கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டைய ஈழம் 2

Page 1

قی
TLD || TLD

Page 2

LIGðÔIG) uI + If
இரண்டாம் பாகம்
வே. க. நடராசா

Page 3
மூன்றம் (திருத்திய) பதிப்பு s , , 1973, uorto எல்லா உரிமைகளும் சேது நூலகத்தாரூக்கே

பண்டைய ஈழம்
உயர்தர வகுப்புகளுக்குரியது
இரண்டாம் பாகம் (பொலன்னறுவைக் காலமும் பிந்திய காலங்களும்)
(க, பொ. த. உயர்நிலை, சாதாரணம் பரீட்சை வினத்தாள்கள் அடங்கியது)
R
(36), 5.5LUTST B. A. (Ceylon) Dip, Ed.
கேவளை : கரவெட்டி

Page 4
நன்றி
இந் நூலில் வெளியாகும் க. பொ. த. உயர்
தரம் - சாதாரண தரம் வினத் தாள்களை வெளி
யிட அனுமதித்த பூரீலங்கா பரீட்சைப் பகுதி ஆணை யாளருக்கும்,
தொல் பொருளியல் பகுதியின் பதிப்புரிமை யுடைய புகைப் படங்களைத் தந்துதவி, வெளியிடு தற்கு அனுமதித்த ஆணையாளருக்கும், இவற்றைப் பெறுதற்கு உதவிய உதவி ஆணையாளர் திரு. மார்க் கஸ் பெர்ணுந்துவிற்கும்,
சொல்லடைவு (Index) எனப்படும் அட்டவணை யைத் தயாரிக்கும் சிரமமான பணியிற் தம் அரிய நேரத்தைச் செலவிட்ட என் மாணவர்க்கும், குறிப் பாகச் செல்வன் த. கோவிந்த தாஸிற்கும்,
நூலில் திருத்தங்கள் செய்தற்கு ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி ஊக்கிய பெரியார்க்கும்
நூலைச் சிறப்புற அச்சிடும் பணியை வழமை போல் ஏற்ற தமிழ்ப்பூங்கா அச்சகத்தினர்க்கும்
நன்றிகள் பல.
1973, LDrt G 23 வே, க. த.

பொருளடக்கம்
محسحصحسحسحمحســــــــــــــــــــح سے
சோழராட்சியில் இலங்கை : விளைவுகள்
1. சோழப் பேரரசின் தேய்வும் பண்பாடும். iர். இலங்
கையிற் சோழராட்சியும், அதன் விளைவுகளும், விஜயபாகுவும் விடுதலையியக்கமும் : i. விஜயபாகுவுக்குமுன் விடுதலை முயற்சிகள். i. சோழராட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெறல். i. விஜயபாகுவின் ஆட்சியும் சாதனைகளும். மகா பராக்கிரமபாகு : i. சூளவம்சம் : மகா பராக்கிரமபாகுவின் காவியம். i. விஜயபாகுவுக்குப் பின் அரசியல்நிலைமைகள். iர். த க் கிணதேச அரசைப் பெறல், ir, இலங்கை முழுவதற்கும் அரசனதல்; உருகுணையை அடிப்படுத்தல். V. பொரு ளியற் பணிகள், ஓர். சமயமும் கலைகளும், ஈi. அயல் நாட்டுக்கொள்கை : அ. பர்மா, ஆ. பாண்டி நாடுமீது படையெடுப்பு.
தென்கிழக்காசிய நாடுகளும் இலங்கையும் : 4. கம்போடியா. i. பூரீ விஜயப் பேரரசு. i. பர்மா, கலிங்க மன்னன் ஆட்சி : பொலன்னறுவையின்
வீழ்ச்சி : i. கலிங்க மன்னர்கள் i, நிஸங்க மல்லன். i. நிஸங்க மல்லனது பின்னேர். iW. மாகனது படை யெழுச்சியும், பொலன்னறுவையின் வீழ்ச்சியும். பொலன்னறுவைக் காலப் பண்பாடு: i. அரசியல் முறை. i. பொருளியல் சமூக நிலைமைகள். i, சமய விருத்திகள், ir, இலக்கிய வளர்ச்சி. ஏ. கட்டிடக் கலை முதலியன. தம்பதெணிய அரசு : பாண்டிய செல்வாக்குப்
Lu J nu ü).
i. இரண்டாம் பாண்டியப் பேரரசு, it. தம்பதெணிய அரசின் எழுக்சி. i. இரண்டாம் பராக்கிரமபாகு. iv. தம்பதெணிய அரசின் வீழ்ச்சி,
பக்.
12
62
76
94
126

Page 5
vil
8. யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் :
i. இந்தியாவில் முஸ்லிம் ஆதிக்கம் வளர்தல். i. யாழ்ப்பாண அரசின் தோற்றம். it. ஆரியச் சக்கர வர்த்திகள் : யாழ்ப்பாண அரசு வலுப் பெறல். ir. கம்பளை ஆட்சியாளரும் அளகக் கோஞரும். 9. கோட்டை அரசின் எழுச்சி : 6-ம் பராக்கிரமபாகு i. விஜய நகரப் பேரரசின் எழுச்சி, it. 6-ம் பராக்கிரம பாகு கோட்டை அரசைப் பெறல். it. 6-ம் பராக் கிரமபாகுவின் சாதனைகள். iy, யாழ்ப்பாண அரசும் கோட்டையும். 10. பிந்திய காலச் சிங்களப் பண்பாடு :
1. பொருளியல் நிலைமைகள் ; பிறநாட்டு வணிக வளர்ச்சி, it, நிருவாகமும் அதிகாரிகளும். i. சமய நிலைமைகள். iy. இலக்கிய வளர்ச்சி, V. கட்டிடக் கலை, சிற்பம் முதலியன. பிற்சேர்க்கை :
வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்லடைவு (Index) க. பொ.த. உயர்தரம், சாதாரணதரம் விஞத்தாள்கள்
நாட்டுப் படங்கள் (அட்டவணை) :
விஜயபாகுவின் படையெழுச்சிகள்
மகாபராக்கிரமபாகு கால இலங்கை மகாபராக்கிரமபாகுவின் நீர்ப்பாசன வேலைகள் தென்கிழக்காசியா (ஆதிகாலம்) இடைக்கால ஈழம் பொலன்னறுவையின் அமைப்பு விஜயநகரப் பேரரசு 6-ம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பர்ணப் படை
யெடுப்பு
Alaa---
ہے۔ حسی۔سی۔سی۔سی۔سی۔
143
64
182
199
2O7
Les
9
40
48 64 85 12ቭ0
I 65
፲ 76
அட்டைப்படம் : சிலை (பொத்கல் விகாரைக்கு முன்)
முகப்புப்படம் : மாணிக்கவாசகர் சிலை
இவையும், நூல் முடிவில் வெளிவரும் ஏனைய புகைப்
படங்களும் தொல்பொருளாய்வுப் பகுதித் தலைவரின்
இசைவு பெற்று வெளியிடப்படுகின்றன.


Page 6
மாணிக்கவாசகர்
ff {1} f(a) { // r =i; Gir எனது என வ |
 

அத்தியாயம் ஒன்று சோழராட்சியில் இலங்கை விளைவுகள்
1. சோழப் பேரரசின் தேய்வும், பண்பாடும் i. இலங்கையிற் சோழராட்சியும், அதன் விளேவுகளும்
பொலன்னறுவையைச் சோழர் இராசதானியாக்கியதிலிருந்து, இரண்டரை நூற்ருண்டுகள் வரையில் அந்நகரே ஈழத்தின் இராச தானியாக விளங்க லாயிற்று. அனுராதபுரத்தைக் காட்டிலும் குறு கிய ஒரு காலப்பகுதியான பொலன்னறுவைக் காலத்தில் இயற்றப் பட்ட சாதஃனகள் ாேது வியப்பைத் துண்டும் எனகயில் உள்ளன . அங்கு இன்றும் நன்னிலையிலுள்ள அக்காலக் கட்டிடச் சிதைவுகளும் பிற இடிபாடுகளும் அக்காலத்தின் பெருமையையும் புகழையும் பறை சாற்றி நிற்கின்றன. அனுராதபுர காலத்தில் இலங்கை பெற்ற சிறப் L Jr Taħriġ , சோழராட்சியென்ற இடையீட்டின் பின், பொலன்னறுவைக் காலத்தில் தொடர்ந்து நிலவியதை நாம் காண்கின்ருேம். பொலன் னறுவைக் கால மன்னர்கனின் சாதஃபிகளேயறியுமுன், சோழராட் சிக்கால இலங்கையின் நிலேமைகளே இவ்வத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்.
சோழப் பேரரசின் தேய்வும், பண்பாடும்
சோழப்பேரரசின் எழுச்சி பற்றி முதற்பாகத்தில் படித்துள்ளோம். இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய சோழப் பேரரசர்களின் காலத்தில் அவர்களின் Girr, எய்திய சிறப்பு விரைவில் பங்காத வறு. அவர்களேத் தொடர்ந்து ஆண்ட சோழர்கள் பார்த்துக் கொண்டனர். 11-ம் நூற்ருண்டு முழுவதும் . அடுத்த நூற்றுண்டுத் தொடக்கத்திலும் பேரரசின் எல்லேகள் பெரும் மாறுதல்களே எப்த விஸ்லே, 1 ம் இராஜேந் ரனுக்குப் பின், அவனது மூன்று புதல்வர் களான இராஜாதிராஜன், 2-ம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் ஒரு கால் நூற்ருண்டுக் காலம் தொடர்ச்சியாக ஆட்சி நடத்தலாயினர், பேலேச் சாளுக்கிய வேந்தனுன 1-ம் சோமேஸ் வரனுடன் அடிக்கடி இவர்கள் நடத்திய போர்களில் இவர்களுடைய போராற்றல் புலப்பட்டது. ஈழத்தில் நடைபெற்ற விடுதஃப் முயற் சிகளும் இவர்களால் பயனற்றவையாக்கப்பட்டன.
1-ம் குலோத்துங்கன் 107 பில் பட்டமெய்திய அதிராஜேந்திரன் ஒரு சில திங்களுள் இறக்க நேர்ந்தமையால், சோழர் அரசியலில் ஒரு முக்கிய விருத்தியேற்பட்டது. அதிராஜேந்திரன் நேர் உரிமை யாள&ன விட்டுச் செல்லாததால், சோழ அரசைப் பெறுதற்குப் பல்?
r_

Page 7
பண்டைய ஈழம்
கங்கrங்கட்டி நின்றனர். குறிப்பாக, மேலைச் சாளுக்கிய இளவரச் ஞன விக்கிரமாதித்தன் (6ம் விக்கிரமாதித்தன்) தனது உறவினன் ஒருவனை அரசனுக்குவதில் முனைந்தான். இதற்குமுன்னதாக, 1 ம் இரா ஜேந்திரச் சோழனது பேரனும், கீழைச் சாளுக்கிய (வேங்கி) மர பைச் சேர்ந்தவனுமான 2ம் இராஜேந்திரன் சோழர் தலைநகர்க்கு விரைந்து தனது உரிமையை நிலைநாட்டிக்கொண்டான். இவனே குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன், சோழப் பேரரசனுக நீண்டகாலம் (1070-1122) ஆட்சி புரிந்தவன். வேங்கியைச் சேர்ந்த ஒருவன் ஆட்சியைப் பெற்றதால், கீழைச் சாளுக்கிய அரசும் சோழப் பேரரசும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரப்பட்டன. ஆட்சித் தொடக்கத்தில் இவன் சில முக்கிய போர்களில் ஈடுபடவேண்டி நேர்ந் தது. குறிப்பாக, விக்கிரமாதித்தனுடன் குலோத்துங்கன் தொடுத்த போரில் முன்னவனைப் புறங்கண்டு பின்வாங்க வைத்தான். இவனது ஆட்சியின் இறுதியில் இடம்பெற்ற இரண்டாவது கலிங்கப்போர் "கலிங்கத்துப்பரணி"யில் பாடப்பெற்றுள்ளது. தனது ஆட்சி த் தொடக்கத்தில் ஈழத்தையும், முடிவில் வேங்கி நாட்டையும் இவன் இழந்த போதும், சோழப் பேரரசின் சிறப்பு அதிகம் பாதிக்கப்பட வில்லை. பொதுவாக, இவனது நீண்ட ஆட்சிக்காலம் அமைதியுடைய தாக இருந்தது. நாடு பலதுறைகளிலும் செழிப்புப்பெற்று விளங்கியது.
3-ம் குலோத்துங்கன்: 2ம் இராஜராஜன் (1146-1163) காலத் இலிருந்தே, சோழப் பேரரசின் எல்லைப்புற நாடுகள் தமது சுயா தீனத்தை நிலைநாட்ட முற்பட்டு வந்தன. மத்திய அரசாங்கமே பலவீனமு ற்றிரு ந்தது. அம்மன்டினலுக்கு மக்களின்மையால், விக்கிரம சோழனது பெண்வழிப் போன் ஒருவன் இராஜா திராஜன் என்ற பட்டப் பெயருடன் அாசைப் பெற்றன். இவனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற 3ம் குலோத்துங்கன் (1178-1218) இறு தி ச் சோழப் பெருமன்னன் மென வர்ணிக்கப்பட்டுள்ளான். ஒரு சில போர்களை இவன் மேற்கொண்டு தனது இராச்சியம் சிதைவு பெருது பேணிஞனெனினும், இவனுடைய ஆட்சிக்காலம் பெரும்பாலும் அமைதிபெற்று விளங்கியது. இவனது காலக் கல் வெட் டு க் கள் காணப்பட்ட இடங்களைக் கொண்டு, தெற்கே குமரிமுனையிலிருந்து வடக்கே வேங்கி நாடு வரை சோழ அரசு இவனது காலத்தில் பரந் திருந்ததாகக் கூறுவர்,
சோழ அரசின் வீழ்ச்சி 13-ம் நூற்ருண்டுத் தொடக்கத்தில், சோழ அரசின் வடமேற்கே ஹொய்சாளரும், தெற்கே பாண்டியரும் தத்தம் பேரரசுகளை நிறுவுவதில் முனைந்து நின்றனர். தெலுங்கச் சோழர் முதலான சிற்றரசர்கள் சுயாதீன ஆட்சியை நிறுவமுற் பட்டிருந்தனர். இவ்வித சூழ்நிலையில் 3-ம் இராஜராஜன் போன்ற

சோழராட்சியில் இலங்கை: விளைவுகள்
பலங்குறைந்த மன்னர்களால், சோழ அரசைப் பாதுகாப்பது கடின மாயிற்று. பாண்டியரின் இரு படையெடுப்புக்களால் 3-ம் இராஜ ராஜன் தோல்வியையும் அவமானத்தையும் அடைந்தான். ஹொய் சிாளமன்னனுடைய தலையீட்டால் அரசைப் பாதுகாத்தான். ஓரளவு திறமைபெற்ற 3-ம் இராஜேந்திரன் பாண்டியர் மீது ஒரு படை யெடுப்பை நிகழ்த்திய போதும், ஹொய்சாளரின் மேலாணக்குட் பட்டவணுகவே ஆட்சிசெய்தான், 1251-ல் பட்டமெய்திய பாண்டியப் பேரரசனன ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், சோழ நாட்டின் மீது ஒரு படையெடுப்பை மேற்கொண்டான். 3-ம் இராஜேந்திர சோழனை அடிப்படுத்தியது மன்றி, அவனைத் திறைசெலுத்தும் படியும் செய்தான். 1279-ல் இராஜேந்திரன் இறந்தபின், சோழ அரசு பாண்டியப் பேரரசில் இணைந்த ஒரு பகுதியாயிற்று.
ஆட்சிமுறை: சோழராட்சிமுறையில், மன்னராட்சியே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. மன்னர் களின் தனிப் பண்புகளும் திறமைகளும், அவர்களது அரசின் வளர்ச்சியையும் தேய்வையும் தீர்மானிப்பவையாக விருந்தன. சோழப் பெருமன்னர்கள் சிலரின் திறமையால், அவர்கள் ஆட்சிசெய்த நிலப்பரப்பின் எல்லைகள் Gorf வெய்தியதைப்போலவே, அவர்களின் மதிப்பும் பெருமையும் பன் மடங்கு உயர்ந்து விளங்கலாயின. மன்னர்க்குக் கிடைத்த வருவா யும் பெருகியிருந்தது. தமது மூத்த புதல்வர்க்கே சோழர்கள் அர சுரிமையை வழங்கும் மரபு இருந்து வந்தது. பெரும்பாலானேர், தம் வாழ்நாளிலேயே தம் புதல்வர் க்கு இளவரசுப் பட்டங்கட்டி ஆட்சியில் அவர்களைப் பங்குபெற வைத்தனர். அக்கால வழக்கை யொட்டி. சோழவேந்தர் தனியரசு நடத்தியபோதும், "உடன் கூட்டத்ததிகாரிகள்’ என்பாரின் ஆயுரை பெற்றனரெனலாம். இம் மன்னர்கள் இராசகேசரிவர்மன், பரகேசரிவர்மன் என்ற பட்டங்களே மாறிமாறிச் சூடிவந்ததையும் அறிகின்ருேம். இராஜேந்திரசோழன் காலம்வரை தலைநகராக விளங்கிய தஞ்சாவூர், இன்றும் தன் பழம் பெருமையை நினைவுபடுத்தும் பல சின்னங்களைக்கொண்டு விளங்கு கின்றது. இராஜேந்திரனும், அவனுக்குப்பின் வந்தோரும் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தினர். முடி கொண்ட சோழபுரம் என்ற பழையாறை நகரும், காஞ்சியும் இரண்டாந் தலைநகர்களாகக் கைக்கொள்ளப்பட்டன.
மாகாண, ஊராட்சி முறைகள்: சோழப் பேரரசு விரிவடைந்த பின், அது ஒன்பது மண்டலங்களாக (மாகாணங்களாக)ப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரையுடைய மாகாணமாக விளங்கியது. ஒவ்வொரு மண்டலமும் வளநாடுகளாகவும், வளநாடுகள் கூற்றங்கள் அல்லது நாடுகளாகவும் மேலும் பிரிக்கப்பட்டிருந்தன. வளநாடு என்பது பெரும்பாலும்

Page 8
4. பண்டைய ஈழம்
இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பெரும் பிரிவாக இருந்ததெனக் கருத இடமுண்டு. நாடுகள் அல்லது கூற்றங்கள், அவற்றின் கண் விளங்கிய பேரூர்களின் பெயர்களைத் தாங்கியிருந்தமையையும் அறிகின்ருேம். (எ-டு : திருவாரூர்க் கூற்றம், வெண்ணையூர் நாடு முதலானவை ) சோழராட்சி முறையின் மிகச்சிறந்த அம்சம், அவர்கள் காலத்தில் நிலவிய உள்ளுராட்சி முறையாகும். நாடு அல்லது கூற்றம் என்ற பெரும் பிரிவும், பல ஊர்களையும் சதுர்வேலி மங்கலங்களையும் கொண்டிருந்தது. ஊர்கள்தோறும் விளங்கிய ஊராட்சி மன்றங்கள், கிராம நிர்வாகத்தைத் திறம்பட ஆற்றி, மக்களின் அமைதியான நல் வாழ்வுக்கு அடிகோலி வந்தன. நீதி வழங்குதல், ஏரி, குளம் முதலானவற்றைப் பாதுகாத்தல், சாலைகளை அமைத்தல், அற நிலையங்களை நடத்துதல், அரசனுக்குச் சேர வேண்டிய அரசிறைகளை வசூலித்துக் கொடுத்தல் முதலான பல கடமைகளை அவையாற்றி வந்தன. இவ்விதமாகக் கடமைகள் அதிகமாகி வந்ததால், கிராம நிருவாகத்தைத் திறம்படக் கவனித் தற்கு, கிராமசபைகளிற் சில உட்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. வாரியங்கள் என்ற உட்கழகங்கள் குறிப்பிட்ட சில கடமைகளைப் பொறுப்பேற்று நடத்தி வந்தன. இவை பற்றிய பல விபரங்களை நாம் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியலாம்.
பொருளியல் நிலைமைகள்: சோழ வளநாடு, நிலவளம், நீர் வள மிக்க நாடாதலால், அங்கு பயிர்ச்செய்கை நன்னிலையில் இருந்தது. என்பதில் வியப்பில்லை. அரசிறையாகச் செலுத்தப்பட்ட வரிகளில், புரவுவரி யென்ற நிலவரி மிக முக்கியமானதாக இருந்தது. நில வருவாயில் (பெரும்பாலும் நெல்லில்) ஆறிலொரு பங்கைக் கடமை யாகச் செலுத்தினர். இவ்வரியை ஊர் ச்சபையார் சேகரித்து அர சனிடம் சேர்ப்பிப்பர் இயற்கையமைப்புக்கேற்ற வகையில் ஆறுகள் ஏரிகள் வெட்டியும், அணைகள் கட்டியும் நீர்ப்பாசனத்துக்கு அரும் பணிகள் ஆற்றினர் சோழமன்னர்கள். நாம் முன்னர் குறிப்பிட்ட ஏரிவாரிய உறுப்பினரே இந்த ஏரிகளைப் பாதுகாத்து, ஊர் மக்க ளுக்குப் பயன் கிடைக்குமாறு பார்த்தவர்கள். பயிர்ச்செய்கையே யன்றி, பல கைத் தொழில்களும் நன்னிலையில் இருந்தன. உள்நாட்டு பிறநாட்டு வணிகமும் நன்கு இயங்கியமைக்குச் சான்றுகள் உண்டு. உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் பொதிமாடுக ளிலும், வண்டிகளிலும் தம் பொருட்களை அக்காலத்திருந்த நெடு வழிகளால் பல ஊர்களுக்கும் கொண்டு சென்று விற்று வந்தனர். ஈழம், சுவர்ணபூமி, பூறி விஜய அரசு, யாவா, சீன போன்ற நாடுக ளுடன் கடல் வாணிபத்தை நடத்தி வந்தனர். இவ்வாணிபத்தில் ஈடுபட்டவர்களுள் நாநாதேச திசையாயிரத்தைஞ் ஞாற்றுவர் (நான தேசிகள்), மணிக்கிராமத்தார், வளஞ்சியர் முதலான குழு க் கள் இருந்தன. பிறநாட்டு வணிகத்துக்குப் பயன்பட்ட காவிரிப்பட்டி

சோழராட்சியில் இலங்கை: விளைவுகள் 5
னம், மாமல்லபுரம், நாகபட்டினம் மற்றும் பல துறைகளில் சுங்கவரி அறவிடப்பட்டது. இதன் மூலம் சோழ அரசிறைக்கு நிறையப்பணம் கிடைத்தது. முதற் குலோத்துங்க சோழன் இச் சுங்கவரியை நீக்கி ஞன் என்பதால், " சுங்கந் தவிர்த்த சோழன்." எனச் சிறப்பிக் கப்பட்டுள்ளான்.
சமூக நிலைமைகள்: சாதி அல்லது குல அடிப்படையிலேயே பெரும்பாலான தொழில்கள் நடைபெற்று வந்தன. சாதிமுறை இறுக்கமுடையதாக விருப்பினும், சாதிகளிடையே மோதல்கள் ஏற் படாது ஒற்றுமை நிலவியமை குறிப்பிடத்தக்கது. பிராமணர்கள் புறம்பான பகுதிகளில் அரசன் அல்லது ஊர்மக்கள் வழங்கிய நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அரசனல் நியமனம் பெற்ற அதி காரிகள், உயர் குடியினராகவே இருப்பர். பெண்கள் பல சிறப் புக்களைப்பெற்று வாழ்ந்தபோதும், சமத்துவ அடிப்படையில் அவர் களின் நிலை அமையவில்லை. பெண்கள் உடன் கட்டையேறும் வழக் கம் ஓரளவுக்கு இருந்தது. ஆண்களும், பெண்களும் தம்மைவிற்று அடிமைகளாக வாழ்ந்ததையும் நாம் அறிகின் முேம்,
சமயமும் கலைகளும்:- பல்லவர் காலத்திலேயே மறுமலர்ச்சி பெற்று வளர்ச்சியுற்ற சைவ, வைணவ மதங்கள்,சோழப் பெரு மன்னர்களின் பேராதரவைப் பெற்று மேன்மையெய்தின. சமண மதம் ஒரளவுக்கு இன்னும் பின்பற்றப்பட்டபோதும், பெளத்தம் அருகியிருந்ததுஎன லாம். சைவ, வைணவ மதங்களைப் பின்பற்றியவர்க் கிடையேயும் பூசல்கள் இடையிடையே தோன்றின. மன்னர்கள் பெரும்பாலும் சைவத்தையே சார்ந்து நின்ருலும், வைணவக் கோயில்களையும் அவர் கள் ஆதரித்தனர் எனலாம். கோயிற் கட்டிடக் கலையும் சிற்பக்கலை யும் சோழர் காலத்திலேயே அதியுன்னத நிலையை எய்தின. இராச ராசேச்சரம் எனப்படும் தஞ்சைப்பெருவுடையார் கோயில் முதலான கோயில்கள் இன்றும் சோழர் காலக் கட்டிடக்கலைச் சிறப்புக்களை எடுத்துக்காட்டி மிளிர்வதைக் காணலாம். கோயில் களை நிறுவுவதில் மட்டும் மன்னர்கள் கருத்தைக் செலுத்தினரல்லர்; அவற்றைப் பேணுவதற்கும், அவை நன்கு இயங்குவதற்கும், வேதங்கள் தேவா ரங்கள் ஓதுவதற்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இக்கோயில் களில் செதுக்கப்பெற்று வைக்கப் பெற்றிருந்த வெண்கலச் சிலைகளும் கட்டிடங்களின் உறுப்புக்களாக அமைந்த சிற்ப வடிவங்களும் சிற்பக் கலையின் உன்னதத்தை யெய்தி நின்றன. தஞ்சாவூரில் கட்டப்பெற் றிருந்த பெருவுடையார் கோயிலிற் பணிபுரிதற்கென இசையிலும் பரத நாட்டியத்திலும் வல்ல மகளிர் கோயிலைச் சுற்றியுள்ள வீதி களில் இராஜராஜனுல் குடியேற்றப்பட்டனர். இவர்கள் தேவரடி யூார் (தேவதாஸிகள்) எனவும், தளிச்சேரிப் பெண்டுகள் எனவும்

Page 9
6 பண்டைய-ஈழம்
அழைக்கப்பட்டனர். பரத மும் கருநாடக சங்கீதமும் அந்நாளில் பெரிதும் பயிலப்பட்டமையால் அவை நன்னிலையில் இருந்தன கோயில்களை மையமாகக் கொண்டே இவையும், பிற கலை களு ம் வளர்ச்சி பெற்றன.
வடமொழியும் தமிழிலக்கியமும்:- சைவ, வைணவக் கோயில்கள் நன்னிலையிலிருந்தமையால், அவற்றையண்டி வாழ்ந்த பிராமணர் களும் செல்வாக்குடன் விளங்கினர். ம ன் ன ர் க ள் தமிழைமட்டு மன்றி, வடமொழியையும் ஆதரிப்பவர்களாகவே இருந்தனர். 1- ம் பராந்த கன் காலத்தில் வாழ்ந்த வேங்கட மாதவர் என்பார் வேத விளக்க நூல்களை (இருக்கார்த்ததீபிகா) இயற்றினர். விக்கிரமசோழ னது குருவாக விளங்கியவர் வடமொழியில் தேர்ச்சிபெற்ற ஒர் ஆசா ரியாராவர். எண்ணுயிரம், திருமுக்கூடல், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் வேதங்கள், வேதாந்தங்கள் என்பவற்றைக் கற்பிக்கும் நிலையங்கள் மன்னர்களின் ஆதரவில் இயங்கி வந்தன. வேதங்களி லும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர்கள் அம்பலங்களில் அல் லது கோவில் மண்டபங்களில் வடமொழியிலுள்ள மகா பாரதம் புராணங்கள் முதலியவற்றை ஓதி, அங்கு கூடியிருந்த மக்களுக்கு அவற்றுக்கு விளக்கஞ் செய்வர். இதற்கெனப் பல நிலங்கள் அவர் களுக்கு வழங்கப்பட்டுமிருந்தன. வடமொழிக்கிருந்த செல்வாக் கால், அக்காலத்தில் எழுந்த தமிழ் நூல்களும் வடமொழிச் செல் வாக்கைக் கொண்டிருத்தலைக் காணலாம்.
தமிழிலக்கிய வரலாற்றில், சோழப் பெருமன்னர் காலத்தைப் "பொற்காலம்" எனவும், ‘காவிய காலம்' என வும் இலக்கிய ஆராய்ச்சியாளர் குறிப்பர். வடமொழியிலுள்ள காவியங்களைப் பின் பற்றித் தமிழிலும் இக்காலத்தில் பெருந்தொகையான காவியங்கள் எழுந்தன. பரணி, உலா, பிள்ளைத்தமிழ் "முதலான பல பிரபந்தங் கள் இக்காலத்திலேயே இலக்கியப் பரப்பில் மலர்ந்து தமிழை வளம் படுத்தின. திருத்தக்க தேவர், சயங்கொண்டார். தோலா மொழித் தேவர், கம்ப ன், சேக்கிழார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, நம்பி யாண்டார் நம்பி, உமாபதி சிவாசாரியார் முதலான பெரும் புல வர்கள் சோழப் பெருமன்னர் காலத்தவர்கள் என்பதை யறிந்தால் அக்காலத்தின் இலக்கியச் சிறப்பை யாம் உய்த்துணரலாம். சோழர் காலத்து இலக்கியங்களிலும் மேலாக அக்கால இலக்கண நூல்கள் வட மொழியின் செல்வ சக்கைக் கொண்டிருத்தலைக் காணலாம். யாப்ப ருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நேமிநாதம், வெண்பாப்பாட்டியல், நன்னூல், புறப்பொருள்வெண்பாமாலை என்பன இக்காலத்தெழுந்த இலக்கண நூல்களாம். பிங்கலம் என்ற நிகண்டும், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் போன்ற சைவு

oda âar6y a sh
சித்தாந்த நூல்களும் இக்காலத்தவையே. இதுவரையும் கூறியவற் முல், சோழப் பேரரசு நிலவிய காலத்தில், அப்பேரரசில் வாழ்ந்த தமிழ்க் குடிகள் பெருஞ்சிறப்பெய்தியதோடு, சமயமும், கலைகளும் உன்னத வளர்ச்சி யடைந்திருந்தன என்பது தெளிவாகும்.
ii இலங்கையிற் சோழராட்சியும் அதன் விளைவுகளும்
சோழப் பேரரசுக்கும் ஈழத்துக்கும் நெடுங்காலமாகத் தொடர் புகள் இருந்து வந்தபோதும், 993-ல் 1-ம் இராஜராஜன் இராஜ ரட்டையைக் கைப்பற்றிய பின்னரே, சோழராட்சி இலங்கையில் தொடங்கியது எனலாம். இப்படை யெழுச்சியின் போது தீவின் தலை நகராகப் பெருமையுடன் இதுகாறும் விளங்கி வந்த அனுராதபுரம் அழிவுற்றது. இராஜராஜன் தனது காலத்திலேயே இலங்கையில் தான் கைப்பற்றிய பகுதியான இராஜரட்டையைச் சோழப் பேரர சின் ஒரு மண்டலமாக (மாகாணமாக)ச் சேர்த்துக் கொண்டான். இராஜராஜன் காலத்திலேயே பொலன்னறுவை தலைநகராக்கப்பட் டது. இராஜராஜனுக்குப்பின் அரசெய்திய அவனது தீரப்புதல்வனன இராஜேந்திரன், தாமதமின்றி இலங்கைமீது மற்றெரு படையெழுச் சியை மேற்கொண்டு, உருகுணையையும் அடிப்படுத்தி இலங்கை முழு வதும் சோழராட்சியில் அமரும்படி செய்தான். முழு இலங்கையைச் சோழர் கைப்பற்றிய பின்னரும், அவர்களுடைய ஆட்சி செயலள வில் இராஜரட்டையில் மட்டுமே நடைபெறலாயிற்று. சிங்கள விடு தலையியக்கம் உருகுணையில் முளை கொண்டு வளர்ச்சி பெற்று வந்தது. சூளவம்சத்திலும், சோழராட்சி இராஜரட்டையில் மட்டுமே மட்டுப் படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. 1070-ல் விஜயபாகு சோழராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தான் என்பர். அதிரா ஜேந்திர சோழனது கல்வெட்டுக்களே இலங்கையிற் கிடைத்துள்ள சோழர் கல்வெட்டுக்களில் மிகவும் பிந்தியவை யெ ன்பதால், 1070 உடன் சோழராட் சி முடிவுக்கு வத்தமை உறுதி பெறுகின்றது. சுமார் 77ஆண்டுகள் சோழராட்சியில் இலங்கை இருந்ததால், எமது நாட் டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படலாயின.
நிருவாகம்: 1-ம் இராஜராஜன் காலத்திலிருந்து 'மும்முடிச் சோழ மண்டலம் ' என்ற பெயருடன், பேரரசுடன் இ"கணக்கப்பட் டிருந்த ஈழமண்டலத்தின் நிருவாகப் பொறுப்பை, இலங்கை வந்த சோழப் பிரதிநிதி (ஆள்பதி) வகித்து வந்தான். சோழரது நிருவாக, முறையை இலங்கையில் அப்படியே அவர்கள் புகுத்தினர்கள் எனக் கருத இடமில்லை. உயர் பதவிகளுக்குச் சோழ நாட்டவரை நியமித்த துடன், உள்ளூராட்சியைப் பெரும்பாலும் இந்நாட்டவரிடமே விட் டனரெனத் தோன்றுகின்றது. தமது மாகாணங்களுள் ஒன்றன

Page 10
战 Ljså én L- u fyph
இலங்கையை, அங்குள்ளது போலவே வளநாடுகளாகிவும், நாடுகளிா கவும் பிரித்துள்ளன ரென்பது ஒரு கல்வெட்டால் தெரிகின்றது. தஞ் சைப் பெருங் கோயிலுக்கு இலங்கையிலுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நன்செய் நிலங்கள் வழங்கப்பட்டதைக் கூறுவதுடன், அந்தக் கிராமங்கள் தமது வருவாயை (நெல், காசு, இலுப்பைப்பால் ஆகிய வற்றை) அனுப்பிவைக்கக் கடமைப் பட்டிருத்தலையும் அக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இதில் அந்தக் கிராமங் கள் மும்முடிச்சோழ மண்டலத்திலுள்ள இராஜராஜ வளநாடு, விக் ரம சோழ வளநாடு என்பவற்றில் இருந்தமை குறிப்பிடப்பட்டுள் ளது. வரிகளை அறவிடுவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் உருகுணையில் உருவான விடுதலையியக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சோழ அதிகாரிகள் முக்கிய கவனஞ் செலுத்தியிருப்பர். பொருளி யல் விருத்திக்கு அவர் ஏதும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பினும் பின்னர் ஏற்பட்ட போர்களால் அது வீணடிக்கப்பட்டிருக்கும். சமய வளர்ச்சியில், குறிப்பாகச் சைவத்தின் வளர்ச்சியில் அவர்கள் அக் கறை கொண்டிருந்தனர் என்பது அவர்களுடைய ஆட்சியின்போது நிறுவப்பட்ட ஏராளமான கோவில்களால் தெரியவருகின்றது.
தலைநகர் : சோழர் படையெழுச்சியின்போது பாழெய்திவிட்ட அனுராதபுரத்தை புதுப்பிக்க எண்னது, புலஸ்தி நகரம் என்ற பொலன்னறுவையை அவர்கள் இராசதானியாக்கினர். இதற்கு அவர்கள் இராஜராஜனது மற்ருெரு பட்டப் பெயரைக் கொண்டு ஜனநாத மங்களம் எனப் பெயர் சூட்டினர். அனுராதபுர காலத்து மன்னர்கள் சிலர் பொலன்னறுவையை ஓர் எல்லைப்புற இராணுவத் தளமாகக் கொண்டு, அங்கேயும் இடையிடையே தங்கி வரலாயி னர். 4-ம் அக்கிரபோதி என்ற மன்னனே முதன் முதலில் பொலன் னறுவையை அரசனது தற்காலிக உறைவிடமாகக் கொண்டவன். இராஜரட்டையின் எல்லை பில், மகாவலிகங்கையைக் கடந்து செல் வதற்குப் பயன்பட்ட துறையொன்றுக்கு (மாகந்தோட்டை) மிக அண்மையில் அது அமைந்ததால், உருகுணையைக் கட்டுப்படுத்து வதற்குப் பொலன்னறுவை மிகவும் ஏற்றதாகக் காணப்பட்டது. சோழரைப் பொறுத்த வரையில், தென்னிந்தியாவிலிருந்து எவ்வித ஆபத்தும் வராது என்ற துணிவு அவர்களுக்கு இருந்தது. உருகுணையைக் கட்டுப்படுத்தவும், அங்கிருந்து வரக்கூடிய படை யெழுச்சியை முறியடிக்கவும் ஏற்ற நிலையமே அவர்களுக்குத் தேவைப் பட்டது இதனலேயே, அவர்கள் பொலன்னறுவையைத் தலைநக ராக்கினர். பின்னர் வந்த சிங்கள மன்னரும் பொலன்னறு வையையே தொடர்ந்து தலைநகராகக் கொள்ளலாயினர்,

đớmụứm.ềuôở av å sin ái, når y Ádh f
அரசியல், பொருளியல் : சோழராட்சியால் இலங்கையின் அரசி யல் முறையிலும் பொருளியலமைப்பிலும் ஏற்பட்ட மாறுதல்கள், முன்னரே புகுந்திருந்தாலும் சோழராட்சிக் காலத்திலேயே இவை வலுப்பெற்றிருத்தல் வேண்டும். ஆட்சிமுறைக் கோட்பாடுகளில், மன்னன் தன்னை ஒரு தெய்வமாகவே மதிக்கும் இயல்பு பொலன்னறு வைக் காலத்தின் போக்காக இருந்ததைப் பின்னர் கவனிப்போம். சோழப் பெருமன்னர்கள் இவ்வகைக் கருத்துக்களைக் கொண்டவர் களாக விருந்ததால், இலங்கை சோழராட்சியிலிருந்த போதே இக்கருத்து இலங்கையிலும் வலுப்பெற்றிருக்க வேண்டும். ஆட்சி யுடன் தொடர்பான வைபவங்களிலும், அரச குடும்பத்தவரின் சடங்குகளிலும் பிராமணர்களின் செல்வாக்கும் இந்துமதக்கிரியை முறைகளும் அதிகரித்திருந்தன. ஒரு பெளத்த மதத்தவனன 1-ம் பராக்கிரமபாகு தன் இளமைக் கர்லத்தில் கூடித்திரிய குலத்தவர் களுக்குரிய பல சடங்குகளை அனுசரித்தமைபற்றிச் சூளவம்சம் குறிப்பிட்டுள்ளது. சோழ மன்னர்களின் முன்மாதிரியைப் பின் பற்றியே, தங்கள் பாதுகாப்புக்கு "வேளைக்கார'ப் படையென்ற ஒரு பிரத்தியேகப் படையை பொலன்னறுவைக் காலச் சிங்கள மன்னர் நிறுவி வைத்திருந்தனர். மன்ன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, பயிற்சிபெற்ற தெரிவுப்படையாக அது இருந்தது. மன்னனது மெய்க்காப்புப் படையாக மட்டும் அப்படை யிருக்காது, தந்த தாதுவைப் பாதுகாப்பதுபோன்ற பணிகளையும் அது பொறுப் பேற்றிருந்தது. பொருளியல் துறையில், குறிப்பாக நீர்ப்பாசனத் துறையில், சோழர் எத்தகைய ஆக்கப் பணியைச் செய்ததாகவும் தெரியவில்லை. அதே வேளையில் தாம் ஆட்சி செய்த காலத்தின் போது, நீர்ப்பாசனங்களை வேண்டுமென்றே அவர்கள் சிதைத் திருப்பர் என்பதும் பொருந்தாக் கூற்ருகும். படையெடுப்பாளராக வன்றி, ஆட்சியாளராக மாறியபின் இலங்கையிலிருந்த நீர்ப்பாசனங் களைப் பேணுதலே அவர்களுக்குப் பகுத்தறிவு புகட்டியிருக்கக்கூடிய நெறியாகும். தம் நாட்டில் பெரும் ஏரிகளையும் அஃ00 கஃளயும் நிறுவியவர்களுக்கு இலங்கையில் அவற்றின் அருமை புலப்படாது போயிருக்கும் எனக் கருத இடமில்லை.
சமயம், பண்பாடு முதலியன : பிந்திய அனுராதபுர காலத்தி லிருந்தே, ஈழத்தின் வரலாற்றில் தென்னிந்தியாவினதும், தமிழர் களினதும் செல்வாக்கு வளர்ந்து வரலாயிற்று. இதற்கு மகுடம் வைத்தது போலவே, சோழரின் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டமை அமைந்தது. சோழராட்சிக் காலத்தில், மேலும் பல தமிழ்க் குடிகளும் படைவீரரும் இலங்கையின் வடபகுதிகளில் குடியேறினர் எனலாம். பொலன்னறுவை, மாதோட்டம், கந்தளாய், பதவியா போன்ற இடங்களிலும் தமிழ்ச் சைவ மக்கள் வாழ்ந்தனர் என்பது

Page 11
d Luffy7 MM - Nu Ffijih
அவ்விடங்களில் அக்காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கிடைத்தின்ம் யால் தெளிவாகின்றது. தமிழர் செல்வாக்கு வலுப்பெற்று வந்ததைப் போலவே, சோழராட்சியில் சைவமும் மேன்மை பெறலாயிற்று. சோழ மன்னர்கள் தமிழ் நாட்டில் சைவத்தை யாதரித்தனராத லால், இலங்கையிற் பல இந்துக் கோவில்கள் நிறுவப்பட்டன. தென்னிந்தியாவில் இலங்கிையின் ஆட்சியாளராக விளங்கிய காலத் தில் சோழர்கள் பெளத்த மதம் மீது பகைமை பாராட்டாது சமயப் பொறையை அனுட்டித்தனர். சோழ மன்னர்கள் பிற சமயங்களைப் பொறுத்தவரையில் சமயப்பொறையைக் கடைப் பிடித்ததாக அறிகின்ருேம். திருக்கோணமலைக்கு அண்மையில் உள்ள வெல்கம் வெஹர என்ற ஒரு விகாரை சோழரின் ஆதரவைப்பெற்று அவர்களால் திருத்திக் கட்டப்பெற்று, "இராஜராஜப் பெரும்பள்ளி' என அழைக்கப்பட்டதாக அங்குள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. இலங்கையில் சோழர் கடைப்பிடித்த சமயக் கொள்கையைப் புலப்படுத்த இக் கல்வெட்டில் வருஞ்செய்தி பயன்படுகின்றது.
கட்டிட சிற்ப முறைகள் : சோழராட்சியின்போது இலங்கையில் நிறுவப்பட்ட சைவக் கோயில்கள், தமிழ் நாட்டில் அதே காலத்தில் இருந்த கட்டிட முறையைப் பின்பற்றியே கட்டப்பெற்றன. பொலன்னறுவையில் இப்போதும் காட்சிதரும் 'இரண்டாம் சிவ தேவாலயம்" என்பதே இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப் பெற்ற வானவன் மாதேவி ஈச்சரம் ஆகும். இது, திருவாலீஸ்வரம் (திருநெல்வேலி மாவட்டம்) போன்ற இடங்களில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்ட நடுத்தர அல்லது சிறிய அளவினதான கோவில்களைப் போன்று அமைக்கப்பட்டது. கந்தளாய், மாதோட்டம் போன்ற பிற இடங்களிலும் கோயில்கள் பல அமைக்கப்பட்டிருந்த போதும் அவற்றின் சிதைவுகள்தானும் இன்று எமக்குக் கிடைக்கவில்லை. ஆனல் அவ்வப்போது கண்டெடுக்கப்படும் வெண்கலச் சிலைகள், ஆங்காங்கே கோவில்கள் இருந்ததை நினைவுக்குக் கொண்டு வருகின் றன. இவ்வாறு எடுக்கப்பெற்ற சிலைகள் நடராஜர், பார்வதி, நாயன்மார் ஆகியோரின் திருவுருவங்களாக வுள்ளன. கொழும்பு அரும்பொருளகத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன. வெண்கலத் தாலான இப் படிமங்கள் (விக்கிரகங்கள்) சிற்பக் கலையின் மகோன்னத எடுத்துக்காட்டுகள் எனக்கலாரசிகர்களால் பாராட்டப் பெற்றவையாகும். இவை யுண்மையில் இலங்கையிலேயே செதுக்கப் பட்டனவா என்பது ஐயத்துக்குரியது. இவையன்றி, கருங்கல் முதலான கற்களிலும் தென்னிந்திய சிற்ப முறையை அனுசரித்து இங்கு சிற்பங்கள் செதுக்கப்படலாயின. இச்சிற்ப முறைகள் பெளத்தக் கட்டிடங்களிலும் பின்னர் தமது செல்வாக்கை ஏற்
படுத்தின.

சோழராட்சியில் இலங்கை: விளைவுகள் 1
சமூகம்- சாதிமுறை: சோழப் பேரரசின் காலத்தில், தென்னிந்
தியாவில் சாதிமுறையானது இறுக்கமடைந்து வந்ததை முன்னரே கவனித்தோம். சோழர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் இத்தன்மை இலங்கையிலுள்ள சாதிமுறையையும் பாதித்திருக்க வேண்டும், சோழராட்சி முடிவெய்தியபின், இலங்கையை ஆண்ட விஜயபாகு பூரீபாத என்ற சிவனுெளிபாத மலைக்குச் செல்லும்பாதை யில் தாழ்ந்த வகுப்பினரின் வழிபாட்டுக்கென ஒரு மேல்தளம்
அமைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு, சோழ
ராட்சி முடிவுற்ற சிறிது காலத்தில் சாதிமுறை நெகிழ்ச்சி யற்றிருந்
தமைக்கு அவர்களின் ஆட்சியின்போது ஏற்பட்ட செல்வாக்கே காரணமாகும்.
இவ்வாறு இலங்கையின் பல்வேறு துறைகளிலும் நிலையான சில மாறுதல்களைச் சோழராட்சி ஏற்படச் செய்தது. இவற்றுள் பண் பாட்டுத்துறை மாற்றங்களே அதிக நிலைபேறுடையன எனலாம் இனி, சோழராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட வரலாற்றை அடுத்த அத்தியாயத்திற் காண்போம்.
பயிற்சி:
1. தென்னிந்தியாப் படம் ஒன்றை வரைந்து, அதில் 1-ம் குலோத்தும்
கன் ஆட்சிக் காலத்தின்போது (11-ம் நூற். இறுதி) இருந்த அரசியல் நிலைமைகளைக் காட்டுக.
2. சோழர் காலக் கட்டிடங்கள் (கோவில்கள்), சிற்பங்கள் ஆகிய வற்றின் புகைப்படங்கள், அல்லது ஓவியங்களைச் சேர்த்து வைக்கவும்.
தேர்வு விஞக்கள் :
1. சோழராட்சியால் இலங்கையடைந்த முக்கிய மாறுதல்களைக் கூறுக
2. சோழப்பேரரசின் சமய, பண்பாட்டுத் துறைச் சாதனைகளைக் கூறுக,
3. சோழப் பேரரசுக் காலத்தில் தென்னிந்தியாவின் பொருளியல்,
சமூக நிலையை விளக்குக.

Page 12
அத்தியாயம் இரண்டு விஜயபாகுவும் விடுதலையியக்கமும்
1. விஜயபாகுவுக்குமுன் விடுதலே முயற்சிகள் i. சோழராட்சி யிலிருந்து இலங்கை விடுதலை பெறல் i. விஜயபாகுவின் ஆட்சியும் சாதனைகளும்
சோழராட்சியில் இலங்கையமர்ந்திருந்தகாலத்தில், நாட்டின் விடுதலையைப் பெறுதற்கான முயற்சிகள் அடிக்கடி எடுக்கப்பெற்று வந்தன. ஆனல், இவை தோல்வியே கண்டன. இறுதியாக, விஜய பாகு நீண்ட காலமாக மேற்கொண்ட போராட்டம் வெற்றியை அளித்தது. சூளவம்சத்தில் விஜயபாகு அதிக முக்கியத்துவம் பெருத போதும் (அத், 56 - 60), அவனுடைய சாதனைகள் உண்மையில் பெரிதும் போற்றுதற்குரியவை. அவனுடைய வரலாற்றை அறிய எமக்கு உறுதுணையாக விருப்பது சூளவம்சமே. இதில் வரும் விபரங் கள் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை அடிப்படையாகக்கொண்ட வையே. சோழர் காலத் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் இவற்றுட் சிலவற்றை உறுதிப்படுத்துகின்றன. விஜயபாகுவின் இரு பொறிப் புக்கள் எமது கவனத்தைச் சிறப்பாகப் பெறவேண்டியவை. அம்ப கமுவக் கல்வெட்டு திருப்பாதக் கோயிலுக்கு (புரீ பாத) விஜயபாகு அளித்த மானியங்களையும், கொடைக%ளயும் எடுத்துக் கூறுகின்றது. இக்கல்வெட்டால், திருப்பாக வழிபாடு இவன் காலத்தில் பெற்றி ருந்த முக்கியத்துவம் பற்றியும், ஆட்சி க் கொள்கை, வரிவிதிப்பு முறை, சமூகநிலை என்பன பற்றியும் சில விபரங்களை உய்த்துணரக் கூடியதாகவுள்ளது. பணுகடுவச் செப்பேடு எனப்படும் இவனுடைய மற்ருெரு முக்கிய பொறிப்பானது, செப்பேடுகளில் செய்யப்பட்ட இலங்கைப் பொறிப்புக்களில் மிகவும் முற்பட்டது. "புதல்-நாவன்" (புத்தராஜா) என்ற பிரதானிக்கு விஜயபாகு வழங்கிய சலுகைகளைக் குறிப்பிட முற்பட்ட இப்பொறிப்பு விஜயபாகுவின் இளமைக்கால விபரங்களை அவனுடைய கூற்றுக்களாகவே கூறுகின்றது. விஜயபாகு அரசனுகும் வரையுள்ள செய்திகள் அவனது வரலாற்றைத் தெளிவு படுத்த உதவுகின்றன

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 13
i. விஜயபாகுவுக்கு முன் விடுதலை முயற்சிகள்.
1070-ல் விஜயபாகு தலைமையில் இலங்கைக்கு விடுதலை கிட்டி யதை யறியுமுன், விஜயபாகுவுக்கு முந்திய சாலத்து விடுதலை முயற்சி களையும், அரசியற் போக்கையும் கவனிப்போம். அனுராதபுர கால இறுதி மன்னனன 5-ம் மகிந்தன் சோழரின் கைதியாகத் தமிழ் நாட்டில் தன் இறுதி நாட்களைக் சழித்து ஈற்றில் 1029- ல் இறந் தான். அதுவரை இலங்கையில் (குறிப் 1ாக உருகுணையில்) விடுதலைக் கிளர்ச்சியானது போதிய உத்வேகம் பெறவில்லை, 5-ம் மகிந்தன் கைதியாக்கப்பட்டபோது, அவன் மகனன காசியப்பன் தப்பியிருந் தான். சிறுவனன காசியப்பன் மிக்க பாதுகாப்புடன் மறைவாக உருகுணயில் வளர்க்கப்பட்டு வந்தான். தந்தை மகிந்தன் மறைந்த பின், உருகுணைப் பிரதானிகள் சிலர், இளவரசனன காசியப்பனைச் சார்ந்து நின்று, சோழரை எதிர்க்க ஆயத்தங்கள் செய்தனர். இத் னிடையே சோழரும் உருகுணைக்குத் தம் படைகளை அனுப்பிக் காசி யப்பனக் கைது செய்ய எண்ணினர். சுமார் ஆறு மாதங்கள் வரை நடைபெற்ற இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. மகுல் மகா விகாரை யென்பதற்கு அண்மையிலுள்ள பலட்டுப்பாண (பலுட்டகிரி) என்ற குன்றின் ஒதுக்கில் தம்மை அரண் செய்து கொண்ட சிங்களப் பிரதா னிகள், சோழருக்குப் பெரும் அழிவுகளை உண்டுபண்ணி அவர்களின் எண்ணத்தைக் கைகூடாதவாறு செய்தனர். இதன் பின், விக்கிரமபாகு என்ற பெயருடன் காசியப்பன் இலங்கை ம ன் ன ன க முடிசூடிக் கொண்டான். ஆனல் உருகுணையில் மட்டுமே அவனது ஆணை ஒடுங்கியிருந்தது. சோழரிடமிருந்து இ ல ங்  ைக  ைய மீட்க அவன் விரும்பி, தன் படைப் பலத்தைத் திரட்டி வரலானன். சோழர் இம் முயற்சிகளை முறியடிக்க முன்வரவில்லை. இதற்குக் காரணம், இதே காலத்தில் தென்னிந்தியாவில் சுயேச்சை பெற வெண்ணிப் பாண்டியரும் சேரரும் நிகழ்த்திய கலகங்களை யடக்கு வதில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை யாகும். இலங்கை யில் நடைபெற்ற விடுதலை முயற்சிகளுக்கும் பாண்டிய சேர இயக் கங்களுக்கும் ஒற் று  ைம யிருந்ததாகச் சிலர் கொள்ளுகின்றனர். விக்கிரமபாகுவுக்கும் சோழருக்குமிடையே போர் நிகழுமுன், அவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான் எனச் சூளவம்சம் கூறுகின் றது. (அத். 56 செய் 6) இதற்கு முரணுக, சோழர் தொடுத்த போரில், விக்கிரமபாகுவின் முடியும் பிற அரசச் சின்னங்களும் அபகரிக்கப்பட்டதுமன்றி, போர்க்களத்தில் அவன் உயிரிழந்ததாக வும் சோழர் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் உண்மை எதுவாகவிருப்பினும், 1041க்கு முன், வெற்றியேதும் காணுது விக் கிரமபாகு இறந்தான் என்பது உறுதி.

Page 13
14 பண்டைய ஈழம்
விக்கிரமபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து, உருகுணையில் உண்டான குழப்பநிலைமை இலங்கை விடுதலை பெறும் நாளைப் பின் போட வைத்தது. சிங்கள எதிர்ப்பியக்கம் தக்க தலைவனைப் பெறது. தவிக்க நேர்ந்தது. சூளவம்ச விவரங்களின்படி, விக்கிரமபாகு மரண மெய்தியதும் கீர்த்தியென்ற ஒரு பிரதானி ஆட்சியைக் கைப்பற்ற, எட்டு நாட்களில் அவனைக் கொன்று மகாலான கீர்த்தி யென்பான் அரசைப் பெற்று மூன்று ஆண்டுகள் ஆட்சி நடத்தினன். சோழ ருடன் நடைபெற்ற போரில் இவன் மடிந்துபோக, பாண்டிநாட்டி விருந்து புகலிடந்தேடிவந்த விக்கிரமபாண்டியன் என்பான் களுத் துறையில் (பா. காலதீர்த்த) இருந்து சிறிதுகாலம் ஆட்சி நடத்தி னன். இதனிடையே, இந்தியாவிலுள்ள அயோத்தியைச் சேர்ந்த மற்ருேர் இளவரசனன ஜகதீபாலன் இலங்கை வந்து, விக் கி ரம பாண்டியன வென்று ஆட்சியைப் பெற்ருன், நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பின், இவனும் சோழருடன் நிகழ்ந்த போரில் மடிந் தான். இதன் பின், உருகுணையின் அரசைப் பெற்றவன் பராக்கிரம பாண்டியன் ஆவான். இவனும் ஈராண்டுகளுள் சோழரின் வாளுக்கு இரையானன். சூளவம்சத்தில் உள்ள இவ் விவரங்களில் வரும் சில பெயர்கள் (மகாலான கீர்த்தி, ஜகதீபால) சோழர் கல்வெட்டுக் களில் இடம்பெறவில்லை. இவற்றுக்குப் பதில் வேறு பெயர்கள் அவற் றில் கூறப்பட்டுள்ளன. இராஜாதிராஜனது 29ம் ஆண்டுக் கல்வெட் டில் வரும் மெய்க்கீர்த்தியில், * குறிப்பிடப்பட்டுள்ள வீரசலாமேகன், மதனராசன் ஆகியவர்களின் பெயர்கள் சூளவம்சத்தில் இடம்பெற வில்லை. வீரசலா மேகன் கன்யா குப்ஜத்திலிருந்து (இப்போதைய கனேஜ்) வந்தவன் என்பதும், மதன ராஜன் ஓர் இராஷ்டிரகூட இளவரசன் என்பதும் கவனிக்கத்தக்கவை, விக்கிரமபாகுவிற்குப் பின் ஏறத்தாழ இருபதாண்டுகள் வரையில் (1029-1050) இவ்வகை நிகழ்ச்சிகளே உருகுணை அரசியலில் இடம்பெற்றன. உருகுணையில் சோழருக்கெதிரான இயக்கம் வலுப்பெறுவதை அவர்கள் தடை செய்வதில் வெற்றி கண்டனர். சிங்களப் பிரதானிகளும் தக்க தலைவனுக்காகக் காத்திருந்தனர். இவ்வாரு ன நிலையிலேயே, விஜய பாகு எனப் பின்னர் அழைக்கப்பட்ட கீர்த்தி அவர்களுக்குத் தலைவ ஞக வாய்த்தான்.அவனுடைய வரலாற்றை இனித் தொடருவோம்.
来 "ஒரு தனித் தண்டால் பெருகட லிலங்கையர்
கோமகன் விக்கிரம பாகுவின் மகுடமும் முன்றனக் குடைந்து தென்றமிழ் மண்புலம் முழுவது மிழந்து எழுகட லீழம் (ம. ப. தொடர்1

a's Jutsab s?sbu8udayub t சோழராட்சியிலிருந்து இலங்கை விடுதலே பெறல்
கீர்த்தியின் இளமை: விஜயபாகுவின் இளமைக் காலப்பெயர் கீர்த்தி என்பதாகும். அனுராதபுர அரசமரபில் உள்ள மானவர்மன் வழிவந்த மொகல்லானனுக்கும் தாடோபதி சன் வழிவந்த லோகிதா வுக்கும மகளுகத் தோன்றியவன் இவன். அரச குடும்பத்தில் பிறந்த ஓர் இளவரசன் சாதாரணமாகத் தன் இளமைக் காலத்தைக் கழிக்க வேண்டிய முறையிலன்றி, காடுகளில் பலவகை இடர்களின் மத்தி யிலும், பகைவர்களுக்கஞ்சிய வண்ணமும் கீர்த்தி தன் இளமைப் பருவத்தைக் கழித்தான். இவன் தந்தை ஓர் இளவரசனுகவிருந் தும் ஆட்சியதிகாரமெதுவும் அற்றவனுகவேயிருந்தான். பராக்கிரம பாண்டியனுடைய மரணத்துக்குப் பின், லோக என்ற படைத் தலை வன், கதிர்காமத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு உருகுணை யின் ஆட்சியலுவல்களைக் கவனித்து வந்தான். அரச மரபில் வராத ஒருவனுக்கு உருகுணையில் தானும் பூரண ஆதரவு இருந்திருக்க முடி யாது. 2ம் இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தி யொன்றில் அவன் இலங்கையில் மானபரணன் புதல்வரிருவரையும், கலிங்கத்தைச் சேர்ந்த வீரசலாமேகனையும் வென்றதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இவர் கஃாப்பற்றிய குறிப்புக்கள் இலங்கை யாதாரங்களில் இல்லை. லோக என்பவனைவிட வேறும் ஆட்சியாளர் ஒரே காலத்தில் உரு குணையில் இருந்திருத்தல் கூடும்.
புக்கவிலங் கேச ஞகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்ன தாகிய கன்னக் குச்சியிலும் ஆர்கலி ஈழஞ் சீரிதென் றெண்ணி உளங்கொள் நாடுதன் னுறவொடும் புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து கவ்வையுற் ருேடக் காதலி யொடுந்தன் தவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழி லுழந்து வெங்களத் துலந்தவச் சிங்களத் தரைசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துரைகொ ஸ்ரீழத் தரைச ஞகியசீர் வல்லவன் மதன ராசன் எல்லொளித் ܗ ܗ ܚ ܗ .ܙ. .ܘ76brGܗ̄Q ܪܵguqܬpܛ) ܂ ܐܶ600ܣܐ-5Lܬ݂ܐ

Page 14
26 Ja 8 - upb
புத்தராஜனது ஆதரவு 1 மலேநாட்டில் ஒபநrகேக்கு அண்மையில் ஹ"ணுவ லப் பகுதியில், லோகவுடன் முரண்பட்ட புத்தராஜன் என்ற மற்ருெரு தலைவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டி யிருந்தான். விஜயபாகுவின் பகைடுவச் செப்பேட்டுப் பட்டயத்தில், தன் தந் தைக்கும் குடும்பத்தினர்க்கும் தனது இளமைக் காலத்தில் இந்தப் புத்த ராஜனே பாதுகாப்பு நல்கி ஆதரவு தந்ததாக விஜயபாகு குறிப் பிட்டுள்ளான். மலையரட்டையின் எல்லைப் புறத்தில் கீர்த்தியும் அவன் தாய் தந்தையரும் வாழ்ந்து வரும் நாளில், அவன் வில் வித் கையிற் சிறந்து விளங்கியதாகக் கூறப்படுகின்றது. புத்தராஜன் மேற் கொண்ட போர் நடவடிக்கைகளிலும், கீர்த்தி பங்குகொண்டிருத் தல் கூடும். புத்த ராஜனது ஆதிக்கம் பரவி வந்ததை லோக தடுக்க முயன்றும், :ெ1ற்றி காணவில்லை. புத்த ராஜனுடன் இப்போது தேவ மல்லன் என்ற மற்ருெரு படைத் தலைவனும் சேர்ந்துகொண்டான். மலைநாட்டில் மட்டுமன்றி, பஞ்ச யோஜன (பஸ்துன் கோறளை) போன்ற பிற மாவட்டங்களிலும் புத்தராஜனுக்கும் கீர்த்திக்கும் ஆதரவு பெருகி வந்தது.
உருகுணைக்குக் கீர்த்தி அரசனுதல் லோக என்பவன் சில ஆண்டு களின் பின் இறந்துபோக, "கேசதாது காசியப்பன் என்பான் கதிர் காமத்தில் ஆட்சியாளனனன். பொலன்னறுவையில் இருந்த சோழப் பிரதிநிதி, புதிய ஆட்சியாளனுக் கெதிராகப் படைகளை யனுப்பி வைத் தான். இப்படைகளைக் காசியப்பன் தோற்கடித்தான். ஆனல் சோழருடன் நடைபெற்ற போர் முடிவுற்றதும், காசியப்பன் புத்த ராஜனுடைய படைகளை எதிர்நோக்க வேண்டியவனுக விருந்தான். கதிர்காமத்தைவிட்டு வெளியேறிய காவியப்பன், கதிரங்கணி யென்ற இடத்தில் தனது அரணை நிறுவி அதைத் தன் உறைவிடமாகக் கொண்டான். புத்த ராஜனது படைகள் அ ங் கும் அவனை த் தொடர்ந்து, அவனை வாளுர் கிரையாக்கின. இவ்வாருக, புத் த ராஜனது உதவியுடன் கீர்த்தி காசியப்பன யகற்றிவிட்டு, தனக்கு உருகுணையின் ஏனைய பகுதிகளில் இருந்த எதிர்ப்பையும் ஈராண்டு களிற் புறங்கண்டு, உருகுஃ00 முழுவதையும் தன் ஆணையை ஏற்கும் படி செய்தான். 1055 அளவில் விஜயபாகு என்ற பெயருடன், கதிர்காமத்திலிருந்து உருகுணேயின் அரசனுகக் கீர்த்தி மகுடந் தரித் தான். அப்போது அவனுக்குப் பதினெட்டு வயதே நிறைந்திருந்தது. எனினும், எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசனுக விளங்கும் தன்மை கள் அவனிடத்தே காணப்பட்டன. தன் ஆதரவாளரை வசீகரிக்கும் இயல்பும், அல்லல்களை எளிதாக்கி அவற்றைத் தாங்கும் திறனும், நம்பிக்கை தரும் வகையில் தலைமைப் பதவியை வகிக்கும் ஆற்ற லும் அவனிடத்தே அமைந்திருந்தன. சோழராட்சியினின்றும் ஈழத்தை விடுவிக்கும் பெரும்பணி அவனைக் காத்திருந்தது.

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 7
சோழர் தாக்குதல் : விஜயபாகு கதிர்காமத்தில் முடிசூடிய செய்தியை அறிந்த சோழ அரசப் பிரதிநிதி, உடனே பொலன்னறு வையிலிருந்து ஒரு படைப் பிரிவை உருகுணைக்கு அனுப்பிவைத் தான். சோழப்படை கதிர்காமத்தை நோக்கி முன்னேறியபோது, விஜயபாகு அதை எதிர்கொள்ளாது, கதிர்காமத்தை விட்டு வெளி யேறினன், கதிர்காமத்துக்குள் எதிர்ப்பின் றிச் சென்ற சோழப் படை அங்கே பல அழிவுகளை யுண்டுபண்ணிவிட்டுத் திரும்பியது. விஜயபாகு முதலில் மலையகத்தில் மறைந்து வாழ்ந்து விட்டுப் பின் னர் சிப்பத்தலகவுக்குச் சென்று அங்கே தங்கினன். உருகுணையில் தனது ஆட்சியை நிலைப்படுத்திக்கொண்ட விஜயபாகு, பொருளியல் வளத்தைப் பெருக்குவதிலும் ஈடுபட்டான். குறிப்பாக அவனது கட்டளைப்படி பர்மாவுக்கு வர்த்தகக் குழுவினர் ஏராளமான திரவி யங்களுடன் சென்று அவற்றைக் கொடுத்து, அங்கிருந்து பல கப்பல் களில் வணிகப் பொருட்களைக் கொணர்ந்தனர். இதனல் விஜய பாகுவின் வருமானம் கணிசமான அளவு அதிகரித்ததாகக் கூறப் படுகின்றது. பொருளியலையும், படை வலியையும் பெருக்கி வந்த விஜயபாகு, தனது அரசிருக்கையை அம்பலாந்தோட்டைக்கு அணித் தாகவுள்ள தம்பலகாமத்துக்கு மாற்றிக்கொண்டான்.
இராஜரட்டைக் கலகம் : உருகுணையில் தனது ஆட்சியை நிறுவித் தன் பலத்தையும் வளர்த்துக்கொண்ட விஜயபாகு சோழராட்சியில் இருந்த இராஜரட்டையையும் தனது ஆணையின் கீழ்க் கொண்டு வருதற்கு ஏற்ற வாய்ப்புக்காகக் காத்திருந்தான். அவ்வேளையில், இராஜரட்டையில் சோழராட்சிக் கெதிராக 1065 அளவில் கலகங் கள் மூண்டன. விஜயபாகுவின் தூண்டுதலால் இவை நிகழ்ந்திருக் கலாம்; அன்றேல் இராஜரட்டை மக்கள் அந்நியராட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்ற வேணவாவால் விஜய பாகுவின் ஆயத்தங்களை யறிந்து கலகஞ் செய்திருக்கலாம். சோழ அதிகாரிகளுக்கு வரிகளைக் கொடுக்க மறுத்து மக்கள் பெருங் கலவரங் களைச் செய்யலாயினர். இராசரட்டையில் உண்டான இக் கலவரங் களைப்பற்றிய செய்தி சோழப் பேரரசனன வீர ராஜேந்திரனுக்கு எட்டியதும், அவன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப் பி வைத்தான், இராஜரட்டைக் கலகத்தை இரக்கமற்ற முறையில் அடக்கியபின் சோழப்பட்ையானது உருகுண சென்று விஜயபாகு வுடன் சமரிட்டது. விஜயபாகு தனது இக்கட்டானநிலையை உணர்ந்து, பலட்டுபாணவில் உள்ள மகுல் மகா விகாரை என்ற கு ன் று த் தொடரில் தன் அரணை யமைத்து, சோழப் படையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். விஜயபாகுவை அடக்கமுடிவு செய்த சோழப் படை அவனை அங்கே சூழ்ந்து சுொண்டது குன்றுத் தொடரின் சிறப்பியல்புகளை வாய்ப்பாகக் கொண்ட போர் முறையை விஜய பாகு கையாண்டதால் சோழப் படை பெருஞ்சேதமுற்று பின்வாங்
3.

Page 15
Lu 6837 GB) - Lu Fpb
கியது. அதைப்பின் தொடர்ந்த விஜயபாகு, அதன் தளபதியை தம்பவிட்டி யெனுமிடத்திற் கொன்றதாகத் தெரிகின்றது, இவ் வெற்றியைத் தொடர்ந்து, பொலன்னறுவைக்குத் தன் படைகளுடன் விரைந்த விஜயபாகு அதைக் கைப்பற்றினன். ஆனல் வீரராஜேந் திர சோழனல் அனுப்பிவைக்கப்பட்ட உதவிப்படைகள் மாந்தையி லிருந்து அனுராதபுரத்துக்கு முன்னேறிச் சென்றபோது, விஜயபா குவின் "சேனபதி தலைமையில் முக்கிய படைப் பிரிவொன்று அதை முன்னேற விடாது தடுக்க முயன்று தோல்வியுற்றது. சோழப்படை யானது பொலன்னறுவை வரை சென்றது. இதற்கு முன்பாகவே, விஜயபாகு பொலன்னறுவையிலிருந்து, உருகுணையை நோ க் கி த் தென்மேற்காகப் பின்வாங்கிச் சென்ருன் , சோழப்படைத் தலைவன் தன்னைப் பின்தொடர்வதை யறிந்து வகிரிகலை (வாதகிரி) யென்ற குன்றை யடைந்து அதை அரணுக்கிக் கொண்டான். சுமார் மூன்று மாதங்கள் வரையில் சோழப்படை இவ்வரணை முற்றுகை செய்து, பின்னர் கைவிட்டதாகத் தெ ரி கி ன் ற து, 1067-ம் ஆண்டைச் சேர்ந்த வீரராஜேந்திரனது திருமுக்கூடற் கல்வெட்டில் அவ ன் எய்திய இலங்கை வெற்றிபற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
உருகுணையிற் கலகம்: சோழரிடத்து விஜயபாகு எய்திய தோல்வி விஜயபாகுவுக் கெதிரான கலகங்களை உருகுயிணையிலுந் தோற்றுவிக் கத் தூண்டுதல் அளித்தது. புத்தளைப் பகுதியில் கலகத்தைத்தொடக் கியவன், கேசதாது காசியப்பனது உடன்பிறந்தாளுவன். தன் தமை யனைக் கொன்றமைக்காக விஜயபாகுவைப் பழிவாங்க எண்ணியே அவன் இக்கலகத்தைத் தொடக்கி வைத்தான். கலகம் அம் மாவட் டம் முழுவதும் பரவி வந்தது. கலகத்தை யடக்க விஜயபாகு தன் படையைக் கொண்டு சென்றபோது, கலகத் தலைவன் விஜயபாகு வின் படைக்கு ஈடுநிற்க முடியாது. கப்பியோடினன். கலகத்தையடக் தியபின் தம்பலகாமத்தில் ஓர் அரஃண நிறுவி அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தான், பின்னர் வளவை கங்கைக்கு அண்மைவில் மஹா நாகஹால என்ற நகரத்தை தன் புதிய தலைமைப்பீடமாகக் கொண் டான். அங்கிருந்து, தன் பாலன அமைப்பைச் சீர்ப்படுத்தி, படைப் பலத்தை நன்னிலைக்கு கொணர்ந்தான். வீரராஜேந்திர சோழன் 1067 க்குப்பின் மேலைச் சாளுக்கியருடன் இடையழுப் போரில் ஈடு பட்டிருந்ததால் விஜயபாகு போர் ஆயத்தங்களைச் செய்வதற்கான அவகாசத்தை பெற்ருன்.
சோழப் பேரரசின் நிலைமைகள் : வீரராஜேந்திரனது மரணத்தைத் தொடர்ந்து 1070-ல் அரசனுன அதிராஜேந்திரன் ஒருசில மாதங் களுக்கே ஆட்சி செலுத்தியதையும் அவனுக்குப் பின் சோழ அரசை பெற நேர் உரிமையாளன் இல்லாதிருந்தமையால் வேங்கி யை ச் சேர்ந்த இளவரசனுன இராஜேந்திரன், குலோத்துங்கன் என்ற பட்

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 19
* ་ འོ- སྒད་ مبسم
} 'مپ
\auf &ኧ?}ዘስmi 八pbr*H出Q丝Qy
نی
விஜயபாகுவின் படையெழுச்சிகள்

Page 16
20 பண்டைய ஈழம்
டப் பெயருடன் சோழ அரசனனதையும் முந்திய பகுதியிற் படித் தோம். சோழ அரசைக் குலோத்துங்கன் பெற்றதை விரும்பாத மேலைச் சாளுக்கியனன 6 ம் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனைப் பகைத்துப் போர் தொடுக்க ஆயத்தமானன். குலோத்துங்கனும் போரில் வல்ல விக்கிரமாதித்தனை வெல்ல, வேண்டிய ஆயத்தங்க ளைச் செய்து வரலானன். இவ்வாருன வேலைகளில் அவன் சிரத்தை காட்டியதால், பேரரசின் தொலைப்பகுதிகளில் தன் கவனத்தைச் செலுத்த இயலாதவனக இருந்தான். பேரரசின் ஒருபகுதியான வேங்கி கைகய மன்னனெருவனது தாக்குதலுக்கு இலக்காகியது. இவ் வேளையிலேயே இலங்கையைச் சேர்ந்த விஜயபாகுவும் சோழராட் சியை முடிவுக்குகொண்டு வருவதில் ஈடுபடலானன்.
விஜயபாகுவின் படையெழுச்சி, விஜயபாகுவின் இறுதிப் பெரும் படையெழுச்சி, ஒரு திட்ட அமைப்பை கொண்டு நடத்தப்பெற்ற தாகச் சூளவம்ச விவரங்கள் உணர்த்துகின்றன. முந்திய படை யெடுப்பு தந்த தோல்வியை மனதிற்கொண்டு மிக்க பாதுகாப்புடன் தன் திட்டத்தைச் செ1ற்படுத்த அவன் முற்பட்டான். இருமுனைத் தாக்குதலை நிகழ்த்த, இரு படைப் பிரிவுகளைத் தகுதிவாய்ந்த தளபதி களின் தலைமையில் அனுப்பினன், மேற்குப் புறமாக தத்கிணதேசத்தி னுரடாகச் சென்ற ஒரு படைவரிசை முகுன்னரு, படத்தலை, வாபி நகரம், புத்தகாமம், திலகுல்ல, மண்டகல்ல முதலான இடங்களி லுள்ள எதிர்ப்பைப் புறங்கண்டு, ஈ ற் றி ல் அனுராதபுரத்தையும் வென்றது. பின்னர், மாந்தையை நோக்கி அப்படை முன்னேறியது. சோழரின் உதவிப்படை வரின், அதனைத் தடுப்பதே அவ்வாறு சென்ற தற்கு நோக்கமாதல் வேண்டும். கிழக்குப் புறமாகச் சென்ற இரண் டாவது படைவரிசையானது, சக்காமத்திலும், மற்றும் இடங்களிலும் இருந்த படை மு காங் க ஃா முறியடித்துப் பொலன்னறுவையை நெருங்கியது. அப்போது படைத் தளபதிகள் விஜயபாகுவை விரை வாக வந்து பொலன்னறுவையைத் தாக்கும்படி செய்தி அனுப்பினர். விஜயபாகு சோழரை வெல்லும் வேளை வந்ததை யுணர்ந்து தன் முழுப்படைப் பலத்துடனும் மகாநா கஹ"ல விலிருந்து புறப்பட் டான். மஹியங்கணையை அடைந்ததும், அங்கே சிறிது காலம் தரித் திருந்த பின் பொலன்னறுவையை நோக்கி விஜயபாகு தன் படை யுடன் மஹாவலி கங்கையோரமாக முன்னேறினன். கிழக்குப் புற மாகச் சென்றிருந்த படையைப் பொலன்னறுவைக்கு அண்மையிற் சந்தித்து, பொலன்னறுவையைக் கைப்பற்ற ஆயத்தங்களைப் பூர்த்தி செய்தான். சோழப் படை வீரர்கள் முதலில் நகரின் வெளியே விஜய பாகுவின் படையினரை எதிர்த்துப் போரிட்டுத் தோல்வி யெய்தி யதும் நகரினுட் புகுந்து பலங்கொண்ட மட்டும் நகரினைப் பாது காப்பதில் முனைந்தனர். ஒன்றரைத் திங்களாக முற்றுகை நீடித்

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 2.1
தும், பொலன்னறுவையை அடிப்படுத்துவது விஜயபாகுவின் படைக் குச் சாத்தியமாகவில்லை. ஈற்றில் விஜயபாகுவின் தளபதிகள், நகர்ச் சுவர்களைத் தகர்த்து நகரினுட் புகுந்து, சோழப் படையை அடிப ணிய வைத்தனர். பொலன்னறுவையைக் கைப்பற்றியபின் விஜய பாகு, தன் முன்னேரின் தலைநகரான அனுராதபுரத்தினுள் Nபேரு வகையுடன் புகுந்து, தன் வெற்றிப் பெருமிதத்தைக் கொண்டாடி னன். 1073-ல் இலங்கை வேந்தனுக அனுராதபுரத்திலேயே முடி சூடிக் கொண்டான். அதிராஜேந்திரனுடைய கல்வெட்டுக்களே இலங்கையிற் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிந்திய காலச் சோழர் கல்வெட்டுக்கள் என்பதைக் கொண்டும், விஜயபாகு 1070 அளவில் ஆட்சி செய்யத் தொடங்கியமை உறுதிப்படுகின்றது.
வெற்றிக்குக் காரணங்கள்: இலங்கைக்கு விடுதலையைத் தேடித் தந்த பெருமன்னர் வரிசையில் விஜயபாகுவும் இடம்பெற்று, இலங்கை மக்களால் என்றென்றும் போற்றப்படும் பெருமைக்குரிய மன்னன் ஆகியதில் ஐயமில்லை. அரசமரபில் வந்தவனக விருந்தும், எந்த அரசுக்கும் உரிமை படைத்தவனுக அவன் பிறக்கவில்லை. பிளவுபட்டிருந்த உருகுணையைத் தன் முயற்சியாலும் சலியா உழைப் பாலும், வீரத்தாலும் ஒன்றுபட வைத்து, அதைத் தனது ஆணைக் குக் கீழ்க் கொண்டுவந்தான். நம்பிக்கையையும் தக்க தலைவனையும் இழந்து நின்ற சிங்கள விடுதலையியக்கத்துக்கு விஜயபாகு அவற்றை ஈந்து, நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தான். தோல்வி கள் எய்திய விடத்தும் தளராது உழைத்த மையும், வாய்ப்புக்கள் கிடைத்தபோது தக்கவாறு பயன்படுக்தியமையும் அவனது வெற் றியை உறுதிப்படுத்தின. 1070-ல் சோழ அரசியலில் ஏற்பட்ட விருத்திகளும் விஜயபாகுவுக்குச் சாதகமாக அமைந்தன. படையுதவி சோழ நாட்டிலிருந்து வரமுடியா திருந்தமையும் முன்னர் நிகழ்ந்த சாளுக்கியப் போர்களில் சோழர் தம் படைப்.பலத்தை விரயஞ் செய்திருந்தமையும் விஜயபாகுவுக்கு உதவியாக இருந்தன. படை யெடுப்பைத் திட்ட அமைப்புடன், தக்க பாதுகாப்புடன் மேற்கொண் டதும் விஜயபாகுவின் வெற்றிக்கு வழிகோலுவதாக அமைந்தது. ஒரு படைப் பிரிவைச் சோழரின் உதவிப் படையைத் தடைசெய்ய வும், பொலன்னறுவையிலிருந்து பின்வாங்க முற்படும் படையைத் தவிக்கச் செய்யவும் விஜயபாகு அனுப்பிவைத்தமை போர்த் தந்தி ரங்களை அவன் அறிந்திருந்திருந்தமையைக் காட்டுகின்றது. விஜய பாகு இலங்கை முழுவதற்கும் அரசனுனதால், எழுபத்தேழு ஆண்டு களாக நிலவிய சோழராட்சியிலிருந்து இலங்கை விடுதலைபெற்று, மேலும் சில நூற்ருண்டுகளுக்குச் சுதந்திர நாடாகத் திகழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது,

Page 17
22 பண்டைய ஈழம்
i. விஜயபாகுவின் ஆட்சியும் சாதனைகளும்
நாட்டுக்கு விடுதலையை அளித்த பின், விஜயபாகுவை எதிர்நோக் கிய பணிகள் மிகவும் கடினமாகவே இருந்தன. ஒரு நாற்ரு?ன்டுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டுக் குழப்பங்கள், போர்கள் என்ப வற்றைத் தொடர்ந்து எழுபத்தேழு ஆண்டுகள் அந்நியர் ஆட்சியும் இடம் பெற்றதால், நாட்டைப் பழைய சுபீட்ச நிலைக்குக் கொண்டு வருதல் டகீரதப் பிரயத்தனமாகத் தென்பட்டது. முன்னர் இடம் பெற்ற படையெடுப்புக்களின் போதும், போர்களின் போதும் பொரு ளியல் வளர்ச்சியின் உயிர் நாடிகளாக விளங்கிய நீர்ப்பாசனங்கள் இயங்காது போயின. சமயத் துறையிலும் இதே போன்ற நிலையே காணப்பட்டது. பெரும்பாலான விகாரைகளும், மற்றைய சமயக் கட்டிடங்களும் பாழெய்தியிருந்தன. அமைதியும், ஒழுங்கான ஆட்சி யும் நிலவினுலே, பொருளியல், சமய, சமூக வளர்ச்சிகளில் மன்னர் கள் கவனஞ் செலுத்த முடியும். நிலைபேருனதும் பலமுள்ளதுமான பாலனத்தை உள்நாட்டில் அமைப்பதும், நாட்டின் பா து க TL புக்கு உறுதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதலும் விஜய பாகுவின் உடனடிக் கவனத்தைப் பெற்ற பெரும் பணிகளாகும். தான் அரும்பாடுபட்டு நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்தி ரத்தைப் பேணிக்காத்து, பொருளியல், சமூக, சமயத்துறைகளில் முன்னேற்றங்களை உறுதிப்படுத்தி நாட்டின் பெருமைக்கும் சுபீட் சத்துக்கும் உழைத்து வெற்றி கண்டதால் விஜயபாகுவை ஒரு பெருமன்னனக் வரலாறு கணித்துள்ளது.
தலைநகர் தெரிவு: விஜயபாகு 1070-ல் இலங்கை முழுவதையும் ஆளும் உரிமையைப் பெற்றபோதும் 1073 அளவிலேயே தனது முடிசூட்டு விழாவை நடத்தினன். அனுராதபுரம் பாழெய்தி யிருந் ததால், கன் முடிசூட்டு விழாவை நடத்துவதற்குரிய கட்டிடங்களை அங்கே நிறுவச் செய்து, பின்னரே அவ் விழாவைப் பெருவிழாவாக நடத்தினன். முடிசூட்டுவிழா அனுராதபுரத்தில் நடாத்தப்பட்ட போதும், அவன் அங்கு அதிக காலம் தங்கியிருக்கவில்லை. சோழரால் தலைநகராக்கப்பட்ட பொலன்னறுவையையே விஜயபாகுவும் இராச தானியாகக் கைக்கொண்டான். பழைய தலைநகர் பாழெய்தியமை மட்டும், பொலன்னறுவையை தெரிவு செய்தமைக்குக் காரண மாகாது. விஜயபாகுவின் தேவைகளுக்கும் பொலன்னறுவை ஏற் புடையதாகக் காணப்பட்டது. பொலன்னறுவை மகாவலி கங்கைக்கு அண்மையில் அதன் பிரதான கடவை யொன்முன மாகந்தோட்ட வைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒர் உபாய நிலையில் அமைந்திருத்த மையே, அதைத் தலைநகராகக் கொண்டமைக்கு முக்கிய காரணமா கும். தென்னிந்தியாவிலிருந்து படையெழுச்சி வரலாம் என்ற அச்சத் துடன் விஜயபாகு ஆட்சி செலுத்தினன். அவ்வாறு நிகழின், அனு

6’ğuUT (38), th விடுதலையியக்கமும் 23
ராதபுரத்தைக் காட்டிலும் பொலன்னறுவை போதிய பாதுகாப் பைத் தர ஏதுவாக அமைந்திருந்தது. மாந்தைக்கு வெகு தொலைவில் பொலன்னறுவை யமைந்திருந்ததால், தென்னிந்தியப் படைகள் இறங்கியதை அறிந்தபின், பாதுகாப்பைப் பலப்படுத்தவும், தேவை யேற்படின் உருகுணக்கு விஜயபாகு தப்பியோடவும் அது ஏற்றதாக விளங்கியது. விஜயபாகுவைப் பொறுத்தவரையில், இதுவே முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும். உருகுணே முதலான தொலை மாகாணங்களையும் மத்திய அரசின் நேர் அதிகாரத்தின் கீழ்க் கட்டுப் படுத்தப் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் கருதியமையும் பொலன்னறுவையின் தெரிவுக்கு ஒரு காரணமாகக் கூறப்படும்.
வேளைக்காரர் கலகம் : விஜயபாகுவின் ஆட்சி நாற்பது ஆண்டுகள் வரை நிலவியது (1070-1110). உருகுணயின் ஆட்சியாளனன ஆண் டிலிருந்தே அவனது ஆட்சியாண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவ னுடைய நீண்ட ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் அமை தியே நிலவியது. ஒரு சில கலகங்கள் நடைபெற்று விஜயபாகுவால் அடக்கப்பட்டன இவற்றுள் முதலிரு கலகங்களும் அவ்வளவு முக்தி யம் வாய்ந்தவையல்ல. இலங்கை முழுவதற்கும் விஜயபாகு அரசனுன போது, ஆதி மலையன் எனற தளபதி பொலன்னறுவைக்கு அண்மை யில் ஒரு கலகத்தைத் தொடக்கி வைத் தான். இக்கலகம் இலகுவில் அடக்கப்பட்டது. 1074 அளவில் மூண்ட மற்ருெரு கலகத்தைத் தொடக்கியவர்கள் உயர் பதவிகளில் இருந்த மூன்று சகோதரர் களாவர். இந்தியாவுக்கு ஒடி அங்கு ஆதரவைத் திரட்டிவந்து உருகுணே, மலேயரட்டை, தக்கிணதேசம் ஆகிய மாகாணங்களில் கலகங்களைத் தொடக்கி வைத்தனர். இக் கலகமும் அடக்கப்பட்டு அதன் தலைவர்களும் தண்டிக்கப்பட்டனர். முதலிரு கலகங்களைப் போலன்றி, 1035-ல் ஏற்பட்ட வேளைக்காரர் * கலகமானது, பார துர ரமான விளைவுகளே உடையதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மாகும். சூளவம்ச விவரப்படி, சாளுக்கிய மன்னனும், சோழ வேந்தனும் அனுப்பிய தூதுவர்கள் விலேயுயர்ந்த வெகுமதிகளுடன் விஜயபாகுவைச் சந்தித்தபோது, அவன் பெரிதும் மகிழ்ந்து, முதலிற்
* 1-ம் இராஜேந்திர சாழன் இலங்கைக்குப் படையெடுத்து வந்த சா லத்தில் அவனுடன் வந்ததாகக் கல்வெட்டுக்களிற் கூறப்படும் வேளைக்காரப் படையினர் அரசனே ப் பாதுகாக்க உறுதி பூண்ட, நம் பிக்கை வாய்ந்த ஒரு மெய்க்காப்புப் படையினராவர். சோழர் முன் DIT 3ífl:Muut பின்பற்றி, விஜயபாகுவும் அவன் பின்னேரும் வேளைக் காரப் படையைத் தமது சேவையில் வைத்திருந்தனர். சோழ அர சர்கள் தெலுங்கரையே தம் வேளைக்காரப் பிரிவில் வைத்திருந்தனர். அண் தப்போலவே, சிங்கள மன்னரும் தமிழ் வீரர்களையே அப் பிரி வில் வைத்திருந்தனர். உள்நாட்டுக் கலகங்களில் இப்பிரிவினர் பக் கஞ் சாய்த லேத் தடுக்ேேவ, இவ்வாறு பிறநாட்டுக் கூலிப் படையின ரைச் சேவைக் கமர்த்தினர் போலும். வேளைக்காரப் படையினர் விஜயபாகுவின் காலத்திலிருந்து மேலும் ஒரு பூாற்றுண்டுவரை இலங்கை மன்னர்களின் சேவையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 18
24 பண்டைய ஈழம்
சாளுக்கியனது தூதுவரை அனுப்பிவைத் தான். அவ்வாறு திரும்பிய தூதுவருடன் சிங்களத் தூதுவரும் தேர்ந்த பரிசுகளுடன் கூ டி ச் செல்லலாயினர். சோழ நாட்டினுள் சிங்களத் தூதுவர் புகுந்த போது, சோழர் அவர்களுடைய காதுகளையும் மூ க்கு களை யும் அறுத்துத் திருப்பி விட்டனர். இத் தண்டனைக்கு ஆளான சிங்களத் தூதுவர், தம் மன்னனிடம் சென்று தமக்கு நேர்ந்ததை எடுத்துரைத் தனர். சோழ அரசன் மீது தணியாத கோபங்கொண்ட விஜய பாகு, தமிழ்த் தூதுவரைத் தன் அவைக் களத்துக்கு அழைத்து, அவர்களுடைய அரசனுக்குக் கூறவேண்டிய வஞ்சினத்தை மொழிந் தான். தனிச் சம"ருக்கோ, அன்றி இருவருடைய படைப்பலத்துடன் கூடிய போருக்கோ தான் ஆயத்தமாக இருப்பதாகத் தூதுவர்க்குக் கூறி, அவர்களைப் பெண்களின் உடையைத் தரிக்கச் செய்து அனுப் பினன். பின்னர் தன் படையுடன் அனுராதபுரஞ் சென்று மட்டி காவாட தீர்த்தத்துக்கும் மகாதீர்த்தத்திற்கும் தன் தளபதிகள் இருவரை அனுப்பி, சோழ நாட்டுக்கு ஒரு படையெடுப்பை மேற் கொள்வதற்கு ஆயத்தங்களை நிறைவேற்றும் படி பணித்தான். அவ் வேளையில், வேளைக்காரப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர், படை யெடுப்பிற் கலந்து கொள்ள மறுத்துக் கலகஞ் செய்தனர். சிங்களத் தளபதிகளிருவரைக் கொன்றது மன்றி. புலத்திநகரத்தை (பொலன் னறுவையை) அடுத்த பகுதியைச் சூறையாடினர். தலைநகரில் அரச g) 65 - தங்கையையும் அவளுடைய மூன்று புதல்வர்களையும் கைப் பற்றி, அரசமாளிகையையும் தீக்கிரையாக்கினர். இவ்வாறன அழிவு வேஜலகளில் வேளைக்காரப் படையினர் ஈடுபட்டபோது, விஜயபாகு தலைநகரை விடுத்துத் தக்கிண தேசத்துக்கு விரைந்து வாதகிரி (வாதிரிகலை) என்ற மலையரணில் தன் திரவியங்களை மறைத்துவிட்டு, ஒரு படையைத் திரட்டி உபராஜாவான வீரபாகுவுடன் பொலன் னறுவையை அடைந்தான் வேளைக்காரப் படையினர் விரைவில் விஜயபாகுவால் தோற்கடிக்கப்பட்டனர். வேளைக்காரத் தளபதிகள் கைப்பற்றப்பட்டுத் தீயிலிடப்பட்டனர். இவ்வாறு அடக்கப்பட்ட வே%ளக்காரப் படைப்பிரிவு, பின்னர் அரசனுக்கு விசுவாசமாக நடந்துகொண்டது. சூளவம் ச விவரங்களில், சோழ அரசனுன குலோத்துங்கன் இக் கலகத்தைத் தூண்டியதாகக் குறிப்பு எதுவும் இல்லை. விஜயபாகுவின் ஆட்சி முடிவெய்திய காலத்தைச் சேர்ந்த வேளைக்காரர் பொறிப்பு (பொலன்னறுவையில் தமிழில் உள்ள கல்வெட்டு) ஒன்றில் தந்ததாதுக் கோவிலைப் பாதுகாக்க வேளைக் காரப் படைப் பிரிவினர் செய்துகொண்ட பொருத்தனை குறிப்பிடப் பட்டுள்ளது. கலகத்தின் பின்னரும், பொறுப்புள்ள கருமங்களை யாற்ற வேளைக்காரப் பிரிவுவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 26
அயல்நாட்டுத் தொடர்புகள் : விஜயபாகுவின் ஆட்சியில் ஏற்பட்ட உள்நாட்டு அபிவிருத்திகளை நோக்குமுன், அவனுடைய அயல் நாட் டுத் தொடர்புகளின் சில இயல்புகளைக் கவனிப்போம். சோழ அரசு இலங்கைமீது மீண்டும் ஒரு தாக்குதலை மேற்கொள்ளாது உறுதி செய்வதும், அவ்வாறு தாக்க நேர்ந்தால் இலங்கைக்கு உதவ முன் வரும் நட்பு நாடுகளை வைத்திருப்பதும் விஜயபாகுவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலமே இலங்கையின் சுதந்திரத் தைக் காக்க முடியுமென்பதை அவன் உணர்ந்திருந்தான். சோழ ரால் முன்னர் கைது செய்யப்பட்ட அயோத்தி ஜகதீபாலனது மக ளான லீலாவதியைத் தன் பட்டத்தரசியாக ஏற்றுக்கொண்ட விஜய பாகு, பின்னர் (பூரீவிஜய அரசைச் சேர்ந்த) கலிங்க இளவரசியான திரிலோக சுந்தரியைத் தன் இரண்டாவது மகிஷியாக்கினன். கலிங் கத்துக்கும் (பூரீவிஜய அரசுக்கும்) இலங்கைக்கும் இடையே நிலவிய உறவுகள் பலமடைய இம்மணவினை யுதவியது. விஜயபாகுவின் உடன் பிறந்தாளான மித்திராவை, சோழ அரசனுக்கு மணஞ் செய்து கொடுக்க மறுத்து, பாண்டிய இளவரசன் ஒருவனுக்கு இராணியாக் கினன். இவ்வாறு ஏற்பட்ட பாண்டியத் தொடர்பும் இலங்கையின் அரசியற் போக்கை நெடுங்காலம் பாதித்தது. சாளுக்கிய அரசனுன 6. விக்கிரமாதித்தனும் விஜயபாகுவும் தூதுக்குழுக்களையும் வெகுமதி க2ளயும் தமக்குள் பரிமாறிக் கொண்டதை முன்னரே கண்டோம். அதேபோல, பர்மிய அரசனன அனுரத்தனுடன், விஜய பா கு உருகுணை யரசனுக விளங்கிய காலத்திலிருந்தே நட்புறவை வளர்த்து வந்தான். இதனுல் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தொடர்பு கள் வளர்ந்து வந்தன. விஜயபாகுவின் ஆட்சியின் இறுதிக் காலத் தில், சோழ அரசுக்கும் இலங்கைக்கும் சுமுக உறவுகள் நிலவின. குலோத்துங்கனது மகள் ஒருத்தியை இலங்கை யிளவரசனன (மித்தி ராவின் மகளுன) மானபரனன் மணஞ் செய்ததால், 1-ம் பராந்தகன் காலத்திலிருந்து இரு அரச குடும்பங்களிடையே நிலவி வந்த பகைமை முடிவெய்தியது. சோழப் பேரரசனன முதலாம் குலோத்துங்கனும் இலங்கையை மீட்பதில் அக்கறை யற்றவனகவே காணப்பட்டான். இவ்வாருக, விஜயபாகு தன் நாட்டின் சுதந்திரத்தைப் பேணுவதைக் குறிக்கோளாகக் கொண்ட அயல் நாட்டுக் கொள்கையையே கடைப் பிடித்து வந்தான். இக் கொள்கையின் விளைவாக, நாடு பெரும் அமைதியைப் பெற்று உள் நாட்டு அபிவிருத்தி வேகமாக ஏற்பட லாயிற்று
சமயப்பணி : விஜயபாகு ஆட்சியைப் பெறுமுன் இருந்த அர
சியல் நிலைமைகள், நாட்டின் முன்னேற்றத்தைப் பல வழிகளிலும்
தடைசெய்திருந்தன. குறிப்பாக, அவை சமய வளர்ச்சிக்குப் பெருந்
தீங்கை யுண்டுபண்ணின. சமயக் கட்டிடங்கள் பெரும்பாலும்
4

Page 19
26 Luff Elu Ab
அழிவுற்றும், சேதமடைந்தும் காணப்பட்டன. மன்னர்சளினதும், உயர் அதிகாரிகளினதும் ஆரதவு குன்றிப் பின்னர் அற்றுப் போன மையால், சங்கத்தினரின் வருவாய் பாதிக்கப்பட்டு, அதில் சீர்கேடுகள் மலிந்து காணப்பட்டன. 'உபசம்பதா" என்ற குரு அபிஷேக சடங்கை நடத்துதற்கு தகுதிவாய்ந்த குரு மார்கள் தாமும் விஜயபாகு அரச ஞன போது இலங்கையில் இருக்கவில்லை. பெளத்தத்தைப் பழைய மேனிலைக்குக் கொண்டு வர உறுதி பூண்ட விஜயபாகு, பர்மாவுக்குத் தூதுவரை அனுப்பி, அறிவாற்றலிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்ட தகுதியுடைய பெளத்த குருமார்களை அனுப்பியுதவுமாறு அந்நாட் டரசனுக்கு வேண்டுதல் விடுத் தான். அவ்வேண்டுத லு க் க  ைம ய பர்மாவிலிருந்து வந்த குரு மார்களைக் கொண்டு, பல தடவைகள் உபசம்பதாவை நடாத்தி, சங்கத்திற் பல குருமார்களைச் சேரும்படி செய்தான். பாழெய்திய சமயக் கட்டிடங்கள் பலவற்றைப் புதுப் பிக்கவும், புதியன சிலவற்றை நிறுவவும் ஒழுங்குகளை மேற்கொண் டான். அனுராதபுரத்தில் உள்ள போதி மரக் கோவிலையும், ஜம்பு கோல, மகா கமை, தம்புல்லை, தெவுந்த ர, மகியங்கணை, பண்டு வஸ்நுவர முதலான பல இடங்களைச் சேர்ந்த விகாரைகளையும் விஜயபாகு புதுப்பித்தான். புதிதாக இவன் கட்டியவற்றுள், பொலன்னறுவையில் அரச மாளிகைக்கு அணித்தாக நிறுவப்பட்ட தந்த தாதுக் கோவிலும், ஒரு விகாரையும் மு க் கி ய மா ன  ைவ முப்பெரும் பிரிவுகளையும் சார்ந்த குருமார்களுக்கு விகாரைகளையும், அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களையும் வழங்கினுன், தான் புதிதாக நிறுவிய விகாரைகளுக்கு மானியமாக வள மி க் க ஆளிசார மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களை வழங்கினன். இந்தி யாவில் புத்த கயாவிலுள்ள புனித போதிமரத்துக்குத் தன் காணிக் கையாக மிகவும் விலையுயர்ந்த முத்துக்கள், மணிகள், இரத்தினங் கள் பலவற்றைத் தூதுவர் வாயிலாக அனுப்பிவைத்தான். யூனிபாத (அல்லது சமந்தகூட) எனப்படும் சிவனெளிபாத மலைக்குச் சென்ற பாத யாத்திரீகர்களுக்கும், குரு மார்களுக்கும் உணவு அளிக்கவும் மடங்களை நிறுவவும் கிலீமலைய என்ற கிராமத்தின் வருவாயை ஒதுக்கியது மன்றி, அதற்குச் சென்ற முக்கிய பாதைகளில் தானே மடங்களை (தான சாலைகளை) நிறுவியுமிருந்தான். விஜயபாகுவின் அம்பகமுவக் கல்வெட்டு இச் செய்தியை உறுதிப்படுத்துவதுடன், மேலதிக விபரங்களையுந் தருகின்றது. குறிப்பாக, தாழ்ந்த வகுப் பினர் திருவடியைத் தரிசிப்பதற்கென ஒரு தனியான த ள த்  ைத அமைத்தமை பற்றி இக் கல்வெட்டே குறிப்பிடுகின்றது.
பொருளியற் பணிகள்: நாடு முழுவதிலும் செயலிழந்து காணப் பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களிற் பலவற்றை மீண்டும் இ யங் க வைத்து, பயிர்ச் செய்கையின் விருத்திக்குத் தூண்டுதல் அளித்த மையே பொருளியல் துறையில் விஜயபாகு ஆற்றிய பெரும்பணி

விஜயபாகுவும் விடுதலையியக்கமும் 2?
யாகும். பண்டவாபி, மகாகணதராவ, நாச்சநூவ, வலாஹசவாபி முதலான பல குளங்கள் விஜயபாகுவின் முயற்சியால் புதுப்பிக்கப் பட்டன ஆளிசாரக் கால் வாயின் இறுதிப் பகுதியைத் திருத்தி அக் கால்வாய் மூலம் மின்னேரியையும் தொழிற்பட வைத்தான். பல ஆறுகளையும் சிற்றறுகளையும் அவன் மறித்து, கால்வாய்களூடாக நீரை வயல்களுக்கு விநியோகித்தானெனச் சூளவம்சம் கூறுகின்றது. ஆனல் அவன் சாலத்தில் பத்தகுண என்ற சிறுகுளம் மட்டுமே நிறு வப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக்கல், புனரமைப்பு, புனருத்தாரணம் என்பனவே விஜயபாகுவின் ஆட்சியில் மேற்கொள் ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் முக்கிய தன்மைகளாக இருந்தன. இவனது பெயரை இன்றுவரை நிலைநாட்டுவதற்கு ஏற்ற ஒரு குளமோ, கால்வாயோ இல்லாதபோதும், விஜயபாகுவின் சாத னைகளை நாம் குறைத்து மதிப்பிடலாகாது. ஒரு நூற்ருண்டுக் காலமாக பாழ்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்த சமயக் கட்டிடங் களையும், பாசனங்களையும் புதுக்கி நன்னிலைக்குக் கொண்டுவருதற்கு விஜயபாகு எடுத்த முயற்சிகள் போற்றுதற்குரியவை.
கலைகள், சமூகம் முதலியன: கலை, இலக்கியத் துறைகளிலும் விஜயபாகு நாட்டமுடையவனக விளங்கினன் அவனையே பெருமை மிகு புலவனெனச் சூளவம்சம் போற்றுகின்றது. புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் அம் மன்னன் ஆதரவளித்து, இலக்கிய வளர்ச்சி யில் ஊக்கங்காட்டினன். இந்தியாவிலிருந்து வந்த அறிஞர்களும் இ வ ன து ஆதரவைப் பெற்றனர். மன்னனுடைய கருணைக்கும் ஆதரவுக்கும் உரியவர்களாகக் குருடர், நொண்டிகள், வறியவர்கள், ஐயமேற்போர், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் இருந்தனர். விலங் கினங்களும் மன்னனுடைய பாதுகாப்பைப் பெற்றன. விஜயபாகு அரசனுனபோது, உபராஜா வாக நியமிக்கப்பட்ட அவனது தம்பி வீரபாகு, விஜயபாகு உயிர் வாழும்போதே இறந்து விட்டான், எனவே ஆதிபாத வாக நியமனம் பெற்றிருந்த மற்றெரு தம்பி யான ஜயபாகு உபராஜாவாக்கப்பட்டான். தனது கலிங்க இராணி திரிலோகசுந்தரி வாயிலாகப் பிறந்த ம க ன ன விக்கிரமபாகுவை ஆதிபாதவாக லிஜயபாகு நியமித்தான். உபராஜாவுக்குத் தக்கிண தேசமும், ஆதிபாதவுக்கு உருகுணையும் உரிய மாகாணங்களாக விளங்கின. விக்கிரமபாகு தன் மாகாணத்துக்கே சென்று மகா நாக ஹ"லவில் தங்கி அதன் பரிபாலனத்தைக் கவனித்து வந்தான். விஜயபாகு 1110-ல் தன் எழுபதாவது வயதில் காலமானன். சுதந் திரச் சிற்பியான விஜயபாகு நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபீட் சத்துக்கும் உழைத்ததால், இலங்கை வரலாற்றில் மிக உயர்வான இடத்தைப் பெற்றுள்ளான்

Page 20
28 பண்டைய ஈழம்
பயிற்சி: w
1. விஜயபாகு நடத்திய போர்கன் விளக்க ஒரு நாட்டுப்படம் வரைக.
2. விஜயபாகுவின் வரலாற்றைக் கூற எமக்குத் துணையாகவுள்ள
ஆதாரங்களைக் குறிப்பிடுக. இவற்றின் தன்மைகளை விளக்குக.
3.
விஜயபாகுவின் காலத்தில் அயல்நாடுகளில் இருந்த அரசியல் நிலைமைகளை ஒரு விளக்கப்படத்தின் துணையுடன் தெளிவாக்குக.
தேர்வு விஞக்கள் :
1.
இலங்கை சோழராட்சியிலிருந்து விடுதலை எய்திய வரலாற்றைச் சுருக்கித் தருக. (விளக்கப்படம் மூலம் விடையைத் தெளிவு படுத்துக.)
விஜயபாகுவின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறி, அவனது சாத ?னகளை மதிப்பிடுக.
விஜயபாகுவின் சாதனைகளை துட்டகாமணியின் சாதனைகளுடன் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுக.
சிறுகுறிப்புக்கள் வரைக. பஞகடுவ சாஸனம்; வேளைக்காரர்; மஹாநாகஹால; கலிங்கம்; வெல்கம் விகாரை; பஞ்ச யோஜன (பஸ்துன் கோறளை) ; மெய்க்கீர்த்தி

அத்தியாயம் மூன்று
ம 1ா கா ப ராக் கிரம பாகு
1. சூளவம்சம்: மகாபராக்கிரமபாகுவின் காவியம் i. விஜயபாகு வுக்குப் பின் அரசியல் நிலமைகள் i தக்கிணதேச அரசைப் பெறல். iv. இலங்கை முழுவதற்கும் அரசனுதல்; உருகுனேயை அடிப்படுத்தல் v. பொருளியற் பணிகள் vi சமயமும் கலக களும் vi. அயல் நாட்டுக் கொள்கை. அ. பர்மா ஆ. பாண்டி நாடு மீது படை யெடுப்பு.
பொலன்னறுவையில் அரசோச்சிய மன்னர்களுள் தலையாய வன். மகா பராக்கிரமபாகு எனச் சிறப்பிக்கப்பட்டுள்ள 1-ம் பராக் கிரமபாகு ஆவான். பொலன்னறுவைக்குச் செல்பவர்களுக்கு அங் குள்ள அவனது கட்டிடங்களின் சிதைவுகளும், நினைவுச் சின்னங்க ளும், பரந்த பராக்கிரம சமுத்திரமும் அவனை நினைவுக்கு கெண்டு வரும், பொலன்னறுவையை எழில்மிக்க நகராக்கிய பராக்கிரம பாகு, நாட்டு மக்களின் சுபீட்சத்துக்கும் ச ம ய முன்னேற்றத் திற்கும் பெரும்பணிகளை யாற்றி நாட்டுக்கும் பெருமை தேடினன். போர்த்திறமை மிக்க இம்மன்னன் தான் அரசனதற்கு ஆறிற்யபோர் களுக்குப் பின் ன ர், வெளிநாடுகளில் தன் புகழையும் மதிப்பையும் பரவச் செய்தற்குச் சில போர்களை மேற்கொண்டான். இத்தகைய பல வியத்தகு சாதனைகளை நிறுவிய பெருமன்னனன மகா பராக்கிரம பாகுவின் வரலாற்றை இந்த "அத்தியாயத்திற் கவனிப்போம். வர லாற்றில் அவனுக்குள்ள இடத்தைத் தீர்மானிப்பதற்கு அவனுடைய வரலாற்றை முதலில் அறியமுற்படுவோம்.
1. சூளவம்சம் (1-ம் பாகம்) மகா பராக்கிரமபாகுவின் காவியம்
சூளவம்சத்தின் முதற்பாகம் 37-ம் அத்தியாயத்தில் தொடங்கி 79-ம் அத்தியாயத்துடன் முடிவடைகின்றது. இப் ஈகத்தைப் பாடி யவர் தர்மகீர்த்திதேரர் என்பது சிங்கள மரபு வழக்கு. இதைக் கைகரும் ஏற்றுள்ளார். ஆனல் மகா பராக்கிரமபாகுவின் காலத் தில் வாழ்ந்தெேமாகல்லான தேரரே இதன் ஆசிரியரென வேருெரு பெளத்த அறிஞர் கருதுகின்றர். சூளவம்சம் முதற்பாகம் முழுவ தும் ஒரே ஆசிரியராற் பாடப்படாது, வெவ்வெறு காலங்களில் வாழ்ந் தவர்களாற் பாடப்பட்டு மிருக்கலாம். ஆயின் பராக்கிரமபாகுவைப் பற்றிப் பாடப்பட்ட பகுதி (62-ம் அத்.-79-ம் அத்) ஒரே ஆசிரிய

Page 21
30 பண்டைய ஈழம்
ரினுடையதென்பதில் ஐயமில்லை, மகாவம்ச ஆசிரியரைப் போலவே, சூளவம்ச (முதற்பாக) ஆசிரியரும் வடமொழிக் காவியங்களையும் காவிய இலக்கணங்களையும், அலங்கார விதிகளையும் கற்றுத்தேர்ந்த வர், ஆகவே, மகாபராக்கிரமபாகுவின் வரலாற்றைக் கூறும் பகுதியில் அவற்றின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகின்றது. சூளவம்ச முதற்பகுதியின் பாட்டுடைத் தலை வணுக மகா பராக்கிரமபாகு திகழ்கின் ரூன், இதை நாம் எளிதிற் கண்டு கொள்ளலாம். கைகரின் மொழி பெயர்ப்பில் அவ்வரலாற்றைக் கூறும்பகுதி 240 பக்கங்கள் எடுத்துள் ளது என்ற ஒன்றே இதைப் புலப்படுத்து . இத்துணை விரிவாக மற் றெந்த மன்னனுடைய (துட்டகாமணியின் வரலாறு உட்பட) வர விாறும் பாடப்படவில்லை. இதைப் பாடிய ஆசிரியர் மகாபராக் கிரமபாகுவின் சம காலத்தவராக வாழ்ந்து, அவனுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை விரிவாக அறிந்ததுமன்றி, அவற்றில் பங்குகொண்ட பாத்திரங்களைச் சந்தித்தும் அரசனது அவைக் களத் திற் பேணப்பட்ட பதிவேடுகளைப் பார்வையிட்டும் மிகுதியான விவ ரங்களைத் திரட்டித் தந்துள்ளார். அதே வேளையில் மகாபராக்கிரம பாகுவின் வண்மையைப் பெற்ற ஒரு பிக்குவாகவும் அவர் இருந்த தால், நன்றியுணர்வைக் காட்டும் வகையில் அவன் புகழைக் காவிய வடிவில் பாடிச் சென்றுள்ளார் காவியத் தலைவனுக்கு உரிய பல பண்புகள் பராக்கிரமபாகுவிடம் உண்டு என்பதையும் மறுத்தற்கில்லை
பராக்கிரமபாகு ஒரு பெரு மன்னன் என்பது உண்மையேயா யி னும், அவனிடம் சில குறைகள் இருந் திருக்கக் கூடும். ஆனல் காவி யத்தலைவன் தன்னேரில்லாத் தலைவனுக இருக்க வேண்டியது கட் டாய மாதலால், சகல நற்பண்புகளின் உறைவிடமாகப் பராக்கிரம பாகுவைச் சித்தரிப்பதில் சூளவம்ச ஆசிரியர் ஈடுபட்டுள்ளார். அவனை ஒர் ஒப்பற்ற வீரனுகவும், அறநெறியாளனுகவும் காட்ட அவர் முனை கின்ருர், இவ்வாருண் நோக்கங்களுக்குப் பராக்கிரமபாகு போர்களில் எய்திய தோல்விகளைக் குறிப்பிடுவதோ, அன்றி அவனது துரோகச் செயல்களை விவரிப்பதோ ஏற்புடையதாகாது. அவனது நற்பெய ருக்கும், வீரத்துக்கும் மாசு சுற்பிக்கும் செய்தி எதையும் சூளவம்ச ஆசிரியர் குறிப்பிடாது விட்டுள்ளார். சிலவற்றைக் குறிப்பிட நேர்ந் தால், அவற்றுக்கு ஆசிரியர் சமாதானமுங் கூறியுள்ளார். சூளவம் சத்தில் வரும் பராக்கிரமபாகுவின் இ ள  ைம க் கால விபரங்களை நோக்கும்போது, ஆசிரியரின் இத்தகைய முயற்சிகள் பல எமக்குத் தெரியவரும். தனது கடமையைச் செய்த ஒரு தளபதியைப் பராக் கிரமபாகு வஞ்சித்துக் கொல்வதை நாங்கள் காணலாம் (65 அத். 35 தொடர் - செய்). தன்னை வளர்த்த சிறிய தந்தையை மீறுதல், விருந்தினனுகக் கஜபாகுவுடன் வாழ்ந்துகொண்டே அவனை வஞ்சிக் கத் திட்டமிடுதல் ஆதியன பெரும் அரச உபாயங்களாகக் கூறப்படு

ởi
கின்றன. வீராவேசம் பொருந்திய வார்த்தைகளை யெல்லாம் அவன் பேசுவதாகக் கூறப்படினும், உண்மையான சண்டைகளை நடத்திய வர்கள் அவனுடைய போர் வீரர்களே. பராக்கிரமபாகுவைச் சிறந்த வீரனுக்குவதற்கு அவனது மாற்ரு ரைப் பேடிகளாகவும் குறைந்த போர்த்திறமையுடையவர்களாகவும் சூளவம்ச ஆசிரியர் சித்தரித் துள்ளார். கஜபாகுவோ, மானபரணனே பராக்கிரமபாகுவுக்குக் குறை வான ஆற்றலுடையவர்களாகக் காணப்படாவிடினும், அவர்களின் திறமையை நாம் கண்டுகொள்ள முடியாதவாறு பராக்கிரமபாகுவே பெரும் வீரனகக் காட்டப்பட்டுள்ளான். கெளடில்யரது அர்த்த சாஸ்திர போன்ற வடமொழி நூல்களில், அரசர்கள் வளரும்முறை பற்றியும் அரச தந்திரங்கள் பற்றியும் அறிந்தவற்றைப் பராக்கிரம பாகுவின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைத்து விட்டதாக கைகர் முதலான அறிஞர் கருதுவர். குறிப்பாக, கஜபாகுவின் விருந்தின னக வாழும்போது, இராஜரட்டையின் நிலைமைகளை உளவறிவதில் பராக்கிரமபாகு ஈடுபடுவதாகக் கூறப்படுதல் இ  ைதயே காட்டும் என்பர்.
சூளவம்ச ஆசிரியரை வழிநடத்திய எண்ணங்களையும் கொள்கை களையும் நாம் அறிந்து கொண்டால், அந்நூலில் உள்ள விபரங்களி லிருந்து பராக்கிரமபாகுவின் உண்மை வரலாற்றை அறிந்து கொள் ளல் இலகுவாக விருக்கும். விவரங்களைக் கூறுமிடத்து கற்பனையும் உண்மைச் செய்தியும் கலந்து விரவியிருப்பினும், பெரும்பாலும், உண்மைச் செய்திகளின் அடிப்படையிலேயே அவனுடைய வராலாறு குளவப் சத்தில் கூறப்படுகின்றது. இதிலுள்ள சில முக்கிய செய் திகள், கல்வெட்டுக்கள் போன்ற பிற ஆதாரங்களாலும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. குருளுறகலைக் கண்மையிலுள்ள சங்கமு-விகாரை யிலும், தேவன கலையிலும் உள்ள இரு டொறிப்புக்கள் இவற்றுள் முக்கியமானவை. பராக்கிரமபாகுவின் பண்டி நாட்டுப் படை யெடுப்புப் பற்றிய முழுவிபரங்களே ச் சூளவம்சத்திலிருந்து அறிய முடியவில்லை. அப் படையெடுப்புத் தோல்வியில் முடிவுற்றதால், சூள வம்சம் முடிவைக் கூருது விட்டுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள சோழ மன்னர்களின் சில கல்வெட்டுக்களால், சூளவம்ச விவரத்தைத் திருத் தவும், நிரப். ம்ெ, மேலதிக விவரங்களைச் சேர்க்கவும் முடிகின்றது. துட்டகா மணியின் வரலாற்றை மகா வம்ச ஆசிரியர் பாடியுள்ள முறைக்கும், பராக்கிரமபாகுவின் வரலாற்றைச் சூளவம்ச ஆசிரியர் பாடிய முறைக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. சூளவம்ச ஆசிரியர் ஏறத்தாழப் பராக்கிரமபாகுவின் சம காலத்தவராக வாழ்ந்து, நம்பிக்கை வாய்ந்த பல செய்திகளையும் குறிப்புக்களையும் துணையாகக் கொண்டு அவனது வரலாற்றைக் காவிய உருவத்தில் தந்துள்ளார். மகாவம்ச ஆசிரியர் துட்டகாமணியினது காலத்தி

Page 22
32 ೬16ಳೆ? ಆಶLU ನೌpಹಿ
லிருந்து சில நூற்ருண்டுகள் பிந்தி வாழ்ந்து, விகார்ைகளிற் பேணப் ,மரபுவழிச் செய்திகளையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு ساشا لا அவனுடைய காவியத்தைப் பாடினர். மகாவம்ச ஆசிரியர் தனது மகா விகாரைக்குப் பெருமை தந்த மகாதூபத்தைத் துட்டகாமணி நிறுவியமையாலேயே அவனுக்குக் கடமைப்பட்டு, அவனுடைய சம யப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவனது வரலாற்றை அமைத் துள்ளார். சூளவம்ச ஆசிரியர் பெரும்பாலும் பராக்கிரமபாகுவின் வண்மையைப் பெற்ற ஒருவராகக் கருதப்பட்டமையால், தன் சொந்த நன்றியறிதலேயே தனது காவியத்தின் வாயிலாகத் தெரி விக்கின்ருர் எனல வேண்டும், இதனுல் பராக்கிரமபாகுவின் சமயப் பணிகளேயன்றி, போர் முயற்சிகளும், பிறசாதனைகளும் ஏறத்தாழ ஒரேயளவு கவனத்தைப் பெற்றுள்ளதைக் காணலாம்.
1. விஜயபாகுவுக்குப்பின் அரசியல் நிலைமைகள்
விஜயபாகு தனது தம்பியான ஜயபாகுவை உபராஜாவாகவும் மகனுன விக்கிரமபாகுவை (கலிங்க ராணியின் வாயிலாகப் பிறந்த வன்) ஆதிபாதவாகவும் நியமித்திருந்தமை பற்றி முன்னரே குறி பிட்டிருந்தோம். விஜயபாகு இறந்தபோது, நெடுநாளைய வழமைப் படி, ஜயபாகு அரசனுக விக்கிரமபாகு உடராஜாப் பதவியைப் பெற் றிருந்தான். ஆணுல், பாண்டிய இளவரசனை மணம்புரிந்திருந்த அவனது சகோதரியான மித்திரா இவ்வாறு நிகழவிடவில்லை. அர சவையின் முக்கியஸ்தர்களையும், பிரதான பிக்குத் தலைவர்களையும் கலந்து, ஜயபாகுவை அரசனுக்கவும், விக்கிரமபாகுவுக்குப் பதில் தன் மூத்த மகனுண மானுபரணன உபராஜாவாக்கி உரிமையாளனுக்கவும் சதிசெய்தாள். உருகுணையிலிருந்த விக்கிரமபாகுவுக்குத் தந்தை யிறந்த செய்தியைத்தானும் தெரிவிக்காது இச்சதித் திட்டம் தலை நகரில் நிறைவேற்றப்பட்டது. ஜயபாகுவை ஒரு கைப்பாவையாக வைத்து ஆட்சியலுவல்களை மித்திராவின் புதல்வர்களான மானுபர ணன், கீர்த்தி பூரீமேகன், பூரீவல்லபன் ஆதியோர் கவனிக்கவேண்டும் என்பதே மித்திராவின் உண்மையான கருத்தாக விருந்தது. இச் சதித்திட்டம் பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. கலிங்க மரபினரை அரசைப் பெறவிடாது தடுக்க இத் திட்டம் முயன்றது. இச்சதியின் விளைவாக, இலங்கை அரை நூற்ருண்டுக் காலத்துக்கு மேலாகக் கோரமான உள்நாட்டுப் பூசல்களையும், போர்களையும், அழிவுகளையும் அனுபவிக்கலாயிற்று. அந் நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக இங்குக் கவனிப்போம்.

