கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன, மொழி, எழுத்துத் தோற்ற, வளர்ச்சி நிலைகளும்

Page 1
H
-, 2,727
التي - __ ܓ |
கொழும்
TIL ET
['u = تعالیL
வங்க இளவரச விஜயன் வரலா
晶
இலங்கையிற் சிங்கள் எழுத்துத் தோற்ற, வி
(மீளா
 

H
s = -
h தமிழ்ச் பங்கம் ... . . . .
= ايات=
교『다.
: T F , uL;
i
Ral, ! # !! ... ଝୁ
7, 出*
ாறும்,
ா இன, மொழி, பளர்ச்சி நிலைகளும்
ய்வு)
யம், எம். ஏ.

Page 2

வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன, மொழி, எழுத்துத் தோற்ற, வளர்ச்சி நிலைகளும்
(மீளாய்வு)
திருமதி தனபாக்கியம் குணபாலிசிங்கம் B. A. Hons (Cay), M. A. (Madras)
மட்டக்களப்பு - 1989.

Page 3
முதற் பதிப்பு ஆணி 1989.
பதிப்புரிமை : தனபாக்கியம் குணபாலசிங்கம்.
அச்சுப் பதிப்பு : சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்,
மட்டக்களப்பு.

முன்னுரை
கலாசார முக்கோணத் திட்டத்தின்கீழ் சென்ற வருட முற்பகுதியிற் பேராசிரியர் செனக. பண்டாரநாயக்காவினதும், ஜேர்மன் தொல்லியல்ாய்வுக் குழுவினரதும் கண்காணிப்பின்கீழ் இப்பன்கடுவ எனும் இடத்தில் அகழ்வு செய்யப்பட்ட பெருங்கற் பண்பாட்டுத் தொல்லியற்களங்களிலிருந்து கிடைத்த தடயங் கள் பற்றியும், அவைதொடர்பான பிரச்சனைகள்பற்றியும் நாம் அறிய ஆவல்கொண்டு, செனக. பண்டாரநாயக்கா அவர்களுக்கு இக்களவாய்வுகள்பற்றி விசாரித்து எழுதியிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகத் தமது இப்பன்கடுவ அகழ்வாய்வுகள் பற்றி வெளிவந்த வெளியீடுகளையும், அவைதொடர்பான வேறுபல கட்டுரைகளையும் எமக்கு அனுப்பி, அவ்வகழ்வாய்வுகள் தொடர் பான பிரச்சனைகளை நாமும் படித்து, விளங்கிக்கொள்ளவேண்டு மென்று கேட்டிருந்தார். இவ்வாறு அவர் அனுப்பிய கட்டுரை கள் சிலவற்றை நாம் வாசிக்கையிற், சிங்கள இளவரசர் விஜயன் வரலாறு தொடர்பாகப் பலரும் தெரிவித்த கருத்துக்களே எம்மை அதிகம் ஈர்த்தன எனலாம். அதனைத்தொடர்ந்து நாம் மேற்கொண்ட படிப்பாய்வுகளின் பயணுகவே இச்சிறிய நூல் வெளிவரமுடிந்தது எனலாம். இதற்குப் பக்கபலமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தவரும், சில கருத்துக்களில் வேறுபட்ட வருமான மகாவித்வான். எப். எக்ஸ் சி. நடராசா அவர்களே இதனைக் கூடிய விரைவில் அச்சேற்றவும் ஊக்கமளித்தனர். எனவே இவ்விரு பேரறிஞர்களின் தன்னலமற்ற சேவைக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். மேலும், இந்நூலைச் சிறப்பிக்கும்வகையில் அணிந்துரையொன்றினை மன முவந்து வழங்கிய கல்விமான் கா. கணபதிப்பிள்ளை அவர்களுக் கும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். நாம் எதிர்பாராத வகையிற் கூடிய விரைவில் இந்நூலை அச்சேற்றித்தந்த மட்டக் களப்பு கத்தோலிக்க அச்சகத்தாருக்கும் எம் நன்றி உரித்தாகுக.
ஜி. தனபாக்கியம் 172, பிரதான வீதி,
ஏருவூர். 14-06-1989.

Page 4
அணிந்துரை
三、マ*ぶ*ズ*※est* て、々
எனக்கு ஒருமுறை இலண்டன் மாநகரில் வதிந்துவரும் உறவினரொருவர் இலண்டனை விபரித்துக் கடிதமொன்று எழுதி யிருந்தனர். இலண்டன் மாநகரம் எவ்வாறு அமையப்பெற்றுள் ளது என்பது உமக்குத் தெரியுமா ? அது அமேசன் நதி அயன மண்டல ஈரவலயக் காடுகளைப்போலுள்ளது. ஏதோ ஒரு நுழை விடங்கண்டு அடவியினுள் நுழைந்துவிடவேண்டியதுதான், வெளி யேறுவது எவ்வழியால் என்பதைக் கண்டுகொள்வது கடின மானது. அத்தனை சிக்கலான காடு இலண்டன் மர்நகரம்.
திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் எழுதித் தந்துள்ள ‘வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன, மொழி, எழுத்துத் தோற்ற வளர்ச்சி நிலை களும்' என்ற தலைப்பினைக் கொண்டுள்ள சிறிய, அரிய, தொல் லியல் வரலாற்றியல் நூல் எனது கைக்கெட்டியது. அதற்கு அணிந்துரை வழங்குமாறு நூலாசிரியர் என்னைக் கேட்டுக்கொண் டனர். நாற்பத்தேழு பக்கங்களைக் கொண்டுள்ள சிறியதொரு நூல்தான். எனினும் வாசிக்க, வாசிக்க அது தன் பொருளளவில் விரிந்துகொண்டேபோகும் இயல்பினது. பொருட்திணிவு அத் துணைச் செட்டானது. மிகவும் சிக்கலான பொருள்; கடினமான ஆய்வு. இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ள தொல்லியல் ஆய்வு, வரலாற்ருய்வு நூல்களாகிய முப்பத்தொன்பது நூல்களை நுணுகி ஆராய்ந்து, பொருள் கண்டு, அப்பொருள்களைத் தொகுத்து, வகுத்து, சீர்செய்து, மதிப்பீடுசெய்து, சிந்தனைக்கியைபுடையன வாக ஆசிரியர் தமது நூலில் முடிவுகளை ஆய்ந்து, முடிவறிந்து, ஆய்வு வியாசத்தினை அருமையாக ஆக்கித் தந்திருக்கின்றனர். அன்னுள் முயற்சி மெச்சத்தக்கது, பாராட்டுதற்குரியது.
அயன மண்டல ஈரக்காட்டில் புகுந்த ஒருவர் திக்குத் தெரியாது திணறிவிடுவதுபோல, சிலர் இந்நூலினைப் படிக்கும் பொழுது பல இடங்களில் வழி தவறித் தத்தளிக்கவேண்டிய நிலை உண்டாதலுங் கூடும்.
காரணம் - இது ஒரு ஆய்வு நூல். தொல்லியலாய்வு, வர லாற்ருய்வு ஒழுங்குகளைத் தெரிந்துகொள்ளாதவர்க்குக் கடினமான தாய் ஆரம்பத்தில் இந்நூல் இருத்தல் கூடும். எனினும் படிக்கப் படிக்க, நுணுகிப், பொருள் அமைவு, பொருள் முடிபுகளை உற்று நோக்கிக்கொண்டு போகுங்கால், பொருள் தெட்டத் தெளிவு டன் புரிந்துகொள்ளக் கூடியதாயிருக்கும். நூல்ாய்வு கருதிப்

படிப்போருக்கு இந்நூல் சிறந்த ஒரு கை நூலாகவும், Lunt L. L'u புத்தகமாகவும் அமையுமென்பதற்கு ஐயப்பாடெதுவும் இல்லை.
எடுத்துக்கொண்டபொருள்: கலிங்கத்துச் சிங்கள வம்சம், விஜயனின் தனிச்சிறப்புவாய்ந்த சிங்கள மக்களின் கலை, கலா சார வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பின்னணியாக இருந் தது - என்பது, நிலைநாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய தொல்லியலாய்வு, வரலாற்ருய்வு நூல்களில், திட்டவட்டமான, தெளிவான விஞ்ஞான ரீதியிற் பெறப்பட்ட தகவல்கள் போன்ற தகவல்களைப் பெற்று, முடிபுகளை முடிவு கட்டிக்கொள்வது எளிதன்று. இந்நூல்போன்ற ஆக்கங்களிற் பெறப்படுவது : “General Trends' - பொதுவான போக்குகள் எனப்படும் தகவல்கள் கூட “Vague' - தெளிவில்லாதனவாகவும் - "Myths' - கற்பனைக் கட்டங்களாகவும் இருப்பதுண்டு.
விஜய மன்னனின் மரபுகூட ஒரு சாராரால் ‘விஜயன் கற்பனை - Vijayan Myth ஆகக் கொள்ளப்பட்டாலும் யாதொரு தவறுமில்லை.
ஆய்வு மனப்பாங்குடனும், நிலக்கரிச் சுரங்கத்திற் புகும் நிலக்கரி அகழ்பவன் மிகுந்த ஊக்கத்துடனும் முயற்சி வேகத் துடனும் நுளைந்து திரவியத்தின”. அகழ்ந்தெடுக்கும் மனப் பாங்குடனும், இந்நூலினைப் படித்துப்பார்த்துப், பொருள் காண் டல் அத்தியாவசியமாகும். இவ்வாய்வுகளின் பிரகாரம் தத்தம் முடிவே தமக்குரியது. இது ஆய்வுச் சுதந்திரம். இந்நூலில் பொதிந்துகிடக்கும் பொருள் ஆழப் புதைந்துகிடக்கின்றது. அகழ்ந்து எடுக்கும்போதெல்லாம் பொருள் விரிவடைந்து கொண்டேபோகும் பாங்கினது. அழகிய மணிக் கோவைக்கூடாக சென்றுகொண்டிருக்கும் தங்க நாணினைப்போன்றது. ஆய்வு ஆக்கங்களின் தகவல்களாகையினுல் அவற்றினைக் கண்டு, வகைப் படுத்தி, தொகுத்து தொடர்பு கண்டுகொள்வதே ஆய்வு நூல் களின் நோக்கமாகும். இவ்வெண்ணத்தினை உளத்தில் இருத்தியே இவ்வாய்வு நூலினைப் படித்துப் பொருள்கொள்வது படிப்போரது நோக்கமாயிருத்தல் வேண்டும். படிக்கப் படிக்கப் பயன்தேறும். ஐயமில்லை.
க. கணபதிப்பிள்ளை 52, நல்லையா வீதி, B.A., F.R.G.S. மட்டக்களப்பு,
26-6-1989.

Page 5

வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன, மொழி, எழுத்துத் தோற்ற, வளர்ச்சி நிலைகளும்
(மீளாய்வு)
வங்க இளவரசர் விஜயன் இலங்கைக்குக் குடிபெயர வேண்டியிருந்த சூழ்நிலைகளை விபரிக்கின்ற மகாவம்சம், இவ ருடைய இளமைக்கால வரலாற்றை விபரிக்கும்பொழுது மகதம், லாலநாடு, வங்கம், கலிங்கம் முதலான கிழக்கிந்தியப் பிராந்தி யங்களின் வரலாற்றுப் பின்னணிகளுடன் தொடர்புபடுத்தி விபரிக்கின்றது. (மகாவம்சம்: அத். 5, 6). மேலும் மகாவம் சத்திற்கு முற்பட்ட நூலான தீபவம்சத்திலும், பிற்பட்ட நூல் களான இராஜவலிய, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் முதலான நூல்களிலும் மட்டுமன்றி, வங்கத்திலும் இளவரசர் விஜயன் வரலாற்று மரபுகள் பேணப்பட்டிருப்பதனல்,
இலங்கையிற். சிங்க னழுக்களின் உருவாக்கம் ஏற்பட்டு ஏறக் குறைய எனும் உண்மை நிறுவப்படத்தக்கதாகும். எனினும் வரலாற்ருசிரியர் ஜி. சி. மெண்டிஸ் காலம் முதலாக இளவரசர் விஜயன் கதை அறிவிய லடிப்படை ஆய்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனைக் கதை என்றும், அதனல் அதனை இலங்கை வரலாற்றிலிருந்து ஒதுக்கி விட வேணடும் என்ற கருத்துப் பொதுவாக வலுப்பெற லாயிற்று. ஆனல் வேறு சிலர், குறிப்பாக எ. எச். மிரான்டோ போன்ற ஆசிரியர்கள் ‘சிங்கள' என்ற பதத்திற்குக் 'கறுவா" எனப்பொருள்கொண்டு, சிங்கள இன மக்கள் இராவணன் காலம் முதலாகவே இலங்கையில் வாழ்ந்துவருகின்றனர் என வாதிப் பர். உண்மையிற் 'சிங்கள' எனும் பதம் சிங்ககாலன் (சிங்கத் தைக் கொன்றவன்) எனும் பதத்தினின்றும் சுருக்கம் பெற்ற பதமாகும். இப்பெயர் சிங்கத்தினைக்கொன்றவன் எனப் புக ழெடுத்த வீரன் சிங்கபாகுவின் பரம்பரையை நினைவுகூருமுக மாக எழுந்த பெயராகும். சிங்கத்தினைக் கொன்றவன் புகழைச் சிலப்பதிகாரமும்

Page 6
“சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து"
(முன்னுரை 1, 47) என விதந்தோதுகின்றது; அதனுற் சிங்கபாகுவின் புகழ் பல நூற்ருண்டுகளாகத் தமிழகத்திலும் பறைசாற்றியிருந்தது என் பது தெளிவாகின்றது. எனவே இலங்கையில் இளவரசர் விஜய னின் வீரமரபின் வரலாற்றினைத் தவிர்த்துவிட்டாற் சிங்கள இன மக்களின் தோற்றத்தினை ஆய்வதென்பது முடியாத காரியமாகும்.
தென்கிழக்காசிய நாடுகளில் வேறெந்த நாடும் பெற்றிராத வரலாற்றுத் தகவல்களை இலங்கை மக்களுக்குக், குறிப்பாகச் சிங்கள இன மக்களுக்கு எழுதிவைத்தவர் மகாநாமன் எனும் பெளத்த தேரராவர். இவர் தமது மக்களின் தோற்ற வரலாறு களை வரலாற்று நெறியுடன் தொடுத்துக்காட்டும் முயற்சியில் மட்டுமன்றித் , தமது சிங்கள இனத்தின் வம்சத்தை மகாவம்சம் என்று பெருமைப்படக்கூடிய இனமாகக் காட்டுவதிலும் அக்கறை யுடையவராக இருந்திருக்கிருர் என்பதனை மகாவம்சத்தைப் படிப்போர் எவரும் மறுப்பதற்கில்லை. லால நாட்டு மக்களைத் துன்புறுத்திய சிங்கத்தினைக் கொல்வதனைச் சந்திரிய தருமமாகக் கொண்டு, சிங்கத்தினைக்கொன்ற சிங்கபாகுவையே, இலங்கை யில் விஜயனும், தோழர்களும் நினைவுகூர்ந்தார்கள். எனவே இலங்கையிற் சிங்கள இன மக்களின் வரலாற்றினைத் தோற்று வித்தவன் சிங்கபாகுவின் மூத்த மகஞன விஜயனே ஆவன். எனவே இளவரசர் விஜயனின் வரலாற்றை இலங்கை வரலாற் றேடுகளில் இருந்து நீக்க முயன்ருேமானல், சிங்கள இன மக் களின் வரலாறு சிரச்சேதம் செய்யப்பட்ட ஒரு வரலாருகவே புலப்படும் என்பதிற் சந்தேகமில்லை. எனவே ஒரு ஆய்வாளர்க் குரிய கண்ணியம், கடமையுணர்வு என்ற நேரியவழி நின்று உண்மையை நிறுவக்கூடிய தகவல்களை இச்சிறிய நூலிற் தொகுத் தளிக்க முயன்றுள்ளேன்.
லால நாட்டரசன் சிங்கபாகுவின் மகன் விஜயன் வழித்
தோன்றல்களுரதிய ழக்கள், இலங்கையில் ஏறக் குறைய 醬 ஆஃடுகளாகக் காலந்தோறும் பேணிய இனத் தனித்துவமான சில மரபுகளும் உள. இச் சமு
தாய மரபுகளின்படிச் சிங்கள மக்கள் தாம் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தாம் பேசும் மொழி ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும், தமது இனத்திற்கென ஒரு கோட்பாட்டை ஆங்காங்கே நிறுவமுற்பட்டுள்ளனர். இச்சமு தாய வழிவந்த மரபுகளை வரலாற்றுக் கூறுகளில் ஒன்முக நாம் கருதுவதனல், முதலில் இவ்மரபுகளை ஏற்றுக்கொண்டு, எவ்
2

வளவு தூரம் மரபுவழிவந்த தகவலில் உண்மை பொதிந்திருக் கின்றது என்பதனையும் ஆராய்வாம். -
இளவரசர் விஜயன் வரலாற்றுடன் தொடர்பான வர லாற்றெச்சங்களை நாம் ஆராய்ந்தவிடத்து, விஜயன் வரலாற் றுடன் தொடர்புடைய இனங்கள் இலங்கையில் மட்டுமன்றிக் கிழக்கிந்தியப் பிராந்தியங்களிலும் கூட, ஓரினத்தின் வழி நின்று பேணப்பட்ட தூய இரத்த உறவுகளை வற்புறுத்தக்கூடிய சான்று களைக் கொண்டிருக்கவில்லை எனலாம். இலங்கைக்கு இளவரசர் விஜயனும், தோழர்களும் வருகைதந்த நாள் முதலாக, இயக் கர், பாண்டியர் (திராவிடர்) நாகர் என்ற சுதேச இனங்களின் கலப்பற்றமுறையிற், தனித்துவமான சிங்கள இனத்தை உரு வாக்கமுடியவில்லை என்பதனை வரலாற்று நூல்களாகிய மகா வம்சம், சூளவம்சம் என்பன மட்டுமன்றிப் பிற மானிடவியல், மொழியியல் முதலான கலாசாரக் கூறுகளும் உறுதிப்படுத்தி யுள்ளன. மேலும் விஜயன் மூதாதையர் பேணியதாகக் கருதப் படுகின்ற ஆரியவிணக்கூறுகள், விஜயன் மூதாதையர்கள் வாழ்ந்த கிழக்கிந்தியப் பிராந்தியங்களான மகதம், கலிங்கம், வங்கம், லால முதலான பகுதிகளிற் கி. மு. ம்ே 7ம் நூற்ருண்டுகளில், எவ்வகையிற் கிழக்கிந்தியச் சுதேசக் குடிகளிடையே தாக்கங்களை ஏற்படுத்தின என்பதனையும் நாம் ஆராயவேண்டியவர்களாக இருக்கின்ருேம்.
மகாவம்சம் தருகின்ற புவியியற் பின்னணிகளின்படி வங்க அரசன், கலிங்கத்து இளவரசியைத் திருமணம் புரிந்து பெற்ற பெண் குழந்தை மிகுந்த அழகி, காமவெறிகொண்டவள். மேலும் சோதிடர்கள் "அவள் மிருக ராஜனைக் கூடுவாள்' எனக் கூறிய தஞல் அவமானம் தாங்கமுடியாமல் அவளை வைத்துக்கொண் டிருக்கையில், அவ்விளவரசி தன்னிச்சையான வாழ்வில் நாட்ட முடையவளாக வீட்டைவிட்டு வெளியேறி, மகத நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த வாணிபக் குழுவுடன் சேர்ந்து சென்ருள். செல்லும் வழியில் லால நாட்டிற் சிங்கமொன்று அக்கூட்டத் தைத் தாங்கியபொழுது, வாணிபக் குழுவினர் அங்குமிங்குமாக ஓடிவிட்டனர். ஆனல் இளவரசி தன் சோதிடத்தை நினைவு கூர்ந்து, அச்சிங்கத்தினிடம் அன்புகாட்டித் தங்கியிருந்து இரட் டைக் குழந்தைகளைப் பெற்ருள். ஒன்று ஆண். ஒன்று பெண். அவள் அவர்களுக்குச் சிங்கபாஹ", சிங்கசீவலி எனப் பெயர் வைத்தாள். பிள்ளைகள் பராயமடைந்த சமயம், தாய்மகனுக்குச் சந்தேகம் தெளியவைத்து, தமது வரலாற்றைக் கூறினுள். அதனைக்கேட்டு அங்கிருக்க விரும்பாத மகன் தாயையும், சகோ தரியையும் எடுத்துக்கொண்டு குகையிலிருந்து வெளியேறி வருகை
3

Page 7
யில் வங்கநாட்டரசனின் படைத் தலைவனும் அவளது மாமனு மாகிய உறவினன் இவர்களைச் சந்திக்கநேரிட்டது. வங்க நாட்டுத் தலைவன் அவர்களை நகருக்கு அழைத்துச் சென்று, இளவரசியைத் திருமணம் செய்துகொண்டான். இளவரசியையும், பிள்ளைகளை யும் காணுத சிங்கம் துயரினல் லால நாட்டு மக்களைத் துன் புறுத்தியது. அதனுற் சிங்கபாகு தாய் தடுக்கவும், அதனைக் கேளாது சிங்கத்தைக்கொன்று மூவாயிரம் காசுகளைப் பரிசாகப் பெற்முன். பின் சிங்கபாகு தன் தாயின் கணவனிடம் அரசாட்சி உரிமையைக் கையளித்துவிட்டுச் சிங்கசீவலியுடன் தான் பிறந்த நாடான லால நாட்டிற்குச் சென்று "சிங்கபுரம்” எனும் நகரை ஏற்படுத்தி ஆட்சிபுரிந்துவந்தான். சிங்கபாகுவிற்கும் சிங்கசீவலிக் கும் பிறந்த (மத்திய தேசத்திற்குக் கிழக்கிலும், தெற்கிலும் தூய்மையான சத்திரிய இரத்தத்தைப் பேணுவதற்காகச் சகோ தரன், சகோதரி விவாகங்கள் நடந்ததாகச் ஸ்மிருதி நூல்கள் மட்டுமன்றி, ஜாதகக் கதைகளிலும் குறிப்புகள் உள. மகதத்தி லும், அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும், சிறப்பாகச் சாக்கியர்களும் இத்தகைய விவாகமுறைகளை வைத்திருந்தனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.) மூத்த புதல்வன் விஜயன் ஒழுக்கம் தவறியவனுக இருந்தான். அதனல் மன்னன் மக்கள் கோரிக்கைக்கிணங்கி, விஜயனையும் அவனது எழுநூறு தோழர்களையும், மனைவி, மக் களையும் தனித்தனிக் கப்பல்களில் ஏற்றிக் கடலிற் போகவிட் டான். இவ்வாறு தனித்தனிக் கப்பல்களில் அனுப்பப்பட்ட பெண் கள், குழந்தைகள், ஆண்கள் ஆகியோர் தனித்தனிக் கரைகளிற் கரையேறி, அவ்வவ்விடங்களிலே வசித்துவந்தனர். குழந்தைகள் நக்கதீபத்திலும், பெண்கள் மஹிளதிபத்திலும் கரையேறினர். ஆனல் விஜயன் முதலிற் சூர்பாரகம் என்ற இடத்திற் கரை யேறினன். ஆனல் அங்கும் அவன் கூட்டாளிகளின் கொடுஞ் செயல்களால் அபாயம் நேரிடும் என்று கருதியவனப் மீண்டும் கப்பலேறி இலங்கைத்தீவிற் தம்பபன்ன என்ற இடத்திற் கரை யேறினன். (மகாவம்சம். அத். 5,6,7. தீபவம்சம். அத். 9.)
கிகட - மகதம்
காரண காரியத் தொடர்பாக மேலே விபரிக்கப்பட்ட புவியியற் குறிப்பின்படி மகதமும் விஜயன் வரலாற்றுடன் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அரசாக அவதானிக்கப் பட்டுள்ளது. எனவே முதலில் மகதத்தின் சமுதாய அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை ஆராய்தல் அவசியமாகின்றது. வட மேற்கிந்தியாவில் இந்து வெளிப்பிரதேசத்தை முதல் ஆரியப்
4

