கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகால சமூகப் பார்வைகள்

Page 1

E56)
மகப்
»ಎ.156T

Page 2


Page 3
Samakala Samooga Paarvaigal A Collection often Articles
First Published November 1991
Printed at Raasakii Printers, Madras-20.
Published in Association with
"Puthiya Bhoomi Publication”
South Asian Books, 6-1, Thayar Sahib II Lane Madras-600 002.
Rs... 22.00
சமகாலச் சமூகப் பார்வைகள் பத்து ஆய்வுக் கட்டுரைகள்
முதல்பதிப்பு: நவம்பர் 1991 அச்சு இராசகிளி பிரிண்டர்ஸ், சென்னை-20. வெளியீடு : புதிய பூமி வெளியீட்டகத்துடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 61, தாயார் சாகிப் 2ஆவது சந்து சென்னை-600 002.
e5. 22.00


Page 4
0.
1.
12.
பொருளடக்கம்
பதிப்புரை - 5 முன்னுரை - 8
- பேராசிரியர் சி. தில்லைநாதன் விஞ்ஞானக் கல்வியின் சமூகப் பயன் - 14
- இ. முருகையன் சமூக அபிவிருத்தியில் கல்வியும் மனிதவலுத் திட்டமிடலும் - 35
-மா. சின்னத்தம்பி
மலையகக் கல்வி வரலாறும் நடைமுறைப்
பிரச்சினைகளும் - 54
- எஸ். இராஜேந்திரன்
தமிழர் சமூக வாழ்வில் பழைமைவாதம் - 69
- சி. கா. செந்திவேல் பெண் விடுதலை வேண்டும் 92 --س
- க. தணிகாசலம் தேசிய இலக்கியமும் கட்சி இலக்கியமும் - 106
- ந. இரவீந்திரன் மலையகத் தொழிலாளர்களும் வேதனமும் - 124
- ஜெ. சற்குருநாதன் மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் - 136
- இ. தம்பையா கம்யூனிசத்தின் தற்காலிகப் பின்னடைவு? - 150
ஏ. ஜே. கனகரட்ன கத்திகள் கையிலேந்தி - 158
- சி. சிவசேகரம்

பதிப்புரை
சமூக வளர்ச்சியானது தனது வளர்ச்சியுடன் கூடவே பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றது. இச் சமூகப் பிரச்சினைகள் சிக்கல்கள் நிறைந்தவையாகவும் குறிப்பிட்டக் கட்டத்தில் போராட்டங்கள் கொண்டவையாக வும் காணப்படுகின்றன. மனித சமூகத்தின் தோற்றத்துடன உருவாகிய சமூகப் பிரச்சினைகளுக்கு மனிதன் எப்பொழுதும் முகம் கொடுத்துத் தீர்வு கண்டு வந்திருக்கின்றான். இத் தீர்வுக்குச் சமூகத்தைப் பற்றிய அடிப்படையான அறிவு சார்ந்த கருத்துக்கள் பிரதானமானவையாக திகழ்ந்து வந்துள்ளன. விஞ்ஞான பூர்வமான சமூக வளர்ச்சி வேக மடைந்த போது விஞ்ஞானப் பார்வை கொண்ட சமூக அறிவும் விருத்தியடைந்து வந்துள்ளது. அதன் மூலம் சமகாலத்தின் சிக்கல்கள் நிறைந்த சமூகப் பிரச்சினைகளுக்கு சமூக விஞ்ஞான நோக்கிலான கருத்துக்கள் அவசியமாகின்றன. ஆதலால் அவ்விதமான கருத்துக்களை சமூக ரீதியில் பரவச் செய்வதன் மூலம் சமகாலப் பிரச்சினைகள் பற்றிய கருத்துத் தெளிவிற்கும் இறுதியில் சிறந்த தீர்வுக்கும். வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும. இது நாம் வர்மும் காலத்தின் தட்டிக் கழிக்க முடியாத ஒரு சமூகப் பணியுமாகும்.
இவ் அடிப்படை நோக்கில் இருந்தே சமகாலச் சமூகப் பார்வைகள்’ என்னும் இந் நூல் வெளியிடப்படுகின்றது. அதற்கான தகுந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைத்தது அதுவே மறைந்த தோழர் மணியம்- கே. ஏ. சுப்பிரமணியம் அவர் களின் இரண்டாவது நினைவு தினமாகும். அவரது வாழும் நினைவுகளின் சார்பாக இந் நூலினை வெளியிடுவதன் மூலம் அவரது உயர்ந்த இலட்சியமும், அதற்கான அவரது அர்ப்பணிப்பு மிக்க வாழ்வும்" நாம் அனைவர் முன்னிலை

Page 5
6
யிலும் நிலைநிறுத்தப்படுகின்றது. அத்துடன் எதிர்கால இளம் தலைமுறையினருக்கு அறிமுகமும் செய்து வைக்கப்படு கின்றது. இந்நூல் அவரைப் பற்றியதல்ல வெனினும் அவரது சமூக நோக்கிற்கும். மனித நேயக் குறிக்கோளுக்கும். செயல் முறைக்கும் மிக இசைவானதாகவே தொகுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பணிகளை அவர் முதன்மைப்படுத்தி செயலாக்கி யும் வந்துள்ளார். தங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை தாங்களாகவே மிகப்படவும்- குறுகிய பார்வையிலும் செய்து அதிலே ஆத்ம திருப்தியும் தற்பெருமையும் கொள்ளும் சிலரது சிறுமைச் செயல்களுடன் தோழர் மணியத்தின் தன்னடக்கம் மிக்க சிந்தனை செயல் வாழ்வு எதனையும் சமப்படுத்த முடியாது.
எனவே அவரைப் பற்றிய நேர்மையான மதிப்பீட்டு நூல் ஒன்று தொகுக்கப்படு முன்பாக அவரது நோக்கையும் விருப் பையும் அடிப்படையாக வைத்து அவருடன் நெருக்கமும் நட்பும் கொண்ட தோழர்களும் நண்பர்களுமான பத்துப் பேர்களின் கட்டுரைகளைக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரைத் தொகுதி நூல் உருவம் பெறுகின்றது. அரசியல் பொருளா தாரம் கலை இலக்கியம் சமூகம் கல்வி துறைகள் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து இதனிலும் பார்க்க விரிவான தோர் தொகுதியினை வெளியிடவே முயற்சிகள் செய்யப் பட்டன. ஆனால் நமது நெருக்கடியும், யுத்த சூழலும் அவலங் களும் அம் முயற்சியினை முழுமை பெறச் செய்ய முடியாதவை யாக்கி விட்டன. இருப்பினும் கடும் முயற்சியினால் இந்த அள வில் தானும் இந் நூலினை வெளியிட முடிந்தமைக்கு மகிழ்ச்சி அடைகின்றோம். அடுத்து வரும் சந்தர்ப்பங்களில் ஆகக் கூடியவற்றைச் செயலாக்க முன்ைவோம். உங்கள் கருத்துக்கள் எமது வெளியீட்டு முயற்சிக்கு உதவுவதாக அமையட்டும். S.
இந் நூலினைத் தொகுத்து வெளியிடும் எமது நோக்கத் திற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கி கட்டுரைகளை தந்து

7
உதவிய கட்டுரை ஆசிரியர்களையும் ஏனைய உதவிகள் செய் தோரையும் பாராட்டுகின்றோம். இந்நூலினை மிக விரைவாக வும் அழகாகவும் வெளியிட்டுத் தந்த சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கு எமது உணர்வும் உரிமையும் கலந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக! நன்றி.
1511, மின்சார நிலையவிதி புதிய பூமி வெளியீட்டகம் யாழ்ப்பாணம்
இலங்கை
27-11-1991

Page 6
முன்னுரை
மண்ணில் நல்ல வண்ணம் மனிதர் வாழ பேராசிரியர் சி. தில்லைநாதன்
மனித சமுதாயமானது கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், கலை இலக்கியம், பண்பாடு, அரசியல் முதலான துறைகளில் பெருமுன்னேற்றங்களைக் கண்டிருப்பது பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், கண்கூடாகக் காணக்கிடக்கும் சமூகப் பொருளாதார அரசிய்ல் நிலை யாது? வாழ்வதற்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் தானும் அற்றநிலையில் வறுமையிலும் அறியாமையிலும் பலர் அல்லலுறுகின்றனர். எவ்வாறாயினும் சரி இலாபம் சம்பா தித்திட வேண்டும் என்ற வெறியினால் உந்தப்பட்ட, அறம், ஒழுக்கம், மனிதநலன், குடும்ப நலன், வருங்கால நலன் முதலானவை பற்றிய சிந்தனையற்ற ஒரு போக்கினை அவ தானிக்க முடிகிறது.
மனித வாழ்வு மோசமாகப் பாதிக்கப்படுமளவுக்கு இயற்க்ைச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது. உடலுழைப்பை நம்பிவாழும் ஏழை மக்கள் உரிமைகளோ அடிப்படை வசதி களோ இன்றித் துன்புறுகின்றனர். சிறுபான்மையினர் உரிமைகள் பங்கப்படுத்தப்படுகின்றன. பெண்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கல்வி, விஞ்ஞானம். கலை, அரசியல் முதலான துறைகள் மனித தன்மையைக் குறிக்கோளாகக் கொள்ளாது ஆதிக்கத்திலுள்ள ஒரு பகுதியினரின் ஆகக் கூடிய இலாபத்திற்காகக் கையாளப்படுகின்றன. இந்நிலையில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி உரிமைகள் தவறிக்கெட்ட மக்கள் தலை தூக்குவது எவ்வாறு?

9
வாழ்வில் மேன்மையடையக் கல்வி உதவும் என்பர். உற்றுN உதவியும் உறுபொருள் கொடுத்தும் கற்றல் நன்றே என்று புறநானூறு கூறும், கேடில் விழுச்செல்வம் கல்வி என்பர் திருவள்ளுவர். மனிதனோ சமூகமோ இயற்கைச் சூழ்நிலையைக் கட்டிவசப்படுத்தி வாழ்வில் முன்னேறக் கல்வி அவசியம். ஆனால், இன்று கல்வி எல்லோருக்கும் ஒரே வகையில் எட்டக் கூடியதாக உள்ளதா? அபிவிருத்தியடைந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்குச் செய்து தர படும் அளவு வசதிகள் அபிவிருத்தி குன்றிய பகுதிப் பாடசாலைகளுக்குச் செய்துதரப்படுகின்றனவா? இலவசக் கல்வி, தாய்மொழி மூல மான கல்வி என்பவற்றால் எல்லோரும் பயனெய்தக் கூடிய தாக இருக்கின்றதா? கால்கள் கட்டப்பட்டவர்களும் கட்டப் படாதவர்களும் ஒரே வகையிற் போட்டியிட்டுக் கல்வியின் பயனையும் வேலைவாய்ப்புக்களையும் பெறுவது சாத்தியமா? கல்வி, சமூக அந்தஸ்தோடும் பொருளாதார வலுவோடும் பிணைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதை துலாம்பரமாகக் காணக்கூடியதாக உள்ளது.
விஞ்ஞானத் தொழில்நுட்ப முன்னேற்றம் இன்று மனித வாழ்வின் சகல துறைகளையும் அவை சார்ந்த சிந்தனை களையும் பண்பாட்டையும் பாதிக்குமளவிற்கு உள்ளது. பொதுத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாட்டு, இன. நாட்டு எல்லைகளை அகற்றும் ஒன்றாகக் காணப்படு கின்றது, ஒரே உலகம், பிரபஞ்சக் கிராமம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆயினும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு நன்ம்ை தருவதாக உள்ளதா? புதியதொரு மருந்து அல்லது ஏதாவதொரு கரும் கண்டுபிடிக் கப்படும் போது அதனால் கூடிய பயன் பெறுவது பொது மக்களா அல்லது அதனை உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுபவர்களா? விஞ்ஞான, தொழில்நுட்ப வளாச்சி முக்கிய மாக போராயுதத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படுவதையே இன்று காண்கிறோம். உலகில் முரண்பாடு களும், பகைமைகளும் அதிகரித்த நிலையில் மனிதரை

Page 7
10
அழித்து இயற்கைச்சூழலை நாசமாக்கும் கருவிகளுக்காகவே மனித குலத்தின் பொருளும் புத்தி வளங்களும் விரயமாக்கப் படுகின்றன.
போராயுத உற்பத்தித் தொழிலே மிகுந்த இலாபகரமான தென்று கருதப்படுகிறது. மானிட முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமையவேண்டிய விஞ்ஞானம் துர்ப்பிரயோகம் செய்யப்படும்போது, அது சமுதாய நம்பிக்கை வரட்சிக்கும் அரசியல் வீரப்பிரதாபப் போட்டிகளுக்கும் வரட்டுச் சிந்தாந் தங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் விளை நிலமாகிறது. மானுடத்தின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தவும் சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்தவும் பண்பாட்டை வளர்க்கவும விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன் படுத்த வழி காணப்படவேண்டும்.
கலை இலக்கிய வரலாறும் மனித சமுதாய வரலாற் றுடன் பின்னிப் பிணைந்ததே. சமுதாயத்தின் ஏனையவர் களுடன் உணர்வுகளையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளும் வேட்கையின் விளைவாகவே கலை இலக்கியங்கள் தோன்றுகின்றன. அவை சமுதாய முயற்சிகளோடு சம்பந்த மற்றவையாகவும் சிலநேர இன்பத்துக்கோ வாழ்க்கைச் சிரமங் களிலிருந்து நழுவுவதற்கோ உதவுபவையாகவும் முடிந்து விட்ல் ஏற்றதன்று, ஒரு சமுதாயத்தின் அரசியற் பொருளா தார நிலைமைகளை, இலட்சியங்களை, அபிலாசைகளை, விழுமியங்களைப் பிரதிபலிப்பவை என்றவகையிலே அவை சமூகப் பார்வைகளாக நோக்கப்படத்தக்கவை.
கல்வி, கலை இலக்கிய, விஞ்ஞானச் செயற்பாடுகள் அரசியல் அமைப்பினால் பெரிதும் நிர்ணயிக்கப் படுபவை Jimras iš காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படைகளும் சமுதாயப் பெறுமானங்களும் அறிவியற் கோட்பாடுகளும் அதனைச் சார்ந்தவையாகவே உருவெடுக்கின்றன. அரசியல் என்றால் அரச நடவடிக்கைகளிலே பங்கெடுத்தல் என்பர். ஆனால், இன்று எம்முன்னுள்ள வினா அரச நிர்வாகத்தில்

11.
மக்கள் பங்கெடுப்பது எவ்வளவுதூரம் வரவேற்கப்படுகிறது என்பதாகும்.
இன்றைய நிலையை உற்றுநோக்கினால், அரசியல் விடயத்தில் ஒருவகைப் பாராமுக நிலையினைக் கடைப் பிடித்தலே புத்திசாலித்தனம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவது புலனாகும். அவர்கள் அரசியல் நடவடிக்கை களில் ஆக்கப்பூர்வமான் வகையில் பங்கெடுப்பதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள். பந்தயக் குதிரைகளில் பணம் கட்டிவிட்டு எட்டநின்று கைதட்டிக் கூச்சலிட்டு மகிழ்பவர்களை அல்லது மனம் சலிப்பவர்களை ஒத்ததொரு நிலையில் மக்கள் காணப் படுகின்றனர். ஆதிக்கத்திலுள்ளவர்களைச் சார்ந்து செயற் படும் வெகுசனத்தொடர்பு சாதனங்கள் அரசியலில் அக்கறை கொள்ளாத ஒரு மனப்பாங்கையே மக்களிடைப் பெரிதும் வளர்ப்பனவாக உள்ளன. அதேவேளை மக்களுக்குப் பல் வேறுவகையான அடிப்படை உரிமைகளும் அதிகாரங்களும் சட்டங்களால் உத்தரவாதஞ் செய்யப்பட்டுள்ளன என்ற மனமாயை வெகு உற்சாகமாக முயன்று பரப்பப்படுகிறது. அசட்டுத்துணிச்சலுடன் வீரப்பிரதாபங்கள் பேசும் வாய் வல்லமையாளர்களும் சந்தர்ப்பவாதிகளும் ஏமாற்றுப்பேர்வழி களும் இரண்டாந்தரப் புத்திக்காரர்களும் அரசியலில் முன் னுக்குவர இந்நிலை சாதகமானதாகத் தோன்றுகிறது.
மக்கள் நலனுக்குப் பாதகமான அனைத்தையும் ஒழித்துச் சாதகமான அனைத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வேட்கையினை அடிநாதமாகக் கொண்டதாக அரசியல் விளங்குகின்றதா? அரசியல் முடிவுகளை எடுக்குமிடத்தும் அதனை வழிநடத்துமிடத்தும் பொதுமக்களின் அபிலாசை களும் சமுதாய அபிவிருத்தித் தேவைகளுமே முதன்மையாகக் கருத்திற் கொள்ளப்படுகின்றனவா?
மனித நலனை முதன்மையாகக் கருதுவதே சிறந்த பெறுமானமெனத் தககது, இயற்கையுடனும் சமுதாயத்

Page 8
12
துடனுமான உறவுகள் மீதும் தன்மீதும் மனிதனுக்கு உள்ள கட்டுப்பாட்டின் அளவைக் கொண்டே பண்பாடு அளவிடப்படு கிறது. மனிதனின் உலகியல் ஆத்மீக விழுமியங்களானவை அரசியல், கல்வி, கலையிலக்கிய, விஞ்ஞானத்துறைகளில் மனிதசமுதாயம் பெற்றவளர்ச்சியினைப் பிரதிபலிப்பனவாய் இருக்கவேண்டும்.
கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், அரசியல் முதலான துறைகளில் அடைந்துள்ள முன்னேற் றங்கள் ‘கூட்டிமானுட ஜாதியை ஒன்றெனக்கொண்டுவையம் முழுதும் பயனுற” உதவினவா அல்லது தாழ்வுற்ற பலரைப் பொருட்படுத்தாது மேனிலையெய்திய சிலருக்குச் சேவகமாக அமைந்தனவா என்பது எண்ணிப்பார்க்கப் பட வேண்டிய தாகும்.
எல்லாக் கலைகளும் மனிதவாழ்க்கை என்ற மகோன் னதக் கலைக்குப் பங்களிப்புச் செய்வனவாக அமையவேண்டு மென்ற துய்ப்புடன் வலியமுயற்சிளை மேற்கொள்வோர் மக்களின் கவனத்துக்குரியவர். அத்தகைய ஒருவரே திரு.கே.ஏ. சுப்பிரமணியம் ஆவர். அவர் 'தன்பெண்டு தன்பிள்ளை, சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு” என்று சீவியத்தை ஒட்டியவரல்லர். சாதாரண மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்ட மக்கள் யாவரினதும் வாழ்க்கை இந்த மண்ணில் நல்லவண்ணம் அமைதற் பொருட்டு அரசியல், விஞ்ஞானம், கலை இலக்கியம்யாவும் கைகொடுக்க வேண்டும் என்று திடமாக நம்பிச் செயற்பட்டவர்.
எமது எழுத்தாளர்களின் அரசியல். கல்வி, விஞ்ஞான, கலைஇலக்கிய முயற்சிகளை உற்சாகப்படுத்திய மணியம் அம் முயற்சிகள் சமூகப் பார்வை கொண்டனவாய் ஆழ அகலமான சிந்தனைகளின் அடியிற் சிறக்கவேண்டுமென விரும்பியவர். அதற்காகப் பலபெருமுயற்சிகளை மேற்கொண்டவர், எனவே அன்னாரின் நினைவாக வெளிவரும் இக்கட்டுரைத் தொகுதி

13
சமூகம், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம் முதலான துறைகள் குறித்த சமூகப் பிரக்ஞையும் சமூகப்பார்வையும் தெளிந்த் எழுத்தாளர்களின் எண்ணங்களை உள்ளடக்கியதாய் அமைந் திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

Page 9
விஞ்ஞானக் கல்வியின சமூகப் பயன் இ. முருகையன்
இன்றைய கல்வி உலகில், விஞ்ஞானம் மிகவும் முக்கிய மானதோர் இடத்தைப் பெற்றுள்ளது. விஞ்ஞானக் கல்வி பயனுள்ளது; பெறுமதி வாய்ந்தது; ஆகையால் அது வளர்க் கப்பட வேண்டும். நவீன உலகில் மிகவும் பரவலாக ஏற்றுச் கொள்ளப்படும் கருத்து இதுவாகும்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. பிரயோக விஞ்ஞான மும் அதன் பேறாகிய தொழில் நுட்ப வெற்றிகளும் மக்கள் மனத்தைக் கவர்ந்துள்ளன. சமூக நீதிக்கோட்பாடுகளுக்கே முதலிடந் தந்து, தொழில் நுட்பத் துறையில் அதிக அக்கறை காட்டாமல் இருந்த சமூகங்களும் கூட இன்று தமது நிலைப் பாட்டை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி விட்டன. தொழில் நுட்ப வளர்ச்சியைப் புறக்கணிப்பது நல்லதல்ல என்பதை அத்தச் சமூகங்கள் உணர்ந்து வருகின்றன. அந்தத் திசையிலே தமது நடவடிக்கைகளை அவை முடுக்கி விட் டுள்ளன. இதன் இயல்பான பெறுபேறாக, தொழில் நுட்ப வியலின் மூல ஏதுவாகிய விஞ்ஞானமும் அதிக மதிப்பையும் கணிப்பையும் பெற்று வருகிறது.
விஞ்ஞானம் என்றதும் அதன் உச்ச நிலையாகிய ஆராய்ச்சிகளையே அறிஞர்கள் கருத்திற் கொள்வார்கள். ஆனால், இங்கு நாம் பாடசாலைகளில் நடைபெறும் விஞ்ஞானக் கல்வியையே பிரதானமாக எடுத்து நோக் குவோம். விஞ்ஞானிகளாக இல்லாத சாமானியமான மக்களுக்கு, பாடசாலைகளில் நடைபெறும் விஞ்ஞானக் கல்வியே அந்தத் துறையுடன் ஓரளவு தொடர்பை ஏற் படுத்திக் கொடுக்கிறது. இந்த வகையிலே விஞ்ஞானத்தின்

15
பரந்த சமூகப் பயன்கள் பலவும் பள்ளிக் கல்வி வாயிலாக வந்து சேர்கின்றன. சனத் தொடர்புச் சாதனங்களாகிய வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள் வாயிலாகவும் இவை வந்து சேர்கின்றன. பள்ளிக் கல்வி, நிறுவன நிலைப்பட்டது; சனத்தொடர்புச் சாதனங்கள் வாயிலாகக் கிடைக்கும் கல்வி, நிறுவன நிலைப் படாதது. இந்த இரண்டு வகைக் கல்வியினாலும் சமூகப் பயன்கள் சில கிடைக்கின்றன; கிடைத்தல் வேண்டும். இந்தச் சமூகப் பயன்கள் பற்றிய சிந்தனைகள் சில இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை பிரத்தியேகமாக எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் சிறப்பான பொருத்தப்பாடு உடையன் அல்ல. என்றாலும் இங்கு தரப்படும் உதாரண விளக்கங்கள் சில, தமிழ்ச் சமூகம் சார்ந்தனவாய் உள்ளன. விடய விளக்கத்தை இலகுவாக்கும்பொருட்டே இந்த அணுகு முறை கையாளப் படுகிறது.
கல்வியின் நோக்கங்களும் இலக்குகளும் காலத்துக் காலம். இடத்துக்கு இடம் மாறுபட்டும் வேறுபட்டும் வளர்ந்து வந்துள்ளன. முன் ஒரு போதும் இல்லாத அளவு அழுத்தம் இன்று விஞ்ஞானக் கல்விக்கு வழங்கப்படுகிறது. இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள்.
யுனெஸ்கோ எனப்படும் ‘ஐக்கிய நாடுகள் கல்வி விஞ் ஞானப் பண்பாட்டு நிறுவனம் விஞ்ஞான கல்வி பற்றி நிறைந்த ஈடுபாடு கொண்டது. அந்த நிறுவனம் 1980 ஆம் 'ஆண்டில் ஒரு பணிக்களத்தை (வேக் ஷொப்பை) நடத்தி யிருந்தது. அந்தப் பணிக்களத்தின் ஆய்வுப் பொருள் "ஆசியாவிலே கல்விக் கொள்கைகளும் இலக்குகளும்" என்ப தாகும். அந்தப் பணிக்களத்தில் வெளிப்படுத்தப் பெற்ற கருத்தொன்று நம் கவனத்துக்கு உரியது.
இப்பிரதேசத்து (ஆசிய) நாடுகள் எல்லாவற்றிலுமே விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பவியலையும்

Page 10
1.6
வளர்ப்பதும், அவற்றைப் பிரயோகிப்பதும் மிகவும் முக்கியமான கல்வி இலக்குகள் ஆயின. குறிப்பாக, "நவீனமயமாதல்’ என்னும் சூழலிலே இது இவ்வா றாயிற்று. விஞ்ஞானத்தையும் தொழில் நுட்ப வியலையும் தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். அவை இந்த நாடுகளின் பரந்த கலாசார, சமூகவிழு மியங்களுக்குத் தொழம்பு புரிய வேண்டும். (யுனெஸ்கோ, 1980: 22)- பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ் கொரியக் குடியரசு, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்குபற்றிய மேற்படி பணிக்களத்தின் அறிக்கையில், விஞ்ஞானம் பற்றியும் தொழில் நுட்பவியல் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கு மேலும் விளக்கம் வேண்டியதில்லை இந்த, நாடுகள் வளர்முக நாடுகள் என்று வருணிக்கப்படத் தக்கவை. இவை, விஞ்ஞான அறிவையும் அதன் பிரயோகங்களையும் மிகவும் உயர்வாக மதிக்கின்றன. இந்த உண்மை மேற்படி அறிக்கையிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. நமது நாடாகிய இலங்கையிலும் விஞ்ஞானக் கல்வியின் பெறுமதி நன்கு உணரப்பட்டுள்ளது. எண்பதுகளின் தொடக்க காலத் திலிருந்தே ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை யிலும் சகல மாணவர்களுக்கும் பொதுவான ஒரு பாடமாக விஞ்ஞானம் இருந்து வந்துள்ளது. 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஆண்டு மூன்றிற் பயிலும் சிறுவர்கள்கூட, ஆரம்ப விஞ்ஞானக் கருத்துகள் சிலவற்றை அறிந்திருக்க வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்றது. இன்று மாணவர்கள் மிகச் சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்துடன் பழக்கஞ் செய்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். இலங்கைக் கல்வியாளரும் கொள்கை வகுப்போரும் விஞ்ஞானக் கல்விக்கு வழங்கும் முதன்மை இதிலிருந்து விளங்குகிறது.
இவ்வாறு, விஞ்ஞானக் கல்விக்கு முதன்மை தரும் போக்கு, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்த ஒன்று

17
அல்ல. உதாரணமாக, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இலங்கையில் நிலவி வந்த நடைமுறையை நோக்கலாம் அன்றும் ஆர்ம்ப விஞ்ஞானம் ஒரு பாடமாக ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்புகளிற் கற்பிக்கப்பட்டது - மெய் தான். ஆனால் அன்றைய ஆரம்ப விஞ்ஞானத்தின் ஆழ நீளங்கள் மிகவும் குறுகியவை. மேலோட்டமான சிறிய அறிமுகம் என்றுதான் அந்தப் பாடத்தைக் கருத வேண்டும். ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளிலே தான், விஞ்ஞானப்படிப்பு பெளதிகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியில் என்று பாகுபாடு பெற்றுத் தனிக் கவனத்தையும் பெற்றது. இந்தப் பருவத் திலேதான் விஞ்ஞானம் ஓரளவு அர்த்த நிறைவுள்ள கனதி யான படிப்பு ஆயிற்று. பெரும்பாலான பாடசாலைகளில், பொருட்படுத்தக்கூடிய ஆய்கூடச் செய் முறை வேலை களும், அந்த ஒன்பதாம், பத்தாம் வகுப்புப் பருவத்திலேதான் இடம் பெறுவது வழக்கம்.
அதே வேளையில், சரித்திரம், பூமி, சாத்திரம், குடி யியல், இலக்கியம், சமயம், மொழி, சித்திரம், சங்கீதம் என்பன எல்லாம், கீழ் வகுப்புத் தொட்டே தனித்தனிப் பாடங்களாகப் படிப்பிக்கப்பட்டு வந்தன. அதாவது, ஐம்பது களிலும் அறுபதுகளிலும், விஞ்ஞானச் சார்பில்லாத 'கலைத் துறைப் பாடங்களுக்கு அதிக ஆதரவு இருந்தது, அது, அன்றைய நிலைமை; கடந்த காலத்து நிலைமை.
இப்போது காலம் மாறிவிட்டது. விஞ்ஞானச் சார்பில் லாத பாடங்கள் பெற்றிருந்த முக்கியத்துவம், படிப்படியாகக் குறைந்து போய்விட்டது. அண்மைக் காலங்களில், விஞ் ஞானச் சார்புள்ள பாடங்களே பெரிதும் போற்றி வரவேற்கப் படுகின்றன. விஞ்ஞானச் சார்புள்ள கல்வியைத்தான் மாண வர்களும் விரும்பி வரவேற்கிறார்கள்
இதற்குப் பல வேறு காரணங்கள் இருக்கலாம். உள்ளூர்
நிலைமைகளுடன் தொடர்புபட்ட உடனடிக் காரணங்கள் சில: உலகு தழுவிய பொதுமையான காரணங்கள் சில.

