கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லை நகர் நூல்

Page 1


Page 2


Page 3

- ■
KTLT 湾リ*リ堂エ

Page 4

நல்ல நகர் நூல்

Page 5

நல்லை நகர் நூல்
as bongsurt ess Ty Taft, B. A. Hons. (Cey.) M. A., S. L. A. S. (செங்கை ஆழியான்)

Page 6
முதற் பதிப்பு:ஓகஸ்ட் 1987 (C) திருமதி கம்லா குணராசா . . .
82, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப் பதிவு: யூனி லங்கா அச்சகம், யாழ்ப்பாணம் . அட்டை விஜயா அச்சகம், யாழ்ப்பாணம். அட்டைப்பட அமைப்பு: ‘தவம்’ புகைப்படங்கள்: பேபி போட்டோ, யாழ்ப்பாணம். வெளியீடு: பூ பூரீதரசிங்,
பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
- NALLAT NA KAR NooL - A True History of Jaffna Kingdom and Nallur Kandaswamy Temple. Author: Kandiah Kunarasa, B. A. Hons (Cey. ), M. A., S. L. A. S. O (C) Mrs. Kamala Kunarasa, 82, Brown Road, Neeraviady, Jaffna. O First Edition: August 1987. O published by: p. Sridarsingh, Poobalasingam Book Depot, Bus Stand, Jaffna. Sri Lanka. O Printed at Sri Lanka press, K. K. S. Road, Jaffna' D Cover Design: Thavam. pages: 60-+-xii=72 O photographs; 'Baby Photo - Jaffna. Pricer Ordinary Edition: Rs; 15-00. Library Edition: Rs: 20-00.

முன்னுரை
யாழ்ப்பாண இராச்சியத்தினதும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலினதும் வரலாற்றைக் கூறும் ‘நல்லை நகர் நூல்" என்ற இந்த ஆய்வு நூலிற்கு நீண்டதொரு முன்னுரை அவசியமன்று. கந்தவேளினது அருள் விளக்கத்தைப் புலப்படுத்தும் தல வரலாழுக இந்நூலைக் கொள்ளமுடியாது; ஏனெனில் பக்திச் சுவை சொட்டக் கந்தவேளினது கருணை இந்நூலில் விபரிக்கப்படவில்லை; கந்த சுவாமி கோயிலினது உண்மை வரலாற்றை ஆதாரங்களோடு புலப்படுத்தும் நூலாக இதனை ஆக்கியுள்ளேன். அதனல், மனதிற் குச் சங்கடந் தரும் கசப்பான சில உண்மைகளை ஜீரணிக்க வேண் டிய இடர்ப்பாட்டை இந்நூலைப் படிக்கும் பெருமக்கள் அடைவார் களாயின் அது என் தவறன்று வரலாற்றில் மறைக்கப்படக்கூடாத மெய்மையை முன் வைக்க நினைக்கும் வரலாற்று மாணவன் ஒருவனுக்குள்ள உரிமையைப் பூரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவே, கசப்பான உண்மைகளை ஜீரணிக்க வேண்டிய சங்கடத்தை
உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண இராச்சியத்தினது வரலாறு, உண்மையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலினது வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த ஆய்வு நூலில் நான் நிறுவ முயன்றுள்ள கருதுகோள்கள் பின்வருவனவாம்:
1. கி. பி. 948ஆம் ஆண்டு புவனேகவாகு என்ற சோழ அரசப் பிரதிநிதியால் முதன்முதல் குருக்கள்வளவு என்ற இன்றுள்ள இடத்தில் கந்தசுவாமி கோயில் கட்டப் ull-ll.
2. கி. பி. 948ஆம் ஆண்டிலிருந்து சிறப்புற்றிருந்த இந்த ஆலயம், கி. பி. 1450ஆம் ஆண்டு, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய செண்பகப் பெருமாள் (சப்புமல்குமரயா) என்ற சிங்கள இளவரசனின் படை யெடுப்பால் அழிவுற்றது.
3. பின்னர் அவனே பூரீசங்கபோதி புவனேகபாகு என்ற பெயருடன் யாழ்ப்பாண அரசின் மன்னஞக முடிசூடிக்

Page 7
-vi
கொண்டதும், தான் அழித்த கந்தவேள் கோட்டத்தைக் கழுவாய் தேடுவான் வேண்டி, முத்திரைச் சந்தியில் 1430ஆம் ஆண்டிற்கும் 1467ஆம் ஆண்டிற்குமிடைப் பட்ட காலவேளையில் எடுப்பித்தான்.
4. இத்திருத்தலம் கி. பி. 1621ஆம் ஆண்டு பிலிப் தே ஒலிவேரு என்ற போர்த்துக்கேயத் தளபதியால் அத்தி வாரத்தோடு கிளறி அழிக்கப்பட்டது; அவ்விடத்தில் பின்னர் ஒல்லாந்தர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை அமைத்துக் கொண்டனர்.
5. கி. பி. 1734ஆம் ஆண்டளவில் கிருஷ்ணையர் சுப்பையர்
என்ற பிராமணர், முத்திரைச் சந்தியருகில் கந்த
மடாலயம் ஒன்றைப் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் நினைவாக நிறுவினர்.
6. அவ்வேளை குருக்கள் வளவில் சர்வமதத் துறவியான சிக்கந்தர் என்ற யோகிக்கு முஸ்லீம்களால் அமைத்து வழிபட்ட சமாதி ஒன்று இருந்தது; அருகில் மசூதி ஒன்றுமிருந்தது.
7 கி. பி. 1749ஆம் ஆண்டில் கிருஷ்ணையர் சுப்பையரும் தொன்யுவான் மாப்பாணரும் சேர்ந்து அரச அனுமதி யுடன் குருக்கள் வளவில், முதலாவது ஆலயம் இருந்த இன்றைய இடத்தில், இன்றைய கோயிலை முஸ்லீம்களை அகற்றிய பின்னர் அமைத்தனர்.
இந்த ஏழு கருதுகோள்களும் இந்த ஆய்வுநூலில் நிறுவப் பட்டுள்ளன என நம்புகின்றேன். அவை சரிவர நிறுவப்பட்டிருந் தால், இந்த நவீன ஆய்வு முறையை எனக்குக் கற்பித்த என் நண்பன் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளைக்கே அப்பெருமை சேரும்; அவ்வாறு நிறுவப்படாதிருக்கில் அது என் குறையாகும். என் வளர்ச்சியினை அவதானமாகக் கவனித்து நெறிப்படுத்தும் என் இனிய நண்பன் ஆ. இராஜகோபால் (செம்பியன் செல்வன்) இந் நூலின் ஆக்கத்திற்குப் பல வழிகளில் ஆலோசனை கூறிய தோடு, இந் நூலின் தலைப்பையும் அவரே தேர்ந்து வழங்கியமைக்கு

vi
அன்னருக்குக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலினை உவந்து வெளி
யிடும் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் திரு. பூ. gதரசிங் நன்றிக்குரியவர்.
இன்னும் சில இனிய நெஞ்சங்களுக்கு நன்றி கூருதுவிடின், கடமை தவறியவனவேன். இந் நூலிலுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் கலையழகோடு எடுத்து வழங்கிய "பேபி போட்டோ" நிர்வாகி, அழகிய முறையில் அட்டையை அமைத்துக் கொடுத்த ஒவியர் தவம்; அவதானமாக அச்சிட்டு வழங்கிய நண்பர் ச. சிவராமன் எழுத்துப் பிழை நேராது ‘புறுாவ்" திருத்தியுதவிய அண்ணர் சி. கனகசபை; அச்சுக்கோர்த்தமைத்த அன்பர் சி. சண்முகம், தம்பி க. அரியநாயகம் (சாமி); அட்டைகை அச்சிட்டுத விய விஜயா அச்சக நிர்வாகி அனைவருக்கும் நன்றி.
இந் நூல் ஒரு காலத்தின் தேவை என நம்புகின்றேன்.
"ஒரு பொல்லாப்பும் இல்லை.
நாமறியோம், ஆரறிவார்.
எப்பவோ முடிந்த காரியம்.
(ppgtb al6ärsuo' என்ற தேரடி செல்லப்பா சுவாமிகளின் மகா வாக்கியங்களே நினைவு வருகின்றன.
'infirmar Altab
உதவி அரசாங்க அதிபரி, கரைச்சி, கந்தையா குணராசா கிளிநொச்சி. (செமிகை ஆழியான்)
01 - 08 - 1987.

Page 8
பதிப்புரை
'நல்லை நகர் நூல்" என்ற இந் நூலினை வெளியிடும்போது, நிறைவான காரியம் ஒன்றைச் செய்துமுடித்த திருப்தி ஏற்படுகிறது. நல்லூர்க் கந்தசுவாமி கோயி லின் உண்மை வரலாற்றை, யாழ்ப்பாண இராச்சியத்தின் சரித்திரச் செய்திகளோடு இந் நூலின் மூலம் அறிய முடிகின்றது. இத் தகு நூல்கள் பல வெளி வரவேண்டிய தேவை இன்று உணரப்பட்டிருக்கின்றது. ஈழத்தின் பிரபல்யமான நாவலாசிரியர், ஆய்வாளர், புவியியலாளர் திரு. கந்தையா குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் இந் நூலினை ஆக்கியுள்ளார் என்பதொன்றே இந் நூலின் தரத்திற்குச் சான்ருகும்.
இத்தகைய ஆய்வு நூல்களை வெளியிட வேண்டுமென எனது தந்தையார் அமரர் பூபாலசிங்கம் அவர்கள் ஆவல் கொண்டிருந் தார். அவரது விருப்பினை நிறைவேற்றும் பணியைப் பூர்த்தி செய்யும் விருப்பின் தொடராக "நல்ல நகர் நூலை வெளியிடு கின்ருேம்.
வணக்கம்.
பூபாலகிங்கம் புத்தகசால், பல்நிலையம், யாழ்ப்பானம், பூ. சூரீதரசின்
O1 - 08 - 1987

ii
நினைவும் செயலும் சொல்லும் முருகன் நாமமாக வாழ்ந்து முடித்த என் மைத்துனர் "சின்னத்தான்’ அமரர் ச. சபாரத்தினம் அவர்களுக்குச் சமர்ப்பணம்,

Page 9
சுருக்கக் குறியீடுகள்
(60s. LDrt.) - 60.56)ntul Dra) ( 6oo6u. Lurr. ) -- Godanju urrunt.do (யா. வை.) - யாழ்ப்பாண வைபவமாலை (எஸ். ஜோ.) - எஸ். ஜோன் - 1882 (யா கெள) -யாழ்ப்பாண வைபவ கௌமுதி (சு, ஞா. ) - சுவாமி ஞானப்பிரகாசர் - 1928 (டா. ஜோ.) - டானியல் ஜோன் - 1930 (ஆ. மு.) - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை - 1933 (செ. இ) - செ. இராசநாயகம் - 1933 1935 (க. க.) - க. கணபதிப்பிள்ளை - 1956 (es)6C3a6ío) - F. de Queyros - 1930 (சி. எஸ். ந.) -ம் சி. எஸ். நவரத்தினம் - 1958 (எஸ். ந.) - எஸ். நடேசன் - 1960
ச. ப.) -- ச. பத்மநாதன் - 1978 (எஸ். ப.) - எஸ். பரணவிதான (கா. இ.) - கா. இந்திரபாலா - 1959 / 1970 / 1972 (கு. ச.) - குல சபாநாதன் - 1971 (வி. சி.) - வி. சிவசாமி - 1972 (க. கு.) - க. குணராசா - 1986 (பொ. செ.) - பொ. செகந்நாதன் - 1987 (அ. ஜோ.) - சேர். அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரைன்
-- 1916 117

பொருளடக்கம்
பக்கப்
முன்னுரை •ითო- V பதிப்புரை skiýka viji சமர்ப்பனம் w iX சுருக்கக் குறியீடுகள் Y ΣΧ. பொருளடக்கம் as is ' xi
ஆதாரவுரை raw
புராதன ஈழ மண்டலம் ፭ · 3 12 ܚܝ 1. 1. நாகர் குடியேற்றம் 1. 2. ஆரியர் குடியேற்றம் 1. 3. தமிழர் குடியேற்றம் 1. 4. முதலாவது சிங்களப் படையெடுப்பு 1. 5. கதிரமலையிலிருந்து மணற்றி 1. 6. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் 1, 7. உக்கிரசிங்கன் 1. 8. தென்னிந்தியப் படையெடுப்புகள் 1. 9. சோழராட்சி
10. புவனேகவாகு
முதலாவது ஆலயம் ー 13 - 18 2. 1. கைலாசமாலைப் பாடல் 2. 2. கோயிலைக் கட்டியவர் யார்?
தமிழரசர்கள் ran 18 - 24
.ே 1. ஆரியச் சக்கரவர்த்திகள் 3. 2. கலிங்கமாகன் 8. 3. சாவகமன்னன் 8. 4. குலசேகரசிங்கை ஆரியன் * 5 தென்னிலங்கைமீது படை

Page 10
10,
— хіі —
சிறீசங்கபோதி புவனேகவாகு 4. 1. சப்புமல்குமரயா 4. 2. கந்தசுவாமி கோயிலின் அழிவு 4. 3. இரண்டாவது கந்தசுவாமிகோயில் 4. 4. சிங்கைப் பரராசசேகரன் 4. 5. மன்னர்ப் படுகொலைகள்
போர்த்துக்கேயப் படையெடுப்புகள் w
1. முதற் படையெடுப்பு 2. தொடர்ந்த படையெடுப்புகள் 3. யார் இந்த யோகியார்? 4. முஸ்லீம் குடியேற்றம் 5. கோயில் அழிவு
35
ந்தமட்ாலயம் ext . 1. சைவமத வழிபாடு
2. கிருஷ்ணையர் சுப்பையர் 3. மடாலயம் அமைந்த இடம்
நான்காவது ஆலயம் 7. 1. நான்காவது ஆலயம் 7. 2. மாப்பாண முதலியார் 7. 3. இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா
ஆங்கிலேயர் காலம் Sw
8. 1. ஆலய நிர்வாகப் பிரச்சினை
தொடரும் திருப்பணி 9. 1. ஆரம்பக் கட்டமைப்பு 9. 2. ஆதியில் வழங்கிய வழக்கம்
நல்லூரும் நாவலரும் · 10, 2 முடிவுரை
ஆய்வுக்குரிய நூல்கள் ஆய்வுக்குரிய சில கட்டுரைகள் ഞ
wanaoisiini
பக்கம் 24-29
29 - 34.
4-38
38 - 46
46 - 49
49-52
52 - 54
55 - 59
57

நல்லை நகர்
நூல்
ஆதாரவுரை
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றிற்கும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தல வரலாற்றிற்கும் நெருங்கிய பிணைப் புள்ளது. யாழ்ப்பாண இராச்சிய மக்களது எழுச்சியும் வீழ்ச்சியும் கந்தசுவாமி கோயிலின் தல வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தே நிகழ்ந்து வந்துள்ளன. யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் மூல நூல்களாகக் கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப் பாண வைபவமாலை ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன. இந் நூல்களின் அடியொற்றியும், இத்துறைசார்ந்த பல்வேறு நூல் களின் துணைகொண்டும், கல்வெட்டுகள், சாசனங்கள், அகழ் வாராய்ச்சியின் பெறுபேறுகள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத்திற்குக் காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன.
யாழ்ப்பாண வைபவ கெளமுதி (க. வேலுப்பிள்ளை-1918), யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசர்1928), யாழ்ப்பாண வைபவம் (சி. பாலசுப்பிரமணிய சர்மா1927), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன்-1930), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை - 1933), யாழ்ப்பாணச்

Page 11
2 நல்லை நகர் நூல்
சரித்திரம் (செ. இராசநாயகம்-1933), யாழ்ப்பாணக் குடியேற் றம் (சிவானந்தன்-1933), யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆங்கிலேயர் காலம் (செ. இராசநாயகம்-1935), Tamils and Ceylon (சி. எஸ். நவரத்தினம்-1958), யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (asm. gj56uturavT-1972), The Kingdom of Jaffna (af. Lugë LD நாதன்-1978), யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் (பொ. செகந்நாதன் - 1987) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப் பிடத்தக்கன. இவற்றுடன் இலங்கைவாழ் தமிழர் வரலாறு (க. கணபதிப்பிள்ளை-1956), தமிழரின் பூர்வ சரித்திரமும் சமய (pub sa, suits (alsTap 'll praisitatii - 1932), The Temporal and Spiritual Conquest of Ceylon, (5606), Gogh), A True and Exact Description of the Great Island Ceylon (1965th Luntai Gyuab), History of Ceileo (fiGustCurr) géu pirai) களிலிருந்தும் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்நூல்களை விட பல அறி ஞர்கள் காலத்திற்குக்காலம், பல்வேறு சஞ்சிகைகளில் பெறுமதி மிக்க ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளனர். எஸ். பரணவிதான 67(upgu “The Ariya Kingdom in North Ceylon' (JRASCB), 6T6). p.Gl-Fair Group5u “The Northern Kingdom' (History of Ceylon-1960), கா. இந்திரபாலா எழுதிய "யாழ்ப்பாணச் சாசனங்கள்" (இளங்கதிர்-1959), "யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும்’ (இளங்கதிர்-1970), ச. பத்ம நாதன் எழுதிய "ஈழத்து வரலாற்று நூல்கள்” (இளங்கதிர்1970), க. குணராசா எழுதிய "யாழ்ப்பாண இராச்சியத்தின் கதை" (வித்தியா-1986), க, சிற்றம்பலம் எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகள் முதலானவை இவ்வகைக் கட்டுரைகளாகும். இவற் றிலிருந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிவதுடன், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தல வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றிய பல்வேறு உண்மைத் தகவல்களை ஆங்காங்கு ஆவணங்களாகச் சிதறிக் கிடக்கின்ற ஏடுகளிலிருந்தும் பெற முடிகின்றது. சேர். அலெக்சாண்டர் Ogn girai)3priTaohair "The Temple of Candaswamy (CALR1916/1917), Lispair 6airah Gaon 66ir 'A Memoir of Mrs. H. W. Winslow Combining a Sketh of Ceylon Mission' (1835)