படையெடுப்பாளர்கள் அணுகியபொழுது, அவர்களுக்கு இந்து வெளிநகர மக்களான தாசர் (தஸ்யு) களிடமிருந்து அதிக எதிர்ப்பு இருந்தது. அதனற் கரிய நிறமும், தட்டைமுக்கும், தெளிவற்ற பேச்சினையும், இலிங்க வழிபாட்டினையுமுடைய தாசர் களின் பாதுகாப்பரண்களையும், மந்தைகளையும், நகரங்களையும், கோட்டைகளையும் கடுமையாகப் போரிட்டே ஆரியர்களால் அழிக்கமுடிந்தது என்று இருக்குவேதம் கூறும். எனினும் தாசர் களின் தலைவர்களில் ஒருவன் ஆரியரின் அதிகாரத்தை ஏற்று, ஆரியருடைய கலாசாரங்களைப் பேணிப் பிராமணர்களை ஆதரித்த வணுகக் காணப்படுகின்றன். இத்தாசர்களையே தொல்லியலாய்வு கள் தென்னுேக்கி லோதால், கேம்பே குடாக் கரையோரமாகத் தென்னேக்கிப் பரவிய திராவிட இனம் என இனம் காட்டி யுள்ளன. ஆரியரின் அடுத்த முக்கிய எதிரிகளாகப் "பணிஸ்" எனும் வர்த்தகர்கள் காணப்படுகின்றனர். இவர்களை மிக்க செல்வந்தமுடையவர்களாகவும், வேதப் புரோகிதர்களை ஆதரிக்க மறுத்தவர்களாகவும், ஆரியரின் மந்தைகளைக் களவாடுபவர்களாக வும் இருக்குவேதம் கூறுமிடத்தும், ஆரியர்கள் தாசர்களைத் துவேசித்து நாசம் செய்ததுபோற், பணிஸ்களின் இருப்பிடங் తాడిగా அழிக்கவிரும்பவில்லை. அதன் காரணமாகக் காலப்போக்கில் 'பணிஸ்" என்ற பதத்திலிருந்தே சமஸ்கிருதத்தில் பல சொற் கள் மருவி இடம் பெறலை நாம் அவதானிக்கலாம். "வணிக் "வணிய" (வியாபாரி) பண்ய (வியாபாரப் பண்டங்கள்) பன (காசு) முதலான சொற்கள் ‘பணிஸ்" எனும் பதத்திலிருந்தே மருவித் தோன்றியவையாம். இவர்கள் தவிர, இந்துவெளியில் வாழ்ந்தோரில் இயக்கர், யாதுதானர், இராட்சதர் முதலா னேரும் இடம்பெறுவர்.
மேலும் இருக்குவேதகாலத்திலேயே (கி. மு. 1500) கங் கைக்குத் தெற்கே மகதத்தில் ஒரு சுதேச அரசு ஆட்சியிலிருந்தது என்பதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது. இருக்குவேதம் கிகட (Kikata) மக்கள் பிரமகந்த என்பவரின் தலைமையிற் பாட கர்களுக்கு எதிரிகளாக (கவிதாசக்தி மிக்கவர்களாக) இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது. (இருக். II. 53.14). யாஸ்கரை அதிகார பூர்வமாகக்கொண்டு சிம்மர் (Zimmer) கிகடவை, மகதமாக அடையாளம் காண்பதோடு, மகதர்களைச் சுதேசக் குடிகளாகவே இனம் காண்பர். வெபர் கிகடவை மகதம் எனக்கொண்டாலும், இங்கு வாழ்ந்த மக்களை ஆரியக்கிளைக்குடிகளாகக்கொள்வர். உண்மையில் இருக்குவேத ஆரியர்கள் "பணிஸ்" போன்ற செல் வந்தக்குடிகளின் வர்த்தக முயற்சிகளை விபரிக்க விரும்பாமை போலவே, பிற்காலத்திற் பல சாம்ராச்சியங்களின் களமாகவும், வாணிபத்தின் களமாகவும் மகதத்தை உருவாக்கிய ஆதி மகதர்
5

Page 8
களின் உயரிய நிலைகளை இருக்குவேத ஆரியர்கள் குறிப்பிட விரும்பவில்லை எனினும் "மகத" என்ற பதம் முதலிற் பாடகர்" எனும் பொருளையும், பின் வர்த்தகர்" என்ற பொருளையும் உணர்த்திற்று. இத்தகைய பதப்பொருள் வளர்ச்சி மகதர்களின் தொழிற்பிரிவினரால் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி நிலைகளைக் காட்டுகின்றதெனலாம். மகதம் வாணிபத்திற்குரிய துறைமுகங் களையண்டியிராவிடினும், உள்நாட்டு வாணிபக் குழுவினர் சந் திக்கின்ற கேந்திர நிலையமாக விளங்கியதனலும், செம்பு, இரும்பு முதலான மூலப் பொருட்களைச் சிங்பும் (Singhbhum) மன்பும் (Manbhum) g5mréñ)Lqub (Dhalbhum) 5pffhom)nT, G35fmrl—g5ä 4rf (uAoğ5 லான அயற்பிராந்தியங்களிற் பெற்றிருந்ததனலும் வாணிப நிலையமாக வளரமுடிந்தது. அதனுற் கி. மு. 7ம் நூற்ருண்டின் இறுதிக்கு முன்னரே மகதத்தில் நாணயங்கள் பாவனையிலிருந்த தாக அவதானிக்கப்பட்டுள்ளது. சில பஞ்ச்மார்க் காசுகள் இந்து வெளிக்கலாசார மக்களான ‘பணிஸ்' இன மக்கள் பாவித்த முத்திரைகளை நிகர்த்தனவாம்.
மேலும் கிராடர்கள், கீகடர்கள், சண்டாளர்கள், பர்ணு கர்கள், சிம்யுஸ்கள் முதலான சுதேசக்குடியினரே கங்கைச் சம வெளியில் வாழ்ந்தவர்கள் என்றும், இவர்களே ஆரியரைக் கிழக் குத், தெற்குப் பிரதேசங்களை நோக்கிப் பரவவிடாமற் சண்டை. யிட்டுத் தடுத்துவந்தனர் எனவும் தெரிகின்றது. மேலும் சதபத பிரமாணம் மகதத்தில் இருந்த அசுரக்குடிகளைப்பற்றிக் குறிப்பிடு கின்றது. புராணங்களும் கங்கையை அண்டி வாழ்ந்த இயக்கர், இராட்சதர், நாகர் முதலான சுதேசக் குடிகளைப்பற்றிக் குறிப் பிடுகின்றன. அதனுற்ருன் சுதேசக் குடிகள் வாழ்ந்த இப்பகுதி களை ஆரியர்கள் தரக்குறைவானவையாகக் காட்ட முயன்றனர் எனத்தெரிகின்றது. இங்கு, அதர்வவேதம் (V. 22.14) மகதம், அங்கம் முதலான பிரதேசங்களைக் காய்ச்சல் முதலான நோய் கள் போய்ச்சேரவேண்டுமென்று மந்திரிப்பதை சீர்தூக்கி நோக்க லாம். மேலும் அதர்வவேதம் விராட்டிய சூக்தத்தில் (XV. 2. 1-4) மகதவாசிகளை 'விராட்டியர்கள்" என்பதோடு, தாழ்ந்தகுடியினர் என்றும், தெளிவற்ற பேச்சையுடையவர்கள் என்பதனலும், ஆரியரல்லாத இவர்களின் தனித்துவமான இயல்புகளையே குறிப் பிடுகின்றது என்பது தெளிவாகின்றது. மேலும் இதனை வலி யுறுத்தும் வகையில் யகுர்வேதம் புருஷமேதயாகத்திற்குப் பலி யிடுபவர்கள் வரிசையில் மகதர்களையும் சேர்த்திருப்பதோடு, மக தர்களைப் பாடகர்கள் என்றும் கூறும். பிற்காலத்திற் தர்ம சூத் திரங்கள் விராட்டியரைச் சாதிக்கலப்புடையவர்கன் என்றும், இனத்தனித்துவமான உடையணிந்தவர்கள் என்றும் குறிப்பிடு கின்றன. பெளதாயன தர்மசூத்திரம் அவந்தி, அங்கம், மகதம்,
6

சுராஷ்டிரம், தட்சிணுபதம், உபாவிருட், சிந்து, செளவீர முத
லான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலப்புச்சாதியினர் என்ப
தோடு, அருட்டஸ் (Artass) காரஸ்கராஸ் (Karaskaras) புண்ட் p6iv (Pundras) GaleF6Tradiatow (Sauviras) Laurit sprGaraiv (Pranunas)
வங்கம், கலிங்கம் முதலான பகுதிகளைத் தரிசித்துவரும் ஆரியர்
களுக்கு வழங்கவிருக்கும் சன்மானங்கள் பற்றியும் குறிப்பிடுகின்
றது. இக்குறிப்பிலிருந்து இப்பகுதிகளில் முதலில் ஆரியக்குடிகள் குடியேறவிரும்பவில்லை என்பதும் தெளிவாகின்றது.
அங்கம், வங்கம் முதலிய நாடுகளின் வரலாற்றை ஆரா யும்பொழுது, அங்கநாட்டினர் பற்றிய குறிப்புகள் இருக்கு வேதத் தில் இடம்பெறவில்லை. ஆனல் அதர்வவேதம் (V. 22) மதத்துடன் இணைத்து அங்கத்தைக் குறிப்பிட்டுள்ள பகுதி மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கத்தைப்பற்றி ஐதரேய ஆரண்யகம் (I. 1. 1) குறுப்பிடுகையில் வங்கம், வகதர், சேரர் என்போர் பறவை களைப் போன்றவர்கள் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு மகதமே வகதர் எனத் திரிபுற்றது எனத் தெரிகின்றது. மேலும் ஆரிய ரல்லாத இப்பகுதி மக்களை ஏளனப்படுத்தும் வகையிலே பறவைக் கீச்சலை நிகர்த்த பேச்சுடையவர்கள் எனக் குறிப்பிட்டனர் எனத் தெரிகின்றது. இங்கு வங்கர் என்றது கிழக்கு வங்கத்தில் தாம் ரலிப்தித் துறையையண்டி வாழ்ந்த மக்களேயாம். வட வங்கத் திற் புரண்ட்வர்த்தன என்ற தலைநகரை அமைத்து வாழ்ந்த மக்களே புண்ட்ருஸ் எனப்பட்டனர். மகாபாரதம் புண்ட்ருஸ் என்ற இனத்தினரை வங்கத்திலும், பீகாரிலும் வாழ்பவர்களாகக் கூறும். மேலே குறிப்பிட்ட வரலாறுகளின்படி இப்பகுதி மக்கள் ஆரியரல்லாக் குடிகள் என்பது தெளிவாகின்றது. இவர்களுள் மகதத்தில் வாழ்ந்த விராட்டியரை வெபர் (Weber) முதலா னேர் ஆரியக்குடிகள் என்றும், மற்றும் ரொத் (Roth), விட்னி (Whitney), Leiyib Lail (Bloom field), Faitlit (Chanda) முதலானேர் சுதேசக்குடிகள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற்கால வேத நூல்களின் காலத்தில் (கி. மு. 900) கிழக்குப் பகுதிகளை நோக்கித் தம் கலாசாரத்தைப் பரப்ப ஆரி யர்கள் எடுத்த முயற்சிகள் சிறிது கைகூடினவாகக் காணப்படு கின்றன. சிறப்பாக இதிகாசகாலங்களில் ஆரியர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவ எடுத்த முயற்சியின் பயனுக விதேகம், கோசலம், காசி (வாரணுசி) முதலான பகுதிகள் ஆரிய வர்த்தத்திற்குரிய பகுதிகளாக மாறின. ஏற்கனவே சதபத பிரா மணம் (1. 4, 1) இந்தக் கலாசார ஊடுருவலைப்பற்றிப் பின்வரு மாறு குறிப்பிடுகின்றது. ‘ஒருமுறை அக்கினிக் கடவுள் கிழக்கே
7

Page 9
யுள்ள பூமியை எரித்துக்கொண்டு சதாநீர (கந்தக் - Gandak) ஆற்றைக் கடந்து விதேகம்வரை சென்றபொழுது, வடமேற் கிந்தியாவிற் சரசுவதி ஆற்றுக்கரையிலிருந்த விதேகமாதவன் அக்கினியைத் தொடர்ந்து சென்றன். இதற்குமுன்னர் அக்கினி கிழக்குப்பகுதியைத் தூய்மைப்படுத்தாமையால் ஆரியர் எவரும் சதாநீர ஆற்றைக்கடக்கவில்லை. பின் அக்கினியின் கட்டளைப் படியே விதேகமாதவனல், விதேக அரசு (சதாநீர ஆற்றுக்கப் பால்) உருவாக்கப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது”. இந் நிகழ்ச்சிக்குப் பின்னரே மனுதர்மசாத்திரம் வடக்கே இமாலயத் திற்கும், தெற்கே விந்தியத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், மேற்கிலும், கிழக்கிலும் சமுத்திரங்களை எல்லையாகக்கொண்ட பகுதி ஆரியவர்த்தம் என்று குறிப்பிட்டது எனலாம். எனினும், இது கிழக்குப் பிராந்தியத்தின் தென்னெல்லையைப் பொறுத்த வரையில் மகதத்துடன் நின்றுவிட்டதெனலாம். இது தொடர் பாக ஐதரேய யிராமணம் (VI, 18) ஆரியாண்டத்திற்கு அப் பால் ஆந்திரர்கள், சபரர்கள், புலிந்தர்கள், புண்ட்ரர்கள் முத லானேர் வாழ்வதாகக் குறிப்பிடுவதை இங்கு நினைவு கூரத்தக் கது. எனவே இத்தகைய இன அடிப்படையிலான புவியியற் குறிப்புகளிலிருந்து எமக்குப் புலணுவது என்னவெனில் இருக்கு வேத ஆரியர்கள் முதலிற் குடியேறிய வடமேற்கிந்தியப் பிர தேசங்கள் முக்கியத்துவத்தையிழந்து நிற்கப், பிற்கால வேத காலத்திற் கங்கை, யமுனு ஆற்றுச் சமவெளிகளையண்டிக் குரு சேத்திரம், பாஞ்சாலம், மத்திய பிரதேசம் எனும் பகுதிகள் ஆரிய கலாசாரங்களைப் பேணுகின்ற முக்கிய களங்களாக மாறின என்பதும், இவற்றைத் தொடர்ந்து கிழக்கே கோசல, காசி, விதேகம் எனும் பகுதிகள் ஆரிய கலாசாரப் பகுதிகளாக எழுச்சி பெற்றுக்கொண்டிருந்தன என்பதும், இவற்றுக்குத் தெற்கே மகதம், அங்கம் கலிங்கம், வங்கம் எனும் பகுதிகள் ஆரிய கலாசாரம் புகமுடியாத பகுதிகளாக இருந்தன என்பதுமாம்
எனினும் ஆரியவர்த்தத்தின் தென்னெல்லையிலிருந்த மகதத் தின் நிலைமைகள் சிறிது வேறுபட்டனவாக மாறிக்கொண்டிருப்ப தையும் காலப்போக்கில் அவதானிக்கக்கூடியதாக இருந்தன. புராணங்கள், மகாபாரதம் முதலான நூல்களின் தகவற்படி குருபரம்பரையில் வந்த வசு என்பவர் சேடி (Chedi - இன்றைய Bundelkhand உட்பட்டபகுதி) பிரதேசத்தில் வாழ்ந்த யாதவர் களை வென்று, அங்கு தன் அரசினை நிறுவினுன் என்றும், பின் இவன் மகனகிய பிருகத்ரதன் மகதத்தில் ஆரிய அரச பரம் பரயைத் தோற்றுவித்தான் என்றும் புலஞகின்றது. இவர்களுள் பிருகத்ரதனின் மகன் ஜராசந்தன் மகாபாரத யுத்தத்திற்குமுன்
8

மகத்திலிருந்து ஆட்சி புரிந்தனன் எனத் தெரிகின்றது. இவ்வாறு வசு பரம்பரையில் வந்த பிருகத்ரதர்கள் ஏறக்குறையப் பதினறு அரசுகளைத் தொடர்ச்சியாக மகதத்தில் வைத்திருந்தனர் என்றும், பின் புத்தர் காலத்தில் (கி. மு. 600) பிரகத்ரதர் அரச பரம் பரை ஆட்சி முடிவுற்றதென்றும் தெரிகின்றது. எனவே பிருகத் ரதரின் ஆட்சியில் மகதம் ஏறக்குறைய மூன்று நூற்ருண்டு காலத்திற்குள் (கி. மு. 900-கி. மு. 600) ஆரிய கலாசாரத் திற்குட்பட்ட களமாக மாற்றமடைந்துகொண்டிருந்தது எனிற் தவருகாது. −
ஆனற் புத்தருடைய காலத்தில் மகதத்தின் கலாசாரக் கலப்பு நிலைகளிற் பெருமாற்றங்கள் ஏற்படுவதையும் நாம் அவ தானிக்கலாம். இக்காலத்தில் சதாநீர ஆற்றுக்கப்பால் கிழக்கே விதேகமாதவனல் உருவாக்கப்பட்டுப், பின் ஜனகருடைய (சீதை யின் தந்தையின்) காலத்திற் புகழ்பெற்று விளங்கியிருந்ததுமான விதேக அரசு (ஆரிய அரசு) நிலைகுலைந்திருந்தது. அதனலோ என்னவோ விதேகத்திற்குத் தெற்கே அமைந்திருந்த தான மகதத்திலும் ஆரிய அரசுகள் நிலைகுலையப், பிம்பிசாரன் (C. கி மு. 548-494) அஜாதசத்துரு (கி. மு. 494 - 462) முதலான நாக அரசுகள் (சிலர் ஹர்யங்க ஹrக்க வம்சத்தவர் என்பர்) சுதேச அரசுகளை ஏற்படுத்தி, மகத சாம்ராச்சியத்தைக் கட்டி எழுப்பு. கின்ற நிலைமைகளை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. எனவே புத்தருடைய காலத்திற் புதிய நகரங்களான கோசல. மகதம், வத்ச (கெளசாம்பி - கோசலும்) அவந்தி (மால்வ) முதலான நகரங்களே செழித்து வளரலாயின. இவற்றுள் கோசல, மகதம் என்ற இரு நகரங்களுமே மகாவீரர், புத்தர் ஆகியோர் சமயத் தொண்டினை வரவேற்ற களங்கள் ஆவன. அதாவது சுதேசக் குடிகளான நாகர், இயக்கர், லிச்சவியர், கோளியர் முதலான சுதேசக் குடிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளே, வைதீக மதத் திற்கெதிரான பெளத்த, ஜைன மதங்களை முதலில் வரவேற் றிருந்தன. புத்தருடைய காலத்திற்குமுன் இராஜ்கிருகத்திற் (Mania Math) கோவில்கள் நாக வழிபாட்டுடன் தொடர் புடையதாகவே இருந்தன. சுதேச மக்களாகிய இயக்கர், நாகர் களின் வழிபாட்டின் செல்வாக்கினைப் பெளத்த, ஜைன மத சிற்பக் கலைகளில் வடிக்கப்பெற்ற இயக்கர், நாகர், பூதகணங் கள் ஆகியவற்றின் சிற்பங்களிலிருந்தும் நாம் உணர்ந்துகொள்ள லாம். மேலும் இப் பின்னணிகளை வலியுறுத்தும்வகையில், இலங் கையிற் புத்தர், இயக்கர், நாகர் முதலான சுதேசக்குடிகளை முதலில் மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சிகளும் அமைந்துள் ளன. சாக்கியர் இனம் கிழக்கிந்தியாவில் நேபாளப் பகுதியைச் சார்ந்த மொங்கோலியர் இனத்திலிருந்து உருவாகிய கிளைக்குடி
9

Page 10
என அறிஞர்கள் இனம் காண்பர். சாக்கியர்கள் இந்தோ-ஆரிய மொழியிலிருந்து மருவி வளர்ந்த பாலி மொழியைப் பேசித் தம்மை ஆரியர்கள் என்று கூறிக்கொண்டாலும், இவர்களிடையே ஆரியர் பேணிய பிராமணர் போன்ற சாதிப் பாகுபாடுகளோ அல்லது வைதீகக்கிரியை வழிபாடுகளோ இருக்கவில்லை. இவர்கள் சத்திரிய மரப்புப்படி ஆயுதந்தரித்தவராயினும், விவசாயம் போன்ற பிறதொழில்களையும் செய்தனர். புத்தருடைய திரிபிடகக் கோட்பாடுகள் முதலிற் பாலி மொழியிலேயே எழுதப்ட்ட்டிருந் தன. கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலத்திலேதான் சிஷ்டரின் மொழியான சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இத் தகைய காரணிகளினுற்ருன் வேதமரபுகளிற்கு அடிபணியாத புத்தருடைய மதம், சுதேச வழிபாடுகளையும் காலப்போக்கிற் பிரதிபலிப்பதாக வரலாயிற்று எனலாம்.
இவ்விதமே மகதம் புத்தர் காலத்திற் பெரும் சாம்ராச்சிய மாக வளரலாயிற்று. நாகவம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரனும், அஜாதசத் துருவுமே தம் உறுதியான கோட்பாட்டினல் இந்திய வரலாற்றில் முதன்முறையாக விசாலமான நிலப்பரப்பைத் தம் மாதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் ஆவர். அதுமட்டுமன்றி இந்து நதிக்கரையின் வடக்கேயமைந்திருந்த காந்தார நாட்டுடன் வைத் திருந்த இராஜதந்திர உறவுகளினல், மகதத்தின் இளைஞர்கள் கல்விகற்பதற்காக காந்தார நாட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். மற்று, இன்னும் கிழக்கே ஆரிய கலாசாரம் புகாத அங்கத்தை யும் பிம்பிசாரன் தன்னுட்சிக்குட்படுத்தியதனுல், மகதத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாயிற்று. அங்கத்தின் தலை நகரான சம்பா (Campa) ஏற்கனவே வர்த்தகத் துறையாகத் திகழ்ந்திருந்தது. சம்பா வடக்கிந்தியாவையும், கிழக்கிந்தியாவை யும் இணைக்கின்ற ஆற்றுக்கரைத் துறைமுகமானபடியினற், தென் னிந்தியந் துறைகளிலிருந்து தாம்ரலிப்தித் (தம்லுக்) துறைக்கு வந்திறங்கிய முத்துக்களையும், வாசனைத் திரவியங்களையும் கங்கை யாற்று வழியாக வடக்கே காந்தாராவரை எடுத்துச்சென்றது. மேலும் அஜரதசத்துரு தன் அரசின் எல்லையை வங்கத்தின் எல்லைவரை விஸ்தரித்ததனல், மகதம் மிகவும் சக்திவாய்ந்த அரசாக விளங்கிற்று. தொடர்ந்துவந்த நூற்ருண்டுகளில், வட மேற்கிந்தியப் பகுதிகள் தவிர்ந்த வட இந்திய மாநிலங்களான இராஜஸ்தான், சிந்து, 'பஞ்சாப் பகுதிகளும், மற்றும் கங்கைச் சமவெளியிலமைந்த மற்றச் சிற்றரசுகள் யாவும் மகதத்தின் கீழிருந்தன. நாகவம்சத்து அரசர்களுக்குப்பின் மகதத்தின் எல்லை களை மேலும் விஸ்தரித்தவன் மகாபத்மநந்தன் (கி. மு. 362-334) ஆவன.
10

