய்வின் போது கிடைத்த கருவிகள் போன்று பூநகரிப் பகுதியிலும் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள காரைநகரிலுள்ள சத்திராந் தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது பெருங்கற்காலக் கலாசாரப் படையிற் குறுணிக்கற்காலக் கருவிகளை ஆக்கு வதற்குரிய குவாட்ஸ் கல்வகையினாலான கற்றகடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.8 ஆனால் பெரு நிலப் பரப்பிலுள்ள மாந்தையிற் குறுணிக்கற்காலக் கருவிகள் மட்டுமன்றி இவர் களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துக் காட் டுந் தடயங்களுங் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.9 ஒட்டு மொத்தமாக நோக்கும்போது ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்பட்ட குறுணிக் கற்காலக் கலாசாரமே வடபகுதியிலும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்த்த பகுதிகளிலுங் காணப்பட்டதை இக்கருவிகளுக்கிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. பெருநிலப்பரப்பிற் பூநகரி வரை இதற்குரிய தடயங்கள் இருந்தும் குடாநாட்டில் ஏன் இவை காணப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது. இப் பகுதி சுண்ணாம்புக்கற் பிரதேசமாகக் காணப்படுவதால் இக் காலக் கரு வி க  ைள ஆக்குவதற்குரிய மூலப்பொருளான குவாட்ஸ் " கல்லினவகை இங்கு காணப்படாமையே இதற் குரிய பிரதான காரணமாகக் கொள்ளப்படுகின்றது. աn tքմ
O 5 வரலாற்றுக்கு முற்பட்ட .

Page 19
பாணக் குடாநாட்டிற்கு நேரெதிரேயுள்ள தமிழகத்தின் தென் கோடியிலுள்ள " தெரி " என அழைக்கப்படும் மணற் குன்று களில் இக்கால மனிதன் வாழ்ந்ததற்கான கருவிகள் காணப் பட, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஏன் இவை காணப் படவில்லை என்பது ஆராய்தற்பாலது. வருங்காலத்தில் மேற் கொள்ளப்படும் திட்டமிட்ட மேலாய்வுகள் இப்பகுதியில் இக் கால மனிதன் வாழ்ந்ததற்குரிய த ட யங் களை வெளிக் கொணரலாம்.
தமிழகக் குறுணிக்கற்காலக் கருவிகளின் தோற்றம் கி. மு. 32,000 ஆண்டுகளாக இருக்கலாமென்று கொள்ளப்படுகின் றது.10 ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதன் தோற்றத்தை கி. மு. 28,000 ஆண்டுகள் என எடுத்துக் காட்டி கி. மு. 1000 ஆண்டளவில் பெருங்கற்காலந் தோன்றும் வரை இக்காலம் நீடித்தது எனவும் எடுத்துக் காட்டியுள்ளன.11 தமிழகம் - ஈழம் ஆகிய இரு பிராந்தியங்களுக்கிடையே உள்ள இக்கருவிகளின் அமைப்பு, செய்திறன் ஆகியவற்றுக்கிடையே இழைவிட்டோடும் ஒற்றுமையை ஆராய்ந்த அறிஞர் இவற்றை இக்கால மனிதன் தென்தமிழகத்தில் இருந்தே ஈழத்திற்குக் கொண்டு வந்தான் எனக் கருதுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டிற் புதியகற்காலமக்களே பெருங்கற்காலக் கலா சாரத்தினை வளர்த்தெடுத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.12
துர்அதிஷ்டவசமாகப் புதியகற்காலத்திற்குரிய தடயங்கள் இற்றைவரை ஈழத்திற் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குப் Au su 35mTyr 600T så sesir கூறப்படுகின்றன. இச்கால மனிதன் கடலைக் கடப்பது பற்றி அறியாதிருந்ததே இவற்றுட் பிரதான காரணமாகக் கொள்ளப்படுகின்றது. எனினுந் தமிழகத்திற் கிடைத்துள்ள புதியகற்காலத்திற்குரிய தடயங்களை நோக்கும் போது, இவை வட தமிழகத்தில் மட்டுமே செறிந்து காணப்படு கின்றமையை அவதானிக்க முடிகின்றது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மாத்திரமே இக்காலக் கருவிகள், புதியகற்காலக் கலாசாரத்திற்குரிய பிற தடயங்கள் இன்றிக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், தென் தமிழகத்திலும் புதிய
யாழ்-தொன்மை வரலாறு 6 இ

கற்காலத்திற்குரிய தடயங்கள் மிக அருகியே காணப்படுகின் றன எனலாம். இதனால் தென் தமிழகத்திலும் இக்கால மனிதனின் நடமாட்டம் மிக அருகியே காணப்பட்டது.
இதனையே ஈழத்தின் வடபகுதியிலுள்ள நாகரிகத்தின், மையப் பிரதேசங்களாக விளங்கிய கந்தரோடை, மாந்தை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு சளும் எடுத்துக் காட்டியுள்ளன. அனுராதபுரத்திற் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இடைக்கற்கால மனிதன் இங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்திய அதே நேரத்திற் புதியகற்கால மனிதனின் தடயங்கள் எவற் றையும் வெளிக் காட்டவில்லை. மாறாக, இடைக்கற்கால மனிதனுக்குப் பின்னர் பெருங்கற்காலக் கலாசாரத்தினைப் பேணிய மனிதன் இங்கு வாழ்ந்ததையே இவை எடுத்துக் காட்டியுள்ளன.13 கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும் இங்கு இடைக்கற்கால மனிதனோ புதியகற்கால மனிதனோ வாழ்ந்ததை எடுத்துக்காட்டாது, ஆரம்பத்திலிருந்து பெருங்கற்காலக் கலாசாரமே இங்கு நிலை கொண்டிருந்ததை உறுதி செய்துள்ளன.14 மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும் இடைக்கற்காலக் கருவிகள் மாத்திரமே கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி. மு. 1840 - 1570 எனக் கொள்ளப்படுகின்றது. இவ்வகழ்வின்போது கி  ைடத்த தட யங்கள் அனுராதபுரத்தினைப் போன்று இடைக்கால மனிதன் இவ்விடத்தில் வாழ்ந்த பின்னர் சில காலம் இப்பகுதி மனித நடமாட்டமற்ற பகுதியாக விளங்கிய பின்னரே பெருங்கற் கால மனிதன் இப்பகுதியிற் கால் கொண்டதை எடுத்துக் காட்டியுள்ளன.15
எனவே, இது வ  ைர மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் இரு ந் து இடைக்கற்காலக் கலாசாரத்தினைத் தொடர்ந்து கி. மு. 1000 ஆண்டளவில் பெருங்கற்காலக் கலாசாரம் ஈழத் திற் பரவியமை உறுதியாகியுள்ளது. அத்துடன் இடைக்கற் கால மக்கள் பெருங்கற்காலக் கலாசாரத்தை வளர்க்கவில்லை என்பதும், மாறாக ஒரு புதிய மக்கட் கூட்டத்தினரே இப்
O 7 வரலாற்றுக்கு முற்பட்ட . .

Page 20
பெருங்கற்காலக் கலாசாரத்துடன் ஈழத்தினை அடைந்தனர் என்பதையும் அகழ்வாராய்ச்சிப் படைகளின் சான்றாதாரங் களும், கிடைத்துள்ள மனித எலும்புக் கூடுகளும் உறுதி செய் இன்றன. இவை ஈழத்தின் தென்பகுதியில் இரத்தினபுரி மாவட் டத்திலுள்ள " பெலன்பண்டி பெலச ' போன்ற இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த அறிஞர் இவர் களைத் தற்கால வேடர்களின் மூதாதையினர் என இனங் கண்டு கொண்டுள்ளனர்.18 இவர்களை வேடொயிட் வர்க் கத்தினர் என அழைப்பர். இவர்கள்தான் தென்னாசியாவிற் காணப்பட்ட பழங்குடி மக்களாவர். இவர்களின் சந்த ஒ யினரே தற்கால வேடர்களுமாவர். மானிடவியலாளர் இவர் களை "ஒஸ்ரலோயிட்" வர்க்கத்தினர் என அழைத்து இவர்கள் பேசிய மொழியையும் ஒஸ்ரிக் மொழியாக இனங் கண்டு
கொண்டுள்ளனர்.
வரலாற்றுதய காலம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஈழத்தில் வர லாற்றுக் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி யிற் தோற்றம் பெற்றது. இக்காலத்திற்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் முடிவுக்குரிய காலத்திற்குமிடைப்பட்ட காலமே வரலாற்றுதய காலமாகின்றது. வரலாற்றுக்கு முற் பட்ட காலத்தின் ஒரங்கமாகிய இடைக்கற்காலம், கி. மு. 1000 ஆண்டளவில் முடிவுறுவதால் இதற்கும் ஈழத்தின் வர லாற்றுக்கால முதல் மன்னனாகிய தேவநம்பியதீஸனின் ஆட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமே ( கி. மு. 1000 - 250 ) வரலாற்றுதய காலமாகின்றது. எ னினும் இக்காலத்திலும் இடைக்கற்கால மனிதன் தொடர்ந்து வாழ்ந்ததை இக்காலத் தொல்லியற் சான்றுகளுடன் காணப்படும் இடைக்கற்காலக் கருவிகள் எ டு த் துக் காட்டியுள்ளன. இக் காலத்துக்குரிய தொல்லியற் சான்றுகள் தென்னிந்தியா, ஈழம் ஆகிய பிராந் தியங்களிற் பெருங்கற்காலக் கலாசாரம் " என அழைக்கப் படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம், இக்கலாசாரம் இப் பகுதிகளிற் கிறிஸ்தாப்தத்தின் ஆரம்பம் வரை நீடித்
யாழ். -தொன்மை வரலாறு 8 இற

(s
திருந்தாலுங்கூட, இதன் பெரும்பகுதி வரலாற்றுதய காலத் தில் அடங்குவது ஈண்டு அவதானிக்கத்தக்கது.
இச் சந்தர்ப்பத்திற் பெருங்கற்காலக் கலாசாரம் என்றால் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. இதனை உருவாக்கி இறத்தோரை அடக்கஞ் செய்வதற்குப் பெருங் கற்களால் ஆன ஈமச்சின்னங்களை இவர்கள் அமைத்ததால் இது இவ்வாறு பெயர் பெற்றது. இச் சின்னங்களின் வெளித்தோற்றத்தினைக் கொண்டு இவை கல்லறை, கல்மேசை, கற்திட்டை, நடுகல், கல்வட்டம் போன்ற பெயர்களைப் பெற்றன. எனினும் இக் கால மக்கள் முழுக்க முழுக்கக் கற்களால் மட்டும் தமது ஈமச்சின்னங்களை அமைக்கவில்லை. தாழிகளிலும், குழிகளிலும் இறந்தோரை அடக்கஞ் செய்தவர்களும் இவர்களேயாவர். எனினும், இக் கலாசாரத்திற் பெருங்கற்களாலான ஈமச்சின்னங்களே விதந்து காணப்பட்டதால், இது பெருங்கற்காலக் கலாசாரம் எனப்
பெயர் பெற்றது.
இவ்வாறு, பல்வேறு வகைப்பட்ட, ஈமச்சின்னங்கள் காணப் பட்டாலும் இவ் வீமச்சின்னங்களில் இறந்தவர்களின் எச்சங்களு டன் புதைக்கப்பட்ட பொருட்கள் இக் கலாசாரத்தின் ஒருமைப் பாட்டை மேலும் எடுத்துக்காட்டி நிற்கின்றன. இவற்றுட் பிரதானமானவை இரும்பாயுதங்களும், கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்களுமாகும். சில அறிஞர் இப்பண்பாட்டிற்குப் பெருங்கற்காலக் கலாசாரம் என்ற பதத்தினை விட, இரும்புக் காலக் கலாசாரம் என்ற பதமே மிகப் பொருத்தமானது எனவும் வாதிடுகின்றனர். மந்தை வளர்ப்பு, நீர்ப்பாசன விவசாயம், நெல் உற்பத்தி, மட்பாண்டத் தொழில், பிற அலங்காரத் தொழில்கள் ஆகியனவற்றை வளர்த்தெடுத்தவர்களும் இவர்களே. தென்ன கத்தைப் போன்று ஈழத்தில் இக்கலாசாரம் நிலவிய மையப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள், வரலாற்றுக் கால நாகரிகத்தினை வளர்த்தவர்கள் இவர்களே என்பதனை உறுதிப்படுத்தியுள்ளன.17 இதனாற் பெருங்கற்கால, வரலாற்றுக் காலக் கலாசாரப் படைகளுக்கிடையே இழைவிட்டோடும் ஒற் றுமையையும் தொடர்பையும் இனங்கண்டுகொள்ள முடிகின்
9 வரலாற்றுக்கு முற்பட்ட.க

Page 21
றது. இதனால் ஈழத்தின் நாகரிகத்திற்கு வித்திட்டவர்களாக இவர்களைக் கொள்ளலாம். பொதுவாக இப் பண்பாட்டில் நான்கு பிரதான கூறுகள் அமைந்திருந்தன. அவை மக்களின் குடியிருப்புகள், ஈமச்சின்னங்கள், குளங்கள், வயல்கள் ஆகியன வாகும்.
முதலில் மக்களின் குடியிருப்புகளை நோக்குவோம். ஈழத் தின் வரலாற்றுக் காலத்தில் முதன்மை பெற்ற, பரப்பளவில் பெரிய, தலைநகராக விளங்கியது அநுராதபுரமாகும். இதனை அண்மைக்காலத் தொல்லியல் அகழ்வுகள் உறுதி செய்கின்றன. 1969ஆம் ஆண்டு தொடக்கம் இப் பகுதியில் அகழ்வுகள் நடை பெற்று வருகின்றன.18 இவ் வகழ்வுகளின் போது மூன்று கலா சாரப் படைகள் இனங்காணப்பட்டன. முதலாவது கலாசாரப் படையிற் குறுணிக்கற்காலத்துக்குரிய தடயங்கள் காணப்படுகின் றன. இதன் பின்னர் பெருங்கற்காலக் கலாசாரப் படையும் அதன் பின்னர் வரலாற்றுக்காலக் கலாசாரப் படையும் காணப் படுகின்றன. பெருங்கற்காலக் கலாசாரப்படையில் வரலாற்றுக் காலக் கலாசாரப்படைச் சான்றுகளும் இணைந்து காணப்படுவ தைக் கொண்டு பெருங்கற்காலக் கலாசாரத்தை வளர்த் தெடுத்த மக்களே வரலாற்றுக்காலக் கலாசாரத்தையும் வளர்த் தெடுத்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்
ன்றைய சிங்கள - தமிழ் மக்கள் பெருங்கற்காலக் கலாசாரத்தின்
էք
வழிவந்தவர்களே என்பதும் உறுதியாகியுள்ளது. இதனையே ஈழத்தின் தென்கிழக்குப் பகுதியிலே உள்ள பழைய உரோகண இராச்சியத்தின் தலைநகராக விளங்கிய மாகமவில் (திஸ்ஸ
மகாராமாவில்) 1880 களிற் பாக்கர் மேற்கொண்ட அகழ்வுகளும் உறுதி செய்துள்ளன.19 வடமேற்கே புத்தளம் மாவட்டத்தி
லுள்ள பொம்பரிப்பிலே (பொன்பரப்பியில்) மேற்கொள்ளப்
பட்ட அகழ்வுகளும் இத்தகைய கருத்திற்கு வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன.20
கந்தரோடை
1967 இல் வட பகுதியில் திருமதி விமலா பேக்லே மேற் கொண்ட மேலாய்வுகளும், அதனைத் தொடர்ந்து 1970 இல்
யாழ். - தொன்மை வரலாறு o

கந்தரோடையில் அவர் மேற்கொண்ட அகழ்வும் வடபகுதி வர
லாற்றுதய காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்
காட்டியுள்ளன.2 கந்தரோடையின் விஸ்தீரணங் கிட்டத்தட்ட
3 - 2 சதுர கிலோமீற்றராகும். இது வழுக்கை ஆற்றுக் கரையி லுள்ளது. வழுக்கை ஆறே சிலகாலங்களிற் கந்தரோடைக் கட லோடு கொண்டிருந்த தொடர்பில் முக்கிய பங்காற்றியிருக்கலா
மெனக் கொள்ளப்படுகின்றது. நாலு மீற்றர் ஆழத்தில் வெட் டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இரண்டு கலாசாரப் படைகள் இனங்காணப்பட்டன. இவை முறையே வரலாற்றுதய
கால, வரலாற்றுக்காலக் கலாசாரப்படைகளாகும். அநுராத
புரத்திற் கிடைத்தது போன்று குறுணிக்கற்காலக் கலாசாரச் சான்றுகள் இங்கு காணப்படவில்லை. மாறாக, இப்பகுதியின்
நாகரீக வளர்ச்சி பெருங்கற்காலக் கலாசாரத்துடன் தொடங்கி
யது என்பதையே ஆரம்பத்திற் கிடைத்த பெருங்கற்காலக் கலா
சாரத்திற்குரிய தடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் பெருங்கற்காலக் கலாசார மக்களே வரலாற்றுக்காலத்தையும்
வளர்த்தெடுத்தனர் என்பதையும் பெருங்கற்கால - வரலாற்றுக்
காலக் கலாசாரங்களுக்கிடையே காணப்படுங் கலாசாரத் தொடர்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது.
கந்தரோடை ஆய்வின்போது பெருங்கற்காலக் கலாசாரத் திற்குரிய இரும்பு, வெண்கலம் ஆகிய மூலப் பொருட்களினா லான பல்வேறு வகையான கருவிகள், மணி வகைகள், உரோம நாணயங்கள், உரோம மட்பாண்டங்கள், ( படம் 6 - 7 ) இலட்சுமி நாணயங்கள் ஆகியன கிடைத்துள்ளன.22 இவற்றோடு அம்மிக்குழவிகள், பறவை மிருக மீன் எலும் புகள், தூண்களுக்குரிய துளைகள், செங்கட்டிகள் ஆகிய னவும் கிடைத்துள்ளன. இவற்றிற் பின்வருவன சிறப்பான இடத்தினைப் பெறுகின்றன. அவை, ஒரு தேரோட்டியைச் சித்திரிக்கும் கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரை, குறியீடு களுடனான மட்பாண்ட ஒடுகள், (படம்-8) ‘ததகபத” அதாவது ததசுவினுடைய பாத்திரம் என்பதைக் குறிக்கும் பிராமி எழுத்துப் பொறித்த உரோம ரவுலெற்றெற் மட்பாண்டம், ( படம் - 9 ) வெண்கலத் திரிசூலம், பல்வேறு இலட் சுமி நாணயங்கள் { படம் - 10 ) என்பன ஆகும். வரலாற்றுதயகாலக் கலாசாரப் படையிற் கிடைத்த மணிவகைகள் கூட கார்ணிலியன், அகேற்,
1 1 வரலாற்றுக்கு முற்பட்ட். OMIMO

Page 22
லபிஸ், அமெதிஸ்ற், கண்ணாடி போன்ற மூலப் பொருட்களிற் செய்யப்பட்டிருந்தன. திரிசூலம் என வர்ணிக்கப்படும் பொரு ளோடு, வெண்கலத்தினாலான வேல் போன்ற இலை வடிவிலுள்ள கருவியும் இங்கே கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. இதேபோன்று * கொல்ஸ்ரிக் " என அழைக்கப்படும் வெண்கலத்தினாலான மைக்குச்சிகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒன்றில் நெல் உமியின் படிவம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைத்த மிருக எலும்புகளில் மாட்டின் எலும்பு முக்கியம் பெறு கின்றது. இவற்றிற் பல, கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட தற்கான சான்றுகளுடன் காணப்படுவதானது மற்தைகளை வளர்த்துத் தமது விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய இப்பகுதி மக்கள் இவற்றை உணவுக்காகவும் பயன்படுத்தியமை யைத் தெளிவாக்குகின்றது. மட்பாண்டங்களிற் பெருங்கற் காலக் கலாசாரத்திற்குத் தனிச் சிறப்பளிக்கும் " கிராபிடி " என்ற குறியீடுகள் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. இவற்றுட் கோளை, வட்டில், பானை போன்றவற்றின் வடி வமைப்பு அனுராதபுரம், பொம்பரிப்பு, குருகல்கின்ன, திவுல் வேவ, மக்கேவித்த போன்ற இடங்களிற் கிடைத்துள்ள பெருங் கற்கால மட்பாண்டங்களின் அமைப்பை ஒத்துக் காணப்படுவது
நோக்கற்பாலது.
இச்சந்தர்ப்பத்தில் இங்கு கிடைத்த வரலாற்றுதயகால மட் பாண்டங்களின் சிறப்பம்சமாகக் காணப்படும் கறுப்புச்சிவப்பு மட்பாண்டங்கள் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. விமலா பேக்லே இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், இவை தென் னிந்திய இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன என்றும், இத்தகைய ஒற்றுமை கந்தரோடை - தென்னக மக்கள் ஆகியோர் ஒரே கலாசாரத் தின் வழிவந்தவர்கள் அல்லது இரு பகுதியினரும் மிக நெருங் கிய முறையிலே தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை எடுத் துக் காட்டுகின்றதெனவும், இங்கு முதலில் கி. மு. நான்காம் நூற்றாண்டளவில் மக்கள் குடியேறி இருக்கலாம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். 1969 இல் அநுராதபுரத்தில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வும் இப்பகுதியில் இதே காலமளவிற்
யாழ்.தொன்மை வரலாறு 12 )

பெருங்கற்காலந் தோன்றியது என எடுத்துக் காட்டினாலும் அண்மைக் காலத்தில் இரு பகுதிகளிலும் கிடைத்த தொல்வி யற் சான்றுகளை விஞ்ஞானக் காலக்கணிப்புக்கு உட்படுத்திய போது கி. மு. 1000 ஆம் ஆண்டளவில் தென்னகம் போன்று ஈழத்திலும் பெருங்கற்காலந் தோன்றிவிட்டது என்பது தெளி வாகியுள்ளது. இதனால், அநுராதபுரம் போன்று, கந்தரோடை வடபகுதியின் முக்கிய தலைநகராக விளங்கியமை t:fsveartr கின்றது.
இவ்வாறே, வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் உள்ள பொம்பரிப்பிலுள்ள தாழிக்காட்டில், விமலா பேக்லே மேற் கொண்ட அகழ்வின்போது கிடைத்த தொல்லியற் சின்னங்களைக் கருத்திற் கொண்டு இப்பகுதி மாந்தையூடாகக் கந்தரோடை யுடன் தொடர்பு கொண்டிருந்ததை எடுத்துக் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் வெளி யிட்ட கருத்தினை அண்மையில் பூநகரிப் பிராந்தியத்திலுள்ள மண்ணித்தலை, பரமன்கிராய் போன்ற இடங்களிற் கிடைத் துள்ள பெருங்கற்காலக் கலாசாரத்தைச் சேர்ந்த கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்களும் பிற தொல்லியற் சின்னங் களும் உறுதி செய்கின்றன. இதேபோன்று பொம்பரிப்புப் பகுதி யில் வாழ்ந்த மக்கள் அநுராதபுரத்தில் வாழ்ந்த இக்கலா சாரத்திற்குரிய மக்களுடனுந் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இவர் எடுத்துக் காட்டியுள்ளார்.23 துர்அதிஷ்ட வசமாகக் கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் இறந்தோரை அடக்கஞ் செய்த இடுகாடுகள் பற்றிய சான்றுகள் இற்றைவரை கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இப் பகுதிலுள்ள குளங்கள், வயல்கள் ஆகியன பெருங்கற்காலக் கலாசாரச் சூழலை நமக்கு நினைவூட்டுகின்றன எனலாம். கந்தரோடையிற் காணப்படுங் குளம் விசாலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குளங்களில் இரண்டாவது இடத்தினைப் பெறுகின்றது. இதில் முதலிடம் வகிக்கும் குளம் மிருசுவிலில் அமைந்துள்ளது.
1917 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிற் கந்தரோடையில் மேலாய்வை மேற்கொண்ட சேர். போல். பீரிஸ் தமது ஆய்வின் போது இங்கே பல்வகையான உலோகத்திலமைந்த பொருட்கள்,
)ே 13 வரலாற்றுக்கு முற்பட்ட் . is set

Page 23
* கொல்ஸ்ரீக் " என அழைக்கப்படும் வெண்கலத்தினாலான மைக்குச்சிகள், (படம்-11) நாணயங்கள், சிற்பங்கள், பெளத்தக் கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை இனங்கண்டமையை இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. இத்தொல்லியற் சான்றுகளை மையமாகக் கொண்டு கந்தரோடையைத் தோற்றத்தில் சிறிய அளவினதாகிய அநுராதபுரம் என வர்ணித்ததோடு இதன் பழைமை பற்றி அவர் தீர்க்க தரிசனத்துடன் கூறிய கருத்து களும் மனங்கொள்ளத்தக்கவை.24 சிங்கள மக்களின் மூதாதை யினன் என நம்பப்படும் விஜயன் (கி. மு. 6 ஆம் நூற்றாண் டில்) இந் நாட்டிற்கு அடி எடுத்து வைப்பதற்கு முன்னரே ஈழத்தில் இவ் வடபகுதி மக்கள் நடமாட்டத்திற்குரிய இடமாக விளங்கியதெனக் கூறி, இத்தகைய நிலையே கிறிஸ்துவை அடுத்த தசாப்தங்களிலும் காணப்பட்டதென்றும் ஈழத்தின் தொல்லியல் நடவடிக்கைகளுக்கு தொல்வியலில் பயிற்சி பெற்ற ஒருவர் பொறுப்பாக இருக்கும்போது தமிழ்ப் பகுதி களைப் புறக்கணிக்கமாட்டார் எனத் தாம் நம்புவதாகவும் அவர், கூறினார். மேலுந் தொடர்ந்து கூறுகையில், இப்பகுதி தென் னிந்தியாவுக்கு அண்மித்துக் காணப்படுவதாலே தென்னாட்டு மீனவர்கள் காலையில் மீன்பிடிக்கச் செல்லும்போது தினமுங் காணும் ஒரு பகுதியாக இது விளங்கியதால் அம் மக்கள் கடலிற் பிரயாணஞ் செய்வதை அறிந்திருந்த காலத்தில் இருந்தே இங்கு வந்து குடியேற ஆரம்பித்து விட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். இவ் விடத்தின் முக்கியத்துவத் தினை உணர்ந்த ஈழத்துத் தொல்பொருளியற் துறையினர் 1967 இல் இங்கு மேற்கொண்ட அகழ்வுகள் இதன் வரலாற்று முக்கியத்துவத்தினை உறுதி செய்துள்ளன. இவ்வகழ்வின்போது பெளத்த மத அழிபாடுகள், நாணயங்கள், சிற்பங்கள், மணி வகைகள் ஆகியனவும் கிடைத்தன. எனினும் 1970 ஆம் ஆண் டில் முதன்முதலாக இப் பகுதியிலே திட்டமிட்டு மேற்கொன் ளப்பட்ட அகழ்வுகள்தான் வரலாற்றுதய காலத்திலிருந்தே இவ்விடம் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது.
இராசநாயகமுதலியார் 1926 இல் தாம் வெளியிட்ட பண் டைய யாழ்ப்பாணம்" என்ற நூலிற் பீரிஸின் கருத்தையே
யாழ் - தொன்மை வரலாறு 14 இ

சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.25 மேலும் அவர் குடா நாட்டிற் கிடைக்கும் தொல்லியற் சான்றுகளை எண்ணிக்கை அடிப்படையில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கந்த ரோடை இப்பகுதியின் தலைநகராக விளங்கியது என்பது உறுதியாகி உள்ளது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். அப் படியாயின், கந்தரோடையிற் கிடைத்த பெளத்த சின்னங் களின் தோற்றம் சான்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. இச் சின்னங்கள் ஒருவகையில் ஒருவித ஈமச்சின்னங்களே ஆகும். பல்வேறு பரிமாணங்களிலமைந்துள்ள பல்வேறு வாலப் பிரிவு களுக்குரிய இத் தூபிகளில் இறந்த பெளத்த பிக்குமாரின் சாம்பல், முருகைக் கற்களிலமைந்த பேழைகளில் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ஒரு வகை யில் இப் பகுதியில் நிலவிய பெருங்கற் கால ஈமச்சடங்கு முறை பெளத்தத்தின் வருகையோடு அதிற் சங்கமமாகியதையே இவை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இத் தூபின் காணப்படும் இடங்கூட முன்பொருகாற் பெருங்கற்காலக் கலாசாரத்துக்குரிய ஈமக்காடாகவும் விளங்கியிருக்கலாம். பெருங்கற்காலக் கலாசார மக்கள் கந்தரோடையில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும், குறிப்பாக ஆனைக்கோட்டை, சத்திராந்தை (காரைந8ர்) கும்புறுப்பிட்டி, சாட்டி (வேலணை), மண்ணித்தலை ஆகிய இடங்களிலும், கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் பெரும்பாலும் வரலாற்றுதய காலத்தில் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. (படம் - 12)
ஆனைக்கோட்டை
இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வுக்கும் பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளுக்கும் இடையே வேறுபாடு உண்டு. நாவாந்துறைப் பகுதியைச் சீர் செய்வதற்குரிய மண் ணைப் பெறுவதற்காகவே ஆனைக்கோட்டை - கரையாம்பிட்டி மண்மேடு வெட்டப்பட்டது.28 இத்தகைய நிகழ்வின்போதே இம் மேட்டில் காணப்பட்ட பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய எச்சங்கள் பொ. இரகுபதி தலைமையிற் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினால் 1980இல் இனங் காணப்
15 வரலாற்றுக்கு முற்பட்ட , சை

Page 24
பட்டது. பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் க. இந்திரபாலா தலைமையில் இந்நூ லாசிரியர், பொ. இரகுபதி ஆகியோர் இணைந்து இங்கே அகழ்வை மேற்கொண்டனர். மண்ணை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அகழ்வாராய்ச்சிப் பணியும் தொடர்ந்தது. இதனாற் பல எச்சங்கள் மண்ணை அகழ்ந் தெடுக்கும் போது சிதைந்தும், குழப்பப்பட்டுங் காணப்பட்டா லுங்கூட, ஒரளவுக்கு இக் குறைபாடுகள் அற்ற பகுதியில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வு இப் பகுதியின் கலாசார முக்கியத் துவத்தினை எடுத்துக் காட்டியுள்ளது. நிற்க, இத்தகைய அகழ் வாய்வுக்கு முன்னர் இங்கு மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்களின் பாகங்களோடு, உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்களுங் கிடைத்தன. இவற்றில் ஒன்றில் இரு பிராமி எழுத்துகள் இனங் காணப்பட்டுள்ளன. இவை முறையே ‘பி’, ‘யி" ஆகும். அத்துடன் இங்கு கிடைத்த சில மட்பாண்ட ஒடுகளிற் சித்திர எழுத்துப் பொறித்துங் காணப்பட்டுள்ளன. (படம் - 13) கல்லினாலான அம்மிக்குழவிகள், இரும்பினாலான ஈட்டியின் பாகங்கள், இரும்பாணிகள், வெண்கல மைக்குச்சி ஒன்று ஆகியன வும் இவ்வாய்வின்போது கிடைத்த பிற பொருட்களாகும்.27
இங்குள்ள சான்றுகளை நோக்கும்போது வரலாற்றுதய காலத்திலிருந்து, வரலாற்றுக் காலத்திலும் இவ்விடம் சிறப் புப் பெற்றிருந்தது தெளிவாகின்றது. பொதுவாகவே இது ஈமச் சின்னங்களை உள்ளடக்கிய ஓர் ஈமக்காடாக இருப்பது மட்டு மன்றி இன்றுவரை இதன் அருகில் தொடர்ந்து இந்து. கிறிஸ்தவ ஈமக்காடுகள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. குடாநாட்டைப் பொறுத்தமட்டில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஈமக்காடாக இது விளங்குவது இதற்குரிய தனிச் சிறப்பா கும். அத்துடன் இங்கு கிடைத்த ஈமச் சின்னங்கள் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள மாந்தைத் துறைமுகத்தில் அகழ்ந் தெடுக்கப்பட்ட ஈமச்சின்ன வகையை ஒத்திருப்பதும் அவதானிக் கத்தக்கது.28 இவ்வீமக்காடு அமைந்திருந்த இடம் ஆனைக் கோட்டை மண்கும்பிகளில் ஒன்றாக இருப்பதோடு இது இன்
யாழ். - தொன்மை வரலாறு 16 O

றைய நாவாந்துறைக்கு அருகிலும் தற்போதைய கரையாம் பிட்டி மயானத்துக்கு அருகிலும் அமைந்துள்ளமை இதற்குரிய மற்றுமோர் சிறப்பாகும். இம் மண்மேட்டிலிருந்து மண்ணை அகழ்ந்தெடுக்கும்போதே இங்கு பெருங்கற்காலக் கலாசாரத்திற் குரிய சான்றுகள் வெளிவந்தன. இச்சான்றுகளில் நீளக்கிடத்தி அடக்கஞ் செய்யப்பட்ட இரு மனிதச் சடலங்களும், வெண் கல முத்திரையொன்றும் முக்கியமானவையாகும். இச் சடலங் களில் ஒன்று புதைக்கப்பட்ட புதைகுழியின்மேலே கூரை ஒடுகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ் வோடுகள் சடலம் புதைக்கப்பட்ட காலத்திற்குரியனவா என் பது சந்தேகத்திற்குரியது.
ஆனைக்கோட்டை ஈமச்சின்னங்களை உள்ளடக்கிய மண் மேட்டின் உயரம் சுமார் 4 அடிகளாகும். இதில் எல்லாமாக நான்கு மண் படைகள் இனங்காணப்பட்டுள்ளன. முதற்படையில் இவ் வீமக்காட்டின் அருகிலுள்ள வயல்களைத் திருத்தியபோது அவற்றின் மேற்படையில் ஊரிகளையுடைய மண் காணப்படு கின்றது. இரண்டாவது படையில் செம்மஞ்சள் மண் காணப் படுகின்றது. மூன்றாவது படையில் ஒருவித இருவாட்டி மண் காணப்படுகின்றது. நான்காவது படை இயற்கையாக இப் பகுதியிற் காணப்பட்ட மண்படையாகவே அமைந்துள்ளது. இங்கே முக்கியம் பெறுவது மூன்றாவது படையாகிய இரு வாட்டி மண்படையாகும். இதிற்றான் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப் படையிற் சுமார் பத்து அடி வித்தியாசத்தில் இரு எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டாலும் இவற்றின் காலம் முன்பின்னதாக அமைந்திருந்தது என்பதை உணர்த்தும் வகையில் இப் படையின் அமைப்பு அமைந்துள்ளது. இப் படை அமைப்பு இரு பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. இவற்றை முறையே(அ), (ஆ) பிரிவு களாகக் கொள்ளலாம். இவற்றில் முதலாவது எலும்புக் கூடு (அ), அ படையிலும், இரண்டாவது எலும்புக் கூடு (ஆ) ஆ படையிலும் காணப்பட்டமை அவதானிக்கத்தக்கது.29
17 வரலாற்றுக்கு முற்பட்ட சைக.

Page 25
பொதுவாக இப்படை அமைப்பை நோக்கும்போது வரலாற் றுதய காலமும் வரலாற்றுக் காலமும் சங்கமிக்கும் காலப் பகுதியில் (கி. மு. 3 ஆம் நூற்றாண்டளவில்) பெருங்கற்காலக் கலாசார மக்கள் இங்கு வாழ்ந்து வரலாற்றுக்காலக் கலாசாரத் தினை வளர்த்தெடுத்தமை புரிகின்றது. இவ்வகழ்வின்போது இனங்காணப்பட்ட கிராபிடி என அழைக்கப்படும் சித்திர எழுத்துக்களுடன் கூடிய பானை ஒடுகள், உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்கள், இலட்சுமி நாணயம், உரோம நாணயம், இரும்புக் கருவிகள், மணி வகைகள், கறுப்புச் சிவப்புநிற மட் பாண்டங்கள், சிவப்புநிற மட்பாண்டங்கள், மிருக எலும்புகள், மீன் எலும்புகள், சிப்பிகள், சுறா எலும்புகள், சங்குகள், ஒடுகள் ஆகியன இப்பகுதியில் கி. பி. 3 ஆம் / 4 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அமைகின்றன. வெண் கல முத்திரையிற் காணப்படுஞ் சித்திர எழுத்தைக் கொண்டும் கந்தரோடையின் காலத்தைக் கொண்டும் நோக்கும்போது இப் பகுதி மக்கள் வரலாற்றுதய காலத்திலேயே இங்கு குடியேறி விட்டார்கள் என ஊகிக்கலாம்.
ஆனால் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலத் தைக் கணிப்பதற்குரிய விஞ்ஞான சாதனங்களின் துணை இல்லாததால் பெருமளவு அகழ்வியற் படைகளிற் கண்டெடுக்கப் பட்ட கலாசாரச் சின்னங்களைக் கொண்டே மேற்படி முடி விற்கு வரவேண்டி உள்ளது. இச் சின்னங்கள் கி. பி. 4 ஆம் நூற்றாண்டளவில் இவ்விடம் முக்கிய மிழந்ததை எடுத்துக் காட்டுகின்றன. இதனை இரண்டாவது படையின் மேலே காணப்படும் காற்றால் கொண்டுவரப்பட்ட செம்மஞ்சள் நிற மணற் படையைக் கொண்டு இனங் கண்டு கொள்ள முடி கின்றது. பல நூற்றாண்டுகளாக மக்கள் நடமாட்டமில்லாது இப்பகுதி விளங்கியதால் செம்மஞ்சட் படை இவ்வாறு காற்றி னால் உருவாக்கப்பட்டது போலத் தெரிகின்றது. மேலே காணப்படும் ஊரிப்படை இவ்வீமக்காட்டின் அயலில் உள்ள வயல்களைத் திருத்தியதால் உருவானது போலத்தெரிகின்றது. இது எப்போது நடந்தது என்று கூறுவது கடினம். யாழ்ப் பாண இராச்சிய காலத்தில் இப்பகுதித் துறைமுகமாகிய
யாழ். - தொன்மை வரலாறு 13

"நாவாந்துறை முக்கியம் பெறவில்லையா என்ற கேள்விகள் எழுவது இயற்கை, வருங்கால ஆய்வுகள் ஒரு சமயம் யாழ்ப் பாண இராச்சிய காலத்திலும் இத்துறைமுகம் பெற்றிருந்த மூக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டலாம். பெருங்கற்காலக் கலா சாரத்தில் ஈமக்காடு மட்டும் முக்கியம் பெறவில்லை. இதன் அம்சங்களாக வயல், குளம், மக்கள் குடியிருப்புகள் ஆகியனவும் முக்கியம் பெற்றன. இப்பகுதி கடற்கரைப் பிரதேசமாக இருந்த தால் இவர்களின் பிரதான தொழில் கடலோடு இணைந்த ஒரு தொழிலாக அமைய, விவசாயம் கடற்றொழில் பெற். றிருந்த முக்கியத்துவத்தினைப் பெறாதிருந்திருக்கலாம். இவ் வீமக்காட்டிற்கு அருகிலேயே மக்களின் குடியிருப்புகளும் அமைந்திருத்தல் வேண்டும். எனினும், இவை பற்றிய சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை.
இனி இங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சடலங்களை நோக்குவாம். இவை இரண்டும் கிட்டத்தட்ட 5 நீளமானதாகக் காணப்படுவதோடு மேற்கு - கிழக்குத் திசையை நோக்கிய வண்ணமே புதைக்கப்பட்டும் இருந்தன. பூரணமான நிலையில் மீட்டெடுக்க முடியாதவாறு முதலாவது ச ட லத் தி ன் (அ) அரைக்குக் கீழ் உள்ள எலும்புகள் அழிந்து விட்டன. அரைக்கு மேலுள்ள பகுதி இரு கைகளையும் அரையை நோக்கி மடித்த வாறு இச்சடலம் புதைக்கப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது. (படம் - 14 ) இம்மனித உடலைச் சுற்றி நிவேதனப் பொருட் களாகப் பல பொருட்கள் படைக்கப்பட்டிருந்தன. இப்பொருட் கள் ஒரு சமயம் இறுதி நேரத்தில் இறந்த இம் மனிதனுக்குச் செய்யப்பட்ட கிரியைகளின் எச்சங்களாகவும் விளங்கியிருக்க லாம். இவற்றுள் மீன், சுறா ஆகியவற்றின் எலும்புகள், நண்டு ஒடுகள், சங்குகள், சிப்பிகள், பல்வகை மிருக எலும்புகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. இவை பெருமளவுக்கு மட்பாண்டங் களிற்றான் வைத்துப் புதைக்கப்பட்டன. மட்பாண்டங்களிற் கிண்ணங்கள், வட்டில்கள், பானைகள் ஆகியன குறிப்பிடத் தக்கன. இவற்றுட் கறுப்புச்சிவப்புநிற மட் பாண் டங்க ள், சிவப்புநிற மட்பாண்டங்கள் ஆகியனவும் அடங்கும். சில மட் பாண்ட ஒடுகளிற் சித்திர எழுத்துகளும் உள. (படம் - 15) எனினும், இவை எ ல் லா வற்  ைற யு ம் விட இச்சடலத்தின்
( 19 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 26
தலைமாட்டருகில் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்ட வட்டிலில், சுறாமாலைகளுடன் கண்டெடுக்கப்பட்ட வெண்கல முத்திரையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் காணப்படு கின்றது. (படம் - 16 )
ஆனைக்கோட்டையிற் கிடைத்த முத்திரையில் இரு வரி வடிவங்கள் உள. இவ்விரு வடிவங்களும் இரு வரிகளாகக் காணப்படுகின்றது. முதலாவது வரியில் சிந்துவெளியிலும் பெருங் கற்கால மட்பாண்ட ஒடுகளிலும் காணப்படுங் குறியீடுகளை ஒத்த சித்திர எழுத்துக் காணப்பட, இரண்டாவது வரியிற் பிராமி வரிவடிவங் காணப்படுகின்றது. இதிலுள்ள சித் தி ர எழுத்து ஈழத்தில் வரலாற்றுக் காலத்திற் பிராமி வரிவடிவம் அறிமுகப்படுத்தப்பட முன்னர் வரலாற்றுதய காலத்தில் இப் பகுதி மக்கள் இச் சித்திர வடிவத்தை அறிந்திருந்ததை எடுத் துக் காட்டுகின்றது எனலாம். இவ் விரு வடிவங்கள் இம் முத்திரைவிற் காணப்பட்டாலும் கோவேத்த / கோவேதன் / கோவேத் / கோவேத கோவேதம் என்ற வாசகமே இவ்வாறு இரு வரிகளாக இரு வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன என்று இனங்காணப்பட்டுள்ளது.30 எ னி னு ம், சிந்துவெளிக் குறியீடுகள் போன்று ஈழத்திலும் இத்தகைய குறியீடுகள் காணப்படுவதும் இத்தகைய முத்திரை அக் காலத் துறைமுகங் களிலொன்றாகிய நாவாந்துறைக்கருகிற் காணப்படுவதும் அவதானிக்கத்தக்க அம்சமாகும். "நாவாய்" என்றாற் கப்பல் எனப் பொருள்படும். இதனால் இக் கப்பல் பிரயாணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனால் அணியப்பட்ட ஒரு மோதிரத்தின் எஞ்சிய பாகமாகவே இவ் வெண்கல முத்திரை அமைந்திருந்ததை இதன் எஞ்சிய பாகம் எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
முதலாவது சடலத்திற்குத் தெற்கே புதைக்கப்பட்ட இச் சடலம் அதனைப் போல் மேற்கு - கிழக்குத் திசையை நோக் கியே புதைக்கப்பட்டிருந்தது. இச் சடலம் முதலாவது சட லத்தை விடக் காலத்தாற் பிந்தியதென்பதை இதன் கால் மாட்டிற் கண்டெடுக்கப்பட்ட உரோம ரவுலெற்றெற் மட்பாண் டங்கள், ஒரு இலட்சுமி நாணயம், இரும்பினாலான அகல்
யாழ். - தொன்மை வரலாறு 20 9ே

விளக்கின் எஞ்சிய பாகங்கள் ஆகியன எடுத்துக் காட்டியுள்ளன. ஆனைக்கோட்டையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலம் (<型 川 4 9" நீளமுடையதாகும். இது பூரணமான நிலையிலும் நிவேதனப் பொருட்களுடனும் வெளிக்கொணரப்பட்டது. இவ் விரு எலும் புக் கூடுகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை பின்னர் மானிட வியல் அறிஞர்களால் ஆராயப்படவிருந்தன. துர்அதிஷ்டவச மாக 1987இல் ஏற்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை காரணமாக இவை அழிந்து விட்டன. எனினும், இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மறந்துவிடத்தக்கதல்ல. இவை யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதல் முதலாக அகழ்ந்தெடுக் கப்பட்ட மனித எலும்புக் கூடுகளாக அமைவதால் வரலாற் றுதய காலத்தில் மனிதன் இங்கு வாழ்ந்ததை இவை எடுத் தியம்புகின்றன. ஆனைக்கோட்டையிற் கிடைத்த சடலம் (அ) வினைப்போன்றே மாந்தையிற் கிடைத்த சடலத்தினை ஆராய்ந்த அறிஞர் அதனைத் தென்னிந்திய மக்களது சடலம் என இனங்கண்டுள்ளனர்.31 இத்தகைய கருத்தினை மேலும் உறுதி செய்வதாக ஆனைக்கோட்டையில் கிரீனப் பட்ட முத்திரையின் வாசகம் அமைந்துள்ளது. இதனால் வரலாற் றுதய காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்களை @á岛 மக்கட் கூட்டத்தினரே ஈழத்திலும் வாழ்ந்தனர் என்பது மேலும் உறுதியாகின்றது.82
இச்சந்தர்ப்பத்தில், ஆனைக்கோட்டையில் கிடைத்துள்ள முதலாவது சடலத்திற்கும் (அ) மாந்தையில் 1950களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலத்துக்குமிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.33 இரண்டும் ஒரே அளவின தாகும். இவை இரண்டும் அரையிற் கையைக் கட்டிய நிலை யிற் புதைக்கப்பட்டிருந்தமை இவற்றிடையே காணப்படும் மற்றுமோர் ஒற்றுமையாகும். எனினும் இவ்விரு பகுதிகளிற் கிடைத்த சடலங்களின் காலத்தினைப் பொறுத்தமட்டில் சில வார்த்தைகள் கூறுவது அவசியமானது. இவை காணப்பட்ட படை அமைப்பு, இச்சடலங்களோடு கண்டெடுக்கப்பட்ட
21 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 27
நிவேதனப் பொருட்கள் ஆகியனவற்றைக் கொண்டே இவற் றின் காலத்தினை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இப்பொருட் களையோ, இவற்றுடன் காணப்பட்ட எலும்புகளையோ காலக்கணிப்புக்குள்ளாக்கும் வசதிகள் கிடைக்காததாலேயே
இவ்வாறு இவற்றின் காலத்தினை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.
மாந்தையிற் கிடைத்த சடலத்தின் காலம் வரலாற்றுக் காலத்தது எனக் கொள்ளப்பட்டாலும் கூட, இது வரலாற்றுக் காலம் மலருவதற்குரிய காலத்திற்குரியதென்று கருதுவதிலே தவறில்லை என்று இதனை ஆராய்ந்த கென்னடி என்ற ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். இவ்வாறே தான் ஆனைக் கோட்டையிற் கிடைத்த முதலாவது சடலத்திற் காணப்படும் சிந்துவெளியை ஒத்த சித்திர வரிவடிவமும் பிராமி வரி வடிவமும் கலந்து எழுதப்பட்ட முத்திரையை நோக்கும் போது சித்திர எழுத்திற் பயிற்சி பெற்ற மக்கள் கூட்டம் ஒன்று இங்கு வாழ்ந்ததை எடுத்துக்காட்டியுள்ளது. இதனால் இத் தகைய வரிவடிவம் இப்பகுதியில் வழக்கிலிருந்திருக்கலாமெனவும் உணர முடிகின்றது. இதனை உறுதிசெய்வதாக மட்பாண்டங் களிற் காணப்படும் சித்திர எழுத்துகள் (கிராபிடி) அமைகின் றன. இதனால் முதலாவது சடலத்தினை வரலாற்றுதய கால மும், வரலாற்றுக்காலமும் சங்கமிக்கும் காலத்துக்குரியதெனக் கொண்டோம். இரண்டாவது சடலம் (ஆ) முன்னயதை விடக் காலத்தாற் பிந்தியது. இதனை இதனுடன் காணப் படும் உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்களும், இலட்சுமி நாணயமும் எடுத்துக் காட் டு கி ன் ற ன. அண்மைக்கால ஆய்வுகள் ரவுவெற்றெற் மட்பாண்டங்களின் தோற்றத்தினை கி. மு. 200 ஆம் ஆண்டிற்கு எடுத்துச் செல்வதாலும், இலட்சுமி நாணயங்களும் ஏறக்குறைய இக்காலத்திலேயே தோன்றி விட்டன என அறிஞர்கள் கருதுவதாலும் இச்சடலத்தினை யும் இக்காலத்திற்குரியதெனக் கொள்ளலாம்.
எவ்வாறாயினுங் கந்தரோடை போன்றே ஆனைக்கோட்
டையிலும் வாழ்ந்த வரலாற்றுதயகால மக்கள் வரலாற்றுக் காலத்திற்குரிய வரிவடிவத்தினைப் பயன்படுத்தினர் என்பதை
யாழ் - தொன்மை வரலாறு 22 O

இங்கு கிடைத்துள்ள முத்திரையின் இரு வரிவடிவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. எனினும் கந்தரோடையிற் கிடைத் துள்ள பிராமி வரிவடிவம் " ததகபத’ எனக் குறிப்பிடுவதை நோக்கும்போது அது பெளத்த மதகுருவுக்குரிய பிச்சாபாத் திரத்தினைக் குறித்திருக்கலாமெனக் கொள்ள இடமிருக்கின் றது. ஆனால் ஆனைக்கோட்டையில் கந்தரோடை போன்று பெளத்தம் அக்காலத்திற் செல்வாக்குடன் விளங்கவில்லை எனக்
கொள்ளலாம்.
ஆனைக்கோட்டையில் நிலத்திலமைந்த குழிகளில் நீளக் கிடத்தி அடக்கஞ் செய்யும் மரபு காணப்பட்டாலுங்கூட, பிற ஈமச்சின்ன வகைகளும் இங்கே வழக்கிலிருந்ததற்கான சான் று கள் காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது உடைந்த பாகங்களுடன் காணப்பட்ட தாழியாகும்.84 இத னுட் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்ட ஒடுகள், சங்குகள், மிருக எலும்புகள் ஆகியனவும், இதற்கு வெளியே மைக்குச்சி யாகப் பயன்படுத்தப்பட்ட வெண்கலத்தினாலான மைக்காம் பொன்றுங் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விமக் காட்டிலுள்ள மண்மேடு சிதைந்து காணப்படுவதால் இதனை முற்றுமுழுதாக இனங்கண்டு கொள்ள முடியவில்லை. ஆனைக்கோட்டை போன்றே தமிழகத்தின் தென்கோடியிற் குறிப்பாக, திருநெல் வேலி, இராமநாதபுர மாவட்டங்களில் நீளக்கிடத்தி அடக்கஞ் செய்தல், தாழி அடக்கம் ஆகியன விதந்து காணப்பட்டன. காரணம் இவை மணல் பிரதேசங்களாகக் காணப்பட்டதே. இவ்வாறே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மணற் பகுதிகளி லும், மன்னார் மாவட்டப் பகுதியிலும் இத்தகைய அடக்க முறை செல்வாக்குப் பெற்றிருந்தது எனக் கொள்ளலாம். ஆனைக்கோட்டை மண்மேட்டில் மண்ணை அகற்றுவோரின் நடவடிக்கை காரணமாக எருதின் சாலும்புகளோடு சேர்ந்த கொம்புகளும் அதனைச் சுற்றிக் கறுப்புச்சிவப்பு மட்பாண்டங் களில் அளிக்கப்பட்டிருந்த நிவேதனப் பொருட்களும் இனங் காணப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் வழக்கிலிருந்த மிரு கங்கள் இறக்கும்போது அவற்றை அடக்கஞ் செய்து அவற்றுக்கு நிவேதனப் பொருட்களை அளிக்கும் மரபை எடுத்துக் காட்டு
23 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 28
கின்றனவா அல்லது இறந்த எசமானுக்கு நிவேதனமாக அளிக் கப்பட்ட மிருகத்தினை எடுத்துக் காட்டுகின்றதா என்று திட்ட வட்டமாகக் கூறமுடியாதுள்ளது. ஒரு சமயம் எசமானின் சடலத்தை இக்கும்பியை அகற்றியோர் மண்ணுடன் எடுத்துச் செல்ல, இம்மிருகத்தின் சடலம் மாத்திரம் எஞ்சியுமிருக்கலாம்.
சத்திராந்தை
ஆனைக்கோட்டையைப் போன்று வரலாற்றுதயகாலத்திற். குரிய பெருங்கற்காலக் கலாசாரத் தடயங்கள் காரைநகரி லுள்ள சத்திராத்தையிலும் கிடைத்துள்ளன.35 இவ்விடத்தி லும் இக்கலாசாரத்திற்குரிய தடயங்கள் மண்மேட்டிலேதான் காணப்பட்டதோடு மண்கும்பியிலிருந்து மண்ணை அகற்றும் போதுதான் இ  ைவ யாவும் வெளிவந்தன. இவ்விடத்தின் பெருங்கற்காலக் கலாசாரப் பாரம்பரியத்தினை இந்நூலாசிரி பரும், பொ. இரகுபதியும் மேலாய்வின்போது இனங்கண்டனர். 1981 இல் ஜனவரி, அக்ரோபர் மாதங்களில் இரு ஆய்வுக் குழிகள் இங்கே அமைக்கப்பட்டன. இவை முறையே அ, ஆ, குழிகள் எனப் பெயரிடப்பட்டன. இவற்றுள் குழி அ' வின் கனம் 5 அடியாக இருந்தது. இதில் மூன்று மண்படைகள் காணப்பட்டன. இவற்றுள் இரண்டாவது படையிற்றான் இரு சடலங்கள் இனங்காணப்பட்டன. (படம்-17) இதனால் இங்கே முக்கியம் பெறுவது இச் சடலங்களை உள்ளடக்கிய இரண் டாவது படையாகும். இச்சடலங்கள் சுமார் 5 அடி நீள முடையன. ஆனைக்கோட்டை, திருக்கேதீஸ்வரம் ஆகிய பகுதி களிற் கண்டெடுக்கப்பட்ட சடலங்களைப் போல நீளக்கிடத் தியே இவையும் புதைக்கப்பட்டிருந்தன. இச்சடலங்களைச் சுற்றி மட்பாண்டங்களோடு நிவேதனப் பொருட்களும் காணப் பட்டன. இந்நிவேதனப் பொருட்கள், கிண்ணங்கள், வட் டில்கள், பானைகள் ஆகியனவற்றுள் ஆனைக்கோட்டையிற் காணப்பட்டதைப் போன்று படைக்கப்பட்டிருந்தன. (படம் 18) இத்தகைய நிவேதனப் பொருட்களின் எச்சங்களாக மீன், மிருக எலும்புகள், நண்டின் கோதுகள், மாட்டுப்பல், மணிகள், பூனை போன்ற மிருகங்களின் எலும்புகள் என்பன காணப்பட்டன.
பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய வட்டில்களிலும் இவை
யாழ். - தொன்மை வரலாறு 24 O

வைக்கப்பட்டிருந்தன. இந்நிவேதனப் பொருட்களிற் குறுணிக் காலக் கருவிகளை ஆக்குவதற்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப் பட்ட "குவாட்ஸ்" கல்லின வகையும் காணப்பட்டது குறிப் பிடத்தக்கது. "ஆ" குழியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது இதன் படை அமைப்புப் பிற்காலச் சான்றுகளுடன் கலந்து குழம்பிய நிலையிற் காணப்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளது. இக்குழியிற் குறைந்தது எட்டுச் சடலங்கள் கிடைத்தாலுங்கூட, படை அமைப்புக் குழம்பிய நிலையிற் காணப்படுவதால் இவை வரலாற்றுதய காலத்திற்குரியனவா என்று திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது. எனினும் இக்குழியிற் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள், மணிவகைகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்
தக்கது.
ஒட்டுமொத்தமாக நோ க் கும் போது சத்திராந்தையிற் கிடைத்துள்ள பெருங்கற்காலச் சின்னங்களைத் திட்டவட்ட மாக வரலாற்றுதய காலத்திற்குரியனவாகக் கொள்ளமுடியா விட்டாலுங்கூட இங்கு கிடைத்த சான்றுகள் வரலாற்றுதயு காலத்திலேயே மக்கள் இவ்விடத்திற் குடியேறியிருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக இங்கு கிடைத்த கறுப்புச்சிவப்பு மட்பாண்டங்களின் மண்சேர்க்கையை ஆராயும் போது கரடுமுரடான மண்ணினால் இவை ஆக்கப்பட்டமை தெரிகின்ற்து. இது ஒரு சமயம் இப்பகுதியிற் குடியேறியவர் களின் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துக் காட்டலாம். இவ் வாறே இம்மட்பாண்டங்களிலுள்ள குறியீடுகளும் அமைந்துள் ளன. இவற்றுட் பிராமி வரிவடிவமாகிய "ம", இரு அடைப்பு களிலுள்ள ஆங்கில எக்ஸ் " போன்ற குறியீடு, திரி சூலங்கள் என்பவை குறிப்பிடத்தக்கன. (படம் - 19) வரலாற் றுக் காலத்திற்கு முன்னரே இத்தகைய குறியீடுகள் வழக்கி லிருந்தன என்பதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. மேலும் வரலாற்றுக் காலத்தின் முத்திரையாகிய ரவுலெற்றெற் மட் பாண்டங்கள் அகழ்வுக் குழிகளிற் காணப்படாததும் இவ்விடத் தின் பழைமைக்குரிய மேலுமொரு சான்றாதாரமாகும். எனி னும் இத்தகைய மட்பாண்டங்கள் அகழ்வுக் குழிகளுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
C 25 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 29
ஏனைய பெருங்கற்காலக் கலாசார மையங்கள்
ஆதிக்குடியேற்ற மையங்களில் வேலனைப் பகுதியும் முக் கியம் பெறுகின்றது. இவ்விடத்திலுள்ள கும்புறுப்பிட்டி, சாட்டி ஆகிய இடங்களிற் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஒரு சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றோடு கண் ணாடி மணிகள், இரும்பாணிகள், இரும்புக் கழிவுகள், சுறா எலும்புகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.86 இச்சான்றுகள் avjrGUnTAbpy4i காலத்திற்குரியனவாகக் காணப்பட்டாலுங்கூட இதன் அமைவிடம், வளம் ஆகியனவற்றை உற்றுநோக்கும் போது இது தமிழகத்திலிருந்து வட பகுதி நோக்கி வந்த மனிதன் வந்தடையும் வழிப்பாதையாக இருந்தது புலனா கின்றது. தக்க அகழ்வாய்வு இதன் வரலாற்றுதய காலக் கலா சாரப் பண்புகளை மேலும் எடுத்துக் காட்டலாம். இவ்வாறே ஜம்புகோளபட்டிணம் அமைந்த பகுதியிலுங்கூட வரலாற்று தய காலத்திலேயே குடியேற்றங்கள் காணப்பட்டிருக்கலாம். பாளி நூல்களில் மாத்தை போன்று இத்துறைமுகமும் இப்பகுதியில் முக்கியமான துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இதன் பழைமையை மேலும் எடுத்துக் காட்டுகின்றது. இதே போன்றுதான் பிற்காலத்தில் முக்கியம் பெற்ற வல்லிபுரம், நாகர்கோயில் ஆகிய இடங்களிலும் ஆரம்பகாலக் குடியேற் றங்கள் வரலாற்றுதய காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இப் பகுதிகளில் எதிர்காலத்தில், மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டமிட்ட ஆய்வுகளும் அகழ்வுகளும் இவை பற்றிய விரிவான தகவல்களைத் தரலாம்.
தொகுத்து நோக்கும்போது யாழ்ப்பாணக் குடாநாட் டைப் பொறுத்தமட்டிற் கந்தரோடையில் மேற்கொள்ளப் பட்ட திட்டமிட்ட அகழ்வு முக்கியமான தொன்றாகும். இதன் பெறுபேறுகள் முழுமையாகப் பிரசுரிக்கப்படாமலிருந் தாலுங் கூட இவ்வகழ்வின்போது கிடைத்த சில பொருட் களை விஞ்ஞான காலக் கணிப்புக்கு உட்படுத்தியபோது இதன் காலம் பற்றிய முடிவுகள் கிடைத்துள்ளது. இவற்றுட் பெரும்பாலான சான்றுகள் இப்பகுதியிற் பெருங்கற்கால மக்க ளின் நடமாட்டம் கி. மு. 500 ஆம் ஆண்டளவிலேயே
யாழ். - தொன்மை வரலாறு 26 ே

ஆரம்பமாகிவிட்டதைக் குறிக்க, ஒரு சில சான்றுகள் கி.மு. 1000 ஆண்டளவிலேயே மக்கள் இங்கு நடமாடத் தொடங்கி விட்டதை எடுத்துக் காட்டியுள்ளன. 37 அனுராதபுரத்திலும்38 பெருங்சற்கால மக்கள் கி. மு. 1000 ஆண்டளவிலேயே காணப் பட்டதைச் சான்றுகன் எடுத்துக் காட்டுவதாற் சுந்தரோடையில் ஏறக்குறையச் சமகாலத்திலேயே பெருங்கற்கால மக்கள் குடி யேறியிருக்கலாமெனக் கொள்ளலாம். இதனால் வட பகுதியில் வரலாற்றுதய காலத்தின் ஆரம்பத்தையும் இக்காலமாகக் கொள் ளலாம். ஆனைக்கோட்டை அகழ்வின்போது கிடைத்த சான்று கள் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திலேயே பெருங்கற்கால மக்களின் நடமாட்டம் இங்கு காணப்பட்டதை எடுத்துக் காட்டி னாலுங்கூட, இங்கு கிடைத்த முத்திரையிலுள்ள முதல் வரி சையிற் காணப்படுஞ் சிந்துவெளி நாகரிக எழுத்துகளை ஒத்த சித்திர எழுத்துகளையும் இவற்றை ஒத்த பெருங்கற்காலக் கலா சாரத்திற்குரிய மட்பாண்டங்களில் உள்ள குறியீடுகளை ஒத்த வடிவங்களையும் நோக்கும்போது வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே இவற்றை இவர்கள் பயன்படுத்தியமை புலனாகின்றது. இதனால் ஆணைக்கோட்டையிலும் வரலாற்றுதய காலத்தி, லேயே மக்கள் வாழ்ந்தமை தெளிவாகின்றது. காரைநகரிலுள்ள சத்திராந்தைப் பகுதியிலும் இக்காலத்திலேயே இம்மக்களின் நடமாட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் வேலணைப் பகுதியி லுள்ள கும்புறுப்பிட்டி, சாட்டி போன்ற இடங்களில் மேற் குறித்த இடங்களிற் கிடைத்த அளவு பெருங்கற்காலச் சான் றுகள் கிடைக்கவில்லை . கும்புறுப்பிட்டியிற் கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்களின் இரண்டே இரண்டு பாகங்கள் மட்டுமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் வாழ்ப்பாணக் குடா நாட்டின் நுழைவாயிலில் இப்பகுதி காணப்படுவது மட்டுமன்றி ஆனைக்கோட்டைக்கு நேரெதிரே காணப்படுவதானது இங்கும் ஆனைக்கோட்டை போன்றே பெருங்கற்காலக் கலாசார மக்க ளின் நடமாட்டம் வரலாற்றுதய காலத்திலேயே தொடங்கி விட்டதைக் குறிக்கின்றது. வருங்கால ஆய்வுகள் இதனை மட்டு மன்றி வல்லிபுரம் போன்ற இடங்களுக்கும் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குமிடையே உள்ள தொடர்பினையும் உறுதி செய்யலாம்.
O 27 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 30
கந்தரோடை, ஆனைக்கோட்டை சத்திராந்தை, கும்புறுப் பிட்டி ஆகிய இடங்களிற் கிடைத்த மட்பாண்டங்கள், குறிப் பாகப் பெருங்கற்காலக் கலாசாரத்தின் முத்திரைகளான கறுப் புச்சிவப்பு நிறத்திலமைந்த கிண்ணங்கள், வட்டில்கள், சிவப்பு நிறமட்பாண்டங்கள் ஆகியன யாவும் ஒரே கலாசாரத்தின் அம்சங்களாக விளங்கியதை எடுத்துக் காட்டும் அதே நேரத் தில் ஈழத்தின் பிற பகுதிகளில் நிலவிய பெருங்கற்காலக் கலா சாரத்தின் ஒரு பகுதியே இவை என்பதனையும் இம்மட்பாண்ட வடிவங்களுக்கிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை எடுத்துக் கிாட்டுகின்றது. அநுராதபுரம், பொம்பரிப்பு, திவுல்வேவ, குருகல்கின்ன போன்ற இடங்களிற் கிடைத்துள்ள மட்பாண்டங் களுக்கும் இவற்றுக்குமிடையே தோற்றமளவில் உள்ள ஒற்றுமை இக்கருத்தினை உறுதி செய்கின்றது. தோற்றத்தில் மட்டுமன்றி இவற்றிடையே காணப்படும் குறியீடுகளிலும் இத் த  ைக ய ஒற்றுமை உண்டு. இதனால் யாழ்ப்பாணக் குடாநாடு ஈழத்து நாகரிக வளர்ச்சியிற் பிற பகுதிகளைப்போல முக்கிய பங்கினை வகித்திருந்தமை புலனாகின்றது.
பெருநிலப்பரப்பு - பூநகரி - மாந்தை
யாழ்ப்பாணக் குடாநாட்டிற் காணப்பட்ட ஒரு நிலை யையே பெருநிலப்பரப்பிலுங் காணலாம். துர்அதிஷ்டவசமாக இப்பகுதியிற் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் போன்று திட்டமிட்ட மேலாய்வுகள் மேற்கொள்ளப்படா விட்டாலும் பூநகரிப் பகுதியில் மண்ணித்தலை, பரமன் கிராய், வெட்டுக்காடு ஆகிய இடங்களிற் கிடைத்த பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய தடயங்கள், இப்பகுதியின் வரலாற்றுதய கால வரலாற்றையுங் குடாநாட்டின் வரலாற்றுதய கால வர லாற்றோடு இணைக்கும் என்பதனை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.89 மண்ணித்தலை தொட்டு மன்னார்க் கரை போரம் வரை பாக்குநீரிணைப் பகுதியின் பிரதான பகுதியாக அமைந்திருப்பதோடு தமிழகத்திற்கு நேரெதிரிற் காணப்படுவதா லும், தமிழகத்திலிருந்து பெருங்கற்காலக் கலாசாரத்தைப் பேனிய மக்கள் இக்கரையை அடைந்திருந்ததற்கான வாய்ப்பு
யாழ். - தொன்மை வரலாறு 28 O

ாள் அதிகம் உண்டு. எனினும், ஈழத்தின் இக்கரையோரங் களில் விரிவான மேலாய்வு செய்யப்படும்போது மேலும் பல தகவல்கள் கிட்டலாம். இத்தகைய இடங்களில் முக்கிய இடத் தினை வகிப்பது மாந்தைத் துறைமுகமாகும். வரலாற்றுக் காலத்தில் மாந்தை முக்கியம் பெற்றது போல வரலாற்றுதய காலத்திலும் இது முக்கியம் பெற்றிருந்தது.
மாந்தையும் அநுராதபுரம் போன்று மிக நீண்டதொரு s6wrFrrrt பாரம்பரியத்தினையுடைய இடமாகும். சந்த 0ராடைக்குக் கிடைக்காத வாய்ப்பும் வசதியும் மாந்தைக்கு இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இதன் அமைவிடம் தமிழகத்தின் தென்முனையின் எதிரில் இருந்ததாற் கடல் வாணிபத்தில் கொற்கை போன்று மாந்தையும் முன்னிலை பெற முடிந்தது. அத்துடன் வடபகுதியிற் கந்தரோடை போன் றல்லாது பெருநிலப் பகுதியில் இது அமைந்திருந்ததால் நிலவள, நீர்ப்பாசன வசதிகளும், வாய்ப்புகளுமுடைய பிரதேசமாகவும் இது எழுச்சி பெறமுடிந்தது. காலகதியில் இது இரு பாது காப்பு அகழிகளும், அரணுங் கொண்ட நகராகவும் வளர்ச்சி பெற முடிந்தது. (படம் - 20) இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் இதன் தொன்மையை நன்கு எடுத்துக் காட்டி யுள்ள அதே நேரத்தில், வரலாற்றுதய காலத்தில் அநுராதபுரத் திற்கு அடுத்தாற்போல அளவில் ஒரு பரந்த பிரதேசமாக இது விளங்கியது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன.
கோகாட் போன்ற தொல் லியலாளர்கள் இங்கு அகழ்வை மேற்கொண்டபோது நிலத்திலிருந்து 29 அடி வரை இவ்விடத் தில் மனிதன் விட்டுச் சென்ற கலாசாரப் படை காணப் படுகின்றது எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். 40 ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் முப்பதடிக்கு மேலாக இதன் கலா சாரப் படைகள் காணப்படுவதை உறுதி செய்துள்ளன.கி அநுராதபுரத்தின் அகழ்வுகளும் கிட்டத்தட்ட இதே அணவுக்குக் கலாசாரப் படைகள் உண்டு என்பதை எடுத்தக் காட்டியுள் ள மையும் ஈண்டு அவதானிக்கத்தக்கது.
29 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 31
மாந்தையிற் கிடைத்த தொல்லியற் சான்றுகளில் 1950இற் சண்முகநாதன் மேற்கொண்ட அகழ்வின்போது வெளிவந்த மனித சடலமொன்று முக்கியம் பெறுகின்றது.42 (படம்-21) நிலத்திலிருந்து 4" 8" ஆழத்திற் புதைக்கப்பட்டிருந்த இச் சடலம் மாந்தை நகர எல்லைக்கு வெளியே காணப்பட்டது. மேற்கு - கிழக்குத் திசையை நோக்கிப் புதைக்கப்பட்டிருந்த இச்சடலத்திள் நீளம் 5 ஆகும். ஆனைக்கோட்டையிலுள்ள (அ) சடலத்தைப் போல் இதன் அரையிற் கைகள் மடித்துக் காணப்பட்டன. ஆனாலும் ஆணைக்கோட்டைச் சடலத்தைப் போலன்றி இதனை முழுமையாக இங்கே பெறமுடிந்தது. கால்மாட்டில் இரு சட்டிகள் காணப்பட்டன. இவை நிவே தனப் பொருட்களாக இருக்கலாம். சட்டிகளின் எண்ணிக் கையை நோக்கும்போது ஆனைக்கோட்டையில் இவை சடலத் தினைச் சுற்றி அதிகமாகக் காணப்பட, இங்கு கால்மாட்டின் இரு பக்கங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றமை அவ தானிக்கத்தக்கது. காரைநகரிலுள்ள சத்திராந்தையிலும் நிவே தனப் பொருட்களைக் கொண்ட சட்டிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சடலம் காணப்பட்டுள்ள படைக்கு மேல் மூன்று மண்படைகள் இனங்காணப்பட்டன. இவற்றுள் இரண்டிலும் எது வித காலா சாரப் பொருட்களுங் காணப்படவில்லை. இவற்றின் சேர்க் னையை நோக்கும்போது இச்சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சில காலமாக இப்பகுதி மக்கள் நடமாட்டத்திற்கு உள்ளா காததாற் போலும் இத்தகைய படை அமைப்பு உருவானது போலத் தெரிகின்றது. இச்சடலங் கிடைத்துள்ள பகடக்கு மேலே உரோம மண்டபாண்டமாகிய "அரிற்றயின்" மட்பாண் டங்களுடைய படை க" ணப்படுகின்றது. இது கிறிஸ்த ப்த காலத்திற்குரியது. இதனால், வரலாற்றுதய காலத்திற்குரிய தாக இச்சடலத்தின் காலத்தை ஒரளவுக்கு நிர்ணயிக்கலாம்.
இச்சடலத்தினை ஆராய்ந்த அறிஞர்கள் இது தற்காலத் தென்னிந்திய மக்களுடைய தோற்றத்தையே ஒத்துக் காணப் படுகின்றது எனவும் எடுத்துக் காட்டி உள்ளனர்.43 இதே மன்னார்க் குடாக் கரையோரத்திலமைந்துள்ள கலாஒயா நதிக் கரையிலுள்ள பொம்பரிப்புத் தாழிக்காட்டிலுள்ள தாழிகளில்
யாழ். - தொன்மை வரலாறு 3O )

வைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர்களும் இத்தகைய கருத்தினையே வெளியிட்டு உள்ள னர். 44 இத்தாழிக்காடு தமிழகத்திலுள்ள மிகப்பெரிய தாழிக் காடான ஆதிச்சநல்லூருக்கு நேரெதிரே காணப்படுவதும், இவ்வாதிச்சநல்லூர் தாம்ரவர்ணி நதிக்கரையிலமைந்திருந்ததுங் குறிப்பிடத்தக்கது. பொம்பரிப்புத் தாழிகளுக்கும், கிண்ணங் களுக்கும், வட்டில்களுக்கும் ஏனைய இரும்பு, வெண்கலப் பொருட்களுக்கும் ஆதிச்சநல்லூரிற் கிண்டெடுக்கப்பட்ட தாழி களுக்கும், கிண்ணங்களுக்கும், வட்டில்களுக்கும் பிற இரும்பு வெண்கலப் பொருட்களுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உளது.45 இதனால் வரலாற்றுதய காலத்தில் மன்னார்க் கரைக்குப் பாண்டிநாட்டிலிருந்தே பெருங்கற்காலக் கலாசாரத் தைப் பேணிய திராவிட மக்கள் புலம் பெயர்ந்திருப்பர் ாணக் கொள்ளலாம்.
மேற்கூறிய கருத்திற்கு மெதுகூட்டுவதாக அமைவதுதான் கி. மு. 6 ஆம் நூற்றாண்டுக்குரிய விஜயனது கதையாகும். இது வெறும் ஐதீகம் என்றாலுங் கூட இதிற் கூறப்படும் இந்நிகழ்ச் சிகள் நாம் எடுத்துக் காட்டியுள்ள தொல்லியற் சான்றுகளை நிரூபிப்பனவாக அமைவதால் அவை பற்றி இங்கே குறிப் பிடுவது அவசியமாகின்றது. வட இந்தியாவில் இருந்தே சிங்கள மக்களின் மூதாதையினராகிய விஜயனும் அவனது கூட்டத் தினரும் வந்தனர் எனப் பாளி நூல்கள் கூறினாலும் இதனை நிரூபிக்க இற்றைவரை தொல்லியற் சான்றுகள் கிடைக்க வில்லை. கிடைத்த இக்காலத்திற்குரிய தொல்லியற் சான் றுகள் இக்காலத்திற்குரிய குடியேற்றம் தென்னிந்தியாவிலிருந்தே ஏற்பட்டது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளன.48 இக்கருத் தினை உறுதி செய்வதாகவே விஜயனது ஐதீகத்திற் காணப் படும் இரு சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. முதலாவது சம்பவத்தில் விஜயனும் அவனது தோழர்களும் வத்திறங்கிய இடமாகத் 'தம்பபண்ணி" என்ற இடங் கூறப்பட்டுள்ளது. நாளடைவில் இப்பெயர் முழு ஈழத்தின் பெயராக வழங்கப் பட்டது எனப் பாளி நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவ்விடத் திற்றான் விஜயன் தனது தலைநகரையும் அமைத்தான். தம்ப
31 வரலாற்றுக்கு முற்பட்ட . . .

Page 32
பண்ணி என்ற பெயர் இவ்விடத்திற்கு வந்ததென்பதற்கான விளக்கமும் இந்நூல்களிற் கொடுக்கப்பட்டுள்ளது.47 °தம்ப" என்றாற் செம்பு / பொன் எனப் பொருள்படும். "பண்ணி" என் றாற் "கைகள்" எனப் பொருள்படும். விஜயன் கூட்டத்தினர் இவ்விடத்தில் வந்திறங்கியபோது களைப்பு மிகுதியாலே தமது னைகளை நிலத்தில் ஊன்றியபோது அவைகள் செம்மை f பொன் நிறமாகியதால் இப்பெயரை இவ்விடத்திற்கு இட்டனர் என இவை கூறுகின்றன. உண்மையிலே விஜயன் கதை. புனையப்பட்ட காலங் கிறிஸ்தாப்த காலத்திற்குப் பின்னருள்ள காலப்பகுதி என அறிஞர்கள் எடுத்துக்காட்டுவதால் வர லாற்றுதய காலத்தில் இவ்விடத்திற்கு அமைந்த ஒரு பெயருக்கே இவ்வாறு கிறிஸ்தாப்த காலத்தின் பின்னர் விளக்கங் கொடுக் கப்பட்டது எனலாம்.
பாளி நூல்களிற் கூறப்படும் மேற்படி விளக்கம் ஏற்கனவே வழக்கிலிருந்த ஒரு வடிவத்திற்குக் கொடுத்த விளக்கம் போலத் தெரிகின்றது. காரணம் விஜயனது கதை வெறுங் கட்டுக் கதையே எனக் கூறும் மென்டிஸ் போன்ற அறிஞர்கள் இக்கதை யில் விஜயனின் தோழர்களால் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றங்க syst அனுராதபுர கம, உபதிஸ்ஸகம, உருவெலவிஜித உரோகணதீகாயு போன்றவை ஏற்கனவே இந்நாட்டில் வளர்ச்சி பெற்ற குடியேற்றங்கள் என்றும், இக்கதை இழைக்கப்பட்ட காலத்தில் இக்கதையுடன், இவ்விடங்கள் இணைக்கப்பட்டன என்றுங் கூறியுள்ளனர்.48 இதனால் இக்குடியேற்றங்களில் ஒன்றாகவும் பின்னர் விஜயனது தலைநகராகவும் விளங்கிய, தம்பபண்ணியையே ஈழத்தின் ஒரு பகுதிக்கும் பின்னர் முழு நாட்டிற்கும் வழங்கப்பட்ட பெயரென்று கூறப்படுகின்றது. தமிழகத்திலுள்ள ஆறாகிய தண்பொருணையின் வடமொழி வடிவமே “தாம்ரவர்ண' எனக் கூறும் அறிஞர்கள் இதனை நிரூபிக்கச் சங்க இலக்கியங்களிலும் பாண்டியக் கல்வெட்டு களிலுமுள்ள ஆதாரங்களை நிரைப்படுத்தியுள்ளனர்.49 இதனால் வடமொழி வடிவமாகிய தாம்ரவர்ணி தான் பாளி வடிவமாகிய 'தம்பபண்ணி"யாக மருவியதெனக் கொள்ளலாம். ஆகவே
தண்பொருணை ஆற்றுப் பகுதியிலிருந்து ஈழத்திற்குக் குடி
யாழ். - தொன்மை வரலாறு 32 ()

யேறிய மக்கள் தாம் வந்திறங்கிய இடத்திற்குத் "தன் பொருணை" எனப் பெயரிட்ட பின்னர் வடமொழிக் கலா சாரப் பரம்பலால் இது தாம்ரவர்ணியாகி, அதன் பின்னர் பிராகிருத வடிவமாகிய தம்பபண்ணியென மாறியது போலத் தெரிகின்றது. இப்பெயரைத் தமிழ் நாட்டிலிருந்து ஈழம் வந்த மக்கள் தமது சொந்த இடத்தின் ஞாபகமாக மன்னார்க் கரை யோரத்திலுள்ள பகுதிகளில் ஒன்றிற்கு இட்டிருக்கலாம். எனி னும் ஈழத்திற்கு ஆதிக்குடிகள் இட்ட தண்பொருணை என்ற வடிவத்தான் தமிழ் நாட்டைப் போன்று ஈழத்திலும் வட மொழி, பிரா கிருத வடிவங்களாக உருமாறியுமிருக்கலாம். ஆனால், பாளி நூல்களிலுள்ள விளக்கத்தினை அவதானிக்கும் போது தாம்ரவரினி என்ற வடிவந்தான் தாம்ரபர்ணியாக அதாவது பொன் நிறமென (தாம்ரா - பொன், வர்ணி - நிறம் உருமாறி, இறுதியில் தம்பபண்ணியாக தம்ப - பொன், வர்ணி -ழ் பண்ணி - நிறம்) உருமாறியபோது, இப்பதத்திலுள்ள பண்ணியைப் பாணியாகக் கொண்டு தம்பபானி (பொன் / செம்பு - பாணி - கைகள்) என விளக்கங் கொடுக்கப்பட்டது. தெரிகின்றது.
பாளி நூல்கள் தரும் வர்ணனைகளை ஒப்பிட்டு நோக்கும் போது விஜயன் கூட்டத்தினர் வந்திறங்கியத' க நம்பப்படும் இடம் கலா ஒயாக் கரையிலுள்ள பொன்பரப்பி (பொம்பரிப்பு) என்றே இனங்காண முடியுமென்றாலும் அறிஞர்கள் தீபவம்சத் தின் குறிப்பினைக் கொண்டு இது மன்னார் மாவட்டத்தி லுள்ள அருவி ஆற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்தது என இனம்கண்டு கொண்டுள்ளனர்.60 கழிமுகக் கரையில் முதலிலே தோன்றிய குடியேற்றம நாளடைவில் அருவியாற்றை மைய பாகக் கொண்டு உள்நகர்ந்தது எனலாம். பாளி நூல்களிலுங் கிரேக்க அறிஞர்கள் தருஞ் சான்றுகளிலும் ஈழத்தின் மிகப் பழைய பெயராக முறையே தம்பபண்ணி, தப்ரபேன் காணப் படுவதால் ஈழத்தின் ஆதிக் குடியேற்றத் தமிழகத்தின் தாம்ர வர்ணி ஆற்றின் கரையோரத்திலிருந்தே இங்கு வந்தது என்பதை இவை நினைவூட்டி நிற்கின்றன எனலாம். இத் தகைய கருத்தினை இவ்ஐதீகத்திற் காணப்படும் இன்னொரு
9 33 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 33
சம்பவமும் உறுதிப்படுத்துகின்றது. கி. மு. 6ஆம் நூற்றாண்டுக் குரிய இவ்ஐதீகத்தில் விஜயனது பாண்டிய இளவரசியும், தோழியரும் வந்திறங்கிய இடமாக “மாதீத்த துறைமுகம் குறிக்கப்படுகின்றது.81 இதுவும் ஆதிக் குடியேற்றந் தமிழகத்தி லிருந்தே, அதுவும் பாண்டி நாட்டிலிருந்தே, ஈழத்திற்கு ஏற்பட்டதை நினைவூட்டுகின்றது எனலாம்.
மாதித்த என்பதன் பொருள் ( மா ) பெரிய ( தித்த ) இறங்குதுறை என்பதாகும். பாலாவித் தீர்த்தத்தின் சிறப்பாற் பின்னர் இவ்விடம் 'மாதீர்த்த' பெரிய தீர்த்தச் சிறப்புடைய இடம் என அழைக்கப்பட்டிருக்கலாம். மாதித்த, மாதீர்த்த ஆகிய வடிவங்களில் எது முந்தியது என்பது ஆராய்தற்பாலது. சங்கத் தமிழ் நூல்களிற் "பெருந்துறை" என்ற குறிப்புக் காணப் படுவதை அவதானிக்கும்போது தமிழ்ப் பெயராகிய பெருந் துறையே நாளடைவில் ‘மாதித்த’ எனப் பாளி மொழியில் வழங்கப்பட்டது எனவுங் GQasfr 6iramT 6Qj Arub. இத்துறைமுகம் மாதோட்ட(ம்) எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் பெரியதோட்டம் என்பதாகும். இதனாற் பெருந் தோட்டமே இவ்வாறு மாதோட்டம் என மருவியது போலத் தெரிகின்றது. தமிழ்நாட்டுப் பெயர்களாகச் சங்க இலக்கியங் களில் இவை குறிப்பிடப்பட்டாலுங் கூட, இவற்றுட் காணப் படும் பெருந்துறை, மாதோட்டம், மாந்தை ஆகிய பெயர்கள் 52 தமிழகத்திலிருந்து இப்பகுதி நோக்கி ஏற்பட்ட இடப்பெயர் வையே நினைவூட்டுகின்றன.
1970களில் அன்றைய தொல்பொருளியற் திணைக்களத்தின் ஆணையாளராக விளங்கிய ராஜா டி சில்வா மாந்தையிற் சில ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்துங் கூட ஆய் வறிக்கை வெளிவராத நிலையில் அவ் அகழ்வின்போது கிடைத்த பொருட்கள் இத்திணைக்களத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. (படம் - 22) எனினும், 1980 இல் இப்பகுதியிற் காஸ்வல் தலைமையிற் பரிசோதனைக் குழிகள் அமைத்து விரிவான அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.63 (படம் 23 - 24) இவற்றில் ஒன்று மாந்தை மேட்டின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்கு எ’ (A) எனவும் பெயரிடப்பட்டது. இப்பரிசோதனைக்
யாழ். - தொன்மை வரலாறு 34 )

குழியிற் பெருங்கற்காலப் பண்பாட்டின் முத்திரையாகிய கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்கள் கிடைத்தன. இவை பெருங்கற்காலத்திற்குரியனவா அல்லது வரலாற்றுக் காலத் திற்குரியனவா என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எனினும் ஈ ழ த்தி ற் கந்தரோடை, அநுராதபுரம் ஆகிய இடங்களிற் பெருங்கற்காலப் பண்பாடு கி. மு. 1000 ஆண்டளவில் ஆரம்பமானதற்கான சான்றுகள் கிடைப்பதாலும், மாந்தைப் பகுதி தமிழகத்திற்கு மிக அண்மித்துக் காணப்படுவதாலும், மாந்தையிலும் சமகாலத் திலேயே இது ஆரம்பமாகிவிட்டதெனலாம். இதனைச் சம காலத் தமிழகத்துப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களின் காலமும் எடுத்துரைக்கின்றன.
மாந்தைக்கு நேரெதிரேயுள்ள கொற்கையில் இதன் ஆரம்பம் கி. மு. 800 எனக் கணிக்கப்பட்டுள்ளது.54 சமகாலத் திற்றான் அரிக்கமேட்டிலும் அநுராதபுரத்தைப் போன்று பெருங்கற்காலப் பண்பாடு உதயமாகியதை ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.65 அரிக்கமேடு, மாந்தை, சுந்தரோடை, அநுராதபுரம் ஆகியனவற்றின் வரலாற்றுக் காலத்துக்குரிய சான்றுகள் இப்பகுதிகளிற் கலாசாரஞ் சமகாலத்திலே தோன்றி வளர்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய போக்கையே மன்னார்க் குடாப் பகுதியில் ஈழத்திலுள்ள பொம்பரிப்பிற் கிடைத்த சான்றுகளுக்கும், தாம்ரவரிணி நதி தீர்த்தத்தி லமைந்த ஆதிச்சநல்லூரிற் கிடைத்த பெருங்கற்காலக் காலா சாரத்திற்குரிய தடயங்களுக்கும் இடையே இழைவிட்டோடும் ஒற்றுமையும் எடுத்துக்காட்டுகின்றது. இதனை மாந்தையின் கலாசாரப்படையின் கனமும் உறுதிசெய்கின்றது எனலாம். கிட்டத்தட்ட 10 மீற்றருக்குக் குறையாமல் இது காணப்படு வது இதன் பழைமைக்குச் சிறந்த உரைகல்லாகும். இதே மாவட்டத்திலுள்ள இன்னோர் ஈமத்தாழிக்காடும், தெக்கம் என்ற இடத்திலுள்ளது.58 இத்தாழிக்காடும் அகழ்வுசெய்யப் படும்போது இதிலுள்ள பல சின்னங்கள் பொம்பரிப்பிலுள்ள தாழிக்காட்டின் சின்னங்களை ஒத்துக் காணப்படலாம். மாந்தை தொட்டுப் பூநகரிப் பகுதியிலுள்ள கல்முனைவரை ஆதிக்
O 35 வரலாற்றுக்கு முற்பட்ட் ஃ.

Page 34
குடியிருப்புகள் காணப்பட்டிருக்கலாமென்பதை அண்மையிற் பூநகிரிப் பகுதியிலுள்ள மண்ணித்தலை, பரமன் கிராய், வெட்டுக் காடு போன்ற இடங்களிற் கிடைத்துள்ள பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிங் கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.57
வவுனியா மாவட்டத்திலும் வரலாற்று தய காலத்தைச் சேர்ந்த பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய தடயங்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள மாமடுவ என்ற இடத்திலே இவை காணப்படுகின்றன 58 ஈமச்சின்னங்கள் காணப்படும் இவ்வி- த் தில் அரசாங்கத்தின் வனவிலங்குப் பகுதியினர் புதிதாக மரங் களை நாட்டும் மு:ற்சியை மேற்கொண்டதாற் பல ஈமச் சின்னங்கள் அழிந்து விட்டன. எனினும் எஞ்சியுள்ள சின்னங்க ளிற் கல்வட்டங்கள், கல்லறைகள் ஆகியன குறிப்பிடத் தக்கன. கல்வட்டங்கள் பூரணமான தோற்றத்துடன் காணப் படுகின்றன எனக் குறிப்பிடலாம். இவற்றின் நீணம் மூன்று TTTLLTS SS LLLL S T SS 00 TTTeTTTT S LLLLLLLLS LTTL TLeT TLT TLS முறையிற் காணப்படவில்லை. சிலவற்றின் பக்கக் கற்கள் அகற் றப்பட்டும் விட்டன. சராசரியான இக்கற்கள் 1 மீற்றர் நீள மும் 1 மீற்றர் அகலமுங் கொண்டவை ஆகும். பூரணமான நிலை:ற் காணப்பட்ட கல்லறையின் நீளம் . 20 மீற்றரும் அகலம் 1 , 40 மீற்றரும் ஆகும். இவ்வீமச்சின்னங்களிற் கல்லறைகளில் இறந்தவரது சாலும்புகளும் பிற நிவேதனப் பொருட்களும் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கலாம். இவற்றுள் ஒன்றிற் கிடைத்த மட்பாண்டங்கள் சில அரச தொல்பொரு ளியற் திணைக்களத்திலுண்டு. கல்வட்டங்களுட் சிலசமயம் முழு மனித உடலும் அடக்கஞ் செய்யப்பதிவது உண்டு. எனினும் அகழ்வு மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில் இது பற்றித் தெளிவாக நாம் ஒன்றுங் கூறமுடியாது. மாமடுவப் பகுதியில் மட்டுமன்றி வன்னி மாவட்டத்தின் பிற பகுதிகளி லும் பெருங்கற்காலர் கலாசாரத்திற்குரிய தடயங்கள் கிட்டலாம்
இவ்வரிசையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் திட்டமிட்ட
மேலாய்வு மேற்கொள்ளப்படின் வரலாற்றுதய காலத் தட பங்கள் பல கிட்டலாம் என்பதை முல்லைத்தீவிற் கிடைத்த
tாழ் - தொன்மை வரலாறு 36 )

அச்சுக்குத்திய நாணயங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.59 கிழக் குக் கரை, வடமேற்குக் கரை போன்று இக்காலத்தில் முக்கியம் பெற்றுக் காணப்படாவிட்டாலுங்கூட, இங்கு கிடைத்த அச்சுக் குத்திய நாணயங்கள் திருகோணமலை மாவட்டத்திற் குச்ச வெளியிற் கிடைத்த கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள் கதிரவெளியிற் கிடைத் துள்ள பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய கல்மேசை, கல் லறை போன்ற ஈமச்சின்னங்கள் ஆகியன இப்பகுதியிலும் வரலாற்றுதய கால மனிதனின் நடமாட்டங் காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றன.80 வருங்காலத்தில் ஈழத்தின் வட கிழக்குப் பகுதியில் வல்லிபுரம், நாகாகோவில், சுண்டிக்குளம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகிய பகுதிகளில் விரிவான மேலாய்வும் அழ்ைவாய்வும் மேற்கொள்ளப்படும் போது இவை பற்றிய விரிவான தகவல்கள் கிட்டும் எனலாம்.
வெறுமனே தொல்லியற் சான்றுகள் மட்டுமன்றி ஈழத்து நூல்களிற் காணப்படும் ஐதீகங்களும் வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே வடபகுதி மனித நடமாட்டத்திற்குரிய பிராந்திய பாக விளங்கியதை எடுத்துக் காட்டுகின்றது எனலாம். பாளி நூல்கள் இப்பகுதியை "நாகதீப" என அழைக்கின்றன.61 இத நூல்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்ட போக்கினை அவதா னிக்கும்போது இது தற்கால நயினாதீவுப் பிராந்தியத்தினைக் குறிக்கவில்லை என்பதையும் அநுராதபுரத்திற்கு வடக்கேயுள்ள பகுதி முழுவதையுமே குறித்து நின்றது என்பதையும் அறிய முடிகின்றது. பிற்காலச் சிங்கள அரசியற் பிரிவுகளான ராஜ ரட்டை, உத்தராபத போன்றன இப்பகுதியையே குறித்து நின்றன. இன்று சிங்கள மக்கள் மத்தியில் ‘நாகதீப" என்பது நயினாதீவைக் குறித்து நிற்பதை நோக்கும்போது ஒருகாற் பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய இப்பதம் நாளடைவில் யாழ்ப்பாணக் குடா நாட்டையும்; இறுதியில் ஒரு தீவையும் குறித்து நின்றது எனலாம். இலக்கியச் சான்றுகளும் இதனையே எடுத்துக்காட்டுகின்றன. மேலும், வடபகுதிக்கு "நாகதீபம்’ என்ற பெயர் பாளி நூல்களிலே தொடர்ச்சியாக இடம் பெறுவதை அவதானிக்கலாம். கிரேக்க அறிஞர்களது
() 37 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 35
குறிப்புகளிலும் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. ரொலமியின் குறிப்பில் இது "நாகதீபாய்" என அழைக்கப்பட்டுள்ளது.82 இவரின் காலம் கி. பி. 2 ஆம் நூற்றாண்டாகும். இவ்வாறே வல்லிபுரப் பொன்னேட்டிலும் இது ‘நாகதீப" என அழைக்கப் பட்டுள்ளது.33 தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதி காரம் ஆகியனவற்றில் இது ‘நாகநாடு ' என அழைக்கப்பட் டுள்ளது.84 இவை குறிக்கும் "நாடு" என்ற பதம் இங்கு அவதானிக்கத்தக்கது. நாட்டிற்குரிய பல தகைமைகளைக் கொண்ட பிரதேசமாக வடபகுதி இக்காலத்தில் விளங்கியதாற் போலும் இவைகள் இப்பதத்தினை இப்பகுதிக்குப் பயன்படுத்தி யிருக இன்றன. இதனால் நாச தீபம் என்ற பதம் ஆரம்பத்தில் ஈழத்தின் வடபகுதியையும் பின்னர் குடா நாட்டையும் இறுதி யாக நயினாதீவையும் குறித்தது எனலாம்.
முதலில் இப்பகுதி பற்றிய மிகப் பழைய குறிப்பினை நோக் குவாம். மகாவம்சமானது சிங்கள மக்களின் மூதாதையினன் என நம்பப்படும், விஜயனது வருகைக்கு முன்னர் புத்தர் இந் நாட்டிற்கு மேற்கொண்ட மூன்று விஜயங்கள் பற்றிக் குறிப் பிடுகின்றது.83 இவற்றின் காலம் கி. மு. 6 ஆம் நூற்றாண் டாகும் இவ்விஜயங்களிற் புத்தர் வந்திறங்கிய இடங்களாக மகியங்கணை, நாகதீபம், களனிப்பகுதி ஆகியன குறிப்பிடப் படுகின்றன. உண்மையிலே இம்மூன்று இடங்களும் பிற்காலத் திற் சிங்கள அரசின் நிருவாகப் பிரிவுகளான உரோகனை, இராஜரட்டை, மாயரட்டை ஆகியனவாகும். இத்தகைய பகுதிகள் ஆரம்பத்திலிருந்தே தனியாக இயங்கியதைப் புத்தரது விஜயம் பற்றிய ஐதீகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. புத்தரின் இரண்டாவது விஜயத்தில் நாகதீபம் குறிப்பிடப்படுகின்றது. நாகதீபத்தினை ஆண்ட மன்னர்களான மகோதர, சூலோதர ஆகியோர் இரத்தினமிழைத்த சிங்காசனத்திற்காகப் போரிட ஆயத்தமானபோது புத்த பிரான் இவர்கள்மீது கருணைகொண்டு இங்கு வந்து இவர்களைச் சமாதானப்படுத்தியதோடு பல கோடிக் கணக்கான நாகர்களையும் புத்தமதத்திற்கு மதம் மாற்றியதாகவுங் குறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி மணிமேகலை யிலுங் காணப்படுகின்றது.86
யாழ். - தொன்மை வரலாறு 38 O

எனினும் இப்பகுதி மக்கள், அமானுஷ்யர்களான நாகர்கள் என்றே பாளி நூல்களில் விளிக்கப்பட்டுள்ளனர். அமானுஷ் யர்கள் என்று பாளி நூல்கள் கூறுவதற்கும் ஒரு காரண மிருந்தது. பாளி நூலோருக்கு ஈழத்திற்கு வந்த முதல் மனித கூட்டத்தினர் விஜயனும் அவனது சகாக்களுமே என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை இருந்தது. இதனாலேதான் இவர்களை இந்நூல்கள் இவ்வாறு குறித்தன. பாளி நூல்களை மையமாக வைத்து வரலாற்றை எழுதிய பரணவித்தானாவும் நாகர்களை அமானுஷ்யர்கள் என்று அழைத்ததோடு இவர்களை மனிதர்கள் என்று அழைத்தாலும் திராவிடர் என அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார், 67 நாகதீபப் பகுதியில் இன்று தமிழ் பேசும் மக்கள் வாழ்வதால் நாகர்கள் இவர்களின் முன் னோர்களே என இராசநாயகமுதலியார் கூறிய கருத்தினை மறுப்பதற்காகவே பரணவித்தானா இவ்வாறு கூறியுள்ளார். எனினும் தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது பெருங் கற்காலக் கலாசாரத்தை உருவாக்கிய திராவிட மக்கள் அமைத்த அரசே பாளி, தமிழ் நூல்களில் ‘நாகதீபம்', ‘நாக நாடு' என அழைக்கப்பட்டுள்ள தெனலாம். ܟܠ
நாகர்கள் எந்த மொழியைப் பேசினர் என்பது பற்றித் திட்டவட்டமான ஒரு முடிவிற்கு வரமுடியாவிட்டாலுங் கூட வடபகுதியில் நாக வணக்கத்தினைப் பேணிய மக்கட் கட்டம் ஒன்று காணப்பட்டதால் இப்பகுதி "நாகதீப", நாகநாடு’ எனப் பெயர் பெற்றது. இவ்வணக்கத்தினை இப்பகுதியில் வாழ்ந்த கற்கால மக்கள் மட்டுமன்றிப் பின்வந்த பெருங்கற் காலக் கலாசார மக்களுநீ தழுவினர். பின்னர், வரலாற்றுக் காலத்திலும் இவ்வணக்கத்தினை அனுஷ்டித்தோர் "நாக(ர்)" என அழைக்கப்பட்டமையை இலக்கியக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன.68 வரலாற்றுக்கால மன்னர்களின் பெயர் களாக மகல்லகநாக, சூளநாக, அபயநாக, குட்டநாக, சிறீநாசு போன்றன மட்டுமன்றி மிகப்பழைய கல்வெட்டுகளான பிராமிக் கல்வெட்டுகளிலும் ‘நாக’ என்ற பெயர் ஆண், பெண் ஆகிய இரு பாலார்களையும் விளிக்கப் பயன்பட்டதை நோக் கும்போது இப்பெயர் ஆதியில் முக்கிய இட்ம் பெற்றதை அறிய முடிகின்றது. பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களும்
O 39 mu J6u Týbglš595 Gyp buČU. - .

Page 36
இதனை அனுஷ்டித்ததாற்றான் இப்பெயர் பின்னரும் இப் பகுதியிலே தொடர்ந்து வழக்கிலிருந்தது எனலாம்.
பாண்டிநாடும் - ஈழமும்
ஈழமும் தமிழகமும் பண்டுதொட்டே மிக நெருங்கிய உற வினைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டும் ஐதீகங்கள் வர லாற்றுக் கருக்களாக ஈழத்துப் பாளி நூல்களிலே காணப்படு கின்றன. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் விஜயன் - பாண்டிய இளவரசி திருமணம் இத்தகைய உறவின் தொடக் கத்தினை எடுத்துக் காட்டுகின்றது எனலாம். மகாவம்சம் Gi?ygu6öv — LurT8aña7 Lq. Gu உறவு பற்றிக் குறிப்பிடுகையிலே தனது மாமனாராகிய பாண்டிய மன்னனுக்கு விஜயன் வருடா கருடம் ஈழத்திலிருந்து முத்துகளைப் பரிசுப் பொருளாக அனுப்பி வத்தான் எனக் கூறுகின்றது. 89 விஜயன் தொட்டுத் தேவ நம்பியதீஸன் வரை ஆட்சி செய்த மன்னர்களது பெயர்களை உற்று நோக்கும்போது "பண்டு" என்ற அடைமொழியுடன் இவை காணப்படுவது அவதானிக்கத்தக்கது. விஜயன் அரசு கட்டிலேறியபின் அவனின் சகோதரனான சுமித்தவின் மகன் "பண்டுவாசுதேவ' ஆவான்.70 பண்டுவாசுதேவனின் மனைவி பாகிய பட்டகச்சணவின் தந்தை சக்கபண்டு என அழைக்கப் படுகின்றான்.71 பட்டகச்சனவின் சகோதரர்களாக அனுராத, ஐ.பதிஸ்ஸ, உஜ்ஜயினி உருவல, விஜித்த, தீகாயு, உரோகண ஆகிய ஏழு பேருமே ஆதியில் ஈழத்தின் வெவ்வேறு இடங்க 6ரிற் குடியேற்றங்களை அமைத்ததாகக் குறிப்பிடப்படுகின் றனர்.72 பண்டுவாசுதேவவுக்கும், பட்டகச்சனஷக்கும் பிறந்த tகளாகிய உம்மதசித்தவின் மகனாகப் பண்டுகாபயன் குறிப் பிடப்படுகின்றான் .73 மகாவம்சம் இப்பெயரைப் பற்றிக் குறிப் பிடுகையில் இவனின் பேரனான பண்டுவாசுதேவனின் பெயர், மூத்த மகனாகிய அபயனின் பெயர் ஆகியவற்றை இணைத்தே இப்பெயர் இவனுக்கு இடப்பட்டது எனக் கூறுகின்றது. பண்டு போசுதேவ என்ற பெயரிலுள்ள பண்டு என்ற பெயருடன் அபய என்ற பெயரையும் இணைத்தே இவ்வாறு இப்பெயர் வழங் கப்பட்டது எனலாம். பண்டுகாபயனைத் தீபவம்சம் "பகுண்டக"
சான அழைப்பதும் இங்கே அவதானிக்கத்தக்கது.74 அத்துடன்
யாழ். - தொன்மை வரலாறு 4O (9

O
இம்மன்னன் தனது இளமைக் காலத்திற் ‘பண்டுல" என்ற பிரா மணனிடம் கல்வி கற்றதோடு இப்பிராமணன் வாழ்ந்த இட மாகப் பண்டுலா - கமவும் மகாவம்சத்திற் குறிக்கப்படுகின்றது.75 அத்துடன் பண்டுகாபயன் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகத் துவாரமண்டலவும் கூறப்படுகின்றது.78
பண்டுகாபயனின் ஆட்சி 106 வருடங்கள் நீடித்ததென்றும், பின்னர் இவன் மகனான முடசிவன் அரசு கட்டிலேறினான் எனவும், இவனதாட்சி 60 வருடங்கள் வரை நீடித்தது என வுங் கூறப்படுகின்றது.77 பாளி நூல்களிற் குறிக்கப்படும் இப் பெயர்களைக் கொண்ட மன்னரின் ஆட்சி ஆண்டுகள் நம்பகர மற்றவையாகக் காணப்பட்டதால் இவர்களைப் பற்றிய செய்திகள் நம்பகரமானவை அல்ல என்ற கருத்தே பொது வாக நிலவுகின்றது. எனினும் இவர்களின் பெயர்களோடு காணப்படும் பண்டு" என்ற பெயரை வடஇந்தியாவிற் காணப் பட்ட ஆரிய வம்சத்தவர்களாகிய “பண்டு" (பாண்டவர்) என்ற வம்சத்துடன் இணைத்துள்ளனர்.78 இப்பண்டு வம்சம் மகா பாரதப்போரிற் புகழுடன் விளங்கிய வம்சம் என்பது அவ தானிக்கத்தக்கது. விஜயனின் மனைவியாகிய பாண்டிய இள வரசி பற்றிய குறிப்பிலுள்ள “பண்டு” என்ற பதத்தினைக் கொண்டும், இதிற் காணப்படும் 'மதுரா" (மதுரை) பற்றிய குறிப்பைக் கொண்டும் இவ்விளவரசி கூடத் தென்இந்தியாவி லுள்ள பாண்டிநாட்டு இளவரசி அல்லவென்றும் வடஇந்தியாவி டுள்ள பண்டு வம்சத்து இளவரசி எனவுங் கொள்ளப்பட் டுள்ளது. பண்டு வம்சம் வட இந்தியாவிலுள்ள மதுரையிற் சிலகாலஞ் செல்வாக்குச் செலுத்தியதும் இதற்கொரு காரண மாகக் கூறப்படுகின்றது. இது மட்டுமன்றி மகாவம்சத்திற் பாண்டிய இளவரசியோடும், அவளது பரிவாரத்தோடும் வந்த *பதினெண் வினைஞர் குழு’ கூட இக்காலத்தில் வடஇந்தியாவி லுள்ள காசியிற் காணப்பட்டதைத் தவிர தமிழகத்தில் அல்ல என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
விஜயனது கதையின் கருவூலமாக ஜாதகக் கதைகளே அமைந்திருந்தன் என வாதிடும் அறிஞர்கள் இச்ஜாதகக் கதை களிலுள்ள மேற்கூறிய பெயர்கள் வடஇந்தியாவோடு பெளத்த
4 1 nu J57 bŋläb(5 (Piib u L. --• • • • • • •

Page 37
பிக்குமார் கொண்டிருந்த தொடர்பினால் ஈழத்தில் இக்கதை a. Coast at sh பெற்றது T67 அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் ஈழத்தின் ஆதிக் குடியேற்றத்திற்குரிய தொல்லியற் பின்னணியில் இதனை நோக்கும்போது இதிற் காணப்படும் "பண்டு' என்பது தமிழகத்தின் பாண்டியரைக் குறித்தது போலத் தெரிகின்றது. ஏனெனில், பாளி நூல்கள் யாவற்றிலும் இப் பாண்டியர் "பண்டு’ என அழைக்கப்படுவது இதற்கான முதற் காரணமாகும். இரண்டாவது காரணம் தமிழகத்திலுள்ள பாண்டியர் வடஇந்தியாவிலுள்ள “பண்டு" வம்சத்தினைவிட ஈழத்திற்கு மிக அண்மித்துக் காணப்பட்டனர் என்பதாகும். இதனை மனதிற் கொண்டே நிக்கலஸ் போன்றோர் விஜய னது குடியேற்றத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தா லுங்கூட, இத்தகைய குடியேற்றம் ஈழத்தில் ஏற்பட்டபோது தென்னிந்தியர் ஏன் அதனை எதிர்க்கவில்லை என்பதும் அவ் வாறு அவர்கள் எதிர்த்திருத்தாலும் அவர்களின் எதிர்ப்பினைச் சமாளித்து ஈழத்தில் வடஇந்தியர் ஒரு ஸ்திரமான அரசைக் கி. மு. நான்காம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ எவ் வாறு அமைத்தனர் என்பது பற்றித் திருப்திகரமான முடிவுக்கு வர இயலாது என்று கூறியிருப்பதும் ஈண்டு அவதானிக்கத் தக்கது .79 பண்டு என்றால் "பழையர்" எனப் பொருள் தரும். இதனாற் பழைமை வாய்ந்த வம்சத்தவர்களாக இவர்கள் காணப்பட்டதாற் போலும் இவர்கள் இவ்வாறு பெயர் பெற் நனர் எனலாம். ஈழத்திலும் ஆதிகாலத்திற் பாண்டிநாடு பெற்றிருந்த செல்வாக்கு இப்பண்டுவாசுதேவ, பண்டுகாபய ஆகியோர் கதைகன் மூலம் நினைவு கூரப்படுகின்றது. இவ் வரலாற்றுச் செய்தி மக்கள் மனதில் வேரூன்றியிருந்தும் கூடப் பாளி நூல்கள் எழுதப்பட்ட காலத்தில், ஜாதகக் கதைகளில் வடநாட்டுப் பண்டுவம்சம் பற்றிப் பிக்குமார் அறிந்திருந்த தன்மையினாலே தமிழகப் பாண்டிய வம்சத்தினரை வட இந்தியப் பண்டு வம்சத் தவரோடு u rr Gil BiT G3 av nr rif இணைத்தனர்.
"பண்டு" என்ற பெயர் மட்டுமன்றி விஜயன், பண்டு காபயன், முடசிவன் ஆகியோர் கதைகளில் வருஞ் செய்தி களும் பாண்டிநாட்டு - ஈழத் தொடர்புகளை உணர்த்துகின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 42 Q

விஜயனது பாண்டிய இளவரசியின் இடமாகத் தென் மதுரையே மகாவம்சத்திற் குறிப்பிடப்படுகின்றது.80 சங்கங்கள் நிலைகொண்டிருந்த இடங்கனாகப் பாண்டியரின் மூன்று தலைநகர்கள் குறிப்பிடப்படுகின்றன. முதற் சங்கம் தென் மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் மதுரையிலும் அமைக்கப்பட்டமை வரலாறு. இவற்றின் காலம் பல ஆயிரம் வருடங்கள் என்பதும் ஐதீகம். சங்கம் அமைந்த இடமாகத் தென்மதுரை காணப்பட்ட செய்தியை யும், விஜயன் காலத்திற்குரிய செய்திலை. யும் ஒப்பிட்டு நோக் கும்போது இவை ஏறக்குறையச் சமகாலக் கதைகளாகவே விளங்குவதும் அவதானிக்கத்தக்கது. தென்மதுரை மட்டுமன்றி இடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடமாகிய கபாடபுரம் என்ற பெயரும் ஈழத்துப் பாளி நூல்களிலும் மிகப்பழைய கல்வெட்டுக் களாகிய பிராமிக் கல்வெட்டுகளிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கபாடபுரத்தின் இன்னோர் வடிவந்தான் துவாரகா ஆகும், துவாரகா, கபாடபுரம் என்பன வாசற் கதவுகளையுடைய இடம் எனப் பொருள் தரும். பண்டுகாபய னது ஐதீகத்திலும் அவன் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகத் 'saint of LDarla' மகாவம்சத்திற் குறிப்பிடப்படுவது ஈண்டு அவதானிக்கத்தக்கது.81 துவாரமண்டல என்ற பெயரே ஈழத் தின் பிராமிக் கல்வெட்டுகளில் தவிறீக்கிரிய" என அழைக் கப்படுகின்றது எனப் பரணவித்தானா அபிப்பிராயப்படுகின் றார்.82 இக்கல்வெட்டுகள் ஈழத்தின் புகழ்பூத்த தாழிக் காடாகிய பொம்பரிப்பிற்கு அருகில் உள்ள தோணிகலவில்" காணப்படுவதும் ஒரு முக்கியமான செய்தியாகும். ஏற்கனவே இத்தாழிக்காட்டிற்குந் தமிழகத்தின் தாம்ரவரிணி நதி தீரத் தில் அமைந்துள்ள ஆதி ச்ச ந ல் இார் த் தாழிக்காட்டிற்கு மிடையேயுள்ள ஒற்றுமையை நாம் எடுத்துக் காட்டியுள்ளமை தினைவு கூரற்பாலது. தோணிக்கலக் கல்வெட்டில் இப்பதம் "தவிரிகிய - நகரக" என்றே இடம் பெற்றுள்ளமையும் அவ தானிக்கத்தக்கது.83
மணற்றி
கபாடபுரம் / துவாரமண்டலம் / தவிறீகிய, ஆகிய பெயர் களோடு ஈழத்தின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தின் பழைய
O 43 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 38
பெயராகிய மணற்றியும் பாண்டி நாட்டோடு ஈழத்தின் வட பகுதி கொண்டிருந்த தொடர்பினை நினைவு கூருகின்றது. இத் தகைய செய்தி இறையனார் அகப்பொருளுரையில் உண்டு.84
இது யாக்கப்பட்ட காலம் கி. பி. 11 - 13ஆம் நூற்றாண்டு
கட்கு இடைப்பட்ட காலமாகக் கொள்ளப்பட்டாலுங்கூட,
இதிற் காணப்படுஞ் செய்திகள் பல சங்ககால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே உள்ளன எனக் கருதப்படுகின்றது.
இந்நூல் கபாடபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முடத்திருமாறன் பற்றிக் குறிப்பிடுகின்றது. இடைச்சங்ககால இறுதியில் வாழ்ந்த இவன் காலத்திற் கபாடபுரம் கடற் கோளினால் அழிய, தமிழ்ப் புலவர்களுடன் வடக்கே சென்று மணலூர் என்னும் சிறு நணரில் இவன் தங்கினான் எனவும் பின்னர்தான் கடைச்சங்கத்தின் தலைநகராகிய மதுரையை
திருமாணித்தான் எனவுங் கூறப்படுகின்றது. தமிழ்ப் புலமை யுள்ள இம்மன்னனின் இருபாடல்கள் நற்றிணையில் உண்டு.85 இங்கே நாம் ஆராய இருப்பது கபாடபுரத்தின்
பின்னர் இப்பாண்டிய மன்னன் சிறிது காலந் தங்கிய மணலூர் பற்றியே ஆகும்.
இராசநாயகமுதலியார் இம்மணலூர் பற்றி இற்றைக்கு அரை நூற்றாண்டுகட்கு முன்னர் கூறிய கருத்துகள் அவதா னிக்கத் தக்கவையாகும், பண்டைய யாழ்ப்பாணக் குடாநாட் டின் பெயரென இதனை வாதிடும் இவர், மகாபாரதத்தில் அர்ச்சுனன் நாக க ன் னி ஒருத்தியைத் தனது தென்னித்தியத் தீர்த்த யாத்திரையின்போது மணந்த செய்தி, அப்பயணத்திற் குறிப்பிடப்படும் ‘மணிபுரம்" பற்றிய செய்தி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு இம்மணிபுரம், மனலூர் ஆகியன ஒத்த சொற்களே என எடுத்துக்காட்டி இத்தகைய நிகழ்ச்சி கி. மு. 15ஆம் நூற்றாண்டிற்குரியது எனவுங் கூறியுள்ளார்.86 இதற்காதாரமாகத் திருவிளையாடற் புராணம், மதுரா மான் மியம் ஆகிய நூல்களில் உள்ள குறிப்புகளையும் எடுத்தாண் டுள்ளார். திருவிளையாடற் புரா ண த் தி றி தற்போதைய மதுரைக்குக் கிழக்கே உள்ள இடமாக மணலூர் இடம் பெற்றுள்ளது. இவ்விடத்திற்றான் மதுரையைத் தலைநகராக அமைப்பதற்கு முன்னர் பாண்டியர் தமது தலைநகரை அமைத்
யாழ். - தொன்மை வரலாறு 44 O

திருந்தனர் எனவுன் கூறப்படுகின்றது. மதுரா மான்மியத்தில் மணலூர், மணவூர், மணவை ஆகிய பதங்கள் காணப்படு கின்றன. இதனால் மணலூர், மணல் புரம், மணலூரிப்புரம், மணவூர், மண வை ஆகியன ஒத்த சொற்களே என வாதிடும் முதலியார் இராசநாயகம், இப்பெயர் தென்னிந்தியக் கடற்கரை யின் இரு மருங்கிலும் வழக்கிலிருந்த இடப் பெயரெனவும் கூறியுள்ளார். இப்பெயரே யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்டது எனவுங் கூறும் இவர், யாழ்ப்பாண அரசை நிறுவிய தமிழ் மன்னர்கள் குடிய விருதுகளான "மணவையாரிய வரோதயன்', ‘மணவையர்கோன்” ஆகியனவற்றைக் கொண்டும், யாழ்ப்பாண வைபவமாலையில் யாழ்ப்பாணத்திற்கு இடப்பட்டுள்ள "மணற்றி" என்ற பெயரைக் கொண்டும், யாழ்ப்பாணத்திற்குப் பல்வேறு காலங்களில் இப் பெயர் வழங்கப்பட்டதென்ற முடிபுக்கு வந்துள்ளார். அத் துடன் இம்மணலூர் என்ற பெயர் பெருமளவுக்குக் கந்த ரோடையையே குறித்தது என்றுங்கூறி, இங்கே நாகரி களின் தலைநகராக இம்மணலூர் கி. மு. 15ஆம் நூற்றாண் டிற் காணப்பட்டது எனவும் விளக்கியுள்ளார். மேலுஞ் சிங்களச் சொல்லாகிய ‘வெலிகம" என்பது இதன் மொழிபெயர்ப்பே என்பதும் இவரது கருத்தாகும். இவ்வெலிகமதான் பின்னர் தற்காலத்தில் வழக்கிலிருக்கும் "வலிகாமமாக" மாறியது போலத் தெரிகின்றது. இதனால் மணலூர்தான் பின்னர் மணற்றியாகி யாழ்ப்பாணக் குடாநாட்டின் பழைய பெய ரானதெனவுங் கூறியுள்ளார். அநுரா த புர ம், சிங்கைநகர், தஞ்சாவூர் போன்றன அநுரை, சிங்கை, தஞ்சை என்றழைக் கப்பட்டது போன்றே மணலூர், மணற்றி ஆகியன மணவை" என அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் இவரது விளக்க Le f're5b.
ஈழத்தின் வடபகுதியில் உருவாகிய இராச்சியத்தின் இன் னொரு பெயரே மணவை, மணற்றி என்பதனை ஏற்கும் இந்திரபானா87 மணவை என்பது பெரிய பிரதேசத்தினைக் குறித்து நின்ற தோடு கி. பி. 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்துச் சேதுபதி மன்னர்களின் தலைநகர்களி
9ே 45 வரலாற்றுக்கு முற்பட்ட்.

Page 39
லொன்று இப்பெயரால் அழைக்கப்பட்டதையும் எடுத்துச் காட்டியுள்ளார். அத்துடன் மணவை, மணற்றி, மனலூர் ஆகியவை தென்னிந்தியாவிலுள்ள இடப் பெயர்களாக விளங்கிப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு இடப்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தினையும் அவர் எழுப்பியுள்ளார். இதன் சிங்கள வடிவமே செல்வாக்குப் பெற்றுள்ளது எனக் கூறும் இந்திரபாலா மணவை பற்றிப் பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத் தக்கது. 88
"ஈழத்துத் தமிழ் வரலாற்றேடுகளை ஆராயுமிடத்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பழைய பெயர்களாக மணற்றி, மணற்றிடல், மணற்றிடர், ஆகிய பெயர்கள் கொடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இவை மூன்றும் ஒரே பெயரின் திரிபுகள் எனக் கொள்ளலாம். இப்பெயரின் வேறு வடிவங் களாக மணலூர், மணவூர் ஆகிய பெயர்கள் அமைந்தன எனப் பரணவித்தானாவும் ஸி. எஸ். நவரத்தினமுங் குறிப் பிட்டிருக்கின்றனர். இவ்வடிவங்கள் எந்த ஆதாரங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன என்று இவர்கள் கூறவில்லை. தமிழ் வரலாற்றேடுகளிலே இவ்வடிவங்களை எம்மாலே கண்டுபிடிக்க முடியவில்லை. யாழ்ப்பாண GGSWLY Os6) யிலே மணற்றிடல், மணற்றிடர் ஆகிய இரு வடிவங்கள் இடம் பெறுகின்றன. மட்டக்களப்பு மான்மியத்திலே மணற்றி, மணற்றிடர் ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிற பெயர்களாக மணிபுரம், நாகதீபம் ஆகியவையுங் கொடுக்கப்பட்டுள்ளன. சாதி மாலைப்பாட்டு என்னும் நூலிலும் மணற்றி என்ற பெயர் காணப்படுகின்றது. மணற்றி என்பது மணற்றிடர் அல்லது மணற்றிடல் என்ற பெயரின் குறுக்கமாக இருக்கலாம். மணற்றிடல் என்ற பெயர் யாழ்ப்பானத்திற்குக் கொடுக் கப்பட்டதன் காரணந் தெரியவில்லை. இப்பெயர் சிங்களப் பெயராகிய வெலிகம எனபதன் தமிழ் மொழிபெயர்ப்பாக இருக்கமுடியும். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் பொறிக் கப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டொன்றில் வலிக்காமம் என்ற பெயர் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியின் பெயராகக்
யாழ். - தொன்மை வரலாறு 46 ()

குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பாகத்திற்கு வழங்கும் பெயராகிய வலிகாமம் இப்பெயரில் இருந்து பெறப்பட்டதாகத் தோன்றுகின்றது. வலிகம என்ற சிங்களப் பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு மணலூர் என்பதாகும். மணற்றிடர் என்பது மணலூரின் வேறொரு வடிவமாக அமையலாம் . ...".
ஆனால் மனலூர் பற்றி இறையனார் அகப்பொருளில் இடைச்சங்கத்தோடு காணப்படுங் குறிப்பினை அவதானிக்கும் போது இப்பெயர் பாண்டி நாட்டில் இருந்தே ஈழத்தினை அடைந்திருக்கலாம் என்று எண்ணத் தூண்டுகின்றது. ஏனெனில், கபாடபுரம் அழிய, பாண்டியர் தமது தலைநகரை வடக்கே உள்ள தலைநகருக்கு மாற்றினார் என இந்நூல் குறிப்பிடு வதால் இது ஆரம்பத்திற் பாண்டி நாட்டின் வடபகுதியிலுள்ள இடத்தினையே குறித்து நின்றது எனவும், பின்னர் பாண்டி நாட்டு மக்களின் பரம்பாைல் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஓர் இடத்திற்கு இப்பெயரிடப்பட்டது எனவும் கொள்ளலாம். இதனையே இந்திரபாலா குறிக்குஞ் சாதிமாலைப் பாட்டும் உணர்த்துகின்றது. இப்பாட்டில் மணற்றி ‘மாந்தையொடு மணற்றி கொண்ட வல்விசயன்" என இடம் பெற்றுள்ளது.89 வையாபாடல், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்களிலும் *மணற்றி" என யாழ்ப்பாணப் பகுதி அழைக்கப்பட்டுள்ளமை நினைவு கூரற்பாலது. மணலூர் அல்லது மணற்றி ஒரு பழைய வடிவமே என்பதனை எடுத்துக்காட்ட மேற்கூறிய மன்னர் இடப்பெயர் மட்டுமன்றி இவ்விடப் பெயரோடு சேர்ந்துள்ள மன்னர்களது பெயரும் உறுதிப்படுத்துகின்றது எனலாம். பாண்டிய மன்னனான முடத்திருமாறனே இவ்விடப்பெய ரோடு இணைந்துள்ள இடைச்சங்ககால மன்னனாவன். இவனது பெயருக்கும் பண்டுகாபயமன்னனின் மகனாகிய ‘மூடசிவனின்’ பெயருக்கும் உள்ள ஒற்றுமை அவதானிக்கத்தக்கது. மனிதனது அங்கக் குறைபாடுகளை வைத்து அவர்களை அழைக்கும் வழக்கம் ஈழத்தில் ஆதியிற் காணப்பட்ட வழக்கங்களில் ஒன் றாகும். முடமான அவயவத்தை உடையதால் முடத்திரு மாறன், முடசிவன் என்ற பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்
u L-7 a TGO our Lib.
O 47 6A J6ùTibgp&S5 (Upiö Lu LL ...... •••

Page 40
தாம்ரவர்ணி என்ற தமிழக ஆற்றுப் பெயருக்கும் ஈழத்தின் பழைய பெயர்களில் ஒன்றாகிய தம்பபண்ணிக்குமிடையே நில வும் ஒற்றுமை எவ்வாறு பாண்டி நாட்டிலிருந்து ஈழத்தினை நோக்கி ஏற்பட்ட இடப் பெயர்வினை நினைவு கூருகின்றதோ அவ்வாறே யாழ்ப்பாணத்தின் பழைய பெயரான மணவை இவ்வாறு ஏற்பட்ட குடிப்பெயர்வையே நினைவு கூருகின்றது. தொல்லியற் பின்னணியில் இப்பெயர்களை நோக்கும்போது இவை வரலாற்றுதய கால நிகழ்வுகளை நினைவூட்டுவனவாகக் காணப்படுகின்றன எனக் கொள்ளலாம். இக்கருத்தினை உறுதி செய்ய மேலும் பல சான்றுகளை நிரைப்படுத்தலாம். டின. லூர் / மணவூர் பற்றிய குறிப்புகள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. இச்சங்கத்திலே தான் ஈழத்துப் புலவரான பூதந் தேவனார் பாடல்களை அரங்கேற்றினார் எனவுங் கூறப்படுகின் றது. அத்துடன் மாந்தையோடு மணற்றியுஞ் சாதிமாலைப் பாட்டிற் குறிப்பிடப்படுவது அவதானிக்கத்தக்கது. மணற்றி என்ற பெயரும் யாழ்ப்பாணத்தைக் குறிக்க, தமிழகத்திள் இன்னோரிடத்தின் பெயராகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் "மாந்தையும்" ஈழத்தின் மன்னாரிலுள்ள ஒரு துறைமுகப் பகுதி யின் பெயராக ஆதிக்குடிகளால் இடப்பட்டது.
பாண்டிநாடு பற்றிக் கிரேக்க அறிஞர்கள் தரும் ஐதீகங்க ளிற் பண்டைய’ என்ற இளவரசி ஹெராக்கிளிசின் மகளே என்றும் அவளே பாண்டி நாட்டின் முதலரசி என்ற குறிப் பும் உளது. மெகஸ்தினிஸ் இது பற்றிப் பின்வருமாறு குறிப்
9“0B96h omTnrff . 91
"ஹெராக்கிளிசுக்குப் பண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத் தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டினை அளித்தான். அவளது ஆட்சிக்குட்பட்டவர்களை முந்நூற்றறுபத்தைந்து ஊர்க ளிற் பகுத்து வைத்து ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குத் திறை கொணரவேண்டுமென்று
கட்டளையிட்டான்.
பாண்டிநாடு பற்றிய இத்தகைய ஐதீகம் ஈழத்தின் வட மேற்குக் கரையில் மன்னார்ப் பகுதியில் அரசாண்ட "அல்லி அரசாணி" பற்றிய ஐதீகத்தினை நமக்கு நினைவூட்டுவதோடு
யாழ். - தொன்மை வரலாறு 48 ()

இரு பிராந்தியங்களுக்குமிடையே வளர்ந்து வந்த பொதுவான சிந்தனையையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
பாண்டி நாட்டுடன் சங்ககாலத்தில் ஈழம் கொண்டிருந்த தொடர்பினைச் சங்க நூல்களிற் காணப்படும் ஈழத்துப் பூதந் தேவனாரின் பாடல்கள் மட்டுமன்றி இரு பிராந்தியங்களுக்கு மிடையே கடற்கோள் பற்றி நிலவும் மரபுவழி ஐதீகங்க ளும் எடுத்துக்காட்டுகின்றன. இக்கடற்கோள்கள் சங்க காலத் திற் காணப்பட்டதை இறையனார்.அகப்பொருள், சிலப்பதி காரம், திருவிளையாடற்புராணம் ஆகிய நூல்களின் செய்திக ஸ் உணர்த்துகின்றன.92 இக்கடற்கோள்கள் பல கட்டங்களிற் காணப்பட்டதாகத் தெரிகின்றது. முதலிலே தமிழகம், ஈழம் ஆகிய பிராந்தியங்களுக்கிடையே காணப்பட்ட பிரதேசங்கள் அழிந்தன. அடுத்த கட்டமாகத் தமிழகத்து, ஈழத்துக் கரை யோரப் பட்டினங்கள் அழிந்தன எனலாம். சங்கங்கள் அமைந் திருந்த மதுரை, கபாடபுரம் மட்டுமன்றிப் புகாரும் இவ்வாறு கடல்கோளினாற் பாதிக்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் எடுத்துக் கூறுகின்றது. தமிழகக் கரையோரப் பகுதிகளில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகள் இக்கடற்கோளின் எச்சசொச்சமாக இவ் விடங்களிற் கடல்மட்டங் குறைந்துங் கூடியுங் காணப்பட் டதற்கான மண்மேடுகளை இனங்காட்டியுள்ளன. இம்மேடுக ளில் 10 - 20 உயரத்தில் உள்ள மேடுகள் கிறிஸ்தாப்த காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட கடல் மட்டத்தின் மாற்றத் தினை எடுத்துக் காட்டுவதாகவுங் கொள்ளப்படுகின்றது. 98
ஈழத்தின் வடமேற்கே கடற்கோள் காணப்பட்டதற்கான எச்சங்கள் உள் என்பதைத் தெரணியகல எடுத்துக்காட்டியுள் ளமையும் ஈண்டு அவதானிக்கத்தக்கது.94 கடற்கோள்கள் பற்றிய ஐதீகங்கள் மட்டுமன்றிப் பாண்டிநாட்டின் தென்பகுதி யும் ஈழிமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றதய காலம் ஆகிய காலப் பிரிவுகளில் இறுக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்ததால் இக்காலங்களிற் குடிப்பெயர்வுகள் பாண்டி நாட்டிலிருந்து ஈழத்தினை அடைந்தன ள் 60 லாம். SE UT லாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய குறுணிக்கற்கால ஆயுதங்கள் இக்காலத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன.
இ 49 வரலாற்றுக்கு முற்பட்ட. .

Page 41
இவ்வாறே பாண்டிநாட்டின் தென்பகுதி மணற்பிரதேசமாகக் காணப்பட்டதால் இங்கே தாழி அடக்கமும், நீளக்கிடத்தி அடக்கஞ் செய்தலுமே வரலாற்றுதய காலத்திற் செல் வாக்குப் பெற்றிருந்தன. ஈழத்திலுந் தாழி அடக்க முறை நிலவியதற்கான சான்றுகள் பொம்பரிப்பு, கரம்பன்குளம், தெக் கம், ஆனைக்கோட்டை, கதிர்காமம் ஆகிய இடங்களில் உள. ஆனைக்கோட்டை, சத்திராந்தை, மாந்தை ஆகிய இடங்களில் நீளக்கிடத்தி அடக்கஞ் செய்யும் முறை பேணப்பட்டது. இவற்றோடு வடபகுதியிற் கிடைத்த பாண்டி நாட்டு நாணயங் களும் இத்தகைய தொடர்பினை உறுதி செய்கின்றன. இது பற்றிப் பின்னர் நோக்குவாம்.
ஈழத்தின் வடபகுதியில் ஏற்பட்ட ஆதிக்குடியேற்றம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை போன்ற தமிழ் நூல்கள் தருஞ் செய்தியினை இனி அவதானிக்கலாம். விஜயன் கூட்டத்தினர் வத்திறங்கிய இடமாகக் கதிரைமலையை இந்நூல் குறிக்கின்றது. இத்தகைய குறிப்பு விஜயன் கதை வடபகுதி மக்கள் மனதில் அக்காலத்தில் நிலை கொண்டிருந்ததையும், ஈழத்தில் முதலரச னான விஜயன் காலத்திலேயே வடபகுதியிலுங் குடியேற்றம் நிகழ்ந்துவிட்டது என்பதையும் எடுத்துக் காட்டுவதாக அமைந் துள்ளதால் இது பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.95
**இற்றைக்கு 2400 வருஷங்களுக்கு முன் இவ்விலங்கை நாடு யானை, கரடி, புலி மிருகங்கள் சஞ்சரிக்கும் பெருவனாந்தரமாயிருந்தது. அவ்வனாந்தரத்திற் சில வேடரேயன்றி யாதொரு மானிட சீவனுமிருந்ததில்லை. அக்காலத்திலே வங்க தேசத்துச் சத்திரிய மரபிற் பிறந்து, இலாட தேசத்தையரசாண்ட சிங்கவாகுவின் குமாரன், விஜயனென்பவன் மகா துஷ்டனாயிருநததினால், அவ. னைப் பிதாவாகிய சிங்கவாகு துரத்திவிட, அவன் புறப் பட்டு அங்குமிங்கும் போன ஒருவரும் இடங்கொடாததி னால் அவன் காசிக்குப் போய் அங்கேயிருந்தான். அவ் விடத்தில் விஜயகுமாரனுக்கு "நீ இலங்கை நாட்டின் மத்தியிலுள்ள கதிரைமலையிற் போயிரு, அந்த நாடு
யாழ். - தொன்மை வரலாறு 5o O

உனக்குடையது" எனச் சொப்பனத்தில் உத்தரவு கிடைத் ததினால் அவன் நீலகண்டாசாரியார் என்னுங் குருவை அழைக்க, அவர் தமது பத்தினியாகிய அகிலாண்ட வல்லியம்மாளையும், புத்திர புத்திரிகளையும், மருமக் களையுங் கூட்டிக் கொண்டு வந்து தனது பரிவாரங் களுடன் கதிரைமலையிற் சேர்ந்தான்.""
விஜயன் பற்றிப் பாளி நூல்களிற் கூறப்பட்டுள்ள கட்டுக் கதையை மையமாகக் கொண்டே மேற்கூறிய கதை இழைக்கப் பட்டாலும் விஜயன் வந்திறங்கிய இடமாகப் பாளி நூல்கள் தம்பபண்ணியைக் கூற, இக்கதை கதிரைமலையைக் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. க கிரைமலை வடபகுதியிலன்றி மலை நாட்டிற்றான் காணப்பட்டது என்பது யாழ்ப்பாண வைபவ மாலை எழுதிய மயில்வாகனப் புலவருக்குள்ள மயக்கமாக இருந்தது. இத்தகைய மயக்கம் பல இடங்களிலே யாழ்ப் பாண வைபவமாலையிலுண்டு. இந்நூலாசிரியரின் காலத்தில் ஈழத்திற் கண்டி இராச்சியம் முக்கியம் பெற்றிருந்ததோடு கதிரைமலை எனப் பெயர்கொண்ட கதிர்காமமுஞ் செல்வாக் குடன் விளங்கியது. இதுபற்றிக் கதிரைமலைப் பள்ளுப் போன்ற நூல்களுங் கூறுகின்றன. இதனால் வட பகுதியின் ஆதிக் குடியேற்ற மையப் பிரதேசங்களில் ஒன்றாகக் கதிரைமலை காணப்பட்டது. இதனால் அன்று நிலவிய இம்மரபைத் தனது காலக் கதிரைமலையாகிய மத்திய பகுதியிலுள்ள கதிரை மலையாக இவர் தவறுதலாக இனங்கண்டு கொண்டுள்ளார்
என்றே கொள்ளவேண்டும்.
எனவே முழு ஈழத்திலும் ஏற்பட்ட ஆதிக் குடியேற்றத் தினை எடுத்துக் கூறும் ஐதீகமாகிய விஜயன் கதையை, வட பகுதியோடு தொடர்புபடுத்தியதன் மூலம் யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் இப்பகுதியின் தலைநகர் எனக் கூறுமளவுக்குச் சிறப்புப் பெற்றிருந்த கதிரைமலையுடன் தொடர்புடைய தமது காலத்தில் வழக்கிலிருந்த ஒரு ஐதீகத்தினைத் தமது நூலில் இணைத்துள்ளார் எனலாம். சுருங்கக் கூறின் கதிரைமலையின் தோற்றத்தினை விளக்க இவர் இக்கதையைக் கையாண்டுள்ளார். அது மட்டுமன்றி விஜயனோடு வடபகுதியிலுள்ள ஆலயங்க்ளின்
51 வரலாற்றுக்கு முற்பட்ட் .

Page 42
தோற்றமும் யாழ்ப்பான 6)a) u G) Lonriga 6)u 9edu இணைக்கப் பட்:ள்ள மையும் அவதானிக்கத்தக்கது. நாட்டின் தென்பகுதி விஜயனது காலத்தில் நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்தது போன்: வடபகுதியும் அடைந்திருந்தது என்பதனை எடுத்துக் காட்டும் வழக்கிலிருந்த ஐதீகமொன்றையே யாழ்ப்பாண 6 evu೧! மாலை ஆசிரியர் தமது நூலிலும் பொறித்துள்ளார் எனக் கொள்ளலாம். எனினும் விஜயன் பற்றிய செய்தி யாழ்ப்பான வைபவமாலையின் முதன் நூலாகிய கைலாய மாலையில் இடம் பெறவில்லை. இவ்வாறேதான் வையாபாடலிலும் இச்செய்தி காணப்படாமை அவதானிக்கத்தக்கது.
தொல்லியற் பின்னணி
இதனால் ‘நாகதீபம்" எனப் பாளி நூல்களிலும் "நாகநாடு” எனத் தமிழ் நூல்களிலுங் கூறப்படும் பகுதி ஆதிகாலத்தில் இருந்தே மக்கள் நடமாட்டத்திற்குரிய இடமாக விளங்கிய தென்பது புலனாகின்றது. கற்கால மக்கள் இங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்துந் தடயங்களாகக் கற்கால (இடைக்கற்கால குறுணிக்கற்கால) ஆயுதங்கள் காணப்படுகின்றன. இவர்களையே இலக்கியங்கள் யசஷ்ர்கள், நாகர்கள் என அழைக்கின்றன. ஆனால், இவர்கள் விட்டுச் சென்ற கல்லாயுதங்கள் மட்டுமன்றி ஈழத்தின் பல பகுதிகளிலுங் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் இவர்கள் மனிதர்களே என்பதையும், இவர்கள் சந்ததி யினரே வேடர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன.96 யாழ்ப் பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் ஆதிக்குடிகளாக யசஷர்களோடு ( இராட்சதர்கள் ) வேடர்களும் குறிக்கப்படுவது ஈண்டு அவதானிக்கத்தக்கது.97 இவர்களை மானிடவியலாளர் ஒஸ்ரலே யிட் வர்க்கத்தினர் என இனங்கண்டு கொண்டுள்ளனர். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழியாகும். பிற்காலச் சிங்கள தமிழ் மக்களின் மூதாதையினரோடு இவர்கள் கலந்து
உருவாக்கிய நாகரிகமே ஈழத்து தாகரிகமாகும்.
வரலாற்றுக் காலத்திலும் வரலாற்றுதய காலத்திலும் வாழ்ந்த மக்களே ஈழம் முழுவதும் காணப்பட்டதை அகழ் வாராய்ச்சிச் சான்றுகள் மட்டுமன்றி, ஈழத்தின் மிகப்பழைய
யாழ். - தொன்மை வரலாறு 52 ஐ

கல்வெட்டுகளான கி. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக் குரிய பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்றுக் காலத்திற் புதிய மக்கட் கூட்டம் ஈழத்திற்கு வரவில்லை என்பதையும், வரலாற்றுதய காலத்தில் ஈழத்தினை அடைந்த பெருங்கற்கால மக்கட் கூட்டத்தினரே தொடர்ந்தும் இங்கு வாழ்ந்தனர் என்பதையும், பெருங்கற்காலக் கலாசார மையங்களோடு காணப்படும் இக்கல்வெட்டுகள் எடுத்துக் காட்டியுள்ளதோடு இக்கல்வெட்டுகளிற் காணப்படுங் குறியீடு களுக்கும் பெருங்கற்காலக் கலாசார மட்பாண்டங்களிலே காணப் படுங் குறியீடுகளுக்குமிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை இதனை மேலும் உறுதிசெய்கின்றது. பொதுவாகவே இப்பிராமி வரிவடிவம் ஈழத்தின் வரலாற்றுக்கால முதல் மன்னனாகிய தேவநம்பியதீஸன் காலத்திலேதான் ஈழத்திற்குப் பெளத்தத் துடன் அறிமுகமாகியது என்று கொள்ளப்பட்டாலுங்கூடஇதற்குச் சில நூற்றாண்டுகட்கு மு ன் ன ஏே தென்னிந்தியப் பிராமிவரிவடிவம் ஒன்று தமிழகம்-ஈழம் போன்ற இடங்களிற் காணப்பட்டதை அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தகைய வரிவடிவத்தினைப் பியூலர் 'திராவிடி வரிவடிவம் எனக் கூறியுள்ளார்.98 இக்கருத்தையே பெர்ணாண்டோ,99 கருணரத் தினா100 ஆகியோர் ஏற்றுள்ளனர். இவ்வரிவடிவத்தினை நாக சுவாமி01 “தமிழி வரிவடிவம்" என அழைக்கின்றார்.
இத்தகைய கருத்தினையே அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதி செய்கின்றமை தெரிகின்றது. அநுராதி புரத்தில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பமாகிய கி. மு. 250 ஆம் ஆண்டு களுக்கு முன்னரேயே இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பிராமி வரிவடிவத்தினை அறிந்திருந்தனர் என்பதனை எடுத்துக் காட்டி உள்ளன. இப்பிராமி வரிவடிவமுள்ள மட்பாண்ட ஒடுகள் காணப்படுங் கலாசாரப்படையின் காலம் கி. மு. 750ஆம் ஆண் டாக இருந்திருக்கலாம் என்பதை இப்படையிற் கிடைத்துள்ள பொருட்களை C.14 காலக் கணிப்புக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.102 இப்பின்னணியிற்றான் 1947இல் தமிழகத் தில் உள்ள அரிக்கமேட்டிற் கசல் என்ற ஆய்வாளர் வர
லாற்றுதய காலத்திற்குரிய பெருங்கற்காலக் கலாசாரப்படை
O 53 வரலாற்றுக்கு முற்பட்ட். . .

Page 43
பிற் கண்டெடுத்த பிராமி வரிவடிவம் பொறித்த மட்பாண்ட ஓடு ஒன்றும் முக்கியம் பெறுகின்றது. இது பற்றிப் பின்வந்த ஆய்வாளர்கள் அதிக அக்கறை செலுத்தாத போதிலும் அண்மைக் காலத்தில் அரிக்கமேட்டு அகழ்வுகளை மீளாய்வு செய்த திருமதி விமலா பேக்லே இப்பகுதியிற் கி. மு. 9ஆம் நூற்றாண்டிற் பெருங்கற்கால மக்கள் டமாடியதற்கான தடயங்கள் உண்டு என்பதை எடுத்துக் காட்டியமையை ஏற்றுள்ள சிரன் தெரணியகலவும் அநுராதபுரம் - அரிக்கமேடு ஆகிய இடங்களில் இத்தகைய பீராமி வரிவடிவம் பொறித்த மட்பாண்டங்கள் சமகாலத்தவை எனக் கூறுகின்றார்.108 இதனால் ஈழத்தின் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்தை கி. மு. 250 எனக் கொள்வது மரபு எனினும் இதன் தொடக்கம் கி. மு. 600 - 500 ஆண்டு காலமாக இருக்கலாம் எனவும் இவர் கருதுவர்.104
எனவே தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளிற் கிடைத்துள்ள சான்றுகளை உற்று நோக்கும்போது வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுதய காலங்களில் இருபகுதிகளும் நெருங்கிய உறவு கொண்டிருந்தமை தெரிகின்றது. ஈழத்திற் கிடைத்துள்ள வர லாற்றுக்கு முற்பட்ட, குறுணிக் கற்கால ஆயுதங்களுக்கும், தமிழகத்திற் சமசாலத்திற் கிடைத்த ஆயுதங்களுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமை காணப்படுவதுபோல இருபகுதிகளின் வரலாற்றுதய காலச் சின்னங்களான பெருங்கற்கால ஈமச் சின்னங்களுக்கிடையேயும் இத்தகைய ஒற்றுமை தென்படு கின்றது. இவ்வொற்றுமையே மேலும் ஈமச்சின்னங்களிற் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், எலும்புக் கூடுகள் ஆகியன புெம் உறுதிசெய்கின்றன. இதனாலே தென்னிந்தியாவைப் போல ஈழத்தின் நாகரிகத்தினை வளர்த்தெடுத்த வரலாற்றுக் கால மக்களின் மூதாதையினர்தான் வரலாற்றுதய கால மக்கள் 6:ன்பதனை இரு பகுதிகளிலுங் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் உறுதி செய்துள்ளன. ஆனைக்கோட்டை எலும்புக் கூடுகளை அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கான சந்தர்ப்பங் கிடைக்காத போதிலும் இங்கு கிடைத்த வெண்கல முத்திரை இப்பகுதி மக்கள் பழந்தமிழராகிய திராவிட மொழிக் கூட்டத் தினரே என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய
யாழ். - தொன்மை வரலாறு 54 )

தொல்லியற் பின்னணியில் விஜயன் தொட்டுத் தேவநம்பிய தீசன் வரையான காலப் பகுதியினை உள்ளடக்கிய தமிழகஈழ வரலாறு பற்றிய ஐதீகங்களை நோக்கும்போது இவை ஐதீகங்களாகக் காணப்பட்டபோதிலும் இவற்றின் கருப்பொரு ளாகத் தென்னிந்திய மக்கள் ஈழத்தின் மீது குடியேறியமை தெரிகின்றது. இதனால், இன்றைய தமிழ், சிங்கள மொழிக ளும், தென்னிந்தியத் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியனவும் ஒரே குடும்ப மொழிகள் என் துந் தெளிவாகின் றது. அறிஞர்கள் தற்காலச் சிங்கள மொழியின் ஆதிவடி வத்தை ‘எலு’ என்டர். திராவிட மொழியாகிய இவ்வெலுவே கி. மு. 3ஆம் நூற்றாண்டிற் பெளத்தத்துடன் இங்கு வந்த பாளிப் பிராகிருதத்தின் செல்வாக்கால் உகுமாறி இன்றைய சிங்களமொழியானது எனலாம். இத்தகைய செல்வாக்குக்கு உட்படாத தமிழ்மொழி பேசியோர் தனித்துவமாக இயங்கிய தோடு தமிழகத்துடனும் உறவை வளர்த்துக் கொண்டனர்.
O 65 6al T 5 Tibgpsg5 (Lfpb li 'l............ • • •

Page 44
1.
O.
l.
12.
13.
அடிக்குறிப்புகள்
Nicholas, C. W. 6Historical Topography of Ancient and Medieval Ceylon, J. R. A. S. C. B. N. S. Vol. VI, 1963. Lu. 9.
.9 ه گا و +L لGtDibu
Ragupathy, P. • Early Settlements in Jaffna - An Archaeological Survey, (Madras), 1987. L፡. 179.
Kanapathippilai, K., Ceylon's contribution to Tamil language and Literature”, University of Ceylon Review, Vol. VI, No. 4, ud. 26 - 228.
வேலுப்பிள்ளை , ஆ , தொடக்ககால ஈழத்து இலக்கியங்க ளும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி),
1986. L. l 2.
Deraniyagala, S., The Pre - Historic Chronology of Sri Lanka, Ancient Ceylons Vol. 6, No. 12, 1990, sg. பக், 211 - 250.
Deraniyagala, S. மேற்படி, ப. 213.
Ragupathy, P• • மே. கூ. நூல், ப. 130
Deraniyagala, S. , Guo - 3in. * * * * 1990, அ. பக். 229 - 230,
Ragupathy, P• • மே. கூ. நூல், ப. 179. Deraniyagala, S., GD. 3. .. a6, 1990, py. Audi. 21 1 - 250.
சிற்றம்பலம் சி. க., பண்டைய தமிழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1991. பக். 78 - 1 14.
Deraniyagala, S. The Proto - and Early Historic Radio Carbon Chronology of Sri Lanka, Ancient Ceylon, Vol. 6, No. 12, 1990, (ஆ). பக். 251 - 292.
யாழ். - தொன்மை வரலாறு 56 O

4. Begley, V., “Proto-historical material from Sri Lanka (Ceylon) and Indian contacts', Ecological Backgrounds of South Asian Pre-history, (ed) Kennedy K. A. R. and Possehl, G. L. (New Orleans) 1973. பக், 191 - 196,
i5. Deraniyagala, S., Gud. J. G., 1990. g. Luijs. 251 - 292.
16. Kennedy, K. A. R., Human Skeletal material from Ceylon with an analysis of the Island's Pre-historic and contemporary population, British Museum Geological (Palaeontological) Series, Vol. 2., No. 4., 1965.
17. Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka (Unpublished Ph. D, Thesis), University of Poona, 1980.
18. Deramiyagala, S., GLD. s. s. 1990 g, u ji. 251 - 29.
19. Sitram palam, S. K., Guo. a. s., 1980. i uji. 1 0 4 - 107.
20. Begley, V., Lukacs, J. R. and Kennedy K. A.R.,
(Excavations of Iron Age burials at Pomparippu,) Ancient Ceylon, Vol. 4, 1981. Luă. 5 1 - 132.
21. Begley, V., Co. a. s., 1973. Lué, 191 - 196
22. Sitrampalam, S. K., Guo. s. ss., 1980. Ludii. 89 - 94.
23. Begley, V., மே. கூ. க., 1973. பக். 191 - 196.
24. Pieris. Paul E., Nagadipa and Buddhist remains in Jaffna, Part I, J. R. A. S. C. B. , Vol XXVI, No. 70, 1917. uá. I 1 - 67;
“Nagadipa and Buddhist remains in Jaffna, Part III”, J. R. A. S. C. B., Vol. XXVIII, No. 72, 1919. u. 40 - 67.
25. Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926.
26. Ragupathy, P., Gud. assa. g5 6d. 1987. Luši. 63 - 78;
i i 5 - 132. Si trampalam, S. K., “Ancient Jaffna: An
O 57 வரலாற்றுக்கு முற்பட்ட .

Page 45
27.
28.
29.
30.
3.
Archaeological Perspective', Journal of South Asian Studies, Vol. 3, Nos. 1 & 2, 1983. uš. 1 - 17. சிற்றம்பலம், சி. க., “யாழ் மாவட்டத்தின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும்’, ‘செந்தழல்", தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திரு நெல்வேலி) 1992.
Ragupathy, P., G.D. F... 51st, 1987. Ludi. 63 - 78,
5 - 126
Sitrampalam, S. K., Gud. 3in... a6., 1983.
Ragupathy, P., Guo. 8r... д51st), 1987. ud. I 18 - 119. Sitrampalam, S. K., G.D. J.. as., 1983. u. 6.
Ragupathy. P., Gud. Sin.. Tsü, 1987. Luji. 280 - 224.
Chanmugam, P. K., & Jayawardene, F. L. W., Skeletal remains from Tirukketiswaram, Ceylon Journal of Science section, G, Vol., V. Part 2, 1954. Luik. 65 - 68.
Sitrampalam, S. K., "The Dawn of Civilization in Sri Lanka”, Paper presented at the First Annual Sessioms of the Jaffna Science Association, 25 - 04 - 1992.
Sitrampalam, S. K., G.D. d, .. 86., 1983. Ragupathy, P., Gud. 3m. 576i, il 987. uši. 66 - 67.
மே. கூ. நூல், பக். 127 - 132.
மே. கூ. நூல், பக். 25 - 31. Ragupathy, P., Gud. 3. U5T dio, 1987. Lu. 205. Deraniyagala. S., 6uD. gr. 5, 1990 - Lă. 25 1 - 292. புஸ்பரத்தினம், ப., பூநகரிப் பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு
வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991 .
யாழ். - தொன்மை வரலாறு 58 O

40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
Senaratne, S. P. F. “The Later Pre-history and Protohistory of Ceylon - Some Preliminary problems' - Journal of the National Museums of Ceylon, Vol. I, Part I, March, 1965. Ltd. 7 - 19.
Carswell John and Martha Prickett Mantai, 1980. A Preliminary Investigation, Ancient Ceylos, No. 5, 1984. Luji. 3 - 68.
Shanmuganathan, S., Excavations at Thirukketiswaram, Thirukketiswaram Papers, (ed.) Vaithiyanathan Kandiah, (Colombo), 1960. Luak. 83 - 84.
Chanmugam, P. K. and Jayawardene, F. L. W. மே. கூ. க., 1954. பக். 65 - 68.
Kennedy, K. A. R., The physical Anthropology of the Megalith Builders of South India and Sri Lanka, Canberra), 1975.
Sitrampalam, S. K., The Urn buriai site of Pompar ippu of Sri Lanka - A study., Ancient Ceylon, Vol. 2, No. 7, 1990. uáš. 263 - 297.
Sitrampalam, S. K. , GöLD. 8hin... a5. . i 980.
Mahavamsa, (Tr) Geiger. W., (Colombo) 1950. SS5, Tuli VI, aiifs, air 40 - 42.
Mendis, G. C., “The Vijaya legend”, Parana vitana Feli. citation Volume (ed) Jeyawickrama, M. A., (Colombo), 1965. Luji. 263 - 279.
Chempakalakshmi, R., “ Archaeology and Tamil Traditions”, Puratattva, No. 8, 1978. Lu&. 11 0 - 122.
Nicholas, C. W., Gud. r. as. , 1963. uš. 63 - 72.
Mahavamsa , மே. கூ. நூல், அதிகாரம் VII, வரி, 56 - 59.
O 59 வரலாற்றுக்கு (UPíbult-.........

Page 46
52. Rasanayagam, C., Gud. 3. JT 6ű, 1926. u. 21.
53. Carswell John and Martha Prickett., GuD. ag... a.s., 1980.
Lják. 3 - 68.
54. Deraniyagala, S. U., "Excavations in the Citadel of Anuradhapura. Gedige 1984, - a Preliminary Report Ancient Ceylon, No. 6, ud. 39 - 47.
55. Begley, V, "Arikamedu reconsideredo, American Journal
of Archaeology. 87, 1974. uá. 461 – 481.
56. Sitrampalam, S. K.- Proto-historic Sri Lanka - An interdiciplinary Perspective, Paper presented at the Eleventh Conference of international Association of Historians of Asia, August 1 - 5, Colombo), 1988.
57. புஸ்பரத்தினம், ப., மே. கூ. க., 1991.
58. சிற்றம்பலம், சி. க , வன்னிநாடும் திராவிடரும், வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர், அனைத் துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை மகா நாடு, முல்லைத்தீவு, 27, 28, 29, வைகாசி 1983. பக். 45 - 49.
59. Parker, H., Ancient Ceylon. (Reprint - New Delhi), 1934.
uj5. 476 - 482.
60. Sitrampalam, S. K., GLID. S. 35., 1980. Ludi. 138 - 144.
61. Mahavamsa, மே, கூ, நூல், அதி. 1.
62. Sinnathamby, J. R., Ceylon in Ptolemy's Geography,
(Colombo), 1968. Luji. 52 - 55.
63. Paranavitana. S. , Vallipuram Gold plate Inscription of the reign of Vasabha, Epigraphia Zeylanica, Vol. IV, No. 29, 1934 - 42. Lá. 229 - 237.
64. Rasanayagam, C., Btd. Sin. நூல், அதி பக் 1 - 44.
யாழ். - தொன்மை வரலாறு So O

65.
66.
67
68.
69.
70.
71.
76.
77.
78.
79.
80.
8.
O es 1
Mahavamsa, Oud. J. Tit, gig, 1.
மணிமேகலை, (பதிப்பு) சாமிநாதையர், உ. வே. , (சென்னை) 1956. அதி. VIII. பக். 1 - 2, 43 - 46.
Paranavitana, S., The Aryakingdom in North Ceylon, J. R. A. S. C. B (N.S), Vol. VII, Part 2, 1961. பக், 1 - 42.
சிற்றம்பலம், சி. க., 'ஈழமும் நாக வணக்கமும்" (பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்), மணிபல்லவம், மணி பல்லவ கலாமன்றம், நயினாதீவு, 28-ம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. பக். 37 48 سے
Mahavamsa, Gud. Sii. GT60, 9 S. VII, Guif. 72 - 7s.
மே. கூ, நூல், அதி. V11.
மே. கூ, நூல், அதி. VII, வரி. 18 - 19.
கூ நூல், அதி, X, வரி 9 - 12,
மே. கூ. நூல், அதி. 1X, வரி. 22 - 29.
Dipavamsa, (ed) Law. B. C., The Ceylon Historical Journal, Vol. VII, 1957-58. 95. XII.
Mahavamsa, Gud. S. 35T alio, 986). X, Gufi. 20 - 21.
மே. கூ. நூல், அதி. X, வரி. 1.
மே. கூ. நூல், அதி. X, வரி. 106. அதி. XI, Gay tfi... 4.
Mendis, G. C., GuD. 3... a.s., 1965. Luá. 263 - 279.
Nicholas, C. W., Guo. 3.. 6., 1963. Lua. 7 - 8.
Mahavamsa, Gud. 55. JjTib, 34 $). VII, 6), h. 49 - 50.
மே. கூ. நூல், அதி. X வரி. 1.
வரலாற்றுக்கு முற்பட்ட் .

Page 47
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
Paranavitana, S., (ed.) Inscriptions of Ceylon, Vol. r. Early Brahmi Inscriptions, (Colombo), 1970. 3; gi) Gaul G.
இல. 1051 - 52.
மேற்கூறிய கல்வெட்டுகளில் இரு நகரங்கள் குறிக்கப்பட் டுள்ளன. அவையாவன அச்சநகர, தவிறிக்கியநகர ஆகும்.
Rasanayagam, C., Gio. 3. gj. 65, uji. 38 - 253.
சதாசிவபண்டாரத்தார், T. W., பாண்டியர் வரலாறு (மூன்றாம் பதிப்பு), (சென்னை) 1956. பக். 10.
Rasanayagam, C., Gud. Si A. gibi T 59, 1926, Ludi. 33 - 44
இந்திரபாலா. கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், (பேராதனை), 1972. பக் 62 - 64.
மே. கூ. நூல், பக். 63.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் (பாழ்ப்பாணம்), 1912. பக். 1.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல. (கொழும்பு), 1949. பக். 24; மட்டக்களப்பு மான்மியம் (பதிப்பு) நடராசா, F. X. C., (கொழும்பு), 1962. பக். 3, 14, 56.
Nilakanta Sastri, K. A., A History of South India, (Madras), 1958. Lu. 26.
Maloney. C. T., The effect of Early Coastal. Traffic on the Development of Civilization in South India, Unpublished Ph. D. Thesis, University of Pennysylvania,
(Pennysylvania) 1968.
Akkaraju and Sarma, V. N., Upper Pleistocene and Holocene Ecology of East Central South India, Ecological Back grounds of South Asian Pre - History மே. கூ. நூல், 1973. பக். 179 - 190. பாலச்சந்திரன், செ., சங்ககால நகரங்களின் அழிவும் கடற்கோள்களின்
யாழ். - தொன்மை வரலாறு 62 O

நிகழ்வும்", பேராசிரியர் சோ. செல்வநாயகம் நினைவுப் பேருரை 6, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல் வேலி), 1989.
94. Deraniyagala, P. E. P., Land Oscillations in the North West of Ceylon, J. R. A. S. N. S. Vol. IV, Part II,
uj. l 27 - 42.
95. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 3 - 4.
96. Kennedy, K. A. R., G.D. s. s., 1965.
97. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 3 - 4.
98. Buhler, J. G. , “Indian Palaeography” Indian Antiquary,
Vol. XXXIII.
99. Fernando, P. E., The Beginnings of Sinhala script, Education in Ceylon - A Centenary Volume I, (Colombo)
Luji. Il 9 - 24.
100. Karunaratne, W. S., Unpublished Brahmi Inscriptions of Ceylon, Unpublished Ph. D. Thesis, University of
Cambridge (Cambridge), 1960. 101. Nagaswamy, R.. The Origin and Evolution of the
Tamil Vatteluttu and Granthascripts, Proceedings of the Second International Conference Seminar of Tamil
Studies (Madras), 1968. Luis. 410 - 4 15.
102. Deraniyagala, S. U. , Gud. Sen.. 35. , 1990. 59) .
103. Deraniyagala, S.U., GuD. 9... 6. 1986. uö. 39 - 47.
104. Deraniyagala. S. U., GLD. sa. 85. 1990: 9.
9 63 வரலாற்றுக்கு முற்பட்ட.

Page 48
அதிகாரம் இரண்டு
வரலாற்றுக் காலம் 1
(கி. மு. 250 - கி. பி. 500)
*ழத்தின் பாளி நூல்கள் ஈழத்தினை ஒரே அரசியற் கூறாகப் படம் பிடித்துக் காட்ட முனைந்தாலும் இது முழுக்க முழுக்க உண்மை இல்லை என்பதனை இந்நூல்களிலே காணப் படும் குறிப்புகளும், நாடெங்கினும் பரந்து கிடக்கும் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டுகின்றன, புத்தரது விஜயம் பற்றிய ஐதீகத்திலே கூட ஈழத்தில் அக்காலத்தில் நிலவிய மூன்று பிரதான அரசியற் கூறுகள் பற்றிய குறிப்புண்டு. அவை தென் கிழக்கே உள்ள மகியங்கனைப் பகுதி, மேற்கே உள்ள களனிப் பகுதி, வடக்கே உள்ள நாகதீபப் பகுதி என்பனவாகும். இவை பிற்கால உரோகணை, மாயரட்டை, ராஜரட்டை ஆகியனவற்றின் முன்னோடிகளாகும். தேவநம்பியதீஸன் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய கூறுகள் தொடர்ந்து செயற்பட்டதற்கான ஆதாரங்க ளுண்டு. அநுராதபுரத்தில் நடைபெற்ற அரசமரக் கிளை நாட்டு வைபவத்திற் கலந்து கொண்டவர்களாக உரோ கணையிலுள்ள கதிர்காமம், ச ன் ட னா க ம ம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த கூடித்திரியர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.2 இவர்கள் பற்றிய குறிப்புப் பின்னர் மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்களிற் காணப்படாவிட்டாலுங்கூட இவர்கள் விட்டுச்சென்ற பிராமிக் கல்வெட்டுகள் இன்றைய அம்பாந்தோட்டை , அம் பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் காணப்படுவதானது பகால உரோகனை இராச்சியத்தின் முன்னோர்கள் இவர்களே என்பதனை எடுத்துக் காட்டுகின்றன.3
தாதுவம்சத்திற் பிறிதோரிடத்திலே துட்டன கமுனுவின் தந்தையாகிய காக்க வண்ணதீஸனின் சமகாலத்தவனாகக் கல்
யாணியில் (களனியாவில்) அரசாண்ட தீஸ பற்றிய குறிப்புக்
யாழ். - தொன்மை வரலாறு 64 O

காணப்படுகின்றது.4 துட்டகைமுனுவின் தாய் இவ்விராச்சியத் தின் இளவரசியாவாள். மகாவம்சத்தின் உரை நூலாகி வம்சத்தப்பக்காசினியில் (மகாவம்ச தீக) களனி இராச்சியத்தில் தீஸனுக்கு ஒரு சகோதரன் இருந்தானென்றும், இவன் ஆண்ட இராச்சியம் கடலோரத்தில் அமைந்த உதிய ஜனபதம் எனவும் கூறப்படுகின்றது.5 தீஸன், உதிய (உதி) ஆகியோரின் தகப்பனின் பெயரை இந்நூல் குறிப்பிடாவிட்டாலுங்கூட இவ்விருவரும் முடசிவனின் பேரன்கள் என்றும், தீஸன் என்ற பெயர்கூடத் தேவநம்பியதீஸனின் பெயரைப் பின்பற்றியே இவர்களில் ஒருவனுக்கு இடப்பட்டது என இதிற் குறிப்பிடப்பட்டுள் ாமையும் நோக்கற்பாலது. இதனால் இக்குறிப்புகள் இக் காலத்தில் அதாவது தேவநம்பியதீஸனின் காலத்திலும் அதற்குப் பின்னரும் நமது நாட்டின் மேற்குப் பகுதியில் நிலை டிருந்த இரு பிராந்திய அரசுகளைக் குறிக்கின்றன.
இத்தகைய பிராந்திய அரசுகளில் ஒன்றுதான் பாளி நூல்கள் குறிப்பிடும் நாகதீபமாகும். இது பற்றிய ஐதீகத்தி. புத்தரது இரண்டாவது விஜயத்திற் கண்டோம்.8 இவ்ஐதீகத் தில் இங்கு ஆட்சி செய்த மன்னர்களாகிய மகோதர, குளோதர ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இவ் வரசர்களும் களனிப்பகுதியில் ஆட்சி செய்த மணிஅக்க என்ற நாக அரசனும் நெருங்கிய உறவினர்கள் எனவுங் (3) fou படுகின்றது. அநுராதபுர அரசமைந்த பகுதியான Մո8ՁՄւ 6Փլஅல்லது உத்தரதேசத்தில் நாகதீப அரசு அமைந்து உண்மை தான். எனினும், பாளி நூல்கள், கல்வெட்டுகள் திருஞ் சான்று களை அவதானிக்கும்போது அநுராதபுர அரசின் s2,656 தற்போதைய அனுராதபுர மாவட்டத்தின் பகுதிகளிற்றான் காணப்பட்டமை தெரிகின்றது. இதற்கப்பால் உள்ள பகுதியிற் சிற்சில காலங்களிற்றான் அநுராதபுர மன்னர்கள் மேற்கொன் நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. இதனால் "இந்நாகதீபம்’ உத்தரபஸ் அல்லது ராஜரட்டை என்ற பிராந்தியப் பிரிவில் ஓர் அங்கமாக விளங்கினாலுங் கூடப் பெருமளவுக்குத் தனித்துவமான அரசியற் போக்கிலேதான் சென்று கொண்டிருந்தது போலத் தெரிகின்றது. இத்தகைய
O 65 வரலாற்றுக் காலம் 1 . .

Page 49
போக்கினை அநுராதபுரத்திலாண்ட மன்னர்களாற் கட்டுப் படுத்த முடியவில்லை.
மேற்கூறிய கருத்தினை வலியுறுத்த மேலுஞ் சில உதார னங்களை நிரைப்படுத்தலாம். தேவநம்பியதீஸன் காலத்தில் உரோகனை அரசின் தோற்றம், வளர்ச்சி பற்றிய சான்றுகள் உள. கதிர்காமச் சண்டனாகமச் சத்திரியர்கள் இங்கே ஆட்சி செய்தபோது இப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சி செய்த வம்சத்தின் வழிவந்த ஒருவனது ஆட்சியும் பரந்தது பற்றிய ஐதீகம் தாதுவம்சம் போன்ற நூல்களிற் காணப்படுகின்றது.7 தேவநம்பியதீஸனுக்கு ஒன்பது சகோதரர்கள் இருத்தனர். அவர் களில் ஒருவன்தான் "மகாநாக" ஆவான். இவன்தான் தேவநம்பியதீஸனுக்குப் பின் அரசுகட்டிலேறத் தகுதியும் அருகதையும் உடையவனாக இருந்தான். அக்கால அரசமைப். பிலே தமையனுக்குப் பின்னர் தம்பியே வாரிசுரிமையைப் பெறுவது வழக்கம். இதன் காரணமாகத் தமையனது ஆட்சியின் போதே வாரிசுரிமை பெறும் தம்பி ‘உபராஜ' என்ற விருதுடன், கருமமாற்றுவதும் அக்காலத்தைய நியதியாகும். இத்தகைய தகுதியுடையவனாகத்தான் மகாநாக காணப்பட்டான். இதனாலே தனது மகனுக்கு வாரிசுரிமை கிடைக்காது போகப்போகின்றது எனக் கவலையுற்ற தேவநம்பியதீஸனின் மனைவி, மகாநாக வைக் கொல்லுவதற்கு ஒரு சதியை மேற்கொண்டதாகக் கூறப் படுகின்றது. இச்சதியின் முக்கிய அம்சமாக மகாநாகவுக்கு உண்ப தற்கு ஒரு கூடை மாம்பழம் அனுப்பப்பட்டதோடு அதில் உள்ள மாம்பழங்களுக்கும் நஞ்சூட்டப்பட்டது. இம்மாம்பழச் fin up zo - Lif Unregraw T Go under 5arieħ ea is 5; கொடுக்கப்பட்டபோது அவனோடு உடனிருந்த தேவநம்பியதீஸனின் மகனும், தேவ நம்பியதீஸனின் மனைவியால் தேவநம்பியதீஸனுக்குப் பின்னர் அரசனாக வேண்டுமென்று விரும்பப்பட்டவனுமான குழந்தை, கூடையின் மேற்பகுதியில் இருந்த இம்மாம்பழங்களில் ஒன்றை எடுத்து உண்டது. இது நஞ்சூட்டப்பட்ட மாம்பழமானதால் அக்குழந்தை இறந்துவிட்டது. இதனால் தனது உயிருக்கே ஆபத்துண்டு என உணர்ந்த ‘மகாநாக" உரோகனைக்கு ஒடி அங்கு ஆட்சி செய்த கதிர்காமச் சத்திரியர்களிடம் அடைக்கலம்
யாழ். - தொன்மை வரலாறு 3s O

புகுந்தான், எனினும் இவன் காலத்தில் இவனுக்கும் கதிரி காமச் சத்திரியர்களுக்குமிடையே இருந்த நல்லுறவு இவன் மகனாகிய கோத்தபயா காலத்திற் பகையாக மாறியதென்றும் இவன் இச்சத்திரிய வம்சத்தினை அழித்தானென்றும், அதனால் ஏற்பட்ட பாவத்திற்குப் பரிகாரமாக இப்பகுதியில் ஐந்நூறு விகாரைகளைக் கட்டினான் என்றுங் கூறப்படுகின்றது.
உரோகணை அரசின் தோற்றம் பற்றி மேற்கூறப்பட்ட ஐதீகம் அநுராதபுர அரச வம்சமே இங்கு அரசாட்சியை அமைத்ததென்பதை வலியுறுத்த இழைக்கப்பட்டதை எடுத் துக்காட்டுகின்றது. இது தடைபெற்றது தேவநம்பியதீஸன் காலத்தி:ாகும். ஆனால் வட பகுதியான ‘நாகதீபத்தில்’ தேவநம்பியதீஸனின் கலாசார நடவடிக்கைகள் பற்றிய தகவல் களைப் பாளி நூல்கள் எடுத்துக்காட்டினாலுங் கூட, முழு ஈழத்தினையும் ஒரே அரசியதி கூறாகவும், இதன் தலைமைத்துவ அரசனாக அநுராதபுர மன்னனையுங் கூறும் இவை நாகதீப அரசின் தோற்றத்தினையும் அதில் அநுராதபுர அரசவம்சம் கொண்டிருந்த பங்கினையும் எடுத்துக்காட்டும் எந்த ஒரு கதையையுங் குறிப்பிடவில்லை. இதிலிருந்து இப்பகுதியிலே தனித்து&மான அரசு ஒன்று காணப்பட்ட மை தெளிவாகின்றது. இத்தகைய அரசு பற்றிய ஐதீகமே புத்தரது இரண்டாவது விஜயத்தின்போது குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களது கதை எனலாம். உரோகணையை ஆண்ட கூடித்திரிய வம்சத்தை அழித்துத் தமது ஆட்சியை நிலைநாட்டியதாகக் கூறப்படுந் தேவநம்பியதீஸனின் சகோதரர்களில் எவனோ நாகதீபத்தினைத் தமது ஆட்சியுடன் இணைத்த செய்தி இந்நூல்களிற் காணப் படாமையும் அவதானிக்கத்தக்கது. இது பற்றிப் பாளி நூலேnர் காட்டும் மெளனம் இப் பகுதி யி ல் அநுராதபுர அரசின் மேலாணை காணப்படவில்லை என்பதனையே எடுத்துக் காட்டு
கின்றது.
தமிழ் இலக்கியங்களில் நாகதீபம் (நாகநாடு)
மேற்கூறிய பின்னணியிற்றான் தமிழ் நூல்களாகிய மணி மேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிற் காணப்படும்
() 67 வரலாற்றுக் காலம் 1 .

Page 50
* நாகநாடு ' பற்றிய செய்திகள் ஆராயப்படவேண்டியுள்ளன. இந்நூல்கள் பாளி நூல்கள் கூறும் ஐதீகங்களை உறுதிப்படுத் துவனவாகக் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. மணி மேகலை போன்ற நூல்களில் நாகநாடு, மணிபல்லவம் ஆகிய குறிப்புகள் உள. இவை இரண்டும் நாகதீபத்தினையே குறித்தன என முதலியார் இராசநாயகம்,8 ஞானப்பிரகாசர்9 ஆகியோர் ஊகிப்பது ஏற்புடைய கருத்தாக அமைகின்றது. இந்நாகதீபத்திற்குப் புத்தர் மேற்கொண்ட விஜயம் பற்றிய மணிமேகலை தருங் குறிப்பினை முதலில் ஆராய்வோம். இக்குறிப்பினைக் கொண்டு இராசநாயக முதலியார் இப்பதம் யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறித்து நின்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். எனினும், பிற்பட்ட காலத்தில் இப்பதம் குடாநாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பதமாக விளங்கினாலுங் கூட நாம் ஆராயும் காலப்பகுதியில் வட பகுதியை அதுவும் அநுராதபுரத்தின் வடபகுதியைக் குறித்து நின்றது என்பதை மணிமேகலையில் வரும் பின்வருங் குறிப்பு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.10
* ஈங்கித னயலகத் திரத்தின தீவத் தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோ னடியிணை யாகிய பிறவி யென்னும் பெருங்கடல் வீடூஉம் அறவி நாவா யாங்குள தாதலிற் றொழுது வலங்கொண்டு வந்தே னிங்கு.
மேற்கூறிய அடிகள் ஈழத்தில் நாகநாடு, மணிபல்லவம் ஆகிய பகுதியோடு இரத்தின தீபம்’ என்ற பகுதியும் காணப் பட்டதை எடுத்துக் காட்டுகின்றன. "இரத்தின தீபம்’ என்பது பொதுவாக அநுராதபுரத்தின் தென்பகுதிக்கு வழங்கப்பட்ட பெயராகவே காணப்படுவதால் இதன் வடபகுதி நாகநாடு என அழைக்கப்பட்டது எனக் கொள்ளுவதே பொருத்தமான தாகும். இதனையே மகாவம்சத்தில் வரும் நாகதீபம் பற்றிய குறிப்பும் உணர்த்துகின்றது. அத்துடன் மணிமேகலையில் நாகநாட்டின் பரப்புப் பற்றிக் காணப்படுஞ் செய்தியும் இக் கூற்றினை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. இந்நூலின்
யாழ். - தொன்மை வரலாறு 68 G

ஒன்பதாவது காண்டத்தில் நாகநாட்டு தானுரறு யோசனை ? என வருங் குறிப்பு இது நானுரறு யோசனைப் பிராந்தியத் தினை உள்ளடக்கியிருந்தமை பற்றி எடுத்துரைக்கின்றது.11 ஒரு யோசனை மூன்று தொடக்கம் பதின்மூன்று மைல் களைக் குறித்தது என முதலியார் இராசநாயகம் குறிப் பிடுவது அவதானிக்கத்தக்கது.
இத்தகைய தகவல் தற்போதைய வடபகுதியைவிடப் பெரிய பிரதேசத்தினையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம். இச் சந்தர்ப்பத்தில் மணிபல்லவத்திற் காணப்படும் * மணி ' என்ற சொல் பற்றிக் குறிப்பிடுதலும் அவசியமாகின்றது. நாக அரசர்கள் இவ்விரத்தினக் கற்கள் ( மணி ) இழைத்த சிம்மா சனத்திற்கே போரிட்டதாகவும் மகாவம்சம் குறிக்கின்றது. இது மட்டுமன்றிக் களனிப் பகுதியில் ஆண்ட நாக அரசனின் பெயராக "மணி அக்க’ என்பதனை மகாவம்சம் குறிப்பிடு
கின்றது. 12 அக்க என்பது வடமொழி " அக்ஷ் " என்பதன் வழிவந்து கண்ணைக் குறிக்கின்றது எனலாம். இதன் பொருள் மணி போன்ற கண்ணையுடையவன் என்பது ஆகும். இக்களனிப் பகுதி நாகர்களும் வடபகுதி நாகர்களும் மிக நெருங்கிய உறவினர் எனபதை ஏற்கனவே கண்டோம். இதனாலே தென் பகுதியில் இரத்தினங்கள் காணப்பட்டதால் இது இரத்தின தீபம் என அழைக்கப்பட்டதோடு இவ்விரத்தினங்கள் வட பகுதியூடாக ஜம்புகோவளம் போன்ற பட்டினங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் வடபகுதி
மணிபல்லவம் " என்ற பெயரையும் பெற்றிருக்கலாம்.
இனிப் புத்தர் மணிபல்லவத்தின் மீது மேற்கொண்ட விஜயம் பற்றி மணிமேகலையிற் காணப்படுங் குறிப்பினை நோக்குவாம் .13
* இருங்கடல் வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடை ?
ஐயா வோவென் றழுவோன் முன்னர்
விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை யோங்கித்
O se வரலாற்றுக் காலம் 1 . .

Page 51
திசைதொறு மொன்பான் முழநில மகன்று விதிமா ணாடியின் வட்டங் குயின்று பதும சதுர மீமிசை விளங்கி அறவோற் கமைந்த வாசன மென்றே நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது பறவையு முதிர்சிறை பாங்குசென் றதிராது தேவரகோ னிட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங் கவிரொளி யறத்தகை யாசனங் கீழ்நில மருங்கி னாகநா டாளும் இருவர் மன்னவ ரொருவழித் தோன்றி எமதீ தென்றே யெடுக்க லாற்றார் தம்பெரும் பற்று நீங்கலு நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை யுயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு வொழிமி னெமதி தென்றே பெருந்தவ முனிவ னிருந்தற முரைக்கும் பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும் தரும பீடிகை தோன்றிய தாங்கென் "
மேற்கூறிய அடிகள், இந்திரனால் வழங்கப்பட்ட இரத் தினமிழைத்த சிங்காசனத்திற்குப் போரிட்ட ஒரே வம்சத்தினைச் சார்ந்த இரு நாக அரசர்கள் பற்றிக் கூறும் அதே நேரத்தில் இப்பிராந்தியம் மணிபல்லவம் ‘நாகநாடு " என அழைக்கப் பட்டதையும் எடுத்துரைக்கின்றன. இதனால் மகாவம்சம் குறிப் பிடும் நாகதீபம்தான் தமிழ் நூல்களில் மணிபல்லவம், நாகநாடு என அழைக்கப்பட்டுள்ளமை மேலும் உறுதியாகி
யுள்ளது.
நாகநாடு பற்றி மணிமேகலையிற் பிறிதோரிடத்திலுங் குறிப்புண்டு. இக்குறிப்பில் நாகநாட்டிலரசாண்ட நாக அரச னாகிய வளைவாணன், அவன் மனைவி வாசைமயிலை, மகள் பீலிவளை ஆகியோர் காணப்படுகின்றனர். பீலிவளை புகார் சென்று சோழ இளவரசனான கிள்ளிவளவனை மணந்து கருப்பவதியாகி நாகநாடு மீண்டு பின்னர் நாகநாட்டில் ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். இம்மகவை நாகநாட்டிலிருந்து
யாழ். - தொன்மை வரலாறு 7o O

புகார் சென்ற கம்பளச்செட்டி மூலம் அனுப்ப நடுக்கடலில் அக்கப்பல் உடைந்தது. பிள்ளை ஒருவாறு தப்பிக் கரையில் ஒதுங்கியது. இதனைக் கம்பளச்செட்டி சோழ அரசனுக்குக் கூற அவன் கவலையுற்று வழக்கமாகப் புகார் நகரிற் கொண்டாடப்படும் இந்திரவிழாவைக் கொண்டாடுவதை மறந் தான். இதனாற் சீற்றமுற்ற மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினாற் சோழ அரசனின் தலைநகராகிய புகார் அழிந்த செய்தி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.14
**நாசு நாடு நடுக்கின் றாள்பவன்
வாகை வேலோன் வளைவணன் றேவி வாச மயிலை வயிற்றுட் டோன்றிய பீலிவளை ... . . 9
** நாக நன்னா டாள்வோன் றன்மகள் பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோன் பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய புனிற்றிளங் குளவியொடு பூங்கொடி பொருந்தியித் தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக் கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப அங்கவன் பாற் சென் றவன்றிற மறிந்து கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும் பெற்றவு வகையன் பெருமகிழ் வெய்திப் பழுதில் காட்சிப் பைந்தொடு புதல்வனைத் தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக் கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள் இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன் நன்மணி யிழந்த நாகம் போன்று கானலுங் கடலுங் கரையுந் தேர்வுபூழி வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது மணிமே கலாதெய்வம் மற்றது பொறார்அள் அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென விட்டனள் சாபம் பட்ட திதுவாற்
O 7 1 வரலாற்றுக் காலம் 1 .

Page 52
கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேற் றடக்கை வானவன் போல விரிதிரை வந்து வியனகர் விழுங்க"
மேற்கூறியவாறு கரை யொ துங்கிய பிள்ளைக்குத் ‘தொண்டைமான் இளந்திரையன்' எனப் பெயர் வைக்கப்பட்ட தென்று முதலியார் இராசநாயகம் பெரும்பாணாற்றுப்படையிற் காணப்படுங் குறிப்பினை மேற்கோளாகக் கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.15 சனினும் இதிற் காணப்படுந் "தொண்டை மான்', 'இளந்திரையன்' பற்றிய செய்திகள் அவதானிக்கித் தக் கவையாகும். இது பற்றி விளங்கிக் கொள்வதற்கு இராசநாயக முதலியாரின் பெரும்பாணாற்றுக் குறிப்பிற்கு நச்சினார்க் இனியர் அளித்துள்ள விe:க்கத்தினை எடுத்துக்காட்டுவது அவசியமாகின்றது. சோழ இளவரசனோடு உடலுறவு கொலசட நாக இளவரசி தனக்குப் பிறக்கப்போகும் மகவை என்ன செய்யவேண்டுமென்று கேட்டதற்குக் கொடுக்கப்பட்ட பதிலாக இவ்விளக்கத்தினை நச்சினார்க்கினியர் அளித்துள்ளார். அது பின் வருமாறு அமைந்துள்ளது. 16
*அவள் யான் பெற்ற புதல்வனை என் செப்வே னென்ற
பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசுரிமையை எய்வித்து
நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ங்ணம் வரவிடத்திரைதருதலின், திரையனென்று பேயர் பெற்றான்.'
தொண்டைமான் என்ற பெயருக்கு நச்சினார்க்கினியர் அளித்த விளக்கமாகவே தொண்டைச் செடி காணப்படுகின்றது. சோழ மண்டலத்தின் வடபகுதியிற் காணப்பட்ட பிரதேசமே தொண்டை மண்டலமாகும். இதனை அரசாட்சி செய்தோர் தொண்டைமான் என்ற விருதுடன் காணப்பட்டனர். எனினும் சங்க காலத்தில் இப்பெயர் ஒர் இனக் குழுவின் பெயராக விளங்கியது தெரிகின்றது." தொண்டையர் ’ என்பதே இதன் மூலமாகும். இத்தகைய ஒர் இனக்குழு தமிழகம், ஈழம் ஆகிய
யாழ், - தொன்மை வரலாறு 72 ே

இடங்களிற் காணப்பட்டதையே தமிழகதித்லுள்ள "தொண்டை மண்டலம்" என்பதும் ஈழத்திலுள்ள " தொண்டைமான் ஆறு " சான்பதும் எடுத்துக் காட்டுகின்றது போலத் தெரிகின்றது. இதனை விளக்கும் ஐதீகமாகவே தொண்டைமானாற்றின் மூலந் தெரியாத காலத்தில் ஈழத்திலிருந்து தமிழகஞ் சென்ற குழந்தை தொண்டைக் கொடியுடன் காணப்பட்டதால் இதற்குத் தொண்டைமான் என விளக்கங் கொடுக்கப்பட்டது எனலாம். தமிழகத்தைப் போன்று ஈழத்திலுஞ் சங்க காலத்திற் பல இனக் குழுக்கள் காணப்பட்டதை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம் புவதாலே, தொண்டையரும் " இத்தகைய ஒரு இனக்குழுவாக யாழ்ப்பாணக் குடா நாட்டிற் 5, IT 6837 பட்டனரெனலாம்.
தொண்டைமான் போன்று " இளந் திரையன் " என்ற குறிப்பும் ஆராய்தற்பாலது. ஈழத்திலிருந்து சென்ற இம்மகவுக்கே இளந்த், ரையன் எனப் பெயர் சூட்டப்பட்டதாக இங்கே குறிப் பிடப்படுவது இதிலுள்ள முக்கிய அம்சமாகும். ஈழத்துத் திரையனையே இவை இவ்வாறு அழைத்தன போலத் தோன்று கின்றது. இதனால் ஈழத்திரையன் இளந்திரையன் ஆக இவற்றில் இடம்பெற்றிருக்கின்றான் எனலாம். ஏனெனில் திரையன் என்ற சொல் கூட ஓர் இனக் குழுவின் பெயராகவே சங்க நூல் களிற்18 குறிப்பிடப்படுவதால் இதற்கு முன்னுள்ள அடைமொழி யாகிய * இளம் ' என்பது இளமையைக் குறிப்பதற்குப் பதிலாக "ஈழம்" என்பதை அடைமொழியாகக் கொண்டிருந்தது என்பது சாலப் பொருத்தமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள திரையரிலிருந்து ஈழத்துத் திரையரை வேறுபடுத்தவே ஈழத் திரையர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். FF!p அரசர்களில் “ ஈழதாக " என்ற பெயருடைய மன்னன் காணப் பட்டதும் இத்தகைய கருத்திற்கு வலுவூட்டுவதாக அமை கின்றது.
இத்திரையர் என்பதை இனக் குழுப்பெயராகக் கொண்டால் இதற்கும் ஈழத்து மன்னர்கள் சூடியிருந்த திஸ்ஸ" என்ற பெயருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதும் ஆராய் தற்பாலது. வரலாற்றுக் காலத்தின் முதல் மன்னனாகிய தேவ,
O 73 வரலாற்றுக் காலம் 1 .

Page 53
நம்பியதீஸனின் இயற்பெயர் தீஸனாகும். இதிலுள்ள "தேவ நம்பிய" என்ற விருது அசோகச் சக்கரவர்த்தியால் இம் மன்னனுக்குக் கொடுக்கப்பட்ட விருது என மகாவம்சம் குறிப்பிடு கின்றது.19 எனினுஞ் சங்க நூல்களிற் சேரமன்னர்களிற் சிலர் சூடியிருந்த "இமயவரன்பன்" என்ற விருதிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்புண்டா? என்பதும் ஆராய்தற்பாலது.20 இமையவர் என்பது தேவர்களைக் குறிக்கும். இவ்வாறே அன்பன் என்பது பிரியமானவன் எனப் பொருள்படும். இதனாலே தேவர்களுக்குப் பிரியமானவன் என இது பொருள் தருகின்றது எனலாம். "இமயவரன்பன்' என்ற இப்பதத்திற்கே பிற்காலத் தமிழ் நூலோர் இமயமாகிய மலையை எல்லையாக உள்ளவன் என்று ஒரு விளக்கத்தினைக் கொடுத்தனர் போலத் தெரிகின்றது. இதனால் "இமயவரன்டன்" என்ற தமிழ் விருதின் மொழி பெயர்ப்பாகத் தேவநம்பிய" என்பதனைக் கொள் ளலாம். இதனை அவதானிக்கும்போது தேவநம்பிய என்ற வடிவந் தமிழ் வடிவமாக இமையவர் அன்பன்" எனப் பெளத் தத்தினதோ அன்றிப் பிராகிருத மொழியாகிய பாளியினதோ, செல்வாக்குக் காணப்படாத சேர நாட்டில் வழக்கிற் காணப்பட, ஈழத்திலோ எனிற் பெளத்தமும் அதன் மொழியாகிய பாளியின தும் செல்வாக்காலே தேவநம்பிய வரிவடிவம் இலக்கியங்களிலுங் கல்வெட்டுகளிலும் இடம் பெற்றது. பெளத்தத்துடன் வந்த பாளிமொழியின் செல்வாக்காலேதான் திராவிடர்களின் மொழி மாற்றமடைந்தது வரலாறு. இத்தகைய மொழி மாற்றத் தினையே இவ்விருது எடுத்துக்காட்டுகின்றது எனலாம். இத் துடன் "திரையர்' என்ற இனக் குழுப் பெயரே நாளடைவில் “திஸ்ஸ என்ற இயற்பெயராகவும் மாறியிருக்கலாம். ' உதி அல்லது " உதியர் ’ என்ற இக்குழுப் பெயர் ‘உதிய" என்ற இயற் பெயராக மாறியது போல இதுவும் இவ்வாறு உருமாறி இருக்கலாம் எனக் கொள்ளலாம்.
வடபகுதியிலமைந்த நாக அரசு பற்றி மகாவம்சம், மணிமேகலை ஆகிய நூல்களிற் காணப்படுங் குறிப்புகளை அவ தானித்தோம். இவ்வரசு காணப்பட்ட பிரதேசம் நாகதீபம், நாகநாடு, மணிபல்லவம் போன்ற பெயர்களால் அழைக்கப் பட்டதையுங் கண்டோம், நாகநாடு பற்றிய குறிப்புச் சிலப்
யாழ். - தொன்மை வரலாறு 74 இ

பதிகாரத்திலுங் காணப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. இக் குறிப்பு இந்நூலின் முதலாவது அத்தியாயத்தில் மங்கல வாழ்த்துப் பாடலிற் கண்ணகி, அவளின் தந்தை ஆகியோரின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியிற் காணப்படுகின்றது. இது பின்வருமாறு அமைந்துள்ளது.21
* ‘நாகநீ ணகரொடு நாகநா டதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார் நக ரது தன்னில் மாகவா னிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்ப ரீகைவான் கொடியன்னா ஸ்ரீராறாண் டகவையாள் அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றுந் தீதிலா வடமீனின் றிறமிவ டிறமெறும் மாதரார் தொழு தேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாண்மன்னோ .” ( 21 - 29 )
இக்குறிப்பிலே புகார் நகரின் சிறப்புக் கூறப்படுகின்றது. இப்புகார் நகரமானது நாகர்களினது நெடிய நகரொடு விளங்கும் நாகநாட்டினோடு ஒப்பாகப் பல்வகைச் சிறப்புகள் கொண்ட நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஈண்டு அவ தானிக்கத்தக்கது. இதன் மூலம் நாகநாடு என்பது ஒரு கற் பனைப் பொருளல்ல என்பதும் இதிற் பல நகர்கள் காணப்பட் ட மையுற் தெரிகின்றது. இதிற் கூறப்படும் நாகநாட்டின் நகரினை எதுவென்று இனங் கண்டு கொள்வது கஷ்டமாகத் தென்பட்டாலும் இது ஒரு சமயம் வடக்கே அமைந்த ஜம்பு கோளப்பட்டினமாகவும் இருக்கலாம். புகார் போன்று இதன் பெரும்பகுதியுங் கடலால் அள்ளிச்செல்லப் பட்டதாற்டோலும் இதற்குரிய எச்சங்களை இன்று நாம் இனங்கண்டு கொள்ள முடியாதிருக்கின்றது.
நாகநாடு, நாகதீபம் பற்றிய ஐதீகங்கள் மகாவம்சம், மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிற் காணப்படுவது வெறுங் கற்பனையல்லவென்றும், ஈழத்தின் வடபகுதியையே குறித்து நின்றது என்பதையும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்
O 75 வரலாற்றுக் காலம் 1 . .

Page 54
குரிய கிரேக்க நூலாசிரியரான ரொலமியின் குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றது. இப்பகுதியை "நாகதீபோய்’ என இவர் அழைப் பது குறிப்பிடத்தக்கது.22 இவரின் குறிப்பிலிருந்து ஈழத்தின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளிலும், நாகவணக்கத்தைப் பேணியோர் வாழ்ந்தது புலனாகின்றது. "நாக’ என்ற பெயரைத் தாங்கியோர் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே ஈழம் முழுவதும் காணப்பட்டனர் என்பதை இக்காலத்திற்குரிய பிராமிக் சுல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.23 இக்கல் வெட்டுகள் இப்பெயரைச் சூடியோர் பெளத்த மதத்திற்கு அளித்த கொடை பற்றிக் கூறுகின்றன. இத்தகைய பெயர்கள் வவுனியா மாவட்டத்தில் நான்கு கல்வெட்டுகளிலும், பொல நறுவை மாவட்டத்தில் மூன்று கல்வெட்டுகளிலும், திருகோண மலை மாவட்டத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும், மட்ட க் களப்பு மாவட்டத்தில் மூன்று கல்வெட்டுகளிலும், அம்பாறை மாவட்டத்தில் ஐந்து கல்வெட்டுகளிலும், அம்பாத்தோட்டை மாவட்டத்தில் <]] கல்வெட்டுகளிலும், மொனராகலை மாவட்டத்தில் நான்கு கல்வெட்டுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கல்வெட்டிலும், கண்டி மாவட்டத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும், மாத்தளை மாவட்டத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும், குருநாகல் மாவட்டத்தில் பதினான்கு கல்வெட டுகளிலும், புத்தளம் மாவட்டத்தில் இரண்டு கல்வெட்டு களிலுங் காணப்படுகின்றன.
வெறும் பெயர்கள் மட்டுமன்றி 'நாக" என்ற பெயரைத் தாங்கிய குறுநில மன்னரின் ஆட்சி பற்றியும் இக்கல்வெட்டுகள் குறிப்து அவதானிக்கத்தக்கது. கண்டி மாவட்டத்திலுள்ள பம்பர கல கோணவத்த ஆசிய இரு இடங்களிலுன்ள இரு கல்வெட்டுகள் இங்கே குறுநில மன்னர்களாக விளங்கிய நாக - அரசர் பற்றிக் குறிப்பிடுகின்றன. 24 பம்பரகலக் கல் வெட்டிற் "பொசனி ராஜ நாக’ என்று இம் 18ன்னன் அழைக்கப் படுகின்றான். கோணவத்தவிற் கிடைத்த கல்வெட்டுப் பெளத்த சங்கத்திற்குக் “கமணிதிஸ்" என்பவன் அளித்த தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இம்மன்னன் தனக்கு முன்னர் அப்பகுதியில் ஆட்சிசெய்த தனது வம்சத்தின் மூவர் பற்றிக் குறிப்பிடுகின்றான். இவர்கள் முறையே பொசனி ராஜ, ராஜ
யாழ். - தொன்மை வரலாறு 73 இ

அபய, ராஜநாக என்பவர்கள் ஆவர். இவர்களில் மூன்றாவது மன்னன் நாக என்ற பெயரைத் தாங்கி நிற்க, கமணிதிஸ என்ற அரசன் இந்நாக என்ற பெயரைத் தாங்காது காணப் படுவதை நோக்கும் போது ‘நாக’ என்பது வம்சப் பெயரல்ல என்பதுந் தெளிவாகின்றது. குறுநில மன்னர்களை மட்டுமன்றி இவர்களின் ஆட்சிக்காலம் பற்றியும் அநுராதபுரம் குருநாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.25 அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள வெஸ்ஸ்கிரிக் கல்வெட்டில் நாகராஜவின் ஆட்சிக் காலத்திற் பெளத்த குருமாருக்கு அளிக்கப்பட்ட வதி விடம் பற்றிய குறிப்புண்டு. இவ்வாறே குருநாகல் மாவட்டத்தி லுள்ள கடுறுவேலக் கல்வெட்டும் "நாகராஜவின் ஆட்சிக் காலத்திற் கொடுக்கப்பட்ட தானம் பற்றிக் குறிப்பிடு கின்றது. மொனராகலை மாவட்டத்திலுள்ள கொல்லதேனியாக் கல்வெட்டிற் பருமகன் புஸ்ஸ்தேவனின் மனைவியாகிய பருமகன் சோனாவினால் ஆய் வம்சத்தைச் சேர்ந்த நாக மன்னனின் ஆட்சியில் அமைக்கப்பட்ட குகை பற்றிக் கூறப் படுகின்றது. இக்கல்வெட்டும் நாக
என்பது ஒரு வம்சப்
பெயரன்று என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
பாளிதால்களைத் துருவி ஆராயும்போது தேவநம்பிய தீஸனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஈழத்து மன்னர் பலர் இப்பெயரைச் சூடியிருந்தமையும் புலனாகின்றது. தேவநம்பிய தீஸனின் தம்பியருள் ஒருவனின் பெயர் "மகாநாக" ஆகும். இவர்களின் பெயருங் காலமும் பின்வருமாறு அமைகின்றன.26 அவை துல்லத்ததாக ( கி. மு. 119 ), கல்லத்த நாக ( கி. மு. 109 - 103 ), சோறநாக (கி. மு. 63 - 51 ), மகாதாதிக மகாநாக ( கி. பி. 7 - 19 ), ஈழநாக ( கி. பி. 33 - 43 ), மகல்லகநாக (கி. பி. 136 - 143), குஜ்ஜநாக ( கி. பி. 186 - 87 ), குஞ்சநாக ( கி. பி. 187 - 189 ) முதலாவது சிறிநாக ( கி. பி. 189 - 209 ), அபயதாக ( கி. பி. 231 - 240 ), இரண்டாவது சிறிதாக (கி. பி. 240 - 242 ) மகாநாக (கி. பி. 509 - 571) என்பனவாகும். இப்பெயர்ட்டவணையைப் பார்க்கும்போது பெளத்த மதம் பரவிய இக்காலகட்டத்திலும் நாகவழிபாட்டின் எச்சமாக இப்பெயர்களை இவர்கள் தாங்கி
O 77 வரலாற்றுக் காலம் 1 .

Page 55
யிருந்தமை புலனாகின்றது. இப்பின்னணியிற்றான் சங்க இலக் கியங்களும் ஆராயப்படவேண்டியுள்ளன. சங்கப் பாடல்களை யாத்த புலவர்கள் பலர் "நாக’ என்ற பெயரைத் தாங்கி நின்றமை தெரிகின்றது. கடைச்சங்கப் புலவர்களிற் பதினைந்து பேர் இப்பெயரைத் தாங்கியிருந்தனர் எனக் கூறப்படுகின்றது.27 முதற்சங்கப் புலவர்களில் ஒருவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஆவர். இவர் ஒரு சிற்றரசர் போலும், இப்பெயருக்கும், ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுகளில் இடம்பெறும் "நாகராஜ’ என்ற பதத் திற்குமிடையே உள்ள ஒற்றுமை அவதானிக்கத்தக்கது. ஈழத்துப் புலவர் ஆகிய ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரும் நாகவழிபாட்டோடு சம்பந்தமுடைய பெயர் எனக் கூறப்படு கின்றது. இத்தகைய சான்றுகள் தமிழகம், ஈழம் ஆகிய பகுதி களில் நாகவழிபாட்டிலே திளைத்திருந்த மக்கட் கூட்டத்தினர் பின்வந்த திராவிட மக்களோடு சங்கமிக்கத் திராவிட மக்கள் இவ்வழிபாட்டம்சங்களைத் தமதாக்கியதை எடுத்துக்காட்டுவ தாகவும் அமைகின்றன.
மேற்கூறிய சான்றுகளை ஆராயும்போது பாளி நூல்கள் கூறுவதுபோல நாகர்கள் அமானுஷ்யர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது. grfurt வருகைக்கு முன்பிருந்தவர்கள் யாவரும் " அமானுஷ்யர்கள் ". அதாவது மனிதப் பிறவிகள் அல்லர் என அவை குறித்தன. பாளி நூல்களின் மேற்கூறிய கருத்தையே முழுக்க முழுக்கப் பரண வித்தானாவும்,? மென்டி சும்,29 ஏற்றிருந்தனர். ஆனால் அண்மைக்கால அகழ்வுகளும், பிற தொல்லியற் சான்றுகளும் மேற்கூறிய கருத்துத் தவறு என்ப தனை எடுத்துக் காட்டியுள்ளன. இவ்வாறே இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் ஆரியரல்லர் என்பதையும், இவர்கள் தான் பெருங்கற்காலக் கலாசாரத்தினைப் பேணிய திராவிட மக்கள் என்பதனையும் விளக்கியுள்ளன்.30 இதனால் இம்மக்கட் கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் பேணிய வழிபாட்டு முறையே நாகவழிபாடு எனலாம். இது ஒரு வழிபட்டு முறையே. இதனை ஒரு வம்சத்துடனோ, ஒரு இனத்துடனோ இணைக்க முடியாதென்பதைப் பாளி நூல்களிற் காணப்படும் மன்னர்கள் பட்டியல் மட்டுமன்றி ஈழததின் மிகப் பழைய கல்வெட்டு
யாழ். - தொன்மை வரலாறு 78 ே

களாகிய பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. பாளி நால்கள் தரும் ( நாம் மேலே எடுத்துக் காட்டிய ) மன்னர் களின் பட்டியலில் தொடர்ச்சியாக அன்றி இடையிடையே இப்பெயர் காணப்படுவது போன்றே பிராமிக் கல்வெட்டு களிலுள்ள மன்னர்களின் வம்சம் பற்றிய பட்டியலிலும் இது காணப்படுகின்றது.
எனினும், இவ்வழிபாடு ஈழத்தின் வடபகுதியில், பிறபகுதி களை விடச் செல்வாக்குடன் காணப்பட்டதால் இப்பகுதி * நாகதீபம் , * நாகநாடு ' என அழைக்கப்பட்டது எனலாம். இதனையே மகாவம்சம், மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிற் காணப்படும் ஐதீகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அது மட்டுமன்றித் தொடர்ந்தும் இப்பகுதியிலே இவ் வழிபாடு நிலைத் திருந்தமைக்கான தடயங்கள் இப்பகுதியின் பழைமைக்குச் சிறந்த ஒர் உரைகல்லாகும். நாகர்கள் என விளிக்கப்படுவோர் அமானுஷ்யர்களல்லர். இவர்கள் நாகவழிபாட்டிலே திளைத் திருந்த மக்கட் கூட்டத்தினரே என இற்றைக்குச் சுமார் முக்கால் நூற்றாண்டுகட்கு முன்னர் கூறிய ஞானப்பிரகாசர் ஈழத்தின் வடபகுதியிற் காணப்பட்ட நாகவழிபாட்டின் பாரம்பரியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக் கத்தக்கது.81
" நாகதீபப் பூர்வகுடிகளாகிய நாகர் தம் புத்த
சமயப் பிரவேசத்தின் பின் போலும், சற்றுச் சற்றாகப் பிறகுலங்களோடு கலந்தும் ஒற்றுமைப்பட்டும் போயி னார். போயும், அன்னோரது பண்டைப் பெயர் நாகன், நாகி, நாகம்மாள், நாகமணி, நாகமுத்து, நாகலிங்கம், நாகநாதன் ஆகிய ஆட்பெயர்களில் இன்றைக்கும் நிலவுவது காணப்படும். அவரது நாக வழிபாடு இன்றைக்கும் நாகதம்பிரான், நாகம்மாள் வழிபாட்டில் விளங்குகின்றது. நாகபாம்பை நல்ல பாம்பென மக்கள் நாமகரணஞ் செய்தலும், அதனைக் கொல்லுவது தோஷமெனக் கொள்ளுதலும், அதன் புற்றில் கோழியறுத்தல், பால், நெய் ஊற்றல் ஆகிய வழிபாடு இயற்றுதலும் நாமெல்லாம் நன்கு அறிந்துள்ள செய்திகளாம் . "" o
O 79 ou Js ibņš ar . ...--

Page 56
இதனால் நாக தீபம் ", " நாகநாடு " என்ற பெயரைத் தாங்கிய ஈழத்தின் வடபகுதி ஈழத்தின் பிற பகுதிகளைப் போல நாகரிகச் சிறப்புடன் விளங்கியமை தெளிவாகின்றது. இதனை வரலாற்றுதய காலத்திற்குரிய சான்றுகள் எடுத்துக் காட்டுவதுபோல வரலாற்றுக் காலத்திற்குரிய சான்றுகளும் எடுத்துக்காட்டுகின்றன. பெளத்த மதத்தினை முதன்மைப் படுத்தும் பாளி நூல்கள், பெளத்த மதத்தோடு சம்பந்த மில்லாத வழிபாட்டு முறைகளைப் பேணிய இவர்களைத் தரம் குறைத்து அமானுஷ்யர்கள் எனக் கூறினாலுங்கூடப், பெளத்த வழிபாட்டிடங்களிற் காணப்படும் மிகப் பழைய நாக பாம்பு உருவங்கள், நாகராஜர்களது உருவங்கள் பெளத்தத் துடன் இவ்வழிபாடு சங்கமமானதின் சின்னங்களாக விளங்கு கின்றன எனலாம். 32
நாகதீபமும், அநுராதபுர மன்னரும்
பாளி நூல்கள் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் நாகதீபத்தோடு கொண்டிருந்த தொடர்பு பற்றித் தருந் தகவல்கள் நோக்கற்பாலன. வரலாற்றுக் காலத்தின் முதல் மன்னனாகிய தேவநம்பியதீஸனுடனேயே (கி. மு. 247 - 207) இத்தகைய தொடர்புகள் ஆரம்பமாகின. இப்பகுதியி லுள்ள துறைமுகமாகிய ஜம்புகோளப்பட்டினத்திலிருந்துதான் அம்மன்னன் அசோகச் சக்கரவர்த்திக்கு அனுப்பிய தூதுக்குழு இந்தியா சென்றது மட்டுமன்றி மீண்டும் இவ்விடத்திற்றான் வந்திறங்கி அநுராதபுரத்திற்குச் சென்றதாகவும் இவை குறிக் கின்றன.33 கங்கைக் கழிமுகத்திலமைந்த கிழக்கிந்தியத் துறை முகமாகிய தாம்ரலிப்தியை இவர்கள் பதினொரு நாட்களிற் சென்றடைந்தாலும் பின்னர் அங்கிருந்து பன்னிரண்டு நாட் களிற்றான் ஈழத்தினை இவர்கள் அடைந்தனர் எனவுங் கூறப் படுகின்றது. புனித அரசமரக் கிளையுடன் சங்கமித்த வந்திறங் கிய துறைமுகமும் இஃதாகும்.34 இவ்வரசமரக் கிளையை வர வேற்கத் தேவநம்பியதீஸன் இத்துறைமுகத்திற்கு வந்து தரித்து நின்றதாகவும் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இது பதினான்கு நாட்களில் அநுராதபுரத்தினை அடைந்தது எனவுங் கூறப்படுகின்றது.85 இம்மரக் கிளையை வரவேற்கத்
யாழ். - தொன்மை வரலாறு 8o O

தேவநம்பியதீஸன் தரித்து நின்ற இடத்தில் ஸமுத்த பன்னசால என்ற வழிபாட்டிடம் அமைக்கப்பட்டது. பின்னர் இத் துறை முகப் பட்டினத்திலும் யம்புகோளவிகாரை கட்டப்பட்டதோடு, அரசமரக்கிளை ஒன்றும் இங்கே நாட்டப்பட்டது.*
அடுத்த நிகழ்ச்சியாக அமைவதுதான் முதலாம் நூற்றாண் டில் ஆட்சி செய்த கல்லாடநாகவினால் (கி. மு. 110 - 103) முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தனுாரிலமைக்கப்பட்ட
குருண்டவாசக என்ற விகாரையாகும்.37 நாகதீபத்தில் மகல்ல
நாக (கி. பி. 136 - 143) சாலிபப்பத விகாரையைக் கட்டி னான்.88 யாழ்ப்பாணக் குடாநாட்டிலே தேவநம்பியதீஸனால் அமைக்கப்பட்டிருந்த திஸ்ஸமகாவிகாரையைப் புனரமைத்தவர் களாக கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கனிட்டதிஸ்ஸவும் (கி. பி. 167 - 186), கி. பி. மூன்றாமி நூற்றாண்டில் ஆட்சி செய்த வொகரிகதிஸ்ஸவும் (கி. பி. 207 - 231) குறிப்பிடப்படுகின்றனர்.39 பாளி நூல்கள் கி. பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சிறிமேகவண்ணனின் (கி. பி. 301 - 328) சமய நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடn விட்டாலுங்கூட வவுனியாவிலிருந்து ஆறு மைல் தொலைவி ஆலுள்ள தோணிகல்லிற் கிடைத்துள்ள இம்மன்னனின் பிராமிக் கல்வெட்டில் இவ்விடத்திலமைந்த யகிசபவட்ட விகாரை பற்றிய செய்தி காணப்படுகின்றது.40 இதற்குப் பின்னர் கி. பி. ஐந் தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த தாதுசேன மன்னன் (கி. பி. 495 - 473) இம் மாவட்டத்திலமைந்திருந்த மங்கள விகார்ை யைப் புனரமைத்ததோடு இதனருகிற் சாலிபவட்ட விகாரையை யுங் கட்டினான். அத்துடன் தூபவிட்டி, தாதுசேண் என்ற இரு விகாரைகளும் இங்கு அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.4 மகல்லநாக என்ற மன்னன் சாலிபவட்ட விகாரையைக் கட்டிய
தாகச் சூளவம்சம் கூறுகின்றது. 42
மேற்கூறிய தகவல்கள் நாகதீபமென அழைக்கப்பட்ட வட பகுதியில், (யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங் களில்) அநுராதபுரத்திலரசாண்ட சிங்கள மன்னர் பெளத்த சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் பற்றியே கூறுகின்றன. இப்பணிகள் பற்றிய குறிப்புகளில் மன்னார் மாவட்டத்தில்
81 வரலாற்றுக் காலம் 1 . . .

Page 57
இவர்களால் இக்காலத்தில் அமைக்கப்பட்ட பெளத்த வழிபாட் டிடங்கள் எவை பற்றியுங் குறிப்பிடாதமை அவதானிக்கத் தக் கது. காரணம் மாந்தைத் துறைமுகம் அநுராதபுர அரசின் முக்கிய துறைமுகமாகக் காணப்பட்டிருந்தாலுங்கூட ஆரம்பத்தி லிருந்தே இங்கு இந்து மதச் செல்வாக்கு மேலோங்கிக் காணப் பட்டதைப் பெளத்த நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. பெளத்த மதத்தின் புனிதப் பொருளாகிய தந்ததாது வந்திறங் கிய இடமாக மாந்தைத் துறைமுகத்தைக் குறிக்குந் தாது வம்சம், இத்தந்ததாதுவை ஈழத்திற்கு எடுத்து வந்தோன் பிரா' மண வேடத்தில் வந்திருந்ததோடு இங்குள்ள இந்துக் கோயில் லுந் தரித்து நின்றான் எனவுங் கூறுகின்றது.48 இது நடந்தது கி. பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சிறிமேகவண் ணன் (கி. பி. 301 - 328) காலத்திலேயாகும்.
மேலும் இக்காலத்தில் நாகதீபத்தில், அநுராதபுர மன்ன்ர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கான rnਗ றுகள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற் காணப்படாதிருக்க மன்னார் மாவட்டத்தில் மட்டுங் காணப்படு வதும் அவதானிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகளுங்கூட இவர்களது செல்வாக்குக்குட்பட்ட மாந்தைத் துறைமுகத்திற்கு அருகிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதும் அவதானிக்கத் தக்கது. கி. பி. முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த வசப மன்னன் (கி. பி. 67 - 111) மகாதீர்த்தத்திற்கு அருகிலுள்ள பகுதியிற் கேகலக் குளத்தினை அமைத்ததாகப் பாளி நூல்கள் கூறுகின்றன.44 இவனது நடவடிக்கைக்குப் பின்னர் அதுவும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் தாதுசேன மன்னன் (கி. பி. 455 - 473) மானாமட அல்லது மானாமடு என்ற குளத்தினை இங்கே அமைத்ததாகக் கூறப்படுகின்றது. இது தற் காலக் கட்டுக்கரைக் குளமாக இருக்கலாம் எனவுங் கருதப்படு கின்றது.45 இக்குளங்கூட மகாதீர்த்த பட்டினத்திற்கு அருகாமையிலுள்ளது. இவ்வாறே பானாகமுவ என்ற குளத் தையுந் தாதுசேன மன்னனே கட்டியதாகக் கூறப்படுகின்றது. மாந்தைப் பிரிவிலுள்ள பானன்காமம்குளம் இஃதாகலாம் என யூகிக்கப்படுகின்றது.48 இவ்வாறு இப்பகுதியில் அநுராதபுர மன்னனின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலுங்கூட இம்
யாழ். - தொன்மை வரலாறு 82 இ

மாவட்டத்திலுள்ள ஊர்ப்பெயர்களும் பிறவும் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழ் - இத்துச் செல்வாக்கு இங்கு காணப் பட்டதை உறுதி செய்வனவாக அமைந்துள்ளன என்பதை வரலாற்றாசிரியராகிய கொட்றிங்ரன் எடுத்துக்காட்டியுள்ளமை கருத்திற் கொளஸ்த்தக்கது.47
Rெமற்கூறியவாறு அநுராதபுர மன்னர்கள் நாகதீபத்தோடு கொண்டிருந்த தொடர்பினை அவதானிக்கும்போது இவை
முழுக்க முழுக்கக் கலாசார நடவடிக்கைகளாகக் காணப்படு வதைக் காணமுடிகின்றது. சமயப்பொறை மிகுந்த அக்காலத் தில் இத்தகைய கலாசார நடவடிக்கைகளை இப்பகுதிகளில் இவர்களது மேலாதிக்கம் பரந்ததற்கான எச்சங்கள் எனக் கொள்ளுவது தவறாகும். அதுவும் இத்தகைய நடவடிக்கைகள் கூட மிக நீண்ட காலப்பகுதியாகிய இக்காலத்திற் கிட்டத்தட்ட எண்ணுாறு வருடங்களில் ஒரு சில மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளாக மட்டுமே காணப்படுகின்றன. கி. பி. ஐந் தாம் நூற்றாண்டிற்றான் தாதுசேன மன்னன் மன்னார் மாவட் டத்தில் ஏற்படுத்திய குளங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. இவைகூட அநுராதபுர மன்னரின் வர்த்தக நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்திய மாந்தைத் துறைமுகப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கையை அநுராதபுர அரசரின் ஆதிக்கப் படர்ச்சியின் எச்சமாகக் கொண்டாலுங்கூட அத்தகைய படர்ச்சி அநுராதபுரத்தில் அரசாண்ட வலிமையுள்ள மன்னனாகிய தாதுசேனன் காலத்தில் இப்பகுதியிற் காணப்பட் டது என்று மட்டுமே யூகிக்க வேண்டியுள்ளது. காரணம் இம் மன்னன் யாழ்ப்பாண மாவட்டத்திலோ வவுனியா, முல்லைத் தீவு மாவட்டங்களிலோ மேற்கொண்ட இத்தகைய நடவடிக் கைகள் பற்றிய குறிப்புகள் பாளி நூல்களில் இடம்பெறவில்லை. இவ்வாறு பாளி நூல்களிலோ தமிழ் நூல்களிலோ இப்பகுதி பெற்றிருந்த நாக்ரிக வளர்ச்சி பற்றிய விரிவான சான்றுகள் காணப்படாதவிடத்துப் பிற சான்றுகளாகிய தொல்லியற் சண்றுகளின் துணை கொண்டே இப்பகுதி வரலாறு பற்றி ஆராய வேண்டியது அவசியமாகின்றது. எனினும் பாணி நூல்கள் தருஞ் சான்றுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஈழத்
( 83 வரலாற்றுக் காலம் 1 .