நல்லை நகர் நூல் 3
வி. சிவசாமி எழுதிய "நல்லூரும் தொல்பொருளும்" (ஒளி1976) என்பன இவ்வகையில் குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றி குலசபாநாதன் முழுமை யான நூலொன்றினை ஆக்கித் தந்துள்ளார்கள்; தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காகக் கோயிலின் வரலாற்றுத் தகவல்கள் பல இதில் இடம்பெருது போயுள்ளன. ஆறுமுகநாவலரின் 'நாவலர் பிரபந்தத்திரட்டு” என்ற நூலிலிருந்து, இக்கோயில் பற்றிய பல வியப்பான தகவல்களைப் பெற முடிகின்றது.
எவ்வாருயினும் யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தின் வர லாற்றுப் பாதையில் நல்லூர்க் கந்தவேள் கோட்டம் வகிக்கும் முக்கிய இடம் சரிவரக் கூறப்படில் வரலாற்றை மெய்மைப் படுத்தும் முயற்சி அதுவாக அமையும்,
1. புராதன ஈழமண்டலம்
வரலாற்றுக் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் என்னும் பெயரால் நாம் அறியும் வட இலங்கை இராச்சியம் எப்போது தாபிக்கப்பட்டது என்பதைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை என நவீன வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். (கா. இந்திரபாலா-1970) கல்வெட்டு ஆதாரங்கள், சாசன ஆதாரங்கள் இருந்தால் தான், இலக்கிய ஆதாரங்களின் மெய்மையை ஏற்றுக்கொள்ள முடியும் என்கின்ற னர். பனையோலைகளில் எழுதிய நம்முன்னுேர், செப்பேடுகளில் எழுதிப் புதைக்காது போயினராம். எவ்வாருயினும், யாழ்ப்பான அரசின் பழைய வரலாற்றைக் கூறும் வையாபாடல், கைலாய மால், யாழ்ப்பாண வைபவமாலை என்பன ஈழமண்டலத்தின் வர லாறு பற்றிய செய்திகளைத் தருகின்றன.
யாழ்ப்பாணக் குடாநாடு, புராதன காலத்தில் நாகதீபம் அல்லது நாகதீவு என அழைக்கப்பட்டது. தீவு என்ற பெயருக் கேற்ப வரலாற்றுக் காலத்தில் பெரு நிலத்திணிவினின்றும் கட லால் பிரிக்கப்பட்டு ஒரு பெரிய தீவாக யாழ்ப்பாணக் குடாநாடு விளங்கியது. ‘இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டை பெருநிலத் திணிவோடு சுண்டிக்குள மணல் அணை இணைத்துள்ளது. பண்டை நாளில் யாழ்ப்பாண-ஆனையிறவுக் கடனிரேரியூடாகக் கலங்கள்

Page 12
4 நல்ல நகர் நூல்
வங்காள விரிகுடாவில் பிரவேசித்துள்ளன." (செ. இராசநாயகம்1933). காலகதியில் மணல் படிந்து சுண்டிக்குள நுழைவாயில் அடைபட்டது
1. 1. நாகர் குடியேற்றம் நாகதீவு என்ற பெயரை இப்பிரதேசம் பெறுவதற்குக் காரண மாக அமைந்தவர்கள், இப்பிரதேசத்தின் பண்டைய குடிமக்களாக வாழ்ந்திருந்த நாசர் என்ற இன மக்களாவர். இப்பிரதேசத்தின் ஆதிக் குடிமக்கள் நாகர்களே. நாகர் எனப்படும் ஒரு மக்கட் கூட்டத்தினர் நாகதீவில் நெடுங்காலமாகக் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்களுள்ளன.
இலங்கை வரலாற்றில் அருமையான செய்திகளை அளிக்கும் பனுவலாகக் கருதப்படும் மகாவம்சம், கெளதம புத்தர் இலங்கைக்கு இரண்டாவது தடவை புனித விஜயம் மேற்கொண்டபோது நாக தீவிலிறங்கி, இரண்டு நாக அரசர்களது பிணக்கைத் தீர்த்து வைத்தார் எனக் கூறுகிறது.
எனவே புராதன காலத்தில் நாகர்களது குடியேற்றம் யாழ்ப் பாணப் பகுதியில் சிதறலாக அமைந்திருந்தது. மணிபல்லவம் என்று முன்னர் வழங்கப்பட்ட நயினுதீவு; கதிரமலை என்று முன்னர் வழங்கப்பட்ட கந்தரோடை மணற்றி, மணவை எனப் பலவாருக வழங்கப்பட்ட வல்லிபுரப் பகுதி, ஜம்புக்கோளப் பட்டினம் என வழங்கப்பட்ட வடகரைப் பகுதி என்பனவற்றில் ஆதிக் குடியிருப்புகள் அமைந்திருந்தன. நாகதீவு எனப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தெற்கே நாகர்களின் குடியிருப் புகள் அமைந்திருந்த பிரதேசம் உத்தரரட்டை அல்லது உத்தர கேசம் எனப்பட்டது. கதம்பநதி என்ற அருவியாற்றிலிருந்து கோகர்ணம் (திருகோணமலை) வரை இணைத்து ஒரு குவிவு வளை கோடு வரைந்தால், அந்த வளை கோட்டிற்கு வடக்கேயமையும் வடபிரதேசம் உத்தரதேசம் எனப்பட்டது. இந்த உத்தரதேசத் தில் மகாதீர்த்தம் (மாந்தை), குதிரைமலை (புத்தளம்), குருந்தை (முல்லைத்தீவு), பல்லவவங்கம் (பதவியா), கோகர்ணம் (திருகோண மலை) முதலிய பகுதிகளில் தமது புராதன குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். இவற்றைவிட உத்தரதேசத்தின் சிதற லாக ஆரண்யகமங்கள் (காட்டுக் கிராமங்கள்) காணப்பட்டன.

நல்லை நகர் நூல் y 5
நாகதீவும் உத்தரதேசமும் ஒருங்கே ஈழமண்டலம் என அழைக்கப் பட்டது. நாகதீவில் கதிரமலையும், உத்தரதேசத்தில் மகாதீர்த்த மும், குதிரை மலையும் நாக குடியிருப்புக்களில் முக்கியமானவை uns cantigas.
"இந்த ஆதிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றிற்கும் தந்தைவழிச் சமூக அமைப்பின் வழி முறைப்படி, ஒவ்வொரு தலைவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தான். (சி, எஸ். நவரத்தினம்-1958)
ஈழமண்டலத்தில் நாகர்களின் குடியிருப்புகள் காணப்பட்ட போது தென்னிலங்கையிலும் மத்திய இலங்கையிலும் இயக்கர்கள் எனப்பட்ட மக்கள் கூட்டத்தினர் வாழ்ந்திருந்தனர். நாகர்களும், இயக்கர்களும் சைவசமயிகள் எனத் துணியலாம். முன்னவர்கள் நாக வணக்கத்தையும், பின்னவர்கள் பைசாச வணக்கத்தையும் கொண்டிருந்தார்கள். நாகர்களை திராவிட இனத்தவர்களாகக் கருத இடமுண்டு.
1. 2. ஆரியர் குடியேற்றம்
இலங்கைச் சரித்திரம் கி. மு. 6ஆம் நூற்ருண்டில், முதன் முதல் நிகழ்ந்த ஆரியக் குடியேற்றத்தோடு ஆரம்பமாகின்றது. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து வந்த ஆரியர்கள் இலங்கை யின் பல பாகங்களிலும் குடியேறினர்கள். இலங்கையில் வந்து குடியேறிய ஆரியருக்கு முன்னுேடியாகக் கலிங்க தேசத்து விஜயன் என்பான், தன்னுடன் 700 பேரையும் அழைத்துக் கொண்டு, கோணநதி (காலஓயா) க்கும் கதம்பநதி (அருவியாறு) க்கும் இடைப் பட்ட தம்பபண்ணை (தாமிரவருணி) என்ற பிரதேசத்தில் குடி யேறினன். ஆரியர்கள் தமது குடியிருப்புக்களைத் தென்னிலங்கை யில் கூடுதலாக நிறுவிக் கொண்டார்கள். ஈழமண்டலத்தில் மகா தீர்த்தம் கோகர்ணம். மகிலதீஷ, (மகிஷதீவு) எனுமிடங்களில் நிறுவிக் கொண்டனர்.
"விஜயனுடன் வந்த மரக்கலங்களில் ஒன்று மகிலதீவு எனு மிடத்தைச் சென்றடைந்தது என மகாவம்சம் கூறுகிறது. உண்மை யில் இது மகிலதீவு, மகிஷதீவாகிய எருமைத் தீவாகும்.” (செ. @。一1933),

Page 13
6 நல்லை நகர் நூல்
புவியியல் நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு முன்னர் நாகதீவு எனும் தீவு ஆகும். இப்பெருந் தீவை தொண்டைமானறு - நாவற்குளி கடனீரேரிகள் மூன்று உபதிவுகளாக்குகின்றன. வலி காமம், வடமராட்சி, தென்மராட்சி என்பனவே அவை. வலிகாமம் முன்பு மணிநாகபுரம் எனவும், வடமராட்சியும், தென்மராட்சியும் மணற்றி எனவும் அழைக்கப்பட்டன; மணற்றிக்கு பிறிதொரு பெயரே மகிஷதீவு (எருமைத்தீவு, எருமை முல்லைத்தீவு). மணற்றி என்ற பெயரே வடமராட்சிக்கே பொருந்தும். பருத்தித்துறை யிலிருந்து சுண்டிக்குளம் வரை வெண்மணல் (மணற்றிடர்) பரந்து கிடக்கின்றது. இங்கு வந்து கலிங்க ஆரியர் இறங்கியபடியால் தான், பின்னர் ஸிங்கபுர என்ற கலிங்க நகரத்துப் பெயரை "சிங்கை நகர்" என வல்லிபுரப் பகுதிக்கு இட்டனர்.
தென்னிலங்கையில் ஆரியக் குடியேற்றங்கள் பரவின. தென் னிலங்கையின் புராதன நாகரீகம் மறைந்தொழிந்து மேம்பட்ட ஆரிய நாகரீகம் நிலைபெறத் தொடங்கியது. விஜயன் தென்னி லங்கையின் முதல் முடி மன்னனஞன். கி. மு. 6ஆம் நூற்ருண்டி லிருந்து கி. மு. மூன்ரும் நூற்ருண்டுவரை ஆரியக் குடியேற்றங் கள் நிகழ்ந்தன. மாதோட்டம் எனப்பட்ட கதம்ப நதிக் கழி முகத்தினூடாகவும், வடகரையிலமைந்த ஜம்புக்கோளத் துறைமுக மூடாகவும் ஆரிய வருகைகள் நிகழ்ந்தன. சங்கமித்தை என்பாள் தேவநம்பியதிஸ்ஸ என்ற மன்னன் காலத்தில் (கி. மு. 3-ம் நூற் முண்டு) புனித வெள்ளரசுக் கிளை யுடன் ஜம்புக் கோளத்தில் வந்து இறங்கிளுள்.
1. 3. தமிழர் குடியேற்றம்
ஆரியர்கள் வட இந்தியாவில் நிலைகொண்டபோது, திரா விடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பா கத்திற்கும், இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம் பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம், நாகதீவில் மிகக் கூடுத லாக நிகழ்ந்திருத்தல்வேண்டும். தென்னிலங்கையில் ஆரியக் குடி யேற்றம் நிலைகொள்ளத் தொடங்கியவேளை, வடவிலங்கையில் திராவிடக் குடியேற்றம் வளர்வதாயிற்று. சேர். போல் பீரிஸ் என்ற அறிஞரின் கருத்துப்படி, விஜயன் பிறப்பதற்குப் பலநூற் முண்டுகளுக்கு முன்னரே வடவிலங்கையில் குடியிருப்புகள் விருத்தி

நல்லை நகர் நூல்
யுற்றிருந்தன என்பதாகும். இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல் கடலே வடவிலங்கையைப் பிரிக்கின்றது. அதனை இலகுவில் கலங் களில் தாண்டி வடவிலங்கையில் குடியிருப்புகள் உருவாகின: இலங்கையின் பலபாகத்தில், ஆதித் திராவிட மக்கள் சடலங்களைப் பெருந்தாழிகளிலிட்டு அடக்கஞ்செய்த முது மக்கள் தாழிகள் அகன் றெடுக்கப்பட்டுள்ளன. 1955ஆம் ஆண்டு புத்தளம்-மறிச்சுக்கட்டி வீதியில் முதுமக்கள் தாழி ஒன்றும், 1982இல் ஆனைக்கோட்டை யிலும், 1984இல் குஞ்சுப் பரந்தனிலும் இத்தகு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை விஜயனின் வருகைக்கு முன்னரே திராவிட நாகரீகம் இங்கு நிலைபெற்றிருந்ததைக் காட்டி நிற்கின்றன.
1. 4. முதலாவது சிங்களப் படிையெடுப்பு
வடவிலங்கையில் நாகர்களதும் அவர்களோடு கலந்து திரா விடர்களினதும் குடியிருப்புகள் வளர்வது, தென்னிலங்கை ஆசி யச் சிங்கள ஆட்சியாளருக்குத் தலையிடியைக் கொடுத்திருக்கவேண் டும். இந்தியாவுடனன சகல தொடர்புகளும் வடவிலங்கைத் துறைமுகங்களூடாகவே (மாதோட்டம், ஜம்புக்கோளம்) நடந்து வந்தன. எனவே வட இந்திய ஆரியருக்கும், தென்னிலங்கை ஆரி யருக்குமிடையே திராவிடக் குடியேற்றங்கள் அமைவது களையப் படவேண்டியதாகப் பட்டிருக்கும். உத்தரதேசத்தையும் (வடவி லங்கை) தக்கண தேசத்தின் (தென்னிலங்கை) ஆதிக்கத்தினுள் வைத்திருக்க விருப்பு எழுந்தது.
அதனல், கி. மு. 1ஆம் நூற்ருண்டில் அல்லது அதற்கும் முன் னர், தென்னிலங்கையிலிருந்து, ஈழ மண்டலத்தின் மீது பெரும் படையெடுப்பொன்று நிகழ்ந்திருக்கவேண்டும், அந்தக் காலகட் டத்தில், கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழமண்டல ஆட் சியாளனின் தலைநகரமாக இருந்திருக்கவேண்டும்.
கி. மு. 2ஆம் நூற்ருண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியில் மக்கள் குடியேற்றம் இருந்தது என்பதைத் தொல்பொருட் சான் றுகள் திட்ட வட்டமாக நிறுவுகின்றன. கந்தரோடைப் பிரதே சத்திலே குடியேறியிருந்த மக்கள் பண்பாட்டு முன்னேற்றம் அடைந்தவர்களாக கி. மு. நூற்ருண்டுகளிலிருந்து பிறநாடுகளு டன் தொடர்புகொண்டு, எழுத்தின் உபயோகத்தையும் அறிந்து

Page 14
8 நல்லை நகர் நூல்
வாழ்ந்தனர் என இதே சான்றுகளைக் கொண்டு அறியலாம். இவ் வாறே யாழ்ப்பாணத்தின் பிறபகுதிகளிலும் முன்னேற்றமடைந்த மக்கள் வாழ்ந்திருக்கவேண்டும்." (கா. இ: 1970)
“கந்தரோடையில் கிடைத்த மட்பாண்ட ஓடொன்றில் பொறிக்கப்பட்டுக் கிடைத்த பிராகி எழுத்துச் சாசனமாகும். பிராகிருத மொழி அல்லது பழைய சிங்களப் பிராகிருத மொழி யிலே இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது: "தவஹ பத"-தத்தவின் பாத்திரம். இதன் காலம் கி.மு. முதலாம் நூற் ருண்டு என்று எழுத்தின் அடிப்படையில் கூறலாம்." (கா.இ. 1959) கந்தரோடையில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்த பெளத்த சின்னங்கள், இப்பகுதியில் பெளத்த மக்கள் நிலை கொண்டிருந்ததைச் சுட்டுகின்றன.
1. 5. கதிரமலையிலிருந்து மணற்றி
எனவே, தென்னிலங்கை ஆட்சியாளர் கதிரமலையைக் கைப் பற்றியதும் அப்பிரதேசத்தில் வாழ்ந்தோரில் ஒரு பகுதியினர் தொண்டைமானுற்றைக் கடந்து மணற்றியில் குடியேறினர். சிங்கை நகர் என்ற வல்லிபுரப் பகுதியில் ஏற்கனவே குடியிருந்தோருடன் இவர்களும் சேர்ந்துகொண்டனர்.
மணற்றியிலும் அவர்களால், அமைதியாகத் தொடர்ந்து வாழ முடியவில்லை. கி. பி. 1ஆம் நூற்றண்டில் அநுராதபுரத்தி லிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப என்ற மன்னன் வல்லிபுரப் பிரதேசத்தை வெற்றிகொண்டான். அதனை வெற்றி கொண்டு தன் அமைச்சன் ஒருவன அப்பகுதியை நிர்வகிக்க நியமித்தான்,
"வல்லிபுரத்திலிருந்து கி. பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்த ஒரு பொற்சாசனம் கிடைத்துள்ளது. இச் சாசனம் பல வகையாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கி. பி. முதலாம் இரண்டாம் நூற்றண்டிலே யாழ்ப்பாணப்பகுதி நாக தீவு எனப் பெயர் பெற்றிருந்ததையும், அக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப மன் னனுடைய (கி. பி. 67 - 111) ஆதிக்கத்திற்கு உட்பட்டு மன்ன னின் அமைச்சன் ஒருவனுல் அது நிர்வகிக்கப்பட்டது என்பதை

நல்லை நகர் நூல் 9
யும், வல்லிபுரப் பிரதேசத்தில் பெளத்தம் பரவியிருந்தது என்பதை யும் இச்சாசனம் அறிவிக்கின்றது; சாசனத்தின் மொழி தென் பாகங்களில் அக்காலத்துச் சாசனங்களின் மொழியாக விளங்கிய ஆதிச் சிங்களமாகும். எழுத்தும் தென்பாகத்தில் பயன் படுத்தப் பட்ட எழுத்தாகும்.” (கா. இ: 1959)
“கி. மு. மூன்றம் நூற்ருண்டில், (கி. மு. 259-210 வரை) அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவநம்பிய திஸ்ஸ மன்னன் நகதிவு உட்பட உத்தர தேசத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தான். அக்காலத்தில் அநுராதபுர இராச்சியத்தவர் கிழக்கிந்தியாவுக்குச் செல்வதற்குப் பயன்படுத்திய பிரதான துறைமுகமாக யாழ்ப்பாணத்து ஜம்புக்கோளத்துறை (தற்காலத் துச் சம்புத்துறை என அடையாளம் காண இடமுண்டு) இடம் பெற்றது. இங்குதான் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் சங்கமித்தா நேரியை வரவேற்றன் என்றும், அவனுல் இங்கு ஸமுத்தபண்ண - ஸா லா என்ற மண்டபமும், ஜம்புக் கோலா விகாரை யும் கட்டுவிக்கப்பட்டன என்றும் அறிகின்ருேம். (கா. இ: 1970)
1, 6. இலங்கையை ஆண்டி தமிழ் மன்னன்
தென்னிந்தியத் தமிழ் மன்னர் காலத்திற்குக் காலம் இலங்கை மேற் படையெடுத்து வந்து சிங்கள மன்னரை வென்று தமது ஆட்சியை இலங்கையில் நிறுவியுள்ளனர். அவ்வேளைகளில் உத்தர தேசமும் அவர்களின் ஆட்சியினுள் அடங்கியிருந்தது. கி. மு. 177ஆம் ஆண்டளவில் சூரதிஸ்ஸ என்ற சிங்கள மன்னன் இலங் கையை ஆண்டபோது, சேனன், குத்திக்கன் என்ற இரு தமிழ்க் குதிரை வியாபாரிகள் தமிழ்ச் சேனையுடன் வந்து இலங்கையைக் கைப்பற்றி இருபதாண்டுகள் ஆண்டனர் (கி. மு. 177-155) என மகாவம்சம் கூறுகிறது. கி. மு. 145ஆம் ஆண்டில் சோழ இள வரசனன எல்லாளன் என்பான், அசேலன் என்ற சிங்கள மன்னனை வெற்றிகொண்டு கி. மு 101 வரை நாற்பத்திநான்கு ஆண்டுகள் இலங்கையை ஆண்டான் என்பது மகாவம்சக் கூற்ருகும். கி. மு. 43 தொட்டு 29 வரை அநுராதபுரத்திலிருந்து புலகத்த, பாகிய, பண்யமாரு, பிலயமாரு தத்திகா எனும் ஐந்து தமிழ் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர் என மகாவம்சம் புகலும்
2