Ladr urträëp Le Lirë
விக்கிரமபாகுவை உபராஜாப் பதிவியைப் பெருது தடுத்ததுடன் திருப்தி கொள்ளாது, மித்திராவின் கூட்டுறவாளர் அவனைக் கைதி யாக்கவும் எண்ணங்கொண்டு, அவன் ஆட்சிசெய்து வந்த உருகுணை மீது ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர். விக்கிரமபாகுவும் இதையறிந்து தன் அரசிருக்கையான மகாநாகஹபல விலிருந்து முன்னேறி, புத்தளைப்பகுதியில் மித்திரையின் புதல்வர்களது படை களை யெதிர்கொண்டு, பல்வேறு இடங்களில் நடைபெற்ற சண்டை களில் அவர்களைப் புறங்கண்டான். இவ்வெற்றியைத் தொடர்ந்து பொலன்னறுவைக்கே சென்று, ஆட்சியைக் கைப்பற்றினன். மூன்று சகோதரர்களின் திட்டம் கைகூடாது போகவே, அவர்கள் தக்கிண தேசத்தையும், உருகுணையையும் தமக்குள் பங்கிட்டு ஆட்சியை நடத்தலாயினர். மூத்தவனை மானுபரணன் தக்கிணதேசத்தையும், கீர்த்தி பூரீமேகன் உருகுணையின் மேற்குப்பகுதியான துவாதச சகசவை யும், பூரீவல்லபன் உருகுணையின் கிழக்குப் பகுதியான அட்டசகசவை யும் ஆட்சி செய்யலாயினர். இவர்களின் தலைநகர்கள் முறையே புங்ககாமம் (டெடிகமை), மகாநாகஹ"ல, உடுந்தொர என்பன வாக அமைந்தன. ஆனல், இந்த நிலைமையுடன் மூன்று சகோதரர் களும் திருப்தி கொள்ளாது விக்கிரமபாகுவைத் தோற்கடிக்கப் படை களைத் தக்கிண தேசத்திற் சேர்த்து வரலாயினர். இதையறிந்த விக்கிரமபாகு, தக்கிணதேசத்துக்கு முன்னேறி அவர்களின் படை களை முறியடித்து அவர்களை பஸ்துன் கோறளைக்குப் பின்வாங்க வைத்தான், இதனிடையே, இந்தியாவிலிருந்து வீரதேவன் என்ற ஓர் அரசன் படையுடன் மகாதீர்த்தத்திலிறங்கிய செய்தி விக்கிரம பாகுவுக்கு எட்டவே, தன் போர் நடவடிக்கைகளை நிறுத்தி, புதிய பகைவனை எதிர்கொள்ள இராஜரட்டை மீண்டான். வீரதேவன் விச்கிரமபாகுவின் படைகளை முறியடித்து, சிங்களச் சேணுபதியையும் கைது செய்தான். கொட்டியார்ப்பற்று (கொட்டசார) வரை பின் வாங்கியோடிய சிங்களப் படையைப் பின் தொடர்ந்த படையெடுப் பாளன் அங்கு நடைபெற்ற இறுதிச் சமரில் தோல்வியெய்தியது மன்றி, களத்திலேயே உயிர் நீத்தான். இதன் பின் விக்கிரமபாகு பொலன்னறுவை மீண்டு, இராஜரட்டையின் பா ல ன த்  ைத க் கவனித்து வரலாஞன். பின்னர், விக்கிரமபாகுவும், அவனது பகை வர்களான மூன்று சகோதரர்களும் கடும் போர்களில் ஈடுபடாது, தத்தம் பகுதிகளைப் பரிபாலித்து வந்தனர். ஆனல், இவர்களுடைய ஆட்சியானது மக்களுக்கும் சமயத்துக்கும் நாட்டுக்கும் பெருந்தீங்கை உண்டுபண்ணியதாகச் சூளவம்சம் கூறுகின்றது. உயர்குடியினரை உதாசீனஞ்செய்து, தாழ்ந்தவகுப்பினர்க்கு முக்கிய பத வி களை வழங்கியதாகவும், மிகுதியான வரிகளை மக்களிடம் வருத்திப் பெற்ற தாகவும், பணவேட்கை அவர்களைப் பீடித்திருந்ததால் பெளத்தக் கோவில்களுக்குக் காணிக்கைகளாக வழங்கப்பட்ட இரத்தினங்கள்
5

Page 23
676 lu. Può
முதலானவற்றைச் சூறையாடியதாகவும் இவர்கள் மீது பல பழிகள் சுமத்தப்பட்டுள்ளன. உரிய முறையில் முடிசூடிய மன்னர்கள் ஆட்சி செலுத்தாமையாலும், ஆட்சியுரிமை பற்றி அடிக்கடி போர் கள் நிகழ்ந்தமையாலும், இலங்கையில் அந் நேரத்தில் ஆட்சி யற வு நிலையே நிலவியது. இதனிடையே, உருகுணையில் கீர்த்தி பூரீ மேக னுடன் வாழ்ந்து வந்த அவனுடைய தாய் மித்திராவும், ஜயபாகுவும் மரணமெய்தினர். ஜயபாகுவின் மரணத்தின் பின், விக்கிரம பாகுவின் உரிமை பலமடைந்ததால், இராஜரட்டையை அவன் உரிமையுடன் நிருவகித்து வரலானன்.
iii, தக்கிணதேச அரசைப் பராக்கிரமபாகு பெறல்
பராக்கிரமபாகுவின் பிறப்பும் இளமையும் : பராக்கிரமபாகுவின் பிறப்பு, இளமை பற்றிய சூளவம்ச விவரங்கள் உண்மைச் செய்திகளை படிப்படையாகக் கொண்டிருத்தல் சாத்தியமில்லை பெரும்பாலும் அவை பராக்கிரமபாகுவைச் சிறப்பிப்பதற்காகச் சேர்க்கப்பட்டவை யென்பது கண்கூடு. விக்கிரமபாகுவால் தமக்கு உண்டான வடுவைப் போக்குதற்குத் தமக்கு ஒர் ஆண்மகவு இல்லாத குறையை எண்ணி மானுபரணன் வருந்திக் கடுந்தவமியற்றி, பல அறங்கள் செய்து, சமயப் பணிகள் செய்து பெரும் புண்ணியங்களைச் செய்ததன் பெறு பேருகவே, பராக்கிரமபாகு அவனுக்குப் பிறந்ததாகக் கூறப்பட் டுள்ளது. குழந்தை பிறந்ததை மானபரணனும், நகரமாந்தரும், அமைச்சர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வேதங்களில் விதிக்கப்பட்டதற்கமைய, பிறப்புக்குரிய கிரியைகளும் (ஜாதகர்மங்கள்) பிற வைபவங்களும் முறைப்படி மானுபரணனுல் நடத்தப்பட்டன. இதுபோன்ற பிற கிரியைகளும், க்ஷத்திரிய குலத்து அரச குமாரர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நடைபெறும். இவை யாவும் பராக்கிரமபாகுவுக்கும் நடைபெற்றதாகச் சூளவம்சம் இயம்புகின்றது. புரோகிதரும் ஏனைய பிராமணர்களும், எதிர்வு கூறுவோரும் பராக்கிரமபாகுவின் உடலிலுள்ள அறிகுறிகளைக் கண் ணுற்றதும், பின்வருமாறு கூறினர் : ** இலங்கைத் தீவை மட்டு மன்றி, ஜம்புத்துவீபத்தையுமே ஒரு குடைகீழ்க் கொணர்ந்து ஆளும் வன்மை இக்குழந்தையிடம் உண்டு.” விக்கிரமபாகுவிடம் தூது வர்களை யனுப்பி, பராக்கிரமபாகு பிறந்த செய்தியைத் தெரிவித்த போது, குழந்தைக்குப் பல ஆபரணங்களையும் வெகுமதிகளையும் அலுப் பித் தன் மகிழ்வைத் தெரியப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. மாஞ பரணனும், பராக்கிரமபாகு பிறந்த சில ஆண்டுகளில் இறந்து விட் டான். இதன் பின் கீர்த்தி பூரீமேகன் தக்கிணதேச ஆட்சியாளஞ)ளுறன். அவன் 1றி வல்லபனை முழு உருகுணையையும் நிருவகிக்கும்படி விட் டான். இராஜரட்டையின் ஆட்சியாளனன விக்கிரமபாகுவும் விரை வில் இயந்து போக, அவனது மகனன கஜபாகு ஆட்சியைப் பெற்

(g) חוr Lb Lש ($6 זrתוrr L& מL
முன், கஜபாகு ஆட்சியைப் பெற்றபோது, அவனை இலகுவில் புறங் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், கீர்த்திபூரீமேகனும் அவன் தம்பி பூரீவல்லபனும் ஒரு படையெடுப்பை மேற்கொள்வதற்கு ஆயத்தமானர்கள். இராஜரட்டையில் கஜபாகுவுக்கு எதிராக அதி ருப்தியை வளர்த்து, அவனது வேளைக்காரப் படைப்பிரிவினரையும் கையூட்டுக் கொடுத்துக் கட்சிமாற வைத்தனர். கஜபாகுவும் மிக வும் துணிகரமாகத் தன் படைகளுடன் முன்னேறி, பூரீவல்லபனை யும், கீர்த்திபூரீமேகனையும் தனித்தனியே அவர்களின் மாகாணங் களிலேயே தோற்கடித்து மீண்டான். பொலன்னறுவைக்குத் திரும் பியதும், தனக்கு எதிராக நடந்துகொண்ட தலைவர்களைத் தண்டித் தான். இ த ன் பின்னர், கஜபாகுவுக்கெதிராகப் போரைத் தொடர்ந்து நடாத்தக் கீர்த்தியூரீமேகனும், தம்பியும் துணியவில்லை.
பராக்கிரமபாகு இராஜட்டைக்குச் செல்லுதல்: மானபரணன் இறந்த பின், அவனுடைய விதவையும் பிள்ளைகளும் பூரீவல்லபனுடன் மகா நாகஹ"லவிலேயே தங்கிவந்தனர். பராக்கிரமபாகுவுக்கு அங்குள்ள வாழ்க்கைமுறை திருப்தியைத் தராததால், தக்கிண தேசத்துக்குச் சென்று, கீர்த்தி டிரீமேகனுடைய தலைநகரான சங்கத்தலியில் (இப் போதைய ஹத்ணுகொடவில்) வாழலானன். குழந்தைகள் இல்லாத கீர்த்தி பூரீமேகன், தன் தமையனது பிள்ளையான பராக்கிரமபாகு வைத் தன் பிள்ளையாகப் பாவித்து, பேரன்புடன் பேணி வளர்த்து வந்தான். கூடித்திரிய அரச குமாரர்கள் கற்க வேண்டிய சகல கலை களையும் வித்தைகளையும் பராக்கிரமபாகு கற்றுத்தேறினன். அரசியற் கலைபற்றி கெளடல்யரின் நூலையும் கற்றிருந்தானெனக் குறிப்பிட்டி ருத்தல் கவனிக்கத்தக்கது. தன் சிறிய தந்தையுடன் தலைநகரைவிட்டு, வெவ்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலாக்களிற் சென்று அனுபவம் பெற் ரூன். இதனிடையே, உருகுணையில் பூgவல்லபன் இறந்துபோக, அவனது மகனன மானுபரணன் ஆட்சியைப் பெற்றுக்கொண்டான். நாட்டை ஒன்றுபடுத்தி ஒரு குடைக்கீழ் ஆளும் எண்ணங்கொண்ட பராக்கிரமபாகு, இராஜரட்டையின் நிலைமைகளைத் தானே நேரில் சென்று அறிய அவாக் கொண்டான். தன் சிறிய தந்தை தனது திட்டங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பாரென்பதை ஊகித்துக்கொண்டு அவனுக்குத் தெரியாமலே இரகசியமாகத் தலைநகரைவிட்டுப் புறப் பட்டான். பதலகொட என்ற எல்லைப்புறக் காவல் நிலையத்துக்குச் சமீபமாக பராக்கிரமபாகுவும் அவனது தோழர்கள் சிலரும் சென்ற போது, அந்நிலையத்தைக் காவல் செய்த சங்கா என்ற தளபதியிடம் சிக்கிக்கொண்டனர், பராக்கிரமபாகுவை அவன் முன்னதாகவே யறி வானதலால், கீர்த்திபூரீமேகனது அனுமதியைப் பெருது அவர்கள் வெளியேற முற்படுவதை யுணர்ந்து அவர்களை மறித்து வைத்தான். பராக்கிரமபாகுவை நல்லமுறையில் உபசரித்துக்கொண்டு, அதேவேஃா

Page 24
96 பண்டைய ஈழம்
யில் தனதுஆட்கள்மூலம் கீர்த்தி பூருரீமேகனுக்குச் செய்தியனுப்பினன். இதைக்குறிப்பாக அறிந்துகொண்ட பராக்கிரமபாகு, சேனதிபதியைக் கொல்லுமாறு கட்டளையிட்டான். இக் கட்டளையை அவனது ஆட் களிலொருவன் நிறைவேற்றவே, அங்கு அமைதியற்ற ஒரு நிலை தோன்றியது. அதையும் சமாளித்துக்கொண்ட பராக்கிரமபாகு இராஜரட்டையை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சேனுபதி சங்காவைக் கொன்றமை பராக்கிரமபாகுவின் பெயருக்கு இழுக்கையே தருவதாகும். ஆயின், இது உண்மை வரலாற்று நிகழ்ச்சியா என்பது ஐயத்துக்குரியது. பதல்கொடவை விடுத்து, கிழக்குநோக்கிச் சென்று காலவாவி மாவட்டத்துக்கு அண்மையி லுள்ள புத்தகாம (மணிக்தெண) என்ற இடத்தை அடைந்த பராக் சிரமபாகு, காலவாவி அதிகாரியை அழைத்து உரையாடி அவனுக்கு வெகுமதிகளைக் கொடுத்தனுப்பினன். இதனிடையே, பராக்கிரம பாகுவின் நடவடிக்கைகளால் கஜபாகுவுக்கும் தனக்கும் விணே போர் மூண்டுவிடும் என்ற அச்சத்தாற் பீடிக்கப்பட்ட கீர்த்தி பூரீமேகன், படைகளையனுப்பி பராக்கிரமபாகுவைக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தான். மாத்தளைப் பகுதியிலுள்வ மலைகளி லும் லக் கலை மலைகளிலும் மறைந்து வாழ்ந்து, கீர்த்தி பூரீமேகனது படைகளின் முயற்சிகளை வீணடித்தபின், கஜபாகுவின் பிரதேசமான ஜனபதவுக்குச் செல்லலா னன். தனது பிரதேசத்துக்குள் பராக்கிரம பாகு வந்துள்ளதை அறிந்த கஜபாகு, பொலன்னறுவைக்கு அவனை வரும்படி அழைப்பு அனுப்பினன். பயத்தால் பீடிக்கப்பட்டே கஜ பாகு இவ்வாறு அழைப்பை விடுத்தானெனச் சூளவம்சம் கூறுவதை நாம் ஏற்கவேண்டி யதில்லை. பராக்கிரமபாகுவைப் பெருவீரனுகக் காட்டுதற்கு ஆசிரியர் கையாண்ட பல உத்தி முறைகளுக்கு இதை யும் ஒர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
இராஜரட்டை நிலமைகளை உளவறிதல் : கஜபாகுவின் அழைப்பை யேற்றுப் பொலன்னறுவைக்குத் தன் தோழர்களுடன் சென்ற பராக் கிரமபாகு, அவனுடைய விருந்தாளியாகச் சில ஆண்டுகள் வாழலா ஞன். அத் நாட்களில் இராச்சிய நிலைமைகளை இரகசியமாக அறிந்து கொள்வதிலும் கஜபாகுவின் அதிகாரிகளது அரச விசுவாசத்தைக் கெடுப்பதிலும் அவன் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தனது கடைசிச் சகோதரியை அழைப்பித்து அவளைக் கஜபாகுவுக்கு மண முடித்து வைத்து அவனைத் திருப்திப்படுத்திக் கொண்டு, தனது உளவு வேலைகளையும் மிகத்திறமையாகச் செய்து முடித்ததாகக் கூறப்படு கின்றது. இவைபற்றிக் கூறப்படும் விவரங்கள் ஆசிரியரின் காவி யப் புலமையைக் காட்டுகின்றனவேயன்றி, உண்மை நிகழ்ச்சிகளாக விருக்குமெனக் கொள்ளத்தேவையில்லை. கஜபாகுவின் அதிகாரிகளை யும், படைத்தலைவர்களையும் ஒரு வேளை தனக்கு ஆதரவு காட்டும்

D 45ft பராக்கிரமபாகு 37
படி செய்தற்குப் பராக்கிரமபாகு முயன்றிருக்கலாம். ஆ ன ல், இம்முயற்சிகள்பற்றி கஜபாகுவுக்குத் தகவல் கிடைக்கவே, இராஜ ரட்டையில் தொடர்ந்து வாழுதல் ஆபத்தானதென்பதை யுணர்ந்து பராக்கிரமபாகு தன் பிறப்பிடமான தக்கிணதேசத்துக்கு மீண் டான். தக்கிணதேசத்திலும் சரக்காமத்தில் (செலகாமம்) தங்கி யிருந்துகொண்டு தலைநகரான சங்கத்தலிக்குச் செல்ல மறுத்தான். பின்னர், பராக்கிரமபாகுவின் தாய் இரத்தினுவலி தலையிட்டு, கீர்த்தியூரீமேகனையும் பராக்கிரமப குவையும் ஒற்றுமைப்படுத்தி வைத்தாள். பராக்கிரமபாகு தலைநகர் க்கு மீண்ட சிறிது காலத்தில் கீர்த்திழரீமேகன் காலமானன். இதைத் தொடர்ந்து, பராக்கிரம HTகு தக்கிணதேச ஆட்சியாளனுக 1140 அளவில் பதவியேற்றன். இச்செய்தியை உருகுணையின் ஆட்சியாளனன மானபரணனுக்கும், ವ್ಹೀಲ್ಡ್ರ-೨: ஆட்சியாளனன கஜபாகுவுக்கும் தெரியப்படுத்
னுன்,
தக்கிணதேச ஆட்சியாளனுகப் பராக்கிரமபாகு பதவியேற்றதும். தின்னே யெதிர்நோக்கிய பல பிரச்சினைசளுக்குத் தீர்வுகாண முற் பட்டான் இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வரச் சிறு வயதிலேயே எண்ணங்கொண்டதாகக் கூறப்படும் பராக் கிரமபாகு, இப்போது ஒரு முக்கிய மாகாண ஆட்சியாளனனதும், தன் இளமைக் கனவை நனவாக்குவதற்கு ஏற்ற ஆயத்தங்*** செய்யலாஞன். எல்லைப்புறக் காவலரண்களை நிறுவி அவற்றைப் பலப்படுத்திக் கொண்டு, தக்கிணதேசத்தின் வளங்களை விருத்தி செய்வதில் ஈடுபட்டான். இக்காலத்தில் அவன் மேற்கொண்ட பாசன, பொருளியற் பணிகள் பற்றிப் பின்னர் விரிவாகக் கூறப் படும். தக்கிணதேசத்தின் ஒரு முக்கிய ஆருன தெதுறு ஒயாவி? சில பாசனத் சிட்டங்களை ஏற்படுத்தியதுடன், பஸ்துன் கோறளையிலும் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்கு வாய்ப்பான வகையில் அப்பகுதியிலுள்ள சகதியை அகற்றினன் அவன் நிறுவிய தலைநக ரான பராக்கிரமபுரத்திலும் (இப்போது அழிந்த நிலையில் உள்ள பண் டுவஸ்நுவரை) பராக்கிரம சமுத்திரம் போன்ற குளங்கள் வெட்டப் பட்டன. வியாபாரமும், சிறப்பாகப் பிறநாட்டு வணிகமும், இவன் கவனத்தைப் பெற்று விருத்தியடைந்தது. நாடு அபிவிருத்தியடைந் தும் அதன் பலனை அரசாங்கம் பெறவியலாது நிருவாக அமைப்புத் தடைப்படுத்தலாம். எனவே, பாலன அமைப்பையுஞ் சீர்ப்படுத்தி, நிருவாகத்திறனை யுறுதிப்படுத்தின்ை. நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப் பெற்றிருந்த நாட்டில், இந்த ஒழுங்குகளால் பெருமளவு நன்மையுண்டாகி யிருக்கும். இவனுக்கு முன்னர் தக்கிணதேசத்தை ஆட்சி செய்தவர்களுக்கும், இவனுக்கு மிடையேயுள்ள பெரும் வேறுபாடு இந்த ஒன்றிலிருந்தே புலப்படும்.

Page 25
38 பண்டைய ஈழம்
அநீதியான வரிமுறை, அரசாங்க அங்கீகாரத்துடன் நடைபெறும் கொள்ளை போன்றவற்றை பராக்கிரமபாகு கைக்கொள்ளாது, மூல வளங்களை அபிவிருத்தி செய்வதிலேயே தன் கவனத்தைச் செலுத்தி யமை குறிப்பிடத்தக்கது அபிவிருத்தி வேலைகள் ஒரு புறம் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், மறுபுறம் இராணுவப் பயிற்சி ஒழுங்கு களும் நல்லமுறையில் நவடபெற்று வந்தன. படைப் பயிற்சியில், நுட்பமான போர்முறைகளும் சிறப்பான இடததைப் பெற்றன. மாகாணம் முழுவதிலுமுள்ள இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறு தற்குத் தூண்டுதலளிக்கப்பட்டு விசேட பிரிவுகளாக அவர்கள் அமைக்கப்பட்டிருந்தனர். அயல் நாடுகளிலிருந்து கூலிப்படைப் பிரிவுகள் சேவைக்கு அமர்த்தப்பட்டன. இவ்வாறன ஆயத்தங்கள் பூர்த்தியானதும், பராக்கிரமபாகு இராஜரட்டையைக் கைப்பற்று தற்குத் தயாராணுன். iw. இலங்கை முழுவததற்கும் அரசனுதல் ;
உருகுணயை அடிப்படுத்தல், தக்கிண தேசத்துக்குப் பராக்கிரமபாகு அரசனனபோது, இராஜ ரட்டையில் கஜபாகுவும், உருகுணையில் மானபரணனும் ஆட்சியா ளர்களாக விளங்கினர். * பராக்கிரமபாகு இராஜரட்டையையும். உருகுணையையும் கைப்பற்றி இலங்கை முழுவதற்கும் அரச9° எண்ணி, இவ்விரு ஆட்சியாளருடன் நீண்ட போர்களை நடத்தல்" ஞன். இப் போர் களைப்பற்றிய வரலாறு மிக விபரமாக ச் சூளவம் சத்தில் உள்ள ஓர் அத்தியாயத்தில். (அத். 70) கூறப்பட்டுள்ளது" பராக்கிரமபாகுவைத் தோல்வியே காணுத வீரனுகச் சித்தரிக்கும் நோக்கங்கொண்ட சூளவம்ச ஆசிரியர், அவன் எய்திய தோல்விகள் பற்றிக் குறிப்பிடாத தில் வியப்பில்லை. இந்த அத்தியாயத்தில் வரும் விபரங்களை நோக்கும்போது, கஜபாகுவும் மானபரணனும் போர் வலிமையிற் பராக்கிரமபாகுவுக்குக் குறைந்தவர்களாகக் காணப்பட வில்லை. நீண்ட காலமாக நடந்தேறிய போர்களின் பின்னரும் தொடர்ச்சியாகப் பராக்கிரமபாகு எய்திய வெற்றிகளின் முடிவிலும்’ பராக்கிரமபாகு தான் கருதியிருந்த இலக்கையடைந்து விட்டாதாகத்  ெத ரிய வி ல் லை. ஒருபக்கச் சார்புடைய முறையில் அ  ைம ந் துள்ள இவ்வரலாற்றில் பராக்கிரமபாகு பெருந் தன்மையு-ன் நடந்து கொள்வதாகக் கூறப்படினும், பிறிதோர் ஆதாரத்தால் (சங்கமுக் கல்வெட்டால்) அரச குமாரர்களும் தாம் நடத்திய போர் களில் வெற்றி தோல்வி காணமுடியாத நிலையிலேயே, சங்கத்தினர் தலையிட்டு இருவர்க்குமிடையே சந்துசெய்து வைத்ததாக அறிகின் ருேம். எனவே, பராக்கிரமபாகு நடத்திய போர்களில் அவன் எய் திய தோல்விகள் சூளவம்சத்தில் குறிப்பிடப்படாததால், இவ்வர லாற்றை நாம் அப்படியே உண்மையாகக் கொள்வதற்கில்லை.
* அத்தியாயமுடிவிலுள்ள மரபு நிரலைப் பார்க்க.

இராஜரட்டையை வெல்லப் பராக்கிரமபாகு நடத்திய போர் களைப்பற்றிய விவரங்களைத் தவிர்த்து, அவற்றின் போக்கை மட்டும் சுருக்கமாக இங்கே கவனிப்போம். முதலில் பராக்கிரமபாகு ம க ரி மலேய தேசம் என்ற பகுதியைக் (அதாவது கஜபாகுவின் ஆட்சிக்குட் பட்ட மலைநாட்டை) கைப்பற்றுவதிற் கவனஞ் செலுத்தினன் இப் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம், தக்கிணதேசத்தின் வலதுபுறத்தி லிருந்து எவ்வகை ஆபத்தும் வாராது தவிர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. க ஜ பாகு வி ன் ஒரு தண்ட நாயகனுன ரக்கன் எ ன் பவ னை த் தன்பக்கத்துக்குச் சேர வைத்து, அப்பிரதேசத்தின் பகுதிகளை ஒவ்வொன்ருகக்  ைகப் பற்றி ஞ ன். இதை முடித்துக் கொண்டதும், இராஜரட்டையைத் தாக் குதற் குத் தன் திட்டங்களை வகுத்துத் தன் அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தினன். அவற்றை நுணுக்கமாகப் பின்பற்றியே போரை நடாத்தவேண்டுமென அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். கரையோர மாக முத்துத் தளங்களை நோக்கியும், உள்நாட்டினுடாகக் காலவாவி நோக்கியும் இரு படைப்பிரிவுகள் முன்னேறின. இவற்றுள் முத்தக கர என்ற மாவட்டத்தில் வெற்றியிட் ய படைப்பிரிவு அங்கு ஓர் அரணே நிறுவியது. கால ஒயா வைக் கடந்து மு ன் னே றிய மற்றப் படைப்பிரிவு, அம் மாவட்டத்தில் சில வெற்றிகளை யடைந்தும் மேலே முன்னேருது தடுத்து நிறுத்தப்பட்டது. மற்ருெரு படைப் பிரிவு நாலந்தாவுக்குச் சமீபமாக அம்பன் கங்கையைக் கடந்து, கஜபாகு வின் பிரதேசங்களுக்குள் புகுந்தன. தன் படைப்பலத்தைப் கூட் டியபின், பொலன்னறுவையைத் தாக்குதற்குப் பராக்கிரமபாகு ஆயத்தமாஞன். தன் தலைநகரை நோக்கிப் பராக்கிரமபாகுவின் படைகள் வருவதை யுணர்ந்த கஜபாகு, விரைவாக இரு படைப் பிரிவுகளை யனுப்பிப் பராக்கிரபாகுவின் முன்னேற்றத்தைத் தடைப் படுத்துவதில் ஒன்றையும், முத்தாகர மாவட்டத்தில் நிறுவப்பட்ட அரணைத் தாக்கிப் பராக்கிரம பாகுவின் கவனத்தைத் திசை திருப்பு வதில் மற்றதையும் ஈடுபடுத்தினன். ஆனலும், பராக்கிரமபாகுவின் படைகள் அளகார மாவட்டம் வரை முன்னேறி அங்கு கஜபாகுவின் படையை வென்றன. மேற்கு நோக்கிச் சென்ற படையுடன் பராக் கிரமபாகுவின் படைப்பிரிவு அனுராதபுரத்துக்கு அண்மையில் பொரு தியது. இச்சண்டையில் பராக்கிரமபாகுவின் படை தோல்வியடை யுந் தறுவாயில், உதவிபெற்றுத் தப்பிக் கொண்டது. இதன் பின்னர், பொலன்னறுவையை நோக்கிய முன்னேற்றத்தைத் தொடர்வதற்கு மீண்டும் ஆயத்தமானன். நாலந்தாவில் தன் தலைமை நிலையத்தை அமைத்துக்கொண்டு, ஆளிசார மாவட்டத்தை அடிமைப்படுத்தினன். இதன்பின், பொலன்னறுவையைத் தாக்குவதற்கு உத்தரவு கொடுத் தான். இவ்வேளையில் உருகுணே ஆட்சியாளனுன மானுபரணனும் தன் படைகளுடன் பராக்கிரமபாகுவைச் சார்ந்து பராக்கிரமபாகு

Page 26
40 Jevi - b
29. " துப்ேெழ: శ్లో ஆதிதிரடித்த (ஐதீஜி
បផ្សំផ្សៃ 約、糞常霸
சலாவத்த \ܘ *్క ಸ್ಕ್ರೆ,
httLog', s *"గ్రీష్మా
భ్ర r w-v g 念 w1 . Qgoʻ `r ́ i ՞ՀԿ: ஜெமிய்ங்கMேJ '^*திநாடு
நேத்ர f ༄་་་་་་ آسانچار *ဒမှ
f ം-\?-
y, /’ " ه\ \
༨་་།༽ , கீரகழ8.உடுந்தொர ம. Nk ఒఆ as on .J[u சமூகவிர:۹نI|اندوئم:۔
Uji - پسrسسخ؟ - ہN
} s M `ܢܚܬ "physarcà 6
5岔 $1\ur( *—ફ
"ടsം .
s *లో ཊི་ཀྱ་
VM" ლ. L[}{fbfTუნფ) ஐ ஆ が 拯}
ஆஅம்ப்ாந்ஜதாப &*> மாஜஅரு, அம்ஃபிl
is ( 3 p. //
--திேந்ெதர
பராக்கிரமபாகு கால இலங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் பலத்தை அதிகரிக்க் வைத்ததாகச் சூளவம்சம் தெரிவிக்கின்றது. முன்னர் கஜபாகுவுடன் சேர்ந்து பராக்கிரமபாகுவுக் கெதிராகச் சண்டை செய்து தோல்விகள் அடைந்த மானபரணன், இராஜரட் டையைப் பராக்கிரமபாகு வெல்வது உறுதியானதும் பின்னவனை ஆதரித்ததாகச் சூளவம்சம் கூறுகின்றது. பொலன்னறுவையைத்தாக் குவதற்கென மானுபரணன் படைகளை சொபரவில் (சொரபர) வைத்துக்கொண்டிருந்தான். பராக்கிரமபாகுவின் படைகள் இலங் காநாத, மகிந்தன் முதலான சிறந்த தளபதிகளின் தலைமையில் கண்டிகாமம் என்ற கணவாய் வரை முன்னேறிச் சென்றன. பொலன் னறுவையின் மேற்கேயிருந்த இக்கணவாயே, பொலன்னறுவையை அவ்வழியால் அடைவதற்கு உள்ள ஒரே வாயிலாகும். கஜபாகுவின் படைகள் அக்கணவாயைப் பாதுகாக்க எவ்வளவோ முயன்றும் தோல்வி கண்டன. கணவாயைக் காக்கவியலாது போகவே, கஜ பாகுவின் படைகள் பொலன்னறுவைக்கு விரைந்தன. அந்நேரத்தில் பெருங்குழப்பம் உண்டாயிற்று. இருப்பினும், கஜபாகு நிலைமை யைச் சமாளித்து, படைகளைத் திரட்டி, பொலன்னறுவையை இயன்ற அளவுக்குப் பாதுகாப்பதற்கு நகரின் வெளியே அணிவகுக் கச் செய்தான். கஜபாகுவின் சேனையைப் பின்தொடர்ந்து வந்த பராக்கிரமபாகுவின் படை, நகரின் வெளியே நிகழ்த்திய சண்டை யில் மிகத்துரிதமான வகையில் வெற்றியை ஈட்டிக் கொண்டது. நகரினுட் புகுந்த பராக்கிரமபாகுவின் ப  ைட, கஜபாகுவைத் தேடிப் பிடித்து அவனைக் கைதியாக்கிக் கொண்டது.
பொலன்னறுவையைக் கைப்பற்றிய பராக்கிரமபாகுவின் படை பினர், தமது அரசனுடைய எண்ணத்தையும் மிஞ்சி, கட்டுக்கடங் காது நடக்கத் தலைப்பட்டனர். தலைநகரில் கொள்ளை, சூறையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து கலவரமும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. போர் வீரர்களின் நடத்தைகளால் ஆத்திர முற்ற மக்களின் தலை வர்களும் அதிகாரிகளுங் கூடி, மானபரணனைத் தமக்கு உதவுமாறு வேண்டிச் செய்தியனுப்பினர். சொபரவில் தங்கியிருந்த மானபர ண ன், இந்த வாய்ப்பைத் தவறவிட விரும்பாது, தன் படைகளு டன் பொலன்னறுவையை நோக்கி விரைந்தான். தலைநகரில் உண் டான கலவர நிலைமையை அடக்கப் பராக்கிரமபாகு சேனபதி தேவனது தலைமிை யில் ஒரு படையை அனுப்பியிருந்தான். ஆனல் அது தனது வேலையைத் தொடங்கு முன்னரே, மானபரணனது படை பராக்கிரமபாகுவின் படையைத் தோற்கடித்து விரட்டியது. சேனபதி தேவன் கைதியாக்கப்பட்டான்.
மானபரணன் முதலில் அமைதியை நிலைநாட்டிக்கொண்டு, கஜ பாகுவின் நம்பிக்கை வாய்ந்த அதிகாரிகளைக் கொன்று, இறுதியில்
6

Page 27
usin flu) is th
கஜபாகுவையும் ஒரு சுரங்க அறையில் கைதியாக்கி வைத்தான். தனது முடிசூட்டு வைபவத்தை நடத்தவே இவ்வாறன செயல் களில் ஈடுபட்டு வந்தான். கஜபாகுவுக்கு உணவைக் கொடாது, அவனைப் பல வழிகளில் துன்புறுத்தி வரலானன். இந்த இக்கட் டான நிலையில் பராக்கிரமபாகுவின் உதவியை நாடி, அவனிடம் ஒரு தூதுவன கஜபாகு இரகசியமாக அனுப்பிவைத்தான். பராக் கிரமபாகு தாமதிக்காது பொலன்னறுவையை மீண்டும் தாக்கத் தன் படைகளை அனுப்பினன். உருகுணையிலிருந்து உதவிப் படைகள் வராது தடுக்கப்பட்டன. மானபரணன் அப்படைகளிடம் தோல்வி யெய்தி, உருகுணைக்குப் புதிய சின்னங்களுடன் தப்பியோடியதாகக் கூறப்பட்டுள்ளது. பராக்கிரமபாகுவின் படைகளால் விடுதலை செய் யப்பட்ட கஜபாகு கொட்டியார்ப்பற்று (கொட்ட சாரவு) க்கு விரைந்து சென்று அங்கே தங்கினன். இதன் பின்னரும் கஜபாகுவின் படை களுக்கும் பரஈக்கிரமபாகுவின் படைகளுக்கும் சண்டைகள் நிகழ்ந்த தாகக் கூறப்படுகின்றது. இச் சண்டைகளால் சலிப்பெய்திய கஜ பாகு, சங்கத்தினரைத் தமது தகராற்றில் தலையிட்டுச் சமாதா னத்தை யேற்படுத்துமாறு வேண்டியபோது சில பிக்குகள் கிரித்தளை யில் தங்கியிருந்த பராக்கிரமபாகுவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி இருவருக்குமிடையே போரை நிறுத்தி வைப்பதற்கான உடன் பாட்டை ஏற்படுத்தினர். இந்த உடன்பாடு மண்டலகிரி விகாரையில் பொறிக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதும், அங்கு இப்போது அது காணப்படவில்லை. குருனுகலைக்கு அண்மையிலுள்ள சங்கமு விகாரை யில் இவ்வுடன்பாடு பிரதி பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம். இருவரும் (கஜபாகுவும், பராக்கிரமபாகுவும்) தமக்குள் தமது ஆயுட்காலத்தில் இனிப் போர் செய்வதில்லையெனவும், இருவரில் எவர் முதலில் காலமாகின்ரு ரோ அவருக்குரிய பிரதேசங்கள் உயிர் வாழ்பவரான மற்றவருக்கே சேருமெனவும், இந்த இருவரில் எவருக் காயினும் பகை பூண்ட மன்னர்கள் இருப்பின் அம் மன்னர்கள் இரு வருக்குமே பகைவர்களாவரெவுைம் இந்த உடன்பாடு கூறியது
சூளவம்சத்திற் குறிப்பிடப்பட்டுள்ள உடன்பாட்டுக்கும் இக் கல் வெட்டிலுள்ளதற்கு மிடையே பெரும் வேறுபாடு உள்ளது. மாஞ பரணன் கஜபாகுவுடன் நட்புறவை மீண்டும் ஏற்படுத்த முயன்றும், கஜபாகு இடமளிக்காததால் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது. உடன்பாடு ஏற்பட்டபின், பராக்கிரமபாகு தன் பிரதேசமான தக்கிண தேசத்துக்குத் திரும்பிச் சிறிதுகாலம் அமைதியுடன் வாழ்ந் தான். இதனிடையே, கந்தளாயில் தன் இறுதிக்காலத்தைக் கழித்த
* தந்ததாது, ஐயக்கலம் ஆகிய இரு சின்னங்களும், முன்னர் விக்கிரமபாகு ஆட்சிசெய்தபோது, சில பெளத்த குருமார்களால் பாதுகாப்புக்காக உருகுணைக்குக் கொண்டு செல்லப்பட்டன.அவற்றை மானுபரணன் பொலன்னறுவைக்குக் கொண்டுவந்திருந்தான்.

மகா பராக்கிரமபாகு 4°
கஜபாகு விரைவில் இறந்து போனன், அனல், பராக்கிரமபாகு இப் போதும் இலகுவாக இராஜரட்டை அரசைப் பெறவியலாது சில நிகழ்ச்சிகள் தடைசெய்தன.
கஜபாகு இறந்தவுடன் அவனது அமைச்சர்கள் மன்னன் செய் திருந்த உடன்பாட்டைப் புறக்கணித்து, மானபரணனைப் பொலன் னறுவைக்கு விரைந்து வந்து அரசை யேற்கும்படி ஒரு வேண்டுதலை அனுப்பினர். பராக்கிரமபாகுவுக்கும் இச் செய்தி எட்டியதால், தன் படைகளை விரைவாக அனுப்பிப் பொலன்னறுவையைத் தன் வச மாக்கினன். கொட்டியார் வரை முன்னேறிய மானுபரணனது படைகள் மகா வலியைக் கடக்காதவாறு, அதன் கடவைகளை யெல் லாம் பராக்கிரமபாகுவின் வீரர்கள் பாதுகாத்து நின்றனர். மான பரணன் ஆற்றைக் கடக்க இயலாததால், போர் நிலைமையில் மந்த மேற்பட்டது. அவ்வேளையில், பராக்கிரமபாகுவின் ஒரு படைப் பிரிவு உருகுணையைத் தாக்க பஸ்துன் கோறளையிலிருந்து முன்னேறி யது. இப் படைப்பிரிவு அங்கு அடைந்த வெற்றிகளால் மானுபர ணன் தன் படையின் சில பிரிவுகளை உருகுணைக்கே அனுப்பவேண் டியவனனன். ஆனல் காவலற்ற ஒரு கடவை யிருப்பதை மானபர ணன் அறிய வந்து அதனுரடாகத் தன் படைகளை அனுப்பி விரைவில் பராக்கிரமபாகுவின் படைகளை நிலைகுலைய வைத்தான். பொலன்ன றுவையை விட்டுப் பின்வாங்கி நாலந்தாவில் தங்கியபின், சிறிதுகால ஆறுதலுக்குப்பின் பராக்கிரமபாகுவின் படை போரைத் தொடர்ந்து நடாத்தியது. போர் நீண்டகாலமாக, நடைபெற்றது. ஈற்றில் மானு பரணனது படை தோல்வி எய்தலாயிற்று. ஆனல், மானபரணன் எதிரிகளிடம் சிக்காது உருகுணைக்குத் தப்பியோடினன். பராக்கிரம பாகு இத்துணை நீண்டகாலம், பொறுமையை இழக்காது, தன் இலக்கை யடைதற்காக அயராது உழைத்து 1153-ல் வெற்றியைப் பெற்று, இலங்கை முழுவதற்கும் அரசனுகப்பொலன்னறுவையில் முடி சூடிக் கொண்டான். உண்மையில் உருகுணையை அப்போதும் அவன் அடக்கி விட்டதாகக் கூறவியலாது. பொலன்னறுவையில் அரசை யேற்ற பின் உருகுனயை அடிபப்டுத்தலே அவனை ஈடுபடுத்திய முக் கிய மான உள்நாட்டுப் பிரச்சினையாக விருந்தது. இலங்கை முழுவ தற்கும் அரசனகப் பராக்கிரமபாகு முடிசூடிக்கொண்ட பின்னரும், சுமார் எட்டு ஆண்டுகள் வரையில் உருகுண அவனது ஆணேயை ஏற்காது இருந்து வந்தது. உருகுணையை அவன் அடிப்பத்திய வரலாற்றையும் இங்கே சுருக்கமாக கூறிவிடுவோம்.
உருகுனையை வெல்லல்; சூளவம்சத்தில் இரண்டு அத்தியாயங் களில் நானுாற்றுக்கும் அதிகமான செய்யுள்களில் விரிவாகக் கூறப் பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்போது, பராக்கிரமபாகு இலகு வாக உருகுணையை வென்றதாக தென்படவில்லை. நீண்டகாலமாக,

Page 28
44 பண்டைய ஈழம்
அவனது படைகள் கடுமையான சண்டைகள் நிகழ்த்தியே அதை வெல்ல முடிந்ததாகப் படுகின்றது. உருகுணையின் ஆட்சியாளனக விருந்த மானபரணன் பொலன்னறுவையிலிருந்து தப்பி உருகுணே க் குச் சென்றதும், சிறிது காலத்தில் இற ந் து போக வே. அவனது தாயான சுகலா என்பவள் (பூரீ வ ல் ல பன் என்பானது இராணி) உருகுணையின் பரிபாலனத்தைக் கவனித்து வந்தாள். உருகுணேயைச் சேர்ந்த படைத் தலைவர்களும் பிரதானிகளும் சு க லா  ைவ ஆத ரித்து நின்றதோடு, பராக்கிரமபாகுவுக்கு எதிராகக் கலகஞ் செய் யவும் ஆயத்தங்கள் செய்யலாயினர். இவற்றையறிந்த பின் ன ரே பராக்கிரமபாகு உருகுணைமிது படையெடுத்ததாகக் கூறப்பட்டுள் ளது. மானபரணன் முன்னர் கொண்டு சென்ற புனித எச்சங் களைக் கைப்பற்றிப் பொலன்னறுவைக்கு கொணர்வதே உருகுணைப் படையெடுப்பின் முக்கிய நோக்கமாகக் கொள்வர். ஏனெனில் இப் புனித எச்சங்கள் பராக்கிரமபாகுவின் உடைமைகளாக வரும் வரை அவனுடைய இறைமை நிறைவு பெருததாகக் கருதப்பட்டது. பராக்கிரமபாகு இந்த உருகுணப் படையெடுப்புக்குப் பொறுப்பா கத் தனது சேனபதி ரக்கனையே நியமித்து அவனுடன் ஒரு பெரும் படையை யனுப்பி வைத்தான். இவனுக்கு உதவியாக மூன்று தள பதிகளும் அனுப்பப்பட்டிருந்தனர். அட்ட சகச என்ற கிழக்கு உருகுணையிலேயே பெரும்பாலான சண்டைகள் நிகழ்ந்தன. உடுந் தொரவில் தங்கியிருந்த இராணி சுகலா, பராக்கிரமபாகுவின் படை கள் நெருங்கி வந்தபோது, எற்றிமோலைக்குச் சென்று ஒளித்திருந் தாள். கடுஞ் சண்டைகளுக்குப்பின் புனித எச்சங்கள் கைப்பற்றப் பட்டன. ஆணுல் இராணி சுகலா அகப்படாது தப்பிவிட்டாள். கடும் எதிர்ப்பினிடையே புனித எச்சங்களைப் பொலன்னறுவைக்கு அனுப்பிவிட்டு, கிழக்கு உருகுணையில் தோன்றிய எதிர்ப்பைப் படிப் படியாக அடக்கி, ஈற்றில் தீகவாபி மாவட்டத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஓர் அரணில் சுகலாவின் படைகள் கூடியிருந்தன. அந்த அரணைப் பராக்கிரமபாகுவின் படைகள் தாக்கியும், அறுதி யான வெற்றியை எய்தமுடியாது போயின.
மேற்கு உருகுணையான துவாதச சகசவை அடக்குவதில், இதே காலத்தில் பராக்கிரமபாகுவின் வேறு படைப்பிரிவுகள் ஈடுபட்டு வந்தன. மேற்கு, தெற்குக் கரையோரங்களால் ஒரு படையும், இரத் தினபுரி மாவட்டம், மொறவக்க கோறளை என்பவற்றினுாடாக மற் ருெரு படையும் மகாநாகஹ"சலவை நோக்கிச் செல்லலாயின. இவற்றுள் இரண்டாவது படை தமிழாதிகாரி ரக்கன் என்பவனது தலைமையிலிருந்தது. இவன் பல வெற்றிகளை எய்தியதுமன்றி. பகைவர்களின் போர் உபாயங்களை வெல்லுவதற்கு ஏற்ற தந்திரங் களைக் கையாண்டு, தன் மன்னனுக்கு வெற்றியை உறுதிப்படுத்தி ஞன். இவ்விரு படைகளும் வெற்றிமேல் வெற்றியீட்டி, மகாநாக

மகா பராக்கிரமபாகு 45
ஹ"லவில் சந்தித்து ஒய்வெடுத்தபின், ஏனைய பகுதிகளையும் அடக்கி வந்தன. வளவை கங்கைப் பகுதியில் ஏற்பட்ட இறுதி எதிர்ப்பையும் தமிழா திகாரி வென்று துவாதச சகசவைமுற்ருக அடக்கிக் கொண் டான். இராணிசுகலாவைக்கைப்பற்றுவதே பராக்கிரமபாகுவின் படை களுக்கு எஞ்சியிருந்த வேலையாகும். அதை ஓரளவு இலகுவாக அவை நிறைவேற்றியபின், கலகத் தலைவர்களைக் கடுமையாகத் தண்டித்து, உருகுணே மக்களை அச்சுறுத்தி மீண்டன. மன்னனுடைய கட்டளைப் H?- பூதன் (Bhuta) என்ற அதிகாரி உருகுணையைப் பரிபாலிக்கலா ன்ை, ஏனைய படைத்தளபதிகள் கைதியான இராணி சு கலாவுடன் பொலன்னறுவைக்கு மீண்டனர்.
உருகுணேயைப் பராக்கிரமபாகுவின் படைகள் வெல்லுவதில் எவ்வளவோ தொல்லைகளை யடைந்தனர் என்பது சூளவம்சத்தில் உள்ள விவரங்களால் மிகவும் தெளிவாகின்றது. உருகுணையில் கல கத்தை நிகழ்த்தியவர்கள் நேரடியாக எதிர்த்து நின்று போர்புரிவ தைக் காட்டிலும், மறைமுகமான எதிர்ப்பைக் காட்டுவதிலும் * கெரில்ல்ா?ப் போர்முறைகளைக் கையாள்வதிலும் * கைதேர்ந்தவர் களாக விளங்கினர். இதனலேயே பராக்கிரமபாகுவின் படைகள் உருகுணேயை வெல்லுவதில் எவ்வளவோ சிரமப்பட்டனர். உண்மை யில். இறுதியிலும் உருகுணை சரிவர அடக்கப்படடதாகக் கூறிவிட முடி யாது. ஏனெனில் இரண்டொரு ஆண்டுகளில் கலகம் மீண்டும் தொடங்கி, மீண்டும் இதேபோன்ற படையெடுப்புக்கள் நடைபெற்ற தாகக்கூறப்பட்டுள்ளது. எனவே உருகுணையை வெல்லுதல் பராக்கிரம பாகுவுக்குமே கடினமாக இருந்தமை குறிப்பிடத் தச்கது.
V. பொருளியற் பணிகள் : நீர்ப்பாசனம்
விஜயபாகு, தனது ஆட்சியின் போது, நாட்டின் சீர் கேட்டை நீக்குவதற்கு மேற்கொண்ட பொருளியற் பணிகளை முன்னரே கவனித் தோம். ஆனல், விஜயபாகு மறைந்தவுடன் நாட்டில் தோன்றிய அரசியல் குழப்பங்களும் உள்நாட்டுப் போர்களும் நாடடைந்த சிறி தளவு முன்னேற்றத்தையுங் கெடுத்து, விஜயபாகுவுக்கு முன்னிருந்த திலும் மோசமான நிலைக்கு நாட்டை ஆழ்த்தின. அரசுரிமைக்கா கப் போட்டியிட்டுப் போரிலீடுபட்ட இளவரசர்கள், வ ள ங் களை விருத்தி செய்யவோ தொழில்களை ஊக்கவோ அவகாசமற்றிருந்த னர். போர்களின் போது நீர்ப்பாசனங்கள் வேண்டுமென்றே சிதைக் கப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. குடிகளோ தம் தொழில்களை அமைதியாக நடத்த முடியாது இடர்ப்பட்டனர். " ஆலையில் கரும் பின் சாற்றைக் கசக்கிப் பிழிந்தெடுப்பதுபோல** மக்களிடம் கடுமை
* பேராசிரியர் கைகர் இக்கருத்தை வற்புறுத்தியுள்ளார். சூள வம்சம் (ஆங். மொழிப் பெயர்ப்பு) பாகம் II பக், 45 அடிக்குறிப்பு.

Page 29
46 பண்டைய ஈழம்
யான வரிகள் கறந்தெடுக்கப்பட்டன. இவ்வாருண் தொல்லைகளால் குடிகள் வருந்தியபோது, பராக்கிரமபாகு அரசைப் பெறுவதற்கு தடத்திய போர்கள் அவர்களின் இடர்களைப் பன்மடங்கு அதிக மாக்கின. ஆன லும் பராக்கிரமபாகு அரசனனபின், பொரு ளியல் வளர்ச்சியில் நாட்டங்கொண்டு உழைத்தானதலால், குடிக ளின் நிலை பெரிதும் மாறுதலடைந்தது. அம்மா மன்னன் மேற் கொண்ட பொருளியற் பணிகளால், நாட்டின் வருவாய் பன்மடங்கு அதிகரித்து ஒரு சுபீட்ச நிலையை நாடு எய்தியது. அவனுடைய ஆட்சியின்போது எழுந்த பாரிய கட்டிடங்களும் பிற ஆக்கப் பணிக ளுக்கும், பிறநாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட படையெழுச்சி களுக்கும் வேண்டிய பணத்தை அவன் மக்களிடம் அறவிட்ட வரி களாலேயே பெற்றுக்கொண்டான். அவ்வளவுக்கு மக்கள் சுபீட் சத்தை அனுபவித்தனர் எனலாம்.
பராக்கிரமபாகுவும் தன் வருவாயைப் பெருக்குதற்கு, விஜய பாகுவைப்போலவே, பிறநாடுகளுடன் வணிகத்தை வளர்த்து வந் தான். பின்னர் பர்மா மீது அவன் மேற்கொண்ட தாக்குதலுக்கு அந்நாட்டுடன் நடைபெற்ற வர்த்தகத்தைத் தடைப்படுத்தப் பர் மிய அரசன் எடுத்த நடவடிக்கைகளே காரணமாக இருந்தன. இவ் வியாபாரத்தைக் கட்டுப்படுத்தி அரசிறைக்கு அதிக வருவாயைப் பெறுதற்கென அவன் தக்கிணதேச அரசனுக இருந்தபோதே அந் தரங்க-துர என்ற ஒரு தனிப் பகுதியை ஏற்படுத்தி யிருந்தான். இப்பகுதியே, பிறநாடுகளுக்கு அனுப்பப்பட்ட வணிகப் பொருட் கள் உள்ள பகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்து அப்பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தது.
வணிகம் ஒரளவு முக்கியத்துவம் பெற்று வந் கபோதும், பயிர்ச் செய்கையே பராக்கிரமபாகுவின் காலத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக விருந்தது. பயிர்ச் செய்கையின் விருத்திக் காகப் பராக்கிரமபாகு எடுத்த நடவடிக்கைகளும், அவன் மேற் கொண்ட நீர்ப்பாசன வேலைகளும் பெரும் பாராட்டுக்குரிய தன் மையன. தக்கிணதேச அரசனுகப் பராக்கிரமபாகு இருந்த காலத் திலேயே, அவன் அப் பிரதேசத்திற் பயிர்ச்ச்ெய்கையின் அபிவிருத் திக்காகப் பல திட்டங்களை மேற்கொண்டான். தக்கிணதேசத்தின் நிலவியல்புகளைப் பற்றிச் சிந்தித்த பராக்கிரமபாகு, "இத்தகைய நாட்டில் (இராச்சியத்தில்) மழையால் வரும் நீரில் ஒரு சிறிதள வாயினும், மனிதத் தேவைக்குப் பயன்படாத வகையில், சமுத்தி ரத்திற் பாய்தலாகாது. இரத்தினக் கற்கள், தங்கம் முதலான வற்றையுடைய சுரங்கங்களுள்ள இடங்களிலேயன்றி ஏனைய இடங் களில் எல்லாம் வயல்கள் அமைக்கப்படல் வேண்டும்" எனத் தனது அதிகாரிகளுக்குக் கூறியதாகச் சூளவம்சம் (அத். 68 செய், 10-11)

47
குறிப்பிட்டுள்ளது. தக்கிணதேச நிலவியல்புகளை யறிந்து அவற்றிற் கேற்புடைத்தான திட்டங்களை வகுத்தான். முதலில், தெ துறுஒயா வில் மூன்று அணைகளைக் கட்டி, மூன்று வெவ்வேறு பாசனத் திட் டங்களை இயங்கச் செய்தான். கொட்டபத்த அணைக்கட்டையும் கால்வாயையும் கொண்டு அமைக்கப்பட்ட முதலாவது திட்டத்தின் சிதைவுகள் தானும் இப்போது கிட்டவில்லை. எபவலப்பிட்டியிலுள்ள அணைக்கட்டிலிருந்து றிடி-பண்டி-எள எனப்படும் கால்வாய் மூலம் மாகல்லவாவிக்கு நீரைக் கொடுக்க வகை செய்தது இரண்டாவது திட்டம். மூன்ருவது திட்டத்தில், தெமோதரவில் நிறுவப்பட்ட அணையிலிருந்து, தலகல்லவாவி என்ற ஒரு குளத்துக்குக் கால்வாய் மூலம் நீர்வசதி யேற்படுத்தப்பட்டது. பாணசமுத்திரம் என்ற பெய ராலும் வழங்கப்பட்ட பராக்கிரம சமுத்திரம், முன்னரே பராக்கிரம புரத்திலிருந்த பண்டவாவி என்பதை விசாலித்து அமைக்கப்பெற்ற தாகும். இக்குளம் விசா லிக்கப்பட்டதும், ஆயிரம் ஏக்கருக்கும் அதிக மான பரப்பைக் கொண்டு விளங்கிற்று. பழைய நீர்த்தேக்கங்கள் பலவற்றை அவன் தக்கிணதேசத்தில் புதுப்பித்து பெரும் பணி புரிந் தான். இவ்வாறு புதுப்பிக்கப்பட்டவற்றுள், முப்பத்தேழு குளங்க ளின் பெயர்களைச் சூளவம்சம் குறிப்பிட்டுள்ளது. ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றை அறிஞர்கள் இனங்கண்டுள்ளனர். இறுதியாக, மனித சஞ்சாரத்துக்கும், பயிர்ச் செய்கைக்கும் உதவாதவாறு சகதிகளை யும், சதுப்பு நிலங்களையும் கொண்டு விளங்கிய பஸ்துன்கோறளையை (பஞ்சயோஜன) நீர்வற்றச் செய்து சகதியை நீக்கிப் பயிர்ச் செய் கைக் கேற்றதாக மாற்றியமை இவனுடைய பெரும் பணியாகும்.
தக்கிணதேச ஆட்சியாளனுக இருந்தபோது, பராக்கிரமபாகு அடிக்கடி போர்களில் ஈடுபட்டும், இத்துணைப் பெரும் பணிகளை இயற்றி முடித்தமை அவனது திறமையைக் காட்டுகின்றது. "ஆற் றல் படைத்த மாந்தரால் ஆற்ற முடியாத ஒன்றும் இவ்வுலகில் உண்டோ?" டராக்கிரமபாகு இவ்வாறு வினவியதாகக் கூறுவது ஒருவேளை சூளவம்ச ஆசிரியருடைய கற்பனையாக இருக்கலாம். ஆனல் இவ்விஞவில் தொனிக்கும் தத்துவம், பராக்கிரமபாகுவின் அரசி யல் வாழ்வுக்குப் பெரிதும் பொருத்தமுடையதாகும். மற்றையோ ரால் எண்ணியும் பார்க்கமுடியாத அளவு பெருந்தொகையான பாசன வேலைகளை, இராஜரட்டையின் அரசைப் பெற்றபின் (1153) நிறைவேற்றியதாகச் சூளவம்சம் அறியத்தருகின்றது. 163 பெருங் குளங்களும் 2376 சிறு குளங்களும் இவனல் புதிதாக அன்றேல் திருத் திக் கட்டப்பெற்றன என்கிறது சூளவம்சம். இவற்றுள் இரண்டா வதும் பெரியதுமான பராக்கிரம சமுத்திரம் பொலன்னறுவையில் நிறுவப்பட்டது. முன்னரே நிறுவப்பட்டிருந்த தோபவாவி, தம்புத் துலுவாவி என்பவற்றை உள்ளடக்கி நிறுவப்பட்ட ஒரு பெரும் நீர்ப்பாசனத் திட்டமே பராக்கிரம சமுத்திரமாகும். அம்பன் கங்

Page 30
4. Ljsfoliu Fulh
s
f
"N.--
மகா பராக்கிரமபாகுவின் நீர்ப்பாசன வேலைகள்
கையில் அங்கமடில்ல என்ற இடத்தில் அஃணயைக் கட்டி அதிலிருந்து வெட்டப்பட்ட கால்வாயின் வழியே இக்குளத்துக்கு நீர் பெறப்பட் l • இக்கால்வாயே, "ஆகாச கங்கை யெனச் சூளவம்சத்தில்قوع۔ அ  ைழ க் கப் படுவ து, அம்பன் கங்கையை ஆதார மா சு க் கொண்டு முன்னரே இ யங் கி ய நீர் ப் பா ச ன த் தொட ரான மின்னேரி - கிரித்தளை - கவுடுலு -கந்தளாய் என்பவற்றுடன் பராக்கிரம சமுத்திரத்தை இணைக்க உதவியது, இவன் கிரித்தளை யுடன் அமைத்த ஒரு தொடுப்புக் கால்வாய். இக்கால்வாய் அமைக் கப்பட்டதால், பராக்கிரம சமுத்திரத்தின் நீர்வசதி மேலும் அதிக ரித்தது. இக்குளம் இன்றுள்ள நிலையில் 18,000 ஏக்கருக்கும் அதிக மான நிலத்துக்கு நீரைப் பாய்ச்ச உதவுகின்றது. இக் குளத்தைச் சுற்றியுள்ள நாற்பது அடிவரை உயரமுடைய கட்டு எட்டரை மைல் நீளமுடைய தென்பதும், பொறிப்புக்களைக் கொண்ட கற்றுரண்கள் இக் கட்டில் ஆங்காங்கே நாட்டப் பெற்றிருந்தன என்பதும் குறிப்பி டத் தக்கவையாகும். பராக்கிரமபாகுவின் புகழை அமைதியான முறையில் என்றென்றும் பறைசாற்றி நிற்பது பராக்கிரம சமுத் திரம் என்பதில் ஐயமில்லை. இது தவிர, பராக்கிரமத் தளாக(ம்),
 

மகா பர்ாக்கிரமபாகு 4兆
பராக்கிரம சாகர்(ம்) என்ற மற்றிரு குளங்களும் அவனுடைய பெய ரைத் தாங்கியிருந்தன. மகிந்த தளாக(ம்), எகாகவாபி என்பனவும் இவனுல் புதிதாக நிறுவப்பட்டனவாகும்.
பராக்கிரமபாகுவால் திருத்தப்பெற்ற அல்லது விசாலிக்கப்பட்ட குளங்களே பெருந்தொகையின. அவற்றுள் மகாசேனனது மின்னேரி மகாதாரகல்ல, கவுடுலு வாவிகளும், மற்றும் காலவாவி, கிரித்தளை பதவியா, நாச்சதூவ, இராட்சதக்குளம் என்பனவும் குறிப்பிடத் தக்கவையாகும். இவன் நிறுவியதாகக் கூறப்படும் கால்வாய்களுள் ஒன்ருன அசிரவதி என்பது, மகா வலி கங்கையிலிருந்து மே ற் கே செல்லும் வகையில் வெட்டப்பட்டிருந்தது. இக்கால்வாய் தொடங் கிய அதேயிடத்தில் தொடங்கிய மற்றுெரு கால்வாயான கோமதி கால் வாயும் பராக்கிரமபாகுவாலேயே நிறுவப்பட்டது. தாதுசேனன் நிறுவிய ஜயகங்கை என்ற கால்வாயையும் பராக்கிரமபாகு புதுக் கினன்.
பாசனத்துறையில் பராக்கிரமபர்கு ஆற்றிய பணிகள் அத்துறை யின் வரலாற்றில் அவனுக்கு மிக உயர்வான இடத்தை அளிக்கும் படி செய்துள்ளன. பராக்கிரமபாகுவின் பொருளியல்முயற்சிகளால் நாட்டில் பெரும் சுபீட்ச நிலை ஏற்பட்டிருப்பினும், அவன் மேற் கொண்ட பாரிய கட்டிட வேலைகளுக்கும் அதிக செலவைத் தந்த யுத்தங்களுக்கும் நிறையப் பணஞ் செலவானதால், அச் செல்வநிலை அதிக காலம் நீடிக்காது போயிற்று.
wi. சமயமும் கலைகளும்
சமயநிலை: பெளத்த சாஸனத்தை (சமயத்தை) மேன்மைபெற வைப்பதற்காகவே, பராக்கிரமபாகு இலங்கை முழுவதற்கும் அரச னக விரும்பியதாகச் சூளவம்சம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளது. அவ னுடைய ஆட்சியின் முக்கிய குறிக்கோள்களில் சமய வளர்ச்சி முதன்மைபெற்றிருந்த தென்பதில் ஐயமில்லை. விஜயபாகுவின் உறுதி வாய்ந்த பணிகளால் சமயநிலை ஓரளவுக்கு உரம் பெற்றிருந்தது போலக் காணப்படினும், அவனுடைய ஆட்சியைத் தொடர்ந்து நாட்டில் உண்டான அரசியல் நிலைமைகளால் அது பெரிதும் பாதிக் கப்பட்டது. உறவினரிடையே ஏற்பட்ட பூசல்களால், நாடு அமை தியையும் ஒழுங்கையும் இழந்து, சங்கத்துக்கு வேண்டிய பாதுகாப் பையும் பெறமுடியாத நிலையேற்பட்டது. விகாரைகளுக்கும், தாதுக் களுக்கும் வழங்கப்பெற்றிருந்த திரவியங்களும், நன்கொடைகளும் இப்போர்களின்போது அபகரிக்கப்பட்டன. விகாரைகள் பல சஞ் சாரமற்றுப் பாழெய்தலாயின. அரசியலில் தோன்றிய சீர்கேடுகள், சங்கத்தினரின் ஒழுக்கத்தையும் பாதிக்கலாயின. ஒரு சிலரைத்தவிர,
7

Page 31
80 Lu 6760). LJ Filb
r&னயேrர் கூடாவொழுக்கமுடைய "துஸ்வலீல பிக்குகளாக வாழ்ந் தனர். நல்லொழுக்கமுடைய (சுஸில) பிக்குகளும் ஒற்றுமையின்றி வாழ்ந்து வரலாயினர். இவ்வாறு சமய வளர்ச்சிக்குத் தடைகளாக விருந்த இடர்களேக் களைந்து, சங்கத்தில் புல்லுருவிகளாக வாழ்ந்த * துஸ்ஸில பிக்குகளை வெளியேற்றி, அதன் புனிதத்தையும் ஒற்று மையையும் நிலைநாட்ட வேண்டியது அவசியமாகியிருந்தது.
சமயப்பணிகள் : மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்போது (1153-1186) அவன் மேற்கொண்ட சமயப் பணிகளுள் முக்கிய மானது, சங்கத்தில் மிகுதியாக இருந்த கூடா வொழுக்கமுடைய பிக்குகளைத் தண்டித்து அவர்களே வெளியேற்றியமையே யாகும். இதற்கெனச் சிறப்பாகக் கூட்டப்பெற்ற ஒரு சமய ம ன் று க் குத் தலைமைதாங்கியவர் பேரறிஞரான திம்புலாகலை மகாகாசியப்ப தேரரா வர். பிடிவாதமும் மூர்க்க குணமும் படைத்த பல துஸ்ஸில பிக்கு கள், சமயமன்றின் நடவடிக்கைகளை முறியடிக்க முனைந்தனர். ஆனல், பராக்கிரமபாகுவின் உறுதியும் மனே வலியும் அவர்களுடைய முயற்சிகளை வியர்த்த மாக்கின. பிளவுபட்ட நாட்டை ஒன்றுபடுத்தப் பராக்கிரமபாகு எடுத்த முயற்சிகளைக் காட்டிலும் கடினமான ஒரு பணியாகச் சங்கத்தினரிடையே ஒற்றுமை ஏற்படச் செய்ததைக் குறிப்பிடுவர். வட்டகா மணியின் காலத்தில் சங்கத்தில் தோன்றிய சமயப் பிரிவினை கள் மகா பராக்கிரமபாகுவின் காலம் வரை வளர்ந்து வந்துள்ளனவேயன்றி, அவற்றுக்கிடையே ஒற்றுமை ஏற்படவில்லை. மகாவிகாரை, அபயகிரி, ஜெதவன என்ற முப்பெரும் விகா  ைர களைச் சார்ந்த பிக்குகள் 12-ம் நூற்ருண்டு வரை ஒற்றுமையடையா திருந்தனர். முதலில் மகாவிகாரைக் குருமார்களிடையே யிருந்த சிறு பூசல்கள் நீக்கப்பட்டதும், ஜெதவன அடயகிரி என்ற இரு விகா ரையினர்க்கும், மகாவிகாரையினர் க்குமிடையே இருந்த வேறுபாடு கள் அகற்றப்பட்டன. மகா சேனனுடைய காலத்தில் மகாயானப் பிரிவினர்க்கும், தேரவாதப் பிரிவினர்க்கும் காணப்பட்ட கொள்கை வேறுபாடுகள் காலவோட்டத்தில் குறைந்திருந்த மை இவ்வாறு சங்கப் பிரிவுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உதவியது. கூடாவொழுக் கமுடையவர்கள் சங்கத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின், சங்கத் தைச் சேர்ந்த முதிய குரவர்களைக் கொண்டு பிக்குகள் பின்பற்று வதற்கு உரிய ஒழுக்க விதிகளே வரைவித்து, அவற்றைக் கல்விகாரை யிலுள்ள பாறையொன்றிற் பொறிப்பித்தான். இவ்விதிகள் ‘கநிகா வத" என அழைக்கப்பட்டன. ஏராளமான சமயக் கட்டிடங்களை நிறு வுவதிலும் விகாரைகளுக்கு நிறைய மானியங்களை வழங்குவதிலும் அவன் மிகுந்த செலவுகளைச் செய்தான். சமயத்துறையில் பராக்கிர மபாகு எடுத்த நடிவடிக்கைகள் நாட்டுக்கும் சங்கத்துக்கும் பர்மா, கம்போடியா போன்ற பிற பெளத்த நாடுகளிடையே பெருமதிப்பை யுண்டாக்கின. அந்நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையே ச ம ய த் தொடர்புகள் ஏற்படலாயின.

மகா பராக்கிரமபாகு
கட்டிட சிற்பக்கலைகள்: பொலன்னறுவையையே தொடர்ந்து தலை நகராக வைத்திருந்த பராக்கிரமபாகு, அதைத் தலைநகருக்குரிய அமைப்புக்களையும், கட்டிட வகைகளையும் கொண்டு விளங்க வைத் தான். அரச மாளிகை ஏழு மாடிகளையுடைய செங்கற் கட்டிடமாக அமைக்கப்பெற்று, அதனுடன் இணைந்ததாக ராஜவேசிபுஜங்க மண் டபம் போன்ற சில உறுப்புக்கள் சேர்க்கப்பட்டன. அரச மாளி கையின் சுற்றுப்புறத்தில் நிறுவப்பட்ட நந்தவனம், தீபுய்யான முத லான பூங்காக்கள் மன்னர் குடும்பத்தினரின் உபயோகத்துக்கென நிறுவப்பட்ட வாவிகள் அல்லது கேணிகளைக் கொண்டிருந்தன. சிலா பொக்கரணி, சித்திரப் பொக்கரணி (சித்திரக்கேணி) முதலானவை உயர்ந்த கட்டிடக்கலைப் பண்புகளைக் கொண்டிருந்தன. அரசமாளி கையுடன் இணைந்ததாக நிறுவப்பட்ட கட்டிடங்களுள் ஒன்று பிரா மணர்களின் தேவைகளுக்குப் பயன்பட்டமையும் மனங்கொளத் தக்கது. இசை, நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு அமைக்கப் பட்ட மண்டபம் "சரஸ்வதி மண்டபம்’ என அழைக்கப்பட்டது. நகரின் தென்கோடியில் அமைந்த மாளிகையும், பிற கட்டிடங்களும் பூங்காக் களும் அழகு வாவிகளும் சமயச் சார்பற்ற கட்டிடக்கலையின் எடுத்துக் காட்டுக்களாகும். இவற்றைவிட, சமயச்சார்புடைய கட்டிடங்கள் பல பராக்கிரமபாகுவின் மத ஈடுபாட்டைப் புலப்படுத்தி நிற்கின்றன. ஆளாஹன பிரிவெஞத் தொகுதியென அழைக்கப்படும் க ட் டி டத் தொகுதியில், இலங்கா திலக படிமமனையும் அவ்விகாரையின் உபோசத விடுதியான பத்த சீமபிரசாதவும், பாார்ாெமபாகுவின் இராணியான ரூபவதியால் நிறுவப்பட்டு அவள் பெயரைத் தாங்கிநின்ற ரூபவதிசேத் தியவும் (கிரி தாகபம்) சுத்திரா சேத்தியவும் முக்கியமானவை, இப்பெரும் விகாரை (ஆளாஹன) நிறுவப்பட்டிருந்த இடத்தில் காணப் 'டும் இடிபாடுகளும், கட்டிடங்களும் ஒரு பெரும் அமைப்புத் தி: '-த்தைக் கொண்டிருந்ததை உணர்த்துகின்றன. கல் விகாரை (உத்த ராாா மய) என்பதில் உள்ள புத்தரின் திருவுருவங்களும், அ த ன் பொதுவான அமைப்பும் இன்றும் பார்வையாளரையும் பக்தர்களையும் பரவசமூட்டும் வகையில் உள்ளன. மிகப்பெரிய அளவில் தி ட் ட மிடப்பட்டு நிறைவேழு மலே விடப்பட்டது போன்று காட்சியளிக் கும் தமிழதுாபம், தமிழ்ப் போர்க் கைதிகளாற் கட்டப் பட்டதென் பர். பொலன்னறுவையின் வடகோடியில் அமைக்கப்பட்ட ஜெதவஞ ராம என்ற விகாரையின் உறுப்பாக நிறுவப்பட்ட திவங்க படிமமனே யும், தந்த தாதுவுக்கென அமைக்கப்பட்ட ஒரு வட்டதாகேயும், 'பது மன ஹாகொட்ட" எனப்படும் தாமரைக்கேணி முதலான எட்டுக் கேணி களும், பராக்கிரமபாகுவின் காலத்தில் எழுப்பப்பட்டன பராக்கிரம பாகு காலத்தில் எழுந்த பிற கட்டிட அமைப்புக்களில் குறிப்பிடத் தக் கது பொத்கல் விகாரை யென்பதாகும். பழைய பொலன்னறுவை நக

Page 32
52 பண்டைய ஈழம்
ரின் தென் புறத்துள்ள இக் கட்டிடம் பராக்கிரமபாகுவின் மற் ருேர் இராணி (சந்திரவதி)யால் நிறுவப்பட்டது. இவ்விகாரையின் அயலிலேயே பராக்கிரமபாகுவின் சிலையெனப் பொதுவாகக் கருதப் படும் அழகி ய சிலை கற்பாறையில் செதுக்கப்பெற்றுள்ளது. இவ் வாறு பொலன்னறுவையைக் க ட் டி டங்க ளா ல் அழகு பொலிய வைத்த பராக்கிரமபாகு, அவற்றுடன் தொடர்புடைய சி ற் பக் கலைகளையும் வளர்க்க உதவினன்.
இலக்கியம்: பராக்கிரமபாகுவின் பெருமுயற்சியால் பெளத்தம் மேன்மை பெற்றதால், இலக்கிய முயற்சிகளும் அவனது காலத்தில் பெருமளவில் நடைபெற்று வந்தன. திம்புலாகலை மகா காசியப்ப மகா தேரர் சமயத்துறையில் பெற்ற புகழுக்கு இணையாக, இலக்கி யத் துறையிலும் பல நூல்களை யெழுதிப் பெருமதிப்பைப் பெற்ருர், பாலி சமஸ்கிருதம் முதலான மொழிகளில் தேர்ச்சிபெற்று விழுமிய அறிஞராகத் திகழ்ந்த மகாகாசியப்ப தேரர் சமந்த பாசாதிகாவுக்கு ஒரு சன்னவையும் அபிதம் மசங்கஹவுக்குப் பொரண-டீகாவையும் எழுதியதாக போற்றப்படுகின்ருர், மொகல்லான வியாகரணவின் ஆசிரியரான மொகல்லான தேரரும், அபிதானப்ப தீபிகாவின் ஆசிரி யரான மொகல்லான தேரரும் பராக்கிரமபாகுவின் காலத்திலேயே வாழ்ந்தன ரென்பது தெளிவு, "சாகர-மதி" (அறிவுக்கடல்) யெனச் சிறப்பிக்கப்பெற்ற சாரி புத்தர் எ ன் ப வரும் பராக்கிரமபாகுவின் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களுட் சிறந்து விளங்கினர். பர் மா முதலான பிறநாடுகளிலிருந்து வந்த நல்லறிஞர்களும் பராக்கிரம பாகுவின் காலத்தில் இலங்கை வந்து, நூல்கள் இ“ற்றுவதில் ஈடு பட்டதாகத் தெரிகின்றது. பெரும்பாலான பெளத்த அறிஞர் க ள் சமஸ்கிருதப் பண்டிதர்களாகவும் விளங்கினர். அவர்கள் இயற்றிய நூல்களில் அம்மொழியின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படும் சமயத் துறையிலும், இலக்கியத் துறையிலும் மகா பராக்கிரமபாகு வின் காலத்தில் இயற்றப்பட்ட சாதனைகளால் அவனுடைய ஆட்சி பொலன்னறுவைக் காலம் முழுவதிலும் தனிச்சிறப்பைப்பெற்று விளங் குகின்றது. இதற்கு நிகராக மற்றெந்த மன்னனுடைய ஆட்சியும் இருக்கவில்லை. எனவேதான் பராக்கிரமபாகுவின் காலத்தை "ஒகஸ் தஸின் காலம்" (Augustan Age) என ஓர் அறிஞர் வர்ணித்துள் ωπΠτff.
wi அய்ல் நாட்டுக் கொள்கை
நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து, பொருளி யல் துறையில் அபரிமிதமான முன்னேற்றத்தையும் சுபீட்சத்தையும் அளித்த மகா பராக்கிரமபாகுவின் அயல் நாட்டுக் கொள்கையை இனி நாம் நோக்குவோம். பொதுவாக, இம்மன்னனும் அயல் நாடுகளுடன் அமைதியையும் நல்லெண்ணத்தையும் அடிப்படையா

மகா பராக்கிரமபாகு | $
கக் கொண்ட கொள்கையையே கடைப்பிடித்திருப்பான். எனினும் பர்மா, பாண்டிநாடு ஆகிய இரு அயல் நாடுகளில் இவ னு  ைட ய படைகள் போர்களில் ஈடுபட நேர்ந்தன. இவற்றுக்கான காரணங்க ளைத் தனித்தனி பின்னர் காண்போம். தன் நாட்டின் நலன் பாதிக் கப்பட்டதை யுணர்ந்தே இப்போர்களில் பராக்கிரமபாகு ஈடுபட் -ான் எனக் கூறமுடிந்தால் அவ்வாறு அவன் ஈடுபட்டமை நியா யமாகவே படும். ஆனல், நாட்டின் நலன் மட்டும் அவனது போர்ப் பூட்கையைத்தீர்மானித்ததெனக்கொள்ள முடியாது. நாட்டின் படை வலியைப் பிற நாடுகள் அறிய வைத்தல், தன் புகழ்க் கொடியைக் கடல் கடந்த நாடுகளிற் பறக்கவிடுதல் போன்ற பேராசை கலந்த நோக்கங்கள் அவனுக்கிருந்தமை புலனுகும். பர்மியப்போர் அவ னுடைய குறிக்கோளையடைய உதவிய போதும் பாண்டி நாட்டில் உண்டான அரசுரிமைத் தகராறில் தலையிட்டுச் சோழ உ த வி ப் படைகளைச் சமாளிக்க முடியாது அவமான மடைந்ததால் அவன் சிேன்னர் அடைந்த புகழுக்கு மாக எற்பட்டது.
-S • Lis to II ; VM
விஜயபாகுவின் ஆட்சிக்காலத்தில், பர்மிய அரசனக விளங்கிய *ஆத்தனுடன் (1044 - 1077) நல்லுறவுகள் நிலவி, இருநாடு களுக்கிடையே தூதுக்குழுக்கள் பரிமாறப்பட்டதையும், வணிக 2-sp வுகள் இருந்தமை பற்றியும் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். \ இரு "டு ரூம் தேரவாத பெளத்தத்தைப் பின் பற்றியதால், dF Lou 15 தொடர்புகளும் இருந்து வந்தன. விஜயபாகுவின் மறைவைத் தொடர்ந்து, இலங்கையில் உண்டான உள்நாட்டுப் போர்களில் ஈடு பட்ட அரசர்கள், அயல்நாட்டுத் தொடர்புகளை வைத்துக் கொள் ளும் அவகாசத்தைப் பெற்றிருக்கவில்லை. இ கல்ை, பராக்கிரமபாகு அரசைப்பெறும் வரை பர்மிய-இலங்கையுறவுகள் தடைப்பட் டிருந்தன எனல் வேண்டும். பராக்கிரமபாகு அரசைப்பெற்ற தும், நாடுகுறிப்பிடத்தக்க அமைதியையும், அளவற்ற பொருளியல் முன்னேற்றத்தையும் எய்தியது, பராக்கிரபாகு பர்மாவுடன் தொடர்ந்து அமைதியையும் நட்புறவையும் வளர்க்க முற்பட்டா னெனினும், விரைவில் அந்நாட்டுக்கெதிரான படையெடுப்பை மேற் கொள்ள வேண்டியவனஞ்ன்.
பர்மியப் படையெடுப்புக்கான காரணங்களைச் சூளவம்சம் வாயி லாகவே நாம் அறிகின்ருேம், இலங்கையிலிருந்து கிரும்பிய ஒரு பர்மியத் தூதுவனுடைய சொல்லைக் கேட்டுப் பர்மிய அரசனக அப்போது விளங்கிய அலோங்சிது என்பான், இலங்கைக்குப் பல வகையான அநீதிகளை இழைத்தான் இலங்கையிலிருந்து வெகுமதி களுடன் செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு யானையைத் தனது

Page 33
54 பண்டைய ஈழம்
பரிசாகப் பர்மிய மன்னன் சொடுக்கும் வழக்கத்தை நிறுத்தி வைத் தான். அத்துடன் பிறநாட்டவர்க்கு வரையறையின்றி யானைகளைப் பர்மியர் விற்பதையும் தடை செய்யக் கட்டளை பிறப்பித்தான். மேலும் யானைகளின் விலையை இரு அல்லது மும்மடங்காகக் கூட்டி னன். தனியார்களின் வர்த் பூகமாக நடைபெற்ற யானை வர்த்த கத்தை அரசனின் தனியுரிமையாக்கி யிருத்தலையும் அதன் பயணுக உண்டான விலைகளின் உயர்வையுமே இது குறிக்கும் என இதற்குக் கைகர் விளக்கங் கூறியுள்ளார். பராக்கிரமபாகுவுக்கு ஆத்திரத்தை யுண்டு பண்ணிய பிறி தொரு :ெயல், பர்மிய மன்னனுக்குப் பொற் றகட்டில் (இலை வடிவில்) பொறிக்கப்பட்ட ஒரு நிருபத்தைக் கொண்டு சென்ற சிங்களத் தூதுவரை, போலிக் காரணங் காட்டி அவமதித் தமையே. அவர்களிடம் இருந்த யானைகளையும், பணத்தையும் கப் பல்களையும் அபகரித்து, அங்குள்ள ஒரு மலையரணில் அவர்களைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினன். பின்னர் சிங்களத் தூதுவரைத் தன் அவைக்கு வருவித்து, இலங்கையிலிருந்து இனிமேல் வணிகக் கிப் பல்கள் வர அனுமதிக்கப்படமாட்டா என்பதையும், தனது தடையை மீறி வரும் கப்பல்களில் வருபவர்களைக் கொல்ல நேர்ந்தால் தான் பொறுப்பில்ஜல யெனக்கூறி அவர்களிடம் ஓர் உறுதிக்கூற்றைப் பெற் றபின், பழுதடைந்த கப்பல்ொன்றில் இவர்களிலிருவரை யிடுவித்து ஆழ்கடலில் செல்லவிட்டான். இவ்வாறு இவன் செய்தமைக்குக் கார னம், இத்தூதுவர்கள் கம்போடியாவுக்கே செல்வர் என்ற அவனது ஊகமே என்பர். மற்றும் ஒருவகையில் பர்மிய மன்னன் இலங்கையை அவமதித்ததாகச் சூளவம்சம் கூறுகின்றது. யானைகளை வாங்குவதற் கென இலங்கை வணிகர்கள் கொண்டு சென்ற பொருள்களைப் பெற் றுக் கொண்டு, தான் தருவதாக வாக்களித்த யானைகளையும் வெள் ளியையும் கொடாது ஏமாற்றினன். இவைபோதாவென்று, கம்போ டியாவுக்குப் பர்மா வழியாகச் சென்று கொண்டிருந்த சிங்கள இள ரசியையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்விதமான பர்மிய அரச Gð7 351 GMF Lu i 35GBGT turi torr மீது ஒரு படையெடுப்பை மேற்கொள்ளும் படி பராக்கிரமபாகுவைத் தூண்டியவை யெனச் குளவம்சம் தெரிவிக்கின்றது.
இப்போர் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு பக்கச் சார்பான சூளவம்ச விபரங்களே எமக்கு ஆதாரமாக வுண்டு. பர்மிய ஆதாரங்களில் இப் Gt.isrri பற்றிய குறிப்புக்கள் ஏதும் இடம் பெறவில்லை. வரலாற்றறி குர்கள் இப்போருக்கான காரணங்கஆள இரண்டு பிரிவுகளில் அடக் குவர். இவற்றுள் வர்த்தக உரிமைகள் தொடர்பாக எழுந்த தக ராறே முக்கியமானதாகு: , யானை வர்த்தகத்தை அரசனின் தனியு ரிமையாக்க அலோங்சிது எ டு த் த நடவடிக்கைகளும், இத்தனியுரி மையை மீறி யானை வர்த்தகத்தை நடாத்த இலங்கை வணிகர்கள்

55
எடுத்த முயற்சிகளுமே இரு நாடுகளுக்குமிடையே பகைமையைத் தோற்றுவிக்க முக்கிய காரணங்களாயின. பர்மாவின் அயல்நாடான கம்போ டியாவுடன் அந்நேரத்தில் நிலவிய பகைமை காரணமாகப் .ோலும், இலங்கையும் கம்போடியாவும் அரசியல் ரீதியான நல்லு றவுகளை வளர்ப்பதைப் பர்மிய அரசன் விரும்பியிருக்க LIDT LI L-IT Gör. இலங்கையுடன் வளர்ந்த பகைமைக்கு இதுவே அரசியற் காரண மாகலாம் எனக் கூறுவர். -
போர் நிகழ்ச்சிகள் பற்றி வரும் சூளவம்ச விபரங்களிலும் மிகைக் கூற்றுக்கள் இடம் பெறுதல் சாத்தியமெனினும் பிற ஆதாரங்களால் இவற்றில் பெரும்பாலும் உண்மை யிருப்பதாக நிறுவப்பெற்றுள் ளது. தனது ஆட்கள் மூலம் பர்மிய அரசனுடைய செயல்கள் பற்றி யறிந்து கோபங் கொண்டு, பர்மா மீது ஒரு படையெடுப்பை மேற் கொள்ள முடிவு செய்து வேண்டிய ஆயத்தங்களைச் செய்தான். பொருளாளன் (கணக என அழைக்கப்படும் அமைச்சன்) இப்படை யெடுபயிற்குத் தலைமைதாடங்குவதாக முடிவு செய்யப்பட்டது. கரை யோரத்தில் கப்பல் கட்டும் தொழில் மும்முரமாக நடைபெற்றது. ஐந்து மாத காலத்தில், படையெடுப்புக்கு வேண்டிய கப்பல்கள்,படை வீரர்கள், உணவு, மருந்து வகைகள் போன்றயாவும் ஆயத்தமாக்கப் பட்டன. நாற்றுக் கணக்கான கப்பல்கள் வடகிழக்கிலங்கையிலுள்ள ஒரு துறையிலிருந்து (பல்லவ வங்க) புறப்பட்டதாகக் கூறப்பட்ட போதும், ஒரு சில (ஆறு) கப்பல்களே பர்மாவை யடைந்தன. தமிழதி காரி ஆதித்தன் படைகளின் தலைவனுகவும் நகரகிரி ர்ேத்தி துணைத்தலை வணுகவும் சென்றனர். நகரகிரி கீர்த்தியின் தலைமையில் TTLD(d5(5. (தாழ் பர்மா)வில் குசுமியாத் துறையில் (இப்போதைய பசேன்) இறங் கிய படைகள் தம் பகைவருடன் போர் தொடுத்துப் பல அழிவுகளை யுண்டு பண்ணி முன்னேறின. படைத்தலைவனுடைய கப்பல் பப்படலம என்ற துறையை அடைந்த பின் அவனுடைய படையும் பல வெற்றி களேயீட்டி நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்தியது Soš7 607 ti, Páslo என்ற இடத்தை அடைந்த சங்களப் படையினர் T7 LD65(65 (li ri 16uu) அரசஃனக் கொன்றன. இதன் பின்னர், இலங்கைக்குப் பர்மியத் தூதுவர்கள் விரைந்து சென்று சங்கத்தினரின் துணையுடன் இலங்கை யரசனுக்கு வேண்டிய யானைகளைத் தருவதாக வாக்களித்து அமை திப் பொருத்தனே செய்து கொண்டனர். பர்மியப் போர் நிகழ்ச்சி பற்றிச் சூளவம்சம் அறியத்தரும் விபரம் இதுவேயாகும்.
தேவனகலையிலுள்ள ஒரு பொறிப்பு, சூளவம்ச விவரங்களைச் சில முக்கிய வகைகளில் உறுதிப்படுத்துகின்றது. மகாபராக்கிரம பாகுவின் 12ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இப்பொறிப்பில் ,பர்மியப் படையெடுப்பில் முக்கிய பங்கைக் கொண்ட கீர்த்தி நுவர கல் (நகர

Page 34
čě பன் 8 டய சீழ்:
கிரி கீர்த்தி) என்ற பெயரையுடைய தளபதிக்குச் சில நிலங்கள் வழங் கப்பட்ட செய்தி குறிப்பிடப்பெற்றுள்ளது. பர்மிய அரசன் அவனது பட்டப்பெயரான “புவன தித்த’ என்பதாலேயே இப்பொறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளான். இலங்கையைச் சேர்ந்த அறிஞர்கள், பராக் கிரமபாகுவின் இப்படைபெடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வில்லை. தாழ் பர்மா (ராமஞ்ஞ) விலுள்ள சில துறைகள் மீது சிங் களப் படையினர் நிகழ்த்திய ஒரு சிறுதாக்குதலையே சூளவம்சம் ஒரு பெரிய கடற்படை யெடுப்பாக மிகைப் படுத்திக் கூறியுள்ள தெனவும், பர்மிய அரசனன அலோங்சிதுவின் மரணத்திற்கும் சிங்க களப் படையினர்க்கும் எவ்விதமான தொடர்புமில்லை யெ ன வு ம் முடிவு கட்டியுள்ளனர். இதுபற்றிச் சிறிது விரிவாக ஆராய்ந்த கலா நிதி சிரிமா கிரிபமுண என்ற அறிஞர், உக்கமவில் கொல்லப்பட்ட வன் தாழ்பர் மாவின் மாகாண ஆட்சியாளஞகலாம் என்ற கருத் தைத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலப் பர்மிய அறிஞர் ஒரு வர் (மாங் தான் துன்) பர்மிய அரசன் அலோங்சிது சிங்களப் படை வீரரால் கொல்லப்பட்டிருத்தல் கூடும் என்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது எவ்வாரு யினும், பர்மியப் படையெடுப்பி ஞல், பராக்கிரமபாகுவின் நோக்கங்கள் கைகூடியமை குறிப்பிடத் தக்கது. வணிக உறவுகள் மீண் டு ம் ஏற்படுத்தப்பட்டபோது, இலங்கை வணிகர்கள் பெற்று வந்த சலுகைகளையும், உரிமைகளை யும் மீண்டும் அனுபவிக்கலாயினர்.
ஆ பாண்டி நாட்டுப் படையெடுப்பு:
தென்னகத்தில் ஒரு வல்லரசு எழுச்சி பெற்ருல் அதனல் வரக் கூடிய விளைவுகளை யுணர்ந்து அதை எதிர்த்து அடக்குவதற்கு ஏனைய அரசுகள் கூட்டுச் சேர் த ல் இயற்கையாகி வந்தது. அவ்வாறே, சோழப்பேரரசு எழுச்சிபெற்றபோது அதை எதிர்த்த பிற தென்னக அரசுகளுடன், குறிப்பாகப் பாண்டிய அரசுடன் இலங்கை இணைந்து செயலாற்றியதை நாம் முன்னர் கண்டுள்ளோம். 1-ம் குலோத் துங்கனது ஆட்சி முடிவுற்றபின், சோழப் பேரரசின் வலிமை குன்றி வரவே, "பாண்டியர் தமது சுயாதீனத்தை நிறுவமுற்படலாயினர். பாண்டியரின் ஆதிக்கம் வளர்வதைத் தடுப்பதில் சோழர் அக்கறை காட்டினர். எனவே, பாண்டியர் சோழரை எதிர்க்கப் பழைய நண் பர்களான இலங்கை மன்னர்களை நாடினர்.
1169 அளவில், மதுரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த பராக் கிரம பாண்டியனக் குலசேகர பாண்டியன் என்ற மற்றேர் இளவர சன் தாக்கி, மதுரையை முற்றுகையிடவே பராக்கிரம பாண்டியன் இலங்கையரசனன மகா பராக்கிரமபாகுவிடம் உதவிகோரித் தூது

57
வர்களை அனுப்பிஞன். தன்னிடம் உதவி கோரிய பராக்கிரம பாண் டியனுக்கு உதவ முடிவுசெய்த பராக்கிரமபாகு உடனே இலங்கா புரன் என்ற படைத்தலைவனை (தண்ட நாயகன்) ஒரு படையைக் கொண்டு சென்று பராக்கிரம பாண்டியனது உரிமையை நிலைநாட்டி வரும்படி பணித்தான். இலங்கைப் படை மகா தீர்த்தத்தினின்றும் புறப்படுமுன்னரே, பாண்டி நாட்டில் நிலைமை திடீரென மாற்றம் அடைந்துவிட்டது" உதவிவேண்டிய பராக்கிரம பாண்டியன் குல சேகரனல் தோற்கடி க்கப்பட்டதுமன்றி, மனைவி மக்களுடன் கொல் லப் பட்டதாகவும் செய்திகள் எட்டின. இச் செய்திகளையறிந்த பின் னரும், பராக்கிரம பாண்டியனது கட்சியையே ஆதரித்துப் போரை நடத்தும்படி இலங்காபுரனைப் பராக்கிரமபாகு பணித்ததாகக் கூறப் படுகின்றது. பராக்கிரமபாகுவின் பாண்டியப் படையெடுப்பு பேரா சையின் விளைவாகவே நடைபெற்றதெனவும் தன் போர்ப் புகழை இந்திய மண்ணில் நிலைநாட்டும் அவாவாலேயே இதை மேற்கொண் டான் எனவும் பராக்கிரமபாகுவிற் குறை காண்பதற்கு இவ்வாறு அவன் நடந்தமை இடந்தருகின்றது.
இலங்காபுரனது தலைமையிற் சென்ற படை தலதில்ல என்ற துறையில் இறங்கி இராமேஸ்வரத்தை யடைந்து பின்னர் குண்டுக் கல் சென்று அங்கிருந்து மதுரையை நோக்கி மு ன் னே றி ய து. இடையே நிகழ்ந்த சண்டைகள்பற்றிய விவரங்களில், இலங்கைப் படைக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டியதாக நம்பும்படி சூ ள வ ம் சத்திற் கூறப்பட்டுள்ளது. இடையிடையே சிங்களப்படை பின்வாங் கியும் தோல்வியெய்தியும் இருத்தல் கூடும். இத் தோல்விகள் பற்றிச் சூளவம்சம் நேரடியாகக் குறிப்பிடவில்லை. மதுரைக்குச் சில மைல் கள் தொலைவில் சிங்களப் படை முன்னேறியபோது, பராக்கிரம பாண்டியனது மகனுன வீரபாண்டியன், உயிர் தப்பிப் பாண்டி நாட் டுக்கு மேற்கேயுள்ள மலைப்பருதியில் கரந்து வாழ்வதாகச் செய்திகள் எட்டின. பராக்கிரமபாகுவின் கட்ட ளைப் படி, வீரபாண்டியன் அழைக்கப்பட்டுச் சிங்களப்படை முகாங்களில் பாதுகாப்பளிக்கப்பட் டான். நீண்டகாலமாக நடைபெற்ற சண்டைகளின் பின்,மதுரையைத் தாக்கிக் குலசேகரனத் தோற்கடித்துக் கலைத்த பின், வீரபாண்டி யன் மதுரையில் சிங்களப் படைத் தலைவர்களால் (இலங்காபுரன், ஜகத்விஜயன்) முடிசூட்டப் பெற்ரு ன். சிங்களப் படையும் மதுரையி லேயே தங்கியிருந்தது. சூளவம்ச விவரங்களால், இப்படையெடுப் பின் முழுவரலாறும் எமக்குத் தெரியவராது. குறிப்பாகப் படைத்தலை வர்களுக்கு என்ன நேர்ந்தது, வீரபாண்டியன் தொடர்ந்து ஆட்சி நடத்த முடிந்ததா போன்ற வினக்களுக்குச் சோழர் பொறிப்புக்கள் மூலமே விடை காணவேண்டும். இப்பொறிப்புக்கள் சூளவம்ச விவரங் கள்சிலவற்றை உறுதிப்படுத்துவதோடு, காலவேடு திடீரென நிறுத்தி
8

Page 35
է 1áñ հիւ- Ա հէքմ:
விட்ட வரலாற்றைத் தோடர்ந்து கூறுகின்றன. இப்பொறிப்புக்க எளில் 2-ம் இராஜாதி ராஜனது 5-ம் ஆண்டைச் சேர்ந்த ஆர்ப்பாக்கம் கல்வெட்டே காலத்தால் முந்தியதாகும் பாண்டி நாட்டைச் சிங்க ளப் படைவென்று, தொண்டி, பாசி முதலான கிராமங்களை இராம நாதபுர மாவட்டத்தில் வெற்றி கொண்டதை இது உறுதிப்படுத்து கின்றது.
அதே சோழமன்னனது 8-ம் ஆண்டைச் சேர்ந்த பல்லவராயன் பேட்டைப் பொறிப்பு, சிங்களப்படை குலசேகரனத் தோற்கடித் துக் கலைத்துவிட்டு வீரபாண்டியனை அரசனக்கியபோது, குலசேகரன் சோழருடைய படை உதவியை வண்டியதைக் குறிப்பிடுகின்றது. சோழ வேந்தன் இவனது வேண்டுகோளுக்கு இணங்கி திருச்சிற்றம் பலமுடைய பெருமான் நம்பியென்ற பல்லவராயனது தலைமையில், ஒரு படையை அனுப்பினன். சோழப்படைத் தலைவன் சிங்களப் படையைத் தோற்கடித்ததுமன்றி, தன் மன்னன் விடுத்த கட்டளையை நிறைவேற்றும் வகையில் இலங்காபுர தண்டநாயகன் மு த லா ன படைத் தலைவர்களின் தலைகளைக் கொய்வித்து, மதுரையின் வாயிற் கதவில் அறைவித்தான். இதன்பின் குலசேகரன் மதுரையில் மீண் டும் ஆட்சி செலுத்தலானன் எனவும், இதனல் "பாண்டி நாடு ஈழ நாடாகாதபடி பாதுகாக்கப் பட்டதாகவும் அக் கல்வெட்டுக் கூறி முடிக்கின்றது. தலைகள் மதுரை வாயிலில் அறையப்பட்ட செய்தி உண்மையென்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனினும் குல சேகரன் பின்னர் சோழப்படையின் உதவியுடன் வெற்றி யீட்டினன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இரண்டாம் இராஜாதிரானது 12-ம் ஆண்டைச் சேர்ந்த திருவா லங்காட்டுப் பொறிப்பு, பாண்டியப் படையெடுப்புப் பற்றிய வரலாற் றின் மற்ருெரு கட்டத்தைக் கூறுகின்றது. குலசேகரன் அரசை மீண் டும் பெற்றதுவரை கூறியபின், பராஃகிரமபாகு சோழ அரசனுக்கும் , குலசேகரனுக்கும் எதிராகப் புதியதொரு தாக்குதலை மேற்கொள்ளு வதற்குப் படைகளைத் திரட்டி இலங்கையின் வடபகுதியில் ஊராத் துறை, புலைச்சேரி, மாதோட்டம், வலிகாமம் மட்டிவாள் (மட்டு வில் அல்லது எழுதுமட்டுவாழ்?) முதலான இடங்களில் அவற்றை நிறுத்தி, கப்பல்களைக் கட்டி ஆயத்தங்களைச் செய்து வருவதைச் சோழப் படைத் தலைவனன அண்ணன் பல்லவராயன் அறிந்து, அப் படையெடுப்பை முறியடிக்க உடனே நடவடிக்கைகள் எடுத்ததாக அக்கல்வெட்டுக் கூறுகின்றது. அந்நேரத்தில் சோழ நாட்டில் தங்கி பிருந்த சிங்கள இளவரசனுன (மானபரணனது மகனன) பூரீவல்ல பன் தலைமையில், சோழப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப் படை வடபகுதியில், புலைச்சேரி மாதோட்டம் முதலான இடங்க

59 שe) חוL מL"ע (968. חישנו ח9 LD
ளிற் பல அழிவுகளைச் செய்து, பல பிரதானிகளைக் கொன்று யானை களைக் கைப்பற்றி, பல கைதிகளுடனும் கொள்ளைப் பொருள்களுட னும் மீண்டது. பராக்கிரமபாகு தன் படையெடுப்புத் திட்டத் தைக் கைவிட்டது மன்றித் தன் கொள்கையையும் மாற்றிக் குல சேகரனேயே உரிமையுள்ள பாண்டிய அரசகை ஏற்று ஆதரித்தான், இதன் பின் குலசேகரன் சோழருக்கு எதிராக நடக்கத் தலைப்பட்டு, அவர்களுடைய சில திறையாளர்களைத் தாக்கினன். இதனுல் சோழ மன்னன் வீரபாண்டியனையே ஆதரித்து, பல்லவராயன் தலைமையில் மீண்டும் ஒரு படையை மதுரைக்கு அனுப்பினன். வீரபாண்டியன் இப்போது சோழப்படையின் உதவியுடன் பாண்டிய அரசனனன். இவ்வாறு 1169-ல் தொடங்கிய உள்நாட்டுப் போர் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் வரையில் நடைபெறலாயிற்று. இப்போரில் தோல் வியே அடைந்தானென்பதும், சோழரால் ஆதரிக்கப்பட்டவர்களே வெற்றியீட்டினர் என்பதும் தெளிவு. பாண்டி நாட்டில் தனது செல் வாக்கை நிலைநாட்டவும், சோழருக்கெதிரே தனது ஆதரவுபெற்ற ஒரு பாண்டியனை அரசனுக்கவும் அவன் எண்ணியிருப்பின், அந்த எண்ணங்கள் கைகூடாது போயின. பாண்டி நாட்டுப்போர், பராக் 6g I cuor (5 எதிர்பார்த் இராத அளவுக்கு நீடித்ததால் இலங்கைக்குப் பெரு நட்டமேற்பட்டது பராக்கிரமபாகு கடும் வரிகளை விதித்துக் குடிகளை வருத்தியதாகப் பின் ன ர் கூறப்பட்டதற்கு பாண்டியப்
படையெடுப்பால் அவனுக்குண்டான பெருஞ் செலவுகளே காரண மெனல் வேண்டும்.
மகாபராக்கிரமபாகுவின் வரலாற்றை முடிக்குமுன், வரலாற்றில் அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய இடத்தைப்பற்றிக் குறிப்பிடுதில் பொருத்தமாகும். அவனுடைய வரலாற்றை இவ்வளவு விரிவாக அறியவும் எழுதவும் உதவியவர் அவனது புகழ்க் "காவியத்தைப் பாடிய சூளவம்ச ஆசிரியரே. விஜயபாகுவின் ஆட்சியின் முடிவில் உண்டான குழப்ப நிலைமைகளிடையே பிளவுபட்டிருந்த நாட்-ை ஒன்று படுத்தி ஆண்டமை அவனுடைய ஒரு சாதனை யென்பதில் ஐயமில்லை. போர்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் அவனது திறமை அடங்கியிருக்கவில்லை, பாசனங்கள் அமைப்பதிலும், கட்டி. டங்கள் நிறுவவதிலும் அவன் நிகழ்த்திய சாதனைகளை இலங்கை மன்னன் எவனும் விஞ்சியிருப்பான் எனக் கூறவியலாது. இவற்ரு லும், இவனது மதப் பணிகளாலும் இலக்கிய, பண்பாட்டுத் துறை வளர்ச்சியில் அவன் காட்டிய ஆர்வத்தாலும் நாடு அவன் காலத்தில் எய்திய செழிப்பை அளவிட முடியாது. அவனது அயல் நாட்டுக் கொள்கையால், அவன் புகழ் வெளிநாடுகளிலும் பரவ ஏதுவாகவிருந் ததுமின்றி, பிறநாடுகளுடன் உறவுகள் வளரவும் அது வழிவகுத்தது எனலாம் ஆனலும், இப்போர்கள் அவனது பேராசையில்ை உண்

Page 36
60 பண்டைய ஈழம்
டானவை யென்றும், இப்போர்களாலும் அவன் மேற்கொண்ட பாரிய கட்டிட வேலைகளாலும் குடிகளின் வரிப்பளு அதிகமானதென வும், ஒரு தனி மனிதனது பேராசையைத் திருப்திப்படுத்தப் பல்லாயி ரக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகம் நடைபெற்ற தெனவும் கண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கை வரலாற்றில் அவனுக்கு அளிக்கப்படவேண்டிய மிக உயர்வான இடத்தை அவன் அடையாத வாறு அவன் நடத்திய அயல் நாட்டுப்போர்கள் தடை செய்கின்றன என்பதில் உண்மையிருப்பதாகவே படுகின்றது.
பயிற்சி :
1. சூளவம்சத்தில் பராக்கிரமபாகுவின் வரலாறும், மகாவம்சத்தில் துட்டகாமணியின் வரலாறும் பாடப்பட்ட முறைகளை ஒப்பிடுக. 2. பராக்கிரமபாகுவின் வரலாற்றை விளக்குவதற்குத் துணையாக வுள்ள முக்கிய பொறிப்புக்களைக் கூறுக. அவை எந்த அம்சங் களைத் தெளிவுபடுத்துகின்றன என்பதை விளக்குக. கூட்டுவேலைக்கு :
அ. மகாபராக்கிரமபாகுவை விஜயபாகுவுடன் அல்லது துட்டகாமணி
யுடன் ஒப்பிட்டு ஒரு விவாதத்தை நிகழ்த்தலாம். ஆ. பராக்கிரமபாகுவின் பாண்டியப் படையெடுப்பை ஆதாரமாகக்
கொண்டு ஒரு சரித்திர நாடகம் எழுதி நடிக்கலாம். தேர்வு வினுக்கள் :
1. மகா பராக்கிரமபாகுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிக்கூறி
அவனது சாதனைகளை மதிப்பிடுக.
2. பராக்கிரமபாகு இலங்கை முழுவதற்கும் அரசனுன வரலாற்றைச் சுருக்கிக் கூறுக? அவனது ஆட்சியின் முக்கியத்துவம் யாது?
3. சமயவளர்ச்சிக்கு பராக்கிரமபாகு ஆற்றிய பணிகளின் முக்கியத்தை
விளக்குக.
4. பராக்கிரமபாகுவின் அயல்நாட்டுப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை
வரைக.