Page 11
18
விஞ்ஞானக் கல்வி அதிக வேலை வாய்ப்புகளைத் தரும் என்னும் அபிப்பிராயம் உடனடிக் காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். வைத்தியராகவோ எந்திரியராகவோ வரும் வாய்ப்பு விஞ்ஞானக் கல்வியினாலேதான் கிட்டும். அப்படிப் பட்ட உயர்தொழில் கிடைக்காவிட்டாலும் பொறிஞர் (மெக்கானிக்) ஆகவோ, தொழில் நுட்பர் (ற்றேக்னிஷன்) ஆகவோ, நில அளவையர் ஆகவோ ஒருவர் வரவேண்டு மானால், விஞ்ஞானக் கல்வியைத்தான் நாட வேண்டும். மறுபுறத்தில், கலைத்துறைப் பாடங்களை எடுத்துக் கொண் டால், அவற்றைப் படிப்பவர்களுக்குப்- பெருவருமானம் தரும் வேலைகள் கிட்டுவது குறைவு, சட்ட வல்லுநர் களாகவோ பேராசிரியர்களாகவோ தேர்ச்சி பெற்றாலொழிய, மற்றவர்கள் குறைந்த வருமானம் தரும் ஒரு சில வேலை களைத்தான் தஞ்சம் அடையவேண்டி இருக்கும்.
இங்கு காட்டப்பட்டவை போன்ற உடனடிக் காரணங் களால், விஞ்ஞானத்தை விரும்புவோர் தொகை அதிகமாகி இருக்கக்கூடும். இவற்றுக்கும் மேலாக, உலகு தழுவிய பொதுவான சிந்தனைப் போக்குகளும் விஞ்ஞானத்துக்குச் சாதகமாக இயங்கியிருக்கக்கூடும். அதாவது, விண்வெளி யுகம் என்று பொதுவாகப் பேசப்படும் இந்தச் சகாப்தத்தின் தன்மையிலே-அதன் இரத்தத்தோடு இரத்தமாக - இந்த விஞ்ஞானச் சார்பு கலந்து விட்டது என்றும் நாம் எண்ணிப் பார்க்கலாம். எட்" கார் ஃபவுரே என்னும் அறிஞர் இதனை ஆணித்தரமாக எடுத்து விளக்குகிறார்
இன்று நாம் "விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி’ என்று விவரிக்கும் நிகழ்ச்சியைப் போலே விரிந்த பலாபலன்களைக் கொண்டத்ாக வேறு யாதொரு நிகழ்ச்சியுமே இது வரை வரலாற்றில் இடம் பெற்றதில்லை.
உண்மையில், விஞ்ஞான அவதானிப்புகளாலும், "சமையற் குறிப்புகளை" ஒத்த சில உபாயங்கள்

19
கண்டறியப் பட்டதனாலும் கணிசமான முன்னேற் றங்கள் முற்காலங்களிலும் நடந்தேறியுள்ளன. ஆனால், இவையொன்றும் இயற்கையின் இரகசிய சக்திகளை அறிவுக்கு வசப்படுத்துவனவாய் அமைய வில்லை. ஒப்பீட்டளவில் அண்மைக் காலங்களிலே தான், அடிப்படை ஆய்வுகள் மூலம் கிட்டிய வெற்றிகள், பரிசீலிக்கப்பட்ட பிரச்சினைகளின் நடுக்கரு வரை ஊடுருவிச் சென்றுள்ளன; அதே சமயத்தில், துரிதவேகத்திற் பரவும் அவ்வெற்றி களின் நடைமுறைப் பிரயோகங்கள், மக்களின் அன்றாட வாழ்விலும் உடனுக்குடன் புகுந்து பரவு கின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டில் இடம் பெற்ற எந்திரத் தொழிற்புரட்சி, முதலாவது எந்திர யுகம் என்ப வற்றுக்கும் இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சிக்குமிடையே நிரம்ப வேறுபாடுண்டு. அன்றைய மாற்றங்கள் மனிதனுடைய பெளதிக மான உடலியல் வலிமையைப் பதிலீடு செய்தன; பல மடங்காக்கின. ஆனால் இன்றைய தொழில் நுட்ப-விஞ்ஞானப் புரட்சியோ மனவுலகத்தையும் வெற்றிகொண்டு விட்டது. எவ்வளவு தூரத்துக்கும் உடனடித் தகவலைச் செலுத்தும் ஆற்றல் கிட்டிய தனாலும், கணிப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பகுப்புணர்வு ஊட்டப்பட்டுப் பரிபூரணமாக்கப் படுவதனாலும் இவ்வித சாதனைகள் சாத்திய LD TAGGIT (åLusy Gir, 1972 : xxxii).
விஞ்ஞானம் எங்கும் பரந்து செறிந்துள்ள தன்மை, மிகவும் தெளிவாக இங்கு வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானம் மனிதனின் அகவுலகத்தை எவ்வாறு வெற்றி கொண்டதென்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏனென்றால், வெறும் பெளதிகமான வாழ்க்கைக் கூறுகளை

Page 12
20
மட்டுமல்லாமல், மானசிகமான அல்லது ஆன்மிகமான பண் பாட்டு அம்சங்களையும் சமுதாய நெறிமுறைகளையும் விஞ்ஞான ஆய்வின் வெற்றி பாதிக்கும். இதை நாம் மறந்து விடக்கூடாது. உண்மையில், கல்வி இயலிலே புதியதொரு "தேடல்" இன்று உலக அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது. சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இறுதி இலட்சி யங்கள் சில உண்டா என்னும் கேள்வியும் அடிக்கடி கேட்கப் படுகிறது. பொருளியல் அநீதிகள், இன, நிற, சமூக, வகுப்புப் பாகுபாடுகள், அதிகார வர்க்கத்தின் வல்லாதிக்கக் கொடுமைகள் என்பனவற்றை ஒழித்து விடுதலை காணும் வேட்கை, ம்னித குலத்தின் பொதுக் குறிக்கோளாக மேலோங்கி வருகிறது. இந்த விடுதலை வேட்கையின் வீச்சையும் வேகத்தையும் வலிமையையும் உணர்ந்து கொள்ளாத சிற்சில சமூகப்பகுதியினர் இக்குறிக்கோளைத் தீவிரமாகத் தழுவிக்கொள்ளத் தயங்கினாலும், நாகரிக மடைந்த மனிதகுலத்தின் இறுதிப் பொது இலட்சியங்கள் எனச் சில நியதிகள் உருவாகி வருகின்றன என்பதை அறிஞர் பெருமக்கள் எடுத்துக் கூறுகின்றனர். இந்த வகையிலே, விஞ்ஞான மானிடவாதம் (ஸயன்ற்றிஃபிக் ஹியூமனிஸம்) என்னும் கருத்தியற் கோட்பாடொன்றைச் சிலர் முன்வைக் கின்றனர். இக்கோட்பாடு மனிதகுலத்தின் விடுதலை வேட்கை உந்தல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று என்று கூற முடியாது. என்றாலும், இறுதியான முழு நிறைவை நோக்கிய நெடும்பயணத்தில் ஓர் இடைநிலைப் படியாக விஞ்ஞான மானிடவாதம் அமைதல் கூடும் என்று தோன்றுகிறது. ஆகையால், அக்கோட்பாடு சார்ந்த சிந்தனைகள் சிலவற்றைச்சுட்டிச் செல்வது இவ்விடத்திலே பொருத்தமாகும்.
விஞ்ஞான மானிடவாதம் மனிதனை வெறும் அகவய மான, அல்லது அருவமான கருத்தாகக் கொள்ளவில்லை. மனிதன் திட்டவட்டமான, உருபடியான உண்மைப் பொருள் ஆவான். அவன் வரலாற்றிலே வேர் கொண்டவன்; சூழ்

21.
நிலைகளின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டவன்; அவன் புறவய மான அறிவின் துணையைச் சார்ந்துள்ளான்; அந்த அறிவும் திடமான, செயலூக்கமுள்ள அறிவாகும். அத்துடன் அந்த அறிவு அந்த மனிதனுக்கு ஏவல் புரிவதையே தன் இலக்காகக் கொண்டது. இவ்வித சிந்தனைகளைப் பொறுத்தவரையில், மார்க்சியத்துக்கும் விஞ்ஞான மானிடவாதத்துக்குமிடையில் உள்ள நெருங்கிய ஒற்றுமைகள் சில நன்கு புலனாகின்றன.
மேற்சொல்லப்பட்ட இயல்புகளையுடைய நவீன மனிதனைப் பொறுத்தவரையில், அவன் காணும் பிரபஞ்சத் தின் சாராம்சமே மாறிவிட்டது. விஞ்ஞானத்திலே ஊறித் திளைத்த ஓர் உலகத்தின் உள்ளே இன்றைய மனிதன் எடுத்து வீசப்பட்டுள்ளான். அவன் விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன இது தான் நிலைமை. பசுமைப் புரட்சியில் ஈடுபட்டுள்ள உழவனாய் இருந்தால் என்ன, தன்னியக்கத் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளியாக இருந்தால் என்ன, அணுக்கருப் பெளதிக ஆய்வுக்கூடத்தின் தொழில் நுட்ப நிபுணனாய் இருந்தால் என்ன, இது தான் நிலைமை.
நவீன நாகரிக சமுதாயத்திலே ஒருவன் பொருள் உற்பத்தியில் ஈடுபிட வேண்டுமானால், அவனுக்குச் சில விஞ்ஞான முறைகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும். பிரயோக அறிவு இருந்தாற் போதுந்தானே என்று சிலர் நினைக்கலாம். இல்லை. அதுகூடப் போதாது. அறிமுறைத் தேர்ச்சியும் அவசியமாகும். அது மட்டுமல்ல; தன்னைச் சூழவுள்ள பிரபஞ்சத்தைச் சரியாகக் காண்பதற்கும் அதை விளங்கிக் கொள்வதற்குங்கூட, விஞ்ஞான அறிவின் திறவுகோல்கள் அவன் வசம் இருப்பது அவசியமாகிவிட்டது.
சராசரி மனிதனுக்கு, ಮೌಲ್ಳಿಕ್ಲಿಷ್ಠಿಇg ழ்ஜிஞ்ஞஐ
???
மொழியும் இன்றியமையாதவ்ை வ்று விகிைச்
ஆ-2

Page 13
22
சிந்தனைகளும் வேறுவகை மொழிகளும் அவனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமாக இவையும் ஆகிவிட்டன.
சுருங்கச் சொன்னால், விஞ்ஞான அணுகுமுறையின் அடிப்படைகளைக் கிரகித்துக் கொள்வது அவசிய தேவை ஆகிவிட்டது. இது புதிய கல்விச் சிந்தனைப் போக்கின் ஆதார சுருதியாகி விட்டது. இதனால், கல்வி நடைமுறை யில், விஞ்ஞான மானுடவாதமும் ஓர் அங்கமாகி விட்டது.
பாடசாலைக் கல்வியிலும் பொது நிகழ்வுக் கல்வியிலும் இதன் தாக்கத்தையும் செல்வாக்கையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கல்வி நடைமுறையைப் பொறுத்த வரையில் விஞ்ஞான மானுடவாதம் என்பதன் கருத்து என்ன? ஆசிரியர்களின் செயற்பாடுகளிலும் மாணவர்களின் செயற் பாடுகளிலும் விஞ்ஞான மானுடவாதம் கோரி நிற்கும் மாற் றங்கள் எவை? இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.
மூன்று விதங்களில் அவ்வகை மாற்றங்களை வரை யறுத்து இனங்காணலாம். (1) புறவயமான சிந்தனைப் போக்கைப் பழக்கத்துக்குக் கொண்டுவருவதும் (2) தொடர் பியல் நோக்கை நோக்கிய பயணமும் (3) இயங்கியற் சிந்தனைகளை வரவேற்பதும் தான் அந்த மாற்றங்கள் என்று சொல்லலாம்.
புறவயமான (ஒப்ஜெக்ற்றிவ்) சிந்தனை என்றால் என்ன? இது அகவயமான் சிந்தனைக்கு எதிர்மாறானது. அகவய மான சிந்தனை என்பது தன்னை மையமாகக் கொண்டது; உணர்ச்சி மயமானது. அங்கு, விருப்பு வெறுப்புகளும் கோப தாபங்களும் பற்றுகளும் பாசங்களும் ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் நீதி நியாயங்களாக வேடம் போட்டுக் கொண்டு நடிக்கும்; போரிட்டுக் கலகம் விளைவிக்கும். அகவயமான

28
உணர்ச்சிப் பற்றுகளை விலக்கிய சிந்தனைப் போக்கே புறவயமானது. இங்கு, நோக்கும் விடயமே முதல் இடம் பறுகிறது. நோக்குவோனாகிய விடயி” விடயத்திலே தலையிடுவதை இயலுமானவரை தவிர்த்துக் கொள்ளு கிறான். அதனால், புறவயச் சிந்தனையை விடயவயச் சிந்தனை என்றும் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட புறவய மான சிந்தனையே விஞ்ஞான ஆய்வுக்கு வாய்ப்பானதாகும். ஓர் உண்மையை நோக்கிய தேடலில், நடப்பியல் மெய்ம்மை களையும் எதார்த்தமான செய்திகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்குமானால், அந்தத் தேடலில் ஈடுபட்டுள்ள எல்லாருமே தம்மிடையே நல்லுறவுகளைப் பேணிக்கொள்ள லாம். அதற்கு எந்த விதமான தடையும் இருக்காது. விஞ்ஞான வழிப்பட்ட மனங்கள் இவ்விதமான புறவயச் சிந்தனைப் போக்கில் ஈடுபாடு கொள்ளுவது இயல்பே ஆகும். ஏனென்ற ல், விஞ்ஞான நோக்கு என்பது, வழமையான பழைய மனப்பாங்குகளையும் கைவிடாது பேணும் ஒருவன், நாகரிகமாக அணிந்துகொள்ளும் துண்டுதுணுக்கான அறிவுப் பூணாரங்கள் அல்ல; அலங்காரமான அறிவாயுதங்களும் அல்ல. உண்மையில் அது முழுமையானதொரு வாழ்க்கைத் தத்துவம் ஆகும். ஒருவனின் ஆளுமையைப் பரிபூரணமாக ஊடுருவிச் செறிந்து கலந்துவிடும் உயிராற்றல் அதற்கு உண்டு. இந்த உயிராற்றலுக்கு ஊற்றுக்கண்ணாய் இருப்பது விடயவயச் சிந்தனை எனப்படும் புறவயச் சிந்தனைதான்.
இனி, தொடர்பியல்வாதம் (றிலேற்றிவிஸ்ம்) விஞ்ஞானத் துடன் எவ்வித உறவைக் கொண்டுள்ளது என்று காண்போம். கருத்துகளும் செயல்களும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. காலமும் சூழலும் அவற்றைக் கணந்தோறும் பாதிக்கின்றன. ஆகையால், தனியாள் நோக்கிலும் சமூகங்களின் நோக்கிலும், கட்டித்துப்போன இறுக்கமான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் விஞ்ஞான நோக்குக்கு விரோதமானவை ஆகும். ஏனென்றால், அறிவுத் தேட்டம் என்பது ஒரு போராட்டம். வழமைகளையும் மரபு

Page 14
24
களையும் சம்பிரதாயங்களையும் தேக்கங்களையும் எதிர்த்த போராட்டம் - அது; ஏற்கெனவே கைவசமுள்ள - தயார் நிலையிலான எண்ணங்களையும் (தேவை ஏற்பட்டால்) உடைத்தெறியும் போராட்டம்-அது; நாம் விளங்கிக்கொள்ள எத்தனிக்கும் பொருளின் சிக்கற்பாட்டுக்கும் இருண்மைக்கும் எதிரான போராட்டம் - அது இப்படிப்பட்ட போராட் டத்தில் கிடைக்கும் வெற்றியே நாம் ஈட்டிக்கொள்ளும் அறிவாகும். இவ்விடத்தில் நாம் நினைவு கூரத்தக்க ஓர் உண்மை உண்டு. ஒரு புதிய தேடலின் தொடக்கப் புள்ளியே அறிவாகும். அதன் வழியில் நாம் தேடிப் பெறும் உண்மை யின் ஒரு பகுதி நமக்கு முந்திய பல தலைமுறைகளைச் சார்ந்தவர்களின் உழைப்பினால் ஈட்டப்பட்டதாகும். முன்னோரின் உழைப்புக்காக அவர்களுக்கு நாம் நன்றி பாராட்ட வேண்டும். ஆனால் உண்மைகளைச் சோதித்துச் சரி - பிழை பார்ப்பதற்கு முன்னர் நாம் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. உண்மைகள் யாவும் அறியப்பட்டு விட்டன எனவும், அவை எப்பொழுதும் மாறாது நிலையாக நிற்கின்றன எனவும் நம்புவது நிலைப்பியற் (மெற்றா ஃபிசிக்கல்) கோட்பாடு எனப்படும். அக்கோட்பாடு விஞ்ஞான நோக்குடன் இசைந்து போகாது. முடிந்த முடியான அல்லது தனிமுழுமையான (அப்லொல்யூற்) எண்ணங்களையும் கருத்துகளையும் விலக்கி, காலத்துடனும் இடத்துடனும் தொடர்புபட்ட எண்ணங்களையும் கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதுதான் தொடர்பியல் வாதம், தொடர்பியல் வாதக் கருத்தோட்டங்கள் தான் விஞ்ஞான நோக்கோடு இச்ைந்து போவன ஆகும்.
தொடர்பியல் வாதத்தோடு இயங்கியற் சிந்தனை நெறியும் விஞ்ஞான நோக்கின் பாற்பட்டதாகும் இயங்கியற் சிந்தனையானது (டயலெக்ற்றிக்கல் ஃதோற்) எண்ணங்களின் உள்ளேயும், செய்கைகளின் உள்ளேயும் "காலத்தைப் புகுத்துகிறது. "இயக்கத்தையும் புகுத்துகிறது. புகுத்துகிறது என்று சொல்வது கூடச்சரியில்லை. ஏனென்றால், காலமும்

25
இயக்கமும் வேறு எங்கேயோ இருந்து கொண்டுவரப்படுவன அல்ல. அவை எண்ணங்களுடனும் செயல்களுடனும் இயல்பாகவே பிரிவின்றித் தொடர்புபட்டுள்ளன. மனித எண்ணங்களும் செயல்களும் காலத்தோடொட்டி மாற்றம் பெற்று, வளர்ந்தும் தேய்ந்தும் பாய்ச்சல் பெற்றும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கொள்ளும் கருத் தோட்டம் இயங்கியல் நெறியில் முதன்மை பெறுகிறது.
"மாற்றமில்லா விதி எதையும் எக்காலும் ஒப்போம்” என்கிறார் நவீனத் தமிழ்க்கவிஞர் ஒருவர் (குலேத்துங்கள், 1983 : 39) தொடர்பியல் வாதமும் இயங்கில் நெறியும் பொறுமையின் விதைகளைத் தூவி வளர்ப்பதற்கு ஏற்ற செழிப்பான நிலமாகும். மனித சமூகங்களிடையே நிலவும் வித்தியாசங்கள் (எற்றத்தாழ்வுகள் அல்ல) இயல்பான வைதான் என்று ஏற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் கொடுமை களையும் குரோதங்களையும் தவர்த்துக்கொள்ள இது உதவும்.
V|
விஞ்ஞான மானுடவாதத்தின் கூறுகள் என்று மேலே வகுத்துரைக்கப்பட்ட புறவயச் சிந்தனையும் தொடர்பியல் வாதமும் இயங்கியல் நெறியும் விஞ்ஞான -தொழில்நுட்பப் புரட்சியின் பேறாக மலர்ச்சி பெற்றவை, ஆகையால் இவை மேற்குலகுக்கு உரியவை என்றும் நவீன காலத்துக்கு உரியவை என்றும் கொள்ளப்படுகின்றன. விஞ்ஞானமும் தொழில் நுட்பவியலும் மேற்குலக மாந்தருக்குத்தான் சொந்தமானவை என்னும் எண்ணமும் நம்மில் ஒரு சாராரிடம் வேரூன்றி நிலைத்து நிற்கிறது.
ஆனால், அப்படிப்பட்ட எண்ணம் உண்மைக்குப் புறம்பானது, ஊர், நாடு, தேசம், சமூகம், இனம் என்னும் வேறுபாடுகளைக் கடந்து இயங்குவது தான் - அறிவு. அது உலக மக்கள் எல்லாருக்கும் பொதுவானது. ஆனபடியால், விஞ்ஞான மானிடவாதத்தின் வித்துகள் ஒவ்வொரு

Page 15
26
சமூகக்குழுவின் மரபிலும் மிகப்பழங்காலம் தொட்டே பயின்று வந்துள்ளன. தமிழ் மரபிலும் விஞ்ஞான மானிட வாதத்தின் வித்துகளை நாம் கண்டறியலாம், மிகச் சில உதாரணங் களை மாத்திரம் தந்து அப்பாற் செல்வோம்.
காலங் கடந்து நிலைபெறத்தக்க கருத்துகள் பலவற்றை வெளிப்படுத்தியவர் திருவள்ளுவர். அறிவுபற்றி அவர் கூறுவன கவனிக்கத்தக்கன.
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
(திருவள்ளுவர் : 423)
**எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு”
(திருவள்ளுவர் : 355)
என்பன வள்ளுவர் வாய்மொழிகள் மெய்பொருள் என்பது தனி ஒருவர் எவருக்கும் சொந்தமானது அல்ல. அது யார் வாய் மூலமும் வெளிப்படலாம். சொல்லுகிறவர் யார் என்பது முக்கியம் அல்ல சொல்லப்படும் பொருள்தான் முக்கியமானது. சொன்னவன் தகுதியை ஆராய்ந்து கொண்டிருப்பது அவ்வளவு பயனைத் தராது சொல்லப்படும் பொருளை ஆராய்வதுதான் பயனுள்ள செயல். இவ்விதமான கருத்துகள் புறவயச் சிந்தனையின் வெளிப்பாடே ஆகும்.
இனி, ஆய்வுக்கு உட்பட்டுள்ள பொருளின் தன்மையும் ஆய்வைப் பாதிக்கக் கூடாது. ஆய்வாளரின் சொந்த விருப்பு, வெறுப்புகள் விலக்கி வைக்கத் தக்கவை. ஏனென்றால், தன் சொந்த விருப்பு காரணமாக ஒருவன் ஒரு பொருளுக்குச் சாதகமான தீர்ப்பைத் தந்துவிடக் கூடும். அது போலவே, தன் சொந்த வெறுப்புக் காரணமாக அவன் அந்தப் பொருளுக்குப் பாதகமான தீர்ப்பையும் தந்துவிடக்கூடும்.