Page 15
10 நல்லை நகர் நூல்
“கி. பி. 1ஆம் நூற்றண்டில் உத்தரதேசத்தை வஸப என்ற சிங்கள மன்னன் தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தான். கி. பி. 2ஆம் நூற்ருண்டில் உத்தர தேசம், மஹல்லகதாக, கனிஷ்டதிஸ்ஸ ஆகிய சிங்கள மன்னர்களாலும், கி. பி. 3ஆம் நூற்ருண்டில் வொஹாரிகதிஸ்ஸ என்ற சிங்கள மன்னனலும், கி. பி. 7ஆம் நூற்ருண்டில் 2-ம் அக்கபோதி, சிலாமேகவண்ண ஆகிய சிங்கள மன்னர்களாலும் நிருவகிக்கப்பட்டது. (கா. இ: 1970)
ஸிலாமேக வண்ண மன்னன் (619 - 628) அனுராதபுரத்தி லிருந்து ஆட்சி நடத்தியபோது யாழ்ப்பாணத்தையும் உள்ளடக்கிய பழைய மாவட்டமாகிய உத்தர தேசத்தை கிரிநாகன் என்பான் கைப்பற்ற முயற்சித்தான் எனவும், கிரிநாகன ஸிலாமேக வண்ணன் உடனே அடக்கி, மீண்டும் உத்தர தேசத்தைத் தன் ஆணைக்குட்படுத்திக் கொண்டான் என்றும் மேலும் சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இந் நூலின் கூற்றின்படி உத்தர தேசத்தில் மீண்டும் ஒருமுறை அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி தோன்றியது. அப்போது 2ஆம் மகிந்த மன்னனுக்கு (777-797) எதிராக உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர்." (கா. 9: 1970)
1. 7. உக்கிரசிங்கன்
சிங்கள ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்ந்த இக் கிளர்ச்
சிக்குத் தலைமை வகித்தவன் கலிங்கதேசத்தவனன் சிங்கை நகரில்
குடியேறியிருந்த உக்கிரசிங்கன் என்ற தலைவனுவான் எனத் துணியலாம்.” (க. குணராசா - 1986)
நெடுங்காலம் இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில் போரிட்டு நாகதீபத்தை உக்கிரசிங்கன் பெற்றுக்கொண்டான். இது நிகழ்ந்தது கி. பி. 785 இல் ஆகும். வெற்றி கொண்ட உக்கிரசிங்கன், *கதிரமலை (கந்தரோடை) யினைத் தலைநகரமாகக் கொண்டு உத்தர தேசத்தை ஆண்டு வந்தான். (யா. வை.)
யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னஞக உக்கிர சிங்கனையே அறியக் கிடக்கின்றது.
உக்கிரசிங்கன் கதிரமலையில் ஆட்சிசெய்த காலத்தில், சோழ இளவரசியாகிய மாருதப்பிரவல்லி என்பாள் தீர்த்த யாத்திரை

நல்லை நகர் நூல் 11
மேற்கொண்டு, கீரிமலைக்கு வந்தாள். அவளை வலிந்து சிறை கொண்டு உக்கிரசிங்கன் மணந்துகொண்டான். அவளின் வேண்டு கோளுக்குச் செவிசாய்த்து, மாவிட்டபுரத்தில் கந்தனுக்கு ஆலயம் சமைப்பித்தான். இந்தியாவிலிருந்து அக்கோயிலுக்குரிய விக்கிர கங்களையும் பெரிய மனத்துளார் என்ற பிராமணுேத்தமரையும் வரவழைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறும்; உக்கிர சிங்கன் தலைநகராகவிருந்த கதிரமலையை விட்டு, சிங்கைநகருக்குத் தனது தலைநகரை மாற்றிக்கொண்டான். உக்கிரசிங்கனின் பின் அவனது மைந்தனன நரசிங்கன், ஜெயதுங்க பரராசசிங்கன் என் னும் நாமத்துடன் அரசனனன். “அவன் அரசியற்றும் நாளிலே யாழ்ப்பாடி என்னும் பாணகுலத்தவனுெருவன், பரிசில் பெறுவான் வேண்டி அரசவைக்கு வந்து தனது திறனைக் காட்டினன். அரசன் மகிழ்ந்து இப்போது கரையூர், பாசையூர் என்றழைக்கப்படுவ தாகிய மணல் மேட்டைப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப் பாடியும் உவகையுடன் ஏற்று, தன்னுார் சென்று தன்குலத்தவ ருடன் வந்து அவ்விடத்தைத் திருத்திக் குடியேறினன். அவ்விடம் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டது. அப் பெயர் பின் பறங்கிக் காரர் கட்டிய நகருக்காகி ஈற்றில் குடாநாடு முழுவதற்குமுரிய தாகி விட்டது." (செ. இ: 1933)
1. 8. தென்னிந்தியப் படையெடுப்புகள்
தென்னிந்தியாவில் தமிழரசுகள் வலிமை பெற்றிருந்த கால வேளைகளில் கடல் கடந்து இலங்கைமீது படையெடுப்புகள் மீண்டுந் தொடங்கின. சிங்கை நகரிலிருந்து ஜெயதுங்கன் வடவிலங்கையை ஆண்ட காலத்தில், முதலாசேனன் என்பான் அநுராதபுரத்தி லிருந்து ஆட்சி செய்தான். பரீமாறபல்லவன் (கி. பி. 815-862) என்ற பாண்டிய மன்னன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து ஜெயதுங்கனை வென்றதோடு, சேனனையும் புறமுதுகிடச் செய்து திறை பெற்றுச் சென்ருன்.
ஜெயதுங்கனின் பின்னர் உத்தர தேசத்தை அவன் சந்ததி யினரே ஆண்டிருக்க வேண்டும். அவர்கள் தென்னிந்தியத் தமிழர சர்களுக்கு அல்லது தென்னிலங்கைச் சிங்களவரசர்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம். ஒன் பதாம் நூற்றண்டில் உத்தர தேசம், 2-ம் கஸ்ஸபமன்னனின்

Page 16
12 நல்லை நகர் நூல்
ஆதிக்கத்தின் கீழ் உட்பட்டிருந்தது என்பதை கந்தரோடைக் கல் வெட்டிலிருந்து அறியலாம் என கா. இந்திரபாலா குறிப்பிடு கிமுர். மேலும் பத்தாம் நூற்ருண்டில் உத்தர தேசம் 4-ம் மஹிந்த என்ற சிங்கள மன்னனின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. பத்தாம் நூற்ருண்டில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு படையெடுப்பு யாழ்ப் பாணத்திலே நடைபெற்றபோது, அப்பொழுது அநுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த நான்காம் மஹிந்த மன்னன் (956-972) உடனே யாழ்ப்பாணத்துக்குப் படையனுப்பி அப்பகுதியை மீண்டும் விடுவித்தான் என சூளவம்சம் கூறும். “படையெடுப்பு நடாத்திய தென்னிந்திய மன்னன் சுந்தர சோழன் எனப்படும் 2-ம் பராந்தக ஞவான். (கா. இ: 1970)
1. 9. சோழராட்சி
ரோகணம் தவிர்ந்த பிறபாகங்கள் சோழராட்சிக்குட்பட்டன என்று சூளவம்சம் கூறுமிடத்து யாழ்ப்பாணப் பகுதியும் பொல நறுவையிலிருந்து ஆட்சி நடத்திய சோழருடைய ஆதிக்கத்திற்குள் அடங்கியிருந்தது என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சோழராட்சி உத்தர தேசமென்ற வட பகுதியில் நிலவி வந்துள்ளது.
உத்தரதேசத்தில் சோழராட்சி நிலைபெற்றிருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகரப் பண்பு வாய்ந்த குடியிருப்புகள் விருத்தி யுற்றிருந்தன. கதிரைமலை (கந்தரோடை) ஜம்புக்கோளப் பட்டினம் (காங்கேசன்துறை) சிங்கை நகர் (வல்லிபுரம்) நாகர் கோவில், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணப் பட்டினம் (கரையூர், ւմn"606ֆԱյr*) நல்லூர், மாதோட்டம், முள்ளியவளை முதலியவற்றை இவ்வகை யில் குறிப்பிடலாம். சிங்கை நகர் தலைநகராக விளங்கியபோது நல்லூர் பல வழிகளிலும் பல துறைகளிலும் சிறப்புற்முேங்கி வளர்ந்து வருவதாயிற்று.
1. 10. புவனேகவ ாகு
உத்தர தேசத்தை சோழரால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதி நிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள் என நம்ப இடமுண்டுg கி. பி. 948 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணனின் வழி வந்த

நல்லை நகர் நால் 13
புவனேகவாகு அல்லது புவனேசவாசர் என்பவர், நல்லூர் பகுதிக் குரிய அரசப் பிரதிநிதியாக இருந்திருக்க வேண்டும். (புவனேகவாகு தமிழ்ப்பெயர், வீரவாகு போல) யாழ்ப்பாணனல் கரையூர்ப் பகுதியில், குடியமர்த்தப்பட்ட நெய்தல் நில மக்கள், யாழ்ப்பாணப் பட்டினத்தின் ஆரம்பக் கட்டமைப்புக்குக் காரணமாயினர்; (பட் டினம் என்பது கரைநகர்) எனலாம். தென்னிந்தியத் துறைகளி லிருந்து ஊர்காவற்றுறையூடாக யாழ்ப்பாணப் பட்டினம் வரை மரக்கலங்கள் வந்து சென்றன. எனவே 10 ஆம் நூற்ருண்டில் சிங்கைநகர் தொடர்ந்து தலைநகரமாக இருந்தபோது, யாழ்ப் பாணப் பட்டினம் துறைநகரமாக விருத்தியுற்றிருந்துள்ளது.
பத்தாம் நூற்ருண்டிலே பார்சியாவின் அரசனன டோபாக் என்பவன், கர்ஷாஸ்ப் என்பவனின் தலைமையில் அனுப்பிய படை ஒன்று கலா என்ற துறையில் (கலா என்பது ஊர்காவற்றுறை: களபூமி) இறங்கி இருநாட் பயணதூரமுள்ள ஓரிடத்தில் வாகுவென் னும் அரசனை வெற்றி கொண்டது என்று அசேதி என்ற பார்சியன் கர்ஷாஸ்ப் நமா என்னும் கிரந்தத்தில் எழுதியுள்ளான். 'பத்தாம் நூற்றண்டில் வாகு என்னும் பெயருடன் இலங்கை அரசரில் யாழ்ப்பாணமொழிந்த பிறவிடத்தில் எவருமிருந்திலர் (செ. இ: 1933) வாகு என்று பார்சிய நூல் குறிப்பிடும் மன்னன் அல்லது சிற்றரசன் அக்காலவேளையில் சோழரின் அரசப் பிரதிநிதியாக வடவிலங்கையில் விளங்கிய புவனேகவாகுவாக இருத்தல் வேண் டும். இச் சிற்றரசனே முதன்முதல் நல்லூரில் கந்தசுவாமிக்குத் திருக்கோயில் அமைக்கும் பாக்கியத்தைப் பெற்ருன்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில், நான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது; இக் கந்தவேள் ஆலயம் இருதடவைகள் முற்ருக அழிக்கப்பட்டது: ஒரு தடவை கைவிடப் பட்டு இடம் பெயர்ந்தது.
2. முதலாவது ஆலயம்
2. 1. கைலாசமாலைப் பாடல்
யாழ்ப்பாணநகர், நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்பன அமைக்கப்பட்ட காலம், அமைத்தவர் பெயர் என்பன குறித்து

Page 17
4. s நல்லை நகர் நூல்
யாவரும் ஆதாரமாகக் கொள்ளும் பாடல் ஒன்று, யாழ்ப்பாண வரலாற்றின் இலக்கிய ஆதாரங்களில் ஒன்ருகக் கொள்ளப்படும் "கைலாசமாலை"யின் முடிவில் தனிப்பாடலாக வந்துள்ளது.
இலகிய சகாத்த மெண்ணுாற்
றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை
மார்பனும் புவனேகவாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக்
கோயிலும் புரிவித்தானே!
இத்தனிப் பாடலிலிருந்து இரு விபரங்கள் புலனுகின்றன. ஒன்று நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவர், “புவனேக வாகு” என்ற பெயர் பூண்டவர். மற்றையது, அக்கோயில் சகிவருடம் எண்ணுரற்றெழுபதாமாண்டில் கட்டப்பட்டது.
இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டின் மெய்மையை முதலில் நோக்குதல் வேண்டும்.
*சக வருடம் 870ஆம் ஆண்டு என்ருல், அது கி. பி. 948ஆம் ஆண்டாகும். (ஜோன்-1930) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற சரித்திர நூலின் ஆசிரியரான நல்லூர் சுவாமி ஞானப்பிர காசரின் கருத்தின்படி, "எண்ணுரற்றெழுபது என்பது 870 அன்று. ஆயிர மாகிய பேரெண்ணும் நூற்றியெழுபதும் சேர்ந்த கணக் காகுமெனத் தோன்றும். எண் என்ருல் 1000. இந்த 1000+ 107 = 1107. சகவருடம் 1107 ஆம் ஆண்டு என்ருல், அது கி.பி. 1248 ஆம் ஆண்டைக் குறிக்கும்" என்பதாகும். (ஞானப்பிரகாசர்-1928)
எனவே, "நல்லைக்குலவிய கந்தவேட்குக் கோயில்கட்டப்பட் டது கி. பி. 948ஆம் ஆண்டிலா அல்லது கி. பி. 1248ஆம் ஆண் டிலா என்பது முடிவு செய்யப்பட வேண்டியதொன்ருகும். (ட்ானி யல் ஜோன்-1930) யாழ்ப்பாண இராச்சியம் 13ஆம் நூற்ருண் டில்தான் உருவாகி ?நிலைத்திருந்ததெனக் கருதும், முதலியார் செ. இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோருட்பட, நவீன வரலாற்றறிஞர்கள் சிலரும், கந்தனலயமும் யாழ்ப்பாண இராச்சியம் செழித்தோங்கியிருந்த ஒரு காலகட்டத்தில்தான்

நல்லை நகர் நூல் 5
அமைக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். கலிங்கத்து மாகனை யாழ்ப்பாண அரசின் முதல் மன்னணுகக் காண இவர் கள் விழைவதால், இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளது. கைலாய மாலையில் வரும் இலக்கியப் பாடற்சான்று மிகத் தெளிவாக இருக்கும்போது, கி. பி. 948ஆம் ஆண்டில் நல்லூரில் ஆட்சியா ளணுக விளங்கிய புவனேகவாகு, குருக்கள்வளவு என்று இன்று வழங்கப்படும், அருள் விளக்கத்துடன் இன்று விளங்கும் திருக் கோயில் அமைந்துள்ள இதேயிடத்தில், முதலாவது கந்தவேள் ஆலயத்தைக் கட்டுவித்தான் எனத் துணியலாம்.
2. 2. கோயிலைக் கட்டியவர் யார்?
தல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு என்பவர் என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. "கைலாய மாலை"யில் வந்துள்ள தனிச் செய்யுள் ஒர் ஆதாரம். இன்னேர் ஆதாரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய யாழ்ப் பாணச் சரித்திரம்” என்ற நூலில் காணப்படும் விசுவநாத சாஸ் திரியார் சம்பவக்குறிப்பு ஆகும். அது வருமாறு:
இலகிய சகாத்த மெண்ணுற்
றெழுபதா மாண்ட தெல்லை அலர் திரி சங்கபோதி
யாம் புவனேக வாகு நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி
கட்டுவித்துக் குலவிய கந்தனுர்க்குக்
கோயிலொன் றமைப்பித்தானே'
இச்செய்யுள், கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுளின் அப்பட்டமான பிரதி; திரிசங்கபோதி புவனேகவாகு என்பவர் கோயிலை அமைப்பித்தாரென அறிந்த விஸ்வநாத சாஸ்திரிகள் கைலாயமாலைத் தனிச் செய்யுளில் மாற்றமுண்டாக்கி யாத் துள்ளார். எவ்வாருயினும் புவனேகவாகு என்பவரே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டிய பெருமகன் என்பதில் பாடபேத மில்2ல. இன்னுேர் ஆதாரமும் இதனை உறுதிப்படுத்தும். 'நல் லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டியம் அதுவாகும்”. (குலசபாநா தன் - 1971)

Page 18
16 நல்லை நகர் நூல்
*சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர தியதிகந்தர விச்ருந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமண்ய பாதார விந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க போதி புவனேகவாகு?
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டிய புவனேகவாகு, இவ்வாறு கோயில் கட்டியத்தில் இன்றும் போற்றப்படுகிறர். இக் கட்டியத்தின் அர்த்தம் வருமாறு: "திருவருட் சக்திகளான தெய்வயானையம்மனும், வள்ளியம்மனும் ஒருங்கே பொருந்த வீற் றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வண்ங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களுடைய வனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள திசைகள் எல்லாவற் றிலும் பரவிய புகழை யுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்த வனுமான புவனேகவாகு" (வி. சிவசாமி - 19.)
எனவே, கைலாயமால்ை கூறும், அலர்பொலி மாலை மார்பன் புவனேகவாகு”வும், விஸ்வநாதசாஸ்திரியின் சம்பவக் குறிப்புக் கூறும், "திரிசங்கபோதி புவனேகவாகுவும், கோயில் கட்டியம் கூறும், "சிறீசங்கபோதி புவனேகவாகுவும் ஒருவரா என்ற வின எழுகின்றது. பின்னவர் இருவரும் ஒருவரே என்பதில் வரலாற் றறிஞர்களிடையே பேதமில்லை. கி. பி. 1450ஆம் ஆண்டிலிருந்து 1467ஆம் ஆண்டுவரை, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட தென்னிலங்கை இளவரசன் சப்புமல்குமரயா என்ற, செண்பகப் பெருமாள் என்ற, சிறீசங்கபோதி புவனேகவாகுவே அவனுவான்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதன்முதல் கி. பி. 948ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்ற முடிவிற்கு வந்ததன்பின், கி. பி. 1450 தொட்டு 1467 வரை யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசோச் சிய சிறீசங்கபோதி புவனேகவாகு, நல்லூர்க் கந்தசுவாமி ஆதிக் கோயிலைக் கட்டினன் என்ற கருத்துப் பொருத்தமற்றது. ஆதலால்

நல்லை நகர் நூல் 17
கைலாயமாலைத் தனிச்செய்யுள் கூறும் புவனேகவாகுவே முதன் முதல் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டினன் எனக் கொள்ள லாம். கோயில் கட்டியம் கூறும் செய்தியும் மறுப்பதற்கில்லை. ஆகவே, இரண்டு கந்தசுவாமி கோயில்கள், ஒன்று அழிந்ததன் பின் மற்ருென்முக, இரண்டு புவனேகவாகுக்களால், வெவ்வேறு காலங்களில் அமைக்கப்பட்டன என்ற முடிவிற்கு வரவேண்டி யுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதல் கட்டிய புவனேக வாகு என்ற பெயர் கொண்டவர் யார்? கல்வெட்டாதாரங் களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாது விடினும், நூலாதாரங்களும், பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை
சிங்கையாரியன் சந்தோஷத்துடனிசைந்து, கலை வல்ல சிகாமணியாகிய புவனேகவாகுவென்னும் மந்திரியையும் காசிநகர்க் குலோத்துங்களுகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத் துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங் கினன்' என யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிருர்,
சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப் பற்றி நடத்தி வருகையில், புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870-ம் வருசத்தில் புவனேக வாகு எனும் மந்திரி நிறைவேற்றினன்' என யாழ்ப்பாண வைப வம்' என்று நூல் கூறுகின்றது.
யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படு கின்றது ‘கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்தி யின் பிரதம மந்திரி புவனேசவாகரால் 884ஆம் ஆண்டளவில் கட்டப்பெற்றது.” (குலசபாநாதன்-1971)
நல்லுTர்க் கந்தசுவாமி கோயிலின் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையர் என்பார், 1811இல் ஆள்வோருக்கு எழுதிய முறைப்
3