மகா பராக்கிரமபாகு 61
இணைப்பு :
பராக்கிரமபாகுவின் மரபும் உறவினரும்
மொகல்லானன் வி. லோகிதா
விஜயபாகு 1 6 Tum Gg5 ஜயபாகு 1 மித்திரா
(1055-11 1 0) (1110 -11) வி. பாண்டுராஜா
விக்கிரமபாகு 11
(1111-1132) மானுபரணன் கீர்த்தியூரீமேகன் பூரீவல் (வீரபாகு) வி. லோகநாதன் லபன் வி. ரத்னுவலி வி. சுகலா
கஜபாகு I அணிகங்க மகிந்தன்
l 132-1153)
--- மித்திரா பிரபாவதி பத்மாவதீ பராக்கிரமபாகு 1 மானுபரணன் லீலா வி. ரூபவதி (1153-86) வதி
|. லீலாவதி
வி. மாஞபரணன்
பூரீவல்லபன் கீர்த்தியூரீமேகன்

Page 37
அத்தியாயம் நான்கு தென் கிழக்காசிய நாடுகளும், இலங்கையும்
i asébum quum. i ழரீ விஜயப் பேரரசு. iii. ‘ tuửupm.
முதலாம் பராக்கிரமபாகுவுக்குப் பிந்தியகால இலங்கை வர லாற்றைக் தொடர்ந்து படிக்கு முன், பர்மா, தாய்லாந்து, (சீயம்) கம்போடியா, மலாயா, இந்தோனேஷியா முதலான தென்கிழக் காசிய நாடுகளின் ஆதிகால வரலாறுபற்றியும், அவற்றுக்கும் இலங் கைக்குமிடையே நிலவிய தொடர்புகள் பற்றியும் இவ்வத்தியாயத் திற் சுருக்கமாக அறிந்து கொள்வோம், இலங்கையின் நிலேயங் காரணமாகத் தென் கிழக்காசிய நாடுகள் பலவும், சீனவும் இத்தீவு டன் மத, வணிக, பண்பாட்டு உறவுகளை மிகுதியாகவும் , gaolயிடையே அரசியற்(ெ?டர்பு க்ளையும் கொண்டிருந்தன. கடற்கரை களைக் கொண்ட நாடுகளாக அவை பெரும்பாலும் இருப்பதாலி அவற்றுக்கும் இலங்கைத் தீவுக்கும் கடல் வழித் தொடர்புகள் இருந்ததில் வியப்பில்ஃல. தென் கிழக்காசிய நாடுகள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கத்தக்க நிலையத்திலும், தொலை விலும் இருத்தலைத் தென் கிழக்காசிய நாடுகளின் படத்தை அவதா னிக்கும் போது நாம் கண்டு கொள்ளலாம். பூரீ விஜய அரசு, பர்மா, முதலான தென் கிழக்ககசிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த உறவுகள் சிலவற்றை முந்திய சில அத்தியாயங்களிலும், இனி வரும் அத்தியாயங்களிலும் படிப்போமாயினும் இவ்வத்தியாயத்தில் அவற் றைத் தொகுத்துக் காண்போம்.
i. கம்போடியா
ஃபூனன் (Funan) அரசு: பொலன்னறுவைக் காலத்திலும், அதற் குப் பின்னருமே கம்போடியாவுக்கும் இலங்கைக்கும் தொடர்புகள் இருந்தமைக்குச் சான்றுகள் கிடைத்தபோதிலும், அதற்கு முன்னரும் தொடர்புகள் இருந்திருத்தல் கூடும். கி. பி. 1-ம் நூற்றண்டிலிருந்து 16-ம் நூற்ருண்டுவரை, பல அரசுகள் கம்போ டியாவில் தோன்றி மறைந்தன. கிமர் (Khmer) என்ற இன மக்கள் வாழ்ந்த கம்போ டியா நாட்டினை மேகொங் (Mekong) நதி வளம்படுத்தியது. கி. பி. 550 வரை கம்போடியாவை யாண்ட அரசைச் சீன ஏடுகள் 'பூனன்’ அரசு என குறிப்பிட்டுள்ளன. கெளண்டின்யன் என்ற ஒரு பிரா மணன் இதை நிறுவியதாக ஒரு கதை அந்நாட்டில் வழங்குகின்றது. பூனன் அரசின் துறைமுகப் பட்டின மொன்றில் (ஒக் இயோ என்ப தில்) செய்யப்பட்ட அகழ்வுகள் பாரசீகம், இந்தியா முதலான நாடு களுடன் இருந்த தொடர்புகளைத் தெளிவாக்கும். பூனன் அரசின் மிகச் சிறந்த மன்னனது பெயரைச் சீன ஏடுகள் பா ன்-ஷி-ம ன்

தென் கிழக்காசிய நாடுகளும் இலங்கையும் 68
4:ன்ற உருவத்திற் பேணியுள்ளன. இவன் பல நாடுகளை வென்று ஆட்சி நடத்தியதுடன், தன் கடற்படை த ந் த வலியால் கட லாதிக்கஞ் செலுத்தி வந்தான். பிந்திய பூனன் அரச மரபினருள் கிர்த்தி பெற்றவன் ஜயவர்மன் ஆவான். பெரும்பாலான பூனன் மன் னர்கள் சைவ மதத்தையே சார்ந்து நின்றனர்.
சென்-லா அரசு பூனன் அரசினது வீழ்ச்சியைக் கொண்டுவரக் காரணமாக விருந்த பவவர்மன், சித்திரசேனன் என்ற இரு சகோத ரர்கள் அதன் திறைநாடாக விருந்த சென்-லாவை (Chen-ta) ஆட்சி செய்தவர்கள். இவர்கள் நிறுவிய அரசானது 6-ம் நூ ற் ரு ண் டி. லிருந்து சில நூற்றண்டுகள் வரை சிறப்புடன் திகழ்ந்தது. இவர் களது குடும்பப் பெயரான கம்பு-ஜ என்பதே, கம்போ ஜ எ ன் ற சமஸ்கிருத வடிவம் பெற்று, நாட்டுக்கும் பெயராயிற்று. சென்-லா சகோதரர்களைத் தொடர்ந்து, நாட்டைச் சிறப்புடன் ஆட்சி செய்த ஈசான வர்மன் , 1-ம் ஜயவர்மன் ஆகியோரும் போர்களில் பெரும் வெற்றிகளை ஈட்டியதுமன்றி, கட்டிடங்களையும் செங்கற்களாலான கோபுரங்களையும் நிறுவினர். சைவமே அங்கீகாரம் பெற்ற மதமாக விளங்கிய போதும், வைணவப் பிரிவும் இருந்ததை அறியமுடிகின் றது. அழகிய சமஸ்கிருத வாக்கியங்களைக் கொண்ட, பல பொறிப் புக்களை இவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். பூனன் அரசின் சுவடு களில் தோன்றிய சென்-லா அரசும், 8-ம் நூற்ருண்டில் தோன்றிய உள்நாட்டுப் போர்களாலும், பூரீ விஜய அரசு முதலான அரசுகளின் தாக்குதல்களாலும் நிலே குலைந்து அழியலாயிற்று.
அங்கோர் (Angkor) அரசு: கம்போடியாவில் ஆதிக்கம் பெற்றி ருந்த அரசுகளில் மிகவும் புகழ்வாய்ந்தது அங்கோர் அரசாதும். அங்கோர் என்ற நகர் அதன் தலைநகராகவும், பண்பாட்டு நிலைக் களஞகவும் விளங்கியது. அங்கோர் அரசை நிறுவிய பெருமை 2-ம் ஜயவர்மனச் சார்ந்த காகும். முன்னர் பூரீவிஜயவில்  ைக தி யா க வாழ்ந்ததாகக் கூறப்படும் இவன், தனது நாடு மீண்டு. சுயாதீன முடைய அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு கொண்டான். "தேவ ராஜா' என்ற வழிபாட்டு முறை அந்நாட்டில் உருவாதற்குக் கார ணமாக விருந்தவனும் இவனே. அரசனைத் தெய்வ உருவிற்சண்டு, அதன் சி ன்  ைமா ன ஒரு விங் க த்  ைத மக்கள் வழிபாட்டுக்கு அமைத்து விடுதல் இவ் வழிபாட்டு முறையின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த லிங்கத்தின் நலனைப் பேணுவதிலேயே குடிகளின் நலனும் தங்கியிருப்பதாக நம்பும்படி செல்யப்பட்டது. இந்த லிங்க வழிபாட்டுக்கென எழுந்த கோவில் சளில் மன்னர்களின் சடலங்கள் அடக்கஞ் செய்யப்பட்டன. ஜயவர்மனுக்குப் பின் வந்த மன்னர் கள் இம் முறையை மேலும் வளர்த்து, கலைநுட்பங்கள் கொண்ட பல கோவில்களை அமைத்தனர். பேகொங் என்ற அற்புதக் கோவிலை

Page 38
(自己巨出像f学)旨mgu唱唱fgg闽o
 

தென் கிழக்காசியநாடுகளும், இலங்கையும் 65
1உம் இந்திரவர்மனும், பழைய அங்கோர் நகரான யசோதர புரத்தை 1-ம் யசோவர்மனும் நிறுவினர். சைவம், வைணவம், பெளத்தம் ஆகிய மதப்பிரிவினர்க்கான நிறுவனங்கள் அமைக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது. இம்மதங்களுள் அக்காலத்தில் சைவமே முதன்மை பெற்று விளங்கியது. 11-ம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் ஆட்சி யைப் பெற்ற 1-ம் சூர்யவர்மன், அரசியற்றுறையிலும், சமயத்துறை யிலும் பெரும் புகழைப் பெற்றவன். இவன் நிறுவிய இரு சமயக் கட்டி டங்களான தா-கியோ பிமியனகாஸ் என்பவை அவனது புக  ைழ நிலைக்கவைத்துள்ளன. அடுத்த நூற்றண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்த 2-ம்சூர்யவர்மன் (1113-1150) பழம் பெருமை வாய்ந்த சம்பா (Champa) அரசையும் மேற்கே யிருந்த பல சிற்றரசுகளையும் அடிபணிய வைத்தவன். சீனுவுக்கு மும்முறை தூதுக்குழுக்களை அனுப்பி அந்நாட்டுடன் நல்லுறவுகளை வளர்த்தான். அங்கோர்- வாத் (Ankgor wat) 67 6ör sp மிகப்பெரிய சமயக்கட்டிடத்தை நிறுவியமை இவனது வியத்தகு சாதனையாகும். உலகிலேயே உள்ள சமயக்கட்டி டங்களில் முதன்மை பெறத்தக்கது இப்பிரமாண்டமான கட்டி டம் ஆகும். 12-ம் நூற்றண்டில் வைணவமே முதன்மை பெற்றிருப் பினும் சைவமும் பின் பற்றப் பட்டமைக்கு சான்றுகள் உண்டு. 2-ம் சூர்யவர்மனது மறைவுக்குப் பின், கிமர் அரசு மீண்டும் பல தொல் லை சாளை யெதிர்நோக்க வேண்டி நேர்ந்தது. 7-ம் ஜயவர்மனே இந்த அரசுக்கு மீட்சியை அளித்து அதன் புகழ்க் கொடியை மிகவும் உய ரப்பறக்க வைத்தவன். சம்பா அரசு மீது ஒரு படையெழுச்சியை மேற் கொண்டு, அதைத்தன் மேலாணக்குட்படுத்தினன். இவன் அடைந்த போர் வெற்றிகளால், 2-ம் சூர்யவர்மனுடையதைக் காட் டிலும் விரிவான அரசை யாட்சி செய்தான். பழைய அங்கோர் நக ருக்கு அண்மையில், புதுமையானதும் விசித்திர நிருமாண அமைப் பைக் கொண்டதுமான அங்கோர்-தொம் (Angkor-thom) என்ற மற் ருெரு நகரை நிறுவினன். அப்புதிய நகரின் நடுவே அமைக்கப்பட்ட பேயோன் (Bayon) என்ற விநோதக் கோவில் பெருங்கலை நுட்பம் வாய்ந்த அமர படைப்பாகும். 7-ம் ஜயவர்மனுக்குப் பின், கிமர் அரசு அழிவுப்பாதையில் மெல்ல நகர்ந்தது. 1431-ல் சீயப்படை யெழுச்சி பொன்று நடைபெற்றதோடு, அதன் பெருமை மறைய
லாயிற்று. மேலும் ஒரு நூற்ருண்டு வரை அதன் சுதந்திரம் பேணப் LILL-ġill.
கம்போடியாவும் இலங்கையும்: கம்போடியாவுடன் இலங்கை
பொலன்னறுவைக் காலத்துக்கு முன் தொடர்புகள் கொண்டிருந்
தமைக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பொலன்னறுவைக் காலத்
திலும், மகாபராக்கிரமபாகுவின் பர்மியப் படையெடுப்புக்கான
காரணங்களைக் கூறும்போது, (சூளவம்சம் அத். 76 செய். 35)
"மேலும், கம்போஜ நாட்டுக்கு லங்காவின் மன்னனல் அனுப்பப்
9

Page 39
6 Lusurf) - Lu Fuò
பட்டிருந்த ஓர் இளவரசியை அவர்கள் பலவந்தமாக்கி ன் கீப்பற்றி னர்” எனக்குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு, அந்நாட்டுக்கும் இலங் கைக்கு மிடையே நல்லுறவுகள் நிலைநாட்டப் பெற்றிருந்தமை பெறப் படும். சமய, பண்பாட்டு உறவுகள் 14-ம் நூற்ருண்டுக்குப் பின் னரே யேற்பட்டமைக்குக் காரணமுண்டு. கம்போடியாவில் சைவம், வைணவம், மகாயான பெளத்தம் என்பனவே 14-ம் நூற்ருண்டு வரை அங்கு முதன்மை பெற்று விளங்கி வந்துள்ளன. இத னல், தேரவாத பெளத்தத்தைப் பின்பற்றிய இலங்கைக்கும் அந்நாட்டுக்கும் 14-ம் நூற்ருண்டுவரை சமய உறவுகளோ, அதன் அடிப்படையில் ஏற்படும் பண்பாட்டுத் தொடர்புகளோ ஏற்பட ஏதுக்கள் இருக்கவில்லை. 14-ம் நூற்ருண்டளவில் கம்போடியா தேர வாத பெளத்தத்தையே பின்பற்றுவதாயிற்று, இவ்வாறு கம்போ டியா தேரவாத பெளத்த நாடாக மாறுவதற்கு இலங்கை மறை முகமாக உதவியது. 13-ம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இலங்கை வந்து சங்கத்திற் சேர்ந்து பர்மாவுக்குத் திரும்பிய சப்பட என்ற சத்தர்ம ஜோதிபால தேரர், பி ன் ன ர் பர்மாவில் சிங்கள சங்க மொன்றை (சீஹள சங்க) நிறுவியதை விரைவில் அறிவோம். அவ் வாறு பர்மாவுக்குத் திரும்பிய பர்மியப் பிக்கு வுடன் இலங்கையிலி ருந்து கூடிச் சென்ற சமயத் தோழர்களுள் ஒருவர் கம்போடிய இள வரசராக விருந்தவரெனப்படும். பர்மாவிலிருந்து சீயத்துக்கும், கம் போடியாவுக்கும் தேரவாத பெளத்தக் கருத்துக்கள் பரவலாயின. அக் கருத்துக்கள் கம்போடிய மக்களைப் பெரிது ம் கவர்ந்ததால், அவர்கள் அம்மதத்தைப் பெருந்தொகையினராகத் தழுவிக் கொண் டனர். இவ்வாறு கம்போடிய மக்கள் தேரவாத பெளத்தத்தைத் தழுவிக் கொண்டமையால் முந்திய தேவ-ராஜா வழிபாடு அருகி பதோடு அரசர்கள் குடிகளிடம் பெற்ற பக்தி கலந்த மதிப்பையும் செல்வாக்கையும் இழக்கலாயினர். இவ்வாறு இரு நாடுகளும் ஒரே மதத்தைத் தழுவியமையால், 14-ம், 15-ம் நூற்ருண்டுகளில் இவற் றுக்கிடையே சம ய த் தொடர்புகள் வலுப்பெற்று வரலாயின. கோட்டையில் ஆட்சி செய்த 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் பர்மா, சீயம் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் இலங்கை வந்து (1425 அளவில்) திருநூல்களைக் கற்றுத் தேர்ந்து களனியில் புதிதாகக் குரு அபிடேகம் பெற்று தத்தம் நாடுகளுக்கு மீண்டனர். அங்கு இலங்கையில் உள்ளதுபோன்ற சங்கங்களை நிறு வியதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நூல்களைக் கம் போடிய அறிஞர்கள் கற்று, தமது நாட்டில் இலக்கியங்களை எழுத வும் அவற்றை ஆதாரமாகக் கொண்டிருப்பர். யாப்பாகுவவில் உள்ள அரண்மனையின் வாயிற் படிக்கட்டின் அமைப்பு கம்போடியா
விலுள்ள அக்காலக் கிமர் கட்டிடங்களுக்குள்ளதைப் போன்று

தென் கிழக்காசிய நாடுகளும், இலங்கையும் 67
அமைந்திருப்பதை அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இதனல் கம்போடியாவின் கலை வளர்ச்சி இலங்கையிலும் செல்வாக்கை யுண்டு பண்ணியதாகச் சிலர் கொள்கின்றனர்.
i. யூனி விஜயப் பேரரசு :
இப்போது இந்தோனேஷியா என அழைக்கப்படும் தீவுக்கூட்டத் தில் அங்கம் வகிக்கும் முக்கிய தீவுகளான சுமாத்திரா, ஜாவா ஆகியவற்றுக்கு மிகவும் புகழ்வாய்ந்த பழைமையான வரலாறு உண்டு. மலாயாத் தீபகற்பத்தின் தொடர்ச்சியாக இவை அமைந் திருப்பது போலக் காட்சியளிப்பது மன்றி ஒரேயின மக்களைப் (மலாய்) பெரும்பாலும் இவை கொண்டிருந்தன. இவற்றுள் பூரீ விஜய அரசு என்பதே சுமார் 7-ம் நூற்ருண்டு முதல் 13-ம் நூற்றண்டுவரை அங்கு நிலவியபோது, இலங்கையும் அதனுடன் தொடர்புகள் பூண்டிருந் தமையின், அதன் எழுச்சி பற்றியும் அதற்கும் எமது தீவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் நாம் இங்கு நோக்குவோம். சுமாத் திராத் தீவிலுள்ள பாளெம்பால் (Palembang) என்பதை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்றதே இந்த அரசு. யாத்திரீகர் முதலானே ரின் பயணக்குறிப்புக்களாலும், பிற நாட்டு நூல்களாலுமே இப் பேரரசின் வரலாற்றை அறியவேண்டியதாக வுள்ளது. சீனவுடன் நடைபெற்ற வணிகத்தில், சுமாத்திரா தன் புவியியல் அமைவு கார ணமாக வகித்த உபாய (கேந்திர) நிலையால் அது அதிக முக்கியம் பெற்றிருந்தது. குறிப்பாக, சுமாத்திராவின் இரு புறமும் உள்ள தொடுகடல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், தென்கிழக்காசிய வணிகத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் அது இருந்தது. பூரீ விஜய அரசின் வணிகர்கள் சீனுவிலுள்ள துறைமுகங்களுக்குச் சென்று அங்கிருந்து கொணர்ந்த பொருட்களைத் தமது துறைகளுக்கு வந்திருந்த கப்பல்களுக்கு விற்றுப் பெரும் இலாபத்தைப் பெற்றன. சுமாத்திராவிலும், பிற தீவுகளிலும் (கிழக்கிந்தியத் தீவுகள்) உற்பத் தியான பொருட்களையும் அக் கப்பல்களுக்கு விற்று வரலாயினர். பூரீ விஜய அரசின் கப்பல்கள் ஒரு புறம் இந்தியாவரையும், மறுபக் கத்திற் சீனவரையும் சென்று அதன் வணிக ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்தன. தமது கடலாதிக்கத்தின் மூலம், தமது வணிக ஆதிக்கத்துக்குப் போட்டி யேற்படாது பார்த்துக் கொண்டனர். வணிக ஆதிக்கமூலம் எழுச்சி பெற்றதே பூரீவிஜய அரசாகும்.
சைலேந்திரர்கள் : மலையரசன்’ என்ற பொருளுடைய "சைலேந் திரன்’ என்பதைத் தம் மரபுப் பெயராகக் கொண்ட ஒரு பெளத்த அரசவமிசம் 8-ம், 9-ம் நூற்ருண்டுகளில் பூரீ விஜய அரசை ஆண்ட தாகத் தெரிகின்றது. மலை களிற் கோவில்களை நிறுவி அவற்றைத் தமது ஆட்சியின் ஓர் அங்கமாக மிகப் பழைய காலத்தில் மெசொப்

Page 40
68 பண்டைய ஈழம்
பத்தேமியாவிலும், பின்னர் இந்தியாவிலும் பல மன்னர்கள் கைக் கொண்டிருந்தனர் இந்தியாவிலிருந்தே இம்முறை தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியிருத்தல் வேண்டும் என்பர். இம் மன்னர்கள் மகாயான பெளத்தத்தை யாதரித்து, அம்மதப் பிரிவுக்குச் சார் புடைய பல கட்டிடங்களை நிறுவினர், சைலேந்திரர்களுடைய ஆட் சிக்காலத்தில் பெளத்தக் கலைகளை வளர்த்த ஒரு நிலையமாக பாளெம் பாங் திகழ்ந்தது. புதிய நாடுகளைக் கைப்பற்றிய போது, அங்கும் அவர்கள் மகாயான பெளத்தத்தைப் பரப்பி அதற்கான சமய நிறு வனங்களையும் கட்டிடங்களையும் அமைத்தனர். Y
சைலேந்திரர்கள் ஜாவாத் தீவிலும் மகாயான பெளத்தத்தைப் பரப்ப முற்பட்டபோது, மத்திய ஜாவாவிலுள்ள மாதரம் என்ற பகுதியில் மற்ருெரு அரச மரபு அம் முயற்சியை எதிர்த்து வெற்றி கண்டது. சஞ்சயன் மரபினர் என்ற அம் மரபினர் சைவத்தை யாதரித்து அதன் வளர்ச்சிக் கெனப் பல கோயில்களை நிறுவினர். சஞ்சய வம்சத்தில் வந்த ஒருவன் பால , புத்திர தேவன் என்ற சைலேந்திரனைத் தோற்கடித்த பின் அவ் வெற்றியைக் கொண் டாடும் முறையில் ரத்துபக மேட்டு நிலத்தில், சில லிங்கங்களே நாட்டி, பெரங் எனுமிடத்தில் ஒரு சிவன் கோவிலை நிறுவினுன் சைலேந்திர மன்னர்கள் ஜாவாவில் நிறுவிய சண்டி என ப் படும் மகாயான பெளத்தக் கட்டிடங்கள் அவர்களுடைய சமய ஆர்வத் தைப் பிரதிபலிக்கின்றன. அதனிலும் மேலாக, கட்டிடத்துறையில் அவை பெருஞ்சாதனைகளாக விருக்கின்றன. பொரபுதூரில் உள்ள சண்டி என்ற ஸ்தூபம், இயற்கைக் குன்றின் உச்சியில் அமைந்தது. அதை யடையச் செல்லும் வழியெல்லாம், உயர்ந்து செ ல் லு ம் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய ஸ்தூபத்தை யடைவ தற்குச் செல்லும் வழியில் உள்ள சுவர்களை அணிசெய்ய மகாயான நூல்களிலுள்ள கதைகளில் வரும் காட்சிகளைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சண்டி மெண்டத் என்ற மற்ருெரு கோவில், பொரபுதூரையடுத்து நிறுவப்பட்டுள்ளது. இதன் கண் ஒரு புத்தர் சிலையும், அதன் இரு மருங்கும் அறவுரை நிகழ்த்தும் பாணியில் இரு போதிசத்துவர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் வெளியேயும் ஒன்பது போதிசத்துவர் சிலைகள் காணப் படுகின்றன. சண்டி பேவொன், சண்டி பிளேசன் முதலான பெளத்தக் கோவில்களும் சைலேந்திரர் காலத்தைச் சேர்ந்தவையே. இவை யனைத்திலும் இந்தியக் கலை மரபுகளின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகின்றது.
சைலேந்திரர் மரபு ஒன்பதாம் நூற்ருண்டில் அருகிவிட்ட போதும், பூரீ விஜய அரசு ஒரு வர்த்தகப் பேரரசாகத் தொடர்ந்து 10-ம், 11-ம் நூற்ருண்டுகளில் பெருவலியுடன் திகழ்ந்துள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளும், இலங்கையும் 69
இந்தியாவில் வங்காளத்துடனும், சோழமண்டலக் கரையுடனும், சீனவுடனும் பூரீ விஜய அரசின் வணிகர்கள் தொடர்பு கொண்டிருந் தனர். கிழக்கு ஜாவாவைச் சேர்ந்த தர்மவம்ச என்ற மன்ன னுடைய தாக்குதல்களை முறியடித்து, பூறி விஜய அரசைப் பாது காத்தவன் பூரீ சூளாமணி வர்மதேவன் ஆவான். இவன் சீனருட இணும், சோழருடனும் நட்புப் பூண்டிருந்தான். சோழருடன் ஏற் பட்டிருந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்கவில்லை. கடற்படை வலி மையை வளர்த்து வந்த சோழர்க்கும், பூரீ விஜய அரசுக்கும் 1-ம் இராஜேந்திர சோழன் காலத்தில் முரண்பாடு தோன்றியது. பின்ன வன் 1025-ல் தனது புகழ்பெற்ற கடற்படை யெடுப்பை மேற் கொண்டு பூஜீ விஜய அரசனைக் கைப்பற்றி, அவனது அரசின் பல பகுதிகளை வெற்றி கொண்டான். இதன் பின், பூறரீ விஜய அரசு சுமாத்திராவுக்குள் மட்டுப் படுத்தப்பட்டிருந்தது. வீரராஜேந்திர சோழன் காலத்தில், சோழர்க்கும், பூரீ விஜயவுக்கும் மீண்டும் நல் லுறவு நிலைநாட்டப் பெற்றிருந்தது. 1-ம் விஜயபாகுவின் சமகாலத் தரசனன 1-ம் குலோந்துங்கச் சோழன் பூரீ விஜய அரசின் வேண்டு தலின் பேரில், நாகபட்டினத்திலுள்ள விகாரைக்கு மானியமளித் துள்ள்ான். 12-ம் நூற்றண்டில், ஜாவாவில் ஒரு கடற்படை வணிக அரசு (கெடிரி அரசு) தோன்ற, அதன் முக்கியத்துவம் குறைந்து வந்தது. 13-ம் நூற்ருண்டில், பாளெம்பாங்குக்குப் பதில் மாலாயு (ஜம்பி) தலைநகராக்கப்பட்டதாகத் தெரிகின்றது. மார்க்கோ போலோ 1292-ல் சுமாத்திராவுக்குச் சென்றபோது, மலாயுவே முக்கிய அரசாக அங்கு விளங்கியுள்ளது. சிங்கோசரி அரசும் மாஜா பாகித் அரசும் எழுச்சியுற்ற போது, பூரீ விஜய (மலாயு) அரசு தேய் வடையலாயிற்று. ஈற்றில், வடக்கே சீயத்தில் தோன்றிய தாய் அரசு, பூg விஜய அரசின் பழைய ஆணிலங்களேத் தனதாக்கிக் கொள்ளவே, அது வீழ்ச்சி யெய்தலாயிற்று.
ழரீ விஜயப் பேரரசும் இலங்கையும் : பூரீ விஜயப் பேரரசுக்கும் இலங்கைக்கு மிடையே தொடர்புகள் இருந்தமைபற்றி சூள வம்சத்திலும், பிற காலவேடுகளிலும் குறிப்புக்கள் இல்லை. 'காலிங்க (கலிங்கம்) என்பதனுடன் இலங்கை வைத்திருந்த தொடர்புகள் (சூள. 54-ம் அத். இருந்து) பூரீ விஜயவுடனிருந்த தொடர்புகளையே குறிப்பதாகக் கொள்வர். பரணவிதான அண் மையில் (1966) வெளியிட்டுள்ள நூலொன்றில் (Ceylon and Malaysia), இலங்கையிலுள்ள சில கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு, 9-ம், 10-ம் நூற்ருண்டுகளிலிருந்து கோட்டை 6-ம் பராக்கிரமபாகுவின் காலம் வரை பூரீ விஜயவுக்கும் இலங்கைக்கு மிடையே நெருங்கிய தொடர்புகள் நிலவியதாக நிறுவ முயன்றுள் ளார். 4-ம் சேனனது காலத்திலிருந்தே தொடர்புகள் இருந்த

Page 41
70 பண்டைய ஈழம்
மைக்கு எமக்கு உறுதியான சான்றுகள் கிட்டியுள்ளன. கம்போ டிய அரசன் ஒருவனல் தோற்கடிக்கப்பட்ட பூரீ விஜய மன்னனெரு வன் (குணர்ண்ணவ என்பான்) இலங்கைக்கு 4-ம் சேனன் காலத் தில் வந்து படையுதவி வேண்டியதாகவும், அப்போது யுவராஜனுக விருந்த மகிந்தன் பெரும் படையுடன் பூரீவிஜய சென்று அவ்வரசை பூரீவிஜய மன்னனுக்கு மீட்டுக் கொடுத்து, இளவரசி சுந்தரியை அங்கே மணஞ்செய்து மீண்டதாக ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின் றது. அக்காலத்திலிருந்து பூரீ விஜய அரசையாண்ட அரச குடும்பத் துக்கும். இலங்கை அரச மரபிற்கும் நெருங்கிய மணவினை யுறவுகள் இருந்து வந்தன. சோழ அரசை எதிர்த்துப் பாண்டியரும் சிங்க ளரும்அமைத்த கூட்டுறவில் பூரீ விஜய அரசு முக்கிய பங்கை வகித்தது. இலங்கையைச் சோழர் கைப்பற்றிய போது அதைப் பாதுகாப்பதற்கு பூரீ விஜய அரசின் மன்னனன சங்கிராம விஜவோத்துங்க வர்மனும் சோழருக் கெதிராகச் சிங்களர் தொடுத்த போராட்டத்தில் சமர விஜயோத்துங்க வர்மனும் இலங்கைக்கு ஆதரவாக இருந்தனர். உண் மையில் பரணவிதானவின் கொள்கைப்படி விஜயபாகு இலங்கையர் சனதற்கு முன்னரே சோழரைத் தோற்கடித்த இலங்கை மன் னன் ஒருவனை (6-ம் மகிந்தன்?) வெ ன் மு ன் எனப்படுகின்றது மகாபராக்கிரமபாகுவுக்குப் பினனரும் கலிங்க மரபினரே யாட்சி செய்ததை அடுத்த அத்தியாயத்திற் கவனிப்போம். பொலன்னறு வைக் கால முடிவில் ஏற்பட்ட கலிங்க மாகனது படையெடுப்பும் அதனைத் தொடர்ந்து பின்னர் நடைபெற்ற சந்திரபானுவின் படை யெடுப்பும், முந்திய நிகழ்ச்சியுடன் தொடர்புடையவை யெனப் பின் னர் காட்டப்படும். இவ்வாறு இலங்கை யரசியல் வரலாற்றில் குறிப் பாகப் பொலன்னறுவைக் காலத்துக்குச் சற்று முன்னும் பின்னும் இலங்கையுடன் பூரீ விஜய அரசு மிக நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தமை புலப்படும். iii. Lu sử Lor
"பர்மா' என்ற பெயரை அந் நாட்டுக்கு அளிக்கக் காரணமாக விருந்த பர்மியக் குடிகள், பர்மாவின் வடபுலத்திலிருந்தே அந்நாட் டுக்குக் குடியேறியவர்கள். ஆனுல் அது நடைபெறுதற்கு முன்னரே அந்நாடு பல நூற்ருண்டுகளாக நாகரிகமெய்தியிருந்தது. அராபியப் புவியியலாளர் தாழ் பர்மாவை (Lower Burma) ராமஞ்ஞ தேச என அழைத்தனர். இலங்கைக் காலவேடுகள் முழு பர்மாவையும் குறிக்க இப்பெயரையே பயன்படுத்தியுள்ளன. "அரமண தேசம் எனவும் இது குறிக்கப்பெற்றுள்ளது. ஜாதகக் கதைகள் முதலான பழையஇந்திய நூல்களில் சுவர்ண பூமி (பா. சுவண்ண பூமி) என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. பெளத்தம் இலங்கைக்குப் பரவிய காலத்திலேயே, அந்நாட்டுக்கும் அது பரவியிருத்தல் கூடுமெனினும் 5-ம் நூற்றண்டளவிலேயே அது நன்னிலை எய்தியிருந்தமைக்குச்

Ĝs ar fèy d as "râu srđa. Ebbayer) & 4yuh t
சான்றுகள் உண்டு. அங்கும் தேரவாதப் பிரிவுப் பெளத்தமே பின்பற் றப் பட்டமையால் இருநாடுகளுக்கும் இடையே தொடர்புகள் வலுப் பெற்று வந்தன. வணிக உறவுகள் இருந்தமை பற்றியும் ஏற்கெ னவே குறிப்பிடப் பெற்றுள்ளது.
பேகன் அரசுக்கு முன் பர்மா: மத்திய பர்மாவில் யூனிக்ஷேத்திரம் என் பதைத் தலைநகராகக்கொண்டு, பியு அரசு 7-ம், 8-ம் நூற்ருண்டுகளில் சிறப்பெய்தியிருந்தது. அந்நகரில் செய்யப்பட்ட அகழ்வுகள். அது ஒரு பெருநகராகத் திகழ்ந்ததை வலியுறுத்துகின்றன. பெளத்தத் தூபிகள் புடைப்பகழ்வுச் சிற்பங்கள் (குப்தர் கலை மரபைச் சார்ந்தவை) கல்லில் செதுக்கப்பட்ட விஷ்ணுவின் படிமங்கள், அவலோகிதேஸ்வர ரின் வெண்கல வடிவங்கள் ஆதியன வெளிக்கொணரப்பட்டுள்ள 9-ம் நூற்ருண்டளவில் தாய் (சீய) அரசொன்று, பர்மாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றி யாட்சி செய்தது. பியுஅரசும் அதற்கLங்ஓ யதாகவே இருந்த தென்பர். பியுஅரசு விளங்கிய காலத்தில் ஐரா வதி நதிக்குக் கிழக்கே, மொன் இனத்தவர்க்குரிய அரசுகள் இருந்து வந்தன. மொன் இனத்தவர் உயர்ந்த பண்பாடு உடையவர் களாக விளங்கி நீர்ப்பாசனங்கள் அமைப்பதில் சிறந்து விளங்ஓ வர்கள். ஹம்ஸாவதி யென முன்பு அழைக்கப்பட்ட பெகுவே இவர் களுடைய தலைநகராக விளங்கியது. 9-ம் நூற்றண்டு அளவில் பர் மாவுக்குள் புகுந்த பர்மியர், முதலில் மொன் இ ன த்த வ ல் விருத்தி செய்யப்பட்ட கியோக்ஸி மாவட்டத்தைத் தமதாக்கிக் கொண்டனர். பின்னர், ஐராவதியைக் கடந்து அரக்கன் பிரதேசத் திலும் மலைச்சாரல்களிலும் குடியேறலாயினர். பிந்திய குடியேற்றங் கள் அவர்களை அந்நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவுமாறு வைத்தன.
பேகன் அரசு: பேகன் நகரும் பேகன் அரசும் முன்னரே நிறு வப் பட்டிருப்பினும், 11-ம் நூற்ருண்டிலிருந்தே அது மிகவும் பெரு மையுடன், திறமைவாய்ந்த மன்னர்களின் ஆட்சியின் கீழ் விளங்கி வந்தது. இக்காலத்திலேயே இலங்கைக்கும் பர்மாவுக்கும் தொடர்பு கள் ஏற்பட்டதை அறிகின்ருேம். அனுேரத்தன் (1044-77) என்ற மன்னன் இப்பெருமைக்கு அடிகோலி, சிறப்புடன் ஆட்சி நடத்தி ஞன். இவனுடைய சாதனேகளில், பர்மா முழுவதையும் ஒன்றுபட வைத்து ஆட்சி செய்தமை முக்கியமானதாகும். தாட்டனில் (Thaton) இருந்த மொன் அரசைக் கைப்பற்றி, தனது அரசில் இணைத்தமை ஒரு குறிப்பிடத்தக்க செயலாகும். இவ்வாறு மொன் அரசையவன் கைப்பற்றியதால், மொன் பண்பாடும், தேரவாத பெளத்தமும் பேகன் அரசில் பெருஞ் செல்வாக்குப் பெறலாயின. அனுேரத்த னது முயற்சியால் தேரவாத பெளத்தம் பெருவளர்ச்சி யெய்தி யிரு ந்தது. இதன் பின், தேரவாத பெளத்தமே பர்மாவின் தேசிய மத

Page 42
? ዷ luấð57 GðL. U fff, Lê
மாக இருந்து வந்துள்ளது. இதனல், இலங்கைக்கும் அந்நாட்டுக்கு மிடையே தொடர்புகள் வளர ஏதுக்கள் அதிகரித்திருந்தன. இவன் நிறுவிய சமயக் கட்டிடங்களில் சுவேஸி டின் பகோடா என்பது மிக வும் பிரசித்தி வாய்ந்தது. இவனுடைய புதல்வர்களில் ஒருவனுன கியான்சித்த (1084 - 1112) மிக்க சிறப்புடன் ஆட்சி நடத்தி, பேகன் அரசுக்குப் பெருமை தேடியவன். இம் மன்னன் சீனவுக்கு இருமுறை தூதுக்குழுக்களை அனுப்பி, சில வணிக உரிமைகளைப் பெற்றன். இந் தியாவில் புத்தக யாவிலுள்ள ம கா போ தி க் கோவிலைத் திருத்து வதில் இவன் ஈடுபட்டான். இவன் நிறுவிய கட்டிடங்களில் புகழ் வாய்ந்தது ஆனந்தா கோவில் எ ன் ப த 7 கு ம். இம் ம ன் ன னை த் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற அலோங்சிது (1112-65) என்பா எனது காலத்தில் பேகன் அரசில் இருந்து வந்த மொன் பண்பாட் டுச் செல்வாக்குக் குன்றி வந்தது. இவன் நிறுவிய தத்பின்னியு கோவில் முந்திய ஆனந்தாக் கோவிலைப் பின்பற்றியது. இவனும் புத்தகயாவில் புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப் ப டு இன்றது. அந்நாட்டுக் காலவேடுகள், இவன் தன் மகன் நரத்து என் பவனல் கொல்லப்பட்டானென்பதை ஆராய்ச்சியாளர் ஒரு மன தாக ஏற்கவில்லை. இவனுக்குப் பின், ஓர் ஆட்சி யிடையறவு இருந்த பின், நரபதி சிது என்பான் ஆட்சியைப் பெற்றன். இவனுடைய காலத்திலிருந்தே இலங்கையுடன் சமயத் தொடர்புகள் அதிகரித்து வந்ததை விரைவில் அறிவோம். பிற்காலப் பேகன் மன்னர்களுள் திறமை மிக்கவனக விளங்கிய கியாஸ்வா 13-ம் நூற்றண்டின் நடுப்பகுதியில் ஆட்சி செய்தவன். இவன் காலத்திலும் இலங்கைக் கும் பர்மாவுக்குமிடையே சமயத் தொடர்புகள் நிலவின. 13-ம் நூற்ருண்டின் பிற்பகுதியில், பர்மாவை யாட்சி செய்த நரதிஹபதி என்பானது காலத்தில் (1356-1287) அந்நாடு மொங்கோலிய (சீன) அரசனன குப்ளாய் கானுல் அடிப்படுத்தப்பட்டது. இதன் பின் பர்மிய இளவரசருள் ஒருவன், மொங்கோலிய அரசனது மேலாணை யின் கீழ் அரசாண்டு வந்தான்.
மொங்கோலிய அரசின் கீழ் 1287-ல் பர்மா கொண்டு வரப் பட்டபின் ஷான் சகோதரர்கள் எனக்குறிப்பிடப்பட்ட தெ ன் பர்மாவைச் சேர்ந்த மொன் அரச குல த்தவர்களால் சுயாட்சியைப் பெறுதற்கென முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. வடபர்மாவில் ஆவா(AVa) எனும் இடத்திலும், தெற்கே பெகுவிலும் ஏறத்தாழ ஒரே காலத்தில் இரு அரசுகள் 14-ம், 15-ம் நூற்ருண்டுகளில் நிலவின. 15-ம் நூற்றண்டில் பெகுவில் அரசாண்ட சில மன்னர்கள் பெளத்த மத வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டவர்களாக, இலங் கைக்குப் பல தூதுகுழுக்களை யனுப்பி வந்தனர். அந்நூற்றண்டு முடிவதற்கிடையில் ஐரோப்பிய வணிகக் குழுக்கள் பெகு அரச

தென்கிழக்காசிய நாடுகளும், இலங்கையும் 7Ᏸ
வைக்கு சென்று வரலாயின. அவற்றின் விளைவுகள் அடுத்த சில நூற்ருண்டுகளில் புலனுகின.
பர்மாவும் இலங்கையும்: ப்ர்மாவிலுள்ள சில மரபுகளின் படி புத்தகோசரே இலங்கையிலிருந்து தேரவாதப் பிரிவுப் பெளத்தம் அந் நாட்டுக்குப் பரவக் காரணமாக இருந்ததாகக் கொள்ளப்படு கின்றது. ஆனல் அத்துணைப் பழைய காலத்திலிருந்து இலங்கைக் கும் பர்மாவுக்கும் தொடர்புகள் இருந்தமைக்கு உறுதியான சான்று கள் இ ல் லை. விஜயபாகுவின் காலத்திலிருந்தே, சூளவம்சத்தில் பர்மியத் தொடர்புகள் பற்றிய குறிப்புக்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. உருகுணே யரசனக அவன் இருந்த காலத்திலேயே இரு நாடுகளுக்கிடையேயும் வணிகத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. விஜயபாகு சோழருக் கெதிராகப் பர்மிய (பேகன்) அரசனது உத வியை நாடியபோது அவன் (அனுேரத்தன்) ஒரு விலையுயர்ந்த வெகு மதியை அளித்ததாகவும், பின்னர் சமயப் புனருத்தாரணத்தை மேற் கொள்கையில் விஜயபாகு மீண்டும் பர்மிய அரசனது உதவியை நாடவே, குருமார்களையும் திருநூல்களையும் இலங்கைக் கனுப்பிய போது, இலங்கை வேந்தன் தந்ததாதுவைப் போன்ற ஒன்றை அனுப்பிய தாகவும் பர்மியக் காலவேடுகள் கூறுகின்றன. விஜயபாகு வுக்குப் பின், அவனுடைய காலத்தில் நிலவிய சுமுக உறவுகளுக்குப் பதில் மகா பராக்கிரமபாகுவின் காலத்தில் பகைமை வளர்ந்து போரில் முடிவுற்றதை முந்திய அத்தியாயத்திற் கண்டோம். இப் போர் வியாபார உரிமைகளை நிலை நாட்ட எழுந்த தென்பது தெளிவு. எனவே இவ்விரு நாடுகளிடையே நிலவிய வணிக உறவுகள் பற்றி மேலும் அறிய முடிகின்றது.
சிஹள-சங்க நிறுவப்படல்: மகாபராக்கிரமபாகு சங்கத்தில் புனி தத்தை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பற்றி மு ன் னரே கண்டோம். பர்மிய ஆதாரங்களின்படி, அலோங்சிதுவின் மர ணத்துக்குக் காரணமாகவிருந்த அவனது மகன் நரத்து என்பான் அரசினைப்பெற்ற வகையினையும் நாட்டிலேற்பட்ட கலவர நிலைமை சளையும் கண்ட சமயத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு 1167-ல் வந் ததாகக் கூறப்படுகின்றது. சில ஆண்டுகளின் பின், உத்தரராஜிவ என்ற ஒரு பிக்குவும், இன்னும் சில பிக்குகளும், சப்பட என்ற சாம ணேரரும் இலங்கை வரலாயினர். இவர்களை இலங்கையிலுள்ள சங் தத்தினர் நன்கு வரவேற்று உபசரித்தனர். சப்பட என்பார் சில ஆண்டுகள் இலங்கையிலேயே திருநூல்களைப் பயில்வதிற் செலவிட்டு, பிக்குவாகக் குரு அபிடேகத்தை இலங்கைலேயியே பெற்ருர், இலங்கை யில் பத்தாண்டுகள் தங்கியபின், சப்படதேரரும் வேறு நான்கு பிக் குகளும் (இவர்களில் ஒருவர் கம்போடிய அரச மரபில் உள்ளவரா
10

Page 43
4. una si Lu typh
கவும், மற்ருெருவர் இலங்கையராகவும் இருந்தனரெனக் கூறப்பட் டுள்ளது) பர்மாவுக்குத் திரும்பினர், இவர்கள் பர்மாவில் சீஹள-சங்க என்ற ஒரு புதிய சங்கப் பிரிவை நிறுவினர். பர்மாவின் சமயவர லாற்றில் இப்பிரிவு முக்கியபாகத்தை வகித்ததாகக் கூறுவர். தாட் டன் (Thaton) பிரிவு என்ற பழைய அல்லது முந்திய பிரிவைக் காட்டிலும் சீஹள சங்கப் பிரிவுக்கு மன்னர்கள் கூடுதலான ஆதரவு தந்தனர். பர்மாவில் பெருந்தொகையினர் இப் பிரிவை ஆதரித் ததைப் போலவே, வேறு தென்கிழக்காசிய நாடுகள் சில ஆற்றிலும் இலங்கைத் தேரவாத பெளத்தம் மிக்க செல்வாக்கைப் பெறலா யிற்று. நிஸங்க மல்லனும் பர்மா முதலான நாடுகளுடன் நட்புறவு கொண்டிருந்ததாக அவனது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ் வாறு பொலன்னறுவைக் காலத்தில் இரு நாடுகளுக்குமிடையே பெரும்பாலும் நல்லுறவுகளே நிலைபெற்றிருந்தன என்பது புலப் படும்.
பொலன்னறுவைக் காலத்தில் வலுப்பெற்ற பர்மியத் தொடர் புகள் பிந்திய காலப்பகுதிகளிலும் குறிப்பாக கோட்டைக்காலப் பகுதியிலும் நீடித்தன. இக்காலப் பகுதிகளில், தேரவாத பெளத் தத்தைப் புனிதத்துடன் பேணிய நாடு என்பதாகப் பெரு மதிப்பு இலங்கைக்குத் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டிருந்தது. உதும் பர-மகா சாமி எனச் சீய ஆதாரங்களில் அழைக்கப்பட்ட ஒர் இலங் கைப்பிக்கு பர்மாவிலும் சீயத்திலும், அந் நாடுகளில் இலங்கையிற் பின் பற்றப்பட்ட சங்க ஒழுக்க விதிகளை புகுத்துவதற்கு மூலகார ணராக விருந்தார். சங்கராஜ மேதங்கர மகாதேரர் என்பவரும் இவ ராவர். எனக்கருதப்படுகின்றது. டெகு மன்னனுெருவன் இ ல ங் கையிலிருந்து தாதுக்களைப் பெற்றுத்தான் நிறுவிய தூபமொன்றில் வைத்துக் கட்ட எண்ணித் தூதனுப்பினன். தர்மசேதி என்ற ஒரு பெகு மன்னன், இலங்கையிலுள்ள முறைப்படி தனது நாட்டுப் பெளத்த பிக்குகளைக் குரு அபிஷேகம் (உபசம்பதா) பெறச் செய் வதற்காக, இலங்கைக்குத் தனது குருமார்களைக் க ப் ப ல் களி ல் அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் இலங்கையில் நன்கு வரவேற் கப்பட்டு, கல்யாணி (களனி) யில் வந்து நின்ற கப்பல்களிலேயே அவர்கள் உப சம்பதா என்ற உயர் குரு அபிஷேகத்தைப் பெற்றதா கவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பர்மா மீண்ட குரு மார்கள் பின்னர் தமது நாட்டில் பெகுஷக் கண்மையில் கல்யாணி சீமா என அழைக்கப்பட்ட பரிசுத்த எல்லையுள் நடத்தி இலங்கை (மகா விகாரை) முறைப்படி உப சம்பதாவை நடாத்தினர். இவ்வாறு, எமது வரவாற்றுக் காலப் பகுதியின் பிற்பகுதியில் பர்மாவுக்கும் இலங்கைக்கு மிடையே மிக நெருங்கிய சமயத் தொடர்புகள் இருந் ததை நாம் உணரலாம்.

தென் கிழக்காசிய நாடுகளும், இலங்கையும் 75
பயிற்சி
1. பர்மிய 'பகோடா'க்கள், கம்போடியாவின் பெரும் கட்டிடங்கள் (குறிப்பாக அங்கோரில் உள்ளவை), ஜாவாவிலுள்ள மெண்டத் கள் பொரயுதுாரில் உள்ளவையுட்பட) என்பவற்றின் படங்களைப் பார்வையிட்டு, அவை இலங்கைப் பெளத்தக் கட்டிடங்களிலிருந்து அமைப்பில் வேறுபடுமாற்றை விளக்குக.
2. இவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட மூன்று அரசுகளின் வரலாற்றில் இந்தியாவின் செல்வாக்கு இருந்தமைக்கு எடுத்துக் காட்டுக்கள் தருக. தேர்வு விஞக்கள்:
1. பொலன்னறுவைக் காலத்திலிருந்து இலங்கைக்கும் பர்மா, சியம்முதலான தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே நிலவிய
உறவுகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுக.
2. சிறு குறிப்புக்கள் 6686 :
அனுேரத்தன் ; அலோங்சிது; பூனீவிஜய அரசு - இலங்கைத் தொடர்புகள்; சீஹள சங்க சைலேந்திரர்கள்.

Page 44
அத்தியாயம் ஐந்து கலிங்க மன்னர்களின் ஆட்சி :
பொலன்னறுவையின் வீழ்ச்சி
i. கலிங்க மன்னர்கள். i. நிலங்க மல்லன் i. நிஸங்க மல்லனது பின்னுேர், iv. மாகனது படையெழுச்சி
யும் பொலன்னறுவையின் வீழ்ச்சியும்.
மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்போது, நாடெய்தியிருந்த சிறப்பை, அவனுடைய பின்னுேர்களின் காலத்தில் அது ஒருபோதும் பெற்றதில்லை. அப்பெரு மன்னனது மறைவைத் தொடர்ந்து ஆட்சி செய்த மன்னர்கள் பெரும்பாலும் பலவீனர்களாகவே காணப்பட் னர். நிஸங்க மல்ல(ன்) ஒருவனைத் தவிர்ந்த ஏனையோர் மிகக் குறு கியகால உறுதியற்ற ஆட்சிகளை நடத்தினர். கலிங்க மாகனது படை யெழுச்சி வரையுள்ள முப்பது ஆண்டுகளில் (1186-1215) பத்து மன்னர்கள் வரையில் ஆட்சி நடத்தியுள்ளனர். கலிங்க ஆதரவாள ருக்கும் பாண்டிய ஆதரவாளருக்கு மிடையே தலைநகரிலுண்டான கடும் போட்டியே அடிக்கடி சச்சரவுகள் தோன்றக் காரணமாக விருந்தது. இவ்வாறு அரசுரிமைபற்றி யெழுந்த தகராறுகளில் தள பதிகள் முக்கிய பங்கை வகித்து, அரச நியாமகர்களாக விளங்கினர். தென்னிந்தியாவிலிருந்தும் படைகள் இவர்களால் வருவிக்கப்பட் டன. இத்தகைய நிலைமைகள் பிறநாட்டாரின் படையெடுப்புக்கள் நடைபெறத் தூண்டுதல் அளித்தன. தென்னிந்தியாவைச் சேர்ந்த படை யெடுப்பாளர் அடிக்கடி இலங்கை விவகாரங்களில் தலையிட்டு வரலாயினர். பராக்கிரம பாண்டியன் என்ற ஒரு பாண்டியன் அர சைக் கைப்பற்றி யிருந்த வேளையிலேயே, கலிங்க மாகன் இலங்கை மீது படையெடுத்து வரலாஞன். இவனது படையெழுச்சி, இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பமாக அமைந்து, பொலன்னறுவை யரசின் வீழ்ச்சியை எற்படுத்தியது. இவ்வாரு ன நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு காலப்பகுதியின் வரலாற்றையே இவ் வத்தியாயத்திற் கவனிக்க இருக்கின்ருேம்.
i. கலிங்க மன்னர்கள் :
மகா பராக்கிரமபாகுவுக்கு முன்னரும் சில இலங்கை மன்னர்கள், தம்மைக் கலிங்க மன்னர்களாகக் கூறிக்கொண்ட போதும், மகா பராக்கிரமபாகுவுக்குப் பின்னர் ஆட்சிசெய்து வந்தவர்களே அவ் வாறு அழைக்கப் பெறுதற்கு அருகதை பெற்றுள்ளனர். ஏனெனில், இம்மன்னர்கள் கலிங்கத்திலிருந்தே இலங்கை வந்து ஆட்சியை நடத்

கலிங்க மன்னர்கள் நிஸங்க் மல்லன் 77
தலாயினர். முந்திய "கலிங்க மன்னர்கள், கலிங்கத்துடன் ஏற்பட் டிருந்த மணவினை யுறவுகளின் விளைவாகக் கலிங்க வமிசத் தொடர் புகள் கொண்டவர்களே. நாம் முந்திய அத்தியாயங்களில் கண்ட வாறு, 4-ம் மகிந்தனே கலிங்கத்துடன் முதன் முதல் மணவினைத் தொடர்புகளைக் கொண்டிருந்தான். திரிலோக சுந்தரீ யென்ற கலிங்க இளவரசியை 1-ம் விஜயபாகு மணஞ் செய்தமை, கலிங்கக் குழுவினர் அரசவையிற் பலமடையவும் கலிங்க மன்னர் பின்னர் ஆட்சியைப் பெறவும் வழிகோலிய தென்பர். சிங்கள (அல்லது பாண்டியக்) குழு வினர்க்கும், இந்தக் கலிங்கக் குழுவினர்க்கு மிடையே சச்சரவுகள் தோன்றலாயின. விஜயபாகுவின் சகோதரி மித்தா என்பவள் ஒரு பாண்டிய இளவரசனை மணஞ்செய்ததிலிருந்தே பான்டியக் குழுவினர் முக்கியம் பெற்று வந்தனர். 1-ம் விஜயபாகு இறந்தபோது, அரசு ரிமை பற்றி நடைபெற்ற தகராறு இவற்றுக்கு முன்னேடியாக விருந்தது. 1-ம் பராக்கிரமபாகுவைத் தொடர்ந்து அரை நூற்ருண் டுக்கு மேல் கலிங்க மன்னர்கள் பொலன்னறுவையிலிருந்து ஆட்சி புரிந்தனர்.
கலிங்கம் (இந்தியாவில்): * கலிங்கம்” என்பது, வழமையான கருத்தின் படி, இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள இப்போதைய ஒரிசா (Orissa) மாகாணத்தையே குறிக்கும். இலங்கைக்கும் இக் கலிங்கத்திற்கும் விஜயனது காலம் முதலாகத் தொடர்புகள் இருந்து வந்தன. குறிப்பாக விஜயனது மரபுக்கதை சீஹள அட்டகதாவில் இடம் பெற்ற காலமான 1-ம் நூற்ருண்டு அளவில் கலிங்கம் பற்றி இலங்கை அறிந்திருந்தமை தெளிவு. இக் கலிங்கத்துக்கும் இலங் கைக்கும் இடையே பின்னரும் தொடர்புகள் இருந்துவந்துள்ளன. கலிங்கத்திலுள்ள தந்தபுரத்திலிருந்தே புத்தரின் புனிதப் பல் எச்சம் (தந்த தாது) இலங்கை க்குக் கொண்டுவரப்பட்டது. 4-ம் மகிந்தன், 1-ம் விஜயபாகு போன்ருே ரின் மணவினையுறவுகளும் இதே கலிங்கத் துடன் நடைபெற்றதாகவே சில அறிஞர்கள்* கொள்கின்றனர். கீழைக் கங்கர்கள் இப்பகுதியை ஒரு காலத்தில் ஆண்டதாக அங்குள்ள சில சான்றுகள் தெரிவிப்பதைக் கொண்டும், தம்கொள்கை வலுப் பெறுவதாக இவர்கள் நம்புகின்றனர். ஆன லும், கலிங்கத்தில் ஆட்சி செய்த மரபினராக இலங்கைக்கு வந்த கலிங்க மன்னரைக் கொள்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
* கலைநிதி (திருவாட்டி) சிறீமா கிரிபாமுண : இலங்கை வரலாற்றின் கலிங்கராட்சிக் காலம் (சிந்தனை மலர் 1-கட்டுரைத் தொடர்). இதே 35(5jg i 5ðar (up Går GOT rif History of Ceylon Vol. I, Part II Ch. VI இலும் அவர் வெளியிட்டுள்ளார்,

Page 45
78 பண்டைய ஈழம்
நிஸங்க மல்லனது தந்தை (பூரீ ஜயகோப மகாராஜா) வின் பெயர் அங்குள்ள ஏடுகளில் இடம்பெறவில்லை. இதனல், இலங்கைக் கலிங் கர்கள் கலிங்கத்தையாண்ட கங்க வம்சத்தின் ஒரு கிளைவம்சத்தைச் சேர்ந்தவர்களாக விருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. எனவே, இப்போது கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு, இலங்கைக்கு வந்த கலிங்க மன்னர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதி யுடன் கூறவியலாது.
கலிங்கம் (மலேஷியாவில்) 10-ம் நூற்ருண்டிலிருந்து இலங்கை கொண்டிருந்த தொடர்புகள் இந்தியாவிலுள்ள கலிங்கத்துடன் அன்று, மலேஷியாவிலுள்ள கலிங்கத்துடன் இருந்ததாக ஒரு கொள் கையைப் பரணவிதான வெளியிட்டுள்ளார். "இலங்கையும் மலேஷி "UrToolth” (Ceylon and Malaysia, Colombo 1966) GT Gör sp giy GnucDGML uu நூலில், கருத்துக்களைத் தொகுத்துக் கூறியுள்ளார். தமது கருத்திற்கு ஆதாரமாக, "10-ம் நூற்ருண்டிலிருந்து 18-ம் நூற்ருண்டு வரை யுள்ள ஆதாரங்கள், அதாவது காலவேடுகளும் சமகாலப் பொறிப்புக் களும் ஒரு கலிங்க நாட்டுடன் நெருங்கிய உறவுகள் இருந்ததாகக் கூறும் அதே காலப்பகுதியில், அக்காலத்தைச் சேர்ந்த சிங்கள இலக் கிய கர்த்தாக்கள் "கலிங்க' எனும் போது கிழக்கிந்தியாவைக் குறி யாது, மலேஷியாவிலுள்ள ஒரு பகுதியையே கருதியமைக்குச் சான்று கள் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளார் (பக். 94). அவர் தரும் சான்றுகளை இங்குச் சுருக்கமாகவும் கூறுவதற்கியலாது. காலிங்க(ம்) அல்லது கலிங்க நாடு என்பது எங்கே இருந்தது என்பது பற்றியும் தெளிவு இல்லை. சீன ஆதாரங்கள் குறிப்பிடும் "ஹொ-லிங்" என்பது கலிங்கத்தைக் குறிப்பதாகக் கொண்டால், அது மத்திய ஜாவாவில் அமைந்ததாகக் கொள்ளல் வேண்டும். வேறு ஆதாரங்கள் தாழ் பர்மா விலும், மலாயாத் தீபகற்பத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் அது இருந்ததாகக் கொள்ள வைக்கின்றன. சிங்கோரா என்ற சிங்ஹபுரத் தைத் தலைநகராகக் கொண்ட கலிங்கத்திலிருந்தே நிஸங்க மல்லனும் அவனது மரபினரும் இலங்கை வந்தனர் என்பதே பரணவிதானவின் முடிபாகும். அவருடைய முடிவும், வரலாற்றறிஞரிடையே பெருமளவு வரவேற்பைப் பெறத் தவறியபோதும், தம் கொள்கையை நிறுவ அவர் காட்டும் சான்றுகளை அவர் சேகரித்ததில் அவருடைய வியத்தகு நுண்மாண் நுழைபுலத்தைக் காணலாம்.
2-ம் விஜயபாகு முதலாம் பராக்கிரமபாகு இறந்தபோது, அவ னது "பாகி நெய்ய" (மருமகன்) வான 2-ம் விஜயபாகு அரசனுணுன். இவன் பராக்கிரமபாகுவின் ஒரு சகோதரியின் மகன் என்பதும், கலிங்கத்தில் வளர்ந்து வந்தவன் என்பதும் எமது ஆதாரங்கள் தரும் செய்திகள் ஆகும். கலிங்கத்திலிருந்து விஜயபாகு அழைக்கப்

கலிங்க மன்னர்கள் நிலங்கமல்லன் yg
பட்டு மாபா என்பதற்கு நிகரான ஹிமியா எனும் பதவியில் 'அமர்த் தப்பட்டிருந்தான். இவ்வாறு மகா பராக்கிரமபாகுவால் தெரிவு செய்யப்பட்ட உரிமையாளனுக விஜயபாகு இருந்தபோதும், கலிங் மன்னருள் முதல் மன்னனன இவனுக்கு உடனே பெரும் எதிர்ப்பு ஏற் பட்டது. இவன் ஆட்சியைப் பெற்ற அன்றே, நாட்டில் குழப்பங்கள் மூண்டன. 2-ம் விஜயபாகு அரசனவதை யேற்காத அமைச்சர்களும் அவைக்களத்து உறுப்பினர்களும் இக் கலவரத்தைத் தூண்டி விட் ருத்தல் கூடும் கலவரங்கள் அடக்கப்பட்டு ஓராண்டுக்காலம் அவன் ஆட்சி நடத்தியபின் ‘குலிங்க மரபினனன ஆரும் மகிந்தனற் கொல்லப்பட்டான். உப ராஜவாக நியமிக்கபட்டிருந்த நி ஸ ங் க மல்ல(ன்) ஆட்சியைப் பெறுவதில் அதிக சிரமமிருக்ககவில்லை. மதிந் தனைக் கொன்று தனது உரிமையை ஒரு சிலநாட்களில் நிஸங்க மல்லன் நிலை நாட்டிக் கொண்டான். நிஸங்கமல்லனுடைய வர லாற்றைச் சிறிது விரிவாகப் கவனிப்போம்.
i. நிஸங்க மல்ல(ன்)
(II87ーII96)
கலிங்க மன்னருள் மிகவும் புகழ்வாய்ந்தவனும், பொலன்னறு வைக்கால ம ன் ன ர் களு ஸ் இறுதிப் பெரு மன்னனுமான நிஸங்க" மல்லன் 1187 ல் ஆட்சியைப் பெற்று ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செலுத்தினுன். பல காரணங்களால் இவனுடைய ஆட்சிக் காலம் வரலாற்று முக்கியம் பெற்றுள்ளது. இவனுடைய வரலாறு சூளவம்சத்தில் ஒரு சில செய்யுளில் (அத். 80 செய் 18-26) கூறப் பட்டுள்ளது. அச்செய்யுள்கள் தனியே அவனது சமயப்பணிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளன. ஆயின், நிஸங்க மல்லன் விட்டுச் சென் றுள்ள பெருந்தொகையான பொறிப்புக்களின் துணைகொண்டு, கால வேடுகளிற் கூறப்படாத பல விபரங்களைச் சேர்க்க முடிகின்றது. மிகக் கூடுதலான பொறிப்புக்களை விட்டுச் சென்றுள்ள இலங்கை வேந்தன் நிலங்க மல்ல ணென்பதை நாம் கருத்தில் இருத்தல் வே ண் டு ம். பொறிப்புக்களில், அவை குறிப்பிடக்கருதிய செய்திகள் இரண்டொரு வாக்கியங்களிற் கூறப்பட்டுவிடும். அவற்றுக்குமுன் கூறப்படும் நீண்ட முன்னுரை (பிரஸஸ்தி) போல அமைந்த பகுதிகள் விரிவாகவும், பலவற்றில் ஒரே தன்மையான செய்கிகளைக் கொண்டவையாகவும் இருத்தலைக் காணலாம். மன்னனது புகழை எடுத்துரைத்தலே இப் பகுதிகளின் நோக்கமாதலின், இவை வெறும் புகழுரைகளாகவும் இருத்தல் கூடும். எனவே நிஸங்க மல்லனது பொறிப்புக்களில் வருஞ் செய்கிகளை வரலாற்றுண்மைகளாகக் கொள்வதில் நாம் எச்சரிக்கை யாக இருத்தல் அவசியமாகின்றது.

Page 46
80 Li sør foliu išpuh
இவனுடைய கல்வெட்டுக்களால் இவன் கலிங்கத்தைச் சேர்ந்த பூரீ ஜயகோப மகாராஜா, பார்வதி மகாதேவி என்போர்க்குப் பிறந்த இளவரசன் என்பதும், கலிங்கத்திலுள்ள சிங்ஹபுரத்திலேயே இவன் பிறந்தான் என்பதும் அறியப்படுகின்றன. முந்திய அரசர்களுக்கும் இவனுக்கும் உள்ள உறவுகள் புலப்படவில்லை. கலிங்கத்திலிருந்து வர வழைக்கப்பட்டு, ஆபா, ஹிமியா, உபராஜா பதவிகளைத் தொடர்ந்து வகித்து, ஈற்றில் அரசனுனமை பொறிப்புக்களால் உணரப்படும். கலிங்க மன்னர்களின் ஆட்சிக்கு நாட்டிற் பரவலான எதிர்ப்பியக்கம் இவன் ஆட்சியைப் பெற்றபோது இருந்தது. இவ்வெதிர்ப்பை முறி யடிக்க நிஸங்க மல்லன் மேற்கொண்ட நடவடிக்கைகள் கவனிக்கத் தக்கவை. தனது உரிமையை வலியுறுத்தத் தான் விஜயனது வமிசத் தில் தோன்றியவன் எனத் தன் கல்வெட்டுக்களிற் கூறியுள்ளான். சில் கல்வெட்டுக்களில், கொவி குலத்தவர்கள் அரசுரிமை கோரும் போது அவர்களை யாதரிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு உரிமை கோரும் கொவி குலத்தவர்கள் அன்னங்களா வும் சிங்கங்களாகவும் தம்மைப் பாவிக்க எண்ணும் காகங்களையும், குள்ள நரிகளையும் போல்வர் எனவும் குடிகள் அறிவுறுத்தப்பட்டனர். மனித உருவில் உள்ள தெய்வங்களே. மன்னர்கள்; இதை யுணராது அரசனுக்குத் துரோகம் இழைக்க முற்படுதல் மன்னித்தற்கியலாத பெரும் பாவச் செயலாகும். இவ்வாறு மற்ருெரு கல்வெட்டில் எடுத்துரைக்கும் நிஸங்க மல்லன், கொவி குலத்தவரை யாத ரித்து அரசத்துரோகம் செய்பவர்களும் அவர்களுக்குரிய தண்டனையைப் பெறுவர் என அச் சுறுத்தினன் . உள்நாட்டில் உண்டான எதிர்ப்பைவிட, அயல் நாட்டவரும் இலங்கையில் அரசுரிமை கோரியதாக அவனுடைய கல் பொத்த என்ற பிரசித்தி பெற்ற பொறிப்பும், பிறபொறிப்புக்களும் கூறுகின்றன. சோழ, பாண்டிய, சேர இளவரசர்கள் இலங்கையின் அரசைப் பெற உரிமை பாராட்டியதாக அவை குறிப்பிட்டு, அவர் கள் பெளத்தத்தைச் சாராத காரணத்தால் அவர்களுக்கு உரிமை கோர நியாயமில்லை யெனவும் அவை வற்புறுத்துகின்றன. நிஸங்க மல்லன் காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிலும் (சாது சரிதொதய) அது எ மு த ப்ப ட் ட காலத்தில் நாட்டின் அரசியலில் ஒரு கொந்த ளிப்பான நிலை யி ரு ந் த  ைதி உணர்த்தும் குறிப்புக்கள் உண்டு. உருகுணையிலும் இவன் காலத்தில் அரசியற் குழப்ப மே ற் பட க் கூடிய சூழ்நிலைகள் இருந்ததையும், அங்கு வெவ்வெறிடங்களில் நாட்டப் பெற்ற கவுத்துரண்களில் (கவு என்ற நீளத்தைக் குறிக்க, நெடுஞ்சாலைகளில் நாட்டப்பெறும் கற்றுாண்கள், உருகுணை மக்களை, ஏனைய பி கிடி, மாயா ரட்டைகளைச் சேர்ந்த குடிகளின் பரிகாசத் துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வைத் தான். இவ்வகையான பல ஆபத்துக்களுக்குமிடையே, தனது இராச்சி யத்தை நிலைகுலைய விடாது பேணியது மன்றி, தன் ஆணையை நாடு

di Gior as L sér sør i R a'r ffisY) ni as L. 6) var l
முழுவதும் ஏற்கும்படி செய்தான், இதில் அவன் வெற்றி யெய்தி யமைக்கு அவனுடைய குணதிசயங்களும். கொள்கையும் உதவியாக விருந்திருக்கு மென்பதில் ஐயமில்லை. ஒழுங்காக அவன் மேற்கொண்ட சுற்றுலாக்கள் மூலம் தனது இராச்சியத்தின் வெவ்வேறு பகுதிக ளையும் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து, அதிருப்தி கொண்ட பிரதானிகளை நீக்கவும் அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்தினன்.
கலிங்க ஆட்சியில் மக்களையும், பிரதானிகளையும் திருப்தி பெற வைத்தற்கு அவன் மேற்கொண்ட மற்ருெரு முக்கிய நடவடிக்கை அவர்களுக்குத் தாராளமாகக் கொடைகளை வழங்கியமையாகும். இவனது தாராண்மையைக் குறிக்கும் "துலாபாரக் கொடைகளை (குறிப்பிட்ட ஒருவரது நிறைக்குச்சமமான கொடைகளை வழங்குதல்) இவன் ஆண்டுதோறும் நடத்தியதாக இவனுடைய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இக்கொடைகளை இவன் வழங்கியதை இவனது கல்வெட்டுக்கள் மட்டுமே குறிப்பிடுவதால், இவை வெறும் புனைவு எனத் தள்ளிவிடவும் முடியும். ஆனல் இவனது கல்வெட்டுக்களில் இவை மிகவும் வற்புறுத்தப்பட்டும், அடிக்கடி கூறப்பட்டும் இருத்த லால் இவற்றில் ஒரளவு உண்மையிருத்தல் கூடுமென அறிஞர் கொள் கின்றனர். துலாபாரக் கொடைகளைவிட, மக்களைச் செல்வந்தராக் கும் வகையில் பல வகையான பிற கொடைகளையும் அவன் வழங்கி ஞன். பராமரிப்பு, நிலங்கள், அடிமைகள், கால் நடை, நிலமானியங் கள், பரம்பரைச் சொத்துக்கள், வஸ்திரங்கள், ஆபரணங்கள் ஆகிய வற்றைக் கொடுத்தான்' என்ற வாக்கியம் அவனது கல்வெட்டுக் களில் அடிக்கடி வருவது. இதைப் போலவே, அனு ரா த புர ம் பூரீபுரம், புலஸ் தி புரம், இராமேஸ்வரம் முதலான இடங்களில் தானசாலைகளை நிறுவி அறத்தை ஓம்பினுன் என்பதும் கல்வெட்டுக் களில் அடிக்கடி குறிப்பிடப் பெற்றுள்ளது. இவற்றில் மிகைக் கூற் றுக்கள் அதிகமாக இடம் பெற்றிருத்தல் எளிதிற் கண்டுகொள்ளக் கூடியது. இவையனைத்தாலும் மக்களின் பொருளியல் நிலை மேம்பாடு அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தான சாலைகளில் ஏழை கள் மட்டுமின்றி, சங்கத்தினர், பிராமணர், குருடர், நொண்டிகள், குள்ளர், கூனர் முதலானுேரும் அவனுடைய வண்மையைப் பெற்று வந்தனர். திருடர் களைத் திருந்தச் செய்வதற்கும் அவர்களுக்கு நிறையச் செல்வங்களை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு பல தரப்பட்ட மக்களும் நிஸங்க மல்லனுடைய வண்மையையும் தாராண்மையையும் அனுபவித்து வரலாயினர் என அவனது கல் வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவனுடைய பொருளியற்பணிகள் பற்றியும் கல்வெட்டுக்களில் வரும் குறிப்புக்கள் மிகைக் கூற்றுக்கள் நிறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. "நிஸங்க சமுத்திரம்" என்பதை இவன் நிறுவிய

Page 47
82 L) 676) L-U ಗೆ, ಸಿ.
தாகக் குறிப்பிடப் பெற்றுள்ளபோதும், உண்மையில் மு ன் ன் ர் இருந்த பராக்கிரம சமுத்திரத்திற்குச் சில திருத்தங்களைச் செய்து தனது பெயரால் அதை அழைத்திருக்கக் கூடும் என்பர் பாண்டி நாடுமீது மன்னன் மேற்கொண்ட படை யெடுப்பின் நினைவைக் கொண்டாடும் வகையில் அவன் நிறுவிய ஒரு குளம் பாண்டி விஜயக் குளம் என்பதாகும். இதை ஒரே நாளில் அவன் நிறுவி முடித்தான் என அக்குளத்தின் கட்டில் உள்ள ஒரு பொறிப்புக் கூறுவதை நாம் அப்படியே உண்மையென ஏற்கத் தேவையில்லை. இப்போது கல்மெடி யான வாவி என இது வழங்கப்படுகின்றது. பண்ட வாபி என்ற மற் ருெரு குளத்தையும் இவனே நிறுவியதாக அங்குள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. சூளவம்சத்தில், பராக்கிரமபாகுவே இதை விசாலித் தான் எனக் குறிப்பிடபெற்றுள்ளது. கல்வெட்டில் உள்ள கூற்றே உண்மைச் செய்தியைக் கொண்டிருக்கலாம் எனத் துணியப் Guibo Gil GT.g. (Hist. of Ceylon Vol. I Part I Lii. 5 13). Up is 5 tu மன்னரின் ஆட்சியின்போது மக்களுக்கேற்பட்டிருந்த வரிப்பளுவைக் குறைக்க எண்ணி நிஸங்க மல்லன் ஐந்தாண்டுகளுக்கு வரிகளை அற விடாது விட்டதாகவும், வரிகளின் விகிதங்களைக் கட்டுப்படுத்தியதா கவும் அவனது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வேறு சில வரிகளை முற் முக நீக்கிவிட்டதாகவும் அவை மேலும் குறிப்பிடுகின்றன. இச்செய் திகள் உண்மையாயின், வேருெரு பலம் படைத்த அரசைச் சேர்ந்த வணுக நிஸங்க மல்லன் இருந்திருக்க வேண்டும் அது மலேஷியா விலிருந்திருக்க வேண்டும் எனப் பரணவிதான தம் வாதத்தை நிறுவ இதைத் துணையாகக் கொள்கின் ருர் ஏனெனில், நிஸங் மல்லனது குறுகிய ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளங்களால் இத்துணைச் செழிப் பைப் பெற்றிருத்தல் இயலாது, பிறிதோர் இராச்சியம் அவனுக்குத் தந்த பொருளியல் உதவியினலேயே இவ்வாறு அவன் செய்வதற்குத் துணிவு பெற்றிருப்பான் என்கிருர் பரணவிதான.
தான் பெளத்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதிற் பெருமை கொண்டவன் நிஸங்க மல்லன். பெளத்தர் அல்லாதவர் அரசுரிமை பாராட்டுவதைத் தடுக்க வேண் மென அவன் தன் குடிகளுக்குப் புகட்டினன். தன் குறுகிய ஆட்சிக்காலத்தில் சமயப் பணிகளை நிறைய ஆற்றியிருந்தான். இவனல் நிறுவப் பெற்றதாகக் கூறப்படும் பெருந் தொகையான சமயக் கட்டிடங்களுள், றன்கொத் தாகபம், ஹட்டதாகே, வட்டதாகே, நிஸங்க லதா மண்டபம் என்பன முக்கியமா னவை. றன் கொத் தாகபம் இன்றும் பொலன்னறுவையில் நன்னிலை யில் உள்ளது. ரூவன் வலி சேத்திய என்பதே இதன் உண்மையான பெயராக விருந்தும் முந்திய பெயரே பொது வழக்கில் நிலைத்துவிட் டது. தம்புள (ஜம்புக் கொல)வில் உள்ள விகாரையை அழகுபடுத்தி, அதன் கண் புத் தரின் தங்க உருவச்சிலைகளை வைத்ததாகவும் கூறப் பெற்றுள்ளது. பெளத்த சங்கத்தினரை ஒன்றுபடுத்தும் முயற்சியி

கலிங்க மன்னர்கள் நிஸங்க மல்லன் 83
லும் நிஸங்க மல்லன் ஈடுபட்டதாகக் கூறும் இவனது கல்வெட்டுக் கள், ஒழுக்கக்கேடான பிக்குகளைச் சங்கத்தினின்றும் வெளியேற் றியதையும் குறித்துள்ளன. பெளத்தமல்லாத பிற மதங்களுக்கும் குறிப்பாக இந்து மதத்துக்கும், நிஸங்கமல்லன் ஆதரவைக் காட்டி ன்ை. கந்தளாயிலிருந்த "டார்வதி சத்திரத்தில் தானங்களை வழங் கியபோது, அங்கிருந்து ஆடல், பாடல்களை இரசித்து மகிழ்ந்தா னெனப்படுகின்றது. நவக்கிரக சாந்தி போன்ற இந்து மதக் கிரியை களிற் கலந்தும், தனது தென்னிந்திய லிஜயத்தின்போது இராமேஸ் வரத்தில் ஒரு தேவாலயத்தில் திருப்பணி மேற்கொண்டு அதற்கு *நிஸங்கேஸ்வரம்’ என்ற பெயரைச் சூட்டியும் தன் சமயப் பொறை யைக் காட்டினன்.
நிஸங்க மல்லனது அயல்நாட்டுத் தொடர்புகள் பற்றி அவனது பொறிப்புக்கள் மிகுதியாகக் கூறு கி ன் ற ன. அவ ன் அடிக் கடி இந்தியா சென்று. தன் படைவலியைக் காட்டி, *றன்.அங்கிலி யையும் (தங்கக் கட்டிகள்), சோழ பாண்டிய குலக் கன்னிகளையும் பரிசாகப் பெற்று மீண்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாண்டிநாடு மீது இவன் மேற்கொண்ட வெற்றிப் பயணத்தின் நினைவாகவே பாண்டி விஜயக்குளம் நிறுவப்பட்டதாகக் கல்மடியான வாவியிலுள்ள பொறிப்புக் கூறுகின்றது. பாண்டிநாட்டு வெற்றியின் பின்னரே, இராமேஸ்வரத்தில் "நிலங்கேஸ்வரம்" என்ற ஒரு தேவாலயத்தைத் திருப்பிக்கட்டி, அங்கு துலாப ராக் கொடைகளையும் வழங்கினன். இராமேஸ்வரத்திலேயே இச் செய்திகளைக் கூறும் இவ னு  ைடய பொறிப்பொன்று காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள பல அரசுக ளுடனும் கர்ணுட, நெல்லூர், கெளட, ஆந்திரா, குஜ1 1ாத் முதலா னவை) அரபு ண, கம்போஜ நாடுகளுடனும் நிஸங்க மல்லன் நட்பு றவுகள் கொண்டிருந்த தாகவும், இவற்றுள் க லிங் கம், வேங்கி, கர்நாட(கi), நெல்லூர், குஜராத் அரசு களு டன் மணவினைத் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் இவனுடைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
நிஸங்க மல்லனது ஆட்சி கண்ணளியுடையதாகவும் குடிகளின் நலனில் பெரும் நாட்டங் கொண்டதாகவும் விளங்கியது. நிருவாகத் தைச் சீர்ப்படுத்தி, அலுவலரிடையே நிலவிய ஊழல்களை யகற்று வதிலும் அவன் அதிக கவனம் செலுத்தினன். கலிங்கராட்சியை நிலைப்படுத்துவதையும், ஈழத் ஈ வர்க்க ஏற்புடைத் தாக்குவதையும் தனது ஆட்சியின் நோக்கமாகக் கொண்டிருந்தான். இந்நோக்கத் தில், தனது காலத்தில் ஒரளவுக்கு வெற்றிபெற்ருனயினும், பின் னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இல் வெற்றிக்கு ஊறு விளைத்தன. ஆனலும் அரசியல் துறையில் அவன் காட்டிய சாதுர்யமும், நிர்வா கத் திறமையை நிலைநாட்டுவதில் அவன் எடுத்த அளவிறந்த அக்க

Page 48
84 பண்டைய ஈழம்
றையும், சமயத்துறையில் அவன் ஆற்றிய பெரும் பணிகளும், அவன் பின்பற்றிய சமயப் பொறையும் அவனது ஏனைய சாதனைகளும் அவ னுக்குப் பெருமை தருவனவாக உள்ளன. குறுகியதோர் ஆட்சிக் காலத்தில் இச்சாதனைகளை நிகழ்த்தியமை அவனுக்கு மேலும் உயர்வை அளிக்கின்றது. -
i நிலங்க மல்லனது பின்னுேர்
நிஸங்க மல்லன் நிறுவியிருந்த உறுதியான ஆட்சியானது, அவ னுடைய மரணத்துடன் மறையலாயிற்று. அதைத் தொடர்ந்து நாட்டின் அரசியலில் குழப்பங்களும் சச்சரவுகளும் மலிந்தன. கலிங் கரது ஆட்சியை இலங்கை மக்கள் வரவேற்குப் படி செய்வதற்கு நிஸங்க மல்லன் எடுத்த முயற்சிகள் யாவும் பயனளிக்காது போயின. குறிப்பாகச் சிங்களத் தளபதிகளும் பிரதானிகளும் கலிங்க ஆட்சி யாளரின் உரிமையை ஏற்க மறுத்துப் புரட்சிகள் செய்தனர். இத னல் கலிங்க ஆதரவாளரும், சிங்கள அல்லது சுதேசக் கட்சியினரும் அணிதிரண்டு ஆட்சியைத் தம் பக்கம் பெறுவதற்குப் போட்டியிட் டனர். இக் கடும் போட்டியினிடையே, பிரதானிகள் அல்லது தள பதிகள் மிகவும் முக்கியம் பெறலாயினர். அவர்கள் அரச நி:ா மகர்கள் (தாம் விரும் பியோரை அரசர்களாக்கவும் நீக்கவும் வலிமை படைத்தவர்கள்) ஆயினர். நிஸங்க மல்லனை யடுத்த சுமார் பதி னெட்டாண்டுகளில் நான்கு அல்லது ஐந்து அரச நியாமகர்கள் வலிமைபெற்று விளங்குவதைக் காணலாம். இந் நிலைமைகள் சோழ, பாண்டியப் படையெடுப்புக்கள் ஏற்படத் தூண்டுதல் அளித்தன. ஈற்றில் கலிங்க மாகனுடைய படையெழுச்சி நடைபெற்று நாடு கண்டிராத பெருங் குழப்ப நிலைக்கு அதையிட்டுச் சென்றது.
நிஸங்க மல்லனுக்குப்பின் ஆட்சியைப்பெற்ற வீரபாகு என்பர்ன், நிஸங்க மல்லனது மகனக விருந்தபோதும், அவனது தாய் குறைந்த குலத்தவளாதலின், அவனுடைய உரிமையை ஏற்காது, ஒரு தளபதி சேனைத் தலைவனன தாவுரு செனவிரதன்) அவன் அரசனன அடுத்த நாளே அவனைக் கொன்றுவிட்டான். 2-ம் விக்கிரமபாகு என்ற பெய ருடன் அரசைப் பெற்ற அடுத்த ஆட்சியாளனும் ஒரு கலிங்க இள வரசனே (நிஸங்க மல்லனது தம்பி) யெனினும், இவனுலும் மூன்று மாதங்களுக்குமேல் அரசை நடத்த இயலவில்லை. சோடகங்க(ன்) என் பான் (நிஸங்க மல்லனது "பாகிநெய்ய" அல்லது மருமகன்) அவளைக் கலைத்து அாசைத் தனதாக்கினன். ஆனல், இப்போது மீண்டும் ஒரு தளபதி (கீர்த்தி), 1-ம் பராக்கிரமபாகுவின் பிரதம இராணி யான லீலாவதி என்பாளை அரசியாக்கினன். பாண்டியத் தொடர்பு டைய ஒருத்தி அரசியானதால், கலிங்கக்குழுவினர் தம்செல்வாக்கைச் சிறிது காலத்துக்கு இழந்தனர். இவள் ஒரு வகையில் வரலாற்று

Y #98యోగశాmoళిrు
89 V YN
ཉི་མ་ཚེ་ལྔ་ཀུ་རྒྱས༡༠
*/ es همان
* (S
(S مهمه N S §éfut குலுரிலன்னறுவை is Trřo ĉ8aerTeuE 6قة لال اليا பூட்டக்களப்பு
[5܀ சிலாபம் இதி &N
தம்பதேனியா
டி சேமகியங்கஜன தி**~ எட்டிகமை _リエイエー “စ္ဆန္တို႕)/ லொதிரிகு s
வத்தா iS 65tg 歌>吸,
eerrez-è *
ரயில ولگا a de 邻 பாணிக்குறை や &
களுத்த శS గోపా
ගg ܧܸ ܧܗ ܡܟ s 'u్ళు i -N.) S. வெந்தோ-இ கோறுதி 2AU Nளுகதிர்காமம்
sh- گ 码底 '്ര് *్య
e Shabrleg لي Päഞ്ഞു
தி * *மகாநாதி
ટ 6ases
தேவீதுவரை
இடைக்கால ஈழம்

Page 49
86 பண்டைய ஈழம்
முக்கியம் பெறுகின்ருள். மும்முறை அரசு கட்டிலேறி ஒரு "சாத னை'யை ஏற்படுத்தினுள் இவளுடைய மூன்றுண்டுக்கால ஆட்சி (முதல் தடவை) யும் அமைதியற்றதாகவே காணப்பட்டது. குறிப் பாக அவளுடைய ஆட்சியுரிமையை ஏற்காத கலிங்கக் குழுவினர், அ வளையு அவளுடைய ஆதரவாளர்களையும் தீவிரமாக எதிர்த்து வந்தனர். கலிங்கத்திலிருந்த சாகஸ் மல்லன (நிஸங்க மல்லனது சகோதரனை) இலங்கையிலுள்ள கலிங்கக் குழுவினர் இங்கு வந்து ஆட்சியை ஏற்குமாறு அழைப்பை விடுத்தனர். கலிங்கத்திலிருந்து புறப்பட்ட சாகஸ் மல்லன் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடை பெறுவதை யறிந்து, அது முடிவுறும் வரை, சோழ நாட்டிலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் தரித்திருந்தான். கலிங்கக் குழுவி னர் வெற்றி யெய்தியபின் சாகஸ மல்லன் இலங்கை வந்து 1200-ம் ஆண்டில் அரசை யேற்முன்.
சாகஸ் மல்லன் ஈராண்டுகளில் அரசை யிழக்கக் காரணமாக விருந் தவன் ஆயஸ்மந்தன் என்ற மற்ருெரு தளபதி யாவான். நிஸங்க மல் லனது இரண்டாவது இராணியான கல்யாணவதி இப்போது அரசியாக் கப்பட்டாள். இவள் ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்த முடிந் தமை குறிப்பிடத் தக்கது. ஆனல், ஆருவது ஆண்டில் அவளை நீக்கிய பின், தர்மாசோகன் என்ற ஒரு குழந்தையைப் பெயரளவில் அரச ணுக வைத்து, தளபதி ஆயஸ் மந்தன் ஆட்சியைத் தன் எண்ணப்படி கவனிக்க முற்பட்டான். கல்யாணவ தீயின் ஆட்சியின்போது நடை பெற்ற ஒரு தமிழ்ப் படையெடுப்பே ஆயஸ் மந்தனுக்குக் கல்யாண வதீயை அகற்ற வாய்ப்பளித்தது. அணிகங்கன் என்பவன் இந்தியா விலிருந்து ஒரு படையைத் தருவித்து, ஆயஸ் மந்தனது பத்தாண்டுக் கால ஆதிக்கத்தை முடிவுக்குக் கொணர்ந்தான். இந்த அணிகங்கன் முன்னர் மஹாதிபாதவாக விளங்கியும் அரசைப் பெருது தடுக்கப் பட்டவன். தனது உரிமையை நிலை நாட்டவே சோழருடைய படை யுதவியைப் பெற்று, தனது பகைவனை ஆயஸ் மந்தனைக் கொன்று, அவனது ஆதிக்கத்தை முடிவுக்குக் கொணர்ந்தான். அணிகங்கனும் நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது, மீண்டும் ஒரு தளபதியால் பதவி நீக்கப்பட்டான். இத்தளபதி (சமூனக்க) லீலாவதீயை இரண் டாந் தடவை அரசியாக்கி வைத்தான். ஆனலும், கலிங்கக் குழுவின ரின் ஆதிக்கம் இன்னும் குன்றிய பாடில்லை லோகேஸ்வரன் என்ற கலிங்கன் ஒரு தமிழ்ப் படையுடன் வந்து, லீலாவதீ ஒராண்டு ஆட்சி செயுமுன் அவளை நீக்கிவிட்டு அரசைக் கைப்பற்றின்ை. பராக்கிரமன் என்ற தளபதியின் உதவியைப் பெற்று லீலாவதீ மூன்ரு ந் தடவை யாக அரசைக் கைப்பற்றினள் , லீலாவதீ சில் திங்கள் ஆளுமுன், ஒரு பாண்டியப் படையெடுப்பு நடைபெற்றது. பராக்கிரம பாண்டி யன் என்பான் இலங்கை வந்து லீலாவதீயை நீக்கிவிட்டு, ஆட்சி யைக் கைப்பற்றினன். இந்தப் பாண்டியன் ஆட்சி செய்தபோதே,

கலிங்கமாக்னது படையெழுச்சி
கலிங்க மாகனது முக்கியம் வாய்ந்த படையெடுப்பு நடைபெற் றது. இவனது படையெடுப்பைப் பற்றிச் சிறிது விரிவாக அடுத்த பகுதியிற் காண்போம்,
கலிங்க ஆட்சியாளருக்கும் இலங்கைப் பிரதானிகளுக்கும் இடையே நடைபெற்ற இப்போட்டியிற் பெரும்பாலும் கலிங்கக் குழுவினரே வெற்றியீட்டியதைக் கண்டோம். ஆனலும், அரசியற் முெல்லைகளும் சூழ்ச்சிகளும் மிகுந்திருந்ததால், எந்த ஒரு மன்ன ருமே நீண்டகாலம் ஆளமுடியவில்லை. ஆட்சியாளர் பெரும்பாலும் வலிமை வாய்ந்த தளபதிகளாலும் பிரதானிகளாலும் இயக்கப்பட்ட பாவைகளாகவே இருந்தனர். இவ்வகையான அரசியல் நிலைமைகள் நிலவியதால், நாட்டின் முன்னேற்றம் இக்காலப் பகுதியில் (11961215) எவ்வளவுக்குத் தடைப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணரலாம். எமது வரலாற்றின் இருண்ட காலப் பகுதிகளில் ஒன் ருக இதைக் கொள்ளலாம்,
iv DIT 36 60T g5) படையெழுச்சியும் பொலன்னறுவையின்
வீழ்ச்சியும்.
பராக்கிரம பாண்டியன் இலங்கைப் பிரதானிகள் சிலரின் உதவி யுடன் சுமார் மூன்றண்டுகள் வரையில் ஆட்சி நடாத்தியபோது, பொலன்னறுவையின் வீழ்ச்சிக்கு அடிகோலிய மிக முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலிங்கத்தைச் சேர்ந்த மாகன் அல்லது காலிங்க விஜயபாகு என்டான் இலங்கை மீது படையெடுத்து வந்தான். 24,000 மலல* வீரரைக் கொண்ட பெரும் படையுடன் அவன் இலங்கை வந்ததாகப் பூஜாவலி யென்ற காலவேடு குறிப்பிட்டுள்ளது. மாகன் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்றையும், அவனுடைய நிருவா கத்தின் தன்மையையும் சூளவம்சம் சித்தரித்து ள முறையை நோக்கும்போது (அத். 80 செய். 54-79). மாகன் ஒரு கொடுங் கோலணுகவே காட்சியளிக்கின்றன். "த வருண மதக்கொள்கையைப் பின்பற்றிய வன்’, ‘முறைகேடான அரசியல் நிருவாகத்தில் திளைப்ப வன்', ‘நன்மை யென்ற காட்டினிடையே அழிவைச்செய்ய எழுந்த
* மலல என்பது மலையாள வீரரையே குறிப்பதாக கொள் வது பொருத்தமாகும். ஆனுல் பரணவிதான மலல என்பதை மலாய்' என நிறுவப் பல சான்றுகளைக் காட்டியுள்ளார். (Ceylon and Malaysia 82 பக். தொடர்) ஆனல், இதே வீரரைக் குறிக்க “கேரள என்பது உபயோகிக்கப்பட்டிருப்பதும், சூளவம்சத்தில் இதே வீரர்க ளைத் தமிழ்ப் போர் வீரர்கள் (அத். 80 செய் 70) எனக் குறித்திருப் பதும் பரணவிதானவின் வாதத்தைப் பலமிழக்க வைக்கின்றன?