27
ஆனபடியால், சொந்த விருப்பு வெறுப்புகளால் மெய்ப்பொருள் சரியாகப் புலப்படாமற் போகலாம், பொய்ப்பொருளே வெளிப்பட்டு விளங்கலாம். விருப்பு வெறுப்புக் காரணமான பட்சபாதகத் தீர்ப்பு ‘காமஞ் செப்புதல்" என்று பழந்தமிழரால் வழங்கப்பட்டது.
'காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (இறை யனார் : 3) என்பது ‘குறுந்தொகைச் செய்யுள் அடியாகும். ‘காமஞ் செப்பாது' தீர்ப்பு வழங்க வேண்டுமானால், பொருளின் தன்மையைக்கண்டு உணர்ச்சி வசப்படக் கூடாது. நியாயங்களைப் போலவேடம் போட்டு நடிக்கும் அகவயமான உணர்ச்சிகளை ஒதுக்கிவைக்க வேண்டும். வேறு சொற்களிற் சொல்வதானால்; புறவயச் சிந்தனையை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தோட்டம் "குறுந்தொகையிலும்’ *திருக்குறளிலும் இடம்பெற்றிருப்பதை மேலே கண்டோம்.
"குறுந்தொகையும்" "திருக்குறளும் பழங்காலத்துப் படைப்புகள். அண்மைக் காலத்துப் படைப்புகளிலும் விஞ்ஞான மானிடவாதச் சார்பான கருத்துகளை நாம் காணலாம். கவிஞர் குலோத்துங்கனின் பாட்டொன்று பின்வருமாறு பேசுகிறது
**சத்தியம் வளரும். மாறும் : தருமங்கள் மாறும் வாழ்வில் உத்தி மற் றொழுக்கம் மாறும் : உயர்ந்தவை என்று கண்ட தத்துவம் வளரும் ; மாறும் : சலனமும் மாற்றமும் தான் நித்தியம் ; வளர்ச்சி ஏற்கும் நெறியினர் நிற்பர் அம்மா”
(குலோத்துங்கள் 1983 : 79)
எந்தவொரு பொருளும் வாழ்க்கையோடு தொடர்ந்து நாள் தோறும் வளர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கு உய்வு

Page 16
28
உண்டு; அவ்வாறு வளரவும் மாறவும் தவறும் எந்தப் பொருளும் தாழ்ச்சி அடையும்; குழ்நிலைக்குத் தன்னை இசைவித்துக் கொள்ளாத எதுவும் வீழ்ச்சி அடைந்தே தீரும் என்பதை வேறு பல தருணங்களில் இந்தக் கவிஞர் வலியுறுத்தி உள்ளார்.
புறவயச் சிந்தனை, தொடர்பியல் வாதம் இயங்கியல் நெறி ஆகியவற்றை இலக்கிய விமரிசனத் துறையிலே பிரயோதித்துக் காட்டியவர் பேராசிரியர் க. கைலாசபதி, அவரது "ஒப்பியல் இலக்கியம்', 'அடியும் முடியும்' ஆகிய நூல்கள் இதற்குச் சிறப்பான சான்றுகளாக விளங்குகின்றன. பல்வேறு இடங்களிலும் காலங்களிலும் தோன்றிய இலக்கியப் பகுதிகளை ஒப்பிட்டுக் காணும் பொழுது அங்கு தொடர்பியல் வாதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. இலக்கிய உலகில் வழங்கும் சில எண்ணக்கருக் களின் படிமலர்ச்சியைக் கண்டு விளக்கும் பொழுது இயங்கியல் நெறியின் பிரயோக்த்தை நாம் பார்க்கிறோம்.
எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் அணுவளவு மாற்றமும் இன்றிப் பொருந்தக் கூடிய ஒழுக்கமோ உண்மையோ இல்லை என்று எடுத்துக் கூறும் இந்தவிதமான குரல்கள், நிலைப்பியல் நோக்கை எதிர்க் கின்றன; இயங்கியல் நோக்கை ஆணித்தரமாக ஆதரிக் கின்றன. கருத்துகள் காரியங்கள் என்பவற்றுக்கு உள்ளே காலமும் இயக்கமும் புகுந்து ஊடுருவிச் செறிந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கிறோம். நிலைப்பியல் அல்லது இயக்கமறுப்பியல் என்னும் தத்துவநோக்கின் மீது விழும் தாக்குதல்களாக இந்தக் குரல்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் ஓங்கி ஒலிக்கின்றன.
இப்படியாக குறுந்தொகை தொடக்கம் குலோத்துங்கள் வரையில் எழுந்த பல குரல்கள் (பாரதியாரின் குரல் உட்பட) புறவயச் சிந்தனையையும் தொடர்பியல் வாதத்தையும் இயங்கியல் நெறியையும் சார்ந்து நிற்கின்றன. விஞ்ஞான

29
மானிட வாதக் கூறுகளின் வித்துகள் என்று இவற்றை நாம் விவரிக்கலாம். இவை, காலங்காலமாக, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் விரவி வருவதை நாம் கண்டுகொள்ளலாம். இவ்விதமாகவே, வேறு சமூகத்தினரின் சிந்தனையிலும் இவை காணப்படலாம். ஆகவே விஞ்ஞான மானிடவாதம் என்பது எந்தவொரு நாட்டாருக்கோ இனத்தாருக்கோ மாத்திரம் சொந்தமான தன்ரிச்சொத்து அல்ல. அது எல்லா நாட்டாருக்கும் எல்லா இனத்தாருக்கும் எல்லாச் சமூகத் தாருக்கும் சொந்தமான ஒரு நவீன தத்துவம் ஆகும். அது நவீன விஞ்ஞானம் நமக்கு வழங்கிய, விலைமதிப்பில்லாத அன்பளிப்பு அதன் பயன்கள் அளப்பரியன. பலர் நினைப்பது போல தொழில் நுட்ப முன்னேற்றத்துடன் மாத்திரம் அந்தப் பயன்கள் நின்றுவிடுவன அல்ல. சமூகப் பயன்களும் கணிசமானவை. அவற்றுட் சில நேரடியானவை; வேறு சில மறைமுகமானவை.
V
நவீன விஞ்ஞானத்தின் அன்பளிப்பாகிய புறவயச் சிந்தனை, தொடர்பியல் வாதம், இயங்கியல் நோக்கு ஆகிய மூன்றும், மனிதரிடையே பொறுமையை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவும்.
நம்முடைய கொள்கைகளே தலை சிறந்தவை; நம்முடைய நம்பிக்கைகளே மேலானவை; நம்முட்ைய பழக்க வழக்கங்களே உயர்ந்தவை; நம்முடைய கிரியைகளும் சடங்குகளுமே தகுதியானவை; மற்றவர்கள் எல்லாம் எங்களைத்தான் பின்பற்ற வேண்டும்-இவை போன்ற எண்ணவோட்டம் எங்கு உள்ளதோ அங்கெல்லாம் போரும் பூசலும் மிகவும் இலகுவாக மூண்டு விடும். இன்று நம் கண்முன் நடந்தேறும் நிகழ்ச்சிகளே இதற்குச் சாட்சி. "மெய்ப்பொருள் காணும் நெறிகளைக் சரியாகக் கிரகித்துக் கொள்ளாத நிலையில், சண்டையும் சச்சரவும் குரோதமும் விரோதமும் புகைந்த வண்ணந்தான் இருக்கும்.

Page 17
30
தான் கொண்ட கொள்கை தவிர்ந்த வேறு கொள்கைகளைச் சந்திக்கும் போதெல்லம் வெகுண்டு, சினந்து முட்டி மோதிக் கொள்ளும் போக்குத்தான் மேலோங்கி நிற்கும். முற்காலங் களிலே ‘சமயக் கணக்கர் மதிவழி நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களும் மதப்போர்களும் இந்த வகையான பிணக்கு களின் பெருக்கமே என்று கூறலாம். பல்லாயிரக் கணக்கான வர்களைப் பலி வாங்கிக் கொண்ட கொள்கைப் போர்கள் எல்லாம் தற்சார்பான அகவயச் சிந்தனையின் கோர விளைவு களே ஆகும்.
இப்படிப்பட்ட கோர விளைவுகளுக்கெல்லாம் மாற்று மருந்தாக உதவக்கூடிய வல்லமை - புறவயச் சிந்தனை, தொடர்பியல் வாதம், இயங்கியல் நெறி ஆகிய மூன்றுக்கும் உண்டு. ஏனென்றால், தொடர்பியல் வாதப்படியும் இயங் கியல் நெறிப்படியும் ஒவ்வாருவனுக்கும் சிற்சில நம்பிக்கை கள் இருக்கலாம்; சிற்சில கோட்பாடுகள் இருக்கலாம்; சிற்சில வாழ்க்கைத் தத்துவங்கள் இருக்கலாம்; சிற்சில ஒழுக்க வழிகள் இருக்கலாம்; சிற்சில சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் வாழ்க்கை தத்துவங்களையும் ஒழுக்க வழிகளையும் சம்பிரதா யங்களையும் மற்றவர்கள் எல்லாம் மேற்கொள்ள வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணத்துக்கே இடமில்லை. ஒருவன் தன்னுடைய கருத்து களைப் பிறர்மீது திணிப்பது என்ற பேச்சுக்கே விஞ்ஞான மானிடவாதத்தில் எள்ளளவும் இடமில்லை. எந்தவொரு கருத்துத் தொகுதியும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தாது; எல்லா வாழ்க்கை முறைகளுடனும் இசைந்து போகாது. இப்படிக் கொள்வதனால், தொடர்பியல் வாதமும் இயங்கியல் நோக்கும் பொறுமைப் பண்பைப் போற்றி வளர்க்க உறுதுணை ஆகின்றன. மக்களிடையே (வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் அல்ல!) இருப்பது இயல்பே என்று எண்ணிக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கின்றன. தன்னைவிட வேறுபட்ட

31
விதத்திலே சிந்திக்கும் ஒருவனைக் கண்டு சினம் கொள்வதும், பகைமை பாராட்டுவதும் தான் புராதன மனிதர்களின் வழக் கங்களாய் இருந்து வந்துள்ளன. அப்படிச் சினம் கொள் ளாமல், பகைமை பாராட்டாமல், மற்றவர்களின் சிந்தனை களையும் நடத்தைகளையும் விளங்கிக்கொள்ள முயல்வதுதான் புதிய விஞ்ஞான நோக்கின் பிரதான பண்பாகும். தகுந்த ஆய்வின் பின்னர் முடிவுக்கு வருவதே இங்கு முக்கியமானது.
விஞ்ஞான நோக்கினாலும், அதை வளர்த்தெடுக்கும் விஞ்ஞானக் கல்வியாலும் விளையும் சமூகப் பயன்களுள் ஒன்று பொறுமைப் பண்பை வளர்ப்பதென்று நாம் கண்டோம். இந்தப் பயன் ஓரளவு மறைமுகமானது; ஆனால் முக்கிய மானது.
மறுபுறத்தில் விஞ்ஞானக் கல்வி விஞ்ஞானப் பரவல் ஆகி யன நேரடிப் பயன்கள் பலவற்றைத் தருவனவாகவும் உள் ளன. இவற்றுள் முக்கியமானது சமூக விஞ்ஞானங்களின் விருத்தி ஆகும் விஞ்ஞானத்தின் வரலாற்றை மேலோட்டமாக என்றாலும் பார்ப்போமானால், இயற்கை விஞ்ஞானமே முதலே தோன்றிற்று என்பது விளங்கும். சடவுலகு பற்றியும் தாவரம் பற்றியும் விலங்கு பற்றியும் தான் தொடக்க காலத்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர் . 'மனிதர்களும் விலங்குகள்" என்ற முறையிலேதான் மனிதர்கள் பற்றிய ஆய்வுகள், தொடக்கப்பட்டன. மனிதர்களின் உடலமைப்பும், உடல் இயங்கும் முறைகளும் விஞ்ஞானிகளின் கவனத்துக்கு உள்ளாயின. இந்த விதமான, இயற்கை விஞ்ஞானத்தின் பாற்பட்ட ஆய்வுகள், தம்மளவிலேயே, மனிதகுலத்துக்குப் பெரிதும் உதவியாக அமையலாயின; உயிரின விஞ்ஞானம் ஈட்டிய பெரு வெற்றிகளினால், மருத்துவம் தலையெடுத்து விரைவான முன்னேற்றங்கள் பலவற்றைக் கண்டது. பெளதிக விஞ்ஞானம் ஈட்டிய சாதனைகளினால், மனிதர் களின் புறச்சூழலை மாற்றி அமைத்து வசதிகளைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய நிலைமைகள் தோன்றின. இவையெல்லாம்

Page 18
82
இயற்கை விஞ்ஞானம் தன்ளளவிலேயே மனிதகுலத்துக்கு வழங்கிய நன்கொடைகள்.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானத் துறைகளில் விளைந்த வெற்றிப் பயன்களால் ஊக்கம் பெற்ற அறிஞர்கள், மனித சமுதாயத்தின் அமைப்பையும் மாற்றங்களையும் வளர்ச்சி மார்க்கங்களையும் கண்டறிவதற்கு விஞ்ஞான விதிகளைப் பிரயோகிக்க முற்பட்டனர். இதன் பேறாகச் சமூக விஞ்ஞானத்துறைகள் உருவாயின.
சமூக விஞ்ஞானத் துறைகள் தமக்கு முன்னர் பிறந்தன வாகிய இயற்கை விஞ்ஞானத் துறைகளின் ஆய்வு முறை களைத் தழுவித் தமது முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் முன்னைய முறையியலை (மெஃதடோலொஜியை) அப்படியே பிரயோகிக்க இயலவில்லை. ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற முறைகளைப் புதியனவாக வகுத்துக் கொள்வது அவசியமாயிற்று. கொள்கையும் நடைமுறையும் ஒன்றையொன்று புதுக்குவதற்கும் திருத்துவதற்கும் துணை நின்றன; துணை நிற்கின்றன.
விஞ்ஞானம் முழுவதுமே (1) கொள்கை வகுத்தல் (2) நடைமுறைப் படுத்தல் ஆகிய கட்டங்களின் ஊடாகத் தன்னைக் காலந்தோறும் புதுக்கிக் கொள்ளும் இயல்பினை உடையது. இந்த இயல்பு, இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டுக்குமே பொருத்தமானது. ஆயினும் சமூக விஞ்ஞானம் மனித மனங்களையும் மக்கள் எடுக்கும் தீர்மானங்களையும் தனது ஆய்வுப் பொருளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது. இதனால், சிறப்பான சிக்கல்கள் பல தோன்றுகின்றன. இந்தச் சிக்கல்களை உரிய வாறு தீர்த்துக் கொண்டால், வாழ்க்கையின் பல்வேறு துறை களிலும் தகுந்த திட்டங்களை வகுப்பதற்கும் நிறைவேற்று வதற்கும் துணையாக விஞ்ஞானம் அமையும். இந்த விதமாக, விஞ்ஞான வழியிலே நேரடிக் சமூகப் பலன்கள் சில

33
நமக்குக் கிடைத்தவாறு உள்ளன. இந்தப் பயன்களெல்லாம் முழுமை பெறுவதற்கு, சமுதாயத்திலே ஏற்ற அரசியற் சூழல் நிலவுவதும் ஒரு நிபந்தனையாய் அமைகிறது.
இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குவதற்கு, மக்களிடையே விஞ்ஞான நோக்கு விரிந்து பரவ வேண்டும். இந்த இடத்திலே சில அடிப்படையான கேள்விகள் எழு கின்றன. நமது பாடசாலைகளில் நடைபெறும் கல்வி நடை முறை மாணவர்களிடையே விஞ்ஞான நோக்கை எவ்வளவு தூரம் வளர்த்துள்ளது? இந்த விஞ்ஞான நோக்கு மாணவர்கள் ஊடாக நமது சமுதாயத்தில் எவ்வளவு தூரம் சுவறியுள்ளது? இந்தத் திசையில் நாம் அடைந்திருக்கும் "முன்னேற்றம்" திருப்திகரமாக உள்ளதா?
விஞ்ஞான ஆசிரியர்களும் கல்விக் கொள்கை வகுப்போ ரும்தான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண வேண்டும். சனத்தொடர்புச் சாதனங்களுக்கும் இந்தத் தொடர்பிலே ஒரு கணிசமான கடப்பாடு உண்டு.
உசாத்துணை
1. UNESCO, Goals and Theories of Education
in Asia – Report of a Regional Workshop Unesco Regional Office for Education in Asia and Oceania, Bankok, 1980.
2. FAURE, EDGAR; HERRERA. FELIPE; KAD DOURA, ABDUL-RAZZAK; LOPES HENRI; PETROVSKY, ARTHUR, W.; RAHEEMA, MAJID and WARD, FEDERICK CHAMPION, Learning to Be, Unesco, Paris,
1972
3. திருவள்ளுவர், "திருக்குறள்", சக்தி காரியாலயம்,
சென்னை, 1957

Page 19
34
இறையனார், "குறுந்தொகை’, எஸ். ராஜம், சென்னை, 1957,
குலோத்துங்கன், "வாயில் திறக்கட்டும்’, பாரதி பதிப்பகம், சென்னை, 1983.
கைலாசபதி, க. , ஒப்பியல் இலக்கியம்' .
கைலாசபதி, க., "அடியும் முடியும்’, பாரி நிலையம், சென்னை, 1970.

சமூக அபிவிருத்தியில் கல்வியும் மனிதவலுத் திட்டமிடலும் மா. சின்னத்தம்பி
கல்வியானது சமூகத்தின் மறுமலர்ச்சியுடன் இணைந்து வளர்ந்து வந்துள்ளது. சமூகக் காரணிகள் மனித வரலாற்றில் மாறி வந்துள்ளன. அக்காரணிகளுடன் கல்வி நெருக்கமான தொடர்புடையதென்ற வகையில், கல்வியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதே போல் கல்வியானது தனி மனிதனின் அறிவு நிலை, திறன், மனப்பாங்கு என்பவற்றிலும் மாற்றங் கள் ஏற்படுத்துவதாயிருப்பதால் அது சமூகக்காரணிகளான பொருளாதாரம், அரசியல், சமூகவியல், வரலாறு போன்ற வற்றை மாற்றியமைப்பதில் முக்கியமானதாயமைந்து வந்துள்ளது. கல்வித்துறை நன்கு வளர்ச்சி பெற்று கல்வி நிறுவனங்கள் நவீனமயமாகி, வளர்ச்சி பெருகியுள்ள சமூகங் களில் பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் உணர்வும் மேம்பாடடைந்துள்ளன. இவ்வாறே பொருளாதாரப்பின்ன டைவும், அரசியற் சுதந்திரமும் அற்ற சமூகங்களில் கல்வியில் பின்னடைவும் சமவாய்ப்பற்ற நிலைமைகளும் காணப்படு கின்றன. சமூகத்தில் குடும்பத்தின் பொருளாதார வசதிகள் அவர்களின் உணவு, வசிப்பிடம் , என்பவற்றை மட்டுமின்றி. அவர்களின் பிள்ளைகள் பெறக்கூடிய கல்வியின் தரத்தையும், கல்வி பெறக்கூடிய கால அளவையும் கட்டுப்படுத்தி வந் துள்ளன பொருளாதார வசதிகள், வசதி மிக்க கல்வி பெறக் கூடிய நகர்ப்புறக் கல்வி நிலையங்களுக்கும் பல்கலைக்கழகங் களுக்கும் செல்லும் வாய்ப்புக்களை நிர்ணயிப்பதன் மூலம் எதிர்காலத் தொழில் நிலைகளையும் அதனூடாக சமூக அந்தஸ்தையும் நிர்ணயித்து வந்துள்ளன. சமூக வளர்ச்சி யானது திட்டமிட்ட முறையிலேயே ஏற்படுத்தக் கூடிய தொன்று என்று கருதுமிடத்து திட்டமிடலில் கல்வித் திட்ட

Page 20
36
மிடலும் அதில் சிறப்பாக மனித வலுத்திட்டமிடலும் முக்கிய மான இடத்தைப் பெற்று வருகின்றன.
சமூக அபிவிருத்தியென்பது கைத்தொழிற் சமூகங்களின் கைத்தொழில் மயமாக்கம் என்றும், சிலர் சுதந்திரமடைதல் என்றும் வேறு சிலர் கல்வி வாய்ப்பு, நலத்துறை விருத்தி நிர்மாணம், தொலைக்காட்சி வலையமைப்பின் வளர்ச்சி என்பன இணைந்த முன்னேற்றம் என்றும் விளக்கமளிப்பர். (Harbison, 1964 : 59) சமூகவியலாளரும், அறிவிப்பாளரும் அபிவிருத்தியென்பது சமூக, அரசியல் நிறுவனங்களின் நிர்மாணங்களை உள்ளடக்கிய நவீனமயமாக்கற் செயற் பாடென்று விளக்கமளிப்பர். பொருளியலாளர் தேசிய வருமானம், உற்பத்தித் திறன் என்பவற்றையும், சேமிப்பு முதலீடு என்பவற்றையும் ஏற்படுத்துகின்ற பொருளாதார வளர்ச்சியென்று கருதுவர். கல்வி, மனிதவலு தொடர்பாக ஐக்கிய நாடுகள் தாபனம், அபிவிருத்தியென்பது மாற்றத் துடன் இணைந்த வளர்ச்சியென்று விளக்கமளிக்கின்றது. மாற்றம் சமூக, கலாச்சார, பொருளாதார ரீதியிலான தொகைரீதியிலும், தராதர ரீதியிலும் ஏற்படும் விரும்பத்தக்க மாற்றங்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது.
அபிவிருத்தியானது எந்தவொரு சமூகத்திலும் இயற்கை வளங்கள், பொருள் சார் மூலதனம் (Material Capital) என்பனவற்றை பெளதிக வளங்களின் உற்பத்தியாக மாற்றும் முயற்சியில் மனிதன் செயற்றிறனுடன் மேற்கொள்ளும் நட வடிக்கைகளைக் குறிப்பிடுகின்றது. இதனால் பொரு ளாதார, சமூகத் திட்டமிடலில் மனிதனை வலுவாகப் பயன் படுத்தும் திட்டமிட்டல் கூடிய கவனம் செலுத்தப்படுவது அவசியமாகியுள்ளது. விரிவான பொருளில் கூறுவதாயின் சமூகத்தின் . எல்லா மக்களிடத்தும் உள்ளடங்கியிருக்கும் இயலுமைகளையும் (Capacities) அறிவு, திறன்கள், தொழில் செய்யும் ஆற்றல் என்பவற்றையும் வளர்த்தெடுக்கும் செயல் முறையே மனித வலு அபிவிருத்தியாகும். அடம் சிமித்

37
மாஷல் போன்ற பொருளியலாளரும் மனித வலு அபிவிருத்தி பற்றியும், மனிதனில் முதலிடுவது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அத்தகைய மனிதவலு அபி விருத்தியை நிர்ணயிக்கும் பிரதான அம்சம் கல்வியாகக் கருதப்பட்டு, கல்வித் திட்டமிடல், பொருளாதாரத் திட்டமிட லுடன் இணைத்து நோக்கப்படுகின்றது
கல்வி மனிதனின் சிந்தனை விருத்தி, ஆக்கத்திறன் என்பவற்றை விருத்தியுறச் செய்வதன் மூலம் மனிதனைப் பொருளாதார வளமாக மாற்றுகிறது. இதனால் கல்வி மேம்பாடு பெற்ற சமூகங்களில் மக்கள் தொகுதி நுகரும் பட்டாளமாக சுமையாக கருதப்பட்ட நிலை மாறி உற்பத்தித் திறனுடைய வளமாகக் கருதப்படுகின்றனர். பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றன வளர்ச்சியடையும் நிலையில் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் மனிதவலு விருத்தி ஒழுங்கு படுத்தப்படு கின்றது. நிறுவன ரீதியிலான கல்வி வளர்ச்சி மக்களிடையே கூட்டுச் செயற்பாடுகளை அதிகரித்ததோடு தேசிய உணர்வு களை வளர்க்கவும். தேசிய வளங்களை அடையாளம் காணவும், சமூகப் பொது முதலீடுகளை உருவாக்கவும், தேசிய காப்புணர்வை விருத்தி செய்யவும் உதவியுள்ளது. பல்வேறு கட்டங்களில் சர்வதேச ரீதியிலான் விளைவுகளினால் கல்விச் சீர்திருத்தங்கள் சமூக ரீதியில் வேண்டப்பட்டுள்ளன. ஜப்பான் இதற்கு நல்ல உதாரணமாகக் காட்டப்படலாம். 1872ல் அங்கு நவீன கல்விமுறை அறிமுகமானபோது மேற்கு நாடுகளின் வளர்ச்சி நிலைகளை மாதிரியாகக் கொண்டு நாட்டை இராணுவ ரீதியில் பலமானதாக்கவும், கைத்தொழில் மயமாக்கவும் கூடிய வகையில் கல்விச்சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதள் விளைவாகவே இரண்டாம் உலகயுத்தத்தில் ஜப்பான் ஈடுபட்டதும், இறுதி யில் சரணடைய வேண்டிய நிலை உருவானதுமாகும்.
8 سنوي

Page 21
38
ஆனால் யுத்த முடிவில் 1947ல் உலக யுத்த அனுபவங் களினால் அமைதியான கலாச்சாரத்தையும் மறுபுறம் சுதந்திரம். ஜனநாயகம். சமத்துவம் பேணும் அரசியல் நிலை யையும் மேம்படுத்தும் வகையிலான கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியது 1960இன் நடுப்பகுதியின் பின். ஜப்பானின் விவசாய நிலப்பற்றாக்குறை இயற்கை வளங் களின் பற்றாக்குறை, போதியளவில் கிடைக்கும் மனிதவளம் என்பவற்றை கருத்திற் கொண்டு மக்களை வளப் படுத்தும் வகையில் பாடசாலைக் கல்வியை பயன் படுத்தும் நோக்கில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாயின 1933 இல் பிரதமர் 5 TsGSFTs of (YASHIRO NAKA SONE) Flyps மேம்பாட்டுடன் மிகவும் நெருங்கிய முறையில் கல்வியை வளர்க்கும் நோக்கில் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயன்றார் (1SAD SUZUK. 1990:24) உலக நெருக்கடி களையுணர்ந்து தன் சமூகத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்த வும் ஏற்ற வகையில் கல்வியை மாற்றியமைத்த ஜப்பான் இன்று பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள வளர்முக நாடுகளின் பல்வேறு சமூகங்களுக்கு கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் விரிவுபடுத்தி வருகின்றது. சிறந்த கல்வி முறையின் விளைவு களாக உற்பத்தியமைப்பை மேம்படுத்தும் தொழில் நுட்ப வளர்ச்சியை ஜப்பான் மாத்திரமன்றி பல்வேறு மேற்குலக நாடுகளும் வளர்முக நாடுகளுக்கும் மாற்ற முன்வந்துள்ளன வளர்முக நாடுகளைச் சார்ந்த ஆசிரியர்கள் விரிவுரை யாளர்கள், தொழில் நுட்பப் போதனாசிரியர்கள், செயல் விளக்கப் பயிற்சியாளர்கள் போன்றோருக்கும் நிபுணர்கள் பபிற்சியும் ஆலோசனையும் வழங்கி வழிகாட்டுகின்றனர். இவ்வகையில் கல்வியானது தனிநபர் மேம்பாடு என்பதிலி ருந்து சர்வதேச ரீதியிலான அபிவிருத்தி வரை ஊடுருவிச் செல்லும் மைய நாணாக வலுப்பெற்றுள்ளது. சமூக அடித்தளக் கட்டுமானத்தில் மட்டுமன்றி, மேற்றளக் கட்டுமா னத்திலும் கல்வியின் செயற்பாடு கூர்மையான பாதிப்பை