Page 19
18 நல்லை நகர் நூல்
பாடு"ஒன் றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (pOOVENEAGEANGOo) எனக் குறிப்பிட்டுள்ளார். (சேர். அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன்)
எவ்வாறயினும் கி. பி. 948ஆம் ஆண்டில் புவனேகவாகு என்பவரால், முதன்முதல் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப் பட்டது எனக் கொள்ளலாம். இவரை ஓர் அமைச்சரென வர லாற்று நூல்கள் சில குறிப்பதால், சோழ அரசனின் அரசப் பிரதிநிதி அல்லது அமைச்சர் அவரெனக் கொள்வதில் தவறில்லை. புவனேகவாகுவால் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 13ஆம் நூற்ருண்டுவரை சிறப்புற்று விளங்கியது.
3. தமிழரச ர்கள்
3. 1. ஆரியச் சக்கரவர்த்திகள்
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடர் வரலாற்றில் பதின் மூன்றும் நூற்ருண்டு, மிக முக்கியமான காலகட்டமாகும். சுதந் திர தமிழ் இராச்சியம் நிறுவப்பட்டு நிலைகொண்ட கால மிது வென வரலாற்ருசிரியர் குறிப்பிடுவர். ஆரியச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெயரோடு விதந்தோதப்படும் தமிழ் மன்னர் களின் ஆட்சிக்கால ஆரம்பமாக பதின்மூன்ரும் நூற்ருண்டு விளங்குகின்றது.
அவர்கள் இராமேஸ்வரத்துப் பிராமண வரச குடியிற் சம் பந்தஞ் செய்தபின், உபவிதம் அணிந்து, ஆரிய அரசர் என்ற நாமம் புனைந்து, இரமேஸ்வரத்தை தந்தேயத்தினளுகைக்குட் படுத்தி, அதனல் "சேதுகாவலன்" என்ற புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியும் சேதுவாஞ்சனையும் பொறித்து, ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்தி வந்தார்கள்.” (செ. இ, 1933)
யாழ்ப்பாணனின் காலத்தின் பின்னெடுங்காலஞ் சென்ற பின்னர் யாழ்ப்பாணநாடு அரசன் இல்லாமையால் நிலைதளர்ந் தது என்பது கைலாயமாலையின் கூற்று, அந்நிலையில் Այո էbւնւյm

நல்ல நகர் நூல் 19
ணத்திலிருந்த பாண்டிமழவன் என்பான் மதுரைக்குச் சென்று யாழ்ப்பாண நாட்டை வந்து ஆளும்படி சிங்கையாரியனை வேண்டி ஞன். சிங்கையாரியன் வருவதற்குமுன் பாண்டிமழவன் என்ற அதிகாரி யாழ்ப்பாணத்தை ஆண்டிருந்தானென்ற தகவல் இக் கூற்றிலிருந்து தெளிவாகின்றது. பாண்டிமழவனைப்பற்றி கைலாய மாலை கூறுவனவற்றைப் புனைந்துரைகளென்ருே கற்பனைக் கதைக ளென்ருே கொள்ளமுடியாது. (ச, பத்மநாதன்-1970)
இவ்வாறு பாண்டிமழவனல் அழைத்து வரப்பட்டவன் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என யாழ்ப்பாண வைபவமாலை கூறு கின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் முதலாவது ஆரியச் சக் கரவர்த்தி இவனே. விஜய கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தி என் றும் சிங்கை ஆரியனென்றும் இவன் அழைக்கப்பட்டான். செக ராசசேகரன் (1) என்ற சிங்காசனப் பெயரையும் புனைந்துகொண் டான். யார் இந்த விஜய கூழங்கைச் சிங்கையாரிய மன்னன்?
*யாழ்ப்பாண வைபவ விமர்சனம்" என்ற நூலில், சுவாமி ஞானப்பிரகாசகர் கூறுவதுபோல விசய கூழங்கை என்ற பெயர் விசயகாலிங்க என்ற பெயரின் திரியாகும் எனக் கொள்ளவேண் டும். முதலியார் செ. இராசநாயகத்திலிருந்து கா. இந்திரபாலா வரை இக்கூற்றின் மெய்மையை ஏற்றுக்கொள்கிருர்கள். விசய காலிங்கன் என முடிவெடுக்கும்போது, விசயகாலிங்கனைக் கலிங்க மாகன் என அடையாளம் காண்பதில் சிரமமில்லை என வரலாற் றறிஞர்கள் கருதுகின்றனர்.
3. 2. கலிங்கமாகன்
கி. பி. 1215 ஆம் ஆண்டு கலிங்கமாகன் என்ற மன்னன் இலங்கையைக் கைப்பற்றி, 1236ஆம் ஆண்டு வரையும் பொல நறுவையிலிருந்து ஆட்சிசெலுத்தின்ை. 1286 ஆம் ஆண்டு 2ஆம் பராக்கிரமபாகு என்ற சிங்களமன்னன், கலிங்கமாகனைப் பொல நறுவையிலிருந்து துரத்திவிட்டான். அந்த யுத்தத்தில் கலிங்க மாகன் இறந்ததாக, ஆதாரமில்லை என்றும் அவன் வடவிலங் கைக்குத் தனது எஞ்சிய படைகளுடன் சென்றிருக்க வேண்டும் என கா. இந்திரபாலா கூறுகிருர். (கா. இ: 1970) அவ்வாறன்றி அவன் மதுரைக்குத் தப்பிச் சென்றிருக்கவேண்டுமெனக் கொள் வதில் வருத்தமில்லை. (க. கு: 1986)

Page 20
20 நல்லை நகர் நூல்
கலிங்கமாகன் ஆட்சியில் வடவிலங்கையும் அவன் ஆதிக்கத் தின் கீழ் இருந்தது. கி. பி. 1236இல் கலிங்கமாகன் மதுரைக் குப் புலம் பெயர்ந்ததால், யாழ்ப்பாண இராச்சியம் மன்னன் இல்லாமல் நிலை தளர்ந்தது. தென்னிலங்கையில் இரண்டாம் பராக்கிரமபாகு வலி குன்றிய மன்னனுக அக் காலவேளை விளங் கியதால், வடவிலங்கையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் திருக்கும் திறன் அற்றிருந்தான். ஆதலால் 1236ஆம் ஆண்டி லிருந்து 1242ஆம் ஆண்டு வரை வடவிலங்கையைப் பாண்டிமழ வன் என்ற அதிகாரியே நிர்வகித்து வந்தான். தென்னிலங்கைச் சிங்கள அரசனின் அச்சுறுத்தல் ஆரம்பமானபோது, பாண்டிமழ வன், சுைலாயமாலையில் விபரித்தவாறு மதுரை சென்று அங்கு கரந்துறைந்த கலிங்கமாகனை வலிந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து விஜயகாலிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்ற நாமத் தோடு அரியணையில் அமர்த்தினன் என்று துணியலாம். இவன் சிங்கை நகரின் மன்னனுக அமைந்ததால் சிங்கையாரியன் எனப் பட்டான், காலிங்க ஆரியச் சக்கரவர்த்தி வடவிலங்கைக்கு மீண்டு வந்தபோது தன்னேடு வேளாள மக்கள் பலரைக் கூட்டிவந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும் குடியேற்றினன் என அறியக் கிடைக்கின்றது. திருநெல்வேலி, புலோலி, பச்சிலைப்பள்ளி, தொல் புரம், கோயிலாக்கண்டி, நெடுந்தீவு, பல்லவராயன்கட்டு, இணு வில், இருபாலை, தெல்லிப்பளை, மயிலிட்டி முதலான ஊர்களில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
அத்தோடு வன்னியர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. கரிக் கட்டுமூலைப்பற்று முள்ளியவளை, மேல்பற்று, மேற்குமூலை, கிழக்கு மூலை, திரியாய், கச்சாய், கட்டுக்குளம், திருக்கோணமலை, தம்பல காமம், கொட்டியாரம், துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி, நொச்சிமுனை, புல்வெளி, தனிக்கல் முதலான உத்தரதேசத்தின் பகுதிகளில் வன்னியர்கள் குடியேறினர்கள்." (வையாபாடல்)
3. 3. சாவகமன்னன்
காலிங்க ஆரியச் சக்கரவர்த்திக்குப் பின் அவன் மகன் குலசேகரசிங்கையாரியன் அரசகட்டிலேறினன் என வரலாற்றறி ஞர் ப்லர் கூறியுள்ளனர். ஆனல் காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக் குப் பின் வடவிலங்கையை ஒரு சாவகமன்னன் ஆண்டுள்ளான்

நல்லை நகர் நூல் 21
என்பதற்குச் சான்றுகளுள்ளன. கி. பி. 1247ஆம் ஆண்டு சந்திர பானு என்ற சாவகன் (யாவா நாட்டைச் சேர்ந்தவன்) சிங்கள அரசின்மீது படையெடுத்தான். அவ்வேளை சிங்கள மன்னனுக விளங்கிய இரண்டாம் பராக்கிரமபாகு இந்தப் படையெடுப்பை முறியடித்து சந்திரபானுவைத் துரத்தியடித்தான்.
தெற்கிலங்கையில் தோல்வி கண்ட சந்திரபானு வடக்கிலங்கை யில் வெற்றிபெற்று அங்கு தோன்றியிருந்த புதிய இராச்சியத்தின் ஆட்சியாளனுக மாறியிருக்கலாம் என இந்திரபாலா கருதுவது ஏற்புடையதாகும். (கா. இ, 1970) எனவே காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் அரியணையைச் சந்திரபானு என்ற சாவக மன் னன் கவர்ந்துகொண்டான். அவனேடு வந்தவர்கள் குடியேறிய பகுதிகள்தாம் சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன் கோட்டை என வழங்கப்படுகின்றது. ஆகவே சந்திரபானு கி. பி. 1248ஆம் ஆண்டளவில் உத்தர தேச மன்னணுகியிருப்பான். அவன் சிங்கள இராச்சியத்தை இரண்டாம் முறை தாக்குவதற்காகப் படை திரட்டினன். பதீ (பதவியா) குருந்தீ (குருந்தனூர்) மாவட்டங் களிலும் பிற மாவட்டங்களிலும் வசித்த சிங்களவரைத் தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது. இவன் சிங்கள இராச்சியத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் 1258-ல் சுந்தரபாண்டியன் சாவகனை வென்று திறை பெற்றுச் சென்(றன். அவன் திறையை ஒழுங்காகச் செலுத்தாமையால் 1262-ல் ஜடாவர்மன் வீரபாண்டியன் சாவகமன்னனைத் தண் டிக்க அல்லது இரண்டாம் பராக்கிரமவாகுக்கு உதவப் படை யெடுத்தான். அவ்வேளை சாவகமன்னன் சிங்கள அரசன்மீது இரண்டாவது தடவையாகப் படையெடுத்துச் சென்றிருந்தான். அப்போரில் சாவகமன்னனின் தலையை வீரபாண்டியன் துண்டித் தான். அதன்பின் திரிகூட கிரியிலும் கோணமலையிலும் இரட் டைக்கயல் இலச்சினையை வீரபாண்டியன் பொறுப்பித்தான். (கா. இ: 1970) இந்த இலச்சினை இன்றும் திருக்கோணமலைக் கோட்டை வாசலில் உள்ளது.
3. 4. குலசேகரசிங்கை ஆரியன்
கி. பி. 1262-ம் ஆண்டில் சாவகமன்னன் போரில் இறக்கவே யாழ்பபாண அரசின் மன்னனக காலிங்க ஆரியச் சக்கரவர்த்தி

Page 21
22 நல்லை நகர் நூல்
யின் மகன் குலசேகரசிங்கை ஆரியன் (பரராசசேகரன் 1) முடி சூடிக் கொண்டான். குலசேகரசிங்கை ஆரியன் இராச்சியத்தின் நிர்வாக ஒழுங்கைச் சீர்ப்படுத்தி நாட்டில் சமாதானம் நிலவ வழி செய்தான். குலசேகரனையடுத்து அவனது மகளுகிய குலோ துங்க சிங்கை ஆரியன் (செகராசசேகரன் 2) கி. பி. 1284-ல் அரசனுனன். மன்னர்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை நகர் மன்னனுக்கே உரித்தாயிருந்தது. சிங்கள மன்னன் புவனேக வாகு என்பான் உரிமைபெற முயன்றதால் குலோத்துங்கன் புவனேகபாகுடன் போர் செய்து உரிமையை நிலைநாட்ட நேர்ந் தது. (செ. இ: 1933)
குலோத்துங்கசிங்கையாரியன அடுத்து கி. பி. 1292-ம் ஆண்டு விக்கிரமசிங்கையாரியன் (பரராசசேகரன் 2) அரசனஞன். இவன் காலத்தில் தமிழருக்கும், சிங்களவருக்கும் மத வேறுபாட்டால் உத்தர தேசத்தில் கலவரம் மூண்டது. அரசன் கலவரத்திற்குக் காரணமான புஞ்சிபண்டாவைவும் அவனைச் சார்ந்த பதினேழு பேரையும் பிடித்துச் சிரச்சேதஞ் செய்வித்தான். கலவரம் அதனல் அடங்கியது. (எஸ். நடேசன்: 1960) எனினும் இவன் காலத்தில் உத்தரதேசத்தில் வன்னிச் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின.
கி. பி. 1302இல் யாழ்ப்பாண அரசின் மன்னனுக வரோதய சிங்கையாரியன் (செகராசசேகரன் 3) முடிதசித்தான். அவன் தனது இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவருக்கும், தமிழருக்கு மிடையே நல்லுறவை ஏற்படுத்தினன். இவன் காலத்தில் வன்னியர்கள் ஏற்படுத்திய குழப்பம் அடக்கப்பட்டது. கி. பி. 1325இல் வரோதயன் இறக்க, அவனது மைந்தன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (பாராசசேகரன் 3) அரச கட்டிலேறினன். இவன் காலத்திலும் வன்னியர் குழப்பஞ் செய்து, அடங்கினர். இந்த அரசன் காலத்தில் இபன்பட்டூட என்ற முஸ்லீம் பயணி யாழ்ப் பாணம் வந்தான். அங்கே ஆரியச் சக்கரவர்த்தியின் திரண்ட கடற்படையையும், செல்வத்தையும் கண்டு அதிசயித்தான். (േ. ഭൂ: 1933)
இ.பி.1847-இல் குணபூசணசிங்கையாரின் (செகராசசேகரன் 4) முடிசூடினன். இவன் காலத்தில் யாழ்ப்பாணவரசில் அமைதியும் சமாதானமும் நிலவியது. இவன் பின் இராச்சியத்தின் அரசனுண விரோதய சிங்கையாரியன் (வரராசசேகரன் 4) காலத்தில் நாட்டில்

நல்லை நகர் நூல் 23
அமைதி நிலவிய போதிலும், வன்னியர் கலகம் இருந்தது. *விரோதயன், பாண்டிய மன்னன் சந்திரசேகரன் என்பானுக்குப் படையுதவி, இழந்த பாண்டி நாட்டையும் முடியையும் மீட்டுக் கொடுத்துள்ளான்." (எஸ். நடேசன்: 1960)
3. 5. தென்னிலங்கை மீது படிை
கி. பி. 1380ஆம் ஆண்டில் விரோதசிங்கையாரியனின் மகன் சயவீரசிங்கையாரியன் (செகராசசேகரன் 5) யாழ்ப்பாண அரசின் சிங்காசனமேறினன். சயவீரசிங்கையாரியன் காலத்தில், முத்துக் குளித்தல் சம்பந்தமாக எழுந்த பிரச்சினையில், தென்னிலங்கை மன்னர்களில் ஒருவனுக புவனேகபாகு என்பானைப் போரில் வென்று, திறைபெற்று மீண்டான்: 'பன்னிரண்டு வருடங்கள் தென் னிலங்கை மன்னர்கள் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத் தினர் (எஸ். ந: 1960) எனினும், கோட்டையின் அரசனுகவிருந்த அழகக்கோனர் என்பான் திறை செலுத்த ஒரு கட்டத்தில் மறுத்ததோடு, சிங்கைநகர் அரசனுல் இவனிடம் சிறை வாங்கும் படியனுப்பப்பட்ட ஏவலாளர்களைத் தூக்கிக் கொன்ருன். அதனல் சயவீர சிங்கையாரியனின் பெரும்படை தரைமார்க்கமாகக் கம்பளைக்கும், கடல் மார்க்கமாகக் கோட்டைக்கும் அனுப்பப் பட்டது. கம்பளையரசனன புவனேகபாகு அப்படைக்கு எதிர் நிற்கவஞ்சி ஒடி ஒளித்தான். கடற்படை தோல்வி கண்டு திரும்ப நேர்ந்தது.
கி. பி. 1410ஆம் ஆண்டளவில் ஜயவீர சிங்கையாரியன் இறக்க குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன், 5) முடிதரித்தான். இவன் காலத்தில் பராக்கிரமபாகு என்ற சிங்கள அரசன் திறை செலுத்த மறுத்தான். அதனல், தென்னிலங்கைக்குப் படையெடுத் துச் சென்று சிங்களவரைத் தோல்விகாண வைத்து, திறைபெற்று மீண்டான்." (எஸ். ந: 1960) இப்படையெடுப்புக்கு விஜய நகர மன்னன் படையெடுத்து உதவியுள்ளான்.
குணவீரசிங்கையாரியனின் பின்னர் கி. பி. 1440இல், அவனது மகஞன கனகசூரியசிங்கையாரியன் (செகராசசேகரன் 6) அரச ணுஞன். யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றில் இவனது காலம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், கி. பி. 1215ஆம் ஆண்டிலிருந்து

Page 22
24 நல்லை நகர் நூல்
1440ஆம் ஆண்டு வரை ஆரியச் சக்கவர்த்திகள் கட்டிக்காத்த வடவிலங்கையின் விலை மதிப்பில்லாத சுதந்திரத்தை, தென் னிலங்கை மக்களிடம் பறிகொடுத்தான்.
4. சிறீசங்கபோதி புவனேகபாகு
4. 1. சப்புமல்குமரயா
கனகசூரியசிங்கையாரியன், வடவிலங்கையை ஆண்டவேளை, தென்னிலங்கையில் கோட்டை அரசனுக ஆரும் பராக்கிரமபாகு என்பான் விளங்கினன். அவன் ஆரிய அரசர்கள் மீது மாருத, பகமை கொண்டிருந்தான். 1450ஆம் ஆண்டு தனது வளர்ப்புப் புத்திரனும், சேனதிபதியான சப்புமல்குமரயா (செண்பகப்பெரு மாள்) என்பானைப் பெரும் படையுடன் உத்தரதேசத்தைக் கைப் பற்றுமாறு அனுப்பினன். அவனது படை முன் எதிர்நிற்கவிய லாது, தமிழ்ப்படை தோற்றது. கனகசூரியசிங்கையாரியன் தன் னிரு புதல்வர்களுடன் இந்தியாவிற்கோடிப்போனன்.
*சப்புமல்குமரயா யாழ்ப்பாணத் தலைநகரிட் புகுந்து, மதங் கொண்ட களிறெனக் கண்டாரைக் கொன்று, அந்த நகர் ஆவணங்களெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாட மாளிகைகளை யெல்லாம் இடிப்பித்துத் தரைமட்டமாக்கினன். சீரும் சிறப்போடும் செழித்து விளங்கிய பொங்கொலி நீர்ச் சிங்கைநகர், சப்புமல்குமரயாவின் படையெடுப் பால் சிதைந்து அழிந்தது." (செ. இ: 1933)
4. 2. கந்தசுவாமி கோயிலின் அழிவு
சிங்கை நகரை அழித்துத் தரைமட்டமாக்கிய சப்புமல்கும ரயாவின் படை, நல்லூரிற் புகுந்தது; அப்படை யாழ்ப்பாணத் தைத் தாக்கியபோது, நகரிலிருந்த மாடமாளிகைகள் தரைமட் டமாக்கப்பட்டன. பழைய தலைநகர் பாழாய்விட்டது. சப்புமல் குமரயாவின் யாழ்ப்பாண வெற்றியைப் புகழ்ந்துபாடும் 'கோகில சந்தோபய எனும் குயில்விடுதூதுப் பிரபந்தம் ஒன்று, யாழ்ப் பாணப் பட்டினத்தின் சிறப்புக்களையும், படை சென்ற பாதை