Page 50
& ur68lu pub
தீ' , 'உண்ம்ை மதமென்ற அல்லிமலர்களைக் கூம்பன்ங்க்கும் பகல் வன்" , "பகற்போதில் அலரும் தாமரை மலர்களை (அதாவது அமை தியை) வாடவைக்கும் சந்திரன்’ போன்ற வர்ணனைகள் அவனைக் குறிக்கக் கையாளப்பட்டுள்ளன. அவன் நிகழ்த்தியதாகக் கூறப்ப டும் கொடுமைகள், அட்டூழயங்கள், அநீதிகள் யாவும் சூளவம்ச ஆசிரியரின் கண்டனத்தைப் பெற்றுள்ளன. உண்மையில், மாகனது படையெழுச்சிக்கு முன்னரே நடைபெற்ற பல அநீதியான செயல் களும் மாகனது காலத்தில் நடைபெற்றதாகச் சூளவம்ச ஆசிரியர் காட்ட முனைந்திருக்கின் ருர். சூளவம்சம் 2-ம் பாகத்தின் ஆசிரியர் தம் கதாநாயகனுக 2-ம் பராக்கிரமபாகுவைச் சிறப்பிக்க எண்ணி யதால், அவனது பகைவனன மாகனை இகழ்வதில் நிறைவு பெறு கின் ருர், மேலும் சூளவம்சத்தின் 2-ம், 3-ம் பாகங்கள் வரலாற் றுக்கு இன்றியமையாத, நம்பிக்கை வாய்ந்த ஆதாரமாகக் கொள்
ளப்படுவதில்லை. நிகாய-சங்கிரஹ, சத்தர்ம ரத்னகர போன்ற நூல்க
ளில் இவனுடைய வரலாறும் செயல்களும் வேறுவகையாகச் சித்தரிக்
கப்பட்டிருத்தலும் கவனித்தற்குரியது. மாகனது ஆட்சியின்போது நிகழ்ந்தனவாகக் கூறப்படும் அட்டூழியங்கள் அவனது வருகைக்கு முன்பாக நிகழ்ந்தனவாகவே இந்நூல்கள் கூறுகின்றன
பராக்கிரம பாண்டியனைக் கைப்பற்றி அவனைக் குருடாக்கியபின், நாட்டில் தோன்றிய எதிர்ப்பை மாகன் கடுமையாக அடக்கினன். அவனுடைய போர்வீரர்கள் அவனது அனுசரணையுடன் நிகழ்த்திய அட்டகாசங்கள் பற்றிச் சூளவம்சம் பல விபரங்களைக் கூறுகின்றது. மாகன் ஆட்சியைப் பெற்ற பின்னரும் பல அக்கிரமங்களை அவனது போர்வீரர் இழைத்ததாகவும், தனிப்பட்ட பலரின் உடைமைகள் பறிமுதலாக்கப்பட்டதாகவும், பல  ைர ப் பெளத்தத்தினின்றும் மத மாற்ற முயற்சிகள் நடைபெற்றதாகவும், விகாரைகளிலுள்ள திரவியங்கள் முதலானவை அபகரிக்கப்பட்டதாகவும், நூல்களின் ஏட்டுச் சுவடிகள் பாழ்படுத்தப் பட்டதாகவும் விவரிக்கப்பட்டுள் ளன. கடுமையான தண்டனைகள், சித்திரவதைகள் போன்றவற் ருல் குடிகள் வருத்தப் பெற்றனர். ஒரு "பயங்கர ஆட்சி நிலவிய தாகக் கூறத்தக்க வகையில் மாகனது ஆட்சி யமைந்தது. பரண விதானவின் புதிய கொள்கைப்படி, கலிங்கம் என்பது பூரீ விஜய அல் லது மலேஷியாவில் இருப்பதாகக் கருதப்படுவதற்கமைய அவனுடன் இலங்கை வந்த படை வீரரும் மலாய்களே எனக் கொள்கின்றர். ஆயின் அவருடைய வாதம் அத்துணை ந' பகமானதாகவில்லை. சூள வம்சத்தில், 'பொய்யான மத நம்பிக்கை யுடையவர்கள்’ என்பதற்கு கைகர் முதலிய அறிஞர்கள் முன்னர் கொடுத்த விளக்கம் அவர்கள் இந்துக்கள் என்பதே (சூள. மொழிபெயர்ப்பு 11-ம் பாகம் பக். 133 அடிக்குறிப்பு). இதையேற்காத பரணவிதான, மலாயா சுமாத்திரா

Is córka u drar tai o'r ff6M) iš 8 LD diya) ar 8射 ஆகிய நாடுகளில் அந்நேரத்தில் பின்பற்றப்பட்ட பெளத் தம்
தூய்மை கெட்டுப் பலவகை ஊழல்களுடையதாக விருந்தமையினல் அவர்களைப் "போலி மதத்தவர்கள்' எனச் சூளவம்சம் குறிப்பிடுவது Gurr (figs, b at air Sapri (A Concise History of Ceylon, 1961: Lui. 245, Ceylon and Malaysia: Ludii. 91). Gutp60)udurras 67(p5 lul G. வந்த வரலாற்றுப்படியும் கலிங்க ம ர பி ன ர் பெளத்தர்களாகவே (எ-டு நிஸங்கமல்லன்) இருந்து வந்தமையால், மாகன் அதே மரபில் வந்தவனுக இருப்பின் அவனை ஒரு விதிவிலக்காகவே கொள்ளவேண் டும். சமயத் துறையில் அடக்கு முறைகளைக் கையாண்டு, பலவந்த மாக மதமாற்ற முயற்சி நடைபெற்றமைக்கு மாகனது ஆட்சியின் போது நிகழ்ந்த முயற்சிகள் ஆதிகால இலங்கை வரலாற்றில் மிகவும் அருமையாகவே சந்திக்கக்கூடிய எடுத்துக் காட்டாகும்.
மாகன் முதலில் வெற்றியை ஈட்டினன் எனினும், நாடு முழு வதும் அவனுடைய ஆட்சியை ஏற்றதாகத் தெரியவில்லை. உண்மை யில், இலங்கையின் வடபகுதியே (பழைய இராசரட்டை - இப்போது * பிஹிடி" அல்லது பஹட்ட ரட்டை) மாகணது ஆட்சியில் அமர்ந் திருந்தது. இவனது காலத்தில் இலங்கைக்குத் திருகோணமலையில் ஒரு படையுடன் வந்த சோடகங்க தேவன் என்பானும் ஒரு கலிங்க ஞகவே இருந்ததால், மாகனுக்கு உதவி செய்யவே அவன் வந்திருந் தல் கூடும் என்பர். இதனிடையே, சிங்களரின் எதிர்ப்பியக்கம் மிக வும் மெதுவாகவே மலைப்பகுதிகளில் வளர்ச்சி பெற்றுவந்தது. மாகன் இந்த எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக வடபகுதியிலுள்ள புலத்தி நகரம், கொட்டசார, குருந்தி, மகாதீர்த்தம், மன்னர் முத லான பல விடங்களில் அரண்களை நிறுவியிருந்தான். சிங்கள எதிர்ப் பியக்கம் 2-ம் பராக்கிரமபாகுவின் தலைமையில் மாகனது படையைத் தோற்கடித்த வரலாற்றைப் பின்னர் படிப்போம்.
மாகனுடைய ஆட்சி மு டி வுற் ற தும் பொலன்னறுவை தலை நகராகக் கைக்கொள்ளப்படாது கைவிடப்பட்டது. தம்பதெணிய முதலான இடங்கள் இலங்கையின் தலைநகரங்களாகும் பெருமை யைப் பெறலாயின கலிங்கராட்சிக் காலம் சுமார் அரை நூற்ருண் டுக் காலத்தைக் கொண்டது (1187 - 1236). உண்மையில் எந்தக் கலிங்க மன்னனும் இந்த நாட்டு மக்களின் விசுவாசத்தைப் பெற்ற தாகத் தெரியவில்லை. நிஸங்கமல்லனது கொள்கையுமே முழு வெற் றியை அளிக்கவில்லை கலிங்கர்கள் அந்நியர்களாகவே இறுதிவரை யும் கருதப்பட்டதால், சிங்களக் குடிகளின் நம்பிக்கையைப் பெற அவர்கள் தவறிவிட்டனர். இதனற் பெரும்பாலான கலிங்க ஆட்சி யாளர், குறிப்பாக நிஸங்க மல்லனுக்குப்பின், மிகக் குறைந்த ஆட் சிக் காலங்களை யுடையவர்களாகவும், பலவீனர்களாகவும் தம் இலங்கை ஆதரவாளரின் தயவை நம்பியவர்களாகவும் விளங்கினர்.
l2

Page 51
() () jsir 69) li ij s up b
கலிங்க ஆட்சியாளருக்கு எதிராக நடைபெற்ற கடும் போட்டியும் அதன் விளைவாக உண்டான அரசியற் சச்சரவுகளும், அந்நியரின் படையெடுப்புக்களும் நாட்டின் முன்னேற்றத்தை தடைப்படுத்தி வைத்தன. நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை முறையும் சமய ஒழுங்குகளும் பல வழிகளில் பாதிக்கப்பெற்றிருந்தன. இவ் வகையான நிலையில் நாடு இருக்கும்போதே, கலிங்க மாகனது படை யெடுப்பும் நடைபெற்றது. முன்னரே, ஏற்பட்டிருந்த தேய்வையும் வீழ்ச்சியையும், அவனது படையினர் புரிந்த அட்டூழியங்களும், அவ னுடைய பாலனத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் அநீதியான செயல்களும் பொலன்னறுவை அரசின் வீழ்ச்சியைக் கொணர்ந்தன.
பொலன்னறுவையரசின் வீழ்ச்சிக்கு காரணங்கள்: மகா பராக் கிரமபாகுவின் ஆட்சியைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசி யல் விருத்திகளைச் சுருக்கமாகக் கண்ட நாம், இனிப் பொலன்னறுவை யரசின் வீழ்ச்சிக்கு அடிகோலிய காரணிகளைத் தொகுத்துக் கவனிப் போம். பொலன்னறுவை யரசின் பெருமைக்கும் புகழுக்கும் மகா பராக்கிரமபாகு காரணமாக விருந்தது போலவே, அதன் வீழ்ச்சியி லும் அவனுக்குப் பங்கு உண்டு. அவனுடைய அயல்நாட்டுப் போர் கள் நாட்டுக்கு அளித்த நன்மையிலும் தீமையே அதிகமானது. குறிப்பாக, தென்னிந்தியாவில் இவன் மேற்கொண்ட பாண்டி நாட் டுப்போர் பத்தாண்டுகள் வரை நீடித்ததால், இலங்கை எய்திய இழப் புக்களை மதிப்பிட முடியாது. மகா பராக்கிரமபாகுவுக்குப் பின் ஆட்சி செய்த 2-ம் விஜயபாகு, நிஸங்க மல்லன் முதலானேரின் ஆட்சிக்காலப் பொறிப்புக்களால் பராக்கிரமபாகு இப்போர்களை நடத்துவதற்குக் கடுமையான வரிகளை விதித்தும் பிறவழிகளிலும் குடிகளை வருத்தியதை யுணர முடிகின்றது. மகா பராக்கிரமபாகு வின் பின்னேர் குடிகளின வரிப்டளுவை இலகுவாக்க எடுத்த நட் வடிக்கைகளை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பராக்கிரமபாகுவின் காலத்தில் கடுமையான அடக்கு முறைகள் கையாளப்பட்டுப் பலர் சிறைகளினுள் தள்ளப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாயினர், புகழ் வேட்கையால் உந்தப்பெற்று அதைப் பெறுதற்குத் தனது குடிகளை வருக்தினன்; எனவே, பராக்கிரமபாகு கொடுமை நிறைந்தவனுக இல்லாவிடினும், அவன் மிகவும் கடுமையானவனுக இருந்திருக்க வேண்டும் எனக் கைகர் கருதுகின் முர். பராக்கிரமபாகு நாட்டின் விருத்திக்கும் மேன்மைக்கும் உழைத்தான் என்பதற்குத் த  ைட யில்லை; ஆயின், அவன் நடத்திய வெளி நாட்டுப்போர்கள், அந்தச் சு பீட்சத்தைக் காலப்போக்கில் மறைய வைக்குந் தன்மையைப் பெற் றிருந்தன. அவற்றின் தாக்கம் உடனடியாகப் புலப்படாது, பின் 5; நிகழ்ந்த அரசியல் மாறுதல்களால் தெளிவாகப் புலப்படலா
Ogle

கலிங்க மன்னர்கள்; நிஸங்க மல்லன் 9
நிருவாகத் துறையில் 1-ம் பராக்கிரமபாகு புகுத்திய மாறுதல் பற்றி அடுத்த அத்தியயாயத்திற் படிப்போம். உருகுணை முதலான மாகாணங்கள் வகித்துவந்த சுயாதீனத்தை முற்ருக நீக்கி நேரடி யாகத் தனது (அதாவது மத்திய அரசாங்கத்தின்) கட்டுப்பாட்டில் அவற்றை வைத்தான். இம் மாற்றம் பராக்கிரமபாகு போன்ற வலிமை படைத்தவர்கள் மன்னர்களாக விளங்கும்போது வெற்றி மைத் தந்தது. ஆனல், அம் மாற்றம், அவனைத் தொடர்ந்து ஆட்சி யைப் பெற்ற பலவீனர்களின் காலத்தில் நிருவாகச் சீர்கேடுகள் அதிகரிக்கவும், திறமையின்மை வளரவும் ஏதுவாக இருந்தது. பராக்கிரமபாகுவின் காலத்தில் நிறுவப்பெற்ற நீர்ப்பாசனங்களின் தொகையை நோக்கும் போது ஓர் உண்மை புலப்படும்; இத்துணைப் பெருந் தொகையான பாசனத் திட்டங்களை நிறுவவும், பேணவும் மிகவும் திறமையான நிருவாக அமைப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பதே. ஆனல், பராக்கிரமபாகுவின் பின்னேர் காலத்தில் இவ் வமைப்புக் குலைந்து செயலற்றிருந்தது. இதனல், பொருளியல் துறையில் முன்னர் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பதில், தேய்வு நிலையே காணப்பட்டது. மேலும், இம் மன்னர்கள் தமது முடியைப் பாது காப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக விருந்ததால், பாசனங்களைப் பழுது பார்க்கவோ, இதர பொருளியல் முயற்சிகளில் நாட்டங் கொள்ளவோ அவகாசமின்றி அவதிப்பட்டனர். கலிங்கக் குழு வினர்க்கும் சிங்கள (அல்லது பாண்டிய)க் குழுவினர் க்கும் நிலவிய கடுமையான போட்டியும், இதன் விளைவாக உண்டான பூசல்களும் மத்திய அரசின் பலத்தைக் குன்ற வைத்து அதன் பொறுப்பிலுள்ள நிருவாகத்தையும் சீர்குலையச் செய்தன. கலிங்கர்கள் அந்நியர்க ளாகவே இறுதிவரையும் இங்குக் கருதப்பட்டமையும் அவர்களுடைய ஆட்சியில் மக்கள் அமைதிபெறுவதற்குத் தடையாயது. மேலும், படைத் தலைவர்கள் தாமே அரச நியாமகர்களாக இருக்க வெண் ணிக் கருமமாற்றியமையும், அந்நியப்படை வீரரை வருவித்து வந்த மையும் இவற்றின் விளைவாக அந்நியப் படையெடுப்புக்கள் நடை பெற்றமையும் பொலன்னறுவை யரசின் தேய்வுக்கு வழிவகுத்தன. இவ்வகையான அரசியல், நிருவாகக் காரணிகள் மத்திய அரசின் செயல் திறனைப் பாதித்து, பொருளியல் சமூகத் துறைகளில் முன் னேற்றம் ஏற்படுவதையும் தடுத்து வைத்தன. இவை யாவும் பொலன்னறுவையின் வீழ்ச்சிக்கு அடிகோலிய காரணங்கள் என்பதில் ஐயமில்லை.
பொலன்னறுவை யரசின் மறைவை விளக்க முற்பட்ட சில அறி ஞர்கள் வேறும் காரணங்களுக்கு முக்கியமளித்துள்ளனர். மலேரியா நோய் பரவியதன் விளைவாகவே, பொலன்னறுவையை மையமாகக் கொண்ட இராஜரட்டையை மக்கள் விடுத்து வேறு பகுதிகளுக்குச்

Page 52
92 பண்டைய ஈழம்
சென்று வாழ்ந்ததாக அவர்கள் நம்பினர். ஆனல், முன்னர் பல நீர்ப்பாசனங்களைக் கொண்டிருந்த பகுதிகள் குடிசன மின்றிப் புறக் கணிக்கப்பட்ட பின்னரே, அப்பகுதிகளில் மலேரியா பரவியிருத்தல் கூடும் எனக் கருதவேண்டும். 16-ம் நூற்ரு ணடைச் சேர்ந்த பிலான் சியஸ் என்பாருடைய தேசப்படத்தில் பதியப்பட்ட ஒரு குறிப்பைத் துணை கொண்டு கொட்றில்டன் போன்ற அறிஞர்கள் இக்கருத்துக்கு முக்கியமளித்துள்ள போதும், இக்கருத்தை நிறுவப் போதிய சான்று கள் கிடைக்கவில்லை. “ஹத்தவனகல்ல விகாரவங்ஸ்" என்பதிலும் வரும் "ஜரரோ க" என்பது மலேரியாவைக் குறிப்பாகக் கருது வதற்கும் இடமில்லை. ر
மாகன்து படையெழுச்சியும் ஆட்சியும் முன்னரே நாட்டைத் திருந்த தேய்வு நிலையைத் துரிதப்படுத்தி, அழிவை உறுதிப்படுத் தின. உண்மையில் முன்னரே குறிப்பிட்ட பல காரணிகளும், மாக னது படையெடுப்பின் போதும் பின்னரும் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் ஒன்று சேர்ந்தே பொலன்னறுவை யரசின் வீழ்ச்சியை ஏற்படுத்தின. மாகனது பெரும் படையைச் சேர்ந்த கூலிப்படையினர் தம் மனம் போனவாறு பல்வகை அட்டூழியங்களைச் செய்தமையாலும், சமய நிறுவனங்களைப் பாழ்படுத்தியதாலும் பொலன்னறுவை ய ர சு நலிவெய்தலாயிற்று. அது மீட்சியே பெருத வகையில் அழிவுற்ற மைக்கு அவனது "பயங்கர ஆட்சி"யின் போது இடம் பெற்ற ஒரு முக்கிய நடவடிக்கையைக் குறிப்பிடுவர். நிருவாக அமைப்பிலும், பாசன அலுவல்களிலும், சமுதாயத்திலும் முக்கிய பங்குகொண்ட குலீனர் என்ற ஒரு வகுப்பினரையே மாகனது வீரர்கள் கடுமை யாகத் தண்டித்தனர். அக்காலச் சிங்கள சமூகத்தில் செல்வம் படைத்தவர்களாக விளங்கியவர்கள் இவ் வகுப்பின ர (ா த லா ல் இவர்களைத் தண்டிப்பதில் பெரிதும் அக்கறை காட்டப்பட்டது. அவர்களைச் சிறைப்படுத்திச் சித்திரவதை செய்ததுமன்றி, அவர் களுடைய உடைமைகள் பறிமுதலாக்கப்பட்டன. இக் கொடுமை களைத் தாங்காது, நற்பண்புடைய மக்கள் பலர் பல்வேறு மலைப் பகுதிகளில் குடியேறி வாழலாயினர். இவ்வாறு உள்ளூர் நிருவாக, நீர்ப்பாசன அமைப்புக்களின் முதுகெலும்பாக விளங்கிய இவ் வகுப் பினர் (குலீனர்) மாகனது ஆட்சியின்போது கடுமையாகத் தண்டிக் கப்பட்டுத் தம் செல்வாக்கை யிழந்ததால், அவர்களுடைய திறமை யாலும் வழி நடத்தலாலும் முன்னர் நல்ல முறையில் இயங்கிய உள்ளூராட்சியும், நீர்ப்பாசன முறையும், இவர்கள் அகற்றப்பட்ட திலிருந்து செயலிழக்கலாயின. பொலன்னறுவை யரசின் வீழ்ச்சிக் கும், பண்டைச் சிங்களப் பண்பாட்டின் தேய்வுக்கும் வழிகோலிய காரணிகளுள் இதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறக, மகா பராக்கிரமபாகுவின் காலத்தில் மேன்மையும்

கலிங்க மன்னர்கள் ; நிஸங்கமல்லன் 93
பெரும் புகழும் எய்தியிருந்த பொலன்னறுவை யரசு, அம் மாமன் னன் மாண்ட அரை நூற்ருண்டுக் காலத்தில் அழிவுற்று மறைய லாயிற்று. பொலன்னறுவை யரசின் மறைவு சிங்களப் பண்பாட்டின் வரலாற்றில் ஒரு தேக்க நிலையை உருவாக்கியதைப் பின்னர் காண் போம். அதற்கு முன்னர் பொலன்னறுவைக் காலப் பண்பாட்டின் சில முக்கிய தன்மைகளை அடுத்த அத்தியாயத்திற் படிப்போம்.
1. நிஸங்க மல்லனது பொறிப்புக்கள் சிலவற்றைப் பார்வையிட்டு
அவற்றின் தன்மைகளை ஆராய்க.
2. "பொலன்னறுவை யரசின் வீழ்ச்சி கலிங்க மாகனது வருகைக்கு
முன் தொடங்கிவிட்டது'. தெளிவாக்குக.
கால அட்டவணை :
பொலன்னறுவைக்காலம் (1017-1235) முழுவதிலும் உள்ள நிகழ்ச்சி களைக் காட்டும் ஒர் அட்டவணையை, இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளில் இடம் பெற்றதுடன் பொருத்தி ஆக்கலாம்.
தேர்வு விளுக்கள் :
1. நிலங்க மல்லனது அரச வாழ்வைச் சுருக்கமாகக் கூறி அவனு
டைய சாதனைகளை மதிப்பிடு.
2 பொலன்னறுவை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலிய முக்
கிய காரணிகளை ஆராய்க.
3. சிறு குறிப்புக்கள் எழுதுக: காலிங்க; கல்பொத்த (கல்வெட்டு); கலிங்க மாகன்; பாண்டி விஜயக் குளம்; கலிங்க-இலங்கைத் தொடர்புகள்.

Page 53
அத்தியாயம் ஆறு பொலன்னறுவைக்காலப் பண்பாடு
i
அரசியல் முறை i. பொருளியல், சமூக நிலைமைகள் i. சமய விருத்திகள் iv. இலக்கிய வளர்ச்சி
W. கட்டிடக் கலை முதலியன.
பொலன்னறுவை சோழரால் த?ல நகராக்கப்பட்ட திலிருந்து மாகனது ஆட்சியில் அமர்ந்தது வரையுள்ள சுமார் இரண்டேகால் நூற்ருண்டுக் காலத்தையே (1017-1235), "பொலன்னறுவைக் காலம்" என்ற பெயரால் நாம் குறிக்கின் ருேம். இக்காலப்பகுதியின் அரசியல் வரலாற்றை இதுவரை கூறிவந்தோம். சோழராட்சியி லிருந்து இலங்கை விடுதலை பெற்றபின், விஜயபாகு, மகாபராக்கிரம பாகு, நிஸங்க மல்லன் முதலானேரின் ஆட்சிக் காலங்களில் நாடு அரசியற் சிறப்பையும், பொருளியல், சமயம், கட்டிடம் முதலான துறைகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை யீட்டியதால், அதற்கு மகத்தான புகழ் கிட்டியது. ஆனல், பொலன்னறுவைக் கால அர சியற் போக்கின் ஒரு தன்மை இவ்வெற்றிகளை நிலைக்கா வண்ணஞ் செய்தது. ஒவ்வொரு முக்கிய அரசனும் நீண்டகால உள் நாட்டுப் போருக்கு அல்லது விடுதலைப் போருக்குப் பின்னரே அரசைப்பெற்று. புனருத்தாரண வேலைகளிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபடலான ன் ஆனல், அம் மன்னன் மறைந்ததும், அவனுடைய சாதனைகளை வீண டிக்கும் வகையில் உடனே அரசியற் சச்சரவுகளும், போட்டிகளும், உள்நாட்டுப் போர்களும் தொடரும். இதனுல் மீண்டும் அரசைப் பெறுகின்ற முக்கிய மன்னன், எவ்வளவோ புனருத்தாரண வேலைக ளேச் செய்யவேண்டி யிருக்கும். அரசியலில் இவ்வாறு உறுதியின்மை யும், குழப்பங்களும், உள்நாட்டுப் போர்களும் அடிக்கடி இடம் பெற்ற தால், பொருளியல், சமயம் முதலான துறைகள் பெரிதும் பாதிக்கப் பட்டதைக் காணலாம். இருப்பினும், இவ் வகையான சூழ்நிலை யில் பொலன்னறுவைக்கால மன்னர்கள் ஈட்டிய பல்துறை வெற்றி கள் உண்மையிலேயே பெருஞ் சாதனைகளாக மதிக்கத்தக்கவை யாகும். பொலன்னறுவைக் காலத்தில் சிங்களப் பண்பாடு பல வழிகளிலும் ஏற்றம் பெற்றிருந்தமை இந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது எளிதிற் புலனுகும்.
i. அரசியல் முறையில் மாறுதல்கள் :
பொலன்னறுவைக் கால அரசியல்முறை, அனுராதபுர காலத்தி னுடையதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட ஒன்முக இருந்ததாக நாம் எண்ணக் கூடாது. உண்மையில், அனுராதபுரகால முறையின்

முக்கிய அம்சங்களையே சோழரை வெளியேற்றியபின், விஜயபாகு மீண்டும் ஏற்படுத்தினன். ஆனலும், எந்த ஒரு முறையும் எக்கால மும் ஒரே தன் மையதாக விருக்குமெனவும் நாம் எதிர்பார்க்க முடி t1յո՝ 35l. எனவே, பொலன்னறுவைக் கால அரசியல் முறையானது, அனுராதபுரகால ஆட்சிமுறை யம் சங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததாயினும், பிந்திய காலப்பகுதியில் அது சில மாறுதல் களைப் பெற்றிருந்தது. இங்கு நாம் பொலன்னறுவைக் காலத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாறுதல்களையே கவனிப்போம்.
மன்னனும் அரசுரிமையும்: பொல்லனறுவைக் காலத்தில் மன் னர்கள் "சக்கரவர்த்தி' என்ற பட்டத்தைச் சூடியுள்ளமை குறிப் பிடத்தக்கது. சூளவம்சத்தில் மகாபராக்கிரமபாகு, கல்வெட்டுக் களில் நிஸங்க மல்லனும் அலனது பின் னே ரு ம் இப்பட்டத்தால் அழைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். அரசுரிமை பழைய முறைப் படியே விஜயபாகு போன்ற மன்னர்களின் காலத்தில் சென்ற தெனினும் கலிங்க மன்னர்கள் அதைப் பின் பற்றியதாகத் தெரிய வில்லை. “பாகிநெய்ய' எனப்பட்ட மருமகனும் உரிமை பெறுவதற் குச் சில வேளைகளில் தகுதி பெற்றுள்ளான். அரசனுக விருப்பவன் தனக்குப்பின் உரிமை பெற வேண்டியவனே ‘உபராஜாவாக நிய மிக்கும் வலுவுடை யவனக இருந்தான். அரசனுடைய முடிவை அரசவை உறுப்பினர்கள் ஏற்காவிடின், அவன் அரசைப் பெறுதல் கடினமாக விருந்தது. கூடித்திரிய குலத்தவனுகவும், பெளத்த மதத் தவனுகவும், இரு வழியாலும் (தந்தை, தாய்) ஒத்த மரபைச் சேர்ந் தவனகவும் இருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. ‘கொவி குலத்த வர்கள் அரசைப் பெற எண்ணியதை நிஸங்கமல்லன் ஏளனஞ் செய் ததை முன்னர் கண்டோம். அரச குலத்து உரிமையாளன் அரசைப் பெறுதற்கு இல்லாத விடத்து, அரச குலப் பெண்களும் உரிமையைப் பெறலாம் என்ற கருத்தை நிலங்க மல்லன் ஒரு கல்வெட்டில் வலி யுறுத்தியுள்ளான். முடிசூட்டு வைபவத்தை நடத்துவதன் மூ ல ம் சில தெய்வீக வலுக்களை மன்னர்கள் பெறுவதாக நம்பப்பட்டது. மன்னர்களுக்குத் தெய்வ வழியுரிமை யிருப்பதாக அவர் களின் பொறிப்புக்களும் அக்காலத் தெழுந்த நூல்களும் வலியுறுத்தியுள் ளன. மன்னர்கள் உருவிற் காட்சியளிப்பினும் அவர்கள் உண்மையில் தெய்வங்களே; எனவே அவர்களைத் தெய்வங்களாகவே மதிக்கவேண் டும். இவ்வாறு நிஸங்க மல்லனது கல்பொத்த பொறிப்புக் கூறி யுள்ளமை நினைவு கூரத்தக்கது.
அரசர்களின் கடமைகள் முதலியன: குடிகளின் நலனைப் பேணல் என்பதையே தமது முக்கிய இலக்காகக் கொண்டு, பொலன்னறுவைக் கால மன்னர்களும் ஆட்சி நடத்தினர். பராக்கிரமபாகுவின் கூற் ருகச் சூளவம்சத்தில் உள்ள ஒரு வாக்கியம் இது: "என்போன்ற

Page 54
is is Luser SM - Lu Ft Ah ஒருவனுக்கு, மக்கள் நலனைப் பேணுது எனது உடைமைகக்ளத் துய்த்
துக் காலத்தைக் கழிப்பது எவ்வகையிலும் ஒவ்வாது.' அரசர்கள் நன்னெறியிற் செ லும்போது, நாடும் முன்னேற்றத்தை யடையும். அரசர்கள் நெறித வருது நடப்பின், கோளங்சளும் தம் வழியே தவ ருமற் செல்லும். மன்னுயிரெல்லாவற்றையும் பரமாத்மா காப்பது பே, ல, அரசர்களே எல்லா மனிதர்களினதும் காவலர்கள். தாராண்மை, வாய்மை, வீரம் என்ற பண்புகளுக்கே, தமது உயிரி லும் மேலான இடத்தை மன்னர்கள் அளிப்பர். நல்லாரைப் பாது காக்கத் தீயோரை அவர்கள் ஒறுக்கின்றனர். இத்தகைய கருத்துக் கள் 12-ம் நூற்ருண்டைச் சேர்ந்த புத்சரண என்ற நூலில் குறிப் பிடப் பெற்றுள்ளன. நற்பண்புகளைச் சிதைக்காது அரசர்கள் பொருள் விருத்தியை ஏற்படுத்தினர்கள் என்பது அவர்களுடைய கல்வெட்டுக்களில் அடிக்கடி வலியுறுத்தப் பெற்றுள்ளது. "அர்த்தத் திற்கும் (பொருள் விருத்திக்கும்) "தர்மத்திற்கும் (நற்பண்புகள்) இடையே அவர்கள் சமநிலையைக் கண்டதாகக் கூறலாம் எனப் பரணவிதான தெரிவிக்கின்ருர். இவ்வித ஒரு மன்னனையே பொத்கல் விகாரைக்கு முன்னுள்ள சிலே சித்தரிப்பதாக அவர் மேலும் கருது கின்ருர், இளவரசர்களுக்குப் பல வித்தைகளிலும் பயிற்சி யளிக்கப் பட்டது. குறிப்பாக, போர்ப் பயிற்சி, சமயம், கலைகள், சாத்திரங் கள் என்பவற்றில் அவர்கள் தேர்ச்சி பெற்றனர். விஜயபாகு சமஸ் கிருத, பாலி இலக்கியங்களைப் பயின்று, புலமை பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. மகா பராக்கிரமபாகு வடமொழியிலுள்ள 'அர்த்த சாஸ்திரம்" போன்ற நூல்களைப் பயின்றிருந்ததாகச் சூளவம்சம் கூறியுள்ளது. இந்தியாவில் பின் பற்றப்பட்டதைப் போலவே, இலங்கை மன்னர்களும் ஜாதகர் ம, நாமகர்ண, உபநயன முதலான கருமங்களை அல்லது கிரியைகளைப் பிராமணர் களைக்கொண்டு ஒழுங் காக நடத்தி வந்துள்ளனர். பரித்த (பிரித் ஒதுதல் போ ன் ற பெளத்தக் கிரியைகளும் இடம் பெற்றன. மனுதர்ம சாஸ்திரம் முதலான வடமொழி நூல்களின் செல்வா க்கு ஆட்சி முறையில் காணப்பட்டது. பொதுவாக நோக்குமிடத்து, பொலன்னறுவைக் காலத்தில் மன்னன் தெய்வீகத் தன்மை வாய்ந்தவனுகவும், மிகவும் உயர்ந்த நிலையிலுமே மதிக்கப் பெற்றிருந்தான் எனலாம்.
மாகாண நிருவாகம் ஒரு முகமாக்கப்பட்டமை : அனுராதபுர காலத் தில் அரசன் தலைநகரிலிருந்து இரசரட்டையை நிருவகிக்க, தக்கிண தேசம், உருகுணை ஆகிய மாகாணங்களின் நிருவாகப் பொறுப்பு இளவரசர்களிடம் விடப்பட்டிருந்தது. இதனல் மாகாணங்கள் பெரு மளவு சுயாதீனத்தைப் பெற்றிருந்தன. இடையிடையே மாகாண ஆட்சியாளர்கள் கலகஞ் செய்யவும் முற்பட்டனர். பொலன்னறு
வைக் காலத்தில் இந்த ஒழுங்கில் ஒரு முக்கிய மாறுதல் ஏற்பட்டது.

Gôumrav sirasfaoy 67) QI di a8mr68) lʼi lu sabr7 Lum (6); Jy uríf) Lu ói) 9 Y
மத்திய அரசுக்குப் பொறுப்பான மன்னனே, மாகாணங்களின் நிரு வாகத்தையும் தனது நேரடியான கண்காணிப்பிற் கவனித்து வர லானன். மாகாண சுயாதீன்த்தை அறவே நீக்கி, "பொலன்னறுவை அரசின் வலுவை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்ாக இருந்திருக்க வேண்டும். பொலன்னறுவை தலைநகராகத் தெரிவு செய்யப்பட் டமை இந்த நோக்கத்தை நிறைவேற்ற மிகவும் ஏற்றதாக விருந்தது. மகா பராக்கிரமபாகுவே இம் மாற்றத்தை முதலிற் கொண்டுவரக் காரணமாக விருந்தவன் எனலாம், (பராக்கிரமபாகு தொடக்கி வைத்த இம்மாற்றத்தின் சில விளைவுகளை முந்திய அத்தியாய்த்திற் கவனித்தோம்.) பராக்கிரமபாகுவின் நிர்வாக ஒழுங்குகளும், அர்த்த சாஸ்திரத்தின் செல்வாக்கைப் புலப்படுத்துவதாகக் கைகர் முதலான அறிஞர்கள் கொள்வர். அந்நூலைப் பின்பற்றியே பராக் கிரமபாகு தக்கிணதேச ஆட்சியாளனுக விருந்தபோது, அந்தரங்க துர என்ற ஒரு தனிப்பகுதியை நிறுவி, கடற்கரைப் பிரதேசம், இரத் தினங்கள் தரும் மாவட்டங்கள், மலை நாட்டுப் பகுதிகள் முதலிய வற்றிலிருந்து பெறப்படும் வருவாயைப் பெறுதற்குப் பொறுப்பாக அதை விட்டான். சுரங்கங்களுக்கு மட்டுமன்றி, யானைகள், முத்துக் கள் என்பவற்றையும் கவனிக்கும் ஒரு வணிகப் பகுதியாக இது விளங்கியது.
அரசர்களின் மெய்க்காப்புப் படையினர் : விஜயபாகு, பராக்கிரம பாகு போன்ற பொலன்னறுவை மன்னர்கள் உயர்குடியிற் பிறந்த் பல இளைஞர்களைத் தெரிவு செய்து, அரண்மனையின் அலுவலராக அவர்களை நியமித்திருந்தனர். இவ்வாறு நிறுவப்பட்ட "சந்திகாவசரா" என்பது சோழருடைய உடன் கூட்டத்தைப் போன்றிருப்பதால், இது சோழரின் செல்வாக்கால் ஏற்பட்டதாக விருக்கலாம். சோழ முன் மாதிரியைப் பின்பற்றி ஏற்படுத்தப்பட்ட வேளைக்காரப் படைப்பிரிவு பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். இது அரசனது மெய்க் காப்புக்கெனவே நிறுவப்பட்டதாக விருப்பினும், தந்ததா துவைப் பாதுகாக்கும் பொறுப்பு இதனிடமே விடப்பட்டிருந்ததையும் கவ னித்தோம். ஒரு நூற்ருண்டுக்குமேல் இந்தப் படையின் சேவை யைப் பொலன்னறுவைக் கால மன்னர்கள் பயன்படுத்தியமை குறிப் பிடத்தக்கது.
வேத்தவையும், உயர் அரச அலுவலரும் : அரசன் முக்கிய தீர்மா னங்களைச் செய்யும்போது, தனது சபை (வேத்தவை அல்லது அரச சபை)யைக் கலந்து ஆலோசித்தான் என நம்ப ஆதாரமுண்டு. இச் சபை "ரஜ-கணு", " அமத்தி-களு", அமாத்திய மண்டல எனப் பொறிப் புக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த அவையில், அரசனது கட்டளை பிறப்பிக்கப்படுமு ன் அவ்விடயத்தை இரு முக்கிய உறுப்பினர் எடுத் தாளுவதே மரபு. அதன் பின் கட்டளை நிறைவேற்றப்படும். அரசன்
l3

Page 55
8 Jay és - a felb
தன் கட்டளையைக் கூறும்போது, அரச சின்னமொன்றை (ய ஹள் என்பதை)க் கையில் ஏந்திய வண்ணமிருப்பான். நிஸங்க மல்லன் தொரடியாவ சன்னஸவில் வரும் கட்டளையைத் தனது அபிஷேக மண்டபத்திலிருந்தவாறு, அமாத்திய மண்டலத்தில் (சபையில்) நிறை வேற்றினன். நிஸங்கமல்லனது சபை மண்டபத்தில் காணப்படும் கற்றுரண்களில் உள்ள பொறிப்புக்களைக்கொண்டு அவனது காலத்தில் வேத்தவை யுறுப்பினராகப் பணி புரிந்தவர்களை அறிய முடிகின்றது. யுவராஜாவும் ஏனைய இளவரசர்சளும், சேனுபதி, பிரதானிகள், காயஸ் தர்கள் (பதிவாளர், எழுத்தாளர்கள்), பொதவருன் (கணக்காளர் கள்), அகம்படிக்குப் பொறுப்பான மண்டலிகர்கள் (இராணுவக் கட மைகளைக் கொண்ட மாவட்ட அதிகாரிகள்) செளராஸி-வருன் எனப் பட்ட வேறும் பிரதேச அல்லது பெரும் பிரிவு அதிகாரிகள், கட கோஷ்டியே - அட்டவுன் எனப்பட்ட வணிகக் குழுவினர் ஆகியோரும் நிஸங்க மல்லனது சபையில் உறுப்பினராக விருந்தனர். நிஸங்கமல் லனது இராணிகள் இருவர் இச்சபையிலிருந்தமை பற்றி தொரடி யாவ சன்னஸ் என்ற பொறிப்புக் கூறுகின்றது. பிரதானிகள் என் பதில் தலைமை நீதி அலுவலர் (சபாபதி-நாயக) உட்பட்ட முக்கிய அதிகாரிகள் அடங்குவர். "நிகாய-சங்கிரஹ'வில் மகாபராக்கிரம பாகுவின் காலத்தில் இருந்த முக்கிய அரசாங்கப் பதவிகளின் பெயர் கள் தரப்பட்டுள்ளன. அதிகார (முதல் அமைச்சர்), செனவிரத் (சேனுபதி), அனுதா (உதவிப் படைத் தளபதி), ஆபா, மாபா, மஹலேணு (பிரதம செயலாளர்), மஹறட்டி-நா (பிரதான மாநில அதி காரி), சபாபதி-நா (பிரதான நீதியலுவலர்), சிட்டு-நா (வணிகக்குழுத் தலைவர்), சிரித்-லே-நா (சட்டத்துறைத் தலைவர்), து-லே-நா (அயல் நாட்டலுவலர்), வியத்-நா (கல்வியலுவலர்), மஹவெத-நா (பிரதான வைத்தியர்), மஹநாதி-நா (பிரதான வானவியலாளர்), தஹம்பசக்-நா (தருமகர்த்தா) முதலான பதவிகள் அந்நூலிற் குறிக்கப் பெற்றுள்ளன. இவை தவிர, திறைசேரிக்குப் பொறுப்பாக விருந்த "பண்டாரப் பொத்தகின்", போக்கு வரத்து அதிகாரியான "வாஹனதாயக ஆகிய பதவிகளும் இருந்தன. சமய நிறுவனங்களின் பராமரிப் பாளராக, சிறப்பாகப் போ திமரக் காவலராக இருந்த அதிகாரி "அரக் மேநா" எனப்பட்டார். லெய்-தரு எனப்பட்ட எழுத்தாளர் பலர் கடமை யாற்றினர்.
இராணுவ அமைப்பு : பொலன்னறுவைக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் சிலர், பெரும் போர்ப்புகழ் படைத்தவர்களாத வின், திறமை படைத்த படைகளை அம்மன்னர்கள் வைத்திருந்தனர். சூளவம்சம், நிகாய சங்கிரஹ போன்ற இலக்கிய ஆதாரங்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டே படையமைப்புப்பற்றிய சில விடயங்களைக் கூறலாம். மன்னர்களிடம் வழமையான நாற்படை

பொலன்னறுவைக் காலப் பண்பாடு: பொருளியல் 99
களும் இருந்ததாகவே கூறப்படினும், காலாட்படையே மிக முக்கிய படைப் பிரிவாக இருந்தது. ஒருவேளை குதிரைப் படையும் இருந் திருத்தல் கூடும். யானைகளும் ஓரளவுக்கு பயன்படுத்தப் பட்டிருக்க முடியும் பராக்கிரமபாகு மட்டுமன்றி, விஜயபாகுவும், நிஸங்க மல்லனும் கடற்படைகளை வைத்திருந்திருப்பர் எனக் கருதப்படு கின்றது. இலங்கையின் கரையோரங்களைப் பாதுகாப்பதிலும் கடற் படை ஈடுபட்டிருந்தது. படை வீரர்களை முதலில் ‘குலீனர்" வகுப்பிலிருந்தே தெரிவு செய்தனர். ஆயின், பராக்கிரமபாகு போன்ற மன்னர்களுக்குப் பெருந் தொகையான படை வீரர்கள் தேவைப்பட்டதால், வேறு (குறைந்த) வகுப்புக்களிலிருந்தும் வீரர் கள் சேர்க்கப்பட்டனர். நாட்டின் வெவ்வேறு பிரிவுகளும் குறிப் பிடப்பட்ட ஒரு தொகைப் படை வீரர்களை மன்னனது சேவைக்கு அனுப்பவேண்டியதாக இருந்திருக்க வேண்டும். அட்ட சகச (எண் ஞயிரர்), துவாதசகஸ (பன்னீராயிரம்) போன்ற உருகுணப் பிரிவு கள் இவ்வாறே ஏற்பட்டிருக்கலாம் என்பர். போர்வீரர்கள் பலவித போர் முறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தனர். படைக்கலங்களும், போருச்கு வேண்டிய ஏனைய கருவிகளும் விசேட தொழிலாளரால் ஆச்கப்பட்டன. அம்பு, வில், வாள், ஈட்டிகள் என்பன முக்கிய போர்க்கருவிகளாக விளங்கின. பாலங்களை அமைத்தற்குத் தெரிந்த பொறியியலாளரும் படைகளுடன் இந்தியா சென்று, அங்கு பராக் கிரமபாகு மேற்கொண்ட பாண்டி நாட்டுப் படையெடுப்பின் போது, நதிகளுக்குமேல் பாலங்களை யமைத்தனர். ப ராக் கி ர ம பாகுவிடம் இருந்த படைகளின் திறமையும் பலமுமே அவனை அயல் நாட்டுப் போர்களை மேற்கொள்ளுவதற்குத் தூண்டின. உதவிப் படைகளைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அனுப்பிப் பத்தாண்டுகள் வரை போ  ைர அங்கு ந டத் தி ய தி லி ரு ந் து அவனுடைய படைப் பலத்தை யுணரலாம். இராணுவத்தினர் உ ஸ் நா ட் டி ல் நிகழ்ந்த உரிமைப்போட்டிகளிலும் தலையிடலாயினர்.
i. பொருளியல், சமூக நிலைமைகள் :
அ. பயிர்ச்செய்கையும் பாசனமும்
அனுராதபுர காலத்தில் இருந்தது போலவே, பொலன்னறுவைக் காலப் பகுதியிலும் பயிர்ச் செய்கையே மக்களின் முக்கிய தொழிலாக இருந்தது. வயல்களுக்குப் பசளையிடப்பட்ட தொன்றைவிட, வேறு விதமான புதிய முறைகள் எதுவும் புகுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை. அரசாங்கத்துக்குக் கிடைத்த அரசிறைகளிலும் நிலவரியே இக்காலப் பகுதியிலும் முக்கியமானதாக இருந்தது. எனவே, அர சாங்கமும் பயிர்ச் செய்கையை ஊக்குவித்து, நில வருவாயை அதிகரிக்கச் செய்வதில் அக்கறை காட்டியது. "கமநாயகர்கள்

Page 56
00 , பண்டைய ஈழம்
என்ற கிராம அதிகாரிகள் மூலமே (இவர்கள் "குலீனர்களாயிருந் தமை குறிப்பிடத்தக்கது) மத்திய அரசு பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைக் கவனிக்கச் செய்தது பயிர்ச் செய்கையைப் பொறுத்த வரையில், மத்திய அரசின் தலையீடு அதிக மின்றி, கிராம மக்கள் அதைக் கவனித்து வரலாயினர். பெரும் நீர்ப்பாசனங்களை யமைப்பது, காடுகளை யழித்துக் களனிகளாக்கு வது, சகதிகளை நீர் வற்ற வைத்து பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாக் குவது போன்ற பணிகளையே மத்திய அரசு கவனித்தது. நீர்ப்பா சனங்களை நன்னிலையில் வைத்திருத்தல், நீர் விநியோகஞ் செய்தல் கால்வாய்களைத் திருத்துதல் போன்ற கருமங்களை உள்ளூராட்சிக் குழுக்கள் (கன்சபாக்கள்) கவனித்து வரலாயின.
பொலன்னறுவைக் காலத்தில், நீர்ப்பாசனத்துறையில் பெரும் பணிகளை ஆற்றிய மன்னர்கள் மிகக்குறைவு. விஜயபாகு, மகா பராக்கிரமபாகு ஆகியோருடன் நிஸங்கமல்லனையும் சேர்த்துக் கொள் ளலாம். மகாபராக்கிரமபாகுவினுடைய பாசனப் பணிகளே இங்கு சிறப்பான இடத்தைப் பெறும். மகாபராக்கிரமபாகுவிற்கு முன், 1-ம் விஜயபாகு (1070-1110) இத்துறையில் குறிப்பிடத்தக்க பணி களை யாற்றியுள்ளான். சோழராட்சியை முடிவுக்குக் கொணர்ந்து இலங்கை முழுவதற்கும் விஜயபாகு அரசஞ்றனபோது, பாசனங்கள் பலவும் பாழெய்திப் பழுதுற்றிருந்தன எனப்படுகின்றது. சோழராட்சி யேற்படுவதற்கு முன்னரிருந்த அரசியற் பிணக்குகளும் மன்னர் களின் நிருவாகச் சீர்கேடுகளும், சோழராட்சியை எதிர்த்து நடை பெற்ற போர்களின் போது உண்டான அழிவுகளும் நீர்ப்பாசனங்கள் இவ்வாறு பாழடைந்தமைக்குக் காரணங்களாக இருந்தன. விஜய பாகு அரசைப் பெற்றபோது, இராஜரட்டையில் முன்னர் (அனு ராதபுர காலத்தில்) நிறுவப்பட்டிருந்த பெரும் பாசனங்கள் பலவும் அழிவுற்றிருந்தன. எனவே, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உழைத்த விஜயபாகு, பழைய நீர்ப்பாசனங்களை நன்னி லைக்குக் கொணர்ந்து பயிர்ச் செய்கையை விருத்தி செய்யப் பாடு பட்டான். எனவே இவனுடைய பாசனப்பணிகள் பெரும்பாலும் புனரமைப்பு, திருத்த வேலைகளாகவே யிருந்ததில் வியப்பில்லை. இவன் பழைய நன்னிலைக்குக் கொணர்ந்த குளங்கள், கால்லாய்கள் பலவற்றின் பெயர்களைச் சூளவம்சம் குறிப்பிட்டுள்ளது. ஆளிசா ரக் கால்வாயைத் திருத்தி, அதனல் நீரைப்பெற்று இயங்கிய மின் னேரி-கவுடுலு-கந்த ளாய்க் குளங்களை மீண்டும் செயற்படுத்தினன். இதைத் தவிர, அனுராதபுரத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நாச்சதுரவ. மகாகணதராவ, மகா கல் கடவளை போன்ற குளங்களையும் திருத்தி யமைத்து, அவற்றை மீண்டும் இயங்க வைத்தான். இவன் புதி தாக நிறுவிய குளங்கள் குறைவாக விருந்தபோதும், விஜயபாகு வின் பாசனப் பணிகளை நாம் மதிப்பிட முடியாது.

பொலன்னறுவைக் காலப் பண்பாடு: பொருளியல் 101
விஜயபாகுவின் ஆட்சியின் முடிவில் நாட்டில் உண்டான அரசி யற் குழப்பங்களும், உள்நாட்டுப் போர்களும் பொருளியல் முன் னேற்றத்தைத் தடைப் படுத்தி வைத்தன. இப்போாகளின் போது நீர்ப்பாசனங்கள் பல மீண்டும் சிதைவெய்தி, பாழடைந்தன. வேண்டு மென்றே சில குளங்களின் கட்டுக்கள் சிதைக்கப் பெற்றிருத்தலும் கூடும். இப்போர்களின் பின், மகா பராக்கிரமபாகு ஆட்சியைப் பெற்ற போதே, நாடு மீண்டும் பொருளியற் சுபீட்சத்தைப் பெற முடிந்தது. எவற்றையும் பெரிதாகத் திட்டமிட்டு, நிறைவேற்றும் இ ய ல் பு படைத்தவன் பராக்கிரமபாகு, அவனது மற்றைய பணிகளுக்கும் இக்கூற்றுப் பொருந்துமாயினும், அவனது பாசனப் பணி களை விவரிக்க இது மிகவும் ஏற்றது. 1140 அளவில் தக்கிணதேச ஆட்சி யாளனன பராக்கிரமபாகு அப்பிரதேசத்தின் பொருளியல் வளங்களை விருத்தி செய்வதன் தேவையை உணர்ந்து பல திட்டங்களே நிறை வேற்றி வைத்தான். தக்கிணதேச நிலவியல்புகளை அறிந்து அதன் தேவைகளைக் கவனித்து அவற்றுக்கு ஏற்புடைய திட்டங்களை வகுத் தான். தக்கிணதேச ஆட்சியாளனுகப் பராக்கிரமபாகு விளங்கிய காலத்து (1140-1153) அவன் நிறுவிய பாசனங்கள் பற்றி முதலில் குறிப்பிடுவோம். முதலில், தெதுறு ஓயாவை (ஜஜ்ஜர நதி) ஆதார மாகக்கொண்டு அவன் நிறுவிய மூன்று திட்டங்கள் குறிப்பிடத் தக்கவை. இவற்றுள் ஒன்று கொட்டபத்த அணைக்கட்டையும் கால் வாயையும் கொண்டு அமைக்கப்பெற்றது. செங்கல்ஒயா என ப் படுவதே இக்கால்வாயாக இருக்கலாம் என்பர். இப்போ  ைத ய எபவலப்பிட்டியிலுள்ள அணைக் கட்டிலிருந்து றிடி-பண்டி-அள என்ற கால்வாய் மூலம் மாகல்லவாவி என்பதற்கு நீரைக்கொடுக்க அமைக்கப் பட்டது இரண்டாவது திட்டமாகும். மூன்ரு வது திட்டத்துக்கு என அமைக்கப்பட்டது தெமோதரவிலுள்ள அனேக் கட்டு ஆகும் • இவ்வணைக் கட்டிலிருந்து சென்ற கால்வாய் தலகல்லவாவி என்ற குளத்துக்கே நீரைக் கொடுத்தது. இத் திட்டங்கள் நிறைவேறியபின் பராக்கிரமபுர மென்ற தக்கிணதேச இராசதானியில் உள்ள பண்ட வாவி என்ற பழைய குளத்தை ஆயிரம் ஏக்கருக்கு ம தி க ம |ா ன பரப்பை உடையதாக விசாலித்து, பராக்கிரம சமுத்திரம் என்ற பெயரைச் சூட்டினன். இதுவே பிற்காலத்தில் "பாண சமுத்திர' மென வழங்கலாயிற்று. இவற்றைத் தவிர மேலும் 57 குளங்களை அவன் புதுப்பித்ததாகச் சூளவம்சம் கூறுகின்றது. இவற்றில் ஒரு சிலவற்றை ஆராய்ச்சியாளர் இனங் கண்டுள்ளனர். இறுதியாக, மனித சஞ்சாரத்துக்கும், பயிர்ச் செய்கைக்கும் உதவாதபடி சகதி களையும், சதுப்பு நிலங்களையும் கொண்டிருந்த பஸ்துன் கோறளையை நீர் வற்றும்படி செய்து பயிர்ச் செய்கைக்கு அப்பிரதேசத்தை உகந்ததாக்கினன். இதனல் தக்கிண தேசத்தில் பயிர்ச் செய்கையில் இருந்த பிரதேசங்கள் அதிகமாயின.

Page 57
102. பண்டைய ஈழம்
1153-ல் இலங்கை முழுவதற்கும் அரசனுன பராக்கிரமபாகு, தனது நீண்டகால ஆட்சியின்போது, ஏராளமான பாசனங்களை நிறுவுவதில் ஈடுபட்டான் சூளவம்சத்தில் தரப்பட்டுள்ள இவனது பாசன வேலைகளின் நிரல், மிக நீளமானதும், எமது வியப்பைத் தூ ன் டு வது மா கும். 1 6 3 பெருங் குளங்களும், 2,376 சிறு குளங்களும் இவனல் புதிதாகக் கட்டப்பெற்றன அல்லது திருத்தப் பெற்றன எனச் சூளவம்சம் கூறியுள்ளது. 'காரகங்கையைக் குன்று களினிடையே ஒரு பெரிய அணையால் மறித்துக்கட்டி, ஆகாச கங்கை யென்ற பிரம்மாண்டமான கால்வாய் மூலம் பெரு வெள்ள ம கப் பாயும் அதன் நீரைக் கொண்டு, தொடர்ச்சியாக நீர் நிறைக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரம் எனப் பெயர் கொண்ட பொய்கைகளின் வேந்தை அட்சியாளன் நிறுவினன்' (சூள. அத் 79 செய் 24-26). முன்னரே நிறுவப்பட்டிருந்த தோப வா வி. தம்புத்துலுவாவி என்ற இரு குளங்களையும் உள்ளடக்கிப் பொலன் னறுவையில் இப்போது அமைக்கப்பட்ட இப்பெரும் நீர்த்தேக்க மானது, பராக்கிரமபாகுவின் ஒப்பற்ற சாதனையாகும். இதற்கு நீர் வசதியை அளித் தற்கென வெட்டப்பெற்ற ஆகாச கங்கை என்ற கால்வாய், அம்பன் கங்கையில் (பின்னர் காரகங்கை யெனப்பட் டது) அங்கமெடில்ல அணையில் தொடங்கியது கிரித் த ளே  ைய ப் பராக்கிரம சமுத்திரத்துடன் தொடுப்பதற்கு இவன் நிறுவிய கால் வாய் மூலம், முன்னரே அம்பன் கங்கையை ஆதாரமாகக் கொண்டு இயங்கிய நீர்ப்பாசனத் தொடருடன் (மின்னேரி-கவுடுலு-கிரித்தளே - கந்தளாய்) இகையினைக்க முடிந்தது. இக்குளம் மூலம் 18,000 ஏக்கர் நிலத்துக்கு நீரைப்பாய்ச்சமுடியும். பராக்கிரம சமுத்திரத்தைச் சுற்றியமைக்கப்பட்ட கட்டு சமார் 40 அடி உயரத்தையும், 85 மைல் நீளத்தையும் கொண்டதாகும். பராக்கிரம தளாகம், பராக்கிரம சாகரம் என்ற வேறிரு குளங்களும் பராக்கிரமபாகுவின் பெயரைத் தாங்கிய பெருங் குளங்களாகும். மஹிந்த தளாகம், எகாக வாபி என்பனவும் இவனுல் புதிதாக நிறுவப்பெற்ற மற்றிரு குளங்களாகும்.
பராக்கிரமபாகுவால் புதுப்பிக்கப்பெற்ற, விசாலிக்கப்பட்ட குளங்களும் கால்வாய்களுமே பெருந் தொகையினவாக உள்ளன. இவற்றுள் அனுராதபுர காலத்துப் பெருங்குளங்கள் பல குறிக்கப் பெற்றுள்ளன. மின்னேரி, கவுடுலு, மகாதார கல்ல, காலவாவி, கிரித்தளை, பதவியா, நாச்சதுர்வ, மான மடு முதலான முப்பது பெருங் குளங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு நிறுவிய முக்கிய கால்வாய்களில் ஒன்று அசிரவதீ (காலிங்க-யோத" அள) என்பதாகும். மகாவலி கங்கையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லுமாறு அது வெட்டப்பட்டது இக் கால்வாய் தொடங்கிய அதே யிடத்தில் தொடங்கி, கிழக்குப் புறமாகச் செல்லும்படி வெட்டப்பட்ட மற்ருெரு கால்வாயான கோமதி கால்வாய் இப்போது

பொலன்னறுவைக்காலப் பண்பாடு:பொருளியல் 103
பாழெய்திய நிலையில் உள்ளது, பழைய கால்வாய்கள் பலவற்றையும் பராக்கிரமபாகு புதுக்கினன். தாதுசேனனது ஜயகங்கை இவ்வாறு புதுப்பிக்கப் பெற்றவற்றுள் ஒன்ருகும்.
பராக்கிரமபாகு இயற்றிய இத்துணை மகத்தான பாசனப்பணி களால், அவன் காலத்தில் பாசன வேலைகள் முன்னெப்போதும் இல்லாத புகழ்நிலையை எய்தியிருக்கும் எனத் துணிந்து கூறலாம். பராக்கிரமபாகுவின் சலியாத உழைப்பாலும், குன்ருத ஆர்வத்தா லும் தக்கிணதேசத்திலும் இராஜரட்டையிலும் நன்முறையில் இயங்கிய பாசனத்திட்டங்கள், நாட்டின் பொருளியல் நிலையை எவ்வளவுக்கு மேம்படுத்தியிருக்கும் என நாம் உணர்ந்துகொள்ள லாம். பொலன்னறுவைக் காலத்தில், இவனுடைய ஆட்சியுடன் இச் சுபீட்சநிலை ஏறத்தாழ முற்றுப் பெறுகின்ற தெனலாம். இவன் மறைந்த ஓராண்டுக்குள் ஆட்சியைப்பெற்ற நிஸங்கமல்லன் (11871 196) தனது பொறிப்புக்களில் நிஸங்க சமுத்திரம், பாண்டிவிஜயக் குளம், பண்டவாபி போன்ற குளங்களைத்தானே நிறுவியதாகக் கூறிய போதும் அவனது கூற்றுக்களை மிகைக் கூற்றுக்களாகவே அறிஞர் கள் கொள்கின்றனர். முன்னர் நிறுவப்பட்டிருந்த குளங்களில் சில திருத்தங்களைச் செய்தபின், அவற்றைத் தனது பெயரால் அழைத்து விடும் இயல்பு அவனிடம் உண்டு என்பர். நிஸங்கமல்லன் நீர்ப் பாசனத் துறையில் புதிய சாதனையாக எதையும் நிகழ்த்தாவிடினும், அத்துறையின் வளர்ச்சியில் ஒரளவு அக்கறை கொண்டிருந்தான் எனலாம்.
நிஸங்க மல்லனை யடுத்து இலங்கையில் ஏற்பட்ட அரசியற் குழப்பங்களின் போக்கை முந்திய அத்தியாயத்திற் க வ னித் த எமக்கு, பொலன்னறுவைக் காலத்தின் இறுதிக் காலத்தில் நா. டின் பொருளியல் நிலை அரசியல் நிகழ்ச்சிகளால் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது நன்கு புலனுகும். பொருளியல் வளர்ச்சியில் அக்கறை காட்டுதற்கு வேண்டிய அமைதியையோ அவகாசத்தையோ எந்த ஒரு மன்னனும் பெற்றிருக்கவில்லை. உண் மையில் அரசர்கள் வெறும் கைப்பாவைகளாக விளங்கி பிரதானிகள் என்ற சூத்திரதாரிகளால் முடுக்கப்பட்டனரேயன்றி, தம் எண்ணப் படி குடிகளின் நலனுக்கான பொருளியல் நடவடிக்கை யே தும் எடுக்கும் நிலையில் அவர்கள் இருந்திலர். இவ்வாறன ஆட்சியாள ரால் புறக்கணிக்கப்பட்டுப் பாழெய்தியிருந்த பாசனங்கள், கலிங்க மாகனது படையெடுப்பின்போது ஏற்பட்ட போர்களாலும் அவனது ஆட்சியின் போது முற்ருகச் செயலற்றிருக்கும் எனலாம். பண் டைச் சிங்கள மக்களினதும், மன்னர்களினதும் பெருமையின் சின் னங்களான நீர்ப்பாசனங்கள் அண்மைக் காலம் வரை கவனிப்பா
ரற்ற நிலையில் காடுகளாற் சூழப்பெற்று மிறைந்தன.

Page 58
04 L ski sðL-ij sph
ஆ. அரசிறையும், வணிகமும்
அரசிற்ை; நிலவரியே இக்காலப் பகு தி யிலும் அரசிறையைத் தந்த முக்கிய வரியாகும். இவ்வரி சாதாரணமாக விளைச்சலில் (வருவாயில்) ஆறில் ஒரு பகுதியாகவே அறவிடப்பட்டது. ஆனல், போர்க் காலங்களில் மன்னர்களுக்குப் பணம் அதிகமாகத் தேவைப் படுமாதலால், அக்காலங்களில் அவர்கள் இவ்விகிதத்தைக் கூட்டியி ருப்பர். பராக்கிரமபாகுவின் போர்களுக்கு வேண்டிய பணத்தை அற விட அவன் தன்குடிகள் மீது வரிகளையும் வரிவிகிதங்களையும் கூட்டி யிருந்தான் என்பதை அவனது பின்னேர்களின் செயல்களால் உணர முடிகின்றது. குறிப்பாக நிஸங்க மல்லன் "முந்திய மன்னர்கள் விதித்த கடும் வரிகளால் அவதிக் குள்ளான குடிகளுக்கு நிவாரண மளிக்கக் கருதி, ஐந்தாண்டுகளுக்கு வரிகளை யறவிடாது விட்டதாக வும், பின்னரும் வரி விகிதங்களைக் குறைத்து சில வரிகளை நீக்கிய தாகவும் அவனுடைய பொறிப்புக்கள் கூறுகின்றன. நிலவரியின் ஒரு பகுதி தானியமாகவும், ஒரு பகுதி காசாகவும் கொடுக்கப் பட்டது. சேனைப் பயிர்ச் செய்கையிலிருந்த நிலங்களும் வரிகளுக்கு உள்ளாயின. நீர்த் தேக்கங்களில் பிடிக்கப்பட்ட மீனுக்கும் ஒரு வரி செலுத்த வேண்டியிருந்தது (பிசம்புரு-வத). தோட்டங்களுக்கும் ஒரு வரி செலுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அனுராதபுர நக ரின் வாயில்களில் லீலாவதி காலத்தில் அங்குகொண்டு வரப்பட்ட வணிகப் பொருட்கள் மீதும் சில வரிகள் அறவிடப்பட்டன. 12-ம் நூற்ருண்டில் பாக்கு அரசனது தனியுரிமையாக விளங்கி அவனுக்கு வருவாய் தந்ததாகத் தெரிகின்றது. இவை தவிர அனுராதபுர காலத் தில் இருந்த வரிகளே தொடர்ந்தும் அறவிடப்பட்டன எனலாம்.
வணிகம் : பொலன்னறுவைக் கால மன்னர்கள், பிறநாட்டு வணிகத்தால் கிடைக்கக்கூடிய வருவாயை அதிகரிக்கச் செய்தற்குப் பல நடவடிக்கைகளை யெடுத்தனர். சோழருடன் போரைத்தொடுப் பதற்கு முன்னரே, பர்மிய வணிகத்தில் விஜயபாகு அக்கறை கொண் டான். உருகுணையில் பெறப்பட்ட பொருட்களை அந் நாட்டுக்கு அனுப்பி, அந்நாட்டிலிருந்து உயர்ந்த ரகத் துணி வகைகளையும், சந்தன மரம், கர்ப்பூரம் முதலான பொருள்களைக் கப்பலில் இறக் குமதி செய்தான். பராக்கிரமபாகுவும் அவ்வாறே தக்கிணதேச ஆட்சியாளனுக விருந்தபோதே, பிறநாட்டு வணிகத்திற் கவனஞ் செலுத்தலான ன். ‘அந்தரங்க துர' என்ற ஒரு தனிப்பகுதி நிறு வப்பட்டு, பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய முத்துக்கள், இரத்தினக்கற்கள், யானைகள் முதலானவை கிடைக்கும் பகுதிகளைக் கட்டுப்படுத்தும்படி விடப்பட்டது. ஏற்றுமதி வணிகத்துக்கெனச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பர்மா முதலான பிறநாடுகளுக்கு அனுப்பப்பட்டதால், பராக்கிரமபாகுவுக்கு நிறைய இலாபம்

Gurravdrar av auDA) diamavi' ua'r Urso, Gurr Sifli uudi 108 கிடைத்திருக்கும். இத்துணைச் சிறப்பான வணிகத்தைத் தடைப்
படுத்தியமையாலேயே, பின்னர் பராக்கிரமபாகு பர்மிய மன்ன னுடன் போர் தொடுக்கலானன். முந்திய காலப்பகுதியில் இலங் கையின் ஏற்றுமதி வணிகப் பொருட்களாக இருந்தவையே பெரும் பாலும் இக்காலப் பகுதியிலும் இருந்தன. நுட்பமான ஒருவகை நெசவுத் துணியொன்று இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்று மசியானமை பற்றி ஆதாரங்களில் குறிப்புக்கள் உண்டு. இந்தியா விலிருந்து பிற நாடுகளில் வணிகஞ் செய்தற்குச் சென்ற வலஞ்சியர், நானுதேசிகள் போன்ற கணங்கள் (குழுமங்கள்) இ ல ங்  ைக யின் வெவ்வேறு பகுதிகளில் தமது வணிக நிலையங்களை நிறுவி, எமது தீவின் வணிகத்தில் மிகவும் முக்கிய பங்கை வகிக்கலாயின. வலஞ்சியர் என்ற கூட்டத்தினர் இலங்கையின் பல விடங்களில் தமிழ்ப் பொறிப்புக்களை விட்டுச் சென்றுள்ளனர். எருதுகளால் இழுக்கப்பெற்ற பொதிவண்டிகளைக் கொண்டுசென்ற வியாபாரிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று உள் நாட்டு வணிகத்தை நடத்தி வந்தனர். ஐதிரீசீ, கஸ்வீனி முதலான புகழ் வாய்ந்த அரபுப் புவி யியலாளர்கள், இலங்கைக்கும் சீன முதலான நாடுகளுக்கு மிடையே நடைபெற்ற வணிகத்தை யுறுதிப்படுத்துவடன், இலங்கையி லிருந்து ஏற்றுமதியான பொருள்களையும் குறிப்பிட்டுள்ளனர். பட் டாடைகள், பல நிற இரத்தினக் கற்கள், வைரங்கள், வாசனைப் பொருட்கள், மூலிவகைகள். விலையுயர்ந்த மரவினங்கள், முத்துக் கள் முதலானவற்றை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொலன்னறு வையில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான சீன நாணயங்கள், அந் நாட்டுடன் நடைபெற்ற வணிகத் தொடர்பை உறுதி செய்வன வாகவுள்ளன. இதே காலத்து அராபிய, தென்னிந்திய நாணயங் களும் கண்டெடுக்கப் பெற்றுள்ளதால் அந்நாடுகளுடன் வணிக உறவு நிலவியமை நிறுவப்பெற்றுள்ளது. 1-ம் பராக்கிரமபாகுவின் காலத் தமிழ்க் கல்வெட்டொன்று நயினுதீவில் காணப்படுகின்றது. இதனல், ஊராத்துறை (ஊர்காவற்றுறை)யின் வணிக முக்கியத்து வம் புலப்படுவதுடன், அங்கு வந்த பிற நாட்டு வணிகர்க்கு அளிக் கப்பட்ட பாதுகாப்புக்களையும் அறியத்தக்கதாக உள்ளது.
இ. சமூக நிலைமைகள் :
சாதி முறை : பொலன்னறுவைக் காலச் சமுதாயத்தில் குலினர் வகித்த முக்கியத்தைப்பற்றி முன்னரே கண்டுள்ளோம். இவர்களே, அரசகுடும்பத்தினர்க்கும், பிராமணர்க்கும், பெளத்த சங்கத்தினர்க் கும் அடுத்த சமுதாயத் தளத்திலிருந்த உயர் வகுப்பினராவர். இவ்வகுப்பினர்க்கு, அவர்கள் அரசாங்கத்துக்கு ஆற்றும் சேவைக் கென வழங்கப்பட்ட நிலங்களின் வருவாய்களைப் பெறும் உரிமை உண்டு. இவ்வாறு வழங்கப்படும் நிலங்கள், "பமுணு" அல்லது *கம் வர நிலங்கள் எனவும், பரபுரு (பரம்பரை) நிலங்களெனவும்:
l4

Page 59
i tij të பண்டைய ஈழ்ம்
ஜீவித அல்லது திவெல் நிலங்கள் எனவும் வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டிருந்தன. மன்னனது சேவையிலுள்ள முக்கிய பதவிகளில் குலீனர் அல்லது கொவி குலத்தவரே பொரும்பாலும் நியமிக்கப்பட் டிருந்தனர். உலோகத் தொழிலில் ஈடுபட்ட ஆசாரிகள் (Gasibunr சாரிகள், ஆயுதங்களை வடித்தவர்கள் மிகவும் உயர்வாக மதிக்கப் பட்டிருந்தனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் “கெவுளு" சாதியினராகவும், மேள மடிப்போர் “பெரவா’க்கள் எனவும் வழங் கப்பட்டனர். சாதியினரிடையே அவர்களின் கடமைகள் பற்றிய சச்சரவுகளும் இடையிடையே தோற்றியுள்ளன. கலப்பு மணங்கள் பெருங் குற்றமாகக் கருதப்பட்டன.
அடிமை முறையும் பொலன்னறுவைக் காலத்தில் பெரு வழக்கி லிருந்தது. ஏறத்தாழ ஒவ்வொரு உயர் குடியினர்க்கும் ஒன்று அல் லது இரண்டு அடிமைகள் இருப்பர். பிரதானிகள் முதலானவர்கள் இன்னும் அதிகமான அடிமைகளையும் வைத்திருந்தனர். இத்தகைய அடிமைகள் விகாரைகள் போன்ற நிறுவனங்களுக்கும் இருந்தனர். அடிமைகளைப் பரம்பரையாகப் பெற்றிருக்காவிடினும் அவர்களை விலைக்கு வாங்க முடிந்தது. தானசாலைகள், சத்திரங்கள், வைத்திய சாலைகள் (ஆதுர சாலை) என்பனவும் அக்காலத்தில் பெருந்தொகை யாக நிறுவப்பட்டு, வறியோர், ஆதரவற்றேர், நோயாளிகள் முத லானேருடைய தேவைகள் அரசர்களால் கவனிக்கப்பட்டன. இத் தகைய பணி களை யாற்றியவர்களுள்ளும், பராக்கிரமபாகுவும், நிஸங்க மல்லனும் தனியிடத்தைப்பெற வேண்டியவர்களாவர்.
i. சமய விருத்திகள்
விஜயபாகுவுக்கு முன் சமயநிலை,
பொலன்னறுவைக் காலத் தொடக்கத்தில், பெளத்த மதத்தின் நிலையானது சோழரின் படையெழுச்சிகளால் பெரிதும் தளர்ச்சி யெய்தியிருந்தது உண்மையில், அனுராதபுர கால இறுதி நூற் ருண்டில் ஆட்சி செய்த சில மன்னர் களின் நிருவாகத்தில் காணப் பட்ட ஊழல்களால், பெளத்தம் நலிவடைந்திருந்தது. உறுதியான ஆட்சியைப் பெற்றிராத மன்னர்களால் பெளத்தத்துக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைத் தடுக்க முடியாது போயிற்று. சங்கத்தினரின் ஒழுக்கத் திலும் சீர்கேடுகள் மலிந்திருந்தன. அவர் களிற் பலர் உ ல கி ய ந் சார்புடையவர்களாக விளங்கினர். சங்கத்தில் முன்னரே தோன்றி யிருந்த ஒற்றுமையின் மை சோழர் இலங்கையைக்  ைகப் ப ற் று வதற்கு முன்னதாகவே, பெரிதும் வலுப்பெற்றிருந்தது. சோழப் படையினரின் அழிவுக்காளான விகாரைகள் பல, மு ன் பே பாழெய்திய நிலையில் இருந்ததாகச் சூளவம்சம் தெரிவிக்கின்றது. எனவே, சோழப் படைகள் 993 லும் பின்னரும் இலங்கையில்

பொலன்னறுவைக் காலப் பண்பாடு : சமயம் 107
நடத்திய போர்களின் போது, முன்னரே ஏற்பட்டு வந்த ஒரு போக்கையே துரிதமடைய வைத் தன. அனுரா த புரத் தி ல் பல அழிவுகளைச் செய்த அப் படையினர், அங்குள்ள விகாரைகளைத் தாக்கி அவற்றைச் சூறையாடினர். "குருதியை உறிஞ்சம் இயக்க” ரென, விகாரைகளின் செல்வங்களை அவர்கள் தமதாக்கிக் கொண் டனர், போர்க் காலத்தில் போர்வீரர்க்கு எக்காலத்திலும் இயல் பாக ஏற்படும் காட்டுமிராண்டித் தனத்துடன் சோழப் படை வீரரும் நடந்திருத்தல் கூடும். ஆணுல், பெளத்தம் அடைந்த தாழ்வுக்கு, சோழப் படையெடுப்புக்கு முன்னரே நிலவிய அரசியற் போக்கும் பெருமளவு காரணமாக விருந்ததை நாம் உணர்தல் வேண்டும்.
சோழர் இலங்கையைக் கைப்பற்றியபின் (993) சுமார் எழுபத் தேழு ஆண்டுகள் வரை நாட்டைப் பரிபாலித்தனர். தமது ஆட்சி யின் போது, சைவத்துக்கு முதன்மையை அளித்தனர். வைஷ்ணவ மதத்தையும் ஒரளவுக்கு ஆதரித்தனர். பெளத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தமைக்குச் சான்றுகள் இல்லை. திருக்கோணமலைக்கு அண்மையில் இருந்த "வெல்கம்-வெஹர" என் பதை அவர்கள் ஆதரித்தமைக்குச் சான்ருக ஒரு பொறிப்பு உண்டு. அதைத் திருத்திக்கட்டி 'இராஜராஜப் பெரும்பள்ளி யென அழைத் தனர். சோழரின் கொள்கை சமயப் பொறையாக இருந்ததெனக் கொள்வதற்கே சான்றுகள் உண்டு. இருப்பினும், காலவேடுகளைப் பின்பற்றி இக்காலத்தில் வரலாறு எழுதுவோரும், பெளத்தத்தின் வீழ்ச்சிக்குச் சோழரே காரணமாக விருந்தனரெனத் த வ ரு க க் கொள்கின்றனர். கலைநிதி கே. கே. பிள்ளை கூறியுள்ளது போன்று, "பொதுவாகக் கூறுமிடத்து, சிங்களருக்கும் சோழருக்கு மிடையே யிருந்த பரஸ்பர உறவைத் தீர்மானிக்கும் முழுமுதற் காரணியாகச் சமயப் பகைமை இருந்திலது. ' + சோழர் இலங்கையில் பல சிவால யங்களையும், பிற இந்துக் கோவில்களையும் நிறுவினர். பொலன் னறுவையிலேயே ஏராளமான கோவில்கள் எழுந்தன. இவற்றுள் பல இன்றும் அழிவுகளாகக் க்ாணப்படுகின்றன. வானவன்மாதேவி ஈஸ்வரம் பொலன்ன"1வையிலும், இராஜராஜேஸ்வரம் என்பது மாதோட்டத்திலும், விஜயராஜ ஈஸ்வரம் எனப் பின்னர் அழைக் கப்பட்ட கோவில் கந்தளாயிலும் சோழர் காலத்தில் நிறுவப் பெற்றிருந்தன. இவ்வாறு சோழராட்சியின் போது இலங்கையில் இந்துமதம் பெரிதும் வளர்ச்சி யெய்தியதால், அதன் செல்வாக்கு பெளத்தத்திலும் ஏற்படலாயிற்று. பிராமணர்களின் முக்கியத் துவமும் அதிகரித்திருந்தது. கந்தளாயில் பிராமணர்களின் குடி யிருப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது. பிராமணர்களின் விதிகளுக்கு
* South India & Ceylon P. 85

Page 60
108 பண்டைய ஈழம்
அமைந்த கிரியைகளும் பெளத்த வழிபாட்டுமுறைகளிலும், அரச வாழ்விலும் இடம்பெறலாயின.
விஜயபாகுவின் சமயப் பணிகள் : 1-ம் விஜயபாகு 1070-ல் இலங் கைக்கு அரசனன போது, பெளத்தத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய தாகவே இருந்தது. பழைய தலைநகரான அனுராதபுரத்தில் இருந்த முக்கிய விகாரைகள், சஞ்சாரமற்றுப் பாழெய்தி யிருந்தன. தாக பங்கள், பரிவெனக்கள் முதலான சமயக் கட்டிடங்கள் பல அழி வுற்று அல்லது பெருஞ் சேதமுற்றிருந்தன. பெளத்தக் குருமார்கள் உருகுணைக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று வாழலாயினர். இருந் தவர்களும். உபசம்பதா’ என்ற குரு அபிஷேகத்தை நடத்துவதற் குரிய தகுதியுடையவர்களாக இருக்கவில்லை. குருமாரிடையே உலகியற் பற்றும் ஊழல்களுமே மிகுதியாகக் காணப்பட்டன. எல்லா வகைகளிலும், பண்டைய பெருமையையும் பொலிவையும் இழந்து காணப்பட்ட பெளத்த சமயத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உறுதியுடன் - விஜயபாகு செயலாற் றினன். புதிய குருமார்களைச் சங்கத்திற் சேர்க்கும் உபசம்பதா வைபவத்தை மீண்டும் நடத்தும்படி செய்ததே இவனுடைய முதற் பணியாகும். பர்மிய அரசனுன அனுேரத்தனுடன் விஜயபாகு கொண்டிருந்த நல்லுறவைப் பயன்படுத்தி, இச் சடங்கை நடத்தும் தகுதிவாய்ந்த குருமாரை அந்நாட்டிலிருந்து தருவித்தான். அறி வாற்றலிலும் சமய ஒழுக்கத்திலும் மேம்பட்ட பர்மியக் குருமார்கள் ஈழத்துக்கு வந்து உபசம்பதாச் சடங்கை நடாத்திப் பலரைச் சங்கத் திற் சேர்த்தனர். இலங்கையிலிருந்து திரிபிடகப் பிரதிகளை அனே ரத்தன் பெற்றுப் பர்மிய அறிஞர் ஒருவரிடம் கொடுத்து, தாட்டனி லிருந்து பெறப்பட்ட சமய நூல்களுடன் ஒப்பு நோக்கச் செய்தான் பர்மியக் குருமார்களின் வருகையுடன் இலங்கையில் பெளத்த மறு மலர்ச்சியும், இலக்கியப் புத்துயிர்ப்பும் இடம் பெறலாயின.
அனுராதபுரத்தில் சங்கத்தில் காணப்பட்ட சாகைகள், குறிப் பாக மகாவிகாரை, அபயகிரி, ஜெதவன என்ற முப்பெரும் விக ரைகளைச் சார்ந்த பிரிவுகள், விஜயபாகுவின் காலத்திலும் ஒன்று படாது தனித்தனி இயங்கலாயின. ஆயின், அவற்றினிடையே நில விய பகைமை பெரிதும் தணிந்திருக்கும் என நம்பலாம். விஜயபாகு நிறுவிய சமயக் கட்டிடங்களுள், பொலன்னறுவையில் பல் எச்சத் துக்கென அமைக்கப்பட்ட கோவில் முக்கியமானது. பல் எச்சத்து கென விழா நடாத்த ஏற்பாடு செய்ததுடன், அனுராதபுரத்துக்கு வெளியே மகா கமை, மஹியங்கணை, மண்டலகிரி முதலான இடங்க ளில் பாழெய்திய பல சமய நிறுவனங்களைத் திருத்திக் கட்டுவித் தான். ழரீபாதவுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் வழிகளில் தங்கிச் செல்வதற்குச் சில தானசாலைகளை அமைத்து, அவர்களுக்கு உண

பொலன்னறுவைக்காலப் பண்பாடு: சமயம் 109
வளித்தற்காக இரத்தினபுரி மாவட்டத்தல் உள்ள கிலீமலைய எனுங் கிராமத்தை மானியமாக வழங்கினன். புத்த கயா விலுள்ள போதி மரக்கோவிலுக்கு விலையுயர்ந்த காணிக்கைகளைச் செலுத்தத் தன் தூதுவர்களைப் பல முறை விஜயபாகு அனுப்பி வைத்தான். விஜய பாகுவின் பணிகளால், பெளத் தம் மீண்டும் நன்னிலையை எய்திய துடன், பெளத்த சங்கமும் பெருஞ் செல்வாக்கைப் பெற முடிந்தது.
மகாபராக்கிரமபாகுவின் காலம் : விஜயபாகுவின் ஆட்சிக்குப் பின் நிகழ்ந்த அரசுரிமைத் தகராறுகளும் உள்நாட்டுப் போர்களும் விஜய பாகுவின் ஆட்சியின்போது பெளத்தம் எய்திய முன்னேற்றத்தைக் கெடுத்தது. விஜயபாகுவால் யுவராஜனக நியமிக்கப்பட்டிருந்த விக்கிரமபாகுவுக்கு எதிராக நடைபெற்ற சதியில் சங்கப் பிரமுகர்க ளும் கலந்திருந்தமையால், ஆட்சியுரிமையை நிலைநாட்டியபின் அவன் அவர்கள் மீது வஞ் சந்தீர்த்தான். சுமார் நாற்பது ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர்களின் பின், பராக்கிரமபாகு ஆட்சியைப் பெற்ற போது, விஜயபாகு ஆட்சியைப் பெற்றபோதிருந்த நிலையிலேயே ஏறத்தாழ பெளத்தம் இருந்தது. பராக்கிரமபாகுவுக்குமுன் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களின் போது, பொருள் வேட்கை கொண்ட சுதேச இளவரசர்கள் விகாரைகளுக்கும் புனித எச்சங்களுக்கும் வழங்கப்பெற்றிருந்த திரவியங்களை அபகரித்தனர். சங்கத்தின் பெயருக்கு மாசு தந்த கூடா வொழுக்கமுடைய பிக்குகள் மலிந் திருந்தனர்.
பெளத்த சமயத்தை மேன்மை பெற வைப்பதையே குறிக்கோ ளாகக் சொண்டு இலங்கை முழுவதன் ஆட்சியைப்பெற்ற மகா பராக்கிரமபாகு சமயத்துறையில் ஆற்றிய பணிகளால், பெளத்த சமயம் உயர்வு பெற்றதோடு, சங்கமும் புனிதமும் ஒற்றுமையும் எய்திற்று. எவ்வளவோ எதிர்ப்பினிடையேயும், மகா பராக்கிரம பாகு தனது உறுதியைத் தளர விடாது, சங்கத்தின் தூய்மையை யும் ஒற்றுமையையும் நிலைநாட்டினன். திம்புலாகலை மகா காசி யப்ப தேரர் தலைமையிற் கூடிய சமய மன்று பற்றி முன்னரே கூறி யுள்ளோம் (அத், 3). சங்கத்திலுள்ள முப்பிரிவுகளையும் ஒன்று படுத்தியதன்மூலம் வட்டகாமணியின் காலமுதல் சங்கத்தில் ஏற்பட் டிருந்த பேத 4ம் நீக்கப்பட்டது. இதனைப் பராக்கிரமபாகுவின் ஒரு பெருஞ் சாதனையாகக் கொள்வர். சங்கத்தின் தூய்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைத்த ஏராளமான "துஸ்ஸில பிக்குகள் அதிணின்றும் வெளியேற்றபபட்டனர். இதன்பின், விநய (ஒழுக்க) விதிகள் பற்றிய கருத்து முரண்பாடுகள் அகற்றப்பட்ட்ன. இதன் முடிவிலேயே, பொலன்னறுவ - கதிகாவத என்ற ஒழுக்க விதிகள் கல் விகாரையிற் பொறிக்கப்பட்டன. திருநூல்களைக் குருமார்கள் பயிலுதல், குருமார்கள் வெளியே செல்லவேண்டிய இடங்களும் நேரமும், ஒரு சீடரைச் சங்கத்திற் சேர்க்கும்போது கவனிக்க

Page 61
1 1 0 பண்டைய ஈழம்
வேண்டிய அம்சங்கள் இவ்விதிகளில் முக்கியமாகத் தெளிவுபடுத் ஈப் பட்டன. இக் கல்விகாரைப் பொறிப்பின் மூலம், சங்கத்தின ரிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு கி. பி. 1165 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவன் நிறுவிய சமயக் கட்டிடங்கள் பற்றியும் இங்கு விரிவாகக் கூறவேண்டியதில்லை. பொலன்னறுவை யில் இவஞல் நிறுவப்பட்ட சமயக் கட்டிடங்களுள் கிரிவிகாரை. இலங்காதிலக விகாரை, தமிழதாபம், கல் விகாரை, திவங்க உருவ வீடு போன்றவை முக்கிடமான வை. இவைபற்றி மீண்டும் பின் வரும் பகுதியிற் ப; ப்போம். −
நிஸங்கமல்லனும், அவனது பின்னுேரும் : பராக்கிரமபாகுவின் ஆட்சியின் முடிவில், இலங்கைப் பெளத்தமும், சங்கமும், பர்மா முதலான பிற பெளத்த நாடுகளிடையே அளவற்ற மதிப்பைH பெற்றிருந்தன. ஆலுைம் அவனது பணிகளும் நிலையான பயனேத் தரவில்லை. எனெனில் பராக்கிரமபாகுவுக்குப் பின் ஒராண்டுக்குள் ஆட்சியைப் பெற்ற நிஸங்க மல்லனும், சங்கத்தில் கூடா வொழுக்க முடையோர் இருப்பதை யுணர்ந்து அவர்களைக் களைந்து விட முற்பட் டான். அவனுடைய பொறிப்புக்களில், பிக்குமார்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றித் தானே அறிவுறுத்தி யுள்ளான். றன் கொத் தாகபம் முதலான அவனுடைய சமயக் கட்டிடங்கள், அவன் சமயத்திற் கொண்ட ஈடுபாட்டை இன்றும் பறைசாற்றி நிற்கும் சின்னங்களாகும். விஜயபாகு, பராக்கிரமபாகு, நிஸங்க மல்லன் ஆகிய மூவரும் பொலன்னறுவைக் கால மன்னருள் நாட்டினபி விருத்தியிலும், சமய வளர்ச்சியிலும் பெரும் அக்கறை காட்டியவர் கள் என்பது தெளிவு. இவர்களுக்குப் பின், பொலன்னறுவைக் காலப் பகுதியின் இறுதியில் ஆட்சி செய்தவர்கள் இடை யிடையே சமய அக்கறை காட்டியுள்ளனர். குறிப்பாக, லீலாவதியை அர சேற்றிய பராக்கிரமன், ஆயஸ் மந்தன் போன்ற தளபதிகள் சமயப் பணிகளாற்றியமைக்குச் ச ரன்றுகள் உண்டு, ஆனல், இவர்களின் பணிகள் எவ்வித பயனையும் தராதவாறு, அந்நேரத்தில் நிலவிய அரசியற் சூழ்நிலைகள் தடுத்தன. இந்நிலையிலேயே, மாகனுடைய படையெடுப்பு நிகழ்ந்து, பெளத்த மதத்துக்குப் பல அழிவுகளைச் செய்தது. சூளவம்ச விவரங்களில் மிகைக்கூற்றுக்கள் பல இருப் பினும், மாகனுடைய படை வீரர்கள் பெளத்த நிறுவனங்களுக்குப் பல சேதங்களை யுண்டுபண்ணி யிருந்தன ரெனலாம். மாகனுடைய ஆட்சியின் போது, ஒரு 'பொய்யான மத'த்தைப் புகுத்தப் பல வந்தமான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் காலவேடு களிற் குறிப்புக்கள் உண்டு. இவ்வாழுகப் பொலன்னறுவைக் கால முடிவில், பெளத்தத்தின் நிலை அக்காலப் பகுதியின் தொடக்கத்தி லிருந்ததைக் காட்டிலும் கீழ்நிலையை யடையலாயிற்று எனலாம்,

Gustava esso a di stav tu sab7 Lum Ö) : #ud üJtb
பல்லெசீச, பூறி பாதவழிபாடுகள் : பொலன்னறுவைக் காலத்தில்
பெளத்தத்தின் பொதுவான வளர்ச்சியை மேலே கவனித்தோம். இனி, சில வழி ப 7 ட் டு மு  ைற க ள் பற்றி ச் சிறப்பாக க் கவனிப்போம். புனிதப் பல் எச்ச (தந்த தாது) வழிபாட்டுமுறை பொலன்னறுவைக் காலத்தில் அதிக முக்கியம் பெற்றிருந்தது. விஜயபாகு இதற்கென ஒரு கோவில் நிறுவி யிரு ந் தா ன். இ க் கோவிலின் பாதுகாப்பு வேளைக்காரப் படைப் பிரிவினரிடம் ஒப் படைக்கப்பட்டது. அப் படையினர். அதன் பராமரிப்புக்கென ஒரு வேலி நிலத்தை ஒதுக்கியதாக ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. இக் காலத்திலேயே, புனிதப் பல் எச்சத்தை வைத்திருத்தல் ஆட்சி யுரிமை வலுப்பெறுதற்கு இன்றியமையாத தென்ற கொள்  ைக உருவாயிற்று, உருகுணைக்குப் பாதுகாப்புக்காகக் கொண்டு செல்லப் பட்ட பல், ஐயக்கல எச்சங்களைப் பராக்கிரமபாகு அங்கிருந்து மீட்டு தனதுரிமையை வலுப்பெறச் செய்ததை முன்னர் கண்டோம். அவன் பல் எச்சத்துக்கு ஆண்டுதோறும் விழா எடுத்ததாகவும் கூறப்படு கின்றது. நிஸங்க மல்லனும், ஹட்டதாகே என அழைக்கப்படும் கட்டிடத்தை நிறுவி, புனிதப் பல் எச்சத்துக் கென அதை விட்டான். "பரித்த’ (பிரித்) ஒதுதலும் இக்காலப்பகுதியிலேயே முக்கியமடைந்து, பெருவழக்கில் இருந்து வந்தது. ழரீயாத (சிவனெளிபாதமலை) மலைக்கு மக்கள் யாத்திரைகளைச் செய்யும் வழக்கமும் இக்காலத் திலேயே அதிகமாகப் பின்பற்றப்பட்டது. விஜயபாகுவின் அம்பக முவப் பொறிப்பு சமனெளக் குறிைல் உள்ள திருப்பாதத்துக்குக் காணிக்கைகளைச் செலுத்தியதையும், அதைத் தரிசிக்க யாத்திரை , செய்யும் அடியவர் கூட்டத்தினர் தங்குவதற்கும் அவர் க ளி ன் பசியைப் போக்கவும் ஏற்பாடுகள் செய்ததைக் குறிப்பிட்டுள்ளது. நிஸங்க மல்லன் தானே நேரிற் சென்று திருவடியை வழிபட்டு, அதற்கென மானியங்களையும் வழங்கினன். உபுல்வன் (விஷ்ணு), சமன் (யமன்) வழிபாடுகளும் தேவுந்தர (தேவிநுவர), தம்புளை, அலுத்துவரை முதலான இடங்களில் நடைபெற்றமைக்குச் சான்று கள் உண்டு.
பிற பெளத்த நாடுகளுடன் தொடர்புகள்: பொலன்னறுவைக் காலத் தில் விஜயபாகு புத்தகயாவுககு அனுப்பிய தூதுக்குழுக்கள் மூலம், மகதத்தில் அதே காலத்திலிருந்த பெளத்த சமயப் பிரிவினருடன் தொடர்புகள் ஏற்பட வாய்ப்பளித்தன. இலங்கையில் இத் தொடர்பு களின் செல்வாக்கைக் காட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. (எ-டு. மஹியங்கணை தாகபத்தின் எச்சவகச் சிற்பம்). எனினும், வடஇந்தியச் செல்வாக்கு விரைவில் அருகிவிடுகின்றது. ஏனெனில், அங்கு பெளத்தம் தேய்வு நிலையிலிருந்தது. தென்னிந்தியாவில் முக்கிய பெளத்த நிலையங்களாக விளங்கிய நாகபட்டினம், காஞ்சி ஆகிய இடங்களிலுள்ள நிறுவனங்களுக்கும் இலங்கைக்கு மிடையே

Page 62
f : பண்டைய ஈழம்
உறவுகள் நிலவின. இக்காலப் பகுதியில், தென் கிழக்காசிய நாடு களுக்கும் இலங்கைக்கு மிடையே தொடர்புகள் அதிகமாகி வந்தன. இவை பற்றியும் முந்திய அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டு விட்டதால் இங்கு அவற்றை மீண்டும் கூறவேண்டியதில்லை. லிகோர் (அப்போதைய தம்பரட்ட) என்ற பகுதி, விஜயபாகுவின் காலத் திலும் அதற்குப் பின்னரும் தேரவாத பெளத்த நிலையமாக விளங் கியது. இலங்கையிலிருந்து சென்ற ஆனந்த தேரர் அங்கு இம் மதத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கை வகித்தார். பர்மாவுடன் நிலவிய சமய உறவுகளால் இரு நாடுகளுமே ப ய ன  ைட ந் த ன, கம்போடியாவுடன் சமயத் தொடர்புகள் பொலன்னறுவைக் காலத் தில் குறைவாகவே யிருந்தன. சீயத்துடன் இருந்த தொ ட் ர் பு களுக்கு அறிகுறியாகவே, வட சீயத்தில் லும்பன் எ னு மி டத் தி லுள்ள ஒரு தனிவகைக் கட்டிடத்தை நினைவு கூரும் முறையில், பொலன்னறுவையில் சத்மஹால் பாசாத என்பது உ ஸ் ள தா க க் கூறப்படும். பொலன்னறுவைக் காலச் சமய விருத்திகளை நோக்கும் போது, அரசியற் காரணிகளால் பெளத்த சமயம் பெரிதும் பாதிக் கப்படும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைதியும் உறுதி யும் நிலவிய காலங்களில் அது துரிதவளர்ச்சியும், படையெடுப்புக்களும் உள்நாட்டுப்போர்களும் நடைபெற்ற காலங்களில் திடீரென வீழ்ச்சி யும் எய்தியதைக் காணலாம். விஜயபாகு, ப ரா க் கி ர ம ப ா கு போன்ற பெருமன்னர்கள் மட்டற்ற சமய ஆர்வத்துடன் பெளத்த சமயத்தை மேன்மை பெற வைத்தனரெனினும், மன்னர்களின் சக்தியையும் மிஞ்சிய காரணிகள் பொலன்னறுவைக் கால முடிவில் அதன் வரலாற்றிலுண்டான பெரும் வீழ்ச்சியைக் கொடுத்தன. iv இலக்கிய வளர்ச்சி
1-ம் விஜயபாகு, மகாபராக்கிரமபாகு போன்ற பொலன்னறு வைக் காலப் பெருமன்னர்கள் பெளத்தத்தின் மறுமலர்ச்சிக்குப் பெரும் பணிகளையாற்றியதனல், இலக்கிய வளர்ச்சிக்கும் பேரூக்க மளித்தனர். அம் மன்னர்கள் அளித்த பேராதரவு காரணமாக, பொலன்னறுவைக் காலத்தில் பாலி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மும் மொழிகளிலுமே இலக்கிய, இலக்கண நூல்கள் பெருந் தொகை யாகப் பெளத்த பிக்குகளால் எழுதப் பெற்று, இத்துறைகளில் போற்றத் தக்க வளர்ச்சியேற்பட்டது. குருமாரல்லாத ஒரு சிலரும் (குருளு கோமி போன்றவர்கள்) இத்துறைகளில் உழைத்துள்ளனர். பொலன் னறுவைக் காலத்திலே வடமொழி மிகுதியாகக் பயிலப்பட்டதால் அம்மொழியின் இலங்கை வரலாற்றில், இக் காலத்திலேயே தனது செல்வாக்கின் உச்ச நிலையை அடைந்தது. சிங்களமும், பாலியும் சமஸ்கிருதத்தின் பாதிப்பைப் பெற்றன. பாலி மொழியிலேயே அதிகமான நூல்கள் தோன்றிய போதும், சமஸ்கிருதத்திலும்,

sôurt av sår av by a) AJ S T Ovaj jarlsrum @ : Gum (3 af Lu 6iv 1 2 3
சிங்களத்திலும் முந்திய காலத்தைக் காட்டிலும் கூடுதலான நூல் கள் எழுதப் பெற்றன. இக் காலத்து "இலக்கிய" முயற்சிகள் ஆக்க முயற்சிகளாக (சிருஷ்டி இலக்கியங்களாக) இருக்காது, விமரிச அல்லது விளக்க நூல்களாகவே இருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கது. பிந்திய பொலன்னறுவைக் காலப் பகுதியில், குறிப்பாக நிஸங்க மல்லனுடைய காலத்திலிருந்தே பெருந் தொகையாக அவை வெளிவந்தன எனக் கூறப்படுகின்றது. இனி பாலி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தனித்தனி கவனிப்போம்.
அ. பாலி
பொலன்னறுவைக் காலத்தில், பாலிமொழியில் எழுதப்பட்ட நூல்களில் புதுமையான தத்துவக் கருத்துக்களோ, சுயசிந்தனேயைக் காட்டும் அம்சங்களோ குறைவு. பண்டை நாளிலிருந்து பேணப் பட்டு வந்த சமயக் கோட்பாட்டு, ஒழுக்க நூல்களில் வரும் தத்து வங்களுக்கும், விதிகளுக்கும் பொருள் கூறுவதிலும், விளக்கங்கொடுப் பதிலும், முன்னரே எழுதப் பெற்ற வியாக்கியானங்களுக்குத் துணை விளக்கங்கள் எழுதுவதிலுமே அக்கால அறிஞர்கள் அதிகமாக ஈடு பட்டனர். உண்மையில், சிந்தனையை வெளியிடுதற்கான கருவியாக அது நெடுங்காலமாக விளங்கவில்லை யென்பர். சமய நூல்களை எழுது வதற்குப் பயன்பட்ட அம்மொழியானது, பொலன்னறுவைக் காலத்துச் சமயப்போக்கின் இரு முக்கிய அம்சங்களுக்கு உதவியது. விஜயபாகு, பராக்கிரமபாகு ஆகியோரின் காலத்துச் சமய முயற்சி களால் நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய சமயமே அதிகம் வலியுறுத்தப் பெற்றது. எனவே, "அபிதம்ம" என்ற திருநூற் பகுதி இக்காலத்தில் முக்கியம் பெறலாயிற்று. 'அபிதம்ம’ப் பகுதியைச் சிறப்பாகக் கற்றதால், அதைப் பற்றிய விளக்கங்களும், சுருக்கங்களும் இடம் பெற்று வந்தன. இதைப் போலவே, சங்கத்தினரின் ஒழுக்கம் பற்றிப் பெரிதும் அக்கறை காட்டப்பட்டதால் அதனுடன் தொடர் புடைய விநய விதிகளும் தெளிவாக்கப்பட்டு, நூல்கள் எழுதப்பட் டன. "டீகா’க்கள் எனப்படும் துணை விளக்க நூல்கள் (முந்தியகாலங் களில் எழுதப்பட்ட பழைய விளக்கங்களுக்கு, இப்போது மேலும் விளக்கத்தைக் கொடுக்கவே இவை எழுதப்பட்டன) இக் காலத்தில் மிகுதியாக எழுதப்பட்டதை யறியலாம். சமஸ்கிருதம் இக் காலத் தில் பாலியில் எழுதப்பட்ட நூல்களின் நடையை மட்டுமன்றி, அம் மொழியின் அமைப்பையே பெரிதும் பாதிக்கலாயிற்று. பெரும்பா லான புலவர்களும் அறிஞர்களும் சமஸ்கிருதத்தை நன்கு கற்றவர் களாக இருந்ததால், அதன் செல்வாக்குப் பாலியிலும் இலகுவிற் பரவியது. சமஸ்கிருதத்தில் உள்ள முன்மாதிரிகளை வைத்து, பாலி யிலும் யாப்பு, அணியிலக்கணங்கள் வகுக்கப்பட்டன. சமஸ்கிருதம்