39
ஏற்படுத்தி வருவதால் கல்வி மனிதவலுத் திட்டமிடலில் முக்கிய பங்கினைப் பெற்றுள்ளது.
கல்வியும் மனித வலுவும்.
வளர்முக நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட வேண்டும். இயற்கை வளங்களை சரியான முறையில் அடை யாளம் காண்பதிலும், அவற்றைப் பொருத்தமான தொழில் நுட்பப் பிரயோகத்துடன் உற்பத்தியில் இணைப்பதிலும் பொருளாதார வளர்ச்சி தங்கியிருக்கிறது. இச்செயல் முறை யினைத் திட்டமிடுவதிலும், பல்வேறு நிலைகளில் செயற் படுத்துவதிலும் மனிதன் பிரதான பங்கு வகிக்கின்றான். இதனால் மனிதவளப் பயன்பாடு நிகழ்கால உற்பத்தியைப் பெருக்குதல், எதிர்கால உற்பத்தி அதிகரிப்பினை உறுதிப் படுத்துதல் என்ற அடிப்படைகளில் முக்கியமானதாகும்.
எந்தவொரு சமூகமும் குறுகிய காலத்தில் தனக்குரிய பண்டங்களையும் மனிதவலுவையும் கூட பிறநாடுகளிலிருந்து பெற்றுத் திருப்தியடையலாம். ஆனால் அதிலும் பல அரசியல் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும். இலங்கை சுதந் திரத்துக்கு முன்னும் மத்திய கிழக்கு நாடுகள் 1970 இன் பின்னும் பிற நாடுகளில் இருந்து ஊழியத்தைப் பெற்றுக் கொண்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து இன்றும் மீளமுடியாத நிலையிலுள்ளன. இலங்கை தனது ஊழியத்தை மத்திய கிழக்குக்கு அனுப்பி வருடாந்தம் சராசரியாக ரூபா 3000 மில்லியனை உழைத்த அதே காலத்தில் தென்னிந்தியா வுக்குத் தேயிலைத் தோட்டத் தொழிலாளரைத் திருப்பி அனுப்பும் அரசியல் நடவடிக்கைகளில் அக்கறை காட்டியே வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இதனால் எந்தவொரு வளர்முகநாடும் தனக்குரிய மனிதவலுவை தன் நாட்டிலேயே வளர்த்துக் கொள்ளும் வகையில் திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

Page 22
40
ஒரு நாடு தனது தேவைக்குரிய பண்டங்களையும் சேவை களையும் எந்தெந்த அளவுகளில் உற்பத்தி செய்ய விரும்பு கிறது என்பதை நாட்டின் வளங்கள். கடந்த கால செயற் திறன்கள் என்பவற்றின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியிலான சிந்தனையின்படி தீர்மானங்கள் எடுப்பதே திட்டமிடல் எனப் படுகிறது. ஒரு காலத்தில் இடப்படுகின்ற எந்தவகை முதலீடும் நீண்டகால விளைவுகளைத் தரக்கூடியன. திட்டங் களில் இலக்குகளைத் தீர்மானித்தபின் மனிதசக்திக்குத் திட்டமிடுவது என்பது தேவைப்படும் தொழிற் திறன்களை உருவாக்க மனிதசக்தி ஆக்கத்தை விவரமாகத் தெளிந்து நிர்ணயிப்பதாகி விடுகின்றது. (ராவ் 1968:4) தேவைப்படு கின்ற ஊழியர் தொகை, அவை வேண்டப்படுகின்ற கால முறையிலான அளவுகளைப் பகிர்ந்தளித்தல் " என்பனவும் ஓரளவு விரிவாக ஆராயப்பட்டு நிர்ணயிக்கப் படுவதும் இத்திட்டமிடலில் அடங்கும். எதிர்காலத்தில் ஊழியர்க்கு அவசியமாக வழங்கப்பட வேண்டிய பயிற்சி நெறிகளையும் , அவற்றுக்கென உருவாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் தொகையையும் தீர்மானித்தல் வேண்டும். அவ்வாறே அந்நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சியளிப்பவர் களுக்குப் பயிற்சியளிப்பதற்குத் தேவைப்படுகின்ற கால அளவையும் கணித்துக் கொள்ள வேண்டும். மனிதவலுவைப் பயன்படுத்துவது பற்றிய விடயத்தில் கால எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுதல் அவசியம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
மனிதசக்தி பற்றிய திட்டமிடலில் வருங்காலத்திற்குரிய தேவையை முன்னுணர்ந்து கணித்துக் கொள்வது, அவற்றுக் குத் தேவைப்படும் ஊழியர்களின் தன்மையை முன் கூட்டியே நிர்ணயம் செய்வதுமட்டும் முக்கியமென்று கருதுதல் கூடாது. வழங்கப்பட வேண்டிய பயிற்சிக்குரிய காலப்பகுதியை தீர்மானித்து, பொருளாதாரத்திற்கு வேண்டும் போது பணியாளர் நிரம்பலை மேற்கொள்ளும் வகையில் அத்தகைய பயிற்சி நிறுவனங்கள் செயற்படுதல் வேண்டும். அல்லது

4.
மனிதவலுவுக்கான கேள்வி நிரம்பல் என்பவற்றை ஒழுங்கான முறையில் பேண முடியாது அந்த நிலையில் உற்பத்தி யில் தடைகளும், தொழிலின்மையும் ஏற்படுவதோடு தேசிய உற்பத்திமட்டமும் வீழ்ச்சியடையும்.
கல்வித்துறையினர் முறைமையான பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பனபற்றி எந்த அளவு அக்கறை கொள்வது நியாய பூர்வமானதோ அதேயளவுக்கு அல்லது அதனிலும் கூடுதலான கவனத்தை தொழிற்கல்வியிலும், பல்வேறு தொழிற் பயிற்சித் திட்டங்களிலும்கூட செலுத்துதல் வேண்டும். தொழில்திறன்கள் கொண்ட ஊழியப்படையைப் பெருக்கும் திட்டம் வெற்றிபெறச் செய்வதே இத்தகைய வளர்முக நாடுகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதான நடைமுறையென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே விரும்பத்தக்க சமூகமாற்றமாகவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
நாட்டுக்கு அவசியமாக வேண்டப்படும் பல்வேறு தொழிற்திறன்களையும் உருவாக்கும் வகையில் தயாரிக்கப் படும் பயிற்சித்திட்டங்கள் இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனப்படுகிறது. பயிற்சித்திட்டங்கள் நீண்டகாலத்திற்குரியதாகவோ, முழுநேரப்பயிற்சியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறே பண்டங் களை உருவாக்குதற்குத் தேவையான எல்லாத் திறன் களையும் பயிற்சி வழங்கிவிட வேண்டும் என்பதுமில்லை. ஏனெனில் ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்பே அவை தொடர் பாக கூடுதலான பயிற்சியைப் பணியாளர்கள் பெறமுடியும். ஆரம்ப காலங்களில் பெற்ற பயிற்சிகள், சிலசமயங்களில் புதிய தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி வேறாக்க நடைமுறைகளிலான மாற்றங்கள் என்பவறறால் காலக்கிரமததில் பழைமையானதாகவோ பொருத்தமற்ற தாகவோ மாறிவிடவும் கூடும். இதனால், தொழில்சார் பயிற்சியானது காலத்துக்குக் காலம் புதுப்பிக்கப்படவேண்டும்.

Page 23
42
மனிதவலு மேம்பாட்டுக்கான பயிற்சித் திட்டங்கள் பகுதி Gbit uugibás 6T T56 lb (Part-time Course), Gig, raiso) Li'l பயிற்சிகளாகவும் (Sandwitch Courses) குறுகிய அளவிலான மீள் பயிற்சிகளாகவும் (Refresher Courses) புதுத்திருப்பப் பயிற்சிகளாகவும் (Orientation Courses) சேவைக்காலப் utilibás 6Tiras 6th (In Services Courses) g(5556) (566.TGib. பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமாக வேண்டப்படும் பல்வேறு திறன்களையும், அவற்றின் தரா தரங்களையும் உருவாக்கும் வகையில் சிறப்புத் தேர்ச்சி வகை யிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நிகழ்காலத்தில் மூளைச் செறிவான கைத்தொழில்கள் (Knowledge (ntensive Industries) நன்கு வளர்ச்சி பெற்றுள்ளதன் விளைவாக 5690760af8gbib (Computers) (3prGut (Robo) 3u TsiTp இயந்திர மனிதர்களும் பெருகியதன் விளைவாக மனித ஊழியத்தினைப் பல்வேறு நிலைகளிலும் அவை பதிலீடு செய்வனவாயுள்ளன. இவற்றைக் கவனித்து இவற்றுக்கு இயைபுடையதாக தொழிற்பயிற்சி முறைகள் வடிவமைக்கப் படுதல் வேண்டும். இதனால் சிறப்புத் தேர்ச்சியை மட்டு மின்றி இணைப்பு முறையிலும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். மனிதவலுவுக்கு களைப்புத் தரக்கூடிய அல்லது உடல்ரீதியில் கேடுதரக்கூடிய தொழில்களை புதிய பொறிகளிடம் விட முடியுமாதலால், அதற்கேற்ப மனிதனுக்கு வழங்கப்பட வேண்டிய தொழிற்பயிற்சியை இணைந்த முறையிற்றான் திட்டமிடுதல் வேண்டும். இத்தகைய பின்னணியில் தேசிய ரீதியில் வழங்கப்படும் கல்வியானது அடிப்படை அறிவை உறுதிப்படுத்துவதாக அமைவது குறுகிய சிறப்புத் தேர்ச்சிக்கு முக்கியத்துவமளிப்பதைவிட விரும்ப்த்தக்கதாக அமையும். இதனால் கல்வியாளர்கள் பொதுக்கல்விக்கு அடுத்து தொழி லிடைப்பயிற்சி, வேறுவகைப்பயிற்சித் திட்டங்கள் என்ப வற்றின் மூலமாக சிறப்புத் தேர்ச்சியைப் பெறுவதற்கு வகை செய்வதில் கூடிய அக்கறை செலுத்துதல் வேண்டும்.
இலங்கை போன்ற வளர்முகநாடுகளில் உழைக்கக்கூடிய வயது, விருப்பம், திறன் உடையவர்கள் பெருந்தொகையில்

43
பொருளாதார நடவடிக்கையில் பங்களிப்புச் செய்ய முடியாத வாறு விலக்கப்பட்டுள்ளனர். ஏதோஒரு வகையில் சமூக உற்பத்திப் பண்டங்களின் நுகர்வில் சமூக உற்பத்திப் பண்டங் களின் பங்கெடுக்கின்ற போதிலும் - குடும்பத் தலைவனில் தங்கியிருப்பவராகவோ அல்லது அரசமானியங்களில் தங்கி யிருப்பவராகவோ இருப்பதன் மூலம்-சமூக உற்பத்தியில் பங்கெடுப்பதற்கு வகைசெய்யும் முறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தகைய தொழிலின்மை நிலையி லிருந்து மனிதவளத்தின் விரயமாகவே கருதப்படும். இலங்கையில் 1950களில் ஆரம்பித்த இலவச அரிசிப்பங்கீட்டு முறையானது 1979இல் உணவு முத்திரைத்திட்டம் அறிமுகப் படுத்தப்படும் வரை நிலவியது 1973 வரை நாட்டின் ஒவ்வொருவருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த a 600T6; Lost 60fugs g5 L-55 fig5 (Food Subsidy Scheme) பதிலாக 1979 செப்டம்பரில் உணவு முத்திரைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 7.26 மில்லியன மக்கள் நலன் பெற்றனர். உணவு உதவித் தொகை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1951 - 55ல் 7.1% மாயும் 1971 - 75ல் 9.9% மாயும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் இலவச மருத்துவம், இலவசக்கலவி என்பனவும் பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டன. இவ்வாறு மனித வலுவை மேம்படுத்தும் வகையில் பொது நிதியானது மனித முதலீடாக இடப்பட்டு, பின்னர் அவர்கள் தொழிலற்றோராக மாறிவிடும் நிலையில், அந்த முதலீடு விரயமாகி விடுகிறது. ஆற்றல் மிகுந்த மனித வலுவை வீணாக்குவதும் பொருளா தார இழப்பாகவே கருதப்படும். அத்துடன் வேoலயறறவர் தனிப்பட்ட முறையில் உளரீதியிலும் பாதிக்கப்பட்டு, அவ நம்பிக்கையும், மனவிரக்தியும் உடையவராகின்றனர் குடும்பத்தவரும் எதிாகாலத்தில் நம்பிக்கையற்று அவருக்கு உதவமாட்டார்கள். வேலையற்றவர் தம் வாழ்வில் பாது காப்பற்றவராகிவிடுவர். இலங்கையில் ஊழியப்படையில் 18% மானோர் வேலையின்றியுள்ளனர். 1989ல் 1.38 மில்லியன் ஊழியர் தொழிலின்றியிருந்தனர். இதே ஆண்டில்

Page 24
44
தொழிலின்மை 19.9% வளர்ச்சி பெற்றிருந்தது. வேலை யற்றோர் மாத்திரமின்றி மறை வேலையின்மை, கீழ் உழைப்பு நிலையிலிருப்போரும் அதிகரித்துச் செல்லும்போது நாட்டின் முதலாக்கமும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப் பட்டுவிடும். இத்தகைய மனிதசக்தியைப் பயன்படுத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பின் அளவைக் குறைக்க முடியும். அல்லது ஏனையோரின் நிகழ்வு மட்டத்தைச் சிறிதளவேனும் உயர்த்த முடியும். இந்த மனிதசக்தியை முதலாக்கத்தில் ஈடுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் பற்றியும் மனித வலுப்பயன்பாடு பற்றிய திட்டமிடலில் அக்கறை காட்டப் படுதல் வேண்டும்.
பல்வேறு வளர்முக நாடுகளில் கல்விக்கான செலவுகளை உற்பத்தித் திறனுடைய முறையில் பயன்படுத்தத்தக்க முறையில் கற்றோருக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க முடிவதில்லை. ஸிம்பாவே நாட்டில் சுதந்திரத்தின் முன் 150 பாடசாலைகள் வரையே காணப்பட்டன. எனினும் 1985இல் இது 1200 ஆக அதிகரித்திருந்தது. 1980க்குப் பின் சில வருடங்களில் மாணவர்கள் பாடசாலையில் சேரும் தொகை 300%ஆக உயர்ந்தது. ஆனால் கறுப்பின மக்களின் இத்தகைய கல்வி அதிகரிப்பு தொழில்வாய்ப்புடன் இணைந்து செல்லவில்லை, அங்கு 1987இல் 18% தொழிலின்மை காணப்பட்டது. பாடசாலைகளில் மாணவருக்கு வழங்கப் படும் எதிர்பார்க்கைகள் நிறைவேற்றப்படாவிடில் முரண் பாடுள்ள கோபங்கொண்ட குடித்தொகையை ஸிம்பாவே எதிர் நோக்கும் அபாயம் இருப்பதாக 1987இல் நடைபெற்ற ஹராறே (Harare) மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள வேலையின்மை, மறைவேலையின்மையின் அதிகரித்த அளவினை இது மேலும் மோசமானதாக்குவதா யிருந்தது. குற்றச்செயல் வீதமானது ஹராறே, புலவயோ (Buawaya) போன்ற நகரங்களில் மூன்றுமடங்காகியிருந்தது. குடிப்பழக்கம் போதைப்பழக்கம் என்பவற்றையும் அதிகரிக்கச் செய்திருந்தது. அங்கு பொருளாதார நிறு

45
வனங்கள் மாத்திரம் தொழிலின் மைக்குப் பொறுப்பல்ல. பொருளாதார உண்மை நிலைமைகளை கருத்திற்கொள் ளாமை கல்வியின் குறைபாடாக அந்த நாட்டின் உதவிக் கல்வியமைச்சர் குறிப்பிட்டார். (Chris Mc Lvor, 1987:23) அங்கு சில தொழில்நுட்பவியல்துறைகளுக்கு வெளிநாடு களிலிருந்து நிபுணர்களை எதிர்பார்க்கும் போது, உள் நாட்டில் தொழிலின்மையும் பெருகிக் காணப்பட்டது, முறை சார்ந்ததுறைகளிலிருந்து கிடைக்கக் கூடிய தொழில்வாய்ப்பு பாடசாலையிலிருந்து விலகும் 100,000 பேரில் 7%மாக மாத்திரமே காணப்பட்டது. அங்கும் மாணவர்கள் மரவேலை, உலோகவேலை, கிராமிய விஞ்ஞானம் (Rural Science) போன்றவற்றைக் கற்கத்தயங்குகின்றனர். அவை புத்தி குறைந்தவர்களுக்கும் கல்வியறிவற்றவர்களுக்குமே உரிய தென எண்ணுகின்றனர். விவசாயிகளான பெற்றோரின் பிள்ளைகள் தாம் பாடசாலைக்கு அனுப்பப்பட்டது அத்தகைய தொழில், சூழல் என்பவற்றிலிருந்து விலகிக் கொள்வதற்காகவே என்பதால், தங்களை மீண்டும் அதே சூழலுக்குத் திரும்பிச் செல்லும்படி எதிர்பார்ப்பது தவறானது என்ற கொள்கையுடையவரர்க, நகரங்களில் தொழிலற்றோ ராகக் குவிந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை லிம்பா வேயில் மட்டுமின்றி வேறு பல வளர்முகநாடுகளிலும் காணப் படுகின்றது. இங்கு கல்விமுறைகளை 'மாற்றுவது பற்றிப் பேசும்போது மனிதவலுத் திட்டமிடல் பற்றி நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். முறைசார்ந்த (Formal) முறையில் (In Formal)கல்வித்துறைகளில் புதியதொழில்நுட்பப்பயிற்சி, தொழிற்பயிற்சி என்பவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும், எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸிம்பாவேயில் 150க்கு மேற்பட்ட கைத்தொழில் நிறுவனங்கள் இடைநிலைப் பாட சாலைகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்குத் தேவையான நிதியையும், இயந்திர உபகரணங்களையும் வழங்குவதற்கு உடன் பட்டிருந்தன. மாணவர்களைப் பாடசாலையின் சில பாடவேளைகளில் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு உடன்தொழிற் பயிற்சியளிப்பது பற்றியும் கவனம்

Page 25
46
செலுத்தப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு மலிவாக தொழி லாளரை வழங்குவது இதன் நோக்கமல்ல. 'மூளையற்றவர் களும், தகுதிகுறைந்தவர்களுமே தொழிற்சாலைகளில் தொழில் செய்ய வேண்டும்” என்ற தவறான மனப் பான்மையை மாற்றுவதே இதன் நோக்கம்ாகும். "சிறந்த மூளைசாலிகள் தொழில் புரிய வேண்டிய இடம் தொழிற் சாலைகளேயன்றி வங்கிகளும் அலுவலகங்களுமல்ல” என்ற கருத்தை வலுப்பெறச் செய்வதே இச் செயற்திட்டத்தின் அடிப்படையாகும். இவை நன்கு கவனமாகத் திட்டமிடப் படுதல் அவசியம் .
தொழில் வாய்ப்புகள் தருவதற்கு முறைமையில் துறைகள் முக்கியமானவையாக பல்வேறு நாடுகளில் வளர்ச்சி பெற் றுள்ளன. அத்துறைகளில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் ஏற்ற பாதுகாப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.
இவ்வாறு கல்வி-தொழில்வாய்ப்பு சார்ந்து திட்டமிடுவ துடன் கலைத்திட்டமானது புதிதாக வடிவமைக்கப்பட்டு, புதிய நூல்களும் அச்சிடப்பட்டு, புதியமாதிரி வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டு, புதிய வகையான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஏற்படுத்தப்படவேண்டும்.
பெண்களும் பிரச்சினைகளும்.
வளர்முக நாடுகளின் கல்வி மனிதவலுத் திட்டமிடலில் பெண்கள் பற்றிய அக்கறை மிகவும் குறைவாகவே காணப்படு கின்றது. வளர்முக நாடுகளில் கிராமங்களில் வாழும் பெண் களின் நிலை மிகவும் பாராதூரமானதாயுள்ளது. அளவுக் கதிகமான வேலைப்பளுவினாலும் போதிய கல்வி வாய்ப் பின்றியும் சமூகரீதியில் அவர்கள் அமுக்கப்பட்டுள்ளனர். பதினைந்து வயதிலும், அதனினும் கூடிய வயதிலும் உலக ரீதியாக 20%மான பெண்களும் வளர்முகநாடுகளில் 27% மான பெண்களும் எழுத்தறிவற்றவர்களாக இருந்துள்ளனர்.

47
ஆபிரிக்காவில் இவர்கள் 41%மாகவும் மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் 54% மாகவும் காணப்பட்டதாக 1985 புள்ளிவிபரங்கள் காட்டியதாகக் குறிப்பிடப்பட்டது (Josef Muetter 1990:17) கல்வி வாய்ப்புக்களிலிருந்துமட்டுமின்றி, தொழிற் பயிற்சிகளிலிருந்தும், துணைச் சேவைகளைப் பெறு வதிலிருந்தும் நிறுவன்ச் செயற்பாடுகளிலிருந்தும் கூட பெரும்பாலான பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர். பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பும், உதவிகளும் அவர்களின் தொனியும் பெருமளவில் மறைக்கப்பட்டும் வந்துள்ளன. வளர்முகநாடுகளின் பொருளாதாரச் சீரழிவுகளில் மிக மோச மாகப் பாதிக்கப்படும் சமூகப் பிரிவினராக பெண்கள் காணப் படுகின்றனர். பெண்கள் நீண்டநேரம் வீட்டிலேயும், வெளி யேயும் வேலை செய்ய வேண்டியவர்களாகவும், இதனால் உடல்ரீதியிலும், உணர்ச்சி ரீதியாகவும் அடிக்கடி பாதிக்கப் படுவோராகவும் உள்ளனர். பெண்களின் நேர விரயம் அவர் களது சக்திவிரயம் என்பன அவர்களை அரசியல் வாழ் விலிருந்து பெருமளவு விலத்திடுவதன் மூலம் அவர்களைப் பாதிக்கின்ற கொள்கை நடைமுறைகளுக்கு மேலும் மேலும் உள்ளாகின்றனர். இத்தகைய பிரச்சினையிலிருந்து இளம் பெண்களின் கல்வி, பொருளாதார வாய்ப்புக்களை மேலும் குறைத்து அதன் மூலம் ஆண்களுக்குச் சமமாக சமூகத் திற்கு தம் பங்களிப்பை வழங்கும் எதிர்கால தகைமையையும் பாதித்துவிடுகின்றது. (United Nations 1990 : 55) வளர்முக நாடுகளில் மரபுரீதியாகப் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் வீட்டுப் பொறுப்புடன், வீட்டிலும், குடும்ப நிறுவனங்களிலும், நிலத்திலும் மேற்கொள்ளும் ஊதியமற்ற உழைப்பையும் வழங்கி வரும்பொது அவை பற்றிய பெறுமதியைக் குறைத்துக் கணிப்பதோடு அவற்றின் 'செலவு” பற்றியும் அது பொரு ளாதாரத்திலும், அபிவிருத்தித்திட்டமிடுதலிலும் முக்கியமான * மாறி” என்பதையும் திட்டமிடுவோர் கருதுவதில்லை”. பெண்களுக்கு குறைந்தளவான கல்வியும் பயிற்சியும் வழங்கப் படுவதால் குறுகிய காலத்துக்குப் பொருந்தாத கருத்து நிலையுடையவர்களாகவும் காணப்படுகின்றனர். பெண்

Page 26
48
தொழிலாளர்கள் ஒப்பீட்டு ரீதியில் ஆண்கள் போல தொழிற் சங்கரீதியில் ஒழுங்கு படுத்தப்படாதிருப்பதால் குறைந்த சம்பளம் பெறுவதோடு கூடியளவு சம்பளவெட்டுக்கும் (Wage cuts) உள்ளாகின்றனர். 1984 ல் ஆர்ஜென்தீனாவில் கைத்தொழிலிலும், சேவைத்துறைகளிலும் ஆண்களை விடப் பெண்கள் சம்பளம் 50% குறைவான மட்டத்துக்கு வீழ்ச்சி யடைந்திருந்தன. (U.N, 1990 - 58) வளர்முகநாடுகளில் முதலிடும் வெளிநாட்டு முதலீட்டாளர் பெரிதும் பெண்தொழி லாளர்களையே விரும்புகின்றனர். குறைந்த அளவான கூலியை வழங்க முடியும் என்பதோடு, ஆண்கள் ஏற்றுக் கொள்ளாத வசதிகுறைந்த தொழிற்சூழலிலும் அவர்கள் வேலை செய்வர் என்ற எதிர்பார்க்கையே இதற்குக் காரண மாகும். இது உண்மையில் நாட்டின் முழுமையான கூலி அமைப்பையே பாதித்து முழுச்சமூகத்தின் மீதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், பொருளாதார நெருக்கடிகளி னால் குடும்பத்தலைவர்களுக்கான தொழில்வாய்ப்புக் குறையும் போது பெண்கள் தொழில் தேடிச் செல்லும் நிலை அதிகரிப்பதால் அவர்களது ஊழியப்படையிலான பங்களிப்பு கூடிவருவதுண்டு. கோஸ்ருரிக்கா, பிறேசில், சிலி, உருகுவே, பிலிப்பைன்ஸ், ஆர்ஜென்ரீனா, பெரு போன்ற நாடுகளில் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருந்தது. சரியான கல்வியும் பொருத்தமான தொழிற்பயிற்சியும் பெண்களுக்கு வழங்கப் படுவதுபற்றி மனிதவலு திட்டமிலின் போது கவனத்திற் கொள்ளாமையினால் ஆண்கள் செய்ய விரும்பாத கீழ்நிலை யான தொழில்களைப் பெண்கள் ஏற்றுச் செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகின்றது. பிறேசில் போன்று நாடுகளில் இந்த நிலைகாணப்பட்டது. உயர்வான தொழில் நுட்பம், பேரளவுத் தொழில்கள், மூலதனச் செறிவு முறை என்பன வளர்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் போதுதான் பெண்களுக்கான தொழில்வாய்ப்பை அதிகரிக்க முடியும். நாணயமதிப்பிறக்கத்தினால் இறக்குமதிப் பொருட் களின் செலவு கூடும் நிலையும் பெண்களின் தொழில் வாய்ப்பைப் பாதித்து வந்துள்ளது. பிலிப்பைன்ஸின் பாட்டன்