நல்லை நகர் நூல் 25
யில் நிகழ்ந்த யுத்த அழிவுகளையும் பெருமையாகப் பாடியுள்ளது. எனவே, சப்புமல்குமரயாவின் படை தலைநகரைத் தரைமட்டமாக் கியது எனக் கொள்வதில் தவறில்லை. அவ்வேளை நல்லூர்க் கந்த சுவாமி கோயிலும் தகர்த்தெறியப் பட்டிருக்கும் என்பதில் ஐய மில்லை. ۔۔۔۔
எனவே கி. பி. 948 ஆம் ஆண்டு, புவனேகவாகு எனும் அமைச்சரால் முதன்முதல் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், கி. பி. 1450ஆம் ஆண்டு, சப்புமல்குமரயாவின் படை யெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான் போன்று, யாழ்ப்பாண நகரியை மீண்டும் புதுப்பித்த சப்புமல்குமரயா, அழிந்துபோன நல்லூர்க்கந்தசுவாமி கோயிலையும் மீண்டும் ஆக்கினன்.
‘ஆரியச் சக்கிரவர்த்தியோடு செண்பகப்பெருமாள் கடும் போர் நிகழ்த்திய நாட்களில், அரண்களும் இராசதானியும் பெரிதும் அழிவுற, அவற்றைச் செண்ப்கப்பெருமாள் திருத்தி அமைத்தானென்றே கொள்ள வேண்டும். சப்புமால்குமாரன் யாழ்ப்பாணப் பட்டினத்திற் கோட்டைகளையும் காவலரண்களை யும் அமைத்தான் என்று ராஜாவலிய சொல்வினவும் இக்கருத் திற்கு ஆதாரமாயுள்ளன. (ச, ப 1970)
சப்புமல்குமரயாவின் தந்தை மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு பணிக்கனவான். "ஆரும் பராக்கிரமபாகு அவனை உப சரித்து, அவன் தேகவலியிலும் வாட் போர்த்திறத்திலும் ஈடுபட்ட வணுய்த் தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம்முடிப்பித்தான்’ (செ. இ: 1933) இவர்களுக்குப் பிறந்தவனே சப்புமல்குமரயா ஆவான். “செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன் நாளங்களில் ஓடக் கொண்டவனதலாலும், தமிழுற்பத்தி யாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்றுவந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமதத் தாபகரெனப் புகழ்ந் தோதியவிடத்தும் தமிழ்ப் பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமன்று’ (ஞானப்பிரகாசர் - 1928)
4.

Page 23
26 நல்ல நகர் நூல்
4. 3. இரண்டிாவது கந்தசுவாமி கோயில்
கி.பி. 1450ஆம் ஆண்டிலிருந்து 1467ஆம் ஆண்டுவரை யாழ்ப் பாண இராச்சியத்தை ஆண்ட சப்புமல்குமரயா என்ற சிறீ சங்கபோதி புவனேகவாகு, குருக்கள்வளவு என்றவிடத்திலிருந்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமிகோயிலை மீண்டும் புதிதா கக் கட்டுவித்தான். படையெடுப்பின்போது அழிந்து சிதைந்து போன முதலாவது தேவாலயம் அமைந்திருந்த விடத்தில் அக் கோயிலை அமைக்காது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அமைப்பித்தான். அரண்மனை, அரசமாளிகைகள் என்பன அமைந் திருந்த பண்டாரவளவு, சங்கிலித்தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றிக்கு அருகில், இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக் கப்பட்டது. அவ்விடம் முத்திரைச்சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும். அவ்விடத்தில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாவது தடவையாக அமைக்கப்பட்
• ܚܬ
இக்கோயில் ஆகம விதிகளுக்கு இணங்க அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. "இக்கோயில் விதானங்கள் செப்புத் தகடு களில் வரையப்பட்டிருந்தன. சிலாவிக்கிரகங்கள் இக்கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தன" (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை1933) இக்கோயில் மிகப்பெரியதாக தென்னிந்தியக் கோயில்களை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். "யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக இதுவே இருந்தது” என்பதை, குவெருேஸ் சுவாமிகளின் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. இக் கோயிலைச் சுற்றி நெடு மதில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் இந்தக் கோயில் மதிலின் ஒரு பகுதியை, சங்கிலித் தோப்பில் யமுனரி என்ற பகர வடிவ ஏரிக்குக் கிழக்குப்புறத் தில், காணமுடிகின்றது. நான்கு அடிகள் அகலமான செங்கற் சுவரின் அத்திவாரத்தை யமுனரிக்குச் செல்கின்ற ஒழுங்கை முகப்பிலும் காணலாம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில், உயர்ந்த மதில்களுள் அமை திருந்தமையால் தான், பின்னர் யாழ்ப்பாணத்தின்மீது படை யெடுத்த பிலிப் ஒலிவேரா என்ற போர்த்துக்கேயத் தளபதி, ஒருகட்டத்தில், இக் கோயிலினுள் தனது வீரர்களுடன் புகுந்து, இதனை ஒரு கோட்டையாகப் பயன்படுத்தி இருக்கின்முன்? (குவைறேஸ் - 1930)

நல்ல நகர் நூல் 27
நல்லூரில் மீண்டும் முத்திரைச் சந்தி கிறிஸ்தவ தேவாலயம் இன்று அமைந்துள்ள கோட்டத்தில் கந்தனலயம் கோபுர கல சங்களோடு அமைந்தது. இக்கோயிலிருந்த சிலா விக்கிரகங்கள் சிலவற்றை யாழ்ப்பாணத் தொல்பொருட் காட்சிச்சாலையில் இன்றும் காணலாம். இப்பெரிய ஆலயத்தை அமைத்தமையால் இவனது பெயர் இன்றும் கோயில் கட்டிடத்தில் "சிறீசங்கபோதி புவனேகவாகு" வென நினைவு கூரப்படுகின்றது.
சிறீசங்கபோதி புவனேகவாகு, நல்லூரிலிருந்து உத்தர தேசத்தை பதினேழு வருடங்கள் ஆட்சி செய்தான். கி. பி. 1467ஆம் ஆண்டு அவன் தென்னிலங்கைக்குத் திருப்பிச் செல்ல நேர்ந்தது. அவனுடைய வளர்ப்புத் தந்தை ஆரும் பராக்கிரம வாகு இறந்துபோக, அவனது பேரன் ஜெயவீரன் கோட்டைக்கு அரசனனன். அதனை விரும்பாத சிறிசங்கபோதி புவனேகவாகு, விஜயபாகு என்பவனை யாழ்ப்பாணத்தின் அரசனுக்கி விட்டு கோட்டைக்கு மீண்டு, ஜெயவீரனைக் கொன்று விட்டு, அரசகட் டிலேறினன். தருணத்தை எதிர்பார்த்து திருக்கோவிலூரில் கரந் துறைந்திருந்த கனக சூரிய சிங்கையாரியனும் , அவனது இரு புதல்வர்களும் சேனைகளுடன் வந்து விஜயபாகுவைக் கொன்று, இழந்த இராச்சியத்தை மீட்டுக் கொண்டனர்,
4. 4. சிங்கைப் பரராசசேகரன்
கனக சூரிய சிங்கையாரியன் மீண்டும் இழந்த மணிமுடியைத் தரித்துக்கொண்டான். அவன் பின் அவனது மூத்த மகனன பர ராசசேகரன் கி. பி. 1478ஆம் ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனனன். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராச சேகரன் ஆவான்.
இவன் தந்தையினுஞ் சிறந்தவனுய், நகருக்கு வடபாலில் சட்டநாதர் திருத்தளியையும், குணபாலில் வெயிலு கந்தபிள்ள யார் ஆலயத்தையும், தென்திசையில் கைலாய நாதர் கோயிலை யும் குடதிசையில் வீரமாகாளி அம்மன் திருப்பதியையும் கட்டு வித்துத் தன் தலைநகரை முன்னையினு மணிபெற விளங்க வைத் தான். கந்தசுவாமி கோயிலிக்கணிமையில் ஓர் ஏரி அமைப்பித்து,

Page 24
28 நல்லை நகர் நூல்
யமுன நதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர் வித்து அவ்வேரிக்குள் பெய்வித்து, அதனை (யமுனரி) யமுனையோ எனப் பெயர் தந்தழைத்தான் (இ. செ1 1933) இந்த யமுனரி என்ற பகர வடிவ ஏரி இன்று அழியுந் தருவாயினுள்ளது.
சிங்கைப் பரராசசேகரனே தமிழ்ச்சங்கம் ஒன்றை நல்லூரில் நிறுவிய அரசனுவான். பரராசசேகரனின் சகோதரன் செகராச சேகரன் சிறந்த தமிழறிஞணுவான். பரராசசேகரம் என்ற வைத்திய நூல், செகராச சேகரம் என்ற சோதிடநூல், இரகுவம்சம் என்ற காவிய நூல் என்பன பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட் டவை என வைபவமாலை கூறும். இரகுவம்சத்தை இயற்றிய அரசகேசரி பதினேழாம் நூற்ருண்டைச் சேர்ந்தவரென்பது ஒரு சாராரின் முடிவு.
சிங்கைப் பரராச சேகரனுக்குச் சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கன், சங்கிலி என நான்கு ஆண்மக்களும், ஒரு பெண் ணுமாக ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஆணுல் போத்துக்கேய நூல்களைக் கொண்டு “வக்கிரதுக்குறிபண்டார "சியங்கேரி” எனவிரு பெயர்களே அறியக்கிடக்கின்றன. (செ.இ:1933) பரராசசேகர மன் னனின்பிற்காலம் மிகத் துயர்நிறைந்ததாக இருந்துள்ளது. கடைசி மகனன சங்கிலியே அத்துயருக்குக் காரணமாவான். யாழ்ப்பாண வைபவமாலை இந்தச் சங்கிலியையும், போத்துக்கேய வரலாற்ற சிரியர்கள் குறிப்பிடுகின்ற யாழ்ப்பாணவரசின் கடைசி மன்ன னை சங்கிலிகுமாரனையும் ஒருவரென மயங்கி எழுதியுள்ளார். இவ்விரு சங்கிலிகளுக்கு மிடையில் ஒரு நூற்ருண்டு காலமும், ஐந்து அரசர்களும் இருந்துள்ளனர்" (எஸ். ந: 1960) சங்கிலி தனக்கு முன் அரசுரிமை கொண்டிருந்த சிங்கவாகு, பண்டாரம் இருவரையும் சூழ்ச்சியால் கொன்றன். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்தமையால் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது த்ந்தையையும் புறக்கணித்துவிட்டு, கி.பி. 1819ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியாசனையில் ஏறின்ை" (செ. இ: 1933) மன் னன் பராாசசேகரனையும் சங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனுனன் என போத்துக்கேய ஆதாரங்கள் கூறும்". (எஸ். ந" 1960) பரநிருபசிங்கன், சங்கிலி யின் வலிமைக்கு அஞ்சிச் சிலகாலம் பேசாதிருந்தான்,

நல்ல நகர் நூல் 29 4. 5. மன்னுர்ப் படுகொலைகள்
தென்னிலங்கையில் ஆதிக்கம்பெற்ற போர்த்துக்கேயர் யாழ்ப் பாண அரசைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரச் சந்தர்ப் பம் பார்த்திருந்தனர். கி.பி. 1542ஆம் ஆண்டு பிரான்சிஸ்சவே ரியர் என்ற போர்த்துக்கேய மதகுரு மன்னருக்கு வந்து 800 பேரைக் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்தார். அதனைக் கேள்வியுற்ற சங்கிலிமன்னன், படையுடன் மன்னர் சென்று மதம் மாறிய மக்களையும், மதம் மாற்றிய குருவையும் சிரச்சேதம் செய்வித்தான். அத்துடன் யாழ்ப்பாணத்திற் பல கலகங்களுக் குங் காரணராயிருந்த புத்த சிங்களரையுமகற்ற வேண்டிக் குறித்த தவணைக்குள்ளே தனது இராச்சிய எல்லைக்கப்பாற் செல்லுமாறு கட்டளை செய்து, அவர்கள் பள்ளிகளையும் இடித்துத் தள்ளினன். அநேக சிங்களக் குடிகள் வன்னிப் பிரதேசத்திற்கும் கண்டி நாட் டிற்கும் சென்ருர்கள். (செ.இ:1933)
5. போர்த்துக்கேய படையெடுப்புகள்
5. 1. முதற்படையெடுப்பு
மன்னரில் நிகழ்ந்து முடிந்த துயரச்சம்பவத்திற்காகப் பழி வாங்கும்பொருட்டு, கி.பி. 1543 இல் போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டது. இப்படைக்கு மாட்டின் அப் போன்சோ தே சௌசா என்பான் படைத் தலைவனுக வந்தான், அவனது கப்பல்கள் நெடுந்தீவில் ஒதுங்கிய போது பரநிருபசிங் கன் அவனை நாடிச் சென்று உதவிகோரினன். சங்கிலி செகராச சேகரன் வழங்கிய திரவியத்தால் திருப்தியடைந்த மாட்டின் அல்போன்சோ தே செளசா படையுடன் திருப்பிச் செல்ல நேர்ந்தது. வக்கிரதுக்குறி பண்டாரம் எனப் போர்த்துக்கேய ரால் அழைக்கப்பட்ட பரநிருபசிங்கன் சங்கிலி மன்னனுக்குப் பயந்து கோவைக்கு ஒட நேர்ந்தது.
5. 2. தொடர்ந்த படையெடுப்புக்கள்
இரண்டாம் முறை கி. பி. 1560ஆம் ஆண்டு கொன்ஸ் தாந்தினு தே பிறகன்சா என்னும் தளபதியின் தலைமையில் போர்த்

Page 25
30 நல்லை நகர் நூல்
துக்கேயப் படை, 77 கப்பல்களுடன் கரையூரில் வந்திறங்கியது. தமிழர்படை எவ்வளவு எதிர்த்தும், போர்த்துக்கேயப் படை நல்லூரை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை. சங்கிலி செகராசசேகரன், கோப்பாய்க்குப் பின் வாங்கினன். தலைநகருட் பிரவேசித்த பறங்கிப்படை நகரைச் சூறையாடியது. பின்னர் சங்கிலி செகராசசேகரனுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டு. ஏராளமான திரவியங்களுடன் கொன்ஸ்தாந்தீனுதே பிறகன்சா திரும்பிச் சென்றன். ஒப்பந்தப்படி மன்னரில் போர்த்துக் கேயர் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டனர்.
சங்கிலி செகராசசேகரனுக்குப் பின் புவிராசபண்டாரம், காசிநயினர் அல்லது குஞ்சுநயினர் (1565) பெரியபிள்ளை செகராசசேகரன் (1570) பவிராசபண்டாரம் (பரராசசேகரன்) (1582) எதிர்மன்ன சிங்ககுமாரன் (1591), சங்கிலிகுமாரன் செகராசசேகரன் (1616) ஆகிய ஆறு மன்னர்கள் யாழ்ப்பாணத் தின் ஆட்சியாளர்களாக விளங்கினர். யாழ்ப்பாண இராச்சியத் தில் நிகழ்ந்த உண்ணுட்டுக் குழப்பத்தினலும், போர்த்துக்கேயரின் அரசியல் தலையீட்டினலும் இந்த மன்னர்கள் நிலையாகத் தொடர்ந்து ஆளமுடியாது போனது, புவிராசபண்டாரம், இரு தடவைகள் மன்னுரைத் தாக்கிப் போர்த்துக்கேயரைத் துரத்த முயன்றும் இயலாது போயிற்று.
தி. பி. 1591இல் போர்த்துக்கேயர் மூன்ருவது தடவையாக அந்திரே பூர்த்தாடு டி மென்டொன்சா எனும் படைத்தலைவனைப் பெரும்படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர்; போர்த்துக்கேயத் தளபதி யாழ்ப்பாண அரசினைப் பெரும்படை யுடன் தாக்கினன்;
தமிழர் படையும் பறங்கியர் படையும் வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்குமிடையிலுள்ள பெரும் வெளியில் அதாவது தற்போதைய நல்லூர்க் கந்தசுவாமி கோயி லமைந்துள்ள இடத்தில் ஒன்றினையொன்று எதிர்கொண்டன.
*அரசனுடைய மகாவீரர்களைக் கொண்ட அந்தப் பத்துப் படை தங்கள் உயிரை வெறுத்துச் சக்துருக்களை எதிர்த்துப் பொரு தினர். அக்கடும் போரிற் கல்ந்த தமிழரெல்லாரும் மாண்டனர். அவர்களை நடாத்திய யோகி ஒருவரும், “கந்தசுவாமி கோயிற் பூசகரும் (பெரிய ஆலயத்துப் பிராமணரும் மாண்டனர்.* (செ. @:。1933】