Page 58
தின் வட பகுதியாகிய "நாகதீபம்" வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான போக்கிற் சென்றமையை இச்சான்றுகள் எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இதனையே இந்நூல்களிற் காணப்படும் நாகதீபம் பற்றிய ஐதீகங்களூழ் உறுதிப்படுத்துகின்றன.
தொல்லியற் கருவூலங்கள்
தமிழக வரலாற்று ஆய்வில் தமிழ் இலக்கிய ஆதாரங்களே பெருமளவு செல்வாக்குச் செலுத்துவது போன்று ஈழத்து வர் லாற்று ஆய்விலும் பாளி இலக்கியச் சான்றுகளே பெருமளவு செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளன. இந்நிலை தமிழகத்தைம் பொறுத்த மட்டில் இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னரும் ஈழத்தினைப் பொறுத்தமட்டில் இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரும் ஒரளவு மாறத் தொடங்கியது. தமிழகம் தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கினா லுங்கூட, இந்கியாவில் தொல்லியற் துறையினர் மேற் கொண்ட மேலாய்வு, அகழ்வாய்வு நடவடிக்கைகள் பெருமள வுக்கு வடஇந்தியாவை மையமாக வைத்தே மேற்கொள்ளப் ւյւ ւ-6ծr. எனினும், 1947இல் சேர். மோற்றிமர் வீலர் இந்தியத் தொல்லியற் துறையின் இயக்குனராகப் பொறுப் பேற்றவுடன் தென்னிந்தியக் கலாசார வளர்ச்சியை அகழ் வியல் ஆராய்ச்சி மூலங் கண்டறியும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இதன் முக்கிய நடவடிக்கையாகத் தமிழ கத்திலுள்ள அரிக்கமேடு (வீரபட்டினம்) கர்நாடகத்தில் உள்ள பிரமகிரி ஆகிய இடங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.48 இதன் மூலந் தென்னிந்தியாவின் நாகரிக வளர்ச்சியில் மூன்று காலக் கலாசாரப் படைகள் இனங்காணப்பட்டன. அவை புதியகற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் ஆகும். அவற்றின் மூலம் பெருங்கற்காலக் கலாசாரமே வரலாற்றுக் காலக் கலாசாரமாக வளர்ச்சி பெற்றது எனவும் இனங்காணப் பட்டுள்ளது. இதனால் வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்தை கி. மு. மூன்றாம் நூற்றாண்டாக இனங்கண்டு கொண்டதோடு இதன் முக்கிய அம்சங்களாகப் பிராமி எழுத்து, எழுது கருவிகள், கட்டிடங்கள், சிற்பங்கள், நகர அமைப்பு, உறை கிணறுகள்,
யாழ் - தொன்மை வரலாறு 84 O

நாணயங்கள், வாணிபம் ஆகியனவும் இனங்காணப்பட்டன. இத்துடன் இக்காலத்தில் மேற்குலகத்துடன் குறிப்பாக உரோம ருடன் கொண்டிருந்த தொடர்பின் எச்சமாக உரோமர்களின் மட்பாண்ட வகைகளான ரவுலெற்றெற் மட்பாண்டங்கள், அரிற் றயின் மட்பாண்டங்கள், உரோம நாணயங்கள் ஆகியனவுங் கண்டெடுக்கப்பட்டன. வீலரின் அரிக்கமேட்டு அகழ்வு இப்பகுதி யில் உரோமர்களது வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய சான்றா தாரங்களையும் வெளிக்கொணர்ந்தன. இவற்றுள் உரோமரது பண்டகசாலை, சாயம் பூசுவதற்கான சாயத்தொட்டி ஆகியன வுங் கண்டு பிடிக்கப்பட்டன. எ னி னு ம், அரிக்கமேட்டைப் பொறுத்தமட்டில் இத்தகைய கலாசார வளர்ச்சி கி. மு. முத லாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரையிலே தான் காணப்பட்டது என வீலர் அன்று கருதியிருந் தார். தொல்லியற் சின்னங்களின் காலத்தைக் கணிப்பதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்ற வசதிகள் அற்ற அக்காலத்தில், தொல் லியற் கலாசாரப் படைகளின் கனத்தை அல்லது திரட்சியின் அளவைப் பொறுத்தும் இவற்றிற் கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டுமே இத்தகைய முடிபுக்கு வீலர் வந்திருந்தார். W
சேர். மோற்றிமர் வீலரைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் அகழ்வுகள் துரிதப்படுத்தப்பட்டன. இவற்றுள்ளே தமிழகத்தி லுள்ள கொற்கை, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காரைக் காடு, வாசவ சமுத்திரம், காஞ்சிபுரம், அரிக்கமேடு ஆகிய இடங் களிலும், ஆந்திர மாநிலத்திலுள்ள அமராவதி, சாலிகுண்டம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத் தகைய அகழ்வுகள் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திற் பெரும் பாலும் ஆற்றோரங்க்ளின் கழிமுகப் பகுதியிற் கடற்கரைப் பகு திக்கு அருகில் அமைந்த துறைமுகப் பட்டினங்கள் எழுச்சி பெற் றதை எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய துறைமுகங்கள் தமிழகத்தின் தென்கோடியிலும், கிழக்குக் கோடியிலும், மேற்குக் கோடியிலும் வளர்வதற்கு இப்பகுதியிற் காணப்பட்ட முத்து, சங்கு, வாசனைத்திரவியங்கள் ஆகியன உந்துசக்தியாக விளங் கின. இதனை அர்த்தசாஸ்திரம் போன்ற வடமொழி நூல்கள் மட்டுமன்றிக் கிரேக்க அறிஞர்களது குறிப்புகளும் எடுத்துக் காட்டியுள்ளன. இத் த  ைக ய நாகரிக வளர்ச்சி பற்றி
)ே 85 வரலாற்றுக் காலம் 1 .

Page 59
மலோனியும் ஆராய்ந்துள்ளார். பெருங்கற்கால விவசாயச் af(yp தாயம் இவ்வாறு மேல்நிலை அடைவதற்கு வெளியுலகத்துடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பே பிரதான காரணியென் பது இவரது கருத்தாகும். 49 வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத் தின் முன்பின்னாகவே மத்தியதரைப் பிரதேசத்துடன் இந்தியா கொண்டிருந்த தொடர்பிற்கான தடயங்கள் உள. இவ் வாணிப நடவடிக்கைகளில் தமிழகம் மட்டுமன்றி, ஈழமும் இணைந்திருந்ததை அலெக்சாண்டரின் மாலுமிகளின் குறிப்புகள், மெகஸ்தீனிஸ் போன்ற கிரேக்க அறிஞர்களின் குறிப்புகள் ஆகி யன எடுத்துக் காட்டுகின்றன.50
இவ்வாணிபத் தொடர்புடன் பெளத்தத்தின் வருகையுந் தென்னிந்தியா, ஈழம் ஆகிய பிரதேசங்களின் நாகரிக வளர்ச்சி யிலே தாக்கத்தினை ஏற்படுத்தியது. பெளத்தம் இக்காலத்தில் இந்தியாவிற் செல்வாக்குப் பெறுவதற்கு வைசிகர்களான வணி கர் இதற்களித்த ஆதரவும் முக்கியமான உந்து சக்தியாக அமைந்திருந்தது. வடஇந்தியாவில் மட்டுமன்றித் தென்னிந்தியா வி லுங் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் இதற்கான சான் றாத ரங்களாக விளங்குகின்றன. ஆந்திர மாநிலம் ஊடாகவே பெளத்தம் தமிழகத்தை வந்தடைந்தது. தமிழகத்திலுள்ள காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களில் இக் காலத்திற் பெளத்தம் செல்வாக்குடன் விளங்கியதற்கான தட யங்கள் பல உள. பெளத்தத்துடன் இணைந்து வந்த பிராமி வரிவடிவமும் இப்பகுதிகளிற் செல்வாக்குப் பெறத் தொடங்கி யது. இதனாலே தென்னிந்தியா, ஈழம் ஆகிய பிராந்தியங்களிற் காணப்பட்ட விவசாயச் சமுதாய அமைப்பு, வணிகச் சிறப்பா லும், வெளி உலகத்துடன் கொண்டிருந்த தொடர்பினாலும் நாகரிக வளர்ச்சியில் மேலும் முன்னேற முடிந்தது.
எனினும், வீலரது அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சிக்குப் பின்னர் 1983இல் மீண்டும் வீலரின் சான்றுகள் அகழ்வாய்வு மூலம் மீளாய்வு செய்யப்பட்டன.51 இவ் ஆய்வில் முன்னின்ற வர் விமலா பேக்லே ஆவர். இவ்வாய்வின் பலனாகப் பல முக் கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அரிக்கமேடு தொட்டுத் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிற் கண்டெடுக்கப்பட்ட
யாழ். - தொன்மை வரலாறு 86 ()

உரோம மட்பாண்டங்களான ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் பற்றிப் புதிய சிந்தனை உருவாகியது. இவற்றின் தோற்றத் திற்கும் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய கறுப்புச் சிவப்பு நிறமுடைய மட்பாண்டங்களான வட்டில்களின் தோற்றத்திற்கு மிடையே இழைவிட்டோடிய ஒற்றுமை எடுத்துக் காட்டப்பட்ட தோடு, இவற்றினை ஆக்குவதற்கும் பெருங்கற்காலக் கலாசாரத் திற்குரிய வட்டில்களே முன்னோடிகளாக இருந்தன என்பதும் இனங் காணப்பட்டது. அத்துடன் இம்மட்பாண்டங்களிற் பெரும் பாலானவை உரோம நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படவில்லை என்றும் உள்ளூரிலேதான் தயாரிக்கப்பட்டன என் றும் இவர் கூறியுள்ளார். எனினும் இவற்றின் உள்ளே உள்ள *ரவுலெற்றெற்' என்ற அலங்கார அமைப்பு மட்டும் உரோம ரிடம் இருந்து பெறப்பட்டது எனவும் இவர் எடுத்துக்காட்டிய தோடு இவை கி. மு. 200ஆம் ஆண்டளவிற் புழக்கத்திற்கு வந்துவிட்டன என்பதும் இவரது கருத்தாகும். அரிக்க்மேட்டில் உள்ள இம்மட்பாண்டங்களிலே எழுதப்பட்ட பிராமி எழுத்துக் களும், இக்காலம் பற்றிய முடிவை உறுதி செய்கின்றன. இக் காலத்திற்குரிய பிராமி வரிவடிவங்கள் கொற்கை, உறையூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற இடங்களிற் கிடைத்த பானை ஒடுகளிலுங் காணப்படுவது ஈண்டு அவதா னிக்கத்தக்கது.
தமிழகத் துறைமுகப் பட்டினங்கள் பற்றிய விரிவான தகவல் களைக் கடலினுள் அகழ்வுகளை மேற்கொள்ளுவதன் மூலமே சரியாக இனங்காண முடியுமென்றாலுங்கூட அரிக்கமேடு, காவி ரிப்பூம்பட்டிணம், கொற்கை ஆகிய துறைமுகங்களில் விரிவான அகழ்வு மேற்கொள்ளப்படின் இது பற்றி மேலும் பல தகவல் களைப் பெறலாம் என்பதனை இங்கு கிடைத்துள்ள சான்றுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அரிக்கமேட்டின் வரலாற்றுக் கால வரலாறு கி. மு. 250ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்ட தாகக் கூறும் விமலா பேக்லே தொடர்ந்து கி. பி. 200 வரை இது ஒரு செல்வாக்குள்ள துறைமுகப் பட்டினமாக விளங்கிய தையும் எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறே காவிரிப்பூம்பட் டினத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும் இங்கு கப்பல்கள் வந்து தங்குவதற்கான இறங்குதுறை ன்று அமைந்திருந்ததை எடுத்துக்காட்டியுள்ளன. இதன் காலம் நான்காம் நூற்றாண்டு
O 37 வரலாற்றுக் காலம் 1 .

Page 60
(கி. மு. 315 - 100) என இனங்கண்டுகொள்ளப் பட்டுள்ளது. கொற்கையிலும் ரவுலெற்றெற் மட்டாண்டங்களும், பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகளுங் கண்டெடுக்கப்பட் டன. அத்துடன் அரிக்கமேட்டிற் கிடைத்துள்ள சான்றுகள் உரோமருடன் கொண்ட வர்த்தகத் தொடர்பால் உரோம மட் பாண்டங்கள், விளக்குகள், மதுச்சாடிகள், பீங்கான்கள் ஆகியன தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதையும், தமிழகத்தி லிருந்து அணிகலன்கள், பல் வகை மணிகள், சங்குவளையல்கள் யானைத்தந்தம், துணிகள், தோல் வகைகள் ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளன.
மேற்கூறிய தகவல்களைவிட, ஈழத்தின் வரலாற்றினைப் பொறுத்தமட்டில் விமலா பேக்லே இங்கு மேற்கொண்ட ஆய்வு பல புதிய தகவல்களைத் தந்துதவியுள்ளன. அதாவது பெருங் கற்காலக் கலாசாரத்திற் தென்னிந்தியாவுடன் இணைந்திருந்த ஈழம், வரலாற்றுக் காலத்திலும் அதனுடன் இணைந்திருந்தது என்பதாகும். இதனை உறுதிப்படுத்த மெளரியர் காலத்தில் தமிழகம், ஈழம் ஆகிய பிராந்தியங்களுக்கிடையே நிலவிய தொடர்பினை எடுத்துக்காட்டும் பெளத்தமதம், பிராமி வரிவடி வம், எலும்பினாலான எழுதுகோல்கள், செங்கட்டிக் கட்டிடங்கள் ஆகியன இரு பகுதிகளிலுங் காணப்படுவதோடு வரலாற்றுக் காலத்தின் முத்திரையாகிய ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் தென்னிந்தியாவிற் காணப்படுவது போல ஈழத்தின் ஆதிகால நாகரிக மையப் பிரதேசங்களிலுங் காணப்படுகின்றன எனவும் எடுத்துக்காட்டியுள்ளார். பாளி நூல்களிற் காணப்படுஞ் சில குறிப்புகளும் இதனை ஓரளவுக்கு உறுதிப்படுத்துகின்றன. தேவ நம்பியதீஸன் காலத்தில் ஜம்புகோளப்பட்டினத்தின் மூலமாகத் தென்கிழக்குக் கரையோரமாக வங்காளத்திலுள்ள தாம்ரலிப்தித் துறைமுகத்தோடு ஈழங் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் இவை கூறுகின்றன. 52 இத்தகைய தொடர்பு பண்பாட்டு ரீதியாக மெளரிய கலாசாரம் ஈழத்திற்குப் பரவியதையே எடுத்துக்காட்டு கின்றது. இப்பாளிநூல்கள் ஜம்புகோளப்பட்டினம் வெறுமனே வட இந்தியாவிலுள்ள தாம்ரலிப்தித் துறைமுகத்துடன் கொண் டிருந்த கலாசாரத் தொடர்பினை மட்டுமே எடுத்துக் காட்டி
னா லுங் கூட ஈழத் துறைமுகப் பட்டினங்களான மாதோட்டப்
யாழ். - தொன்மை வரலாறு 88 )

பட்டினம், ஜம்புகோளப்பட்டினம் ஆகியன தமிழகம், ஆந்திரா கலிங்கம், வங்காளம் ஆகிய பகுதிகளிலமைந்திருந்த கொற்கைப் பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், வீரபட்டினம் (அரிக்கமேடு), மசூலிப்பட்டினம், விசாகபட்டினம், கலிங்கபட்டினம் ஆகியவற் றுடனும், உரோமருடனுங் கொண்டிருந்த வர்த்தக நடவடிக் கைகள் மூலம் இணைந்திருந்தன.
இத்தகைய தொடர்பின் எச்சமாகவே கி. மு. 200 ஆம் ஆண்டுகளுக்குரிய மட்பாண்டங்களான ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் தென்னிந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிற் காணப்படுகின்றன எனலாம். இச்சந் கர்ப்பத்திற் பாளி நூல் களிற் கூறப்படும் மகாதீர்த்த பட்டினம் பற்றி எல்லாவல கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.38 இந்நூல்கள் இத்துறை முகத்தினை, “புர” அல்லது "நகர' என்ற வடமொழி மூலங் களிலே தோன்றிய சொற்களுக்குப் பதிலாகப் " பட்டின " என அழைப்பது ஆரம்ப காலத்திலிருந்தே தமிழர் செல்வாக்கு இங்கு நிலைகொண்டிருந்தது என்பதை உறுதியாக்குகின்றது எனக் கருதுகின்றார். தமிழ்ப் பட்டினம் என்பதன் திரிபே பட்டின ஆகும். ஜம்புகோளப் பட்டினமும் இத்தகைய விளக்கத்திற்கு உரியதாகவே காணப்படுகின்றது. இருந்தும் இச்சொல்லிற் பட்டினத்தோடு ஜம்புகோவளம் " என்பது கோள என மருவி இணைந்து காணப்படுவது அவதானிக்கத்தக்கது. ஜம்பு கோவளத்தைவிட காரைநகர், பருத்தித்துறை ஆகிய இடங் களிலுங் கோவளம் என்ற பெயர் இடப் பெயராகக் காணப் படுகின்றது. இவற்றைப் போலன்றி, ஜம்புகோவளம் என்ற சொல்லில் உள்ள " ஜம்பு’ என்பதன் பொருள் நாவலாகும். இப்பகுதியில் நாவல் மரங்கள் காணப்பட்டதால் இது இவ் வாறு பெயர் பெற்றிருக்கலாம். எனினும், இதற்கும் தமிழ் ழிTல்கள் குறிக்கும் நாவலந்தீவுக்கும் உள்ள தொடர்பு ஆராய்தற்பாலது. எவ்வாறாயினுங் கோவளமே, கோள என மருவி ஜம்பு என்ற பகுதியுடன் வழங்கப்பட்டது எனலாம். இக் கோவளம் என்ற இடப்பெயர்கூட கேரள மாநிலத்திற் காணப் படுவது நினைவு கூரற்பாலது.
ஏற்கனவே குறிப்பிட்டவண்ணம் ஈழத்திற் கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் ஈழத்துத்
O 89 61769пji)god strovit I .

Page 61
தொல்லியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தன.
1947இல் அரிக்கமேட்டு அகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியக் கலாசார வளர்ச்சி பற்றிய தெளிவான வரலாற்றை எடுத்துக்
காட்டினவோ அவ்வாறே 1969இல் ஈழத்தின் வரலாற்றுக் காலத்
தலைநகர்களில் மிகப் பெரியதான அநுராதபுரத்தில் மேற்
கொள்ளப்பட்ட அகழ்வுகளும் அமைந்தன. 1969 ஆம் ஆண்டைத்
தொடர்ந்து 1980களிலும் இங்கே அகழ்வுகள் மேற்கொள்ளப்
பட்டன.54 இவ்வகழ்வுகள் தமிழகத்தைப்போல ஈழத்திலும் பெருங்கற்காலக் கலாசார மக்களே ஈழத்தின் வரலாற்றுக் கால நாகரிகத்தினை உருவாக்கியதை எடுத்துக்காட்டிய அதே நேரத்தில் வரலாற்றுக் காலத்திற் பெளத்தத்தின் வருகை, பிராமி எழுத்தின் பரம்பல், செங்கட்டியினாலான கட்டிடமுறை, " நாணயம், வாணிபம் ஆகியன ஈழத்தினை நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முக்கிய பங்கை வகித்ததையும் எடுத்துக்
காட்டியுள்ளன. இவற்றோடு வெளி உலகத் தொடர்பின் சின்ன மாக ரவுலெற்றெற் மட்பாண்டங்களும் வரலாற்றுக் காலத்தின் முத்திரையாக இப்படையிற் காணப்பட்டது. 1970இற் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வும் அநுராதபுரத் தின் வரலாற்றுக் காலக் கலாசார வளர்ச்சியே இங்கும் காணப்
பட்ட தை உறுதி செய்தது.55
விமலா பேக்லே 1967இல் ஒரு மேலாய்வைக் கந்தரோடையில் மேற்கொண்டபோது இப்பகுதியின் முக்கியத்துவத்தினை இனங் கண்டுகொள்வதற்காகப் பரிசோதனைக் குழிகள் இவரால் அமைக்கப்பட்டன. இதுபற்றி அன்று அவர் கூறியதாவது.58
**இங்கே தோண்டப்பட்ட சிறு பரிசோதனைக் குழியில் கிடைத்த கலாசாரச் சின்னங்கள் அரிக்கமேட்டின் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திற் கிடைத்த சமகால கலாசாரச் சின்னங்களோடு ஒத்துக் காணப்படுகின்றன. இவ் வாய்வின்போது ஒரு பரிசோதனைக் குழியிலாவது கலா சாரச் சின்னங்களுக்கு அடியிலுள்ள நிலமட்டத்தின் படை யைக் கிட்டமுடியாவிட்டாலும் கூட எமக்குக் கிடைத்த
யாழ். - தொன்மை வரலாறு eo O

கலாசாரச் சின்னங்கள் சில இவற்றின் காலம் கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்க லாம் என்பதை உணர்த்தியுள்ளன. வரலாற்றுக் காலத் திற்கு முன்னரே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை இங்கு நீர்த்தாங்கி அமைப்பதற்காக வெட்டப்பட்ட 3. 66 மீற்றர் ஆழத்திற்கு மேலான குழியிற் கிடைத்த சான்று கள் உணர்த்துகின்றன. அத்துடன் தரையில் கிடைத்த தொல்லியற் சான்றுகளும் இவை இந்தியா வில் சமகாலத்தில் அகழ்வியற் படைகளில் காலக் கிரமத்தில் வரிசைப்படுத்தப்பட்ட சான்றுகளை ஒத்தன வாகவும் அவற்றைப் போன்று காலத்தால் பழைமை
sursor GO) Gurrach a 6h 67687 என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன. இங்கே கிடைத்த தொல்லியல் எச்சங் களிலே பெரும்பாலானவை மட்பாண்டங்களே. இவற்
றோடு கழிவிரும்புகள், முருகைக்கல் துண்டுகள், லக்ஷ்மி நாணயத் துண்டுகள் ஆகியனவும் ரவுவிெற்றெற் மட் பாண்டங்களோடு இணைந்து காணப்படுகின்றன. "
விமலா பேக்லே மேலும் இங்கு கிடைத்த ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும் இது தனித்தன்மை வாய்ந்தன எனக் கூறி அரிக்கமேட்டிற் கிடைத்துள்ள உரோம மட்பாண்டங்களை இவை ஒத்துக் காணப்படுவதால் அங்கிருந்தே இவை கந்தரோடைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாமென வுங் கருத்துத் தெரிவித்திருந்தார். ரவுலெற்றெற் மட்பாண்டங் களுடன், பெருங்கற்காலக் கலாசாரத்தின் முத்திரையாகிய கறுப் புச் சிவப்பு மட்பாண்டங்கள் ஆகியனவும் இவரால் இவ்வாய்வின் போது இனங்காணப்பட்டது. எனினும், இங்கே கிடைத்த பெரும்பாலான மட்பாண்டங்களில் இப்பகுதிக்குரியனவாக உள்ள மங்கல் சிவப்பு நிறந்தொட்டு ஒரு வகை நரை நிறம்
வரையுள்ள மட்பாண்டங்களும் அடங்கும்.
எவ்வாறாயினும், 1960இல் இப்பகுதியில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுதான் கால அடிப்படையிற் கந்தரோடையிற் காணப்பட்ட கலாசார வளர்ச்சி பற்றி எடுத்துக்காட்டியுள்ளது. இவ் அகழ்வின்போது நாம் ஏற்கனவே குறித்த வண்ணம் முத
9 91 வரலாற்றுக் காலம் 1 .

Page 62
லிரு படைகளிலும் பெருங் கற்காலக் கலாசாரச் சின்னங்களும், இறுதிப் படையில் இதிலிருந்து வளர்ச்சி பெற்ற வரலாற்றுக் காலச் சின்னங்களுங் காணப்பட்டன. இவ்வகழ்வின் ஆராய்ச்சி அறிக்கை வெளிவராத நிலையில் விமலா பேக்லே எழுதிய ஒரு சிறு கட்டுரையின் துணை கொண்டும் இவ்வகழ்விற் பங்கு பற் றிய அன்றைய யாழ்ப்பாண நூதனசாலையின் பொறுப்பாள ராக விளங்கிய திரு. செல்வரத்தினத்தின் தினக் குறிப்பிலிருந்து கிடைத்த குறிப்புகளைக் கொண்டும் ஒரளவுக்கு இப்பகுதியிற் காணப்பட்ட வரலாற்றுக் காலக் கலாசாரத்தின் முக்கிய அம் சங்களை எடுத்துக்காட்ட முடியும், 57 வரலாற்றுக் காலப் படை யின் பிரதான முத்திரையாக ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் காணப்பட்டன. இவற்றிற் பிராமி எழுத்துகளும் பொறிக்கப் பட்டிருந்தன. இவற்றில் ஒன்றிற் கிடைத்த பிராமி வாசகந்தான் ‘ததக பத’ ஆகும். இதன் பொருள் தத்தனுடைய பாத்திரம் என்பதாகும்.
வரலாற்றுக் காலக் கலாசாரப் படையின் சிறப்பம்சமாகிய லக்ஷமி நாணயங்கள், வெண்கலத்திலமைந்த திரிசூலம், தேரோட்டி யைச் சித்திரிக்குங் கார்ணிலியன் முத்திரை ஆகியவற்றோடு கார்னிலியன், அகேற், லபிஸ், அமேதிஸ்ற் போன்ற கற்களி லமைந்த மணிவகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், கட் டிடங்களுக்கு அமைக்கப்பட்ட தூணின் துளைகள் ஆகியனவுங் காணப்பட்டன. இச்சின்னங்களைக் கொண்டு அரிக்கமேட்டிற் காணப்பட்ட கலாசார வளர்ச்சியை ஒத்த கலாசார வளர்ச்சியே
கந்தரோடையிலுங் காணப்பட்ட தை இவர் இனங்கண்டுள்ளார்.
குடனநாட்டில் தொல்வியல் தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளில் 1980 களில் இரகுபதி இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகள் ஒரு மைல்கல்லாக அமைகின்றன என்றால் மிகையNகாது. 58 எனினும் இவ்வாய்வின் போது கிடைத்த சின்னங்களைக் கால அடிப்படையில் நிரைப்படுத்து வதற்குப் பல பரிசோதனைக் குழிகளை இப்பொருட்கள் கிடைத்துள்ள இடங்களில் அமைத்து ஆய்வு செய்ய வேண்டி யது அவசியமாகின்றது. இவ்வாறு செய்யும்போதுதான் ஈழத்திற்
யாழ். - தொன்மை வரலாறு 32 ()

கிடைத்த சின்னங்களுக்குந் தமிழகத்திற் கிடைத்த சின்னங் களுக்குமிடையே உள்ள தொடர்பினைச் சரியாக இனங்கண்டு கொள்ள முடியும். இக்காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு தென்னிந்தியக் கலாசார மையப் பிரதேசங்கள் போன்று உரோமருடன் தொடர்பு கொண்டு விளங்கியதைக் கந்த ரோடை, ஆனைக்கோட்டை, சத்திராத்தை, வேலனை, சாட்டி, மண்ணித்தலை, வல்லிபுரம், நாகர்கோயில், கருமணற் கும்பி, தாளையடி, வெற்றிலைக்கேணி, வெடியரசன் கோட்டை ஆகிய இடங்களிற் கிடைத்த ரவுலெற்றெற் மட்பாண்டங் களும்,59 கந்தரோடை, ஆனைக்கோட்டை, நல்லூர், வல்லி புரம், நாகர்கோயில், கல்வளை ஆகிய இடங்களிற் கிடைத்த æ_Gg T tD நாணயங்களும் உறுதி செய்கின்றன (படம் - 1 ). இத்தகைய தொல்லியற் சின்னங்கள் இக்காலத்தில் உரோம ருடன் கொண்டிருந்த வர்த்தகத்தின் மூலந் தமிழகம் - ஈழம் ஆகிய பிராந்தியங்களுக்கிடையே நிலவிய நெருங்கிய தொடர் பின் சாச்சங்களாக விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
கிறிஸ்தாப்த காலத்திலும் அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நாகரிக வளர்ச்சியை எடுத்துக்காட்டுவனவாகக் கந்தரோடை, ஆனைக் கோட்டை, சத்திராந்தை, கும்புறுப்பிட்டி, சாட்டி, வல்லிபுரம், நாகர்கோயில், கருமணற்கும்பி, தாழையடி, வெற்றிலைக்கேணி, வெடியரசன் கோட்டை, வேரப்பிட்டி, திஸாமளுவை, களை யோடை, அரியாலை கிழக்கு, முள்ளி, ஆனைவிழுந்தான் திகழி, துலுக்கன்கோட்டை, மண்டலாய், நித்தியவேட்டை, பப்பரவப் பிட்டி ஆகிய இடங்களில் Lட்பாண்டங்கள் காணப்படுகின்றன { டடம் - 26 ). இத்தகைய நாகரிக வளர்ச்சியின் சின்னங்களாகச் சிவப்பு நீற மட்பாண்டங்களுந் தடித்த விளிம்பினை உடைய சிவப்பு நிற மட்பாண்டங்களும் விளங்குகின்றன என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றுட் குறிப்பாகத் தடித்த விளிம் பினையுடைய மட்பாண்டங்கள் தொடர்ந்து பல நூற்றாண்டு களாக இப் பகு தி யி ல் வழக்கில் இருந்ததாகவுங் கூறப் படுகின்றது.60
O ஒ3 வரலாற்றுக் காலம் I ... ... see

Page 63
வடபகுதியிலுள்ள ஜம்புகோளப் பட்டினம் போன்று பெரு நிலப்பகுதியில் மாந்தை செல்வாக்குள்ள துறைமுகமாக விளங் கியதை இங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்லியற் சின்னங்கள் உணர்த்துகின்றன. ஜம்புகோளப் பட்டினத்தின் பெரும்பாலான சின்னங்கள் அழிந்துவிட்டன. சில பகுதிகள் கடலால் ஆக்கிரமிக் கப்பட்டும் விட்டன. ஆனால் மாந்தையோ எனில் இன்றும் தொல்லியல் ஆய்வுகளுக்கு உகந்த ஒரு தளமாக விளங்குவது இதற்குரிய தனிச்சிறப்பம்சமாகும். இதனால் ஜம்புகோளப் பட்டினத்திற்கு இல்லாத சிறப்பு இதற்குண்டு. கிழக்கு மேற்காக நடைபெற்ற வர்த்தகப் பாதையில் உள்ள பாக்குநீரிணைக் கரையில் இது அமைந்திருந்ததும், இதற்குள்ள மற்றொரு சிறப்பா கும். இதன் அமைவிடம் இரு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங் களிலுங் கப்பல்கள் எதுவித கஷ்டமுமின்றி நங்கூரமிட்டு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருந்தது. அத்துடன் பெருநிலப்பகுதியில் நிலவள, நீர் வசதிகள் கொண்ட பிரதேசத்தில் அதுவும் அருவி ஆற்றின் கழிமுகப் பகுதியில் இது அமைந்திருந்தமையும் இதன் வளர்ச்சிக்குரிய மற்றுமொரு காரணமாகும். இதன் வளர்ச்சியும் அநுராதபுர நகரத்தின் வளர்ச்சியும் பெருமளவு இணைந்தே காணப்பட்டன. ஏனெனில் அநுராதபுர அரசின் பிரதான துறைமுகமாக வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே இது குறிப்பிடப்படுகின்றது. இதனால் வடபகுதியின் பிற இடங்களைப் போலன்றி இத் துறைமுகத்தில் அநுராதபுர அரசின் செல்வாக்குக் காணப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டிலும் இங்கு மேற் கொள்ளப்பட்ட அகழ்வுகள் இதன் பழைமையை எடுத்தக்காட்டி னாலும் இத்துறைமுகத்தின் வளர்ச்சியைக் கால அடிப்படையில் எடுத்துக் காட்டும் விரிவான சான்றுகளைத் தரவில்லை. இத் தகைய சான்றுகளைக் கால அடிப்படையில், நிரைப்படுத்திக் கூறுவது கஷ்டமாயினுங் கடந்த ஒரு தூற்றாண்டு காலமாக மாந்தைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் நடவடிக்கைகளாக இவை அமைவதால் இவற்றைச் சுருக்கமாக இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. இவ்விடத்தில் 1887இல் தான் முதல்முதலாகப் பி. ஜே. போக் என்பவரால் அகழ்வாய்வு
யாழ். - தொன்மை வரலாறு e4 O

மேற்கொள்ளப்பட்டது.81 இவர் தாம் எழுதிய கட்டுரையில், அகழ்வின்போது காணப்பட்ட பெரிய கட்டிடம், பழைய தெருக்கள், கிணறுகள், உடைந்த சிற்பங்களின் பாகங்கள், உடைந்த கூரை ஒடுகள், மட்பாண்டங்கள் ஆகியனவற்றை எடுத்துக்காட்டியுள்ளார். தூரகிழக்குப் பிரதேசத்திற்குரிய மட் பாண்டங்களோடு, மத்திய கிழக்குப் பகுதிக்குரிய கண்ணாடிகள், மணிவகைகள், கண்ணாடி வளையல்கள், சங்கு வகைகள், வெண் கல இரும்புப் பொருட்கள் ஆகியனவும் இவ்வகழ்வின்போது கிடைத்தன. இவருக்குப் பின்னர் 1907இல் இவ்விடத்தில் மேற் கொண்ட ஆய்வின்போது கட்டிட அழிபாடுகளோடு சோழ, பாண்டிய நாணயங்கள், கண்ணாடி~சங்கு வளையல்கள், மட் பாண்டங்கள், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய இரண்டா வது சேனனின் சாசனம் ஆகியனவும் இனங்காணப்பட்டதோடு ஒரு சிறிய புத்தர் சிலையுங் கண்டுபிடிக்கப்பட்டது.62 அக்காலத் தில்தான் அழிந்த திருக்கேதீஸ்வரத்திலுள்ள லிங்கத்தினைத் தேடி ஆறுமாத காலமாக முன்னூறு வேலையாட்கள் நிலத்தை அகழ்ந்துகொண்டிருந்தமை பற்றியும் இவ்வறிக்கையிற் குறிப் பிடப்பட்டுள்ளது. ら
இருபது ஆண்டுகட்குப் பின்னர் 1926இல் கோகாட் இவ் விடத்தில் அகழ்வு செய்த போது பல்வேறு கலாசாரப் படை களை இனங்கண்டதோடு அவற்றை உறுதிப் படுத்துவனவாக மட்பாண்டங்கள் உள என்றும் எடுத்துக் காட்டினார். 63 எனி னும், 1950இல் எஸ். சண்முகநாதன், மேட்டின் நிலமட்டம் வரை அகழ்வை மேற்கொண்டதன் பலனாக இதனை உள்ளடக் கிய கலாசாரப் படையின் கனம் 32 அடி என அறியப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகளில் மட்பாண்டச் சுற்றுகளினாலான இரண்டு கிணறுகள், கற்களால் கட்டப்பட்ட இரண்டு கிணறுகள், உரோம மத்தியகிழக்கு மட்பாண்டங்கள், மணிவகைகள் யானைத் தந்தத்தினாலான உரோம கலை மரபிலமைந்த தேர் ஆகியனவற்றோடு ஒரு மனித சடலமும் அடங்கும். 64 பின்னர் தொல்லியற் திணைக்களத்தின் தலைவரான ராஜா டீ சில்வா இப்பகுதியிலே தொடர்ந்து பல காலமாக அகழ்வாய்வை மேற் கொண்டிருந்துங்கூட இற்றைவரை இதுபற்றிய அறிக்கை வெளி
O 95 வரலாற்றுக் காலம் 1 .

Page 64
வராததுடன் ஒரு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரைதானும் இவ ராற் பிரசுரிக்கப்படாதமை குறிப்பிடத்தக்கது. இப் பின்னணி யிற்றான் 1967இல் விமலா பேக்லே இப்பகுதியில் மேற்கொண்ட மேலாய்வு முக்கியம் பெறுகின்றது.5ே 1967இல் மேலாய்வை மேற்கொண்ட இவர் இப்பகுதியின் பழைமையை இனங்கண்டு கொண்டுள்ளதோடு அரிக்கமேட்டிற் கண்டெடுக்கப்பட்ட ரவுலெற்றெற் மட்பாண்டங்கள், உரோம நாட்டு மட்பாண் டங்கள், சீன, பேர்ஷிய மட்பாண்டங்கள் ஆகியனவற்றையுங் கண்டுபிடித்தார்.
தமது மேலாய்வின்போது இப்பகுதியில் முன்னர் மேற் கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிக் குழிகளின் - 6ð) - S56ð) (f" இவர் பார்வையிட்டதுங் குறிப்பிடத்தக்கது. மாந்தைத் துறை முகத்தில் இரு சுற்று வட்டங்களாக அகழிகளுண்டு. அவை எக் காலத்தைச் சேர்ந்தன என்பது அகழ்வாராய்ச்சி மூலமே நிரூ பிக்க முடியுமெனவுங் கூறி இதனை அண்மித்துப் பல குடியிருப் புகள் காணப்பட்டதையும் இவர் எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றுள் தாமரைக்குளம், மாளிகைத்திடல், வேத யமுறிப்பு, ஆனைக்கோட்டை, பாப்பாமோட்டை, முருங்கன் ஆகியன அடங்
கும். இவற்றோடு அநுராதபுரத்திற்கும் மாந்தைக்குமிடைப்பட்ட
பகுதியில் பழைய குடியிருப்புகளின் எச்சங்களாகவுள்ள மட்பாண்
டங்கள், செங்கட்டிகள் ஆகியனவற்றையும் இவர் குறிப்பிட்டுள் னார். இவ்விடங்களிற் கொல்லன்மருதமடு, விளாத்திக்குளம், இராசமடு, கற்கடந்தகுளம், மாளிகைப்பிட்டி, வவுனிக்குளம், ஆத்திமோட்டை ஆகியன குறிப்பிடத்தக்கன.
இவரது ஆய்வைத் தொடர்ந்து 1980, 1982, 1984ஆம் ஆண் டுகளிற் காஸ்வல் தலைமையில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டா லும் 1983இல் நடைபெற்ற இனக்கலவரத்தினைத் தொடர்ந்து இவை இடைநிறுத்தப்பட்டன. இவ்வகழ்வு அறிக்கை வெளி வராத நிலையில் இவ்வகழ்வு பற்றி இதிற் பங்கு கொண்ட மார்தா பிறிக்கெற், ஜோன் காஸ்வல் ஆகியோர் எழுதிய கட் டுரைகளிலிருந்துதான் இதுபற்றி நாம் சில குறிப்புகளைத் தர முடிகின்றது.68 இவ்வகழ்வாய்வுகள் முன்னர் இப்பகுதியில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வுகள் போலன்றி நன்கு திட்டமிட்டு இத் துறைமுகம் பற்றிய விரிவான சான்றுகளை அறிந்து கொள்ள
யாழ். தொன்மை வரலாறு 93

மேற்கொள்ளப்பட்டதாகக் காணப்படுவதால் மாந்தையின் வர லாற்றில் இவை ஒரு மைற்க்ல்லாக அமைகின்றது. இத்தகைய ஒரு விரிவான அகழ்வின் சுருக்கமாக அமைந்துள்ள மார்தா பிறிக்கெற், ஜோன்காஸ்வெல் ஆகியோர் எழுதிய இரு கட்டுரை களும் இதன் வளர்ச்சியைக் கால அடிப்படையில் அறிந்துகொள் ளும் திறவுகோலாக அமைந்துள்ளன. முதலில் மார்தா பிறிக் கெற்றின் கட்டுரையை நோக்குவாம்.87 இக் கட்டுரையில், மாந்தையின் கலாசார வளர்ச்சியை இனங்காணுமுகமாக எ (A), பி (B), சி (C) என அழைக்கப்பட்டு அமைக்கப்பட்ட மூன்று பரிசோதனைக் குழிகள் பற்றியும், இவற்றோடு இப்பகுதியில் துளை கருவிகள் மூலம் அகழ்வாராய்ச்சிப் படையின் அமைப்பை அறிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பற்றியும் வரைபடத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே இடைக் கற் கால, பெருங்கற்காலக் கலாசாரங்களைத் தொடர்ந்து வரலாற் றுக்காலத்திற்குரிய தடயங்கள் கி. மு. 200 ஆம் ஆண்டிற்குரியன வாகக் காணப்படுகின்றன என இவர் குறிப்பிட்டுள்ளார். இதற் கான முக்கிய தடயமாக உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங் களைக் குறிப்பிட்டு இவை இந்தியாவிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்பட்டன எனவுங் கூறியுள்ளார். இவற்றோடு கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்களிற் குறிப்பாகக் கிண்ணங்கள் காணப் பட்டன. இவை இரண்டிற்குந் தோற்றமளவில் உள்ள ஒற்றுமை யும் இவரால் இனங்கண்டு கொள்ளப்பட்டது. இவை கி. பி. 200 வரையும் இப்பகுதியில் வழக்கிலிருந்து மறையச் சுதேச மட் பாண்டங்களுடன் வட இந்தியாவுடன் குறிப்பாக குஜராத்து டன் இத்துறைமுகங் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டும் மினுமினுப்புத் தன்மை வாய்ந்த சிவப்பு நிற மட்பாண் டங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மட்பாண்டங்கள் குஜ ராத் பகுதியிற் கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டுகள் வரை வழக்கிலிருந்தன. இதனைக் கருத்திற்கொண்டே வரலாற்றுக்காலத்தின் கலா சாரப் படையை அடுத்துக் காணப்படும் இப்படையின் காலத் திற்கு இடைக்காலம் எனப் பெயர் சூட்டி உள்ளார். அத்துடன் இதன் காலத்தைக் கி. பி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற் றாண்டிலிருந்து கி. பி. எட்டாம் நூற்றாண்டாகவும் நிர்ண
() அ7 வரலாற்றுக் காலம் 1

Page 65
பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் படையிற் காணப் படும் மத்திய கிழக்கு, தூரகிழக்குப் பகுதிகளிற் கிடைத்த மட் "
பாண்டங்கள் இதன் காலத்தைக் கி. பி. எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் பதினோராம் நூற்றாண்டுகளாக ஆக்கி விடுகின்றன.
இக்காலம்வரை ஒரு செல்வாக்குள்ள துறைமுகமாக விளங்கிய
மாத்தை கி. பி. பதினொராம் நூற்றாண்டளவிலே தனது முக் கியத்துவத்தினை இழந்தது என்பதும் இவரது கருத்தாகும்.
வரலாற்றுக் காலக் கலாசாரப் படையும் அதனைத் தொடர்ந்து காணப்படும் இடைக்காலப் (Intermediate )
1டையுமே நாம் ஆராயும் காலப்பகுதிக்குரியனவையாகக் காணப்
படுவதால் அவைபற்றிக் கூறுவதும் அவசியமாகின்றது. இக் கலாசாரப்படையின் கனம் 1.00 மீற்றராகும். இதற்கான தடயங்கள் மாந்தைப் பகுதியின் வடபகுதியிற்றான் உண்டு. இப்படையின் அமைப்பை நோக்கும்போது மக்கள் நிரந்தர மான, அழிவற்ற பொருட்களைப் பயன்படுத்திக் கட்டிடங் ளைக் கட்டியதற்கான சான்றுகளுக்குப் பதிலாக நிரந்தரமற்ற பண், மரம் போன்ற பொருட்களைப் பயனபடுத்தியே ஃட்டிடங்களைக் கட்டியிருக்கலாமெனக் கூறமுடிகின்றது. இதற்கு ஆதாரமாக மக்களின் வசிப்பிடங்கள் என யூகிக்கப்படும் பகுதிகளிற் படையின் கனம் குறைந்து காணப்படுவதோடு இவற்றுட் சாம்பல் கலந்திருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இச்சான்றுகள் ஒரு சமயம் இப்பகுதியில் மக்கட் சேறிவு குறைந்து காணப்பட்டதை எடுத்துக்காட்டலாம் என்றும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. இவ்வாறு கட்டி டங்களை அமைத்ததற்கான தடயங்கள் குறைந்து கா:ை ப் பட்டாலும் இக்காலத்தில் பொருளாதாரச் செழிப்புக் காணப் ட்டதை இக்கலாசாரப் படையிற் கிடைத்த உரோம ரவு ல்ெலற்றெற் மட்பாண்டங்கள் (படம்-27), இலட்சுமி நாணயம் (படம்-28), மரம் - சுவஸ் திகா சின்னங்கள் பொறித்த நாண
பூம் (படம்-29), யானைத் தந்தத்தினாலான இசைக் கருவி
3ன் பாகம் (படம்-30) ஆகியன எடுத்துக்காட்டியுள்ளன, இக்காலத்தில் இத்துறைமுகம் பெற்றிருந்த செழிப்பை முன் னர் இங்கு கிடைத்த உரோம நாணயங்களும், கட்டுக்கரைக்
யாழ். - தொன்மை வரலாறு es

குளத்திற்கு அருகிலுள்ள பிடாரிக் குளத்திற் கிடைத்த உரோம நாணயங்களும் எடுத்துக் காட்டுகின்றன. 1950இல் சண்முகநாதனால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட உரோமக் கலைப்பாணி யில் அமைந்திருந்த யானைத் தந்தத்தினாலான இரதமும் இக்கலாசாரப்படையைச் சார்ந்தது என இவர் கருதுகின் றார். இக்காலத்தில் உரோம நாட்டு டன் மட்டுமன்றி மத்திய கிழக்குப் பிராந்தியம், தூரகிழக்குப் பிராந்தியம் ஆகிய வற்றுடன் மாந்தைத் துறைமுகம் கொண்டிருந்த வாணிபத் தொடர்பினை எடுத்துக்காட்டும் எச்சங்களாக மேற்கூறிய பிராந்தியங்களில் வழக்கிலிருந்த மட்பாண்ட வகைகளும் இவ்வாய்வின்போது வெளிவந்தமை குறிப்பிடத் த க் க து (படம் - 31 - 36). இத்தகைய வர்த் ஆக நடவடிக்கைகள் பற்றிய விபரத்தினை இனிவரும் ஆய்வுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறே மாந்தை நகரின் வடக்கே காணப்படும் இக்காலக் கலாசாரச் சின்னங்கள் இதன் தென்பகுதியில் எவ் வாறு காணப்படுகின்றன என்பதனை வருங்கால ஆய்வுகள் தான் எடுத்துக்காட்டல் வேண்டும் என்பதும் இவரது விளக்க மாகும்.
அடுத்தாற்போல் இவ்வகழ்வாய்வின் இயக்குநராகச் செயற் பட்ட ஜோன் காஸ்வல் 1990இல் எழுதிய கட்டுரை மாந்தை பத்றிய தகவல்களைத் தருகின்றது.68 1980 தொடக்கம் 1984 வரையுள்ள காலப்பகுதியில் அகழ்வாய்வின்போது மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு 1982இல் மேலும் பல அகழ்வாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு இவற் றுக்கு டி (D), ஈ (E) எனப் பெயரிட்டமை பற்றி இவ் வறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழிகள் மூலம் கிடைத்த சான்றுகள் 1980 இற் கிடைத்த சான்றுகளை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இங்கு கிடைத்த உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் கந்தரோடை, அநுராதபுரம், அரிக்கமேடு, மாந்தை ஆகிய நகரங்கள் உரோம வர்த்தகத்தில் இணைந்திருந்ததை மேலும் உறுதி செய்வனவாக அமைந்
() 39 வரலாற்றுக் காலம் 1

Page 66
திருந்தன. 1984இல் மேலும் எவ் (F), ஜீ (G), ஏச் (H), ஐ (1), ஜெ (), கெ (K), எல் (L), எம் (M), என் (N) என்ற ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு மாந்தையின் கலாசாரப் பாரம்பரியம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இவை மேலும், மாந்தையின் விஸ்தீரணம் பற்றியும் அக்காலச் சர்வதேச வர்த்தகத்தில் அது பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்காட்டின. இவ்வாய்வுகளின் மூலமாக மாந்தை நகரின் விஸ்தீரணம் 48 கெக்ரர் என இனங்காணப்பட்டது. அத்துடன் வரலாற்றுக் காலத்தில் உரோமருடனும், தென்னிந்தியாவுடனும் மாந்தை கொண்டிருந்த தொடர்பு மேலும் உறுதிப்படுத்தப் பட்டதோடு கி. பி. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 8ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிற் பேர்ஷியாவுடன் இத் துறைமுகப் பட்டினங் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டும் மட்பாண்டங்களுங் கிடைத்தன. இதனை இக்கால இலக்கியாதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
மாந்தையின் தொல்லியற் பாரம்பரியம் மாந்தை தொட்டுப் பூநகரிப் பகுதிவரை காணப்படுவதைப் புஷ்பரத்தினத்தினால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.69 அண்மைக்காலங்களிற் பெருநிலப் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளில் இது ஒரு  ைமற்கல்லாக அமைகின்றது என்றால் மிகையாகாது. ஒரு வகையில் இத்தகைய ஆய்வு விமலா பேக்லே முன்னர் பொம் பரிப்பில் வாழ்ந்த மக்கள் வடக்கே கந்தரோடையுடன் மாந்தை, பூநகரி வழியாகத் தொடர்பு கொண்டிருந்தனர் என ஆரூடம் கூறியதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. பூநகரிப்பகுதி யிற் கல்முனையிலிருந்து அரசபுரம் வரை அதாவது கல்முனை, மண்ணித்தலை, வினாசியோடை, கெளதாரிமுனை, பரமன் கிராய், மட்டுவில் நாடு, நல்லூர், தியாகம், விழாத்திக்காடு, பள்ளிக்குடா, தெனிவரை ஆகிய இடங்களில் இடைக்கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக்காலம் ஆகிய காலப் பகுதி களுக்குரிய தொல்லியற் சின்னங்களை இவர் கண்டுபிடித்துள் ளார். இப்பண்பாட்டிற்குரிய முத்திரையாக விளங்கும் கறுப் புச் சிவப்புநிற மட்பாண்டங்கள் வெட்டுக்காடு, மண்ணித்தலை ஆகிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியும்
யாழ். - தொன்மை வரலாறு 1oo O

மணற்பிரதேசமாகவுள்ள பகுதியாக விளங்குவதால் மாந்தை, ஆனைக்கோட்டை, பொம்பரிப்புப் போன்று நீளக்கிடத்தி அடக் கஞ் செய்தல், தாழிகளில் அடக்கஞ் செய்தல் ஆகியன இங்குங் காணப்பட்டிருக்கலாம். கறுப்புச் சிவப்பு நிற மட் பாண்டங்களோடு உரோம மட்பாண்டங்கள், கறுப்பு, சிவப்பு, நரைநிற மட்பாண்டங்கள், மண்விளக்குகள், சுடுமண் பாவைகள், கொழு, கத்தி, இரும்பினாலான மீன்பிடித் தூண்டில்கள், பல்வேறு நிறங்களிலமைந்த மணிவகைகள், கைவளையல்கள், எலும்பினாற் செய்யப்பட்ட கழுத்து மாலைகள் ஆகியனவும் இம்மேலாய்வின்போது இங்கே கிடைத்துள்ளன. இத்தகைய சான்றுகளில் இரும்பினாலான வேலொன்று கிடைத்தமையுங் குறிப்பிடத்தக்கது. இவற்றோடு இப்பகுதியின் பழமையை எடுத்துக் காட்டும் பிற சின்னங்களாக ஈழத்தின் மிகப்பழைய நாணயங்களான அச்சுக்குத்திய நாணயங்கள், இலட்சுமி நாண யங்கள் ஆகியன மண்ணித்தலை, வெட்டுக்காடு ஆகிய இடங் களிற் கிடைத்துள்ளன. இதே இடங்களிற் சந்தரோடை, மாந்தை போன்று இப்பகுதியும் உரோமருடன் கொண்டிருந்த தொடர்பின் எச்சமாக விளங்கும் உரோம நாணயங்கள், ரவுலெற்றெற் மட் பாண் டங்க ள், அரிற்றையின் மட் பாண்டங்கள், உரோம மதுச் சாடிகள் ஆகியனவுங் கிடைத் துள்ளன. பள்ளிக்குடாவில் முழுமையான உரோம மதுச்சாடி ஒன்று கிடைத்துள்ளது (படம் 37). இவற்றைவிடக் கல்முனை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் அரேபிய, சீன நாணயங்கள் கிடைத்தமையுங் குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வின்போது குறிப்பாக ஈழவூரிலுள்ள கிராஞ்சியிற் காணப்பட்ட உறைகிணறு பற்றியுங் குறிப்பிடுவது அவசியமா கின்றது. வட்டமான சுடுமண்ணினாலான வளைவுகளிலமைந்த வையே இவையாகும். மணற் பிரதேசங்களில் இத்தகைய கிணறுகள் பாவனையில் இருந்தன. இவ்விடத்திற் கிணற்றிற்குப் பயன்படுத்தப்பட்ட வட்டமான பல்வேறு சுடுமண் வளைவுகள் அடிப்பகுதியிலும், மேற் பகுதியில் நட்சத்திர வடிவிலமைந்த சுடுமண்ணினாலான வளைவுங் காணப்பட்டதாகக் கூறப் படுகின்றது. உறைகிணறுகள் மாந்தையிலுங் காணப்பட்டன். குறிப்பாகச் சண்முகநாதன் 1950இல் மேற்கொண்ட அகழ்வின்
() 1o 1 வரலாற்றுக் காலம் 1

Page 67
போது பானை வடிவிலமைந்த இக்கிணறுகளை இனங்கண்டு கொண்டுள்ளமை ஈண்டு அவதானிக்கத்தக்கது. வட்டவடிவி லுள்ள சுடுமண் வளைவுகளையுடைய கிணறுகள் வடக்கே வல்லிபுரத்திலும், கிழக்கே முல்லைத்தீவிலும் இனங்காணப் பட்டன. வல்லிபுரத்தில் மேலாய்வின்போது நம்மால் இனங் காணப்பட்ட இவ்வுறைகிணறு சுமார் மூன்று அடி விட்ட முடையது.70 முல்லைத்தீவிற் கிடைத்த உறைகிணறு பற்றிப் பாக்கர் குறிப்பிட்டு இதனுள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்கள் காணப்பட்டதையும் எடுத்துக்காட்டியுள்ளமை நோக்கற்பாலது.71 இந்நாணய வகை முன்னர் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இத்தகைய நாணய வகைகளிலொன்று குடத்தனையிலும் ஆ. தேவராசனாற் கண்டெடுக்கப்பட்டது.72 பூநகரி, மாந்தைப் பகுதிகளிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி. மு. 3 ஆம் நூற்றாண்டுகட்கு முன்னரே இவை வழக்கில் வந்துவிட்டன என ஆராய்ச்சியாளர் கருதுவதாலும், உறைகிணறுகள் தமிழ் நாட்டிற் கிறிஸ்தாப்த காலத்தை அண்டிப் பயன்பாட்டிற்கு வந்ததற்கான தடயங்கள் காணப்படுவதாலும், ஈழத்திற் காணப்படும் இத்தகைய உறை கிணறுகள் கிறிஸ்தாப்த காலத்திற்குரியன எனலாம்.
இவை எல்லாவற்றையும் விடப் பூநகரிப் பகுதியிற் கிடைத்த தொல்லியற் சின்னங்களில் முக்கியமானவை பிராமி வரிவடிவத்துடன் காணப்பட்ட மட்பாண்ட ஒடுகளாகும். இத்தகைய ஒடுகளிற் பிராமி வரிவடிவம் வழக்கில் வருவதற்கு முன்னரே இங்கு பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய சித்திர வடிவிலமைந்த மட்பாண்டக் குறியீடுகள் கிடைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது (படம் 38). இத்தகைய குறியீடுகள், பிராமி
வரிவடிவங்கள் ஆகியன பெருங்கற்காலக் கலாசார மக்களே வர லாற்றுக்கால நாகரிகத்தினையும் வளர்த்தெடுத்தனர் என்பதை மேலும் உறுதி செய்கின்றன. இவற்றைவிட இம்மட்பாண்டங் களிலே காணப்பட்டுள்ள பிராமி வரிவடிவங்களுந் தனிச் சிறப்பு வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. வடபகுதியிற் கிடைத்த பிராமி வரிவடிவம் பொறித்த மட்பாண்ட ஒடு ஒன்று கந்தரோடையிற் கிடைத்தது பற்றி ஏற்கனவே குறிப் பிட்டிருந்தோம். இவ்வோடு ரவுலெற்றெற் மட்பாண்டமாகும்.
யாழ். - தொன்மை வரலாறு 1O2

இதன் வாக்கியம் பெளத்த மதத்திற்குரிய பிராகிருத மொழியில் அமைந்திருந்ததுங் குறிப்பிடத்தக்கது. ஆனாற் பூநகரி மேலாய் வின்போது கிடைத்த பிராமி வரிவடிவ எழுத்துகளோ எனில் ஈழத்தில் வழக்கிலிருந்த பிராமி வரிவடிவம் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் புதிய சிந்தனைகளைத் தத்துள்ளன.
ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்த்தோர் இவற்றுள் இருவித படைகளை இனங்கண்டுள்ளனர். இது பற்றி முதல் அத்தியாயத்திற் குறிப்பிட்டிருந்தோம். பொது வாக இப்பிராமி வரிவடிவம், பெளத்தம் கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே இங்கு புகுந்தபோது பெளத்த் மதத்திற்கு அளிக்கப்பட்ட தானங்களை அதன் மொழியாகிய பிரா கிருத மொழியில் எழுதவே பெளத்தத்துடன் இங்கு அறி முகமானது எனக் கொள்ளப்பட்டாலுங்கூட, இவ்வரிவடிவ அமைப்பை ஆராய்ந்தோர் இதற்கு முன்னர் ஒரு வரிவடிவம் இங்கு காணப்பட்டதென்றுங் கூறியுள்ளனர். இதுதான் 'திராவிடி வரிவடிவமாகும். தமிழகம், ஈழம் ஆகிய பகுதி களிற் பெளத்தத்துடன் இணைந்த வடஇந்தியப் பிராமி வரி வடிவம் வரமுன் வழக்கிலிருந்தது இவ்வடிவமாகும். இவ் வடிவமே தமிழகத்திலுள்ள ஈழத்தினை ஒத்த பழைமை வாய்ந்த மிகப்பழைய கல்வெட்டுகளான பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. தமிழகப் பிராமி எழுத்துகளான ஈ, ள, ம, அ போன்ற எழுத்துகள் பூநகரி மாவட்டத்திலுள்ள இம்மட்பாண்டங்களிற் காணப்படுவதோடு தமிழுக்குரிய சிறப் பாண வடிவங்களான ற, ன, ழ, ள, ல போன்றனவும் இவற்றுட் காணப்படுவது மற்றொரு சிறப்பான அம்சமாகும். பரமன் கிராயிற் கிடைத்த பிராமி வரிவடிவத்திலமைந்த மட்பாண்ட ஒட்டின் வாசகம் “வேளான்" என இனங்காணப்பட்டுள்ளது (படம் 39). இதன் காலம் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாகும். இது சங்ககாலக் குறுநில மன்னரைக் குறிக்கும் 'வேள்” என்ற பதத்தின் வழிவந்த தாகும். வேள் என்ற பதம் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியபுளியங்குளக் கல்வெட்டில் மட்டுமன்றி ஈழத்தின் பிற பகுதிகளிலுங் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.78 இவ்வாறே மண்ணித்தலையிற் கிடைத்த மட்பாண்ட ஒட்டிலும் நமது
1O3 வரலாற்றுக் காலம் 1

Page 68
நாட்டின் பழைய பெயரான ஈழத்தைக் குறிக்கும் இரு வாசகங்கள் உள. இவற்றின் முதலாவது வாசகம் * ஈல " அல்லது “ஈலா" என அமைய இரண்டாவது வாசகம் “ ஈழ " என இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளது?4 (படம் 40). பூநகரியிற் கிடைத்த தொல்லியற் சான்றுகள் ஈழத்தின் வடகிழக்கே வல்லிபுரம் தொட்டு முல்லைத்தீவு at 60g திட்டமிட்டு மேலாய்வு செய்யப்ப்ட வேண்டுமென்பதை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன எனலாம்.
எனவே மேற்கூறிய மேலாய்வு - அகழ்வாய்வு ஆகியன வற்றின்போது கிடைத்த தொல்லியற் சான்றுகளை நோக்கு கின்றபோது வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே வட பகுதி பெற்றிருந்த நாகரிகச் சிறப்புத் துலாம்பரமாகின்றது. தமிழகத்தோடும், உரோம நாட்டோடும் இது கொண்டிருந்த இறுக்கமான பிணைப்பு இத்தகைய நாகரிக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது. வாணிப வளர்ச்சி விவசாயத் தளத்திலிருந்த பெருங்கற்காலச் சமூகத்தின் பொருளாதார அமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவந்ததோடு நகர நாகரிக வளர்ச்சிக்கும் இதனை இட்டுச் சென்றது. பெளத்தத்தின் வருகையும் இத்தகைய மாற்றத்தினை மேலுந் துரிதப்படுத்தி யது. பெளத்தம் ஈழத்திற் கால்கொண்ட பின்னணியில் வடபகுதியும் இதனுடன் இணைந்து காணப்படுவது மேற் கூறிய கருத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது. தமிழக இலக் கியக் குறிப்புகள், இப்பகுதியிற் கிடைத்த தொல்லியற் சின் னங்கள், பிராமிக் கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியன இங்கே காணப்பட்ட அரசியல், பொருளாதார, கலாசார நடவடிக்கைகளை மேலெழுந்த வாரியிலாவது அறிந்து கொள்ளு வதற்கு உதவியுள்ளன.
அநுராதபுரத்தில் அரசாண்ட அரசர்களின் நடவடிக்கை களை அறிவதற்கு உள்ள சான்றுகள் போன்று வடபகுதி அரசர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுவதற்குரிய சான்றுகள் பாளி நூல்களிற் காணப்படாதவிடத்தும் இங்குள்ள தொல்லியற் சின்னங்கள் நாட்டின் பிற பகுதிகளைப் போல் வடபகுதியுங் கலாசார வளர்ச்சி கொண்ட பகுதியாகக் காணப்பட்டதையே எடுத்துக்காட்டுகின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 1o4 ஜூ

கல்வெட்டுகள்
புத்தரது விஜயத்திற் கூறப்படும் நாக அரசர்கள், நாக இளவரசியாகிய பீலிவளை ஆகியோர் பற்றி வருங் குறிப்புகள் ஆகியன ஐதீகங்களாக இருந்தாலுங்கூட இப்பகுதியில் நிலவிய அரசமைப்புப் பற்றிய செய்தியையே இவை குறிக்கின்றன என்பதை ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இக்கல் வெட்டுகள் பாளிநால்கள் தருஞ் செய்திகளுக்கு மாறான ஒரு அரசியல் அமைப்பையே எடுத்துக்காட்டுகின்றன. பாளி நூல்கள் அநுராதபுரத்தினை, மையமாகக் கொண்டு ஈழம் முழுவதும் ஒற்றையாட்சி அமைப்பிலே நிருவகிக்கப்பட்டதைக் கூறுகின்றன. தேவநம்பியதீஸன் கால ட்சிக்கும் கிறிஸ்தாப்தத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலுள்ள இக்கல்வெட்டுகள் நாடெங் கணும் பல சிற்றரசுகள் காணப்பட்டதை மட்டுமன்றி நாக அரசர்கள் அரசாண்டதையும் எடுத்தியம்புகின்றன. இத்தகைய சிற்றரசுகள் பெருமளவுக்குச் சுதந்திரமாகவே இயங்கின. கிறிஸ்தாப்தத்தினை அண்டியுள்ள காலப் பகுதியிலேதான் இவை யாவும் வலிமையுள்ள பிராந்திய அரசுகளின் செல் வாக்குக்கு உட்பட்டன எனவும் இக்கல்வெட்டுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய அரச அமைப்பே தமிழகத்திலுஞ் சமகாலத்திற் காணப்பட்டமை நோக்கற்பாலது. ஈழத்திற் காணப்பட்ட இவ்வமைப்புப் பற்றிக் குணவர்த்தனா ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார்.75 இக்கட்டுரையில் இவர் நாடெங்கணுமுள்ள 269 இடங்களிலுள்ள பிராமிக் கல்வெட்டு களை ஆராய்ந்துள்ளார். இக்கல்வெட்டுகளில் இக்காலக் குறு நில மன்னர்கள் ரஜ, கமணி போன்ற விருதுகளைச் சூடியிருந் தமையையும் இவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஈழத்தின் வட பகுதியைப் பொறுத்தமட்டில் இத்தகைய கல்வெட்டுகள் காணப் படும் இடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. காரணம் கருங்கற்குகை அமைப்பு உடைய இடங்கள்தான் இத்தகைய கல்வெட்டுகளை அமைப்பதற்கு உகந்த இடங்களாகக் காணப் பட்டன. வட பகுதியிலோ எனில் இத்தகைய கருங்கற் பாறைகள் கொண்ட பகுதிகள் மிகமிக அரிதே. வவுனியா மாவட்டத்திலேதான் இத்தகைய பாறைகள் உண்டு.
O 105 வரலாற்றுக் காலம் 1

Page 69
வவுனியா மாவட்டத்தில் மகாகச்சற்கொடி, எருப்பொத் தான, பெரியபுளியங்குளம், வெடிக்கனாரிமலை ஆகிய பகுதி களில் இவை காணப்படுகின்றன.78 இவற்றுட் பெரிய புளியங் குளத்திலுள்ள முப்பத்தைந்து கல்வெட்டுகளில் நான்கு கல் வெட்டுகள் இப்பகுதியிற் காணப்பட்ட சிற்றரசு பற்றிய சான்றுகளைத் தருகின்றன. இவற்றின் வரி வடிவத்தினை ஆராய்ந்தோர் இவை ஈழத்தில் வளர்ச்சி பெற்ற பிராமி வரிவடிவத்தின் தொடக்க காலமாகிய கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தவை என இனங்கண்டு கொள்வதால் ஏறக்குறைய இவை தேவநம்பியதீஸனது ஆட்சிக் காலத்துக்குரியன எனக் கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்ட நான்கு கல்வெட்டுகளும் ரஜ உதி பற்றியும் அவன் மனைவி " அபி அனுரதி " பற்றியுங் குறிப்பிடுகின்றன. ராஜா என்ற பதந்தான் இககல்வெட்டுகளில் * ரஜ " எனக் காணப்படு கின்றமை அவதானிக்கத்தக்கது. ராஜா உதியின் வம்சம் பற்றி இவை எதுவுங் கூறாவிட்டாலுங்கூட, அபி அனுரதி யின் வம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டில் வரும் அபி " என்ற பதத்தினைப் பற்றிக் கருத்துத் தெரி வித்த பரணவித்தானா போன்றோர் இதனை இளவரசியைக் குறிக்குஞ் சொல் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.77 ஆனால் நாட்டின் பிற பகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகளை நோக்கு கின்தபோது இதனையும் ஒரு விருதுப் பெயராகவே கொள்ள லாம். அவ்வாறாயின் அவ்வை ", " ஐயை " போன்ற பதங் களின் மருவுதலாகவே இது அமையலாம்.78 இக்கல்வெட்டு களில் அநுரதியின் தகப்பனாக ரஜநாக என்பவனுடன், அவளின் கணவனான உதியும் குறிப்பிடப்படுகின்றான். அத் துடன் இக்குகைத் தானத்தை வழங்கியவர்களாக உதியும் அவனது மனைவி அபி அனுரதியும் இதில் விளிக்கப்படுகின் றார்கள். ஆகவே நாட்டின் ஏனைய பகுதிகளிற் காணப் பட்டது போன்று நாகதீபப் பகுதியிலும் நாகஅரசு காணப் பட்டதை இவை எடுத்துக்காட்டுகின்றன. இப்பகுதியில் மேலும் பல கல்வெட்டுகள் கிடைத்திருந்தால் இதனைப் போன்று மேலும் பல சிற்றரசுகள் இங்கு நிலவியிருந்ததை எடுத்துக் காட்டியிருக்கும்.
யாழ், - தொன்மை வரலாறு 106 ()

நாட்டின் பிற பகுதிகளிலும் * நாக " என்ற பெயருடன் காணப்படுங் கல்வெட்டுச் சான்றுகள் நாகச் சிற்றரசுகள் பற்றிக் குறிப்பதும் அவதானிக்கத்தக்கது. இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். உதாரணமாக மொனராகலை மாவட்டத் திலுள்ள கொல்லதேனியா என்ற இடத்தில் உள்ள பிராமிக் கல்வெட்டொன்று இப்பகுதியிலுள்ள சோன " பெளத்த சங்கத்திற்கு அளித்த குகைத்தானத்தினைக் கூறுகின் றது.79 இச் சோன " என்ற பெண் "பருமகள் " என்ற விருதினைப் பெற்றிருந்தாள். இவள் இத்தகைய தானத்தினை அயநாக ( ஆய் நாக ) என்பவன் அரசாளும்போது அளித்த தாக இக்கல்வெட்டுக் கூறுகின்றது. இங்கே குறிப்பிடப்படும் * அய என்பது குறுநில மன்ன்ராகிய ஆய் வம்சத்தினரையே குறித்து நின்றது.80 இதனால் ஆய் வம்சத்தினைச் சேர்ந் தோர் " நாக " என்ற பெயரைச் சூடியிருந்தனர் என்பது
என்ற பெண்,
புலனாகின்றது. இக்கல்வெட்டின் வரிவடிவங்கூட வவுனியா மாவட்டத்தில் உள்ள பிராமி வரிவடிவத்தின் காலத்தினை ஒத்தே காணப்படுவது அவதானிக்கத்தக்கது. இவ்வாறே கதிர்காமச் சத்திரிய வம்சத்தவரான பத்துச் சகோதரர் " சந்ததியினர் வெளியிட்ட கல்வெட்டுகள் அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிற் காணப் படுகின்றன. இத்தகைய கல்வெட்டுகளிற் சிலர் உதி * என்ற பெயரைச் சூடி இருந்ததோடு, இவ்வம்சத்தின் இளைய வன் உபரஜ நாக " என்ற பெயரையுஞ் குடியிருந்தமையை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இவனது கல்வெட்டு எடுத்துக் காட்டுகின்றது.81 இத்தகைய பின்னணியில் நோக்கும்போது வவுனியா மாவட்டத்திலுள்ள நாக அரசனின் வழித் தோன்ற லாகிய அனுரதி பற்றிய செய்தி இக்காலத்தில் இப்பகுதியிற் காணப்பட்ட ஒரு அரசையே எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.
நாடெங்கணுமுள்ள பிற கல்வெட்டுகளில் உதி என்ற பெயர் கூட உதி, உதிய என்ற வடிவங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கல்வெட்டுகள் • உதி " என்ற பெயரைத் தாங்கி யோர் சிற்றரசர்களாகக் காணப்பட்டதையும் எடுத்துக் காட்டு கின்றமை அவதானிக்கத்தக்கது. இச்சொல் ஆரம்பத்தில் வம் சத்தைக் குறித்து நின்று காலகதியில் இயற்பெயராக மருவிய
1o7 வரலாற்றுக் காலம் 1

Page 70
தெனச் சங்க நூல்களிற் காணப்படும் பெயர்களை ஆராய்ந் தோரி கூறுகின்றனர்.82 இது ஆரம்பத்தில் வம்சப் பெயராக விளங்கியதைப் பின்வரும் பாடல் உரைக்கின்றது.
* மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேள்மான் நல்லினி ஈன்றமகன் ""
சேரமன்னனின் பெயராகிய "உதியன் பெருஞ்சேரலாதன்" என்ற பெயரே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளமை நோக்கற் பாலது.83 ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் நாக என்ற பெயரை விட ‘உதி என்ற பெயரைச் சூடியோர் பொதுவாகச் சிற்றரசர்கள், பருவகர்கள் எனப்பட்ட நிருவாகிகளாகக் காணப் பட்டமை தெரிகின்றது. 84 எனினும் பெரியகுளக் கல்வெட்டில் உதியின் வம்சத்தினை விட நாக அரசனின் வம்சமே முக்கியம் பெற்றதொன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. உதியின் வம்ச வரலாறு இதிற் குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமன்றி நாக அரசனுக்கு அடுத்ததாகவே "உதி" இக்கல்வெட்டிற் கூறப்படுவ தும் ஈண்டு நோக்கற்பாலது. அபி அனுரதி பற்றி இது குறிப் பிடும்போது இவளை உதியின் மனைவி என்று கூறுவதற்குப் பதிலாக இவள் நாக அரசனின் மகளும் உதியின் மனைவியும் என்றே விளிக்கப்படுகின்றாள். இவ்வாறு நாக மன்னன் முன்னி லைப் படுத்தப்பட்டமை இப்பகுதியில் நாக அரசர்கள் செல்வாக்
குடன் விளங்கியமையாலேயே எனலாம்.
வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளக் கல்
வெட்டுகளுக்கு மற்றுமோர் சிறப்புண்டு. இவற்றில் இரண்டில் தமிழ் வணிகனான விசாகன் பற்றிய குறிப்புண்டு (படம் 4).85 முத7வது கல்வெட்டிலே தமிழ் வணிகனாகிய விசாகனின் குகை எனப் பொருள் தரும் "தமேட வணிஜ ஹபதி விசகஹ லினே" என்ற வாசகமும், அடுத் 5 கல்வெட்டில் தமிழ் வணிகனான இறகபதி விசாகனினால் குகைக்கு) அமைக்கப்பட்ட படிக்கட்டுகள்
எனப் பொருள்தரு: "தமே. வணிஜ ஹபதி விசசஹ செனி
ஃமே" என்ற வாசகமும் உண்டு. 'தமேட" என்பது தமிழரைக் குறிக்கும் "தமாகும். பாளி இலக்கியங்கள் தமிழகத்தில் இருந்து வந்த தமிழ்ப் படை எடுப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்
யாழ். - தொன்மை வரலாறு 108

லாம் "தமிள’ என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளதால் இப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் தமேட" என்ற பதமும் ‘தமிள" என்ற பதமும் ஒன்றே எனலாம். இதனால் இப்பதம் தமிழ்நாட்டவரைக் குறித்தாலுங்கூட வவுனியாப் பகுதியில் தமி ழிற் பேசக்கூடிய, தொடர்பு கொள்ளக்கூடிய மக்கட் கூட்டம் இருந்ததையே இவை எடுத்துக் காட்டுகின்றன.86 மேற்கூறிய கருத்தினையே இங்குள்ள கல்வெட்டுகளிற் காணப்படும் பிற
பதங்களும் உறுதி செய்கின்றன.
இவற்றில் ஒன்றுதான் வேள்” என்ற பதமாகும். பெரிய புளியங்குளக் கல்வெட்டில் இரண்டு இடங்களில் இது காணப் படுகின்றது.87 முதலாவது கல்வெட்டிற் பருமகன் நுகுய என்ற வேளின் புதல்வர்களாகிய பருமகன், சிகறமலு, நுகுயமலு ஆகி யோர் குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது கல்வெட்டிற் குதிரை களின் அத்தியட்சகனான வேளின் மனைவியாகிய திஸ்வின் குகை என்ற வாசகம் காணப்படுகின்றது. ஈழத்துப் பிராமிக் கல்வெட்டு கsளப் பதிப்பித்த பரணவித்தானா வேளில் உள்ள “ள" என்ற பிராமி எழுத்தைத் தவறாக “ளு” என வாசித்து இதனை “வேளு" எனக் கொண்டார். இவரின் இவ் வாசிப்பைத் த்மிழகத் திற் கிடைத்த பிராமிச் சாசனங்கள் உறுதி செய்யவில்லை. இச் சான்றுகள் இத்தகைய பிராமி எழுத்தை "ஸ்" என வாசித்தலே சரியானதென எடுத்துக் காட்டியுள்னன.88 இவ்வாறே “வேள்” என்ற இனக் குழுவைக் குறிக்கும் பிராமிச் சாசனங்கள் ஈழத்தின் பிறபகுதிகளிலுங் கிடைத்துள்ளன. தமிழகத்தில் “வேள்', ‘பரதர்" போன்றோர் தென்பாண்டி நாட்டில் வாழ்ந்தவர்களாவர். இவர் களில் வேள்கள் விவசாயத்திற் கவனஞ்செலுத்த, பரதர் / பரதவர் குதிரை வியாபாரம், கடற்றொழில் முதலியவற்றிலுங் கவனஞ் செலுத்தினர். இத்தகைய ‘பரதவர் ஈழத்தின் பல பகுதிகளி லும் வாழ்ந்தது போன்று வவுனியா மாவட்டத்திலும் வாழ்ந் ததை இங்குள்ள பிராமிச் சாசனங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இச்சாசனங்களிற் 'பட’, ‘பரத போன்ற பதங்கள் காணப்படு கின்றன. இவற்றை ஆராய்ந்த பரணவித்தானா போன்றோர் "தலைவன்’ என்ற விருதுப் பெயராகவே இவை இக்கல்வெட்டு கரிேல் இடம்பெற்றுள்ளன என எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆனால் இவற்றைத் தமிழகப் பின்னணியில் நோக்கும்போது
O9 வரலாற்றுக் காலம் 1

Page 71
தலைவனை விடத் தமிழகத்திற் காணப்பட்ட இனக்குழுவே இங்கே குறிக்கப்படுகின்றது என விளங்கிக் கொள்வதே ஏற் புடையதாகின்றது.89
இங்குள்ள கல்வெட்டுகளிற் காணப்படும் இன்னொரு தமிழ்ப் பதந்தான் "பருமக" என்பதாகும்.90 கிறிஸ்தாப்தத்திற்கு முன்ன ருள்ள பிராமிக் கல்வெட்டுகளில் இது காணப்படுகின்றது. இது காணப்படும் இடங்களை நோக்கும்போது நாட்டினது நிருவாகத் தின் முதுகெலும்ப்ாக விளங்கிய செல்வச் செழிப்புடைய ஒரு வகுப்பினர் சூடியிருந்த விருதே இஃதென்பது புலனாகின்றது. இப்பதத்துடன் இதன் பெண்பால் வடிவமாகிய ‘பருமகள்" என்ற பதம் பிராமிக் கல்வெட்டுகளில் எல்லாமாக ஆறு இடங்களிற் காணப்படுகின்றது. இதனைப் பரணவித்தானா தவறுதலாக ‘பருமகளு" என வாசித்துள்ளார். வேளை, வேளு என வாசித் தது போன்றே பருமகளைப் பருமகளு என வாசித்துள்ளார். இப்பதத்தின் பொருள் பற்றியும் பரணவித்தானா கருத்து வெளியிடுகையில் இது ஒரு பழைய சிங்களச் சொல் எனவும் வடமொழியிலுள்ள "பிரமுக' என்பதன் வழிவந்த சொல்லென் றுங் கூறியதோடு பாளிமொழிச் சொற்களான பமுக்கோ, பாமொக்கோ ஆகியனவற்றுக்கும் இதற்கும் தொடர்புண்டு எனவுங் கூறினார். தமிழிலுள்ள "பெருமகன்" என்ற வடிவம் இச்சொல் வழிப்பிறந்ததே என்பதும் பரணவித்தானாவின் கருத்தாகும்.
ஆனால் இவ்வடிவத்தினை ஒலியமைப்பிலும் உருவ அமைப் பிலும் ஆராய்ந்து பார்க்கும்போது பரணவித்தானாவின் கருத்து ஏற்புடையதாக அமையவில்லை. ஏனெனிற் சிங்களச் சொல் லான இப் "பருமக’ வைக் கொண்டு வடமொழிப் பிரமுக வழியே இது பிறந்தது எனக் கொண்டாற் "பிரமுக வில் வரும் பிர' என்பது 'பா' ஆகச் சிங்களமொழியில் திரியுமே ஒழியப் "பரு” ஆகத் திரியமாட்டாது. எவ்விதமெனில் வடமொழியில் உள்ள
*பிரியா", "சந்திரா" என்பன மருவும்போது "பியா", "சண்ட" என வருவதுபோல் ஆகும். இதனாற் சிங்கள மொழியிலுள்ள *பமொக்", பாளிமொழியிலுள்ள "பாமொக்கோ", "பமுக்கோ"
ஆகியவற்றைப் "பிரமுக வழிப்பிறந்தனவாகவே கொள்ளலாம். ானவே தமிழ்மொழியில் உள்ள "பிரமுகன்" என்ற பதந்தான்'
யாழ். - தொன்மை வரலாறு 11o O

வடமொழியிலுள்ள "பிரமுக வழிப்பிறந்த சொல்லாகும். தமி ழிலே வடமொழிப் பதமாகிய பிரமுக வழிவந்த "பிரமுகன்" என்ற பதங் காணப்படுவதால் இதற்கும் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படும் "பருமக" என்ற பதத்திற்கும் எதுவித தொடர்புமில்லை எனலாம். வேறு எந்த மொழிச் சொல்லில் இருந்தும் மருவாத பழைய தமிழ் வடிவமே இப்பதமாகும் என்பதனை இப்பதத்தினைப் பிரித்து ஆராயும்போது தெளிவா கின்றது. இதனை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். அவையாவன பரு என்ற பகுதியுடன் மக அல்லது மகன் விகுதியை இணைத் தால் இது பெருமகன் அல்லது பருமகன் எனப் புணரும். அல்லா விட்டால் பெரு என்ற விகுதியுடன் மகன் என்ற விகுதியை இணைத்தாலும் இது பெருமகன் எனப் புணரும். இப்பெருமகன் அல்லது பருமகனே இப்பிராமிக் கல்வெட்டுகளிற் "பருமக' என இடம்பெற்றுள்ளது. இவ்விதமின்றி இப் பிராமிக் கல்வெட்டுக ளில் இடம் பெற்றுள்ள "பருமக" என்ற வடிவம் பெருமகன், பருமகன் ஆகிய வடிவங்களின் மூலவடிவமாகவும் இருந்திருக் கலாம். இவ்வாறாயின் காலத்தால் முந்திய "பருமக" வடிவமே இப்பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது எனலாம். இதன் பின்னர் வந்த பெருமகன், பருமகன் வடிவங்களே பிற் பட்ட இலக்கியங்களில் இடம் பெற்றன எனவுங் கொள்ளலாம். இப்பெருமகனின் ஏனைய மருவுதல்களே பெம்மான், பெருமான், பெருமாள், பெருமக்கள் ஆகும். இதனால் இப்பருமகவின் பெண்பால் வடிவமே "பருமகள்" எனலாம். இது வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடிக்கனாரி மலையிலுள்ள பிராமிக்
கல்வெட்டிற் காணப்படுகின்றது.9
வவுனியா மாவட்டத்திற் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன் னர், அதுவும் தேவநம்பியதீஸனின் சமகாலமளவில் நிலைத் திருந்த நாகச் சிற்றரசு பற்றிய சான்றையே பெரிய புளியங்குளக் கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது. இதனை ஈழத்தின் பிறபகுதி களிற் காணப்படும் நாகச் சிற்றரசர்கள் பற்றிக் கிடைக்குங் கல் வெட்டுகளோடு ஒப்பிடும்போது ‘நாக" என்ற பெயரைத் தாங் கிய சிற்றரசர்கள் வடபகுதியில் மட்டுமன்றி நாட்டின் பிற பகுதிகளிலுங் காணப்பட்டமை புலனாகின்றது. இதனாற் பாளி நூல்களிலும், தமிழ் நூல்களிலும் நாக அரசர்கள் பற்றிக்
1 1 1 வரலாற்றுக் காலம்

Page 72
காணப்படும் ஐதீகங்கள் ஒரு வரலாற்றுக் கருவூலத்தையே எடுத் தியம்புகின்றன என்பது உறுதியாகின்றது. நாக அரசர்கள் மட்டு மன்றிச் சங்ககாலத் தமிழகத்தைப் போன்று “வேள்” போன்ற குறுநில மன்னர்களுங் காணப்பட்டதை வவுனியா மாவட்டத்தி லுள்ள பிராமிச் சாசனம் மட்டுமன்றிப் பூநகரிப் பகுதியிற் கண் டெடுக்கப்பட்ட வேளின் மருவுதலாகிய "வேளான்” என்ற வாசக மும் எடுத்துக் காட்டுகின்றது.
*வேள்” எனப்பட்டோர் சங்ககாலக் குறுநில மன்னர்களே என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாக, வேள் போன்ற சிற்றரசர்களின் நிருவாகத்திற் பங்கு கொண் டோரே "பருமக" என இக்கல்வெட்டுகளில் விளிக்கப்படுகின் றனர். தமிழ் வடிவங்களான பருமகன், பெருமகன் ஆகியன வற்றின் மருவுதலாக அல்லது பழைய தமிழ் வடிவமாக இது காணப்பட்டிருக்கலாமென்பதை இதன் அமைப்பும், பிற தமிழ் இலக்கியச் சான்றுகளும் உறுதி செய்கின்றன. இதன் பெண்பால் வடிவமே “பருமகள் ஆகும். பாண்டிநாட்டில் வாழ்ந்த ‘பரதர்" என்ற இனக் குழுவினர் ஈழத்தின் பல பகுதிக ளிலும் வாழ்ந்தது போன்று வடபகுதியிலும் வாழ்ந்ததை வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுகளிற் காணப் படும் பட" அல்லது ‘பரத" ஆகிய பதங்கள் உணர்த்துகின் றன. இவற்றுக்கு மெருகூட்டுவதாக இங்குள்ள கல்வெட்டு களிற் காணப்படுந் தமேட" என்ற பதம் இப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் காணப்பட்டதை மேலும் உறுதி செய் கின்றது. வவுனியா மாவட்டத்தைப் போன்று பூநகரிப் பகுதியி லுள்ள கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய (ஏறக்குறைய வவுனி யாவிலுள்ள பிராமிச் சாசனங்களின் காலத்தை ஒத்த) மட் பாண்டங்களில் உள்ள பிராமி வரிவடிவங்களிற் காணப்படும் , வேளான், ஈழ, ஈலா போன்ற வாசகங்கள் இப்பகுதியிலுந் தமிழ் வழக்கிலிருந்ததை இயம்புகின்றன.
வல்லிபுரப் பொற்சாசனம்
பாளி நூல்களில் அநுராதபுர மன்னர்கள் வடபகுதி|மீது
மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றிய சான்றுகள்
காணப்படாதவிடத்து 1936இல் வல்லிபுரத்திற் கண்டெடுக்கப்
யாழ், - தொன்மை வரலாறு 12 ஐ

(የእ
பட்ட ஒரு பொற்சாசனத்தின் குறிப்பைக்கொண்டு கி. பி. இரண் டாம் நூற்றாண்டில் வடபகுதி அநுராதபுர அரசின் அங்கமாக விளங்கியது என எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.92 இப்பொற் சாசனம் வல்லிபுரத்தின் விகாரை ஒன்றின் அத்திவாரத்தின் கீழ் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது. இவ்விகாரையின் மேற்பகுதிகள் யாவும் அழிந்து விட்டன. இதன் நீளம் 39.16" ஆகும். அகலம் 1" ஆகும். இதன் கனம் 694 கிரெயின் ஆகும். இதனை முதன் முதலிற் பதிப்பித்தவர் பரணவித்தானா ஆவர். பிராமி வரி வடிவத்தில் அமைந்த இதன் வாசகம் பின்வருமாறு அமைந்து உள்ளது (படம் 42).
1. ஸித்த மஹரஜ வஹயஹ ரஜெஹி அமெதெ
2. இஸிகிரயே நகதிவ புஜமெநி
3. படகர அத தெஹி பியகுகதிஸ்
4. விஹர கரிதே
இதற்கு இருவித விளக்கங்களைப் பரணவித்தானா தந்துள்ளார். -9 e S) sau Irau 6öf:
(அ) வசப மஹாராஜாவின் ஆட்சிக் காலத்தில் அவனின் அமைச்சனான இஸிகிரய நாகதீவை நிருவகிக்கும் போது படகர அத்தானாவில் பியகுகதிஸ் ஒரு விகா ரையை அமைத்தான்.
(ஆ) வசப மஹாராஜாவின் ஆட்சிக் காலத்தில் அவனின் அமைச்சனான இஸி கிரய நாகதீவை நிருவகிக்கும் போது படகர அத்தானாவில் பியகு கதிஸ் விகாரை கட்டப்பட்டது.
இப்பொற்சாசனத்தினை ஆராய்ந்த பரணவித்தானா இச் சாசனத்தின் வரிவடிவம் ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப் படுங் கல்வெட்டுகளிற் காணப்படும் வரிவடிவமே எனக் கூறி னாலும் இவ் வரிவடிவத் தில் உள்ள எழுத்துகளிற் பல வளைவுகளை அவ%ானித்த இவர் இத்தகைய வேறுபாடுகள் இாப்பதற்குக் காரணம் இச்சாசனம் பொன்னேட்டில் அமைய,
1 13 வரலாற்றுக் காலம் 1

Page 73
ஏனையவை கல்லில் அமைந்ததே எனவும் விளக்கமளித்துள் ளார். இதனால் இச்சாசனத்திற் கூறப்படும் மன்னன் இரண் டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே இருத்தல் வேண்டும் எனக் கொண்ட பரணவித்தானா இதிற் கூறப்பட்டுள்ள மன்ன னான "வஹ" என்பவனை அநுராதபுரத்தில் அரசாண்ட வசட மன்னனாக (கி. பி. 126 - 170) இனங்கண்டு கொண்டுள்ளார். அத்துடன் இச்சாசனம் பாளி நூல்கள் கூறும் நாகதீபம் அநுராதபுர மன்னனின் மந்திரியின் கீழ் நிருவகிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றது என்பதும் இவரது கருத்தாகும்.
புயங்கு தீப" என்பது பாளி நூல்களிற் புங்குடுதீவைக் குறிப்பதால் இவ்விகாரை புங்குடுதீவிலிருந்து வந்த திஸ்வி sær frib கட்டப்பட்டிருக்கலாம் அல்லது இத்தீவில் sD 6ir6mT பெளத்த பிக்குவின் பெயரால் இவ்விகாரைக்குப் ‘பியகுகதிஸ" விகாரை எனப் பெயரிட்டு இவ்விகாரையை இஸிகிரய என்ற மந்திரி கட்டியிருக்கலாம் எனவும் இவர் கூறியுள்ளமை அவ தானிக்கத்தக்கது. இச்சாசனத்தின் மொழி, நாட்டின் பிற கல்வெட்டுகளிற் காணப்படுவது போன்று பழைய சிங்கள மொழி எனக் கூறும் இவர் இச்சாசனம் இப்பகுதியிற் சிங்கள பெளத்தர து செல்வாக்கு நிலைத்ததை எடுத்துக்காட்டுகின்றது எனவும் வாதிட்டுள்ளார். அத்துடன் சகல சொற்களுக்குஞ் ஓங்கள மொழியினது மூலத்தைக் கற்பித்த பரணவித்தானா இதிற் காணப்படும் 'இஸிகிரய’ என்ற பதத்திற்கு மட்டும் வடமொழியிலோ, ஓங்கள மொழியிலோ இதன் மூலம் g;rr GðöT'_JL-frð sðé5 ஏற்றுக்கொண்டு இப்பதம் இந்நாட்டிற்குப் புறம்பானதொரு பதம் என்றும் இதற்குந் திராவிடப் பத மாதிய 'ராயர்" என்ற பதத்திற்குமிடையே ஒற்றுமையுண்டு என விளக்கியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இச்சாசனம் பற்றிப் பலர் ஆராய்ந்துள்ளனர். இவர்களில் தானியும் ஒருவராவார். இவர் ஒரு புகழ்பூத்த கல்வெட்டிய லாளராவர். இவரது கருத்துகளை வேலுப்பிள்ளை தொகுத்துத் தாம் இச்சாசனம்பற்றி எழுதிய கட்டுரையிற் தந்துள்ளார்.98 தானியின் முதலாவது கருத்து இதன் வரிவடிவம் சம்பந்த மானதாகும். இச்சாசனத்தை வெளியிட்ட பரணவித்தானா
யாழ். - தொன்மை வரலாறு 1 14

விற்கு இது பற்றிய ஐயம் இருந்துங்கூட வல்லிபுரத்திற் காணப்படும் வரிவடிவத்திலுள்ள நெளிவுகள், இது பொன் தகட்டில் எழுதப்பட்டதாலேதான் ஏற்பட்டது என்றதொரு விளக்கத்தினைக் கொடுத்துத் தப்பிக்கொண்டார். ஆனால் தானியோ எனில் ஈழத்திற் காணப்படும் பிற சாசனங்களை விட வல்லிபுரச் சாசனத்தின் வரிவடிவம் தனித்துவமானது என எடுத்துக்காட்டியுள்ளார். இதற்கும் ஆந்திர மாநிலத் தி ல் இசஷ்வாகு வமிச மன்னர் காலத்திற்குரிய அமராவதி நாகர் யுனி கொண்டா ஆகிய பெளத்த நிலையங்களில் உள்ள கல்வெட்டு களில் உள்ள வரிவடிவத்திற்குமிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமையை இவர் கண்டுள்ளார். பிரதானமாக இரு பகுதிகளிலும் எழுத்துகளின் தண்டுகளிற் கீழ்ப் பகுதிகளில் வளைவுகள் விதந்து காணப்படுகின்றன.
இவற்றோடு இசுஷ்வாகு வரிவடிவத்திற் காண ப் படும் எழுத்துகளாகிய அ, இ, உ, க, ம, ய, ற, ல, ள ஆகியனவற்றுக் கும் இவ்வரிவடிவத்தில் உள்ள எழுத்துகளுக்குமிடையே நில வும் ஒற்றுமையை எடுத்துக்காட்டி இத்தகைய ஒற்றுமை கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமராவதி, நாகர்புேனிகொண்டா ஆகிய பகுதிகளில் வழக்கிலிருந்த வரி வடிவமே ஈழத்தினையும் வந்தடைந்ததை விளக்கி நிற்கின்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரின் சொத்தாக எந்தவொரு வரிவடிவமும் அமையவில்லை என்றும் இவர் கூறுகின்றார். இதனால் இத்தகைய வரிவடிவத்தைப் பழைய சிங்கள வரிவடிவமே என்று பரணவித்தானா கூறுவது ஏற்
புடையதாக அமையவில்லை.
ஈழத்துப் பிராமிச் சாசனங்களை ஆராய்ந்து வெளியிட்ட பரணவித்தானா போன்றோர் இவை ஆதிச் சிங்கள மொழியி லுள்ளதென விதந்து கூறியுள்ள அதே நேரத்தில், இவற்றுக் குச் "சிங்கள பிராகிருதம்" என்ற நாமத்தையுஞ் சூட்டியுள் ளனர். ஆனால் தென்னாசியச் சாசனங்களை ஆராயும்போது, தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவை பிராகிருத மொழியிலேதான் எழுதப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
9ே 1 15 வரலாற்றுக் காலம் 1

Page 74
இதனைப் பின்பற்றியே அமராவதி, நாகர் யுனிகொண்டா பகுதியிற் பெளத்தத்தினை ஆதரித்த இசஷ்வாகு வம்சத்தவ ரும் தமது ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட திராவிட மொழியான தெலுங்கு வழக்கிலிருந்த பிரதேசத்திற் பிராகிருத மொழி யிலேதான் தமது சாசனங்களை வெளி யி ட் ட ன ர். இம் முறையை அநுசரித்துத்தான் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பல்லவர்களும் ஆரம்பத்திலே தமது சாசனங்களைப் பிராகிருத மொழியிலே வெளியிட்டனர். ஆந்திர மாநிலம், தமிழகம் ஆகியவை திராவிட மாநிலங்களாகும். இதனால் இப்பிராகிருத மொழிச் சாசனங்களைக் கொண்டு இப்பகுதி மக்கள் எவ்வாறு வடஇந்தியப் பிராகிருத மொழியைப் பேசி னர் என்று கூறுவது தவறோ, அவ்வாறேதான் வல்லிபுரத்தி லுள்ள பொன்னேட்டின் மொழியாகிய பாளி பிரா கிருதத்தி னைக் கொண்டு இப்பகுதி மக்கள் இம்மொழியைப் பேசினர் என்று கொள்வதுந் தவறாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு சிங்கள - பெளத்த ரது செல்வாக்கு இங்கே காணப் பட்டதென்று கூறுவதுந் தவறான கருத்தாகும்.
இத்தகைய தவறைப் பரணவித்தானா தொடக்கம் கல் வெட்டறிஞர்கள் பலரும் இழைத்துள்ளனர். இக்காலப் பெளத்த மத நிறுவனங்களின் செயற்பாடுகளை எடுத்துக் கூறும் இச் சாசனங்களின் மொழியை மக்களின் மொழியாகத் தவறாக இனங்கண்டு கொண்டமை இதற்குரிய காரணம் ஆகும். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் கானப்படும் பழைய திராவிட வரிவடிவத்திலுள்ள எழுத்துகள் மட்டுமன்றிப் பழைய திராவிடப் பெயர்களும் பெளத்தத்தினைத் தழுவியோர் திரா விட மொழிகளைப் பேசியோரே என்பதனை எடுத்துக் காட்டுகின்ற அதே நேரத்தில், இம்மக்கள்தான் நாளடைவில் பெளத்தத்தின் மொழியாகிய பாளி பிராகிருதத்தின் செல் வாக்குக்கு உட்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டுவதால் வல்லிபுரப் பொன்னேட்டு மொழியைப் பெளத்த மதத்தின் மொழியாகக் கொள்ளலாமே தவிர மக்களின் மொழியாகக் கொள்ளதேடியாது. இதனை விளக்க மேலும் ஓர் உதாரணத் தைக் கூறலாம். ஈ ழத் தி ற் சோழராட்சி ஏற்பட்டபோது தமிழே நிருவாக மொழியானது. இவர்கள் விட்டுச் சென்ற
யாழ். - தொன்மை வரலாறு 1 16 ே

தமிழ்க் கல்வெட்டுகளை இன்றைய சிங்கள மாவட்டங்களாகிய அநுராதபுரம், பொலநறுவை ஆகியவற்றுட் காணப்படுவதைக் கொண்டு இப்பகுதிகளின் மக்கள் தமிழராக விளங்கினர் என்று கூறுவதில் உள்ள தவறைப் போன்றே வல்லிபுரப் பொன்னேட்டில் உள்ள பிராகிருத மொழியைக் கொண்டு, இப்பகுதி மக்கள் ஆதிச் சிங்கள மொழியைப் பேசினர் என்று கொள்வதுந் தவறாகும். ஆதலால் இவ்வரிவடிவம், மொழி ஆகியன பரணவித்தானாவின் கருத்திலுள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.
தானியின் கருத்தினை ஏற்கும் வேலுப்பிள்ளையும் இதன் காலங் கி. பி. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனால் இச்சாசனத்திற் கூறப்படும் மன்னனை அநுராதபுரத்தில் அரசாண்ட வசபனாகக் கொள்வதிற் பல சிக்கல்கள் எழுகின்றன. வசப மன்னனின் ஆட்சிக் காலத்திற் குரிய பல கற்சாசனங்கள் ஈழத்தின் பிற பகுதிகளிலும் உள.94 இவற்றுள் இம்மன்னன் "வசப" அல்லது "வஹப' என அழைக் கப்படுகின்றான். இக்கல்வெட்டுகளில் முறையே * enEL o அல்லது "வஹப" என அழைக்கப்பட்ட இம்மன்னன் வல்லி புரப் பொற்சாசனத்தில் மாத்திரம் ஏன் வஹ " 676örgy அழைக்கப்பட்டான் என்பது புதிராகவே உள்ளது. இத்தகைய மயக்கம் பரணவித்தானாவுக்கும் இருந்தது. எனினும், முரண் பாடுகளுக்குச் சாமர்த்தியமாக விளக்கம் கொடுப்பதிற் கைதேர்ந்த பரணவித்தானா இத்தகைய வேறுபாட்டிற்கும் ஒரு விளக்கத்தினைத் தரத் தவறவில்லை. இத்தகைய வேறு பாட்டிற்குரிய காரணம் சாசனத்தை எழுதியவர் தவறாக இப்பெயரைப் பதிவு செய்திருக்க முடியாது என எடுத்துக் காட்டி ஒரு பெயரே வடபகுதியிலுள்ள வல்லிபுரத்தில் ஒரு விதமாகவும், தென்பகுதிக் கல்வெட்டுகளில் இன்னோர் வித மாகவும் எழுதப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இவ் வடிவங்கள் யாவற்றினதும் மூல வடிவம் வடமொழி வடிவ மாகிய விருஷப' என்று கூறி இதற்கான கருத்தையுந் தந் துள்ளார். விருஷப என்றால் "எருது அல்லது மேன்மை பொருந்திய பொருள் என்பது பொருளாகும். வடமொழியில் எவ்வாறு ‘விருஷப' என்பது ‘விருஷ', 'ருஷ" என வழங்கப்
1 17 வரலாற்றுக் காலம் 1

Page 75
سو
பட்டிருக்கின்றதோ அவ்வாறே இச்சாசனத்தில் இது "வஹ' என வழங்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார். பரண வித்தானா வல்லிபுரப் பொற்சாசனத்திலுள்ள ‘வஹ" என் பதனை அநுராதபுரத்தில் அரசாண்ட வசப மன்னனுடன் இணைத்துக் கொள்வதற்கு மேற்கூறிய விளக்கத்தினை அளித் தாலுங்கூட, இச்சாசனம் அநுராதபுரத்தில் அரசாண்ட வசப மன்னனுக்குரிய தென்பதனை ஏற்றுக் கொள்ளுவதற்கு இதன் வரிவடிவம் மட்டும் அன்றி இம்மன்னன் கால நிகழ்ச்சிகளும் மாறாகவே அமைந்துள்ளன. ஈழம் முழுவதும் அநுராதபுரத் தினை மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சியமைப்பில் ஆளப் பட்டது எனக் கூறுவதில் அக்கறை கொண்ட பாளி நூலோர் வசபனின் ஆட்சி வடபகுதியில் நிலைத்திருந்தால் அவ்வாட்சிக் கால நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டு இருப்பர். வட பகுதியில் இவன் ஆட்சி பற்றிய குறிப்புகள் பாளி நூல் களில் இடம் பெறாத தொன்றே இப்பகுதியில் அநுராதபுர மன்னனான வசபனின் ஆட்சி காணப்படவில்லை என்பதற்குத் தக்க சான்றாகும். அத்துடன் இம்மன்னன் வடபகுதியில் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை பற்றிப் பாளி நூல் களிலோ இவனால் வெளியிடப்பட்ட பிற சாசனங்களிலோ குறிப்புகள் காணப்படாதவிடத்து வல்லிபுரப் பொற்சாசனம் அநுராதபுரத்திலரசாண்ட வசபனையே குறிக்கின்றது எனக்
கூறுவதும் ஏற்புடைய கருத்தாக அமையவில்லை.
வடபகுதியில் அநுராதபுர மன்னரின் ஆட்சி நிலைகொண் டிருந்ததை எடுத்துக் காட்டப் பரணவித்தானா இன்னுமொரு சான்றையும் கூறியுள்ளார். கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பிராமிச் சாசனத்தில் உள்ள * தீபராஜ' என்ற குறிப்பே இஃது ஆகும். இத்தகைய குறிப்பு வடபகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்டின் அரசனையே குறித்தது என இவர் கூறுவது வித்தையாகின்றது. இவ்விருதுப் பெயர் ஈழத்தரசனுக்கே உரியதாகலாம். வல்லிபுரப் பொற் சாசனத்தின் வரிவடிவம், மொழிநடை ஆகியன ஆந்திர நாட்டிற் சமகாலத்திற் (கி. பி. 3 - 4 ஆம் நூற்றாண்டுகளிலே) காணப்பட்ட சாசனங்களை ஒத்ததே என்பதனை வலியுறுத்த
மேலும் பல சான்றுகள் உள. இச்சாசனங் கிடைத்த இடத்
யாழ். - தொன்மை வரலாறு 118 னு

தில் ஒரு புத்தர் சிலையுங் கிடைத்துள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாகவே இது கிடைத்துள்ளது. அமராவதிப் பாணியில் உள்ள பளிங்குக் கல்லினாலான இச்சிலையின் உயரம் சுமார் எட்டு அடியாகும். இதுபற்றி லூயிசும் குறிப் பிட்டுள்ளார்.95 இக்காலத்தில் இப்பகுதியிலே தொல்லியல் மேலாய்வில் ஈடுபட்டிருந்தபோதே இதனை இவர் கண்டார்
என்றும் இதனுடன் காணப்பட்ட அழிபாடுகளை விஷ்ணு
கோயிற் பூசகர் தமக்குக் காட்டினார் என்றும் இவர் கூறியுள் GTI Tri. லூயிஸ் அக்காலத்தில் வடபகுதியில் அரசாங்க அதிபராக இருந்ததினால் அரசாங்கத்தின் சொத்தாக அன்று அதனைப் பொறுப்பேற்றார். பின்னர் சேர். கென்றி பிளேக் தேசாதிபதியாக இருந்த காலத்தில் இது தாய்லாந்து அரசாங் கத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இச்சிலை அமராவதிக் கலைப்டாணியில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சிலைகள் கந்தரோடை, சுன்னாகம், வவுனியா போன்ற பகுதிகளில் மட்டுமன்றி நாட்டின் தென் பகுதியிலுங் குறிப்பாக அம்பாந்தோட்டைப் பகுதிகளிலுங் கிடைத்துள்ளன. இவை ஆக்கப்பட்ட அமராவதிக் கலைப் பாணியின் காலம் கி. மு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 4 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகின்றது. இந்தக் கலைப்பாணியிலே தான் கந்தரோடையிற் காணப்படும் பெளத்த ஸ்தூபிகளும் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 50 ஸ்தூபிகள் இங்கே உள. இதனாற் கிறிஸ்தாப்த காலத்தின் பின் குறிப்பாக 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளிலே வட பகுதி அமராவதியுடன் கொண்ட தொடர்பினாலேதான் இத்தகைய கலைமரபு அங்கிருந்து ஈழத்தினை அடைந்தது எனலாம். நாகர் யுனிகொண்டாவிற் பிற நாட்டுப் பெளத் தர்கள் வசிப்பதற்கான விகாரைகள் காணப்பட்டது போன்று ஈழத்துப் பெளத்தர்களுக்கும் அங்கு ஒரு பிரத்தியேக விகாரை காணப்பட்டதைக் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்குரிய நாகர் யுனி கொண்டாக் கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது.98 இக்கல்வெட் டில் இவ்விகாரை “சீகள விகாரை" என அழைக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் வல்லிபுரம் பெளத்த வழிபாட்டிடங்களில் ஒன்றாக விளங்கியதோடு ஒரு துறைமுகமாகவும் விளங்கியதால் இத்தகைய
1 19 வரலாற்றுக் காலம் 1

Page 76
தொடர்பு இதனுாடாகவும் ஏற்பட்டிருக்கலாமென்பதை இப் பகுதிக் கடற்க்ரையோரமாகக் காணப்படும் அழிபாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் வல்லிபுரத்திற் கிடைத்த ஆந்திர மாநிலத்தில் அரசாட்சி செய்த சாதகர்ணி மன்னனின் நாணயமும் ஆந்திர நாட்டுடன் இப்பகுதி கொண் டிருந்த தொடர்பு பற்றி எடுத்துக் காட்டுகின்றது.97
அத்துடன் கந்தரோடையிற் கிடைத்த கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய பிராமி வரிவடிவத்தில் அமைந்த ஒரு கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரையும் இத்தகைய தொடர் பினை மேலும் உறுதி செய்கின்றது. இம்முத்திரை பரணவித் தானாவிடங் கையளிக்கப்பட்டது. இதன் வாசகம் * விஷ்ணு பூதிஸ்ய வணங்குபவனுடைய " என்பதாகும். இப்பெயர் ஒரு சமயம்
என்பதாகும்.98 இதன் பொருள் விஷ்ணுவை
பெளத்தனாக மாறு முன்னர் இப்பெயரைத் தாங்கியவன் இந்துவாக விளங்கியதை எடுத்துக் காட்டும் சான்றாகவும் அமையலாம். ஏனெனில் ஈழத்தில் ஆதிப்பிராமிக் கல்வெட்டு " களிற் காணப்படும் இந்து மதத்துடன் தொடர்புடைய பல பெயர்கள் பெளத்தர்களாக மாறு முன்னர் அவர்கள் இந்து மதத்தினை அநுஷ்டித்ததையே எடுத்துக் காட்டுகின்றன.99 எவ் வாறாயினும் இத்தகைய சான்றுகள் வடபகுதியிற் காணப் பட்ட பெளத்த மதத்திற் கிறிஸ்தாப்தம் தொட்டு கி. பி. நான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்திய மாநிலமாகிய ஆந்திர மாநிலத்தின் செல்வாக்குக் காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.
இப்பொற்சாசனத்திற் காணப்படும் பெயர்களை இனி நோக்குவோம். முதலில் "நகதீவ’ என்ற பதமே இதில் முக்கியம் பெறுகின்றது. இதனைப் பாளி நூல்கள் குறிப்பிடும் நாகதீபமாகவும், தமிழ் நூல்கள் குறிப்பிடும் நாகநாடு, மணிபல் லவமாகவுங் கொள்ளலாம். எனினுங் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தின் பெருநிலப்பரப்பு அடங்கிய வடபகுதியைக் குறித்த இப்பதம் இச்சாசனத்திற்குரிய காலமாகிய கி. பி. நான்காம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறித்தது என்பதை இச்சாசனத்திற் காணப்படும் பொருள் எடுத்துக்
யாழ். - தொன்மை வரலாறு 12O ே

காட்டுகின்றது, ஏனெனில் இச்சாசனத்தில் வசப மஹாராஜன் காலத்தில் நாகதீபத்தை இஸிகிரய என்பவன் ஆட்சி செய்த தாகக் குறிக்கப்படுவதால் ஒரு சமயம் இவ்வசப என்ற மன்னன் வன்னிப் பகுதியை உள்ளடக்கிய Լյ6ծէքսl நாகதீபத்தின் பரப்பை ஒத்த பிரதேசத்தை ஆட்சி செய்ததால் 'மஹாராஜ" எனப் பெயர் பெற்றிருத்தல் கூடும். இதனால் இப்பெரும் பிரதேசத்தின் ஒரு மாகாணமாக விளங்கிய யாழ்ப்பாணக் குடாநாடே ‘நாகதீபம்’ என்று இப்பொற்சாசனத்தில் அழைக் கப்படுகின்றது எனலாம். இக்காலத்தில் இப்பதம் இக்குடா நாட்டுக்குரிய பதமாகிக் காலப்போக்கில் ஒரு சிறு தீவினைக் குறிக்கும் பதமாக மாறியதையே நயினாதீவு (நாகதீபம்) என்ற தீவின் பெயர் எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் இதனை எழுதப் பயன் படுத்திய எழுத்துகளில் "நாக’ என் பதனை எழுதும்போது தமிழ்மொழிக்குரிய வல்லினமான "க " இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கும்போது இப்பகுதி யிலே தமிழ் மொழியைப் பேசியோர் வாழ்ந்தமை மேலும் உறுதியாகின்றது. பாளிப் பிராகிருதத்திற்குரிய க தமிழிலே தமிழுக்குரிய க வாக உச்சரித்து எழுதப்பட்டமையே இங் குள்ள திராவிட மக்கள் பெளத்தத்தினை அனுஷ்டித்தனர் என்பதற்குத் தக்க சான்றாகும். ஏனெனில் இச்சாசனம் மக்களின் பார்வைக்கு வைப்பதற்காக எழுதப்படவில்லை. கட்டிடத்தின் அத்திவாரத்தில் மறைத்து வைத்துக் கட்டவே எழுதப்பட்டது. இதனால் இம்மதத்தினைத் தழுவியோருக் குரிய உச்சரிப்பிலும் இது அமைந்துவிட்டது எனக் கொள்
வது தவறாகாது.
இதே போன்ற இன்னோர் வடிவந்தான் ‘படகர அத நெஹி’ ஆகும். இதில் இரண்டு கூறுகள் உள. ஒன்று "பட கர" மற்றது "அதநெஹறி" ஆகும். “படகர" என்பதற்குப் பரணவித்தானா இது தற்போதைய வல்லிபுரத்தின் பெயர் என விளக்கங் கொடுத்துள்ளார். இது தவறுபோலத் தெரி கின்றது. மணற் பிரதேசத்தினைக் குறிக்குஞ் சிங்களச் சொல்லாகிய "வலி' என்பதில் இருந்துதான் இவ்வல்லிபுரம் மருவியதென்று கூறுவாருமுளர். வல்லிபுரம் என்ற பெயர் தமிழ்நாட்டிலுமுண்டு, வல்லிச் செடிகள் காணப்பட்ட இட
O 121 வரலாற்றுக் காலம் 1

Page 77
மாகையால் இது இவ்வாறு பெயர் பெற்றிருக்க க் கூடும். இவ்வாறே நாகர்கோயிலும், கோவளம் என்ற பெயருந் தமிழ் நாட்டிலுமுண்டு. இவை தமிழகம் - ஈழம் ஆகிய பகுதிகள் இக்காலத்திற் கொண்டிருந்த தொடர்பின் எச்சங்களாக விளங்கு கின்றன.
நிற்க, “ பட கர " என்பதை * வட கரை " என்ற திரா விட ( தமிழ் ) வடிவமாகக் கொள்ளலாம். ஏனெனில் மொழி களிற் 'ப', ' வ" உருமாற்றம் நடைபெறுவதுண்டு. இதனால்
* வடகரையே " இச்சாசனத்திற் படகரையாக எழுதப்பட்டது போலத் தெரிகின்றது. "ஆஸ்தான’ (அதநெ) என்பது வட மொழியில் இடம்" என்ற பொருளைத் தருவதால் இது *வடகரை" என்ற இடம் எனப் பொருள்படும் ஹி " என்பது இடத்தில் எனப் பொருள் தரும் ஏழாம் வேற்றுமை உருபாகும். பிற்காலத்திற் காணப்படும் வடமராட்சி என்ற வடிவத்தின் மூலமாகப் படகர என்பதனைக் கொள்ளலாமா என்ற கேள்வியும் அடுத்து எழுகின்றது. அல்லது "அதநெ’ என்பதனை இடம் எனக் கொள்ளாது ஒரு இடத்தின் பெயராகவுங் கொள்ள இட முண்டு. அப்படியாயின் குடத்தனை போன்ற இடப்பெயரே இச் சாசனத்தில் * அதநெ " எனக் குறிக்கப்பட்டுள்ளது எனவுங்
கொள்ளலாம்.
அடுத்து வருவது தான் "புஜமெநி’ என்ற பதமாகும். இதன் பொருள் இப்பகுதியின் நிருவாகியாகச் செயலாற்றி இப் பகுதி வருமானங்களை அநுபவிப்பவன் என்பதாகும். தமிழ கக் கல்வெட்டுகளில் 'நாடாள்வான்" என்ற தலைவர்கள் இத்தகைய பணிகளைச் செய்தது போன்று ஈழத்திலும் பேர ரசனின் கீழ் மாநிலத் தலைவனான "இஸிகிரய அப்பகுதி வருமானத்தினை அநுபவிக்குந் தகுதி பெற்றிருந்தான் என்ப தனையே மேற்கூறிய பதம் எடுத்துக்காட்டுகின்றது. இதனால் நாகதீப என்ற பிராந்தியத்தின் மாவட்டத் தலைவனாகப் பேரரசனின் அமைச்சன் ஒருவன் காணப்பட்டதையே இச் சாசனங் குறிப்பிடுகின்றது. ኧ
இறுதியாக நாம் ஆராய் வது இப்பொற்சாசனத்கிற் காணப்படும் 'இஸிகிரய’ என்ற பதமாகும். இதிலும் இரண்டு சொற்கள் உண்டு. இவற்றில் ஒன்று 'இஸிகி" மற்றது ‘ரய"
யாழ். - தொன்மை வரலாறு 12 2

ஆகும். 'இஸிகி" என்பதற்குப் 65יח75$וסולנ6 עבדrחaונa3 ק"חז,b,maא விளக்கங் கொடுக்கப் படவில்லை. வேலுப்பிள்ளை இப்பதம் ஈழத்தினைக் குறிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.100 இதனை ஈழத்தினைக் குறிக்குஞ் சொல்லாகக் கொண்டால் இப்பதம் ஈழத்துத் தலைவன் என்ற கருத்தினையே தந்து நிற்கும். இதுவும் அவ்வளவு பொருத்தமுடைய விளக்கமாகத் தெரிய வில்லை. 'ராயர்" என்பதன் குறுக்கமே ‘ரய'வாகும். சம காலத் தமிழகத்தில் 'ராயர்’ என்ற பெயர் இனக் குழுக்களின் பெயரோடு இணைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ள தால் 'இஸி" என்பதனை ஒரு இனக் குழுவின் பெயராகவே கொள்ளுதல் மிகப் பொருத்தமாகத் தோன்றுகின்றது. “மழவ ராயர்" என்ற பதம் இதற்கு நல்ல உதாரணமாகும். தலைவ னைக் குறிக்கும் 'ராயர்’ என்ற பதமே மழவ / மாளவ என்ற பதத்துடன் இணைந்து இவ்வாறு “மழவராயர்’ என மருவி யது எனலாம். 'ராயர்" என்பது சக் க ர வர்த் தி எனவும் பொருள்படும். மாளவச் சக்கரவர்த்தி என்ற பதம் இதற்கான உதாரணமாகும். இங்கே சக்கர வர்த்தி என்பது பேரரசனை மட்டுமன்றிப் பிராந்தியத் தலைவனையுங் குறித்து நின்றது. பிற்காலத்திலே தமிழகத்திற் பாண்டிய வம்சத்தின் கீழ்ப் படைத் தளபதிகளாக விளங்கிய பிராமண குலத்தவர் ஆரியச் சக்கர வர்த்திகள் என அழைக்கப்பட்டதும் ஈண்டு நினைவு கூரற் பாலது. இதனால் இஸி என்பதனை ஒரு இனக் குழுப் பெயராகக் கொள்வதே பொருத்தமாகின்றது.
இனக் குழுக்கள்
சங்க இலக்கியங்களிற் பல இனக் குழுக்கள் காணப்பட்ட தற்கான சான்றுகள் உள. உதாரணமாகச் சேரர்கள் ஆண்ட பகுதியிற் குடவர், குட்டுவர், அதியர், உதியர், மலையர், மழவர், மறவர், இளையர், பூலியர், வில்லோர், கொங்கர், குறவர் ஆகியோர் காணப்பட்டனர்.101 இவ்வாறே பாண்டி பரது பிரதேசத்திற் காணப்பட்ட இனக் குழுவினராகப் பரதர், கோசர், ஆய், வேள் போன்றோர் காணப்படுகின்றனர். சில சமயங்களில் இவர்கள் தனித்தனியாக ஆட்சி செய்ததற்குந்
123 வரலாற்றுக் காலம் 1

Page 78
தடயங்கள் உள. இத்தக்ைய பிரிவில் ஆவியர் (ஆய்), ஒவியர், வேளிர், அறுவர், அண்டார், இடையர் ஆகியோரும் அடங்கு வர். ஈழத்திலுங் கிறிஸ்தாப்த கா லத் தி ல் இருந்த இனக் குழுக்கள் பின்னர் மறைந்ததைப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. உதியர்', 'அதியர்" என்ற இனக்குழு வின் எச்சமாகத் திகழ்வதுதான் "உதி" என்ற பெயராகும். இதேபோன்று “திஸ" என்ற பெயருந் திரையர்” என்ற குழுவின் எச்சமாகும். ஆற்றை நினைவு கூருந் தொண்ட மான் என்ற பெயருந் 'தொண்டையர்' என்ற இனக்குழு வின் எச்சமேயாகும். இவ்வாறே இஸி" என்பதும் 'இளையர்" என்ற இனக் குழுவைக் குறித் த தா ல் இவ்வினக் குழுவின் தலைவன் 'ராயர்’ என்றழைக்கப்பட்டான்.
ஆராய்ச்சியாளரிடையே 'ராயர்" என்ற பதத்தின் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள. பொதுவாக இதனை வடமொழி * ராஜ என்பதன் திரிபே எனக் கொண்டாலுங் கூட இதற்கும் வடமொழி ராஜ என்ற பதத்திற்கும் எது வித தொடர்புமில்லை என வாதிடுவாருமுளர். தலைவர்களைக் குறிக்கும் * அரையர் " என்றதன் வழி வந்ததே ' ராயர் எனலாம். முதற்சங்கப் புலவர்களில் ஒருவராக முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடப்படுவது ஈண்டு கவனிக்கத் தக்கது. இதனால் இப்பதத்தினை முரஞ்சியூர் முடிநாக அரையர் ஆகக் கொள்ளலாமா என்பதும் ஆராய்தற்பாலது. ‘ராஜ", "அரையர்'
ஆகியனவற்றைத் தனித்தனியான மூலங்களிலிருந்து தோன்றிய பதங்களாகக் கொண்டாலுங்கூட வல்லிபுரப் பொன்னேட்டிற் காணப்படும் ' ரய என்ற சொல் தலைவன் என்ற பொரு ளில் வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இப்பெயர் பிரதானிகளின் வர்க்கத்தினையுங் குறித்திருக்கலாம் போலத் தெரிகின்றது. ஏனெனிற் சூளவம்சம் முதலாவது பராக்கிரம பாகுவின் தமிழகப் படை எடுப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் இத்தகைய * ராயர் ’ என்ற விகுதி படைத்த குழுவினர் பற்றி விரிவாகக் கூறுவதும் இங்கே நோக்கற்பாலது.102
குறிப்பாக, பராக்கிரமபாகுவின் ஆதரவாளனான வீர பாண்டியனின் அபிஷேகம் மதுரையில் நடைபெற்றபோது அதிற் கலந்து கொண்டவர்களாக லம்பகண்ண வம்சத்தினைச்
யாழ். - தொன்மை வரலாறு 124 O

சேர்ந்த மூன்று இனக் குழுக்களின் தலைவர்கள் இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளனர்.103 அவர்கள் மாளுவச் சக்கரவர்த்தி, மாழவராய(ர்), அதலயூருநாடாள்வார(ர்) ஆகியோர் ஆவர். அதலயூர் நாட்டை ஆண்டவனே இவ்வாறு அதலழருநாடாள் வார என இதில் அழைக்கப்பட்டுள்ளான் எனத் தெரிகின்றது. * நாடாள்வார(ர்) " என்பது மாவட்டத் தளபதியையே குறித்து நின்றது எனக் கெய்கர் தமது குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ளமை அவதானிக்கத்தக்கது.104 சோழர் ஆட்சிக் காலத்திலும் நாடு ? என்ற பிரிவு மாவட்டத்தினையே குறித்து நின்றது. இதிற் காணப்படும் மற்றைய பதம் மாழவராய என்பதாகும். இதுவும் * மழவர் " என்ற இனக் குழுவின் தலைவனைக் குறித்தது எனலாம். * மழவராயர் " என்ற பெயரும் இதன் வழிப்பிறந் ததே. இவ்வாறே மாளுவச் சக்கரவர்த்தி " என்பதும் மாளுவக் குழுவின் தலைவனைக் குறித்ததேயாகும்.
இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னனான முதலாம் சிங்கை ஆரியனை ஈழத்திலிருந்த பாண்டி நாட்டைச் சேர்ந்த மழவன் அழைத்து வந்தமை பற்றித் தமிழ் நூல்களிற் காணப்படுங் குறிப்பு இம்மழவர் கூட்டத் தினர் பன்னெடுங்காலமாக ஈழத்தில் வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றது, அத்துடன் நாடாள்வார(ர்), ராய(ர்), சக்கரவர்த்தி போன்ற பெயர்கள் சூளவம்சத்திற் பிற இடங்களிற் காணப் படுகின்றமையும் அவதானிக்கத்தக்கது.105 இப் பெயர்களுடன் தொடர்புடைய இடங்களை நோக்கும்போது இவை பெரும் பாலும் இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிற் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இப்பெயர்களிற்கான சில உதாரணங்களை நோக்குவாம். அவை ፦ வலத்திருக்கநாடாள்வார(ர்), குண்டயமுத்தராயர(ர்), வில்வ ராயர(ர்), அஞ்சுகொட்டராயர(ர்), நரசிம்மதேவ(ர்) என்பன ஆகும். சில இடங்களிற் பெருமாள் ” என்ற பெயரும் இவற் றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வல்லிபுரப் பொற் சாசனத்திலுள்ள இஸிகிரய என்பது மேற்படி இனக் குழு வொன்றைக் குறித்து நின்றது என்று கொள்வதே பொருத்தம் ஆகின்றது. இவர்கள் பிரதானிகளாக இருந்து மாவட்டங்களை ஆட்சிசெய்தனர்.
() 125 வரலாற்றுக் காலம் 1

Page 79
இச்சந்தர்ப்பத்தில் மகாவம்சத்தில் அநுராதபுரத்தினை ஆட்சி செய்த வசபன் ஈழத்தின் வடபகுதியைச் (உத்தரபச ) சேர்ந்தவன் என்றும், அவன் லம்பகண்ண வம்சத்தைச் சேர்ந் தவன் என்றும் வரும் குறிப்பு அவதானிக்கத்தக்கது. 108 இதனை மையமாகக் கொண்டுதான் பரணவித்தானா போன்றோர் வல்லிபுரப் பொன்னேட்டிற் குறிப்பிடப்படும் வசபனும் அநுராத புரத்தினை ஆட்சி செய்த வசபனும் ஒருவனே என்ற முடி புக்கு வந்தனர். ஆனால் லம்பகண்ண வம்சம் வடபகுதியில் மட்டுமன்றி ஈழத்தின் பிறபகுதிகளிலுங் காணப்பட்டதற்குச் சான்றுகள் உள. அத்துடன் இவ்வம்சம் வசபணுக்கு முன்னரே ஈழத்து அரசியலில் முக்கியம் பெற்றிருந்தது. தேவநம்பிய தீஸன் வழிவந்த மெளரிய வம்சத்திலிருந்து அரசியலதிகாரத் தினைக் கைப்பற்றிய வம்சமாக இது குறிப்பிடப்படுகின்றது.
வசபன் அரசுகட்டிலேறுவதற்கு முன்னதாகக் கி. பி. முத லாம் நூற்றாண்டில் ஈழத்தினை ஆண்ட ஈழநாக மன்னனின் முடிசூட்டு விழா நிகழ்ச்சியோடு லம்பகண்ண வம்சம் முதன் முதலாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல முடிசூட்டு விழாவின்போது மன்னர்கள் திஸவேவக் குளத் திற்கு நீராடச் செல்வதுபோல இம்மன்னனுஞ் சென்றான, முடிசூட்டு விழாவுக்கு முன்னர் இடம் பெற்ற நிகழ்ச்சியே இஃதாகும். இந்நிகழ்ச்சியின்போது பிரதானிகளும், லம்பகன் ணருஞ் செல்வது வழக்கம். ஆனால் மன்னன் தனது ஸ்நானத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பிய போது முடிசூட்டு விழாவில் முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை உடையவர்களாய் முக்கிய பங்கேற்கும் இவர்களைக் காணவில்லை. இவ்வாறு இவர்கள் முக்கிய நிகழ்ச்சியிற் கலந்து கொள்ளாது தவிர்த்துக்கொண்டதை அரசன் தனக்கு அவமான மாகக் கருதினான். இதனாற் கோபம் கொண்ட மன்னன் மகாதூபிக்குச் செல்லும் பாதையைச் சீர் செய்யும் பணியை இவர்களுக்கு அளித்து இவர்களை மேற்பார்வை செய்வதற்குச் சண்டாளர்களைப் பணித்தான் எனக் கூறப்படுகின்றது. சண் டாளர்களோ எனிற் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ளவர்கள்.
இதனாற் கோபமடைந்த லம்பகண்ணர்கள் கிளர்ச்சி செய்து
யாழ். - தொன்மை வரலாறு 128
కత్తి

அரசனையுஞ் சிறைப்பிடித்தனர். இத்தகைய நிகழ்ச்சி அக்கால அரசியலில் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையே எடுத்துக் காட்டுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்ட மன்னன் பற்றிக் கவலைப் பட்ட அரசி தனது மகனைப் பட்டத்து யானை மீது ஏற்றி விட அவ்யானை சிறுவனுடன் பாதுகாப்பாகச் சிறைச்
Ꮺ- ᎱᎱ ᎧᏡ ᎧᏌ6ᎼᎧ ᎿᎥ Ꭵ அடைந்து மன்னனைச் சிறை மீட்டதோடு
அவனை மகாதீர்த்தத்திற்கு இட்டுச் சென்று பின்னர் காட்
3
டுக்குள் ஒடி மறைந்தது.
மூன்று வருடங்கள் இவ் ஈழநாக தமிழகத்தில் வாழ்ந்த போது அநுராதபுரத்தில் லம்பகண்ணரது ஆட்சியே நிலை பெற்றிருந்தது. ஆனால் ஈழநாக LDԱ)յւ 1ւգ-Այւb է 16ծԼ-Այւ-6մ வந்து " சக்கர சோப' என்ற துறைமுகத்தில் இறங்க் லம்ப கண்ணரிடம் இருந்து அரசைக் கைப்பற்றினான் என மகா வம்சங் கூறுகின்றது. மகாதீர்த்தத் துறைமுகத்தின் மூலமாகத் தமிழகஞ் சென்ற இம்மன்னன் ஏன் "சக்கர சோபத்* துறை முகத்தில் வந்திறங்கினான் என்பது புரியவில்லை. இத்துறை முகம் ஈழத்தின் கிழக்குப் பகுதியிற் காணப்பட்டது என ஊகிக்கப்படுகின்றது.107 ஒரு சமயம் வடபகுதியில் லம்பகண்ணர் வலுவாகக் காணப்பட்டதால் இவன் இவ்வாறு கிழக்குப் பகுதியில் வந்திறங்கி இருக்கலாம். எனினும் இவனின் ஆட்சி ஆறு வருடங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் இவனின் மகன் சண்டமுகசிவன் எட்டு வருடங்களும் ஏழு மாதமும் ஆட்தி செய்தான். இவனின் பட்டத்து ராணி தமிழகத்தினைச் சேர்ந்ததாலே தமிழதேவி என அழைக்கப்ப்ட்டாள். இவனுக்குப் பின்னர் யசலாகதீஸ் ஏழு வருடமும் எட்டு மாதமும் அர சாட்சி செய்தான். இக் காலத்திற்றான் இவனிடம் * சுப என்ற வாயிற் காவலன் அரசுரிமையைப் பறித்தான். இச் சுபனிடம் அரசைப் பறித்து லம்பகண்ண வம்சத்தின் ஆட்சியை ஏற்படுத்தியவனாக வசபன் கொள்ளப்படுகின்றான். இவ்வம்சம் மகா சேனன் காலம் வரை நீடித்திருந்தது.
6) i guas sdon 605T 5j ding to
இச்சந்தர்ப்பத்தில் லம்பகண்ண வம்சம் பற்றிக் குறிப்பிடு
தல் அவசியமாகின்றது. பரணவித்தானாவோ எனில் இது பாளி
127 வரலாற்றுக் காலம் 1

Page 80
வடிவமாகிய "லேஹக" என்றதன் வழிவந்த "லமனி" என்ற சிங்களச் சொல்லாகும் எனக் கூறி இதன் பொருள் எழுத்தா ளர்" ஆகும் என்றார்.108 இவர்கள் அரச நிர்வாகத்தில் இக் கடமையைச் செய்தார்கள் என மேலும் இவர் வாதிடுகின்றார். எனினும் இவர்களின் தோற்றம் பற்றி இவருக்கும் சரியான விளக்கமில்லை என்பதை இவரே ஒப்புக் கொண்டிருக்கின்றார். பரணவித் தானாவின் கருத்தினை எல்லாவெல ஏற்கவில்லை.199 ஆனாற் கிருஷ்ணசுவாமி ஐயங்காரோ எனில் இவ்வாறு பெயர் பெற்றிருப்பதற்கு இவர்களின் காதில் ஆபரணங்கள் அணியப் பட்டதால் இதன் துவாரம் பெரிதாகிக் காது நீண்டு காணப்பட் டதே காரணம் என்கின்றார்.110 லம்ப என்பது நீண்ட, தொங் கும் எனப் பொருள்படும். கண்ண என்பது கர்ண என்ற வட மொழிச் சொல்லின் பாளி வடிவமாகிய காது எனப் பொருள் படும் இத்தகைய விளக்கம் ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஏனெனில் ஈழத்து மன்னர்கள் பலர் தமது முக அமைப்பைக் கொண்டு இக்காலத்திற் பெயர் பெற்றிருந்ததற்கான ஆதா ரங்கள் மகாவம்சத்திலேயே உளது. உதாரணமாக ஈழநாகனின் மகனின் பெயர் சண்டமுகசிவ ஆகும். சண்டமுக என்றால் சந்திரன் போன்ற முகத்தினை உடையவன் எனப் பொருள் படும். இவ்வாறே வசபணுக்குப் பின்னர் அரசாண்ட மன்னன் வங்கநாசிகதிஸ் என அழைக்கப்படுகின்றான். இதன் பொருள் வள்ைந்த மூக்கையுடைய தீஸன் என்பதாகும். இதனால் இவ் வம்சத்தின் முன்னோர் நீண்ட காதையுடையவர்களாக இருந்த தால் இவ்வம்சம் இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம் என ஊகிக் கலாம். இதனால் எழுத்தாளர் என்ற பதத்தினை விட நீண்ட காதையுடையவர்கள் என்ற பதமே அதிகம் பொருத்தமான விளக்கமாக இதற்கு அமைகின்றது.
லம்பகண்ணர் பற்றிய சான்றுகள் சூளவம்சத்தில் முதலா வது பராக்கிரமபாகுவினது பாண்டி நாட்டுப் படைஎடுப்புப் பற்றிய நிகழ்ச்சியிலுங் காணப்படுகின்றது.111 இப்படை எடுப் பின்போது மதுரையை வென்ற பராக்கிரமபாகுவின் படைத் தளபதியாகிய லங்காபுர லம்பகண்ணராகிய மாளுவச் சக்கர
வர்த்தி, மாழவராய(ர்), அதலயூரு நாடாள்வார(ர்) ஆகியோ
யாழ். தொன்மை வரலாறு 128 G

ரிடம் வீரபாண்டியன் முடிசூட்டு விழாவின்போது லம்பகண் ணர் செய்யும் பணியைச் செய்யுமாறு பணித்தான் என்று சூளவம்சங் குறிப்பிடுகின்றது. ஏற்கனவே நாம் ஈழநாகனின் முடிசூட்டு வைபவத்தின்போது லம்பகண்ணருக்குரிய கடமைகள் பற்றிக் கூறியிருந்தோம். இதனால் ஈழத்தினைப் போன்று தமிழகத்திலும் இத்தகைய வம்சத்தவர் முடிசூட்டு வைபவத் திற் பங்கு கொண்டமை புலனாகின்றது. ஆனாற் பரணவித் தானாவோ எனில் இத்தகைய வம்சந் தென்னகத்திற் காணப் பட்டதற்கான சான்றுகள் இல்லாததால் இவ்வம்சந் தென் னகத்திற் காணப்படவில்லை என்றும் பராக்கிரமபாகுவின் தளபதியாகிய லங்காபுர ஈழத்திலுள்ள லம்பகண்ணப் பிரதா ரிைகள் போன்ற பிரதானிகள் பாண்டி நாட்டிலுங் காணப் பட்டதால் இவ் லம்பகண்ணரின் பொறுப்பை இதே தரத்தி லிருந்த பிரதானிகளிடம் அளித்ததையே சூளவம்சம் இவ் வாறு குறிப்பிடுகின்றது எனவுங் குறிப்பிட்டுள்ளார்.112 இத னாற் கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த FF3ք 55/ லம்பகண்ணர்களைக் கி. பி. பதினோராம் நூற்றாண்டிலே தமிழ கத்தில் வாழ்ந்த லம்பகண்ணரோடு இணைக்க முடியாது என்ப தும் இவரது வாதமாகும். ஆனால் எல்லாவெலவோ எனிற் கி. பி. 12ஆம் நூற்றாண்டுக்குரிய கர்நாடகத்திலுள்ள கல் வெட்டில் லம்பகண்ணரின் நாடு பற்றிக் காணப்படுங் குறிப் பையும் முதலாவது பராக்கிரமபாகுவின் காலத்திற்குரிய சூள வம்சக் குறிப்பையும் மேற்கோள் காட்டிக் கி. பி. 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளிலே தென்னிந்தியாவில் இவர்கள் வாழ்ந் தார்கள் எனக் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.118 எவ் வாறாயினும் இவர்களைப் பிரதானிகள் எனப் பரணவித்தானா ஏற்றுக்கொள்வதும், முடிசூட்டு விழாவில் அவர்களுக்கிருந்த பொறுப்பினை அங்கீகரிப்பதுங் கருத்திற் கொள்ளத்தக்கது.
மேற்கூறப்பட்டவையைத் தமிழக - ஈழ வரலாற்றுப் பின் னணியில் நோக்கும்போது "லம்பகண்ண" என்பதும் ஒரு வம்ச மாகவே விளங்கியது புரிகின்றது. ஈழத்துப் பாளி நூல்களும் இதனை உறுதிசெய்கின்றன. தேவநம்பியதீஸனின் வம்சம் மெளரிய வம்சம் எனக் கூறும் இவை லம்பகண்ணரின் வம்சத் தினை வசபனோடு இணைக்கின்றன. லம்பகண்ணர்கள் ஈழம்
129 வரலாற்றுக் காலம் 1

Page 81
முழுவதும் வாழ்ந்ததை நோக்கும்போது வடபகுதியிலிருந்து இவர்கள் ஈழத்தின் பிற பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என ஊகிக்கலாம். இத்தகைய வம்சத்தின் முதல் மன்னன்தான் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தினை ஆண்ட வசப மன்னன் எனக் குறிக்கப்பட்டாலும் இக்காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வம்சம் இங்கு காணப்பட் டிருக்கலாம். பெளத்த அரச மரக் கிளையுடன் இவர்கள் ஈழத் தினை அடைந்தவர்கள் என்ற ஐதீகம் இதனையே உறுதிப் படுத்துகின்றது.14 வசபனோடு அநுராதபுரத்தில் ஆட்சி செய்த இவ்வம்சம் நாளடைவில் பெளத்த மதம், பாளிச் செல்
வாக்குகளுக்கு உட்பட்டு உருமாறத் தொடங்கியிருக்கலாம்.
ஆனால் நாகதீபத்திலே தொடர்ந்து வாழ்ந்த இவ்வம்சத்தி னர் தங்களது பழைய தமிழ்த் தொடர்பைக் கொண்டிருந்த தோடு இந்துக்களாயும் வாழ்ந்திருக்கலாம். இதனை "வசப" என்ற பெயரே மிக அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றது. இத னால் அநுராதபுரத்தில் அரசாண்ட மன்னனின் பெயரான *வசப" என்ற பெயர் இந்துவாக விளங்கிப் பெளத்த மதத்தி னைத் தழுவிக்கொண்டதன் சின்னமாகக் காணப்பட, வட பகுதியில் ஆண்ட மன்னனின் இப்பெயர் எத்தகைய மாற்றமு மின்றி அவனது இந்துமத நம்பிக்கைகளையே குறித்தது என லாம். இதனாலேதான் இப் பொற்சாசனத்திலும் இம் மன்னன் பெளத்த மதத்தோடு தொடர்புபடுத்தப்படவில்லை. அதனாற் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற் பாளி நூல்கள் கூறும் அநுராதபுரத்தினையாண்ட வசப மன்னனும், வல்லிபுரப் பொற் சாசனத்திற் கூறப்படும் வசப மன்னனுஞ் சாசனத்தின் எழுத் தமைதி குறிப்பதுபோல வெவ்வேறு காலத்தவர்கள் ஆவர். இவர்கள் ஒரே வம்சத்தைச் சார்ந்திருந்ததும், ஒரே பெய ரைச் குடியிருந்ததுந்தான் இவர்களிடைய்ே காணப்பட்ட ஒற்றுமையாகும்.
மேற்கூறிய சான்றாதாரங்களை ஒட்டுமொத்தமாக நோ க் கும்போது வடபகுதியும் ஈழத்தின் பிற பகுதிகளைப் போன்று நாகரிக்த்தில் வளர்ச்சி கண்டிருந்ததை இலக்கிய்ங்கள் மட்டு மன்றி இப்பகுதியிற் கிடைத்துள்ள முத்திரைகள், பிராமிக்
யாழ். - தொன்மை வரலாறு 13O ()

கல்வெட்டுகள், மட்பாண்ட ஒட்டுச் சாசனங்கள், வல்லிபுரப் பொன்னேடு ஆகியன எடுத்துரைக்கின்றன. பழந்தமிழரே இப் பகுதியின் நாகரிக கர்த்தாக்கள் என்பதற்கான சான்றாதா ரங்கள் சங்கப் பாடல்கள் தொட்டு இப்பகுதியில் இன்று வரை அழியாது வழக்கிலிருக்கும் பல சங்ககாலச் சொற்களும் எடுத்தியம்புகின்றன. ஈழத்தில் இக்காலத்தில் வாழ்ந்த இம் மக்களில் ஒரு பகுதியினர்தான் பெளத்தம் ஈழத்திற்கு வட பகுதியூடாகப் பரவியபோது அதனைத் தழுவிக்கொண்டனர். இதனையே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல் வெட்டுகள், வல்லிபுரப் பொற்சாசனம், பிற பெளத்த அழி பாடுகள் என்பன எடுத்துக் காட்டியுள்ளன. ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படுந் தமிழ்ப் பிராமி வரிவடிவத்தி லுள்ள எழுத்துகள், தமிழ்ப் பதங்கள் ஆகியன இதனை மேலும் உறுதி செய்கின்றன. எனவே தமிழகத்திற் சங்க காலப் பகுதியிற் காணப்பட்ட பல்வேறு இனக் குழுக்கள் சங்கமமாகி உருவாக்கிய அரசியல், சமூக, பொருளாதார அமைப்பினைப் போன்ற ஒரு அமைப்பையே இவையும் நம் மனக்கண் முன்னே நிறுத்துகின்றன.
தமிழகமும் ஈழமும்: ஐதீகங்களில் வரலாறு
நாகநாடு பற்றி மகாவம்சம், மணிமேகலை, சிலப்பதிகா ரம் போன்ற நூல்களிற் காணப்படுகின்ற ஐதீகத்தினைப் போன்று, யாழ்ப்பாண அரசு காலத்தில் வளர்ச்சி பெற்ற கோவலன் - கண்ணகி பற்றிய கதைகளிலும் வடபகுதியிற் காணப்பட்ட அரசமைப்பு முறை ஒரளவுக்கு ஐதீகமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவலன் கண்ணகி கதை, ஈழத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகிழக்கு மாகாணத்திற் பல்வேறு நாமங்களிற் பாட பேதங்களுடன் வழக்கிலிருப்பது அவதானிக்கத்தக்கது. இது யாழ்ப்பாணத்திற் கோவலனார் காதை" எனவும், முல்லைத் தீவிற் 'சிலம்பு கூறல்" எனவும், மட்டக்களப்பிற் கண்ணகி வழக் குரை' எனவும் வழங்கப்படுகின்றது.15 இதனால் இவற்றிற் கூறப் படும் முக்கிய அம்சங்களை எடுத்துக் காட்டுவது பொருத்த
131 வரலாற்றுக் காலம் 1

Page 82
மாகின்றது. இக்கதையிற் சிலப்பதிகாரத்தின் கதாநாயகி பாகிய கண்ணகியின் காற்சிலம்புக்கு வேண்டிய மணிகளைப் பெறுவதற்காகக் கண்ணகியின் தந்தையான மாநாய்கன் மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றிக் கூறப்படுகின்றது. கண்ணகி யின் தந்தையாகிய மாநாய்கனும், கோவலனின் தந்தையா கிய மாசாத்துவானுஞ் சிறந்த நண்பர்கள் தலைசிறந்த வணிகர்கள். இவர்கள் காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரை யில் உலாவிக்கொண்டிருக்கும்போது அவர்களை நோக்கி ஒரு பேழை மிதந்து வந்தது. அப்பேழையில் ஒரு பெண் குழந்தை காணப்பட்டது. பின்னர் மாநாய்கன் அக்குழந்தையைத் தன தாக்கியதோடு மாசாத்து வானின் ஆண் குழந்தைக்கும் இப் பெண் குழந்தைக்கும் பருவம் எய்தும்போது திருமணஞ் செய்து வைப்பதாகவும் ஒப்புக் கொண்டனர். இதன்படி இக்குழந் தைகள் பருவம் எய்தியதும் மாசாத்துவான் தனது மகனுக்கு மாநாய்கனின் மகளைப் பெறுவதற்காக அவனில் லஞ் சென்று திருமண நாளுக்கான நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
கண்ணகிக்கு வேண்டிய அணிகலன்கள் யாவும் பின்னர் குறைவின்றிச் செய்யப்பட்டன. இவ்வணிகலன்களிலொன் றாகிய காற் சிலம்பினுள் எவ்வகையான பொருளை இடல்
வேண்டுமெனக் கம்மியர் கேட்க மாநாய்கன்,
* எவராலும் பெறுவதற்கரிய நாகமணியன்றி
வேறு எந்த மணியும் தன் மகளின் காற் சிலம்புக்கு இடுதல் ஆகாது. *
என்று கூறி இத்தகைய நாகமணி தென் திசையிலே உள்ள நாகதீவிலே உள்ள நாகராசனிடமே பெறலாமெனவுங் கூறி னான்.116 மேலும் இது பற்றி அவன் கூறுகையில் இம் மணி யைக் கடல் கடந்து சென்று பெறுவது இலகுவல்லவென்றும் இதனை ஒரு கடல்வீரனால் மட்டுந்தான் பெறலாம் என்றுங் கூறினான். அப்போது மாநாய்கனுடனிருந்த புரோகிதர் இதனைச் சாதிக்கக் கூடியவன் மீகாமனே எனக் கூறி, * மீகாமனின் " கதையைக் கூறினர். இவன் பரதவர் குலத்த வன். கரையில் வாழ்ந்ததால் இக்குலத்தவர் கரையார் எனவும் அழைக்கப்பட்டனர். இத்தகைய வீரமிக்க மரபிலே தோன்றிய
யாழ். - தொன்மை வரலாறு 132 (9

வனே மீகாமனாவன் என்பதனைக் கண்ணகி வழக்குரையில் மீகாமன் கதையில் வரும் பின்வரும் பாடல் எடுத்துரைக் கின்றது. 117
"கூட்டிவந்தான் வருணர்தமைக் குறையறுத்துக் கரைநீளம் வாட்டமற வைத்தநாளில் வழங்கியபேர் கரையார்காண் பாட்டிலவர் தம்பெருமை பகரவினித் தொலையாது தீட்டுபுகழ் மீகாமன் சிறந்தமர பெனவுரைத்தார்".
பரதர் தெருவிலே வாழ்ந்த மீகாமனை அழைத்து வந்த செய்தி பின்வருமாறு கூறப்படுகின்றது.118
** சொல்லுமெனத் தூதர்தாமும் தொங்காம லேயோடி எல்லை யில்லாப் புகழ்பரதர் இருக்குமந்தத் தெருப்புகுந்து மல்லையொத்த புயத்தானே வருணகுலத் துதித்தோனே அல்லையொத்த கொடைவணிக்ன் அழைத்துவரச்
சொன்னதென்றார்".
இவ்வாறு அழைக்கப்பட்ட மீகாமன் மாநாய்கனின் வேண்டு கோளை ஏற்று அதனைச் செயற்படுத்துவதற்காகக் கப்பல் களைத் தயாரித்துத் தரும்படி கேட்க இதற்கான மரவகைகள் ஈழத்திலே தென்பகுதியிலாண்ட அரசனிடம் பெறப்பட்டன எனவுங் கூறப்படுகின்றது.
அக்காலத்தில் ஈழத்தின் வட பகுதியின் சில பகுதிகளை முக்குவர்களின் தலைவனாகிய வெடியரசன் ஆட்சி செய்தான். இவர்களும் பரதர் குலத்தவரே. சிலர் பிற்பட்ட ஐதீகங்களின் அடிப்படையில் இவர்களை இராமாயணத்தில் இராமலட்சுமண ருக்குக் கங்கைக் கரையிற் படகோட்டிய குகன் " வம்சத்த வருடன் இணைத்து முன் குகன் என்பதே முக்குகரானது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.19 எனினும், முத்துக் குளித்தல் என்ற பிரதான தொழிலில் இவர்கள் ஈடுபட்டதால், நீரில் அமிழ்தல், மூழ்குதல், முழுகுதல் எனப் பொருள் தரும் முத்துக்குளித்தல் வழிப்பிறந்த சொல்லே முக்குவர் எனலாம். இவர்கள் சிற்றரசர்களாக ஈழத்தின் வடபகுதியை ஆண்டனர். இவர்களின் தலைவன் வெடியரசனாவன். இது பற்றி டானியல் ஜோன் பின்வருமாறு கூறுகின்றார். 120
133 வரலாற்றுக் காலம் 1

Page 83
* அக்காலத்திலே யிந்நாட்டுக் குடிபதிகளாயிருந்த வெடி
யரசனென்னும் குகனும் அவன் சகோதரராகிய வீர நாராயணன், விளங்குதேவன், போர்வீர கண்டன், ஏரிலங்குருவன் என்னும் நால்வரும், சிற்றரசர்களாய் அங்கங்கிருத்தார்களென விளங்குகின்றது. இவர்களைக் கிருட்டினன் புத்திரரென்பர். இவர்களில் வெடியரசன் நெடுந்தீவிற் கோட்டை கொத்தளங்களை ஸ்தாபித்துத் தீவுப் பற்றுக்களைத் தனதடிப்படுத்தி, அரசியலுக்குரிய படை படைக்கலங்களுடன் இராச்சியம் பண்ணினான். வெடியரசன் கோட்டை தற்காலமழிந்து கிடப்பதை யத் தீவின் மேற்குப் பகுதியிற் காணலாம். வீரநாராயணன் பொன்னாலை முனைப் புறத்து எலுமிச்சமலையிற் றனக்கும் தன் பரிவாரத்தவர்க்கு மேற்ற கட்டிடங்களைக் கட்டி, தனதானை செலுத்திக் கிருட்டினர் கோயிலை ஸ்தாபித்துப் பிரஸ்தாபமுற்றிருந்தான். அவ்விடத்திலுள்ள சதுரங்க மணல், மாளிகையடைப்பு முதலாமிடங்களும், கட்டிடக் குறிகளும், கண்டெடுக்கப்படும் பூர்வபொன்னாணயங்களும், அவ்விட மிருந்த அட்டோலிக்கங்களைக் காட்டுகின்றன. விளங்கு தேவன் சுழிபுரத்தின் வடபகுதியிலுள்ள திருவடிநிலையிலும் போர் வீரகண்டன் கீரிமலையிலும், ஏரிலங்குருவன் மயி விட்டித் துறைப்பகுதியிலும், தத்தம் பரிவாரத்தோடு அவ்வப் பகுதிகளை ஆண்டிருந்தார்களெனப் பூர்வ சரித் திரமுண்டு'.
நாகரத்தினம் வேண்டிச் சோழ மன்னனின் அனுமதியுடன் மரக்கலங்கள் அணியணியாகப் பின் செல்ல நயினாதீவை நோக்கி வந்த மீகாமனை வழிமறித்தவன் இப்பகுதி மீது மேலாண்மை கொண்டிருந்த வெடியரசனாவன். பின்னர் இருவருக்குமிடையில் நடைபெற்ற போரில் வெடியரசன் தோல்வியுற அவனைச் சிறைப்பிடித்துத் தனது கப்பலின் பாய்மரத்திற் கட்டினான் மீகாமன். மீகாமன் இதன் பின்னர் நயினாதீவை அடைந்து நாகராசனை வணங்கி அவனுக்குச் சீர்வரிசை செய்து அவனி டம் நாகரத்தினத்தைப் பெற்றுக் காவிரிப்பூம்பட்டினம் நோக்கி வெடியரசனுடன் செல்கையில் வெடியரசனின் இன்னோர் தம்பி யாகிய வீரநாராயணனுக்கு அவன் தமையன் சிறைப்பட்ட
யாழ். - தொன்மை வரலாறு 134 O

செய்தி கிட்ட அவனும், அவன் தம்பியரும் மீகாமனை எதிர் கொண்டு போரிட்டதை டானியல் ஜோன் பின்வருமாறு குறிப் பிடுகின்றார்.121
"அத்தருணம் வீரநாராயணன் வட்டுக்கோட்டை, கோட்டைக்காடு முதலாங் காடுகளில் வேட்டை யாடப் போயிருந்தான். தூதர் அஃதறிந்து, அவ்விடஞ் சென்று, ஒலை வழியாலும், வாய் மொழியாலும் வெடியரசனுக்கு நேரிட்ட விபத்து க்களை அவனுக்கு விபரித்தனர். அவனோ கோபா வேசங்கொண்டு, தனது தம்பிமார் மூவருக்கும் இச் சமாசாரம் அறிவிக்கும்படி தூதரை யனுப்பி, இதோ! மாற்றான் துடுக்கடக்கி யவனாவி யெடுக் கிறேனென்று சபதங்கூறித் தன் சேனை போருக் காயத்தமாகும் படி முரசறைவித்து, சேனைகளைச் சேர்த்துக் கொண்டு ஆயுதபாணியாய் மரக்கலமீ தூர்ந்து நாகதீவை நோக்கி நடந்தான். அவ் விடத்தே தன் கருமத்திற் கண்ணாய் நின்ற மீகாமனும், தன் சேனை போருக்காயத்தமாகும் படி செய்தான். உடனே கடலிரண்டு பட்டதென்ன இருபகுதிச் சேனையும் ஒன்றோடொன்று கொதித்துப் பொங்கிச் சீறி தண்டம், ஈட்டி, வாள், வல்லயம், வேல், அம்பும் முதலாம் ஆயுததாரிகளாகி, அடித்தும், குத்தியும், வெட்டியும், பிளந்தும், இரத்தவாறு கடலையும் பிரித்துச் செல்லத்தக்கதாய்க் கடும்போர் புரிந்தனர். போர் புரிந்தபோது வீர நாராயணனேவிய பாணத் தால் மீகாமன் மூர்ச்சித்து வீழ்ந்தும், அவன் ஆயாசம் தெளிந்து எழுந்து மறுபாணத்தை யேவி வீரநாராயணன் மார்பைப் பிளந்து அவனாவியை மண்ணுல கொருவச் செய்தான். திருவடிநிலை, கீரிமலை, மயிலிட்டி யென்னுமிடங்களிலிருந்து, விளங்குதேவன், போர் வீர கண்டன், ஏரிலங்குருவனென்னும் மூவருந்தத்தஞ் சேனை யோடு வந்து, மீகாமனோடு சமராடத் தொடங்கினர். கோடை காலக் கருமேக மிடித்து மின்னியும், வாதராய னாலள்ளுண்டு மழையின்றி வெளிறினாற் போல வெடியரச
() 135 வரலாற்றுக் காலம் 1

Page 84
னுடைய சம்மதப்படி போர் செய்யாது விட்டு மீகா மனோடு சமரசப்பட்டு, அவனுக்கு விரும்பியபடி நாக ரத்தினமுங் கொடுத்து, வழிவிட்டனுப்பினர். அந்நாட் களில் வெடியரசன் வமிசத்தாரான முற்குகரிற் பலர் நெறி கெட்டு, மட்டுக்களப்பு முதலாம் இடங்களுக்குச் சென்று வாசம் பண்ணினார்களெனக் கடலோட்டு வெடி யரசன் சரிதம் முதலாம் நூல்களிற் காணலாம். "
வெடியரசனதும் அவனது சகோதரர்கள் பற்றியும் யாழ்ப் பாண வைபவமாலையில் எதுவித குறிப்புங் காணப்படா விட் டாலுங்கூட இந்நூலிற் கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய செய்தியாகக் கீரிமலை, மாதகற் பகுதிகளில் ஆட்சி செய்த முக்குவத் தலைவர்களான சேந்தன், குசுமன் பற்றிக் கூறப் படுவதை நோக்கும் போது ஆதிகாலத்திலே ஈழத்தில் ஏற் பட்ட முக்குவக் குடியேற்றத்தினையே இக்குறிப்பு உறுதி செய் கின்றது எனலாம்.122
எனினும், மாநாய்கன் ஈழத்தில் நாகரத்தினத்தைப் பெற்ற ஐதீகம் வையாபாடலிலுங் காணப்படுகின்றது. இந்நூல் நயினா தீவை நாக நயினாதீவு என அழைப்பதும் அவதானிக்கத் தக்கது.123 இதில் மீகாமன் - வெடியரசன் பற்றிய செய்தி பின் வருமாறு உரைக்கப்பட்டுள்ளது.124
அற்புத மாகுங் கலியுக மூவா
யிரத்துமுந் நூறுடன் தொண்ணுர
றுற்றிடு மிரண்டா மாண்டினி லரச
னுயர்மது ராபுரி நாடன்
விற்கரச் சோழன் றனையடி வணங்கி
விறல்வணி கேசர்மா நாகர்
பெற்றிடு புதல்வி கண்ணகை தனக்குப்
பேரர வின்மணி வேண்ட. 52
வேண்டிய மாற்றம் விரும்பியங் கரசன் விளம்புமீ காமனைக் குறித்துத்
தூண்டகு தோளான் வெடியர சனையுந்
துலுக்கனை யுந்தொலைத் தழித்துத்
யாழ். - தொன்மை வரலாறு 136 இற

தேண்டிய தெய்வூமணிதருகென்னத்,
சென்றனன் செருவில்விென் றவரை
மீண்டன ன்ரவின் மனிதனை" விாங்கி
விமலைதன் னிந்தனி லன்ற்ே. 53
இவ்வாறு கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவல னார் - காதை ஆகிய நூல்களிலும், வையாபாடலிலும் இடம் பெறுவதை நோக்கும்போது இவற்றை வெறும் ஐதீகங்க.ெ ஒதுக்கித் தள்ளாது இவை வரலாற்றுக் கருவுள்ளன என்பதை எடுத்துக் காட்டுவதற்குப் பிற சான்றுகள் காணப்படுவதால் அவற்றை இங்கே நிரைப்படுத்துவது அவசியமாகின்றது.
தமிழகத்தின் தென்கோடியும் ஈழத்தின் வட, வட மேற்குப் பகுதியும் ஆதிகாலந்தொட்டு முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் ஆகிய தொழில்களில் முக்கியம் பெற்று விளங்கின. UITGöörg நாட்டிலுள்ள கொற்கைத் துறைமுகத்தில் இத்தகைய நட வடிக்கைகளிலீடுபட்ட பரதர் குலத்தவர் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.124 ஈழத்து இலக்கியங்களிற் பரத குலத்தவர் இத்தொழிலிலீடுபட்டமை எடுத்துக்காட்டப் படாவிட்டாலுங்கூட, இவற்றுட் குறிப்பாகக் கி. )Dي 6 هgفقا நூற்றாண்டுக்குரியதென நம்பப்படும் விஜயனது ஐதீகத்தில் விஜயன் வருடந்தோறுந் தனது மாமனாரா இய Unt Giorgiu னுக்கு முத்துகளை அனுப்பினான் என்ற செய்தி கூறப்படு வதை இங்கே குறிப்பிடலாம்.125 தேவநம்பியதீஸன் காலத் திலேகூட வடமேற்கே உள்ள கடற்கரையோரத்தில் முத்துகள் மிதந்தன எனக் கூறப்படுகின்றது.126 இதனால் ஈழத்துப் பரத குலத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டனர் எனலாம். இதனை உறுதிப்படுத்துவதுதான் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பரத அல்லது பட என்ற பெயர்களுடன் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளாகும். இதனாற் பரத குலத்தவர் கிறிஸ்தாப்தத் திற்கு முன்னரே, வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்தில் இங்கு காணப்பட்டனர் என்பது தெளிவாகின்றது. இக்குலத்திலுள்ள பிரிவினர்கள்தான் முக்குவருங் கரையாரும் ஆவர். முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவரே முக் குவராவர். கரையார் மீன்பிடித்தலோடு வாணிபத்திலுமீடு
137 வரலாற்றுக் காலம்

Page 85
பட்டிருந்தனர். இதனை உறுதிப்படுத்துவதாகக் காணப்படு வதுதான் பண்டைய ஈழத்தின் தலைநகராகவுள்ள அநுராத புரத்திற் காணப்படுந் தமிழ் வணிகர்களின் கல்வெட்டாகும்.127 இக்கல்வெட்டு இவர்கள் தங்கியிருந்து தமது வாணிப நட வடிக்கைகளிலீடுபடுவதற்கு அமைக்கப்பட்ட கட்டிடத்திலேயே காணப்படுகின்றது. துர்அதிஷ்ட வசமாக இக்கட்டிடத்தின் மேற்பகுதிகள் மரத்தினால் அமைந்திருந்ததாற்போலும் அழிந்து விட்டன. எனினும் இவ்வணிகக் கூட்டத்தினர் தமது அந் தஸ்துக்கு ஏற்ற முறையில் அமர்வதற்கான இருக்கைகள் கருங்கற்பாறையில் வெட்டப்பட்டு அவற்றின் கீழே அவர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பெயர்கள் இவ்வணிகர்கள் பெளத்த மதத்தினைத் தழுவியதை எடுத்துக் காட்டுகின்றன. எனினும் எல்லா இருக்கைகளிலும் மேலாக உயரத்திற் காணப்படும் இருக்கையில் " நவிக கராவஹ " கப்பலோட்டியான கரையானுடைய (இருக்கை) எனப் பொருள் தரும் வாசகங் காணப்படுகின்றது. இவ்வாணிபக் குழுவின் தலைவனாக இவன் காணப்பட்டதாற்றான் இவனது இருக்கை எல்லோரது இருக்கைகளையும் விட உயர்ந்து காணப்பட்டது. இப்பதத்திற்குங் கப்பற் படையுடன் ஈழத்தினை நோக்கி வந்த கப்பற் படைத் தலைவனான இக்குலத்தினைச் சேர்ந்த மீகாமனுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமை அவதானிக் கத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் மீகாமன் என்ற பதங் கப்ப லோட்டி அல்லது தலைமைக் கப்பலோட்டி எனப் பொருள்
படுவது அவதானிக்கத்தக்கது.
இவ்வாறேதான் இக்கல்வெட்டில் மேலும் ஒரு செய்தியும் எடுத்துக் காட்டப்படுகின்றது. அதுதான் இதில் இடம் பெற் றுள்ள ' தமேட கஹபதி கன " என்பதாகும். இதன் பொருள் * தமிழ் நாட்டு வணிகர் குழு " ஆகும். இதிலே காணப்படுங் * கஹபதி " என்ற பதம் பொதுவாக வாணிபச் சிறப்பால் மேன்மையுற்ற செல்வந்தரைக் குறிக்குஞ் சொல் என்பதை இக்கல்வெட்டிற் காணப்படும் நவிக ’ என்ற பதம் உறுதிப் படுத்துகின்றது, கடல் மூலம் வாணிபப் பொருட்களை எடுத்து வியாபார நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த குழுவினரையே இப் பதங் குறிக்கின்றது எனலாம். வவுனியா, திருகோணமலை,
யாழ். - தோன்மை வரலாறு 138

*%ம்பாறை ஆகிய மாவட்டங்களிலுங் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வாணிப நடவடிக்கைகளிலீடுபட்ட தமிழ்நாட்டு வணிகர் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கும்போது கிறிஸ்தாப்தத் திற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ் நாட்டவர் வாணிபக் குழுக்களை அமைத்து ஈழத்துடன் வாணிபத்திலீடு பட்ட மை புலனாகின்றது. இதனை அநுராதபுரக் கல்வெட்டில் இடம் பெறும் * கஹபதி கன என்ற சொல் மட்டுமன்றி மாசாத்துவான், மாநாய்கன் என்ற பெயர்களும் எடுத்துக்காட்டு கின்றன. சாத்து என்பது வணிகர் குழு எனப் பொருள் தரும், இதன் தலைவன் மாசாத்துவான் என அழைக்கப் பட்டான். இவர்கள் பெரும்பாலுந் தரைவழி வாணிபத்திலீடு பட்டனர். கடல்வழி வர்த்தகத்திலீடுபட்ட வணிக கணத்தின்
தலைவன் * மாநாய்கன் ” என அழைக்கப்பட்டான். இதனால்
வர்த்தகத்துறையில் இறுக்கமாக இணைந்திருந்த தமிழகத்
திற்கும் ஈழத்திற்குமிடையே வாணிபப் பொருட்களைப் பெறு வதற்காக நடைபெற்ற போரையோ வாணிபப் போட்டியின் விளைவாக நடைபெற்ற போரையோதான் மீகாமன் - வெடி யரசன் க்தை உருவகப்படுத்துகின்றது. இக்கதை கண்ணகி காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டுச் சம்பவத்தைக் சருப்பொருளாகக் கொண்டிருந்தாலுங் கூட இதில் விரித்துக் கூறப்படுஞ் செய்திகள் தமிழகம் - ஈழம் ஆகிய பிராந்தியங் களின் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பகால நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கக் கூடியவை என்று கூறினால் மிகையாகாது.
இத்தகைய பின்னணியிற்றான் பாளி நூல்கள் கூறுந் தமிழ் நாட்டவர் ஈழத்தின் மீது மேற்கொண்ட படை எடுப் புகள் ஆராய்தற்பாலன. ஈழத்தின் வரலாற்றின் ஆரம்ப காலங் கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகக் கொள்ளப்படுவதால் இக்காலந் தொட்டுக் கிறிஸ்தாப்த காலம் வரையிலான காலப்பகுதியினை உள்ளடக் கிய இருநூற்றைம்பது ஆண்டுகளிற் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளிலே (மூன்றிலொரு காலப் பகுதி) தமிழகத்திலிருந்து வந்தோர் அநுராதபுரத்திலாட்சி செய்த மன்னரிடமிருந்து அரசாட்சியைப் பறித்து ஈழம் முழுவதும் ஆட்சி செய்தனர்
139 வரலாற்றுக் காலம் 1

Page 86
எனப் பாளி நூல்கள் குறிப்பிடுவதால் இது பற்றிச் சற்று விரிவாக ஆராய்வது பொருத்தமாகின்றது.
பாளி, சிங்கள, தமிழ் நூல்களும் தமிழ் மன்னருஸ்
நாகநாடு பற்றித் தமிழ் நூல்களிலும், தமிழ் வணிகர் பற்றிப் பிராமிக் கல்வெட்டுகளிலுங் காணப்படுங் குறிப்பினை அவதானிக்கும்போது ஈழத்தின் வடபகுதி குறிப்பாக அநுராத புரத்திற்கு வடக்கே உள்ள பகுதி தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை புலனாகின்றது. இத் தகைய தொடர்பின் மூலமாகத் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் இப்பகுதியில் வந்து குடியேறுவதற்குரிய வாய்ப்புக் கிட்டியது மட்டுமன்றி, வணிகர்கள், குறிப்பாக அரசியலாதிக்கம் விரும்பியோர் கூட அரசியலாதிக்கத்தினைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டதைத் தீபவம்சம்,
மகாவம்சம் போன்ற நூல்கள் எடுத்தியம்புகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் ஈழத்தின் வெளியுலக அரசியற் றொடர்பு களைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. இக்கால அரசியற் தொடர்புகளைத் தமிழகத்துடன் மட்டுமே அநுராத புர அரசு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேவநம்பிய தீஸனின் ஆட்சிக் காலத்தில் ஈழம், தமிழ்நாடு ஆகியன அசோ கனின் தர்மபோதனையை ஏற்ற நாடுகளாகக் கூறப்படுகின் றன. கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய சமுத்திர குப்த மன்னனின் அலகாபாத் கல்வெட்டில் அவனின் ஆட்சி ஈழம் வரை படர்ந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டாலுங்கூட அதற் குரிய சான்றாதாரங்களில்லை. தேவநம்பியதீஸனின் மரணத் தின் பின்னர் சூரதீஸ் அரசனானபோது அவனிடமிருந்து அரசபதவியைக் கைப்பற்றியவர்களாகச் சேனன், குத்திகன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 128 இவர்கள் குதிரை வணிகனின் புதல்வர்கள் எனவுங் கூறப்படுகின்றது. சங்க இலக் கியங்களிற் பரதர்களுங் குதிரை வாணிபத்தில் ஈடுபட்டுள்ளமை பற்றி வருங் குறிப்புகளை அவதானிக்கும்போது இவர்களும் ஒரு சமயம் பரதர் குலத்தவராக இருந்திருக்கலாமோவென எண்ணத் தூண்டுகின்றது. இவர்கள் அரச அதிகாரத் தினை இவ்வாறு இலகுவாக (அதுவும் தேவநம்பியதீஸன்
யாழ். - தொன்மை வரலாறு 14O 9ே

மறைந்து பத்து ஆண்டுகளின் பின்னர்) பெறுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்பது பற்றித் தெரிய வில்லை. ஒரு சமயம் இவர்களை ஒத்த தமிழ் நாட்டவர் பலர் அநுராதபுரப் பகுதியிற் காணப்பட்டதாலும் அவர்களின் உதவி கொண்டு இவர்கள் அரசாதிகாரத்தினைப் பெற்றிருக்கலாம். எனினும், நீதி தவறாது ஆட்சி செய்தவர்கள் என இவர் களைப் புகழ்ந்துரைக்குந் தீபவம்சம், மகாவம்சம் ஆகியன இவர்கள் ஆட்சி இருபத்திரண்டு வருடங்கள் (கி. மு. 237 - 215) நீடித்தது பற்றியுங் குறிப்பிடுகின்றன. இந்துக்களாக விளங்கிய இவர்கள், தமது சமயக் கடமைகளை நிறைவேற் றுவதற்காக மல்வத்து ஓயா நதியை அநுராதபுரத்தின் நக ரருகே ஒடும் வண்ணம் திசை திருப்பினார்களெனவுங் கூறப்
படுகின்றது.
சேனன், குத்திகன் ஆகியோரது ஆட்சியின் t ମିର୍ଜର୍ସୀ ଜst if தேவநம்பியதீஸனின் இன்னொரு தம்பியாகிய அசேலன் ஆட்சி பீடம் ஏறினான். இவனது ஆட்சியும் பத்து வருடங்களே நீடித்தது. அப்போது " சோழ நாட்டிலே நற்குடியிற் பிறந்த தமிழனான எல்லாளன் " என்பான் ஈழத்தினைக் கைப்பற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சங் குறிப்பிடுகின்றது.129 இவனது ஆட்சி பற்றியும் இவனுடன் போரிட்ட ஈழத்து மன்னனான துட்டகைமுனு பற்றியுந் தீப வம்சத்திலே சிறு குறிப்பு மட்டும்தான் உண்டு.130 தமிழகத்தி லிருந்து படை எடுத்த சேனன், குத்திகன் ஆகியோரைத் * தமிள என்று அழைத்த தீபவம்ச ஆசிரியர் எல்லாளனை மட்டும் அவ்வாறு குறிப்பிடாது கூடித்திரிய இளவரசனாகிய எல்லாளன் அசேலனைக் கொன்ற பின்னர் நாற்பத்துநான்கு வருடங்கள் நீதி தவறாது ஆட்சி செய்தான் என்று கூறுகின்றது. இவனைத் தோற்கடித்த காக்கவண்ணதீஸனின் மகனாகிய அபய என்னும் இளவரசன் (துட்டகைமுனு) பத்துத் தளபதிகளின் உதவியுடன் முப்பத்திரண்டு தமிழ் அரசர்களை யுந் தோற்கடித்து நாற்பத்து நான்கு ஆண்டுகளின் பின்னர் அநுராதபுரத்தினைக் கைப்பற்றினான் என மேலுங் குறிப்பிடு கின்றது.
141 வரலாற்றுக் காலம் 1

Page 87
எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனுவைத் தாம் எழுதிய காவியமாகிய மகாவம்சத்தின் கதாநாயகனாக மகாவம்ச ஆசிரியர் சித்திரிக்க விரும்பியபோதும் எல்லாளனைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடத் தவறவில்லை. நண்பனுக்கும் எதிரிக்குஞ் சமமான நீதியையே வழங்கினான் என்று கூறும் மகாவம்ச ஆசிரியர் இதனை விளக்க ஓர் உபகதையையும் எடுத்தாண்டுள்ளார். எவருக்கும் நீதி வழங்க வேண்டுமென்று கருதித் தான் தூங்கும் அறையில் ஒரு மணியைக் கட்டி அதனை இழுத்து அடிப்பதற்கான கயிற்றை அரண்மனை வாசலிலே தொங்கவிட்டான். குறையிரப்போர் அதனை இழுத்து அடிப்பதன் மூலத் தமது குறையை மன்னனுக்கு முறையிட முடிந்தது. இத்தகைய சம்பவம் ஒன்று கன்றை இழந்த ஒரு பசுவின் கதையாக எல்லாளனின் ஆட்சியிற் குறிப்பிடப்படுகின்றது. எல்லாளனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். திஸ்வாவி நோக்கி இரதத்திற் செல்லும்போது தவறுதலாக அவ்வழியிற் படுத்திருந்த பசுவின் கன்றைத் தனது தேர்ச்சில்லினால் நெரித்துக் கொல்ல நேர்ந்தது. இதனாலே துன்பமடைந்த பசு இது பற்றி மன்னனுக்கு முறையிட்டது. மன்னன் தானே தேரைச் செலுத்தித் தன் மகன் பசுக்கன்றைக் கொன்ற இடத்திலே தன் மகனைத் தேர்ச் சில்லினால் நெரித் துக் கொன்றதாக மகாவம்சங் குறிப்பிடுகின்றது. இத்தகைய சம்பவந் தமிழகத்திலாட்சி செய்த மனுநீதிகண்ட சோழனது வரலாற்றிற் காணப்படுவதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. இதே போன்று மகாவம்சந் தவறான நெறியாகிய இந்து மதத்தினைத் தழுவிய இவன், பெளத்த மதத்திற்கு ஊறு செய்யாது ஆட்சி செய்ததற்கான ஒரு நிகழ்ச்சியையுங் குறிப் பிடுகின்றது. எல்லாளன் பிக்குமாரை அழைப்பதற்காக மிகுந்தலைக்குச் சென்றபோது இரதச் சில்லொன்றின் முனை, வழியிலுள்ள தாதுகோபுரத்திற்குச் சிறிய பாதிப்பை ஏற்படுத் தியது. அப்போது உடனிருந்த எல்லாளனின் அமைச்சன் * மன்னனே எங்களுடைய தீவிற்கு உம்மாற் பாதிப்பு ஏற்பட் டுள்ளது ? எனக் கூற, மன்னன் மனம் வருந்தி வெகுதிரவியங்கள் செலவு செய்து பொன்னாலான கட்டிகளைச் செய்து உடைந்த தாதுகோபுரத்தின் பகுதிகளைச் சீர்செய்தான் எனக் குறிப்
பிட்டுள்ளது.
யாழ். - தொன்மை வரலாறு 142 ()

எல்லாளனுக்குந் துட்டகைமுனுவுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தந் தமிழ் - சிங்கள இனப்போராட்டமாக மகாவம்சத்திற் சித்திரிக்கப்பட்டாலுங்கூட அவ்வாறின்றி வெளிநாட்டிலிருந்து வந்து அரசாட்சிசெய்த மன்னனுக்கும் உள்ளூர்ச் சக்திகளை ஒன்று திரட்டிப் போராடிய ஒருவனுக்குமிடையிலான போரென்றே வரலாற்றாசிரியர்கள் இதனை எடுத்துக்காட்டியுள்னர்.181 மகா வம்சத்திலே துட்டகைமுனு - எல்லாளன் ஆகியோரது Gt_isrff நடவடிக்கைகளை நோக்கும்போது துட்டகைமுனு மகாகமவி லிருந்து அநுராதபுரம் நோக்கி எல்லாமாகப் பதினெட்டு இடங் களில் எல்லாளனுடைய படையினர் காணப்பட்ட கோட்டை களிற் சமர் புரிந்தமை கூறப்படுகின்றது. இச்சமரின்போது எல்லாளனின் தளபதிகளாகச் சட்ட, தித் திம்ப, மாககோத, கவாரா, இகசரிய, நாளிக, தீகபாய, கபிசிக, கோட, ஹலவபாணக, வாஹித, காமினி, கும்ப, நற்திக, தம்ப, உண்ண, ஜம்பு ஆகி யோர் கூறப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோருந் தமிழர்களே என மகாவம்சங் குறிப்பிட்டாலும் இவர்களிற் பலர் , சிங்களவ
ராக இருந்தனர்.
இவ்வாறே துட்டகைமுனுவினது படைத் தளபதிகள் பத்துப் பேருஞ் சிங்களவரே எனக் கூறப்பட்டாலும் அவர்களுட் தமிழ ரும் இருந்தனர் எனக் கொள்ளலாம். இதற்கு உதாரண மாக “வேலு சுமண" என்ற பெயரிலுள்ள “வேலு" என்ற பெயரைச் சுட்டிக் காட்டலாம். உண்மையிலே இப்பதம் “வேள்” ஆகும். "வேள்” என்போர் குறுநில மன்னர்களாகச் சங்க காலத்தில் விளங்கியது போல ஈழத்திலுங் காணப்பட் டனர்.182 இவ்வாறே துட்டகைமுனுவின் பரம்பரைகூட ஆய்" எனப்பட்ட சிற்றரச பரம்பரை என்பதை ஈழத்தின் தென்கீழ்த் திசையிலுள்ள பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. இவ் ஆய்” என்ற இனக் குழுவினர் தமிழ் நாட்டில் வேளிரைப் போன்று சிற்றரசர்களாக விளங்கியதோடு அவர்களோடு நெருங் கிய உறவுங் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத னால் எல்லாளன் - துட்டகைமுனு ஆகியோருக்கிடையே £565, Lபெற்ற யுத்தத்தினை ஓர் இனப்பூசலாகக் கொள்வது முடியா தென்பது மேலும் உறுதியாகின்றது.
9ே 143 வரலாற்றுக் காலம் 1

Page 88
இனி இவ்விரு அரசர்களுக்கிடையே நடைபெற்ற போர் பற்றி மகாவம்சங் குறிப்பிடுவதை நோக்குவாம்.138
"நகரத்தின் தெற்கு வாசலுக்கு அண்மையில் இரு மன்னர் களும் பொருதினர். எல்லாளன் குறி நோக்கித் தனது ஈட்டியை எறிந்தான். துட்டகைமுனு அக்குறியிலிருந்து தப்பிக் கொண்டு எல்லாளனின் யானையைத் தந்தங்களி னால் துளைப்பதற்குத் தனது யானையை ஏவினான். எல்லாளனை நோக்கித் தனது ஈட்டியை எறிந்தான். யானையுடன் எல்லாளனும் சரிந்தான். இவ்வாறு துட்ட கைமுனு வெற்றிவாகை சூடி இலங்கையை ஒரே ஆட்சிக் குள் இணைத்த பின்னர் தலைநகருக்குள் தேர்ப்படை யுடனும், காலாட் படையுடனும், யானைப் படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும்படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கெட்டிய தூரத்தி லிருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமக் கிரியைகளைத் துட்டகைமுனு நடத்தி னான். போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடை யில் வைக்கப்பட்டுத் துட்டகைமுனு அச்சிதைக்குக் கொள்ளி வைத்தான். அங்கு ஒரு நினைவுத் தூபியைக் கட்டி எழுப்பி அதனை வழிபடுமாறு ஆணையிட்டான். அன்று தொடக்கம் இலங்கை மன்னர்கள் இந்நினைவுத் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மெளன அஞ்சலி செய்வது வழக்கம்.”
எல்லாளனைத் தோற்கடித்தாலுங்கூட ஈழம் முழுவதையும் ஒரே குடைக்குக் கீழ்க் கொண்டு வருவதற்காக முப்பத்திரண்டு தமிழ் அரசர்களையுந் துட்டகைமுனு தோற்கடித்ததாகத் தீப வம்சமும் மகாவம்சமுங் கூறுகின்றன.134 இந்நூல்களில் மகா வம்சம் இவர்கள் யாவரும் தமிழரே எனக் குறிப்பிடுகின்றது. அப்படியாயின் இவர்கள் எல்லாளனின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியிலா துட்டகைமுனுவின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியிலா காணப்பட்டனர் என்பது தெளிவாக இல்லை. இதனை விடப் போரில் எல்லாளனுக்கு உதவத் தமிழகத்திலிருந்து வந்த "பாலுக" பற்றியும் மகாவம்சத்திற் குறிப்புண்டு.135 எனினும்
யாழ் . - தொன்மை வரலாறு 144 ()

இவனது படை எல்லாளனின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து ஏழு நாட்களின் பின்னரே ஈழம் வந்தது. அறுபதாயிரம் படைவீரர்களுடன் மகாதீர்த்தத் துறைமுகத்தில் வந்திறங்கிய இவன் துட்டகைமுனுவினாலே தோற்கடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கூறும் மகாவம்சம் இப்படை வீரர்கள்
அனைவரையுந் துட்டகைமுனு அழித்தான் எனக் கூறுகின்றது.
எல்லாளன் இறந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாகத் துட்டகைமுனுவின் வலுவான ஆட்சியாலே தமிழகத் திலிருந்து எப்படையும் அநுராதபுரத்தினைத் தாக்கவில்லை. ஆனாற் பின்னர் ஆட்சி செய்த வலகம்பா காலத்தில் (கி. மு. 103) உள்நாட்டிற் காணப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழகப்படை எடுப்புகளுக்கு வழிவகுத்தன. அப்போது நாட்டிற் பஞ்சம் ஏற்பட்டிருந்ததோடு உரோகனைப் பகுதியில் “நீல" என்ற பிராமணம் இவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்ததாகவுங் கூறப்படுகின்றது. இக்காலத்தில் இப்படை எடுப்பை நிகழ்த் தியவர்களாக ஏழு தமிழர்கள் கூறப்படுகின்றனர்.138 மகா தீர்த்தத்தில் வந்திறங்கிய இவர்கள் அநுராதபுரத்தினைக் கைப்பற்ற வலகம்பா மன்னன் நாட்டின் தென் பகுதியாகிய உரோகணைப் பகுதிக்குச் சென்று ஒளித்துக் கொண்டான். அப்பொழுது இவ்வெழுவரில் ஒருவன் இம்மன்னனது மனைவி யாகிய சோமாவதியை அழைத்துக் கொண்டு தமிழகஞ் செல்ல மற்றொருவன் பிச்சா பாத்திரத்துடன் தமிழகஞ் சென்றதாகக் கூறப்படுகின்றது. ஈற்றிலே தரித்து நின்ற புலஹதன், பாஹியா, பணயமாறக, பிளையமாறக, தரதிய ஆகியோர் பதினேழு வருடமும் ஏழு மாதமும் மாறிமாறி ஆட்சி செய்த தாக மகாவம்சங் கூறுகின்றது. இதன் பின்னர் அனுலா என்ற அரசி (கி. மு. 48 - 44) கள்ளக்காதலர்களாகிய இரு தமிழரை மாறிமாறி மணந்து அவர்களை அரசாட்சிப் பொறுப்பிலமர்த்தியதாகவுங் கூறுகின்றது. இவர்களில் ஒருவன் வடுகன். மற்றையவன் நீலிய ஆவன். மகாவம்சம் இந்நீலிய னைத் ‘தமிள ராஜ" என அழைப்பது குறிப்பிடத்தக்கது.187 கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சண்டமுகவின் மனைவி 'தமிள தேவி’ என மகாவம்சத்தில் அழைக்கப் படுவதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.138
O 145 வரலாற்றுக் காலம்

Page 89
எனினும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழக - ஈழ
உறவுகளில் ஒரு திருப்பு முனையாகின்றது. இக்காலம் தான் தமிழகத்திற் சோழ வம்சத்தவனாகிய கரிகாற் சோழ மன்ன னின் ஆட்சி மேன்மை பெற்ற காலமுமாகும். சேரரையும் பாண்டியரையும் வெற்றி கொண்ட தனிப் பேரரசனாக இவன் காணப்பட்டான். இவனின் வட நாட்டுப் படை எடுப்புப் பற்றிச் சிலப்பதிகாரம் சிறப்பாக உரைக்கிறது. இமயமலையில் சோழ வம்சத்தின் சின்னமான புலிக்கொடியை இவன் பறக்க விட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டினை வளப்படுத்திக் காடு களை அழித்துக் களனிகளாக்கியதோடு, நீர்ப்பாசனத் திட் டங்கள் பலவற்றையும் உண்டுபண்ணினான். காவேரி ஆற்றிற்கு அணை கட்டியவனாகச் சங்க நூல்களில், குறிப்பாக இவனின், ஆட்சிச் சிறப்புப் பற்றிப் பேசும் பட்டினப்பாலையில் குறிப்பிடப் படாவிட்டாலுங் கூட, பிற்பட்ட தமிழகக் கல்வெட்டுகளில் இவனின் இப்பணி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழகத்தில் சோழரின் ஆட்சியை முதன்மைப் படுத்திய இவனின் கவனம் ஈழத்திற் திரும்பியது வியப் பன்று.189 இத்தகைய படை எடுப்புப்பற்றி ஏன் மகாவம்சங் குறிப்பிடவில்லை என்பது புதிராகவே உள்ளது. எனினும் பிற் பட்ட நூல்களாகிய ராஜவலிய, பூஜாவலிய ஆகிய நூல்களில் இது பற்றிய குறிப்புண்டு.140 இந்நூல்கள் சோழ அரசன் ஒருவன் ஈழத்தின்மீது படை எடுத்துப் 12,000 சிங்களவரை அடிமைகளாகச் சிறைபிடித்துச் சென்றதோடு தான் கட்டுங் காவேரி அணையிலும் வேலை செய்வதற்கு இவர்களைப் பயன் படுத்தினான் என்றுங் கூறுகின்றன. அக்காலத்தில் வலிமைபெற்ற சோழ மன்னனாகக் காவேரிக்கு அணை கட்டியவனாகக் கரிகாற் சோழன் குறிப்பிடப்படுவதால் இந்நூல்களில் இம்மன்னனின் பெயர் குறிப்பிடப்படாதவிடத்தும் இக்குறிப்பு இவனுக்குரியது எனக் கொள்ளப்படுகின்றது. 141 போரில் வெற்றி ஏற்படும்போது தோற்றவர்களை வெற்றிவாகை சூடிய மன்னன் சிறைக் கைதி களாக்கித் தனது நாட்டிற்கு இட்டுச்சென்று தனது பணிகளில் ஈடுபடுத்துதலும் உண்டு. இவ்வாறு அவர்களை ஈடுபடுத்திய முதல் மன்னனாகக் கரிகாற்சோழன் மட்டும் காணப்பட வில்லை. இவனுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகட்குப் பின்
யாழ். - தொன்மை வரலாறு 146 )ே

ஈழத்து மன்னனாகிய முதலாவது பராக்கிரமபாகு தமிழகத்தி லிருந்து இட்டுவந்த போர்க்கைதிகளைக் கொண்டு பொலனறு வையிற் க்ட்டிய ஸ்தூபி இன்றும் (தமிளதுரப) தமிழ் ஸ்தூபி' என்ற பெயரைத் தாங்கி நிற்பதுங் கருத்திற்கொள்ளத்தக்கது.
பின்னர் அரசு கட்டிலேறிய முதலாவது கஜபாகு தமிழகஞ் சென்று சோழனாற் சிறைபிடிக்கப்பட்ட 12,000 பேருடன் மேலதிகமாகச் சமஅளவு தொகையையுஞ் சேர்த்துப் போர்க் கைதிகளாக ஈழத்திற்கு இட்டு வந்தான் என்பதை ராஜவலிய, பூஜாவலிய ஆகியன குறிப்பிடுகின்றன. இது கரிகாற்சோழன் இறந்து சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொன்றென லாம். ராஜவலிய என்ற நூல் கஜபாகுவின் இத்தகைய பயணம் யாழ்ப்பாணத்தினூடாக நடந்ததென்றும், இப்படை யெடுப்புக்கு நீலிய என்ற பிராமணன் தலைமை தாங்கிய தாகவுங் கூறுகின்றது. 42 இச்சந்தர்ப்பத்திற் கி. மு. முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அனுலா என்ற அரசியின் கள்ளக் காதலனாக நீலிய என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளமையும், அவ னின் தமிழக அரசவம்சத் தொடர்பை எடுத்துக்காட்ட அவன் "தமிள ராஜ" என மகாவம்சத்தில் அழைக்கப்பட்டுள்ளமையுங் கருத்திற்கொள்ளத்தக்கது. இந்நீலிய கூடத் தமிழகத்தவனாக இருந்ததோடு, சோழ அரசனின் அதிருப்தியாளர்களில் ஒருவ னாகவுங் காணப்பட இவனைப் பயன்படுத்திக் கஜபாகு தனது தமிழகப் படை எடுப்பை மேற்கொண்டான் எனவும் ஊகிக் கலாம். வெற்றிகரமான படை எடுப்பின் பின் கண்ணகியின் காற்சிலம்பு, நான்கு இந்துத் தேவாலயங்களுக்குரிய சின்னங்கள், புத்தரது பிச்சாபாத்திரம் ஆகியனவற்றைக் கொண்டு வந்த தோடு இப்படை எடுப்பில் இட்டுவந்த 24,000 போர்க் கைதி களையும் ஈழத்தின் தென் பகுதியிற் குடியேற்றியதாகவுங் கூறப்படுகின்றது. வடபகுதியூடாகவே கஜபாகுவின் தமிழகப் படையெடுப்பு ஏற்பட்டதெனக் கூறும் ராஜவலிய போன்ற நூல்களில் அவன் திரும்பி வந்தபோது கொண்டுவந்த சிறைக் கைதிகளைக் குடியமர்த்திய இடங்களில் வடபகுதி இடம் பெறாமை புதிராகவே உள்ளது. கஜபாகு கண்ணகி விழாவிற் கலந்தது பற்றிய செய்தி சிலப்பதிகாரத்திலுங் கூறப்படுகின்றது.
147 வரலாற்றுக் காலம் 1

Page 90
மேலும், கஜபாகு காலத்து இருவேறுபட்ட நிகழ்ச்சிகளான சோழ நாட்டின் மீது படைஎடுத்தல், கண்ணகியின் சிலம்புடன் விழா முடிவில் மீளல் ஆகியவை ஒரே தடவையில், ஒரே நிகழ்வாக நடைபெற்றதாகச் சிங்கள நூல்களிற் கூறப் பட்டுள்ளன போலத் தெரிகின்றது. இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளாகவும் இவை நடை பெற்றிருக்க லாம். முதல் நிகழ்ச்சியாகச் சோழ நாட்டின் மீது படைஎடுத்துத் தனது முன்னவன் எதிர்கொண்ட தோல் வியால் ஏற்பட்ட அவமா னத்தைத் துடைக்கும் நிகழ்ச்சி அமையப் பின்னையது சோழனின் இறைமையை அடக்கியபின் அவனின் எதிரியாகிய சேரனின் தலைநகரில் நடைபெற்ற விழாவிற் கலந்து கொண்டதாகவும் அமையலாம். எவ்வாறாயினுஞ் சிங்கள நூல்களில் மட்டுமன் றித் தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்திலுங் கஜபாகுவின் தமிழகப் பயணங் குறிக்கப்படுவது இதற்கு மேலுங் காத்திரத் தினை அளிக்கின்றது.
இச்சந்தர்ப்பத்திற் சிலப்பதிகாரத்திற் கஜபா கு பற்றி வரும் பாடலை எடுத்துக் காட்டுவதும் அவசியமாகின்றது.143
"கடல்சூ பூழிலங்கைக் கஜவாகு வேந்தனும் அன்னாட் செய்த நாளனி வேள்வியுள் வந்தீ கென்றே வணங்கினர் வேட்டத் தந்தேன் வரமென் றெழுந்த தோர் குரல்"
சேரன் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா விற் கலந்து கொண்ட கஜபாகு அநுராதபுரத்தில் வருடா வருடம் ஆடி மாதத்தில் இவ்விழா நடைபெற ஏற்பாடு செய்ததாகவுஞ் சிலப்பதிகாரங் கூறுகின்றது. இதுதான் பின்னர் கண்டிப் பெரஹராவாக வளர்ச்சி பெற்றது. பிரகாரம் என்ற சொல்லின் திரிபே பெரஹராவாகும். இதன் பொருள் வீதி வலம் வரல் ஆகும். ஈழத்திற் கண்ணகி வழிபாட் டின் பரம்பலைக் குறிக்கும் நாட்டுச் சிந்துப் பாடல்கள் வட பகுதியூடாகவே கண்ணகி வழிபாடு ஈழத்திற் பரவியது எனக் குறிப்பிடுகின்றன.144 இப்பாடல்களிற் கந்தரோடையிலுள்ள அங்கணாமைக்கடவை கண்ணகி வழிபாட்டிற்குரிய முதற்றல மாக விளிக்கப்படுவதால் முதலியார் இராசநாயகம் ஜம்பு
urri h. — Glasntsit Sonio Gai Tay at my of Mise Ara

கோளப் பட்டினத்தில் வந்திறங்கிய கஜபாகு கந்தரோடையில் உள்ள அங்கணாமைக்கடவையில் ஒரு கண்ணகி கோயிலை அமைத்தான் என்று கருதுகின்றார். இக்கோயிலின் முன்னால் இம் மன்னனின் சிலை அமைக்கப்பட்டிருந்தது என்றும் மிகமிக அண்மைக் காலத்திற்றான் அது அழிந்தது என்றுங் கூறப் படுகின்றது. 145
எனினும், இத்தகைய நிகழ்ச்சிகள் பாளி நூல்களாகிய தீபவம்சம், மகாவம்சம் ஆகியனவற்றில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய வழிபாட்டு முறைகள் இந்தால்
களை யாத்தோரின் தேரவாத பெளத்த நம்பிக்கைகளுக்கெதி
ரானதாகக் காணப்பட்டதால் இவ்விடயத்தில் இவை மெளன மாகவிருந்திருக்கலாம். அநுராதபுரச் சிங்கள மன்னனே முழுத் தீவினையும் ஆளும் அருகதையுடையவன் என்ற நோக்குடைய இந்நூல்கள் கஜபாகு வடபகுதி மீது கொண்டிருந்த அரசிய லாதிக்கம் பற்றிக் குறிப்பிடாமையால் இக்காலத்தில் இம்மன்ன னது ஆணை இப்பகுதியிலே நிலைபெற்றிருக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது,
கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய மேற்கூறிய நிகழ்ச் சியைப் போன்று கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குரிய இன் னோரு நிகழ்ச்சியும் ஈழத்து வரலாற்று நூலாகிய சூளவமசத் திற் காணப்படுகின்றது. முன்னைய நிகழ்ச்சி பற்றித் தமிழக வரலாற்று நூல்களிலோ ஈழத்தின் மிகப் பழைய பாளி நூல் களாகிய தீபவம்சம், மகாவம்சம் போன்றனவற்றிலோ எதுவித குறிப்புகளும் இடம்பெறாதிருக்கப் பின்னைய இந்நிகழ்ச்சி பற்றி இக்கால வரலாற்றைக் கூறுஞ் சூளவம்சத்தில் மட்டுமன்றி, யாழ்ப் பாண வைபவமாலையிலும் ஏனைய கல்வெட்டுகளிலும் ஆதா ரங்கள் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. அதுமட்டுமன்றித் தமிழக வரலாற்றிலுங்கூட முன்னர் செல்வாக்குடன் விளங்கிய சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் தமிழ் நாட்டில் ஏற்பட்ட களப்பிரரின் ஆட்சியின் விளைவாகத் தமது சுதந்திரத்தினை இழந்த காலமும் இக்காலமே. இத்தகைய ஒரு சூழலிலேதான்
149 வரலாற்றுக் காலம் 1

Page 91
தமிழகத்திலிருந்து ஏற்பட்ட பாண்டியப் படை எடுப்புகள் பற்றிச் சூளவம்சத்திற் கூறப்படுகின்ற கூற்றுகள் முக்கியம் பெறுகின்றன.146
அநுராதபுரத்திலே தேவநம்பியதீஸனால் ஆரம்பிக்கப்பட்ட மெளரிய வம்ச ஆட்சி, கி. பி. முதலாம் நூற்றாண்டில் மறைய, வசபணுடன் லம்பகண்ண வம்சத்தின் ஆட்சி ஏற்பட்டது. இவ் வம்சத்தின் கடைசி மன்னன் மகாநாமவாவான். இவனுக்கும் இவனது பட்டத்து அரசிக்கும் ஆண் குழந்தைகள் இல்லா விட் டாலும் இவனின் இன்னோர் அரசியாகிய தமிழ்நாட்டு அரசி மூலம் ஒரு மகன் பிறந்திருந்தான். இவனே மகாநாமவுக்குப் பின்னர் அரசு கட்டிலேறினான். இவனின் பெயரைச் * சென் கொட்" எனச் சிங்கள நூல்கள் கூறுகின்றன. செங்கோன்’ என்ற பெயரையே இவை இவ்வாறு செங்கொட்’ என அழைக் கின்றனவோ என்பது ஆராய்தற்பாலது. அரசுரிமைக்கு இவன் முறைப்படி தகுதி அற்றவன் எனக் கூறி மகாநாமவின் பட்டத்து அரசியின் மகளான “சம்கா" என்பவள் இவனைக் கொன்று தனது கணவனை அரசனாக்கினாள். இவனும் அரசு கட்டிலேறிய வருடத்திலே இறந்தான். இவனின் பின்னர் அரசுகட்டிலேறிய மித்தசேனன் முறைப்படி அரசுரிமைக்கு அருகதையற்றிருந் தாலுங்கூட இவன் மந்திரிகளிலொருவனின் அனுசரணையுடன் ஆட்சிசெய்ய முற்பட்டபோதுதான் தமிழகத்திலிருந்து பாண் டியப் படையெடுப்பு ஏற்பட்டது. இதனால் முறையாக ஒரு வருடமேனும் மித்தசேனனால் அரசாள முடியவில்லை. எனினும் இவ்வாறு உள்நாட்டிற் காணப்பட்ட வாரிசுரிமை பற்றிய சர்ச்சையும் வலிமையற்ற மன்னர்கள் ஆட்சியுமே பாண்டியப் படையெடுப்பை ஈழத்தின்மீது ஈர்த்தன என்று மட்டுங் கூறி விட முடியாது.
தமிழகத்திலே தமது அரசியல் அதிகாரத்தினை இழந்த இவர்கள் வெளிநாட்டிற் சென்று இத்தகைய அதிகாரத்தினைப் பெறலாம் என்ற நோக்கத்துடனும் இதனை மேற்கொண்டிருக் கலாம். எவ்வாறாயினும் இப்படையெடுப்பின்போது சிங்களப் பிரதானிகள் பலரின் ஆதரவு இவர்களுக்கிருந்தது. இவர்கள் பாண்டியராட்சியை ஆதரித்து ஒத்துழைத்தனர். கால் நூற்
யாழ். - தொன்மை வரலாறு 150 கு

றாண்டாக ஏற்பட்ட பாண்டியராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த தாதுசேனன் இவ்வாறு பாண்டியராகிய தமிழருக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிங்களப் பிரதானிகள் கூட்டத்தினரைத் தண்டித்தான் என்ற சூளவம்சக் கூற்று இதனை உறுதி செய்கின்றது. எவ் வாறாயினும் இப்பாண்டியராட்சி ஈழ வரலாற்றைப் பொறுத்த மட்டிற் கிறிஸ்தாப்த காலத்திற்குப் பின்னர் காணப்பட்ட பிர தான நிகழ்ச்சியாக அமைவதால் அது பற்றிக் கூறுவது அவசிய மாகின்றது. இப்பாண்டிய வம்சத்தில் ஆட்சி செய்தவர்களாகப் பண்டு, பாரிண்ட, குட்டபாரிண்ட, திரிதர, தாதிய, பீதிய ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். கிறிஸ்தாப்தத்திற்கு முன் னர் அநுராதபுரத்தில் அரசாண்ட எல்லாளனுக்கெதிராக ஈழத் தின் தென்கிழக்குப் பகுதியிலமைந்த உரோகண இராச்சியத்தின் மன்னனான துட்டகைமுனு போர் தொடுத்தது போன்றே இப் பாண்டியராட்சியை அகற்றிச் சுதேச சிங்கள ஆட்சியை மீண் டும் ஏற்படுத்த முயன்ற தேசிய வீரனாகத் * தாதுசேனன் • சூளவம்சத்திற் சித்திரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.147
பாண்டிய மன்னனின் முதல்வனான பண்டுவின் ஐந்து வருட ஆட்சியின் பின்னர் இவனின் மகனாகிய பாரிண்ட மூன்று வருடம் ஆட்சி செய்தான். இதன் பின்னர் பண்டுவின் இன்னோர் மகனான குட்டபாரிண்ட அரசனானான். இவன் காலத்திற் பாண்டியருக் கெதிராகத் தாது சேனன் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி கண்டன. பின்னர் ஆட்சி செய் தோரிலே திரிதரவின் ஆட்சி இரண்டு மாத காலத்திற்கும், தாதியனின் ஆட்சி மூன்று வருடத்திற்கும், பீதியவின் ஆட்சி ஏழு மாதத்திற்கும் மட்டுமே நீடித் திருந்தது. இவ்வாறு அநுராத புரத்திற் காணப்பட்ட பாண்டியராட்சி மாயரட்டையிலோ உரோகணையிலோ பரவவில்லை என்ற தொனி சூளவம் சத்திற் காணப்பட்டாலுங்கூட குருநாகல் மாவட்டத்தி லுள்ள அரஹகமவிற் கிடைத்த பாரிண்டவின் கல்வெட்டும், கதிர்காமத்திற் கிடைத்த தாதியனது கல்வெட்டும் இவர்க காாட்சி இப்பகுதிகளிற் பரவியிருந்ததை எடுத்துக்காட்டும் அதே நேரத்திற் புத்த மதத்திற்கு இவர்கள் அளித்த கொடை பற்றியுங் குறிப்பிடுகின்றன.14° இவர்களின் சொந்தச் சமய நம்பிக்கைகள் பற்றிச் சூளவம்சங் குறிப்பிடவில்லை.
151 வரலாற்றுக் காலம் 1

Page 92
மேற்கூறிய கருத்தினை உறுதி செய்வதுதான் யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் பாண்டு மகாராஜன் ஆட்சி பற்றிய குறிப்பென்றால் மிகையாகாது. இவை கூறும் பாண்டு மகாராஜன் பாண்டிய மன்னனே ஆவன். முதலில் இக்குறிப்புப் பற்றி அவதானிப்போம். யாழ்ப்பாண வைபவமாலை இந்
நிகழ்ச்சி பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.149
** அக்காலத்திலே கண்டி நாட்டிலிருந்து இலங்கையை அரசாண்ட பாண்டு மகாராஜன் மணற்றிடரென்றழைக்கப் பட்ட இந்நாட்டிற்கு வந்திருந்தான். இவ்விடத்திற் குடியி ருந்த சிங்களவரிற் சிலர் கீரிமலைக்குச் சமீபமாயிருந்த கரைத் துறைகளிற் குடியிருந்த முக்குக் ரென்னும் வலைஞரைக் கொண்டு மீன் பிடிப்பித்து உணக்குவித்துக் கண்டிநாடு முதலிய நாடுகளுக்குக் கொண்டுபோய் வியாபாரம் பண் ணுவது வழக்கமாயிருந்தது. உசுமன், சேந்தன் முதலிய முக்குகத் தலைவர்கள் வேலையாட்களை வைத்து மீன்பிடிப் பித்துக்கொண்டு வந்தார்கள். சிங்களவர் நிழல் வசதிக்கும், தண்ணீர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களிற்றங்கி அக்கோவிற் பிரகாரங்களில் மீனைக் காயப்போட்டுந் திருக் கிணறுகளில் தண்ணீர் அள்ளவுந் தொடங்கினதால் அங்கி ருந்த பிராமணர் கோயில்களைப் பூட்டிக் கொண்டு அப் புறத்தே ஒதுங்கிவிட்டார்கள். கோயில்களிற் சில காலம் பூசை இல்லாமலிருந்தது. அதை அறிந்து பாண்டு மகா ராஜன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி விசாரணை செய்து, நியாயமான தண்டனை செய்து, முக்குகக் குடிகளை அவ் விடத்தை விட்டுத் துரத்தி விட்டான். உசுமன் முதலிய முக்குக வலைஞர்கள் அவ்விடத்தை விட்டு மட்டக்களப் புக்குப் போய்ப் பானகை, வலையிறவு என்னுமிடங்களில் இருந்தார்கள். சில குடிகள் மாத்திரம் இந்நாட்டிலுள்ள மறுதுறைகளிற் போய்க் குடியிருந்தார்கள். அதுமுதல் உசுமன்துறை, சேந்தான்குளம், வலித்தூண்டல் முதலிய இடங்களில் முக்குகக் குடிகள் இருந்ததில்லை. ”*
இந்நூல் இக்குறிப்பினைக் கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய தகவலாகவே தருகின்றது. அநுராதபுரத்திற் பாண்டியராட்சி
யாழ்,- தொன்மை வரலாறு 152 O

நிலை கொண்டிருந்ததும் இக்காலத்திலாகும். இதனால் இப் பாண்டியரில் முதல்வனான பண்டுதான் இந்நூலிற் பாண்டு மகாராஜன் என அழைக்கப்பட்டுள்ளான் எனலாம். யாழ்ப் பாண வைபவமாலை எழுதப்பட்ட காலத்திற் சிங்கள மன்னரின் தலைநகர் கண்டியிற் காணப்பட்டதால் அநுராதபுரத்திற்குப் பதிலாக இந்நூலிற் கண்டியே சிங்கள மன்னரின் தலை நகராகத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. இத்தகைய தவறுகள் வேறு பல இடங்களிலும் இந் நூலிற் காணப்படுகின்றமையால் இதனை ஆசிரியர் தவறாகவே குறித்துள்ளார் எனலாம். இதனால் மேற்கூறிய குறிப்பு உண்மையான வரலாற்று நிகழ்ச்சியைக் கூறுகின்றதா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாயினும், அநுராதபுர மன்னர், வடபகுதியோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றிப் பாளி நூல்களிற் காணப்படுத் தகவல்களுக்கும். இதற்குமிடையே பெரிய வேறுபாடு காணப்படுவதும் இங்கே அவதானிக்கத்
தக்கது.
நாம் ஏற்கனவே எடுத்துக்காட்டியது போன்று பாளி நால்களிற் காணப்படுங் குறிப்புகளிற் பெரும்பாலானவை நாக தீபத்தில் அவர்கள் மேற்கொண்ட பெளத்த நடவடிக்கைகளை மட்டுமே குறித்துள்ளன. இவர்கள் இப்பகுதியில் மேற்கொண்ட எவ்வித அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் அவை குறிப்பிட வில்லை. அநுராதபுரத்தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னரின் ஆட்சி உத்தரதேசத்திற் காணப்பட்டது என்ற செய்தியையும், பாண்டு மகாராஜன் கீரிமலைக்கு வந்து மேற்கொண்ட f5 Lسس வடிக்கை பற்றி யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படுஞ் செய்தியையும் ஒப்பிட்டு ஆராயும்போது இவை சமகாலத்தனவாய் இருப்பது அவதானிக்கத்தக்கது. அத்துடன் பாண்டிய மன்னர் களின் சமயம் பற்றிப் பாளி நூல்கள் எவ்வித குறிப்பினைபுத் தராவிட்டாலுங்கூட அவர்கள் வடபகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நோக்கும்போது இவர்கள் இந்துக்களாக இருந்தனர் என யூகிக்கலாம். எனினும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு வடபகுதியிற் பாண்டியராதிக்கம் பற்றி முழுமை யாக அறிய முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு சமயம் அநுராதபுரத்திற் பாண்டியராட்சி நடைபெற்ற காலத்தில் இன்
153 வரலாற்றுக் காலம் 1

Page 93
னொரு பாண்டியப் படையெடுப்பு வடபகுதியில் ஏற்பட்ட சம்பவத்தை யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் இவ்வாறு கூறியுமிருக்கலாம்.
யாழ்ப்பாண வைபவமாலை இப்பகுதி பற்றி மேலுந் தருந் தகவல்கள் ஆராய்தற்பாலன. குறிப்பாக முக்குவர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தருந் தகவல்களை நோக்கும் போது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் அவர்கள் வடபகுதியிற் காணப்பட்டமை தெரிகின்றது. ஆனாற் கண்ணகி வழக்குரை போன்ற நூல்களிற் குறிப்பிடப்படும் வெடியரசன் பற்றிய ஐதீகங்களை ஆதி ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களில் முக்குவர் குலத்தவரான பரதர் அல்லது பரதவர் பற்றிய குறிப்புகளின் பின்னணியில் நோக்கும்போது யாழ்ப்பாண 6ð) (6)'IL 16).1l D fT6ð) 6) ஏற்கனவே இப்பகுதியில் நிலைத்திருந்த முக்குவக் குடியிருப்புகள் பற்றியே குறிப்பிடுகின்றது எனலாம். இவர்களைப் பயன்படுத்தித் தென்பகுதி மக்கள் மேற்கொண்ட மீன்பிடி வியாபாரத் தொழில் பற்றிய குறிப்பும் அக்காலத் தில் வட - தென் பகுதிகளுக்கிடையே நடை பெற்ற மீன்பிடித் தொழிலில் தென்பகுதி மக்கள் பங்கு கொண்டதையே எடுத்துக்
காட்டுவதாகவும் அமையலாம்,
முக்குவரின் மட்டக்களப்புக் குடியேற்றம் பற்றிய செய்தி யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுங் காலத்தில் யாழ்ப் பாணத்திலிருந்து நடைபெற்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இத்தகைய குடியேற்றங் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து நடைபெறுவதற்குப் பதிலாக இன்று கேரளம் என அழைக்கப்படும் பழைய சேர நாட்டி லிருந்தும் ஏற்பட்டிருக்கலாம். இக்கூற்றினை இரு பிராந்தியங் களுக்கிடையே காணப்படுங் கலாசார ரீதியான ஒற்றுமைகள் உறுதி செய்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஏற்பட்ட முக்குவக் குடியேற்றம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் இடம் பெற்றுள்ள கருத்து ஏற்புடையதல்ல என வி. சீ. கந்தையா பின்வருமாறு கூறி யிருப்பது அவதானிக்கத்தக்கது.150
யாழ். - தொன்மை வரலாறு 154 )

"மட்டக்களப்புக் கோயில்களிலே காணப்படும் * முக்குகர் வன்மைக் கல்வெட்டு", "சாதிக் கல்வெட்டு', 'திருப்படைக் களஞ்சியக் கல்வெட்டு" என்ற பட்டயங்களிற் காணுகின்ற படி இம்முக்குக குலத்தாரை வடநாட்டிலிருந்து மட்டக் களப்புக்கு நேரே வந்தவர்களின் சந்ததியினரென்று கொள்ள லேயன்றி, யாழ்ப்பாணத்திலிருந்து கி. பி. 5ஆம் நூற் றாண்டிற் துரத்தப்பட்டோராய் இங்கு வந்தோரென்று கொள்ளுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. யாழ்ப் பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முக்குகர் மீன் பிடி வம்சத்தவரென்று அறிகின்றோம். மட்டக்களப்பு முக்கு கரது பண்டைய வரலாறுகளில் எங்கேனும் அவர் அத்தொழில் செய்ததாகத் தெரியவில்லை. காடு கெடுத்து நாடாக்கி வயல் வளம் படுத்திய அம்மக்கள் அன்றும் இன்றும் செய்தொழிலால் உழவரே என்றும், நாட்டு நிருவாகத்திலும் கோயில் நிருவாகத்திலும் கலிங்க மன்னரால் அவர்கட்குப் பங்கு கொடுக்கப்பட்டிருந்த தென்றும் தெளிவாகின்றது.??
ஆனால் வி. சீ. கந்தையா கூறுவதுபோல இக்குலத்தவர். வடநாட்டிலிருந்து வந்தனரென்பது வெறும் ஐதீகமே. தமது பழைமையை இராமாயண காலத்திற்கு, அதில் இடம்பெறுங் குகனுடன் இணைப்பதன் மூலம் எடுத்துக்காட்டவே மேற்கூறிய ஐதீகம் வளர்க்கப்பட்டது எனலாம். எனவே தமிழக - ஈழ வரலாற்றுப் பின்னணியானது கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே இவர்கள் ஈழத்திற் காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றமை அவதானிக்கத்தக்கது. இவர்கள் மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், வாணிபம் ஆகியவற்றில் ஈடுபட்டதைச் சங்க இலக்கியங்கள் எடுத் துக் காட்டுவதால் விவசாய வசதி கிடைத்த மட்டக்களப்பு மக்கள் அத்தொழிலைத் தமது பிரதான தொழிலாகக் கொண் டிருந்தனர் எனக் கொள்வதிலே தவறில்லை.
மேற்குறிப்பிட்ட தமிழ் மன்னர் ஆட்சி, தமிழகத்திலிருந்து படையினரின் வருகை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றிப் பாளி நூல்களிற் குறிப்புகள் காணப்பட்ாவிட்டாலுங் கூட அநுராதபுரத்திற் சிங்கள மன்னர்களின் வலுவைக் குறைத்த இத்தகைய படையெடுப்புகள் வடபகுதியிலே தமிழர் ஆட்சி
Q 155 வரலாற்றுக் காலம் 1

Page 94
மேலும் தனித்துவமடைய வாவது உதவியிருக்கலாம். தமிழ்மொழி நாகதீபப் பகுதியில் வழக்கிலிருந்ததைப் பிராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்வதை நோக்கும்போது பெளத்தத்தின் வருகை தென்பகுதியிலிருந்த தற்காலச் சிங்கள மொழி பேசும் மக்களின் மூதாதையினரைத் திசைதிருப்ப, நாகதீபப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மொழி பேசியோர், மொழி, மத ரீதியில் இவர்களிலிருந்து வேறுபட்ட, தனித்துவமான ஒரு கலாசாரத்தைப் பேணி வளர்த்ததை இப்பகுதியிற் கிடைத்த தொல்லியற் சான்றுகளும் பிராமிக் கல்வெட்டுகளும் நாணயங்களும் உறுதி செய்கின்றன.
தமிழக - ஈழத் தொடர்புகளில் இதுவரை நாம் தமிழகத்தி லிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட படையெடுப்புகள் பற்றியே கண்டோம். ஈழத்துப் பாளி நூல்களை நோக்கும்போது அரசுரிமை இழந்த ஈழத்து மன்னர்கள் தாம் இழந்த அரசாட்சியுரிமையை நிலைநாட்டுவதற்குத் தமிழகஞ் சென்று தமிழ்ப் படையினருடன் திரும்பிய இக்காலத்திற்குரிய மூன்று சம்பவங்கள் இவற்றுட் காணப்படுகின்றன. இத்தகைய வழக்கத்தினை ஆரம்பித்து வைத்தவனாக ஈழநாக ( கி. பி. 33 - 43 ) என்ற மன்னன் குறிப்பிடப்படுகின்றான். 151 அனுராதபுரத்தில் அரசாண்ட லம்பகண்ணரிடம் அரசாட்சியை இழந்த இம்மன்னன் தமிழகஞ் சென்று மூன்று ஆண்டுகள் தரித்து நின்று படையுடன் மீண்டு தனது ஆட்சியுரிமையைத் திரும்பப் பெற்றதாகக் கூறப் படுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய . நடவடிக்கைகளில் ஈடுபட்டவனாக அபயநாக (கி. பி. 231 - 240) குறிப்பிடப்படுகின்றான்.152 இவன் பல் ல தி த் த என்ற துறைமுகத்திலிருந்தே தமிழகம் நோக்கிய தனது கடற் பயணத்தைத் தொடங்கியதாகப் பாளி நூல்களின் சான்றுகளை எடுத்துக் காட்டும் முதலியார் இராசநாயகம் இக்குறிப்பு வல்வெட்டித்துறைமுகத்திற்குரியதென்று கூறி ன ரீ லு ங் கூட பல்லதித்தவை வல்லிபுரத்துடன் இணைத்துப் பார்ப்பது கூடப் பொருத்தமாகத் தெரிகின்றது.159 மூன்றாவது நிகழ்ச்சி இரு நூற்றைம்பது ஆண்டுகளின் பின்னர் நடைபெற்றது. அது தாதுசேனனின் மகனாகிய முதலாவது மொகல்லான (கி. பி. 491 - 508) தமிழகஞ் சென்று படையுடன் வந்து காசியப்பனிட மிருந்து ஆட்சியை மீளப் பெற்றதாகும்.154 எனினுந், தமிழகத்தி
யாழ். - தொன்மை வரலாறு 15s O