Page 63
114 LI GÁST SÐ LJ Fpb பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்தபோதும், பாலியிலேயே மிக
அதிகமான நூல்கள் எழுதப்பட்டன என்பதால், அனுராதபுர காலத்தில் அம்மொழிக்கு இருந்த மதிப்பு இக்காலப் பகுதியிலும் தொடர்ந்தமை கவனிக்கற்பாலது.
பொலன்னறுவைக் காலத்தில் வாழ்ந்து அதற்கு ஒளி கொடுத்த இலக்கிய கர்த்தாக்கள் சிலரைப்பற்றியும், அவர்களுடைய முக்கிய நூல்கள் பற்றியும் இனிச் சுருக்கமாகக் காண்போம். பராக்கிரம பாகுவின் காலத்துச் சமய நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகித்த உதும் பரகிரி விகாரை (திம்புலாகலை) மகா காசியப்ப தேரர், இலக்கிய மறுமலாச்சிக்கும் பெரும் பணிகளை யாற்றினர். மும்மொழிப் பாண்டித்தியம் பெற்ற இம் மூதறிஞர் பாலியில் அபிதம்மத்த சங்கஹ என்பதற்கு விளக்கமாக எழுதிய பொராளு-டீகா என்பது குறிப்பி டத் தக்கது. இதைத் தவிர, மொஹவிச் செதனி (அபிதம்ம பற்றியது) விமதிவிநோதனி (விநய பற்றியது), புத்தவங்ஸ, அணுகத வங்ஸ என் பவற்றையும் அவர் இயற்றினர். மற்ருெரு பேரறிஞரான மொகல் லான தேரர், வடமொழியிலுள்ள வியாகரண (இலக்கண) நூல்களில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாராதலின், வடமொழியில் கைக் கொள்ளப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கமையப் பாலி இலக்கண முறை களையும் கோவைப்படுத்தி, மொகல்லான வியாகரண என வழங்கப் படும் புகழ் வாய்ந்த நூலை இயற்றியுள்ளார். இவருடைய நூலால், பாலி இலக்கணத் துறையில் ஒரு புதிய மரபே உருவானதாகக் கொள் ளப்படுகின்றது. அபிதானப்ப தீபிகா என்பதையும் இவரே யாத்த தாகக் கொள்ள இடமுண்டு. சாகரமதி (அறிவுக்கடல்) எனச் சிறப் பிக்கப்பட்ட சாரிபுத்த மகா தேரர் என்பாரே, டராக்கிரமபாகுவின் காலத்து அறிஞர்கள் எல்லோருள்ளும் மிகவும் புகழீட்டியவராவர். துணை விளக்க நூல்களான 'டீ காக்களே நிறைய எழுதி, தமது விளக் கத் திறமையை நிலைநாட்டியவர். சாரத்த தீபனி (புத்தகோசரது சமந்தபாசாதிகாவுக்கு எழுதியது) சாரத்த மஞ்சுசா, லீனத்த பகாசினி என்பன இவர் எழுதிய "டீகா"க்கள் ஆகும். இவற்றுள் சாரத்ததீ பணியில் இவருடைய அறிவு விசாலமும் திறமையும் புலனுகின்றன விநய பிடகவின் சாரத்தைத் தரும் விநய சங்கஹ என்பது, சாரிபுத் தரின் புகழைப் பன்மடங்கு உயர்த்தும் அரிய முயற்சியாகும். ஜெத வன விகாரையில் சாரிபுத்தர் நிறுவிய கல்விக் கழகமானது பெளத் தக் கல்வியை மேலும் வளர்த்து வந்தது. இவருடைய சீடர்கள் பலர், பின்னர் தங்கள் குருவின் வழி சென்று, பல நூல்களை இயற் றினர்.
சாரிபுத்தரின் சீடருள் சிலர் தாமே பல நூல்களை இயற்றிப் பொலன்னறுவைக் கால இலக்கிய வளர்ச்சிக்குதவினர். வடமொழி யிலுள்ள காவிய இலக்கணங்களை யொட்டிப் பாலியில் எழுதப்

பொலன்னறுவைக்காலப் பண்பாடு : இலக்கியம் 115
பெற்ற வுத்தோதய என்ற யாப்பிலக்கண நூலின் ஆசிரியரான சங் கரக்கிதர், யோக வினிச்சய முதலான வேறும் நூல்களையும் எழுதி யுள்ளார். இவர் காலத்தவரான சுமங்கலர் அபிதம்ம நூல்களுக் குப் பல விளங்கங்களைத் தந்தவர். சா ரிபுத்தரின் சீடர்களில், இவர் களைத் தவிர புத்த நகர், வாசிஸ்ஸரர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் காலத்தவர்களான உதும்பரகிரி, மேதங்கரர், பியதஸ்ஸி என்போரும் பல நூல்களை ஆக்கியுள்ளனர். சாரிபுத்தரின் மற்ருெரு சீடரான தர்ம கீர்த்தி தேரர் பாடிய தாடாவங்ஸ என்பது பெருமதிப் பைப் பெற்ற 4. JnTL - @n) 7 (g5 uĚ . தர்ம ர்ேத்தி தேரர் சூளவம்சத்தின் முதற்பாகத்தைப் பாடியதாகப் பொதுவாகக் கொள்வர். இந்நூலி அலும் சமஸ்கிருத காவிய, அலங்கார உத்தி முறைகள் கையாளப்பட் டிருத்தலைக் காணலாம். எனவே பொலன்னறுவைக் காலத்தில் பாலி மொழியில் நடைபெற்ற இலக்கிய முயற்சிகள் விளக்க நூல் களை எழுதும் துறையிலேயே அதிகமாக நடைபெற்றன. எனினும், ஒரு சில ஆக்க இலக்கியங்களும், இலக்கண நூல்களும் தோன்ற லாயின. இவற்றில் வடமொழிச் செல்வாக்கு மிகுதியாக இருந்தமை கவனிக்கத்தக்கது.
ஆ. சமஸ்கிருதம்
அனுராதபுர காலத்திலேயே சமஸ்கிருதம் இலங்கைக் குருமார் களால் பெரிதும் பயிலப்பட்டு வந்தது. மஹாயான பெளத்தத் துடன் சமஸ்கிருதத்துக்கிருந்த தொடர்பே, அம்மொழிக்கு இலங் கையில் ஒரு வித எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. தேரவாத மதத் தைப் பின் பற்றியோர், வடமொழியை ஒருவகைத் துவேஷத்துடன் நோக்கலாயினர். இருப்பினும், குறிப்பாகப் பிந்திய அனுராதபுர காலத்திலிருந்தே இலங்கையிலுள்ள பெளத்த அறிஞர்களால் அது பெரிதும் பயிலப்பட்டு வந்தது. பொலன்னறுவைக் காலத்திலேயே, இலங்கையில் சமஸ்கிருதக் கல்வியின் வளர்ச்சி உச்ச கட்டத்தை எய்திற்று என்பர். சமஸ்கிருதத்தைப் பயின்று அம்மொழியிலேயே புலமைபெற்று நூல்களைப் புலவர்கள் எழுதியதோடு, அம்மொழிச் சொற்களும் இலக்கண அமைதிகளும் மிகுதியாகப் பாலி, சிங்கள மொழிகளிற் புகுந்து அவற்றைப் பெரிதும் பாதித்தன.
அரசியல் சமூகத் துறைகளிலும் வடமொழி நூல்களின் செல் வாக்குப் பரவியிருந்ததை முன்னரே கவனித்துள்ளோம். சோழராட் சியில் சைவ, வைணவ மதங்கள் இலங்கையில் வளர்ச்சி பெற்றிருந் தமையும், தென்னிந்தியப் பிராமணர்கள் இலங்கையில் குடியேறி யிருந்தமையும், விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற மன்னர்க ளின் ஆதரவை இவர்கள் பெற்றிருந்தமையும் பொலன்னறுவைக் காலத்தில் சமஸ்கிருதம் பரவத் துணையாக விருந்த கரரணிகளா

Page 64
16 பண்டைய ஈழம்
கும். சமஸ்கிருத மொழியிலும் பொலன்னறுவைக் காலக் கல்வெட் டுக்கள் பொறிக்கப் பெற்றமை அதன் செல்வாக்கை பிரதிபலிக்கின் றது. கல்பொத்த பாறைப் பொறிப்பும், நிஸங்கமல்லனது பொறிப் புக்கள் பலவும் தொடக்கத்தில் அல்லது முடிவில் அழகிய சமஸ்கி ருதச் செய்யுள்களைக் கொண்டவை.
பொலன்னறுவைக் கால இ லக் கி ய மறுமலர்ச்சியிற் பங்கு கொண்ட அறிஞர்கள் பலர் சமஸ்கிருதத்திலும் பாண்டித்திய முடையவர்கள். அவர்களுட் சிலர் சமஸ்கிருதத்திலேயே நூல்களை யும் எழுதியுள்ளனர். முன்னரே நாம் குறிப்பிட்டிருந்த உதும் பரகிரி மஹா காசியப்ப தேரர் தமது வடமொழி யிலக்கண வன்மையைக் கொண்டு பாலாவ பொதன என்பதை சாந்திர வியாகரணவைப் பின் பற்றி எழுதினர் சாரிபுத்த தேரரும் வடமொழி வன்மை மிக்க வராதலால், பஞ்சகாலங்கார என்பதற்கு ஒரு விளக்கத்தை எழு தியதுடன் வடமொழி யிலக்கணச் சுருக்க மொன்றையும் ஆக்கிய தாகக் கொள்வர். குணகரர் என்பாரின் டாத்ரீகரண என்பதற்கு புத்த நாகர் ஒரு டீகாவை யெழுதினர். சதகம்’ என்ற வகைப் பாடல் முறையைக் கைக்கொண்டு, புத்தர் மீது புகழ் மாலைகளைப் பொலன்னறுவைக் காலப் புலவர்கள் தொடுத்தனர். அபயகிரி விகா ரையைச் சேர்ந்த உத்தர மூலக்கல்விக் கழகத்தில் இருந்த அனுருத்த என்பார், அனுருத்த சதகவை இந்திய முன்மாதிரிகளையொட்டி எறத்தாழ இந்திய சதகங்களுக்கு நிகரான தரத்தையுடையதாக இயற்றினர். நாமாஷ்டசதகம் என்பதும் இக்காலத்து நூலாகலாம் புத்த-கத்ய என்ற மற்ருெரு அருமையான நூலும், இதே காலக் தைச் சேர்ந்ததாகப் பொதுவாக நம்பப்படுகின்றது. பொலன்னறு வைக் காலத்தில் தோன்றிய சமஸ்கிருத நூல்கள் தொகையில் குறை வாக இருப்பினும் தரத்தில் உயர்ந்தவையாக விருத்தல் பனங் கொளத் தக்கது.
இ, சிங்களம் :
கவிதை : அனுராதபுரகாலத்தைப் பார்க்கினும், பொலன்னறு வைக்காலத்தில் சிங்களமொழி எவ்வளவோ விருத்தியடைந்தமை யால் இலக்கியங்கள் அம்மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் தோன்றின. பாலியைப் போலவே, சிங்கள மொழியும் அதில் தோன் றிய இலக்கியங்களும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கை மிகுதியாகக் கொண்டிருந்தன. விஜயபாகு தானே ஒரு சிறந்த கவியாகக் திகழ்ந் ததுமன்றி, தன் அவைக் களத்தில் பல சிங்களப் புலவர்களையும் ஆதரித்தான் எனச் சூளவம்சம் கூறியுள்ளது. இதனல், பல நூல் கள் விஜயபாகுவின் காலத்திலேயே தோன்றி யிருத்தல் கூடும். ஆயின், அத்தகைய ஒரு நூல்தானும் இன்று எமக்குக் கிட்டவில்லை

பொலன்னறுவைக் காலப் பண்பாடு: இலக்கியம் 117
சமஸ்கிருத மகாகாவிய அமைப்பையும் இலக்கணங்களையும் பின் பற்றிப் பாடப்பட்ட இரு கவிதை நூல்கள் பொலன்னறுவைக் காலத்தைச் சேர்ந்தவையாக எமக்கும் கிடைத்துள்ளன. இவை யிரண்டுமே இரண்டு ஜாதகக் கதைகளைக் கருவாகக் கொண்டவை. பிராமண வடிவில் வந்து ஐயமிரந்த சக்கக் கடவுளுக்கு, தானங்கள் வழங்குவதைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட முய லாக அவதரித்த போதிசத்துவர், தன் உடலையே தானமாக வழங் கிய கதையைக் கூறும் சசஜாதகக் கதையையே, முதலாவது நூலான சசதாவத கருவாகக் கொண்டுள்ளது. கதையைச் சுவைபடக் கூறு வதில் கவனமெடுக்காது, வடமொழிக் காவிய இலட்சணங்களைப் புகுத் துவதிலும், வருணனைகளை அளவுக்கும் தேவைக்கும் மிஞ்சிப் பெய்வதிலும் இந் நூலாசிரியர் ஈடுபட்டுள்ளார். பல வகை அணி களில் (அலங்கார) தமக்கு உள்ள ஆற்றலை வெளிப்படுத்தவும் நூலேப்பயன் படுத்தியுள்ளார். லீலாவதியின் ஆட்சியின் (11971200) போதே பாடப்பெற்றது என்பதை நூலில் வரும் செய்யுள் ஒன்று அறியத் தருகின்றது. மகாதேவ ஜாதகக் கதையை இதை முறையில் சிங்களக் கவிதை வடிவில் தந்த நூல் முவதெவுதாவத என்பதாகும். இவையிரண்டும், இவற்றுக்குப் பின் எழுந்த கவ்சிளு மின (குசஜாதகக் கதையைக் கூறுவது)வும், கீ (Gi) என்ற ஒரு வகை (எதுகையில்லாத ஈரடிச்) செயுட்களால் ஆனவை:
வசன நூல்கள்; குருளுகோமி, வித்யாசக்கரவர்த்தி போன்ற அறிஞர்கள் “பொலன்னறுவைக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்து வசன இலக்கியங்களை எழுதினர். குருளுகோமியின் நூ ல் களில் முந்தியதான தர்மபிரதீபிகாவவை ஒரு ‘பரிகதா" என அதன் அசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் இலக்கிய நயம் மிக்க தெனவும், பெளத்தக் கதைகள் பலவற்றைக் கொண்ட ஒரு கலைக் களஞ்சிய மெனவும் கூறுவர். இதன் நடை "பண்டித' நடையெனக் கூறத் தக்கதாகவுள்ளது, சமஸ்கிருதச் சொற்கள் (தத்சமங்கள்) பெருந் தொகையாக இடம் பெற்றுள்ளன. குருளுகோமியின் இரண்டாவது நூலான அமாவதுர, முந்திய நூலைக் காட்டிலும் வேறுபட்ட, எளிய நடையில் அமைந்தது. புத்தரின் பெருமையைக் கல்வியறிவில்லாத சாதாரண ஒருவனும் விளங்கிக் கொள்ளும் வகையில் இந் நூ ல் அமைக்கப்பட்டது. சிங்கள வசன இலக்கியங்களில் அமாவதுரவுக்குத் தனியிடம் உண்டு. வித்யா சக்கரவர்த்தி யெனச் சிறப்பிக்கப்பட்ட ஓர் ஆசிரியரால் 12-ம் நூற்ருண்டளவில் எழுதப்பட்ட புத்சரண என்பதும், புத்தரின் மீதுள்ள அபிமானத்தை வளர்ப்பதற்கெனவே எழுதப்பட்டது. உவமைகள் முதலிய அணிகளைத் திறமையாகக் கையாண்டு, சபையினரிடையே பேசுவதுபோன்ற பாணியில் இந்நூல் அமைக்கப்பட்டது,

Page 65
18 பண்டைய ஈழம்
"சன்ன'க்களும், "கடபத’க்களும் சிங்களத்திலும் சமய விளக்க நூல்கள் இக்காலப் பகுதியில், கல்வியறிவில் மேம்படாதவர்களுக் க்ென எழுதப்பெற்றன. இவற்றுள் சன்ன, கடபத, பரிகதா என மூன்று வகைகள் இருந்தன. சன்ன என்பது, பாலி அல்லது சமஸ் கிருதப்பாடல்களுக்கு எழுதப்படும் பதவுரையாகும்; அதாவது ஒரு பாடலின் பொருளை, உரை நடைக்குரிய ஒழுங்கில் சொல்லுக்குச் சொல் நேர்ப்பொருள் கூறுவதாம். இதில், பாடலில் வரும் சொற் களை யெடுத்துவிட்டால், மீதியாக உள்ளது தனித்து நிற்கக்கூடிய அமைப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். கடபத என்பது, தமிழில் ‘அரும்பத விளக்கம்" என்பதற்கு நிகரானது. பரிகதா என்பதில் ஒரு நூலை விளங்கு தற்கு உதவியாக, தெரிவு செய்த பகுதிகளுக்கு விரிவான விளக்கங்கள் அல்லது குறிப்புக்கள் தரப்படும். வெஸ்ஸ் துரு தா சன்ன என்பது பாலியில் உள்ன வெஸ்ஸந்தர ஜாதகவுக்கு எழு தப்பெற்றது, எட்டு ஜாதகங்களின் " சன்ன'க்கள் "அட்ட தா சன்ன" என்பதில் அடங்கும். சாரி புத்தரால் இயற்றப்பெற்றதாகக் கூறப் படும் அபிதர்மர்த்த சங்சிரஹ சன்ன மூலம் அனுருத்தரின் அபிதம் மத்த சங்கிரஹ என்ற தத்துவ நூல் விளக்கம் பெற்றது, இந்திாலி களில், சிறப்பாக சாரிபுத்தரின் நூலில், கையாளப்பட்ட மொழியா னது மிகுதியான வடமொழிக் கலப்பையுடையது. இவ்வாறு சிங் களச் சொற்களுடன் சங்கதச் சொற்களை அதிகமாகக் கலந்து எழு துதல் அக்காலத்து வழக்கமாகியிருந்தது, இதையே "மிசிர - சிங்கள்" என அழைத்தனர். கடபத நூல்களில் முக்கியமானவை ஜாதக அடுவ கடபதய, மஹாபோதிவம்ச கிரந்த பத விவரண என்பனவாகும். ஜாதக அடுவ கடபதவும் "மிஸிர சிங்ஹள நடையிலேயே எழுதப்பட்டதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பல சொற்களுக்குச் சமஸ்கிரு தத்திலேயே விளக்கந் தரப்பட்டுள்ளது. இந் நூ ல் எழுதப்பட்ட காலத்தில் (12-ம் நூற்.) தமிழ்ச் சொற்கள் பல சிங்களத்திற் கலந் துள்ளன.
V. கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம்.
சோழராட்சியில் கட்டிடங்கள்: சோழர் இலங்கையைக் கைப்பற் றியபோது அனுராதபுரத்தில் விளங்கிய முக்கிய கட்டிடங்கள் அழி வுற்றதுமன்றி, அவர்களுடைய ஆட்சியில் அவை மேலும் புறக்கணிக் கப்பட்டுப் பாழெய்தலாயின. சோழர் பொலன்னறுவையை இராச தானியாக்கி, அங்கும், மாதோட்டம் போன்ற பிற இடங்களிலும் இந்து சமயக் கோவில்களை நிறுவினர். இக்கோவில்கள் தென்னிந்தி யாவில் பெருவளர்ச்சி யடைந்திருந்த கோவிற் கட்டிட முறையையே பின்பற்றிய தெனினும், இங்கு நிறுவப்பட்டவை உருவிற் சிறியவை யாயிருத்தல் குறிப்பிடத்தக்கது. இவற்றுள் இன்னும் நன்னிலையிற் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆகிய (2-ம் சிவ

பொலன்னறுவைக் காலப் பண்பாடு: கல் 115
தேவாலே எனப்படுவது) சோழர் காலக் கட்டிட முறைப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது. பொலன்னறுவையில் நிறுவப்பட்டிருந்த பிறகோயில்களும், மாதோட்டம், கந்தளாய், பதவியா போன்ற பிற இடங்களில் கட்டப்பட்டவையும் இப்போது அழிந்துவிட்டன். நாதனர் கோயில் என வழங்கப்படும் வெல்கம் வெஹர சோழர் காலத்தில் புதுக்கப்பட்டு ஆதரிக்கப்பட்ட ஒரு பெளத்த விகாரை யாகும். சோழர் இலங்கையில் நிறுவிய கோயில்களில் வைத்திருந்த வெண்கல உருவச் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அச்சிலைகளின் சிற்ப முறையையும் எழிலையும் கலா விற்பன்னர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.
1-ம் விஜயபாகுவும் அட்டதாகேயும் : விஜயபாகுவின் காலத்தி லேயே, நீண்ட காலத்துக்குப்பின் சிங்களக் கற்றச்சர்களும் ஆசாரி களும் தொழிற்பட ஆரம்பித்தனர். விஜயபாகு பழைய கட்டிடங் களைப் பழுது பார்ப்பதிலும் மீட்பதிலுமே தனது கவனத்தைச் செலுத்த வேண்டியவனனன். இவன் புதிதாக நிறுவிய கட்டிடங் கள் குறைவு அனுராதபுரத்தில் தனது முடிசூட்டு விழாவை நடத்து வதற்கு ஒரு மாளிகையை அமைத்தான். அதன் சிதைவுகள் அண் மையில் தொல் பொருளாய்வுப் பகுதியினரால் அகழ்ந்து ஆராயப் பட்டன. புனிதப்பல் எச்சத்துக்கென இவன் நிறுவிய கோவில், பின்னர் வேளைக்கார்ர் பாதுகாப்பில் விடப்பட்டது. அது வே பொலன்னறுவையிலுள்ள 'அட்ட தாகே யென்ற கட்டிடச் சிதை வாகும். இக்கட்டிடமும், அனுராதபுரத்திலுள்ள பழைய கட்டிட அமைப்பையே தழுவியுள்ளது. இக்கட்டிட அமைப்பைக் கூர்ந்து நோக்கியவர்கள், இதனுடைய ஒரு மேல்மாடியிலேயே, தந்ததாது வைக்கப்பட்டிருந்த தென்பதை யுணர்வர். விஜயபாகுவின் மறை வுடன் தொடங்கிய அரசுரிமைத் தகராறுகள் சுமார் 40 ஆண்டுகள் நீடித்து, கட்டிடத்துறை விருத்திக்குத் தடையாயின. தொடர் பாகக் கலை விருத்தியடையாது போனதால், கற்றச்சர்கள் பராக் கிரமபாகுவின் காலத்தில் குறைவாக விருந்தனர்.
மகாபராக்கிரமபாகுவின் கட்டிடங்கள் : 1-ம் பராக்கிரமபாகுவும், நிஸங்க மல்லனுமே பொலன்னறுவைக் கால மன்னர்களுள் கட்டிடத் துறையில் பெருஞ் சாதனைகளை நிகழ்த்தியவர்கள். பொலன்னறுவை யில் இன்றும் பார்வையாளரின் கவனத்தைப் பெறுகின்ற கட்டிட அமைப்புக்கள் பல பராக்கிரமபாகுவினுடையவை. ஆளாஹனப் பிரி வெணுவுக்குரிய கட்டிடங்களில், இவன் நிறுவியவை இலங்காதிலக உருவ வீடும், பத்தசிமபிரசாதவும் (உபோ சத வீடு) ஆகும். கிரி தாகபம் என இப்போது அழைக்கப்படும் ரூபவதி சேத்தியவும் சுபத் திரா சேத்தியவும் பராக்கிரமபாகுவின் காலத்தவையாகும். இவையும் ஆளாஹன பிரிவெனத் தொகுதிக்குரியவையே. ஆளாஹன பிரிவெ

Page 66
Ꭵ 70 பண்டைய ஈழம்
ஞவின் அமைப்புத்திட்டம் போற்றுதற்குரிய முறையிலிருப்பதாக அறி ஞர்கள் கருதுவர். மிகப் பெரிதாகத் திட்டமிட்டு நிறைவேருத நிலை யிற் காட்சியளிக்கும் தமிழ தூபம், இந்தியாவிலிருந்து கொண்டுவரப் பட்ட தமிழ்ப்போர்க் கைதிகளைக் கொண்டே நிறுவப்பட்டதாகக் கூறு வர். இது ஒரு புதுவகைக் கட்டிட அமைப்பைப் பின்பற்றியதாகலாம்
திவங்க 66 foes cy
கல்வி ாரை (? ஒதீாமரைக்கேணி
இலங்காதீலக
'ဖိနှိ 蓝 回] 队 ::தெழ்லமகரசிய)ே தேவால் - ο ܐܽܐܽ W
ங்கித்விகாரை غلق.: சிவ தேவால் த
卑。偲三去リ
if6figQty ஜீழ ததgதரிவில்கள் ஆவதேவால
ஜர் နှီးမှူးနှီးမစီရှိုးနှီးမိဇီးဖe
ஜிஷரிட்டதாகே ! S26) (1685
リ சிவ தலாக
2零露 عه عهده 珑 #ಣ್ಣೆ äÌÇä0ಣ್ಣ
மலTனது மாளி
நபர்க்கிரமபாகுவீதுக s o ဦမျိုးဂြိုခြု ಙ್ಗಹಂ॥
SS *宇ss== 2 UJTë, fJDUT5(?)65ds &&) s {E} (JTg5G) 6525s,60s)
பொலன்னறுவையின் அமைப்பு
எனவும் கூறுகின்றனர் கல் விகாரை யென வழங்கும் உத்தராரா மையிலுள்ள ஒவ்வொரு புத்தர் சிலைக்கும் ஒரு கோவில் முன்னர் நிறுவப்பட்டிருந்தது. பொலன்னறுவையின் வடகோடியில் அமைந் துள்ள ஜெதவனுராம விகாரையின் உறுப்புக்களாக விளங்கிய திலங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÖLmash speða á án af L.sínum.6): så) 12 l
உருவவீடு. தந்ததாதுவுக்கென அமைக்கப்பட்ட ஒரு வட்டதாகே தாமரைக்கேணி முதலான கேணிகள் குறிப்பிடத்தக்கவை. பழைய பொலன்னறுவையின் தென்புறத்தில் உள்ள பொத்கல் விகாரையும் இவனது காலத்தைச் சேர்ந்ததே. சமயச் சார்பில்லாத கட்டிடங்கள் சிலவும் இவனல் நிறுவப் பெற்றுள்ளன. மகா பராக்கிரமபாகுவின் அரச மர்ளிகை, செங்கற்களாலான ஒரு பிரமாண்டமான கட்டிட மாக இருந்திருக்க வேண்டும். இர ண் டு மாடிகளையாவது இது கொண்டிருக்க வேண்டும். சூளவம்சத்தில். இம் மாளிகை ஏழுமாடி களைக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. மாளிகையிலிருந்து கிழக் குப்புறமாகச் சென்ருல் பராக்கிரமபாகுவின் வேத்தவை மண்ட பத்தை அடையலாம். கல்லாலான மேடையொன்றில் நிறுவப்பட்ட இக்கட்டிடத்துச்குரிய பழைய பெயரான ராஜவேஜி புஜங்க மண்டபம் வாயிற்படி யொன்றில் பொறிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். அரச மாளிகையின் சுற்றுப்புறத்தில் நந்தவனம், தீபுய்யான முதலான பூங்காக்களில் குமாரபொக்குண எனப்படும் சி லா பொக்கரணி போன்ற அழகிய கேணிகள் நிறுவப்பட்டிருந்தன. முன்னர் குறிப் பிட்ட தாமரைக் கேணியை (பதுமனஹ கொட்ட) ”கல்லில் உரு வான காவியம்" என வர்ணித்துள்ளனர். இவ்வாறு சமயத் தேவை களுக்கும், உலகியல் தேவைகளுக்கும் என அமைக்கப்பட்ட கட்டிட அமைப்புக்கள் அவனது பெருமையையும், தாராண்மையையும், அவற்றிலும் மேலாக அவனது அழகியலுணர்வையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
நிஸங்க மல்லனது சாதனைகள் : பராக்கிரமபாகுவைத் தொடர்ந்து அரசைப் பெற்ற நிஸங்க மல்லன், தன் முன்னேனது கட்டிடத்துறைச் சாதனைகளை விஞ்சவேண்டும் என்ற நோக்குடன் செயலாற்றினன் தன் குறுகிய ஒன்பதாண்டு ஆட்சியில், இவனுல் நிறுவப் பெற்ற தாகக் கூறப்படும் கட்டிடங்கள் உண்மையிலேயே இவனது காலத்தில் முடிவுற்றன வெனின், இத்துறையில் இம் மன்னன் தனக்குரிய புகழுக்கு எல்லா வகைகளிலும் அருகதை பெற்றுள்ளான் எனலாம். கல்-பொத்த (கல்லா லான புத்தகம்), நிஸங்க லதா மண்டபம் போன்ற புதுமையான கட்டிட அமைப்புக்களும் நிஸங்க மல்லன் காலத்திலே வெற்றியுட்ன் உருவாக்கப்பட்டன. இம் மன்னன் தனக்கு நிறுவிய மாளிகையின் சிதைவுகள் இன்றும் உள்ளன. கட்டிடக்கலை யம்சங் கள் இவற்றில் குறைவாகவேயுள்ளன. இதுவும் இரண்டு மாடிகளை யாவது கொண்ட செங்கற் கட்டிடம் என்பது படிக்கட்டுக்களாலும், பிற இடிபாடுகளாலும் புலப்படும். நிஸங்க மல்லனது வேத்தவை மண்டபத்தில், அரசனது இருக்கையினைத் தாங்கிய கல்லாலான சிங் கமும் வேத்தவை யுறுப்பினர்களின் இருக்கைகளைக் குறிப்பிடும் பொறிப்புக்களையுடைய தூண்சளும் இப்போதும் பேணப்பட்டுள்ளன. தளதா மாளுவ என்ற பகுதியில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க
I6

Page 67
*召沙 பண்டைய ஈழம்
கட்டிடம் வட்டதாகே யாகும். நிஸங்க மல்லனது ஒரு பொறிப்பு இதை அவன் நிறுவியதாகக் கூறியபோதும், கட்டிட அமைப்பைக் கொண்டு அது அவனது காலத்துக்கு முந்திய தென்பர். சத்மஹால் பிரசாத என அழைக்கப்படும் ஒரு புதுவகைக் கட்டிட அமைப்பும் நிஸங்க மல்லனுடையதாகக் கொள்ளப்படினும், அவனே நிறுவினன் என உறுதியாகக் கூறு தற்கு ஆதாரமில்லை. உயர்ந்து, படிப்படியா கக் குறைந்து செல்லும் ஒரு கோபுர அமைப்புக் கொண்ட இவ் வுறுதியான கட்டிடம் வட சீயத்திலுள்ள ஒரு கட்டிடத்தை நிகர்த்த தால், அங்குள்ள முறை இலங்கையைப் பாதித்திருக்கலாம். அல் லது இந்தியாவிலிருந்து, பின்னர் அழிந்துபோன ஒரு கட்டிடத்தை அடியொற்றி இது நிறுவப் பெற்றிருக்கவும் கூடும். ஹட்டதாகே என்பதை இவனே நிறுவினன் என்பதற்கு ஆதாரமுண்டு. பல் எச் சத்தை வைத்தற்குக் கட்டப்பெற்ற இக் கட்டிடத்திலும் ஒரு மேல் மூாடி இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. ஒரு பெரும் பாறைக் கல்லை அழுத்தமாக்கி அதில் இலங்கையிலுள்ள மிக நீண்ட கல் வெட்டை அவன் பொறிக்கச் செய்தான். இதுவே கல்பொத்த (Gai-Pota) என வழங்கப்படுகின்றது. சுமார் 27 அடி நீளமும் 5 அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட இக் கல்லானது வரலாற்று முக்கியத்தைப் பெற்றுள்ளது. பொலன்னறுவையிலுள்ள மிகப் பெரிய (பூரணமான) தாகபம் றன்கொத் தாகபம் என வழங்கப் படும் ரூவன்வலி தாகபமாகும். 180 அடி உயரத்தையும், அடிப்பா கத்தில் 550 அடி சுற்றளவையுங் கொண் டது இக் கட்டிடம் நிஸங்க மல்லன் மறைந்ததைத் தொடர்ந்து உண்டான தகராறுகள், கட்டிடத் துறையில் மேலும் அபிவிருத்திகள் ஏற்படுவதைத் தடுத் தன. ஈற்றில் கலிங்க மாகனது ஆட்சியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இக் கட்டிடங்களிற் பல அழியவும் பாழெய்தவும் காரணமாயின. 13-ம் நூற்முண்டின் முடிவில் பொலன்னறுவையின் புகழை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இவை எவ்வித பலனையும் தர வில்லை. சுமார் ஆறு நூற்ருண்டுகள் வரையில் காடுகளால் மறைக் கப்பட்ட இப் பெரு நகரின் பெருமை அண்மைக் காலத் தொல் பொருள் அகழ்வுகள் மூலம் துலங்க வைக்கப்பட்டுள்ளது.
கட்டிடமுறையில் புதிய விருத்திகள் : பொலன்னறுவைக் காலத் தில் நிறுவப்பட்ட முக்கிய தாகபங்கள் அனுராதபுரகாலத்துப் பாரிய தா கபங்களையே மாதிரிகளாகக் கொண்டு அமைக்கப் பெற்றன. தமிழதூபம் போலவே பராக்கிரமபாகுவின் காலத்தைச் சேர்ந்த வேறிரு (டெடி கமை, யுதங்கஞ ஆகிய இடங்களிலுள்ள) தாகபங் களும் நிறைவேருத தோற்றத்தைக் கொண்டிருப்பதால், ஒரு வேளை ஸ்தூப முறையின் வளர்ச்சியில் இதுவும் ஒரு புதிய போக்கைக் காட்டலாம் எனப்படுகின்றது. சேத்திய-கர என்ற கட்டிடவகை இலங்கையில் எய்திய வளர்ச்சியின் இறுதிப் படியைக் காட்டுவதாக

பொலன்னறுவைக் காலப் பண்பாடு: கலை ፲ 2 ፵
பொலன்னறுவையிலுள்ள வட்டதாகேயைக் குறிப்பிடுவர். பிளிமகே எனப்படும் படிமமனை என்பதே பொலன்னறுவைக் கா லத் தி ல் அதிக முக்கியம் பெற்றிருந்தது. வசிவுக் கூரை யுடையதும், செங் கல்லால் கட்டப்பட்டதுமான இக் கட்டிடவகை அடிப்படையில் இந்துக் கோவில்களைப் போன்றது. தூபா ராம எனப்படுவதும், இலங்காதிலகவும், திவங்க-படிமா-கரவும் பொலன்னறுவையில் இக் கட்டிட வகைக்கு உள்ள சிறந்த உதாரணங்களாகும். முன்னை யதில், இருக்கும் புத்தர் சிலையும், பின்னைய இரண்டிலும் நிற்கும் புத்தர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. தூபாராம ஒன்றிலேயே வளைந்த மேற்கோப்பை இன்றும் காணமுடிகின்றது. நிஸங்க லதா மண்டபம், சத்மஹால் பிரசாத என்பனவும் புதிய அமைப்புக் களைக் கொண்டுள்ளதை முன்னரே கூறினேம்.
சிற்பம் : சிற்பக்கலையில் ஈடுபட்ட கலைஞர்கள், கட்டிடக் கலைஞர் களுக்குத் துணையாக, அவர்கள் நிறுவும் கட்டிடங்களின் உறுப்புக்க ளாக உள்ளவற்றையும், சில வேளைகளில் தனியான சிற்பங்களையும் செதுக்கி வந்தனர். பொலன்னறுவைக் காலப் புத்தர் சிலைகளுக்கு, கல்விகாரையில் செதுக்கப்பட்டுள்ள நான்கு உருவச் சிலைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும். அவை யனைத்துமே பெரிய சிலைகள் என்பதை அவற்றின் பரிமாணங்கள் விளக்கும். படுத்திருக்கும் பாணியில் உள்ளது 46 அடி நீளமும், இருக்கும் திருவுருவம் 15 அடி யு'ரமும், மற்ருெரு இருக்கும் பாணியில் செதுக்கப் பெற்ற புத்தர் சிலையும் முன்னையதை விடக் குறைந்த உயரமும் கொண்டவை. இவற்றைவிட, நின்ற திருவுருவச்சிலை (22 அடி உயரம்) கவர்ச் சியைக் கொண்டு விளங்குகின்றது. வட்டதாகேயில் உள்ள புத்த உருவங்கள் இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத ஒரு தனியான முறையில் அமைந்தவை. பொத்கல் விகாரையின் முன்ள்ைள ஒரு பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட உருவச்சிலை, எகைப் பிரதிபலிக் கின்ற தென்பதை ஆராய்ச்சியாளர் முடிவுகட்டவில்லை. அகஸ்தியர் அல்லது புலஸ் தியர் சிலையாகவே நிறுவப்பெற்றது என ஒரு சாராரும், பாரக்கிரமபாகுவின் சிலையே எனப் பிறிதொரு சாாரும், (lpாண்
பட்டு நிற்கின்றனர். இச் சிலையின் கையிலுள்ளதைப் புத்தகம்(ஓலை) எனப் பொதுவாகக் கொள்வர். ஆஞல் பரணவிதான அதை அரசச் சின்ன(யஹள)மாகக் கொள்வர். _prnt di6)rio tr(56anti
இல்லா விடினும் வேருெரு பொலன்னறுவைக் கால மன்னனையே அச்சிலை சித்தரிப்பதாக அவர் கொள்கின்ருர், பொலன்னறுவைக் காலத்திலும், கட்டிடங்களின் உறுப்புக்களாகப் படிக்கட்டுத் தொடர் கள். சந்திர வட்டப் படிக்கற்கள் முதலானவை பயன்பட்டன. ஆணுல், இச் சிற்பங்கள் அனுராதபுர காலச் சிற்பங்களுக்கு இணை யான எழிலைக் கொண்டிருக்கவில்லை. சந்திர வட்டக் கற்களில், பொலன்னறுவைக் காலத்தவை ஒன்றேனும் முந்திய காலப்பகுதி யின் குறைந்த தரத்தவைக்கும் நிகராக இருக்கவில்லை, பொலன்

Page 68
24 பண்டைய ஈழம்
னறுவைக்கால சந்திரவட்டக் கற்கள் தேவையற்ற அளவு வேலைப் பாடுகளையும் அலங்கார வேலைகளையும் கொண்டு உருவங்கள் நெருக்க மாகவும் உயிர்த்துடிப்பற்றும் இருப்பதைக் காணலாம். பொலன் னறுவையில் உள்ளவற்றுள் சிறந்ததாக வட்டதாகேயில் உள்ளி சந்திர வட்டக்கல்லைக் குறிப்பிடுவர்.
ஒவியம்: பொலன்னறுவைக் காலத்தில் ஒவியக்கலை வளர்ச்சியுற் றிருந்தமைக்கு இலக்கியங்களில் பல குறிப்புக்கள் இருப்பினும், எமக்கு இன்று கிடைத்துள்ள ஒவியங்கள் மிகச் சில. மஹியங்க ண தூபத்தின் எச்சவகத்தில் வரையப்பட்ட ஒவியங்களே காலத்தால் முற்பட்டவை. திம்புலாகலையிலும், அதற்கு அண்மையிலும் உள்ள விகாரைகளில் ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கல் விகாரையிலும் முன்னர் ஒவ்வொரு புத்தர் சிலையையும் சூழ உருவங்கள் தீட்டம்ப்' பெற்றிருத்தல் வேண்டுமென நம்பப்படுன்றது. ஆனல் உத்தரா ராமையில் உள்ள திவங்க பிளிமகேயிலேயே பெரு மளவு ஒ வி யங்கள் நன்னிலையிற் பேணப்பட்டுள்ளன. ஜாதகக் க  ைத களி ல்* வரும் காட்சிகளையும், புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் சித்த ரிக்கும் ஒவியங்களே இங்கு தீட்டப் பெற்றுள்ளன. புறவுருவங்களை முதலில் சிகப்பில் வரைந்து, பின்னர் மஞ்சள் பச்சை முதலான வேறு வண்ணங்கள் மேலுக்குத் தீட்டப்பெற்றிருக்கின்றன. மொத் தத்தில் கவர்ச்சியும், உருவங்களின் முகபாவங்களைச் சித்தரித்துக் காட்டுவதில் திறமையும், இவற்றில் போற்றுதற்குரிய அம்சங்களா கும். சீகிரி அல்லது அஜந்தா ஒவியங்களுக்கு இவை நிகராக இல் லாதபோதும், இந்த ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தில் இந்தியா விலும் ஓவியக்கலை தேய்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
u uî bà:
1. பொலன்னறுவைக் கால அரசியற் பிரிவுகளைக் காட்ட ஒரு விளக்
கப் படம் வரைக.
2. பராக்கிரமபாகுவின் நீர்ப்பாசனங்களே ፵J5 விளக்கப்படம் {ւp6ծլք
தெளிவுபடுத்திக் காட்டுக.
3. பொலன்னறுவை நகரின் அமைப்புத் திட்டத்தையும், அங் குள்ள கட்டிடங்களின் படங்களையும் சேகரித்து அங்குள்ள கட்டி டங்கள்பற்றி மேலும் விபரங்களைச் சேர்த்துக் கொள்க.

பொலன்னறுவைக் காலப் பண்பாடு. 125
கூட்டு வேலைக்கு
பொலன்னறுவை நகருக்கு ஒரு சுற்றுலா ஒழுங்கு செய்து, அந்நக ரைப் பார்வையிட்டு வந்தபின் வெவ்வேறு குழுக்கள் சுற்றுலாப் பற்றிய வெவ்வேறு அம்சங்கள்பற்றி அறிக்கைகள் எழுதலாம்.
தேர்வு வினுக்கள்:
1. பொலன்னறுவைக் காலப் பொருளியல் வளர்ச்சி அரசியற் கார
ணிகளால் பாதிக்கப்பட்ட வகையினை விளக்குக.
2. பொலன்னறுவைக் கால ஆட்சிமுறையின் அடைந்த முக்கிய
இயல்புகளைக் கூறுக.
3. பொலன்னறுவைக் காலப் பொருளியல் நிலைமைகள்பற்றி ஒரு
கட்டுரை வரைக. -
4. சமயத்துறையில் விஜயபாகு அல்லது மகா பராக்கிரமபாகு ஆற்
றிய பணிகளைக் கூறுக.
5. 'பொலன்னறுவைக் காலத்தில் தோன்றிய கலை வளர்ச்சியின் - முக்கிய இயல்புகளைக் கூறுக.
6. பொலன்னறுவை நகரின் வளர்ச்சிக்கு விஜயபாகு, மகா பராக் கிரமபாகு, நிஸங்கமல்லன் ஆற்றிய தொண்டுகளை விபரிக்க.

Page 69
அத்தியாயம் ஏழு தம்பதெணிய அரசு:
பாண்டியர் செல்வாக்குப் பரவல் i. இரண்டாம் பாண்டியப் பேரரசு i. தம்பதெணிய அரசின் எழுச்சி i. இரண்டாம் ப்ராக்கிரமபாகு iv. தம்பதெணிய அரசின் வீழ்ச்சி
இலங்கை வரலாற்றில், சிங்கள நாகரிகத்தின் புகழ் பூத்த காலங்களான அனுராதபுர, பொலன்னறுவைக் : காலங்களைத் தொடர்ந்து, சிங்களப் பண்பாடும் இலங்கை அரசியலும் அடைந்த வளர்ச்சியில் ஒரு தேய்வு நிலை ஏற்பட்டதாகத் தோன்றுகின்றது. பொலன்னறுவைக்குப் பின் தம்பதெணிய, குருனுகலை, கம்பளை, ரயிகமை, கோட்டை என்பன இலங்கையின் இராச தானிகளாகத் தொடர்ந்து கைக்கொள்ளப்பட்டன. இவற்றுள் பொரும்பாலானவை தென் மேற்கிலங்கையில் அமைந்துள்ளதால், இக்காலப் பகுதியைத் "தென் மேற்கு நோக்கிய பெயர்வுக் காலம்’ எனவும் அழைப்பர். * 'இடைக்காலம்" அல்லது ‘மத்திய காலம்" இலங்கை வரலாற் றைப் பொறுத்த மட்டில் மாகனது படையெழுச்சியோடு தொடர் புடைய நிகழ்ச்சிகளுடன் தொடங்குவதாகவும் கொள்வர். இக் காலப்பகுதியில் தென்னிந்தியாவில் ஆதிக்கம் பெற்ற பாண்டிய விஜயநகரப் பேரரசுகள் இலங்கையின் அரசியற் போக்கையும், பண்பாட்டையும் பாதிக்கலாயின. . தம்பதெணி இராசதானியாக விளங்கிய காலத்தின் முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளையும் இதே காலத்தில் (13-ம் நூற்.) தென்னிந்தியாவில் விளங்கிய பாண்டியப் பேரரசு இலங்கையைப் பாதித்த வகையையும் இந்த அத்தியாயத்தில் கவனிப்போம். பின்வரும் அத்தியாயங்களில், கம்பளை போன்ற இடங்கள் இராசதானிகளாக விளங்கிய காலத்து இலங்கை வரி லாற்றைக் கவனிப்போம். m
i. இரண்டாம் பாண்டியப் பேரரசு.
13-ம் நூற்றண்டி ன் முற்பகுதியில், 3-ம் இராஜராஜன், 3-ம் இராஜேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களின்போது, சோழ்ப் பேரரசு பலவகை இடையூறுகளின் மத்தியில் வீழ்ச்சி யெய்தியதை முன்னர் கவனிப்போம். அதே காலப் பகுதியில், பாண்டிய அரசு தன் வலியைப் பெருக்கி சோழப் பேரரசு முன்னர் எய்தியிருந்த மேன்மையைத் தன தாக்கியது. 13-ம் நூ ற் மு ன் டி ன் பெரும் பகுதியில் இவ்வாறு எழுச்சி பெற்ற இரண்டாம் பாண்டியப் பேரரசு தென்னிந்தியாவில் ஆதிக்கஞ் செலுத்தியதுமன்றி, இலங்கை மீதும்

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 12?
தன் செல்வாக்ககப் பர்ப்பி வந்த்து. 1218-ல் அரசெய்திய மாற வர்மன் சுந்தர பாண்டியன்’ என்பrன்ே, 'பர்ண்டிய்ப் பேரரசின் எழுச்சிக்கு அடிகோலியவன். '3-ம் குலோத்துங்களுல். பாண்டிய அரச மரபெய்திய அவமானத்தைத் துடைக்க வெண்ணி, மூப் பெய்திய சோழ மன்னனையும் அவனது பட்டத்திளவரசனையும் (3-ம் இராஜராஜன்) கலைத்து ஆயிரத்தலியில் மாறவர்மன் சுந்தர பாண் டியன் வீராபிஷேகம் நடத்தி மீண்டான். ஹொய்சள மன்னனது உதவியுடனேயே, சோழன் தன் உரிமையை நிலைநாட்ட முடிந்தது. 3-ம் இராஜராஜன் பட்டமெய்திய பின், “ பாண்டியருக்குத் திறை கொடுக்க மறுத்து, பாண்டிநாட்டுக்கு ஒரு படையையும் 'அவன் அனுப்பி வைத்தான் காடவர் குலத்தவனுன் கோப்பெருஞ்சிங்கன் என்பவனும் இப்போது பாண்டிய நட்பாளனுக இருந்து, 3-ம் இராஜ ராஜனுக்குத் தோல்வியை ஏற்படுத்தியது மன்றி, அவனைத் தெள் ளாறுப் போரின் பின் கைதியாக்கிச் சேந்தமங்கலம் என்ற இடத் திலுள்ள அரணில் வைத்திருந்தான். ஹொய்சள மன்னனது 'தலை யீட்டாலேயே, இம்முறையும் சோழன் விடுதலை பேறவும்,' அரசுரி மையை மீட்கவும் முடிந்தது. ஹொய்சள மன்னனல் (2-ம் ந்ரசிம் மன்) பாண்டிய அரசனும், கோப்பெருஞ்சிங்கனும் தோற்கடிக்கப் பட்டனர். இப் போருக்குப் பின், சோழர், பாண்டியர், ஹொய் சள்ர் ஆகியோரிடையே அமைதி நிலவி வ்ரலாயிற்று. 'ஹொய்ச்ள மன்னணுகப் பின்னர் விளங்கிய சோமேஸ்வரன், சோழ இளவரச ஞன 3-ம் இராஜேந்திரனுக்கு உதவியதால், பாண்டிய இளவர்சர் கள் போரில் தோற்கடிக்கப்பட்டனர். . ஆனலும், சோழ அரசு மீட்சி பெறவோ, அன்றி பாண்டிய அரசு வீழ்ச்சி யெய்தவோ இச் சண்டை வழிகோலவில்லை. . . : , , ...,
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (1251 - 1268) என்பவனுட்ைய ஆட்சியின் போது, பாண்டியப் பேரரசு தன் புகழின் உச்ச நிலையை எய்தியது. இவன் பல போர்களை நடாத்திப் பேரரசின் எல்ல்ைகளை விரிவடையச் செய்தான். சேர, சோழ, ஈழ ஹொய்சள மன்னர் களுடன் பொருதி அவர்களை அடிபணிய வைத்ததுமன்றி, " திறை செலுத்தும் படியும் செய்தான். பாண, கொங்கு நாடுகளையும் தன் பேரரசுடன் இணைத்து, காகதீய அரசனன் கணபதியையும், அவனது சிற்றரசர்களையும் புறங்கண்டான். நெல்லூர் வரை பாண்டியப் பேரரசு வடக்கே விரிவடைந்தது. இலங்கை அமைச்சன் ஒருவன் து வேண்டுதலின் பேரில், பாண்டிய மன்னனது தம்பியான ஜடாவர் மன் வீரபாண்டியன் ஒரு படையுடன் இலங்க்ைக்கு வந்தான் 'சுந் தர பாண்டியனது போர்ச் சாதனைகள்' அவனை ஒரு 'தலைசிறந்த தென்னிந்திய மன்னன்’ ஆக்குகின்றன: அவனைப் போலவே அவ னுடன் சமகால அரசஞகத் (1253 இலிருந்து) திகழ்ந்த ஜடாவர்மன்

Page 70
! é8 Luar fil-ġu ppb
வீரபாண்டியனும் போர் வெற்றிகள் பல ஈட்டியவன். இலங்கையில் ஒரு படையெழுச்சியை மேற்கொண்டு இலங்கை அரசியலிற் சில மாறுதல்களை இவன் நிகழ்த்தினன்.
1-ம் மாறிவர்மன் குல்சேகரன் (1268-1308) சுந்தர் பாண்டியனைத் தொடர்ந்து ஆட்சியை நடாத்தி, தன் முன்னேரின் வழி சென்று. பாண்டியப் பேரரசின் புகழை நிலை நிறுத்தினன். இவனுடைய காலத்தில், ஹொய்சளரின் ஆதிக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்த பகு திகள் பாவும் பாண்டியப் பேரரசின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இந்தப் பாண்டியனும் இலங்கையின் விவகாரங்களில் தலையிட்டான். மாறவர்மன் குலசேகரன் காலம் வரை ஒற்றுமையுடனும் சிறப்புட னும் விளங்கி வந்த பாண்டிய அரச மரபு, அவன் இறந்தபோது பிளவுபட்டுப் பெருமையை இழக்கலாயிற்று. அவனுடைய இரு புதல் வர்களான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தந்தையின் மறைவைத் தொடர்ந்து தமக்குள் பிணக்குற்றுச் சண்டையிட்டனர். தோல்வி கண்ட சுந்தர பாண்டியன், மல்லிக் கபூர் என்ற முஸ்லிம் படைவீரனது தயவை நாடினன். இதன் விளைவாகப் பாண்டியப் பேரரசு விரைவில் மறையலாயிற்று.
i. தம்பதெணிய அரசின் தோற்றம் : 3-ம் விஜயபாகு
கலிங்க மாகனது ஆட்சியை முடி வுக் குக் கொ ண ர் ந் து நாட்டுக்கு விடுதலை பெறும் இயக்கம் வளர்ச்சி பெற்ற போதே தம்பதெணியவும், அதைத் தலைநகராகக் கொண்ட அரச மரபும் முக்கியம் பெற்றுள்ளன. மாகனது ஆட்சி இராஜரட்டையில் மட்டுப் படுத்தப் பட்டிருந்த போது, ஒரு சில இளவரசர்களும், படைத் தலைவர்களும் மாயா ரட்டையிலும் உருகுணேயிலும் ஆங்காங்கே எதேச்சையாகக் குறுகிய மாநிலங்களில் ஆட்சி நடத்தி வந்தனர். உருகுணையில் ஆட்சி நடத்திய ஆதிபாத புவனேகபாகு மாகனது அரசின் எல்லைப்புற மாவட்டமொன்ருன மிணிப்பே. மாவட்டத்தில் ஆதிக்கஞ் செலுத்திய தளபதி சங்கா, யாப்பாகுவில் தங்கிய மற் ருெரு தளபதியான் சுபா, குருளுகலை மாவட்டத்திலுள்ள தம்ப தெணியாவைச் சேர்ந்த விஜயபாகு ஆகியோரிடையே ஒற்றுமையோ, பொதுப்புகைவனை மாகனை விரட்டும் பொது நோக்கமோ இருக்க வில்லை. தம்பதெணியாவைச் சேர்ந்த விஜயபாகு, மாகனை விரட்டி, நாட்டுக்கு விடுதலையை அனிப்பதில் ஓரளவுக்கு வெற்றி கண்டவன். குறுகிய ஒரு மாநில ஆட்சியாளனகத் தொடங்கிய இந்த விஜய பாகு, 2-ம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்களை நாட்டுக்குத் தந்த ஒரு மரபையே தோற்றுவித்த பெருமைக்குரியவன். சங்க போதி யுடனும், கலிங்க மரபினருடனும், பாண்டிய மரபுடனும் இந்த விஜயபாகுவைத் தொடர்புபடுத்த வெவ்வேறு ஆதாரங்கள் முற்

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 189
பட்டுள்ள போதும் உண்மையில் விஜயபாகுவின் மரபுக்கும், அணு ராதபுரம், பொலன்னறுவை ஆகிய இராசதானிகளில் அரசோச்சிய மரபுகளுக்கும் எதுவித தொடர்பும் இருக்குமென நம்புதற்கில்லை. அரச மரபெதையும் உண்மையில் சேரர்தவனுக விஜயபாகு இருந் தும், அவன் மகன் 2-ம் பராக்கிரமபாகுவின் புகழைப் பாடிய கவிஞர்கள் தமது பாட்டுடைத் தலைவனுக்கு உயர்வு தரக் கருதியே இவ்வாறு கற்பனை செய்திருப்பர். அ வ் வித உறவுகளிருப்பினும் அவை தூரத்துறவுகளாகவே இருந்திருக்கும். விஜயபாகு முதலில் ஒரு "வன்னிராஜா' வானமை அவனது அரசியல் வாழ்வின் முக்கிய படியாகக் கருதப்படும். 'வன்னிராஜா' என்பது, காட்டுப் பகுதி களாக இருந்த நிலங்களுக்குரிய தலைவர்களுக்கு வழங்கப்பெற்ற பெயராகும். பளாபத்கல என்ற இடத்திலேயே இவ்வாரு கத் தன் வாழ்வை அவன் தொடங்கியிருத்தல் வேண்டும். விஜயபாகு பின் னர் படிப்படியாகத் தன் அதிகாரத்தை வளர்த்து, ஈற்றில் மாயா ரட்டை முழுவதையும் தனது ஆட்சியை ஏற்குமாறு செய்தான். அவ னது இளமைக் காலப் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் எமது ஆதாரங்களில் கூறப்படவில்லை. படைப்பலம் மூலமும், யுக்திகள், சூழியல் மூலமும் இதைக் கைகூடச் செய்திருப்பான்,
மாயாரட்டையின் ஆட்சியை விஜயபாகு பெற்ற போதே, தம்ப தெணியவையும் அதன் இராசதானியாக்கினன். குருணகலைக்குச் சில மைல்கள் தென்மேற்கேயுள்ள இந்நகர், இயற்கையாக உயர்ந்த ஒரு பகுதியில் நிறுவப்பட்டது. மாகனது தலைநகரான பொலன்ன றுவைக்கும் இதற்குமிடையே பல மைல்கள் இடைவெளி யிருந்த மையும், அவனுடன் பின்னர் போர் தொடுக்கும்போது போரை நடத்த ஏதுவான ஒரு நிலையமாக அது இ ரு ந் த  ைம யும் அவன் விஜயபாகுவை எதிர்த்துத் தாக்கமுற்பட்டால் பாதுகாப்பைத் தர வல்லதாக இருந்தமையும் தம்பதெணியவைத் தலைநகராக்கியமைக் குக் காரணங்கள் எனக் கொள்ளலாம். அக்கால அரசியல் நிலை மையைச் சமாளித்தற் கேற்புடைய விரகுசார் நிலையில் தம்பதெணி யிருந்தமை அதன் தெரிவைத் தீர்மானித்தது என்பது தெளிவு விஜயபாகு அதை மேலும் பலமடையச் செய்வதற்காகப் பல அரண் களையும், மதிற் சுவர்களையும் அமைத்தான் எனச் சூளவம்சம் கூறு கின்றது.
முன்னர் தக்கிணதேசம் எனப்பட்ட பகுதியே, இப்போது மேல
திக மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு மாயாரட்டை யென்ற பெயரில்
தம்பதெணிக் காலத்தில் முக்கியம் பெற்றுள்ளது. மாயா (மாயா அல்
லது மாஹாதிபாத) என்பவன் நிருவகித்த தென்ற பொருளிலேயே
இதற்கு மாயாரட்டை யென்ற பெயர் ஏற்பட்டது. அனுராதபுர,
பொலன்னறுவைக் காலங்களில் முக்கியம் பெற்றிருந்த உருகுணே
I 7

Page 71
30 units) - LI pub
இப்போது அதன் முதன்மையை இழக்கலாயிற்று. தொடக்கத்தில் (13-ம் நூற்றண்டுக்கு முன்) இராஜரட்டைக்குக் குறைந்த நிலை யிலேயே அது இருந்த தெனினும் 13-ம் நூற்ருண்டிலிருந்த இராச தானிகள் பெரும்பாலும் அப்பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டு வந்ததால், அதுவே முதன்மை பெறுவதாயிற்று. நெற் பயிர்ச் செய் கையை மேற்கொள்ள ஒரளவுக்கு அது இடந்தந்ததெனினும் அங்கு பெறக்கூடிய வணிக ப் பொருட்களாலும் துறைகளாலுமே அது பொருளியல் துறையிலும் அதிக முக்கியத்துவம் பெற்றது.
மாகனது படைகளின் கண்ணிற் சிக்காவண்ணம் வாசிஸ்ஸர தேரர் முதலான குருமார்கள் புனிதப்பல், ஐயக்கல எச்சங்களைக் கொத்மலையில் புதைத்து விட்டு, தென்னிந்தியாவுக்கு ஓடியதாக நமது ஆதாரங்கள் கூறுகின்றன. விஜய பா கு மாயாரட்டைக்கு அரசனனதும், இக்குருமார்களை அங்கிருந்து வரவழைத்து, புதைக் கப் பெற்ற புனித எச்சங்களைத் தன் தலைநகரான தம் ப தெ னி யவுக்குக் கொண்டுவரச் செய்தான். பின்னர் தன் த லை ந க ரி ல் அவற்றுக்குக் கோவிலை நிறுவாது கேகாலை மாவட்டத்திலுள்ள பெலிகலவில் அமைத்தான். மாகனது படைகளிலிருந்து வரக்கூடிய ஆபத்திலிருந்து கூடிய பாதுகாப்பை இப் புனித எச்சங்களுக்கு அளிக்கவே இவ்வாறு தொலைவில் உள்ள பெலிகலவில் இக்கோவிலை எடுத்தான். இவ்வாறு புனித எச்சங்களைத் தன் பாதுகாப்பில் வைத் தமையால், பெளத்தத்துக்குப் பணியாற்றியதுடன், தனது உரிமை யையும் பலமடையச் செய்தான். சங்கத்தினர் விஜயபாகுவின் பக்கத்தைச் சார்ந்து அவனுக்கு ஆதரவைப் பெருக வைத்தனர். சங்கரக்கித தேரர், திம்புலாகலை மேதங்கர தேரர் போன்ற பிக்குத் தலைவர்களின் உதவியுடன் சங்கத்தைப் புனிதப்படுத்தி அதன் ஒற்று மையை நிலைநாட்டினன். பாழடைந்த பழைய விகாரைகளைப் புதுக்கியும், புதியவற்றை நிறுவியும், பெளத்தத் திருநூல்களைச் சங்கத்தினர் பயில்வதற்கு ஒழுங்குகள் செய்தும் சங்கத்தின் உயர் வுக்கும் சாஸனத்தின் வளர்ச்சிக்கும் உழைத்தான். 3-ம் விஜயபாகு நான்கு ஆண்டுகள் மட்டுமே (1232-36) ஆட்சி செய்தான். முதுமை யெய்திய பின்னரே அவன் ஆட்சியைப் பெற்றிருந்ததால், விரைவில் அவனது ஆட்சி முடிவெய்தியிருத்தல் வேண்டும். இவனுடைய ஆட்சி மாயாரட்டையில் மட்டுமே ஒடுங்கியிருந்தது; அங்கு ம் அவன் உறுதியுடன் ஆட்சி நடத்தவில்லை. இருப்பினும், இவனது மகன் 2-ம் பராக்கிரமபாகு போன்றவர்கள் இவன் தொடங்கிய பணியையே ஓரளவுக்கு நிறைவேற்றி வைத்தனர்.
i. 2-ம் பராக்கிரமபாகு: அவனது சாதனைகள்
பராக்கிரமபாகுவின் இளமை: தம்ப தெணிய மரபின் தலைசிறந்த மன்னஞன 2-ம் பராக்கிரமபாகு பொலன்னறுவைக் காலத்துக்குப்

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 131
பிந்திய காலச் சிங்கள மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவன். இவனைப் பற்றியறிய உதவும் நூல்களுள் முக்கியமானவை சூளவம்சம் (2-ம் பாகம்), பூஜாவலிய* என்பன. இவற்றின் ஆசிரியர்கள் இவன் மீது தமது புகழ் அஞ்சலிகளே மிக்க நன்றியுணர்வுடன் பாடியுள்ளனர். சூளவம்சத்தில் இவனது இளமைக்கால நிகழ்ச்சிகள் மிக்க குறை வாகவே இடம் பெற்றுள்ளன. இவனுடைய தந்தையான 3-ம் விஜயபாகு தனக்குப்பின் அரசைப்பெறத் தகுதியு ைட ய வ ஞ க ப் பராக்கிரமபாகுவையே தெரிவு செய்தமைக்கு, நிமித்தங்கூறுவோரின் கருத்துக்களை நம்பியமை ஒரு காரணமாகக் கூறப்பெற்றுள்ளது. இலங்கை முழுவதையு மன்றி, ஜம்புத்துவீபத்தையுமே (இந்தியா வையும்) ஒரு குடைக்கீழ்க் கொண்டுவர வல்லவன் என அவர்கள் கூறினராம். சங்கத்தினரிடம் தன் மகனை விஜயபாகு ஒப்படைத்த தாகவும், சங்கத்தின் பாதுகாப்பைத் தன் மகனிடம் விட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது. தன் இளமைப் பருவத்தில் பர்ாச்கிரம பாகு பல கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்ருன் என எமது ஆதாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், சிங்களம் பாலி ஆகிய மொழிகளிலும், புத்த தர்மத்திலும் அவன் எய்திய புலமை காரணமாகவே அவனுக்குக் 'கலிகால சாஹித்திய சர்வஞ்ஞ பண்டித" னென்ற அடைமொழியும் வழங்கப்பட்டது.
சூளவம்சம் 2-ம் பாகம் (80-ம் அத்-90-ம் அத். வரையுள்ள பகுதிஇதையே சூளவம்சத்தின் 3-ம் பாகமாகக் கூறுவர் அண்மைக் கால ஆய்வாளர்) பல வழிகளில் எமது வரலாற்றை எழுத உதவிய போதும், சில முக்கிய விபரங்களைக் கூழுமலும் விட்டுள்ளது. 2-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் நடைபெற்ற பாண்டியப் படை யெடுப்புக்கள் பற்றி எவ்வித குறிப்பும் இதில் இல்லை. பூஜாவலியவில் உள்ள 34 அத்தியாயங்களில், கடைசி இரு அத்தியாயங்களிலுமே வரலாற்று நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. நூலில் வரும் ஒரு குறிப்பால், 1266-ல் அது மயூரபாததேரரால் எழுதப்பட்டு முடிந்த தாக நிறுவப் பெற்றுள்ளது. 3-ம் விஜயபாகு, 2-ம் பராக்கிரமபாகு 1-ம் புவனேகபாகு ஆகியோரின் சமகாலத்தவராக ஆசிரியர் வாழ்ந்தமை இந்நூலுக்குச் சிறப்பைத் தருகின்றது. இருப்பினும், தமது புரவலனுண் 2-ம் பராக்கிரமபாகுவுக்குப் பெ ரு  ைம  ைய த் தராத பாண்டியப் படையெடுப்புக்கள் பற்றி இந்நூலாசிரியரும் எதுவும் கூருது விட்டுள்ளார். உண்மையில், 2-ம் பராக்கிரமபாகு வின் அமைச்சன் ஒருவனது வேண்டுகோளுக் கிணங்க இந்நூலை எழுதிய மயூரபாததேரர், பின்னர் அதை அரசனிடம் சமர்ப்பித்தா ரெனவும், அரசன் பெரிதும் மகிழ்வெய்தி அந்நூலுக்குப் பெரும் மரியாதைகளைச் செய்ததாகவும் கூறப்பெற்றுள்ளது. சூளவம் ச விவரங்களும், இந்நூலில் வரும் விவரங்களும் பெரிதும் ஒற்றுமை யுடையனவாக விருத்தலும் குறிப்பிடத்தக்கது.

Page 72
132 பண்டைய ஈழம்
மாயாரட்டைக்கு அரசனுதல்: 3-ம் விஜயபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசைப் பெற்ற 2-ம் பராக்கிரமபாகு 1236-ல் தனது முடிசூட்டு விழாவை முதன்முதலில் நடத்தினன். இவ்வாறு அரசைப் பெற்ற பராக்கிரமபாகுவை எதிர் நோக்கிய பெரும்பணி. இராஜரட்டையில் அப்போது ஆட்சியை நடத்தி வந்த மாகனை முறி யடித்து, அப் பகுதியையும் தனது ஆணையின் கீழ்க் கொண்டு வருவதேயாகும். பெரும் படைப்பலத்தைக் கொண்டிருந்த மாகனைத் தோல்வி காண வைப்பது எளிதாக நிறைவேறும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, பராக்கிரமபாகு படைப்பலத்தைத் திரட்டு வதிலேயே தன் கவனத்தை ஈடுபடுத்தினன். "இலங்கை என்ற மடந்தையை என்னுடைய வளாக்குவேன்" என அவன் உறுதி பூண் டான் என்பதாகவும், துட்டகாமணி, தாதுசேனன், 1-ம் விஜயபாகு போன்ற விடுதலை வீரர்களின் அடிச்சுவடுகளில் அவன் செல்ல எண் ணியதாகவும் காலவேடுகள் கூறுகின்றனவேயன்றி, அவன் எடுத்த நடவடிக்கைகளின் விபரங்களை அவை தரவில்லை. சங்கத்தினர்க்கும், தந்த தாதுவுக்கெனத் தம்பதெணியில் ஒரு கோவிலை நிறுவி, முன் னர் பெலிகலவில் வைக்கப்பட்ட அப்புனித சின்னத்தைத் தருவித்து, அதன் கண் வைத்து, அதன் பெயரில் பெருவிழா எடுத்தான். சங்கத் தினரும் பல வன்னித் தலைவர்களைப் பராக்கிரமபாகுவை ஆதரிக்கச் செய்தனர். இராஜரட்டையிலுள்ள வேறும் சில வன்னித் தலைவர் களை பராக்கிரமபாகுவின் தம்பியும் யுவராஜனுமான புவனேகபாகு (குருணகலையில் தங்கியவன்) பராக்கிரமபாகுவின் ஆணையை ஏற்கு மாறு செய்தான்.
மாகனது ஆட்சி முடிவுறுதல்: பராக்கிரமபாகுவின் காலத்திலேயே மாகனது ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தென்பது தெளிவு. ஆயின், அதில் அவன் வகித்த பங்கு தெளிவாக அறியப்படவில்லை. நமது ஆதாரங்கள் இதைப்பற்றிக் கூறுவதை அப்படியே ஏற்கவும் முடியவில்லை. ஏனெனில், அவை முழுவிவரங்களையும் கூறுவதாகப் படவில்லை. பொலன்னறுவை, கொட்டியாரம், கந்தளாய், கவுடுலு, பதவியா, குருந்தன்குளம், மானுமடு, புலச்சேரி, வலிக்காமம், திரு கோணமலை, ஊராத்துறை, இலுப்பைக்கடவை முதலான பல இடங் களில் உள்ள அரண்களில் மாகனது காவற்படையினர் நிறுத்தப்பட் டிருந்தனர். மாசனும், அவனுடைய உபராஜாவாக விளங்கிய ஒரு ஜயபாகுவும் தமது ஆட்சியின் பிற்பகுதியில் குடிகளின் மதிப்பைப் பெறத்தக்க வகையில் நடந்து கொண்டனர் போலத்தெரிகின்றது. போர்ப்பயிற்சியும், அனுபவமும் படைத்த (அவனுடைய) தமிழ், மலையாள (மலாய்?) வீரர்களைப் பராக்கிரமபாகுவின் படைவீரர்கள் வெல்லுதற்குரிய தகுதிகளையோ, பக்குவத்தையோ அடைந்தமைக் குச் சான்றேதும் இல்லை. அப்படியிருக்கவும், மாகனது போர் வீரர் கள் தமக்குள் ஆலோசனை செய்துவிட்டுத் தாமாகவே பயந்து

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 133
நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கால வேடுகள் கூறுகின்றன. பொலன்னறுவையைக் சைவிட்டு வெளியேறிய அவனது படைவீரர் கள், அவசரத்திலும், தடுமாற்றத்திலும் மேற்குப் புறமாகவே பின் வாங்கி, காலவாவிப் பகுதியில் தங்கியிருந்த சிங்களப் படையினரி ரிடம் சிக்கிப் படுதோல்வி யெய்தியதாக அவை மேலும் கூறுகின் றன, உண்மை நிகழ்ச்சியின் விவரணையாக இது இருக்காது என்பது தெளிவு. எனவே உண்மையில் நடந்தது என்ன என்பதை மேலே கவனிப்போம்.
பாண்டியப் படையெழுச்சியும், மாகனது தோல்வியும்: 2-ம் பாரக் கிரமபாகுவின் காலத்தில் நடைபெற்றனவாகத் தென்னிந்தியக் கல் வெட்டுக்கள் குறிப்பிடும் பாண்டியப் படையெழுச்சிகளுக்கும், மாக னது தோல்விக்கும், மலேஷியாவிலுள்ள தாம்பர லிங்கித்திலிருந்து இலங்கைமீது நடைபெற்ற சந்திரபானுவின் படையெடுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் தெளிவாகவில்லை. வரலாற்றுத் துறை அறிஞர்கள் இவற்றினிடையே தொடர்புகளைக் காண முற்படு கின்றனர். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனது ஏழாம் ஆட்சியாண்டி லிருந்து (1258) அவனது கல்வெட்டுக்கள் இலங்கையை வென்றதை யும் இறை பெற்றதையும் குறிப்பிட்டுள்ளன. ('துலங்கொளி மணி யுஞ்சூலி வேழமும் இலங்கைக் காவலனையிறை கொண்டருளி" என வரும் பகுதி நோக்கற்பாலது.) சுந்தர பாண்டியனது இப்படை யெடுப்புக் கஞ்சியே, மாகனது படைகள் பொலன்னறுவையிலிருந்து சிதறியோடியிருத்தல் வேண்டும் எனக் கொள்ளப்படுகின்றது. பாண்டி யப்படைகளும், சிங்களப் படைகளும் இணைந்து செயலாற்றியிருத் த ல் கூடுமென மேலும் ஊகிக்கப்படுகின்றது. பராக்கிரமபாகு பாண் டிய உதவியை மாகனுக்கு எ தி ராகே வேண்டியிருத்தல் சாத்திய மெனவும், மாகனது படைகளின் தோல்வியைச் சிங்கள நூல்கள் தமது மன்னனுக்குச் சார்பாகவும், பாண்டியக் கல்வெட்டுக்கள் பாண் டிய மன்னனது பெருமைக்குரியதாகவும் கொண்டிருக்க வேண்டு Goud Gö7 Luri (Hist. of Cey, Vol. I Pt. II Pt. 621). (9) i 35 (UDB605 9y6ð7. மைக் கால ஆராய்ச்சியாளர் ஒருவரான லியன கமகே பெருமளவில் ஏற்றுள்ளார்.
சந்திரபரணுவின் படையெடுப்பு : பராக்கிரமபாகுவின் பதினேராம் ஆட்சியாண்டில் (1247) சந்திரபானு என்ற ஜாவகன் தன் படை யுடன் இலங்கையின் பல துறைகளில் வந்திறங்கிப் பல அழிவுகளைச் செய்ததாகவும், அரசனுடைய மருகனன வீரபாகு இப்படையை எதிர்கொண்டு, கடுஞ் சமரின் பின் புறங்கண்டதாகவும் கூறப்படு கின்றது. தென்மேற்குக் கரைகளிலே இப்படை வந்திறங்கியதாகக் கொள்வதற்கு, வீரபாகு இவ் வெற்றியின் பின் தேவுந்தரவுக்குச் சென்றதாகக் கூறப்படுவதை ஆதாரமாகக் கொள்வர். மலாயாத்

Page 73
2岛4 பண்டைய ஈழம்
தீபகற்பத்திலுள்ள ஜாயாவில் காணப்பட்ட 1230 ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டின் மூலம் சந்திரபானு தாம்பரலிங்கத்தைச் ' சேர்ந்த பெளத்தன் என்பதும், அவனது பெயர் பணி தர்மராஜா என்பதும் சந்திரபானு என்ற பெயர் அவடைய ஒரு சிறப்புப் பெயர் என்ப தும் பெறப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்ததாக நம்பப்பட்ட புத் தரின் அற்புதச் சிலை யொன்றைக் கவர்ந்து செல்வதே சந்திரபானு வின் படையெடுப்பின் நோக்கமாகும். ஆனல் சந்திரபானு தனது முதற் படையெடுப்பில் தோல்வியடைந்த போதும், விரைவில் மீண் டும் ஒரு படையெடுப்பை நிகழ்த்தினன். அல்லது, வீரபாகுவால் தோற்கடிக்கப்பட்டதும், அவன் வட இலங்கைக்குச் சென்று, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருத்தல் வேண்டும். 1262 அளவில் தந்தை பராக்கிரமபாகு இராச்சிய அலுவல்களைக் கவனிக்க முடியாத வாறு நோயினல் பீடிக்கப்பட்டிருந்த போது, மூத்த புதல்வனை விஜயபாகுவும், மருகனன வீரபாகுவுமே அவற்றைக் கவனித்து வந்தனர். இவ் விரு வரும் யாப்பாகுவில் இருக்கும்போது,:மகா தீர்த்தத்தில் வந்திறங்கிய சந்திரபானு தன் படையுடன் இராஜ ரட்டையிலிருந்து முன்னேறி இவர்களைச் சமரில் ஈடுபடுத்தினன். யாப்பாகுவை முற்றுகையிட்ட சந்திரபானு, புத்தரின் புனித எச்சங் களேத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டதுமன்றி, இலங்கையின் இறைமையையும் தனக்கு அளிக்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப் பட்டுள்ளது. சந்திரபானுவின் இரண்டாம் படையெடுப்பு மிக விரி வாகத் திட்டமிடப்பட்டுத் தகுந்த ஆயத்தங்களுடன் நடைபெற் றுள்ளது. சீயத்திலுள்ள தாய் அரசான சுகோதய அரசு மேலும் விரிவெய்தியபோது, முன்னர் நட்பு நாடாக இருந்த தாம்பரலிங்கத் தையும் அது சேர்த்துக் கொள்ளலாயிற்று. இதனல், தாம்பரலிங்க ஆட்சியாளனுன சந்திரபானு இலங்கையில் ஆட்சிபெற எண்ணியே இப் படையெடுப்பை நடத்தியிருத்தல் கூடும். சந்திரபானுவின் படையெடுப்பை விஜயபாகுவும் வீரபாகுவும் தாமாகவே புறங் கண்டு, சந்திரபானுவை உயிரிழக்க வைத்ததாகச் சிங்கள ஆதாரங்கள் கூறுகின்றன. ஆல்ை, வேறு ஆதாரங்கள் பாண்டியப் படையே சந் திரபானுவின் தோல்விக்கும் மறைவுக்கும் காரணமாக இருந்ததென உணர்த்தும். அவற்றை நோக்கும்போது ஏறத்தாழ இதே காலத் தில் (1262ல்) பாண்டியப் படையெடுப்பொன்று நிகழ்ந்ததை யுன . gT 6q)fT !t6, −
ஜடாவர்மன் வீரபாண்டியனது படையெடுப்பு: வீரபாண்டியனது பத்தா ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் இலங்கையில் அவன் எய் திய வெற்றிகளைக் குறிப்பிட்டுள்ளன "சோணுடும் ஈழமும் சாவ கன் முடியும் முடித்தலையும் கொண்டருளிய பூரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 10-வது' எனவரும் கல்வெட்டுப் பகுதியில், ‘சாவ கன் முடியும் முடித்தலையும்" என வருவதால் வீரபாண்டியனது படையெடுப்பின் போது, சந்திரபானு தோல்வியடைந்ததுமன்றி,

தம்பதெணிய அரசும் Lralarguf செல்வாக்கும் 133
உயிரிழந்ததாகவும் நம்பப்படுகின்றது. வீரபாண்டியன்து பிந்திய கல்வெட்டுக்களில், குறிப்பாக அவனது 11-ம் ஆண்டைச் சேர்ந்த, குடுமியாமலேக் கல்வெட்டில் உள்ள பிரஸஸ்தியில், இப்படையெடுப் புப்பற்றிய மேலதிக விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஓர் இலங்கை அமைச்சனது வேண்டுதலுக்கமையவே "அரசியல் வழக்கம் நெறிப் பட நாட்டும் குறிப்புடன் வீரபாண்டியன் இப்படை யெடுப்பை மேற் கொண்டானெனவும், இங்கு நிகழ்ந்த சண்டையின் போது (இலங்கை) அரசர்கள் இருவரில் * ஒருவன் மாண்டானெனவும், சண்டையின் முடிவில் படைப்புரவியும், கனகமணித் தேரும், சீன வடம், நாமத்தோடு, நவமணிக்குவை முதலான பலவற்றைப் பாண். டியன் அபகரித்ததுமன்றி, கோணமலை, திரிகூடகிரி ஆகிய இடங்க ளில் பாண்டியர் கொடியை உயர்த்தியதாகவும், “ த ந் தை யாண்ட தடங்கடல் ஈழத்தைச் சாவகன் மைந்த னரிடம் கையளித்து மீண்டதாகவும், மற்றைய வேத்தனிடம் ஆ னை த் திறை கொண்டு திரும்பியதாகவும் இக் கல்வெட்டுக்களில் கூறப் பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு, நடந்தவற்றை நிதானிப்ப தில் ஈடுபட்டுள்ள அறிஞரிடையே முரண்பாடுகள் இருப்பினும், பொதுவாக அவர்கள் மேலே வருமாறு கூறுவர். சந்திரபானுவின் படைகள் இராஜரட்டையிலிருந்து படையெடுத்து வரும்போதே பராக்கிரமபாகுவின் அமைச்சனுெருவன் பாண்டியருதவி பெறச்சென் றிருந்தான். இவனது வேண்டுதலுக்கிணங்க வீரபாண்டியன் படை திரட்டி வருமுன், சந்திரபானு லின் படைகள் யாப்பாகு வரை சென் றன. பின்னர் சந்திரபானுவுக்கும் வீரபாண் 3 யனுக்கு மிடையே நடைபெற்ற கடுஞ்சமரில் சந்திரபானுவின் படைகள் தோல்வி யெய்தியதுமன்றி, சந்திரபானுவும் உயிரிழந்தான். சந்திரபானு வின் பல உடைமைகள் பாண்டியனல் அபகரிக்கப்பட்டன. ஈற்றில், சந்திரபானுவின் மகனையே தனக்குத் திறை செலுத்துமாறு பணித்துத் தந்தையின் அரசைப்பெற வைத்தான்** 2-ம் பராக்கிரமபாகுவும் பாண்டிய மன்னனுடன் நட்புரிமை பாராட்டி வெகுமதிகளை யளித்த தால், அவுனும் திறை செலுத்தியதாகப் பாண்டியர் கல்வெட்டுக் கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை யாதாரங்களும் இதை ஓரளவுக்கு உறுதிப்படுத்துகின்றன.
* "ஈழமன்னர் இலகுவரில் ஒருவனை வீழப்பொருது விண் மி  ைச * வீரபாண்டியனுற் கொல்லப்பட்டவன் மா கனே எனவும், மாகன் பூரீ விஜயவைச் சேர்ந்த கலிங்களுதலால், அவனுடைய மகன் ‘சாவ கன் மைந்தன்" என அழைக்கப்பட்டிருத்தல் பொருந்தும் எனவும் பரணவிதான தமது புதிய கொள்கைக்கேற்ப இதற்கு வி ள க் கம் Gasnt GáSairo it. Ceylon and Malaysia, Ludii. 91

Page 74
36 - பண்டைய ஈழம்
சமயப்பணிகள் முதலியன: 2-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியில் அந்நியரே இராஜரட்டையில் ஆதிக் கஞ் செலுத்தியதால் அவனுடைய சமய நடவடிக்கைகள் மா யாரட் டையிலுள்ள இடங்களிலேயே நடைபெற்றன. 1260 க்குப் பின்னர் பராக்கிரமபாகு இராஜரட்டையில் சில சமய நடவடிக்கைகளைத் தன் மகன் விஜயபாகுவை மேற்கொள்ளச் செய்தான். 1258 அளவில் பராக்கிரமபாகு தீராத நோயினுற் பீடிக்கப்பட்டிருந்தமை யால், முதலில் தனது அமைச்சன் ஒருவனிடமும் (தேவபதிராஜா) பின்னர் 1262 அளவில் தனது மூத்த புதல்வனன விஜய பா கு விடமும் நிருவாகப் பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தான். விஜய பாகு 1262 அளவில் அனுராதபுரத்திற்கும், பொலன்னறுவைக்கும் சென்றபோது அங்கே தமது விசுவாசத்தைச் செலுத்திய வன்னித் தலைவர்கள் அனுராதபுரத்திலுள்ள ரூவன்வலி தாகபத்தை அவர் களையே திருத்தும் படி பணித்துவிட்டு, விஜயபாகு தன் மைத்துனன் வீரபாகுவுடன் பொலன்னறுவை சென்று நகரின் பாது கா ப் புக் களைப் பலப்படுத்தினுன். குளங்களைத் திருத்திப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்யவும் ஏற்பாடுகள் எடுத்தான். பின்னர் த ந்  ைத பர்ாக்கிரமபாகுவைப் பொலன்னறுவைக்கே வரும்படி செய்து அங்கு அவனுக்கு முடிசூட்டு விழாவை நடத்தி வைத்தான். இதன் பின் புனிதப்பல் எச்சத்தையும் பொலன்னறுவையில் அதற்கென நிறுவப் பட்டிருந்த கோவிலில் வைக்கச்செய்து தன் தந்தையின் நெடுநாளைய விருப்பத்தை நிறைவேற்றினன். பராக்கிரமபாகுவின் ஆட்சியின் இறுதியாண்டில் (1270) மற்ருெரு முக்கியம் வாய்ந்த சமய நிகழ்ச்சி இடம் பெற்றது சகஸ்தீர்த்தத்தில் (தாஸ்தொட்ட)வில் உபசம்பதா வைபவம் ஒன்றை விஜயபாகு நடாத்தி முடித் தான். பொலன் னறுவைக் காலத்தில் அந்நகரின் தெற்கேயுள்ள இந்த இடத்திலேயே உபசம்பதா வைபவம் நடைபெற்று வந்தது. சங்கத்தில் தூய்மையை ஏற்படுத்த 2-ம் பராக்கிரமபாகு எடுத்த முயற்சிகள் குறிப்பிடத் தக்கவை. இவன் காலத்தில் பிக்குகளை வழி நடத்துவதற்கென வெளியிட்ட விதிகள் தம்பதெணி கதிகாவத என்ற பொறிப்பில் கூறப்பட்டுள்ளன.
இலக்கியப்பணி: பராக்கிரமபாகு ஆற்றிய சமயப் பணிகளால், பெளத்தக் கோட்பாடுகளைக் கூறும் திருநூல்களும் அவற்றின் விளக் கங்களும் நன்கு பயிலப்பட்டன. துணை விளக்கங்களும் அரும்பத விளக்கங்களும் (கடபத) எழுதப்படலாயின. 2-ம் பராக்கிரமபாகுவே ஒரு சிறந்த கல்விமானுக விளங்கியதுமல்லாது, சில முக்கிய நூல் களையும் எழுதினன். விசுத்தி மார்க்க மகா சன்னய, வனவினிச சன் ணய, கவ்சிளுமிண (காவியம்) என்பவற்றை இவனே எழுதியதாகக் கொள்வர். இந்நூல்களால் அவனது புலமையை மட்டுமன்றி, அவ னது பன்மொழிப் பாண்டித்தியத்தையும் சமய விளக்க ஆற்றலையும்

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 187
அறிய முடிகின்றது. மயூரிபாத தேரரின் பூஜாவலிய, தர்மசேனரின் சித்தர்ம ரத்தனுவலிய, வெதெஹ தேரரின் ரஸவாஹினி, ஹத்தவன கல்ல விகாரவங்ஸ போன்ற நூல்கள் யாவும் பராக்கிரமபாகுவின் காலத்தவையாகும். ஒரு சில வைத்திய, சோதிட நூல்களும், சிதத் சங்கராவ என்ற பிரசித் திபெற்ற இலக்கண நூலும் இவனது காலத் தவையாகும். அரசியல் நிலைமை அத்துணை வாய்ப்பாக இல்லா திருந்தபோதும், பெளத்த அறிஞர்கள் கல்வியை வளர்த்து இவ் வாருன அரிய நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் துறையில் "கலிகால சாஹித்ய சர்வஞ்ஞ பண்டித”னன 2-ம் பராக் கிரமபாகுவே வழிகாட்டியாக விளங்கினன் எனக் கொள்ளலாம்.
முடிவுரை : இலக்கியத்துறையிலேயே அவனது பெருஞ்சாதனை கள் இருப்பதாகக் கொள்ளப்படினும், அரசியல் முதலான துறை களிலும் அவனது சாதனைகளைக் குறைத்து மதிப்பதற்கில்லை. பிற நாட்டாரின் அரசியல் தொல்லைகள் அதிகமாகவிருந்த ஒரு காலப் பகுதியில், இலங்கையின் சுதந்திரத்தைப் பெருமளவு பேணினன். தானே போர்களிற் பங்கு கொண்டு அவற்றை நடத்தாவிடிலும், தனது புதல்வர்களையும் மருமகனையும் இந்நிலைமைகளைச் சமாளிக் கும்படி செய்து அவர்களுக்குப் பக்க பலமாக விருந்தான். மாக னது ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வத்ததும், சந்திரபானுவின் அச்சுறுத்தலினின்றும் நாட்டைக் காப்பாற்றியதும், பாண்டியரின் ஆட்சியில் இலங்கை அமராதவாறு செய்ததும் இம்மன்னனது சாதனை களே. சமய வளர்ச்சியில் மட்டற்ற ஆர்வம் கொண்டிருந்த இம் மன்னனது சமய நடவடிக்கைகள் ஒரு புத்துயிர்ப்புத் தோன்றி யமை உணரற்பாலது. கட்டிடங்களை அவன் அவ்வளவாக நிறுவ வில்லை. பழைய நகர்களிலுள்ள ஒரு சில முக்கிய கட்டிடங்களைப் பேணியதோடு, தம்பதெணியிலும் தந்ததாதுவுக்கென ஒரு கோவிலை நிறுவினன். எனவே, லியன கமகே கூறுவதுபோல, "அவன் (2-ம் பராக்கிரமபாகு) வாழ்ந்த காலத்தையும் அவனை எதிர்நோக்கிய தொல்லைகளையும் நோக்கும்போது. அவனுடைய சாதனையைக் குறைத்து மதிப்பிடுதல் அவனுக்கு நியாயம் வழங்கத் தவறுவதாக முடியலாம்'.
iv. தம்பதெணிய அரசின் வீழ்ச்சியும்,
f அதன் காரணங்களும்
2-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சி 1270-ல் முடிவெய்தியதும், மூன்னரே இராச்சிய நிருவாகப் பொறுப்பைக் கவனித்து வந்த அவனுடைய மூத்த புதல்வனன விஜயபாகு (4-ம் விஜயபாகு) அர சைப் பெற்ருன். "போதிசத்துவ னெனவும் அழைக்கப்பட்ட இவன், மக்களிடையே தனது நற்பண்புகள் காரணமாக நற்பெய
8

Page 75
38 பண்டைய ஈழம்
ரைப் பெற்றிருந்தான். ஆஞல், படைத்தலைவஞன மித்திரன் (பா. மீத்த), விஜயபாகு அரசைப்பெற்ற ஈராண்டுகளில் அவனைக் கொல்வித்தான். விஜயபாகுவின் ஒரு தம்பியான புவனேகபாகு கொலைகாரரிடம் சிக்காது தப்பியோ டினன். அவனைக் கைப்பற்று தற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் பலிக்கவில்லை. மித்திரன் தானே அரசஞக முற்பட்டபோது இலங்கையில் அப்போது அரச சேவையி லிருந்த "ஆர்ய’ (இராஜ புத்தான) படைவீரர்கள் கலகஞ்செய்து அவனைக் கொன்று, புவனேகபாகு அரசைப் பெறுதற்கு உதவினர். யாப்பாகுவிலிருந்த புவனேகபாகு, தம்பதெணியாவுக்குச் சென்று முடிசூடிக் கொண்டான். சிங்கள வன்னித்தலைவர்கள் சிலர் இவனை எதிர்த்துக் கலகஞ் செய்தனர். தென்னிந்தியாவிலிருந்து தமிழ்ப் படைகள் இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டன. ஒரு வேளை மித்திரனது சூழ்ச்சியால் இவை நடைபெற்றிருத்தல் கூடும். இருப் பினும், புவனேகபாகு கலகங்களையும் அந்நியர் தாக்குதல்களையும் புறங்கண்டு, தனது ஆட்சியை நிலைப்படுத்தினன். தன் தந்தை யைப் போலவே, இவனும் சமயப் பணிகளை மேற்கொண்டு சங்கத் தினரைத் திருப்தி பெற வைத்தான். இவனுடைய காலத்தில் எகிப்திய சுல்தானுக்கு அனுப்பப்பட்ட தூதுக்குழு கெய்ரோவை 1283-ல் அடைந்தது. புவனேகபாகுவும் 1284 அளவில் இறந்து போனன்.
புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து, நாட்டில் ஏதோ குழப்பம் மூண்டதாகத் தெரிகின்றது, சூளவம்சத்திலும் ஒர் இடை வெளி இவ்விடத்தில் இருக்கின்றது. புவனேகபாகுவுக்குப் பின், ஓர் ஆட்சியிடையற்வு ஏற்பட்டதாகத் தளதாசிரிதா என்ற நூல் குறிப் பிட்டுள்ளது. இதே காலத்திலேயே ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஒரு படையை ஆரியச்சக்கரவர்த்தி யென் பானது தலைமையில் 1284 அளவில் இலங்கைக்கு அனுப்பினு ன். இப்படை யெடுப்பு நடை பெற்றபோது இலங்கையில் உணவுப் பஞ்சமொன்று நடைபெற்றதா கத் தெரிகின்றது. இப்படை யெடுப்பின் போது புனித எச்சங்களையும், மற்றும் விலையுயர்ந்த திரவியங்களையும் ஆரியச் சக்கரவர்த்தி கைப் பற்றிச்சென்று, பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தான். வடபகுதி யில் ஆட்சி செலுத்திய ‘சாவகன் மைந்தன்” (சந்திரபானுவின் மகன்) இச்சந்தர்ப்பத்தில் யாப்பாகுவைக் கைப்பற்றியிருக்க, பாண்டியனது படைத் தலைவன் அவனைத் தாக்கித் தோற்கடித்து புனித எச்சங்களையும் மீட்டுச் சென்றிருக்கலாம். இது எவ்வாருயினும், அடுத்த அாசனன 3-ம் பராக்கிரமபாகு (4-ம் விஜயபாகுவின் மகன்) பாண்டி நாட்டுக்கே சென்று, பாண்டிய மன்னனிடம் பரிந்துபேசிப் புனித எச்சங்களைத் திருப்பிப்பெற்று வந்தான், புனித எச்சங்களைப் பெற்றுவந்த பின்னரே 3-ம் பராக்கிரமபாகு, அரசனுயிருக்கலாம் என்பதால், இவன் 1287 அளவிலேயே அரசாளத் தொடங்கியிருப்பான். பாண்டியராதிக்கம் 3-ம்

தம்பதெணிய அரசும் பாண்டியர் செல்வாக்கும் 139
பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கையில் வலுப்பெறலாயிற்று. இதை விரும்பாத பிரதானிகள் புவனேகபாகு என்ற இளவரசனைச் சார்ந்து நிற்கலாயினர். குருனுகலையில் தங்கியிருந்த இப் புவனேக பாகு, பொலன்னறுவையிலிருந்து ஆட்சி நடத்திய 3-ம் பராக்கிரம பாகுவைத் தாக்க ஒரு படையைக் கொண்டு சென்ருன், அங்கே பராக்கிரமபாகுவைப் பணிய வைத்து, தந்த தாதுவைக் கைப்பற்றிக் குருணுகலே மீண்டு தன்னை 1293 அளவில் அரசனகப் பிரகடனஞ் செய்தான்.
2 ம் புவனேகபாகுவால் இராசதானியாக்கப்பட்ட குருளுகலை இப்போது முக்கியத்துவம் பெற்றது. இவனுடைய ஆட்சி ஒன்ப தாண்டுகள் வரை நீடித் திருந்தது. இம் மன்னன் ஆண்டுதோறும் தனது முடிசூட்டு விழாவையடுத்து, உபசம்பதா வைபவத்தையும் நடத்தி வந்துள்ளதைத் தவிர, இவனது ஆட்சியில் வேறு முக்கிய நிகழ்ச்சியேதும் இடம் பெறவில்லை. இவனது மகனன 4-ம் பராக் கிரமபாகுவும் குருனகலேயிலிருந்தே ஆட்சி செலுத்தினன். "தம்பை யின் காவலனுக இவன் போற்றப்பட்டதைக் கொண்டு, தம்ப தெணியவுடன் இம் மன்னனும் தொடர்பை வைத்திருத்தல் கூடும் இவனுடைய காலத்திலும், 2-ம் பராக்கிரமபாகுவின் காலத்தைப் போன்று. ஏராளமான நூல்கள் எழுதப்பெற்றன. இவனுக்கும் "பண்டித பராக்கிரமபாகு என்ற பெயர் இருந்தது. இவனும் ஒரு கல்விமானகத் திகழ்ந்து, இலக்கிய வளாச்சிக்கு இவன் உறுதுணை யாக விளங்கினன். புலவர்கள் பலரை இவன் ஆதரித்துப் டோற்றி ஞன். இவர்களும் தம்மை யாதரித்த மன்னனப்பற்றிய புகழ்மாலை களைத் தமது நூல்களில் சேர்த்துள்ளனர். நாரன்பத்தக் கல்வெட் டைக் கொண்டு, இவனுடைய காலத்திலும் ஒரு தமிழ்ப் படை யெடுப்பு நிகழ்ந்ததாகக் கூறுவர். இவனுடைய சமய நடவடிக்கை கள் முதலானவை மாயா ரட்டையிலேயே இடம் பெற்றதால், இவ னுடைய ஆட்சிப் பரப்பு அதன் எல்லைகளுக்குள் அடங்கியிருந்த தெனலாம். இவன் 1302-ல் அரசைப்பெற்று 1326 வரையாவது ஆட்சி செலுத்தியதாகக் கூறுவர். இவனுடைய ஆட்சியின் முடிவில் உண்டான கலகத்தில் இம்மன்னன் இறந்திருத்தல் கூடும், 4-ம் பராக்கிரமபாகுவுடன், தம்பதெணிய மரபும் முடிவுக்கு வரலா யிற்று. 3-ம் விஜயபாகுவால் நிறுவப்பட்ட இம் மரபில் 2-ம் பராக் கிரமபாகு ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளதைக் கண்டோம். ஆனல், அவனுடைய மறைவுக்குப்பின், சுமார் அரை நூற்ருண்டுக் காலத் தில் தம்பதெணிய மரபும் முடிவெய்தலாயிற்று.
தம்பதெணியரசின் வீழ்ச்சிக்கு வழிகோவிய காரணிகளை இனிச் சுருக்கமாகக் காண்போம். மாகனது படையெடுப்பின் விளைவாக வும், அதற்கு முந்திய நிகழ்ச்சிகளின் பயனகவும் பழைய சிங்கள

Page 76
1 4 0 பண்டைய ஈழம்
அரச மரபு ஏறத்தாழ அற்றுவிட்டது. தம்பதெணியவில் தோன்றிய மரபு, முந்திய மரபு வழிவந்ததாகக் கூறப்பட்டபோதும், உண்மை யில் அதை ஒரு புதிய மரபாகவே கருதவேண்டும். புதிய மரபைச் சேர்ந்த மன்னர்கள் தமது திறமையைக்கொண்டே தமது ஆட்சியை நிலைப்படுத்த வேண்டும். தம்பதெணிய மரபைச் சேர்ந்தவர்களிற் பெரும்பாலானேர் திறமைசாலிகளாக இருக்கவில்லை. பலவீனர்க ளும், சமய ஈடுபாடு கொண்டவர்களும், இலக்கியப் புலமை படைத் தவர்களுமே ஆட்சியாளராக இருந்தனரன்றி, போர்த்திறமை, நிரு வாக வலிமை முதலான வற்றில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை. உறுதிபெருத ஒரு மரபில் திறமை குறைந்தவர்கள் ஆட்சிக்கு வந்த தால், அம் மரபு நீடித்துப் புகழ்பெற முடியாது போய்விட்டது. 2-ம் பராக்கிரமபாகுவின் புதல்வனன புவனேகபாகுவும், மருமக ஞன வீரபாகுவும் இப்பொது விதிக்கு மாருக, ஒரளவு போர்த் திறமை கொண்டவர்களாக விளங்கினர். 2-ம் பராக்கிரமபாகுவுக் குப்பின், அரசுரிமைத் தகராறுகளும் அடிக்கடி இடம் பெற்றதைக் கண்டோம். 2-ம் பராக்கிரமபாகுவின் மகனன 4-ம் விஜயபாகு வைத் தளபதி யொருவன் கொன்று அரசைப் பெற்றதையும், அத் தளபதியைக் கொன்று ஆட்சியை மீட்ட 1-ம் புவனேகபாகு பல வகை இடையூறுகளை எதிர்நோக்கவேண்டி யிருந்ததையும் அப்போது கவனித்தோம். பின்னர் 1-ம் புவனேகபாகுவின் மரணத்தின் பின் னரும் உள் நாட்டில் ஒருவகை ஆட்சியிடையறவும், ஒரு பஞ்சமும் ஏற்பட்டன. இவை போதாவென்று ஒரு பாண்டியப் படையெடுப் பும் நிகழ்ந்தது, 3-ம் பராக்கிரமபாகுவுக்குப் போட்டியாக 2-ம் புவனேகபாகு இருந்த மையும் முன்னரே குறிப்பிடப்பட்டது. தம்ப தெணிய மன்னர்களுள் ஒருவணுவது, இலங்கை முழுவதையும் ஆட்சி நடத்தியதாகக் கூறமுடியாது. மாயாரட்டையையும் மத்திய மலை நாட்டின் சில மாவட்டங்களையுமே உண்மையில் அவர்கள் தமது நிருவாகத்தில் வைத்திருந்தனர். 2-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சி யின் இறுதிப் பகுதியிலேயே பொலன்னறுவை, அனுராதபுரம் முத லான இடங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டமைபற்றிய குறிப்புக் கள் வருகின்றன. வடபகுதியில் முதலில் கலிங்க மாகனும், பின்னர் சந்திரபானுவு *, இவர்களைத் தொடர்ந்து இவர்களில் ஒருவனுடைய மகனும் ஆட்சி செய்ததை நாம் முன்னர் குறிப்பிட்டுள்ளோம். யாழ்ப்பாணத்திலும் இதே காலத்தில் ஒரு தமிழ் அரசு நிலவி வந்தது. இவை யெல்லாவற்றையும் விட பிறநாட்டுப் படையெடுப்புக்கள் தம்பதெணியரசின் நலிவுக்கு மிக முக்கிய காரணியாக விளங்கின எனலாம். சந்திரபானுவின் தாக்குதல்கள், பாண்டியப் படை யெடுப்புக்கள் முதலானவை நாட்டைப் பெரிதும் பாதிக்கலாயின. உள் நாட்டில் உண்டான தொல்லைகளை இப் பிறநாட்டுப் படை யெடுப்புக்கள் மேலும் அதிகமாக்கின. பெர்லன்னறுவைக் காலத்தில் உள்ளதைப் போன்ற பொருளியற் சிறப்பை, தம்பதெணியக் காலத்

தம்பதெணிய அரசும். பாண்டியர் செல்வாக்கும் 14 !
தில் நாடு பெறவில்லை. நாடு எய்திய ஒரு சிறிதளவு முன்னேற்றத்தை யும் இவ்வரசியல் தொல்லைகள் பாழ்படுத்தின. இவ்வாறன காரணி கள் அனைத்தும் ஒருங்குசேர்ந்து தம்பதெணிய அரசை நிலை க்க விடாது, விரைவிற் சீர்குலைய வைத்தன.
பயிற்சி:
13-ம் நூற்றண்டுத் தென்னிந்தியா, இலங்கை ஆகியவற்றிலுள்ள அரசியல் நிலைமைகளைக் காட்டும் தேசப் படமொன்றை வரைக.
. 2-ம் பாண்டியப் பேரரசு, இலங்கையின் அரசியல் வரலாற்றைப்
பாதித்தமையை விளக்குக.
தேர்வு விஞக்கள்:
1.
2.
2-ம் பராக்கிரபாகுவின் சாதனைகளை மதிப்பீடு செய்க.
13-ம் நூற்றண்டில் மாயாரட்டை இலங்கை வரலாற்றில் முக்கியம் பெற்றமைக்குக் காரணங்கள் தருக.
தம்பதெணிய அரசு நிலைக்காது, விரைவிற் சீர்குலைந்தமைக்குக் காரணங்கள் கூறுக.
தம்பதெணிய அரசின் எழுச்சிக்கு வழிகோலிய காரணிகள் யாவை? வரலாற்றுச் சிறுகுறிப்புக்கள் வரைக; தம்பதெணிய சுபகிரி (யாப்பாகுவ); பூஜாவலிய; சந்திரபானு; சகஸதிர்த்த (த ஈ ஸ் தோட்ட); வன்னி; தம்பதெணி கதிகாவத, ஆரியச் சக்கரவர்த்தி.
creekas.

Page 77
142 பண்டைய ஈழம்
தம்பதெணிய குடிமரபுப் பட்டியல்
விஜயமல்லன்
3-ம் விஜயபாகு
2-ம் பராக்கிரமபாகு 67Gaora, Lint g, இளவரசி
4-ம் விஜயபாகு 1-ம் புவனேகபாகு திரிலோகமல்ல இளவரசன்
3-ம் பராக்கிரமபாகு 2-ம் புவனேகபாகு
4-ம் பராக்கிரமபாகு

அத்தியாயம் எட்டு யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும்
i. இந்தியாவில் முஸ்லீம் ஆதிக்கம் வளர்தல், it, யாழ்ப்பாண அரசின் தோற்றம். i. ஆரியச் சக்கரவர்த்திகள்: யாழ்ப்பாண அரசு வலுப்பெறல். iv. கம்பளை ஆட்சியாளரும், அளகக்கோணுரும்.
தம்பதெணிய மரபின் இறுதி மன்னர்களால் இராசதானி யாக்கப்பட்ட குருனகலேயும் விரைவில் அப்பெருமையை இழந்து விடுகின்றது. கம்பளை (கங்கா சிறிபுரம்) விரைவில் சிங்கள அரச மர பினரின் இராசதானியாக்கப் பெறுகின்றது. மலைநாட்டிலுள்ள இந் நகரை இராசதானியாக்கிய அரசமரபுக்கும் முந்திய அரச மரபுக்கும் எவ்வித தொடர்பும் இருந்ததாகப் புலப்படவில்லை. கம்பளையை இராசதானியாகக் கொண்ட சிங்கள மன்னர்கள் தம்மை 'திரிசிங் கள" அதிபதிகளாகக் கூறிக்கொண்டபோதும், அவர்களுடைய ஆதிக்கம் தென்னிலங்கையில் மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. வட பகுதியில் அதே காலத்தில் "ஆரியச் சக்கரவர்த்திகள்" என்ற தமிழ் அரச மரபினர் தனியரசை நடத்தி வரலாயினர். ஆரியச் சக்கர வர்த்திகளில் சிலர், அக்காலத்து அரசியல் நிலைமைகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தென்னிலங்கை யாட்சியாளரையும் தமது ஆணையை ஏற்கவைத்துத் தமக்குத் திறை செலுத்த வைத்தனர். இராஜாவலி, நியாய சங்கிரஹ போன்ற நூல்களும், சில பொறிப் புக்களும், பிற நாட்டு யாத்திரிகர்களின் குறிப்பு க்க ளு ம் இ  ைத யுறுதிப்படுத்துகின்றன. எமக்குள்ள ஆதாரங்கள் இக்காலப் பகுதி யின் வரலாற்றைத் தெளிவாக அறிய உதவவில்லை. அறிஞர் களி டையே கருத்து முரண்பாடுகள் பல நிலவுதற்கு இது காரணமா கின்றது. இருப்பினும், எமது நூலின் இயல்புக்கு ஏற்ப, பொதுவாக ஏற்கப்பட்ட முடிபுகளையும், கருத்தொற்றுமை நிலவாத இடங்களில் இருசாரா ரின் வாதங்களின் முக்கிய அடிப்படைகளையும் இங்குச் சுருக்கமாகக் கூறுவோம்.
1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கம் வளர்தல்.
வட இந்தியாவில் 10-ம் நூற்ருண்டிலிருந்து முஸ்லீம் படையெழுச் சிகள் வ்டமேற்கிலுள்ள கணவாய்களுடாக நடைபெற்று, படிப்படி யாக வடஇந்தியாவில் அவர்களின் ஆதிக்கமும் ஆளுகையும் பரவ லாயின. பின்னர், தக்கணம் மீதும், தென்னிந்தியாமீதும் அவர் களின் கவனஞ் சென்றது. மாலிக் கபூரில் படையெடுப்பு பாண்டியப், பேரரசின் சீர்குலைவுக்குக் காரணமாயிற்று. பின்னர், தென்னிந்தி யாவுமே சிறிது காலத்துக்கு முஸ்லிம் ஆட்சியில் அமரலாயிற்று.