நல்லை நகர் நூல் 31 5. 3. யார் இந்த யோகியார்?
அக்கால வேளையில் யாழ்ப்பாணமண்ணில் துறவிகள் நட மாடினர். தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாண இராச்சியமூடாக சிவனெளிபாதமலைக்கும், கதிர்காமத்திற்கும் தலயாத்திரையை யோகிகள் மேற்கொண்டுள்ளார்கள். யோகிகள் வடிவில், கண்டி மன்னனுக்குதவ, போர்வீரர்கள் தென்னிந்தியாவிலிருந்து செல் வதாகப் போர்த்துக்கேயர் சந்தேகப்பட்டிருக்கிருர்கள். எவ்வாரு யினும் நல்லூரில் யோகியர் ஒருவர் வாழ்ந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
இவரது பெயர் சிக்கந்தர் என்பர். இவரை சைவமக்களும், அக்காலத்தில் நல்லூரில் வாழ்ந்த முஸ்லீம் மக்களும் ஆதரித்துப் போற்றினர். இந்த இரு மதத்தவர்களுக்குமுரிய அற நெறிகளை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தபடியால் தான் இரு மத மக் களும் அவரை வழிபட்டனர். புராதன நல்லூர்த் தேவாலயம் அமைந்திருந்த குருக்கள் வளவில் அந்த யோகியார், உலவினர். தன்னை நாடிவந்த மக்களுக்கு அறநெறி புகட்டினர். போர்த்துக் கேயருக்கும் தமிழ்ப் படைவீரர்களுக்குமிடையில், குருக்கள்வள வில் நிகழ்ந்த யுத்தத்தில் அந்த யோகியார் உயிரிளக்க நேர்ந்தது. குருக்கள்வளவின் சுற்ருடலில் அக்கால வேளையில் முஸ்லீம்கள் வாழ்ந்தமையால், அவர்களால் நன்கு மதிக்கப்பட்ட அந்த யோகியாருக்கு, ஒரு சமாதியைக் குருக்கள்வளவில் கட்டி வழிபா டியற்றி வருவாராயினர். h−
5. 4. முஸ்லீம் குடியேற்றம்
அக்காலகட்டத்தில் இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ள குருக்கள் வளவு என்றவிடத்தில் முஸ்லீம்கள் குடி யேறியிருந்தார்கள் என அறியப்படுகின்றது.
"அக்காலத்தில் கந்தசாய்பு என்பவனல் மகம்மது மார்க்கத் தவர்களாக்கப்பட்ட தமிழ் வம்சத்தவர்களான சில சோனகக் குடிகள் காயில் பட்டணம் முதலிய இடங்களிலிருந்து வந்து தென் மிருசுவில் என்னும் ஊரில் குடியிருந்து சாவகச்சேரி, கொடிகா மம், எழுதுமட்டுவாள், முகாவில் என்னுமிடங்களிலுள்ள சந்தை களில் வியாபாரம் பண்ணிக்கொண்டு தாங்களிருந்ததென மிருக

Page 26
32 நல்லை நகர் நூல்
விலுக்கு உசனென்று பேருமிட்டனர். சிலகாலம் அவ்விடத்தி லிருந்து அவ்விடம் வசதிப்படாததினுல் அந்தச் சோனகக் குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரிற் கந்தசுவாமி கோயிலிருந்த இடத் தில் குடியிருந்தார்கள்." (யாழ்ப்பாண வைபவமாலை)
*சோனகர் உசனின்று மகன்று சோனகன் புலவில் சிறிது காலம் வைகி, அதுவும் வாய்ப்பாகாமையால், இப்போது நல் லூர்க் கந்தசுவாமி கோவிலிருக்கு மிடத்துற்கு மேல் பாகத்தில் குடிகொண்டார்கள் அங்கே ஒரு பள்ளிவாசலுங் கட்டினர்கள். (ஆ. மு: 1933) "கோயிலின் அயலிலே மேற்குத் திசையாக சில காலத்திற்கு முன் மசூதி யொன்றிருந்ததாகத் தெரிகின்றது." (வி. சி: 1976) கி. பி. 1560ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்தினுாடி பிறகன்ஸா யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது, பறங்கி களுக்கு எதிராக 'தமிழர் படையிலுள்ள வடக்கரும், சோனகரும் போராடினர். (ஞானப்பிரகாசர் 1928) கி. பி. 1591இல் யாழ்ப் பாணத்தை வெற்றிகொண்ட அந்திரே பூர்த்தாடு, மீண்டும் கல கம் விளைக்கக் கூடியவர்களென எண்ணமிட்ட எண்ணுாறு வடக் கரையும் சில சோனகரையும் சிரச்சேதஞ் செய்துள்ளான்." (செ. இ 1933) மேலும் கரையிறங்கிய பறங்கிப்படை, இவ்விடத்திற் கணிமையிலிருந்த சோனகரின் வர்த்தகசாலைகளைக் கண்டு, அவை களுட் புகுந்து 10000 கண்டி நெல்லையும், 400 கண்டி அரிசியை யும் வாரிக்கொண்டு போயினர்." (செ. இ: 1933) இவற்றி லிருந்து நல்லூரில் சில சோனக் குடிகள் வசித்துவந்தனர் எனத் துணியலாம்.
5. 4, கோயில் அழிவு
1450ஆம் ஆண்டிற்கும் 1467ஆம் ஆண்டிற்கு மிடையில் இடையில், பூரீ சங்கபோதி புவனேகவாகுவினல் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், ஒன்றரை நூற்ருண்டுகளின் பின் 1621ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் அத்தி பாரத்தோடு அழிவுற நேர்ந்தது.
1620ஆம் ஆண்டு பிலிப் டி ஒலிவேரு என்ற போர்த்துக்கேயத் தளபதி, பெரும்படையுடன் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத் தான். இதுவே போர்த்துக்கேயரின் இறுதிப் படையெடுப்பாகும்.

நல்லை நகர் நூல் 33
அவன் யாழ்ப்பாணத்தைப் பூரணமாகத் தன் ஆதிக்கத்துக்குட் படுத்தினன். பிலிப் டி ஒலிவேரு, யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்த சைவாலயங்களில் பலவற்றை இடித்துத் தரைமட்டமாக்கினன்.
"யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிறவிடங் களிலெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமயம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கி விட்டனர்" (செ. இ: 1933).
"1621ஆம் ஆண்டு பிலிப் தே ஒலிவேரு நல்லூரைத் தன் னுறைவிடமாக்கிக் கொண்டான். அவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி, இருந்தவிடமுந் தெரியாமல் அத்தி வாரத்தையும் கிளறுவித்தான்" (செ. இ) "அங்கிருந்த பெரிய கோயிலில் கிறிஸ்தவரல்லாதவர்கள் மிக்க ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அவன் அதனை அழியாது விட்டால், அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாக அவர்கள் வாக்குறுதி செய்து வந்தனர். ஆனல், அவன் ஒரு மதப்பற்றுமிக்க கத்தோலிக்கனத லால், அவர்களின் நடவடிக்கை அவன் அக்கோயிலை அழித்தற்குக் கொண்டிருந்த விருப்பத்தினை மேலும் அதிகரிக்க வைத்தது. எனவே அதனை அத்திவாரமில்லாது அழிக்குமாறு கட்டளையிட் டான்? என குவேருேஸ் சுவாமிகள் தனது நூலில் எழுதியுள்ளார். இவ்விதமான கொடுந் தொழில்களைச் செய்வதற்கு, அவர்களது சமயாபிமானமும், வைராக்கியமும், மறுசமயத்தவரது வழிபாட்டுக் குரிய கோயில்கள் தம்மத விரோதமென்ற நம்பிக்கையுமே காரணங்களாயவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய காரணமென்பது மறுக்கொணு உண்மை." (செ. இ: 1933) பிலிப்தே ஒலிவேரு முன் கூறியபடி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையிடித்து அக்கோயிற் கற்களைக் கொண்டு, கோட்டையும் வீடுகளும் கட்டினன். யாழ்ப்பாணத் திலிருந்த சைவ வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரை மட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோயிலதிகாரிகளும் அர்ச்சகர்களும் தத்தம் கோயில் விக்கிரகங்களைக் கிணறுகளிலுங் குளங்களிலும் போட்டு மறைத்தார்கள்." (செ. இ: 1933)
கீரிமலையிலிருந்த திருத்தம்பலேஸ்வரன் கோயிலை அவர்கள் இடிக்குமுன்னே, விக்கிரகங்களை அக்கோயிற் குருக்களாகிய பரசு
S

Page 27
34 Xn நல்லை நகர் நூல்
பாணி ஐயர் ஒரு கிணற்றிலிட்டு மண்ணுல் தூர்த்துவிட்டு அவ் விடத்தினின்றும் நீங்கினர். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்க்காப்பாளனயிருந்த சங்கிவியென்னும் சைவப்பண்டாரம், அக்கோயில் விதானங்கள் வரையப்பட்ட செப்பேடு, செப்புச்சாதனங்களையுங் கொண்டு மட்டக்களப்புக் கோடினன். அங்கிருந்த சிலாவிக்கிரகங்கள் தாமிரவிக்கிரகங்களை யெல்லாம் அக்கோயில் குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக் கோடினர். (ஆ. மு: 1933)
"அந்தோ சைவசமயத்தின் அரணுகவிருந்த கோயில் அழிந்தமை சைவசமயம் குன்றுங்காலம் ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறி போலும். சைவமன்னர்கள் தாபித்துத் தலைவணங்கிவந்த பெருங் கோயில் அவர்கள் ஆட்சி முடிவடையவே அக்கோயிலும் தரை LOLL-orub.” (es su T 5Tssor–1971)
6. கந்தமடாலயம்
6. 1, சைவ மத வழிபாடு
கி. பி. 1820ஆம் ஆண்டு, யாழ்ப்பாண இராச்சியம் போர்த் துக்கேயர் வசமாகியது. போர்த்துக்கேய தனியரசாட்சியில், கத் தோலிக்க கிறிஸ்தவ மதத்தையே மக்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டுமென, போர்த்துக்கேய ஆட்சியாளர் வற்புறுத்தினர்.
"சைவ மத வணக்கம் செய்யப்படா தென்றும் பூசை முதலி யண அனுட்டிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்களென்றும் கட்டளை பிறப்பித்ததுமன்றி, ஒற்றர்களை வைத்தும் ஆராயப்பட்டது. ஆனல், அந்தரங்கமாகத் தங்கள் தெய்வங்களை வழிபடுவதையும், சைவ ஆசாரங்களையுஞ் சனங்கள் கைவிட்டாரல்லர். தங்கள் தங் கள் வீட்டுச் சார்களிலும், வளவுகளிலும், மரத்தடியிலும் ஒவ் வோர் அடையாளங்களை வைத்து வழிபட்டு வந்தனர். விரத காலத்தில் சாப்பிட்ட இலைகளைக் கூரைகளிலும் வேலிகளிலும் மறைவாக ஒளித்துச் செருகி வந்தனர். ஒவ்வொருவருஞ் சிலுவை யடையாளமணிய வேண்டுமென்றுங் கட்டளை பிறந்தது. உலோ

நல்லை நகர் நூல் 35 கங்களாற் செய்யப்பட்ட சிலுவைகளை அணிவதற்குச் சனங்கள்
நாணித் தங்கள் தலைப்பாகைகளைச் சிலுவை ரூபமாகக் கட்டி வந்தனர். (செ. இ: 1933)
போர்த்துக்கேயப் பறங்கியர் சைவாலயங்களைப் பாழாக்கிய பின் பெரும்பாலும், அக்கோயில்களிருந்த விடங்களிலேயே, தங் கள் கோயில்களைக் கட்டினர். நல்லூரில், யமுனரிக்கருகே விளங் குங் கிறிஸ்தவ கோயிலிருக்குமிடம் ஒலிவேருவால் இடிக்கப்பட்ட புராதன கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டிருந்த விடமே.* (செ. @:1933)
எனவே, போர்த்துக்கேயர் காலத்தில், நல்லூரில் இடிக்கப் பட்டழிந்த கந்தசுவாமி கோயில் விளங்கியவிடத்தில், கத்தோ லிக்க தேவாலயம் ஒன்றமைக்கப்பட்டது. ‘முதலில் இந்தத் தேவாலயம் களிமண்ணுலும் பனையோலையாலுமமைக்கப்பட்டது". (பிலிப்பால்தேயஸ்).
கி.பி. 1658ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந் தர் வசமாகியது. அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்திலிருந்து, தமது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைப் பரப் புவதில் தீவிரமாகவிருந்தனர். மக்களைக் கத்தோலிக்க சம யத்தினின்றும் திருப்ப முயன்றனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்துப் புதுக்கியுந் திருத்தியும் தமது மதத் தேவாலயங்கள் ஆக்கினர்.
6. 2. கிருஷ்ணையர் சுப்பையர்
ஒல்லாந்தர் தங்கள் அரசாட்சியின் பிற்கூற்றில் சமய விஷய மாகக் கொண்ட வன்கண்மையைக் குறைத்துக்கொண்டனர்”. (செ. இ: 1933) அதனல் சைவசமயிகள் தமது ஆசாரங்களையும், வழிபாடுகளையும் பயமின்றிக் கைக்கொண்டொழுகத் தொடங்கி னர். "நல்லூரில் வாழ்ந்த சைவசமயிகள் பலர் கந்தசுவாமி கோயில் இருந்தவிடத்திற்கு வந்து வழிபாடியற்றினர். (அ. ஜோ: 1916/17) போர்த்துக்கேயப் பறங்கியர்களால் இடிக்கப்பட்ட நல் லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததியோராகிய பிரா மணர் சிலர் இக்கோயிலின் வழிபாட்டை மீளவும் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்கள் என அறியப்படுகிறது; கிருஷ்ணையர்

Page 28
36 நல்ல நகர் நூல்
கப்பையர் என்ற பிராமணுேத்தமர் ஒருவர், புராதன கந்த சுவாமி கோயில் இருந்தவிடத்திற்கு அண்மையில், மடாலயம் ஒன்றினை நிறுவி, வேலினைப் பிரதிஷ்டைசெய்து வழிபாடியற்றக் காரணமாக இருந்தார், என அறியப்படுகின்றது.
*நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பறங்கியர்களினல் இடிக்கப் பெற்றுச் சில காலஞ் சென்றபின், கிருஷ்ணையர் சுப்பையர் என் னும் பிராமணுேத்தமரின் முயற்சியினல், அக்காலவரசினரிடம் உத் தரவு பெற்றுக் கோயில் கட்டி மடாலயமாகப் பிரதிட்டை செய்தனர்” என யாழ்ப்பாண வைபவம் என்னும் நூல் கூறுகின் றது. இந்த உண்மையை ஆங்கிலேயராட்சிக்காலத்தில் யாழ்ப் பாணத்தின் பிரதம நீதியரசராகவிருந்த, சேர். அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவரின் நினைவுக் குறிப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்,
எனவே, 1734ஆம் ஆண்டளவில், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், முன்னர் இருந்த இடமாகிய யமுனுரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருந்தபடியால், அதே வளவில் பிறிதோரிடத்தில் ஒரு சிறு மடாலயம் அமைக்கப்பெற்றது. இம் மடாலயம் பழைய கந்தசுவாமி கோயில் இருந்த அதே இடத் திற்ருனே அமைக்கப்பெற்றது எனச் சிலர் கருதுகின்றனர். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்படுத்தப்பட் டது. இந்த மடத்திற்றனே ஒரு வேலையும் வைத்து வழிபட்ட னர் போலும். இது மடாலயமாக இருந்தமையால், கோபுரம் தூபி முதலியனவின்றியே யிருந்தது. மேலும் உயர்ந்த கோபுர முடைய கோயிலாகக் காணப்படின், ஒல்லாந்தர் அதனை மீண் டும் தரைமட்டமாக்கிவிடக் கூடும் எனப் பயந்து பக்தர்கள் பெரிய கோயில் கட்டியெழுப்பாமல் அமைதியாக வழிபாடு நடத்தி வந்திருத்தல் கூடும் என ஊகிக்க இடமுண்டு. (குல
ாபாநாதன் - 1971)
6. 3. மடாலயம் அமைந்த இடம்
கி. பி. 1734ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோயில், யமுன ரிக்கு அருகில் அமைக்கப்பட்ட மடாலயமா அல்லது இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலா என்பது முடிவுசெய்யப்பட வேண்டியதொன்முகும். யாழ்ப்பாண அரசாங்க அதிபராக 1869

நல்லை நகர் நூல் 37
தொடக்கம் 1896 வரை கடமையாற்றிய சேர் துவைனம் அவர் களின் குறிப்புகளிலிருந்தும் 1882 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள சைவசமயக் கோயில் இடாப்பிலி ருந்தும், இன்றைய கோயில் 1734இல் இரகுநாத மாப்பாண முதலியாரால், கல்லினலும் செங்கற்களினலும் கட்டப்பெற்று ஒட்டினல் வேயப்பெற்றது" என்பதாகும். (குலசபாநாதன்-1971) இது ஏற்புடையதன்று. உண்மையில், யமுனரிக்குப் பக்கத்தில் நிறுவப்பட்ட கந்த மடாலயமே 1734 இல் அமைக்கப்பட்டது எனக் கொள்ளவேண்டும்.
"இக்கோயிலின் அதிகாரிகளுள் ஒருவராயிருந்த மாப்பான முதலியார் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த பெட்டிசமொன்றில், இக் கோயில் 60 ஆண்டு களுக்கு முன் கட்டப்பெற்றதெனக் குறிப்பிட்டுள்ளார். (குலசபா நாதன் 1971) அதன்படி நோக்கில், இன்றைய கந்தசுவாமி கோயில் 1749இல் கட்டப்பட்டது எனக் கொள்ளவேண்டும். அதாவது, யமுனரிக்கு அருகில் கந்த மடாலயம் கட்டப்பட்டு 15 வருடங்களின் பின்பாகும்.
மேலும், முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் யாழ்ப் பாணச் சரித்திரத்தில், இன்றைய கோயில் 1793இல் அமைக்கப் பட்டதெனக் குறிப்பிடுகின்ருர்.
எனவே 1749ஆம் ஆண்டளவில் கிருஷ்ணையர் சுப்பையரும் வேறு சைவ சமயிகள் பலரும் கந்தசுவாமி கோயிலை மீண்டும் ஆல யமாக அமைக்கும் விருப்போடு, அரசாட்சியாருக்கு விண்ணப்பஞ் செய்தனர். " ஒல்லாந்தர் காலத்தில், மலபார் சமயத்தை (சைவம்)க் கைக்கொண்டொழுகிய தனியார் சிலர், ஒரு காலத் தில் புகழ் பூத்திருந்து பின்னர் அழிவுற்ற கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசுக்கு விண்ணப்பித்தனர். அக்கோயிலைக் கட்டுவதற்கான ஒருவகை உறுதி வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியைக்கொண்டு, கந்த அவாமிகோயில் மீண்டும் அமைக்கப்பட்டது.” பறங்கிகளாலிடிக் கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததியோ ராகிய சில பிராமணர், "அரசாட்சியாருக்கோர் விண்ணப்பஞ் செய்து, கோயில் அமைக்க உத்தரவு பெற்று, முன்னே கோயிலி ருந்தவிடமாகிய யமுனரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம்

Page 29
38 நல்லை நகர் நூல்
அமைக்கப்பட்டிருந்தபடியால், "பிராமணவளவு" (குருக்கள்வளவு) என்னும் தங்கள் உரிமைக் காணியில் சிறிய கோயிலொன்றமைத் துத் தாங்களே வணங்கிவந்தனர். இக்கோயிலிருக்குமிடம் அம்பலவாணர் கந்தப்பச்செட்டி பெயரில் தோம்பு பதியப்பட்டி ருக்கிறது" என முதலியார் செ. இராசநாயகம் கூறியுள்ளார். இவ்வாறு குருக்கள்வளவில் இன்றைய கந்தசுவாமி கோயிலை, நிறுவுவதற்கு, அக்காலத்தில் ஒல்லாந்தர் பணிமனை (கச்சேரி)யில் சிருப்பராகக் கடமையாற்றிய தொன்யுவான் மாப்பாணமுதலி யார் உதவிபுரிந்துள்ளார்.
"ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் சிருப்பராகக் கடமைபார்த்து வந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரண மாகத் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லுTர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவுபெற்ருர், என குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகிறர். கிறிஸ்தவ ராகவிருந்த தொன்யுவான் மாப்பாணமுதலியாருக்கு, ஒரு சைவக்கோயிலைக் கட்டுவதற்கு ஆட்சியாளர் அனுமதி வளங்கி யிருப்பார்கள் என்பது ஏற்றதாகாது.
7. நான்காவது ஆலயம்
பறங்கிகளாலிடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச் சகரின் சந்ததியோராகிய கிருஷ்ணையர், சுப்பையர், மீண்டும் அக் கோயிலை அமைக்க விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பத்திற்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தவர் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆவர். சிங்கை ஆரியச் சக்கிரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகவாகு, முதன் முதல் கந்தசுவாமி கோயில் அமைத்த அதிபரிடத்தில், புதிய ஆலயத்தை அமைப்ப தற்கு ஒல்லாந்த ஆட்சியாளர் அனுமதி வழங்கினர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று கிறிஸ்தவ தேவாலத்திற்கு அருகிலிருக்கும் இந்த மடா லயத்தை, அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்.
இரண்டு, தமது வர்த்தகத்திற்குப் போட்டியாளராக அமைந்த முஸ்லீம்களை குருக்கள் வளவிலிருந்து அகற்றும் நோக் கம்.