மேலே விபரித்ததன்படி கி. மு. 6ம் நூற்ருண்டுக்கு முன் னரே மகதத்தில் ஆரிய கலாசார ஊடுருவல்களை நாம் அவ தானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இவற்றிற்கப்பாற்பட்ட கலிங் கம், வங்கம் முதலான பகுதிகளில் ஆரிய கலாசாரம் மேலோட்ட மான முறையிலே தனது செல்வாக்கைச் செலுத்தியதாகத் தெரி கின்றது. அதனுலே இன்றும் இப்பகுதிகளிற் சில இனங்களையும், மொழிகளையும் கலப்பற்றனவாக நாம் இனம் காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும், பிற்காலத்தில் ஆரியக் கலப்பிற்குற்பட்ட ஒரியா, பெங்காலி, குசராட்டி முதலான மொழிகளின் வரிவடி வங்கள் வழமையான தேவநாகரி வரிவடிவங்களிலிருந்து சிறிது வேறுபடுவதையும் நாம் அவதானிக்கலாம்.
அங்கம், கலிங்கம், வங்கம் :
இவ்வாறு மகதத்தின் சமூக, அரசியல்களில் ஆரிய கலா சார ஊடுருவல்கள் இருக்கையில், இதற்கப்பாலிருந்த அங்கம், வங்கம், கலிங்கம் என்ற பிரிவுகள் கி. மு. 6ம், 5ம் நூற்ருண்டு கள்வரை ஆரிய கலாசாரத்திற்கப்பாற்பட்ட பகுதிகளாகவே இருந்தன. அங்கம், வங்கம், கலிங்கம் முதலான பகுதிகளுடன் தொடர்பான வரலாறுகளை ஆராயுமிடத்துப் பலியின் அரச பாரத்தைத் தாங்குவதற்குப் பாத்தியதையற்ற ஆண்மக்களான அங்க, வங்க, கலிங்க, சுஹ்ம, புண்ட்ர எனும் ஐந்து புத்திரர் களும் அங்கத்தினைப் பிரித்தாண்டனர் எனத் தெரிகின்றது. செ. இராசநாயகம் அவர்கள் விஷ்ணு புராணத்தை ஆதார மாகக்கொண்டு, கலிங்க வரலாற்றை ஆராயும்பொழுது. பலியின் புத்திரர்களில் ஒருவனகிய கலிங்கனை இந்து நதிக்கரையின் மேற் குப்பகுதி அரசிலிருந்து இந்திரனும், விஷ்ணுவும் கி. மு. 2800ம் ஆண்டளவிற் துரத்தியதனுலே, கிழக்குப் பகுதியிற் கலிங்க அரசு உருவாக்கப்பட்டதென்பர். இங்கு குறிப்பிட்ட காலக் கணிப்பு ஓரளவிற்கு முற்பட்டதாக இருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இதிகாசங்களிற் கலிங்கம் ஒரு வளர்முக அரசாகக் குறிப் பிடப்பட்டிருப்பினும், அங்கம், வங்கம், கலிங்கம் எனும் அரசு களை மகாபாரதம் மிலேச்ச அரசுகளாகவே குறிப்பிடுகின்றது. எனவே இவர்களை நேரடியாகத் தென்னிந்தியத் திராவிடக் குடி களின் வாரிசுகள் என்று கொள்வதைக் காட்டிலும், ஐதரேய பிராமணம் (VIII. 8) குறிப்பிட்ட சபரர் கலிங்கத்திலும் (கலிங் கம் ஆதியில் ஒரிசாவையும், வங்கத்தின் ஒரு பகுதியையும் உள் ளடக்கியிருந்தது) புண்ட்ருஸ் வங்கத்திலும் (வடவங்கம்) வாழ்ந் தனர் என்ற பழைய மரபுகளின் வரலாற்றடிப்படையிற் கண்
11

Page 11
ணுேட்டமிடுதலே உண்மை வரலாறுகளை வெளிக்கொணர உதவும் எனலாம். மேலும் கெளரவர், பாண்டவர் யுத்தத்திற் கலிங் கத்து மன்னனன சிருதாயு (Srutayu) தன் இரு புதல்வர்களுடன் பாண்டவர்களுக்கெதிராகப் போர்புரிந்து வீமனுற் கொல்லப்பட்ட னர் என மரபுகள் தெரிவிக்கின்றன. (பாரதப் போரிலே தமிழ் மூவேந்தரும் பாண்டவர்க்குத் துணையாய் நின்றனர் என்றும் பாண்டவர் படைக்குப் பெருஞ்சோறு அளித்ததனுல் உதியன் சேரலாதன் 'பெருஞ்சோற்று உதியன்” என அழைக்கப்பட்டான் எனும் தமிழ் மரபுகளையும் இங்கு நினைவுகூரல் உகந்ததாம்.) மகாபாரத யுத்தத்திற்கும், மகதத்தை கி. மு. 4ம் நூற்றண்டி லாண்ட மகாபத்மநந்த இராசாவின் காலத்திற்குமிடையில் முப்பத்திரண்டு கலிங்கர்கள் ஆட்சியிலிருந்தனர் எனப் புராணங் கள் குறிப்பிடுகின்றன. ஆனற் புத்தருடைய காலத்திற் கெள சாம்பியை (வத்ச) ஆண்ட பெளரவர்களின் இருபத்தாருவது அரசஞன உதயணன் கலிங்கத்தை வென்றதாகக் கதாசரித்சாகரம், பிரியதர்சிகா முதலான பிற்காலச் சமஸ்கிருத நூல்கள் குறிப்பிடு கின்றன. எனவே ஐதான முறையில் ஆரிய கலாசாரமும், பிரா. கிருத மொழியும் கி. மு. 6ம் நூற்ருண்டளவிற் கலிங்கம்வரை யிற் காலெடுத்து வைத்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை. மேலும் கலிங்கத்தைப்பற்றிப் பெளத்த ஜாதாகக் கதைகளிலும், சங்க இலக்கியங்களிலும் மற்றுப் பாணிணியம், மகாவம்சம் முதலான நூல்களிலும் குறிப்புகள் பரவிக்கிடக்கின்றன. எனவே கலிங்க அரசின் பழமைமிக்கத் தோற்றமும், அது நீண்டகாலமாக ஆரிய கலாசார ஊடுருவலுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்திருந்தது என்பதும் வரலாற்றுண்மையாகும். உதயணன் கலிங்கத்தைக் கைப் பற்றினன் என்ற வரலாறு உண்மையாக இருக்குமானுல் இவனே கலிங்க அரசில் முதன் முதலாகக் கி. மு. 6ம் நூற்ருண்டின் நடுப்பகுதியிற் (புத்தர் காலம்) தலையிட்ட ஆரிய மன்னனுவான். பிற்பட்ட வரலாறுகளின்படி, மகாபத்மநந்தனின் (இவனே பிம்பி சாரன், அஜாதசத்துரு முதலான நாக அரசுகள் கட்டிவளர்த்த மகத அரசினை மேலும் வலுப்படுத்திய சுதேச அரசனவான்) ஆட்சியிலிருந்து விடுவித்துக்கொண்ட கலிங்கர், பின் மெளரியர் என்ற இன்னேர் சுதேச அரசின் வழிவந்த அசோக மன்னன் மகதத்தை ஆண்ட காலத்திற் கலிங்கத்தின்மீது படை எடுத்த பொழுது, அசோகன் படைகளுடன் சுதந்திர தாகத் துடன் எதிர்த்துநின்று போராடினர். இக் கலிங்கரின் வீரத்திறனை நாம் அசோகனின் கல்வெட்டிலிருந்து (XIII) அறிந்துகொள்ளமுடிகின் றது. இக்கல்வெட்டிலிருந்து கலிங்கப் போரில் 150,000 மக்கள் கைதிகளாக்கப்பட்டனர். 100,000 பேர் வெட்டப்பட்டனர். இவற்றைவிடப் பன்மடங்கினர் இறந்தனர் என்பது அசோகன் கணக்கெடுப்பின்கீழ் வந்த பட்டியலாகும்.
12

கலிங்கத்திலும், வங்கத்திலும் தென்னிந்தியத் திராவிடக் கலாசார ஊடுருவல்கள்:
அசோக மன்னனுக்குப்பின் கலிங்கத்தின் வரலாறு, கலிங்க மன்னனன காரவேலவின் காலத்தில் (கி. மு. 155) உச்சநிலையை அடைந்திருந்ததாக ஹாதிகும்பகுகைக் கல்வெட்டினின்று புலணு கின்றது. இக் காரவேல ஆரிய கலாசாரத்தைப் பேணிய சேடி பரம்பரையின் மூன்ருவது தலைமுறையினனுவான். எனவே கலிங்க வரலாற்றில் ஏற்கனவே குறிப்பிட்ட உதயணன், காரவேலவின் தலைமுறையினரான சேடி பரம்பரையினர் காலத்திலேதான் கலிங்கத்தில் ஆரிய கலாசாரம் உட்பிரவேசிக்க முடிந்ததெனலாம். மேலும், இக்காரவேலவின் காலத்திற் திரமிரதேச சங்காதம் (தமிழ் மூவேந்தர்) படையெடுத்தபொழுது, காரவேல அவர் களை அழித்துப் பாண்டியரிடமிருந்து முத்துக்களைப் பெற்றதாக இவனது கல்வெட்டுக் குறிப்பிடும். இந்த மூவேந்தர் படை யெடுப்புப், பழைய இந்துவெளித் தொடர்புடைய கலிங்க அர சிற்கும், பிற்காலத் தென்னிந்தியத் திராவிட அரசுகளுக்கு மிடையே ஏற்பட்ட அரசியற் தொடர்புகளைத் தொடர்புபடுத் திக் காட்டுகின்றதே ஒழியக், கலிங்கரை நேரடியாகத் தென் னிந்தியத் திராவிடக் குடிகளினின்றும் கிளைவிட்ட திராவிட வினக் குடிகள் என்று கூறும் அளவிற்குப் பிற சான்றுகளை வைத்திருக்கவில்லை எனலாம். எனவே இலங்கையிற் தொல்லிய லாய்வுகளும், திராவிடக் கலாசாரமும் (பக். 56) எனும் எமது நூலில் நாம் குறிப்பிட்ட கருத்தினை மறுபரிசீலனை செய்தே இக் கருத்தினை இங்கு தெரிவிக்கின்ருேம். எனினும் தென்னிந்தியத் திராவிடக் கலாசாரம் கடல் வாணிப முயற்சிகளின் மூலமும், படையெடுப்புக்களின் மூலமும் கலிங்கம், வங்கம் முதலான நக ரங்களின் கரையோர நகரங்களிற் தமது கலாசார ஊடுருவல் களைத் கிறித்துவிற்கு முற்பட்ட நூற்ருண்டுகளிலிருந்து செய் திருக்கலாம் என்பதற்கு எமக்குச் சங்க இலக்கியங்களும், கறுப் புச் - சிவப்புப் பானை ஓடுகளின் தடயங்களும், பிறமொழி ஆய்வு களும் சான்றுகளாகக் காணப்படுகின்றன. வங்கத்தின் துறை யாகிய தாம்ரலிப்தித் (தம்லுக்) துறையுடன் கனகசபைப்பிள்ளை அவர்கள் காணும தமிழர் நாகரிகத்தொடர்பு, கடல் வாணிப நடவடிக்கைகolனல் ஏற்பட்டதொன்றேயன்றி, அவர் கருதியது போல் வங்கம் தமிழரின் ஆதி இருப்பிடம் என்பதனுலன்று என் பது நாம் மேலேயாராய்ந்த வங்கத்தின் வரலாற்றினின்று புல ஞகின்றது. வங்கர் படகுப் படையை வைத்திருந்ததனுல் "வங்கம்" என்ற பதம் தமிழில் படகு எனும் பொருளில் இலக்கிய வழக் குப் பெறலாயிற்று. பல நாள்களிற் கடலிற் செல்லும் வங்கம்
13

Page 12
பற்றி அகநானூறும் (255 : 1 - 7), மணிமேகலையும் குறிப்பிடு கின்றன. v s.
**வங்கமாக்களொடு மகிழ்வுடனேறிக்"
Lo Goof? XIV. 79 'வங்கமேறினன் மணிபல்லவத்திடை”
W Lo Gail XXV. 126 என்ற பகுதிகளில் இலங்கையில் மணிபல்லவத்திற் (நயினதிவு) தங்கிய வங்கிம்பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. சுந்தர மூர்த்திநாயஞரும் திருக்கேதீசுவரப் பதிகத்தில்
"வங்கம் மலிகின்ற கடன்மா தொட்ட
நன்னகர்" என்பர்.
இவ்விதமே "கலிங்கம்" எனும் பதமும் ஆடை எனும் பொருளிற் சங்க இலக்கியங்களில் இடம்பெறலாயிற்று. கிறித்து விற்கு முற்பட்ட நூற்ருண்டுகளிற் கலிங்கத்திலும், மசூலிப் பட்டனத்திலும் நெய்யப்பட்ட மஸ்லின் பட்டுக்கள் கிரேக்கம், உரோமாபுரி முதலான நாடுகளுக்குத் தென்னிந்திய வாணிபத் துறைகளினூடாக ஏற்றுமதியாகின. இவ்வாறு கலிங்கத்திற் சிறப்பாக உற்பத்திசெய்யப்பட்ட ஆடையின் சிறந்த இயல்பு கருதி கலிங்கப்பட்டு - "கலிங்கம்" என அழைக்கப்படலாயிற்று. தமிழிலும் கலிங்கப்பட்டுக் 'கலிங்கம்’ எனவே இலக்கிய வழக் குப் பெறலாயிற்று.
"பாம்பு பயந்தன்ன வடிவின்
காம்பின் கழைபடு சொலியின்
இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்"
என்றும்
*ஆவியன்ன ஆவிநூற் கலிங்கம்” என்றும் புறநானூற்றிற் கலிங்கம் என்ற பதம் இலக்கிய வழக் குப் பெறலாயிற்று. “குணகடற் றுகிர்" என்று பட்டினப்பாலை குறிப்பிட்டதும், கலிங்கத்துப் பட்டுக்கள் சோழமண்டலத் துறை களினூடாக வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டதனலேயாம்.
எனவே நாம் மேலே ஆராய்ந்துகாட்டியவாறு இந்து வெளி நகரிலிருந்து வெளியேறிய பலியின் புதல்வர்களே அங்கம், கலிங் கம், வங்கம், சுஹ்மம், புண்ட்ர முதலான அரசுகளைக் கிழக்கிந் தியப் பிராந்தியங்களில் ஏற்படுத்தினர் என்பதிற் சந்தேகமில்லை. அதனல் இங்கு வாழ்ந்த சுதேசக்குடிகள் தென்னிந்தியத் திரா விடர்களினின்றும் வேறுபட்டவர்கள் என்பதனையும் மேலே விளக்
14

கிக்காட்டியிருந்தோம். ஆனலும் வாணிபத்தில், அரேபியக்கடல், கேம்பேகுடா, பாரசீகக்குடா, மன்னர் வளைகுடா, வங்காள விரிகுடா, சுமத்திராத்தீவுகள் காழகம் (கடாரம்) வரைத் தமி ழர்கள் அரேபியருடன் சேர்ந்து வாணிபப்பெருமக்களாக விளங் கியதனல், முக்கிய வர்த்தகத்துறைகளில் இவர்களின் செல்வாக் குத் தவிர்க்கமுடியாததாயிற்று. இவற்றுட் தென்கிழக்காசிய நாடுகளின் கேத்திரத் துறைமுகமாக, வங்கநாட்டின் துறையாகிய தாம்ரலிப்தி (தம்லுக்) விளங்கலாயிற்று, என்பதனை நாம் மகா வம்சத்தின் குறிப்புகளிலிருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. எனவே தாம்ரலிப்தித் துறையிற் தமிழ் வாணிபக் குழுக்களின் செல்வாக்குத் தவிர்க்கமுடியாததாகின்றது. இவ்விதமே பிறருக்கு அடிபணியாது தன்னதிக்கமான அரசுகளைக்கொண்டதும், இன் னும் பிறநாடுகளை இணைத்துச் சாம்ராச்சியமொன்றை உருவாக்க விளைந்ததுமான (இலங்கை வரலாற்றில் அடிக்கடிக் கலிங்கரின் சுமுகமான வருகையும், படையெடுப்புகளும் இங்கு நினைவுகூரத் தக்கன.) கலிங்கத்தின் வரலாற்றுடன், தமிழரின் வரலாறு பொருளாதார ரீதியிலே பின்னிப்பிணைந்திருந்தது எனலாம். கலிங்க மன்னன் காரவேலவின் (கி. மு. 155) ஹாதிகும்ப கல் வெட்டுக் குறிப்பிலிருந்து, கிறித்துவிற்கு முற்பட்ட காலம் முத லாகவே மூவேந்தர் படை எடுப்புக்கள், மற்றும் வர்த்தக முயற்சி கள் என்பன திராவிட நாகரிகத்தை அங்கு ஊடுருவவைத்தன. ஆனலும் அவை நிலையானவையன்று. தற்காலிகமானவையே.
கலிங்கத்திற் திராவிட நாகரிகத்தின் ஊடுருவல்களின் முக்கிய இயல்பாக கறுப்புச் - சிவப்பு மட்பாண்டங்கள் இடம் பெற்றுள்ளன. கலிங்கத்திற (ஒரிஸா மாநிலப்பகுதியில் சிசுபால கிருகத்துறையையண்டி) கிடைக்கப்பெற்ற கறுப்புச் சிவப்பு மட் பாண்ட ஒடுகள் இத்தகைய திராவிடக் கலாசார ஊடுருவலின் தடயங்களேயாம் என்பதிற் தவறில்லை. எனினும் சிசுபாலகர்க்கிற் (Sisupalagarh) கிடைக்கப்பெற்ற கறுப்புச் - சிவப்பு வண்ண மட் கலயங்களைப், பெருங்கற்சின்ன ஈமக்குழித் தொடர்பற்றனவாய்ச் செம்புக்கற்காலத்தைப் பேணிய (Chalcolithic) இந்துவெளிக் காலத்தைய மட்பாண்டங்களாகுமா? என இவைபற்றி எஸ். சி. ராய் (S. C. Ray) ஐயம் கொள்வதையும் நாம் இங்கு குறிப் பிடுதல் அவசியமாகும். ஆனல் கி. மு. 2ம் நூற்ருண்டெனக் கணிக்கப்பெற்ற, குழப்பமற்ற மண்படைகளில் இவை கிடைக்கப் பெற்றமையினுற், திராவிடரின் வாணிப முயற்சியினலே இக் கலாசாரப் பரவல் நிகழ்ந்ததென்ற கருத்தே வலிமைபெறுகின்ற தெனலாம். இன்றும் சோடநக்பூர், ஒரிஸாப் பகுதிகளிற் பரவி வாழ்கின்ற "கோண்டர்" "கூயி" முதலான திராவிடக் கிளையினத்
15

Page 13
தவர் ஆதியிற் செலுத்திய செல்வாக்கின் எச்சங்களாகவே தென் படுகின்றனர்.
அடுத்து சிசுபாலகர்கிற் கிடைக்கப்பெற்றதுபோன்ற கறுப் புச் - சிவப்பு மட்பாண்டங்கள் மேற்கு வங்கத்தின் தென்கரைப் பிரதேசங்களான பிர்பும் ' (Birbhum) புர்த்வான் (Burdwan) மிட்னபூர் (Midnapur) முதலான பகுதிகளில் முப்பத்திரண்டு களங்களிற் பெருங்கற்பண்பாட்டுடன் தொடர்பற்றனவாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தடயங்கள் நாம் ஏற்கனவே குறிப் பிட்ட வாணிப முயற்சிகளினல் ஊடுருவியன என்பது தெளிவு. எனினும் இந்தியவரலாற்ருசிரியர்கள் முதலாம் இராசேந்திர னுடைய (கி. பி. 1012 - 1044) கங்கைப் படையெடுப்பின் போதே திராவிட நாகரிகம் வங்கத்திற் கூடிய விளைவுகளை ஏற் படுத்தியுள்ளன என அவதானித்துள்ளார்கள். முதலாம் இரா சேந்திரன் படையெடுப்பின் பின் வங்கத்திற் குடியேறிய கர்னட கத் தலைவன் சேனன் வழிவந்தோரே, இன்று வங்கத்திலுள்ள சாமந்தசேனக்குடியினர் என்று கருதப்படுகின்றது. இத்தகைய கலாசாரக் கலப்புப் பின்னணியின் காரணமாகவே இன்றைய வங்காளமொழி எழுத்துக்கள் நாகரிலிபியை ஒட்டி அமைந்தவை யாயினும், எகர, ஒகர உயிர் மெய்க்குறிகள் தமிழ், மற்றும் கிரந்த எழுத்துக்களின் முறையையண்டியமைந்தன என்பது தெளிவு. மேலும் எச். ரைசிலி ஒரிஸ்ஸாவிலும், வங்கத்திலும் அவதானித்த மொங்கொலோ - திராவிட இன வளர்ச்சிகளும் இதன்பாற்பட்டனவாம்.
வங்கத்தின் இன வளர்ச்சிகள்:
- இலங்கையில் வங்க இளவரசர் விஜயன் வரலாற்றுண்மையை உறுதிப்படுத்துமுகமாக ஆர். எல். கேர்க் (R. L. Kirk) நடாத் திய இரத்த உறவு ஆய்வுகள் சிங்கள மக்களிடையே, திராவிட வின இரத்த உறவுகளைத் தூரத்து உறவாகவும், வங்க இரத்த உறவுகளைக்கூடிய நெருக்கமுடையதாகவும் காட்டியுள்ளன. இவ ருடைய ஆய்வின் முடிபுகள் ஓரளவிற்கு மகாவம்சக் குறிப்புகளை யும், மேலே அவதானித்த வரலாற்று மரபுகளையும் உறுதிப் படுத்துகின்றன எனலாம்.
எனினும் எம்மைப்பொறுத்தளவில் "வங்க இரத்தம்" என்று இனம் காணும் நிலை இன்றைய சமுதாய வளர்ச்சி நிலை
யிற் மிகக் குழப்பமானதொன்றகவே தெரிகின்றது. ஏனெனில் இன்று பல்லினங்களின் சேர்க்கையினல் உருவாகியிருக்கும் வங்க
16

இனத்தைக்கொண்டு, தூய இன வளர்ச்சிகளைப் பேண முயன்ற பழைய இனங்களை அடையாளம் காண்பதென்பது, மொழி யாலோ அல்லது வேறு மானிடவியல்களாலோ அளந்து காண்ப தென்பது சேறுநிறைந்த குட்டையின் இயல்புகளை அறிய எடுத்த முயற்சியை நிகர்த்ததாகும். எனினும் இந்தவழியில் அணுகி ஆய்வுசெய்த பி. எஸ். குஹா (B. S. Guha) இன்று இந்தியா வின் சனத்தொகையை உருவாக்குவதில் ஏறக்குறைய ஆறுக்குக் குறைவில்லாத இனங்களின் சேர்க்கையை அவதானித்துள்ளார். இவர்களுள் மத்திய ஆசியாவிலிருந்துவந்த அல்பைன் (Alpine) திஞரிக் (Dinaric) ஆர்மெனெயிட் (Armenoid) இனங்களின் சேர்க்கையால் உருவாகிய ஒரு கிளை இனமே வங்கம், ஒரிஸா , குஜராட் முதலான பகுதிகளில் முக்கிய இனத்தவர்களாகக் காணப்படுகின்றனர் என்பர். இவருடைய ஆய்வுகள் மேலே நாம் ஆராய்ந்த சபரர், புலிந்தர் புண்ட்ராஸ் முதலிய சுதேசக் குடி கள், மற்று நாகர் இயக்கர் முதலான மொங்கோலிய இனக் குடிகள், மற்றும் திராவிடவின் ஊடுருவல்பற்றிய வரலாற்றினங் களின் பங்கினைத் தெளிவுறுத்துவதாக இல்லை எனலாம். கார ணம், நாடோடிகளான மனித இனங்கள் தோன்றிய நாள்முதல் (ஆபிரிக்காவிற் பல இடங்களிற் கிடைக்கப்பெற்ற கல்லாயுதங் கள், மனித எலும்புகளின் எச்சங்கள் என்பன, அங்கிருந்து மனித இனம் ஒரு கோடியாண்டுகளுக்கு முன்னரே குடிபெயரத் தொடங்கிவிட்டது என்றும், பாகிஸ்தானிற் கிடைக்கப்பெற்ற புதிய தடயங்களின்படி இரண்டு கோடி வருடங்களுக்கு முன்னரே மனித இனம் குடிபெயரத் தொடங்கிவிட்டது என்றும் தெரிவிப் பதஞல் மனித இனத்தின் நாடோடி இயல்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்) மனித இனங்கள் யாவும் நாடோடிகளாகத் திரிகையில், ஏதோ ஒருவகையிற் கலப்புற்றதனல், பழையன கழியப் புதியன ஏற்றல் என்பதற்கிணங்க, புதிய பண்புகளைக் கொண்ட இனங்களைத் திட்டவட்டமாக இனம் காண்பதென்பது கடினமான செயலாகும்.
இத்தகைய கடினமான சூழலிலும், வெவ்வேறு கோணங் களிலிருந்து ஆய்வுகளைச் செய்து, அவைதரும் தகவல்களைக் கோர்த்துப்பார்க்கையில் உண்மையை ஓரளவிற்காவது அறிந்து கொள்ளும்பொழுது, மனித இனம் தன் பழம்பெருமைமிக்க வரலாற்றினையும், கலாசார முன்னேற்றங்களைப்பற்றியும் பெரு மைப்படுகின்றது. மேலும் தன்னைநிகர்த்த இனங்கள், வேறு கிரகங்களிலும் வாழ்கின்றர்களா என்னும் ஆய்வில், விண்ணுல கத்திற்குக்கூடச் செல்லத் தயங்கவில்லை எனலாம்.
17