லிருந்து படை உதவியுடன் ஆட்சியைப் பெற்ற இவன் தமிழகத்திலிருந்து மேலும் படையெடுப்புகள் நிகழாவண்ணங் கடற்கரைய்ோரத்தைப் பாதுகாத்தான் எனவுங் கூறப்படு கின்றது.
மேற்கூறிய இலக்கியத் தொல்லியற் சான்றுகள் வடபகுதியே “நாகநாடு’, ‘மணிபல்லவம்’ எனத் தமிழ் நூல்களிலும் ‘நாகதீப" எனப் பாளி நூல்களிலும் "நகதிவ' என வல்லிபுரப் பொன்னேட் டிலும் விளிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக் காட்டியுள்ளன. எனினும் இச்சான்றாதாரங்களைக் கொண்டு சமகால அநுராதபுர அரசின் தொடர்ச்சியான வரலாற்றைக் கூறுவது போல் இப் பகுதியின் வரலாற்றைக் கூறமுடியாவிட்டாலுங்கூட இக் காலத்தில் இப்பகுதியில் அநுராதபுரத்திற் காணப்பட்ட அரச உருவாக்கத்திற்குப் புறம்பான முறையில் ஒர் அரச உருவாக் கம் அமைந்திருந்ததை இவை உறுதி செய்கின்றன. தமிழ் மக்களே இத்தகைய வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்ததை இவை மேலும் உறுதிப்படுத்துகின்றன. கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் அநுராதபுர அரசிற் காணப்பட்ட தமிழக மன்ன ரின் அதிகாரப் படர்ச்சியும் அநுராதபுர அரசின் ஸ்திரமின் மையும், வடபகுதியின் தனித்துவத்தினை மேலும் உறுதி செய்தது. இவ்வாறு தனித்துவமான போக்கிற் சென்ற இப் பகுதி அரசமைபோடு அநுராதபுரச் சிங்கள மன்னர் கொண் டிருந்த தொடர்புகள் பெருமளவுக்குப் பெளத்தமதம் சம்பந்த மான தொடர்புகளாகக் காணப்பட்டமையுங் குறிப்பிடத்
தக்கது.
s) வரலாற்றுக் காலம் 1

Page 95
9.
10.
ll.
12.
13.
அடிக்குறிப்புகள்
Mahavamsa. (ed.), Geiger, W., 1950. 95). 01.
மே. கூ. நூல், அதி. XIX. வரி. 53 - 55.
Gunawardana, R. A. L. H., Prelude to the State' - “An Early Phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka, The Sri Lanka Journal of the Humanities, (University of Peradeniya) 1982, (Published in 1985), Vol. VIII, Nos. 1 & 2, Luj. I - 39.
History of Ceylon, Vol I, (ed', Paranavitana, S. (Colombo),
1959, பக், 147 - 150,
Vamsatthappakasini, (ed). Malala sekara, G. P., (Lond. ), 1936. Vol. II. . u. 4 3 1 .
Mahavamsa, G. D. Gin. 45/T6v. 936. l .
History of Ceylon, Vol. I, 1959. GLD. J. D.Tai,
uji. I 48 - I 56.
Pieris, P. E., Nagadipa and Buddhist remains in Jaffna J. R. A. S. (C. B), Vol. XXVIII. No. 70, 1917.
பக், 31 - 43 .
ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், (அச்சுவேலி,) 1928. அதி. 1. பக். 20 - 36.
மணிமேகலை, (பதிப்பு), சாமிநாதையர், உ. வே. சென்னை, (ஆறாம் பதிப்பு), 1965. காதை 11, வரி. 21 - 26,
மே. சு. நூல், காதை 9, வரி. 21.
Mahavamsa, Guð. dr. BTóð, S5). 1, 6)/sfl. 71 - 84.
மணிமேகலை, மே. கூ. நூல், காதை 8, வரி. 1 - 2; 43 - 63.
யாழ். - தொன்மை வரலாறு 158 இற

4.
15,
6.
7.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26,
27.
28.
மே. சு. நூல், காதை 24, வரி. 54 - 57 காதை 25. ଗuff. 179 - 2013
Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926. Ludi. 28 - 29.
மே. கூ. நூல், ப. 29.
Dorai Rangaswamy, M. A., The Surnames of the Cankam Age Literary and Tribal, (Madras), 1968. Luji. 39, 43, il 6 8 - 176.
மேற்படி, பக். 160 - 173.
Mahavamsa, GLID. st... Un đầv, 936). XI.
Dorai Rangaswany, M. A., GLD. J. 5/Táv, uš. 182, 195 .
சிலப்பதிகாரம், (பதிப்பு), சாமிநாதையர். உ. வே. (சென்னை), 1927. க. மங்கல வாழ்த்துப் பாடல், வரி. 21 - 29.
Sinnathamby, J. R., Ceylon in Ptolemy's Geography, (Colombo), 1968. L. J. 52 - 55.
சிற்றம்பலம், சி. க., “ ஈழமும் நாகவணக்கமும், (பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்), மணிபல்லவம், மணிபல் லவக் கலாமன்றம், நயினாதீவு, 28ஆம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 04 - 1990. பக். 237 - 248,
மேற்படி, பக். 37 - 48.
Paranavitana, S., (ed), Inscriptions of Ceylon, Part I, Brahmi Inscriptions, (Colombo), 1970.
Rasanayagam, C., ĜuD. 3i... Jp Tsio, Luēš. 68 - 69.
Pillai, K. K., South India and Ceylon, (Madras), 1975. L. 37.
Paranavitana, S., The Arya Kingdom in North Ceylon, J. R. A. S. (C. B.) N. S., Vol. VIII, Part 2, 1961. Luis. 174 - 224.
159 வரலாற்றுக் காலம் 1

Page 96
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
Mendis, G. C., The Vijaya legend, Paranavitana Felicitation Volume, (ed.), Jeyawickrama, M. A., (Colombo), 1965. I uji. 263 - 279.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka', Unpublished Ph. D. Thesis, University of Poona, 1980.
ஞானப்பிரகாசர், சுவாமி. , மே. கூ. நூல், 1928. ப. 24.
Paranavitana, S., Art of the Sinha lese, (Colombo), 1971.
Mahavamsa, மே, கூ, நூல், அதி. XI, வரி. 20 - 23,
மே. கூ. நூல், அதி. XIX, வரி. 22 - 38
மேற்படி, அதி. XIX, வரி. 22 - 38
மே. கூ. நூல், அதி. XX111, வரி. 19 - 23:
அதி. XXV11, வரி. 20 . 25.
Nicholas, C. W., Gud. sh... s. 1963. u. 86. Mahavamsa, Gud. Sm. நூல், -96). XXXV, Qufl. 124.
மே. கூ. நூல், அதி. XXXV1, வரி. 9.
Nichoas, C. W . , GLo. a. as. 963. 1. 87,
Culavamsa, Part. I (Tr. & Ed.) Geiger, W., (Lond.), 1973, அதி. 38. வரி. 48.
Mahavamsa, GLD. sz. gi si), 93. XXXV., 6 f. 124.
Dathavamsa, (ed), Law, B. C., (Lahore), 1925. L. 22.
Mahavamsa, மே. கூ. நூல், அதி. XXXV, வரி. 94.
Nicholas, C. W., Guo. g. B. 1963. Lj. 81.
மேற்படி, ப. 81.
Nicholas, C. W., G.D. s. s. 1963, L. 80.
யாழ். - தொன்மை வரலாறு 16O O

48.
49.
50.
51.
52.
53.
S4.
56.
57.
58.
Wheeler, R. E. M., Arikamedu, An Indo - Roman
Trading Station on the East Coast of India,
“Ancient India”, No. 2., 1946 L uji. 1 7- 24; Wheeler, R.E.M.,
"Brahmagiri and Chandravalli", Ancient India, No. 4., 1948.
Lui;. I 80 - 31 0.
Maloney, C. T., The effect of Early coastal Traffic on the Development of Civilization in South India, Unpublished Ph. D. Thesis, University of Pennysylvania, ( Pennysylvania ), 1968.
Nicholas, C. W., Guo. 3... as, 1963. Ludii. 6 - 16.
Begley, V., " Arikamedu Reconsidered '', American Journal of Archaeology, 87, 1974. Ludii. 46 l - 48l.
Mahavamsa, GLD. s. 5T is, -95. XIX. Guth. 6.
Ellawala, H., Social History of Early Ceylon, ( Colombo), 1969. பக். 118 - 119.
Deraniyagala, S. U., Excavations in the Citadel of Anuradhapura - Gedige 1984, A Preliminary Report, Ancient Ceylon, No. 6. 1986. Ludii. 39 - 48.
. Begley, V., Proto - historical material from Sri Lanka
(Ceylon) and Indian contacts, Ecological Backgrounds of South Asian Pre - history, (ed.) Kennedy, K. A. R. and Possehl. G. L., ( New Orleans ), 1973. Lud. 19 - 196.
Begley., V., Archaeological Exploration in Northern Ceylon '. Expedition, Vol. 9, No. 4, Summer 1967, பக், 21 - 29.
Sitrampalam, S. K., Ĝi D. 3. ... as. 1980.
Ragu pathy, P., Early Settlements in Jaffna - An Archaeo • logical Survey, ( Madras ), 1987.
161 வரலாற்றுக் காலம் 1

Page 97
59.
60.
61.
62.
63
64.
65.
66.,
67.
68.
69.
70.
மே. கூ. நூல், ப. 14.
மே. கூ. நூல், பக். 5 - 12.
Boake, W. J. S., Tirukketisvaram, Mahatirtha, Matoddam or Mantoddai, J. R. A. S. ( C. B. ), Vol. X, 1887, பக். 107 - 117.
Bell, H. C. P., Archaeological Survey of Ceylon, Annual Report, 1907. ( Sessional Papers 1911 ), 15. 26 - 30.
Hocart, H. M., Report of the Archaeological Commissioner, 1925 - 26, மே, சு. அறிக்கை, 1926 - 27.
Vaithianathan, K., (ed ) Tirukketiswaram Papers, (Colombo), 1960.
Begley, V., 3Lo. št. 6, 1967. Luš. 21 - 29.
Carswell, John Mantai 1980: Preliminary Investigation,
& "Ancient Ceylon, No. 5, 1984. Martha Prickett i ješ. l. - 68.
Prickett, Martha., “The Preliminary Investigation of Mantai, 1980. என்ற பகுதி இதற்கு முன்னர் கூறப்பட்ட கட் டுரையின் 4 - 68 வரையிலான பக்கங்களிலுள.
Carswell, John., 'The Excavation of Mantai, Ancient
Ceylon, No. 7, 1990. u ši, 17 - 28.
புஷ்பரத்தினம், ப, பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991
சிற்றம்பலம், சி. க., யாழ். மாவட்டத்தின் அண்மைக் காலத் தெரல்லியல் ஆய்வும் ஆதிக்குடிகளும், செந்தழல், தமிழ்மன்ற வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1982.
யாழ். - தொன்மை வரலாறு 1s2 னு

7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
8.
8.
82.
83.
84.
85.
Parker, H., Ancient Ceylon, (Lond.), 1909. Lud. 461 - 521.
சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1982.
Sitrampalam, S. K., "The Form Velu of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India, Tamil University, Thanjavur. February 2-4, 1991.
புஷ்பரத்தினம், ப. மே, கூ, க. 1991.
Gunawardana, R. A. L. H., Gud. at... 35., 1985. பக், 1 - 39.
Paramavitana, S, மே. கூ. நூல், 1970. பக். 26 - 29.
G3LPfihLJg , u. IX VIII.
Sitrampalam, S. K., Gup. 5, .. as. 1980; Sitrampalam, S. K., “The title Aya of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Summary of the paper submitted to the Archaeological Congress, (Colombo), 1988.
சிற்றம்பலம், சி. க., மே, கூ, க. 1990. பக். 37 - 48.
Sitram palam, S. K. , Gŝuo. ghi,... 86. 1988.
Gunawardana, R. A. L. H., GD, a. s. 1985.
Dorai Rangaswamy, M. A., GLo, s... 51 si), 1968. பக். 7 - 115.
சிதம்பரனார், அ., சேரர் வரலாறு, (திருநெல்வேலி),
Il 972. Lu. 47.
Paranavitana, S., Guo. 3... Tsi, Li. XXXVII.
Paranavitana, S., Gud. Sim... BT6), Lu. 28, 5 Gv GGAL G இல. 355 - 356,
163 வரலாற்றுக் காலம் 1

Page 98
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
சிற்றம்பலம், சி. க., தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துக்கள், *தமிழோசை", தமிழ் மன்ற வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1988 - 1989. Lj. 29 - 36.
Paranavitana, S., GLID. 5. Jb16v, 1970. 556 @au "G இல. 353, 355.
Mahadevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions, ( Madras), 1966; Mahalingam, T. V., Early South Indian Palaeography, ( Madras ), 1967. i uji. 255 - 256.
Sitrampalam, S. K. , GöLD, 3in., 86. 1980.
Sitrampalam, S. K., The Title Parumaka Found in Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Sri Lanka Journal of South Asian Studies, No. 1 (New series) 1986/87. Lj. 13 - 25.
Paranavitana, S., Gud. H. Corso, 1970. L. 29.
Paranavitana, S., Vallipuram Gold Plate Inscription of the reign of Vasabha', Epigraphia Zeylanica, Vol. IV, No. 29, 1934 - 42. Lu5. 220 - 237.
Velupillai, A., Tamils in Ancient Jaffna and Vallipuram Gold Plate", Journal of Tamil Studies, No. 19, June, 1981. பக், 1 - 14.
Paranawitana, S., GLD. 3, . [5! io, 1959. L. 181.
Lewis, J. R., “Some Notes on Archaeological Matters in the Northern Province Ceylon", Antiquary and Literary Register, Vol. II, part II, (Colombo), 1916. Lidi. 94 – 99.
Sobhana, Gokhale., Sri Lanka in some Early Indian Inscriptions, The James Thevathasan Rutnum Felicitation Volume, (ed.), Indrapala, K., (Chunnakam ), 1980. u 1Ꮷ5. 28 - 81 .
யாழ். - தொன்மை வரலாறு 164 C

97.
98.
99.
100.
101.
102.
03.
04.
105.
106.
O7.
108.
109.
கிருஷ்ணராஜா, செ., யாழ்ப்பாணக் குடா நா ட் டி ற் கிடைத்த நாணயங்கள்’. சிந்தனை, தொகுதி 1, இதழ் 111, 1983. பக், 71 - 84,
இந்திரபாலா, கர், யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், (பேராதனை ), 1972. ப. 31,
Sitrampalam, S. K., “ The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka ”, Ancient Ceylon, No. 7, 1990. Luji. 285 - 309.
Velupillai, A., G. D. si... as. Lu. 6.
Dorai Rangaswamy, M. A., GLD. st. Tato, 1963.
Culavamsa, Part II, (Tr. & Ed.) Geiger, W., (London) 1973. அதி. 76, 77. இச்சந்தர்ப்பத்தில் முதலாவது குலோத்துங்கசோழனின் கல்வெட்டுகளில் பொன்பற்றி
உடையான் அரையன் மூவாயிரத்தொருவன் என்பவன்
குருகுலராஜன் என்ற விருதினைக் கொண்டவனாகக் குறிக்கப்படுவதை நோக்கும் போது - அரையன், ராஜன் ஆகியன வெவ்வேறு மூலங்களிலிருந்து தோன்றியவையே 6T 677 Gotlib. Raghavan, M. D., The Karavas of Ceylon Society and Culture, ( Colombo ), 1961. Ludii. 8 - 9.
மே. கூ. நூல், அதி. 77, வரி. 27 -29.
மே. கூ. நூல், அதி. 76, அடிக்குறிப்பு. 3.
மே. கூ. நூல், அதி. 76, 77.
Rasanayagam, C. Gud. Sa. J5rsv, 1926. LJ. 72.
Paranavitana, S., (ed.), (3D. 3. 5Tsi, 1959, U. 176.
மே. கூ. நூல், ப. 175.
Ellawala, H., Social History of Early Ceylon, (Colombo), 1969. Luji. 34 - 35.
)ே 165 வரலாற்றுக் காலம் 1

Page 99
10. Krishnaswami Aiyangar, S., Some Contributions of South
India to Indian Culture, (Calcutta). 1942, Lii. 86 - 88.
1 11. Culavamsa, GuD. s. 576i, 1973. giga). 77, வரி. 27 29 ــــــــ
1 l2. Paranavitana, S., ĞLD. gi . as . I 9 6 1 . t.u. 184.
13. Ellawala, H, Guo. gr. HIsv, 1969. LJ. 35.
114. மே, கூ, நூல், ப. 34.
115. கந்தையா, வி. சீ., கண்ணகி வழக்குரை, (சுன்னாகம் , 1968,
115. மே, கூ, நூல், ப. LX
117. மே. கூ. நூல், ப. 32 செய்யுள் 92.
118. மே. கூ. நூல், பக். 33, செய்யுள் 97.
119. சிவப்பிரகாசம், மு. க., விஷ்ணுபுத்திரர் வெடியரசன்
வரலாறு, (வட்டுக்கோட்டை), 1988.
120. ஜோன். எஸ்., யாழ்ப்பாணச் சரித்திரம், (பதிப்பு) Danief
John, M. B., (Tellippalai), 1929. i. 6.
12!. மே. கூ. நூல், பக். 7 - 8.
122. யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல,
(சுன்னாகம்), 1949. பக். 9 - 10.
123. வையாபாடல், (பதிப்பு) தடராசா, க. செ., (கொழும்பு),
I 980. urtG), 60.
124. Dorai Ranga Swamy, M. A-, Gud år bitso, 1968. List. 43,
28, 23, 130.
125. Mahavamsa, GLD. «9a. Diffsö, J918. VII, affl. 73 – 74.
126. மே. கூ. நூல், அதி. X1, வரி, 14 - 15.
யாழ். - தொன்மை வரலாறு 188 )

l27. Paranavitana, S., Gp. 3. Ditso, 1970, u. 7.
128. Mahavamsa, GLD. e. 5Tei, g9. XXI., 6uf. 10 - 11.
129. மே, கூ, நூல், அதி. XXI, வரி. 13 - 34.
30. Dipavamsa, The Ceylon Historical Journal, Vol. VII. July & Oct., l957. and Jan. & April, 1958. Nos. 1-4,
அதி. 18, வரி, 50・
131. சிறிவீர, டபிள்யு. ஐ., துட்டகைமுனு - எல்லாளன்
வரலாற்று நிகழ்வு. - ஒரு மறு மதிப்பீடு", இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், (யாழ்ப்பாணம் ), 1985.
i jaj. l 19 - 24 0.
132. Sitrampalam, S. K., Göo. ösin... a6. 1 991 ~.
133. இரத்தினம், ஜே., எல்லாளன் சமாதியும் வரலாற்று
மோசடியும், ( தமிழாக்கம் கனகரட்னா, ஏ. ஜே) *
மறுமலர்ச்சிக் கழக வெளியீடு, 1981. ப. 32.
134. Mahavamsa, மே. சு. நூல், அதி. XXV, வரி. 75,
135. மே. கூ. நூல், அதி. XXV, வரி. 76 - 100,
436. மே. கூ. நூல், அதி. XXXI, வரி. 56 - 61,
37. மே, சு. நfல், அதி, XXXIV, வரி. 22 - 27,
38. மே, கூ, நூல், அதி, XXXV, வரி. 47 - 48,
139. Paranavitana, S. , GLID. Fria. A5/T6ño, 1959. Lu. 2 1 1 .
140. மே, கூ, நூல், பக். 182 - 184.
141, மே. கூ. நூல், பக். 211
142. Rajavaliya, (ed) Gunasekara, B., (Colombo), 19ll.
167 வரலாற்றுக் காலம் 1

Page 100
143. சிலப்பதிகாரம், மே. கூ. நூல். 1927. அதி. XXX,
L5. l60 - l64.
144. சற்குணம், எம், "ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்", திருக்கேதீச்சரம் திருக்குட்த் திருமஞ்சன மலர், பக். 113 - 118.
145. Rasanayagam, C., GLD. 95... Jb/T6ü), Lu. 74.
146. Paranavitana, S., Gud. G. SITrio, 1959. uši. 292 - 296.
147. Cullavamsa, GuD. 69ia. DITño), 950. XXXVIII.
148. Paranavitana, S., Guo. 4. до 60, 1959. u 5. 393 – 294.
149. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 9 - 10.
150. கந்தையா, வி. சீ., மட்டக்களப்புத் தமிழகம், (சுன்னாகம்),
l964. Uj; 437.
15 l. Mahavamsa, Ĝko.. 3a, gÍTsio, 9y3. XXXV, eaJ difi, 25 — 28.
152. மே, கூ, நூல், அதி, XXXVI, வரி. 42 - 50.
l53. Rasanayagam, C. , G3LD. 69.. En si), 1 926. U. 76.
154. Mahavamsa, Gud. ar. JB17 siv, syS) . XXXIX, வரி, 32.
வாழ். - தொன்மை வரலாறு 163 இ

அதிகாரம் மூன்று
வரலாற்றுக் காலம் 11 (கி. பி. 500 - 1000 வரை)
வரலாற்றுப் பின்னணி
தென்னாசிய வரலாற்றிற் குறிப்பாகத் தமிழக - ஈழ வரலாற்றிற் கி. பி. 6ஆம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. சங்க காலத்தின் பின்னர் களப்பிரர் ஆட்சியில் உறங்கிக் கொண்டிருந்த தமிழகம் பல்லவ வம்சத்தின் எழுச்சி யோடு அரசியல், கலாசாரம், பொருளாதாரம் அகிய துறைகளிற் பெருமாற்றங்களைக் கண்டது. இக்காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்படுத்திய இந்து சமய மறுமலர்ச்சி, தமிழகத்திற் பெளத்த மதத்தின் செல்வாக்கை மங்கச் செய்தது பல்லவர் கால அரசியல் உறுதியுங் கலாசார மறுமலர்ச்சியும், பாண்டியராலும் அவர்கள் பின் வந்த சோழராலும் பேணப் பட்டது. இதனாற் கி. பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கங் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை, அதாவது அநுராதபுர அரசின் வீழ்ச்சி வரை, தமிழகத்தில் அரசியல் ஸ்திரங் காணப்பட்டது. ஆனால், இத்தகைய ஸ்திர நிலை இக்காலத் தில் ஈழத்திற் காணப்படவில்லை. வாரிசுரிமைப் போர் ஈழத்து அரசியலில் ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. தமது உரிமையை நிலைநாட்ட விரும்பியோர் தமிழகஞ் சென்று தமிழகப் படையுடன் திரும்பி வந்து அரசாட்சியைப் பெறுவதும் இவ்வாறு வரும் படையினர் அநுராதபுர இராச்சியத்திலே தங்குவதும் பொது வழக்காகியது.
இக்கர்லத்திற்கு முன்னர் தமது அரசியலுரிமையைப் பெறுவ தற்க்ாகப் படைஉதவி வேண்டித் தமிழகத்துக்குச் சென்ற மன்னர்கள் மூவராவர். இவர்கள் முறையே ஈழநாக (கி. பி. 33 - 43 ), அபயநாக ( கி. பி. 231 - 240 ), முதலாவது மொகல்லான (கி. பி. 491 - 508) ஆவர். எனினும் பல நூற்
() 169 வரலாற்றுக் காலம் II

Page 101
றாண்டு இடைவெளியில் நடைபெற்ற சம்பவங்களாக இவை அமைந்துள்ளன. அத்துடன் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளை உள்ளடக்கிய காலப்பகுதியில் மூன்றே மூன்று சந்தர்ப்பங்களிற் றான் ஈழத்து மன்னர்கள் படைஉதவி வேண்டித் தமிழகஞ் சென்ற நிகழ்ச்சி சுட்டப்படுகின்றது. ஆனால் ஏழாம் நூற்றாண் டில் மட்டும் எட்டு முறை வாரிசுரிமைப் போரில் உதவி பெறுவ
தற்காக ஈழத்து மன்னர் தமிழகத்திற்குச் சென்ற நிகழ்ச்சியை
மகாவம்சம் குறிப்பிடுகின்றது. எட்டாம் நூற்றாண்டில் ஒரளவு சமாதான நிலைமை காணப்பட்டாலும் பல்லவருக்குப் பின்னர் வலிமையுற்ற பாண்டியரின் எழுச்சியால் அவர்களது அரசியற் றலையீடு இக்காலத்தில் ஈழத்திலுங் காணப்பட்டது. இதன்
பின் எழுச்சி பெற்ற சோழருக்கு எதிராகப் பாண்டியரோடு
ஈழத்தரசர் கொண்டிருந்த இறுக்கமான உறவாற் சோழப் படையெடுப்புகள் கி. பி. 10ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதோடு அநுராதபுர அரசும் வீழ்ச்சி கண்டது.
அநுராதபுர அரசின் வீழ்ச்சிக்கு இக்கால மன்னர்களது பலவீனமும் வெளிநாட்டுப் படையெடுப்புகளும் பிரதான காரணிகளாக அமைந்திருந்தன. உள்நாட்டில் வலிமையற்றிருந்த அரசு இவ்வாறாக வெளிநாட்டவர் அரசியலாதிக்கத்திற்கு
அடியிட்டுக் கொடுத்தது. இத்தகைய படை எடுப்புகளின்
தாக்கம் பற்றிக் கிங்ஸ்லி டீ சில்வா பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது.
* கிறிஸ்துவுக்குப் பின்னுள்ள 6ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில்
தென்னிந்தியாவிலே மூன்று இந்து அரசுகள் (பல்லவர்,
பாண்டியர், சோழர்) எழுச்சி பெற்றன. இதன் விளை வாக இவைகளுக்குஞ் சிங்கள ராஜ்யத்திற்கும் இடையே இருந்த உறவுகளை இனத்துவ முரண்பாடுகள் ஊறு செய்தன. இத்திராவிட அரசுகளின் சமய நோக்கைப் பொறுத்த மட்டிற் போர்க் கோலமிக்க இந்துத் தன்மை யைக் கொண்டு விளங்கியதோடு தென்னிந்தியாவில் பெளத்த செல்வாக்சினை அடியோடு களைந்தெறிவதையே நோக்கமாகவுங் கொணடு செயற்பட்டன. காலப் போக்கிற் போர்க் கோலமிக்க இந்து மதத்தினாலே தென்னிந்தியா
யாழ். - தொன்மை வரலாறு 17O

விற் பெளத்த மதம் முற்றாக அழிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தென்னிந்திய - சிங்கள ராஜ்யங்களுக்கிடையே இருந்த மிக முக்கிய பண்பாட்டு உறவு துண்டிக்கப்பட்டது. தவிர, ஈழம் மீது தென்னிந்திய அரசுகள் கொண்டிருந்த வெறுப்பு - வழக்கமாக இவ்வெறுப்புணர்ச்சிக்குக் கொள்ளை அடிக்கும் வேட்கை ஆர்வமூட்டியது - இப்போது முதற் தடவையாகச் ᏯᎭ Ꭵ ᎠtᎥ Ᏼ ஆர்வத்தாலும் இனத்துவத்தின் பெருமை உணர்வினாலும் முனைப்புப் பெற்றது. இதி லிருந்து எழுந்க முக்கிய விளைவு என்ன வென்றால் ஈழத் தில் இருந்த தமிழர் தமது இனத்துவம் பற்றிக் கூடுத லாகப் பிரக்ஞை செலுத்தத் தொடங்கியது எனலாம். இந்த இனத்துவ உணர்வைப் பண்பாட்டு ரீதியாகவும் சமய ரீதியாகவும் அவர்கள் நிலைநாட்ட முனைந்தனர். இது தான் திராவிட / இந்து / தமிழ் என்ற வடிவங்க ளாகும்."
சில்வர் குறிப்பிடுவது போலத் தமிழகத்தின் தாக்கத்தினாலே தமிழர் மத்தியில் மட்டும் இனத்துவ உணர்வும், மொழி, சமய உணர்வுங் கலந்து நிற்கவில்லை. சிங்களவர் மத்தியிலும் இத்தகைய உணர்வு நன்றாக வேரூன்றி இருந்ததற்கு இக் காலத்தில் எழுதப்பட்ட பாளிநால்களே சான்று பகருகின்றன. இவ்வாறு தென்னகத்திலிருந்து ஏற்பட்ட தமிழ் இந்துக் கலா சாரத்தின் தாக்கத்தில் இருந்து சிங்கள அரசையும் பெளத்த மதத்தையுங் காப்பாற்றவேண்டுமென்ற உணர்வு இக்காலத்தின் அரசியற் கோட்பாடாகப் பாளிநாலோரால் வளர்க்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலை, குறிப்பாக உள்நாட்டுப் போர், வாரிசுரிமைப் போர் என்பன இவர்கள் அடிக்கடி தமி ழகஞ் சென்று படையுதவி பெற்றுவர வேண்டிய தேவையை உண்டுபண்ணியது. இதன் காரணமாகத் தமிழ், இந்துச் செல் வாக்கு முற்பட்ட அநுராதபுர அரசுக் காலத்தினை விட இக் காலத்தில் மிகக் கூடிய அளவுக்கு ஈழத்திற் காணப்பட்டதும் வரலாறாகும். தமிழர் குடியேற்றங்களாலும் , தமிழ்ப் படை யினர் அரண்மனையிற் பெற்ற செல்வாக்கினாலும் அநுராதபுர அரசின் இறுதிக் கட்டத்தில் அரசர்களைத் தெரிந்தெடுப்பதிலே தலைநகரிலிருந்த தமிழ்ப்படையினர் அதிக பங்கினை வகிக்கத்
171 வரலாற்றுக் காலம் 11

Page 102
தொடங்கினர். இதனால் இவர்களின் செல்வர்க்கினை மட்டுப் படுத்த வேண்டிய தேவையும் இக்காலச் சிங்கள அரசர்களுக் கிருந்தது. p.
இத்தகைய ஈழத்து அரசியற் சூழலிற்றான் வடபகுதியின் அரசியல் வரலாற்றையும் அணுக வேண்டியுள்ளது. இது பற்றிப் பாளி நூல்களில் மிகக் குறைவான தகவல்களே காணப்பட்டாலுங் கூட அவற்றைச் சமகால வரலாற்றுப் பின்னணியில் ஆராயும் போது இவை பெருமளவுக்குப் பயனுடைய தகவல்களாக அமைகின்றன. தமிழ் நூல்களாகிய கைலாயமாலை, யாழ்ப் பாண வைபவமாலை, வையாபாடல், மட்டக்களப்பு மான்மியம், கோனேசர் கல்வெட்டு, திரிகோணாசலபுராணம் போன்ற வற்றில் இப்பகுதியின் அரசியல் வரலாற்றைக் கட்டி எழுப்பும் அளவுக்குப் போதிய சான்றுகள் காணப்படவில்லை. எனினும், இந்நூல்கள் குறிப்பிடும் உக்கிர சிங்கன், மாருதப்புரவீகவல்லி ஆகியோரின் கதைகள், யாழ்பாடி கதை ஆகியனவற்றை வெறுங் கட்டுக்கதைகள் என்று உதறித்தள்ளாது சமகால ஈழத்து, தென்னக அரசியற் பின்னணியில் அலசும் போது வடபகுதியிற் காணப்பட்ட அரசு பற்றியும் இக்காலத்துத் தமிழகத் தொடர்புகள் பற்றியும் அதன் விளைவாக ஏற்பட்ட தமிழர் குடியேற்றம் பற்றியும் ஐதீக உருவில் இவை எடுத் துரைக்கின்றன என்பது புலனாகின்றது. இதுபற்றிப் பின்னர் விபரமாக ஆராய்வோம்.
வடபகுதியும் அனுராதபுர மன்னர்களும்
இக்காலத்து அநுராதபுர அரசின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகிய உரோகலையின் வரலாற்றை நோக்கும்போது கி. பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் 8ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுர அரசவம்சத்தோடு தொடர்புடைய மன்னரின் ஆட்சி பற்றிய குறிப்புகள் உள. ஒரளவுக்குத் தனித்துவமான சுதந்திர அரசு என்ற நிலையை இது இரண்டாவது மகிந்தன் காலத்திற் (கி. பி. 777 - 797) பெற்றது எனலாம். உத்தரதேஸமெனப் பாளி நூல்கள் அழைக்கும் பண்டைய நாகதீபத்தின் வரலாற் றினை நோக்கும் போது இப்பகுதி கி. பி. 6ஆம் நூற்றாண்டி
யாழ். - தொன்மை வரலாறு 172 O

4-Jaro''u li iĝ: 40 kv o
லிருந்து முன்னர்போலத் தனித்துவமான ஓர் அரசிய4ற் போக் கிலேதான் சென்று கொண்டிருந்தrmர்ய்ை அவதானிக்க முடிகின் றது. இத்தகைய ஓர் அமைப்பு வூ-Hகுஇயிற் காணப்பட்டதைக் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் ஈழம் வந்த"கொஸ்ம்ஸ்'இன்டிகோ ?ofiu Găvg|Giv ( Cosmas Indicopleustes ) 6TGð7 LUGAJ Ugi FF pub பற்றிய குறிப்பு எடுத்துக் காட்டுவதாக முதலியார் இராசநாயகம் கூறி யுள்ளார்.2 முதலியார் இராசநாயகமும் இக்குறிப்பினை ரெனன்ற் என்ற வரலாற்றாசிரியரின் நூலிலிருந்தே மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இக்குறிப்புப் பின்வருமாறு அமைகின்றது.8
"ஈழத்தின் இரு முனைகளிலும் இரு அரசர்கள் ஆட்சி செய்கின்றனர். இவற்றில் ஒருவனிடம் செந்நீல நிற10ணி உண்டு. மற்றவனிடம் துறைமுகப் பட்டினமுள்ள பகுதி" உண்டு. இத்துறைமுகப் பட்டினமும் வாணிப மையமும் இங்குள்ள துறைமுகங்களில் பெரியதாகும்.'
இவ்விரு மன்னர்கள் ஆட்சி செய்த பிரதேசங்களிற் செந்நீல மணி  ைய யு  ைட ய வ ன ஈ க க் குறிப்பிடப்படுபவன் அநுராதபுர மன்னனே என முதலியார் இராசநாயகம் இனங் கண்டுள்ளார். காரணம், இவன் ஆட்சிக்குட்பட்ட பகுதி இரத்தினக் கற்கள் காணப்பட்ட பகுதியாக வெளிநாட்டோரான குவான் சுவாங், மார்க்கபோலோ, இபின்பற்றுற்றா ஆகியோரது நூல்களிற் குறிப்பிடப்பட்டுள்ளமையே ஆகும். மற்றைய மன்னனாக வடபகுதித் தமிழ் மன்னன் விளங்கினான் என இவர் கொள்ளுகின்றார். காரணம் மாந்தைத் துறைமுகம் இக் காலத்திற் புகழ்பூத்த துறைமுகமாக எழுச்சி பெற்றதே யாகும். இத்தகைய கூற்றுக்கு ஆதாரமாக ரெனன்ற் எழுதிய நூலினையும் மேற்கோளாகக் காட்டியுள்ளதோடு சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரத்தில் வரும் "வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்" என்ற குறிப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
கொஸ்மஸின் குறிப்பினை ஆதாரமாகக் கொண்டு முதலி யார் இராசநாயகம் மேலும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.4
() 173 வரலாற்றுக் காலம் 11

Page 103
"பெரிப்புளுஸ் என்ற நூலின் ஆசிரியர் முன்னர் இக் காலத்து இந்திய வாணிபம் பற்றித் தரும் தகவல் களைக் கொஸ்மஸ் இதுபற்றிக் கூறியுள்ள தகவல்கள் உறுதிசெய்வதோடு இக்காலத்தில் மாதோட்டம், கதிரை மலை போன்ற துறைமுகப்பட்டினங்கள் மேன்மை பெற் றுக் கான்னப்பட்டதையும் இவை எவ்வித சந்தேகமுமின்றி நிரூபித்துள்ளன. அரேபியா, பாரசீகம், மலையாளக்களை ஆகியனவற்றிலிருந்து வரும் கப்பல்கள் மாதோட்டம், தலைச்சேரி (கல்முனை) ஆகிய துறைமுகங்களுக்கு வருகை தந்ததோடு, சங்கட-ம் என்ற சிறு வள்ளங்களின் மூல மாக (வழுக்கை ஆற்று வழியாக) கதிரைமலைக்குப் பண்டப் பொருளை அனுப்பின யாழ்ப்பாணக் கோட் டைக்கு மேற்கே காணப்படும் நாவாந்துறை என்ற துறை முகம் இன்றும் சங்கட நாவாந்துறை என அழைக்கப் படுகின்றது. இத்துறைமுகம் இப்பகுதியிற் காணப்பட்ட சிறு வள்ளங்களுக்குப் பாதுகாப்பை அளித்தது எனலாம்" ஆனையிறவு நீரேரியில் கடற்பிரயாணம் மேற்கொள்ள வசதி காணப்படும் வரை சீனக் கப்பல்கள் தலைச்சேரிக்கு அப்பாலும் நங்கூரமிடுவது வழக்கம். பின்னர் சீனக்கப்பல் களும், சோழ மண்டலக்கரை, கங்கைக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் கப்பல்களும் யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள பல துறைமுகங்க்ளில் நங்கூரமிட்டுத் தாங்கள் நங்கூரமிட்டிருந்த துறைமுகங்களின் வசதிக்கேற்ப தமது வாணிபப் பொருட்களையும் தரைவழியாகவோ அன்றில் கடல்வழியாகவோ இப்பகுதியின் சிறந்த பண்டமாற்றுத் துறைமுக 6655 ult965TLDT விளங்கிய கதிரைமலைக்கு
அனுப்புவது வழக்கமாகும்.'
கொஸ்மஸ் பற்றிய முதலியார் இராசநாயகத்தின் கூற் றினைப் பரணவித்தானா மறுத்துரைத்துள்ளதோடு கொஸ் மஸின் குறிப்பினையும் பின்வருமாறு தந்துள்ளார்.
"இந்தியக் கடலில் ஒரு பெருந்தீவுள்ளது. இத்தியர்கள் இதனை சிலிதீப (சிங்களதீப) என்றழைக்கக் இரேக்கர்கள் * தப்ரபேன்" என அழைக்கின்றனர். இங்கு செந்நிற
யாழ். - தொன்மை வரலாறு 174 శ్రీ

மணிகளுண்டு. இத்தீவில் இரு அரசர்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே சச்சரவுண்டு. இவர்களில் ஒருவன் ஆளும் பகுதி செந்நிற மணிகள் காணப்படும் பகுதியா கவும், மற்றவன் ஆளும் பகுதி வாணிபத்தின் மைய மாக விளங்கிய துறைமுகத்தினையுமுடையது."
மேலும் கொஸ்மஸின் கூற்றினை மொழி பெயர்த்தவர் செந்நிற மணிகளை, நீலநிற மணிகளென்று கருத இன்னுஞ் சிலர் செவ்வந்தி நிற மணிகளெனவுங் கருதுகின்றனர் என எடுத்துக்காட்டியுள்ள பரணவித்தானா எவ்வாறாயினும் இம் மணிகள் கிடைக்கும் இடம் உரோகணைப் பகுதியேயன்றி அநுராதபுர அரசின் பகுதி அல்ல எனவுங் கூறியுள்ளார். இதனால் துறைமுகத்துடன் வாணிபமையப் பிரதேசத்தினைக் கொண்டிருந்த மன்னன் அநுராதபுர மன்னனே ஒழிய யாழ்ப் பாண அரசின் மன்னன் அல்ல எனவும் எடுத்துக் காட்டி யுள்ளார். அநுராதபுரத்திலுள்ள பெளத்த ஆலயமொன்று விலைமதிப்பற்ற மணியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு யாத்திரிகர்கள் குறிப்பிட்டாலுங்கூடக் கொஸ்ம ஸின் ‘செந்நிற மணிநாடு" என்ற குறிப்பு அநுராதபுரத் தினை விட உரோகணைக்கே பொருத்தமென்று கூறி அன்றும் இன்றும் இப்பகுதியில் மணிகள் கிடைப்பது இத்தகைய கருத் தினை மேலும் உறுதி செய்கின்றது எனவும் வற்புறுத்தி
யுள்ளார்.
பரணவித்தானா உரோகணை இராச்சியமே கொஸ்மஸ் குறித்துள்ள செந்நிற மணிநாடு என்பதனை நிலைநிறுத்த மேலுமொரு உதாரணத்தினை எடுத்துக் காட்டியுள்ளார். இவ் வுதாரணமும் வெளிநாட்டவரான வஜ்ஜிரபோதி என்பவரது குறிப்பாகும். மகாயான பெளத்த மதத்தினை ஈழத்திற்குப் பரப்புவதற்கு வந்த இவர் கி. பி. 689க்குச் சற்றுப் பின்னதாக, (கொஸ்மஸ் இங்கு வந்து சிறிது காலத்தின் பின்னதாக) ஈழம் வந்தபோது இங்கு காணப்பட்ட இரு அரசர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரை யில் இவர் தங்கினாரென்பதும் பின்னர் சிவனொளிபாதமலை யினைத் (சிறீபாதம்) தரிசிக்க விரும்பிய இவர் உரோகண
O 175 வரலாற்றுக் காலம் 11

Page 104
(லெள - கொ - ன) (Lou - h0 - na) நாட்டினூடாகவே இதனை அடைந்து உரோகணை அரசனுக்கு மகாயானத் தத்துவத்தினைப் போதித்தார் எனவுங் கூறப்படுகின்றது. இத னாற் கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்குரிய ஈழம் பற்றிய குறிப்பு disos) or நோக்கும்போது ஈழம் முழுவதிலும் மேலானை செலுத்திய அநுராதபுர மன்னனையும், அவனின் ஆணையை ஏற்றிருந்த உரோகணைச் சிற்றரசனையுமே கருதுவது பொருத்த மாகும் எனப் பரணவித்தானா அபிப்பிராயப்படுகின்றார். அநுராதபுரத்து மன்னனுக்கு உரோகணை மன்னன் கீழ்ப்படிய மறுத்துத் தொந்தரவு கொடுத்த காலத்திற் கொஸ்மஸ் வந்த தால் இவ்வாறு இரு அரசர்களுஞ் சச்சரவிலீடுபட்டிருக் கிறார்கள் என இவர் கருதியிருக்கலாமென்பதும், இக்கூற்றினை வடக்கே தனியாக யாழ்ப்பாண இராச்சியம் நிலவியதற்கான சான்றாகக் கொள்ளமுடியாது என்பதும், இதனைச் சூளவம்சத் தின் குறிப்புகள் உறுதி செய்கின்றன என்பதும், பரணவித் தானாவின் கருத்து ஆகும்.
கொஸ்மஸ் கூறுந் துறைமுகப் பட்டினம் மாந்தைப் பட்டினமே என வாதிடும் பரணவித்தானா இது ஆதிகாலந் தொட்டு அநுராதபுர மன்னனின் நேரடி ஆட்சியின் கீழ்க் காணப்பட்டிருந்ததென்றுங் கூறியுள்ளதோடு இதற்காத்ார மாகக் கி. பி. 8ஆம் நூற்றாண்டிற்குரிய சிங்கள மன்னர்க ளால் வெளியிடப்பட்டு மாந்தைப் பகுதியிற் கண்டெடுக்கப் பட்ட இரு கல்வெட்டுகளையும் உதாரணங் காட்டியுள்ளர் கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இப்பகுதியிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவுஞ் சிங்கள மொழியிலே தான் உள்ளன என்றுங் கூறியுள்ளர். இவை பற்றி உரிய இடத்தில் ஆராய இருப்பதால் நாம் தற்போது கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்குரிய நிகழ்ச்சிகளை மட்டுமே ஆராய்வோம்.
பரணவித்தானாவின் கருத்தையே இந்திரபாலாவும் அங்கீ கரித்துப் பின்வருமாறு கூறியுள்ளார். 6
*யாழ்ப்பாணத்து இராச்சியம் தொடர்ந்து கிறிஸ்துவுக்குப்
பிற்பட்ட நூற்றாண்டுகளிற் சுதந்திரமாக இருந்து வந்தது
யாழ். - தொன்மை வரலாறு 176 )

என்பதைப் பிற நாட்டவர் குறிப்பொன்றை ஆதாரமாகக்
கொண்டு நிரூபிப்பதற்கு இராசநாயகம் முயற்சித்துள்ளார்.
கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த மேல் நாட்டவராகிய கொஸ்மஸ் இன்டிகோபிளிய ஸ்டிஸ் என் பவர் இலங்கையிலே அக்காலத்தில் இரு மன்னர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருப்பதை இராச நாயகம் சான்றாக வைத்து, அப்பிற நாட்டவர் குறிப் பிட்டிருப்பது யாழ்ப்பாண இராச்சியத்தையும் அதற்குத் தெற்கே இருந்த சிங்கள இராச்சியத்தையுமே என்று வாதாடியுள்ளார். ஆனால் பரணவித்தானா காட்டியுள்ளது
போல, கொஸ்மஸ் குறிப்பிட்டிருப்பது அநுராதபுர
இராச்சியத்தையும், ரோஹண இராச்சியத்தையுமே என்று
கொள்வதற்கே இடமுண்டு."
எவ்வாறாயினும், செந்நிற மணிநாடு என்று கொஸ்மஸ் கூறுவது பெருமளவுக்கு அநுராதபுர அரசிற்கே பொருத்த மான கூற்றுப் போலத் தெரிகின்றது. ஏனெனில் அநுராத புரத்திற்குத் தெற்கே உள்ள பகுதி 'இரத்தினதிபம்" எனவும் இதற்கு வடக்கே உள்ள பகுதி ‘நாகதீபம்" அல்லது ‘மணி பல்லவம்" எனவும் அ  ைழக்கப்பட்ட  ைத மணிமேகலையிற் காணப்படுகின்ற குறிப்பு எடுத்துக் காட்டுகின்றது. இது பற்றி முந்திய அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்டிருந்தாலுங்கூட இச் சந்தர்ப்பத்தில் இதனை மேற்கோளாகக் காட்டுவது பொருத்த மாகவுள்ளது. இக்கூற்றுப் பின்வருமாறு அமைந்துள்ளது ?
"ஈங்கித னயலகத் திரத்தின தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோ னடியிணை யாகிய பிறவி யென்னும் பெருங்கடல் விடுஉம் அறவி நாவா யாங்குள தாதலிற் றொழுது வலங்கொண்டு வந்தே னிங்கு"
இதனால் ஈழத்தின் வடபகுதி, "மணிபல்லவம்’ என அழைக்கப் பட இதன் தென்பகுதி 'இரத்தினதிபம் என அழைக்கப் பட்டமை இதிலிருந்து புலனாகின்றது. இவ்விரத்தின தீபத்திலே தான் சமந்தகூடம் அல்லது சிவனொளிபாதமலையுண்டென்
O 177 வரலாற்றுக் காலம் 11

Page 105
பதும் இதனை மணிமேகலை சென்று தரிசித்தது பற்றியும் இவ்வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. இச் செய்தி யினை ப் பரணவித்தானா மேற்கோள் காட்டியுள்ள கொஸ்மஸ், வஜ்ஜிர போதி ஆகியோரின் கூற்றுகளின் பின்னணியில் ஆராயும் போது ‘செந்நிற மணிநாடு" என்பது உரோகணை அரசுக்கு மட்டுமன்றி அநுராதபுர அரசுக்கும் பொருத்தமென்பதுந் தெரிகின்றது. இதனாற் கொஸ்மஸின் கூற்றினை அதுராதபுர அரசுக்குரியதாகக் கொள்வதிலே தவறில்லை. எனினும், இக் காலத்தில் இரத்தின தீபம் என்ற பதம் அநுராதபுரத்திற்குத் தெற்கே உள்ள பகுதியைக் குறித்தாலும் ஈழம் முழுவதற் கும் உரிய பதமாக மணிமேகலையில் மட்டுமன்றிக் குவான் சுவாங்கின் குறிப்பில் இது இடம் பெற்றுள்ளமையும் அவதா னிக்கத்தக்கது.
பரணவித்தானா குறிப்பிடுவது போன்று மாதோட்டத் துறைமுகம் அநுராதபுர அரசினாற் பயன்படுத்தப்பட்டதற் கான ஆதாரங்கள் உண்டு. ஆனால் அநுராதபுர அரசின் நேரடியான ஆட்சியிற் கி. பி. 7 ஆம் நூற்றாண்டிலே இப்பகுதியோ வடபகுதியோ தொடர்ந்து காணப்பட்ட தாகப் பாளி நூல்களில் எவ்வித குறிப்புங் காணப்பட வில்லை என்பதுங் கவனத்திற் கொள்ளப்படவேண்டியதொன் றாகும். இச்சந்தர்ப்பத்திற் கி. பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டு களில் அநுராதபுர மன்னன், உத்தரதேச எனப் பாளி நூல்கள் கூறும் வடபகுதியோடு கொண்டிருந்த அரசியற் தொடர்புகள் பற்றியும் எடுத்துக் காட்டுவது அவசியமாகின் றது. சூளவம்சம், சிலா மேகவண்ணன் (கி. பி. 619 - 628) அநுராதபுரத்தினை அரசாண்டபோது தமிழகப் படையினரின் உதவி கொண்டு உத்தரதேசத்தினைச் சிறீநாக என்ற தளபதி கைப்பற்ற முயற்சித்தான் என்றும் இக்கலகக்காரனை இம் மன்னன் அடக்கினான் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது.* இக்கிளர்ச்சி நடந்து 150 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பகுதி யில் இரண்டாது மகிந்தன் (கி. பி. 777 - 797) அநுராதபுரத் தில் அரசனாக விளங்கிய காலத்திற் கிளர்ச்சி ஏற்பட்ட தென்றும் அத்தகைய கிளர்ச்சியும் அடக்கப்பட்டதென்றுஞ் சூ ள வ ம் சங் குறிப்பிடுகின்றது.9 எனினுஞ் சிறீநாகவின்
யாழ். - தொன்மை வரலாறு 178 ே

கிளர்ச்சி அடக்கப்பட்டாலும் அநுராதபுர மன்னர்கள் இப் பகுதியின் மீது மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றிய சான்றுகள் பாளி நூல்களிற் காணப்படாமை குறிப் பிடத்தக்கது. அவ்வாறன்றி இக்கிளர்ச்சி பற்றி மட்டுமே குறிக்கப்படுவதாலும் இதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளையும் அநுராதபுர மன் னன் இப்பகுதி மீது மேற்கொண்டது பற்றிப் பாளி நூல்கள் குறிப்பிடாததாலும் இதனை அநுராதபுரத்து அரசனுக்கு எதிராகப் படைத்தளபதியாக இருந்த சிறீநாக, வடபகுதியின் உதவியோடு மேற்கொண்ட கிளர்ச்சி என்றே கருதவேண்டி யுள்ளது. இதனாற்றான் தமிழகத்திலிருந்து 60) lull-Gir மீண்ட சிறீநாக வடபகுதியூடாகவே ஈழத்தினை அடைந்து அநுராதபுரத்து அரசனைத் தாக்கினான். இக்கினார்ச்சி அடக் கப்பட்டாலும் இத்தகைய வெற்றி நீடித்திருக்கவில்லை. அநுராதபுரத்து அரசன் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக் குள் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் பற்றிப் பாளி நூல்களில் எவ்வித குறிப்பும் இடம் பெறாமை இதனைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. Wy
இக்காலத்தில் ஈழத்து அரசியலிற் பெரும் பங்கினை வகித்திருந்த தமிழகப் படையெடுப்புகள் எல்லாம் மாதோட்டத் துறைமுகம் வழியாகவே அநுராதபுரத்தினை அடைந்ததைப் பற்றிப் பாளிநால்கள் கூறுகின்றன. இதனால் இப்பகுதியிலே தமிழர் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதே காலத்துக்குரிய சூளவம்சக் குறிப்பிலும் ஹத்ததாத்த தமிழகத்திலிருந்து தமிழர் படை யுடன் மகாதீர்த்தத்தில் வந்திறங்கி அநுராதபுரத்தினை நோக்கி முன்னேற முயன்றபோது இங்குமங்கும் இருந்த தமிழர் அவ் வணியிற் சேர்ந்து கொண்டுள்ளதை மேற்கோளாகக் கொண்டு குணசிங்கா இக்காலத்தில் மாதோட்டந் தொடக்கம் அனுராத புரம் வரையிலுள்ள வழியிலே தமிழர் செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டதென்று கூறியுள்ளார்.10 இதனால் மாதோட்டஞ் சிங்கள மன்னரினாலும், தமிழகத்திலிருந்து படையுடன்
வந்தோராலும் பயன்படுத்தப்பட்ட துறைமுகமாகக் காணப்
179 வரலாற்றுக் காலம் 11

Page 106
பட்டாலுங்கூட, இது வடபகுதி மன்னனின் மேலாணையின் கீழே காணப்பட்டதென்பதோடு தமிழர் செல்வாக்கும் இங்கு மேலோங்கிக் காணப்பட்டதெனலாம்.
மாதோட்டம்
தமிழர் செல்வாக்கு இங்கு ஆரம்பத்திலிருந்தே நிரம்பிக் காணப்பட்டதற்கு மாதோட்டத்தின் அமைவிடமும் முக்கிய காரணமாக இருந்தது. தமிழகத்திலுள்ள துறைமுகப்புட்டினங் களோடு வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திலிருந்தே இது பிணைந்திருந்தது. இவற்றை இணைப்பதில் உரோம வர்த்தகம் வகித்த முக்கிய பங்கினை முந்திய அத்தியாயத்திற் கண்டோம். உரோம வர்த்தகத்தில் விழ்ச்சி கி. பி. 5ஆம் நூற்றாண் டளவில் ஏற்படத் தமிழகத்துடனும் மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளுடனும் இக்காலத்தில் இது இணைத்திருந்ததை இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் எடுத்தியம்பு கின்றன. இதனை 1980களில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலத்துக்குரிய அகழ்வியற் படை அமைப்பில் இரண்டைக் குறிப்பிடலாம்.11 அவை இடைக்காலப் படை அமைப்பு, ஆரம்ப மத்தியகாலப் படை அமைப்பு ஆகும் (படம் 23 - 24 ). இவற்றுள் முன்னை யது கி. பி. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கங் கி. பி. 8 ஆம் நூற்றாண்டாகும்; பின்னையது கி. பி. 8ஆம் நூற் றாண்டு தொடக்கம் கி. பி. 11ஆம் நூற்றாண்டாகும். இக் காலத்திற் கி. பி. மூன்றாம் நூற்றாண்டளவில் மாந்தை தமிழகத்தோடு மட்டுமன்றி வட இந்தியாவிலுள்ள குஜராத்தி னுடனுந் தொடர்பு கொண்டிருந்தமையைக் காணக்கூடியதாக
வுள்ளது.
இதனை அடுத்துக் காணப்படும் ஆரம்ப மத்திய காலத்திற் குரிய படை, பல நூற்றாண்டுகளாக, வரலாற்றுதய காலத்தில் இருந்து தொடர்ந்து முக்கியம் பெற்ற இவ்விடத்தின் கடைக் கட்ட வரலாற்றைக் கூறும் பகுதியாக விளங்குவது ஈண்டு நினைவுகூரற்பாலது. மாத்தை மேட்டிலுள்ள இப்படையினமைப்பு நடுவில் உயர்ந்து காணப்பட இரு பக்கங்களிலும் இதன்
யாழ். - தொன்மை வரலாறு 18o இ

திண்மை போக்ப் போகக் குறைந்து காணப்படுவதை இதன் விளக்கப்படம் எடுத் துக் காட்டு வது அவதானிக்கத்தக்கது. இப்படையின் கனம் நடுப்பகுதியில் 4 மீற்றராகவும் மேட்டின் கரைப்பகுதியில் 2.75 மீற்றராகவுங் காணப்படுகின்றது. இவ் விடம் பற்றிய உள்ளுர், வெளியூர் இலக்கியக் குறிப்புகள், சிற்பங்கள், செங்கட்டிக் கட்டிடங்கள் ஆகியன, பல முக்கிய மான கட்டிடங்கள் இம்மையப் பகுதியில் அமைந்திருக்கலாம் என்பதை எடுத்தியம்புகின்றன. இக்காலப் பகுதியிற் செங் கட்டிகளைப் பயன்படுத்திப் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஐந்து அல்லது ஆறுகாலப் பிரிவுகளாக, இக்காலப் பகுதிக்குரிய கட்டிடங்கள் அமைந்திருக்கலாமெனக் கொள்ளப் படுகின்றது. இச்சான்றுகளின் அடிப்படையில் நோக்கும் போது இரு சுற்றுகளாக அமைந்துள்ள இத்துறைமுக நகரின் வளர்ச்சியை இப்படை அமைப்பு எடுத்துக் காட்டலாம் போலத் தெரிகின்றது
எனினும் இச்காலத்திற்குரிய சிறப்பான அம்சமாகத் திகழ்வது மாந்தைத் துறைமுகத்தின் சர்வதேச வர்த்தக நகரச் சிறப்பை எடுத்துக்காட்டும் மத்திய கிழக்கு, தூர கிழக்கு மட்பாண்டங்க ளாகும். இத்தகைய மட்பாண்டங்கள் பெரும்பாலுங் கி. பி. 9ஆம் நூற்றாண்டு தொடக்கம் 11ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தன. இவற்றுட் சசானிய மட்பாண்டங்கள், வர்ணம் தீட்டப்பெற்ற சீன தாங்வம்ச மட்பாண்டங்கள், சதுரமான அலங்காரங்களையுடைய மட்பாண்டங்கள், சீன பச்சை நிற வெள்ளை நிற மட்பாண்டங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன (படம் 3 - 36 ). இத்தகைய மட்பாண்டங்கள் அகழ்வாய் வின்போது மாந்தையில் மட்டுமன்றிப் பாரசீகக் குடாவிலுள்ள சிறவ், பஸ்ர ஆகிய துறைமுகங்களிலும், ஒமானின் துறை முகப் பட்டினமாகிய சொகாரிலும், சிந்துவிலுள்ள பன்போரி லும், கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள மண்டா, கில்வா ஆகிய துறைமுகப்பட்டினங்களிலுங் கிடைத்துள்ளமையானது மாந்தை யோடு இவ்விடங்களும் மத்தியகிழக்கு - துர கிழக்கு ஆகிய பிரதேசங்களிடையே நடைபெற்ற வர்த்தகத்தோடு அவை இணைந்திருந்தமையை எடுத்துக் காட்டுகின்றது. இம்மட் பாண்ட அலங்காரங்களில் நிர்வாணக் கோலமாக நடமாடும்
181 வரலாற்றுக் காலம் 11

Page 107
உருவ மொன்றும், அலங்கார வடிவமாக அமைக்கப்பட்டிருப்பது அவதானிக்கத்தக்கது. இவற்றைவிட யானைத் தந்தத்தினாலான கருவியின் பாகமுங் கிடைத்துள்ளது. இது ஒரு வாத்தியக் கருவி யின் பாகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பல்வேறு நிறங்களிலமைந்த மணிகள், வளையல்கள், வெண்கல - இரும்புத் துண்டுகள், முத்துகள், இரத்தினக்கற் பகுதிகள், ஆமையோடு, கண்ணாடித்துண்டுகள் ஆகியன இவ்வகழ்வின் போது கிடைத்த பிற பொருள்களாகும்.
மேற்கூறப்பட்ட அகழ்வாராய்ச்சிச் சான்றுகளை மாந்தைத் துறைமுகத்திலமைந்திருந்த திருக்கேதீஸ்வரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரங்களின் பின்னணியில் நோக்குவதும் பயனுடையதாகும். இவர்களின் பாடல்களை மையமாக வைத்து வேலுப்பிள்ளை ஒரு சிறு கட்டுரையை வரைந்துள்ளார்.12 இவர்களின் காலம் பற்றி இவர் குறிப்பிடுகையிலே திருஞானசம்பந்தரின் காலங் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி எனவும், சுந்தரரின் காலத். தினைப் பொறுத்தமட்டிற் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி, பிற்பகுதி, ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி எனப் பலவாறு கூறப்பட்டுள்ளது எனவுங் கூறியுள்ளார். எனினும் இவர்களின் பாடல்கள் இம்மாதோட்டத்தின் சிறப் பினை எடுத்துக் காட்டுவதோடு, அதன் சூழல், வாணிபச் சிறப்பு, நகர வளர்ச்சி ஆகியவற்றையுங் குறிப்பிடுவது அவ தானிக்கத்தக்கது. மாந்தையின் மூலவடிவம் மாதோட்டம் என்பது வேலுப்பிள்ளையின் கருத்தாகும். எனினும் இக்கா லச் சிங்கள இலக்கியங்களிலுங் கல்வெட்டுகளிலும் இது மகா G)6).11T Lq. ( M a h a v o t i ), LD 35 mt LHG5) ( M a h a p u t u J l dfT 6nuG5) (335 TL 'L (M a va t u t o a ), LD 35 T Lull "il GOT ( M a h a p a ț a na ), மாதோட்ட f Mat o a ) எனவும் அழைக்கப்பட்டுள்ளது.13 இவ்விடம் கி. பி. 9ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்துக் களுக்குப் புனிதமான இடமாக விளங்கிய தென்பதை அநுராத புரம், கதிர்காமம் ஆகிய இடங்களிற் கிடைத்த இக்காலத்துக் குரிய இரு சிங்களக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.14 இக்கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை
யாழ். - தொன்மை வரலாறு 132 O

நிறைவேற்றாது அவற்றை மீறுவோர் மகாவுடு என அழைக் கப்படும் மாதோட்டத்திற் பசுவைக் கொன்ற பாவத்தினை அடையக் கடவர் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி யில் இந்துமதச்செல்வாக்கு விதந்து காணப்பட்டமை புலனா கின்றது. பல்வேறு நாட்டவர்கள் இங்கு வாழ்ந்துங்கூட இவர் களுட் பெரும் பான்மையோர் இந்துக்களாக மட்டுமன்றித் தமிழராகவும் விளங்கியதை இவ்விடத்திலுள்ள இடப்பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டிலோ ஈழத் தின் கிழக்குப் பகுதியிலோ உள்ள இடப்பெயர்களிற் சிங்களக் கலப்புக்கான எச்சங்கள் காணப்பட்டாலுங்கூட இவ்விடப் பெயர்கள் முழுக்க முழுக்கத் தமிழ் மூலங்களுடன் காணப் படுகின்றன என்று கொட்டிங்ரன் கூறியிருப்பது சிந்திக்கத் தக்கது.8
எனினும், பெளத்த வழிபாட்டிடங்களும் இவ்விடத்திலே காணப்பட்டதையே இங்கு ஜோன் ஸ்ரில் அகழ்வாய்வின் போது கண்டெடுத்த பெளத்த சிலை ஒன்றும் இங்கு கிடைத்த இரு சிங்களக் கல்வெட்டுகளும் உணர்த்தகின்றன, சைவநாயன் மார்கள் ஏற்படுத்திய கலாசார மறுமலர்ச்சியால், இக்காலத்திற் பெளத்தத்தைப் பேணியோர் சிங்களவர்களாகக் காணப்பட்ட தால் இம்மதத்திற்குரிய மொழியில் இக்கல்வெட்டுகள் அமை வது சகஜமே. ஐந்தாவது காலப்பனின் (கி. பி. 914 - 923) காலத்திற்குரிய இவ்விரண்டு கல்வெட்டுகளும் மாதீர்த்த பட்டினத்திலேதான் கிடைத்துள்ளன. இவற்றில் முதலாவது கல்வெட்டு16 அநுராதபுரத்திலுள்ள பகதூர சென் என்ற தியான மண்டபத்திற்கு இம்மாந்தைப் பகுதியிலுள்ள மூன்று கிராமங்கள் நிவேதனமாக அளிக்கப்பட்டதைக் கூறுகின்றது. இக்கிராமப் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டனவாகக் காணப் படுகின்றன. அவையாவன பெபொடதுட. கும்பல்கல, தும்பொகொன் ஆகும். இவை யாவும் உதுறுகரா (வடகரை) விலுள்ள குடகடவுகாப் பிரிவிற் காணப்பட்டன. இக் கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ள உதுறுகரா என்ற வடிவத்தி லுள்ள உதுறு என்பது உத்தர (வட) என்ற சொல்லின் திரிபா கவும், கரா என்பது கரையின் மருவுதலாகவும் இருக்கலாம். இதற்கும் கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வசபனது
183 லரலாற்றுக் காலம் 11

Page 108
வல்லிபுரப் பொற்சாசனத்தில் இடம்பெறும் படகரா (வடகரை) என்ற வடிவத்திற்குமுள்ள ஒற்றுமை அவதானிக்கத் தக்கது. இக்கல்வெட்டு மேலும் எடுத்துரைப்பதாவது : இம் மூன்று கிராமங்களுக்குள் மகாபுடு (மகாதீர்த்த) பட்டினத்தி லுள்ள அரச ஊழியரோ நா விகாரை (நாகவிகாரை), ராக விகாரை ஆகியனவற்றுள் வசிப்போரோ நுழையக் கூடாது என்பதாகும். காஸப்பனின் இன்னோர் சிங்களக் கல்வெட்டு மகாவொடி (மகாதீர்த்தம்) யிலுள்ள சமடாதிய என்ற இடத் தைக் குறிப்பிடுவதோடு இங்குள்ள கிராமமாகிய சமடாதிய என்பதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றியுங் குறிப்பிடு கின்றது. இவ்விரு கல்வெட்டுகளிலுங் குறிப்பிடப்பட்டுள்ள இரு விகாரைகளும், நான்கு கிராமங்களும் மகாதீர்த்த பட்டினத் திலேதான் உள்ளன எனவுங் கூறப்பட்டுள்ளது.17 இதனைப் போன்றே சூளவம்சம்,18 மற்றுமொரு சிங்களக் கல்வெட்டு19 ஆகியன கி. பி. எட்டாம் நூற்றாண்டிற் சிங்கள இளவரச னான மகிந்தன் இங்கு நிலைகொண்டிருந்ததையுஞ், சிங்களச் சுங்க அதிகாரிகள் சுங்கவரி திரட்டியதையுங் குறிப்பிடுகின்ற மையை நோக்கும்போது வடபகுதித் தமிழரசுக்குரிய இத் துறைமுகப் பட்டினம் அநுராதபுர அரசின் துறைமுகப் பட்டின மாகவும் பயன்படுத்தப்பட்டமை தெரிகின்றது. இத்தகைய கருத்தையே பாளி நூல்களில் இப்பகுதியிற் சிங்கள மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன. இக்காலத்தில் அடிக்கடி தென்னிந்தியாவோடு சிங்கள மன்னர் இத்துறைமுகத்தின் மூலமாகக் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய குறிப்புகளும் இத்துறைமுகத்திலே தென் னிந்தியப் படைகள் வந்திறங்கியதாகக் காணப்படுஞ் சான்று களும் மேற்கூறிய கருத்துக்கு மெருகூட்டுகின்றன.
இனிச் சம்பந்தர், சுந்தரர் தேவாரங்களில் இத்துறைமுகச் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டுள்ளமையை அவதானிப்போம்.20 சம்பந்தரின் பாடல்களில் “மாதோட்டம்" என்ற பெயரிலே தான் இத்துறைமுகப் பட்டினம் அழைக்கப்படுகின்றது. ஒரே ஒரு இடத்திற்றான் இதனை "மாதோட்ட நன்னகர்’ என அழைத்துள்ளார். தமிழ் வடிவமாகிய பட்டினத்திற்குப் பதிலாக நாயன்மார்கள் "நன்னகர்" என இதனை அழைப்பதை நோக்
யாழ். - தொன்மை வரலாறு 184 இ

கும்போது வடமொழி மூலமாகிய நகர" என்பது இக்காலத் திலே தமிழ் மயமாக்கப்பட்டுப் பட்டினத்தைக் குறிப்பதற்கு எடுத்தாளப்பட்டமை புலனாகின்றது. பிற பாடல்கள் யாவற் றிலும் இப்பட்டினத்தின் இயற்கைச் சூழல், கடல்படு திரவியங் கள் ஆகியன விளிக்கப்பட்டுள்ளன. இதன் இயற்கைச் சூழலை,
கடிகமழ் பொழிலனி மாதோட்டம் இருங்கடற் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் உயர்தரு மாதோட்டத்
குடிவாழ்க்கை வாழையம் பொழின் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக் * வண்டு பண்செயு மாமலர்ப் பொழின் மஞ்ஞை நடமிடு
மாதோட்டம் " மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா தோட்ட நன்னகர் “ எனறும,
இதன் கடலின் சிறப்பை,
6.
கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் "
மறிகடல் மாதோட்டத்(து) "
மலிகடல் மாதோட்டத்(து) " மா டெ லாமண முரசெனக் கடனலி தொலிகவர்
மாதோட்டத் ( து ) " என்றும்,
கடல்படு திரவியங்களை,
* கடல்வாயப் பொன்னிலங்கிய முத்து - மாமணிகளும்
பொருந்திய மாதோட்டத்து )
என்றும் இவை எடுத்துக் காட்டியுள்ளன.
சுந்தரரின் பத்துப் பாடல்களில் * மாதோட்ட நன்னகர் ?
என்ற பதம் எல்லாமாக எட்டு இடங்களிற் காணப்படுவதை அவதானிக்கும் போது இது பெரு நகராக் இக்காலத்தில் எழுச்சி பெற்றமை புலனாகின்றது. இதனையே இவர் காலத் திற்குரிய மத்தியகிழக்கு, தூரகிழக்கு நாடுகளின் மட் பாண்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனையே இக்காலச்
O 185 வரலாற்றுக் காலம் 11

Page 109
சிங்களக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. இனி இப் பாடல்களிற் குறிக்கப்பட்டுள்ளனவற்றை நோக்குவாம். இள் விடத்தின் இயற்கைச் சூழலை,
"வரிய சிறை வண்டி யாழ் செயு மாதோட்ட நன்னகருள்” "மட்டுண்டு வண்டாலும் பொழின் மாதோட்ட நன்னகரிற்” 'மாவின் கனி தூங்கும் பொழின் மாத்ோட்ட நன்னகரிற்’
என்ற அடிகளும்; கடலின் சிறப்பையும் அதில் மேற்கொள்ளப் பட்ட வாணிபச் சிறப்பையும்,
கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்ட நன்னகருள்" * வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில் " வையம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில் " * வானத்துறு மலியுங் கடன் மாதோட்ட நன்னகரில்
என்ற அடிகளும் எடுத்துக் காட்டுகின்றன. இவ்விடத்திலே முத்தும், உப்பும் விளைந்ததும் இப்பாடல்களிற் குறிப்பிடப் பட்டுள்ளன. அகழ்வாய்வின் போது கிடைக்கப் பெற்ற முத்துகள், இரத்தினக் கற்கள், யானைத் தந்தம் ஆகியனவற்றின் எச்சங்கள் இப்பகுதி வாணிபத்தில் இவை பெற்றிருந்த சிறப் பினை எடுத்துக் காட்டுகின்றன.21
இப்பின்னணியிற்றான் பாளி நூல்களில் வடபகுதி பற்றிக் காணப்படுந் தகவல்களை நாம் நோக்க வேண்டும். சிறீநாகன் வடபகுதி ஊடாகவே இந்தியாவில் இருந்து வந்ததும், இப் பகுதியையே அநுராதபுர அரசுக்கெதிரான கிளர்ச்சிக்குரிய தளமாகப் பயன்படுத்தியதும், தமிழகம் - வடபகுதி ஆகிய பிராந்தியங்களிடையே ஒரே கலாசாரத்தினைப் பேணிய மக்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர் என்பதும் மேலே கூறிய வற்றிலிருந்து புலனாகின்றது. இதனை உறுதி செய்வதாக அநுராதபுரத்து மன்னனாகிய மாணவர்மன் தனது எதிரிகளிட மிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இப்பகுதியை அடைந்து இங்கேயே இளமைப் பருவத்தினைக் கழித்த நிகழ்ச்சி அமைந்து விடுகின்றது. அது மட்டுமன்றித் தமிழகத்துப் பல்லவ மன்னன் அளித்த படையுடன் அநுராதபுரத்தினைக் கைப்பற்ற வந்த இவன் உத்திர தேசத்தினூடாகவே அனுராதபுரத்தினைத்
யாழ். - தொன்மை வரலாறு 186 ()

தாக்கியதாகவுங் கூறப்படுகின்றது.22 கி. பி. 9ஆம் நூற்றாண்டிற் பாண்டிய மன்னனான சிறீமாறகிறீவல்லபன் ஈழத்தினைத் தாக்க முற்பட்டபோது முதலில் உத்தரதேசத்தினூடாகவே அநுராதபுரத்தினைத் தாக்கியதாகக் கூறப்படுவதோடு இப்படை எடுப்பில் இப்பகுதியிலிருந்த தமிழர்கள் இவனது படையுடன் சேர்ந்து கொண்டதையுஞ் சூளவம்சங் குறிப்பிடுகின்றது.23 இத்தகைய சான்றுகள் இக்காலத்தில் வடபகுதிமிது அநுராதபுர அரசின் கட்டுப்பாடு தளர்ந்திருந்ததென்பதை எடுத்துக்காட்டுவன வாக அமைகின்றன என்று குணசிங்கா கருதுகின்றார்.24
மேற்கூறிய கூற்றுக்களைச் சரியாக விளங்கிக் கொள்வ தற்குச் சிறீநாக, இரண்டாவது மகிந்தன் ஆகியோரின் காலத் திற்கு இடைப்பட்ட காலத்தில் நிலவிய அரசியற் சூழ் நிலையை அறிந்து கொள்வது மிக அவசியமாகின்றது. சிறீ நாகவின் காலச் சூழல் பற்றி முதலில் அறிவது பொருத்த மாவதால் அதனை நோக்குவோம். இக்காலத்தில், குறிப்பாகத் தாதுசேனனுக்குப் பின்னர் வலிமையுள்ள மன்னராட்சி மிக அருகியே காணப்பட்டது. சிலாகால ( கி. பி. 518 - 531), மகாநாக (கி. பி. 569 - 571), இரண்டாவது மொகல்லான (கி. பி. 581 - 551), முதலாவது அக்கபோதி (கி. பி. 571 - 604), இரண்டாவது அக்கபோதி (கி. பி. 604 - 614) போன்ற சில மன்னர்கள் வலிமையுடையவர்களாக ஒரளவுக்கு ஸ்திரமான அரசாட்சியை அமைத்தாலுங்கூட, (குறிப்பாக இரண்டாவது அக்கபோதிக்குப் பின்னர் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுக ளாக, மானவர்மன் பல்லவ அரசனின் உதவி பெற்று ஸ்திர மாண அரசாட்சியை அமைக்கும் வரை) அநுராதபுர அரசி யலில் வாரிசுரிமைப் போட்டியின் விளைவாக ஒன்பதுக்கு மேற்பட்ட கட்சிகள் செயற்பட்டன. நாட்டின் இதர பகுதி களான தக்கிணதேசம், மலையதேசம், உரோகணை ஆகியன இத்தகைய போட்டியின் களங்களாக விளங்கியதோடு இப்பகுதி களில் இருந்த இளவரசர்களோ பிராந்தியத் தலைவர்களோ, அநுராதபுர மன்னனின் உறவினர்களோ 'அநுராதபுர அரசுக் கெதிராகச் செயற்பட்டு அதனைக் கைப்பற்ற முயன்றதையுங்
காணக்கிடக்கின்றது.
(9 187 வரலாற்றுக் காலம் II

Page 110
இவ்வாறு இப்பிராந்தியங்கள் இக்கால அரசியலில் முக்கிய களங்களாக அடிக்கடி விளிக்கப்பட, நாட்டின் வடபகுதியாகிய உத்தரதேச, இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் இத் தகைய கிளர்ச்சியின் களமாகக் குறிக்கப்பெற்றுள்ளமை, இப் பகுதி மீது அநுராதபுர மன்னரின் ஆட்சி அல்லது மேலாணை நாட்டின் ஏனைய பகுதிகளிற் காணப்பட்டது போன்று காணப் படவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதனால் இத்தகைய பின்னணியிற் சிறீநாகனின் கிளர்ச்சியினை ஆராய் வதன் மூலம் இது பெற்றுள்ள முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ள முடியும். சிலாகால தனது பிள்ளைகள் நிருவாகத் திற் பங்கு கொள்வதற்கான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டதாகச் சூளவம்சங் குறிப்பிடுகின்றது. தனது மூத்த மகனான மொகல்லான என்பவனுக்கு அநுராதபுர அரசின் கிழக்குப் பகுதியைக் கொடுத்தும், தனது இரண்டா வது மகனான டாதா பழதி என்பவனுக்குத் தக்கிண தேசத் தைக் கொடுத்தும், தனது இளைய மகனான உபதிஸ்ஸவைத் தனது அரண்மனையிற் தன்னுடன் வைத்தும் இருந்தான். எனி னும் டாதா பழதி, மூத்த மகனாக விளங்கியதோடு அடுத்த வாரி சாகவும் விளங்கியதால் மலைய தேசத்திற்கு இவன் அதிபதி யானான். இதனைக் குறிக்கும் பதமாகிய "மலையராஜ" என்பது முதன்முதலாக இக்காலத்திலேதான் வழக்கில் வந்தமை யும் அவதானிக்கத்தக்கது.25
இக்காலத்தில் உரோகணைப் பகுதியிலுள்ள மகாநாக என்பவன் சிலாகாலனை நாடி, அவனின் அநுசரணையோடு உரோக்ணைப் பகுதியின் வரிசேகரிப்பாளனாக விளங்கினான். எனினும் அரசனாக வேண்டுமென்ற ஆசையினாலே தனது உறவினனான அக்கபோதியுடன் சேர்ந்து சிலாகாலனுக்கு எதி ராகப் போரில் இறங்கினான். இதனால் உரோகணை பெரு மளவுக்கு அநுராதபுர அரசின் கட்டுப்பாட்டினை ஏற்காத பகுதியாக இவன் கால்த்தில் உருவானது. இதே நிலை தொடருவதற்குச் சிலாகாலனின் மரணமும், அதன் விளைவாக அவனின் பிள்ளைகளிடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போரும் உதவியது. எனினும் அப்போரில் வெற்றி கொண்ட மொகல் லான, உரோகணையில் வலுப் பெற்றிருந்த மகாநாகனைப்
யாழ். - தொன்மை வரலாறு 188 இ

பகைக்க விரும்பவில்லை. மொகல்லானாவின் அமைதிய்ான இருபதாண்டுக் கால அரசாட்சியின் பின்னர் அரசுகட்டிலேறிய அவனது மகனான கீர்த்திசிறீமேகனின் வலிமையற்ற ஊழல் நிறைந்த ஆட்சியைப் பயன்படுத்தி மகாநாக இவனுக்கெதிரா கக் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றுக் கி. பி. 569 இல் அநுராதபுரத்தின் அரசனானான். எனினும் அவனுக்கும் வாரிசு இல்லாததாலே தனது தாயின் சகோதரனின் மூத்த மகனான அக்கபோதியை இளவரசனாக்கினான். அக்கபோதியின் ஆட்சி ஏறக்குறைய முப்பதாண்டுகள் (கி. பி. 571 - 604) நீடித்தது. இவன் தனது காலத்திலும் நிருவாகத்தினைப் பரவலாக்கியதாகக் கூறப்படுகின்றது. இம்மன்னன் உத்தர தேசத்திற் குருண்ட் விகாரையையுங் குளத்தையுங் கட்டியதாகக் கூறப்படுகின்றது. இவ்விகர் ரையினை மேலும் விஸ்தரித்தவனாக நான்காவது அக்கபோதியின் (கி. பி. 667-683) மந்திரி குறிப்பிடப்பட்டுள்ளான். இவை மு ல்  ைல த் தீவு மாவட் டத்திலுள்ள குருந்தனுாரிலே அமைந்திருந்தன என ஊகிக் கப்படுகின்றது.26 பின்னர் தக்கிண தேசத்தின் அதிபதியாக (உபராஜாவாக) இவன் தனது தாயின் சகோதரனை நியமித் தான். தனது சகோதரியின் மகனை மலைய தேசத்தின் அதிபதி யாக "மலையராஜ' என்ற பட்டத்துடன் நியமித்தான். அக்க போதியின் மரணத்தின் பின் உபராஜாவாக இருந்த சகோதரியின் மகன், இரண்டாவது அக்கபோதி என்ற பெயருடன், அநுராத புர அரசின் மன்னனானான். இவனின் ஆட்சிக் காலம் இ. பி. 604 - 614) ஓரளவுக்கு அமைதியாகக் காணப்பட்டா லுங்கூட இவனின் மரணத்தோடு இவனால் உபராஜாவாக நியமிக்கப்பட்ட சங்கதீஸ் பதவியேற்றபோது பிரச்சனைகள் உருவாகின.
சங்கதீஸ அரசனாய் இருப்பதைச் சங்கதீஸவின் சேனாதி பதியாகிய சிலாமேகவண்ணனோ இரண்டாவது அக்கபோதி காலத்திற் சேனாதிபதியாக விளங்கிய மொகல்லானவோ விரும்பவில்லை. எனினுஞ் சங்கதீஸவின் சேனாதிபதியாகிய சிலாமேகவண்ணன் தனது மன்னனுக்கு எதிராகத் தாக்கு தலை நடாத்தியதைப் பயன்படுத்தி மொகல்லான சங்கதீஸ் வைத் தோற்கடித்துக் கி. பி. 614 இல் அநுராதபுர அரசின்
189 வரலாற்றுக் காலம் 11

Page 111
மன்னனானான். சங்கதீஸ்வினதும் அவனது சேனாதிபதியின துங் குடும்பத்தினை அழிக்கும் நடவடிக்கைகளில் மொகல்லான இறங்கினாலுங்கூட உரோகணைக்குத் தப்பியோடிய சங்கதீஸ வின் மகன் ஜெட்டதீஸனும் சேனாதிபதியின் மகன் சிலாமேக வண்ணனும் பின்னர் அநுராதபுர அரசர்களாக வருவதை இவனாலே தடுக்க முடியவில்லை. சிலாமேகவண்ணன் ஜெட்ட தீஸ்வின் உதவியோடு மொகல்லானவைக் கொன்று அரசனா னான். தனது அதிகாரத்திற்குச் சவாலாக ஜெட்டதீஸ் அமைவான் என்று எண்ணியதால் அவனையுங் கொல்வதற் குத் திட்டந்தீட்டியிருந்தான். எனினும் இது வெற்றியளிக்க வில்லை. சேனாதிபதிகளின் கையோங்கிய இக்காலகட்டத்தில்அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் மலிந்த கால கட்டத்திலேதான் சிலாமேகவண்ணனுக்கெதிராகச் சிறீநாக மே ற் கொண் -
கிளர்ச்சி குறிக்கப்படுவது அவதானிக்கத்தக்கது. இக் கிளர்ச்சி
யில் ஈடுபட்ட சிறீநாக என்பவன் சிலாமேகவண்ணனின் மகனாக விளங்கியதோடு அவனின் சேனாதிபதியாகவும் விளங்கி னான் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் இக்கிளர்ச்சி
யைத் தூண்டுவதில், அநுராதபுர அரசனாக வருவதற்குத் துடித்துக் கொண்டிருந்த ஜெட்டதீஸ்வின் பங்களிப்புங் கணிசமாக இருந்ததுபோலத் தெரிகின்றது. சிலாமேகவண்ண னைத் தாக்குவதற்குத் தமிழகஞ் சென்ற சிறீநாக படையுடன் வடபகுதியூடாகவே வந்து இத்தகைய நடவடிக்கைகளிலீடு ப்ட்டபோது ராஜமித்தக என்ற கிராமத்தில் இவன் தோற் கடிக்கப்பட்டான் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு வடபகுதி ஊடாக இவன் தமிழகப் படையுடன் வந்ததை நோக்கும் போது வடபகுதியில் இக்காலகட்டத்தில் இயங்கிய அரசமைப்புத் தமிழகப் படையினருடன் இணைந்து இவனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தது எனலாம். இதனாற் சிறீநாக ஏற்படுத்திய கிளர்ச்சியை, அநுராத புரத்து அரச பதவியில் அமர விரும்பிய ஒருவன் தமிழகம், ஈழத்தின் வடபகுதி ஆகிய இடங்களிலிருந்து பெற்ற படை உதவி யுடன் நடாத்திய ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது. இதனைக் கொண்டு வடபகுதியில் அநுராதபுர மன்னர் ஆட்சி காணப்பட்ட தென்றும் இதற்கு எதிராகவே இப் பகுதியின் தலைவனான
யாழ். - தொன்மை வரலாறு 1 அo ()

சிறீநாக கிளர்ச்சி செய்து அது அடக்கப்பட்டு, அநுராதபுர மன்ன ராட்சி மறுபடியும் இப்பகுதியில் நிலை கொண்டிருந்ததென்றுங் கூறமுடியாது. இப்போட்டியில் வெற்றிபெற்ற அநுராதபுர மன்னன் சிறீநாக வுடன் வந்த தமிழகப் படையினரை அநுராத புரத்திற் காணப்பட்ட பல்வேறு விகாரைகளுக்கு அடிமைகளாக
அளித்தான் என்று சூளவம்சங் கூறுகிறதே ஒழியச் சிறீநாகவுக்கு
உதவிய வடபகுதி மக்களுக்கு இவன் அளித்த தண்டனை பற் றியோ அப்பகுதியில் இவன் மேற்கொண்ட நிருவாக நடவடிக் கைகள் பற்றியோ இந்நூல் எதுவுங் கூறவில்லை.27 இதனால் அநுராதபுர மன்னனின் ஆட்சி உத்தரதேச என அழைக்கப்பட்ட வடபகுதியின் தலைநகரான அநுராதபுரத்தினை அண்டியுள்ள பகுதியில் மட்டுமே காணப்பட்டதென்பதும், இதற்கு அப்பால்
பெருமளவுக்கு வவுனியாவுக்கப்பால் உள்ள வடபகுதியில் நாட் டின் ஏனைய பகுதிகளைப் போன்று பிராந்திய அரசு ஒன்று செயற்பட்டதென்பதும் புலனாகின்றது. இவ்வாறு நாட்டின் பிற பகுதிகளிற் செயற்பட்ட பிராந்திய அரசுகள் பற்றியும், அநுராதபுர மன்னன் இவற்றின் மீது மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றியுங் கூறும் பாளி நூல்கள் வடபகுதி அரசமைப்புப் பற்றி மெளனமாக இருந்தமை இப்பகுதியின் வரலாறு வேறொரு திசையிற் சென்றதையே எடுத்துக்
காட்டுகின்றது.
கி. பி. 7ஆம் நூற்றாண்டில் மட்டும் ஐந்து தடவைகளாக அநுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தமிழகஞ் சென்று படையுடன் திரும்பிவந்த நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.28 இக்காலத்தில் வாரிசுரிமைப்போர் ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சி யாக அநுராதபுர அரசை ஆட்டிப்படைத்ததால் வடபகுதி மீது அநுராதபுர அரசரின் மேலாணை செல்வது மிக மிகக் கஷ்ட மாகவே இருந்தது. இதனால் வடபகுதி அரசு தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இத்தகைய அர சியற் சூழல் அளித்ததைப் பாளி நூல்களில் இப்பகுதி பற்றிச் சிறீநாகவின் (கி. பி. 614 - 622) கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒன்றரை நூற்றாண்டு வரை) எத்தகைய குறிப்புங் காணப்படாத தன்மை உறுதி செய்கின்றது. இதனை விளங்கிக்கொள்வதற்கு இக்கால அநுராதபுர மன்னர் தமிழகஞ் சென்று படையுடன்
O 19 1 வரலாற்றுக் காலம் 11

Page 112
வந்து தமது அரசுரிமையைப் பெற்ற நிகழ்ச்சிகளைக் கூறலாம்.29
சிலாமேகவண்ணனின் மகன் மூன்றாவது ஜெட்டதீஸவுடன் போரிட்டு வெற்றியும் பெற்றான். மூன்றாவது ஜெட்ட
தீஸவின் மந்திரியாக விளங்கிய தடாசிவ தமிழகஞ் சென்று தமிழ்ப்படையுடன் திரும்பி மூன்றாவது அக்கபோதியைத்
தோற்கடித்து முதலாவது தத்தோபதீஸ் (கி. பி. 639-650) என்ற பெயருடன் அரசுகட்டிலேறினான். திரும்பவும் இம்மன்னன் தமிழகத்திற்கு ஒடித் தமிழ்ப்படையுடன் நாடு திரும்பியது
பற்றியும் பின்னர் இவன் தனது எதிரிகளாற் தோற்கடிக்கப் பட்டது பற்றியுஞ் சூளவம்சங் கூறுகின்றது. இக்காலத்திலே தத்தோபதீஸ்வின் உறவினனான முதலாவது ஹத்ததாத்த தமிழ்ப் படையுடன் ஈழம் வந்தான். பின்னர் மூன்றாவது அக்க
போதியின் மகனாகிய இரண்டாவது காஸ்ப்ப (கி. பி.
650 - 659) தமிழ்ப் படையுடன் செயற்பட்ட ஹத் ததாத்த
வைத் தோற்கடித்தான். ஆனால் இக்காலத்தில் அநுராதபுரத்
திற் செல்வாக்குடன் விளங்கிய தமிழ்ப் படையினர் இரண்டாவது
காஸப்பவை விரும்பவில்லை. இதனால் இவர்கள் அப்போது தமிழ் நாட்டிலே தங்கியிருந்த இரண்டாவது ஹத்ததாத்தவை (கி. பி. 659 - 666) அழைத்து மன்னனாக்கினார்கள். இக்காலத் திற் செல்வாக்குடன் விளங்கிய தமிழ்ப் படைத் தளபதிகளாகப் பொத்தகுட்டக, பொத்தசாத, மகாகண்ட ஆகியோர் சூளவம்சத் திற் குறிப்பிடப்படுகின்றனர்.
சிங்கள மன்னனாகிய மாணவர்மன் ( கி. பி. 684 - 718 ) பல்லவ வம்சத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். இவனின் இயற்பெயர் *மான ஆகும். பல்லவ மன்னர்களின் பெயர்கள் இறுதியில் 4 வர்மன் " என்ற விகுதியுடன் முடிவடை வதைப்போன்று இவனுந் தனது பெயரை மானவர்மன் என மாற்றிக் கொண்டான். இம்மன்னன் தனது அரசுரிமையை இழந்த நிலையில், இளமைப் பருவத்தினைத் தனது குடும்பத்துடன் உத்தரதேசத்திற் கழித்ததாகச் சூளவம்சங் குறிப்பிடுகின்றது.80
இம்மன்னன் தனது அரசுரிமையை நிலைநாட்டப் பல்லவ மன்னன் அளித்த படையுடன் இருமுறை அநுராதபுரம் நோக்கிப் படை எடுத்தான். முதன்முறையாக இவனுக்கு
யாழ். - தொன்மை வரலாறு 192 O

உதவி செய்ய வந்த பல்லவப் படை அநுராதபுரத்தினை அடைந்தாலுங்கூட, அக்காலத்திற் பல்லவ அரசனான நந்திவர்மன் சுகவீனமுற்றுக் காணப்பட்டதால் அப்படை திரும்பியது. இதனால் மாணவர்மன் திரும்பவுந் தமிழகஞ் சென்று 18 ஆண்டுகள் பல்லவ அரண்மனையிலே தங்கி கி. பி. 684இல் இரண்டாவது நரசிம்மவர்மன் கொடுத்த படையுடன் திரும்பி வந்து அநுராதபுரத்தினைக் கைப்பற்றி அரசனானான்.3 இவனது மக்களாகிய ஐந்தாவது அக்கபோதி ( கி. பி. 718 - 724 ), மூன்றாவது கா ஸப்ப ( கி. பி. 724 - 730 ), முதலாவது மகிந்தன் ( கி. பி. 730 - 733 ) ஆகியோர் பல்லவ - தமிழ்ப் படை உதவியுடன் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றவர்களாவர். மானவர்மனின் வருகை Oβαμπ (5) அநுராதபுரத்திலே தமிழ்ப் படையினரின் கையோங்கியது. இவர்களின் செல்வாக்கினை மானவர்மனால் ஓரளவு கட்டுப்
படுத்த முடிந்தபோதிலும் பின் வந்தவர்களால் முடியவில்லை.
இரண்டாவது மகிந்தனின் ( கி. பி. 777 - 797 ) காலத் தில் அநுராதபுர மன்னன் வடபகுதியோடு கொண்டிருந்த் தொடர்புகள் பற்றியுஞ் சூளவம்சத்திற் குறிப்புண்டு.32 இவன் அனுராதபுரத்தினை ஆண்ட சிலாமேகனின் மகனாவான். தந்தையின் காலத்திற் சேனாதிபதியாக விளங்கியவன். சிலாமேகன் இறந்து ஏழாவது அக்கபோதி அரசுகட்டிலேறிய போது அவன் சேனாதிபதியாகும் பொறுப்பை ஏற்காது அரசனின் அநுசரணையோடு மகாதீர்த்த பட்டினத்தில் வாழ்ந்ததாகச் சூளவம்சத்திற் குறிப்பிடிப்படுகின்றது. எனினும் அக்கபோதி இறந்தபோது அரசபதவியைக் கிளர்ச்சிக்காரர் கைப்பற்றி நாட்டை அழித்துவிடுவதைத் தடுப்பதற்காக வெகு சீக்கிரமாக இவன் அநுராதபுரத்திற்கு மீண்டு அரசபதவியைப் பெற்றதாகச் சூளவம்சங் கூறுகின்றது.
சிறீநாகனின் கிளர்ச்சி வடபகுதியில் நடந்து கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளின் பின்னர்தான் வடபகுதியில் நடை பெற்ற இவன்காலக் கிளர்ச்சி பற்றிச் சூளவம்சம் விரிவாகக் குறிப்பிடுகின்றது. இக்கிளர்ச்சியின்போது வடபகுதி முதலிகளும், இங்கு வாழ்ந்த மக்களும் இப்பகுதியின் ஆணையைப் பலாத்
O 193 வரலாற்றுக் காலம் 11

Page 113
காரமாகப் பெற்று அரசனுக்குரிய திறையைக் கொடுக்க மறுத்தனர் எனக் குறிப்பிடுகின்றது. மகிந்தன் ஒரு படையுடன் உத்தரதேசம் சென்று இப்பகுதி முதலிகளையும், மக்களையும் அடக்கி அநுராதபுரம் மீண்டதாகவும் மேலும் இது கூறுகின்றது. அவ்வாறு அநுராதபுரம் மீண்ட மகிந்தன் மீண்டுமொரு முறை வடபகுதியின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மாகா ணத் தலைவர்களில் ஒருவனாகிய டப்புல என்போன் படை யுடன் இவனைச் சமருக்கு அழைத்த போது அவனை மகிந்தன் தோற்கடித்தான். இத்தகைய சமர், தலைநகரான அநுராதபுரத் திற்கு வெளியே நடைபெற்றபோது தலைநகரான அநுராத புரத்தில் அரசபதவிக்குரியவன் காணப்படாததைக் கண்ட வட பகுதி முதலிகள் அநுராதபுரத்திற்கு வந்து அதனைக் கைப்பற்ற முயன்றார்கள் எனவுங் கூறப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சி இக்காலத்தில் இவர்கள் கையோங்கி இருந்ததையே எடுத்துக் காட்டுகின்றது. எனினும், இரண்டாம் மகிந்தன் (கி. பி. 777-797) மறுபடியும் அவர்களைத் தலைநகரிலிருந்து விரட்டியடித்துத் தனது பதவியை ஸ்திரப்படுத்தினான் என்று சூளவம்சங் குறிப் பிடுகின்றது. நாட்டின் எல்லாப் பகுதிகளையுந் தனது படைப் பலத்தாலே தனது ஆணைக்குக் கீழ்க் கொண்டு வந்தான் எனச் சூளவம்சங் குறிப்பிட்டாலுங்கூட, இ வ னு க்கு வடபகதியில் மட்டுமன்றிக் கிழக்கு, தெற்குப் பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புகள் காணப்பட்டன. இதனால் இத்தகைய எதிர்ப்புகளின் மத்தியில் வலிமையுடன் காணப்பட்ட வடபகுதி மக்களைத் தொட்ர்ந்து இவனாலோ இவன் பின்வந்தவர்களாலோ அடக்கி வைத்திருக்க முடியவில்லை என்பது தெரிகின்றது. ஏனெனில் இது பற்றிய விபரமான குறிப்புகள் சூளவம்சத்திற் காணப்படவில்லை. எனினும், இம்மன்னன் வடபகுதி மீது ஆரம்பத்திற் படை எடுத்து அதன் மீது சிலகாலந் தனது மேலாணையை ஏற்படுத்தி, அப்பகுதித் தலைவர்களிடந் திறையைப் பெற்றிருந்தான் எனக் கொண்டாலுங் கூட, இத்தகைய நிலை நெடிது காலம் நீடிக்க வில்லை என்பதனையே வடபகுதித் தலைவர்கள் அநுராதபுரத் தலைநகர் வரை வந்து மேற்கொண்ட போர் நடவடிக்கைகள்
எடுத்துக் காட்டுகின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 194 இ

தமிழ் நூல்களும் வடபகுதியும்
மேற்கூறிய பின்னணியிற்றான் தமிழ் நூல்கள் குறிப்பிடும் உக்கிரசிங்கன், மாருதப்புரவீகவல்லி ஆகியோரின் கதைகள் ஆராயப்பட வேண்டியுள்ளன. முதலில் யாழ்ப்பாண வைபவ மாலையிற் காணப்படும் உக்கிரசிங்கனின் கதையை நோக்கு வாம். இந்நூலில் உக்கிரசிங்கன் சிங்கத்தின் முகமும், மானிட உருவமுங் கொண்டவனாகக் குறிப்பிடப்படுகின்றான். இவனின் அரசிருக்கையாகக் கதிரைமலை விளங்கியது. இதுபற்றி யாழ்ப் பாண வைபவமாலை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.33
* சாலிவாகன சகாப்தம் 717இல் (கி. பி. 795) விஜயராச னின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையிலிருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந்து போன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்துக் கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான். தென்னாடுகளை வேற்றரசன் ஆண்டு வந்தான்."
கதிரைமலையிலரசாண்ட இவன் கீரிமலையிலுள்ள நகுலேசர் கோயிலைத் தரிசிப்பதற்காகக் கீரிமலையிலுள்ள ‘வளவர்கோன் பள்ளம்" என்னுமிடத்தில் வந்திறங்கிப் பாளயமிட்டிருந்தான். இது சம்பவித்து எட்டாம் வருடத்திலே சோழ தேசாதிபதி யாகிய திசையுக்கிர சோழன் மகள் மாருதப்பிரவல்லி தனக் குண்டான குன்ம வியாதியைத் தீர்க்கக் கீரிமலையிலே தீர்த்த மாடுதல் வேண் டு ம் என்று சாந்தலிங்க முனிவர் கூறிய ஆலோசனைப்படி காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து புறப் பட்டுப் பலவிடங்களிலுந் தீர்த்தமாடிய பின்னர் தாதிமாருந் தோழிமா ருஞ் சேனை வீரருஞ் சூழ்ந்து வரக் கீரிமலையிலுள்ள *குமாரத்தி பள்ளம்" என்னுமிடத்தில் வந்து பாளயமிட்டிருந் தாள். இங்கிருந்து தீர்த்தமாடியதன் விளைவாக அவளது குன்ம வியாதியுந் தீர்ந்ததோடு குதிரைமுகமும் மாறியதன் விளைவாக அவள் யெளவன பருவத்தினையுடைய மங்கையின்
தோற்றத்தினைப் பெற்றிருந்தாள்.
195 வரலாற்றுக் காலம் II

Page 114
அப்போது மூன்றாம் முறையாக நகுலேஸ்வரர் கோயிலைத் தரிசிக்க வந்து, வளவர்கோன் பள்ளத்திற் பாளயமிட் டிருந்த உக்கிரசிங்கன், நகுலேசர் சந்நிதானத்தில் அவளைக் கண்டு அவளை விவாகஞ் செய்ய வேண்டுமென்று நினைத் தான். குதிரைமுகம் மாறப் பெற்ற மாருதப்பிரவல்லியேர் எனிற் கோயிற்கடவை என வழங்கப்பட்ட அக்குறிச்சிக்குத் தனது குதிரைமுகம் மாறப் பெற்றதால் மாவிட்டபுரம் எனப் பெயர் சூட்டி அவ்விடத்திலே ஒரு கந்தசுவாமி கோயிலைக் கட்டுவிக்க எண்ணித் தனது பிதாவாகிய திசையுக்கிர சோழ னுக்குத் திருமுகம் அனுப்பினாள். எனினும், ஒரு நாளிரவில் அவளிருந்த பாளயத்திற்குச் சென்ற உக்கிரசிங்கன் அவளைத் தனது மனைவியாக்கும் பொருட்டுத் தனது பாளயத்திற்குத் தூக்கிச் சென்று அவளை மணமுடித்தான்.
இவ்வாறு அவளை மணந்த உக்கிரசிங்கன் தனது மனைவி யோடு கதிரைமலைக்குப் போக எண்ணியபோது மாருதப்பிர வல்லி தான் ஆரம்பித்த கந்தசுவாமி கோயிலின் திருப்பணி களைப் பூர்த்தி செய்த பின்னரே வருவதாகக் கூறினாள், இத்திருப்பணி பற்றிய திருமுகத்தினைப் பெற்றுக் கொண்ட இவளது தந்தையாகிய திசையுக்கிர சோழன் திருப்பணிக்கு வேண்டிய கலைஞர்கள் மட்டுமன்றி, பிரதிஷ்டை செய்வதற் கான விக்கிரகங்களையும், பூசை புரிவதற்குப் பெரியமனத்துளார் தலைமையிற் பிராமனோத்தமர்களையும் அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. காங்கேயன் என நாமங் கொண்ட முருக னது விக்கிரகங்கள் இத்துறைமுகத்தில் வந்திறங்கியதால் இது காங்கேசன்துறை என அழைக்கப்பட்டதாகவும், இதற்கு முன் னர் இதன் பெயர் காசாத்துறையாக இருந்ததாகவும் யாழ்ப் பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது.34 வடஇந்தியாவி லுள்ள புத்தமதத்தின் புனித தலமாகிய புத்தகாயாவுடன் இத்துறைமுகத்தின் மூலமாகவே தொடர்புகள் மேற்கொள்ளப் பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றது போலும்.
உக்கிரசிங்கன் - மாருதப்பிரவல்லி ஆகியோரின் கதை யாழ்ப்பாண வைபவமாலையின் மூல நூலாகிய கைலாய மாலைவில் இடம் பெற்றுள்ளமையும் அவதானிக்கத்தக்கது.
யாழ்.- தொன்மை வரலாறு 196 O

காவிரி நாட்டிற்குரிய சோழ இளவரசியின் பெயர் கைலாய மாலையில் மாருதப்புரவீகவல்லி என இடம் பெற்றுள்ளது. தனது நோயைத் தீர்க்க விரும்பிய இவ்விளவரசி சேனையுடன் வந்து கீரிமலையிலே தீர்த்தமாடி, இரவு நேரமானதாற் கீரி மலைச் சாரலில் ஒரு பாளயமிட்டுத் தங்கியதைப் பின்வரும்
அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.35
. . . சோழன் மகளொருத்தி - கன்னிமின்னார் தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்து ளாடிப் பிணிதணிப்ப தாநினைந்து - சேடியர் தஞ் சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
பாவையுறு தீர்த்தம் படிந்ததற்பி னேர் வைபெறு கங்குலுற வெங்குமிகு காவ லரண்பரப்பிச் சங்கையுறு கூடாரந் தானமைத்து - மங்கை விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே பொருந்துதுயி லாயிருக்கும் போது . . .”*
இவ்வாறு மாருதப்புரவீகவல்லி இரவில் மஞ்சனத்தில் தூங்கு கின்ற சமயம் சிங்கமுகத்தினையுடையவனும், கார்த்திகேய னைக் குல தெய்வமாகக் கொண்டவனும், கதிரைமலை அர சனுமாகிய வாலசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக் கவர்ந்து தனது குகைக்கு இட்டுச் சென்று மணம் முடித்து இருவரும் இந்திரனும், இந்திராணியும் போன்று இன்பத்தில் திளைத் திருந்ததைப் பின்வரும் அடிகள் எடுத்துரைக்கின்றன. அதாவது,38
** . . . . . சூர்ப்பகையை மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தவடி யார்துயரை யாற்றுங் குமரனரு ளாலே - போற்றுதவர் வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத் தாய்ந்த நராகத் தடலேறு - சாய்ந்துகங்குல் போவதன்முன் னேகியந்தப் போர்வேந்தன் மாமகடன் காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே - ஆவலுடன் கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
O 1 g7 வரலாற்றுக் காலம் 11

Page 115
வண்டார் குழலை மணம்புணர்ந்து - உண்டான பூவிலநூ போகம் பொருந்திப் புலோமசையுங் காவலனும் போலக் கலந்திடுநாள் ..."
காலஞ் செல்ல மாருதப்புரவீகவல்லி சிங்கத்தின் வடிவினை உடைய அழகான நரசிங்கராசன் என்னும் ஆண்மகவைப் பெற்றாள். அவளுக்குப் பின்னர் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இவர்கள் இருவரும் சிறப்பான முறையிற் பெற்றோ ரால் வளர்க்கப்பட்டனர். இளவரசன் பருவமெய்தியவுடன் அவனின் சகோதரிக்கு அவனைத் திருமணம் செய்து வைத் துச் சிறப்பான முறையில் விமரிசையாக அவனுக்குப் பட்டா பிஷேகமும் இயற்றினார்கள். இவனாட்சி நல்ல பலனைத தரும் என மக்கள் மகிழ்ந்த நேரத்தில் இவனின் அரசாட்சி பரந்ததையும் அயலரசர்களை வெற்றிகொண்டு தனியரசாட்சி நடாத்தியதையும் இந்நூல் கூறுகின்றது.37
யாழ்ப்பாண வைபவமாலை இறுதியாக உக்கிரசிங்கன் - மாருதப் பிரவல்லி ஆகியோரின் திருமணத்திற்குப் பின்னருள்ள நிகழ்ச்சிகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.38
'இது நிற்க, கதிரைமலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சில காலத்தின் பின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமுஞ் சர்வ ராச லட்சணங்களும் உடையனாய்ச் சிங்கத்தின் வாலை யொத்த வாலுடனே ஒரு குமாரனும் அவனுடனொரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் நரசிங்கராசனென்றுஞ் சண்பகாவதி என்றும் பெயரிட் டார்கள். அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி, நரசிங்கராசன் என்னும் பெயர் படைத்த வாலசிங்கராசனுக்கு முடிசூட்டி அரசாள வைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகா ராசன் செயதுங்கவரராசசிங்க மென்னும் பட்டத்துடன் முடி குட்டப் பெற்று அரசாட்சியை ஒப்புக் கொண்டான்."
வையாபாடலில் கைலாயமாலையைப் போல் உக்கிரசிங்கன் மாருதப்பிரவை கதைக்குப் பின்னர் யாழ்பாடியின் கதை வருவதற்குப் பதிலாக யாழ்பாடியின் கதைக்குப் பின்னர்தான்
பாழ். - தொன்மை வரலாறு 198

மக்கிரசிங்கன், மாருதப்பிரவை கதை வருகின்றது.39 இதன் வசன நூலாகிய வையாவிலும் இக்கதை மிகச் சுருக்கமாகவே இடம் பெறறுள்ளது.40 யாழ்ப்பாண வைபவமாலை, கைலாய மாலை ஆகியவற்றுட் சோழ இளவரசி மாருதப்பிரவல்லி, மாருதப்புரவீகவல்லி என அழைக்கப்பட, வையாவில் மாருதப் பிரவீகவல்லி எனவும் வையாபாடலில் இவள் பெயர் மாருதப் பிரவை எனவும் இடம் பெற்றுள்ளமை அவதானிக்கத்தக்கது. குலகேதுவின் மைத்துணனான உக்கிர சோழனின் மகளாகிய மாருதப்பிரவை தனது குதிரைமுகம் மாறப் பல தீர்த்தங்கள் ஆடிக் கடைசியிற் கீரிமலையிலே தீர்த்தமாட அவளின் குதிரை முகம் மாறியதால் இவ்விடம் மாவிட்ட புரம் என அழைக்கப் பட்டது என வையாபாடலிற் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் னர் உக்கிரசிங்கனை மணந்த இவள் கதிரைமலையில் வாழ்த் ததாகக் கூறப்படுகின்றது. கதிரைமலையில் இருந்து பெருநிலப் பரப்பிலுள்ள வாவெட்டிக்கு அக்காலத்திலே இவனின் ஆட்சி பரந்தது கூறப்பட்டுள்ளது. அப்போது சிங்கத்தின் முகத் தினையும் வாலையுமுடைய ஒரு மைந்தன் இவர்களுக்குப் பிறந் தான். மணம் முடிக்க விரும்பிய இவன் மதுரையை ஆண்ட சிங்ககேதுவிடந் தனக்குப் பெண் கேட்டுத் தூதரை அனுப்பிய செய்தி பின்வருமாறு இந்நூலிற் கூறப்பட்டுள்ளது.41
அரசளித் தவனங் கிருந்திடு நாளி
லயோத்தி மன்னன் குலக்கேதுக் குரியமைத் துனனவ் வுக்கிர சோழ னுகந்துபெற் றிடுமக வானோர் மரபினுக் குரிய சிங்ககே தென்ற
மைந்தனு மாமுகந் தரித்தங் குரனொடு முதித்தாள் மாருதப் பிரவை யுவமையில் வல்லி யென்பவளும்
கூடிய குதிரை முகமது மாறக்
குணமுள தீர்த்தங்கள் யாவும்
தேடியே யிலங்கை நகரினிற் சென்று
திறமுள கீரிமா மலையி
O 199 வரலாற்றுக் காலம் 11

Page 116
லாடினள் தீர்த்த மம்முக மகன்ற
தன்னதால் மாவிட்ட புரமென்
றேடரு நதியும் நிகரில வென்றே
யிறைஞ்சின விறைவனை நினைந்தே.
பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற் போயரன் மகவினை வணங்கிப் பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருத்தன ளதற்பின் மன்னவ னடங்காப் பற்றினி லேகி
மாநகர் வாவெட்டி மலையிற் றன்ணிக ரற்ற மண்டப மியற்றித் தன்னர சியற்றின னிருந்தான்
அப்பொழு தன்னான் றனக்கொரு மைந்த
னரியினின் முகமுமோர் வாலு மொப்பனை சொல்லற் கரியதா யுதித்தா
னுலகினில் விபீஷண னந்நாள் செப்புதற் கரிய வைகுந்த பதவி
சேர்ந்திட நினைத்தவன் றன்னை யெப்புவி தனக்கு மிறைவனா யிருத்தி யென்றினி திருத்தினா னியல்பால்
மன்னவ னிராமன் கொடுத்திடு முடியும்
மந்திர வாளுமெஷ் வுலகுந் தன்னடி பத்துஞ் சக்கர மொன்று
தன்கையி லிடுகணை யாழி மின்னிக ரிடையாள் மோகினி யென்னும்
வீரமா காளிமற் றுன்னித் துன்னலர் தம்மைச் செகுத்திடு மென்றே
தொகை பெறக் கொடுத்தனன் மாதோ,
மானகர் தன்னை யாண்டிடு சிங்க
மன்னவன் தூதரை யழைத்துத் தேனலர் மாலைப் புயத்தவன் சிங்க கேதுவென் பானிட மணுகி
யாழ். - தொன்மை வரலாறு 2OO ()

யான்மண முடிக்க விசைத்திடு நீவி ரென்னலு மடிமுறை பணிந்து
கானகங் கங்கை நீங்கியே மதுரைக்
காவலன் றனக்கிவை யுரைத்தார்"
இனித் திரிகோணாசல புராணத்திற் காணப்படும் உக்கிர சிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதைபற்றி நோக்குவாம். இந் நூலில் மாருதப்ரவீகவல்லி / மாருதவீகவல்லி என இவள் அழைக்கப்படுவதோடு இவளின் தந்தையின் பெயராகத் 'திசை யுக்கிர சோழன்" என்ற பெயர் காணப்படுகின்றது. அத்து டன் இந்நூல் இவளின் கணவனை உக்கிரசிங்கன் எனவும் அழைப்பது குறிப்பிடத்தக்கது. மாருதப்புரவீகவல்லி தனது குதிரைமுகம் நீங்கப் பல தலங்களுக்குந் தீர்த்த யாத்திரை செய்ததைக் கூறும் இந்நூல் அவளுக்குக் குன்மவியாதி இருந் தது பற்றியோ தீர்த்த யாத்திரையின் போது சேனையுடன் சென்றது பற்றியோ எதுவுங் கூறவில்லை. தனது குதிரை முகம் நீங்கும் வண்ணமே இத்தகைய தீர்த்த யாத்திரையை மேற்கொண்டதாக இந்நூலிற் பின்வருஞ் செய்யுள் குறிக்கின்
42. التي D
*ஆங்கவன் றவத்தில் வந்த வரிவையர்க் கரசி யான
வோங்கெழிற் கினையே யில்லா மாருதப் ப்புரவீக வல்லி பாங்குறு தனது தொல்லைப் பரிமுக நீங்கு மாறு தீங்கறு தலங்க டோறுந் தெரிசனஞ் செய்வா னெண்ணி"
இத்தகைய த ல யாத் தி  ைர சோழ நாட்டிலுள்ள தில்லை போன்ற தலங்களில் ஆரம்பமாகி ஈழத்திலுள்ள தலங்கள் வரை மேற்கொள்ளப்பட்டது. ஈழத்துத் தலங்களிலுந் தீர்த் தங்களிலும் பெரிய மாதோட்ட மேவிப் பிறங்கு கேதீச்சரம், அதிலுள்ள பாலாவித் தீர்த்தம், திருகோணமலை மாவட் டத்திலுள்ள கன்னியா தீர்த்தம் , கோணநாதருறையுந் திருக் கோணேஸ்வரம், அதிலுள்ள பாபநாச தீர்த்தம், அங்குள்ள திருக்கரசைஈசன், மகா வலிகங்கை, வெருகல். ஆற்றங்கரையி லுள்ள குமரவேள், குமரவேள் உறையும் கதிரைமலை, அத னருகே உள் ள மாணிக்ககங்கை ஆகியன அடங்கும் 43
() 2o 1 வரலாற்றுக் காலம் II

Page 117
மேலுஞ் செங்கடக மாநகர் சென்ற மாருதப்ரவீகவல்லி இறுதியாகக் கீரிமலையை அடைந்து தீர்த்தமாடித் தனது குதிரை முகம் மாறப் பெற்றாள் எனவுங் கூறப்படுகின்றது. குதிரைமுகம் நீங்கப் பெற்ற மாருதப்ரவீகவல்லி கீரிமலையை அடைந்து நகுலேசர் ஆலயத்தில் மேற்கொண்ட திருப்பணி களைப் பின்வரும் பாடல்கள் கூறுகின்றன. 44
அகில் கமழ் கரிய கூந்த லணியிழை யங்க ணீங்கி மகிமைசான் முனிக்குத் தீர்வை வதனத் தின் வடிவை மாற்று நகுலமால் வரையின் பாலாய் நண்ணியத் தீர்த்தந் தன்னிற் பகர்முறை யாட லோடு பரிமுக நீங்கிற் றன்றே.
(க அ)
பரிமுக நீங்கி வாசப் பங்கய முகங்கள் கூம்ப விரிகதிர் பரப்பித் தோன்றும் வெண்மதி முகமும் பொற்பா ருருவமும் பெற்றே யாங்க ணுறைநகு லேச ரோடும் பொருங்கயற் கண்ணி னாளைப் போதுகொண் டருச்சித் (தேத்தி (க சு)
பின்னர் மாவிட்டபுரம் என்ற பெயர் வரப் பெற்றமையும் அங்குள்ள முருகனுக்கு ஆலயம் அமைத்த செய்தியும் இந்நூலிற் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.45
கந்தசர வணமுருக காங்கேய கறைக்கண்டன் கண்ணிற்றோன்று மைந்தவள்ளி தெய்வானை மணவாள மான்மருக வலிகொண்
[ மாவைச் சிந்தவடி வேல் விடுத்த சேவகவென் பரிமுகத்தைத் தீர்த்துமாற்றிச் சுந்தரநன் முகமளித்த வருட்டேவே யெனப் போற்றித்
துதித்தாளன்றே. (உஅ) ஏற்றுமம் மாதி னுக்குப் புரவியின் முகந்தீர்த் திட்ட வாற்றினா லப்பதிக்கு மாவிட்ட புரமென் றோர்பேர் சாற்றினா ரவளு மாங்குச் சரவணோற் பவனுக் கன்பான் மாற்றிலா மணியாற் பொன்னால் வான்றிருப் பணிகள் செய்தாள்
(உகூ )
யாழ். - தொன்மை வரலாறு 2O2 O

அதன் பின்னர் தன்னுரரை அடைந்து உக்கிரசிங்கனை மணந்த செய்தியும், இவர்கட்குச் செயதுங்க வீரபோக வரரார சிங்கன் எனும் மகன் பிறந்தமையும் இம்மைந்தன் மதுரை அரசனின் மகளான சமதூதி என்பாளை மணந்து செங்கோலோச் சியமையும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.46
கோணேசர் கல்வெட்டில் உக்கிரசிங்கன் - மாருதப்புரவீக வல்லி கதை குளக்கோட்டன் - ஆடகசவுந்தரி கதையாக மாறியுள்ளது.47 சோழ இளவரசி ஆகிய மாருதப்புரவீகவல்லி இங்கே கலிங்க இளவரசியாகக் குறிக்கப்பட்டுள்ளதோடு இவளின் பெற்றோராக அசோகசுந்தர், மனோன்மணிசுந்தரி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் பெற்ற பிள்ளைதான் அழகு சவுந்தரியையான ஆடக சவுந்தரியாகும். இப்பிள்ளையைப் பார்த்த சோதிடர்கள் இது இராச்சியத்திற்குரிய பிள்ளை அல்ல என்று கூற மன்னன் ஒரு பேழையில் அக்குழந்தையை வைத்துச் சமுத்திரத்தில் விட்டான். இப்பேழை இலங்காபுரியை அடைந்தது. இதனைக் கேள்விப்பட்ட இலங்காபுரி மன்னனான மனுநேயகஜபாகு அதனை மட்டக்களப்பில் உள்ள பாலநகையூர்க் கரையிற் கண்டெடுத்துத் தனது இராசதானியாகிய உன்னரசு கிரிக்கு இட்டுச் சென்று அப்பிள்ளையை வளர்த்துச் சிலகாலம் ஆட்சி செய்து இறந்தான். இதன் பின்னர் இப்பிள்ளை உன்னரசுகிரிக்கு அரசியானாள். அப்போதுதான் வடகரையில் இருந்து வந்த சைவனாகிய குளக்கோட்டன் திருக்கைலையாகிய கோணேஸ்வரத்தில் ஆலயங் கட்டுவதாகக் கேள்விப்பட்டுத் தனது படையை அனுப்பி அந்த ஆலயத்தையும் இடித்துக் கடலிலே தள்ளி அவனையுங் கப்பலிலேற்றி அவனின் நாட்டுக்கு அனுப்புமாறு மந்திரியை ஒரு படையுடன் இவ்வரசி அனுப்பி னாள். அப்படை இம்மன்னனின் திருப்பணிகளைக் கண்டு அதிசயித்து இம்முயற்சிகளுக்கு அரசியின் உதவி வேண்டுமா என்று அவனிடம் கேட்டு வரவே அரசி தங்களை அனுப்பிய தாகக் கதையை மாற்றிக் குளக்கோட்டனிடம் சொல்ல, அம் மன்னன் அரசி இவர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை அப் படியே சொல்லி இவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதுடன் அரசகுமாரிக்கு மணி மாலையுங் கணையாழியுங் கொடுத் தனுப்பினான். அரசியிடம் சென்ற இவர்கள் இம்மன்னன்
O 2O3 வரலாற்றுக் காலம் II

Page 118
குளங்கட்டுஞ் செய்தியைக் கூறி அரசகுமாரிக்குக் கொடுத்தனுப்பிய மணிமாலையையுங் கணையாழியையும் அவளுக்களித்தார்கள். இதனைக் கேட்ட அரசி குளத்தினைக் கட்டுவதற்கும் மன்னனது திருப்பணிக்கு உதவவும் ஒரு பூதப்படையை மந்திரியோடு அனுப்பியதுடன் இப்பணிகள் முடிந்ததும் மன்னனை அழைத்து வரும்படியுங் கூறினாள். இதன் பின்னருள்ள, நிகழ்ச்சிகளை இந்நூல் பின்வருமாறு உரைக்கின்றது.48
" அதன் பின்னர் இராசராசனான குளக்கோட்டுராசனும் தனது சதுரங்க சேனையும் மந்திரியுமாக உண்ணாசகிரி யென்னும் பட்டிணத்திற்கு வந்து ஆடகசவுந்தரி யென்னும் இராசகுமாரியை விவாகம் முடித்துக் கொண்டு சிலநா ளங்கிருந்து இராசாத்தியுடன் திருக்குளம் பார்க்க வந்து பார்த்த பொழுது வுட்புறத்தில் ஒரு பணிவிருக்கக் கண்டு அவ்வரசி தன்னோடு வந்த ஸ்திரி சனங்களைப் பார்த்து இந்தப் பணிவைக் கட்டுங்க ளென் ன அச்சொல் முடிய முன் ஆளுக்கொரு கல்லாய் வைத்துக் கட்டி முடித்தார்கள். அல்விடத்திற்குப் பெண்டுகள் கட்டு என்று பெயரானது. அதன்பின் அரசனும் அரசியும் வந்து திரிகோணை நாயகரையுந் தரிசனை செய்து சொக்கட்டர்ன் மாதிரி யான ரத்னமணி மண்டபமும் பளிங்கினாலொற்றைக் கால் மண்டபமும் சமைப்பித்துத் தரிசனை செய்து வருகிற நாளில் கோணைநாயகர் கிருபையால் குமா ரத்தி வயிற்றிற் சிங்ககுமாரனென்னுமொரு பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளையுடன் இராசாவும் குமாரத்தி யும் உண்ணாசகிரி பட்டிணம் போய்ச் சில நாளிருந்து இராசகுமாரத்தி தேகவியோகமான பின்பு குமாரனை அந்தப் பட்டிணத்தை அரசாள வைத்து மந்திரிக்கும் முக மனான வார்த்தை சொல்லிச் சிங்ககுமாரனுக்கு மந்திரி யாகத் திட்டம் பண்ணி வைத்துப் பின் எங்கோமானா கிய அரசனும் தனது படையலங்காரத்தோடு திரிகயிலைக்கு வந்து தரிசனை செய்து கொண்டிருந்தார். முன்முலைத் தாடகையென்று சொல்வது பிசகு, பிறக்கமுன் தனபாரமிருந் ததினால் முன்முலையாடகசவுந்தரியென்று பெயராயிற்று."
யாழ். - தொன்மை வரலாறு 2O4 ()

மட்டக்களப்பு மான்மியத்திலும் ஆடகசவுந்தரி கலிங்க நாட்டு இளவரசி என்றே அழைக்கப்பட்டுள்ளாள்.49 திரி கோணாசல புராணத்தில் இவளின் கதை குளக்கோட்டனுடன் இணைக்கப்பட்டிருப்பது போன்று இந்நூலில் இவளின் கதை ரிகா சேனனுடன் இணைக்கப்பட்டிருப்பது அவதானிக்கத்தக்கது. கோணேசர் கல்வெட்டிற் கலிங்கத்து இளவரசியாகிய இவளின் தந்தையின் பெயராக அசோகசுந்தர் விளிக்கப்படுவதோடு அரசாட்சிக்குரியவள் அல்ல எனச் சோதிடரால் இனங் காணப் பட்ட இவள், குழந்தையாக இருக்கும்போதே பேழையில் வைத்துச் சமுத்திரத்தில் விடப்பட்டாள் என்றுங் கூறப்
பட்டுள்ளது. vo
மட்டக்களப்பு மான்மியம் மனுநேயகஜபாகு மன்னன் இவளைப் பிள்ளையாகச் சுவீகாரஞ் செய்து உன்னரசுகிரியில் வளர்த்து வந்ததோடு தனக்குப் பின்னர் இவளுக்கு அரசுரி மையைக் கொடுத்தான் எனக் கூறுகின்றது. இவளுக்கு இம் மன்னர் இட்டபெயர் ஆடகசவுந்தரியாகும். இவள் மட்டக் களப்பில் அரசாட்சி செய்யும்போது மகாசேனன் என்பான் வைதூலியம் எனுஞ் சைவத்தை வளர்க்கத் தட்சணகயிலையில் இருந்த சிவாலயங்களை நேர்பண்ணிப் புத்தாலயங்களை இடிப்பித்தான். இதனை அறிந்த ஆட கசவுந்தரி ஒரு படையை அனுப்பி அவன் நேர் செய்த ஆலயத்தை இடித்துக் கடலிலே தள்ளி அவனையும் அவனது துணைவரையும் அடித்துத் தள்ளிவிட்டு வரும்படி கூறினாள். மகாசேனன் அப்படை யுடன் அரசியின் இருப்பிடஞ் சென்று அவளை மணம் முடித் தான் எனக் கூறப்படுகின்றது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை யாகச் சிங்ககுமாரன் இந்நூலிற் குறிப்பிடப்படுகின்றான். ஆடகசவுந்தரி சிங்க குமாரனைப் பெற்றுப் பின்னர் நடை பெற்ற நிகழ்ச்சிகளை மட்டக்களப்பு மான்மியம் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.50
* பின்பு மகா சேனனும், மனைவி ஆடகசவுந்தரியும் வைதூ லியராய் வாழுங் காலம் சிங்க குமாரனைப் பெற்று மூன்று வருஷத்தில் ஆடகசவுந்தரி தேகவியோகமானாள். பூதங் களும் காடேறி மறைந்தன. அதன் பின் மகாசேனன்
() 2O5 வரலாற்றுக் காலம் 11

Page 119
தனது புத்திரனை வளர்த்து இளவரசுடைய புத்திரி தாரக சோதியைப் பாணிக் கிரகணஞ் செய்துவைத்து மட்டக்களப்பு, உன்னரசுகிரி, தட்சணாபதி மூன்றையும் பட்டங்கட்டி ஆளும்படி முடிசூட்டித் திரிகயிலையில் சென்று சிலகாலத்தின் பின் கயிலை வாசனோடு கலந்து
முத்தி அடைந்தனர்."
சிங்ககுமாரன் ஆட்சி பற்றி மட்டக்களப்பு மான்மியம் மேலும் குறிப்பிடுகையில், தனது தந்தை தட்சணகயிலையில் மேற் கொண்ட திருப்பணி போலவே இவனும் உன்னரசுகிரியில் திருப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறுகின்றமை அவதானிக்கத்
தக்கது.
நாம் மேலே ஆராய்ந்ததிலிருந்து உக்கிரசிங்கன் மாருதப் புரவீகவல்லி கதை தமிழ் நூல்களாகிய யாழ்ப்பாண வைபவ மாலை, மட்டக்களப்பு மான்மியம், திரிகோணாசல புராணம், கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், வையா, கைலாய மாலை ஆகிய நூல்களில் வெவ்வேறு வடிவங்களில் உருமாறி வழங்கப்பட்டுள்ளதென்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழ் நூல்களின் வரலாற்று முக்கியத்துவம்
இச்சந்தர்ப்பத்தில் இக்கதைகளின் வரலாற்று முக்கியத் துவம் பற்றி ஞானப்பிரகாசர் பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.81
* ஆயின் மாருதப்பிரவாகவல்லி உள்ளபடி மாறுதலடைந்த ஆட கசவுந்தரியேயாம். மாருதப்பிரவாகவல்லி அலைகளின் மேலுந்தப்பட்ட பேழையில் வந்தவள் எனும் பொருட்டே என்பது வழுவாகாது. (பிரவாகவல்லி, பிரவல்லி என்றும், பிரவிகவல்லி என்றும் ஆங்காங்கு மாறுதலடைந்து நிற்கும்) உக்கிரசிங்கனும் குளக்கோட்டனும் ஒருவனே. இவன் சரித்திர சம்பந்தமான ஒரு வட இலங்கை அரசனாகலாம் என்னும் மதம் பின்னாற் தெரிவிக்கப்படும். . . . மாருதப் பிரவாகவல்லியும் உக்கிரசிங்கனும் என்போரின் வரலாறு
முழுதும் ஆடகசவுந்தரி குளக்கோட்டன் என்போரினது
யாழ். - தொன்மை வரலாறு 206 O

வரலாற்றினைக் கொண்டுதித்தது என்பதோ எவ்விதத்தி னும் நிச்சயமாம். குளக்கோட்டன் தம்பலகாமத்தில் திருப் பணி செய்வித்தமைகூடக் கீரிமலைத் திருத்தம்பலேசுரன் கோயிலில் வைத்து அனுசரிக்கப் பட் டி ருக்கி ன் றது. பூரீ ச. குமாரசுவாமிப்பிள்ளை திருத்தம்பலையை தம்பலா (ஒரு சாதிக் கீரை) எனுஞ் சிங்கள மொழியின் திரிபே போலும் எனக் கூறுகின்றார் (பக். 37), இதற்குத் தம்பிலாவத்தை எனும் காணிப் பெயர் அவர் தரும் ஓர் சான்று. ஆயின் இவ்வுற்பத்தியும் அடித்தளத்தி லிருப்ப, இவ்வுற்பத்தியுள்ள ஊர்ப் பெயரே கொண்ட தம்பலகாமத்துக் கோவிலும் திருத்தம்பலேசுரமும் சம்பந்தப் பட்டனவேயன்றோ என்பது பரியாலோசிக்கத்தக்கது."
மேலும் உக்கிரசிங்கனின் காலத்தை ஞானப்பிரகாசர் கி. மு. 23ஆம் நூற்றாண்டு எனக் கூறியிருப்பதும் ஈண்டு நோக்கத் ஆக்கது.
இக்கதைகள் பற்றி இந்திரபாலாவும் பின்வருமாறு கருத் துத் தெரிவித்துள்ளார்.02
"யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுக்கு உக்கிரசிங்கன் கதையை ஒரு நம்பகரமான ஆதாரமாகக் கொள்ளமுடி யாது. இக்கதையை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும் . . . தமிழ் வரலாற்றேடுகளிலே கூறப் பட்டுள்ள உக்கிரசிங்கன் கதை முழுவதும் நம்பகரமற்ற தென்றே கொள்ள வேண்டும். இக்கதையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இதில் வேறும் பல கட்டுக் கதைகளும் இடப் பெயர் விளக்க ங் களும் கலந்திருப்பதைக் காணலாம். உக்கிரசிங்கன் கதை பெரும்பாலும் சிங்கள மக்கள் மத்தி யிலே வழங்குகின்ற விஜயமன்னன் பற்றிய கதையைத் தழுவியதாக அமைகின்றது. தமிழ் வரலாற்றேடுகளிலே கூறப்பட்டுள்ள குளக்கோட்டன் கதையின் சில அம்சங்க
ளும் இதிலே கலந்துள்ளன . . . இவை தற்செயலாகத் தோன்றுகின்ற ஒற்றுமைகள் என்று விளக்கமுடியாத வகையிலே அமைந்துள்ளன. உக்கிரசிங்கன் கதைகளை
() 2O7 லரலாற்றுக் காலம் II

Page 120
ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால் எவ்வாறு விஜயன் கதையில் வரும் பாத்திரமாகிய சிங்கபாகு தமிழ் நூல் களிலே உக்கிரசிங்கனாக மாறியுள்ளான் என்பதைக்
5T6007 Gurrub. "
இந்திரபாலா மேலும், யாழ்ப்பாணப் பகுதியிற் சிங்கள இராச் சியத்தின் தோற்றத்தினை விளக்குங் கதையாக விஜயன் கதை காணப்பட்டதென்றும், இக்கதையே வடபகுதி இராச் சியத்தின் தோற்றத்தினை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இக்கதையின் கதாபாத்திரங்களைப் பற்றி ஒவ் வொரு நூலிலுங் காணப்படுந் தகவல்கள் எடுத்து விளக்கு கின்றன என்றுங் கூறியுள்ளார். இவரது கருத்து யாதெனில் விஜயனின் பாட்டனாராகிய சிங்கமே இக் க  ைத யி ல் உக்கிரசிங்கனாகவும், பாட்டியாகிய வங்கத்து இளவரசியே மாருதப்புரவீகவல்லியாகவும், இவர்களின் பிள்ளைகளாகிய சீகபாகு, சீகவல்லியே வெவ்வேறு வடிவங்களில் உககிரசிங்கன்மாருதப்புரவீகவல்லியின் பிள்ளைகளாக இக்கதைகளிலே இடம்
பெற்றுள்ளனர் என்பதாகும்.
விஜயன் கதைக்கும், இக்கதைக்கும் உள்ள தொடர்புகளை விளக்க மேலும் பல உதாரணங்களை இந்திரபாலா தந்துள் ளார். அதாவது சிங்கத்தினைக் குறிக்குஞ் சிங்கம் என்ற விகுதி யுள்ள பெயர் இக்கதையில் இடம்பெற்றுள்ளதை முதலிற் குறிப் பிடலாம். விஜயன் கதையிலுள்ள சிங்கந்தான் இவ் உக்கிரசிங் கன் கதையில் உக்கிரசிங்கனாக, உக்கிரசேன சிங்கனாக, இறு தியில் உக்கிரமாசேனசிங்கனாக இடம் பெற்றுள்ளமை தெரி கின்றது. அது மட்டுமன்றி விஜயனின் பாட்டாவாகிய சிங்கத்தி னைப் போன்று உக்கிரசிங்கனும் ஆரம்பத்திற் சிங்கத்தை ஒத்த பாத்திரமாக விளங்கிப் படிப்படியாகத் தமிழ் நூல்களில் ஒரு சாதாரண மனிதனாக வளர்ச்சி பெற்றமையைக் காண முடி கின்றது. கைலாயமாலையில் உக்கிரசிங்கன் அரை மனிதனாகவும் அரைச் சிங்கமாகவும் காட்சி அளிப்பதோடு அவன் ஒரு குகை யுள் வாழ்ந்தவனாகவுங் கூறப்படுகின்றான். யாழ்ப்பாண வைபவ மாலையில் முகத்தோற்றத்தில் மட்டுமே இவன் சிங்கத்தை ஒத் துக் காணப்பட்டுள்ளானேயன்றிக் குகையில் வாழ்ந்தவனாகக்
யாழ். - தொன்மை வரலாறு 2O8 O

குறிப்பிடப்படவில்லை. வையாபாடலிற் சிங்க உறுப்புகள் எதுவு மற்ற சாதாரண மனிதனாக உக்கிரசிங்கன் கூறப்பட்டாலும் இவனது மகனுக்குச் சிங்க உறுப்புகள் உள எனக் கூறப்பட் டுள்ளது. திரிகோணாசல புராணத்திலோவெனில் இவனும் இவ னின் மகனுஞ் சிங்க உறுப்புகள் எதுவுமற்றவர்களாகவே குறிப் பிடப் பட்டுள்ளனர். கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் ஆகியவற்றிலுஞ் சாதாரண மனிதனின் கதையாகவே உக்கிரசிங்கன் கதை இடம் பெற்றுள்ள போதிலும் இது இந் நூல்களிற் குளக்கோட்டன், மகாசேனன் ஆகியோரின் கதைகளு டன் இணைந்து உருமாறிக் காணப்படுவதையும் அவதானிக்க
முடிகின்றது.
இவ்வாறே, விஜயன் கதையில் வரும் வங்கத்து இளவரசி, இந்நூல்களில் மாரு தப்பிரவல்லி, மாருதப்புரவீக வல்லி, ஆடக செளந்தரியாக உருமாறியுள்ளதையும் இந்திரபாலா எடுத்துக் காட்டியுள்ளார். கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, திரிகோணாசலபுராணம், வையாபாடல், வையா ஆகிய நூல்களில் இவள் சோழ நார்ட்டு இளவரசியாகவும், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் ஆகியனவற்றிற் கலிங்கத்து இளவரசி யாகவுஞ் சித்திரிக்கப்பட்டுள்ளாள். வங்கத்து இளவரசி போன்று மாருதப்புரவீகவல்லியும் அழகானவள். இதனாற்றான் இவளுக்கு ஆடகசெளந்தரி என்ற பெயர் கோணேசர் கல்வெட்டு, மட்டக் களப்பு மான்மியம் போன்ற நூல்களிற் காணப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலையிற் குன்மவியாதியையுங் குதிரை முகத் தினையும் மாற்றிக்கொள்ளவே இவள் தீர்த்த யாத்திரை மேற் கொண்டாள் எனக் கூறப்பட கைலாயமாலை, வையாபடல், திரிகோணாசல புராணம் ஆகிய நூல்களில் இவளின் குதிரை முகம் இவ் யாத்திரைகளினாலே மாறியது எனக் கூறப்பட்டுள்ளது. இவளின் குன்மவியா தி பற்றிய குறிப்பு இந்நூல்களில் இல்லை. கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் ஆகியவற்றிற். குன்மவியாதி அற்ற குதிரைமுகமற்ற அழகிய குழந்தையாக இவள் சமுத்திரத்தின் வழியாக ஈழத்தினை அடைந்தமை கூறப் படுகின்றது. அத்துடன் இன்னொரு வேறுபாடும் உண்டு. மாருதப் புரவீகவல்லியின் கதை யாழ்ப்பாண வைபவமாலை, கைலாய மாலை, வையாபாடல், திரிகோணாசல புராணம் ஆகியவற்றுள்
O 2oe வரலாற்றுக் காலம் II

Page 121
வடபகுதியுடன் இணைந்த வொன்றாக இடம் பெறக் கோணே சர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்களில் ஈழத்தின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்டு காணப்படு வது அவதானிக்கத்தக்கது.
சிங்கத்திற்கும், வங்கத்து இளவரசிக்கும் சிங்கபாகு, சீகவல் லி என்ற ஒர் ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர் என்பதும், பின்னர் இவர்கள் இருவரும் மணம் முடித்தனர் என்பதும், இவர்களின் மூத்த மகனே விஜயன் என்பதும் விஜயன் கதையிற் காணப்படுஞ் செய்தியாகும் கைலாயமாலை, யாழ்ப் பாண வைபவமாலை ஆகிய நூல்களில் இதே போல் உக்கிர சிங்கனுக்கும், மாருதப்புரவீகவல்லிக்கும் ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டுபிள்ளைகள் பிறந்தமை கூறப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் மணம் முடித்தனர். ஆனால் வையாபாடல், திரிகோணாசல புராணம், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்களில் இவர்கள் ஒரு மகவைப் பெற்றெடுத்த செய்தி மட்டுமே கூறப்படுகின்றது. அத்துடன் மகவின் தோற்றத்தினைப் பொறுத்தும் இந்நூல்களிற் காணப்படுந் தகவல்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆகிய நூல்களில் உக்கிரசிங்கனின் மகனின் வால் மட்டுஞ் சிங்கத்தின் வாலை ஒத்திருந்தது எனக் கூறப்பட்டுள்ளது.  ைவயா பாடலில் இவனின் முகமும் வாலுஞ் சிங்கத்தின் முகத்தினையும் வாலையும் ஒத்துக் காணப்பட்டுள்ளமை கூறப்பட்டுள்ளது. அத்துடன் மகாவம்சத்தில் விஜயன் கதையிற் காணப்படுஞ் சிங்கபாகு என்ற பெயர் உக்கிரசிங்கனின் மகனுக்குத் தமிழ் நூல்களிற் பலவாறு வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகியவற்றுள் இவனின் பெயர் நரசிங்கராசன் எனவும், வையாபாடலிற் சிங்கன் எனவும், திரிகோணாசல புராணத்திற் செயதுங்க வீரபோகவரராச சிங்கன் எனவும், மட்டக்களப்பு மான்மியம், கோணேசர் கல்வெட்டு ஆகியனவற்றுட் சிங்க குமாரன் எனவும் இடம் பெற்றுள்ளமை அவதானிக்கத்தக்கது. விஜயன் கதையிலுள்ள வேறு சில அம்சங்களும் உக்கிரசிங்கனின் மகனின் கதையோடு இணைக்கப்பட்டுள்ளது. வையாபாடலில்
யாழ். - தொன்மை வரலாறு 22o O

விஜயன் பாண்டிய இளவரசியை மணக்க வேண்டி மதுரைக்குத் தூதனுப்பியது போன்று உக்கிரசிங்கனின் மகனும் மதுரைக்குத் தூதனுப்பப், பாண்டிய இளவரசி அறுபது தோழியருடனும் பல்வகைச் சாதியைச் சேர்ந்தோருடனும் இலங்கைக்கு வந்தாள் என்ற செய்தி இடம் பெறத் திரிகோணாசல புராணத்தில் இத்தகைய விபரங்கள் இல்லாமல் மதுரைக்குத் தூதனுப்பிய செய்திமட்டுங் காணப்படுவது அவதானிக்கத்தக்க து.
இவ்வாறு உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதைக்கும் விஜயன் கதைக்குமிடையே பல ஒற்றுமைகளை அவதானிக்க முடிகின்றது. சிங்கள இராச்சியத்தின் தோற்றத்தினை விளக்க விஜயன் கதை காணப்பட்டது போன்று தமிழ் இராச்சியத்தின் தோற்றத்தினை விளக்க உக்கிரசிங்கன் கதை காணப்பட்டாலுங் கால அடிப்படையில் விஜயன் கதை பழையதாக விளங்குவ தாலும் இதில் உள்ள பல அம்சங்கள் உக்கிரசிங்கன் கதையில் இடம் பெற்றுள்ளதாலும் விஜயன் கதையிலிருந்தே உக்கிர சிங்கன் கதை வளர்ச்சி பெற்றது என்று கூறப்படுகின்றது. ஆனால் விஜயன் கதை ஒரு கட்டுக்கதையே என்றுங் கி. பி.
6ஆம் நூற்றாண்டளவில் ஈழத்தின் பெயராக விளங்கிய சீகள, தம்பபண்ணி ஆகிய பெயர்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்க மாகவே இது அமைந்தது என்பதும் இன்று ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறே, உக்கிரசிங்கனின் கதையும் வடபகுதி அரசியலில் இக்காலத்திற் பிரதான மையப் பிரதேசங்களாக விளங்கிய கதிரைமலை, கீரிமலை, மாவிட்டபுரம் போன்ற பகுதி
களை மையமாக வைத்து இழைக்கப்பட்ட கதை எனலாம்.
ஐதீகங்களும் தொல்லியற் சான்றுகளும்
விஜயன் கதை கட்டுக்கதையாக-வடநாட்டிலிருந்து சிங்கள மக்களின் மூதாதையினர் ஈழத்திற்கு வந்தது பற்றி விளக்குங் கதையாகக் காணப்பட்டாலும் இக்கதையோடு சம்பந்தப்பட்ட இடங்களையுங் இக்கதை கூறுங் காலப்பகுதியாகிய கி. மு. 6ஆம் நூற்றாண்டுக்குரிய காலப்பகுதியையும், ஆராய்ந்து பார்க்கும்போது இக்கதை இக்காலத்தில் ஈழத்திற் காணப் பட்ட குடியேற்றங்களுக்குப் பாளி நூலோர் தமது கண்ணோட் டத்திற் கொடுத்த விளக்கமாகவே அது அமைகின்றது. வட
O 21 1 வரலாற்றுக் காலம் 11

Page 122
இந்தியாவிலிருந்து ஈழத்தில் இக்காலத்தில் எத்தகைய குடி யேற்றமும் நடை பெற்றதற்கான தொல்லியற் சான்றுகள் காணப்படவில்லை. மாறாக, இக்காலத்தில் ஏற்பட்ட குடி யேற்றங்கள் யாவும் தென்னகத்திலிருந்து ஈழத்தினை நோக்கி ஏற்பட்டதைத் தென்னகம், ஈழம் ஆகிய பகுதிகளிலுள்ள தொல்லியற் சா ன் று க ள் எடுத்தியம்புகின்றன. எவ்வா றாயினும் இக்குடியேற்ற மையப் பிரதேசங்களைத்தான் விஜயன் கதை மட்டுமன்றி யாழ்ப்பாண வைபவமாலையிற் கூறப்படும் விஜயன் கூட்டத்தினர் வந்திறங்கிய கதிரைமலை (கந்தரோடை) பற்றிய குறிப்பும் எடுத்துக் காட்டுகின்றது. கதிரைமலையின் அரசியற் பாரம்பரியம் பற்றி அறிந்திருந்த யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் இதனைத் தாம் வாழ்ந்த காலத்திற் பிரபல்யம் பெற்றிருந்த ஈழத்தின் தென்பகுதியி லுள்ள கதிரைமலையுடன் ( கதிர்காமத்துடன் ) இனங்கண்டு கொண்டது வியப்பன்று. உக்கிரசிங்கன் கதையில் வரும் செங்கடக நகரி பற்றிய குறிப்பும் இத்தகையதே. ஆதலால் இவ்வாறு ஏற்பட்ட தென்னிந்தியக் குடியேற்றங்களை அறியாத தீபவம்ச, மகாவம்ச ஆசிரியர்கள் தமது காலத்திற் காணப் பட்ட ஈழத்து நாகரிக மையப் பிரதேசங்களின் தோற்றத் தினைத் தமக்குப் பரீட்சிதமாக இருந்த ஜாதகக் கதைகளின் சம்பவங்களிலிருந்து இழைத்தனர் எனலாம். இவ்வாறு இழைக் கப்பட்ட விஜயனது கட்டுக் கதையிற்கூட மகாதீர்த்தம் தவிர்ந்த ஈழத்தின் வடபகுதி இடம் பெறாமை இவர்கள் இந்நூல் களை எழுதிய காலமாகிய கி. பி. 6ஆம் நூற்றாண்டில் இப் பகுதி தனியானதொரு அரசியற் போக்கிற் சென்று கொண்டி ருந்ததற்குத் தக்க சான்றாகும்.
ஈழத்தின் ஏனைய பகுதிகளில் நாகரிகத்தின் தோற்றம் விஜயனோடு இணைக்கப்பட்டிருந்ததைக் கண்ட யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர், வட பகுதிக்குரிய நாகரிகத்தின் தோற்றத்தினையும் அவ்வாறு இணைக்க விரும்பினார். இதனாற் கதிரைமலையின் நாகரிகச் சிறப்பினை அறிந்திருந்த யாழ்ப் பாண வைபவமாலை ஆசிரியர் விஜயன் வந்திறங்கிய பகுதி யாகக் கதிரைமலையைக் குறிப்பிட்டுப் பின்னர் அரசோச்சிய
யாழ். - தொன்மை வரலாறு 2 12 )ே

பகுதியாகத் தம்மனாவைக் (தம்பபண்ணியைக்) குறிப்பிட்டார். அத் துட ன் உக்கிரசிங்கனையும் விஜயனது சகோதரனான சுமித்தவின் மகனாகக் கொண்டார். சிங்கள அரசவம்ச வர லாற்றிலும் பாண்டிய இளவரசியை மணந்த விஜயனுக்குச் சந்தானமில்லை. இதனால் அவனது சகோதரன் சுமித்தவின் மகன் வழிவந்த வம்சமே அரசுரிமையைப் பெற்றது. இத்தகைய தொடர்ச்சியை வடபகுதியிற் காணப்பட்ட அரசுக்குக் கொடுக்க விரும்பிய யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர், இவ்வாறு உக்கிரசிங்கனை விஜயனின் சகோதரனின் மகனாக்கினார் போலும். விஜயனுக்கும் உக்கிரசிங்கனுக்குங் கிட்டத்தட்ட 300 ஆண்டுக் கால இடைவெளி காணப்பட்டாலுங்கூட யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் வடபகுதி அரசின் பழைமையையுந் தொடர்ச்சியையும் எடுத்துக் காட்டவே இத்தகைய சம்பவத்தை உக்கிரசிங்கனின் கதையில் இழைத்தார் எனலாம்.
விஜயன் கதையை எவ்வாறு ஒரு கட்டுக்கதை என்று ஏற்றுக் கொண்டு இக்கதை எழுச்சி பெற்ற காலத்திற் காணப்பட்ட குடியேற்றத்தினை இது எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாமோ ፥, அவ்வாறே உக்கிரசிங்கன் கதையையும் அது ஒரு கட்டுக்கதை யாக இருந்தாலுங்கூட, விஜயன் கதையின் காலந்தொட்டு வட பகுதியிற் காணப்பட்ட ஒர் அரசமைப்பினை எடுத்துக்காட்ட எழுந்த கதை எனக் கொள்ளலாம். இதனை வடபகுதியின் நாகரிக வளாச்சியை எடுத்துக்காட்டுந் தொல்லியற் சான்றுகளும் இக்கதைக்குரிய கால இலக்கியச் சான்றுகளும் எடுத்துக் காட்டு கின்றன. வடபகுதியிற் கந்தரோடை ஒர் அரசியல் மையப் பிரதேசமாக விளங்கியதைத் தொல்லியற் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனினும் உக்கிரசிங்கன் காலத்திற் கந்தரோடை யில் மட்டுமன்றிப் பெருநிலப் பரப்பிலும், அவனின் ஆதிக்கம் பரந்திருந்ததை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் வம்சத்தினால் ஆளப்பட்ட வடபகுதி அநுராதபுர மன்னரின் அரசியற்றலையீட்டி னாற் போலுந் தனது அரசுரிமையை இழ ந் த  ைத யாழ்ப்பான வைபவமாலையிற் காணப்படும் டிக்கிரசிங்கனின் கதை எடுத்துக் கூறுகின்ற அதேநேரத்தில் தமிழகம் சென்ற இவன் அதனை மீளப் பெற்றதையும் இது
O 213 வரலாற்றுக் காலம் 11

Page 123
குறிப்பிடுகின்றது. இவ்வாறு வடபகுதியிலே தமிழ் அரசு காணப்பட்டபோது தென் பகுதியை வேற்றரசன் ஆண்டான் என்பதுவும் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இத னையே யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு குறிப்பிடு கின்றது.53
* சாலி வாகன சகாப்தம் 717இல் (கி. பி. 795) விஜய ராசனின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையிலிருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலை முறையாய் இழந்துபோன இவ் விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்துக் கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான். தென்னாடுகளை வேற்றரசன் ஆண்டு வந்தான்."
மேற்கூறிய சம்பவங்களைச் சமகால அநுராதபுர அரசியற் பின்னணியில் நோக்கும் போது இவை இப்பகுதியின் ஓர் அர சமைப்புப் பற்றியும் இவ்வமைப்பிற் காணப்பட்ட மன்னன் அர சுரிமை இழந்தது பற்றியுங் குறிப்பிடுவது துலாம்பரமாகின்றது. இக்காலத்தில் அநுராதபுர அரசர் தமது வாரிசுரிமையை நிலை நாட்டத் தமிழகஞ் சென்று படையுடன் வருவது சர்வ சாதர் ரணம். அநுராதபுர அரசின் வரலாற்றைக் கூறும் பாளி நூல் களில் இத்தகைய சம்பவங்கள் கால அடிப்படையில் நிரைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளன. துர் அதிஷ்டவசமாக இத்தகைய மரபு தமிழ் நூலோர் மத்தியிற் காணப்படவில்லை. இதனால் வடபகுதியிற் காணப்பட்ட அரசு பற்றி நாம் அநுராதபுர அரசர் பற்றி அறிவது போல் அறிய முடியாதுள்ளது. அநுராதபுர அரசில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினைபோல் வடபகுதி அரசிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றாலோ அநுராதபுர மன்னரின் ஆட்சிப் படர்க்கையாலோ , வடபகுதி மன்னன் அரசுரிமையை இழந்து பின்னர் படையுடன் வந்து அதனைப் பெற்றதையே யாழ்ப்பாண வைபவமாலை எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய சம்பவத்திற்கும் அநுராதபுரத்திலாண்ட இரண்டாவது மகிந்தன் காலத்தில் வடபகுதியில் ஏற்பட்ட முதலிகளின் கிளர்ச்சிக்கும்,
யாழ். - தொன்மை வரலாறு 214 O

அவர்கள் அனுராதபுரம்வரை சென்று அதனைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம்.
ஐதீகங்களும் வடபகுதிஅரசும்
உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதைகளிற் கட்டுக்கதை அம்சங்கள் காணப்பட்டாலும் இவை வடபகுதியில் இக்காலத்தில் நிலைத்திருந்த ஒர் அரசமைப்பையே கருவூலமாகக் கொண்டுள் ளன என முதலியார் இராசநாயகமும் ,54 ஞானப்பிரகாசரும்,55 ஏற்றிருப்பது நினைவு கூரற்பாலது. எனினும், உக்கிரசிங்கனைக் கலிங்க வம்சத்துடன் இணைத்து இக்காலந் தொடக்கம் வடபகுதியிற் கலிங்க வம்சம் ஆட்சி செய்தது என்றும் அநுராபுரத்திலாண்ட சிங்கள மன்னர்கள் கலிங்க வம்சத்துடன் கொண்டிருந்த உறவுகள் பற்றியுங் கூறும் சூளவம்சச் செய்தி இந்தியாவிலன்றி ஈழத்தின் வடபகுதியிலரசாட்சி செய்த கலிங்க வம்சத்துடனேதான் என, முதலியார் இராசநாயகங் கற்பித் துள்ளமை இக்கால ஈழ - தமிழக வரலாற்றுப் பின்னணியில் ஏற்புடைய கருத்தாக அமையவில்லை. அநுராபுரத் திணை ஆண்ட சிங்கள வம்சத்தினர் கூட இந்தியாவிலுள்ள கலிங்கநாட் டுடன் இவ்வரசின் பிற்பகுதி தொட்டுப் பொலநறுவை இராச் சியம் வரை இடையிடையே மணத் தொடர்பை மேற்கொண்ட தன் விளைவே பொலநறுவையில் முதலாம் பராச்கிரமபாகுவின் பின்னர் கலிங்க வம்சத்தின் ஆட்சி ஏற்படக் காரணமானது. வடபகுதியிலரசாண்ட தமிழ் வம்சத்தினைத்தான் முதலியார் இராசநாயகம் கலிங்கவம்சம் எனத் தவறுதலாகப் புரிந்துள்ளார்
எனலாம்.
மேலும், முதலியார் இராசநாயகம் கூறுவதுபோல் அநுராத புர அரச வம்சத்துடனோ இந்தியாவிலுள்ள கலிங்க வம்சத் துடனோ இவ் வம்சம் கொண்டிருந்த உறவுகள் பற்றி எத் தகைய சான்றுங் கிடைக்கவில்லை. உக்கிரசிங்கன் விஜயனது சகோதரனின் மகன் எனக் கூறப்பட்டுள்ளமை வெறும் ஐதீகமே. இவ்வாறு கூறப்பட்டதற்கான உண்மையான காரணம் இப் பகுதி, நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலப் பழைமை யான நாகரிக வளர்ச்சியைக் கண்ட பகுதி என்பதை எடுத் துக்காட்டவும் வடபகுதியில் ஆண்ட தமிழ் வம்சத்திற்கு
() 215 வரலாற்றுக் காலம் II

Page 124
ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கற்பிக்கவுமேயாகும். இவ் வாறே உக்கிரசிங்கனைக் குளக்கோட்டனுடன் இணைத்துப் பார்ப்பதும் ஏற்புடையதாக இல்லை. வன்னியரைக் குளக் கோட்டன் அழைத்து வந்த நிகழ்ச்சியைச் சமகால வன்னியரின் வரலாற்றோடு இணைத்துப் பார்க்கும்போது குளக்கோட்டனின் கதை கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதே என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.58 குளக்கோட்டன் திரிகோனா சல புராணத்திற் சோடகங்கன்’ என விளிக்கப்படுவதை ஆதாரமாகக் கொண்டு திருகோணமலையிற் கிடைத்துள்ள கி. பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய வடமொழிக் கல்வெட்டிற் குறிப்பிடப்படும் சோடகங்கனைக் குளக்கோட்ட னாக இனங்கண்டுள்ளனர்.57 இதனாற் கி. பி. 8ஆம் நூற் றாண்டுக்குரிய உக்கிரசிங்கனைக் குளக்கோட்டனாக இனங் காணுவது பொருந்தாது. மாகன் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் பொலநறுவையில் ஆட்சி செய்ததற்கான சான்று கள் காணப்படுவதால் உக்கிரசிங்கனை மாகனுடன் இணைப் பதும் இயலாததாகின்றது.
உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதை ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் காட்டவில்லை எனக் கூறியுள்ள இந்திர t-ffT6)f இதற்கும் விஜயனது கட்டுக்கதைக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்துள்ளமையை மேலே கண்டோம். எனினும், எவ்வாறு இத்தகைய தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது பற்றி அவர் குறிப்பிடுவது ஈண்டு அவதானிக்கத்தக்கது. 58
*யாழ்ப்பாணத்தில் ஆரியச் செல்வாக்குப் பரவுவதற்கு முன்பு வாழ்ந்த மக்கள் வரலாற்றாரம்ப காலத்திலே ஆரிய மயமாக்கப்பட்டுச் சிங்கள மொழி பேசுவோராக வரலாற்றுக் காலத்திலே மாறி இருந்தனர். அதாவது, இலங்கைத் தீவின் பிற பாகங்களில் வாழ்ந்தவர்களைப் போலவே அவர்களும் சிங்களவர்களாக மாறியிருந்தனர். ஆகவே, அவர்கள் மத்தியிலும் விஜயன் கதை வழங்கி வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்தில் தனியரசு தோன்றியிராத காலத்திலே, அதாவது யாழ்ப் பாணம், சிங்கள இராச்சியத்தின் ஒரு பாகமாக இருந்த
யாழ். - தொன்மை வரலாறு 216 ே

காலத்திலே, அங்கு வாழ்ந்த மக்கள் விஜயன் கதையைத் தங்கள் இராச்சியத்தின் ஆரம்பத்தை விளக்கும் ஒரு கதையாகக் கூறிவந்தனர். பின்னர் யாழ்ப்பாணத்திலே தனியரசு தோன்றி, அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் பேசு வோராக மாறிய காலத்திலே புதிய சூழ்நிலைக் கேற்ப விஜயன் கதையும் மாற்றம் அடைந்தது. அது தொடர்ந்து இராச்சியத்தின் ஆரம்பத்தை விளக்கும் கதையாக இருந் தாலும் பழைய சிங்கள இராச்சியம் மறக்கப்பட்டுப் பின்னர் தோன்றிய தமிழ் இராச்சியமே மக்கள் மனதில் நின்றதினால் அக்கதை தமிழ் இராச்சியத்தின் தோற் றத்தை விளக்கும் கதையாகத் திரிபடைந்தது. அதாவது, விஜயன் கதையை வேறோர் இராச்சியத்தின் தோற் றத்தை விளக்கும் கதையாகக் கூறாது புதிய இராச்சியத் தின் தோற்றத்தை விளக்குங் கதையாகத் தம்மை அறி யாமலே அம்மக்கள் மாற்றிக் கொண்டனர். நாடோடி மரபில் இவ்வாறு கதைகள் திரிபடைவது இயல்பாகும். இவ்வாறாக விஜயன் கதை தமிழ் இராச்சியத்தோடு தொடர்புடைய கதையாக மாறியதும், அதிலே வரும் பாத்திரங்கள் தமிழ்நாட்டு வரலாற்றுடனும் தொடர் புடைய பாத்திரங்களாக மாறினர். எனினும், அம்மாற் றத்தைக்கூடத் தமிழ் மூலாதாரங்களிலே படிப்படியா கக் காணலாம், விஜயன் கதையில் வரும் சிங்கம் உக்கிர சிங்கன் என்று திரிபடைந்து, யாழ்ப்பாண வைபவமாலை யிலே சிங்கத்தின் ம க ன ர கி ய சிங்கபாகுவின் வழித் தோன்றல் என, அதாவது உண்மையிலே சிங்கத்தின் வழித் தோன்றல் என மாறி நின்று, பின்னர் வேறு நூல்களிலே சோழநாட்டு இளவரசனாகக்கூட மாறியுள் ளது. வங்கத்து இளவரசியும் கலிங்கத்து இளவரசியாகிச் சோழ இளவரசியாக மாற்றமடைந்துள்ளாள். இப்படியாக ஒரு காலத்தில் முழுச் சிங்கள இராச்சியத்துக்கும் பொது வாக இருந்த ஒரு கதை பிற்பட்ட காலத்தில் அவ்விராச் சியத்தின் ஒரு பாகத்திலே தோன்றிய சுதந்திர இராச்சி யம் ஒன்றுக்குச் சிறப்பாகப் பொருந்தும் கதையாக மாறி யது. இதுவே உக்கிரசிங்கன் கதைக்கு நாம் கொடுக்கக்
O 2 17 வரலாற்றுக் காலம் 11

Page 125
Ji, glu விளக்கம். யாழ்ப்பாண வைபவமாலையிலும் கைலாயமாலையிலும் இக்கதை அரைகுறையாக முடி வடைந்து, யாழ்ப்பாண இராச்சியத்தைத் தாபித்தவன் எனப்படும் யாழ்பாடியின் கதையை அறிமுகப்படுத்துவதற்கு உதவுகின்றது. வையாபாடலிலே இக்கதை வட இலங்கையின் தமிழ்க் குடியேற்றங்கள், வன்னிச் சிற்றரசுகள் ஆகியன வற்றின் ஆரம்பத்தை விளக்குவதற்குப் பயன்பட்டுள்ளது. உக்கிரசிங்கனை மாகன் என்றும் மாகனின் துணைவன் ஜயபாகு என்றும் இனங்கண்டு கொள்ள எடுக்கப்பட்டுள்ள
முயற்சிகள் பலனற்றவையாம்."
இந்திரபாலாவின் கருத்து ஏற்புடைய கருத்தாக அமைய வில்லை என்பதை அண்மைக் காலத் தொல்லியற் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. இத்தகைய சான்றுகள் ஈழத்தில் ஆரியக் குடியேற்றம் நடைபெறவில்லை என்றும், மாறாக ஈழத்தின் ஆதிக்குடிகள் தென்னிந்திய மக்களே என்பதையும் நிரூபித் துள்ளன.59 ஈழத்தில் ஆரிய மயமாக்கம் என்பது பெருமளவிலான மக்களின் புலம்பெயர்வின்றிக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈழத்திற்கு வந்த பெளத்தத்தின் மொழியாகிய பாளியினால் ஈழத்துத் திராவிட மொழிகளிலொன்றாகிய எலு, சிங்களமாகி ஆரிய மொழிச் சாயலைப்பெற்று உருமாறியது என்பதாகும். இவ்வாறு பெளத்தத்துடன் ஏற்பட்ட மொழி கலாசார மாற்றத்தினை ஆரியமயமாக்கம் என்று தவறுத லாக வரலாற்றாசிரியர்கள் குறித்துள்ளனர். *,●
ஈழத்தின் வடபகுதியைப் பொறுத்தமட்டில் வரலாற்றுதய காலத்திலும் வரலாற்றின் ஆரம்ப காலத்திலுந் தமிழ்பேசும் மக்கள் இங்கு காணப்பட்டதைக் கல்வெட்டாதாரங்கள் எடுத்துக் காட்டுவது பற்றி முந்திய அத்தியாயத்திற் குறிப்பிட்டிருந் தோம். இம்மக்களில் ஒரு பகுதியினர் பெளத்தத்தைத் தழுவியதையே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல் வெட்டுகள், வல்லிபுரப் பொற்சாசனம் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்திலும் இத்தகைய நிலையே காணப் பட்டது. தமிழகத்தில் நாயன்மார் ஏற்படுத்திய கலாசார மறுமலர்ச்சி இவர்களை மறுபடியுந் தங்களது பூர்வீக இந்து
யாழ். - தொன்மை வரலாறு 218 ெ

மத நம்பிக்கைகளைத் தழுவ வைத்தது. நாயன்மார்களின் இத்தகைய கலாசார மறுமலர்ச்சியின் தாக்கம் வடபகுதியிலுங் காணப்பட்டதைத் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய தலங்கள் மீது அவர்கள் பாடிய பாடல்கள் எடுத்துக் காட்டு கின்றன. இதனாலே தமிழ் - இந்துக் கலாசாரம் துரித வளர்ச்சி கண்டது. இவ்வாறு பெளத்த செல்வாக்குக்கு உட்பட்ட வடபகுதி மக்களைச் சிங்கள மொழி பேசும் ஆரிய மக்களாக இனங்கண்டு, மறுபடியுந் தமிழ் பேசுவோராக இவர்கள் மாறினர் என்பது தமிழக - ஈழ வரலாற்றுப் பின்னணியில் ஏற்புடைய கருத்தாக அமையவில்லை. உக்கிரசிங்கன் கதையிற் காணப்படும் விஜயன் கதையின் அம்சங்களுக்கு நாம் கொடுக்கும் விளக்கம் யாதெனில், தென் பகுதியோடு தொடர்பு கொண் டிருந்த வடபகுதி மக்கள் விஜயனின் கதையைத் தமது இராச்சியத்தின் பழைமை பற்றி, அதன் தோற்றம், தொடர்ச்சி பற்றி எடுத்துக்காட்டப் பயன்படுத்தினர் என்பதேயாகும். உக்கிரசிங்கன் என்ற பெயரை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட பெயராகக் கொண்டாலுங்கூட, இக்காலத்தில் வடபகுதியில் ஆட்சி செய்த மன்னன் பற்றியும், அவன் வம்சத்தின் பழைமை, தொடர்ச்சி ஆகியன பற்றியும் உள்ள வரலாற்றுக் கருவூலத்தினை ஒரு ஐதீகமாக இது எடுத்துக் காட்டுகின்றது என்று துணியலாம். சிலசமயம் தமிழக அரசவம்சத்தில் ஒருவனாகவும் இவன் காணப்பட்டிருக்கலாம். அல்லது இம்மன்னன் தமிழகத்து அரச வம்சப் பெண்ணை மணந்த நிகழ்ச்சியே இவ்விதம் உக்கிர சிங்கன் - மாருதப்புரவீகவல்லி பற்றிய திருமண நிகழ்ச்சியாகவும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கலாம். ஈழத்து இக்கால வரலாற்றுப் பின்னணியில் அரசுரிமை இழந்த அரசர்கள் தமிழ்நாடு சென்று படையுடன் திரும்பி வந்து ஆட்சியைப் பெறுதல், இந்திய வம்சங்களுடன் திருமணத் தொடர்பினை ஏற்படுத்துதல் அசாதாரண நிகழ்ச்சிகள் அல்ல. ஆதலால் இந்திரபாலா கூறுவதுபோல் வட பகுதியில் வரலாற்றின் ஆரம்ப காலத்திற் சிங்கள மக்கள் வாழ்ந்தனர் என்றோ இவர்கள்தான் தமிழ் இராச்சியத்தின் தோற்றத்தோடு தமிழர்களாக மாறியதால் முழுச் சிங்கள இராச்சியத்தின் தோற்றத்தை விளக்க வந்த விஜயன் கதை நாட்டின் ஒரு பகுதியிற் காணப்பட்ட இராச்சியத்
O 219 வரலாற்றுக் காலம் II

Page 126
தின் தோற்றத்தினை விளக்கப் பயன்படுத்தப்பட்டது என்று கூறுவதற்கோ ஆதாரம் இல்லை. பதிலாக வடபகுதியில் நிலைத் திருந்த அரசு பற்றிய ஐதீகங்களை வளர்த்தெடுக்க இக் கதை பயன்படுத்தப்பட்டது என்று கூறுவதே மிகப் பொருத்த மான கருத்தாகும். வடபகுதியில் மட்டுமன்றி ஈழத்தின் கிழக்குப் பகுதியிலும் நிலைத்திருந்த தமிழ் வம்சங்களை எடுத்துக் காட்டும் ஐதீகமாக இது வளர்ந்ததைத் திரிகோணாசல புராணம், மட்டக்களப்பு மான்மியம் ஆகியனவற்றுள் இடம் பெற்றுள்ள ஆடகசவுந்தரி பற்றிய ஐதீகம் உறுதி செய்கின்றது.
யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் உக்கிரசிங்கன் கதை இக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் ஆட்சி பரந்த நிகழ்ச் சியை எடுத்துக் காட்டுகின்றது போலத் தெரிகின்றது. இப்பகுதி யில் இதன் அரசியல் ஆதிக்கம் பரவிய நிகழ்ச்சியைத் தலைநகர் மாற்றமென்று இந்நூல் கூறுகின்றது போலத் தெரிகின்றது இதனையே யாழ்ப்பாண வைபவமாலை,60
" இது நிற்க, கதிரைமலையிலிருந்த உக்கிர சிங்கராசன் சில காலத்தின் பின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டுவருங் காலத்தில் . . . "' எனக் குறிக்கின்றது.
யாழ்ப்பாண வைபவமாலையிற் குறிப்பிடப்படுஞ் செங்கடக நகர் பற்றி இதனைப் பதிப்பித்த முதலியார் சபாநாதன் ஒரு விளக்கத்தினைக் தந்துள்ளமை அவதானிக்கத் தக்கது. இந்நூல் எழுந்த காலத்திற் கண்டி அரசின் தலைநகராகச் செங்கடக நகர் காணப்பட்டதால் இப்பெயரை வடபகுதியின் தலைநகருக் கும் இந்நூலின் ஆசிரியர் தவறுதலாக இட்டுள்ளார் என்று சபா நாதன் கூறுகின்றார். 81 இதனாற் சிங்கைநகர்தான் இவ்வாறு செங்கடகநகர் என்று இந்நூலில் இடம்பெற்றுள்ளது என்பது இவரின் விளக்கமாகும். யாழ்ப்பாண வைபவமாலையில் இத் தகைய மயக்கங்கள் பிற இடங்களிலும் உண்டு. வடபகுதிக் கதிரை மலையைத் தென்பகுதிக் கதிரைமலையோடு இனங் கண்டு கோண்ட மையும் யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியருக்
கிருந்த மயக்கங்களில் ஒன்றாகும். இதனால் வடபகுதியின்
யாழ். - தொன்மை வரலாறு 220 இ9

இன்னொரு தலைநகருக்கும் இந்நூலாசிரியர் தான் வாழ்ந்த காலத்திற் காணப்பட்ட யாழ்ப்பாண அரசின் தலைநகரான சிங்கைநகரின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றுங் கொள்ளலாம். இத்தகைய தலைநகர் வல்லிபுரப் பகுதயின் கடற்கரைப் பகுதியிற் காணப்பட்டிருக்கலாம். காரணம் யாழ்ப் பாணக் குடாநாட்டிற் கந்தரோடைக்கு அடுத்ததாகத் தொல் வியற் சான்றுகள் அதிகங் காணப்படும் பகுதி இல் தாகவே காணப்படுகின்றது. பின்னர் நல்லுரர் սյուbւնւյn 6507 、架功ró行 காலத்தில் இராசதானியாக எழுச்சி பெற்ற காலத்திற் பழைய தலைநகரான சிங்கை நகரின் ஞாபகமாக இப்பெயர் நல்லுT ரோடு இணைக்கப்பட்டுமிருக்கலாம். அல்லது பெருநிலப் பரப்பிலும் இப்பெயர் காணப்பட்டிருக்கலாம். குறிப்பாகப் பூநகரிப் பகுதியில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆய்வுகளும் இவ்வாறு யூகிக்க வைக்கின்றது. அப் படியாயின் உக்கிரசிங்கன் காலத்திற் பெருநிலப்பரப்பிலும் அரசாட்சிபீடம் வளர்ச்சியடைந்திருந்தது என்று துணியலாம். இதனையே யாழ்ப்பாண வைபவமாலை செங்கடகநகரி எனக் குறிப்பிட, வையாபாடல் இதனை "வாவெட்டி’ என அழைக், கின்றது. இவை இரண்டும் யாழ்ப்பாண அரசு காலத்தில் வழக்கிலிருந்த நகரங்கள் என்பதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.
இக்காலத்திற் பெருநிலப்பரப்பு அங்குள்ள விவசாய வாய்ப்பு களாலும், மாந்தை போன்ற வர்த்தகத் துறைமுகங்களின் சிறப் பாலும் முன்னிலை பெற்றிருந்தது. வணிகத்திற்கான கேந்திர ஸ்தானத்திற் பெருநிலப்பரப்பு அமைந்திருந்ததால் இக்காலத்தில் இடம்பெற்ற சீன, அராபிய வணிகத் தொடர்புகளும், பல்லவ பாண்டியப் பிரதேசங்களுடன் இது கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளும் இதனை முன்னிலைக்கு இட்டுச் சென்றிருக்க லாம். மாந்தைக் துறைமுகத்தின் சிறப்பினை நாயன்மார்க ளான ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல்களும், இங்கு கண்டெடுக்கப்பட்ட சீன, அராபிய மட்பாண்டங்களும், பல்லவ, பாண்டிய நாணயங்களும் எடுத்துக் காட்டுகின்றன. இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
C 221 வரலாற்றுக் காலம் 11

Page 127
வடபகுதியிலிருந்த அரசவாதிக்கம் உக்கிரசிங்கனின் காலத் திற் பெருநிலப் பரப்பை நோக்கிப் பரந்ததை வையாபாடலில் வரும் பாடலொன்று பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது.*
"பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற்
போயரன் மகவினை வணங்கிப்
பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருந்தன ளதற்பின்
மன்னவ னடங்காப் பற்றினி லேகி
மாநகர் வாவெட்டி மலையிற்
றன்ணிக ரற்ற மண்டப மியற்றித்
தன்னர சியற்றின னிருந்தான்."
யாழ்ப்பாணமும் யாழ்பாடியும் W
அரசவாதிக்கத்தின் மையம் பெருநிலப்பரப்பிற் பரந்திருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மாவட்டத் தளபதி யாக அல்லது சிற்றரசனாக விளங்கிய ஒருவனின் கதையையே யாழ்பாடியின் கதையும் எடுத்துக் காட்டுகின்றது போலத் தெரிகின்றது. இதே போன்ற ஒரு சம்பவத்தினை நாம் வசட னது வல்லிபுரப் பொற்சாசனத்திலுங் காண்கின்றோம். இங்கே வசப மகாராசன் காலத்தில் நாகதீபத்தினை ஆண்ட அவனது அமைச்சன் பற்றிக் கண்டோம். நாகதீபம் என்ற வழக்கு இக்காலத்திற் குடாநாட்டிற்கு மட்டும் உரியதாகக் குறுகிக் காணப்பட்டது போலத் தெரிகின்றது. இவ்வாறே இக்காலத் தில் இக்குடாநாட்டுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயரும் மணற்றி ஆகும்.
தென்னிந்தியாவிலிருந்து இக்காலத்திற் படைகளுடன் மக்* ளது குடியேற்றங்களும் ஈழத்தினை வந்தடைந்ததைச் சிங்கள நூல்களுங் கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டுகின்றன. இத் தகையதோர் குடியேற்றத்தைப் பற்றிய கருவூலத்தையே கி. பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய யாழ்பாடி கதையிலுங் காண்கின் றோம் என்றால் மிகையாகாது. யாழ்ப்பாண வைபவமாலை இது பற்றிக் கூறுவதை முதலில் நோக்குவாம்.38
யாழ். - தொன்மை வரலாறு 222 இ

"அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவிவீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரியிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்க மகாராசன் பேரிற் பிரபந்தம் பாடிக் கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மகா சந்தோஷமாய் அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள ‘மணற்றிடல்' என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு இவ்விடத்தில் வந்திருந்து வடதிசையிற் ஓல தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றி இவ் விடமிருந்த சிங்களவர்களையும், அவர்களையும் ஆண்டு முதிர்வயதுள்ளவனாய் இருந்து இறந்து போனான். அக்காலத்திலே சிங்களவரும், பிறரும் இந்நாட்டை அர சாளக் கருதித் தமிழ்க் குடிகளையொடுக்கியதால் தமிழ்க் குடிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய் விட்டார்கள்."
யாழ்பாடி கதை வையாபாடலில் இன்னொரு வடிவத் தில் அமைந்துள்ளதோடு இவனின் காலங் கலிமூவாயிரம் வருடம் (கி. மு. 101) எனவும் இதிற் கூறப்பட்டுள்ளது. இந் நூலில் விபீஷணனின் அவையில் யாழை வாசிப்பவனாகிய யாழ்பாடி வடகரையிலே தனக்குக் கிடைத்த மணற்றியை ஆள்வதற்குத் தசரதனின் மைத்துனனான குலகேது என்பவ னது மகன் கோளுறுகரத்துக் குரிசிலை (கூழங்கைச் சக்கர வர்த்தியை) அழைத்து வந்து பட்டஞ் சூட்டி இவ்விடத்திற்கு "யாழ்ப்பாணம்" எனப் பெயரிட்ட செய்தி பின்வருமாறு உரைக்கப்படுகின்றது. 64
அன்னது நிற்க விபீஷணன் றன்மு
னரியயாழ் வாசினை புரிவோன் மின்னுள விலங்கை வடகடற் கரையில்
மேவிய மணற்றிடற் காட்டில் தன்னிகர் பிறிதொன் றிலாதநல் வருக்கை
தாலிளம் பூகமாத் தேங்கு கன்னலென் றுரைக்கும் பயிரினை யியற்றிக்
கற்பக தாருவென் றிசைத் தான்.
O 223 வரலாற்றுக் காலம் 11

Page 128
கற்பக தருவுங் காமர்மண் டபமுங்
காசினி தனிற்புரிந் ததற்பின் தற்பரன் றன்னை நினைத்துசென் றருளித்
தசரதன் மைத்துன னான விற்கரக் குலக்கே திவனென வுரைக்கும்
வீரனை வணங்கியான் புரிந்த நற்புவி தனக்கு நாயகம் புரிய
நாதனே வேண்டுமென் றுரைத்தான்.
யாழிசை பயில்வோ னிசைத்தசொற் கேட்டங்
கிதமுறுந் தனதுமைந் தர்களிற் கோளுறு கரத்துக் குரிசிலை யளிப்பக் கொற்றவன் சக்கர பதியென் றேழ்பெரும் புவியி னிலங்கையாழ்ப் பாண
மிருந்தர சியற்றின னந்நாள் நாளுறு கலிமூ வாயிர வருடம்
நாடர சளித்தவ னிருந்தான்.
வையாபாடலில் மேற்கூறிய செய்தியைத் தொடர்ந்தே உக்கிரசிங்கன் (உக்கிரசேனசிங்கன் ), மாருதப்பிரவை *ஆகியோ ரின் கதைகள் இடம் பெற்றுள்ளன. யாழ்பாடி இவ்வாறு அழைத்து வந்த குலகேதுவின் மைந்தர்களில் ஒருவனான கோளுறுகரத்துக் குரிசில் (கூழங்கைச் சக்கரவர்த்தி) அயோத்தி மன்னன் தசரதனின் மைத்துனன் எனக் கூறப்படுகின்றான். வையாவில் மாருதப்பிரவீகவல்லியின் தந்தை திசையுக்கிர சோழன் என அழைக்கப்படுவதோடு இவன் கூழங்கைச் சக்கர வர்த்தியின் மாமன் எனவும் விளிக்கப்பட்டுள்ளான். அத்துடன் யாழ்ப்பாண வைபவமாலையில் நல்லூரில் ஆட்சி செய்யப் பாண்டி மழவனால் அழைத்து வரப்பட்ட பாண்டி நாட்டு ஆரியச் சக்கரவர்த்திகளின் மு த ல் வன ரா ன சிங்கையாரியன் (கூழங்கைச் சக்கர வர்த்தி) மாருதப்பிரவையின் சகோதரனான சிங்ககேதுவின் மருமகன் என அழைக்கப்பட்டுள்ளான். இவ் வாறு தக்க வரலாற்றியல் தெளிவின்றி வெவ்வேறு கால வம்சங்களை ஐதீகங்களாக ஒன்றாக இணைத்துக் கூறும் மயக்கத்திற்கான காரணம் வடபகுதியிற் காலவரன் முறையில் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்தும் மரபு காணப்
யாழ் - தொன்மை வரலாறு 224 O

படாததே எனலாம். வடபகுதியில் ஆட்சிசெய்த வம்சங்கள் பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்நூலோர் இவற்றின் பழைமையை யும் இந்தியத் தொடர்பையும் எடுத்துக் காட்டவே இத் தகைய சம்பவங்களை ஒன்றாக இணைத்து மிருக்கலாம்.
வையாபாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் காலத்தால் முந்திய கைலாயமாலையிலும் யாழ்பாடி கதை இடம் பெற்றுள்ளது. இவ்யாழ்பாடி அப்போது அரசனாக இருந்த உக்கிரசிங்கனின் (வாலசிங்கனின்) மகனாகிய நரசிங்க ராசனைப் பாடியே யாழ்ப்பாணத்தைப் பரிசிலாகப் பெற்று இதனை ஆட்சி செய்து இறந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள் ளது. எனினும் வையா பாடலிற் குறிப்பிட்ட வண்ணம் இந் நூலிலே தசரதன் வழித் தோன்றலாகிய குலகேதுவின் மகனை அழைத்து வந்து இங்கு அரசனாக்கியமை எடுத்துக் கூறப்படாமை அவதானிக்கத்தக்கது. யாழ்பாடியின் ஆட்சி பற்றிக் கைலாயமாலை பின்வருமாறு உரைக்கின்றது.*
* பாவலர்கள் வேந்தன் பகரு மியாழ்ப்பாணன்
காவலன்றன் மீது கவிதைசொல்லி - நாவலர் முன் ஆன கவி யாழி ணமைவுறவா சித்திடலும் மானபரன் சிந்தை மகிழ்வாகிச் - சோனைக் கருமுகி னேருங் கரன் பரிசிலாக வருநகர மொன்றை வழங்கத் - தருநகர மன்றுமுதல் யாழ்ப்பாண மானபெரும் பெயராய் நின்ற பதியி னெடுங்காலம் - வென்றிப் புவிராசன் போலப் புகழினுட னாண்ட கவிராசன் காலங் கழிய .
யாழ்பாடியின் ஆட்சியின் முடிவில் இப்பகுதி அரச னின்றித் தளம்பியதையும் இந்நூல் எடுத்துக்காட்டியுள்ளது. இக்கூற்றினை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதி செய் கின்றது.
இக்கதையின் வரலாற்று முக்கியத்துவத்தினை ஆராய்ந்த இந்திர பாலா இக்கதை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பின்னர் வாழ்ந்த குருட்டுப் புலவராகிய அந்தகக்கவி வீரராகவ
() 225 வரலாற்றுக் காலம் 11

Page 129
ரைப் பற்றிய கதையை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் என்னும் இடப்பெயரை விளக்க எழுந்த நாடோடிக் கதை என்ற ஞானப்பிரகாசரின் கருத்தை இரற்றுள்ளார்.68 அந்தகக் கவிவீர ராகவர் கி. பி. பதினாறாம் அல்லது பதினேழாம் நூற்றாண டிலே வாழ்ந்தவரென்று கூறும் இந்திரபாலா இவர் யாழ்ப் பாணத்தை ஆண்ட கடைசி ரன்னர்களுள் ஒருவராகிய பரராச சேகரனிடம் பரிசில் பெற்றவர் எனவும் எடுத்துக்காட்டியுள்ளார். யாழ்பாடி கதையில் இது பிற் சேர்க்கைபே என்பதனை வலி யுறுத்த மேலும் ஓர் உதாரணத்தினையும் இவர் தந்துள்ளார். அஃதாவது யாழ்ப்பாண வபவமாலைக்கு முற்பட்ட நூலாகிய கைலாயமாலையிலே யாழ்பாடியின் பெயர் வீரராகவன் என்றோ அவன் ஒரு குருடன் என்றோ குறிப்பிடப்படவில்லை. இதனாற் கைலாயமாலையின் கூற்றையே வையாபாடலும் அங்கீரிகப்பது அவதானிக்கத்தக்*து என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்திரபாலா இக்கதை ஒரு கட்டுக்கதை என்றும் இதனைக் கி. பி. 9ஆம் நாற்றாண்டில் யாழ்ப்பாணத்திலே தனியரசு ஒன்று பைட்டமைக்குச் சான்றாகக் கூற முடியா துள்ளது என்றும், இதில் எவ்வித வரலாற்றுண்மையும் இல்லை எனவுங் கூறி முடித்துள்ளார் மேலும் அவர் யாழ்ப்பாணம் என்ற இடப்பெயரின் டிளக்கமாக எழுந்த இக்கதையின் தோற் றத்தினை இச்சொல்லின் தோற்றத்தினைக் கொண்டு நிர்ணயிக்க முற்பட்டுள்ளார். இதற்கான சான்றாதாரங்களையும் பின்வரு மாறு நி ைரப்படுத்தியுள்ளார். அஃதாவது,87
இவ்வாறு இதுவரை நமக்குக் கிடிைத்துள்ள பழைய ஆதாரங்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து கி. பி. 1435இல் பொறிக்கப்பட்ட சனத்திலே வரும் இ ஆழ்ப்பானா யந் பட்டினம் என்னும் வடிவமே எமக்குக் கிடைக்கும் மிகமுற்பட்ட வடிவமாகின்றது. பல எழுத்துப் பிழைகள் நிரம்பிய இச்சாசனத்தி?ே (உதாரணமாக ஈழம் என்பது இழம் என எழுதப்பட்டுள்ளது) இவ்வாறு எழுதப்பட்டுள்ள பெயரை யாழ்ப்பானாயன் பட்டினம் அல்லது யாழ்ப் பாணாயன் பட்டினம் எனத் திருத்தி அ  ைமக்க இட முண்டு. அப்படியெனின் அருணகிரிநாதருடைய பாட லிலே வரும் பெயராகிய யாழ்ப்பாணாயன் பட்டினம்
ாழ்.- தொன்மை வரலாறு 226 ()

என்பது ஒரு பழைய வடிவமாக இருக்கலாம். கி. பி. 1450 அளவில் எழுதப்பட்ட சிங்கள நூல்களில் வரும் யாபா - பட்டுன என்பதும் ஒரு பழைய வடிவமாகும். இகன் ஈற்றுப் பாகமாகிய பட்டுன என்பதும் பட்டினம் என்பதும் ஒருபொருட் சொற்கள். ஆகவே, யாழ்ப் பானாயன் என்பதும் uurrrrr Gresó Lugh ஒன்றென்று கூறலாம். யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு பெறப் பட்டது என்பதை அறிய இவ்விரு பெயர்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. இவை இரண்டும் பதினைந்தாம் நூற்றாண்டு வடிவங்கள். பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழ் வடிவம் மாற்றமடைந்திருந்தா லும், அது மறக்கப்படவில்லை என்பது போர்த்துகீச ஆதாரத்தினால் தெரிய வருகின்றது. மேலே கூறியது G3urt Go, Jafana - en - Putalam (gọn LuíT GO T - 67 Gör - Lg5 GM7 Lb) என்பதே திரிபடை யாத பழைய வடிவம் எனக் கேய்றோஸ் பாதிரியார் அறியுமளவுக்கு இக்கருத்துப் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவியிருக்க வேண்டும். 'ஜாபானா - என்" என்பது “யாழ்ப்பாணாயன்" என்பதை நெருங்கிய முறையிலே ஒத்திருப்பதோடு, அதன் பொருள் 'ஜாபானாவின் தலைவன்’ (நாயன்) எனவும் கேய்றோஸ் கூறுவதால், "ஜாபானா - என்" என அவர் குறிப்பிடுவது *யாழ்ப்பாணாயன்' என்பதன் போர்த்துக்கீச வடிவமே என்று கொள்ளலாம். இவ்வாறு பார்க்குமிடத்து யாழ்ப் பாணாயன், பட்டினம் என்ற பெயரே பின்னர் யாழ்ப் பாண பட்டினம், யாட்பாண பட்டினம் என்றெல்லாம் திரிந்து இறுதியில் யாழ்ப்பாணம் என்று அமைந்துள்ளது எனக் கூறலாம். ஆயினும், யாழ்ப்பாணாயன் பட்டினம் வேறொரு வடிவத்தின் திரிபா, அதன் பொருள் என்ன என்ற வினாக்களுக்குத் தற்போது விடையளிக்கச் சான்று கிடைக்கவில்லை. ஆகவே, யாழ்ப்பாணம் என்பது எவ் வாறு பெறப்பட்டது என்பதை எமக்குக் கிடைத்துள்ள பழைய வடிவங்களைக் கொண்டு கூறமுடியாது. யாழ்ப் பாணாயன் என்பவன் யார் என்பதைக் கண்டு கொள்வது கஷ்டம். எனினும், அதனை விளக்குவதற்காக யாழ் பாடியின் கதை உருவாக்கப்பட்டது என்று கூற இடமுண்டு.?
O 227 வரலாற்றுக் காலம் II

Page 130
யாழ்பாடி கதை ஒரு புனைகதை என்றும், ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்டகால வரலாறு தமிழ் வரலாற்று மரபுகளில் இடம்பெறவில்லை என்றுங் கூறும் பத்மநாதன் யாழ்ப்பாணம் என்ற சொல்லின் தோற்றத்தினை விளக்க வந்த இப்பெயர் பற்றிப் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார். 68
*யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது என்பதை வரலாற்றடிப்படையிலே விளக்கிக் கொள்வதற் குத் தக்க சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. சிங்கள மன்னர் ஆண்ட காலத்தில் “யாப்பா" என்ற பட்டமுடைய இளவரசன் இருந்து ஆண்டதால் இப்பெயர் வழக்கில் வந்திருக்க வேண்டுமென்று சிலர் கருதுவர். எனினும் அநுராதபுர காலத்திலோ பொலநறுவைக் காலத்திலோ யாப்பா என வழங்கிய எந்தவொரு இளவரசனும் யாழ்ப் பாணத்திலிருந்து அரசு செலுத்தினான் என்று கொள்வதற்கு எந்தவிதமான சான்றுகளுமில்லை. பதினாலாம் நூற்றாண் டின் முடிவில் எழுதப்பெற்ற நிகாய சங்கிரசுயவெனும் நூலே யாப்பாட்டுன" என்ற நகரைக் குறிப்பிடும் முதல் நூல். அதன்பின் எழுதப்பெற்ற சிங்கள நூல்கள் யாவும் ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகரை யாப்பாபட்டுன" என்றே குறிப்பிடுகின்றன. லக்கண்ண தண்ட நாயக்க னென்ற - மதுரையிலிருந்து தமிழ்நாட்டை ஆட்சி புரிந்தவிசய நகர இளவரசரின் திருமாணிக்குழிக் கல்வெட்டிலே (கி. பி. 1432) யாழ்ப்பாணாயன் பட்டினம், ஈழம் என முறையே யாழ்ப்பாணமும் கோட்டையும் குறிப்பிடப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தைக் குறிக்கும் தமிழ் ஆவணங் களுள் இதுவே காலத்தால் மிக முந்தியது. பதினைந்தாம் நூற்றாண்டின் நடுவில் யாழ்ப்பா டி கதை வழக்கிலிருந்த தென்பதற்கு இச்சாசனம் தரும் தகவலைச் சான்றாகவுங் கொள்ளலாம். பாழ்ப்பாணாயனின் பட்டினம் என்ற தனாலேயே யாழ்ப்பாணாயன் பட்டினம் என்ற ப்ெயர் தோன்றியிருக்கக் கூடும். பதினேழாம் நுற்றாண்டிலே ஈழ வரலாறு பற்றி எழுதிய குவேறோஸ் சுவாமியாரும் யாழ்ப்
யாழ். - தொன்மை வரலாறு 228 இ

பாணன் பற்றிய கதையை அறிந்திருந்தார். யாழ்ப்பாணனின் பட்டினம் சான்றதனால் யாழ்ப்பாணப் பட்டினம் என அந்நகரைக் குறிப்பிடுகின்றனர் என அவர் சொல்வது கவனித்தற் பாலது."
சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணம் " என்ற GoF nr 6āv சிங்கள வடிவமாகிய யாபநே என்பதிலிருந்து பிறந்ததே என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். 69
* இதனால் யாழ்ப்பாணப் பெயர் யாப்பா - நெ எனும் சிங்களப் பெயரீட்டினின்று உண்டானதென்பர் ஆராய்ச்சி வல்லோர். இதுவே எம்மதமுமாம். யாப்பா ( யகபத் ) எனும் சொற்பகுதி * நல்ல ' எனும் பொருளுள்ள ஒர் மொழியாம். " நெ " என்னும் பகுதி 8 ஜஹர் " 67 GOTI பொருள்படும். ஆகவே யாப்பா - நெ - நல்லூர் எனும் தமிழ்ப் பெயருக்குச் சரியான சிங்களமாம். ( இது பூரீ ஏ. எம். குணசேகர முதலியார் முதற் சண் எடுத்துக் காட்டியது. இடப்பெயர் வரலாறு 130-ம் பக். ) எனவே யாப்பா - நெ, யாப்ப - பட்டுண என்பவையிரண்டும் நல் இார் நல்லூர்ப் பட்டணம் எனுந் தமிழ்ப் பெயர்
களையே காட்டி நிற்கும் . . .
தமிழ்ச் சொல்லாகிய யாழ்ப்பாணம் சிங்களச் சொல்லாகிய * யாப்பா பட்டுன என்பதன் மருவுதலே என்பது பரணவித் தானாவின் கருத்தாகும்.70 யாபாவின் பட்டினம் என்பதே இதன் பொருள் எனக் கூறும் இவர், உயர்ந்த பதவி வகித் தோனை அல்லது அரச வம்சத்தோனைக் குறிக்கும் "ஆபா " என்பதன் வழி வந்ததே இது என்றும் கூறுகின்றார். இதன் சமஸ்கிருத வடிவம் * ஆர்யபாட ஆகும். எனினுந் தமது இத்தகைய கருத்துக்கு ஆதாரமாக அநுராதபுர அல்லது பொலநறுவைக்கால ஆவணங்களிற் காணப்படுஞ் சான்றுகளை நிரைப்படுத்த முடியாத இவர், இப்பகுதியில் மலாயா தேசத்தி லிருந்து வந்த சாவகரின் ஆட்சி (கி. மு. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) ஏற்பட்டபோதே இச்சொல் வழக்கில் வந்தது எ ன் ன்றார். இதனாற் * சாவ " என்பது தான் " யாவ என உருமாறி * யாவக பட்டுன ஆனது என்றும் பின்னர்
() 229 வரலாற்றுக் காலம் 11

Page 131
யாப்பாபட்டுன எனச் சிங்களத்தில் வழக்கில் வந்தது என்பதும் இவரது வாதமாகும். இதன் தமிழ் வடிவமே யாழ்ப்பாணம் என உருமாற இதனை விளக்க யாழ்பாடி கதை சிருஷ்டிக்க்ப் பட்டதென்று இவர் கூறுகின்றார். இதனால் இப்பகுதியிற் சாவக னாட்சி, சிங்களர் ஆட்சி, தமிழர் ஆட்சி என்பன வரன் முறையிற் காணப்பட்டன என இவர் கூறுங் கருத்து ஏற்புடைய தாகக் காணப்படவில்லை. காரணஞ் சாவகனாட்சிக்கு முன்னர் மட்டுமன்றிச் சிங்களவரின் மேலாட்சிக்கு முன்புந் தமிழராட்சி இங்கே காணப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதனால் பரணவித்தானாவின் கருத்து ஏற்புடையதாக அமையவில்லை. இதனால் இந்திரபாலா" கூறுவதுபோல "யாழ்ப்பாணம்’ என்ற சொல்லைச் சிங்களச் சொல்லின் மருவுதல் எனக் கொள்ள முடியாததால் இச்சொல்லின் தோற்றம் பற்றி அறிவதற்குப் பிற சான்றுகளை நாடுவது அவசியமாகின்றது.
ஈழத்து வரலாற்றின் ஆரம்ப காலப் பகுதிய்ை நோக்கும் போது தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் வேள், ஆய், பரதர் போன்ற பல இனக் குழுக்கள் காணப்பட்டதை அறிய முடிகின்றது. இத்தகைய குழுக்களிற் ' பாணர் " எனப்பட்ட வகுப்பினருங் காணப்பட்டிருந்த்னர் என்பதையே யாழ்ப்பாணம் என்ற பதம் எடுத்துக் காட்டுகின்றது. இப்பாணர் பற்றி வித்தியானந்தன் பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத் தக்கது.72
* "பாணர், பொருநர், கூத்தர், வயிரியர், கோடியர், விறலியர் எனப் பல்வகை இசைவாணர் சங்க காலத்தில் இருந்தனர். "பாணன், பறையன், துடியன், கடம்பன் என்றிந் நான்கல்லது குடியுமில்லை" என்று புறநானூறு கூறும். இதிலிருந்து பழந்தமிழ்க் குடியினருள் தலை சிறந்து விளங்கியவர் பாண் மரபினரே என்பது புலப்படும். பாணர் என்பதற்கு இசை பாடுவோர் அல்லது பண் பாடுவோர் என்பது பொரு ளாகும். பாணரில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், ம்ண்டைப் பாணர் எனப் பல பிரிவினர் இருந்தனர். அவருள் யாழ்ப்பாணர் சிறுபாணர், பெரும்பாணர் என இருவகைப்
படுவர். இவர்கள் சிறிய யாழையும் பெரிய யாழையும்
யாழ். - தொன்மை வரலாறு 230 கு

உடைமையால் இப்பெயர் பெற்றனர். பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப்படை சிறுபாணரை ஆற்றுப்படுத்திய தாகவும், பெரும்பாணாற்றுப்படை பெரும்பாணரை ஆற்றுப் படுத்தியதாகவும் இயற்றப்பட்டன.
வித்தியானந்தன் சங்ககாலத்தில் வழக்கிலிருந்த பல்வகை யாழ்க்கருவிகள் பற்றியுங் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நினைவு கூரற்பாலது. இதனால் யாழ் வாசிப்பதிலே தேர்ச்சி பெற்றோர் இப்பகுதியிற் காணப்பட்டதாற் சங்ககாலந் தொடக்கம் சிறப்பாக யாழ்ப்பாணர் வாழ்ந்த gLLDfTé, இருந்ததால் யாழ்ப்பாணம் ( யாழ் + பாணர் + அகம் ) என வழங்கப்பட் டிருக்கலாம். இதனால் யாழ்ப்பாணத்தை ஞானப்பிரகாசர் கூறுவது போற் சிங்கள வடிவமாகிய யாப்பா - நெ என்ற வடிவத்திலிருந்து பிறந்தது எனக் கொள்ளமுடியாது. இசைக் கருவியாகிய யாழிலே தேர்ச்சி பெற்றோர் சங்க காலத்திற்குப் பின்னருங் குறிப்பாகப் பல்லவர்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தனர் என்பதனை நால்வரின் முன்வரிசையில் இடம்பெறும் திருஞான சம்பந்தரின் தேவாரத்திற் " பாணர் " பற்றிக் காணப்படுஞ் செய்தி மேலும் உறுதி செய்கின்றது. திருஞானசம்பந்தர் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவர் தமது தேவாரங் களிலும் பாணர் என்று குறிப்பது திருநீலகண்ட யாழ்ப்பாண ரையே என இனங் காணப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் திருக்கோயில்களைச் சென்று தரிசித்தபோதெல்லாம் அவருக்கு இவரே யாழ் வாசித்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் இவரது தேவாரத்திற் காணப்படும் பானர் " பற்றிய குறிப்புத் திருநீலகண்ட யாழ்ப்பாணரையே குறிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. இதற்கு மேற்கோளாக ஒரு சில பாடல்
களைக் கூறலாம்.73
*நாணமுடை வேதியணு நாரணனு நண்ணவொணாத்
தாணுவெனை யாளுடையான் றன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணவிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.”*
O 23 வரலாற்றுக் காலம் 11

Page 132
நக்க மேகுவர் நாடுமோ ரூருமே
நாதன் மேனியின் மாசுண மூருமே தக்க் பூமனைச் சுற்றக் கருளொடே
தார முய்த்தது பாணற் கருளொடே மிக்க தென்னவன் றேவிக் கணியையே
மெல்ல நல்கிய தொண்டர்க் கணியையே அக்கி னாரமு துண்கல னோடுமே
யால வாயர னாருமை யொ டுமே
திருஞானசம்பந்தருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழினை வாசித்த செய்தி நாயன்மார்களின் வரலாற்றினைக் கூறும் பெரிய புராணத்திலிடம் பெற்றுள்ளமையைப் பின்வரும்
பாடல் குறிக்கின்றது.74
இன்னிசைபாடின வெல்லாம்யாழ்ப் பெரும்பாணனார் தாமும் மன்னுமிசை வடிவான மதங்க சூளாமணியாரும் பன்னியவேழிசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் பொன்னின் றிருத்தாளம் பெற்றார்புகலியிற் போற்றிருந்தார்
இவ்வாறே இந்நூலிலே திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றிப் பன்னிரண்டு பாடல்கள் உள. அவற்றுள் ஒன்று பின்வருமாறு
அமைந்துள்ளது.75
ஞான முண்டார் கேட்டருளி
நல்ல விசையாழ்ப் பெரும்பாணர்க் கான படியாற் சிறப்பருளி
யமரு நாளி லவர்பாடும் மேன்மைப் பதிகத் திசையாழி
லிடப்பெற் றுடனே மேவியபின் பானற் களத்தார் பெருமணத்தி
லுடனே பரமர் தாளடைந்தார்.
இதனாலே திருஞானசம்பந்தரது பணிகளில் யாழ்ப்பாணர் கொண்டிருந்த பங்கினை நோக்கும் போது யாழ்ப்பாணம் பல்
லவர் காலத்தில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சியின் பங்காளியாக
யாழ். - தொன்மை வரலாறு 232 )

விளங்கியமை புலனாகின்றது. இதனை உறுதிப்படுத்துவதாக அமைவதுதான் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகிய திருத்தலங்கள் மீது பாடிய தேவாரங்களாகும். அப்பரது தேவாரத்திற் காணப்படுங் ’ என்ற குறிப்புந் திருக்கேதீஸ்வரத்திலுறை சிவனையே குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. இத்தகைய
கேதீச்சரமேவினார்
குறிப்புகள் சங்க காலந் தொட்டுப் பெரியபுராணம் எழுதப்பட்ட கி. பி. 12ஆம் நூற்றாண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாடு பாணரின், அதாவது பெரிய யாழ்க்கருவியை வாசிப்பதிற் கைதேர்ந்தவர்களின் வதிவிடமாகத் திகழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன. இதனால் யாழ்ப்பாணம் " என்ற சொல் மிகப்பழைய தமிழ் வடிவமே என்பதுந் தெளிவாகின்றது.
ஆதலால் யாழ்பாடி கதை பற்றிக் கைலாயமாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்களில் வருகின்ற குறிப்பினை நோக்கும் போது இதனை யாழ்ப்பாணம் என்று காணப்பட்ட இடப் பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம் பற்றிய ஐதீகம் என்று மட்டுங் கொள்ள முடியாது. வடதிசையி லிருந்து இவன் குடிகளை அழைத்து வந்து யாழ்ப்பாணத்திற் குடியேற்றியதாக இக்கதையில் இடம் பெறும் நிகழ்ச்சியானது இக்காலத்தில் வடதிசையாகிய தமிழ் நாட்டிலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட குடியேற்றங்களையே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அதுமட்டுமன்றி யாழ்பாடியே இப்பகுதியை ஆள ஒரு அரசனையும் பின்னர் இட்டு வந்தான் என்று காணப் படுங் குறிப்புக்கூட ஒரு வகையில் இக்காலத்திலே தமிழகத்தி லிருந்து ஏற்பட்ட புலப் பெயர்வுகளையும் அவற்றோடு அரசியல் ஆதிக்கத்தினை விழைந்தோர் இங்கு வந்து தமது அரசாதிக் கத்தினை நிலைநாட்டியதையும் யாழ்பாடி கதை உருவகப் படுத்திக் காட்டுவதாக அமையலாம். இதனால் இது உக்கிரசிங்கனது மகனின் காலத்தில் நடைபெற்ற சம்பவம் எனக் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்கள் குறிப்பிட்டாலுங்கூட  ைவ ய |ா பா ட ல் இச்சம்பவத்தைக் * கலிமூவாயிரம் ’ ( கி. மு. 101 ) என எடுத்துக் காட்டுவதை அவதானிக்கும்போது யாழ்பாடி கதை, உக்கிரசிங்கன் கதை ஆகியன இருவேறு காலத்தவையாக இருக்கலாம் என்றுங்
O 233 வரலாற்றுக் காலம் 11

Page 133
கருத இடமிருக்கின்றது. வெவ்வேறு காலங்களில் இடம் பெற்ற மரபுகளையே இவை ஒன்றிணைத்துக் கூறுகின்றன என்றும் யூகிக்க இடமுண்டு. எனினுங் கி. பி. ஆறாம் நூற்றாண்டு தொடக்கந் தமிழகம் அரசியல் ரீதியில் அநுராதபுர அரசோடு கொண்டிருந்த தொடர்பினை நோக்கும் போது இவற்றைப் பல்லவர் கால அரசியற் பின்னணியில் இணைப்பதே பொருத்த மாகின்றது. ஒரு வகையில் யாழ்ப்பாண வைபவமாலையில் உக்கிரசிங்கனின் காலத்ததாக இடம்பெறும் * தொண்டைமான் வரவு கூட இக்காலத்திற் பல்லவ அரசின் ஆதிக்கப் படர்ச் சியை நினைவு கூருவதாகவும் அமையலாம். முதலில் இதுபற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் இடம் பெற்றுள்ள செய்தியை அவதானிப்போம் .78
'அவன் (உக்கிரசிங்கன் ) அவ்விடத்தில் வந்திருப்பதையும் கரணவாய், வெள்ளப்பரவை முதலிய இடங்களில் நல்லுப்புப் படுஞ் செய்தியையும் தொண்டைநாட்டை யரசாண்ட தொண்டைமான் என்னும் அரசன் கேள்விப்பட்டுப் பரிவாரங் களுடன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கிச் சந்தித்து இந் நாட்டில் விளையும் உப்பிலே தனக்கு வேண்டியளவு வருடந்தோறும் விலைக்குக் கொடுக்கவும், உப்புப் படுமிடத் துக்குச் சமீபத்திலே மரக்கலங்களைக் கொண்டுபோய் உப்பேற்றவும், மாரிகாலங்களில் மரக்கலங்களை ஒதுக்கி விட்டு நிற்கவும் வசதியாக வடகடலில் ஒர் ஆறு வெட்டு வித்துக் கொள்ளவும் உத்தரவு கேட்டான். உக்கிரசிங்க மகாராசன் உத்தரவு கொடுக்கத் தொண்டைமான் அங்கிருந்த சிற்றாற்றை மரக் கலங்கள் ஒடத்தக்க ஆழமும் விசாலமும் உள்ளதாகவும் ஒதுக்கிடமுள்ளதாகவும் வெட்டு வித்துத் தன்னுாருக்கு மீண்டான். அது முதல் இதுவரைக் கும் அவ்வாறு தொண்டைமானாறு என்றழைக்கப்
படுகின்றது."
மேற்கூறிய குறிப்பிலிருந்து பல்வகையான யூகங்களை அக்கால அரசியற் பின்னணியிலிருந்து மேற்கொள்ளலாம். முதலிலே இதில் இடம்பெறுந் * தொண்டைமான் " என்பது எதனைக் குறிக்கின்றது என்பது ஆராய்தற்பாலது. சங்க
யாழ். - தொன்மை வரலாறு 234 ()

காலத்திலே * தொண்டையர் ” என்ற இனக்குழு காணப்பட்ட தால் ஈழத்திலும் அவ்வினக் குழுவோடு தொடர்புடைய ஆறே, தொண்டைமான் ஆறு என வழங்கப்பட்டிருக்கலாமென முதல் அத்தியாயத்திற் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இதற்கு இன்னொரு விளக்கத்தினையும் இக்காலத் தமிழக அரசியற் பின்னணியிலிருந்து கொடுக்கலாம். அதாவது, இது பல்லவ மன்னனைக் குறிக்கின்றது என்பதேயாகும். தொண்டை மண்டலத்தை ஆண்டதாற் பல்லவர்கள் ‘தொண்டைமான்கள்’ என அழைக்கப்பட்டனர். இத்தகைய மன்னன் ஒருவன் படை யுடனும், மரக்கலங்களுடனும் வடபகுதித் துறைமுகத்தில் வந்திறங்கித் தனது ஆணையை நிலைநாட்டித் தனது வாணிப நடவடிக்கைகளுக்காக மேற்கொண்ட நடவடிக்கையே இவ் வாறு உக்கிரசிங்கனுடன் தொண்டைமானாற்றின் தோற்றம் பற்றிய கதையாக இழைக்கப்பட்டிருக்கின்றது எனவுங் கருத இடமுண்டு. ஏனெனிற் காசாக்குடிச் சாசனத்திற் பல்லவ வம்ச முதல் மன்னனான சிம்மவிஷ்ணு (கி. பி. 575 - 600) ஈழத்தினைக் கைப்பற்றியவனாக விளிக்கப்படுகின்றான்." இவ னின் பேரனான நரசிம்மவர்மனிடஞ் சரண்புகுந்த ஈழத்து மன்னன் மாணவர்மன் பதினெட்டு ஆண்டுகள் பல்லவ அரண் மனையிற் கழித்த பின்னர் பல்லவர் அளித்த படையுடன் மீண்டுந் தானிழந்த அரசைத் திரும்பப் பெற்றுக் கொண்ட தாகச் சூளவம்சங் கூறுகின்றது. எனினும் மானவர்மன் பல்லவ மன்னனிடம் உதவி கோரிச்செல்ல முன்னருள்ள காலப்பகுதியிற் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு அநுராதபுர அரசியலிலே தென்னிந்தியப் படையினரின் செல்வாக்கு அதிகரித்துக் காணப் பட்ட காலமென்பது குறிப்பிடத்தக்கது. இக்காலம் ஈழத்திற் பெருமளவு உள்நாட்டுக் குழப்பங் காணப்பட்ட காலமுமா கும்.78 உதாரணமாக மூன்றாவது அக்கபோதி (கி. பி. 629 - 639), முதலாவது தாதோபதீஸ் (கி. பி. 639 - 650) காலத் தில் அரசனுக்கு உதவத் தமிழகப் படையினர் வருவிக்கப் பட்டிருந்தனர். இப்படையினருக்குரிய வேதனத்தைக் கொடுக்க வசதியற்ற இம்மன்னர்கள் அதற்கான பணத்தைப் பெறுவ தற்காக விக்ாரைகளைச் சூறையாடியதாகவுங் கூறப்படுகின்றது.
O 235 வரலாற்றுக் காலம் 11

Page 134
அநுராதபுர அரசிலே தமிழர் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டதை மேலும் பல உதாரணங்கள் மூலம் விளக்க லாம். முதலாவது தப்புலவும் (கி. பி. 659) அவனின் மக னாகிய மாணவும் தமிழகப் படைவீரர்களது செல்வாக்கினை மட்டுப்படுத்த முனைந்தபோது இப்படைவீரர் அரசுரிமை விழைந்து நின்ற இன்னொருவனான இரண்டாவது தாதோப தீஸ்வை (கி. பி. 659 - 667) அரசனாக்கியபோது தப்புலவும் மானாவும் உரோகணவுக்குச் சென்று தலைமறைவாக வாழ வேண்டியிருந்தது. தாதோபதீஸவுக்குப் பின்னர் அரசு கட்டி லேறிய நாலாவது அக்கபோதி (கி. பி. 667 - 683) காலத்தலே தமிழர் செல்வாக்கு மேலுங் கையோங்கிக் காணப்பட்டது. சேனாதிபதி, பிரதம மந்திரி ஆகிய பதவிகளை இவர்கள் வகித்த தாகவுங் கூறப்படுகின்றது. இம்மன்னனின் மரணத்தின் போது பொத்தகுட்ட என்ற தமிழ்ப் பிரதம மந்திரி மிக வலிமையுள்ள வ னாக அநுராதபுர அரசிற் காணப்பட்டான். அரசுரிமைக்குத் தகுதியான ஒருவனைச் சிறைப்படுத்தித் தத்த (கி. பி. 683-84) என்பவனை இவன் மன்னனாக்கியதாகக் கூறப்படுகின்றது. தித்தவின் மரணத்தோடு மறுபடியும் இவன் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த அதே வருடத்திற் (கி. பி. 684) பல்லவப் படை யுடன் மீண்ட மாணவர்மன் (கி. பி. 684 - 718) இவனிடமிருந்து அரசைக் கைப்பற்றினான்.
அதுமட்டுமன்றி அநுராதபுர அரசில் இக்காலத்திலிருந்தே காணப்பட்ட தமிழ்க் குடியேற்றங்கள் பற்றிச் சிங்களக் கல் வெட்டுகளிலுங் குறிப்புகள் காணப்படுகின்றன.79 தெமெள் 695 u6ip69) ("D e m e 1 K a b a 1 1 a), “G) 3GQud6ir 95 bu ?ub" ("D e m e ! g, a m b i m) * Gogld 677.5 enw GapGiggs 60aö7” (Demelat - Valadennin) ஆகியன தமிழர் குடியிருப்புகள் பற்றியத் தெமெளி குளி (D e meli - Ku 1i) என்ற பதம் இவர்கள் செலுத்த வேண்டிய வரி பற்றியும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தெமென அதிகாரி என்ற பதவிப் பெயருடன் ஒருவன் முதல்முதலாக இரண்டாவது சேனன் (கி. பி. 853 - 887) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.80
யாழ். - தொன்மை வரலாறு 236 O