நல்லை நகர் நூல் 39
எனவே, ஆட்சியாளர்கள் குருக்கள் வளவை. கந்தசுவாமி கோயிலமைக்கத் தோம்பு எழுதிக் கொடுத்தனர். "அம்பலவா ணர் கந்தப்பசெட்டி எனக் கந்தவேளின் பெயரிலேயே தோம்பு பதியப்பட்டது. (செ. இ. 1933) "அம்பலவாணர் சுப்பிரமணியம் என நல்லூர்க் கந்தசுவாமி பேரில் பதியப்பட்டதாக குலசபா நாதன் கூறுவார்.
கிருஷ்ணையர் சுப்பையர் ஆலயத்தை அமைப்பதற்காக ஊர் ஊராக நிதி சேகரித்தார்; அவருக்குப் பலவகைகளிலும் உதவி யாக இருந்தவர் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆவர். எனினும், அவர் நேரடியாக ஆலயத் திருப்பணியில் ஈடுபடமுடி யாதிருந்தமையால், அவரது மைந்தன் இரகுநாத மாப்பாணமுத லியாரை, ஆலயத் திருப்பணியில் முழுமூச்சாக ஈடுபட வைத் தார் எனக் கொள்ளலாம்.
7. 2. மாப்பாண முதலியார்
தொன்யுவான் மாப்பாண முதலியாருக்கு இரகுநாத மாப் பாண முதலியார் எனவும் பெயர்’ என குலசபாநாதன் குறிப் பிடுவது ஏற்றதாகவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் ஒரேபெயர் இருக்க வாய்ப்பில்லை. அவர் முதல் கிறிஸ்தவராதலால் அவ்வழக் கப்படி மாப்பாணர் என்ற நாமம் அவரது குடும்பப் பெயராகி பிள்ளைகளின் பெயரோடு சேர்ந்து வழங்கப்பட்டது. மாப்பாண, முதலியாரின் மகன் இரகுநாத மாப்பாண முதலியார் என மாப் பாண வம்ச பரம்பரை தெளிவாகக் சுட்டும்போது, மாப்பாண முதலியாரை இரகுநாதர் மாப்பாணர் எனவும் அழைப்பர் என் பது பொருத்தமற்றதாகும். கோயிற்ருபகர் அவரென வலியுறுத் தும்பொருட்டு, இது வலிந்துகொள்ளப்பட்ட கூற்ருகும்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை, அமைத்ததில் இரகுநாத மாப்பாண முதலியாருக்குரிய இடத்தை எவரும் மறுப்பதற்கு இல்லை. அதேபோன்று கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமண ருக்குரிய இடத்தையும் எவரும் மறுக்கவியலாது. ஆக இவ்விரு வரும், கந்தவேள் சந்நிதியை மீண்டும் அமைப்பதில் ஈடுபட்டனர்.
கோயிலை மீளவும் அமைப்பதற்குரிய காணியில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தனர். ‘சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி

Page 30
40 நல்லே நகர் நூல்
கோயில் கட்டவருங் காலத்தில் தடையாயிருக்குமென்று நிஜனத் துத் தமிழர் கூடி அவர்களே அவ்விடத்தை விட்டுப் புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்தும் கூடாமற் போயிற்று. "அந்த நிலங்களுக்கு அதிகவிலே தருவோம். எங்களுக்கு விற்றுவிடுங்கள் என்றுங் கேட்டுப் பார்த்தனர். சோனகர் அதற்குஞ் சம்மதிக்கவில்லே. யாதொரு இணக்கத்துக்குஞ் சோனகர் சம்மதியாது போனதினுல், அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக் கொண்டுபோய், தண்ணீர் குடிக்கும் கிணறுகளில் போடுவித்தார்கள். பன்றியிறைச்சியைக் கண்டவுடன் சோனகர் அழுது புலம்பிப் பசிபட்டினி கிடந்து ஆற்ருமல் ஈற்றில் தமிழருடனே தங்கள் பெருநாட்களில் வந்து சமய வழிபாடு செய்யத் தடைபண்ணுதிருப்பதற்கு SET Of Gir படிக்கையெழுதுவித்துக் கொண்டு, கிடைத்த விலேயையும் வாங்கிக் கொண்டுபோய் நவாந்துறைக்குக் கிழக்குப் பக்கமாகக் குடியேறி ஞர்கள்", என மயில்வாகணப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. முஸ்லீம்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோயி விருக்குமிடத்துக்கு மேல்பாகத்திலே குடிகொண்டார்கள். அங்கே ஒரு பள்ளிவாயிலுங் கட்டினூர்கள். அப்பொழுது முன் இடிபட்ட கந்தசுவாமி கோயிலே மீளவுங் கட்டுவதற்குத் தமிழர் முயன்று சோனகரை அவ்விடத்தினின்றும் நீக்கித் திருமாறு ஒல்லாந்த தேசாபதிக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். ஒல்லாந்த் தேசாபதி அதற்கநுகூலஞ் செய்வதாகக் கூறியும் செய்யாது காலம் போக் கினுன். அது கண்டு தமிழர் சோனகரை அவ்விடத்தை விடும்படி கேட்டும் இரந்தும் பார்த்தார்கள். முடிவில் அந்நிலத்துக்குப் பெருவிலே தருவதாயுங் கேட்டார்கள். சோனகர் அதற்கும் இசை யாமைகண்டு தமிழர் ஒரு பன்றியைக் கொன்று அவர்களுக்கென் லாம் பொதுவாயிருந்த கிணற்றிலிட்டார்கள். அது கண்டு சோனகர் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறிஞர் கன்" என ஆ. முத்துத்தம்பிப்பிள்ளே தனது யாழ்ப்பாணச் சரித் திரத்தில் கூறிச்செல்வார்.
ஆகவே, குருக்கள் வளவிலிருந்து வாழ்ந்த முஸ்லீம்கள் அவ் விடத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரே, அவ்விடத்தில் கந்த சுவாமி கோயில் நிறுவமுடிந்துள்ளது. குருக்கள் வளவில் சிக்கந்தர் என்ற யோகியாரின் சமாதியும், இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன் றும் இருந்துள்ளன.

சுந்த வேரினா தும் திருப்ருட் ரசீதிகளினதும்

Page 31
சங்திலித் தோப்பில் asakTG LGaias "ilu 'L பண்டைய கோயிலிர
மர தீதிலான அம்மன் சிஐ சிவன் சிஐ
| நீண் ஈடய கோயின் ஆா எண்டைய கோயிலின் கஜலட்சுமி 5ß?5 irLiu :E i" 14ஆம் நூற்றுண்டு)
 
 

கந்தசுவாமி கோயிலின் மாளிகை முகப்பு சித்திரத் தேசி உலா
சங்கிவித் தோப்பிலுள்ள
இன்றைய கோயிலின் கம்பீரமான எழிற் Tsir Lyrik

Page 32
இருந்தவிடத்தில் இன்று காணப்படும்
கிறிஸ்த lh தேவாலயம்
பாழடைந்த நிலையில் கிடக்கு | ! armal ET fl = pబ్రy rf
 
 

i
நல்லே நகர் நூல் 45
வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து நோக்கும்போது, பொது மக்களிடமிருந்து ஆலயத் திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி யைக் கொண்டு கிருஷ்னேயர் சுப்பையர் நான்காவது தடவை யாகக் கோயிலக் கட்டுவித்தார். இக்கோயில், அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது
பின்பு அக்கோயிஃப்ப் பெருப்பித்துக் கட்டும்பொழுது, ஆங் கிருந்து இறந்து அடக்கம் பண்ரைப்பட்ட ஒரு முஸ்லிம் பெரியா ருடைய சமாதி அக்கோயிலின் உள்வீதிக்குள் அகப்பட்டபடியால், அதையிட்டு முஸ்லீம்கள் கலகம் செய்தனர். பின்பு கோயில் மேற்கு வீதியில், வாயில் வைத்துக் கொடுத்துச் சமாதியையணுகி அவர்கள் வணங்கிவர இடங்கொடுத்ததால் கலகம் ஒருவாறு தணிந்தது. அதற்குச் சாட்சியாக அவ்வாயிற் கதவு இன்றுமிருப் பதும், அதனருகே வெளிப்புறம் பந்தரிட்டுச் சிலகாலத்தின்முன் வரை தொழுகை நடத்திவந்ததும் இதனே வற்புறுத்தும்." (செ. இ! 1935)
எனவே, பொதுமக்களிடமிருந்து ஆலயத் திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியினேக் கொண்டு, (கிருஷ்னேயர்) சுப்பையர் என்ற பிராமணரால் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் பிரதம குருவாக சுப்பையர் தெரிவானுர், அவரின் கீழ் (இரகுநாத) மாப்பாண முதவியார் என்பவர், சுப்பையரோடு சேர்ந்து ஆலய பரிபாலனத்தை நடாத்த நியமனமானுர், (டி. ஜோ 191617) கிருஷ்னேயர் சுப்பையரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந் தார்." (குவி சபாநாதன் - 1971)
இக்குறித்த பிராமணரும், (இரகுநாத) மாப்பாண முதலியா ரும் ஆலய பரிபாலனத்தை மிகவும் சிறப்பாக, எவ்வித வழுவு மின்றி, மிகுந்த முன்னெச்சரிக்கையோடும், சமய ஆசாரத்தோடும் நடாத்தி வந்தார்கள்." (அ. ஜோ 19617)
-7, 3, இரகுநாத மாப்பான முதலியார் சமூகா!
தற்போதைய கந்தசுவாமி கே ாயிலின் தாபகர்களில் ஒருவரான கிருஷ்னேயர் சப்பையர், ஆலயத்தின் பிரதம குருவாகத் தெரிவான தால், ஆலயக் கட்டியத்தில் அவர் இடம்பெற முடியாது போனது. அதனுல், அந்தக் கெளரவம், இரகுநாத மாப்பாண மு தவியாருக்குக் கிடைத்தது.

Page 33
46 pమీడియి நகர் நூல்
திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகரா கிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற்ருபகராக இரகுநாத மாப்பாண முதலியார் பெயரைப் பின்னும் கட்டியத் தில் கூறி வருகின்ருர்கள். அக்கட்டியம் வருமாறு:
'பரீமான் மகாராஜாதிராஜ அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி பூரீ கஜவல்லி மகாவல்லி
ஸமேத பரீ சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனதிருட சிவகோத்திரோற்பவஹா
இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா’ 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மகாமண்டபத்துக் கீழைச் சுவரிலே மேற்குமுகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாணர் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை இன்றும் பார்க்க முடியும், (g y : 1971)
கோயில் கட்டியத்தில் இரகுநாத மாப்பாணரின் பெயர் இடம் பெற்றதால், அக்கோயில் தாபகர்களில் ஒருவரான கிருஷ்ணையர் சுப்பையரின் பெயர் உரிய கெளரவத்தைப் பெருது போனது.
8. ஆங்கிலேயர் காலம்
கி. பி. 1798ஆம் ஆண்டு யாழ்ப்பாணவரசு ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் வந்தது. "குடிகளும் தத்தமது வருணுசாரத்தையும் சமயாசாரத்தையும் சுயேச்சையாகக் கைக்கொண் டொழுகுஞ் சுயாதீனம் ஆங்கிலவரசாற் கொடுக்கப்பட்டது. முன்னர்க்கோயில் போலாது, கொட்டில்போல இலைமறைவிற் கிடந்த கோயில்க ளெல்லாம் வெளிப்படத்தொடங்கின. இடிந்த கோயில்களை மீளக் கட்டிக்கொள்ளும்படி ஆங்கிலவரசு வந்தவுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. (ஆ. மு. 1933)
அக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சக ராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால

நல்லை நகர் நூல் 47
சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக இரகு நாதமாப்பாண முதலியாரின் மகன் ஆறுமுக மாப்பாண முத லியார் இருந்தார். ஆங்கிலவரசினர் சைவாலயங்களுக்கு அர்ச் சகர்களை நியமனஞ் செய்தனர்.
"அவர்களுக்குரிய மரியாதைகளும் வரிசைகளும் ஆணைப்பத் திரமூலமாகத் தேசாதிபதி கைச்சாத்தோடு நியமன நிருபம் பெற் முருள்ளே முதல்வர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர் சிகிவாகன ஐயர் புத்திரராகிய வாலசுப்பிரமணியஐயர். இவருக்கு நியமனப்பத்திரம் 1807ஆம் டு ஜனவரி மீ" 5ஆம் திகதி தேசா திபதி தோமஸ் மெயிற்லண்ட் (கவனர்) அவர்களாற் கொடுக்கப் பட்டது. அப்பத்திரம் இன்றும் அவர் சந்ததியாரிட முள்ளது.” (செ. இ: 1933) "கிறிஸ்து வருஷம் 1807-ம் வருஷம் தை மீ" 5-ம் திகதி சகல குருத்துவ மரியாதைகளுடன் குரு பிரதானியாக இவருக் குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி, வேறு ஐந்து குருமார்களை இவருக்குத் துணையாகக் குருத்துவம் நடத்தும்படியும் கவனர் உத்தரவு செய்திருக்கின்ருர். (அ. ஜோ: 1916/17) அவர்களில் கணபதி ஐயரும், இராமசாமி ஐயரும் குறிப்பிடத் தக்கவர்களாவர். (செ.இ: 1935) பக்தகோடிகளால் நன்கு மதிக்கப்பெற்றுச் சிறப்பாக நித்திய நைமித்தியங்கள் நடைபெற்றன.”
8. 1. ஆலய நிர்வாகப் பிரச்சினை
கந்தசுவாமி கோயில் ஆலயநிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடை யில் பிரச்சினைகள் முதன்முதலாகத் தல்ை தூக்கின. *ஆலய நிதி யைத் தனது சுயதேவைகளுக்கு ஆறுமுக மாப்பாணர் பயன் படுத்துவதாக, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சுப்பையரால் காக்கல் செய்யப்பட்டது. அதனைப் பிரதம நீதியரசர் ஸேர். அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரணை செய்தார். அவர் தனது தீர்ப்பைப் பின்வருமாறு வழங்கினர்
**கந்தசுவாமி சோயிலின் சகல நடவடிக்கைகளையும் இன் றைய பிரதம குருவும், (ஆறுமுக) மாப்பாண முதலியாரும் இணைந்தே நிர்வகிக்கவேண்டும். ஆலயப்பொருட்களுக்குச் சேதா ாம் நேராவண்ணம் அவை ஓர் அறையில் பாதுகாப்பாக வைக்

Page 34
48 தல்லை நகர் நூல்
கப்பட்டு அந்த அறை. இரு பூட்டுகளால் பூட்டப்படவேண்டும். அப்பூட்டுக்களின் சாவிகளிலொன்று பிரதம குருவிடமும், மற்றை யது குறித்த (ஆறு முக) மாப்பாணரிடமும், இருத்தல் வேண் டும்." (அ. ஜோ: 1916| 17) -
இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைத் தரவில்லை. கோயில் தம் குடும்பச் சொத்து; அதனல், கோயில் நிர்வாகம் முழுவதும் தமக்குரியதென அவர் கருதியதால், **1809ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு ஒரு பெட்டிசம் ஒன்றினைச் சமர்ப்பித்தார்" (செ.இ: 1935) அப்பெட்டிசம் 1811ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கலெக்டரால் (அரசாங்க அதிபர்) விசாரணை செய்யப்பட்டது. அவர்முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள், கோயி லின் உரிமையில் மாப்பாண முதலியாருக்கே சாதகமாகவிருந்தன. "ஆறுமுக மாப்பாண முதலியார் கொடுத்த பெட்டிசத்தை விசா ரித்த கறிங்றன் (Carrington) என்னும் கலக்டர், இம் மாப்பாண முதலியாரின் தகப்பனே இக்கோயிலைக் கட்டுவதற்கு முக்கிய காரணராயிருந்தமையால் இவரே கோயிலதிபதித்துவம் பெறுதற் குரியவரென்று அரசாட்சியாருக்கு அறிக்கை செய்தார்" ه ) وq • லோ: 1916 / 17) அதனல், ‘சுப்டையர் குருக்களிடம், நீதிபதி ஸேர் அலெக்சாண்டர் ஜோன் ஸ்ரல்ை வழங்கப்பட்ட, ஆலயப் பண்டகசாலையின் ஒரு திறப்பு (கருக்களிடமிருந்து மீளப் பெறப் பட்டு, ஆறுமுக மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. (அ. ஜோ: 1916| 17)
கந்தசுவாமி கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்த ஆறுமுக மாப்பாணர், தமது முன்னேர் போல, கச்சேரி சிருப்பராகவும் விளங்கினர். கி. பி. 1811இல் கச்சேரியில் காசு குறைந்ததென் னுங் காரணத்தால் மாப்பாணர் சிருப்பு வே% யால் விலக்கப் பட்டார் விலகிய சில நாட்களுள் அவர் இறந்திருக்கவேண்டும். அவருக்கப்பின் அவர் மருமகனகிய சின்னத்தம்பியென்பவர் கோயிலதிகாரத்தையேற்றனர். பின்பு சிருப்பு மாப்பாணருடைய பேரனகிய (இரகுநாத மாப்பாண முதலியார் அதிகாரியாயினர்." (செ. இ: 1935)
"1807இல் தீவாந்தர தண்டனையடைந்து மலாக்காவுக்கு அனுப்பப்பட்டு, 1812-ல் மன்னிக்கப்பட்டு திரும்பி வந்த வில்லவ சாய முதலியாரும், பெரிய தாமோதரம்பிள்ளையும் பிராமணர்