Page 14
மனித இனம் இடம்பெயர்ந்து சென்று, இன்னேர் இனத் துடன் கலந்து வாழ விரும்பும் காரணங்களில் ஒன்று பொருளா தார ரீதியான புலம்பெயர்தலேயாம். இவர்களுட் கடல் வாணி பர்கள் எப்பொழுதும் சமரசமுள்ள மக்களாகவே வாழ்ந்து வந் துள்ளனர் என்பதற்கு வரலாறுகள் சான்றுபகர்கின்றன. இத ஞல் இனங்களின் தனித்துவ இயல்புகள் திரிதல் நியாயமான தொன்ருகும். இவ்வகையில் ஆதி இந்தியாவின் உள்நாட்டு வாணிப முயற்சிகளையறிதலும் எமக்கு அவசியமாகின்றது. இள வரசர் விஜயன் வரலாற்றுடன் தொடர்பான வரலாற்றிற் கலிங்க இளவரசிக்கும், வங்க இளவரசனுக்கும் பிறந்த மகள் சுதந்திர வாழ்க்கையில் இச்சைகொண்டவளாக, மகதத்திற்குச் செல்லும் , வாணிபக் குழுவினருடன் அவர்களை அறியாவண்ண்ம் சேர்ந்து சென்றனள் என்றும், போகும் வழியில் லால நாட்டிற் சிங்க மொன்று அவ்வாணிபக் குழுவினரைத் தாக்கியது என்றும் கூறப் பட்டுள்ள பகுதியிலிருந்து, எம்க்குக் கிடைக்கின்ற வரலாற்றுத் தகவல்கள் பல. முதலிற் கிழக்கிந்தியப் பிராந்திய நகரங்களின் வாணிப ஒழுங்கமைதிகளை நாம் உணரக்கூடியதாக இருப்பதோடு, பாதுகாப்புக் காரணமாக வாணிபக் குழுவினர் பெருந் தொகை யினராகக் கூட்டம் கூட்டமாகப் பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதனையும், இவ்வாணிபக் குழுவினர் கலா சார பரிமாற்றங்களுக்கும், நகர்களையண்டிய குடியேற்றங்களுக் கும் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்பதனையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏ. எல். பசாம் புத்தர் காலத் திற் கிழக்கிந்தியத் துறைகளையும், மேற்கிந்தியத் துறைகளையும் தொடுக்கின்ற முக்கியபாதையொன்றினையும், கிளைப்பாதைகள் இரண்டினையும் விபரிப்பர். இவ்வர்த்தகப் பாதைகள் வங்கத்தின் தாம்ரலிப்தித்துறையில் ஆரம்பமாகிச் சம்பா (Campa - அங்கத் தின் தலைநகர்) நதித்துறையூடாகப் பாடலிபுரம், வாரணுசி (காசி) கெளசாம்பிவரை சென்று, பின் அங்கிருந்து ஒரு கிளைப் பாதை விதிசை, உஜ்ஜனியூடாக நர்மதையாற்று முகத்துவாரத்தி லமைந்த பிருகுகச்சத்துறைமுகத்தைச் சென்றடைந்தது. ஆனல் முக்கியபாதையானது கொசாம்பியிலிருந்து யமுனையின் தென் கரை வழியாக மதுரா, இன்றைய டெல்லி, சாகலா முதலிய நகரங்களினூடாகப் பஞ்சாப்பின் ஐந்து ஆறுகளையும் கடந்து, வடமேற்கிந்தியாவின் காந்தார (தக்சிலா) நகரை அடைந்தது. பின் இவ்வர்த்தகமார்க்கமானது காபுல் பள்ளத்தாக்கினுரடாக மத்திய ஆசியா வரை சென்றது. மேலும் இவ் முக்கிய பாதையி லிருந்து பிரிந்துசென்ற இரண்டாவது கிளைப்பாதையானது மது ராவிலிருந்து இன்றைய இராஜஸ்தானையும், தார் பாலைவனத்தை யும் (That desert) ஊடறுத்துக்கொண்டு இந்துநதிக்கரையின்
18

முகத்துவாரத்திலமைந்திருந்த பதள (Patala) துறையையடைந் தது. பாசம் விபரித்துள்ள இந்த மூன்று மார்க்கங்களையும் நாம் வரைபடமூலம் (வரைபடம் 1.) அவதானிக்கையிற் கிழக்கிந்தியத் துறைகளுக்கும், மேற்கிந்தியத் துறைகளுக்குமிடையே நிகழ்ந்த வாணிப முயற்சிகள், நாட்டின் உட்பாகங்களினூடாகவே கூடுத லாக நடைபெற்றது என்றும், கடல் வாணிபங்களைப் பெரும் வர்த்தகர்களே நடாத்தமுடிந்ததென்பதும் உய்த்துணரத்தக்கது. மேலும் அடிக்கடி நிகழ்ந்த உள்நாட்டு வாணிப முயற்சிகளினல் இனங்களிடையே கலாசாரப் பரிமாறல்கள், சிறப்பாக மொழிப் பரிமாற்றங்களும், மொழித் திரிபுகளும், இனக்கலப்புக்களும், இனத்தூய்மையிழப்பும் இயல்பானவையாகிவிடுகின்றன. இக் கண்ணுேட்டத்தினை நாம் விளங்கிக்கொள்வோமானுற் கி. மு. 6ம் நூற்ருண்டிற்கு முன்னரே துறைமுகங்களையண்டியிருந்த கலிங்கம், வங்கம் முதலான பிரதேசங்களில் வேறுபட்ட பல புதிய கலாசார ஊடுருவல்களை நாம் மறுதலிக்கமுடியாது. ள்னவே நன்னிலங்களைத் தேடி ஆரியர்கள் படையெடுப்பதற்கு முன்னரே, ஆரிய கலாசாரம், வாணிபம் என்ற போர்வையின்கீழ் அறிமுக மாகியிருக்கலாம் எனும் கருத்தினையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்ருேம்.
கிழக்கிந்தியப் பிராந்தியப் புவியியல் அமைவுகள்:
மேலும் மகாவம்சம் விபரித்த புவியியற் குறிப்புகளை ஆராயு மிடத்துக் கிழக்கிந்திய நகரங்களின் பெயர்கள், புவியியல் அமைவு கள், அரசியற் பிரிவுகள் என்பன கி. பி. 12ம் நூற்ருண்டு வரை மாற்றங்களுக்குட்படாமல் இருந்தன என்பது காளிதாச னின் இரகு வம்ச காவியத்தில் விபரிக்கப்பட்ட ரகுவின் படை யெடுப்புப் பாதைபற்றிய குறிப்புகளிலிருந்தும், பின் முதலாம் இராசேந்திரனின் (கி. பி. 1012 - 1044) கங்கைப் படையெடுப் புப்பற்றிய பாதைகளின் குறிப்புகளிலிருந்தும் தெளிவாகின்றது. காளிதாசன் (இவர் கி. மு. 100 - கி. பி. 500க்கிடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்பதற்காகிய கருத்து வேறு பாடுகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்) வாழ்ந்த காலத்தில் மகதம் முதல் தெற்கே தாமிரபர்ணியாறு வரை உள்ள பிர தேசங்களின் புவியியல் அமைவு பின்வருமாறு.
முதலில் மகதத்திலிருந்து ரகுவின் திக்விஜயம் ஆரம்ப மாகிக் கிழக்குத்திசையாக ஸ"ஹ்மதேசம் (மேற்கு வங்கம். இது கலிங்கத்திற்கும் வங்கத்திற்குமிடைப்பட்ட பகுதி) பின் முறையே வங்கம், உத்கலதேசம் (ஒரிஸா) கலிங்கம் (ஒரிஸாவின் தென்
19

Page 15
னெல்லையிலிருந்து தெற்கே கோதாவரி வரையுமுள்ள பகுதி) முதலிய நாடுகளை வென்றபின், கடலோரமாகச் சென்று காவேரி யிற் குளித்தபின், பாண்டிநாடு சென்று தாமிரபர்ணி கலக்கின்ற கடலிலிருந்து எடுக்கப்பெற்ற முத்துக்களைப் பாண்டியரிடமிருந்து பெற்றன். (ரகு. அத். 4:34 69) இதனேடு அங்க தேசத்தினையும் (அத். 6.30) காளிதாசன் குறிப்பிடத் தவறவில்லை. (வரை படம் 2) மற்று, முதலாவது இராசேந்திரனுடைய பன்னிரண் டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவன் வடநாட்டுப் படை யெடுப்புப்பற்றிக் குறிப்பிடுகின்றது. இவன் படையெடுப்பு முதலிற் கலிங்கத்திலுள்ள சக்கரக்கோட்டம் (விசாகப்பட்டினத் திற்கு வடமேற்காக அமைந்தது. இக்காலத்திற் சித்திரக் கோட் டம் எனப்படும்.) பின் ஒட்டர நாடு (உத்கலர் அல்லது ஒரிஸா), தென்கோசல நாடு (இங்கு கோசல நாடு என்பது இன்றைய grüglii (Raipur) 1960Freiwi (Bilaspur) 3Flbuági (Sambalpur) முதலிய பகுதிகளையடக்கிய பகுதியேயாம். எனவே இது கங் கைக்கு அப்பாலுள்ள கோசல நாடன்று) முதலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு, பின் முறையே தண்டபத்தி (தந்தபுர) தக்கணலாடம், வங்காளம், உத்திரலாடம் முதலான பகுதிகளை யும் கைப்பற்றிக்கொண்டு கங்கைக்கரையையடைந்தது. (வரை படம் 3.) சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுக் கோவை ஐந்தாவது நூல் 1932, முதலாவது இராசேந்திரனின படை கள் கங்கையை நோக்கிச்சென்ற வழிகளை அடையாளம் காணு மிடத்து, தென் குஜராட், வங்கம், வட குஜராட் என அடை யாளம் காண்பது தவருகும். இவ்வாறு அடையாளம் காணல் யுத்த நெறிகளுக்கு மட்டுமன்றிப், புவியியல் அமைவுகளுக்கும் அப்பாற்பட்டதாகத் தெரிகின்றது. எனவே இராசேந்திரன் படை கள் வங்கத்திற்கும் மதத்திற்குமிடையிலமைந்த லால (லாட) நாட்டினுாடாகவே சென்றன என்பது எம் கருத்து.
லால நாட்டுத் தலைநகரம் - சிங்கபுரம்:
மேலும் இளவரசர் விஜயனின் தந்தையாகிய சிங்கபாகு அமைத்த சிங்கபுரம் எனும் நகரைப்பற்றிய குறிப்புகள் எதுவும், மேற்குறிப்பிட்ட புவியியல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம் பெறவில்லை. எனினும், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான தமிழ் இலக்கியங்களிற் 'சிங்கபுரம் கலிங்க நாட்டிலமைந்த நக ரெனக் குறிப்புகள் உள.
கடிபொழிலுடுத்த கலிங்க நன்னட்டு தீம்புனற் பழனச் சிங்கபுரத்தினும்
Saavub. XXIII II 130-140.
20.

"காசில்பூம்பொழிற் கலிங்க நன்னுட்டுச் சிங்கபுரம்”
D6sof). XXVI II 15-17.
கலிங்க நாட்டிலுள்ள இச்சிங்கபுரம் இன்று ஒரிஸாவிலுள்ள கஞ்சம் ஜில்லாவில் (Ganjam Zila) இருக்கின்றது. இச்சிங்க புரத்தையே மகாவம்சம் குறிப்பிடுகின்ற (சிங்கபாகு லால நாட் டில் அமைத்த) சிங்கபுரமாகச் சில அறிஞர்கள் கருதுவர். ஆனல் ஏ. கன்னிங்காம் (Sir. A Cunningham) கஞ்சம் ஜில்லாவிலிருந்து மேற்கே நூற்றுப்பதினைந்து மைல் தொலைவிலுள்ள சிங்கபுரமே விஜயன் வரலாற்றுடன் தொடர்பான சிங்கபுரம் என்பர். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி லாட அல்லது ராட என்ற பிரதேசத்தை வங்கத்தின் மேற்குப் பகுதியெனவும், முதலாம் இராசேந்திரன் ஆாலத்தில் தென் லாடத்தில் ரணகுரவும் வடலாடத்தில் மஹி ப்ாலவும் ஆட்சிபுரிந்தனர் என்றும் கூறுவர். இன்றைய ஹ"க்லி (Hughli or Hoogly) மாநிலத்திலுள்ள தாரகேசு வரத்திலிருந்து பத்து மைல் தூரத்திலுள்ள ராட அல்லது லால மாகாணத்தி லுள்ள சிங்கூர்தான் விஜயன் வரலாற்றுடன் தொடர்பான சிங்கபுரம் என நந்தலால் கருதுவர். முதலாம் இராசேந்திரனின் படையெடுப்புப் பிரதேசங்களில் நீலகண்ட சாஸ்திரி அடையாளம்” கண்ட லாட அல்லது ராட தேசத்தையே நந்தலாலும் பழைய ராட நகராக அடையாளம் காண்பதனுல் இந்த லால (ராட) தேசத்திலேதான் விஜயனின் தந்தை அமைத்த சிங்கபுரம் என்ப திற் சந்தேகமில்லை. இதுதொடர்பாக இலங்கையிலிருந்து கிடைக் கப்பெற்ற ஆதாரங்களின்படி பதினைந்தாம் நூற்ருண்டைச்சேர்ந்த சிங்கள இலக்கியமொன்று கெளட (Gauda) வங்கம் முதலான நாடுகளுடன் சேர்த்து லாடத்தைக் குறிப்பிடுவதனல், பழைய லால நாடு மேற்குறிப்பிட்ட ராட தேசமே என்பது மேலும் உறுதியாகின்றது. ஆனற் பழைய லால நாடு பிற்காலத்தில் இரு அரசியற் பிரிவுகளாக வளர்ந்ததனலே உத்தரலாடம், தக்கணலாடம் எனப் பிரியலாயிற்று என்று தெரிகின்றது. சிலப் பதிகாரம் போற்றுகின்ற 'சிங்காவண் புகழ்ச் சிங்கபுரப்" புகழ், காலப்போக்கிற் கலிங்க நாட்டிலும் பல சிங்கபுரங்கள் உருவாக ஏதுவாக இருந்ததெனலாம். (இதுபோலவே இலங்கையில் வெடி யரசன் இனத்தவர் குடியேற்றங்களுடன் யாழ்குடாக் காரைதீவு, புத்தளம் காரைதீவு, மட்டுநகர்க் காரைதீவு என்பன தொடர் புடையனவாகக் காணப்படுகின்றன.)
எனவே நாம் மேலே ஆராய்ந்ததன்படி ஹாக்லி மாநிலத்தி லுள்ள ராடப் பிரதேசத்திலே இளவரசர் விஜயன் பிறந்தார் என்பதனை நாம் நிச்சயம் பண்ணிக்கொள்வதால் வரலாற்றுக்
21

Page 16
குழப்பங்களைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும். இலங்கை வரலாற் முசிரியர் சிலர் குஜராட் மாநிலத்தைப் பழைய லால அல்லது ராட நாடெனக் கொண்டு அங்குள்ள சிஹோரை (Sihor) விஜய ன்ன் சிங்கபுரம் என்றும், வேறு சிலர் இந்துநதிக் குடாப்பகுதியி
லுள்ள ஹிங்கூர் (Hingur) தான் விஜயன் பிறந்த இடமென்றும் அடையாளம் காண்பர். பிருகுகச்ச, குப்பாரக எனும் துறை முகங்கள் மேற்கிந்தியாவிற் கேம்பேக் குடாப்பகுதியில் அமைந்த பழைய துறைமுகங்கள் ஆவன. இளவரசர் விஜயனும், தோழர் களும் ஏறிய கப்பல் குர்பாரகம் எனும் துறையில் முதற் கரை சேர்ந்ததாக மகாவம்சமும் (V. V. 46), மிருகுகச்சத் துறையிற் கரை சேர்ந்ததாக தீபவம்சமும் (IX, V, 26) குறிப்பிடுவதனல் வரலாற்ருசிரியர்களிற் சிலர் இத்துறைகளுக்கே முக்கியத்துவம் கொண்டு, குஜராட்டையே லால நாடெனவும் அடையாளம் காண்பர். ஆனல் மகாவம்சத்தின் பிற வரலாற்றுக் குறிப்பு களுடனும், இந்திய வரலாற்றுக் குறிப்புகளுடனும், இவர்கள் கருத்துக்கள் வலிமையுடையனவா என்று ஆராய்கையில், மகா வம்சமும், தீபவம்சமும் குறிப்பிட்ட துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் தவறெனப் புலப்படுகின்றன. எழுதிவைக்கும் மரபு கள் உருவாவதற்கு முற்பட்ட காலத்தில், அரசர்கள் அவையிலோ, அல்லது மதபீடங்களிலோ வரலாற்றுத் தகவல்களையும், சமய நூல்களையும் மனனம் செய்துகொள்வதற்கென நிபுணர்களே இருந்துவந்தனர். எனவே மனனம் செய்வோருக்குக் கிடைத்த தகவல்கள் தவருனவையா அல்லது தவறற்றனவையா என்ப தனை அறியக்கூடிய புவியியல் அறிவுகள் இவர்களுக்கில்லாவிடின் இத்தகைய தவறுகள் இடம்பெறல் சகஜமே. அதனேடு வங்கத் தின் தாம்ரலிப்தித் துறைக்கும், மேற்கிந்தியப் பிருகுகச்சத் துறைக்குமிடையே வர்த்தக மார்க்கமொன்று இருந்ததென்ப தனை நாம் ஏற்கனவே அவதானித்திருந்தோம். எனவே மகத வணிகக் குழுக்களின் ஆதிக்கத்தின்கீழ்ப் பிருகுகச்சத்துறை இருந் திருக்கலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாகவும் இத் தகைய குழப்பமான தகவல்கள் இவர்களுக்குக் கிடைத்திருக்க லாம் என்றும் நாம் கருதமுடிகின்றது. மேலும் தீபவம்சம் (9: 15-16) சூர்பாரகத் துறையிலிருந்து இளவரசர் விஜயன் கப்பல் மேலே வடக்கு நோக்கிப் பிருகுகச்சத் துறையை (9 : 7) சென்றதாகக் குறிப்பிடுகின்ற புவியியற் குழப்பமான தகவல்களை யும் இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.
குஜராட் மாநிலத்தின் (இதன் பழைய பெயர்கள் லோதால், லாட என்பனவாம். தொலமி லரிகே (Larike) என அழைத் தனர்) பழைய வரலாற்றினை ஆராயும்பொழுது, இந்துவெளியி
22

லிருந்து தென்னேக்கி நகர்ந்த ஆதிஹாரப்ப மக்களே லோதால் துறையினூடாகப் பிறநாட்டு வர்த்தக முயற்சியிலீடுபட்டிருந் தார்கள் என்றும், இவர்களைச் சதபத பிராமணம் மிலேச்சர்கள் என்று குறிப்பிட்டுள்ளது என்றும் தெரிகின்றது. இத் துறைமுகம் பின் கடற்பெருக்குக்களாற் கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. C. 14 பரிசோதனைப்படி லோதால் துறை கி. மு. 1800 அளவிற் கைவிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் தொல்லியலாய்வுகள் குஜராட்டில் ஹாரப்ப மக்களின் இலிங்க வழிபாட்டின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளன. லோதால் துறை கைவிடப்பட்டபின்னரும், ஹாரப்ப சித்திர எழுத்துக்கள் இங்கு கி. மு. 1300 வரை பாவனையிலிருந்திருக்கின்றன என்ப தும் அவதானிக்கப்பட்டுள்ளது. குஜராட்டில் ஹாரப்ப மக்கள் பேணிய திராவிடக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து, ஜராசந்த னுக்குப் பயந்த யாதவர்கள் மதுராவிலிருந்து புலம்பெயர்ந்து வந்து, துவாரகை எனும் கரையோரப் பட்டினத்தை உருவாக் கித் தம் கலாசாரத்தைப் பேணினர் என்பதும், பின் நர்மதா முகத்துவாரத்திலமைந்த பிருகுகச்சத்துறைக்கும், கிழக்கேயிருந்த தாம்ரலிப்தித் துறைக்குமிடையே மகதத்தினூடாக உள்நாட்டு வாணிப முயற்சிகள் பெருமளவில் நடைபெற்றுவந்தன என்ப தும், லோதாலை அண்டிய பகுதிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்களாம். மேலும் ரங்பூரிற் (Ranpur) கங்கைப் பிரதேசத்திற் பாவனையிலிருந்த ஆரியரின் வடநாட்டுக் கறுப்புப் பூச்சு (Northern black Polished Ware) LDLLItaliot Lild, 6ft 6). Qp. 500ம் ஆண்டெனக் கணிக்கப்பெற்ற, மண்படைகளிலேயே முதன் முதலாகத் தோற்றம்பெறலாயின. எனவே மிகப் பிற்பட்ட காலத்திலே (கி. மு. 500) ஆரியர்கள் குஜராட் மாநிலப் பகுதி களில் ஊடுருவலாயினர் எனத் தொல்லியலாய்வாளர்கள் கருது வர். எனவே இலங்கையிற் சிங்கள இன வரலாற்றை உருவாக் கிய இளவரசர் விஜயனின் மூதாதையரின், அரசியற் பின்னணி களைக்கொண்ட சூழ்நிலைகள் கி. மு. 6ம் நூற்ருண்டளவிற் குஜராட்டில் உருவாக இடமிருக்கவில்லை என்பதும் தெளிவா கின்றது. அதனேடு இளவரசர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்த காலம் முதலாக, விஜயனின் வம்சத்தவர்கள் என்ற கோதா விற் கலிங்கர், வங்கர், மகதர் என்போரின் செல்வாக்கு இலங்கை அரசியலில் அதிகரிக்கலாயின என்பதனை மகாவம்சம் முதலான வரலாற்று நூல்கள் குறிக்கத் தவறவில்லை. இதன் முதன் முயற்சி யாக விஜயனின் ஆட்சிபாரத்தையேற்க வாரிசு இன்மையால், விஜயனின் சகோதரன் மகன் பாண்டு வாசுதேவன் சிங்கள இனத் தூய்மையைப் பேண வரவழைக்கப்பட்டான். மேலும் மகாவம் சம் (அத், 37) கீர்த்தி பூரீ மேகவன்னன் (கி. பி. 362 - 390)
23

Page 17
காலத்தில் ஒரு பிராமண அரசிளங்குமரி கலிங்கத்திலிருந்து புத்தருடைய தாதுதந்தத்தை இலங்கைக்குக் கொண்டுவந்த தாகக் கூறுகின்றது. (பார்க்கவும் EP. IND. XV. 246) இவ் வாறு வந்தவர் கலிங்க ஒரிசா தேசத்து உலகநாச்சி என்பவளே யாம் என்பது மட்டக்களப்பு மான்மியத்தின் தகவல்களிலிருந்து தெரிகின்றது. மேலும் மட்டக்களப்புப் பகுதியிற் கலிங்கர், வங்கர், சிங்கர் என்போரின் செல்வாக்கு ஏறக்குறைய கி. பி. 300ம் ஆண்டுக்குப்பின் தொடர்ச்சியாக இருந்தது என்பதனையும் மட்டக்களப்பு மான்மியம் எடுத்துக்கூறுகின்றது. சோழ இளவரசி தம்பதி நல்லாள், உலகநாச்சி, ஆடகசவுந்தரி எனும் பெயர்களி லிருந்து, கலிங்கர், வங்கர், சிங்கர் முதலான இராச பரம்பரை யினர் தமிழகத்து அரசுகளுடன் விஜயன் காலம் முதலாகத் திருமணத் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பதும் தெளி வாகின்றது. திருமண உறவு கள் மூலம் தமிழ்க் கலாசாரத் தொடர்புடையவர்களாக இவர்கள் இருந்ததனுலேதான், தமிழ்க் குடிகள் செல்வாக்கின்கீழிருந்த மட்டக்களப்புப் பிரதேச ஆட்சி பாரத்தைப் பொறுப்பேற்றனர் எனத் தெரிகின்றது.
மேலும் சிங்கள அரச சபையிற் தாதுசேனன் (கி.பி. 843) பழைய கலிங்க வாரிசு எனத் தெரிகின்றது. மகாவம்சம் மகிந்த IV (கி. பி. 956 - 972) வின் சிங்க அரச வம்சத்தைப் பற்றி வற்புறுத்துகையில் (மகா. LXIII 12, 13, LIV 9, 10, 11) இலங்கையில் உயர்குடிப் பெருமக்கள் இருந்தபோதிலும், மகிந்த IV கலிங்கவம்சத்து இளவரசியைத் தருவித்து அவளைப் பட்டத் தரசியாக்கிக்கொண்டார். பின் இவர்களுக்குப் பிறந்த இரு ஆண் மக்களையும் ஆதிபாதர்களாகவும், பெண்மகவை அரசியாகவும் முடிசூட்டி சிங்கள அரச வம்சத்தை இலங்கை அரசசபையில், நிலைநிறுத்திக்கொண்டார் என்கிறது. இதன்பின் பராக்கிரமபாகு 1ன் (கி. பி. 1153 - 1186) மகள் இரத்தினுவலி, தனது தந்தை யின் தகப்பனர் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுவதோடு, விஜயனுடைய காலத்துக்குப்பின் கலிங்கரும், பாண்டியரும் ஒன்றுக்கொன்று தொடர்பான குடும்பங்களாகி விட்டன (சூளவம்சம் LXIII 12, 13) என்று தமது திருமண உறவுத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டுவர். விஜயபாகு I தன் பொல்லநறுவக் கல்வெட்டிற், பராக்கிரமபாகு 1 தன்னை இலங் கையின் அரசியற் பாரத்தை ஏற்கும்படி அழைக்கும் சமயத்திற், தான் கலிங்கத்தின் தலைநகரான சிங்கபுரத்திலிருந்ததாகக் குறிப் பிடுவதோடு, தன் கலிங்க வம்சத் தொடர்புகளையும் குறிப்பிட் டுள்ளார். இவ்வகையிலே. கலிங்கத்து நிசங்கமல்லனும் (கி. பி. 1187 - 1196) தன் கல்பொதக் கல்வெட்டிற், தான் சிங்கபுரத்