Page 78
144 LøkrebLu Fypd இவ்வாறு, இந்திய வரலாற்றில் உண்டான மகத்தான அரசியல் விருத்திகள் மறைமுகமான சில தாக்கங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. இரண்டாம் பாண்டியப் பேரரசின் சீர்குலைவின் விளைவாக, இலங்கை யரசியலில் அப் பேரரசு செலுத்திய ஆதி க் கம் மறையலாயிற்று. 14-ம் நூற்றண்டில் இலங்கையில் நிலவிய அரசுகள், தென்னிந்திய அரசியல் தலையீடின்றிச் சுயாதீனத்துடன் இயங்கலாயின. முஸ்லிம் ஆதிக்க வளர்ச்சியால் செயலிழந்த தென்னிந்தியத் த லை வர் கள் இலங்கை வந்து இங்கு நடைபெற்ற அரசியல் விருத்திகளில் பங்கு கொள்ளலாயினர். யாழ்ப்பாண அரசின் வளர்ச்சியை இவ்விதமான வரலாற்று அடிப்படை கொண்டே சிலர் விளக்குவர். யாழ்ப்பாணத் திலும் இலங்கையின் கரையோரங்களிலும் நடைபெற்ற முஸ்லிம் குடியேற்றங்களையும் இந்திய வரலாற்று விருத்திகளின் நேரல் விளைவு களாகவே கொள்வர். எனவே, இலங்கை வரலாற்றை மறைமுகமா கப் பாதித்த முஸ்லிம் ஆதிக்க வளர்ச்சியின் சில முக்கிய கட்டங் களை மிகச் சுருக்கமாக இப்பகுதியில் குறிப்பிடுவோம்.
"கசினிவத்'கள்: இந்தியாமீது நடைபெற்ற முதல் முஸ்லிம் தாக் குதல் 8-ம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இடம்பெற்றது. சிந்து மாகாணத்துக் கண்மையில் இலங்கைக்கு வெகுமதிகளைக் கொண்டு சென்ற சில அராபியக் கப்பல்கள் கடலிற் கொள்ளையிடப்பட்டமைக் காக அராபியக் "கலிபா' விஞல் அனுப்பப்பட்ட முகம்மது இபின் காசிம் என்பான் பஞ்சாப் வரை படையெடுத்துச் சென்றுவெற்றியீட் டினன். சிந்துவைக் கைப்பற்றியபின், அம் மாகாணத்தை அராபிய இராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்தனர். ஆனல் அராபியர் களின் இவ்வெற்றி நிலையான அரசியல் மாறுதலெதையும் ஏற் படுத்தவில்லை. எனினும், அரசியல் பண்பாட்டு அம்சங்கள் இந்தியா வுக்குப் பரவ இது ஏதுவாகவிருந்ததெனக் கூறுவர். இஸ்லாம் மதம் துருக்கிக்குப் பரவியபின், அந்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் கலீபாக்களின் துணைவர்களாக விளங்கி, பின்னர் பராசீகம், ஆப் கானிஸ்தானம் முதலான நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிறுவ லாயினர். இவ்வாறு முக்கியம் பெற்றவர்களில், கசினி (Ghazni) என்ற இடத்தைச் சேர்ந்த யாமினி குடும்பத்தவர்கள் முதன்மை பெற்றனர். முன்னர் அடிமையாக 10-ம் நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்த ஒரு கசினி மன்னன் இந்தியா மீது படை யெடுத்தான். அவனுடைய மகனன முகம்மது காசிம், பல தடவைகள் இந்தியா மீது படையெடுத்து வட இந்தியாவில் பஞ்சாப் முதலான பகுதிகளை வென்று, அப்பகுதிகளை நிருவகிக்கலானன். இவன் மேற்கே கஸ்பி யன் கடல்வரை பரந்திருந்த மிகப் பெரியதொரு பேரரசுக்கு மன்

Lurry'jurtisë? Jy to th, ஆட்சியாளரும் 48
னஞக விளங்கினன், அவனுடைய அவைக் களத்தைப் ஃபிர்தோஸி முதலான பெரும் புலவர்கள் அணி செய்தனர். கலைகளில் நாட்ட முடைய இம் மன்னன் ஒரு பல்கலைக் கழகத்தைக் கசினியில் நிறுவி வளர்த்தான். முகம்மது காசிமுக்குப் பின், அவனுடைய பேரரசு அதிக காலம் நிலைக்கவில்லை.
கோரி மரபினர்: கசினிமரபின் பின் எழுச்சிபெத்ற கோரி (Ghur) மரபின் சிறப்புக்கு அடிகோலியவன் முகம்மது கோரி, ஆவன். ஒரு சிறிய பிரதேச ஆட்சியாளனகத் தொடங்கிய இவன் பின்னர் இறு திக் கசினி மன்னனை வென்று தனது ஆட்சியைச் சிந்துப் பள்ளத் தாக்கில் நிறுவினன். 12-ம் நூற்ருண்டின் முடிவில், வட இந்தியா வில் நிலவிய இந்து அரசுகளான இராஜபுத்தான அரசுகளை வென்று, வாரணுசிவரை தன் படைகளைச் செலுத்தி வெற்றியீட்டினன். இவ னுக்குப்பின், முன்னர் அடிமையாகவிருந்த ஒரு சிறந்த படைத் தலைவனன குத்ப்-உத்-தீன், இந்தியாவில் இருந்த பிரதேசங்களை டில்லியில் தான் நிறுவிய சுல்தான் ஆட்சியின் கீழ்க்கொணர்ந்தான் இவன் மேலும் பல வெற்றிகளையீட்டி, வட இந்தியாவின் பெரும் புரப்பைத் தனது ஆட்சிக்குட்படுத்தினன். இவனே உண்மையில் இந்தியாவில் முஸ்லிம் பேரரசை நிறுவியவன் எனக் கொள்வர். நிருவாகத்தை நல்ல முறையில் நடத்தித் தனது பேரரசில் மக்கள் அமைதியுடன் வாழ வகை செய்தான். டில்லியிலும், ஆஜ்மீரிலும் இவன் பெரும் மசூதிகளை நிறுவியதுமன்றி, இந்துக்களையும் பெருந் தன்மையுடன் நடத்தினன். இவனைப்போலவே, இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்துத்மிஷ் (1211 - 36), பல்பன் (1265 - 87) மிகச் சிறந்த ஆட்சியாளராக விளங்கலாயினர். இல்துத்மிஷ் என் பானே அவனது மரபின் தலை சிறந்த ஆட்சியாளனுக மதிக்கப்படு பவன். அவன் பெற்ற பேரரசை உள்நாட்டுக் கலகங்களும், பிற நாட்டு (மொங்கோலிய)த் தாக்குதல்களும் சிதைக்காது பேணியது மன்றி, அதை மேலும் பல மெய்த வைத்தான். UöugJub (Balban) மொங்கோலியத்தாக்குதல்களினின்று இந்தியாவைப் பாதுகாத்தான். உள் நாட்டிலும் தோன்றிய கலகங்களை யடக்கி, தன் பேரரசில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டி அதை வலுவடைய வைத் தான். ஆனலும், இவனைத்தொடர்ந்து அரசைப்பெற்ற பலவீனர்கள் தமது அரசைப் பேண முடியாது போகவே, "அடிமை மரபு" என அழைக்கப்படும் இம்மரபுக்குப் பதில் ஒரு புதிய மரபு (கில்ஜிகள்) அ காரத்தைப் பெற்றது
அலாவுத்தீன் கில்ஜி: கில்ஜிகள் என்ற புதிய மரபின் தலையாய சுல்தான் அலாவுத்தின் கில்ஜி ஆவன், இம் மரபின் முதல் மன்ன ஞன ஜலாலுத்தின் என்பானது மருமகனன அலாவுத்தினே, விந்திய
9

Page 79
148 பண்டைய ஈழம்
மலைத் தொடரைத் தாண்டித் தக்கணத்துக்கும் படையெடுத்துச் சென்று அங்கு முதன்முதலில் முஸ்லிம் ஆட்சி பரவக் காரணமாக விருந்தவன். தன் மாமனைக் கொன்று 1296-ல் அரசைப் பெற்ற அவனுக்கு எதிராக உள்நாட்டில் விளங்கிய பகைவர்களை அடக்கு வதில் முதலில் ஈடுபட்டான். எல்லைப்புறக் காவல்களையும் பலப் படுத்திவிட்டு, நாடு கைப்பற்றுவதில் ஈடுபடலானன். 1305 அள லில், வட இந்தியா முழுவதும் அவனது ஆணையை ஏற்கலாயிற்று, இதன்பின் மீண்டும் விந்தியமலைக்கு அப்பாலுள்ள தக்கணத்திலேயே அவனது கவனஞ் சென்றது. தேவகிரி யாதவர் வாரங்கலைச் சேர்ந்த காகதீயர், ஹொய்சளர் ஆகியோர் தக்கணத்திலும், தென்னிந்தியா வில் பாண்டியரும் ஆட்சி நடத்தினர். 1306 லிருந்து மாலிக் கபூர் பன்முறை படையெடுத்துச் சென்று இவ்வாட்சியாளரை அடிபணிய வைத்துத் திறையும் பெற்றுச் சென்ருன்.
பாண்டியப் பேரரசின் சீர்குலைவு ஹொய்சளரை வென்றபின், 1311-ல் பாண் டி நாடுமீது தன் தாக்குதலை மேற்கொண்டான். மாறவர்மன் குலசேகர பா ன் டி யன் தனக்குப்பின் பாண்டிய அரசைப் பெறுதற்கு, தன் இளைய புதல்வனன வீரபாண்டியனையே உரிமையாள்ளுறக நியமித்திருந்தான். இதை விரும்பாத சுந்தர பாண் டியன், தன் தந்தையைக் கொன்று (சிலர் கருத்துப்படி) தனதுரி மையை நிலைநாட்ட முற்பட்டான். இதனல், உண்டான உரிமைத் தகராறில், வீரபாண்டியனே வெற்றிபெற்ருன் அவ்வேளையில் சுந் தரபாண்டியன், தக்கணத்தில் படையெடுப்பை மேற்கொண்டிருந்த மாலிக் கபூரைத் தனக்கு உதவவேண்டினன், வீர பாண்டியன் ஹொய்சள மன்னனுக்கு முன்னர் உதவியமையும், மாலிக் கபூசின் பகைமையைச் சம்பாதிக்கக் காரணமாக விருந்திருக்கும், பாண்டி நாடுமீது படையெடுப்பை நடத்திய காபூர், சிதம்பரம், பூரீரங்கம் முதலான இடங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தான். மதுரையை முற்றுகையிட்டு வென்றபின் அங்குள்ள கோவில்களையும் கொள்ளை யிட்டுப் பின்னர் இராமேஸ்வரம் வரை முன்னேறி, அங்கு ஒருபள் ளிவாசலை அமைத்தான் எனவும் கூறப்பட்டுள்ளது. மதுரையில் ஒரு படையை விட்டு, காபூர் தலைநகர்க்கு ஏராளமான கொள்ளையுடன் மீண்டான். காபூர் திரும்பிய பின்னரும், பாண்டிய உள்நாட்டுப் போர் முடிவுறவில்லை, சுந்தர பாண்டியனது வேண்டுதலுக்கிணங்க காகதீய மன்னனது பிரதிநிதி யொருவன் படையுடன் சென்று, 1317-ல் வீரபாண்டியனையும் கேரள மன்னனையும் தோற்கடித்து, சுந்தரபாண்டியனுக்கு அரசைப் பெற்றுக்கெ (ாடுத்தான் ஈற்றில் முகம்மது பின் துக்லக் என்ற டில்லி சுல்தான் 1327 க்குப்பின் 'மாபார் நாடு (தமிழ்நாடு) மீது பல தாக்குதல்களை மேற்கொண்டு, தனது 33 மாகாணங்க ஆல் ஒன்ருக அதைச் சேர்த்துக்கொண்டான்.

யாழ்ப்பான அரசும், கம்பளை ஆட்சியாளரும் 147
கில்ஜிகளின் மறைவு : அலாவுத்தீனது பிறசாதனைகளை இனிச் சுருக்கமாகக் காண்போம். அலாவுத்தீனது ஆட்சியின்போது, வட இந்தியாவும், தக்கண அரசுகளும் ஒன்முக இணைக்கப்பட்டு, நீண்ட காலம் நாடு பெருத அரசியல் ஒற்றுமையை இப்போது கண்டது பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டது. அலாவுத்தீனது வரி விதிப்புக் கொள்கையும், சமயக் கொள்கையும் பேரரசில் மக்கள் அமைதிபெற வழிசெய்யத் தவறின. இவனுடைய ஆட்சி 1815-ல் முடிவுற்றது. இவன் இறந்த ஐந்தாண்டுகளில், கில்ஜிகளின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
முகம்மது பின் துக்ளக் கில்ஜி மரபின் முடிவுக்குக் காலாகவிருந்த கியாஸ்-உத்தீன் துக்ளக் என்பானது மகனன முகம்மது துக்ளக் (1826-1351) ஒன்றுக்கொன்று முரணுன குணுதிசயங்களை யுடை யவன். அறிவாற்றலும், பெருந் திட்டங்களைத் தீட்டும் திறனும், சமயப் பொறையும் உடைய துக்லக், மூர்க்க சுபாவம் படைத்த வணுகவும் விளங்கினன். தலை நகரை டில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றி, அதற்கு தெளலதாபாத் எனப் பெயர் சூட்டினன். இவன் காலத்தில் தேர்ன்றிய பல கலகங்களை யடக்குவதில் கடுமையைக் கைக்கொண்டான். இவ்வாறு ஏற்பட்ட கலவர நிலைமைகளைப் பயன் படுத்தி விஜய நகரப் பேரரசு எழுச்சியுற்றதைப் பின்னர் காண் போம். 1351ல் திடீரென அவன் இறந்தபோது, அவனது குடிகள் பெரும் ஆறுதலைப் பெற்றனர். அவனுக்குப் பின் ஆட்சியைப் பெற்ற ஃபிரோஸ் துக்ளக், தன் முன்னேன் இழந்த ஆணிலங்களை மீட்க முயன்றனெனினும், மொங்கோலியப் படை யெழுச்சிகளால் டில்லி சுல்தானியராட்சியும் விரைவில் முடிவடையலாயிற்று. விந் திய மலைக்குத் தெற்கே, தக்கணத்தில் தேவகிரியில் தங்கிய முஸ் லிம் பிரதானிகள் முகம்மது துக்லக்கின் காலத்தில் நிறுவிய பாமணி அரசு தொடர்ந்து நிலைபெற்று வரலாயிற்று.
மொகலாயப் பேரரசு தோன்றுமுன் இந்தியாவில் ஆதிக்கம் பெற்ற முஸ்லிம் ஆட்சியாளரின் முக்கிய அரசியல் நடவடிக்கைகள்
பற்றி இதுவரை சுருக்கமாகக் கூறினுேம். துருக்கிய, ஆப்கானிய முஸ்லிம்களான இவர்களின் சாதனைகள் பற்றியோ, அல்லது அவர் களின் அரசுகள் நிலையாமைக்கு உரிய காரணங்கள் பற்றியோ, இங்கு குறிப்பிட வியலாது. இலங்கையில் முஸ்லிம் படையெழுச்சிகளோ, அரசியலாதிக்க முயற்சிகளோ நடைபெறவில்லை. ஆனலும் அராபிய, இந்திய முஸ்லிம்கள் இலங்கையுடன் நெடுங்காலம் வணிகத்தை நடத்திப் பின்னர் தீவின் கரையோரங்களில் குறிப்பிடத்தக்க அள வில் குடியேற்றலாயினர். இதனல், இலங்கையிலுள்ள குடிகளில் கணிசமான ஒரு தொகையினராக அவர்கள் விளங்கி வருவதுடன், தமது தனித் தன்மைவாய்ந்த பண்பாட்டு அம்சங்களைப் போற்றி வளர்த்து வருகின்றனர்,

Page 80
148 L6ó760L-u Fpub
i. யாழ்ப்பாண அரசின் தோற்றம்
தமிழ்க் குடிகள் வடஇலங்கையில் நெடுங்காலம் வாழ்ந்து வந் தமை பற்றி நாம் துணிவதற்கு நமது ஆதாரங்களிற் ப்ல. குறிப் புக்கள் உள்ளபோதும் வடபகுதியில் ஒரு தமிழ் அரசு தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதற்குப் போதிய சான்றுகள் எமக் கில்லை. யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாய மாலை, வையாபாடல் தகூஷிண கைலாச புராணம் போன்ற ஆதாரங்களில் உள்ள மரபுகளில் பொதிந்துள்ள செய்திகளை நடுநிலை நின்று ஆய்ந்து, உண்மைகளை நிறுவும் பணியில் போதிய அளவு அறிஞர்கள் ஈடுபடவில்லை. சுமார் அரை நூற்றண்டுக்குமுன் யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்ச்சி முறையில் அணுகித் தம்முடிவுகளை நூல்கள் வடிவில் தந்த முதலி யார் செ. இராசநாயகம், நல்லூர் வண. சுவாமி ஞானப்பிரகாசர் போன் முரின் அரிய முயற்சிகள் இத்துறையில் முன்னேடிகளாக அமைந் தன. ஏறத்தாழ இவர்கள் கொண்டிருந்த முடிபுகளைத் தழு வி அண்மைக் காலத்தில் வித்தியாரத்னம் சி. எஸ். நவரத்தினம், சு. நடேசன், டாக்டர் கே. கே. பிள்ளை போன்றவர்கள் யாழ்ப்பாண அரசின் வரலாறுபற்றி யெழுதியுள்ளனர். இவர்களின் கருத்துக்கள் பொதுவான வரவேற்பைப் பெறத் தவறியிருப்பதை நாம் குறிப்பிட வேண்டும்.
கி. பி. எட்டாம் நூற்ருண்டுக்கு முன்னரே, யாழ்ப்பாணப் பகுதி யில் நாகர் அரசு நிலவியது என்பதை நிறுவும் முயற்சி வெற்றி பெற். றுள்ளதாகக் கொள்வதற்கில்லை. மேலும், மகாவம்சம், சூளவம்சம், போன்ற நூல்களில் வட பகுதியில் இருந்த அரசைப்பற்றிய குறிப் பேதும் இன்மை நோக்கற்பாலது. 18-ம் நூற்றண்டில் மயில்வா கனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை யி ல் யாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றி வரும் கூற்றுக்களின்படி, (கி. பி. 725க்குச் சமமான) சாலிவாஹன 715ல் விஜயனது சகோ தரனல் நிறுவப்பட்ட மரபில் வந்த ஒர் இளவரசனன உ க் கி ர சிங்கன், வடதேசத்திலிருந்து ஒரு பெரும் படையுடன் இலங்கையில் வந்திறங்கி, அம் மரபினர் நெடுங்காலம் இழந்திருந்த உரிமையை மீட்கும் வசையில் கடும்போரின் பின் நாட்டின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டான் எனவும், இவன் கதிரமலையில் ஆட்சி நடத்திய போது, தெற்கே மற்ருெரு மன்னன் அரசாண்டான் எனவும் அது கூறுகின்றது. விஜயனுடைய உறவினனன பண்டுவாசுதேவனது மரபிலேயே உக்கிரசிங்கன் வந்ததாகக் கொள்வதன்மூலம், உக்கிர சிங்கன் கலிங்கத்தைச் சேர்ந்தவனென நிறுவுகின்றனர். அதே நூலில் வரும் பிறிதொரு கூற்று அவனைச் சோழ நாட்டவளுக்கு கின்றது. திசை உக்கிர சோழனது மகஞன சிங்ககேதுவின் மகளுக யாழ்ப்பாண அரசின்முதல் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். கைலா

யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் 149
யமாலையின் கூற்றுப்படி, பாண்டிமழவன் என்ற வேளாளத் தலைவல்ை அழைக்கப்பட்டு வந்த ஒருவனே (செகராஜசேகரன், சிங்கை ஆரியன் என அழைக்கப்பெற்றவன் யாழ்ப்பாணத்தின் முதல் அரசன் எனக் கொள்ளவேண்டும். இவனே பின்னர் விஜய கூழங்கைச் சக்கரவர்த் தியென அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இம்மாறுபட்ட கூற்றுக்களை நோக்கும்போது, சில சரித்திர மரபுகளுடன் பல ஐதிகங்களும் கலந்து, உண்மையை மறைத்துள்ளன எனத் தோன்று கின்றது. இவற்றிலுள்ள உண்மையை நிதானிக்கப் பிற ஆதாரங் கள் கிடையாமை வருந்தத்தக்கது. ஏறத்தாழப் பதின் மூன்ரும் நூற்ருண்டுவரை, யாழ்ப்பாண அரசு நிலவியதைக் கூறும் நம்பிக்கை வாய்ந்த பிற ஆதாரங்கள் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண வைபவ மாலே முதலான நூல்களில் வருஞ்செய்திகள் கட்டாயமாக உண்மை நிகழ்ச்சிகளையே குறிப்பன எனவும் உறுதி கூறமுடியாது.
3. யாழ்ப்பாண அரசின் முதல் மன்னணுக மரபுகள் கூறும் உக் கிரசிங்கன் கலிங்கநாட்டைச் சேர்ந்தவன் எனவும், யாழ்ப்பாண மின்னர்கள் தம்மைக் (கலிங்க நாட்டு) கங்கை மரபினரென இலக் கிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன எனவும், கலிங்க மன்னர்க 7ெ7ன கன்கர்கள் தமது நாணயங்களிற் பொறித்த படுத்திருக்கும் எருதையே யாழ்ப்பாண மன்னர்களும் தமது நாணயத்திற் பொறித் தினர் எனவும் பல காரணங்களைக் காட்டி யாழ்ப்பானத்தில் ஆட் சியை நடத்திய மன்னர்கள் கலிங்க நாட்டவர்கள் எனச் சில அறி ஞர்கள்? முடிவுகட்டியுள்ளனர். தமது நாட்டில் உள்ள சிங்ஹபுரம் என்ற பெயரையே இங்கும் "சிங்கை நகர்" என மாற்றி வழங்கினர் என்பர். கலிங்கச் சக்கரவர்த்தி மரபினர் எனச் சூளவம்சத்தில் வரும் தொடர்கள் யாழ்ப்பாண மன்னர்களின் மரபையே குறித் திருக்கும் என இவர்கள் மேலும் துணிந்துள்ளனர். 4 ம் மகிந்தன் கலிங்க அரசமரபில் வந்த இளவரசி யொருத்தியையும், 1-ம் விஜய பாகு "காலிங்க அரசகுடும்பத்தைச் சேர்ந்க "திலொக சுந்தர்' யென்ற பெயரையுடைய யெளவனமும் எழிலும் பொருந்திய இள வரசியையும்" மணஞ்செய்தனர் எனச் சூளவம்சத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இம் மணவினையுறவுகள் இந்தியாவிலுள்ள கலிங்க நாட்டுமரபுடன அல்லது பூரீ விஜய அரசைச் சேர்ந்த ஓர் அரச மரபுடன நடைபெற்றன என நடைபெறும் விவாதத்தைப் பற்றி முன்னர் குறிப்பிட்டோம். யாழ்ப்பாண அரசின் வ ர லா ற் றை ஆராய்ந்த சில அறிஞர்கள், சூளவம்சத்தில் குறிப்பிடப் பட்டுள்ள கலிங்கமரபு வட இலங்கையில் ஆட்சி செய்த "கலிங் 7 மரபையே (3/946 b GT67ś Gargit S657 p63rí (C. S. Navaratnam: Tamils & Ceylon, 97 ft) பிற நாட்டைச் சேர்ந்த கலிங் கமர் யி ன்
* lirálfi Ga, Gs, gairar: South India & Ceylon, uá. 117

Page 81
150 பண்டைய ஈழம்
அவ்வாறு சூளவம்சம் குறிப்பிடாமல் விடக்காரணம் இல்லை. எனவே, இலங்கையைச் சேர்ந்த ஓர் அரச மரபையே அது குறிப்பதாக இவர்கள் வாதிக்கின்றனர். யாழ்ப்பாண அரச மரபை நிறுவியவ்ர் கள் கலிங்க நாட்டவர்களே "என்ற கொள்கை பொதுவாக ஏற் புடைய தெனக் கொள்ளலாம் என டாக்டர் பிள்ளை கருதுகின் ருர். (பக். 121).
யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த அரச மரபினர் க்கு ஆரியச் சக்கர வர்த்திகள் என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தின்மக்குரிய கார்ணங் கள் பற்றியும் பலவித கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. செசராச சேகர மாலையில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று யாழ்ப்பாண மன்னர்களைக் கங்கர்கள் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு, சோழருடன் மணவுறவுகள் கொண்டிருந்த கீழைக்கங்கர் கள் (சோடகங்கர்கள்) இராமேஸ்வரத்துக்குச் சென்று குடியேறி அங் குள்ள பிராமணர்களுடன் விவாகத் தொடர்புகள் வைத்திருக்க வேண்டுமென்பதாலேயே, இவர்களுக்கு “ஆர்யச் சக்கரவர்த்திகள் என்ற பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென நடேசன் கருது கின்றர்.* அதே நூலில், இம் மன்னர்கள் பாண்டிய அரசனுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி நடத்தியமை குறிப்பிடப் பட்டுள்ளது. "அவர் கள் (சிங்கை நகரரசர்கள்) இராமேச்சரத்துப் பிராமணவரச குடி யிற் சம்பந்தஞ் செய்தபின், உப வீதம் (பூணுால்) அண்ந்து, ஆசிய வரசர் என நாமம் புனைந்து, இராமேச்சரத்தைத் தந்தேயத்தின ளுகைக்குட் படுத்தி, அ9 னல் "சேதுகாவலன்" எனப் புதுப்பெய்ர் புனைந்து, விடைக் கொடியுஞ் சேது லாஞ்சனையும் பொறித்து, ஒரு வர் பின்னெருவராக பரராசசேகரன், செகராசசேரன் எனச் சிங் காசனப் பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்தி வந் தார்கள்." இவ்வாறு முதலியார் இராசநாயகம் தமது "யாழ்ப் ானச் சரித்திரம்' எனும் நூலில் (பக். 46-47) கூறுவர். தமது நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும் தமது இராமேஸ்வரத் தொடர்பை நினைவூட்டும் வகையில் "சேது" என்பதைப் பொறித் துள்ளமையும், தங்களைச் சேதுகாவலர்கள் எனக் கூறியிருப்பதையும் நோக்கும்போது இராமேஸ்வரத்துடன் இவர்களுக்கிருந்த தொடர்பு உறுதிபெறுகின்றது. 12-ம் நூற்றண்டளவில், அல்லது அதற்கு முன் பாகவே இம்மரபினர் தம்மை "ஆரியச் சக்கரவர்த்திகள்' என அழைக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். 12-ம் நூற்ருண்டில் வாழ்ந்த புகழேந்திப்புலவர் ஒரு சிங்கை ஆரியசேகரன் மீது அவன் வண்மையைப் போற்றும் பாடலைப் பாடியுள்ளார். இதைக்கொண்டு 12-ம் நூற்ருண்டிலோ, அதற்கு முன்பாகவோ யாழ்ப்பாண மன் னர்கள் 'ஆரியச் சக்கரவர்த்திகள்’’ எனத் தம்மை அழைத்திருப் பர் என முடிவு செய்யப் பெறுகின்றது. * Hist. of Cey. Vol I. Pt II, P. 691

யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் 181
. பொதுவான இலங்கை வரலாற்று நூல்களில், யாழ்ப்பாண அரசு 13-ம் நூற்ருண்டில் கலிங்க மாகனுடைய படையெடுப்பின் விளைவாகவே தோன்றியதாகக் கொள்ளப்படும். யாழ்ப்பாண் வைபவ மாலையில் உள்ள மரபுச் செய்திகளை அப்படியே உண்மை யென ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், 1344ல் இலங்கை வந்த இபின் பட்டுட்டாவின் குறிப்புகளிலேயே யாழ்ப்பாண அரசுபற்றிய மிகப் பழைய சம காலக்குறிப்பு இடம் பெற்றுள்ள தெ ன வும் கூறுவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில நூல்களில் த வி ர, பொறிப்புக்களிலோ பாலி, சிங்களக் காலவேடுகளிலோ 13-ம் நூற் ருண்டுக்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு பற்றிய தெளிவான குறிப் பேதும் இருக்கவில்லை. யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல் களில், யாழ்ப்பாண அரசு பற்றி வரும் மரபுச் செய்திகளை உறுதிப் படுத்தும் பிற ஆதாரங்கள் இன்மையால் அவற்றுக்கு முக்கியத்து வம் அளிக்கத் தயங்குவர். எனவே, 13-ம் நூற்றண்டுக்குச் சற்று முன்பாக யாழ்ப்பாண அரசு தோன்றியிருத்தல் கூடுமாயினும், 13-ம் நூற்ருண்டிலேயே அது கவனத்தைப் பெறும் வகையில் முக் கியம் பெறுகின்றது. கலிங்க மாகனைத் தமிழ் அரசனுகச் சிங்கள நூல்களுமே குறிப்பிடுவதால், அவனுல் அல்லது அவனது உப ரா சாவாக விளங்கிய ஜயபாகுவால் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியரசு தோற்றுவிக்கப் பட்டிருக்கவேண்டு மென்பர். மாகனுக்குக் கலிங்க விஜயபாகு என்ற பெயர் இருந்தமை இலக்கிய ஆதாரங்கள் வாயி லாக அறியப்படுவதால், விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என்பது மாகனையே குறிக்கும் என (கூழங்கை என்பது கலிங்க என்பதன் திரிபாகக் கொண்டு) முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிர காசர் ஆகியோர் கருதினர். இதற்கு மாருக, ஜயபாகுவே (மாகனது உபராஜா) மாகனுடைய காலத்தில் வட இலங்கையில் தனியர சைத் தோற்றுவித்தானென நடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார் (Hist. of Cey. Vol. 1 Pt. III P. 6 92).
யாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றிய முரண்பட்ட கொள் கைகளினல் உண்டாகும் குழப்பத்தை அதிகமாக்குவதற்கு பரண விதான அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து உ த வி யு ள் ளது. "கலிங்கம்' என்பது மலேஷியாவிலுள்ள தென்ற அவருடைய புதுக் கொள்கையின் தொடர்ச்சியாகவே இது உள்ளது. 1264 அளவில் கலிங்க (மலாய் நாட்டு) மாகன் வட இலங்கையில் ஒரு சாவக அரசை நிறுவினன் எனவும், இவனையே வீரபாண்டியன் கொன்று பின்னர் அவனுடையூ. மகனுக்கு அரசைக் கொடுத்து மீண்டதாகவும் பரண விதான கூறுகின்ருர், கலிங்க மாகனையே உக்கிரசிங்கன் எனவும், விஜய கூழங்கை சக்கரவர்த்தி யெனவும் யாழ்ப்பாண வைபவ மாலை முதலான நூல்கள் குறிப்பிடுவதாக அவர் மேலும் கூறுவர். யாழ்ப் பாணத் தீபகற்பத்திலும் அயலிலும் உள்ள இடப் பெயர்களைச் (சாவு

Page 82
8 Lehrs)Lu opb
கச்சேரி, சாவன் கோட்டை, சாவகக் கோட்டை) தமது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கின்றர். யாழ்ப்பாண நகருக்குச் சிங்களத்தில் வழங்கும் "யாப்பனே' என்பதும் (இலக்கியங்களில், யாப்பா-பட் டுண) சாவகர் தொடர்பைப் புலப்படுத்துவதாக அவர் (ஜாவக: யாவக, யாவா - யாபா + பட்டுண) நிறுவ முயன்றுள்ளார். எனவே, இன்றுள்ள நிலையில் யாழ்ப்பாண அரசு தோன்றிய காலம்பற்றி எவ்விதமான முடிவுக்கும் உறுதியுடன் வர இயலாமலிருக்கின்ருேம். 13-ம் நூற்ருண்டில் யாழ்ப்பாண அரசு இருந்தமைக்கு உறுதியான சான்றுகள் உண்டு. ஆனல், அந் நூற்ருண்டுக்கு முன்னரே (இரண் டொரு நூற்ருண்டுகளுக்கு முன்னர்) அது தோன்றியிருத்தல் கூடும் என நாம் நம்பலாம்.
iii. ஆரியச்சக்கர வர்த்திகள் :
யாழ்ப்பாண அரசு வலுப்பெறல்
13-ம், 14-ம் நூற்ருண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் தம்மை ஆரியச் சக்கரவர்த்திகள் எனக் குறிப்பிட்டதை முன்னரே கண்டோம். இலங்கைக் காலவேடுகளிலும், கல்வெட்டுக் களிலும் இப் பெயர் இடம் பெற்றுள்ளது. தமது இராசதானியாக இவர்கள் கொண்டிருந்த சிங்கைநகர் என்பது, இப்போதைய நல்லூர் என்பதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயரா என்பது தெளிவாக வில்லை. சிங்கை நகர் இப்போதைய் வல்லிபுரம் இருக்கும் பகுதிக்கு அண்மையில் இருந்திருத்தல் வேண்டும் என அறிஞர்கள் சிலர் கருது கின்றனர். வல்லிபுரம் ஒரு காலத்தில் ஒரு சிறந்த கடற்கரைப் பட் டினமாகவும், ஒரு வேளை தலைநகராகவும் இருந்திருக்கக் கூடுமெனப் பொதுவாகக் கூறப்படினும், தொல் பொருளாய்வுகள் சரிவர மேற் கொள்ளப்பட்டாலே இவை பற்றிய உறுதி வாய்ந்த முடிபுகள் ஏற் படலாம். சிங்கை நகரை இராசதானியாகக் கொண்டிருந்தமை யால், ஆரியச் சக்கரவர்த்திகள் "சிங்கை ஆரியர்கள்" எனவும் அழைக்கப்பட்டனர். செகராச சேகரன், பரராசசேகரன் என்ற பட் டப் பெயர்களை அவர்கள் மாறி மாறிச் சூடியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகளின் கீழ், யாழ்ப்பாண அரசனது 13-ம் நூற்ருண்டில் வலிமையெய்தி, அடுத்த நூற்ருண்டில் அதி யுன்னத நிலையைப் பெற்றது. 14-ம் நூற்ருண்டிலேயே ஆரியச்சக் கரவர்த் ஆகளின் ஆணை தென்னிலங்கை யாட்சியாளர்களாலும் ஏற்கப்பட்டிருந்தது. இவ்வாறு யாழ்ப்பாண அரசு சிறப்புற விளங் கிய இரு நூற்ருண்டுகளின் (13-ம், 14-ம் நூற்.) வரலாற்றை இப் பகுதியிற் சுருக்கமாகக் கூறுவோம்.
முதல் ஆரியச் சக்கரவர்த்தியான விஜய கூழங்கைச் சக்கர வர்த்தி (சிங்கையாரியன் 1215-40) பற்றி வைபவ மாலையில் உள்ள

Ikuntybus) urtas67 அர்சும், கம்பளை ஆட்சியாளரும் I 53
செய்திகள் உண்மையில் முந்திய மன்னர்கள் காலத்துக்கு உரியவை யாகும். அடுத்த ஆரியச் சக்கரவர்த்தி (குலசேகர சிங்கையாரியன் 1240 - 1256 ) அமைதியான ஆட்சியை நடத்தின னெனினும், இவனையே ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கைப்பற்றிச் சென்ற தாக நவரத்தினம் கருதுகின்றர். இவனுக்குப் பின் அரசைப்பெற்ற குலோத்துங்க சிங்கையாரியன் 1256 - 79 'தன் காலத்துத் 5äsvuuttu போர் வீரனும், யாழ்ப்பாண மன்னர்களுள் தலைசிறந்த ஒருவனு? மாக விளங்கியதாக நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார். இவன் பாண் டிய அரசமரபின் நட்பாளனுக விளங்கி, ஹொய்சள (போசள) மன் னனுக் கெதிராக ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அடைந்த போர் வெற்றிக்கு உதவியவனுகக் கொள்வர். இவன் காலத்தில் யாப்பகு வவில் தங்கியிருந்த 1-ம் புவனேகபாகுவுக்கும் இவனுக்கும் முத்துத் தளங்களின் உரிமை குறித்துத் தகராறு எழுந்திருக்க வேண்டும். இவனுக்குப்பின் ஆட்சியைப்பெற்ற விக்கிரம சிங்கையாரியன் (1279 - 1302) காலத்திலேயே பாண்டியப் படையொன்று இலங்கை வந்தது, மார்க்கோ போலோ என்ற பிரசித்திபெற்ற வெனிஸ் பி ர யா னி இலங்கை வந்ததும் (1292-ல்) இவன் காலத்திலேயாகும். இவனு டைய ஆட்சியிலிருந்த சிங்கள தமிழ்க்குடிகளிடையே கலகம் எழுந்த போது அதை அடக்கியபின், அதில் முக்கிய பங்குகொண்ட சிலரை அரசன் கடுமையாகத் தண்டித்தான். இவ்வாருக, 13-ம் நூற்ருண் டின் முடிவில் யாழ்ப்பாண மன்னர்கள் இலங்கையில் அரசியற் சிறப் புடையவர்களாக விளங்கி வந்ததை உணரலாம். பாண்டியப் பேர ரசுக்கு முதலில் பணிவாக யாழ்ப்பாண மன்னர்கள் விளங்கிப் பின் னர் அப்பேரரசு வீழ்ச்சி யெய்தியபோது மிகவும் முக்கியத்துவம் பெற்றனர். ܕ ;
14-ம் நூற்றண்டில் ஆட்சி செலுத்திய ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாண அரசின் வலிமையைப் பெருக்கி அதன் ஆதிக்கத்தை வளர்த்தனர். அரசியல் துறைகளில் மட்டுமன்றி, சமய (சைவ) வளர்ச்சியிலும், தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கினர். தமிழ்ச்சங்கம் ஒன்று இம்மன்னர் களின் காலத்தில் நிறுவப்பெற்று அவர்களால் ஆதரிக்கப்பட்டதுஇபின் பட்டுட்டர் முதலான பிறநாட்டு யாத்திரிகர்கள் இலங்கை வந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் பெருமையை நாம் உணரத்தக்க வகையிலான பயன்தரு குறிப்புக்களையும் விட்டுச் சென்றுள்ளனர். வரோதய சிங்கையாரியன் ‘செகராச சேகரன்"என்ற பட்டப்பெயரைச் சூடினன். அமைதியும் முன்னேற்றமுங் கண்ட இவனுடைய ஆட்சி யில் பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவன் காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சகராசசேகரம்* என்ற வைத்திய நூலில், சர்ப்ப சாஸ்திரம் என்ற பகுதியில் வரும் ஒரு செய்யுள் அக்காலத்தில் தென்னிலங்கை வேந்தர்களும் ஆரியச் சக்
* இது பின்வந்த ஒரு செகரரசசேகரன் (ஜயவீர சிங்கையா ரியன்) காலத்தது என்பார் நவரத்தினம். n
20

Page 83
154 பண்டைய #pb
கரவர்த்திக்குத் திறையளித்ததை உணர்த்தும். இம்மன்னன் நிறு விய தமிழ்ச் சங்கத்தில் யாழ்ப்பாணப் புலவர்கள் மட்டுமன்றி, இந் தியாவிலிருந்து வந்த புலவர்களும் நன்கு ஆதரிக்கப்பட்டனர். குல சேகர பாண்டியனது ஆட்சி முடிவுற்றபோது, மதுரையில் மூண்ட அரசுரிமைத் தகராறில் சுந்தர பாண்டியனது கட்சியை ஆதரித்து, ஒரு படையுடன் வரோதயன் இங்கிருந்து சென்று அவனுக்கு அரசு ரிமையை மீட்டுக் கொடுத்தான் அவ்வாறு வரோதயன் இந்தியா சென்ற வேளையில் இங்குள்ள வன்னித்தலைவர்கள் சிலர் சிங்கள அர சரின் உதவியை நாடிக் கலகஞ்செய்ய முற்பட்டதாகவும், அவ்வு தவி கிட்டாமையால் அம்முயற்சியைக் கைவிட்டதாகவும், இந்தியா விலிருந்து மீண்ட வரோதயன் அவர்களை விசாரித்தபின் மன்னித்து விட்டதாகவும், விசுவாசமாக விருந்த ஓமந்தைத் தலைவனுக்கு வெகு மதிகளை வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இவனது காலத்தில் கச்சாய்த்துறையில் நடைபெற்ற ஒரு சண்டையில் வரோதயனது படை கள் பெருவெற்றி யெய்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (அங்கு இவன் தோற்கடித்த பகைவர்கள் வன்னியர் படையா அன்றி அவர் களுக்கு உதவ வந்த வடகர் (தெலுங்கர்) படை யா என் பது தெளிவில்லை.) கச் சாய்ப் போர்க் களத்திலேயே சடலங்க ளே ப் பரிசோதனை செய்து தமது வைத்திய நூலுக்குதவும் குறிப்புக்களை துெ கராசசேகர ஆசிரியர் திரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ் வாருக வரோதய சிங்கை ஆரியன் அரசியல், போர்த்துறைகளில் மட்டுமன்றி, பொருளியல், சமயம், இலக்கியம் முதலான பிற துறைகளிலும் தனது அரசைச் சிறப்புடன் தி ஈழச் செய்தமை போற்றுதற்குரியது.
மார்த்தாண்ட சிங்கையாரியன் ( 1825 - 1348) பரராஜசேகரன் என்ற பட்டப்பெயரைச்சூடி, சுமார் கால் நூற்ருண்டுக் காலம் ஆட்டி செய்தான். இவனும், கல்வி, பயிர்ச்செய்கை முதலான துறைக ளில் ஊக்கங்கொண்டு பணியாற்றினன். இவன் காலத்திலேயே (1344-ல்) இபின் பட்ட்ேடா என்ற மொறக்கோ நாட்டு யாத்திரிகன் ஆதாம் மலையை (பூரீபாதவை)த்தரிசிக்க இலங்கை வந்தான். இவன் விட்டுச் சென்றுள்ள பயணக் குறிப்புக்கள் மூலம் இலங்கை பற்றி யும், குறிப்பாக யாழ்ப்பாண அரசின் சிறப்புக்கள் பற்றியும் ஒல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவன் இலங்கையில் பத்தால என்ற ஒரு துறையில் (பட்டினத்துறையைக் குறிப்பதாகச் சிலரும், புத்தளத்தைக் குறிப்பதாகப் பிறரும் கருதுவர்.) இறங்கிப் பின்னர் யாழ்ப்பாண மன்னனை அடைந்தபோது அவன் அங்கு நன்கு உபசரிக் கப்பட்டான். பின்னர், மன்னன் உதவிய யோகிகள், பிராமணர் ஆகியோருடனும் சிவிகையாளருடனும் புறப்பட்டு, முதலில் ஒர் ஆற்றைக் 'கடந்து பின் மன்னர் மண்டலத்தையும், சலாபத் துறை யையும் தாண்டி, கோனரின் ஆளுகையிலிருந்த கோ நக  ைர

யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் 55
அடைந்து, அங்கிருந்து இரத்தினபுரி வழியாகச் சென்று ஆதாம் மலையை அடைந்து திருப்பாதத்தை வழிபட்டதாகத் தன் குறிப்புக் களில் எழுதியுள்ளான். இக்குறிப்புக்களும் சிங்கை நகர் எது என் பதைத் தெளிவாக்கத் தவறியுள்ளன. ஆரியச் சக்கரவர்த்தியை இபின் பட்டுட்டா "இலங்கைச் சுல்தான்? எனக் குறித்துள்ளதைக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்தி அக்கால இலங்கையில் முதன்மை பெற்றிருந்தமை தெளிவாக்கப்பட்டதாகக் கூறுவர். ஆயின், கோன ரும் இலங்கைச் சக்கரவர்த்தி யென்றே குறிக்கப் பெற்றுள்ளதால் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. ஆரியச் சக்கரவர்த்தியின் பொருளியற் சிறப்பை இபின் பட்டூட்டா கூறும் விபரங்கள் தெளிவாக்குகின்றன எனலாம். ஆரியச் சக்கரவர்த்தி யின் நூறு கப்பல்கள் ஒரே நாளில் சோழமண்டலக் கரையில் கறுவா, அகில் முதலான ஏற்றுமதிப் பொருள்களுடன் நின்றதைக் கண்டதாக அவன் கூறியுள்ளான். முத்துத்தளங்களும் ஆரிய ச் சக்கரவர்த்தியின் பொறுப்பிலேயே இருந்தன என்பதும் அவனது குறிப்புக்களால் தெளிவாகின்றது. ஆரியச் சக்கரவர்த்தி பாரசீக மொழியை அறிந்திருந்தான் எனவும், கல்விமானகக் காண்ப்பட் டான் எனவும் பட்டுட்டா மேலும் குறிப்பிட்டுள்ளான்.
மார்த்தாண்ட சிங்கையாரியனுக்குப் பின் யாழ்ப்பாண அரசைப் பெற்ற குணபூஷண சிங்கை ஆரியன் 1348-71, விரோதய சிங்கை ஆரியன் 1381-80 போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் மார்த் தாண்டனது காலச் செழிப்பும் சிறப்பும் நிலவின. குணபூஷணன் காலத்தில் நெசவாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டு வண்ணுர்பண்ணையில் குடியேற்றப்பட்டதாகக் கூறப்பெற்றுள்ளது. இம் மன்னன் இளவயதினனக இருந்த காலத்தில் இவனது தாய் ஆட்சியைக் கவனித்து இருத்தல் கூடுமென்வர். இவனுடைய ஆட் சியின்போதே தென்னிந்தியாவிலிருந்து வேளாளத் த லைவர் க ள் யாழ்ப்பாணத்திலுள்ள பல கிராமங்களில் குடியேறலாயினர். இக் குடியேற்றங்கள் பற்றி வைபவமாலையும். கைலாயமாலையும் சில விபரங்களைக் கூறுகின்றன. 14-ம் நூற்ருஜண்டின் முற்பகுதியில் பாண் டிய அரசு முஸ்லிம் தாக்குதல்களுக்கு இலக்காகிப் பின்னர் மதுரை யில் ஒரு முஸ்லிம் சுல்தானது ஆட்சி சிறிது காலம் நடை பெற்றது. பின்னர் விஜய நகரப் பேரரசு எழுச்சியுற்றபோது மதுரை சுல்தானட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அதற்குப் பதில் தெலுங்குமொழி பேசும் அதிகாரிகளின் பொறுப்பில் தமிழ் நாட்டின் நிருவாகம் விடப்பட்டது இத்தகைய பெரும் மாற்றங்களே ஆளும் வகுப்பினராக இருந்த வேளாளரைத் தம் காட்டை விட்டு புதிய நாடான ஈழத்துக்க வரச் செய்தன என நவரத்தினம் குறிப் பிட்டுள்ளார் (அதே நூலில் பக். 115). இத்தகைய ஒரு குடியேற் றம் நடந்தமை பற்றிய மரபு, உண்மையை அடிப்படையாகக் கொண் டிருந்தது எனப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுவர்.

Page 84
756 Lu 67 69) au Fph
ஜெயவீர சிங்கையாரியன் 1380 1410 சிறுவயதிலேயே, தந்தை விரோதய சிங்கையாரியனது திடீர் மரணத்தைத் தொடர்ந்து அர சைப் பெற்ருன். இவன் ஆட்சி நடத்திய காலத்தில் தென்னிலங் கையில் யாழ்ப்பாண அரசுக் கெதிரான நடவடிக்கைகளில் அளகக் கோனர் ஈடுபட்டதன் விளைவாக, ஒரு படையெடுப்பை அம்கு மேற் கொள்ளலானன். இதன் விபரங்களை அடுத்த பகுதியிற் கூறுவோம். இன்னும் இவனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற குணவீரசிங்கை யாரியனும் 1410-40 சைவ சமய வளர்ச்சிக்குப் பெரும் பணிகள் ஆற்றினர். ஜெயவீரன் "சைவந் தோன்றிடத் தோன்றினன்" எனச் சிறப்பிக்கப்பட்டவன்.குணவீரன் இராமேஸ்வரத்திலுள்ள கோயிலில் திருப்பணியை மேற்கொண்டிருந்தான். இதற்குத் திருகோணமலை யில் இருந்து கற்களைக்கொண்டு சென்றன் எனப்படுகின்றது. தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்த மன்னர்களில் இவனும் குறிப்பிடத் தக்கவனவான். 'பரராஜ சேகரம்" எனப்படும் ஒரு வைத்திய நூல் இவன் காலத்திலேயே எழுதப் பெற்றது. யாழ்ப்பாண அரசின் வரலாற்றைத் தொடருமுன் கம்பளையிலிருந்த சிங்கள மரபினர் பற் றியும், அவர்களுக்கும் ஆரியச் சக்கரவர்த்திக்கு மிடையே ஏற்பட்ட முரண்கள் பற்றியும் அடுத்த பகுதியிற் காண்போம்.
.
IV. கம்பளை ஆட்சியாளரும், அளகக்கோனுரும்
கம்பளை அரசமரபு: 14-ம் நூற்றண்டின் முற்பகுதியின் முடிவில் (1341க்குப்பின்) கம்பன சிங்கள அரசின் இராசதானியாக்கப்பட்டது. இதனிடையே தம்பதெணிய அரச மரபு முடிவெய்தி, புதியதொரு மரபும் தோன்றலாயிற்று. இம் மரபின் தொடக்க கால மன்னர் களில் ஒருவனுன 5-ம் விஜயபாகுவுக்கு வழங்கப்பட்ட "சவுளு' என் பதை "சாவக" என்பதிலிருந்து வந்ததாகக் கொண்டு, இப்புதிய மரபை "இலங்கையை முந்திய நூற்ருண்டில் ஆட்சி செய்த சாவக (மலாய்) ஆட்சியாளருடன் தொடர்பு படுத்தப்பரணவிதான முயன் றுள்ளார். இது எவ்வாறிருப்பினும், ஒரு நூற்ருண்டுக்குக் குறை வாக கம்பளையில் ஆட்சி செலுத்திய இப்புதிய மரபு அத்துணைச் சிறப்புடைய மன்னர்களைக் கொண்டிருக்கவில்லை. அக்காலத்தில் நிலவிய அரசியல் நிலைமைகளைத் தமது வலிமையைக் கொண்டு சமா ளித்து நாடுமுழுவதையும் தமது ஆட்சியில் நிலைகுலையாது வைத்திருக் கும் ஆற்றல் பெற்றவர்களாக அவர்கள் இருக்கவில்லை. உண்மையில் இம்மன்னர்கள் குறுகிய ஆணிலங்களையே ஆட்சி செய்தனராயினும், "திரிசிங்கள’ அதிபதிகளாகத் தம்மைக் குறிப்பிட்டு வந்தனர். கம்பளை யில் சில மன்னர்கள் ஆட்சி செய்யும்போது, அதே காலத்தில் சிலர் டெடிகமையில் இணையரசர்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் 157
அளகக்கோளுர்கள்: கம்பளை அரச மரபினர் பலவீனர்களாக இருந்ததையும், அவர்களை யெதிர் நோக்கிய இடர்கள் மிகப் பெரி தாக இருந்ததையும் பயன்படுத்தி இரு பிரதானி குடும்பங்கள், குறிப்பாக அளகக்கோஞர் குடும்பம், கம்பளைக் கால அரசியலில் மிகமுக்கிய பங்கை வகிக்கலாயின. கம்பளைக் காலத்தின் பிற்பகுதி யில், இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ரயிகமையிலிருந்து ஆட்சி யலுவல்களைக் கவனித்தனர். தென்னிந்தியாவிலுள்ள சேரநாட்டின் தலைநகரான வஞ்சி (கரூர்)யிலிருந்த ஒரு பிரதானி குடும்பத் தலை வர்களான இவர்கள், இலங்கை வந்து இங்குள்ள மன்னர்களின் சேவையில் அமைச்சர்களாக விளங்கி, காலப்போக்கில் செயலள விலான ஆட்சியாளர்களாகவும் விளங்கினர். தொடக்கத்தில் இவர் கள் வணிகர்களாக இருந்திருக்கலாம். இலங்கையிற் குடியேறி இங்கு பல தலைமுறைகள் காலமாக வாழ்ந்து வந்த பின்னரே இவ்வாறு அரசியல் முக்கியத்துவம் பெற்றனர். இவர்கள் இலங்கையிலுள்ள அரச குடும்பங்களுடன் மண உறவுகள்” கொண்டிருந்தன ரென்ப தால், இவர்களுடைய முக்கியத்துவமும் மதிப்பும் புலனுகலாம். "பிரபு ராஜா” என்றே தம்மை அழைத்தபோதும் உண்மையில் 14-ம் நூற்ருண்டின் இறுதியில் இவர்களே வலிமைமிக்க ஆட்சியாளரா கத் தென்னிலங்கையில் விளங்கினர். ‘அளகக்கோஞர்" என்ற பெய ரைத் தாங்கியவர்கள் வெவ்வேறு காலத்தில் பிரபு ராஜாக்களாக இருந்துள்ளனர். இவர்களுள் மிகவும் புகழ் பெற்றவன் 14-ம் நூற் முண்டின் பிற்பகுதியில் ஆட்சி செலுத்திய பெரிய அளகேஸ்வ ரன் ஆவன். இராஜாவலீ முதலான சிங்களக் கால வேடுகளின் பாராட்டைப் பெற்றவன் இவனே. வரலாற்றில் இடம் பெற்ற மூன் ரும் அளகக்கோனரும் இவனே. (அளகக்கோனர்கள் சிங்கள நூல் களில் அளகேஸ்வரர்களெனக் குறிக்கப்பெற்றுள்ளனர்).
5-ம் விஜயபாகுவும் பின்னுேரும் அளகக் கோஞர்களின் அரசியல் நடவடிக்கைள் பற்றி யறியுமுன், 5-ம் விஜயபாகுவால் நிறுவப் பட்ட புதிய மரபைச் சேர்ந்த சில மன்னர்கள் பற்றிச் சுருக்கமாக அறிந்துகொள்வோம். 5-ம் விஜயபாகுவின் புதல்வர்களான 4-ம் புவனேகபாகு (1341-51) வும், 5-ம் பராக்கிரமபாகு (1344-59)வும் ஒரே காலத்தில் ஆட்சியாளர் சளாக இருக்துள் கானர். பின்னவன் டெடிகமையை இராசதானியாகக் கொண்டிருந்த 1 என். இவர்களு டைய காலத்தில், வேருெரு பிரபுக் குடும்பம் முக்கியம் பெற்றிருந் தது. சேணு லங்காதிகார என்ற இப் பிரபுவின் குடும்பமும் மலையாள தேசத்தைச் சேர்ந்த மரபில் வந்த காகவே கொள்ளப்படும். இக் குடும்பத்திற்கும், அளகக்கோனர் குடும்பத்திற்கும் பெரும் போட்டி நிலவியதில் வியப்பிருக்க முடியாது. 4-ம் புவனேகபாகுவும் "திரிசிங் களாதீஸ்வர னெனத் தன்னை அழைத்துக்கொண்டபோதும், தென் னிலங்கையிலே சில பகுதிகள் இவனுடைய ஆட்சியில் இருந்ததாகக்

Page 85
158 பண்டைய ஈழம்
கூறுவதற்கில்லை. வட இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தியும் தென் னிலங்கையில் யிகமையில் அளகக்கோனரும் இதே காலத்தில் அதி காரத்தைப் பெருக்கி வந்தனர், ரயிகமையில் நிகழ்ந்த ஒரு புரட்சி யால் அளகக் கோனுரின் அதிகாரம் சிறிது தடைப்பட்டபோது, கம்பளை சிறிது காலம் செல்வாக்குப் பெறலாயிற்று 5-ம் பராக்கிரம் பாகுவும் அவனது அமைச்சனை சேனலங்காதிகர்ரனும் முக்கியூம் பெறலாயினர். ஆனல் விரைவில் 5-ம் பராக்கிரமபாகு உருகுணக் குத் துரத்தப்பட்ட சாக அறிகிருேம் ஆரியச் சக்கரவர்த்தியின் ஒரு படையெடுப்பாலேயே இவ்வாறு நேர்ந்ததாகக் கூறுவர். 5-ம் பராக்கிரமபாகுவுக்குப் பின் ஆட்சியைப் பெற்ற 3-ம் விக்கிரமபாகு (1357-74) முந்திய இரு அரசர்களின் மருமகனுகக் கருதப்படுகின் முன். இவனுடைய காலத்தில் அளகக் கோனர் ஒருவன் கம்பளை அரசியலில் அதிக செல்வாக்கைப் பெற்றன். இவனே அளகக்கோஞ்ர் களுள் மிகவும் புகழ்பெற்றவன். இவ்வாறு அளகக் கோனர் கம்பளை யிலும் செல்வாக்கெய்தியமையால், சேன லங்காதிகாரனது முக்கி யத்துவம் அருகி மறையலாயிற்று. 3-ம் விக்கிரமபாகு ஆரியச் சிக் கரவர்த்திக்குத் திறை செலுத்தி வந்தமை குறிப்பிடத் தக்கது கம்பளை மன்னனது சார்பிலேயே, அளகக் கோனர் ஆரியச் சக்கர வர்த்தியின் ஆதிக்கத்துக்கு முடிவைக் காண முற்பட்டு 1389 அளவில் வெற்றி பெற்றதாகத் தெரிகின்றது. 3-ம் விக்கிரமபாகு பதினெட்டு ஆண்டுகள் வரையில் அரசனுக விருந்தான். இவனும், இவனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற 5-ம் புவனேகபாகு (1372-14 08) வும் பெயரளவில் மட்டுமே ஆட்சியாளராக விருந்தனர். இவர்கள் காலத்தில் அளகக் கோேைர உண்மையான ஆட்சியாளனுக விளங்க லா(6) என். (-th புவனேகபாகு ஓர் அளகக் கோனரின் மகளுவான். ஆe) ல் அளகக் கோஞர்களிடையே உரிமை பெண் வழி மருமகனுக்கே செல்லும்.) 5-ம் புவனேகபாகுவுக்குப் பின் கோட்டை 6-ம் பராக் கிரமபாகுவே முறைப்படி அரசைப் பெற்ற மன்னணுவான். இடையே நிகழ்ந்தவற்றை விரைவிற் கவனிப்போம்.
முதலிரு அளகக்கோஞர்கள்: 5-ம் விஜயபாகுவின் ஆட்சிக் காலத் தின்போது, பெரும் அதிகாரத்தை வகித்த அமைச்சனும் ஆட்சியா ளனுமான அளகக்கோனர் நிஸங்க அளகக்கோனர் என்பானது வழி யில் வந்த பத்தாவது அளகக்கோனரெனக் குறிப்பிடப் பெற்றுள்ள போதும், இவனே முதன்முதலில் எமது கவனத்துக்குள்ளாகும் அள கக்கோனர் ஆவன். கித்சிறிமேவன் - களனியில் சமயக் கட்டிடங்கள் நிறுவப்பட்டதற்கு இந்த அளகக்கோனர் உதவியளித்ததாக 1344-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பொறிப்புக் குறிப்பிடுகின்றது. அதே ஆண்டில் இலங்கை வந்த இபின் பட்டுட்டாவும் இவனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளான். 1344-ல் வடஇலங்கையில் வந்திறங்கிய இபின் பட்டுட்டா பின்னர் ஆரியச் சக்கரவர்த்தியின் உதவியுடன் ஆதாம்

யாழ்ப்பாண அரசும், கம்பன் ஆட்சியாளரும் 189
மலைக்குச் செல்லுகையில், "கோநகர்" என்ற இடத்தில் தங்கியது கூறியுள்ளான். 'அல் கொனரின் ரின் (அளகக்கோனரின்) பிட இதைக் குறிப்பிட்டிருப்பதோடு வெள்ளையான முதலான அரசர் ஒ. னங்களை அளகக்கோஞர் வைத்திருந்ததையும் அவன் அறியத் தருவின் ருன், கோநகர் என்பதைக் குருன கலையாகவும், ரயிகமையாகவும் இரத்தினபுரியாகவும் பலவாருக இனங்கண்டுள்ளனர், ஆய்வாளர் அது எவ்வாறியிருப்பினும், கம்பளை மன்னனுக்குப் பணிவ. இல் லாது. சு யா தீ ன த் து ட ன் அளகக்:ோனுர் ஆட்சி செலுத்தி னன் என்பது இபின் பட்டூட்டாவின் குறிப்புக்களால் தெளிவாகி றது. ஆயின் மொறக்கோ யாத்திரீகன் இலங்கையை விட்டு ԼվՈՉւն படுமுன்னரே. இந்த முதல் அளகக்கோனருக் கெதிரான ஒரு புரவி நடைபெற்றதாக அவன் குறிப்பிடுன் கிரு:ன். 'அவனது (அளகக் கோனரது) பேரரசில் உள்ள பிரமுகர்கள் அவனுக்கெதிராகக் கல கஞ் செய்து, அவனைக் குருடாக்கிவிட்டு அவன் மகனை அரசனுக்கி னர்" எனப் பட்டூட்டா எழுதியுள்ளான். ஆட்சியுரிமை அளகக் கோனரிடையேயுள்ள (மலையாள) வழமைப்படி மருமகனுக்கே தேர வேண்டுமாதலால் இக்கலகத்தின் நோக்கம் அவ்வாறு சேர்வதைத் தடை செய்தற்காக இருக்கலாம். இதில் கம்பளை ஆட்கியாளரும் குறிப்பாக சேன லங்காதிகாரனும் அக்கறை கொண்டிருக்கலம் அவர்கள் இக்கலகத்தின் விளைவாகத் தமது அதிகரரத்தை வளர்க்க முடிந்தமை தெளிவு. இக் கலகத்தின் போது பதவியில் அமர்த்தப் பட்டவனும் அளகக்கோனராகவே யிருந்திருப்பானெனக் ெேகாண்டு அவனை இாண்டாம் அளகக்கோளுர் என்பர். இவன் மிகவும் சொற் பம்ான கர்லமே பதவி வகிக்க முடிந்தது. இவனே விடுத்து, elp gif ரும் அளகக்கோனுர் பற்றி இனிக் கவனிப்போம.
பெரிய அளகேஸ்வரன்: கம்பளைக் காலப் பகுதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆட்சியாளன் இவன் என்பதில் ஜயமில்லை. முதல் அளகக்கோனரின் சகோதரி பத்மாவதியின் மகனக இவன் இருத்தல் கூடும். இவன் காலத்து எழுந்த நூல்களிலும் (நிகாய சங்கிாஹ, அத்தனகலு வங்ஸ முதலானவை). சில கல்வெட்டுக்களிலும் இவனைப் பற்றிய விவரங்கள் உள்ளன. முன்னர் நடைபெற்ற அரசியற் புரட்சியால் நலிவெய்திய அளகக் கோஞர்கள் மீண்டும் வலிமை பெற உதவிய நிகழ்ச்சிகளை யினிக் கூறுவோம். 5-ம் பராக்கிரம பாகு தமிழ்ப் படைகளினல் துரத்தப்பட்டு உருகுணைக்குச் சென்று வாழ்ந்ததை அங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு 5-ம் பராக்கிரமபாகு உருகணைக்குக் கலைக்கப் பட்டமைக்குக் காரண மாக விருந்தவன் ஒர் ஆரியச் சக்காவர்த்தி யெனக் கூறுவர். டெடி கமைக்குப் பதின் மூன்று மைல் தொலைவிலுள்ள கொட்டகமவில் பொறிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டை இதற்கு ஆதாரமாகக்

Page 86
i 60 பண்டைய ஈழம்
கொள்வர்." (பின்னர் நடைபெத்ற ஆரியச் சக்கரவர்த்தியின் படை யெடுப்பில் அவன் எய்திய வெற்றியையே இது குறிப்பதாக் நவரத் தினம் கருதுவர் - அதே நூலில் பக். 133) 5-ம் பராக்கிரமபாகு வும், 3-ம் விக்கிரமபாகுவும் முறையே, டெடிகமையிலும், கம்பளை யிலும் போட்டியாக ஆட்சி நடத்தி வந்ததாக்வும், விக்கிரமபாகுவே ஆரியச் சக்கரவர்த்தியின் துணையை வேண்டி 5-ம் பராக்கிரமபாகு வைக் கலைக்கத் தூண்டுதலாக விருந்திருக்கலாம் எனவும் பரணவி தான விளக்கந்தருகின்றர். இதே வேளையில், அளகக்கோனர் ஒருவ னும் (பெரிய அளகேஸ்வரன்) தன் குடும்பத்தினர் முன்னர் இழந்த செல்வாக்கை நிலை நாட்டுவதில் வெற்றி பெற்றுள்ளான். இவனும் இவனது உடன் பிறந்தாரும் 3-ம் விக்கிரமபாகுவின் அரச குடும்பத்து டன் நெருங்கிய உறவு பூண்டனர். 3-ம் விக்கிரமபாகு தன்நிலையை உறுதிப்படுத்தத் தன் உடன் பிறந்தாளான ஜய:பூரீ என்பாளை இவர்க ளுக்கு மணஞ்செய்து வைத்தான். 3-ம் அளகக்கோனரும், அவனது தம்பிமாரும் முன்னர் நடந்த புரட்சியினுல் உரிமை யிழந்தமையால், தமக்கு உதவி பெறுவதற்காக ஆரியச் சக்கரவர்த்தியிடம் சென்று அவனுடைய படையுதவியைப் பெற்றிருக்கலாம். இது எவ்வாருயி னும் ஆரியச் கசக்ரவர்த்தி மேற்கொண்ட படையெடுப்பின் விளைவாக 3-ம் விக்கிரமபாகுவும், அவனிலும் மே லா. க அளகக்கோனரும் நன்மை பெற்றனர். ஆயின் இரு பகுதியினரும் ஆரியச் சக்கரவர்த் திக்குத் திறை செலுத்தும் நிலையில் இருக்க நேர்ந்தனர். வரிகளைப் பெறுதற்கான ஆட்களை நிறுத்திவிட்டு, ஆரியச் சக்கரவர்த்தி யாழ்ப் பாணம் மீண்டான்.
ஆரியச் சக்கரவர்த்தியின் படையெடுப்புக்கள்: ஆரியச் சக்கரவர்த்தி தனது இராசதானிக்குத் திரும்பியதும், அவனது ஆதிக்கத்திலிருந்து கம் &ள அரசின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் விக்கிரமபாகுவும், அளகக்கோஞரும் ஈடுபடலாயினர். ஆரியச் சக்கரவர்த்தியை எதிர்ப் பதற்கென ஒரு கூட் டு ற வை விக் கி ர ம பா கு அ மை த் ததாக ஒரு பொறிப்பு க் குறிப்பிட்டுள்ளது. அளகக்கோஞர் கோட்டை யெனப் பின்னர் அழைக்கப்பட்டு வந்த் ஜயவர்த்தனக் கோட்டையில் ஒருபலம் வாய்ந்த அரணை அமைத்து, தன் படைப்
' கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினர் காமர்வளைப்
பங்க்யக்கை மேற்றிலதம் பாரித்தார் பொங்கொலி நீர்ச்
சிங்கை நகரா ரிய ஃனச்சேரா வணுரேசர்
தங்கள் மடமாதர் தாம்" W - இப்பொறிப்பின் காலத்தைப் பதினன்காம் அல்லது பதினைந்தாம் நூற்ருண்டாகக் கொள்வர். 14-ம் நூற்ருண்டின் மத்தியில் ஆரியச் சக்கரவர்த்தி யொருவன் ஈட்டிய ஒரு வெற்றியை இது குறிப்பிடுவது தெளிவு.

lur bibutar அரசும், கம்பளை ஆட்சியாளரும் 161
பலத்தையும் பெருக்கி வந்தான். தனது ஆயத்தங்களைப் பூர்த்தி "யாக்கியதும், வரிகளை அறவிட ஆரியச் சக்கரவர்த்தியால் நியமிக் கப்ப்ட்டவர்களை அவன் தூக்கிலிட்டதாக இராஜாவலீ கூறுகின்றது, ஆரியச் சக்கரவர்த்தி உடனே தென்னிலங்கை ஆட்சியாளரைத் தண்டிக்கக் கடல் வழியாலும் தரைவழியாலும் த ன் படை களை அனுப்பி வைத்தான். கடல் வழியால் வந்த படைகள் கொழும்பு, வத்தளை, சிலாபம் முதலான இடங்களில் தங்கியிருந்தன. அளகேஸ் வரன் தன் படைகளை ஏவி, ஆரியச் சக்கரவர்த்தியின் படைகளைத் தாக்கியதுமன்றி அவர்களுக்குப் பெருஞ்சேதங்களையும் உண்டுபண்ணி அவர்களைத் தோற்கடித்துப் பின் வாங் க ச் செய்த தாகவும் நிகாய சங்கிரஹ கூறுகின்றது. இராஜாவலி யென்ற நூல் இதிலி ருந்து வேறுபட்ட விபரத்தைக் கூறுவதால் ஆரியச் சக்கரவர்த்தி முதலில் எய்திய தோல்வியுடன் திருப்தியடையாது, மீண் டு ம் ஒரு படையெடுப்பைத் தென்னிந்தியப் படையுதவியுடன் மேற் கொண்டதாகக் கூறுவர். இராஜாவலீயில் குறிப்பிடப்படும் ஆரியச் சக்கரவர்த்தியின் படையெடுப்பும் முந் தி ய படையெடுப்பைப் போன்றே நடைபெற்றது. தெமட்டகொடை, கொரகான போன்ற இடங்களில் கடல்வழியால் வந்த படைகள் அளகேஸ்வரனது படை களாலும், மலையகம் வந்த படைகள் கம்பளைப் படையால் மாத்த ளையிலும் தோற்கடிக்கப் பட்டன. " பாணந்துறையில் விடப்பட்டி ருந்த யாழ்ப்பாணக் கப்பல் களும் நிர்மூலமாக்கப் பட்டதால் பின்வாங்கும்படி நேர்ந்த ஆரியச் சக்கரவர்த்தியின் படைகள் திரும் புவதும் தடைப்பட்டது. பெரிய அளகேஸ்வரனது போர்த்திறமை யைப் புகழும் நோக்கங்கொண்ட நூல்களில் ஒரு பக்கச் சார்பாக இவ்வரலாறு எழுதப் பெற்றுள்ளது. இவ் விவரங்கள் முற்றிலும் உண்மையாக விருக்கும் எனக் கொள்ள வேண்டியதில்லை. எனினும், அளகேஸ்வரனது முயற்சியால் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கம் தென்னிலங்கையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதை உண்மையெனக் கொள்ளலாம். இவ்வெற்றி அவனுடைய மதிப்பை யும், அதிகாரத்தையும் பன்மடங்கு அதிகரிக்க வைத்தது. இவன் 1359லிருந்து இருபதாண்டுக்குமேல் இலங்கை அரசியலில் பெரும் முக்கியத்துவம் பெற்று விளங்கினு ன். எளு அத்தனகலு வங்ஸ்வில் இவன் "பூரீ லங்காதீஸ்வர" னெனப் போற்றப்பட்டுள்ளான். FE) . இல்க்கியத் துறைகளுக்கு அளகேஸ்வரன் காட்டிய பேர்ாதரவு அரசி யல் இராணுவச் சாதனைகளால் முன்னர் அவனுக்குண்டான புகழை நிலைக்க வைத்துள்ளது. ܕܪ · ܀
வீர அளகேஸ்வரன் பெரிய அளகேஸ்வரன் 1392க்கு முன்பாக
இறந்துபோக, அவனது மகனுண குமார அளகேஸ்வரன் “பிரபுராஜா"
ஆனன். இவனது ஆட்சி சிறிது காலமே நடைபெற்றது. பெரிய
அ ள கே ஸ் வ ர னது மருமகனன வீர அளகேஸ்வரன் குமார
அளகேஸ்வரனைக் கலைத்து அதிகாரத்தைத் தனதாக்கினன். ஆணுல்,
சிறிது காலத்தில் வீர அளகேஸ்வரனது தம்பியான மற்றேர் அள
2.

Page 87
62 Luar MLJ or b
கேஸ்வரன் (வீரபாகு ஆதிபாத என நூல்கள் இவன் பெயரைக் குறிப்
பிடுகின்றன) அதிகாரத்தைப் பெறுதற்குப் போட்டியிடலாஞன். ரயிகமையில் இரு சகோதரர்களுக்குமிடையே மூண்ட சண்டையில் வீர அளகேஸ்வரன் தோல்வி கண்டு, நாட்டை விட்டே வெளியேறி னன். இதன் பின், தென்னிலங்கையின் (செயலளவிலான) ஆட்சி யாளனுக வீரபாகு ஆதிபாத விளங்கலாஞன். இவனும் தன். மாம னன பெரிய அளகேஸ்வரனைப் போன்ற ஒரு திறமைசாலியாக விருந்தான் என இலக்கிய ஆதாரங்கள் நம்பவைக்கின்றன. படை களை நல்ல முறையில் நிர்மாணித்து வைத்திருந்தான் எனவும், சிங் கள அரசுக்குப் பகைவர்களால் நேர்ந்த ஆபத்துக்களினின்றும் அதைக் காப்பாற்றினன் எனவும் இவனது புகழை நிகாய சங்கிரற கூறுகின்றது. இலக்கிய கர்த்தாக்கள் பலர் இவன் வண்மையைப் பெற்று மகிழ்ந்தனர்; சமய நடவடிக்கைகள் சிலவற்றுக்கும் இவன் தன் ஆதரவைக் கொடுத்தான், வீரபாகு 1396 அளவில் இறந்து போக, அவனது இரு புதல்வர்கள் சிறிது காலம் ஆட்சி நடத்தினர். இதனிடையே, வீர அளகேஸ்வரன் இலங்கை திரும்பி அதிகாரத் தைத் தனக்கு மீட்டுக் கொண்டபின் பன்னிராண்டுகள் ஆட்சி நடத் தினன். ஈற்றில், சீனவிலிருந்து இலங்கை வந்த ஒரு படையிடம் சிக்கி அந்நாட்டுக்குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டான். இது 1411 அளவில் நடைபெற்றது. சினத்தாக்குதல் பற்றிய விவரங்களை இனிக் கூறுவோம்.
செங் ஹோவின் (சீனத்) தாக்குதல் : 1403-ல் பட்டத்துக்குவந்த யுங்-லோ என்ற சீனச் சக்கரவர்த்தி (மிங் வம்சத்தவன்) செங்ஹோ என்பானது தலைமையில் ஒரு கப்பற் படையைத் தென் பிரதேசங்களைத் துருவியாராய அனுப்பி வைத்தான். செங் ஹோ இப் படையுடன் அராபியா வரை பல நாடுகளுக்கு வெவ்வேறு தடவைகளில் சென்ரூன். தன் முதற் பயணத்திலேயே அவன் இலங்கை வந்தபோது வீர அள கேஸ்வரனது எதிர்ப்பைப் பெற்று மீண்டான். வீர அளகேஸ்வரனை ஒரு கடுங்கோலணுகச் சீன ஆதாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 1411 அளவில், செங் ஹோ மீண்டும் இலங்கைக்கு வந்தான். சீனப் பேரர சன் இலங்கை அரசனுக்கு அனுப்பிய வெகுமதிகளுடன் வந்த செங் ஹோவை இம்முறையும் வீர அளகேஸ்வரன் எதிர்க்க முற்பட்டான். அளகேஸ்வரன் காட்டிய எதிர்ப்புக்கு, தன் நிலைமை பற்றிய கவலை யோ அல்லது அவனது கடுங்கோன்மையின் தன்மையோ காரண மாகலாம். பல் லா யிரக் க ண க் கா ன தன் படை வீரரை இராசதானிக்கும் துறைமுகத்துக்கும் (ரயிகமைக்கும் பாணந்துறைக் கும்?) இடையேயுள்ள பாதையைத் தடுக்கும்படி பணி த் தா ன் வேருெரு படைப்பிரிவு கப்பல்களைத் தாக்க முற்பட்டது. அளகேஸ் வரனது இரகசியத் திட்டங்கள் பற்றிய சில செய்திகளை அவனுடைய ஆட்களிற் சிலர் செங் ஹோவுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து,

யாழ்ப்பாண அரசும், கம்பளை ஆட்சியாளரும் 163
செங் ஹோ தன் கப்பல்களுக்கு மீளமுற்பட்டான். ஆனல் அவனது வழி தடைப் படுத்தப்பட்டிருந்தது. தனது ஆட்களுக்கு இரகசிய மாகச் செய்தியனுப்பி, சிங்கள வீரருடன் போர் நிகழ்த்தும்படி கூறிவிட்டு, செங் ஹோ 3000 போர் வீரருடன் முன்னேறி அள கேஸ்வரனது தலைநகரைச் சூழ்ந்து வெற்றி கொண்டான். பின்னர் அரசனன அளகேஸ்வரனையும் குடும்பத்தினரையும் கைதிகளாகிக் கெர்ண்டு, கடும் எதிர்ப்பினிடையே கப்பல்களை யடைந்து சீனவுக்குச் செங் ஹோ திரும்பினன். சீன அரசவையை 1412-ல் அடைந்த அவன், தன் சிங்களக் கைதிகளைப் பேரரசனிடம் ஒப்படைத்தான். பேரரசன் யுங்லோ அளகேஸ்வரனிடத்துப் பரிவுகாட்டி அவனுக்கு விடுதலை யளித்து, தகுதியான ஒருவனை அரசனுகத் தெரிவு செய்யும் படி சீனுவுக்குச் சென்றிருந்த பிற சிங்கள கைதிகளைக் கே ட் டு க் கொண்டான். அப்போது அவர்கள் சிறுவனக இருந்த பராக்கிரம பாகுவைத் தெரிவு செய்தனர். இவனே பின்னர் கோட்டையரசின் சிறந்த மன்னனுக விளங்கிய 6-ம் பராக்கிரமபாகு ஆவன். செங் ஹோ பின்னரும் ஒருமுறை (1459-ல்) இலங்கை வந்தான். செங் ஹோவின் இலங்கைத் தாக்குதல் கம்பளை அரசும் அதனிலும் மேலாக அளகக்கோனரின் ஆட்சியும் மறைய வழிகோலியது.
பயிற்சி:
1. யாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றி நிலவும் முக்கிய கருத்துக்,
களுக்கு உரிய அடிப்படைகளைக் கூறுக.
2. 14-ம் நூற்றண்டில் (1344 அளவில்) இலங்கையில் நிலவிய அரசியல் நிலைமைகளை ஒரு விளக்கப்படம் வரைந்து தெளிவு படுத்துக,
தேர்வு விஞக்கள்:
1. யாழ்ப்பாண அரசின் வரலாற்றைப் (15-ம் நூற்றண்டு வரை)
படி முறையாகச் சுருக்கித் தருக.
2. சிறு குறிப்புக்கள் வரைக: யாழ்ப்பாண வைபவ மாலை; நிகாய
சங்கிரஹ; இராஜாவலி; செங்ஹோ; பெரிய அளகேஸ்வரன்.
3. ஆரியச் சக்கரவர்த்திக்கும், அளகக்கோனுருக்குமிடையே நடை பெற்ற போராட்டத்திற்குக் காரணங்கள் யாவை? இதன் விளைவு கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுக.

Page 88
அத்தியாயம் ஒன்பது கோட்டை அரசின் எழுச்சி:
6-ம் பராக்கிரமபாகு
. விஜயநகரப் பேரரசின் எழுச்சி. it. 6-ம் பராக்கிரமபாகு கோட்டை
அரசைப் புெறல், it. 6-ம் பராக்கிரமபாகுவின் சாதனைகள். iv. யாழ்ப்பாண அரசும் கோட்டையும்.
இந்த அக்தியாயத்தில் கோட்டையரசின் எழுச்சியை, குறிப் பாக அதன் தலை சிறந்த மன்னனுன 6-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்கால வரலாற்றைக் கவனிக்க இருக்கின் ருேம், பண்பாட்டுத் துறைகளில் மட்டுமன்றி, அரசியல் துறையிலும் மிகவும் சிறப்புடைய ஒரு காலமாக அவனுடைய ஆட்சிக்காலம் விளங்கியமையால், அதை ‘சிங்கள நாகரிகத்தின் இறுதி புகழ்பூத்த காலப்பகுதி" யென வர லாற்ருசிரியர் அழைப்பர் வட இலங்கையில் மிகவும் பலக் துடனும், சிறப்புடனும் விளங்கி வந்த ய7ழ்ப்பாண அரசை அடக்கி அதைத் தனது ஆணையை ஏற்க வைத்தமை 6-ம் பராக்கிரமபாகுவின் மிகப் பெரிய சாதனையென் பதில் ஐயமில்லை. இச் சாதனையையே இவனது காலத்து எழுந்த இலக்கியங்களும் போற்றுகின்றன. எனவே, யாழ்ப் பாண அரசுக்கும் கோட்டையரசுக்கு மிடையே 15-ம் நூற்ருண்டில் நிலவிய உறவுகளையும் நாம் கவனித்தல் வேண்டும். கண்டியரசு என்பது ஒரு தனியரசாக விளங்கத் தொடங்கியதும் இதே நூற் ருண்டின் இறு யில் ஆகும். இலங்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுமுன், இந் நூற்றுண்டுகளில் இலங்கையை அரசியல், பண்பாட்டுத் துறைகளில் அதிகம் பாதித்த இந்துப் பேரரசான விஜயநகரப்பேரரசின் எழுச்சிபற்றி முதலில் கவனிப்போம்.
i. விஜய நகரப் பேரரசின் எழுச்சி :
வட இந்தியாவில் பேரரசுகளை நிறுவிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலவோட்டத்தில் தக்கணத்தையும், பின்னர் தென்னிந்தியாவையும் தமது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வந்து அப்பகுதியைத் தம்பேரரசிற் சேர்த்துக் கொண்டதை முந்திய அத்தியாயத்திற் கவனித்தோம், தக்கணத்திலும், தென்னிந்தியாவிலும் நடைபெற்ற முஸ்லிம் படை யெழுச்சிகளும், ஆட்சியும் இந்து அரசுகளாக அப் பகுதிகளில் விளங் கிய ஹொய்சள காகதீய முதலான அரசுகளை வீழ்ச்சி பெறவைத்த துடன், மக்களின் அமைதியான வாழ்வையும் பங்கமுற வைத்தன. சத்தியநாதய்யர் கூறுவதுபோல, "நாடுகளும் நகரங்களும் கொள்ளை யிடப்பட்டன. சமய நிலையங்களாகவும் கல்விக் கூடங்களாகவும்

பண்டைய ஈழம் 65
இருந்த கோயில்களும், மடங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. பெரும் பான்மையும் மக்கள் தாழ்ந்த நிலையில் வைக்கப்பெற்றனர். முகமதிய மதம் சில நிலைகளில் மக்களின் மீது திணிக்கப் பெற்றது. இதனுல் அரசியல், பொருளாதார, சமய ஆன்மீக, கலைப்பண்புத் துறைகளில் அழிவு பா டு ம் குழப்ப மு ம் ஏ ற் பட் ட ன "* இவ் வாரு க முகம்மது பின் துக்ளக் நிறுவிய ஆட்சி முறையின் தன்மைகள் மாபார்
விஜய நகரப் பேரரசு கலகம் முதலான பல கலகங்களை யுண்டு பண்ணின. ஆனல், இக் கலகங்கள் திறமை படைத்த முஸ்லிம் படைகளால் கடுமையாக அடக்கப்பட்டன. இத்தகைய ஒரு நிலையிலேயே சிதறுண்டு, சிறுமை
* R. சத்தியநாதய்யர், D. பாலசுப்பிரமணியன் : இந்திய விர
லாறு இரண்டாம் பாகம் (1960) பக். 158.

Page 89
166 கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு
யுற்றுப் பொறுமையுடன் வாழ்ந்த தென்னிந்தியச் சிற்றரசர்கள் தம் பொறுமையைக் கைவிட்டு ஒற்றுமை பூண்டு முஸ்லிம்களை யெதிர்க்க முற்பட்டனர். இதன் விளைவாகவே, விஜய நகரப் பேரரசு தோன்றலாயிற்று. இந்து இந்தியப் பண்பாட்டின் இறுதிப் புகலிட மாக இப் பேரரசு விளங்கியது என்பர். முஸ்லிம் ஆதிக்க வளர்ச்சி யினைத் தடைப்படுத்தும் நோக்குடன் 14-ம் நூற்றண்டில் எழுச்சி யெய்திய விஜய நகரப் பேரரசு தென்னிந்தியாவில் 15-ம், 16-ம் நூற்
ருண்டுகளில் மிகவும் பொலிவடன் விளங்கி 17-ம் நூற்ருண்டில் வீழ்ச்சி யெய்தியது. இப்பகுதியில் நாம் அதன் தோற்றம் பற்றியும், 15-ம் நூற்ருண்டில் அது எய்திய வளர்ச்சி பற்றியும் சுருக்கமாகக் கூறிய பின், அப் பேரரசுக்கும் இலங்கைக்கும் நிலவிய தொடர்புகள் பற்றிக் குறிப்பிடுவோம்.
விஜயநகரின் தோற்றம் பற்றி முரண்பாடான கொள்கைகள் நிலவுகின்றன. அயல்நாட்டு முஸ் - ம் வரலாற்ரு சிரியர்கள் கூறு பவற்றுக்கும், இந்திய மரபுரைகளுக்கும் வேறுபாடு உண்டு. சங்கம சகோதரர்கள் ஐவரில் இருவரான ஹரிஹரனும், புக்கனும் துங்க பத்திரை நதியின் தீரத்தில் விஜய நகரை (வெற்றித் திருநகர்) நிறு வியதாக மரபுகள் கொள்கின்றன. ஹொய்சள மன்னன் 3-ம் வல் லாளன் (Ballala-111) வடக்கிலிருந்து நிகழக் கூடிய முஸ்லிம் படை யெழுச்சியிலிருந்து தன் நாட்டைக் காப்பாற்றும் நோக்குடன் விஜய நகரை நிறுவினன் என வேறு சில ஆதாரங்களைக் கொண்டு கூறுவர்" மற்ருெரு கருத்துப்படி, டில்லிக்கு மு ன் ன ர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட சங்கம சகோதரர்களான புக் கணு ம் ஹரிஹரனும் அங்கு இஸ்லாத்தைத் தழுவியிருந்தபோது, தக்கணத்தில் உண்டான கலவர நிலைமையை அடக்கு தற்குக் கம்பிலி ஆட்சியாள னுக்கு உதவியாக அவ்விருவரும் அனுப்பப்பட்டனர். அவர்கள் தக்கணத்துக்கு வந்தபோது, முஸ்லிம்களுக்கெதிரான மத, அரசியல் இயக்கம் வலுப்பெற்று வந்தது. வித்யாரண்யர் என்ற இந்து முனி வரை அவர்கள் சந்தித்து, இந்து மதத்தை மீண்டும் தழுவி சுல்தா னுக்குரிய தம் ‘பற்றுறுதியை விடுத்து ஒர் இந்து அரசை விஜயநக ரில் நிறுவினர். இக் கருத்தை நீலகண்ட சாஸ்திரி வருமாறு சுருக் கிக் கூறுவர்: "இவ்வாருகத் தன் அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கு தக்கணத்துக்கு டில்லி சுல்தால்ை அனுப்பப்பட்ட நம்பிக்கை வாய்ந்த அவனது பிரதிநிதிகள் இஸ்லாத்தின் தாக்கங் களினின்றும் புராதன இந்துப் பண்பாட்டைப் பாதுகாப்பதில் பின் னர் முதன்மை பெற்றுத் திகழ்ந்த வரலாறு கண்ட தலைசிறந்த இந்து அரசுகளில் ஒன்றின் தாபகர்களாக மாறலாயினர்.”*
* K, A. N. Sastri: A History of South India (Madras, 1955)
P.229-30 (மொழிபெயர்ப்பு நூலாசிரியருடையது)

கோட்டை அரசின் வீழ்ச்சி: 6-ம் பராக்கிரமபர்கு 167
1336-ல் நிறுவப்பட்ட விஜயநகர அரசு, சங்கம மரபினரின் ஆட்சியில் துரிதமாக விரிவடைந்து வந்தது. 2-ம் ஹரிஹரன் என் பானது ஆட்சியின்போது (1379-1406) தென்னிந்தியா முழுவதும் அவனுடைய ஆணைக்குட்பட்டது. விஜயநகரப் பேரரசின் வட எல்லையில் நிலவிய பாமனி அரசு என்ற தக்கண முஸ்லிம் அரசுக்கும், விஜயநகரப் பேரரசுக்குமிடையே பெரும் டோட்டி, போர்நிலவி களும் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. 1-ம் தேவ ராயன் காலத்தில் பாமணி சுல்தானது படைகள் விஜயநகரப் பேரரசின் படைகளைத் தோல்விகாண வைத்தன. அடுத்த பேரரசனன 2-ம் தேவராயன் (1422-46) 15-ம் நூற்ருண்டின் தலையாய விஜயநகர மன்னன் ஆவன். ஆனலும், இவனுடைய காலத்தில் விஜயநகரப் படைகள் பலமுறை பாண் அரசின் படைகளிடம் தோல்வியை ஒப்புக் கொள்ளலாயின. தன் படைவலியைப் பெருக்க முஸ்லிம்களைத் தன் படைகளிற் சேர்த்தும் பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்தியும், நிருவாகத்தைச் சீர்ப்படுத்தியும் பல திருத்தங்களை மேற்கொண் டான். ஆனலும் பாமனிப் படைகள் மீண்டும் ஒருமுறை இவ னது படைகளை அறுதியாகத் தோற்கடித்தன. முஸ்லிம்களிடம் தேவராஜன் தோல்வி எய்தியமையால், பாமனி சுல்தானுக்கு அவன் திறை செலுத்த வேண்டியும் நேர்ந்தது. ஆனலும், கலிங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் இடங்களிலும் 2-ம் தேவ ராயன் வெற்றி மேல் வெற்றியீட்டினன். இவனது ஆட்சியில் பேரரசு பெருஞ் செழிப்புடனும் முன்னேற்றத்துடனும் காணப்பட்டதை இ வ ன் காலத்தில் வந்த அப்துர்-ரசாக் போன்ற பிறநாட்டாசிரியர்கள் எழுதியுள்ள குறிப்புக்கள் உணர்த்துகின்றன. இலங்கையின் வட பகுதியுட்பட, தென்னிந்தியா முழுவதும் இவனது ஆட்சி பரந் திருந்ததாக இவர்கள் அறியத்தருகின்றனர். ஒரு பெருங் சடற் படையை வைத்திருந்ததுடன், பிற காட்டு வணிகத்தையும் நல்ல முறையிற் கட்டுப்படுத்தி அரசிறையைப் பெருக்கினன் எனவும் கூறப்பட்டுள்ளது. தானே சிறந்த அறிஞணுக விளங்கி, கலை இலக் கியத் துறைகளில் பேரூக்கங்காட்டி, கலைஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தான். தேவராயனது நீண்ட ஆட்சி 1446 ல் முடிவுற்றதும் அவன் காலத்தில் எற்பட்ட வளர்ச்சியும் செழிப்பும் அவனது பின் னேர் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன.
2-ம் தேவராயன் இறந்த ஒராண்டின் பின், அவன் மகன் மல்லிகார்ஜுனன் ஆட்சியைப் பெற்ருன். இவனது ஆட்சியுடன் "பிளவு, தேய்வு, குழப்பம்" என்பவற்றைக் கொண்ட ஒரு காலப் பகு தி சு மார் நா ற் ப த ர ன் டு க ள் வ  ைர நீடித்தது. மல்லிகார்ஜ"னன் பலவீனஞகவும் திறமை குறைந்தவனுகவும் இருந் தமையால், பேரரசுக்குத் திறை கொடுக்காது மாகாண ஆட்சி யாளர் பலர் சுயாதீன ஆட்சியை நிறுவ முற்பட்டனர். பாமனி

Page 90
168 பண்டைய ஈழம்
சுல்தானும், ஒரிஸ்ஸா மன்னனும் விஜயநகரப் பேரரசின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றலாயினர். இந்நிலையில், சாளுவத் தலைவனுன நரசிம்மன் ஆட்சியைக் கைப்பற்றி, சாளுவ மரபை நிறுவினன். நரசிம்மீன் மாகாணங்களில் மூண்ட கலகங்களேயடக்கி, விஜயநகரப் பேரரசுக்கு இடுக்கணைத் தந்த பாமனி சுல்தானையும் ஒரிஸ்ஸா மன் னனேயும் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்றன். நரசிம்மன் ஆறு ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிள் இறக்க, அவனது புதல்வர்கள் அரசைப் பெற்றபோதும், படைத்தலைவனுன நரச நாயக்கனே உண் மையான ஆட்சியாளனுக விளங்கினன், சாளுவ மரபு அடுத்த நூற் ருண்டு தொடங்கும் போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின் அரசைப் பெற்ற துளுவ மரபு சுமார் எழுபது ஆண்டு கள் பதவியில் இருந்தது. இதன் தாபகனன வீர நரசிம்மனுக்குப் பின் அரசஞன கிருஷ்ண தேவராயன் (1509 - 1530) விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த மன்னனகப் போற்றப்படுபவன். இவன் காலத்திலேயே அப் பேரரசு மிகவும் விரிவெய்திப் பெரும் புகழு மெய்தலாயிற்று. இவனது மரணத்துடன், விஜயநகரப் பேரரசின் சீர்குலைவு தொடங்கி விட்ட தெனலாம். மாகாண ஆட்சியாளராக நியமிக்கப்பெற்ற நாயக்கர்கள் தனியாட்சி செலுத்திவரலாயினர். 1565-ல் நிகழ்ந்த தலக்கோட்டைச் சண்டையில் விஜயநகரப் படை கள் முஸ்லிம் படைகளுக்குத் தோற்கவே, பேரரசும் வீழ்ச்சியடைய லாயிற்று. அரவீடு மரபென்ற ஒரு மரபு விஜயநகர அரசின் எஞ்சிய பகுதிகளை 17-ம் நூற்ருண்டு வரை ஆண்டுவந்த போதும், பெரு மைக்குரிய இந்துப் பேரரசின் தன்மை சிறிது தானும் இப் பிந்திய மரபினரின் காலத்தில் அதற்கு இருக்கவில்லை.
விஜயநகரப் பேரரசும் இலங்கையும் : தென்னிந்தியாவில் மிகவும் பலம்பெற்று விளங்கிய விஜய நகரப் பேரரசுக்கும் இலங்கைக்கும் அரசியல், கலைத்துறைகளில் தொடர்புகளும், பாதிப்புக்களும் ஏற் பட்டிருத்தல் இயல்பு. 1-ம் புக்கனது காலத்தில் (1356-77) தென்னிந்தியாவில் பல சண்டைகளை வெற்றியுடன் நடத்திய அவனது மகன் குமார கம்பணன் இலங்கையுடனும் போர் நிகழ்த்தி யிருக்கலாம் என்பர். ஃபெரிஷ்டா என்பான் 1378-ல் இருந்த விஜய நகர்பற்றிக் குறிப்பிடுகையில், இலங்கையுட்படப் பலநாடுகளின் அர சர்கள் தம் தூதுவர்களை விஜய நகரிக்கு அனுப்பியதுமல்லாது, *வெகுமதி களையும் வழங்கியதாகக் கூறியுள்ளான். இவ்‘வெகுமதி
கள் திறைகளையே குறிக்குமெனக் கொண்டு, இலங்கை அந் நேரத் தில் வெற்றிகொள்ளப் பட்டிருக்கலாம் என்பர். 1-ம் ஹரிஹரன் (1377-1404) காலத்தில் இலங்கைக்கும் விஜய நகரப் பேரரசுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருந்தமைக்குச் சான்றுகள் இருக்கின்றன. விஜய நகரின் ஆணையை முன்னர் மீறிய சோழ, பாண்டிய, துந்திர நாடுகளுக்கெதிரே அவனது மகன் விரூபாக்ஷன்

கோட்டை அரசின் sĩ qọđề: 6-th பராக்கிரமபாகு 169
படையெடுத்தபோது இலங்கைமீதும் ஒரு படையெடுப்பை அவன் மேற்கொண்டதாகவும், இலங்கையில் ஜயஸ்தம்பம் (வெற்றித் தூண்) ஒன்றை நாட்டியதாகவும் அவனது அரியூர்ச் செப்பேடுகள் குறிப் பிட்டுள்ளன. தன் நிறைக்குச் சமமான பொன்னை இராமேஸ்வரத் தில் வழங்கியமை இலங்கை வெற்றியின் நினைவாக இருக்கலாம். 2-ம் ஹரிஹரன் காலத்திலிருந்து விஜயநகர அரசர்கள் இலங்கை யிலிருந்து திறைபெற்றிருக்கலாம் எனவும் கருதக்கூடியதாகவுள்ளது.
கோட்டை 6-ம் பராக்கிரமபாகுவின் சமகாலத்தவனுக விளங் கிய விஜயநகரப் பேரரசன் 2-ம் தேவராயன் (1422-46) ஆவன். இவனது போர் வெற்றிகள் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கி. பி. 1435 ஐச் சேர்ந்த ஒரு பொறிப்பில் லக்கண்ண தண்டநாயக் கன் என்ற மதுரை ஆள்பதி ஒரு குதிரைப் படையுடன் யாழ்ப் பாணம், நாகபட்டணம், ஈழம் ஆகியவற்றை அழித்தற்குப் புறப் பட்ட செய்தியும், இவன் வெற்றியுடன் மீண்டதற்கு அறிகுறியான ஒரு தானமும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1440 ஐச் சேர்ந்த 2-ம் தேவராயனது பொறிப்புக்களால் "ஈழம் திறைகொண்ட” என்ற பட்டத்தை அவன் சூடியிருந்தமை தெரிய வருகிறது. பிற ஆதாரங் களும் ஒரு விஜயநகரப் படையெடுப்பு இதே காலத்தில் ந  ைட பெற்றதை உறுதிப்படுத்துகின்றன. 6-ம் பராக் கி ர ம பா கு வும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம்பட்டினம் என்ற துறைக்கு ஒரு கடற்படையெடுப்பை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ் வாறு 14-ம், 15-ம் நூற்ருண்டுகளில் எழுச்சிபெற்ற விஜயநகரப் பேரரசு, அயலில் உள்ள இலங்கையையும் அரசியல் து  ைற யில் பாதிக்கலாயிற்று. இதனுல் இலங்கை அரசியலில் உண்டான மாறுதல் களைப் பின்னர் காண்போம்.
i. 6-ம் வராக்கிரமபாகு கோட்டை அரசைப் பெறல்
6-ம் பராக்கிரமபாகு கோட்டை அரசின் தலைசிறந்த மன்னனுக மட்டுமன்றி, பொலன்னறுவைக் காலத்துக்குப் பிந்திய காலங்களில் ஆட்சி செய்தவர்களுள் எல்லாம் மிகவும் கீர்த்தி பெற்றவன் எனவும் கொள்ளப்படுகின்றன். இவன் அண்மைக் காலத்திலேயே ஆட்சி செய்துள்ளான் எனினும், இவன் ஆட்சியைப் பெற்றவரை இவனு டைய மரபுவழி போன்றவை எமது ஆதாரங்களில் தெளிவாகக் கூறப்படவில்லை. இலங்கை வரலாற்று ஆதார நூல்களில் ஒன்றன இராஜாவலீயிலும், போர்த்துக்கேய ஆசிரியனன டூ கூற்ருேவினு டைய நூலிலும் வரும் செய்திகளை நாம் உண்மையெனக் கொள் வதற்கில்லை. இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் வருமாறு: சீன ரால் கைதியாக்கப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு விஜயபாகுவின் குழந்தையான பராக்கிரமபாகுவை, அவனது தாயான இராணி சீனரி டம் சிக்கவிடாது தப்பவைத்ததுமன்றி, தன் குழந்தைகளுடன் தப்பி
&器

Page 91
I () lushr flu epth
யே: டி வீதாகம என்ற இடத்துக்குச் சென்முள். அங்குள்ள விகாரை யின் மகாதேரர் பராக்கிரமபாகுவுக்குப் பாதுகாப்பளித்து, ஆட்சியை அவ்வேளையில் அபகரித்திருந்த அளகேஸ்வரனது சூழ்ச்சி வலையில் அகப்படா வண்ணம் கூடுதலான பாதுகாப்பையுடைய பொல்வத்தை யென்ற இடத்துக்கு (கேகாலை மாவ்ட்டம்) அனுப்பி அங்கு ஒரு பிர தானியின் பொறுப்பில் பராக்கிரமபாகுவை வளரவிட்டார். பதி ணுறு வயதைப் பராக்கிரமபாகு எய்தியதும், வீதாகம மகாதேரர் இளவரசனைப் படைத்தலைவர்களிடம் ஒப்படைத்த பின், அவர்களும் மகாதேரரும் செய்த கூட்டு முயற்சியால், அளகேஸ்வரன் தோற்கடிக் கப்பட்டு, பராக்கிரமபாகு அரசைப் பெறமுடிந்தது. இச்செய்தி களை நோக்கும்போது, வீதாகம தேரர் பராக்கிரமபாகு அரசைப் பெறுவதில் முக்கிய பங்கை வகித்துள்ளமை புலப்படும். ஆயின், இச் செய்திகள் நம்பிக்கை வாய்ந்தவையாகத் தோன்றவில்லை. இந் நிகழ்ச்சிகள் நடைபெற்றதற்குப் பல ஆண்டுகளின் பின் (17-ம் நூற்) தோன்றிய இராஜாவலீயில் புனைகதைகளோ என எண்ணத்தக்க கதைகள் புகுந்து வரலாற்றுச் செய்திகளுடன் கலந்து விட்டமை புலப்படும். பொது மக்களிடையே பெருமதிப்பையும், புலவர்களின் கற்பணு சக்திக்கு இடமளிக்கத்தக்க தன்மைகளையும் கொண்ட 6-h பராக்கிரமபாகு பற்றி இவ்வகையான கற்பனைகள் தோன்றியதில் வியப்பில்லை. ஆனல் வியப்பென்ன வெனில், ஒரளவு அண்மைக் காலத்தில் வாழ்ந்த இம் மன்னன் பற்றிய உண்மைச் செய்திகள் இத்துஃ0 விரைவில் மறக்கப்பட்டதே யாகும்.
பராக்கிரமபாகுவின் சமகாலத்து இலக்கியங்களில் இடை யி ையே வரும் (r, பிப்புக்களால் இவனது மரபுவழி பற்றியும், சீன ஆதாரங்களால் இன் ஆட்சியைப் பெற்ற வரலாறு பற்றியும் நாம் வேறு வகையான செய்திகளை அறிய முடிவதையும் இச் செய் திகள் அதிக நம்பிக்கைக் குரியவை யெனவும் பரணவிதான சுட்டிக் காட்டியுள்ளார். "சவுளு' (5-ம்) விஜயபாகுவின் வழிவந்தவனுக இவ் வாதாரங்கள் கொள்ளவைக்கின்றன. * 5-ம் விஜயபாகுவின் புதல் வஞன 5-ம் பராக்கிரமபாகுவுக்குப் பிறந்த ஓர் இளவர
* 5-ம் விஜயபாகு
5-ம் பராக்கிரமபாகு வி. விகார மகாதேவி
இளவரசி வி. ஜயமகாலான
۔
லமனி ஜயமகாலான வி. சுனித்திராதேவி
6-ம் பராக்கிரமபாகு

கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு 171
சியை, 'ஜயமகாலான" எனப்படும் ஒரு பதவியை (எழுத்தர் லேகக என்பதற்குச் சமமானது) வகித்தவன் மணஞ்செய்திருந் தான். இவர்களுடைய மகஞன ஒரு ஜயமகாலான (லமனி ஜயமகாலான)வே, பராக்கிரமபாகுவின் தந்தை யென்பதும், சுனித் திராதேவி என்ற ஒரு கலிங்க (மலாய்?) இளவரசி யென்பதும் இச் சமகால இலக்கியங்களிலுள்ள குறிப்புக்களால் பெறப்படும். அளகக் கோனர் குடும்பத்தின் எழுச்சியால் தாழ்வுற்றிருந்த கம்பளை அரச மரபு வழியில் வந்த பராக்கிரமபாகு இப்போது தனது குடும் பத்தினது உரிமையை நிலைநாட்டினன். சீனத் தாக்குதல் அளகக் கோனர் குடும்பத்துக்குப் பேரிடியாக விருந்ததென்ருல், பராக் கிரமபாகுவின் குடும்பத்தினர்க்கு ஒரு வரப்பி ரசா த மாக அது அமைந்ததாகக் கொள்ளலாம்.
பராக்கிரமபாகு அரசைப் பெற்ற வரலாறு பற்றிய உண்மைச் செய்திகளை (சீன ஆதாரங்களில் உள்ளபடி) இனிக் கூறுவோம். முன்னரே நாம் குறிப்பிட்டவாறு, செங்-ஹோவின் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சீனுவுக்குக் கொண்டு செல்லப்பட்ட வீர அளகேஸ்வரனையும், அவனது அவைக்களத்தவரையும் சீனப் பேரரசன் (ஓர் அமைச்சன் இவர்களைக் கொல்லும்படி ஆலோசனை கூறியதையும் புறக்கணித்து) கொல்லாது விடுதலை செய்தான். அதே வேளையில், அங்கு சென்றிருந்த அரச குடும்பத்தவரை மிகவும் தகுதி வாய்ந்த ஒருவனை அரசனுகத் தெரிவு செய்யும்படி கேட்க, அவர்கள் "யெ-ப-நய்-ன" எனச் சீன மொழியில் எழுதப்பட்ட வனத் (சிங்களத்தில் "ஆபாண" என்பதற்குச் சமமானது") ஒரு மனதாகத் தெரிவு செய்தனர். இத்தெரிவைச் சீனப் பேரரசன் ஏற்றதோடு, அவனை இலங்கைக்கு அனுப்பி அரசனகப் பிரகடனஞ் செய்வித்தான். இவன் அரசனன பின்னர் "பு-ல-கொ-ம-பா -ஸய்-ல-ச" (பராக்கிரமபாகு ராஜா) என்ற பெயரைத் தாங்கிய தாகவும் சீன ஆதாரங்கள் குறித்துள்ளன. இவற்றை நுனித்து ஆராய்ந்த பரணவிதான இவற்றுக்குத் தரும் விளக்கம் வருமாறு: "செங் ஹோவினல் சீனவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதிகளில் ஒருவனக 6-ம் பராக்கிாமபாகு எனப் பின்னர் அழைக்கப்பட்ட இளவரசன் இருந்திருக்கமுடியாது; ஆகவே நிகழ்ந்திருக்கக்கூடியது என்ன வெனின், இளவரசனே, அவனுடைய சார்பில் வேறுசிலரோ செங் ஹோவின் முதற் படையெழுச்சியின் போது அவனது உதவியை நாடிப்பெற்றனர் என்பதும், ஏற்கெனவே இவ் இளவரசனுக்குகே உதவியளிப்பதாக முடிவு செய்திருந்ததால், வீர அளகேஸ்வரனிடத்து அவன் பகைமை பாராட்டினன் என்பதும் ஆகும். சீனக் கடற்
* இதை யாபா (யாவா) நாயக என்பதற்குச் சமமானதாக இப்போது பரணவிதான கொள்வர். Ceylon &Malaysia, P. 143,