மேற்கூறிய பின்னணியிற்றான் யாழ்பாடி கதைக்கு வியாக் கியான ங் கொடுக்க வேண்டியிருக்கின்றது. யாழை வாசிப்பதிற் கைதேர்ந்த குழுவினர் வாழ்ந்ததால் இப்பகுதி (யாழ்ப்பாணர் + அகம்) யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். யாழ்ப் பாணருக்கும் யாழ்ப்பாணம் என்ற பதத்திற்குமிடையே இழை விட்டோடும் ஒற்றுமையைப் பெரிய புராணத்திற் காணப்படும் *யாழ்ப்பாணனார்" என்ற குறிப்பு எடுத்துக்காட்டுகின்றது. இக் குறிப்பு அருணகிரிநாதர் காலத்திற்கு முந்தியதாகும். துர் அதிஷ்ட வசமாக இதற்கு முந்திய காலத்திற்குரிய இலக்கியங்களில் யாழ்ப்பாணம் பற்றிய வடிவம் இடம்பெறாமையால் இதன் வழக்காறு பற்றி நாம் திட்டவட்டமாக எதுவுங் கூறமுடியா விட்டாலுங்கூட ஏற்கனவே வழக்கிலிருந்த யாழ்ப்பாணம் என்ற வழக்கிற்கு விளக்கங் கூறவந்த கதையாக இதனைக் கொள்ள லாம். இத்தகைய கருத்தையே அண்மைக் காலங்களில் விஜயன் கதைக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன. “சீகள' என வழக்கிலிருந்த நாட்டுப் பெயருக்கு அளிக்கப்பட்ட விளக்கமாகவே விஜயன் பற்றிய ஐதீகம் எழுச்சி பெற்றது என்பது பிரபல சிங்கள வரலாற்றாசிரியரான மென்டிசின் கருத்தாகும் .81 够
அத்துடன் யாழ்பாடி கதையிற் சில வரலாற்றுக் கருவூலங்களுங் காணப்படுகின்றன. முதலாவதாக வடதிசையான தமிழகத்தி லிருந்து இக்காலத்திலேற்பட்ட குடியேற்றம் பற்றி இது கூறு கின்றது. இதனை விளக்கமாக நாம் அறிந்துகொள்ள முடியா விட்டாலும் அநுராதபுர அரசிற் காணப்பட்ட குடியேற்றங் களின் பின்னணியிலும், இக்காலத்திலே தமிழகத்தவர் அநுராதபுர அரசின் மீது கொண்டிருந்த செல்வாக்கின் பின்னணியிலும் நோக்கும் போது தமிழகத்துக் குடிகள் பல இக்காலத்தில் யாழ்ப் பாணத்திற் குடியேறின என்பது தெளிவாகின்றது. இரண்டாவ தாக யாழ்ப்பாணத்திலே தமிழ் நாட்டவன் ஒருவன் அரசனா னதை இது எடுத்துக் காட்டுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆகியன யாழ்பாடியே இங்கு அரசனாக இருந்து இறந்தது பற்றிக்கூற வையாபாடல், யாழ்பாடி இந்தியாவுக்குச் சென்று குலகேதுவை அழைத்து வந்து மன்னனாக்கியது பற்றிக் குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும் இவை எல்லாவற்றிலுங்
9 237 வரலாற்றுக் காலம் II

Page 135
கருப்பொருளாகக் காணப்படுவது தமிழகத்தோன் ஒருவன் அரச னாகக் காணப்பட்டதே. இதுவும் அக்காலத் தமிழக ஈழத்து அரசியற் பின்னணியிற் சாத்தியமான தொன்றாகவே காணப் படுகின்றது.
உக்கிரசிங்கன் காலக் குறிப்பிலே தொண்டைமான் வரவு பற்றி யாழ்ப்பாண வைபவமாலையிற் குறிக்கப்பட்டாலும் இச் சம்பவம் கைலாய மாலையிலோ வையாபாடலிலோ காணப்பட வில்லை. எனினும் நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேட் டிற் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு (கி. பி. 575 - 600) காலத்தில் ஈழம் வெற்றி கொள்ளப்பட்டதை நோக்கும் போதும், இக்காலந்தொட்டு இவனின் பின்னர் அரசாண்ட மகேந்திரவர்மன், நந்திவர்மன் காலத்திலும் அநுராதபுர அர சில் ஒரு குழப்பமான நிலை காணப்பட்டதை அவதானிக்கும் போதும் பல்லவர் படைஎடுப்பு இக்காலத்தில் ஈழத்தில் ஏற் பட்டிருக்கலாம் என யூகிக்க இடமுண்டு. இ த  ைன யே தொண்டைமானின் ஐதீகம் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது எனவும் யூகிக்கலாம். அதுமட்டுமன்றி, இத்தகைய நிகழ்ச்சி உக்கிரசிங்கன் காலத்தோடு இணைக்கப்பட்டாலுங் கூட இவன் காலத்திற்கு முன்னரும் இது நடைபெற்றிருக்க லாம் என்பதை அநுராதபுர அரசனின் தமிழகத் தொடர் புகள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வுக்கிரசிங்கன் பல காலம் ஆட்சி செய்து அரசுரிமை இழந்த மன்னனாகவே தமிழ் நூல்களிற் சித்திரிக்கப்படுவதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது. இவ்வாறு ஆட்சியுரிமை இழந்த இவன் அநுராதபுரத்தி லரசாண்ட மன்னரைப் போலத் தமிழகஞ் சென்று படையுடன் திரும்பித் தனது உரிமையை நிலைநாட்டியதையே மேற் கூறிய உக்கிரசிங்கன் பற்றிய ஐதீகம் எடுத்துக் காட்டுகின்றது.
இவை எல்லாவற்றையும் அக்கால அரசியற் பின்னணியில் நோக்கும் போது தமிழகத்தவர் இங்கு வந்து அரசியலதி காரத்தினைக் கைப்பற்றல், சுதேச மன்னர் இழந்த அதிகா ரத்தினை மீளப் பெறத் தமிழகம் சென்று படையுடன் திரும் பல், தமிழக மக்களைக் குடியேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டே இக்கதை இழைக்கப்பட்டமை தெளி
யாழ். - தொன்மை வரலாறு 238 )

வாகின்றது. இத்தகைய நிகழ்வுகள்தான் அநுராதபுர அரசிய லிலுங் காணப்பட்டது. அதிஷ்டவசமாகச் சூளவம்சம் இந் நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுகின்றது. அக்கால வரலாற்றைக் கோவைப்படுத்தி வைப்பதற்கு யாழ்ப்பாணத்திற் சூளவம்சம் போன்றதொரு நூல் காணப்படாததால் மக்கள் மனதில் மேற்கூறிய சம்பவங்கள் நாடோடிக் கதைகளாக விளங்கிய தைக் கண்ட தமிழ் நூலோர் ஐதீகங்களாகவே இவற்றைப் படைத்து விட்டனர். இவற்றின் வரலாற்றுக் கருவூலங்களை உய்த்துணர்வது வரலாற்றாசிரியர்களின் பணியேயாகும்.
திருஞானசம்பந்தர் தேவாரத்தினையும், பெரிய புராணத் திலே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருக்கு ஒரு தனி அதிகாரங் காணப்படுவதையுஞ் சங்க நூல்களில் யாழ்ப்பாணர் பற்றி வருஞ் செய்திகளின் பின்னணியில் நோக்கும்போது மணற்றி போன்று யாழ்ப்பாணம் என்ற பெயர்கூடப் பழையது என்பது தெளிவாகின்றது. திருஞானசம்பந்தரது காலம் வரை ஈழத்துத் தமிழ் நூல்களில் இது தொடர்ந்து வழக்கிற் பயின்று வராத தற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றுட் பிரதானமா னது இப்பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களோ பிற தமிழ் நூல்களோ யாழ்ப்பாண அரசு தோன்றிய காலத்திற்கு முன்னர் எழாததே ஆகும். இத்தகைய நூல்கள் எழுந்திருந்தால், இவைகளில் *யாழ்ப்பாணம்’ என்ற சொல் இடம் பெற்றிருக்கும். இந்நூல்க ளில்லாதவிடத்து யாழ்ப்பாணப் பகுதியை ஆண்ட ஒரு சிற் றரசனின் செய்தியையே தமிழ் நூலோர் பிற்காலச் சம்பவங்க ளோடு இணைத்துப் பயன்படுத்தி உள்ளனர் போலத் தெரி கின்றது. யாழ்ப்பாணம் என்று தமது காலத்திற் காணப்பட்ட சொற் பிரயோகத்தின் மூலத்தினை அறியாத தமிழ் நூலோர் இது இவ்வாறு பெயர் பெற்றதற்குக் காரணம் பாணன் இதனைப் பரிசிலாகப் பெற்றதே எனக் கூறியுள்ளனர்.
இறுதியாக யாழ்பாடி கதை இன்னோர் வரலாற்றுச் சம்பவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுதான் வடபகுதி யில் இக்காலத்திற் காணப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஆகும். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குரிய பாண்டிய மன்னராட்சி
() 239 வரலாற்றுக் காலம் 11

Page 136
யில் இப்பகுதியிற் காணப்பட்ட சிங்களக் குடியேற்றம் பற்றிய குறிப்பினையும், யாழ்பாடி கதையிற் காணப்படுஞ் சிங்களவர்கள் பற்றிய குறிப்பினையும் வையாபாடலில் இடம் பெற்றுள்ள * சிங்களவர்" என்ற இனத்தவர் பற்றிய குறிப்பினையும் நோக் கும்போது இக்காலப்பகுதியிலே தமிழ் மக்களில் இருந்து மொழி யாலும் மதத்தாலும் வேறுபட்ட இனத்தவரான சிங்கள மொழி பேசுவோரும் இங்கு காணப்பட்டதை இவ்ஐதீகம் எடுத்துக்காட்டு கின்றது. அநுராதபுர அரசிற் காணப்பட்ட தமிழ்க் குடியேற் றங்கள் போன்றே வடபகுதியிலுஞ் சிங்களக் குடியேற்றங்கள் காணப்பட்டன என்பதையே இக்குறிப்பு எடுத்துக் காட்டுகின் றது. இவர்கள் பெளத்தர்களாக இருந்தது மட்டுமன்றிச் சிங்கள மன்னர்களின் ஆதிக்கப் படர்ச்சி ஏற்பட்ட காலங்களில் இவர்களுக்குந் தமிழ் மக்களுக்குமிடையே காணப்பட்ட முரண் பாடுகளையும் இவை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய முரண்பாடுகள் யாழ்ப்பாண அரசு காலத்திலுங் காணப்பட்ட்மை ஈண்டு அவதானிக்கத்தக்கது.
முடிவாக, யாழ்பாடி கதை காலவரன்முறையற்ற நிலை யிலே தமிழ் வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளமை பற்றியுங் கூறுவது அவசியமாகின்றது. யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை ஆகியனவற்றுள் இது உக்கிரசிங்கனின் மகனது காலத்து (கி. பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய) நிகழ்ச்சி யாகக் குறிப்பிடப்பட வையா, வையாபாடல் ஆகியவற்றுள் இக்கதை விபீஷணன் கால நிகழ்ச்சிகளோடும் ஈழத்தின் வட பகுதியிற் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் காணப் ULL — மிகப்பிற்பட்ட கால அரசியல் நிகழ்ச்சிகளோடும் இணைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.82 வையாபாடல், வையா ஆகியன கூறும் கோளுறுகரத்துக்குரிசிலை, (கூழங்கைச் சக்கரவர்த்தியை) கி. பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் பொலநறுவையில் ஆட்சி செய்து பின்னர் வடபகுதியைத் தனது ஆணைக்குட்படுத்திய காலிங்க மாகனாக முதலியார் இராசநாயகம் இனங்கண்டுள்ளார்.83 “مہ
எனவே மேற்கூறிய கதைகளை உற்றுநோக்கும்போது ஒரு குறிப்பிட்ட கால நிகழ்வாகத் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட
யாழ். தொன்மை வரலாறு 24O ே

புலப் பெயர்வு, அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் ஆதிக் கம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள யாழ்பாடி கதை ஐதீகமாயினும் ஒரு வரலாற்று நிகழ்வையே எடுத்துக் காட்டுகின்றது. காலவரன்முறைப்படி சம்பவங்களை நிரைப் படுத்துந் திறன் அற்ற தமிழ் நூலோர் இக்கதையைப் பல் வேறு கால நிகழ்ச்சிகளோடு இணைத்தாலுங்கூட இக்கதை பிற்பட்ட அநுராதபுர காலத்தில், அதுவும் பல்லவ-பாண்டிய~ சோழ அரசுகளின் மேலாணை மேலோங்கிக் காணப்பட்ட காலத்திலே தமிழகத்திலிருந்து ஈழத்தின் வடபகுதி நோக்கி ஏற்பட்ட புலப் பெயர்வு பற்றியே எடுத்துக் காட்டுகின்றது என்பது பொருத்தமாகக் காணப்படுகின்றது.
தொண்டைமானைப் பல்லவ மன்னரோடு இணைப்பதற்கு மேலும் பல தொல்லியற் சான்றுகள் உறுதுணையாய் உள்ளன. முக்கியமாகக் கந்தரோடை, மாதோட்டம் போன்ற பகுதிகளிற் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் இவற்றிற் குறிப்பிடத்தக்கன, 1919இல் இப்பகுதியில் மேலாய்வு செய்த சேர் போல் பீரிஸ் இருவேறு அளவுகளிற் கந்தரோடையிற் கிடைத்த மூன்று நாணயங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.84 இவற்றில் ஒன்றில் முன்பக்கத்திற் சிங்கமும் பின்பக்கத்தில் மூன்று புள்ளிகளைச் சுற்றி வட்டமுங் காணப்படுகின்றது. இரண்டாவது நாணயத்தில் முன்பக்கஞ் சிங்கமும் பின்பக்கம் மரமும் உண்டு. மூன்றாவது நாணயத்தில் முன்பக்கஞ் சிங்கமும் பின்பக்கத்தில் முக்கோணமும் சுவஸ்திகாவும் அமைந்துள்ளன. இத்தகைய சிங்கம் பொறித்த காசு தருக்கேதீஸ்வரத்திலுங் கிடைத்துள்ளது. முற்பக்கத்திற் சிங்கமும் பிற்பக்கத்திற் பூரண கும்பமும் அதன் இரு மருங்கிலுங் குத்துவிளக்குகளுங் காணப்படுகின்றன. சிங்கமே ஆரம்ப காலத்திற் பல்லவரின் இலட்சனையாகக் காணப் பட்டாலும் நாளடைவில் இதனிடத்தில் இடபம் " செல்வாக் குள்ள இலட்சனையாக மாறியது. பல்லவர் கலைமரபிற்குரிய இக்காலச் சிற்பங்களும் வடபகுதியிற் கிடைத்துள்ளமை குறிப் பிடத்தக்கது. இவற்றுட் கல்லினாலான லிங்கம், விநாயகர்சிலை, செப் பி னா லா ன சோமஸ்கந்தமூர்த்திசிலை ஆகியன திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்துள்ளன.85 வடபகுதியிற் பல்லவர் கலைமரபு காணப்பட்டதை அண்மையில் வெட்டுக்காட்டிற்
O 241 லரலாற்றுக் காலம் II

Page 137
பல்லவ கிரந்த எழுத்துப் பொறித்துக் காணப்பட்ட சிலையின் உடைந்த பாகம், அரசபுரத்திற் கிடைத்த பொன் முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலை ஆகியன எடுத்துக்காட்டுகின்றன.8 இப்பகுதியிலுள்ள பல்லவரை நினைவுபடுத்துங் காஞ்சிபுலவு, காஞ்சி மீனாட்சி வளவு, பல்லாய் ஆகிய இடப்பெயர்களுங் கருத்திற் கொள்ளத்தக்கன. அநுராதபுர அரசின் தலைநகரான ஸ்சுறுமுனியா, திரியாய், நாலந்தா ஆகிய இடங்களிற் பல்லவர் கலைப்பாணியை நினைவுபடுத்தும் எச்சங்கள் உள. இவற்றோடு திருகோணமலை, குருக்கள்மடம் ஆகிய இடங்களிற் கிடைத்த பல்லவர் கலைமரபிற்குரிய விஷ்ணு சிற்பங்கள் வடபகுதியிலும் இத்தகைய கலைமரபு காணப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவனவாக உள்ளன.87
வட பகுதியின் ஆதிக்கப் பரப்பு
மணற்றி, யாழ்ப்பாணம் ஆகிய பெயர்கள் பழையனவாகக் காணப்படுவது போன்று உக்கிரசிங்கனதும், அவனது மகனதுங் கால நிகழ்ச்சிகளில் வன்னிப்பகுதி இணைத்துக் கூறப்படுவதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. உதாரணமாக யாழ்ப்பாண அரசர் காலத்தில் முல்லைத்தீவிலுள்ள வாவெட்டியில் அவர்கள் மாளிகை அமைத்துத் தங்கிய செய்தி வையாபாடலில் உண்டு.88 ஆனால் இதே நூலில் இவ்வாவெட்டியில் உக்கிர சிங்கன் மாளிகை அமைத்து அரசாண்ட நிகழ்ச்சியும் காணப் படுகின்றது. இவ்வாறே யாழ்ப்பாண வைபவமாலை உக்கிர சிங்கனை வன்னியரிடமிருந்து திறை பெற்றவனாகக் குறிப்பிடு கின்றது. இதனால் வடபகுதியின் அரச மையம் பெரு நிலப் பரப்பை நோக்கி, உக்கிரசிங்கன், அவனின்மகன் ஆகியோர் காலத்தில் (யாழ்ப்பாண அரசு காலத்திற்கு முன்னர்) நகர்ந்தது என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்துள்ளது போலத் தெரிகின்றது. இவ்வாறு பெருநிலப் பரப்பில் வடபகுதியின் அரச மையப்பீடங் காணப்பட்டபோது பர்ழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு சிற்றரசோ மாவட்ட அரசோ காணப்பட்டதையே யாழ் பாடி கதையாக இந்நூல்கள் கூறுகின்றன என யூகிக்கலாம். துர்அதிஷ்டவசமாக இது பற்றித் தமிழ் நூல்களிலோ பாளி நூல்களிலோ விபரங்கள் காணப்படவில்லை.
யாழ். - தோன்மை வரலாறு 242 )ே

எவ்வாறாயினும், பெருநிலப்பரப்பை நோக்கி இப்பகுதி மன்னரின் அரசமையம் நகர வேண்டிய தேவை ஏற்படுவ தற்கு இக்கால அரசியல் ஆதிக்க வளர்ச்சியும் ஒரு காரணமாக இருந்தது. குடாநாட்டிலே தலைநகரை வைத்துக் கொண்டு பெருநிலப்பரப்பினை ஆளுவது கடினம். இது மட்டுமன்றி விவசாய நடவடிக்கைகளின் விஸ்தரிப்பும் இதனை ஊக்கப் படுத்தியிருக்கலாம். அநுராதபுர அரசின் தலையீடுகளிலிருந்து இப்பகுதியைக் காப்பதற்குப் பெருநிலப்பகுதியில் அரசமையம் அமைய வேண்டிய அவசியமேற்பட்டது.
தமிழகப் படையெடுப்புகள்
கி. பி. 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளிலே தமிழகத்திலிருந்து பாண்டிய, சோழ வம்சங்களது படை எடுப்புகள் ஈழத்தின் மீது ஏற்பட்டன. இப்படை எடுப்புகளும் இவற்றை எதிரி கொண்ட ஈழத்து மன்னரின் நடவடிக்கைகளும் வடபகுதி வரலாற்றில், குறிப்பாக வடபகுதியின் தனித்துவத்தினைப் பாதுகாக்க உதவியதால் இவை பற்றிக் கூறுவதும் அவசியமா கின்றது. இப்படை எடுப்புகளைத் தொடர்ந்து பல தமிழ்க் குடியேற்றங்களும் அநுராதபுரப் பகுதியில் மட்டுமன்றி ஈழத் தின் வடபகுதியிலும் ஏற்பட்டன. இதனால் இதனைப் பற்றிச் சற்று விரிவாக ஆராய்வது அவசியமாகின்றது. பாண்டி நாட்டிலிருந்து ஏற்பட்ட படை எடுப்பு இவ்வம்ச மன்னனான சிறீமாற சிறீவல்லப சீமாற சீவல்லப ) காலத்தில் ஏற்பட் டது.89 கி. பி. 835ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறிய இவன் கி. பி. 882 வரை அரசாட்சி செய்தான். இக்காலத்தில் அநுராதபுரத்தில் அரசாண்ட மன்னன் முதலாவது சேன னாவான் ( கி. பி. 833 - 853 ). இப்படை எடுப்புப் பற்றிய தகவல்கள் தமிழகத்திற் கிடைத்த பெரியசிம்மனூர்ச் (og u பேடுகளிலுள்ள தமிழ், வடமொழியிலமைந்த குறிப்புகளில் மட்டுமன்றி ஈழத்துப் பாளி நூலாகிய சூளவம்சத்திலும் உள. பாண்டிய மன்னன் தென்னிந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிலர சாண்ட மன்னர்களை வெற்றி கொண்டதன் விளைவாக ஏக வீரன், பரசக்கரகோலாகலன், அவனிபசேகரன் ஆகிய விருதுப்
O 243 வரலாற்றுக் காலம் 11

Page 138
பெயர்களைச் சூடியிருந்தான் எனவுங் கூறப்படுகின்றது. இவனது படைஎடுப்பு ஈழத்தின் வடபகுதியூடாகவே நடந்ததென்றும், இப்படை எடுப்பின் போது இப்பகுதியிலுள்ள தமிழர்கள் உதவி னார்கள் என்றுஞ் சூளவம்சங் குறிப்பதை அவதானிக்கும்போது தமிழர்கள் இப்பகுதியில் அரசியல் ரீதியிற் செல்வாக்குடன் காணப்பட்டமை புலனாகின்றது.90
இவ்வாறு வடபகுதிக்கு முதலில் வந்த நோக்கம் ஒரு சமயந் தனது சிங்கள அரசைத் தாக்கும் பணிக்கு இப்பகுதித் தமிழ் அரசின் உதவியைப் பெறுவதற்காகவும் இருக்கலாம் . அத்துடன் இங்கு காணப்பட்ட அரசமைப்பும் இத்தகைய படை எடுப்பைப் பயன்படுத்தி அநுராதபுர அரசரிடமிருந்து எதுவித தாக்குதலும் வடபகுதி மீது ஏற்படுவதை மட்டுப் படுத்தலாம் எனவும் நினைத்திருக்கலாம். மகாதலித்தகம என்ற இடத்திற் பாண்டிய - சிங்களப் படைகளுக்கிடையே நடைபெற்ற போரிற் சிங்களப்படை தோல்வியைத் தழுவியது. இதிலேற்பட்ட வெற்றியைத் தொடர்ந்து அநுராதபுர அரசின் பல நகரங்களைக் கொள்ளையிட்டதோடு பெளத்த விகாரை களிலிருந்த பொற்படிமங்கள் பலவற்றையும், விலையுயர்ந்த பிற செல்வங்களையும் இம்மன்னன் கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இப்படை எடுப்பை எதிர் கொண்டு சமாளிக்க முடியாத முதலாவது சேனன் தலைநகரை விட்டு மலைய தேசத்திற்குச் சென்று ஒளித்துக் கொண்டான். இவனின் சகோதரனான யுவராஜன் மகிந்தன் இப்படை எடுப்பினர்லேற் பட்ட அவமானத்தைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு சகோதரனான காஸ்ப்ப, பாண்டிய மன்னனுடன் போரிட முயற்சிகள் மேற்கொண்டும் அது பலிக் காத கட்டத்தில் ஒழித்துக் கொண்டான். பின்னர் சேனன் பாண்டிய மன்னனுக்குத் தன்னிடமிருந்த திரவியங்களை மேலும் கொடுத்து அவனிடஞ் சரணாகதியடைந்ததன் விளைவாக இவர்களுக்கிடையே சமாதானம் ஏற்படச் சேனன் திரும்பவும் மன்னனாக அங்கீகரிக்கப்பட்டான். பாண்டியப் படை எடுப்பி னால் ஏற்பட்ட சேதங்களைச் சீர் செய்வதிலேதான் இவனது ஆட்சிக் காலத்தின் பிற்பகுதி கழிந்தது எனக் கூறப்படுகின்றது. நிக்காய சங்கிரக என்ற நூல் இச்சேன மன்னன் சைவத்
யாழ். - தொன்மை வரலாறு 244 ()

துறவியினாற் சைவனாக மதம் மாற்றப்பட்டதோடு இதே துறவி அவனது ஊமை மகளைப் பேச வைத்ததாகவுங் கூறு கின்றது.91 இத்தகைய சம்பவம் ஒன்று பற்றி மாணிக்கவாசக ரின் வரலாறு பற்றிக் கூறுந் திருவாதவூரடிகள் புராணத்தி லுங் கூறப்படுகின்றது.92 திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் ஈழத்து மன்னனை மதம் மாற்றி அவனின் ஊமை மகளைப் பேச வைத்தது பற்றி இந்நூல் குறிப்பிட்டாலும் இம் மன்னன் யார் என்பதை மட்டும் கூறவில்லை.
நிற்க, பாண்டியப் படை எடுப்பினால் ஏற்பட்ட வடுவைத் தீர்ப்பதற்கு முதலாவது சேனனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இரண்டாவது சேனன் (கி. பி. 842 - 877) காத்திருந்தபோது பாண்டிய நாட்டிலேற்பட்ட உள்நாட்டுப் பூசல் இதற்கான வாய்ப்பையும் இவனுக்களித்தது. பாண்டிய மன்னனான சிறீமாற சிறீவல்லபனுக்கும் அவனது மகனாகிய வரகுணனுக்கும் பிணக் கேற்பட, வரகுணன் ஈழத்து மன்னனாகிய இரண்டாவது சேன னிடம் உதவி கேட்டதாகக் கூறப்படுகின்றது. வரகுணனை வர வேற்ற சேனன் படையுடன் பாண்டிநாடு சென்றதோடு பாண்டிய மன்னனுடனான போரிலே தனக்குதவப் பல்லவ மன்னனான
களை அரிசலூரில் எதிர்கொண்ட பாண்டியப் படை தோல் வியைத் தழுவியது. சிங்களப் படையின் இன்னோர் அணி இதன் தளபதியாகிய குத்தக தலைமையில் மதுரையைச் சூறை யாடியதோடு முன்னர் சிறிமாற சிறீவல்லப எடுத்துச் சென்ற திரவியங்களையும் பெற்றுக்கொண்டு ஈழந் திரும்பியதெனவுஞ் சூளவம்சங் குறிப்பிடுகின்றது.93
பாண்டிய சிங்கள அரசுகளுக்கிடையே நிலவிய நெருக்கமான தொடர்புகளுக்கு இக்காலத்தில் விஜயாலயன் தலைமையில் எழுச்சி பெற்ற சோழவம்சம் சவாலாக அமைந்தது. இவ்வம்சத்து மன்னனான முதலாவது பராந்தகன் (கி. பி. 907 - 953) தனது ஆதிக்கத்தினைப் பாண்டி நாட்டில் விஸ்தரிக்க முயன்றான். கி. பி. 910 இற் பாண்டி நாட்டின் மீது படை எடுத்து அதனை வெற்றி கொண்டான். இதன் சின்னமாக இவன் ‘மதுரை
() 245 வரலாற்றுக் காலம் 11

Page 139
கொண்ட கோப்பர கேசரி வர்மன்” என்ற பட்டத்தினையுஞ் குடிக்கொண்டான்.94 அப்போதைய பாண்டிய மன்னனாகிய மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் சிங்கள மன்னனாகிய ஐந்தாம் காஸ்ப்பவிடம் (கி. பி. 914 - 923) உதவி கேட்க அவன் சக்க என்ற சேனாதிபதியின் கீழ் ஒரு படையை அனுப்பினான். பாண்டியனுக்கு உதவிக்கு வந்த ஈழத்துச் சிங்களப் படையோடு பராந்தக சோழனின் படை வெள்ளூர் என்ற இடத்திற் பொருதி யது. இதிற் பாண்டிய சேனை பெருஞ் சேதத்துக்குள்ளாகியது. மதுரை மீண்டும் பராந்தகனாற் கைப்பற்றப்படச் சிங்களப்படைத் தளபதியாகிய சக்க சேனாதிபதி மறுபடியும் பராந்தகனுடன் போரிட முயன்ற போது அவன் நோய்வாய்ப்பட்டு இறக்க, எஞ்சி யிருந்த படையினரைச் சிங்கள மன்னன் ஈழத்துக்கு அழைத் தான் எனவுஞ் சூளவம்சங் கூறுகின்றது.9 ஈழத் துப் படை தோல்வியைத் தழுவியது மட்டுமன்றி எழுச்சியுறுஞ் சோழ வம் சத்தின் பகைமையையும் பாண்டியருடன் கொண்ட நட்புற வாலே தேடிக்கொண்டது. இவ்வாறு சிங்கள - பாண்டிய அரசு களுக்கிடையே காணப்பட்ட நட்புறவு சோழ - சிங்களஅரசுகளுக் கிடையே முரண்பாடு வளருவதற்கு வழி வகுத்தது. இதன் விளைவாகக் கி. பி. 993இல் கிட்டத்தட்ட பதின்மூன்று நூற் றாண்டுகளுக்கு மேலாகச் சிங்கள அரசின் தலைநகராக விளங் கிய அநுராதபுரஞ் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் தலைமையில் வந்த படையினராலே தகர்க்கப்பட அதன் வர
லாறும் அஸ்தமனமானது.
பாண்டிநாடு முழுவதையுந் தனது ஆட்சிக்கு உட்படுத்திய பராந்தக சோழன் அதன் தலைநகராகிய மதுரையிலே தனது முடிசூட்டு விழாவை நடாத்த முயன்றபோது பாண்டியனின் முடியும் அரச சின்னங்களும் அங்கு காணப்படவில்லை. இவை யாவுந் தோல்வியடைந்த பாண்டிய மன்னனாகிய இராசசிம்ம னால் ஈழத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்நாட்டுச் சிங்கள மன்னனிடம் அடைக்கலமாக வைக்கப்பட்டதை அறிந்து அவற்றை வாங்கி வருமாறு சில தூதர்களை அநுராதபுர மன்னனிடம் அனுப்பினான். அப்போதைய சிங்கள மன்னனாகிய நான்காம் உதயன் அவற்றைக் கொடுக்க மறுக்கவே பராந்தகன் ஈழநாட் டின் மீது படை எடுத்துச் சென்று அதனைக் கைப்பற்ற
யாழ். - தொன்மை வரலாறு 246 9ே

வேண்டும் எனத் துணிந்தான். இதனாற் சோழப்படை ஈழம் நோக்கி வந்தது. ஈழத்தில் நடைபெற்ற இப்போரிற் சிங்களப் படைத் தலைவன் இறந்தான். பராந்தகனின் வெற்றியை அடுத்து உதயன் வேறு வழியின்றிப் பாண்டிய மன்னன் அடைக்கல மாகத் தன்னிடம் விட்டுச்சென்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டு உரோகணையில் சென்று ஒழித்துக்கொண்டான். ஈழம் வந்த சோழப்படை உ ரோ க  ைண க் குச் சென்று ஈழத்து மன்னனைக் கைப்பற்றாது நாடு கிரும்பியது. இதற்குக் காரணம் அக்காலத்திற் சோழநாட்டின் மீது ஏற்பட்ட ராஷ்டிர கூடப் படையெடுப்பேயாகும். எனினும் ஈழநாட்டுப் போரிற் சோழமன்னன் பெற்ற வெற்றியை அடுத்து ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பர சேகரி வர்மன்" என்ற பெயரைப் பராந்தகன்
குடிக்கொண்டான்.98
ஈழத் தமிழகத் தொடர்புகள்
ஈழத் தமிழகத் தொடர்புகள் பற்றியும், இக்காலத்திலேற் பட்ட சோழப்படையெடுப்பின் பரிமாணம் பற்றியும் இச்சந் தர்ப்பத்தில் ஆராய்வது பொருத்தமாகின்றது. இதற்கு முன்ன ரெல்லாந் தமிழகத்திலிருந்து தனிப்பட்டோரால் மேற்கோள்ளப் பட்ட படை எடுப்புகள் ஈழத்தினைக் கைப்பற்றிச் சில காலம் ஆளுவதற்கும் வழி வகுத்தன. பின்னர் அவைகள் பின்வாங்கு வதுஞ் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வேறு படை எடுப் புகள் ஏற்படுவதும், பின் வாங்குவதும் பொது நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. இவ்வாறே ஈழத்திலிருந்து குறிப்பாக அநுராத புரத்திலரசாண்ட மன்னர்கள் தமது அரசுரிமையை இழந்த நேரத்திலே தமிழகஞ் சென்று ஆளும் அரசிடமோ அங்கு காணப் பட்ட மக்களிடமோ இருந்து கிடைத்த உதவியைக் கொண்டு அரசாட்சியை மீளப் பெறுதல் வழக்காகியது. எனினும் இத் தகைய நிலை பல்லவ, பாண்டிய, சோழ வம்சங்களின் எழுச்சி யோடு, கி. பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து மாறத் தொடங்கி யது எனலாம். இக்காலந்தொட்டு ஈழத்து அரசியலிலே தமிழக வம்சங்கள் பெரும் பங்கு கொண்டிருந்தன. கி. பி. 9ஆம் நூற் றாண்டில் விஜயாலயனின் கீழ்த் தமிழகத்திற் சோழரின் எழுச்சி ஆரம்பமாக முன்னர் தமிழகத்தின் ஆதி க் க ப் போட்டியில்
O 247 வரலாற்றுக் காலம் 11

Page 140
முதன்மை பெற்றவர்களாகப் பல்லவரும் பாண்டியருமே விளக் கினர். இத்தகைய ஆதிக்கப் போட்டியில் அநுராதபுரத்திலிருந்த அரசும் தன்னை இணைத்துக் கொள்வது அக்கால அநுராதபுர அரசர்களின் பிரதானமான வெளி யு ற வுக் கொள்கையாக
அமைந்தது.
இதனாலே தமக்குப் புவியியல் ரீதியில் மிக அண்மித்துக் காணப்பட்ட பாண்டியரிடமிருந்து ஆபத்து வருவதன் மூலந் தமது இறைமைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை உணர்ந்த அநுராதபுர அரசர் பாண்டியருக்கெதிராக முதலிற் பல்லவருடன் அணி திரண்டனர். இதனையே ஈழத்தின் மன்ன னான மாணவர்மன் போன்றோரின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. எனினுங் கி. பி. 9ஆம் நூற்றாண்டிற் பல்லவ ரோடு நடைபெற்ற பிரதான யுத்த களமாகிய திருப்புறம்பியப் போரிற் (பல்லவரும் பாண்டியரும் இணைந்து சோழரை எதிர்த்த போரிற்) பல்லவரும் பாண்டியருந் தோற்கடிக்கப்பட்டமை தமி tք& வரலாற்றில் ஒரு மைற்கல்லானது. இப்போர் பல்லவரினதும் பாண்டியரினதும் மேலாண்மைக்குச் சாவுமனி அடித்தது மட்டு மன்றித் தமிழக வரலாற்றின் நான்கு நூற்றாண்டுகள் முக்கியம் பெற்ற சோழ அரசின் எழுச்சிக்கும் வித்திட்டது.
பல்லவரைச் சிதைத்த சோழர், அவர்களின் ஆளுகைக் குட்பட்ட தொண்  ை- மண்டலத்தையுந் தமதாக்கினர். இதன் அடுத்த நடவடிக்கையே காவேரிப் படுக்கையை மைய மாகக் கொண்ட சோழரின் தென்பகுதியிற் காணப்பட பாண்டியரை அடக்கி அப்பிரதேசத்தினையுந் தமது ஆளுகைக் குக் கீழ்க் கொண்டுவர அவர்கள் எடுத்த முயற்சியாகும். இதனால் இற்றைவரை பல்லவருடன் நட்புறவு கொண்டிருந்த அநுராதபுர மன்னர், பல்லவருக்குப் பின்னர் பாண்டியரோடு நெருக்கமான உறவை வளர்க்க விரும்பினர். இத்தகைய உறவு மூலந் தமிழகத்திற் சோழரது மேலாண்மை ஓங்கு வதைத் தடுக்கலாம் என நம்பினர். இவ்வாறு தடுப்பதன் மூலஞ் சோழராதிக்கந் தமிழகத்திற் பரவிய பின்னர் ஈழத் திலும் ஏற்படுவதைத் தடுக்கலாமென்பது அவர்களது எண்ண மாக இருந்தது. ஈழத்தரசர் மட்டுமன்றிச் சோழர், சிங்கள
யாழ். - தொன்மை வரலாறு 248 ()

அரசர் ஆகியோரது ஆளுக்கைக்கு உட்பட்ட பகுதிகளின் இடையிற் காணப்பட்ட பாண்டியருக்குஞ் சோழரிடமிருந்து தமது தனித்துவத்தினைப் பாதுகாக்கச் சிங்கள மன்னரின் உதவி அத்தியாவசியமாகியது. இவ்வாறு ஏற்பட்ட பாண்டியர் - சிங்கள அரசர் ஆகியோரின் உறவே வரலாற்றேடுகளிற் பாண்டிய - சிங்கள உடன் பாடாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உறவு சோழரின் மேலாண்மைக்குச் சவாலாகவும்
அமைந்தது.
பாண்டி நாட்டைக் கைப்பற்றுதல் சோழருக்கு அரசியல் ரீதியில் மட்டுமன்றிப் பொருளாதார ரீதியிலும் நன்மை அளித் தது. பாண்டி நாட்டின் தென்கோடி முத்துக்குளிப்பிற்குப் பண்டு தொட்டே பெயர் பெற்றிருந்தது. இத்தகைய தொழில் மூலம் பாண்டிய - ஈழ அரசுகள் பெரும் வருவாயைச் சம்பா தித்தன. பாண்டிநாடு சோழர் கையில் வரும்போது இதன் வருவாய் எழுச்சி பெறுஞ் சோழ அரசின் பொருளாதார பலத்தைக் கட்டி எழுப்புவதற்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந் தது. அத்துடன் பாண்டியப் பிரதேசத்தில் வளப்படுத்தப் படாத பல்வகையான காட்டுப் பிரதேசங்கள் காணப்பட்டன. இவை சோழரைத் தாக்குவோர் தங்குவதற்கான வாய்ப்பை அளித்தன. இதனாற் பல்லவரை அழித்தது டோன்று பாண்டி
நாட்டிற் சோழப்படை நிரந்தரமாக நிறுத்தப்பட்ட சான்றுகள், பாண்டியரை முற்றாக அடக்கி அவர்களைத் தம் வழிக்குட் கொண்டு வருவதிற் சோழருக்கிருந்த சிரமங்களை எடுத்துக் காட்டுகின்றன. இவற்றைவிட எழுச்சி பெறுஞ் சோழ அரசின் விவசாய நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கும் பாண்டி நாட் டில் அதுவரை உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் படாத நிலங்கள் நல்ல வாய்ப்பான பகுதிகளாகவும் அமைத் தன. இவை எல்லாவற்றையும் விடப் பாண்டிய - சிங்கள உறவைப் பயன்படுத்திப் பாண்டிய மன்னர் ஈழத்திற் சரண் புகுந்ததாற் சோழருக்கெதிராகப் பாண்டியரால் ஈழம் ஒரு தளமாகப் பயன்படுத்தப்படுவதற்கு முற் றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகியது. மேலும் சிங்கள அரசின் வாணிபப் பொருட்களும் சோழரின் வர்த்தக நடவடிக்கைகளை விஸ் .
9 249 வரலாற்றுக் காலம் 11

Page 141
தரிக்க ஒரு நல்ல வாய்ப்பான தளமாக ஈழங் காணப்பட்ட தைச் சோழருக்கு உணர்த்தின.
எனவே மதுரையைக் கைப்பற்றிய பராந்தகன் அங்கு முடிசூடுவதற்காகப் பாண்டிய மன்னனின் முடியும் பிற அணிகலன்களுங் காணப்படாததால் அவற்றைப் பெறுவதற் காகவே ஈழத்தின் மீது படை எடுத்தான் என்று கூறப்பட் டாலுங்கூட உண்மையில் இப்படை எடுப்பிற்கு மேற்கூறிய அரசியல், பொருளாதாரக் காரணிகள் பின்னணியாக இருந் தன. இதனையே முதலாம் பராந்தகன், இரண்டாம் பராந் தகன் ஆகியோர்காலப் படைஎடுப்புகள் மட்டுமன்றிப் பின் வந்த சோழப் படை எடுப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன.
முதலாவது டராந்தகனின் கீழ்ச் சோழப்படை எடுப்பு நிசழ்ந்த போது சிங்களப் படையின் சேனாதிபதி தலைநகரில் இல்லை என்றும், அவன் குழப்பமுள்ள எல்லை மாகாணத்தில் இருந்தான் எனவுஞ் சூளவம்சங் கூறுகின்றது.97 பின்னர் பராந்தகனின் படை நாட்டை விட்டுச்சென்றதும் அநுராதபுரத் திற்கு மீண்ட உதயன் தனது படைப்பலத்தை அதிகரிக்கும் நோக்கமாக விதுரங்க என்பவனைச் சேனாதிபதியாக நியமித்த தாகக் கூறப்படுகின்றது. இச்சேனாதிபதி சோழ அரசின் எல்லை மாகாணத்தைத் தாக்கியதோடு சோழ அரசனான முதலாவது பராந்தகன் ஈழத்து அரசனிடமிருந்து எடுத்துச் சென்ற திரவியங்களைக்  ைக ய விரிக் கும் படி சோழ மன்னனைக் கேட்டுக் கொண்டதாகவும் இந்நூல் மேலுங் கூறுகின்றது. இவ்வாறு சூளவம்சம் இவ்வெல்லை மாகாணத்தைச் சிங்கள அரசின் சேனாதிபதி தாக்கினான் ’ என்று கூறினாலுங்கூட அதனைச் சிங்களஅரசின் ஆளுகைக்கு உட்படுத்தினான் என்று கூறவில்லை.
இச்சந்தர்ப்பத்திற் சோழ அரசின் எல்லை மாகாணம் பற்றி வருங் குறிப்பு ஆராய்தற்பாலது. இவ்வெல்லை மாகாணம் என்பது சோழரின் எல்லை மாகாணமாகிய பாண்டியரது பிராந்தியத்தினையா அல்லது ஈழத்தினையா குறித்து நின்றது oன்பதே நாம் எதிர் நோக்கும் பிரச்சனையாகும். பாண்டிய
யாழ். - தொன்மை வரலாறு 25o G

சோழ, ராஷ்டிரகூட அரசுகளுக்கு இடையே நடைபெற்ற யுத்தத் தின் விளைவாகத் தமது சுதந்திரத்தை மீண்டும் பெற்றதால், இங்கே குறிப்பிடப்படும் எல்லை மாகாணம் பாண்டியர் பிரதேச மாக இருக்கலாமென்று கருத முடியாது. அதுமட்டுமன்றி இவ்வெல்லை மாகாணத்தினைச் சிங்களப் படைத்தளபதி தாக்கினான் எனச் சூளவம்சங் குறிப்பதை ஆராயும்போது இவனின் நடவடிக்கை நிச்சயமாக இக்காலத்தில் ஈழத்துச் சிங்கள அரசுடன் நல்லுறவுடன் காணப்பட்ட பாண்டியப் பிரதேசமாகவும் இருக்க முடியாது என்பது மேலும் உறுதியா கின்றது. ஆனாற் கி. பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பினனர் ஈழத்தின் வடபகுதியாகிய உத்தரதேசத்தில் அநுராதபுர அரசின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சவால்கள் காணப்பட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது கிளர்ச்சி செய்பவர்கள், அநுராதபுர அரசுக்கெதிராகச் செயற்படுபவர்கள் போன்றோர் ஆதரவு கோரிச் தஞ்சம் புகும் பிரதேசமாக இது காணப் பட்டதோடு இங்கு ஏற்பட்ட கிளர்ச்சிகள் பற்றியுஞ் சூள வம்சங் குறிப்பிடுகின்றது.98 இதனாற் சூளவம்சங் குறிப்பிடும் * எ ல்  ைல மா காண ம் " இப்பகுதியாகவும் இருக்கலாம். பராந்தகனின் படை அநுராதபுரத்தினை விட்டகன்றாலுஞ் சோழர் ஆதிக்கம் வடபகுதியில் நிலை கொண்டிருக்கலாம். இதனாற்றான் இதனைத் தாக்க வேண்டியதேவை சிங்களச் சேனாதிபதிக்கு இருந்தது. இப்பகுதியையே சூளவம்ச ஆசிரியர் சோழ அரசின் எல்லை மாகாணம் என்றுங் குறித்திருக்கலாம்.
வடபகுதியிற் சோழர் ஆதிக்கப்படர்ச்சி இக்காலத்தில் எற்பட்டதை இங்கு காணப்படுஞ் சோழர் கால இடப் பெயர் களும் மண்ணித்தலைச் சிவாலயமும் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலச் சோழக் கலைமரபில் ஆக்கப்பட்ட இச் சிவாலயமும் இக்காலத்திற் சோழராதிக்கம் இப்பகுதியில் நிலை கொண்டதன் சின்னமாக விளங்குகின்றது எனலாம்.99 சோழரின் இத்தகைய ஆதிக்கப்படர்வு ஏற்கனவே இப்பகுதியில் நில்ைகொண்டிருந்த தமிழரின் ஆதிக்கத்திற்கும் வலுவூட்டுவதாக அமைந்திருக்கலாம். இத்தகைய வாய்ப்பினை உருவாக்குவதில் அநுராதபுர அரசின் வலியிழப்பும் ஒரு காரணமாகும்.
O 251 வரலாற்றுக் காலம் 11

Page 142
எனினும் ராஷ்டிரகூட நெருக்கடியிலிருந்து மீண்ட சோழ அரசு இக்காலத்திலே தமது ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பாண்டிய அரசை மீண்டுந் தனது ஆணைக்குக் கீழ்க் கொண்டு வர முயன்றது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈழத்தரசன் பாண்டியனுக்கு உதவியளித்தான் போலத் தெரிகின்றது. இச் சம்பவங்கள் சுந்தரசோழன் என அழைக்கப்பட்ட இரண்டா வது பராந்தகன் (கி. பி. 956 - 973) காலத்தில் நடைபெற் றன. நான்காம் மகிந்தன் காலத்திலே தென்னிந்திய மன்ன னான "வல்லப* நாகதீபத்தின் மீது படை எடுத்தான் எனச் சூளவம்சங் கூறுகின்றது. 100 சோழரைக் குறிக்கும் "வளவன்" என்ற சொல்லே வல்லப என இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற யுத்தத்திற் சோழரது தரப்பிற் சோழ அரசின் இளவரசனாகிய இரண் டாவது ஆதித்தன் தலைமை தாங் கி னா ன். இச்சமரிற் சோழரை எதிர்கொள்ள முடியாத பாண்டிய மன்னனான வீரபாண்டியன் புறமுதுகு காட்டிக் காட்டிற்குட் சென்றொழித் தான். இச்சம்பவங் கி. பி. 960 இல் நடைபெற்றது. இப் போரை வழி நடத்திய சோழ அரசின் சேனாதிபதியாகிய இருக்குவேளிர் குலத்தினைச் சேர்ந்த “சிறிய வேளார்’ தென் னாட்டு வெற்றியை அடுத்து ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஊராத்தோட்டிையிற் படையுடன் வந்திறங்கி, அங்கு ந.ை பெற்ற Gurrflaj) மாண்டதாகவுங் கூறப்படுகின்றது.10 இத்தகைய சோழப் படை எடுப்பு அநுராதபுர மன்னனாலே தோற்கடிக்கப்பட்டது எனக் கூறுஞ் சூளவம்சம் இப்படை எடுப்புக்குத் தலைமை தாங்கியவனாகச் சேன" என்ற சேனாதி பதி பற்றியுங் குறிப்பிடுகின்றது. 102 Gurt fai வெல்ல முடியாத ஈழத்தரசனுடன் சோழ மன்னன் சமாதானத்தை மேற்கொண்டான் எனவும் இதனால் ஈழத்தரசனின் புகழ் ஜம்புதீபம் முழுவதும் பரவியது எனவுங் கூறுகின்றது. அப் போது ஈழத்தரசனாக விளங்கியவன் நான்காவது மகிந்தனா வான் (கி. பி. 956 - 972). சூளவம்சந் தரும் குறிப்பை இம் மன்னனின் வெஸ்ஸகிரிக் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.108
கி. பி. 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ்க் கல்வெட்டுகள் அநுராதபுரத்திற் காணப்படுகின்றன.104 இவற்
யாழ். - தொன்மை வரலாறு 252 ே

றுள் இரண்டு “குமார கணம்" பற்றிக் கூறுகின்றன. இது ஒரு வணிக கணமாகும். மற்றைய கல்வெட்டு இன்னொரு வணிக கணமாகிய "நான்கு நாட்டார்" பற்றிக் கூறுகின்றது. இவர்கள் ஐஞ்அநூற்றுவர் என்ற வணிக கணத்தைச் சேர்ந்த வர்கள் ஆவர். இவ்வாறு தலைநகராகிய அநுராதபுரத்திற் காணப்பட்ட தமிழ்க் குடியிருப்புகள், தமிழ்க் கல்வெட்டுகள் ஆகியன மட்டுமன்றி இக்காலத்திலே தமிழ்ப்படை வீரர் பெற்றிருந்த செல்வாக்கும் ஈழத்திலே தமிழர் குடியேற்றம் ஸ்திரம் பெற்று வளர உதவின. இத்தகைய பின்னணி வட பகுதியிலே தமிழ் மக்கள் மேலுந் தமது தனித்துவத்தினைப் பேணிப் பாதுகாக்க உதவின. இங்கு ஏற்பட்ட தமிழ் நாட்டுப் படை எடுப்புகளைத் தொடர்ந்து தமிழ்க் குடியேற்றங்களும் இங்கு வளர்ச்சி பெற்றன. படை எடுத்து வந்த வர் கள் இங்கேயே கால்கொண்டனர்.
சோழ-சிங்களப் படைகளுக்கிடையே நடைபெற்ற யுத்தத்தின் களமாக, வடபகுதி குறிப்பிடப்படுவது அவதானிக்கத்தக்கது. அதுவும் இப்பகுதித் துறைமுகமாகிய ஊராத்துறையே இதில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சோழப்படைகள் இங்கே வந்திறங்கியதை நோக்கும் போது வடபகுதி இக் காலத்திற் பராந்தகனின் ஆட்சியைத் தொடர்ந்து சோழச் செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதே காரணமாக லாம். இதனால் வடபகுதியில் நிலைகொண்டிருந்த சோழரை அப்பகுதிக்குச் சென்று தாக்கி வெற்றி கொண்டதன் மூலம் ஈழம் முழுவதிலுந் தனது செல்வாக்கைப் பரப்பியவனாக மகிந்தன் கணிக்கப்பட்டதையே வெஸ்ஸ்கிரிக் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. எனினும் வெற்றி கொண்ட இப்பகுதியில் இம்மன்னனாலோ இவன் பின் அரசு கட்டிலேறிய சிங்கள மன்னராலோ இப்பகுதி நிருவகிக்கப்படவில்லை. இது பற்றிய சான்றுகள் சூளவம்சத்திற் காணப்படவில்லை. இக்காலச் சிங்கள மன்னர்கள் பலர் வலிமையற்றவர்களாகக் காணப் பட்டதாலும் இவ்வாறு அவர்களால் வடபகுதியைக் கட்டுப்
படுத்தித் தமது ஆணைக்குள் வைத்திருக்க முடியவில்லை.
) 253 வரலாற்றுக் காலம் 11

Page 143
இந்நிகழ்ச்சியைக் கொண்டு நான்காவது மகிந்தன்காலம் வரை வடபகுதி அநுராதபுர அரசரின் ஆணையை ஏற்றிருந்த தென்று கொள்ளமுடியாவிட்டா லுங்கூட இவன் காலத்தில் அநுராதபுர அரசின் மேலாணை வடபகுதியினைச் சென் றடைந்தது எனலாம். பொதுவாகவே இக்காலத்தில் அநுராத புரத்தில் அரசாட்சி செய்த மன்னர்கள் வலிமையற்றவர்களா கவே காணப்பட்டனர். அவர்களில் நான்காவது மகிந்தன்தான் ஒரளவு வலிமை படைத்தவனாகக் காணப்படுகின்றான். இவனுக்குப் பின் வந்த ஐந்தாவது சேனன் (கி. பி. 972 - 82), ஐந்தாவது மகிந்தன் ( கி. பி. 982 - 1029) போன்றோர் வலிமையற்றுக் காணப் பட்டனர். இவர்கள் காலத்தில் அநுராத புரத்திலிருந்த திராவிடப் படையினரின் கையோங்கியிருந்தது, இப்படையினருக்குக் கொடுக்க வேண்டிய வேதனத்தை மகிந்தன் கொடுக்காததால் இவர்கள் கிளர்ச்சி செய்ய மகிந்தன் உரோகணைக்குச் சென்று ஒழிக்க வேண்டியிருந்தது. ஈழத்திற் காணப்பட்ட இத்தகைய அரசியல் நிலையைப் பயன்படுத்தித் தான் சோழரது படை எடுப்பு முதலாவது இராஜராஜன் ( கி. பி. 985 - 1016 ) காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப் படுகின்றது. இப்படை எடுப்பால் அநுராதபுர நகரமுஞ் சிதைக்கப்பட்டதோடு அநுராதபுர அரசின் வரலாறும் அஸ்தமனமானது,
வடபகுதியும் சிங்கள மன்னர்களும்
வடபகுதியோடு இக்காலத்திற் சிங்கள மன்னர் கொண் டிருந்த அரசியற்றொடர்புகளாக மூன்றேமூன்று மன்னர் கால நிகழ்ச்சிகளைக் கூறலாம். இவர்கள் முறையே ஸிலாமேக வண்ணன் ( கி. பி. 619 - 628 ), இரண்டாம் மகிந்தன் ( கி. பி. 777 - 797 ), நான்காவது மகிந்தன் ( கி. பி. 956 - 972 ) ஆகிய மன்னர்களாவார். இத்தகைய தொடர் புகள்கூட முறையே ஒன்றரை, இரண்டு நூற்றாண்டுகள் கால இடைவெளியிற்றான் காணப்படுவதையும் அவதானிக்க மூடிகின்றது. இவற்றில் முதலாவது அநுராதபுர அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி என்றும் ஏனையவற்றை இவர்கள் இப்பகுதியிலே தமது ஆதிக்கத்தை விஸ்தரிக்க மேற்
யாழ். - தொன்மை வரலாறு 254 )ே

கொண்ட நடவடிக்கை என்றுங் கூறுதலே பொருத்தமாகின்றது. இவற்றைவிட இப்பகுதியிலுள்ள பெளத்த நிறுவனங்களுக்கு இவர்கள் அளித்த நன்கொடைகள் பற்றிய இலக்கியக் கல்வெட்டாதாரங்கள் காணப்படுகின்றன. முதலாவது அக்க போதி ( கி. பி. 571 - 604 ) முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தனுாரிலுள்ள குருந்த விகாரையைக் கட்டியதாகக் கூறப்படுகின்றது.105 பின்னர் நான்காவது அக்கபோதியின் { கி. பி. 667 - 683 ) மந்திரி இவ்விடத்தில் ஒரு மண்டபத்தைக் கட்டியதாகவுங் கூறப்படுகின்றது.108 இரண்டாவது அக்கபோதி ( கி. பி. 604 - 614) யாழ்ப்பாணத்திலிருந்த உண்ணலோமரக் கோயில் என்ற நிறுவனத்தை ராஜாய தன தானு என்ற விகாரைக்குக் கட்டுவித்துக் கொடுத்ததோடு அங்கிருந்த அமலசேதிய என்ற ஸ்தூபிக்கும் ஒரு குடையைத் தானமாக வழங்கியதாகச் சூளவம்சங் கூறுகின்றது.107
கந்தரோடை வடபகுதியிற் காணப்பட்ட முக்கியமான வழிபாட்டிடங்களில் ஒன்று என்பதைச் சிங்கள நூலாகிய நம்பொத்த எடுத்துக் காட்டுவதை இங்கு கிடைத்த கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்களக் கல்வெட்டொனறும் உறுதி செய்கின்றது. இக்காலத்தில் ( கி. பி. 10ஆம் நூற்றாண்டில் ) ஒர் அரசமையப் பீடமாகக் கந்தரோடை விளங்கியதற்கான சான்றுகள் போதியளவு கிடைக்காவிட்டாலுங்கூட இக்கல் வெட்டுப் பெளத்த மதத் துறையில் இது பெற்ற முக்கியத்து வத்தினை எடுத்துக் காட்டுகின்றது. இது ஒரு தூண்கல் வெட்டாகும். உடைந்த ஒரு தூணின் மூன்று பக்கங்களில் இது காணப்படுகின்றது. இதனால் இது பூரணமற்றதொன்றா கும். இதன் முதலாம், மூன்றாம் பக்கங்களிற் காணப்படும் வாசகங்கள் பெருமளவுக்கு அழிந்துவிட்டதால் இரண்டாம் பக்கத்தில் உள்ள வாசகம் மட்டுமே வாசிக்கக் கூடிய நிலையிற் காணப்படுகின்றது. தற்போது யாழ்ப்பாண அரும்பொருட் சாலையிற் காணப்படும் இதன் வாசகங்களைப் பின்வருமாறு இந்திரபாலா மொழிபெயர்த்துள்ளார்.108
O 255 வரலாற்றுக் காலம் II

Page 144
சீருடை (ஷத்திரிய) குலத்தின் சிகரமாகிய இகடி வாகு பரம்பரையில் வத்து, உடையாராகிய ருஹ"ணுப் பிரதேசம் மலை மண்டலம் ஆகியவற்றை ஒராணைக்கு உட்படுத்திய . . .
நான்காவது காஸ்ப்பவின் (கி. பி. 898 - 914) ஆட்சிக் காலச் சிங்களக் கல்வெட்டுகளிற் காணப்படும் வசனங்கள் இதிற் காணப்பட்டாலும் இது அவனின் தமையனாகிய முதலா வது உதயன் காலத்திற்குரியதாக இருக்கலாம் என்று இந்திர பாலா கருதினாலும் பெளத்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிவேதனங்கள் பற்றி மாந்தையிற் கிடைத்த ஐந்தாவது காஸ்ப்ப வின் ( கி. பி. 914 - 923 ) இரு சிங்களக் கல்வெட்டுகள்110 எடுத்தியம்புவதை நோக்கும்போது கந்தரோடைக் கல்வெட்டும் இம்மன்னன் இப்பகுதியிற் காணப்பட்ட பெளத்த நிறுவனத் துக்குக் கொடுத்த நிவேதனம் பற்றியே கூறுகின்றது எனலாம்.
எனவே கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் காணப் பட்ட தமிழக - ஈழ அரசியற் சூழலின் பின்னணியில் நோக்கும் போது வடபகுதி தனித்துவமான அரசியற் போக்கிலே செல் வதை அவதானிக்க முடிகின்றது. பாளி நூல்களில் உத்தரதேச என அழைக்கப்பட்ட இப்பகுதி பற்றிய குறிப்புகள் மிக அரிதா கவே காணப்படுகின்றன. நாட்டின் பிற நிருவாகப் பகுதிக ளாகிய தக்கிணதேசம், மலையதேசம், உரோகணை போன்ற வற்றில் மன்னர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை களைக் குறிக்கும் பாளி நூல்கள் உத்தரதேசத்தில் அவர்கள் மேற்கொண்ட அரசியல் நிருவாக நடவடிக்கைகளைக் குறிக்க வில்லை. அதே நேரத்தில் இப்பகுதி பற்றிக் காணப்படுங் கொஸ்மஸ் குறிப்புகள், உக்கிரசிங்கன், மாருதப்புரவீகவல்லி கதைகள், தொண்டைமான் வரவு, யாழ்பாடி கதை ஆகிய வற்றை நோக்குகின்றபோதும், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரின் தேவாரங்களிற் காணப்படுங் குறிப்பு களை நோக்கும் போதும் இப்பகுதி தனித்துவமான அரசியற்
யாழ்-தொன்மை வரலாறு 256 (9

போக்கிற் சென்றது என்ற கருத்து மேலும் உறுதி பெறுகின் றது. இதனாலேதான் பாளி நூல்கள் இப்பகுதி பற்றிய விரிவான சான்றுகளைத் தரவில்லை எனலாம். முதலாம் பராந்தகனுடன் ஏற்பட்ட சோழப் படை எடுப்போடு தமிழரா திக்கம் வடபகுதியில் மேலும் ஸ்திரம் அடைந்தது. அநுராதபுர அரசிற் காணப்பட்ட அரசியல் ஸ்திரமின்மை சோழராதிக்கம் ஈழத்தில் மேலும் படருவதற்கு வழிவகுத்தது. சோழராதிக்கப் படர்ச்சி வடபகுதியிலே அதன் தனித்துவத்தினை மேலும் வலுப்படுத்தியது. இது பற்றி அடுத்து ஆராய்வோம்.
C 257 வரலாற்றுக் காலம் 11

Page 145
10,
l.
12.
13.
அடிக் குறிப்புகள்
Silva, K. M. De., A History of Sri Lanka, (New Delhi), 1981. L. 20.
Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926. uj. l 20 - 121,
The Christian Topography of Cosmos, (Tr) Mccrindle, J. W., (Lond.) 1897. Lui. 363 - 364.
Rasanayagam, C. , Gud. 3m... Jg5T ii, Lu. 126.
Paranavitana, S., The Arya Kingdom in North Ceylon, J. R. A. S. (C. B.) N. S., Vol. VII, Part 2, 1961. Lu. 184.
இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், (பேராதனை), 1972. ப. 5.
மணிமேகலை, (பதிப்பு சாமிநாதையர், உ. வே.(சென்னை), (ஆறாம் பதிப்பு), 1965. அதி. 11, வரி. 21 - 26.
Culavamsa, (ed) Geiger, W., Part I, (Lond.), 1973. அதி. 44. வரி. 70 - 75,
மே. கூ. நூல், அதி. 48, வரி. 83 - 85
ጰr
Gunasinghe, P. A. T., The Tamils of Sri Lanka - Their role, Colombo), (N. D. J. L. 21 - 22.
Martha Prickett, The Preliminary Investigation of Mantai, 1980 Ancient Ceylon, No. 5, 1984. Lă. 41-68.
வேலுப்பிள்ளை, ஆ , "தேவாரம் காட்டும் மாதோட்ட வரலாறு', வன்னிப் பிராந்தியத் g5 tб ур п у п tü ф 5) மகாநாட்டு மலர், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை, மகாநாடு. (முல்லைத்தீவு.) 27, 28, 29, வைகாசி, 1983. பக். 1 - 5. -
Nicholas, C. W., Historical Topography of Ancient and Medieval Ceylon, J. R. A. S. (C. B.) N. S., Vol. VI, 1963. L. 75.
யாழ். - தொன்மை வரலாறு 258 G

14. Paranavitana, S., “Inscriptions on the stone canoe within the citadel, Anurathapura'. Epigraphia Zeylanica, Vol. IIF, 1928 - 1933, Lu. 131 - 137. ه.، عه. مه نجی . Paranavitana, S., “Kataragama Inscriptions'', Epigraphia Zeylanica, Vol. III., 1928 - 1933, Ljä. 212 - 225.
15. Nicholas, C. W., Gud. s. s. 1963. U. 80.
16. மேற்படி, ப. 80.
17. மேற்படி, ப. 80.
18. Culavamsa, Gud. Jh. gjir 50, -936). 48, வரி. 81 - 82.
19. Paranavitana, S., Mannar Kacceri Pillar Inscriptions,
Epigraphia Zeylanica, Vol III, 1928 - 1933. பக், 100 - 113,
20. திருக்கேதீச்சரத் திருப்பதிகம், காஞ்சிபுரம், வச்சிரவேலு
முதலியார், க.தெளிவுரை, வித்துவான் சுப்பையாபிள்ளை ந:, விளக்கவுரை, (வெளியீடு) யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், (யாழ்ப்பாணம்) (மூன்றாம் பதிப்பு), 1987.
21. Martha Prickett, Gud. S. 5. 1984.
sk 22. Culavamsa, மே. சு. நூல், அதி. 44 வரி 3 வரி, 45.
23. மே, கூ, நூல், அதி. 50, வரி 14 - 15.
24. Gunasinghe, P. A. T., G.D. sin. g5Tóiv, Luis. 20 - 22.
25. Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol. .
Part I, (Colombo), 1959. U. 302
26. Nicholas, C. W., Gud. sa. s. 1963. uši. 86 - 87.
27. Culayama, மே, சு. நூல், அதி. 44. வரி 72 - 74
28. Gunasinghe, P. A. T., Gud. 3m. J5'Too, ** 19 - 21.
9ே 259 வரலாற்றுக் காலம் 11

Page 146
29.
30.
31.
32.
33.
34.
3S.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
Paranavitana, S., (ed). GLD. sa. 1516ö, 1959. Ué. 305314.
Culayamsa, மே. கூ. நூல், அதி, 44, வரி. 3, 53.
Paranavitana, S., sed) Gud. Ha. 5Isv, 1959. Lé. 315 – 320.
Culayamsa, மே, கூ, நூல், அதி. 48. வரி. 83 - 122.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல.
(சுன்னாகம்), 1949, ப. 13,
மே. கூ. நூல், ப. 21.
கைலாயமாலை, (பதிப்பு) ஜம்புலிங்கம்பிள்ளை, (சென்னை), 1939, ப. உ. (2), வரிகள் எ - க0 (07 - 10).
மே. கூ. நூல், வரி (சச - உச) (14 - 24).
மே. கூ. நூல், வரி உ0 - கரு (28 - 35).
யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், ப. 13.
வையாபாடல், (பதிப்பு) நடராசா, க. செ. (கொழும்பு), 1980 - t_i - 34, t_Jfrt-d) , 14 •
வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், அம்ரர் வைத்தியநாதர் தம்பு நல்லையா நினைவு வெளியீடு,
(யாழ்ப்பாணம்), 29. 1. 1993. ப. 15.
 ைவயா பாடல், மே. சு. நூல், செய். 15 - 20,
பக். 35  ை37.
திரிகோணாசல புராணம், தம்பை நகர்ப் படலம், (பதிப்பு) சண்முகரத்தின ஐயர் ( யாழ்ப்பாணம் ), 1909, செய். ந ( 03) பக். ரு0 ( 50 ),
மே. கூ. நூல், செய். சு ( 6 ), பக். ருஸ் - ( 50).
யாழ். - தொன்மை வரலாறு 26o O

44. மே. கூ. நூல். செய், கஅ ( 18 ), கசு ( 19 ),
பக். கசு கூ ( 199 ).
45. மே. கூ. நூல். செய். உஅ ( 28 ), உசு ( 29 ).
46. மே, கூ, நூல். செய் நக ( 31 ), கச, ( 34 ),
பக், உ0க ( 20 1 ).
47. கோணேசர் கல்வெட்டு, ( பதிப்பு ) வைத்திலிங்க தேசிகர், பு. பொ., ( யாழ்ப்பாணம் ), 1915. ( தகSண கைலாச புராணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது ), பக். கந.
B] êም ( 82 - 94 ),
48. மே, கூ, நூல், ப. கரு ( 35 ),
49. மட்டக்களப்பு மான்மியம், ( பதிப்பு ) நடராசா, F. X. C,
( கொழும்பு), 1962. பக். 29 - 35.
50. மே, கூ, நூல், ப. 35
51. ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாண 6.
விமர்சனம், ( அச்சுவேலி ), 1928. ப. 12; ப. 15,
52. இந்திரபாலா. கா., மே. கூ. நூல், 1972. பக். 8 - 14.
53. யாழ்ப்பாண வைபவமாலை, ம்ே. கூ. நூல், ப. 13.
54. Rasamayagam, C., GD. a. 5 õi, eš, 7.
55. Paranavitana, S. , Gud. Jin... a6. 196 l. u. 191 .
56. பத்மநாதன். சி. வன்னியர், ( பேராதனை), 1970.
57. Paranavitana, S., The Fragmentary Sanskrit Inscription from Trincomalee", Epigraphia Zeylanica, Vol. I, Part 1, இல, 14, பக். 170 - 173.
58. இந்திரபாலா, கா., மே, கூ, நூல், 1972, ப. 13,
O 261 வரலாற்றுக் காலம் 11

Page 147
59. Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, 1980.
60. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல்,
Lá。22 一 23...
61. மேற்படி, பக். 2 - 13. 62. வையாபாடல், மே, கூ, நூல், செய். 17.
63. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 23 - 24, 64. வையாபாடல், மே. கூ. நூல், செய். 12 - 14.
65. கைலாயமாலை, மே. கூ. நூல், வரி. ருகூர் . சு அ
.( 68 ۔ 9 5 )
66. இந்திரபாலா. கா., மே. கூ. நூல், 1972. பக். 17 - 18.
67. மே. கூ. நூல், பக். 16 - 17.
68. பத்மநாதன், சி, ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள், இளங்கதிர், தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், (பேராதனை ), ( 1969 - 70 ), ப. 130.
69. ஞானப்பிரகாசர், சுவாமி, மே. கூ. நூல், ப. 18.
70. Paranavitana, S., (3D, S, s. 1961. Lud. 201 - 26 2.
71. இந்திரபாலா, கா. , மே, கூ, நூல், 1972. ப. 15.
72. வித்தியானந்தன், சு, தமிழர் சால்பு, ( பேராதனை ), 1985. Líš. 5 14. 'የ..
73. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், ( வெளியீடு, சைவ சித்தாந்த சமாஜம் ), (சென்னை), 1937, ப. க0க செய். 09, பக், சு உ0 - க உக. செய். சு.
யாழ். - தொன்மை வரலாறு 262 இதி

74.
75,
76.
.ךף
78.
79.
8().
81.
82.
84.
85.
86.
திருத்தொண்டர் மாக்கதை, (வெளியீடு) திருநெல்வே லி தென் இந்திய சைவசித்தர்ந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டட், ( சென்னை, ) 1977. பக். ச00, செய். 278.
மே. கூ, நூல், பக். அகஅ, செய். கக ( 11 ). யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. JþT 6i, Lu . Il 4.
Rasanayagam, C., Gud. St. Táto, Lu. 241.
Gunasinghe, P. A. T., GD. 5. . g5sr 6i, Luis. Il 9 - 20.
Indrapala, K., Early Tamil Settlements in Ceylon, J. R. A. S. (C. B. : N. S., Vol. XIII, 1969. Lud. 48-68.
Guna singhe, P. A. T. , Gud. s. 576i, Luši. 28 - 29.
Mendis, G. C., 'The Vijaya Legend, Paranavitana Felicitation Volume, (ed.) Jeyawickrama, N. A., (Colombo), 1965. Lä. 268 - 279.
6 EQ LI எனும் யாழ்ப்பான நாட்டு வளப்பம்,
மே. கூ. நூல், பக். 1.
கைலாயமாலை, மே. கூ. நூல், முதலியார் செ. இராச நாயகம் எழுதிய மேற்படி நூலின் ஆராய்ச்சி முன் னுரையைப் பார்க்கவும்,
Pieris, Paul, E., " Nagadipa and Buddhist remairs in Jaffna', Part II, J. R. A. S. (C. B.), Vol. XXXVIII, No. 72. 1919. ud. 40 - 67.
புஷ்பரத்தினம், ப. இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு, (முதுகலைமாணிப் பட்டத்திற்கான ஆய்வுரை), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், (திருநெல் வேலி), 1988. பக். 335 - 388,
புஷ்பரத்தினம், ப. , பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு’, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991.
C 263 வரலாற்றுக் காலம் II

Page 148
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101 .
102.
புஷ்பரத்தினம், ப, மே. கூ. க. 1988. பக். 327 - 335. வையாபாடல், மே. கூ. நூல், செய். 99 - 100.
Culavamsa, Gio. s. föll sið, Sig). 50, 6Usfl 14.
Gunasinghe, P. A. T., G.D. dr. DfT si), Ludii. 2 - 22.
Rasanayagam, C., மே. கூ. நூல், பக். 254,
திருவாதவூரடிகள் புராணம், பூரீமத். ம. க. வேற்பிள்ளை அவர்கள் செய்த விருத்தியுரையுடன் (சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம்), 1939. பக். நசு ச - B கூசு,
செய். அரு. அசு.
Paranavitana, S., GLO. S. gös sv, 1959. Lá. 331 - 332.
சதாசிவபண்டாரத்தார், T. V., பிற்காலச் சோழர் சரித்திரம், (வெளியீடு) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், (சென்னை), 1954. பக். 37 - 38.
மே. சு. நூல், ப. 39. Culavamsa, Part II, GuD. Fr. (5/Tso, 9, S. 53., 6) fl 41. Paranavitana, S., CLD. Sin... DIT sio, 1959. uši. 346.
Guna singhe, P. A. T. , Ĝuo. sa.. pli sio, u. 21 - 22.
புஷ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
Culavamsa, மே. கூ. நூல், Part II, அதி. 54, வரி 12-16.
Abraham. Meera. Two Medieval Merchant Guilds of South India, (New Delhi), 1988. U. 60.
Culavamsa, மே. கூ. நூல், Part 11, 'அதி. 54, வரி 12-16.
யாழ். - தொன்மை வரலாறு 264 இ

103. Paranavitana, S., Gud, sin... JISTGü, 1959. u. 347.
104. Indrapala. K., GLD. 32. s. 1969.
105. Nicholas, C. W., Guo. J. as. 1963. Lu. 86.
106. மேற்படி, ப. 86.
107. Calayamsa, மே. கூ. நூல், அதி. 42, வரி 62 - 63.
108. இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், சிந்தனை, சிற்றிதழ் 1, (பேராதனை), 1969, ப. 11.
C 285 வரலாற்றுக் காலம் 11

Page 149
அதிகாரம் நான்கு
வரலாற்றுக் காலம் 11 (கி. பி. 1000 - 1250)
பொலநறுவை 95F காலத்தில் ஈழமும் GLUg6ub
இக்காலம் தமிழக - ஈழ வரலாறுகளைப் பொறுத்த மட்டில் மிக முக்கிய காலகட்டமாகின்றது. தமிழகத்திற் பல்லவவம்சத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, எழுச்சி பெற்ற சோழ வம்சத்தினர் சேர, பாண்டிய வம்சங்களை ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்ததோடமையாது தமிழக வர லாற்றிற் பேரரசர்களாக எழுச்சி பெறவுஞ் செய்தனர். சோழரின் தரைப்படை கங்கைக்குச் செல்ல, கடற்படை ஈழ முங் கடாரமுங் கொண்டது, பேரரசு நிலையினின்று தளர்ந்த காலத்திலுங்கூட இக்காலப் பகுதியிலே தமிழகத்தில் ஒரு வலிமை மிக்க வம்சமாக இது காணப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதனால் தமிழகத்தினைத் தனது ஆளுமைக்குக் கீழ்க் கொண்டு வந்த இவ்வம்சம் ஈழத்தினையுந் தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வர, 1070இல் முதலாவது விஜயபாகு சோழப்படையை வெற்றி கொள்ளும் வரை ஈழத் திற் சோழர் ஆட்சி நிலை கொண்டிருந்தது. ஈழத்திலிருந்து சோழ வம்சம் வெளியேறிய பின்னரும் ஈழத்து அரசியலில் அதன் தாக்கம் காணப்பட்டது. சோழவம்சத்தின் கீழ் ஈழம் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுதான் ( 77 ஆண்டுகள் ) காணப்பட்டாலும், ஈழத்து அரசியல் கலாசாரத் துறைகளில் இவ்வாட்சி ஏற்படுத்திய காத்திரமான பங்களிப்புக் கவனத்திற் கொள்ளத்தக்கது.
ஈழம் இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழகத்தி லிருந்து வந்த படை எடுப்புகளால் தனது சுதந்திரத்தினை இழந்தாலுங்கூட இவ்வாறு ஒரு நீண்ட காலப்பகுதிக்குச் சதந்திரத்தினை முன் ஒருபோதும் இழந்ததில்லை. இக்காலப்
யாழ். - தொன்மை வரலாறு 266 ல்

பகுதியிற்றான் முதன் முதலாக ஈழம் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாகியதோடு அங்கிருந்து அனுப்பப்பட்ட சோழப் பிரதிநிதியால் அது நிருவகிக்கவும் பட்டது. அடுத்ததாக இது வரை ஈழத்தில் வலுவடைந்த திராவிட கலாசார அம்சங்கள் சோழரின் வருகையோடு மேலும் உறுதி பெற்று, வளர்ச்சி பெறவும் வழிவகுக்கப்பட்டன. வடபகுதியைப் பொறுத்தமட்டில் தமிழராட்சி உறுதியாக வளர்ச்சி பெற உதவியதால் வட கிழக்கு மாகாணங்களின் வரலாற்றில் இது ஒரு மைற்கல்லாக அமைகின்றது. அத்துடன் வன்னிச் சிற்றரசர்களின் எழுச்சிக்கு வழிவகுத்த காலமும் இஃதாகும். இதனாற் சில வரலாற்று ஆசிரியர்கள் தமிழ் மாகாணமாக இப்பகுதி இக்காலத்துடன் ஸ்திரமடைந்தது எனக் கூறுகின்றமை கவனிக்கத்தக்கது.
சோழராட்சி இங்கு ஏற்பட்டபோது தமிழர்கள் பெரு மளவுக்கு ஈழத்திற்கு வந்தனர். இவர்களிற் படைவீரர்கள், வணிகர்கள், கலைஞர்கள், நிருவாகிகள், பிராமணர்கள் போன் றோர் கணிசமான தொகையினராகக் காணப்பட்டனர். சோழர் காலந் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமன்றிக் கலாசார வரலாற்றிலும் ஒரு முக்கிய காலகட்டமாக விளங்கிய தால் அக்கலாசார வளர்ச்சியின் அம்சங்கள் பல முன் எப் போதுமில்லாத அளவுக்கு இந்நாட்டிற் புகுவதற்கான வாய்ப்பை இவர்கள் ஆட்சி நல்கியதோடு அவை நிரந்தரமாக நீடித்து நிலைக்கவும் வழி சமைக்கப்பட்டது. இதனையே கிங்ஸ்லி டீ
சில்வா 1,
"சோழராட்சியின் தவிர்க்க முடியாத விளைவு யாதெனில் ஈழத்தின் மதத்துறையிலும் பண்பாட்டுத்துறையிலும் இந்து பிராமண சைவ சமய நடைமுறைகளும் திராவிடக் கலை யும் கட்டிடக்கலையும் தமிழ்மொழியும் ஊடுருவி மிகப் பலம் வாய்ந்த முறையில் மேலோங்கியமையே. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியப் படைஎடுப்புகள் ஈழத்தில் நடைபெற்றகாலை இந்தியாவில் பெளத்த மதம் வீழ்ச்சியடைந்திருந்ததோடு முக்கிய பெளத்த கல்வி நிலையங்கள் முஸ்லீம்களது படைஎடுப்பால் சீரழிந்தும் காணப்பட்டன. இப்போக்குகள் பின்நோக்கி
() 287 வரலாற்றுக் காலம் II

Page 150
மாற்றமுடியாதவாறு அமைந்தும் காணப்பட்டன. இக் காலந்தொட்டு ஈழத்தின் மீது தென்னிந்தியா செலுத்திய ஆதிக்கம் முற்று முழுதாக இந்து மத உள்ளடக்கத்தினைக் கொண்டதாகவே இருந்தது,** எனக் கூறுகின்றார். சோழராட்சி ஈழத்து வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தினை அரசரத்தினமும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.2
" சோழர்கள் தோற்கடிக்கப்பட்டுச் சிங்கள அரசர்களின் அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்ட பொழுதிலும் தமிழர்களது செல்வாக்கு ஒழிந்து விடவில்லை. தமிழர்களது எண்ணிக்கைப் பெருக்கமும், அவர்களது பொதுவான செல்வத்த நிலையும் படைத்துறையிலும், நிருவாகத் துறையிலும் அவர்கள் வகித்த செல்வாக்கான பதவிகளும் இதனைச் சாத்தியமற்றதாக்கி விட்டன."
மேற்கூறிய இக்கருத்தினை மனதிற் கொண்டே புகழ் பூத்த ஈழத்து வரலாற்றாசிரியர்களிலொருவரான மென்டிசும் இக்காலந்தொட்டு கி. பி. 1505இல் மேல்நாட்டவராகிய போத்துக்கேயர் ஈழத்திற்கு வரும் வரையிலுள்ள ஈழத்து வரலாற்றுக் காலப்பகுதியைத் தென்னிந்திய வரலாற்றுக் காலம் என அழைத்தார்.3 இவ்வாறு இவர் அழைத்துள்ள இக்காலப் பகுதியில் இரு பிரிவுகள் உள. முதலாவது பிரிவு நாம் இவ்வத்தியாயத்தில் ஆராயப்படும் காலப்பகுதியையும் , அதன் அடுத்த பிரிவு பிற்பட்ட காலப்பகுதியையுங் குறிக்கும். இவ்வாறு இவர் இதனை அழைப்பதற்குக் காரணம் இக்காலத்தில் தென்னிந்தியா ஈழத்து வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கமே ஆகும். இத்தகைய தாக்கத்திற்கு வழிவகுத்தது தமிழகத்தில் ஏற்பட்ட சோழரின் எழுச்சியும் அவர்கள் பின் எழுச்சி பெற்ற இரண்டாவது பாண்டியப் பேரரசுமாகும். இரண்டா வது பாண்டியப் பேரரசின் எழுச்சியோடுதான் வடபகுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைமையின்கீழ் * யாழ்ப்பான அரசு" எழுச்சி பெற்றதுங் குறிப்பிடத்தக்கது. இதனால் இக்காலப்பகுதி வரலாற்றிலே தமிழகத்தில் ஆட்சி செய்த சோழரும் பாண்டியரும் ஈழத்தின் வடபகுதியோடு கொண் டிருந்த தொடர்பு பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 268 இ

நாம் ஆராயும் இக்காலத்தைத்தான் பாளி, சிங்கள வரலாற்று நூல்கள் பொலநறுவைக் காலம் என அழைக்கின்றன. எனினும், இது பொலநறுவை அரசின் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கிய காலப்பகுதி என்றால் மிகையாகாது. முதலாவது பகுதி ஈழத்திற் சோழராட்சிக் காலப்பகுதிக்குரியது. சோழர்கள் தான் அநுராதபுரத்தினை அழித்து, அதுராதபுர அரசின் வரலாற்றை அஸ்தமிக்கச் செய்தவர்கள். இவர்களே அநுராத புர அரசர் காலத்தில் வெறும் இராணுவத் தளமாக விளங் கிய பொலநறுவையை "ஜனநாத மங்கலம் " எனப் பெய சிட்டுத் தமது அரசின் நிருவாக மையமாக்கியவர்கள. சோழர் நாட்டை விட்டுச் சென்றாலும் மாகனின் வீழ்ச்சிவரை { கி. பி. 1255 ) இது தொடர்ந்து நிருவாக 60) LDULA)ffé5 விளங்கியது. சோழரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குச் சற்றுக் கூடிய காலப்பகுதியைச் சிங்கள மன்னர்கள் காலம் ( கி. பி. 1055 - 1186 ) எனலாம். இதில் விஜயபாகு (கி. பி. 1070 - 1110), முதலாம் பராக்கிரம பாகு ( கி. பி. 1153 - 1186 ) ஆகியோரின் ஆட்சிக் காலம் முக்கிய காலகட்டங்களாக அமைக்கின்றன.
பராக்கிரமபாகுவின் மரணத்தோடு இன்னொரு காலப் பகுதி பொலநறுவைக்கால வரலாற்றில் ஆரம்பமாகின்றது. இது தான் கலிங்க வம்ச மன்னர்கள் காலமாகும். சந்தானமில்லாது இறந்த பராக்கிரமபாகுவுக்குப் பின்னர் அவனது சகோதரியின் மகன் இரண்டாவது விஜயபாகு அரசு கட்டிலேறி, அவனாட்சி ஒரு வருடத்தில் முடிவுறக் ( 1187 ) கலிங்க வம்சத்து மன்னர் ஆட்சி ஆரம்பமாகின்றது. இக்காலத்தில் சுதேச சிங்கள அரசர்கள் கலிங்க வம்சத்தவரோடு கொண்ட மணத் தொடர் பால் இவ்வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் அரசு கட்டிலேறினர். இவர்களில் முதன்மையானவன் நிசங்க மல்லனெனினும் ( 1187 - 1 196) இவனாட்சி ஒன்பது வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுகளுச்குச் சற்றுக் கூடிய இக்காலப் பகுதியில் பன்னிரண்டு அரசர்களும் இரண்டு அரசியர்களும் அரசு கட்டிலேறியுள்ளனர். அரசர்களிற் பத்துப் பேர் கலிங்கராகவும், ஒருவன் பாண்டியனாகவும், ஒருவன் மட் டுமே சிங்கள வம்சத்தவனாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
() 289 வரலாற்றுக் காலம் III

Page 151
இதன் பின்னர் 1215இல் ஈழத்தினைக் கலிங்கநாட்டினைச் சேர்ந்த மாகன் தமிழர், கேரளப்படைகளின் உதவியோடு பொலநறுவை அரசின் மீது படைஎடுத்து அதனைக் கைப் பற்றி, 1255 வரை மன்னனாக விளங்கினான். முன்னைய கலிங்க வம்சத்தவர்கள் காலத்தினை விட இவனின் காலம் வலுவுள்ள ஒரு மன்னனின் காலமாகக் காணப்படுவதால் 1186 gai) பராக்கிரமபாகுவின் மரணத்தோடு இ வ னி ன் காலம் வரையிலுள்ள காலப்பகுதியைக் கலிங்க வம்ச காலப் பகுதி எனக் கொண்டாலுங்கூட இருகாலப் பகுதிகளுக்கு மிடையே காணப்பட்ட தனித்துவமான பண்புகள் இவற்றை இரு பகுதிகளாக ஆக்கி விடுகின்றன. சுருங்கக் கூறின் பொலநறுவை அரசு காலத்தின் அரசியல் வரலாற்றினை
சோழர் காலம் ( 993 - 1070 ), சிங்கள மன்னர்கள் காலம் ( 1070 - 1186 ), கலிங்க வம்சத்தவர் காலம் ( கி. பி. 1187 - 1215 ), மாகன் காலம் ( 1215 - 1255 ) ଘTଙT
நான்கு கூறுகளாகப் பிரித்தாராயலாம்.
சோழரின் ஆன்ண ஈழத்தின் வடக்கு, வட - கிழக்கு, வட மேற்குப் பகுதிகளிலே தான் வலுப்பெற்றுக் காணப்பட்ட தெனலாம். ஏனெனில் பாளி நூல்களை நோக்குகின்ற போதும் ஈழத்தின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து அவர்கள் ஆட்சிக் கெதிராகக் கிளர்ச்சிகள் நடைபெற்றமை புலனா கின்றது. இதனால் தான் ஸ்பென்சர் போன்றோர் ஈழத்தி லேற்பட்ட சோழர் படை எடுப்புகளின் பல்வேறு படிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் இவை ஆரம்பத்திற் கொள்ளை அடித்தலை நோக்கமாகக் கொண்டிருந்தன வென்றும், முழு ஈழத்தினையும் நேரடியாகத் தொடர்ந்து தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வரமுடியாத நிலையில் தென்கிழக்கிலிருந்து ஏற்பட்ட கொரில்லாத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது இறுதியில் ஈழத்தின் மீதான தமது பிடியைக் கைவிட்ட னர் என்றும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.4
ஈழத்திலுள்ள சோழக் கல்வெட்டுகளை நோக்கும் போதும் சோழ மன்னர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை
நோக்குகின்றபோதும் பொலநறுவை அரசின் அரசியல்,
யாழ். தொன்மை வரலாறு 27o ()

பொருளாதார, கலாசார வரலாற்றில் சோழராட்சி பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியமை புலனாகின்றது. சோழரின் நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றியவர்களாகவே சோழருக்குப் பின்னர் பொலநறுவையில் ஆட்சி செய்த விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் காணப் படுவது குறிப்பிடத்தக்கது. எனினுஞ் சோழரின் நடவடிக்கை களை அவர்களின் பிற நடவடிக்கைகளின் பின்னணியிலும் ஈழத்து மன்னராலோ அல்லது ஈழத்தின் மீது படைஎடுத்த பிற மன்னராலோ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பின்னணியிலும் ஒப்பிட்டு நோக்கும் போது கொள்ளை அடித்தலே இவர்களின் பிரதான குறிக்கோளாக இருந்தது என்பது தவறான கருத்தாகும். எப்போரிலும் கொள்ளை அடித்தலும் ஒரம்சமாக இருப்பது வழக்கந்தான். சோழரின் நடவடிக்கைகளில் இது விதந்து காணப்பட்ட தென்று கூறு வதற்கான ஆதாரமில்லை. கொள்ளை அடித்தலை விட அரசியல், பொருளாதாரரீதியில் தமது ஆதிக்கத்தினை வலுப் படுத்துதலே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இதுபற்றிப் பின்னர் ஆராய்வோம்.
நிற்க, ஈழத்துச் சிங்கள மன்னனாகிய ஐந்தாவது மகிந் தனைச் சோழர் சிறைக்கைதியாகத் தமது நாட்டிற்கு இட்டுச் சென்றாலும் உரோகணையில் தமது ஆட்சிப் பீடத்தினை அமைத்த ஐந்தாவது மகிந்தனின் DE GÖTT 6ðIT ஆறாவது காஸ்ப்ப (கி. பி. 1029 - 1040), DST6) is கித்தி ( கி. பி. 1040 - 42 ), விக்கிரமபாண்டு ( கி. பி. 1042 - 43 ), ஜகதிபால (கி. பி. 1048 - 46 ), பராக்கிரமபாண்டு ( கி. பி. 046 - 48 ), லோகேஸ்வர ( லோக ) ( கி. பி. 1048 - 54), எழாவது காஸப்ப (கி. பி. 1954 - 55), முதலாவது விஜயபாகு (கி. பி. 1055 - 1110) ஆகியோர் சோழருக்குத் தமது நட வடிக்கைகள் மூலம் தொந்தரவு கொடுத்தமை குறிப்பிடத் தக்கது. எனினுஞ் சோழப் படைகள் அடிக்கடி உரோகனைக் குச் சென்ற போதெல்லாம் அதனை எதிர்த்து வெற்றி கொள் வநிற் சக்தியற்றவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். இவர்களிற் பராக்கிரமபாண்டு என்பவன் சோழமன்னனான
O 271 வரலாற்றுக் காலம் II

Page 152
இராஜாதிராஜனால் தோற்கடிக்கப்பட்ட விக்கிரம பாண்டிய னாவன். சிங்கள இராசவம்சத்தோடு கொண்டிருந்த உறவால் இவன் உரோகணையில் ஆட்சியுரிமையைப் பெற்றான்.
சிங்களமன்னரின் ஆட்சிக்காலம் பொலநறுவைக் காலத்தில் அமைதியான காலமாகக் கூறப்பட்டா லுங் கூட இதுவே பல சிக்கல்கள் நிறைந்த காலமும் ஆகும். இவர் களுள் முதலாவது விஜயபாகு சோழரை வெற்றி கொள்வதில் வெற்றியடைந் தாலுங்கூடச் சோழப்படை எடுப்பின் அச்சுறுத்தலோடுதான் அரசாட்சி செய்தான். ஈழத்தின் வடபகுதியில் இவனது ஆட்சி பரந்திருந்தது பற்றியோ இவன் இப்பகுதியில் மேற் கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றியேர் சான்றுகள் கிடைக்காவிட்டாலும், சோழருக்கெதிரான இவனின் இரா ணுவ நடவடிக்கைகளில் மகாதீர்த்தம், மட்டிவால் தீர்த்தம் (பூநகரியிலுள்ள மட்டுவில் நாடு) போன்றன குறிக்கப்படு வதை நோக்கும்போது இவனது மேலாணை ஒரு குறிப்
பிட்ட காலத்திற்காவது அதாவது சோழருக்கெதிராக இவன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலகட்டத்திலாவது இப்பகுதியில் காணப்பட்டிருக்கலாம். எனினும் இவனது மரணத்தின் u$ର୍ଦଶ ଜotiff கிட்டத்தட்ட
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொலநறுவை அரசில் ஒர் மந்த நிலையே காணப்பட்டது. ஜெயபாகுவின் ஒரு வருட ஆட்சியைத் தவிர இங்கு ஆட்சி செய்த இரண்டாவது விக்கிரமபாகுவோ ( கி. பி. 1111 - 1132 ), இரண்டாவது கஜபாகுவோ ( 1132 - 1153 ) விஜயபாகுவைப் போன்று வலிமையுள்ள மன்னர்களாகக் காணப்படாததோடு, பெளத்த மதத்தினைத் தழுவாது இந்து மதத்தினைத் தழுவி வழக்க மாசுப் பெளத்த மன்னர்களுக்குரிய முடிசூட்டு விழாவையும்
காணாது ஆட்சி செய்தார்கள் .5
வடபகுதியில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் எவையுங் காணப்படவில்லை. எனினும் இவர்களில் இரண்டாவது கஜபாகுவின் காலஞ் சிங்கள அரச வம்சத்தினரிடையே அதிகாரப் போட்டி நிலவிய காலமாகும். தக்கினதேசம், உரோகணை ஆகிய் பிராந்தியங்கள் இவனது
யாழ் - தொன்மை வரலாறு 272 O

ஆணையை ஏற்காது தனித்துவமான போக்கில் சென்றமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளை ஒன்றுபடுத்திப் பொலநறுவை யில் ஆட்சியைக் கைப்பற்றியவன் பராக்கிரமபாகுவா வான்.
பராக்கிரமபாகு சோழருக் கெதிராக மேற்கொண்ட படை எடுப்புகளில் வடபகுதியிலுள்ள புலைச்சேரி, மட்டுவில் நாடு,
மகாதீர்த்தம் ஆகிய துறைமுகப்பட்டிணங்கள் குறிப்பிடப்படு
கின்றன. அத்துடன் ஊர்காவற்றுறையிலும் இம்மன்னனின் தமிழ்க் கல்வெட்டுக் காணப்படுகின்றது. இதனால் இவன் காலம் ஒரளவுக்குப் பொலநறுவை அரசரின் மேலாணை வட பகுதியில் பரந்ததை எடுத்துக் காட்டினாலுங் கூட, வட
பகுதி பொலநறுவை அரசின் அங்கமாக ஆளப்பட்டதற்
கான விரிவான தடயங்கள் காணப்படவில்லை.
பராக்கிரமபாகுவிற்குப் பின் அரசுகட்டிலேறிய அரச வம் சத்தில் நிஸங்கமல்லன் (கி. பி. 1187 - 1198) வலிமையுடையவ னாகவும், அவனின் ஆணை ஈழம் முழுவதும் பரந்ததாகவும் பாளி நூல்களும் இவனது கல்வெட்டுகளும் எடுத்துக்காட்டினா லுங் கூட வடபகுதியில் உள்ள மகாதீர்த்தம் மட்டுமே, இவனின் இராமேஸ்வரம் மீதான திக் விஜயத்தின்போது குறிப்பிடப் படுகின்றது. வடபகுதியோடு இவன் கொண்டிருந்த தொடர்பு பற்றிய பிற சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. இவற்றை விட இவனின் ஆட்சிக்குப் பல சவால்களும் காணப்பட்டதை இவனின் கல்வெட்டுகளே எடுத்தியம்புகின்றன.6 கேரளர், சோழர், பாண்டியர் மட்டுமன்றி "கோவிகுல" என அழைக் கப்பட்ட நிலக்கிழாரும் இவர்களிற் பிரதானமான வர்களாவர். நிஸங்கமல்லனின் மறைவும், வலிமையற்ற கலிங்கவம்ச அரசர்களிடையே காணப்பட்ட அரசியற் பூசலும் வடபகுதியில் இவர்களின் ஆணை செல்வதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. எனினும் மாகனது படைகள் நிலை கொண்டிருந்த இடங்கள் பற்றிச் சூளவம்சம் கூறுகையில் வடபகுதியிலுள்ள மன்னார், ம7ந்தை, குருந்தி, இலுப்பைக்கடவை, ஊர்காவற்றுறை, வலிகாமம் ஆகியனவற்றை எடுத்துக்காட்டுவது அவதானிக் கத்தக்கது.7 இதனால் மாகனின் மேலாணை வடபகுதியில் பரந்திருந்தது என்பது உறுதியாகின்றது. இக்காலம் தான் சந்திரபானு என்னும் சாவகன் தமிழகத்திலிருந்து திரட்டிய படையுடன் வடபகுதியில் வந்திறங்கிய காலமாகும்.
0 273 வரலாற்றுக் காலம் 11

Page 153
மேற்கூறப்பட்ட வரலாறே இக்காலத்திற்குரிய பொல நறுவை மன்னர்களது வரலாறு மட்டுமன்றி, ஈழத்தின் வட பகுதியோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய வரலாறுமாகும். இத்தகைய வரலாற்றுத்துகள்களைக் கொண்டு இப்பகுதி வரலாற்றை அறிந்து கொள்ளுவது மிக மிகச் சிரமமானதே. இப்பகுதியின் வரலாறு பொலநறுவை அரசின் வரலாற்றுப் போக்கைவிடத் தனித்துவமான ஒரு போக்கிற் சென்றதாற்றான் இப்பகுதிக்குரிய சான்றுகள் பொல நறுவை அரசின் வரலாற்றைக் குறிக்கும் பாளி நூல்களிலோ அன்றிச் சிங்களக் கல்வெட்டுகளிலோ காணப்படவில்லை. இத னால் எமது ஆய்வில் இப்பகுதிக்குரிய நூல்களாகிய கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, வையா, வையாபாடல் போன்றனவற்றில் காணப்படும் வரலாற்றம்சங்களை ஆராய்
வது அவசியமாகின்றது.
6356) fruttu po Fran6) யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் யாழ்பாடி இறந்த பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகள் அரசு கட்டிலேறும்வரை ஒரு இடைவெளி காணப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. இக்காலத்திற்கும் ஆரியச்சக்கரவர்த்தி களுக்கும் இணைப்பை ஏற்படுத்துபவனாக "பாண்டி மழவன்" என்ற பிரதானி இந்நூல்களிற் குறிப்பிடப்படுகின்றான்.8 கைலாயமாலை இவனின் வரலாற்றையுங் கூறுகின்றது. இவன் பாண்டி நாட்டிலுள்ள பொன்பற்றியூரிலுள்ள செல்வராசா என்பவனின் மகனாவான். இவனின் மழவ குலம் பாரம்பரிய மாக முடிசூட்டுவிழாவில் மன்னருக்குரிய முடியினை எடுத்துக் கொடுக்கும் சலாக்கியத்தினைப் பெற்றிருந்தது. இவன் ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோனான பாண்டியசேகரனின் மகனா கிய சிங்கை ஆரியன் மதுரையில் அரசாட்சி செய்து கொண் டிருந்தபோது யாழ்ப்பாணத்தினை ஆள அவனை அழைத்து வந்த செய்தி கூறப்படுகின்றது. இதில் முக்கியமான அம்சம் யாதெனில் யாழ்பாடியின் மரணத்தின் பின்னர் யாழ்ப்பாணம் அரசனின்றிக் காணப்படல் - பாண்டிமழவன் போன்றோர் இப்பகுதியில் ஆணை செலுத்துதல் - ஈற்றில் ஆரியச்சக்கரவர்த் திகள் அரசை அமைத்தல் ஆகியனவாகும். ஆரியச் சக்கர வர்த்திகள் காலம் தனியான பகுதியாக நாம் ஆராயும் இக்
யாழ். - தொன்மை வரலாறு 274 )ே

காலத்திற்குப் பிற்பட்டுக்காணப்படுவதால் இவ்வத்தியாயம் இந்நூல்கள் கூறும் மேற்கூறிய யாழ்பாடி - பாண்டி மழவன் பற்றிய அம்சங்களை ஆராய்வதாக அமைகின்றது. முதவில் கைலாயமாலை தரும் தகவலை நோக்குவாம்.9
** . . . . . அவிர் கிரண
சந்திரனில்லாத வெழிற் ராரகை பொல் வானரசாள் இந்திரனில்லாத விமையவர் போல் - விந்தை கரை சேரிம் மாநகர்க்கோர் காவலரண் செய்யுந் தரை யரசனின்றித் தளம்ப . . . "'
மேற்கூறிய அடிகள் யாழ்பாடியின் இறப்பிற்குப் பின்னர் அரசனின்றி இப்பகுதி காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின் றன. இக்காலத்தில் இங்கு காணப்பட்ட பிரதானிகளில் ஒருவனாகிய பாண்டி மழவன் மதுரைக்குச் சென்று சிங்கை யாரியனை யாழ்ப்பாணம் வந்து அரசமைக்கும்படி அழைத்த தைப் பின்வரும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.10
* பொன் பற்றி யூரனண்டர் போரிலழல் சூரன்
மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்ட புகழ் வேளாளர் வங்கிஷத்திற் றிட்டமுடன் வந்து செனனித்தோன் - மட்டுலவுஞ் செங்கு வளைத்தார் மார்பன் செல்வராயன் பயந்த துங்க மல்ை யுச்சிச் சுடர் விளக்குக் - கங்கை குலங் கொண்டாடுங் கொண்டல் குடிமைகளோரை வரையுந் தொண்டாகவே கொணர்ந்த சூழ்ச்சியுள்ளாள்-மண்டுவிடை தூண்டுமே ராளன் சுகிர்தன் சுபவசனன் பாண்டி மழவன் பரிந்து சென்று - வேண்டிப் பெருகு புகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய
வருகுதி நீ யென்று வணங்கத் .
இனி யாழ்ப்பாண வைபவமாலை தரும் சான்றுகளை நோக்குவாம். யாழ்ப்பாண வைபவமாலை இவ்விரு நிகழ்ச்சி களையும் தனித்தனியாகக் கூறுவதும் அவதானிக்கத்தக்கது. இந்நூல் யாழ்பாடி பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.11
O 275 வரலாற்றுக் காலம் II

Page 154
" யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு
இவ்விடத்தில் வந்திருந்து, வடதிசையிற் சில தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றி இவ்விடமிருந்த சிங்களவர்களையும் அவர்களையும் ஆண்டு, முதிர் வயதுள் ளவனாய் இருந்து இறந்து போனான். அக்காலத்திலே சிங்களவரும் பிறரும் இந்நாட்டை அரசாளக் கருதித் தமிழ்க் குடிகளை யொடுக்கியதால் தமிழ்க்குடிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய் விட்டார்கள்.”*
மேலும் யாழ்ப்பாணம் அரசனின்றித் தத்தளித்த காலத்தில் பாண்டி மழவன் தமிழகம் சென்று யாழ்ப்பாணத்தை அரசாளச் சிங்கையாரியன் என்ற இராசகுமாரனை அழைத்து வந்த செய்தி பற்றிக் கூறியுள்ளதாவது,12
** இந்த நிலைபரத்தில் யாழ்ப்பாணம் கொஞ்சக் காலம் தளம்பிக் கொண்டிருக்கையில், சிங்கள கலகத்துக்கு எடுபடாமல் இருந்து காலம் விட்டு வந்த பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி மழவன் என்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே சோழ நாட்டிலிருந்து வந்து இராச உத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டிருந்த திசை யுக்கிர சோழன் மகனாகிய சிங்ககேதுவுக்கு மருமகனான சிங்கையாரியன் என்னுஞ் சூரிய வமிசத்து இராசகுமார னைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தை அறிவித்து இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டு மென்று கேட்க, சிங்கையாரியராசன் மறுத்துப் பேசாமற்
பாண்டிமழவன் கேள்விக்கு உடன்பட்டு.
ஆனால் வையா, 13 வையாபாடல்14 போன்ற நூல்கள் பாண்டி மழவன் யாழ்ப்பாண அரசின் முதல் மன்னனாகிய சிங்கை ஆரியனை அழைத்து வந்த செய்தி திரிபுபடுத்தப்பட்டு யாழ்பாடியே இவனை அழைத்து வந்தான் என்று கூறுகின்றன. மேலும் குலகேதுவின் புதல்வனாகவே யாழ்ப்பாண அரசின் முதல்வனான சிங்கையாரியன் இவற்றுள் விளிக்கப்பட்டுள்ளான். அத்துடன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளில் முதல்வனைச் சிங்கையாரியன் என்று கைலாயமாலை, யாழ்ப் பாண வைபவமாலை ஆகியன கூற, இந்நூல்களிற் கூழங்கைச்
யாழ். - தொன்மை வரலாறு 278 கு

சக்கரவர்த்தி, கோளுறுகரத்துக்குரிசில் என்ற பெயர்களே காணப் படுகின்றமை அவதானிக்கத்தக்கது. எனினும் இந்நூல்களின் கூற்றினை அங்கீகரிப்பது போல யாழ்ப்பாண வைபவமாலை பிறிதோரிடத்தில் இம்மன்னனுக்கு ஒரு கை கூழங்கையாயிருந் ததினால் இவனைக் கூழங்கையாரியன் என்றும், விசய கூழங் கைச் சக்கரவர்த்தியென்றுஞ் சொல் வார்கள் எனக் குறிப் பிட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.18 இம்மன்னனின் ஒரு கை முடமான கையாகக் காணப்பட்டதாற் போலும் இவன் * கோளுறுகரத்துக்குரிசில்' என அழைக்கப்பட்ட செய்தியை வையா பாடல் கூறுகின்றது.16
மேற்கூறிய செய்தியே வையாவில் பின்வருமாறு இடம் பெற் றுள்ளது.17
'' . . . . . . அவ்விடம் இராச்சியம் பண்ணி இராசாவாக இருக்கும்படி உம்முடைய பிள்ளைகளிலே ஒரு பிள்ளை தரவேண்டுமென்று கேட்ட பரிசால் அவரும் மனம் பொருந்தித் தன்னுடைய குமாரன் கையொன்று சொத்தி யாயிருந்த பிள்ளையைக் கொடுத்தார். அந்தப் பிள்ளையை யாழ்ப்பாடி ஆகிறவன் கூட்டிவந்து விசய கூழங்கைச் சக்கரவர்த்தி என்னும் பட்டமுங் கட்டி அரசு பண்ணும் படி வைத்து மணற்றிடல் என்னுங் காட்டுக்கு யாழ்ப் பாணம் என்ற பட்டமும் தரித்து தனது நாடென்று யாவருஞ் சொல்லும்படிக்கு யாழ்ப்பாடியிருந்தான். அப் போது கலியுகத்திலே மூவாயிரம் வருஷம் சென்று போச்
சிது.
வையா, வையாபாடல் ஆகிய நூல்களிலே யாழ்பாடியே மதுரையில் இருந்து ஆரியச்சக்கரவர்த்திகளின் முதல்வனாகிய கூழங்கைச் சக்கரவர்த்தியை அழைத்து வந்தமை கூறப் படுகின்றது. பாண்டிமழவன் பற்றிய குறிப்பு இவற்றில் இடம் பெறவில்லை. இதனால் கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய நூல்களில் பாண்டி மழவனே பாண்டி நாட்டி லுள்ள மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்தை அரசாளச் சிங்கை யாரியனை அழைத்து வந்த செய்தி கூற வையா, வையா
பாடல் ஆகிய நூல்களில் யாழ்பாடியுடன் அது இணைக்கப்
O 277 வரலாற்றுக் காலம் II

Page 155
பட்டிருக்கின்றன போலத் தோன்றுகின்றது. இக்கால யாழ்ப்பாண வரலாற்றில் யாழ்பாடி கதை - பாண்டிமழவன் கதை - சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் கதை ஆகியன இவ்விராச்சிய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களைக் குறித் து நின்றதை அறியாத வையா, வையாபாடல் ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தினை ஆட்சி செய்ய வந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் முதல்வனை யாழ்பாடி கதையுடன் இணைத்துள்ளனர். காலவரன் முறையில் நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்தும் மரபு தமிழ் நூலோரிடம் காணப்படாமை யையே இந்நூல்கள் தரும் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. இச்சம்பவம் பற்றிப் பத்மநாதன் பின் வருமாறு கூறி யுள்ளார்.18
*யாழ்ப்பாணன் தனது பிரதேசத்தினை ஆளுவதற்கு ஒரு புதல்வனை அனுப்புமாறு வடநாட்டு மதுரையிலுள்ள குலகேது மன்னனை வேண்டினான் என்றும் அவ் வேண்டுகோளுக்கிணங்கிய குலகேது மன்னன் கையொன்று சொத்தியாகவிருந்த தன் புதல்வனை அனுப்பி வைத் தான் எனவும் வையா கூறுகின்றது. இக்கதையிலே கவனிக்க வேண்டியது யாழ்ப்பாணத்து மு த ல ர சன் மதுரையிலிருந்து வந்தான் என்ற மரபு. வடநாட்டு மதுரை என்பதை (இலங்கைக்கு) வடக்கிலே உள்ள பாரத நாட்டு மது  ைர யெ ன க் கொள்வோமாயின் யாழ்ப் பாணத்தை யாண்ட முதலரசன் பாண்டியரின் மதுரையி லிருந்து வந்தான் என்ற ஐதீகத்தையே வையாபாடல் குறிப்பிடுகின்றதெனக் கொள்ள வேண்டும். குலகேது, குலசேகரன் ஆகியவிரு சொற்களும் ஒரு பொருளைத் தருகின்றமையால் (மாறவர்மன்) குலசேகரன் என்ற பாண்டிய மன்னனையே வையாபாடல் மதுரையிலாண்ட குலகேது எனக் குறிப்பிடுகின்றதெனக் கருதலாம். ஆரியச் சக்கரவர்த்திகளுள் முதல்வனாகிய முதலாம் சிங்கையா ரியன் மதுரையிலாண்ட பாண்டியனின் மகனெனக் கைலாய மாலை கூறும். ஆயினும், சிங்கையாரியன் என்ற இள வரசனை மதுரையிலிருந்து பாண்டிமழவன் அழைத்து வந்தானென்று கைலாயமாலை சொல்லுகையில் வையா
யாழ். - தொன்மை வரலாறு 278 9ே

பr டல் மதுரையிலிருந்து கூளங்கைச் சக்கரவர்த்தி என்ற இளவரசனை யாழ்ப்பாணன் அழைத்து வந்தான் என்று சொல்லுகின்றது. இருநூல்களும் ஒரே நிகழ்ச்சி பற்றியே - பாண்டிநாட்டால் வந்த ஆரியச்சக்கரவர்த்தி யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றி அங்கு அரசனாகியமை பற்றியே கூறுகின்றனவென்றும் கருதலாம். இருநூல்களும் ஒரு நிகழ்ச்சி பற்றிக் கூறினும் அவை கூறும் முறையிலே வேறுபாடுகள் உள்ளன. 6 soft frta வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரளவிலாயினும் புரிந்து கொள்ளக்கூடிய முறையிலே எடுத்துரைக்கின்றது. வையாபாடலிலுள்ள மரபில் வரலாற்று நிகழ்ச்சிகள் புனை கதைகளிலே மறைகின்றன." எனினும் பத்மநாதன் கூறுவது போலக் கைலாயமாலை கூறும் பாண்டி மழவனே வையா, வையாபாடல் போன்ற நூல்க களில் யாழ்பாடியாகக் குறிக்கப்பட்டுள்ளான் என்று கருது வது பொருத்தமாகத் தெரியவில்லை. உண்மையிலே யாழ் பாடிக் கதை, பாண்டி மழவன் கதை ஆகியன ஆரியச்சக்கர வர்த்திகள் காலத்திற்கு முன்னர் யாழ்ப்பாணப் பகுதி நோக்கி இரு வேறு காலப்பகுதிகளில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப் பெயர்வுகள் பற்றிய தகவல்களையே தருகின்றன. யாழ்பாடிக் கதையை ஈழ - தமிழக வரலாற்றுப் பின்னணி யிற் ஆராய்ந்து கி. பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளுக்குரிய செய்தியையே இது கருவூலமாகக் கொண்டிருந்ததென்பதை முந்திய அதிகாரத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம். அவ்வாறே , யாழ்பாடி இறந்த பின்னர் “யாழ்ப்பாணம் சிலகாலம் அரச னின்றித் தளம்பியதாக, யாழ்ப்பாண வைபவமாலை, கைலாய மாலை கூறுஞ் செய்திகளையும், பின்னர் பாண்டிமழவன் யாழ்ப்பாணத்திற் குடிகொண்டிருந்த செய்தியையும் ஈழத்துத் தமிழக வரலாற்றுப் பின்னணியில் ஆராய்வதும் அவசியமா கின்றது. வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியில் ஈழமும் சோழரும்
இவ் ஆய்வில் முதன்மை பெறுவது கி. பி. 11ஆம் நூற் றாண்டிற்குரிய தமிழக - ஈழத்து வரலாற்று நிகழ்ச்சிகளாகும்.
O 27g வரலாற்றுக் காலம் II

Page 156
இந்நிகழ்ச்சிகளுள் இக்காலத்திற் சோழவம்சம் பேரரசாக எழுச்சி பெற்றமை ஒரு மைற்கல்லாக அமைகின்றது. யாழ் பாடி கதைக்குப் பின்னருள்ள நிகழ்ச்சியாகத் தமிழ் நூல்க ளாகிய கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை ஆகி யனவற்றிற் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிலகாலம் அரசனின்றித் தளம்பியதாகக் கூறப்படுங் காலப்பகுதி ஈழத் தில் சோழராட்சிக் காலத்தைக் குறிக்கின்றது எனலாம். ஏனெனில் ஈழத்தரசரின் தலைமை இக்காலத்தில் அழிக்கப் பட்டது. ஈழம் சோழ அரசின் ஒரு மாகாணமாக மும்முடிச் சோழ மண்டலமாகச் சோழ அரசனின் இராசப் பிரதிநிதி யான சோழ இலங்கேஸ்வரனால் ஆளப்பட்ட வரலாற்றுப் பின் னணியையே தமிழ் நூல்களின் மேற்கூறிய செய்தி குறிக்
கின்றது. சோழரின் நடவடிக்கைகள் சிங்கள அரசோடு தொடர்புள்ளனவாக அமைந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற, அவர்கள் காலத்திற்குரிய கல்வெட்டுகள், நான யங்கள், சிற்பங்கள், இடப்பெயர்கள் ஆகியன வடபகுதி யோடு அவர்களை இணைக்கின்றன. இதனை நோக்குகின்ற போது ஈழத்திற் சோழ மன்னர் மேற்கொண்ட
நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராயவேண்டியது அவசியமா கின்றது. M
ஈழத்திற் சோழராட்சி பற்றிய தகவல்களைப் பல்வகை யான சான்றுகள் மூலம் அறியலாம். இலக்கிய ஆதாரங்கள், தமிழ்க் கல்வெட்டுகள், கட்டிடங்கள், சிற்பங்கள், நாணயங்கள் ஆகியன இவற்றுள் முக்கியமானவையாகும். ஈழத்தின் பாளி நூல்களைப் பொறுத்தமட்டிலே தமிழகத்திலிருந்து வந்த படை எடுப்புகளைக் கண்டிக்கும் அதே தொனி சோழர் காலம் பற்றிய இவைகளின் குறிப்புகளிற் கடைப் பிடிக்கப் பட்டாலுங் கூட, இங்கு கிடைத்த பிற சான்றுகள், பாளி நூல்களின் சான்றுகளிற் காணப்படுந் தவறுகளைச் சீர்துரக் கிப் பார்க்கவும் தேவுையான இடங்களில் அவை தருந் தகவல்களைத் திருத்தவும் உதவுகின்றன. முதன்முதலாகச் சோழரது காலத்திற்றான் தமிழ்க் கல்வெட்டுகள் எண் ணிக்கை ரீதியில் ஈழத்திற் கூடிக் காணப்படுகின்றன. இவை ஈழத்தின் பல பகுதிகளிலுங் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்
யாழ். - தொன்மை வரலாறு 2eo இ9

கல்வெட்டுகள் சோழ மன்னர்களான முதலாம் இராஜராஜன் (கி. பி. 985 - 1016), முதலாம் இராஜேந்திரன் (கி. பி. 10141044), இரண்டாம் இராஜேந்திரன் (கி. பி. 1051 - 1063), அதிராஜேந்திரன் (கி. பி. 1067 - 1070) ஆகியோர் காலத்திற் குரியனவாகக் காணப்பட்டாலுங்கூட, அதிக அளவினதாகிய கல்வெட்டுகள் ஈழம் முழுவதையுந் தனது ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்த முதலாவது இராஜராஜனின் மகனாகிய முத லாம் இராஜேந்திரன் காலத்திற்கே உரியனவாகக் காணப்படு கின்றன. இத்தகைய கல்வெட்டுகள் மாந்தை, பொலநறுவை, பதவியா, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, மெடிறிகிரியா, கந்தளாய், நிலாவெளி, மானாங்கேணி, திருகோணமலை, பெரியகுளம் ஆகிய இடங்களிற் கிடைத்துள்ளன. யாழ்ப் பாண அரசின் வரலாற்றைக் கூறுந் தமிழ் நூல்களிற் சோழரின் நடவடிக்கைகள் பற்றிய சான்றாதாரங்கள் காணப் படவில்லை. பாளி நூல்களிலுஞ் சோழரது அரசியல் நட வடிக்கை பற்றிய சான்றுகள் சுருக்கமாகவே காணப்படுகின் றன. ஆனால் மேற்கூறிய இடங்களிற் கிடைத்த கல்வெட்டு களிலிருந்து இக்கால அரசியல், நிர்வாக, சமூக, பொருளா தார நடவடிக்கைகள் பற்றி விரிவாக அறிய முடிவதால் இவை ஈழத்திற் சோழரின் நடவடிக்கைகளை ஆராய்வதற்குப் பிரதான சான்றுகளாக விளங்குகின்றன. ஈழத்திற் கிடைக்குஞ் சோழர் காலச் சிவாலயங்கள், இவற்றுட் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஆகியனவுஞ் சோழரின் கலாசார வரலாற்றுக்குரிய முக்கிய சான்றாதாரங்களாக விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
ஈழநாட்டின் மீது சோழர் மேற்கொண்ட படை எடுப் பினை இதற்கு முன்னர் சோழர் மேற்கொண்ட படை எடுப்புகளின் பின்னணியிலும் இது நிகழ்ந்த காலத்தைய அரசியல் - பொருளாதாரப் பின்னணியிலும் அலசுவது அவசிய மாகின்றது. முதலாம், இரண்டாம் பராந்தகன் காலப் படை எடுப்புகள் ஈழத்தினை அவர்களின் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வருவதில் வெற்றிபெறவில்லையாயினும் முதலாவது இராஜராஜன் காலத்திற் (கி. பி. 993 - 1010) சோழ அரசு சாம்ராஜ்ய அரசாக உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
O 281 வரலாற்றுக் காலம் II

Page 157
இராஜராஜன் தொடக்கிவைத்த பணி இவனின் மகனாகிய இராஜேந்திரனால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தரையில் மட்டுமன்றிக் கடலிலுந் தமது ஆதிக்கத்தினைப் பரப்ப இவர்கள் விழைந்தனர். இதனாற் சேர, பாண்டிய மண்ட லங்களைத் தனது ஆணைக்குக் கீழ்க் கொண்டுவந்த முத லாம் இராஜராஜனின் அடுத்த பணியாக முன்னர் முற்றுப் பெறாத ஈழ முற்றுகை அமைந்ததில் வியப்பில்லை. முத லாம் இராஜேந்திரனால் இப்பணி நிறைவேற்றப்பட்டது. இவ் வாறு பேரரசுக் கோட்பாட்டில் இயங்கிய முதலாவது இராஜ ராஜனின் பணி பற்றி நீலகண்ட சாஸ்திரி பின்வருமாறு கூறுவது அவதானிக்கத்தக்கது.19
* தனது நாட்டின் வாணிபத்தை விஸ்தரிக்கும் நோக் குடன் (இராஜராஜன்) கடலாதிக்கத்தினைப் பரப்புவதில் தீவிர அக்கறை காட்டினான். இதன் மூலம் வங்காள விரிகுடாவைச் " சோழரின் ஏரி ' என மாற்றுவது அவனின் நோக்கமாகும். இதனால் ஈழத்தினைத் தனது ஆணைக்குக் கீழ்க் கொண்டு வருதல் உபகண்டத்தில் தான் கொண்டிருந்த மேலாதிக்கத்தினை முன்னெடுத் துச் செல்லும் நடவடிக்கையாக மட்டும் அமையாது கடலாதிக்கம் கொண்ட அரசாகச் சோழ ご架ア60g。 மாற்றும் அவனது திட்டத்தின் அங்கமே எனலாம்."
மேற்கூறிய நோக்கிற்குச் சமகாலத்து ஈழத்து அரசியல் நிலையும், பிறபொருளாதாரக் காரணிகளும் உந்து சக்திகளாக விளங்கின. அக்காலமே அநுராதபுரத்திலாண்ட சிங்கள மன்னனாகிய ஐந்தாவது மகிந்தன் ( கி. பி. 982 - 1929 ) தனது படையினரின் கிளர்ச்சியைச் சமாளிக்கமுடியாது தத் தளித்த காலமாகும். இக்காலங்களிற் தென்னிந்தியப் படையி னர் தான் அநுராதபுர அரசில் அதிக ஆதிக்கம் செலுத்தினர். சுதேசச் சிங்களப் படைவீரரை விட இவர்களிலேயே சிங்கள மன்னர்கள் அதிக நம்பிக்கையும் வைத்திருந்தனர். இக்காலச் சான்றுகளில் இப்படை வீரர்கள் தமிழர், கேரளர், கருநாட கத்தவர் என அழைக்கப்படுகின்றனர். இக்கால நிகழ்ச்சி பற்றிச் சூளவம்சம் பின்வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கத்
20 • 5gyټققg
யாழ். - தொன்மை வரலாறு 232 இ)

* வலிமையற்ற மன்னனான மகிந்தன் தனது அரசத்துவ முறைமையிலிருந்து விலகிச் சென்றதோடு வலிமையற்றவ னாகவும் காணப்பட்டான். இதனால் இவனுக்குக் கொடுக்க வேண்டிய (வரியாக ) விளைச்சலில் ஒரு பகுதியையும் மக்கள் கொடுக்கவில்லை. இவ்வாறு தனது பத்தாவது வருட ஆட்சியில் தனது முழுச் செல்வத்தையும் இழந்த இம்மன்னன் படைவீரருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத் தைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த முடியாத நிலைக்கும் ஆளானான். இவர்களில் ஊதியத்தினைப் பெறாத கேரளர்கள் எல்லோரும் அரசனின் அரண்மனை வாயிலில் அணிதிரண்டனர். பலாத்காரத்தினைப் பிர யோகிக்க விரும்பிய இவர்கள் தமது கைகளில் அம்பு, ஈட்டியுடன் கூடிய பல ஆயுதங்களுடன் ' எங்களுக்குரிய வேதனத்தை வழங்காதவரை நாம் உணவருந்தப் போவ தில்லை " எனக் கூச்சலிட்டனர். ஆனால் மன்னன் இவர் களை ஏமாற்றி விட்டான். தன்னால் கொண்டு செல்லக் கூடிய பொருட்களுடன் நிலத்துக்கடியில் உள்ள சுரங்கப் பாதை மூலம் அவசரமாக உரோகணைக்குச் சென்றான்."
இச்சந்தர்ப்பத்தில்தான் சோழ மன்னன் ஈழத்தின்மீது படை எடுத்தான் எனச் சூளவம்சங் கூறுகின்றது. இந்நூல் இம்மன்னனின் பெயரைக் குறிப்பிடாது விட்டாலுங்கூடப் பிற சான்றுகளின் அடிப்படையிலே நோக்கும்போது இவன் சோழ மன்னன் இராஜராஜன் என்பது தெளிவாகின்றது. காரணம் பதவியாவிற் கிடைத்துள்ள இம்மன்னனின் கல்வெட்டு ஈழம் இவனின் ஆட்சிக்குட்பட்டிருந்ததை உறுதி செய்கின்றது. மேலும் சூளவம்சந் தருந் தகவல்களை ஆராயும்போது ஈழத் தில் இம்மன்னனின் படை எடுப்பின்போது குழப்பமான ஒரு அரசியல் நிலை காணப்பட்டமை தெளிவாகின்றது. இத்தகைய நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களாகத் தென்னிந்தியப் படை வீரர்கள் காணப்பட்டதும் புலனாகின்றது. மன்னனின் வவியிழப்பு, பிரசைகள் வரிகளை அவனுக்குக் கொடுக்காமை, இதனாற் படையினர் கிளர்ச்சி என்ற அம்சங்கள் நிரைப் படுத்திக் கூறப்பட்டாலுங்கூட இக்கால அநுராதபுர அரசிய
O 283 வரலாற்றுக் காலம் III

Page 158
லிலே தென்னிந்தியப் படைவீரர் பெற்றிருந்த செல்வாக்கினை நோக்கும்போது படைவீரரின் கிளர்ச்சிக்குக்கூட இவர்கள் தமது தாய் நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகளும் காரணமாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத் தூண்டு கின்றது.
மேற்கூறிய யூகத்தினை ஆமோதிப்பதாகச் சூளவம்சத்திற் காணப்படும் மற்றுமோர் கூற்று அமைகின்றது.21
"எதிர்க்கரையிலிருந்து வந்த குதிரை வியாபாரி (குதிரைச் செட்டி) தனது நாடு திரும்பியபோது ஈழத்தில் காணப் பட்ட அரசியல் குழப்ப நிலை பற்றி மன்னனுக்கு அறி வித்தான். இதனைக் கேள்விப்பட்ட வலிமைமிக்க அரசன் ஈழம் முழுவதினையும் கைப்பற்றும் நோக்கமாக வலிமை மிக்க படை ஒன்றினை அனுப்பினான்."
சூளவம்சத்தின் இத்தகைய கூற்றினை அவதானிக்கும்போது இக்காலத்திலே தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்பட்டமை புலனாகின்றது. இத் தொடர்பின் ஒரம்சமாகவே தென்னிந்தியப் படையினரின் கிளர்ச்சி அமைந்ததோ என்பது ஆராய்தற்பாலது. ஏனெனிற் சேர, சோழ, பாண்டிய அரசுகள் மூன்றையும் வெற்றி கொண்டு "மும்முடிச் சோழன்" என்ற விருதுப் பெயரைச் குடியவன் இராஜராஜனே. இதனாற் சூளவம்சங் கூறும் மலையாளிகள் (கேரள நாட்டவர்) இம்மன்னனின் ஐந்தாம் படை வீரர்களாகவுஞ் செயற்பட்டார்களோ என்பது சிந்திக் கத்தக்கது. எவ்வாறாயினுஞ் சூளவம்சத்தின் மற்றொரு கருத் தாகிய "குதிரை வணிகன்" இந்நாட்டு அரசியல் நிலை பற்றி மன்னனுக்கு எடுத்துக்கூற, மன்னன் முழு ஈழத்தினை யுங் கைப்பற்றும் நோக்குடன் ஒரு படையை அனுப்பினான் என்பது பாரிய அரசியல் தாக்கங் கொண்ட கருத்தாக அமைகின்றது என்று மீரா ஏபிரகாம் கூறியிருப்பது ஏற் புடைத்தான கருத்தாக அமைகின்றது.2 அவர் இக்கருத்துப் பற்றிக் கூறுகையிற் சூளவம்சத்தின் சான்று சோழ அரச ருடன் அக்கால வணிகர் நேரடித் தொடர்பு கொண்டிருந்த தையும் சோழ அரசின் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை
யாழ். - தொன்மை வரலாறு 284 (9

வழங்குவதில் ஈடுபட்டிருந்ததையும் எடுத்துக் காட்டுகின்றது என்கின்றார். அதுமட்டுமன்றி இத்தகைய படைஎடுப்பினால் வணிகருக்குங் கைப்பற்றும் நாட்டில் சோழ அரசின் ஆதிக்கத் தினைத் தொடர்ந்து தமது வாணிப நடவடிக்கைகளை விஸ் தரிப்பதற்குமான வாய்ப்புக் கிட்டியது. சோழ அரசு நேரடி யாக இக்காலத்தில் வர்த்தகத்தில் ஏகபோக உரிமை கொண்டாடி ஈடுபட்டதற்கான சான்றுகள் காணப்படாவிட் டாலுங்கூட, பல வர்த்தக கணங்களான மணிக்கிராமம், ஐஞ்ஞாற்றுவர், வலஞ்சியர், நானாதேசிகள் போன்றோர் இத்தகைய நடவடிக்கைகளிற் பங்கு பற்றியதால் இவ்வாணி பப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளாற் சோழ அரசு பலனை அடைந்திருக்கலாமென எண்ண இடமுண்டு. அதுமட்டுமன்றிச் சோழ அரசியலாதிக்க வளர்ச்சிகூட ஒரு வகையிற் கைப்பற்றும் நாட்டிலிருந்து பெறும் வருமானத்திற் கும், பிற பொருட்கள் உள்நாட்டுக்குள் வருவதற்கும் வழி வகுத்தது. இதனை மனதிற் கொண்டு போலும், சூளவம்ச ஆசிரியர் இக்காலப் படை எடுப்பின் தாக்கம் பற்றிப் பின்வருமாறு மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.23
"முழு ஈழத்திலும் பெளத்த சங்கத்தின் முப்பிரிவுகளுக் கும் சொந்தமான புனிதச் சின்ன அறைகளை இவர்கள் உடைத்துச் சூறையாடிப் பொன் விக்கிரகங்கள் போன்ற பெறுமதி மிக்க புனிதப் பொருட்களை எடுத்துச் சென்ற னர். இங்குமங்கும் அவர்கள் பெளத்த தேவாலயங்களைத் தரைமட்டமாக்கியதோடு இரத்தத்தை உறிஞ்சும் யக் ஷர்கள் போல் ஈழத்தின் பொக்கிஷங்கள் யாவற்றையும் சூறையாடி அபகரித்துச் சென்றனர்."
சூளவம்ச ஆசிரியரின் கூற்று வெறுமனே முதலாவது இராஜ ராஜனின் காலத்திற்குரிய கூற்று மட்டுமன்று. முழுச்சோழ ரின் ஆட்சிக்குமுரிய கூற்றாகவே இதனைக் கொள்ளல் வேண்டும். இக்காலத்திற்கு முன்னர் கி. பி. 9ஆம் நூற்றாண் டிற் பாண்டிய மன்னனான சிறிமாற சிறீவல்லபனின் படை ஈழத்தினை அடைந்த போதும் இது போன்ற வர்ணனை சூளவம்சத்தில் இடம் பெற்றுள்ளது அவதானிக்கத்தக்கது.24
O 235 வரலாற்றுக் sirswib III

Page 159
"பாண்டு மன்னன் அரசனது பண்டாரத்திலுள்ள விலை மதித்தற்கரிய பொருட்களை எல்லாம் எடுத்துச் சென் றான். விகாரையிலும் நகரத்திலும் எவற்றைச் சூறை யாட முடியுமோ அவற்றை எல்லாம் குறையாடி னான். இவ்வாறு இவன் சூறையாடிய பொருட்க ளில் ரத்தின பாசாதாவிலுள்ள புத்தரின் தங்க விக்கிர கங்கள், முனி குலோத்துங்கரான புத்தரினது கல்லினா லான விக்கிரகத்தில் அதன் கண்களாக இழைக்கப் பட்டிருந்த இரு மணிகள், துரபராம ஸ்துரபியின் தங்கத்தகடுகள், இங்குமங்குமுள்ள விகாரைகளிலுள்ள பொன்னாலான புத்தரது விக்கிரகங்கள் ஆகியன அடங் கும். இவற்றை இவன் சூறையாடிச் சென்றதன் மூலம் ஈழத்தினை அதன் விலை மதித் தற்கரிய பொருட்களை இழந்த நாடாக விட்டுச் சென்றான். யக்ஷர்களால் குறையாடப்பட்ட நகரம் போன்று இதனால் சிறப்பு மிக்க நகரம் சோபை இழந்தது."
சூளவம்ச ஆசிரியர் மனதில் எவ்வாறு அக்காலத் தென் இந்தியப் படை எடுப்புகள் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன என்பதனை மேற்கூறிய தரவுகள் வெளிக்காட்டு கின்றன.
சூளவம்ச ஆசிரியரின் கூற்றினை ஒத்த கருத்தினையே ஸ்பென்சரும் முன்வைத்துள்ளார்.25 சோழப்படை எடுப்புகள் பற்றி அவர் குறிப்பிடுகையில் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் காலத்துப் படைஎடுப்புகள் ஈவிரக்கமற்றுச் சூறை யாடுதலையும், ஈழத்தின் வடபகுதியில் (உத்தர தேசத்தில் ) உள்ள பிரதான அரசியல், சமய மையங்களை அழிப்பதனையும் இலக்காகக் கொண்டு இதனைத் தொடர்ந்து ஈழத்தின் பிற பகுதிகளிற் பல்வகையான ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளு வதற்காகத் தற்காலிக அரண்களையுடைய படைத்தளங்களையும் கொண்டிருந்தன என்கின்றார். தமது தாய் நாட்டிலே தமது ஆட்சியை ஸ்திரப்படுத்தாத நிலையிற் காணப்பட்ட சோழர், இப்படைஎடுப்புகளின் மூலம் இலகுவான வழியிற் செல்வத் தினைச் சம்பாதித்தனர். தாய்நாட்டிலே தாம் ஆண்ட பகுதி களில் மேலதிக வரிகளை விதித்துத் தமது வளத்தினைப்
யாழ். - தொன்மை வரலாறு 286 象

பெருக்க வாய்ப்பிழந்த சோழர் சீக்கிரத்திலே மேலாதிக்க வளத்தினைப் பெறுவதற்கு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்றும், இத்தகைய சோழ அரசின் நடவடிக்கை களுக்கும் வணிகரின் நடவடிக்கைகளுக்குமிடையே தொடர்புகள் காணப்படவில்லை என்றும், அவை சோழ அரச வம்சத்தினை விடச் சுயமான முறையிலே இயங்கின என்றும் இவர் கூறி முடித்துள்ளார். ஆனால் சூளவம்சம் குறிப்பிடும் குதிரை வணிகன் பற்றிய குறிப்பும், ஈழத்தில் முதலாம் இராஜராஜ னின் காலத்தில் இயங்கிய வணிக கணங்களான நானா தேசிகள்
போன்றோரின் கல்வெட்டுகளும், இக்காலத்திற்கு முன்னர் இங்கு இயங்கிய * குமாரகணத்தார் ", " நானாட்டார் " ஆகிய
வணிக கணங்களின் கல்வெட்டுகளும் இவற்றின் மேலாக இக்காலத்தில் மத்தியகிழக்கு - சீனா ஆகிய பிராந்தியங்களுக் கிடையே காணப்பட்ட வர்த்தகத்திலே தென்னிந்தியா - ஈழம் ஆகிய பிரதேசங்கள் கொண்ட பங்கும், இத்தகைய வாணிப நடவடிக்கைகளிற் பல வணிக கணங்கள் ஈடுபட்டதற்கான கல் வெட்டுச் சான்றுகளும், இராஜராஜனின் ஈழப் படை எடுப்புச்கு முன்னதாக இவன் சேர, சோழ, பாண்டியரை வெற்றி கொண்டு மும்முடிச் சோழனான சான்றும் இவற் றோடு ஈழப் படை எடுப்பின் பின்னர் இம்மன்னன் முந் நீர்ப் பழந்தீவுகளைக் கைப்பற்றியமையும் இம் மன்னனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் கீழ் ஈழம் முழுவதும் கைப்பற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடாரப் படைஎடுப்பும் வெறும் அரசியல் ஆதிக்கத்திற்கு மட்டுமன்றிப் பொருளாதார வலுவினைத் தரும் வாணிப நடவடிக்கைகளிலே தமது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவதிலும் சோழர் ஈடுபாடு கொண் டிருந்ததனைப் புலனாக்குகின்றன.
இவனது மெய்க்கீர்த்திகளிற் கூறப்பட்டுள்ள இவனின் சாதனைகளை நோக்கும் போதும் நீலகண்ட சாஸ்திரி கூறு வது போலச் சோழப் பேரரசின் வாவியாக வங்காள விரி குடாவை மாற்றும் நோக்கத்தில் அப்பகுதியின் அரசியல் பொருளாதார வாய்ப்புகள் அடங்கியிருந்தமை புலனாகின் றது. இம்மன்னன் காலச் சாதனையை இவனின் மெய்க்
கீர்த்தியொன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.28
() 287 வரலாற்றுக் காலம் 11

Page 160
" திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்க பாடியுந் தடிகை பாடியும் நுளம்ப பாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டொழிற் சிங்கள ரீழமண் டலமும் இரட்ட பாடி யேழரை யிலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் னெழில்வள ரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராச கேசரி வர்மரான உடையார் பூரீ ராசராச தேவர்க்கு யாண்டு. '
அநுராதபுரத்தினை அழித்த சோழப்படை பின்னர் பத வியா நோக்கிச் சென்று பொலநறுவையைத் தலைநகராக்கு முன்னர் பதவியாவில் தற்காலிக படைத் தளத்தினைக் கொண்ட நகரமொன்றை அமைத்திருக்கலாம் எனவும் யூகிக் கப் படுகின்றது.27 இத்தகைய யூகத்திற்குக் காரணம் பல இந்துக் கோயில்களின் அடித்தளங்களின் மத்தியில் இராஜராஜ னின் காலத்திற்குரிய தமிழ்க் கல்வெட்டொன்று கிடைத்துள் ளமையே ஆகும். இக்கல்வெட்டின் மொழி தமிழரயினும் வரிவடிவம் கிரந்தமாகும். இக்கல்வெட்டிற்றான் முதல் முத லாக ஈழத்திற் காணப்பட்ட ‘நானாதேசி" வணிக கணம் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.28 ஐஞ்ஆாற்றுவரோடு இணைந்திருந்த வணிக கணங்களில் நானாதேசிகளுமொருவ ராவர். ‘நானாதேசிகள்", "ஐஞ்ஆநூற்றுவர்" வணிக கணங் களின் கல்வெட்டுகள் பொலநறுவைக் காலத் தமிழ்க் கல் வெட்டுகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தகைய வணிக கணங்கள் இக்காலத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலைகொண்டிருந்ததற்கான தடயங்கள் காணப்படாததால் இச்சோழப் படைஎடுப்போடுதான் இவை ஈழத்தினை வந் தடைந்தன எனவும் யூகிக்கப்படுகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 288 இ

பதவியாவினன அடுத்துப் பொலநறுவை சோழராற் சிங்கள அரசின் தலைநகராச்கப்பட்டது. மகாவலி கங்கை யின் கிளை நதியாக விருக்கும் சல்லோயாக் கரையிலமைந் திருந்த இது மகாவலிகங்கையூடாகக் கிழக்கே திருகோண மலையுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பினை மட்டுமன்றித் தென் கிழக்கே சிங்கள மன்னர்களின் கிளர்ச்சித் தளமாக விளங்கிய உரோகணை மீது படை எடுத்து அதனை அடக் கும் வாய்ப்பினையுஞ் சோழருக்கு அளித்தது. பொலநறு வைக்கு இராஜராஜனின் விருதுப்பெயர்களிலொன்றாகிய * ஜனநாத " என்ற பெயரை மையமாகக் கொண்டு "ஜன நாதமங்கலம்" எனப் பெயரிடப்பட்டது. இராஜராஜனின் கல் வெட்டுகள் இங்கு கிடைக்காவிட்டாலும் இங்குள்ள * வான வன் மாதேவீஸ்வரம் " என்ற சிவாலயம், இராஜராஜனின் மனைவியின் பெயரால் அமைக்கப்பட்டமை நினைவு கூரற் பாலது. எனினும் இராஜராஜனின் கல்வெட்டுகள் திருகோண
மலை மாவட்டத்திற் கிடைத்துள்ளன.
சோழப்படையெடுப்புக்கு முன்னர் இங்கு காணப்பட்ட பெளத்த விகாரையாகிய வெல்கம் விகாரை இம்மன்னனின் பெயரால் இராஜராஜப் பெரும்பள்ளி எனப் பெயரிடப்பட்ட தோடு அதனை இவன் ஆதரித்ததையும் இங்கு கிடைத்த கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.29 இதனாற் சோழப்படை பெளத்த வழிபாட்டிடங்களைச் சூறையாடியது என்ற சூள வம்ச ஆசிரியரின் கூற்று ஆதாரமற்றது என்பது நிரூபணமா கின்றது. பதவியாவிற் காணப்பட்ட பெளத்த நிறுவனங்களை உடைத்தே சோழர் இந்து ஆலயங்களைக் கட்டினர் என்ற கூற்றும் ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டப்பட்டுள் ளது. 30 திருக்கோணேஸ்வரத்திற் காணப்படும் இம்மன்னனின் கல்வெட்டு இத்தலமும் இவனின் போஷிப்பைப் பெற்றிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.8 கந்தளாயிற் சிவஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டதோடு அதனைப் போஷிக்கப் பிரா மணர்கள் குடியிருப்புகளும் இம்மன்னனால் ஏற்படுத்தப்பட்டன என்பதை " இராஜராஜ சதுர்வேதி மங்கலம் " என்ற இங் குள்ள பிராமண குடியிருப்பு எடுத்துக் காட்டுகின்றது.32
O 289 hı Jüri) gök saray'de III

Page 161
இவ்வாறே மாதோட்டமும் சோழரின் தளமாக விளங்கியதை இதற்கு இடப்பட்ட பெயரும், இங்கு காணப்படுங் கல்வெட் டொன்றும் எடுத்துக் காட்டுகின்றது. இம்மன்னனின் செய ரால் இவ்விடம் 'இராஜராஜபுரம்" என அழைக்கப்பட்ட தோடு தாழிக்குமரன் என்ற நிருவாகி ஒருவன் இம்மன்ன னின் பெயரால் இராஜராஜேஸ்வரம் என்ற பெயரில் இங்கு ஒர் ஆலயத்தை அமைத்ததையும் இங்கு கிடைத்த கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது.83 இக்கல்வெட்டின் வாசகம் பின்வரு மாறு அமைந்துள்ளது.
" சோழ மண்டலத்து ஷத்திரிய சிகாமணி வளநாட்டு வெளார் நாட்டுச் சிறுகூற்ற நல்லூர் கிழவன் தாழிகுமரன் ஈழமான மும்முடி சொழ மண்டலத்து மாதொட்ட மான ராஜராஜ புரத்து எடுப்பித்த ராஜ ராஜ ஈஸ்வரத்து மஹா தேவர்க்கு சந்திராதித்தவல் நிற்க ராஜராஜநக.’
இதுமட்டுமன்றி இராஜராஜனின் பெயரால் இராஜராஜப் பெருந் தெருவென்று பெயர் கொண்ட தெருவொன்று இப் பட்டினத்திற் காணப்பட்டதும் அவதானிக்கத்தக்கது.
இராஜராஜனின்கால மெய்க்கீர்த்திகளில் ஈழம் முழுவதும் அவனால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இப்பொறுப் பினை நிறைவேற்றியவனாக இவனின் மகனான முதலாம் இராஜேந்திரன் விளங்கியதை அவனின்கால மெய்க்கீர்த்திகளுங் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இதனால் "உத்திரதேச என அழைக்கப்பட்ட ஈழத்தின் வடபகுதி மட்டுமே இராஜ ராஜனாற் கைப்பற்றப்பட்டது எனக் கொள்ளலாம். இராஜ ராஜனின் படைஎடுப்புக்கு அஞ்சியோடிய ஐந்தாவது மகிந்தன் உரோகணையிற் சென்று ஒளித்துக் கொண்டான் எனக் கூறப்படுகின்றது.
இக்காலத்தில் ஈழத்தின் யாழ்ப்பாணக் குடாநாடு வரை யுள்ள வடபகுதியில் இம்மன்னனின் ஆட்சி பரவவில்லையா என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. துரதிஷ்டவசமாக ஈழத்
யாழ். - தொன்மை வரலாறு 29O இ

தின் பிறபகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகள் போன்று இம்மன்னனின் கல்வெட்டுகள் இங்கு காணப்படவில்லை. ஆனால் இம்மன்னனின் நாணயங்கள் நாரந்தனை34 பூநகரி35 ஆகிய இடங்களிற் கிடைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதனால் இவன் ஆட்சிக் காலத்தில் வடபகுதியி லுந் தமிழர் குடியேற்றங்கள் காணப்பட்டன எனலாம். ஏனெனில் இரண்டாம் பராந்தகனின் படை ஊர்காவற்றுறை யில் வந்திறங்கி அங்கு நடைபெற்ற போரில் இதன் படைத் தளபதி இறந்தான் என்ற செய்தியானது ஊர்காவற்றுறை யும் மாதோட்டம், திருகோணமலை போன்று இரண்டாம் பராந்தகனின் காலத்திலிருந்தே முக்கிய துறைமுகமாகச் சோழ ரின் கவனத்தை ஈர்த்தமை தெளிவாகின்றது. மாதோட்டத் தினைவிடத் திருகோணமலையிலே காணப்படும் இம்மன்ன னின் கல்வெட்டுகளும் இம்மன்னனது ஆட்சிக் காலத்தில் முந் நீர்ப் பழந்தீவுகளின் மீதான படை எடுப்பும் பின்னர் ஏற் Ul -- கடாரப் படை எடுப்புப் பற்றிய சான்றுகளுங் கிழக்கே திருகோணமலையுடனும் ஊர்காவற்றுறை இணைந் திருந்ததோடு ஊர்காவற்றுறையிற் சோழக் கடற்படை தங்கி யது என்றுங் கருத இடமளிக்கின்றது. யாழ்ப்பாணக் கோட் டைப் பகுதியிற் காணப்படும் ஐஞ்ஆாற்றுவன் வளவு என் பது இவன் காலத்தில் இப்பகுதியில் செல்வாக்குடன் விளங் கிய இவ்வணிக கணம் பற்றிய சான்றாகவும் அமையலாம்.38 ஏனெனிற் பதவியாவிற் கிடைத்த இம்மன்னன் காலக் கல் வெட்டில், ஐஞ்அநூற்றுவரின் சகபாடி வணிக கணமாகிய "நானாதேசி" வணிக கணம் குறிப்பிடப்படுகின்றது. வருங்கால ஆய்வுகள் இது பற்றி மேலும் பல தகவல்களைத் தரலாம்.
சோழப் பேரரசின் அரசியல் நடவடிக்கைகள் முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டன. ஈழமண்டலம் முழுவதையும் இவன் தனது ஆளுமைக்குக் கீழ்க் கொண்டு வந்தது மட்டுமன்றிச் சிங்கள அரசன், அவன் மனைவி ஆகியோரைச் சிறைப்பிடித்து, வேண்டிய திரவியங் களையும் இந்நாட்டிலிருந்து தனது நாட்டுக்கு எடுத்துச் சென்றதைச் சூளவம்சம் மட்டுமன்றி ஈழம், தமிழகம் ஆகிய
291 வரலாற்றுக் காலம் II

Page 162
இடங்களிற் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டுகின்றன. இவன் கால நடவடிக்கைகள் பற்றிச் குள வம்சம் தருங் குறிப்புப் பின்வருமாறு அமைந்துள்ளது.37
* வலிமை வாய்ந்தவன் (சோழ மன்னன்) இலங்கையைக்
கைப்பற்றுவதற்காக ஒரு வலிய படையை அனுப்பி வைத் தான். இவர்கள் விரைவாக இலங்கைக்கு வந்து இறங்கினர். தாங்கள் இறங்கிய இடத்திலிருந்து பெரும் பாலான குடிகளுக்கு இன்னல் விளைவித்துக்கொண்டு சோழப் படையினர் உரோஹணத்துக்கு (உரோகனைக்கு முன்னேறிச் சென்றனர். (ஈழத்து) மன்னனுடைய முப் பத்தாறாவது ஆட்சியாண்டிலே சோழர் (மன்னனுடைய) மஹிஷியையும் (மன்னன்) முதுசொமாகப் பெற்றிருந்த இரத்தினங்களையும், முடியையும் (அரச குடும்பத்தின்) ஆபரணங்கள் அனைத்தையும், தெய்வங்கள் அளித்த பரிசாகிய விலைமதிக்க முடியாத வைரக் காப்பினையும் உடைக்க முடியாத வாளினையும், கிழிந்த துணித் தாதினையும் கைப்பற்றினர். அச்சத்தால் வனத்துக்குள் ஒடி ஒளித்த மன்னனை அவர்கள் உயிருடன் கைப் பற்றி அவனுடன் உடன்படிக்கை செய்யப்போவதாகச் சாட்டுச் செய்தனர். பின்னர் மன்னனையும் தாம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் உடனடியாகச் சோழ மன்னனிடம் அனுப்பி வைத்தனர். ”
மேற்கூறிய சூளவம்சத்துச் செய்தியை உறுதிப்படுத்துவ தாக ஊர்காவற்றுறைக் கோட்டையிற் கிடைத்த மாதோட்ட நகருக்குரிய கல்வெட்டொன்று அமைகின்றது. இக்கல்வெட்டும் இதனோடு மற்றொரு கல்வெட்டும் இங்குள்ள கோட்டையில் ஒரு கல்லின் இரு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாவது கல்வெட்டு வாசிக்கக்கூடிய நிலையிலும், இரண் டாவது கல்வெட்டின் பகுதிகள் அழிந்த நிலையிலுங் காணப் படுகின்றன. முதலாவது கல்வெட்டின் வாசகமாவது:
* ஸ்வஸ் தி பூரீ ஈழமு மு ) (ங்) துவ் கொண்டு
ஈழத்த ரெசெெரயும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடு டொன
urb. - தொன்மை வரலாறு 292 ()

அதிகாரத் தண்டநாசகனார் ஜய( ங்) கொண்ட (ெ சா ) ( ழ ) மூ வெந்த ) வெளார் மாதொட்டமான இராசராசபுர"
இரண்டாவது கல்வெட்டின் வாசிக்கக் கூடிய பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.
*ஸ்வஸ்தி பூரீ ஈழமான மும்முடி
சொழ மண்டல. . . . . . ண. . . . . குல. . .
மாதோட்டப் பகுதி சோழரின் துறைமுகமாக இம்மன்னன் காலத்திலும் சிறப்புப் பெற்றிருந்ததை இங்கு அமைக்கப்பட்ட சிவாலயம் பற்றிய கல்வெட்டுச் சான்று மேலும் உறுதி செய்கின்றது.38
எனினும் ஊர்காவற்றுறைக் கல்வெட்டுகள் பல வழி களிலும் முக்கியம் வாய்ந்தனவாக அமைகின்றன. ஏனெனிற் சூளவம்சத்தின் சோழப் படை எடுப்பினை உறுதி செய்யும் ஈழத்துக் கல்வெட்டு இஃதென்றால் மிகையாகாது. இப்படை எடுப்புகள் பற்றித் தமிழகத்திலுள்ள இம்மன்னன்காலக் கல் வெட்டுகள் எடுத்துக் காட்டினாலும் ஈழத்திற் கிடைத்துள்ள இக்கல்வெட்டுத்தான் அச்செய்தியை உறுதி செய்வதாக அமை கின்றது. முதலாம் இராஜராஜன் காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட படை எடுப்புக்குத் தலைமை தாங்கியவனாக முதலாம் இரா ஜேந்திரன் கூறப்படுகின்றான். ஆனால் இம்மன்னனோ இவனது இராசகுமாரர்களோ ஈழப்படை எடுப்புக்குத் தலைமை தாங் காது சோழச் சேனாதிபதியாகிய அதிகாரத்தண்ட நாசகனார்
ஜயங்கொண்ட சோழ மூவேந்த ଔଷ୍ଣା ଜୀm (Trii'' என்பவனே தலைமை தாங்கியமை இக்கல்வெட்டின் மூலம் தெளிவா
கின்றது.
மேற்கூறிய நிகழ்ச்சியை உறுதி செய்வனவாகத் தமிழகத்திற் கிடைத்த இம்மன்னனின் மெய்க்கீர்த்திகள் அமைகின்றன. இவனது ஐந்தாம் ஆட்சிஆண்டுக் காலத்தில் (கி. பி. 1017) இம் மன்னனின் ஈழப்படை எடுப்பு நடைபெற்றதை இவனின் மெய்க் கீர்த்திகளிலொன்று குறிப்பிட்டுள்ளது. இதன் வாசகம் பின் வருமாறு அமைந்துள்ளது.39
293 வரலாற்றுக் காலம் II

Page 163
"பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவியரோ ங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும் தெண்டிரை யீழ மண்டல முழுவதும்"
மேற்கூறிய செய்தியே இம்மன்னனுடைய கரந்தைச் செப் பேடுகளிலுங் கொடுக்கப்பட்டுள்ளது. 40 இச்சாசனம் இம்மன்னன் ஒரு கொடிய படை கொண்டு ஈழத்து மன்னனையும் அவனுடைய ஆள்புலத்தையும், முடியையும் அவனுடைய அரசி யையும் மகளையும் அவனுடைய செல்வத்தையுங் கைப்பற்றி யதையும், ஈழத்து மன்னன் போரிலே தோல்வியடைந் ததால் தனது மகளையும் அரசியையுஞ் சொத்துக்களையும் இழந்த காரணத்தினாலே இராஜேந்திரசோழனை அடைந்து அவனுடைய பாதங்களிலே வீழ்ந்து சரண்புகுந்தான் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இம்மன்னனாற் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட சிங்கள மன்னன் 1029இற் சோழ நாட்டிலேயே
இறந்தான்.
தென் பகுதிக் கிளர்ச்சிகளும் சோழ ஆதிக்க மறைவும்
சோழருக்கெதிரான கிளர்ச்சிகள் தென்கிழக்குப் பகுதியி லமைத்திருந்த உரோகணையை மையமாக வைத்து நடை பெற்றன. இதற்கு அடிப்படையான காரணம் கி. பி. 1029இற் சோழ நாட்டிற் சிறைக்கைதியாக இருந்த ஐந்தா வது மகிந்தனின் மரணமாகும். சூளவம்சம் மகிந்தன் பற்றிக் கூறுவதாவது, பன்னிரண்டு வருடம் சோழ நாட்டிற் சிறைக் கைதியாக இருந்த மகிந்தன் தான் அரசுகட்டிலேறிய நாற் பத்தெட்டாவது வருடத்திற் சுவர்க்கத்தினை அடைந்தான் என்பதாகும். 41 இக்கிளர்ச்சியின் முன்னணியில் ஐந்தாவது மகிந்தனின் மகனாகிய காஸப்பனே திகழ்ந்தான். சோழர் களால் இக்கிளர்ச்சியை அடக்க முடியவில்லை என்றும் இத னாற் கி. பி. 1029 தொடக்கங் கி. பி. 1041 வரையிலான பன்னிரண்டு ஆண்டுகள் இவன் பெருமளவுக்குச் சுதந்திர
யாழ். - தொன்மை வரலாறு 294 )

மன்னனாக முதலாவது விக்கிரமபாகு என்ற பெயரில் இப் பகுதியில் ஆட்சி செய்ததாகவுங் கூறப்படுகின்றது. கி. பி. 1041இல் இவனும் மரணமானான்.
சோழரின் அரசியலை நோக்கும்போது முதலாவது இராஜேந்திரனின் காலத்திலே அவனின் அரசியல் நடவடிக்கை களிற் பங்கு பற்றிய முதலாவது இராஜாதிராஜன் காலம் (கி. பி. 1018 - 1054) மேலும் ஈழத்திற் பல கிளர்ச்சிகள் உருவாகிய காலமாகின்றது. இது பற்றிச் சூளவம்சம், சோழக் கல்வெட்டுகள் ஆகியனவற்றுட் குறிப்புகள் உள. சோழருக்கெதிரான நடவடிக்கைகளிற் புதிதாக ஈடுபடும்போது விக்கிரமபாகு இறந்ததாகவுங் கூறப்படுகின்றது. இவனைத் தொடர்ந்து கித்தி என்பவன் மன்னனானாலும் இவனது ஆட்சி எட்டு நாட்கள் மட்டுமே நீடித்திருந்தது. இவனைப் பதவி நீக்கிக் கொலை செய்த மகாலானகித்தி (S. L. 1041 - 44) மூன்று ஆண்டுகள் அரசாண்டான். சோழராலே தோற்கடிக்கப்பட்ட இவன் தோல்வியால் ஏற்பட்ட go மானத்தைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படுகின்றது. இம்மன்னனுக்கு ‘விக்கிரம பாண்டு” என்ற மகனுமிருந்தான். இது பற்றிச் சூளவம்சங் குறிப் பிடுகையிற் சோழருக்குப் பயந்த மகாலானகித்தியின் மகனான விக்கிரமபாண்டு தனது தாயகத்தினை விட்டு ஈழத்தினை அடைந்தான், என்று மட்டுமே கூறுகின்றது. எனினும் உரோகனையில் விக்கிரமபாண்டு மிகச் சொற்ப காலம் மட்டுமே ஆட்சி செய்தான். இவனை வடநாட்டிலுள்ள அயோத்தியாவிலிருந்து வந்த 'ஜகதிபால’ என்பவன் கொன்று மன்னனானான். இவன் நான்கு ஆண்டுகளாக (கி. பி. 10481046) இப்பகுதியை ஆட்சி செய்தான். இறுதியிற் சோழர் இவனைப் போர் முனையிற் கொன்றது மட்டுமன்றி இவனின் மனைவி, மகள் ஆகியோரைச் சிறைப்பிடித்து அவர்களது சொத்தையும் அபகரித்துச் சோழ நாட்டுக்கு இட்டுச் சென்ற தாகச் சூளவம்சங் குறிப்பிடுகின்றது. சோழராட்சியிற் சோழ ருக்குத் தொல்லை கொடுத்தவனாகப் பராக்கிரமபாண்டு என்ற மற்றொரு மன்னனுங் குறிப்பிடப்பட்டாலும் ஈற்றிற்
O 295 வரலாற்றுக் காலம் 11

Page 164
சோழராலேயே இவன் போர் முனையிலே தோற்கடிக்கப்பட்ட தாகச் சூளவம்சங் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது.42
இனிச் சோழக்கல்வெட்டுகளை நோக்கும் போது இராஜாதி ராஜனின் இருபத்தொன்பதாம் ஆண்டுக்குரிய மணிமங்கலக் கல் வெட்டு உரோகனைப் பகுதி மன்னர்களோடு இவன் மேற் கொண்ட போர்கள் பற்றிப் பின்வருமாறு உரைக்கின்றது.48
"தொருதணித் தண்டாற் பொருகட லிலங்கையர்
கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும் முன்றனக் குடைந்த தென்றமிழ் மண்டல முழுவதும் மிழந் தெழுகட வீழம் புக்க விலங்கேச னாகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்ன வாக்கித் தன்னக் குச்சியினும் ஆர்கலி யீழஞ் சீரிதென் றெண்ணி உளங்கொளந் நாடு தன்னுற வொடும்புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித் தன்கார்க் களிறிழிந்து கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன் றவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்களத் துலத்தவச் சிங்களத் தரசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துரைகொ ஸ்ரீழத் தரச னாகியசீ வல்லவ மதன ராசன் மெல்லொளித்
தடமணி முடியுங் கொண்டு . .
மேற்கூறிய கல்வெட்டிலிருந்து விக்கிரமபாண்டு, பராக்கிரம பாண்டு ஆகியோரைச் சோழர்கள் தோற்கடித்தது மட்டுமன்றி வீரசலாமேகன், பூரீ வல்லவன், மதன ராசன் ஆகியோரையுந் தோற்கடித்தமை தெளிவாகின்றது. எனவே சூளவம்சம், சோழக்கல்வெட்டு ஆகியனவற்றின் செய்திகளை ஒப்பிட்டு ஆராய்தல் நமது அடுத்த பணியாகின்றது. சோழக்கல்வெட்டு
யாழ். - தொன்மை வரலாறு 2es O

விக்கிரமபாகுவைப் போர்முனையிற் தோற்கடித்ததாகக் கூறச் சூளவம்சம் இம்மன்னன் நோயினாலிறந்ததாகக் கூறுகின்றது. சூளவம்சங் குறிப்பிடும் விக்கிரமபாண்டுதான் சோழக் கல் வெட்டில் விக்கிரமபாண்டியன் என அழைக்கப்பட்டுள்ளான் போலத் தெரிகின்றது. இவன் பாண்டிய இளவரசியை மணந்த மகாலான கித்தியின் மகனாவான். பாண்டி நாட்டிலிருந்து ஈழத் தினை அடைந்த இவனின் ஆட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்தது. பின்னர் இவனை ஜகதிபால கெர்ன்று மன்ன னானான். இவன் வடஇந்தியாவிலுள்ள அவுத் பகுதியிலிருந்து ஈழத்திற்கு வந்தவனாவன். இவனும் மூன்று ஆண்டுகள் தான் ஆட்சி செய்தான். எனினும் இம்மன்னன் பற்றிய தகவல் சோழக்கல்வெட்டிற் காணப்படவில்லை. இக்கல்வெட் டுக் கலிங்கநாட்டிலிருந்து (கன்னக்குச்சி) வந்த வீரசலாமேகன் பற்றியும் அவனைப் போர்க்களத்திற் கொன்ற சோழன் அவனின் மனைவி, மகள், பண்டாரம் ஆகியனவற்றைக் கவர்ந்து சென்றதையுமே குறிக்கின்றது. சிலர் இக்குறிப்பு வடஇந்தியாவிலுள்ள கன்னோசிக்கே பொருந்தும் என்பர். சூளவம்சங் குறிப்பிடும் பராக்கிரமபாண்டு என்பவன் விக்கிரம பாண்டியனின் மகனாவன். ஜகதிபாலாவின் பின் அரசு கட்டி லேறிய இவனைத்தான் சோழர் கி. பி. 1053இற் கொன் றார்கள் போலத் தெரிகின்றது. இறுதியாகச் சோழக் கல் வெட்டுக் கூறுஞ் சிறீவல்லப மதனராசன் என்பவன் யார் என்று அறிந்து கொள்வது இலகுவன்று. சூளவம்சங் குறிப் பிடும் பராக்கிரமபாண்டுதானா இவன் என்பதும் ஆராய்தற் பாலது. இவன் கன்னட நாட்டவனாக இக்கல்வெட்டிற் குறிப் பிடப்படுவதால் இவனைப் பராக்கிரமவோடு இணைத்துப்
பார்ப்பதிற் சிக்கல்கள் உள.
மேலும் சோழருக்கெதிராக உருகுணையிலிருந்து சிங்கள மன்னர்கள் போரிட்டதை இரண்டாவது இராஜேந்திரனின் (கி.பி. 1051 - 63) நான்காவது ஆட்சி ஆண்டுக்காலத்திற் பொறிக்கப் பட்ட கல்வெட்டொன்று பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது.44
O 297 வரலாற்றுக் காலம் IT

Page 165
" . . . . தென்றிசை வயிற்
போர்ப்படை நடாத்திக் கார்க்கட விலங்கையில் விறற்படைக் கலிங்கர்மன் வீரசலா மேகனைக் கடகளிற் றொடுபடக் கதிர்முடி கடிவித் திலங்கையர்க் கிறைவன் மானா பரணன் காதல ரிருவரைக் களத்திடைப் பிடித்து மாப்பெரும் புகழ்மிக வளர்த்த கோப்பரகேசரி வர்மரான உடையார் பூரீ ராசேந்திர தேவர்க்கு யாண்டு”
இக்கல்வெட்டில் இம்மன்னன் வென்ற இரு ஈழத்தரசர்கள் பற்றிக் குறிப்பிடப்படுவது அவதானிக்கத்தக்கது. இவர்கள் முறையே வீரசலாமேகன், மானாபரணன் ஆவர். இவ்விரு மன்னர்களும் முதலாவது இராஜாதிராஜன் கல்வெட்டுகளிலுங் குறிப்பிடப்படுவது இங்கே அவதானிக்கத்தக்கது. முதலாவது இராஜாதிராஜன் வீரசலாமேகனைக் கொன்றதாகத் தனது கல்வெட்டிற் குறித்தாலும் வீரசலாமேகன் இவனாற் தோற் கடிக்கப்பட, பின்னர் ஆட்சி செய்த இரண்டாவது இராஜேந் திரனின் காலத்திலும் இவன், தோற்கடிக்கப்பட்டமை புலனா கின்றது. இவ்வாறே முதலாவது இராஜாதிராஜனின் கல் வெட்டில் அவன் மானாபரணனைத் தோற்கடித்தான் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இரண்டாவது இராஜேந்திரசோழ னாற் சிறைப்பிடிக்கப்பட்டவனாக ஈழத்தரசனான மானா பரணனுங் குறிப்பிடப்படுவது அவதானிக்கத்தக்கது.
இக்காலந்தான் பிற்காலத்தில் முதலாவது விஜயபாகு எனப் புகழ் படைத்த ‘கித்தி’ என்ற பெயருடைய இள வரசன் உருகுணையில் எழுச்சிபெற்ற காலமுமாகும். இவனின் தந்தை மொகல்லான அநுராதபுரத்திலரசாண்ட சிங்கள வம்சத்தினைச் சார்ந்தவன் எனக் கூறப்படுகின்றது. தனது பதினேழாவது வயதில் முதலாவது விஜயபாகு எனப் பெயர் சூடிய இவன் கதிர்காமத்திலே தனது அரசிருக்கையை அமைத்துக் கி. பி. 1055இல் மன்னனாக முடிசூடிக் கொண் டான். அப்போது சோழப்படை கதிர்காமத்திற்குச் சென்றது. அதன் பலத்தினை அறிந்து அதனோடு நேரடியாக மோத விரும்பாது விஜயபாகு பின்வாங்க இட்படை கதிர்காமத்தி
யாழ். - தொன்மை வரலாறு 298 O

னைத் தாக்கி அழித்ததோடு கொள்ளைப் பொருட்களுடனும் பொலநறுவைக்குத் திரும்பியது. சோழருக்கெதிரான விஜய பாகுவின் நடவடிக்கைகள் வீரராஜேந்திரன் (கி. பி. 1063 - 69) சோழ அரசனாக அரசுகட்டிலேறியபோது மேலுந் தீவிர மடைந்தன. கதிர்காமத்திற் தோல்வியைத் தழுவிய விஜய பாகு தனது சோழருக்கெதிரான நடவடிக்கைகளின் களமாக இப்பகுதியிலுள்ள தம்பலகாமத்தினைத் தெரிந்தெடுத்துக் கொண்டான்.
இச்சந்தர்ப்பத்தில் விஜயபாகுவுடனான போரின் போது சோழரின் படைகள் தக்கினதேசம், உருகுணை ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்தமை பற்றிச் சூளவம்சம் தரும் தகவல் அவதானிக்கத்தக்கது.45 சோழரின் கவனத் தாய்நாட்டிற் செலுத்தப்பட்ட இக்காலத்திற் Luriuonto வுடனுஞ் சிநேக உறவினை விஜயபாகு ஏற்படுத்தியதால் அங்கிருந்து பல பொருட்களை இவனுக்குப் பர்மிய மன்னன் அனுப்பியதாகவுங் கூறப்படுகின்றது. விஜயபாகுவின் முயற் சியாற் போலும் சோழருக்கெதிராக ஈழத்தில் அவர்களின் ஆளுமைக்குட்பட்டிருத்த பகுதியிலுங் கிளர்ச்சிகள் உருவாகின. மிகக் கொடூரமான முறையில் இக்கிளர்ச்சிகளை அடக்கிய சோழப்படை பின்னர் உரோகணையை முற்றுகையிட்டது. அப்போது இவனது நெருங்கிய நண்பர்களான இரவிதேவ, சலா ஆகியோர் சோழரின் பக்கஞ் சேர்ந்தும் கூட இம்மன் னன் பழுத்தகிரியிலே தனது அரணை அமைத்துச் சோழரின் வரவை எதிர்நோக்கிய வண்ணம் இருந்தான். பழுத்தகிரி பைச் சோழர் தாக்கியபோது அவர்கள் துரத்தி அடிக்கப் பட்டதோடு சோழச் சேனாதிபதி இப்போரில் மாண்டதாக வுங் கூறப்படுகின்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து விஜயபாகு பொலநறுவையைத் தாக்கித் தன்வசப்படுத்தி னான். அப்போது சோழ மன்னனான வீரராஜேந்திரன் தனது ஐந்தாவது ஆட்சியாண்டில் ஒரு படையை அனுப்பி விஜயபாகுவைத் தோற்கடித்ததாக இவனது திரு முக்கூடற் கல்வெட்டுப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றது.46
299 on ysn frihŋ k GT6) lib III o

Page 166
* . . . . . . . . . . . . . . ஈழத்
தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி மாப்பொருந்தானை ஏற்ற காப்புடைக் கடல்வளை யரணத்து வெல் சமந் தெர்டங்கியச் சிங்களச் சேனை மங்கப் பைங்கழல் குருகுலத் தரையனு முரு மெனப் பொரு சினத்தால் சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந்தாற்றாதோர் ஒசைத் தரையினோடத் தராபதி விசைய பாகுவுந் திசை கெட ஒட மற்றவன் தேவியைப் பற்றி வென்று
s a • * s முதலாகிய அளப்பருங் குலதனம் மணியின முடியொடு வாரிக் தினிமதில் இலங்கையுந் தனகே யாக்கித் . . . . . .
மேற்கூறிய போர் பற்றிய செய்தி சூளவம்சத்திலுங் கர்ணப்படுகின்றது.47 மகாதீர்த்தத்திலிறங்கிய சோழப்படை அங்கு பலரைக் கொன்றதோடு இராஜரட்டையையுந் தன் வசமாக்கியது. இதன் பின்னர் சோழப்படை உரோகனை நோக்கிச் சென்றபோது விஜயபாகுவின் நண்பர்கள் சிலர் சோழரின் பக்கம் சேர்ந்து கொண்டாலுங்கூடச் சோழரிடம் அகப்படாது தப்பிக் கொண்ட விஜயபாகுவிற்கு எதிராக உரோகணையிலேயே கிளர்ச்சி உருவாகியது. இதனை வழி நடாத்தியவன் முன்னர் விஜயபாகுவினாற் கொல்லப்பட்ட காஸப்பவின் சகோதரனாவான். இக்கிளர்ச்சி வெற்றியளிக்காது போகவே இவன் சோழரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைச் சென்றடைந்தான் எனக் கூறப்படுகின்றது. எனினுஞ் சோழ அரசு கி. பி. 1067க்குப் பின்னர் உள்நாட்டிற் பல சவால் களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இச் சந்தர்ப்பத்தி னைப் பயன்படுத்திய விஜயபாகு சோழருக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினான். வீரராஜேந்திரனுக்குப் பின்னர் அரசு கட்டிலேறிய அதிராஜேந்திரன் விஜயபாகு விற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான சான் றுகள் இல்லை. கி. பி. 1070இற் கீழைச்சாளுக்கிய இளவரச னான குலோத்துங்கன் சோழ அரசனானான். இவனது ஆட்சி
யாழ் - தொன்மை வரலாறு 3oo D

சோழர் ஈழநாட்டின் மீது கொண்டிருந்த தொடர்புகளில் ஒரு திருப்புமுனையாகியது.
எனினுந் தமிழகத்தில் வீரராஜேந்திரனின் காலத்திலேயே (கி. பி. 1063 - 69 ) சோழர் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. வடபகுதியில் மேற்குச் சாளுக் கியரின் தொந்தரவும் தெற்கே பாண்டியரின் தொந்தரவும் இக்காலத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நேரத்திற் சோழ நாட்டிலேதான் தனது ஆட்சியை ஸ்திரப்படுத்த வேண்டிய தேவை சாளுக்கிய வம்சத்தவனாகிய குலோத்துங் கனுக்கு ஏற்பட்டது. சாளுக்கிய வம்சாவளியான இவனுக்கு முன்னர் அரசர்களாக விளங்கிய, ஈழம் முழுவதனையும் முதல் முதலாகச் சோழரின் ஆணைக்குக் கீழ்க் கொண்டு வந்த முத லாம் இராஜேந்திரனின் மைந்தர்களாகிய இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் ஈழத்தின் மீது கொண்டிருந்த உணர்வு பூர்வமான ஈடுபாடு இவனுக்கு இருக்கவில்லை. இதனால் ஈழத்தினை இழப்பதாலே தனிப் பட்ட முறையில் எந்தவொரு தோல்வியையுஞ் சம்பாதித்தவ னாக ஆகும் நிலை இவனுக்கிருக்கவில்லை. கீழைச் சாளுக் கிய மன்னனாகிய முதலாவது குலோத்துங்கன், தான் இள வரசனாக ஆட்சி செய்த வேங்கியைச் சோழரின் ஆதிக்கத் திற்கு உட்பட்டதாக்குவதோடு தெற்கே பாண்டியரின் பிர தேசத்திலுஞ் சோழராதிக்கத்தினை நிலைந்ாட்டுவதே உசிதம் எனக் கொண்டான். இதனால் ஈழத்தினை நேரடியாகத் தனது முன்னோர் ஒரு சோழ அரசின் மாகாண மாக்கி ஆண்டதற்குப் பதிலாக அதன் மீது ஒருவித மேலாண்மை செலுத்தவே சித்தங் கொண்டான். இதனால் இவனின் ஆட்சிக்காலஞ் சோழ வம்சத்தின் ஆட்சி ஈழத்தில் அஸ்தமித்த காலமாகின்றது.
சோழருக்கு மேலைச் சாளுக்கியரிடமிருந்த தலையிடியைப் பயன்படுத்தி விஜயபாகு அநுராதபுரம், பொலநறுவை ஆகிய பகுதிகளுக்கு நாட்டின் மேற்குப் புறமாகவும், கிழக்குப் புறமாகவும் படையை அனுப்பினான். அநுராதபுரத்திற்கு அனுப்பப்பட்ட படை சோழ அரசிலிருந்து வரும் உதவி
O 3of வரலாற்றுக் காலம் II

Page 167
களைத் தடுத்து நிறுத்தியது. இப்படையைத் தாக்கிய சோழ ரின் படைகளின் நிலையங்களாக வடமேற்கே உள்ள முகுன் னாறு ( நுவர கல ), படலத்தல (பதலகொட ), வாபிநகர ( குருநாகலுக்குக் கிட்டவுள்ள வேனாறு ) புத்த காம (மாணிக் தேன-தம்புலவுக்குத் தெற்கே உள்ளது), திலாகுல (தலகல்லே ஆல), மகாகல்ல ( நிக்கவரட்டிய ), மண்டகல ( பொல்பிட்டி கமவுக்குக் கிட்டவுள்ள மகாமடகல ) போன்ற இடங்களைச் சூளவம்சங் குறிப்பிடுகின்றது.48 அநுராதபுரத்தினைக் கைப் பற்றிய இப்படை பின்னர் மகாதீர்த்தம் நோக்கி முன்னேறிய தாகவுங் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கே சாகம ( திருக் கோவிலுக்கு மேற்கேயுள்ள சாகம ) ஊடாகச் சென்ற படை பொலநறுவையை நோக்கி முன்னேறியது. அநுராதபுரத்திற்குச் சென்ற படைக்கு எதிராக " ஆதிமலய " என்பவன் கிளர்ச்சி செய்தாலும் அது அடக்கப்பட்டது. இத்தகைய கிளர்ச்சி விஜயபாகுவின் முடிசூட்டு வைபவத்தினையும் பின்போட்டது எனக் கூறப்படுகின்றது. அநுராதபுரத்திற்குச் சென்ற படை பொலநறுவைக்குச் சென்ற சிங்களப்படையுடன் இணைந்து கொண்டது. இறுதியாக நடைபெற்ற இத்தாக்குதலிற் சோழர் படை தோல்வியைத் தழுவியது.
சோழரை வெற்றி கொண்ட விஜயபாகு சிங்கள மன்னரின் பாரம்பரிய தலைநகரான அநுராதபுரத்தைத் தலைநகராக்கு வதற்குப் பதிலாகப் பொலநறுவையையே சோழரைப் போலத் தலைநகராக்கி ஜனநாதமங்கலம் என்ற இதன் பெயருக்குப் பதிலாகத் தனது பெயரினை அடிப்படையாகக் கொண்டு விஜயராஜபுர " எனப் பெயரிட்டான். சோழ நிருவாக அமைப்பையே இவன் தனது காலத்திலுந் தொடர்ந்தான் என்பதற்கு இப்பெயர் மாற்றம் மட்டுமன்றிப் பிற சான்றுக ளும் உண்டு. சோழரின் கல்வெட்டுகளிலே காணப்படும் மன்னனைக் குறிக்குந் "தேவர்' என்ற சொல் இவனின் கல் வெட்டுகளிலும் உள. இவ்வாறே சோழராட்சியில் முக்கிய பங்கு வகித்த வேளைக்காரப் படை இம்மன்னன் காலத்திலுந் தொடர்ந்தியங்கியது. சுந்தளாயில் முதலாம் இராஜராஜ னின் பெயரால் அமைக்கப்பட்ட இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தைத் தனது பெயர் கொண்டு விஜயராஜ சதுர்வேதி
யாழ். - தொன்மை வரலாறு 3O2 )ே

மங்கலம் என மாற்றிய தன்மையும்,49 சோழரின் அமைப்பு களை விஜயபாகு தொடர்ந்து பேணியதை எடுத்துக் காட்டு கின்றது.
இச்சந்தர்ப்பத்திற் சோழருக்கெதிராக விஜயபாகு கொண் டிருந்த வெளிநாட்டு உறவுசள் பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. சோழர் ஈழத்தினை விட்டு அகன்றா லுஞ் சோழர் ஆதிக்கம் தமிழகத்தில் வலுவாகக் காணப் பட்டதால் அவ்வரசிலிருந்து ஏற்படும் ஆடத்து சளைத் தடுப் பதற்காக விஜயபாகு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிச் சூளவம்சத்திற் கூறப்பட்டுள்ளது.50 இதன் முதல் நட வடிக்கையே சோழரின் தாக்குதலுக்கு வாய்ப்பான இடமாக இருந்த அநுராதபுரத்திலே தனது அரசிருக்கையை அமைக் காது பொலநறுவையிலே இதனை அமைத்துக் கொண்ட தாகும். இவ்வாறேதான் வடமேற்குக் கரையும் இம்மன்ன னாற் பாதுகாக்கப்பட்டது. சோழரிடமிருந்து வர இருந்த ஆபத்தினை மேலுந் தடுப்பதற்காக இவர்களின் எதிரிக ளோடு விஜயபாகு உறவுங் கொண்டிருந்தான். முதலாம் குலோத்துங்கன் பழைய பகைமையை மறந்து விஜயபாகுவின் சகோதரியான மித்தவை சோழ இளவரசனுக்கு மணம் முடித்து வைக்க விரும்பியுங்கூட அவளை இச்சோழமன்ன னுக்கு மணம் முடித்துக் கொடுப்பதற்குப் பதிலாகச் சோழ ரின் எதிரியாகிய பாண்டியனுக்கு விஜயபாகு மணம் முடித்துக் கொடுத்தான். இந்திய உபகண்டத்திற் சோழருக்கெதிராகத் தனது கரத்தினை வலுப்படுத்த விரும்பிய விஜயபாகு முன் னர் உருகுணை மன்னனாக விளங்கிய ஜோதிபாலாவின் மகள் லீலாவதியைத் தனது பட்டத்து இராணியாக்கியதோடு தனது இரண்டாவது பட்டத்து இராணியாகக் கலிங்கநாட்டு இள வரசியாகிய திரிலோகசுந்தரியையும் மணந்தான். இக்காலத்திற் கலிங்கரோடு சோழர் பகைமை கொண்டிருந்தமையும் ஈண்டு நினைவு கூரற்பாலது.
சூளவம்சம் இவன் ஈழம் முழுவதிலுந் தனது மேலான ண யைச் செலுத்தினான் எனக் கூறுகின்றது. இக்கூற்றினை
இவனால் வெளியிடப்பட்ட அம்பேகமுவக் கல்வெட்டும்
இ) 3O3 வரலாற்றுக் காலம் II

Page 168
உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டுத் தனது வீரத்தினாலே தமிழ் படைகளைத் தோற்கடித்து முழு ஈழத்தினையும் தனது ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தான் எனக் கூறு கின்றது.51 துரதிஷ்ட வசமாக வடபகுதியில் இக்காலத்தில் இவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. சூளவம்சத்திலுள்ள ஜம்புகோள விகாரைக்கு இவன் மேற்கொண்ட திருத்த வேலைகள் பற்றிய குறிப்பு மாத்தளைப் பகுதியிலுள்ள இப் பெயர் கொண்ட விகாரைக்கே பொருத்தமாகின்றது. 52 அத் துடன் வடபகுதியில் இவன் ஏற்படுத்திய நிருவாக ஒழுங்குகள் பற்றிய சான்றுகள் சூளவம்சத்திற் காணப்படவில்லை.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு சோழ மன்னனான முதலாவது குலோத்துங்கன் விஜயபாகுவுடன் சிநேக உறவை வளர்க்க விரும்பி ஒரு தூதுக்குழுவை ஈழத்திற்கு அனுப் பினான். அதன் நோக்கம் விஜயபாகுவின் சகோதரியான மித்த என்பவளைச் சோழ இராசகுமாரனுக்கு மணப் பெண்ணாகப் பெறுதலே ஆகும். இத்தகைய நோக்கத்துடன் தர்ன் சாளுக்கிய மன்னனும் விஜயபாகுவுக்குத் தூதொன்றை அனுப்பியிருந்தான். முதலில் விஜயபாகு மன்னன் சாளுக்கிய நாட்டுத் தூதுவர்களை உபசரித்து அனுப்பினான். இவர்கள் தமது தாய்நாட்டுக்குச் செல்லும் வழியில் சோழநாட்டி னுாடாகவே செல்ல வேண்டியிருந்தது. அப்போது இக்குழு வினரின் மூக்கு அரியப்பட்டு இவர்கள் சித்திரவதை செய் யப்பட்டனர். இதனாற் கோபங் கொண்ட விஜயபாகு ஈழத்தில் இருந்த சோழநாட்டுத் தூதுவர்களை அழைத்து அவர்களுக்குப் பெண்களுடைய உடைகளை அளித்துத் தனது எதிர்ப்பினையும் கோபத்தையும் சோழ மன்னனிடம் எடுத்துச் சொல்லுமாறு பணித்தான் எனவும் சூளவம்சம் குறிப்பிடுகின்றது.58 இதனைத் தொடர்ந்து விஜயபாகு சோழநாட்டின் மீது படை எடுப்பதற் காக கி. பி. 1085இல்) தனது இரு படைத் தலவர்களை வட பகுதியிலுள்ள மட்டிகாவட்டதீத்த (மட்டுவில் நாடு), மகாதித்த (மாதோட்டம்) ஆகிய துறைமுகங்களுக்கு அனுப்பி வேண்டிய ஆயத்தங்களைச் செய்தான் எனவும் இந்நூல் கூறுகின்றது.54
யாழ். - தொன்மை வரலாறு 3O4 O

விஜயபாகுவின் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ் இராணுவத்தினரான வேளைக்காரப் படையினர் தமது தாய்நாட்டவருக்கெதிரான விஜயபாகுவின் நடவடிக்கைகளை விரும்பவில்லை. இதனால் இவர்கள் இப்படை எடுப்புக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு இராணுவத் தளபதிகளையும் கொன்றதோடு பொலநறுவையையும் தீக்கிரையாக்கினர். அத் துடன் விஜயபாகுவின் இளைய சகோதரியாகிய மித்தவை யும் அவளது பிள்ளைகளாகிய மானபர்ண, கிர்த்திசிறிமேக, பூரீவல்லப ஆகியோரையும் சிறைப்பிடித்தனர். இக்கிளர்ச்சியை நேரில் நின்று சமாளிக்க முடியாத விஜயபாகு ‘வக்கிரிகல" என்ற இடத்திலிருந்த கோட்டை ஒன்றினுள் ஒளித்துக் கொண் டான் என்றும் பின்னர் ஒருவாறு பொலநறுவைக்குத் திரும்பி வேளைக்காரரின் கிளர்ச்சியை அடக்கித் தனது அரசாட்சியை ஸ்திரப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. வடபகுதியோடு விஜயபாகு கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டும் இன்னோர் சம்பவமும் சூளவம்சத்தில் இடம் பெற்றுள்ளது.55 சோழரின் தாக்குதல் ஏற்படலாமென்று நினைத்த விஜயபாகு தனது நாற்பத்தைந்தாவது ஆட்சியாண்டில் (கி. பி. 1103) படைகளுடன் சென்று கடற்கரையிலுள்ள ஒரு துறைமுகத்தில் எதிரியின் வரவை எதிர் பார்த்துத் தங்கியிருந்தான் என்றும் இத்தகைய படை எடுப்பு நிகழாததால் அவன் தனது தலை நகருக்குத் திரும்பினான் என்றும் கூறப்படுகின்றது. இதிற் கூறப்படும் கடற்கரையிலே இருந்த துறைமுகப் பட்டினம் மாதோட்டமாக இருக்கலாம் எனக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு வடபகுதி மீது விஜயபாகுவின் நேரடி ஆட்சிக்கான தடயங்கள் காணப்படாத நிலையில் இவன் சோழ நாட்டின் மீது மேற்கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளின்போதே இப்பகுதித் துறைமுகங்கள் குறிப்பிடப்படுவது அவதானிக்கத்
தககது.
வடபகுதியில் சோழராட்சியும் அதன் விளைவுகளும்
ஈழத்தின் வடபகுதியாகிய யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் முதலாம் இராஜராஜன் காலந்தொட்டுச் சோழராட்சி காணப் பட்டதற்கான தொல்லியற் சான்றுகள் பற்றி ஏற்கனவே
O 3o5 வரலாற்றுக் காலம் 11

Page 169
கண்டோம். ஈழம் முழுவதையும் தனது ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்த முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்று யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வடபகுதியில் சோழராட்சி காணப்பட்டதை மேலும் உறுதி செய்கின்றது. இது காணப்பட்டுள்ள தூணின் அளவு 5' 10** 8%'x84' ஆகும். இதன் இரு பக்கங்களிலும் எழுத்துகள் காணப்படுகின்றன. தமிழ் கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்ட இக்கல்வெட்டின் மொழி தமிழாகும். இக் கல்வெட்டுப் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெற்ற ஒன் றாகவே காணப்படுகின்றது. ஏனெனில் யாழ்ப்பாண மாவட் டத்திற் காணப்படும் முதல் தமிழ்க் கல்வெட்டு இதுவாகும். இதற்கு முன்னர் ஊர்காவற்றுறையிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு முதலில் அமைந்திருந்த இடம் மாதோட்டம் எனக் கண்டோம். இங்கிருந்து தான் இக்கல்வெட்டு ஊர்காவற் றுறைக்கு எடுத்து வரப்பட்டது.
கோட்டையிற் கிடைத்த இக்கல்வெட்டை அ’, 'ஆ' என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ‘அ’ என்ற பகுதி யில் 44 வரிகளும், ஆ என்ற பகுதியில் 29 வரிகளும் உள. இக் கல்வெட்டு இங்கு ஸ் ள ஆலயமொனறிற்கு அளிக்கப்பட்ட நிவேதனம் பற்றிக் கூறுகின்றது. ஆலயம் அமைந்திருந்த இடத்தின் பெயர் முழுமையாக இதில் வாசிக்க முடியும் நிலை யில் காணப்படாதவிடத்தும் இதனை * நல்லூர் " என இந்திரபாலா இனங்கண்டுள்ளமை ஏற்புடைத்தாக அமைந் துள்ளது.* ஏனெனில் நல்லூர் என்ற பெயர் சோழர் காலத் தில் செல்வாக்குடன் விளங்கிய இடப்பெயர்களின் ஒன்றாகும்.
முதற் பகுதி (அ) சிதைந்த நிலையிற் காணப்பட்டாலுங் கூட மாதோட்டத்தில் உள்ள இராஜேந்திரனின் கல்வெட்டுப் போன்று இம்மன்னனின் அரசாட்சிப் பகுதிகளையும், ஈழத்து மன்னன், மனைவியர், திரவியங்கள, ஆகியன கைப்பற்றப் பட்ட செய்தியையும் கூறுகின்றது. ஈழத்தின் இக் கல் வெட்டின் அழிந்த பாகங்களை எடுத்துக் காட்டும் வாசகங் களைக் கொண்டு இதன் இடைவெளிகளை இதனைப் பதிப் பித்த இந்திரபாலா நிரப்பி உள்ளார். இக்கல்வெட்டு
யாழ். - தொன்மை வரலாறு 3O6 ()

* திருமன்னி வளர" என ஆரம்பிக்கின்றது. இதில் இராஜேந்திர னின் பெயர் மட்டுமன்றி அவனின் விருதுப் பெயரான * பரகேசரி வர்மன்" என்பதும் காணப்படுவது அவதானிக்கத் தக்கது.
இதன் இரண்டாவது பாகம் (ஆ) இம்மன்னனின் ஆட்சி யாண்டைக் குறித்தாலும் அது அழிந்து விட்டது. இக்கல் வெட்டில் அரசன் "உடையார் சிறீ இராஜேந்திர சோழதேவர்’ என அழைக்கப் பட்டுள்ளான். இதிற் அடிறப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு இது இம்மன்னனின் ஆறாவதும், பத்தாவதுமான ஆட்சி ஆண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கூறி இதன் காலத் தைக் கி. பி. 10 22ஆம் ஆண்டு என இந்திரபாலா யூகித் துள்ளார். இக்காலத்தில் ஜம்புகோள பட்டினம் செல்வாக் கிழக்க மேற்கூறிய துறைமுகங்கள் முன்னிலை அடைந்தன. முந்நீர்ப்பழந்தீவுகளைத் தன் கடற்படை வலிமையுடன் தனதாணைக்குட்படுத்திய சோழரின் கடற்படை வடக்கேயுள்ள தீவுகளிலும் நிலைகொண்டிருக்கலாம். இது பற்றிய விபரங்கள் நமக்கு இதுவரை கிட்டவில்லை. 2,
எனினும் மேற்கூறிய சான்றுகள் வடபகுதியிலே தொடர்ந்து சோழராட்சி நிலைகொண்டிருந்ததை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது 1017ஆம் ஆண்டளவில் இராஜேந்திரன் ஈழத்தினைத் தனது ஆட்சிக்கு உட்படுத்தினான் எனலாம். இது நடந்தது ஐந்தாவது மகிந்தனது முப்பத்தாறாவது ஆட்சிக் காலத்தில் ஆகும்.57
எனினும் சோழர் காலத்திலிருந்து ஈழத்திற் பல குடி யேற்றங்கள் ஏற்பட்டதைப் பல இடப்பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. மாதோட்டம் முதலாவது இராஜராஜனின் பெயரால் இராஜராஜபுரமென அழைக்கப்பட்டது. ஈழத்தின் பெரு நிலப்பரப்பில் சோழராட்சியையும் அதன் விளைவாக ஏற் படுத்தப்பட்ட குடியேற்றங்களையும் நினைவு கூரும் மேலும் பல பெயர்கள் உண்டு. இவை பற்றிய சான்றுகள் அண்மை யில் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் மூலமாக வெளிவந்துள்ளன.68 இவ்விடப் பெயர்களில் மண்ணி
O 3o7 6QJ y6w) aribgp1 ĝis asmaj ŭit III

Page 170
யாறு, குடமுருட்டி ஆறு, நல்லூர், தியாகம், சோழமண்டலம்,
பல்லவராயன், பல்லவராயன் ஆறு பல்லவராயன்கட்டு, ஆலங்கேணி, செட்டிகுறிச்சி, மட்டுவில்நாடு, சோழியகுளம், அம்பலப்பெருமாள், நீராவி, வெள்ளாங்குளம், கோனாவில்,
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். (படம் 43-44). யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக விளங்கிய நல்லூர் என்ற இடப்பெயர் இவ்விராச்சியம் தோன்ற முன்னரே யாழ்ப் பாணக் குடாநாட்டில் வழக்கிலிருந்ததை யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது இராஜேந்திரனின் கல்வெட்டு எடுத்துக்காட்டியுள்ளது.59 இவ்வாறே உரும்பிராய், கருணாகரப்பிள்ளையார் கோயில் சோழமன்னனான முதலாம் குலோத்துங்கனின் சேனாதிபதியின் பெயரை நினைவூட்டு கின்றது எனக் கூறுவாருமுளர். மாவிட்டபுரத்திலுள்ள வள வர்கோன் பள்ளம், வளவனாகிய சோழனையும், வடமராட்சியி லுள்ள கங்கைகொண்டான், முதலாம் இராஜேந்திரனையும், செம்பியன்பற்று, செம்பியராகிய சோழரையும் நினைவு கூரும் பிற பெயர்களாகும். இவ்வாறே வடமராட்சி மேற்கிலுள்ள மழவராயன் குறிச்சி, திருநெல்வேலியிலுள்ள பாண்டிமழவன்
வளவு, சங்கானையிலுள்ள வில்வராயன் தோட்டம், கட்டுவனிலுள்ள சோழகங்கராயன் தோட்டம், கலிங்கராயன் சீமா, கொக்குவிலிலுள்ள கலிங்கராயன் புலம் ஆகியன
சோழராட்சிக்குப் பின்னரும் யாழ்ப்பாண அரசின் எழுச்சிக்கு முன்னரும் ஈழத்தின் வடபகுதி நோக்கி ஏற்பட்ட இடப் பெயர்வுகளை நினைவூட்டுகின்றன. இடப்பெயர் ஆய்வினை விரிவாக மேற்கொள்ளின் இக்காலத்திலே தமிழகத்திலிருந்து ஏற்பட்ட குடியேற்றங்கள் பற்றிய விரிவான செய்திகள் மேலுங் கிட்டலாம்.
மேற்கூறிய குடியேற்றங்களை ஊக்குவிப்பனவாகச் சோழர் காலத்திலிருந்து ஈழம் வந்த தமிழகத்து வணிக கணங்களும் அமைந்தன. இவ்வணிக கணங்கள் பற்றியும் அவற்றின் செயற் பாடுகள் பற்றியும் இந்திரபாலா,60 பத்மநாதன்,1ே L5-Tst ஏப்ரகாம்62 ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். ஈழத்துத் தமிழ் வணிக கணங்கள் பற்றிக் குறிப்பிடும் பத்மநாதன் கி. பி. 900 - 1250 ஆகிய ஆண்டுக்காலப்பகுதியில் இயங்கிய இக்
யாழ். - தொன்மை வரலாறு 3O8 9ே

கணங்கள் பற்றிய விபரம் ஈழத்திலுள்ள 22 சாசனங்களில் உள்ளனவென்றும், இவற்றுள் மூன்று சாசனங்கள் மட்டும் சிங்கள மொழியிற் காணப்பட ஏனையவை யாவும் தமிழ் மொழியிலேதான் உண்டு என்றும் கூறியிருப்பது அவதானிக்கத் தக்கது. இச்சாசனங்கள் அநுராதபுரம், பொலநறுவை, பதவியா, வகால்கட, விகாரகின்ன , வதுளை, தெகியமுல்ல, கல்தென் பிட்டிய, மணல்கேணி முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில், இத்தகைய வணிக கணங்களான திசை யாயிரத்து ஐஞ்ஆாற்றுவர், நகரத்தார், வலஞ்சியர், மணிக் கிராமத்தார் போன்றோர் முதலாவது விஜயாலயன் காலத் திலிருந்தே காணப்படுவது அவதானிக்கத்தக்கது. ஈழத்திலும் சோழராட்சியில் கி. பி. 11ஆம் நூற்றாண்டில் இத்தகைய வணிக கணங்கள் செயற்பட்டதற்கான ஆதாரமுண்டு. சோழர் இக்காலத்தில் இந்து சமுத்திரத்தில் நடைபெற்ற வர்த்தகத் தில் பங்குகொள்ள விரும்பினர். இதனால் சோழரின் அரசியல் ஆதிக்கத்தினைத் தொடர்ந்து ஈழத்திலும் வணிககணத்தினர் தமது செல்வாக்கினை அதிகரித்தனர் எனலாம். அய்யாவொளே எனக் கன்னட மொழியில் அழைக்கப்பட்ட வணிககணமே தமிழ்ச்சாசனங்களிலே திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெறுமனே ஐஞ்அநூற்றுவர் என அழைக்கப்படுவதும் உண்டு. ஈழத்தில் பதினொராம் நூற்றாண்டில் பொலநறுவையில் இவர்கள் வசித்தமைக்கான சாசன ஆதாரமுண்டு. இவ்வாறே நானா தேசிக வணிக கணத்தவரும் பதவியாவில் முதலாவது இராஜராஜனின் காலத் திலிருந்தே காணப்பட்டனர். நானா தேசிகள் பற்றி ஈழத்தி லுள்ள ஏழு சாசனங்களிற் குறிப்புகள் உள. இவர்களின் கல்வெட்டுகள் பதவியா, வகால்கட, விகாரகின்ன, தெகிய முல்ல ஆகிய இடங்களிலுள்ளன. பொதுவாக நானா தேசிகள், அய்யாவொளே அல்லது ஐஞ்ஞாற்றுவர் அல்லது திசையா யிரத்து ஐஞ்ஆாற்றுவர் ஆகிய வணிக கணங்கள் இவற்றின் கூட்டமைப்பாகிய மிகப் பெரிய அமைப்பான நானா தேசித் திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் என்ற அமைப்பில் இயங்கிய தாகவும் கூறப்படுகின்றது.
O 3og வரலாற்றுக் காலம் II

Page 171
இவ்வமைப்பில் நானாதேசிகளை விடச் செட்டிகள், செட்டி புத்திரர், கவறையர், காமுண்டஸ்வாமி, ஆவணக்காரர், வீரவலஞ்சியர், வீரக்கொடி போன்ற பிற வணிக கணங் களும் இயங்கின. இவ்வணிக கணங்களுக்குரிய மற்றுமோர் சிறப்பு யாதெனில் கி. பி. 11ஆம், 12ஆம் நூற்றாண்டு களில் ஈழத்தில் சுயாட்சியுரிமை கொண்ட வணிக பட்டினங் களை அமைக்கும் அளவுக்கு இவை செல்வாக்குப் பெற்றிருந் தமையேயாகும். இத்தகைய பட்டினங்களை வகால்கடவில் அமைத்த ஐஞ்ஞாற்றுவர் பதவியாவிலே ஐயம்பொழில் பட்டினத் தினையும் அமைத்தனர். பதவியாவில் கிடைத்துள்ள இவர்களின் கல்வெட்டு பதினெண்பூமி திசையாயிரத்து ஐஞ்அநூற்றுவர் என இவர்களை அழைப்பது நோக்கற்பாலது. இத்தகைய வணிக பட்டினமொன்று தக்கின தேசத்தில் உள்ள பண்டு வாஸ் நுவரவிலும் காணப்பட்டதை அங்கு கிடைத்த சாசனம் எடுத்துரைக்கின்றது. இச்சாசனத்தின் எழுத்துகள் சிதைந்த நிலையிற் காணப்பட்டாலுங்கூட இதில் இடம் பெற்றுள்ள நானா தேசி பட்டினம், " அருஞ்சிறப்புத் தேசி பதினெண் பூமிப் பட்டினப்பாதை " போன்ற சொற்றொடர்கள் இச் சாசனம் கிடைத்துள்ள இடத்திலே ஐஞ்ஆாற்றுவர் பட்டின மொன்றை அமைத்ததை எடுத்துக் காட்டியுள்ளன. விகார கின்னக் கல்வெட்டும் நானாதேசிகளான ஐஞ்ஆாற்றுவர் அமைத்த வீரபட்டினம் பற்றிக் குறித்துள்ளது.
ஈழத்தின் வடபகுதியைப் பொறுத்தமட்டில் இவ்வணிக கணங்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்குரிய சாசனங்கள் ஈழத்தின் பிற பகுதிகளிற் கிடைத்திருப்பது போன்று கிடைக்காவிட்டாலுங்கூட, தமிழகம், ஈழத்தின் வட பகுதி தவிர்ந்த ஈழத்தின் பிற பகுதிகளிற் கிடைத்த சான்று களின் அடிப்படையில் ஒரளவுக்கு இப்பகுதியில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டு மாதோட் டத்திற் காணப்பட்ட தமிழ் வணிகர் பற்றிக் குறிப்பிடு கின்றது.83 இ வர் க ளின் பெயர்களாகச் சங்கரபாடியார், வெற்றிலை வாணிபர், வாழைக்காய் வணிகர் போன்றோர்
குறிப்பிடப்பட்டுள்ளனர். துறைமுகப்பட்டினமான மாதோட்
யாழ். - தொன்மை வரலாறு 31O )ே

டம் இக்காலத்தில் ஈழத்தில் காணப்பட்ட வணிககணங்க ளால் அவைகளின் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட் டதை மாந்தைத் தோணக்காரர் பற்றி வகால் கடவிலமைந் திருந்த நானாதேசிகளது வீரபட்டினத்திற் கிடைத்துள்ள கல்வெட்டு எடுத்தியம்புகின்றது.4ே இக்கல்வெட்டிற் காணப் படும் "மாந்தை தோணக்காரர் பட்டவர்த்தனம்" என்ற குறிப்பு மாந்தையிலுள்ள கப்பலோட்டிகளின் கணமொன்றின் தலைவனைக் குறித்தது எனக் கொள்ளப்படுகின்றது. இச்சொற் றொடர் ஆனது வகால்கட (கட்டனேரி) வீரபட்டினம் மாந்தைத் துறைமுகத்தினூடாக நடைபெற்ற இறக்குமதி ஏற்றுமதி வாணிபத்தில் பங்கு கொண்ட பெருவணிகர் கணங்களைச் சேர்ந்தவர்களைத் தன்னகத்தே கொண்டிருந் ததை எடுத்துக் காட்டுகின்றது எனவும் கொள்ளப்படுகின்றது.
வகால்கட மட்டுமன்றி ஐஞ்ஆாற்றுவரால் அமைக்கப்பட் டிருந்த பதவியாவிலுள்ள வீரபட்டினத்துடன் பூநகரி மாவட் டத்திலுள்ள "கோணாவில்" என்ற கி ராமத் தி ல் நிலை கொண்டிருந்த 'நானாதேசிக வணிக கணத்தவர் கொண் டிருந்த தொடர்பு பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது 65 இவ்விடத்திலுள்ள சிவதேவாலயத்தின் அழிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் இராஜாதிராஜனின் காலத்திற் குரிய கல்வெட்டு இங்குள்ள இரவிகுல மாணிக்க ஸ்வரத்திற்கு நானாதேசிக வணிக கணத்தைச் சார்ந்த கோணாவில் வெங் காடன் என்பவன் எறிமணி ஒன்றைத் தானமாகக் கொடுத் தது பற்றி உரைக்கின்றது. கோணாவில் பூநகரியின் கிழக் கெல்லையிற் காணப்படும் கிராமமாதலால் இவ்விடத்திலுள்ள நானாதேசிக வணிகனே இத்தகைய தானத்தினை அளித் திருக்கலாமெனக் கொள்ளப்படுகின்றது. இதனை உறுதிப்படுத் தப் புஸ்பரத்தினம் மேலும் பல சான்றுகளை நிரைப் படுத்தியுள்ளார். இக்கிராமத்திற்குத் தெற்காக த் தா ன் "அம்பலப்பெருமாள்” என்ற கிராமம் உள்ளது. அம்பலம் என்பது சோழர் காலத்தில் வணிகர்கள் தங்குமிடத்தைக் குறித்து நின்றது. இதனால் பூநகரியிலுள்ள "அம்பலப்பெரு மாள்" என்ற இடம் வணிகர்கள் தங்கிய இடத்தையே குறித்து நின்றது எனலாம். இத்தகைய யூகத்திற்கு மெரு
O 31 1 வரலாற்றுக் காலம் III

Page 172
கூட்டுவதாக அம்பலப்பெருமாள் என்ற இடத்திற்கு அருகி லுள்ள சோழியன்குளம் என்ற இடப்பெயர் அமைந்துள்ளது. இதனால் பூநகரிப் பகுதியில் மட்டிவால்நாடு என்ற துறை முகமூடாக இயங்கிய நானா தேசிகள் என்ற வர்த்தக கணத் தினர் பதவியாவோடு மட்டுமன்றிப் பிறபகுதிகளில் இயங் கிய வர்த்தக கணங்களோடும் தமது வர்த்தக நடவடிக்கைகள் மூலம் இணைந்திருந்தனர் எனக் கொள்ளலாம். யாழ்ப் பாணத்தின் கோட்டைக்கருகே உள்ள ஐஞ் ஆாற்றுவன் வளவு என்ற இடப்பெயர் இவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் இப்பகுதியிற் காணப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்திலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது ஐஞ்ஆாற்றுவர் என்ற வணிக கணத்தினர் கர்நாடகத்திலுள்ள நிலக்கிழார் வகுப் பினரின் அமைப்பாகிய ஒக்கலு" அல்லது "அறுவத்தொக்கலு" என்ற அமைப்புடனும், தமிழகத்திலுள்ள சித்திரமேழி என்ற அமைப்புடனும் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் இணைந்து செயற்பட்டதை அறிந்து கொள்ளலாம்.68 இவ்வாறு 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் வியாபார, வணிக அமைப் புகள் இணைந்து இயங்கியதை இவ்வமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. சித்திர மேழி அமைப்பினர் கி. பி. 11 ஆம் நூற்றாண்டில் தமிழகத் திற் காணப்பட்டதற்கான கல்வெட்டாதாரங்கள் காணப்பட் டாலுங் கூட இவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற் பகுதியிற்றான் முக்கிய அமைப்பாகச் செல்வாக்குப் பெற்றனர். சித்திரமேழி அமைப்பு இக்காலத்தில் பரந்த அளவிற் செல் வாக்குடன் விளங்கியதைச் "சித்திரமேழிப் பெரு நாட்டார்" என்ற குறிப்பு மட்டுமன்றி ஐஞ்ஆாற்றுவரோடு இணைந்து வெளியிட்ட கல்வெட்டுகளில் ஐஞ்ஆாற்றுவரை விட இவர் களே முதல் நிரைப்படுத்தப்பட்டுள்ளதும் எடுத்துக் காட்டு கின்றது. இத்தகைய கல்வெட்டுகளில் மன்னரின் சின்ன மாகிய செங்கோல், சித்திரமேழியினரது சின்னமாகிய மேழி, ஐஞ்ஆாற்றுவரின் சின்னமாகிய சிறு பை அல்லது செம்பொன் பசும் பை வரையப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இவ் வாறு இம்மூன்று சின்னங்களும் இக்கல்வெட்டுகளில் காணப்
யாழ். - தொன்மை வரலாறு 312 G

படுவது இவர்களின் இணைந்த செயற்பாட்டை உறுதி செய் யும் அதேநேரத்தில் இவர்களின் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த அரச ஆதரவையும் எடுத்துக் காட்டுகின்றது. இதனால் இவ் விரு அமைப்புகளும் இக்காலத்தில் இணைந்து ஈழத்தின் வட பகுதியிலுஞ் செயற்பட்டன என்று கூறலாம்.
வடபகுதியில் மாந்தைத் துறைமுகத்தைவிட ஊர்காவற் றுறை ஒரு முக்கிய துறைமுகப் பட்டினமாக இக்காலத்தில் எழுச்சிபெற்றது. இதனை முதலாவது பராக்கிரமபாகுவின் நயினாதீவிற் காணப்படும் ஊர்காவற்றுறைத் தமிழ்க் கல் வெட்டு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.87 இக்கல்வெட்டு இத்துறைமுகத்தில் வந்திறங்கிய யானை, குதிரை ஆகிய மிருகங்களை ஏற்றிவந்த மரக்கலங்கள் உடையும்போது அதற்குரிய நஷ்டத்தின் பங்கை எவ்வாறு அரசும், மரக் கலங்களின் உடைமையாளரும் பகிர்ந்து கொள்ளல் வேண்டு மென்பது பற்றி இத்துறைமுகத்திற் கடமையாற்றிய அதிகாரி களுக்கு இடப்பட்ட அறிவுறுத்தல்களைக் குறிப்பதாக இருந்தா லுங்கூட இதிற் கூறப்பட்ட விடயங்கள் இத்துறைமுகத்தில் வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்ட வணிக கணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. இக்கல்வெட்டு இத் தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட பரதேசிகள்” பற்றிக் குறிப்பிடுகின்றது. இதற்கு விளக்கங் கொடுக்க வந்த பத்மநாதன் இது வெளிநாட்டு வர்த்தகரைக் குறிக்குஞ் சொல் என்பது தவறானது என்றும், இது இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இப்பெயர் கொண்ட ஒரு வணிக கணத்தையே குறித்தது என்றும் எடுத்துக் காட்டியுள்ளார்.68
எனினும் இது பற்றி இந்திரபாலா கூறுவதை நோக்கும் போது இது வெளிநாட்டவரான ஐஞ்ஆாற்றுவரைக் குறித்தது என்பதும் பொருத்தமானது போலத் தெரிகின்றது.89 அஃதாவது,
* ஊராத்துறைத் துறைமுகத்திற்கு அடிக்கடி போய்ச் சென்ற வெளிநாட்டு வணிகரை விளித்து அமைக்கப் பெற்ற நயினாதீவிலுள்ள பராக்கிரமபாகுவின் சாசனம் அரசனுக்கு யானைகளையுங் குதிரைகளையும் ஏற்றிச் சென்ற வாணிபக்
0 312 வரலாற்றுக் காலம் II

Page 173
கப்பல்களைக் குறிப்பிடுகின்றது. யானைகள், குதிரைகள் என்பன ஐஞ்ஆாற்றுவர் தாம் கொள்வனவு, விற்பனவு செய்ததாகக் குறிப்பிடுவனவற்றுள் இரு பிரதானமான பொருட்களாகும். தென்னிந்தியச் சாசனங்களிற் குதிரைச் செட்டிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்ற போதும் குதிரை வாணிபமானது அராபியர் வசமாயிருந்திருத்தல் கூடும். யானை வர்த்தகமானது தென்னிந்தியர், சிங்கள வர், தென்கிழக்காசியர் ஆகியோர் பங்கு கொண்டிருக்கக் கூடியவொன்றாகும். "
த மி ழ கத் தி ல் ஐஞ்ஞாற்றுவருக்குஞ் சித்திரமேழியினருக்கு மிடையே காணப்பட்ட தொடர்புகளை நோக்கும் போதும் வடபகுதியிற் சித்திரமேழியினர் மட்டுமன்றி ஐஞ்ஆாற்றுவரும் அவர்களது அமைப்பிலுள்ள நானாதேசிகளும் வர்த்தக நட வடிக்கைகளை மேற்கொண்டதற்கான தடயங்களை அவதா னிக்கும் போதும் இந்திரபாலாவின் கருத்தினை முற்றுமுழு தாக நிராகரிக்க முடியாதென்பது தெளிவாகின்றது. நானா தேசிகள் எனப்பட்ட ஐஞ்ஞாற்றுவர் ஈழத்தின் தென்கிழக்குக் கரையோரத்திலும் இயங் கி ய  ைத அம்பாந்தோட்டையிற் கிடைத்த துர்க்கையின் உருவம் பொறித்த இவர்களின் இலட்சனை70 எடுத்துக் காட்டுவதால் வடக்கின் கரையோரத் துறைமுகங்களான மாதோட்டம், ஊர்காவற்றுறை மட்டு மன்றி வடபகுதியின் பிற இடங்களிலும் இவர்கள் செல் வாக்குடன் இக்காலத்தில் விளங்கியிருந்தனர் எனலாம். இவ் வணிக கணங்களோடு "செட்டி” களுத் தனியான கணங்க ளாக ஈழத்திற் பிற பகுதிகளில் இயங்கியது போன்று இங்கும் இயங்கினர் என்பதைக் குடாநாட்டில் மட்டுமன்றிப், பெருநிலப் பகுதியிலுள்ள பூநகரி போன்ற இடங்களிற் 'செட்டி" என்ற பெயரை நினைவூட்டும் இடப்பெயர்கள் அமைந்துள்ளமையும் எடுத்துக் காட்டுகின்றன.
இத்தகைய வணிக கணங்கள் பற்றிய கல்வெட்டுகள் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து காணப் படவில்லை. இவர்களின் வணிக நடவடிக்கைகளை இக்காலத் தில் எழுச்சி பெற்ற அராபிய வணிகரின் ஆதிக்கங் கட்டுப்
யாழ். - தொன்மை வரலாறு 314 O

படுத்தியதும் இதற்கான காரணமாயிருக்கலாம். எனினும் இக்காலத்தில் வடக்கே தோன்றிய யாழ்ப்பாண அரசும் வாணிப நடவடிக்கைகளிற் சிறப்புப் பெற்றுக் காணப்பட்ட தால் அத்தகைய அரசின் வளர்ச்சியில் இவ்வணிக கணங் களின் ஆதிக்க வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பது Lisögó)Gumr அக்கால அரசியலில் இவை கொண்டிருந்த பங்கு பற்றியோ அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறே இவ்வணிக கணங்கள் கோவில்
களைக் கட்டியும், அவற்றைப் போஷித்தமைக்குமான சான்றுகள் காணப்படுகின்றன. துரதிஷ்டவசமாக வடபகுதி யில் இதற்கான சான்றுகள் கிடைக்காவிட்டாலுங் கூட
இப் பகுதியிலும் ஈழத்தின் பிறபகுதிகளைப் போன்று இவர் களின் நடவடிக்கைகள் இடம் பெற்றிருந்தன எனக் கொள்ளலாம்.
இவ்வணிக கணங்களோடு பல்வேறு இராணுவப் பிரிவு களும் இயங்கியதற்கான சான்றுகள் உள.71 நானாதேசிகள், திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் போன்ற அமைப்புகளில் அங்கக்
காரர் ( மெய்க்காப்பாளர்), கொங்குவாளர், வீரக்கொடி, குருகுலத்தார், அகம்படியார், வேளைக்காரர் போன்ற அமைப் புகள் காணப்பட்டதற்கான சான்றுகள் உள. இவற்றை
விட இப்படைகளின் இராணுவச் செயற்பாடுகளை எடுத்துக் காட்டும் பல்வேறு இராணுவப் பிரிவினர்களும் இவ்வணிக கணங்களோடு இயங்கியதற்கான தடயங்களும் உள. இவற்றுள் எறிவீரர், முனைவீரர், இளஞ்சிங்கவீரர் போன்றோரைக் குறிப்பிடலாம். இத்தகைய இராணுவப் பிரிவுகள் சோழர் காலத்திலிருந்தே இங்கு காணப்படுவது மட்டுமன்றிச் சோழர் ஈழத்தினை விட்டுச் சென்றதன் பின்னர் சிங்கள அரசர் காலத்திலுந் தொடர்ந்து இயங்கியமைக்கான சான்றுகள் காணப்படுவது மற்றோர் சிறப்பம்சமாகும். படை உதவியுடன் அரச பதவியைக் கைப்பற்றுவதற்காக ஈழத்துச் சிங்கள மன்னர் தமிழகஞ் செல்வது பொது நியதியாக அநுராதபுர அரசு காலத்திற் காணப்பட்டாலுங்கூடப் பொலநறுவை அரசு காலத்தில் இதற்கான சான்றுகள் இல்லை. இதற்குக்
O 315 வரலாற்றுக் காலம் II