திற் பிறந்தவன் என்றும், மேலும் சிங்கபுரத்து விஜயனின் பரம்பரையில் வந்தவனுகையால் இலங்க்ையையாள்வதற்குரிய தனது உரிமைகள்பற்றியும் வற்புறுத்தியுள்ளார். இவனுக்குப் பின் நியமனம் பெற்றவர்களும் கலிங்கரே. மாகன் (கி பி. 1214 - 1235) கலிங்கத்திலிருந்து வந்தவனுயினும், இவன் பழைய சிங்கள வமிசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியவனகத் தெரிய வில்லை. அதனுற் சிங்கள மக்களைத் துன்புறுத்திப், பெளத்த தாபனங்களை அழித்ததோடு, தமிழ்மக்களையும், சைவத்தையும் ஆதரித்துத் தமிழர் ஆட்சியைப் பலப்படுத்தியவனுகக் காணப் படுகின்றன்.
மேலும் குருலுகோமி (Gurulukom) (பன்னிரண்டு அல்லது பதின்மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர்) தமது தர்மபிரதீபிகாவில் இளவரசர் விஜயனைக் கலிங்க அரசனுெரு வனுடன் ஒப்பிடுகையில், இக்கலிங்க மன்னனின் பாட்டி விஜய னுடன் தொடர்பான கலிங்க வம்சத்தில் வந்தவர் என்பர். மேலும் இதே நூலிற் சுலுகலிங்கு கதையையும் உரைப்பதன் மூலம் இளவரசர் விஜயனின் பழைய கலிங்கவம்சத் தொடர்பு களில் இந்நூலாசிரியர் அக்கறைகாட்டுவதை நாம் அவதானிக்க லாம். மேலும் பராக்கிரமபாகு IVன் (கி. பி. 1410 - 1468) சபைப்புலவரான தேநுவரைப் பெருமாள் எனும் வைணவப் பிராமணர் தமது சரசோதிமாலையில் நாடுகளுடைய நாள், கோள் கூறிப், பின்யோக அபவாதம் எனும் பகுதியில்
*வார யோகத்திற்குற்றம் வங்கமோ டங்கதேசஞ்
சீருறு கலிங்கம் ஈழதேசத்திற் காகா தென்பர்”
என்று கூறுமிடத்து ஈழத்துடன் வங்கம், அங்கம், கலிங்கம் என்ற நாடுகள் கொண்டிருந்த பழைய இனவுறவுகளையும், மரபுகளையும் சோதிடர் கணக்கிற்கொண்டார் எனத்தெரிகின்றது. இவைதவிர, இலங்கையிற் கலிங்ககுல மன்னர்களின் பரம்பரையில் வந்தோர் பற்றி இரு பட்டியல்களைச் சி. எஸ். நவரட்னம் தமது, தமிழ ரும் இலங்கையும் எனும் நூலிற் தந்துள்ளார். இவ்வாறு இலங்கை யிற் சிங்கள இனமக்கள் தமது கலிங்க வம்சத்துப் பாரம்பரியங் களையும், பிற மரபுகளையும் அழியவிடாமற் பாதுகாக்கக் காலத் துக்குக் காலம் முயன்றுவந்துள்ளனர் என்பதனை நாம் அவதானிக்க லாம். மேலும் சிங்கபாகு சிங்கத்தைக் கொன்ற வீரச் செயலை நினைவுகூருமுகமாகவே “சிங்களர்" என்ற புதிய இனம் தோன்ற லாயிற்று என்றும், அதனுற் சிங்கர் குடியேறிய இடங்கள் சிங்க புரங்கள் என்றும் பெயரிடப்பட்டன என்றும் கலிங்க மரபுகள் தெரிவிக்கையில், வங்க மரபுகளும் இளவரசர் விஜயனின் பிரி வினையைக் காலந்தோறும் நினைவுகொள்ளத் தவறவில்லை என்று
25

Page 18
தெரிகின்றது. இந்த மரபுகள் சிங்கள இளவரசர் விஜயனை "விஜயசிங்க” என்றே குறிப்பிடுகின்றன. வங்க மரபுகள் பேணி வைத்திருக்கும் நாட்டுப் பாடல் ஒன்று பின்வருமாறு:
“Amader Chele Vijayasinha
Lanka Koriya Jayi”
இதன் பொருள் இளைஞர் விஜயசிங்க (வங்கத்தைவிட்டு) இலங் கையையடைந்தார் என்பதாகும்.
வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாவாய்கள் கரைசேர்ந்த தீவுகள் :
இதுவரை நாம் மகதம், ராட (லால) வங்கம், கலிங்கம், குஜராட் (லால) முதலான நாடுகளின் புவியியல் அமைவுகள், இன வரலாறுகள், தொல்லியலாய்வுகள், மரபுகள் என்பனவற்றை ஆராய்ந்து இளவரசர் விஜயன் பிறந்த கிழக்கிந்தியப் பிராந்தி யத்தின் அரசியற், பொருளாதாரச் சமூகச் சூழ்நிலைகளை ஆராய்ந் தோம். இனி மகாவம்சம், தீபவம்சம் விபரிப்பதன்படி மூன்று நாவாய்களில், ஒவ்வொன்றிலும் தனித்தனியே விஜயனும் தோழர் களும், பெண்களும், பிள்ளைகளும் ஏற்றிக் கடலில் விடப்பட்ட னர் எனத்தெரிகின்றது. (மகா. அத். 6:44-46; தீப. 9:13-16) (இம்மூன்று நாவாய்களும் ஒரே நேரத்திற் கடலில் விடப்பட வில்லை என்பதனலே இவர்கள் வெவ்வேறு இடங்களிற் திசை தெரியாது கரை ஏறினர் என்றும் தெரிகின்றது.) இவற்றுள் பெண்களுடன் வெளியேறிய நாவாய் மகிளதிவை அடைந்ததாக மகாவம்சமும், தீபவம்சமும் குறிப்பிடுகின்றன. இந்நூல்கள் குறிப் பிடுகின்ற மகிளதிவு, மினிகோய்த்தீவுட்பட (Minicoy) உள்ள மாலைதீவுக் கூட்டங்களே என்பதற்குச் சாதகமாகப் போதிய ஆதாரங்கள் உள. இன்றைய மாலைதீவு மக்களின் பேச்சு வழக் கிற் பழைய சிங்கள மொழியின் செல்வாக்கினை ஆர். எல். புரோஹியர் அவதானித்துள்ளார். மேலும் கில்வேட் சிலேட்டர் (Gilbert Sater) மினிகோய்த்தீவினரின் எண்வரிசை எவ்வளவு தூரம் சிங்கள மொழியின் எண்வரிசை முறையைப் பின்பற்றி யமைந்துள்ளது என்பதனை விபரித்துள்ளனர். இத்தகைய மொழி ஒற்றுமைக்குக் காரணம் இலங்கை மாலைதீவு வரையும் பரந்த தொரு பெருந்தீவாக இருந்ததஞலே எனப் புரோஹயர் கருது வர். இராஜவலிய இத்தகைய கருத்தை ஏற்படுத்தக்கூடியவகை யிற் பெருங்கடற் பெருக்கொன்று களனிதிஸ்ஸ களனியாவை ஆண்டகாலத்தில் (கி.மு. 200) ஏற்பட்டதாக விபரித்துள்ளது.
26

எனினும் இக்கடற் பெருக்கிலிருந்து மன்னர், கற்பிட்டி, மாதம்பை முதலிய கரையோரப் பட்டினங்கள் தப்பிவிட்டனவாக இராஜ வலியவே குறிப்பிடுகின்றது. மேலும் மகாவம்சம் விஜயன் இலங் கைக்கு வந்திறங்கிய காலத்திலேயே மகாதிட்டு (மாதோட்டம்) தம்பபன்ன (தாமிரபர்ணி) கல்யாணி (களனியா) மணி பல்ல வம் (நயினதிவு) முதலிய கரையோரநகரங்களையும், தீவுகளையும், கடம்பநதி, கம்பீரநதி முதலிய நதிகளையும் இலங்கையின் தென் மேற்கு, வடமேற்குப் பகுதிகளிற் குறிப்பிட்டிருப்பதனல் இராஜ வலியவின் கடற்பெருக்கு வருணனை உயர்வு நவிற்சியணியின் பாற்பட்டதாம் என்பது தெளிவாகின்றது. எனவே விஜயன் வருகைக்கு முன்னரே மாலைதீவு, லச்சதீவுப் பகுதிகள் தனித் தீவுக் கூட்டங்களாகிவிட்டன என்பது தெளிவாகின்றது. வைஜயந்தி எனும் வடமொழி நூல் மாலயதீபம் தென்சமுத் திரத்திலிருக்கிறதென்பதனல், மாலைதீவையே இந்நூல் குறிப்பிடு கிறதென்பதில் ஐயமில்லை. முதல் இராசராசசோழன் (கி. பி. 985 - 1014) சேரநாட்டிற்குத் தென்மேற்கே அரபிக்கடலிலுள்ள மால்தீவுகள் எனும் முந்நீர்ப் பழந் தீவுகளைக் கைப்பற்றினன் என்றும் கூறப்படுகின்றது. மேலும் மாலைதீவிற் கிடைக்கப்பெற்ற புராதன கல்வெட்டுக்களின்படி, மாலைதீவின் குரியவழிபாடுடைய ஆதிக்குடிகள் இந்துவெளி, மேற்காசியா முதலிய நாடுகளின் நாகரிகத் தொடர்புடையவர்கள் என்றும், சில சமயம் தூர கிழக்கு நாடுகளின் தொடர்புகளும் இவர்களுக்கிருந்திருக்கலாம் என்றும் நோர்வே ஆய்வாளர் தோர் ஹயதல் (Thor Heyerdahl) குறிப்பிட்டுள்ளார். இன்று இலங்கைக்குத் தென்மேற்காக 400 மைல்கள் தூரத்தில் இந்து சமுத்திரலுள்ள இத்தீவுக் கூட்டங் களில், இருநூற்றிருபது தீவுகளிலேதான் மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். •
எனவே மாலைதீவுக் கூட்டங்களின் தனியியல்புகளைக் கருத்திற்கொண்டு, வங்கத்திலிருந்துவந்த நாவாய் இங்கு கரை யேறியதனுலேதான், இங்கு பழைய சிங்கள மொழியின் செல் வாக்கிற்குரிய காரணம் எனலாம். எனவே மகாவம்சத்தின் வர லாற்றுத் தகவல்களை நாம் இவ்வகைத் தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்துதல் அவசியமாகும்.
இவர்களது பிள்ளைகளை ஏற்றிச்சென்ற நாவாய் நக்கதீப கம் எனும் தீவையடைந்ததாக மகாவம்சம் (மகா. அத். 6.43-45) குறிப்பிடுகின்றது
முதலாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி கடாரப்படை யெடுப்புப்பற்றிக் குறிப்பிடுகையில்
27

Page 19
கலாமுதிர் கடுந்திறல் விலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் எனக் குறிப்பிடுகின்றது. இத்தீவினையே மணிமேகலையும் "நக்க சாரணர் நாகர் வாழ்மலை' (XVI : 5, 39) எனக்குறிப்பிட்டதென லாம். இன்று வங்காள விரிகுடாவிற்குத் தெற்கேயுள்ள அந்த மான்தீவுக் கூட்டங்களுக்குத் தென்பகுதியிலுள்ள பத்தொன்பது தீவுக் கூட்டங்களையே நக்காவாரம் அல்லது நிக்கோபார்த் (Nicobar) தீவுகள் என அடையாளம் கண்டுள்ளனர். இவற்றுள் பன்னிரண்டு தீவுகளிலே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொங் கோலிய இனத்தைச்சார்ந்த மக்களே இன்று இங்கு வாழ்ந்து வருகின்றனர். எனவே இத்தீவின் மொழியாய்வுகளும் எமது இளவரசர் விஜயனின் வரலாற்றை உறுதிப்படுத்தவல்லன என நாம் எதிர்பார்க்கலாம். ஹென்ரி கொரியா நக்கதீபகத்தை நாக தீவு என்று அடையாளம் கண்டு யாழ்குடாவிலேதான் பிள்ளை கள் ஏறிய நாவாய்கரை சேர்ந்ததென்பர். மகாவம்ச ஆசிரியர் நாகதீவிற்கும் - நக்கதீபகத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதை அறிந்திருந்தார் என்பதனை மகாவம்சத்தை ஆராய்பவர்கள் உணர்வர். (வரை படம் 4)
விஜயனும் தோழரும் ஏறிய வங்கம் முதலிற் கரையேறிய தாக மகாவம்சம் குறிப்பிடுகின்ற (6.46) சூர்பாரகத்தைப் பெயர் ஒற்றுமை காரணமாகச் சில வரலாற்ருசிரியர்கள் கேம்பேகுடாவி லுள்ள சுபாரத் துறையுடன் அடையாளம் கண்டத்னலே, சிங்கள மக்கள் இந்தியாவின் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று இன்று வரை அறியமுடியாத குழப்பமான சூழ்நிலைகள் இருந்துவருகின் றன. எனினும் சில வரலாற்ருசிரியர்கள் சூர்பாரகத்தைத் தென் னிந்திய உவரித்துறையென்றும் அடையாளம் கண்டிருப்பதை யும் இங்கு குறிப்பிடுதல் உகந்ததாகும். இது தவறின் நாம் மேலே வலியுறுத்திய கலிங்க - வங்கப் புவியியற் பின்னணிகளை யும், கடற்பிராந்தியப் பழைய துறைகளையும் கவனத்திற்கொண்டு மகாவம்சம் குறிப்பிட்ட சூர்பாரகம் தென்னிந்தியக் கிழக்குக் கரையில் அமைந்துள்ள சோபத்மா (பொதுகே) துறையாகலாம் என்பதற்கும் நாம் மறுதலிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம். இவைதவிர, நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மகத வணிகரின் செல்வாக்கிற்குட்பட்டிருந்த பிருகுகச்ச - சூர்பாரகத் துறைகளைப் புவியியல் அறிவின்மையாலும் தவருகக் குறிப்பிட் டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.
28

இலங்கையிற் சிங்கள இனமக்களின் வளர்ச்சி நிலைகள் :
இனி இலங்கையிற் சிங்ககாலன் பரம்பரைப் புகழ்மிக்க இளவரசர் விஜயசிங்க உருவாக்கிய சிங்கள இன வளர்ச்சி நிலை களை நாம் ஆய்கையிற், தூய சிங்கள இனத்தனித்துவத்தை இலங்கையில் நிலைநாட்டுவதென்பது இயலாத காரியமாகும். இலங்கையிற் சிங்கள இளவரசர் சிங்கள இனமக்களை உருவாக்க முயன்றபொழுது, கலிங்கம் அல்லது வங்கவமிசத்துப் பெண்களின் பங்களிப்பை நிரப்புவதற்கு முன்வந்தவர்கள் பாண்டிய நாட்டுப் பெண்களே. (மகா. VI. 57 - 58) இதனுற் தொடக்க நிலையி லேயே விஜயனும், தோழர்களும் உருவாக்கமுனைந்த சிங்கள இனத் தனித்துவம் தூய்மையை இழந்துவிடுகின்றது. மேலும் இலங்கையின் பிறகுடிகளான இயக்கர், நாகருடைய இனக் கலப்புகளும் காலப்போக்கிற் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. ஆனலும் விஜயனுக்குப் பின் அரசாட்சிப் பாரத்தையேற்கக் கூடிய வாரிசுகள் இல்லாமையால், விஜயனின் தம்பி சுமிதனுக்கு, விஜயன் தன்னட்சிப்பாரத்தைப் பொறுப்பேற்கவல்ல வாரிசு ஒருவரைக் கேட்டுக் கடிதமனுப்பியிருந்தான். (மகா. அத். VI. 7 - 12) விஜயனின் கோரிக்கையைச் சுமிதனின் மகன் பாண்டு வசுதேவன் ஏற்றுக்கொண்டு, இலங்கையிற் சிங்கள அரச பரம் பரையின் இனத்தூய்மையைப் பேணுவதற்காக முப்பத்திரண்டு மந்திரி குமாரருடன் துறவி வேடத்திற் திருகோணமலையில் வந் திறங்கினன். பின்னர் இவனைத் திருமணம் புரியவந்த சாக்கிய வமிசத்துப் பத்ரகாஞ்சனவும், தோழியரும் பிக்குகள் வேடத் திற் கோனகமத்துறையை வந்தடைந்தனர். (மகா. VI. 18-24) இவர்களைத் தொடர்ந்து கங்கைப் பிரதேசக் குடியேற்றங்களும், பின் பெளத்த மத தூதுவர்களான மகிந்ததேரர், சங்கமித்தை தேரி என்போருடன் வந்தவர்களும், சிங்கள இன வளர்ச்சியிற் முக்கியபங்குகொண்டனர் எனலாம். இவர்களிற் சாக்கிய இனத் தைச் சேர்ந்த பத்திரகாஞ்சனுவும், தோழியரும் மொங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று மேலே அவதானிக்கப்பட் டுள்ளது. அவ்விதமே மகிந்தர் - சங்கமித்தை என்போருடைய மெளரியமரபுகளும், மெளரியர்களை ஆரியர் என்று கருதுமள விற்கு வற்புறுத்துவதாக இல்லை. மற்றுக் கங்கைச் சமவெளியி லும் ஆதியில் வாழ்ந்த இயக்கர், இராட்சதர், நாகர் என்போர் மொங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றே அவதானிக் கப்பட்டுள்ளனர். எனினும் காலப்போக்கிற் "கங்கை குலத்தோர்" என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும் வம்சத்தில் எந்தளவிற்கு ஆரியவினச் செல்வாக்கிருந்தது என்பதும் திட்டவட்டமான
29

Page 20
மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது. ஆனல் கங்கைப்பிரதேசப் பகுதிகள் மகதம் உட்பட கி. மு. 6ம் நூற்ருண்டிற்கு முன்னரே ‘ஆரியாண்டம்" அல்லது ‘ஆரியவர்த்த' என்ற ஆரியருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளாகிவிட்டன என்றும் மேலே அவ தானித்திருந்தோம்.
எனவே சிங்கள இளவரசர் விஜயன் தன்னட்சி பாரத்தை ஆதரிக்கவேண்டி ஏற்படுத்திய, புதிய இனச் சேர்க்கைகளை மெரு கூட்டி வளர்க்கும் வகையிலே பின்வந்த கங்கைச் சமவெளிக் குடி யேற்றங்கள் அமைந்தன எனலாம். ஆனல் அரச பாரம்பரியத் தைத் தாங்குவதற்குக் காலந்தோறும் கலிங்கத்துச் சிங்கவம்ச வாரிசுகளையே வரவழைத்தனர் என்பதும் மேலும் அவதானிக்கப் பட்டது. இந்தச் சிங்க அரசவம்சததை ஆதரித்த பொதுமக்க ளைப் பொறுத்தவரையிற் பல்லினங்களின் கூட்டுச்சேர்க்கைகளும், மரபுகளுமே, இன்றைய சிங்களப் பொதுமக்கள் வளர்ச்சிக்கு வித்திட்டன எனலாம். நாம் பல்கோணங்களிலிருந்தும் ஆதாரங் களைத் தேடித்துரந்து கிடைத்த சான்றுகளைக்கொண்டு, இத் தகைய சூழ்நிலை ஒன்றுதான் சிங்கள மக்களின் வளர்ச்சிக்குப் பின்னணியாக இருந்தது என்று காட்டினலும், இன்றுவரை சிங்கள மக்கள் இலங்கை நாட்டிற், தமது என்று காலந்தோறும் கட்டிக்காத்துப் பேணிவந்த சமுதாய, மானிட, மொழியியல், மற்றும் பிற மரபுகளையும் நாம் கவனத்திற் கொண்டுதான், இன்று இவர்கள் வரலாற்றை ஆராயவும், மதிப்பீடு செய்யவும் கடமைப்பட்டிருக்கிருேம் எனிற் தவருகாது. ஒரு தொல்லிய லாளன் அல்லது வரலாற்ருசிரியனின் கடமை, கண்ணியங்களில் இந்த நிதான உணர்வு மிக முக்கிய பண்பாகும்.
சிறப்பாக, இன்று சிங்கள மக்கள் தம்மை ஆரிய வம்சத் தைச் சேர்ந்தவர்கள் என்றும், தம்மொழி ஆரியமொழிக் குடும் பத்தைச் சேர்ந்ததென்றும் இனம் காட்டவே விரும்புகின்றனர். சிங்கள மக்களின் அரசியல், சமய வரலாறுகளை விபரிக்கின்ற மகாவம்சம், சூளவம்சம் முதலான நூல்கள் சிங்கள மக்களை ஆரியவின மக்களென்று குறிப்பிட்டு இனம் காணவில்லை. எனி னும் இந்நூல்கள் திராவிடர்களைத் தமிழர், பாண்டியர், கேரளர், சோழர், கன்னடர்கள், நாயக்கர்கள் என்று குறிப்பிட்டது போலவே, சிங்கள மக்களைச் “சீகளர்கள்" எனக் குறிப்பிட்டன ராகலாம். மேலும் சூளவம்சம் இரு சந்தர்ப்பங்களிற் 'தகுரசு’ (Thakuraka) என்ற படைத்தலைவன் (XC. 16 - 30) கீழும், "ஆரியச்சக்கரவர்த்தி? என்ற படைத்தலைவன் கீழும் ஆரியப் வடைகள் (XC: 44) என்று குறிப்பிட்டாலும், 'சுதேசப் படை
30。