Page 92
172 பண்டைய ஈழம்
படையின் துணையும், வீர அளகேஸ்வரனைச் சீனர் கைப்பற்றியமை யால் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த சிங்களருக்குண்டான அதிர்ச்சியும், பராக்கிரமபாகுவைக் கோட்டை, ரயிகமையைச் சேர்ந்த மாவட்டங்கள் அரசனக ஏற்றுக் கொள்ளவைத்தன.* பரண" விதான பின்னர் தம் புதிய :ொள்கைக் கேற்ப, 5 ம் பராக்கிரம பாகுவையும் ஒரு மலாய்த் தொடர்புடைய மன்னனுகவே கொள் 6) Gð7 (U?ri (Ceylon & Malaysia, 136 ff). gygy Lu sibstó) p5T id g) šéš5 GTg வும் கூறவேண்டியதில்லை. பொதுவாக நோக்குமிடத்து, சீன ஆதா ரங்கள் தருஞ் செய்திகளே உண்மையென்பது புலப்படும். இவன் அரசனன பின்னர் சீனப் பேரரசனுக்குத் திறை செலுத்தி வந்த தையும் சீன ஆதாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இவன் ஆட்சியைப் பெற்ற ஆண்டும் பலவகையாகக் கணக்கிடப்பெற்றுள்ளது. சீனவி லிருந்து திரும்பி அரசை யேற்ற ஆண்டு 1412 ஆக இருக்கலாம்" எனவே, இந்த ஆண்டிலிருந்தே இவனது ஆட்சி தொடங்கியதென் பர். 1415 லேயே இவனது முடிசூட்டு விழா நடைபெற்றிருத்தல்
வேண்டும்,
ரயிகமையிலேயே இவனது ஆட்சி தொடங்கியது. விரைவில் "ஜயவர்த்தனபுரம்" என்ற கோட்டைக்குத் தன் தலைநகரைப் பராக் கிரமபாகு மாற்றிக்கொண்டான். அங்கு தனக்கென ஒரு புதிய மாளிகையையும், தந்ததாதுக் கோவிலையும் அமைத்து, புதிய நக ருக்குப் பொலிவையும் புகழையும் அளித்தான். கீரவல்ல இளவர சியை இவன் மணஞ்செய்து, பல்வகைச் சிறப்புக்களுடன் ஆட்சி செய்யலானன். ஆட்சித் தொடக்கத்தில் இவனது ஆணையை ஏற்க மறுத்த மலைநாட்டு ஆட்சியாளனுடன் ( சேன லங்காதிகாரவின் பேரஞன பராக்கிரமபாகு ஆபாவுடன்) சமர் செய்து வென்றமை கடலாதெணியக் கோவில் துரணுென்றில் உள்ள பொறிப்பால் உறுதி பெறுகின்றது. இதன் பின் கம்பளை அரச மரபினர் பராக்கிரமபாகு வின் ஆணைக்குக் கட்டுப்பட்டே அதிகாரஞ் செலுத்தி வந்தனர். 6-ம் பராக்கிரமபாகு கோட்டை அரசைப் பெற்ற வரலாற்றை இது வரை கூறினுேம். இனி அவனது ஆட்சிக்கால நிகழ்ச்சிகளையும் அவனது முக்கிய சாதனைகளையும் கவனிக்கத் தொடங்குவோம்,
i. 6-ல் பராக்கிரமபாகுவின் சாதனைகள்
ஆரும் பராக்கிரமபாகுவின் ஆட்சி 1412-ல் தொடங்கியதாகக் கொண்டால், அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செலுத் தியதை (1412-67) உணரலாம். சீனப் பேரரசனது திறையாள னகவே முதலில் அவனிருந்த போதும், விரைவில் தன் சுயாதீனத்தை
* A Concise History of Ceylon, P. 307

கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு 17.3
நிலைநாட்டிக் கொண்டான். நாட்டின் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாண அரசையும், வன்னித் தலைவர்களையும் தனக் குப் பணிய வைத்தான். தென்னிந்தியாவில் விளங்கிய விஜயநகரப் பேரரசின் தாக்குதல்களைச் சமாளித்து அதன் (கன்னடப்) படை களைப் பின்வாங்க வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. தானே ஒரு கடற் படையெடுப்பை மேற்கொண்டு, தென்னிந்தியாவிலிருந்த ஒரு சிற்றரசனைத் தண்டித்ததாகவும் இலங்கை நூல்கள் குறிப்பிட்டுள் ளன. இவ்வாறு பல போர்ச் சாதனைகளை நிலைநாட்டியுள்ளதையே இலக்கியங்கள் பெரிதும் போற்றியுள்ளன. அமைதிக்காலச் சாதனை கள் பலவற்றை அவன் நிகழ்த் சியமையும் குறிப்பிடத்தக்கதே' பொருளியல் துறையில், குறிப்பாகப் பிறநாட்டு வணிகக் துறையில் நாடு பெரும் முன்னேற்ற மெய்தியது. கலைத்துறைகள் பெருவளர்ச்சி யெய்தின. இலக்கிய விற்பன்னர்கள் பலர் ஆதரிக்கப்பட்டு வந்தமை யால், இக்காலத்தில் ஏற்பட்ட இலக்கிய அறுவடைகள் போற்றத் தக்கவையாக விருந்தன. பெளத்தமும் நன்னிலையை எய்தியிருந்தது. இவ்வாறு இதர துறைகளிலும், போர்த்துறை-அரசியல் துறைகளி லும் குறிப்பிடத்தக்க பல அரிய செயல்களை 6-ம் பராக்கிரமபாகு. புரிந்துள்ளதை யினித் தனித்தனி கூறுவோம்.
சீன ஏடுகளில் பராக்கிரமபாகுவிடமிருந்து அல்லது அவனது ஆட்சிக்கால இலங்கையிலிருந்து திறை கிடைத்ததாகக் குறிக்கப் பட்டுள்ளது. இதைக்கொண்டு சில ஆண்டுகளில் 6-ம் பராக்கிரம பாகு சீனுவுக்குத் திறையனுப்பியதை அறியலாம். சீனரின் உதவி யுடன் அவன் அரசைப் பெற்றிருப்பின், இவ்வாறு அவன் திறை யனுப்பியதில் வியப்பில்லை. இருப்பினும், சில ஆண்டுகளில் (14211432) அவன் திறையனுப்பியதை நிறுத்தியிருக்கவேண்டும். செங்ஹோ மீண்டும் ஒருமுறை இலங்கை வந்தமைக்கு இலங்கையிலிருந்து திறை வராமையே காரணமாகலாம். இது எவ்வாருயினும், இலங் கையிலிருந்து இடையிடையே சில வெகுமதிகளுடன் தூதுவர்களைச் சீனவுக்கு அனுப்பியதில் 6-ம் பராக்கிரமபாகுவுக்கு அதிக நட்டம் ஏற்பட்டிருக்க முடியாது. 1459க்குப்பின் இவ்வெகுமதிகள் அனுப்பு வதை அவன் நிறுத்தியிருத்தல் வேண்டும். இதன் பின், 6-ம் பாாக் கிரமபாகு முழுச் சுயாதீனத்துடன் ஆட்சிசெய்து வரலானன்.
விஜயநகரப் பேரரசுக்கும் இலங்கைக்குமிடையே நிலவிய அரசி யற் ருெடர்புகள் பற்றி முதற் பகுதியிலேயே குறிப்பிட்டிருந்தோம். 6-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சியின் முற்பகுதியில் ஒரு விஜயநகரப் படையெழுச்சி நடைபெற்றதாக நம்பப்படுகிறது. 2-ம் தேவராய னது ஆட்சிக்காலத்தில் (1422-46) மதுரை நாயக்கனுக நியமிக் கப்பட்டிருந்த லக்கண்ண தண்ட நாயக்கன் 1435 க்கு முன்பாக இலங்கை மீது ஒரு படையெடுப்பை மேற்கொண்டிருந்தான். இதன்

Page 93
174 பண்டைய ஈழம்
பின்னரே, அவன் 'தவிண சமுத்திராதிபதி' என்ற பட்டத்தைச் சூடியதாகத் தெரிகின்றது. 144 க்குரிய பொறிப்பில் "ஈழம் திறை கொண்ட” என்ற பட்டத்தை 2-ம் தேவராயன் குடியுள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். லக்கண்ண தண்ட நாயக்கனது படையெடுப் பின் விளைவு பற்றி டாக்டர் பிள்ளை கூறுவது இது: "யாழ்ப்பாணம் மட்டுமோ அன்றி முழு இலங்கையுமே லக்கண்ண தண்டநாயகனுல் வெற்றிகெ ாள்ளப்பட்ட  ெத ன் தி ல் ஐயத்துக்கிடமேயில்லை." (S India & Cey, P. 109 ) யாழ்ப்பாண மன்னனை கனகசூரிய சிங் கையாரியனும் கோட்டையரசனுன 6-ம் பராக்கிரமபாகுவும் திறை செலுத்தி யிருப்பாரென அவர் மேலும் கருதுவர். இலங்கையாதா ரங்களில், இப்படையெடுப்பு நிகழ்ந்தபோது பராக்கிரமபாகு விரை வில் கன்னடப் படைகளைத் தோற்கடித்த்தாகக் கூறப்பட்டுள்ளது. விஜயநகரப்படை தொடக்கத்தில் வெற்றியீட்டியிருப்பினும், கோட் டையரசன் அந்நியப் படைகளை விரைவில் விரட்டியிருப்பான் என் பதே உண்மையாக விருக்கலாம் எனப் பரணவிதான கொள்வர். (A Concise Hist. of Cey., P. 310). ''a) is gargot a girl situés Gir மீண்டும் ஒருமுறை (1445) இலங்கையின் எல்லைப்புறம் வரை கடற் பயணஞ் செய்தான்" என அப்துர் ரசாக் கூறியுள்ளதைக்கொண்டு, மீண்டும் ஒரு படையெடுப்பை அவன் மேற்கொண்டிருத்தல் கூடும். முன்னரே அவன் வெற்றியெய்தியிருப்பின், இரண்டாம் படையெ டுப்புக்குரிய காரணம் புலப்படவில்லை. விஜயநகரின் மேலாணேயி லிருந்த தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூர்ப் பிரதானி யொருவ னுடன் பராக்கிரமபாகுவுக்கு அவ ன த ஆட்சியின் பிற்பகுதியில் ஒரு தகராறு மூண்டது. "வரகூர் உடையன்" என்ற பட்டத் தைச் சூடியிருந்த மழவராயன் என்கின்ற இத்தலைவன் கறுவா ஏற் றிச் சென்ற பராக்கிரமபாகுவின் கப்பல்களைச் சூறையாடிமையா லேயே இத்தகராறு மூண்டதாகக் கூறப்பட்டுள்ளது பராக்கிரம பாகு ஒரு படையை அதிவீரராம பட்டினம் என்ற துறைக்கு அனுப் பினு ன். அங்கு பலரைக் கொன்று, கொள்ளையடித்து மழவராய னைக் கொன்றுவிட்டு, மகுடங்கோட்டை யெனப்பட்ட பகுதியில் உள்ள நான்கு கிராமங்களை மானியமாகப்பெற்று அது திரும்பியது. இக் கிராமங்கள் தொடர்ந்து சில ஆண்டுகளாக இலங்கைக்குத் திறை யனுப்பி வந்ததாகத் தெரிகின்றது.
6-ம் பராக்கிரமபாகுவின் சாதனைகளில் அதிகம் புகழ்ச்சியைப் பெற்றது யாழ்ப்பாணத்தில் விளங்கிய ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசை அடிப்படுத் தி இலங்கை முழுவதையும் தனது ஆட்சிக்குட் படுத்தியமை ஆகும். கம்பளை மன்னர்களின் காலத்தில் சிங்கள அரசு வலிகுன்றியபோது ஆரியச் சக்கரவர்த்திகள் தமது ஆட்சிப் பரப்பை விரிவு பெறவைத்து, தமது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்தது மன்றி, சிங்கள அரச மரபை நிலைகுலைய வைத்தனர். விஜயநகரப்

கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு 178
பேராசு வலிமை பெற்றபோது, அதன் தாக்குதல்களுக்கு யாழ்ப் பாண அரசும் இலக்காகி, அப்பேரரசுக்குத் திறை செலுத்தி வரலா யிற்று. கன்னடப் படைகள் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள சில இடங்களில் நிறுத்தப் பட்டுமிருந்தன. 6-ம் பராக்கிரமபாகு ஆட்சியைப் பெற்ற பின்னரும் யாழ்ப்பாண மன்னனுடைய வலி மைக்கும் அதனிலும் மேலாக விஜயநகரப் பேரரசின் வலிமைக்கும் ஈடுநிற்க முடியாதென அவன் அஞ்சி யாழ்ப்பாண மன்னனுடன் போர் தொடுக்க 1450 வரை அவன் துணியவில்லை. விஜயநகரப் பேரரசில் 2-ம் தேவராயனது ஆட்சிமுடிவில் தோன்றிய குழப்ப நிலைமைகளும், மல்லிகார்ஜுனன் போன்ற திறமை குறைந்தவர்கள் ஆட்சியைப் பெற்றதஞல் உண்டான சீர்குலைவும் அப்பேரரசின் வலி குன்றுவதற்குக் காலாயின. இந் நிலைமைகள் இலங்கையின் அரசியற் போக்கையும் பாதிக்கலாயின. வட இலங்கையில் விஜய நகரப் பேரரசுக்கு இருந்த ஆதிக்கம் சிறிது த ள ர் ந் தி ரு த் த ல் வேண்டும். இதைப் பயன்படுத்திய பராக்கிரமபாகு யாழ்ப்பாணப் படையெழுச்சிக்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடலானன். இதற்கு முன்பாக, வன்னிப் பகுதியில் ஏறத்தாழ சுயாதீனத்துடன் ஆட்சி செலுத்திய வன்னித் தலைவர்களை அடக்குவதில் முனைந்தான். இதையும் அவன் இலகுவாகச் சாதித்திருந்தான் எனக்கூறிவிட முடி யாது. கிரா சந்தே சய முதலான அவன் காலத்துச் சிங்கள இலக்கி யங்களில் வரும் குறிப்புக்களை நோக்குமிடத்து, பராக்கிரமபாகு கடுஞ் சமர் புரிந்தே அவர்களை அடக்க முடிந்த தென்பது புலப் படும்.
யாழ்ப்பாணப் படையெழுச்சிக்குப் பொறுப்பாகப் பராக்கிரம பாகுவால் நியமிக்கப்பட்ட செண்பகப் பெருமாள் என்பவன். (சபுமால் குமாரய எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படுபவன்) பராக்கிரமபாகு போற்றப்பட்ட அளவுக்குச் சிங்கள இலக்கியங்களில் புகழப் பெற் றுள்ளான். இவனுடைய தந்தையான பணிக்கன் இந்தியாவிலிருந்து (மலையாளம்?) இலங்கை வந்து பராக்கிரமபாகுவின் சேவையில் பணியாற்றிய உ ய ர் குடி யாள னெனத் தெரிகின்றது. அவனது திறமை, ஆற்றல், மதியூகம் என்பவற்றை மதித்த பராக்கிரமபாகு அவனுக்குச் சிங்களப்பிரதானி குடும்பத்தில் மணமுடித்து வைத் தான். அவனுடைய இருபுதல்வர்களும் அரச குமாரனுடன் (பராக் கிரமபாகுவின் மகள் உலகுடையதேவியின் புதல்வன்) வளர்ந்து வந்ததாகவும். இவர்களில் சபுமாலின் போர்த்திறமை கண் டு பெரிதும் வியந்து அவனையே யாழ்ப்பாணப் படையெடுப்புக்குத் தளபதியாக நியமிக்க முடிவு செய்தான். யாழ்ப்பாணப் படை யெடுப்பில் சபுமால் எய்திய வெற்றி அவனுக்குப் பெரும் புகழை அளித்தது மன்றி, கோட்டையின் அரசுரிமையையும் அவனுக்குக் கிட்டவைத்ததெனலாம். யாழ்ப்பாணத்துக்குக் கோட்டைப் படை,

Page 94
i8 LJ6ਗ6) Lu up B
யின் முக்கிய பிரிவு செல்லுமுன், தீபகற்பத்தின் அயலிலுள்ள சல கிராமங்கள் தாக்கப்பட்டு, அங்கிருந்து கைதிகள் கோட்டைக்குக் கெ" ண்டு செல்லப்பட்டதாக இராஜாவலி குறிப்பிட்டுள்ளது. இதைக் கொண்டு, பகைவனது நாட்டுச் செய்திகளை யறிதற்கு ஒரு படை முன்னதாகச் சென்று திரும்பியிருக்கலாம் என்பர். பராக்கிரம
དེ་ შპჯoff 6. ද්r aí
ܠܐܚܔ
f 65&frasu)3p A. 屁 (btful ミ M 每 الس',
t y ༤།། S
த்தளம் G
7 རྒྱལ༧ བྱུང་བ། ཡ་ང་མཁས་
QTigs
::
/ s శీకామి
*
്ങു. Ayurt,
፮)
e of
@5卿岛&r マジ
SUБѣтgйч w 2கங்காதிபுே R 60Er *ST
தெ
6-ம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாணப் படையெடும்பு
 

darran - yrfahr Typ ở đầ: 8.Lb Lurrt á 6 w Lb Luft i 7 *
பாகுவின் பிரதான படைப் பிரிவின் செலவு தரை வழியாகவே நடைபெற்றிருத்தல் வேண்டும். “கோகில சந்தேசய'வில் கூறப்படும் விவரங்களைக் கொண்டு அப்படை மன்னர் வரை கரையோரமாகவே சென்றிருத்தல் கூடுமெனக் கொள்ளலாம். மன்னரிலிருந்து முன் னேறிய படை தீபகற்பத்தை அடையுமுன், ஜாவகக் கோட்டையில் தங்கியிருந்த கன்னட (விஜயநகர)ப் படையினர் அதைத் தடுத்துச் சமர்புரிந்தனர். இருதரப்பினர்க்கும் கடுஞ் சண்டை நிகழ்ந்த பின் சபுமாலின் படைகள் வெற்றியெய்தித் தீபகற்பத்தினுள் புகுந்தன. இதன் பின் அதிக எதிர்ப்பின்றி யாழ்ப்பாணம் (யாப்பாபட்டுண) வரை அவை முன்னேறலாயின. யாழ்ப்பாண அரசின் தலைநகர் மிகவும் தீவிரமாகக் காவல் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட போதும், சபுமாலின் தீரச் செயல்களாலும், அவனது தலைமை யில் போராடிய கோட்டை வீரர்களின் திறமையாலும் இக்கடும் எதிர்ப்புப் புறங்காணப் பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக, தனது குதிரையை அவன் செலுத்திப் போராடிய விதம் அவனது வெற்றியினை உறுப்படுத்தியதாக அவை கூறுகின்றன. ஆரியச் சக்கரவர்த்தி (கனகசூரிய சிங்கை ஆரியன்) இந்தியாவுக் கோடிவிடவே, யாழ்ப்பாண அரசு கோட்டை மன்னனது வசமாக்கப் பட்டது. யாழ்ப்பாண அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கோட்டைக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். யாழ்ப் பாண அரசை வெற்றி கொண்ட சபுமாலுக்கு மன்னனுல் மிகுந்த மரியாதைகள் செய்யப்பட்டு, பின்னர் அதன் ஆட்சியாளனுகவும் அவன் நியமிக்கப்பட்டான். சபுமால் யாழ்ப்பாணத்து நல்லுரிலிருந்து ஆட்சி நடத்தி வரலானன். "சிறீசங்கபோதி புவனேகபாகு" என்ற பெயரைச் சூடி, செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைச் சுமார் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்து வரலானன். இவனே நல்லூர் க் கந்தசாமி கோவிலைக் கட்டியதாகக் கூறப்படுபவன்.
பராக்கிரமபாகுவின் நீண்ட கால ஆட்சியில் நாடு பெரும் பாலும் அமைதியையே பெற்றிருந்தது. அவனது ஆட்சி முடியுந் தறுவாயில் ஜோதிய-சிடான என்ற கம்பளை அரசகுமாரன் கலகஞ் செய்தபோது, அம்புலுகல குமாரய அங்கு படையுடன் அனுப்பப் பட்டு அக் கலகம் அடக்கப்பட்டது. நாடு பெரிதும் அமைதியுடன் விளங்கியதால், பொருளியல், சமயம், கலை முதலாய கலைத்துறைகள் வளர்ச்சி யெய்தலாயின. பராக்கிரமபாகுவின் கப்பல்கள் வணிகப் பொருட்களுடன் தென்னிந்தியக்கரைக்குச் சென்றதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இக் காலத்தில் அராபியரும் இலங்கை வந்து தீவின் ஏற்றுமதி வியாபாரத்தில் பெரும்பங்கு கொள்ளலாயினர். கொழும்புத் துறைமுகத் தூடாக நடைபெற்ற வணிகத்தைக் கட்டுப் படுத்தவே கோட்டை இராசதானியாக்கப் பட்டதென்பர். பெளத் தம் இவன் காலத்தில் எய்திய வளர்ச்சி பற்றியும், இவனது சமயப்
23

Page 95
78 பண்டைய ஈழம்
பொறை பற்றியும் பின்னர் குறிப்பிடுவோம். இலக்கியத்துறை யிலேயே மிகவும் செழிப்பு வாய்ந்த காலமாகக் கோட்டைப் பராக் கிரமபாகுவின் அாலம் விளங்கியதையும் பின்னர் காண்போம் (10-ம் அத். i-ம் iv -ம் பகுதிகளைப் பார்க்க). இவன் காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்களுக்கும் தன் ஆதரவை நல்கியது மன்றி, பராக்கிரம பாகு தானே ஒரு நிகண்டைச் சிங்களத்தில் இயற்றிய தா கவு ம் தெரிகின்றது. இலங்கையில் தேரவாத பெளத்தமும் சங்கமும் இவன் காலத்தில் மிகவும் நன்னிலையில் இருந்ததால் இவற்றுக்குப் பிற நாடுகளில் பெருமதிப்பு ஏற்பட்டது. 6-ம் பராக்கிரமபாகுவின் இச் சாதனைகள் அவன் புகழைப் பிற நாடுகளிலும் பரவச் செய்தன. * இடைக்கால ஈழத்தின் தலைசிறந்த மன்னன்’ என வரலாற்றறிஞர் கள் இவனைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும். இலங்கை முழுவதும் தனது ஆட்சியைப் பரப்பி, சிங்கள அரச மரபுக்கும் நாட்டுக்கும் உயர்வைத் தந்தவன் 6-ம் பராக்கிரமபாகு எனலாம்.
iv. யாழ்ப்பாண அரசும் கோட்டையும்
யாழ்ப்பாண அரசைச் சபுமால் குமாரய அடிப்படுத்தியதையும், நல்லூரை இராசதானியாகக் கைக்கொண்டு யூனிசங்கபோதி புவனேக பாகு என்ற பெயருடன் அவன் ஆட்சி செய்ததையும் முன்னர் குறிப் பிட்டோம். இப்பகுதியில் யாழ்ப்பாண அரசு மீண்டும் சுதந்திர மெய் தித் தனியரசான வரலாற்றையும், 6-ம் பராக்கிரமபாகுவுக்குப் பிந்திய கோட்டை வரலாற்றையுஞ் சுருக்கமாகக் கூறுவோம். 6-ம் பராக்கிரமடாகு தனக்குப்பின் அரசைப் பெறுதற்குத் தன் மகள் உலகுடையதேவி வழிப் பேரனையே நியமித்திருந்தான். இவன் அர சைப் பெற்றபோது 2-ம் ஜயபாகு (அல்லது ஜயவீர பராக்கிரமபாகு) என்ற பெயரைச் சூடியதாக எமது ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆணுல், இவனது ஆட்சி திடீர் முடிவை எய்தியது. சபுமாலே இவனுடைய ஆட்சியை விரைவில் முடிவுககுக் கொண்டு வரக்காரண மாக விருந்தவன் என இராஜாவலீ கூறியபோதும், டூ கூற்றே என்ற போர்த்துக்கேய ஆசிரியன் இக்கால நிகழ்ச்சிகள்பற்றி வேறு வகை யாகக் கூறுகின் முன். இது எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண வெற்றி யாளன் என்ற முறையில் சபுமாலுக்குண்டான பெரும் புகழ் அவன் கோட்டை அரசையும் பெற உதவியிருக்கலாம். ஆனல், 6-ம் புவனேகபாகுவின் ஆட்சியின் போது, அவனுடைய பரந்த அரசின் வெவ்வேறு பகுதிகளில் கலகங்களும் சச்சரவுகளும் மிகுதியாகத் தோன்றலாயின. சிங்கள பெரளிய (சிங்களப் புரட்சி) எனப்படும் ஒரு கலகத்தை, களு கங்கைக்கும் வளவை கங்கைக்கும் இடைப் பட்ட பஸ்துன் கோறளை முதலான பகுதிகளைச் சேர்ந்த சில பிர தானிகள் நடத்தினர். இக்கலகத்தை அடக்க அனுப்பப்பட்ட அர சனது சகோதரன் அம்புலு கல குமாரய தனது ஏழு கோறளை (சத் தர

கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு 179
கோறளை)ப் படையுடன் பஸ்துன் கோறளைக்குச் சென்று அப்பிர தேசத்தில் அமைதியை நிலைநாட்டினன். இதனிடையே ஏழு கோற ளையிலும் கலகம் மூண்டது. இக் கலகத்தை யடக்கப் புவனேக பாகுவே நேரிற் சென்ருன். அவனுடைய படையைக் கண்டு கலகத் தலைவர்கள் அஞ்சிப் பணிந்ததாகவும் புவனேகபாகு அவர்களுக்கு மன்னிப்பை வழங்கியதாகவும் அவனுடைய டெடி கமைக் கல்வெட் டுக் குறிப்பிடுகின்றது.
6-ம் புவனேகபாகுவின் காலத்திலேயே "உடரட்ட" என்ற மலை நாடும் தனியிராச்சியமாகப் பிரிந்துகொண்டது. செங்கடகலவை (கண்டி) நிறுவியவனுகச் சூளவம்சம் குறிப்பிடும் விக்கிரமபாகுவும் உடரட்டையில் தனியரசைத் தோற்றுவித்த சேனுசம்மத விக்கிரம பாகுவும் ஒருவனுகவே இருக்கலாம் என்பர். 6-ம் பாரக்கிரமபாகுவி ஞட்சியின் இறுதியில் மலையக மக்கள் கலகஞ்செய்து தோல்வியுற் றமைபற்றி முன்னர் கவனித்துள்ளோம். அக்கலகம் அடக்கப்பட்ட பின், அப்பகுதியின் பாலனத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட கம்பளை இளவரசனே பின்னர் தோன்றிய கலகத்துக்குத் தலைவனுக விருந்தான் என உறுதியாகக் கூறமுடியாது. அதே இளவரசனக இல் லாவிடினும், அதே மரபில் வந்தவன் என ஒர் இலக்கிய ஆதாரம் அவனைக் கொள்ள வைக்கின்றது. "சேனசம்மத" என்ற அடை மொழியைக்கொண்டு படையின் இசைவு பெற்று அவன் அதிகாரத் தைப் பெற்றிருப்பான் என்பர். இந்த விக்கிரமபாகு மலையகத்தின் ஆட்சியாளனுக விருப்பதுடன் திருப்தி பெற்றிருப்பான் எனக் கொள்ளமுடியாது. 'திரிசிங்களா தீஸ்வர "சக்கரவர்த்தி” போன்ற பட்டங்களை இவன் சூடியமை இவனுடைய நோக்கங்களைப் புலப் படுத்தும், கோட்டை மன்னனுக்கு எதிராக முன்னர் சலகஞ் செய்த ஏழு கோறளைப் பிரதானிகள் பின்னர் இவனுக்கு விசுவாசம் தெரி வித்தமைபற்றி இவனுடைய ஒரு பொறிப்புக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், ஏழு கோறளைப் புவனேகபாகு மீண்டும் தனக்கு விசுவா சமாக இருக்க வைத்து அதன் பாலனத்துக்குப் பொறுப்பாகத் தன் தம்பியை அனுப்பி வைத்தான். இருப்பினும், உடரட்டை தனியர சாகவே திகழ்ந்து வரலாயிற்று. அதை யடக்குவதில் புவனேகபாகு வெற்றி யெய்தவில்லை என்பது உறுதி.
யாழ்ப்பாண இராச்சியமும் கோட்டையில் ஏற்பட்ட குழப்பங் களைப் பயன்படுத்திச் சுதந்திரம் அடையலாயிற்று. யாழ்ப்பாண வைபவமாலை"யின் கூற்றுப்படி, பதினேழு ஆண்டுகளே யாழ்ப்பா ணம் கோட்டையரசின் கீழமர்ந்தது. சபுமால் கோட்டையரசைப் பெற்றபின், யாழ்ப்பாணத்தைப் பரிபாலித்தற்கு அனுப்பிய விஜய பாகு மக்களுக்குப் பல கொடுமைகளைப் புரிந்து வருத்தியதாகவும் இதனல் கோட்டை அரசனது ஆணையிலிருந்து தம்மை விடுவிக்க

Page 96
1 8 U பண்டைய ஈழம்
அவர்கள் காத்திருந்தனரெனவும் கூறப்படுகின்றது. இதனிடையே முன்னர் இந்தியாவுக் கோடிய கனகசூரிய சிங்கையாரியன் அங்கு தல யாத்திரை செய்து, தன் பிள்ளைகளைத் திருக்கோவிலில் படிக்க வைத்தபின், தென்னிந்தியச் சிற்றரசர்களின் படைத் துணைபெற்று 1467-ல் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்து வந்தான். நல்லூரில் ஆண்ட சிங்கள ஆட்சியாளன் எதிர்பார்த்திருக்காத வகையில் இப் படையெழுச்சி நடைபெற்றபோதும், அவன் உடனே தன் படைக ளேத் திரட்டிப் போர் தொடுத்தான். இப் போரில் கனகசூரியன் வெற்றி பெற்றதால், யாழ்ப்பாண அரசை அவன் மீட்டு மேலும் சில ஆண்டுகள் நல்லூரிலிருந்தே ஆட்சி நடத்தலானன். பின்னர் தன் மூத்த புதல்வனை பரராஜசேகரனிடம் ஆட்சியை ஒப்படைத்து அரசியல் வாழ்விலிருந்து ஒய்வுபெற்றுக்கொண்டான். இப் பரராஜ சேகரனே (1478-1519) நல்லுரில் பல கோவில்களை எடுப்பித்தவன் எனப் போற்றப்படுபவன். கைலாசநாதர் கோவில், சட்டநாதர் கோவில், வீரமா காளி அம்மன் சோவில், வெயிலுகந்தப் பிள்ளையார் கோவில் என்பவற்றை இவனே நிறுவித் தன் சமயப் பற்றுக்குச் சான்றுகளாக விட்டுச் சென்றன். யமுனுரி" என இப்போது வழங் கும் யமுன ஏரியையும் இவனே அமைப்பித்தான் என்பர். தன் காலத்தில் ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவி, தமிழ்மொழியில் புலமை பெற்ற வித்துவான்களையும் புலவர்களையும் சேரவைத்து அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்துச் சன்மானங்களும், பரிசில்களும் வழங்கினன். இவ்வேந்தனுடைய மைத்துனனன அரசகேசரி என் பான், காளிதாசருடைய இரகுவம்சத்தைத் தமிழிற் பாடினன். பரராஜசேகரன் உலா' என்ற நூலும் இதே காலத்திலேயே ஆக்கப் பட்டிருத்தல் கூடும். இவ்வாறு சிங்கைப் பரராஜசேகரன் காலத் தில் சைவமும், தமிழும் நன்னிலையெய்தி யிருந்தமை புலப்படும்.
கோட்டை யரசின் மன்னனுக விளங்கிய 6-ம் புவனேகபாகுவின் ஆட்சி ஏழாண்டுகளில் (1478-ல்) முடிவெய்தவே, அவனுடைய மக னை ஒருவன் பண்டித பராக்கிரமபாகு என்ற பெயருடன் பட்டத் துக்கு வந்தான். பின்னர் அம்புலுகல குமாரய என்ற இளவரசன் (சபுமாலின் தம்பி) புதிய அரசனை யெதிர்த்துப் படையெடுத்துக் கோட்டைக்குச் சென்றன். அரசனை யெளிதிற் புறங்கண்டு அவனேக் கொன்றபின், ஆட்சியை ஏற்று வீர பராக்கிரமபாகு என்ற பெயரைச் சூடிக்கொண்டான். இவனுடைய ஆட்சி 1508 வரை நீடிக்கலா யிற்று (1454-1503). இவன் அரசனுக விளங்கிய காலத்திலேயே போர்த்துக்கேயர் முதன் முதல் 1505ல் இலங்கைக்கு வரலாயினர். எனவே, போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் தனியே கோட்டை யரசு மட்டுமன்றி யாழ்ப்பாண அரசும், கண்டி அரசும் சுயாதீனமுடைய தனியரசுகளாகத் திகழ்ந்தன.
ത്തത്തബ

கோட்டை அரசின் எழுச்சி: 6-ம் பராக்கிரமபாகு 181
பயிற்சி :
1. 15-ம் நூற்றண்டின் நடுப்பகுதிவரை விஜய நகரப் பேரரசு எய்திய
வளர்ச்சியைக் காட்ட விளக்கப்படம் வரைக.
2. 6-ம் பராக்கிரமபாகுவின் கால இலங்கையின் அரசியல் நிலைமை
களைச் சித்தரிக்கும் ஒரு படத்தை வரைக.
3. பொலன்னறுவைக் காலத்திலிருந்து 1505 வரையுள்ள முக்கிய நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒரு கால அட்டவணையைத் தயாரிக்க.
தேர்வு விஞக்கள்:
1. ஆரும் பராக்கிரமபாகுவின் அரச வாழ்க்கைபற்றிச் சுருக்கிக் கூறி
அவனது சாதனைகளை மதிப்பிடுக.
2. 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் கோட்டையரசு எழுச்சிபெற்ற
மைக்குரிய காரணங்களைக் கூறுக.
3. 14-ம், 15-ம் நூற்ருண்டுகளில் இலங்கைக்கும் பிற நாடுகளுக்கும்
இடையே நிலவிய வணிக உறவுகளை விளக்கிக் கூறுக.
4. சிறு குறிப்புக்கள் வரைக; கோகில சந்தேச நல்லூர்; கங்காசிறீ
புரம் ஜயவர்த்தன புரம் விஜய நகரப்பேரரசு.

Page 97
அத்தியாயம் பத்து பிந்திய காலச் சிங்களப் பண்பாடு
1. பொருளியல் நிலைமைகள் : பிறநாட்டு வணிக வளர்ச்சி i. நிரு வாகமும் அதிகாரிகளும் i. சமய நிலைமைகள் iv. Hubákuu வளர்ச்சி V கட்டிடக்கலே முதலியன.
பொலன்னறுவைக் காலத்துக்குப் பிந்திய சுமார் மூன்று நூற் றண்டுகளின் வரலாற்றை, சிறப்பாக அரசியல் வரலாற்றை இதற்கு முந்திய மூன்று அத்தியா 11ங்களில் கூறினுேம், இடையிடையே சில அரசர்களோ அன்றேல் அகிகா ரிகளோ பழைய பெருமையை நினை வுக்குக் கொண்டுவர முற்படுதலைக் காணலாமாயினும், தேய்வுப் பாதையில் இலங்கையின் அரசியல் வரலாறு செல்வதையே நாம்பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. இதைத் தடுத்து நிறுத்த 6-ம் மராக்கிரமபாகுவாலும் முடியவில்லை யென்பதைச் சென்ற அத்தியாய முடிவிற் கண்டோம். அவனுடைய ஆட்சி முடி வுற்ற சிறிது காலத்தில், அவன் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய நாட்டின் ஒற்றுமை சிதறலாயிற்று. பிளவுபட்டுக்கிடந்த நாடே அந்நியரை வரவேற்றது. அரசியலிலே சிறப்புக் குறைந்த காலங்க ளாக தம்பதெணிய, கம்பளை, கோட்டைக் காலங்கள் இருந்தன எனின், இதர துறைகளில் அவை அதிக சிறப்பை எய்தியிருத்தல் சாலாது. ஆனலும் இடையிடையே ஒரளவுக்குச் சிறப்புடன் ஆட்சி நடத்திய அரசர்களும் அதிகாரிகளும் சமய வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி என்பவற்றிலும் நாட்டங் காட்டியமையால் அத்துறையில் சிங்களப் பண்பாடு பெருமை யடைவதாயிற்று. சமயத் துறையில் எய்திய சிறப்புக்கள் நிலைபேறுடையனவாக விருக்கவில்லை. வணிகத் துறை யிலும் முந்திய காலங்களின் போக்குத் தொடர்ந்த தெனினும், இம் மூன்று நூற்ருண்டுகளில் இலங்கையின் பிறநாட்டு வணிகம் துரித வளர்ச்சி யெய்தி வந்ததெனலாம். இதனுல் இக்காலப் பொருளியல் வணிகமே அதிக முக்கியத்துவமும் பெறலாயிற்து. இவ் விருத்தி களை இனித் தனித்தனி காண்போம்.
i. பொருளியல் நிலைமைகள்: பிறநாட்டு வணிக வளர்ச்சி.
பயிர்ச் செய்கை: இவ்வத்தியாயத்தில் நமது சவனத்திற்கு உள் ளாகும் தம்பதெணிய, கம்பளை, கோட்டைக் காலப் பகுதிகளில் (1236-1508) தீவின் பொருளியல் அமைப்பில் சில முக்கிய மாறு தல்கள் ஏற்படலாயின. குடிசனச் செறிவிலும் பொருளியல் முக்கியத் திலும் முன்னர் முதன்மை பெற்றிருந்த இராஜரட்டை, இப்போது அம் முதன்மையை இழக்கலாயிற்று. மழை வளமும் இயற்கை வள

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 183
மும் அதிகமாகவுள்ள தென்மேற்கு, மத்திய பாகங்களே இக்காலப் பகுதிகளில் குடிசனச் செறிவு மிக்க பகுதிகளாயின. இம் மாறுத லுக்கான காரணங்கள் முன்னரே தெளிவாக்கப்பட்டு விட்டன. இவ்வாறு குடிப்பரம்பலில் உண்டான மாற்றத்தால் பொருளியல் நிலைமைகளிலும் மாற்றம் ஏற்படலாயிற்று. பயிர்ச் செய்கையே இக்காலத்திலும் முக்கிய தொழிலாக விளங்கியபோதும், புதிய சூழ் நிலைக்கும் நில அமைப்புக்கும் ஏற்ட அதிலும் புதிய முறைகள் கைக் கொள்ளப்பட்டன. குடிகளின் உணவு வகைகளும் இப்போது மாற்ற மடையலாயின. தெங்குப் பொருள்கள் (தேங்காய், தேங்கள் யெண்ணெய்) உணவில் முக்கிய இடத்தை இக் காலத்திலேயே பெற்றன. பழைய பாரிய பாசனங்கள் பலவும் பாழடையலாயின. ஒரு சில மன்னர்கள் (3-ம் புவனேகபாகு, 4-ம் புவனேகபாகு போன்றவர்கள்) பாழெய்திய பாசனங்கள் சிலவற்றை நன்னிலைக்குக் கொண்டுவர முயன்றனர். ஆயின் அவர்களின் முயற்சி அத்துணை பெரிதாகவோ, நிலைபேருன பலனைத் தந்ததெனவோ கொள்வதற் கில்லை. ஈரலிப்பு வலயத்திலும் வேறு வகையான அமைப்பைக் கொண்ட நீர்ப்பாசனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கு வேண்டிய அணைகள், வாய்க்கால்களை நிறுவுவதிலும் திருத்துவதிலும் கம்பளை மன்னர்கள் சிலர் கவனம் செலுத்தினர். காடுகளை யழித்து "சேனை’ப் பயிராக நெற் ப யிர் ச் செய்கையை மேற் கொள்ளும் முறையால் இக்கர்லத்தில் பெரும் பகுதிகள் பயிரிடப்பட்டன. மக் களின் உணவுப் பழக்கங்களில் உண்டான மாறுதல்களுக்கேற்ப, புதிய தானிய வகைகளும், பழமர வகைகளும் உண்டாக்கப்பட்டன. பருத்திச் செய்கையும், அதனேடுகூட நெசவுத் தொழிலும் இக்கா காலத்தில் அபிவிருத்தி யடையலாயின. 2-ம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்களின் காலத்தில் தெங்குத் தோட்டங்களும் முக் கியமடைந்து வரலாயின.
பிறநாட்டு வணிகம்: இக்காலப்பகுதியின் ஒரு தனியியல்பு இலங் கைக்கும் வெளி நாடுகட்குமிடையே நடைபெற்ற வணிகம் மிகத் துரித வளர்ச்சி பெற்றிருந்தமையாகும். சீன, இந்திய, அராபிய பாரசீக வணிகர்கள் இலங்கையின் முக்கிய துறைகளுக்கு வந்து அவ்வணிகத்திற் பெரும்பங்கு கொண்டிருந்தனர். தெவிநுவரை யில் (தெவுந்தர) இக்காலத்தில் பொறிக்கப் பெற்றிருந்த ஒரு கல் வெட்டு பாரசீக, சீன, தமிழ் மொழிகளில் எழுதப்பட்டிருந்து மை குறிப்பிடத்தக்கது: யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி யொருவன் பாரசீக மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் என இபின் பட டூட்டா குறிப்பிட்டுள்ளமையும் நினைவு கூர்தற்குரியது. ஆரியச் சக்கரவர்த் திகள் தாமே கப்பல்களை வைத்திருந்து பிறநாடுகளுடன் வணிகஞ் செய்வதில் நாட்டங் கொண்டிருந்தனர். தென்னிலங்கையில் பிற நாட்டு வணிகர் கூட்டங்கள் மன்னுரிலிருந்து கொழும்பு வரையும்,

Page 98
184 Lje 6 lu ob
கொழும்பிலிருந்து காலிவரையும் துறைமுகங்களை யடுத்து வாழ்ந்து வரலாயின. இவ்வயல் நாட்டு வணிகர்களில் Gp di) a DrGoad கள் "அராபியர்கள்" என்பதை விரைவிற் காண்போம். இக்காலப் பகுதிக் குரியவையாக இலங்கையில் அதிகமாகக் கண்டெடுக்கப் பட்ட நாணயங்களும் இலங்கைக்கும் பிறநாடுகளுக்கும் இடையே நிலவிய வணிக உறவுகளை உறுதிப்படுத்துவன. பாரகசீம், ஓர் மஸ் பாண்டிய, விஜயநகர ஆகிய பிறநாட்டு நாணயங்களுடன் சீன நாணயங்களும் மிகுதியாகக் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. முக்கிய துறைமுகங்களால் அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வருவாயைச் சேகரிப்பதற்கும் அவற்றின் நிருவாகத்தைக் கட்டுப்படுத்தவும் அரச அலுவலர்கள் அங்குக் கடமையாற்றினர். 2-ம் பராக்கிரம பாகுவுக்கு இவ்விடயத்தில் இருந்த அக்கறையை அவனுடைய ஒரு பொறிப்புப் புலப்படுத்தும். இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மீதும் ஒரு வகைவரி வசூலிக்கப்பட்டதாகத் தெரிகின் றது. கறுவாவும் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இக்காலத் திலேயே விளங்கத் தொடங்கியது. 2-ம் பராக்கிரமபாகு என்ற தம்பதெணிய மன்னனுடைய காலத்திலிருந்தே கறுவா காரணமாகத் தீவின் புகழ் பிறநாடுகளிற் பரவலாயிற்று என நாம் ஒரு போர்த் துக்கேய வரலாற்றறிஞனது கூற்ருல் உணரலாம்.
அராபியரும் இலங்கையின் வணிகமும் கீழை நாட்டு வணிகப் பொருட்களைப் பெற்று மேலை நாடுகளுக்கு அனுப்பும் நடுவர்களாக "அராபியர்" என்ற சாதியினர் புகழ் பெற்றுள்ளனர். அராபியர்" எனும்போது, அராபிய நாட்டில் மட்டுமன்றி அபிசீனியா, பாரசீகம் போன்ற அயல் நாடுகளிலும் வாழ்ந்த அரபு மொழி பேசிய முஸ் லீம்களையும் அதிற் சேர்ப்பர். இவ்வராபியர் எடுத்த பெருமுயற்சி யால், 10-ம் நூற்ருண்டளவில் கீழை நாட்டு வணிகத்தைத் தமது தனியுரிமையாக்கிக் கொண்டனர். இலங்கையிலிருந்து பெறப்பட்ட இரத்தினக் கற்கள், முத்துக்கள், வைரங்கள், சங்கு, மிளகு முதலான பொருட்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகித்து வந்தனர். இலங்கையில் இவ் வியாபாரத் தொடர்பின் விளைவாக முஸ்லிம், வணிகக் கூட்டம் ஒன்று குடியேறி வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகின்றது. இவர்களே தென்னிந்தியத் துறைகளுக்கு வரும் அராயிய வணிகக் கப்பல்களுக்கு வேண்டிய இலங்கைப் பொருட் களை அனுப்பி வைத்தனர். இலங்கையின் வணிகத்தில் அராபியர் அதிக பங்கைப் பெற உதவிய ஒரு முக்கிய விருத்தி சோழமண்டலக் கரையில் 12-ம், 13-ம் நூற்றண்டுகளில் முஸ்லிம் வணிக ஆதிக்கம் வலுப்பெற்று வந்தமை எனலாம். பாண்டியரும் இதே காலத்தில் வணிக, அரசியல் முதன்மையைப் பெறுவதில் பேரார் வங் காட்டி னர். இத்தறுவாயிலேயே, 1-ம் புவனேகபாகு என்ற இலங்கை மன் னன் 1223-ல் குவலாவுன் என்ற எகிப்திய சுல்தானுக்கு ஒரு முஸ் லிம் தூதுவன (உதுமான்) அனுப்பி வைத்தான். எகிப்திய சுல்தா

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 285
துக்குப் புவனேகபாகு அனுப்பிய கடிதத்தில், தன்னிடம் முத்துக் கள், இரத்தினக் கற்கள், கப்பல்கள், யானைகள், மஸ்லின் முதலான பல பொருட்கள் இருப்பதை அறியப்படுத்தி அவனுடைய நாட்டு டன் வணிக உறவையும் நட்புறவையும் வளர்க்க விரும்புவதாகவும் கூறினன். தன்னிடம் உள்ள பொருட்களில் ஒன்ருகக் கறுவாவை யும் குறிப்பிட்டிருந்தான். எகிப்துடன் நேரடியாகவே வணிகத் தொடர்பை நிறுவப் புவனேகபாகு எடுத்த முயற்சி வெற்றிபெற் றிராவிடினும், இம் முயற்சியால் அக்கால அரசர்கள் பிறநாட்டு வணிகத்தை வளர்ப்பதில் கொண்டிருந்த அக்கறை எமக்குப் புலன கும். அராபியர் இலங்கை வணிகத்தில் கொண்டிருந்த முக்கிய பங் கும் அரசவையில் அவர்களுக்கிருந்த செல்வாக்கும் இதனல் தெளி வாகும். ஆரியச் சக்கரவர்த்திக்கும், சிங்கள மன்னர்களுக்கும் இடையே மூண்ட போர்களுக்கு முத்துத் தளங்களின் உரிமைக்கு இரு சாராரும் போட்டியிட்டமை ஒரு முக்கிய காரணமாக இருந்தமை நினைவு கூர்தற்பாலது. சிலுவைப் போர்களின் பின்னர் ஐரோப்பா வில் வாசனைத் திரவியங்களைப்பற்றி யறிந்த மேலை நாட்டவர் அவற் றின்மீது அதிக நாட்டங் கொண்டதால் இவற்றின் தேவை அங்கு அதிகமாகவே, இலங்கையின் ஏற்றுமதி வணிகமும் (குறிப்பாக இலங் கைக் கறுவா) பெருவளர்ச்சி எய்தலாயிற்று. அராபியரே இவ்வணி கத்தைத் தமது தனியுரிமையாக நடத்தி வந்ததால், இவர்களின் தனியுரிமையைத் தகர்க்கவே பின்னர் போர்த்துக்கேயர் கீழை நாடுகளுக்கு வரலாயினர். அராபியர் இலங்கையின் ஏற்றுமதி வணி கத்தில் வகித்த நிலை காரணமாகவே, இலங்கையின் மேற்கு தெற் குக் கரையோரங்களில் உள்ள பிரதான துறைகளை யடுத்து அவர்க ளின் குடியேற்றங்கள் இதே காலத்தில் ஏற்படலாயின. மன்னர், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, வேரு வளை, காலி முதலானவற்றில் இத்தகைய குடியேற்றங்கள் ஏற்பட் டன எனக் கொள்ளலாம். சோழமண்டலக் கரையிலும் இதே காலப் பகுதியில் முஸ்லீம் வணிக ஆதிக்கம் நிலவியதால் அங்கிருந் தும் (காயல் பட்டினம்) முஸ்லீம்கள் இலங்கை வந்து குடியேறி யிருப்பர் எனலாம்.
நாணயங்கள்: கஹாபண (கஹவண)வும், மசவும்: இந்தியாவில் *புராண" என வழங்கப்பட்ட ஆதிகாலத்து நீள்சதுர நாணயங்க ளைப் போலவே, இலங்கையிலும் அத்தகைய நீள்சதுர வெள்ளி நாணயங்கள் வெவ்வேறு வகையான அடையாளங்களைக் கொண்டு வழங்கப்பெற்றதாகத் தெரிகின்றது. இவற்றுக்கே ‘கஹாபனங்கள் (வடமொழியில் ‘கர்ஷா பண) அல்லது "கஹவண" என்ற பெயர் வழங்கப்பட்டது. இத்தகைய நாணயங்கள் வடஇந்தியாவிலிருந்தும் தொடக்க காலத்தில் (கி பி. 1-ம் நூற். முன்) வந்திருக்கலாமெ வினும், பின்னர் இலங்கையிலேயே இவை வெளியிடப்பட்டதாகக்
24

Page 99
& 8 L67 666 - Lu Meldub
கொள்வர். 7-ம் நூற்ருண்டு வரையுள்ள பொறிப்புக்களில் இக் கஹாவணுக்கள் வழக்கிலிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. பொலன் னறுவைக் காலத்தின் பிற்பகுதியிலும் சாகஸமல்லன் போன்ற மன் னர்கள் ஏராளமான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். இவற் றையும் சூளவம்சம் கஹாபனங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. முந்திய கஹாபணத்தின் இருபதில் ஒரு பங்கு நிறைகொண்ட "மச" என்ற செப்பு நாணயங்கள் பொலன்னறுவைக் காலத்திலும் பின் னரும் வழக்கிலிருந்ததாகச் சிங்கள இலக்கியங்கள் புலப்படுத்துகின் றன. இவற்றையும் கஹாபனங்களுக்கு சமமானவையாகவே பின் னர் கொள்ளலாயினர். பொலன்னறுவைக் காலத்திலிருந்த ‘மச’க் கள் தம்பதெணிக்காலத்திலும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இவற் றுக்கே 'தம்பதெணி-காசு" என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. 4-ம் விஜயபாகு, 2-ம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் இத் தகைய செப்பு நாணயங்களை அதிகமாக வழக்கிலிருக்கச் செய்த னர். 1-ம் புவனேகபாகுவுக்குப் பின், 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்திலேயே இத்தகைய நாணயங்கள் (மச) வெளியிடப்பெற்றன. இந்த நாணயங்களைத் தவிர வேறும் நாணயங்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்தபோதும் அவை அத்துணை முக்கியமானவை யல்ல. பொன் முதலான உலோகங்களில் அனுராதபுர காலத்தில் நான யங்கள் (பிறநாட்டு வணிகத்துக்கே பெரும்பாலும் இவை பயன் படுத்தப்பட்டன) வெளியிடப்பெற்றபோதும், பிந்திய காலங்களில் அம்முறை அருகிவிட்டது. ‘மட-றன்" என்ற பொற்காசு நிஸங்க மல்லன் காலத்திலும் வழக்கிலிருந்ததை அறியலாக், கம்பளைக் காலத்தில் ‘பணம்’ என்ற மற்றெரு நாணயமும் இரு ந் த  ைத க் கடலாதெணிப் பொறிப்பு உணர்த்துகின்றது. இவை பெரும் பாலும் தென்னிந்தியாவிலிருந்தே வந்திருக்க வேண்டும். இலங்கைக் காசும் தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் வழக்கிலிருந்ததை அறிய முடிகின்றது. ‘ஈழக்காசு" என இது அங்கு வழங்கப்பெற்றது. ஆரியச் சக்கரவர்த்திகளும் தமிழில் "சேது" எனப் பொறிக்கப்பட்ட நாண யங்களை வெளியிட்டிருந்தனர்.
i. நிருவாகமும் அதிகாரிகளும்
தம்பதெணியக்காலம் போன்ற பிந்திய காலங்களிலும் முந்திய காலத்திலிருந்த ஆட்சிமுறையும், கோட்பாடுகளும் அடிப்படையில் அதிக மாற்றமடையாது தொடர்ந்து நிலைபெற்று வந்தன. இங்கு நாம் ஒரு சில புதிய விருத்திகளை மட்டும் கவனிப்போம். இக்காலப் பகுதிகளில் ஆட்சிசெய்த பெரும்பாலான மன்னர்களின் ஆணை தீவு முழுவதிலும் பரவியிருக்கவில்லை. ஆனலும், அவர்கள் பெருமைக் குரிய பட்டங்களைச் சூடினர். 'திரிசிங்ஹளாதீஸ்வர என்ற பட்டத் தைத் தம்பதெணி மன்னர்களும், பின்வந்தவர்களும் சூடியதை

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 187
முன்னர் க் கண்டோம். அவ்வாறே "சக்கரவர்த்திகள்" என இக்கா லத்து மன்னர்கள் பலர் தம்மை அழைக்கலாயினர். பட்டத்துக்கு வந்த பின் மன்னர்கள் சூடும் பெயர்களில் சிறீசங்கபோ(தி) என்ப தையே பெரும்பாலாஞேர் இக்காலத்தில் விரும்பியமை தெளிவு. கந்தவுருசிரித என்ற அக்கால நூலொன்றில் அரசனது நித்திய கரு மங்களும் கடமைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பெளத்தத் தத்துவங்களும் பிராமணக் கிரியை முறைகளும் எவ்வளவுக்கு அர சர்களின் நடைமுறை வாழ்வில் கலந்திருந்தன என்பதை அந்நூலில் வரும் விவரங்களால் உணரமுடிகின்றது. 2-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் தோன்றிய அந்நூலில் குறிப்பிடப்படும் அதிகாரிகளின் பெயர்களும் பயனுள்ளவை. அரசர்கள் தெய்வீகத்தன்மையுடைய வர்கள் என்ற கருத்து பிந்திய காலப்பகுதியில் மேலும் வலுத்து வந்தது. தம்மைப் போதிசத்துவர்" அல்லது போதிசத்துவரின் அவ தாரங்கள் எனக் கோட்டைக் கால மன்னர்கள் கருதினர். அபி ஷேகம் (முடிசூட்டுவிழா), அரசுரிமை ஆதியன முன்னைய காலங் களைப்போலவே இருந்து வந்தன. கம்பளைக்காலத்தில் மட்டும் அர சுரிமை சகோதரிவழி மருமகனுக்கே சேர்வதாயிற்று. ஒரே அரசியை ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள் மணமுடிக்கும் வழக்கம் இதே காலத்தில் பின்பற்றப்பட்டதையும் காணலாம். இவ்வகையான மாறுதல்கள் தென்னிந்தியத் தொடர்புகளால் உண் டா ன  ைம தெளிவு
அதிகாரிகளைப் பொறுத்த மட்டிலும், பொலன்னறுவைக் காலத் திலும் அதற்கு முன்னரும் இருந்த பதவிகள் பிந்திய காலப்பகுதி களிலும் வழக்கிவிருந்தன. சில பெயர்கள் மாறுதல்களடைந்தன. சிலவற்றின் முக்கியத்துவம் கூடியும் குறைந்தும் இருந்தன. புதிய சில பதவிகளின் பெயர்களை இக்காலப்பகுதிகளிலுள்ள ஆதாரங்க ளிலேயே முதன்முதலாகக் கேள்விப்படுகின்ருேம், முந்திய சேஞபதி இப்போது செனநாயகனுகின்ருன். அதிகார என்ற பிரதம அமைச் சன் இப்போது எக-நாயக ஆனன். பண்டார-நாயக்க (களஞ்சி யத் தலைவன்), திஸா-நாயக்க, சாமந்த-நாயக்க, அதிகரண-நாயக்க அர்த்த நாயக்க போன்ற பெயர்கள் எமது காலப்பகுதிகளிலேயே வழக்குக்கு வந்தன.
வன்னி : இதே காலப் பகுதியிலேயே, "வன்னி" என்பதுபற்றிய குறிப்புக்கள் எமது ஆதாரங்களில் முதன் முதலாக இடம் பெற்றுள் ளன. வன்னியர்கள் என்ற தலைவர்களின் (பிரதானிகளின்) ஆட்சி யில் அமர்ந்த பிரதேசமே வன்னி யெனப்பட்டது. வட பகுதியில் விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கும் தென்னிலங்கையில் விளங்கிய சிங்கள அரசுகளுக்கும் இன்டப்பட்ட பகுதியாக வன்னி அமைந்த தால், அரசியல் வரலாற்றில் அதற்கு ஒரு தனியிடம் அளிக்கப்படும்.

Page 100
H 88 பண்டைய ஈழம்
யாழ்ப்பாண வைபமாலை, நிகாய சங்கிரஹ முதலான ஆதாரங்களி, லும், கல்வெட்டுக்களிலும் இவைபற்றிய குறிப்புக்கள் இடம் பெற் றுள்ளன. பொலன்னறுவையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங் கையில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளே வன்னியர்கள் தமது ஆதிக் கத்தைப் பெருக்க உதவின. இப்பிரிவுகள் பொதுவாகப் பதினெட்டு எனவே கொள்ளப்படும். முந்நூற்றறுபத்துநான்கு பிரிவுகள் இருந் ததாகவும் நிகாய சங்கிரஹ குறிப்பிடுகின்றது. வன்னியர்கள் பெரும் பாலும் தமிழர்களாக விருந்தனர் என்பதும் யாழ்ப்பாண அரசுக்கு இவர்கள் இடையிடையே திறை செலுத்தியமையும், 6-ம் பராக் கிரமபாகுவின் படைகள் முதலில் வன்னியர்களை அடக்கிய பின்னரே யாழ்பாணத்துக்குச் செல்ல முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை. வன்னித் தலைவர்கள் தென்னிந்தியாவிலிருந்தே வந்திருத்தல் கூடும் என அறிஞர்கள் கருதுவர். 3-ம் விஜயபாகு போன்ற தம்பதெணிய அரசர்கள் முதலில் வன்னித் தலைவர்களாகவே அரசியல் வாழ்வைத் தொடங்கினர் என்பதும் கவனித்தற்பாலது.
i. சமய நிலைமைகள் :
பொலன்னறுவைக்கால முடிவில் பெளத்தமும், பெளத்த "சங்க” மும் பெரும் சீர்கேடடைந்திருந்தன. சோழராட்சியின் முடிவிலிருந் ததைவிட, கலிங்கமாகனது ஆட்சியின் முடிவில் பெளத்தத்தின் நிலை பெருங் கவலைக்கிடமாகக் காணப்பட்டது. சங்கத்தில் தோன் றிய ஊழல்கள், விகாரைகளும் பிறசமய நிறுவனங்களும் அடைந் திருந்த சேதங்கள், அரச ஆதரவின்றிக் குருமார்கள் பட்ட அவதி கள் அனந்தம். பல பெளத்தக் குருமார்கள் பிற பெளத்த நாடுக ளுக்குச் சென்று தங்கினர். பெளத்தம் இவ்விதமான நிலையில் இருந்தபோதே, தம்பதெணிய முதல் அரசனன 3-ம் விஜயபாகு அரசைப் பெற்றன். இவன் சங்கத் தலைவர்களுடன் ஒத்துழைத்து சங்கத்தின் புனிதத்தையும் நற்பெயரையும் நிலைநாட்டுவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டான். இவனுடைய காலத்தில் தம்ப தெணியில் நிறுவப்பட்ட விஜய சுந்தராராமயவில் ஒரு சமயமன்று கூடி அங்கு எழுந்த கருத்து வேற்றுமைகளை ஆராய்ந்து விநய விதி களின்படி அவற்றுக்குத் தீர்வுகண்டு, சங்கத்தினர் பின்பற்றுதற் கென ஒழுங்கு விதிக் கோவை யொன்றை வகுத்தது. 1222ல் வெளி யிடப்பட்டதாகக் கூறப்படும் இக் கதிகாவத எமக்குக் கிட்டவில்லை. உபசம்பதாச் சடங்கை ஒழுங்காக வைத்தற்கு நடவடிக்கைகளை யெடுத்தும், திருநூல்களைப் பிரதி பண்ண வைத்தும், புதிய விகாரை களை நிறுவியும், குருமார்களின் கல்விக்குரிய வசதிகளை ஏற்படுத்தி யும் மற்றும் பல வழிகளிலும் சங்கத்தையும் பெளத்தத்தையும் பழைய நன்னிலைக்குக் கொண்டுவர மன்னன் பாடுபட்டான். இவற் றில் அவன் ஓரளவுக்காயினும் வெற்றி பெற்றிருப்பான் எனலாம்,

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 189
2-ம் பராக்கிரமபாகுவும் தன் தந்தையின் பணிகளைத்தொடர்ந்து நிறைவேற்றி, மேலும் பல பணிகளை ஆற்றி, சமயத்தை மேனிலை பெற வைத்தான். சோழநாட்டிலிருந்தும், தம்பரட்டவிலிருந்தும் மலாயா) வரவழைக்கப்பட்ட அறிவுசான்ற குருமார்கள் இலங்கை யில் சமய மறுமலர்ச்சிக்கு உழைத்தனர். இலங்கையில் பெறமுடி யாத சமய நூல்களின் சுவடிகளும் பிற பெளத்த நாடுகளிலிருந்தே தருவிக்கப்பட்டுப் பிரதி பண்ணப்பட்டன. 2-ம் பராக்கிரமபாகு வின் காலத்திலும் சமயப் பேரவை யொன்று கூடி, சங்கத்தைத் தூய்மை பெறவைத்தற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டது. 1266-ல் தம்பதெணியில் கூடிய இச்சமயப் பேரவைக்குத் தலைமை தாங்கியவர் மேதங்கர மகாஸ்வாமி என்பாரே. பலரைச் சங்கத்தினின் றும் வெளியேற்றியதோடு, தம்பதெணி கதிகாவத எனப்படும் ஒழுக்க விதிகளை இப்பேரவை தொகுத்து வெளியிட்டது. இவ்விதிகளை இன்றும் நாம் பயிலும் வாய்ப்பு உண்டு. இவ்விதிகளில் குருமாரின் ஒழுக்கமும் தூய வாழ்வும் வலியுறுத்தப் பெற்றிருப்பதோடு, அவர் கள் கல்வியிலும் சமய அறிவிலும் தேர்ச்சிபெற வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. 2-ம் பராக்கிரமபாகு ஒன்பது தடவைகள். உபசம்பதாச் சடங்கை நடாத்த வைத்தான். அவனது ஆட்சிமுடி 4ம் தறுவாயில் தாஸ்தோட்டவில் அவ் வைபவம் நடத்தப்பட்டது. 2-ம் புவனேகபாகு என்ற மன்னன் காலத்தில் இவ் வைபவங்கள், ஆண்டுதோறும் நடைபெற்றதாகக் கூறப்படும். பிக்குகளுக்கு ஆடை களே வழங்கும் வைபங்களும் தம்பதெனிக் காலத்தில் சிறப்பாக நடைபெற்றன. 2-ம் பராக்கிரமபாகுவின் பின்னேரும் அவனைப் போலவே பல சமய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமயத்தின் நிலையைப் பாதுகாத்து வந்தனர். -
தம்பதெனி மரபின் வீழ்ச்சியுடன், சங்கத்தில் மீண்டும் ஒழுக் கக்குறைவு புகுந்து அதன் பெயரை மாசுபடுத்தியது. கம்பளை மரபி னர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி, அமைதியான ஆட்சிமுறை யையும் ஏற்படுத்தியபோது, இவ்வொழுக்கச் சீர்கேடுகளுக்கு முற் றுப்புள்ளி வைக்கப்பட்டது. செணு லங்காதிகார என்ற அமைச்சனே இம்முறை சமயப் பேரவை கூடுதற்குக் காரணமாக விருந்தவன். அமரகிரிவாச வனரத்தன மஹாசாமி என்பாரின் தலைமையில் 1341ல் கூடிய இச்சமயமன்று முந்திய சமய மன்றுகளைப் போலவே சங்கத் தூய்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இச்சமய மன் றின் நடவடிக்கைகளாலும் அதிக பயன் கிட்டவில்லை. சிறிது காலத் தின் பின், அளகேஸ்வரன் என்ற பிரபுராஜா ஒருவனும், வீரபாகுஆபா என்பவனும் மீண்டும் இத்தகைய மன்றுகளைக் கூட்டுவித்து சங்கத்தின் புனிதத்தை நிலைநாட்டினர்.

Page 101
290 . பண்டைய ஈழம்
கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பெரு மன்னனன 6-ம் பராக்கிரமபாகுவும் மதவளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினன். இவன் அரசைப்பெற வீதாகம மகாசாமி என்ற பிக்கு துணை நின்ருர் என்ற மரபுரைபற்றி முன்னர் கூறினுேம். இவ னுடைய காலத்தில் விளங்கிய விழுமிய குருமார்கள் பலர் சர்வ தேசப் புகழ் பெற்றவர்கள். 6-ம் பராக்கிரமபாகுவும் தனது நாற் பத்தைந்தாவது ஆட்சியாண்டில், குருமார்கள் பின்பற்றுவதற்கான விதிகளை வெளியிட்டிருந்தான். ஆயின் இவ்விதிகள் முழுவதும் ஈமக்கு இப்போது கிட்டவில்லை. 6-ம் பராக்கிரமபாகுவுக்குப் பின் ஆட்சிசெய்த கோட்டை மன்ன்ர்கள் சமய வளர்ச்சியில் அவன் அளவுக்கு அக்கறை காட்டியதாகப் புலப்படவில்லை. எனவே, போர்த் துக்கேயருடைய வருகைக்குமுன்பே, பெளத்தம் ஓரளவு தேய்வடையத் தொடங்கியிருந்த தெனலாம்.
13-ம், 14-ம், 15 ம் நூற்றண்டுகளில் தென்கிழக்காசியாவி லுள்ள பிற தேரவாத பெளத்த நாடுகளிடையே இலங்கைக்கு மட் டற்ற மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டிருந்தது. இதனுல் இலங் கைக்கும் அந்நாடுகளுக்குமிடையே அடிக்கடி சமய உறவுகள் ஏற் பட்டுவந்தன. கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளுடன் இருந்த தொடர் புக ஆள முன்னரே குறிப்பிட்டுவிட்டோம். சீயம், சீனு ஆகிய இரு நாடுகளுடன் இம் மூன்று நூற்ருண்டுகளிலும் நில விய சமயத் தொடர்புகளை இங்குச் சுருக்கமாகக் கூறுவோம். இலங் கையைச் சேர்ந்த உதும்பர மஹா சாமி என அழைக்கப்பட்ட பிக்குத் தலவர் எடுத்த முயற்சியின் விளைவாகவே 14-ம் நூற்றண்டின் நடுப் பகுதியில் சுகோதய அரசிலும், வட சீயத்திலிருந்த தாய் அரசிலும் இலங்கையில் பின்பற்றப்படும் தேரவாதப் பிரிவு பரவலாயிற்று என அங்குள்ள ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. வேறு ஆதாரங்களைக் கொண்டு பர்மா, சீயத்துக்கு விஜயஞ் செய்து அங்கு தேரவாதப் பிரிவுக்குரிய ஒழுக்கங்களை அந்நாடுகளிற் பரவ வைத்தவர் மேதங் கர மகாசாமி (சங்கராஜா) என அறியப்படுகின்றது. இச் சங்கராசா வால் ஆட்கொள்ளப்பட்ட தாய் அரசன் லிதய்ய ஆவன். இவ னுடைய சேவைபற்றிச் சங்கராஜா பாலியிற் பாடிய செய்யுள்கள் சில சுகோதயவில் பொறிக்கப்பெற்றுள்ளன. அனுராதபுரத்திலுள்ள போதிமரத்துக்குரிய முளை யொன்று சுகோதயவில் ஒரு விகாரையில் நாட்டப்பெற்றது. சீயத்தைச் சேர்ந்த பிக்குகளும் இலங்கை வந்து தங்கி, நூல்களை இயற்றிச் சென்றனர். அத்தகைய ஒருவரே, கட லாதெணியில் வந்து கங்கி, தம்மகீர்த்தி மகாசாமியிடம் பயின்று பின்னர் சத்தம்ம சங்ஹக என்ற நூலை எழுதியவர், 6-ம் பராக் கிரமபாகுவின் காலத்தில் இலங்கை வந்து, இங்கே திருநூல்களைக் கற்று உப சம்பதாச் சடங்கைக் களனியில் முடித்துத் திரும்பிய பிக்குகள் தம் நாட்டிலும் புதிய அமைப்பைக் கொண்ட சங்கத்தை

பிந்திய காலச் â di sari பண்பாடு is
நிறுவினர். அதற்கும் சீஹள சங்க என்ற பெயரே ஏற்பட்டது. இலங்கையிலிருந்து திரும்பியபோது ஒரு பிக்கு பூறரீபாதமலையிலுள்ள திருவடியின் பிம்பம் ஒன்றை எடுத்துச் சென் ருர், இதுவும், வழி பாட்டுக்குரிய பிற பெளத்தச் சின்னங்களும் காலத்துக்குக் காலம் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சுகோதயவிலும், வட சீயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்தன. இலங்கையில் வழிபடப்பட்ட பெளத்தச் சின்னங்கள் பற்றிச் சீனச் சக்கரவர்த்திகளும் அறிய வந்தனர். அவர்களுள் மிகவும் பிரசித்தி பெற்றவஞன குப்ளாய் கான் 1584 ல் இலங்கையில் உள்ள பல் எச் சம், மயிர் எச்சம், ஐயக்கலம் என்பவற்றைப் பெறுதற்குத் தூத ஒனுப்பினன். மிங் சக்கரவர்த்தியான யுங்-லோ பூரீபாதஷக்குத் தன் காணிக்கையாக வழங்கும்படி சில விலையுயர்ந்த பொருட்களை அனுப்பினன். ۔۔۔۔
iv. இலக்கிய வளர்ச்சி :
தம்பதெணியக் காலம்:
3-ம் விஜயபாகு தம்பதெணியை இராசதானியாகக் கொண்டு ஆட்சி நடத்தியபோது, முன்னர் மாகனது படையெழுச்சியின் போது பொலன்னறுவையை விட்டுப் பாதுகாப்பை நாடிப் பல விடங்களுக் கும் ஓடிய குருமார்களைத் தம்பதெணிக்கு அழைத்து அவர்களுக்குப் புகலிடம் அளித் தான். அழிவுற்ற பல நூல்களின் சுவடிகளைப் பிறநாடு களிலிருந்து ப்ெற்று, அவற்றைப் பிரதிபண்ணச் செய்தான். முன் னைய காலங்களை விட, இப் பிந்திய காலங்களிலேயே சிங்களத்தில் இலக்கியங்கள் தோன்றலாயின. ஆனுலும், வடமொழிச் செல் வாக்கும் ஓரளவு இன்னும் இருந்தே வந்தது. தம்பதெணியக் கால மன்னர்கள் பலரும், குறிப்பாக 2-ம் பராக்கிரமபாகு, இலக்கிய வளர்ச்சியில் பெரிதும் அக்கறைகொண்டு, புலவர்களையும் அறிஞர்க ளையும் ஆதரித்தனர். 2-ம் பராச்கிரமபாகுவே ஒரு பெரும் புலவஞக மதிக்கப்பட வேண்டியவன். இவனுடைய இலக்கியப் பணிகள் பற்றி முன்னரே கூறியுள்ளோம். சோழ நாட்டிலிருந்தும் மலாயாவிலுள்ள தம்பரட்டவிலிருந்தும் அறிஞர்களை வரவழைத்து அவர்களுக்குப் பல மரியாதைகளைச் செலுத்தினன். அவனுடைய வேண்டுகோளின் படியே அவனது காலம்வரை சூளவம்சம் தொடர்ந்து பாடப்பட் டது. சிறீசங்கபோதியின் தியாகச் செயலை நினைவு கூர்தற்கு எழுந்த விகாரையின் வரலாருன ஹத்தவண்கல்ல விகார வங்ஸ் என்ற வசன நூல் பாலியில் எழுதப்பட்டது. வெதெஹ தேரர் என்பார் எழுதிய ரஸவாஹினி, எளிய பாலி வசன நடையில் கதை ரூபத்தில் பல வர லாற்று நிகழ்ச்சிகளையும், மரபுரைகளையும் கூறுவது. இதில் வரும் 103 கதைகளில் நாற்பதும் இந்தியாவில் நடைபெற்றவை. சம்பந்த கூடவண்ணணு (பூரீ பாதமலை வரலாற்றைக் கவிதை வடிவில் தருவது)

Page 102
92 பண்டைய ஈழம்
மிகச் சிறந்ததொரு சிங்கள இலக்கண நூலான சிதத் சங்கராவ் என் பன வெதெஹ தேரரின் மற்றைய படைப்புக்கள். வீரசோழியம் போன்ற தமிழ் இலக்கண நூல்களைப் பின்பற்றியே வெதெஹ தேரர் தமது இலக்கண நூலை இயற்றியுள்ளார் என கொடகும்பர கொள் வர். வா கிரிகலை மயூாடாதப் பிரிவெனத் தலைவரான புத்த புத்திரர் யோகர்ணுவ என்ற வைத்திய நூலையும், பூஜாவலி யென்ற சமய நூலையும் எழுதினர். பாலியிலுள்ள "தர் மட்டகதா" என்பதில் வரும் கதைகளைச் சுவையான முறையில் சிங்களத்தில் கூறும் சத்தர் மரத்னுவலி (வசனம்) இக்காலத்ததே. நெடுங்காலம் நிலைத்து வந் துள்ள ஓர் இலக்கியச் செல்வம் இது.
2-ம் பராக்கிரமபாகுவின் புதல்வர்களும், தந்தையைப்போலவே இலக்கிய ஆர்வம் உடையவர்கள்; இலக்கிய வளர்ச்சிக்கு நிறைய உதவியவர்கள். இவர்களுடைய காலத்தில் வாழ்ந்த வணரத்தன மெதங்கரர் பயோகசித்தி என்ற பாலி இலக்கண நூலை எழுதினர். புத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமான "ஜினசரிதவை எழு திய மற்ருெ?ரு மெதங்கர தேரரும் இதே காலத்தவரே. குருனகலையி லிருந்து ஆட்சி செய்த 4-ம் பராக்கிரமபாகு (1302-26) ஒரளவு இலக் கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தவன். தனது இராஜகுரு (சோழநாட் டைச் சேர்ந்த ஒரு மகாதேரர்) வாயிலாக மன்னன் ஜாதகக்கதைகள் முழுவதையும் அறிந்து, அவற்றிற் பேரார்வங்கொண்டு, அவற்றைச் சிங்களத்தில் பெயர்க் கச் செய்தான். இச்சிங்கள ஆக்கமே "பன்சியபணஸ்-ஜாதக-பொத்த' என்பது இக்கதைகளைச் சிங்களத்தில்பெயர்த் தவர்கள் அக்காலச் சமூக நிலைமைகளைச் சுட்டுஞ் செய்திகளை ஆங் காங்கே சேர்த்து விட்டனர். பல் எச்சத்தின் வரலாறு ன தளதா சிரித, எளு-போதி வங்ஸ, அணுகத வல்ஸ (பிந்திய இரண்டும் வசன நூல்கள்) இதே காலத்திலேயே எழுந்தன. சூளவம்சம் தொடர்ந்து 4-ம் பராக்கிரமபாகுவின் காலம் வரை பாடப்பட்டது. இவ்வாறு தம்பதெணிக் கால அரசியல் நிலைமை அவ்வளவு சிறப்பைப் பெற் றிராத போதும், இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி யேற்பட்டதைக் காணலாம்.
கம்பளைக் காலம் : . .
கம்பளைக் காலத்தில் சிங்களத்திலேயே மிகுதியான இலக்கி யங்கள் இலங்கையில் தோன்றின. இதற்குக் கூறப்படும் காரணங் களை நாம் அறிதல் வேண்டும். இந்தியாவில், குறிப்பாக வட இந்தி யாவில் முஸ்லிங்களின் ஆதிக்கம் ஏற்பட்டதோடு, வடமொழியின் செல்வாக்கும் அழியலாயிற்று. தென்னிந்தியாவில் விளங்கிய விஜய நகரப் பேரரசு தென்பிராந்திய (திராவிட) மொழிகளையே மிகுதியும் ஆதரித்தது. இலங்கையிலும் வடமொழி செல்வாக்கிழந்துவிட, சுதேசமொழியான சிங்களத்தில் நூல்கள் அதிகமாக எழுதப்பட்டன

பிந்திய Lusis Lurs 198
மேலும் சமய விடயங்களையும் சமய வரலாற்றையும் கூறு தற்கே பாலி அதிகம் பயன்பட்டது. கற்பனை வளஞ் செறிந்த இலக் கியங்களை எழுதவும், உலகியல் சார்ந்த விடயங்களைக் கூறுவதற் கும் பாலி அதிகம் பயன்படமாட்டாது. வடமொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்று, அம் மொழியிலேயே இலக்கியங்கள் சமைக்கும் அளவுக்குப் புலமை பெறுதல் அத்துணை எளிதன்று. அவ்வாறு புலமைபெற்று, இலக்கியங்களைப் படைத்தாலும், அ வ ற் று க் கு அறிஞர் மத்தியில் மதிப்பைப் பெறுதல் மிகக் கடினமானது. இத் தகைய காரணங்களாலேயே, சிங்களத்தில் நூல்கள் பெருந்தொகை யாக இக்காலப்பகுதியில் எழுதப் பெற்றன. சிதத் சங்கராவ என்ற இலக்கண நூல் எழுதப்பட்டிருந்தமையும் சிங்களத்தில் நூ ல் க ள் எழுதுவதற்குத் தூண்டுதலாக விருந்தது.
கம்பளைக் காலத்தில் அரசியல் துறையில் போர்களும் போர்க ளுக்கான ஆயத்தங்களுமே அடிக்கடி இடம் பெற்றுவந்தன. இடை யிடையே நிலவிய அமைதியும், இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு தரும் ஆட்சியாளரும் இருந்த காலங்களில் இலக்கியங்கள் தழைத்து ஓங் கலாயின. 4-ம் புவனேகபாகுவின் அமைச்சனுக விளங்கிய செஞ லங்காதிகார புலவர்களைப் போற்றும் புரவலனுக விளங்கினன். இவ னுடைய தூண்டுதலால் கூடியப் சமயப் பேரவையின் நடவடிக்கை கள்பற்றி முன்னரே கூறினுேம். கம்பளைக் காலத்திலேயே "சந்தே சய" என்ற தூதுப்பிரபந்தங்கள் சிங்கள மொழியில் முதன் முத லாக செல்வாக்குப் பெறலாயின. கம்பளைக் காலத்தில் தோன்றிய இரு முக்கிய "சந்தேச’க்களில் ஒன்ருன திஸர சந்தேச (அன்னம் விடுதூது) என்பது, இப்போதுள்ள "சந்தேச’க்கள் அனைத்துள்ளும் மிகப்பழையதாகும். டெடிகமையிலுள்ள ஆட்சியாளனுக்கு (5-ம் பராக்கிரமபாகுவுக்கு) தெவிநுவரையில் உள்ள ஒரு பெளத்த பிக்கு ஓர் அன்னம் மூலம் ஒரு செய்தியை அனுப்புவதாக அது பாடப் பெற் றது. மன்னனுக்குப் பாதுகாப்பையும் பகைவரை வெல்லும் வலி மையையும் அளிக்கும்படி தெவிநுவரையில் உள்ள உபுல்வன் (விஷ்ணு) தெய்வத்தைத் தாம் வேண்டினர். இதுவே மன்னனுக்கு அன்னம்மூலம் விடுக்கப்பட்ட செய்தியாகும். காளிதாஸரின் வட மொழியிலக்கியமான மேகதூதத்தைத் தழுவி யெழுந்த சிங்கள *சந்தேச பிரபந்தங்கள் இயற்கை வருணணை, இடங்களைப்பற்றிய வருணனைகள் முதலானவற்றுக்கும் அதிகமான இடமளித்தன. இக் காலத்தில் எழுந்த மற்ருெரு தூதுப் பிரபந்தமான மயூர சந்தேச (மயில் விடுதூது) 5-ம் புவனேகபாகுவின் காலத்தில் கடலாதெணி யில் வாழ்ந்த ஒரு பிக்குவால் பாடப்பட்டது. தெவிநுவரையில் உள்ள உபுல்வன் தெய்வத்திடம் 5-ம் புவனேகபாவுக்கும் அவனது குடும்பத்தினர் அளகக்கோளுர், சங்கராஜா முதலானுேர்க்கும் அருள்பா லிக்கும்படி வேண்டி மயிலைத் தூதாகக் கம்பளையிலிருந்து
25

Page 103
194 Lehrs)-u "pú
அனுப்புவதையே மயூர சந்தே சக்ருவாகக் கொண்டுள்ள்து. கவித் துவச் சிறப்பு இச்சந்தேசயவில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறு வர், -
5-ம் புவனேகபாகு (1372 - 1408) வின் ஆட்சியின் பிற்பகுதி யில் சங்கராஜாவாக விளங்கிய தேவரக்கித ஜயபாகு தம்மகித்தி என் பார், இலங்கைப் பெளத்த மத வரலாருக எழுதிய நிகாய-சங்கிரஹ வில், வைதீக மதத்துக் கெதிராக நடைபெற்ற இயக்கங்கள் எய்திய தோல்விகளும், சங்கத்தைத் தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட வெவ் வேறு நடவடிக்கைகளும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய மற்றெரு நூலான சத்தர் மாலங்கார, ரஸவாகினியில் உள்ள கதைகளுடன் மேலும் பல கதைகளைக் கூறுகின்றது. பாலா வதார என்ற பாலி இலக்கண நூலுக்குச் சிங்களத்தில் ஒரு "சன்ன? வையும் இவரே எழுதினர். வீரபாகு ஆபா என்ற ஆட்சியாளனும் பல அறிஞர்களை ஆதரித்து ஊக்கமளித்தான்.
கோட்டைக் காலம்
கோட்டைக் காலத்தில், குறிப்பாக 6-ம் பராக்கிரமபாகுவின் காலத் இல் (1412-67) இலக்கிய வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலைகள் இருந்தன. 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் அறிவுப் பணியில் ஈடுபட்டிருந்த பிரிவெனக்களுக்குப் போதிய ஆதரவை அவன் அளித்தான். இவற் றின் தலைவர்களும், வேறு பிக்குகளும் சிறந்த புலவர்களாகவும், அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர். இவர்கள் எல்லோருள்ளும், தொடகமுவிலிருந்த விஜயபாகு பிரிவெனவின் தலைவரான ஜீ ராகுல என்பார் மிக்க சிறப்பைப் பெற்றவர். இளமைப் பருவத்திலேயே தாய்மொழி தவிர்ந்த ஆறு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இவரது பெரும் புலமையும் நாட்டுப்பற்றும் மிளிர்கின்றன. சத்துபஸ்த-ஜாதகக் கதையை அடிப்படையாகக் கொண்டு பூரீ ராகுல தேரர் பாடிய “காவிய சேகர' என்பது, சிங்கள மொழியில் எழுந்த கவிதை நூல்க ஞள் ஒர் ஒப்பற்ற இடத்தை வகிக்கின்றது. பின்வந்த சிங்களக் கவிஞர்களுக்கெல்லாம் முன் மாதிரியான ஒரு கவிதை நூலாக இது விளங்கியது. வாரணுசி (காசி)யின் அரசனுடைய மதியூகியான அமைச் சன் சேனகனது கதையையே இது கூறுகின்றது. இவர் பாடிய பரவி சந்தேசயவில் பராக்கிரமபாகுவின் மகளான சந்திராவதிக்கு ஏற்ற ஒரு வரனையும் இலங்கை முழுவதையும் ஆளும் தகைமை கொண்ட ஒரு மகனையும் அருளும்படி தெவிநுவரவில் உள்ள உபுல் வன் தெய்வத்தை வேண்டுவதாகப் புருவிடம் தூதனுப்பப்படுகின் றது. தெவிநுவரைபற்றி இந்நூலில் பல அரிய விபரங்கள் உண்டு. பூரீ ராகுல தேரரின் மற்ருெரு சந்தே சவான சளலிஹிணி சந்தேசவில்,

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 195
தூதுசெல்லும் பறவை (சளலிஹிணி) கோட்டையிலிருந்து விபீஷணக் கடவுளின் இருப்பிடமான களனிக்குச் செல்கின்றது. சிங்களத் தூதுப் பிரபந்தங்களில் இதுவே மிகவும் நீளம் குறைந்த தென்பர் பஞ்சிகா - பிரதீப, பதசாதன டீகா என்ற இரு இலக்கண விளக்க நூல்களையும் பூரீ ராகுல எழுதினர். இவருடைய பன்மொழிப் புல மையை முன்னையது காட்டும். விரிவும் விளக்கமும் கொண்ட பூரண மான இலக்கண நூலாக இன்று வரை இலங்கையிலும் வெளி நாடுகளிலும் இது மதிப்பைப் பெற்றுள்ளது.
ஏறக்குறைய இதே காலத்தில் அல்லது சற்றுப்பிந்திய காலத் தில் வாழ்ந்த பிற புலவர்கள் பற்றியும் இனிச் சுருக்கமாகக்கூறுவோம். இவர்களும் பெரும்பாலும் சிங்கள இலக்கியங்களையே படைத்துப் புகழ் எய்தினர். கோகில சந்தேச என்ற மிக நீண் ட சந்தே ச காவியத்தைப் பாடியவர் முல்கிரிகலையிலுள்ள இருகல்குல - பிரிவெ ஞத் தலைவராவர். தெவிநுவரையிலுள்ள ஒரு பிக்கு யாப்பாபட்டுண (யாழ்ப்பாணம்) வில் இருந்த சபுமாலுக்குக் குயில் கொண்டு செல் அலும் தூதைப்பற்றி இது கூறுகின்றது. இச் சந்தே சவே, சந்தேச காவியங்Jளுள் எல்லாம் சிறந்ததெனவும் கொள்ளப்படும். அக்கால அரசியல் நிலைமைகளைப் பற்றிய பல பயனுள்ள செய்திகள் இதன் கண் உண்டு. ஹம்ஸ சந்தேச என்ற மற்ருெரு சந்தே சவும் இதே காலத்துக்குரியது. ஆனல், இதன் ஆசிரியர் பற்றிய தெளிவான குறிப்பு எதுவும் இல்லை. கிரா சந்தேச (கிள்ளை விடுதூது) என்பதில் பிணி. பயம், போலிக்கோட்பாடுகள் என்பவற்றிலிருந்து தீவைக் காக்கும் வண்ணம் நாத என்ற தெய்வத்தை வேண்டும்படி தொட கிமு பூரீ ராகுலவுக்கு ஒரு பிக்கு அனுப்பும் செய்தி அடங்கியுள்ளது. இதுவும் சரித்திர நிகழ்ச்சிகள் பற்றிய சில குறிப்புக்களைக் கொண் டுள்ளது. பூரீ ராகுலரின் விஜயபா(கு) பிரிவென பற்றிய விவரங் களேயும் கிரா சந்தேச தருகின்றது. வாத்தாவ என்ற கிராமத் தைச் சேர்ந்த ஒரு பிக்குவால் குட்டில ஜாதகக் கதையைப் பின் பற்றிப் பாடப்பட்ட ‘குட்டில காவிய" என்பது, அக்காலத்துத் தோன் றிய அருமையான கவிதை நூல்களில் ஒன்ருக மதிக்கப்படும். எளி மையும், எடுத்த பொருளைத் திறமையோடு கூறி முடிக்கும் ஆற்றலும் ஏற்ற இடத்தில் வரும் துல்லியமான வர்ணனைகளும் இதன் சில முக்கிய பண்புகளாகும். இக் காவியத்தைப் பின்பற்றியும் பின்னர் பல நூல்கள் எழுந்தன. 6-ம் பராக்கிரமபாகுவைப் பற்றிய புகழ் மாலையாகப் பாடப்பெற்ற பரகும்ப சிரிதவும், சத்தர்ம ரத்ணுகர என்ற வசன நூலும் இக்காலத்து எழுந்த பிற நூல்களாகும். வீதாகம மைத்திரேயர் என்பார் இயற்றிய நூல்களுள், புதுகுணுலங்கார என்ற நூலில், புத்தர் பெருமானின் ந ல் லி ய ல் புகள் போற்றப்படுகின்றன. கோட்டையில் வந்து தங்கிய ஒரு வங்காள தேசப் பிராமணரும் (ரீ ராமச்சந்திர கவிபாரதி) பக்தி சதகம் போன்ற

Page 104
Α 9 6 பண்டைய ஈழம்
நூல்களை வடமொழியில் ஆக்கியதாகத் தெரிகின்றது. 6-ம் பராக் கிரமபாகுவும் ருவன் மல என்ற ஒரு நூலை ஆக்கினன். வைத்திய, சோதிட நூல்களும் குறிப்பிடத்தக்க அளவு இக்காலத்தில் சிங்களத் தில் தோன்றலாயின. 6-ம் பராக்கிரமபாகுவின் மறைவுடன் இலக் கிய வளர்ச்சி பெரிதும் தடைப்படலாயிற்று. அந்நியராட்சியென்ற அந்தகார இருள் விரைவில் இலங்கையை மூடிவிட்டது.
V. கட்டிடக்கலை, சிற்பம் முதலியன
கட்டிடக் கலை முதலான கவின் கலைகளிலும் பிற துறைகளில் காணப்பட்ட ஒரு தேய்வு நிலையே தம்பதெணி முதலான பிந்திய காலங்களிற் காணப்பட்டதென்பர். இப் பிந்திய காலங்களில் இராச தானிகளாக விளங்கிய தம்பதெணிய, குருணுகலை, கோட்டை முத லான இடங்களில் போதிய அளவு இடிபாடுகளோ, பழைய கட்டி டச் சின்னங்களோ எமக்குக் கிட்டவில்லை. சோழர் நிகழ்த்திய அழிவு வேலைகளுக்குப் பின் அனுராதபுரத்திலும், மாகனுடைய நாசவேலைகளுக்குப் பின் பொலன்னறுவையிலும் எஞ்சிய கட்டிடச் சிதைவுகளுள் ஒரு பகுதி தானும் இப்பிந்திய காலத் தலைநகர்களில் காணப்படவில்லை. இதற்குக் காரணம், பின்னர் வந்த போர்த்துக் கேயர் செய்த கலை அழிவுச் செயலெனக் கூறலாம். ஆனல், இது ஒரு தகுந்த விளக்கமாகத் தென்படவில்லை. பொலன்னறுவை, அணு ராதபுரம் என்பவற்றைப் போலப் பிந்திய கால இராசதானிகள் நெடுங்காலம் தலைநகர்களாக விளங்கவில்லை. அரசியல் அமைதியும் உறுதியான சமநிலையும் குறைந்த இப்பிந்திய காலப்பகுதிகளில் அமைதியும் பொருளியற் செழிப்பும் உள்ள காலங்களைப் போன்று பெருந்தொகையான கட்டிட சிற்ப வேலைகள் மேற்கொள்ளப்பட் டிருக்க முடியாது. அவசர வேலைகளாக இவை இருந்திருக்கு மாத லால், உறுதிவாய்ந்த கட்டிடங்களாக இல்லாது, அழிந்துவிடும் தன்மையுடைய செங்கல் முதலானவற்றல் கட்டப்பட்டவையாகவே இருந்திருக்க வேண்டும்.
பிந்திய காலக் கட்டிடச் சிதைவுகளுள், குறிப்பிடத்தக்க சின் னங்கள் யாப்பகுவவிலும், கம்பளைக் கண்மையிலுள்ள இரண்டு இடங் களிலுb உள்ளன. கோட்டை போன்ற இடங்களில் முன்னர் இராச தானிகளாக இருந்தமைக்கான சான்றுகளையே காண்டல் அரிது. யாப்பகுவவில் "தளதா மாளிகாவ" எனத் தவருக அழைக்கப்படும் ஒரு கட்டிடத்தின் சிதைவுகள் உள. இதைத் தவிர, பழைய நக ரின் எல்லையில் எடுப்பான தோற்றமுடைய வாயிற் கட்டிட அமைப் புக்குக் கொண்டு செல்லும் பாரிய படிக்கட்டு உளது. (நூலின் முடிவிலுள்ள படத்தைப் பார்க்க) உண்மையான தளதா மாளிகை யின் சிதைவுகள் இவையாகவே இருக்கலாம் எனப் பரணவிதான

பிந்திய காலச் சிங்களப் பண்பாடு 97
at 3 Luft, (A Concise Hist. of Ceyion P, .338). gai5.L.L. 960) Dili புக்களில் காணப்படும் அழகு வேலைப்பாடுகள் தென்னிந்திய, குறிப்பாகப் பிற்காலப் பாண்டிய மரபில் உள்ளவை. படிக் கட்டிலுள்ள சில அம்சங்கள் கிமர் (கம்போடிய) கட்டிடங்களின் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுவர்.
கம்பளைக் காலத்தில் கட்டிடத்துறையில் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் இருந்ததாகக் கருதலாம். அரசர்களின் அக்கறையும் சம யப்பற்றும் மட்டும் இதற்குக் காரணமாகா. தென்னிந்தியாவிலி ருந்து முஸ்லிம் படையெடுப்புக்களின் விளைவாகத் தம் நாட்டை விட்டு இலங்கை வந்த ஆசாரிகள் (கற்றச்சர்கள்), இங்கு சமயக் கட்டிடங்கள் நிறுவுவதில் ஈடு படுத் த ப்ப ட் ட ன ர். இதன. ல் தென்னித்தியக் கட்டிட மரபுகள் தழுவிய கட்டிடங்கள் பல இங்கு எழுந்தன என்பர். பெளத்தக் கட்டிடங்களில் தென்னிந்திய இந் துக் கோவில்களின் கட்டிட முறைகள் புகுந்தமைக்கு இத்தகைய sá6r á Sjö grl Lil' G6ir at g| (Concise Hist. of Cey. P. 338). ölí t! ளைக் கணித் தாகவுள்ள இரு வெவ்வேறு இடங்களில், ஏறத்தாழ ஒரே காலத்தில் நிறுவப்பட்ட லங்கா திலக, கடலாதெணிக் கோவில்கள் இக்காலத்துக் கட்டிடங்களுள் தனிச் சிறப்பைப் பெறுவன. செனலங்கா திகார என்ற அமைச்சனது வண்மையைப் பெற்று எழுந்த லங்கா திலகவின் பெரும்பகுதி செங்கல்லால் அமைந்தது. அடிப்பாகமும், கதவு நிலைகளும் கல்லால் ஆனவை. 96 அடி நீளமும் 78 அடி அகலமும், 80 அடி உயரமும் கொண்டதாக இருந்தது இக் கட்டி டம் பாரிய புத்தர் திருவுருவம் வழிபாட்டுக்குரிய முக்கிய சிலையாக மூலக் கோயிலிலும், உபுல்வன், சமன், விபீஷணன், கணேச ஸ்கந்தத் தெய்வங்களின் சிலைகள் வெளிப்புறச் சுவர்களின் இடைகளி லும் (மாடக்குழிகளில்) வைக்கப்பட்டுள்ளன. இக் கட்டிடத்தில் பெரும்பாலும் பழைய சிங்களக் கட்டிடமுறைகளுடன், தென்னிந்திய பர்மியக் கலைப் பண்புகளும் கலந்திருத்தல் புலப்படும்.
கடலாதெணிக் கோவிலின் தோற்றத்துக்குக் காரணராக விருந்த வர் தர்மகிர்த்தி என்ற தலைமைக் குருவாவர். லங்காதிலகவைப் போன்றே இதுவும் 5-ம் விஜயபாகுவின் காலத்தில் கட்டத்தொடங்கி 4-ம் புவனேகபாகுவின் மூன்ரும் ஆட்சியாண்டில் பூர்த்தியாக்கப் பட்டது. இது அக்காலத் தென்னிந்திய (விஜயநகர)க் கலை மரபில் கட்டப் பெற்றுள்ளது. மூலக் கோயிலில் வஜ்ராசனத்தில் வீற்றிருக் கும் புத்தரின் பாரிய உருவம் வைக்கப்பட்டுள்ளது. "படிமாகர' என்ற பெளத்தக் கோவிலினதும், தேவாலயத்தினதும் அமைப்புக்கள் இந்தக் கட்டிடத்தின் மனபடத்தில் கலந்து இணைந்துள்ளன. இக் கட்டிடத்தின் சிகரம் என்ற பகுதியை விட ஏனைய பகுதிகள் யாவும் கல்லாலானவை என்பது குறிப்பிடத்தக்கதே. திராவிடக் கட்டிட

Page 105
198 பண்டைய ஈழம்
முறையில் அமைந்த மற்றும் இரு கோவில்கள் கண்டியில் உள்ள நாததே வாலை, ஆதாஹனமஞவவிலுள்ள கெடிகே என்பன.
சிற்பக் கலையும், கட்டிடத் துறைபோலவே ஒருவகைத் தேய்வு நிலையையே எய்தியிருந்தது. இக்காலத்துக் கட்டிடங்களில் எமக்குக் கிடைத்துள்ளவற்றில் பலவகைச் சிற்பவேலைப்பாடுகளைக் காணலாம். பொலன்னறுவைக் காலத்தில் உள்ளவற்றைப் போன்ற சந்திர வட் டப் படிக்கல் பெலிகலவில் காணப்படுகின்றது. பிற்காலத்தில் இச் சிற்ப அமைப்பு பல மாற்றங்களை எய்தியது. கற்களாலான புத்தர் சிலைகளும் இக்காலத்தில் அருமையாகவே கிடைத்துள்ளன. அவற் றுள் கணேகொடையில் (அலவதுர-கேகால மாவட்டம்) உள்ளது மிகச் சிறந்தது எனலாம். இக்காலத்து வெண்கலச் சிலைகளும் கலை யெழில் குறைந்தே காணப்படுகின்றன. ஒவியங்கள்பற்றி இலக் கியங்களில் வரும் குறிப்புக்களைத் தவிர, இக்காலப் பகுதிக்குரிய ஒவியம் எதுவும் எமக்குக் கிட்டவில்லை.
虫
பயிற்சி :
1. உங்கள் வகுப்பாக அல்லது உங்கள் பாடசாலையிலிள்ள வரலாற் றுக் கழகமாகப்பழைய நாணயங்கனைச் சேகரித்து அவற்றை வகைப் படுத்தலாம்.
2. இலங்கை இடைக்காலத்தில் (13-ம், 14-ம், 15-ம் நூற்.) பிறநாடு களுடன் நடத்திய வணிகத்தை விளக்க ஆசியாப்படம் ஒன்று A686.
தேர்வு விளுக்கள் :
1. தம்பதெனி, கம்பளைக் காலங்களில் சிங்கள இலக்கியம் எய்திய
வளர்ச்சிபற்றிச் சுருக்கமாகக் கூறுக.
2. 'இடைக்காலக் கலைவளர்ச்சியில் தேய்வு காணப்பட்டது" விளக்குக
3. சிறு குறிப்புக்கள் வரைக அராபியர்கள்; கஹாவணு: வன்னி தம்
பதெணி; கதிகாவத; சந்தேசய.