Page 174
காரணம் இக்காலத்திற் சிங்கள அரசர்களின் தேவைகளை நிறைவேற்ற இத்தகைய இராணுவப் பிரிவுகள் ஈழத்திற் காணப்பட்டமையே. இவர்கள் சிங்கள அரசிற் செல்வாக்கு மிக்கவர்களாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இவ் விராணுவப் பிரிவுகள் வணிக கணங்கள் அ  ைம த் த வீர பட்டினங்களில் அவர்களின் சொத்துடமைகளைப் பாதுகாக்கும் பணிகளிலீடுபட்டிருந்தனர். பதவியாவிலும் விகாரகின்னவிலுங் காணப்பட்ட வீரபட்டினத்தில் 'வலங்கைப் பெரும் படை” போன்ற இராணுவப் பிரிவுகள் செயற்பட்டன. இத்தகைய படைகள் சேனாதிபதிகளின் தலைமையிலிருந்ததற்கான சான்று களைப் பதவியா, விகாரகின்ன போன்ற இடங்களிற் கண் டெடுக்கப்பட்ட இவர்களின் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டி யுள்ளன. இக்கால வேளைக்காரப் படையிலே தமிழர்,
மலையாளிகள், தெலுங்கர் போன்ற பிரிவினர் காணப்பட்டனர்.
சாதி அடிப்படையில் இயங்கிய இக்காலச் சமூகந் தமிழகத் தைப் போன்று ஈழத்திலும் வலங்கை, இடங்கை என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்ததைக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டி யுள்ளன. இத்தகைய பிரிவுகள் ஈழத்தில் இயங்கிய இராணுவப் பிரிவுகளிலுங் காணப்பட்டன. அத் துட ன் இவ்விராணுவப் பிரிவுகளுங்கூடக் குறிப்பிட்ட வணிக கணங்களைத் தமது தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்கான சான்றுகளும் உள. பொலநறுவையிற் கி  ைடத் த வேளைக்காரரது கல்வெட்டு வேளைக்காரப் படையானது வலங்கை இடங்கை போன்ற பிரிவினரதும் ஏனைய சமூகப் பிரிவினரதுஞ் சேர்க்கையாக இயங்கியதை உணர்த்தியுள்ளது.72 இத்தகைய பிரிவினரில்
வலங்கையரின் தலைவர்களாக நானாதேசிகள், வலஞ்சியர் ஆகியோரும் இடங்கையரின் தலைவர்களாக நகரத்தாரும் பொலநிறுவையிலுள்ள வேளைக்காரரின் கல்வெட்டுகளிற்
குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. வலங்கை, இடங்கை போன்ற பிரிவுகள் தமிழகத்தில் முதலாவது இராஜராஜன் காலத்திலிருந்தே இயங்கியதற்கான தடயங்கள் உள. முதலா வது இராஜராஜன், முதலாவது இராஜேந்திரன் காலத்துச் சிறப் பான படைகளாக வலங்கைப் பிரிவினர் இயங்கினர் என்பது பேற்றன் ஸ்ரீனுடைய கருத்தாகும்.78 அவர் மேலும் இது
யாழ்- தொன்மை வரலாறு 316 O

பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் வேளைக்காரரினது படையில் வலங்கைப் பிரிவினரே விதந்து காணப்பட்டனரென்றும், இவர்கள் இக்காலத்திற் சோழமண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பகுதிகளிற் செல்வாக்குடன் விளங்கிய விவசாய சமூகத்தினர் எனவுங் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிக் கருத்துத் தெரி வித்துள்ள மீரா ஏப்ரகாம், அவ்வாறெனில் இடங்கைப் பிரிவில் வேளாளரும், வலங்கைப் பிரிவில் இவர்களை விடச் சமூக மட்டத்திற் செல்வாக்குக் குறைந்த பிற சமூகத்தவருங் காணப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். 74 கள்ளர், மறவர் போன்றோரை இப்பிரிவினுள் அடக்கி விடலாம். கரங்களில் இடதைவிட வலதே முக்கியமாகவுங் காணப் படுவதும் ஒரு வகையில் இக்காலச் சமூகத்தில் முதன்மை வகித்த விவசாய சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிப்பதற் காகவும் இப்பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.
இச்சந்தர்ப்பத்தில் ஈழத்தின் வன்னிமைகள் பற்றி ஆராய்ந்த பத்மநாதன்?5 இவற்றின் தோற்றத்தினை ஈழத்தி லேற்பட்ட சோழராட்சியுடன் இட்டுச் செல்வது அவதானிக் கத்தக்கது. சோழராட்சியில் ஈழத்தில் நிலை கொண்டிருந்த வேளைக்காரருக்கு அளிக்கப்பட்ட படைப்பற்றுகளே வன்னி மைகள் உருப்பெறுவதற்கு வழி வகுத்தன எனக் கூறும் பத்மநாதன் இப்பற்றுகளிற் சில வன்னிமைகளாக உருவெடுத் தன எனவுங் கூறியுள்ளார். காரணஞ் சோழப் பெருமன்னரின் ஆவணங்களில் வன்னியர் பற்றியும் வன்னிப் பற்றுகள் பற்றியும் வேளைக்காரப் படைப் பிரிவின் தலைவர்களாக இருந்த வன்னியநாயகன் பற்றியுஞ் சான்றாதாரங்கள் காணப் படுதலே ஆகும். வையாபாடல் கூறும் வன்னியர் குடியேற்றம் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் இப்பகுதியிலேற்பட்ட குடியேற்றமாகக் கொள்ளப்பட்டாலுங்கூட இக்குடியேற்றம் நடந்தகாலை இப்பகுதியிற் காணப்பட்ட சுதேசத் தலைவர் களைப் பற்றி இந்நூலிற் காணப்படுங் குறிப்புகளை நோக் கும் போது இது ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்திலேற் பட்ட வன்னியர் குடியேற்றத்திற்கு முன்னர் இங்கு நிலை கொண்டிருந்த வன்னிமைகளையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
O 317 வரலாற்றுக் காலம் II

Page 175
அதுமட்டுமன்றி ஆசிரியச் சக்கரவர்த்திகளின் காலத்திலேற் பட்ட குடியேற்றம் பற்றிய வையா தரும் பெயர்ப்பட்டியலும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள் தரும் பெயர்ப் பட்டியலும் இக்காலத்திற்கு முன்னர் தமிழகத்திலிருந்து வந்து இங்கு நிலைகொண்ட பாண்டி நாட்டுப் பிரதானிகளின் பெயர்களைப் பெருமளவுக்கு ஒத்திருப்பதால் இப்பெயர்ப் பட்டியலை இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.78
** அத்தீமாப்பாணன், மழுவராயன், திசைவிளங்குமழுவ ராயன், சேது வந்த மழுவராயன் கறுத்தவாகு, சிங்க மாப்பாணன், இராசிங்க மாப்பாணன், இளஞ்சிங்க
மாப்பாணன், நல்லவாகு மெய்த்தேவன், வீரசோதையன், திடவீரசிங்க மாப்பாணன், அனுராசபுரி வீர மழுவராயன், கிளை காத்தவன், முடிகாத்தவன், சிங்கவாகு யாப்பையி னார், மூக்கையினார், கேப்பையினார், ஊமைச்சியானார், தொவ்வாணி சோனர், திசைவென்றோன், இளஞ்சிங்கவாகு தேவன், தனத்திறற்கிறீபன், வக்கிரன், மயிடன், கறுத்த வராய சிங்கமுகன், மிடியிட்டான், அங்கசிங்கன், காஞ்ச கட்டையன், காலிங்கன், தில்லைமூவாயிரர், சுவதிட்ட ராயன், கங்கை வளநாட்டான், காவேரியடைத்தான், முல்லைமடப்பளி, குமாரமடப்பளி, சங்குமடப்பளி, சருகு மடப்பளி, அகம்படியாராகிய இவர்களும் ஆரிய வங்கிஷ பிராமணர்களும் கூடிவந்து ஒடமேறிக் கடல் கடந்து இலங்கை நாட்டிலே யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி இருந் தார்கள்.
நிற்க, சோழரிடம் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாவது விஜயபாகுவின் இராணுவத்திற் சோழர் காலத்தில் இயங்கிய இராணுவப் பிரிவினர் தொடர்ந்தும் இயங்கினர் என்பதற்கான தடயங்கள் உள. பொலநறுவையிற் காணப்பட்ட சிங்கள அரசின் அரச சின்னமாகிய தந்ததாது கோயிலைப் பாது காக்கும் பணி இவ்விராணுவப் பிரிவுகளில் ஒன்றாகிய வேளைக் காரரிடம் விடப்பட்ட ஒன்றே இவர்கள் இக்காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத்திற்குச் சிறந்த உரைகல்லாக
யாழ். - தொன்மை வரலாறு 318 O

அமைகிறது.77 முதலாவது விஜயபாகுவின் படைகள் நிலை கொண்ட இடங்களாக வடபகுதியிலுள்ள மட்டிவால்நாடு, மகாதீர்த்தம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. சோழ அரசுக் கெதிராகப் ப4டையெடுக்கும் நோக்கத்துடன் விஜயபாகு மகா தீர்த்தத்திற்குப் படைகளை நகரித்தியபோது தமது நாட்ட வருக்கெதிராகச் சிங்கள மன்னன் படை எடுப்பதை விரும் பாத இவர்கள் கிளர்ச்சி செய்தது பற்றியும் அக்கிளர்ச்சி வெகு சிரமத்துடன் அடக்கப்பட்டது பற்றியுஞ் சூளவம்சந் தருந் தகவல் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.78 இத்தகைய வேளைக்காரப் படையினர்தான் இரண்டாவது கஜபாகு காலத்திலும் மன்னனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தவர்களாவர். பின்னர் இது அடக்கப்பட்டது.79 இம்மன்னனின் காலத் திற்றான் பொலநறுவை அரசில் இயங்கிய இராணுவப் பிரிவு களிலொன்றாகிய ‘அகம்படி பற்றிய குறிப்பு முதன்முத லாகக் காணப்படுகின்றது.80 இப்படை அமைப்பு இக்காலத்தில் வடபகுதியிலுங் காணப்பட்டிருக்கலாமென்பதை இன்றுந் தமிழர் மத்தியில் நிலைகொண்டுள்ள சாதிப் பிரிவுகளிலொன்றாகிய அகம்படியார் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறே முதலா. வது பராக்கிரமபாகு காலத்திற் கொட்டியாரத்தில் நிலை கொண்டிருந்த வேளைக்காரர் மேற்கொண்ட கிளர்ச்சியும்
அடக்கப்பட்டது.
இம்மன்னன் சோழருக்கெதிராக மேற்கொண்டிருந்த இராணுவ நடவடிக்கையின் போது இவனின் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்த இடங்களாக வடபகுதியிலுள்ள ஊர் காவற்றுறை, மட்டிவால் நாடு, வலிகாமம், மகாதீர்த்த ஆகியன குறிப்பிடப்படுவதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. அத்துடன் இச்சந்தர்ப்பத்திற் சூளவம்சம் ஓரிடத்தில் இப்படை எடுப்புக்கும், பர்மா மீதான படைஎடுப்புக்கும் முன்னதாகப் பராக் கிரமபாகுவின் பதினாறாவது ஆட்சி ஆண்டில் மகாதீர்த்தத் திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றிக் கூறுவது அவதானிக்கத்தக்கது.81 மகாதீர்த்தத்திற் சிங்கள மன்னர்கள் கொண்டிருந்த தொடர்பு துறைமுகப் பகுதியில் மாத்திரமே காணப்பட்டது. இதற்கப்பால் இது
O 319 வரலாற்றுக் காலம் II

Page 176
செல்லவில்லை என்பதை இங்கு கிடைத்துள்ள சிங்களக் கல் வெட்டுகளும் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய குறிப்பு இத்துறைமுகப் பகுதிக்கு வெளியே வடபகுதியில் வாழ்ந்த மக்கள் செய்த கிளர்ச்சியைக் குறிக்கலாம். எனினும் இக் கிளர்ச்சி அடக்கப்பட்டதை இந்நூல் குறிப்பிட்டுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. இத்தகைய கிளர்ச்சி பராக்கிரமபாகுவின் வடபகுதி மீதான மேலாணைக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியாகவும் இருக்கலாம்.
எவ்வாறாயினும் மேற்கூறிய சான்றுகள் பொலநறுவையிற் சோழராட்சி நிலை கொண்டிருந்தபொழுது வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களும் அவர்களது மேலாணைக்கு உட்பட் டதையே எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாட்சியின்போது சோழ நிருவாகிகள், படைவீரர்கள், வணிக கணங்கள், பிராமணர், கலைஞர்கள் போன்றோர் ஈழத்தின் பிறபகுதிகளிற் பரவியது போன்று இப்பகுதியிலும் பரந்தனர். சோழருக்குப் பின்னர் முதலாம் விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற வலிமை யுடைய மன்னர்களின் ஆட்சி வடபகுதி நிலையிற் குறிப் பிடத்தக்க மாற்றத்தினைக் கொண்டு வரவில்லை. காரணம் இரு மன்னர்களும் வலிமையுடைய மன்னர்களாகக் காணப் பட்டாலும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியவர்களாகவே இயங்க வேண்டியிருந்தது. இதனாலே தமது பகுதிகளிலே, தமது ஆட்சியை ஸ்திரப்படுத்துவதிலேயே இவர்களின் கவனம் முழுவ துஞ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. விஜயபாகுவின் நாற்பது ஆண்டுக்கால ஆட்சி பொலநறுவையிற் சிங்கள அரச ரின் ஆட்சியை மறுபடியும் புனரமைப்பதிலேதான் செல விடப்பட்டது எனலாம். சோழருக்கெதிராக இவன் மேற் கொண்டதாகக் கூறப்படும் இராணுவ நடவடிக்கைகளில் வட பகுதித் துறைமுகங்கள் இடம்பெறுவதுகூட ஒரு வகையிலே தனது புனர்நிர்மாண நடவடிக்கைகளைச் சோழரின் தலையீடு சிதைத்து விடும் என்ற பயத்தின் காரணமாக இவன் மேற் கொண்ட தற்பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துக் காட்டு வதாகவும் இருக்கலாம். இதனால் இவன் காலத்திலும் இவன் ஆட்சியைத் தொடர்ந்து வந்த காலத்திலும் பெருமளவுக்கு இக் காலத்தில் வடபகுதியில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த
யாழ். - தொன்மை வரலாறு 32O )

அமைப்புகளே தொடர்ந்தன எனக் கொள்ளலாம். இத்தகைய போக்கினைப் பராக்கிரமபாகு இப்பகுதி|மீது கொண்டிருந்த மேலாணை கூட மாற்றியமைக்க முடியவில்லை. பராக்கிரம பாகுவின் ஆட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலை, இதற்குச் சாதகமாகவும் அமைந்தது. இத்தகைய ஒரு காலகட்டத்திற் றான் அரச ஆதிக்கத்தினை விரும்பிய தமிழகத்து நிலக்கிழார் வகுப்பினர் வடபகுதி நோக்கித் தமது கவனத்தைச் செலுத் தினர். இது சோழராட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்தாலுங் கி. பி. 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளிலே துரிதமாக வளர்ச்சி பெற்றது, இதனையே பாண்டிமழவன் கதை உரு வகப்படுத்துகின்றது. தமிழகத்திலிருந்து ஆட்சி அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ள வந்த இப்பிரதானிகளுடன், இக்காலத்தில் வணிக நடவடிக்சையிலீடுபட்டிருந்த தமிழ் வணிக கணங்கள், தமிழ் இராணுவ அமைப்புகள், பல்வேறு தொழிற் பிரிவுகள் ஆகியன தமிழ் மக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தில் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கின.
சோழருக்குப் பின் ஈழம்
சோழரது எழுபத்தேழு ஆண்டுக் கால ஆட்சிக்குப் பின் னர் விஜயபாகுவின் நாற்பது ஆண்டுக் கால ஆட்சி பொல நறுவை அரசுக்கு ஸ்திரத்தை அளித்தாலும் விஜயபாகுவின் மரணத்தோடு மேலும் நாற்பது ஆண்டுகள் ( பராக்கிரமபாகு அரசனாகும் வரை ) பொலநறுவை அரசியலில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. இக்காலந்தான் பொலநறுவையில் விஜயபாகுவின் மகனாகிய முதலாவது விக்கிரமபாகுவினதும் (கி. பி. 1111-1132) அவனது பேரனாகிய இரண்டாவது கஜபாகு வினதும் ( கி. பி. 1132 - 1153 ) ஆட்சி நிலைபெற்ற காலப் பகுதியாகும்.82 இவர்கள் காலம் அமைதியற்ற வாரிசுரிமைப் போர் நடைபெற்ற காலப் பகுதியாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் வடபகுதியோடு எவ்வித தொடர்பும் அற்றதாக இவர்களின் ஆட்சியும் அமைந்தது. எனினும் இவர்கள் காலத்திலும் பின்னரும் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி யில் இவர்கள் கால நிகழ்வுகளும் முக்கியம் பெறுவதால்
O 321 வரலாற்றுக் காலம் 11

Page 177
இவை பற்றியுங் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமாக அமைவது சிங்கள மன்னர்கள் வெளிநாட்டு அரசவம்சங்களோடு ஏற்படுத்திக் கொண்ட மணத் தொடர்புகளாகும்.
இவ்வம்சங்களில் வடஇந்தியாவிலுள்ள அவுத், தக்கணத்தி லுள்ள கலிங்கம், தமிழகம் ஆகிய பகுதிகளோடு கொண் டிருந்த தொடர்புகள் குறிப்பிடத்தக்கன. விஜயபாகுவின் பட்டத்து இராணியாகிய அவுத் நாட்டு இளவரசிக்கு யசோதா என்ற பெண் பிறந்தாள். வீரவம்ம ( வீரவர்மன் ) என்பவனை மணந்த இவளுக்கு லீலாவதி, சுகலா என்ற இரு பெண்கள் காணப்பட்டனர். விஜயபாகுவின் இரண்டாவது பட்டத்து இராணியாகிய கலிங்கத்து இளவரசியாகிய திரிலோகசுந்தரிக்கு சுபத்தா, சுமித்தா, லோகநாத, ரத்னாவலி, ரூபாவதி என்ற ஐந்து பெண்களும், விக்கிரமபாகு என்ற ஆணும் பிள்ளை களாயினர். விஜயபாகுவின் இளைய சகோதரியாகிய மித்த, பாண்டிய இளவரசனை மணந்தது பற்றி முன்னர் குறிப் பிட்டிருந்தோம். இவர்களுக்கு மானாபர்ணன், கித்திசிறிமேக, சிறீவல்லப என்ற மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் விஜயபாகுவின் முதற் பட்டத்து இராணியாகிய லீலாவதியின் பேத்தியாகிய சுகலாவையும் இரண்டாவது
பட்டத்து இராணியாகிய திரிலோகசுந்தரியின் மகள்களாகிய
ரத்னாவலி, லோகநாத ஆகியோரையுந் திருமணஞ் செய்தனர். திரிலோகசுந்தரியின் மகள்களான சுபத்தா, சுமித்தா ஆகியோர் முறையே வீரபாகு, ஜெயபாகு என்ற விஜயபாகுவின் சகோதரர்களை மணம் முடித்தனர். இவர்களில் வீரபாகு, விஜயபாகு மன்னன் காலத்திலேயே இறக்க, ஜெயபாகு அடுத்து உபராஜாவாக இம் மன்னனால் நியமிக்கப் பெற் றான். விஜயபாகுவின் மகன்தான் விக்கிரமபாகு ஆவான். இத்தகைய மணத்தொடர்புகள் விஜயபாகுவின் மரணத்தின் பின் பல சிக்கல்களை உருவாக்கின.
விஜயபாகு இறந்தவுடன் இவனின் சகோதரியாகிய மித்த அப்போது உரோகணையில் ஆட்சி செய்த விக்கிரமபாகுவுக்கு
அறிவிக்காது தனது சகோதரனாகிய உபராஜ ஜெயபாகுவை
யாழ். - தொன்மை வரலாறு 322

மன்னனாக்கினாள். தமையனுக்குப் பின் தம்பி அரசுகட்டிலேறும் மரபு காணப்பட்ட சிங்கள வாரிசுரிமை மரபில் இது நியாயமானதே. எனினுஞ் ஜெயபாகு மன்னனானதும் விஜய பாகுவுக்கு வேறு ஆண் சகோதரர்கள் இல்லாததால் அடுத்து விக்கிரமபாகுவே உபராஜனாக வரவேண்டியவன். ஆனால் இவனை உபராஜாவாக வருவதைத் தடுத்துத் தனது பிள்ளை களுக்கே அரசபதவி கிட்ட வேண்டுமென்ற விருப்பத்தாலே தனது மூத்த மகனர்கிய மானாபர்ணனை இப்பதவிக்கு நியமிப்பதில் விஜயபாகுவின் சகோதரியாகிய மித்த வெற்றி கண்டாள். எனினும் அப்போது உருகுணையில் நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்த விக்கிரமபாகு பொலநறுவையை நோக்கிப் படை எடுத்து இம்முயற்சியை முறியடித்துத் தானே ஜெயபாகுவை நீக்கிவிட்டு மன்னனானான். எனினும் இவனின் ஆட்சி * இராஜரட்டையில் ’ மட்டுந்தான் நிலை கொண்டிருந்தது. தக்கின தேசம், உரோகணை ஆகிய பகுதிகளில் மித்தவின் பிள்ளைகளின் அதிகாரம் நிலைகொண்டிருந்தது. இவர்களில் மூத்தவனாகிய மானாபர்ணன் தக்கின தேசத்தில் வீரபாகு என்ற பெயருடன் ஆட்சி செய்தான். நிக்கராவட்டியிற் SAT60 படுந் தமிழ்க் கல்வெட்டு முதலாவது குலோத்துங்கனின் மகள் வீரப்பெருமாள் என்பவனை மணஞ் செய்தது பற்றிக் கூறுகின் றது.88 வீரபாகு என்ற பெயர் மானாபர்ணனுக்கும் இருந்த தால் இவ்வீரப்பெருமாள் என்பது மானாபர்ணனையே குறிக் கும் எனவும் கொள்ளப்படுகிறது. அவ்வாறாயின் பாண் இளவரசனின் மகனான மானாபர்ணனைச் சோழ இளவரசி பணந்தமை உறுதியாகிறது. ஏனையவர்கள் உரோகனைப் பிராந்தியத்தின் இரு கூறுகளை நிருவகித்தனர். எனினும் இச்சகோதரர்கள் விக்கிரமபாகுவைத் தோற்கடிக்க எடுத்த கூட்டு முயற்சி தோல்வி கண்டது.
விக்கிரமபாகு இவ்வாறு உள்நாட்டிலே தனது மைத்துனர் களுக்கு எதிராகத் தனது ஆட்சியதிகாரத்தினை ஸ்திரப்படுத் திய காலத்திற்றான் வெளிநாட்டிலிருந்து "வீரதேவன்" தலைமையில் வந்த படைஎடுப்பையும் இவனால் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பழந்தீவின் ஏகச்சக்கரவர்த்தியாகிய இவன்
O 323 வரலாற்றுக் காலம் II

Page 178
ஆரிய நாட்டவன் எனச் சூளவம்சத்திற் குறிப்பிடப்படுகிறான். இவன் மகாதீர்த்தத்தில் வந்திறங்கினான், 84 விக்கிரமபாகுவின் t.1601-lasair மகாதீர்த்தத்தில் வீரதேவனுடன் மோதிய போது புறங்காட்டின. விக்கிரமபாகுவின் சேனாதிபதி இப் போரின் போது சிறை பிடிக்கப்பட்டதுமன்றி, இரு இள வரசர்களும் ஒரு தளபதியும் இப்போரின் போது கொல்லப் பட்டனர். போரிலே தோல்வி கண்ட விக்கிரமபாகு திருகோண மலை மாவட்டத்திலுள்ள கொட்டியாரத்திற் சென்று ஒளிந்த நேரத்தில் வீரதேவன் இவனைத் தொடர்ந்து தாக்கியபோது வீரதேவன் மரணத்தினைத் தழுவிக் கொண்டர்ன். இவ் வாறு வீர தேவனை வென்ற விக்கிரமபாகு மறுபடியும் பொல நறுவையை அடைந்து மன்னனானான்.
இக்கால அரசியல் மையப்பிரதேசங்கள் பற்றிச் சூளவம்சங் குறிப்பிடுகையிற பொலநறுவையில் விக்கிரமபாகுவும், தக்கின தேசத்தில் மானாபர்ணனும், உரோகனைப் பிரிவிலுள்ள டுவாதஸகசக்வில் கித்திசிறீமேகனும், அட்டசகஸ் வில் சிறீவல் லபனும் ஆட்சி செய்ததோடு இவர்களின் ஆட்சி கொடூரமாக வும் நீதியற்றதாகவும் அமைந்திருந்தது எனவுங் கூறுகிறது. இவ்வாறு விஜயபாகுவினால் நாற்பது ஆண்டுகளில் ஒருமைப் படுத்தப்பட்ட பொலநறுவைச் சிங்கள அரசு, அவன் இறந்த வுடன் நான்கு அரசுகளாகப் பிரிந்தது. நாற்பது ஆண்டுகளுக் குப் பின்னர் முதலாவது பராக்கிரமபாகு மன்னனாகி இப் பிராந்தியங்களை ஒன்றுபடுத்தும் வரை இத்தகைய நிலையே காணப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் இவர்களின் ஆட்சிக்கால நடவடிக்கை கள் பற்றிச் சூ ள வ ம் ச ங் குறிப்பது ஈண்டு அவதானிக் கத்தக்கது.85 எவ்வாறு ஆலையின் வசப்பட்ட கரும்பு சாறாகப் பிழியப்பட்டதோ அவ்வாறே இவர்களும் அளவுக் கதிகமான வரிகளை மக்கள் மீது திணித்ததன் மூலம் அவர் களைச் சாறாகப் பிழிந்தனர் என இந்நூல் குறிப்பிடுகிறது. விக்கிரமபாகு மட்டுமன்றி அவனின் மகனாகிய கஜபாகுவும் இந்துவாக விளங்கியதால் இவர்களுக்கு முறைப்படி சிங்கள அரசர்களுக்கு நடைபெறும் பட்டாபிஷேகங் கூட நடைபெற
யாழ். - தொன்மை வரலாறு 324 இ

வில்லை. இதனாற் கல்வெட்டுகளில் இவர்களின் ஆட்சி ஆண்டுகள் விஜயபாகுவின் பின் அரசனான ஜெயபாகுவின் ஆட்சியாண்டடிப்படையிலேதான் குறிப்பிடப்பட்டுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. விக்கிரமபாகுவைப் பற்றிச் சூளவம்சங் குறிப்பிடுகையிற் பொலநறுவையிற் பெளத்த சங்கத்தினரின் வாசஸ்தலங்களாக விளங்கிய பெளத்த விகாரைகளை வெளி நாட்டுப் படையினர் உறையுமிடங்களாக மாற்றினான் என்றும் பெளத்த சமய நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடித் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தினான் என்றுங் கூறு கிறது. அத்துடன் இக்காலத்தில் அரசத்துவத்துக்கு வலுவூட்டும் எச்சமாக விளங்கிய தந்ததாது உரோகணைக்கு எடுத்துச் செல் லப்பட்டதையுங் குறிப்பிடுகின்றது.
மேலுஞ் சிங்கள அரசப் பிரிவுகளின் எல்லைகளிலே காணப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் ஒருவரோடு ஒரு வர் பொருதது மட்டுமன்றிப் பல கிராமங்களைக் கொள்ளை யடித்துந் தீக்கிரையாக்கியும் அவைகள் இருந்த இடங்களையே இனங்கண்டு கொள்ள முடியாதவாறு ஆக்கியும் விட்டதோடு குளங்களின் அணைக்கட்டுகளையும் உடைத்தனர். அத்துடன் நாட்டிலே களவு கொள்ளை அதிகரித்தது என்றுஞ் சூளவம்சங் கூறுகின்றது. இராஜரட்டையில் விக்கிரமபாகு ஆட்சிசெய்த பொழுது தக்கினதேசத்தின் ஆட்சிப் பொறுப்புக்குரிய மானாபர்ண னுக்குப் பராக்கிரமபாகு என்ற மகனும் மித்தா, பிரபாவதி என்ற மகள்மாரும் இருந்தனர். பராக்கிரமபாகு பிறந்ததும் மானாபர்ணன் இறக்கக் கித்திசிறிமேகன் தக்கினதேசத்தின் அதிபதியானான். சிறிவல்லவன் உருகுணையின் அதிபதி யானான். இக்காலத்தில் இருபத்தொரு ஆண்டுகள் ஆட்சி செய்த விக்கிரமபாகு கி. பி. 1132இல் மரணமானான். இதனைத் தொடர்ந்து இவனது மகனாகிய இரண்டாவது கஜபாகு பொலநறுவையில் அரசு கட்டிலேறினான். அப்போது தக்கின தேசம், உருகுணை ஆகிய பிராந்தியங்களை ஆட்சி செய்த கித்திசிறிமேகன், சிறீவல்லபன் ஆகியோர் இராஜரட்டையைக் கைப்பற்றுவதற்கு இணைந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.
கஜபாகுவின் வேளைக்காரப் படையினருக்கு இலஞ்சம்
O 325 வரலாற்றுக் காலம் 11

Page 179
கொடுத்து அவர்களை அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் படி தூண்டியுங்கூட இவ்விருவரும் ஈற்றில் கஜபாகுவின் படைகளாலே தோற்கடிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மேலுங் கஜபாகுவுக்கெதிரான இராணுவ நடவடிக்கை களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டனர்.86
இக்காலம் பெருமளவுக்கு ஈழநாட்டின் மீது வெளிநாட்டுப் படை எடுப்புகள் குறைந்து காணப்பட்ட காலமெனலாம். முதலாவது குலோத்துங்கன் கி. பி. 1120 இல் இறந்தான். எனினும் முதலாவது விஜயபாகுவின் மரணத்திற்குப் பின்னர் விக்கிரமபாகு, கஜபாகு ஆகியோரின் ஆட்சிக் காலம் உள் நாட்டில் அமைதியின்மை காணப்பட்ட காலமாகவே விளங்கு கின்றது என்றால் மிகையாகாது. முறையாகப் பாரம்பரிய முறைப்படி பட்டாபிஷேகஞ் செய்யப்பட்ட அரசனொருவன் இக்காலத்தில் இல்லை. விஜயபாகு காலத்தில் வலுவாக இருந்த பொலநறுவை அரசு இப்போது இராஜரட்டை, தக்கின தேசம், உருகுணை என்ற முப்பிரிவுகளாகப் பிரிவுபட்டிருந்தது. இவற்றுள்ளே தக்கினதேசம், உருகுணை ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தோர் இராஜரட்டைப் பகுதியிலரசாண்ட பொலநறுவை அரசனுக்கெதிராகப் போர் தொடுத்து நின்றனர். இவ்வாறு முரண்பாடுகளும், பிரிவினைகளும் நிறைந்த இக்காலப் பகுதி யில் எவ்வித முன்னேற்றங்களுங் காணப்படவில்லை. இப்பகுதி களிற் கிடைத்த வருமானங்கள் இராணுவ நடவடிக்கைகளி னால் ஏற்பட்ட செலவுகளைச் சமாளிக்கவே உதவின. சமய ரீதியிலோ, பொருளாதார ரீதியிலோ குறிப்பிடத்தக்க மாற்றங் களோ வளர்ச்சிகளோ காணப்படவில்லை. இச்சூழ்நிலை யிலே பராக்கிரமபாகு வாரிசற்ற தனது சிறிய தந்தையாகிய கித்திசிறிமேகனுடன் சென்று வளர்ந்தான்.
பராக்கிரமபாகுவும், அவன் ஆட்சிக்கால நடவடிக்கைகளும்
உரோகணையின் தலைவனாகிய சிறீவல்லபன் இறக்க அவனின் மகனாகிய மானாபர்ணன் அதன் அதிபதியானான். பின்னர் கித்திசிறீமேகன் இறக்கப் பராக்கிரமபாகு தக்கின
யாழ். - தொன்மை வரலாறு 328 G

தேசத்தின் அதிபதியானான். தக்கினதேசத்தின் அதிபதியாகிய இவன் அதனை வளம்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்ததோடு இராஜரட்டை அரசோடு அது கொண் டிருந்த எல்லைகளிலுந் தனது படைபலத்தினை அதிகரித்தான். இத்தகைய நடவடிக்கைகள் ஏனைய இராஜரட்டை, உருகுணை அரசுகளைப் போலன்றித் தக்கினதேசத்தின் அரசை வலு வுள்ளதாக்கின. இராணுவ பலமும் அதிகரிக்கப்பட்டதோடு இராணுவத்தினருக்கு நல்ல பயிற்சியும் அளிக்கப்பட்டது. கேரளர் மட்டுமன்றி வேளைக்காரரும் இவனது படை அணி யில் முக்கியம் பெற்றிருந்தனர்.
இவ்வாறு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட பராக்கிரம பாகு மலயதேச என்று அழைக்கப்பட்ட மத்திய மலைநாட்டுப் பகுதிகளைத் தனது ஆளுமைக்குக் கீழ்க் கொண்டுவந்தான். இப்பகுதி பொலநறுவைப் பகுதி மீது இராணுவ நடவடிக்கை களை மேற்கொள்ளுவதற்கு வசதியான பகுதியாக அமைந் திருந்தது. அடுத்த நடவடிக்கையாகக் கஜபாகு மீதான தாக்குதல்களை ஆரம்பித்தான். இம்மன்னன் " மாறுபட்ட சமய நெறியைத் தழுவிய பிரபுக்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து, இராஜரட்டையை இத்தகைய மாறுபட்ட சமய நெறியாளரைக் கொண்டு நிரப்பினான்" எனச் சூளவம்சங் கூறுகிறது.87 இத்தாக்குதல்களிற் பராக்கிரமபாகு வெற்றியீட் டும் நிலையிற் காணப்பட்டதை அறித்த உருகுணைப் பகுதியின் அதிபதியான மானாபர்ணன் இதுவரை கஜபாகுவின் படைகளோடு இணைந்து பராக்கிரமபாகுவின் படைகளைத் தாக்கிய போக்கினை மாற்றிப் பராக்கிரமபாகுவோடு இணைந்து கொண்டான். பொலநறுவைத் தலைநகர் தாக்கப்பட்டதோடு, கஜபாகுவும் பராக்கிரமபாகுவின் படைகளாற் சிறைபிடிக்கப் பட்டான். எனினும் பராக்கிரமபாகுவின் படைகள் கட்டுக் கடங்காது நகர மக்களைப் பல வழிகளிலுத் துன்புறுத்தின. இச்சந்தர்ப்பத்திற் பராக்கிரமபாகுவின் பக்கம் நின்ற மானா பர்ணன் கஜபாகுவின் பக்கம் இணைந்ததோடு பராக்கிரமபாகு வின் படைகளுக்கெதிராகப் போர் தொடுத்து அவர்களைத் தோற்கடித்தான். இவ்வாறு பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடித்த இவன் கஜபாகுவையும் இரகசியமான முறை
O 327 வரலாற்றுக் காலம் II ,

Page 180
யிற் கொன்றுவிட்டுத் தானே இராஜரட்டையின் மன்னனாக வரும் முயற்சிகளிலும் ஈடுபட்டான். இதனை அறிந்த கஜபாகு பராக்கிரமபாகுவுக்கு இரகசியமாக ஒரு செய்தியை உதவிக்கு வரும்படி அனுப்பப் பராக்கிரமபாகு மறுபடியும் பொலநறுவை மீது படை எடுத்ததோடு மானாபர்ணனின் கையிலிருந்து பொலநறுவையையும் மீட்டெடுத்தான். எனினும் பராக்கிரம பாகுவின் படைகள் பொலநறுவைக்கு வர முன்னரே கஜபாகு ஈழத்தின் கிழக்குக் கரையிலுள்ள கொட்டியாரக் கரைக்குச் சென்றுவிட்டான். பராக்கிரமபாகுவிற்குங் கஜபாகுவிற்கும் இடையிலே முரண்பாடு ஏற்பட இரு பகுதியினருந் திரும்பவும் பொருதனர். இச்சந்தர்ப்பத்திற் பெளத்தசங்கம் தலையிட்டு இவர்களுக்கிடையே ஒரு சமாதானத்தினை ஏற்படுத்தியது. கஜபாகு சந்ததியில்லாமல், வயோதிபனாகக் காணப்பட்ட தால் அவன் தொடர்ந்தும் அரசனாக இருப்பதைத் தடுத்து நிறுத்தாது அவன் இறந்தவுடன் பொலநறுவை அரசபதவியை அடையும்படி சங்கத்தினர் பராக்கிரமபாகுவிடங் கேட்டுக் கொண்டதற்கமைய முதலாங் கஜபாகு தனது பிற்காலத்தி னைக் கந்தளாயிற் கழித்தான். பராக்கிரமபாகு தக்கினதேசத் திலேயே தொடர்ந்தும் வாழ்ந்தான். சஜபாகு இறந்ததும் அவனது மந்திரிமாரும் பிற உத்தியோகத்தர்களும் உருகுணைப் பகுதியின் அதிபதியாகிய மானாபர்ணனுக்குத் தூது அனுப்பி அவனைப் பராக்கிரமபாகுவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மேற்கொண்ட முயற்சிகள் பராக்கிரமபாகுவாலே தோற்கடிக்கப்பட்டதோடு மானாபர்ணனின் உருகுணைப் பிர தேசமும் இவனாலே தாக்கப்பட்டது. மானாபர்ணன் இறக்கும் போது தனது வாரிசுகளைப் பராக்கிரமபாகுவோடு போரிடாது அவனது மேலானையை ஏற்கும்படி வற்புறுத்தியதாக அம்பாந் தோட்டை மாவட்டத்திலுள்ள இவனது கடகமுக்கல்வெட்டு எடுத்துக் காட்டுகின்றது.88 இதனைப் பராக்கிரமபாகுவின் தேவநாகலக் கல்வெட்டும் உறுதி செய்கிறது.89 கஜபாகு, மானாபர்ண ஆகியோருடன் போரிட்ட மன்னன் முழு நாட் டினையும் ஒரே குடைக்கீழ்க் கொண்டு வந்தமை பற்றி மேற் கூறிய தேவநாகலக் கல்வெட்டுக் கூறுகின்றது. பராக்கிரமபாகு பொலநறுவையில் முடிசூடிய நிகழ்ச்சி பற்றி விரிவாகச் சூள வம்சத்திற் குறிப்புள்ளது.
யாழ். - தொன்மை வரலாறு 328 ()

எவ்வாறாயினும், மானாபர்ணன் கூறியவாறு உரோகணை இலகுவாகப் பராக்கிரமபாகுவின் ஆணையை ஏற்கவில்லை. மானாபர்ணனின் தாயாகிய சுகலா, அரச சின்னமாகிய தந்ததாதுவைப் பராக்கிரமபாகுவிற்குக் கையளிக்க மறுக்கவே மறுபடியும் இருபகுதியினருக்குமிடையே போர் மூண்டது. இக் காலத்தில் உரோகணையில் உள்நாட்டுக் கிளர்ச்சியுங் காணப் பட்டது. இக்கிளர்ச்சியினை அடக்கச் சேனாதிபதி றக்கவின் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. இப்படை உரோ கணைக்குச் செல்லக் கொட்டியாரத்திலிருந்த சிங்கள, கேரள, வேளைக்காரப்படையினர் கிளர்ச்சி செய்ததாகக் கூறப்படு கின்றது.80 இவ்வாறு இவர்கள் கிளர்ச்சி செய்ததன் நோக்கம் வெகு சீக்கிரத்திலே தாம் இராஜரட்டையினை ஆளும் உரிமையைப் பெறலாம் என்று கருதியமையே எனக் கூறப் படுகிறது. எனினும் இக்கிளர்ச்சி பராக்கிரமபாகுவினால் அடக் கப்பட்டது. கிளர்ச்சிக்காரர்கள் சிரச்சேதஞ் செய்யப்பட்ட தோடு அவர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங் களுந் திருப்பிப் பெறப்பட்டன. உரோகனை பல்வேறு சிரமங் களுக்கு மத்தியிலே திருப்பிக் கைப்பற்றப்பட்டதோடு தந்த தாதுவுஞ், சுகலாவுங் கைப்பற்றப்பட்டனர். எனினும் இம்மன்ன னின் எட்டாவது ஆட்சி ஆண்டுக் காலத்தில் ( கி. பி. 1161 இல் ) இப்பகுதி மீண்டுங் கிளர்ச்சி செய்தும் அது பின்னர் அடக்கப்பட்டது.
அடுத்து முக்கியம் பெறுவது பராக்கிரமபாகு மேற்கொண்ட பர்மிய, தென்னிந்தியப் படை எடுப்புகளாகும். பர்மியப் படை எடுப்பு இவன் அரசுகட்டிலேறிய பதினோராவது அல்லது பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டுகளில் ( கி. பி. 1 64 65 ) நடைபெற்றது.9 இப்படைஎடுப்புக்கான காரணம் இக்கால வாணிப நடவடிக்கைகளேயாகும். பர்மா சென்ற படை ஈழத் தின் கிழக்குக் கரையிலுள்ள பல்லவவங்க (குச்சவெளிக்கு வடக்கே உள்ள இடம் ) என்ற இடத்திலிருந்து புறப்பட்ட தென்றும் இப்படை எடுப்புக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள எல்லாமாக ஐந்து மாதங்கள் பிடித்தன எனவுங் கூறப்படு இறது. ஈற்றில் இருநாடுகளுஞ் சமாதானத்தை மேற்கொண் டதை இம்மன்னனின் தேவநாகலக் கல்வெட்டு எடுத்தியம்பு
329 லரலாற்றுக் காலம் III

Page 181
கிறது.92 இப்படை எடுப்புக்குத் தலைமை தாங்கியவனாகத் தமிழ் அதிகாரி ஆதிச்ச என்டீவன் குறிப்பிடப்படுகிறான். தமிழர் களின் நலனை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டதே இப் பதவியாகும். இப்பதவி வகித்தோர் இராணுவத்திற் பங்காற்றி னாலும் வேறு பல நிருவாகப் பொறுப்புகளிலுங் காணப்பட் டனர். நாம் மேற்கூறிய ஆதிச்ச என்பவன் நிதிப் பிரிவின் முக்கியஸ்தனாகவுங் காணப்பட்டான். இவ்வாறே பராக்கிரம பாகு உருகுணைப்பகுதி மீது மேற்கொண்ட போர் நடவடிக்கை களிலே தமிழ் அதிகாரி றக்க என்பவன் முக்கியம் பெற்றுள்ளமை யும் அவதானிக்கத்தக்கது. பர்மியப்படை எடுப்பு நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ( கி. பி. 1169 ) பராக்கிரம பாகுவின் பதினாறாவது ஆட்சி ஆண்டில் மாந்தைக்கருகாமை யிலுள்ள பிரிவில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றிச் சூளவம்சங் குறிப்பிட்டாலும் இதற்கான காரணத்தினை அது கூற
வில்லை.93
பராக்கிரமபாகுவும் தமிழகமும்
பர்மியப் போரைப் போலல்லாது ஈழத்து வரலாற்றிற் பெருந் தாக்கத்தினை ஏற்படுத்திய போர் பராக்கிரமபாகுவின் தென்னிந்தியப்படை எடுப்பாகும் என்றால் மிகையாகாது.94 பராக்கிரமபாகுவின் தென்னிந்தியப் படை எடுப்பு ஒரு வகை யிற் சோழருக்கெதிராக இயங்கிய சிங்கள - பாண்டிய - கேரள நாட்டவரின் கூட்டு நடவடிக்கை எனலாம். இப்படை எடுப்பு ஆரம்பமான காலம் பராக்கிரமபாகுவின் பதினாறாவது ஆட்சி ஆண்டான கி. பி. 1169 ஆகும். அப்போது சோழமன்ன னாக விளங்கியவன் இரண்டாவது இராஜராஜனும் (கி. பி. 1150 - 1176) அவனது ஆட்சியின் பிற்பகுதியில் அவனோடு இணைந்து அரசனாக விளங்கிய இரண்டாவது இராஜாதிராஜ னுமாவர். இப்படை எடுப்புக்கு முக்கிய காரணமாக விளங் கியது பாண்டி நாட்டின் உள்நாட்டுப் போராகும். அக் காலத்திற் பாண்டி நாட்டின் அரசனாக விளங்கியவன் பராக்கிரமன் ஆவான். எனினும் இவனைவிடத் தனக்கே இதனை ஆளும் உரிமை உண்டு எனக் குலசேகரன் எண்ணி
யாழ். - தொன்மை வரலாறு 33O ()

இவனைத் தாக்கினான். அப்போது பராக்கிரமன் இராணுவ உதவி கோரிச் சிங்கள மன்னனாகிய பராக்கிரமபாகுவை
நாடக் குலசேகரன் சோழரிடம் உதவி கேட்டான்.
சில ஆண்டுகளாக நீடித்த இப்போரின் விளைவு யாதெனில் இரு பக்கமும் போரிட்ட சோழ - சிங்கள அரசுகள் வலியிழக்க, இவற்றின் இடத்தில் இரண்டாவது பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்றதே ஆகும். இப்போர் பற்றிச் சூளவம்சத்தில் விரிவான தகவல்கள் காணப்பட்டாலுங்கூட, இதன் இறுதிக் கட்ட நிகழ்ச்சிகள் பற்றி - இதன் முடிபு பற்றி - அதாவது இப் போரினை வழிநடாத்திச் சென்ற பராக்கிரமபாகுவின் தனபதி யாகிய லங்காபுரவின் கதி பற்றி எதுவுங் கூறாது சூளவம்சம் மெளனம் சாதித்தாலுங்கூடச் சோழக் கல்வெட்டுகளில் இப் பகுதி பற்றி விரிவான சான்றுகள் காணப்படுகின்றன. இத னாற் சூளவம்சம், சோழக் கல்வெட்டுகள் ஆகியனவற்றை இணைத்தே இப்போரினைப் பற்றி விளங்கிக் கொள்வது அவசிய மாகின்றது. பராக்கிரமபாகுவின் படை லங்காபுர தலைமையில் மகாதீர்த்தத்திலிருந்து புறப்பட்டது (படம் 45). எனினும் இப்படை புறப்பட முன்னரே பாண்டிநாட்டிற் குலசேகரனின் கையோங்க அவன் பராக்கிரமனையும் அவனது மனைவி, பிள்ளைகள் ஆகியோரையுங் கொன்று அரசனான செய்தி எட்டினாலுங்கூடப் பராக்கிரமபாகு லங்காபுரவுக்குப் LJfrsöorg. நாடு சென்று குலசேகரனை விரட்டிப் பராக்கிரமனின் வழித் தோன்றல் ஒருவனை அரசனாக்கும்படி பணித்தான். பாண்டி நாட்டிலுள்ள பல இடங்களில் நடைபெற்ற மோதல்கள் பற்றிய விரிவான தகவல்கள் சூளவம்சத்திலுண்டு. இறுதியாகக் குல சேகரன் தோற்கடிக்கப்பட்டு பராக்கிரம பாண்டியனின் மக னான வீரபாண்டியன் லங்காபுரவினால் அரசனாக்கப்பட்டான். அத்துடன் பலரைச் சிறைக் கைதிகளாக ஈழநாட்டுக்கு லங்கா புர அனுப்பியதோடு பல கொள்ளைப் பொருட்களையும் அவர்களோடு அனுப்பியதாகச் சூளவம்சங் கூறுகின்றது.
போரில் வெற்றி பெற்ற லங்காபுர பாண்டி நாட்டிலே தனது செல்வாக்கினை ஸ்திரப்படுத்த விரும்பிப் பாண்டிய பிரதானிகள் சிலருக்கு வழங்கிய உதவிகள் பற்றிய செய்தியுங்
O 331 வரலாற்றுக் காலம் II

Page 182
கூறப்படுகிறது. கீழ்மங்கலம், மேல்மங்கலம் ஆகிய ஊர் களை உள்ளடக்கிய பகுதி கண்டதேவ மழவராயனுக்கு அளிக்கப்பட்டது. தொண்டி, மருதங்குடி ஆகிய பகுதிகள் மாழவச் சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட்டன. இவ்வாறு பாண்டி நாட்டுத் தலைவர்கள் சிலருக்கு ஆட்சியுரிமை அளித்து அவர் களைத் தன்பக்கம் இணைக்க லங்காபுர முயன்றாலுங்கூடக் குலசேகரன் மறுபடியும் போர் நடவடிக்கைகளை முடுக்கிவிட இத்தலைவர்களுங் குலசேகரனோடு இணைந்து மதுரையி லிருந்து வீரபாண்டியனைத் துரத்தினர். எனினும் ஈழத்தி லிருந்து அனுப்பப்பட்ட துணைப்படை மூலம் மறுபடியுங் குலசேகரனை லங்காபுர தோற்கடித்து வீரபாண்டியனை மன்னனாக்கினான். இந்நிகழ்ச்சிகள் மட்டுமே சூளவம்சத்தில் இடம் பெற்றுள்ளன.
இப்போரின் தொடர்ச்சி பற்றிய விபரம் சூளவம்சத்திற் காணங்படாவிட்டாலுங்கூட இது பற்றிய சான்றுகள் சோழக் கல்வெட்டுகளில் உண்டு. லங்காபுரவிடம் பல தடவை தோல்வி கண்ட குலசேகரன் சோழ நாட்டுக்கு வந்து சோழ மன்னனான இரண்டாம் இராஜாதிராஜனிடம் உதவி கேட்க அவன் " திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவ ராயன் தலைமையில் ஒரு படையை அனுப்ப ஆரம்பத் கிற் சிங்களப்படை இவர்களை வெற்றி கொண்டது. இதனாற் சோழநாட்டு மக்களுக்கு அச்சமுங் கலக்கமும் ஏற்பட்டதென் றுஞ் சுவாமிதேவர் என்பவர் இறையருள் வேண்டி நடாத்திய பூசையின் விளைவாக லங்காபுரவின் படை தோல்வி கண்ட தென்றும் ஆர்ப்பாக்கத்துக் கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது.95 எனினுஞ் சோழப்படை ஈற்றில் லங்காபுரவின் படையை வெற்றி கொண்ட நிகழ்ச்சி பல்லவராயன்பேட்டைக் கல் வெட்டிற் கூறப்பட்டுள்ளது.98 இக்கல்வெட்டு இராஜாதிராஜனின் படைத்தளபதியாகிய திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம் சிங்களப்படையை வென்றது பற்றியுஞ்
பிப் பல்லவராயன் சிங்களப்படைத் தளபதியாகிய லங்காபுர உள்ளிட்ட L. GR) தளபதிகளையுங் கொன்று அவர்களின் தலைகளை மதுரைக் கோட்டை வாயிலில் வைத்தது பற்றியுங் கூறுகின்றது. இச் சம்பவம் பராக்கிரமபாகுவின் இருபத்தோராவது ஆட்சியாண் டில் ( கி. பி. 1147 ) நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
யாழ். - தொன்மை வரலாறு 332 இ

இவ்வாறு சிங்களப்படை தோல்வி கண்டாலும் பராக்கிரம பாகு தனது முயற்சிகளைக் கைவிடாது போரினைத் தொடர்ந் ததை இராஜாதிராஜனின் பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டுக் காலத்திற் (பராக்கிரமபாகுவின் இருபத்தைந்தாவது ஆட்சிக் காலத்தில்) பொறிக்கப்பட்ட திருவாலங்காட்டுக் கல்வெட்டு எடுத்தியம்புகிறது.97 மதுரையிலாண்ட குலசேகரனைப் புற முதுகு காட்டும் வண்ணம் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் இம்மன்னன் கப்பல்களைக் கட்டி, படை களை அணிதிரட்டும் முயற்சிகளை ஊராத்துறை, புலைச் சேரி, மாதோட்டம், வலிகாமம், மட்டுவில் ஆகிய துறை முகங்களில் மேற்கொள்வதை அறிந்த சோழ மன்னன் ஒரு படையை அனுப்பி இம்மன்னனின் முயற்சிகளைச் சிதறடித் தமை இக்கல்வெட்டிற் கூறப்படுகிறது. சோழக் கல்வெட்டு இதுபற்றிக் கூறுகையில் இராஜராஜ சோழனின் அமைச்சின் தலைவனாக விளங்கிய "வேதவனமுடையான் அம்மையப்ப னான அண்ணன் பல்லவராயன்" என்பான் பராக்கிரமபாகு வின் நடவடிக்கைகளை அறிந்து பராக்கிரமபாகுவோடு ஆட்சியுரிமையில் முரண்பட்டுக்கொண்டு சோழநாட்டில் வந்து தங்கிய பராக்கிரமபாகுவின் மருமகனான சிறீவல்லப தலை மையில் ஒருபடையை அனுப்பினான் என்றும் மேற்குறிப்பிட்ட படை ஊராத்துறை, வல்லிகாமம், மட்டிவால் உள்ளிட்ட ஊர்களிற் புகுந்து, புலைச்சேரி, மாதோட்டம் ஆகிய ஊர் களையும் அழித்து, அவ்வூர்களிலிருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டு ஈழமண்டலத்தின் கீழ் மேல் இருபதின் காதத்திற்கு மேற்படவும், தென்கடல் முப்பதின் காதத்திற்கு மேற்படவும் அழித்துச் சில சிங்களத் தலைவர்களைக் கொன்றும், எஞ்சி யோரைச் சிறைப் பிடித்துக் கொண்டுஞ் சோழநாடு திரும்பி யது என்றுங் கூறுகிறது.98
ஈழத்தின் வட, வடமேற்குப் பகுதியிற் செல்வாக்குள்ள துறைமுகங்களாகக் காணப்பட்ட இத்துறைமுகங்கள் யாவும் இக்காலத்திலே தமிழகத்தோடு இம்மன்னன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் அட்டவணையிலே இடம்பெறுவ தும் அவதானிக்கத்தக்கது. இவற்றுள் மகாதீர்த்த, மட்டிவால்
O 333 வரலாற்றுக் காலம் 11

Page 183
தாடு ஆகியன முதலாவது விஜயபாகுவாற் சோழருக்கெதி ராக இம்மன்னன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை களிற் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டு ஒன்று ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற வாணிப நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடுவதால் இப்பகுதி சில காலமாவது இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது எனக் கருத இடமுண்டு. தனது முயற்சிகள் தோல்வி கண்டதை அறிந்த பராக்கிரமபாகு குலசேகரனைத் தம்பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றான். இதனாற் குலசேகர பாண்டியன் சோழ அரசுக்கு விரோத மான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி இராஜராஜ சோழனிடம் அன்பு கொண்டிருந்த இராஜராஜக் கற்குடி forrrrrr tu 67 , இராசகம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் முதலான பாண்டியத் தலைவர்களையும் அவர்களின் நாட்டை விட்டுச் (சோழ அரசின் கட்டுப்பாட்டிலிருந்த) வெள்ளாற் றின் வடஎல்லைக்குப் போகும்படி கூறிச், சிங்களப்படைத் தளபதிகளின் தலைகளையும் மதுரைக் கோட்டை வாயிலிலிருந் தும் அகற்றுவித்தான். சோழ அரசன் தனது தளபதியாகிய அண்ணன் பல்லவராயனுக்குக் குலசேகரனை அகற்றிப் பாண்டிய அரசாட்சியை வீரபாண்டியனுக்கு அளிக்கும்படி கூற அவன் அவ்வாறு செய்தான். இப்போரிற் குலசேகரனுக்கு உதவ வந்த சிங்களப்படை தோல்வி கண்டது. எனினுங் கி. பி. 1167 - 1175ஆம் ஆண்டுகள் வரை இராஜாதிராஜன் காலத் தில் நடைபெற்ற போரில் இறுதி வெற்றி சோழருக்கே கிடைத்தது. இதனால் இவன் "மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராசகேசரி வர்மன்" என்ற பெய  ைர ச் சூடிக்
கொண்டான். 99
இராஜாதிராஜனின் மரணத்தோடுஞ் சோழ - பாண்டியப் போர்கள் ஓயவில்லை. குலசேகரன் இறந்த பின்னர் அவன் மகன் விக்கிரமபாண்டியன் தனது தந்தையின் அரசைத் தனக் குப் பெற்றுத் தரும்படி அப்போதைய சோழ மன்னனாக விளங்கிய மூன்றாங் குலோத்துங்கனிடம் (கி. பி. 1178-1218) விண்ணப்பித்த நேரத்தில் மதுரையிலாண்ட வீரபாண்டியன் சோழர் அளித்த உதவியை மறந்து ஈழத்து மன்னனான
யாழ். - தொன்மை வரலாறு 334 ()

பராக்கிரமபாகுவின் நண்பனானான். இதனால் மறுபடியுஞ் சோழ - சிங்களப் படைகள் மோதின. இது பற்றி மூன்றா வது குலோத்துங்கனின் ஒன்பதாவது ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது.100 பாண்டிநாட்டின் மீது படை எடுத்த சோழப்படை வீரபாண்டியனின் மகனைக் கொன்று விக்கிரமபாண்டியனை மன்னனாக்கியதோடு வீர பாண்டியனுக்கு உதவிக்குச் சென்ற சிங்களப் படைவீரரின் மூக்குகளையும் அரிந்து அவர்களையுங் கடலுட் தள்ளியது எனவும் இது கூறுகிறது.
இவ்வாறு பராக்கிரமபாகுவின் வெளிநாட்டுக் கொள்கை யின் அடித்தளமாக விளங்கிய சோழ அரசை எதிர்க்கும் முயற்சி ஆரம்பத்தில் வெற்றியை அளித்தாலும் முடிவிலே தோல்வியை மட்டுமன்றிப் பெரும் பொருளாதார வீழ்ச்சியை யும் ஏற்படுத்தியது. பராக்கிரமபாகு சோழருக்கெதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை பத்து ஆண்டுகட்கு மேலாக நீடித்தது. இதனாலே திறைசேரி வெறுமையானது. மக்கள் பலவாறு இவ்விராணுவ நடவடிக்கைகள் காரணமா கத் துன்புறுத்தப்பட்டனர்; பல்வேறு சிரமங்களுக்குள்ளாயி னர். பராக்கிரமபாகுவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இம்மன்னனின் பின் அரசுகட்டிலேறிய இரண்டாவது விஜயபாகு, நிஸங்க மல்லன் ஆகியோரின் ஆட்சிக்கால நடவடிக்கைகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. சூளவம்சம், விஜயபாகு தனது மாமனாகிய பராக்கிரமபாகுவாற் பல்வேறு துன்பங்களுக் குள்ளாகிச் சிறையில் விலங்கினால் அடித்து வருத்தப்பட்ட ஈழத்து வாசிகளை விடுவித்துக் காருண்யங் காட்டியதோடு, இன்னுஞ் சிலருக்கு அவர்கள் இழந்த கிராமங்களை அல்லது நிலங்களை மீண்டும் அளித்து நாட்டு மக்களை இன்பத்தி லாழ்த்தினான் என்றும் இம்மன்னனின் ஆட்சி பற்றிக் கூறு கின்றது.101 இவன் பின்னர் அரசு கட்டிலேறிய நிஸங்கமல்ல னின் கல்வெட்டும் முன்னைநாள் மன்னர்களின் நடைமுறை களுக்கு மாறாகப் பராக்கிரமபாகுவால் மிகக் கடுமையான ஆனால் நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளால் வறியவர்க ளாக மாறிக் களவெடுத்தலையே தமது ஜீவனோபாயமாகக்
O 335 வரலாற்றுக் காலம் II

Page 184
கொண்டுள்ள பலர் பற்றிக் கூறி இவர்களை இத்தொழிலை மேற்கொண்டு செய்யாது இம்மன்னன் தடுத்து மேலும் பலரின் துன்பங்களைக் களைந்ததையுங் கூறுகின்றது.102 பராக்கிரமபாகுவின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், சமயநடவடிக்கைகள் மட்டுமன்றிப் பர்மா, விசேடமாகப் பாண்டிய நாடு ஆகியவற்றுடனான போர்கள் ஆகியன நாட்டு மக்களிடமிருந்து கூடிய வரியை அறவிட்டதையும், வேண்டிய வாறு அவர்களைத் தனது பணிகளில் ஈடுபடுத்தியதையும், அவ் வாறு செய்ய உடன்படாதவர்களைச் சிறையில் அடைத் ததையுமே மேற்கூறிய இரு மன்னர்காலக் குறிப்புகளும் எடுத் துக்காட்டுகின்றன என்று கூறினால் மிகையாகாது.
பராக்கிரமபாகுவின் பின்
பராக்கிரமபாகுவின் மரணம் பொலநறுவை அரசியலில் மட்டுமன்றி நாட்டு வரலாற்றிலும் பாரதூரமான மாற்றங் களை ஏற்படுத்தியது. துரதிஷ்டவசமாக இம்மன்னனை ஒரு கர்வியத் தலைவனாகப் படைத்த சூளவம்சத்திலோ பிற சிங்கள நூல்களிலோ இம்மன்னனின் மரணத்தைத் தொடர்ந்து கி. பி. 1215இல் மாகனது படைஎடுப்பு வரையிலான வரலாறு மிகமிகச் சுருக்கமான முறையிலேதான் கூறப்பட்டுள்ளது. இத னால் இவை தருந் தகவல்களைக் கொண்டு இக்கால அரசியல் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறுவது கஷ்டமாகவேயுள் ளது. எனினும் இக்கால நிகழ்ச்சிகளைக் கூர்ந்து ஆராயும் போது முன் எப்போதுமில்லாத அளவுக்குப் பராக்கிரமபாகு இறந்து மாகனின் படைஎடுப்பு நிகழ்ந்த காலம் வரையிலான கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களிற் பதினைந்து மன்னர்கள் பொலநறுவையில் அரசாண்டுள்ளனர். இவர்களில் நிஸங்கமல்ல னைத் தவிர ஏனையோர் ஒன்றிற் கொலை செய்யப்பட்டுள்ள னர், அல்லது பதவி நீக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சி களை இலக்கியச் சான்றுகள் கொண்டு முற்றாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் இக்காலத்திற்குரிய கல்வெட்டா தாரங்கள் இவற்றினைச் சற்று விரிவாக அறிவதற்கு உதவு கின்றன.103 பராக்கிரமபாகுவின் ஆட்சியினைப் பொதுவாக ஒரு பொற்காலம் எனக் கூறினாலுங்கூட அது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிய காலமாகவுத் திகழ்ந்தது என்று
யாழ். - தொன்மை வரலாறு 336 C

கூறினால் மிகையாகாது. இவன் அரசனாகுவதற்கு முன்னர் நிலவிய உள்நாட்டுப்போரும், இதன் மூலம் தக்கினதேசம், உரோகணை ஆகிய பகுதிகளைத் தனது ஆணைக்குக் கீழ்க் கொண்டு வருவதற்கு இவன் எடுத்த முயற்சிகளும் ஈழத்தின் சிங்கள அரச வம்சங்களை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. இப்போர்களிற் பல இளவரசர்கள் கொல்லப்பட்டது மட்டு மன்றி இவர்கள் பலருக்கு என்ன நடத்தது என்று கூட அறிய முடியாதுள்ளது. இதனாற்றான் இம்மன்னன் சந்ததி யில்லாது இறந்தபோது இவனுக்குப் பின் அரசாட்சியைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு ஒரு வலுவுள்ள சிங்கள இள வரசன் கூடக் காணப்படவில்லை. இவனுக்குப் பின் அரச னான இவனின் சகோதரியின் மகனான விஜயபாகு கலிங்க நாட்டிலே பிறந்து வளர்ந்தவன். இவ்வாறே மாகன் படை எடுப்பு நிகழும்வரை ஆட்சி செய்த பெரும்பாலான மன்னர் களுங் கலிங்க வம்சத்தவர்களே. இதனால் இக்காலம் பொலநறுவை அரசியலிற் கலிங்க மன்னர்கள் காலம்" என அழைக்கப்படுகின்றது. இக்கலிங்க வம்சத்தவர்களாற் சிங்களப் பிரதானிகளினதோ மக்களினதோ விசுவாசத்தினை முற்றாகப் பெறமுடியவில்லை. இவ்வாறு சிங்கள அரச வம்சஞ் சீரழிந்த நிலையில், வேற்று நாட்டு அரசவம்சம் அரசாணையைக் கைப்பற்றிய நிலையிற் பொலநறுவையிற் காணப்பட்ட பிர தானிகள், மந்திரிகள், படைத் தளபதிகள் ஆகியோரிடையே ஒற்றுமையீனமும், பிணக்குகளுங் காணப்பட்டன.
அரசசபையிலும் பல்வேறு பிரிவினைகள் விதந்து காணப் பட்டன. இப்பிரிவினைச் சக்திகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். முதலாவது பகுதியினர் கலிங்க அரச வம்சத் தின் ஆட்சியை விரும்பியவர்கள் மட்டுமன்றி வலுவுள்ளவர்க ளாகவும் விளங்கினர். இரண்டாவது பகுதியினர் பாண்டிய ராட்சியை விரும்பியவர்கள். எனினும் நிளங்கமல்லனுடைய கல்வெட்டுகளில்104 பெளத்தர்களல்லாத சோழர், கேரளர் மட்டுமன்றிப் பாண்டியரும் அரசுரிமைக்கு அருகதையற்ற வர்கள் எனக் கூறப்படுவதை அவதானிக்கும்போது தமிழக வம்சங்கள் இக்காலப் பொலநறுவை அரசியலிற் காத்திரமான சக்தியாக விளங்கியமை தெளிவாகின்றது. மூன்றாவது
O 337 வரலாற்றுக் காலம் II

Page 185
சாரார் சிங்கள அரச வம்சத்தினரே இவ்வரச பதவியை வகிக்க வேண்டுமென விரும்பினர். இவர்களைப்போலும் நிஸங்க மல்லன் தனது கல்வெட்டுகளிற் "கோவிக் குலத்தினர்" என அழைக்கின்றான். இப்பதம் இக்காலத்தில் “வேளாளர்" என்ற பொருளைத் தரும் நிலப் பிரபுகளைக் குறித்தது. இவர்கள் அரசர்களாகுவதை விரும்பக் கூடாது என்றும், எத்தகைய வலுவுள்ளவர்களாக இவர்கள் காணப்பட்டாலுங்கூட இவர் களை அரசர்களாகத் தெரிவு செய்தல் கூடாது என்றும் இக்கல்வெட்டில் இம்மன்னன் குறிப்பிடுவது அவதானிக்கத் தக்கது.
இவ்வாறு அரசசபையில், வலுவான ஒரு சுதேசச் சிங்கள மன்னன் காணப்படாத காலகட்டத்தில், சிங்கள மக்களுக் கிடையே கலிங்க வம்சத்தவர் தமது செல்வாக்கினை நிலை நாட்டுவதற்குத் தத்தளித்த காலகட்டத்தில், இக்கால அரசிய லில் மேலும் பல சிக்கல்களையும், அமைதியின்மையையும் உருவாக்கியவர்களாகப் பராக்கிரமபாகு விட்டுச் சென்ற படைத் தளபதிகள் பலர் காணப்பட்டனர். படைத்தளபதிகள் அரச வம்சத்தினராகவோ அரசனோடு பல்வேறு உறவுகளைக் கொண்டிருந்தவர்களாகவோ காணப்பட்டதே சிங்கள அரசிய லிற் பாரம்பரியமாகப் பேணப்பட்டுவந்த நெறிமுறையாகும். ஆனால் இக்காலத்தில், கலிங்கவம்ச அரசாட்சியில் அரச வம்சத்தோடு இப்படைத் தளபதிகள் எவ்வித உறவு முறைத் தொடர்பும் அற்றவர்களாக விளங்கியதாற் பொலநறுவையில் அரசாண்ட மன்னர்களுக்கு விசுவாசிகளாக இருக்க வேண்டிய தேவை இவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் இக்கால அரசர்கள் பெருமளவுக்கு இப்படைத் தளபதிகளின் நல் லெண்ணத்தைப் பெற்றே அரசாள வேண்டிய நியதி காணப் பட்டதால், இவர்களிற் பலர் இப்படைத் தளபதிகளின் கைப் பொம்மைகளாக விளங்கியமை தவிர்க்க முடியாததாயிற்று. ஆனாற் படைத் தளபதிகள் மட்டத்திலோ எனில் ஒற்றுமை யீனமும், அதிகாரப்போட்டியுங் காணப்பட்டதால் இக்கால அரசர்களும் இதற்குப் பலிக்கடாக்களாயினர்.
யாழ். - தொன்மை வரலாறு 338 (9

பராக்கிரமபாகு இறந்த பின்னர் கலிங்க நாட்டிலிருந்து வந்த இவனது சகோதரியின் மகன் இரண்டாவது விஜயபாகு என்ற பெயருடன் முடிசூடிக் கொண்டான். முடிசூடிய அன்றே சில மந்திரிகள் இவனைப் பதவி நீக்க முயன்றும் விஜயாயன் தன் நாவன்" என்ற பிரதானியின் தலையீட்டினால் இம் முயற்சி முறியடிக்கப்பட்டாலுங்கூட ஒருவருட ஆட்சியோடு இவன் ஐந்தாவது மகிந்தனாற் கொலை செய்யப்பட்டான். இம்மகிந்தன் சுதேச சிங்களப் பிரதானிகளின் வகுப்பினைச் சேர்ந்தவனாக இருக்கலாமென யூகிக்கப்படுகின்றது. இத்தகைய வகுப்பினைத்தான் இவனுக்குப் பின் அரசுகட்டிலேறிய நிலங்க மல்லன் தனது கல்வெட்டுகளிற் “கோவிகுல" என அழைக்கின் றான்போலும். மகிந்தனின் வரவைச் சுதேசச் சிங்களப் பிரதானிகளின் எழுச்சியாக, அவர்கள் பொலநறுவை அர சின் அதிகாரத்தினைக் கைப்பற்ற எடுத்த முயற்சியாகக் கொண்டால், இக்காலத்து மன்னர்களில் ஒரே ஒரு சிங்கள வம்சத்து மன்னனாகக் காணப்பட்ட மகிந்தனை மன்னனாக் கும் முயற்சி படுதோல்வியடைந்தது என்றுதான் கூறல் வேண்டும். ஏனெனிற் சூளவம்சம் இவனின் ஆட்சிபற்றிக் குறிப் பிடுகையில் இவனின் படைத் தளபதிகள், படைவீரர்கள், சீற்ற முள்ள பிரசைகள், பிற அரச ஊழியர் ஆகியோரின் சம்மது மின்றி மிகத் தீமையான வழியில் ஐந்து நாட்கள் அரசாண் டான் எனக் கூறுகின்றது.108 இதற்குப் பின்னர் இக்காலத்தில் எந்தவொரு சிங்கள வம்சத்தவனையும் மன்னனாக்கும் முயற்சி காணப்படாத ஒன்றே இக்காலத்திற் சிங்கள அரண்மனையில் வெளிநாட்டவர் பெற்றிருந்த செல்வாக்கைத் துலாம்பர மாக்குகின்றது. மகிந்தன் எவ்வாறு அரசபதவியில் இருந்து நீக்கப்பட்டான் என்பது தெரியவில்லை.
இவனைத் தொடர்ந்து இரண்டாவது விஜயபாகு காலத் தில் உபராஜாவாக இருந்த நிஸங்கமல்லன் அரசனானான். ஒன்பது ஆண்டுகள் மட்டும் நீடித்த இவனின் ஆட்சிகூடப் பல்வேறு பிரச்சனைகள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின் றது.106 கல்வெட்டுகளில் மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருத் தல் வேண்டும் என இவன் வற்புறுத்தியுள்ளதோடு இவ்வாறு விசுவாசமற்றுத் துரோ கி க ளாக ச் செயற்படுவோருக்குத்
O 339 வரலாற்றுக் காலம் II

Page 186
தண்டனை யாதெனில் அவர்கள் மட்டுமன்றி அவர்களின் குலமும் சகபாடிகளும் முற்றாக அழிக்கப்படுவர் என்பதாகும். இதே கல்வெட்டுகளிற் சோழர், பாண்டியர், கேரளர் ஆகியோர் அரசுரிமையை விழையக் கூடாது எனவும் இவன் கூறத் தவறவில்லை. மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இவன் தக்கினதேசம், உரோகனை ஆகிய பிராந்தியங்களுக்கு விஜயம் செய்தான் எனக் கூறப்பட்டாலும் நாற்படையுடனேயே இத் தகைய விஜயங்கள் அமைந்தன என இவனின் கல்வெட்டுகளே எடுத்துக் காட்டுவதை நோக்கும்போது இக்காலத்தில் நிலவிய அமைதியின்மை புலனாகின்றது. இவற்றைவிடத் தென்னிந் தியாவுக்கு இவன் மேற்கொண்ட விஜயம் மகாதீர்த்தத்துறை முக மார்க்கமாக அமைந்திருந்தாலுங்கூட ஈழநாட்டில் இம் மன்னன் மேற்கொண்டதாகக் கூறப்படும் விஜயங்களில் வட பகுதி தவிர்க்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. எனினும் எவ்வாறு நிஸங்கமல்லனின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சி முடிவுற்றது என்பது தெரியவில்லை. இவனின் பின் இவனின் மகன் இரண்டாவது வீரபாகு மன்னனானான். இவன் அரசனாகப் பதவி ஏற்ற அடுத்ததினமே நிஸங்க மல்லனின் படைத்தளபதிகளில் ஒருவனான லக் விஜயசிங்கு செனிவி தாவருணா என்ற படைத் தளபதியாற் கொலை செய்யப்பட்டு நிஸங்கமல்லனின் இளைய சகோதரன் இத்
தளபதியால் அரசனாக்கப்பட்டான்.
மேற்கூறிய நிகழ்ச்சி இக்காலத்திற் படைத்தளபதிகள் பெற்றிருந்த செல்வாக்கினையே எடுத்துக் காட்டுகின்றது. இதற்குப் பின்னர் சோடகங்கன் என்ற மன்னனைப் பதவி இறக்கி லீலாவதியை இராணியாக்கியவனாகப் படைத் தளபதி யாகிய லக் விஜயசிங்கு கித் செனிவி என்பவன் குறிப்பிடப் படுகின்றான். இன்னோர் படைத்தளபதியான லக் விஜயசிங்கு செனிவி ஆபோநாவன் பின்னர் அரசுரிமை பெற்ற சாகஸ் மல்லன், கல்யாண வதி, தம்மாசோக ஆகியோரை மன்னர் களாக்கியவனாகவுங் காணப்படுகின்றான். கெய்கர் போன்றோர் தாவருண, ஆபோநாவன் ஆகிய பெயர்கள் இரண்டும் ஒருவ னுடைய பெயரே எனக் கூற, விக்கிரமசிங்க தாவருண, செனிவி ஆகியன மட்டும் ஒருவனின் பெயர் எனக் கருத்துத்
யாழ். - தொன்மை வரலாறு 34o O

தெரிவித்துள்ளார். எனினும் இம்மூன்று பெயர்களும் நிஸங்க மல்லன் தொட்டுக் கல்யாணவதி அரசி வரையுள்ள இருபது ஆண்டுகளை உள்ளடக்கிய காலமாக இலக்கிய, கல்வெட் டாதாரங்களிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. இம் மூன்று பெயர்களும் ஒருவனையே குறித்திருந்தால் இத்தளபதி இக்காலத்திலே தான்நினைத்தபடி அரசர்களை ஆட்டிப் படைக் குந் திறனுடையவனாக, இருபது ஆண்டுகளாக இக்கால அரசியலிற் பதற்ற நிலையை உருவாக்கியவனாக விளங்கினான் எனலாம். அன்றி இம்மூன்று பெயர்களையும் வெவ்வேறு படைத் தளபதிகளைக் குறிக்கும் பெயராகக் கொண்டால் இருபது ஆண்டுகளில் இப்படைத் தளபதிகள் பெற்றிருந்த செல்வாக்கினையே இது எடுத்துக் காட்டுகின்றது எனலாம் .007
நிஸங்கமல்லனின் மகனான வீரபாகுவைத் தாவருண கொன்று நிஸங்கமல்லனின் இளைய சகோதரனை மன்னனாக்கி யது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவனின் பெயர் மூன்றாவது விக்கிரமபாகுவாகும். இவன் மூன்று மாதம் மட்டுமே அரசாண்டான். நிஸங்கமல்லனின் சகோதரியின் மகனான சோடகங்கன் இவனைக் கொலை செய்து தான் மன்னனானான். இவனினாட்சி ஒன்பது மாதங்கள் மட்டுமே நீடித்தது. படைத் தளபதியாகிய செனிவி இவனை நீக்கி விட்டுப் பாண்டிய வம்சத்தினைச் சேர்ந்த பராக்கிரமபாகுவின் அரசியர்களில் ஒருத்தியான லீலாவதியை அரசியாக்கினான். மூன்று வருடங்கள் நீடித்த இவளின் ஆட்சிக் காலத்திற் சோழர் மும்முறை ஈழத்தின் மீது படை எடுத்தனர். இக் காலத்திற் கலிங்கர்களோடு மனத் தொடர்பினைக் கொண் டிருந்த சோழர்கள் பாண்டியரின் ஜென்ம விரோதிகளாக விளங்கினர். கலிங்க வம்சத்தவனான சோடகங்கன் அகற்றப் பட்டுப் பாண்டிய வம்சத்தவளான லீலாவதி அரசியான தன்மையினால் மறுபடியுங் கலிங்க வம்சத்தினருக்கு அரசுரிமை யைப் பெற்றுக் கொடுக்கவும் இப்படைஎடுப்பு நிகழ்ந்திருக்க லாம். லீலாவதியைத் தொடர்ந்து கலிங்க இளவரசனான சாகளமல்ல அரசனான நிகழ்ச்சி இவ்வாறு ஊகிக்க
வைக்கின்றது.
(9 341 வரலாற்றுக் காலம் 11

Page 187
எவ்வாறாயினும் இந்நிகழ்ச்சிகள் அரசபதவியைப் பகிர்வதிற் பாண்டிய - கலிங்க வம்சங்களுக்கிடையே காணப்பட்ட பூசல் களையே எடுத்துக் காட்டுகின்றன. சாகஸமல்லனை அரச பதவியிலிருந்து நீக்கிய தளபதியாகிய ஆபோநாவன் நிஸங்க மல்லனின் அரசியாகிய கல்யாணவதியை அரசியாக்கினான். இவள் ஆறுவருட காலம் அரசியாக விளங்கினாள். அத்துடன் இக்காலந் தமிழ்ப் படைஎடுப்புகள் நிகழ்ந்த காலமுமாகும்.108 எனினும் இவளைப் பதவியிலிருந்து அகற்றிய தளபதியாகிய ஆபோநாவன், மூன்று மாதக் குழந்தையாகிய தம்மாசோகவை மன்னனாக்கினான். இச்சந்தர்ப்பத்தில் இதே தளபதி தான் சாகஸமல்லன், கல்யாணவதி ஆகியோருக்கு அரச பதவியை வழங்கியவனென்பதும் நினைவு கூரற்பாலது. எவ் வாறாயினும் இத்தகைய நடவடிக்கைகள் தளபதிகள் இக் காலத்திற் பெற்றிருந்த செல்வாக்கினையே எடுத்துக் காட்டு கின்றன. இக்காலத்தில் அணிகங்க என்பவன் தென்னிந்தியப் படையுதவியுடன் பதினேழு நாட்கள் மட்டுமே அரசனானான். அப்போது விக்கண்ட சமுனக்க அணிகங்கவைக் கொன்று லீலாவதியை மறுபடியும் அரசியாக்கி நாட்டை நிருவகித்த தாகக் கூறப்படுகின்றது. தமிழகப் U60).-ul-6öT வத்த லோகேஸ்வர, லீலாவதியை அகற்றிய பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினான். கலிங்கவம்சத்தவனான இவனுக்கு உறுதுணை யாக இக்காலத்தில் வல்மையுடன் விளங்கிய லோகே அறக் மேன என்பவன் குறிப்பிடப்படுகின்றான். எனினும் லோகேஸ் வரனின் ஆட்சி ஒன்பது மாதங்கள் மட்டுமே நீடித்திருந்தது. இவனை அகற்றிய படைத் தளபதியாகிய பராக்கிரம மூன்றாவது முறையாக லீலாவதியை அரசியாக்கினான். எனினும் லீலாவதியின் ஆட்சி ஏழு மாதம் மட்டுமே நீடித்தது. பராக்கிரம என்ற பாண்டிய இளவரசன் தமிழகப் படையுதவி யுடன் ஆட்சியைக் கைப்பற்றினான். இவனின் காலத்திலே தான் மாகனின் படைஎடுப்பு நிகழ்ந்தது,
மாகனது படைஎடுப்புப் பொலநறுவை அரசின் வரலாற்றில் மட்டுமன்றி வடபகுதி வரலாற்றிலும் முக்கியம் பெறுவதினால் அதனை ஆராய்வதற்கு முன்னர் இக்கால அரசியலைக் குழப் பிய சக்திகளிலொன்றாகிய தென்னிந்தியப் படைனடுப்புகள்
யாழ். - தொன்மை வரலாறு 342 ()

பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. நிஸங்கமல்லனின் ஆட்சிவரை பெருமளவுக்கு வெளிநாட்டுப் படைஎடுப்புகள் அருகிக் காணப்பட்ட நிலை போய் இவனின் மறைவோடு (கி. பி. 1196) இப்படைஎடுப்புகள் தீவிரமடைந்த போக் கினையே அவதானிக்க முடிகின்றது. உள்ளூரில் அரசாதிக்கத் தினைக் கைப்பற்ற ஏற்பட்ட போட்டி பூசல்கள், கலிங்க - பாண்டிய வம்சங்களுக்கிடையே நிலவிய போட்டிகள், தளபதி களின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு மத்தியிலேதான் இக்காலப் படைஎடுப்புகள் நிகழ்ந்தன. இவ்வாறு உள்ளூரிற் காணப்பட்ட அரசியற் குழப்ப நிலையைப் பயன்படுத்திச் சோழ, பாண்டிய, கலிங்க வம்சத்தினர் படைஎடுத்து மேலுங் குட்டையைக் குழப்பியவர்களாகக் காணப்படுகின்ற ஒரு நிலையையும் இக் காலத்தில் அவதானிக்க முடிகின்றது. நிஸங்கமல்லன் இறந்து மாகனின் படை எடுப்பு நிகழ்ந்த காலத்திற்கு இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் எட்டுப் படைஎடுப்புகள் நிகழ்ந்தன.109 இவற்றிற் பெரும்பாலானவை சோழரால் அல்லது சோழரின் அநுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டனவாகவே விளங்குகின் றன. தென்னிந்திய - ஈழச் சாசனங்களிலும் இலக்கியங்களிலும் இப்படைஎடுப்புகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. பராக்கிரமபாகு, நிஸங்கமல்லன் ஆகியோரின் காலங்களிலே தென்னிந்தியாவிலிருந்து ஈழத்தின் மீது படைஎடுப்புகளும், ஈழத்திலிருந்து தென்னிந்தியா மீது படையெடுப்புகளும் மேற் கொள்ளப்பட்டன என்பது பற்றி முன்னர் கண்டோம். இவ் வாறே இக்காலச் சோழக் கல்வெட்டுகளின் மூலம் மூன்றா வது குலோத்துங்கன் மூன்று முறை ஈழத்தின் மீது படை எடுத்தமை தெரிகின்றது.110 இவனின் முதலாம் படைஎடுப்பு கி. பி. 1187இல் நடைபெற்றது. இது நடந்தது இவனின் ஒன்பதாவது ஆட்சியாண்டிலாகும். இவன் தனது பத்தாவது ஆட்சியாண்டில் (கி. பி. 1188) ஈழத்தின் மீது இரண்டாவது முறை படை எடுத்தான். இக்காலத்திற் பொலநறுவையில் அரசனாகக் காணப்பட்டவன் நிஸங்கமல்லனாவான். பராக்கிரம பாகுவீன் மரணத்தினைத் தொடர்ந்து காணப்பட்ட குழப்ப நிலையைப் பயன்படுத்தி மூன்றாவது குலோத்துங்கன் இப் U60)-6TGS 6pu மேற்கொண்டான் போலத் தெரிகின்றது. எனினும் இப்படை எடுப்பு வெற்றியளிக்காததாற் போலுந்
C 343 வரலாற்றுக் காலம் II

Page 188
திரும்பவுங் கி. பி. 1194இல் இன்னொரு படைஎடுப்பு மேற் கொள்ளப்பட்டது. இதிலும் அவன் குறிப்பிடத்தக்க வெற் றியை அடையவில்லை. காரணம் நிஸங்கமல்லன் கி. பி. 1196 வரை அரசனாக விளங்கியமையே. குலோத்துங்கனின் திருமாணிக்குழிக் கல்வெட்டு மறுபடியும் லீலாவதி அரசியாக இருந்த காலத்தில் ( கி. பி. 1197 - 1200 ) ஈழத்தின் மீது இவன் மேற்கொண்ட படைஎடுப்புப் பற்றிக் கூறுகின்றது. இவ்வரசி காலத்தில் எழுதப்பட்ட சசதாவத என்ற கவிதை யில் இக்காலத்திற் சோழ நாட்டிலிருந்து ஏற்பட்ட மூன்று படைஎடுப்புகள் பற்றியும் இவ்வரசியின் தளபதியாக விளங்கிய "கித்தி" இவற்றைத் தடுத்து நிறுத்தியது பற்றியுங் கூறப் பட்டுள்ளது.111 இதன் உரை நூல் இது பற்றி மேலும் பல தகவல்களைத் தருகின்றது. மாதோட்டத்தில் வந்திறங்கிய இப்படைகள் இரு முறை அநுராதபுரம் நோக்கி முன்னேற முயன்றபோது தோற்கடிக்கப்பட்டன என்று இந்நூல் குறிப் பிடுகின்றது. மூன்றாவது முறை தக்கினதேசத்திலுள்ள சிலாபத்திலிருந்து சிறீபுர வரை இப்படை முன்னேறிய போதும் இறுதியிற் கித்தியால் இது தோற்கடிக்கப்பட்டது.
தளபதியாகிய இக்கித்தி முதலாவது பராக்கிரமபாகு, நிஸங்க மல்லன் ஆகியோர் காலந்தொட்டு இராணுவத்திற் கடமை யாற்றியதோடு சோடகங்கவைப் பதவியிலிருந்து நீக்கி லீலா வதியை அரசியாக்கியவனுங்கூட. இவன் கி. பி. 1200 ஆம் ஆண்டளவிற் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் இம்மூன்று படைஎடுப்புகளும் 1 197 - 1200 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் நடைபெற்றிருக்கலாம் எனக் கொள்ளப்படுகின்றது. குலோத் துங்க சோழனின் ஈழம் மீதான இறுதிப் படைஎடுப்பு கி. பி. 1212 இல் நடைபெற்றதைப் புதுக்கோட்டையிற் கிடைத்துள்ள இவனின் கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது.112 இக்காலத் திற்கு முன்னர் ஈழம் கைப்பற்றப்பட்டுவிட்டதை இக்கல் வெட்டு உறுதி செய்கின்றது. எனினுஞ் சூளவம்சம், ஈழத்துக் கல்வெட்டு ஆகியன தருஞ் சான்றுகளின் அடிப்படையில் இது கி. பி. 1209இல் நடைபெற்றிருக்கலாம் ତTର୪T& கொள்ளப்படுகின்றது. கல்யாணவதியின் (கி. பி. 1202 - 1208) போபிட்டியக் கல்வெட்டிலே தமிழ்ப் படைஎடுப்பின் காரண
யாழ். - தொன்மை வரலாறு 344 O

மாக மினிப்பேயை விட்டு இவ்வரசி வெளியேறிய நிகழ்வு கூறப்பட்டுள்ளது. 113 இத்தகைய நிகழ்வு இவ்வரசியின் எட்டாவது ஆட்சி ஆண்டுக் காலத்தில் வெளியிடப்பட்ட மினிப்பேக் கல்வெட்டாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.14 இவ்வாறு நடைபெற்ற போரிற் சிங்களச் சேனாதிபதியாகிய “ஆதி உயிரிழந்தமையுங் குறிப்பிடப்பட்டுள்ளது. i
இக்காலத்தில் ( கி. பி. 1209இல்) நடைபெற்ற இன் னோர் படைஎடுப்புப் பற்றியுஞ் சூளவம்சங் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. 115 இது கூறுந் தகவல் யாதெனில் மகாதிபாத அணிகங்க என்பவன் சோழநாட்டிலிருந்து ஒரு பெரும்படையுடன் ஈழம் வந்து பொலநறுவையில் ஆட்சி செய்த தம்மாசோகவைக் கொன்று பதினேழு நாட்கள் ஆட்சி செய்தான் என்பதாகும். மினிப் பேக் கல்வெட்டுக் கூறுந் தமிழ்ப்படை எடுப்பு இஃதே எனக் கொள்ளலாம். சோழப் படை உதவியுடன் அணிகங்க ஈழத்தின் மீது மேற்கொண்ட படைஎடுப்பையே புதுக்கோட்டைக் கல்வெட்டு எடுத்துக் கூறு கின்றது எனக் கொண்டாலுங் கொட்டாங்கேக் கல்வெட்டுக் கூறும் லோகேஸ்வரனின் காலத்தில் (கி. பி. 1210-1211) நடை பெற்ற சோழப் படைஎடுப்பாகவும் இஃதிருந்திருக்கலாமெனக் கொள்ளலாம். கி. பி. 1212ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழத் தின் மீது ஏற்பட்ட சோழப்படை எடுப்புகள் பற்றித் தென்னிந்திய, ஈழத்து ஆவணங்களிற் சான்றில்லை. மேற் கூறிய சோழப்படை எடுப்புகளை விட இக்காலச் சான்றுகள் மாகனது படைஎடுப்பு நிகழ்வதற்கு முன்னர் நடைபெற்ற இரு படைஎடுப்புகள் பற்றியே கூறுகின்றன. இதில் முத லாவதாக அமைவது லங்கேஸ்வரனின் படை எடுப்பாகும். இவன் எதிர்க்கரையிலிருந்து (தமிழ் நாட்டிலிருந்து) தமிழர் படையுடன் வந்து புலஸ்தி நகரில் (பொலநறுவையில்) ஒன் பது மாதங்கள் ஆட்சி செய்தவனாவான். இதன் பின்னர், பாண்டிய இளவரசனான பராக்கிரமனால் இறுதியான படைஎடுப்பு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுப் படை யுடன் வந்த இவன் பொலநறுவையில் மாகன் படைஎடுத்த போது அரசனாக விளங்கியவன் ஆவான். இவ்வாறு தமிழகத்திலிருந்து ஏற்பட்ட இக்காலப் படைஎடுப்புகள்
O 345 வரலாற்றுக் காலம் II

Page 189
பொலநறுவை அரசை வலிகுன்றச் செய்த அதே நேரத்தில் வடபகுதியிலே தமிழரின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் தனித்துவத்திற்கும் வழிவகுத்தன என்று கூறினால் மிகை
பாகாது.
மாகனும் மாகனுக்குப் பின்பான வடபகுதியும்
கலிங்க நாட்டவனாகிய மாகனின் வருகை (கி. பி. 1215) ஈழ வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகின்றது. எவ்வாறு சோழரின் வருகை அநுராதபுரத்தின் அஸ்தமனத்தைக் குறித்ததோ அவ்வாறே மாகனின் வருகையோடு பொலநறுவை அரசின் அஸ்தமனமும் உறுதியாயிற்று. அதுமட்டுமன்றி அநுராதபுரம்பொலநறுவை ஆகிய பகுதிகள் காடடர்ந்த பிரதேசங்களாக மாற வடக்கே தமிழ் அரசு தனித்துவமாக விளங்கச், சிங்கள அரசின் மையப்பீடங்கள் தென்மேற்கு நோக்கி நகரத்
தொடங்கின. இவ்விரு அரசுகளினைப் பிரிப்பனவாகக் காடடர்ந்த பகுதிகள் காணப்பட்டன. இவைகளை வன்னி பர்கள் ஆட்சி செய்தனர். வடக்கே இருந்தவர்கள்
யாழ்ப்பாண அரசுக்கும், சிங்களப் பகுதிகளில் இருந்தவர்கள் சிங்கள அரசுக்குந் திறை செலுத்தினர். எவ்வாறாயினும் மாகனது ஆட்சி சிங்கள நூல்களான சூளவம்சம், பூஜா வலிய ஆகியவற்றிற் கொடூரமான ஆட்சியாகச் சித்திரிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் நூல்களான யாழ்ப்பாண வைபவமாலை போன்றவற்றிற் கூறப்படும் யாழ்ப் பாண அரசின் முதல் மன்னனான விசய கூழங்கைச் சக்கர வர்த்தி இவனாக இருக்கலாமெனக் கூறப்படுவதோடு மாகோன் என இவனை அழைக்கும் மட்டக்களப்பு மான்மியம் கிழக்கே இவனின்கால நடவடிக்கைகள் பற்றியுங் கூறுகின்றது."
இவனின் படைஎடுப்புப் பற்றிச் சூளவம்சம் பின்வருமாறு கூறுகின்றது. 117
* ஆனால் ஈழத்து வாசிகளின் பல்வேறு கொடூர பாதகச் செயல்கள் ஒன்று திரண்டதன் விளைவாக இந்நாட்டைக் காப்பாற்றும் தெய்வங்கள் இதனைத் தொடர்ந்து செய் யத் தவறிவிட்டன. தவறான சமய நம்பிக்கையுடைய
யாழ். - தொன்மை வரலாறு 346 )

ஒருவன் இங்கு வந்திறங்கினான். அவனது உள்ளம் தீய அரசத்துவத்தில் திளைத்திருந்தது. தாராளத்துவம் போன்ற நற்குணங்களை எரித்தொழிக்கும் காட்டுக்தி போன்றவனும் அவனாவான். இவன் நன்மார்க்கம் என்ற இரவுத் தாமரைகளை குவியச் செய்யும் சூரியன். அமைதி என்ற பகற் றாமரைகளின் அருளை அழிக்கும் சந்திரன். இவனது பெயர் மாகனாகும். கலிங்க வம்சம் வழிவந்த கொடுங்கோலன். சிந்தனைத் தெளிவற்றவன். இதனால் மதிநுட்பம் மழுங்கடிக்கப்பட்டவன். இவன் கலிங்க நாட்டிலிருந்து 24, 000 வீரர்களின் தலைவனாக இங்கு வந்திறங்கி ஈழத்தினைக் கைப்பற்றினான். " மேற்கூறிய கருத்தினையே இன்னொரு நூலாகிய கத்தாவங்கல்ல விகாரவம்ச என்ற Ա576ն பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.118
* ஈழத்திற்கு ஆபரணங்களாக விளங்கிய பல அரசர்கள் பெளத்தம், தர்மம், சங்கம் ஆகியவற்றுள் ஈடுபாடுடைய வர்கள், எத்தனையோ அற்புத சக்திகளைப் பெற்றிருந்த வர்கள் மரணித்துவிட்டனர். பின்னர் வேறு அரசர்களும் நீதி நெறியிலிருந்து வழுவியவர்களும் பாரம்பரியமான அரசத்துவத்தில் ஊறித் திளைத்தவர்களும் பாக்கியசாலி களல்லாத பலவீனர்களும் இவர்களை ஒத்த அமைச்சர் களும் ஆட்சி பீடங்களிலமர்ந்து பரஸ்பர பகைமையைக் கொண்டிருந்த காலத்தில், கடந்த காலத்தில் ஈழத்து வாசி களால் புரியப்பட்ட ஒரு கொடூரமான பாதகச் செயலின் விளைவாக பெளத்தரின் நெறியை அறவே அறியாதிருந்த பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த பகைவரின் படைகள், தவறான மார்க்கம் என்ற புதரில் சிக்குண்டவர்கள், ஜம்புத் தீவிலிருந்து இங்கு வந்திறங்கி ஈழம் முழுவ தனையும் குழப்பமும் ஆபத்தும் நிறைந்த நிலைக்கு உள்ளாக்கினர். * எல்லா நூல்களிலும் இவன் கலிங்க நாட்டவன் என்ற கருத்தே விதந்து காணப்பட்டாலுஞ் சூளவம்சத்தில் ஓரிடத்தில் இவன் * தமிள " அதாவது தமிழ் நாட்டவன்" எனவுங் குறிப் பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது."
O 347 வரலாற்றுக் காலம் II

Page 190
சூளவம்சத்தில் மாகனது படை வீரர்கள் பலவாறு குறிப்பி டப்பட்டுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. இந்நூலின் மூன் றிடங்களில் இவர்கள் கேரளர் என்றும், எட்டு இடங்களில் தமிழர் என்றும், ஒரிடத்தில் தமிழர் கேரளர் என்றும் கூறப் பட்டுள்ளதை இந்திரபாலா எடுத்துக் காட்டியுள்ளார். பூஜாவலிய என்ற சிங்கள நூல் மரகனைக் கலிங்கராஜ என ஆரம்பத்தில் அழைத்துப் பின்னர் திராவிடராஜ, தெமள ராஜா எனவுங் குறிப்பிட்டுள்ளது. இதே போன்று இவனது படைவீரர்களும் முதலில் மலையாளிகள் (மலால) என விளிக் கப்பட்டுப் பின்னர் தெமள என அழைக்கப்பட்டு இறுதியாகத் தெமள மலா ல என்றும் அழைக்கப்பட்டுள்ளமை அவதானிக் கத்தக்கது. இத்தகைய கூற்றுகள் ஆரம்பத்தில் மாகனுடைய படையிற் கேரளர்கள் காணப்படப் பின்னர் பொலநறுவைப் பகுதியிலிருந்த தமிழ் வீரர்களும் இதில் இணைந்து கொண் டதை எடுத்துக் காட்டுகின்றன. சூளவம்சங் கூறுவது போல் ஆரம்பத்தில் 24,000 படைவீரர்கள் மாகனின் அணியிற் காணப் பட்ட னர். பின்னர் பொலநறுவையை இறுதியாக இவன் விட்டு விலகும்போது 40,000 படைவீரர்கள் காணப்பட்டனர் என்பது இக்காலத்தில் இப்பகுதித் தமிழர்கள் இதிலிணைந்து கொண்டதையே எடுத்துக் காட்டுகின்றது.
மாகனது ஆட்சி பற்றிச் சூளவம்சம், பூஜாவலிய போன்ற நூல்களின் வர்ணனைகள் சற்று மிகைப்படுத்தப்பட்டனவாக இருந்தாலுங்கூட, பொலநறுவையில் இவனது படைகள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பெருமளவுக்கு உண்மைச் சம்பவங் களாகவே உள்ளன எனலாம். மாகனைத் தவறான நம்பிக் கைகளைக் கடைப்பிடிக்கும் ஒருவனாகக் கூறுஞ் சூளவம்சம் மக்களையும் இத்தகைய நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும்படி இவன் தூண்டினான் என்றுங் கூறுகின்றது. அத்துடன் கிராமங்கள், வயல்கள், வீடுகள், தோட்டங்கள், அடிமைகள், மாடுகள், எருமைகள் போன்ற எவை எவை சிங்களவருக்குச் சொந்தமாக இருந்தனவோ அவற்றை எல்லாம் பறித்துக் கேரளருக்கு இவன் கொடுத்தான் எனவுங் கூறப்படுகின்றது. விகாரைகள், பிரிவேனாக்கள், ஏனைய வழிபாட்டிடங்கள்
ஆகியனவற்றைத் தனது படைவீரரின் வசிப்பிடங்களாக மாற்
யாழ். - தொன்மை வரலாறு 348 G

றினான். பெளத்த மதத்திற்குச் சொந்தமான சொத்துகளை அபகரித்த இவன் பிக்குமார்களைச் சித்திரவதை செய்ததோடு அவர்களது வருமானங்களைப் பறித்ததாற் பலரி தமிழகத்தி லுள்ள சோழ, பாண்டிய மண்டலங்களுக்குச் சென்றனர் எனவுஞ் சூளவம்சம், பூஜாவலிய போன்ற நூல்கள் குறிப்பிடு கின்றன.120 மாகன் இவ்வாறு மக்களைக் கொள்ளையடித்ததும் பெளத்த சங்கத்தினரை வருத்தியதும் இவர்களின் செல்வங் களைக் கவர்ந்ததுந் தனக்கெதிராக இவர்கள் கிளர்ச்சி செய் யாது தடுப்பதற்கே என்று கூறப்படுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளால் வடக்கே தமிழர்களின் பலம் அதிகரிக்கச் சிங்கள மக்கள் ராஜரட்டையை விட்டுத் தென்மேற்கே நகரத் தொடங்கினர். இக்காலத்தில் ராஜரட்டை நாகரிகத்தின் சீரழிவுக்கு முதலாவது பராக்கிரமபாகு விற்குப் பின்னர் பதவியேற்ற வலிமையற்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்ப ட் ட தொடர்ச்சியான அந்நியப் படை யெடுப்புகள், இதனால் நீர்வள நாகரிகத்தின் நிருவாகச் சீர் கேடு ஆகியன பிரதான காரணிகளாக எடுத்துக் காட்டப் பட்டாலும் மாகனின் வருகை பொலநறுவை அரசின் வீழ்ச்சி யினைத் துரிதப்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வரசின் நிருவாகச் சீர்கேட்டுக்குத் தென்மேற்கு நோக்கிய சிங்கள மக்களின் புலப் பெயர்வின் தாக்கமுங் காரணமாக இருந்தது என்று கூறினால் மிகையாகாது. மாகன் இவர்களின் நிலங்கள், சொத்துகள் ஆகியனவற்றைக் கவர்ந்தான் எனச் சூளவம்சங் குறிப்பிடுவதை நோக்கும்போது இத்தகைய புலப் பெயர்வுகள் மாகனின் நடவடிக்கைகளால்ே துரிதமடைத்
தன எனலாம்.
மேற்கூறிய நிகழ்ச்சிகள் மட்டுமன்றி மாகனின் படை எடுப்பு இன்னொரு விதத்திலும் பொலநறுவை அரசின் வர லாற்றிற் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டது. இதற்கு முன்னர் பொலநறுவை அரசினைத் தோற்றுவித்த சோழவம்சம் இந்நாட்டை விட்டுச் சென்றதும் ஏற்பட்ட படைஎடுப்புகளை நடாத்தியோர் நிரந்தரமாக இங்கு தங்க வில்லை. இதனாற் சிங்கள அரசர் சிலகாலம் தமது அரசிருக்
O 349 வரலாற்றுக் காலம் II

Page 191
கையை இழந்தாலும் மீண்டும் அதனைப் பெற்று அரசாளத் தவறவில்லை. ஆனால் இப்போதோ எனில் இங்கு மாகனும் அவனது படைவீரர்களும் நிரந்தரமாக வாழ்ந்தனர். மாகன் மட்டுமன்றிச் சாவகன், பாண்டியன் ஆகியோரின் ஆட்சியும் வடபகுதியிலே துளிர்த்தது. இதனாற் சிங்கள அரசின் எதி ரிகள் தொடர்ந்து வடக்கே ஸ்திரம் பெற்றுக் காணப்பட்ட னர். மாகன் வடக்கே சென்ற பின் பொலநறுவையைக் கைப்பற்றிய சிங்கள அரசர் தொடர்ந்து அங்கு தமது அரசை ஸ்திரப்படுத்த முடியாததால் அதனைக் கைவிட நேர்ந்தது. இதனால் நிரந்தரமாக ராஜரட்டையிலிருந்த சிங்களவரின் அதிகாரம் தளர்ந்தது. இத்தகைய நிகழ்வுக்கு இவர்களின் நிலங்களை மாகன் குறையாடித் தனது படை வீரர்களான கேரளர், தமிழர் ஆகியோருக்கு அளித்தமையுங் காரணமாகவிருந்தது. இதன் விளைவாக நிருவாகிகள், மக்கள் ஆகியோரது புலப் பெயர்வுந் தொடர்ந்தது. இதன் விளைவு யாதெனில் வடக்கே இருந்த அரசு சிங்கள அரசின் தலைமு டின்றித் தனித்துவமாகத் தன்னை வளர்த்துக் கொள்ள முடிந் தது என்பதாகும்.
நிற்க, மாகனது ஆட்சி நிலை கொண்டிருந்த இடங்கள் பற்றிச் சூளவம்சங் குறிப்பிடுவது ஆராய்தற்பாலது.121 இவனின் படைகள் நிலைத்திருந்த கோட்டைகளாகக் கொட்டசாறr (கொட்டியாறு), கங்கா தளாக (கந்தளாய்), காகாலய (கட்டுக் குளம்), பதிட்ரட்ட (பதவியா), குருந்தி (முல்லைத்தீவுப் பகுதியி லுள்ளது), மானாமத்த, மகாதித்த மன்னார (மன்னார்), புலச்சேரி (பூநகரிப் பகுதி), வாலிககாம (மன்னாருக்குக் கிட்ட வுள்ள பகுதி), கோணாரட்ட (திருமலை), கொனுசுரட்ட, Lfo(B) பாதபதித்த (இலுப்பைக்கடவை), சூகரதித்த (ஊர்காவற் றுறை) ஆகியன இந்நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளன. மாகன் பொலநறுவையிலிருந்து 1255ஆம் ஆண்டில் இரண்டாவது பராக்கிரமபாகுவால் வெளியேற்றப்பட்டான் என்பதால் இவ னின் இராசதாணி முதலிற் பதவியாவிலும் பின்னர் யாழ்ப் பாணத்திலும் அமைந்திருக்கலாமென இந்திரபாலா கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் அண்மையிற் பூநகரி மாவட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையுஞ் சூளவம்சத்தில்
யாழ். - தொன்மை வரலாறு 35o O

மார் கனது படைகள் நிலைகொண்டிருந்த இடங்களையுங் கொண்டு இவனின் அரசியல் மையப்பீடம் பூநகரிப் பகுதியில் அமைந்திருக்கலாம் என்ற கருத்துப் புஸ்பரத்தினத்தால் முன் வைக்கப்பட்டுள்ளது.122
இச்சந்தர்ப்பத்தில் மாகனது படைஎடுப்புக்கும் வடக்கே யாழ்ப்பாண அரசின் உதயத்திற்குமிடைப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட படையெடுப்புகள் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. இக்காலத்தில் எல்லாமாக ஐந்து படைஎடுப்புகள் நிகழ்ந்தன.* இவற்றில் மலாயா நாட்டிலிருந்து ஈழத்தின் மீது படைஎடுத்த சாவகனின் படைஎடுப்பை விட ஏனையவை யாவுத் தமிழ் தாட்டிலிருந்து வந்த படைஎடுப்புகள் என்பது குறிப்பிடத் தக்கது. இரண்டாவது பராக்கிரமபாகுவாலே தோற்கடிக்கப் பட்ட சந்திரபானு வடபகுதியில் அபயம் புகுந்தான் எனக் கருத இடமிருக்கின்றது. மாகனது அனுமதியுடனேயே இவ் வாறு இவன் இப்பகுதியில் நிலைகொண்டிருந்திருக்கலாம். இது நிகழ்ந்த காலங் கி. பி. 1247 ஆகும். இப்படை எடுப்பில் இவனுக்குதவியாகச் சாவகப் போர்வீரர் செயற்பட்டதைச் சூளவம்சம், பூஜா வலிய போன்ற நூல்கள் எடுத்துக் கூறுகின் றன. கி. பி. 1258 இல் நடைபெற்ற படைஎடுப்பை மேற் கொண்டவனாக ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் குறிப் பிடப்படுகின்றான். இது பற்றிச் சூளவம்சங் குறிப்பிடா விட்டாலும் இம்மன்னனின் சில கல்வெட்டுகள் இவன் ஈழத் திலிருந்து திறை பெற்றதைக் குறிப்பிடுகின்றன. இதனை அடுத்த இரண்டாவது பாண்டியப்படை எடுப்பு கி. பி. 1262 இல் நடைபெற்றது. இப் படைஎடுப்புப் பற்றிச் சூளவம்சங் குறிப்பிடாவிட்டாலுங்கூட இது பற்றி இப்படை எடுப்பை மேற்கொண்ட ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு
எடுத்துக் கர்ட்டியுள்ளது.
மாகனது ஆட்சி கி. பி. 1255 இல் முடிவடையச் சாவக மன்னன் சந்திரபானு ஈழத்தின் வடபகுதியைத் தனது ஆட்சிக் குக் கீழ்க் கொண்டுவந்ததோடு தென்பகுதியில் உள்ள சிங்கள மன்னனுடன் போர் செய்வதற்கு முதற்படியாகத் தமிழகஞ் சென்று பாண்டிய, சோழ நாடுகளிலிருந்து தமிழ்ப்படையினரை
C 351 வரலாற்றுக் காலம் II

Page 192
அழைத்து வந்து மகாதீர்த்தத்தில் இறங்கிப் பதி, குருந்தி ஆகிய மாவட்டங்களில் இருந்த மக்களையுந் தன்னோடு இணைத்தான் எனச் சூளவம்சங் குறிப்பிடுகின்றது.124 ஈழத் தின் வடபகுதியில் மாந்தைக்கு அருகே உள்ள பகுதிகளாக இவை இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.25 சாவக, சிங்கள் மன்னரின் பூசல் பற்றிச் சூளவம்சத்தில் விரிவான சான்றுகள் காணப்படாவிட்டாலுங் கூடப் பாண்டியக் கல்வெட்டு இது பற்றி விவரமாகக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு ஈழத்தில் ஆட்சி செய்த இரு மன்னர்களுக்கிடையே நிலவிய பூசலைத் தீர்க்கச் சிங்கள அரசனின் அமைச்சன் பாண்டியனின் உதவியை நாடினான் என்றும் இதில் ஒரு மன்னன் (சாவகன்) போர்க் களத்திற் கொல்லப்பட மற்றைய மன்னன் (சிங்கள மன்னன்) பாண்டியனுக்கு அடிபணிந்து திறை கொடுத்தான் என்றும் இதே போல் சாவக மன்னனின் மைந்தனும் பாண்டியனின் மேலாணையை ஏற்று வடபகுதியில் அரசமைத்தான் என்றுங் கூறுகின்றது. இது பற்றி மேலும் இக்கல்வெட்டுக் குறிப்பிடுகை யிற் சாவகனைக் கொன்ற பாண்டியப்படை அநுராதபுரத்திலே அவனது மைந்தனின் முடிசூட்டு விழர்வையும் நடாத்தியதாகக் கூறுகின்றது. இதனால் அநுராதபுரத்தின் வடபகுதி இக்காலத் திலே தமிழர் வசங் காணப்பட்டதை இது உறுதி செய்கின் றது. இச்சம்பவங் கி. பி. 1268இல் நடைபெற்றது எனலாம். எனினும் இக்காலத்திற்குப் பின்னருங்கூடப் பாண்டிய அரச ரின் சிற்றரசர்களாக விளங்கிய கலிங்கராயர், சோழகங்க தேவர் ஆகியோர் மேற்கொண்ட படைஎடுப்புகள் பற்றிச் சூளவம்சங் கூறுவதோடு இவை முதலாவது புவனேகபாகு அரசு கட்டிலேற முன்னர் (கி. பி. 1271-க்கு முன்னர்) நடைபெற்றவை எனவுங் குறிப்பிடுகின்றது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட படைஎடுப்புகள்தான் Lurr6ö7 lqufflair. படைத்தளபதியாகிய ஆரியச்சக்கரவர்த்தியின் படைஎடுப்பா கும். இது நிகழ்ந்தது கி. பி. 1284இல் ஆகும்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து நாம் அறிந்து கொள் வது யாதெனில் 1215-1284 வரையிலான வரலாற்றில் வட பகுதி தனித்துவமான போக்கிற் சென்று கொண்டிருந்த தென்பதாகும். முதலில் மாகனும், பின்னர் சாவகனும்
யாழ். - தொன்மை வரலாறு 352 )ே

பின்னர் அவனின் மைந்தனும் இறுதியில் பாண்டியரும் இக் காலத்தில் இப்பகுதியினை ஆட்சி செய்தனர். Lonrsgőt, சாவகன், சாவகன்மைந்தன், பாண்டியர் ஆகியோர் ஆட்சி யில் மட்டுமன்றி இதற்கு முன்னருந் தமிழகத்தில் இருந்து படை வீரர்கள் மட்டுமன்றிப் பிரதானிகளும் வந்தனர். இவர்களில் ஒருவன்தான் யாழ்ப்பாண அரசின் ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்தவனான சிங்கை ஆரியனை ஈழத்திற்கு இட்டு வந்த பொன்பற்றியூர் வேளாளனான பாண்டிமழவனாவான்.
வடபகுதியில் பாண்டியப் பிரதானிகளின் செல்வாக்கு
இவ்வாறு பாண்டியப் பிரதானிகளின் ஆதிக்கம் மாகனின் ஆட்சியிலும் அதற்குப் பின்பும் வடபகுதியிற் செல்வாக்குடன் காணப்பட்டதற்கு ஈழத்திற் சோழராட்சி ஏற்பட்டதுஞ் சோழ ராட்சியின் பின் பராக்கிரமபாகு தமிழகத்தோடு கொண் டிருந்த அரசியற் றொடர்புகளும் முக்கிய காரணமாகும். அவை சோழராட்சியில் நிருவாகப் பதவிகளை வகித்தோர் தொடர்ந்துந் தமது அதிகாரத்தினை ஸ்திரப்படுத்த வழி வகுத்தது. அத்துடன் பராக்கிரமபாகுவாற் பாண்டி நாட்டின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது லங்காபுரவினால் வெற்றி கொள்ளப்பட்டுத் தமது அரசியல் அதிகாரத்தினை இழந்த பல பிரதானிகள் வடபகுதிக்கு வந்து ஆட்சியுரிமையைக் கைப்பற்றியுமிருக்கலாம். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியது போன்று பராக்கிரமபாகுவின் மரணத் திற்கும் மாகனது படைஎடுப்புக்கும் (1215) இடைப்பட்ட காலத்திற் பொலநறுவை அரசியலில் ஏற்பட்ட குழப்பநிலை, அங்கு தமிழகத்தோரின் செல்வாக்கினை ஓங்க வைத்தது போன்று வடபகுதியிலும் ஒங்க வைத்தது என்று கூறினால் மிகையாகாது. தமிழ் நாட்டவரான சோழர், பாண்டியர், கேரளர் போன்றோரின் அதிகார வளர்ச்சி பொலநறுவையி லாண்ட சிங்கள அரசனுக்குப் பெரிய அச்சுறுத்தலாக அமைந் ததை நிஸங்கமல்லனின் கல்வெட்டுப் பின்வருமாறு எடுத்
துரைப்பது அவதானிக்கத்தக்கது. 128
O 353 லரலாற்றுக் காலம் II

Page 193
அரசத்துவத்திற்கு அரசர்களின் மகன்களே தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும் என்பதற்கு அமைவாக ஆப, மகாப என்ற பதவிகளை வகிக்கும் இளவரசர்களே (அவர்கள் பருவம் எய்தாதவர்களாக இருப்பினும்) தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும். ஏனெனில் அவர்களே உலகநாயகர்களாக விளங்குவது மட்டுமன்றித் தமது குடும்ப வழக்கங்களையும் பேணுபவர்களாக இருத்தல் வேண்டும். இளவரசர்கள் இல்லாவிடின் இராச்சியம் அரசிகளின் ஆட்சிக்கு உட் பட்டிருத்தல் வேண்டும். அரசிகளுமில்லாவிடின் அரச னுடைய ஸ்தானத்தில் ஒரு பெரிய அரசன் அணிந்த பாதுகையையாவது வைத்து இராச்சியத்தைப் பாதுகாத்தல் வேண்டும். கற்பகதருக்கள் இருந்த இடங்களில் நச்சு மரங்களை நடுவது போன்று அல்லது நஞ்சை ஊற்றுவது போன்று கலிங்க வம்சத்திற்குரிய இலங்கைத் தீவில் கலிங்க வம்சத்தினைச் சேராத பெளத்தர்கள் அல்லாத சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி இடம் பெறுவ தற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது. அம்மன்னர்சள் பெளத்தத்தின் எதிரிகள். இளவரசன் விஜயன் காலந் தொட்டுக் கலிங்க வம்ச இளவரசர்களுக்கே இலங்கைத் தீவு உரித்தானது. எனவே அவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரசர்கள் எவராவது காணப்படின் அவர்களையே சிம்மாசனத்திலேற்றி அரசையும் மதத்தையும் பாதுகாப்பது மக்களின் கடமையாகும். "
மேற்கூறியவாறு தமிழ்நாட்டவரின் அச்சுறுத்தல்களும் அரசியலாதிக்கவிழைதலுங் காணப்பட்ட இக்காலப் பகுதியில் நிலவிய குழப்பநிலை பொலநறுவைப் பகுதியில் மட்டுமன்றி வடபகுதியிலும், அதுவும் பொலநறுவையிலாண்ட அரசர்கள் வடபகுதி மீது தமது மேலாணையைச் செலுத்த முடியாது தமக்குள்ளே, பல பிரச்சினைகளை எதிர் நோக்க வழிவகுத் திது. பராக்கிரமபாகுவின் பாண்டிநாட்டுப் படைஎடுப்பின் போது குறிப்பிடப்படும் மழவச் சக்கரவர்த்தி, மாழவச் சக்கர வர்த்தி என்ற குறிப்புகள் மழவ வம்சத்தின் தலைவர்களுக்குரிய விருதுப் பெயர்களாகும். இவ்வாறே இப்படைஎடுப்புகளின்
யாழ். - தொன்மை வரலாறு 354 இ

போது சூளவம்சங் குறிக்கும் ராய, நாடாள்வான், தேவன் போன்ற பெயர்களும் முறையே ராயர் (தலைவன்), தலைவன், தேவன் என்ற பெயர்களின் திரிபே எனலாம். இத்தகைய பெயர்கள் ஈழத்திலும் வழக்கிலிருந்ததற்குச் சான்றுகள் உள. வல்லிபுரப் பொன்னேட்டிற் காணப்படும் இசிகிராய(ர்) என்ற பதத்தில் உள்ள ராய என்ற விகுதி ராயரைக் குறித்து, நின்றது. இவ்வாறே நாடாள்வான்’ என்ற விருதினைச் சோழ, நிருவாகிகள் தமிழகத்திற் சூடியிருந்ததை இங்குள்ள சோழக், கல்வெட்டுகள் உறுதி செய்துள்ளன. இவ்வாறே தலைவனைக்
குறிக்குஞ் சக்கரவர்த்தி, தேவன் ஆகிய டெயர்கள் சோழ
மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். இதனைப் பின்பற்றியே பொலநறுவையிலாண்ட விஜயபாகு போன்றோர் தமது கல் வெட்டுகளிலே திரிபுவனச் சக்கரவர்த்தி ( மூன்று உலகங்களின் தலைவன் ), விஜயபாகுதேவர் எனத் தம்மை அழைத்ததை
இவனின் தமிழ்க் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.127
பாண்டிமழவனுக்கும் மேற்கூறிய நிலக்கிளார்களாகிய பிரதானி வர்க்கத்தினருக்கும் இடையே உள்ள தொடர்பினை , ஆரியச் சக்கரவர்த்தியாகிய சிங்கை ஆரியனின் முடிசூட்டு வைபவம் பற்றிய நிகழ்வு பற்றித் தமிழ்நூல்கள் கூறுந் தகவல்கள் உறுதி செய்கின்றன. சூளவம்சம் பராக்கிரமபாகு" வின் படைத்தளபதி வீரபாண்டியனின் முடிசூட்டு வைபவத் திற்கு லம்பகண்ண வம்சத்தவர்களாகிய மாளவச்சக்கரவர்த்தி, மாளவராயர், அதலயூர் நாடாள்வார் ஆகியோரை லம்பகண் ணர்கள் மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்றும்படி பணித் தான் எனக் கூறுகின்றமை அவதானிக்கத்தக்கது. இதே லம்ப கண்ண வம்சத்தவர் ஈழத்திலுங் கி. பி. முதலாம் நூற்றாண்டில் ஈழநாகவின் முடிசூட்டு வைபவத்தில் இயற்றிய பணிகள் பற்றி மகாவம்சங் குறிப்பிடுகின்றது. 128 அக்காலத்தில் அரசுகட்டி லேறிய வசப மன்னனுடன் இவ்வம்ச ஆட்சி அநுராதபுரத்தில் ஏற்பட்டது. இவ்லம்பகண்ணர்களே தேவநம்பியதீஸனின் மெளரிய வம்சத்திலிருந்து அரசாட்சிப் பொறுப்பை ஏற்றுப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் என மகாவம்சங் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. இதனால் லம்பகண்ண வம் சத்தவராகிய “மழவர் அரசாதிக்கத்தோடு நெருங்கிய தொடர்பு
C 355 வரலாற்றுக் காலம் III

Page 194
கொண்டிருந்தனர் என்பது புலனாகின்றது. இதனையே தமிழ் நூல்கள் முதலாவது ஆரியச்சக்கரவர்த்தியின் முடிசூட்டுவிழாவிற் பாண்டிமழவன் மேற்கொண்ட பணி பற்றிக் கூறுந் தகவல் உறுதி செய்கின்றது.129 பாண்டி மழவனின் முடிசூட்டு வைபவத் தில் அரசனுக்கு நுதற்பட்டத்தினை அணிவிக்குந் தகுதி பெற்றிருந்த தொன்றே இத்தகையோர் இக்காலத்தில் எவ் விதம் அரசியல் அதிகாரத்தினைப் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுந் தக்க சான்றாகும்.
அதுமட்டுமன்றித் தமிழ் நூல்கள் கூறும் முதலாவது ஆரியச்சக்கரவர்த்தியின் காலத்தில் இங்கு தமிழ் நாட்டிலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்வுகள் பற்றிய பட்டியலில் இடம் பெறுந் தலைவர்களின் பெயர்களுக்கும் பாண்டி நாட்டில் லங்காபுர மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின்போது குறிப் பிடப்படுந் தலைவர்களின் பெயர்களுக்குமிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமை அவதானிக்கத்தக்கது. தமிழ் நூல்கள் இத்தகைய பெயர்களாகப் பாண்டிமழவன், செண்பகமழவன், கனகமழவன், நரசிங்கமழவன், நரசிங்கதேவன், Gg Gösta s மாப்பாணன், சந்திரசேகரமாப்பாணன், கனகராயன், பேராயிர முடையான், கூபகார்யேந்திரன், புண்ணியபூபாலன், தேவரா யேந்திரன், மண்ணாடுகொண்ட முதலி, தனிநாயகன் ஆகியன வற்றைக் குறிக்கின்றன.130 இப்பெயர்களிற் காணப்படும் விகுதிகளான தேவன், மாப்பாணன், gr (Tulu aár, உடையான், இந்திரன், பூபாலன், முதலி, நாயகன் ஆகியன தலைவன் அல்லது அரசன் என்ற பொருள் சுட்டி நிற்பது அவ தானிக்கத்தக்கது. உண்மையிலே இவர்கள் சிற்றரசர்களாக இக்காலத்தில் விளங்கினர் என்பதை இவர்கள் பற்றிக் கைலாயமாலையில் வருங் குறிப்புகள் எடுத்து காட்டுகின்றன. மேழிக்கொடியை உடைய பாண்டிமழவன் வேளாள குலத்தவன் மட்டுமன்றி " ஊர்காத்தோன் " என்ற விருதினையுடையவ னாகவும் விளங்கினான். ஊர்காத்தோனும் நாடாள்வானை ஒத்த பதமென்பது ஈண்டு நினைவு கூரற்பாலது. நரசிம்ம தேவன் " வெள்ளாமரசன் " என்ற விருதினைப் பெற்றிருந் தவன். இவ்வாறே செம்பக மாப்பாணனும் சந்திரசேகர மாப்பாணனும், மேழிக் கொடியோடு * வெள்ளாமரசன் "
யாழ். - தொன்மை வரலாறு 356 O

என்ற விருதினையும் பெற்றிருந்தனர். பேராயிரவனை "நாட்ட முறும் ஆதிக்க வேளான் " எனக் கைலாயமாலை குறிப்பது இவனின் அதிகாரச் சிறப்பையே எடுத்துக் காட்டுகின்றது. நீலகண்டனை வெள்ளாமரசன் எனக் குறிக்கும் இந்நூல் மன்னனைப் போன்ற நிலையில் இவனைப் பற்றி எடுத்துக் காட்டியுள்ளது அவதானிக்கத்தக்கது. காரணம் இவன் இற் நூலில் மன்னனைக் குறிக்கும் பதமாகிய நிருபன் " என அழைக்கப்படுவதோடு, மன்னனுக்குரிய தகைமைகளையும் பெற்றிருந்தான் எனவும் கூறப்படுகின்றான். கனகமழவன், கூபகார்யேந்திரன், தேவராசேந்திரன், மண்ணாடு கொண்ட முதலி ஆகியோரும் வெள்ளாமரசன் ? என விளிக்கப்பட் டுள்ளனர்.
இதனால் ஈழத்தின் வடபகுதியில் ஏற்பட்ட சோழராட்சியி னாலும், அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற தமிழக - ஈழ உறவுகளினாலும், பொலநறுவை அரசில் ஏற்பட்ட அரசிய லாதிக்கத் தளர்வுகளாலும் இக்காலத்தில் நிலக்கிளார்களாகச் சிற்றரசர்கள் நிலையிற் காணப்பட்ட வேளாள குலத்தோர் அரசியலதிகாரத்தினைத் தமக்குள்ளே பகிர்ந்து கொண்டனர். போலத் தெரிகின்றது. பாண்டிமழவனுக்கும் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தின் மீது பாண்டிய மன்னர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை வழி நடாத்தி வந்த ஆரியச்சக்கரவர்த்திகளுக்குமிடையே தொடர் பினை ஏற்படுத்துவதற்காகவே பாண்டிமழவன் தமிழகஞ் சென்று ஆரியச் சக்கரவர்த்திகளின் முதல்வனை யாழ்ப் பாணத்திற்கு மன்னனாக்க இட்டு வத்தான் எனக் குறிப் பிட்டுள்ளன. உண்மையிலே பாண்டிமழவன், ஆரியச் சக்கர வர்த்திகள் ஆகியோர் காலம் வடபகுதியிலே தமிழ்நாட்டோர் மேற்கொண்ட அரசியலாதிக்கத்தின் இரு வேறு காலகட்டங் களாக அமைந்திருந்தன எனலாம். இதனையே தமிழக - ஈழ வரலாற்றுப் பின்னணியும் எடுத்துக் காட்டுகின்றது.
பாண்டியப் படையெடுப்புகள்
கி. பி. 1238ஆம் ஆண்டளவில் ஈழத்தின் மீது ஏற்பட்ட பாண்டியப் படை எடுப்புப் பற்றி முதலாவது ஜடாவர்மன்
O 357 வரலாற்றுக் காலம் II

Page 195
சுந்தரபாண்டியனது கல்வெட்டு எடுத்தியம்புவதோடு ஈழத்து மன்னனிடம் திறை பெற்றதையுங் கூறுகின்றது.31 அப்போது ஈழத்தினை ஆண்ட மன்னன் இரண்டாவது பராக்கிரமபாகு өптөштөйт. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் படை எடுப்புகளைப் பற்றிப் பாண்டிய மன்னனான வீர பாண்டியனின், 1268 ஆம், 1264 ஆம் ஆண்டுகளிற் பொறிக் கப்பட்ட கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.132 இச்சான்று களை ஆராயும் போது ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்குத் திறை கொடுத்த சாவக மன்னன் பின்னர் அவ்வாறு செய்ய மறுத்தான் என்பது மட்டுமன்றி வடபகுதியிலாட்சி செய்த சாவக மன்னனுக்குந் தென்பகுதியில் ஆட்சி செய்த இரண் டாவது பராக்கிரமபாகுவிற்குமிடையே பூசல் காணப்பட்ட தும் இப்பூசலிலே தலையிடுமாறு சிங்கள அரசன் சார்பில்
அவனின் மந்திரி கேட்டதற்கேற்பப் பாண்டியப் படை ஈழம்
வந்ததும் புலனாகின்றது. எனவே இப்படைஎடுப்புக்குப் பின்னணியாக வடபகுதியில் நிலைகொண்டிருந்த சந்திரபானு வின் படைகளும் காரணமாயிருந்தன எனலாம். சூள
வம்சஞ் சந்திரபானு பாண்டி நாட்டிலிருந்துஞ் சோழநாட்டி லிருந்தும் படைகளைத் திரட்டி வந்து பதி, குருந்தி ஆகிய மாவட்டங்களிலும் பிறமாவட்டங்களிலும் வாழ்ந்த சிங்கள வரைத் தன்பக்கஞ் சேர்த்துக் கொண்டு இரண்டாவது முறையாகச் சிங்கள இராச்சியத்தின் மீது படை எடுத்தான் எனக் கூறுகின்றது.138 இப்போரின் விளைவாகச் சிங்கள மன்னன் பாண்டியருக்குத் திறை கொடுப்பவனாக இணங்க, சாவக மன்னன் மடிந்த பின் அவனின் மைந்தன் பாண்டிய ரின் திறை அரசனாக வட பகுதியில் ஆட்சி செய்யும் உரிமை யைப் பெற்றான். இதனையே வீரபாண்டியனின் கல்லெட்டிற் காணப்படுஞ் "சோணாடும் ஈழமும் சாவகன் முடியும் முடித் தலையும் கொண்டருளியவன்" என்ற வாசகம் எடுத்தியம்பு கின்றது.184 அது மட்டுமன்றித் தனது ஈழப் படை எடுப்பின் சின்னமாகப் பாண்டியரின் மீன் இலட்சனையைத் திரிகூட கிரியிலும், கோணமலையிலும் பொறித்ததாகவுங் கூறப் படுகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 358 O

திருகோணமலைக் கோட்டை வர்சலிற் காணப்படும் இரு கயல்மீன் சின்னம் வீரபாண்டியனாற் பொறிக்கப்பட்டதாகும். புவனேகபாகுவின் ஆட்சியிலே தமிழகத்திலிருந்து கலிங்கராயர், சோழகங்கதேவர் ஆகியோர் மீண்டும் படை எடுத்தனர் போலத் தெரிகின்றது. இவர்களிற் கலிங்கராயர் பாண்டிய மன்னர்களான முதலாவது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாவது ஜடாவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்தில் மந்திரியாக விளங்கியதற் கர்ன சான்றுகள் கிடைப்பதால் மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்தியின் கீழ் ஈழத்தின் மீதான படைஎடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் இப்படைஎடுப்பு நடைபெற்றிருக்கலாம் எனக் கொள்ளலாம்.
எனினும், புவனேகபாகுவின் மரணம் ஈழத்திற் பாண்டி யரின் கையை ஒங்க வைத்தது. மரணத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சத்தின்போது தமிழனான ஆரியச் சக்கர வர்த்தி ஈழத்தின் மீது படை எடுத்துப் பல இடங்களை அழித்ததோடு, சிங்கள அரசின் தலைநகரான யாப்பகூவவையுஞ் சிதைத்துச் சிங்கள அரசவம்சத்தின் சின்னமாகிய தந்ததாது வையும் பிற கொள்ளைப் பொருட்களையுந் தமிழகத்திற்கு இட்டுச் சென்றான் எனச் சூளவம்சங் கூறுகின்றது.135 இப்படை எடுப்பை நிகழ்த்திய ஆரியச்சக்கரவர்த்தி " மதிதுங்கன் தணி நின்று வென்ற பெருமாளாகிய ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பாண்டியக் கல்வெட்டில் விளிக்கப்படுகின்றான்.38 இவன் இக் காலப் பாண்டிய மன்னனாகிய மாறவர்மன் குலசேகர பாண்டியனின் அமைச்சனாக மட்டுமன்றிப் படைத்தளபதியாக வும் விளங்கினான் என இவை கூறுகின்றன. இவனின் இயற்பெயர் மதிதுங்கனாகும். சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயரையுடையவனாக விளங்கிய இவன் அந்தண குலத் தினைச் சேர்ந்தவன். இதனால் மறையவரைக் குறிக்கும் ஆரிய என்ற பெயருடன் சக்கரவர்த்தி’ என்ற விருதுப் பெய ரும் இணைந்தே ஆரியச்சக்கரவர்த்தி என இவன் அழைக்கப் பட்டான். இவனின் சொந்த இடம் பாண்டிநாட்டின் தென் கோடியிலுள்ள செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லூர் set D.
 ே359 வரலாற்றுக் காலம் II

Page 196
யாழ்ப்பாண அரசின் தோற்றத்திற்கான பின்னணி
முன்கூறிய நிலைமை காணப்பட்டபோதும், மாகனுக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களின் காலத்தில் வடபகுதி யின் அரசியல் நிலை பற்றிய தடயங்கள் தெளிவாக நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் இதனைப் பொலநறுவை அரசு காலச் சமகாலத் தமிழக வம்சங்களின் அரசியற் பின்னணியில் நோக்கும் போது ஒரளவுக்கு வடபகுதி அரசியலின் தனித்து வத்தினை அறிய முடிகின்றது. இத்தகைய முயற்சியை 1926ஆம் ஆண்டிலே பண்டைய யாழ்ப்பாணத்தை எழுதிய முதலியார் இராசநாயகம்137 மேற்கொண்டிருந்தாலுங்கூட அவர் காலத்திற் கிடைத்த சான்றுகளை விடத் தற்போது மேலும் பல சான் றுகள் கிடைப்பதால் அவர் கூறிய விளக்கங்களைவிட ஒரளவு விரிவான விளக்கங்களைத் தற்போது கொடுக்க முடிகின்றது.
யாழ்ப்பாண வரலாற்றினைக் கூறுந் தமிழ் நூல்களிலே மாகனது ஆட்சி பற்றிய குறிப்பில்லை . ஆனால் யாழ்ப் IGs 606 Lea Lorrgs, 6, 60556) TL LOIT60) a) போன்றனவற்றுட் பாண்டிமழவனால் யாழ்ப்பாணத்திற்கு இட்டு வரப்பட்ட சிங்கை ஆரியன் என்ற மன்னனே யாழ்ப்பாண இராச்சிய வம்ச முதல்வன் எனக் கூறப்படுவதோடு இவனின் மறு பெயர்களாகக் கூழங்கை ஆரியன் அல்லது விசய கூழங்கைச் சக்கரவர்த்தி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இவனது ஒரு கை வழங்காமையே என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இவ்விசய கூழங்கைச் சக்கர வர்த்தி கி. பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகள் அரசாட்சியை இப்பகுதியில் அமைக்க முன்னர் இங்கு ஆட்சி செய்த ஒரு மன்னனாக இருக்கலாம். இவனுக் கும் பின்வந்த ஆரியச் சக்கரவர்த்திகளுக்குமிடையே காணப் பட்ட தொடர்பினைச் சரியாக விளங்கிக் கொள்ளாத தமிழ் நூலோர் இவனை ஆரியச் சக்கரவர்த்திகளின் பட்டியலில் இணைத்துள்ளனர் போலவுந் தெரிகின்றது.
இத்தகைய கருத்தினை உறுதி செய்ய மேலும் பல சான் றுகள் உண்டு. விசய கூழங்கைச் சக்கரவர்த்திக்குக் கொடுக்கப் பட்ட விருதாகிய சிங்கை ஆரியன் என்பது யர்ழ்ப்பாணத்
யாழ். - தொன்மை வரலாறு 36o இ

தினை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு வழங்கப்பட்ட பெயராகும். ஆரிய குலத்தவர்களாகிய இவர்கள் சிங்கைநகரில் ஆட்சி செய்ததாற் சிங்கை ஆரியர் எனப் பெயர் பெற்றனர். மேலும் யாழ்ப்பாண வைபவமாலையிற் கொடுக்கப்பட்டுள்ள சிங்கை ஆரிய வம்சப் பட்டியலில் முதல் மன்னனாகிய கூழங்கை அல்லது விசய கூழங்கைச் சக்கரவர்த்தியைத்தவிர மற்றைய எல்லோருஞ் * சிங்கை ஆரியன்' என்ற வம்சப் பெயரைக் கொண்டிருந்தமையும் அவதானிக்கத்தக்கது. இவர்களின் பெயர்களோடு சேர்த்து இப்பெயர் இணைக்கப்பட்டிருந்தாலுங் கூடக் கூழங்கைச் சக்கரவர்த்தி இவர்களிலிருந்து வேறுபட்டவன் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. சக்கரவர்த்தி என்ற விருதினைச் சூடிய ஆரிய குலத்தவரே ஆரியச் சக்கர வர்த்திகள் என அழைக்கப்பட்டவர்களாவர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் பாண்டியப் படைஎடுப்பு ஈழத்தின் மீது ஏற்பட்ட போது அதனை வழிநடாத்தி வந்தவர்கள் இவர்களாவர். தமிழகத்திற் பாண்டியராட்சி வலிகுன்றச் சுதந்திரமாக யாழ்ப்பாணத்திற் சிங்கை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர்கள் அமைத்த அரசே யாழ்ப்பாண அரசாகும்.
இதனாற் பாண்டிமழவன் ஆரியச் சக்கரவர்த்திகளின் முதல்வனாகிய சிங்கையாரியனைக் கூட்டி வந்த செய்தியும், இவனுக்கே கூழங்கைச் சக்கரவர்த்தி என்ற பெயரிருந்த செய்தியும் மீளாய்வு செய்யப்பட வேண்டியனவாகவே காணப் படுகின்றன. பாண்டிமழவன் போன்ற தமிழகப் பிரதானிகள் வடபகுதியை ஆட்சி செய்த காலத்திற் பொலநறுவையிலே தமிழ்ப்படைகள் மட்டுமன்றிக் கலிங்கமாகனின் ஆட்சியுங் காணப்பட்ட காலமாகும். கலிங்கமாகனின் படைகள் நிலை கொண்டிருந்த இடங்கள் பற்றிச் சூளவம்சந் தருந் தகவலை நோக்கும்போது இவனின் ஆட்சி வடபகுதியிலும் பரந்தமை உறுதியாகின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் முன்னிலை பெற முன்னர் ஈழத்திற் காணப்பட்ட பாண்டியப் பிரதானிகளில் ஒருவனாகப் பாண்டிமழவன் விளங்கியிருக்கலாம். இதனையே பாண்டிமழவன் தமிழகஞ் சென்று ஆரியச் சக்கரவர்த்திகளின் முன்னோனை யாழ்ப்பாணத்திற்கு அரசனாக்க அழைத்து
இல் 361 வரலாற்றுக் காலம் 11

Page 197
வந்தான் என்ற செய்தியாகவுத் தமிழ் நூல்கள் குறிக்கலாம். ஏனெனில் * மழவர் " எனப்பட்ட நிலக்கிழார் பிரதானிக ளாகப் பதவி வகித்ததோடு தமிழகத்திற் பாண்டியராட்சியில் மந்திரிப் பதவிகூட வகித்ததற்குச் சான்றுகள் உள. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ( கி. பி. 1218 - 1238 ) முதல் அமைச்சன் மழவராயனான சங்கரன் என்பதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.188
இத்தகைய பின்னணியிற்றான் தமிழ் நூல்களிற் கூறப் பட்டுள்ள விசய கூழங்கைச் சக்கரவர்த்தி பாளி, சிங்கள நூல்களிற் குறிப்பிடப்பட்டுள்ள மாகனே என்ற கருத்தினை ஞானப்பிரகாசர் போன்றோர் கொண்டிருந்தனர்.139 பாளி, சிங்கள நூல்கள் குறிப்பிடும் இவ்விசய கூழங்கைச் சக்கர வர்த்தி மாகனின் சகபாடிகளில் ஒருவனான ஜெயபாகுவே என்பது நடேசனின் கருத்தாகும்.140
பாளி, சிங்கள நூல்கள் குறிப்பிடும் விசய காலிங்க என்பதன் திரிபே விசய கூழங்கை என்பது ஞானப்பிரகாசர், இராசநாயகம் ஆகியோரின் கருத்தாகும். நிகாய சங்கிரகய சத்தர்மரத்னாகரய ஆகிய நூல்களில் மாகன் காலிங்க விஜய பாகு என அழைக்கப்பட்டுள்ளான்.141 இத்தகைய கருத் தினை ஆமோதிக்கும் இந்திரபாலா இத்தகைய மருவுதலுக்கு உதாரணமாக இராஜராஜ சோழன், வீரபாண்டியன் என்ற பெயர்களை உதாரணங் காட்டி மன்னனது பெயரின் இறுதியில் அவனின் வம்சப் பெயர் வழங்கி வந்ததற்கு ஆதாரத்தையுந் தந்துள்ளார். இவ்வாறு காலிங்க என்பது கூழங்கையாகத் திரிபடைந்த காலத்திற் கூழங்கை என்பதன் தோற்றத்தினை அறியாதோர் இம்மன்னனின் கையொன்று வழங்காததால் இவனுக்கு இப்பெயர் வழங்கப்படலாயிற்று என்ற விளக்கத் தினைக் கொடுத்தனர் என்பதுதான் இந்திரபாலா எடுத்துக் காட்டுங் காரணமாகும். மட்டக்களப்பு மான்மியத்தில் நாக தீவை ( யாழ்ப்பாணத்தை ) ஆண்ட ஆரிய மன்னர்களின் முதல் மன்னனாகக் காலிங்கை ஆரியன் குறிப்பிடப்படுவதாற் கூழங்கைஆரியனே இவ்வாறு இந்நூலிற் காலிங்கை ஆரியன் என மருவியதென்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
யாழ். - தொன்மை வரலாறு 362 இல்

இதனால் விசயகாலிங்கன் என்ற பெயரைப் பெற்ற மாக மன்னன் தமிழ் வரலாற்று மரபிலே யாழ்ப்பாணத்தை ஆண்ட முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி எனப் பிழையாகக் கருதப் பட்டமையினால் அவனுக்கு ஆரியன் என்ற பெயர் கொடுக் கப்பட்டது என்பது இந்திரபாலாவின் கருத்தாகும்.14
எனினும் இந்திரயாலா கருதுவது போல் யாழ்ப்பாண அரசின் தலைநகராகிய சிங்கைநகர், அதன் சின்னமாகிய நந்திக் கொடி, மன்னர்களின் வம்சப் பெயர் ஆகியவற்றை மாகனின் பிறப்பிடமாகிய கலிங்க தேசத்தோடு இணைப்பதற்குரிய சான்றுகள் போதா. சிங்கை நகரென்பது கலிங்க நாட்டிலுள்ள "சிம்ஹபுர" என்ற நகரின் பெயர் வழி வந்ததெனக் கூறப்படுங் கருத்து ஏற்புடைத்தாக் அமையவில்லை. காரணம் மாகனது ஆட்சி பல காலம் நிலைகொண்ட பொலநறுவை போன்ற பிற இடங்களில் இத்தகைய பெயர் காணப்படாதிருக்க வடபகுதி யில் இவ்வாட்சியை நினைவூட்டுந் தொல்லியற் சின்னங்களோ பிற நாணய ஆதாரங்களோ காணப்படாதவிடத்து இப்பெயர். இப்பகுதிச் சுதந்திர அரசின் தலைநகருக்குரிய பெயராக நிலைத்தது என்று கருதுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாறாக, சிங்கை, சிம்ஹபுரம் என்ற பெயர்கள் ஈழத்தின் மீது படைஎடுப்பை மேற்கொண்ட முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே காணப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதால் இப்பெயரி சோழர் காலத்திலிருந்து ஏற்பட்ட புலப் பெயர் வுகளின் விளைவாகவே இங்கு நிலைகொண்டது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.143
யாழ்ப்பாண அரசரின் நாணயங்களை அலங்கரிக்கும் தத்தி, குத்துவிளக்கு ஆகியன கலிங்கப் பிரதேசத்திலரசாண்ட கங்க வம்சத்தவரின் பட்டயங்களிற் காணப்படுவதால் வடபகுதியிற் கலிங்கமாகனின் ஆட்சி நிலைபெற்றிருந்த போது இவை இங்கு அறிமுகமாயின என்றும் பின்னர் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் இவற்றைக் கைக்கொண்டனர் என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.14 இதற்காதாரமாகக் கலிங்க நாட்டில் ஆட்சி செய்த கலிங்க வம்சத்தவர் வெளியிட்ட நாணயங்களில் இடது புறம் நோக்கிப் படுத்திருக்கும் நந்தி
() 363 வரலாற்றுக் காலம் II

Page 198
யும் அதற்குமேல் வலது புறத்திலே காணப்படும் பிறைச் சந்திரனும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மாகன் பொல நறுவையிலிருந்து வெளியேறிய பின்னர் பதவியாவிலே தனது தலைமைப் பீடத்தினை அமைத்துக்கொண்டபோது வெளியிட்ட தாகக் கருதப்படும் வெண்கல முத்திரையிற் காணப்படும் நந்தி யின் உருவத்தையும் அதனுடன் இணைந்து காணப்படும் பிற சின்னங்களையும் இந்திரபாலா இக்கருத்தினை உறுதி செய்வ தற்கு மேலதிக சான்றாதாரங்களாக நிரைப்படுத்தியுள்ளார். பதவியா முத்திரையில் நந்தி ஒரு விரிந்த தாமரையிற் காணப்படு கின்றது. நந்தியின் இரு மருங்கிலுங் குத்துவிளக்குகள் உள. மேலே பிறைச்சந்திரனும் அதற்கு மேற் குடையும் உள்ளன. குடையின் இரு பக்கங்களிலுஞ் சாமரைகள் இருக்கின்றன. இத் தகைய சின்னங்கள் கலிங்க வம்சத்தவர் கலிங்க நாட்டில் வெளியிட்ட செப்பேடுகளிலுங் காணப்படுவதால் ஆரியச்சக்கர வர்த்திகள் இச்சின்னங்களிலிருந்தே தங்களின் நாணயங்களிற் பொறிப்பதற்காகச் சின்னங்களைத் தெரிந்தனர் என இந்திர பாலா கருதினாலும், பதவியா முத்திரைக்கும் யாழ்ப்பாண அரசர் வெளியிட்ட நாணயங்களுக்குமிடையே காணப்படும் வேறுபாட்டையும் அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை.145
பதவியா முத்திரையிற் காணப்படுஞ் சின்னங்களில் நந்தி, பிறை ஆகியன மட்டுமே யாழ்ப்பாணத்தரசரின் நாணயங் களிற் காணப்படுவதோடு பதவியா முத்திரையில் நந்தி வலது புறம் நோக்கிய வண்ணங் கால்களைப் பூரணமாக மடக்கி வைத்துப் படுத்திருக்க, யாழ்ப்பாண அரசரின் நாண யங்களில் இது இடப்புறம் நோக்கி ஒரு காலைப் பூரண மாக மடக்காது சிறிது உயர்த்தி வைத்திருப்பது அவதா னிக்கத்தக்கது. அத்துடன் யாழ்ப்பாண அரசரின் நாணயங் களிற் காணப்படும் நந்தி, பிறைச்சந்திரன் ஆகியன ஈழத் தினை முக்கால் நூற்றாண்டாக ஆட்சி செய்த சோழ வம்ச நாணயங்களிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைவர்களா கிய பாண்டியரின் நாணயங்களிலுங் காணப்படுவதால் மேற் கூறிய சோழ, பாண்டிய வம்சங்களின் காலத்தில் இவை இங்கு செல்வாக்குப் பெற்றன என்று கருதுவது ஏற்புடைக் கருத்தாகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 364 (9

இத்தக்ைய சான்றுகள் மாகன் வேறு, யாழ்ப்பாண அரசை ஸ்தாபித்த ஆரியச் சச்க்ரவர்த்திகள் வேறு என்பதை எடுத் துக் காட்டினாலுங்கூட மாகனின் ஆட்சி ஆரியச் சக்கர வர்த்திகள் காலத்திற்கு முன்னர் இங்கு நிலைகொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. மாகன் இரண்டாவது பராக்கிரமபாகுவாற் பொலநறுவையிலே தோற்கடிக்கப்பட்டாலுங்கூட 1255 இலே அவன் இறந்தான். இக்காலத்திலேதான் வடபகுதியில் இவனின் மேலாணை பரந்திருந்தது. மாகன் வடபகுதியில் நிலை கொண்ட நேரத்திலே தான் (1247இல்) சாவகனான சந்திர பானு, சிங்கள அரசின் மீது (தம்பதேனியா மீது) l. öð).-- எடுத்துத் தோல்வி கண்டான். இதன் பின்னர் இவன் வட பகுதியிற் தஞ்சம் புகுந்து, மறுபடியும் 1262இற் சிங்கள அரசின் மீது படை எடுத்துத் தோல்வி கண்டதோடு அப் போரில் இறந்தான் எனவுங் கூறப்படுகின்றது. வடபகுதியிற் காணப்பட்ட சாவகனின் ஆட்சி பற்றித் தமிழ் நூல்களிற் சான்றுகள் காணப்படாவிட்டாலும் பாளி, சிங்கள நூல்களிற் சான்றுகள் உள.148 வடக்கே சாவகன் கோட்டை போன்ற இடப் பெயர்களுங் காணப்படுகின்றன. இவை மட்டுமன்றிப் பண்டைய இராச்சியங்களின் எல்லைகளைக் கூறுஞ் சிங்கள நூலாகிய திரிசிங்களே கடயிம் ஸஹ வித்தி என்ற நூலில் யாழ்ப்பாணம் ஜாவகம என அழைக்கப்பட்டுள்ளதோடு இத னுடன் இப்பகுதியின் ஐந்து பிரதான மாவட்டங்களுங் குறிப் பிடப்பட்டுள்ளன.147
அராபிய அறிஞர்கள் கூறுஞ் “சபக்” என்பதும் "ஜாவகம்" என்பதைக் குறித்திருக்கலாம். இதிலடங்கிய மாவட்டங்களா வன ஜவரிபரட (சாவகச்சேரிப் பகுதி), மாரச்சிரட (வடக தென்மராட்சிப் பகுதிகள்), பலதடிரட (முள்ளியவளைக்கு அரு கிலே உள்ள இடம்), முதுந்து மல்லியா ரட (முள்ளியவளை), கணுக்கிணிரட (கணுக்கேணி) என்பன ஆகும். முல்லைத்தீவு மாவட்டப் பகுதிகளும் இவற்றுட் குறிக்கப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது (படம் 44). இவ்விராச்சியத்தின் எல்லைகளில் நாட்டப்பட்ட கற்கள் தமிழ் எழுத்துப் பொறித்துக் காணப் பட்டன என்ற குறிப்பு இக்காலச் சிங்கள நூல்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 148 அத்தகைய சாவகனின்
O 365 வரலாற்றுக் காலம் II

Page 199
ஆட்சியின் தலைமைப்பீடம் எவ்விடத்திலமைந்திருந்தது என்ப தைத் திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. தமிழகத்திற் பாண்டியரின் எழுச்சி ஈழத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்த லாகக் காணப்பட்டதைப் பாண்டியக் கல்வெட்டுகள் எடுத் தியம்புகின்றன. தொடர்ச்சியாக வந்த இத்தகைய படை யெடுப்புகளே ஈற்றில் ஈழத்தின் வடபகுதியிற் பாண்டியப் பிரதானிகளான பாண்டிமழவன் போன்றோரின் வருகைக்கும் பாண்டியப் படை எடுப்புகளை வழி நடாத்தி வந்த ஆரியச் சக்கரவர்த்தியின் கீழே இங்கு யாழ்ப்பாண அரசு தோன்று வதற்கும் வழி வகுத்தன.
கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அரசாட்சி செய்த உக்கிரசிங்கன், சிங்கள அரசவம்சத்தினைத் தோற்றுவித்த விஜயனின் சகோதரனின் மகன் என யாழ்ப்பாண வைபவ மாலை குறித்த தகவலை மையமாகக் கொண்டு முதலியார் இராசநாயகஞ் சில அநுமானங்களை மேற்கொண்டிருந்தார். அதாவது விஜயனின் முன்னோர் கலிங்க நாட்டுடன் தொடர் புடையவர்களாக இருப்பதால் உக்கிரசிங்கனுங் கலிங்கனே என்றுஞ் சிங்கள நூல்களிற் சிங்கள மன்னர்கள் கலிங்க வம்சத்தோடு ஏற்படுத்திக் கொண்ட மணத்தொடர்புகள் பற்றிய சான்றுகள், உண்மையில் உக்கிரசிங்கன் வழியாக வளர்ச்சி பெற்றுக் கி. பி. 10ஆம், 11ஆம், 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் வடபகுதியிலே ஆட்சி செய்த இவ்வம் சத்தினையே குறிக்கின்றது என்றும் இவர் யூகித்திருந்தார்.49 ஆனால் யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் உக்கிர சிங்கனின் விஜயனுடனான தொடர்பு பற்றிய குறிப்புக் கைலாயமாலையிலோ அன்றி வையாபாடலிலோ காணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதனைக் கலிங்கவம்ச ஆட்சி பற்றிய சான்றாகக் கொள்வது சிரம மாகவே உள்ளது. அவ்வாறு கொண்டாலுங்கூட உக்கிர சிங்கனின் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களின் பட்டியல் தமிழ் நூல்களிற் காணப்படவில்லை. உக்கிரசிங்கனினதும் மாருதப் புரவீகவல்லியினதுந் திருமணம் பற்றிக் கூறும் இவை, இவர் களுக்குப் பிறந்த பிள்ளைகளைக் கூறுகின்றனவே தவிர அவர் களின் அடுத்த சந்ததியினர் பற்றிய தகவல்களைத் தரவில்லை.
யாழ். - தொன்மை வரலாறு 366 O

இந்நிலையில் வடபகுதியிற் கலிங்க வம்ச ஆட்சி நடைபெற்ற தென்றோ அதனுடன் பொலநறுவையில் அரசாண்ட மன்னர்கள் தொடர்பு கொண்டிருந்தனரென்றோ கூறுவது ஏற்புடைத்தாக அமையவில்லை. இக் கூற்றினைப் பொலநறுவையில் ஆட்சி செய்த கலிங்க மன்னர்கள் பற்றிய இலக்கியக் கல்வெட்டுச் சான்றுகளும் உறுதி செய்கின்றன. இவ்வாறே இக்காலத்திற் குரிய பாளிமொழியிலுள்ள எ ந் த வொரு நூலிலாவது அல்லது கல்வெட்டிலாவது இவர்கள் ஈழத்தின் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்புக் காணப்படவில்லை. மாறாக, இவர்கள் தெளிவாக் ஜம்புத் தீவகத்திலிருந்தே (இந்தியாவில்) வந்தவர்கள் என்பது இவற்றுள் விளக்கப்பட்டுள்ளது.
வடபகுதியிற் கி. பி. 12ஆம் நூற்றாண்டிலே ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி நிலைகொண்டிருந்ததை எடுத்துக் காட்டுவதற்காக இராசநாயக முதலியார் மேலுஞ் சில சான்று களை எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றுள் முதலில் இடம் பெறுவது விஜயபாகுவின் மகனாகிய முதலாவது விக்கிரம பாகு காலத்தில் ஈழத்தின் மீது வீரதேவ என்பவனால் மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்பாகும். பாளி நூல்கள் இவன் ஆரிய தேசத்தினைச் சார்ந்தவன் எனக் குறிப்பிடுகின்றன. இப்பெயர் வடபகுதிக்குரிய பெயராக இக்காலத்தில் வழங்கப் பட்டிருக்கலாம் என அனுமானித்துள்ள முதலியார் இராச நாயகம், இவ்வாறு இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்ட தற்கான காரணம் இப்பகுதியில் இக்காலத்திலே யாழ்ப் பாண இராச்சியத்தினைத் தோற்றுவித்த ஆரியச் சக்கர வர்த்திகளின் ஆட்சி நிலவியமையே எனக் கூறியுள்ளார்.150 அத்துடன் பரணவித்தானா எடுத்துக்காட்டுவது போல இப் பகுதி ஆரியச் சக்கரவர்த்திகளின் பெயரால் "ஆரியதேச? என அழைக்கப்பட்டமைக்கான தடயங்கள் எதுவும் ஆரியச் சக்கரவர்த்திகள் கால நூல்களிலோ அதற்கு முந்திய நூல்களிலோ காணப்படவில்லை.151 இவை எல்லாவற்றுக்கும் மேலாக வீரதேவவின் படை எடுப்புப் பற்றிக் கூறுஞ் சூளவம்சம் இவன் ஈழத்தவன் அல்லன் என்பதைத் தெளிவாகக் கூறியுள் ளது. இவன் ஆரிய தேசத்திலிருந்து ஒரு படையுடன் மகா தீர்த்தத்தில் வந்திறங்கியது மட்டுமன்றி இம்மண்ணிற் கால்
O 367 6 Jad Fribgpš s Froe III

Page 200
கொண்டு விக்கிரமபாகுவுடன் சமராடினான் எனவும் இந் நூல் குறிப்பிட்டுள்ளது. வடபகுதி மன்னனாக இவனைக் கொள்வோமானால் இவ்வாறு இவன் மகாதீர்த்தத்திற் கால் கொள்ள வேண்டிய அவசியமிருந்திருக்காது. இவற்றை விட வடபகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி. பி. 12ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதற்கான தடயங்கள் தமிழகத்திற் கிடைத்துள்ள நூல்களிலோ, கல்வெட்டுகளிலோ, ஈழத்துச் சான்றுகளிலோ காணப்படவில்லை. தமிழகச் சான்றுகள் ஆரியச் சக்கரவர்த்திகளைப் பாண்டிய அரசின் படைத்தளபதிக ளாகவும் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் இவ்வரசிற் கடமையாற்றியவர்களாகவும் இவர்களைக் குறிக்கின்றன. பாண்டியரின் ஈழத்துப் படைஎடுப்புகளை வழிநடாத்தியவர்க ளாகச் சம காலத்தில் இவர்கள் சூளவம்சத்திற் குறிக்கப் படுவதாற் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் வடபகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி நிலை பெற்றதெனக் கொண்டு இதனால் இப்பகுதி 'ஆரியதேச"மென அழைக்கப்பட்டது என இராசநாயக முதலியார் கருதுவது பொருத்தமற்ற கூற்றாகவே காணப்படுகின்றது.
தமிழ் நாவலர் சரிதையிற் குறிப்பிடப்படும் இரு பாடல் களை ஆதாரமாகக் கொண்டு கி. பி. 12ஆம் நூற்றாண்டில் வடபகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசு காணப்பட்ட தாக முதலியார் இராசநாயகம் மேலும் எடுத்துக் காட்டி யுள்ளார்.152 இப்பாடல்களைப் பாடியதாகப் புகழேந்திப் புலவர் இந்நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சான்றாகக் கொண்டு, இப்புலவர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதி இதிற் கூறப்படுஞ் "சிங்கையாரியன்" என்ற குறிப்பு இப்பகுதியில் இக்காலத்திற் சிங்கை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி களுக்கே உரியது எனவும் முதலியார் இராசநாயகம் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.163
"பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்குங் காவலர் நிற்கும் படிவைத்த வாகண்டி யொன்பதினும் மேவலர் மார்பினுந் திண்டோ ளினுஞ்செம்பொன் மேருவினுஞ் சேவெழு தும்பெரு மான்சிங்கை யாரிய சேகரனே"
யாழ், - தொன்மை வரலாறு 368 O

இம்மன்னனைப் புகழேந்திப் புலவர் புகழ்ந்து uTugu தாகக் கூறப்படும் மேற்கூறிய பாடல் புகழேந்திப் புலவருக்கு இம்மன்னன் பொன்னும் யானையும் அளித்ததைக் கூறுகின் றது. இப்பாடலிற் குறிப்பிடப்படுஞ் சிங்கையாரியன் பரராச சேகரன் அல்லது செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெய ருடன் வடபகுதியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒரு வனே எனவும் முதலியார் இராசநாயகங் கருதினார். அது மட்டுமன்றி இதே நூலில் இவ்வாரியச் சக்கரவர்த்தி இறந்த போது மனம் வருந்திய புகழேந்திப் புலவர் இசைத்த பாட லாகப் பின்வருஞ் செய்யுள் அமைந்துள்ளதும் அவதானிக்கத் தக்கது.154
அஆ விதியோ வடலா ரியர்கோமான்
எஏ வலரா லிழந்தநாள் - ஒஒ
தருக்கண்ணி லுங்குளிர்ந்த தண்ணளிதந் தாண்ட
திருக்கண்ணி னுஞ்சுடுமோ தீ
இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனிற் புகழேந்திப் புலவரின் செய்யுள்களாகக் குறிக்கப்படும் மேற்படி செய்யுள்கள் புகழேந்திப் புலவராற் பாடப்பட்ட பாடல்களடங்கிய நூல் களில் இடம் பெறாது இருக்க மேற்கூறிய தமிழ் நாவலர் சரிதையில் இணைக்கப்பட்டுள்ளன என்பதேயாகும். இவ்வாறு தனிச் செய்யுள்களாகப் பல்வேறு புலவர்களாற் பாடப்பட்ட செய்யுள்கள் எனச் சிலவற்றுக்குப் பெயரிட்டு இந்நூலில் இடம் பெற்றுள்ள சான்றைப் புகழேந்திப் புலவருக்குரிய நூல் களில் இல்லாத சான்றை, ஆதாரமாகக் கொண்டு இவற் " றைப் புகழேந்திப் புலவரோடு இணைப்பது பொருத்தமன்று. அத்துடன் புகழேந்திப் புலவரின் காலம் பற்றியும் அறிஞ ரிடையே கருத்து வேறுபாடு உண்டு. சிலர் இவர் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கூறுகின்றனர்.456 இதனாற் கி. பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுகட்டிலேறிய ஆரியச் சக்கரவர்த்திகளைக் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் அரசுகட்டிலேறியவர்களாகவும் புகழேந்திப் புலவரின் காலத்தினைக் கி. பி. 12ஆம் நூற் றாண்டு என முதலியார் இராசநாயகங் கொள்வதும் பொருத்தாது.
O 369 வரலாற்றுக் காலம் II

Page 201
இதேபோன்றுதான் தமிழ் நாவலர் சரிதையிற் காணப் படும் இன்னோர் பாடல் இதே காலத்தில் ஈழத்திற் பெரும் பஞ்சமேற்பட்டதென்றும் அப்போது கண்டியை ஆண்ட பரராசசிங்கன் என்ற மன்னனுக்கு உதவும் வண்ணம் புதுக் கோட்டையிலிருந்து சடையப்பமுதலி என்பான் ஆயிரம் கப்ப லில் நெல்லை அனுப்பியதாகவுங் குறித்துள்ளது.136 இச் சடையப்பமுதலிதான் புதுவை, திருவெண்ணைநல்லூர் ஆகிய இடங்களிற் புகழுடன் வாழ்ந்த வேளாளன் என முதலியார்
இராசநாயகங் கூறுவதோடு கம்பனைப் போஷித்தவரும் இவரே என்று கூறியுள்ளார். இப்பாடலிற் குறிப்பிடப் படும் பரராசசிங்கன் என்பவன் யாழ்ப்பாண அரச
னாகிய பரராசசேகரனாக இருக்கலாமெனவும் முதலியார் இராசநாயகங் கருத்துத் தெரிவித்துள்ளதோடு தமிழ் நாவலர் சரிதை ஈழத்தின் தலைநகராகக் கண்டி விளங்கிய காலத்திலே தொகுக்கப்பட்டதால் இம்மன்னனின் தலைநகராகச் சிங்கை நகர் இந்நூலிற் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாகத் தவறுத லாகக் கண்டியே குறிப்பிடப்பட்டுள்ளது எனவுங் கூறியுள் ளார். ஆனாற் பரராசசிங்கன் என்ற பெயர் யாழ்ப்பாண அரசை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் பெயர்ப் பட்டியலில் இடம் பெறாமையும் இப்பாடலுக்குரிய கால மாகிய கி. பி. 12ஆம் நூற்றாண்டில் ஆரியச் சக்கரவர்த்திகள் இப்பகுதியில் ஆட்சி செய்ததற்கான தடயங்கள் காணப்படா மையுந் தமிழ் நாவலர் சரிதை பிற்காலத் தொகுப்பு நூலாகக் காணப்படுதலும் இதிற் கூறப்பட்டுள்ள செய்தி நம்பகரமற்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறேதான் அராபிய அறிஞர்களாற் கூறப்படுஞ் “சபக்” (Zabak) என்ற இடம் பற்றிய கூற்று இக்காலத்திலே தனியரசாக விளங்கிய யாழ்ப்பாணப் பகுதியைக் குறித்தது என்பதாகும். மேற்கூறிய கருத்தினைக் கிருஷ்ணசுவாமி ஐயங்கார் எடுத்துக் காட்டியுள்ளதைக் குறிப்பிடும் பரணவித்தானா இத்தகைய பதங் கி. பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் சாவ கரின் ஆட்சியோடு வடபகுதிக்கு வழங்கப்பட்டதென்றும், இதனால் அராபிய அறிஞர்கள் குறிக்குஞ் “சபக்” மலாயாத் தீபகற்பத்திலுள்ள பழைய அரசான ‘சாவகமே எனவும்
யாழ். - தொன்மை வரலாறு 37o ெ

மறுத்துரைத்துள்ளமை ஏற்புடைத்தாக அமைந்துள்ளது.157 யாழ்ப்பாணப் பகுதி சாவக நாட்டிலிருந்து கி. பி. 13ஆம் நூற்றாண்டிற் படைஎடுத்து வந்த சந்திரபானுவிற்குப் பின் னரே சாவகம் என அழைக்கப்பட்டது என்று இவர் கூறு வதும் பொருத்தமானதாக இருப்பதாற் கி. பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் காணப்பட்ட 'சபக்” அரசு பற்றிய அராபிய அறிஞரின் கூற்று மலாயாப் பிரதேசத்திலுள்ள சாவக நாட்டிற்கே பொருத்தமாகின்றது எனலாம்.
முதலியார் இராசநாயகம் போன்றோர் வடபகுதியிற் காணப்பட்ட தனி அரசின் வரலாற்றை மேற்கண்டவாறு வரிசைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தக்க ஆதாரங் களால் நிறுவப்படமுடியாது போனாலுங்கூட இக்கால வர லாற்றைப் பொலநறுவை அரசின் அரசியல் வரலாற்றோடும், தமிழகத்தின் அரசியல் வரலாற்றோடும் இணைத்துப் பார்க்கும் போது யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள் கூறும் யாழ்பாடி கதைக்குப் பின்னர் இப்பகுதி சிலகாலம் அரசரின்றித் தளம்ப, பாண்டிமழவன் மதுரைக்குச் சென்று ஆரியச் சக்கர வர்த்திகளின் முதல்வனான சிங்கை ஆரியனை அழைத்து வந்தான் என்ற மேலோட்டமான நிகழ்ச்சிக்கு ஒரு ஆதார ரீதியான வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்க முடியும். இத்தகைய பின்னணி ஈழத்திற் சேர்ழர் பொலநறுவையைத் தலைநகராக்கி அரசாண்டவுடனேயே கால்கொண்டுவிட்டது என்றால் மிகையாகாது. கிங்ஸ்லி டீ சில்வா, அரசரத்தினம் போன்றோர் குறிப்பிட்ட வண்ணஞ் சோழராட்சி ஈழத்தின் வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும். இவ்வாட்சி பற்றி அறிந்து கொள்ளுவதற்குச் சூளவம்சந் தருந் தகவல்கள் மட்டுமன்றி ஈழத்திற் காணப்படும் முப்பதிற்கு மேற்பட்ட சோழக் கல் வெட்டுகளுந் துணை புரிகின்றன. எனினும் இவற்றுட் பெரும்பாலானவை வடபகுதிக்கு வெளியே குறிப்பாக ஈழத் தின் கிழக்குப் பகுதியிற்றான் காணப்படுகின்றன. இருந்துந் தமிழகத்திலுள்ள சமகாலச் சோழக் கல்வெட்டுகள், வட பகுதிக்கு வெளியே காணப்படுங் கல்வெட்டுகள், வட பகுதியிலுள்ள இடப்பெயர்கள் ஆகியனவற்றைக் கொண்டு
37 வரலாற்றுக் காலம் II

Page 202
சோழராட்சியிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட குடியேற் றங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது.
ஈழத்தினைக் கைப்பற்றிய சோழர், இதனைச் சோழப் பேரரசின் ஒன்பதாவது மாகாணமாக்கி இதற்கு முதலாம் இராஜராஜனின் பெயரைக் கொண்டு " மும்முடிச் சோழ மண்டலம் " எனப் பெயரிட்டனர். கிழக்கு மாகாணத்திலுள்ள கந்தளாய், மானாங்கேணி ஆகிய இடங்களிற் கிடைத்துள்ள கல்வெட்டுகள் இதனை நிருவகிப்பதற்குத் தமிழகத்திற் சோழ அரசர்கள் இராசகுமாரர்களை நியமித்தது போன்று ஈழத்தி லும் இவ்வாறு செய்ததை உறுதிப்படுத்துகின்றன. இவன் சோழ இலங்கேஸ்வரன் என அழைக்கப்பட்டான். 158 இவன் இராசப் பிரதிநிதியாகக் காணப்பட்டாலுங்கூட அரசனாகவே விளங்கி னான் என்பதனை இக்காலச் சிங்கள மன்னர்களின் பட்டா பிஷேகத்தின் போது சூடிய பெயர்களான சிறீ சங்கவர்ம (சிறீ சங்கபோதிவர்மர் ), லங்கேஸ்வர தேவர் போன்ற பெயர்களை இவன் சூடியிருந்தமை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் ஈழத்தின் பிறபகுதிகளைப் போல வடபகுதியும் முதலாம் இராஜராஜன் காலத்திலிருந்தே சோழ அரசப் பிரதி நிதியின் ஆளுகைக்குட்பட்டிருந்தது என ஊகிக்கலாம். யாழ்ப் பாண மாவட்டத்தில் நாரந்தனையிலும்,159 பூநகரிப் பகுதி யில் மண்ணித் தலை, வெட்டுக்காடு, மட்டுவில்நாடு, ஈழவூர் ஆகிய இடங்களிலும்0ே கிடைத்த முதலாவது இராஜராஜ னின் செப்பு நாணயங்கள் இதனை உறுதி செய்கின்றன.
இக்காலத்திற் சோழநாடு மண்டலங்கள், வளநாடுகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது போன்று இப் பகுதியும் பல்வேறு வளநாடுகளாகப் பிரித்து ஆளப்பட்டிருக் கலாம். ஏனெனில் இவ்வாறான ஆறு வளநாடுகள் பற்றி ஈழத்திற் கிடைத்த சோழக்கல்வெட்டுகள் எடுத்தியம்பு கின்றன.181 சோழரின் தலைநகரான பொலநறுவையும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் நிகரிலிச் சோழவளநாடு என அழைக்கப்பட்டன. நாட்டின் கிழக்குப் பகுதியிற் காணப் பட்ட இராஜராஜ வளநாடு பற்றியும், விக்கிரமசோழ வளநாடு பற்றியுங் குறிப்புகளுள. திருகோணமலை மாவட்டத்திலுள்ள
யாழ். - தொன்மை வரலாறு 372 O

பெரியகுளப்பகுதி வீரபரகேசரி வளநாடெனவும் (அபயாசிரய வளநாடு அல்லது இராஜேந்திரசிங்க வளநாடு) கந்தளாய்ப் பகுதி இராஜேந்திர சோழவளநாடு (இராஜவிச்சாதிர வளநாடு) எனவும் அழைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்டப் பகுதி அருண்மொழித்தேவ வளநாடு என அழைக்கப்பட்டுள்ளது. அண்மையிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இத்தகைய அமைப்பு இங்குங் காணப்பட்டதை எடுத்தியம்பியுள்ளன.182 இவ்விடப்பெயர் களுட் சோழமண்டலம், மட்டுவில்நாடு ஆகியன காணப் படுவதால் மண்டலமென்ற பேரமைப்பில் வளநாடு போன்ற அமைப்புகள் இங்கும் காணப்பட்டன எனலாம்.
வளநாட்டின் அடுத்த பிரிவுதான் நாடாகும். மட்டுவில் நாடு என்ற பெயர் இத்தகைய பிரிவை உணர்த்துகின்றது. நாடு என்ற பிரிவு ஈழத்திற் காணப்பட்டதைப் பொலநறு வையிலுள்ள சோழக் கல்வெட்டுகளிற் காணப்படும் நாட்டார் பற்றிக் காணப்படும் பதமும் உறுதி செய்கின்றது. இவ்வாறே பிராமணர் வாழ்ந்த இடங்களை நிருவகிக்கச் "சபை" என்ற அமைப்பும், பிராமணரல்லாதோர் வாழ்ந்த இடங்களை நிருவகிக்க 'ஊர்' என்ற அமைப்புங் காணப்பட்டது. கந்தளா யில் முதலாம் இராஜராஜன் காலத்தில் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்" என்ற பிராமணக் குடியிருப்புக் காணப்பட்டது. இதனை நிருவகித்த சபையின் நிருவாக அமைப்புப் பெருங் குறி மகாசபை, பெருங்குறிப் பெருமக்கள், ஆளுங்கணம் என அழைக்கப்பட்டது. இத்தகைய அமைப்புகள் வடபகுதியிலுங் காணப்பட்டிருக்கலாம். இவ்வாறே வணிகத் தலங்கள் நகரம் என்ற அமைப்புகளால் நிருவகிக்கப்பட்டன. பதவியா போன்ற இடங்களில் இவை இயங்கியதற்கான சான்றுகள் காணப் படுவதால் வடபகுதியிலும் இத்தகைய சோழ நிருவாக அமைப்புத் தொடர்ந்தது எனலாம். 183
இக்காலத்தில் ஈழத்திற் காணப்பட்ட சோழ நிருவாகிகள் பற்றிய குறிப்புகள் ஈழத்திற் கிடைத்த சோழக் கல்வெட்டு களில் உள. இத்தகைய நிருவாகிகள் உடையான், தேவன், வேளான், நாடாள்வான், அரையன் போன்ற விருதுகளால்
O 373 வரலாற்றுக் காலம் 11

Page 203
அழைக்கப்பட்டமையுந் தெரிகின்றது. இத்தகைய பதவிகள் தமிழகத்திலுள்ள சோழ நிருவாகத்திலுங் காணப்பட்டதை அக்கல்வெட்டுகளிற் காணப்படும் நாடாள்வான், கிளவன், பேரரையன், பணிமகன், சிறுதானம் போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை விளக்குவனவாகவே பொல நறுவை, மாதோட்டம், பதவியா போன்ற இடங்களிற் கிடைத்த கல்வெட்டுகளிற் காணப்படுஞ் சோழ நிருவாகிகளின் பெயர்கள் அமைந்துள்ளன.184 பொலநறுவையிற் கிடைத்த கல்வெட்டுகளிற் பூரீமோகனூர் உடையான், திருப்பூவணதேவன், தியாக சிந்தாமணி மூவேந்த வேளான், பூரீமுகரி நாடாள்வான், மங்கலப்பாடி வேளான், சோழப் பல்லவராயன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவ்வாறே சிறுகூற்றநல்லூர்க் கிளவனான தாழிக்குமரன், சிறுகுளத்தூர் உடையான் தேவன், பணிமகன் ஆகிய பெயர்கள் மாதோட்டத்திற் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் உள. பதவியாவிற் கிடைத்த கல்வெட்டுகள் தமிழகத்திலுள்ள மருங்கூர், பாலைப்பாக்கம், திருச்சிற்றம் பலம் ஆகிய இடங்களிலிருந்து வந்து இப்பகுதியை நிருவகிக்க வந்த உடையான்" என்ற விருது கொண்ட பலர் பற்றிக் கூறுகின்றன. அவை கம்பாக்கம் உடையான், பாலைப் பாக்கம் உடையான், மருங்கூர் உடையான், திருச்சிற்றம்பலம் உடையான் ஆகும். உடையான் மட்டுமன்றித் "தேவன்" போன்ற பெயர்களும் இக்கல்வெட்டுகளில் உள. இத்தகைய சான்றுகள் பிற்காலத்தில் எவ்வாறு ஐரோப்பியராட்சியில் முக்கிய நிருவாகிகள் அவர்களின் தாயகத்திலிருந்து ஈழத்திற்கு வந்து ஆட்சி செய்தனரோ அவ்வாறே சோழர் காலத்திலும் இதே போன்ற ஒரு வழக்குக் காணப்பட்டதை எடுத்தியம்புகின்றன.
சோழ மன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்கு வழங்கிய
பட்டங்கள் பற்றிச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவது இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கத்தக்கது. 165
" . . . அதிகாரிகளுக்கு வழங்கிய பட்டங்கள் LDrTurnīra u Gör,
பேரரையன், அரையன், மூவேந்த வேளான், தொண் டைமான், பல்லவராயன், காலிங்கராயன், 435T-6ani TsTu u Gör,
யாழ். - தொன்மை வரலாறு 374 O

கச்சிராயன், சேதிராயன், வாணகோவரையன், மாவலி வாணராயன், கேரளராசன், விழுப்பரையன், மழவராயன், நாடாள்வான், பிரமாதிராசன், பிரமமாராயன், சோழ கோன் முதலியனவாம். இப்பட்டங்களைப் பெரும்பாலும் தம் இயற்பெயர் அல்லது சிறப்புப் பெயர்களோடு இணைத்தே சோழ மன்னர்கள் தம் அரசியல் தலைவர்க்கு அளித்து வந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ் வுண்மையை இராசராச மாராயன், விக்கிரம சோழ цртрттш6йт, இராசேந்திர சோழ மூவேந்த வேளான், வீரசோழப் பல்லவராயன், விருதராச பயங்கர வாண கோவரையன், சனநாதக்கச்சிராயன், வீரராசேந்திர மழவராயன், குலோத்துங்க சோழ கேரளராசன், இராச ராசக் காடவராயன், வீரராசேந்திர பிரமாதிராசன் என்று வழங்கப் பெற்றுள்ள பட்டங்களால் தெள்ளிதின் உணர்ந்து
கொள்ளலாம்.
மேற்கூறிய வேளான், தேவன், நாடாள்வான் ஆகிய பெயர்கள் அக்காலத்திற் காணப்பட்ட நிலக்கிழார் வகுப்பினை எடுத்துக் காட்டும் பெயர்கள் என்பது ஈண்டு நோக்கற்பாலது. இவ்வாறு சோழ நிருவாகத்தில் நிலக்கிழார்கள் செல்வாக்குப் பெற்றமைக்கான காரணம் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் அவர்கள் இட்டுவந்த செல்வம் மட்டுமன்றி அக்காலத்தில் விவசாய உற்பத்தியின் அதிகரிப்புமே எனக் கரோசிமா கருதுகின்றார்.168 அணைக் கட்டுகள் கட்டப்பெற்றமை, குளங்கள், கால் வாய்கள் ஆகிய வற்றைப் புனருத்தாரணஞ் செய்தமை ஆகியன இத்தகைய விவசாய நிலக்கிழார்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தன எனவும் இவர் கருதுகின்றார். இவ்வளர்ச்சியை 12 ஆம், 13 ஆம் நூற் றாண்டுகளிலுங் காணக்கூடியதாக உள்ளது. இக்காலத்தில் வணிக நடவடிக்கைகள் விதந்து காணப்பட்டதால் நகரங்கள் வளர்ச்சி பெற அவற்றைப் போஷிக்கும் மையங்களாக உள்ளூர் விவசாய அமைப்புகள் எழுச்சி பெற்றதன் விளைவாக நிலக் கிழார் வகுப்பினர் முன்னிலை பெற்றனர். அதனால் இக் காலத்தில் வியாபார, விவசாய வகுப்பினருக்கிடையே நெருங்கிய ஒற்றுமை நிலவியது. இதனை இக்காலத்திற்குரிய கல்வெட்டுகள்
O 375 வரலாற்றுக் காலம் II

Page 204
எடுத்தியம்புகின்றன. அத்துடன் தமிழகத்தில் நிலக்கிழார் எவ்வாறு மேல்நிலை அடைந்தார்களோ அவ்வாறே தமிழகத் தின் வடக்கே உள்ள கன்னடப் பகுதியிலும், ஈழத்திலும் இவர்கள் முன்னிலை அடைந்தனர் என மீரா ஏப்பிரகாம் எடுத் துக் காட்டுவதோடு இதற்கு ஆதாரமாக ஈழத்து மன்னனாகிய நிஸங்கமல்லனின் கல்வெட்டில் விளிக்கப்பட்டுள்ள ‘கோவிகுல" பற்றியுங் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டின் வாசகம் பின் வருமாறு அமைந்துள்ளது.187
* ஒரு பிரசை ஒழுங்காக நடத்து கொண்டால் அரசன் முன் பிரசன்னமாக வேண்டுமென ஆணையிடப்பட்டதும் எதுவித பயமுமின்றி அவன் செல்ல வேண்டும். இவ்வர்று நடக்கும்போது நான் ஒரு தவறும் செய்ய வி ல்  ைல ஆதலால் நான் ஏன் அஞ்ச வேண்டும் என்று அவன் உணரல் வேண்டும். அரசர்களின் இரகசியங்களைப் பற்றிப் பேசுவது மந்திரங்களை உச்சாடனம் செய்து யமனை வரவழைப்பதற்கு ஒப்பானதாகும். அரசனுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தவனின் புகழ் நீடூழி வாழும். நன்றி உணர்வே உண்மையான உணர்வு. உழவே மேன் மையான தொழிலாகும். தர்மமே மிக உன்னதமான செல்வமாகும். பேணப்பட வேண்டிய இவை யாவும் அரசர்களுடாகவே உயிர் வாழ்கின்றன. எனவே அரச னைக் காப்பதில் எப்பொழுதும் கண்ணாயிருத்தல் வேண் டும். தற்பெருமை கொண்டவர்களை அரசர்கள் விரும்ப மாட்டார்கள். ஆதலால் அரசர்களிடமிருந்து பதவிகளை யும், செல்வத்தையும், விருதுகளையும் பெறும் எவ னும் தற்பெருமை கொள்ளலாகாது. . . . கோவிக் குலத் தைச் சேர்ந்த எவனாவது தனக்குக் கிடைத்த விருதுகள், பதவிகள் ஆகியவற்றைக் கொண்டு ராஜத் துரோகத்தைப் பற்றிச் சிந்திப்பானாகில் மக்கள் அவனுடன் உறவாடக் கூடாது. இத்தகையதொரு எண்ணத்தை அவன் மனதிற் கொண்டிருந்தால் அவனைப் பொதுமக்கள் இகழ்வார்கள். எவ்வாறெனில் காகங்களும் நரிகளும் அன்னங்களைப் போன்றும் சிங்கங்களைப் போன்றும் நடக்க முற்பட்டால்
மக்கள் அவற்றை எள்ளி நகையாடுதல் போன்றதாகும்.
யாழ். - தொன்மை வரலாறு 376 O

அவனதும் அவனது லெளகீகச் சொத்துக்களும் அழித் தொழிக்கப்படும். எனவே மக்கள் ஐக்கியப்பட்டு அவனை அகற்ற வேண்டும். *
மேற்கூறிய நிலப்பிரபுத்துவ வகுப்பினர் ஈழத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் முன்னின்ற தற்கான தடயங்கள் முதலாம் பராந்தகன் காலத்திலிருந்தே காணப்படுகின்றன. தமிழகத்திற் புதுக்கோட்டை மாவட்டத் தில் வாழ்ந்த இருக்கு வேளிர் " இத்தகைய வகுப்பினைச் சேர்ந்தவர்களாவர்.188 முதலாம் பராந்தகன் இவர்களோடு மணத் தொடர்புகளையும் ஏற்படுத்தியிருந்தான். இதனாற் சோழருடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலும் இவர்கள் பங்கு கொண்டனர். தமிழகத் இற் பாண்டியருக்கெதிராகச் சேவூரில் நடைபெற்ற போரிற் சோழர் பக்கம் நின்று பொருத படைத்தளபதி கொடும்பாளூ ரைச் சேர்ந்த பராந்தகன் சிறியவேளார் ஆவான். இவனே தான் இரண்டாவது பராந்தகன் காலத்திலும் ஊர்காவற்றுறை யில் வந்திறங்கிய சோழப் படைக்குத் தலைமை தாங்கியவ னாவான். பின்னர் இராஜராஜனின் படைஎடுப்புகளிலும் இருக்குவேளிர்கள் முக்கிய பங்கினை வகிக்கத் தவறவில்லை. முதலாம் இராஜேந்திரனின் ஈழப் படைஎடுப்பை வழிநடாத்தி ஈழத்து மன்னனைச் சிறைப் பிடித்த " சோழ மூவேந்த வேளார் " என்பவனும் இவ்வகுப்பினைச் சார்ந்தவனே. இதுமட்டுமன்றித் தமிழகத்திற் கி. பி. 11-ஆம் நூற்றாண்டி லிருந்து எழுச்சி பெற்ற நிலக்கிழார் சமூக அமைப்பின் ஒரு அமைப்பே சித்திரமேழி என அழைக்கப்பட்ட அமைப்பாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சித்திரமேழி என்ற இடப்பெயர் இன்றும் இவ்வமைப்பின் எச்சசொச்சமாக விளங்கு வது அவதானிக்கத்தக்கது. இச் சித்திரமேழிப் பகுதியில் வாழும் வேளாள வகுப்பினர் தாம் இந்தியாவிலிருந்து வந்த வர்கள் என்ற குலமரபை இன்றும் பேணி நிற்பது அவதானிக் கத்தக்கது.189
சித்திரமேழி என்ற அமைப்பு, தமிழகத்திற் கி. பி. 11 ஆம் நூற்றாண்டிலேயே காணப்பட்டதற்கான கல்வெட்டாதா
O 377 வரலாற்றுக் காலம் II

Page 205
ரங்கள் உண்டாயினுங் கி. பி. 12 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இவர்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாக வளர்ச்சி பெற்றிருந்தனர். இவர்கள் பற்றி மகாலிங்கம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.170
* வேளார் என அழைக்கப்பட்ட நாட்டிலுள்ள விவசாய சமூகத்தினர் சித்திரமேழிப் பெரியநாட்டார் என்ற அமைப்பாக இயங்கினர். நிலத்தின் பயணிலே இவர்கள் தங்கியிருந்தமையால் பூமி புத்திரர் என்றும், நாட்டு மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பல கிராமங்களின் தொகுதி சித்திரமேழிப் பெரிய நாடென அழைக்கப்பட, சில தனிப்பட்ட கிராமங்கள் சித்திரமேழி, நல்லூர், சித்திரமேழிவிடங்கள், சித்திரமேழிச் சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாழ்ந்த கிரா மங்களில் பொற்கொல்லர், தேவரடியார் போன்ற பலர் வாழ்ந்தனர். அநேகமாக நிலத்தின் விளைபொருட்கள், அவற்றின் விநியோகம் ஆகியன இவர்களின் கட்டுப் பாட்டுக்குள் இருந்தன. அக்கால மன்னர்களின் போஷிப்பும் இவர்களுக்குக் கிடைத்ததால் இவர்கள் தனித்துவமான முறையில் சித்திரமேழி என்ற பெயருடன் இயங்கினர் sTGOT 6) rTub. ”
மேழி என்றால் உழவுக் கலப்பை என்பது பொருளாகும். இதனால் மேழியே இவர்களின் சின்னமாகியது. தமிழகத்தில் இரண்டாவது இராஜாதிராஜன் காலந் தொடக்கம் இவர்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்க மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மேலும் வலுப் பெற்றது. சோழச் சிம்மாசனத்தைப் பெறுவதில் மூன்றாவது குலோத்துங்கனுக்கு இவர்கள் துணை நின்றதாகவுங் கூறப்படுகின்ற நிகழ்ச்சி ஒன்றே அரசியலில் இவர்கள் பெற்ற செல்வாக்கினை எடுத்துக் காட்டப் போது மானது.171 இக்காலந்தான் சோழநாட்டின் மீது பராக்கிரம Lunt (556?aöt u6ol- 67GujL/565 b, அதற்கெதிராகச் சோழ அரசர்களான இரண்டாவது இராஜாதிராஜன், மூன்றாவது குலோத்துங்கன் ஆகியோர் ஈழத்தின் மீது படைஎடுத்த காலமுமாகும். இத்தகைய படைஎடுப்புகளாலே தமிழகத்தி
யாழ். - தொன்மை வரலாறு 378 O

லிருந்து மக்களின் புலப் பெயர்வு பொலநறுவையிற் காணப் பட்டது போன்று ஈழத்தின் வடபகுதியிலுங் காணப்பட்டது.
ஈழத்திற் சோழராட்சி கி. பி. 1070இல் மறைந்தாலுங் கூடப் பின்னர் அரசு கட்டிலேறிய முதலாவது விஜயபாகு வட பகுதியிலே தனது நிருவாக நடவடிக்கைகளை மேற்கொண்டதற் கான சான்றுகள் காணப்படாததாற் சோழ அரசு விட்டுச்
சென்ற நாடாள் வான், உடையான், கிழவன், தேவன் போன்ற உள்ளூர்த் தலைவர்கள் இப்பகுதியிலே தமது ஆட்சியை ஸ்திரப்படுத்தியிருக்கலாம். இவர்கள் யாவரும்
விவசாய சமூகத்தினரே. இவர்கள் பிராந்தியத் தலைவர் களாகப் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்திருக்கலாம். இதற்கான வாய்ப்பை முதலாவது விஜயபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாகப் பராக்கிரமபாகு அரசு கட்டிலேறும் வரை பொலநறுவை அரசிற் காணப்பட்ட குழப்ப நிலையும் உதவியிருக்கலாம். பராக்கிரமபாகுவின் நிருவாகம் வடபகுதியில் முழுமையாக இயங்கியதற்கான த ட யங் கள் காணப்படாவிட்டாலுங்கூட, தமிழகத்திற் குறிப்பாகச் சோழருக்கெதிராக இவன் மேற்கொண்ட போர் நீடித்த காலமாகிய 15 ஆண்டுகளாவது இப்பகுதி இவனது கட்டுப்பாட்டிற்குட் காணப்பட்டிருந்தது என்பதைச் சூளவம் சத்தில் இவனது படைகள் நிலைகொண்டிருந்த துறைமுகங் களாக ஊர்காவற்றுறை, மட்டிவால்நாடு, மகாதீர்த்த, வலி காமம் போன்றன குறிக்கப்படுவதும், ஊர்காவற்றுறையில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை வழிப்படுத்த இவன் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறுந் தமிழ்க் கல்வெட்டுஞ் சான்று பகருகின்றன.172
எனினும் யாழ்ப்பாண வைபவமாலை யாழ்பாடி இறந்த பின்னர் சிலகாலம் அரசனின்றி இப்பகுதி தளம்பியது பற்றியும் அதன் பின்னர் பாண்டிமழவன் தமிழகஞ் சென்று சிங்கை யாரியனை அழைத்து வந்தமை பற்றியுங் கூறுவதை நோக்கும் போது இக்காலத்தில் விவசாய சமூகத்தினைச் சேர்ந்த பிரதானிகளைத் தலைவராகக் கொண்டோரின் ஆட்சியே வட பகுதியிற் காணப்பட்டது என ஊகிக்க முடிகின்றது. ஏனெனில்
O 379 வரலாற்றுக் காலம் II

Page 206
* மழவன்" எனப் பெயர் கொண்டோர் விவசாய சமூகத்தவ ராவர். இப்பெயருக்கு முன்னர் காணப்படும் "பாண்டி" என்ற அடைமொழி இவன் பாண்டி நாட்டினைச் சேர்ந்தவன் என் பதை எடுத்துக் காட்டுகின்றது. பராக்கிரமபாகுவின் பாண்டியப் படைஎடுப்புப் பற்றிச் சூளவம்சத்திற் காணப்படுங் குறிப்புகளை நோக்கும் போது இத்தகைய பிரதானிகள் பாண்டி நாட்டின் தென்கோடியின் பல பகுதிகளிலும் ஆட்சியாளர்களாக விளங் கியமை புலனாகின்றது. இதனால் இத்தகைய மரபினரே வடபகுதியிற் சோழராட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினைப் பயன்படுத்திப் பராக்கிரமபாகு வின் காலத்திற்கு முன்னரும் அவன் ஆட்சிக்குப் பின்னரும் இப் பகுதியின் பிரதானிகளாக இருந்து இப்பகுதி மக்களின் மீது ஆட்சி செய்தனர் என யூகிக்கலாம். இத்தகைய யூகத்தினை உறுதி செய்வதாகச் சூளவம்சத்திற் பராக்கிரமபாகுவின் தளபதியாகிய லங்காபுர தென்பாண்டி நாட்டின் பல்வேறு பிரதானிகளோடு போரிட்டதாகக் கூறப்படுஞ் செய்திகள்
அமைந்துள்ளன.
லங்காபுரவின் பாண்டிநாட்டுப் படைஎடுப்புப் பற்றிய விபரஞ் சூளவம்சத்தின் 76ஆம், 77ஆம் அத்தியாயங்களில் உள.178 இத்தகைய குறிப்பின் விபரம் பின்வருமாறு அமைந் துள்ளது. பாண்டி நாட்டிலுள்ள இராமேஸ்வரத்திற் கால் கொண்ட லங்காபுரவின் படையினை எதிர்கொண்டவர்களாகச் சூளவம்சத்தில் வடவளத்திருக்க நாடாள்வார( ர்), குண்டய முத்த - ராயர( ர் ), வில்லவராயர(ர் ), அஞ்சுகோட்ட நாடாள் வார (ர்), நரசிம்மதேவ ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இராமேஸ்வரத்திலிருந்து எட்டு மைல்களுக்கப்பால் முன்னேறிய லங்காபுரவுடன் கஞ்சக்குடியராய(ர் ), சோழகங்க, சுந்தர பண்டுராஜ, பண்டுராஜ ஆளவந்த பெருமாள( ள்), ஆகியோர் போரிட, இத்தளபதி குஞ்சுகுடி, கொள்ளுற ஆகிய பகுதிகளில் ஆட்சி செய்த் மறவராஜ, மழவராஜ ஆகியோரைத் தன் ஆளுமைக்குக் கீழ்க் கொண்டு வந்தான். இவ்வாறே மாழவச்சக்கரவர்த்தி, மாழவராய( ர் ), பரித்திக்குண்டியாற, தொண்டமானாறாய( ர் ), துவாராதிபதி வேளார( ர் ), வீரப் பேரய - ராயர( ர் ) செங்குந்டியராயரர் ), நிகழதராயரர் ),
யாழ். - தொன்மை வரலாறு 38O 9

கரும்மலத்த ராயர( ர் ), நகுல ராயரர் ), புங்கொண்ட நாடாள்வார{ர்), கரம்பராயர(ர்), குன்டியூர(ர்) - அதலயூர(று), நாடாள்வார( ர் ), கங்கயார( ர் ) அளத்தூர{ர் 9 நாடாள் வார( ர் ), நிச்சவிநோத வானவராயர(ர்), பட்டிராயர( ர்), தங்குத்தரராயர( ர் ), தொம்பிய ராயர( ர் ), ஆளவந்த பெருமாள(ள்), சோழகோனார(ர்), தங்கிப் பெருமாளt ஸ் ), அளக்கியராயர( ர் ), LDT 627 fru_pr600r மகாராஜ, அவந்திய ராயர{ர் ), முனயட்டராஜர( ர் ) போன்றோரும் இவனது இராணுவ நடவடிக்கைகளின்போது குறிப்பிடப்படுகின்றனர்.174 தேவி பட்டினத்திற்கு முன்னேற முன்னர் இவனாத் கொல்லப் பட்டவர்களாக வில்லவராஜர(ர்), சோழக்கோனார(ர் ), யாதவராஜர{ர் ) ஆகியோரும் தேவிபட்டினத்தில் இவனால் வெற்றி கொள்ளப்பட்டவர்களாக குட்டகஞ்ச குண்டராயர(ர்), பண்டியாண்டார( ர் ), சோழக்கோனார( ர் ), யாதவராயர{ர்), வில்லவராயர( ர் ), காலிங்கராயர( ர் ), சு ந் த ர ப ண் டு ராயர(ர் ), நரசிம்மதேவ, பண்டியராயர(ர் ), குண்டய முத்த ராயர( ர்), கடிலியராயர(ர்), பண்டி மண்டல நாடாள்வார( ர்), வீரகங்க ராயர( ர் ), கங்கை கொண்ட பேரரையர(ர்), அளுத்தூரநாடாள்வார( ர் ), பண்றிய ராயர( ர் ), வில்லவ - ராயர( ர் ), சுல்லகஞ்ச குண்டராயர{ர் ), கண்டதேவமாளவராயர( ர் ), காலிங்கராயர( iர் ), இலங்கிய ராயர(ர் ), அளத்தூரநாடாள்வாரர்), கலிகாலராயர( ர் ),
மாளவச்சக்கரவ(ர்)த்தி g3 (5uitit குறிப்பிடப்படுகின் றனர்.175 செம்பொன்னேரியில் நடைபெற்ற யுத்தத்திற் குந்தவர ( tர் ), கள்ளர் படைகள், கொழிகளரf iர் ) படைகள், மறவர் 1651-56ir ஆகியன லங்காபுரவினால் தோற் கடிக்கப்பட மீண்டும் இவ்விடம் மாளவச்சக்க( ர)வ(ர்)த்தி யிடம் கொடுக்கப்பட்டது.176 இவ்வாறே மாளவராயர்
இழந்த முண்டிக்கரா( ரை) திரும்பவும் அவனிடம் லங்கா புரவினால் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற இன்னும் பல பெயர்களைக் குறிப்பிடலாம். விரிவஞ்சி அவை இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன.
சூளவம்சத்தில் லங்கபுரவின் பாண்டிநாட்டின் மீதான படைஎடுப்பின் இறுதிக்கட்டமாக அமைவதுதான் பாண்டிய
O 331 வரலாற்றுக் காலம் II

Page 207
இளவரசனான வீரபாண்டியனை மதுரையில் முடிசூட்டிய வைபவம் ஆகும். இவ்வைபவத்தில் லம்பகண்ணர் (லம்பகர்ணர்) களாகிய மாளவ - சக்க(ர)வ(ர்)த்தி, மாளவராயர(ர்), அதள யூர(ர்) நாடாள்வாரர்) ஆகியோரிடம் லம்பகண்ணர்களுக் குரிய கடமைகளைப் புரியும் வண்ணம் பொறுப்பினை அளித்தான் எனக் கூறுகின்றது.177 சூளவம்சத்திற் காணப் படும் இவ்வடிகளுக்குக் குறிப்பெழுதிய கெய்கர், மேற்கூறி யவை இரு அம்சங்களை வெளிப்படுத்துகின்றன’ எனக் கூறி யுள்ளார்.178 அஃதாவது இக்காலத்தில் லம்பகண்ண வம்சந் தென்னிந்தியாவிற் காணப்பட்டதோடு முடிசூட்டு விழாவிலும் முக்கிய பங்கினை வகித்தது என்பதே அஃதாகும். இவ்வம்சத்தின் கடமைகளுக்கும் முதலாவது ஆரியச்சக்கரவர்த்தியை ஈழத்திற்கு இட்டுவந்தவனாகக் கூறப்படும் பாண்டிமழவன் ஆரியச்சக் கரவர்த்தியின் பட்டாபிஷேகத்தின்போது மு டி எ டு த் து க் கொடுத்த நிகழ்ச்சிக்குமிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.
இவ்வாறு வடபகுதியில் பாண்டி நாட்டுப் பிரதானிகள், மாகன், சாவகன், பாண்டியர் ஆகியோரின் ஆட்சி இப் பகுதியிற் தமிழரின் வலுவினையும் தனித்துவத்தினையும் மேலும் உயர்த்தியது. மாகனின் படையில் மட்டுமன்றிச் சாவகனின் படையிலும் பெரும்பான்மையாகக் காணப்பட்டவர்கள் தமிழ கத்தோரே ஆவர். இவர்களோடு மலையாளத்தவரும், கன்னட, தெலுங்கு நாட்டவருங் காணப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் படைஎடுப்புகள் மேலும் பாண்டி நாட்டிலிருந்து பிரதானிகளையும் பிறரையும் ஈழத் திற்கு இட்டு வந்தன. பாண்டிமழவன் தென்பாண்டி நாட்டுப் பொன்பற்றியூரைச் சேர்ந்தவன் என யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை ஆகியன குறிப்பிடுகின்றன. 179 சூள வம்சத்தில் இப்பகுதி முதலாவது பராக்கிரமபாகுவின் தளபதி யாகிய லங்காபுரவின் படைஎடுப்புகளின்போது பாண்டியப் பிரதானிகளின் ஆட்சிக்குள்ளாகிய பகுதியாகக் கூறப்படுவது ஈண்டு நினைவு கூரற்பாலது. இப்பகுதியிற் காணப்பட்ட மழவச் சக்கரவர்த்தி, மழவராயர் போன்ற பிரதானிகள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுவதை நோக்கும்போது ஈழத்திற்
யாழ். - தொன்மை வரலாறு 382 இ

பாண்டியப் படைஎடுப்புகள் ஏற்பட்ட காலத்திற்கு முன்னரே இப்பிரதானிகள் வடபகுதியிலே தமது செல்வாக்கை அதிகரித் திருந்தமை புலனாகின்றது. இவர்கள் சாவகன் மைந்தனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பின்னர் ஈழத்தின் மீது பாண்டியப்படையை இட்டுவந்த ஆரியச் சக்கரவர்த்தி போன் றோர் வடபகுதியிற் பாண்டியராட்சி வலி குன்றத் திறை கொடுப்பதை நிறுத்தித் தனியரசைப் பிரகடனஞ் செய்திருக்க லாம். இவ்வம்சமே வரலாற்று ஏடுகளிற் குறிப்பிடப்படுஞ் சிங்கை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி வம்சம் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சிங்கள, தமிழ் அரசுகள் தனித்தனியான பிரதேசங்களில் ஒன்றின் தனித்துவத்தினை மற்றையது அழிக்காதவாறு வளர்ச்சி பெற வழிவகுத்ததோடு இவற்றின் தனித்துவங்கள் கூர்மையடையவும் வழிவகுத்தன.
() 333 வரலாற்றுக் காலம் II

Page 208
அடிக்குறிப்புகள்
1. Silva, K. M. De., A History of Sri Lanka, ( New
Delhi ), 1981. ша. 20 - 21.
2. Arasaratnam, S., Ceylon, (New Jersey), 1964. U. lo3.
3. Mendis, G. C., Early History of Ceylon, ( Calcutta ),
1947.
4. Spencer, W. George., The Politics of expansion - The Chola Conquest of Sri Lanka and Sri Vijaya, ( Madras ), 1983. Ludis. 46 - 65.
5
Kirubamune, S., The Royal consecration in Medieval Sri Lanka The problems of Vikramabahu II and Gajabahu II, Sri Lanka Journal of South Asian Studies, 1976. Ludii. 12 - 32.
6. Paranavitana, S. History of Ceylon, Vol I, Part II,
(Colombo j 1960. Ludiš. 509 – 515.
7. Cullavamsa, (Tr & Ed) Geiger, W., Parts I & II,
( Lond.), 1973. gg. 83. Guíħ. 1 5 - 18.
8. யாழ்ப்பாண வைபவமாலை, ( பதிப்பு} சபாநாதன், குல,
( சுன்னாகம் ), 1949, ப. 25.
9. கைலாயமாலை, ( பதிப்பு ) ஜம்புலிங்கம்பிள்ளை, சே. வெ.
( சென்னை ), 1939. வரி. ச0 - ருO.
10. மே. கூ. நூல், வரி. எரு - அ0.
11. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், ப. 24.
12. மே. கூ. நூல், ப. 15.
13. வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், அமரர் வைத்தியநாதர் தம்பு நல்லையா நினைவு வெளியீடு, ( யாழ்ப்பாணம்) , 29.1.1993. ப. 14.
யாழ். - தொன்மை வரலாறு 384 O

14.
15.
6.
7.
18,
19.
20.
21.
23.
24.
25.
26.
27.
28.
வையாபாட்ல், (பதிப்பு) நடராசா, க. செ., (கொழும்பு), 1980, செய், 13 - 14.
யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், ப. 30.
வையாபாடல், மே, கூ, நூல், செய். 14.
வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், மே. கூ. நூல்,
Ld5 15.
பத்மநாதன், சி., "ஈழத்து வரலாற்று நூல்கள்", இளங் கதிர், (பேராதனை), 1969 / 70. பக். 130 - 131.
Paranavitana, S., (ed) History of Ceylon, Vol. I, Part I, 1959. ud. 347 - 348.
Culavamsa, மே. சு. நூல், Part II, gyS. 4, வரி. 4 - 12.
மே. கூ. நூல், Part II, அதி. 4, வரி. 13 - 15.
Abraham, Meera., Two Medieval Merchant Guilds of South India, (New Delhi), 1988. ud. 129 - 138.
Culavamsa, மே. கூ. நூல், Part 1, அதி. 50, வரி 20 - 22.
மே. கூ. நூல், அதி. 50, வரி 33 - 36.
Spencer, W., George, CLD. 3... BITs), Ludi. 46 - 65.
சதாசிவ பண்டாரத்தார், T.V., பிற்காலச் சோழர் சரித்திரம், பகுதி 1, (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு), (சென்னை), 1954, ப. 266,
Abraham, Meera., G.D. di. Tsi), Ludii. 129 - 138.
Indrapala, K., "An Inscription of the time of Rajaraja Cola I from Padaviya”, Epigraphia Tamilica, Vol. I, Part I, (Jaffna), 1971, Lui. 33 - 36.
() 335 வரலாற்றுக் காலம் 11

Page 209
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
Indrapala. K., Fourteen Cola Inscriptions from the Ancient Rajaraja - Perumpalli (Velgam Vehera/Natanarkovil) at Periyakulam, Epigraphia Tamilica, Vol. I, Part I, (Jaffna), 1971. Luis. 37 - 5 1.
Gunawardana, R.H.L. H., Rope and Flough-Monasticism and Economic interest in Early Medieval Sri Lanka, (Arizona), 1979. ud. 200 - 204.
Gunasingham, S., "Fragmentary slab inscription of the time of Rajaraja I (985 - 104 AD), Three Cola Tamil Inscriptions from Trincomalee, (Peradeniya), 199.
சிற்றம்பலம், சி. க., "ஈழமும் இந்து மதமும்-பொலநறு வைக் காலம் 1000 - 1250, சிந்தனை, தொகுதி 1
இதழ் II, ஆடி 1984, ப. 130
Pathmanathan, S., "Chola Inscriptions from Mantai”, திருக்கேதீச்சரத் திருக்குடத் திருமஞ்சன шpбN)й , (கொழும்பு), 1979. பக், 59 - 70,
செல்வரத்தினம், ம. பொ, நாரந்தனையில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட் கருவூலம், பூர்வகலா, யாழ்ப் பாணத் தொல்பொருட் கழகச் சஞ்சிகை, 1973, பக். 40-42.
புஷ்பரத்தினம். ப., பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, 1991. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை 1991
LưGod!ptu உறுதிகளில் இவ்விடத்தின் பெயராக இடம் பெற்றுள்ளது.
Culavamsa, Gud. 3. JT6, Part , அதி 55, வரி, 24 - 20.
இந்திரபாலா, கா. , யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், சிந்தனை, சிற்றிதழ் 1, (பேராதனை), 1 9 69. 1. 1. 5.
யாழ். - தொன்மை வரலாறு 386 ே

39. சதாசிவ பண்டாரத்தார், T. V., மே. கூ. நூல், 1954.
A 267.
40. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1969, ப. 4.
41. Culavamsa, G.D. sin.. 5T 5i, Part I, 1973. S. 55,
@ນມື້ 33.
42. Paranavitana, S., (eđ) GUD. S. DIT 6v, Vol. I, Part II,
Il 960. Luji. 417 - 427. 3. ሪ
43. சதாசிவ பண்டாரத்தார், T, V., மே. கூ. நூல், 1954.
Lud, . 269 - 270.
44. மே, கூ, நூல், ப. 272.
45. Culavamsa, G3p. sra... gi/Taio, Part II, 7973. 9y3. 59.
வரி. 42 - 45.
46. சதாசிவ பண்டாரத்தார், T. V., மே, கூ, நூல், 1954.
v. 276.
47. Paranavitana, S., GLD... sa... gprsio, Vol I, Part п, 96).
பக், 424 - 427.
48. Culavamsa, Gud. (s. 15Tsi, Part I, 1973. g36). 58,
வரி. 42 - 45.
49. Paranavitana, S., GuD. sa. grsö, Vol. I, Part II, 1960.
J. 434.
50. மே, கூ, நூல், பக். 428 - 437.
51. Paranavitana, S., Ambagamuva Rock Inscription of Vijayabahu II” ( 1058 - 1114 A. D.), Epigraphia Zeylanica, Vol. II, 1912 - 1927. Luả. 202 - 218.
52. Culavamsa, மே. கூ. நூல், Part 1, 1973. அதி. 60,
வரி, 59 - 61
e) 337 வரலாற்றுக் காலம் II

Page 210
S3.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.,
Paranavitana, S., Gud. Sa... It so, Vol. I, Part II, 1960. U. 433.
Culavamsa, Gup. sĩ. J5Tsĩ), Part I, 1973. -99. 60, வரி 34 - 35.
மே. கூ. நூல், அதி. 60 வரி 45 - 47.
Indrapala, K., " A Cola Inscription from the Jaffna Fort ", Epigraphia Tamilica, Vol. I, Part I, (Jaffna ), 1971. uš. 52 - 56.
சதாசிவ பண்டாரத்தார். T. W. மே. கூ. நூல், 1954. ( . 153.
புஸ்பரத்தினம், ப., சோழர் காலக் குடியேற்றங்களால் தோன்றிய பூநகரி இடப் பெயர்கள், யாழ். பல்கலைக் கழகக் கலைப்பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1992.
Indrapala, K., GuD. sa. as, 1971. Luláš. 52 - 56.
Indrapala, K., South Indian Mercantile communities in Ceylon ( circa, 950 - 1250), Ceylon Journal of Historical and Social Studies, s New series). Vol. I, No. 2, July - December 1971. uš. 101 - 113.
பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் ( கி. பி. 1000 - 1250 ), சிந்தனை, தொகுதி 11, இதழ் 1, ஆடி. 1984. பக். 45 - 78.
Abraham, Meera. Gud. Gen. 576i), 1988. Sy 367. 1 - 5.
Pathmanathan, S. , Gud. 3. as. 1979. uši. 59 - 70.
பத்மநாதன், சி. மே , கூ, க. 1984, ப. 82,
புஷ்பரத்தினம், ப. மே. கூ. க. 1992.
Abraham, Meera., Guv. Sí... UBITøv, l988. uši. 79 - 80.
யாழ். - தொன்மை வரலாறு 388 இ

67.
68.
69.
70,
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
Indrapala, K., The Nainativu Tamil Inscription of Parakramabahu-I, University of Ceylon, XXI, No. 1 April 1963, பக். 101 - 113,
பத்மநாதன், சி., மே. கூ க. 1984. பக். 84 - 70.
இந்திரபாலா, கா, மே, கூ, க, 1963, பக். 67  ை68
Pathmanathan, S., "Bronze seal of the Nanad O S is from Hambantota, Paper read at the Seminar of the International Association of Historians of Asia, (Colombo), 1988. August 1 - 5. ud. I - 13.
பத்மநாதன், சி., மே, கூ, க, 1984 பக். 45 - 78. Indrapala, K., GLo. a. 35. I 1963. Luis. 1 0 1 - 11 3.
Abraham, Meera., GD. gr.. Ts), 1988. L. 96.
மேற்படி, ப. 96.
மேற்படி, ப. 96.
பத்மநாதன், சி., வன்னியர், (பேராதனை), 1970.
வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், மே.கூ.நூல், 1993. U. 19.
Paranavitana, S., No. 40, Polonnaruwa slab Inscription of Velaikara’s, Epigraphia Zeylanica, Vol. II, 1912-1927. Luji. 42 -255.
Culavamsa, Gud. 5. MTsi, Part I, 1973. gy g6). 60, வரி. 35 - 44.
மே. கூ. நூல், அதி. 63, வரி. 24 - 29.
Pathmanathan, S., The Kingdom of Jaffna, Part I, (Circa A. D. 1250 - 1450), (Colombo), 1978. uáš. 78 - 79.
O 389 வரலாற்றுக் காலம் 11

Page 211
81. Culavamsa, Gud. as. Ti, Part II, 1973. 96). 66,
வரி. 7 - 8.
82. Paranavitana, S., Gud. s. 5T 5iv, Vol. I, Part II, 1960.
uš. 438 - 460.
83. Раrаnаvitana, S., “Two Tamil Inscriptions from Budu
muttava”, Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933. Luis. 31 I .
84. Culavamsa, Gud. G. grái, Part I, 1973. J. S. 5o,
வரி. 36.
85 மே, கூ, நூல், அதி. 63, பக். 440.
86. மே. கூ. நூல், அதி. 63 வரி. 24 - 27.
87. மே, கூ, நூல், அதி. 70, வரி, 53 - 55.
88. Paranavitana, S. , Gud. n. Dirst), 1960. Uá. 459.
89. Paranavitana, S., “Devanagala Rock Inscription”,
Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933.
шф. 3 1 2 - 335.
90. Culavamsa, Gud. 5. BJTsio, Part II, 1973. s 6G). 74,
வரி 44 - 45.
91. Paranavitana, S., Gud. St. Tổiv, Vol. I, Part II, 1960.
uj5. 473 - 476.
92. Paramavitana, S., மே. கூ. நூல், 1928 - 1933.
udi. 312 - 325.
93. Culavamsa, மே. 5. jITáv, Part 1I, 1973. gys). 76,
வரி. 7 - 9.
94. Paranavitana, S., Gud. sh. SIT 6, Vol. l, Part. II,
1960. i Idi. 475 - 494.
uff. or தொன்மை ai j6rg 39o O

95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
05.
106.
107.
108.
மே. கூ நூல், ப. 482.
மே. கூ. நூல், ப. 483.
மே. கூ. நூல், ப. 488.
சதாசிவ பண்டாரத்தார். T. V., மே. கூ. நூல், 1954, uji. 1 31 - 135.
மே. கூ, நூல், ப. 135.
Indrapala, K., " Invasions from South India and the abandonment of Polonnaruwa ', The Collapse of the Rajaratta Civilization in Ceylon and Drift to the South West, (ed) Indrapala, K., (Peradeniya), 1971. u. 74.
Culavamsa, GuD. 3in... JJ5fT6ö, Part II, 1973. Jgeyg5). 80, வரி. 1 - 5.
Paranavitana, S. G.D. 5. Bratio, Vol. I, Part II, 1960.
Lu. 3 il 2.
Perera. B. J., An examination of the political troubles that followed the Death of King Parakramabahu I, J. R. A. S. C. B ( N. S ), Vol. V, Part II, 1958.
ulėji. Il 73 - Il 82.
Paranavitana, S., GLID. S. 51Tstv, Vol. I, Part II, 1960. பக், 509 - 510,
Perera, B. J., GLID. øn. 36. 1958. Lu. Il 75.
Paranavitana, S., GLD sin. Mrsi, Vol I, Part II, 1960. பக், 509 - 515,
Perera, B.J., Guo. v. s. 1958. Ludii. 177 - 179.
Indrapala, K., ĜuD. 6a. 85. 1971. Lu... 76.
3g வரலாற்றுக் காலம் 11

Page 212
109.
110.
11.
112.
113.
14.
5.
116.
117.
118.
119.
120.
121.
1 22.
123,
124.
மே. கூ. க. ப. 74
மே. கூ. க. பக். 86 - 87.
மே. கூ. க. ப. 76.
மேற்படி, ப, 76.
மேற்படி, ப. 76.
மேற்படி, ப. 78.
மேற்படி, பக். 76 - 77.
இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், (பேராதனை), 1972. பக். 49 - 51.
Culavamsa, Guo. a. DTá), 1973. 95. 80, வரி. 54 - 60,
Liyanagamage, A., The Decline of Polonnaruwa and the rise of Dambadeniya, (Colombo), 1968. Lud. 67 - 75.
Indrapala, K., Guo. s. s. 1971. Lé. 79 - 80.
Liyanagamage, A., GLD. J. D.Tai), 1968. Uds. 98 - 152.
Culavamsa, GLD. d. Grój, Part II, 1973. 93. 83, வரி. 15 - 20.
புஷ்பரத்தினம், ப. * யாழ்ப்பாண இராச்சியத்தின்
தலைநகர்-புதிய நோக்கு ", முத்தமிழ் விழா மலர், 1991. விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழக வெளியீடு
(யாழ்ப்பாணம்), 1991. பக். 36 - 55.
Indrapala, K., G.D. S. 35. 1971. Ludi. 86 - 87.
Culavamsa, GUD. s. 15Tsi, Part II, 1973. gyS). 88,
வரி 62 - 65.
யாழ். - தொன்மை வரலாறு 392 ஐ