49
6.JibgpuDg6) u 5ŮLIGIšgib 66avu u jfsid (Batan Export Processing Zone) இத்தகைய நிலையைக் காணக்கூடியதாகவிருந்தது.
பெண்களுக்கான தொழில்வாய்ப்புப்பற்றிய கவனம் மனிதவலுத் திட்டமிடலில் இடம் பெறாதபோது பெண்கள் தமக்குரிய தொழில்களைப் பெரிதும் சம்பளத்துடனான ஒய்வு நாட்கள். தொழிற்சங்க உரிமை, சேமலாபநிதிபெறும் உரிமை போன்றன வழங்கப்பட்ாத முறையில் துறைகளில் (Informal Sector) தேடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெரு (Peru) நாட்டில் 1983ல் 36 2 சதவீதமாயிருந்த முறைமையுள் துறையிலான பெண்கள் பங்கு 1987ல் 45% மாக அதிகரித் திருந்தமை இந்நிலையைக் காட்டுகின்றது. தொழிற்பயிற்சி வழங்குவது பற்றிய செயல்திறன் இல்லாத நிலையில் நிலமற்ற, தொழிற்பயிற்சியற்ற பெண்கள் பிச்சையெடுப் பதிலும், விபச்சாரம் செய்வதிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியா, பெரு போன்ற நாடுகளிலும் வேறுபல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த நிலையுண்டு சரியான திட்டமிடல் நடவடிக்கைகள் இல்லாத நிலையில் கிராமங்களில் குடும்ப அங்கத்தவர் சுகவீனமாகும் போது பெண்கள் உழைப்புக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வருமான இழப்புக்கும் வறுமைக்கும் ஆளாகின்றனர்.
பல்வேறு வளர்முகநாடுகளில் கல்விக்கான செலவானது மெய்வடிவில் (Real Terms) வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்தநிலையில் பெண்பிள்ளைகளின் கல்வியே அதிகம் பாதிக் கப்படுகின்றது. பல ஆபிரிக்க நாடுகளில் ஆரம்ப, இடை நிலை, பல்கலைக்கழக மட்டங்களில் எல்லாம் பெண்கள் சேரும்விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆபிரிக்கக் குடும்பம் ஒன்று அதிகரிக்கும் பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்த முடியாதிருக்கும் நிலையில் பெண்பிள்ளைகளையே கல்வி கற்கச் செல்லாமல் தடுக்கின்றனர். துரதிஷ்டவசமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பரவலாக இந்த

Page 27
50
நிலைமை உள்ளது. பெண்பிள்ளைகளுக்கான கல்விச் செலவைக் குறைத்தலானது பிறப்பு வீதத்தை உயர்த்தியும் பெண்களின் கல்வி அடைவினைக் குறைத்தும் கொள்ளச் செய்வதன் மூலம் நீண்டகாலத்தில் சமுகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இவற்றைக் கவனத்திற் கொண்டே கல்வியியலாளரும், பொருளியலாளரும் நீண்டகால சமூக மேம்பாட்டில் பெண்கள், அவர்களின் கல்வி, தொழில்நிலை, சமூக சமத்துவம் என்பவற்றையும் இணைக்கும் வகையில் மனிதவலுவைத் திட்டமிடுதல் அவசியமாகும். இதற்குப் பின்வரும் நடவடிக் கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
1. பெண்கள் பற்றிய தகவல்கள், புள்ளிவிபரங்கள் மிகவும் கவனமாக சேகரிக்கப்படல். அவ்வாறு சேகரிக்கப்படும் போது குறிப்பாக கிராமியத்துறை சார்ந்த பெண்கள் பற்றிய விபரங்கள் திரட்டுதல்.
2. பெண்களின் சூழல்பற்றிக் கவனமாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படல், குடும்பம், வயல், தொழிற் சாலைகள், சேவை நிலையங்கள், நகரங்கள் என்ப வற்றிலான பெண்கள் வாழ்நிலை வசதிகள், பிரச்சனைகள் பற்றி மதிப்பிடப்படல்.
3. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக்கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றிலான பெண்களின் நிலைமைகளை, முன்னேற்றங்களை ஆண்களுடன் ஒப்பிட்டு அறிதல் . 4. ஆண்களுடன் இணைந்து தொழில் செய்தல்
கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து நகரங்களில் தங்கியிருந்து தொழில் செய்தல் போன்ற நிலைமை களில் கூலிமட்டம், ஏனைய வசதிகள் தொடர்பாக
எழக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அறிதல்.

51.
5. பெண்களை முகாமைப்படுத்தல், அவர்களது சேவை களை விரிவுபடுத்தல், கையாளக்கூடிய சாதனங்கள். பால்வேறுபாடு தொடர்பான தனியம்சங்களைக் கவனித்தல் போன்றவற்றில் போதிய விவரங்களைப் பெற்று அதன்படி முடிவுகள் எடுத்தல்.
6. பெண்கள் கல்வி, பெண்கள் ஊட்டம். பெண்கள் நிறுவன அமைப்புக்கள், பெண்கள் உரிமைச் சட்டங்கள், போன்றவற்றை நன்கு அறிந்து (3 uptio படுத்தும் வழிமுறைகளைத் தீர்மானித்தல்.
7. பிரதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் மேற் கொள்ளப்படும் தொழில் வாய்ப்பு அதிகரிப்பதற் கான செயல்திட்டங்களில் பெண்சுள் நிலைபற்றி தெளிவான முடிவுகளை மேற்கொள்ளல்.
8. கல்வித்திட்டமிடல், பொருளாதாரத் திட்டமிடல் என்பவற்றின் போது சமத்துவ உணர்வுடன் ஊழியப்படையிலான பெண்கள் நிலை பற்றிய முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளல்.
முடிவுரை
வளர்முக நாடுகள் தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும், சுயமான சமூக, பொருளாதார அடித்தளங்களை அரசியல் அமைதியுடன் இணைந்தவகையில் நிர்மாணிக்கும் வகையிலும் கல்விபற்றிய திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். சமூக மேம்பாடு என்பது இன்று சமூகத்தின் பிரதான பிரிவினராகிய பெண்கள் முன்னேற்றத்துடன் இணைந்ததாயிருப்பதால் இதுவரை புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்றி பெண்கள் பிரச்சினைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். மனிதனைச் சுமையாகக் கருதும் வகை யில் பொருத்தமற்ற கல்வி-தொழின்மைப் பெருக்கம்” என்ற முறையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையைத் தடைசெய்யும் வகையில் மனிதனை வலிவாக உயர்த்தும் வகையிலும், அவ்

Page 28
52
வலுவைத் தேசிய முன்னேற்றத்துக்குத் திறமையாகப் பயன் படுத்தும் வகையிலும் கல்வியில் மனிதவலுததிட்டமிடலுக்கு உரிய இடம் கொடுபடல் வேண்டும். முறைசார் நிறுவனங் களை மாத்திரமின்றி, முறைசாரா நிறுவனங்களையும் தொடர்பு படுத்தும் வகையிலும் சர்வதேச தொடர்புமுறை களின் நலன்களைப் பயன்படுத்தும் வகையிலும் கல்வி யையும் பொருளாதாரத்தையும் திட்டமிடுவதில் கல்வியிய லாளரும். பொருளியலாளரும் தம் மதியுரைகளினால் அரசி யலாளரை வழிபடுத்த முடியுமானால் எதிர்கால சமூக மாற்றங்கள் செல்வச் செழிப்பையும் சமூக அமைதியையும் நிச்சயம் மானுடத்துக்கு வழங்கும்.
REFERENCES
* CABRIEL, TOM (1990)
''Women and Rural Extension Services' DEVELOPMENT AND CO-OPERATION, No 4 1989.
BONN, PP 19-21 .
* HARBISON, FREDRICK (1964)
Human Resources and Development'' ECONOMIC AND SOCIAL ASPECTS OF EDUCATIONAL PLANNING, UNESCO, NETHERLAND, PP 59 - 66.
* MC LVOR CHRIS (1987)
ZIMBABWE TAKCLEE EDUCATION PROBLEMSo Development and Co-Operation. No 6/1937, NONN, PP 22-24.

53
MUELLER, JOSEF (1990)
Literacy - Human Right, Not Privilage'' DEVELOPMENT AND CO-OPERATION, No 2 | 1990.
BONN, PP 17 --. 20.
SUZIKI ISAO (1990)
Educational Reform in Japan Towards the T enty-first Century PROSPECTS, UNESCO PARIS, PP 22 - 27
UNITED NATIONS (1990)
''Women in Developing Countries - Invisible Victims of the Economic Crisis.' DEBT - A CRISIS FOR DEVELOPMENT, UNO, PP 55 - 67.
ராவ். வி., கே. ஆர்.வி. (1966)
'மனிதசக்திக்குரிய திட்டமும் பொருளாதார வளர்ச்சியும்”, கல்வியும் மனிதசாதன வளர்ச்சியும், கலைக்கதிர் வெளியீடு. 1968 : பக் 39-52

Page 29
மலையக கல்வி வரலாறும் நடைமுறை பிரச்சினைகளும்
எஸ். இராஜேந்திரன்
எந்த ஒரு சமூகமும் முன்னேறுவதற்கு மிக அடிப்படை யாக அமையும் அம்சம் கல்வியாகும். ஒரு சமூகம் தான் பெற்றுக்கொண்ட அறிவு, சிந்தனை போன்ற எல்லாவற்றை யும் அடுத்துவரும் பரம்பரைக்கு வழங்கி வருகின்றது இது ஒரு வரலாற்றுப் பணித்திட்டமாக நடந்து வருகின்றது. இந்த அறிவு, சிந்தனை என்பனவெல்லாம் உலக வரலாற் றில் பல சாதனைகளை செய்துள்ளது. மனித வரலாற்றில் எய்தபட முடியாது எனக் கருதப்பட்டவையெல்லாம் கல்வி யின் மூலமாக வெற்றிகரமாக எய்தப்பட்டுள்ளது
தென்னாசிய நாடுகளில் கல்வி மட்டம் ஓரளவு உயர் வாகவுள்ள நாடு இலங்கையாகும். எனினும் கல்வியின் பல்வேறு கூறுகளை பூரணமாக வெற்றி கண்டுள்ளதா என்பது ஆராயப்பப் வேண்டிய விடயமாகும். சமூகப் பொருளா தார கலாசார விடயங்களில் எல்லாம் தனித்துவமான அம்சங் களைக் கொண்டுள்ள மலையகத்தின் கல்வி எனும் அம்சத்தை மட்டும் எடுத்து நோக்கினாலும் "மலையகக் கல்வி நிலை’ தேசிய நிலமைகளை பிரதிபலிக்கவில்லை என்பது புலனாகும் • இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களின் கல்வி நிலைப்பற்றி ஆராய்வது ஒரு சமூகத்தின் அறிவியல் சார்ந்த விடயங்களை ஆராய்வது மட்டுமன்றி. தேசிய ரீதியிலான கல்வி முன்னேற் றம் என்பது எந்த அளவிற்கு நாட்டின் கல்வி முன்னேற்றத் தின் முழுமையினை எடுத்துக் காட்டுகின்றது என்பது பற்றி யும் ஆராய்வதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

55
ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் மத்திய மலைநாட்டுப் பகுதியில் பெருந் தோட்டங்களை ஆரம்பித்தனர். இக்காலக் கட்டத்தில் கிறிஸ்த்தவ மதத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓரிரு பாடசாலைகள் ஆரம்பிக்கக் பட்டன. இந்த பாடசாலைகள் காலனித்துவத்தின் தேவை களை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டன. இந்த பாடசாலைகளில் கூட தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். இதனைத் தொடர்ந்து பெருந்தோட்டப் பிரதேசங்களில் தொழிலாளர் களின் குழந்தைகளை கட்டுப்படுத்தி வைக்கவென சில பாடசாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. இந்த பாடசால்ைகள் கூட காலனித்துவத்தின் உச்ச பயன்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்காக அமைக்கப்பட்டவையேயாகும். அக்காலத்தில் தொழிலாளர்களின் பிள்ளைகளை "பார்த்துக் கொள்ளவென' பிள்ளை மடுவங்கள் அமைக்கப்பட்டது போல் தோட்டப் பாடசாலைகளும் சிறுவர்கள் தேயிலைக் கன்று களை நாசம் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், தொழி லாளர்கள் பூரண மன ஈடுபாட்டுடன் (பிள்ளைகளின் பால் கவனம் திரும்பாமல்) உழைப்பதற்கெனவும் அமைக்கர பட்டவையே ஆகும். கல்வியின் மகத்துவம், நோக்கங்கள், செயற்பாடுகள் என அக்காலத்து அறிஞர்களாலும் கல்வி உளவியலாளர்களாலும் கூறப்பட்ட கருத்துக்களுக்கு அப்பாற் பட்டதாகவே இப்பாடசாலைகள் அமைந்தன பிள்ளைகளை கட்டுப்படுத்தி வைப்பதற்கான ஒரு நிலையமே பாடசாலை தோட்டப்புற கல்வியினால் ஒன்றையுமே சாதித்துவிட முடியாது போன்ற எண்ணத்தை தொழிலாளர் மனதிலே அழுத்தி, அவர்களை கல்வியிலிருந்து அன்னியப்படுத்தி வைப்பதற்காகவே இத்தகைய பாடசாலைகள் தொடங்கப்
பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நகரப்பகுதிகளில் அமைந்திருந்த மிசனரி பாடசாலை களில், தோட்டத் தொழிலாளர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெரிய கங்காணி பரம்பரையைச் சேர்ந்தவர்கள்

Page 30
56
மட்டுமே கல்விப் பலாபலன்களை, பெற்றுக் கொண்டனர். இந்தப் பாடசாலைகளில் வழங்கப்பட்டக் கல்வி கூட வெள்ளைக்கார எசமானனுக்கு கை கட்டிச் சேவகம் செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந் திருந்தது. மத மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் சில பேர் கிறிஸ்த்தவ பாடசாலைகளில் படித்தா லும், பெரியகங்காணியின் பிள்ளைகள் பெற்றுக்கொண்ட வாய்ப்புகளை கூட பெற முடியாத நிலையிலேயே இருந்தனர்.
அவ்வப்போது சிற்சிலமாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் சுமார் நூற்றியிருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மேற் கூறப்பட்ட வகையில்மைந்த ஒரு கல்விச் சூழலே மலையகத் தில் நிலவியது. 1931 டொனமூர் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கையின் கல்வியில் ஆங்காங்கே சில முன்னேற்றங்கள் அடையாளம் காணப்பட்டாலும் மலையக L」TL-5FTsのGU56f இவ்விடயங்களில் புறக்கணிக்கப்பட்டவை யாகவே இருந்தன. இன நலன், மத நலன் போன்றவையே இக்காலங்களில் கல்வி முன்னேற்றத்தில் செல்வாக்கு கொண்டிருந்தன.
அதே வேளையில் இக்காலப்பகுதியில் படிப்படியாக மலர ஆரம்பித்த இடதுசாரி இயக்கமும், தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு குறிப்பிடத் தக்க பங்கினை ஆற்றின என்பது நோக்கத்தக்கது. தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக் கைகளும், ஆங்கிலேயரும் பெரிய கங்காணிகளும் அதற்கெதி ராக மேற்கொண்ட அடக்குமுறைகளும் தொழிலாளர்களின் சிந்தனைப் போக்கில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத் தியது. தோட்டப்பாடசாலைகளில் தற்செயலாக கற்றுக் கொண்டவர்கள் எழுத வாசிக்கத்தெரிந்தவர்கள் தொழிற் சங்கப் போராட்டங்களில் முக்கியபங்கினை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய போக்கு உள்ளுர் கறுப்புத் துரைமார்களுக்கும் பேரிடியாக அமைந்தது.

57
1930-47 காலப்பகுதியில் உள்ளுர் அரசியல் வாதிகளும் அரசங்கத்தில் அங்கம் வகித்தனர். சமூக அபிவிருத்தி, கல்வி போன்றவற்றில் சில திட்டங்களையும் நடைமுறைப்படுத் தினர். எனினும் ஏ. ஈ. குணசிங்க போன்ற இன வாதிகளும் *முதலாளித்துவ அரசியல்வாதிகளும்’ நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தமையால் கல்வித் துறை சார்ந்த செயற்றிட் டங்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் சென்று பெருந் தோட்டங்களையும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் மலையகக் கல்வி இன்னொரு கட்டத்திற்கு வளர முடியாத நிலையிலேயே இருந்தது.
1948-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கொடி மாற்றம்’ நடந்தது. இதைத் தொடர்ந்து இலங்கையர் அனைவருக்கும் சுதந்திரம் என்று கூறப்பட்டது. ஆனால் சுதந்திர இலங்கை யில், பத்து இலட்சம் மக்களின் குடியரிமை பறிக்கப்பட்டது. மனித குலமே வெட்கித் தல்ல குனியும் இந்த இழிச்செய லானது இந்திய வம்சாவளி மக்களை, அரசியல், பொருளா தார சமுக விடயங்களில் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது.
குடியுரிமை பறித்தமை மலையகத்தின் கல்வியில் பெருந தாக்கத்தினை ஏற்படுத்தியது. பாடசாலைகளில் அனுமதி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களிலெல்லாம் பிரசா உரிமைப் பத்திரம் கேட்கப்பட்டது. இதே வேளை பாராளு மன்ற சந்தர்ப்பவாதத்துக்குள் வீழ்ந்து கிடந்த இடது சாரி களும் இவர்களிடமிருந்து ஒட்டுப் பெற முடியாது என்பதை அறிந்து தொழிலாளர்களிடமிருந்து அரசியல் ரீதியாக விலகினர். இதன் காரணமாக சுதந்திரத்தின் பின்னர் ஏற்படட தேசியக் கல்வி ஓட்டத்தில் மலையக மக்கள் இணைந்துக் கொள்ள முடியாத நிலையிலிருந்தனர்: ஒரு ஆசிரியருடன் செயற்பட்டு வந்த தோட்ட பாடசாலைகள மேலும் கீழ் நிலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெருந்தோட்ட நகரப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சில பாடசாலைகளும் மத வெறி, சாதி, அந்தஸ்த்து போன்ற வரையறைக்குள்ளேயே கட்டுப்பட்டுக கிடந்தது. எங்கெங்கு

Page 31
58
லஞ்சம் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் கொடுத்து தனது சட்ட ரீதியான பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு. அவற்றைச் சமர்ப்பித்து பிரசா உரிமைப் பத்திரம் பெற்றுக் கொண்ட ஒரு சில தொழிலாளர்கள் கூட நகரப் பாடசாலை களின் "கல்விக் கொள்கை` காரணமாக தமது பிள்ளைகளுக்கு அனுமதி பெற முடியாத நிலையிலிருந்தனர். அதாவது இந்திய-பாகிஸ்த்தானிய பிரசா உரிமை சட்டத்தின் கீழ் பிரசா உரிமை பெற்றுக்கொண்டவர்கள், கல்வியில் காட்டப் பட்ட சாதி, மத, அந்தஸ்து வேறுபாடு காரணமாக முன்னேற முடியாத நிலையிலேயே இருந்தனர். தே வேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்த பாடசாலைகள் பல மடங்கு முன்னேறின.
சுதந்திரத்தின் பின் சுமார் இருபத்தியிரண்டு வருடங் களுக்குப் பின்னரே பெருந்தோட்டப்பகுதியிலுள்ள பாட சாலைகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் பதினொரு பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டது. வலப் பனை பகுதியைச் சேர்ந்த மகாவூவ தோட்டப்பாடசாலையே முதன் முதலில் தேசியமயமாக்கப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக பெருந்தோட்டப் பாடசாலைகள் தேசியமய மாக்கப்பட்டன. எனினும் பாடசாலையின் அமைப்பு, வசதிகள், போன்ற அம்சங்களில் எவ்விதமாற்றமும் ஏற் படுத்தப்படவில்லை (தேசிய மயமாக்கப்பட்ட மகாவூவ பாடசாலை சுமார் இருபது வருடங்கள் கழிந்த பின்னரும் அதே நிலையிலேயே உள்ளது) பெருந்தோட்டப் பாடசாலை களின் தேசியமயமாக்கம் ஒரு வரவேற்கத்தக்க விடயமே யாகும். எனினும் காலனித்துவ நோக்கத்திலிருந்து விடு பட்டுச் செல்லக்கூடிய வகையில் எவ்வித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படாமலிருப்பது வருந்தத்தக்கதே யாகும். மலையக பாடசாலைகள் தேசிய கல்வி முன்னேற்றத் தோடு இணைக்கப்படாத நிலையிலேயே உள்ளது.

59
சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் ஆகிய்வற்றைத் தொடர்ந்து குடியுரிமைப் பிரச் சினையைத் தீர்ப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் அவை பூரணத்துவம் பெறவில்லை. எனினும் பெருந்தோட்டப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் கல்வியில் மீண்டும் அக்கறை காட்டத் தொடங்கினார். பிரசா உரிமைப் பிரச் சினை எப்படியும் தீர்க்கப்படும் என்ற எண்ணம் தொழிலாளர் கள் மத்தியில் தோன்றியது. எனினும் இலங்கையில் * கல்வியின் பலாபலன்கள்’ எனக் கருதப்படும் விடயங்கள் தொழிலாளருக்கு எட்டாத கனியாகவே இருந்தது. பாட சாலை அனுமதி, வேலைவாய்ப்பு போன்றவற்றில வம்சாவளி பிரசை, பதிவுப் பிரசை என்ற வேறுபாடுகள் காட்டப்பட்ட மையும் இதற்கு காரணமாக அமைந்தது.
மலையக மக்களின் கல்வியில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் 1972ஆம் காலப்பகுதியில் நிலவிய பஞ்சமாகும். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையானது நாட்டின் ஏனைய பகுதி களை உற்பத்தி ரீதியாக ஊக்குவித்தாலும் மலையகம் தனியே பெருந்தோட்டத்துறை சார்ந்த பொருளாதாரத்தில் மட்டும் தங்கியிருந்தமையால் தொழிலாளர்கள் பலர் பட்டின்ரியால் இறக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். வறுமை நிலை யானது பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை உணவு தேடுவதற்கும, கூலிவேலைகளுக்கும் அனுப்பினர். பாடசாலையிலிருந்து பெரும்பாலான பிள்ளைகள் விலகிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து 1977இல் பதவிக்கு வந்த யூ.என்.பி அரசு முதல் வேலையாக இனக் கலவரத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கெதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. இந்த யூலை இனக்கலவரத்தில் மலையக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, பண்டாரவளை போன்ற

Page 32
60
எல்லைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சொல்லெணாத் துயரங் களை அனுபவித்தனர். தொழிலாளர்கள் சேமித்து வைத்த அற்பச் சொற்ப சொத்துக்கள் சூறையாடப்பட்டு லயக் காம்பராக்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன இது கல்வியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட "பட்டிப் பாடசாலைகள்’ கூட மூடப்பட்டன. அப்பாடசாலைகளிலிருந்த ஆசிரியர்கள் பாதுகாப்புத் தேடி வேறிடங்களுக்குச் சென்றனர்.
கலவரப் பாதிப்பு காரணமாக தோட்டத் தொழிலாளர் பலர் இந்தியர் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படத் தொடங்கினர். பிள்ளைகளை பாடசாலை செல்வதிலிருந்து நிறுத்தினர். பலர் வவுனியா மாவட்டத்தில் குடியேற முற்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களின் நிச்சயமற்ற பாதுகாப்பு நிவிையானது அவர்களை ஓர் குழப்ப மான நிலைக்குத் தள்ளியது. இவர்களின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும் தமது கையாலாகாத நிலை யினை வெளிப்படுத்தினர். இதனால் தொழிலாளர்களும் தமது பிள்ளைகளின் கல்வி, வாழப்போகுமிடம் தொடர்பாக உறுதியான ஓர் முடிவினை எடுக்க முடியாத நிலைக்கு ஆளாகினர்.
1977க்குப் பின்னர் பல முறை இனக்கலவரங்கள் நடந்தது எனினும் தோட்டத் தொழிலாளர்கள் இதனை யெல்லாம் தாங்கிக்கொண்டு உழைத்தனர். 1983இல் மாபெரும் இனப்படுகொலை நடைபெற்றது. மலையக மக்களின் சகல அம்சங்களிலும் இது தாக்கத்தினை ஏற்படுத் தியது. எனினும் மக்கள் இம்முறை சற்று வித்தியாசமாக சிந்திக்கத் தலைபட்டனர். எப்படியும் இங்கேயே வாழ வேண்டும் என்ற எண்ணம் தொழிலாளர்களின் மத்தியிலே எழுந்தது. இந்த உறுதிப்பாட்டினடிப்படையிலேயே தமது அரசியல் நிலை, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி போன்ற விடயங்களிலெல்லாம் அக்கறை கொள்ளத் தொடங்

6.
கினர். தான் ஒரு தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டத் தொடங்கினர். வட பகுதியில் நடைபெறும் போராட்டம், இன அடக்குமுறை, பொருளாதார பிரச்சினை கள், இடதுசாரி சிந்தனையின் விருத்தி போன்ற பல்வேறு அம்சங்கள் மலையக மக்களின் சிந்தனையோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் ஒரு தனித்தேசிய இனம் என்ற எண்ணமானது கல்வியிலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. தோட்டத் தொழிலாளர்களை பொருளாதாரப் பிரச்சினை பெரு மளவு தாக்கிய போதிலும் தமது பிள்ளைகளை எப்படியும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மத்தியிலே உறுதியாக வேரூன்றியது. இதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களின் தொகை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றது.
மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் தோன்றி யுள்ள இந்த நல்ல அம்சத்தை மேலும் வளர்த்து முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும். மலைய கத்திலுள்ள கல்வி-மான்களும். அறிவியல் ரீதியாக சிந்திப் பவர்களும் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்துவது அவசியமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கும், மாணவர் களுக்கும் கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவதோடு அவர்களை இன்னொரு கட்டத்திற்கு முன் தள்ளிவிடுவதும் அவசியமாகும். விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சியை முக்கியப் படுத்தி விரிவுபடுத்துவதோடு, மலையக மக்களின் வரலாற் றையும் அதனோடு இணைந்த வகையில் கற்பிக்க வேண்டும்.
மலையகக் கல்வியின் சமகாலப் பிரச்சினைகள்
இன்று சாதாரண மக்களின் பிள்னைகள் படிக்கும் பாட சாலைகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. இப்பாட சாலைகளில் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் பல காணப் படுகின்றன. பெருந்தோட்டத்துறை பகுதியில் காணப்படும்