99
பிற்சேர்க்கை:
hwn
(i)
(ii)
வரலாற்றுக் குறிப்புக்கள்
வரலாற்றுக் குறிப்புக்கள் வரைவதற்கு அட்டவணையின் துணையுடன் நூலில் ஆங்காங்கேயுள்ள குறிப்புக்களைப் பயன் படுத்தலாம். ஒரு சிலவற்றுக்கு மட்டும் இங்கு குறிப்புக்கள் தரப்படுகின்றன. ஆ - ர். ) அபிஷேகம் : இலங்கையில் நிறுவப்பட்ட முடியாட்சியானது, தொடக்கத்திலிருந்தே இந்தியாவிலுள்ள முறையை அனுசரித் திருந்தது. குறிப்பாக ஒர் அரசன் ஆட்சியைப் பெற்றதும், அபிஷேகம் என்ற முடிசூட்டு விழாவை நடாத்தித் தனது உரிமையை உறுதிப்படுத்துதல் அவசியமாகக் கருதப்பட்டது. மெளரியர் கால வட இந்தியாவுடன் இலங்கை கொண்ட உற வின் விளைவாகவே அபிஷேக முறை இலங்கையிற் புகுத்தப் பட்டதாகக் கொள்ளப்படும். அசோகப் பெருமன்னனது தூண்டுதலால், தேவானம்பிய திசனே முறைப்படி அபிஷேகம் செய்த முதல் இலங்கை மன்னனுவான். கூடித்திரிய குலத்த வனன மன்னன் தன்னுேடொத்த குலத்தவளான இராணி (மகிஷி) யுடன் இவ் வைபவத்திற் கலந்து கொள்வான். அக் காலச் சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகளாக விளங்கிய கூடித்திரியக் கன்னியும், பிராமணரும், செட்டியும்
வலம்புரிச் சங்கிலிருந்து கங்கையின் நீரை அபிஷேகஞ்செய்து
மன்னனிடம் ஆளும் பொறுப்பை ஒப்படைத்தனர். மன்ன னுடைய அபிஷேகம் நடை பெற்ற ஆண்டிலிருந்தே அவனு டைய ஆட்சியாண்டுகள் கணக்கிடப்பட்டன. இவ் வைப
வத்தை நடாத்துவதன் மூலம் அவன் தெய்வீக வலுக்களைப் பெற்றதாகப் பின்னர் நம்பப்பட்டது.
கதிகாவத ; இலங்கைப் பெளத்த சங்கத்தின் வரலாற்றில்,
"விநய விதிகளுக்கு முரணுக நடந்துகொள்ளும் கூடா வொழுக்கமுடைய (துஸ்ஸில) பிக்குகள் இடையிடையே சங்
கத்திற்கு மாசு ஏற்படுத்தினர். சங்கத்தின் தூய்மையை நிலை
நாட்டும் ஆர்வமுடைய சில மன்னர்கள், சங்கத்தைச் சேர்ந்த விழுமிய குருமார்களின் துணையுடன் சமயப் பேரவைகளைக் கூட்டிச் சங்கத்தின் புல்லுருவிகளான கூடாவொழுக்க முடை யோரை வெளியேற்றினர். பின்னர், விநய விதிகளில் முக்கி யமான சிலவற்றைத் தொகுத்து, குருமார்கள் பார்வையிடக் கூடிய பொது இடங்களில் அவற்றைப் பொறிப்பித்தனர். இவ்வாறு வரைவிக்கப்பட்ட விதி , ளே "கதிகாவத" எனப்படும். பொலன்னறுவைக் காலத்தில் மகா பராக்கிரமபாகு கல்விகா

Page 106
200 Lussy G -- AL RF pub
யிற் பொறிப்பித்த விதிகள் "பொலன்னறுவ கதிகாவத" என் வும், தம்பதெணியக் காலத்தில் 2-ம் பராக்கிரமபாகுவிஞல் சுட்டப்பெற்ற சமயப் பேரவையினுல் தொகுக்கப் பெற்ற விதிகள் 'தம்பதெணிக் கதிகாவத" எனவும் வரலாற்றில் இவை அழைக்கப்படுகின்றன. அக்காலத்துச் சமய, அரசியல் நிலை களை, சிறப்பாக 'சங்கத்தில் நிலவிய ஊழல்களைப்பற்றி யறிய உதவும் முக்கிய வரலாற்று ஆதாரங்களாகவும் இவை மதிக் கப்படுகின்றன. "هر سم
(ii) போதிசத்துவ வழிபாடு: மகாயான பெளத்தப் பிரிவின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று போதிசத்துவர்களில் நம்பிக்கை கொண்டு, அவர்களின் உருவங்களை வழிபட்டு வந்தமை ஆகும், மகாயானத்த வர்கள் "அர்ஹத்" என்ற நிலையுடன் திருப்தி பெருது, அதனிலும் மேலான "போதிசத்துவர் நிலையைத் தமது இலக்காகக் கொண்ட னர். புத்தரின் நிலைக்கு முந்திய நிலையைக் குறிக்கும் இப்போதி சத்துவ நிலையில், கெளதம புத்தருக்கு முன்னரும் பலர் போதிசத் துவர்களாக இருந்து, மனிதகுல மீட்சிக்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்புகின்றனர். கெளதமபுத்தரும்ே, முன்னர் போ திசத்துவராகப் பல அவதாரங்களில் தோன்றியதாக நம்புவர். இவ் வகையான போதிசத்துவர்களில், அவலோகிதேஸ்வரர், மஞ்சுபூணூரி, மைத்திரேயர் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மகாசேனன் போன்ற மன்னர்களின் காலத்தில் மகாயான பெளத்தம் இலங்கை யிற் பரவுவதில் வெற்றிகண்டதால், போதிசத்துவ வழிபாடும் இலங் கையிற் பரவியது. அவுக்கான, புதுரு வெகல முதலான பல இடங் களில் போதிசத்துவர்களின் சிலைகள் இன்றும் காணக் கூடியயதாக உள்ளன. அவலோகிதேஸ்வரர் பிற்பட்ட காலத்தில் நாதக் கடவு ளாக வழிபடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்பட்ட கால அரசர்கள் சிலர் தம்மைப் போதிசத்துவர்களாகக் கூறிக்கொண்ட தைக்கொண்டு, போதிசத்துவ வழிபாடு எய்திய செல்வாக்கை நாம் உணரலாம்.
(iv) இபின் பட்டுட்டா; இலங்கை வந்த பிறநாட்டு யாத்திரீகர் களுள் முக்கியமான ஒருவன் மொறக்கோ தேசத்துத் தாங்கியரைச் சேர்ந்த இபின் பட்டூட்டா ஆவன். 1344 ல் வட இலங்கையில் வந் திறங்கிய இபின் பட் டூட்டா, யாழ்ப்பாணத்தை யாண்ட ஆரியச் சக்கரவர்த்தியினுல் உபசரிக்கப்பட்டான். பின்னர், யாழ்ப்பாண மன்னன் உதவிய ஆட்களுடன் சிவனுெளிபாத மலையைத் தரிசிக் கச் சென் முன். இடையே அளகக்கோஞரின் ஆட்சிக்குட்பட்ட பகுதி யையும் கடந்து செல்ல நேர்ந்தான். இபின் பட்டுட்டா இலங்கை யிலிருந்து திரும்பிய பின் எழுதிவைத்த பயணக்குறிப்புக்களில் இலங் கையின் அரசியல், வணிக நிலைமைகள் பற்றிய மிகவும் பயனுள்ள

வரலாற்றுக் குறிப்புக்கள் 201
விவரங்கள் உள. யாழ்ப்பாண இராச்சியம் நிலவியமைபற்றி எமக் குக் கிண்டத்த முதற் சமகாலக் குறிப்பு இவனுடைய பயணக் குறிப் புக்களிலேயே வருகின்றது. யாழ்ப்பாண அரசன் முத்துத் தளங்க ளின் உரிமையைப் பெற்றிருந்ததையும், அவனுடைய துறைமுகத் தில் ஏராளமான கப்பல்கள் நின்று வணிகப் பொருட்களை ஏற்றிய தையும் இபின் பட்டுட்டா குறிப்பிட்டுள்ளான். தென்னிலங்கை யில் மிகுந்த அதிகாரத்துடன் விளங்கிய அளகக்கோளுர் பற்றிய சில முக்கிய விபரங்களையும், அக்காலத்து இலங்கை, தென்னிந்திய வணிகத்தில் அராபிய வர்த்தகர்கள் வகித்த முக்கியத்துவம்பற்றிய மரபுகளையும், வேறும் பலவற்றையும் இபின் பட்டுட்டா குறிப்பிட் டுள்ளான்.
(w) தொடகமுவ சிறீ ராகுல தேரர்: கோட்டை 6-ம் பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள இலக்கியம் பெருவளர்ச்சி யெய்தியமை குறிப்பிடத்தக்கது. அவனல் ஆதரிக்கப்ட்ட பிரிவெ ணுக்கள் புகழ்படைத்த பல அறிஞர்களைக் கொண்டு விளங்கின. இவற்றுள், தொடகமுவவில் விளங்கிய விஜயபாகு பிரிவெணு பெரும் புகழீட்டி வந்தது எனலாம். இப்பிரிவெனவின் தலைவரான சிறீ ராகுல தேரர் "சங்கராஜா' வாகவும் பின்னர் விளங்கியவர். 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில், ஏன் கோட்டைக் காலத்தின் தலை சிறந்த அறிஞராகவும் புலவராகவும் இவரைக் குறிப்பிடலாம், சந் தேச இலக்கிய வகையைச் சேர்ந்த பரவி, சளலிஹிணி சந்தீேசக் களை இயற்றிப் பெருமை யெய்தியுள்ளார். "காவிய சேகர" என்ற இவருடைய கவிதை நூல், சிங்கள இலக்கியத்துறையில் தனிச்சிறப் பைப் பெற்றது. ஒரு ஜாதகக் கதையை ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்ட இக் கவிதை நூலானது, பின்வந்த சிங்களக் கவி ஞர்க் கெல்லாம் முன் மாதிரியான ஒரு கவிதை நூலாகத் திகழ்ந்து வந்துள்ளது, பாலி, சிங்களம், சமஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் முதலான பல மொழிகளில் தேர்ச்சிபெற்று விளங்கிய சிறீராகுலர், இலக்கண நூல்கள் சிலவற்றை ஆக்கித் தம் திறமையைக காட்டி யிருக்கின்றர். பஞ்சிகா பிரதீப என்ற இவருடைய சிங்கள இலக்கண நூலில் இவருடைய அறிவு விசாலமும், பன்மொழிப் புலமையும் புலப்படுகின்றன. விரிவும் விளக்கமும் உடைய ஒரு சிறந்த இலக் கண நூலாக இன்றுவரை இது போற்றப்பட்டு வருகின்றது. 6-ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் சமயத் துறையிலும் இலக்கியத் துறையிலும் பெரும் புகழுடன் விளங்கிய இப்பேரறிஞரான சிறீ ராகுல தேரரின் புகழ் இக்காலம் வரை தமது நூல்கள் வாயிலாக நிலைத்து வந்துள்ளது,
26

Page 107
202 பண்டைய ஈழம்
(wi) வேளைக்காரர்: சோழராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தி விஜயபாகு அவர்கள் கொண்டிருந்த ஒரு முறையைக் கைக் கொள் ளலானன். தனது நம்பிக்கைக்கு உகந்த தென்னிந்தியக் கூலிப்படை யினரைத் தன் மெய்க்காப்புப் படையினராக நியமித்திருந்தான். இவ்வகையான வேளைக்காரப் படையை விஜயபாகுவே முதன்முத வில் கைக்கொண்டிருந்தான், இதே முறையை அக் காலப்பாண்டிய சோழ ம ன் ன ர் கள் கைக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக் ஈது. இவர்கள் அந்நியர்களாதலின், அரசர்களுக்கெதிராக அரண்மனை யிலோ, தலைநகரிலோ ஏற்படக்கூடிய சூழ்ச்சிகளிலும் சதிகளிலும் இவர்கள் ஈடுபடமாட்டார்களென நம்பப்பட்டது. விஜயபாகுவால் இலங்கையில் தொடக்கப்பட்ட இம்முறை சுமார் ஒரு நூற்ருண்டுக் காலம் வரையில் கைக்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. விஜய பாகுவின் ஆட்சிக் காலத்தில், வேளைக்காரப் படைப் பிரிவினரே. புனிதப் பல் எச்சத்தின் காவலராகவும் விளங்கினர். விஜயபாகு வின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின் போது, வேளைக்காரப் படையினரே அதனைப் பாதுகாத்து வந்தனர். பொலன்னறுவையிலுள்ள இவர்களுடைய பொறிப்பொன்று புனிதப் பல் எச்சத்துக்கு நிறுவப்பட்ட கோவில்பற்றிய சில விபரங்களைத் தருகின்றது. விஜயபாகுவின் காலத்திலும் பின்னரும் தங்கள் சத்தி யத்திற்கு மாருக அரசனுக்கெதிரான கலகங்களில் இவர்கள் கலந்து கொண்டமைக்குச் சான்றுகள் இருப்பினும், பொதுவாக இவர்கள் மீது அரசர்களுக்கிருந்த நம்பிக்கையில் தளர்ச்சி யேற்படாதிருந்த தெனலாம். முடியாட்சியை நிலைக்க வைப்பதில் 11-ம், 12-ம் நூற் ருண்டுகளில் வேளைக்காரப் படையினர்க்கு பெரும் பங்கிருந்தது.
(wit) சந்திரபானு: இலங்கை மீது இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடொன்றிலிருந்து நடைபெற்ற முதற் படையெடுப்பான சந்திர பானுவின் ஜாவகப் படையெடுப்பு 13-ம் நூற்ருண்டில் 2-ம் பராக் கிரமபாகுவின் காலத்தில் நடைபெற்றது. 2-ம் பராக்கிரமபாகுவின் 11வது ஆட்சியாண்டில் (1247ல்) நடைபெற்ற இப்படையெடுப்பின் தலைவனுன சந்திரபானு பற்றிய விபரங்கள் 1230-ம் ஆண்டைச் சேர்ந்த (மலாயாத் தீபகற்பத்தில் உள்ள ஜாயா எனுமிடத்தில் உள்ள) பொறிப்பு ஒன்றில் உள்ளன. பூரீதர்மராஜா என்ற பெயரை யுடையவனுன சந்திரபானு தம்பரட்ட (காம்பரலிங்க) என்ற பகு திக்கு அதிபதியாக விளங்கினன் என்பதும், பெளத்தத்தையே இவன் பின்பற்றினன் என்பதும் இப் பொறிப்புத் தெரிவிக்கும் செய்திகள். சந்திரபானு இலங்கை மீது இரு படையெழுச்சிகளை மேற்கொண் டிருந்தான். முதற் படையெடுப்பை 2-ம் பராக்கிரமபாகுவின் சார் பில் அவன் மருமகனன வீரபாகு புறங்கண்டான். சந்திரபானு வின் இரண்டாவது படையெடுப்பு மிக விரிவாகத் திட்டமிட்டு நடை பெற்றதாகத் தெரிகின்றது. சுகோதய அரசு விரிவெய்திய போது

வரலாற்றுக் குறிப்புக்கள் 203
கந்திரபானுவின் நாடான தாம்பரலிங்கத்தையும் அது சேர்த்துக் கொண்டதால், இலங்கையில் தன் ஆட்சியை நிறுவும் நோக்குட னேயே இரண்டாவது படையெடுப்யை மேற்கொண்டான். இப் படையெடுப்பின் முன்னதாக, சந்திரபானு வடபகுதியில் தன் செல் வாக்கை நிலைநாட்டியிருந்தான். இலங்கை ஆதாரங்களின்படி, சிங் கள இளவரசர்களான விஜயபாகுவும் வீரபாகுவும் சந்திரபானுவைப் புறங்கண்டதாகவும், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் சிலவற்றின் படி ஜடாவர்மன் வீரபாண்டியன் ன்ைற பாண்டிய மன்னணுல் அவன் தோற்கடிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையெடுப்புக்களை நடாத்திய சந்திரபானு இலங்கை வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற் றுள்ளான்.
(vii) போதிகர (போதிமரக் கோவில்); அனுராதபுர காலத்திலி ருந்தபெளத்த வழிபாட்டுச் சின்னங்களுள் ஒன்ருக அனுராதபுரத்தி லும், பிற இடங்களிலும் இருந்த ‘பொதிகர" என்ற வகைக் கோவில் முக்கியம் வாய்ந்ததாகும். புத்தகயாவிலிருந்து, தேவானம்பிய திசணு டைய காலத்தில் கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நாட்டப் பெற்ற புனித வெள்ளரசு (போதி) மரத்தைச் சுற்றிப் பிந்திய நூற் முண்டுசளில் ஒரு கோவிலுக்குரிய அமைப்பில் ஒரு கட்டிடம் அமைக் கப் பெற்றதாகத் தெரிகின்றது. சாஞ்சியிலுள்ள குறை புடைப்பச் சிற்பமொன்றைக் கொண்டு இதன் அமைப்புப்பற்றி ஊகித்து அறிந்து கொள்ளலாம். இதைவிட, வடக்குப் பாகத்தில் ஒரு வாயில் வழி யும், நான்கு வாயில்களிலும் தர்மச் சக்கரங்களைத் தாங்கிய தூண் களும். தெற்கு வாயிலில் கல்லாலான ஆசனமும் காணப்பட்டன. பிற்பட்ட காலங்களில் செய்யப்பட்ட திருத்தங்களால், முன்னர் இருந்த அமைப்புக்கள் இனங்கண்டு கொள்ள முடியாதவாறு மறைந்து விட்டன. இந்தியாவிலும் இவ்வகைக் கட்டிடம் பெருவழக்கில் இருந் தமை பற்றி நாம் அறிய முடிகின்றது. அனுராதபுரத்துக்கு வெளி யேயும் பல விடங்களில் போதிமரக்கிளைகள் நாட்டப்பெற்று, அவ் விடங்களிலும் இதே வகையான "போதிகர" என்ற வகைக் கட்டி டங்களும் நிறுவப்பட்டிருந்தன. ஆயின் இற்றைவரை ஓரளவுக் காயினும் நன்னிலையில் சிதைவுகள் பேணப்பட்டுவந்த "போதிகர", நில்லக்காம எனுமிடத்திலுள்ளதாகும், இதன் கட்டிட அமைப்பு பார்வைக்கு மிகவும் எடுப்பாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறப் படுகின்றது.
(ix) யுவராஜா (மஹயா) ; யுவராஜன் அல்லது உபராஜா என் பதற்குச் சமமான ஒரு சொல்லாக மஹயா - மகாதிபாத - மாபா மாயா கையாளப் பெற்றுள்ளபோதும், சில காலங்களில், இவற்றி னிடையே அற்ப வேறுபாடும் இருந்துள்ளது. அனுராதபுரகாலத்

Page 108
204 பண்டைய ஈழம்
தொடக்கத்தில், உபராஜன் (அரசுரிமைக்குரிய அடுத்த நேர் 'உரி மையாளன்-பட்டத்துக்குரியவன்) உருகுணையின் ஆட்சிக்குப்பொறுப் பாக இருந்து வந்தான் பிந்திய அனுராதபுர காலத்திலிருந்தும் குறிப்பாக 6-ம் நூற்ருண்டின் இறுதியிலிருந்து ஏறத்தாழ 12-ம் நூற்ருண்டு வரையில் இராஜரட்டையின் தெற்குப் பிரிவான தக் கிண தேசம் என்பதே பட்டத்துக்குரியவனுக்குரிய பகுதியாக விள்ங்கி வந்தது. யுவராஜா தலைநகரிலேயே தனக்குரிய மாளிகையில் தங்கி, வேருெரு அதிகாரிமூலம் தனது பிரதேசத்தின் பாலனத்தைக் கவனித் திருத்தல் கூடும். அவசியம் நேரும்போது தானே நேரில் சென்றுஅங்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் கலகங்களையும் சமாளித்து வந்தான். 9-ம், 10-ம் நூற்றண்டுகளில் யுவராஜா (உபராஜா) என்ற சொல் கையாளப்படவில்லை. மஹயா (மாபா) என்பதே இக்காலப்பகுதி யில் இவனுக்கு வழங்கப்பட்டது. 1ம் பராக்கிரமபாகுவின் காலத் தில், தக்கிணதேசம் யுவராஜனுக்குரிய பகுதியாக குறிப்பிடப்பெற் றிருப்பினும், இதற்கென ஒருவன்' அவன் நியமித்தம்ை பற்றிக் குறிப்புக்கள் இல்லை. பிந்திய காலப்பகுதிக்ளில், யுவராஜனக (மஹ யாவாக) நியமிக்கப்பட்டாலன்றி, ஒருவனுக்கு அரசுரிமை உறுதி யாகக் கிடைத்தல் அரிதாகவிருந்தது. 12ம் நூற்றண்டுக்குப் பின் மஹயா (மாயா) வின் பிரிவாக விளங்கிய பகுதி மாயா ரட்டை என வழங்கியது" இப் பகுதியில் முந்திய தக்கிணதேசமும், மலையரட் டையும் அடங்கியதெனலாம்,
(x) பருமகர்கள்: (1-ம் பாகம்: 184-ம் பக்கம் பார்க்க) இலங் கையின் தொடக்க கால வரலாற்றில் மிகவும் முக்கிய பங்கை வகித் தவர்கள் பருமகர்கள் என்ற நிலப் பிரபுக்கள் அல்லது தலைவர்கள் எனலாம். ஆரியர் குடியேறிய தொடக்க காலத்தில், இவர்களே குடியிருப்புக்களை நிறுவுவதில் தலைமை தாங்கி அவற்றை நிறைவேற் றினர் என நம்பப்படுகின்றது. இதன் பின்னரும், பருமகர்கள் (சமஸ்கிருதத்தில் பிரமுகர்) என அழைக்கப்பட்டவர்கள் டாலர் தீவின் பல பாகங்களில் இருந்ததைத் தொடக்க கால (பிராமி)ப் பொறிப்புக்கள் உணர்த்துகின்றன. இவர்களிற் சிலருக்கு ஒரளவு பரிபாலனப் பொறுப்புக்களும் இருந்ததாகத் தெரிகின்றது. சேன பதி முதலான உயர்பதவிகளுக்கு முதலில் பருமகர்களையே தெரிவு செய்தனர். அரசர்களுமே தொடக்கத்தில் ஒரு பருமகராக இருந் திருக்கலாம் என்பது 'மா - பருமகர்" என்ற அவர்களுடைய பட்டப் பெயரால் தெரிகின்றது. சில கிராமங்களின் வருவாயை இவர்கள் துய்த்தனர். தொடக்ககாலத்தில், அரசர்களுடன் மணவுறவு கொள் ளத்தக்கவர்களாக இவர்கள் மதிக்கப்பட்டனர். இவ்வாறு, முந்திய அனுராதபுர காலத்தில் அளவற்ற செல்வாக்குடன் திகழ்ந்த ஒரு வகுப்பினர் இப் பருமகர்கள் எனலாம்,

வரலாற்றுக் குறிப்புக்கள் 205
பயிற்சி:
பின்வருவனவற்றிற்கு வரலாற்றுச் சிறு குறிப்புக்கள் வரைக.
i.
iv.
viii.
xi.
ஆதிபாத (ஆபா) i. தமிழதிகாரின், i. போஜக-பதி தகபூதி w, கஹாவணு wi. பாஹியன் vi. ஹவான் சாங் அராபியர் ix. கனிஷ்கன் x மார்க்கோ போலோ தண்டநாயக ki. சன்ன ki. வஜ்ஜிரபோதி xiv. சங்க மித்திரதேரர் XV, வட்டதாகே (சேத்தியகர)

Page 109

Gia Tâü6ủönLâị -INDEX
( I'' என்பதன் பின்னுள்ள பக்கங்கள் 1-ம் பாகத்திலும், II
என்பூதன் பின்னுள்ளவை 2-ம் பாக்த்திலும் உள்ளவை.)
அக்கிரபோதி 1-ம் i 139, 193 அக்கிரபோதி 2-ம் i 141, 193 அக்கிரபோதி 3-ம் i 147 அக்கிரபோதி 4-ம் i 148 அங்கமெடில்ல அணை i-48 அங்கோர்-ii 63 அசிக்கஹக-i 132, 137, 180 அசிரவதி (கால்வாய்) i-49, - ... 02 f. ፆ: - - “ዩ ፥ マー அசோகன்-i:50, 52-57, 58, ”, ზ1, 63, 64., 93., 98 அட்ட்த்தா-i 3, 9, 120 அட்ட்சகச (க) i 33, 99 அட்டதா கே i 82, 111, 119,
1 22 அதிராஜேந்திர சோழன் i 1, 7 அதிராம் பட்டினம் i 169 அத்தனகலை i-103 அந்தரங்க-துர i 46, 97, 104 அபய்கிரிவிகாரை i7, 89-90, 1 02, 106, I 19, 201 அபயவாவி i-41 அபிஷேக(ம்) i 27, 178
அப்துர்-ரஸ்ாக் i-167, 175 அம்டிலுகல குமாரன் i 177 178 t அமராவதீ (சிற்பமரபு, இடம்).
96, 215 அம்பகமுவ (கல்வெட்டு) i 12
26 அம்பதீர்த்தம் i-80 அம்பன் கங்கை i 18, 189, 191
193, ii-39, 47, 102 அர்ஹத் i-96-97 அரிட்டன் i - 58, 64
அரேபியா (அராபியர்) i 7, 8, 15, 197, ii 105, 1 77, " .184, 185 அலஹபாத் (தூண்பொறிப்பு) i
1 13, l l 4 .
அலுவிகாரை i 89
அலோங்சிது i 53, 72 அளகேஸ்வரர் (அளகக்கோனர்)
ii 157, 16 0 அளகக்கோனர்-ii (பெரிய அளகேஸ்வரன்) i 159 அனோத்த (அனேரத்தன்)
ii 25, 53, 7 , 1 08 அனுராதபுரம் i 4, 7, 8, 9, 33-42,81。84,90,】25。 28 l 53, 174, 1 75, 177, iiי . அஜந்தா i 96, 117, 122, 218
'அஜாதசத்துரு i 51
அஸ்வகோ ஷர் i 94, 99
ஆகாச கங்கை i 48, 102 ஆகாச சேதியi 85 ஆசனகர i 214
ஆதித்தன் (தமிழதிகாரி ஆதித்
தன்) i 55 ஆதித்தசோழன்- i 163
ஆதிபாத i 180
ஆரியர் i 1, 16, 20, 24-37,
187, 188
ஆரிய தேவர் i 99
ஆர்ப்பாக்கம் i 58
ஆவிவழிபாடு 1 43
ஆளாஹன பிரிவெஞ i 51, 1 19
ஆளிசார (அளகர) அணை இடம் i 1 89, il 91. I 93, ii 26,. 39, 100

Page 110
208
ஆஜீவகர் i-43 இசரசமணக (இசுரு-முனியா)" i 62, 122, 131, 153, 212 216 இந்து ஐரோப்பியர் (ஆரியரைப்
LIFT rid 5) இந்திகடுசாய 1213 இந்திரன் i 26, 28, 42 இந்துமதம் i 42, 118, 181 i
5, 63, 65 இந்தோனேஷியா i67 இபின் பட்டூட்டா i 8 i 154,
155, 158 இயக்கர் 1 20 இரத்தினபாசாதா i 158, 216 இரத்தினபுரிi 44, 155 இரத்தினதுவிபம் (இலங்கை) i
96 . இராக்கதர் 120 இராசராசேச்சரம் i 167, i5, O7 '•ኛ. இராட்சதக் குளம் (மானமடு
பார்க்க) இராமேஸ்வரம் i 57, 81, 150 இராசரட்டை 1 18, 167, 181
ii 35-38 இராஜராஜப் பெரும் பள்ளி i
10 ; , , இராஜராஜன்-1-ம்- i 186
74
இராஜாவலீ i 101, 126, ii 161 இராசேந்திரன் 1-ம் i 167, 170
174 இராஷ்டிரகூடர் i 155, 156,
65 இலங்காதிலக விகாரi 51, 110 இலங்காபுரன் ii 57, 58 இலம்பகர்ணர் i 86-87 100,
1 02, 139 இளநாகன் i 86-87
பண்டைய ஈழம்
உக்கிரசிங்கன் i 148, 151
உசிலியதிசதேரர்i 107
உடரட்டை i 179
உடுந்தொர i 33, 44
உதயன் i - i 158 'உதும்பரகிரிமகாகாசியப்ப
தேரர் i 114, 118, 199 உதும்பரமகா சாமி i 74 உத்தரதேசம் (ரட்டை) i 159,
83 உத்தராமாய (உத்தரசேதிய)
22 - zLust bug mr i 8, 21 0, ii 26, 73,
108 a2u 5R 5F6ör 1-tb i I I 9. I 20, 191 உபதிசகாமம் - 33, 39, 198 உபராஜா (மகாதிபாத மாயா, மஹயா பி. அ. புரகாலத் தில்) i 159, 179 - 180,
18 I ii 95, 9 8 உபாசகவிகாரை i 61 உபுல்வன் (உபுலவண்ண) + 42,
1 53 ii 1 1 1 உபோசத i 58 2-GLrrsfS-Gr i 210 உருகுண i 18, 19, 34, 72-74,
77, 84-85, 101, 108, 154, 157,158, 178, 180, 1 8 1 : ii 8, 13; II, 4, . I, 5, 189 38-45, 91, 129 உரோம் 16, 7, 15, 70, 86, 95,
96, 195 உறுவ்ெலார் 33, 39, 197 உறையூர் i 69, 165 உஜ்ஜயினி i 52,53, 115 உஜ்ஜேனி-i 33 マ。 ஊராத்தோட்ட (ஊர்காவற் றுறை) i 137i 58, 105 எகிப்து i 22 i 138 எட்டங்கப்பாதை i 48

209
酰éff少 (sidiarréffair) in 1,72,
81 எருவாவிi-189 ஒகஸ்தஸ் சீசர் 1 195
fflanymt i 114, ii 77 . . கங்கை 26, 32, 51, 52, 169 கங்கைகொண்ட சோழபுரம்"
i 1 69 iii 3 கங்கர் i 156 கச்சக தீர்த்தம்
டை) i 4, 80 sëgonti ii I 54 கடலாதெணி (விகாரை) 14
i 172,卫97 . 5-frrbi 169-l 70 கண்டகசேத்தியi 212, 215 கண்டுல i 76-77 கண்வர் i 95 கணிரஜானுதிசன் i 86, 90 கதிகாவத (பொலன்னறுவை)-
ii 50, 1 09 கதிகாவத (தம்பதெணி) i 36,
89 கதிர்காமம் i 72, 205, i 16,17 M கந்தரோடைக் 4.
கந்தளாய் i 141, 193 i 9, 83,
(மாகந்தோட்
19 கபில வஸ்து i 47 கம்பளை (கங்கா சிறீபுரம் i
1 57 - 163 l 93, 197 கம்போஜர் (இந்தியாவில்) i
31, 32, 53 கம்போஜ (கம்போடியா)
1 5 ii 55, 62-66
கரிகாலன் i 71
கல்ஒயா i 157, 181
கல்பொத்த i 95, 121
கல்விகாரை i 50, 51, 1999
120, 129
கலிங்கம் i 31, 32 52, 53. 54, 14 I, 173, ii 25, 76, 78,
27
84, 86, 91, 148, 199 gais Drs Göri 16 ii 70, 84° 87, 90, 92, 132, 151 கலிங்கயோத அள (அசிரவ தீ
யைப்பார்க்க) கலுகங்கை 1 18 கவுடுலுவாவிi 105 ii 49 ,144 و قة 14 ,126 l grff i$ن"gorrقی
163 களனி (கல்யாணி) 1 18, 35, 73,
183, ii 66, 73
களனித்திசன் i 73
களுத்துறை 诅14,185
sai 5UT (கம்சபா, கிராமசபை
யைப் பார்க்க)
கன்யாகுப்ஜம் ii 14
கன்ஹேரி i 25
கனகசூரிய சிங்கையாரியன் i
174, 177, 180
கனிட்டதிசன் 102
.(48, 4 1 50.94 99 99
(ශුෂණි. i 1 35 + 1 **
கஹபதி I 85
கஹ்ாபன (கஹவணு) i 73, it
185, 186
கஜபாகு (கயவாகு) i 101, 102
காகதீயர் ii 127, 146
காகவண்ணதிசன் i 72, 74, 77 காசபர்வதம் (astafuu) i 80 கால" 50, 94 காஒயப்பன் i 129. 130.1819 2 1 9 v i 1 70, 1 71 : காஞ்சிi 113, 137, 145; 147,
151, 163, ii 3 » காமணி (காமிக) 1 27 28, 36,
83 காரகங்கை (அம்பன் கங்கை
யைப்பார்க்க) காலஓயா i 18 128, 1 9 2 , ii
39

Page 111
* 10 Lake GPL b
&mềuộums4 (&ếóm Ôayêu) i 128
157, 158, 192, ii. 49 காவிரிப்பட்டினம் i 107 காளிதாசன் i 116, 132 காஷ்மீரம் i 56 94 கிமர் i 62, 65 கிராமசபை i 36, 183 கிரிகண்டசிவன் i 40 கிரிண்டிஒயா 134 கிசித்தளை i 141, 193, 42,
49, 102 கிரிவிகாரை i 11:9 கிருஷ்ணன் 3-ம் 165, I 7 கிரேக்கம்!ர் i 6,70, 94,95,195 கிலீமலய 109
கீர்த்தி சிறீமேகன் 32.87 கீர்த்திசிறீமேவன் (சிறீமேகவண்
ண ன் பார்க்க) கீழைச்சாளுக்கியர் 166 குசுமியா (பசேன்) தத குஞ்சநாகன் 102 குட்டஹால (புத்தள) 79 குட்டபாரிந்தன் i 126 குட்டகண்ணஅபயன் i 86 குடும்பிகர் (கஹபதி) 1 185 குண்டலவனம் 1 100 குணவீர சிங்கையாரியன் i 186 குப்தர் (பேரரசு) 16, 95,
iii II I 6 குப்ளாய்கான் i 72, 191 குமரிமுனை i 68, 2
குமாரதாசன் i 132, 207 குமாரபொக்குண (வாவி) i 12 குமுக்கன் ஓயா i 34 குருந்தனுளர் (வாவி, விகாரை)
i 193 குருஞகலை 1 18, i 139, 154 குலசேகர சிங்கையாரியன் i 153 குலசேகர பாண்டியன் i 56-59 குலீனர் i 92, 99, 104 குலோத்துங்கசிங்கையாரியன்
ii 153 குலோத்துங்கன் 1-ம் i 1, 2
20, 3-h i 2 குவெண்ணு (குவேனி) i 33 குலிநகரம் i 48
குஷானர் (பேரரசு) i 94, 95,
48, 119 கெடிகே (நாளந்தா) i 152, 214 கேகாலை i 130 கேசதாது i 132, 137
கொங்கு i 155, 164, i 127 கொத்மலை i 130 கொட்டகம i 159 Go ss nr * I - F nr pr (Go5nt Luq. Luft tř u fibgoI) ii 33, 42, 8 9 கொட்டபத்த i 47, 101 கொடா பயன் i 103, 107 கொலம்ப காலக Ꭵ8 1 , Ꮧ 8 5 கொவி (குலம்) i 80, 95, 186 கொழும்பு i 8, i 161, 85 கொஸ்மஸ் இண்டிகோபிளியூஸ்
L-6) i 7, 197 கோகண்ண(திருகோணமலையைப்
பார்க்க) கோசலம் i 50, 113 கோட்டை (ஜயவர்த்தனபுரம்)
ii、100,丑72 கோப்பொருஞ்சிங்கன் i 127 கோமதீ (கால்வாய்) i 49, 102
கெளதமடத்தர் (புத்தரைப்
२१ unri 55) கெளதமி, புத்ர சாதகர்ணி | 95,
I OO
கெளடிலயர் 51, 65, i 31 சக்க i 42, 218, i 117 சக்க (சேணுதிபதி) 1 171 சக்காம (ம்) i 20 சகஸ தீர்த்தம் (தாஸ் தோட்ட
G0) als 't Luridii45) சங்க(ம்) i 4, 47, 49-50, 54

சொல்லடைவு
56、57.60、61。98 ii 26, 50, 1 1 0, 188 சங்கதி சன் i 147 சங்கத்தலீ i 35, 37 சங்கமித்திரதேரர் i 104, 107
109 சங்கமித் திரை (தேரி) i 59-61 சங்கமு விகாரை i 31, 42 சத்தாதிசன் i 73, 77, 78, 84
& 5, 88 சத்திரியர் (கூடித்திரியர் பார்க்க சத்மகால்பிரசாத i 112, 122,
H 2 3 சந்திரபானு i 16, i 70, 132
134 சந்திர வட்டப்படிக்கல் i 122
iii Il 23
சந்தேச i 122,193 சண்டி மெண்டத் i 68
Fü_u - ii 66, 73 s:Litr (g 60)LI) i 27 & Luit 5 i 181 சபுமால் குமாரய (செண்பகப்
பெருமாள்) i 170 éFLbutr egy J és 65 சமனெள (பூரீபாத) i 11, 26,
108, l l 1, 19 1 சமணம் i 43, 46, 48, 49, 55,
63, 126 சம்தரு 186 ‘சமுத்திரகுப்தன் i 113, 115,
118 சன்னிபாதசாலi 210 சாக்கிய குலம் (முனி - புத்தர்)
i 47, 58. 127 சாகா லியர் i 105, 108, 202,
203 சாகுந்தலம் i 116 சாஞ்சி i 65, 96, 215 சாதாவாகனர்கள் i 95, 145 சாகஸ் மல்லன் i 86
G)g)fluttr i 18, 1 22, 13 0, 196. 208. 217, 218 சிங்கபுரம் i 31, i 78, 149 சிங்கைநகர் i 149, 152 சித்தார்த்தர் (புத்தர்) i 46, 47 சித்தாலபப்பத (சித்துல்பவுவ)
i 21 6 சிந்து நதி i 22-24, 31, 136 சிலா காலன் i 132, 137, 138,
202 சிலாபம் (சலாவத்த) i 161,
185 சிலாமேகவண்ணன் i 147, 202 சிறியவேளார் i 172 சிறீசங்கபோதி 1 102, 103 சிறிமேகவண்ணன் (கீர்த்திசிறி
மேகன்) i 118, 119, 121 சியம் i 64, 69, 71, 112, 190 හී(A) i 6, 7, 15, 16, 94, 129,
1 96 ii 62, 63, 6, 7, 1 73,
83 சீஹளசங்க i 66, 73, 74, 191
சு கலா (இராணி) i 44, 45 *கோதய அரசு i 134. 190 சுங்கர் i 98 சுப்பாரக i 31 சுமேரியா i 22 சுவர்ணபூமி i 57; 196, i 70 சுவேஸிகன் பகோடா i 72 சூத்திரன் i 28, 185 சூரதிசன் i 71 சூளவம்சம் i 111, 1 18, 121, 128, 13 0, 139 ii 13, 24, 2 7 , 29 , 5 7 , 8 Ꮞ. 3 7 , 1 Ꮽ I
செகராஜசேகரன் i 152, 153
செகராஜசேகரமாலை i 150
செங்கடகலை (கண்டி) i 179
செங்ஹோ i 16, i 162, 171
73
செலியூக்கஸ் நிகேட்டர் i52,

Page 112
2 1 a Lutur (9) L-Alu 9, pdb
ச்ெட்டி 1 178, 198 சேனலங்காதிகார i 157-159
193, 197 சேத்தியகர i 122 சேர(ர்) நாடு i 69, 155 சேரன் செங்குட்டுவன் i 70,101 ச்ேருவில i 73, 74 சேனபதி 1 180, 185
சேனணி 1 27 சேனன் 1ாம், *158, 159, 2ம் 1 5 9- 60 5-ம் i 173
சொபரi 64, i 41 சொத்திசேனன் i 120, 126 சொண i 108, 109 சோட கங்கன் i 84 சோரநாகன் i 86, 90 சோழர் நாடு i 16, 68. 69
. 163-175,19 7 ii 13-19 ,69 தக்கணம் (இந்தியா) i 26, 52,
1 0 0 1 1 4, ii il 64 தக்கிணதேசம் i 180,181, 183 ii. 20, 23, 33-37, 46, 47
29 தக்கிண விகாரை i 88, 107 தக்கிண தூபம் 212 தஞ்சாவூர் i 163, 167, i 3 தஞ்சைப் பெருவுடையார் கோ வில்(இராசராசேச்சரம் பார்க்க) தந்ததாது i 106, 119, 203,
204, i 9, 26, 1 1 1 . தந்தபுரம் i 119 i 77 தட்சசீலம் i 53, 66 தப்புலன் i 148 தம்பதெணிய (ஜம்புதொனி) : i 18 ii 128- 1 40, 186 , தம்பபண்ணி 1 33 197 தம்பரட்ட i 189, 191 தம்புளை (ஜம்புக்கோல பார்க்க) தமிழதாபம் ii 51, 120
தர்மகிர்த்தி தேரர் i 29, 115, தர்மகாமாத்திரர் i 55 தர்மருசிப்பிரிவு i 89, 20, 107.
129 . தர்மதாது i 138, 202 தர்மரக்கிதர் i 57 தலைக்கோட்டை i 168
தாக பம் i 61, 65, 210 i
தாதுசேனன் i 8, 127-129, 192 தாட்டன் i 71, 74 தாடோபதிசன் i 148, 149
தாமிரலிப்தி 1 32, 58, 64, 197
தாம்பரலிங்கம் i 133, 134 தாய் அரசு (தாய்லாந்து) i 62, 134, 190 . . தாவுரு செனவிரதன் i 84 தான்ய கடகம் i 99 தாஸ்தோட்ட i 159 i 136 தாஸ் யு i 25, 28 திசமகாராம (விகாரை) i 62,
212 திசவாவி i 81, 188 திசையாயிரத்தைஞ்ஞாற்றுவர்
ii 4
திம்புலாகலை 1 191 i 109,
五24
திராவிடர் i 23
திரிபிடகம் i 49, 89, 139, 205
1 08 திரியாய் 1 213, 216 திரிலோக சுந்தரிi 25, 27, 77 திருக்கேதீஸ்வரம் i 152, 204 திருக்கோணமலை i 35, 1979
2 05, 2 I 7 ii Il 0, 15 6 திருக்கோணேஸ்வரம் i 152,
204 திருப்பாதக் கோவில் (பூரீபாத
வைப் பார்க்க) திருப்புறம்பியம்(பூgபுறம்பியம்)
i 156, 163

சொல்லன்டவு
திருவாலங்காடு 1 174 i 58 திவங்க உருவவீடு (பிளிமகே, படிவமனே) i 51, 121, 124 தீகசந்தசேனபதிப் பிரிவெஞ
i 8, 12 7 தீகவாவிi 74, 77, 88 44 தீகஜந்து i 80 தீகாயு 39 தீபவம்சம் i 2, 3, 9, 10, 11,
106, 129, 206 தீபுய்யான i 51 துட்டகாமணி 1 10-11, 19,
72-82, 90 துவாதச கச (க) i 33, 99 துவாரபாலர் i 219 துர்பாராமதாகபம் i 61, 141
212 துரலத்தனன் i 84 . . . தெதுறு ஒயா (ஜஜ்ஜரநதீ) i
- 47, 1 0 1 தெமட்டகொடை i 161 தெள்ளாறு i 156. i 127 தேரவாத பெளத்தம் (சாகை) i 10, 17, 56, 75, 89, 96, 98, 1 0 6, 20 II ii 50, 66, 72, 190 தேவகிரி i 147 தேவராஜன் i 167, 169, 174 தேவன கலை i 31, 55 "தேவானம்பிய 64, 178
தேவானம்பியதிசன் i 9,10,41,
59, 63, 64, 71-73, 87 தேவுந்தர (தேவநகர, தேவி
நுவரை) i 150, 153, 205
ii 133, 183, 193 தொண்டை மண்டலம் i 68,
154, 155 - 164
தொரடியாவசன்னச i 98
தோப்பவாவி 120, 191 i 47
O2
28
நகரகிரி (நுவரகல்) கீர்த்தி i 58 நகரகுத்திகi 183 நயினுதீவு i 105 நரத்து i 73 நரபதிசிது it 72 நல்லூர் i 4, i 152, 178, 180 நாகதீபம் i 141, 172, 182 நாகபட்டினம் i 197, i 5, 69*
111 நாகர் 1 20, 43 நாகார்ஜ"னக்கொண்டா i 96,
99 s நாகார்ஜ"னர் 94, 99, 100 நாச்சதுரவ i 138, 193, i 27,
49 நாளந்தா (இந்தியா) i 56,
1 15, 137
நாளந்தா (மாத்தளைக் கண்மை
யில்) 152 it 39
நிகாய சங்கிரஹi 34, 205 i
88, 98, 162
நில்லக்காமம் 213
நிஸங்க சமுத்திரம் it 81 நிஸங்கமல்லன் i 79-84 நிஸங்கலதா மண்டபம்i82-121 நிஸங்கேஸ்வரம் ii 83
பங்குளி (புத்தர் சிலை) i 217 பங்சு கூளிகர் i 172, 203 பச்சிமதேச i 183 பஞ்சயோஜன (பஸ் துன் கோ றளை) i 16, 43, 47, 179 பஞ்சாப் i 51, 135, 136 பண்டகா ரிகா i 180, 185 பண்டவாவி it 27, 101 பண்டுகாபயன் i 38, 41 பண்டு வாசுதேவன் 39 பத்த சீம பிரசாதா i 51, 1 19 பத்தினித் தெய்வம் வழிபாடு
101, 102 பதவியா (தனவாவி, பதிவாவி) i 1 3 8 1 93 ii 9, 49

Page 113
814 ush all plb
பதுமனஹ கொட்ட tt 81 பப்பதந்தக்கால்வாய் 105, 191 பர்மா 15, 16, i 26, 53-56
66, 70-74 பரராஜ சேகரன் i 152, 154,
1 80 பராக்கிரம சமுத்திரம் i 47-48 பராக்கிரமபாகு 1-ம் (மகா
பராக்கிரமபாகு) i 29-60
90, 91 1 01 பராக்கிரமபாகு 2-ம் it 13137 3.-ih ii 138 4-Ib I 39 பராக்கிரமபாகு 6-ம்i 170-178
194, 195 பராக்கிரமபுரம்
(பண்டுவஸ்நுவர) i 37 பராந்தகன் 1-ம் i 164, 165, 171, 2-lb i 165, 172 பருமகர் i 36, 80, 184 185 பல்லவர் அரசு 16, 143- 47
150-152, 154, 156 சிம்ம விஷ்ணு i 143 145
மகேந்திரவர்மன் 145
146, 150 நரசிங்கவர்மன் (Lorr to 6)
லன்) i 146, 147, 149
பல்லவவங்க i 55 பலட்டுப்பான (பலுட்டகிரி)
ii 13 பல் எச்சம் (தந்ததாது பார்க்க) பளாபத்கல i 129 பணுகடுவ செப்பேடு i 12, 16 பனையமாறன் i 85 (பஸ்ஸ் பஸ்லது i 183 Lun 6u 6är i 7, 30, 1 5, 120
2O3 பா சீனுராம 62 பாடலிபுரம் (பாட்ணு) i 50, 51
64 பாண்டிவிஜயக்குளம் i 82, 83 பாண்டு 126
பாண சமுத்திரம் tt 47
unr 6); gyuuuu Gör i 86, 90, † 95 பாதிக திசன் i 102
unrgra i 1 I 6, I 45 1 50 பாளெம்பாங் 67, 68, 69
u ublogrrror i 50 பியுஅரசு i 71 பிரதோசி (ஃபிர்தோசி) 145 பிராமணர் i 28, 43, 45, 48, 55, 62, 65, 158, 178,
85 பிராமி (வரிவடிவம்) t 5, 33,
196 பிருகுகச்ச i 64 பிஹிடிரட்ட i 89
புங்ககாம (டெடிகமை) i 33,
156, 157, 160 புத்தகயா (கயை) i 9, 47, 118
137 ii. 72, 109 புத்தகாம i 36 45ಕ್ಚ¬ಗೆ ! 3. 120, 206, புத்ததாசன் 119, 120 புத்தர் (ததாகதர் சம்புத்தர்) i 1 0, ill, 33, 46-50, 56, 58、65, 89, 96, 97, I 06。 121 w புத்தராஜன் i 16 புத்தளம் i 18, 33, 154, 185
புதுருவெகலை $ 203, 217
புருஷபுரம் (பெஷாவார்) i 50,
94, 99
புரோகிதர் i 27, 43, 180
புலச்சேரி i 58,
புலிகேசி 2-ம் it 135, 145, 146
புவனேகபாகு 1-ம் i 132, 138
184 2-b i 139, 4-bii
157
GU5 ii 71-72

சொல்லடைவு 2 15
பெலிகல 1.130
பேகன் அரசு i 71 பேயொன் i 65 பொத்கல் விகாரை/சிலை i 51,
9 6, 12 II, I, 23 பொத்தகுட்ட i 148
பொலன்னறுவை i 4, 17, 18,
1 48, 1 7 4 i 8-9, 17-22, 40,44,90,93 போதிசத்துவர் I வழிபாடு i 97,
119 ii 1.87 போஜகபதி 1 189
மகதம் i 31, 32, 50, 51
மகாகணதராவை 1 190, i 27
மகாகமை (திசமகாராம) i 35
73, 79, 212
மகங்கல் கடவளை i 190
மகர்சேனன் 3, 10, 104-105,
08-09 மகாதாடிக மகாநாகன் 18,
90 மகாதாரகல்ல i 49 மகாதாலிதகாம 1 159 மகா தீர்த்தம் (மாதோட்டம்)
i 7, 15, 1985, 149, 157 卫96。197。i 9,23,24, 57-58 LDSnrGS36Jri i 57 மகாதூபம் (ருவன் வலியைப்
unTri š5) மகாபருமக i 185 மகாபாலிi 62, 210 மகாபுடுலத்தன் i 198 மகா மலைய தேசம் ii 39 மகாயான பெளத்தம் (சாகை) i 50, 96, 100, 104-109, I35、I38 ii 50-68, I I 5 முகாலே i 181
மகாவம்சம் i 2, 3, 8-12, 3033, 38-40, 43, 72, 78, 90, 98, 104, 121, 201 மகாவலிகங்கை i 18, 74, 78,
80, 05。I57, 193 ii 22 மகாவீரர் (வர்த்தமான மகா
வீரர்) i 46 மகாசாங்கிஹப் பிரிவு 50, 56
98, 99 மகாதிபாதா (மாபா, மஹயா
onru unr) 14 l, 18 0 மஹாபோதி வம்சம் 121, 207 மகாநாமன் i 120 மஹாநாகஹ"ல i 18, 33, 35,
44一45 மஹ்ாமேகவனம் i 41, 60 . மகிந்தர் i 57, 61, 106 மகிந்தன் 2-ம் i 157, 4-ம்
165, 172 ii. 77 5-lb i. 1 73 ii I3 மகியங்கணை 1 19, 20, 102,
199 i 1 1 1, 124 மகுல் மகா விகாரை i 13, 17 மஞ்சு பூரிi 97 மட்டிவாள் (எழுதுமட்டுவாழ்?)
ii 58 மதிரிகிரி (மண்டலகிரி விகாரை
இடம்) i 213, 217 i 42 மதுரா துணு i 160 மதுரை 67-68, 160, 169,
1 7 1 i 57 மரிசவடி (மிரசவட்டி) 81, 116,
212, மல்வத்துஒயா (கதம்பநதி, அரு வியாறு) 18, 33, 192 மல்லிகார்ஜுனன் i 167 மலாயா (மலேஷியா) i 15 i 78
88, 19. மலாயு (ஜம்பி) i 69

Page 114
21 6 பண்டைய ஈழம்
மலையரட்டை i 18, 138, 159,
I 81 iii I, 6, 23 மன்னர் i 89, 185 மாகந்தோட்டை (கச் சக தீர்த்
தம் பார்க்க) மாகல்லவாவி i 47, 101 மாத்தளை i 161 மாமல்லபுரம் i 146, 151 i 5 LDrr u umr JJtu‘65)L— ii 1 2 9 Lorrfi is,GLurrGarr ii ’69, 1 53 மார்த்தாண்ட சிங்கையாரியன்
1i 154 மாலிக்கபூர் i 143, 146 LDIT 6IT GJ Lb i 1 1 3, l 14 மானவர்மன் i 149-150, 152,
60 மானபர்ணன் i 25, 32, 34 மானுமடு (இராட்சதக்குளம்)
i 1 92 ii 49 மிகாரன் i 129 மிகிந்தலை (மிசாகபர்வதம்) i
59, 88 , 108 , 129, 209 மித்தசேனன் i 121, 126 மிருச்சடிகம் i 116 மின்னேரி (மணிஹlரவாவி)
1 l 04- I 05 , i 90-19I , ፤ 98 ii 49 மினண்டர் i 94 மினிப்பே (மணிமேகலை) அணை கால்வாய் i 141, 193 முகம்மது காசிம் i 144 முகம்மது பின் துக்லக் i 144,
47 முத்தாகர i 39 முத்திரா ராட் சஸம் i 116 முடசிவன் i 39, 41, 59 மெய்க்கீர்த்திகள் i 166, 167 மேகதூதம் i 116, 122 மைத்திரேய (ர்) i 56, 63, 98
21 7
ரூவன் வலிசயா "
மொகலிபுத்திரதிசதேரர் i 54
56 - - -
மொகல்லானன் (முகலன்) i8, 129, 1 32, 1 3 7 2 ub i 138 192
மொன் i 71, 72
மொஹஞ்சதரோ i 22-24
மோரியர் (மரபு) i 124, 127
139 மெளரியர் (பேரரசு) i 16, 51
52, 63-65, 71, 93, 24 யசலாலகதி சன் i 83, 88 யசோதரபுரம் i 65
யாப்பகுவ (யாப்பாகு) i 18
ii 65, 6 6 1 3 4
யாவா i 15, i 67, 68 யாழ்ப்பாணம் i 140, 148,
150, 175, 177, 179
ரக்கன் i 39, 44
ரக்கிதர் i 57 ரடிக(ய) 183 ரட்லது i 183 - ரயிகமை i 157, 159, 162
I 72 ராமஞ்ஞதேச (பர்மா) i 70 ராஜசூயம் i 27 ரும் மீண்டீ i 47
ரூபவதி சேத்திய i 51
ரூவன் வலிசயா (அனுராதபுரம்)
i 11. 75, 81, 90, 181, ii 136 - - - -
(ப்ொலன்ன றுவை) i 82 ரோஹண போஜக i 181 லக்கண்ண தண்டநாயக்கன் i
169, 173 லஞ்சதிசன்i 84, 88 லமணி இலம்பகர்ணர் பார்க்க) லிகோர் i 112 லிச் சாவி 1 113 லீலாவதி i 25, 84, 86, 104

சொல்லடைவு 217
லேகக i 171 - லோகபாசாதா (லோவமகாபா tur) i 81, 108, 119, 21 0 லோகேஸ்வரன் 86 வங்கநாசிகதிசன் 10 வங்கம்: i31, 32 - வசபன் i88,100-10,182, 189 வசுமித்திரர் 94, 99 வஞ்சி i 69 157 வட்டகாமணி 9, 10, 84, 85
86. 88-90, 100 வட்டதாகே 213, 51,82,122 வத்தளை i 161 வருணன் 1 26, 28, 42 a distruth i 4, 101 ii. 1 is வ்லஞ்சியர் 105 வலாஹசவாவி 141 27 வலிகாமம் i 58 Gwait Goft ii 138, 187-88 வாகல்கட i 211, 212, 265 வாகிரிகலை (வாதகிரி) F,i-
18, 24
வாதாபி (பாதாமி) 卫45-46 வானவன் மாதேவி ஈஸ்வரம்
ii 1 0 1 07 விக்கிரமாதித்தன் y ii 2, 20 விக்கிரமாதித்தன் (2-ம் சந்திர குப்தன்) i 115, 16 2த விக்கிரமபாகு i 27, 32, 34 விக்கிரமசிங்கையாரியன் தg விகாரதேவிi 73, 76, 7g விசுத்திமார்க்கம் i 120, 206 விதிசா i 59 விநயபிடகம் i 49 விந்தியமலை i 26, 15 விருபாக்ஷன் i 168
விரோதயசிங்கையாரியன் ii
55 விஜய்பாகுi (கீர்த்தி) 1 19i15-27,72,100,104 விஜயபாகு i78, 128-130” விஜயநகர்பேரரசு i 16 i 165 166, 155, 164-169, 175 விஜயன் (சிங்ஹல) i 30, 33;
-38-39. வீதாகம மகாதேரர்சாமி i
190 விரசலா மேகன் iFf4° வீரதேவன் i 33 வீரபாகு i 134 ଭର୍ଷ ரபாகு ஆதிபர் ቌff iዅ°} 62. வீரபாண்டியன் i 57, 59 s .. வீரபாண்டியன் (ஜ்டர்வர்மன்)
i 165 ii 1 28, 134 வெல்கம் வெஹர i 10, 107 வெ சகிரிi 62, 212 வேங்கி i 2, 18, 83 G36 &ndasтgri ili 9, 23, 97 வை துல்யவாதம் i 106, 107
08 வொகாரிகதிசன் i 102, 106 றன் அங்கிலி, i 83 றன்கொத்தாகபம் i 122, 82 றிடிபண்டிஎள i 47, 101 ஸ்தூப(ம்) i 65 i 122 ஸ்ராவகயானம் i 96 ஸ்வர்ணபூமிi 57 ஸ்வெதம்பரர் i 47 கூடித்திரியர் i 27, 28, 51, 77.
78, 185 ...

Page 115
218 பண்ட்ைய ஈழம்
ஜகதீபாலன் i 14
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
ii 3, 1 Ma7. 133
ஜம்புக்கோலi 58, 61, 62, 64,
197 i 26 ஜயகங்கை 1,128,92, i 49,
OB
ஜயபாகுi 27, 82, 34 ஜயவர்த்தனபுரம் "கோட்டை
யைப் பார்க்க) ஜன்பதti 36 ஜனநாதமங்களம் 174 ஜாதகக்கதை 66
guunr ii 34 ஜானகிகரணம் 121, 207 ஜீனர் i 46 ஜெட்டதிசன் i 103, 108
ஜெதவனுராம (தாகபம் விகா. ரை)i 212, 215 i 108 ஜெதவனராம (பொலன்னறு ഞഖ);i $1, 114, 12 ஜோதிபாலர் i 149, 202 பூரீசங்கபோதி புவனேகபாகு i
178 ܫܡܼܫ பூரீஜயகோபமகாராஜா i 80 பூரீமாற பூரீவல்லபன் (சிமாறகி வல்லபன்) i 156, 158, 159
பூரீநாகன் i 102 s . . பூரீவல்லபன் i32-35, 58 பூரீவிஜய அரசு i 16, 169, 197
ii. 25, 6:3, 67-70.


Page 116

H·*)
Noae, sae ±,±,±,±), |-|×(.........!!! -::=≡:
km--No
! ,
· ) ---- ----
· sae |-
கிரி விகாரை, லங்காதிலக விகாரை (ஆளஹான பிரிவெணுத் தொகுதி)
·|- saetae
·±
----
i |-
封) 链)"ዜኾ.. -引)
(மகாடராக்கிரமபாகு) பொலன்னறுவை
அரச மாளிகை

Page 117
கல் பொத்த
 

பொலன்னறுவைச் சமயக் கட்டிட வாயில்

Page 118
ல் பிராசாத
象
சத மஹா
 

யாப்பகுவ (அரண்மனை-படிவாயில்)
கடலாதெணிய கோவில்

Page 119
工霞霆曇 థ్రో 露*醬
33 క్ష్
棗
క్లే
: : క్ష్ リ
矚 H、
့ဖို့ပုံဖို့ 醬 量鸾
சுவரோவம் (திவங்க படிமமனே)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(官學的性的 內으ns:ĶĒrts 11 LITT---- 5 floss}} [[Estos,(mesos os so solirī£) (=: £せgEFJ国

Page 120

பொதுப் பரீட்சை விஞத்தாள்கள்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர(ப்) பரீட்சை.
( டிசம்பர் 1966 - ஏப்ரல் 1972)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர(ப்) பரீட்சை.
(டிசம்பர் 1966 - டிசம்பர் 1972)
ولدت زنك أنتي . யூரீ லங்கா பரீட்சைப் பகுதி ஆணையாளரின் இசைவு பெற்று வெளியிடப்படுகின்றன.

Page 121
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை 1зғфрий 1966
வரலாறு 1. இலங்கை வரலாறு. மூன்று மணி. 11-ம் வினவுக்கும், வேறு நான்கு விஞக்களுக்கும் விடை எழுதுக. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இவ்விரண்டு வினக்களைத் தெரிக. (முக்கிய ஆறுகளைக் காட்டும் இலங்கைப்படம் ஒன்று தரப்படும்.)
பகுதி 1
அனுராதபுர காலத்து இலங்கையைப் பற்றி அயல் நாட்டு இலக் கியங்களிற் காணப்படும் பிரதான குறிப்புக்களை எழுதுக. இந்தியாவில் மகாயான பெளத்தம் தோற்றியதைப்பற்றி எழு
துக. மகாசேனன் ஆட்சியின் இறுதிவரை அது இலங்கைக்கு எவ்வாறு பயன்பட்டது எனக் காட்டுக.
முதலாம் விஜயபாகு, துட்டகாமணி என்பவர்களுடைய சாத னைகளின் ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துக் காட்டுக. பொலன்னறுவைக் காலத்திலிருந்த இலக்கிய, கவின்கலை முயற்சிகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுக. பின்வருவனவற்றில் எவையேனும் நான்கினுக்குச் சிறு குறிப்புகள் எழுதுக. (அ) அபிஷேகம் (ஆ) பறுமக (இ) அமராவதி சிற்பங்கள் (ஈ) போதிசத்துவர்களை வணங்குதல் (உ) கடிகாவத்தை (ஊ) பத்தினி வழிபாடு (எ) தமிழதிகாரின் (ஏ) சன்னஸ்.
பகுதி II
கோட்டைப் பிரதேசங்களைப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய முறையிலுள்ள பிரதான படிகளை ஆராய்க. கரையோரப் பிரதேசங்களில் தமது ஆட்சியை வலுப்படுத்த டச்சுக்காரர் கையாண்ட முறைகளை ஆராய்க. கண்டி இராஜதானியிலிருந்த பொருளாதார, சமூக அமைப்பில் சாதிவேற்றுமை செயல்பட்ட விதத்தை ஆராய்க.

9.
I 0.
ll.
- 3 -
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்ருண்டில் பிரித்தானிய பரி பாலனம் எம் முக்கிய வகைகளில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு உதவியாயிருந்தது?
டொனமூர் ஆணைக் குழுவினர், அக்காலத்தில் இலங்கையர் களுக்குப் பூரண பொறுப்புள்ள ஆட்சி கொடுக்க இயலாமைக் குரிய பிரதான காரணங்கள் யாவை?
uE53) III கொடுக்கப்பட்ட தேசப்படத்தில் பின்வருவன எல்லாவற்றையும் குறித்துப் பெயரிடுக. இவற்றுள் நான்கினுக்குச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக. () தம்புல்லை (ii) குட்டகலை (ii) காஜறகாம (ty) காலஓயா {y) மகியங்கணை (yi) மலேய (yi) முத்துராஜவலே (yi) பராக் கிரம சமுத்திரம் (ix) சுமணசுடம் (x) யாப்பகூவை
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை ஏப்ரல் 1968
வரலாறு 1. இலங்கை வரலாறு. மூன்று மணி. 11-ம் வினவுக்கும், வேறு நான்கு வினுக்களுக்கும் விடை தருக. முதலாம் பகுதியிலிருந்து இரண்டு வினக்களையும், இரண்டாம் பகுதியிலிருந்து இரண்டுவினுக்களையும் தெரிவு செய்தல் வேண்டும்.
(பிரதான ஆறுகளைக் கொண்ட இலங்கைப்படம் அளிக்கப்படும்)
முதலாம் பகுதி அனுராதபுரிக் கால இலங்கையின் (அ) பொருளாதார வரலாற் றிலும் (ஆ) அரசியல் வரலாற்றிலும், மகாவலி கங்கையினதும் மல்வத்து ஓயாவினதும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துக. வத்தகாமணி அபயவின் ஆட்சியின் இறுதிவரை இலங்கையில் நிலவிய புத்த சமயத்தைத் தழுவாத நம்பிக்கைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

Page 122
سے 4 سس۔
3. எமது நாட்டின் வரலாற்றில் பல்லவரின் செல்வாக்கு எவ்வெவ்
வகைகளில் எவ்வளவு தூரம் பயன்பட்டுள்ளது? 4. நிசங்க மல்லனின் ஆட்சியின் முக்கியத்துவத்தை ஆராய்க. 5. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினங்பற்றிச் சுருக்கமான
குறிப்புக்கள் எழுதுக (அ) காஜரகாமச் சத்திரியர் (ஆ) லம்பகண்ண
(இ) ஆதிபாத (ஈ) கலிங்க (உ) நாத (ஊ) தண்டநாயக்க (எ) மொகல்லான II (ஏ) இப்னு பத்தூத்தா
இரண்டாம் பகுதி 6. "கோட்டை இராசதானியின் பொருளியல் வளங்கள் யாழ்ப் பாண இராசதானியின் பொருளியல் வளங்களைவிட அல்லது கண்டி இராசதானியின் பொருளியல் வளங்களை விட மிக அதிக
மானவை.** ஆராய்க. −
7. டச்சுக்காரரின் பரிபாலனம் எவ்வெவ் விதங்களில் போர்த்துக்
கேயரின் பரிபாலனத்தைவிடச் சிறந்து விளங்கியது?
8. 1817-18 இன் புரட்சிக்கு வழிகோலிய பிரதான காரணிகள்
எவை? அது தோல்வியுற்றதேன்?
9. பத்தொன்பதாம் நூற்ருண்டில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் போக்குவரத்துச் சாதனங்களின் முக்கியத்து வத்தை ஆராய்க.
10. சுதந்திரத்துக்கு முன்னர் உள்ள கால எல்லையில் முதிர்ந்தோர் வாக்குரிமை வழங்கியதால் ஏற்பட்ட சமூக, அரசியல் பெறு பேறுகளை ஆராய்க.
மூன்றம் பகுதி பின்வரும் அனைத்தையும் படத்திற் குறிப்பிட்டுப் பெயரெழுதி, இவற்றுள் எவையேனும் நான்கினைப்பற்றிச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக:
(அ) தெதுறு ஒயா (ஆ) நாகதீபம் (இ) தீகவாபி (ஈ) மணிக்கடவரை (உ) தெவுந்தரை (ஊ) மட்டக்களப்பு (எ) மக்டொவல் கோட்டை (ஏ) குருநாகல்
(ஐ) கடுகண்ணுவை (ஒ) சப்ரகமுவ மாகாணம்

கல்விப் பொதுத் தராதர (உயர்தர)ப் பரீட்சை ஏப்ரல் 1969
வரலாறு 1. இலங்கை வரலாறு. く மூன்று மணி.
11-ம் வினவுக்கும் வேறு நான்கு வினுக்களுக்கும் விடை எழுதுக. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இவ்விரண்டு வினக்களைத் தெரிக.
முக்கிய ஆறுகளைக் காட்டும் இலங்கைப்படம் ஒன்று தரப்படும்.)
பகுதி 1 அனுராதபுரக் காலத்தில் இலங்கையின் பொருளியல், அரசியல் வரலாற்றைப் புவியியல் இயல்புகள் பாதித்த வகையினை விளக்குக "இலங்கை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத் தொடக்கமாகத் தேவனம்பிய தீசனது ஆட்சி அமைந்தது.' ஆராய்க. அனுராதபுரக் கால எல்லையில் கட்டிட, சிற்பத் துறைகளில் ஏற்பட்ட அயல்நாட்டுப் பாதிப்புக்களை ஆராய்க. 1-ம் விஜயபாகுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிக் கூறி, அவனது சாதனைகளை மதிப்பிடுக. எவையேனும் நான்கினைப் பற்றிச் சரித்திரச் சிறு குறிப்புக்களை எழுதுக:
1. தகபதி 2. கஹாவணு 3. சந்தகடபஹன 4. நிலபடதர்ஸனய 5. 2-ம் சேனன் 6. இராணி சுகலை 7. சந்திரபானு 8. தெவிநுவர
பகுதி II
கரையோரப் பிரதேசங்களில் போர்த்துக்கேயரது அதிகாரம் பர வத் துணையாகவிருந்த காரணிகளை ஆராய்க.
ஒல்லாந்தர் ஆட்சியால் ஏற்பட்ட பொருளாதார, சமய, சமூக மாறுதல்களை விளக்கிக் கூறுக.
கண்டி இராச்சியத்தில் 17-ம் நூற்ருண்டில் நிலவிய பொருளியல்,
சமூக நிலைமைகளை ஆராய்க.
பிரித்தானியரின் பாலனக் கொள்கை 19-ம் நூற்றண்டின் முற் பகுதியில் இருந்ததைவிடப் பிற்பகுதியில் எந்தெந்த முக்கிய அம்சங்களில் வேறுபட்டிருந்தது? -8

Page 123
0.
11.
--سے 6 سست
இனவாரியிலான பிரதிநிதித்துவம் அரசியல் உடலில் ஏற்படும் ஒரு புற்று நோயாகும்." ஆராய்க.
Lieg55 III
கொடுக்கப்பட்ட தேசப்படத்தில் பின்வருவன எல்லாவற்றையும் குறித்துப் பெயரெழுதுக. இவற்றுள் நான்கினுக்குச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புக்கள் வரைக.
(1) உபதிசகாமம் (i) மிஹிந்தலை (i) புத்தளம் (ty) விஜிதபுரம் (y) பராக்கிரம சமுத்திரம் (yi) ரயிகமை (yi) கலுகங்கை (yi) வேருவனே (ix) முனிஸ்வரம் (x) நல்லூர்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை ஏப்ரல் 1970
11-வது வினவிற்கும், முதலாம் பகுதியிலிருந்து இரண்டு விஞக் களையும், இரண்டாம் பகுதியிலிருந்து இரண்டு விஞக்களையும் தெரிந்து, வேறு நான்கு வினுக்களுக்கும் விடை தருக.
பகுதி 1
1255 கி. மு. வரையுள்ள இலங்கைச் சரித்திரம் படித்தற்குப் புதைபொருளாராய்ச்சி மூல ங் க ளின் முக்கியத்துவத்தை ஆராய்க. துத்தகாமணி அபய, வத்தகாமனி அபய என்பவர்களின் சாதனை களை ஒப்பிடுக. இவர்களுள் எவர் பெரியவர்?
கி. பி. 5-ம் நூற்ருண்டுவரை இலங்கைக்கு வந்த அந்நியப் படை யெடுப்புக்களைச் சுருக்கமாகக் கூறுக. இவற்றின் விளேவுகளை ஆராய்க.

4.
0.
-۔ 7 دسمہ
முதலாம் பராக்கிரமபாகு அந்நிய நாடுகளுக்குப் படையெ துச் சென்றமை பற்றிச் சுருக்கமாக விபரிக்க r A历
பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றமைக்கு இவை எவ்
வாறு காரணமாய் இருந்தன என்பது பற்றி ஆராய்க.
பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினுக்குச் சுருக்கமான குறிப்புக்களை எழுதுக.
(அ) சத்தக்ககாக (ஆ) போஜகபதி (இ) யுவராஜ (ஈ) பாகியான் (உ) அத்தானி பொராகர் (ஊ) வட்டதாக (எ) லீலாவதி அரசி (ஏ) யாப்பகூவை
பகுதி 2
ஒதவாக்கை இராச்சியம் எழுச்சி உற்றமைக்குரிய சந்தர்ப்பங்களை யும், அது திடீரென வீழ்ச்சியுற்றமைக்குரிய காரணங்களையும் ஆராய்க.
இலங்கையில் டச்சுக்காரரின் போருளாதாரக் கொள்கையை விளக்குக. அதன் விளைவுகளைக் கூறுக. இலங்கையின் பொருளாதார விருத்தி சம்பந்தமாகக் கோல்புறுரக் கொமிசன் செய்த சிபார்சுகளின் முக்கியத்துவத்தைக் கணிக்க. இலங்கை மக்களின் அரசியல், சமூக வாழ்க்கையில் ஆங்கிலக்கல்வி செலுத்திய செல்வாக்கினை ஆராய்க. பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் புத்தசமயமும் இந்து சமயமும் மறுமலர்ச்சி யடைந்தமைக்குரிய காரணங்களை ஆராய்க.
பகுதி 3
கொடுக்கப்பட்ட படத்தில் பின்வருவனவற்றைக் குறித்துப் பெயரிடுக;
அவற்றினுள் நான்கினுக்குச் சரித்திரக் குறிப்புக்கள் எழுதுக.
(t) கதிர்காமம் (ii) வளவகங்கை (iii) FunrGifhlaðav (i) தொலஸ் தகஸ்றட்ட
(y) பராக்கிரமபுரம் (yi) கங்காதடாக (கந்தளாய்) (yi) கொட்டசார (yi) ஊரு தொட்ட
(ix) subLuðst (x) நீர் கொழும்பு

Page 124
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை ஏப்ரல் 1971
வரலாறு 1. இலங்கை வரலாறு 3 மணி
11-ம் வினவுக்கும் வேறு நான்கு வினக்களுக்கும் மாத் தி ரம் விடை தருக. முதற்பகுதியிலிருந்து இரு வினுக்களையும், இரண் டாம் பகுதியிலிருந்து இரு விஞக்களையும் தெரிவு செய்க.
பகுதி 1
இலங்கையில் ஆரியக்குடியிருப்புக்கள் தோன்றி அபிவிரு த்தி யடை வதற்குப் புவியியற் காரணிகள் எந்த அளவிற்கு அநுகூலமாயிருந் தன என்பதை ஆராய்க.
அநுராதபுரக்காலத்தில் மகாயான பெளத்தம் வளர்ச்சியடைந்த வரலாற்றை, சிறப்பாகச் சமயவாழ்க்கையிலும் அது பிரயோகித்த செல்வாக்கைக் குறிப்பிட்டு ஆராய்க. பொலநறுவை இராச்சியம் தளர்ச்சியடைந்து வீழ்ச்சியுற்றதற் குரிய காரணங்களை ஆராய்க. VIஆம் பராக்கிரம பாகுவின் ஆட்சி எவ்வகையில் முக்கிய முடையது என்பதை ஆராய்த்து விளக்குக.
பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கு பற்றிச் சிறு வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக:
(அ) தோவாரிக (.-) aosulunr (இ) வஜ்ஜிரபோதி (உ) போதிகர (உ) பணுகடுவ செப்பேட்டுப் பொறிப்பு (ஊ) திவெல் (எ) சபுமல் அரசகுமாரன்.
பகுதி 2
போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்தின்மீது படையெடுத்துச் சென்றமைக்குரிய காரணிகளைச் சுருக்கமாகக் கூறி, அவர்கள் தோல்வியடைந்தமைக்குரிய காரணிகளை விளக்குக. கடற்கரைப்பிரதேசத்தின் பொருளாதார சமூக வாழ்க்கையில் டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) எத்தகைய தாக்க விளைவை உண்டாக் இனர் என்பதை ஆராய்க.

0.
11.
- 9 -
கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் ஆட்சி, சமய, கலாசாரத் துறையில் எத்தகைய முக்கியத்துவம் உடையதென்பதை ஆராய்ந்து விளக்குக. பத்தொன்பதாம் நூற்ருண்டில் கண்டிய உழவோர் விடயத்தில் பிரித்தானியர் கைக்கொண்ட பூட்கைகளைத்தெளிவாக விளக்குக. தொனமூர் ஆணைக்குழுவினர் என்ன நியாயங்களுக்காகச் சருவ சன வாக்குரிமை வழங்க வேண்டுமென விதந்துரைத்தனர்?
பகுதி 3 கொடுக்கப்பட்ட தேசப்படத்திலே பின்வருவன எல்லாவற்றை யும் குறித்துப் பெயரிட்டு, அவற்றுள் எவையேனும் நான்கு பற்றிச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக.
(அ) மகாதித்த (ஆ) கொணநதி (இ) கிரிதலே h− (ஈ) தக்கிணதேசம் (உ) மகாநாகசூல (ஊ) பண்டுவஸ்நுவர (எ) கோகண்ண (ஏ) தம்பதெனிய (ஐ) வெல்லஸ்ஸ (ஒ) மக்டொனல் கோட்டை
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை ஏப்ரல் 1972.
இலங்கை வரலாறு 1. 3 மணி 11-ம் வினவையும் 1ஆம் பகுதியிலிருந்து இருவினுக்களையும், 2-ம்
பகுதியிலிருந்து இரு வினக்களையும் தெரிவு செய்து, எல்லாமாக 5 வினக்கட்கு விடை தருக.
பகுதி 1 **இலங்கைத்தீவின் சமய, கலாச்சார வரலாற்றில் தேவானம்பிய தீசனுடைய ஆட்சிக்காலம் விசேடமாய்க் குறிப்பிடத்தக்க தொன்ருகும்." இக்கூற்றினை விளக்குக.

Page 125
2.
10.
ll.
-- ر ل : حسه
இராஜரட்டையில் அனுராதபுரக் காலத்தில் தீர்ப்பாசனத்துறை
யில் ஏற்பட்ட பிரதான முன்னேற்றங்களைக் கிரம ஒழுங்கிற் கூறுக. மகாபராக்கிரமபாகுவின் வெளிநாட்டுத் தொடர்புகளைச் சுருக்க மாக ஆராய்க. கி. பி. 1235 க்கும், 1415 க்கும் இடையில் இலங்கையரசர் தங்கள் தலைநகர்களைத் தெரிவதில் எக்காரணிகள் தூண்டுதலளித்தன ? பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கு பற்றிச் சிறு குறிப் பெழுதுக:
(அ) உபராஜ (ஆ) அவலோகிதேஸ்வரர் (இ) பாகியன் (ஈ) வட்டதாகே (உ) கடிகாவத்த (ஊ) குருளுகோமி
(எ) செனேவிரத்.
பகுதி 2 கோட்டை இராச்சியத்தின் பிரிவினையும், புவனேகபாகுவுக்கும் மாயாதுன்னைக்கும் உண்டான பிணக்கும் போர்த்துக்கீசர்இலங்கை யின் கரையோர மகாணங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவியாயின." இக்கூற்றினை ஆராய்க. * கண்டியரசருள் இரண்டாம் இராசசிங்கனே த லை சிறந்த மன்னன்." இதனை நீர் ஒப்புக்கொள்கின்றீரா ? இலங்கையின் கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தர் கடைப் பிடித்த பொருளாதாரப் பூட்கையை விபரிக்க. பத்தொன்பதாம் நூற்றண்டில் இலங்கையில் உண்டான பொரு ளாதார மாற்றங்களைக் கூறிஅவற்றின் முக்கியத்துவத்தைவிளக்குக. 1910 முதல் 1931 முடியவுள்ள காலப்பகுதியில் இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தையும், அபிவிருத்தியையும் விபரிக்க.
Lu(356 III கொடுக்கப்பட்ட படத்திலே பின்வருவனவற்றைக் குறித்துப் பெயரிட்டு, அவற்றுள் எவையேனும் நான்கு பற்றிச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்பும் எழுதுக:
(அ) மையங்கனை (ஆ) கதம்ப நதி (இ) கஜரகாம (ஈ) கந்தளாய்க்குளம் (உ) அளகரக்கால்வாய் (ஊ) ஊராத்தொட்ட (எ) மல்வான (ஏ) கொட்டியாரம்
(ஐ) கன்னுெருவ (ஒ) ஹங்வெல்ல

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை
Iqa tout 1966
வரலாறு மூன்று மணி
பகுதி 1. இலங்கையும் அதன் அயல்நாடுகளும் - கி.மு. 250 - கி.பி. 1508
1.
2,
1-ம் வினவுக்கும் வேறு ஐந்து வினுக்களுக்கும் விடை தருக. 1-ம் விஞவுக்கு ஒரு புற உருவப்படம் கொடுக்கப்படும்.
(i) all Ddig55 கொடுக்கப்பட்டுள்ள இலங்கைப் படத்தில், பின் வருவனவற்றைக் குறித்துப் பெயரெழுதுக
கிரிந்தை, திருக்கேதீஸ்வரம், ஜம்புக்கொல, தம்மனநுவரை, சிவனுெளிபாதமலை, களனி, நாளந்தை, சிலாபம், கற்பிட்டி, மல்வத்து ஒயா. (i) மேலேயுள்ளவற்றுள் எவையேனும் ஐந்தைப் பற்றிச் சுருக் கமான வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக. ஒவ்வொரு குறிப்பும் ஐம்பது சொற்களுறகு மேற்படலாகாது.
இலங்கையில் முதன் முதலாக இடம்பெற்ற சிங்களக் குடியேற் றங்களைப்பற்றி ஒரு வரலாற்றுக் குறிப்பு எழுதுக. தேவனம்பிய தீசன் முடிசூடியது வரை அவற்றினுடைய அபிவிருத்தியை வரி சையாக ஆராய்க.
தேவானும்பிய தீசனுடைய ஆட்சி தொடக்கம் தாதுசேன னுடைய ஆட்சிவரை பெளத்த மதத்தின் அல்லது நீர்ப்பாசனத் தின் முன்னேற்றத்தை விவரிக்க. حہ சிங்கள அரசர்கள் பல்லவர்களோடும் சோழர்களோடும் கொண் டிருந்த தொடர்புகளைப் பற்றி எழுது கி.
1-ஆம் விஜயபாகு 1-ம் பராக்கிரமபாகுவிலும் பார்க்கப் பெரிய ஓர் இராணுவத் தலைவன் ஆவன். இதனை நீர் ஏற்றுக்கொள் கின்றீரா? உமது விடைக்கான காரணங்களைத் தருக.
13-ம் நூற்ருண்டிலிருந்து 15-ம் நூற்ருண்டுவரை மாயாரட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுச்சியுற்றது பற்றி எழுதுக. محی
யாழ்ப்பாணத்தை யாண்ட ஆரியச் சக்கரவர்த்திக்கும், கோட் டையை யாண்ட நிசங்க அழகக்கோனருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தங்களுக்கான காரணங்களைக் கூறுக. இந்த யுத்தங்கள் எவ்வாறு முடிவடைந்தன?

Page 126
ܚ 12 ܚ=ܗ
பின்வருபவர்கள் எவரேனும் நால்வரைப் பற்றி வரலாற்றுக் குறிப் புக்கள் எழுதுக: (ஒவ்வொரு குறிப்பும் 100 சொற்களுக்கு மேற்படலாகாது.)
சந்திரகுப்த விக்கிரமாதித்தன், இபின்பாதுதா, பாஹியன் மொக்கலிபுத்த திசதேரர், மார்க்கோ போலோ, கலிங்க தேசத்து மகான், சங்கமித்திர தேரர்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை ஆகஸ்ட் 1967
சரித்திரம் மூன்று மணி சரித்திரம் - 1. இலங்கையும் அதன் அயல் நாடுகளும்
(கி. மு. 250 தொடக்கம் கி. பி. 1508 வரை) 1-ஆம் வினவுக்கும் வேறு நான்கு வினக்களுக்கும் விடை தருக. 1-ஆம் வினவுக்கு ஒரு வெளியுருவப் படம் கொடுக்கப்படும். (அ) உமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இலங்கைப் படத்தில் பின் வருவனவற்றைக் குறித்துப் பெயர்களை 6 TCLp ĝis 695:-
(i) ஊருதொட்ட (i) றித்திகல் (ii) குட்டசால (ty) கொக்கன (w) காலவாவி (vi) வெலிகாமம்
(viii). GLugosup (x) வளவகங்கை
(ஆ) மேலேயுள்ளவற்றுள் எவையேனும் 5SS) GUNLUU Fíflögur முக்கியத்துவத்தைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் எழுதுக. மஹிந்த தேரோவினுடைய வாழ்க்கையைப்பற்றி ஒரு சரித்திரக் குறிப்பு எழுதுக. இலங்கையிற் பெளத்தம் பரவுவதற்கு அவர் செய்த தொண்டினை விவரிக்க.
கி. மு. 1-ஆம் நூற்ருண்டிலிருந்து கி.பி. 4-ம் நூற்ருண்டின் இறுதி வரை இராஜரட்டையிலும் உறுகுணையிலும் கட்டப்பட்ட լ9ց՝ தான நீர்ப்பாசன வேலைப்பாடுகளில் பத்தினை அவை கட்டப் பட்ட ஒழுங்கு முறைப்படி எழுதுக. அவற்றைக் கட்டுவித்தவர் களின் பெயர்களையும் எழுதுக. இக்காலவெல்லையில் அனுராத புர, மாகம அரசர்கள் நீர்ப்பா சன வேலைப்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்கான இரண்டு காரணங்களைத் தருக.

6.
a- a O -
கி. பி. 9-ம் 10-ம் நூற்ருண்டுகளில் அனுராதபுரம் குன்றியதற் கும், கி. பி. 11-ம் நூற்ருண்டில் அது வீழ்ச்சியடைந்ததற்கு நான்கு காரணங்களைத் தருக. இந்தியாவிலும், தென்கிழக்காசியாவிலும் சோழ சாம்ராச்சியம் பரவியதை விவரிக்க. இது இலங்கையை எவ்வாறு பாதித்தது? பெளத்த மதத்துக்குப் புத்துயிரளிப்பதற்கு 1-ம் பராக்கிரமபாகு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி எழுதுக. 11-ம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து 15-ம் நூற்ருண்டின் இறுதிவரையும் இலங்கை தென்கிழக்காசிய நாடுகளோடும், தூர கிழக்கு நாடுகளோடும் கொண்டிருந்த தொடர்புகளை விவரிக்க. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினுடைய சரித்திர முக்
கியத்துவம் பற்றிக் குறிப்புகள் எழுதுக: (ஒவ்வொரு குறிப்பும் 100 சொற்க்ளுக்கு மேற்படலாகாது.)
() சந்திரகுப்த மெளரியன் (ii) சமுத்திரகுப்தன்
(i) அஜாதசத்துரு (ty) நாகார்ச்சுனன்
(y) காளிதாசன் (ty) முகம்மது தீர்க்கதரிசி (vit) ஹியூன் ஸாங் (yi) கனிஷ்கன்
கல்விப் மொதுத் தராதர (சாதாரணதர)ப் பரீட்சை டிசெம்பர் 1967
சரித்திரம் மூன்று மணி
சரித்திரம் 1. இலங்கையும் அதன் அயல் நாடுகளும் (கி. மு. 250 - கி. பி. 1508)
1-ம் வினவுக்கும், வேறு நான்கு வினக்களுக்கும் விடை தருக.
1-ம் வினவுக்கு ஒரு புறவுருவப்படம் கொடுக்கப்படும்.
1.
(i) கொடுக்கப்பட்ட இலங்கைப் படத்தில், பின்வருவனவற்றைக் குறித்துப் பெயர்களை எழுதுக:
மாந்தோட்டம், களனி, சித்துல் பஹஅவை, மஹியங்கணை, மிகிந்தலை, டெடிகமை, யாப்பகுவை, கங்கசிறீபுரம், வாகிரிகலை" வேருவளை,

Page 127
-- 14 س--
(i) இவற்றுள் எவையேனும் ஐந்தினைத் தெரிவு செய்து அவை ஒவ்வொன்றையும் பற்றி 75 சொற்களுக்கு மேற்படாமற் சுருக்க மாகச் சரித்திரக் குறிப்புக்கள் எழுதுக.
துட்டகெமுனுவின் வீர வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாக எழுக, அவனுடையது ஆட்சியின் தனிச் சிறப்பு யாது? இப்பொழுது எமக்குக் கிடைக்கும் சான்றுகளை துணைக் கொண்டு, கி. பி. 5-ம் நூற்ருண்டில் இலங்கையின் (அ) பொருளாதார நிலைமைகளைப் பற்றி அல்லது (ஆ) கலாசார முன்னேற்றத்தைப் பற்றி எழுதுக. கி. பி. 11-ம் நூற்ருண்டில் இலங்கையில் சோழ மன்னர்களின் ஆட்சி நிறுவப்பட்டதற்கான காரணங்களைக் கூறுக. 1-ம் விஜயபாகுவின் அல்லது VI-ம் பராக்கிரமபாகுவின் சாதனை களை விவரிக்க.
பொலன்னறுவை அரசர்களின் ஆட்சியின்போது இலங்கையில் நிலவிய (அ) மத்திய அரசாங்க (ஆ) உள்ளூராட்சி முறைகளைப் பற்றி எழு துக.
கோட்டை இராச்சியத்தின் எழுச்சிக்கான காரணங்களைக் கூறுக. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினைப் பற்றிச் சரித்திரக்
குறிப்புக்கள் எழுதுக் (ஒவ்வொரு குறிப்பும் 100 சொற்களுக்கு மேற்படலாக்ாது.)
(t) மஹெஞ்ச தாரோ (i) பலலவர் (i) யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி (hy) சந்திரபானு (y) இலம்பகர்ண அரசவம்சம்
(vi) அராபியர்கள்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சிாதாரணதர)ப் பரீட்சை
டிசெம்பர் 1968
சரித்திரம் மூன்று மணி
சரித்திரம் I - இலங்கையும் அதன் அயல் நாடுகளும்
(கி. மு. 250 - கி. பி. 1508)
1-ம் வினவுக்கும், வேறு நான்கு விஞக்களுக்கும் விடை தருக.
1-ம் விழுவுக்கு ஒரு வெளியுருவப் படம் கொடுக்கப்படும்.
உமக்குக் கொடுக்கப்பட்ட இலங்கைப் படத்தில் பின்வரும் எல்லா இடங்களையும், பிரதேசங்களையும் குறித்துப் பெயரெழு துக. அவற்றுள் எவையேனும் ஐந்தினைத் தெரிவு செய்து, அவை யொவ்வொன்றையும் பற்றிச் சுருக்கமான சரித்திரக் குறிப்புக்கள் எழுதுக. M
(i) தம்மன்னு நுவரை (ti) மாகமம் (iii) smrav6faur (iv) Gagarfluurr
(y) பொலன்னறுவை (hy) தம்பதேனியா (yi) தேவிநுவரை (vii) சீதவாக்கை (ix) யாப்பபொட்டுணை (x) 6ravnr Luth.
தேவனும்பிய தீசனுடைய ஆட்சியின் முக்கியத்துவத்தை ஆராய்க.
வைதுல்யப் புறநெறி என்ருல் என்ன ? அது இங்கு எவ்வாறு பரவியது ? அதன் பெறுபேறுகளை விபரிக்க.
இலங்கை எவ்வாறு சோழசக்கராதிபத்தியத்தினுள் ஒரு மாகாண மாயிற்று என்பதை அல்லது எவ்வாறு இலங்கை அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது என்பதை விவரிக்க.
இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் 1-ம் பராக்கிரமபாகுவின் சாதனைகளை ஆராய்க,
தம்பதேனியா அல்லது கம்பளை அரசியல் முக்கியத்துவம் பெற்று எழுச்சியுறுவதற்கு வழிகோலிய காரணிகளை விவரிக்க.
இக்காலத்தில் இலங்கையின் பிறநாட்டு வியாபாரத்தைப்பற்றிச் சுருக்கமான ஒரு விபரம் தருக.
WI-ஆம் பராக்கிரமபாகுவின் அரச வாழ்க்கையினைச் சுருக்கமாக ஆராய்ந்து, அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.

Page 128
- 16 -
3. கீழே தரப்பட்டுள்ளவற்றில் தொகுதி I இலிருந்து ஒன்றையும், தொகுதி II இலிருந்து வேறென்றையும் தெரிவு செய்து, அவற் றைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்புக்கள் எழுதுக.
தொகுதி 1 தொகுதி II (i) இலம்பகர்ணர் (ii) LurrL-GóLöggrib (iii) udsnrogmpnrGoT (hy) காஞ்சிப்பல்லவர்கள்
(y) சந்திரபானு (yi) சமுத்திரகுப்தன்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை டிசெம்பர் 1969
சரித்திரம் மூன்று மணி சரித்திரம் 1 - இலங்யுைம் அதன் அயல் நாடுகளும் -
கி. மு. 250 - கி. பி. 1508 பகுதி C யிலுள்ள வினவுக்கும், A B என்ற பகுதிகள் ஒவ்வொன்
றிலிருந்து குறைந்தது இரண்டு விஞக்களையாவது தெரிவுசெய்து, எல்லாமாக ஆறு விஞக்களுக்கு விடை தருக.
பகுதி A 1. மகாசேனன் அல்லது முதலாம் காசியப்பன் ஆட்சியில் தோன்றிய முக்கிய சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் படிப்படியாகக் கூறுக. 2. ஒரு காலத்தில் இராசரட்டையின் தலைநகரமாயிருந்த அநுராத
புரத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்க. 3. யாழ்ப்பாணம் அல்லது தம் பதே னிய ஓர் இராஜதானியாக
எழுச்சியுற்றமைக்குரிய காரணங்கள் யாவை? 4. உமது அபிப்பிராயப்படி பின்வருபவர்களில் சிறந்த அரச ன்
Lystrit?
(1) முதலாம் விஜயபாகு (i), ஆரும் பராக்கிரமபாகு, காரணங்கள் கூறுக.
3.
5. அசோகனுடைய காலத்தில் இருந்த புத்தமத தூதுக்குழுக்களைப்
பற்றி எழுதுக.

6.
7.
8.
- 17 =
இந்தியாவிலும் ஆசியாவின் இதர பகுதிகளிலும் சோழர் ஆதிக் கம் பரவிய விதத்தினை விவரிக்க. (வரைபடங்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படும்.)
இலங்கை சம்பந்தமாகவுள்ள தொடர்புகளை விசேடமாகக் குறிப் பிட்டு, சீனர் அல்லது அரேபியர்களின் வியாபார முயற்சிகளை
விபரிக்க, M
சரித்திர முக்கியத்தை விளக்கி, பின்வருவனவற்றுள் எவையே னும் இரண்டினுக்குச் சிறு குறிப்புக்கள் எழுதுக.
(i) ஆரியர் (ii) கனிஷ்கன் (iii) i srrSF) (iv) பூரீ விஜய இராச்சியம். &
பகுதி e
(அ) கொடுக்கப்பட்ட இலங்கைப் படத்திற் குறித்துப் பெய ரிடுக.
(1) கதம்பநதி (i) கிரிண்டி ஒயா (ii) கோகண்ண (iv) தக்கிணதேசம் (w) ஜயகங்கை (vi) காலவாவி (wi) மகாதீர்த்தம் (vii) மஹியங்கணை (xi) மாகம்புரம்
(x) பொலன்னறுவை.
(ஆ) பின்வருவனவற்றுள் இரண்டினுக்குச் சரித்திர முக்கியக் குறிப்புக்கள் எழுதுக: (1) நாகதீபம் (i) மலையரட்டை (ii) தேவிநுவரை (iv) களனி
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்ை
டிசெம்பர் 1970
வரலாறு = மூன்று மணி
வரலாறு 1. இலங்கையும் அயல் நாடுகளும்
(கி. மு. 250 -கி. பி. 1509) எல்லாமாக ஆறு வினக்களுக்கு விடை எழுதுக.
கட்டாயமான பகுதியாகிய "இ" யைத் தெரிவு செய்வதோடு, o “goo, ''g'' என்ற ତ୍ରିଏ୭ பகுதிகளுள் ஒவ்வொன்றிலுமிருந்து குறைந்த பட்சம் இரு வினுக்களையேனும் தெரிவு செய்தல் வேண்டும்.

Page 129
9.
பகுதி که ،eq99(அ) பண்ன்ட் இலங்கையிற் குளங்கட்டிப் புகழ் பெற்ற இருவர் பெயரைத் தருக; அவருள் ஒவ்வொருவரும் அமைத்த இரு பெரிய நீர்ப்பாசன வேலைகளையும் குறிப்பிடுக. - - (ஆ) பண்டைச் சிங்கள இராச்சியங்கிளே ஆண்ட மன்னர்கள் நீர்ப்பாசன வேலைகளை அமைப்பதில் தமது சத்தியைச் செல விட்டதற்குரிய காரணம் என்ன ? சோழர் கி. பி. 893 இல் இலங்கைமீது ஏன் படையெடுத்து வந்த னர் ? சிங்கள மக்கள் தோல்வியடைந்ததற்குரிய காரணங்கள் யாவை? இப்படையெடுப்பின் விளைவுகள் யாவை ?
சிறுகுறிப்பு எழுதுக (அ) மகாவிகாரை (ஆ) இலம்பகர்ணர்கள் (இ) தலதா (ஈ) உருகுணை(ரோகண இராச்சியம்,
, கோட்டை இராச்சியம் எழுந்ததற்குரிய காரணங்கள் யாவை ?
பகுதி ، « இலங்கையிலே பெளத்த மதத்தை நிலைநாட்டுவதற்கு egyGeFrrás மன்னனும் தேவானம்பியதீசனும் ஆற்றிய தொண்டுகள் யாவை? சமுத்திர குப்தனது ஆட்சியிலே குப்தப் பேரரசு படிப்படியாக விரிவடைந்த வரலாற்றைத் தருக.
. சோழர் இந்து சமயத்துக்கும் பண்பாட்டிற்கும் ஆற்றிய தொண்
டினை விபரிக்க போத்துக்கேயரின் வருகைக்கு முன்பு முஸ்லிம்கள் இலங்கையோடு கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளை விபரிக்க.
பகுதி இ9
(அ) கொடுக்கப்பட்ட இலங்கைப் படத்திலே
(i) இராசரட்டை என வழங்கிய_பிரதேசத்தை நிழற்சாயை
யூட்டிக் காட்டுக. (R) உத்தரதேசம், பாசீனரேசம், தக்கிண தேசம், மலயதேசம்,
இவற்றைப் பெயர் குறித்துக் காட்டுக. (i) இராசரட்டையின் தலைநகரையும் உருகுணையின் தலைநகரை
யும் இணைத்த பிரதான வீதியை வரைக.
(ty) சமந்தகூடம், மகியங்கணை, களனி, மகாதித்த - இவற்றைச்
குறித்துப் பெயரிடுக. t - (ஆ) படத்திற் குறித்தவற்றுள் எவையேனும் நான்கு பற்றிச் சுருக்கமாகக் குறிப்பு எழுதுக.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை, டிசம்பர் 1971.
வரலாறு மூன்று மணி வரலாறு 1 - இலங்கையும் அயல்நாடுகளும்
(கி. மு. 250 - கி. பி. 1508) கட்டாயப்பகுதியான "இ" பகுதியிலுள்ள விஞவுக்கும். "அ" பகுதி, "ஆ" பகுதி ஆகியவற்றில் ஒவ்வொன்றிலுமிருந்து குறைந்த
பட்சம் இரு வினக்களையும் தெரிவுசெய்து, எல்லாமாக ஆறு வினுக்களுக்கு விடை எழுதுக.
பகுதி ، وهq?*
1. அநுராதபுர இராச்சியத்தின் எழுச்சிக்கு அநுகூலமாயிருந்த புவி
யியற் காரணிகளை விளக்குக,
2. தாதுசேன மன்னனது ஆட்சி வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுக. அவன் ஏன் ஒரு சிறந்த அரசனக மதிக்கப்படுகிறன் ?
3. நிஸங்க மல்லனது ஆட்சி முடியும்வரையும் பொலநறுவை எவ்
வாறு முக்கியத்துவம்பெற்று வந்தது என்பதை வரன்முறையாக விளக்குக.
4. இலங்கையிலே பொலதறுவைக் காலப்பகுதியில் இருந்த பிரதான
வரிகளும் அரசிறை வருவாய்களும் எவை ?
ag55 ۹es *
5. அசோக மன்னரது ஆட்சிக் காலத்தில், ஆசியாவிலே பெளத்தம்
எவ்வாறு பரவியது என்பதை விளக்குக. 6. குப்தர் காலப்பகுதியில் இந்தியாவிலே கவின் கலைகள் வளர்ச்சி யடைந்த வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்க. இவ் வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தவை யாவை ? 7. பல்லவர் பற்றிய ஒரு விவரணக் குறிப்பு எழுதுக. அவர்கள்
இலங்கையோடு எத்தகைய தெடர்புகளை நிலைநாட்டினர்கள் ?
8. சோழ மன்னர்களின் ஆட்சியில் நிலவிய பொருளாதார சமூக
வாழ்வின் முக்கிய அமிசங்களே விளக்குக.

Page 130
س۔ 20 ہے
பகுதி இ9 9. (அ) கொடுக்கப்பட்ட இலங்கைப் படத்திலே பின்வருவனவற்
றைக் குறித்துப் பெயரெழுதுக
(i) தம்ப கோல பட்டுன (yi) சேதியகிரி (i) தாஸ்தோட்ட (vii) praig, (ii) குத்தசல (yi) சேருவில
(ty) பஸ்யோதுன் ரட்ட (ix) பலாத்துபான (y) சிறீ ஜயவர்த்தன புரம் (x) சமந்தகூடம்
(ஆ) இவற்றுள் எவையேனும் ஐந்தினைத் தெரிந்து, அவை ஒவ் வொன்றினதும் வ்ரலாற்று முக்கியத்தைச் சுருக்கமாக விளக்குக.
கல்விப பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை டிசெம்பர் 1972
வரலாறு மூன்று மணி வரலாறு 1- இலங்யுைம் அயல் நாடுகளும்
(S. (p. 250 - S. 9. 1508)
"இ" பகுதிக்கும் (இது கட்டாயமானது), "ஆ" பகுதி ஆகி யவை ஒவ்வொன்றிலிலுமிருந்து குறைந்த பட்சம் இரு வினக் களையேனும் தெரிவு செய்து, வேறு ஐந்து வினுக்களுக்கும் விடை எழுதுக. எல்லாமாக ஆறு வினக்களுக்கு விடை யெழுதப்படல் வேண்டும்.
பகுதி * a கி. மு. 1 ஆம் நூற்றண்டிலிருந்து (கி. பி. 3 ஆம் நூற்ருண்டு வரையும் அநுராதபுர இராச்சியத்திலே விவசாயமும் வியாபார மும் விருத்தியடைந்த வரலாற்றை விபரிக்க. 2. முதலாம் (காசியப்பனுடைய அரசியல் வாழ்வைச் சுருக்கமாக விவரிக்க. அவனை ஒரு பெருமைவாய்ந்த அரசனென்று நீர் கருது கின்றீரா? உமது விடைக்கு நியாயங் கூறுக.
3. பின்வருவோருள் எவரேனும் நால்வருடைய வரலாற்று முதன்
மையை விளக்கிச் சுருக்கமான குறிப்புக்கள் எழுதுக. (அ) ஈழநாகன் (ஆ) மகிந்து IV (இ) பராக்கிரமபாகு11 (ஈ) இபின்பட்டுட்ட்ா (உ) தொட்டகமுவ சிறீ ராகுல,

4.
6,
- 2 --
கி. பி. 1055 இற்கும் 1235 இற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய (அ) மைய ஆட்சி முறையையும் (ஆ) உள்ளூர் ஆட்சி முறையையும் விவரிக்க.
பகுதி ‘‘چg,’’ அசோகச் சக்கரவர்த்தியின் அரசியல் வாழ்வை வரன்முறை யாகக் கூறி, அவர் சாதித்தவற்றையும் சுட்டிக் காட்டுக.
இந்தியாவிலே குப்தருடைய ஆட்சிக்காலத்தில் நிலவிய ஆட்சி முறை, சமூக அமைப்பு ஆகியவற்றை, மெளரியருடைய ஆட்சிக் காலத்தில் நிலவியவற்றுடன் ஒப்பிட்டு விளக்குக. ஒரு புறவுருவப் படத்தின் உதவியோடு (அ) இந்தியாவினுள் ளேயும், (ஆ) இந்தியாவுக்கு வெளியேயும் சோழ வல்லரசின் ஆள்புலப் படர்ச்சியை விவரிக்க. கீழே சொல்லப்பட்டவற்றுள் எவையேனும் நான்கைத் தெரிந்து, அவை ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகள் எழுதி அவற்றின் முதன்மையை விளக்குக.
(i) இருக்கு வேதம் (ty) சைலேந்திர இராச்சியம் (i) பெளத்தப் பேரவைகள் (y) நாலந்தா (ii) மகாயான சமய நம்பிக்கைகள் (vi) இரண்டாம் பாண்டிய வம்சம் (அ) கொடுக்கப்பட்ட இலங்கையின் புறவுருவப் படத்திற் பின் வருவனவற்றைக் குறித்துப் பெயரிடுக.
(i) கடம்பநதி (w) மினிப்பே எல (yi) கங்கசிறீபுரம் (i) திக்ா மதுல்ல (w) பதவியாக் குளம் (vili) றக்குவான (ii) நாகதீபம் (vi) GMpfs Lo (ix) தேவிநுரை
(x) சித்துல்பகுவ (ஆ) இவற்றுள் எவையேனும் ஐந்தைத் தெரிந்து அவற்றின் வரலாற்று முதன்மையைச் சுருக்கமாகக் காட்டுக.

Page 131
உசாத்துணை நூல்கள்
இராசமாணிக்கனர், டாக்டர் மா : சோழர் வரலாறு (மூன்று பாகங்கள்) சென்னை 1959 இராசமாணிக்கம், முதலியார் செ. : யாழ்ப்பாணச் சரித்திரம் - யாழ்ப் Lunroof lib, 1933 சத்தியநாதய்யர் R. - பாலசுப்பிரமணியன் D. 'இந்திய வரலாறு (2-ம் பாகம்) அண்ணுமலை, 1960
சதாசிவப்பண்டாரத்தார் T. W. பாண்டியர் வரலாறு சென்னை 1966
பிற்காலச்சோழர் வரலாறு
(3 பாகங்கள்) அண்ணுமலைநகர்
சபாதாதன், முதவியார் குல (Ed.) : யாழ்ப்பாண வைபவமாலை,
கொழும்பு 1953
சுப்பிரமணியன், ந. : இந்திய வரலாறு (முதற் பாகம்) சென்னை, 1964
இலங்கை அரசாங்க வெளியீடுகள் (தமிழாக்கம்)
உரோலின்சன் : இந்தியா - ஒரு பண்பாட்டு வரலாற்
றுச் சுருக்கம். பரணவிதான செ. : இலங்கைத் தூபி
நீலகண்ட சாஸ்திரி க. அ. தென் இந்திய வரலாறு.
Palli & Siahala sources (in English Translation)
Culavamsa (Parts I & II). Ed. W. Geiger Colmbo 1953 Dipavamsa : Ed. B. C. Law. C. H. J. Colombo 1959
Mahavamsa : Ed. W. Geiger. with Addendum by
G. C. Mendis Cclombo. 1950
Rajavali : Ed. B. Gunasekara Col mbo. l954
Modern Works : Adikaram E. W. : Early History of Ceylon (1953) Ariyapala M. B. Society in Medieval Ceylon (1953) Godakumbura C. E. t Sinhalese Literature (1955)

Hall D. G. E. : A History of South East Asia; MacMillan (1964)
Kanagasabaipillai St Tamils Eighteen Hundred years ago Madra s (1961) Liyanagamage, Amaradasa t The Decline of Polonnaruwa and the Rise of Dambadeniya (1968)
Malalasekara G. P. : Pali Literature of Ceyloa (1958) Mudiyanse, Nandasema : Mahayana Monuments in Ceylon (1967)
Navaratnaa C. S. Tamils & Ceylon, 1st. Ed. Jaffna
p. , , i Vanni and Vanniyas - Jaffna
Nicholas & Paraaavitana : A Concise History of Ceylen (1961) Nilakanta Sastri K. A. : A Histery of South India. (1958) Paranavita S. : Ceylon and Malay.ia (1966)
V) 9 ,, (Ed.) : University of Ceylon History of Ceylon
Vol. I Parts I & II (1959 & 60)
Pillai K. K. South India & Ceylon Madras (193) Raghavan M D. i Handsonne Beggars (1957) Rahula, Walpola Rev. : History of Buddhism in Ceylon (1956) Rasanayagam, Mindaliyar C. : Ancient Jaffna Madras (1926) wije sekera NR. D. : The People of Ceylon. (1951)
Note Unless otherwise mentioned all books were published
in Colombo.

Page 132
பக்கம்
27
29
39
39
54
63
80
84.
17
20
43
60
6.
167
172 14
184
91
வரி
16
17
3
31
34
32
24
29
33
9
2-ம் பாகம் - பிழைதிருத்தம்
பிழை
நாச்சநூவ
ஆறிற்ய
முத்தககர
வெற்றியீட்ய
அபகத்து
உருவிற்ண்டு
வெவ்வெறிடங்களில்
அவளை
அசிரியர்
திலங்க உருவவீடு
மாலிக்கபூரில்
சுலைக்க
1359 லிருந்து
போர் நிலவிகளும் 5-ம் பராக்கிரம பாகுவையும்
பாரகசீம்
அராயிய
l5g4ー@
திருத்தம் நாச்சதுரவ ஆற்றிய முத்தாகர வெற்றியீட்டிய அபகரித்து
உருவிற் கண்டு.
வெவ்வேறிடங்களில் அவனை
i 26řilutř
திவங்க படிவமனை மாலிக்கபூரின்
கலைக்க
1159 லிருந்து போர் என்பன. 6-ம் பராக்கிரமபாகுவையும் lurpur6F75ub
அராபிய
1284ல்ை


Page 133
THIRD EDITION (REVISED)
PANDA
* AL thor :
V.K. NÄIDARA.
Part || Anura dhapul
Part | Polonnaru Wa Later
P
Setu Noо4-alсапn —
----------
விரைவில் வெளிவருகின்றது
வரலாற்று மாணவர்
| ugöISOLui
தபொ.த. (உயர்தரம் + சாதி
+ „izjini ji)ngIäi; Eta TT=a T
சேது |ԵII6մ3:

YA ILAYI
JAFB.A. (Cey), Dip. in Ed,
ra Period -- Rs. 5-50
a and
Periods - Rs. 5-50
blishers :
Kevallai — Karav eddi.
SASqqSqSqSqSA SqqSqSqSqSqSqSqS SSeq SS SKSS S S S
கள் நெடுநாள் எதிர்பார்த்த ஈழ விளக்கம்
ாரன தரங்களுக்கான) வினுத்தாள்களும்
விடைகளும் அடங்கியது.
ம் கரவெட்டி