123. புஷ்பரத்தினம், ப, மே, கூ, க. 1991. ப. 44.
126. Paranavitana, S., No. 28, Polonnaruwa slab Inscription at the North Gate of the Citadel", Epigraphia Zeylanica, Vol. II, i 912 - 1927. š. i 57 - Il 64.
127. சிற்றம்பலம், சி. க., ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம் ( கி. பி. 1000 - 1250 ), சிந்தனை, தொகுதி 11, இதழ் 11, ஆடி, 1984. பக். 149 - 150.
128. Paranavitana, S., G.D. Jr.. gxf76ü, Vol. I, Part I, 1960.
Ludis. I75 - 176. ,
129. கைலாயமாலை, மே. கூ. நூல், 1939. வரி கக0 - ககரு.
130. மே, கூ, நூல், வரி. கஉ0 - உ00, யாழ்ப்பாண வைபவ
மாலை, மே கூ. நூல், 1949. பக். 27 - 29.
131. - Pathmanathan, S., Guo. esih. UBITsio, 1978. Luši. 146- 148.
132. மே. கூ. நூல், பக். 150 - 156.
133. Culavamsa, Ĝilo. s. glTsio, Part II, 1973. 96). 88,
வரி. 62 - 85,
134. Paranavitana, S., Gud. s. 5/Tổv, Vol. I, Part II, 1960,
Lu. 685.
135. Culavamsa, Ĝuo. 3... BT-ste, Part II, 1973. 93. 90,
வரி. 43 - 47.
136. Pathmanathan, S., Glo. J. EITs), 1978. Lu. 1 75.
37. Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926.
138. பத்மநாதன், சி. , மே. சு. க. 1969/70. ப. 137.
அடிக்குறிப்பு 9.
139. இந்திரபாலா, கா., மே, கூ, நூல், 1972, ப. 49
இ 393 வரலாற்றுக் காலம் II

Page 213
140. Paranavitana, S., GLID. G. Tóã, Vol. I, Part II, 1960.
Ly. 692.
141, இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1972. ப. 49
142. மே, சு. நூல், பக். 50 - 51.
143. புஷ்பரத்தினம், ப. மே. கூ. க. 1991.
144. இந்திரபாலா, கா., மே, கூ, தால், 1972. பக். 81 - 84,
145. மே. சு. நூல் பக். 83 - 84.
146. Paranavitana, S., The Arya Kingdom of North Ceylon, J. R. A. S. C. B. (N. S.), Vol. VI, Part 2, 1961.
196 سے 193 ;ھیJ
147. இந்திரபாலா, கா., மே. கூ நூல், 1972. பக். 66 - 67.
148. Gobu L. Leži 66.
149. Rasamayagam, C. , G3LD. 69,... ps/Talio, 1926. 93). 7.
150. மே , கூ, நூல், பக். 286 - 287.
151. Paranawitana, S., Guo. a. as., 1961. Lui. I87
152. Rasanayagam, C., Gud. Sin. BT76v, 1926. Luši. 284 - 285,
153. மே, கூ, நூல், ப. 285,
154. மேற்படி, ப. 285.
155. Paranavitana, S., G.D. s. s. 1961.
Lu. 88.
156. Rasanayagam, C., (LD. s. dist si), 1926. Lud. 287-288.
157. Paranavitana, S., GuD. s. s. 1981. Luji. 188 - 189.
158. Gunasingam, S., Two Inscriptions of Chola Ilankeswara
Deva, (Peradeniya), 1974. jš. - 0.
யாழ். - தொன்மை வரலாறு 394 இ

59.
160
6.
162.
163.
64.
165.
166.
68%.
59.
70.
17.
172.
173.
174.
செல்வரத்தினம், ம. பொ., மே. கூ, க. 1973. பக், 40 - 41.
புஷ்பரத்தினம், ப. மே, சு. க. 1991.
Pathmanathan, S. , “Cola rule in Sri Lanka”, Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, tЛaffna), vol. 2, January. 1974. u Já. 21 - 22.
புஷ்பரத்தினம், ப. , மே, கூ. க. 1992.
Pathmanathan, S., GLD. 9n. &5. 1974 - Ljó, 22 - 23.
மே. கூ. க. ப. 27.
சதாசிவ பண்டாரத்தார், T.V., பிற்காலச் சோழர் சரித்திரம், (மூன்றாம் பகுதி), (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு) 1961, ப. 17,
Abraham. Meera., (ởưD. đĩ. J5íT6ö, 1988. Lu. 10.
Paranavitana, S., Polonnaruwa - Galpota Inscription of Nissa ukamalla, Epigraphia Zeylanica, Vol. II, 912- 1927.
Lydit, 98 - 1 à 5.
Abraham, Meera., GLID. Gin. Taid, 1988. u. 59.
மே. கூ. நூல், ப. 81.
Mahalingam, T. W., South Indian Polity, (Madras), 1955. L. 386.
Abraham, Meera., Guo. 5. Ji/Tsb, u. 88.
Paranavitana, S. , Ĝuo, d9n... gp/Tsio, Vol. I, Part II, 1960.
uáš. 483 - 484.
Culavamsa, GöILD. Jh.. göstsid, Part II, 96). 76, 77.
மே. கூ, நூல், அதி. 76 வரி. 93 - 148.
O 395 வரலாற்றுக் காலம் II

Page 214
175. மே. கூ. நூல், அதி. 76 வரி. 137 - 241.
176. மே, கூ, நூல், அதி. 76 வரி. 259 - 264.
177. மே. கூ. நூல், அதி. 77, வரி. 27 - 28.
178. மேற்படி, அடிக்குறிப்பு - 1.
179. யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், 1949.
L. 25. கைலாயமாலை, மே. கூ. நூல், 1939. வரி. 70-74,
யாழ். - தொன்மை வரலாறு 396 O

அதிகாரம் ஐந்து
மக்களும் மொழியும்
கற்கால மக்கள்
Iழைய கற்கால மனிதனது எலும்புக் கூடுகள் வடபகுதி யிற் காணப்படாவிட்டாலுங்கூட இக்காலத்திற்குரிய கருவிகள் இரணைமடு, மாங்குளம், முருங்கன் போன்ற பகுதிகளிற் காணப்படுவதால் இப்பகுதியிலும் பழைய கற்கால மக்கள் வாழ்த்தது உறுதியாகின்றது. துரி அதிஷ்டவசமாக ஈழத்தின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கு இப்பகுதியில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால் இக்கால மக்க ளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு விரிவான தடயங்கள் காணப்படவில்லை. எனினுந் தென்பகுதி மக்களின் வாழ்வு பற்றிய தகவல்கள் அதே கலாசாரத்தினைப் பேணிய இப் பகுதி மக்களுக்கும் பொருந்துவனவாகையால் அவற்றை இங்கே எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது.
பழைய கற்கால மனிதனது இத்தகைய ஆதாரங்களை டி. இ. பி. தெரணியாகல இரத்தினபுரிப் பகுதியிற் கண் டெடுத்தார். இரத்தினபுரிக்கு அருகேயுள்ள கான்கொட என்ற இடத்தில் மேற்றாடையின் நடுவிலுள்ள வெட்டுப்பல்லொன் றும் இதற்கு முக்கால் மைலுக்கப்பால் தாடையின் கடை வாய்ப்பல்லொன்றும் இவற்றுக்கு அண்மித்துள்ள இன்னோ ரிடத்தில் முற்பக்க மண்டையோட்டின் இடது பக்க நெற்றி எலும்பும் இவராற் சேகரிக்கப்பட்டன. இவற்றுள் முதலிரண்டு பல்வகையையும் a GOE மனிதனை கோமோபிதிகஸ் gris; 6tuggi) (Homopithecus Sinhaleyus) 6T6076 lb giggluntair மண்டையோட்டிற்குரிய மனிதனை கோமோ சிங்களயுஸ் (Homo Sinhaleyus) 676Tayub g)6up60p sgattulij55 tgl. g). LS). தெரணியாகல அழைத்தார். கோமோ சிங்களயுஸ் எனக்
O 397 மக்களும் மொழியும்

Page 215
கருதப்பட்ட சான்றுகளை ஆராய்ந்த கென்னடி இன்றைய மனித உருவமாகிய கோமோ சப்பியன்ஸ் - சப்பியன்ஸ் உரு வமைப்பைப் பெற முன்னர் குரங்கு நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி கண்ட மனிதனின் ஒரு காலகட்டத்திற்குரிய சான்றுகளாக இவற்றைக் கொண்டார். இவற்றை அவ்வாறு கொண்டாலுங்கூட இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் இரத்தினபுரிப் பிரதேச ஆற்றுப்படுக்கைகளிற் பிற சான்றுகள் காணப்படாதவிடத்து இவற்றைப் பழைய கற்கால மனித னுடையது என்று திட்டவட்டமாகக் கூறமுடியாதென்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கற்கால மனிதனது எச்சங்கள் பெலன்-பண்டி-பல சவைவிட நில்கல, பெலிகல, பதடொம்ப லேன, ராவனல்ல, பெலிலேன, கித்துல்கல போன்ற குகைகளிலுங் கிடைத்துள் ளன. பெலன்பண்டிபலசவில் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 12 மனித சடலங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் ஆண், பெண் ஆகிய இருபாலாரது சடலங்களும் அடங்கியுள் ளன.2 பெலன்பண்டிபலசவிற் கிடைத்த எலும்புகளை ஆராய்ந்த கென்னடி இவற்றினைச் சிங்கள, தமிழ், வேட எலும்புக் கூடுகளோடு மட்டுமன்றி இந்தியாவிலுள்ள காடு களில் வாழும் நாகரிக வளர்ச்சி காணாத பழங்குடி மக்க ளுடைய எலும்புக் கூடுகளோடும் ஒப்பிட்டு நோக்கிய பின் இலங்கையில் வாழும் வேடர் இவ்விடைக் கற்கால மக்களின் சந்ததியினரே எனக் கூறியுள்ளார்.3 இத்தகைய மானிட வியல் ரீதியான ஆய்வுக்கு முன்னர் வேடர் பற்றி ஆராய்ந்த சரசின் சகோதரர்கள், டி. இ. பி. தெரணியாகல, பிரிட்ஜெட், அல்சின் போன்றோரும் இம்முடிவுக்கே வந்திருந்தனர்.4
பொதுவாகத் தென்னாசியாவில் நாடளாவப் பரந்த மக்க ளான "வேடோயிட்” அல்லது "ஒஸ்ரலோயிட்" என அழைக்கப் படுவோரும் வேடர்களது ரகத்தைச் சார்ந்தவர்களாவர். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழியாகும். இவர்களின் ஒரு பகுதியினர் மேற்கேயிருந்து இந்தியா புக, இன்னொரு பகுதியினர் தென்கிழக்காசியா, தூரகிழக்குப் பிராந்தியங்களிற் பரந்திருந்தனர். மானிடவியலாளர் முன்னையவர்களை
யாழ். - தொன்மை வரலாறு 398 O

"ஒஸ்ரோ லோயிட் மக்கட் களை ஒஸ்ரோனேசியன் மக்ககூழ்மம்', என்வும். அழைப்பர். இவர்களின் மொழியான் ஒஸ்ரோ ஏசியற்றிக் மொழிக் குடும் பத்தில் இந்தியாவிலுள்ள்.கொல்-மூண்டா”மெர்ழிகள்" மட்டு மன்றி இலங்கையிலுள்ள வேடர், றொடியர் ஆகியோரது மொழிகளும் அடங்கும். இவர்கள்தான் தென்னாசியாவில் இன்று நாகரிக வளர்ச்சி காணாத மக்கள் எனக் கணிக்கப் படுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இடைக்கற்கால மக்களினது கலாசார வளர்ச்சி பற்றி அல்சின் தம்பதியினர் கூறியவை
ஈண்டு நினைவு கூரற்பாலது.8
* இடைக்கற்காலம் தொடக்கம் பண்பாட்டு ரீதியான விளக்கம் கொடுக்கப்படவல்ல தடயங்கள் காணப்படுவதால், இவற்றினை இன்றும் உயிர் வாழும் பழங்குடி மக்களுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம். இம்மக்களிடம் ஆதி ஒஸ்ரோலோயிட் அல்லது " வேடோயிட் " தன்மை முக்கிய மாக இடம் பெற்றிருந்தது என நாம் கொள்ளலாம். இத்தன்மை இன்றும் பழங்குடி மக்களிடையே மேலோங்கி இருப்பதோடு இந்திய சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கூடிய அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டுமுள்ளது. இடைக்கற்கால மக்களும் தொகையிற். கணிசமானவர்களாக இருந்திருக்கலாம். இதனால் உயிரியல் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் இம்மக்கள் பிற்பட்ட கால இந்தியப் பண்பாட்டு வளர்ச் சிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பினைச் செய்துள்ளனர். இந்தியாவுக்கென்ற தனித்துவமான மனப்பான்மைகள் கருதுகோள்கள் எனக் கருதப்படுபவை இம்மக்களின் பண்பாட்டிலிருந்துதான் துளிர்த்திருத்தல் வேண்டும். "
இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வரும் புதிய கற்காலத்திற் குரிய தடயங்கள் இற்றைவரை ஈழத்திற் கண்டுபிடிக்கப்பட வில்லை. தமிழகத்திற் பெருங்கற்காலக் கலாசாரத்தினைப் பேணிய மக்கள்தான் இடைக்காலத்தை அடுத்து ஈழத்திற் பரந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
)ே 399 மக்களும் மொழியும்

Page 216
பெருங்கற்கால மக்கள்
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தென்னிந்தியா விலும், அரைநூற்றாண்டுக்கு மேலாக ஈழத்திலும் நடைபெற்ற அகழ்வுகள் பெருங்கற்காலக் கலாசாரத்தினை உருவாக்கிய மக்கள் பற்றியும் அவர்களது மொழி பற்றியும் பலதரவுகளைத் தந்துள்ளன. இத்தகைய ஆய்வுகளிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகளை மானிடவியலாளரான கென்னடி ஆராய்ந்து முதல் முறையாக இம்மக்கள் பற்றி விஞ்ஞான ரீதியில் ஒரு நூலை 1975இல் வெளியிட்டுள்ளார். இவருக்கு முன்னர் பலர் இவ் விடயம் பற்றி ஆராய்ந்தாலும் இவரைப் போலத் தெளிவான முறையிற் கருத்தினை வெளியிடவில்லை. இப்பெருங்கற்காலக் கலாசாரம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கென்னடியின் ஆய்வுகளும் அல்சின் தம்பதியினரின் ஆய்வுகளும்3 நன்கு விளக்கியுள்ளன.
இத்தகைய கலாசாரம் புதிய கற்கால மக்களால் வளர்த் தெடுக்கப்பட்ட கலாசாரமென்பதையே தென்னிந்தியாவில் இக் கலாசாரத்திற்குரிய மையப் பிரதேசங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டி உள்ளன.9 எவ் வாறெனில், தென்னிந்தியாவில் விவசாயம், நெற்றானிய உற்பத்தி, மந்தை வளர்ப்பு ஆகிய தொழில்களை மேற் கொண்டிருந்த புதிய கற்கால மக்களின் ஈமமுறைகளிற் கி. மு. 1000 ஆண்டளவிற் பெரிய கற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. வெளி யுலகுடன் இவர்கள் கொண்டிருந்த தொடர்பினாற்றான் இவர் களின் இப்புதிய கற்காலக் கலாசாரத்தில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது. இதனால் இவர்களின் கலாசாரமும் பெருங்கற் காலக் கலாசாரம் என அழைக்கப்பட்டது. இப்பெருங் கற்காலக் கலாசாரமே தென்னிந்திய நாகரிக வளர்ச்சிக்குக் கால்கோளாக அமைந்திருந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். இதற்கு முன்னரெல்லாம் தென்னிந்தியாவிற் புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகியன வெவ்வேறு மக்களால் வளர்த் தெடுக்கப்பட்ட கலாசாரங்களென்றே கருதப்பட்டன. இதற்குக் காரணம் கலாசார அம்சங்களின் சேர்க்கையைத் தெளிவாக
யாழ். - தொன்மை வரலாறு 4oo C

விளக்கும் அகழ்வியற் படைகளை ஆய்வாளர்கள் நுணுகி ஆராயாது விட்டமையே. ஆனாற் புதிய கற்காலக் கலா சாரப் படைக்கும் பெருங்கற்காலக் கலாசாரப் படைக்குமிடையே நிலவிய தொடர்பினை அகழ்வாராய்ச்சிப் Lent-werfloor சேர்க்கை எடுத்துக் காட்டுவதை அவதானிக்கும்போது புதிய கற்காலத்தினை உருவாக்கியவர்களே பெருங்கற்காலத்திற்கும் உரியவர் என்பது உணரப்பட்டுள்ளது.10 இத்தகைய கருத் தினைப் புதிய கற்காலத்திற்குப் பின்னர் தென்னிந்தியாவில் எந்தவொரு பெரிய அளவினாலான புலப்பெயர்வும் நிகழாமை உறுதிப்படுத்துகின்றது.
ஈழத்தினைப் பொறுத்தமட்டிற் புதிய கற்காலத்திற்குரிய தடயங்கள் இங்கு இற்றைவரை கிடைக்காவிட்டாலுங்கூட இடைக்கற்காலத்தினைத் தொடர்ந்து புதிய கற்கால மக்களுக் குப் பதிலாகப் பெருங்கற்கால மக்களே ஈழத்தில் விவசாயம், நெல் உற்பத்தி, நீர்ப்பாசனம் ஆகியனவற்றைப் புகுத்தினர் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இக்கலாசாரத்திற்குரிய இவ் எலும்புக் கூடுகளோடு காணப் படும் இடைக் கற்காலக் கருவிகள், இடைக்கற்கால மக்களாகிய ஒஸ்ரலோயிட் வர்க்கத்தினர் இக்காலத்திற் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய மக்களோடு இணைந்து இங்கு வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
இதற்கு முன்னரெல்லாம் ஈழத்து நாகரிக வளர்ச்சி பற்றி ஆரர்ய்ந்த பரணவித்தானா போன்றோர் பாளிநால்களை மையமாகக் கொண்டு நீர்ப்பாசன விவசாயம், நெல் உற்பத்தி போன்ற அம்சங்களைப் புகுத்தியோர் வடஇந்தியாவிலிருந்து ஈழம் வந்த ஆரிய மக்கட் கூட்டத்தினர் என்ற கருத்தினைத் தெரிவித்தனர்.11 எனினும் ஈழத்திற் காணப்பட்ட பெருங்கற் காலக் கலாசாரச் சின்னங்களை ஆராய்ந்த இவர் இவற்றுக்கும் தென்னிந்திய பெருங்கற்காலச் சின்னங்களுக்குமிடையே இழை விட்டோடும் ஒற்றுமையை அவதானித்தாலும், இக்கலாசாரம் ஆரிய கலாசாரத்திற்குப் பின்னர்தான் ஈழத்திற் புகுந்தது என்றும் ஈழத்து நாகரிக வளர்ச்சியில் ஆரிய கலாசாரம் ஏற் படுத்திய தாக்கத்தினை இது ஏற்படுத்தவில்லை என்றுங் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனோடு ஈழத்து நாகரிக
இ9 4o மக்களும் மொழியும்

Page 217
கர்த்தாக்கள் பற்றியும் பரணவித்தானாவுக்கு இருந்த மயக் கம் பற்றி இங்கு குறிப்பிடுதல் அவசியமாகின்றது. கற்கால மக்கள் பற்றிக் கூறிய இவர் இவர்களை யாரென்று தெளி வாக அறியமுடியாவிட்டாலுங்கூட இன்று சிங்கள - தமிழ் மொழி பேசுவோரிற் பெரும்பான்மையினர் இவர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறத் தவறவில்லை.12
இப்பின்னணியிற்றான் ஈழத்தின் பெருங்கற்காலக் கலாசார மையப் பிரதேசங்களிற் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்த கென்னடி இதனை உருவாக்கியவர்கள் தென்னகத்தில் இதனை உருவாக்கியவர்களின் இனத்தவரே என்பதை எடுத்துக் காட்டி யுள்ளமை முக்கியம் பெறுகின்றது.13 இவ்விரு பகுதிகளிலும் இக்காலத்திற் புதியதொரு மக்கட் கூட்டத்தினர் புகுந்ததற் கான எவ்வித தடயங்களுமில்லை எனக் கூறுங் கென்னடி ஈழத்துப் பெருங்கற்காலக் கலாசாரத்தினைத் தென்னிந்திய திராவிட மக்களே உருவாக்கினார்கள் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இவரது இத்தகைய கருத்துக்குப் பிரதான சான்றாதாரமாக அமைந்தது புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பிற் கிடைத்த எலும்புக் கூடுகளாகும். 14 இம் மக்கள் இடைக்கற்கால மக்களுடன் கொண்டிருந்த தொடர் பினை உறுதி செய்வனவாக இவற்றிற் சிலவற்றுக்கும் இடைக்கற்கால மக்களின் எலும்புக்கூடுகளுக்குமிடையே இழை விட்டோடும் ஒற்றுமை விளங்குகின்றது.
இச்சான்றுக்கு இன்னொரு கோணத்திலும் விளக்கம் கொடுக்கலாம். அஃதாவது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் விஜயன், குவேனி கதை கட்டுக்கதையாக இருந் தாலுங்கூட விஜயனினதுஞ் சகாக்களினதுங் குடியேற்றங்கள் அமைந்துள்ள இடங்களாகத் தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்களிற் கர்ணப்படுங் குறிப்புகள் உண்மையிலே இந்நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இவ்விடங்கள் நாகரிக மையங்களாக விளங்கியதையே எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் விஜயன் காலக் குடியேற்றங்களில் நாகதீபம், தம்பபண்ணி, மகாதித்த ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளமையும் ஈண்டு அவதானிக்கத் தக்கது. மகாதித்த என்பது மாதோட்டத் துறைமுகமாகும். இவ்வாறே தம்பபண்ணி என்பதும் மாதோட்டப் பகுதியில்
யாழ். - தொன்மை வரலாறு 4O2 O

ஒடும் அருவியாற்றங்கரையிலமைந்திருந்த இடம் என ஆய்வாளர் களால் இனங் காணப்பட்டுள்ளது. நாகதீபமாகிய வடபகுதி யிற் கந்தரோடை, ஆனைக்கோட்டை, சத்திராந்தை, சாட்டி, மண்ணித்தலை, மாமடுவ போன்ற இடங்களிற் காணப்படுந் தொல்லியற் சின்னங்கள் ஈழத்துப் பெருங்கற்காலக் கலா சாரத்தின் ஒரு முக்கிய தடயமாக இப்பகுதி விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளமையுங் குறிப்பிடத்தக்கது. விஜயன் யகூஷப் பெண்ணாகிய குவேனியை மணந்த ஐதீகங்கூட இந்நாட்டிற்கு நாகரிகத்தினைப் புகுத்திய பெருங்கற்கால மக்கள் முன்னர் இங்கு வாழ்ந்த கற்கால மக்களோடு கொண்டிருந்த தொடர்பினை உருவகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நிற்க, 1952இல் மாதோட்டத்திற் சண்முகநாதனாற் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய மனித எலும்புக் கூட்டினை ஆராய்ந்த ஜெயவர்த்தனா, சண்முகம் ஆகியோர் இதனைத் தென்னிந்திய வர்க்கத்தினருக்குரியதொன் றாகக் கொண்டனர். 15 இவ்வெலும்புக்கூடு எடுத்துக் காட்டுத் தென்னிந்தியர்களே ஆனைக்கோட்டையிலுங் காணப்பட்டனர் என்பதனை இங்கு கிடைத்த இரு எலும்புக் கூடுகளிற் குறிப் பாக இவற்றுள் ஒன்றுக்கும், மாந்தையிற் கிடைத்த எலும்புக் கூடு அடக்கம் செய்யப்பட்ட முறைக்கும் இடையே கர்ணப்படும் ஒற்றுமை மட்டுமன்றி இங்கு கிடைத்த வெண்கல முத்திரையும் உறுதிப்படுத்தியுள்ளது. 16 இரு வரிவடிவங்களிலமைந்த இம் முத்திரையின் வாசகங் கோவேந்த அல்லது கோவேதன் அல்லது கோவேத அல்லது கோவேதம் என்ற பழந்தமிழ் வாசகம் என இனங்காணப்பட்டுள்ளது.17 இதனால் இவ் வெலும்புக் கூடுகளுக் குரியவர்கள் திராவிடமொழி பேசிய தமிழ் மக்களே என்பதும் உறுதியாகின்றது.
மொழி
இச்சந்தர்ப்பத்திற் கற்கால மக்களின் மொழி பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. பழங்கற்கால மக்களின் மொழி பற்றிய தடயங்கள் காணப்படாவிட்டாலுங்கூட இடைக்கற்கால மக்களின் மொழி பற்றி அண்மைக்கால ஆய்
O 4O3 மக்களும் மொழியும்

Page 218
வுகள் எடுத்தியம்புகின்றன. இத்தகைய ஆய்வின் களமாக ஈழத்தின் தென்பகுதி காணப்பட்டாலுங்கூட இது பற்றிய குறிப்பு வடபகுதியில் வாழ்ந்த இக்கால மக்களின் மொழி பற்றிய விளக்கத்தினை அளிக்க உதவுவதால் அது பற்றி இங்கே முதலிற் குறிப்பிடுவது அவசியமாகின்றது. 18
இடைக்கற்கால மக்களுடைய மொழியினது எச்சங்கள் பின் வந்த மொழிகளிலே தாவரங்கள், மிருகங்கள், இடங்கள் ஆகியனவற்றின் பெயராக நிலை கொண்டுள்ளதை மொழியிய லாளருஞ் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இத்தகைய கண்ணோட் டத்தில் இலங்கைத் தமிழ்மொழி ஆராயப்படாவிட்டாலுங்கூட சிங்கள மொழி ஒரளவுக்கு ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. கிராமிய மக்களின் வாழ்க்கையிற் பயன்படுத்தப்பட்ட ஒஸ்ரிக் மொழிச் சொற்களாக இவ்வரிசையில் 200 சொற்கள் வரை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.19 அண்மைக் காலத்தில் இம்மொழி பேசியோரது இவ்வெச்சங்களுக்குந் தென்கிழக் காசிய, மாலைதீவு மொழிகளுக்குமிடையே உள்ள உறவு பற்றி யும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.20 இச்சந்தர்ப்பத்திற் சிங்கள மொழிக்கும் ஒஸ்ரிக் மொழிக்கும் இடையேயுள்ள உறவு பற்றி ஆராய்ந்தோர் வெளிக்கொணர்ந்த ஒருசில உதாரணங்களை எடுத்துக் காட்டுதல் அவசியமாகின்றது. ஈழத்திற் பல ஆறு களுக்குப் பொதுவான பெயராக வழங்கப்படுங் “ கங்கை "" என்ற சொல் இந்நாட்டின் ஆரியரது குடியேற்றம் நடைபெற்ற போது இவற்றுக்கு இடப்பட்ட பெயராகும் என நம்பப்பட்டு வந்துள்ளது. ஆறு எனப் பொருள் தரும் இக்கங்கை என்ற சொல் ஒரு ஒஸ்ரிக் மொழிச் சொல்லேயாகும். இதுவே வெவ் வேறு வடிவங்களிலே தென் ஆசிய, இந்தோசீனப் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுகின்றது. இதற்குச் சான்றாக ஆறு எனப் பொருள் தரும் பதங்கள் வங்காள 'காங்", இந்தோ சீனத்திலுள்ள "கொங்’, ‘மீ - கொங்", தென் சீனப் பிராந்தியத்தி லுள்ள 'கியாங்", "கங்', 'காங்", "யங்சே கியாங்" போன்ற வடிவங்களிலுள்ளது என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.* கங்கை என்ற சொல் மட்டுமன்றி ஆற்றைக் குறிக்கும் இன் னொரு சொல்லான "ஒயா" கூட இம்மொழியின் வடிவமாக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. சிங்கள மொழியில்
யாழ். - தொன்மை வரலாறு 4O4 O

உடலுறுப்புகளுக்கு வழங்கப்படும் ஒலுவ (தலை), ககுல (கால்), கட (வாய்), கலவ (தொடை), தொல (வாய், இதழ்) பட (வயிறு) போன்றனவும் ஒஸ்ரிக் மொழிச் சொற்களே.22 மிருகங்களின் பெயர்களான அலியா (யானை), கொட்டியா (புலி) போன்றனவுந் தாவரங்களின் பெயர்களான பொல் (தென்னை), கொஸ் (பலா) ஆகியனவும் இவ்ரகத்தைச் சேர்ந்தனவே. இத்தகைய உதாரணங்கள் இந்நாட்டுச் சிங்கள - தமிழ் மொழிகள் இக்கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன. வரலாற் றுதய காலத்திற் சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களின் மூதாதையினர் இவ்விடைக்கற்கால மக்களை எதிர்கொண்டு அவர்களைத் தமது கலாசாரத்திற்கு வழிப்படுத்தியபோது அவர்களில் ஒரு பகுதியினர் காடுகளில் ஒதுங்க, ஏனையோர் இவர்களுடன் கலந்த தன்மையினாற்றான் இத்தகைய எச் சங்கள், இருமொழிக் கலப்பின் சின்னங்களாக விளங்குகின் றன. இம்மொழியியற் சான்றினைப் பெருங்கற்காலப் பண் பாடு செழித்த பகுதியாகிய பொம்பரிப்பிற் கிடைத்த எலும்பு களும் உறுதி செய்துள்ளன. இடைக்கற்கால மக்களும் பின் வந்த சிங்கள - தமிழ்மொழி பேசியோரின் மூதாதையினரும் உயிரியல் ரீதியாக இணைந்ததை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உறுதி செய்துள்ளது.23
பெருங்கற்கால மக்கள் பேசிய மொழியாக மூலத் திராவிடத்திலிருந்து துளிர்த்த மொழிகளே எலு, தமிழ் ஆகியன வாகும். இவ்வெலு மொழிதான் தற்காலச் சிங்களமொழி யின் மூலமொழியாகும். இவ்விரு மொழிகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன என்பதை இவ்விருமொழி களிலுமிருந்து வளர்ச்சி பெற்ற சிங்கள, தமிழ் மொழிகளுக் கிடையே காணப்படும் ஒற்றுமை மட்டுமன்றி, ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகளிற் (இன்றைய சிங்கள மொழி வழக்கிலிருக்கும் பகுதிகளில் ) காணப்படும் பல பழைய தமிழ் வடிவங்களாகிய பருமக, ஆய், வேள், பரத போன்றனவும் எடுத்துக் காட்டுகின்றன. பெளத்தத்துடன் இங்கு வந்த பாளிமொழியின் செல்வாக்காற்
(9 4O5 மக்களும் மொழியும்

Page 219
றான் எலு மொழி தனியான பண்புகளையுடைய வட இந்திய மொழிச் சாயலையுடைய சிங்கள மொழியாக வளர்ந்தது என்பதும் இன்று ஏற்கப்பட்டுள்ளது. 24
புதிய கற்கால மக்கள் தற்காலத்திலே தென்னிந்தியாவிலே இராவிட மொழிகளைப் பேசும் மக்கள் என்பதனைத் தற்காலத் திராவிட மொழி பேசுவோரினதும், புதிய கற்கால மக்களி னதும் எலும்புக் கூடுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையைக் கொண்டு கென்னடி நிறுவி உள்ளார். இதனால் இன்று தென்னிந்தியாவிற் பேசப்படுந் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் புதிய கற்காலத்திலேயே இப் பகுதியில் நிலைகொண்டிருந்த மூலத் தென்னிந்தியத் திராவிட மொழியிலிருந்து கி. பி. 1000 ஆண்டளவிற் பெருங்கற்காலக் கலாசாரம் வளர்ச்சியடைந்தபோது துளிர்த்த மொழிகளென லாம். இவற்றுள்ளே தமிழ் மொழி அடைந்த வளர்ச்சி இம் மொழிகளில் மூத்தமொழியாக இதனை ஆக்கியுள்ளதோடு இலக்கியங்கள் படைத்த பழைய செம்மொழியாகவும் இதனை
உருவாக்கி விட்டது.
வடபகுதியும் தமிழ் மொழியும்
ஈழத்துத் திராவிட மக்களின் மொழிகளிலே தமிழும் ஒன்றாகும் என்பதனை நிரூபிப்பதாக அமைவதுதான் இன்றும் யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கிலிருக்கும் பல மிகப்பழைய தமிழ்ச் சொற்களாகும். இவை தமிழகத்துச் சங்க காலத்தைப் போன்ற தமிழக மரபு ஈழத்தில் வழக்கிலிருந்ததையும், பேணப்பட்டிருந்ததையும் உறுதி செய்கின்றன. இது பற்றித் திருநாவுக்கரசு கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.25
* பொதுவாக யாழ்ப்பாணத்திற் பழைய சங்கத் தமிழ்ச் சொற்கள் பல இன்றும் வழக்கில் உள்ளன. இது மட்டும் அல்லாமல், டாக்டர் கால்டுவெல் கூறுவதைப்போல, தமிழ கத்தின் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சமஸ்கிருத மொழியின் கலப்புக் குறைந்து காணப்படுவதோடு, தூய தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுவதையும் காண்கின்றோம். தமிழகத்தை விட யாழ்ப்பாணத்தில் வடமொழிச் சொற்கள்
யாழ். - தொன்மை வரலாறு 4O6 ()

மிகமிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. ஐது, அதர் என்னும் பழந்தமிழ்ச் சொற்கள் அங்கு இன்றும் வழக்கில் உள்ளன. 'அ' எனும், சுட்டெழுத்து சேய்மையில் உள்ள பொருளைச் சுட்டப் (அவன், அவள், அது) பயன்படுவதாகும். இதைப்போன்று "இ" எனும் சுட்டெழுத்து அருகிலுள்ள பொருளைச் சுட்டப் (இவன், இவள், இது) பயன்படுவதாகும். இவ்விரண்டிற்கும் இடை யில் உள்ளவற்றைச் சுட்ட உகரத்தைப் (உவன், உவள், உது) பயன்படுத்துவது தொல்காப்பியர் காலத்திய வழக் கமாகும். பிற்காலத்தில் இவ்வழக்கம் தமிழகத்தில் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் அந்தப் பழைய வழக்கம் பேச்சு வழக்கில் இருந்து வரு வதைக் காண்கின்றோம். சிறுபிள்ளைகளை "மகனே" என்று விளிப்பது தொல்காப்பியர் காலத்திய மரபாகும். இன்றும், யாழ்ப்பாணத் தமிழர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில், இவ்வாறு விளிப்பது வழக்கமாக இருந்து வரு கிறது. பழந்தமிழில் மொழிக்கு முதலில் - சொல்லின் தொடக்கத்தில் - வராத எழுத்துகள் ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்பன ஆகும்.
பிறமொழிச் சொற்கள் இந்த எழுத்துகளில் யாதாகிலும் ஒன்றை முதல் எழுத்தாகக் கொண்டு வழங்குவது உண்டு. இச்சொற்களைத் தமிழில் வழங்கப்பட்ட பிறமொழிச் சொற்களாகப் பயன்படுத்துகிற பொழுது, பொருத்த மான உயிர் எழுத்தை முதலில் சேர்த்து வழங்க வேண்டும் என்பது இலக்கண நூலாரின் துணிவாகும். 'ரதம்" என் பதை "இரதம்" எனவும், "ருசி" என்பதை "உருசி" எனவும், " லட்டு " என்பதை * இலட்டு " எனவும் வழங்குவது வழக்கம். இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் கல்வியறிவில்லாப் பாமர மக்களும் உருசி ( சுவை ), இரத்தம் எனப் பேசு வதைக் கேட்கின்றோம். இவை மட்டும் அல்லாமல் கழியும், இறைச்சி, ஊண், அங்கா, பீலி, சீலை, புழை போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் இன்றும் பேச்சுத் தமிழில் இடம் பெற்றுள்ளன. இவை யாவற்றையும் கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது கடைச்சங்க காலத்தில், பூgலங்கா
9 4o7 மக்களும் "மொழியும்

Page 220
தமிழகத்தின் ஒரு பகுதியாக இல்லையென்றாலும், தமிழ் வழங்கும் நிலமாகத் தமிழ்ப் பண்பாட்டுப் பண்ணையாக
இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. *
தமிழகத்திலே அமைந்திருந்த சங்கத்திற்குச் சென்று தமிழ்ப் பாடல்களை அரங்கேற்றும் அளவுக்கு ஈழத்திற் தமிழ்ப்புலமை சிறந்து விளங்கியது. இதனைச் சங்க நூல் களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றுட் காணப்படும் பூதந்தேவனாரின் பாடல்கள் எடுத்துக் காட்டு கின்றன. இந்நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என இருவர் குறிப்பிடப்பட்டாலும் இவ்விருவரும் ஒருவரே என்பது உறுதியாகியுள்ளது. மதுரை யில் வாழ்ந்ததாலேயே ஈழத்துப் பூதந்தேவனார் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார்.28 இச்சந்தர்ப் பத்திலே தமிழகத்திற்கும், ஈழத்திற்கும் இடையே நிலவிய மொழி ரீதியான தொடர்பு பற்றி ஆ. சதாசிவம் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.27
* இவ்வரலாறுகளை ஊன்றி ஆராயுமிடத்துக் கடைச் சங்க காலத்தில் ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததென்பதும், மனுநீதிகண்டசோழன் எனப் புகழப்படும் எல்லாளன் முதலியோர் தமிழ் கூறும் நல்லுலகத்தை ஒருங்கே ஆண்டு வந்தனர் என்பதும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரேயொரு புலவரவைக் களமா யிருந்த மதுராபுரியை நாடிப் பல பகுதிகளிலுமிருந்து புலவர்கள் சென்றனர் என்பதும் தெரியக் கிடக்கின்றன. எனவே, ஈழத்துப் பூதன்றேவனார் முதலிய யாவருக்கும் பொதுவாகிய சங்க இலக்கிய மரபே ஈழத்துத் தமிழிலக்கிய மரபுமாகும். "
இப்பூதந்தேவனார் என்ற பெயர் இவரின் தந்தையாகிய
* பூதன் ஆகியவற்றை இணைத்தே உருவானது எனக் கொள்ளலாம். இவரினாற்
இவரின் பெயராகிய 9 தேவன்
பாடப்பட்ட ஏழு பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் உள்ளன. ஈழத்திற்குரிய மிகப்
யாழ். - தொன்மை வரலாறு 408 O

பழைய செந்தமிழ்ப் பாடல்களாக இவை காணப்படுவதர்ல் இவற்றை இங்கே பதிவு செய்வது அவசியம் ஆகின்றது.
இப்பாடல்கள் குறிஞ்சி, பாலை ஆகிய திணைகளுக்குரியன.
முதலிற் குறிஞ்சித் திணையிலுள்ள பாடல்களை அவதானிப் போம். இப்பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை ஆகியவற்றுள் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றில் உள்ள பாடல் இரவுக் குறிவந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லிய தாக அமைகின்றது.28
முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்குவணர்ப் பெருங்குரல் உணிஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக் கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளிஇய நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம் நடுங்கு துயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத் திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம் இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஒர்க்குங் காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே
இவ்வாறே குறுந்தொகைப் பாடலும் தலைமகன் சிறைப் புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியதாக அமைந்துள்ளது.29
வெறிஎன உணர்ந்த வேலன் நோய்மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே
O 4og மக்களும் மொழியும்

Page 221
அடுத்து வருவதுதான் அகநானூறு, குறுந்தொகை, நற் றிணை ஆகிய நூல்களில் இடம்பெறும் பாலைத்திணைப் பாக்களாகும். இவற்றுள் முதலாவதாக அகநானூற்றிலே தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியதாகப் பின்வரும் unr 6ão அமைந்துள்ளது.30
அஃதாவது,
செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க்கு உறுமிடத் துய்க்கும் உதவி யாண்மையும் இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ யுள்ளுநர்ப் பணிக்கும் ஊக்கருங் கடத்திடை வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக வருவர் வாழி தோழி பொருவர் செல்சமங் கடந்த செல்லா நல்லிசை விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன் பாடுபெறு சிறப்பிற் கூடல் அன்னநின் ஆடுவண் டரற்று முச்சித் தோடார் கூந்தன் மரீஇ யோரே
இதே நூலிற் பிரிவுணர்த்தப்பட்ட, தோழி தலைமகனைச் செலவு விலக்கியதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.31
சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகலெழில் அல்குல் அவ்வரி வாடப் பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப் பெயலுறு மலரிற் கண்பனி வார ஈங்கிவள் உழக்கும் என்னாது வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப்
யாழ். - தொன்மை வரலாறு 41 O O

பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது இரும்புறாப் பெடையோடு பயிரும் பெருங்கல் வைப்பின் மழைமுத லாறே
குறுந்தொகையில் வினை தலை வைக்கப்பட்ட விடத்துத் தலைமகன் பாங்கற்கு உரைத்த நிகழ்ச்சி பின்வருமாறும்,82
இன்றே சென்று வருதும் நாளைக் குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக் கால்இயல் செலவின் மாலை எய்திச் சில்நிரை வால்வளைக் குறுமகள் பல்மாண் ஆகம் மணந்துஉவக் குவமே
தோழி கிழத்தியை உடன் போக்கு நயப்பக் கூறியது பின்வருமாறும் அமைந்துள்ளது.33
நினையாய் வாழி தோழி நணைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை வெண் கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரு மாறே
நற்றிணையிற் பூதந்தேவனாரின் பாடல் உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியதாக அமைந்துள்ளது.84
அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் திருந்திழை அல்குல் பெருந்தோள் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழிஇக்
O 41 மக்களும் மொழியும்

Page 222
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி ழுதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழியில் வுலகத்தானே
இவ்வாறு ஈழத்துத் தமிழ்ப்புலமை சங்கப்பாக்களில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடா நாட்டிற் காணப்படும் பல சங்கத் தமிழ்ச் சொற்கள் பெருநிலப்பரப்பிலும் வழக்கில் இருந்திருக்கலாம். முறையான ஆய்வு இதனை உணர்த்தும் என்பதை வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுந் தமிழ் இனக்குழுக்களான "வேள்', ‘பரதவர்” போன்ற சொற்களும், ‘பருமக" போன்ற விருதுப் பெயர் களும் எடுத்துக் காட்டுகின்றன. இதே கல்வெட்டுகளிற் காணப்படுந் தமேட (தமிழ்) பற்றிக் காணப்படுங் குறிப்புகள் தமிழகத்தோடு ஈழத்தின் வடபகுதி கொண்டிருந்த இறுக்க மான தொடர்பினை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய பின்னணியிற்றான் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவரான பூதந்தேவனாரின் பாடல்களை ஆராய வேண்டியுள்ளது. இப் பூதந்தேவனாரை ஈழத்தவரென ஏற்றுக் கொள்ளும் வேலுப் பிள்ளை இவரின் இருப்பிடம் ஈழத்தின் தென்பகுதியிற் குறிப் பாகக் கேகாலை, குருநாகல் மாவட்டங்களிலமைந்திருந்தது எனக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.36 இதற்காதாரமாக இப்பகுதியிற் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த தமிழ் மரபை உறுதிப்படுத்துங் கல்வெட்டுகளை எடுத்துக் காட்டியுள் ளார். இப்பகுதிகளிற் சங்ககாலத்தில் வழக்கிலிருந்த " பெருமகன்" போன்ற விருதுப்பெயர்கள், ஆய், வேள், பரதவர் போன்ற இனக் குழுப் பெயர்கள் ஆகியன காணப்பட்டதைக் கிறிஸ் தாப்தத்திற்கு முன் புள்ள பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பதால் இக்கருத்தினை முற்றாக நிராகரிக்க முடியாவிட்டாலும், ஈழத்தின் வடபகுதி தமிழகத்திற்கு அண்மித்திருப்பதாலும், இப் புலவர் வடபகுதியிலிருந்தே தமிழகத்துக்குச் சென்றிருக்
யாழ். - தொன்மை வரலாறு 412 ()

கலாமென ஊகிப்பதிலே தவறில்லை. இவரைப் போன்று இன் னும்பல ஈழத்துப் புலவர்கள் தமிழகஞ் சென்றிருக்கலாம். இவர்கள் யாத்த இப்பாடல்கள் நமக்குக் கிடைக்காதிருக்கலாம். இவ்வாறு ஈழமுந் தமிழகமும் நெருங்கிய முறையிலே தொடர்பு கொண்டிருந்தமையை தமிழகத்திலிருந்து ஈ ழ த் தி ன் மீது மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகளும் எடுத்துக் காட்டு கின்றன. இத்தகைய படைஎடுப்புகளின் விளைவாக அநுராதபுரத்திலே தமிழராட்சி நிலைத்தது பற்றியே பாளி நூல்கள் கூறுகின்றன. அநுராதபுரத்தில் ஏற்பட்ட தமிழர் ஆட்சி வடபகுதியோடு எத்தகைய தொடர்புகளைக் கொண் டிருந்தது என்பது பற்றிப் பாளி நூல்களில் எதுவித குறிப்புங் காணப்படாவிட்டாலுங்கூட இவர்களின் ஆட்சி வடபகுதியிலே தமிழரின் வலுவைக் கூட்டுஞ் சக்தியாக விளங்கியிருக்கும் என்றால் மிகையாகாது.
3FTBF6OTr:1866T
பெளத்தமதம் கி. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் ஈழத்திற் கால் கொண்டபோதுதான் இம்மதத்தின் மொழியாகிய பாளிமொழியும், அதனை எழுதப் பயன்படுத் தப்பட்ட வடஇந்தியப் பிராமி வரிவடிவமும் அறிமுகமாகியது என்ற கருத்துப் பன்னெடுங்காலமாகச் செல்வாக்குப் பெற்றிருந் தது. விஜயனின் வழிவந்த சிங்கள மக்களின் குடியேற்றம் பற்றிய ஐதீகத்தில் நம்பிக்கை கொண்டோர் சிங்கள மக்களின் குடியேற்றத்திற்கும், அவர்களின் வடஇந்தியத் தொடர்புக்கும் இவற்றைச் சான்றாதர்ரமாகக் காட்டவும் பின்னிற்கவில்லை.86 எனினும் இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த அறிஞர்கள், பெளத்தம் இங்கு கால்கொள்ள முன்னரே பிராமி வரி வடிவம் ஈழத்திற் புகுந்து விட்டதை எடுத்துக் காட்டத் தவறவில்லை. பரணவித்தானாவிற்கு இத்தகைய சந்தேக மிருந்துங்கூட, இது பற்றி அவர் ஆழமாக ஆராயவில்லை. ஆனாற் பெர்னாண்டோ, சத்த மங்கல கருணரத்தினா போன்றோர் பெளத்தத்துடன் வட இந்தியப் பிராமி வரிவடி வம் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு ஏற்கெனவே ஒரு பிராமி வரிவடிவம் இருந்தது என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
O 413 மக்களும் மொழியும்

Page 223
இவ்வரிவடிவத்திற்குந் தென்னிந்தியாவில் அப்போது வழக்கி லிருந்த வரிவடிவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் இவர்கள் இனங்கண்டனர்.
கி. மு. 500 ஆம் ஆண்டளவில் முழு இந்தியாவிலும் பிராமி வரிவடிவமே காணப்பட்டாலுங்கூட, இது பிராந்திய ரீதியாக இரு கூறுகளாகக் காணப்பட்டது என்பதை முது பெருங் கல்வெட்டியலாளரான பியூலர் எடுத்துக் காட்டியுள் ளார். இது வடஇந்திய, தென்னிந்திய பிராமி வரிவடிவங்க ளாகக் காணப்பட்டது. தென்னிந்திய வரிவடிவத்தையே அறிஞர்கள் "திராவிடி" அல்லது "தமிழி’ என்ற வரிவடிவமாகக் கொண்டனர். இவ்வரிவடிவத்திற்கும் ஈழத்திற்குப் பெளத்தம் அறிமுகமாக முன்னர் காணப்பட்ட பிராமி வரிவடிவத்திற்கு மிடையே உள்ள ஒற்றுமை இவர்களாற் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதோடு இவ்வரிவடிவ எழுத்துகளுக்குந் தமிழகத்துப் பிராமி வரிவடிவத்திலுள்ள எழுத்துகளுக்குமிடையே உள்ள ஒற்றுமையும் எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கான சான்றாதா ரங்களாக ஈழத்தின் பிராமி வரிவடிவத்திலுள்ள அ, இ, உ, 6T, LD, 67, U. U, 5, ef, di போன்ற எழுத்துகள் இனங் காணப்பட்டுள்ளன.37 இத்தகைய வரிவடிவத்திலே தமிழுக்குரிய சிறப்பான எழுத்துகளாகிய ள, ழ ஆகியன வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளக் கல்வெட்டுகளிற் காணப்படுவது ஈண்டு அவதானிக்கத்தக்கது.38 ஆரம்பத்தில் இவ்வரிவடிவ எழுத்துகள் பெளத்தத்தோடு அசோகச் சக்கர வர்த்தி காலத்தில் ஈழத்திற்கு வந்த வடஇந்தியப் பிராமி வரிவடிவத்திலுள்ள எழுத்துகளுடன் கலந்தே எழுதப்பட்டா லுங் கிறிஸ்தாப்த காலத்தில் இவ்வரிவடிவம் மறைய வட இந்திய வரிவடிவமே செல்வாக்குப் பெற்றது.
இத்தகைய நிலையை வரிவடிவத்தில் மட்டுமன்றி இவ்வரி வடிவத்திற் காணப்படும் பெயர்களிலும் அவதானிக்கலாம். இவற்றிற் பருமக, வேள், ஆய், பரத, மருமக, போன்றன வற்றைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஈழத்திற் பெளத்தம் புகுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த திராவிட மக்கள் தென்னிந்திய வரி வடிவத்தினை உபயோகித்தனர்
யாழ். - தொன்மை வரலாறு 414 C

எனக் கண்டோம். அதேபோல் இத்தகைய வரிவடிவத்தினை இவர்கள் பயன்படுத்த முன்னர் தமக்குரிய சித் திர எழுத்து களிலமைந்த ஒரு வகை வரிவடிவத்தையும் பயன்படுத்தினர் என்பதை அண்மைக் காலத்தில் ஆனைக்கோட்டையிற் கண் டெடுக்கப்பட்ட வெண்கல முத்திரை எடுத்துக்காட்டியுள்ளது9ே (படம்-16). இம்முத்திரையில் இருவரிவடிவங்கள் உள. இதன் மேல்வரிசையிற் சித்திர எழுத்துகளிலமைந்த வரிவடிவமுங் கீழ் வரிசையிற் பிராமி வடிவத்திலமைந்த வரிவடிவமுமுண்டு. இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் ஒரே வாசகம் இரு வரிவடிவங்களில் எழுதப்பட்டமை மட்டுமன்றி, மேல் வரிசையிற் காணப்படும் வரிவடிவத்தினை அறிந்திருந்த மக்கள் கீழ் வரிசையிலுள்ள வரிவடிவத்தின் பயனை அறிந்த பின்னர் அதனையும் பயன்படுத்தியமையையேயாகும்.
இத்தகைய சித்திர எழுத்துகள் பெருங்கற்காலப் பானை ஒடுகளிலுங் காணப்படுவதால் ஆனைக்கோட்டை வெண்கல முத்திரை பெருங்கற்காலக் கலாசார மக்களாகிய திராவிடரே சித்திர எழுத்தை ஈழத்திற் பயன்படுத்தினர் என்பதனையும் பின்னர் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்பாலே தென் னிந்தியப் பிராமி வரிவடிவத்தை ஏற்றனர் என்பதையும் உறுதி செய்கின்றது என்றால் மிகையாகாது. இத்தகைய சித்திர எழுத்துகள் தமிழகத்தோடு, பிற தென்னிந்திய மாநிலங்க ளாகிய கேரளம், ஆந்திரா, கருநாடகம் ஆகிய இடங்களிற் கிடைத்துள்ளமையுங் கலாசார ரீதியிற் தென்னிந்திய - ஈழப் பிராந்தியங்கள் பெருங்கற்காலத்திலிருந்தே தொடர்புகொண் டிருந்ததை எடுத்துக் காட்டியிருக்கின்றன. இதனால் ஈழத்தின் பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்வதற்கு முன்னர், சித்திர எழுத்துகளுடன்கூடிய ஆனைக்கோட்டையிற் கி  ைடத் த வெண்கல முத்திரை பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
மேற்கூறிய முத்திரை ஒரு மோதிரத்தின் பகுதியாக இருந் துள்ளது போலத் தெரிகின்றது. எவ்வாறாயினும், இப்பிராமி வரிவடிவத்தைக் கொண்டே இதன் மேல் உள்ள சித்திர எழுத்து வரிவடிவத்திற்கு விளக்கங் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சித்திர வரிவடிவத்தில் மூன்று
O 415 மக்களும் மொழியும்

Page 224
குறியீடுகள் உள. இவை முறையே திரிசூலவடிவிற் காணப்படுங் "கோ", "வே" ஆகியனவும் பிராமிவடிவமான "ம" போன்ற இன் னொரு எழுத்துமே இம்மூன்று குறியீடுகளுமாகும். சிந்துவெளி யில் மட்டுமன்றிப் பெருங்கற்காலக் கலாசார மட்பாண்டங்களி லும் இத்தகைய குறியீடுகள் காணப்படுவது அவதானிக்கத் தக்கது.40 இம்முத்திரையின் கீழ்வரிசையிற் கோ, வே, த என்ற பிராமி வரிவடிவ எழுத்துகள் உள. இந்திரபாலா இவ்வரி வடிவத்தினைக் கொண்டு திரிசூலங்கள் இரண்டிற்குந் தனித் தனியே "கோ", " வே" என்ற உச்சரிப்பினைக் கொடுத்ததோடு மூன்றாவது சித்திர எழுத்துக்குத் "த இதன் அருகில் உள்ள புள்ளி அல்லது அனுஸ்வாரம் இவ் வெழுத்தோடு சம்பந்தமில்லாத தனியான வடிவமென்றும் விளக்கமளித்து இதனை * கோவேந்த " அல்லது "கோவேதன்" என வாசித்துள்ளார். இவ்வாசகத்தில் இரண்டு சொற்கள் உள என்பதை இந்திரபாலா எழுத்துக்காட்டியுள்ளார். அவையாவன * கோ ', " வேந்து " ஆகும். இவையிரண்டும் மன்னனைக் குறிக் குஞ் சொற்களாகும். தமிழ் முதலிய பல திராவிட மொழி களில் இவையிரண்டும் மன்னனையே குறிக்குஞ் சொற்களாக
என்ற விளக்கமளித்து
அமைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. இச்சொல்லை மூன்று அங்கங்களாகப் பிரித்தே மேற்கூறிய முடிபுக்கு அவர் வந்துள் ளார். அவையாவன "கோ", "வேத", "அன்" என்பன ஆகும். இதற்கு ஆதாரமாகத் தமிழகத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் வாசகங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.41
இவ்வாசகத்திற்கு மற்றுமோர் விளக்கத்தினை இரகுபதி அளித்துள்ளார். இப்பிராமி வாசகத்திற் 'கோ' , வே" , "த" ஆகிய எழுத்துகள் உண்டு எனக் கூறும் இவர் இவற்றைப் பிரிக்கும் போது இவை முறையே கோ + வேத் + அ என அமையும் எனக் கூறியுள்ளதோடு இவ் 'அ' விகுதி பிராமிக் கல்வெட்டுகளில் ஆறாம் வேற்றுமையின் உருபாக வருகின்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் இவ்வாசகத்தைக் கோவேந்தனுடைய" என்ற பொருளிற் *கோவேத" என வாசிக்கலாமென்று இவர் அபிப்பிராயப் படுகின்றார். இவ்வரிவடிவத்தில் உள்ள புள்ளியை அனுஸ்வார மாகக் கொள்வதற்குரிய உதாரணங்கள் பிராமிக் கல்வெட்டு
யாழ். - தொன்மை வரலாறு 416 ()

களிற் காணப்படவில்லை என வாதிடும் இவர் அவ்வாறு இதனை அனுஸ்வாரமாகக் கொள்ளினும் இதன் விகுதி 'அன்' அல்ல 'அம் ஆகும் என்றும் அப்படியாயின் இதனைக் *கோவேதம்" எனவும் வாசிக்கலாமெனக் கூறியுள்ளார். அன்", “அம்” ஆகிய இரண்டும் ஒரே பொருளைத் தரும் விகுதிகளே. மகன், அரசன் ஆகிய வாசகங்கள் முறையே மகம், அரசம் என வருவது போல் கோ + வேத் + அம் என்பதும், *கோவேதம்’ என வந்துள்ளது என்பது இவரது கருத்தாகும்.42
கால அடிப்படையில் நோக்கும் போது வடபகுதியிலுள்ள மிகப்பழைய எழுத்தாதாரமாகிய ஆனைக்கோட்டை வெண்கல முத்திரையின் சான்றைத் தொடர்ந்து காணப்படுவது தான் வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் வவுனியா மாவட்டத்திலுள்ள மகாகச் சற்கொடி, எருப்பொத்தான, பெரிய புளியங்குளம், வெடிக் கனாரிமலை ஆகிய இடங்களிற் காணப்படுகின்றது.48 இவை பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட குகைத்தானத்தைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளிற் பருமக* , ககபதி” *கமிகா” போன்ற விருதுப் பெயர்களைக் கொண்ட நிருவாகப் பொறுப்பு களிற் காணப்பட்டோர் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி வேள், பரதவர் போன்ற இனக் குழுக்களின் பெயரோடு நம்நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த தமிழகத்து வணிகர் பற்றிய குறிப்புகளும் உள (படம் -41).
இக்கல்வெட்டுகளுக்குரிய காலத்தைச் சார்ந்தவைதான் பூநகரி மாவட்டத்திற் கிடைத்த பானை ஒடுகளிற் காணப்படும் பிராமி வரிவடிவத்திலுள்ள சாசனங்களாகும்.44 இப்பகுதியில் மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன் கிராய் ஆகிய இடங் களிற் கிடைத்த மட்பாண்டங்களிலே தமிழ்மொழிக்கே சிறப் பான ஈ, ம, ள, ல, ழ, ற, ன போன்ற எழுத்துகள் காணப் படுவது குறிப்பிடத்தக்கது. பரமன்கிராயிற் கிடைத்த மட்பாண் டச் சாசனம் ஒன்றில் இரு எழுத்துகள் உள. இவை லோ, மா ஆகும். இதனால் இச்சாசனம் லோமா என வாசிக்கப் பட்டுள்ளது.
O 417 மக்களும் மொழியும்

Page 225
இதனைவிட முக்கியம் பெறுவது தான் இங்கு கிடைத்த இன்னொரு மட்பாண்டச் சாசனமாகும். இதில் மூன்று எழுத் துகள் உள. இதனை ? வேளான் ” என வாசித்துள்ளனர் (படம் - 39). இவற்றோடு மண்ணித்தலையிற் கிடைத்த இரு மட்பாண்டச் சாசனங்களின் வாசகங்கள் முறையே ஈல / ஈல்ெ எனவும், ஈழ எனவும் இனங்காணப்பட்டுள்ளன ( படம் - 40). இச்சாசனங்களுக்குரிய சிறப்பு யாதெனில் இவை யாவும் பெளத்த மதத் தொடர்பற்ற இடங்களிற் காணப்படுவது மட்டுமன்றித் தமிழுக்குரிய சிறப்பான எழுத்துகளுடன் காணப் படுவதுமாகும். இவற்றின் காலங் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாமெனக் கொள்ளப் படுகின்றது. இதே காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட ஒடு ஒன்று தான் கந்தரோடை அகழ்வின் போதுங் கிட்டியது. இதன் காலங் கி. மு. இரண்டாம் நூற்றாண்டாகும். இதன் வாசகத் ததஹ பத " அதாவது "தத்தவினுடைய பாத்திரம்" என்பதாகும் (படம் - 9 ). இதே காலத்தினைச் சார்ந்த தான ஆனைக்கோட்டையிற் கண்டெடுக்கப்பட்ட இரு பிராமி எழுத்துகளான பி, யி ஆகியவற்றுடன் உள்ள உரோம ரவுலற்றெற் மட்பாண்டமும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சான்றுகள் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே வடபகுதி மக்கள் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர் என்பதனை உறுதி செய்கின்றன என்றால் மிகையாகாது. இதே போன்று கிறிஸ்தாப்தத்திற்குப் பின்னரும் மக்கள் கல்வி அறிவுடையவர்களாக விளங்கியதை இங்கு கிடைத்த சாசனங்கள் உறுதி செய்கின்றன. இவற்றுட் கந்தரோடையிற் கிடைத்த கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரை பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இதிலுள்ள பிராமி வரிவடிவம் *விஷ்ணு பூதிஸ்ய" அதாவது "விஷ்ணுவைப் பூசிப்பவனுடைய என்றமைந்துள்ளது. இதே போன்று கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய சாசனமாக அமைவதுதான் புகழ் பெற்ற வல்லிபுரப் பொற்சாசனமாகும் (படம் - 42 ). இது பற்றி ஏற்கனவே குறித்துள்ளோம்.
யாழ். - தொன்மை வரலாறு 418 G

துர்அதிஷ்டவசமாக ஈழத்தின் தென்பகுதியிற் கிறிஸ் தாப்தத்திற்குப் பின்னருள்ள நூற்றாண்டுகளிற் பிராமி வரி வடிவம், தென்னிந்திய பல்லவ கிரந்த வரிவடிவம் போன்றன வற்றின் செல்வாக்காற் சிங்கள மொழியிலமைந்த சாசனங்கள் கி. பி. 7ஆம் நூற்றாண்டளவில் எழுச்சி பெற வழி வகுத் ததற்கான தடயங்கள் காணப்படுவது போன்று வடபகுதியில் இவ்வரிவடிவம் தமிழ் வரிவடிவமாக வளர்ச்சி பெற்றதை எடுத்துக்காட்டுஞ் சாசனங்கள் இற்றைவரை கிடைக்கவில்லை. ஈழத்தின் வடபகுதியிற் கிடைக்குந் தமிழ்க் கல்வெட்டுகள் கி. பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகவே காணப்படுகின்றன. எனினும், அநுராதபுரத்திற் கி. பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுவது ஈண்டு நினைவு கூரற்பாலது.45
வடபகுதியில் இக்காலத்திற்கு முந்திய தமிழ்க் கல் வெட்டுகள் ஏன் காணப்படவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானது. இதற்குச் சில காரணங்களுமுண்டு. முதலாவ தாக வடபகுதியில் இன்னும் பூரணமான முறையிலே தொல் லியல் மேலாய்வுகள் நடைபெறவில்லை. அத்துடன் யாழ்ப் பாணக் குடாநாடு போன்ற பகுதிகளில் இத்தகைய சாசனங் களை ஆக்குவதற்குரிய கருங்கற்கள் காணப்படாததும் ஒரு G5nTT6ð07 L DIT G5 இருக்கலாம். எவ்வாறாயினும் தமிழகத்திற் பிராமி வரிவடிவந் தமிழ்ச் சாசன வரிவடிவமாக வளர்ச்சி பெற்றதை நடுகற்களிலமைந்த வரிவடிவங்கள் எடுத்தியம்புவது போல ஈழத்தின் வடபகுதியிலும் இதற்கான தடயங்கள் வெளிவரலாம். இதனால் ஒரு வரலாற்றுக் குறிப்பாக வட பகுதியிற் கிடைத்துள்ள சாசனங்களை நிரைப்படுத்துவது அவசியமாவதால் அவற்றை இங்கே தருகின்றோம்.
வடபகுதித் தமிழ்க் கல்வெட்டுகள்
வடக்கே கிடைத்துள்ள முதலாம் இராஜராஜன் காலத்திற் குரிய கல்வெட்டுகளில் மாதோட்டத் துறைமுகத்திற் கிடைத் துள்ள கல்வெட்டு முதன்மையாகின்றது.46 வடமாகாணத்திற் கிடைத்த இராஜராஜனின் காலத்திற்குரிய ஒரே ஒரு கல்வெட்டு இது என்பதால் மட்டுமன்றி இத்துறைமுகப் பட்டினத்திற்
O 4 19 மக்களும் மொழியும்

Page 226
சோழர் பெற்ற செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றதென்ற வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகின்றது. தென்கிழக் காசிய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்த சோழர் திருகோணமலைத் துறைமுகத்திலே 5uDBI செல்வாக்கை நிலை நாட்டியது போன்று, தமது பேரரசோடு தொடர்பு கொள்வதற்கும் வங்காள விரிகுடாவிலே தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் மாதோட்டத் துறைமுகப் பட்டினத்திலே தமது கடற்படையை நிலைபெறச் செய்தனர். அநுராதபுர அரசுக் காலத்தில் இத்துறைமுகத்தினூடாகவே இவ்வரசு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே நேரத்தில் ஈழத்தை நோக்கி வந்த படை எடுப்புகளும், ஈழத்தரசர் தமிழகத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளும் இத்துறைமுகத்தினூடாகவே நடைபெற்றன என்பதும் அவ தானிக்கத்தக்கது.
இக்கல்வெட்டு மாதோட்டம் 'இராஜராஜபுரம்" என அழைக்கப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் இது முதலாவது இராஜராஜனின் பெயரில் நிருமாணிக்கப்பட்ட இங்குள்ள ஆலயமாகிய இராஜராஜேஸ்வரத்திற்கு அளிக்கப் பட்ட தானம் பற்றியும், இத்தலத்தில் நடைபெற்ற விழாக்கள் பற்றியும், இறுதியாக மாதோட்டத் துறைமுகப் பட்டினத்தின் அமைப்புப் பற்றியும் குறிப்பிடுகின்றது. முதலாம் இராஜ ராஜனின் நிருவாகிகளில் ஒருவனாகிய தாழிக்குமரனால் இக் கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் காணப் படுந் தூணின் நீளம் 4° 5”, அகலம் 8" ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றிற் சில வரிகள் அழிந்திருந்தாலும் எல்லாமாகத் தொண்ணுாற்று எட்டு வரிகள் இதிற் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் மன்னனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இவ் வரிவடிவத்தின் அமைப்பினை உற்று நோக்கும் போது இது பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியதாகக் காணப் படுவதும், இதிற் கூறப்பட்டுள்ள விடயங்கள் சோழரது ஆட்சியின் ஆரம்ப காலத்திற்குரியதாக விளங்குவதும், இது முதலாம் இராஜராஜன் காலத்திற்குரியதென்பதைத் தெளி வாக்குகின்றது. சமகாலச் சோழக் கல்வெட்டுகளைப் போன்று
யாழ். - தொன்மை வரலாறு 42o O

இக்கல்வெட்டின் வரிவடிவத்திலுந் தமிழ், கிரந்த எழுத்துகள் கலந்து காணப்பட்டாலும் இதன் மொழி தமிழாகவே காணப் படுகின்றது.
இனிக் கல்வெட்டின் வாசகத்தினை நோக்குவாம்.47
1. சொழ மண் 2. டலத்து ஷ 3. த்திரிய சிகாம 4. ண வளநா 5. ட்டு வெளார் நா 6. ட்டுச் சிறுகூ 7. ற்ற நல்லூர் கிழ 8. வன் தாழி கு 9. மரன் ஈழமா 10. ன மும்முடி 11. சொழ மண் 12. டலத்து மா 13. தொட்ட மான 14. ராஜராஜபுர 15. த்து எடுப்பி
16. த்த ராஜராஜ 17. ஈஸ்வரத்து ம 18. ஹாதேவர்க்கு 19. சந்திராதித்தவ 20. (ல்) நிற்க ராஜரா 21. ஜ நக
பக்கம் s
னளக் கொடி நா டான அருமொழி தேவ வளநாட்டு க்கு இடங்கும் பா
;
 ே4 21 மக்களும் மொழியும்

Page 227
7.
19.
20.
21.
22。
23·
24·
25.
26.
0.
தைகளால் நிச தம் இரண்டு வ(ட்ட-) மு( ம் ) பிடிலிகை வா ரியும் இவனெ மெ ல் இறுவதாகவும் இ வ்வூரில் நெய்யும் தறிகளால் கூடி ன முதலும் வட் டத்தால் கூடி ன முதலும் பா தை படவுகளா ல் கூடின முதி லுங் கொண்டு திரு கிருத்தியாமமம் வைய்யாசி விசா கம் ஏழு நாளும் விழா வெடுத்து திர்த்தம் ஆ
ட்டு விப்பதாக வும் ஆய
விடங்க
பக்கம் இ
வனைபெருங் கொலால் ஐங் கொல் உட்படவ டக்கும் மெல்பா ற் கெல்லை ராஜரா ஜப் பெருந்தெரு வுக்குக் கிழக்கும் வட பாற்கெல்லை கம்மாணச்செரி க்குத் தெற்கும் இ
யாழ். - தொன்மை வரலாறு
422 இ

11. வ்விசைத்த பெ 12. ரு நான்கெல்லை
3. க்குள் அகப்பட்ட 14. நிலத்தில் இவ் 15. வூர்க் குடி குன்றன்
6. காமன் இருந் 17. த மாளிகையும் 18 விடும் தொட 19 டமும் நிங்கலா 0ே. கவும் இன்னடு 21. வுபட்ட இத்தனை 22. யும் இத்தெவர்
3. க்கு இறைஇலி தெ 24. வ தானம் ஆவ
பக்கம் ஈ
ஒந்றும் பா
தை படவுகளால் அக்கம் ஒற்று ம் இவ்வூர் நெய் யும் தறிகளால் தறியால் திங்க ள் அரைக்கால் அக் கமும் இறுப்பன வற்றில் கொடுப்போ
9
ன னிடை காசின்வா
i
Ke
யொரு வட்டமும் 12. கொள்வானிடை ஒ 13. ரு வட்டமும் கொ 14. ள் வதாகவும் 15. ஆக இப்படி கொ 16. ணண்டு பொழுது 7. இரு நாழியாக
 ே423 மக்களும் மொழியும்

Page 228
18. நிசதம் ஆறு நா 19. பூழி அரிசி திருவமி 20. ர்தும் அரிசிக்கு 21. ம் மாணி இரண்டு 22. க்கு நிசதம் நெல் 23. லெண்ணாழியும் 24. மடபதி ஒருவ . . . . .
இராஜராஜனது மகனாகிய முதலாவது இராஜேந்திர
னின் காலத்தில் அவனது படைத் தளபதியாகிய ஜயங் கொண்ட சோழ மூவேந்த வேளான் ஈழத்தரசனையும் அவ னுடைய மனைவியையும், பிள்ளைகளையுஞ் செல்வத்தினை யுங் கைப்பற்றியதோடு ஈழம் முழுவதையுங் கைப்பற்றினான் என்பதைப் பின் வருங் கல்வெட்டு உரைக்கின்றது. முன்னைய கல்வெட்டுப் போன்று இக்கல்வெட்டும் மாதோட்டத்திற்கு உரியதானாலும் இது கிடைக்கப் பெற்ற இடம் ஊர்காவற் றுறைக் கோட்டையாகும்48 (படம் - 46).
1. ஸ்வஸ்தி பூரீ 2. ஈழ முழு 3. வதுங் கொ 4. ண்டு ஈழ
5. த்த ரைசரை 6. யும் பெண் 7. டிர் பண்டார 8. மும் பிடிச் 9. சுக் கொடு பொ 10. ன அதிகார 11. த் தண்டநாச 12. கனார் ஜய 13. பங் கொண்ட சொ 14. ழ மூவெந் (த ) 15. Gavan Trh Lonr 16. தொட்டமான 17. இராசராசபுர
யாழ் - தொன்மை வரலாறு 424 O

இக்கல்வெட்டுக்குரிய மற்றோர் சிறப்பு யாதெனில் இது தருந் தகவல்களைத் தமிழகத்திலுள்ள சோழக் கல்வெட்டுகளும் உறுதி செய்வதாகும். இதற்கான ஆதாரம் இம்மன்னனுடைய கரந்தைச் செப்பேடுகளிலுங் காணப்படுகின்றது. மேற்கூறிய கல்வெட்டின் அடுத்த பக்கத்திற் காணப்படும் மற்றோர் கல் வெட்டும் மாதோட்டத்திற்குரியது தான். ஆனால் முன்னைய தைப்போல் இதன் எழுத்துகள் தெளிவாக இல்லை. பல சிதைந்து விட்டன. எனினும் இது ஈழத்தை மும்முடிச் சோழ மண்டலமென அழைப்பது அவதானிக்கத்தக்கது. இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.49
1. ஸ்வஸ்தி பூரீ 2. ஈழமான மு 3. ம் முடி சொழ 4. tDGðrL-G) • . . . .
5. . . 600 . . . . . . . . .
6. குல . . . . .
ஈழத்தினை இராஜேந்திரனின் படைகள் வெற்றி கொண்ட தையும் மன்னனதும், மகிஷியரதும் முடியையும் பாண்டியன் ஈழத்தரசனிடம் விட்டுச்சென்ற முடியையும் ஆபரணங்களை யுஞ் சோழர் கைப்பற்றிய நிகழ்ச்சியையும் மாதோட்டத்தி லுள்ள இன்னோர் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இந் நிகழ்ச்சியைக் கூறும் இக்கல்வெட்டுத் தமிழகத்தில் இராஜேந் திரன் மேற்கொண்ட படைஎடுப்புகள் பற்றிக் குறிப்பிடுவதும் அவதானிக்கத்தக்கது. தூணின் இரண்டு பக்கங்களிலுந் தமிழுங் கிரந்த எழுத்துக்களுங் கலந்து எழுதப்பட்ட இக்கல் வெட்டின் மொழி தமிழாகும். இதில் எல்லாமாக இருபத் தேழு வரிகள் உள. இதன் முதற்பக்க வாசகங்களாவன,60
ஸ்வஸ்திழறி: திரு மன்னி வளர இ ( ரு ) நில மடந்தையு ம் பொ ( ற்) செயப்பா . வை ( யுஞ் ) சிர்த்த
O 425 மக்களும் மொழியும்

Page 229
விச் செல்வி ( யுந்த ) ன் (பெ ) ருந் தெவியரா இ இன்புற நெ (டு) தியல் g , ( ஊழியுள்) இடது (ன ) 10. ற நாடும் துடர்வ 11. னவெலிப் படர் வ 12. ன வா ( சியு ) ஞ் 13. சுள்ளிச் சூழ்மதி
4. பட்கொள் ( R ) ப்பாக் 15. கைய்யும் ( ந) ண்ண 16. ற் கரு முரன் ( Lo ) 6öo7
7. ணைக் கட ( க்கமும் ) பொரு (க) 18. ட லிழத்த ( ரச ) ர்த மு
19. டியு மாங் ( க ) வர் தெ 20. வியரொங் ) கெழில் 21. முடியும் முன்னவர்
22. பக்க ( ல் ) தென்னவர் 23. வைத் ( தசு) ந்த (ரமுடி ) 24. ( யும் ) இந் ( தி ) ரனாரமும் 25. ( தென்றிசை ) ஈழம 26. (ண் டல (முழுவ தும் எ 27. (றி படைக்கெரள ) ன்
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் இராஜே ந்திரனுடைய பெருந் தானைப் படைப் பிரிவைச் சேர்ந்த தேவன் சந்திமான் இராஜ ராஜபுரமென அழைக்கப்பட்ட மாதோட்டத்திலமைந்திருந்த திருவிராமேஸ்வரம் என்ற மற்றுமோர் ஆலயத்திற்கு அளித்த நன்கொடை பற்றிக் கூறுங் கல்வெட்டொன்றும் பின்வரும்
வாசகங்களுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.*
1. ஸ்வஸ்தி பூரீ. திரு (வி) 2. ராமிஸ் வரமுடைய ம சி, (ஹா) தெவர் எழு 4. ந் தருளும் இக்ஷவா 5. ஹ" தெவர் எழுந்த
யாழ். - தொன்மை வரலாறு 426 O

. . . . . மாதொட்டமான (ர) ஈ ஜராஜபுரத்து திருவிராமிஸ்வர மு டையமஹா தெவர்க் 10. கு உடையார் பூரீ ரா 11. (ஜெ) ந்திர சொழதெவர் 12. பெருந்த நத்துப் ப 13. ரிை மகன் சிறுகுளத் 14. துரருடையான் . . . . . 15. . . . தெவன் சந்தி. . . 16. மானடி து . . . . . 17. நிமந்தமாவது 18. மெற்படியூர் சங்க 19. ரப்பாடியார் வசம்குடு 20. த்த காசிரண்டு மெற் 21. (ப) டியூர் வெற்றிலை 22. வாணியர் வசம் குடு 23. த்த காசொந்று மெ 24. ற்படி ஊர் வாழைக்காய்
:
25. வாணியர் வசம் கு 26. டுத்த காசொந்று 27. ஆகக் காசு நாலு 28. நாலுக்கும் நின்றி 29. றையாக சந்தி வி
இராஜேந்திரனுடைய தமிழ்க் கல்வெட்டொன்று யாழ்ப் பாணக் கோட்டையிற் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டினைத் தாங்கி நிற்குந் தூண் 5 10'X84" x8” என்ற பரிமாணத்தி லுள்ளது. இத்தூணின் இரு பக்கங்களிலும் எழுத்துகள் பொறிக் கப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டு ‘அ’, "ஆ" என்ற இரு பகுதிகளாகப் பிரித்து வாசிக்கப்பட்டுள்ளது. "ஆ" என்ற பகுதிக் குரிய அநேகமான எழுத்துகள் சீர் செய்ய முடியாதளவுக்குச் சிதைந்து விட்டன. இவற்றுள் "அ" பிரிவிலுள்ள கல்வெட்டு இம்மன்னனின் ஈழம் உட்பட்ட ஆதிக்க வளர்ச்சியைக் கூற, "ஆ" பிரிவிலுள்ள கல்வெட்டு இங்குள்ள தலத்திற்கு அளிக்கப்
427 மக்களும் மொழியும்

Page 230
பட்ட நிவேதனம் பற்றிக் கூறுகின்றது. இது தற்போதைய நல்லூர் ஆலயப் பகுதி பற்றிக் குறிப்பிடுவதாக இந்திரபாலா கருதுகின்றார். இதன் வாசகம் பின்வருமாறு காணப்படுகின்றது.*
(வரிகள் 1 - 9)
(திருமன்னி) வளர விரு நில மடந்தையும் போர்ச் சயப்பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன் பெருந் தேவியராகி யின்புற நெடிதியலுT Nயுளி டைதுறை)
10. (ந) (ாடும் தொடர்வன - 11. வேலிப் படர்வன 12. (வ) ஈசி (யும் - சுள்ளி) 13. (ச்) சூழ் (ம) (திற் கொ 14. ள்ளிப் (பாக்கையு) 15. (ம்) நண் {ணற் கருமர) 16, ண் ம (ண்ணைக்க) 17. (ட) க்கமு (ம் பொருகடலி) 18. ழத்தர (சர் தம் முடியு) 19. மும்) ஆங் (கவ) ர் தே) 20. (வி) ய (ரோங் கெழி) 21. (ல்) முடி (யும் முன்ன) 22. வர் பக்க (ல் தென்) 23. (ன) வர் (வைத்த சுந்) 24. தர முடி (யுமிந்திர) 25. னாரமும் (தெண்டி) 26. ரை ஈழ (மண்டல) 27. (மு) முவது (மெறிபடை) 28. (க்) கே (ரளர் முறை) 29. (மை) யி (ற் - சூடுங் குல) ஒ0 - 35. (த) ன (மாகிய பலர்
புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
யாழ். - தொன்மை வரலாறு 428 e

6.
7.
38.
39.
40。
4 Il ..
42。
43.
44。
ll.
2.
13.
14 - 8.
9.
20.
8.
22.
23.
忍4。
25.
தொல்பெருங் காவற் - பல் பழந் தீவும் செரு) விற்சி (னவி யிருபத் தொ) ருகா ல {ர) சுகளை கட்ட பரசுராம (ன்) மேவருஞ் சாந்திமத் (தீ) வரண் கருதி (இரு) த் (தி) (ய) (செ) ம் (பொற்றிருத்த) கு (முடி) யு (மாப்பொரு) (த) ண் (டா) ற் - கொண் (ட கோப்) பரகே (சரி) வ (ன்ம) ரா (ன) கோ வெ இராஜெ (ந்திர) (சோழ) தேவர்க்கு
பகுதி ஆ
• • • سمسم --. ((LufT600T (GB உடையார் பூரீ (ரா) ஜெ (த்திர) சோழ ()ே த
Onuff ... • • • • • •
. . . . . . . டவ(ன்)
• . . . . . ) o Dlo) F4P (LDj T ன (மும்)
e - e Gif a o
( நல்)லுார்
凸
த (று) வி ( ள ) க . க்கு வைத்த . . . . . நெய் ( யா ) . . . . . ( க்கி ) நுக்கு ( வை) ( த ) சாவா மூவா (பத்)து இ( ன )வ
னை )யும் சந்திர் . . . . .
O 429 மக்களும் மொழியுட்

Page 231
26. ( த்) தவற் . . . . செலுத் (த )
27. . . . . . . னேனித்தி 28. . . . . யிலுடைய 29. . . . . . . . ஆன் சாத்தனே
என அமைகின்றது.
சோழராட்சியை வடபகுதியில் உறுதிப்படுத்துஞ் சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளை அடுத்தாற்போல் முக்கியம் பெறுவதுதான் ஊர்காவற்றுறையிற் (ஊராத்துறை) கிடைத் துள்ள முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டாகும் (படம் - 47). சோழரின் ஆட்சிக்கும் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்குமிடையில் வேறெந்தவொரு சிங்கள மன்னனுக்கு முரிய கல்வெட்டும் இங்கு கிடைக்கப் பெறவில்லை. எனினும் பராக்கிரமபாகு தனது தாய்மொழியான சிங்களத்திலன்றித் தமிழில் இக்கல்வெட்டை வெளியிட்டமை இப்பகுதியின் தமிழ்ப் பாரம்பரியத்தினை மேலும் உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டு இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒழுங்குகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுப் பூரணமற்றதொன் றாகவே காணப்படுகின்றது. தற்போது நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயிலிலுள்ள இக்கல்வெட்டின் ஒரு பகுதி கோயிற் கட்டிடத்துள் அடங்கிவிட்டது. அத்துடன் எஞ்சியுள்ள தூணின் இரு பக்கங்களிலும் வரையப்பட்ட இக்கல்வெட்டின் ஒரு பகுதி ஆயுதங்களைத் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தால் அழிந்து விட எஞ்சிக் காணப்படும் பகுதி மாத்திரமே இப்போது கிடைத்துள்ளது. அது பின்வருமாறு அமைந்
53. نت r 6ITه الآن
1 . . . . . . . நாங்கள் . . . . . . .
. . . வந்து ஊராத்துறை 3. ( யில் ) பரதெசிகள் வந்து இருக்க வெணுமென்றும் அவர்கள் ரகூைடிப்பட ெ 6. வணு மென்றும் பல துை 7. ற களில் பரதெசிகள் வந்து நந்து 8. றையி(ெ ல ) கூடவெணுமென்று
யாழ். - தொன்மை வரலாறு 43O இ)

9. (ம்) நாம் ஆனை குதிரை மெல்ஸ்நெஹ 10. (மு ) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை 11. கொடுவந்த மரக்கலங் கெட்டது 12. ணடாகில் நாலத்தொன்று பண்டா 13. & ர )த்துக்குக் கொண்டு மூன்று கூறும் 14. ( உ ) டையவனுக்கு விடக்கடவதாகவு 15. ( ம் ) வானிய மரக்கலங் கெட்டதுண் 16. டாகில் செம்பாகம் பண்டாரத்துக் 17. ( கு)க் கொண்டு செம்பாகம் உடைய 18. ( வ)ணுக்கு விடக்கடவதாகவும் இவ் 19. வவஸ்தை சந்திராதித்ய (ரு ) ஸ்ளதனையும் க 20. ல்லிலுஞ் செம்பிலும் எழுத்து வெ 21. ட்டி வித்து இவ்வவஸ்தை செய் துங்கு 22. டுத்து தேவ ( ஹ ) பராக்கிரமபுஜோ ரிபுராஜவ 23. ( ம்ச தாவாநல (ஸ் ) ஸ்கலஸிம்ஹள சக்ரவ 24. ர் ( த்தி )
ஊர்காவற்றுறை போன்று தீவகத்தில் அல்லைப்பிட்டியும் இக்காலத்தில் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெற்றது போலத் தெரிகின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சீனச் சட்டிகள் போன்றன இங்குள்ள சிவதேவாலயத்திற்கு அளிக்கப் பட்ட நிவேதனப் பொருளாக அமைந்திருக்கக்கூடும். இவற் றின் காலங் கி. பி. 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப் படுகின்றது. சீனர் மட்டுமன்றிப் பாரசீகரும், அராபியரும் ஈழத்தோடு கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளுக்கான சான்றுகள் உள. கி. பி. 10 - 15ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் களின் செல்வாக்குத் தென்னாசியாவில் விதந்து காணப்பட்ட தாற் கி. பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் இவர்கள் நிலைகொண்டு விட்டனர் எனப் பலர் அபிப்பிராயப் படுகின்றனர். இதனை உறுதி செய்வதாக மாந்தையிற் கிடைத்துள்ள மத்திய கிழக்கு மட்பாண்டங்கள் காணப்பட்டா லுங்கூட இதற்கப்பால் இவர்களின் குடியேற்றங்கள் பற்றிய விபரமான தடயங்கள் நமக்குக் கிட்டவில்லை. அடுத்தாற் போல் வடபகுதியிற் காணப்படும் இடப்பெயர்கள் பற்றியும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது.
431 மக்களும் மொழியும்

Page 232
இடப்பெயர்கள்
இடப்பெயர்கள் பன்மொழிப் புலமையோடு ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இதற்கு வரலாற்று அறிவு மட்டும் இருந்தாற் போதாது. பலமொழிகளை அறிந்தும் இருத்தல் வேண்டும். இம்மொழிகளிலே தமிழ், சிங்களம், பாளி ஆகியன வற்றின் அறிவும், இவற்றுக்கு முன்னர் இங்கே நிலைகொண்டி ருந்த ஒஸ்ரிக் மொழியின் அறிவும் மிகமிக அவசியம். அவ்வாறே நமது வரலாற்றிற் பாரிய தாக்கத்தினை ஏற் படுத்திய தென்னிந்திய மொழிகளாகிய மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியனவற்றின் அறிவும் அவசியம். அத்துடன் மொழி இயலிலே தக்க பயிற்சியும் வேண்டும். ஏனெனில் வர லாற்றினை ஊன்றிக் கற்கும்போது தென்னகப் பெருங்கற் காலக் கலாசாரத்திலிருந்து துளிர்த்த மொழிகளாகத் தமிழும், சிங்களத்தின் மூலமொழியாகிய எலுவுங் காணப்படுகின்றமை புலனாகின்றது. இன்று ஈழத்தின் தென்பகுதிகளிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள ஆய், வேள், பரத, பெருமக போன்ற வடிவங்கள் இவ்விரு மொழிகளும் பொதுவான ஒரு மூலமொழியில் இருந்து பெறப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்ட நிலையையே எடுத்துக் காட்டு கின்றன. மூலத் தென் திராவிடமே இம்மூல மொழியாக இருக்கலாமென்பதைத் தமிழகச் சங்க இலக்கியங்களிற் காணப் படும் மேற்கூறிய பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் வடபகுதியிற் காணப்படும் இடப்பெயர்களை அறிந்து கொள்ளப் பெளத்தத்தோடு இணைந்த பாளி மொழி, தற் காலச் சிங்கள மொழியின் மூலமொழியாகிய எலு மொழி ஆகியவற்றிலும் புலமை அவசியமாகின்றது. இதனால் இன்று வடபகுதியிற் காணப்படும் இடப் பெயர்களிலே தமிழ் - எலு ஆகிய மொழிகள் உறவாடிய மிகப்பழைய நிலை இவற்றின் ஆணி வேராகின்றது என்றால் மிகையாகாது. அதன் பின்னர் எலு சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்ற காலத்தில் - எலுமொழி பேசியோர் பெளத்தர்களாக மாறிய கால கட்டத்தில் - இங்குள்ள இவர்களின் நாவிற் பழைய பெயர்கள் திரிபடைந்து உச்சரிக்கப்பட்டுப் புதிதாகப் புகுத்தப்பட்ட
யாழ். - தொன்மை வரலாறு 432 ()

பெயர்கள் எவ்வாறு உருமாறின என்பது பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது. ஏனெனில் வரலாற்றில் ஒரே இடப் பெயர் பல்வேறு காலகட்டங்களிலே திரிபடைந்து பல்வேறு விளக்கங் களைத் தந்ததற்கும், பல்வேறு வகையில் மக்களால் வழங்கப் பட்டதற்குஞ் சான்றுகள் உள. இப்பின்னணியில் இவற்றை நோக்காது தற்கால மொழி வழக்கினைப் பின்னணியாக வைத்துக் கொண்டு இவற்றின் மூலத்தினை அறிய முற்படுவது பல சிக்கல்களை உருவாக்கி விடுகின்றது. ஆதலால் இடப் பெயர் ஆய்வில் மேற்கூறிய அம்சங்களைக் கவனத்திற் கொள் வது அவசியமாகின்றது.
வடபகுதியிற் பழந்தமிழர் பெருங்கற்காலக் கலாசாரக் காலத்திலிருந்தே இங்கு நிலை கொண்டிருந்ததற்கான பல பழந் தமிழ்ச் சொற்கள் தமிழகத்தைப் போலன்றி இன்றும் இங்கு வழக்கிலிருப்பதும், சங்கம் வளர்த்த தமிழகத்திற்குச் சென்று தமிழிலே தாம் பெற்ற புலமையை அரங்கேற்றியதை எடுத்துக் காட்டுஞ் செய்யுள்கள் சங்க இலக்கியங்களிற் காணப் படுவதும், வெண்கல முத்திரை, பிராமிக் கல்வெட்டுகள், மட் பாண்ட ஒடுகள் ஆகியவற்றுள்ளே தமிழ் வடிவங்கள் இடம்பெறு வதுந் தமிழ் மொழியின் பழைமையை எடுத்துக் காட்டுந் தக்க சான்றுகள் ஆகும். இவ்வாறு தமிழ் மொழியின் பழைமை வடபகுதியில் நிலைபெற்றிருந்தது போலத் தென்பகுதியிலே தமிழோ டொத்த எலு மொழியின் பழைமை நிலைக்க முடிய வில்லை. இதற்குக் காரணம் பெளத்தத்தின் வருகையால் ஏற்பட்ட பாளி மொழியின் படர்ச்சியேயாகும். இதன் விளைவே சிங்கள மொழியின் உருவாக்கமாகும். இதனால் சிங்கள மொழியின் படர்ச்சி வடபகுதியிலும் சில காலகட்டங் களில் ஏற்பட்டபோதும் கூடத் தமிழ் மொழி வடிவங்களை இதனாற் சிதைக்க முடியவில்லை.
இவ்விடப் பெயர்கள் பற்றி ஞானப்பிரகாசர் ஆராய்ந் துள்ளார். 54 தமிழ், சிங்களம், பாளி ஆகிய மொழிகளில் இவருக்கு நல்ல புலமையிருந்தது. ஈழத்தின் ஆதிக்குடிகள் திராவிடரே என்ற தனது கட்டுரையில் எலு மொழி பேசியோர் சிங்களவர்களாக மாறியதன் விளைவாகவே திராவிட மொழி
0 433 மக்களும் மொழியும்

Page 233
இடப் பெயர்களும் சிங்கள இடப் பெயர்களாகத் திரிபடைந்தன வென்றார். இதனால் இதற்கு முன்னர் பழந்தமிழ்ப் பெயர் களே இங்கு நிலைகொண்டிருந்தன என்பதற்குப் பின்வரும் உதாரணங்களை அவர் எடுத்தாண்டுள்ளார். அவையாவன சிங்கள மொழியிலே தோட்டத்தைக் குறிக்கும் வட இதே பொருளைத்தரும் வட்டமென்ற தமிழ்ச் சொல்லாகும். நிலத் தினைக் குறிக்கும் தமிழ்ப் பெயராகிய "திணை'யே சிங்கள மொழியில் "தேன்" என வழங்கப்படுகின்றது. சதுப்பு நிலத் தினைக் குறிக்கும் "வில்" என்பது வில’ என்றும், காட்டு நிலத்தினைக் குறிக்குங் குறும்பொறையே "கும்புற" எனவும் நீரோட்டத்தினைக் குறிக்கும் "அலையே” “எல" எனவும், ஆற் றைக் குறிக்கும் 'ஒடை ஒட வெனவும், இதே பொருள் தரும் “கங்குவே" கங்கையெனவுங், கல்" என்ற சொல்லே "கல” என வும் உயர்ந்த பூமியைக் குறிக்குங் "கொடு" என்ற சொல்லே "கொட எனவும் வழங்கப்படுகின்றது எனக்கூறி இப்பகுதியிற் சிங்கள மொழியின் படர்ச்சி ஏற்பட்டபோது இவற்றிற் சிங்களச்சாயல் படிந்தது என்கின்றார்.
வடபகுதி பழந்தமிழரின் வசிப்பிடமே எனக் கூறுஞ் சுவாமி ஞானப்பிரகாசர், இங்கு சிங்களச் செல்வாக்காற் பல சிங்களப் பெயர்கள் உள என்ற கருத்தினை முன்வைக்கவுந் தவற வில்லை.55 ஆனால் இவ்விடப் பெயர் பற்றி ஆராய்ந்த மெஸ். க. வேலுப்பிள்ளை 1918இல் தாம் வெளியிட்ட தூலிலே தற்கால ஆராய்ச்சி முடிபுகளுக்கு முரணான வகை யில் ஒரு கருத்தினை முன் வைத்துள்ளார்.56 அஃதாவது,
"புராதன காலத்திலே யாழ்ப்பாண நாடெங்கும் சிங்களர் வாசஞ் செய்தனரெனவும், தமிழ்க் குடிகள் திராவிட தேயத்தினின்றும் இவண்வந்து தலைப்பட்ட காலத்துத் தான் சிங்களர் அருகிச் சிதைவுற்றனரெனவும், இரு பகுதியாரும் சிறிது காலமேனும் உடன் வசிப்பவராய்க் காணியாட்சி செய்து வந்தனரெனவும், எண்ணுதற்கு எம்நாட்டிலே இந்நாளும் வழங்கப்படும் ஏராளமான இடப்பெயர்கள் மாத்திரமே போதுமான சான்றாகும்.
யாழ். - தொன்மை வரலாறு 434 இ

நூலாதாரந்தான் எட்டுணையேனும் இல்லாதிருப்பினும், யாழ்ப்பாணத்திலே, எப்பாகத்தினும் ஊர்கட்கும், வயல் கட்கும், தோட்டங்கட்கும், குடிநிலங்கட்கும் மற்றுந் தானங்கட்கும் உரியனவாய் மலிந்து விளங்கும் சிங்களப் பெயர்களே சிங்கள மக்கள் இந்நாட்டிலே முன்னாள் வசித்தமையைச் செவ்வனே காட்டுவனவாம். தமிழ் மக்கள் சிதைந்தும் முற்றாய்ச் சிதைபடாது தங்கி நிற் கும் காத்திரமான இச்சிங்கள அபிதான சாசனத்தை அறிவுடையோர் யார்தாம் அங்கீகரியாது தள்ளிவிடுவார்? சிற்றிடங்கட்குத்தானும் சிங்களப் பெயர்களிருப்பதை நோக்குங்கால், அப்பெயர்களை இட்டவர் அவ்வவ் விடங்களை நன்கறிந்த சிங்களரேயென்பது உம், சுதேசி களல்லாத சிங்களவருக்கு அவ்வாறு பெயரிடுதல் அநாவ சிய மாகையால் பெயரிட்ட சிங்களர் குடிபதிகளாயிருந் தவரேயென்பதுர2உம் பெறப்படும்."
இதனைத் தொடர்ந்து இவர் பல விகுதிகளிலுள்ள சிங்களப் பெயர்களை எடுத்துக்காட்டியுள்ளார்.37 இவற்றில் முதலாவதாக இவர் எடுத்துக்காட்டும் சொல் " வில் " ஆகும். இதற்கு உதாரணமாக இணுவில், உடுவில், கொக்குவில் போன்ற இடப் பெயர்களை எடுத்தாண்டுள்ளார். ஆனால் 'வில்" என்பது சதுப்பு நிலைத்தினைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் என்று ஞானப்பிரகாசர் கூறியுள்ளதை ஏற்கனவே எடுத்துக்காட்டி னோம். இதனாற் சிங்கள மொழியிலுள்ள "வில்" ஒரு கால கட்டத்திலே தமிழ், எலு மொழிகளுக்குப் பொதுவானதொரு வடிவமாக விளங்கிப் பின்னர் இவைகள் வேறுபட்ட மொழி களாக வளர்ச்சி பெற்ற காலத்திலும் வழக்கிலிருந்தன எனக் கொள்ளலாம். இவ்வாறேதான் “பாய்" என்று விகுதியில் முடி யும் மாணிப்பாய், கமம் என்ற விகுதியில் முடியும் சுண்ணாகம் போன்றனவும் அமையலாம்.
அதுமட்டுமன்றிச் சிங்களச் சொல்லாகிய "கம" என்பதைக் * கிராம " என்ற வடமொழி வடிவத்தின் வழிப் பிறந்தது எனக் கொள்ளுவது மரபானாலுங்கூட, நிறைவு எனப் பொருள்
தரும் பழந்தமிழ் எலுமொழி வடிவங்களிலிருந்து தோன்றிய
O 435 மக்களும் மொழியும்

Page 234
தென்று இதனை ஏன் கூறமுடியாது. இதனால் வடமொழியி லிருந்து வந்த " கம’ என்ற வடிவத்தைப் போல் ஏற்கனவே தமிழ் - எலு மொழிகளுக்குப் பொதுவாக * கமம் ' என்ற பழந் தமிழ் வடிவம் இருந்ததென்றும் பின்னர் ஒரு காலகட்டத்தில் இதனைக் கிராமத்தின் வழிவந்த சொல் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எனவுங் கொள்ளலாம். இவ்வாறே தான் யாழ்ப்பாணத்திலுள்ள "தனை" என்ற விகுதியில் முடியும் பெயர்களும் உள. இவற்றுக்கு உதாரணமாகக் குடத்தனை, நாரந்தனை போன்ற இடங்களைக் கூறலாம். தனை என்பது தானை அல்லது தனை என்ற சிங்களச் சொற் களின் திரிபென்று கொள்ளலாமெனக் கூறப்பட்டாலுந் திணை' என்ற பழந்தமிழ், எலுமொழி வடிவங்களே இவ்வாறு திரி
படைந்தன என்று ஏன் கொள்ளக்கூடாது. இவ்விதம் பல சிங்களப் பெயர்களுக்கான விளக்கத்தினைப் பழந்தமிழ்ச் சொற்களில் மட்டுமன்றித் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றினாலும்
அணுக வேண்டியுள்ளது. காரணம் இப்பகுதி மக்கள் படை வீரர்களாகவும் வணிகர்களாகவும் வடபகுதியில் நடமாடியதற் கான வரலாற்றாதாரங்கள் காணப்படுவதேயாகும்
அதுமட்டுமன்றித் திராவிடமொழி பேசும் மக்கள் இப் பகுதியிலே தமது குடியேற்றங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இங்கு கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுவதால் இடப்பெயர்களின் மூலத்தைத் திராவிட மொழிகளில் மட்டுமன்றி ஒஸ்ரிக் போன்ற மொழிகளிற் பார்ப்பதும் அவசியமாகின்றது. ஞானப்பிரகாசர் *கங்கை" ஒயா" என்ற பெயர்கள் கங்கு, ஓடை என்ற தமிழ்ப் பெயர்களின் வழி வந்ததெனக் கொண்டாலுங் கூடக் கங்கை" என்பது ஒர் ஒஸ்ரிக் சொல் என்று அண்மைக்கால ஆய்வா ளர்கள் எடுத்துக் காட்டுவதால் ஞானப்பிரகாசர் இதன் மூலம் பற்றிக் கூறியுள்ள கருத்து மீள்பரிசீலனைக்குள்ளாகின் றது.58 இவ்வாறே நதிகளின் பெயர்களுடன் காணப்படும் ஓயா' என்பதுகூட இம்மொழிப் பிறந்த சொல் ஆகும். மல்வத்து ஒயாவிலுள்ள மல் + வத்து என்ற சொற்கள் பூந் தோட்டம் என்ற சிங்கள மொழிக் கருத்தினைத் தற்போது
யாழ். - தொன்மை வரலாறு 436 O

தந்தாலுங்கூட இவற்றின் மூலம் பற்றிய விரிவான ஆய்வு இதனைவிடப் பழமை வாய்ந்த ஒஸ்ரிக் மொழிக் குடும்பத் துக்கு இவற்றை இட்டுச் செல்லலாம். தமிழ் மூலங்கள் மட்டுமன்றி இவற்றிலுள்ள பிற தென்னிந்திய மொழிகளின் மூலங்கள், எலு மொழியின் மூல வடிவங்கள் ஆகியனவும் விரிவாக ஆராயப்படல் வேண்டும். இவ்வாறே வட பகுதி யிற் காணப்பட்ட தமிழ், எலு மொழி வடிவங்கள் சில காலங் களின் பின்னர் ஏற்பட்ட சிங்கள மொழியின் படர்ச்சியால் எவ்வாறு உருமாறின என்பதும் ஆழமான ஆய்வுக்குரிய பகுதியாகும். இது தனியானதொரு ஆய்வாக இடம்பெற வேண்டியதாகையால் இதனை மொழி இயலாளரின் கவனத் திற்கே விட்டு விடுதல் பொருத்தமாகும். எனினும் அவர்கள் இதிற் கூடிய அக்கறை கொண்டு ஆராய்வது அவசியம் என்பதை ஈழத்தில் ஆதிக்குடிகள் பற்றிய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம் இவ்வாறே ஈழத்திற்கு வெளியே இருந்து வந்த சேர, சோழ, பாண்டிய வம்சங்களையுங் கலிங்கர்களையுஞ், சீனர், யவனர், அராபி யர், சாவகர் போன்றோரையும் நினைவு கூரும் பல இடப் பெயர்களும் உள. இவைபற்றி விரிவாக ஆராய இடமுண்டு.
O 437 மக்களும் மொழியும்

Page 235
10.
அடிக்குறிப்புகள்
Kennedy, K. A. R., "Antiquity of human Settlement in
Sri Lanka” P. E. P. Deraniyagala Felicitation Volume, sed) Thelma Gunawardane, Leelananda Prematilleke and
Roland Silva, (Colombo), 1980.
Deraniyagala, S., The Pre - History of Sri Lanka. An outline, Festschrift 1985 James Thevathasan Rutnam (Felicitation Volume), (ed) Amerasinghe, A. R. B. and Sumanasekara Banda, S. J., (Ratmalana), 1985. Uá* 14 - 25.
Kenaedy, K. A. R. Human Skeletal material from Ceylon with an analysis of the Islands Pre - historic and contemporary populations, British Museum Geological and Palaeontological series, Vol. 2, No. 4, 1965.
Allchin, B., The Stone tipped arrow, (London), 1966.
Thapar, Romila. A History of India, (Harmondsworth), 1966.
Allchin, B., and Allchin, F. R., The Birth of Indian Civilization (Harmondsworth), 1968. ( .. 320.
Kennedy, K. A. R., The Physical Anthropology of the Megalith builders of South India and Sri Lanka, ( Canberra ), 1975.
Allchin, F. R., and Allchin, B., G.LL. s., JOT, 1968.
சிற்றம்பலம், சி. க., பண்டைய தமிழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு ( திருநெல்வேலி ), 1991. Luis. 78 - 14.
மே. கூ, நூல், ப. 115 - 134.
யாழ். - தொன்மை வரலாறு 438 ()

11.
12.
13.
4.
16.
7.
18.
9.
20.
21.
22.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol I, Part I, ( Colombo ), 1959. gg. 4, Luši. 82 - 97.
மே. சு. நூல், ப. 96.
Kennedy, K. A. R., Gud. A. Tii, 1975.
Lukacs, John, R., and Kennedy, K. A. R., Biological Anthropology of Human Remains from Pomparippu', (Part two), Ancient Ceylon, No. 4, May. 1981. பக், 97 - 142.
Chanmugam, P. K., and Jayawardane, F. L. W., Skeletal remains from Tirukketiswaram", Ceylon Journal of Science Section G, Vol. I, Part 2, 1954. Uš. 65-68.
Sitrampalam, S. K., Ancient Jaffna - An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol. 3, Nos. 1 & 2. 1984. Luš. 36 - 51 .
Ragupathy, P., Early Settlements in Jaffna - An Archaeological survey, (Madras), 1987. Lud. 200 - 204.
Dissanayake, J. B., " In search of a lost language. Some observations on the complex origins of Sinhala, The Ceylon Historical Journal, Vol. XXXV, Nos. 1 - 2, 1978. பக், 51 - 57.
Gunawardhana, W. F., Sinhalaya Yagyidya Muladharma, s Colombo ), 1973.
Dissanayake, J. B., GLD. a. s. 1978. uáš. 51 - 57.
Majumdar, R. E., (ed.) The Vedic Age, ( Bombay), 1951. L. 149.
Paranavitana, S., Guo. 3... Ts), 1959, u. 30.
G 439 மக்களும் மொழியும்

Page 236
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
Kennedy, K. A. R. Gud. sv. BG. 1980.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, 1980.
திருநாவுக்கரசு, க. த. இலங்கையிற் தமிழ்ப் பண்பாடு, { சென்னை ), 1978,
வேலுப்பிள்ளை, ஆ. . " தொடக்ககால ஈழத்து இலக்கியங் களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் ", தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1986, பக். 1 = 27,
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ( தொகுப்பு) சதாசிவம், ஆ. . (சாகித்திய மண்டல வெளியீடு), (கொழும்பு), 1966. ப. 3.
அகநானூறு ( களிற்றியானை நிரை ), ( பதிப்பு ) சோமசுந்தரனார், பொ. வே. திருநெல்வேலி தென் னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக் கழக வெளியீடு ( சென்னை ), 1970. பக். 322, செய் - அஅ.
குறுந்தொகை, (பதிப்பு) சண்முகம்பிள்ளை, மு., தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு முதற்பதிப்பு, சென்னை 14, திருவள்ளுவர் ஆண்டு, ஆவணி - செப்ரெம்பர், 1985. ப. 36, செய், 360.
அகநானூறு (மணிமிடை பவளம் நித்திலக்கோவை), (பதிப்பு) சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை - 1, 1973. ப. 343, செ. உங்க.
மே. கூ. நூல், பக். 19 - 20, செய். ந.0எ. குறுந்தொகை, மே. கூ. நூல், ப. 171, செய். 189.
மே. கூ. நூல், ப. 301, செய். 343.
பாம். - தொன்மை வரலாறு 44o

34. நற்றிணை நானூறு, (பதிப்பு) நாராயணசாமி ஐயர், அ. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு, சென்னை - 1 முதற் பதிப்பு, 1952, ப. நுகூெ , செய். R கூகூ .
35. வேலுப்பிள்ளை, ஆ., மே. கூ. க. 1986
36. Paranavitana, S., Inscriptions of Ceylon, Wol, I,
Early Brahmi Inscriptions, ( Colombo), 1970.
37. Fernando, P. E., The Beginnings of Sinhala Script '', Education in Ceylon - A Centenary Volume I, (Colombo),
Jėji. Il 9 - 24 .
38. Paranavitana, S., Gud. Sin . 576i, 1970. Uši, 27-29.
39. Ragupathy, P., G.D. Ja. 5.16ö, uá. 200 - 204.
40. Sitrampalam, S. K., GLD. s. s. 1980.
41. Ragupathy, P., GLID. assa. 576i, Ludi. 200 - 202.
42. மே, கூ, நூல், பக். 202 - 203.
43. Paramavitana, S, மே. கூ. நூல், 1970. பக். 26 - 29.
44. புஷ்பரத்தினம், ப, பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்விற் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991.
45. இந்திரபாலா, கா., அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டார் கல்வெட்டு, " சிந்தனை ", மலர் 1, இதழ் 4, ( பேராதனை ), 1968. பக். 31-35. Indrapala, K., Two Inscriptions from the Hindu Ruins - Anuradhapura, Epigraphia Tamilica, Vol. I, Part I, ( Jaffna ), 1971. ud. 1 - 5.
46. Pathmanathan, S., " Chola Inscriptions from Mantai',
இ) 44.1 மக்களகம் மொமியம்

Page 237
47.
48.
49
50.
5.
52.
53.
54.
55.
56.
57.
58.
திருக்கேதீச்சரம் திருக்குட்த் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு. ஆனி உக ( 4 : 7 - 1976 ), பக். 64 - 65.
மே. கூ. க. பக். 64 - 66.
மேற்படி, ப. 66,
இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள் ", சிந்தனைச் சிற்றிதழ் 1, (பேராதனை), 1969, ப. 5.
Pathmanathan, S., Gud. s. as. 1976. u. 66.
மேற்படி, ப. 66.
Indrapala, K., " A Cola inscription from the Jaffna
fort, Epigraphia Tamilica, Vol. I. Part I, June, 1971.
jáš. 52 - 56.
Indrapala, K., The Nainativu Tamil Inscription of Parakramabahu I, University of Ceylon Review, Vol. XXI, No. 1, April, 1963. Ludii. 101 - 103. இந்திரபாலா, கா., மே. கூ. க. 1969. பக். 8: சிவசாமி, வி., தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு யாழ்ப்பாணம், யூன். 1990. பக். 1 - 18.
Gnana Prakasar, Swami, Ceylon Originally a land of Dravidians , Tamil Culture, Vol. I, No. I, Feb. 1952. பக், 27 - 35,
ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாண வைபவவிமர்சனம், ( அச்சுவேலி ), 1928. பக். 20 - 35.
வேலுப்பிள்ளை, மெஸ். க., யாழ்ப்பாண வைபவ கெளமுதி, (வயாவிளான்), 1918. வட மாகாணத்திலுள்ள சில இடப் பெயர்களின் வரலாறு, பக. 13 - 14.
மே. கூ. நூல், பக். 21 - 136.
Majumdar, R. E. G.D. 3. J56 tu. 149
யாழ். - தொன்மை வரலாறு 442 ே

அதிகாரம் ஆறு
வாழ்வும் வளமும்
வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுதய காலங்கள்
ழைய கற்கால மனிதனது வாழ்க்கை பற்றி விரிவாக நாம் அறிந்துகொள்வதற்கு நமக்குக் கிடைத்துள்ள தடயங்கள் போதுமானவையாகக் காணப்படாவிட்டாலுங்கூட இந்தியாவில் இக்காலத்தைய மனிதனது நடைமுறைகளையே ஈழத்தின் இக்கால மனிதனும் பின்பற்றினான் எனக்கொள்வது தவறா காது. பழைய கற்கால மனிதன் பிற்பட்ட கால நாகரிக வளர்ச்சிக்கு எத்தகைய பங்கினை அளித்தான் என்று திட்ட வட்டமாக நாம் கூறமுடியாவிட்டாலும், அவனது வாழ்க்கை முறைபற்றி ஒரளவு கூறமுடியும். இவன் நாடோடியாகத் திறந்த வெளிகளிலும், ஆற்றோரங்களிலுங் குகைகளிலும் வாழ்ந்தான். பெரிய மிருகங்களின் எலும்புகளையுந் தோல் களையுங் கொண்ட கூடாரங்களை அமைத்து வாழ்ந்ததற் கான தடயங்கள் ஏனைய நாடுகளிற் காணப்படுவதால் இங்கும் இவ்வாறு நடைபெற்றிருக்கலாம் எனக் கொள்ளலாம். உண்மையிலே இடைக்கற்காலந் தொட்டுத்தான் நிரந்தரமாகக் குகைகளில் வாழும் மரபு வளர்ச்சிபெற்றது. இக்காலத்தில் வேட்டையாடுதலே பிரதான தொழிலாக அமைந்திருந்தது. கற்கருவிகளோடு மரத்தாலும் எலும்பாலும் ஆன கருவிகளும் அம்பு, வில் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. சிறுசிறு குழுக் களாக வாழ்ந்த மனிதன் மிருகங்களைத் துரத்திச்சென்றும் பொறிக்கிடங்குகளில் அவற்றை விழவைத்தும் வேட்டையாடி னான். மாமிசம் மட்டுமன்றிக் கிழங்குவகைகள், பழவகைகள், தேன் போன்றவையும் இவனால் உணவுக்காகப் பயன்படுத்தப் பட்டன. நெருப்பின் உபயோகத்தோடு நாயின் பயனும் இக் கால மனிதனால் உணரப்பட்டது.
O 443 வாழ்வும் வளமும்

Page 238
ஈழத்தில் இடைக்கற்காலம் பற்றி ஒரளவு விரிவான சான்றுகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கால மனிதன் வாழ்ந்த இருப்பிடங்களான குகைகள், திறந்தவெளிகள் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திறந்த வெளிக் குடியிருப்புகளிற் சவ அடக்கங்களை மேற் கொண்டு மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வந்த இடந்தான் சப்பிரகமுவ மாகாணத்திலுள்ள பெலன்பண்டிபலச என்ற இடமாகும். இக்கால மனிதன் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளை நாடினான். கடல் மட்டுமன்றி நன்னீர் நிலை களும் இவனது தண்ணிர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமன்றி மீன் போன்ற உணவு வகைகளைப் பெறுவதற்கும் பயன்பட்டன.
வேட்டை ஆடுதல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களை இடைக்கற்கால மனிதன் மேற்கொண்டிருந்தான். ஆய்வுகளின் போது மிருகங்கள், பறவைகள் பலவற்றினது எலும்புகளுங் கிடைத்துள்ளன. இவை உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றுட் காட்டுக்கோழி, காட்டுநரி, மாடு, மான், குரங்கு, பல்லி, யானை, நீர் எருமை, கரடி, பன்றி, முயல் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். கரையோரப் பிரதேசங்களிலிருந்து உப்பு, சிப்பிகள் என்பன மலைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இவை பண்டமாற்றுப் பொருட்களாகப் பயன் படுத்தப்பட்டும் இருக்கலாம். இலை, மரப்பட்டை, தோல் ஆகியவற்றை ஆடைகளாகப் பயன்படுத்திய சிறுசிறு குழுக்க ளாகவே இக்காலச் சமுதாயம் வாழ்ந்தது. இக்கால மனிதன் சிப்பிகள், எலும்புகள், மரவிதைகள் ஆகியனவற்றை மாலை களாகக் கோத்தும் பயன்படுத்தினான். இறந்தவர்களுக்குக் கெளரவமான முறையிலே அடக்கங்களும் மேற்கொள்ளப் பட்டன.2 பொதுவாக இவர்களது வாழ்க்கை முறை இவர்கள் சந்ததியினராகிய வேடரின் வாழ்க்கை முறையையே ஒத்துக்
காணப்பட்டது.
இடைக்கற்காலத்தினை அடுத்த வரலாற்றுதய காலமாகிய இரும்புக்காலம் பற்றிய சான்றுகளும் ஈழத்திற் காணப்படு
கின்றன. இக்காலத்தில் நீர்ப்பாசன விவசாயமும் மந்தை
யாழ். - தொன்மை வரலாறு 444 இ)

வளர்ப்பும் முக்கியம் பெற்றுக் காணப்பட்டன. இத்தகைய நிகழ்வுக்கு முன்னோடியாக விளங்கிய மந்தை வளர்ப்பையுந் திட்டமிட்ட வகையிலான உணவு உற்பத்தியையுங் குறிக்கும் புதிய கற்காலத்திற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலும் இடைக்கற்காலத்தின் பிற்பகுதியிலே இத்தகைய வாழ்க்கைமுறை யையே இக்கால மனிதன் மேற்கொண்டிருக்கலாம். இராவ னெல்லக் குகை ஒன்றிற் காணப்பட்ட சோள விதைகளையுங் கற்கருவிகளையும் ஆதாரங்காட்டி பி. இ. பி. தெரணியாகல கூறிய கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இது பற்றி மேலும் ஆராயப்பட வேண்டியும் உள்ளது. அம்மி குழவிகள், உரல்கள் மட்டுமன்றி இந்தியாவிற்கூட ஒரளவு மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேதான் ஆரம்ப உணவு உற்பத்தி இடைக்கற்காலத்தில் நடைபெற்றிருந்ததற்கான தடயங்கள் காணப்படுவதால் ஈழத்திலும் இவ்வாறு நடைபெற்றது எனக் கொள்ளுவதிலே தவறில்லை. இடைக்கற்காலங் கி. பி. 1000 ஆண்டளவில் முடிவடைய வரலாற்றுதய காலத் தொடங்கியது.
பெருங்கற்காலம்
இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வருவது தான் புதிய கற்காலமாகும். கருங்கற்களாற் செய்யப்பட்ட இக்காலக் கருவிகள் செதுக்கப்பட்டு உரஞ்சி அழுத்தம் செய்யப்பட்ட தால் இவை இவ்வாறு பெயர் பெற்றன. மந்தை வளர்ப்பு, விவசாயம், மட்பாண்டத் தொழில், கிராமங்களின் வளர்ச்சி ஆகியன இக்காலத்திற்குரிய சிறப்பம்சமாகும். தென்னிந்தியா வில் இக்கலாசாரங் கி. மு. 4000 ஆண்டளவிற் தோன்றிய தற்கான ஆதாரங்கள் இருந்தும் ஈழத்தில் இற்றைவரை இதற் குரிய தடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்திலுங் குறிப்பாகத் தென் தமிழகத்திலும் இதற்குரிய தடயங்கள் அருகியே காணப்படுகின்றன. இதனால் ஈழத்தில் விவசாயம், தானிய உற்பத்தி, மந்தை வளர்ப்பு ஆகியனவற்றின் தோற் றத்தினை இந்தியாவைப் போன்று புதிய கற்கால மக்களுடன் இணைக்க முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் இவ்வம் சங்களைப் பெருங்கற்காலக் கலாசார மக்களே தென்னிந்தியாவி
O 445 வாழ்வும் வளமும்

Page 239
லிருந்து ஈழத்திற் புகுத்தினர் என்பதை இக்கலாசாரம் நிலை கொண்டிருந்த மையப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.8
இக்கலாசாரத்தில் நான்கு பிரதான கூறுகள் உள. அவை யாவன மக்கள் குடியிருப்புகள், வயல்கள், குளங்கள், இடு காடுகள் என்பன ஆகும். இன்றும் இத்தகைய அமைப்பே தொடர்ந்து காணப்படுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இத்தகைய அமைப்பே ஈழத்துப் பொருளாதாரத்தின் அடித் தளமாக விளங்கியதைக் குளங்களோடும் வயல்களோடும் இணைந்து காணப்படும் பெருங்கற்காலக் கலாசாரத் தடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை உறுதிப்படுத்துவ தாக 1969இல் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் அமைந்துள்ளன.4 இவ்வகழ்வின் போது இவ்விடத் திற் பெருங்கற்காலக் கலாசாரக் குடியிருப்போடு செயற்கை யாக அமைக்கப்பட்ட குளத்திற்கான சான்றும் அகழ்வாராய்ச் சிப் படையின் சேர்க்கையில் இனங்காணப்பட்டுள்ளது. நெல் லின் படிமங்கள் இங்கு பெறப்பட்டதோடு நெல்லின் உமியை மக்கள் உபயோகித்ததற்கான தடயங்களுங் கிட்டின. இத்தகைய நெல்லின் படிமங்கள் புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப் பிலுங் கிடைத்துள்ளன. வடபகுதியிலுங் குறிப்பாகக் கந்த ரோடையில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது நெல்லின் படிமங் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது (படம்-48). இதனால் இக்கால மக்களின் வாழ்க்கையில் விவசாயம் ஒரு
பிரதான இடத்தினைப் பெற்றிருந்தது என்பதிற் சந்தேக மில்லை.6
வடபகுதியின் பொருளாதாரக் கட்டமைப்பு
ஈழத்தின் தென்பகுதியிற் காணப்படுவது போலவே வட பகுதியிற், குறிப்பாகக் கந்தரோடை போன்ற இடங்களிற் காணப்படுங் குளங்கள், வி வ ச ர ய அமைப்பில் அவை பெற்றிருந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றன. குடாநாட்டில் இவ்வாறு குளங்களை அமைக்கும் வசதிகள் காணப்பட்டாலுங்கூட, நீரைப் பெறுவதற்கும், விவசாய
யாழ். - தொன்மை வரலாறு 446 O

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெள்ளவாய்க்கால்கள் முக்கிய பங்கை வகித்தமை குறிப்பிடத்தக்கது. 8 இத்தகைய வெள்ள வாய்க்கால்களிலொன்றாகிய வழுக்கையாற்றின் அருகிற் கந்தரோடை அமைந்துள்ளதுங் குறிப்பிடத்தக்கது. கட்டுவனில் ஆரம்பமாகும் வழுக்கை ஆறு அளவெட்டி, கந்தரோடை, கட்டுடை நவாலியூடாகக் கல்லுண்டாயில் வந்து கடலை அடைகின்றது. கந்தரோடையுடன் தொடர்புகளை மேற்கொள் வதற்கும் இவ்வாய்க்கால் வசதியாக அமைந்திருந்தது. அடுத்து முக்கியம் பெறுவதுதான் சிப்பித்தறை வாய்க்கா லாகும். உரும்பிராயில் உற்பத்தியாகிக் கோண்டாவில், நந்தா வில், கொக்குவில் வண்ணார்பண்ணையூடாகச் சென்று இன்னோர் பெருங்கற்கால மையப் பிரதேசங்களிலொன்றாகிய
ஆனைக்கோட்டை வழியாக இது கடலையடைகின்றது.
இச்சந்தர்ப்பத்திற் குளங்களோடு சம்பந்தமுடைய "வில்" என்ற விகுதியில் முடியும் இடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடு வதும் அவசியமாகின்றது. கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் ஆகிய பெயர்கள் இவற்றிற் சிலவாகும். இப் பெயர்கள் இவ்வூர்களில் “வில்" போன்ற அமைப்பினாலான சிறிய குளங்கள் காணப்பட்டதையே எடுத்துக் காட்டுகின்றன. சிற்சில இடங்களிற் சுண்ணாம்புக் கற்பாறை நிலத்தில் அமிழ்வதால் இத்தகைய குளங்கள் தோன்றியுள்ளன என்று கூறப்படுகின்றது. இவ்வாறு நீர் தங்கும் இடங்களில் நீரைத் தேக்குவதற்கு அணையை வில் போன்ற வடிவத்தில் அமைத்த் தால் இப்பெயர் உருவாகி இருக்கலாமெனவுங் கொள்ளப் படுகின்றது. இவற்றோடு நிலத்துக்கடியிலுள்ள நீரும் இக் காலத்திற் துரவுகள்" எனப்பட்ட கிணறுகள் மூலம் மணற் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பிரிவிற் கிணறுகள், கேணிகள், குண்டுகள் ஆகியன அடங்கும். பெரும்பாலும் மணற் பிரதேசங்களிற் கிணறுகளை ஆக்குவது இலகுவாயிற்று.
பெருநிலப்பரப்பைப் பொறுத்தமட்டிற் காணப்படும் பல பெரிய குளங்களின் தோற்றத்தினையும் பெருங்கற்காலக் கலா சாரத்துடன் இணைத்துப் பார்க்க முடிகின்றது. முக்கியமாக
O 447 வாழ்வும் வளமும்

Page 240
இக்கலாசாரச் சின்னங்கள் காணப்படும் மாமடுவக்குளம் இக் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நடவடிக்கை களில் பல தமிழ் மன்னர்களின் பெயர்களும் பாளி நூல்களிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. அநுராதபுரத்தினை ஆட்சி செய்த முதல் தமிழ் மன்னர்களாகிய சேனன், குத்திகன் ஆகியோர் தமது பாவங்களைக் கழுவுவதற்காகக் கடம்ப நதி யைத் தலைநகருக்கு அருகில் இட்டு வந்ததாகக் கூறப்படு கின்றது.? இவ்வாறே எல்லாளன் வடக்கே "பெலி வாவி’ என்ற குளத்தினை அமைத்தது பற்றி மகாவம்சங் கூறுகின்றது. இப் பெலிவாவி வவுனிக்குளமாக இருக்கலாம் எனப் பாக்கர்
கருத்துத் தெரிவித்துள்ளார்.8
இதேபோன்று இரணைமடு, கனகராயன்குளம், கட்டுக் கரைக்குளம் ஆகியனவற்றின் தோற்றத்தையும் பெருங்கற்காலக் கலாசாரத்தின் தோற்றத்துடன் இணைத்துப் பார்க்கலாம். வட பகுதியிற் குளம் என்ற சொல்லுடன் இடப்பெயர்கள் முடி வடைவது போன்று தெற்கேயும் இத்தகைய நிலை காணப் படுவதைக் "குளம் " என்று முடிவடையும் தற்காலச் சிங்கள இடப் பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவை பெருங்கற் காலத்திலிருந்து முக்கியம் பெற்றிருந்த குளத்தை மையமாகக் கொண்டிருந்த விவசாய அமைப்பையே சுட்டி நிற்கின்றன. நாளடைவில் இவை பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி யடைந்தன. இவற்றில் இக்குளங்களுக்கு நீரை இட்டுச் செல்ல வுங் கால்வாய்கள் மூலம் அபரிமித நீரை வெளியேற்றவும் பல் வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகள் இக்குளங்களில் இணைக்கப்பட்டன. இக்காலத்திற் குறிப்பாகத் தமிழகத்திற் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குளங்சளில், மேற்கூறிய அம்சங்கள் காணப்படுவதால் ஈழம் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்பால் இவை ஈழத் தினை அடைந்திருக்கலாம். வடபகுதியிலேற்பட்ட சோழராட்சி இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவித்திருக்கலாம். பாண்டி நாட்டுப் பிரதானிகளின் வருகை இவற்றின் வளர்ச்சியை முன் னெடுத்துமிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இவை பற்றிய விபரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
யாழ். - தொன்மை வரலாறு 448

பெருங்கற்காலக் கலாசாரத்தில் விவசாயம் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைக் குளங்க்ள், நெல்லின் படிமங்கள் மட்டு மன்றி அக்கால மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான கருவி களும் எடுத்துக் காட்டுகின்றன. கோடரிகள், கத்திகள், மண்வெட்டிகள், அரிவாள்கள், வாச்சி போன்ற கருவிகள் மட்டு மன்றி இவ்வகழ்வுகளின் போது இரும்பினாலான கொழுக்களும் திவுல்வேவ, குருகல்கின்ன, பொம்பரிப்புப் போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன. 9 வடபகுதியிலும் விரிவான அகழ்வுகள் மேற்கொள்ளப்படும்போது இக்கருவிகள் பற்றிப் பல தகவல்கள் கிட்டலாம்.
இத்தகைய மக்கள் மண்ணினாலான வீடுகளில் வாழ்ந் தனர். அன்றாட வாழ்க்கையிற் பல்வேறு மிருகங்களைத் தமது விவசாயத் தேவைக்கும் உணவுக்கும் பயன்படுத்தியதை இவ், விடங்களிற் கிடைத்த மிருகங்களின் எலும்புக்கூடுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுட் பிரதானமானவை எருது, பசு, ஆடு போன்ற மிருகங்களாகும்.10 ஆனைக்கோட்டை அகழ்வில் நிவேதனப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட எருதின் எலும்பு களுங் கொம்புகளுங் கிடைத்துள்ளதை நோக்கும் போது இம் மிருகம் இக்காலத்தில் மக்களால் நன்கு பேணப்பட்டமை தெளி வாகின்றது. எனினும், அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கூரிய கருவிகளால் வெட்டப்பட்ட மாட் டெலும்புகள் கிடைத்தது போன்று கந்தரோடையிலுங் கிடைத் துள்ளன. இதனால் விவசாயத் தேவைகளோடு இவை உண. வுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
குதிரை பெருங்கற்காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத் தினை அநுராதபுரத்திற் கிடைத்துள்ள இதன் எலும்புகளும் பொம்பரிப்புப் பானை ஒட்டிற் கிடைத்துள்ள குதிரையின் கடிவாளத்தினைக் காட்டுங் குறியீடும் எடுத்துக்காட்டுகின்றன. குதிரை வியாபாரிகளின் புத்திரர்களாக ஈழத்தின் மீது படை எடுப்பினை மேற்கொண்ட சேனன், குத்திகன் ஆகியோரைப் பாளி நூல்கள் குறிப்பிடுவதும் ஈண்டு நினைவு கரற்பாலது.12 இதனால் இம்மிருகத்தின் பயன்பாடு வடபகுதியிலும் இக் காலத்திற் காணப்பட்டிருக்கலாம். அத்துடன் கடல்படு உணவு
O 449 வாழ்வும் வளமும்

Page 241
களை இவர்கள் பயன்படுத்தியதை ஆனைக்கோட்டை கந்தரோடை, சத்திராந்தை ஆகிய இடங்களிற் கிடைத்த மீன், சுறா, நண்டு, சிப்பி, சங்கு போன்ற பலவற்றின் எச்சங்கள் எடுத்துக் காட்டுகின்றன.13
தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் வாழ்ந்த பரத குலத்தவர் தாம் மேற்கொண்டிருந்த மீன்பிடித்தொழிலிற் கிடைத்த சுறா வின் எலும்புகளை வணங்கியதைப் பட்டினப்பாலை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய நூல்களிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன.14 ஆனைக்கோட்டையிற் கண்டெடுக்கப் பட்ட சுறாவின் எலும்புகள் இப்பகுதி மக்கள் இவற்றை மாலை யாக அணிந்தது பற்றி எடுத்துக் காட்டுகின்றன. அதுமட்டு மன்றி வவுனியா மாவட்டத்திற் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டு களில் இடம் பெற்றுள்ள பரதவரைக் குறிக்கும் ‘பரத போன்ற பதங்கள் தமிழகத்தைப் போல ஆனைக்கோட்டையிலும் பரதவ குலத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்கின்றன. இதனாற் பெருங்கற்காலக் கலாசாரத்தில் விவசாயம், மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தல் ஆகியன முக்கியம் பெற்றிருந்ததோடு வேட்டையாடுதலும் இக்காலத் தொழில் களிலொன்றாக விளங்கியிருந்ததைப் பல்வேறு பறவைகளின் எலும்புகள் மேலும் எடுத்துக் காட்டுகின்றன.
பெருங்கற்காலக் கலாசாரப் பொருளாதார அமைப்பினைச் சங்ககாலத் தமிழகத்திற் காண்பது போன்று ஈழத்திலுங் காணலாம். இத்தகைய அமைப்பே ஈழத்தின் கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய வரலாற்றுக்காலத்திலுங் கிறிஸ்தாப்த காலத்திற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளிலுஞ் சிறந்து விளங்கிய பொருளாதார அமைப்பாகும். சங்ககாலத்தில் நிலங்கள் அவற்றின் இயல்புகளுக்கேற்ற முறையில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்டிருந்தன. இவை முறையே காடு, மலை, வயல், கடற்கரை, வனாந்தரம் ஆகியவற்றைக் குறிக்கும். இவ்வாறு பல்வேறு புவியியற் பின்னணியில் அவற்றின் தன்மைக்கேற்பவே தொழில்களும் அமைந்திருந்தன. இத்தொழிலடிப்படையிலே அமைந்திருந்த சமூகங்களின் பொருளாதார அமைப்பையே சங்க நூல்கள்
யாழ். - தொன்மை வரலாறு 45O O

பேசுகின்றன. துர்அதிஷ்டவசமாகத் தமிழகத்திற்கான பொரு ளாதாரச் சான்றுகளை இவைகள் தருவது போன்றோ ஈழத்தின் தென்பகுதிக்குரிய சான்றுகளைப் பாளி நூல்களுஞ் சிங்களக் கல்வெட்டுகளுந் தருவது போன்றோ வடபகுதிக் கான இப்பொருளாதார அமைப்புப் பற்றித் தமிழ் நூல்களிற் போதிய சான்றுகள் கிட்டாவிட்டாலுங்கூடத் தமிழக - ஈழத்தின் தென்பகுதி ஆகியனவற்றின் பின்னணியில் இவை பற்றி ஒரளவுக்கு நாம் அறிந்து கொள்ளலாம். அத்துடன் ஈழத்துப் பூதந்தேவனாரின் குறிஞ்சி, பாலைத் திணைகளுக் குரிய பாடல்களை நோக்கும் போது சங்ககாலத் தமிழகத்தில் நிலவிய நிலப்பகுப்பு முறையை ஒத்த ஒரு நிலப்பகுப்பு முறை ஈழத்திலுங் காணப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
மந்தை வளர்ப்பே பெருங்கற்கால மக்களின் பிரதான தொழிலென்று மேலே கண்டோம். இத்தகைய அமைப்பு இக்காலத்திலும் பின்னரும் இன்றுந் தொடர்ந்திருப்பது அவ தானிக்கத்தக்கது. " மாடு " என்றாற் செல்வம் " என்பது பொருள் ஆகும். இத்தகைய செல்வத்தின் சின்னமாக இவை பேணப்பட்டதாற் புனிதப் பொருளாகவும் இவை நாளடைவில் உயர்ச்சி பெற்றன. சிலப்பதிகாரந் தமிழகத்தில் இத்தொழிலிற் சிறப்புப் பெற்றிருந்த ஆயர் குலம் பற்றிப் பேசுகின்றது. இத்தொழிலில் ஈடுபட்டோர் பால், தயிர் ஆகியனவற்றைத் தமது உணவுத்தேவைக்காகப் பயன்படுத்தியதையும். வயற் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களோடு இவற்றைப் பண்டமாற் றாகப் பயன்படுத்தியது பற்றியுஞ் சங்க நூல்கள் கூறுகின்றன. பெரும்பாணாற்றுப் படையில் இந்நில மக்களின் வாழ்க்கை பற்றிய வர்ணனை சமகால ஈழத்திற்கும் பொருந்துமாகையால் அது பற்றி இங்கே குறிப்பிடுதல் பொருத்தமாகின்றது.15 இப் பெரும்பாணாற்றுப்படையின் பாடலில் ஆடுகள் கட்டப்பட்டி ருந்த இவர்களின் குடியிருப்புகள், கிராமத்தினைச் சுற்றி மேயும் பசுக்கள், பற்றைகளினாலமைந்த வேலிகள், மெலிந்த வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியனவுஞ் சித்திரிக்கப் பட்டுள்ளன.
9 451 வாழ்வும் வளமும்

Page 242
மான்கள், முயல்கள், வான்கோழிகள் ஆகியனவும் இவர் களின் உணவில் முக்கிய பங்கினை வகித்தன. மலைப்பகுதி யாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். தினையே இவர்களது முக்கிய தானிய மாகும். வரகு, எள்ளு, குரக்கன், சாமை ஆகியன இவ்வகையில் அடங்கும். இன்றும் இத்தகைய தானியவகை இப்பிராந்தியத்திற் பயிரிடப்படுவது அவதானிக்கத்தக்கது. எனினும் இந்நிலங்களில் மருதநிலமாகிய வயல்நிலப்பகுதியே முக்கியம் பெற்றது. உழவுத் தொழிலிலும் இது மேன்மை பெற்றது. பெருங்கற்கால மக்களின் குடியிருப்புகளில் இதனை வலியுறுத்தும் கலப்பையி னது கொழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ஏற்கனவே கண் டோம். இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பிரதான தானியமாக நெல் காணப்பட்டது. சங்க இலக்கியங்களில் நெல் விளைவித்தல் தொட்டு நெல் அறுவடை வரை பல் வகையாக மேற்கொள்ளப்பட்ட பணிகளாக மாடுகளினால் நிலத்தினை மிதித்தல், நிலத்தை மட்டப்படுத்துதல், நாற்று நடுதல், களைபறித்தல், அறுவடை செய்தல், நெற்கட்டு களைக் களத்திற் சேர்த்தல், குடுமிதித்தல், காற்றிலே தூற்று தல் ஆகியன விரிவாகப் பேசப்பட்டுள்ளதை நோக்கும்போது சமகாலத்தில் இங்கும் இத்தகைய நிகழ்வுகள் முக்கியம் பெற்றமை புலனாகின்றது.18 இன்றுஞ் சிங்கள - தமிழ் சமூகத் தவர் மத்தியில் நெல் உற்பத்தி தொட்டு அறுவடை வரையி லாக அனுஷ்டிக்கப்படும் விழாக்கள், கிரியைகள் ஆகியனவற் றுக்கிடையே காணப்படும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.
இவற்றைவிட ஏரிகள், குளங்கள் ஆகியனவற்றிலிருந்தும் துலா மூலமும், மாடுகளைக் கொண்டு ‘ஆப்பி’ மூலமும் நீரிறைக்கட்பட்டமை பற்றிச் சங்க நூல்களிற் கூறப்பட்டுள்ளது. ஈழத்திலும் பெருங்கற்காலத்திலிருந்தே நெல்லின் l யோகம் காணப்பட்டது பற்றி ஏற்கனவே கண்டோம். சிங்க ளம், பாளி ஆகிய மொழிகளில் "சாலி என்ற பதம் இந் நெல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலே இது ஒரு பழந்தமிழ்ச் சொல்லாகும். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிலும் இப்பதம் காணப்படுகின்றது.17 °சாளியர்' எனப்பட்டோர் வேளாளரின் ஒரு பிரிவினராவர். இன்றும்
யாழ். - தொன்மை வரலாறு 452 )ே

பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பச்சையரிசிச் சாளியர்” என்ற பிரிவினர் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வவுனியாவில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் வேளிர்" என்ற பதம் காணப்படுவதுபோல ஈழத்தின் பிறபகுதிகளிலும் இப்பதம் காணப்படுகின்றது. இது வேளாளரைக் குறிக்கும் பதமா கும். அண்மையிற் பூநகரிப் பகுதியில் கிறிஸ்தாப்த காலத் திற்கு முந்திய மட்பாண்ட ஒடுகளில் வேளாளரைக் குறிக் கும் “வேளான்" என்ற பதம் காணப்பட்டது பற்றிப் பிறி தோரிடத்தில் குறிப்பிட்டிருந்தோம். சோழர் காலத்தில் இவ் வேளாளப் பிரிவின் ஒரு பகுதியினரான "சித்திர மேழியார்? பற்றிய குறிப்புகள் 2. Qof அதனைப்போல் ஈழத்திலும் காணப்படும் சித்திரமேழி என்ற ஊர் இவர்கள் இங்கு நிலை கொண்டிருந்ததையே எடுத்துக் காட்டுகின்றது. இவர்கள் நானா தேசிகளோடு சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. வேளாள வகுப்பினரில் நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் என இரு பிரிவினர் இருந் தனர். நிலமுள்ள பிரிவினர் கிழான், தேவன், உடையான் போன்ற பெயர்களைக் கொண்டு விளங்கினர். இவர்கள் தமது பொருளாதாரச் செல்வாக்கால் உயர்பதவிகளை வகித்ததை ஈழத்திலுள்ள சோழக் கல்வெட்டுக்ள் எடுத்தியம்புகின் றன.18 சோழராட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டி மழவன் போன்றோரின் குறிப்பும் அதனைத் தொடர்ந்து காணப்பட்ட பாண்டியப் பிரதானிகளின் வருகையும் இக்கா லத்தில் வலுவுள்ள சமூகமாக இவ்விவசாயச் சமூகம் வளர்ச்சி பெற்றதையே எடுத்துக் காட்டுகின்றது.
கடற்கரையில் வாழ்ந்த மக்கள் நெய்தல் நில மக்களாகச் சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களிற் பரதவர் போன்ற குழுவினர் அடங்குவர். இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்கு குளித்தில் ஆகியன விளங்கின. மன்னார் வளைகுடா முத்துக்குளிப்பிற் பண்டு தொட்டு மேன் மைபெற்று விளங்கியதால் ஈழத்தில் வாழ்ந்த இப்பரதவ குலத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டிருக் கலர்ம். இவ்வாறே சங்கு குளித்ததை எடுத்துக் காட்டும் சங்குகள் பல வடபகுதிக் கரையோரங்களில் இன்றுங்
O 453 வாழ்வும் வளமும்

Page 243
காணப்படுவதால் ஒருக்ார்ல் இத்தொழில் அக்காலத்தில் மேன்மை பெற்றிருந்ததையே அது எடுத்துக் காட்டுகின்றது எனக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களிற் சங்கினாலாக்கப் பட்ட அணிகலன்கள் பற்றிப் பேசப்படுவதை நோக்கும்போது இத்தகைய மரபு பண்டைய ஈழத்திலுங் காணப்பட்டது எனலாம். கப்பல் கட்டுந் தொழிலிலும் இம்மக்கள் மேன்மை பெற்றிருந்தனர். அத்துடன் குதிரை வாணிபமும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பாளி நூல்களில் இவ்வாணிபத்திலீடுபட்ட தமிழகத்தோர் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி, அநுராத புரத்திலமைந்துள்ள தமிழ் வணிகரின் கல்வெட்டும் இதனை எடுத்தியம்புகின்றது.19
இக்காலப் பொருளாதார அமைப்பின் முக்கிய பங்களிப்பு யாதெனிற் கிராமங்கள், பட்டினங்கள் ஆகியனவற்றின் எழுச்சியே எனலாம். விவசாய அமைப்பு ஊர்களின் எழுச்சி யைக் குறித்தது போலக் கடற்கரை ஓரங்களிற் காணப்பட்ட பொருளாதார அமைப்புப் பட்டினங்களின் எழுச்சியைச் சுட்டி நின்றன. உப்பு விளைவித்தலும் பண்டுதொட்டே முக்கிய தொழிலாக விளங்கியது. யாழ்ப்பாண வைபவமாலையில் இடம்பெறும் தொண்டைமான் வரவில் கரணவாய், வெள்ளப் பரவை ஆகிய இடங்கள் உப்பளங்களாக விளங்கிய செய்தி இதனை உறுதிப்படுத்துகின்றது.20 சங்க இலக்கியங்களைப் போல ஈழத்துப் பாளி நூல்களும் பல்வகைப் பயிர்கள் பயி ராக்கப்பட்டமை பற்றிக் கூறுகின்றன. தென்னை, கரும்பு ஆகியன இவ்வாறு பயிர் செய்யப்பட்டன. இன்றுங் கடற் கரை ஓரங்களிலே தென்னை செழித்து வளருவது குறிப்பிடத் தக்கது. பனை வடபகுதியின் கற்பக தருவாக இக்காலத்தைப் போன்று அன்றும் விளங்கியது. இதன் பயன் மக்களின் வாழ் வில் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தது. இவ்வாறே நெசவுத் தொழிலும் பண்டுதொட்டு மக்கள் வாழ்வில் முக்கிய பங் கினை வகித்ததையே குவேனி கதையில் விஜயன் குவேனியைக் கண்டபோது அவள் நூல் நூற்றுக் கொண்டிருந்தாளென்ற செய்தி உணர்த்துகின்றது.21 மக்கள் வாழ்வில் ஆடை ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பட்டதால் இதுவும் அக்காலந்
யாழ். - தொன்மை வரலாறு 454 9

தொட்டுப் பேணப்பட்ட தொழிலாக இருந்தமையை மேற் கூறிய குவேனி பற்றிய ஐதீகம் எடுத்துக்காட்டுகின்றது. அக் காலத்திலே தமிழகத்திலிருந்து பல்வேறு தொழில் வினைஞர்கள் ஈழத்தினை வந்தடைந்ததை விஜயனின் மனைவியாகிய பாண்டிய இளவரசியோடு வந்ததாகக் கூறப்படும் பதினெண் வினைஞர் குழுவுடன் வந்த ஆயிரம் குடும்பங்கள் பற்றிய ஐதீகம் எடுத்து இயம்புகின்றது.
கைக்கோளர் எனப்பட்ட வகுப்பினர் இத்தொழிலிற் சிறப் புப் பெற்று விளங்கினர். சோழர் காலக் கல்வெட்டுகளில் இவர்கள் ப ைட யி ற் சேர்ந்து கடமையாற்றியதற்கான குறிப்புகள் உள. பள்ளர், பறையர் போன்ற வகுப்பினரும் ஆடைகளுக்குச் சாயமேற்றுந் தொழில்களில் ஈடுபட்டனர். * சாயவேர் " எனப்பட்ட செடியின் வேரே இவ்வாறு சாய மேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதால் சாயவேர்ப் பள்ளர், சாயவேர்ப் பறையர் என இவர்கள் அழைக்கப்பட்டனர். இவற் றோடு பல்வேறு மரம், இரும்பு, செம்பு, பொன் ஆகிய உலோகப் பொருட்கள் செய்வதிலும் தேர்ச்சி பெற்றோர் இக் காலந்தொட்டுக் காணப்பட்டனர் என்பதைப் பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படும் பெயர்கள் உறுதி செய்கின்றன.22 இதனையே சங்க இலக்கியக் குறிப்புகளும் எடுத்துக் காட்டி யுள்ளன.28
மக்கள் வாழ்வில் அன்றாடப் பயன்பாட்டிற்குரிய மட்பாண் டத் தொழில், தச்சுத் தொழில், கம்மாரத் தொழில் (கொல்லர்), பொற் கொல்லத் தொழில், பல்வேறு மணி வகைகளில் ஆபரணங்களை ஆக்கும் தொழில் போன்றன மட்டுமன்றிப் பொழுது போக்குக்கான இசைக் கருவிகளை யாக்கும் திறன் படைத்த வினைஞர்களும் இக்காலத்திற் காணப்பட்டிருக் கலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் என்ற சொல்லே யாழ் வாசிப்பதிற் கைதேர்ந்த கலைஞர்கள் இங்கு காணப்பட்டதை எடுத்துக் கர்ட்டுகின்றது. இவற்றோடு கோயிற் கலைகள் பல வற்றிலுந் தேர்ச்சி பெற்றிருந்த கலைஞர்கள் பண்டுதொட்டு இங்கு காணப்பட்டிருந்தனர். மாருதப்புரவீகவல்லி கதையில் இத்தகைய கலைஞர்கள் தமிழகத்திலிருந்து இங்கு அழைத்து
() 455 வாழ்வும் வளமும்

Page 244
வரப்பட்டமை மட்டுமன்றிப் பிரதிஷ்டைக்குரிய விக்கிரகங்கள் கூட அங்கிருந்தே இங்கு எடுத்து வரப்பட்டன என்ற தொனி காணப்பட்டாலுங்கூட வடபகுதி தமிழகத்தோடு கொண்டிருந்த தொடர்புகளால் இத்தகைய கலைஞர்கள் இங்கு வருவதற் கும், கோயிற் கலைகள் உள்நாட்டில் மேன்மையுறுவதற்கும் வழிஏற்பட்டது. இந்து மதத்தோடு மட்டுமன்றிப் பெளத்த மதம் சம்பந்தமான கலைச் செல்வங்கள் கூட ஈழத்தின் தென் பகுதி, தமிழகம், இந்தியா ஆகிய பிராந்தியங்களிற் காணப் பட்ட கலைஞர்களோடுங் கலைக்கூடங்களோடுங் கொண் டிருந்த தொடர்பால் வளர்ச்சி பெற்றன எனலாம். அத்துடன் பாளி, சிங்கள நூல்கள் சிங்கள அரசுகளில் நிலவிய பொரு ளாதார அமைப்பினைப் பற்றிய தகவல்களைத் தருவது போன்று வடபகுதியில் இக்காலத்திற் காணப்பட்ட பொரு ளாதார அமைப்புப் பற்றிய தகவல்களை இந்நூல்களோ அன்றித் தமிழ் நூல்களோ தராததால் மேலோட்டமாகவே இப் பகுதியின் பொருளாதார அமைப்புப் பற்றி ஆராய்ந்துள்ளோம். எனினும் இவ்வமைப்பின் ஒர் அம்சமாகிய வாணிபம் பற்றிய சான்றுகள் பல கிடைப்பதால் அடுத்து அது பற்றி ஆராய் வது அவசியமாகின்றது.
வாணிபம்
புவியியல் அடிப்படையில் நோக்கும்போது ஈழத்துக் கலா சாரம் இந்தியக் கலாசாரக் வட்டத்திற்குள்ளே அடங்குவதால் இப்பின்னணியிற்றான் ஈழத்து நாகரிக வளர்ச்சி பற்றி ஆராய வேண்டுமெனப் பிரபல மானிடவியலாளரான மெலோனி கருது கின்றார்.24 இவரின் இத்தகைய கருத்தையே அரை நூற் றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய யாழ்ப்பாணத்தை எழுதிய இராசநாயக முதலியாரும் வெளியிட்டிருந்தார். அன்று அவர்,2
* ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் அநேகமாகத் தென்னிந்தியாவில் நிலவிய நாகரிகத்தினை ஒத்ததான நாகரிகத்தினையே வளர்த்தெடுத்தார்கள் என எண்ணுவது நியாயத்தின் பாற்பட்டதாகும். இத்தகைய நோக்கிற்றான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய ஈழத்தின் வடபகுதியிற் றழைத்த நாகரிகம் பற்றி விபரிக்க முடியும். ஈழத்தின்
யாழ். - தொன்மை வரலாறு 456 O

மதிப்பிட முடியாத தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் போது இத்தகைய ஆய்வுக்கான தடயங் களாக இவை நின்று சாட்சியும் ஒத்தாசையும் நல்கும்
676ra)ntub. ”
என்று கூறியிருந்தார்.
துர்அதிஷ்டவசமாகத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச் சியைச் சங்க நூல்களிலிருந்தும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்தும் அறிவது போன்று ஈழத்தின் வடபகுதி யிற் காணப்பட்ட பொருளாதார, நாகரிக வளர்ச்சி பற்றிப் பாளி நூல்களின் மூலமாகவோ அன்றி இங்கு மேற் கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலமாகவோ அறிந்துகொள் வது மிகமிகச் சிரமமாகவே உள்ளது. இங்கு காணப்பட்ட வாணிப வளர்ச்சி பற்றித் தமிழகப் பின்னணியிலும், கிரேக்கர், உரோமர், சீனர், பாரசீகர் போன்ற வெளிநாட்டார் குறிப் புகள் மூலமும், ஈழத்துப் பாளி, சிங்கள நூல்களிற் காணப்படுங் குறிப்புகள் மூலமும், ஈழத்துப் பிராமி, சிங்களக் கல்வெட்டுகள் ஆகியன தருஞ் சான்றுகள் மூலமும் தான் ஓரளவுக்கு அறிந்து கொள்ளமுடிகின்றது.
பண்டுதொட்டுத் தமிழகத்தின் தென் பகுதியும் ஈழத்தின் வட - வடமேற்குப் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியுங் கரை யோர வாணிபத்தில் முக்கிய மையப் பிரதேசமாக விளங்கியது பற்றி மலோனி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.28
* பண்டைய காலத்தில் கடல் வாணிபம் கடற்கரை ஒர மாகவே நடைபெற்றது. இத்தகைய வாணிபம் சிந்து மாகாணக் கடலோரத்திலிருந்து ஆரம்பமாகிக் குஜராத் மாநிலக் கடற்கரை வழியாக மன்னார் வளைகுடாப் பகுதிக்கு விஸ்தரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மன்னார் வளைகுடாவிற் கிடைத்த முத்தே இவ்வாணிபத்தின் பிரதான காரணியாக அமைந்திருத்தல் வேண்டும். இவ் வாணிபத்தினாற்றான் தென்பாண்டி நாட்டு மக்களுக்கும் ஈழத்தின் வடபகுதி மக்களுக்கும் இவ்வணிகர்களுடன் தொடர்பேற்பட்டது. *
O 457 வாழ்வும் வளமும்

Page 245
இவ்வாறு இப்பகுதி ஈர்ப்பு மையமாக விளங்கியதற்கு அடிப் படையான காரணம் பண்டுதொட்டு மன்னார் வளைகுடா முத்துக்குளித்தல், சங்குகுளித்தல் ஆகியனவற்றுக்குப் பெயர் போன இடமாக விளங்கியதோடு இப்பகுதியிற் காணப்பட்ட துறைமுகங்களுக்கூடாக இரத்தினக் கற்கள் ஏற்றுமதி செய்யப் பட்டதும் ஆகும். இருந்தும் இப்பகுதியிற் காணப்பட்ட முத்துகள் ஆரம்பத்தில் இப்பகுதிக்கு வணிகர்களை ஈர்ப்பதற்குப் பிரதான காரணமாய் அமைந்திருந்தது எனக் கூறும் மலோனி, இவ்வாணிப வளர்ச்சியே ஈற்றில் மக்கள் குடியேற்றத்திற் கும் நாகரிக வளர்ச்சிக்கும் வழிவகுத்தது எனவுங் குறிப்பிடு கின்றார்.
ஈழத்தின் பொருளாதார வளர்ச்சியில் வாணிபம் ஒரு முக்கிய பங்கினை வகித்ததை ஜாதகக் கதைகள், சீன யாத்திரிகர்களின் குறிப்புகள் ஆகியனவற்றிலிருந்து தெளிவாக அறிய முடிகின் றது. ஜாதகக் கதைகளில், குறிப்பாக வலகச ஜாதகத்திற் சிறிசவத்துவில் வாழ்ந்த ய கழிகள் ஈழத்தின் கடலோரப் பகுதிகளிலே தமது வாணிபக் கப்பல்கள் உடைந்து தவிக்கும் வணிகர்களை மணம் முடிப்பதற்காகத் தமது நகருக்கு அழைத் துச் சென்று பின்னர் அவர்களைப் பிடித்துத் தமக்கு உண வாக்கிக் கொண்ட செய்திகள் கூறப்படுகின்றன.27 திவ்யவதான என்ற இன்னொரு நூலில் இரத்தினதிபம் என அழைக்கப்பட்ட இந்நாட்டுக்கு விலைமதிப்பற்ற கற்களைத் தேடி வணிகர்கள் வந்தது பற்றியும் அவர்கள் ஈற்றில் இராட்சசிகளின் பிடியிற் சிக்கியது பற்றியுங் குறிப்புளது.28 இவ்வாறு வந்த வணிகர் களின் தலைவனே சீகள என்றும் இவன் ஈற்றில் யக்ஷர்களைக் கொன்று ஈழத்தில் அரசமைத்தான் என்றும் இந்நூல் கூறு கின்றது.29 இவ்வாறான குறிப்புக் குவான் சுவாங்கின் நூலிலுங் காணப்படுகின்றது. 30
கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஈழம் வந்த பாஹியன் என்ற சீன யாத்திரிகனின் குறிப்பிலும் ஈழத்தின் ஆதிவாசிகளாகிய யகூடிர்களின் வாணிப நடவடிக்கைகள் பற்றிய ஐதீகங்கள் காணப்படுகின்றன.31 பாஹியன் ஈழத்தில் ஆதியில் மனிதர்கள் வாழவில்லை என்றும் அவர்களுக்குப் பதிலாகப் பேய், பிசாசு
யாழ். - தொன்மை வரலாறு 458 G

களுந், தேவதைகளுமே வாழ்ந்தனவென்றும், பல்வேறு நாடு களிலிருந்து இங்கு வந்த வணிகர்கள் இத்தேவதைகள் தாம் தோற்றமளிக்காத நிலையில் விலை குறித்து வைத்த பொருட் களைப் பெற்று, அதற்குரிய பணத்தையும் விட்டுச் சென்றன ரென்றும் இவ்வணிகர்களின் மூலமாக இவ்வாணிப நடவடிக்கை களை அறிந்த பல்வேறு நாட்டு மக்கள் இந்நாட்டின் சிறப் பினை அறிந்து அதிக அளவில் இங்கு வந்து குடியேறியதன் விளைவாக இந்நாட்டில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது என்றுங் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய ஐதீகங்கள் பண்டு தொட்டு ஈழம் வாணிப நடவடிக்கைகளில் மேம்பட்டிருந்த நிகழ்ச்சியையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன.
ஈழம் மட்டுமன்றி இதன் வட, வடமேற்குப் பகுதிகள் ஆகியன தென்னிந்தியாவுக்கு அருகில் அமைந்திருந்ததால் ஈழம் நாகரிக வளர்ச்சி கண்ட வரலாற்றுக் காலத்திலேயே தமிழ கத்து முசுறி, தொண்டி, கொற்கை, புகார் போன்ற வாணிப மையங்களுடன் தொடர்பு கொண்ட பகுதியாக இவை காணப் பட்டன என ஊகிக்க முடிகின்றது. இத்தகைய வாணிட நடவடிக்கைகளில் வடக்கே இருந்த ஜம்புகோளப் பட்டினமும் வடமேற்கே இருந்த மகாதித்த என அழைக்கப்பட்ட மாதோட் டமும் முன்னிலை பெற்றிருந்தன. இதேபோல வல்லிபுரம் போன்ற இடங்களிலும், கிழக்கே முல்லைத்தீவிலும் Lo) வாணிப மையங்கள் காணப்பட்டிருக்கலாம். வல்லிபுரம், முல்லைத்தீவு ஆகியன இவ்வாறு முக்கியம் பெற்றிருந்தன என்பதை உறுதி செய்வனவாக இப்பகுதிகளிற் கண்டெடுக்கப் பட்ட மிகப் பழைய நாணயங்களான அச்சுக் குத்திய நாணயவகைகள் அமைந்துள்ளன.32
வடபகுதித் துறைமுகங்களும் தமிழகமும்
* ஜம்புகோள ” என்ற வடிவமே வடபகுதியிலமைந்திருந்த துறைமுகத்தைக் குறிக்கும் சொல்லாகப் பாளி நூல்களில் இடம் பெற்றுள்ளது. மகாவம்சத்தில் வரும் குறிப்பில் இத் துறைமுகத்தினுடாகவே வட இந்திய அசோகச் சக்கரவர்த் திக்குத் தேவநம்பியதீஸன் பரிசுப் பொருட்களுடன் ஒரு தூதுக் குழுவை அனுப்பினான் என்றும் அக்குழுவில் செத்தி (செட்டி)
O 459 வாழ்வும் வளமும்

Page 246
வணிகர்களின் தலைவன் இடம் பெற்றிருந்தான் என்றுங்
கூறப்பட்டுள்ளது.33 பொதுவாக வட இந்தியாவோடு கலாசார
நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகமாக இது
பாளிநூல்களில் இடம் பெற்றிருந்தாலுங்கூட இத்தூதுக்
குழுவில் அடங்கியோரிற் செட்டி பற்றிய குறிப்புக் காணப் படுவது வாணிப நடவடிக்கைகளிலும் இத்துறைமுகம் முக்கியம்
பெற்றிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
இக்கருத்தினையே எல்லாவலவும் பின்வருமாறு ஆமோதித் துள்ளமை அவதானிக்கத்தக்கது.34
* கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஈழம் வடஇந்தியா வோடு கொண்டிருந்த கலாசார, வாணிபத் தொடர்பு களைப் பொறுத்தமட்டில் எல்லாச் சான்றாதாரங்களும் வேறெந்தத் துறைமுகத்தையும் விட முக்கியம் பெற்ற தாக ஜம்புகோளப் பட்டினம் வளர்ச்சி பெற்றதையே எடுத்துக் காட்டுகின்றன. ஜம்புகோளப் பட்டினத்துக்கு" அருகில் உள்ள பகுதி வாணிப நகராக வளர்ச்சி பெற்றது மட்டுமன்றிப் பெருமளவுக்குப் பெளத்தர் களே இங்கு வாழ்ந்தனர் எனவுங் கருத இடமுண்டு. *
ஜம்புகோளப் பட்டினம் என இது அழைக்கப்பட்டமைக்கான விளக்கத்தினைக் கூறவந்த எல்லாவல, பட்டினம் என்பதைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வதால் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தின் முசுறி, தொண்டி கொற்கை, புகார் போன்று ஈழத்துத் தமிழ் மக்களின் வாணிப நடவடிக்கைகளின் மைய மாக ஜம்புகோளப் பட்டினமும் வளர்ச்சி பெற்றிருந்தது எனலாம்.
பாளி நூல்கள் கூறும் ஜம்புகோள என்பதனை இரு சொற்றொகுதிகளாகப் பிரிக்க முடியும். ஜம்பு, கோவளம் ஆகியவையே இவையாகும். கோவளம் என்ற பதமே பாளி நூல்களிற் கோள" என வழங்கப்பட்டது போலத் தெரிகின் றது. இப்பெயர் பருத்தித்துறை, காரைநகர் ஆகிய இடங் களிற் காணப்படுவதுங் குறிப்பிடத்தக்கது. ஒரு வகையிற் *கோவளம்" என்ற பெயர் கூடத் தமிழகத்திலிருந்து இங்கு
யாழ் - தொன்மை வரலாறு 46o O

ஏற்பட்ட குடிபெயர்வுகளின் மூலமாகவே ஈழத்தினை அடைந் தது எனலாம். இப்பெயர் சென்னைக்குத் தெற்கே உள்ள ஓர் ஊரின் பெயராகும் எனக் கூறும் சேதுப்பிள்ளை கடலுக்குள் நீண்ட தரைமுனையை உடைய பகுதியே கோவளமாகும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.35 இதனால் இப்பகுதி முன் பொருகால் கடலை நோக்கி விரிந்து காணப்பட்டதால் இப் பெயரால் இது அழைக்கப்பட்டும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி பின்னர் கடற்கோளால் அழிந்துபட்டதாற்றான் இப் பட்டினம் பற்றிய தொல்லியற் சான்றுகள் நமக்குக் கிட்டாம
லிருக்கலாம்.
எனினும் இப்பெயரின் முன்னாலுள்ள " ஜம்பு " பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. செம்பு நிறத்தைக் குறிக்கும் ‘சம்பு" என்ற தமிழ்ப் பெயரே இவ்வாறு ஜம்புவாக மாறியிருக்கலாம். அல்லது நாவல் என்ற தமிழ்மொழி வடிவமே இவ்வாறு ஜம்பு என வடமொழி, பாளி மொழி ஆகியனவற்றுள் வழங்கப்பட்டிருக்கலாம். ஜம்புவைச் சம்புவின் வழிப் பிறந்த தாகக் கொண்டால் இதனை ஜம்புவாகிய சிவனாகவும் கொள்ளலாம். அப்படியாயின் இது சிவனின் இருப்பிடம் அமைந்திருந்த கோவளம் எனப் பொருள் தரும். விசேஷமான சிவஸ்தலம் ஒன்று இங்கு காணப்பட்டதால் அல்லது நாவல் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். நாவலந்தீவு என்பதே வடமொழியில், "ஜம்புதீப" என அழைக்கப்படுவதால், ஜம்புதீபம் என அழைக் கப்பட்ட இந்தியாவோடு இது கொண்டிருந்த தொடர்பினா லும் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் ஈழத்தின் வடபகுதி வடஇந்தியாவோடு கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டுஞ் ஜாதகக் கதைகள் பற்றிக் குறிப்பிடுவதும் அவசியமாகின்றது. அகித ஜாதகத்தில் வட இந்தியா, தமிழகத்துப் புகார், ஈழத்தின் வடபாலுள்ள தீவு களிலொன்றாகிய காரைதீவு ஆகியன இடம் பெற்றுள்ளதும் ஈண்டு நினைவு கூரற்பாலது. வடஇந்தியாவிலிருந்து வந்த முனிவர் ஒருவர் புகாரில் தங்கிய பின்னர் ஈழத்திலுள்ள காரைநகருக்கு வந்து காரைச் செடிகளின் இலைகளையுண்டு வாழ்ந்ததாக மேற்படி கதை குறித்துள்ளது.38
O 461 வாழ்வும் வளமும்

Page 247
வடக்கே ஜம்புகோவளம் போன்று வடமேற்கே மாந்தைப் பட்டினம் சிறப்புப் பெற்றுள்ளமையைப் பாளி நூல்களின் குறிப்புகளுத் தமிழ் நூல்களின் குறிப்புகளும் எடுத்துக் காட்டு கின்றன. இப்பதங்கூட ஒரு பழந்தமிழ் வடிவமாகிய “பட்டினம்" என்பதன் சிதைவாகிய “பட்டின" எனப் பாளி நூல்களிற் குறிக் கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே இப்பகுதி பழந்தமிழரின் செல்வாக்குக்குட்பட்ட பகுதியாக விளங்கியது எனவும் எல்லாவல கூறத் தவறவில்லை. இப்பதத்தின் தோற் றம் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.87
* எமது நூல்களில் மகாதித்த என்பது எந்தவோரிடத்தி லும் நகர அல்லது புர என அழைக்கப்படாமை அவ தானிக்கத்தக்கது. இது மகாதித்த பட்டின(ம்) என்றே அழைக்கப்பட்டுள்ளது. ஜாதகக் கதைகளில் பட்டின என்ற பதம் பட்டினம், நகரம் அல்லது துறைமுகத்தையே குறித்து நின்றது. தமிழிற் கூடப் பட்டினம் என்றால் நகரத்தினையே குறிக்கும். இதனால் இப்பதத்தைத் திராவிடமொழி வழிவந்ததொன்றாகக் கொள்ள இடமுண்டு.”
இச்சந்தர்ப்பத்தில் இராசநாயக முதலியார் சங்க நூல்கள் குறிக்கும் மாந்தையே மன்னாரிலுள்ள மாதித்த பட்டின " எனத் தெரிவித்துள்ள கருத்து அவதானிக்கத்தக்கது. சேர மன்னரின் ஆணைக்குட்பட்டதால் இத்துறைமுகங் குட்டுவன் மாந்தை எனப் பெயர் பெற்றது என்பதும் இவரது கருத் தாகும்.38 சேரர் கடற்படை படைத்துக் காணப்பட்டதால், ஒரு சமயம் இப்பகுதியிலே தமது ஆதிக்கத்தினைப் பரப்பிய தன் காரணமாக இது இவ்வாறு அழைக்கப்பட்டுமிருக்கலாம். இதனால் முதலில் இராசநாயக முதலியார் மேற்கோளாகக் காட்டும் குறுந்தொகையிற் காணப்படும் பின்வரும் பாடலை நோக்குவாம்.39 :
* முனா அதி யானையிண் குருகின் காணலம்
பெருத்தோட்ட மள்ள ரார்ப்பிசை வருஉங் குட்டுவன் மாந்தை யன்ன ?
( குறுந்தொகை. 35)
யாழ். - தொன்மை வரலாறு 462 இ9

மேற்கூறிய பாடல் இத்துறைமுகத்திணைக் குட்டுவன் மாந்தை என அழைப்பதோடு இப்பகுதிக் கடற்கரையிலுள்ள சோல்ை களில் உணவை உண்ணும் யானைகள் பெருந்துறையில் உள்ள விவசாயிகள் செய்யும் ஒலியாற் பீதியடைந்தன எனவுங் குறிப்பிடுகின்றது. இப்பாடலிலுள்ள சிறப்பு யாதெனில் இதிற் காணப்படும் * மாந்தை ", " பெருந்தோட்டம் " ஆகிய பெயர்க ளாகும். மாத்தை என்ற சொல் சங்ககாலத்திலிருந்தே வழக்கிலிருப்பது அவதானிக்கத்தக்கது. சிலர் குறிப்பிடுவது போன்று மாந்தையைத் தமிழகத்திலுள்ள ஒரு துறைமுகத்தின் பெயராகக் கொண்டாலுங்கூட அது புகழ்மிக்க துறைமுகத் தின் பெயராக ஈழத்திலும் பண்டு தொட்டு வழக்கிலிருந் துள்ளமைக்குச் சான்றுகளுண்டு. அக்காலந்தொட்டுத் தமிழ கத்திலுள்ள துறைமுகத்தின் பெயரொன்று ஈழத்திலுள்ள துறைமுகத்திற்கு இடப்பட்டமை தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வின் விளைவாகவும் இருக்க லாம். இப்பகுதி தமிழகத்திற்கு நேரெதிரிற் காணப்பட்டதால் தமிழகத்திலேற்பட்ட வாணிப வளர்ச்சியோடு இது வரலாற். றுக் காலத்தின் ஆரம்பத்திலேயே இணைந்து விட்டது. இத னையே இப்பெயர் மேலும் எடுத்துக் காட்டுகின்றது. தண் பொருணை என்ற தமிழக ஆற்றின் பெயர் எவ்வாறு ஈழத் திற்கு இடப்பட்டுப் பின்னர் வடமொழியிலே தாம்ரவர்ணியா கவும், பாளிமொழியிலே தம்பபண்ணியாகவும் உருமாறியதோ அவ்வாறு உருமாறாது மாந்தை என்ற பெயர் இப்பகுதிக்குத் தொடர்ந்திருப்பது இதற்குரிய தனிச் சிறப்பாகும். விஜயன் கூட்டத்தினர் வந்திறங்கிய ‘தம்பபண்ணி" என்ற இடங்கூட மாந்தையின் அருகே ஒடும் அருவி ஆறென அழைக்கப்படும் மல்வத்து ஒயாவின் கழிமுகக் கரையிலேயே அமைந்துள்ளது என்று அறிஞர்கள் அபிப்பிராயப்படுவதும் ஈண்டு அவதானிக் கத்தக்கது.40 எனினும் இக்குறுந்தொகைப் பாடலில் வரும் பெருந்தோட்டம் தமிழ், பாளி நூல்களில் இத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள "மாதோட்டம்" (மாதோட்ட) என்ற பெயரைச் சுட்டி நிற்பதால் மாந்தை என்பதுகூட தமிழகத்திலுள்ள மாந்தையையன்றி ஈழத்திலுள்ள மாந்தை யையே குறித்தது என்று இராசநாயக முதலியார் எண்ணிய திலே தவறில்லை போலத் தெரிகின்றது.
O 463 வாழ்வும் வளமும்

Page 248
மா என்பது பெரிய என்ற பொருளைத் தருந் தமிழ்ச் சொல்லாகும். வடமொழி : மகா " என்பது இத்தகைய பொருளைத் தரும் இன்னுமோர் வடிவமாகும். இதனாற் பெருந்தோட்டமும் மாதோட்டமும் ஒத்த சொற்களே என லாம். இச்சொல்லே தமிழில் மாதோட்டமெனவும், பாளி, சிங்கள மொழிகளில் மாதோட்ட எனவும் வழங்கப்பட்டுள்ளது. “மகாதித்த" என்பது பெரிய இறங்கு துறை எனப் பொருள் படும். ஒரு சமயம் பெருந்துறை என்று இவ்விடத்திற்கு வழங்கப்பட்ட பெயரே இவ்வாறு பெரிய இறங்குதுறையாக மாதித்த ( மகாதித்த ) எனப் பாளி, சிங்கள மொழிகளில் உருமாறியுமிருக்கலாம். இதன் வடமொழி வடிவந்தான் மகாதித்தமாகும். எவ்வாறாயினும் இத்துறைமுகத்தின் பெயர் பண்டு தொட்டு இவ்விடம் தமிழகச் செல்வாக்குக்கு உட்பட்டதையே எடுத்துக் காட்டி நிற்கின்றது.
வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திலிருந்தே தமிழகமும் ஈழமும் வாணிபத்துறையில் ஒன்றாக இணைந்து நெருக்க மான தொடர்புகளை உடையனவாக விளங்கியதற்கான பல சான்றுகள் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்துவதாகவே சிலப்பதிகாரத்திற் காணப்படும் பின் வரும் அடிகள் அமைந்துள்ளன.41
நாகநீண கரொடு ணாகநாட தனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர துதன்னில்
இப்பாடலில் நாக நாட்டிலுள்ள நகரொன்று புகார் நகரோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இப்புகாரிற்றான் கண்ணகியின் தந்தை யான மாநாய்கன் வாழ்ந்ததாக ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். நாகநாடே பாளி நூல்கள் குறிப்பிடும் * நாசுதீப " என்ற வடபகுதியாக இனங்காணப்பட்டுள்ளதால் இக்குறிப்பை வடபகுதியிலுள்ள ஒரு துறைமுகத்திற்கு உரிய தாகக் கொள்ளலாம். எவ்வாறாயினும் புகாருடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு இது சிறப்புடன் விளங்கியமை அவதானிக் கத்தக்கது. இது ஒரு சமயம் ஜம்புகோவளத்தையுங் குறித் திருக்கலாம். மாநாய்கனை வடபகுதியோடு தொடர்புபடுத்தும்
யாழ். - தொன்மை வரலாறு 464 ெ

பிற ஐதீகங்களும் உள. கண்ணகிக்குக் காற்சிலம்பு அமைப் பதற்கு உரிய நாகமணியைப் பெறுவதற்காக மீகாமனை" வடபகுதிக்கு இவன் அனுப்ப, அவனை எதிர்த்துப் போரிட்ட வெடியரசன், அவனின் சகோதரர்கள் ஆகியோரையும் வெற்றி கொண்டு நாகமணியுடன் மீகாமன் தமிழகந் திரும்பியதாகக் கண்ணகி வழக்குரை எடுத்தியம்புகின்றது.42 மாநாய்கனை நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தோடு இணைக்கும் பல உளதாலும் வெடியரசன் - மீகாமன் கதையில்
ஐதீகங்கள்
வடக்கே உள்ள தீவுகள் இடம்பெறுவதாலும் புகாரின் சிறப்புப் போன்ற சிறப்புடன் விளங்கிய நாகநாட்டு நகராக ஜம்புகோவளம் காணப்பட்டிருக்கலாம். இவற்றை விடக்
கோவலனுடைய தந்தையின் பெயராக மாசாத்துவானும் அவனின் வணிக நண்பனின் பெயராகக் கண்ணகியின் தந்தையான மாநாய்கனுஞ் சிலப்பதிகாரத்தில் இடம் பெற் றுள்ளமை அக்கால வாணிப அமைப்பு முறையையே எடுத் துக் காட்டுகின்றது.
இலக்கியங்களில் வணிக குழுக்கள் • சாத்து’ என அழைக் கப்பட்டதற்கான சான்றுகள் உள. சாத்துக்களை (குழுக்களை) அமைத்துத் தரைவழி வர்த்தகத்திலீடுபட்ட குழுக்களின் தலைவன் " மாசாத்துவான் " என அழைக்கப்பட்டான். இவ் வாறே கடல் வாணிபத்திலீடுபட்ட குழுக்களின் தலைவனும் மாநாய்கன்” என அழைக்கப்பட்டான். ‘நாய்கன்" என்ற இப் பதம் வடமொழி " நாவிக " என்ற பதத்தின் வழிவந்தது என்று பொதுவாகக் கொள்ளப்படினும் இதற்குந் தமிழிலுள்ள * நாவாய் " என்ற பதத்திற்குமிடையே உள்ள தொடர்பு ஆராய்தற்பாலது. இச்சந்தர்ப்பத்தில் மீகாமன் என்ற பதங் கூடக் கப்பற்றலைவனைச் சுட்டி நிற்பது அவதானிக்கத் தக்கது.
நாகநாட்டுடன் புகார் நகரங் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றிய குறிப்பு மணிமேகலையிலுண்டு. நாகநாட்டு இளவரசி பீலிவளை சோழ அரசனான நெடுங்கிள்ளியுடன் கொண்டிருந்த உறவால், தான் பெற்ற மகனை அவ்வரசனிடம் அளிக்குமாறு இவ்விரு பகுதிகளுக்குமிடையே வாணிப f5வடிக்கைகளிலீடுபட்ட கம்பளச் செட்டியிடம் அளித்ததாக
O 465 வாழ்வும் வளமும்

Page 249
வருங் குறிப்பு இக்காலத்திற் செட்டி வணிகர்கள் இப்பகுதி வாணிபத்தில் ஈடுபட்டதை எடுத்துக் காட்டுகின்றது. 43 தேவ நம்பியதீஸனால் அசோகச் சக்கரவர்த்திக்கு அனுப்பப்பட்ட தூதுக்குழு இத்துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றதை நோக்கும்போதும் வடபகுதியில் அமைந்திருந்த ஜம்புகோளப் பட்டினமே தமிழ் நூல்களிற் புகார் நகரத்தின் சிறப்பினை ஒத்த சிறப்புடன் விளங்கிய பட்டினமாக இருக்கலாம் என எண்ணத் தூண்டுகின்றது. நாகநாடு சிலப்பதிகாரத்திற் குறிக் கப்படுவது போன்று மணிமேகலையில் * மணிபல்லவம் " என வும் பேசப்படுகின்றது. தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர் மணிபல்லவத்திலே தங்கி நின்று சென்றதை இந்நூலின் பின்வரும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன. 44
* கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉ
யிலங்கு நீர்ப்புணரி யெறிகரை யெய்தி வங்க மேறினன் மணி பல்லவத்திடைத் தங்காதக் கலஞ்சென்று சார்ந்திறுத்தலும்
(மணிமேகலை 25, 24 - 127)
வங்க மாக்கெளாடு மகிழ்வுட னேறிக் கால்லிசை கடுக்கக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள்
(மணிமேகலை 24, 79 - 84)
மேற்கூறிய குறிப்புகள் யாவும் நாகநாடு, மணிபல்லவம் என அழைக்கப்பட்ட வடபகுதியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. சங்க நூல்களிலொன்றாகிய பட்டினப்பாலையிலும் புகார் நகருக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து குவிந்த வாணிபப் பொருட்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இக்குறிப்பில் ஈழத்தி லிருந்து அங்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவு ags ( வாசனைத் திரவியங்கள் ) "ஈழத்துணவு' எனவும் தென் கிழக்காசிய பிராந்தியமாகிய கடாரத்திலிருந்து அங்கு வந்த
யாழ். - தொன்மை வரலாறு 468 G

பொருட்கள் "காளகத் தாக்கம்" எனவும் இடம் பெற்றுள் ளமை அவதானிக்கத்தக்கது.45 இத்தகைய குறிப்புகள் தமிழகஈழ வர்த்தக நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் நேரடி யாக ஈழத்திற்கு வந்து பொருட்களை இட்டுச் செல்வதற்குப் பதிலாக இப்பொருட்கள் தமிழகத்திலுள்ள துறைகளை அடைய இவை அங்கிருந்தே இவ்வர்த்தகர்களின் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை எடுத்துக்காட்டுவனவாக அமை கின்றன. இத்தகைய நிலை ஈழத்தின் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பின் ஆரம்ப கட்டத்தினைக் குறித்தது எனலாம். உரோம இலக்கியக் குறிப்புகள் அவர்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஈழத்து வாணிபப் பொருட்களை ஈழத் திற்கு வந்து பெற்றுக் கொள்வதற்குப் பதிலாகத் தமிழகத்தி லுள்ள துறைமுகங்களிலேயே அவற்றைப் பெற்றதை எடுத்துக் காட்டுகின்றன,
இத்தகைய குறிப்புகள் இக்காலத்திலே தமிழக வணிகர்கள் ஈழத்து வர்த்தகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்ததை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில், தென்கிழக் காசிய வர்த்தகத்திலும் முக்கிய பங்கினை வகித்ததை உறுதி செய்கின்றன. அதுமட்டுமன்றித் தமிழக வணிகர் மத்தியதரைப் பிரதேசத்துடனுஞ் செங்கடலூடாகவும் வாணிப நடவடிக்கை களை மேற்கொண்டிருந்ததை உறுதிப்படுத்துவதாக அண்மை யில் எகிப்து நாட்டிற் கிடைத்துள்ள தமிழ் வணிகரின் பெயர்கள் பொறித்த கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி வரிவடிவத்திலமைந்த இரு மட்பாண்டச் சாசனங்கள் அமைகின்றன.49
மேற்கூறிய பின்னணியிற்றான் பாளி நூல்களில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் படைஎடுப்புகள் பற்றி ஆராய வேண் 4 யுள்ளது. காரணம் இப்படைஎடுப்புகள்கூட ஒரு வகையில் தமிழகத்தவர் ஈழத்துடனான வாணிபத்தினைத் தமது கட்டுப் பாட்டுக்குட் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண் டிருந்திருக்கலாம் எனவும் யூகிக்கலாம். ஏனெனில் மகாவம் சம் ஈழத்திற்குப் படையுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றிய வர்களாகச் சேனன், குத்திகன் ஆகிய இருவரையுங் குதிரை
இ) 467 வாழ்வும் வளமும்

Page 250
வணிகரின் புதல்வர்கள் என அழைகின்றது.47 இத்தகைய குறிப்பிலிருந்து நாம் தெளிவது யாதெனில், தமிழ்நாட்டிற் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப் படாததால் வெளிநாட்டிலிருந்து அங்கே இறக்குமதி செய்யப் பட்ட குதிரைகளின் வர்த்தகத்தில் தமிழ் வணிகர்கள் ஈடு பட்டிருந்தார்கள் என்பதாகும். குதிரை வணிகரைப் பிற் காலக் கல்வெட்டுகள் "குதிரைச் செட்டிகள்" என அழைக் கின்றன.48 இதனாற் குதிரைவாணிபம் தமிழகம்-ஈழம் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற போது தமிழ்நாட்டு வணிகரின் ஏகபோக உரிமைக்குரியதாகவும் இது அமைந்திருந்தது என லாம். தமிழர் இக்காலத்தில் குதிரை வாணிபத்தில் முன் னிலை பெற்றிருந்ததை உறுதி செய்வதாக வவுனியா மாவட் டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படுங் குறிப்பொன்று அமைகின்றது. இக்குறிப்புக் குதிரைகளை மேற்பார்வை செய் யுந் தலைவனாக வேள்” என்பவனைக் குறிக்கின்றது.49 வட மேற்கே குதிரைமலை என்ற இடப்பெயர் காணப்படுவது இக்காலத்திற் குதிரைகள் இவ்விடத்தில் வந்திறங்கியதை எடுத்துக் காட்டுவதாகவும் அமையலாம். இவ்விடத்தையே கிரேக்க அறிஞர்கள் * குதிரை முனை" என அழைத் துள்ளனர்.50 தமிழகத்திலுள்ள இக்குதிரைமலைதான் “வேள்” எனப்பட்ட இனக் குழுவினரில் ஒருவனான பாரி வாழ்ந்த இடம் எனச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இவ்வர்ணிப நோக்கத்திற்காகவே கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் ஈழத் தின் மீது எல்லாளன் மேற்கொண்ட படை எடுப்பும் அமைந் திருக்கலாம். இவனின் ஆட்சிக் காலம் நாற்பத்து நான்கு வருடங்களாகும். இது அநுராதபுரத்தில் நீடித்திருந்ததையே பாளி நூல்கள் எடுத்தியம்புகின்றன.51 அதுமட்டுமன்றி இவ னைக் குதிரைவணிகனாக அன்றிப் பெருமகனாகவே இவை குறிப்பதும் அவதானிக்கத்தக்கது. வாணிபத்தினால் ஏற்பட்ட செல்வச் செழிப்பால் உருவாக்கப்பட்ட வர்க்கத்தினரே சம கால ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் "கஹபதி', ' குடும் பிகன்" என அழைக்கப்பட்ட பெருமக்களாக விளங்கியதை நோக்கும்போது, எல்லாளனும் இத்தகைய வகுப்பினனாகக் காணப்பட்டதாலேயே மகாவம்சம் பெருமகனாக இவனை அழைத்தது எனலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 468 G

எல்லாளனுக்குப் பின்னர் கி. மு. முதலாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த வட்டகாமினியின் காலத்திலேற்பட்ட தமிழ்ப் படை எடுப்பும், அதன் விளைவாக அநுராதபுரத்திற் கிட்டத் தட்டக் கால்நூற்றாண்டுகளாக ஏற்பட்ட தமிழராட்சியுந் தமிழக - ஈழ வாணிப நடவடிக்கைகளிலே தமிழரின் கையை ஓங்க வைத்திருக்கலாம். இப்படைஎடுப்பு ஈழத்தின் வடபகுதிக்கு மிக அண்மித்தக் காணப்பட்ட பாண்டிநாட்டிலிருந்தே ஏற்பட்டது. இவர்களின் பெயர்கள் புலஹத்த, பாஹிய, பனையமாற, பழையமாற, தாதிக என்பன ஆகும்.62 இதன் பின்னர் அனுலா என்ற அரசியின் காலத்தில் அவளின் சோர நாயகர்களாக இரு தமிழ் நாட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள னர். இவர்களில் ஒருவன் வடுகனாவன். மற்றவன் நீலிய னாவன். 58 இவ்வாறு பாளி நூல்கள் தருஞ் சான்றுகளை நோக்கும்போது கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னருந் தேவ நம்பியதீஸனுடன் ஆரம்பமாகும் வரலாற்றுக் காலத்துக்கு மிடைப்பட்ட காலப்பகுதியின் மூன்றிலொரு காலப்பகுதியில் அநுராதபுரத்திலே தமிழ்நாட்டவராட்சி நடைபெற்றமை புலனாகின்றது.
பிற்காலத்திற் சோழர் ஈழத்தின்மீது மேற்கொண்ட படை எடுப்புகளுக்கு வர்த்தகமும் ஒரு காரணமாக அமைந்திருந்தது போன்று கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் ஈழத்தின் மீதான தமிழ் நாட்டவரின் படைஎடுப்புகளுக்கும் வர்த்தகம் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது என்பதை ஈழத்தின் மிகப்பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. காலத்தால் இக்கல்வெட்டுகள் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளைச் சார்ந் திருப்பது இவற்றின் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக் கின்றது.
இப்பிராமிக் கல்வெட்டுகளிலே தமிழ்நாட்டிலிருந்து வந்த வணிகர்கள் ‘தமேட வணிக" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.54 பாளி நூல்கள் பொதுவாகவே தமிழ்நாட்டவரைத் "தமிள"(ழ) என அழைப்பதை நோக்கும்போது இந்நூல்கள் குறிக்குந் 'தமிள" தான் இக்கல்வெட்டுகளிலே 'தமேட" என இடம்
O 469 வாழ்வும் வளமும்

Page 251
பெற்றுள்ளது எனலாம். இவ்வர்த்தகக் குழுக்கள், குழுக்களா கச் செயற்பட்டதையே அநுராதபுரத்திலுள்ள தமிழ் வணிக்ர் களது கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது.55 இக்கல்வெட்டிலே "தமேட கஹபதி கன" என்ற சொற் பிரயோகம் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி இவ்வர்த்தக கணத்தவர் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய கற்பாறையில் வெட்டப்பட்ட இவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஆசனங்களுங் காணப்படுகின்றன. இவ்வாசனங்கள் பல்வேறு நிரைகளாக அமைந்துள்ளன. இவற்றுக்குரியோராகச் சக, நசத, திஸ, குபிரசுயாத, காரவ போன்ற பெயர்கள் காணப்படு கின்றன. இவ்வாசனங்களில் அதி உயரத்திலுள்ள ஆசனத் திற்கு உரியவனாகக் கடலோடியான நாவிகன் குறிக்கப்பட் டுள்ளான். எனினும் இந்நாவிகவுடன் இணைந்து காணப் படுங் ‘காரவ" என்பது கரையோர மக்களைச் சுட்டி நிற்கும் * கரையார்" என்பதன் பழைய வடிவம் எனக் கூறுவாரு முளர். 56 அப்படியாயின் இப்பதம் கரையார் சமூகத்தினைச் சேர்ந்த கப்பற்றலைவனையே குறித்து நிற்கின்றது எனலாம்.
இக்கல்வெட்டுகளிற் காணப்படும் " நாவிக என்ற பதத் திற்குஞ் சிலப்பதிகாரங் குறிக்குங் கண்ணகியின் தந்தையாகிய * மாநாய்கன்” என்ற பதத்திற்குமிடையே நெருங்கிய ஒற்றுமை உள்ளது. இதனாலே தமிழகத்திற் கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டோரின் தலைவனையே " மாநாய்கன்" என்ற பதஞ் சுட்டி நின்றது என்று ஏற்கனவே குறித்தோம். தமிழகத்தி லிருந்து கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய காலப்பகுதியிற் செயற்பட்ட வர்த்தக கணம் பற்றியே இந்த அநுராதபுரக் கல்வெட்டில் இடம் பெறும் " தமேட கஹபதி கன " என்ற சொல்லும், இதன் தலைவனான "நாவிககாரவ' என்ற சொல் லும் எடுத்துக் காட்டுகின்றது எனலாம். இதில் இடம் பெற் றுள்ள பெயர்களை நோக்கும்போது இவை யாவும் பெளத்த மதத்தோடு சம்பந்தமுடைய பெயர்களாகவே காணப்படுவ தால், இக்கால வாணிப நடவடிக்கைகளிலே பெளத்த மதத் தினைத் தழுவிய தமிழகத்தவர் ஈடுபட்டதை மேலும் இவை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் மட்டுமன்றித் தக்கணம், வடஇந்தியா ஆகிய இடங்களிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்
யாழ். தொன்மை வரலாறு 47o (9

களாகப் பெருமளவுக்குப் பெளத்தர்கள் காணப்படுவதோடு, குகைத்தானங்களை அளித்தவர்களாகவும் இவர்கள் குறிப்பிடப் படுவது அவதானிக்கத்தக்கது.57
பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் இன்னோர் பதந் தான் " புக ஆகும். இப் புக" வும் ஒரு வர்த்தக கணத்தைக் குறித்து நிற்கின்றது எனக் கருதப்படுகின்றது.58 இவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளத்தில் காணப் படும் இரு கல்வெட்டுகளிலே ‘தமேட வணிஜ கஹபதி விசாக" பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.89 இது அநுராதபுரத் தினைப் போன்று இப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட கூட்டத்தினரையே குறிக்கின்றது எனலாம். எனினும் இக்கல்வெட்டிலும் அநுராதபுரத்தினைப் போன்று இவ்வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோராகக் கஹபதி " எனப்பட்டோர் குறிப்பிடப்படுவதால், இப்பதம் வாணிப நடவடிக்கைகளில் மேன்மையுற்று விளங்கிய ஒரு வகுப்பினரைக் குறிக்கும் பதம் எனக் கொள்ளலாம். இதனையே இக் கஹபதிகள் என்ற பெயர் காணப்படும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இதனாற் சிலப்பதிகாரங் குறிக்கும் மாநாய்கன், மாசாத்துவான் ஆகியோர் இத்தகைய வகுப் பினர் எனலாம்.
தமிழகம் - ஈழம் ஆகியன வர்த்தகத்துறையில் இக் காலத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததைத் தமிழகத்து மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் ஈழக்குடுமிகன் " என்ற பதம் எடுத்தியம்புகின்றது.60 குடுமிகன் " என்ற பதம் ஈழத்திலுள்ள் பிராமிக்கல்வெட்டுகளில் ஒரே ஒரு இடத்திற்றான் காணப் பட்டாலுங்கூட இவர்களுங் கஹபதி ga அழைக்கப் பட்ட வகுப்பினரே என்பதை இப்பதம் இடம்பெற்றுள்ள் இந்தியாவிலுள்ள தக்கணப் பகுதிகளிற் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. இதனாற் பண்டைய ஈழம் - தமிழகம் ஆகிய பகுதிகளில் வாணிபச் சிறப்பால் மேன்மை பெற்ற ஒரு வர்க்கம் ‘கஹபதிகள்" என அழைக்கப் Lull-60LD புலனாகின்றது. இத்தகையோர் ஈழத்துடன்
O 47 வாழ்வும் வளமும்

Page 252
கொண்டிருந்த தொடர்பையே ஈழத்திலே தமிழ் நாட்டவரைக் குறிக்குந் தமேட" என்ற பதத்துடன் சேர்ந்து காணப்படும் இப்பதம் எடுத்தியம்புகின்றது. தமிழ்நாட்டார் ஈழத்தின் மீது மேற்கொண்டிருந்த வர்த்தக நடவடிக்கைகளைக் குறிக்குங் கல்வெட்டுகள் ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுங் காணப்படுகின் றன. இவற்றுள் அம்பாறை மாவட்டத்திலுள்ள குடுவில் என்ற இடத்திற் கிடைத்த கல்வெட்டு முக்கியமாகின்றது.81 இதுவும் அநுராதபுரம், வவுனியா ஆகிய பகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகளை ஒத்த காலத்திற்குரியதுதான். குடுவில் கல் வெட்டு தீகவாபி பொறன வணிஜன பற்றியும் அவர் களின் மனைவியாகிய திஸ என்ற பெயரைத் தாங்கிய தமிழ்ப் பெண்மணி பற்றியுங் குறிப்பிடுகின்றது. இத்தீகவாபி ஈழத்தில் ஆரியரின் ஆதிக்குடியேற்ற மையங்களிலொன்றாகும். பின்னர் துட்டகைமுனு மன்னனுடைய ஆட்சியில் அவனின் தம்பியாகிய * சட்டதிஸ ? இப்பகுதியுடன் இணைத்துக் கூறப்படுவதும் அவதானிக்கத்தக்கது. ஈழத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கியதனாற்றான் இவ்விடத்துடன் வாணிப நடவடிக்கைகளை வெளிநாட்டவரான தமிழகத்தார் மேற்கொண்டிருந்தனர். இக்கல்வெட்டில் இடம்பெறும் ‘தீகவாபி பொறன வணிஜன " என்ற பதத்திற்குப் பரணவித்தானா * தீகவாபி வாசிகளான வணிகர்கள் " என்ற விளக்கத்தினைக் கொடுத்தாலுங்கூட கிருபாமுன இத்தொடரில் இடம்பெறும் * பொறன” என்ற பதத்தினை மையமாகக் கொண்டு இதற்குத் "தீகவாபியில் வாழும் பழைய வணிகர்" என விளக்கங் கொடுத் துள்ளார்.
எவ்வாறாயினும் இப்பதம் இப்பகுதியில் வாழ்ந்து வியா பார நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர் கூட்டத்தினையே சுட்டிக் காட்டுகின்றது. இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள சேருவில என்ற இடத்திலுள்ள கல்வெட் டிலுந் தமேட என்ற பதங் காணப்படுவது அவதானிக்கத் தக்கது.62 இப்பதத்துடன் இணைந்து வணிகரைக் குறிக்கும் * வணிஜ " என்ற பதங் காணப்படாவிட்டாலுங்கூட இப் பதத்தினைப் பிற பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில்
யாழ். - தொன்மை வரலாறு 472 G

நோக்கும்போது இப்பதங்கூட இங்கு அக்காலத்தில் வியாபாரத்தி லீடுபட்ட தமிழக வணிகரையே சுட்டி நின்றது என யூகிக்கலாம்.
எனவே கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் தமிழ்நாட்டவர் ஈழத்து வாணிப நடவடிக்கைகளில் முன்னிலை பெற்றமை இதன் மூலம் உறுதியாகின்றது. அதேநேரத்தில் இவர்கள் ஈழத்தின் அரசுரிமையைக் கைப்பற்றி இதனை ஆட்சி செய்த தாகப் பாளி நூல்களில் இடம்பெறுஞ் சான்றுகளை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில் நோக்கும்போது இவ் வாணிபத்திலே தமிழகத்தவர் கொண்டிருந்த பெரும்பங்கு தெளி வாகின்றது. ஈழத்தின் வியாபாரப் பொருட்கள் தமிழகத்தினை அடைந்ததோடு அங்கிருந்தே வெளிநாட்டவர் இவற்றைத் தமது நாடுகளுக்கும் இட்டுச் சென்றனர். இத்தகைய வாணிப நடவடிக்கைகளிலே தமிழ் வர்த்தகர்கள் முன்னின்றதையே மேற்கூறிய சான்றுகள் எடுத்தியம்புகின்றன. இதனை உறுதிப் படுத்துவதாகக் கிரேக்க அறிஞர்களது குறிப்புகளும் அமைந் துள்ளன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பிற நாட்ட வரான உரோம வணிகர்கள் ஈழத்திற்கு வராது ஈழத்தின் வாணிபப் பொருட்களைத் தமிழகத்திலிருந்தே தமது நாட் டிற்கு எடுத்துச் சென்றனர் என்பதையே மேற்கூறிய குறிப்பு விளக்குகின்றது.8
வடபகுதித் துறைமுகங்களும் வெளிநாட்டுத் தொடர்புகளும்
கி. பி. முதலாம் நூற்றாண்டிற் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நடவடிக்கை பற்றி அறியப்பட்டதையடுத்து உரோம வணிகரின் கீழைத்தேயங்களுக்கான வருகை புதிய உத்வேகத் தினை அடைந்தது. ஆயினும் இக்காலத்திற்கு முன்னரே ஈழத்தின் வாணிபப் பொருட்களைப் பற்றிக் கிரேக்கர், இந்தி யர்கள் மூலமாக அறிந்திருந்ததைக் கிரேக்க அறிஞர்களது குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.64 ஒனெசிகிறிற்றஸ் என்ற கிரேக்க மாலுமியினுடைய குறிப்பில் ஈழத்து யானைகள் இந்திய உபகண்டத்து யானைகளைவிடப் பருப்பத்திற் பெரியன
473 வாழ்வும் வளமும்

Page 253
என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இக்குறிப்புக் கி. மு. தான்காம் நூற்றாண்டுக்குரியது. இதே காலத்திற்குரிய மெகஸ்தினிசின் குறிப்பிலே தப்பிரபேனில் (ஈழத்தில்) இந்தியா வைவிட அதிக அளவு பொன்னும் பெரிய முத்துக்களுங் கிடைத்தன எனக் கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே இத்தகைய குறிப்புகளில் ஈழத்து முத்துகளையும் யானைகளையுமே பெரிதுபடுத்திக் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
மன்னார்க் கரையோரத்தில் முத்துக் குளித்தல் ஒரு பிரதான தொழிலாக இடம்பெற்றிருந்தது போன்று வன்னிப் பகுதிகளிலும் அக்காலத்தில் யானைகளைப் பிடித்து வியாபாரி களுக்கு விற்றலும் ஒரு முக்கிய வாணிப நடவடிக்கையாகக் காணப்பட்டிருக்கலாம். ஏனெனில் யாழ்ப்பாண அரசு காலத் தில் மட்டுமன்றிப் பின்வந்த போத்துக்க்ேயர், டச்சுக்காரர் களின் ஆட்சியிலும் இத்தொழில் இப்பிரதேசத்திற் சிறப்பான தொழிலாக் இடம் பெற்றமை ஈண்டு நினைவு கூரற்பாலது. பொதுவாகவே ஈழத்தின் வாணிபப் பொருட்கள் கிரேக்க, உரோம வணிகர்களாலே ஈழத்திற்கு வராது தென்னிந்தியத் துறைமுகங்களினூடாகவே பெறப்பட்டன என்று பெருப்புளூஸ் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது. இக்கருத்தினையே உரோமரின் வா னி பம் பற்றி எழுதிய வாமிங்ரனும்
கொண்டுள்ளார். 65
கி. பி. முதலாம் நூற்றாண்டிற் கிப்பலசால் பருவப் பெயர்ச்சிக் காற்றின் செயற்பாடு பற்றி அறிந்து கொண்டமை மேற்கு - கிழக்கு நாடுகளின் வர்த்தகத் துறையிற் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. இதனால் முன்னர் போலல் லாது செங்கடற் பகுதியிலிருந்து விரைவாகத் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு வரமுடிந்தது. இது இந்தியாவுடன் மேற்கு நாடுகள் வர்த்தகத்துறையிற் கூடிய அளவு தொடர்புகளைப் பேண வழி வகுத்தது. இதனாற் கிறிஸ்தாப்தத்திற்குப் பின்ன ருள்ள இரண்டு நூற்றாண்டு காலப் பகுதியில் இந்தியா - உரோம நாடு ஆகியவற்றுக்கிடையிலான வர்த்தகத்தில் இந் தியர் பெருமளவு இலாபத்தினைப் பெறமுடிந்தது. இவ்வாறு நடைபெற்ற வர்த்தகத்தில் தென்னிந்திய வாணிப மையங்
யாழ். - தொன்மை வரலாறு 474 O

களுக்கு ஈழத்திலிருந்து யானைத் தந்தம், ஆமையோடு போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதாக ஸ்ராபோ குறிப்பிடுகின்றார். எனினும் இக்காலத்தில் ஈழத்து வணிகர்கள் கப்பற் பிரயாணத் தில் ஈடுபட்டதையும், இப்பிரயாணங்களின் போது திசையினை அறிந்து கொள்வதற்குப் பறவைகளைத் தம்மோடு எடுத்துச் சென்றதனையும் பிளினி என்ற இன்னொரு கிரேக்க அறிஞர் குறிப்பிட்டுள்ளமையுங் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தக்கது.86
பொதுவாகக் கிறிஸ்துவுக்குப் பின்னர் கி. பி. இரண்டாம் துற்றாண்டு அளவிற் கிரேக்க - உரோமர் இந்து சமுத்திர வர்த்தகத்திற் கொண்டிருந்த பங்கு குறைந்து கொண்டே செல்லத் தொடங்கியது. கி. பி. நான்காம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு இரண்டாகப் பிளவுபட்டது. எனினும், கி. பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த உரோம நாணயங்கள் முன்னர் உள்ள காலப் பகுதியைவிட ஈழத்தில் அதி க ம |ா க க் காணப்படுவதை நோக்கும்போது உரோமர்கள் முன்னரைப் போலல்லாது நேரடியாகவே ஈழத்து வாணிப மையங்களுக்கு வரத் தொடங்கியமை உறுதியா கின்றது.87 இக்காலத்திலே தமிழகத்தில் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியும் அதன் பயனாக ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை யும் இதற்கு வழி வகுத்தது. அத்துடன் மூன்றாம் நூற்றாண்டு தொடக்கங் கி. பி. 6ஆம் நூற்றாண்டு வரை உரோமர் பெற்ற இடத்தினைப் பாரசீக, அராபிய வர்த்தகர்கள் இந்து சமுத் திரத்திற் பெறத் தொடங்கினர். இவர்களிற் குறிப்பிடத்தக் கவர்கள் பாரசீகத்தில் ஆட்சி செய்த சசானிய வம்சத்தின ராவர். இவர்கள் விட்டுச் சென்ற மட்பாண்ட ஒடுகள் திருக் கேதீஸ்வரத்திற் கண்டுபிடிக்கப்பட்டமை நோக்கற்பாலது. இக் கால வாணிப நிலை பற்றிச் சத்தியசீலன் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.8
"இந்து சமுத்திரத்தின் வர்த்தக வரலாற்றிலே கிறித்து வுக்குப் பிற்பட்ட நான்காம், ஐந்தாம், ஆறாம் நூற் றாண்டுகளிலே மிக முக்கியமான அபிவிருத்திகள் ஏற் பட்டன. முன்னைய நூற்றாண்டுகளில் வர்த்தகப் பரி
O 475 வாழ்வும் வளமும்

Page 254
வர்த்தனை மையமாகத் தென்னித்தியத் துறைகள் பெற்ற நிலைமை மாறி இம்முக்கியத்துவத்தை இலங்கைத் துறைகள் பெறலாயின. அவ்வாறான துறைகளில் மகா தீர்த்தம் பெருமளவில் இக்காலப் பகுதியில் பயன் படுத்தப்பட்டது என அறிகிறோம். சீன யாத்திரிக னான பாஹியன் ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கை வந்தபோது ஒரு சீன வாணிகன் தலைநகரில் வழிபாடு செய்து கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிடுகி றார். குவாய்யூன் என்பவர் தொகுத்த சீனத் திரி பிடகத்திலே காணப்படும் பட்டியலில் நான்காம் நூற் றாண்டிற்கும், ஏழாம் நூற்றாண்டிற்குமிடையே சீனா விற்கு இலங்கையிலிருந்து சென்ற பெளத்த துறவிகளது பெயர்கள் காணப்படுகின்றன. இவர்களது இந்த நீண்ட தூரப் பிரயாணங்கள் இப்பிரதேசங்களுக்கிடையே நட மாடிய வர்த்தகக் கப்பல்கள் மூலமாகவே நடைபெற் றிருக்க வேண்டும்."
மேற்கூறியவாறு கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட நான்காம் நூற் றாண்டு தொடக்கம் ஏற்பட்ட மாற்றங்கள் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் ஈழத்தினைக் குறிப்பாக மகாதித்த பட்டினத் தினை ஒரு சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாக மாற்றியதற்கான இலக்கியச் சான்றுகள் உள. இக்காலத்திற் பாரசீகக் கப்பல்களும், இந்தியக் கப்பல்களுஞ் சீனக் கப்பல் களுஞ் சிறப்புப் பெற்றிருந்த வர்த்தகப் பரிவர்த்தனை நிலைய மாகிய மாதோட்டத்திற் சந்தித்துக் கொண்டதை இலக்கியச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் மேற்காசிய வர்த்தகர்களின் குடியேற்றமும் இக்காலத்தில் நிகழ்ந்தது எனலாம்.
இத்தகைய மாற்றத்தினால் வடபகுதியில் அமைந்திருந்த ஜம்புகோள பட்டினம், பல்லதித்த போன்றன செல்வாக் கிழக்க மாதோட்டமே இந்து சமுத்திரக் கடல் வர்த்தகத்தில் ஒரு நடுநிலையமாகவும், வர்த்தகப் பரிவர்த்தனை நிலைய மாகவும், முன்னிலை பெற்றிருந்ததைக் கொஸ்மசின் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. 69 கொஸ்மசுக்கு முன்னரே இது செல்
யாழ். - தொன்மை வரலாறு 478 இல்

வாக்குப் பெற்ற பட்டினமாக விளங்கிவிட்டது. காரணத் தந்ததாதுவின் வரலாற்றைக் கூறுந் தாதுவம்சங் கி. பி. நான்காம் நூற்றாண்டிலே தந்ததாதுவை ஈழத்துக்கு எடுத்து வந்த கலிங்க அரச வம்சத்தவர்களாகிய தந்தகுமாரவும் ஹேம மாலாவும் அக்காலத்தில் "லங்கா பட்டினம்" என அழைக்கப் பட்ட மாதோட்டத்தில் வந்திறங்கியதாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இப்பெயரால் இது அழைக்கப்படுவது இக்காலத்தில் முதன்மை பெற்ற பட்டினமாக இது பெற்றிருந்த வளர்ச்சி யையே சுட்டிநிற்கின்றது.70
பாரசீகக் குடாவிலிருந்து மேற்கு இந்தியக் கடற்கரையோர மாக நடைபெற்ற வர்த்தகத்தில் ஈழத்தின் முக்கிய பரிவர்த் தனை நிலையமாக மகாதீர்த்த பட்டினம் விளங்கியதையும், இங்கிருந்து பிற இடங்களுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்லப் பட்டதையும் இக்குறிப்பு எடுத்துக்காட்டுவதால் ஈழத்தின் வடபகுதித் துறைமுகமாகவும், அநுராதபுர அரசின் துறை முகமாகவும் விளங்கிய மகாதீர்த்தத்தில் நடைபெற்ற வர்த்த கம் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வர்த்தகம் பற்றிய கொஸ்மசின் கூற்றினை அவ தானிப்போம்.71
* மையநிலையில் இத்தீவு இருப்பதால் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் எத்தியோப்பியா விலிருந்தும் கப்பல்கள் அடிக்கடி இங்கு வருகின்றன. அதேபோன்று இங்கிருந்தும் பல கப்பல்கள் வெளியே செல்கின்றன. மிகத் தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து, அதாவது சின்ஸ்ரா போன்ற நாட்டிலிருந்தும் வேறுபல வாணிபத் தலங்களிலிருந்தும் பட்டு, கராம்பு, சந்தனம் போன்ற பொருட்களைப் பெற்று இவை இப்பகுதியிலுள்ள மாலே போன்ற தலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின் றன. மாலேயில் மிளகு விளைகின்றது. கரியானா செம்பு, மரவகைகள், ஆடைகளைத் தைப்பதற்கான துணிவகைகள் ஆகியனவற்றை ஏற்றுமதி செய்கின்றது. கஸ்தூரி, ஆமணக்கு ஆகியன விளையும் சிந்துவுக்கும், பாரசீகத்திற்கும்
O 477 வாழ்வும் வளமும்

Page 255
கோமெறிற் நாட்டுக்கும், அடுலே நாட்டிற்கும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தீவு இவ்வாணிப நிலை யங்களிலிருந்து முன்பு நாம் குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்து மிகத் தொலைவிலுள்ள துறைமுகங் களுக்கு அனுப்பி வைப்பதோடு தனது விளைபொருட் களையும் இருபகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றது."
கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வஜ்ரபோதி என்னும் பெளத்த பிக்கு ஈழத்திற்கு வந்தபோது பொத் - சி - லீ (Po - tchi - It) என்ற துறைமுகத்தில் முப்பத்தைந்து பாரசீகக் கப்பல்கள் காணப்பட்டதாகவும் அவை விலையுயர்ந்த கற்களைப் பெறுவதற்காகக் காத்திருந்தன என்றுங் கூறுகின்றார்.72 இவர் கூறும் விலையுயர்ந்த கற்கள் இரத்தினக் கற்களாகும்.
மாந்தைத் துறைமுகம் இக்காலத்திற் சர்வதேச வாணிப நிலையமாக விளங்கியதை இங்கு கண்டெடுக்கப்பட்ட சீன, இந்திய, மத்திய கிழக்கு நாடுகளின் மட்பாண்டங்கள் எடுத் தியம்புகின்றன. அத்துடன் இதன் நகரச்சிறப்பினைக் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின் பாடல்கள் சிறப் பாக எடுத்துக் காட்டுகின்றன. திருஞானசம்பந்தரின் பாடலில் இடம் பெற்றுள்ள ' குடி வாழ்க்கை வாழையம் பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்" என்ற குறிப்பு இந்நகர் சன நெருக்கம் நிறைந்த நகராக இக்காலத்தில் விளங் கியதை எடுத்துக் காட்டுகின்றது. இதனைவிட மாதோட்டம் பற்றிய பின்வருங் குறிப்புகளும் அவதானிக்கத்தக்கவை.
* கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் "
* இருங்கடற் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் "
* உயர் தரு மாதோட்டம் ”
* மறிகடல் மாதோட்டத்து "
* மலிகடல் மாதோட்டத்து "
* வண்டு பண்செயு மாமலர்ப் பொழின் மஞ்ஞை நடமிடு
மாதோட்டம் "
* பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய
மாதோட்டத்து ”
* மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் "
யாழ். - தொன்மை வரலாறு 478 )

இதிலிருந்து, இத்துறைமுகப்பட்டினத்தின் இயற்கை அழகு, கடல்வளம், நகரச் சிறப்பு ஆகியனவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.78
மாந்தைநகரின் சிறப்பைக் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாடல்களி லுங் காணமுடிகின்றது. திருக்கேதீஸ்வரநாதனைச் சுந்தரர் தமது பாடல்களிற் பாடியபோது அத்தலத்திற்கருகிற் காணப் படுந் துறைமுகம், அதன் வாணிப நடவடிக்கைகள், கடல்படு திரவியங்கள் ஆகியன பற்றியுங் குறிப்பிடத் தவறவில்லை. இதனையே,
* வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில் " * வரிய சிறை வண்டி, யாழ் செயு மாதோட்ட நன்னகருள்" * வையம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில் * வானத்துறு மலியுங்கடன் மாதோட்ட நன்னகரில்" * மட்டுண்டு வண்டாலும் பொழின் மாதோட்ட நன்னகரில்" * மாவின் கனி தூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில்" * கறையார் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன்னகருள்"
போன்ற இவரது பாடல் வரிகள் குறிக்கின்றன.74
மாணிக்கவாசகரது பாடலில் வருந் திருப்பெருந்துறை * என்பது மாதோட்டத்தைக் குறிக்கலாமெனவுங் கருதப்படுகின் றது.75 பெருந்தோட்டமெனக் குறுந்தொகைப் பாடலிற் காணப் படுங் குறிப்புக்குந் திருப்பெருந்துறை என மாணிக்கவாசகரின் பாடலிற் காணப்படுங் குறிப்புக்கும் ஒற்றுமை உண்டு. பெருத் துறையே அங்குள்ள மூர்த்தியின் விசேடத்தாலே திருப்பெருந் துறை எனப் பெயர் பெற்றது போலத் தெரிகின்றது. மாணிக்க வாசகர் இவ்விடத்திற்குக் குதிரை வாங்கச் சென்றதாக அவ ரது வரலாறு எடுத்தியம்புகின்றது. இக்காலத்தில் மாதோட்டம் ஒரு சர்வதேச வர்த்தக நிலையமாக எழுச்சி பெற்றதால் இத்துறைக்குக் குதிரை வியாபாரத்திலீடுபட்ட அராபியர்கள் குதிரைகளை இட்டு வந்தனர் எனக் கருத இடமுன்டு. ஏனெனிற் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு
479 வாழ்வும் வளமும்

Page 256
வரை பாரசீகரைத் தொடர்ந்து அராபியரே இந்துசமுத்திர வர்த்தகத்தில் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கினர் என்பது பின்வருமாறு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.78
" ஆறாம் நூற்றாண்டின் பின்பாக இஸ்லாத்தின் எழுச்சி யின் விளைவாக அராபிய இனம் திடீரென்று வலுப்பெற்ற இனமாக மாறப் பல்வேறு துறைகளில் வேறு இனத்தவர் பெற்ற இடத்தை அராபியரே பெற்றனர். அதன் விளை வாக இதுவரை வர்த்தகத்துறையிலே பாரசீகர் வகித்து வந்த முக்கியமான இடத்தை அராபியர் பெருமளவில் பறித்துக்கொண்டனர். இதனால் ஆறாம் நூற்றாண்டிற் கும், பத்தாம், பதினொராம் நூற்றாண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்காசியா, இலங்கையிடையே அராபிய வர்த்தக உறவுகள் கூடுதலாக ஏற்பட்டு, அரபுக் குடியேற்றங்களும் கரையோரத்துறைகளிலே ஏற்பட்டன எனலாம். "
வர்த்தகத்தைத் தொடர்ந்து அராபியக் குடியேற்றங்களும் இங்கு ஏற்படலாயின.
ஈழத்துப் பாளி நூல்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கந் தமிழக அரசவம்சங்கள் ஈழத்தின் மீது கொண்டி ருந்த அரசியலாதிக்கம் பற்றிக் குறிப்பிடுகின்றன. இத்தகைய ஆதிக்கம் இக்காலத்தில் வாணிபத் துறையிலும் ஏற்பட் டிருந்தது. இதனையே திரியாயிற் பல்லவ கிரந்தத்திலமைந்த கல்வெட்டொன்று எடுத்துக்காட்டுகின்றது.77 திருக்கேதீஸ்வரம், தாரகுண்டம் ஆகிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட பல்லவ நாணயங்களும் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.78 பல்லவர்கால நாணயங்கள் வடக்கே கந்தரோடையிற் கண்டு பிடிக்கப்வட்டதுங் குறிப்பிடத்தக்கது.
இக்காலத்திற் பல வணிக கணங்களுஞ் செயற்பட்டன. இவற்றுள் மணிக்கிராமம் முதன்மையானது. இவர்களது கல் வெட்டுகள் கேரள மாநிலத்திலும், தென்கிழக்காசிய நாடுகளி லொன்றாகிய தாய்லாந்திலுங் கிடைப்பது போன்று ஈழத் தின் தென்கிழக்கே மஹியங்கனையிலுங் கிடைத்துள்ளதால்,79
யாழ். - தொன்மை வரலாறு 48O C