Page 33
(S2
பாடசாலைகளில் இப்பிரச்சினைகள் பூதாகரமானதாகக் காணப்படுகின்றன. இப்பகுதியின் தனித்துவமானச் சூழ் நிலையில் இவற்றை அணுகுவது பொருத்தமானதாகும்.
மலையகக் கல்வியினைப் பாதிக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை முதலில் நோக்குவோம். இலங்கையின் கல்வி கொள்கையானது மாறி மாறி பதவிக்கு வருகின்ற அரசாங்கத்தின் கொள்கையோடு இணைந்ததாக மாற்றிய மைக்கபப்டுவது யாவரும் அறிந்த உண்மையாகும். இதன் காரணமாக இலங்கை நாட்டுக்கென நிரந்தரமான ஒழுங் கமைக்கப்பட்ட கல்விக் கொள்கையொன்று இல்லை. 1984ல் கொண்டு வரப்பட்ட கல்வி வெள்ளையறிக்கை பல கல்விமான்களால் எதிர்க்கப்பட்ட போதிலும் அது கவனத்தில் கொள்ளப்படாது நடைமுறைப்படுத்தப்பட்டது ஏற்கனவே மிகதாழ் நிலையிலிருந்து பெருந்தோட்டத்துறை பாட சாலைகள் கொத்தணி முறையால் எவ்வித பலனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பல பாடசாலைகள் சிங்கள கொத்தணிக்குக் கீழ்கொண்டுவரப்பட்டன. இதனால் அவை ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றன. தமிழ் மொழி மூல கொத்தணி தலைமைப்பாடசாலைகளும் போதிய வசதிகளின்றியே காணப்படுகின்றன.
மலையகக் கல்வியை பாதித்துள்ள இன்னொரு விடயம் இனவாதமாகும். மலையகப் பகுதியின் கல்வி நிருவாகம் மத்திய, ஊவா மாகாண சபைக்குள்ளேயே பெருமளவு உள்ளடங்குகிறது. இந்த மாகாண கல்வி நிறுவன அமைப் புகளில் மலையகத் தமிழர்களுக்கு எவ்வித நிர்வாக பலமும் கொடுக்கப்படவில்லை. இந்த உண்மையை ‘மலையக அரசியல்வாதிகளே” ஒப்புக் கொண்டுள்ளனர்.
கோட்டக் கல்வி அமைப்புகளிலும் இந்நிலையே காணப் படுகின்றது. உதாரணமாக முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளைக் கொண்ட வலப்பனை கோட்டக் கல்வி அலுவலகத்தில் கல்வியதிகாரி ஒருவர்

63
மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழி மூல மத்திய மகா வித்தியாலயம் என்ற தரத்துக்கு ஒரு பாடசாலைகூட தரமுயரவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். இப் பகுதியில் சிங்கள மொழிமூல மத்திய மகா வித்தியாலங்கள் நான்கு காணப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
மலையகக் கல்வியை பாதிக்கும் இன்னெரு முக்கிய விடயம் "தொழிற்சங்க அரசியலாகும். மலையகத்தில் உள்ள எந்த ஒரு நேர்மையான கல்விமானும் இதன் தாக்கத் துக்கு உட்படாமலில்லை. ஆசிரியர் நியமனம், பதவி யுயர்வு, பாடசாலைக்கட்டிடம் அமைத்தல், மலசல கூடம மைத்தல் போன்ற சகல அம்சங்களிலும் இந்த அரசியல் செல்வாக்குக் காணப்படுகின்றது. இதில் வேடிக்கை என்ன வெனில் "கற்றவர்கள்’ என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் இந்த இழிசெயல்களுக்குத் துணை போவதாகும். மலையக மக்களின்பால் கருத்துக் கொண்டுள்ள ஆசிரியர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அண்மைக் காலத்தில் பல ஆசிரியர்கள் இதைத் துணிந்து கண்டித்து வரு கின்றனர். புதிய ஆசிரியர் அமைப்புகளை உருவாக்கவும் பலர் முயன்று வருகின்றனர்.
தொழிற்சங்க அரசியல் அடிவருடிக் கூட்டமொன்று மலையகப் பாடசாலைகளின் சகல அம்சங்களையும் தீர்மானிப் பதால் பல பாடசாலைகளுக்குக் கிடைக்கவிருந்த வெளிநாட்டு நிதிகூட கிடைக்காமலுள்ளது. சாமிமலை, மஸ்கெலியா போன்ற பகுதிகளில் இந்நிலைமைகளை நேரடியாகவே காணலாம். இந்த அரசியல் செல்வாக்கினைப் பெற்றவர்கள் எவ்வித தகமையுமில்லாமல் பதவி உயர்வைப் பெற்றுள்ளனர். *அடிவருடி’ தகமையிருந்தால் கல்வித்துறையில் எதனையும் சாதித்துக் கொள்ளலாம் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். மலையக் கல்வியைப் பாதிக்கும் இந்த இழிசெயல்களுக்கு எதிராக, நீண்ட காலமாகவே மாணவர்களாலும், பெற்றோர்களாலும் பல நடவடிக்கைகள்

Page 34
64
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் பலமுறை குண்டர்களின் தாக்குதலுக்கு உட்பட் டுள்ளனர். இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு கந்தப்பளை பிரச்சினையாகும்.
மேற்கூறப்பட்ட இந்த அரசியல் நாடகம் காரணமாக பலர் உயர் கல்வியைத் தொடராமல் "அடிவருட" தவமிருக் கின்றனர். இவர்களின் பின்னால் சென்றால் எப்படியும் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது இவர்களது நம்பிக்கையாகும் இந்தப் போக்கு கல்வியின் மகத்துவத்தை பாதிப்பதாக அமைகின்றது. கல்வி முன்னேற்றத்தில் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகின்றது. இதனை களைந்தெறிய வேண்டியது உடனடிக் கடமையாகும். அண்மைக் காலத்தில் மலையக மக்களின் பால் அக்கறை கொண்டவர்கள் இந்த ஈனச்செயலை முறியடிக்க பல எதிர்ப்புகளையும் எதிர்நோக்கியவாறு முன்னேறிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
மலையகக் கல்வியினைப் பாதிக்கும் மற்றொரு காரணி பொருளாதாரமாகும், ஒரு புறம் வானளாவ உயர்ந்து செல்லும் விலைவாசியும் மறுபுறம் தொழிலாளர்கள் சம்பள உயர்விலிருந்து புறக்கணிக்கப்படுவதும் இம்மக்களின் நிச்சய மில்லாத வருமான நிலையும் கல்வியில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தோட்டத்தொழிலாளரின் மாத வருமானம் எண்ணுறு ரூபாய்களுக்குள் அடங்குவதால் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைக் கூட நுகர முடியாத நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. இவ்ர்கள் கடன் சுமையிலேயே தமது வாழ்க்கையை நடத்து கின்றனர். இதன் காரணமாக ப்ொருத்தமான குடும்பக் கல்விச் சூழலை இங்கு காணமுடியாது.
க. பொ. த உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாண வர்கள் பலர் பல்கலைக் கழகத்துக்காக தெரிவு செய்யப் பட்டுள்ளபோதிலும் குடும்ப வறுமை காரணமாக உயர்

கல்வியைத் தொடர முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுள் பலர் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த பின்னர், அல்லது ஒரிரு வருடங்கள் சென்ற பின் தாங்கிக் கொள்ள முடியாத வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசுகளை வழங்கும் பணியைச் செய்து வருகின்றது. இதனைக் கூட பல மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ளனர். காரணம் இந்த உதவிப்பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தொழிற் சங்க சிபாரிசு தேவைப்படுகின்றது. தொழிற்சங்கம் பிள்ளை யின் குடும்ப நிலையைக் கருத்தில் கொள்ளாது அந்த பிள்ளையின் குடும்பம் யாருடைய சங்கத்தில் இருக்கின்றது? தமது சங்கத்தில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் எந்த அளவுக்கு தமக்கு விசுவாசமாக நடந்து கொள்கின் றார்கள்; அவர்கள் வியாபாரிகளா? அந்தப் பகுதி பிரதிநிதி என்ன சொல்கின்றார் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி தெரிந்த பின்னரே சிபாரிசு வழங்கப்படுகின்றது.
தேசிய ரீதியாக நோக்கும் போது இலங்கையில், பாட சாலையை இடையில் விட்டு நீங்குபவர்களின் தொகை குறிப் பிடத்தக்க அளவு உள்ளது, இது மலையகத்தில் மிக உயர்ந்த தாக காணப்படுகின்றது. ஆண்டு 7 முதல் ஆண்டு 9 வரை யுள்ள 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இவ்வாறு பாடசாலையை இடையில் விட்டு நீங்குகின்றனர். இதற்கு பொருளாதாரமே அடிப்படை காரணமாக உள்ளது. இவர் களின் பெரும்பாலானோர், தோட்டத் தொழிலுக்கு (தொழிலாளி) முயற்சிக்க ஏனையோர் கொழும்பு போன்ற நகரங்களில் ஹோட்டல் வேலை, வீடுகளில் வேலை போன்ற வற்றுக்குச் செல்கின்றனர்.
சமுக விடயத்தில் கல்வியில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணி குடும்பச் சூழலாகும். தொழிலாளர் குடியிருக்கும் லயன் அறைகள் கல்விச் சூழலுக்குப் பொருத்தமற்றதாகவே

Page 35
66
காணப்படுகின்றன. இருட்டறை, சுகாதார சூழலின்மை, ஒரு சிறிய அறைக்குள் பல குடும்ப உறுப்பினர் வாழ வேண்டிய நிலை, வாசிகசாலையின்மை போன்ற பல காரணிகள் குழந்தையின் சிந்தனை, அறிவு விருத்தி போன்ற வற்றில் தடையினை ஏற்படுத்துகின்றது. இதைவிட வாழிட அமைப்பு, நூலக வசதியின்மை, விளையாட்டு மைதான மின்மை, சிறுவர் பூங்கா இன்மை போன்ற காரணிகளும் இணைந்து கொள்வதால் பொதுவாக முழு "தோட்டச் சூழலுமே கல்வி விருத்திக்குத் தடையாக அமைகின்றது. குடும்ப வறுமை வேலைவாய்ப்பின்மை, இனவாதம், தொழிற் சங்ககெடுபிடி, குடியுரிமையின்மை, பிரசாஉரிமை வேறுபாடு போன்ற காரணிகள் குழந்தைகளின் உளவியலில் தாக் கத்தினை ஏற்படுத்துகின்றது.
ஆரம்பத்தில் சாதியமைப்பு தொழிலாளர்களின் கல்வியில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தினாலும் தற்காலத்தில் இது ஓரளவு மறைந்த நிலையில் காணப்படுகின்றது. எனினும் அது முற்றாக மறைந்து விட்டது எனக் கூறமுடியாது. "மேல் மட்டம்" எனக்கருதப்படும் உத்தியோகங்களில் உள்ளோரிடம் இந்த சாதி சிந்தனை காணப்படுகின்றது. இது ஓர் குழு நிலை செயற்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. இந்த அம்சமும் தொழிலாளர்களின் கல்வி முன்னேற்றந்தில் தடையினை ஏற்படுத்தி வருகின்றது.
மலையக நகரங்களில் புற்றீசல் போல் தோன்றியுள்ள மினி சினிமா மற்றும் எண்ணற்ற மது விற்பனை நிலையங்கள் போன்றனவும் வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்திவருகின்றன. இவை கல்வியில் மட்டுமின்றி மலையகப் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதைவிட மலையகப் பகுதிகளில் திடீரென படையெடுத்து வந்துள்ள சமய நிறுவனங்கள் மாணவர்களின் சமுகம் சார்ந்த சிந்தனைகளிலிருந்து விலகிச் செல்லக்கூடிய போக்

67
கிற்கு தூண்டுதலளிக்கக்கூடிய 'புனித” பணியினை மேற் கொண்டு வருகின்றன.
எனவே இன்று கல்வி ரீதியாகவும் சமூக விடுதலை சார் பாகவும் சிந்திக்கும் அனைவரும் இந்த விடங்களில் கூடிய கவனத்தைத் திருப்புவது அவசியமாகும். இன்று நம் முன்னுள்ள முக்கிய பணி கல்வியின் மகத்துவத்தை மாணவர் களுக்கும். தொழிலாளர்களுக்கும் உணர்த்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேசிய ரீதியான அரசியல் சமூக விடயங் களில் இவர்களை முன்தள்ளுவதாகும். மலையகப் பகுதிகளில் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் சரியான அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் போதனையாளர்கள் மலையக கல்வி பற்றிய ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்துவது அவசிய
DTeth.
இலங்கையிலுள்ள பாட நூல்கள், பாடத்திட்டங்களில் தோட்டத்தொழில ளர்களின் வருகை, அவர்கள் பட்டத் துன்பங்கள், இலங்கைப் பொருளாதாரத்துக்கு அவர்களாற்றி வரும் பங்கு, வாழ்க்கை நிலை, அரசியற் பழிவாங்கல்கள், புவியியற் சூழல், சமூகச் சூழல், தேயிலை ஆராய்ச்சி போன்ற விடயங்களை இணைப்பதற்கு சகல கல்விமான்களும் குரலெழுப்ப வேண்டும். இது ஓர் சமூகக் கடமையாகும். இது மலையக மக்கள் தன்னைப்பற்றி அறிவதற்கு மட்டுமின்றி இலங்கையிலுள்ள பிற இன மக்கள் இவர்களை சரியாக மதிப்பிடவும் வழி வகுக்கும். இதன் மூலம் இன்று நிலவிவரும் மலையக மக்கள் மீதான ‘இன அந்நியத்தன்மை” ஓரளவு நீக்கப்படலாம்.
இப்போதுள்ள தேசிய கல்வியமைப்புக்குள்ளேயே சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமாயின் மலையகத்தில் கல்வி அபிவிருத்தியினை நோக்கமாகக்கொண்ட ஓர் திட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். கல்வித் தகமைகளில் உயர்ந்த, அனுபவங்களைக் கொண்ட கல்வி அபிவிருத்தியில் அக்கறை யுள்ளவர்கள் மட்டுமே இதில் அங்கம் பெற வேண்டும். இக்

Page 36
68
குழு எவ்வித அரசியலுக்கும் உட்படாத வகையில் சகல கல்வி செயலாக்க விடயங்களிலும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை மலையக மக்களை ஒரு தனித் தேசிய இன மாக அங்கீகரித்து, அவர்களது இனத்தனித்தன்மையை வளர்ந்தெடுக்கக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். இது உடனடியாகவே மேற்கொள்ள வேண்டிய விடயமாகும். தொழில்ாளர்களை அரசாங்க ஊழியர்களாகப் பிரகடனப்படுத்தி அவர்களது பொருளாதாரச் சுமையினை ஒரளவேணும் குறைக்க முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும்.
தோட்டப் புறங்கள் கல்விச் சூழலுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்படவேண்டும். புதிய வாழ்வு, புதிய கலாசாரம் மலையகத்தில் மலர வேண்டும். பொருளாதார அரசியல், சமூக ரீதியாக இம்மக்களைத் தள்ளி வைக்கும் நிலை நீக்கப்படவேண்டும். தேசிய நீரோட்டத்தில் இம்மக் களையும் இணைக்க வேண்டும் ,
இவ்விடயங்களெல்லாம் உடனடியாக சாதிக்கப்படக் கூடிய விடயமில்லை, எனினும் இதற்கான வேலைத்திட் டங்கள் நீண்ட கால-குறுங்கால அடிப்படையில் திட்ட மிடப்படவேண்டும். இதற்கு தொழிலாளர்களைப் பக்கபல மாகக் கொண்ட புதிய ஜனநாயக இயக்கம் முன்னெடுக்கப் படவேண்டும் தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தி அவர்களது பலத்துடன் மேற்குறித்த சகல அம்சங்களையும் வென்றெடுக்க வேண்டும். மலையக மக்களின் உரிமைக்காக, செயற்படும் சகல ஸ்தாபனங்களும், இம்மக்களின் ஆகக் குறைந்த அளவு உரிமைக்காகவாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தமிழர் சமூக வாழ்வில் பழைமைவாதம் --சி. கா. செந்திவேல்
கடந்த அரைநூற்றாண்டு காலத்தை எடுத்து நோக்கின் இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழர்களின் சமூக வாழ்வு பற்றிய அக்கறைகள் பல்துறைகளிலும் அதிகரித்துவந்துள்ள மையை அவதானிக்கமுடியும். அவர்களின் அரசியல் பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்குத் தடைக்காரணி களாக அமைந்துள்ள பல்வேறு அம்சங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளும் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. இலங்கையில் உருவாகி வளர்ந்து அரசியல் துறையில் ஆதிக்கம் பெற்றுள்ள சிங்கள பெளத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட பாகுபாடு, புறக்கணிப்பு, அடக்குமுறை என்பனவற்றினால் தமிழர் சமூக வாழ்வின் வளர்ச்சி பெருமளவிலான தட்ைகளுக்கு உள்ளாகி வந்துள்ள செய்திகளைப் பல்வகை ஆய்வுகள் முன்வைத் துள்ளன. பெரும்பாலான ஆய்வுகளும் அறிக்கைகளும் இன சார் அடிப்படைகளைக் கொண்டிருப்பினும் அவற்றிடையே காணப்படும் உண்மைகள் மறுக்கப்படமுடியாதவை. மேலும் பல உண்மைகள் துலக்கமடையவும், அவற்றின் அடிப்படைக் காரணிகள் இனசார் கண்ணோட்டத்திற்கும் அப்பால் கண்டு பிடிக்கப்படவும் வேண்டும். அதற்கு விஞ்ஞானக் கண் ணோட்டம் மிகுந்த நேர்மையான வரலாற்று ஆய்வும், வர்க்கப்போராட்டப் பார்வைகொண்ட அரசியல் நிலைப் பாடும் அவசியம். இவை விரித்து நோக்கப்படுதற்கு இது உரிய சந்தர்ப்பம் அன்று.
இக்கட்டுரையிலே சுட்டிக்காட்டி வலியுறுத்தமுற்பட்டுள்ள அம்சம் வேறொன்றாகும். அதுவே தமிழர்களிண் சமூக வாழ்வில் உள்ளுர ஊறி உறைந்து காணப்படும் பழைமைவாத
ஆ-5

Page 37
70
மாகும். இப்பழைமைவாதம் என்ற அம்சம் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சியின் மைக்கும். தேக்க நிலைக்கும் ஒரு காரணமாகிநிற்பதளையும் பல்வேறு ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக்காட்டி வலியு றுத்தத் தவறியுள்ளன. இலங்கையிலும் இந்தியாவிலும் உருவாகிய சமூக விஞ்ஞானத்துறை சார்ந்த முற்போக்கு அறிஞர்கள், ஆய்வாளர்கள் இப்பழைமைவாதம் பற்றிய உண்மைகளையும் அதன் தன்மைகளையும் பெருமளவிற்கு எடுத்துரைத்து வந்துள்ளனர். ஆயினும் அக்கருத்துக்கள் பரந்த சமூக அடிப்படையில் பரவிச் செல்வதைத் தடுக்கக்கூடிய வகையில் தமிழ் அறிஞர்கள் என்போர் இப்பழைமைவாதத் தினைப் பாதுகாத்து வந்துள்ளனர் இன-மொழித் தொன்மை பாரம்பரிய கலாசாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள். சம்பிரதாயங்கள் என்ற பல்வேறு பேர்களிலும் போர்வையிலும் இப்பழைமைவாதம் இன்றுவரை கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற மையைக் காணமுடியும், இவ்வாறாயின் இப்பழைமை வாதத்தின் வரலாற்று அடிப்படையையும் அதன் பிற்போக் கான உட்கூறுகளையும், அவை தமிழர் சமூக வாழ்வில் வகித்துவரும் ஆதிக்கத்தினையும் தெளிவாக அடையாளம் கண்டுகொள்வது அவசியமாகும். அவற்றுக்கான குறிப்புக் களை மட்டுமே இக்கட்டுரை கொண்டிருக்கின்றது.
தமிழர் பழைமைவாதத்திற்கு அடிப்படையான முதற் கூறாகக் கொள்ளப்படுவது தமிழர்களின் இன மொழித் தொன்மை பற்றிய கருத்துக்கள் ஆகும். ஒரு காலத்தில் இருந்து பின்பு கடலால் விழுங்கப்பட்டதாகக் கூறப்படும் லெமூரியாக் கண்டத்தின் ஆதிக்குடிகள் திராவிடர்கள். தமிழர்கள் என்ற தொடக்கப் புள்ளியில் இருந்து தமிழர்களின் தொன்மையைச் சிலர் தொடங்குவர். இன்னும் சிலரோ அதற்கும் முன்னே சென்று பழந்தமிழ்ப்ப்ாடல் ஒன்றின் வரிகளாக அமைந்த "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” தமிழர்கள் என்றவாறு

71
அவர்களின் இனமொழித் தொன்மையைக் கொண்டாட முனைவர். இதுபற்றி பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகிறார். "தமிழ் இலக்கியத்தின் தொன்மையை தோற்றமறியாக் காலத்திற்கு கொண்டு செல்லல் ஆரியத்திற்கும் தமிழுக்குமுள்ள வேறுபாடுகளை மிகையழுத்தமாகக் கூறுதல், பழந்தமிழ்நூல்கள் சென் றொழிந்த பொற்க பல மொன்றை சித்தரிப்பன என்று ஓயாது எடுத்துரைத்தல் இவையே பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் பயபக்தியான பணியாக இருந்துவந்திருக் கின்றன. சுந்தரம்பிள்ளையிலிருந்து வரதராசனார் வரையில் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தமிழாய்விலும் பார்க்க தமிழபி மானத்தையே ஏற்புடைமைக்கு அளவுகோலாகக் கொண்டியங் கினர். இத்தகைய அறிஞர் குழாத்தினர் இனமொழித் தொன் மையையே எவ்வாறு பெருமையாகவும் காட்டினர் என்பதை யும் கைலாசபதி மேலும் சுட்டிக்காட்டுகின்றார். "ஆயினும் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து. அதிகாரமும் செல்வாக்கு முடைய தமிழறிஞர்களின் ஆராய்ச்சி அடிப்படை தொன்மை = பெருமை தனித்துவம் = பெருமை, மாறாமை = பெருமை ஒப்புமையின்மை = சிறப்பு என்ற வாய்ப்பாடாகவே இருந்து வந்திருப்பது தெளிவு. "ஆனால் இத்தகைய தடம்பட்ட வழியில் இருந்து விலகி ஒரு நிதானமான சமூக விஞ்ஞான ஆய்வுப் பிரிவினர் மட்டுமே தமிழர்களின் இன-மொழித் தொன்மையை நிதானமான வரலாற்று ஆதாரங்களுடன் காண இடைவிடாது முயன்றுவருகின்றனர். இத்தகைய வர்கள் தமிழர்களின் இன-மொழித் தொன்மையை வரலாற்று ஆதாரங்களுக்கு அப்பால் இழுத்துச்சென்று பொய்மைப் புகழ்பாடுதலையோ, அன்றி அவர்களின் தொன்மைக் காலப் பகுதியைச் சுருக்கிக் காட்டுவதையோ குறியாகக் கொள்ள வில்லை. அந்தவகையில் நோக்கும்போது தமிழர்களின் இன மொழித் தொன்மையானது குறிப்பிட்ட நீண்டதொரு காலப்பிரிவைக் கொண்டது என்பது மறுப்பதற்கில்லை.
இத்தகைய இன மொழித் தொன்மையை தமிழர்கள் மத்தியில் உள்ள பழைமைவாதிகள் சமூக வளர்ச்சிக்குக்

Page 38
72
குறுக்கே நிலை நிறுத்த இடைவிடாது முயன்றுவருகின்றனர். இத்தொன்மையின் பெயரால் புதியனவற்றை, விஞ்ஞான பூர்வமானவற்றை, சமூக வளர்ச்சிக்கு உறுதுணையான வற்றை எல்லாம் நிராகரித்து நிற்கின்ற ஒரு போக்கே தமிழர் பழைமைவாதத்தின் முனைப்பான போக்காகி நிற்கின்றது. இப்போக்கினால் தமக்கு இணையான தொன்மைவாய்ந்த இன மொழிப்பிரிவினரோ, மக்கள் சமூகங்களோ உலக நாடு களில் இல்லை என்ற விதமான கருத்துநிலைகளைப் பரப்பித் தமிழர்களைப் பொய்மை வழிபாட்டார்களாக்கியும் வைத் திருப்பது இப்பழமைவாதமாகும். இது எளிதாகவே வேற்று இன மொழிப் பிரிவினரைக் குறைத்தும், கீழ்மைப்படுத்தியும் நோக்கும் ஒருவிதத் தொன்மை ஆதிக்கப் பார்வையும் உரு வாக்கியுள்ளது.
உலகின் பல்வேறு இன மொழிச் சமூக மக்களின் வரலாற்று வளர்ச்சியை, முன்னேற்றத்தை, புதிய சிந்தனைக் கருவூலங்களை எல்லாம் தமிழர் பழமைவாதப் பண்பான இன மொழித் தொன்மை நிராகரித்து நிற்கின்றது. உதாரணமாக சமூகவியல் துறையிலே விஞ்ஞான சோஷலிசக் கருத்துக்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் பேசப்படும்போது இப்பழைமை வாதிகள் ஆவேசத்துடன் எழுந்து எதிர்க்குரல் கொடுப்பர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்பற்றி வள்ளுவன் கூறிவிட்டான் என்றும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நமது பண்டைத் தமிழர் எடுத்துக் காட்டினர் என்றும். 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று கார்ல் மாக்ஸ் கூறுவதற்குப் பலநூறு வருடங்களுக்கு முன்பாக "யாதும் ஊரே யாவரும் கெளிர், என்று நம் முன்னோர் எடுத்துரைத்துச்சென்றனர், என்றும் வாதிட்டு நிற்பர், இன்றைய சமூக நிலைமைகளையும் அவற்றிடையான சமூக முரண்பாடுகளையும் கவனத்திற் கொள்ளாது அவற்றின் வாயிலாக எழுந்துள்ள சமூகப் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பனவற்றின் தன்மை
களை சமூக விஞ்ஞான நோக்கில் கண்டு தீர்வுகளை நாடு

73
வதற்குப் பதிலாக வள்ளுவன் கண்ட 'சோஷலிசத்தைப்" பற்றியும், கம்பன் கண்ட 'சமூக நீதி' பற்றியும் வாய்நிறையப் பேசி அதனூடாக ஒருவித தொன்மைப் புகழ் அமைதிகாணவே தமிழர் பழைமைவாதம் இனமொழித் தொன்மையைத் தூக்கி நிறுத்துகிறது.
இத்தகைய இன மொழித் தொன்மை பற்றிய கருத் துக்கள் நிலவுடைமை சமூக அமைப்பிலே செழுமையுடன் வளர்க்கப்பட்டன என்பது தெளிவு. இன்றும் சமூக வலிமை யுடையதாக விளங்கும் பழமைவாதத்தின் பல்வேறு கூறுகளும் இக்கால கட்டத்திலேயே பிரசவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட துடன் வரையறுப்புக்களையும் தெளிவாக்கங்களையும் பெற்றன. இவ்வரலாற்று நிகழ்வுப்போக்கு பற்றி பேராசி ரியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகின்றார். "உறவுகள் யாவும் சங்கிலிப் பின்னலாகத் தொடர்புபெற்றன. உச்சியிலே கலசம்போல் பேரரசன் வீற்றிருந்தான். கீழே வர வர அகன்று அகன்று ஆகக் கீழ்க் கற்களாகப் பண்ணையடிம்ைகளும் சாதாரண சிறு கைத்தொழிலாளர்களும் இருந்தனர். யாவும் மத்திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன. அதே சமயத்தில், கீழே போகப்போக உரிமைகளும் கடமைகளும் தெளிவாக்கப்பட்டன.
இவ்வாறு நிலப்பிரபுத்துவ உச்சக் கட்டத்திலே தெளி வாக்கப்பட்ட் உரிமைகளும், கடமைகளும், சடங்குகள் - சம்பிரதரயங்கள், வழக்கங்கள் என்பனவே இன்றும் பழைமை வாதக் கூறுகளாகத் தமிழர்களிடையே பிற்பற்றப்பட்டு வரு கின்றன. இக்காலப்பிரிவிலே உருவாகிய கலை இலக்கியங் களும், நிலை நிறுத்தப்பட்ட மதத் தத்துவங்களும், கலாசார நடைமுறைகளும் தமிழர்களின இன மொழித் தொனமை யுடன் இணைக்கப்படுகின்றன. இவ்விணைப்பின் இறுக்க மானது இன்றும் கனதிமிக்கப் பழைமைவாதச் சிநதனை களாக செயல்களாக நடைமுறைகளாக நம் சூழலில் இருந்து வருகின்றன.