களைச் சீகள வீரர்கள் என்றே குறிப்பிடுகின்றது. (இங்கு குறிப் பிட்ட "ஆரியச்சக்கரவர்த்தி" என்ற பட்டம் பெரும் அதிகாரத்தை பும், தகைமையையுமே சுட்டுகின்றதென்றும் இப்படைத் தலைவன் ஆரியனல்ல என்றும் சூளவம்சம் சுட்டுவதையும் இங்கு குறிப் பிடல் பொருத்தமாகும்.) ஆணுலும் மகாவம்சம், சூளவம்சம் ஆகிய இரு நூல் ஆசிரியர்களும், சீகள மக்களைத் தென்னிந்திய அரசியற் கலாசாரத் தொடர்புகளிலிருந்தும் தம்மை வேறு படுத்திக் காட்ட முயன்றதனுற் தாம் “சீகள மக்கள்" என்று கூறிக்கொள்ள விரும்பும் இனத் தனித்துவத்தையும் விரும்பி ஞர்கள் என்பது தெளிவாகின்றது. வோகரிகதிச மன்னன் (கி. பி. 269 - 291) காலத்தில் வாழ்ந்த பிக்கு ஒருவர் ஆரியதே வ (Aryadeva) எனும் பெயரையும், இதன்பின் மாணவம்மாவின் காலத்தில் (கி. பி. 676 - 711) ஆரியசூர என்பவர் ஜாதகமாலா எனும் நூலை எழுதினர் என்ற குறிப்பும் எமக்குக் கிடைப்பத ணுல் ஆரிய இனக் கலாசாரத் தொடர்புகள் கணிசமான அள விற்கு இருந்தன என்பதும் தெளிவாகின்றது. கி. பி. 2ம் றூற் ருண்டைச் சார்ந்த நெலும்ப பொகுண (கிழக்கு மாகாணம்) விலுள்ள பாறைக் கல்வெட்டு விகாரைகளிற் செய்யப்பட்ட ஆரிய வன்ச (Ariyawansa) கிரியைகளைப்பற்றிக் குறிப்பிடுவதையும் இங்கு குறிப்பிடல் பொருத்தமாகும். மற்றுச் சிங்கள மக்களின் மானிடவியற் பண்புகளை ஆராயுமிடத்து, திராவிடவின மக்களின் இயல்புகளுக்கப்பாற்பட்ட வகையிற் வேதகால ஆரியர்களைப் போற் போரிலீடுபாடுடைய தன்மையினை இவர்களிடத்தில் வர லாற்றடிப்படையாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இப்பண்பினை அவதானித்துப்போலும் பூரீ இராஜராஜ தேவர் மெய்க்கீர்த்திகள் “முரட்டெழில் சிங்களவர்” எனச் சிங்கள வீர ரின் போர்த்திறனை விதந்து கூறினர் எனத் தெரிகின்றது. இலங்கைப் பெருங் கற் பண்பாட்டுக் களங்களில் நடாத்தப்பட்ட இன ஆய்வுகளின்படி, இப் பண்பாட்டு மரபைப் பேணியவர்கள் தென்னிந்தியத் திராவிட இனத்தவரின்றும் வேறுபட்டவர் அல் லர் என்று கே. ஆர். கென்னடி கருதுவர். ஆனற் பி. இ. பி. தெரணியகல தப்போவ - மருதமடுவப் பெருங்கற் பண்பாட்டுக் களங்களிற் கிடைக்கப்பெற்ற தாழிகளின் மேற்பகுதிகளில் வனை யப்பட்டிருந்த மனித உருவங்களைக்கொண்டு, நீக்ரோ இனத்தவ ருடன் ஆரியவினமக்களையும் அவதானித்ததாகக் கூறுவர். எனி னும் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் ஆதி திராவிடர்கள் பேணியது போன்ற பெருங்கற் பண்பாட்டு மரபுகளைக் கிழக் கிந்தியர்கள் பேணியதாகத் தெரியவில்லை. (இதன் விரிவைப் 45-46ம் பக்கம் பார்க்கவும்) மேலும், பி. இ. பி. தெரணியகல பொதுவாகச், சிங்கள மக்களை இன அடிப்படையில் அடையாளம்
31

Page 21
காணுகையிற் மத்தியதரைவாசிகள், நீக்ரோ இனத்தவர் (இவ் விரு இனத்தவரும் திராவிட இனத்தவரின் வளர்ச்சியிற் முக்கிய பங்களித்தவராவர்.) மற்றும் மொங்கோலியர், "அல்பைன், ஆர் மெனுேயிட், ஒஸ்ரலொயிட் முதலான இனத்தவரின் சேர்க்கை யால் வளர்ச்சியடைந்த ஓரினமாகக் கருதுவர். வங்கத்தின் இன வளர்ச்சிகளில், மத்திய ஆசியாவிலிருந்துவந்த அல்பைன், தினரிக், ஆர்மெனெயிட் இனங்களின் சேர்க்கையால் உருவாகிய கிளை யினத்தவரையே முக்கிய இனத்தவராகப் பி. எஸ். குஹா அவ தானித்துள்ளனர். எனவே பி. இ. பி. தெரணியகல அவதா னித்த மொங்கோலியர், அல்பைன், ஆர்மெனுெயிட் இனக் கூறு கள் வங்கத்தினூடாக வந்ததெனிற் தவருகாது.
சிங்களமொழித் தோற்றமும், வளர்ச்சி நிலைகளும் :
இன்றைய சிங்கள மொழியைப் பொறுத்தவரையில், வர லாற்றடிப்படையாக மேற்கிந்தியப் பிராந்தியங்களிலும், கிழக் கிந்தியப் பிராந்தியங்களிலும் பேசப்பட்ட பிராகிருத மொழிக் கும், சிங்கள மொழிக்கும் கூடிய தொடர்புகள் உள என அவ தானிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சிங்கள மொழியின் வளர்ச்சி நிலையில் இன்றைய பெங்காலி மொழி, மராட்டி மொழி, குஜ ராட்டி மொழி முதலானவற்றின் பங்களிப்புகளும் பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவர் பேசும் மொழி யைக்கொண்டு, அவருடைய இனத்தன்மையைத் தீர்மானிக்க முடியாது என்பதனை மானிடவியல், மொழியியல் ஆய்வுகள் காட்டி யுள்ளன. எனினும் சிங்கள மொழியைப் பொறுத்தளவில், அதன் தோற்ற, வளர்ச்சி நிலைகளை ஆய்வதற்கான போதிய வரலாற் றுத் தகவல்கள் இருப்பதனுற் சிங்கள மொழியின் தோற்ற, வளர்ச்சிகளிற் பங்களித்த இனங்களை வரலாற்றடிப்படையில் இனம் காணுவதால், ஓரளவிற்கு இனத்தையும், மொழியையும் நாம் தொடர்புபடுத்தமுடியும் எனக் கருதுகின்ருேம்.
இலங்கையின் ஆதிச் சிங்களக் குடிகளின் வரலாற்ருய்வுகள், சிங்கள மக்கள் பேசிய மொழி (கி. மு. 500-கி. பி. 500) எழுமொழி எனத் தெரிவித்துள்ளனர். இளவரசர் விஜயனும், தோழரும் இலங்கையை அடைந்த காலத்தில், இலங்கையிற் பேச்சு வழக்கிலிருந்தமொழி எழுவாகும். இந்த எழுமொழி ஈழத்திற் பேசப்பட்ட பழைய தமிழ் மொழி என இனம் காணக் கூடியதாக இருக்கின்றது. இளவரர் விஜயனும், தோழர்களும் கிழக்கிந்தியப் பிராகிருத மொழியைப் பேச்சு மொழியாகக்
32

கொண்டிருந்தபொழுதிலும், பாண்டிநாட்டுப் பெண்களுடன் ஏற் படுத்திக்கொண்ட திருமணத் தொடர்பினுல் இவர்களின் பிள்ளை களின் தாய்மொழியாக எழுமொழியே அமையலாயிற்று. அதனல் தாய்பேசிய உறவுமுறைச் சொற்களான அம்மே, அப்புச்சி, அக்கா, மாமா, ஐயா (இதுவேறு உறவுமுறையில் அண்ணு எனப் பாவிக்கப்படுகின்றது.) எனும் தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழி யில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொண்டன. வீசிகரணவா, தள்ளுகரனவா, தட்டுக்கரனவா முதலிய சொல்லுருவாக்கங்கள், இருமொழியின மக்கள் சேர்ந்து உருவாக்கிய புதிய மொழியின் நிலை எனலாம். இத்தகைய இருமொழிப் பண்புகள் (பாண்டியப் பெண்களின் எழு அல்லது பழைய தமிழ், மற்றும் விஜயனும், தோழரும் பேசிக்கொண்ட கிழக்குப் பிராந்தியப் பிராகிருதம்) சேர்ந்து சிங்கள மொழி உருவாகியதஞற் பிரதிபலித்த திராவிட மொழியியல்புகளைக் கவனத்திற்கொண்டு பாதிரியார் எச். எஸ். டேவிட் சிங்கள மொழியைத் திராவிட மொழிக் குடும்பத்தில் ஒன்ருகக்கொள்வர். எனினும், இன்றைய சிங்கள மொழியில் எழு மொழிப் பண்புகள் ஐம்பது வீதம் என்றும், மிகுதி ஐம்பது வீதமும் ஆரிய மொழிக் குடும்பத்திற்குரிய பண்புகளே என்றும் விகிதாசாரப்படி மதிப்பிட்டுக் காட்டுவர். சிங்கள மக்கள் கி. மு. 3ம் நூற்றண்டளவிற் பெளத்த மதத்தைத் தழுவிய காலத்திற் கூட, இம்மக்கள் பெளத்த திரிபிடக விதிமுறைகளை எழு மொழி யிலேயே விளங்கிக்கொண்டனர் எனத் தெரிகின்றது. மூல திரி பிடக விதிகளைப் புத்தர் தாம் பேசிய பாலி மொழியிலேயே உரைத்திருந்தனர். ஆனல் இவற்றை வெவ்வேறு இன மக்க ளுக்கு உபதேசிக்கும்பொழுது, அவ்வவ் பிராந்திய மொழிகளி லேயே உபதேசித்து வந்தனர். எனவே மகிந்தர் மிகுந்தலையில் அரித்ததேரருக்குப் பாலி மொழியிற் திரபிடக விதிகளைக் கூறி ஞர் என்பதற்கு ஆதாரமில்லை. அப்படிக் கூறியிருந்தாலும்கூட, மகிந்த தேரர் பெளத்த திரிபிடகத்தை இலங்கை மக்களுக்கு உபதேசித்தபின் எழுந்த அட்டகதா எனும் பெளத்த சமய உரைகள் யாவும் எழு பாஷையிலே எழுதப்பட்டிருந்தன. எனவே இந்த எழு மொழியே சிங்கள மொழியின் தோற்ற நிலையாகும். எனவே இதனை ஆதி சிங்கள மொழியென்று குறிப்பிடுவதே பொருத்தமாகும். எழு மொழிபற்றித் தம்பிய - அதுவ - கதபதய (Dhampiya - atuva – gatapataya) g5spólů îGLóLög, S) fî s விதியானது எழுதீவில் எழு மொழியிலேயே உரைக்கப்பட்டது எனக் குறிப்பிடும். இதன் குறிப்புகள் பின்வருமாறு:
Magadhabasin Vatemin a budukalatuva heladiva ajuro helu basin tubũha.
33

Page 22
இந்த எழுபாஷையிலிருந்த திரிபிடக விதியானது கி. பி. 5ம் நூற்ருண்டளவிற் புத்தகோசன் எனும் தென்னிந்தியத் தேரராற் பாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபின் வழக்கிறந்துபோய் விட்டதாகத் தெரிகின்றது. எனவே இலங்கையிற் சிங்கள மக் களின் ஆதி சிங்கள மொழியான எழுவே, பேச்சுவழக்கிலும், இலக்கியவழக்கிலும் இடம்பெறலாயிற்று என்பது தெளிவாகின் றது. இந்த எழுமொழியின் வளர்ச்சியில் விஜயன் குழுவினர் பேசிய கிழக்கிந்தியப் பிராகிருதமொழி, சிறப்பாக அசோக மன் னனின் கீர்ணுர்க் (Girnar) கல்வெட்டு மொழியுடனும் இவ் எழு மொழி (கிறித்துவிற்கு முற்பட்டகாலச் சிங்களமொழி) நெருங் கிய தொடர்புடையதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அசோக மன்னனின் இளமைக்கால வரலாறு அவந்தி, உஜ்ஜனி முதலான மேற்கிந்தியப் பிராந்திய அரசுகளுடன் தொடர்புடையதாக இருந்தது. அதனேடு அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து மூன்று வகையான பிராகிருதமொழி வழக்கிலிருந்ததாகத் தெரிகின்றது. அவை கிழக்கிந்தியப் பிராந்தியப் பிராகிருதம், மேற்கிந்தியப் பிராந்தியப் பிராகிருதம், வடமேற்கிந்தியப் பிராந்தியப் பிராகிரு தம் என்பனவாம். இவற்றுட் கிழக்கிந்தியப் பிராந்தியப் பிரா கிருதமே அர்த்தமாகதி எனும் பாலிமொழியுருவாக்கத்திற்கு முன்னேடியாக இருந்தபொழுதிலும், அர்த்தமாகதியின் காலப் போக்கு வளர்ச்சி நிலைகளில் மேற்கிந்தியப் பிராந்தியப் பிரா கிருதம் அதிக செல்வாக்கைச் செலுத்தியதாகவும் தெரிகின்றது.
அதனேடு முதலிற் பெளத்த திரிபிடக விதிகள், அர்த்தமா கதி எனும் பாலிமொழியைக் காட்டிலும் பழைய மொழியொன் றிலே உருவாகியது என்றும், அந்தப் பழைய மொழியானது பெரும்பாலும் அவந்தி அல்லது கெளசாம்பிப் பிரதேசங்களைச் சார்ந்த மொழிகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம் என்றும் கீத் (Keith, A) கருதுவர். இப்பழைய பிராகிருதமொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகவே விந்தியமலைச்சாரற் பைசாசி மொழியும் கருதப்படுகின்றது. எனவே மேலே கவனித்தவாறு அவந்தி, உஜ்ஜயினித் தொடர்புடைய மகிந்தர் வருகையுடன், மேற்கிந்தியப் பிரதேசப் பிராகிருதமொழி அறிமுகமாகக்கூடிய வாய்ப்பு: சிங்களமொழிக்கிருந்தது எனிற் தவருகாது. அதனுலே சிங்களமொழி வளர்ச்சியில், மேற்குப்பிராந்தியப் பிராகிருதம் அதிக செல்வாக்கைச் செலுத்தமுடிந்தது எனலாம்.
நாம் மேலே ஆராய்ந்து காட்டிய காரண, காரியத் தொடர்புகளை என். எ. ஜயவிக்கிரம (N. A. Jayawickrama) இன்னேர்வகையில் ஆராய்ந்து காட்டியுள்ளனர். இவர் கருத்துப் படி மகதம், ஆந்திரநாட்டுக் கலாசாரத் தொடர்புகள், இலங்
34

கைக்கு ஏற்பட்டபின்னரே பாலித்திரிபிடக விதிகள் இலங்கைக் குக் கிடைக்கக்கூடியதாக இருந்ததென்றும், மேலும் இக்காலகட் டத்திற் பெளத்த சங்கத்தினர் வர்த்தக மார்க்கங்களினூடாகப் பணிபுரியும்போது, பாலி மொழியிற் பல்வேறு பேச்சு வழக்குக் களிலான ஒலியமைதிகள் தாக்கத்தை ஏற்படுத்தின என்றும், அதனலே கிழக்கிந்தியப் பிராகிருதம், மேற்கிந்தியப் பிராகிருதம், பைசாசிமொழி, மற்றும் திராவிட மொழியியல்புகளையும் சிங்கள மொழி சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தன என்பர். இவருடைய காரணங்களையும் நாம் மறுதலிப்பதற்கில்லை.
இவருடைய காரணங்களையும் ஏற்றுக்கொண்டு, நாம் ஏற்கனவே அவதானித்த மகிந்தரின் வருகை, (உஜ்ஜயினி -க் கெளசாம்பி மொழித் தொடர்புடையவர்.) கங்கைப் பிரதேச மக்களின் குடியேற்றங்கள், மற்றும் கலிங்க வம்சத்தவரின் இடை யரு அரசியற், கலாசாரத் தொடர்புகள் என்பவற்றினுற், சிங்கள மொழி மேலும் ஆரியமொழியாக மெருகூட்டப்படும் சந்தர்ப் பங்களையும் பெற்றுக்கொண்டது. இத்தகைய வரலாற்றுப் பின் னணிகளுடன் சிங்களமொழி வளரக்கூடிய சூழ்நிலைகள் இருந்தத னலே, சிங்கள மொழியின் பேச்சுவழக்கில், இன்றைய பெங்காலி மொழி, மராட்டிமொழி, குஜராட்டிமொழி என்பன, வரலாற் றடிப்படையிலான தொடர்புகளைக் காட்டி நிற்கின்றன. எனினும் சிங்களமொழியின் இலக்கிய வளர்ச்சியிற் பாலி, சமஸ்கிருத மொழிகளின் செல்வாக்கே மேலோங்கி நிற்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாம்.
மேலே ஆராய்ந்தவாறு உருவாகிப், பின் நெளிவு, வளைவு களுக்கூடாக வளர்ந்த சிங்களமொழி கி. பி. 5ம் நூற்ருண் டளவிலேதான் தன் மொழிவடிவு இன்னதெனச் சிங்கள மக்க ளுக்குக் காட்ட முன்வந்ததெனலாம். அதாவது கி. பி. 5ம் நூற்றண்டளவிலேதான் சிங்களமொழி கல்வெட்டுக்களிற் கை யாளப்பட்டதென்பதனைக் கல்வெட்டியலாளர்கள் அவதானித் துள்ளார்கள். இதற்கு முந்தியகாலக் கல்வெட்டுக்கள் யாவும் எழுமொழியும் (பழைய தமிழ்ச் சொற்களும்) பிராகிருதமும் கலந்த மொழியிற் தென்னிந்தியப் பிராமி எழுத்துக் களிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களாம். சிங்களமொழியின் தோற்ற, வளர்ச்சிகள் இவ்வாறிருக்கையிற், சிங்கள எழுத்துவடிவங்களின் தோற்ற, வளர்ச்சிகளுக்குரிய வரலாற்றுப் பின்னணிகள் சிறிது வேறுபட்டதாம். சிங்கள எழுத்துவரி வடிவங்களின் படிமுறை யான வளர்ச்சி நிலைகளை இலங்கையில் இதுவரை கிடைக்கப் பெற்ற பழைய கல்வெட்டுக்களிலும், இவற்றுடன் தொடர்பான தென்னிந்திய, மற்றும் வட இந்தியக் கல்வெட்டுகளிலும் உள்ள
35

Page 23
தொடர்புகளை ஒப்பிட்டு ஆராய்வதன்மூலம், சிங்களமொழியின் எழுத்து வளர்ச்சியுடன் தொடர்பான பல்வேறு கூறுகளையும் நாம் தொடுத்தும், இணைத்தும் பார்க்கமுடியும்.
சிங்கள எழுத்துவ டிவங்களின் பரிணும வளர்ச்சிகள் :
இந்தவகையில் இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட் டுக்களை ஆராய்ந்தவர் சத்தமங்கல கருணரத்தின ஆவர். இவ ருடைய ஆய்வுகள் இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட்டுக் களிற், தென்னிந்தியத் தமிழ்ப் பிராமி (தாமிழி) எழுத்துக்களே கையாளப்பட்டிருந்தன என்பதனைக் காட்டியுள்ளன. அசோகன் பிராமி எழுத்துக்கள் காலப்போக்கிலே கி. மு. 1ம் நூற்றண் டளவிற்ருன் இலங்கைக் கல்வெட்டுக்களில் இடம்பெறமுடிந்தது, என்பதனையும் இவருடைய ஆய்வுகள் வெளிப்படுத்தலாயின. மேலும் இந்த இரண்டு பிராமி எழுத்துக்களுக்குமுள்ள வேறு பாடுகளையும் இவர் எடுத்துக்காட்டுவதன்மூலம் தென்னிந்தியப் பிராமியின் பழைமை நிலையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட வரிவடிவங்களில் முதலிற் தென்னிந் தியத் தமிழ்ப்பிராமி (தாமிழி) வரிவடிவங்கள் என்று குறிப் பிடும்போது, அவை எதனைக் குறிக்கின்றன என்று ஆராய்தல் அவசியமாகும். தமிழ்ப்பிராமி (தாமிழி) எழுத்துவடிவங்களின் தோற்ற, வளர்ச்சி நிலைகளை ஆராய்வதற்கு முன்னேடிகளானத் தென்னிந்தியப் பானை ஒடுகளிற் கீறப்பட்ட கிரபிடிக் (Graffiti) 'குறியீடுகளுக்கும், இந்துவெளிச் சித்திரக் குறியீடுகளுக்குமிடையே யுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் அறியவேண்டும். இவ் விடயம் தொடர்பாக லால் (B. B. La) நடாத்திய ஆய்வுகளுக் குப்பின், நூற்றுக்கணக்கான புதிய கிரபிடிக் குறிகளை எஸ். குருமூர்த்தி ஆராயலாயினர். எனவே அண்மையில் இவர் நடாத் திய ஆய்வுகளின்படி முக்கியமான முன்னுாறு தென்னிந்தியக் கிரபிடிக் குறிகளில் 80 - 90 வரையிலான குறியீடுகள் இந்து வெளி எழுத்துக் குறியீடுகள் எனவும், 90க்கு மேற்பட்ட கிரபிடி கள் இந்துவெளிக் குறியீடுகளிலிருந்து வேறுபட்டன எனவும், 10 கிரபிடிகள் தமிழ்ப் பிராமிக் குறியீடுகளை நிகர்த்தன எனவும், இன்னும் சில தற்காலத் தமிழ் எழுத்துக்களை நிகர்த்தன என வும் வகுத்துக்காட்டியுள்ளார். இதற்கிடையில் வட இலங்கையில் ஆனக்கோட்டையிற் பெருங்கற் பண்பாட்டுக் குழிகளிற் கிடைக் கப்பெற்ற குறியீடுகளிற் பிராமி எழுத்துக்களும், இந்துவெளிக்
36

குறியீடுகளும் ஒன்றன்கீழ் ஒன்ருகப் பொறிக்கப்பட்டிருப்பதனல், இவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மேலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. உண்மையில் இந்துவெளிக் குறியீடுகள் மத்திய இந்தியா, மகாராஷ்டிரம், கர்னடகம் வரை செம்புக் கற்காலச் (Chalcolithic) கலாசாரத்துடன் பரவியிருந்தன என்பதனுலும், பின் தென்னிந்தியாவிற்குள் தமிழகத்தை இவ்வடிவங்கள் அடை யும்பொழுது செம்புக்கால மக்களாலும், இரும்புக்கால மக்க ளாலும் (இவர்களே பிற்பட்ட ஹாரப்பக் (இந்துவெளி) கலா சார நிலையைப் பிரதிபலித்தவர் ஆவர்) கையாளப்பட்டன என் பதஞலும், இந்துவெளிக் குறியீடுகளே தமிழ்ப்பிராமிக்கு மூலமா யிருந்தன என்பது தெளிவாகின்றது. மேலும் மேற்கிந்தியாவிற் பிற்பட்ட ஹாரப்பன் கலாசாரநிலை (கி. மு. 1900-1600) எனக் காலக் கணிப்புச் செய்யப்பட்டிருப்பினும், குஜராட்டில் இவ் வெழுத்து வடிவங்கள் கி. மு. 1300 வரையிலும், இன்னும் தெற்கே டைமவாத்திற் (Daimabad) கி முடி 1200 ஓரைப் பாவனையிலிருந்தன என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே ஹாரப்பன் எழுத்துக் குறிகளுடன் தொடர்பான் தேன்னிந்தியப் பெருங்கற்பண்பாட்டுக் கூறுகளின் காலமும் கி.மு. 12இ0 ன்னக்ஸ் கணிக்கவேண்டுமென்று எஸ். குருமூர்த்தி வூற்புற த்துவர்லி நாம் மேலே அவதானித்தவாறு ஏறக்குறைய எடுதிளி னுாடாகப் பரிணமித்த தமிழ்ப்பிராமி (இமிழி) ாேழுத்துக்க்ள், காலப்போக்கில் வளர்கின்ற நிலையிற் தனியேல்புகிளேக்$காட்டிக் கொள்ளும் முறையில், முற்றுமுழுதாகப் புதிய எழுத்தி விஷ்வங் களைப் புதிய சூழ்நிலைகளில் உருவாக்கிக்கொள்ளும் நிலைகளைபுேச் நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அசோகன் பிராமி எழுத்துக்களும் வேருேர் சூழ்நிலையில், இத்தகைய படிமுற்ைக் கிரம வளர்ச்சியினுரடாக ஹாரப்பன் எழுத்துக் குறிகளிலிருந்து, தனித்துவமான இயல்புகளுடன் பரிணமித்து வளர்ந்தவையே என்று ஆர். நாகசுவாமி கருதுவர். தென்னிந்தியப் பிராமி வளர்ச்சி நிலைகளைத் தொடர்ச்சியாக ஆராயக்கூடிய தொல்லியற் தடயங்கள் எமக்குக் கிடைத்தமைபோல், அசோகன் பிராமியின் முற்பட்ட படிமுறை வளர்ச்சிக் கிரமங்களை ஆராயக்கூடிய தரவு கள் இல்லையென்று சலித்துக்கொள்வதிலும்பார்க்க, நாமே எம் மிடமுள்ள தரவுகளைக்கொண்டு உண்மையைத் தேடல் அவசிய மாகின்றது. ஹாரப்பன் கலாசாரத்தின் பிற்பட்ட நிலைகள் அசோகன் பிராமி தோன்றி, வளர்ச்சிபெற்ற பிராந்தியங்களை அண்டிய பகுதிகளான் குஜராட், மத்திய இந்தியா, மகாராஷ் டிரம் ஊடாகவே தென்னகத்தை நோக்கிப் பரவலாயின என்பது போதிய தொல்லியற் தடயங்கள்மூலம் நிறுவப்பட்டுள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் ஹாரப்பன் கலாசாரத்
37