ஈழத்தின் வடபகுதியிலும் இவர்கள் வாணிப நடவடிக்கை களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இதுவரை இது பற்றிய தடயங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அநுராதபுரத்திற் கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய இன்னோர் வர்த்தக கணமான நான்கு நாட்டாரின் தமிழ்க் கல்வெட்டொன்று காணப்படு கின்றது.80 இக்காலத்தில் மகாதீர்த்தம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகக் காணப்பட்டதால் இங்கும் இவர்களின் நடவடிக்கை மேலோங்கிக் காணப்பட்டிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இது பற்றிய சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறே *குமாரகணம்" என அழைக்கப்பட்ட இன்னோர் வர்த்தகக் குழுவின் நடவடிக்கை பற்றிக் கூறுங் கி. பி. 10ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த இரு தமிழ்க்கல்வெட்டுகள் அநுராதபுரத் திற் கிடைத்துள்ளன.81 வடபகுதியிலும் பல வர்த்தக முயற்சி களில் இவை ஈடுபட்டிருக்கலாம். இது பற்றிய சான்றுகள் எதிர்காலத்திற் கிட்டலாம். எவ்வாறாயினும் வடபகுதியில் மேற்கூறிய வர்த்தக கணங்களின் சான்றுகள் காணப்படாவிட் டாலுங்கூட இக்காலத்தில் மாதோட்டம் பெற்றிருந்த முக்கியத் துவத்தினை நோக்கும்போது இப்பகுதி இவர்களின் நடவடிக்கை களுக்குட்பட்ட பகுதியாக விளங்கியது என யூகிப்பதிலே தவறில்லை.
மாதோட்ட நகரின் சிறப்புப் பற்றித் தமிழ் நூல்கள்ல் மட்டு மன்றிக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும், ஒன்பதாம் நூற் றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சகசவத்துப் பகரண, இராசவாகினி போன்ற சிங்கள நூல்களிலுங் குறிப்புகள் உள.82 சிவ எனப்பட்ட மந்திரி பற்றிக் கூறுஞ் சகசவத்துப் பகரண, ஒரு விழாக் காலத்தில் இம் மந்திரி நகரத்தினை அலங் கரிக்கச் செய்ததோடு இந்நகர வீதிகளின் வழியாக உலா வந்தான் எனவுங் கூறுகின்றது. இதுபற்றிய விபரம் இராச வாகினியில் உளது. இந்நகரிலுள்ள எல்லா வீதிகளுஞ் சிறப் பாகத் துப்பரவு செய்யப்பட்டதோடு, அவற்றை அலங்கரித்து இங்குள்ள மாடமாளிகைகளிற் கொடிகளைப் பறக்கவிட்டு, மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரதத்திலேறிப் பலம்வாய்ந்த படைவீரர் புடைசூழ இந்நகரைச் சுற்றி இம்மந்திரி உலாவந் தான் என அந்நூல் கூறுகின்றது. அத்துடன் இதே நூல்
O 481 வாழ்வும் வளமும்

Page 257
இத்துறைமுகத்தில் வாழ்ந்த நந்தி என்ற வணிகன் பற்றியும் அவன் கப்பற் கூட்டத்தினரின் உதவியுடன் ஏற்றுமதி இறக்கு மதி வர்த்தகத்தை வெளிநாடுகளுடன் நடாத்தியது பற்றியுங் குறிப்பிடுகின்றது.
சூளவம்சம் இரண்டாவது மகிந்தன் ( கி. பி. 777 - 797 ) அநுராதபுர மன்னனாக முடிசூடிக் கொள்ள முன்னர் இத் துறைமுகப் பட்டினத்தின் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனித் துக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றது.83 கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய மன்னார்க் கச்சேரிக் கல்வெட்டு இங்குள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக * மகாபடுலட்டன் " என்ற உத்தியோகஸ்தன் காணப்பட்டதைக் கூறும் அதே
நேரத்தில் இத்துறைமுகப்பட்டினத்தையும் LD5iful L-607. ' என அழைக்கின்றது. இவ்வுத்தியோகஸ்தன் இங்கு சுங்க வரியைச் சேகரிப்பவனாகக் கடமையாற்றினான். சுங்கவரி
ஈழத்தின் துறைமுகங்களிற் கி. பி. முதலாம் நூற்றாண்டி லிருந்தே அறவிடப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள.84 ஈழத்தின் தென்பகுதித் துறைமுகமாகிய “கொடவய' என்ற இடத்தில் முதலாவது கஜபாகுவின் காலத்திற் 'சுகிய" என அழைக்கப்பட்டு இவ்வரி அறவிடப்பட்டதை இம்மன்ன னின் கொடவயக் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது.85
நிற்க, கி. பி. பத்தாம் நூற்றாண்டில் மகாதீர்த்தம் சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாகப் புகழ் பெற்று விளங்கியதை * குடுட் அல் அலாம் " என்ற நூல் எடுத்துக் காட்டுகின்றது.80 இந்நூல் இத்துறைமுகப் பட்டினத்தை மூவஸ் " என அழைப்பதோடு இப்பெருநகர் இந்துஸ்தானின் தென்கோடியை நோக்கி அமைந்திருந்ததென்றும் இத்தீவிற் காணப்படும் பொருட்கள் இத்துறைமுகத்திற்கு இட்டுச் செல்லப் பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துக் செல்லப்பட்ட தைக் குறிக்கின்றது. இவ்வாறு சர்வதேச நிலையில் உயர்ச்சி பெற்ற இந்நகரிலே தமிழரின் செல்வாக்கு அதிகரித்துக் காணப் பட்டதை நாயன்மார்களின் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனையே இங்கு காணப்படுஞ் சிங்களமொழியின் கலப்பில்லாத தமிழ் இடப் பெயர்களும் உறுதி செய்கின்றன எனக்
யாழ். - தொன்மை வரலாறு 482 இ

* கொட்டிங்ரன் " சுட்டிக் காட்டியுள்ளார்.87 எனினும் இத் துறைமுகம் அநுராதபுர அரசின் பிரதான துறைமுகமாகக் காணப்பட்டதை நோக்கும்போது இதனை வடபகுதி அரசு மட்டுமன்றி அநுராதபுர அரசுந் தனது தேவைகட்குப் பயன் படுத்தியமை உறுதியாகின்றது.
நாட்டின் வடமேற்கிலமைந்திருந்த மகாதீர்த்தம் போல வடகிழக்கிலும் பல துறைமுகங்கள் பண்டுதொட்டு எழுச்சி பெற்றிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இதற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலுங் கிறிஸ்தாப்த காலத்தினை அண்டிய சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியா போன்று ஈழத்தி லும் புழக்கத்திலிருந்த மிகப்பழைய நாணயவகையான அச்சுத் குத்திய நாணயங்கள் வல்லிபுரம், முல்லைத்தீவு ஆகிய இடங் களிற் கிடைத்துள்ளமை இப்பகுதியும் பண்டுதொட்டு வாணிபத் துறையில் முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கலாமென்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கிழக்குக்கரை கி. பி. ஏழாம் நூற்றாண்டிலும் வாணி நடவடிக்கைகளில் மேன்மை பெற்றிருந்ததைத் திரியாய்ப் பாறைக் கல்வெட்டு உறுதி செய்கின்றது.88 இவ்விடத்திற் கிரிகண்ட சேத்தியமொன்றை ரபுசக்க, வல்லிக என்ற இரு வணிகர்களின் அமைப்பு உருவாக்கியது பற்றி இக்கல்வெட்டுக் கூறுவதோடு இத்தகைய வணிகக் கூட்டத்தினர் சமுத்திரத்தினைக் கிடந்து அங்கு வந்தவர்கள் என்றுங் கடலிற் பிரயாணஞ் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் பொருட்களை வாங்கி விற்பதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் இவர்களின் வர்த்தகப் பொருட்கள் பல்வேறு வகையான கப்பல்களிற் கொண்டு செல் லப் பட்டன என்றும் இது குறிப்பிடுகின்றது. இத்தகைய குறிப் பினை முல்லைத்தீவிற் கிடைத்த மிகப்பழைய நாணயங்களின் பின்னணியில் நோக்கும்போது கிழக்குக்கரையும் பண்டுதொட்டு வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியம் பெற்றது உறுதியாகின்றது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள * கோகர்ண " எனக் குறிப்பிடப்படுந் திருகோணமலைத் துறைமுகம் விஜயனின் பின் னர் ஆட்சிபீடமேறிய பண்டுவாசுதேவனின் மனைவியாகிய பட்டகச்சனா வந்திறங்கிய துறைமுகமாகக் குறிப்பிடப்படுவதும்
9 483 வாழ்வும் வளமும்

Page 258
ஈண்டு அவதானிக்கத்தக்கது.89 எனினுஞ் சோழர் காலத்திற்
றான் இது மேன்மை பெற்றது. அத்துடன் இக்கரையிலிருந்த
* பல்லவ வங்க " என்ற துறைமுகம் முதலாவது பராக்கிரமபாகு
காலத்தில் முக்கியம் பெற்றிருந்தது. 90 ஆயினும், வடமேற்குத்
துறைமுகமாகிய மாதோட்டம் இந்தியாவுக்கு அருகிலும்
பாக்குநீரிணைக் கரையை அண்மித்தும் அமைந்திருந்ததால்
நாட்டின் பிற துறைமுகங்களை விடப் பட்டினமாக, சர்வதேச பரிவர்த்தனை நிலையமாக இது உயர்ச்சி பெற்றது.
இதனையே இங்கு கிடைக்கும் வெளிநாட்டு மட்பாண்டங்கள்
மட்டுமன்றி இங்குள்ள இரு சுற்றிலமைந்துள்ள அகழிகளும் எடுத்தியம்புகின்றன.
இத்தகைய வெளிநாட்டுத் தொடர்புகள் பல வெளிநாட் டவர்கள் இத்துறைமுகப் பட்டினத்தில் வந்து குடியேறவும் வழி வகுத்திருந்தது. பாரசீகர் இக்காலத்தில் இங்கு வாழ்ந்ததை அநு ராதபுரத்திற் கிடைத்த சிலுவை " எடுத்துக்கர்ட்டுகின்றது.9 இவ்வாறே அராபியரும் மாதோட்டத்திற் குடிகொண்டிருக் கலாம். ஏனெனில் அராபியர்கள்தான் பாரசீகரை அடுத்து இக்காலத்தில் மத்திய கிழக்கினூடாக நடைபெற்ற வர்த்தகத் தில் முக்கியம் பெற்றிருந்தனர். அராபியர் ஈழத்தின் பிற இடங்களிலும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இக்காலத் திற் குடியேறியதற்கான சான்றுகள் காணப்படுவதால் இவர் களின் குடியேற்றம் இச்காலத்தில் மாந்தை போன்ற துறை முகப் பட்டினங்களிற் காணப்பட்டிருக்கலாம். இவ்வாறே சீனர் களும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இங்கு தங்கியிருக்கலாம். எனினும் இவர்கள் எல்லோரையும் விட தமிழரே இங்கு விதந்து காணப்பட்டனர். இவர்களிற் பலர் தமிழகத்திலிருந்து வாணிப நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக இங்கு @4界 கொண்டிருந்தனர்.
சோழராட்சியில் வாணிபம்
சோழராட்சி ஈழத்தின் வர்த்தக்த் துறையிலே தமிழகத்தின் பங்கு மேலோங்கியதை எடுத்துக் காட்டுவதாய் அமைந்
துள்ளது. எவ்வாறு கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் தமிழ் நாட்
யாழ். - தொன்மை வரலாறு 434 ()

டினரின் கைகள் ஈழத்து வாணிப நடவடிக்கைகளில் மேலோங் கிக் கானப்பட்டதோ அவ்வாறே தமிழ் நாட்டார் சோழ ராட்சியிலே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண் டிருந்ததற்கான கல்வெட்டாதாரங்கள் உள. இதனால் வாணிபத்துறையில் இக்காலத்தில் ஈழத்தின் வடபகுதி மட்டு மன்றி முழு ஈழமும் சோழரின் செல்வாக்குக்கு உட்பட் டிருந்தது. இது பற்றிப் பத்மநாதன் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்.92
* பாக்குநீரினை வழியான இந்திய - இலங்கை வர்த்தகம் பெரும்பாலும் தமிழக வணிகர் வசமாயிருந்தது குறிப் பிடத்தக்கது. தமிழக வணிகரின் நடமாட்டங்களும் நட வடிக்கைகளும் இலங்கையின் துறைமுகப் பட்டினங்களிலும் அவற்றை அடுத்துள்ள கரையோரப் பகுதிகளிலும் நகரங் களிலும் தமிழரின் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு வழி பமைத்தன. கி. பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இலங்கைபிலே தமிழ் வணிகரின் செல்வாக்கு மிகக் கூடுதலான அளவிலே ஏற்படலாயிற்று. *
சோழர் கால வணிக கணங்களில் திசையாயிரத்து ஐ ஞ் ஆற்றுவர், நானாதேசிகள், வலஞ்சியர், வீரக்கொடியர், நகரத்தார், செட்டிபுத்திரர், செட்டிகள் போன்றோர் அடங்கு வர். இவ்வணிக கணங்களின் பிரதான மையங்களாகப் பதவியா, வகால்கட, பொலநறுவை, பண்டுவாசு நுவர போன்ற நகரங்கள் விளங்கின. இவ்வணிக கணங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காகச் சுயாட்சி கொண்ட பட்டினங்களையும் அமைத்திருந்தனர். கல்வெட்டுகள் இவ்வாறு இயங்கிய தான்கு பட்டினங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.93 இவற்றிலொன்று கட்டனேரியிலிருந்தது. இதற்கு ஐஞ்ஆாற்றுவர் நானாதேசிய வீரபட்டினம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. பதவியாவி லுள்ள திசையாயிரத்து ஐஞ்ஆாற்றுவரின் கல்வெட்டு இங்கு அவர்கள் அமைத்த பட்டினத்தை ஐயம்பொழில் பட்டினம் என அழைக்கின்றது. இவ்வாறே நானாதேசிகளின் பட்டினம் பண்டுவாசுநுவர, விகாரகின்ன ஆகிய இடங்களிலுங் காணப் பட்டன. வாகனேரியிற் கிடைத்த கல்வெட்டு இப்பட்டினங்
() 485 வாழ்வும் வளமும்

Page 259
களை நிருவகிக்க * ஆளும் கணம் " ஒன்று காணப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. அதிற் பல்வேறு வணிக கணங்களுடன் தொடர்புடைய இராணுவப் பிரிவின் தலைவர்களும் அங்கம் வகித்தனர்.
தென்னிந்தியக் கல்வெட்டுகளில் பட்டினங்களின் நிருவாகி * பட்டண சுவாமி " என அழைக்கப்பட்டது பற்றிக் குறிப் புகளுண்டு. ஈழத்திலும் இவன் இவ்வாறு அழைக்கப்பட்டிருக் கலாம். ' தவளம் " என்ற சொல்லும் ஈழத்துக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. இதன் பொருள் பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து விற்பனை செய்யும் இடம் என்ப தாகும். தமிழ்ச் சொல்லாகிய இதிலிருந்து வளர்ச்சி பெற்ற வடிவமே தவளக்காரர் என்பதாகும். இத்தகைய பட்டினங் களிற் சில " எறிவீரர் பட்டினம் " எனவும் அழைக்கப்பட் டமை தெரிகின்றது. எறிவீரர் என்ற இராணுவப் பிரிவாற் பாதுகாக்கப்பட்டதால் இவை இவ்வாறு பெயர் பெற்றன போலும். பொதுவாகவே இத்தகைய பட்டினங்கள் முன்னர் அமைந்திருந்த வியாபார நிலையங்களிலும், முக்கிய கேந்திர மையங்களிலும் அமைந்திருந்தன.
உள்நாட்டு வாணிபத்தோடு துறைமுகங்களினூடாகவும் பொருட்களைத் திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் ஏற்றுமதி செய்ததை வாகனேரிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய வர்த்தகத்தில் மாந்தைத் துறைமுகம் முக்கியம் பெற்றதை இக்கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இக்கல்வெட்டில் "மாந்தை தோணக்காரர் பட்டவர்த்தனம்" என்ற குறிப்பு வருகின்றது. இது மாந்தையிலுள்ள கப்பலோட்டிகளின் கணத்தின் தலை வனைக் குறிக்குஞ் சொல்லாகும்.94 இவன் வாகனேரியிலுள்ள நானாதேசிய வீரபட்டினத்தின் ஆளுங் கண உறுப்பினன் என்பதும் அவதானிக்கத்தக்கது. இதனால் இவ்வீரபட்டினம் மாந்தைத் துறைமுகத்தினுாடாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளிலீடுபட்டமை புரிகின்றது. பதவியாவிலுள்ள ஐஞ்ஆாற்றுவரின் சாசனத்தில் வருஞ் சங்கர மனுதன்” என்ற பதம் கடல் வாணிபத்தினையே உணர்த்துகின்றது. "சங்கரம்" என்ற பதம் பெருங்கப்பல்களைக் குறிப்பதால் இதன் உரிமை
யாழ். - தொன்மை வரலாறு 486 )ே

யாளனையோ அன்றித் தலைவனையோ தான் சங்கரமனுதன் என்ற பதம் குறித்தது எனலாம்.95 இச்சான்றுக்ளை நோக்கும் போது சோழரின் ஆட்சி நிலைகொண்டிருந்த வட பகுதியில் நாட்டின் பிறபகுதிகளைப் போன்று சோழர்கால வணிககணங் களின் செயற்பாடுகள் காணப்பட்டன எனக் கருதலாம்.
வடபகுதியைப் பொறுத்தமட்டில் மாந்தைத் துறைமுகத்திற் சோழர்கால வணிக கணங்கள் பல நிலைகொண்டு வாணிப நடவடிக்கைகளிலீடுபட்டதை இங்கு கிடைக்கும் முதலாவது இராஜேந்திரனின் காலக் கல்வெட்டிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. 98 இவை இங்கு வாணிப நடவடிக்கை களிலீடுபட்ட சக்கரபாடியார், வாழைக்காய் வணிகர், வெற்றிலை வணிகர் போன்றோர் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவ்வாறே சோழர் காலத்தில் ஈழத்தின் பிற பகுதிகளி லியங்கிய வர்த்தக கணங்கள் வடக்கே தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்ததை உறுதி செய்யுஞ் சில சான்று களுங் காணப்படுகின்றன. இதற்குரிய சான்றாக அமைவது தான் பதவியாவிற் காணப்படும் முதலாவது இராஜராஜனின் கல்வெட்டாகும்.97 இது இங்குள்ள ஆலயமாகிய இரவிகுல மாணிக்க ஈஸ்வரத்திற்கு நானாதேசிக வணிக கணத்தைச் சேர்ந்த கொண்ணாவில் வெண்காடான் எறிமணி ஒன்றைத் தானமாகக் கொடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல் வெட்டுக் குறிப்பிடுங் கொண்ணாவில் என்ற கிராமம் பூநகரிப் பகுதியில் அம்பலப்பெருமாள் என்ற கிராமத்திற்கருகில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதால் நானாதேசிகர்களது வர்த்தக நடவடிக்கைகள் இப்பகுதியிலுங் காணப்பட்டமை உறுதியாகின்றது.98 இவ்வாறே இதனருகிற் 5IT 600TL LIG)th அம்பலப்பெருமாள் என்ற பெயர்கூடச் சோழர்காலக் கல் வெட்டுகளில் வணிககணங்கள் ஒன்றுகூடும் இடத்தினையே குறித்தது என்று கூறப்படுகின்றது.99 இத்தகைய சான்றுகள் இவ்வணிக கணங்களின் நடவடிக்கைக்குள்ளான பகுதியாக இப்பகுதி விளங்கியமையை மேலும் உறுதி செய்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இவ்வணிக கணங்களின் நடவடிக்கைள் காணப்பட்டதை இரு முக்கிய இடப்பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றில் முதலாவது பெயர்
O 487 வாழ்வும் வளமும்

Page 260
ஐஞ்ஞாற்றுவன் வளவு ஆகும். இப்பெயர் யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகிற் காணப்படுவதால் இப்பெயர் திசை யாயிரத்து ஐஞ்ஆாற்றுவரையே குறித்ததெனவும், இவர்க ளது நடவடிக்கைகள் இக்கோட்டைப் பகுதியை அண்டியே
காணப்பட்டன எனவுங் கொள்ளலாம். இவர்களின் ஒரு பிரிவினர்தான் நானாதேசிகளாவர். இதனைவிட இள வாலைக்கு அருகிலுள்ள சித்திரமேழி என்ற கிராமத்தின் பெயருங்கூட ஒரு வகையில் ஐஞ்ஆாற்றுவருடன் கி. பி. 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் இணைந்து செயற்பட்ட விவசாய கணத்தின் பெயராகவே காணப்படுகின்றது. தமிழகத்தில் இவ் விரு கணங்களும் இணைந்து வெளியிட்ட பல கல்வெட்டுகள் உள.100 இவற்றில் இவர்களின் வாணிப முயற்சிகளில் இடம் பெற்ற பொருட்களின் பெயர்கள் காணப்படுவதால் ஈழத்தி லும் இவ்வணிக கணத்தினர் இத்தகைய பொருட்களின்
இறக்குமதி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டனர் எனலாம்.
இவர்கள் தமது வாணிப நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய பொருட்களாக உப்பு, நெல், அரிசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு விதை, பாக்கு, மிளகு, இஞ்சி, வெங்காயம், கடுகு,
சீரகம், இரும்பு, பருத்தி, திரித்த நூல், மெல்லிய புடவை, தடிப்பான புடவை, நூல், மெழுகு, தேன், எள்ளு, சாக்கு,
சந்தனக்கட்டை, காரகில், பட்டு, பன்னீர், கற்பூரம், எண் ணெய், குதிரைகள், யானைகள் ஆகியன குறிப்பிடப்பட் டுள்ளன.10
மேற்கூறிய பின்னணியிற்றான் ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாவது பராக்கிரமபாகுவின் (கி. பி. 1153 - 86) கல் வெட்டு ஆராயப்படல் வேண்டும். கிறிஸ்தாப்த காலத் திற்கு முன்பிருந்தே ஊர்காவற்றுறை ஒரு முக்கிய துறை முகப்பட்டினமாக விளங்கியதென்பதை விஜயனின் பின்னர் அரசுகட்டிலேறிய "பண்டுவாசுதேவ" என்பவனின் ஆட்சிக்கால ஐதீகங்கள் எடுத்துரைக்கின்றன. இவனினாட்சியோடு இத்துறை முகத்தினை இணைப்பதன் மூலம் இராஜாவலிய" என்ற சிங்கள நூல் இம்மன்னனின் கீர்த்தியை எடுத்துக் காட்ட முற் படுகின்றது. இந்நூலில் இதன் பெயர் ஊறாத்தோட்ட" என இடம் பெற்றுள்ளது. எனினுங் கி. பி. 10ஆம் நூற்றாண்டில்
பாழ். - தொன்மை வரலாறு 488 O

இது முன்னிலை பெற்றுக் காணப்பட்டதை இரண்டாவது பராந்தகனின் காலச் சோழப் படை இங்கு வந்திறங்கிய நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. 102 இப் படைஎடுப்பை நான்காவது மகிந்தன் தோற்கடித்தான் எனக் கூறுஞ் சூளவம்சம் இத் துறைமுகத்தின் பெயர்களாகக் "கூறாத்தோட்ட', 'சுகரதித்த" ஆகியனவற்றைக் குறிப்பிடுகின்றது.103 இ த னா ல் இத் துறைமுகங் கி. பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே முக்கிய பட்டினமாக எழுச்சி பெற்றமை புலனாகின்றது. சோழ ராட்சியின் ஆரம்பத்தில் மகாதீர்த்தமும் முக்கிய பட்டினமாக விளங்கினாலுங்கூட அண்மைக் காலத்தில் இங்கு மேற்கொள் ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் கி. பி. 11ஆம் நூற்றாண் டளவில் இது தனது முக்கியத்துவத்தினை இழந்தது என எடுத்துக் காட்டுவதால் ஊர்காவற்றுறை இக்காலந்தொட்டு வாணிப நடவடிக்கைகளிற் பெற்றிருந்த முக்கியத்துவத் தினையே முதலாவது பராக்கிரமபாகுவின் கல்வெட்டு எடுத் தியம்புகின்றது எனலாம்.104
இக்கல்வெட்டு இத்துறைமுகத்திற்குக் குதிரை, யானை போன்ற மிருகங்களைக் கொண்டு வருங் கலன்கள் கெடும் போது அவற்றிற்குரிய இழப்பினை எவ்வாறு பகிர்ந்து கொள்ளு வது என்று பராக்கிரமபாகு தனது சுங்க அதிகாரிகளுக்கு விடுத்த அறிவுறுத்தல்களை எடுத்தியம்புவதாச அமைகின்றது. இத்தகைய அறிவுறுத்தல்களை நோக்கும்போது ஒரு சில ஆண்டு களாவது பராக்கிரமபாகுவின் ஆட்சி இங்கு நிலைகொண்டமை தெளிவாகின்றது. இம்மன்னன் பாண்டிநாட்டுடன் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் இத்துறைமுகம் இடம் பெறுவது பற்றிச் சோழக் கல்வெட்டுகள் கூறுவதால் இந் நடவடிக்கைகள் காணப்பட்ட காலத்திலாவது பராக்கிரமபாகு வின் மேலாணை இப்பகுதியிற் காணப்பட்டதெனலாம். ஊர் காவற்றுறைக் கல்வெட்டு இத்துறைமுகத்தில் யானை, குதிரை போன்றவற்றினையும் பிற வாணிபப் பொருட்களையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்த பரதேசி வணிக கணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்திரபாலா வெளிநாட்டவரே பரதேசிகள் என இக்கல்வெட்டிற் கூறப்பட்டுள்ளனர் எனக் கூறப் பத்மநாதன் 105 இது பரதேசிகள் என்ற பெயரில்
டு 489 வாழ்வும் வளமும்

Page 261
இயங்கிய ஒரு வர்த்தக கணம் பற்றியே குறிப்பிடுகின்றது எனக் கூறுகின்றார். இனி இக்கல்வெட்டுக் கூறுஞ் செய்தியை நோக்குவாம். மன்னனுக்கு யானை, குதிரை ஆகியனவற்றைக் கொண்டு வந்த மரக்கலங்கள் சேதமடைந்து கரையை அடைந் தால் அவை கொண்டு வந்த மிருகங்களில் நாலிலொன்று திறைசேரிக்கும் (பண்டாரத்திற்கும்) எஞ்சிய பங்கு மரக்கலச் சொந்தக்காரர்களுக்குஞ் சேரல் வேண்டும். பிற வாணிபப் பொருட்களை ஏற்றிவந்த மரக்கலங்கள் சேதமடைந்தால் அவற்றின் பொருட்களில் அரைப்பங்கு திறை சேரிக்கும் அரைப்பங்கு மரக்கலங்களின் சொந்தக்காரர்களுக்குஞ் சேர வேண்டுமென்றுங்கூறி இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக வசதிகள், சுங்க ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும் இக்கல்வெட்டு இக்காலத் தில் வடபகுதியிற் காணப்பட்ட வாணிபம் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றது எனலாம்.
வடபகுதியோடு சீனர் கொண்டிருந்த தொடர்பு பற்றி யும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மட்பாண்டங்கள், வர்த்தகத்தின் விளைவாக இங்கு கொண்டு வரப்பட்ட நாணயங்கள் ஆகியன மாதோட்டத்திற் கிடைத்தாலுங்கூட, 1970இன் பிற்பகுதியில் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் காஸ்வ லால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பலனாக மாதோட் டத்திலும் வங்காலையிலும் வடக்கே யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள அல்லைப்பிட்டியிலுஞ் சீனநாட்டு மட்பாண் டங்கள் பல கிடைத்துள்ளன 108 இவற்றுட் சுங் வம்சத் திற்குரிய போசலின் எனப்படும் பீங்கான் பாத்திரங்கள், சீனரின் சிறப்பான பாத்திரங்களாகிய செலடொன்" எனப் படும் இளம் பச்சை மெருகூட்டப்பட்ட வழுவழுப்பான பீங் கான் பாத்திரங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன, சீனர்கள் இப்பாத்திரங்களை இந்து சமுத்திரத் தீவுகளிற் கொண்டு வந்து விற்பதற்கு முன்னர் சீனா சென்ற அராபிய, இந்திய, பாரசீக வியாபாரிகள் இவற்றை வாங்கிவந்து விற்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வெளிநாடுகளிற் சீனப் பாத்
யாழ். - தொன்மை வரலாறு 49o )

திரங்களுக்குக் கிராக்கி ஏற்படவே வெளிநாடுகளில் விற்பதற் கென இவ்வகைப் பாத்திரங்கள் பெருந் தொகையாகச்
செய்யப்பட்டன.
ஈழத்திலும் இக்காலத்திற்குரிய பாத்திரங்கள் மாதோட்டம், யாப்பகூவ போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன. அல்லைப் பிட்டியிற் கிடைத்த பாத்திரங்களைப் பன்னிரண்டாம், பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கொள்ள லாம். இவற்றுட் கிண்ணங்கள் குறிப்பிடத்தக்கன. பாத்திரங்கள் உடைந்த நிலையிற் காணப்பட்டாலுஞ் சிலவற்றுள் வழமை யான சீன வடிவங்கள் காணப்படுகின்றன. பானை போன்ற பெரும்பாத்திரங்கள், தட்டம், ஒடுங்கிய கழுத்தையுடைய கூசா போன்றனவும் இவ்வட்டவணையில் அடங்கும். இவை கோயிலொன்றிற் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஊகிக்கப் படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகள் ஜாதகக் கதைகளில் மட்டுமன்றி மணிமேகலை போன்ற நூல்களிலும் வர்த்தக நடவடிக்கைகளுக்குரிய இடங்களாகப் பண்டு தொட்டு விளங்கியதற்கான சான்றுகள் காணப்படுவ தால் ஊர்காவற்றுறை போன்று பெரிய அளவிலான துறை முகமாக வளர்ச்சியடையாவிட்டாலும் அல்லைப்பிட்டியும் இக்காலத்திற் செல்வாக்குள்ள ஒரு துறைமுகமாக விளங்கிய தோடு சீனவணிகர்கள் பலரும் இங்கு வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு வசதியான ஒரு துறைமுகமாகவும் இது விளங்கியது எனலாம். இதனை உறுதி செய்வதாக அல்லைப்பிட்டிக்கு அருகிலுள்ள கப்பலடி, சீனன் கோயில் ஆகிய பெயர்கள் அமைகின்றன.
ஒருங்கிணைத்து நோக்கும்போது ஈழத்தின் வாணிப வளர்ச்சியில் இதன் அமைவிடமும் இங்கு கிடைத்த வாணிபப் பொருட்களும் பெரும் பங்கினை வகித்தாலுங்கூடக் கிறிஸ் தாப்த காலத்திற்கு முன்னரும் இதனைத் தொடர்ந்த சில நூற்றாண்டுகளிலும் ஈழம் வெளியுலகுடன் கொண்டிருந்த வாணிப நடவடிக்கைகளிலே தமிழகம் பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தியதை இலக்கியத் தொல்லியற் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இருந்தும் இந்நிலை நெடிது காலம் நீடிக்க
() 491 வாழ்வுல் வளமும்

Page 262
வில்லை, வடபகுதியின் மாந்தைத் துறைமுகஞ் சர்வதேச வர்த் தக நிலையமாக எழுச்சி பெற்றதை நாயன்மாரின் பாடல்களும் இங்கு கிடைத்த உரோம, மத்தியகிழக்கு, தூரகிழக்கு மட் பாண்டங்களும் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்திற் பல்லவ, பாண்டிய, சோழ வம்சங்களின் எழுச்சியும், அவை ஈழத் தோடு கொண்டிருந்த அரசியற்றொடர்புகளுந் தமிழகத்தோர் ஈழத்தை நோக்கிப் புலம் பெயரவும், வாணிப - கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் வழி வகுத்தது. இவ்வரிசையிற் சோழரின் வருகை வடபகுதி வரலாற்றில் ஒரு மைற்கல்லா கின்றது. சோழர் பெற்றிருந்த அரசியலாதிக்கம் பல்லவ, பாண்டிய வம்சங்களின் காலங்களை விட அக்காலத்திலே தமிழகத்தவரின் செல்வாக்கைப் பல துறைகளிலும் அதிகரித்த தோடு வடபகுதியிலே தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்தினையும் உறுதி செய்தது. தமிழகத்தவரோடு மட்டுமன்றி உரோமர், பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோருடன் வடபகுதி வாணிபத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த பொழுதிலும் இவர்கள் இப்பகுதிக் கலாசார வரலாற்றிலே தமிழகத்தவர் ஏற்படுத்திய தாக்கத்தை ஒத்த தாக்கத்தினை ஏற்படுத்த வில்லை. எனினும் ஈழத்துச் சிங்கள அரசுகள் வடபகுதியோடு கொண்டிருந்த அரசியல், கலாசாரத் தொடர்புகள் இப்பகுதி வாணிப வளர்ச்சியையுந் துரிதப்படுத்தியதை இப்பகுதியிற் கிடைத்த இவ்வரசுகளின் நாணயங்கள் எடுத்தியம்புகின்றன.
நாணயங்கள்
உள்நாட்டிற் பண்டுதொட்டு வாணிப நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன. ஆரம்பத்திற் பண்டமாற்றும் பின்னர் பணப்புழக்கமும் ஏற்பட்ட பின்னர் பொருட்களுக்குரிய பெறு மதியை உலோகத்தில் அளிக்கும் வழக்கமும் வளர்ச்சி கண் டது. கற்காலத்திலும் பெருங்கற்காலத்திலும் வழக்கிலிருந்த பண்டமாற்று முறை பின்னருந் தொடர்ந்தது. வடபகுதியி லுள்ள வெவ்வேறு இடங்களில் மட்டுமன்றித் தென்பகுதியிற் கிடைத்த பொருட்களுக்காகவும் இப்பண்டமாற்று நடைபெற் றிருக்கலாம். இவ்வாறு வெளிமாவட்டத்தவர் இப்பகுதிக்கு வரும்போது தமது பிரதேசத்துப் பொருட்களை இங்கு
யாழ். - தொன்மை வரலாறு 492 )

கொண்டுவருதலும் இங்கு விளைந்த பொருட்களை அவற் றுக்கு மாற்றீடாக எடுத்துச் செல்வதும் வழக்காயிற்று. ஆனாற் காலகதியில் "நாணயம்" வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்க இப்பொருட்களை விலை கொடுத்து வாங்
கும் வழக்கம் பரவலாக வழக்கில் வந்தது.
நாட்டின் ஏனைய பகுதிகளிற் காணப்படும் பழைய நாணயங்களைப்போல ஈழத்தின் வடபகுதியிலும் பழைய நாண யங்கள் பல காணப்படுகின்றன. இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிற் காணப்படும் இத்தகைய நாணயங்களை அறிஞர் அச்சுக்குத்திய நாணயங்கள் (Punch-marked coins) என்பர்.107 நாணயத் தகடுகளைச் சூடாக்கி அச்சிற் பொறித்த சின்னங் களை இவை சூடாக இருக்கும்போது தனித்தனியாக இவற் றிற் பதித்துப் பின்னர் வேண்டிய அளவுக்கு வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களில் அமைந்த இத்தகடுகளை வெட்டிய தால் இவை இவ்வாறு பெயர் பெற்றன.
இத்தகைய நாணயங்களை வடமொழி இலக்கியங்கள் * கர்ஷபண", "புராண" என அழைக்கின்றன. புராண என் றாற் பழையவை எனப் பொருள்படும். சிங்கள மொழியில் இவை "கஹபண’ என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலுஞ் செம்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் வெளியிடப்பட்ட இவ்வகை நாணயங்களைத் தனியான வர்த்தகக் குழுக் களே மன்னரது அங்கீகாரத்துடன் வெளியிட்டிருக்கலாமெனக் கொள்ளப்படுகின்றது. எனினும் இவற்றுட் பொன்னினா லான நாணயங்களும் இருக்கலாமெனக் கருதப்படுகின்றது. இவை பெரும்பாலும் நீள்சதுர வடிவின; தடிப்பான தகடு களில் உருவாக்கப்பட்டன.108 சராசரியாக 56 கிறெயின் நிறையுடையவை. கந்தரோடையிற் கிடைத்த நாணயங்களிற் சில வெள்ளிக்காசுகள்; சில வெள்ளி முலாம் பூசப்பட்ட பொற்காசுகள்; சில முற்றாகவே செப்புக் காசுகள். இவை நீள மான உலோகத் தகடுகளில் வெட்டப்பட்டதோடு, இவற்றின் நிறையைச் சரியாக இனங்கண்டு கொள்வதற்காக இவற்றின் மூலைகள் நறுக்கப்பட்டுங் காணப்படுகின்றன. வாணிப நோக் கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இவற்றுட் பெரும்பாலும்
O 493 வாழ்வும் வளமும்

Page 263
ஒரு பக்கத்திலுஞ் சில சமயம் இரு பக்கங்களிலுஞ் சின்னங்கள் உள. இவற்றுட் இட்டத்தட்ட முன்னுாற்றுக்கு மேற்பட்டஒன்னங்கள் காணப்படுகின்றன. மலை, எருது, நாய், சூரியன், மரம், யானை, சந்திரன் போன்றன இவற்றுட் சிலவாகும். கி. மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலேதான் இவை தோற்றம் பெற்றுப் பின்னர் தென்னிந்தியாவை அடைந்தன என்று முன்னர் கருதப்பட்டது. தென்னிந் தியாவிலுள்ள இத்தகைய நாணயங்களையும் அவற்றுட் காணப்படுங் குறியீடுகள், சின்னங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்த மகாலிங்கம், இக்குறியீடுகள் பலவற்றிற்கும் பெருங் கற்காலக் கலாசாரத்திற் கிடைக்கும் மட்பாண்ட ஒடுகளுக்கு மிடையே காணப்படும் ஒற்றுமையை எடுத்துக் காட்டித் தென்னிந்தியாவிற் காணப்படும் இத்தகைய நாணயங்கள் வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், வட இந்தியாவைப்போலத் தென் இந்தியாவிலும் சமகாலத் திலேயே இவை புழக்கத்திற்கு வந்து விட்டன என எடுத்துக் காட்டியுள்ளார்.19
மேற்கூறிய நாணயத்தின் வகையை ஒத்ததான நாணய வகையே ஈழத்திற் காணப்படும் ஆதி நாணயங்கள் ஆகும் ஈழத்திற்கு அண்மையிலே தமிழகம் இருப்பதாலும், இரு பகுதி களுக்குமிடையே நெருங்கிய வர்த்தகத் தொடர்புகள் கானப் பட்டதற்கான சான்றுகள் காணப்படுவதாலுந் தென்னிந்தியா வில் இருந்தே இவை ஈழத்தினை அடைந்திருக்கலாம் போலத் தென்படுகின்றது. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம் ,120 குடத்தனை, 11 மண்ணித்தலை, வெட்டுக் காடு,112 மாதோட்டம், முல்லைத்தீவு போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன.118 இவற்றுள் மூன்று வளைவுகளையுடைய மலையின் சின்னம், எருது, சூரியன், நாய் போன்ற சின்னங்கள்
காணப்படுவது அவதானிக்கத்தக்கது ( լ յլ -ւb - 49 - 50 ).
வடபகுதியிற் குறிப்பாகக் கந்தரோடையிற் கிடைத்த நாணயங்களிற் பாண்டிய மன்னர்களால் வெளியிடப்பட்டநாணயங்கள் முக்கியம் பெறுகின்றன. அச்சுக்குத்திய நாணய வகையைத் தொடர்ந்து இவை இங்கு கிடைப்பது பண்டு
யாழ், - தொன்மை வரலாறு 494 G

தொட்டு இரு பகுதிகளுக்குமிடையே நிலவிய தொடர்புகள் பற்றிய இலக்கியத் தொல்லியற் சான்றுகள் தருந் தகவல் களை உறுதி செய்வனவாக அமைந்திருப்பதால் இவை பற்றி இங்கே சற்று விரிவாகக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இந்நாணயங்கள் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி "பாண்டியர் பெரு வழுதி நாணயங்கள்" என்ற நூலிலே தந்துள்ள தகவல் களையே நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.14 இந்நாணயங் களை இவர் கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கூறியுள்ளார். சதுரவடிவிலமைந்த அவை செம்பினாலாக்கப் பட்டவை (படம் - 51) . இவற்றின் சிறப்பம்சங்களை இனி ஆராய்வோம்.
முதலாவது வகையில் முன்புறத்தின் மேல்வரிசையிற் பின்வருஞ் சின்னங்கள் உள. இடது புறத்தில் வேலியிட்ட மரம் - வேலியிற் கடலாமைச் சின்னம் ஆகியன பொறிக்கப் பட்டுள்ளன. நடுப்பகுதியிற் கோயிற் சின்னமும் இதன் வலது கோடியில் மூன்று முகடுகளையுடைய மலையின் சின்னமுங் காணப்படுகின்றது. இதன் கீழ் வரிசையில் இடதுபுறத்திற் கொடிமரமும், நடுவில் யானையும், வலதுகோடியில் வேலியிட்ட மரம் - வேலியிற் கடல் ஆமைச் சின்னம் ஆகியனவுங் காணப்படுகின்றன. பின்புறத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் சின்னம் உண்டு. இவ்வாறு உருவகப்படுத்தப்பட்டுள்ள மீன் சின்னம் பெருங்கற்காலக் கலாசாரத்துக்கு உரிய மட்பாண்டங் களிற் குறியீடாகக் காணப்படுவதும் ஈண்டு கவனிக்கத் தக்கது.
இரண்டாவது வகையில் முன்பக்கத்தின் மேல் வரிசையின் இடது புறத்தில் மூன்று முகடுகளையுடைய மலையின் சின்னம், கவிழ்ந்த பிறை வடிவான கூரை, ஐந்து தூண்களையுடைய கோயில், வேலியுள்ள மரம் ஆகியன உண்டு. இதன் கீழ் வரிசையில் இடது பக்கத்திற் கொடிக்கம்பம், நடுப்பகுதியில் யானைச் சின்னம், வலதுபக்கத்தில் திரிசூலம் ஆகியன உண்டு. இச்சூலத்தினைத் தாங்கி நிற்கும் பீடத்திற் கடல் ஆமைச் சின்னங் காணப்படுகின்றது. இதன் பின்புறத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் சின்னங் காணப்படுகின்றது.
O 495 வாழ்வும் வளமும்

Page 264
மூன்றாவது நாணயவகையில் முன்புறத்தின் மேல்வரிசையில் வேலியிடப்பட்ட மரமும், வேலியிற் கடலாமைச் சின்னமும், கவிழ்ந்த பிறை போன்ற கூரையும், நான்கு தூண்களையுடைய கோயிலும், மூன்று வளைவுகளையுடைய மலைச்சின்னமும், இதன் மேல் வேலியிட்ட மரமுங் காணப்படுகின்றது. இதன் கீழ் வரிசையில் வலதுபுறம் நோக்கி நிற்குங் குதிரையும் இடது புறம் நோக்கி நிற்கும் யானையுங் காணப்படுகின்றன. இதன் மறுபக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீனின் குறியீடு உளது. இச்சின்னங்கள் பொறித்த மேலுஞ் சில பாண்டிய நாணயங்களைக் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் காட்டியுள் ளமையும் ஈண்டு அவதானிக்கத்தக்கது.
இவற்றோடு கந்தரோடையிற் கிடைத்த கி. மு. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குரிய ஒரு பாண்டிய நாண யம் பற்றியுங் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் கூறியுள்ளார். 15 இதன் முன்புறத்தில் மூன்று வளைவுகளை உடைய மலையின் சின்னம், நாய், மரம், மரத்தினை நோக்கி நிற்கும் யானை ஆகியன காணப்பட இதன் பின்பக்கத்தில் மூன்றடுக்குள்ள மண்டபமும், இதன் வலப்புறத்தில் வெட்டரிவாளுடன் கூடிய திரிசூலமுங் காணப்படுகின்றன. மேற்கூறிய நாணய வகைகள் அரசியற் செல்வாக்கினாலா அன்றி வாணிபத் தொடர்பி னாலா வட பகுதியை அடைந்தன என்று திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. இவை கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்தி யனவாகக் காணப்படுவதாலும், அநுராதபுரத்திற் பாண்டிய வம்சத்தவர் அரசாட்சி நடத்தியது பற்றிப் பாளி நூல்கள் குறிப்பிடுவதாலும் அவ்வாட்சி வட பகுதியிலும் பரந்திருந் ததன் எச்சமாக இவை விளங்கலாம். இது பற்றி விரிவாக ஆராய இடமுண்டு.
கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயங் களில் வட்டவடிவிலுள்ள செப்பு நாணயங்களுங் காணப்படு கின்றன. இத்தகைய நாணயங்கள் கந்தரோடையிலுங் கிடைத் துள்ளன.119 இவை வார்க்கப்பட்ட நாணய வகையைச் சார்ந்தவையாகும் (படம் - 52). புராண நாணயங்களின் சின்
னங்கள் சூடாக்கப்பட்ட தகடுகளிற்றான் பொறிக்கப்பட்டன.
யாழ். - தொன்மை வரலாறு 496 ே

ஆனால் இவற்றின் சின்னங்கள் தக்ட்டோடு சேர்த்து வார்க் கப்பட்டதால் இவை இவ்வாறு பெயர் பெற்றன. இவை நீள்சதுரம், வட்டம், போன்ற வடிவிலுள்ளன. இச்சின்னங் களில் யானை, வேலியிட்ட மரம், மூன்று வளைவுகளையுடைய மலை, தண்டுடன் கூடிய சுவஸ்திகா ஆகியன குறிப்பிடத் தக்கன. இவற்றின் பொருளை ஆராய்ந்த அறிஞர் சிலர் இவை புத்தபிரானின் வாழ்விலுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்றன எனக் கூறியுள்ளனர்.117 யானை புத்த ரின் பிறப்பையும், மரம் அவர் ஞானம் பெற்ற அரசமரத் தினையும், தண்டுடன் கூடிய சுவஸ்திகா அவரது போதனை யையும், மலை அவரின் பரிநிர்வாணத்தினையுங் குறிப்பதாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனர்ல் இச்சின்னங்களின் தோற்றம் பெளத்த மதவருகைக்கு முன்னரே காணப்படுவ தால் இவற்றைப் பெளத்த மதத்துடன் இணைப்பதிற் பல சிரமங்கள் உண்டு. ஏற்கனவே அச்சுக்குத்தப்பட்ட நாணயங் களில் மரம், மலை, யானை, சுவஸ்திகா போன்றன காணப் படுகின்றன. வார்க்கப்பட்ட நாணயங்களிற் சிலவற்றுள் எருது, எருதின் பாதம் (நந்தி பாதம்) ஆகியன காணப்படுகின்றன. இதனால் இவற்றைப் பெளத்த மதத்தோடு இணைத்துக் கூறுவது கஷ்டமாகவே உள்ளது. இந்நாணய வகையிற் காணப்படுஞ் சின்னங்களை நோக்கும் போது இவை அச்சுக் குத் தப்பட்ட நாணய வகையைப் பின் பற்றியே ஆக்கப்பட்டமை புலனாகின்றது.
வார்க்கப்பட்ட நாணய வகையைத் தொடர்ந்து காணப் படுபவை லசஷ்மி நாணயங்களாகும். இத்தகைய நாணயங்கள் வடக்கே கந்தரோடை, ஆனைக்கோட்டை, கல்முனை, திருக் கேதீஸ்வரம், முல்லைத்தீவு, அநுராதபுரம் ஆகிய இடங்களி லுந் தெற்கே சிலாபம், திஸ்ஸமகாராம, நிந்தவூர் போன்ற இடங்களிலுங் கிடைத்துள்ளன.118 (படம் 53 - 56). நீள்சதுர வடிவினாலான இவை ஈயம், செப்பு, இரும்பு, சிலிக்கா, நிக்கல் முதலிய உலோகங்களிற் செய்யப்பட்டவையாகும். எனினும் வடக்கே கந்தரோடை போன்ற இடங்களிற் காணப்படும் இத்தகைய நாணயங்கள் ஏனைய இடங்களிற் காணப்படுவன வற்றைவிடச் சிறப்பான கலையம்சம் பொருந்தியனவாகக்
4g7 வாழ்வும் வளமும்

Page 265
காணப்படுகின்றன. இவற்றின் முன் பக்கத்திலே தாமரை யாசனத்தில் நிற்கும் பாவனையில் இரு கைகளிலுந் தாமரை மலர்களை ஏந்தி நிற்கும் பெண் தெய்வம் ஒன்று சித்திரிக்கப் பட்டுள்ளது. இதன் இரு மருங்கிலும் யானைகள் தும்பிக் கைகளினால் நீர் சொரிகின்றன. சில சமயந் தாமரை ஆச னத்திலிருந்து தாமரைத் தண்டுகள் தாமரை மொட்டுக்களுடன் வெளிக்கிளம்புவதும் இவற்றி ற் சித்திரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இத்தகைய தெய்வங் கஜலக்ஷமியே என இனங்காணப்பட்டுள்ளது. இத் தெய்வத்தின் கிரீடத்திற் குப் பின் ஒளிவட்டமுண்டு எனவுஞ் சிலர் க்ருதுகின்றனர். இந்நாணயங்களின் மறு பக்கத்திலே தண்டுடன் கூடிய சுவஸ் திகாவுண்டு. சில சமயம் இதே பக்கத்தில் மயில், சேவல், வேல் போன்ற சின்னங்களுண்டு எனவுஞ் சிலர் கருதுகின்றனர்.
நிற்கும் பாவனையிலுள்ள லக்ஷமியோடு இருக்கும் பாவனையிலுள்ள லக்ஷ்மி நாணயங்களும் அநுராதபுரம், முல்லைத்தீவு, திஸ்ஸமகாராம ஆகிய இடங்களிற் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இந்நாணயங்களைக் கூடப் பெளத்த மதத் துடன் இணைத்துக் கூறுவாருளர். இவற்றின் முற்பக்கத்தி லுள்ள பெண்ணைப் புத்தரது தாயாகக் கொள்ளும் இவர்கள் இத்தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யுந் தோரணையில் இரு மருங்கிலுஞ் சித்திரிக்கப்பட்டுள்ள யானைகளை மாயாதேவியின் கனவின் சின்னமாகவுங் கொள்வர். இவற்றின் பிற்பக்கத்தி லுள்ள தண்டுடன் கூடிய சுவஸ்திகா புத்தரின் போதனையை எடுத்துக் காட்டுகின்றது என இவர்கள் கூறுகின்றனர். ஆனால் கஜலக்ஷமியின் தோற்றம் பிற்பட்ட காலத்திலும் இவ்வாறே அமைந்திருப்பதை நோக்கும்போது இதனைக் கஜலசஷ்மியின் வடிவம் என்று கொள்வதே சரியானதாகும்.
இச்சந்தர்ப்பத்திற் பச்சிலைப்பள்ளியிற் கடந்த நூற்றாண் டிற் கண்டு பிடிக்கப்பட்ட 7000 நாணயங்கள் பற்றி ஸ்ராக் என்ற அறிஞர் தருந் தகவல் அவதானிக்கத்தக்கது.19 இவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையை அவதானிக்கும்போது இவை யும் பழைய நாணயங்கள் ஆக இருக்கலாம் என்று யூகிக்க இடமுண்டு. இந்நாணயங்கள் ஒரு மனித சடலத்தின் காலடி யில் ஒரு குடத்தில் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தன. இம்
யாழ். - தொன்மை வரலாறு 4gs O

மனித உடல் நிலத்திலிருந்து மூன்று அடி ஆழத்தில்.ஆக் கஞ் செய்யப்பட்டிருந்தது. இம்மனிதனின் கையில் மோதிர மும் பிற அணிகலன்களுங் காணப்பட்டன. துர்அதிஷ்டவச மாக இந்நாணயங்கள் பற்றிய பிற விபரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
அடுத்துப் பாக்கர் 1885இல் முல்லைத்தீவிலுள்ள தென்னந்தோட்டத்திலுள்ள கிணறொன்றிற் கண்டெடுத்த நாணயங்கள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. 120 இவற்றுள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களோடு லக்ஷமி நாணயங்களுங் கிடைத்துள்ளன (படம் - 50 ). பாக்கர் இவற்றை லசுஷ்மி நாணயங்கள் எனக் குறிப்பிடாவிட்டாலுங் கூட இவை பற்றி அவர் தருந் தகவல்களை உற்று நோக்கும் போது இவை லசுஷ்மி நாணயங்கள் என்பது தெளிவாகின் றது. கந்தரோடையிற் கிடைத்த இத்தகைய நாணய வகை யோடு ஒப்பிடும்போது இவற்றிற் கலையம்சங் குறைந்தே காணப்படுகின்றது. நீள்சதுர வடிவிலமைந்த இவை பல்வேறு பரிமாணங்களில் உள. இவற்றில் முன்பக்கத்தில், நிற்கும் லசஷ்மியின் உருவம் உண்டு. இதன் கரங்களிற் சில பொருட்கள் உள்ளன என ஏற்றுக் கொள்ளும் பாக்கர் இவற்றை மலர்த்தண்டு, திரிசூலம் ஆகிய பொருட்களாக இனங்கண்டுள் ளார். சில சமயந் திரிசூலம் பெண் தெய்வத்தின் இன்னொரு வடிவமாகிய துர்க்கையையுங் குறிக்கலாம் என்கின்றார். இத் தெய்வத்தின் இருமருங்கிலும் யானைகள் காணப்படாவிட்டா லுங் கையிலுள்ள மலர்த்தண்டுகளைத் தாமரை மலர்த்தண்டு களே என இனங்கண்டு கொள்ளலாம். இக்கூற்றினையே இந் நாணயத்தின் மறுபக்கத்திலுள்ள தண்டுடன் கூடிய சுவஸ்திகாக் குறியீடு உறுதி செய்கின்றது.
இச்சுவஸ்திகாவுடன் பல இடங்களிற் சாடியோடு கூடிய மரக்கிளையும் (வேலியிட்ட மரம்) முன்பக்கக் கால்களில் ஒன்றை மடித்து மற்றக்காலை உயர்த்திப் படுத்திருக்கும் எருதின் உருவமுங் காணப்படுகின்றது. கந்தரோடையைப் போன்று முல்லைத்தீவிற் கிடைத்த லக்ஷமி நாணயங்களில் லக்ஷமி தாமரை ஆசனத்திற் காணப்படவில்லை. இரு இடங்களிலும்
G 499 வாழ்வும் வளமும்

Page 266
உள்ள நாணயங்களில் மறுபக்கத்திலே தண்டுடன் G.L. ULI சுவஸ்திகா காணப்பட்டாலும் இவற்றோடு காணப்படுஞ் சின்னங்கள் வேறுபட்டே காணப்படுகின்றன. கந்தரோடை நாணயங்களில் முருக வணக்கத்தோடு தொடர்புடைய மயில், வேல், சேவல் ஆகியன காணப்பட முல்லைத்தீவிற் கிடைத்த நாணயங்களிற் சிவவணக்கத்திற்குரிய நந்தி சித்தரிக்கப்பட் டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய வேறு பாடுகள் இக்காலப்பகுதியிற் பிரதேச தனித்துவத்துடன், லசுஷ்மி நாணயங்கள் காணப்பட்டதை எடுத்துக்காட்டுகின்ற றனவா என்பது ஆராய்தற்பாலது. ஏனெனில் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் நிந்தவூரிற் கிடைத்த இத்தகைய நாணயங் களின் மறுபுறத்திற் சிந்துவெளி நாகரிகத்திற் காணப்படும் பல சின்னங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாகவே லக்ஷமி நாணயங்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தன எனக் கொள்ளப் படுகின்றது.
வடபகுதியிற் கிடைத்த நாணயங்களில் உரோம நாண யங்கள் முக்கியமானவை. 121 இவை கி. பி. முதலாம் நூற் றாண்டு தொடக்கங் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை யான காலத்திற்குரியவை. இக்காலத்திற்றான் உரோமப் பேரரசு கீழைத்தேய நாடுகளுடன் நெருக்கமான வர்த்தகத் தொடர்பினை மேற்கொண்டிருந்தது. இவை பற்றிய குறிப் புகள் சங்க இலக்கியங்களிலுங் கிரேக்க - உரோமரது நூல் களிலுங் காணப்படுவதோடு உரோமரின் மட்பாண்டங்களும் மதுச்சாடிகளும் இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளிற் கிடைத்துள்ளன. உரோம நாணயங்கள் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகத்தாலானவை. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம், 122 மண்ணித் தலை, வெட்டுக்காடு,128 திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங் களிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன.124 இவற்றின் முற்பக்கத் திற் பொதுவாகக் கிரீடமணிந்த மன்னனின் தலையும் அவனின் பெயருந் தலையைச் சுற்றிவரப் புள்ளிகளும் உள. பின்பக்கத்திலே ஒன்று, இரண்டு அல்லது மூன்று போர் வீரர்கள் அல்லது சிலுவை முதலிய உருவங்கள் உள. இந்
யாழ். - தொன்மை வரலாறு 5OO இ

நாணயங்களிற் பெரும்பாலானவை கி. பி. நான்காம், ஐந் தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். காரணம் இக் காலப்பகுதியிற்றான் உரோம வணிகர்கள் நேரடியாக ஈழத் துத் துறைமுகங்களுக்கு வந்தனர். இதற்கு முன்னருள்ள காலப்பகுதியில் ஈழத்து வணிகர்களே தமிழகத்திலுள்ள துறைகளுக்குச் சென்று உரோமருடைய மட்பாண்டங்களை யும், நாணயங்களையுந் தமது பொருள்களைக் கொடுத்துப் பெற்று வந்ததாகக் கூறப்படுகின்றது (படம் - 49).
இச்சந்தர்ப்பத்திற் பிடரிமயிருடன் கூடிய சிங்கம் பொறித்த நாணயங்கள் பற்றியுங் குறிப்பிடுவது அவசியமாகின்றது.125 இத்தகைய நாணயங்கள் வடக்கே கந்தரோடையிற் கிடைத் துள்ளன. இந்நாணயங்களிற் சிங்கம் முன்பக்கத்திலும் மூன்று புள்ளிகளடங்கிய வட்டம் பின்பக்கத்திலுங் காணப்படுகின்றன. சிலசமயம் இவற்றின் பின்பக்கத்திற் கிளையுடைய மரமும் உளது. சிலவற்றின் முன்பக்கத்திற் சிங்கம், முக்கோண வடிவம் ஆகியன காணப்படப் பின்பக்கத்திற் சுவஸ்திகா உளது. இத்தகைய நாணயங்கள் பல்லவரதே எனப் போல் பீரிஸ் கருதினார். 126 சிங்கம் பல்லவரது சின்னமாக அவர் களது நாணயங்களிற் காணப்படுவதே இதற்கான காரண மாகும். அதுமட்டுமன்றி இத்தகைய நாணயவகை தமிழகத் திற் கிடைப்பதும் இதற்கான மற்றுமோர் காரணமாகும். இத்தகைய சிங்கம் பொறித்த நாணயங்கள் திருக்கேதீஸ்வரத் திலுங் கிடைத்துள்ளன. ஆனால் இவற்றின் முன்பக்கத்திற் சிங்கம் காணப்பட்டாலும் பின்பக்கத்திற் பூரணகும்பமும் அதன் இருமருங்கிலுங் குத்துவிளக்குகளுங் காணப்படுகின்றன. இவை பல்லவ வம்சத்தினரால் வெளியிடப்பட்டவையே என்பது ஹெற்றியாராச்சியின் கருத்தாகும்127 (படம்-57). சில நாணயங் களில் ஏரியுடன் கூடிய எருது முன்பக்கத்தில் நிற்கும் நிலை யிற் காணப்படச் சக்கரம் மறுபக்கத்திலுள்ளது. பல்லவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஆரம்பத்திற் சிங்கம் இலட்சனை யாகக் காணப்பட்டாலுங்கூட காலகதியில் எருது அவர்களின் இலட்சனையாக முன்னிலை பெற்றமை ஈண்டு நினைவு கூரற்பாலது. அண்மையிற் பூநகரிப் பகுதியிலுள்ள கல்முனை, வெட்டுக்காடு, ஈழவூர் ஆகிய பகுதிகளிற் கி. பி. 10 ஆம்
() 5o வாழ்வும் வளமும்

Page 267
நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாணயங்கள் கிடைத் துள்ளன. இவற்றுள் மூன்று நாணயங்க்ள் வட்டெழுத்திற் * பழனி " என்ற வாசகம் பொறித்துக் காணப்படுகின்றன.128 (படம் - 58). இவற்றை முதலாவது பாண்டியப் பேரரசுக்குரிய நாணயங்களாகக் கொள்ளலாம்.
மேற்கூறிய நாணய வகைகளோடு வடபகுதியிற் கண்டெடுக் கப்பட்ட கி. பி. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுர அரசில் வழக்கி லிருந்த நாணயங்களும் அடங்கும். இவற்றைக் கஹவணு என அழைப்பர். 129 இவை பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாலானவை. வட்டவடிவமான இவற்றின் முன் பக்கத்தில் வேட்டி தரித்துக் கிரீடம் அணிந்து, நிற்கும் நிலை யிலே அரசன் க்ாணப்படுகின்றான். இவனின் இடது கரம் மடித்தவாறு சங்கு அல்லது மலரை வைத்திருக்க வலது கரம் நிலம் நோக்கி நிற்கின்றது. சில சமயம் விளக்குகளும் இவற்றிற் காணப்படுகின்றன. இவ்விலச்சினைகளைச் சுற்றிப் புள்ளி போன்ற வட்டங்களும் உள. இவற்றின் பின்பக்கத் தில் அரசன் இருக்கும் நிலையிற் காணப்படுகின்றான். சில நாணயங்களிற் சதுரக் கோடிழுத்த ஆசனமும் உண்டு. முன் பக்கத்திலுள்ளது போன்றே இவனின் இடது கரமுங் காணப் படுகின்றது. ஆடை, கிரீடம் ஆகியனவற்றை மன்னன் அணிந் துள்ளான். வலது கரம் முழந்தாளிலுள்ளது. இடப்புறமாக பூரீலங்காவிபுரம் அல்லது பூரீலங்கேஸ்வர என்ற வாசகம் மூன்று வரிகளிலே நாகரி எழுத்திற் காணப்படுகின்றது. இவ்வாசகத்தின் பொருள் ஈழத்தின் தலைவன் என்பதாகும். சில நாணயங்களிலே மன்னன் பிறை அல்லது தாமரைமலர், சங்கு, மல்லிகைப்பூ, சக்கரம் போன்றவற்றை இடதுகரத்திலே முன்பக்கத்திலும், பின்பக்கத்திலுங் கொண்டுள்ளான். இவ்வுரு வம் திருமாலாக இருக்கலாமெனக் கொள்ளப்படுகின்றது. ஏனெனில் ஆழ்வாரின் பாசுரங்களிலே "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்ற வாசகங் காணப்படு கின்றது. இத்தகைய நாணயவகையிற் பல்வேறு பிரமாணங்கள் உள. இவற்றில் அரைவாசி அர்த்த கஹவணு எனவுங் காற்பகுதி பல அல்லது தெக எனவும், எட்டிலொன்று
யாழ். - தொன்மை வரலாறு 5O2 O

அக எனவும் அழைக்கப்பட்டன. சில நாணயங்களில் நாகரி எழுத்தில் பூரீலங்கா என்ற வாசகமுளது. இன்னுஞ் சிலவற்றிலே தாமரை மலரின் மேல் நிற்கும் நிலையில் லக்ஷமி காணப் படுகின்றாள். மறுபுறத்தில் லக்ஷமி என்ற வாசகம் நாகரி வரிவடிவத்திலுள்ளது. வேறு சிலவற்றுட் பிறை, தாமரைப் பூ முதலியனவும் நந்தக அல்லது உரக அல்லது தரக அல்லது இரக அல்லது அரக என்ற வாசகமும் நாகரி எழுத்திற் காணப்படுகின்றது.
ஈழத்தில் சோழராட்சியுடன்தான் மன்னனின் பெயர் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவற்றின் முன் புறத்தில், நிற்கும் நிலையிலே உள்ள மனிதனும் பின்புறத்திலே, இருக்கும் நிலையிலே உள்ள மனிதனுங் காணப்படுகின்றான். மன்னனின் பெயர் பூரீ ராஜராஜ என நாகரி வரிவடிவத் திற் பின்புறத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. இவை செப்பினா லானவை. இம்மன்னனின் நாணயங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் நாரந்தனையிலும்130, பெருநிலப்பகுதியிற் பூநகரியிலுங் கிடைத்துள்ளன.18 (படம் - 59 - 61 ). சோழரிடம் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாம் விஜயபாகு சோழரின் வழக்கத்தினைத் தொடர்ந்து தனது பெயரை பூரீ விஜயபாகு என இந்நாணயங் களில் வெளியிட்டான். பின்னர் ஆட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகுவின் நாணயங்களிற் பூரீ பராக்கிரமபாஹ" என்ற வாசகங் காணப்படுகின்றது.132 பராக்கிரமபாகுவைத் தொடர்ந்து பொலநறுவையில் ஆட்சி செய்த நிஸங்கமல்லன் (படம் - 62 - 64 ), சோடகங்கன், லீலாவதி, சாஹஸமல்லன், தம்மாசோகதேவ போன்றோரது செப்புக் காசுகள் பண்டத் தரிப்பு, மட்டுவில், கந்தரோடை, வல்லிபுரம், தொல்புரம், Hங்குடுதீவு போன்ற குடாநாட்டுப் பகுதிகளில் மட்டுமன்றிப் பெருநிலப்பரப்பிற் பூநகரிப் பகுதி, மாந்தை ஆகிய இடங் களிலுங் கிடைத்துள்ளன. இவ்வாறே தம்பதேனியாவில் ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு, மூன்றாம் விஜயபாகு, புவனேகபாகு போன்ற மன்னர்களின் நாணயங்கள் யாழ்ப் பாணத்திற் கந்தரோடை, வல்லிபுரம், அச்சுவேலி, தெல்லிப்பழை, புங்குடுதீவு முதலிய இடங்களில் மட்டுமன்றிப் பெரு நிலப்பரப்பிற் பூநகரி, மாதோட்டம் போன்ற இடங்களிலுங்
O 5O3 வாழ்வும் வளமும்

Page 268
கிடைத்துள்ளன. இந்நாணயங்கள் வடபகுதிக்கு வியாபார நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டன. இதேபோன்று அராபிய, சீன நாணயங்களும் வியாபாரத்தின் மூலமாகவே வட பகுதியை அடைந்தன. அண்மையிற் பூநகரிப் பகுதியிற் சில அராபிய நாணயங்கள் கிடைத்துள்ளன.188 இவ்வாறே ஆரியச் சக்கரவர்த்திகளின் எசமானர்களான இரண்டாவது பாண்டியப் பேரரசை அமைத்த பாண்டிய வம்சத்தவரின் நாணயங்களும் இங்கே கிடைத்துள்ளன.134 இவற்றுள் முன் பக்கத்திற் காலை மடித்துப் படுத்திருக்கும் நந்தியும், இதன் இருமருங்கிலும் இருகுத்துவிளக்குகளும் மேலே பிறைச் சந்திரனும் பின் பக்கத்தில் இரண்டு மீன் இலட்சனைகளுங் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, மாதோட்டம் போன்ற இடங்களிற் கிடைத்துள் ளன.135 இவற்றிற் காணப்படும் நந்திக்கும் ஆரியச் சக்கர வர்த்திகளின் சேது " நாணயங்களிற் காணப்படும் நந்திக்கு மிடையே காணப்படும் ஒற்றுமை அவதானிக்கத்தக்கது.(படம்- 65)
இவ்வாறு வடபகுதியிற் கிடைத்துள்ள நாணயங்கள் இப் பகுதியிற் கிடைத்துள்ள தொல்லியற் சான்றுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இவை சம காலத்தில் ஈழத்தின் பிறபகுதிகளைப் போன்று இப்பகுதியும் நாகரிக வளர்ச்சி கண்டிருந்ததை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் வாணிபத்துறையிற் பிரதான பங்கினை வகித்த தையும் விளக்குகின்றன. இங்கு காணப்படும் நாணய வகை களில் இப்பகுதி அரசமைப்பால் வெளியிடப்பட்டதை எடுத்துக் காட்டும் ஒரு தொடர்ச்சியான நர்ணய வகை காணப்பட வில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்பகுதி அரசு தனது நாணய வகையைத் தானே உருவாக்கியிருக்க லாம் என்று யூகிப்பதிலே தவறில்லை. இத்தகைய ஒரு கருத்துக்கு மெருகூட்டுவதாக அமைவதுதான் இப்பகுதிக்கே உரிய தனித்துவமான அம்சங்களுடன் விளங்கும் இங்கு கிடைத்துள்ள அச்சுக்குத்திய, லக்ஷமி நாணய வகையாகும். வருங்கால ஆய்வுகள் இதுபற்றி மேலும் பல தகவல்களைத் தரலாம். எவ்வாறாயினும் ஈழத்தின் தென்பகுதியோடு வட
யாழ். - தொன்மை வரலாறு 5O4 ()

பகுதி கொண்டிருந்த தொடர்பினை எடுத்து விளக்குவனவாக இங்கு கிடைத்துள்ள அநுராதபுர, பொலநறுவை அரசுகளின் நாணயங்கள் விளங்குகின்றன. இத்தகைய தொடர்பின் எச்ச மாகவே இங்கு கிடைத்துள்ள தமிழக அரச வம்சங்களின் நாணயங்களும், வெளிநாட்டாராகிய உரோமர், அராபியர்
போன்றோரின் நாணயங்களும் விளங்குகின்றன.
D 5O5 வாழ்வும் வளமும்

Page 269
10.
11.
12.
அடிக்குறிப்புகள்
சிற்றம்பலம், சி. க., வரலாற்றுக்கு முற்பட்ட கால இலங்கை, ஆய்வு காலாண்டிதழ், 1 - 2 ஏப்ரல் - பூன். 1987, பக். 71 - 85.
Deraniyagala, P. E. P., The Races of the Stone Age and of the Ferrolithic of Ceylon'. J. R. A. S. C. B. N. S., Vol. IV, Part I, 1956. Luši. 1 - 2 l.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, (Poona). 1980.
Deraniyagala, S., The Citadel of Anuradhapura, 1969, Excavations in the Gedige Area, Ancient Ceylon. No. 2, 1972. uá. 48 - 162.
Sitrampalam, S. K. Gud. Jr. s. 1980.
Ragapathy, P., Early Settlements in Jaffna. An Archaeological Survey, (Madras), 1987. Lud. 135 - 148.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Vol. I, Part I, (Colombo), 1959. U. 144.
Parker, H., Ancient Ceylon, (Lond.), 1909.
Sitrampalam, S. K., Gio. a. s. 1980.
மேற்படி, பக். 209 - 212.
மேற்படி. ப. 210,
Mahavamsa, (ed.) Geiger, W., (Colombo), Reprint - 1950. அதி. XXI, வரி 10 - 12.
யாழ். - தொன்மை வரலாறு 5O6 9ே

13.
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
Ragupathy, P., Guo. 3. дјтi), ud. 124 - 132.
சிற்றம்பலம், சி. க. "யாழ். மாவட்டத்தின் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக்குடிகளும்", செந்தழல், தமிழ் மன்றம், யாழ். பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1982.
வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, (பேராதனை), 1959. L. 81. மே. கூ. நூல், பக். 185 - 188.
Ragupathy, P., GLo. 3i... J5JT sib, Lu. 208.
Pathmanathan, S., “ Cola rule in Sri Lanka, Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, Vol. 2, (Jaffna), 1974. Ludii. 19 - 32.
Paranavitana, S., Inscriptions of Ceylon, Vol. I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970. LJ. 7.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல. (சுன்னாகம்), 1949, ப. 14.
Mahavamsa, GID. Sii... 5T 5o, 959. VII, aii. 10 - 1 1.
Paranavitana, S., Gud. Sin. g5Tsiv, 1970. LJáë. XCV - CI.
வித்தியானந்தன், சு, மே. கூ. நூல், அதி. 12, Luis. Il 96 - 227.
Maloney, C. T., The effect of Early coastal sea Traffic on the Development of civilization in South India, Unpublished Ph. D. Thesis, University of Pennysylvania, ( Pennysylvania ) , 1968.
Rasanayagam, S., Ancient Jaffna, ( Madras), 1926. t_1 - 129 •
D 5o7 வாழ்வும் வளமும்

Page 270
26.
27.
28.
29.
30.
31.
32,
33.
34.
36.
37.
38.
39.
0.
Maloney, C., " The Beginnings of Civilization in South India ', The Journal of Asian Studies, 29. May, 1970. u Já. 603 - 616.
Srisena, W. M., Sri Lanka's Commercial Relations with the outside world from earliest times to 8th century A. D', The Sri Lanka Journal of South Asian Studies, Vol 2, No. 1, December 1980. Lu. 13.
மேற்படி, ப. 13. Paranavitana, S., Guo. Br. 560, 1959. Lješ. 101-105.
மேற்படி, பக். 102 - 103.
Goib u Lu. Il 03 . . .
Parker, H., Guo. st. Této, jáš. 468-52.
Mahavamsa, மே, கூ, நூல், அதி. X1, வரி 25 - 26.
Ellawalla, H., Social History of Early Ceylon, ( Colombo ), 1969. Lu. 1 19.
சேதுப்பிள்ளை, ரா. பி., தமிழகம் - ஊரும் பேரும், ( சென்னை ) , 1976, ப. 47.
Ragupathy, P., G.D. Jr.. 1576), 1987. u. 47; Rasanayagam, C., (GuD. Sim... bTsi), Lu. Il 91.
Ellawalla, H. , ĜuD. &i... 1p/Tsi), Lu... l 1 8. Rasanayagam, C., ĜuD. ĝin. . p/76ii), 1926. Ludi . ! 9- 22.
Gổogib 1 i 4, Lu. ? l.
Nicholas, C. W., “Historical Topography of Ancient and Medieval Ceylon', J. R. A. S. C. B. N. S., Wol. VI, l963. u. 75.
வாழ். - தொன்மை வரலாறு 508 O

a 1.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
சிலப்பதிகாரம், ( பதிப்பு ) சாமிநாதையர், உ. வே. (சென்னை ), 1927. அதி, 1, வரி 20 - 25 .
கண்ணகி வழக்குரை, (பதிப்பு ) கந்தையா, வி. சீ. ( சுன்னாகம் ), 1968.
மணிமேகலை, (பதிப்பு ) சாமிநாதையர், உ. வே. ( சென்னை ), 1965. அதி. 26. வரி. 178 - 203.
மே. கூ. நூல், அதி. 25, வரி. 124 - 127; அதி. 14, வரி. 79 - 84.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பதிப்பு) சாமிநாதையர், உ. வே. ( சென்னை) , 1950. பட்டினப் பாலை, வரி, 190 - 191.
Begley, Vimala., Arikamedu Reconsidered , American Journal of Archaeology, Vol. 87, 1983. U. 481.
Mahavamsa, Gun. 3. g5Táv, gy3. XXI., ajih. 10 – 12.
Abraham, Meera. Two Medieval Merchant Guilds of South India, ( New Delhi ), 1988. L. 37.
Paranavitana, S., Gud. Gr. 576i, 1970. Lu. 28.
Rasanayagam, C., GLD. Jr.. நூல், 1926. பக். 24 - 26.
Mahavamsa, Guo... sa... grói, gy3. XXII, Quif. 13 - 14.
மே. கூ. நூல், அதி. XXXI, வரி. 56 - 61.
மே. கூ. நூல், அதி, XXXIV, வரி. 22 - 25.
சிற்றம்பலம், சி. க., "தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துகள்",
* தமிழோசை ", தமிழ் மன்றம், (திருநெல்வேலி), l988 - 89. jš. 29 - 35.
( 5O9 வாழ்வும் வளமும்

Page 271
55. Paranavitana, S., Gud. s. 576i, 1970. U. 7.
56. Raghavan, M. D., The Karavas of Ceylon Society and
Culture, (Colombo), 1961. Ludii. 8 - 9.
57. Thapar, Romila., History of India,(Harmonsdworth), 1966. 58. Paranavitana, S., GLD. s. GT si), 1970. Ué. XCIX - CI. 59. மே. கூ. நூல், 1970. கல். இல. 356 - 357.
60. Mahalingam, T. V., South Indian Palaeography, (Madras),
19ა5. uā. 255 - 25 6 •
61. Paranavitana, S., CBLD. Sin. g5 siv, l970. u. 37,
கல். இல. 480.
62. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1988 - 1989, ப. 18,
63. Sirisena, W. M., GD. s. as. Lu. 18.
64. மே, கூ, க. பக். 14 - 15.
65. Warmington, E. H., The commerce between the Roman
Empire and India, (Cambridge), 1928. L. 63.
66. Sirisena. W. M., Gud. Se.. as, L. 18.
67. மே. கூ. க. ப. 19.
68. சத்தியசீலன், ச, "இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தக
மும்’, ‘ சிந்தனை", தொகுதி I, இதழ் 11, சித்திரை 1976, U. 52.
69. The Christian Topography, Cosmas (Tr) Macrindle,
J. W., (Lond), 1897. Lud. 363 - 365.
70. Hettiaratchi, S. B., Social and Cultural History of Anciant Sri Lanka, (New Delhi), 1988. U. 212.
யாழ். - தொன்மை வரலாறு 51o ()

71. Abraham, Meera., Gup. s. gTi, U. 19
72. சத்தியசீலன், ச, மே, கூ, க. ப. 53
73. திருக்கேதீச்சரத் திருப்பதிகம், வச்சிர வேலு முதலியார் தெளிவுரை, வித்துவான் சுப்பையாபிள்ளை விளக்கவுரை, கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழக வெளியீடு (யாழ்ப்பாணம்), 1987.
74. மேற்படி,
75. Rasanayagam, C., G.D. sin.. 5Tsiv, Lu. 254.
76. சத்தியசீலன், ச. , மே, கூ, க. ப. 54.
77. Sirisena, W. M., Gito. s. 86. Lu. 14.
78. குணசிங்கம், செ, கோணேஸ்வரம், (பேராதனை), 1970,
tu. 67.
79. Abraham, Meera., (GuD. Siia. GT6io, Luš. 28, 29, 3 à,
33, 35, 37, 38, 127, 128, 129.
80. இந்திரபாலா, கா., மே. கூ. க. 1968.
8. Indrapala, K., GuD. S. . 36. 1971. Lusë. 1 - 5.
82. Hettiaratchi, S. B., Gud, sa. Tsiv, u. 177.
83. மேற்படி.
84. Paramavitana, S. , No. 5, Mannar Kacceri Pillar
Jinscription, Epigraphia Zeylanica, Vol. Il II, 1928-1933. td. 100 a 13.
85. Sirisena, W. M., Guo. g. 5. Lá. 14.
86. Perera, B. J., 'The Foreign Trade and Commerce of Ancient Ceylon', Ports of Ancient Ceylon, The Ceylon Historical Journal, Vol. I, No. 2, Oct. 1951. Lu. 12.
O 51 வாழ்வும் வளமும்

Page 272
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
01.
102,
103.
104.
105.
Nicholas, C. W., Gud. sia. s. v. 80.
Sirisena, W. M., Gud, ga. s. u. 14.
Mahavamsa, (3 ud. dsi... j5IT6ñ», J95). VIII, 6Quiñ. 24 - 25.
Paranavitana, S., (ed) History of Ceylon, Vol. I, Part II, (Colombo), 1960. Lu. 474.
Sirisena, W. M., GLD. s. 5. U. 26.
பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி. பி. 1000 - 1250), சிந்தனை, தொகுதி 11 இதழ் 11 ஆடி 1984, ப. 45.
மே. சு. க. பக். 59 - 64.
மே. கூ. க. ப. 62.
மே. கூ. க. ப. 70.
Pathmanathan, S., GLD. a. s. 1976. L. 66.
பத்மநாதன், சி., மே. கூ. க. பக். 56 - 57,
புஸ்பரத்தினம், ப. மே. கூ. க. 1992.
மேற்படி, Abraham, Meera., Guo. H. 51st, ud. 80 - 88.
மே. கூ. நூல், ப. 228.
Nicholas, C. W., Guo. J.. as 84.
மேற்படி.
Indrapala, K., மே. கூ. க. 1963; சிவசாமி, வி. தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, (யாழ்ப்பாணம்), யூன். 1990.
பத்மநாதன், சி., மே. கூ. க. 1984, பக். 64 - 70.
யாழ். - தொன்மை வரலாறு 512

O6.
107.
08.
09.
10.
11.
12.
3.
14.
115,
16.
17.
இந்திரபாலா, கா., அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப் பாத்திரங்கள் - பழம்பெரும் இந்துக் கோயிலின் சொத்துக்கள், வீரகேசரி, வார வெளியீடு, 20 - 11 - 1977; Carswell, John., Sri Lanka and China, Fetschrift - 1985, James Thevathasan Rutnam, (Felicitation Volume), (ed.) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, (Ratmalane), 985.
Codrington, H. W., Ceylon Coins and Currency, (Colombo ), 1924. Ljd. 57 - 60.
சிவசாமி, வி., யாழ்ப்பாணக் காசுகள், (யாழ்ப்பாணம்), 1974. ; கிருஷ்ணராசா, செ. * யாழ்ப்பாணக் குடா நாட்டிற் கிடைத்த நாணயங்கள்’, சிந்தனை, தொகுதி 1, இதழ் III, கார்த்திகை 1983. பக். 70 - 84.
Mahalingam, T. V., Presidential Address at the All India. Numismatic Conference, 59th Annual Session, (Nagpur), 10th November, 1970.
Pieris, Paul, E., Nagadipa and the Buddhist Remains in Jaffna, J. R. A. S. C. B., 1919. Lii. 45-60.
சிற்றம்பலம், சி. க., மே, கூ. க. 1982.
புஸ்பரத்தினம், ப. மே. கூ. க. 1991.
Codrington, C. W. G.D. s. 5 sil, 1924.
கிருஷ்ணமூர்த்தி, இரா., பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், (சென்னை ), 1987, பக். 51 - 63.
மேற்படி, ப. 61.
சிவசாமி, வி., மே, கூ, க. 1974,
Hettiaratchi, D. P. E., The Symbols on the Buddhist Swastika Coins of Ancient Ceylon', Paranavitana Felicitation Volume, (ed) Jeyawickrama, M.A., (Colombo), 1965。Lá。227·242。
O 513 வாழ்வும் வளமும்

Page 273
118.
119.
120.
2.
22.
23.
124.
125.
126,
27.
128.
129.
130.
131.
32.
133.
量34。
135.
Sitrampalam, S. K., "A note on the Lakshmi plaques of Sri Lanka, Paper presented at the fifth Annual Conference of the Numismatic Society of Tamil Nadu, 1991.
சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1982. Parker, H., Co. sin. T6), 1909. Luš. 468 - 52 l.
சிவசாமி. வி., மே, கூ, க. 1974
Guoiul.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
Codrington, H. W. G.D. J.. g. 6, 1924.
சிவசாமி, வி, மே. கூ. க. 1974.
Pieris, Paul, E., GD. Ja... s. 1919. Li, 56 - 67.
Hettiaratchi, D. P. E., "A note on an unpublished Pallava coin", J. R. A. S. C. B. (N.S.), Vol. IV, Part I, (Colombo). 1955, Lui. 72 - 76.
புஸ்பரத்தினம், ப., மே. கூ. க. 1991.
சிவசாமி, வி, மே, சு. க. 1975,
செல்வரத்தினம், ம. பொ., மே. கூ க. 1973,
பக். 40 - 42.
புஸ்பரத்தினம், ப. , மே, கூ, க. 1991.
சிவசாமி, வி. யே. கூ. க. 1975.
புஸ்பரத்தினம், ப. மே, கூ, க. 1991,
புஷ்பரட்ணம், ப. பூநகரி - தொல்பொருளாய்வு, யாழ்ப் பாணப் பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993, பக், 121 - 124.
Pieris, Paul, E., G.D. s. s. 1919. Lui. 57 - 60.
இத்தகைய நாணயங்கள் மாந்தையிலும் கிடைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
யாழ். - தொன்மை வரலாறு 514 ெ

அதிகாரம் ஏழு
சமூகமும் சமயமும்
Fழத்திற்கு நாகரிகத்தினைப் புகுத்தியவர்களான பெருங் கற்காலக் கலாசாரத்திற்குரிய திராவிடமொழி பேசிய, தற் காலச் சிங்கள - தமிழ் மொழிகளைப் பேசியோரின் மூதா தையினரும், இடைக்கற்கால மக்களும் இணைந்து உருவர்க் கியதே தற்கால ஈழத்து நாகரிகமாகும். எனினும் ஈழத்து வரலாற்றை அறிய உதவும் நூல்களாகிய தீபவம்சம், மகா வம்சம், சூளவம்சம் போன்றன. பெளத்த மத வரலாற்றைக் குறிப்பதையே தமது பிரதான நோக்கமாகக் கொண்டிருப்ப தாற் சமகாலச் சமூகம் பற்றிய வரலாற்றுக்கு இவைகள் போதியளவு முக்கியத்துவத்தினைக் கொடுக்கவில்லை. அக் காலச் சமூகம் பற்றி வருஞ் சான்றுகள்கூட வடஇந்தியச் சமூக அமைப்பினை மையமாகக் கொண்டே தரப்பட்
டுள்ளன. காரணம் சிங்கள மக்களின் மூதாதையினர் இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்ற நம்பிக்கை இவற்றை எழுதியோர் மத்தியிற் காணப்பட்டதே ஆகும். சிங்கள மக்களின் சமூக வரலாறு பற்றி எழுதிய அக்கால அறிஞர்களும் மேற் கூறிய பின்னணியிற்றான் தமது ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் தென்பகுதியிற் காணப்படுஞ் சான்றுகள் இவ்வாறு அமைய, வடபகுதியைப் பொறுத்தமட்டில் இதன் வரலாற்றைக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, 60956) it மாலை, வையாபாடல் ஆகிய நூல்களில் நாம் ஆராயுங் காலப்பகுதிக்குரிய சான்றுகளை விரிவான முறையிற் பெற முடியவில்லை. தமிழகத்திற்குச் சங்க நூல்கள் தருஞ்
O 515 சமூகமும் சமயமும்

Page 274
சான்றுகளை ஒத்ததான சான்றுகள்தானும் ஈழத்தின் வடபகுதி வரலாற்றுக்குக் கிடைக்கவில்லை. எனினும், ஈழத்திற்குப் பெளத்தங் கால்கொண்டபோது அதற்களிக்கப் பட்ட தானங்களைக் கூறும் ஆயிரத்திற்கும் அதிகமான பிரா மிக் கல்வெட்டுகளில் இத்தானங்களை அளித்தோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.1 எனினும் பெளத்தத்தோடு அறிமுகமான வடஇந்தியக் கலாசாரத்தின் தாக்கத்தினாற் பழைய திராவிட வடிவங்கள் மறைய, வடஇந்தியக் கலா சாரத்தினைப் பிரதிபலிக்கும் புதிய வடிவங்கள் வழக்குப் பெற்றன. அண்மைக் காலங்களில் இத்தகைய குறிப்புகளைச் சமூகவியற் கண்ணோட்டத்தில் அணுகும் முறை காணப்பட் டாலுங்கூட வடஇந்தியக் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்ட அறிஞர்கள் இவற்றிற்கு வடஇந்தியச் சமூக அமைப்பையே பின்னணியாகக் கொடுத்துள்ளனர்.2 இத்தகைய அணுகுமுறை யால் ஈழத்தின் எதிர்க்கரையிலுள்ள, ஒரே கலாசார மூலத்தி லிருந்து துளிர்த்த தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றி அறிவ திலோ அதன் தாக்கம் பற்றி அறிவதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை.
எனினும், கடந்த இரு தசாப்தங்களாக ஈழத்தில் மேற் கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் தென்னிந்தியரே என்பதை எடுத்துக் காட்டியுள்ள தால் இப்பிராமிக் கல்வெட்டுகளையுந் தென்னிந்திய, தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியில் ஆராய்வது அவசிய மாயிற்று. இத்தகைய ஆய்வுகள் ஈழத்தின் பண்டைய சமூக அமைப்பினைச் சங்க நூல்கள் தரும் பின்னணியில் அலசுவதற் கான ஒரு வாய்ப்பினையும் அளித்துள்ளன. வடபகுதி யினைப் பொறுத்த மட்டில் நாட்டின் பிற பகுதிகளிற் காணப் படுவது போன்ற கருங்கற் பாறைகள் மிகக் குறைந்தே காணப் படுவதால் இப்பகுதியிற் பிராமிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றது. இது இத்தகைய ஆய்விற்கு ஒரு தடையாக இருந்தாலுங்கூட இவை தருஞ் சான்றுகளைச் சங்க இலக்கியங்களின் பின்னணியிலும் ஈழத்தின் பிறபகுதிகளிற் கிடைக்குஞ் சான்றுகளோடு ஒப்பிட்டும் ஆராயும்போது ஒரள வுக்கு அக்காலந்தொட்டு இப்பகுதியில் நிலவிய சமூக அமைப் பினைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 516 0

வடபகுதிச் சமூகக் கட்டமைப்பு
சங்க இலக்கியங்கள் நிலங்களின் புவியியற் பின்னணிக்கு ஏற்ப அவற்றை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என வகுத்து இங்கு வாழ்ந்த மக்கள் பற்றிப் பேசு கின்றன. இத்தகைய நில அமைப்பினைப் பற்றிக் கூறுஞ் சங்க நூல்கள் இங்கு ஆட்சி செய்த முடியுடை வேந்தரான சேர, சோழ பாண்டியரையும் அவர்களின்கீழ் ஆட்சிசெய்த குறுநில மன்ன ரையும், இப்பகுதிகளில் வாழ்ந்த இனக் குழுக்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த குடவர், அதியர், மலையர், மழவர், பூலியர், வில்லோர், கொங்கர், குறவோர், பரதவர், கோசர் ஆகியோரும், இம்மூவேந்தர்களது ஆளுகைக்கு உட்படாத ஆவியர், ஓவியர், வேளிர், அறுவர், ஆண்டார் போன்றோ ரும், தமிழகத்தின் எல்லையில் வாழ்ந்தோராகத் தொண்டை யர், களவர், வடுகர் ஆகியோருஞ் சங்கநூல்களிற் குறிப்பிடப் படுகின்றனர்.3 இத்தகைய இனக் குழுக்களே நாளடைவிற் பல்வேறு தொழிற் பிரிவுகளாகப் பிரிந்து சாதிகளாக உருவெடுத் தன. இதனால் வடஇந்தியச் சாதியமைப்புக்குந் தென்னிந்தியச் சாதி அமைப்புக்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. வட இந்திய இலக்கியங்கள் கூறும் நால்வகை வர்ணப் பிரிவுகள் தென் னகத்திலோ ஈழத்திலோ காணப்படுவதற்குப் பதிலாகத் தொழி லடிப்படையிற் பல்வேறு பிரிவினர்களாகப் பிரிந்து வளர்ச்சி பெற்ற ஒரு சமூக அமைப்பையே இங்கு காணக்கூடிய தாகவுள்ளது. எனினும் இப்பிராமிக் கல்வெட்டுகள் பெளத் தத்தோடு வந்த வடஇந்தியக் கலாசாரத்தின் செல்வாக்காற் பழைய திராவிடத் தொழிற் பிரிவுகளைக் காட்டும் வடிவங்கள் மறைந்ததையும் அவற்றினிடத்தில் வடஇந்தியக் கலாசாரத் தினைப் பிரதிபலிக்கும் வடிவங்கள் இடம்பெற்றதையுங் குறிப் பது அவதானிக்கத்தக்கது. இவ்வாறு பல்வேறு தொழிற் பிரி வினர் இத்தகைய நிலையைப் பெற்றாலுஞ் சங்க இலக் கியங்களின் பின்னணியில் இப்பிராமிக் கல்வெட்டுகளில் எச்ச சொச்சமாக நிலைத்துள்ள சில பழந்தமிழ் வடிவங்களை நோக்கும் போது பண்டைய தமிழகத்தை ஒத்த தொழிற் பிரி
O 517 சமூகமும் சமயமும்

Page 275
வினரே ஈழத்திற் காணப்பட்டனர் எனலாம். இதனை ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் வடிவங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இப்பிராமிக் கல்வெட்டுகள் வடக்கே வவுனியா மாவட்டத் திற்றான் அதிகம் காணப்படுகின்றன. மகாகச்சற்கொடி, எருப் பொத்தான, பெரியபுளியங்குளம், வெடிக்கனாரிமலை ஆகிய இடங்களே இவைகளாகும்.4 இக்கல்வெட்டுகளில் இடம்பெறுஞ் சில பெயர்களைச் சமகாலச் சங்க இலக்கியக் குறிப்புகளோடு ஆராயும்போது வடபகுதிச் சமூக உருவாக்கம் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இவர்களில் “வேளிர்” என அழைக்கப்பட்டோர் பற்றி முதலில் ஆராய்வோம். வேள்” என்ற பதம் ஈழத்திலுள்ள பதினெட்டுப் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. இப்பதத்தினைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் *வேள்” 6了Gリ ஏற்கனவே எடுத்துக்காட்டி யுள்ளோம்.5
இத்தகைய 'வேள்" என்ற குறிப்புடன் காணப்படுங் கல் வெட்டுகள் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படும் இடங் களுக்குச் சமீபமாகக் காணப்படுவது இவற்றிற்குரிய மற்று மோர் சிறப்பாகும். சங்க இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்து விவசாயத்திலீடுபட்டோரை வேளிர் " என அழைக் கின்றன. இவ்விலக்கியங்களில் இவர்கள் “வேள் முதுமக்கள்", 'தொன்முது வேளிர்", "முதுகுடி" என அழைக்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் தமிழகத்தில் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் விவசாயச் செழிப்புங், கற்றாரை இவர்கள் போஷித்தவாறும் இவ்விலக் கியங்களிற் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இதனால் ஈழத்தின் நாகரிகத்தின் அடித்தளமாக விளங்கும் விவசாய சமூகத்திற்கு வித்திட்டவர்கள் இவர்களே என்பது புலனாகின்றது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியபுளியங்குளக் கல்வெட்டில் இதற் குரிய சான்றுகள் காணப்படுவதோடு, அண்மையிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது (இதன் வடிவமாகிய) * வேளான் " என்று பொறிக் கப்பட்ட மட்பாண்டச் சாசனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள
யாழ். - தொன்மை வரலாறு 518 O

மையும் இக்கருத்தை மேலும் உறுதிசெய்கின்றது. இதனை வாசித்த தமிழகத்துக் கல்வெட்டறிஞரான மகாதேவன் இச் சான்று யாழ்ப்பாணப் பகுதியிற் சங்க காலத்திலேயே தமிழ் வேளிர் அல்லது வேளாளர் குடியேறியிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது எனக் கருதுகின்றார். சங்க இலக்கியக் குறிப் புகளை அவதானிக்கும்போது இவ்வகுப்பினரில் இருபிரிவினர் காணப்பட்டமை புலனாகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் நிலச் சொந்தக்காரர் ஆவர். இவர்களே ' கிழான் " என்ற பதத்தினால் இந்நூல்களில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர் களின் செல்வந்த நிலை பலவாறு இப்பாடல்களிற் புகழப் பட்டுள்ளது. இவர்களை விட ஏனையோர் நிலமற்ற வேளான் தொழிலிலீடுபட்டவர்கள். இவர்கள்தான் வினைவலர் என
அழைக்கப்பட்டனர்.8
இச்சந்தர்ப்பத்திற் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுங் ‘குடி பற்றிய கூற்றும் அவதானிக்கத்தக்கது. சிவத்தம்பி இது பற்றிக் கூறுகையில் இது இரண்டு பொருளில் இவ்விலக்கியங் களிற் கையாளப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.? இவற் றுள் முதலாவது பொருள் மக்கள் வாழ் குடியிருப்புகளையும் மற்றையது சாதியையுங் குறிக்கும். விவசாயிகளாக விளங்கிய நிலக்கிழாரான வேளாளருக்கு வேண்டிய கடமைகளைப் புரியுந் தொழிலாளர் " சிறுகுடி " என அழைக்கப்பட்டனர். இவ்வாறான பொருளாதார அடிப்படையிலான வேறுபாடு இக் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டதெனக் கூறப்படுகின்றது. இதனாற் பிற்காலத்திலே தமிழ் - சிங்களச் சமூக அமைப்பில் வேளாண்மையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள வேளாளர் தமக்குக் கிடைத்த பொருளாதார வாய்ப்பின் மூலம் முதன்மை பெற்றனர். இவ் அடிப்படையிலேயே அடிமை, குடிமை எனப் பிற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட தேசவழமைச் சட்டங்களிற் குறிப்பிடப்படுஞ் சமூக அமைப் பின் அடித்தளத்தினைக் காணலாம். எனினும் இது பற்றிய தொடர்ச்சியான வரலாற்றைக் கூறுவதற்குரிய விபரங்கள் நாம் ஆராயுங் காலப் பகுதிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
О 519 சமூகமும் சமயமும்

Page 276
வேளிர் எனப்பட்ட வேளாளர் போன்றே நெய்தல் நிலத் தில் வாழ்ந்த பரதவர் / பரதர் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுஞ் சான்றை உறுதிப்படுத்துவனவாக ஈழத்திற் பல்வேறு பகுதிகளிலுங் கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பிராமிக் கல் வெட்டுகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் வரலாற்றுப் பின் னணியை அறியாத ஈழத்து வரலாற்றாசிரியர்கள் "பட' அல்லது ‘பரத’ என இக்கல்வெட்டுகளில் இடம்பெறும் பதத்திற்குத் "தலைவன்", "பிரபு” என்ற விளக்கத்தினைக் கொடுத்தாலுங்கூட, அண்மைக்காலத்தில் இது பற்றி ஆராய்ந்தோர் இப்பதம் தமிழகத்திலுள்ள பரதவ குலத்தவரையே குறித்து நின்றது என எடுத்துக்காட்டியுள்ளனர்.8 இத்தகைய பதம் வட பகுதி யில் வவுனியா மாவட்டத்திலுள்ள மகாகச்சற்கொடி, எருப் பொத்தானை, பெரியபுளியங்குளம், வெடிக்கனாரிமலை ஆகிய இடங்களிற் கிடைத்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.9 இதனால் இப் பரதகுடி நாடுமுழுவதிலும் வியாபித்திருந் தமை புலனாகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டாலும், இன்னொரு பகுதியினர் துறைமுகப் பட்டினங்களிலிருந்து வாணிப நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும் ஆதாரம் உண்டு. இவர்கள் வர்த்தகத் திற் கையாண்ட பொருட்களாகச் சங்கு வளையல்கள், வாச னைத் திரவியங்கள், உப்பு, இரத்தினக் கற்கள், குதிரைகள், ஆகியன அடங்கும். இவர்கள் வசித்த கம்பீரமான மாளிகைகள், பண்டகசாலைகள், கப்பல்கள், தேர்கள் பற்றியுஞ் சங்க இலக் கியங்கள் குறிப்பிடுகின்றன. அநுராதபுரத்திற் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வணிகர் களின் கல்வெட்டுப் பற்றியும் இச்சந்தர்ப்பத்திற் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இக்கல்வெட்டுத் தமிழ் வணிகர் தமது வர்த் தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஈழத்துப் பரதன், தமிழகத்துச் சுமணன் ஆகியோர் அமைத்த பிரசாதம் (கட்டிடம்) பற்றிக் குறிப்பிடுவதோடு இக்கட்டிடத்தில் வசித்த தமிழ்நாட்டு வணிகரின் பெயர்களும் இதிற் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றுள் இவ்வணிக கணத்தின் தலைவனாகிய நவிகா காரவ' என்ற பதம் காணப்படுகின்றது. இங்கே காணப் படும் கோரவ' என்பதைக் கரையார்” எனக் கொண்டு இது
யாழ். - தொன்மை வரலாறு 52O 9ே

கரையேர்ரத்திலிருந்த மக்கட் கூட்டத்தினரைக் குறித்தது என இராகவன் கொள்வது ஏற்புடைத்தாக உள்ளது.10 இதனாற் கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்த பரதவ குலத்தவரின் ஒரு பிரிவினரே இவர்கள் எனலாம். இவர்களும் வடபகுதியில் இக் காலத்தில் வாழ்ந்தவர்களே.
யாழ்ப்பாண வைபவமாலை பாண்டியரின் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகையில் வடக்கே அக்காலத்தில் நிலவிய முக்குவர் போன்ற குடிகளைப் பற்றிக் கூறுவதை இங்கே எடுத்துக் காட்டுவதும் அவசியமாகின்றது.11 முக்குவர் பற்றிய குறிப்புக் கண்ணகி வழக்குரை காதையிலும் இடம் பெற்றுள்ளமை ஈண்டு அவதானிக்கத்தக்கது. இக்கதை தமிழகத்தின் பரதவர் தலைவனான மீகாமனுக்கும், ஈழத்தின் வடபகுதியில் அரசிய லதிகாரம் பெற்றுக் காணப்பட்ட முக்குவத் தலைவனாகிய வெடியரசனுக்கும் அவனது சகோதரர்களுக்குமிடையே [ნ მზთtபெற்ற யுத்தம் பற்றிக் கூறுகின்றது. இதனாற் பரதவ குலத் தவரின் இன்னொரு பிரிவினரே "முக்குவர் எனலாம். ஆனாற் பரதவர்கள் கிழக்குத் தமிழகத்தில் வாழ, இவர்கள் மேற்குத் தமிழகத்தில் வாழ்ந்தார்கள். முத்துக் குளித்தல், சங்கு குளித் தல் ஆகியன இவர்களின் பிரதான தொழில்களாகும். இவ் வாறே திமிலர்? எனப்பட்டோரும் பரதவ குலத்தவராவர். திமில்" பற்றி இலக்கியங்களில் ஆதாரங்கள் உள. திமில் என்பது ஒருவகை வள்ளத்தினைக் குறிக்குஞ் சொல்லாகும். இதனால் இத்தகைய வள்ளங்களைப் பயன்படுத்தியதால் இவர்கள் இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். இவ்வாறே சங்க நூல்களிற் காணப்படும் அம்பி", *கப்பல்", "தோணி', *நாவாய்? போன்ற சொற்கள் வெவ்வேறு வகையான கப்பல்களைக் குறித்திருக்கலாம். இத்தகைய கப்பல்கள் வடபகுதியிலும் வழக்கில் இருந்திருக்கக் கூடும்.
இவ்வாறு பல்வேறு குலப்பிரிவுகளாகப் பண்டைய சமூகம் பிரிக்கப் பட்டிருந்தாலும் இப்பிரிவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பினடிப்படையில் இத்தகைய குலங்கள் எவ்வாறு பிரிந்திருந்தன என்றும், இக்குலங்கள் நாட்டின் நிருவாகத்தில் எத்தகைய பங்கினை வகித்தனவென்பது பற்றியுங் கல்வெட்டுக்
 ே521 சமூகமும் சமயமும்

Page 277
குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. இக்கல்வெட்டுக்களிற் காணப் படும் பருமக, கஹபதி, குடும்பிகா, கமிகா, போன்ற பெயர்கள் இக்காலச் சமூகத்திலும் நிருவாகத்திலும் முக்கிய பங்கினை வகித்த குழுவினர் சூடியிருந்த விருதுப் பெயர்களாகக் காணப்படுகின்றன.12 இவ்விருதுப் பெயர்களிற் "பருமக" என் பது ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுகளிற் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. இப்பதத்திற்கு விளக்கங் கொடுத்தோர் இதனை வடமொழிப் பதமாகிய பிரமுக வழிவந்ததென்று எடுத்துக்கர்ட்ட முற் பட்டாலும் இது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பருமகன் அல்லது பெருமகன் என்பதன் வழிவந்ததே என்பதை இவ்விலக் கியங்களிற் காணப்படுங் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. வல்வில் இளையர் பெருமகன், வடுகர் பெருமகன், வாயவர் பெருமகன், கல்லா இளையர் பெருமகன், அகவுனர் பெரு மகன், ஆவியர் பெருமகன், ஓவியர் பெருமகன், சான்றோர் பெருமகன், மழவர் பெருமகன், வில்லோர் பெருமகன், விச்சியர் பெருமகன், பாணர் பெருமகன், மறவர் பெருமகன், குறவர் பெருமகன், பூலியர் பெருமகன்3 என்பனவும் பெம் மான், பெருமாள், பெருமக்கள் ஆகியனவும் இதன் வழிவந்த வையே என்பதும் ஏற்கப்பட்டுள்ளது. இவ்விருதினைச் குடியோர் சேனாதிபதிகள் (சேனாபதி), மந்திரிகள் (அமெதா), நீதித் துறைத் தலைவர்கள் (படகாரிகா), திணைக்களத் தலைவர்கள் (அடேக), கணக்காளர்கள் ( கணபேடிகா ) போன்ற பதவி களை வகித்ததோடு வாணிபம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களில் ஒருவன் கப்பற்றலைவனாக வும், ஆாதனாகவுங் குறிக்கப்படுவது வியாபார நோக்கமாக இவர்கள் வெளிநாடுகளுக்குஞ் சென்றிருக்கலாமென்று யூகிக்க வைத்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் நிருவாகத்தில் மட்டுமன்றி *ள்ளூர் நிருவாகத்திலும் இவர்கள் முக்கிய பங்குகொண்ட வசதி படைத்த செல்வந்தக் கூட்டத்தினர் என்பது புலனா கின்றது. விவசாயம், வாணிபம் ஆகிய துறைகளில் இவர்கள் ஈட்டிய செல்வம் பண்டைய ஈழத்தின் பொருளாதாரத் துறையில் மிக்க வலுவுள்ள வர்க்கமாக இவர்களை ஆக்கி
யாழ். - தொன்மை வரலாறு 522 O

விட்டது. இதனாற்றான் வேறு எந்தப் பிரிவினரையும் விடப் பெளத்த மதத்திற்கு அதிக அளவு தானங்களை அளித்தவர் களாக இவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படுஞ் சான்றுகள் பல்வேறு இனக் குழுக்கள் இத்தகைய விருதினைச் சூடியிருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன. இவர்களிற் பிராமணர், வேள், பரதவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தமக் குள்ளே திருமண உறவுகளை மேற்கொண்டிருந்தாலுங்கூட, சிற்றரசர்களான ஆய், வேள் போன்றோரிடமும், அரசவம் சத்தினருடனும், இத்தகைய உறவுகளை மேற்கொண்டிருந்த் தற்கான தடயங்கள் காணப்படுவதால் அதிகாரத்தினைப் பொறுத்தமட்டில் இவ்வகுப்பினர் மன்னர்களுக்கு அடுத்ததாகச் செல்வாக்குடையவர்களாக விளங்கினர் எனலாம். எனினும் இத்தகைய விருதுகள் கி. பி. முதலாம் நூற்றாண்டளவில் வழக்கொழிய “மஹாபருமக" அல்லது "மாபருமக" என்ற் விருது மன்னர்களின் பெயர்களாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஆதிகாலத்தில் இனக்குழு நிலையி லிருந்த சமூகம் விரிவடைந்து பிரதேச அடிப்படையில் வளர்ச்சி பெற்றபோது அரச பதவிக்கு அடுத்தாற்போல் முக்கிய பங் கினை வகித்த இவ்வர்க்கத்தினைச் சேர்ந்த ஒருவன் அரச னாக உயர்ச்சி பெற்றதையே இது எடுத்துக் காட்டுகின்றது எனலாம். ஈழத்திற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளிற் பருமகனின் பெண்பால் வடிவமாகிய பருமகளுங் காணப்படு கின்றமை அவதானிக்கத்தக்கது. நாட்டிலுள்ள கல்வெட்டு களில் எல்லாமாக ஆறு கல்வெட்டுகளில் இவ்வடிவம் காணப் பட்டாலும் வவுனியா மாவட்டத்திலுள்ள வெடிக்கனாரி மலையிலுள்ள கல்வெட்டொன்றில் இவ்வடிவங் காணப்படுவது இக்காலத்திற் பெண்களும் நிருவாகத்திற் பங்கு கொண்ட தையே எடுத்துக் காட்டுகின்றது.14
பருமக என்ற விருதுப்பெயருக்கு அடுத்தாற்போல முக்கியம் பெறும் வடிவமாக "கமிகா” என்ற பதங் காணப் படுகின்றது. பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்ந்தோர் பொது வாகக் கிராமத் தலைவனைக் குறிக்கும் பெயராக இதனைக் கொண்டாலுங்கூட நாட்டின் நிருவாகத்தில் இவர்கள் கொண்ட
)ே 523 சமூகமும் சமயமும்

Page 278
வங்கும், பிற சமூகக் குழுக்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுகள் பற்றிய சான்றுகளும் பருமகர்கள் போன்று செல் வாக்கு உடையவர்களாகவே இவர்களும் விளங்கினர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனிற் * பருமகன்’ என்ற விருதினை உடைய சிலர் ? கமிகா " என்ற விருதினைப் பெற்றோருடன் கொண்டிருந்த மணத்தொடர்புகள் பற்றியுங் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமன்றி இவ் விருதினைச் சூடியிருந்தோர் நாட்டின் நிருவாகத்திற் கொண் டிருந்த முக்கிய பொறுப்புகள் பற்றியும் இக்கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. சிலர் அமைச்சராகவும், இன்னுஞ் சிலர் வரிசேகரிப்போராகவும், வேறுஞ் சிலர் நிதிப் பொறுப் பாளராகவுங் கடமையாற்றியதை இவை எடுத்துக்காட்டுகின் றன. இத்தகைய பதவிகளை வகித்தோர் உயர்ந்த வம்சத் தொடர்புடையவர்களாக விளங்கினர் என்பதை எடுத்துக் காட்டக் கருணதிலகா புத்தகோசரின் சமந்தபாசாதிகா என்ற நூலிற்கு எழுதிய வியாக்கியான உரையிலே ‘குலபுத்த" என்ற பாளிச்சொல் இக் கமிகா " என்ற கருத்தினை ஒத்த கருத் துள்ள வடிவமாகக் காணப்பட்டுள்ளதை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார்.15 அத்துடன் வவுனியா மாவட்டத் திலுள்ள மகாகச்சற்கொடி, எருப்பொத்தான ஆகிய இடங் களிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் இப்பதங் காணப்படுவது வடபகுதியிலுஞ் சமகாலத்தில் இப்பதவிகளை வகித்தோர் காணப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாகின்றது.16 இதனால் நாட்டின் பிறபகுதிகளைப் போன்று இப்பருமகர்களும், கமிகர் களும் நாட்டின் நிருவாகத்தில் முதுகெலும்பாக விளங் கியதோடு வசதி படைத்த இவர்கள் தமது அரசியல், பொரு ளாதாரச் செல்வாக்கினாலே தம்மை உயர் குலத்தவர் என வும் அழைத்துக் கொண்டனர். துர்அதிஷ்டவசமாக இவ்வகுப் பின்ர் பற்றிய சான்றுகள் பாளி நூல்களில் இடம்பெற வில்லை. இத்தகைய நிலை பாளி நூல்களை ஆதாரமாகக் கொண்டு பண்டைய ஈழத்தின் சமூகவரலாறு பற்றி ஆராய்வ தில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறிய பெயர்களை விடக் குடும்பிக’, ‘கஹபதி" ஆகிய வேறு இரு விருதுப் பெயர்களும் இக்கால இலக்கியங்
யாழ். - தொன்மை வரலாறு 524 இ

களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலுங் காணப்படுகின்றன. இக் குடும்பிக என்ற பதம் பாளிநூல்களிற் காணப்பட்டாலுங் கூட, ஈழத்தில் ஒரே ஒரு இடத்திற் றான் இப் பதத்தைக் கொண்ட கல்வெட்டுக் காணப்படுகின்றது.17 இப்பதந் தக்கண இந்தியாவிலும் வடஇந்தியாவிலுமுள்ள பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பிராமிக்
கல்வெட்டொன்றில், அதாவது மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றக் கல்வெட்டில் மாத்திரம் ஒரிடத்தில் இது குறிக்கப்பட்டுள்ளது. 'ஈழ குடும்பிகன்" என்ற வடிவமே
இதிலுள்ளது.18 அதாவது, ஈழநாட்டைச் சேர்ந்த குடும்பிகன் என்பது இதன் பொருளாகும். எனினும் இலக்கிய ஆதாரங் களை ஆராயும்போது ‘குடும்பிக" என்ற விருதினைச் சூடியிருந் தோர் வசதியுள்ள உயர் பதவிகளை வகித்தோராகவே காணப்படுகின்றனர். சகசவத்து பகரண என்ற பாளிநூல் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் நாடெங்கணும் வாழ்ந்த குடும்பிகர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.19 இவர்கள் பெரிய நிலச் சுவாந்தர்களாக விளங்கியதையும் இந்நூல் எடுத் தியம்புகின்றது. மகாவம்சத்தின் உரை நூலாகிய வம்சத்தப்ப காசினி என்ற நூலில் இவர்களின் செல்வந்த நிலையும் உயர்குடிப் பண்புங் கூறப்பட்டுள்ளது. வடபகுதியிலே - குறிப் பாக வவுனியா மாவட்டத்திலுள்ள கல்வெட்டுகளிற் குடும்பிக என்ற பதம் இடம்பெறவில்லை. எனினும் இதன்ை ஒத்த பொருளைத் தருங் கஹபதி" என்ற பதங் காணப்படுகின் றது.20 இப்பதம் இங்கே எல்லாமாக ஆறிடங்களிற் குறிப் பிடப்பட்டுள்ளது, இவற்றில் இரண்டிடங்களிலே *தமிழ் நாட்டு வணிகர்களான கஹபதிகள்” என்ற குறிப்புளது. இத னால் இப்பதம் வாணிபத் துறையிற் செல்வாக்குடன் விளங் கிய ஒரு வகுப்பினரைக் குறித்து நின்றது. பொதுவாக இப்பதம் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுவது போலக் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் விவசாய, வாணிப நட வடிக்கைகளிலீடுபட்டோரைக் குறித்தாலும், இவ்வகுப்பினர் பிற தொழில்களிலீடுபட்டிருந்ததைப் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படும் மணிகார (மணிகளை ஆக்குத் தொழில் களில் ஈடுபடுவோர்), நட (நடிகர்கள்), தொபச (தகரத் தொழிலிலீடுபடுவோர்) போன்ற பதங்கள் உணர்த்துகின்றன.
O 525 சமூகமும் சமயமும்

Page 279
இதனாற் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் வினைஞர்கள், நடிகர்கள் போன்றோர் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோரை ஒத்த வகுப்பினராகவே கணிக்கப்பட்டனரென்றும் கிறிஸ் தாப்த காலத்திற்குப் பின்னர்தான் விவசாயிகள், வணிகர் களைவிட வினைஞர்கள் குறைந்த தரத்தினராக எண்ணப் பட்டனர் என்றும் பரணவித்தானா அபிப்பிராயப்படுகின் றார்.21 இத்தகைய கஹபதிகள் முக்கிய நிருவாகப் பொறுப்பு SGT7 ge கொடகாரிகா (நிதியாளர்), துரக (துTதர்), கனக (கணக்காளர்) ஆகிய பதவிகளை வகித்ததோடு சிற்பக் கலைஞர்களாக (று படக) வும் விளங்கினர். இவர்கள் பருமகர்கள் போன்ற ஒரு உயர்நிலையிற் காணப்படாவிட்டா லும் அவர்களுக்கு அடுத்த நிலையில் விளங்கினர். மேற் கூறிய சான்றுகள் தொழிலடிப்படையிற் பல்வேறு பிரிவின ராக இயங்கிய மக்கட் கூட்டம் பற்றியே எடுத்துக் காட்டு கின்றன.
மேற்கூறிய பிரிவினரோடு தமிழகத்தைப் போன்று ஈழத் திலும் பிராமண குலங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் இருபத்தொரு இடங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் உள.22 வட இந்தியச் சமூக அமைப்பில் நால்வகைப் பிரிவின ராகிய பிராமணர், சத்திரியர், வைசியர், குத்திரர் ஆகியோரிற் பிராமணர் மட்டுமே, அதுவுஞ் சிறுதொகையினராக இக்கல் வெட்டுகளில் இடம் பெற்றுள்ளமையானது இவர்கள் திராவிட சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய பிராமண குலங்கள் நாடு முழு வதுங் காணப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் காணப் படும் அதே நேரத்தில் வடபகுதிக் கல்வெட்டுகளில் அத்தகைய சான்றுகள் காணப்படாவிட்டாலுங்கூட, வடபகுதியிற் பண்டு தொட்டு இந்துமதம் பேணப்பட்டு வந்ததால் இக்குலத்தவரும் இப்பகுதி நடவடிக்கைகளில் முன்னிலை பெற்றிருந்தனர் என லாம். நாட்டின் பிறபகுதிகளிற் காணப்படுங் கல்வெட்டுகளில் கெளதம, அதிமதக, கெளசிக, போதிமசக, வற்ச, கோபூதி போன்ற குலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுவதும்
யாழ் - தொன்மை வரலாறு 525 ற

அவதானிக்கத்தக்கது. கிறிஸ்தாப்தத்திற்குப் பின்னருள்ள குறிப் புகளிலொன்றாகக் கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய சம்பவ மாகிய பாண்டுமகாராஜாவின் ஆட்சி பற்றிக் கூறும் யாழ்ப் பாண வைபவமாலை கீரிமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த பிராமணர் பற்றிக் குறிப்பிடுகின்றமை அவதானிக்கத்தக்கது.28
இத்தகைய அமைப்பில் பிராமண சமூகத்தினரை முன் னிலைப்படுத்திய வட இந்தியச் சாதியமைப்புக் காணப் படாவிட்டாலுங்கூடத் தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் மதத் துறையில் ஒரு முக்கிய பங்கினை அவர்கள் வகித்தனர். இதற்கான ஆதாரங்கள் பாளி நூல்களிலுங் கிறிஸ்தாப்தத் திற்கு முந்திய பிராமிக் கல்வெட்டுகளிலும் உள. சிங்கள அரச சபையில் இவர்கள் புரோகிதர்களாக இருந்து, அரசின் ஆலோசகர்களாக, அரசின் பிறப்புத்தொட்டு இறப்புவரையி லான கிரியைகளிற் பங்குபற்றியதற்கான தடயங்கள் உள. இவர்கள் ஆசிரியர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்த தைப் பாளி நூல்களும் எடுத்துக் கூறுகின்றன.24
எனினுஞ் சிங்கள மக்களின் மூதாதையினர் பெளத்தர் களாக மாறியதாற் பெளத்த குருமார்களே இவர்கள் பெற்ற இடத்தினை வகித்தாலுங்கூட அரசசபையிற் பட்டாபிஷேகந் தொட்டு, மன்னரின் அன்றாடக் கடமைகள் வரை இப்பிராமண குலத்தவர் முக்கிய பங்கு வகித்தனர். இதனையே கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஈழத்திற்கு வந்த சீன யாத்திரிகனாகிய பாஹியனின் குறிப்பும் எடுத்தியம்புகின்றது. இவன் கடுமையான இந்து விதிகளின்படி தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டான் எனக் கூறுவதை நோக்கும்போது சிங்கள மன்னர்கள் பெளத் தர்களாக மாறினாலுங்கூட, இந்துமத நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததையே மேற்கூறிய குறிப்பு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.25 இத்தகைய நிலைக்கு இவர்களின் முன்னோர் கடைப்பிடித்து வந்த இந்து - மத நெறிகள் மட்டு மன்றி இவர்கள் இக்காலத்திலே தென்னிந்தியாவோடு கொண் டிருந்த அரசியல், கலாசார, வர்த்தகத் தொடர்புகளுங் காரண மாயிருந்தன. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இந்துமத மறு
இ) 527 சமூகமும் சமயமும்

Page 280
மலர்ச்சியும் ஈழத்தரசரி த்தோடு கொண்டிருந்த தொடர்புகளும் முன்னைய காலத்தைவிடச் சிங்கள அரண் மனையில் இவர்கள் முக்கிய பங்கினை வகிக்கக் காரணமாயிற்று.
எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளிற் சிங்கள அரச சபையிற் பிராமணர் போஷிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள. சூளவம்சம் இரண்டாவது மகிந்தனைப் பற்றிக் குறிப்பிடுகையில் இம்மன்னன் அங்குமிங்குமாக அழிந்திருந்த தேவாலயங்களைப் புனருத்தாரணஞ் செய்து (அவற்றுக்கு) விலையுயர்ந்த விக்கிர கங்களைச் செய்வித்துப் பிராமணர்களுக்கு மன்னர்கள் உண்பது போன்ற இனிய உணவுங் கொடுத்துப் பொற்கிண்ணங்களிலே அவர்களுக்குச் சர்க்கரையும் பாலும் கொடுத்தான் என்று கூறுகின்றது.28 இதேகாலத்தில் இன்னோர் மன்னனாகிய இரண்டாம் காசியப்பனின் நடவடிக்கைகள் பற்றியும் இந்நூல் பிறிதோர் இடத்திற் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.27
"சாதாரண மக்கள், பிக்குகள், பிராமணர்கள் ஆகியோர் அவரவர்க்குத் தகுந்த வாழ்க்கையை நடாத்த ஊக்குவித்து உயிர்க்கொலை புரியக்கூடாது என்னுங் கட்டளையை யும் அமுல் செய்தான்",
ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இன்னோர் மன்ன னான சேனன் பற்றியும் இந்நூல் பின்வருமாறு குறிப்பிட் டுள்ளது.28
* அவன் பொன்னாலான ஆயிரஞ் சாடிகளில் முத்து களை இட்டு நிரப்பி, ஒவ்வொன்றின் மேல் ஒவ்வொரு விலையுயர்ந்த இரத்தினக் கல்லை வைத்து அவற்றை ஆயிரம் பிராமணருக்கு இரத்தினக்கல் பதித்த பாத்திரங் களிலே பாற்சோறும், அத்துடன் பொன்னுாலும் தான மாக வழங்கிய பின் கொடுத்தான். புண்ணிய கருமங் களை ஆற்றுவதில் ஈடுபாடுடைய அவன் (பிராமணர்கள்) உள்ளம் பூரிக்கும் வண்ணம் புத்தாடைகளை அவர்களுக் களித்து அவர்களை விழாக்கோலத்தில் மகிழ்ந்திருக்க வைத்தான் ?
யாழ். - தொன்மை வரலாறு 528

இதுமட்டுமன்றி அநுராதபுரம் போன்ற தலைநகர்களிலும், இந்துக் கோயில்களின் அழிபாடுகள் காணப்படுவதோடு பிராமணர்களின் வதிவிடங்களுங் காணப்படுவது இவர்கள் அக்காலத்திற் பெற்றிருந்த முக்கியத்துவத்தினையே எடுத்துக் காட்டுகின்றது.29
மேற்கூறிய பின்னணியிற்றான் வடபகுதியிற் காணப்பட்ட பிராமண குலங்கள் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது." வடபகுதியிற் பண்டுதொட்டு இந்துமத வழிபாட்டு நெறிகள் ஆலயங்களை 65) LDLLDf5 வைத்து வளர்ச்சி பெற்றதை யாழ்ப்பாண வைபவமாலை விஜயனின் காலத்தோடு இணைத் துக் கூறும் தி ரு த் தம் பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி, கதிரை ஆண்டார் கோயில்களும் வடமேற்கே இருந்த திருக் கேதீஸ்வரமுஞ் சான்று பகருகின்றன. அத்துடன் பிராமிக் கல் வெட்டுகள், பழைய நாணயங்கள், சுடுமண் பாவைகள் ஆகியன வற்றின் சான்றுகளும் பண்டுதொட்டு இங்கு பிராமண குலத் தவர் இந்துமத வழிபாட்டு நெறிகளை நெறிப்படுத்தியோராகக் காணப்பட்டதை உறுதிசெய்வதாக அமைகின்றன. எனினும் ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்படுஞ் சான்றுகள் போன்று இப்பகுதியில் இவர்களின் நடவடிக்கைகளை எடுத்தியம்புஞ் சான்றுகள் காணப்படாதவிடத்தும் இக்கால அரசியல், சமூகக் கடமைகள் பலவற்றிற் பிராமணகுலத்தவர்கள் ஈடுபட்டிருந் தனர் எனக் கொள்ளலாம். ஏற்கனவே எடுத்துக்காட்டியவாறு யாழ்ப்பாண வைபவமாலை கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய செய்தியாகக் கீரிமலைக் கோயில்களிற் கடமையாற்றிய பிராமண குலத்தவர் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு நினைவு கூரற்பாலது.
அத்துடன் கி. பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாருதப்புரவீகவல்லி - உக்கிரசிங்கன் கதையில் மாவிட்ட புர ஆலய அமைப்புப் பற்றிய குறிப்பிற் பிராமண குலத் தவரும் பிறருந் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தது பற்றிக் கூறப்படுகின்றது. அந்நூலில் மாவிட்டபுரத்திலமைந்த கந்தசுவாமி கோயிலைக் கட்டவிரும்பிய மாருதப்பிரவல்லி அதனைக் கட்டுவிக்க எண்ணி அதற்கு வேண்டிய சகல
O 529 சமூகமும் சமயமும்

Page 281
வஸ்துக்களும், விக்கிரகங்களும், பிராமணரும் அனுப்பும்படி தனது பிதாவாகிய திசையுக்கிரசோழனுக்குத் தூதனுப்ப அப் போது திசையுக்கிரசோழன் தில்லை மூவாயிரவரை அழைத்து அவர் மூலமாகப் பெரிய மனத்துளார் என்னுந் தீட்சிதரை அனுப்பி வைக்கச் சோழராசன் சகல தளபாடங்களையுங் கந்தசுவாமி, வள்ளியம்மன், தெய்வநாயகியம்மன் விக்கிரகங் களையும் பெரிய மனத்துளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்தான் எனக் கூறுகின்றது.80
எனினும் இதனைத் தொடர்ந்து வருங் குறிப்புத்தான் முக்கியமானது. அதாவது மணமாகாமல் வந்த பெரிய மனத் துளார் ஏற்கனவே இங்கு வசித்த பிராமண குலத்தவருடன் ஏற்படுத்திய திருமணத் தொடர்பே அதுவாகும். இதனை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறுகின்றது.81
"தில்லையிற் பெண் எல்லை கடவாததால், ப்ெரிய மனத் துளார் விவாகமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை (பி-ம். வாலாம் பெண்) விவாகஞ் செய்து, அப்பெண்ணுக்குத் தில்லை நாயகவல்லி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோயிற்றென்புறத்திலுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ் செய்து தன் பணிவிடையை நிறைவேற்றி வந்தார். பிரா மணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்பமாகி இரு திறத்துக் கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானார். *
இதேபோன்று வடபகுதியிலுள்ள பிற ஆலயங்களிலும் பிரா மணக் குலங்கள் காணப்பட்டன. அத்துடன் ஆலயங்களைக் கட்டுவதற்குஞ், சிற்பங்களை வடிப்பதற்கும் உள்ளூர்க் கலை ஞர்களுடன் தமிழகக் கலைஞர்களும், ஈழத்தின் வடபகுதிக்கு வந்திருக்கலாம். வடபகுதியிற் பூநகரி மாவட்டத்திற் காணப் படும் பல்லவர்கால விஷ்ணுசிலை,32 திருக்கேதீஸ்வரத்திற் கண் டெடுக்கப்பட்ட பல்லவர் கலைமரபை விளக்கும் லிங்கம், நந்தி, சோமஸ்கந்தர் விக்கிரகம், விநாயகர் சிலை ஆகியன38, இவ்வாறு வளர்ச்சி பெற்ற கலைமரபு பற்றியும் இவற்றைப் படைப்பதிலே தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 53O ே

மேற்கூறிய சமூக அமைப்புச் சோழரின் வருகையோடு ஸ்திரம் பெற்று வளர்ந்தது. இக்காலத்தில் வடபகுதியிலமைந் திருந்த சுதேசச் சமூகப் பிரிவினருந் தமிழகத்திலிருந்து வந்த பல சமூகப் பிரிவினருஞ் சங்கமமாயினர். சோழரின் நிருவா கத்தினை நடாத்துவதற்கு "வேளான்", "தேவன்", "உடையான்" என்ற விருதுகளைக் கொண்ட வேளாள சமூகத்தின் நிருவாகிகள் இங்கு வந்தனர். இது பற்றி ஏற்கனவே எடுத்துக் காட்டி யுள்ளோம். சோழராட்சியைத் தொடர்ந்து வடபகுதியில் இத்தகையோர் இப்பகுதி நிருவாகத்தில் முக்கிய பங்கினை வகித்ததைப் பாண்டிமழவன் கதை எடுத்தியம்புகின்றது. அது மட்டுமன்றித் தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் மேலும் இதனை உறுதிசெய் கின்றது. சோழராட்சிக் காலத்திலே தமிழகத்திலிருந்து பல சமூகப் பிரிவினருஞ் சாதிப்பிரிவினரும் வடபகுதியிற் குடியேறினர். இவர்களோடு பிராமணர்கள், கலைஞர்கள், பல்வேறு இராணுவப் பிரிவினர் ஆகியோரும் இப்பகுதி யில் நிலைகொண்டிருந்தனர். ஈழத்தின் பிறபகுதிகளிற் சோழர் காலத்திற் காணப்பட்ட பிராமணக் குடியிருப்புகள் போன்று வடபகுதியிலும் பல காணப்பட்டிருக்கலாம். ஆரியச் சக்கரவர்த்திகளின் வருகையோடு அவர்களின் ஆட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பதற்குத் தமிழகத்திலிருந்து பல வேளான் தலைவர்கள் தத்தம் அடிமை குடிமைகளோடு வட பகுதியிற் குடியேறியதாக யாழ்ப்பாண வைபவமாலை,34 கைலாயமாலை,35 வையாபாடல்36 போன்ற நூல்கள் எடுத்துக் காட்டினாலும் இத்தகைய அமைப்புப் பெருங்கற்காலத்திலிருந்தே கருக்கட்டி விட்டது. இதனால் ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முன்னரே இது உரம் பெற்று வளர்ச்சி பெற்றுவிட்டது எனலாம்.
பல்வேறு வினைஞர் குழுக்கள் ஆரம்ப காலந்தொட்டு முக்கிய பங்கினை வகித்தனர் என்பதற்குத் 35 u LDfT 35 விஜயன் - பாண்டிய இளவரசியின் திருமணம் பற்றிய ஐதீகம் அமைந்துள்ளது. மகாவம்சம் இது பற்றிக் கூறுகையில் விஜயனுக்கு மணப்பெண்ணாக வந்த பாண்டிய இளவரசி விஜயனின் தோழர்களான எழுநூற்றுவருக்கு மணப்பெண்க
531 சமூகமும் சமயமும்

Page 282
ளாகத் தமது தோழியர்களுடனும் பதினெண் வினைஞர் கூட்டத்தினரை உள்ளடக்கிய ஆயிரங் குடும்பங்களுடனும் மகாதீர்த்தத்தில் வந்திறங்கினாள் எனக் கூறுகின்றது. இக் கால இலக்கியங்களிற் பதினெண், அறுபத்திநான்கு ஆகிய பதங்கள் ஒர் உபசார வழக்காகப் பயன்படுத்தப்பட்டதை நோக்கும்போது இப்பதினெண் என்ற எண்தொகை ஒர் உபசார வழக்காக இருந்தாலுங்கூடத் தமிழகத்துக் கலைஞர்கள் ஈழத்திற்கு வந்த ஒரு கருவையே மேற்கூறிய ஐதீகம் எடுத்துக் காட்டுகின்றது என்று கூறினால் மிகையாகாது. அதனால் அரசியல், வர்த்தக, கலாசார உறவுகளிலே தமிழகத்துடன் மிக இறுக்கமாக இணைந்திருந்த ஈழத்தை நோக்கிக் கிறிஸ் தாப்த காலத்திற்கு முன்னரே பல வினைஞர் கூட்டத்தினர் வந்தனர் என்று எண்ணுவதிலே தவறில்லை.
இவர்களின் வருகை ஈழத்திற் செயற்பட்ட பல்வேறு தொழிற் பிரிவினரின் திறனை மேலும் உயர்த்தியிருக்கலாம். இவர்களிலே தச்சர், கொல்லர், கன்னார், தட்டார், குயவர், வண்ணார், அம்பட்டர், கைக்கோளர் (நெசவாளர்), கரை யார், முக்குவர், பரவர், பரதவர், செம்படவர், கடையார், திமிலர், பள்ளர், பறையர் போன்றோரைக் குறிப்பிடலாம். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளையுந் தமிழ் நூல்களை யும் உற்று நோக்கும்போது பல்வேறு தொழிற் பிரிவினர் பற்றிய சான்றாதாரங்களை அவைகளிலே காணமுடிகின்றது. பிராமிக் கல்வெட்டுகளில் வேளாளர், கரையார், பரதவர் போன்ற குழுவினர் பற்றிய சான்றுகளோடு பல்வேறு தொழில் களிற் குறிப்பாகத் தச்சுத் தொழில், கம்மாளத் தொழில், மணி களில் ஆபரணங்களை ஆக்குந் தொழில் போன்றனவற்றுட் கைதேர்ந்த வினைஞர்களுங் குறிப்பிடப்பட்டுள்ளனர். யாழ்ப் பாண வைபவமாலை முக்குவர் போன்ற சமூகப் பிரிவினரைக் கூறக் கண்ணகி வழக்குரை பரதவர், முக்குவர் போன் றோர் பற்றி விபரிக்கின்றது. இவ்வாறே வையாபாடலிற் பல்வேறு சாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் காணப் படுவதை நோக்கும்போது ஆரம்பத்தில் எண்ணிக்கையிற் குறைந்த இத்தொழிற் பிரிவுகள் காலவெள்ளோட்டத்தில் விரிவடைந்து சென்றமை புலனாகின்றது. இத்தகைய தொழில் வழிச் சமூக அமைப்பின் வழக்கங்களை எடுத்துக் காட்டுவன வாகத் தேசவழமைச் சட்டங்கள் அமைகின்றன.
யாழ். - தொன்மை வரலாறு 532 O

சமூக வழக்குகள்
பண்டைய தமிழகத்தினை ஒத்த சமூக அமைப்பே ஈழத் திற் காணப்பட்டது என்பதை உறுதி செய்வதாய் அமைவது தான் இன்றும் வடபகுதியில் வழக்கிலிருக்குந் தேசவழமைச் சட்டங்களாகும். இவற்றைச் சட்டங்கள் என்று கூறுவதற்குப் பதிலாகப் பல்லாண்டு காலமாக இப்பகுதி மக்களாற் பேணப் பட்ட சமூக நடைமுறைகள் எனக் கூறுவதே பொருத்தமாகும். பொதுவாகவே பண்டைய சமூகங்களில் இத்தகைய நடை முறைகள் சட்டங்களாகப் பேணப்பட்டுச் சட்டவாக்கத்திற்குரிய காத்திரத்தினைப் பெற்றுள்ளன. ஈழத்திலுந் தமிழகத்திலும் பெருங்கற்காலக் கலாசாரத்தின் வழிவந்த சமூக அமைப்பின் அடித்தளமாக விளங்கியது பெண் ஆட்சி உரிமையும் அதன் வழிவந்த பெண்வழி உரிமையுமே என்பதைச் சமூக இயலாளர் இனங்கண்டு கொண்டுள்ளனர். பின்வந்த வட இந்தியக் கலா சாரத்தின் தாக்கத்தினாற்றான் இவ்வமைப்பில் ஆண்வழி ஆட்சியும் அதன்வழிவந்த ஆண்வழி உரிமையும் புகுந்தன. இவற்றோடு இணைந்ததுதான் சகோதரனதுஞ் சகோதரி யினதும் பிள்ளைகளின் திருமணங்களாகும். இத்தகைய வழக் கங்களின் மீது பின்வந்த உரோம - டச்சுச் சட்டங்களின் ஒரு சில அம்சங்கள் புகுத்தப்பட்டன. இதன் சேர்க்கையே இன்றைய தேசவழமைச் சட்டங்களாகும்.
இவ்வாறே தமிழகத்திலும் பெண்வழி ஆட்சியும், பெண் வழி உரிமையும், ஆரம்பத்தில் வழக்காக இருந்தபோதும் வட இந்தியக் கலாசாரத்தின் செல்வாக்கால் ஆண்வழி ஆட்சி யுரிமையும், ஆண்வழி உரிமையுஞ் செல்வாக்குப் பெற்றன. எனினும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சேர நாடாகிய இன்றைய கேரளப் பகுதியில் வழக்கிலிருக்கும் மருமக்கட்தாய முறை பழந்தமிழரின் பெண் வழி ஆட்சி, பெண்வழி உரிமை ஆகியனவற்றுக்குச் சான்றாக விளங்கு கின்றது. சொத்துரிமையிலும் பிறவற்றிலும் ஆண்களுக்கு முன் லுரிமை அளிக்கும் மக்கட்தாய முறைக்குப் பதிலாகப் பெண்வழிக்கும், பெண்வழிவந்த பிள்ளைகளுக்கும் முன் இணுரிமை அளிப்பதே மருமக்கட் தாயமாகும். இத்தகைய
O 533 சமூகமும் சமயமும்

Page 283
அமைப்பிற் சகோதரனதும் - சகோதரியினதும் பிள்ளைகளின் திருமணம் முக்கிய பங்கினை வகித்தது. மருமகன் என்றால் மகனாக ஒன்றாக நெருங்கி இணைத்தல் எனப் பொருள்படும். இத்தகைய அமைப்பின் வழக்காற்றை எடுத்தியம்புங் கல் வெட்டாதாரங்களும் ஈழத்திலுள.
கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய பிராமிக் கல்வெட்டு களில் எல்லாமாக ஒன்பது கல்வெட்டுகளில் இப்பதங் காணப்படுகின்றது.37 பருமகன்" என்ற வடிவம் "பருமக" என்று எவ்வாறு இவற்றுள் இடம் பெற்றுள்ளதோ அவ் வாறே "மருமகன்’ என்ற வடிவமும் “மருமக" என இவற்றுள் வழங்கப்பட்டுள்ளது. மகன் என்ற வடிவம் மக" என்ற வடிவத்திற்குப் பின்வந்த வடிவமாகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்த வடிவம் ‘மக" என்பதாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருக்கும் ஆண், பெண் பாலாரைக் குறிக்கும் மோனே’ என்பது இதன் திரிபே. இப்பதங் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் தற்போதைய அநுராத புரம், பொலநறுவை, அம்பாறை, அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிற் காணப்படுகின்றன. எண்ணிக்கையில் இக்கல்வெட்டுகள் முறையே அநுராதபுர மாவட்டத்தில் மூன்றும், பொலநறுவை மாவட்டத்தில் ஒன்றும், அம்பாறை மாவட்டத்தில் ஒன்றும், அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஒன்றும், குருநாகல் மாவட்டத்தில் இரண்டுமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி இப்பதங்கள் காணப்படுஞ் சந்தர்ப்பங்களை நோக்கும் போது இதனைச் சூடியோர் நாட்டின் நிருவாகத்தில் முக்கிய பங்கினை வகித்தது புலனாகின்றது. ஏனெனில் நாட்டு நிருவாகத்திற் பங்கு கொண்ட "கமிகா”, “கஹபதி", *பருமக", "சேனாதிபதி', *உபராஜ போன்றோரும் இக்கல்வெட்டுகளிற் குறிப்பிடப் பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இத்தகைய கல்வெட்டுகள் வடபகுதியிற் காணப்படாவிட்டாலுங்கூட இன்றும் பேச்சு வழக்கிலிருக்கும் " மோனே’ என்ற வடிவம் மட்டுமன்றித் தேசவழமைச் சட்டத்திலே திருமணம் பற்றி வருங் குறிப்பிலே திருமணத்திற்குரிய இரத்த உறவிற் சகோதரனதுஞ் சகோதரி யினதும் பிள்ளைகளின் திருமணம் அங்கீகாரம் பெற்றிருப்பதும் இப்பகுதியிற் கிறிஸ்தாப்த காலந்தொட்டு இவ்வழக்குக் காணப் பட்டதை உறுதி செய்கின்றது.
யாழ். - தொன்மை வரலாறு 534 .ே

இவற்றைவிட இத்தேச வழமைச் சட்டங்களை ஆராய்ந் தோர் பண்டைய பெண் ஆட்சியுரிமையையும், பெண்வழி உரி மையையும் எடுத்துக் காட்டும் இதிற் காணப்படும் அம்சங்களுக் கும், இன்றும் மட்டக்களப்பு புத்தளம் ஆகிய பகுதிகளில் வழக்கிலிருக்கும் முக்குவச் சாதிச் சட்டங்களுக்குங் கேரளத்தில் வழக்கிலிருக்கும் மருமக்கட் தாய வழக்காற்றிற்கும் இடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகளை இனங்கண்டுள்ளனர். இது பற்றிக் குமாரசுவாமி பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி யுள்ளார்.38 இதனால் இவற்றுக்குரிய ஒற்றுமையை எடுத்துக் காட்ட முன்னர் மருமக்கட்தாய முறையின் அடிப்படை அம் சங்கள் பற்றிக் கூறுவது பொருத்தமாகின்றது. இதன் அடிப் படை அம்சந் தாய்வழியுரிமையாகும். இங்கே தாய்வழி என்பது தாய், பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் வழியாக
உரிமை பாராட்டுதலாகும்.
பெண்னைப் பொறுத்தவரையில் மேற்கூறிய நிலை காணப்படுவதுபோல் ஆணைப் பொறுத்தவரைத் தாய்வழி என்பது இவ் ஆணின் தாயின் வழியை மட்டுமே குறிக்கும். ஆணினது மனைவியோ பிள்ளைகளோ ஆணின் தாய்வழிச் சொத்துக்கு உரிமை கோரமுடியாதென்று கூறுங் குமாரசுவாமி இதனை வலியுறுத்த வேரோடி விலத்தி முளைத்தாலுந் தாய்வழி தப்பாது" என்ற பழமொழியை எடுத்துக் காட்டி யுள்ளார். இவ்வாறு பல்வேறு தாய்வழி வந்த குடும்பங்கள் இணைந்த அமைப்புத் தாவாட் " என மலையாளத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புப் பல தாய்வழியினுாடாக வந்த சொத்துகளை இணைத்த அமைப்பாக மட்டுமன்றி ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பாகவுஞ் செயற்பட்டது. இக்கூட்டுக் குடும்பத்திலே தாய் வழியில் வயதில் மூத்தவன் (தாய்மாமன்) தலைவனாக இருந்து அதன் சொத்துகளையும் இவ்வமைப் பையும் வழி நடத்தினான். இவன் ‘காரணவன்" என அழைக் கப்பட்டான். இவனில்லாதவிடத்து இப்பணியை இவனுக்கு வய தில் அடுத்த இளையவனாகிய "அநந்திரவன்' மேற்கொண் டான். சிலசமயம் இவர்களைவிட இவ்வமைப்பிற்குப் பொறுப் பாளியாகத் தாய்வழியில் மூத்த பெண் இயங்குவதும் உண்டு.
O 535 சமூகமும் சமயமும்

Page 284
சிலசமயங் கணவன் அல்லது தந்தை இவ்வமைப்பிலுள்ள தமது மனைவி அல்லது பிள்ளைகளுக்குத் தனியான இல்லங் களைத் தாந் தேடிய சொத்துகளிலிருந்து அமைத்துக் கொடுப் பது வழக்கம். இவ்வாறு இல்லங்களை அமைக்கும்போது இவை "தாய்வழி இல்லங்கள்" எனப் பெயர் பெற்றன. எனினும் இத்தாய்வழி இல்லங்கள் தமது சொத்துகளைத் தொடர்ந்துந் தாவாட்" என அழைக்கப்பட்ட கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து பிரிக்காமலே இயங்கின. இத்தகைய அமைப்புச் சொத்துகளை வெளியே செல்லாது பாதுகாத்தது. இச்சொத் துகள் அங்கத்தவர்களின் முதுசொமாகவுந் தேடிய தேட்ட மாகவும் அவர்கள் அமைத்த தாய்வழி இல்லங்களாகவும் இடம் பெற்றன. இத்தகைய சொத்துகளுக்குப் பெண்களை உரிமையாக்குவதன் மூலம் அவை பாதுகாக்கப்படவும் வழி சமைக்கப்பட்டது.
கேரளத்தில் மேற்கூறிய UGirato-u வழக்காற்றை ஆராய்ந்த குமாரசுவாமி, இன்றும் வடபகுதித் தமிழ் மக்க ளின் முதுசொத்தாக விளங்குந் தேசவழமைச் சட்டங்களுக்குங் கேரள வழக்காற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். குமாரசுவாமியின் கருத்து யாதெனிற் கேரளமுறை அப்படியே வடபகுதியிற் புகுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பூரணமாக இல்லா விட்டாலும் இம்முறையின் எச்சசொச்சங்கள் தேசவழமைச் சட்டங்களிற் காணப்படுவதானது முன்பொருகால் இருபகுதியி னரும் ஒரே சமூக அமைப்பிற் காணப்பட்டதையே எடுத்துக் காட்டுகின்றது என்பதாகும். தாய்வழி ஆட்சி உரிமை, தாய்வழி உரிமை, மச்சான், மச்சாள் திருமணமுறையோடு தேசவழமையிற் காணப்படும் மேலும் பல வழக்குகளும் இவரால் இனங் காணப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக இடம் பெறுவதுதான் வடபகுதியில் இன்றும் நிலவுஞ் சீதன முறையாகும். ஆண்வழி ஆட்சி முறையையும், ஆண்வழி உரிமையையும் அங்கீகரிக்கும் வடமொழிக் கலாசாரத்திற் பெற்றோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அன்பளிப்பாக வழங்குஞ் சீதனமுந் திராவிடக் கலாசாரத்திலுள்ள சீதனமும் இருவேறு பட்ட துருவங்கள் என இவர் குறிப்பிட்டுள்ளதோடு மருமக்கட்
யாழ் - தொன்மை வரலாறு 533 (9

தாயத்திலுள்ள தாய்வழி இல்லமே பின்னர் தேசவழமை வழக்காற்றிற் சீதனமாக வளர்ச்சி பெற்றது எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். தேசவழமைச் சட்டங்களிற் காணப்படும் முதுசொம், தேடிய தேட்டம், சீதனம் ஆகியவை மருமக்கட் தாயத்திலுள்ள அம்சங்களை ஒத்துக்காணப்படுகின்றன என்ப தும் இவரது கருத்தாகும்.
மருமக்கட் தாயத்திற் காரணவன்" பெறும் இடத்தையே திருமணத்தின் பின்னர் பெண்ணின் கணவன் பெறுகின்றார். கணவனுக்கும் மருமக்கட் தாயத்திலுள்ள காரணவன் போன்று, தேசவழமைச் சட்டத்தில் மனைவி இறந்தால், அவள் பெற்ற சீதனத்தை அவளின் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உரிமை யைக் கணவன் பெறுகின்றான். அவ்வாறே கணவன் இறந்தால் இத்தகைய உரிமை மனைவிக்குக் கிடைக்கின்றது. மருமக்கட் தாயத்தில் மகள் இறந்த பின்னர் சொத்துகளை எவ்வாறு தாயிடங் கையளிக்கும் பொறுப்பினைக் கணவன் பெற்றிருக்கின் றானோ அவ்வாறே தேசவழமை வழக்காற்றில் மனைவி இறந்த பின்னர் கணவன் திரும்ப மணம் முடிக்கும்போது தனது மனைவியின் சீதனத்தையுந் தனது தேடிய தேட்டத் தில் அரைவாசியையும் பிள்ளைகளின் பொறுப்பினையும் , மனைவியின் தாயிடங் கையளிக்க அவன் கடமைப்பட்டுள் «өтпт657 . பெண் பிள்ளைகள் தாயின் சீதனத்தைப் பெறுஞ் சலாக்கியமுந் தேசவழமைச் சட்டத்திலுண்டு. குடும்பத்திற் கடைசிப்பெண் சீதனம் பெற்றுத் திருமணமாகும் வரை அக்குடும்பத்திலுள்ள ஆண், குடும்பச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாதென்பது இதிலுள்ள நியதிகளிலொன்றா கும். அதுமட்டுமன்றிப் பிள்ளைகள் இல்லாது சீதனம் பெற்ற பெண் இறக்கும்போது அச்சொத்து அக்குடும்பத்தில் ஆண்கள் இருந்தாலுங்கூடச் சீதனம் பெற்ற அவளின் சகோதரி களுக்கே செல்வது பண்டைய தேசவழமை வழக்க்ாறுகளில் ஒன்றாகும். இவ்வாறே திருமணமாகாத பெண் இறக்கும் போது அவளுக்குரிய சொத்துத் திருமணமாகிய, திருமண மாகாத பெண்களுக்கே செல்கின்றன. இவையெல்லாம் பெண்கள் வழியாற் சொத்துரிமைப் பரிமாற்றஞ் செய்யப்பட்ட பழந்தமிழர் வழக்காகும்.
டு 537 சமூகமும் சமயமும்

Page 285
இதனைவிடத் தேசவழமை வழக்காறுகளிற் காணப்படுஞ் சுவீகாரம், ஒற்றி, பங்குரிமை ஆகியனவற்றுக்கும் மருமக்கட் தாயத்தின் வழக்காறுகளுக்குமிடையே உள்ள ஒற்றுமையை எடுத்துக்காட்டுங் குமாரசுவாமி சிவபெருமானுக்குஞ் சுந்தர ருக்கும் ஏற்பட்ட தகராறு பற்றிக் கூறும் தேவாரத்தையும் இதற்குச் சான்றாதாரமாக எடுத்துக் காட்டியுள்ளார். இத் தேவாரத்திலுள்ள விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் " என்ற அடிகள் குறிப்பிடத்தக்கன. ஒருவர் தன்னுடைய நிலத்தையோ இன்னொரு பொருளையோ அடைவு வைக்கலாம். இவ்வாறு அடைவு வைக்கும் போது வட்டிக்குப் பதிலாக அதன் பலனை அனுபவிக்கும் உரிமை பணங் கொடுத்தவருக்குண்டு. இதுதான் ஒற்றியாகும். இவ்வாறு அடைவுவைத்த பொருளைத் திரும்பவும் பெறும்போது அதனைப் பயன்படுத்துபவருக்குத் தக்க காலக் கெடு கொடுத்தே திருப்பிப் பெறவோ விற்கவோ அடைவு வைத்தவரால் முடியும். அவ்வாறு அப்பொருளை விற்கும் போதுகூட ஒற்றிக்கு அளித்தவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டுமன்றிச் சாதாரணமாக நிலங்களை விற்கும்போதுகூட அந்நிலத்திற்குரிய பங்காளிகள், அயலவர் ஆகியோருக்கே முன்னுரிமை அளித்தல் வேண்டும் என்பதும் தேசவழமையின் நியதியாகும்.
தேசவழமை வழக்காறுகள் எவ்வாறு மருமக்கட்தாய வழக் காறுகளோடு ஒத்துக் காணப்படுகின்றனவோ அவ்வாறே முக்குவச் சாதிக்குரிய வழக்காறுகளுக்கும் மருமக்கட்தாய வழக் காறுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையும் தம்பையாவினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.39 முக்குவர் மத்தியிற் காணப் படும் பெண் வழி உரிமை, சகோதரனதும், சகோதரியினதும், பிள்ளைகளின் திருமணம், மருமக்கட்குப் பொருள் சேரல், மட்டுமன்றிக் குடி அமைப்பும் மருமக்கட் தாயத்திலுள்ள தாவாட்’ அமைப்பை நினைவுகூரச் செய்கின்றது எனக் கூறுந் தம்பையா, முக்குவர் மத்தியிலுந் தாய் வழியில் மூத்தவனே (தாய் மாமனே) மருமக்கட் தாயத்திற் காரண வன் போன்று செயற்படுகின்றான் எனவுங் கூறியுள்ளார். சொத்துரிமையில் முதுசொம், தேடிய தேட்டம் ஆகிய வேறு பாடுகள் இரு வழக்குகளுக்குமிடையே காணப்படும் பிற
யாழ். - தொன்மை வரலாறு 538 ()

ஒற்றுமைகளாகும். இத்தகைய ஒற்றுமைகள் மருமக்கட் தாயம், தேசவழமை வழக்குகள், முக்குவச்சாதி வழக்குகள் ஆகியன முன்பொருகால் ஒரு பொதுக் கலாசாரப் பண்பு களைப் பெற்றிருந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
மேற்கூறிய அம்சங்களை மையமாகக்கொண்டே குமார சுவாமி ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் ஆண்வழி ஆட்சி முறையும், ஆண்வழி உரிமை முறையும் உடைய வேளாளப் பிரபுக்களின் குடியேற்றத்திற்கு முன்னரே ஈழத்திலே தாய்வழி ஆட்சிமுறை, உரிமைமுறை ஆகியன காணப்பட்டன என்றும் யாழ்பாடிக் காலக் குடியேற்றத்துடன் இத்தகைய வழக்குகள் ஈழத்திற் புகுந்து விட்டன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். இத்தகைய வழக்குகள் ஈழத்திற் புகுந்ததற்கு ஆதாரமாக
இராகவன் 40 யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் முக்குவர் குடியேற்றம், யாழ்பாடி கதை ஆகியவற்றைக் கொள்கின்றார். ஆனால் அண்மைக்காலத் தொல்லியல்
ஆய்வுகள் ஈழத்து நாகரிக கர்த்தாக்கள் பெருங்கற்கால மக்களே என எடுத்தியம்புவதாலுங் கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய பிராமிக் கல்வெட்டுகளிலே தமிழர் பற்றி வருங் குறிப்புகள், முக்குவ குலத்தவரின் ஒரு பகுதியினரான பரதவர் பற்றி வருங் குறிப்புகள் ஆகியன மட்டுமன்றி மருமக்கட் தாயம், தேசவழமைச் சட்டம், முக்குவச் சட்டம் ஆகியன வற்றில் அடித்தளமாக விளங்கும் மருமக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் மருமக (மருமகன்) என்ற வடிவங் காணப் படுவதுந் தமிழகத்தைப் போன்றே ஈழத்திலும் பெண்வழி ஆட்சியுரிமையும், பெண்வழி உரிமையுஞ் சமகாலத்திலேயே காணப்பட்டது என உணர வைக்கின்றது. தமிழகத்தில் வட இந்திய இந்துமத கலாசாரத்தின் செல்வாக்கால் இம்முறை ஆண்வழி ஆட்சிமுறை, ஆண்வழி உரிமை முறை அம்சங் களைப் பெற்றது போன்று ஈழத்திலும் பல்லவ, பாண்டிய, சோழச் செல்வாக்கினாலும் ஆதிக்கப் படர்ச்சியினாலும் இவற்றோடு இணைந்து வந்த கலாசாரச் செல்வாக்கினாலும் இத்தகைய அம்சங்கள் தாய்வழி ஆட்சியுரிமையுடனுந் தாய் வழி உரிமையுடனுங் கலந்தன வென்றும், பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் ஏற்பட்ட வேளாளப் பிரபுக்களின்
() 539 சமூகமும் சமயமும்

Page 286
குடியேற்றத்துடன் இவ்விரு முறைகளுஞ் சங்கமித்துத் தற் போதைய தேசவழமைச் சட்டங்கள் உருவாக வழிவகுத்தன எனவுங் கொள்ளலாம். எவ்வாறாயினும் வடபகுதியிற் பாரம் பரியமாக விளங்கும் இத்தேச வழமை வழக்காறுகள் கண்ணகி வழக்குரை காதையில் இடம்பெறும் வெடியரசன் கதையோ அன்றி வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவ மாலை ஆகியவற்றுள் இடம்பெறும் யாழ்பாடி கதையோ வெறுங் கட்டுக்கதைகள் அல்ல வென்றும் பண்டைய தமிழகத் திலிருந்து ஈழத்தின் வடபகுதிக்குத் தமிழகத்தோர் தமது சமூக வழக்குகளுடன் குடிபுகுந்த நிகழ்ச்சிகளை உருவகப் படுத்துவனவாகவே இவை அமைகின்றன எனவுங் கூறலாம்.
இறுதியாகப் பண்டைய யாழ்ப்பாணமுந் தமிழகமுங் கலா சார ரீதியில் இணைந்திருந்ததை மேலும் உறுதிப்படுத்த இன் றும் யாழ்ப்பாணத்திலுஞ் சேரநாடாகிய கேரளத்திலும் வழக்கி லிருந்த, இருக்குஞ் சில பழக்க வழக்கங்களையும் இராகவன் சுட்டிக்காட்டியுள்ளதை எடுத்துக் காட்டுவது அவசியமாகின்றது. இவற்றில் ஒன்றுதான் மச்சாள், மச்சான் திருமண முறை யாகும். இத்திருமணங்களைத் தம்பையா இரு பிரிவாகப் பிரித்துக் குறிப்பிட்டுள்ளார். அவை சம்பந்தம், தாலிகட்டுங் கலியாணம் என்பவை ஆகும். சம்பந்தம் என்பது குருக்களோ, ஒமம் வளர்த்தலோ, தாலிகட்டுதலோ இன்றிக் குறிப்பிட்ட ஆணும் பெண்ணுஞ் சில கிரியைகளுடன் கைப்பிடிக்கும் முறையாகும். இத்தகைய முறைதான் கேரள - யாழ்ப்பாணப் பகுதிகளில் வழக்கிலிருந்த பழைய முறை எனக்கூறி நாளடை வில் இம்முறையுடன் குருக்கள், ஓமம், தாலிகட்டல் போன்ற அம்சங்களும் இணைந்தன என இராகவன் கூறியுள்ளார். இதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் ஆண்கள் வேட்டி, சால்வை ஆகியனவற்றை அணியும் முறை, பெண்கள் சேலைகட்டும் முறை, சோற்றிற் கஞ்சியை வேறுபடுத்தி அருந்தும் முறை, பச்சடி போன்றவற்றைத் தயாரிக்கும் முறை ஆகியனவும் இன் றுங் கேரளப் பகுதியிற் காணப்படுகின்றன. இவ்வாறே இரு பகுதி மக்களுங் கன்னத்திற் குடுமியை முடியும் வழக்கத்தினையும் பின்பற்றியிருந்தனர். அதாவது தலையின் பின்புறத்திற் குடுமி முடியும் வழக்கம் ஆண், பெண் ஆகிய இரு பாலார் மத்தியிற்
யாழ். - தொன்மை வரலாறு 54o )ே

காணப்பட்டாலுங்கூட இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற் காதுக்குமேலே தலையின் ஒரு பக்கத்திற் குடுமி முடியும் வழக்கங் காணப்பட்டதென்று முதலியார் இராசநாயகத்தினை மேற்கோள் காட்டி இராக வன் கூறியுள்ளார். இவ்வாறு கன்னத்திற் குடுமியை முடிபவர்கள் கன்னக் குடும்பியர் என அழைக்கப்பட்டனர். இவ்வழக்கம் இன்று யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணப் பெண்கள், ஆண்கள் ஆகியோர் காதுகளில் அணியும் தோடு, கடுக்கன் போன்றனவுங் கேரளத்திற் காணப்படும் ஆபரணங்களை ஒத்தே காணப் படுகின்றன. இறுதியாக இல்லங்களின் அமைப்பில் உள்ள ஒற்றுமையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நடுவில் முற்றம் விட்டு நாற்சார் அமைப்பில் வீடுகட்டுதல் இருபகுதிகளிலுங் காணப்பட்ட பழைய வழக்காகும். இவ்வாறே வளவுக்குள் நுழையும் வாசலில் ஒரு கொட்டிலில் அலங்காரமான மரப் படலை அமைக்கும் முறை காணப்பட்டதுங் குறிப்பிடப் பட்டுள்ளது. இத்தகைய படலையுங் கொட்டிலும் அதனோடு கூடிய திண்ணைகளும் உடைய பழைய வீடுகள் பல இன்றும் யாழ்ப்பாணத்திற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.
இக்காலத்திற் கல்விகூட ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் ஏகபோக உரிமையாகவே விளங்கியது. வடஇந்திய வர்ணாச் சிரம தர்மத்திற் கல்வி எவ்வாறு பிராமணரின் ஏகபோக gdff60) fou utres விளங்கியதோ அவ்வாறே வடபகுதியிலும் அரசர்கள், பிராமணர்கள், நிலச்சுவாந்தர்களாகிய வேளாளரி ஆகியோரின் உரிமையாக இது பெருமளவுக்குக் காணப்பட் டது. ஏனெனில் அக்காலக் கல்வி முறையில் ஒருவனுடைய பிறப்பு, அந்தஸ்துப் போன்றன பிரதர்ன பங்கினை வகித்தன. பெரும்பாலுங் குருகுலக் கல்வியே காணப்பட்டது. பெண் கல்வி பற்றிய குறிப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இவற்றைவிட இக்காலச் சமூகப் பழக்கவழக்கங்கள், ஒழுக் கங்கள், நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சம காலக் குறிப்புகள் காணப்படாததாற் பிற்பட்ட கால நடை முறைகளிற் பல இக்காலத்திலும் வழக்கிலிருந்தன எனக் கொள்ளலாம். மேற்கூறிய தொழிற்பிரிவுகளைவிடச் சித்த
O 541 சமூகமும் சமயமும்

Page 287
வைத்தியம், சோதிடம் போன்றனவும் அக்கால மக்களின் வாழ் வில் முக்கிய பங்கினை வகித்தன. எனினும் இவைகள் பற்றிய விரிவான தடயங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
சமூக வாழ்விற் சடங்குகளும் முக்கிய இடம் பெற்றன. இவற்றில் இல்லங்க்ளில் நடைபெற்றனவற்றை முதலில் நோக்கலாம். இன்றும் பிள்ளையின் பிறப்புத்தொட்டு இறப்பு வரை நடைபெறுங் கிரியைகள் அக்காலத்திலும் நடைபெற் றன என யூகிக்கலாம். இவற்றை நடாத்தி வைப்பதிற் பிராமண வகுப்பினர் முக்கிய பங்கினை வகித்தனர். இக் கிரியைகளிலே திருமணத்தின்போது நடைபெற்ற கிரியைகள் முக்கிய இடத்தினை வகித்தன. ஆரம்பத்தில் வெகு எளிமை யாக அமைந்திருந்த இவை பிராமண குலத்தவரின் செல் வாக்கால் விரிவடைந்தன. இவ்வாறே பெருங்கற்காலத்திற் பெருவழக்காகக் காணப்பட்ட, இறந்தோரை நிலத்தில் அடக் கஞ் செய்யும் முறை ஆரியரது செல்வாக்கினாலே தகனஞ் செய்யும் முறையாக மாறியது. இதனால் இடுகாடு முன்னர் பெற்ற முக்கியத்துவத்தினை இப்போது சுடுகாடு பெறத் தொடங்கியது. அத்துடன் இதனோடு ஒத்த கிரியைகளிலும் ஆரியச் செல்வாக்குப் படரத் தொடங்கியது. இவ்வாறு திரா விட சமூக அமைப்பு வடஇந்திய ஆரிய கலாசாரச் செல்வாக் குக்கு உட்பட்டாலுங்கூட அதன் அடித்தளம் அதிணின்று வேறு பட்டதொன்றாக விளங்கியதென்பதை இதன் சமூக அமைப்பு, வழிபாட்டு நெறிகள், பிற கலாசார அம்சங்கள் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன.
இக்காலத்தில் வடபகுதியிலே தமிழ் பேசும் மக்கள் மட்டுந் தான் வாழ்ந்தனர் எனக் கொள்வது தவறாகும். தென்னிந்தி யர்களான கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோரும் இங்கு காணப்பட்டனர். யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடல் போன்ற நூல்களிற் சிங்கள மக்கள் பற்றிய குறிப்புகள் உள. யாழ்ப்பாண வைபவமாலை, சிங்கள இனத்தின் மூதாதை யினனான விஜயனின் வம்சத்துடன் இப்பகுதி மன்னனான உக்கிரசிங்கனை இணைத்துள்ளது. இப்பகுதியிலே தொழில் நிமித் தம் மட்டுமன்றிக் குடியானவர்களாக வாழ்ந்த சிங்கள
யாழ். - தொன்மை வரலாறு 542 (9

மக்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. எனினும் இவர் களைப் பற்றிய விரிவு தமிழ் நூல்களிலோ பாளி நூல்களிலோ இடம்பெறவில்லை. சிங்களவரைப் போன்று இஸ்லாமியர்களும் இப்பகுதியில் வாழ்ந்தனர். ஏனெனில் மாதோட்டம் ஒரு சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனை நிலையமாகக் கி. பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுச்சி பெற்றதால் மத்திய கிழக்கிலிருந்து இம்மக்கள் வாணிப நிமித்தம் இத்துறைமுகப் பகுதிகளில் வந்து குடியேறினர். மத்திய கிழக்கு நாணயங் களும் மட்பாண்டங்களும் இதற்குச் சான்றாதாரமாக விளங்கி னாலும் இவர்களின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான ஆதா
ரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறே அல்லைப் பிட்டி, வங்காலை ஆகிய இடங்களிற் கிடைத்த சீன மட் பாண்டங்கள் மட்டுமன்றி, வையாபாடலிற் காணப்படுஞ்
சீனர் பற்றிய குறிப்புகளும் இவர்கள் வடபகுதியோடு கொண்டிருந்த தொடர்புகளுக்குச் சான்றாதாரமாக விளங்கு கின்றது.
நிருவாகம்
ஈழத்து வரலாற்றைப் பற்றிக் கூறும் பாளி நூல்கள் அநுராதபுரத்தினை மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சி அமைப்பே வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்து நடைபெற்றது எனக் கூறுகின்றன. இவ்வமைப்பில் வடபகுதி * உத்தரதேஸ்" என்ற அமைப்பிற்குள் அடங்க, இதனைத் தனது நிருவாகிகள் மூலந் தலைநகரிலிருந்து மன்னன் நிருவகித்தான் என்ற தொனியே இந்நூல்களிற் கர்ணப்படுகின்றது. எனினுங், கிடைக் குந் தொல்லியல் ஆதாரங்களை நோக்கும்போது அநுராதபுர மன்னரின் ஆட்சிப் படர்ச்சி சிற்சில காலப்பகுதிகளில் வட பகுதியில் ஏற்பட்டதற்கான சம்பவங்கள் காணப்பட்டாலுந் தொடர்ச்சியாக இங்கு நிருவாக நடவடிக்கைகளை மேற் கொண்டதற்கோ இப்பகுதியில் இவர்களின் ஆட்சி தொடர்ந்து நிலைபெற்றதற்கோ சான்றுகள் காணப்படவில்லை. பாளி நூல்கள் சிங்கள மன்னர்களிற் சிலர் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், மாதோட்ட நகருக்கு அருகிலுள்ள பகுதி களிலுங் குளங்களை அமைத்தது பற்றி ஒரு சில குறிப்புகளை மட்டுமே தந்துள்ளன. ஆனாற் சிங்கள மன்னர்களின் அதி
9 543 சமூகமும் சமயமும்

Page 288
காரிகள் துறைமுகப் பட்டினங்களில் ஒரு சில காலப்பகுதிகளில் நிலைகொண்டு அங்கு நடைபெற்ற வர்த்தகப் பரிமாற்ற நட வடிக்கைகளைக் கண்காணித்ததை மன்னார்க் கச்சேரியிற் கிடைத்துள்ள சிங்களக் கல்வெட்டு, முதலாவது பராக்கிரம பாகுவின் நயினாதீவுத் தமிழ்க் கல்வெட்டு ஆகியன குறிக் கின்றன. இவற்றுள் நயினாதீவிற் கிடைத்துள்ள இம்மன்னனின் கல்வெட்டு ஊர்காவற்றுறையில் இம்மன்னன் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றிக் கூறுகின்றது. இதனால் நாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிருவாக அமைப்புப் பற்றிப் பாளி, சிங்கள நூல்கள், சிங்களக் கல்வெட்டுகள் ஆகியன போதியளவு சான்றாதாரங்களைத் தந்துங்கூட. வடபகுதி பற்றி இவைகளில் ஒரு சில சான்றுகள் மட்டுமே காணப் டாடுவது, பாளி நூல்கள் கூறுவது போல் இப்பகுதி அநுராத புர மன்னனின் நேரடியான ஆட்சியிலே தொடர்ச்சியாகக் காணப்படவில்லை என்பதை உறுதியாக்கி உள்ளது. பல்வேறு பிரதேச அரசுகள் காணப்படும் போது ஒன்றின் மேலாணை மற்றையதன் மீது சிற்சில காலங்களிற் காணப்படுவது வழக்கம். இத்தகைய நிலையே வடபகுதியிலுங் காணப்பட்டது. எனினும் இப்பகுதி வரலாறு பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை போன்றனவற்றுள் இங்கு காணப் பட்ட அரசியல் நிலை பற்றிய சான்றுகள் காணப்படாத தால் நாட்டின் பிறபகுதிகளிற் கிடைக்குஞ் சான்றாதாரங் களின் உதவி கொண்டே இப்பகுதியின் ஆதிகால நிருவாக அமைப்புப் பற்றி ஆராய வேண்டியுள்ளது. எனினுஞ் சோழர் கால நிருவாக அமைப்புப் பற்றிப் பல கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுவதால், இவற்றின் பின்னணியில் வட பகுதியின் நிருவாக அமைப்புப் பற்றி ஆராய்வதற்கான வாய்ப்பு உளது. இத்தகைய அமைப்பின் வளர்ச்சியையே ஆரியச் சக்கரவர்த்திகள் அமைத்த யாழ்ப்பாண அரசிலும் நாம் காணக் கூடியதாயுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘நாகதீப" அரசு பற்றிப் பாளி நூல்கள் தருந் தகவல்கள் இப்பகுதியில் நிலைத்திருந்த அரசாட்சியைக் கருவூலமாகக் கொண்டுள்ளன எனலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 544 இ

வரலாற்றின் ஆரம்ப காலத்திற்குங் கிறிஸ்தாப்த காலத் திற்கும் முன்னருள்ள காலப்பகுதியில் நமது நாட்டிற் பல் வேறு சிற்றரசர்கள் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.41 இதனை இவற்றுட் காணப்படும் ரஜ (ராஜ), கமணி போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. வட இந்தியக் கலாசாரத்தின் அம்சமாக வந்த பாளிப் பிரா கிருதத்தின் செல்வாக்காலே பல பழந்தமிழ் வடிவங்கள் இவ்வாறு உருமாற எஞ்சிய ஒரு சில வடிவங்களுங் கால கதியில் வழக்கொழிந்தன. எனினும் இதே போன்ற அமைப்பே வடபகுதியிலுஞ் சமகாலத்திற் காணப்பட்டிருக்கலாம். ஆனைக்கோட்டையிற் கிடைத்துள்ள வெண்கல முத்திரையிற் காணப்படுங் கோவேந்தன் என்ற வாசகங் கருத்திற் கொள்ளத் தக்கது. இப்பதத்தினைக் கோ, வேந்தன் என இரு பகுதிக ளாகப் பிரிக்கலாம். இவையிரண்டும் அரசனைக் குறிக்கும் பதங்களாகும். எனினும் இப்பெயரைக் கொண்டு இவை இப்பகுதியில் ஆணை செலுத்திய அரசனை அன்றிச் சிற்றர சனைக் குறித்து நின்றது என்று நாம் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனாலும் இப்பெயர்கள் இப்பகுதியில் நிலை கொண்டிருந்த அரசு பற்றிய கருத்துகளை எடுத்துக் காட்டுவ தால் அரசத்துவம் பற்றிய சிந்தனை இங்கு உணரப்பட்டிருந்த தையே இவை எடுத்துக் காட்டுகின்றன எனலாம். வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியபுளியங்குளக் கல்வெட்டில் ரஜஉதி” என்பவனும் அவனின் மனைவி 'அபிஅனுரதி"யும் அவனின் தகப்பனாகிய நாக அரசனும் (ரஜநாக) குறிப்பிடப்பட்டுள்ள 607 ti". பிறமாவட்டங்களிலுள்ள கல்வெட்டுகளை ஆராயும் போது இத்தகைய சிற்றரசர்கள் காணப்பட்டதற்கு ஆதார மிருப்பதால் வவுனியா மாவட்டத்தில் நாக, உதி என்ற வம்சப் பெயர்களைச் சூடியிருந்த இரு சிற்றரசுகள் காணப்பட்டனவென எண்ணுவதிலே தவறில்லை.
எமது அண்டைநாடாகிய தமிழகத்திலும் இதன் சம காலத்தில் முடியுடை வேந்தருங் குறுநில மன்னர்களும் ஆட்சி செய்த ஒரு அரசியலமைப்பினையே சங்க இலக்கி யங்கள் எடுத்துரைக்கின்றன. இத்தகைய அமைப்பிற் குறு நில மன்னர்களின் வரிசையில் ரஜ' , கமணி" போன்றோர்
O 545 சமூகமும் சமயமும்

Page 289
மட்டுமன்றி வேள், ஆய் போன்ற சிறுசிறு இனக் குழுக்களின் தலைவர்களுங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொரு ஆட்சிமுறை ஈழத்திலும் காணப்பட்டதற்கான தட யங்கள் உண்டு. வேளிர் எனப்பட்ட இனக்குழுவினரின் வழி வந்தவரே வேளாளராவர். வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியபுளியங்குளத்தில் உள்ள பிராமிக் கல்வெட் டொன்றிற் குதிரைகளின் மேற்பார்வையாளரான வேள் பற்றிப் பேசப்படுகின்றது. இதனால் இவர்களிற் சிலர் குறுநில மன்னர்களாக இருந்த அதே நேரத்தில் இன்னுஞ் சிலர் நிருவாகத்தில் முக்கிய பதவிகளை வகித்தமையையும் இதன் மூலம் அறியமுடிகின்றது. வேள் என்ற இனக்குழுவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே *ஆய்" எனப் பட்ட மற்றுமோர் இனக் குழுவினராவர். தமிழகத்திற் பாண்டிநாட்டில் இவர்கள் சிற்றரசர்களாக விளங்கியவர்கள். இதனை அறியாத ஈழத்துக் கல்வெட்டியலாளர் இதனை ஒரு விருதுப் பெயரான "அய" என வாசித்துள்ளதோடு அரசகுமாரர்களைக் குறிக்கின்றது எனவுங் கருத்துத் தெரிவித் திருந்தனர். * ஆனாற் பிராமிக் கல்வெட்டிற் குறில், நெடில் ஆகிய இரு வடிவங்களுக்கும் ஒரே எழுத்துக் காணப்படுவ தால் 'அ' வை "ஆ" வாகவும் வாசிக்க வாய்ப்புளது. இதனால் இதனை "ஆய்" என இனங்கண்டு கொள்ளுவதே பொருத்தமாகின்றது. இதனுடன் சில சமயஞ் சேர்ந்தும், சில சமயந் தனித்தும் இன்னோர் வடிவமாகிய "அபே" என்ற வடிவங் காணப்படுகின்றது. இதன் மூலவடிவந் தமிழ் “ஒளவை ஆகும். அன்பும், மரியாதையும் இணைந்து நின்று பெண்களை அழைக்கும் மரியாதைக்குரிய வடிவமாகிய இவ் ஒளவைதான் கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய மொழி களில் முறையே அவ்வே, அவ்வ, அப்பே என வழங்கப்படு கின்றது.48 இதனால் "ஆய்" எனப்பட்ட குழுவினர் போன்று இவர்களையும் உள்ளூர் நிருவாகத்தில் ஈடுபட்ட ஒரு குழு வினராகக் கொள்வதே பொருத்தமாகின்றது. இப்பதம் நாட்டின் பிற பகுதிகளிற் காணப்படுவது போல் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளக் கல்வெட்டிலுங் காணப்படுவதோடு இவ்விருதுப் பெயருக்குரியவராக அனுரதி என்ற பெண்ணும் இக்கல்வெட்டிற் குறிப்பிடப்பட்டுள்ளாள்.44
யாழ். - தொன்மை வரலாறு 548 இ

ரஜநாகவின் மகளாகவே அபிஅனுரதியை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது. இது இவ்விருதினைச் சூடிநின்றோருக்கிடையே காணப்பட்ட அரசியல் அந்தஸ்தை எடுத்துக் காட்டுகின்றது. "ஆய்" என்ற விருதினைத் தாங்கிய பெயருடையோர் வட பகுதிக் கல்வெட்டுகளிற் காணப்படாது விட்டாலுங்கூட இவர்களுக்கும் வேளிருக்குமிடையே நிலவிய குலத் தொடர்பு களை நோக்கும் போதும், பிறமாவட்டங்களில் உள்ள கல் வெட்டுகளில் "ஆப்" "அபி" போன்ற வடிவங்கள் காணப் படுவதை அவதானிக்கும் போதும் வேள், அபி போன்று குறுநில மன்னரைக் குறிக்கும் ஆய் என்ற வடிவமும் வவுனியாவிற் காணப்பட்டிருக்கலாமென ஊகிக்க இடமுள்ளது.
இவ்வாறு இப்பகுதியிலமைந்த அரசாட்சி முறை பற்றி ஒரு பொது நோக்காகவே சில விடயங்களைக் கூற முடிகின் றது. "நாகதீப" அல்லது "உத்தரதேஸ்" என அழைக்கப்பட்ட இப்பகுதியில் ஆரம்பத்தில் நிலவிய சிற்றரசுகளே காலகதி யிற் பிரதேச அடிப்படையிலான அரசின் எழுச்சிக்கும் வழி வகுத்திருக்கலாம். இதனைப் பற்றிய விபரங்கள் நமக்குக் கிட்டாவிட்டாலுங்கூட, வல்லிபுரத்திற் கிடைத்துள்ள பொற் சாசனத்திற் காணப்படும் "மகரஜ", (மஹாராஜ) என்ற பதத் தினை நோக்கும்போது இச்சாசனத்தின் காலமாகிய கி. பி. நான்காம் நூற்றாண்டில் இத்தகைய விருதினைச் சூடிய ஒரு மன்னன் இப்பிரதேசம் முழுவதும் ஆட்சி செய்திருக்கலாம் என எண்ண இடமுண்டு. இத்துடன் இதே பொற்சாசனம் இப்பகுதியில் இம்மன்னனின் பிரதேசத் தலைவனாக வடகரையில் "இசிகிரய" என்பவன் ஆட்சி செய்தது பற்றியுங் கூறுகின்றது. இவ்வாறு இப்பகுதி பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்துப் பிர தேசத் தலைவர்களால் ஆளப்பட்டதைச் சூளவம்சமும் ஓரிடத் திற் குறிப்பிட்டுள்ளது. இந்நூல் நான்காவது மகிந்தனின் ( கி. பி. 777 - 797) ஆட்சிக்கெதிராக உத்தரதேசத்து முதலிகள் செய்த கிளர்ச்சி பற்றிக் குறிப்பிடுவதால் இக் குறிப்பு இங்கு நிலை கொண்டிருந்த மாவட்டத் தலைவர் அமைப்பு முறையையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.45
நிற்க, மகாராஜாவான வசபனது ஆட்சியில் மாவட்டத் தலைவர்கள் காணப்பட்டது போன்ற அமைப்பே உக்கிர
O 547 சமூகமும் சமயமும்

Page 290
சிங்கன், மாருதப்புரவீகவல்லி காலத்திலுந் தொடர்ந்திருக் கலாம். யாழ்ப்பாண அரசு காலத்தில் வன்னிக் குடியேற்றம் பற்றிக் கூறும் வையாபாடலும் இத்தகைய தலைவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்ததை எடுத்துக் காட்டுகின்றது.48 இந்த அமைப்பே பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத் திலுந் தொடர்ந்தது. மாவட்டங்கள் பல உள்ளூர்ப் பிரிவுக ளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவை பற்றிய உறுதி யான சான்றுகள் சோழர் காலத்திலிருந்தே நமக்குக் கிடைக் கின்றன. எனினும் பிரர் மிக் கல்வெட்டுகளிற் பருமக கஹபதி, கமிகா போன்ற விருதுப் பெயர்களைச் சூடியிருந் தோர் பற்றிய தகவல்கள் காணப்படுவதால் இவர்கள் நாட் டின் நிருவாகத்தில் மந்திரிகள், சேனாதிபதிகள், நிதியாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவர்களாக இருந்து இவர்களும் இவர்களின் வழி வந்தோரும் மன்னனுக்குப் பக்க பலத்தினை அளித்தனர் எனக் கொள்ளலாம்.
ஈழமும் சோழ அரசின் மாகாணங்களில் ஒன்றாக இணைந் ததைத் தொடர்ந்து சோழ நிருவாகத்தின் வசதிக்காக இது மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. இது பற்றி ஏற்கனவே கூறப்பட்டிருந்தாலுங்கூட இவ்விடத்தில் இதனைக் குறிப்பிடுதலும் அவசியமாகின்றது. இராஜராஜனின் காலத்திலேதான் இவ்வாறு ஈழமுஞ் சோழ அரசின் ஒன்ப தாவது மண்டலமாகியது. அதனை எடுத்துக் காட்டும் விதத் தில் இம்மன்னனின் விருதுப் பெயர் - அதாவது சேர, சோழ, பாண்டிய முடிகளைச் சூடிய மன்னன் என்ற பொருள் தரும் வண்ணமாக மும்முடிச் சோழ மண்டலம் என இப்பிரதேசம் அழைக்கப்பட்டது. பொதுவாகவே மாகாணங்கள் மட்டுமன்றி இவற்றின் கீழுள்ள பிரிவுகளும் மன்னர்களின் பெயரைத் தாங்கி நின்றதைச் சோழக் கல்வெட்டுகளின் மூலம் அவ தானிக்கலாம். தமிழகத்திற் காணப்பட்ட சோழக் கல் வெட்டுகளிற் சோழ மண்டலம், தொண்டை மண்டலம், ராஜ ராஜ மண்டலம், அதிராஜ மண்டலம், விக்கிரமசோழ மண்ட லம், முடிகொண்ட சோழ மண்டலம், மலை மண்டலம், நிகரிலிச் சோழ மண்டலம், வேங்கி மண்டலம் எனப்
பிரதேசப் பிரிவுகள் அழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
யாழ். - தொன்மை வரலாறு 548 .ே

இம்மண்டலங்களின் தலைவர்கள் மண்டல முதலிகள் என அழைக்கப்பட்டனர். இம்முதலி என்ற பதம் மண்டலி, மண்ட லிகள், மண்டலமுடையான் போன்று பலவாறு இக்கல்வெட்டு களில் இடம் பெற்றுள்ளது.47 ஈழத்திலும் இம்மண்டலத்தினை நிருவகித்த மண்டலமுதலியாகச் சோழ இலங்கேஸ்வரன் " என்பவன் விளங்கியதை ஈழத்துச் சோழக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.48
சோழக் கல்வெட்டுகளில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் மாகாணங்கள் மண்டலங்கள் என அழைக்கப் பட்டது போன்று இதன் அடுத்த பிரிவாக வளநாடு என்ற பிரிவு காணப்படுகின்றது. இப்பிரிவுகள் பல மன்னர்களின் பெய ரைக் கொண்டு விளங்கியதை ஈழத்துச் சோழர் காலக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. மாதோட்டமான இராஜ ராஜபுரத்தின் நிருவாகப் பிரிவாக அருள்மொழித் தேவ வளநாடு குறிப்பிடப்படுகின்றது. *அருள்மொழித் தேவன்? என்பது இராஜராஜனது பெயர்களிலொன்றாகும். இவ்வருள் மொழித் தேவ வளநாடு இராஜராஜபுரத்தினையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது போலத் தெரிகின்றது. இங்குள்ள கோயிலை இராஜராஜேஸ்வரத்து மஹாதேவன் கோயில் என இக்கல்வெட்டுக் குறிப்பதோடு இதனை அமைத்தவனாகத் தாழிக்குமரன் என்பவனையும் இங் குள்ள கல்வெட்டுக் குறிக்கின்றது. இவனின் பிறப்பிடந் தமிழ் நாட்டிலுள்ள சிறுகூற்ற நல்லூராகும். 'கிழவன்" என்ற பதம் இவனின் பெயரோடு இணைக்கப்பட்டுள்ளதை நோக்கும்போது இவன் நிலக்கிழானாக அல்லது நிலச் சுவாந்தனாக விளங்கி யமை தெரிகின்றது.
பொதுவாகவே ஈழத்திலுள்ள சோழக் கல்வெட்டுகளிலே தேவன், கிழவன் போன்ற பெயர்கள் காணப்படுவது வழக் கம். இது நிலச்சுவாந்தர்களாக விளங்கிய வேளாள வகுப் பினரையே குறித்து நின்றது. இவர்கள் ஆற்றிய பணிகளுக் காக இவர்களுக்கு நிலங்கள் மானியமாகக் கொடுக்கப்பட்ட தால் இவர்கள் நிலச்சுவாந்தர்களாகியிருக்கலாம். கல்வெட்டி லுள்ள குறிப்புகளை நோக்கும்போது அருள்மொழித் தேவ வள நாட்டில் அதிகாரம் படைத்தவனாகத் தாழிக்குமரன்
() 549 சமூகமும் சமயமும்

Page 291
விளங்கியமை தெரிகின்றது. அரசிற்குரிய பிரத்தியேக அதிகாரங்களுக்கூடாக நிலங்களை வழங்குதல், வரிகளை ஒதுக் கீடு செய்து நிறுவனங்களுக்கு அளித்தல் போன்ற பணிகளை இவன் செய்ததை நோக்கும்போது இக்கால அரச நிருவாகத் தில் அரசனின் பொறுப்புகளிற் சிலவற்றை நிருவாக உத்தி யோகத்தர்களும் மேற்கொண்டதை இது எடுத்துக் காட்டுகின் றது எனலாம். இதே போன்று இதன் அடுத்த பிரிவாகிய நாடு வடபகுதியிலுங் காணப்பட்டதைப் பூநகரிப் பகுதியிலுள்ள இடப்பெயரொன்று எடுத்துக் காட்டுகின்றது. தமிழகச் சோழக் கல்வெட்டுகளில் ஈழத்திற் காணப்பட்ட துறைமுகங்களி லொன்றாக மட்டுவில்நாடு குறிப்பிடப்படுகின்றது. இது பூநகரி மாவட்டத்திலுள்ளது என இனங் காணப்பட்டுள்ளதால் இத்துறைமுகப் பட்டினம் வளநாட்டின் உப பிரிவான நாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பொலநறுவையிற் கிடைத் துள்ள அதிராஜேந்திரனுடைய கல்வெட்டில் 8 நாட்டார் " என வருங் குறிப்பு அப்பகுதியிற் காணப்பட்ட இப்பிரிவையே எடுத்துக் காட்டுகின்றது.
நாட்டின் அடுத்தபிரிவு கோட்டமெனச் சோழர் காலத் தில் அழைக்கப்பட்டது. ஈழத்துக் கல்வெட்டுகளில் இது பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் பூநகரிப் பகுதியில் மட்டுவில் நாட்டிற்குத் தெற்கே உள்ள கரிக்கோட்டம் என்ற பெயர் இத்தகைய பிரிவு வடபகுதியிலுங் காணப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்ப்பாணக் குடா" நாட்டிற் காணப்படுஞ் செம்பியன் பற்று " என்ற இடப் பெயர்கூடச் சோழ நிருவாகத்தின் ஒரு உபபிரிவைக் குறிக்க லாம். செம்பியன் என்பது சோழரைக் குறிக்கும் பதமாகை யாற் செம்பியன் பற்றானது சோழ நிருவாகத்தின் ஒரு பிரிவே எனக் கொள்ளுதல் தவறன்று. பற்று என்ற இப் பதம் வடக்கே வேரூன்றியதை வன்னிப் பகுதியை "அடங்காப் பற்று ’ ‘பெருங்களிப்பற்று" என்று தமிழ் நூல்கள் குறிப்பது எடுத்துக் காட்டுகின்றது.
சோழர் காலத்தில் உள்ளூர் நிருவாகஞ் சிறப்புடன் விளங் கியதற்கான கல்வெட்டாதாரங்கள் தமிழகத்திற் கிடைப்பது போன்று ஈழத்திலுங் கிடைத்துள்ளன. இத்தகைய சான்றுகள்
யாழ். - தொன்மை வரலாறு 55o O

வடபகுதியிற் காணப்படாவிட்டாலுங்கூட ஈழத்தின் பிறபகுதி களிற் காணப்பட்ட அமைப்புகளை ஒத்ததான அமைப்புகளே வடபகுதியிலுங் காணப்பட்டன எனக் கொள்ளுதல் தவறன்று. தமிழகத்திலே தேவஸ்தானங்களை நிருவகிப்பதற் காகத் தேவஸ்தான சபைகள் இயங்கின. இவ்வாறே பிராமணர் வாழ்ந்த சதுர்வேதி மங்கலம் " போன்ற குடியி ருப்புகள் சபா " என்ற உள்ளூர்ச் சபையின் கீழ் இயங் கின. பிராமணரல்லாத ஏனையோர் வாழ்ந்த ஊர்கள் 'ஊர்' என்ற சபையில் இயங்கின. இவை குறி, பெருங்குறி மகா சபை, பெருங்குறிப் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டன. வணிகர்கள் வாழ்ந்த பட்டினங்கள் சுயாட்சி கொண்ட வீர பட்டினங்களாக வளர்ச்சி பெற்றன. சோழர் காலத்திலே தமிழகத்தைப் போல் ஈழத்துத் தேவஸ்தானங்களுஞ் சபை களால் நிருவகிக்கப்பட்டன என ஊகிக்க இடமுண்டெனினும் இதற்கான கல்வெட்டாதாரங்கள் இற்றைவரை கிடைக்க வில்லை. பிராமணர்கள் வாழ்ந்த ஊர்கள் ( சதுர்வேதி மங்கலம் ) தனியான சபைகளாக இயங்கின. கந்தளாயிற் சோழப் பேரரசனான முதலாவது இராஜராஜனின் 49 காலத்திற் குரிய இராஜராஜச் சதுர்வேதி மங்கலம் பற்றிய சான்றுகள் காணப்படுவதால் ஈழத்தின் வடபகுதியிலும் பிராமணக் குடி யிருப்புகள் ' சதுர்வேதி மங்கலம் " என அழைக்கப்பட்ட அமைப்பின் கீழுள்ள சபைகளால் நிருவகிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
கந்தளாயிற் கிடைத்த சோழ இலங்கேஸ்வரனின் கல் வெட்டிற்0ே பெருங்குறிப் பெருமக்கள் என அழைக்கப்பட்ட இச்சபையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய சான்றுகள் காணப்படுவதாற் சோழராட்சிக்குட்பட்ட வட பகுதியிலும் இத்தகைய அமைப்பு இயங்கிய தென்று யூகிப் பதிலே தவறில்லை. இவ்வாறே வணிகர்கள் வாழ்ந்த இடங்களைச் சுயாட்சி கொண்ட பட்டின சபைகள் நிருவகித் தன.51 ஐஞ்ஞாற்றுவர் போன்ற வணிக கணங்கள் அமைத்த இத்தகைய சுயாட்சி கொண்ட நான்கு பட்டினங்கள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இவை வாகல்கட, பதவியா, பண்டுவாசுநுவர, விகாரகின்ன ஆகிய
O 551 சமூகமும் சமயமும்

Page 292
இடங்களிற் காணப்பட்டதோடு அவை முறையே நானா தேசிகள் வீரபட்டினம், ஜயம்பொழில் வீரபட்டினம், பண்டுவாச நுவர வீரபட்டினம், விகாரகின்ன வீரபட்டினம் எனவும் அழைக்கப்பட்டன. வடபகுதியிலும் ஐஞ்துாற்றுவர் போன்ற வணிக கணங்களும் பிறவுஞ் சோழர் காலத்திற் செல்வாக் குடன் காணப்பட்டதால் இப்பகுதியிலும் இத்தகைய வீரபட்
டினங்கள் இயங்கின என யூகிக்கலாம். மேற்கூறிய கருத்து
களை உறுதி செய்வனவாக இப்பகுதிகளில் எதிர்காலத்தில் வெளிவருங் கல்வெட்டாதாரங்கள் அமையலாம்.
இத்தகைய அமைப்புகளின் செயலாக்கம் பற்றித் தமிழகத் திற் கிடைக்குஞ் சோழக் கல்வெட்டுகள் தருந் தகவல்களை நோக்கும்போது ஈழத்திலும் இம்முறையே பின்பற்றப்பட்டது என யூகிக்கலாம். இத்தகைய அமைப்புகள் வாட் " என்று ஆங்கில மொழியில் அழைக்கப்படுங் குடும்புகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. இக்குடும்புகளில் வாழும் ஆண்கள் எல்லோருந் தமது பெயர்களை ஒலையில் எழுதிக் குடும்புக்கென ஒதுக்கப் பட்ட பானையில் இடுவர். பின்னர் எல்லாக் குடும்பு களிலுள்ள பானைகளுஞ் சேர்க்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அரச உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குடும்புக்குமுரிய ஒலைகள் பானையிலிட்டுக் குலுக்கப்பட்டு ஒரு சிறுவனைக் கொண்டு அவ்வோலைகளில் ஒன்றை எடுக்கச் செய்வதன் pavh அவ்வக்குடும்புக்குரிய அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வர்கள் "வாரியம்" என அழைக்கப்பட்ட சிறு நிருவாக சடை யாகப் பிரிந்து கருமமாற்றினர். இத்தகைய நிருவாக சபை களில் இயங்குவோரின் தகுதி பற்றியுங் கல்வெட்டுகளிற் குறிப்புகள் உள. தமிழகச் சோழக் கல்வெட்டுகளிலே தோட்ட வாரியம், ஏரிவாரியம், கழனிவாரியம் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இத்தகைய வழக்குகளே ஈழத்திலுங் காணப்பட்டன எனக் கொண்டாலுங்கூட இவற்றின் செயற் பாடுகளை அறிந்து கொள்ளுவதற்குரிய கல்வெட்டாதாரங்கள்
நமக்குக் கிடைக்கவில்லை.
யாழ்.  ைதொன்மை வரலாறு 552

எனவே, தமிழகத்தைப் போன்று ஈழத்து நிருவாகத்திலும் நிலக்கிழார் வகுப்பினரே முக்கியம் பெற்றிருந்தனர் என்பதை மேலே குறித்தோம். ஈழத்திற் காணப்படுஞ் சோழர் காலக் கல்வெட்டுகளிற் காணப்படும் உடையான், கிழவன், நாடாள் வான், வேளான், தேவன், ராயன், அரையன், பணிமகன்' போன்ற சொற்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இவர்கள் யாவரும் நிலக்கிழார்களே. தமிழகத்தில் இருந்து சோழரின் தலைநகராகிய பொலநறுவைக்கு நிர்வாகிகளாக வந்தவர்கள் அவர்களின் நாட்டின் பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுட் பூரீ மோகனூர் உடையான், திருப்புவனதேவன், பூg தில்லைக்கரசு தியாகசிந்தாமணி மூவேந்த வேளான், விறப்பேட்டு நாட்டு மங்கலப்பாடி வேளான், சோழப் பல்லவரையன் ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்கன. பதவியாவில் "உடையான்" என்ற பதவி யுடன் செயலாற்றிய சோழ நிருவாகிகள் பற்றிய குறிப்புண்டு. உடையான் என்ற பதவியை விடச் சிறுதானம், பேரரையன், போன்ற பதவிகளும் இக்காலத்திற் காணப்பட்டதை மாதோட் டத்திற் கிடைத்துள்ள சோழக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின் றன. மாதோட்டத்திற் சோழ நிருவாகிகளாக விளங்கிய தாழிக் குமரன் தமிழகத்திலுள்ள சிறுகூற்ற நல்லுரிலிருந்தும், தேவன் தமிழகத்திலுள்ள சிறுகுளத்தூரிலிருந்தும் வந்தமையை இங்குள்ள கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இவர்களிலே தாழிக்குமரன் என்பவன் உடையான் என்ற பதவியிலும், தேவன் என்பவன் சிறுதானம் என்ற பதவியிலுங் காணப் பட்டமை அவதானிக்கத்தக்கது.
சோழரின் நிருவாகத்தில் இராணுவமும் முக்கிய பங். கினை வகித்தமை பற்றித் தெரியவருகின்றது. கல்வெட்டுகளிற் காணப்படும் மூன்றுகைமகாசேனை, வேளைக்காரர், அணுக்கர், அகம்படி போன்ற பதங்கள் இராணுவத்திற் காணப்பட்ட பல் வேறு பிரிவினரை எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் வேளைக்காரரின் படைப்பிரிவில் வன்னியர்" என அழைக்கப் பட்டோர் கடமையாற்றியதற்கான குறிப்புகள் உள. இவர் களுக்கு இராணுவக் கடமைகளுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் வன்னிமைகள் என அழைக்கப்பட்டன. இதனால் இத்தகைய
O 553 சமூகமும் சமயமும்

Page 293
வன்னியருஞ் சோழ இராணுவத்தில் இக்காலத்திற் காணப்பட் டிருக்கலாம் எனக் கொள்ளலாம். வையாபாடலில் யாழ்ப்பாண அரசு காலத்தில் அடங்காப்பற்றிலேற்பட்ட வன்னியர் குடி யேற்றத்திற்கு முன்னர் இங்கு பல்வேறு பகுதிகளிலுங் காணப் பட்ட தலைவர்களைப் பற்றிக் காணப்படுங் குறிப்புகள் இவ் வாறு எண்ணத் தூண்டுகின்றது. இத்தகைய தலைவர்களை வென்றே வன்னியர் இப்பகுதியிற் குடியேற்றங்களையும் ஆட்சி யையும் அமைத்ததாக வையா, வையாபாடல் ஆகியன
குறிக்கின்றன.
வருமானமும் வரிகள் பற்றியுமான சான்றாதாரங்களுஞ் சோழர் காலத்திற் காணப்படுகின்றன. நிலங்க்ள் அவற்றிற் கிடைத்த வருமானங்களுக்கேற்பப் டிரிக்கப்பட்டு வரிகள் அற விடப்பட்டன. நீர் வசதியுள்ள நிலங்கள் நன்செய் நிலமெனவும் ஏனையவை புன்செய் நிலங்களெனவும் பிரிக்கப்பட்டிருந்தன பொதுவாக ஈழத்து நிலங்கள் அவற்றின் விளைவுகளின் தன் மைக்கேற்பவே அவற்றின் அளவு மதிப்பிடப்பட்டாலுஞ் சோழர் காலத்திற் சில குறிப்பிட்ட அளவைக் கருவிகளைக் கொண்டு நிலங்களை அளக்கும் மரபு காணப்பட்டதை அவர்களின் கல் வெட்டுகளில் இடம்பெறும் *உலகளந்தகோல் போன்ற பதங்கள் எடுத்துக் காட்டுகின்றன: நிலங்களின் அளவு வேலி" என அழைக்கப்பட்டது. இது பல்வேறு பரிமாணங்களாக 112, 14 118, 1120, 1180, 1 / 10 எனப் பிரிக்கப்பட்டிருந்தது.
வேலியின் உபபிரிவுகளாக மா, குழி, காணி, முந்திரிகை ஆகியன குறிப்பிடப்படுகின்றன. திரவங்களாகவுந் திண்மங் களாகவும் பொருட்களை அளக்கும் முறையும் இக்காலத் திற் காணப்பட்டது. ஆடவல்லான் அல்லது இராஜசேகரி இத்தகைய அளவு முறைகளில் ஒன்றாகும்.62 வரி சில சமயம் பணமாகவும், பெருமளவுக்கு விளை பொருட்களாகவும் பெறப்பட்டது. விளைபொருட்களின் மூலம் பெறப்பட்ட வரிக்கு நெல்முதல் " எனப் பெயரிடப்பட்டது. இலுப்பை மரம் போன்றவற்றில் மட்டுமன்றிச் சுங்கவரி சந்தைகளின் விற்பனையாற் கிடைக்கும் வரி ஆகியனவற்றின் மூலமும் வருமானம் பெறப்பட்ட-து: அத்தோடு போக்குவரத்துக் 5-606
யாழ். - தொன்மை வரலாறு 554 CN

களிலும் வரிகள் அறவிடப்பட்டன. சோழராட்சி மறைந்த பின்னர் இப்பகுதியில் ஆட்சி செலுத்திய பாண்டியப் பிரதானி களது நிர்வாகத்திலும் மேற்கூறிய அமைப்பு முறைகள் விரிவடைந்தன.
மாவட்ட ஆட்சி மரபே சாவகனின் ஆட்சியிலுங் காணப் பட்டதைத் " திரிஸிங்ஹளே கடயிம் ஸஹ வித்தி " என்ற நூல் எடுத்துக் காட்டுகின்றது. இது ஐந்து மாவட்டங்கள் இக் காலத்திற் காணப்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளது. அவை ஜவரிபரட, மாரச்சிரட, பலதடிரட, முதுந்து மல்லி யாரட, கணுக்கிணிரட என்பவை ஆகும். இவை முறையே சாவகச்சேரி வட - தென்மராட்சி), முள்ளியவளைக்கு அருகிலே யுள்ள பகுதி, முள்ளியவளை, கணுக்கேணி என்பவை ஆகும்.53 இத்தகைய மாவட்ட அமைப்பே யாழ்ப்பாண அரசின் ஆட்சி யின் ஆரம்பத்தில் நிலவியதை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறுகின்றது.54
* இப்படியே அவ்வப்பிரபுக்களை அவரவர் அடிமைக் குடி களுடனே அவ்வவ்விடங்களில் இருத்திய பின், வல்லிய மாதாக்கன் என்னும் பராக்கிரம சூரனை மேற்பற்றுக்கும், செண்பகமாதாக்கன் என்னும் சூரிய வீரனைக் கீழ்ப்பற் றுக்கும், இமையாணமாதாக்கன் என்னும் உத்தண்ட வீரனை வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கன் என்னும் விசய பராக்கிரமனைத் தென்பற்றுக்கும் அதி கா ரி களாக நிறுத் தி, உத்தண்ட வீரசிகாமணியாகிய வீரசிங்கன் என்பவனைச் சேனாபதியாக்கி ஒரு சுபதினத் திலே நல்ல முகூர்த்தமிட்டு மகுடாபிஷேகம் பெற்று, நகரி வலம் வந்து, சிங்காச்னம் ஏறிப் பூலோக தேவேந்திரனாய் அரசாண்டான்."
இத்தகைய குறிப்புகள் அக்காலத்தில் யாழ்ப்பாணம் நான்கு மாவட்டங்களாக ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்திற் பிரிக் கப்பட்டு அதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.
O 555 சமூகமும் சமயமும்

Page 294
ஆனாற் சிங்கள மக்களின் தலைநகராக அநுராதபுரம், பொலநறுவை ஆகியன தொடர்ந்து இயங்கியது போலச் சமகாலத்தில் வடபகுதியிலும் பல தலைநகர்கள் பல்வேறு காலங்களிற் காணப்பட்டன போன்று தெரிகின்றது. யாழ்ப் பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையிற் கந்தரோடை ஒரளவுக்கு அநுராதபுரத்தைப் போன்று தலைநகராக இயங்கு வதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தது. ஆனாற் பெருநிலப் பரப்பில் எந்தவொரு குறிப்பிட்ட இடமுந் தொடர்ச்சியாக இப்பகுதியின் தலைநகராக விளங்கியதென்று கூறுவதற் கில்லை. இத்தகைய நிருவாகத்திற் குடாநாடு, பெருநிலப் பரப்பு ஆகியன ஒரே நிருவாக அமைப்பின்கீழ் இயங்கியதா அல்லது ஒன்றின் மேலாணையின்கீழ் மற்றையது இயங்கியதா அல்லது சிறு சிறு பிராந்தியத் தலைநகர்களின் கீழ் இவை நிரு வகிக்கப்பட்டனவா என்பது பற்றித் திட்டவட்டமாக அறிந்து கொள்வதற்கும் போதிய தடயங்கள் இல்லை. ஆனால் இப் பகுதியிற் சில குறிப்பிட்ட காலங்களிற் சில அரசியல் மையப் பீடங்கள் ஏனையவற்றைவிட வலுவாகக் காணப்பட்டிருக்க, அவற்றின் மேலாணையை ஏனையவை ஏற்றும் இருக்கலாம். எவ்வாறாயினும் இது பற்றிய விபரங்களை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள்தான் தரமுடியும்.
BFD u lb இந்துமதம்
பண்டைய ஈழத்திற் பெளத்த மதத்தின் வருகைக்கு முன்னர் நிலவிய வழிபாட்டு நெறிகள் பொதுவாக இந்துமத நெறிகளே எனக் கொள்ளப்பட்டாலுங்கூட இவற்றுள் மூன்று பகுதிகளைத்தான் அடையாளங் காண முடியும். இவற்றின் அடித்தள நெறியாக அமைவது இந்நாட்டுப் பூர்விகக் குடிக ளின் யசுஷ், நாக வழிபாடாகும்.55 இவற்றோடு பின்னர் ஈழத் திற்கு நாகரிகத்தினைப் புகுத்திய திராவிடரின் வழிபாட் டம்சங்கள் சங்கமித்து மேலோங்கின. இவ்வழிபாட்டு நெறி களிலே தமிழகத்தைப்போல் ஆரிய வழிபாட்டு நெறிகளுஞ் சங்கமமாகி உருவானதே இந்து மதமாகும். பொதுவாக யகஷ் என்றாற் பூசிக்கப்படுபவர் அல்லது பூசிக்கத்தக்கவர் என்பது
யாழ். - தொன்மை வரலாறு 556 கு

பொருளாகும். இத்தகைய வழிபாடானது பண்டைய காலத்தில் வழக்கிலிருந்த இயற்கை வழிபாடாகும். இயற்கைப் பொருட் களைத் தெய்வமுறைப் பொருட்களாக மட்டுமன்றித் தெய்வங்களாகவும் பேணி இயற்றப்பட்டதே இவ்வழி பாட்டு முறையாகும். இத்தகைய பொருட்களில் மரம், D6096) மிருகங்கள் ஆகியன வழிபடப்பட்டதோடு நாளடைவிலே தெய்வங்களோடு இவைகள் இணைக்கவும் பட்டன. கடவுளருக்கு உருவங் கொடுத்து வழிபடப்பட்ட தோடு அபிஷேகஞ் செய்தல், பூசை வழிபாடு ஆகியனவும் இவற்றில் அடங்கின என்று ஆனந்தக்குமாரசாமி கருதுகின் றார்.56 திராவிட வழிபாட்டு நெறியில் மேன்மை பெற்றுக் காணப்பட்ட உருவவழிபாடு, பூசைவழிபாடு ஆகியன இவற் றில் இருந்து பெறப்பட்டனவேயாகும். இவ்வாறுதான் யக்ஷ வழிபாட்டில் ஒரம்சமாக விளங்கிய மரவழிபாடே பின்னர் கோயிலிலே தலவிருட்ச வழிபாடாக வளர்ச்சி பெற்றது. பழைமையான இவ்வழிபாடு பற்றி மகாவம்சம் போன்ற நூல் களிற் காணப்படுங் கி. மு. 6ஆம், 4ஆம் நூற்றாண்டுகளுக் குரிய ஐதீகங்களிற் குறிப்புகளுண்டு. விஜயன், குவேனி கதை யில் மட்டுமன்றிக் கி. மு. 4ஆம் நூற்றாண்டில் அநுராத புரத்தில் ஆட்சி செய்த பண்டுகாபயனின் காலத்தில் யசுஷ் கடவுளர்க்கு அவன் அமைத்த கோயில்கள் பற்றிய குறிப்பு களும் உள.57 இதனால் இக்காலத்தில் வடபகுதியிலும் இவ் வழிபாட்டு நெறிகள் பரந்திருந்தன எனக் கொள்ளலாம்.
இவ்வாறே நாக வழிபாடு பற்றியும் புத்தர் இந்நாட்டின் மீது மேற்கொண்ட விஜயங்களின் போது சந்தித்த நாக அரசர்கள் பற்றியும் மகாவம்சக் குறிப்புகளில் மட்டுமன்றிப் பிராமிக் கல்வெட்டுகளிலுஞ் சான்றுகள் உள.58 நாகத்தினை வணங்கிய பூர்வீகக் குடிகளே நாகர்கள் என அழைக்கப்பட் டனர். நாக வணக்கம் இன்றுந் தமிழர் - சிங்களவர் மத்தியில் நிலைத்து நிற்பது இதன் பழைமைக்குந் தொடர்ச்சிக்குஞ் சிறந்த உரைகல்லாகும். வடபகுதியில் நாக வணக்கம் மேன்மை பெற்றிருந்ததைப் பழைய நூல்களில் இப்பகுதி நாகதீப, நாகநாடு என அழைக்கப்பட்டமை எடுத்துக் காட்டு கின்றது. அவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக்
9 557 சமூகமும் சமயமும்

Page 295
கல்வெட்டுகளிலும் ஈழத்தின் பிற பகுதிகளிற் காணப்படுவது போன்று நாக ? என்ற பெயருடைய மன்னர்கள் காணப் பட்டமை பற்றிக் குறிப்பிடப்படுவது இதன் பழைமையை மேலும் உறுதி செய்கின்றது.89 அத்துடன் இன்றும் வடபகுதி பிற் காணப்படும் நாகபூஷணி அம்மன் ஆலயம், நாகர் கோயில் ஈஸ்வரன் ஆலயம் ஆகியன இந்நாக வழிபாடு பின் வந்த தாய்த்தெய்வ, சிவன் வழிபாடுகளோடு சங்கமித்ததையே எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய சங்கமிப்பின் மூலம் பல பழைய யக்ஷ - நாக வழிபாட்டம்சங்கள் பின் வந்த திராவிட வழிபாட்டம்சங்களுடன் இணைந்தன.
திராவிட வழிபாட்டம்சங்களில் முதன்மை பெறுவனவாகத் தாய்த் தெய்வம், சிவன், முருகன், திருமால் ஆகியோர் விளங்குகின்றனர். யாழ்ப்பாண வைபவமாலை இவற்றுள் அம்பாள், சிவன், முருக வழிபாட்டம்சங்கள் வடக்கில் விஜயன் காலத்தில் மேன்மை பெற்றிருந்ததைப் பின்வருமாறு குறிக்கின்றது.60
* அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண்டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலை நிறுவி, மேற் றிசைக்கு மாதோட்டத்திற் பழுதுபட்டுக் கிடந்த திருக் கேச்சுரச் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்றிசைக்கு மாத்துறையிற் சந்திரசேகரேச்சுரன் கோவிலை எழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பதியிலே திருத்தம்பலேச்சுரன், திருத்தம்பலேசுவரி கோவில் களையும், அவைகளின் சமீபத்திலே கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்து, அவ்வாலயங்கட்குப் பூசனை நடாத்தும்படி நீலகண்டாசாரியரின் மூன்றாங்குமாரன் வாமதேவாசாரியன் என்னும் காசியிற்பிராமணனையும் அவன் பன்னியாகிய விசாலாட்சியம்மாளையும் அழைப் பித்து அக்கிரகாரம் முதலிய வசதிகளுங் கொடுத்து இருத்தி வைத்தான். அக்கோவில் அவ்விடத்துத் தோன்றிய காரணத்தால் அந்தக் கிராமம் கோவிற் கடவை எனப் பெயர் பெற்றது. "
யாழ். - தொன்மை வரலாறு 558 (

மேற்கூறிய குறிப்பிற் சில பிற்கால நிகழ்ச்சிகளுஞ் சேர்த்துக் கூறப்பட்டாலுங்கூட, இவை ஒரு பழைய வழிபாட்டு மரபு நெறி பற்றிய செய்தியையே தருகின்றன என்பதிற் சந்தேக மில்லை. நான்கு திசைகளிலுங் கோவில்க்ளை அமைக்கும் மரபு சங்ககாலத்தில் நான்கு திணைகளின் தெய்வங்களைக் குறித்து நின்ற மரபின் வழிவந்ததென்றாலுங்கூட ஈழத்தின் மத்தியகாலப் பகுதியிற்றான் இது ஒரு செல்வாக்குள்ள மர பாக வளர்ச்சி பெற்றிருந்தது. அத்துடன் தம்பலகாமக் கேர்ணேஸ்வரர் ஆலயங்கூடப் போத்துக்கேயராலே தகர்க்கப் பட்டதன் பின்னர் கட்டப்பட்ட ஆலயம் என்பது வரலா றாகும். இதனாலே யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியரி திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குப் பதிலாக்த் தம்பலகாமக் கோணேஸ்வரத்தினைத் தவறுதலாகக் குறித்துள்ளார் போலத் தெரிகின்றது. இதேபோன்றுதான் கதிரை ஆண்டார் கோயில் பற்றிய செய்தியுமாகும். கதிரைமலை என்பது கந்தரோடையைக் குறித்தது என்று கொள்ளப்படுமாயின் அப்பகுதியிற் சிறப் புற்ற ஆலயமொன்றே இவ்வாறு இந்நூலிற் குறிக்கப்பட்டுள் ளது போலத் தெரிகின்றது. உக்கிரசிங்கனின் குலதெய்வ மாகப் பிற்காலத்திற் கதிரைமலையிலுள்ள முருகன் குறிக் கப்பட்டுள்ளமையே இவ்வாறு யூகிக்க வைத்துள்ளது.
எவ்வாறாயினும் மேற்கூறிய வழிபாடுகள் ஈழம் முழுவதிலுங் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் காணப்பட்ட வழிபாட்டு நெறி களே என்பதைப் பிற இலக்கியத் தொல்லியற் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆதலால் இவ்வழிபாட்டு நெறிகளில் ஒன்றாகிய சிவவணக்கம் பற்றி முதலில் நோக்குவாம். இவ் வழிபாடு கி. மு. நான்காம் நூற்றாண்டில் அநுராதபுரத்திலர சாண்ட பண்டுகாபய மன்னனின் ஆட்சிக் காலத்தோடு இணைக் கப் பட்டுள்ளமையானது இதற்குரிய பழைமையை எடுத்துக் காட்டுகின்றது. இம்மன்னன் சிவிகசாலா, சோதிசாலா என்ற இரு வழிபாட்டிடங்களை அமைத்தானென மகாவம்சங் கூறு கின்றது.81 இவற்றுக்கு விளக்கங் கொடுத்த பரணவித்தானா இவை முறையே பிராமணர் தங்கியிருந்து மந்திரம் உச்சரிக்கும் இடம், லிங்க வழிபாட்டிற்குரிய இடம் என்ற இரு பொருள் களைத் தரும் என்றார்.62 இதனை உறுதிப்படுத்துவதாக
O 55g சமூகமும் சமயமும்