Page 39
74
தமிழர் பழமைவாதத்தின் அம்சங்களை மிக எளிதில் அடையாளம் காண்பதற்குரிய தளமாகச் செயல்படுவது தமிழர் கலாசார முனையாகும். மனிதகுல வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மனிதர்கள் தாம் வாழ்ந்துவந்த புவிசார் சூழலுக்கும், இயற்கையின் நிகழ்வுகளுக்கும் ஏற்ப தமது வாழ்க்கையை - தொழில்-இருப்பிடத்தை, மொழியை நடை உடை பாவனைகளை உருவாக்கிக் கொண்டனர். பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் என்பனவும் உரு வாகின. இவை காலப்போக்கில் நிலமானிய அமைப்பில் மதத்துடன் இரண்டறக் கலக்கப்பட்டதுடன் மதத்தின் மூலமான விளக்கங்களும் முன்வைக்கப்பட்டது. இதுபற்றி ஆய்வாளரான கோ. கேசவன் பின்வருமாறு கூறுகின்றார்; “இங்கேதான் மதமும், சாதி உணர்வுகளும் கலாசார நிறு வனங்களும் தம் பங்கை நிறைவேற்றுகின்றன. மதம் பொது வாகவே ஆளும் வர்க்கத்திற்கு அனுசரணையாக இருந்து வத்துள்ளது. மதம் பிராமணர்களின் வாழ்க்கையாகவே இருந்தது. நிலமானிய சமூகத்தில் உபரி உற்பத்திசெய்யும் பண்ணையாட்கள், அடிமைகள், கைவினைஞர்கள் ஆகி யோரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மதம் பயன்படு கின்றது. இதைப் படைப்பலத்தால் ஆணையிட்டுச் செய்துவிட முடியாது. இது காலங்காலமாக - பெதுவாக - ஆனால் அழுத்தம் திருத்தமாகச் செய்யவேண்டிய பணி, இங்கேதான் மதங்கள் கொடுக்கும் தத்துவம் பய படுகின்றது. இந்தத் தத்துவங்கள் மக்கள் வாழ்வைப் பாதிக்கின்றன என்பதில் ஐயமில்லை
இவ்வாறு சோழர்காலத்திலே கட்டியெழுப்பப்பட்ட மதக் கலாசாரத்தையே தமிழர்களின் பொற்காலக் கலாசாரம் என்ற மேன்மையுடன் இன்றும் தமிழர்கள் சுமந்து வருகின்றனர். தமிழர்களிடையே இடம்பெறும் பிறப்பு, திருமணம், இறப்பு. நினைவுகூரல் போன்ற பிரதான சடங்குகளிலும்; சகல

75
ஆக்க முயற்சிகளிலும், நாள் - நட்சத்திரம் - சகுனம் - சாத் திரம் போன்ற சாதாரண அன்றாட கருமங்களிலும்; மூட நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் இம்மதக் கலா சாரத்தின் முத்திரைகள் பளிச்சிட்டுநிற்கின்றன. மனித நேயம், மனசாட்சி. மனிதர்களின் வாழ்வியல் கடமை என்பன வற்றுக்கு மேலால் புழைமைவாய்ந்த வழக்காறுகள் என்ப தற்காக மட்டுமே அவை முன்னெடுக்கப் படுகின்றன.
தமது வாழ்வியல் கடமைகள் பலவற்றை மனிதநேய அடிப்படையில் செய்யவேண்டியிருக்க அவற்றை நிராகரித்து விட்டு அதற்கும் அப்பால் கடவுள், மறு உலகம், சடங்குகள், வழக்கங்கள் என்பதற்காகப் பழமையின் பெயரில் கற்றோரும் மற்றோரும் செயல்படும் போக்கு நிறையக் காணக்கூடிய தாகும். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறுதல் முடியும். தமது பெற்றோரின் இறுதி வயோதிபக் காலத்தில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவப் பராமரிப்பு, போன்ற வற்றைக் கொடுத்து அவர்களைப் பேணிப்பாதுகாத்து அவர் களுக்குரிய வாழ்வியல் கடமைகளை செய்ய மறுக்கும் சிலர், பெற்றோர் இறந்ததும் அவர்களுக்குரிய மரணச் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழக்கங்கள் என்பனவற்றை பழைமைவழமையின் பெயரால் ஒழுங்குதவறாது செய்துமுடிப்ப தனையும் அதிலே பெருமை கொள்வதனையும் தமிழர் வாழ்வில் நிறையக் காணமுடியும்
தமிழர் சடங்குகளில் பிராமணர்களின் சமஸ்கிருத சொற் றொடர்கள்-உள்ளிட்ட கிரிகைகள் நடத்தாது விட்டால் பெருமை. வழைமை கெட்டுவிட்டதாகப் பதறி வீழ்ந்தடிக்கும் பத்தாம்பசலிப் போக்கு இன்றும் வலுவுள்ளதாகக் காணபபடு கின்றது. இவை ஏன்? எதற்காக? யாது பயன்? என்று நியாயமான அறிவியல் சார்ந்த கேள்விகளுககும் அபபால் மிகுந்த சிரமத்துடன் பெரும் பொருட்செலவுடன் அவை கண் மூடித்தனமாக முன்னெடுக்கப்படுகின்றன. இப் பழமைவாதச் செயல்களுக்கு கற்றோர் எனத் தம்மைக் கூறிக்கொள்வோர் வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

Page 40
76
மேற்குறித்த கலாசார நடைமுறைகள் முழுத் தமிழர் களுக்குமாக இருக்கும்படியாக விடப்படவில்லை என்ற உண்மையும் இங்கே நோக்குதற்குரியது. சாதிப்பாகுபாடு அடிப்படையில் இக்கலாசார நடைமுறைகள் வகுக்கப்பட்டு மிக இறுக்கமாக முன்னெடுக்கப்பட்டுவந்த செய்தி தமிழர் கலாசாரத்தில் நிறையக் காணக்கூடியதாகும். உயர்சாதி யினர் எனப்படுவோர் பின்பற்றிய அல்லது கடைப்பிடித்த கலாசார நடைமுறைகளைத் தாழ்த்தப்பட்டத் தமிழர் எனப் படுவோர் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை. அப்படியாயின் தமிழர் சமுதாயத்தில் ஒருபகுதியினரை கைக்கொள்ளவிடாது தடுக்கப்பட்ட தமிழர் பழம்பெரும் கலாசாரத்தை முழுத் தமிழர் களின் கலாசாரம் என எவ்வாறு உரிமை கொண்டாட முடியும் என்பது கேள்வியாகின்றது.
எனவே தமிழர் கலாச்சாரத்தின் ஒவ்வோர் அம்சமும் சமகாலத் தேவையின் அடிப்படையிலும் எதிர்காலச் சமூக வளர்ச்சியின் தேவையைப் பொறுத்தும் முற்றான ஆய்வு களுக்கும் பரவலான பரிசீலனைக்கும் உள்ளாக்கப் படல் வேண்டும். அப்பொழுதே நமது பழம்பெரும் கலாசாரத்தின் தேவையற்றவையும். பிற்போக்கானவைகளும் இனங்காணப் பட்டு நிராகரிக்கப்படமுடியும். அதேவேளை தமிழர் கலாசா ரத்தின் முற்போக்கான கூறுகள் அனைத்தும் பேணிப்பாது காத்து முன்னெடுக்கப்படுதல் அவசியமாகின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவம் செழுமை யடைய வாய்ப்புக்கள் அதிகரிக்க முடியும். இத்தகைய முற் போக்குக் கூறுகளைக் கொண்ட கலாசாரம் மனிதநேயத் தையும் ம6னிதப் பண்பாட்டையும் வளர்க்கக்கூடியதான புதிய கலாசாரமாக வளர்க்கப்படமுடியும்,
அதேவேளை மனிதர்களைப் பாகுபடுத்தி மனிதநேயத்தை மறுத்து, ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்தி, அறிவியல் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி, மூடநம்பிக்கைகளையும்முட்டாள்தனங்களையும் பாதுகாக்கமுற்படும் பிற்போக்கு

7
கலாசார நடைமுறைகளை நிராகரித்து ஒதுக்கப்படவேண்டி யவையாகும். இதனையே பழைமைவாதக் கலாசரரம் எனச் சுட்டிக்காட்டக்கூடியதாகும்.
தமிழர் சமூக வாழ்வின் மற்றொரு பழைமைவாதக் கூறாகக் காணப்படுவது சாதியமாகும். இந்தியாவில் உருவாகிய நால்வருணக் கோட்பாட்டின் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ வழிவந்த இச்சாதிமுறையானது அக்காலத் தொழில் அடிப்படையில் பல்வேறு சாதிகளை உருவாக்கி அவர்களுக்கான சமூக வாழ்நில்ைக் கடமைகளையும் வகுத்து வைத்தது. காலப்போக்கில் இச்சாதியமானது தமிழர் வாழ் வின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார துறைகள் அனைத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தீண்டாமையும், அடிமைகுடிமை முறைகளும் அதன் தீராக் கொடுமைகளாகவும், சாதி அகம்பாவம் கொண்ட நடை
முறைகளுமாகின.
தமிழர்கள் தமது சமூக வாழ்வில் இச்சாதியத்தை ஒரு வகையான சமூக நோக்காகக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாகும். தொழில்துறைகளில், கல்வியில், பொரு ளிட்டலில், குடும்ப உறவுகளில், இச்சாதியக் கண்ணோட்டம் முன்னெழுந்து முனைப்பாக நின்றுவருவதனைக் காண முடியும். ஒரு தமிழரை மற்றொரு தமிழர் முன் அறிமுகம் இல்லாத நிலையில் வெளியிடங்களில் அல்லது வெளிநாடு களில் சந்திக்கும்போது பெயர், ஊர், தொழில் என்பனவற்றை அறிந்து கொள்ளும் அதேவேளை, அவசியமானதொன்றாக அறியமுனையும் அம்சம் அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதையேயாகும். இலங்கையில் வெளிவரும் சகல மொழித் தினசரிப் பத்திரிகைகளிலும் காணப்படும் திருமணச் சோடி தேடுவதற்கான விளம்பரங்களில் குறிப்பிடப்படும் சாதியைச் சேர்ந்தவர்களிடம் இருந்தே திருமண உறவு தேடப்படுவதைக் காணலாம. சாதி எதுவும் பார்க்கப்பட

Page 41
78
மாட்டாது என்ற குறிப்பு இதுவரை எந்த விளம்பரத்திலும்
இடம்பெறவில்லை. இந்நிலை சிங்கள மக்களிடத்திலும் காணப்படுகின்றது.
தமது சொந்த நாட்டிலே சாதிகளுக்குரிய தரக்குறை வான தொழில்கள் என ஒதுக்கி ஏளனப்படுத்திய தொழில்கள் பலவறறை இன்று மேற்கு நாடுகளிலே அகதி அந்தஸ்துடன் வாழ்ந்துவரும் நம் தமிழர்கள் தாராளமாகச் செய்துவருகின் றனர் அப்படி இருந்தும்கூட தமது சாதிய நிலைப்பாட் டினை அவர்கள் கைவிடத் தயாரில்லாத நிலையே தொடர் கின்றது. மேற்குலக நாடுகளில் வாழ்ந்துவரும் "தமிழர் களிடையே திருமண உறவுகள் இடம்பெறுவது முற்றிலும் சாதியடிப்படையிலே என்பது தெளிவு. அங்கு சாதிகளை உறுதிப்படுத்திக்கொள்ள இங்கு சாட்சியங்களும் ஆதாரங் களும் உடனுக்குடன் கோரப்படுகின்றன. உறவினர்கள் சகல வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்தச் சாதி விவகாரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து எந்தச் சாதி, அந்தச் சாதியிலும் எந்தத் தரம் என்பன யாவும் விபரமாகக் கண்டு பிடிக்கப்படுகின்றன. தமிழர் பழைமை வாதத்தின் இறுக்கம் இப்படியாக கடல் கடந்தும் அரசோச்சும் நிலையினைக் காணலாம். அங்கு சில குடிமை முறைகள் கொண்டு செல்லப் பட்டாலும் ஆச்சரியப்படமுடியாது. ஏற்கனவே ஐயர் முதல் மணவறை வரையும்-தாலி தொடக்கம் சீதனம் வரை தமிழ்க் கலாசாரம் மரபு என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சாதியக் கண்ணோட்டம் தனியே குறிப்பிட்ட உயர் சாதியினரிடம் மட்டும் படிந்து காணப்படும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்ட சாதியினர் எனப்படுவோர் மத்தியிலும் உறைந்து காணப்படும் ஒன்றாகும். தமக்குக் குறைந்த சாதியினனெரக் கருதப்படும் எவரிடத்திலும் எந்தச் சாதியைச் சேர்ந்த தமிழரும் திருமண உறவை வைத்துக்கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. காதல் திருமணங்கள் சிலவேளைகளில் இதற்கு விதிவிலக்காக இருப்பினும் அவர்

79
களைப் பெரும்பாலான குடும்பத்தினர் புறக்கணித்தே வைத்திருப்பார்கள்.
சாதியத்தின் பிரதான அம்சமாகிநிற்பது தீண்டாமையும், அடிமை-குடிமை முறையுமாகும். பகிரங்கமான பொது இடங்களிலே பாராட்டப்பட்டுவந்த தீண்டாமைக்கு எதிராக அறுபதுகளின் நடுக்கூறு தொட்டு எழுபதுகளின் முற்கூறு வரை இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் சமூகரீதியில் அதன் கொடுமைகளை முறியடித்தன. ஆனால் வீடுகளில், தனியார் வசிப்பிடங்களில் பல்வேறு நிலைகளிலே இன்றும் கூட இத்தீண்டாமை முன்னெடுககப்படுகின்றது.
தமிழர்களின் சமூக வாழ்வில் இடம்பெறும் சகல சடங்கு களிலும் சாதியத்தை முன்நிறுத்தும் செயல்முறைகள் நிறையக் காணக்கூடியவையாகும். இவையே அடிமை குடிமை முறையாக வகுக்கப்பட்டவையாகும். தேசவழமை என்ற பதத்தின் கீழ் இந்நாட்டிற்கு வந்த அந்நியர்கள்கூட இந்த முறைமைகளை ஏற்றுக்கொண்டனர். தோமஸ் வன்றி என்னும் ஒல்லாந்து கொம்மான்டோர் 1697 இல் எழுதிய அறிக்கையொன்று ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் செய்ய வேண்டிய "இராஜகாரியத்தை குறித்தது. அதில் நாற்பது சாதிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு மரணச் சடங்கின்போது சாதியத்தின் கூறான அடிமை குடிமை முறையின் சகல அம்சங்களையும் நன்கு அவதானிக்கமுடியும். இழவு அறிவித்தல், வெள்ளை கட்டுதல், பறையடித்தல், கட்டை குத்தி தறித்து-எடுத்துச் செல்லுதல், நிலபாவாடை விரித்தல், நெல்லுப்பொரி எறிதல்" கொள்ளிச்சட்டி சாவுதல், வாய்க்கரிசி வைத்திருத்தல், கொள்ளிக் குடம் கொத்துதல், பிரேதம் எரித்தல் போன்ற யாவும் சாதியப் பெருமையின் சின்னங்களாகவும் செயல்முறை களாகவும் இருந்துவருகின்றன. இவற்றில் ஒன்று இரண்டு அற்றுப்போயினவாயினும் 6J60)6OTu 1606) இறுக்கமுடன் இருந்துவருவனவேயாகும். இவை மறைந்துவருகின்றன

Page 42
80
என்று கூறப்படுவதில் அர்த்தமில்லை. "விளக்குமாறு எட்டா இடத்தைவிட்டு தூசு தானாக என்றும் மறைவதில்லை," என்ற மெய்மொழிக் கிணங்கவே சாதியத்தின் பல கூறுகள் போராட் டத்தின்மூலம் மறைய வழி ஏற்பட்டது. இப்பணி தொடரப் படவேண்டியதொன்றாகும்.
அடிமை குடிமை முறைகள் புதிய பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்குரிய அடிப்படைகளாக வழக்கம், முறைமை, தமிழர் மரபு என்ற நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக ஒன்றைக் கூற முடியும். நாங்கள் எங்களிலும் பார்க்க உயர்ந்தவர்கள் எனப் படுவோருக்கு குடிமைச் செயல்கள் செய்யமாட்டோம் என முன்வந்து போராட்டங்கள் பல நடத்துவதில் தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோர் முன்னின்றனர். அவர்களது நிலை நியாயமானதே. ஆனால் இன்று தங்களுக்குக் குறைந் தவர்கள் எனப்படுபவர்களைக் கொண்டு தாங்களே அக்குடி மைச்செயல்கள் பலவற்றைச் செய்விக்கும் போக்கு புதிய போக்காக பரவிவருவதுதான் விசனிக்கவேண்டியது ஆகும். இங்கேதான் தமிழர் பழைமைவாதத்தின் போலித்தனம் வெளிப்படுகின்றது. இதனை தமிழர் கலாசாரத்தின் அடையாளம் எனக் காட்டவும் சில அறிவுஜீவிகள் முற்படு கின்றனர். −
ஆதலால் தமிழர் பழைமைவாதத்தின் ஆதிக்கக் கூறுகள் தனியே ஆண்ட பரம்பரையினரிடம் மட்டுமன்றி ஆளப்ப்ட்ட பரம்பரையினரான சாதாரண உழைக்கும் மக்களிடத்திலும் தன்னாதிக்கம் கொண்டிருப்பதை மேற்குறித்த நடைமுறை கள் தெளிவாக்குகின்றன. இதுபற்றி வெகுஜனன்-இராவணா எழுதிய "சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" என்னும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டிருப்பது சாலப் பொருந்துவதாகவே உள்ளது. ‘இன்று தமிழர் சமுதாயத்தில் ஒருவரின் சமுதாய சார்பு நிலையையும், அவரது முன்னோக் கிய சமூக நோக்கையும் கணிப்பீடு செய்வதற்கு, ஒரு சிறந்த

8.
அளவுகோலாக சாதியத்தைப் பற்றி அவர் கொண்டிருக்கும் எண்ணக்கருத்தையும் அதனோடு ஒத்த அவரது நடைமுறை களையும் வைத்து சரியான முடிவுக்கு வரமுடியும்.
இவ்வாறு தமிழர்களிடம் ஊறி உறைந்துபோன சாதிய நோக்கு அவர்களின் பொதுவான சமூக நோக்காகவும் வெளிப்படுவதைக் காணலாம். வேற்று இன மொழி மதப் பிரிவு மக்களை எளிதாகவே உதாசீனப்படுத்தி, கீழ்மைப் படுத்தி, கொச்சைப்படுத்தும் போக்கு இச்சர்திய சமூக நோக்கின் உள்ளார்ந்த தன்மையின் ஓர் வெளிப்பாடேயாகும்.
சாதியம் தமிழர் சமுதாயத்தில் ஓர் அவமானச் சின்னம் என்று மேலெழுந்த நடையாகக் கூறுவதில் பயன் ஏது மில்லை. அது மனிதர்களைப் பாகுபாட்டிற்கு உள்ளாக்கி மனிதநேயத்தை மறைத்து தமிழர் சமூக வாழ்வின் வளர்ச் சியை பாழ்படுத்திவரும் ஒரு தீராக் கொடும் நோயாகவும் இருந்து வருகின்றது. இதனை தமிழர் பழைமைவாதம் பல்வேறு மறைமுகவழிகளிலே பாதுகாத்து நிலைநிறுத்த தன்னாலனதைச் செய்தேவருகின்றது. இத்தகைய சாதி யத்தையும் அதனோடு இணைந்த சாதியச் செயல்களையும் தமிழர்கள் மத்தியில் இருந்து ஒழித்தாகவேண்டும். ஒரு புறத்தில் ஒழிக்க மறுபுறத்தால் புதுவடிவம் பெறும் சாதியச் செயல்களின் அடிப்படைகள் அறிவுபூர்வமாகவும் நடைமுறை ரீதியாகவும் அடையாளங்காணப்பட்டு அழித்தொழிக்கப்படல் வேண்டும். அதற்குரிய போராட்டங்கள் அந்த முனையிலே தொடரப்படுவது அவசியமாகும்.
V/
* மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்து வோம்” என்று இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பெண்ணடிமைத்தனத்தை உற்று நோக்கிய பாரதி கனல் கக்கக் கூறிச் சென்றான். ஆனால் இந்த நூற்றாண்டு முடிவதற்கு ஒரு தசாப்தம் மட்டும் இருக்கும் இன்றைய

Page 43
82
நாட்களிலும் பாரதி கண்ட பெண்ணடிமை தமிழர் சமூக வாழ்வில் உரம்பெற்று நிற்பதனைக் காண முடிகிறது. அதற்குரிய சமூக வேர்களில் பலமானதாக இருப்பது தமிழர் பழைமைவாதமே ஆகும்.
உலக வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தின் ஒரு படிநிலை யிலே தனிச்சொத்துடைமையும் தந்தை வழி சமூக ஆதிக்கமும், பெண்ணின் சமூக அந்தஸ்தை இரண்டாந்தர நிலைக்குத் தள்ளியது. நிலமானிய அமைப்பு மேன்மேலும் பெண்ணை வீட்டடிமை கொண்டது. இந்நிலை உலகம் முழுவதற்கும் பொதுவானதாக இருந்த அதேவேளை இந்தியச் சூழலிலே, பெண்ணடிமைத்தனம் சேட இடத்தைப் பெற்றுக் கொண்டது. அதற்கு இந்திய தத்துவஞான மரபு வரை விலக்கணம் வகுத்துக் கொடுத்து. மனுதர்ம சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது. "ஒரு பெண் சிறு வயதில் தந்தைக்கும், திருமணமானபின் கணவனுக்கும், முதுமையில் தன் மகனுக் கும் கட்டுப்பட்டவள்" என பெண்ணுக்கு நீதி வகுத்து நிரந்தர அடிமைத்தனத்தை பறைசாற்றுகிறது. இவ்வாறு தமிழர் பழைமைவாதம் தன்னுள் கொண்டுள்ள பெண்ணடி மைத்தனத்தை பழைமையின் பேரால் பெண்கள் மீது பெரும் பாரமாகச் சுமத்தி நிற்கின்றது.
தமிழர் வாழ்வில் பெண் குழந்தை பிறந்தவுடனேயே பாகுபாட்டின் குறி தென்பட ஆரம்பித்து விடுகின்றது. ஆண் குழந்தையானால் கற்கண்டும், பெண் குழந்தையானால் சர்க்கரையும் வழங்கும் நடைமுறை மூலம் பெண் இரண்டாம் இடம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள். ஒரு பெண் பிறந்து வளர்கின்ற ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பெற்றோர், குடும்பம், சமூகம், பெண்ணுக்குரிய அடிமைத் தன இலக்கணங்களை அவள்மீது சுமத்தி சமூகநீதி-நடை முறையாக்கி விடுகின்றனர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகைக் குணங்களுக்கும் உரியவள் பெண் என்ற வரையறை உயர்த்தப்படுகிறது. நிமிர்ந்த நடை கூடாது எனவும், பெண் நிலத்தையே பார்த்து நடக்க