நல்ல நகர் நூல் Հ 49 பக்கஞ் சார்ந்து (இரகுநாத) மாப்பாண முதலியாருக்கு மிகவும் இடர் விளைத்தனர். அது பற்றி மாப்பாண முதலியார் 1819-ம் ஆண்டு ஜூலை மாசத்தில், அவர்கள் தனக்குச் செய்யும் இடையூறுகளைப்பற்றி பிறெளண்றிக் (Brownrigg) தேசாதிபதி அவர் களுக்கு விண்ணப்பஞ் செய்தனர். அதனை அவ்வூர் சர்வாதிகாரி (கலக்டர்) யே கவனித்து, அதற்கு வேண்டிய நீதிசெய்ய வேண்டு மென்று தேசாதிபதி கட்டளையிட்டனர். கலக்டர் செய்த நீதி யின்னதென்று தெரியவில்லை." (செ. இ: 1935)
இ. பி. 1851இல் கோயில் அருச்சகர்களாயிருந்த பிராமணர், தேசாதிபதியின் கைச்சாத்துடன் தங்கள் முன்னேருக்கு அதிகாரச் சீட்டுக் கொடுத்திருந்ததென்றும், தங்களுக்கும் அவ்வித சீட்டுக் கிடைக்கவேண்டுமென்றும் தேசாதிபதிக்கு விண்ணப்பித்தனர்" அதற்குக் கண்டி ஆதீன புத்தகோயில்களிலுள்ள ஈருமாருக்கன்றிப் பிராமணருக்கு அவ்வித சீட்டுக் கொடுப்பதில்லையென்றும், அவர் களுக்குள் வியாச்சியமிருந்தால் டிஸ்திரிக் கோட்டில் வழக்குத் தொடுத்துத் தீர்த்துக் கொள்ளவேண்டுமென்றும் அரசாட்சியார் உத்தரவிட்டனர். அப்படியே வழக்கு வைச்கப்பட்டது. உடனே அக்காலத்திருந்த கோயிலதிகாரியாகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிராமணருக்கு அவ்விக அதிகார நியமனம் கொடுப்ப தற்கு அரசினர்க்க எதுவித சுதந்திரமுமில்லையென்றும், உளதேல் அரசினரே அகனை வெளிப்படுத்க வேண்டுமென்றுந் கேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். டயிக் ஏசண்டர் அவ் விண்ணப்பத்தைப் பற்றி விசாரித்துச் செய்த அறிக்கையில்ை அரசாட்சியார் அக் காரியத்திற் பிரவேசியாது நெகிழவிட்டனர்.? (செ. இ: 1935)
எனவே, யாழ்ப்பாணக் கலெக்டரின் இச் செயலில்ை கிருஷ்ணயர் சுப்பையரின் பரம்பரையினர், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயவரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத் தில் ஏகபோகவுரிமையைப் பெற்றனர்.
9. தொடரும் திருப்பணி 9. 1. ஆரம்பக் கட்டமைப்பு
கி. பி. 948ஆம் ஆண்டு கந்தவேளுக்கு முதன்முதலாக ஆல்யத் தைக் குருக்கள் வளவில், சோழரின் அரசப் பிரதிநிதியாக தல்

Page 35
50 நல்லை நகர் நூல்
லூரில் இருந்த புவனேகவாகு அமைப்பித்தான். அந்தக் கந்த ஞலயம் 1450ஆம் ஆண்டு தென்னிலங்கை இளவரசன் சப்புமல் குமரயாவின் படையெடுப்பால், அழிந்துபோனது. தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான்போன்று, சிறீசங்கபோதி புவனேகபாகு என்ற பெயரோடு யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்துகொண்ட சப்புமல்குமரயா முத்திரைச் சந்தியில் மீண்டும் கந்தவேளுக்குப் புதிதாகக் கோயிலமைப்பித் தான். அத்திருக் கோயிலை 1621ஆம் ஆண்டு பிலிப் தே ஒலிவேரு என்ற போர்த்துக்கேயத் தளபதி, தரைமட்டமாக்கி அத்திவாரத் தோடு கிளறுவித்தழித்தான். 1734ஆம் ஆண்டு கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமணர், மடாலயம் ஒன்றமைத்து அதில் வேலைப் பிரதிஷ்டை செய்து வழிபாடியற்றிவந்தார். 1749ஆம் ஆண்டு அந்தக் கந்தமடாலயம் கைவிடப்பட்டு, மீண்டும் குருக்கள் வளவில் இன்றுள்ள ஆலயத்தை கிருஷ்ணையர் சுப்பையரும், இரகுநாத மாப்பாண முதலியாரும் கட்டிமுடித்தனர்:
ஆரம்பத்தில் இன்றைய கந்தனலயம், கல்லினலும் செங்கற் களினலும் கட்டப்பெற்று, ஒட்டினல் வேயப்பெற்றது. அவ்வேளை மணிக்கூட்டுக் கோபுரங்களோ, சுற்றுப்பிரகார மண்டபங்களோ அமைந்திருக்கவில்லை; விமானம் எதுவுமற்ற கர்ப்பக்கிருகமும் அர்த்த மண்டபம், வெளி மண்டபம் என்பனவே அமைந்திருந்தன.
இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினர் இக்கோயிலில் அநேக திருத்தங்களைக் காலத்திற்குக் காலம் செய்து வந்திருக் கின்றனர். பொதுமக்களின் உதவிகளோடு இந்தத் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆறுமுக மாப்பாண முதலியார் பரிபாலன காலத்தில் மணிக்கோட்டுக் கோபுரம் ஒன்று 1899-ல் கட்டப் பெற்றது. மூலத்தானத் தளம் கருங்கற்றிருப்பணியாக நிறை வேறி, 1902ஆம் ஆண்டில் சம்புரோக்ஷண கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபங்கள் 1909ஆம் ஆண்டில் ஆறுமுக மாப்பாண முதலியாரால் கட்டப்பட்டது. இவ்வாறு காலத்திற்குக் காலம் கோயில் திருத்தியமைக்கப்பெற் றது. 1964ஆம் ஆண்டு தொடக்கம் கோயிலின் அறங்காவலராக இருந்த குமாரதாச மாப்பாணர், 1965ஆம் ஆண்டு மகோற்சவம் நடைபெறுவதற்கு முன்னர் சிறிது காலத்துள், பழைய வசந்த மண்டபம் இருந்தவிடத்தில் விசாலமான புதிய மண்டபத்தை நிருமானித்துவிட்டார்கள்.” (கு. ச:1971)

நல்ல நகர் நூல் 51
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கிழக்குவாயிலைக் கொண்டது. கோயிலின் உள்வீதியைச் சுற்றி உயர்ந்த மதில் கட்டப்பட்டுள் ளது. தேரோடும் அழகிய வீதி நாற்புறமும் உண்டு. சிறந்த சிற்ப வேலைப்பாடமைந்த அழகிய ஐந்தடுக்குக் கோபுரமும், அதன் இருமருங்கிலும் அழகிய மணிக்கோபுரங்களும் கீழை வாயிலை அலங்கரிக்கின்றன. உள் வீதியில் விநாயகர் கோயில், தேவிமார் கோயில், சந்தானகோபாலர் கோயில், வயிரவர் கோயில், சூரியமூர்த்தி கோயில் முதலிய சுற்றுக் கோயில்கள் உள்ளன. மூலஸ்தானம் அர்த்த மண்டபம், நீராவி மண்டபம், ஆறுமுகசுவாமி கோயில் மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், முத்துக்குமாரசுவாமி மண்டபம், ஸ்தம்ப மண்டபம், மடைப்பள்ளி, களஞ்சியம், தெற்குவீதி மண்டபம், வெள்ளிவாகன சாலை, நெல் அறை, கணபதி மண்டபம், அம்மன் மண்டபம், பள்ளியறை, சந்தானகோபாலர் மண்டபம், பூக்குறடு மண்டபம், பூந்தோட்டம், வயிரவர் மண்டபம், வசந்த மண்டபம், வாகன சாலை, கோபுர வாசல், தீர்த்த மண்டபம், தெண்டாயுதபாணி ம்ன்டபம் எனப் பல அங்கங்கள் இக்கோயிலில் உள்ளன." (கு. ச: 1971)
வெளி வீதியில், தென்புறமாக அமைந்திருந்த தீர்த்தக் குள மும், தெண்டாயுதபாணி ஆலயமும் 1983ஆம் ஆண்டு உள் வீதிக் குள் அடக்கப்பட்டுவிட்டன. ஆலய முன் மண்டபம் முற்ருக நீக்கப்பட்டு, காங்கிரீட் திருப்பணியாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. கோயிலின் சுற்றுப் பிரகார மண்டபங்களும் "காங்கிரீட்” திருப்பணியாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
9, 2. ஆதியில் வழங்கிய வழக்கம்
*55 திருவிழாக்கள் வருடந்தோறும் நடைபெறும் ஆறுகாலப் பூசை, மகோற்சவம், ஆடி - ஆவணியில் 25 நாட்களுக்கு நடை பெறும். சுவாமியை மக்கள் தோளிற் காவிக் கொண்டு நடந்தும், வாகனத்தில் வைத்தும் வீதிவலமாகச் சுற்றி வருவார்கள். கிழக்கு வீதியும் வடக்கு வீதியும் கோயிற்றெரு. மேற்கு வீதி பருத்தித் துறை ருேட்டிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் தெரு. தெற்கு வீதி பருத்தித்துறைத் தெரு. மகோற்சவ காலத்தில் யாழ்ப் பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து 1000 தொடக்கம் 2000

Page 36
52 நல்லை நகர் நூல்
யாத்திரிகர் சமுகமளிப்பர்’ என வடமாகாண ஏசெண்டராக இருந்த சேர் வில்லியம் குருெப்ரன் துவைனம் தனது குறிப்பில் எழுதியுள்ளதாக குல சபாநாதன் தனது நூலிற் குறிப்பிட்டுள் GTITriř.
ஆதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழா, இன் றைய காலவேளைகளில் நிகழும் திருவிழாக்கள் போன்று நிகழ வில்லை. அறையும் பறையொலியோடு குமிழஞ்சூழ் வெளிச்சத்தில் திருவிழா நடந்து, பின்பு நானவித வாத்தியவொலியோடு தீவர்த்தி வெளிச்சத்தில் திருவிழா நடந்தது." (ஆறுமுகநாவலர்-1875). மேலும் தேர்த்திருவிழாவின்போது, *சுவாமி எழுந்தருளப் பண் ணும் தேரின் உருளையிலே வைரவருக்குப் பிரியமென்று ஆடு பலியிட்டே தேரினை இழுத்தார்கள். "சாயங்காலப் பூசைக்கும் இரிண்டாங்காலப் பூசைக்கும் இடையே வசந்தமண்டபத்தின் எதிர்ே பொதுப் பெண்களின் நடனசங்கீத நிகழ்ச்சிகள்நடந்தன. (ஆ. நாே 1875)
திருவிழாக் காலங்களில் தேவதாசிகள் நடனமாடுவது சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்துள்ளது. "அழகிய கோயிற் பெண்கள், ஏராளமான நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேரின் முன் நடன மாடினர்கள் நூற்றுக்கணக்கான மக்கள் அரை நிர்வாணமாக புழுதியில் பிரதிஸ்டை செய்தார்கள்’ என மிறன் வின்ஸ்லோ தனது குறிப்பில் எழுதியுள்ளார். (மிறன் வின்ஸ்லோ-1823).
10. நல்லூரும் நாவலரும்
நல்லைநகர்க் கந்தவேளுக்கும், நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிஜல சிவாகமங்களுக்கும், குமாரதந்திரத்திற்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினர். "இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தாபியில்லாதது கோயிலாகாதே இக் கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப் பட்டிருக்கவில்லை" என அவர் கூறிஞர்.

நல்லை நகர் நூல் 53
இது மடாலயம் ஆதலாலும், சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமையவேண்டுமென்ற நியதியில்லை என்பர். ஆதலால், வருடாவருடல் கோயிலினுள் மாற்றங்கள் உருவாகின்றன. வழமையான உள்வீதி, திருக்குளத்தை உள்ளடக்கி இன்று அமைந்துள்ளது; வடபாக உட்புறச் சுவரில் திருமுருகனின் அறுபடை வடிவங்களைக்கீறி, முருகனின் காலில் ‘ஆமப்பூட்டு’ ஒன்றும் மாட்டியிருக்கிரு?ர்கள். நடராசரின் சித்திர வடிவம் கிழக்கு நோக்கி இருக்க, முருகனின் திருக்கலியாணக் கோலம் தெற்கு நோக்கி வரையப்பட்டிருக்கிறது. சூரிய நாராயணனின் வடிவம் கிழக்கு நோக்கி வரையப்பட்டுள்ளது. உட்பிரகார மண்டபங்களும், முன்புற புதுத்தோற்றமும் அவற்றிலுள்ள தோரண வளைவுகளும் இந்துக் கோயிலுக்குரியதாகவில்லை . மடாலயம் ஆதலால், ஆகம விதிகள் இங்கு பூரணமாகப் பேணப்படாது போயின,
“கி. பி. 1873இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாயிருந்த காலத்தில், ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றிருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விருப்பினராய், அஃதோடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய், அவ்வருடம் தைமாசத் தில் அக்கோயிலில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து ரூபா 6000 வரையில் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன. ஆனல் தேர்த்திருவிழாவுக்கு முதனள் செய்து வருகிற ஆட்டுக் கொலையை இனிமேல் அவ்வாறு செய்வதில்லையென்று நாவலருக்கு முன் செய்து கொடுத்த பிரதிக்கினைக்கு மாருகப் பின்னும் அக் கொலை நடந்தபடியால், நாவலர் அவர்கள் கோபித்து, 1876-ம் ஒ) மார்கழி மாசம் வண்ணுர்பண்ணைச் சிவன்கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்குத் தொடரவும், பின் அக்கோயிலை ஒழுங்காய் நடத்து வதற்குமாக, ஒரு சபை அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட சபையார் கோயிலதிகாரிமேல் வழக்குத் தொடர்ந் தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவலரவர்கள் தேகவியோக மாயினர். 1929-ம் (Su) ஜூன் மீ" 10-ந் உஇக் கோயில் பொது வென்றும், கோயிலதிகாரி கோட்டுக்குக் கணக்குக் காட்டவேண்டு மென்றுந் தீர்ந்த டிஸ்திறிக்கோட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும். (செ. இ: 1935)
7

Page 37
54 நல்ல நகர் நூல்
இக் கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில்: இங்கிருக்கிற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை. வேலாயுதம்: சிந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படைக் சிலம். அவரேவல் செய்யும் அடிமை." என நாவலர் கூறினர். தீட்சை பெருத பிராமணர் பூசை செய்ததும், தேவதாசிகள் நடனமாடுவதும், தேர்த்திருவிழாவின்போது தேர்க்காலில் ஆடு வெட்டிப் பலிகொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணனவை” என அவர் கருதினர். அதனல், அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பாணருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருஷ காலம் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்; கர்ப்பக் கிருகத்தைக் கருங் கற்றளியாகச் செய்விக்க அவர் விரும்பி, கருங்கற்களும் தருவிக்கப் பட்டன. ஆனல், கோயிலதிகாரிகள் ஒத்துழைக்காததால், அவை வீதியில் வீணே கிடந்து, இன்று வெளிமதிலுக்கு அத்திவாரமாகி விட்டன. ـ
நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்" என்ற கட்டுரை யிலிருந்து அறியமுடிகின்றது.
‘எப்படியாயினும் ஆகட்டும் இங்கே அருள் விளக்கம் இருக் கிறது" என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.
10. 2. முடிவுரை
கி. பி. 948ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்த சுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ் மக்களின் வரலாற்றேடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த 1039 ஆண்டுகளாக விளங்கிவருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாண்டுகள் நீண்ட பாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.

நல்ல நகர் நூல் 55
10.
11.
12
13.
14.
5.
ஆய்வுக்குரிய நூல்கள்
கைலாயமாலை - சா. வே ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு
சென்னை - 1939. வையாபாடல் - கலாநிதி க. செ. நடராசா பதிப்பு.
கொழும்பு - 1980. யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன் பதிப்பு ,
கொழும்பு - 1963. செகராசசேகரம் - ஞானப்பிரகாச luibiggrg nrai,
அச்சுவேலி - 1932,
செகராசசேகரமாலை - இ. சி. இரகுநாதையர் பதிப்பு,
கொக்குவில் - 1942
. வையா - ஞா. ஞானப்பிரகாசர் பதிப்பு,
அச்சுவேலி - 1921. யாழ்ப்பாணச் சரித்திரம் - எஸ். ஜோன்,
LunTibùLurraooruh - 1882. யாழ்ப்பாண வைபவ %ெளமுதி - க. வேலுப்பிள்ளை, வசாவிளான் - 1918, யாழ்ப் பாண வைபவம் - சி. பாலசுப்பிரமணிய சர்மா பதிப்பு, சங்கானை - 1927. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - நல்லூர்,
சுவாமி ஞானப்பிரகாசர் - 1928. யாழ்ப்பாணச் சரித்திரம் - டானியல் ஜோன்
(முதல்பாகம் யாழ் - 1930. யாழ்ப்பாணக் குடியேற்றம் - சிவானந்தன்,
யாழ்ப்பாணம் - 1933. யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ஜா
யாழ்ப்பாணம் - 1933, யாழ்ப்பாணச்சரித்திரம்-முதலியார் செ. இராசநாயகம்,
யாழ்ப்பாணம் - 1933. யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆங்கிலேயர் காலம்,
செ. இராசநாயகம், யாழ்ப்பாணம் - 1935.

Page 38
56
16.
17.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
நல்ல நகர் நூல்
தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் -
சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி - 1932. இலங்கைவாழ் தமிழர் வரலாறு - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராதனை - 1956, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - கா. இந்திரபாலா, யாழ். தொல்பொருளியற் கழகம், கண்டி - 1972. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் - I, II - பூரீலபரீ ஆறுமுகநாவலர் - 1875, நாவலர் பிரபந்தத் திரட்டு (இரண்டாம் பாகம்), வித்தியாதுபாலன யந்திரசாலை சென்னை - 1955. நல்லூர்க் கந்தசுவாமி - குல. சபாநாதன்,
நல்லூர் தேவஸ்தான வெளியீடு - 1971. யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் - பொ. செகந்நாதன், யாழ் இலக்கியவட்ட
வெளியீடு - 1987. A True and Exact Description of The Great
Iland of Ceylon - Phillip Baldeaus. The Temporal and Spiritual Conquest of Ceylon - F. de. Queyroz, Translated by: Fr. S. G. Perera, Colombo – 1930. Tamils and Ceylon - C. S. Navaratnam,
Jaffna - 1958. The Northern Kingdom - S. Natesan, History of Ceylon, Vol: I Part; II Colombo - 1960. The Kingdom of Jaffna -
S. Pathmanathan, Colombo - 1978 Political History of The Kingdom of
Kotte -- G. P. V. Somaratne.

நல்லை நகர் நூல் 57
ஆய்வுக்குரிய சில கட்டுரைகள்
. The Ariya Kingdom in North Ceylon -
S. paranavithane, JRASCB, Vol: VIII Parti: II
யாழ்ப்பாணச் சாசனங்கள் - கா. இந்திரபாலா,
இளங்கதிர், பேராதனை - 1959. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும், சூழ் நிலையும் - கா. இந்திரபாலா,
v இளங்கதிர், பேராதனை - 1970. ஈழத்து வரலாற்று நூல்கள் - ச. பத்மநாதன்,
இளங்கதிர், பேராதனை - 1970. நல்லூரும் தொல்பொருளும் - வி. சிவசாமி,
ஒளி சஞ்சிகை, யாழ்ப்பாணம் - 1977. யாழ்ப்பாண இராச்சியத்தின் கதை - க. குணராசா,
வித்தியா சஞ்சிகை, உரும்பிராய் இந்துக் கல்லூரி பவளவிழா மலர் - 1986.
On the History of Jaffna from the Earlist Period to the Dutch Conquest -
Simon Asie Chetty, JRASCB Vol: 1 Ceylon Gazetter,
Colombo - 1834.
The Temple of Candaswamy, Jaffna - Sir Alexander Johnstone's Manuscripts, CALR Volt II
Part: III 1916 / 1917.
A Memoir of Mrs. H. W. Winslow, Combining
a Sketch of Ceylon Mission -
Miron Winslow, New York - 1835.

Page 39


Page 40

sae! ----+|- 「:----- 1 || ----------- -: |-

Page 41


Page 42

}ff6յք இத்தினதும்
கந்தசுவாமி இனதும்
உறும் நூல் .م... , ورد و به
卫* 岛 ■ L.
டி.