Page 296
ஈழத்தில் அரசர்கள் குடியிருந்த பெயர்களும் பிராமிக் கல் வெட்டுகளிற் காணப்படுஞ் சிவனோடு சம்பந்தமுடைய பெயர் களும் அமைகின்றன. மகாவம்சம் பண்டுகாபயனின் தந்தையின் பெயரை முடசிவ என்கின்றது.83 இவ்வாறே பிராமிக் கல் வெட்டுகளிற் சிவ, சிவரக்கித (சிவனாற் பாதுகாக்கப்படுபவன்), சிவபாவித (சிவனாற் பரிபாலிக்கப்படுபவன்) என்ற பதங்களுங் காணப்படுகின்றன.64 இதனால் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுஞ் சிவ வணக்கத் தலம் திருத்தம்பலேசுவரர் ஆலயமும் வடபாலமைந்திருந்த திருக்கேதீஸ்வரமுமாகும்.
இவ்வாறே ஈழத்தின் மிகப்பழைய நாணயங்களிலுஞ் சிவ வணக்கத்தோடு தொடர்புடைய "எருது’ வடக்கே கந்தரோடை யிலும்5ே பெருநிலப்பரப்பில் மாதோட்டம்,66 முல்லைத்தீவு7ே ஆகிய இடங்களிலுங் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறும் நந்தி என்ற பெயரும் சிவனது வாகனமாகிய எருதினைக் குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.98 இவ்வாறே சிவவணக்கத்தின் ஒரம்ச மாகிய லிங்கவணக்கத்தின் எச்சமாக விளங்குஞ் சுடுமண்ணினா லமைந்த லிங்கங்களும் வடக்கே உருத்திரபுரம் (படம் - 66), மாமடுவ போன்ற இடங்களிற் காணப்படுகின்றன.69 சிவ வழிபாடு இக்காலத்திற் சிறந்து விளங்கினாலும் அதன் தொடர்ச்சியை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகுவதற் குரிய சான்றாதாரங்கள் நமக்குக் கிட்டவில்லை. கி. பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய சம்பவமாக யாழ்ப்பாண வைபவமாலை கீரிமலை பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.70
* சிங்களவர் நிழல் வசதிக்கும் தண்ணிர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களிற்றங்கி அக்கோவிற் பிரகாரங் களில் மீனைக்காயப் போட்டும், திருக்கிணறுகளில் தண் ணிர் அள்ளவுந் தொடங்கினதனால் அங்கிருந்த பிரா மணர்கள் கோவில்களைப் பூட்டிக் கொண்டு அப்புறத்தே ஒதுங்கி விட்டார்கள். கோவில்களிற் சிலகாலம் பூசை இல்லாமலிருந்தது".
சிவ வழிபாட்டோடு இணைந்ததுதான் சக்தி வழிபாடாகிய அம்பாள் வழிபாடாகும். யாழ்ப்பாண வைபவமாலை "திருத் தம்பலேசுவரி என்று கூறுவது அம்பாளையே எனலாம். சக்தி
யாழ். - தொன்மை வரலாறு Eeo இ

வழிபாடு, சிவவழிபாட்டோடு இணைந்தாலும் பண்டைக் காலத் திலே அது தனித்துவமான @@ பாரம்பரியத்தினைக் கொண்டிருந்தது. விவசாய அபிவிருத்தியிலீடுபட்ட மக்கட் கூட்டத்தினர் விவசாய விருத்தியை அளித்த பூமாதேவியைத் தாயாகக் கொண்டிருந்தனர். தாய்மையின் சிருஷ்டி போன்றே நிலத்தின் விளைவுகளும் அமைந்தன. இதனாலே தாயைப் போன்று நிலமகளும் உருவகப் படுத்தப்பட்டாள். இதனாற் போலும், சமூகவியலாளர் பெண்வழிச் சமுதாய அமைப்பே உலகில் ஆதியானதென்றும் இதன் பின்னர்தான் ஆண்வழிச் சமுதாய அமைப்புத் தோன்றிய தென்றுங் கூறுவர். திராவிட சமுதாயமும் பெண்வழிச் சமுதாய அமைப்பைப் போற்றிய தொன்றாகும் இதனாற்றான் சங்க இலக்கியங்களிற் சொற்றவை முக்கிய தெய்வமாகப் போற்றப்படுகின்றாள். ஈழத்துப் பாளி நூல்கள் " கொற்றவை ’ என்ற பதத்தினைக் 6}} dolfT6Y7Fr விட்டாலுங்கூட, இவை குறிக்கும் " யகசி வழிபாடு இத் தாய்த் தெய்வ வழிபாட்டையே குறித்தது எனலாம். இத னால் மகாவம்சத்திற் பண்டுகாபயன் கால நிகழ்வுகளிலொன் றாக அவன் யக்ஷர்களான வடமாமுகி, பச்சிமாராணி, சேதி போன்றோர்க்குக் கோயிலமைத்தான் என்ற செய்தியானது நமது நாட்டில் ஆதியில் வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழி பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. அதுவே யகூஷி வழி பாடாக இந்நூல்களில் விளிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம், மாமடுவ ஆகிய இடங்களிற் கிடைத்துள்ள சுடுமண்ணினாலான பெண்ணுருவில் அமைந்துள்ள பாவைகள் இவ் வழிபாட்டின் பழமைக்குச் சிறந்த உரைகல்லாகின்றன (படம் - 66). இவ்வழி பாட்டு நெறியாளரே பின்னர் பெளத்தத்தினைத் தழுவியதும் பழைய தாய்த்தெய்வ நெறிகளையும் பெளத்தத்தோடு இைைவத்துக்கொண்டனர். இதனைப் பெளத்த அழிபாடுகளி டையே காணப்படும் யசுழி, நாகி ஆகியவற்றின் உருவச்சிலை சள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய கருத்தினை ஈழத்தின் மிகப்பழைய பெளத்த கட்டிடங்களாகிய அபயகிரி சேதவனராம ஆகியனவற்றுட் காணப்படும் புடைப்புச் சிற்பங் களாய் அமைந்துள்ள யசுழி, நாகி ஆகியனவற்றின் சிலைகள் உறுதிசெய்கின்றன. அபயகிரிவிகாரையிற் கையிலே தாமரை மலருடன் காணப்படும் பெண்தெய்வம் ஒன்றுளறு.
561 சமூகமும் சமயமும்

Page 297
இதனை லக்ஷமியின் உருவம் எனக் கொள்ளலாம். இவ்வாறே சேதவனராமவிற் காணப்படும் யக்ஷயின் வலக்கையிலும் இன் னொரு பெண்ணின் இடக்கையிலுந் தாமரை மலர்கள் உண்டு,71
இச்சந்தர்ப்பத்திற் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் லக்ஷமி பற்றிய சான்றுகளைக் குறிப்பிடுவதும் அவசியமாகின் றது. இக்கல்வெட்டில் லக்ஷமி என அழைக்கப்பட்ட ஒருபெண் இச் சொல்லின் பாளி வடிவத்தில் "லசி" என்ற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளாள்.72 சங்க இலக்கியங்களில் லசஷ்மி * திரு " என அழைக்கப்பட்டுச் செல்வத்தின் தலைவியாகப் போற்றப்பட்டுள்ளாள். இத் திரு என்ற வடிவமும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் உண்டு. இவ்வாறு ஈழத்திலும் இவள் போற்றப்பட்டதை பிராமிக் கல்வெட்டுகள் மட்டு மன்றி நாணயங்களும் எடுத்துக் காட்டுகின்றன. வடபகுதி யிற் * புராண" என அழைக்கப்பட்ட மிகப்பழைய நாணய வகையைத் தொடர்ந்து புழக்கத்திற்கு வந்தவை * லக்ஷமி " நாணயங்களாகும்.73 இவற்றின் முன்பக்கத்திலே தாமரை மலரிலே தாமரை மொட்டுக்களைக் கைகளிலேந்தி நிற்கும் பாவ னையிலுள்ள லக்ஷமியும் அத்தெய்வத்திற்கு இருமருங்கிலும் இரு யானைகள் அபிஷேகஞ் செய்தலுஞ் சித்திரிக்கப் பட்டுள்ளன. இதன் மறுபக்கத்திலே தண்டுடன் கூடிய சுவஸ்திகா சித்திரிக்கப் பட்டுள்ளது. இக் கஜலக்ஷமி மட்டுமன்றிச் சக்தியின் வேறு பல மூர்த்தங்களும் பண்டைய ஈழத்தில் வழிபாட்டிற்குரியன வாகக் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறுந் துர்க்கை, காளி, கார்த்திகா போன்ற பெயர்கள் எடுத்துக்காட்டு கின்றன.74 இவ்வாறே முல்லைத்தீவிற் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களிலே தலைவிரி கோலமாகச் சூலத்தினைக் கையி லேந்தி நிற்குந் துர்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளாள். இதனால் வடபகுதியில் ஆதியிற் காணப்பட்ட இவ்வழிபாடு தனித்துவ மாகவும் பின்னர் சிவன், திருமால் ஆகியோருடன் அவர்களின் தேவியர்களாகவும் உயர்ச்சி பெற்றது. நயினை நாகபூஷணி அம்மன் வழிபாடானது சக்தி வழிபாட்டுடன் சங்கமமான நாக வழிபாட்டினை எடுத்துக்காட்டும் அதேநேரத்தில் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுந் திருத்தம்பலேசுவரர், திருத்தம்பலேசு
யாழ். - தொன்மை வரலாறு E62

வரி வழிபாடுகள் சிவனையும் அவனது தேவியான சக்தியையுங் குறித்து நிற்பதோடு சிவவணக்கத்தோடு சக்தி வழிபாடு இணைந்ததையுங் குறிக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் வடபகுதியில் நிலைகொண்டிருந்த கண்ணகி வழிபாடு பற்றியுங் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட கஜபாகு மன்னன் கண்ணகி விழா முடிந்ததும் வடபகுதியூடாகவே கண்ணகியின் காற்சிலம்போடு அநுராதபுரத்தை அடைந்ததாகக் கூறப்படு கின்றது. ஈழத்திற் கண்ணகி வழிபாட்டை மேம்படுத்த விரும்பிய இம்மன்னன் கந்தரோடையிலுள்ள அங்கணாமைக் கடவையிற் கண்ணகிக்கு ஒரு கோயிலை அமைத் தான் எனக் கருதப்படுகின்றது. இராசநாயக முதலியார் இந்நிகழ்ச்சி யின் நினைவாக இவ்வாலயத்தின் முன்பாக வைக்கப்பட்டி ருந்த கஜபாகுவின் சிலை யானை ஒன்றினால் உடைக்கப்பட் டாலும் இச்சிலையின் காலுந் தலையும் இந் நூற்றாண்டின் இருபதுகளில் இப்பகுதியில் மேலாய்வு செய்த போல் பீரிசினால் இனங்காணப்பட்டன எனவும் இவ்வெச்சங்கள் பின்னர் இப் பகுதி நூதனசாலையில் வைக்கப்பட்டதாகவுங் குறிப்பிட் டுள்ளார்.?5 அநுராதபுரத்தில் வருடாவருடம் ஆடி மாதத்திற் கண்ணகிக்கு இம்மன்னன் பெருவிழா எடுத்ததாகக் கூறப்படு கின்றது. எனினும் வடபகுதியூடாகவே கண்ணகி வழிபாடு ஈழத்தினை அடைந்தது என்பதை இப்பகுதியில் விளங்கிய கண்ணகி கோயில்கள் பற்றிக் கூறும் பள்ளுப் பாடலில் அங்க ணாமைக்கடவை முதன்மைப் படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்கின்றது. இப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.78
* அங்கணம் மைக்கடவை செட்டிபுல மச்சூழ்
ஆனதொரு வற்றாப் பளை மீ துறைந்தாய் பொங்கு புகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல் புகழ்பெருகு கோலங்கி ராய்மீ துறைந்தாய் எங்குமே உன்புகழை மங்காம லோத
என்றனது சிந்தையி லுறைந்தகா ரணியே பங்கமுறு துயரங்கள் தீரவருள் புரிவாய்
பரிவுசெறி கோலங்கி ராயிலுறை மாதே."
O 563 Feypas(upo as ADUCupúb

Page 298
சக்தி வழிபாட்டோடு இணைந்து நிற்பதுதான் முருக வழிபாடாகும். கொற்றவைச் சிறுவன் ", " பழையோள் கிழவி? என்று முருகனைச் சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன.77 சங்க இலக்கியங்களிற் குறிஞ்சிக் கடவுளாக மாயோனுக்கு அடுத்து முக்கியம் பெற்றுள்ள கடவுளாகப் பேசப்படுபவன் முருகனாவான். இவனே சேயோன் ", "செவ்வேள் " எனவும் அழைக்கப்படுகின்றான். இத்தகைய வழிபாடு மிகப் பழைமை யானது என்பதை இற்றைக்கு 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தெனக் கருதப்படும் ஆதிச்சநல்லூரிற் கிடைத்த வேல் ? சின்னமும், முருகனது ஆலயங்களுக்குப் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அணிந்து செல்லும் வெண்கலத்தி னாலான சின்னங்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஈழத்திலும் இவ்வணக்கம் பழைமையானதே என்பதை எடுத்துக் காட்டுவ தாகப் பொம்பரிப்புத் தாழிக்காட்டிற் கிடைத்துள்ள வேல் ? அமைந்துள்ளது. இதனைப் போன்ற வடிவமுள்ள வேலொன்று இன்னொரு பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ள பின் வேவ என்ற இடத்தில் வெளிவந்துள்ளது. வேல் போன்ற உருவமைப்புடைய பல கருவிகளும் அநுராதபுர அகழ் வின் போது பெருங்கற்காலக் கலாசாரப்படையில் வெளிவந் துள்ளமையும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. கந்தரோடையில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது வேல் " சின்னங் கண்டுபிடிக்கப்பட்டதோடு பெருங்கற்காலக் கலாசாரப் பானை ஒடுகளிலும் இச்சின்னங் காணப்படுகின்றது. இவற்றுட் சிலவற்றுள் இவ்வேலானது இருதலை, முத்தலைச் சூலங்களாக வுஞ் சித்திரிக்கப்பட்டுள்ளது.78
வம் இடம்பெற்றுள்ளமையை நோக்கும்போது இதற்கும் சங்க இலக்கியங்கள் குறிக்கும் வேல் வழிபாட்டை இயற்றிய பூசாரி களுக்குமிடையே உள்ள தொடர்பு தெளிவடைகின்றது. முருக வழிபாட்டிலீடுபட்ட இப்பூசாரிகள் ? வேல் " கொண்டு வெறி யாட்டில் ஈடுபட்டதால் வேலன் என அழைக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. சங்க இலக்கியங்கள் குறிக்கும் வேலனது வெறியாட்டு முருக வணக்கத்திற் பிரபல்யம் பெற்றிருந் தது. இவ்வழிபாட்டு மரபே ஈழத்திலுள்ள கதிர்காமம், மண்டூர்,
யாழ். - தொன்மை வரலாறு 584 )

செல்வச்சந்நிதி ஆகிய இடங்களில் இன்றுங் காணப்படுகின்றது. இவ்வழிபாட்டு மரபிற் காணப்படும் முருகன் தனது முதல் மனைவியாகிய வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியை மணக்க ஈழத்திற்கு வந்தான் என்ற ஐதீகம் தமிழக, ஈழ கலாசாரங்களுக் கிடையே உள்ள இவ்வணக்கத்தின் பரம்பலை எடுத்துக் காட்டுவதாக அமையலாம். இவற்றைவிட முருகனின் வட மொழி வடிவங்களாகிய * குமார , ஸ்கந்த (கதலி), விசாக, குகன், மகாசேன போன்ற பெயர்களும் பிராமிக் கல்வெட்டு களிற் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. அத்துடன் முருகனை வளர்த்த தாய்மார்களான கார்த்திகைப் பெண்டிரைக் குறிக்குங் “ கார்த்திகா " என்ற வடிவம் இக்கல்வெட்டுகளிற் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. இவ்வாறு மேற் கூறிய சான்றுகள் இவ்வணக்கத்தின் தொன்மையை எடுத்துக் காட்டுவதால் வடபகுதியில் நிலைபெற்றிருந்த பழைய வழி பாட்டு நெறிகளில் இஃதும் ஒன்றாகக் காணப்படுகின்றது.79
சிவன், உமை, முருகன், விஷ்ணு போன்று பிரமன் இக் காலத்தில் வணங்கப்பட்டதற்கான சான்றாதாரமாக இப்பெயர் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்பட்டாலுங்கூட ஒரு செல்வாக் குடைய கடவுளாகப் பிரமன் உயர்ச்சி பெறவில்லை. இவ்வாறே விநாயக வழிபாட்டை எடுத்துக் கூறுஞ் சான்றாக மிகுந்தலையி லுள்ள கண்டகசேத்தியாவின் சிற்பங்கள் காணப்படுகின்றன.80 இவற்றின் காலங் கி. மு. முதலாம் நூற்றாண்டாகும். இவற்றை ஒரு வகையிற் பூதங்கள் எனலாம். விநாயகரின் தோற்றத்தினை அவதானிக்கும்போது பூதவழிபாட்டின் வளர்ச்சி யாகவே விநாயக வழிபாட்டினைக் கொள்ள வேண்டியுள்ளது. வடபகுதியில் இதற்கான தடயங்கள் காணப்படா விட்டாலும் இற்றைவரை ஒரு செல்வாக்குள்ள வழிபர்டாக இது இங்கு காணப்படுவதாற் கிறிஸ்தாப்த காலத்திலேயே, மிகுந்தலையிற் காணப்படும் யானை முகத்தினையுடைய பூதத்தின் சிலை காணப்படுவதால் அக்காலத்திலிருந்தே இவ்வழிபாடு இங்குங் காணப்பட்டிருக்கலாமெனக் கொள்ளல் தவறாகாது.
6onsnisyo ang tb
யாழ்ப்பாண வைபவமாலை இப்பகுதியில் நிலைகொண்டி ருந்த வழிபாட்டு நெறிகளில் ஒன்றாக வைணவ வழிபாட்டு
)ே 535 சமூகமும் சமயமும்

Page 299
மரபுகளைக் குறிக்காவிட்டாலுங்கூடப் பர்ளி இலக்கியங்களின் பின்னணியிலும் பிராமிக் கல்வெட்டுகளின் பின்னணியிலும் நோக்கும்போது இந்நெறி இப்பகுதிகளிற் பண்டுதொட்டு வழக்கிலிருந்தமை தெளிவாகின்றது. விஜயனது வருகையைக் கூறும் மகாவம்சம் விஜயனையும் அவனது கூட்டத்தினரை யும் பாதுகாக்கும் பணியைச் சக்கவாகிய இந்திரனிடம் புத்த பிரான் அளித்ததையுஞ் சக்க உப்புலவண்ணனிடம் இப்பணியை அளித்ததையுங் கூறுகின்றது.81 இங்கே குறிப்பிடப்படும் உப்புல வண்ணன் பற்றிய குறிப்பின் காலங் கி. மு. ஆறாம் நூற் றாண்டாகும். உப்புலவண்ண என்ற பாளிமொழியின் வட மொழி வடிவம் உற்பலவர்ண ஆகும். உற்பல, உற்புல ஆகியன நீலோற்பலத்தினைக் குறிப்பன ஆகும். இவ்வாறே நிறத்தினைக் குறிக்கும் பதங்களே வர்ண, வண்ண என்பவை ஆகும். இதனால் நீலோற்பலனே இவ்வாறு பாளி நூலில் உப்புல வண்ணனாக இடம் பெற்றுள்ளான் எனக் கொள்ளலாம். இதன் பொருள் மாயோனாகிய நீல நிறத்தவனாகும். இதனாற் சங்க இலக்கியங்கள் முதன்மைப்படுத்தும் மாயோனே பாளி நூல்களில் உப்புல வண்ணனாக விளிக்கப்படுகின்றான் எனலாம். இம்மாயோனே சங்க இலக்கியங்களிலே திருமால் என விளிக்கப்படுகின்றான். இவனின் நீலநிறச் சிறப்பினை இவ்விலக்கியங்களிற் காணப்படும் "நீனிறவுருவி னேமியோன்", முன்னீர் வண்ணன்', ‘நீனிற வுருவின் நெடியோன்" போன்ற குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.82 மாயோனின் சக்தி யாகவே "திரு சங்க இலக்கியங்களிற் சித்திரிக்கப்படுவதோடு மாயோன் திருவினை மார்பிலே தாங்குபவனாகவும் விளிக்கப் படுவது ஈண்டு நோக்கற்பாலது. இதனால் மாயோனாகிய திருமாலும் அவனின் சக்தியாகிய "திரு வும் இக்காலத்தில் வழிபடப்பட்டமை உறுதியாகின்றது.
மாயோன் மட்டுமன்றி இக்கால ஈழத்தவர் இத்தெய்வத் தின் கிருஷ்ணன், வாசுதேவன், ராமன் போன்ற பிற ரூபங் களையும் அறிந்திருந்ததைப் பண்டுவாசுதேவன், பண்டுகாபயன், ஆகியோருடன் தொடர்புடைய ஐதீகங்கள் எடுத்துக் காட்டு கின்றன.88 இக்க்ருத்தினை உறுதி செய்வதாகப் பிராமிக் கல் வெட்டுகளில் இடம்பெறும் இவ்வழிபாட்டோடு தொடர்புடைய
யாழ். - தொன்மை வரலாறு sess O

பெயர்கள் விளங்குகின்றன. நீலோற்பலன் "உபலவாகவும் ?, விஷ்ணு விணு ' வாகவும், கண்ணன் கண " வாகவும், இராமன் ' ராம வாகவும், கோபாலன் "கோபால வாகவும், நாராயணன் 'நாராயண' வாகவும், பாலதேவன் 'பலதேவ" வாகவும் பலராமனின் இன்னோர் நாமமாகிய லாங்குலி
நகுலி"யாகவும் இவற்றிற் குறிப்பிடப்படுவது அவதானிக்கத் தக்கது.84 இறுதியாக மகாவம்சத்திற் குறிக்கப்படும் இவ்வழி பாட்டிற்குரிய மரங்களாகப் பனை, ஆல் போன்றன இடம் பெற்றுள்ளதை நோக்கும்போது சங்க இலக்கியங்கள் பலராம னைப் பனைக்கொடியோன் என அழைப்பது மனங் கொள்ளத்தக்கது. இவ்வாறே சிவனும் இவ்விலக்கியங்களில் ஆலமர் கடவுளாக விளிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கத் தக்கது. இக்காலத்தில் நிலைகொண்டிருந்த விஷ்ணு வழி பாட்டை உறுதி செய்வதாகக் கந்தரோடையிற் கிடைத்த கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய கார்ணிலியன் முத்திரை யுங் காணப்படுகின்றது. இதில் " விஷ்ணு பூதிஸ்ய " என்ற
வாசகம் உளது.
இன்று கிராமிய மட்டத்தில் மக்களாற் பேணப்படும் வைதீக, ஆகம நெறிசாராத வழிபாடு நாட்டார் வழிபாடாகும். இவ்வழிபாடுதான் பாளி நூல்களில் யகஷ் - நாகவழிபாடாக ஈழத்தின் மிகப்பழைய வழிபாடாக விளிக்கப்படுகின்றது என்றால், மிகையாக்ாது. இவ்வழிபாட்டில் மரங்களும் அவற்றின் கீழே வைத்து வழிபடப்படுந் தெய்வங்களும் முக்கியம் பெறுகின்றன. இம்மரங்களில் வேம்பு, அரசு, ஆல், நாவல், மருது முதலியன முக்கியமானவையாகும். இவற்றின் கீழே தெய்வங்கள் இருவித நிலைகளில் வைத்து வழிபடப்படுகின்றன. எதுவித சிற்ப அம்சங்களுமின்றி வெறுங் கற்களாகவே இவற்றை வைத்து வழிபடும் மரபு மிகப் பழையதாகும். இத்தகைய வழிபாட்டு நெறியே இவ்வழிபாட்டிற் செல்வாக்குடன் விளங்குகின்றது.
இவ்வழிபாட்டு நெறியிற் கல்லில் இத்தெய்வங்களுக்குச் சிற்பந் தீட்டி வழிபடும் மரபும் உண்டு. இந்நாட்டார் வழி படுந் தெய்வங்களாகக் காடன், மாடன், சுடலைமாடன், காடேறி, கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரியதம்பிரான்,
O 567 சமூகமும் சமயமும்

Page 300
அண்ணமார், நீலி, பேச்சி போன்ற தெய்வங்கள் விளங்கு கின்றன. வேதாகம வழிபாட்டிற் பிராமணக் குருக்கள் வகிக்கும் பொறுப்பை இவ்வழிபாட்டிற் கிராம மக்களில் ஒருவர் வகிப்பது வழக்கம். சடங்குகள் இதில் மிக மிகக் குறைவு. பொங்கல், குளிர்த்தி, படையல், உயிர்ப்பலி ஆகியன இதில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. எனினும் வேதாகம வழிபாட்டின் அம்சமாக விளங்கும் பிள்ளையார், முருகன் (வேல்), வீரபத்திரர் போன்ற கடவுளரும் இவ்வழிபாட்டு நெறியில் நாளடைவில் இடம்பெற்றுள்ளன. சாதாரணமாக வைரவ சூலத்தினை வைத்து வழிபடும் மரபும் இதிலுண்டு.
இந்துமத வழிபாட்டு நெறிகள்
பொதுவாகவே இக்கால வழிபாட்டு நெறிகளில் வேதா கம வழி நிற்கும் நெறிகளும், அதாவது அந்தணரையுங் கோயில்களையும் அச்சாணியாகக் கொண்டிருக்கும் நெறிகளும், இந்நெறி சாராத கிராமிய மட்டத்தில் நாட்டார் வழிபாடாக மரவணக்கம், குளிர்த்தி, பொங்கல் போன்ற கிராமிய வழி பாட்டு நெறிகள் என்பனவுங் காணப்பட்டன. எனினுந் தமிழ கத்தைப் போன்று இக்காலத்திற் பெளத்த மதம் ஈழத்தின் பிற பகுதிகளிற் செல்வாக்குற்றிருந்தது போல, வடபகுதியிலுஞ் சில மையப் பிரதேசங்களில், வாணிப நிலையங்களிற் செல்வாக்குற்றுக் காணப்பட்டதையே கந்தரோடை, வல்லி புரம், சுன்னாகம், புங்குடுதீவு போன்ற இடங்களிற் கண் டெடுக்கப்பட்ட பெளத்த கலைமரபிலொன்றான அமரா வதிக் கலைப் பாணியிலமைந்திருந்த சிற்பங்களும் ஏனைய பெளத்த ஸ்தூபிகளின் அழிபாடுகளும் எடுத்துக் காட்டு கின்றன.
தமிழகத்தில் நாயன்மர்ர்களும், ஆழ்வார்களும் ஏற்படுத் திய இந்துக் கலாசார மறுமலர்ச்சி ஈழத்தின் வடபகுதியையும் அடைந்ததைத் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் போன்றோர் ஈழத்திலிருந்த திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியனவற்றின் மீது பாடிய பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் இக்கலாசார மறுமலர்ச்
யாழ். - தொன்மை வரலாறு sess O

சியை ஏற்படுத்திய திருஞானசம்பந்தரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவர் சென்ற தலங்களுக்கெல்லாம் தாமுஞ் சென்று யாழ் வாசித்தமை பற்றிக் கிடைக்குந் தகவல்கள் இக்காலத் தில் இரு பகுதிகளுக்குமிடையே நிலவிய கலாசாரத் தொடர்பை மட்டுமன்றி ஈழத்தின் வடபகுதியில் இம்மறுமலர்ச்சி ஏற் படுத்திய தாக்கத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது. இத னால் இக்காலத்தில் இவ்விடங்களிற் பல்லவர் கலைமரபைப் பின்பற்றி ஆலயங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் திருக்கோணேஸ்வரப் பகுதியில் ஆர்தர் சி கிளாக், மைக்கல் வில்சன் ஆகியோரின் தலைமையிற் கடலுக்கடியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளிற் கிடைத்த பல்லவர் பாணியி லமைந்த தூண்கள் எடுத்துக் காட்டியுள்ளன.85 இக்காலத் திற் பல்லவர் கலைமரபு ஈழத்திற் பரவியிருந்ததை அநுராத புரத்திலுள்ள ஸ்சுறுமுனியாவிலுள்ள இன்றைய பெளத்த கோயிலிற் காணப்படும் இந்துக்கோயிலின் அடித்தளப் பீடக் கற்கள், கோமுகி ஆகியனவும் சிவன், பார்வதி ஆகியோரைச் சித்தரிக்குஞ் சிற்பங்கள், ஐயனார் சிற்பம், நாலந்தாவிற் கிடைக்கும் பல்லவ பாணியிலமைந்த மகாயான பெளத்த கோயில், தென்கிழக்கே சித்துல்பவுவவிற் கிடைத்துள்ள போதிசத்துவ சிலைகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடத்திற் கிடைத்துள்ள விஷ்ணுசிலை, திருகோண மலையிலுள்ள பொத்தன் காட்டிற் கிடைத்துள்ள விஷ்ணு சிலை, திரியாயிலுள்ள பெளத்த ஸ்தூபியிற் காணப்படுந் துவார பாலகர்களின் சிலை ஆகியனவும் எடுத்துக் காட்டுகின் றன88. இதனால் வடபகுதியிலும் இத்தகைய மரபு தழைத் தோங்கியது என்று யூகிப்பதிலே தவறில்லை. இக்கூற்றினை உறுதி செய்வதாகத் திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த மூன்று சிலைகள் அமைகின்றன. இவற்றுள் முதன்மை பெறுவது செப் புத் திருமேனியாலாகிய சோமஸ்கந்த விக்கிரகமாகும் (படம்-67). இதிற் காட்சி தருஞ் சிவன், பார்வதி, முருகன் ஆகியன ஒரே பீடத்திற் செய்யப் பட்டுள்ளதோடு முருகன் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பது போலவுஞ் சித்திரிக்கப்பட்டுள்ளான். இவ்வாறே திருக்கேதீஸ்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது நிலத்துக்கடியிலே கருங்கல்லினாலான லிங்கம் ஒன்று கண்டுபிடிக்
O 569 சமூகமும் சமயமும்

Page 301
கப் பட்டது. இது தற்போது ஆலயத்தின் மேற்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது (படம் - 68), இங்கு கிடைத்த மற் றொரு சிற்பம் விநாயக ருடையதாகும்87 (படம் - 69). அண்மை யிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய் வின் போது வெட்டுக்காட்டில் உடைந்த சிலையின் பகுதி களும் அரசபுரத்திற் கருங்கல்லிற் பொன் முலாம் பூசப்பட்ட ஒன்றரை அடி உயரமான விநாயகர் சிலை ஒன்றுங் கிடைத் துள்ளது. இவை பல்லவர் கலை மரபுக்குரியன எனக் கொள்ளப்படுகின்றது.88 சோழக் கலைப்பாணிக்குரிய விஷ்ணு சிலை ஒன்றும் பூநகரியிற் கிடைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது59 (படம் - 70).
இத்தகைய பின்னணியிற்றான் யாழ்ப்பாண வைபவமாலை யில் இடம்பெற்றுள்ள வழிபாட்டிடங்கள் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது. உக்கிரசிங்கன், மாருதப்புரவீகவல்லி ஆகிய இருவருடனுந் தொடர்புடைய தலமாகக் கீரிமலையிலுள்ள திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் விளங்கு கின்றன. எனினும் உக்கிரசிங்கன் ஒரு முருக பக்தனாக விளங்கியதைக் கைலாயமாலையும், வையாபாடலுங் குறிக் கின்றன. உக்கிரசிங்கனின் தலைநகரைக் கதிரைமலை (கந்தரோடை அல்லது கந்தரோடைக்கு அருகிலுள்ள தற் போதைய கதிரைமலை) எனக் கூறுங் கைலாயமாலை இவனின் குலதெய்வமாகிய குமரனைப் பற்றிப் பின்வருமாறு கூறு கின்றது. 90
* . . . . . . . . . . . வரிந்தசிலை வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங் காடன் புதல்வன் கதிர்காமன் - ஏடவிழுந் தார்க்கடம்பன் பேர்முருகன் றாமோ தரன்மருகன் சீர்க்குரவன் றேவர் திரட்கொருவன் - சூர்ப்பகையை மாற்றுங் குகன் குழகன் வாய்ந்தவடி யார்துயரை யாற்றுங் குமர னருளாலே " இதே போன்று வையாபாடலிலும் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது.9
யாழ். - தொன்மை வரலாறு 57o O

பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற்
போயரன் ம்கவினை வணங்கிப்
பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருந்தன ளதற்பின்,
இத்தகைய குறிப்புகள் யாழ்ப்பாண வைபவமாலை குறிப் பிடும் கதிரை ஆண்டார் திருத்தலம் கதிரைமலையில் இருந்த முருகன் ஆலயமாக இருக்கலாமென ஊகிக்க வைக்கின்றது. மாவிட்டபுரத்திற் சோழ அரசனின் கலைஞர்களைக் கொண்டு மாருதப்புரவீகவல்லி அமைத்ததாகக் கூறப்படும் முருகன் ஆலயமும் இக்காலத்திற் பிரசித்தி பெற்ற முருகன் ஆலய மாக விளங்கியிருக்கலாம். இதேபோன்று கீரிமலைச் சிவஸ்தல முஞ் சிறப்புடன் விளங்கியது. பல்லவர் பாணியைத் தொடர்ந்து ஈழத்திற் பரந்த சோழரின் கலைமரபை எடுத்துக் காட்டுஞ் சின்னமாக மாருதப்புரவீகவல்லியின் மாவிட்டபுரத் திருத்தலம் அமைந்திருந்திருக்கலாம். அண்மையிற் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வின் போது இனங் காணப்பட்ட சோழர் கால மண்ணித்தலைச் சிவாலயம் அதற்கான இன்னோர் ஆதாரமாகும் (படம்-71 ), அநுராத புரத்திற் செங்கற்களாலான அத்திவாரங்களுடன் கர்ப்பக் கிருகம், அந்தராளம் போன்ற பாகங்களுடன் காணப்படுங் கோயில்களின் அடித்தளங்களை ஒத்த அடித்தளத்தினை இது உடையதால் இதன் காலங் கி. பி. 9 ஆம், 10 ஆம் நூற் தாண்டுகளாகலாம்.92 இதனால் இது முற்காலச் சோழக் கலை மரபில் அமைக்கப்பட்ட ஆலயம் போலத் தெரிகின்றது. இத்தகைய யூகத்தினை இக்காலத்திலேற்பட்ட சோழப்படை எடுப்புகளும் உறுதி செய்கின்றன.
༣ நிற்க மண்ணித்தலைச் சிவாலய விமானத்தின் பெரும் பகுதியும், அந்தராளத்தின் &ռ60p պմ), முன்பக்கமும் இடிந்து விழுந்து மண்ணுக்குட் புதையுண்டுள்ளன. இதன் அத்திவாரப் பகுதி பெருமளவு மண்ணினால் மூடப்பட்டிருந் தாலும் இது ஏறத்தாழ 21 அடி நீளத்தையும் 124 அடி அகலக் தையுங் கொண்டுள்ளது. இச்சிவாலயங் கர்ப்பக்கிருகத்தையும் அதன் முன்னாற் சிறிய அந்தராளத்தையுங் கொண்டுள்ளது.
O 371 சமூகமும் சமயமும்

Page 302
இதன் கர்ப்பக்கிருகம் வெளிப்புறமாக 104 அடி நீளமும், 124 அடி அகலமும் 8 அடி 8 அங்குல உயரமும் உடையது. உட்புறமாக இது 6 அடி நீளத்தையும், 6 அடி அகலத்தை யும் 10 அடி உயரத்தையுங் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய இதன் வாசல் 4 அடி 2 அங்குல உயரமும் 3 அடி அகலமும் உடையது. 3 அடி தடிப்புள்ள இதன் சுவர்கள் பெருமளவிற்குச் செங்கற்களையும் பொழிந்த சிறிய முருகைக்கற்களையுங் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தின் மூன்று வெளிப்புறச் சுவர்கள், அவற்றில் அமைந்த புடைப்புத் அாண்கள், தேவகோஷ்டங்கள், மாடங்கள் என்பன இவ் வாலயத்தின் ஏனைய சிறப்பம்சங்களாகும். இவ்வாலயத்தின் G5T (p6, tomri 2 அடி 3 அங்குலம் நீளமுடையது; சுண் ணாம்புக் கல்லால் அமைக்கப்பெற்றது. அடுத்து முக்கியம் பெறுவது அந்தராளமாகும். இது வெளிப்புறமாக 10 அடி 6 அங்குல நீளத்தையும், 11 அடி அகலத்தையும், 8 அடி உயரத்தையுமுடையது. இதன் உட்புற நீளமாக 7 அடி 8 அங்குலமும் அகலமாக 6 அடி 5 அங்குலமும், 10 அடி உயரமும் காணப்படுகின்றது. கர்ப்பக்கிருகத்தில் உள்ள விமான மும் இதற்குத் தனிச்சிறப்பை அளிக்கின்றது. மூன்று தளங் களையுடைய இவ்விமானத்தில் மூன்றாவது தளத்திலுள்ள ஸ்தூபி இடிந்து வீழ்ந்துவிட்டது. இதன் உயரம் விமானத்தின் உபபீடத்திலிருந்து மூன்றாந் தளம் வரை 7 அடி ஆகவும் கர்ப்பக்கிருகம் நிலமட்டத்திலிருந்து 17 அடியாகவும் உள்ளது. இன்று வடபகுதியில் நிலைத்து நிற்கும் மிகப்பழைமை வாய்ந்த சோழர் காலக் கலைமரபில் ஆக்கப்பட்ட ஆலயமாக மண்ணித்தலைச் சிவாலயம் அமைந்திருப்பதே அவ் ஆலயத்திற் குரிய சிறப்பு என்றால் மிகையாகாது93 (படம் - 71 ).
மண்ணித்தலை போன்று திருக்கேதீச்சரமும் புகழ் பெற்ற சிவாலயமாக விளங்கியது மட்டுமன்றி மாதோட்டம் புனித நகராக இக்காலத்திற் சிறப்படைந்ததையுஞ் சிங்களக் கல் வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. இவற்றுள் முதலாவது கல் வெட்டு அநுராதபுரத்திற் கிடைத்துள்ளது.94 இது கி. பி. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது. இதனை வெளியிட் டோர் தாம் அநுராதபுரத்திலுள்ள சேதவனராம விகாரையின்
யாழ். - தொன்மை வரலாறு 572 O

கட்டிடப் பணிக்கு உதவுவதாக வாக்களித்து இதனை மீறு வோர் இத்தீவில் வசிப்பவர்களாற் செய்யப்படும் பாவம், பழி யாவற்றையுந் தம்மீது ஏற்றுக்கொள்ள வேண்டுமென் மகாதீர்த்தத்திற் பசுக்களைக் கொலை செய்பவர்கள்
றும், சம்பாதிக்கும் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றுங் கூறுகின்றது. கதிர்காமத்திற் கிடைத்த மற்றைய கல்வெட்டுக்
குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுவோர் மகாதீர்த்தத்திற் பசுக்களைக் கொன்ற பாவத்தினை அடைவர் என்று கூறு கின்றது.95 இதனால் இக்காலத்தில் வேறு எந்த இந்து வழிபாட்டிடத்தையும்விட இவ்விடம் புனித தலமாக இந் துக்களல்லாதவராலும் பேணப்பட்டமை தெரிகின்றது.
இந்துமத ஆலயங்களும் பரிபாலனமும்:
ஈழத்திலேற்பட்ட சோழராட்சியானது இந்துமத நிறுவ னங்கள் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சிபெற வழிவகுத்தது. முக்கியமாகச் சோழப் பேரரசர்களாகிய முதலாம் இராஜரா ஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோரது நடவடிக்கைகள் இதற்கு உந்து சக்தியாக அமைந்ததை மாதோட்டம், பதவியா, கந்தளாய், திருகோணமலை ஆகிய இடங்களிற் கிடைத்த முதலாவது இராஜராஜனது கல்வெட்டுகள் எடுத் தியம்புகின்றன. மாதோட்டமான இராஜராஜபுரத்தில் முதலா வது இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் அமைக் கப்பெற்றது.98 இவ்வாறே பொலநறுவை மாவட்டத்திலுள்ள அத்தகடவில் உத்தம சோழ ஈஸ்வரமும், மெதிரிகிரியாவில் நித்திய விநோத ஈஸ்வரமும், அநுராதபுர மாவட்டத்திலுள்ள மகா கிருண்டிகமவில் ஜயங்கொண்ட ஈஸ்வரமும், பதவியாவில் இரவிகுல மாணிக்க ஈஸ்வரமும், கந்தளாயில் இராஜராஜேஸ் வரமும், திருகோணமலையில் மச்சகேஸ்வரமும் அமைக்கப் பட்டன. இம்மன்னனின் ஆணை வடபகுதி வரை பரந்ததை உறுதி செய்வதாக நாரந்தனையிற் கிடைத்துள்ள இவனின் நாணயங்களும், அம்மன் உருவம் பதித்த பொன் பதக்கமும் (படம் - 72) உறுதி செய்கின்றன.97 இதனால் நாரந்தனையில் மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பிற மாவட்டங் களிற் கட்டப்பட்டது போலப் பல கோயில்கள் இவனின் காலத்
O 573 சமூகமும் சமயமும்

Page 303
திலுங் கட்டப்பட்டிருக்கலாம். இத்தகைய கோயில்களின் எச்சங்கள் யாவும் பின்வந்த போத்துக்கேயரின் ஆட்சியின் போது அழிக்கப்பட்டன எனக் கொள்ளின் தவறன்று.
முதலாம் இராஜேந்திரனும் முதலாம் இராஜராஜனைப் போன்ற சிவபக்தனே. தந்தையின் திருப்பணிகளைத் தொடர்ந்த பெருமை இவனுக்குண்டு. இவனின்காலக் கோயில் தான் திருக்கேதீஸ்வரத்திலுள்ள திருவிராமேஸ்வரமாகும்.98 பொலநறுவையில் இரண்டாவது சிவதேவாலயத்தை அமைத்த இவன் தனது தாயின் பெயரால் அதற்கு "வானவன் மாதேவீஸ்' வரம்" எனப் பெயர் சூட்டினான். இவனின் நடவடிக்கைகளி லொன்றே நல்லூரில் அமைந்த ஆலயமாகும் என்பதை யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டுபிடித்த இம்மன்னனின் கல் வெட்டு எடுத்தியம்புகின்றது.99 கோயில் கட்டும் மரபு மட்டு மன்றிச் சிற்பங்களைக் கல்லிலும், வெண்கலத்திலும் ஆக்கும் பணி இக்காலத்தில் மிகுந்து காணப்பட்டதைப் பொலநறுவை யில் இன்றும் அழியாது நிற்கும் இந்து ஆலயங்கள் மட்டுமன்றி அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்துக் கடவுளரின் கருங்கல், வெண்கலத்தினாலான சிற்பங்களும் எடுத்துக் காட்டுகின்றன.100 இவற்றுட் சிவன், பார்வதி சமேத சிவன், நடராஜர், நாயன் Lontrisair ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய சிற்பங்கள் வடபகுதியிலுங் காணப்பட்டிருக்கலாம். துர்அதிஷ்டவசமாக இதற்கான எச்சங்கள் இற்றை வரை கண்டு பிடிக்கப்படாவிட்டாலுங்கூட வன்னிப் பகுதியிலுள்ள உருத்திர புரச் சிவன் கோயில், வவுனிக்குளச் சிவன் கோயில், ஒட்டுசுட் டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயமாகியன சோழரின் போஷிப் பைப் பெற்றிருந்தன. இதனை வவுனிக்குளத்திலும் (படம்-73) உருத்திரபுரத்திலுங் கிடைத்த லிங்கங்கள் எடுத்துக்காட்டுகின் றன (படம் - 74). வற்றாப்பளை அம்மன் ஆலயங்கூடச் சோழரின் போஷிப்பைப் பெற்றிருக்கலாம். அத்துடன் கொக்கிளாய்க் குடாவின் மேற்குப் பக்கமுள்ள கந்தசுவாமி மலை, குருந்தனுார் ஆகிய இடங்களிற் காணப்படும் அழிபாடுகள்கூட முன்பொருகாற் சோழர் ஆட்சியில் இங்கு அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகளாக இருக்க
யாழ். - தொன்மை வரலாறு 574 O

லாம்.101 ஏனெனிற் சோழராதிக்கங் கிழக்கே பதவியா, வாகல் கட, கந்தளாய், திருகோணமலை ஆகிய பகுதிகளிற் காணப் பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுவதாற் சோழரின் ஆணை முல்லைத்தீவுக் கரையோரப் பகுதிகளிலும் பரந்திருந்தது எனக் கருதலாம்.
சோழராட்சியில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இந்து மத நிறுவனங்கள் பற்றிய பல விபரங்களுங் கிடைக்கின்றன. இக்கால ஆலயங்களில் முன்னர் போலக் கல்விகேள்விகளிற் சிறந்து விளங்கிய பிராமண குலத்தவர் காணப்பட்டதோடு அவர்கள் வசிப்பதற்குத் தனியான குடியிருப்பு மையங்களுங் காணப்பட்ட தைக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. முதலாவது இராஜராஜனின் கந்தளாயிற் கிடைத்த கல்வெட்டு நான்கு வேதங்களிலுஞ் சிறந்து விளங்கிய பிராமணரின் குடியிருப்பு ஒன்று இங்கு காணப்பட்டதைக் கூறுகின்றது. இக்குடியிருப்பு முதலாவது இராஜராஜனின் பெயரால் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்" என அழைக்கப்பட்டது. இவ்வாறே அநுராதபுர மாவட்டத்திலுள்ள மகாகிருண் டிகமவில் முதலாவது இராஜ ராஜனின் காலத்திலிருந்து இரண்டாவது கஜபாகுவின் காலம் வரை நீடித்திருந்த பிராமணக் குடியிருப்புப் பற்றிய கல் வெட்டாதாரமுமுண்டு. இக்குடியிருப்பு முதலாவது இராஜ ராஜனின் பட்டப் பெயர்களிலொன்றாகிய "ஜெயங்கொண்ட" என்ற பெயரையும், இரண்டாவது கஜபாகுவுக்கு முன்னர் ஆட்சிசெய்த ஜயபாகுவின் பெயரான சாளமேகனையும் இணைத்து ஜயங்கொண்ட சாளமேக சதுர்வேதி மங்கலம் " என அழைக்கப்பட்டது. அதுமட்டுமன்றிக் கோயில் நிர்வாகக் கடமைகளிலும் பல்வேறு பிரிவினராகத் தமது பாண்டித் தியத்திற்கேற்பப் பிராமண குலத்தவர் காணப்பட்டதைப் பொலநறுவையிலுள்ள வானவன் மாதேவீஸ்வரக் கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இக்கல்வெட்டுச் சோழ நிருவாகத்தில் உயர்பதவி வகித்த பல்லவராஜனால் வெளியிடப்பட்டது. கோயிலுக்கு இவனால் அளிக்கப்பட்ட நிவேதனம் பற்றிக் கூறும் இக்கல்வெட்டு இத்திருப்பணியைக் கண்காணிப்பவர் களாகப் பதிபாத மூலப்பாடுடைப் பஞ்சாச்சாரியார், தேவகர் மிகள், கிரமவித்தன். சிவப்பிராமணர், பன்மகேஸ்வரர், பரிசா
)ே 575 சமூகமும் சமயமும்

Page 304
ரகர், தேவரடியார் போன்றோரைக் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமன்றிப் பிராமணரின் கடமைகளுக்காக நெல் வேதன uorta95é கொடுக்கப்பட்டிதை மாதோட்டத்திற் கிடைத்த முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டு எடுத்தியம்பு கின்றது. இதனால் நாட்டின் பிறபகுதிகளைப் போல் வட பகுதியில் உள்ள ஆலயங்களிற் கல்விகேள்விகளிற் சிறந்து விளங்கிய பிராமண குலத்தவரும் அவர்களது குடியிருப்பு களுங் காணப்பட்டமை உறுதியாகின்றது.102
திருக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய) குறிப்புகளுங் கல்வெட்டுகளில் உள. மர்தோட்டத்திலுள்ள: முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டுத் திருவிராமேஸ் வரத்திற் சந்தி விளக்கு எரிப்பதற்குத் தேவன் என்பான் அங்கு வாணிப நடவடிக்கைகளிலீடுபட்ட வணிகர்களான சக்கர பாடியாரிடம் இரண்டு காசுகளையும், வெற்றிலை வணிக ரிடம் ஒரு காசையும், வாழைக்காய் வணிகரிடம் ஒரு காசை யும் இருப்பாக வைத்தது பற்றிக் கூறுகின்றது.103 இந்நான்கு காசுகளிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டே கோயிலில் மாலை நேர விளக்கு (சந்தியா விளக்கு) எரித் தல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. விளக்கெரிப்பதற்குப் ப்ணம் மட்டுமன்றி, இவ்விளக்குகளுக்கான நெய்யைப் பெறுவ தற்காக ஆடு, மாடு, எருமை போன்ற மிருகங்களும் வழங்கப் பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையிற் கண்டெடுக்கப்பட்ட முதலாவது இராஜேந்திரனுடைய கல்வெட்டில் இம்மிருகங்கள் பற்றிக் காணப்படும் வகிகள் அழிந்து காணப்படுகின்றன. எனினும் இவ்வழிந்த பகுதிகளுக்கு முன்னே காணப்படும் ‘சாவாமூவா' என்ற தொடரை நோக்கும்போது நெய்யை எடுக்கும் பணி எதுவித தடங்கலுமின்றித் தொடரவேண்டு மென்ற நோக்கத்திற்றான் தமிழகத்திற் காணப்படுவது போன்று பல்வகைப் பராயத்தில் மிருகங்கள் அளிக்கப் பட்டமை தெளிவாகின்றது.104 சிலசமயந் தென்னை மரங்கள் கூட அவற்றிலிருந்து பயனைப் பெறுவதற்காக ஆலயத்திற்கு நிவேதனமாக அளிக்கப்பட்டன. இலுப்பைப் பாலும் இக் காலத்தில் விளக்கேற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இக் காலத்தில் அரச உத்தியோகத்தர்களே அரசுக்குரிய நிலங்களை
யாழ். - தொன்மை வரலாறு, 575 &

ஆலயங்களுக்கு நிவேதனமாக அளிக்கும் உரிமையையும், அரசுக்குரிய வரிகளை இவற்றுக்கு அளிக்கும் உரிமையையும் பெற்றிருந்ததை மாதோட்டத்தில் நிருவாகியாக விளங்கிய தாழிக்குமரனின் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.
இக்கல்வெட்டில் இராஜராஜசோழனின் வளநாடாகிய மாதோட்டத்திற்குச் செல்லும் பாதையிலிருந்து அறவிடப் படும் பணத்தில் இரண்டு வட்டமும், இங்குள்ள தறிகள், பாதைத்துறைகளிற் பெற்ற வருமானத்தையுங் கொண்டு வைகாசி விசாகத்தில் ஏழுநாட்களுக்குத் திருவிழாவுந் தீர்த்த மும் நடைபெற மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் பற்றிக் கூறப்படுகின்றது. ஆலயத்தின் தேவைக்காக வரிகள் மேலும் அறவிடப்பட்டு எவ்வாறு செலவு செய்யப்படல் வேண்டு மென்றும் இக்கல்வெட்டுக் கூறுகின்றது. அஃதாவது இங் குள்ள தெருக்கள், இறங்கு துறைகள் ஆகியனவற்றுள் நடை பெறும் போக்குவரத்திலே தினமும் ஒரு அக்கம் அறவிடப்படல் வேண்டும். இங்குள்ள நெசவாளர்களிடமிருந்து ஒரு தறிக்கு 1/8 அக்கம் அறவிடப்படல் வேண்டும்; அத்துடன் இவ்விடத்தில் நடைபெறும் கொள்வனவு, விற்பனவுப் பொருட்களுக்கு ஒரு காசுக்கு ஒரு வட்டம் என்றவாறு பணம் அறவிடப்படல் வேண்டும். இவ்வாறு கிடைத்த முதலிலிருந்து பெறப்பட்ட வட்டியில் ஆலயத்திற்குச் செய்யப்பட வேண்டிய ஒழுங்குக ளாவன: தினமும் ஆண்டவனுக்குத் திருவமுது ( நெய்வேத் தியம்) வைப்பதற்கு ஆறுநாழி அரிசியும், இரு இளம் பிரா மணருக்குத் தினமும் எட்டுநாழி நெல்லும், இங்குள்ள மடத்திலுள்ள தலைவருக்கு அன்னதான ஒழுங்குகள் ஆகியன வும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.105
சோழராட்சிக்குப் பின்னரும் அவர்களால் உருவாக்கப் பட்ட ஆலயங்களும் அவற்றின் அமைப்பு முறைகளுந் தொடர்ந்து பேணப்பட்டு வந்தன. இவ்வமைப்புகள் அக் காலத்தில் இப்பகுதியின் நிருவாகிகளின் போஷிப்பையும் பெற்றிருந்தன. பாண்டிமழவன் போன்ற பிரதானிகளின் ஆட்சி இவற்றுக்கு வேண்டிய போஷிப்பை அளித்தன. எனி னும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற்
O 577 சமூகமும் சமயமும்

Page 305
காணப்படுங் குறிப்புகள் இந்து மதம் முதன்மை பெற்ற நிலையில் வடபகுதியிற் காணப்பட்டதைத் தெளிவாக்குகின்றன. ஈழத்திற் பிற பகுதிகளிலோ எனிற் சிங்கள மன்னர்கள், இந்து மதத்தைப் போஷித்தது மட்டுமன்றி அதன் செல்வாக் குக்கு உட்பட்டுங் காணப்பட்டனர். முதலாவது விஜயபாகு சோழர் கால இந்து நிறுவனங்களைப் போஷித்தான். இரண் டாவது விக்கிரமபாகு, இரண்டாவது கஜபாகு போன்றோர் இந்துக்களாக விளங்கியதாற் பெளத்த மன்னர்களுக்கு நடை பெறும் பட்டாபிஷேக விழாக்கூட இவர்களுக்கு நடைபெற வில்லை. முதலாவது பராக்கிரமபாகு இந்துமதக் கிரியைகளை அனுஷ்டித்ததோடு பல ஆலயங்களையும் புனருத்தாரணஞ் செய்தான். நிஸங்கமல்லன் பொலநறுவையிலுள்ள சிவதேவா லயத்தில் இலட்சார்ச்சனையிலீடுபட்டதோடு கந்தளாய்ச் சிவ தேவாலயத்திற்கு ஒரு தானசாலையையும் அமைத்தான். மாகனினாட்சி மேலும் பெளத்தத்தைச் சீரழித்து இந்து மதத்தினை முன்னிலைப் படுத்தியது. இத்தகைய சூழலிற் றான் வடபகுதியிற் பெளத்த மதம் நலிவுறத் தொடங்கியது. இக்கால கட்டத்திற்றான் வடபகுதியில் இந்து - பெளத்த மதங்களுக்கிடையே - இவற்றைத் தழுவிய பிரிவினர்களுக் கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்திருக்கலாம். இது பற்றி ஆராய இடமுண்டு.
முடிவாக நோக்கும்போது தற்கால இந்துமதத்தின் அச் சாணியாக விளங்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன இக்காலத்திற் சிறப்படையத் தொடங்கிவிட்டன. இத்தகைய வழிபாட்டு நெறியில் மக்களின் அன்றாடச் சமய அனுஷ்டா னங்கள் பற்றிக் கூறுவது இலகுவன்று. எனினும் பிற்காலத் தைப் போற் சரியைகளுங் கிரியைகளும் இக்கால வழிபாட் டில் முக்கிய இடத்தினை வகித்தன என்று கூறினால் மிகை யாகாது. விரதமிருத்தல், யாத்திரை செல்லுதல் போன்றன இத்தகைய வழக்கங்களிற் சிலவாகும். இவற்றோடு நாட்டார் வழிபாட்டு நெறிகளும் இணைந்தன. இவையே பிற்கால இந்துமத வளர்ச்சிக்கு வழிகோலின.
யாழ். - தொன்மை வரலாறு 578 G

பெளத்தம்
வடபகுதி பெளத்த மதத்தோடு கொண்டிருந்த தொடர்பு மிகப்பழைமையானது. நாகதீப என அழைக்கப்பட்ட இப்பகுதி கெளதம புத்தரின் இரண்டாவது விஜயத்தின் போது அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாகக் குறிப்பிடப்பட்டாலுங் கூடப் புத்தர் இந்நாட்டின் மீது மேற்கொண்ட விஜயம் வெறும் ஐதீகமாகவே கணிக்கப்படுகின்றது.108 ஈழத்துப் பாளி நூல்கள் பெளத்தத்தினை இங்கு புகுத்தியவனாக மகிந் தனையே குறிக்கின்றன. இது நடைபெற்றது வரலாற்றுக் காலத்து முதல் மன்னனாகிய தேவநம்பியதீஸனின் ஆட்சி யிலாகும். ஆகாயமார்க்கமாக வந்த மகிந்தன் தேவநம்பிய தீஸனை அவனின் பெயர் சொல்லி அழைத்துப் பெளத்த மத உபதேசங்க்ளை அவனுக்குப் புகட்டியதாக மகாவம்சம் கூறுகின்றது. எனினும் விமானப்போக்குவரத்து வசதிகள் அற்ற அக்காலத்தில் வான்மார்க்கமாக மகிந்தன் வந்தான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதான கருத்தல்ல. ஆனால் மகிந்தன் ஈழத்திற்குப் பெளத்தத்தினைப் புகுத்தியமை ஒரு வரலாற்று நிகழ்ச்சியே. இப்பெளத்தம் வடநாட்டிலிருந்து நேரடியாக் ஈழத்தினை அடைவதற்கு முன்னதாகத் தமிழ கத்தினை அடைந்து பின்னரே ஈழத்தினை அடைந்திருக்க லாமென்பதைத் தமிழ் நாட்டில் மகிந்தனோடு தொடர்பு டைய சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதனால் மகிந்தன் தமிழ் நாட்டில் பெளத்தத்தினைப் பரப்பிய பின்னரே ஈழத்திற்கு இதனைப் புகுத்தினான் எனக் கொள்ளலாம்.
" ஜம்புகோள " பட்டினத்தை இந்தியாவோடு கொண் டிருந்த கலாசாரத் தொடர்புகளில் ஒரு முக்கிய துறைமுக மாகப் பாளி நூல்கள் குறிப்பதாலும், பின்னர் சங்கமித்தை இத்துறைமுகத்தினூடாகவே பெளத்த அரச மரக்கிளையை ஈழத்திற்கு இட்டு வந்தாள் என இவை கூறுவதாலும் மகிந் தனும் அவனது குழுவினரும் ஜம்புகோளத்தினுரடாகவே பெளத்தத்தினை ஈழத்திற்கு எடுத்து வந்தனர் என யூகிக்க இடமுண்டு. இதனால் வடபகுதியூடாகவே பெளத்தம் அநுராத புரத்தினை அடைந்தது எனக் கொள்ளலாம். மகாவம்சம்
O 579 vepa5(půo sudu (půb

Page 306
அசோக்னின் மகளாகிய சங்கமித்தை அரசமரக்கிளையுடன் ஜம்புகோள பட்டினத்தில் வந்திறங்கியபோது தேவநம்பியதீஸன் ஜம்புகோள பட்டினத்திற்குச் சென்று இவளை வரவேற்றது பற்றியும் பின்னர் இவ்வரச மரக்கிளை ஊர்வலமாகப் பதின் னான்கு நாட்களில் அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவுங் கூறுகின்றது.107 சங்கமித்தையாற் கொண்டு வரப்பட்ட இப்புனித அரசமரக்கிளை இவ்விடத்தில் வந் திறங்கியதன் நினைவாகவே இதன் ஒரு கிளையும் இம்மன் னன் காலத்தில் நாட்டப்பட்டது. பின்னர் இதிலொரு விகாரையுங் கட்டப்பட்டது. இதுதான் ஜம்புகோள விகாரை யாகும். இவ்விகாரையோடு சமுத்த பன்னசாலா என்ற மண்டபமும் இவ்விடத்திலே கட்டப்பட்டது.108
தேவநம்பியதீஸனுக்குப் பின்னர் தற்கால வவுனியா மாவட்டத்திற் கல்லாடநாக (கி. மு. 109 - 103) என்பவன் குருண்டவாசக விகாரையைக் கட்டியதாகக் கூறப்படுகின் றது. இது வவுனியாவுக்குத் தெற்கே உள்ள கரிக்கட்டு மூலை யில் இருந்திருக்கலாமென நிக்கலஸ் அபிப்பிராயப்படுவதோடு இதன் தற்காலப் பெயர் குருந்தனுார் எனவுங் கருதுகின் றார்.109 இவ்வாறே கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற் கஜபாகுவின் பின் அரசுகட்டிலேறிய அவனின் மாமனாகிய மஹல்லக நாக (கி. பி. 136-143) நாகதீபத்திற் ஸாலி பப்பத விகாரையைக் கட்டுவித்ததாகக் கூறப்படுகின்றது.110 மஹல்லக நாகவின் இரண்டாவது மகனாகிய கனிட்டதிஸ்ஸவும் (கி. பி. 167 - 186 ) நாகதீபத்தில் ஒரு பெளத்த கோயிலைத் திருத்தி யமைத்தான்.111 சிறிநாகவினது மகனாகிய வொகரிகதிஸ் ( கி. பி. 209-231) நாகதீபத்திலுள்ள திஸ்ஸ விகாரையைச் சுற்றி மதிலை அமைக்க,112 வவுனியா மாவட்டத்திலுள்ள தோணிகல என்ற இடத்தில் மகாசேனனின் மகனாகிய சிறீ மேகவண்ண ( கி. பி. 301 - 328) ஒரு விகாரையைக் காட்டினான்.118 இக்காலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் அநுராதபுர மன்னர் மேற்கொண்ட பெளத்தமத நிருமாணப் பணிகள் பற்றிய குறிப்புகள் காணப்படாவிட்டாலுந் தாது வம்சங் கீர்த்தி சிறிமேகன் காலத்திற் புத்தரது புனிதத்
யாழ். - தொன்மை வரலாறு 58o (

தந்தம் மகாதீர்த்த பட்டினத்தில் வந்திறங்கியதாகக் குறிப்பிடு கின்றது.14 ஆனால் இப்பட்டினத்தை இந்நூல் மகாதீர்த்த பட்டினம் என அழைப்பதற்குப் பதிலாக லங்காபட்டினம் என்றே அழைப்பது நோக்கற் பாலது. இவ்வாறு ஈழத்திற்குத் தந்ததாதுவை எடுத்து வந்தோர் இப்புனிதச் சின்னத்துடன் ஒரு இரவை இங்குள்ள அழகிய தேவாலயத்திற் கழித்ததாக இந்நூல் கூறுகின்றது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த தாதுசேன மன்னன் ( கி. பி. 455 - 473 ) தூபவிட்டி, தாதுசேன ஆகிய விகாரைகளை நாகதீபத்திற் கட்டியதாகக் கூறப்படுகின்றது.115 ஆனால் இதற்குப் பின்னருள்ள காலப் பகுதியில் அநுராதபுரத்திலரசாண்ட மன்னரோ பொல நறுவையிலரசாண்ட மன்னரோ வடபகுதியில் மேற்கொண்ட பெளத்தமதக் கலாசார நடவடிக்கைகளுக்குரிய ஆதாரங்கள் பாளிநூல்களிற் காணப்படவில்லை. பாளிநூல்களின் இத் தகைய போக்கு நாட்டின் பிற பகுதிகளைப் போல, வட பகுதியிற் பெளத்தம் மேன்மை பெற்றிராத நிலையையே எடுத்துக்காட்டுகின்றது என்றால் மிகையாகாது.
தமிழக வரலாற்றினை நோக்கும்போது ஆந்திரப் பிரதே சத்தில் வளர்ச்சி பெற்ற பெளத்தக் கலைமரபு கிறிஸ்தாப் தத்தின் ஆரம்ப காலத்தில் ஈழத்திலும் பரவியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதனால் ஆந்திரக் கலை மரபில் வளர்ச்சி பெற்ற பல சிற்பங்கள் ஈழத்திற்கும் எடுத்து வரப்பட்டன. ஈழத்திலே தோன்றிய பெளத்த சிலைகள் கூட ஆந்திரக் கலைப்பாணியில் ஆக்கப் பெற்றவையாகும். இதனால் ஈழத்தின் வடபகுதியுந் தமிழகம் போன்று இவ்வாந்திரக் கலைமரபின் செல்வாக்குக்குட்பட்டமை தெளிவாகின்றது. இதிற் பிரதான மையப்பிரதேசமாகக் கந்தரோடை விளங்கியது. 1966இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின்போது இங்கே ஸ்தூபிகளின் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப் լյլ °-ւ-6ծr 116 (படம்-75-76). பின்னர் இவைகள் தொல்லியற் றிணைக்களத் தினாற் சீர்செய்யப்பட்டன. இவை தோற்றவமைப்பில் ஆந்திர நாட்டிலுள்ள அமராவதி, நாகர்ஜ"னி கொண்டா ஆகிய பெளத்த ஸ்தலங்களிற் காணப்படும் ஸ்தூபிகளை ஒத்துக் காணப்படுகின்றன. எனினும் இவை பல்வேறு காலப் பிரிவிற்
O 581 sey86(púb sucupio

Page 307
கட்டப்பட்டவையாகும். ஸ்தூபிகளின் பகுதிகள் மட்டுமன்றிப் பல கட்டிடங்களின் அத்திவாரங்கள், புத்தரது புனித பாதஞ் செதுக்கப்பட்ட பீடம் (படம் - 77 - 78), கூரை ஓடுகள் ஆகி யனவும் இவ்வகழ்வின்போது வெளிவந்தன. பெரும்பாலும் இவ் ஸ்தூபிகளின் அடித்தளம் அழகாகச் செதுக்கப்பட்ட முருகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. எல்லாமாக இருபத்திரண்டு ஸ்தூபிகள் இனங் காணப்பட்டன. இவற்றில் ஆகக் குறைந்த பரிமாணமுள்ள ஸ்தூபியின் விட்டம் ஆறு அடிய்ாகும். ஆகக் கூடிய பரிமாணமுள்ள ஸ்தூபியின் விட்டம் இருபத்திமூன்று அடி யாகும். இவற்றின் உள்ளே இறந்த பெளத்த குருமாரின் அஸ்திகள் முருகைக் கற்களிலமைந்த பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு செம்பு ஆணிகள், சங்கு வளையல்கள், மோதி ரங்கள், பிற அணிகல வகைகள், பல்வகை நிறங்களிலமைந்த மணி மாலைகள் (படம் - 79), நாணயங்கள் ஆகியனவும் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது கிடைக்கப் பெற்ற பிற பொருட்களாகும். இத்தகைய மணி மாலைகள், போல் பீரிஸினா லுங் கண்டெடுக்கப்பட்டன (படம்-80). எனினும், இப் பொருட்களில், 2.10 அங்குலம் அளவுள்ள சங்கினா லமைந்த ஒரு பூதத்தின் கணத்தின்) உருவஞ் சிறப்பாகக் குறிப் பிடப்படவேண்டிய தொன்றாகின்றது (படம் -81). சீரழிந்த நிலையிற் காணப்பட்ட இந்த ஸ்தூபிகளின் புனரமைப்புத் தொல்லியல் நெறிமுறைகளுக்கு அப்பாற் சென்று மேற்கொள் ளப்பட்டதொன்றாகவே காணப்படுகின்றது. இவற்றின் பழைய வடிவத்தை எடுத்துக் காட்டும் வகையில் எச்சங்கள் காணப் படாத நிலையிற் புதிய கற்களைக் கொண்டு ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இவை புனரமைக்கப்பட்டுள்ளன. இது இவற்றிற் காணப்படும் ஒரு முக்கிய குறைபாடாகும்.
கந்தரோடையுடனான பெளத்தத் தொடர்பை ஸ்தூ பிகள் மட்டுமன்றி இங்கு கண்டெடுக்கப்பட்ட பெளத்த சின்னங்களும் எடுத்துக் காட்டுகின்றன (படம் - 82), இங்கே கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்களில், நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை முக்கியமானது. பளிங்குக் கல்லினாலான இச்சிலை அமராவதிக் கலைப் பாணியிலமைந்திருந்தது. இதன் பாகங்கள் உடைந்து காணப்பட்டாலும் யாழ்ப்பாண நூதன
யாழ். - தொன்மை வரலாறு 582 (”

சாலையில் வைக்கப்பட்டிருக்கும் இதன் மார்பகம் விசால LDT60 g. ஐந்தரை அடி உயரமானது. இதன் காலங் கி. பி. 3ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகின்றது.17 இவற்றைவிடச் சில சாசனங்களும் இங்கே கிடைத்துள்ளன. இவற்றுள் முதன்மையானது கி. மு. இரண்டாம் நூற்றாண் டிற்குரிய மட்பாண்டச் சாசனமாகும்.118 இதில் "ததகபத" அதாவது தத்தனுடைய பாத்திரம் எனப் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாத்திரங்களைப் பெளத்த துறவிகள் பயன்படுத்தியதால் இதனை ஒரு பெளத்த துறவி யின் பாத்திரம் எனலாம். இதனைத் தொடர்ந்து காணப் படுவதே "விஷ்ணு பூதிஸ்ய" என்ற வாசகத்துடன் காணப் படுங் கார்ணிலியன் கல்லில் அமைந்த சாசனமாகும்.19 இந்துக்களும் பெளத்த மதத்திற்குக் கொடைகளை அளித் ததற்கான சான்றுகள் காணப்படுவதை நோக்கும்போது மேற்கூறிய முத்திரையில் விளிக்கப்படுபவன் கந்தரோடையி லுள்ள பெளத்த சமய நிறுவனத்திற்குச் சில தானங்களை அளித்திருக்கலாம் போலத் தெரிகின்றது.
கந்தரோடையைப் போன்றே பெளத்தம் செழிப்புற்ற இடங்களிலொன்றாக வல்லிபுரங் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் மாயோன் ஆலயந் தமிழர் வழிபாட்டில் முதன்மை பெற்ற திருமாலின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆலயமாக விளங்குகின்றது. பெளத்தம் இச்சிறப்பு வாய்ந்த தலத்திற் கால்கொண்டதையே இங்கு கண்டெடுக்கப்பட்ட கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குரிய வல்லிபுரப் பொற்சாசனம் எடுத்தியம்புகின்றது. இச்சாசனம் இங்கு அமைக்கப்பட்ட விகாரையைப் பற்றிக் கூறுகின்றது. அத்துடன் இதன் வரி வடிவமும் ஆந்திர மாநிலத்தில் வழக்கிலிருந்த பிராமி வரிவடி வத்தை ஒத்தே காணப்படுகின்றது. இதனால் இப்பெளத்த தலம் ஆந்திரப் பிரதேசத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை புலனாகின்றது. இதனை உறுதி செய்வதாக அமைவதுதான் இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆந்திரக் கலைப் பாணியில் அமைந்த புத்த சிலையாகும்120 (படம் -83). இது தற் போதுள்ள வல்லிபுரக் கோயிலுக்கு ஐம்பது யார் தொலைவிற் கண்டெடுக்கப்பட்டது. அமராவதி கலைப் பாணியிற் பளிங்குக்
)ே 583 சமூகமும் சமயமும்

Page 308
கல்லால் ஆக்கப்பெற்ற இப்புத்தர் சிலை, நிற்கும் பாவனையி லுள்ளது. இதன் வலது கரம் உடைந்து விட்டது. வலது மார்புந் தோளும் உடையினால் மறைக்கப்பட்டுள்ளன. சிலகாலம் யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த இச்சிலை பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது.
புத்தூரிலும் 1954இல் ஒரு புத்தர்சிலை நிலாவரைக் கண்மையிற் கண்டெடுக்கப்பட்டது.121 ஆந்திர மாநிலத்திற் குரிய பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட இச்சிலையின் உயரம் 3 அடி 3 அங்குலமாகும். உடைந்த நிலையிற் காணப்பட்டா லும் இது கலை மரபில் வல்லிபுரத்திற் கிடைத்த புத்தர் திலும் பெளத்த மதத்தோடு சம்பந்தமான அழிபாடுகள் கிடைத்துள்ளன. 122 இவற்றுள் ஸ்தூபி, ஸ்தூபி மேடையின் பாகங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. எனினும் இங்குள்ள அழிபாடுகளிடையே, நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை முக்கியமானது. (படம் - 84). ஆந்திர மாநிலத்திற்குரிய பளிங்குக் கல்லால் அமைந்த இச்சிலையின் உயரம் 12 அடி ஆகும். அகலம் 20 அங்குலமாகும். இச்சிலையிற் காணப்படும் மேல் அங்கி அமைப்புப் பாதத்தினை மறைத்த நிலையில் இடது கையிலிருந்து கீழ் நோக்கித் தொங்குவதாக அமைந்துள்ளது. இவற்றைத் தவிர நாகர்கோவில், உடுவில், மாகியப்பிட்டி (படம்-85), மல்லாகம், தெல்லிப்பளை, மந்துவில் ஆகிய இடங்களிலும் பெளத்த மதத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.123 இவ்வாறே தீவுப் பகுதிகளிலும் வேலணை (கும்புறுப்பிட்டி), வேரப்பிட்டி (காரைதீவு), திகழி (புங்குடுதீவு), நயினாதீவு ஆகிய இடங்களிலும் பெளத்த மத அழிபாடுகள் கிடைத்துள்ளன. இவற்றுட் புங்குடுதீவில் (புயங்கு தீவ) வாழ்ந்த பெளத்த குருமார் பற்றிய குறிப்புக் கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய துட்டகைமுனுவினது வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளதை நோக்கும் போது இப்பகுதிகளில் ஆதியிற் பெளத்தந் தழைத்திருந்தமை உறுதி யாகின்றது.124 எனினுங் கந்தரோடை போன்று சிறப்புள்ள பெளத்த அழிபாடுகள் காணப்படும் இடமாக நெடுந்
யாழ். - தொன்மை வரலாறு 584 )

தீவிலுள்ள வெடியரசன் கோட்டை என அழைக்கப்படும் இடத்திலுள்ள அழிபாடுகள் காணப்படுகின்றன. இவ்வழி பாடுகள் 15 - 20 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பகுதியிற் காணப் படுவது நோக்கற்பாலது. இதனால் இவ்விடமுங் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற் கந்தரோடையைப் போன்று முக்கிய பெளத்த மத வழிபாட்டிடமாக விளங்கியமை புலனா
கின்றது.
இவ்வாறே பெருநிலப் பரப்பிலுங் கிறிஸ்தாப்த காலத் திற்கு முந்திய காலப்பகுதியிலேயே பெளத்தம் நிலைகொண்ட தற்கான தடயங்கள் உள. வவுனியா மாவட்டத்திலுள்ள எருப்பொத்தான, பெரிய புளியங்குளம், வெடிக்கனாரிமலை போன்ற இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட பிராமி வரி வடிவத்திலமைந்த குகைக் கல்வெட்டுகள் இப்பகுதியிற் பெளத் தம் நிலைகொண்டதற்கான எச்சங்களாக விளங்குகின்றன. இவை பெளத்த குருமாருக்கு அளிக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன.125
பெருநிலப்பரப்பிலுள்ள பெளத்த அழிபாடுகள் பற்றி இாயிஸ் தாம் எழுதிய வன்னி மாவட்டக் கையேட்டிற் "தொல்லியல்" என்ற அத்தியாயத்திற் சில விபரங்களைத் தந்துள்ளார். 126 இப்பகுதியில் இவர் மேற்கொண்ட மேலாய் வின் போது கிடைத்த தகவல்களாக இவை அமைவதே இவற்றுக்குரிய சிறப்பாகும். வவுனிக்குளத்திலுள்ள பெளத்த அழிபாடுகளைக் குறிக்கும் இவர், இங்குள்ள கோவிற்காட் டிற் கிடைத்த எட்டு அடி உயரமான, தலை உடைந்த புத்தர் சிலை பற்றியுங் கூறியுள்ளார். இவற்றோடு பெள்த்த மத வழிபாட்டுக்குரிய கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒடுகள், செங்கட்டிகள் ஆகியனவும் இங்கு கிடைத் துள்ளன. பாவற்குளத்திலுங் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்ன ருள்ள தாதுகோபுரங்களின் அழிபாடுகளோடு கல்லிற் சிற்ப மாக வடிக்கப்பட்ட ஐந்துதலை நாகத்தின் உருவமுங் கிடைக்கப் பெற்றது. அடுத்து முக்கியம் பெறுவது மடுகந்த வாகும். இவ்விடத்திலே ஸ்தூபியின் அழிபாடுகள் உள. பெளத்த தந்ததாது அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்
9ே 585 சமூகமும் சமயமும்

Page 309
பட்டபோது அது தரித்து நின்ற இடங்களிலொன்றாக இது குறிப்பிடப்படுகின்றமை நோக்கற்பாலது. இவ்வாறே புத்த சிலைகள் ஈரற்பெரியகுளம், புளியங்குளம், பாலமோட்டை ஆகிய இடங்களிலும், பெளத்த ஸ்தூபிகளின் அழிபாடுகள் சேமமடு, கனகராயன்குளம், செட்டிக்குளம், கல்மடு, அரிய மடு, பண்டாரக்குளம், கற்சிலைமடு, வாவட்டமலை, கொக்குத் தொடுவாய் ஆகிய இடங்களிலுங் கிடைத்துள்ளன.127
வடபகுதியிற் காணப்பட்ட பெளத்த மதம் பற்றிய சான்று களைப் பாளி நூல்கள் தருந் தகவல்களினதும், இங்கு கிடைத்த தொல்லியற் சான்றுகளினதும் அடிப்படையில் நோக்கும்போது ஈழத்தின் பிற பகுதிகளைப் போலன்றி இங்கே சில முக்கிய இடங்களிற்றான் இது செல்வாக்குடன் காணப்பட்டமை புலனாகின்றது. இக்காலத்தில் ஆந்திரப் பகுதியிற் பெளத்தஞ் செல்வாக்குடன் விளங்கியதால் அதன் தாக்கந் தமிழகத்திற் காணப்பட்டது போன்று இப்பகுதி யிலுங் காணப்பட்டதையே இங்கு கிடைத்த இக்கலைமரபுக் குரிய பெளத்த சிலைகளுஞ் சாசனங்களும் எடுத்தியம்புகின் றன. தமிழகத்தில் எவ்வாறு பெளத்த மதம் நாயன்மார்கள் ஏற்படுத்திய இந்து மதக் கலாசார மறுமலர்ச்சியாற் சீரழிந் ததோ அவ்வாறே வடபகுதியிலும் இத்தகைய போக்குக் காணப்பட்டது. இதனாற் பெளத்தர்களாகக் காணப்பட்டோ ரிற் சிலர் தமது பழைய இந்துமத நம்பிக்கைகளுக்குத் திரும்பச் சிலர் தொடர்ந்தும் பெளத்தர்களாக விளங்கினர். பெளத்த மத அனுஷ்டானங்களிற் பாளி மொழியே முக்கியம் பெற்றதால் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுஞ் சான்றுகள் இம்மொழிக் கல்வெட்டுகளிற்றான் அமைந் தன. எனினும் நாயன்மார்களின் காலத்திலிருந்தே சிங்கள மக்களுடன் பெளத்தம் இணைக்கப்பட்டதால் இம்மதத்திற் குரிய தானங்களை எடுத்தியம்புங் கல்வெட்டுகள் இம்மொழியில் அமைந்தன. இதனையே வடபகுதியிற் காணப்படுஞ் சிங்களக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.
கி. பி. 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலுஞ் சிங்கள மன்னர்கள் வடபகுதியிலிருந்த பெளத்த நிறுவனங் களுக்குக் கொடுத்த கொடை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்
யாழ். - தொன்மை வரலாறு 585 G

உள. இதற்கான சான்றாதாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ளது. இதனை எடுத்துக்காட்டுஞ் சிங்களக் கல்வெட்டு மன்னார்க் கச்சேரியிற் காணப்படுவதால் இது மன்னார்க் கச்சேரித் தூண் கல்வெட்டு என அழைக்கப்படுகின்றது. இது முதலிலே திருக்கேதீஸ்வரப் பகுதியிலிருந்தே கச்சேரிக்கு எடுத்து வரப்பட்டிருக்கலாமென இதனைப் பதிப்பித்த பரணவித்தானா குறிப்பிடுகின்றார். இக்கல்வெட்டுச் சிறிசங்கோ என்ற மன்னனின் பன்னிரண்டாவது ஆட்சிக்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்றது. இதிற் கூறப்படுஞ் சிறிசங்கோ என்ற மன்னன் இரண்டாவது சேனனாக (கி. பி. 853 - 887) அல்லது அவனின் சகோதர 676. நான்காவது காலப்பனாக ( கி. பி. 898 - 914 ) இருக்கலாமெனினும், இது பெருமளவுக்கு நான்காவது காஸ்ப்பனையே குறிக்கலாமெனப் பரணவித்தானா கருது கின்றார். இக்கல்வெட்டுப் பகடுறசென் என்ற தியான மண்ட பத்திற்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட மூன்று கிராமங்களைப் பற்றிக் கூறுகின்றது. இக்கிராமங்கள் உதுறுகராவிலுள்ள குடககடவுகாப் பிரிவிலுள்ளன. இவற்றின் பெயர்களாக பெபொடதுட, கும்பல்கல, தும்பொகொன் ஆகியன குறிக் கப்பட்டுள்ளதோடு இக்கிராமங்களில் மாதீர்த்தத்திலுள்ள அதிகாரிகள் உட்படப் பலர் செல்லக் கூடாது எனவுங் கூறப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இவற்றுக்கு இப்பகுதியிலுள்ள நாகமகா விகாரை, ரக விகாரை ஆகிய இடங்களில் வசிப் போருஞ் செல்லக்கூடாது எனவும் இதிற் கூறப்பட்டுள்ளது.128
ஐந்தாவது காஸப்பனின் இன்னொரு சிங்களக் கல் வெட்டும் மகாதீர்த்தத்தில் உள்ள சமடாதிய என்ற விகாரை பற்றிக் குறிப்பிடுவதோடு இதற்கு வழங்கப்பட்ட சென்னாறு கம என்ற கிராமத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றியுங் குறிப்பிடுகின்றது.129 இக்கல்வெட்டுகளில் உள்ள மற்றோர் அம்சம் யாதெனில் மகாதீர்த்தப் பகுதிக்குட்பட்ட பகுதியை வடபகுதி என்று குறிப்பதாகும். இதற்கு இவை பயன்படுத்தி யுள்ள பதம் உதுறுகரா (வடகரை) என்பதாகும். வல்லிபுரப் பொன்னேட்டிற் ‘படகர” என்பதற்கும் இதிலுள்ள வட (உதுறு ) கரா (கரை) என்பதற்கும் உள்ள தொடர்பு அவதானிக்கத்தக்கது. இவற்றைவிட லூயிஸ் வன்னிப்
O 587 சமூகமும் சமயமும்

Page 310
பிராந்தியத்தில் ஒலுமடு என்ற இடத்திற் காணப்பட்ட ஐந்தாவது காஸப்பனது கல்வெட்டுப் பற்றியுங் குருந்தன் குளத்திற் கிடைத்துள்ள மூன்றாவது மகிந்தனது கல்வெட்டுப் பற்றியுங் குறிப்பிட்டுள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கது.130 அவை கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குரியவை ஆகும். இதே காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கந்தரோடையிலும் ஒரு துரண் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. சிங்களமொழியில் மூன்று பக்கங்களிலும் எழுதப்பட்ட இக்கல்வெட்டு நான் காவது காஸப்பன் அல்லது இவனின் தமையனாகிய முத லாவது உதயனதாக இருக்கலாம் என இந்திரபாலா கருது கின்றார்.181 இத்தகைய கல்வெட்டும் இங்குள்ள விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறிய சான்றுகள் யாவுஞ் சிங்கள மன்னர்கள் அநுராதபுரத்தினை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதிக்குரியனவாகும். இக்காலப்பகுதியில் மாதோட்டம் இந்துமதச் செல்வாக்கு நிறைந்து காணப்பட்ட இடமாக விளங்கினாலும் இது ஒரு சர்வதேசத் துறைமுகமாக விளங்கிய தால் இங்கே பல்வேறு மதத்தவரும், மொழியினரும் வாழு வதற்கான வாய்ப்பையும் இது அளித்தது. இத்துறைமுகம் அநுராதபுர அரசர்களாலும், வெளிநாட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்டதால் அவர்களின் சமய நடவடிக்கைகள் இத்துறைமுகப் பகுதியிற் காணப்படுவது ஆச்சரியமன்று. இவ்வாறே கந்தரோடையும் ஆரம்பத்திலிருந்தே வடபகுதியில் ஒரு பிரதான பெளத்த வழிபாட்டு மையமாக விளங்கிய தாற் சிங்கள மன்னன் ஒருவன் இவ்வழிபாட்டிடத்திற்கு அளித்த மானியத்தையே இங்குள்ள சிங்களக் கல்வெட்டு எடுத்தியம்பு கின்றது எனலாம். எனினும் பொலநறுவைக் காலத்து மன்னர்கள் இப்பகுதியோடு மேற்கொண்டிருந்த பெளத்த சமய நட வடிக்கைகளுக்கான சான்றுகள் காணப்படவில்லை. முதலாவது விஜயபாகுவினது சமய நடவடிக்கைகளில் ஒன்றாக அவனாலே திருத்தியமைக்கப்பட்ட ஜம்புகோள விகாரை பற்றிய கூற்று வடபகுதிக்கன்றி மாத்தளை மாவட்டத்திலுள்ள பெளத்த நிறுவனத்திற்கே பொருத்தமானது ஆகும்.32 இக்காலத்திலே தான் வடபகுதியிலே தமிழகப் பிரதானிகளின் ஆட்சி நடை
யாழ். - தொன்மை வரலாறு 58e O

பெற்றது. இவர்களின் ஆட்சி பெளத்தத்தின் சீரழிவுக்கும், இந்து மதத்தின் மேன்மைக்கும் வழி வகுத்திருக்கலாம்.
வடபகுதியின் பிரதான துறைமுகமாகிய மாதோமூடம் மத்தியகிழக்கு நாடுகளோடும், தூரகிழக்கு நாடுகளோடும் வை கத் துறையிலே தொடர்பு கொண்டதற்கான தடயங்கள் காணப்படுவதால் இந்நாட்டு வணிகர்கள் இப்பகுதியில் வந்து தங்குவதற்குந் தமது சமய நடவடிக்கைகளை அனுஷ்டிப்பதற் கும் வாய்ப்பு இருந்தது. அநுராதபுரத்திற் பாரஒத் கிறிஸ்தவர் வாழ்ந்ததை உறுதி செய்யுஞ் சிலுவை ஒன்று காணப்படுவதும் மேற்கூறிய யூகத்தினை உறுதி செய் கின்றது. இவ்வாறே அராபியர்களின் வருகையும் இப்பகுதியில் இஸ்லாமிய மதத்தின் செல்வாக்கை வளர்த்திருக்கலாம். எனினுந் தற்போது கிடைக்குஞ் சான்றுகளைக் கொண்டு வடபகுதியில் நிலவிய கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிடாடு நெறிகள் பற்றி ஆராய்வது சிரமமாகவே உள்ளது.
589 சமூகமும் சமயமும்

Page 311
1.
2.
அடிக்குறிப்புகள்
Paranavitana, S., sed) Inscriptions of Ceylon, Vol. I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970.
Ellawalla, H., Social History of Early Ceylon, (Colombo), 1969.
Dorai Rangaswamy, M. A., The surnames of the Cankam
Age literary and Tribal, (Madras). 1968.
7.
10.
பக், 112 - 204. Paranavitana, S., GD. s. ri), 1970. jš. 26 - 29.
Sitrampalam, S. K., The form Velu of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India, Tamil University, Thanjavur in February, 2-4, 1991.
Sivathamby, K., " Development of Aristocracy in Ancient Tamil Nad, Vidyodaya Journal of Arts, Science, and letters, Vol. 4, Nos. 1 & 2, 1971. ud. 25 - 46.
மேற்படி,
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona, (Poona), 1980.
Seneviratne, S., "The Baratas - A case study of Community integration in Early Historic Sri Lanka',
Fetschrift 1985. James Thevathasan Rutnam (Felicitation
volume), (ed.) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, S. J., (Ratmalana), 1985. Luš. 549 - 556.
Paramavitana, S., மே. கூ. நூல், 1970. பக். 26 - 29.
Raghavan, M. D., The Karavas of Ceylon Society and Culture, (Colombo), 1961.
யாழ். - தொன்மை வரலாறு 59o O

ll.
2.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
O 59
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல. (சுன்னாகம்), 1949, பக். 9 - 10,
Karunatilaka, P. V. B., ‘Early Sri Lankan Society - Some reflections on Caste, Social groups and Ranking', Sri Lanka Journal of the Humanities, 1983 - 84. Vols. 9 - 10, Nos. 1 & 2, Luši. 108 - 143.
Sitrampalam, S. K., The title Parumaka found in
Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal”, Sri Lanka Journal of South Asian Studies, No. 1 (N. S.), 1986/87. L. 16.
Paranavitana, S., Gud. as... þrið 1970. L.J. 29.
Karunatilaka, P. W. B., G.D. s. s. Ludii. 127 - 129.
Paranavitana, S., Gud. asil. T6v, 1970. uši. 26 - 29.
மே. கூ. நூல், கல். இல: 233.
Mahalingam, T. V., Early South Indian Palaeography, (Madras), 1967. Lj. 255-256.
Karunatilaka, S., Gup. s. 5. u Jež. 129 - 136.
Paranavitana, S., G.D. s.. T63, 1970. Luji. 26 - 29.
மே. கூ. நூல், 1970. பக். XCW - C1.
Paranavitana, S., (3ио. д. д. Тdi, 1970. ид. LХVIII-LXIX. சிற்றம்பலம், சி. க. 'கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத் தில் வாழ்ந்த பிராமணக் குலங்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள்", புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் யூரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் - மகாகும்பாபிஷேக மலர், 1989. Ludi, 50 - 55.
சமூகமும் சமயமும்

Page 312
23. யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், பக். 9 - 10. சிற்றம்பலம், சி. க., "கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கியச் சான்றுகள்", வேலணை மேற்கு பெரியபுலம் மகா கண் பதிப்பிள்ளையார் ( முடிப்பிள்ளையார் ) ஆலய மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், சுக்கில வருஷம், பங்குனி, 29, (11-4-1990). பக். 81 - 87.
24. சிற்றம்பலம், சி. க., "ஈழமும் இந்து மதமும்- அநுராதபுர காலம்", சிந்தனை, தொகுதி 11, இதழ், 11, பங்குனி 1984. பக். 108 - 141. சிற்றம்பலம், சி. க., "ஈழமும் பிராமண குலங்களும்" ( கி. பி. 1ஆம் நூற் றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை ) கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மலர், வெளியீடு - தர்மகர்த்தா சபை 7 - 6 - 1989 - 24 - 7 - 1989. பக். 61 - 68.
25. Beal, S., Buddhist records of the Western World,
( Boston ), 1885. u. XXIV.
26. Culavamsa, (ed ) Geiger, W., ( Colombo ), 1953.
egy 3. XXXXVIII, Qui). 143-144.
27. மே. கூ. நூல், அதி. XXXXV111, வரி. 21. 28. மே. கூ. நூல், அதி. XXXXXI, வரி. 65-68.
29. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1984. பக். 19-22. 30. யாழ்ப்பாண வைபவமால்ை, மே. கூ. நூல், பக். 19-23. 31. மேற்படி, ப. 22.
32. புஷ்பரத்தினம், ப., பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்விற் கிடைத்த தொல் பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை,
1991.
யாழ். - தொன்மை வரலாறு 592 )

33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43,
புஷ்பரத்தினம், ப, இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தி யக் கலையின் செல்வாக்கு, (முதுமாணிப் பட்டத்திற் கான ஆய்வுரை ), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், ( திருநெல்வேலி), 1988. பக். 335 - 338.
யாழ்ப்பாண வைபவமாலை, மே, சு. நூல், பக். 27-30.
கைலாயமாலை, (பதிப்பு) ஜம்புலிங்கம்பிள்ளை, சே. வெ., (சென்னை ), 1939. வரி - கசரு - உ0ரு ( 145 - 205 ),
வையாபாடல், (பதிப்பு) நடராஜா, க. செ. (கொழும்பு),
1980.
Paranavitana, S., Gud. Sm., 5T 5, 1970. 56ãw. g)Gv. 83, 289, 487, 643, 744, li42, ll 62, 1202.
Hindu Organ, 19 - 6 - 1933, 6 - 7 - 1933, 3 - 8 - 1933, 23 - 10 - 1993, 21 - 12 - 1933.
Tambiah, H. W., The Laws and Customs of the Tamils of Jaffna, ( Colombo), 1951. Raghavan, M. D., The Malabar inhabitants of Jaffna - A study in the Sociology of Jaffna Peninsula, Sir Paul E. Pieris Felicitation Volume, ( Colombo ), 1956. uá. 114 - 1 31.
Gunawardana, R. A. L. H., “Prelude to the state - An early phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka', The Sri Lanka Journal of the Humanities, (University of Peradeniya). Published in 1985. Vol. VII, Nos. 1 & 2, Luši. Il-39.
Paramavitana, 8, மே. கூ. நூல். 1970. பக். 26-29.
Sitrampalam, S. K., Gud. asia. s. I 980; “Tho title Aya of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal', Summary of the paper submitted to the Archaeological Congress, 1988.
() 593 சமூகமும் சமயமும்

Page 313
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
S5.
56.
57.
58.
Paranavitana, S., Gud. s. 576i, 1970. Luši. 27-29Culavamsa, மே, சு. நூல், அதி. 48, வரி. 81-82.
வையாபாட்ல், மே, சு. நூல், செய், 29 - 51.
Shanmugam. P., The Revenue system of the Cholas 850 - 1279 A. D., ( Madras), 1987. Lu. 116.
Gunasingham, S., Two Inscriptions of Chola Ilankesvara Deva, ( Peradeniya), 1974. jš. - 10.
மேற்படி,
மேற்படி.
பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் ( கி. பி. 1000 - 1250 ), சிந்தனை, தொகுதி 11, இதழ் 11, ஆடி 1984, பக். 59 - 60.
Pathmanathan, S., Cola rule in Sri Lanka, Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies, (January ), 1974. ud. 19 - 32. இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், ( பேராதனை ), 1972. பக். 66 - 67.
யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், பக். 29-30,
சிற்றம்பலம், சி. க., "பண்டைய ஈழத்து யக்ஷ நாக வழிபாடுகள்", சிந்தனை, Vol. 121, No. 2, 1983. Luis. Il 2 l e il 36.
Coomaraswamy, A. K., The Yaksas, (New Delhi), 1971. Mahavamsa, மே. கூ. நூல், அதி. X, வரி 84 - 90.
சிற்றம்பலம், சி. க., "ஈழமும் நாக வணக்கமும் பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்", மணிபல்லவம், மணி பல்லவக் கலா மன்றம், நயினாதீவு, 28-ம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. பக். 37 - 48.
யாழ். - தொன்மை வரலாறு 594 இ

59.
60.
○1。
62.
63.
(54.
65,
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
Paranavitana, S., GuD. sin. Táto, 1970. uł., 26 - 29. யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நூல், ப. 6.
Mahavamsa, Guo. sa... gTsi), 95). X, Qufl. 101 - 103.
Paranavitana, S., Pre - Buddhist Religious beliefs in Ceylon, J. R. A. S. C. B., Vol. XXXI, No. 82. 1929, பக். 302 - 327,
Mahavamsa, GBuo... gr... 5Tgio, Je35. XI, Guiffi, l.
Sitrampalam, S. K., The Brahmi Inscriptions as a Source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka', Ancient Ceylon, Vol I, No. 7, 1990. u udž. 285 - 309. சிற்றம்பலம், சி. க., "இலங்கையின் ஆதிப் பிராமிக் கல் வெட்டுகள் காட்டும் இந்து மதம்", சிந்தனை, தொகுதி 1, இதழ் 11, சித்திரை, 1976. பக். 29 - 36. Fieris, Paul, E., Nagadipa and Buddhist remains in Jaffna”, (Part II,) J. R. A. S. C. B., Vol. XXVIII, No, 72, 1919, பக். 57 - 58,
Hettiaratchi, D. P. E., A Note on an Unpublished Pallava coin., J. R. A. S. C. B. ( N. S.), Vol. IV, Part - I, (Colombo), 1955. U5. 72 - 76.
Parker, H., Ancient Ceylon, ( New Delhi) 1984. Luji. 72 - 7 6
Sitrampalam, S. K., GuD. 9. s. 1990. u5. 285 - 309.
சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1983, ப. 131.
யாழ்ப்பாண வைபவமாலை, மே, கூ, நூல், பக். 9 - 10. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. 1983.
Sitrampalam, S. K., GLID. Gin... a6. 1990.
Sitrampalam, S. K., Go. a. 6. 1991.
() 595 சமூகமும் சமயமும்

Page 314
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
Sitrampalam, S. K., Gud. s. 5. 1990.
Rasanayagam, C., Gub. 4. дота), LJ5. 73-74.
சற்குணம், ம. , “ ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், திருக்கேதீச்சரத் திருக்குடத் திருமஞ்சன மலர் - திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி, உக (4-7-1976). பக், 115.
வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, 1959. பக். 118.
சிற்றம்பலம், சி. க., "ஈழத்திற் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் நிலவிய முருக வழிபாடு பற்றிய தொல்லியற் சான்றுகள்", காரைநகர் திக்கரை முருகமூர்த்தி குடமுழுக்கு விழாச் சிறப்பு Ipsos, 1990.
Sitrampalam, S. K. Guo. ii. 5. 1990. Ellawala, H., (3uo. 5. [5ITai), u. 159.
Mahayamsa, Guo. 5. g5Tő, egy 3. VII., 6uil. 5.
வித்தியானந்தன், சு, மே. கூ, நூல், பக், 127 - 131.
Mendis, G. C., “The Mahabharata legends in the Mahavamsa , J. R. A. S. C. B. N. S., Vol. V, 1956. LJé. 81 o 84.
சிற்றம்பலம், சி. க., "கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத் தில் நிலவிய வைணவ வழிபாட்டு மரபு பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் சான்றுகள், 1991”, தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்ற வெள்ளி விழா மலர், பக். 61 - 66. சிற்றம்பலம், சி. க., கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத் தில் நிலவிய வைணவ மத வழிபாட்டெச்சங்கள், வல்லிபுர ஆழ்வார் குடமுழுக்கு மலர், (அச்சில்).
யாழ். - தொன்மை வரலாறு 595 இ)

85. இந்திரபாலா, கா. , இலங்கையில் திராவிட்க் கட்டிடக்கலை,
(கொழும்பு), 1970.
86. புஷ்பரத்தினம், ப., மே, கூ, க. 1988. பக். 327 - 335,
87. மேற்படி.
88. புஷ்பரத்தினம், ப. மே, கூ. க. 1991.
89. புஷ்பரட்ணம், ப., பூநகரி - தொல்பொருளாய்வு,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993. L. 96.
90. கைலாயமாலை, மே. கூ. நூல், வரி. க9 - கரு (10 - 15). 91. வையாபாட்ல், மே, கூ, நூல், செய். 17. w
92. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1970.
93. புஷ்பரத்தினம், ப. மே, கூ, க. 1991.
94. Paranavitana, S., Inscriptions on the stone canoe within the citadel Anuradhapura’, Epigraphia Zeylanica, Vol III, 1928 - 1933. u uë;.. 131 - 137.
95. Paranavitana, S., No. 21, Kataragama Inscriptions, Epigraphia Zeylanica, Vol. UII, 1928-1933. uji. 221 - 225.
96. Pathmanathan, S., " Chola Inscriptions from Mantai, மே. கூ. நூல், நள ஆண்டு, ஆணி, உக. (4 - 7 - 1976).
ui; . 59 - 69.
97. செல்வரத்தினம், ம. பொ., "நாரந்தனையிற் கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட் கருவூலம்’, பூர்வகலா, யாழ்ப் பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973, Luji. 40 — 42.
98. Pathmanathan, S., G.D. dr. 35. 1976.
99. Indrapala, K., “A Cola inscription from the Jaffna Fort ", Epigraphia Tamilica, Vol. I, Part I, 1971. பக். 52 - 56.
() 597 சமூகமும் சமயமும்

Page 315
100. சிற்றம்பலம், சி. க., "ஈழமும் இந்து மதமும் - பொலநறு வைக் காலம் (கி. பி. 1000 - 1250), சிந்தனை, தொகுதி I, இதழ் 11, ஆடி 1984. பக். 115 - 156.
101. இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1970. 102. சிற்றம்பலம், சி. க., மே. கூ. க. ஆடி, 1984. 103. Pathmanathan, S., Gud. J. as. 1976. 104. Indrapala, K., மே. கூ. க. 1971. பக், 52 - 56. 105. Pathmanathan, S., மே. கூ. க. 1976. 106. Mahavamsa, மே. கூ. நூல், அதி. 1. 107. மே. சு. நூல், gig. XVIII, வரி, 59 - 68.
108. மே, கூ. நூல், அதி. XIX, வரி 23 - 27,
109. Nicholas, C. W., "Historical Topography of Ancient and Medieval Ceylon, J. R. A. S. C. B. N. S., Vol. VI, 1963. U. 86.
1 10. Mahavamsa, Gud. 3i. Tv, IgG. XXXV, auf. 124. 111 மே, கூ. நூல், அதி. XX, வரி. 25. 112 மே கூ. நூல், அதி. XXXV1, வரி. 9.
13. Nicholas, C. W., Guo. 3... s. L. 86.
114. Hettiaratchi, S. B., Social and Cultural History of
Ancient Sri Lanka, (New Delhi), 1988. Lu. 312.
115. Nicholas, C. W., Gud. SF. G. u. 84.
i16. Godakumbura, C. E., Kantarodai’, J. R. A. S. C. B. N. S.
Vol. XII, 1967. Lá. 67 - 76.
117. புஷ்பரத்தினம், ப. மே. கூ. க. 1988. பக். 266 - 267.
யாழ். - தொன்மை வரலாறு 598 O

18.
19.
120.
21.
22.
23.
24.
25.
26.
127.
28.
29.
30.
31.
132.
இந்திரபாலா, கா. , "கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம்", பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, மலர் 1, 1973.
y ėji. 16 - 17.
இந்திரபாலா, கா., மே. கூ. நூல், 1972. ப. 31.
புஷ்பரத்தினம், ப. மே. கூ. க. 1988. பக். 268 - 269.
மே. கூ. க. ப. 269.
மேற்படி.
Pieris, Paul, E., Nagadipa and Buddhist remains in Jaffna, (Part I ), J. R. A. S. C. B , Vol. XXIV, No. 70, 1917. Lui. 40 - 67; Pieris, Paul, E., மே. கூ. க. No. 72, 1919. பக். 40 - 67.
Mahavamsa, Gun. 3. gitái), egy 9. XXV, a f. 106-112.
Paranavitana, S., Gud. as... gbr 6, 1970. Ljš. 26-29.
Lewis, J. P., A Manual of the Vanni District - Ceylon, ( Colombo), 1895. Luk. 295 – 316.
Kannangara, E. T., Jaffna and the Sinhalese Heritage, (Colombo), 1984.
Nicholas, C. W., Gud. Gr. s. Ll. 71.
மேற்படி.
Lewis, J. P., Gud. s. நூல், 1895.
இந்திரடாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள்", சிந்தனைச் சிற்றிதழ் - 1, ( சிந்தனை வெளியீடுகள் ), பேராதனை, 1969, ப. 11.
Mahavamsa, மே, கூ, நூல், அதி. 60, வரி. 60.
)ே 599 சமூகமும் சமயமும்

Page 316
.
உசாவியவை
தமிழ் நூல்களும் கட்டுரைகளும்
இந்திரபாலா, கா., 'அநுராதபுரத்திலுள்ள நான்கு நாட்
டார் கல்வெட்டு", சிந்தனை, மலர் 1 இதழ் 4, ( பேராதனை ).
இந்திரபாலா, கா., “யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள்" சிந்தனை, சிற்றிதழ் 1, பேராதனை, 1969.
இந்திரபாலா, கா., இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை, ( கொழும்பு), 1970.
இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற் றம், ( பேராதனை ), 1972.
இந்திரபாலா, கா. , 'கந்தரோடையிற் கிடைத்த ஒரு பிராமிச் சாசனம், பூர்வகலா, யாழ்ப்பாணத் தொல் பொருளியற் கழகச் சஞ்சிகை, மலர் 1, 1973. பக், 16 - 17,
இந்திரபாலா, கா., "அல்லைப்பிட்டியில் அகழ்ந்தெடுத்த அழகிய சீனப்பாத்திரங்கள் - பழம்பெரும் இந்துக் கோயி லின் சொத்துகள்", வீரகேசரி, வாரவெளியீடு, 20 - 1 - 1977. مجوه
இரத்தினம், ஜே. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும், ( தமிழாக்கம் கனகரட்னா, ஏ. ஜே. ). மறு
மலர்ச்சிக் கழகம், (திருநெல்வேலி), 1981.
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ( தொகுப்பு ) சதாசிவம், ஆ., (சாகித்திய மண்டல வெளியீடு ), ( கொழும்பு), 1966.
கந்தையா, வி. சீ., மட்டக்களப்புத் தமிழகம், (சுன்னா கம்), 1964,
யாழ். - தொன்மை வரலாறு SOO

0.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
20.
கந்தையா, வி. சீ. கண்ணகி வழக்குரை. (சுன்னாச்ம்), 1968.
கிருஷ்ணமூர்த்தி, இரா., பாண்டியர் பெருவழுதி நர்ண யங்கள், (சென்னை), 1987
கிருஷ்ணராஜா, செ. யாழ்ப்பாணக் குட்ர்நாட்டிற் கிடைத்த நாணயங்கள் ", சிந்தனை, தொகுதி 1, இதழ் II, 1983. பக். 71 - 84.
குணசிங்கம், செ, கோணேஸ்வரம், (பேராதனை), 1970.
கைலாயமாலை, (பதிப்பு) ஜம்புலிங்கம்பிள்ளை, சே. வெ. (சென்னை), 1939.
கோணேசர் கல்வெட்டு, (பதிப்பு) வைத்திலிங்க தேசி கர், பு. பொ., (யாழ்ப்பாணம்), 1915. (தக்ஷிண கைலாச புராணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது).
சத்தியசீலன், ச, இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தக மும்" சிந்தனை, தொகுதி I, இதழ் 11, சித்திரை, 1976. i 14. 48 - 59.
சதாசிவபண்டாரத்தார், T. V., பாண்டியர் வரலாறு, (மூன்றாம் பதிப்பு), (சென்னை), 1956.
சதாசிவபண்டாரத்தார், T, V., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி - 1), ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு ), ( சென்னை ), 1954.
சதாசிவபண்டாரத்தார், T. W., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி 11), (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு ), (சென்னை), 1957.
சதாசிவபண்டாரத்தார், T, V., பிற்காலச் சோழர் சரித் திரம், ( பகுதி 111), சோழர் அரசியல், (அண்ணா மலைப் பல்கலைக் கழக வெளியீடு), 1961
C 6o 1 உசாவியவை

Page 317
21.
32。
罗5。
盛4。
み5。
26。
27.
28.
29.
30
3.
சற்குணம், எம். "ஈழத்திற் கண்ணகி வழிபர்ட்டின் தோற்றமும் வளர்ச்சியும்", திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக (4 - 7 - 1976).
Já. 1 1 3 - 17.
சிதம்பரனார், அ., சேரர் வரலாறு, (திருநெல்வேலி), 1972
சிலப்பதிகாரம், ( பதிப்பு) சாமிநாதையர், உ. வே. (சென்னை), 1927
சிவசாமி, வி, யாழ்ப்பாணக் காசுகள், (யாழ்ப்பாணம்),
974.
சிவசாமி, வி. தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, யாழ்ப் பாணம், யூன், 1990.
சிவநாதன், யாழ்ப்பாணக் குடியேற்றம், பகுதி = 1, (கோலாலம்பூர்), 1932
சிவப்பிரகாசம், மு. க., விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு, (வட்டுக்கோட்டை), 1988.
சிற்றம்பலம், சி. க., "இலங்கையில் ஆதிப் பிராமிக் கல் வெட்டுகள் காட்டும் இந்து மதம்" சிந்தனை, தொகுதி I, இதழ் I, சித்திரை, 1976.
சிற்றம்பலம், சி. க., யாழ் மாவட்டத்தின் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக் குடிகளும், செந்தழல், தமிழ் மன்றம், யாழ். பல்கல்ைக் கழக வெளியீடு (திருநெல்வேலி), 1982. VM
சிற்றம்பலம், சி. க., பிராமிக் கல்வெட்டுகளும் தமிழும்", ஒந்தனை, தொகுதி I, இதழ் 1, பங்குனி * பக். 57 - 86.
சிற்றம்பலம், சி. க., வன்னிநாடும் திராவிடரும்' வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர், அனைத் துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை மகா நாடு, (முல்லைத்தீவு), 27, 28, 29, வைகாசி, 1988 பக், 45 - 49.
யாழ். - தொன்மை வரலாறு 6O2

芭2。
93.
s4.
35 .
36.
37.
S8.
39.
சிற்றம்பலம், சி. க., "பண்டைய ஈழத்து யசுஷ், நாக
வழிபாடுகள்", சிந்தனை, தொகுதி 1, இதழ் 11, ஆடி 1983. பக். 121 - 136
சிற்றம்பலம், சி. க., "பண்டைய ஈழமும் இத்து மதமும்", பாரதி, மறு பிரசுரம், 1983.
சிற்றம்பலம், சி. க. 'ஈழமும் இந்து மதமும் அநுராதபுர் காலம்’, சிந்தனை, தொகுதி II, இதழ் 11, uši gasil, 1984. LJá. 108 - 141.
சிற்றம்பலம், சி. க., "ஈழமும் இந்து மதமும் பொல நறுவைக் காலம் (கி. பி. 1000 - 1250), சிந்தனை, தொகுதி II, இதழ் II, ஆடி, 1984, பக். 115 - 156.
சிற்றம்பலம், சி. க., "வரலாற்றுக்கு முற்பட்ட கால இலங்கை, ஆய்வு, காலாண்டிதழ், 1 - 2, ஏப்ரல் - யூன், و 5 8 س- 71 هژی ه H5987
சிற்றம்பலம், சி. க., தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துகள்", தமி ழோசை, தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல்வேலி), 1988 - 1989. பக். 29 - 36,
சிற்றம்பலம், சி. க., “ ஈழமும் பிராமண குலங்களும் - கி. பி. 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 10ஆம் நூற்றாண்டு வரை', கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மகா கும்பாபிஷேக மலர், வெளியீடு தர்மகர்த்தாச் சபை, 7 - 6 - 1989, 24 - 7 - 1989 பக். 61 - 68.
சிற்றம்பலம், சி. க., “கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் சான்றுகள்", புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் பூரீ வீரகத்தி விநாயகர் கும்பாபிஷேக மலர், 1990 பக். 50 - 55.
6O3 உசாவியவை

Page 318
0.
4 l.
42、
43.
44。
45.
46.
47.
சிற்றம்பலம், சி. க., * கிறிஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமண குலங்கள் பற்றிய இலக்கி யச் சான்றுகள்", வேலணை மேற்குப் பெரிய புலம் மகா கணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், சுக்கில வருஷம், பங்குனி - 29, 11 - 04 - 1990. பக், 81 - 87.
சிற்றம்பலம், சி. க., "ஈழமும் நாக வணக்கமும் - பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்", மணிபல்லவம், மணி பல்லவக் கலாமன்றம், நயினாதீவு, 28ஆம் ஆண்டு நிறைவு விசேட மலர், 16 - 4 - 1990. பக். 37 - 48. சிற்றம்பலம், சி. க., “ ஈழத்திற் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் நிலவிய முருகவழிபாடு பற்றிய தொல்லியற் சான்றுகள்", காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழாச் சிறப்பு மலர், 1990.
சிற்றம்பலம், சி. க., பண்டைய தமிழகம், (யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக வெளியீடு), (திருநெல்வேலி), 1991.
சிற்றம்பலம் சி. க., கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலவிய வைணவ வழிபாட்டு மரபு பற்றிய பிராமிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள்", தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்ற வெள்ளி விழா மலர், 1991 பக். 61 - 66,
சிற்றம்பலம், சி. க. , கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழத்தில் நிலவிய வைணவ மத வழிபாட்டெச்சங்கள்", வல்லிபுர ஆழ்வார் குடமுழுக்கு மலர், (அச்சில்).
சிறிவிர, டபிள்யு, ஐ., "துட்டகைமுனு - எல்லாளன் வர லாற்று நிகழ்வு: ஒரு மறு மதிப்பீடு", இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், (யாழ்ப்பாணம்), 1985. Luji. Il il 9 - 1 40. செல்வரத்தினம், ம. பொ., "நாரந்த்னையிற் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட் கருவூலம்", பூர்வகலா", யாழ்ப் பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1973, ujë. 40 - 42.
யாழ் = தொன்மை வரலாறு 504 O

48.
49.
50
5.
52。
53。
54.
55.
56.
57.
53。
சேதுப்பிள்ளை, ரா. பி., தமிழகம் = ஊரும் பேரும் (சென்னை), 1976.
ஞானப்பிரகாசர், சுவாமி, சா., யாழ்ப்பாண வைபவ விமர்சனம், (அச்சுவேலி), 1928.
திரிகோணாசல புராணம், (பதிப்பு) சண்முகரத்தின ஐயர், (யாழ்ப்பாணம்), 1909.
திருக்கேதீச்சரத் திருப்பதிகம், வச்சிரவேலு முதலியார் தெளிவுரை வித்துவான் சுப்பையாபிள்ளை விளக்கவுரை, (வெளியீடு) யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு, விற்பனைக் கழகம், (மூன்றாம் பதிப்பு), 1987.
திருக்கேதீச்சரம்- சைவமகாநாட்டு மலர், (யாழ்ப்பாணம்), 1960.
திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக, (4- 7 - 76).
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள், வெளியீடு சைவசித்தாந்த சமாஜம், (சென்னை), 1937.
திருத்தொண்டர் மாக்கதை, வெளியீடு திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டட், (சென்னை), 1977,
திருநாவுக்கரசு, க. த. இலங்கையிற் தமிழ்ப் பண்பாடு, (சென்னை), 1978,
திருவாதவூரடிகள் புராணம், பூரீமத். ம. க. வேற் பிள்ளை அவர்கள் செய்த விருத்தியுரையுடன் சைவப் பிரகாச யந்திரசாலை, (யாழ்ப்பாணம்), 1939.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பதிப்பு) சாமிநாதையர், உ. வே. (சென்னை), 1950.
O 605 உசாவியவை

Page 319
59。
60。
6.
62.
63.
64.
65,
66.
67.
68.
பத்மநாதன், சி. , ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள் இளங்கதிர், தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், (பேராதனை), 1969 - 70. பக். 116 - 143.
பத்மநாதன், சி., வன்னியர், (பேராதனை), 1970,
பத்மநாதன், சி. , ‘இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி. பி. 1000-1250), சிந்தனை, தொகுதி I, இதழ் 1, ஆடி, 1984. பக். 45 - 78.
பாலச்சந்திரன், செ., சங்ககால நகரங்களின் அழிவும் கடற்கோள்களின் நிகழ்வும், பேராசிரியர் சோ. செல்வ நாயகம் நினைவுப் பேருரை 6, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், (திருநெல்வேலி), 1989.
பாலசுந்தரம், இ. இடப்பெயர் ஆய்வு, காங்கேசன் கல்வி வட்டாரம், பண்டிதர் சி. அப்புத்துரை மணிவிழா வெளியீடு, 1988,
புஷ்பரத்தினம், ப. , இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு, (முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுரை, யாழ்ப்பாணப் பல்க்லைக்கழகம், (திருநெல்வேலி), 1988.
புஷ்பரத்தினம், ப. பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்விற் கிடைத்த தொல்பொருட் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1991.
புஷ்பரத்தினம், ப. யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகர் - புதிய நோக்கு", முத்தமிழ் விழா மலர், விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழக வெளியீடு, (யாழ்ப்பாணம்), 1991, பக். 36 - 55.
புஷ்பரத்தினம், ப. சோழர் காலக் குடியேற்றங்களால் தோன்றிய பூநகரி இடப்பெயர்கள், யாழ். பல்கலைக் கழகக் கலைப்பீடக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1992.
புஸ்பரட்ணம், ப. பூநகரி - தொல்பொருளாய்வு, யாழ்ப்
பாணப் பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி), 1993.
யாழ். - தொன்மை வரலாறு sos O

69.
70
71.
72.
73.
74.
75.
76.
77.
ፖ8.
79.
80.
மட்டக்களப்பு மான்மியம், (பதிப்பு) நடராசா, F. X. C,
(கொழும்பு), 1962.
மணிமேகலை, (பதிப்பு) சாமிநாதையர், ܧ• Gܘu. ܝ (சென்னை), 1965.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம், (யாழ்ப்பாணம்), 1912,
யாழ்ப்பாணச் சரித்திரம், ஜோன். எஸ்., (பதிப்பு) Daniel John, M. B., (Tellippalai), 1929.
யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல. (சுன்னாகம்), 1949.
வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, (பேராதனை) ,1959.
வேலுப்பிள்ளை, மெஸ், க., யாழ்ப்பாண வைபவ கெளமுதி, (வயாவிளான்), 1918. ( வட மாகாணத் திலுள்ள சில இடப் பெயர்களின் வரலாறு. )
வேலுப்பிள்ளை, ஆ , "தேவாரம் காட்டும் மாதோட்ட வரலாறு', வன்னிப் பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை மகாநாடு, (முல்லைத்தீவு), 27, 28, 29 வைகாசி,
1983, Lud. 1 - 5.
வேலுப்பிள்ளை, ஆ, தொடக்ககால ஈழத்து இலக்கியங் களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்', தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், (திருநெல் வேலி), 1986.
வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம், அமரர் வைத்தியநாதர் தம்பு நல்லையா நினைவு வெளியீடு, (யாழ்ப்பாணம்), 29 - 1 - 1993. V
60) auty Intl IntL6), (பதிப்பு) நடராசா, க. செ. (கொழும்பு), 1980,
பூரீ விநாயகர் கும்பாபிஷேக மலர், வவுனிக்குளச் சிவாலயத் திருப்பணிச் சபை வெளியீடு, (யாழ்ப்பாணம்)
1970.
O 6O7 PTauna

Page 320
பிறமொழி நூல்களும் கட்டுரைகளும்
Abraham, Meera. Two Medieval Merchant Guilds of South India, (New Delhi), 1988.
Akkaraju and Sarma, W. N., "Upper Pleistocene and Holocene Ecology of East Central South India’, Ecolon gical Backgrounds of South Asian Pre-History, (ed) Kennedy, K. A. R. and Possehl, G. L., (New Orleans), 1973. pp. 179 - 190.
Allchin, B., The Stone tipped arrow, (London), 1966.
Ailchin, B., and Allchin. F. R., The Birth of Indian Civilization, (Harmondsworth), 1968.
Arasaratnam, S., Ceylon, (New Jersey), 1964.
Beal, S., Buddhist records of the Western World, (Boston), 1885.
Bechert, H., The cult of Skandakumara in the religious history of South India and Ceylon, Proceedings of the Third International Conference Seminar of Tamil studies, Paris, ( Pondichery ), 1973. pp. 199 - 206.
Begley, W., " Archaeological Exploration in Northern Ceylon '. Expedition, Vol. 9, No. 4, Summer 1967. pp. 2 l - 29.
Begley, W., Proto - historical material from Sri Lanka (Ceylon) and Indian contacts, Ecological Backgrounds of South Asian Pre - history, (ed) Kennedy, K. A. R., and Possehl, G. L., (New Orleans), 1973. pp. 191-196.
Begley, V., Lukacs, J. R., and Kennedy, K. A. R.
Excavations of Iron Age burials at Pomparippu, Ancient Ceylon, Wol. 4, 1981. pp. 51 - 132.
Begley, V., o Arikamedu Reconsidered ”, American Journal of Archaeology, 87, 1984. pp. 461 - 48l.
uu Tyb. - (5r săT FINLd 61 garga e3O8 ()

2.
3.
14.
5.
16.
17.
8.
9.
20.
21.
22.
Bell, H. C. P., Archaeological survey of Ceylon, Annual Report 1907, (Sessional Papers 1911). pp. 26 - 30.
Boake, W. J. S., “ Tirukketisvaram, Mahatirtha, Matoddam or Mantoddai, J. R. A. S. (C. B), Vol. X, 1887. pp. 107 - 1 17.
Carswell, John. & Prickett. , Martha, Mantai 1980; A Preliminary Investigation, Ancient Ceylon, No. 5, 1984. pp. 3 - 68
Carswell, John., " The Excavation of Mantai, Ancient Ceylon, No. 7. 1990. pp. 17 - 28, Carswell, John., 'Sri Lanka and China', Festschrift. 1985 James Thevathasan Rutnam (Felicitation Volume), (ed.) Amerasinghe, A. R. B., and Sumanasekara Banda, S. T., Sri Lanka Unesco National Commission, (Ratmalana), 1985. pp. 17 - 28.
Chanmugam, P. K., and Jeyawardane, F. L. W., Skeletal remains from Tirukketiswaram, Ceylon Journal of Science, Section G., Vol. I, Part 2, 1954. pp. 65 - 78.
Chempakalakshmi, R., “ Archaeology and Tamil Traditions '. Puratattva, No. 8, 1978. pp. 110 - 122.
Codrington, H. W., Ceylon coins and currency, (Colombo), 1924.
Coomaraswamy, A. K., The Yaksas, (New Delhi), 1971.
Culavamsa, Part I, (Tr & Ed) Geiger, W., (Colombo),
1953.
Culavamsa, Part II, (Tr & Ed) Geiger, W., (London),
1973.
Dathavamsa, (ed.) Law, B. C., (Lahore), 1925.
609 உசாவியவை

Page 321
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
Deraniyagala, P. E. P., "The Races of the Stone Age and of the Ferrolithic of Ceylon' J. R. A. S. C. B. N. S. Vol IV, Part I, 1956 (-g). pp. 1 - 21.
Deraniyagala, P. E. P., Land Oscillations in the North West of Ceylon, J. R. A. S. C. B. (N. S.), Vol. IV, Part II, 1956 (). pp. 127 - 142.
Deraniyagala, S. U., “The Citadel of Anuradhapura, 1969, Excavations in the Gedige Area', Ancient Ceylon, No. 2, 1972. pp. 48 - í62.
Deraniyagala, S. U., The Pre - History of Sri Lanka. An outline, Festschrift 1985, James Thevathasan Rutnam (Felicitation volume), (ed) Amarasinghe, A. R. B., and Sumanasegara Banda, S. J., (Ratmalana), 1985.
Deraniyagala, S. U. Excavations in the citadel of Anuradhapura : Gedige 1984, A Preliminary Report", Ancient Ceylon, No. 6, 1986. pp. 39-48.
Deraniyagala, S., The Pre - Historic Chronology of Sri Lanka', Ancient Ceylon, Vol. 6, No. 12, 1990 (g)). pp. 21 l - 250.
Deraniyagala, S, The Proto - and Early Historic Radio Carbon Chronology of Sri Lanka'. Ancient Ceylon, Vol. 6, No. 12, 1990 (sg). pp. 251 - 292
Deraniyagala, S. U., “Pre - History of Sri Lanka - An Ecological Perspective Memoir, 8", Part I, Published
by the Archaeological survey of Sri Lanka, (Colombo),
1992.
Deraniyagala, S. U., “Pre - History of Sri Lanka - An Ecological Perspective, Memoir 8”, Part II, Published by the Archaeological survey of Sri Lanka, (Colombo),
1992.
யாழ் - தொன்மை வரலாறு 31O 0

32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
61
Dipavamsa, The Ceylon Historical Journal, Vol. VII, July & Oct. 1957 and Jan. & Apr. 1958. Nos. 1 - 4.
Dissanayake, J. B., " In search of a lost language Some observations on the complex origins of Sinhala, The Ceylon Historical Journal, Vol. XXXV, Nos. 1 - 2, 1978. pp. - 51 - 57.
Dorai Rangaswamy, M. A., The Surnames of the Cankam Age literary and Tribal, (Madras), 1968.
Ellawala, H., Social History of Early Ceylon, (Colombo), 1969.
Fernando, P. E., The Beginnings of Sinhala script. Education in Ceylon-A Centenary, Vol. I, (Colombo).
Gnana Prakasar, Swami., Ceylon Originally a land of Dravidians", Tamil Culture, Vol. I, No. I. Feb. 1952. pp. 27 - 35. f
Godakumbura, C. E., "Kantarodai, J. R. A. S. C. B. N. S., Wol. XII, 1968. pp. 67 - 76.
Gokhale, Sobhana., Sri Lanka in Some early Tndian Inscriptions, The James Thevathasan Rutnam Felicitation Volume, (ed ) Indrapala, K., (Chunnakam), 1980, pp. 28 - 31.
Gunasingham, S., Two Inscriptions of Chola Ilankesvar a Deva, (Peradeniya), 1974.
Gunasingham, S., Fragmentary slab Inscription of the time of Rajaraja I (985 - 1014 AD). - Three Cola Tamil Inscriptions from Trincomalee, (Peradeniya), 1979.
Gunasinghe, P. A. T., The Tamils of Sri Lanka - Their role, (Colombo), (N. D).
Gunawardhana, W. F., Sinhalaya Vagvidya Mula - dharma, (Colombo), 1973.
உசாவியவை

Page 322
44.
45.
47.
48.
49.
50.
S1.
52.
Gunawardana, R. A. L. H., Rope and Plough: Monasticism, and Economic Interest in Early Medieval Sri Lanka, (Arizona), 1979.
Gunawardana, R. A. L. H., "Prelude to the state - An early, phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka, The Sri Lanka Journal of the Humanities, ( University of Peradeniya ), Vol. VIII, Nos. 1 & 2, 1985. pp. 1 - 39.
Hettiaratchi, D. P. E., “A note on an unpublished Pallava coin, J. R. A. S. C. B. (N. S.), Vol. IV, Part I, (Colombo), 1955. pp. 72-76.
Hettiaratchi, D. P. E.,'" The Symbols in the Buddhist Svastika coin of Ancient Ceylon", Paranavitana Felicitation Volume, (ed) Jayawickrama, N. A. , (Colombo), 1965.
Hettiaratchi, S. B., Social and Cultural History of Ancient Sri Lanka, (New Delhi), 1988.
Hindu Organ, 19 - 6 - 1933, 6 - 7 - 1933, 3 - 8 - 1933, 23 - 0 - 1933 and 21 - 12 - 1933.
Hocart, H. M., ( 1 ) Report of the Archaeological
Commissioner, 925 - 26:
( 2) Report of the Archaeological
Commissioner, 1926 - 27.
Indrapala, K., 'The Nainativu Tamil Inscription of
Parakramabahu I, University of Ceylon Review, Vol. XXI, No. 1, April, 1963.
Indrapala, K., Early Tamil Settlements in Ceylon' J. R. A. S. C. B. ( N. S. ), Vol. XIII, 1969. pp. 43 — 63.
யாழ். - தொன்மை வரலாறு 612 ()

53.
54.
56.,
57.
58.
60.
61.
Indrapala, K., Invasions from South India and the abandonment of Poionnaruwa”, The Collapse of tho Rajaratta civilization in Ceylon and Drift to the South West, ( ed ) Indrapala, K, (Peradeniya), 1971. pp. 73 —88.
Indrapala, K., . An Inscription of the time of Rajaraja Cola I from Padaviya”, Epigraphia Tamilica, ( ed ) Indra pala, K., (Jaffna), 1971, pp. 33 - 36.
Indrapala, K., “A Cola Inscription from the Jaffna fort", Epigraphia Tamilica, Vol. I, Part I, June, 1971. pp. 52 - 56.
Indrapala, K., Fourteen Cola Inscriptions from the Ancient - Perumpalli ( Velgam Vehera / Natanarkovil ) at Periyakulamo, Epigraphia Tamilica, (ed.) Indrapala, K., (Jaffna), 1971. pp. 37 - 5i.
Indrapala, K., Two Inscriptions from the Hindu Ruins, Anuradhapura, Epigraphia Tamilica, Vol. I, (Jaffna), 1971. pp. 1 - 5.
Indrapala, K., 'South Indian Mercantile Communities in Ceylon circa, 950 - 1250", Ceylon Journal of Historical and Social Studies, (New series), Vol. I, No. 2, (July - December, 1971). pp. 101 - 113.
Kanapathippillai, K., " Ceylon's Contribution to Tamil Language and Literature, University of Ceylon Review, Vol. VI, No. 4, 1948. pp. 216 - 228.
Kannangara, E. T., Jaffna and the Sinhalese Heritage, (Colombo), 1984.
Karunaratne, S. M., Unpublished Brahmi Inscriptions of Ceylon, Unpublished Ph. D. Thesis, University of Cambridge, (Cambridge), 1960.
6 13 உசாவியவை

Page 323
62. Karunatilaka, P. V. B., o Early Sri Lankan Society - Some reflections on Caste, Social groups and Ranking ' , Sri Lanka Journal of the Humanities, Vol. 9 - 10, Nos. 1 & 2, 1983 - 84. pp. 108 - 143.
63. Kennedy, K. A. R., Human skeletal material from Ceylon with an analysis of the Island's Pre - historic and contemporary populations”, British Museum Geological (Palaeontological) Series, Vol. 2. No. 4, 1965.
64. Kennedy, K. A. R., The Physical Anthropology of the Megalith Builders of South India and Sri Lanka, (Canberra), 1975.
65. Kennedy, K. A. R., Antiquity of human settlement in Sri Lanka”, P. E. P. Deraniyagala Felicitation Volume, (ed) Thelma Gunawardane, Leelanand a Prematileke and Roland Silva, (Colombo), 1980.
66. Kirubamune, S., The Royal consecration in Medieval Sri Lanka”, The Problems of Vikkrama bahu II and Gajabahu I, Sri Lanka Journal of South Asian Studies, 1976. pp. 12 - 32.
67. Krishnaswami Aiyangar, S., Some Contributions of South India to Indian Culture, (Calcutta), 1942.
68. Lewis, J. R., A Manual of the Vanni District-Ceylon,
(Colombo), 1895
69. Lewis, J. R., Some notes on Archaeological matters in the Northern Province ", Ceylon Antiquary and literary Register, Vol. II, Part II, (Colombo), 1916. pp. 94 - 99.
70. Liyanagamage, A., The Decline of Polonnaruwa and the rise of Dambadeniya, (Colombo), 1968. pp. 97 - 142.
ll. Lukacs, John, R., and Kennedy, K. A. R., Biological Anthropology of Human Remains from Pomparippu ', (Part two), Ancient Ceylon, No. 4, May, 1981. pp. 79 - 142.
யாழ். - தொன்மை வரலாறு 614 இ

72. Mahadevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions, ( Madras ), 1966.
73. Mahalingam, T. V., Early South Indian Palaeography,
Madras , 1967.
74. Mahalingam, T. V., Presidential Address at the All India Numismatic Conference, 59th Annual session, (Nagpur), 10th November, 1970.
75. Mahavamsa, (ed) Geiger, W., (Colombo, Reprint - 1950.
76. Majumdar, R. E., (ed.) The Vedic Age, (Bombay), 1951.
77. Maloney, C. T., The effect of Early Coastal sea Traffic on the development of civilization in South 1ndia, Unpublished Ph. D, Thesis, University of Pennysylvania, ( Pennysylvania ), 1968.
78. Maloney, C. T., "The Beginnings of Civilization in South India , The Journal of Asian studies, 29. May. 1970. pp. 603 - 616.
79. Mendis, G. C., The Early History of Ceylon (Or
Indian period of Ceylon History), (Calcutta), 1948.
80. Mendis, G. C., The Mahabharata Legends in the Mahavamsa", J. R. A. S. C. B. N. S., Vol. V, 1956. pp. 8 l – 84,
81. Mendis, G. C., “ The Vijaya Legend, Paranavitana Felicitation Volume,(ed.) Jeyawickrama, M. A., (Colombo), 1965. pp. 263 - 279.
82. Nagaswamy, R., The Origin and Evolution of the Tamil, Watteluttu and Grantha - Scripts , Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies, (Madras), 1968. pp. 410 - 45.
83. Navaratnam, C. S. Vanni and the Wanniyas, (Jaffna),
1960.
O 6 5 உசாவியவை

Page 324
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
Nicholas, C. W., " Historical Topography of Ancient and Medieval Ceylon , J. R. A. S. C. B. N. S., Vol. VI, 1963.
Nikaya Sangrahaya, (ed.) Wickremasinghe, D. M. de. Z, (Colombo), 1890.
Nilakanta Sastri, K. A., A History of South India, (Madras), 1958.
Nilakanta Sastri, K. A., The Colas, (Madras), 1984.
Paranavitana, S., Polonnaruwa - Galpota Inscription of Nissankamalla, Epigraphia Zeylanica, Vol. II. pp. 98 - 125.
Paranavitana, S., No. 28, “Polonnaruwa slab Inscription at the North Gate of the Citadel", Epigraphia Zeylanica, Vol. II, pp. 157 - 164.
Paranavitana, S., No. 40, Polonnaruwa slab Inscription of Velaikkaras ”, Epigraphia Zeylanica, Vol. II, pp. 242 - 255.
Paranavitana, S., No. 5, o Mannar Kacceri Pillar - Inscription ”, Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 33. pp. 100 - 103.
Paranavitana, S., " Inscriptions on the stone canoe within the Citadel, Anuradhapura ", Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933. pp. 131- 137.
Paranavitana, S., No. 21, Kataragama Inscriptions,
Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933. pp. 221 - 225.
Paranavitana, S., " Two Tamil Inscriptions from Budumuttava ", Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933. pp. 302 -312.
யாழ். - தொன்மை வரலாறு 816 (:

95,
96.
97.
98。
99.
100.
0.
102.
103.
104.
105.
106.
Paranavitana, S., “ Devanagala Rock Inscription ”, Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 33. pp. 312 -325.
Paranavitana, S., Vallipuram Gold Plate Inscription of the reign of Vasabha', Epigraphia Zeylanica, Vol. IV, No. 29, 1934 - 42. pp. 220 - 237.
Paranavitana, S. The Fragmentary Sanskrit Inscription from Trincomalee', Epigraphia Zeylanica, Vol. V, Part I, No. 14, 1955. pp. 170 - 173.
Paranavitana, S., Pre - Buddhist Religious beliefs in Ceylon , J. R. A. S. C. B., Vol. XXXI, No. 82, 1929. pp. 302 - 327.
Paranavitana, S., (ed.) History of Ceylon, Wol. I, Part I, (Colombo) 1959.
Paranavitana, S., History of Ceylon, Vol. I, Part II, (Colombo), 1960.
Paranavitana, S., “ The Arya Kingdom in North Ceylon , J. R. A. S. (C. B. ) N. S., Vol. VII, Part 2, 1961. pp. 174 - 224.
Paranavitana, S. (ed.) Inscriptions of Ceylon, Vol. I,
Early Brahmi Inscriptions, (Colombo), 1970.
Paranavitana, S., Art of the Sinhalese, (Colombo), 1971, Parker, H., Ancient Ceylon, (New Delhi), Reprint, 1984.
Pathmanathan, S. , “ Cola rule in Sri Lanka”, “Proceedings” of the Fourth International Conference Seminar of Tamil Studies, (Jaffna), Vol. 2, January, 1974. pp. 19 - 32.
Pathmanathan, S., Chola Inscriptions from Mantai, திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர், திருக் கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு, ஆனி உக (4-7-1976). pp. 59 - 69.
O 317 உசாவியவை

Page 325
107. Pathmanathan, S., “ The Kingdom of Jaffna ', Part I,
(Circa A. D. 1250 - 1450), (Colombo), 1978.
108. Pathmanathan, S., Kingship in Sri Lanka, A. D. 1070 - 1270', The Sri Lanka Journal of the Humanities, Vol. VIII, Nos. 1 & 2, University of Peradeniya, (Peradeniya), 1982 ( Published in 1985 ). pp. 120 - 145.
109. Pathmaaathan, S., “The Bronze seal of the na na des is from Hamban tota, Paper read at the seminar of the International Association of Historians of Asia, (Colombo), 1 - 5 August, 1988.
110. Perera, B. J., “The Foreign Trade and Commerce of Ancient Ceylon. Ports of Ancient Ceylon", The Ceylon Historical Journal, Vol. I, No. 2, Oct., 1951. pp. 109 - 119.
111. Perera, B. J., An Examination of the Political Troubles that followed the Death of King Parakramabahu I”, J. R. A. S. C. B. N. S. , Vol. V, Part III, 1958. pp. 173 - 182.
112. Pieris, Paul, E., Nagadipa and Buddhist remains in Jaffna”, Part I, J. R. A. S. C. B., Vol. XXVI, No. 70, 1917. pp. 40 - 67.
Nagadipa and Buddhist remains in Jaffna' Part II, J. R. A. S. C. B., Vol. XXVIII, No. 72, 1919.
113. Pillai, K. K., South India and Ceylon, (Madras), 1975.
114. Prickett., Martha, “ The Preliminary investigation of Mantai, 1980, Ancient Ceylon, No. 5, 1984. pp. 41 - 68.
1 l5. Raghavan, M. D., The Malabar inhabitants of Jaffna - A study in the Sociology of Jaffna Peninsula, Paul E., Pieris Felicitation Volume, (Colombo), 1956.
யாழ், - தொன்மை வரலாறு 6 18 ே

116.
17.
18.
119.
120.
121.
122.
123.
124.
125.
26.
127.
Raghavan, M. D., The Karavas of Ceylon-Society and Culture, (Colombo), 1961.
Ragupathy, P.. Early Settlements in Jaffna - An Archaeological survey, (Madras), 1987.
Rajavaliya, (ed) Gunasekara, B., (Colombo), 1911.
Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926.
Senaratne, S. P. F., " The Later Pre - history and Proto - history of Ceylon - Some Preliminary Problems , Journal of the National Museums of Ceylon, Vol. I, Part I, March, 1965. pp. 7 - 19.
Seneviratne, S., “ The Baratas - A case study of community integration in Early Historic Sri Lanka, Festschrift 1985. James Thevathasan Rutnam (Felicitation volume), (ed.) Amerasinghe, A. R. B.,
and Sumanasekara Banda, S. J., ( Ratmalana ), 1985. pp. 49 - 56.
Shanmugam, P., The Revenue system of the Cholas 850 - 1279 A. D., (Madras), 1987.
Shanmuganathan, S., " Excavations at Thirukketiswaram', Thirukketiswaram Papers, (ed.) Vaithiyanathan Kandiah,
(Colombo), 1960. pp. 83 - 84.
S. I. I. ( South Indian Inscriptions), Vol. II.
Silva, K. M. De., A History of Sri Lanka, (New Delhi),
98.
Sinnathamby, J. R., Ceylon in Ptolemy’s Geography, (Colombo), 1968.
Sitrampalam, S. K., The Megalithic Culture of Sri Lanka, Unpublished Ph. D. Thesis, University of Poona. (Pooma), 1980.
() 6 19 உசாவியவை

Page 326
128. Sitrampalam, S. K., “Ancient Jaffna - An Archaeological Perspective', Journal of South Asian Studies, Vol. 3, No. 1, Dec. 1984. pp. 36 - 51.
129. Sitrampalam, S. K., Brahmi Inscriptions of Sri Lanka - An Alternative approach, Jaffna College Miscellany, 1984. pp. 1 - 6.
130. Sitrampalam, S. K., “The Cola Temples of Sri Lanka - A study”, Tamil Civilization, Vol. 3, Nos. 2 & 3, 1985. pp. 123 - 132.
131. Sitrampalam, S. K., The Title Parumaka found in Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal”, SriLanka Journal of South Asian studies, No. 1 (N. S.), 1986 / 87.
132. Sitrampalam, S. K., “ The title A ya of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal ', Summary of the paper submitted to the Archaeological Congress, (Colombo), l 988.
133. Sitrampalam, S. K., Proto - historic Sri Lanka - An interdisciplinary Perspective, Paper presented at the Eleventh Conference of International Association of Historians of Asia, August 1 - 5, ( Colombo), 1988.
134. Sitrampalam, S. K., " The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka, Ancient Ceylon, Wol, I, No. 7, 1990. pp. 285 - 309.
135. Sitrampalam, S. K., The Urn burial site of Pomparippu of Sri Lanka - a study Ancient Ceylon, Vol. 2, No. 7, 1990. pp. 263 - 297.
136. Sitrampalam, S. K., The form Velu of Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Paper presented at the XVII Annual Congress of Epigraphical Society of India, Tamil University, (Thanjavur), in February 2 - 4, 199.
யாழ். - தொன்மை வரலாறு 62O 9

137.
38.
39.
140.
14.
142.
143.
144.
145.
146.
Üe es2 1
Sitrampalam, S. K., A note on the Lakshmi plaques of Sri Lanka", Paper presented at the fifth Annual Conference of the Numismatic Society of Tamil Nadu, 1991.
Sitrampalam, S. K., “ The Dawn of Civilization in Sri Lanka , Paper presented at the First Annual Sessions of the Jaffna Science Association, 25-4-1992.
Sivathamby, K., “Development of Aristocracy in Ancient Tamil Nad, Vidyodaya Journal, of Arts, Science, Letters, Vol. 4, Nos. 1 & 2, 1971. pp. 25 - 46.
Spencer, W. George., The Politics of expansion - The Chola Conquest of Sri Lanka and Sri Vijaya, (Madras), 1983.
Srisena, W. M., Sri Lanka's commercial Relations with , the outside world from earliest times to 8th century AD, The Sri Lanka Journal of South Asian Studies, Wol. 2, No. 1, December, 1980. pp. 12 - 31.
Tambiah, H. W., The Laws and Customs of the Tamils of Jaffna, (Colombo), 1951.
Thapar, Romila., A History of India, (Harmondsworth), 1966.
The Christian Topography of Cosmos (Tr.) McCrindle J. W., (Lond.) 1897.
Vaithianathan, K., (ed.) Thirukketiswaram papers, (Colombo), 1960.
Vamsatthappakasini, (ed.) Malalasekara, G. P., Vol. II. (Lond), 1936.
உசாவியவை

Page 327
147. Veluppillai, A., Tamil in Ancient Jaffna and Vallipuram Gold plate", Journal of Tamil Studies, No. 19, June, 1981. pp. 1 - 14.
148. Warmington, E. H., The commerce between the Roman
empire and India, (Cambridge), 1928.
149. Wheeler, N. E. M., Arikamedu; An Indo - Roman Trading station on the East coast of India , Ancient India, No. 2, l946. pp. 180 - 30.
150. Wheeler, R. E. M., Brahmagiri and Chandravalli",
Ancient India, No. 4, 1948.
151. Wickramasingha, D. M. De. Z., Ambagamuva Rock Inscriptions of Vijaya Bahu -- I (1058 - l l I4 A. D.),
Epigraphia Zeylanica, Vol. II, 1912 - 1927. pp. 202 - 218.
யாழ் - தொன்மை வரலாறு 622 டு

படம்
Ulth
Ultb
படம்
Ulth
ul-b
Lin-b
LJl-b
Ulub
ul-th
ul-th
படம்
UL-th
விளக்கப் படங்களின் அட்டவணை
0
1.
12
3
ஈழத்தின் அமைவிடம்
கற்காலக் கருவிகள்
( Deraniyagala, S. U., 1992 : 213 - 233 )
p is
கந்தரோடையிற் கிடைத்த உரோம ரவுலெற்றெற் வகை மட்பாண்டங்கள் (Begley, V. 1967 : 25 )
கந்தரோடையிற் கிடைத்த உரோம ரவுலெற்றெற் வகை மட்பாண்டங்கள் (Begley, V., 1967 - 26)
கந்தரோடையிற் கிடைத்த குறியீடுகளுடனான மட்பாண்டங்கள் ( Begley, V., 1967 : 24 )
கந்தரோடையிற் கிடைத்த " ததகபத " என்ற பிராமி வரிவடிவத்திலுள்ள் மட்பாண்டம் (இந்திரபாலா, கா., 1972 : 92 )
கந்தரோடையிற் கிடைத்த லக்ஷமி நாணயம் ( Begley, V. 1967 : 25 J)
கந்தரோடையிற் கிடைத்த வெண்கலத்தினாலான GOLDáäø55ë SF35ain ( Pieris, Paul, E., 1919 : Pl. VII.)
யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள் ( கி. மு. 500 - கி. மு. 100) ( Ragupathy, P., 1987 : 170)
ஆனைக்கோட்டை மேலாய்விற் குறியீடுகளுடன் கிடைத்த மட்பாண்ட எச்சங்கள் ( Ragupathy, P., 1987 : 78)
O 323 படங்களின் அட்டவணை

Page 328
LuLth 4 ஆனைக்க்ோட்டை அகழ்வின்போது கிடைத்த
LoGofs Flavb (Ragupathy, P., 1987 : 119 )
படம் 15 ஆனைக்கோட்டை அகழ்வின் போது கிடைத்த
olutgõš;gir (Ragupathy, P., 1987 : 123)
ULib 6 ஆனைக்கோட்டை அகழ்வின் போது கிடைத்த
G6) 16:5w856) (up £55)60)DT (Ragupathy, P. , 1987: 1 19)
Lulb 17 சத்திராந்தை அகழ்வின் போது கிடைத்த
upamfis dou-avih (Ragupathy, P., 1987 : 127 )
Luluh l8 சத்திராந்தை அகழ்வின் போது கிடைத்த மட்
unfairliids air ( Ragupathy, P., 1987: 132 )
படம் 19 சத்திராந்தை அகழ்வின் போது குறியீடுகளுடன்
கிடைத்த மட்பாண்ட எச்சங்கள் ( Ragupathy, P. c. 1987 : 131 )
full-th 20 மாந்தையின் விமானப் படத் தோற்றம்
(Archaeological Survey of Sri Lanka)
Lull-th 21 மாந்தையிற் கிடைத்த மனித சடலம்
(Chanmugam, P. K., and Jayawardane, F. L. W., 1954)
படம் 22 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியின் G5s fibpuh ( Carswell, John and Prickett, Martha, 1984: 69 )
படம் 23 மாந்தை - 1980 இல் அமைக்கப்பட்ட அகழ்வுக்
w குழியின் சமாந்தரத் தோற்றம்.
(Carswell, John and Prickett, Martha. 1984: 40)
Lit-th 24 மாந்தை - 1980 இல் அமைக்கப்பட்ட அகழ்வுக் gólu f6ör Luišs iš Gørrfibpuh ( Carswell, John and Prickett, Martha. 1984: 58 )
யாழ். - தொன்மை வரலாறு 824 இ

ul-b
full-th
IL-ħ
Lulth
Ulth
ULuh
ulth
Julth
ul-lif
luth
uluh
2& வவுனியா மாவட்டத்திற் காணப்படுங்
35 divayu. Llš56ït (Sitrampalam, S. K., 1980: Pl. XII)
26(அ) யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள்
கி. மு. 100 - கி. பி. 500 (Ragupathy, P., 1987: 172 )
(ஆ) யாழ்ப்பாண மாவட்டக் குடியேற்ற மையங்கள்
( கி. பி. 500 - கி. பி. 1300) (Ragupathy, P., 1987 : 172)
27 மாந்தை அகழ்வின் போது கிடைத்த ரவுலெற்றெற்
மட்பாண்டங்கள் (Carswell, John and Prickett, Martha., 1984: 74)
28 மாந்தை அகழ்வின் போது கிடைத்த லசுஷ்மி
நாணயம் ( Carswell, John and Prickett, Martha, 1984; 77 )
29 மாந்தை அகழ்வின்போது கிடைத்த மரத்துடன்
காணப்படுஞ் சுவஸ்திகா நாணயம் (Carswell, John and Prickett, Martha, 1984: 77 )
30 மாந்தை அகழ்வின் போது கிடைத்த யானைத் தந்தத்தினாலான இசைக் கருவியின் பாகம் s Carswell, John and Prickett, Martha., 1984 : 76)
31 (அ), (ஆ) மாந்தை அகழ்வின் போது கிடைத்த மத்திய
கிழக்கு (தூர) கிழக்கு மட்பாண்டங்கள் ވ& (Carswell, John and Prickett, Martha., 1984: 78-80)
32(அ), (ஆ) p
33 p
34 9) 2
35 • Fri) PP
36 pp
9ே 625 படங்களின் அட்டவணை

Page 329
படம் 37 பூநகரியிற் கிடைத்த உரோம மதுச்சாடி
( புஷ்பரட்ணம், ப. 1993 : 50 )
lub 38 பூநகரியிற் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த
மட்பாண்டங்கள் ( புஷ்பரட்ணம், ப. 1993 : 36 ) Luluh. 39 பிராமி வரி வடிவத்தில் * வேளான் " என்ற வாசகத்
துடன் காணப்படும் மட்பாண்டச் சாசனம் (புஷ்பரட்ணம், ப. 1993 : 40)
படம் 40(அ) ஈழ / (ஆ) ஈலா / (இ) லோமா என்ற பிராமி வரி
வடிவங்களுடன் காணப்படும் மட்பாண்டச் சாசனங்கள் (புஷ்பரட்ணம் ப. 1998 : 39 )
படம் 41 (அ, ஆ) தமேட (தமிழ என்ற வடிவம் பொறித்த
. வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங் குளத்திற் கிடைத்த பிராமிச் சாசனம் (Paranavitana, S., 1970, Pl. XXXV)
dullb 42 வல்லிபுரப் பொற்சாசனம்
(Paranavitana, S., 1934 - 42)
படம் 43 வட பிராந்தியம் uL-b 44 வன்னி நாட்டுக் குடியேற்ற மையங்கள்
LIL-ħ 4 5 முதலாவது பராக்கிரமபாகுவும் பாண்டி நாடும்
(Paranavitana, S., 1960 : 496 - 97)
ulth 46 ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாவது
இராஜேந்திரன் காலத் தமிழ்க் கல்வெட்டு (இந்திரபாலா, கா., 1972 : 93)
ub 47 ஊர்காவற்றுறையிற் கிடைத்த முதலாம் பராக் கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டு (Indrapala, K., 1963 : 68 - 69)
Lth 48 கந்தரோடையிற் கிடைத்த நெல்லின் படிமத்துடன்
காணப்படும் மைக்குச்சி (Sitrampalam, S, K., 1980 : Pl. XVII).
யாழ். - தொன்மை வரலாறு 628 )ே

U th
படம்
u lih
Luluh
Lull-b
uulub
tul lib
lut-th
lut-th
Litllb
49
50
53
54
55
56
57
53
59
Lb 60
கந்தரோடையிற் கிடைத்த அச்சுக்குத்திய நாணயங்கள் (Pieris Paul, E., 1919 : Pl. XII)
இல, 2 - 9 11 - 17). உரோம நாணயங்கள் GLejħluq. Pl. XII gav. 1, 27 - 38)
முல்லைத்தீவு அ) அச்சுக்குத்திய நாணயங்கள் A-K.
ஆ) லக்ஷமி நாணயங்கள் ( 2 - 17 ) (Parker, H., 1984 : 468 - 69 )
கந்தரோடையிற் கிடைத்த பாண்டிய நாணயங்கள்
(கிருஷ்ணமூர்த்தி, இரா. 1987) (Pieris. Paul. E. 1919 : XLII. glav. 7 - 2)
(அ) செப்பு நாணய இலட்சனைகள் (ஆ) செப்பு லக்ஷமி - பாண்டிய நாணயங்கள்
(கந்தரோடை) ( Pieris. Paul, E., 1919 : Pl. XIII )
லசுஷ்மி (இலட்சுமி) நாண்யங்கள் (கந்தரோடை)
p
லசுஷ்மி நாணயங்கள் (பூநகரி) (புஷ்பரட்ணம், ப. 1993)
லக்ஷமி நாணயக் குறியீடுகள் - (நிந்தவூர்)
மாதோட்டத்திற் கிடைத்த பல்லவ நாணயம் (Hettiaratchi, D. P. E., 1955)
பூநகரியிற் கிடைத்த " பழனி " என்ற வட்டெழுத்து வடிவத்துடன் காணப்படும் பாண்டிய நாணயங்கள்
(புஷ்பரட்ணம், ப. 1993 : 56)
நாரந்தனையிற் கிடைத்த முதலாவது இராஜ ராஜனின் நாணயங்கள் ( யாழ்ப்பாண அரும்பொருளகம் )
9
O 327. பட்ங்களின் அட்டவணை

Page 330
படம் 81 பூநக்ரிப் பகுதியிற் கிடைத்த முதலாவது இராஜராஜ னின் நாணயங்கள் (புஷ்பரட்ணம், ப. 1993 : 65)
ulub 62 பூநகரிப் பகுதியிற் கிடைத்த முதலாவது
விஜயபாகுவின் நாணயங்கள் (புஷ்பரட்ணம், ப. 1993: 185 - 167)
படம் 63 பூநகரிப் பகுதியிற் கிடைத்த முதலாவது ugrará, 9true... !
w பாகுவின் நாணயங்கள்
(புஷ்பரட்ணம், ப. 1993 ! மேற்படி)
படம் 4ே பூநகரிப் பகுதியிற் கிடைத்த நிஸங்கமல்லனின்
நாணயங்கள்
(புஷ்பரட்ணம், ப., 1993 மேற்படி)
ub 65 வடபகுதியிற் கிடைத்த பாண்டிய நாணயங்கள்
uth 6ð உருத்திரபுரத்திற் கிடைத்த சுடுமண்ணினாலான
தாய்த்தெய்வப் பாவைகள் * ۔ ۔۔۔۔۔
ul-b 67 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த செப்பினாலான
சோமஸ்கந்த விக்கிரகங்கள் (திருக்கேதீச்சரம்
திருக்குடத் திருமஞ்சன மலர், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபை வெளியீடு, 1976)
ulub 68 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த விங்கம்
(திருக்கேதீச்சரம், சைவமகாநாட்டு மலர், 1960 ; 90 - 91)
u-ub 69 திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்த விநாயகர் சிலை
(Navaratnam, C. S., 1960: 6 - 7) *
U-th 70 பூநகரிப் பகுதியிலுள்ள பல்லவராயன் கட்டிற்
கிடைத்த விஷ்ணுசிலை (புஷ்பரட்ணம், ப. 1993 : 98)
படம் 7 மண்ணித்தலைச் சிவாலயம்
(புஷ்பரட்ணம், ப. 1993 : 85)
Jub 72 நாரந்தனையிற் கிடைத்த அம்மனின் திருவுருவம்
பொறிக்கப்பட்ட பதக்கம் (செல்வரத்தினம், ம. பொ. 1973)
யாழ். - தொன்மை வரலாறு 828 ெ

படம்
Ulth
ul- b
Lull-tb
tilth
lib
Lulth
Lull-th
படம்
tol-th
Lullb
Lull-lis
73 (அ), (ஆ) வவுனிக்குளத்திற் கிடைத்த லிங்கம்
(பூரீ விநாயகர் கும்பாபிஷேக மலர், 1960 : 6 - 7)
74 உருத்திரபுரத்திற் கிடைத்த லிங்கம்
( Navaratnam, C. S., 1960: 28-29)
75 கந்தரோடை அகழ்வு
(Godakumbura, C. E., 1967)
76 கந்தரோடை அகழ்வின்போது ஸ்தூபிகள்
காணப்பட்ட நிலை (மேற்படி )
77 கந்தரோடை ஸ்தூபிகள் தொல்லியற்றிணைக் களத்தினாற் சீர்செய்யப்பட்ட நிலை (மேற்படி)
78 கந்தரோடையிற் கிடைத்த புத்தபாதம்
( மேற்படி)
79(அ) கந்தரோடையிற் கிடைத்த மாலைகள் (g) , , (Godakumbura, C. E., 1967)
80 கந்தரோடையிற் கிடைத்த மாலைகள்
( Pieris Paul, E., 1919 : Pl. XVIII )
8. கந்தரோடையிற் கிடைத்த பூதகணங்கள்
( Godakumbura, C. E., 1967 )
82(அ) கந்தரோடையிற் கிடைத்த புத்தர் சிலைகள்
(ஆ) , ( Pieris Paul, E., 1917 )
83 சுன்னாகத்திற் கிடைத்த புத்தர் சிலை
84 வல்லிபுரத்திற் கிடைத்த புத்தர் சிலை
85 மாகியப்பிட்டியிற் கிடைத்த புத்தர் சிலை
( Pieris Paul, E., 1919; PI. XI )
C 329 படங்களின் அட்டவணை

Page 331

கருநாத
(é9 ~ V-Y) ! rh K озъггото тъпо 9J1235 ISY dBSerras гѣп5 بطولاته f
ஜீ3த்திடே ஆய்ந்தவதமுத்திரங் A ༽།༽ Loroso6uyúo
வகாரங்குநாடு கிரிகுடா
سمبر .
X 2 c2xjt trid 1Hr L&SLu.Júb. o be cer Liptoll I LaSr. ii. - - - 2 Jr Iasi Li Jrless
O 631

Page 332
யாழ். - தொன்மை வரலாறு 632 O

படம் - 02
O 633

Page 333
யாழ். - தொன்மை வரலாறு 634 ே

படம் - 03
O 635

Page 334
யாழ். - தொன்மை avoir p 636 0

O 637

Page 335
யாழ். தொன்மை வரலாறு 638 ெ

sỹ: --×} * */
?~-ExfE-恩卡
05
படம் -
O 63g

Page 336
யாழ். - தொன்மை வரலாறு 640 O

06
t. Jl -Lð =
O 64

Page 337
யாழ். - தொன்மை வரலாறு 642 O

Luluh - 08
O 643

Page 338
பழ. தொன்மை வரலாறு 8** O

աւ-ւհ - 10
O 645

Page 339
யாழ். - தொன்மை வரலாறு 646 O

11
படம் -

Page 340
யாழ். - தொன்மை வரலாறு 648

* つー。下
ཏུ། ང་ད་
LhJr Ipůl Jir Y GOOI. Lor ISOJ"Lăšo குழபைலற்றமைபவங்கள்
caÁÉs (yp 5oo — és QP 1oo 2CDONJ) |
o cosocorás caserrocopl- . Nب. ز நில்ல Dð 3 அகரைIEஆஃ' / . '. σ ཡོད་ན་ ༨
→-೪ ۰ به قوه قلب || || Dഞ്ഞങ്ങട്ടുഭാ . . . * ۰ - فه :
Á அறக்க்ட்ம் நிலயம் - - - - - - - 云 至 ta5 ւյւ-ւb - 12 حده مع இல, 6, 9
Fఆఫ్రిజ్ఞాతeర95-1881_ C2DadI5.Jgeo தஜிகிதஐஐநடஜ் ஆடைத்த
Io. I II redibil - CSIaas Jaeair
{ تم استضضضضضمسيسبيد. سميع.
649 ULib - 13

Page 341
தொன்மை வரலாறு 65O 9

6^so3 ezğéyraéea> gypağbzğèao»2''
so,1xexor frty1°. LLOL°x1x taxIX_ro.
తలియారTఊరBenరియాDL <లాzeడమే | *eri se porter, tisă ------------
--- - - - - -- w --- --- ---------------- -.ܝܚ- • -ܚ-ܝܢ-- -- --
651 படம் = 15

Page 342
யாழ். - தொன்மை வரலாறு 652 ே

6
ul D -
O e 53

Page 343
யாழ். - தொன்மை வரலாறு 654

*ae-Cae - 

Page 344
யாழ். - தொன்மை வரலாறு 656 ே


Page 345
யாழ். - தொன்மை வரலாறு 658 ே

O 659

Page 346
யாழ். -தொன்மை வரலாறு 66O ே

படம் - 23
● 661

Page 347
யாழ். - தொன்மை வரலாறு 662 ே

osae seg - ---- ---ܝܚ · - ܝ --ܝ ܝ ܝ ܚܝܝܢ--ܝܚ سسسسسسسسسسسسس
t トー。。
o - - - - Y یه قیه شده وn حعص دیگحیe=تقع ཆེ་ *, ,ین قلعہ کی تاریخی حیصے یع تھے۔ عرصے خلیجعجی سید حیدریحیے درد ܕܗܝ ܓܗܝ
* 2s? திதிக் മ-ഭ് 8.مبیتھ بھییجیے آء بیٹھ مہین Na z
Cor.
- 3
assbuerrao Coserie lásé 4é s e- 1 splasov).
6>ax_ossexxesolo C-46 s 1.2 - e2)

Page 348
யாழ் - தொன்மை வரலாறு 664 ே

\ ικαπιφύγπασίστ το παλικα ε \ குழ2வந்நீழைங்கள் N. Caseye, loo - as if 5oo)
ܬ.
ras *\
, блапguыузаštсвӕыпш*ах» — 7. 1oesšтs:staš
AH3கழி s scessay. 3 துேரப்பிட்டி 9. డెరరి22 రeట్టఎrదరిDL4 ass3rtisaas q <=StepASSÉ CESEormeeSØLgk cabajero adasi 11. di Pasiraní
aST 12z 12. asriềFS5 Setu 12ɔDu
படம் = 26 அ
---- -- س م " " ܝ ܚ-- - ܝܚ- - ܝ - ܝ -- - ܝ " " ---
*-1*)ಗ್ಗೆ uопа±- ۰ ۰۰۰ حباب-ر 一、下--ー 29 م \, uÉra, exalouyéiaba.
b- ه குர்ஆஜ் - A2-sexcoa, JP)
22 31 . هیله حکی 2. s2 2 t S・ N
v. 3 క్స్, (Yao 27 NANN
-N s ༤32 སེ་ -- པོ་ཕ- ༄། ޑްގެ ܐܶܓ݁ܶܢ
L S qTeekTe qTeLeeLekLJSA SA MeTeMMe eMTTTS S AS 2 திகதி, 15 அகந்தஅரசின்)ட 2awassed ஆ சிகப5கி;தீவு ss aseegg sesa rle>I- ao espesiesÉS 2to. 4. Ceast Sp. دz Gہے کہ کے بخیے دحی O as, soyasée அத்திராக்கதை. 0Y S S eLe0AeLeLeeLekLTeALAeL0LLSLLLLS L0SL HLHLLLJJL0LL
00 LLMekTCTe TJLLAALLATLLL SqM TLqLMeLeeTTLqS z astroy2. 00 MLAkeee TAkqqALqeLeTeAeAeTTS iA TiiTkTALALATTS a ceఆకులుయాడిp. 久中 ఫైల్స్లో 3 తాggājతజ్ఞ CS IpaštasKítězsaszóbesɔ. 22 secedes-2 ag. Z5letil-rr-ILMSKI GAEsir డి colosaxx25xxxocyP&0&x. As pe-డే." T. 17. 3s மண்டகாங் | 11 திகதUழ்நிலை. a4 (. , % அகால்க்வல்
டி திசை3ழு A5 | 3 -ře, Sey- 37 réztezésegyzezuesosis erxi 2Csési escfb. a deer as acces. aegusandrás.
3easts ada
படம் - 26 ஆ
O 665

Page 349
யாழ். - தொன்மை வரலாறு 666 0

27
ul-th -
28
tul -th -
O 667

Page 350
யாழ். - தொன்மை வரலாறு 668 O

படம் = 30
O 669

Page 351
யாழ். - தொன்மை வரலாறு 67O C


Page 352
யாழ். - தொன்மை வரலாறு 672 O

O 673

Page 353
யாழ். - தொன்மை வரலாறு 674 )

O 675

Page 354
யாழ். - தொன்மை வரலாறு 676 O

Q e77

Page 355
யாழ். - தொன்மை வரலாறு 67e O

6ア9

Page 356
யாழ். தொன்மை வரலாறு 68O 9

39
Lul th -
40 அ
Ulth -
O 68

Page 357
targit - GolgswiTanur Algeg esse 2 O

Mó 683

Page 358
urb. - வரலாறு 584 O

42 كه ub-1
685

Page 359
யாழ். - தொன்மை வரலாறு 686 9

Mw'n ... * | SM
IL பிரார்கதிபம்ھہ حکم کے
பிரதான் ஆறுகள்
குமுநட்டி ஆாது 2:భజిra_5ఉు జిలB. ’ 3. Lur TGS''' <ق இதந்த, * அன்னச்சட்ழக்இனாம். n ஐந்ாது ہتھیلئے زنجی y
& ۰۰ن ؟ و یا رییس می * கrதடுக்கூச12ழக்குதலாம் tr ద్దోగ్గట్టు 2647 l (2120pఉం)62> vii eEe75è-eğbi 2G963,2geo2éz5
M. ʻ : adjég5.
Referen ·
Lub - 43
) 687

Page 360
1. தனுஷ்கோடி 4. வடலி 7. சூரன்கோட்டை
10 , காமன்
கோட்டை
13. பரமகுடி
16. சரண்டை.
19. அருப்புக்
கோட்டை
22. பூரீ வில்லி
புத்தூர் 25. சிவரக்கோட்டை
28. திருப்புவனம்
31. அழகமாநகர் 32。 34. திருப்புத்தூர் 35. 37. பொன்னமராவடி 38. 40. கீழநிலை 4. 43. சிறுவயல் 44.
46 grr606MTU Př 47.
கோயில்
49. மணமேல்குடி 50.
52. குருந்தன் குடி 53. 55. தொண்டி 56. 58. பணிகக்கோட்டை 59.
61. மருதூர் 62.
64, பாண்டிவயல் 65。
67. ஊர்காவற்றுறை 68
70. மாந்தை 7.
2. இராமேஸ்வரம் 5. தேவிபட்டணம்
8. எருவாடி
11. இடைக்குளம்
14. பட்டனேந்தல்
17. முடிக்கரை
0. இடைக்குளம்
23. வெள்ளூர்
26. சாத்தான்குடி
மதுரை
சோழவந்தான்
நேமம்
புதுக்கோட்டை கீழ்மங்கலம்
ஜெயங்
கொண்டான்
வெள்ளாறு
மஞ்சக்குடி
அஞ்சுகோட்டை
திருவேகம்பற்று மங்கலம்
கோட்டையூர்
கொழுவூரி
மட்டிவால்நாடு
வலிகாமம்
3. குண்டுக்கால்
6. காவனூர் 9. சிறுவயல்
2. கோணாப்
பெண்டல்
நெட்டூர்
மேல்பகளை
திருப்பாச்
செட்டி
24. திருமால்
】5。
8.
2.
27. கட்டளை
30. பட்டினத்தான்
s' GasTu-Gu) -
33.
36. வேளாங்குடி
39. மேல்மங்கலம்
கீழையூர்
42. மானாமதுரை
45. செம்பொன்
Dnrif
48. வடமணமேல்
s' குடி 51. சிறுவல்
54. LufGüulu-67 b
57. அணியவயல் 60. உக்கிரபாண்டி
ւյց մ»
63. மருதூர்
66. சதுர்வேதி
மங்கலம்
69. புலைச்சேரி
72. பல்லவ வங்க
தொன்மை வரலாறு 688 O

வன்னிநாட்டுக்குமுந்ைத மைல்கள்
( ஒ கதீஸ்த்தாத காலத்தித்த బ్రPణిత
bosses
pణిజికజీ-జాతరౌ6ు. రnఖ2.5తాణTు.
xole
ශු>

Page 361
யாழ். - தொன்மை வரலாறு 690 O

ul-th - 46
O 691

Page 362
யாழ். - தொன்மை வரலாறு 692 9

- bו-ונL
Ulth -
47
48

Page 363
யாழ். - தொன்றை வரலாறு 694 ெ

படம் - 49
● 695

Page 364
யாழ். தொன்மை வரலாறு 695 ெ

50
or
O 697

Page 365
யாழ். - தொன்மை வரலாறு 698 9

LTrešgJ rtbreašJebašr
C 2)6O>PIULễuassřL)
TதாகவMம். ட
பின்புறம்
SeSYS LIAJIP : 2.
六 全制国
பின்புறம்.
ISISSŁı Aleño
t614šk13geňC
O es 99

Page 366
யாழ். - தொன்மை வரலாறு 7oo O

Aelga 4 − > O . d : | 65u 5mరూruఎ తిరులెరDయాr266
-
படம்  ை52 அ
● フ○1

Page 367
யாழ். - தொன்மை வரலாறு 7o2 O

O 7O3

Page 368
O O4 agawga 7
- தொன்ை
urbo

53
ii.- ***
O 705

Page 369
யாழ். - தொன்மை வரலாறு 7OS O

54
Lulub -
N O N Q

Page 370
til Fryd, r ossfeðravno Qugausgp 7oe O

&eolozsvás rarrezxxxas அதிதைகள்,
富^富 ··悬炒 ܝ܇ ، ܣܝ ܢ¬ *
+ 1 και
es y A.
" . A2s 2. 2.53
■ 量日 ങ്ങ أسسـ | | | | | .
ecò 5 als 4
படம் - 56
O 709

Page 371
யாழ் . - தொன்மை வரலாறு 71O 9

ו 1 ל ס
ulub - 57

Page 372
யாழ. தொன்மை வரலாறு 712 ெ

S8
Luluh -
----
**シ
Sax's
8
8
60
ULLO -
S9
Ulub -
О 7 1 з

Page 373
யாழ். - தொன்மை வரலாறு 714 ம்ே

O y 5

Page 374
யாழ். - தொன்மை வரலாறு 716 C

படம் - 64
O 717

Page 375
யாழ். தொன்மை வரலாறு 718 ெ

படம்  ை68
O 7 9

Page 376
யாழ்.- தொன்மை வரலாறு 72o O

ub -
70
UL-ub
O 721

Page 377
யாழ். தொன்மை வரலாறு 722 ே

72
A
() 723

Page 378
வாழ். தொன்மை வரலாறு 724 ே

73 ஆ
படம் =
O 725

Page 379
யாழ். தொன்மை வரலாறு 726 O

O 727

Page 380
யாழ். - தொன்மை வரலாறு 728 G

720

Page 381
யாழ். - தொன்மை வரலாறு 73O 9

ulth - 78

Page 382
ury. - Од тамо а Јоид 732. O

733

Page 383
யாழ. க தொன்மை வரலாறு 734 O

Ullb -
82 ஆ

Page 384
யாழ. - தொன்மை வரலாறு 736 O

83
படம் -
O 737

Page 385
யாழ்-தொன்மை AJ Javo Avgp 738 O

84
ul-D me
● 739

Page 386
uryb.- Gg5rghenid Gignag 74o O

uLib - 85
O 741

Page 387
பழ. - தொன்மை வரலாறு 742 ()

சொல்லடைவு இடப் பெயர்கள்
அம்பலப்பெருமாள் 308, 311, 312, 487.
அரசபுரம் 100, 242, 579.
அருண்மொழித் தேவ வளநாடு 378,
அல்லைப்பிட்டி 431, 490, 491, 543.
அனுராதபுரம் 7, 10, 11, 12, 13, 14, 27, 28 29, 35, 37, 45, 53, 54, 64, 65, 66, 67, 68, 77, 80, 81, 82, 83, 90, 96, 99, 104, 105, 112, 113, 114, 17, 118, 126, 127, 130, 140, 141, 143, 145, 148, 149, 151, 152, 153, 155, 156, 157, 171, 172, 173, 175, 176, 177, 178, 179, 182, 183, 184, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 213, 214, 215, 228, 229, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 246、247 24s 250、251。252 253, 354, 257." 269, 282, 283, 288. 298, 30, 302, 303, 309, 344,346,352,413,446,448,449,454,468, 469, 470, 471, 472, 477, 481, 483, 484, 496, 497, 502, 505, 520, 529, 534, ნ43, 544, 556, 557, 559, 563. 564, 569, 571, 572, 573, 575, 579, 581, 585, 589.
ஆனைக்கோட்டை 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 28, 30, 50, 54, 93, 96, 101, 403, 415, 418, 447, 449, 450, 497, 545.
இந்தியா 1, 2, 3, 4, 42, 80, 86, 91, 174, 212, 219, 225, 399, 414, 443, 445, 456, 461, 466, 471. 483, 484, 485, 493, 500, 515.
இலுப்பைக் கடவை (மடுபாதபதித்த) 273, 350, இரணைமடு 4.
இரத்தினதிபம் 68, 69,
O 743 சொல்லுட்ைவு

Page 388
இலங்கை 144, 152, 211, 214, 26, 238, 224, 29 2, 298,
300, 398, 404, 476, 480, 485.
இராஜராஜபுரம் 290, 307, 420, 426. இராஜராஜசதுர்வேதி மங்களம் 289, 302, 373, 55 1, 575.
Fptb 1. 8 ತಿ, 4 5 6 7 8 9 10, 13 14, 20
2 t, 29, 32, 32, 33, is 34, 35, 39, 40, 42, 43. 44, 45, 46, 47, 48, 49, 53, 54, 55, 64, 67, 68, 72, 73, 75, 76, 78, 79, 80. 82, 83, 84, 86, 88, 89, ρο, 92, 93, 10 Ι, 10 , 103 - 04, 106, 108, 109, 111, 12, 113, 115, 1 6, 18, 1ι 9, 1 και 0, 122, 123, 124, 125, 126, 1 και 7 128, 129, 130, 131, 133, 136, 137, 138, 139, 140, 141, 143, 144, 145, 146, 147, 148, 150, 151, 156, 169, 170, 171, 172, 173, 175, 76, 177, 178, 183, 187, 190, 192. 209, 2 t 1, 2 12, 215, 218, 219, 220, 226, 230, 231, 235, 238. 241, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 253, a 54, 256, 257, 266, 267, 268. 269, 270, 2.71. 273, 274, 879, 280, 28 1, 283, 284, 286. 287, 288, 290, 29, 294, 295, 299, 300, 301. 303. 304, 306, 307, 308, 313, 314, 315, 8 16, 317, 326, 329, 330, 33 1, 332, 335, 337, 340, 341, 343, 344, 345, 348, 347, 351, 353, 355, 357, 359, 364, 36s, 367, 368, 370, 371, is 72, 378, 374, 376, 377, 379, 397, 398, 399, 400, 401, 402, 405, 404, 405, 406, 408, 412, 415, 415, 419, 420, 424, 425, 427, 431,432, 433, 443, 444, 445, 446, 448, 449, 451, 452, 453, 455, 457, 458, 459, 460, 461, 463, 464, 466, 467, 468, 469, 471, 47, 473, 475, 477, 478, 480, 48, 482, 483, 484,485, 486, 487, 488, 491, 492, 493, 500, 501, 502, 503, 504, 515: öl6 517, 5l8 520, 5』I, 533, 。524、525, 526。
யாழ். - தொன்மை வரலாறு 724 O

527, 528, 529, 530, 531, 532, 533, 539, 540, 513, 546, 548, 549, 550, 551, 552, 553, 554, 556, 558, 559, 560, 56ւ, 562, 563, 564, 565, 567, 568, 56.9, 571, 573, 578, 579, 581, 586.
ஈழவூர் 372, 501.
உசுமன்துறை 152.
உதுறு கரா (வடகரை) 183.
உருத்திரபுரம் 560, 561, 574.
உரும்பிராய் 308, 447 ' '
உன்னரசுகிரி (உண்ணாசகிரி) 203, 104, 205, 206.
ஊர்காவற்றுறை (சுகரதித்த)
ஊறாத்தோட்டை/ஊராத்துறை 252, 253, 273, 287, 291, & 98, 306, 813, 814, 5 ከ9, 883, 884, 850, 877,
, , 379, 424, 43ο, 431. 483, 488, 49 1, 544.
எருப்பொத்தான 106, 417, 518, 520, 524, 585.
ஐஞ்ஞாற்றுவன்வளவு 312, 488:
கங்கைகொண்டான் 308.
கணுக்கிணிரட (கணுக்கேணி) 365, 555. ‹ኣ
கதிர்காமம் 50, 51, 64, 66, 67, 151, 182, 212, 298,
299, 564, 573. w V.
கதிரைமலை 51, 174, 195, 197, 198, 199, 2 1, 212,
220, 559, 57t.
கந்தரோடை 7, 10, 11, 12, 13, 14, 15, 18, 22, 23. 26, 27, 28, 29, 35, 45, 90, 91. 93, 99, 100, 10 t, 202, 119, 120, 148, 149, 212, 2 3, 22 J, 24 1, 255, 403, 48, 446, 447, 449, 450, 480, 493, 494, 496, 497, 499, 500, 501, 5 J 3, 504, 556, 559, 560, 563, 564, 567, 568, 581, 582, 583, 884, 585, 588, , ,
கந்தளர்ய் (கங்காதளாக) 350, 573, 575.
கரணவாய் 234, 454, 'v
கல்முனின 85, 100, 101, 497, 50
gi, I w
e 745 சொல்லடைவு

Page 389
கரையாம்பிட்டி 15, 17. காரைநகர் 5, 15, 24, 27, 30, 89, 460, 461. காவிரிப்பூம்பட்டினம் 85, 86, 87, 89, 195. கீரிமலை 134, 135, 136, 152, 153, 195, 197, 198, 202. 207, 2 Ꭰ 1 , 237, 527, Ꮌ 29 , 558 , 570 , 571 . குடத்தனை 102, 122, 436, 494. குடமுருட்டியாறு 308. குருந்தனுரர் 81, 189, 255, 574, 580. குருந்தி 273, 350, 352, 358. கும்புறுப்பிட்டி 15, 26, 27, 28, 93. சத்திராந்தை 5, 15, 24, 25, 27, 28, 30, 50, 93,
40.3, 450. சாட்டி 15, 26, 27, 93, 403. சிங்கைநகர் 45, 220, 221, 361, 363, 368, 370, 383. சித்திரமேழி 377, சுன்னாகம் 435, 568, 584.
தம்பபண்ணி 31, 32, 33, 48, 51, 213, 402, 463.
தமிழ்நாடு 33, 34, 102, 115, 121, 122, 139, 140, 148, 149. 150, 192, 217, 219, 233, 25, 253, 256。40g。529, 549。
தமிழகம் 1, 2, 3, 6, 7, 21, 29, 26, 28, 32, 3: 34, 36, 40, 41, 42, 43, 48, 54, 55, 72, 79, 78, 8.4, 86, 87, 88, 89, 90, 9, 109, 04, 165, 108, 109, f 10, 12. 16, 122, 123, 124, 127, i29, 131, 137, 139, 140, 14, 142, 144, 145, 46, 147, 248, 150, 155, 156, 169, 170, 17 t, 72, 178, i r 9, 180, 186, 190, 191, 192, 193, 213, 214, 25, 18, 19, 230, 238, 234, 236, 237, 238, 240, 24, 243, 247, 248, 356, 266。268 276、379、280、283, 29I, 363, 309, 310, 312, 315, 36, 318, 321. 322, 330, 333, 3,37, 3 42., 345, 349, 351 353, 35ნ, 357, 359, 360, 866, 368, 372, 374, 376, 377, 978, 379,
வாழ். - தொன்மை வரலாறு 748 கு

407. 408, 418, 4.5, 42, 433, 445, 448, 450, 45, 455, 456, 459, 460, 463, 464, 466, 467, 46, 469, 470, 471, 473, 475, 484, 488, 491 492, 494, 501, 505, 516, 517, 5 18, 519, 520 53 I, 525、526, 527、530、531 532、533。539, 54? 545、546, 548、550、551 552, 553, 556, 56 5, 5 6 8, 576, 579, 58 1, 5 86. திருக்கேதீஸ்வரம் கேதீச்சரம் 24, 95, 182, 201, 219, 233. 24, 475, 480. 497, 500, 501, 529, 530, 558、560, 568、569, 572, 574, 587。 திருக்கோணேஸ்வரம் 289, 568. திருகோணமலை 569, 573, 575. தென்னிந்தியா 2, 8, 12, 14, 21, 30, 31, 41, 44, 45, 46, 54, 84, 85, 86, 88. 89, 90, 100, 129, ] 70, } 7 ", 184, 812, 8 18, 85 ይ• 868, 286, 287, 329, 330, 340, 342, 343, 382, 400, 401, 406, 4l 4, 4 t5, 432, 436, 437, 445, 4లీ6, 459, 474 476, 49 it, 517. தொண்டைமண்டலம் 72, 73, 248, 317. தொண்டைமான் ஆறு 73, 234, 235. நயினாதீவு 37, 38, 134, 136, 313, 544, 584, நல்லூர் 93, 100, 221, 224, 229, 290, 308, 378,
428, 524. நாகதீபம் ( மணிபல்லவம் ) 38, 39, 46, 52, 64, 65, 67, 68, 70, 74, 75, 79, 80, 81, 83, 88, 84, 06, l 14, 120, 121, 122, 130, 153, 156, 57, I 72, 177, 222, 252, 402, 403, 464, 547, 557, 580 , 581. நாகநாடு 38, 39, 67, 68, 69, 70, 74; 75, 79, 89,
20, 131, 157, 465, 557. நாகர்கோயில் 26, 37, 93, 122, 584. நாரந்தன்ை 291, 372, 436, 509, 573. நாவாந்துறிை 15, 17, 19, 20.
O 747 GaasvsøMLô

Page 390
பதவியா/பதிரட்ட/பதி 350, 358, 485, 553, 573, 575.
பரமன்கிராய் 13, 28, 100, 103, 417.
பாண்டிநாடு 2, 31, 34, 40, 41, 42, 44, 47, 48, 49, 50, 2, 125, 128, 129, 137, 224, 245, 279, 297. 318, 330, 335, 336, 351, 353, 354, 358, 359, 380, 382, 469, 546.
புங்குடுதீவு 114, 503, 568, 584,
புலச்சேரி 275, 333, 350.
புத்துரர் 584. பூநகரி 5, 13, 28, 35, 36, 102, 103, 104, 112, 221, 27 2 , Ꮽ07 , 311 , 312, 3 Ꭵ4, , 350, , 85 1 , 37 ? , 37 Ꮽ; 4.17, 45 3, 487, 50l., 503, 504, 518, 530, 550 570, 571. . . . பெரியபுளியங்குளம் 103, 106, 109, 111, 417, 518, 520,
546, 585. ()ெபலன் பண்டி பெலச 8, 398, 444, பொலநறுவை 321, 323, 324, 325, 326, 327, 328, 336, 337, 338, is 39, 542, 343, 345, 346, 348, 349, 350, 353, 354, 357, 360, 361, 36s, 364, 365, 367, 371, 372, 373, 374, 379, 385, 503. 505, 534, 553, 556, 573, 574, 575, 581, 588. மகாகச்சற்கொடி 106, 4 17, 5 18, 520, 524.
*。
மட்டக்களப்பு/மட்டுக்களப்பு 37, 64, 76, 107, 131, 136,
、、15g、154、I55。203。205 a06 535 569・
v . ! 1 1 ܆ - ܘܝ ... ' .. '፩ V w - ༥ மட்டுவில் / மட்டுவில்நாடு / மட்டிவால்நாடு 100, 272, 273,
v. 308, 37 2. 373, 503, 550.
மண்ணித்தலை 13, 15, 28, 36, 93, 100, 10, 103,
372, 403, 417, 418, 494, 500. . .
மணற்றி./ மணலூர்|மணவூர்/மணவை/மணற்றிடர் 48, 44, 45,
46, 47, 48, 152; .239, 248, 277. . . .
மணிபல்லவம் 68, 69, 70, 74, 120, 157, 466, .
மதுரை 124, 125, 199, 203, 211, 246, 275, 276, 277,
278, 279, 332, 934, 371, 82, 471, 525.
யாழ். - தொன்மை. வரலாறு 748 O

மன்னார்/மன்னார/மன்னார்க் குடா/மன்னார் வளைகுடா 2, 5
23, 28, 30, 31, 35, 35, 47, 48, 81, 82, 85,
மாதோட்டம் / மாதோட்ட / மகாதித்த/மாதித்த / மகாதீர்த்தம்/ மாதித்த பட்டின(ம்)| மாதோட்டத்துறைமுகம் / மகா தீர்த்தத் துறைமுகம் / மகாதீர்த்த / மகாதீர்த்த பட்டின 34, 82, 88, 89, 127, 145, 174, 178, 179, 82, 183, 184, 185, 186, 93, 201, 241, 272, 273, 290, v 291 , , 292, 300, .. 302, 304, . 306, :306, 3 1 0, 000SSS S 0 00SS SS000SSS000S S 000S000S00SS000S SAS00S0S 368, 374, 379, 402, 403, 420, 425, 426, 459, 462, 463, 464,376, 477, 478, 479, 480, 481, 483, 484, 489, 490, 491, 503, 504, 553, 558, 560, 572, 573, 576, 577, 58t, 587, 588, 589. மாந்தை 5, 7, 13, 16, 21, 22, 26, 28, 29, 30 : 34, 35, 47, 48, 50, 82, 83, 94, 96, 97, 98, 99, 100, 101, 102, 173, 176, 180, 181, 182, as , 273, 281, 313, 330, 352, 403, 462, 463, 473, 479, 484, 486, 487, 492, 503, மாமடுவ 36, 403, 448, 560, 561. Y மாரச்சிரட (வட-தென்மராட்சிப் பகுதி) 365, 555. மாவிட்டபுரம் 196, 199, 202, 211, 308,571. முல்லைத்தீவு 36, 81, 82, 83, 102, 104, 131, 189, 242, 255, 365, 459, 483, 494, 497, 498, 499, 500, 56o, 56 3, 575. யாழ். குடாந்ாடு 5-6, 6, 13, 21, 26, 27, 28, 37, 44, ι 45, 68, 73, 81, 93, 118, 1 2 0, 121, 174, 183, 821,、222,235, 43,299,505,308,412,419, 487, 490, 491, 503, 550, 556, 573, 588. யாழ்ப்பாணம் 18, 19, 21, 23, 45, 46, 47, 48, 8, 82, 9s, 125, 131, 147, 154, 155, 174, 175, 208, a 16, 217, 220, 22, 222, 823, 2 24, 225, 226, 227, 228, 229, 230, 231, 2 a 2, 233, 237, ።39, 240, 24፥, 25ö, ' ፡68,” “ 874, 275,' `።76, ።7ጕ,
O /டித் சொல்லடைவு

Page 391
278, 279, 280, 28 1, 291, 306, 318, 350, 357, 360, 36 1, 363, 365, 372, 406, 4 Ն7, 434, 435, 436, 455, 488, 503, 5 19, 52.9, 534, 540, 541, 548, 555, 584. யாழ்ப்பாணாயன் பட்டினம் / யாழ்ப்பாணப் பட்டினம் / யாபா
பட்டுண 226, 227, 228, 229, 230, வல்லிபுரம் 26, 27, 37, 93, 102, 104, 112, 113, 115, I 16, 1 27, 1 19, 120, 121, 156, 221, 459, 483, 494, 500, 503, 547, 568, 58 3, ნ84. வவுனியா/வன்னி 5, 36, 76, 81, 83, 103, 105, 107, l08, 109, ll 1, 112, à 21, 131, 191, 2 à 8, 242, 267, 4 15, 414, 417. 450, 453, 468, 471, 472. 474, 518, 520, 523, 524, 525, 543, 545, 546, 547, 548, 550, 574、580, 585、587. வெட்டுக்காடு 28, 100, 101, 241, 372, 417, 494, 500,
501, 570. வெடிக்கனாரிமலை 106, 111, 417, 518, 50, 523, 585. வெடியரசன் கோட்டை 93. வேலணை 15, 26, 27, 93, 584, ஜம்புகோளப்பட்டினம் (ஜம்பு கோவளம் ) 26, 69 75, 80, 88, 89, 94, 148 - 149, 307, 459, 460, 464, 465, 466, 476, 579, 580.
தொல்லியல் சான்றுகள்
அச்சுக்குத்திய நாணயங்கள் 37, 101, 102, 459, 483, 499.
ஆனைக்கோட்டை வெண்கல முத்திரை 417, 545. இராஜராஜேஸ்வரம் 290, 420, 573,
இலட்சுமி (லக்ஷமி) நாணயங்கள் 11, 18, 20, 22, 91, 92, 98, 10, 497, 498, 499, 500, 504, 562.
உண்ணலோமரக்கோயில் / விகாரை 255.
உருத்திரபுரச் சிவன் கோயில் 574,
யாழ் உதொன்ழை வரலாறு 75o O

உரோம நாணயங்கள் 11, 18, 85, 93, 98, 99, 10
475, 500. உரோம மட்பாண்டங்கள் / மதுச்சாடிகள் 11, 30, 87, 88,
91, 96, 10 , 500, 50l. உரோம, மத்தியகிழக்கு மட்பாண்டங்கள் 95, 492. உரோம ரவுலெற்றெற் மட்பாண்டங்கள் 11, 16, 18, 20,
22, 97, 98, 99, 418. ஊர்காவற்றுறைக் கல்வெட்டு 292, 306, 313, 489,
கதிரையாண்டவர் கதிரையாண்டார்கோயில் 558, 859, 571. கல்வெட்டுகள் 39, 43, 53, 65, 74, 77, 78, 103, 105, 106, 107, 08, 209, 1 1 0, 13, l l 4, 15, 122, 129, 182, 183, 184, 253, 273, 280, 28 1, 283, 287, 288, 289, 290, 291, 892, 293, 296, 297, 298, 304, 306、307, 3 II。312, 3 I6、325, 333, 337, 338, 3.39, 340, 344, 351, 352, 367, 368, 371, 374, 375, 377, 405, 415, 417, 419, 424, 425, 427, 468, 469, 471, 472, 482, 485, 487, 490、522。523、526。534, 544、547 549。550。 551, 552, 558, 574, 575, 576, 577. கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள் 9, 12 13, 16, 18, 19, 20, 23, 25, 26, 27, 35, 36, 37, 87, 91, 97, 100, 101. கார்ணிலியன் கல்லிலமைந்த முத்திரை 92, 120, 418. குருண்ட வாசக விகாரை / குருந்த விகாரை 81, 89, 255. குறுணிக்கற்காலக் கருவிகள் / ஆயுதங்கள் 49, 52, 54. சசானிய மட்பாண்டங்கள் 181, சாலிபப்பத விகாரை 81. சாலிபவட்ட விகாரை 81. சிவப்பு நிற மட்பாண்டங்கள் 18, 19, 28, 93, 97.
சீன அராபிய மட்பாண்டங்கள் 221.
திருத்தம்பலேச்சுரன் / திருத்தம்பலேசுவரி கோயில் / ஆலயம்
558, 560, 570.
O 75 சொல்லடைவு

Page 392
நகுலேசர் கோயில் 195, 196, 202. நயினாதீவு நாகபூசணியம்மன் கோயில் / ஆலயம் 430, 485
558, 5 62.
நாணயங்கள் 85, 90, 101, 156, 291, 363, 483, 490, 49s, 494, 496, 499, 500, 501, 503, 504, 505, 529, 560, 562, 57.3, 582.
பிராமிக் கல்வெட்டுகள் 39, 43, 53, 64, 73, 76, 77, 78 79, 81, 86, 103, 104, 105, 107, 108, 109, 110, 1 11, 112, 116, 120, 124, 130 - 131, 131, 137, 139, 140, 143, 154, 155, 218, 405, 41, 416, 417, 432, 433, 450, 452, 453, 455, 468, 469, 471, 473, 516, 517, 518, 520, 523, 54, و 560 ,57 5 ,548 ,546 ,545 ,539 ,27 5 ,26 5 , 525 562, 564, 565, 566. பெரியபுளியங்குளக் கல்வெட்டு 108, 109, 111, 414, 518,
545, 546。 மட்பாண்ட ஒட்டுச் சாசனம் / மட்பாண்டச் சாசனம் 31, 48,
467, 5 18, 583. மண்ணித்தலைச் சிவாலயம் 251, 571, 572
总
மத்திய கிழக்கு / தூரகிழக்கு மட்பாண்டங்கள் 181, 185, 431)
492, 543. மன்னார்க் கச்சேரித்தூண் கல்வெட்டு 482, 544, 587 ய (ஜ) ம்புகோள விகாரை 81, 304, 388 ரவுலெற்றெற் மட்பாண்டம் 25, 85, 87, 88, 89, 90,
91, 92, 93, 96, 1 0 1, 102. வல்லிபுரப் பொன்னேடு / பொற்சாசனம் / வல்லிபுரச் grafGörib 38, 13, Il 5, 116, 177, l l 8, 120, 21, 22, 124, 125, 126, 130, 131, 157, 84, 218, 222, 355、418、547、583、587.
தொழில் விருதுப் பெயர்கள்
அகம்படியார் 315, 319, 553. அராபியர்/வணிகர் 314, 589. அரையர்/அரையன் 124, 553,
யாழ். - தொன்மை வரலாறு 752 ()

அந்தணர்குலம்/பிராமணர்/புரோகிதர் 359, 523, 526, 527, 53. அய்யாவோளே 309, ஆய் 141, 143, 230, 4 12, 523, 548, 547.
உடையான் 373, 374, 379, 453, 531, 553, ஐஞ்ஞாற்றுவர் 253, 285, 309, 310, 311, 313, 314,
551, 552. கடல்வழி வர்த்தகம்/வாணிபம்/தொழில் 19, 109, 139, 457,
470, 486. 5L1535 IT 417, 52, 523, 524, 534, 548. .532 4703 137 ,38 1 rf חו u "ע (9660. கலிங்கர்/கலிங்கவம்சத்தவர் 269, 270, 898, 303, 338, 341,
437. கஹபதி/ககபதிகள் 417, 468, 471, 522, 524, 525, 526,
534, 548. கிளவன்/கிளான் 374, 379, 458, 5 19, 549, 553. குடும்பிகன்/குடும்பிகா/குடும்பிகர் 468, 522, 524, 525. குதிரைவர்த்தகம் / வியாபாரம் / வாணிபம் / குதிரைச்செட்டிகள்
109 , 3 14, 454, 468 . குமார கணத்தார் 287, 481, கேரளர் 28, 283, 337, 340, 348, 350, 353. கைக்கோளர் 455, 532. சங்கு குளித்தல் 453, 458, 521. சாவகர் 229, 437, effTaiuri 458.
சிங்களவர் 152, 240, 276, 314, 348, 350, 433, 434,
435, 515, 843, 556, 557, 560, 586. சித்திரமேழியினர் 314, 453. சிறுபாணர்/இசைப்பாணர் 230, 231. சீனர் 437, 490, 543. செட்டி (வணிககணம்)/செட்டிகள் செத்தி வணிகர்கள் / செட்டி
புத்திரர் 3 10, 314, 459-480, 466, 485, சேரர் 266, 287, 437, 462, 517, 548,
O 753 சொல்லடைவு

Page 393
சோழர்/சோழவம்சம் 249, 250, 253, 254, 266, 267, 868, 269, 27 1, 272, 273. 281, 28 6, 287, 289, 290, 29 1, 292, 293, 294, 295, 296, 297, 299 30 F, 308, 318, 320, 321, 330, 33, 334, 335. 337, 340, 341, 343, 346, 349, 353, 371, 377, 979, 380, 420, 425, 430, 437, 448, 453, 469, 484, 487, 489, 492, 503, 5 17, 531, 539, 544, 548、549、550、553 57I, 572, 574.
தமிழ் வணிகர்/தமிழக வணிகர்/தமேட வணிகர் 467, 468,
469, 473.
தமிழர்/தமிழ் மக்கள் 144, 145, 238, 244, 25 1, 26 , 268, 270, 282, 291, 316, 348, 349, 350, 352, 382, 409, 407, 4l 3, 460, 469, 482, 484, 485, 55 7, 583 . s
திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் 309, 315, 485, 486, 488. திராவிடர் 254, 267, 415, 433, 542, 556, 557, 558.
தேவன் (ர்) 302, 355, 373, 374, 375, 379, 453,
53 l, 553.
தொண்டைமான்கள்/தொண்டையர் 72, 235, 374, நகரத்தார் 309, 316, 485. நாக 107, 108, 112,
நாடாள்வார ( ர் ) (ன்) நாடாள்வான் 122, 125, 355, 356;
373, 374, 375, 379, 553.
நான்கு நாட்டார் 258. நானாதேசிகள் 285, 287, 288, 291, 316, 453, 487. நானாதேசிக வணிக கணம் 309, 310, 31, 312, 3 14,
315, 485, 487, 488. நானாதேசி திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் 309. நானாதேசிய வீர பட்டினம் 486.
நானாட்டார் 287,
பதினெண் பூமி திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் 310.
யாழ். - தொன்மை வரலாறு 754 )

பரதர் / பரதவர் / பரத குலத்தவர் / பரதகுடி 109, 132, 137, 140, 54, 230, 4 12, 417, 450, 453, 517, 520, 521, 523, 582, 539. பரதேசிகள் 313, 489, பருமக/மகாபருமக 1 மாபருமக 110, 111, 112, 412, 417,
522、523、524、526、534, 548. பருமகன்/ள் 107, 110, 111, 112, பல்லவர் 235, 238, 241, 242, 248, 249, 66, 448,
501, 527, 539, 569. பாண்டியர் 248, 249, 250, 251, 252, 266, 288, 573, 287, 30 1, 337, 340, 341, 353, 377, 437, 517, 521, 539, 548, பாணர்/ன் 230, 231, 233, 239. பாரசீகர் 431, 480, 484, 492. பிராமணர்/பிராமண குலம்/பிராமண குருக்கள்/அந்தணர் 287
318, 320, 373, 528, 530, 541, 542, 559, 560, 568, 575, 576, 577. பெருமகன் 111, 112, 4 12, 468. மணிக்கிராமத்தார்/கிராமம் 285, 309, 480. மதுரை(யும் ஈழமும்)கொண்டகோபரகேசரிவர்மன் 246, 247. மழவச் சக்கரவர்த்தி / மழவர் / மழவகுலம் / வம்சம் மழவராயன் மாளுவச் சக்கரவர்த்தி 125, 274, 354, 355, 375. மீகாமன் 133, 134, 135, 136, 138, 139, 455, 52, முக்குவர் 133, 37, 152, 154, 155, 521, 532, 538,
539.
முத்துக்குளித்தல் 2, 133 137, 155, 249, 453, 458, 474,
5 2 l
யாழ்ப்பாணர்(ன் ) 223, 229, 230, 231, 232, 287, 239, UT IT uuri ( 6ör ) 1:23, 355, 553.
லம்பகண்ணர் (லம்பகர்னர்)/வம்சத்தவர் 150, 156, 355, 382, வணிக கணங்கள் 285, 287, 288, 291, 308, 309, 311, 31 2, 313, 314, 315, 316, 320, 321, 470, 471, 480, 485, 486, 487, 488, 490.
O 755 சொல்லட்ைவு

Page 394
வர்த்தகம் 83, 85, 86, 88, 89, 93, 94, 99, 10ர 18 1, 28 1, 249, 287, 314, 467, 469, 470, 47, 472, 474, 475, 476, 477, 480, 493, 500, 520 544。 வலஞ்சியர் 285, 309, 316, 485, வன்னியர் 26, 242, 317, 346, 553, 554, வாணிபம் 2, 85, 86, 90, 99, 104, 137, 139, 155, 174 175, 188, 186, 221, 235, 282, 285, 287, 31 1, 315, 334, 417, 457, 458, 463, 464, 465, 466, 467, 469, 471, 475, 474, 479, 492, 520 5 e 2, 525, 545, 576. 6l6ar FrTuuò 19, 86, 104, i 09, 22 , 243, 249, 400, 401, 445, 446, 447, 448, 449, 450, 5 18, 525. வீரக் கொடி/யர் 310, 315, 485. வேள் 109, 143, 230, 4 12, 4 17, 468, 523, 546, 547, வேளாள குலத்தவன் (ர்) | வேளாளன் (ர்) / வேளான்(ர்) 112, 275 317 338, 356, 357 370, 373 375, 877 378, 45 , 453, 5 19, 520, 531, 532, 539, 54 II, 546, 549, 553. வேளிர் 143, 453, 5 20, 546, 5 17, வேளைக்காரப்படை/வேளைக்காரர் 302, 305, 315, 317, 318,
319, 325, 553.
நூல்களின் பெயர்கள்
அகநானூறு 408, 409, 410.
அகித ஜாதகம் 1 அகித்த ஜாதகம் 461.
இராசவாகினி 481.
இறையனார் அகப்பொருளுரை 44, 47, 49.
கடலோட்டு வெடியரசன்சரிதம் 136.
கண்ணகி வழக்குரை / காதை 131, 133, 137, 154, 465,
52, 532, 540.
கதிரைமலைப்பள்ளு 51.
குடுட் அல் அலாம் 482.
யாழ். - தொன்மை வரலாறு 756 ()

குறுந்தொகை 408, 409, 410, 411, 462, 479 Go) sorruprgo) a ő 8, 172, 196, 197, 198, 199,
208, 209, a 10, 218, 225, 226, 233, 237, 240, 274, 87 (5, 876, 277, 279, 280, 356,
கொஸ்மஸ் குறிப்புகள் 478, கோணேசர் கல்வெட்டு 172, 203 205, 206, 209, கோவலனார் கதை 131, 137. சகசவத்துப் பகரண 481, 525.
சத்தர் மரத்னாகரய 362.
சமந்த பாலாதிகா 524. சாதிமாலைப்பாட்டு 46, 47, 48. சிலப்பதிகாரம் 38, 49, 67, 74 - 75, 79, 131,
146, 147, 148, 451, 454, 465, 466, 470,
சிலம்பு கூறல் 131, 137. சிறுபாணாற்றுப் படை 231. சூளவம்சம் 81, 124, 125, 128, 129, 149, 150, Ꮧ7 8, 179 , I84, Ꮧ87 , 1 88 , 19 1 , 1Ꮽ 2 , 19 3 , 215, 335, 239, 244, 245, 250, 251, 255. ኃ82, 283, 287, 291, 292, 294, 295, 897 • 300, 303, 304, 30 5., 319, 3 24, 325, 327, 330, 331, 332, 335, 336,339,544,345, 347, 348, 349, 350, 35 1, 355, 358, 361, 368, 871, 379, 380, 383, 389, 482, 515, 547. V
தமிழ் நாவலர் சரிதை 368, 369, 370,
தாதுவம்சம் 64, 66, 82, 477, 580, திரிகோணாசல புராணம் 172, 201, 205, 206, 209,
21 1, 21 6, 220, திரிஸிங்களே கடயிம் ஸஹ வித்தி 365, 555. திருஞானசம்பந்தர் தேவாரம் 231, 239, 256.
திருவாதவூரடிகள் புராணம் 245,
O 757 சொல்லடைவு
800,
ssa, 357,
210.
132,
47 l.
15, 194, 27 Ꭶ, 299, 328, 346,
367 ; 528,
210,

Page 395
திருவிளையாடற் புராணம் 44, 49.
திவ்யவதான 458,
தீபவம்சம் 33, 40, 64, 140, 141, 144, 149, 212, 402,
5I5。
தேசவழமைச் சட்டங்கள் 519, 533, 534, 535, 536,
537, 539, 540.
நற்றிணை 44, 408, 410, 411.
நம்பொத்த 255. o
நிகாய சங்கிரகய 228, 362.
பட்டினப்பாலை 146, 450, 466,
பத்துப்பாட்டு 231.
பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் 495.
புறநானூறு 230,
பூஜாவலிய 146, 147, 346, 348, 349, 351 .
பெரிப்புளுஸ் 174.
பெரிய புராணம் 232, 233, 237, 239,
பெரும்பாணாற்றுப்படை 72, 231, 450, 451.
மகாவம்சம் 38, 40, 41, 43, 64, 65, 68, 69, 70, 74, 75, 79, 126, 128, 131, 140, 141, 142, 143, l44, 145, 146, 47, 149, 170, 210, 212, 55, 402, 448, 459, 467, 468, 515, 525, 531, 557, 559, 560, 561, 566, 567, 579.
மட்டக்களப்பு மான்மியம் 46, 47, 172, 205, 206, 207,
210, 220, 346, 362.
மணிமேகலை 38, 67, 68, 69, 74, 75, 79, 131, 177,
465, 466, 49 l.
மதுரா மான்மியம் 44, 45.
யாழ்ப்பாண வைபவமாலை 45, 46, 50, 51, 52, 136, 149, 152, 153, 54, 172, 195, 196, 198, 199, 206, 208, 209, 210, 212, 213, 214, 217, 218, 220, 221, 222, 224, 225, 226, 233, 234, 237, 238, 239, 240, 242, 274, 275, 276, 277, 279,
யாழ். - தொன்மை வரலாறு 758 O

280, 38, 346, 360, 36, 96, 971, 379, 382, 454, 515, 521, 527, 52.9, 530, 531, 532, 539, 540, 542, 544, 555, 558, 569, 560, 565, 570。
571, 577.
ராஜவலிய 3, 146, 147, 488.
வம்சத்தப்பக்காசினி 65, 525.
வலகச ஜாதகம் 458,
வெடியரசன் கதை 540,
வையா 199, 206, 209, 224, 240, 274, 276, 277,
278, 279, 318.
வையாபாடல் 47, 52, 136, 137, 172, 198, 206, 209, 210, 218, 221, 222, 223, 224, 285, 226, 233, 237, 238, 240, 245, 274, 276, 277, 278, 279,
317, 366, 515, 531, 532, 540, 542, 543, 554。570。
மனிதப் பெயர்கள் - 1
ஆடக சவுந்தரி 203, 204, 205, 208, 209, 220 ஆரியச் சக்கரவர்த்திகள் 123, 224, 228, 268, 274, 277, 278, 279, 317, 3 18, 352, 353, 355, 357, 359, 360, 361 • 3 63, 364, 3 65, 366, 367, 36:8, 370, 37l, 382, 383, 504、53I, 539, 544。548. இரண்டாம் பராந்தகன் 250, 252, 281, 29 1, 377, 489, இரண்டாம் இராஜாதிராஜன் 311, 330, 382, 378, இரண்டாம் இராஜேந்திரன் 281, 297, 298. இராஜராஜன் 282, 283, 284, 288, 289, 290, 377, இராஜராஜசோழன் 338, 884, 362, 549. இராஜேந்திரன் / இராஜேந்திரசோழன் 282, 286, 294, 301,
307, 425, 427. உக்கிரசிங்கன் (வாலசிங்கன்) 172, 195, 196, 198, 199, 201, 203, 206, 207, 208, 209, 210, 211, .212, 2 13, 214, 2 15, 216, 247, è 18, 219, 220, 22, 224, 225, 233, 234, 235. 238, 240, 242, 256, 366, 52.9, 559, 570.
d 759 சொல்லடைவு

Page 396
எல்லாளன் 14i, 142, 143, 144, 145, 15 f, 448, 468,
469.
கண்ணகி 75, 132, 147, 148, 464, 465, 470. கரிகாற்சோழன் 146, 147.
கஜபாகு 148, 149. குலகேது 199, 223, 224, 225, 237, குலோத்துங்கன் 300, 301, 344. குளக்கோட்டன் 203, 204, 205, 206, 207, 209, 216. கூழங்கைச் சக்கரவர்த்தி (கோளுறு கரத்துக்குரிசில்) 223, 224,
240, 277, 279. சந்திரபானு 273, 351, 358, 365, 371. சாவகன் 350, 351, 352, 353, 385.
சிங்ககுமாரன் 204, 205, 206, 210. சிங்ககேது 199, 276. சிறீநாக 39, 178, 179, 186, 187, 188. சிறீமாற சிறீவல்லபன் 245, 285. சோழ இலங்கேஸ்வரன் 280, 345, 372, 549 தனத்திறற்கிறீபன் 318. தனிநாயகன் 356. தாரகசோதி 206. தாழிக்குமரன் 420 . திசையுக்கிரசோழன் 195, 196, 201, 224, 276, 530,
542, 547 - 54&. திருஞானசம்பந்தர் 182, 231, 232, 233, 239 478. திருநீலகண்ட யாழ்ப்பாணர் / நாயனார் 231, 232, 239 துட்டகைமுனு 141, 142, 143, 144, 145, 472, 584. தேவநம்பியதீஸன் 3, 8, 40, 53, 55, 64, 65; 66; 67, ه 26 1 و 2 1 1 و 106 و 105 ,88 , 81 و 80 , 77 ,74 - 73 137, 140, 141, 150, 459, 466, 469, 579.
தொண்டைமான் 234, 238, 241, *
و 9ة قة و 8 3 3 و 37 3 و 36 3 و 5 3 3 و 273 و 269 قة نهرة مايو لشرقي
540, 34, 342, 343, 344, 503, 578.
யாழ். - தொன்மை வரலாறு 760 O

பராக்கிரமபாகு 129, 270, 271, 273, 319, 320, 321, 325, 326, 327, 928, 329, 930, 85 1, 332, 333, 334, 335, 396, 938, 389, 341, 343, 353, 354, 378, 379, 380. பராந்தகசோழன் 246, 247, 250, 253, 389. பாண்டிமழவன் 224, 274, 275, 276, 277, 278, 279, 355 , 356 , 3 57 , Ꮽ Ꮾ0 , 86 1 , 366, 379, 382,
453, 577.
மாகன் / மாகோன் 216, 218, 269, 270, 336, 337, 342, 343, 345, 346, 347, 348, 350, 351, 352, 3 53 , 360 , 36 1 , 362 , 363 , Ꮽ64 , 365 , Ꮽ82 .
மாசாத்துவான் 132, 139, 465. மாநாய்கன் 132, 133, 138, 139, 464, 465, 470. மாருதப்புரவீகவல்லி / மாருதப்பிரவல்லி / மாருதவீகவல்லி /
மாருதப்பிரவை / மாருதப்பிரவீகவல்லி 172, 195, 196 197, 198, 199, 201, 202, 203, 206, 208, 209, 210, 211, 215, 216, 219, 224, 256, 366, 455, 529, 548, 570, 571.
மாள(ழுவராயர(ர்) 125, 128, 318, 355, 380, 382,
மாளு (ழ) வச் சக்கரவர்த்தி 125, 128, 355, 380, 382. முதலாம் இராஜராஜன் 246, 254, 281, 282, 285, 288,
287, 293, 302, 305, 507, 309, 3 16, 3 72, 373, 375, 419, 420, 487, 551, 573, 574, 575. முதலாம் இராஜாதிராஜன் 295, 298. முதலாம் இராஜேந்திரன் 281, 282, 287, 290, 29 1, 293, 295, 301, 506, 316, 375, 377, 424, 426, 487, 57.3, 574.
முதலாம் கஜபாகு 147, 328, 482. முதலாம் குலோத்துங்கன் 303, 304, 308, 326, முதலாம் பராக்கிரமபாகு 124, 128, 129, 147, 215, 269, 313, 319, 324, 344, 349, 382, 484, 488, 489, 503, 578. முதலாம் பராந்தகன் 245, 250, 257, 377,
O 781 சொல்லட்ைவு

Page 397
முதலாம் விஜயபாகு 266, 271, 272, 298, 318 319, 320 .
326 , 33Ꮞ, Ꭿ 79 , 508 , 578 , 588. மூன்றாம் குலோத்துங்கன் 334, 335, 343, 378, யாழ்பாடி 198, 218, 222, 223, 224, 225, 226, 227, 228, 230, 237, 240, 274, 275, 276, 277, 279, 379, 539。 லங்காபுர 331, 332, 356, 380, 381. வசபன் 82, 117, 118, 121, 126, 127, 128, 129, 130,
150, 183, 222, 355. விச(ஜ)ய கூழங்க்ைச் சக்கரவர்த்தி 277, 346, 360, 362. விஜயபாகு / தேவர் 269, 271, 299, 300, 301, 302, 303,
304, 305, 321, 322, 323, 323, 337, 367. விஜயன் I விஜயன் கூட்டத்தினர் 14, 31, 32, 33, 34, 40, 41, 42, 43, 50, 51, 52, 55, 137, 207, 208, 209, 210, 211, 213, 214, 215, 216, 217, 219, 354, 366, 402, 403, 454, 455, 488, 531, 542, 558, 566。 வீரபாண்டியன் 331, 332, 334, 335, 355, 358, 359,
362, 382. வெடியரசன் 133, 134, 135, 136, 139, 154, 521. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 351, 358.
ஸிலாமேகவண்ணன் 254,
மனிதப் பெயர்கள் - I
அரசரத்தினம் 268, 371 .
இந்திரபாலா 16, 45, 46, 47, 176, 207, 208, 209, 216, 218, 219,. 225, 226, 230, 255, 256, 30 6, 307, 308, 313, 314, 348, 350, 362, 416, 428, 489, 588.
இரகுபதி 15, 16 24, 92, 416. இராகவன் 521, 539, 540, 541.
بر
யாழ். - தொன்மை வரலாறு 762 )ே

இராசநாயக முதலியார் / முதலியார் இராசநாயகம் 14, 39, 44, 45, 68, 69, 72, 148, 156, 173, 174, 177, 2 15, 24 0, 3 δ0, 362, 366, 367, 368, 369, 37υ, 371,4伊2,463,54卫,563。 ஈழத்துப் பூதந்தேவனார் 49, 78, 408, 451. எல்லாவல 89, 128, 129, 460, 462. காஸ்வல் 34, 96, 97, 99, 490, கிங்ஸ் லீ டீ சில்வா / சில்வா 170, 171, 287, 371. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் 128, 370. கிருஷ்ணமூர்த்தி 495, 496. குமாரசுவாமி 535, 536, 538, 539, குவான் சுவாங் 173, 178, 458. கெய்கர் 125, 340, 382. கென்னடி 22, 398, 400, 402, 406. கேய்றோஸ் பாதிரியார் 227, 228. கொட்டிங்ரன் 183, 483. கொஸ்மஸ் / இன்டிகோ பிளியஸ்டிஸ் 173, 174, 175, 176,
177, 178, 476, 477. சண்முகநாதன் 30, 95, 99, 101, 403. ஞானப்பிரகாசர் 207, 215, 226, 229, 231, 362, 434,
435, 436. டானியல் ஜோன் 133; 135. தம்பையா 538, 540.
தெரனியகல 49, 397, 39 3, 445, பத்மநாதன் 228, 278, 279, 308, 313, 317, 485, 4 89, பரணவித்தானா 39, 43, 46, 78, 106, 110, 113, 114, 115, 116, 117, 118, 120, 121, 123, 126, 197, 129, 174, 175, 176, 177, 178, 829, 230, 367, 370, 401, 402, 413, 472, 526, 559. பாக்கர் 10, 102, 448, பாஹியன் 458, 476, 527. பியூலர் 58, 414.
O 783 சொல்லடைவு

Page 398
புஸ்பரத்தினம் / புஷ்பரட்ணம் 100, 311, 351. பூதந்தேவனார் 48, 408, 411. பெர்னான்டோ , 53, 413, போல் பீரிஸ் 13, 14, 241, 501, 568, 58, மார்தா பிறிக்கெற் 96, 97. மீரா ஏப்ரகாம் 284, 30 8, , , 8 17 , · 37 Ꮾ. ' மெகஸ்தினிஸ் 1, 2, 48,86, 474. மெலோனி 86, 456,458。 மென்டிஸ் 32, 78, 237, 28ச். மெஸ். கா. வேலுப்பிள்ளை 434. மோற்றிமர் வீலர் 84, 85, 86. ராஜஏ டீ சில்வா 34, 95. லூயிஸ் 119, 585, 587. வித்தியானந்தன் 230, 231. olup6vor Guš3 av 10, 12, 13, a sffr. s 6, 87, ss, go, g,
92, 96, 100. ஸ்பென்சர் 270, 286 ஹெற்றியாராச்சி 501,
Né
遂
ീ
يتيتيتيتيتيتيتيتيتيتي
யாழ். - தொன்மை வரலாறு 734 O


Page 399


Page 400
-- யாழ்ப்பாணம் என்ற இந்நூலின் கரு 1992 இல் பதிப்பித்த " TBF_7షన్ காலப்பகுதிக்கு தியதாகும். யாழ்ப்பன
பெயரில் இத்தெ
நூலாசிரியரால்
 
 
 
 
 
 

. 1+5 தான்ம பரம்
பொருள் இந்நூலாசிரியர் யாழ்ப்பாண இராச்சியம்'
முன்னருள்ள வ்டபகுதி 上
ம் தற்கால வரலாறு 、
டரின் இறுதிப்பகுதி
1. .ܢ ̄ -1
பதிப்பிக்கப்படவுள்ளது