Page 24
தைத் தொடர்ந்து ஊடுருவிய ஆரிய கலாசாரச் சூழ்நிலைகளில், ஹாரப்பன் சித்திர எழுத்துக்கள் எவ்வாறு அசோகன் பிராமி யாகப் பரிணமித்தன என்பதனை ஆய்வது கல்வெட்டியலாளரின் கடனகும். இவ்வாய்வுகளுக்கு உதவும்வகையிற் ஹன்தர் (Hunter), லங்டன் (Langdon) முதலானேர் ஹாரப்பக் குறியீடுகளுக்கும், பிராமி எழுத்துக்களுக்குமிடையேயுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளனர். அண்மையிற் பி. பிரியங்க (B. Priyanka) பிராமி எழுத்துக்களையும், நாகரி எழுத்துக்களையும் உபயோகித்து ஹாரப் பன் சித்திர எழுத்துக்களுக்கும், பதினெட்டுப் பிராமி எழுத்துக் களுக்குமுள்ள உட்தொடர்புகளை எடுத்துக்காட்டியுள்ளனர். எனி னும் மொனியர் உவில்லியம்ஸ், வூலர் (Buhler), பிரெளன் (C. J. Brown), மக்டொனல்ட் முதலானேர் அசோகன் பிராமி வடிவங் கள் பொனிசியன் (Semitic Script) வடிவங்களிலிருந்து தோன் றியதாகக் கருதுவர். உண்மையென்னவெனிற் பொனிசியர்கள் ஹாரப்பா மக்களுடன் வாணிபத் தொடர்புகளை வைத்திருந்த வர்களானபடியாற், பொனிசியரின் வரி வடிவங்களின் செல் வாக்கை ஹாரப்பா வரி வடிவங்களிலும், பின் ஹாரப்பா வரி வடிவங்களின் செல்வாக்கைப் பிராமியிலும் காணக்கூடியதாக இருக்கின்றது என்பதேயாம்.
வட இந்தியாவிற் பொதுமக்கள் பேசிய மொழியாகிய பிராகிருதத்திற்கு முதலில் எழுத்துவடிவம் கொடுத்தவை அசோ கன் பிராமிக் கல்வெட்டுக்களேயாம். சிஷ்டரின் (பிராமணர், அரசர்கள்) பேச்சுமொழியாகிய சமஸ்கிருதம் கி. மு. 2ம் நூற் ருண்டளவிலேயே கல்வெட்டுக்களில் இடம்பெறலாயிற்று. வட இந்தியாவிற் பிராமியைத் தொடர்ந்து வளர்ந்த எழுத்து வடி வங்கள் நாகரி எழுத்து வடிவங்களாம். (குஜராட்டின் நாகரப் பிராமணரின் எழுத்து அல்லது கடவுளரின் நகரத்து எழுத்து எனச் சிலர் பொருள்கொள்வர். வேறுசிலர் நாகரின் எழுத்து வடிவங்கள் எனக் கருதுவர்.) எனினும் வடமேற்கிந்திய எல்லை களிற் கிரேக்கர், பாரசீகர் செல்வாக்கினற் கிரேக்கம் (Greek) கரோஷ்டி (Khairoshti) முதலான எழுத்து வடிவங்களும் கல் வெட்டுக்கள், நாணயங்கள் என்பவற்றில் இடம்பெறலாயின. அசோகன் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி நிலைகளை அயோத்தி, மதுரா, கெளசாம்பி முதலான பகுதிகளின் சிற்றரசர்களின் (கி. மு. 3ம் நூற்ருண்டின் பிற்பகுதி) காசுகளிலும், தென்னிந்தியா வில் ஆந்திரருடைய பழையகாசுகளிலும் (கி. மு. 150) அவ தானிக்கலாம். மேற்கிந்தியாவில் உடும்பரருடைய (Odumbara) காசுகளிலும் (கி. மு. 100) மேற்குச் சந்திரபருடைய (கி. மு. 100) காசுகளிலும் கிரேக்கம், கரோஷ்டி என்பவற்றுடன் பிராமி இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. வாரணுசிக் காசுகள் இரண்
38

டில் கி. மு. 150 ஆண்டளவில் வளர்ச்சிபெற்றிருந்த பிராமி இடம்பெற்றிருப்பதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருக் கின்றது. எனினும் ஆந்திரநாட்டில் கோதமி புத்ர பூரீ யக்ஞ சாதகர்ணியின் (கி. மு. 100) காசுகளில் முற்புறத்தில் அசோகன் பிராமியும், பிற்புறத்திற் தென்னிந்தியப் பிராமியும் சந்திக்கின்ற முதற் கட்டத்தையும் கவனத்திற்கொள்ளல் நன்று. எனினும் இன்னேர் புதிய வளர்ச்சி நிலைகளை முக்கிய சக (Saka) தலை வனன நகபானவின் (கி. பி. 100) காசுகளிலும், கி. பி. 115ம் ஆண்டளவில் மால்வ அரசை உருவாக்கிய சக தலைவனன சஸ் தனவின் (Chastana) காசுகளிலும் அவதானிக்கலாம். இவர் களுடைய காசுகளிற் பின்புறத்திற் கரோஷ்டி எழுத்துக்களுடன் பழைய நாகரி எழுத்துக்களிலே கல்வெட்டுக்கள் பொறிக்கப் பட்டிருந்தன. இதன்பின்னர் ஹ"ணர்கள் (Huns) காலத்திற் (கி. பி. 500) பொதுவாகக் காசுகளிற் பழைய நாகரி வடிவங் களிலே கல்வெட்டுக்கள் பொறிப்பது வழக்கமாயிற்று.
எனவே தொல்லியலாய்வுகளின்படி வட இந்தியாவில் முத லிற் பிராமியே பரந்த அளவிற் கல்வெட்டுக்களிலும், காசுகளி லும் பொறிக்கப்பட்ட எழுத்துவடிவங்கள் என்பதும், காலப் போக்கிலே பிராமியிலிருந்துருவாகிய நாகரி எழுத்துக்கள் இடம் பெறலாயின என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சமவாயங்கன சுத்த எனும் ஜைன நூல் கி. மு. 2ம் நூற்றண் டளவிற் தாமிழி, வம்மி (Bammi - brahmi) முதலான பதி னெட்டு வகை எழுத்துக்கள் இந்தியாவிற் பாவனையிலிருந்தது என்பதனற், தாமிழி என்பது தமிழகத்திற் தமிழ்மொழிக்கு முதல் எழுத்து வடிவம் கொடுத்த தென்னிந்தியப் பிராமியே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை தமிழ் எழுத்துக்களின் ஆரம்பநிலை என்பதனை முதன்முதற் புலப்படுத்தியவர் கே வி. சுப்ரமணிய ஐயர் அவர்கள் ஆவர். வட இந்தியப் பிராமியைக் காட்டிலும் தென்னிந்தியப் பிராமியே (தாமிழி) பழமை மிக்கது என்பதும் தொல்லியலாய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அசோ கன் பிராமிக்கும், தென்னிந்தியப் பிராமிக்குமிடையிற் பொது எழுத்துகள் சில அவதானிக்கப்பட்டபொழுதும், தமிழ்மொழியின் பேச்சியல்புகளுக்கமையத் தென்னிந்தியப் பிராமியின் வரிவடிவங் களும் அளவுபடுத்தப்பட்டனவாக இருந்தன. இந்த இயல்பினையே பிற்காலத் தமிழ் எழுத்து வடிவங்களும் பேணிவரலாயின. தமிழ் எழுத்துக்கள், அசோகன் பிராமி, அல்லது நாகரி எழுத்துக்களி லிருந்து வர்க்க எழுத்துக்களையோ அல்லது ஜ, ஸ, ஸ, ஹ, பூரீ போன்ற ஒலிகளையோ உருவாக்கிக்கொள்ள விரும்பாத நிலை யானது, தென்னிந்தியப் பிராமியின் (தாமிழி) தூய தனித்துவ இயல்புகளிலிருந்தே வந்ததெனலாம். எனினும் காலப்போக்கிற்
39

Page 25
தமிழ்நாட்டிற் பிராகிருதமொழியின் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் வர்க்க எழுத்துக்களை உருவாக்கவேண்டிய சூழ்நிலை கள் ஏற்படலாயின என்பதனை, உறையூரில் அகழ்வாய்வுகளிற் பெற்ற பானைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்துக்களிலிருந்து அறி யக்கூடியதாக இருக்கின்றது. அதனேடு பல்லவர் ஆட்சியில் ஆந்திராவின் தென்பகுதி, கன்னடம் முதலான பகுதிகள் தமிழ கத்துடன் இணைக்கப்பட்டதனுல், இம்மொழிகளின் கூட்டுச் சேர்க்கையால் ஆதிபல்லவ கிரந்த எழுத்துக்கள் உருவாக வாய்ப்
பேற்பட்டன. இப்பல்லவகிரந்தம் தெலுங்கு - கன்னட எழுத்து
வடிவங்களின் சாயல்படைத்தனவாம். எனினும் இப்பல்லவ கிரந்
தத்தில் எழுதப்பட்ட மொழி பிராகிருதமேயாம். மேலும் பல்ல
வர் காலத்திலேதான் நாகரி எழுத்துவடிவங்களும் தமிழகத்துக்
கல்வெட்டுக்களில் இடம்பெறலாயின. மேலும் தென்பகுதியில்
இத்தகைய பிராகிருத மொழி, சமஸ்கிருதமொழிச் செல்வாக்கி
னற் கேரளத்திற் கிரந்த எழுத்துகள், மேற்குறிப்பிட்ட மொழி
களின் ஒசையமைதிகளைத் தெளிவுறுத்தக்கூடியவாறு உருவாக்கப்
பட்டன. இவ்வாறு உருவாகிய சேரகிரந்த எழுத்துக்களைப்
பாவித்தே சமஸ்கிருதச் சொற்கள் முதலாயின, அன்றும் இன் றும் தமிழ்மொழியில் எழுதப்பட்டுவருகின்றதே ஒழிய, பிற
மொழிச் செல்வாக்கினுற் தமிழ் எழுத்துக்களில் எத்தகைய தாக்கங்களும் ஏற்படவில்லையெனலாம்.
நாம் இதுவரை அவதானித்த வட இந்திய, தென்னிந்திய எழுத்துக்களின் வரலாற்றுப் பின்னணிகளினடிப்படையிலேயே சிங்கள எழுத்துக்கள் தோற்ற வளர்ச்சிகளையும் ஆராயவேண்டிய வரலாற்றுச் சூழ்நிலைகள் எமக்குள. ஏனெனில் சிங்கள எழுத் துக்களின் தோற்ற, வளர்ச்சிகளை ஆராய்ந்தவர்கள், இவ்வெழுத் துக்களின் தோற்ற நிலைகளைத் தென்னிந்தியப்பிராமியே உரு வாக்கியதெனக்கருதினுலும், பிற்பட்ட வளர்ச்சிகளில் ஆந்திர எழுத்துக்கள், பல்லவ கிரந்தங்கள், தமிழ் எழுத்துக்கள், சேர கிரந்தங்கள் என்பன அதிகதாக்கம் செலுத்தியுள்ளன என்பர். இவர்களுட் சிறப்பாக போல். எம். ஜயராஜன் சிங்கள எழுத் துக்களின் வரலாற்ருய்வில், வட இந்திய எழுத்துக்களான அசோகன் பிராமி, தேவநாகரி, பெங்காலி, குஜராட்டி முதலான எழுத்துக்களுடன் சிங்கள எழுத்துக்களை ஒப்பமிட்டு நோக்கி, இவற்றிடையே எவ்வித உருவ ஒற்றுமையில்லாதிருக்கும் நிலை யினையும், பின் தெலுங்கு, கன்னட எழுத்துக்களைப்போற், சிங்கள எழுத்துக்களும் இடைநிறுத்தமில்லாக் கையோட்டத்துடன் எழு தப்படுவனவாயினும், அதிக உருவ ஒற்றுமைகளை வற்புறுத்த முடியாதிருக்கிறது என்றும் ஆராய்ந்து காட்டியுள்ளனர். மேலும்
40

இவர் புவியியலடிப்படையிலண்னிமத்தான் தமிழக எழுத்துக்கள், சேரநாட்டுக் கிரந்தங்கள் என்பனவே சிங்கள எழுத்துக்களின் வளர்ச்சி நிலையிற் செல்வாக்கை. ஏற்படுத்தின என்றும், இப் பின்னணியிலே பல்லவ கிரந்தங்களின் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுவர். குறிப்பாகப் பல்லவர் அரச சபைக்கும், இலங்கை மன்னனன மானவன்மனுக்குமிடையேயிருந்த நெருக்கமான கலா சாரத் தொடர்பினுற் பிராமி எழுத்துக்களிற் பல்ல வகிரந்தம் குறிப்பிடத்தக்க மாற்றத்தினைக் கி.பி. 7ம் நூற்ருண்டளவில் ஏற்படுத்தியதென்றும், காலப்போக்கிற் பல்லவகிரந்தமே பிரா பழிக்குப்பதிலாக இடம்பெறலாயிற்று என்றும், இந்நிலையிற் சிங் கள வரிவடிவங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளை யும் சுட்டிக்காட்டுவர். மேலும் சிகிரிய ஓவியக்கூடத்திலுள்ள எழுத்துக்கள் கூடப் படிப்பு ஞானமற்ருேரால் எழுதப்பெற்ற கிரந்த அல்லது தமிழ் எழுத்துக்களே என்பர். எனினும் சிங்கள எழுத்துக்களின் தோற்ற நிலையில், ஆந்திர எழுத்துக்களின் செல் வாக்கு வரலாற்றடிப்படையிற் தவிர்க்கமுடியாததொன்முக நாம் கருதுகின்ருேம். வட்டகாமினி அபயமன்னன் (கி. மு. 103) அர சினையிழந்திருந்த காலத்திற் பஞ்சமேற்பட்ட சமயம், தம்மை யாதரிப்பார் எவருமின்றியிருக்கையிற் பெளத்த சங்கத்தினரில் ஒரு பகுதியினர் ஆந்திரநாட்டிற்குச் சென்றிருந்தனர். பின் வட்ட காமினி அபயன் மீண்டும் அரசினைக்கைப்பற்றி நாடு சீரடைந்த தும், ஆந்திர்ா சென்றிருந்த பெளத்த சங்கத்தினர் திரும்பிவந்து பார்க்கையிற், பெளத்த திரிபிடக விதிகளை மனனம் செய்திருந்த பெளத்த சங்கத்தினரிற் சிலர் இறந்துபோனதாற், பெளத்த திரி பிடகத்தின் சில பகுதிகள் இல்லாமற்போய்விட்டதைக் கண்ட னர். அதனற் பெளத்த திரிபிடக விதிகளை எழுதிவைக்கவேண் டிய அவசியத்தை உணர்ந்தனர். அதனல் ஆந்திராவிற் பன்னி ரண்டு வருடங்களாக இவர்கள் கற்றுக்கொண்ட ஆந்திர எழுத் துக்களின் செல்வாக்குத் தவிர்க்கமுடியாததாகின்றது. எமது கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைப் பெளத்த பிக்கு கள் ஆந்திரநாட்டிற் தங்கியிருந்த செய்தியையும், அவர்கள் பெளத்தக்கோட்பாட்டை இ'பா முழுவதும் பிரசாரம் செய்ய எடுத்த முயற்சிகளையும் நாகார்ச்சுனகொண்டவிலுள்ள கல்வெட் டுக்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் அனுராதபுரத்தில் ஜேதவன ராமாவிற் கிடைக்கப்பெற்ற தூண் கல்வெட்டுப் பகுதியின் எழுத்துக்கள் நாகார்ச்சுனகொண்ட எழுத்து வடிவங்களை ஒத் திருந்தன என்பதனலும், துட்டகைமுனு ஏற்பாடுசெய்த மகா தாபத்தின் அடிக்கல்நாட்டு விழாவிற்கு நாகர்ச்சுனகொண்டா, அமராவதி முதலான ஆந்திரதேசப்பகுதிப் பெளத்த மகா சங் கத்தினர் சமூகமளித்திருந்தனர் என்பதனலும், பெளத்த திரி
41

Page 26
பிடக நூல்களின் உரையாசிரியரான புத்தகோசர் குண்டூர் (Guntur) மாகாணத்தின் மொரண்டகேடகவில் வசித்தவர் என விசுத்திமக்க குறிப்பிடுவதனலும், இலங்கையில் ஆந்திரநாட்டுச் செல்வாக்குப் பெளத்தமத அடிப்படையில் மட்டுமன்றிச், சிங்கள எழுத்து வளர்ச்சிநிலைகளிலும் தவிர்க்கமுடியாததாகின்றது. என். எ. ஜயவிக்ரமவும் மகதம், ஆந்திரநாட்டுக் கலாசாரத் தொடர்பு கள் இலங்கைக்கு ஏற்பட்டபின்னரே பாலி பெளத்தமத விதி கள் (Pali Canon) இலங்கைக்குக் கிடைக்கக்கூடியதாக இருந் தது என்பதோடு, மேற்கிந்திய பெளத்தக் குகைகளின் எழுத்து, மொழியியல் மாற்றங்களுக்கிணங்கச் சிங்கள எழுத்து, மொழி என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்படலாயின என்பர். எனவே நாம் ஆந்திரநாட்டுச் செல்வாக்கையும், மேற்கிந்தியப் பிராந்தியச் செல்வாக்கையும் கூடச் சிங்கள எழுத்துவடிவங்களின் தோற்ற, வளர்ச்சிகளிற் தட்டிக்கழிக்கமுடியாது.
இளவரசர் விஜயனும், தொல்லியற் தடயங்களும் :
தீபவம்சம், மகாவம்சம் முதலான நூல்கள் விபரிக்கின்ற இளவரசர் விஜயன் வரலாற்றை நிராகரிப்பவர்கள் முன்வைக் கும் காரணங்களிலொன்று, விஜயன் வரலாற்றை உறுதிப்படுத்தக் கூடிய தொல்லியற் தடயங்கள் இல்லை என்பதாம். உண்மையில் விஜயன், தோழர்களுடன் அனதரவான புதிய சூழலிற் பாண்டி நாட்டுக் குடியேற்றங்களுடன் முப்பத்தெட்டு வருடங்களே தம்ப பன்னவிலிருந்து ஆட்சி புரிந்தனன். தம்பபன்ன நகர் தவிர, வேறு நான்கு கிராமங்களையே இவர்கள் உருவாக்க முடிந்தது என்றும் தெரிகின்றது. விஜயனின் ஆட்சிக்குப்பின் கலிங்க - வங்கக் கலாசாரக் கூறுகளைப் பிரதிபலிக்கின்ற சிங்கள அரசு, தம்பபன்ன விற் தொடரமுடியாத அரசியற் பின்னணிகளையும் நாம் கவனத் திற்கொள்வது அவசியமாகின்றது. ஏனெனில் விஜயனுக்குப்பின் தம் இனத்தூய்மையைப் பாதுகாக்கும் பணியேற்ற பாண்டு வசு தேவன், தம்பபன்னத் திராவிடக்குடிகள் அறியாவண்ணம் மாறு வேடத்தில் வந்து மகாகந்தர நதியின் முகத்துவாரத்திலிறங்கிப் பின், தன் தலைநகரைப் பாண்டுவிாஸ் நுவரவிற்கு (குருநாகல் பகுதி) மாற்றியிருந்தான். அதனற் குறுகியகால அரசியற் கள மான தம்பபன்ன கைவிடப்படவே, பெரும்பகுதி அழிபொருள்க ளாலான. கட்டிடங்கள் அழிய நேரிட்டதனுற் தொல்லியற் தட யங்களுக்கு இடமற்றுப்போய்விட்டதெனலாம். மெகஸ்தீனஸ் பாடலிபுரத்திற் கங்கைக்கும்,சோன் நதிக்குமிடையில் 9 மைல் நீளம் 1 மைல் அகலமான விஸ்தீரணத்தில் 64 வாயில்களையும், 570 கோபுரங்களையும்கொண்ட நகரமொன்றினை வருணிப்பன. இந் ந்கரத்தின் பெரும்பகுதி மரத்தினல் நிர்மாணிக்கப்பட்டதனலே
42

நமக்குத் தொல்லியற் தடயங்களைத் தரவில்லை என்பதனையும் இங்கு குறிப்பிடல் உகந்ததாம். எனினும் எச். நெவில் தம்மன நுவரக் காட்டிற் (புத்தளத்திற்கு வடகிழக்காகப் பன்னிரண்டு மைல்கள் தூரத்திலுள்ள) கிடைக்கப்பெற்ற அழிபாடுகளை விஜ யன் காலத்தனவாகக் கருதுவர். சிங்கள அரசர்களில் முதன் முதலாகப் பாண்டுகபாய மன்னனே (கி. மு. 394 - 307) கட்டிட நிர்மாண நுணுக்கங்களுடன்கூடிய ஒரு நகரை அனுராதபுரத் தில் அமைத்தவனுகக் கணிக்கப்படுகின்றன். கலாசார முக்கோணத் திட்டத்தின்கீழ் அநுராதபுர நகரின் பழைய அமைப்புகளை நாம் ஓரளவிற்காவது அறியக்கூடியதாக இருக்கின்றது எனலாம். எனவே இதற்கு முற்பட்டகாலத்துக் கட்டிடங்கள் யாவும் அழி பொருட்களாலானவை என்பது உறுதியாகின்றது. இத்தகைய சூழ்நிலையில் விஜயன் வரலாற்றை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரம் மாலைதீவிற் (மகிளதிவு) பேசப்படும் பழைய சிங்கள மொழியே எனலாம். அதனேடு நக்கதீபத்தின் (Nicobar) ஆதிவரலாற்று மரபுகளின்படி, வேருெரு நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒரு இளவரசியின் கப்பலே அங்கு கரையேறியதாகத் தெரிகின்றது. மகாவம்சம் வங்கத்திலிருந்து நாடு கடத்தப்பெற்ற பிள்ளைகளின் கப்பல் நக்காவரம் கரையேறியது என்று கூறுவதற்கும், நக்கா வரத்தின் மரபுக் கதைக்கும் உரிய கரு ஒரே சாயல் படைத்தது என்பதில் ஐயமில்லை. நக்காவரத் தீவுகளின் மொழி கிழக்கிந்தியப் பிராந்தியத்தைச் சார்ந்த முண்டாஸ், காசிஸ் இனத்தவரின் மொழியியல்புகளைக் கொண்டதாகவும் தெரிகின்றது. இம்மொழித் தொடர்பும் கிழக்கிந்தியாவைத் தொடர்புபடுத்துவதனுற் தீப வம்சம், மகாவம்சம் தருகின்ற வரலாற்றுத் தகவல்களை எம் ஆய்வுகளுக்குதவும் வகையிற் கைய்ாள்வதைவிட்டு, அவற்றைக் கட்டுக்கதைகள் என ஒதுக்கிவிடுதலால் நாம் வராற்று மூலங்களை இழக்க நேரிடுகின்றது.
இந்தியாவில் ஆரிய கலாசாரம் :
இந்தியாவில் ஆரிய கலாசாரம்பற்றிய ஆய்வுகள், இருக்கு வேத ஆரியர்கள் இந்துவுெளி நகரங்களைக் கைப்பற்றிய சமயம் நாகரிக வளர்ச்சியிற் பின்தங்கியவர்களாக இருந்தனர் எனக் காட்டியுள்ளன. அதனுலேதான் வேதகால ஆரியருடைய தொல் லியற் களங்கள் என நாம் அடையாளம் காணக்கூடிய பானை வகைகளோ அல்லது முத்திரைகளோ அன்றேல் கட்டிட அழி பாடுகளோ எமக்குக் கிடைக்கவில்லை. மானுடற் தோற்றத்தில் கவர்ச்சியான நெடிய உடற்கட்டையும், நீண்ட மூக்கினையும், வெள்ளை நிறத்தினையும் சிறப்பாகக்கொண்டிருந்தனர். போர்களிற் குதிரைகள் பூட்டிய எளிதான இரதங்களைப் பாவித்துப் போரில்
a3

Page 27
வல்லவர்களாக விளங்கியதோடு, தீவளர்த்து இயற்கைத் தெய்வ வழிபாடுடையவர்களாகவும், வேதங்களின் பொருளைக் குரல் அசைவுகளுடன்கூடிய தொனியிற் தெளிவுறுத்திப் பாராயணம் செய்பவர்களாகவும் இருந்தனர். மேலும், தம்மை உயர்ந்தோர் எனக்கருதி, இந்துவெளி நாகரிகத்தை வளர்த்திருந்த கரிய நிற முடைய தாசர் எனும் சுதேசக்குடிகளை தெளிவற்ற பேச்சை யுடையவர் என்றும், இலிங்க வழிபாட்டையுடையோர் எனவும், தட்டை மூக்கினையுடையவர் எனவும் ஏளன்ம் செய்தனர். சுதே சக் குடிகளுடன் கலக்கவிரும்பாத இவர்கள் பிராமணர், சத்திரி யர், வைசியர், சூத்திரர் முதலான சாதிப் பாகுபாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டனர். தம்மை “ஆரியர்” எனவும், இந்தியா விற் தமது கலாசாரம் பரவிய-பகுதிகளை “ஆரியவர்த்த” அல்லது *ஆரியாண்டம்” எனவும் புவியியலடிப்படையிலும் எல்லை வகுக்க லாயினர். பிராமணர்களைப் பூமியில் நடமாடும் தேவர்களென வும், சமஸ்கிருத மொழியைத் தேவபாஷையெனவும் பாராட்ட லாயினர். சிறுசிறு குழுக்களாகக் கிராமங்களில் வாழ்ந்து பழகிய வர்களானபடியால், வேதகால இறுதிவரை கிராம வாழ்க்கை யையே பின்பற்றினர். அதனுற் தாசர்களின் நகரங்களையும், புரங்களையும் கைப்பற்றியிருந்தும், அவற்றை உயயோகிக்க விரும்ப
அதனலே வேத ஆரியருடைய தொல்லியற் களங்கள் வேதகால முடிவுவரை (கி. மு. 900-கி. மு. 600) வெறுமை யானவையாக இருந்தன என்று கருதப்படுகின்றது. மேலும் வேத ஆரியருடைய பானைகள் கையால் வனையப்பட்டுக் கலை நுணுக்க மற்றனவாக வனையப்பட்டனவாம். ஹஸ்தினபுர, அஹிச்சத்திரா, கெளசாம்பி முதலான இடங்களில் ஆரிய கலாசாரத்திற்குரிய மண்படைகளின் (கி. மு. 900 - 600) கீழ்மட்டத்தில், ஆரியரின் சாம்பல்நிறப் பூச்சு (Painted grey Ware) மட்பாண்டங்களே கிடைக்கலாயின. காலப்போக்கிலேதான் (கி. மு. 600) ஆரிய ருடையது என இனங்காணக்கூடிய வடநாட்டுக் கறுப்பு வண்ண LDL asauriisair (Northern Black Polished Ware) Gaitái)65ui) களங்களிற் கிடைக்கலாயின. ஆனற் காலத்தால் முற்பட்ட இந்துவெளிக் கலாசாரத்திற்குரிய மட்கலயங்கள் நன்கு பண்படுத் தப்பட்டுச் சக்கரத்தில் வனையப்பட்டு, நன்கு சுடப்பட்ட உறுதி 'யான சிவப்புநிற மட்கலயங்கள் ஆவன. இவை பெரும்பாலும் சிவப்புநிற மேற்பூச்சினையும், கறுப்பு வண்ணங்களிற் தீட்டப் பெற்ற பலவகைச் சித்திரங்களையும் கொண்டனவாம். இவற்றை விடக் கறுப்புச் - சிவப்பு மட்கலயங்களின் பண்புகள் தனித்துவ
DfT 607606uurTub. 3 is
44

இறந்தோருடைய மரணக்கிரியைகளிலும் ஆரியர் கிரியை நெறிகள் தனி இயல்புகொண்டனவாய் இருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதர்வவேதம் இறந்தோரை மூன்று வகையான மரபுகளின்படி பராதீனம் செய்யப்படுவதைக் குறிப் பிடுகின்றது. அதர்வவேதம் அக்கினியை விழித்து “ஒ1 அக்கினி! புதைத்தவனையும், வெளியில் வீசப்பட்டவனையும், தகனம் செய் யப்பட்டவனையும் யாகத்தை (உணவை) உண்ணக் கொண்டுவா" என அழைக்கின்றது. இதிலிருந்து வேதகாலத்து ஆரியர்கள் மூன்றுவகையான மரணக்கிரியைகளைப் பின்பற்றினர் என்பது தெளிவாகின்றது. சதபத பிராமணம் இறந்த ஒருவனுக்குப் பக்கங்களில் இறகு, வால் என்பன இல்லாதவகையில் அமைக் கப்பட்ட யாகமேடையை நிகர்த்தவாறு தூபி அமைக்கப்பட வேண்டும் என்று, ஆரியருடைய மரணக்கிரியைகளிற் காலப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையினைக் குறிப்பிடுகின்றது. பொதுவாக வேதக்கிரியைகளுக்கான யாக மேடைகள் வில்வடிவ மானதென்றும், இறந்தோருக்கான கிரியைகள் வீட்டினுள் தென் திசையில் அமைக்கப்பெற்ற யாகமேடையிலே நடைபெறும் என் றும் தெரிகின்றது. மேலும் சதபதபிராமணம் (XIII 8:1-5) தேவ வழிபாட்டையுடையோர் தமது சவக்குழிகளை நான்குமூலைகளை யுடையதாகச் செய்வர், ஆனல் அசுரர்களும், கிழக்கிந்தியர்களும் வட்டவடிவமாக அமைப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. அதனேடு தேவவழிபாடுடையோர் தமது சவக்குழிகளைப் பூமியிலிருந்து பிரிக்கமுடியாதவாறு செய்கையில், அசுரரும் கிழக்கில் வாழ்பவரும் (கிழக்கிந்தியரும்) பிறரும் பூமியிலிருந்து பிரித்து எடுக்கக்கூடிய வகையிற் கற்பெட்டிகளில் (Shallow stone basin) வைத்துப் பின் கற்திட்டைகளால் மூடுவர் (ச.பி. XI 8:2-2) என்கிறது. ஆபஸ்தம்பரின் சிரெளதசூத்திரம் இறந்தோரைப் புதைததலை யும், உயரமாகக் கட்டப்பெற்ற மேடையில் வைக்கப்பட்ட இறந் தோர் உடலையும் குறிப்பிடுகின்றது. ஆனல் ஆஸ்வலாயன கிரு கிய சூத்திரம் (V. 1,4) ஒருவன் இறந்ததும், அவன் உடலை எரிப்பதற்குச் ஸ்மாசானம் (Smasana) எழுப்பப்படவேண்டுமென் கிறது. இவ்வாறு ஆரியர்கள் இறந்தோர் சடலத்தினைத் தீமூட்டித் தகனம் செய்யும் மரபினைப் பிற்காலத்திலேதான் பிரபலிக்கமாகக் கடைப்பிடிக்கலாயினர் எனத் தெரிகின்றது. எனினும் கிருகிய சூத்திரம் தீமூட்டி எரிக்கப்பட்ட எலும்புகளைப் பானையிற் சேக ரித்துவைத்தலையும் குறிப்பிடுகின்றது. எனினும் இதிகாசத்திற் (கி. மு. 900 -) தகனம் செய்தலே ஆரிய மரபாகக் கருதப்படு கின்றது. ஆரியனல்லாத ஜடாயுவின் (கழுகுச்சின்னமுடையவன்) குலமரபுப்படி இறந்தவர்களைப் புதைப்பதே மரபு. எனினும் இராமர் தன்மரபுப்படி ஜடாயுவைத் தீமூட்டிஞன் என இராமா பணம் கூறுகின்றது. (ஆரண்யகாண்டம் IV: 22) இத்தகன
45

Page 28
முறை மிகப் பிரபலமாக வட இந்தியாவில் இருந்தகாலத்திலே தான், கிரேக்கநாட்டு இராஜ தூதுவரான மெகஸ்தீனஸ் சந்திர குப்தமெளரியரின் அரச சபையிற் பாடலிபுரத்திற் தங்கியிருந் தனன். மெகஸ்தீனஸ் அவதானித்ததன்படி இந்தியர்கள் இறந் தோருக்கு நினைவுத்தூபி (Monuments) எழுப்புவதில்லை என்றும், வாழ்க்கையில் ஒருவர் ஆற்றுகின்ற நற்பணிகளும், பின் அவர் களைப்பற்றிப் புகழ்ந்தோதி எழுதப்படும் துதிப்பாடல்களுமே, அவர்கள் நினைவை நிலைப்படுத்தவல்லன என்றும், கருதினர் எனத்தெரிகின்றது. இவ்வாறு ஆரியரின் வெவ்வேறு காலங்களில் உருவாகிய வைதீக இலக்கியங்களிலிருந்தும், ஆரியரின் மரணக் கிரியைகளின்படி முறையான வளர்ச்சிகளை நாம் அவதானிக்க முடிகின்றது. சவக்குழித் தொல்லியலாய்வுகளின்போது கலா சாரங்களை இனம் காண்பதற்கு இவை ஓரளவிற்கு உதவலாம் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய ஆரம்பநிலை மரபுகள் சிலவற்றை இன்றும் கிழக்கிந்தியாவில் வாழும் மக்கள் அனுட்டித்து வருவதையும் நாம் இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும். இறந்தோர் உடற் தகனத்தின் பின் சேகரிக்கப்பட்ட எலும்புகளைப் பானையில் வைத் திருக்கும் மரபினை இன்றும் ஒரிசா, பீகார், வங்காளம், அசாம் தேயிலைத் தோட்டங்களிற் பரவி வாழும் ஒஸ்ரிக் (Austric) குடும்ப மொழியைப் பேசும் சந்தல்ஸ் (Santals) எனும் இனத் தவர் செய்துவருகின்றனர். (ஒஸ்ரிக் மொழிக் குடும்பமானது கிழக்கிந்தியர்கள், இந்தோ - சீனர்கள், முண்டாஸ், காசிஸ் முத லானேர் பேசும் மொழிக்குடும்பமாகும்) மேலும் வங்காளத்தில் இந்துக்கள் இன்றும் இறந்தோர் சடலத்தை எரித்தபின், எஞ்சிய சடலத்தைக் கங்கையில் வீசும் வழக்கம் உடையவர்களாக இருக் கிருர்கள். காசிஸ் (Khasis) இனத்தவர் தகனம் செய்யப்பட்ட குடும்ப அங்கத்தவரதும், தமது பிற உறவினர்களதும் எலும்பு களைச் சேகரித்து, ஒரு பானையில் வைத்துப் பாதுகாத்தலை இன். றும் தமது மரபாகப் பேணிவருகின்ருர்கள். சோடநக்பூரிலுள்ள திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஒரோன் (Oraon) இனமக்கள் முதலிற் தற்காலிகமாக இறந்தோரைச் சவக்குழி களிற் புதைத்தபின், சிறிது காலத்தால் அவர்களின் எலும்பு களைச் சேகரித்து நிரந்தரமாகப் புதைப்பர்.
இதுவரை நாம் ஆராய்ந்த இனத்தவர் தம் மரணச் சடங்குகளிலும் பானைவகைகளைக் கையாள்வது பொது மரபாக இருப்பினும், இவ்வெவ்வேறு இனத்தவர்கள் கையாண்ட இப் பானைகளின் விசேட தன்மைகள், பிற இயல்புகள் என்பனவற் றைப் படிப்பதன்மூலம் இனங்களை ஒரளவிற்கு இனம்காண முடி யும்:உலகின், எந்தக் கோணத்திலிருந்தாலும் மனித சமுதாயத்
46

தின் மரபுகள் சில பொதுவானவையாயினும், இவ்வினங்கள் வேறுபட்டு நிற்கும் நிலைகளை அடையாளம் காண்பதற்குப் பானை வகைகள் மட்டுமன்றி, வேறுபல தொல்லியல் எச்சங்களும் எமக்கு உதவிவந்துள்ளன.
இறுதியாக நாம் இதுவரை பல்கோணங்களிலிருந்தும் தக வல்களை ஆராய்ந்து, உண்மை எதுவாக இருக்கலாம் என்ற ஆய்வு நோக்குடன், பல வரலாற்றுத் தகவல்களைப் பின்னணி யாகக்கொண்ட ஆரியருடைய மரணக் கிரியைகள் பற்றியும் சுருக்கமாக ஆராய்ந்தோம். எனவே திராவிடவின,மொங்கோலிய, மற்று ஆரியவினக் கலப்புக்கொண்ட இளவரசர் விஜயனின் பரம்பரை வழிவந்த சிங்கள மக்களின் இடுகாடுகள் அல்லது சுடுகாடுகள் எக்கலாசாரத்தை மேலோங்கிப் பிரதிபலிக்கின்றன என நாம் முதலில் ஆராய்தல் அவசியமாகும். எனினும் இது வரை இலங்கைச் சவக்குழிகளிற் கிடைக்கப்பெற்ற கறுப்புச் - சிவப்புப் பானைவகைகளை ஆராய்ந்தவர்களிலொருவரான சுதர்சன் செனிவிரட்ன மகாவலி கங்கையின் தென்பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கிழக்கிந்தியாவிற் கறுப்புச் - சிவப்புப் பானைகளைப் பாவித்த ஆரியர்களே குடியேறியிருக்கலாமா? என்றும், எனவே இக்கறுப்புச் - சிவப்புப் பானைகள் ஆரிய கலாசாரத்தைப் பேணு கின்ற சிங்கள மக்களுடையதாகலாமா ? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார். மற்றுத் தென்னிலங்கையிற் பல பெருங் கற் பண்பாட்டுச் சவக்குழிகளை அகழ்வாய்வு செய்த எஸ். கே. சிற்றம்பலம் அவர்கள் இச்சவக்குழிகளிற் திராவிடவினக் கலா சாரப் பண்புகள் மேலோங்கிக் காணப்படுவதாற் சிங்களமக்களும் திராவிடர்களேயன்றி, வேறெவருமல்ல என்ற கருத்தினைத் தெரி விப்பர். ஆனல் இக்கருத்துக்கு நேரெதிரான கருத்துக்களை ஹென்றி கொரியா தெரிவிப்பர். இவர் கருத்துப்படி மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயன் குழுவினரின் பிள்ளைகள் ஏறிய கப்பல் கரைசேர்ந்த இடம் நாகதீபமே (யாழ்ப்பாணமே) என்பர். அதனல் ஆதியில் வட இலங்கைத் தமிழரும் சிங்களக் குடிமக் களே என்றும், பின் தென்னிந்தியச் செல்வாக்கினலே இவர்கள் தமிழ் இந்துக்களாக மாற நேரிட்டது என்றும், பதவியா, மடுகந்த முதலான கிராமங்களில் வாழ் சிங்கள மக்கள், தாம் விஜயன் பரம்பரையில் வந்தவர்களானபடியால், வேறு இனத்த வர்களுடன் விவாகத் தொடர்புகளை வைப்பதில்லையென்றும், இவர்கள் இனத்தூய்மையை வற்புறுத்துவதோடு, யாழ்குடாத் தமிழ்மக்களும், தென்பகுதிச் சிங்கள மக்களும் விஜயன் வழித் தோன்றல்களே என்றும் கருதுவர். இச்சிறிய நூலில் நாம் ஆராய்ந்த தரவுகள் இவை தொடர்பான ஆய்வுகளை மேலும் வேண்டி நிற்கின்றன எனலாம்.
47

Page 29
0.
12.
13,
இந்நூலாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நூல்கள்
... A. L. Basham, The wonder that was India,
Fontana, 1967.
R. L. Brohier, Discovering Ceylon, Colombo, 1973.
C. J. Brown, The coins of India, Indological Book
House. Varanasi. 1973.
S. K. Chatterji, Origin and Development of the Bengal
Language Vol. I.
K. P. Chattopadhyaya, The Ancient Indian Culture
Contacts and Migrations, Culcutta. 1970.
Rev. Fr. H. S. David, An Etymological and Comparative Lexicon of Sinhala and Tamilzh Part IV. 1974.
Paul м. Jayarajan, History of the Evolution of the
Sinhala Alphabet.
A. B. Keith, A History of Sanskrit Literature, Oxford
University Press, 1956.
D. D. Kosambi, The Culture and Civilization of Ancient
India in Historical outline, Vikas Publishing House. 1975.
Kaushal Kumar Mathur, Nicobar, Islands, New Delhi,
1967.
S. Karunaratne, The Brahmi Inscriptions of Ceylon,
Elept. of Archaeology, 1984.
R. C. Majumdar, Ancient India, New Delhi: 7, 1971.
uses . , (Ed.), The Vedic Age, vol. 1,
London, 1952.
48

4.
5.
6.
7.
8.
19.
21.
22.
23.
25.
26,
27.
D. P. Mishra, Studies of India, Orient Longman, 1971. Madras University Historical Series, No. V. 1932. C. S. Navaratnam, Tamils and Ceylon, 1958.
K. N. Nilakantasastri, The Colas, University of Madras,
1955.
C. kasanayagam. Ancient Jaffna, New Delhi, 1984.
S. C. Ray, Stratigraphic Evidence of coins in Indian
Excavations and some Allied Issues, Varanasi 5, 1959.
J. N. Tiwari and P. L. Gupta, A Survey of Indian Numismatography, The Numismatic Society of India, 1964.
Sir, Mortimer Wheeler, The indus Civilization,
Cambridge University Press, 1962.
F. X. C. நடராசா, சரசோதிமாலை, மட்டக்களப்பு கத்தோ
விக்க அச்சகம், 1988.
(υφ. θη. சிவப்பிரகாசம், விஷ்ணு புத்திரர் வெடியரசன் வர
லாறு, தொல்புரம், 1988.
என். கே வேலன், சோழர் ஆட்சி, சென்னை, 1980.
கட்டுரைகள்
S. Bandarana ake, “The Periodization of Sri Lankan
history and some related historical and Archaeological Problems" a paper presented at the International Association of the Historians of Asia, 1988.
T. Burrow, “The Early Aryans", A Cultural History of India, (Ed.) by A. L. Basham, Oxford, 1975.
H. Corea, i “Do away with racial distinctions in Govt. documents' Observer, 7-5-1989,
49

Page 30
28.
29.
30.
31.
33.
34.
35.
36.
37.
38.
39.
P. E. P. beraniyagala, “The Races of the Stone age
and of the Ferrolithic of Ceylon" R. A. S. (C. B) vol. 5, 1956-57.
P. E. Fernando, “The Beginnings of Sinhala Script', Education in Ceylon, - A Centenary, Vol. I, Colombo, 1969.
S. Gurumoorthy, “The Indus Script and iron age Graffiti of South-India”, Tamil Civilization Vol. 4, 1986, Journal of the Tamil University, Tanjavur, 1986.
N. A. Jayawickrama, “Literary activity in Pali",
Education in Ceylon.
A. H. Mirando, “Was Ravana an Aryan a Sinhalese
D. News, Feb. 16, 1982.
s "Deciphering the Harappan Script,
D. News, Feb. 22, 1989.
Nandola Deg, “ “Notes on the History of the District
of Hughli or the Ancient Rada”, J. Beng, B. R. A. S., New Series, Vol. VI.
. V. S. Parekh, “Depictions of Sivalingas from Gujarat'
Journal of the Oriental Institute. M. S. University, Barodo, Vol. XXXII, March - June, 1984.
S. Seneviratne, “The Archaeology of the Megalithic black and red ware complex in Sri Lanka', Ancient Ceylon No. 5, 1984.
S. K. Sitrampalam, “Proto - Historic Sri Lanka - An Interdisciplinary Perspective' a Paper Prsented at the AHA, 1988.
Thor Heyerdahl, “Indus Vally link with Maldives' Reported by T. Sabaratnam, Di News, Feb. 4, 1983.
S. C. M. Weerasinghe, “Sinhala language and lexico
graphy", D. News, Dee. 5, 1988.
50


Page 31
、VJv」、て、丈g が ----4*11년에적多總 d缓ynwr!$\くノ 대정(主유てぶy&て2Q-· 七gasue &ェに Qんと... -(a·色多”vivivsト -vysłq Nrodをまeg %ykm、クyく|- : ~ , , , y&Yにぎy Zva运☆\, , tsvါ湾ほび}·Vをェにてモえ: 9)
• r )kmanyグy3BG |
· ミ92vgrvy yn adola · §沙龟歧對張「Y」\d9tとvsyavy 、g > Lysej słoww??)đINoɔɔ ɔ必CD,隐 -召心TYLWW-، メ一gyx-* く -必@%そwo Inc. i-iv 1.vej心) vt)9Jvyrgマ&エ3 y vd wwɔ - z}
· N tys_c r) 'o' こAdて&えば、를 て切ニQニン・% g noy zてこ て|
メ QwvgrてY ・
斑 = \ ( ooq -3 g ) にngg てりプzy&a rgg』は ・$3 vこGeさ D 出をこに出て」szこをマへ -- ----vaev_idx, wɔɔ。シ Q& Qfvg」
 
 

?zosīrz od 1961‘vig XI sv.M lwrol 区saえoヌ山p、gvェsvaョY', 30 > noS
*5
工rgをェg so Norg&江
g&gy」 ^
V so v ~|yły 1 N 3 ɔ
J3gyざ
てJこxy

Page 32
CẢ TH KALA - ORRI SA
-、」 ~~~~?Ł....!!!!!!“:
~{3
T}} E Rou T.
E o F KAJ ENīRā5 [× P & D1 r , oN so ɲɛ&AMG, e 5
1・いおま入ARAxorrAA %ミoミesミ 3. O DDARA - A-, kõsa LA
• 5 • TARDA Bu k Trı 6. Takkına Lã Đa T · W AN GA o · LATTARALÃ DA o · Gam Gies
T+4 E公的制최되T이외TrAcaenis.45 &,&AME D IN taesMAHĀVAŘASA
�$womants. l-Achcha yiwe S3}}Q1)2)ARA -ÖKKI SĄ|- |-£xɔ---- 15 .呢TANŢa Bukri-��TDANTA Þa R Asas?APAww4/A .Q ひ90-MAN, Cơ %\&MAłł i LA1)+v(A%ỵN/AK KAPI就 ^ !!! Çf Caewr 19 .急\}(MÂLDIves)心( N/togarいる。 -§ 0 に& YES)
Twana Packiem.GunaĖaLastné HAM
» :
 
 
 

*建!==Œ!= r네티미「피어귀'아버─파이어서 –리히어子法
A5 ZARRATED 3\ \ALBいふ
NEPALMAGADHA”Ń......... 1. Bu HMA DE GA 2 . VAN € A 3 . UATH KALA |4 KALI NGAGuy_F Ộo
cana Box 5. BaThe D ! N kāyɛR.
ĉ· PaN ɔya coun Toy 7. KERA LA 8. kɔN KAN
5 u HMA - WEST N AN GA

Page 33

THE AUTHOR;
MRS. THANAPACKIAM GUNABALASINGHAM B. A. Hons. (Cey.), M. A. (Madras)
EDUCATION RECORD :
First Class in Honors Degree in Sanskrit (Tamil Medium, 1966 - University of Peradeniya)
First Class in M. A. Degree in Ancient History & Archaeology (English Medium, 1975 - University of Madras) Also awarded the Shri R. Ravivarma Memorial Medal & Jawaharlal Nehru Memorial Fund award for 1975.
EXTRA-CURRICULAR :
Secured First Place in the Environmental Essay Competition (Tamil Medium) Organised by the Central Environmental Authority of the Ministry of Local Government, Housing and Construction to mark the World Environment Day 1986.
EMPLOYMENT RECORD :
Held the office of a Lecturer at the University of Peradeniya (1966 - 1968) and at the University of Colombo (1969 - 1979) and also as a visiting lecturer at the Vidyalankara Campus, Kelaniya. (1975 - 1979)
PUBLICATIONS:
1. Archaeological Research and the Dravidian culture
in Sri Lanka. (Tamil)
2. History of Vanga Prince Vijaya and origin and Development of the Sinhala race, the language and the script. - A Reappraisal. (Tamil)

Page 34
-를
\
s
「さ
சென். ஜோசப் கத்தோலிக்

轟量 அச்சகம், மட்டக்களிப்பு.