83
வேண்டும் என்றும் சிறுவயதில் இருந்தே சிந்தனையில் ஊட்டப்படுகிறது. ஆணுக்குச் சமமாக பெண் நீதி, நியாயம் பேசினால் 'ஆண் மூச்சுக்கொண்டவள்" என்றும் பெண்ணுக் குரிய வரையறைகளை மீறியவள் என்றும் நிந்திக்கப்படு கிறாள். கற்புப் பெண்ணுக்கு மட்டும்தான் உரியதொன்றாக வகுத்த பிதாவழி-பிரபுத்துவ அமைப்பு மறுபுறத்திலே பெண் களில் ஒரு பிரிவினரை பரத்தையர் ஆக்கி போகம் அனுபவித்த புதுமை நகைப்பிற்குரிய முரண்பாடாகிறது. 'கற்பு நெறி என்று சொல்ல வந்தார், அஃது இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்” என்ற பாரதியின் நீதி நியாயம் நம் தமிழர் பழைமைவாதத்திடம் செல்லாதுபோய்விட்டது. பெண்ணை சக்தியாகவும், தெய்வமாகவும் பாவனைசெய்து - போற்றிப் புகழ்ந்து கொண்டு அவளிடம் சுரண்டக்கூடிய சகலதையும் சுமத்தக்கூடிய சுமைகளை எல்லாம் சுமத்தி அனுபவிக்கக் கூடிய மிருக உணர்வுகளுக்கெல்லாம் அவளைப் பலியாக்கி விட்டு ஆணாதிக்கம் தறிகெட்டு நிற்பதனை தமிழர் பழைமை வாதம் பழம்பெரு இலக்கியங்களால் வாதிட்டு பாதுகாத்து நிற்கிறது. வள்ளுவன் முதல் வாரியார் வரை கற்பின் மகிமைக்கு உரியவள் பெண் மட்டுமே என்றும் அதனைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் அவளிடமே விட்டு வைத்து பிரச்சார நாயகர்கள் ஆனார்கள். அவர்களது வாய்ப்பாடு ஆண்களினால் மட்டுமன்றி அறநெறிப் பிரசாரம் செய்யும் பெண்கள் பலராலும் மூடத்தனமாகப் பிரசாரப்
படுத்தப்படுகிறது.
ஒரு பெண் சிறுமியாக இருந்து பருவம் அடைந்ததும் அவளுக்கு நடக்கும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவதானித்தால் அவற்றின் உட்கிடைக்கை பெண்ணடிமைத் தனத்தை வற்புறுத்துவதாகவே அமைகின்றன. அதேபோல் திருமணத்தின்போது இடம்பெறும் சடங்குகளும் தாலிகட்டும் தார்ப்பரியங்களும், அம்மி மிதித்து-அருந்ததி காட்டும் செயல் முறைகளும் ஒரு பெண் சமய - சம்பிரதாய - கலாசார

Page 44
84
ரீதியிலே ஒரு ஆணின் பூரண அடிமை ஆக்கப்படுவதனை தமிழர் பழைமைவாதம் பெருமையாகக் கொள்கின்றது.
ஒரு கணவன் இறந்த மரணவீட்டில் மனைவிக்கு நடத்தப் படும் கலாசார நடைமுறைகளை தமிழர் பழைமைவாதம் இன்றும் கைவிடுவதாக இல்லை. கட்டிய தாலியை கழற்றி இறந்த கணவனின் மார்பிலே வைக்க வேண்டும். பின் வெள்ளைச் சீலை உடுத்தி கணவனின் உடலுக்கு மாலை யிட்டு பலதடவை தொட்டு வணங்க வேண்டும். இறந்த கணவனின் வலது கைப் பெரு விரலால் தனது நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழிக்க வேண்டும். அதன் மூலம் தான் 'தாலி அறுந்தவள்', 'அறுதலி' என்ற பட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அன்றில் இருந்து குடும்பத் தின், சமூகத்தின் நற்காரியங்கள் யாவற்றிலும் இருந்து வெள்ளைச் சீலை உடுத்திய விதவைப் பெண்ணாக ஒதுக்கி வைக்கப்படுகிறாள். தனது பிள்ளைகளின் நற்காரியங்களில் கூட அவள் முன்நிற்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வழக்கங்கள் இந்தியாவிலே அண்மைக்காலம் வரையில் பின்பற்றப்பட்டுவந்த உடன்கட்டை ஏற்றப்படும் கொடுமை மிகு நிகழ்வுகளாக இல்லாவிடினும் மற்றோர் வகையிலே பெண்ணுக்கான சமூகக் கொடுமை என்று கூறுவது மிகைப் பட்ட கூற்றாக இருக்க முடியாது.
பால் ரீதியிலே 'பள்ளியறை பதுமை” யாக்கப்படும் பெண் தாய்மை என்பதன் ஊடாக, "தலைவி' என்ற போலிப் பேரின் மூலமாக வாழ்நாள் பூராவும் பிள்ளைகள், கணவன், குடும்பம் என்பனவற்றின் சுமைகளுக்கு தன்தலையைக் கொடுத்துவர நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவளது உழைப் பிற்கு பெறுமதியே பார்க்கப்படுவதில்லை. எவ்வளவு இரட்டித்த வேலைப்பழுவிற்கு பெண் ஆளாக்கப்பட்டாலும் இறுதியில் ஆணாதிக்கம் எனற அழுந்துத்தடியால் அவள் அமுக்கப்படுகிறாள். இவற்றையெல்லாம் நமது தமிழர் பழைமைவாதம் கவனத்துடன் கட்டிக்காத்து வருகிறது.

85
இதனை கர்ண பரம்பரைக் கதைகள் தொட்டு கண்ணதாசன் பாடல்கள்வரை பாதுகாத்து நியாயம் கற்பிக்கின்றன.
இத்தகைய தமிழர் பழைமைவாதத்தின் அரணால் பாதுகாக்கப்பட்ருவரும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் போர்தொடுத்துவருவே ரின் எண்ணிக்கையும் குறைவல்ல, பாரதியின் அடியொற்றிவந்த கவிஞர்களில் ஒருவரான சி. சிவசேகரம் பின்வருமாறு போர்க்குரல் கொடுக்கிறார்
பல ஆயிரம் வருஷப் 1 படிமங்கள் பொடிபடட்டும் வார்த்துஞ் செதுக்கியும் 1 கடைந்தும் குடைந்தும் கல்லிற் பொழிந்தெடுத்தும் / வார்த்தைபல வரைந்தும், வர்ணங்கள் தீட்டியும் | மந்தைகள் போற் பெண்குலத்தை மேய்த்த பரம்பரையோர் / காத்துக் கவனமுடன் பேணிப் பராமரித்த / கல்லும் உலோகமும் களிமண்ணும் | காகிதமும் ஒலைகளும் சீலைகளும் வேய்ந்த சிறைக் கூடம் வீழ்ந்து நொறுங்கட்டும் பெண்ணடிமை பெரும்கோட்டை மதில்கள் பொடிபடட்டும்.
பெண்காள் திரள்மின் 1 சூழுகின்ற வேலிச் சுவர்கள் எல்லாம் சாயட்டும் I மூடி மறைந்திருக்கும் கூரை பெயரட்டும்! | தலைகள் நிமிரட்டும் கைகள் உயரட்டும் வானத்தில் ஒரு பாதி அங்கே
அமரட்டும். (செப்பனிட்டபடிமங்கள் - கவிதைத்தொகுதி, சி. சிவசேகரம்)
கல்லும் உலோகமும் கனிமண்ணும் காகிதமும், ஒலைகளும் சீலைகளும் கொண்டு வேயப்பட்ட தமிழர் பழைமைவாதம் போற்றும் பெண்ணடிமைச் சிறைக்கூடம் உடைக்கப்பட்டால் அன்றி தமிழர் சமூக வாழ்வின் வளர்ச்சி முன்நோக்கிச் செல்லமுடியாது என்பது சமூக ரீதியில்
ஆ-6

Page 45
86
உணரப்படுதல் வேண்டும். தமிழர் பழைமைவாதத்தின் ஊடே இறுக்கப்பட்டுள்ள பெண்ணடிமைக்கயிறுகள் அறுத்தெறியப் படுவதற்கான பணி தனியோரு முனையிலே மட்டும் ஆற்றப் படக்கூடியதொன்றல்ல. வரலாற்று வளர்ச்சியையும் இன்றைய யதார்த்த சூழலையும் எதிர்காலத் தேவையையும் விளங்கி உணர்ந்து உறுதியுடன் செயல்படமுனைவதன் மூலமே தமிழர் பழைமைவாதத்தின் ஓர் கூறாகிய பெண்ணடி மைத்தனத்தையும் முடிவுக்குக் கொண்டுவரமுடியும்.
V
தமிழர்களின் சமூக வாழ்விலே காணப்படும் அரசியல் துறையை எடுத்து நோக்கின் அங்கேயும் இப்பழைமைவாதம் தன்னாதிக்கம் கொண்டதாகவே இருந்துவந்துள்ளது. பிரபுத்துவத்திற்குப்பின் வந்த அந்நியரான காலனித்துவ வாதிகள் தமது மதம், கல்வி, கலாசாரம் போன்றவற்றை தமிழர்கள் மத்தியில் பரப்பியவேளைகளிலுங்கூட தமிழர் பழைமைவாதத்தையோ அதன் கூறுகளையோ முற்றாக நிராகரித்துச்செல்ல முற்படவில்லை அதனை அரவணைத்துப் பாதுகாத்தே வந்தனர். அன்று தொட்டு அண்மைக்காலம் வரையான தமிழர் அரசியல் தலைமத்துவ சக்திகளும் இப்பழைமைவாதத்தினைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். இவ் அரசியல் தலைமைத்துவச் சக்திகள் அரசியல் துறையிலே நோக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களைத் தொட்டும் பார்க்கவில்லை. சமூக விடுதலை; சமூக மாற்றம், அடிப் படைப் பொருளாதாரத் தேவைகள், இவற்றினூடான தமிழர் சமூக வாழ்வின் முன்னோக்கிய வளர்ச்சி, உலகின் விடுதலை பெற்ற நாடுகளின் முன்னுதாரணங்கள் போன்ற யாவற் றையும் அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை, அதற்குப் பதிலாக பழம்பெருமை பேசி வெறும் இனவுணர்வுப்படுத்து வதிலும், சென்றெழிந்த பொற்காலத்தை மீட்பது பற்றிய வாய்ப்பிதற்றலிலும் ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதிலும் தமது காலத்தைக் கழித்துவந்தனர். உள்ளார்ந்த நிலையிலே தத்தமது வர்க்கத் தேவைகளை

87
அரசியல் பதவிகள் மூலம் ஈடேற்றிவந்த இத்தலைமைகள் அரசியல் தேவைக்காக பரம்பரைப் பின்னணி, சாதி, ஊர், ஆணாதிக்கம், பிரதேசம், பதவி போன்ற சகலதையும் பழைமைவாதத்தின் அடிப்படையிலேயே அரசியவில் முன்னெடுத்தனர், இத்தகைய தமிழர் அரசியல் தலை மைத்துவ சக்திகளினால் தமிழர் சமூக வாழ்வினை ஓர் புதிய சமூக வளர்ச்சிப் பாதையின் ஊடே முன்னெடுத்துச்செல்ல முடியா நிலைக்கு உள்ளாகின. இதற்கான அடிப்படையாக அமைந்தது அவர்களது ஆளும்வர்க்க நிலைப்பாடும் அதற்கு அரண்செய்து நின்ற தமிழர் பழைமைவாதமும் தான் என்பதும் தெளிவு.
தமிழ்நாட்டு அரசியல் அரங்கிலே ஆரம்பகாலத்தில் நாத்திகமும் சீர்திருத்தமும் பேசி தமிழர் பழைமைவாதத்தின் சில கூறுகளுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த திராவிட இயக்கத்தினர் காலப்போக்கில் அதனைக்கைகழுவி விட்டனர். அரசியல் பதவியும் அதிகாரமும் அண்மித்து வந்ததும் தாம் பேசியவைகளையும் செய்தவைகளையும் மறந்து தமிழின் பெயரால் தமிழ் இனத்தின் பெயரால் தமிழர் பழைமைவாதத் தினைப் பாதுகாத்து நிலைநிறுத்தும் காவலர்களாக மாறினர் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கற்ற வரட்டுத்தன மான நாக்திகமும்-மத எதிர்ப்பும்-வெறுமையான சீர்திருத் தமும் இத்தகைய முடிவுகளுக்கே அவர்களைக் கொண் செல்லும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டனவே யாகும்.
இவ்வாறு தமிழர்களின் பொருளாதார, அரசியல். சமூக, கல்வி, கலாசாரத் துறைகளிலான வாழ்வு அனைத்திலும் சகல சிந்தனைகளிலும் செயல்முறைகளிலும் இப்பழைமை வாதம் செறிந்து காணப்படுகின்றன. அதன் பிற்போக்கான கூறுகள் தமிழர் சமூகவாழ்வின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையினை தாமதப்படுத்தும் கனதிமிக்க காரணிகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது என்பதனைந் துணிந்து கூறுதல் முடியும்.

Page 46
88
தமிழர் பழைமைவாதத்திற்கும் எதிரான கருத்துக் களை முன் வைக்கும் போதும் அதனை தமிழர் களுடைய நீண்ட இனமொழித் தொன்மை, அவர்களது கலாசாரப் பெருமை, நாகரீக வளர்ச்சி, பழந்தமிழின் இலக்கியச் செழுமை யாவற்றையும் நிராகரித்து ஒதுக்கிவிட வேண்டும் என அர்த்தம் கொள்ளமுடியாது. தமிழர்களின் இன மொழித் தொன்மையும், அவர்களின் செழுமைமிக்க இலக்கியங்களும் அறநெறி நூல்களும் அவற்றை உருவாக்கிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மேதைகள், புலவர்கள் யாருமே புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் அல்லர், ஒதுக்கித் தள்ளவேண்டிய அவசியமோ தேவையோகூட எழமுடியாது என்பதில் இருவித கருத்துக்கு இடம் இல்லை. இவை யாவும் தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு அன்றைய சூழலில் பெரும் பங்களிப்பை வழங்கிநின்றன என்பதும் மறுக்கப்படமுடி யாதவையாகும்.
இங்கே பிரச்சினையைத் தோற்றுவிக்கும் பிரதான விடயமாக நிற்பது யாதெனில், அன்றைய சமூகச் சூழலுக்கும் தேவைக்குமாக உருவாக்கப் பட்ட நீதி நியாயங்களையும் அறநெறிகளையும் இலக்கியங்களையும் எவ்வித பகுப் பாராய்வுமின்றி அல்லது தற்கால சமூக அறிவியல் நோக்கில் நுணித்து ஆராயாது அப்படியே சமகாலத் தேவைக்கும் பழைமையின்-தொன்மையியல் பெயரால் பொருத்தி அதில் நிறைவுகாண முற்படும் பழைமைவாதப் போக்கே பிரதான கவனத்திற்குரியதாகும்.
காலத்திற்கேற்ற வகைகள் அவ்வக்
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய்- எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை
(உயிர்பெற்ற தமிழர் பாட்டு)
என்று நவயுகக் கவி பாரதி மிக அழுத்தமாகக் கூறிச்சென்ற பின்பும் அதனைச் சிந்தனையில் கொள்ள மறுத்து நிற்கும்

89
பழைமைவாதம் அறிவியல் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி மூடத்தனமாகச் செயல்படமுனையும்போதே அப்பழைமை வாதத்திற்கு எதிரான போக்கு கனல் கொள்ள வேண்டி யுள்ளது. பழைமையான யாவும் பழைமை என்பதற்காக நிராகரிக்கப்படவேண்டியதில்லை. அதே போல் புதுமை யானவை என்பதெல்லாம் சமூக வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்க முடியாது. தமிழர்களின் இனமொழித் தொன்மையில் இருந்து இன்று வரையான நீண்ட காலப் பகுதியில் மனிதகுல வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தவை அனைத்தும் போற்றப்பட வேண்டியவையாகும். அதேபோல் இன்றைய நமது சமகாலத் தேவைக்கு அவற்றில் இருந்து பெறக்கூடிய முற்போக்கான கூறுகள் யாவும் கையேற்ற முன்னெடுக்கப்பட வேண்டியதுமாகும். அதேவேளை சமூக வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பிற்போக்கான கூறுகள் யாவும் நிராகரிக்கப்பட வேண்டியவையுமாகும் அவ்வாறு நிராகரிக் கப்பட வேண்டிய தொன்றாகவே தமிழர்பழைமைவாதத் தினை அடையாளம் காணுதல் வேண்டும்.
பழைமைவாதத்தின் பிற்போக்கான கூறுகளை இனங் கண்ட மூத்த முற்போக்கு கவிஞரும், அறிஞருமான முருகையன் தனது கவிதை ஒன்றிலே மிக ஆணித்தர்மாகப் பின் வருமாறு எடுத்துக்கூறுகிறார்.
** இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற் போட்டுக் குனிந்து புறப்பட்டோம நீள் பயணம் தேட்டம் என்று நம்பி, சிதைந்த பழம் பொருளின் ஓட்டை உடைசல், உளுத்த இரவல்கள் பீத்தல், பிறுதல், பிசகி உதிர்ந்தவைகள் நைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டுச் சிந்தி இறைந்த சிறிய துணுக்குவகை இப்படியான இவற்றையெல்லாம் சேகரித்து மூட்டி கட்டி, அந்த முழுப் பாரம் கண் பிதுக்கக்

Page 47
90
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும் சற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வுபெற்றுப் புத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணவில்லை. மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக் கொட்டி உதறிக் குவிகின்ற கூளத்துள் வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ சற்றேனும் இல்லோம்.
சலிப்பும் வலிப்பும் எழ, பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த ஊருகிறோம், ஊருகிறோம் ஓயாமல் ஊருகிறோம்
வேண்டாத குப்பை விலக்கி, மணிபொறுக்கி அப்பாலே செல்லும் அறிவோ குறைவு.
g?! இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு; பண்பாட்டின் பெயரால் பலசோலி எங்களுக்கு."
(மாடும் கயிறுகள் அறுக்கும், கவிதைத் தொகுதி: (இ. முருகையன்)
இன்று இலங்கையில் தமிழர்கள் தமது தனித்துவமான தேசிய இன அடையாளத்தை நிலைநிறுத்தவும் அதனைப் பாதுகாத்து முன்னெடுக்கவும் போராடி வருகின்றனர். அப்போராட்டம் முழுமைபெற்று முன் செல்வதற்கும், வளர்ச்சிகண்டு வெற்றிபெறுவதற்கும் தமிழர் சமூக வாழ்வின் வளர்ச்சிக்கு இதுவரை தடைக்கற்களாக அமைந்த பல்வேறு காரணிகளில் ஒன்றாக இருந்து வரும் தமிழர் பழைமைவாதம் என்பது உரியமுறையில் இனங்காணப்பட்டு அவை சமூக ரீதியில் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். அதனை அடையாளம் காட்டுவது அறிஞர்களின் காலக்கடமையா

91.
கின்றது. உடைத்து நொறுக்கி விட்டெறிய வேண்டியது தமிழர்களின் சமூக வாழ்வு வளர்ச்சியில் அக்கறையும் சிரத்தை யும் கொண்ட அனைத்தும் பிரிவினரினதும் தவிர்க்க முடியாத தேவையாகின்றது. உசாத்துணை நூல்கள்
1. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
க. கைலாசபதி, 2. மண்ணும் மனித உறவுகளும்
கோ. கேசவன். 3. சமூகவியலும் இலக்கியமும்
க. கைலாசபதி. 4. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்
வெகுஜனன்-இராவணர் 5. இன்றைய உலகிலே இலக்கியம்
இ. முருகையன்.

Page 48
பெண்விடுதலை வேண்டும் க. தணிகாசலம்
பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்ற குரல் இன்று உலகின் பலபாகங்களிலும் பரவலாக ஒலிக்கிறது சமூதாய நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கரையுள்ள அரசியலா ளர்கள், மாதரியக்க முன்னோடிகள் அனைவரும் இன்று இதனை முதன்மைப் படுத்துகின்றனர். புதிய சமூக அமைப்பை உருவாக்கும் நோக்குடன் போராடிக் கொண்டிருக் கும் விடுதலை அமைப்புகள் அனைத்தும் பெண் விடுதலையை தமது பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளன
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அங்கொன்றும் இங் கொன்றுமாக எழுந்த இவ்விடுதலைக் குரல்கள் சமூகப் புரட்சி நடைபெற்ற நாடுகள் அனைத்திலும் ஓரளவு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகள் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் அனைத்திலும் பெண்கள் விழிப்படைவதும் விடுதலை யுணர்வு பெறுவதும் மந்த நிலையிலேயே உள்ளது இன்றைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளால் பெண்கள் வாழ்வில் சில புறத்தோற்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகின் றன. எனினும் பல்வேறு நிலைகளிலும் பெண் ஒடுக்குமுறை யும் அதனால் ஏற்படும் துன்பதுயர்களும் தொடரவே செய்கின்றன.
பெண்கள் உழைப்பில் ஈடுபட்டுப் பொருளிட்டும் இக் காலத்திலும் பெண் குழந்தை பிறக்கும் பொழுதே பெற்றோர் முகம் சுருங்கிவிடுகிறது. எந்தவித உழைப்பும் பெறுமானமும் இன்றி வீட்டு வேலைகளைச் செய்வதுடன் இரட்டை சுமை யாக சமூக உழைப்பிலும் இன்று பெண்கள் ஈடுபடுகின்றனர்

93
சீதனக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளபவர் களும் வயதெல்ல்ை கடந்தும் மணமாகாமல் சமூகத்தால் ஒதுக்கப்பட்டுத் தனிமையில் வாடுபவர்களும் இருக்கின்றனர். இன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று தொழில் பார்க்கும் ஆண்களுக்கு மணப் பெண்களாகச் செல்வோர் பெற்றோரின் தீர்மானத்துடன் வெறும் நிழற்படங்களை நம்பி மணமகனைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை எற்பட்டுள்ளது. அத்துடன் மணப்பெண்கள் தங்களை விட வயதில் மிக குறைந்தவர்களாகவும், வெள்ளைத்தோல் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களது பிரதான எதிர்பார்ப்பாகவும் வளர்ந்து வருகிறது. ஆணாதிக்க நோக்குடன் ஆண்களால் அடித்துத் துன்புறுத்தப்படும் குடும்பப் பெண்கள் சமூக கட்டுக்கோப்புக்களை மீறும்துணி வற்றவர்களாக கண்ணிரும் கம்பலையுமாக வாழும் நிலை இன்றும் நிலவுகிறது. உயர்கல்வியும் வேலை வாய்ப்புக்களும் கூட இத்துயர்களைப் போக்கவில்லை.
எமது நாட்டின் கிராமப்புறங்களில் விவசாயவேலைகளில் ஈடுபடும் பெண்கள். ஆண்கள் பெறும் கூலியில் அரைப்பங் கிலும் குறைவானதையே பெறுகின்றனர். நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் குறைந்த சம்பளத்திற்கே வேலைக்கமர்த்தப்படுகின்றனர். தேசிய வரு மானத்தில் ஒருபகுதியை ஈட்டித்தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் பெருந்தொகையான பெண்கள் உயர்ந்த மலைகளில் மிகக் கடுமையாக உழைத்தும் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர். அரசின் திறந்த பொருளா தாரக் கொள்கையால் உருவான சுதந்திர வர்த்த வலயத்தில் பெருந்தொகையான இளம்பெண்கள் தொழிற்சங்க உரிமைகள் எதுவுமற்று கெயடுக்கின்ற கூலியை பெற்று இரவு பகலாக உழைக்கிறனர். மத்தியகிழக்கில் பணிபுரியச் சென்ற பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டமையே அங்கு அவர்கள் அனுபவிக்குங் கொடுமைகளுக்கு எடுத்துக்காட் டாகும். பாலியல் ரீதியான பாகுபாடுகளும், வன்முறை களும், யுத்தகாலங்களிலும், இனமதக் கலவரங்களின்

Page 49
94
போதும் பெண்கள் எதிர்நோக்கும் பெருந்துயராகவே இருந்து வருகிறது.
இத்தகைய துயர்நிலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும். இதற்கு பெண்கள் அறிவியல் ரீதியில் விழிப்படைவதும் ஒருங்கிணைந்து செய்ற்படுவதும் அவசிய மாகும். வரலாற்றுத் தரவுகளை தொகுத்து மார்க்ஸ். ஏங்கெல்ஸ், ஆகியோரால் வெளியிடப்பட்ட பெண்ணடி மையின் ஆரம்பம் பற்றிய கருத்துக்கள் பெண்விடுதலைக்கு உரமூட்டுவதாகும். மனிதகுல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் நிலைபெற்றிருந்த தாயுரிமைச் சமூதாயத்தில் பெண்தலைமை பெற்றிருந்தாள், உரிமை பெற்றிருந்தாள். தாயை வைத்தே பிள்ளைகளை அடையாளங்காணும் குழு மணமுறையும் கூட்டுவாழ்க்கையும் அன்று இருந்தது. தமக்கென எதையும் சேர்த்துவைக்க அறியாத கூடி உழைத் ததை கூடியே உண்டு வாழ்ந்த அப்புராதன பொதுவுடைமைச் சமூதாய்ம் காலப்போக்கில் தகர்ந்துபோனது. தனியுடமைச் சமூதாயம் உருவானது. சொத்துக்குரிய சரியான வாரிசை அடையாளங்காணும் தேவை ஒருதார மணக்குடும்ப முறையை உருவாக்கியது, அன்றிலிருந்து பெண் சமூக உழைப்பி லிருந்து பிரிக்கப்பட்டு வீட்டு வேலைக்கு உரியவளாக்கப் பட்டாள், ஏங்கெல்ஸ் அவர்களின் கூற்றுப்படி'வரலாற்றில் தோன்றிய முதல் வேலைப்பிரிவினை அதுவானது முதல் அடிமையும் பெண்ணானாள்’. பிற ஆடவனை நிமிர்ந்து நோக்காத அடக்கமும் கணவனுக்கு அஞ்சி, நாணி ஒடுங்கும் தன்மையும், எதிருரை பேசாத அடிமை சிறுமதியும் பெண் களின் பண்பாக படிப்படியாகப் பேணிவளர்க்கப் பட்டது.” *ஒருவனுக்கு ஒருத்தி" என்று நாம் பெருமையுடன் பேசிக் கொள்ளும் பழைய பண்பாட்டு உறவுமுறைகள் தனியுடமை அமைப்பின் வ்ெளிப்பாடாக உலகெங்கும் தோற்றம் பெற்ற வையே.
அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த ஆளும் வர்க்கம் தாம் அனுபவிக்கும் போகப் பொருட்களில்

95
ஒன்றாகவே பெண்களையும் ஆக்கிகொண்டது. இயற்கை பாலியல் கவர்ச்சிக்காக, பெண்களுக்கு அளித்த உடலழகு அன்றைய ஆளும்வர்க்கத்தினருக்குப் போதவில்லை. பொட் டிட்டு மையிட்டு, பூக்கள் சூடி, பட்டும் சருகையும் சுற்றி, உடலெங்கும் ஆபரணங்கள் மாட்டி அழகு பார்த்து, உடலழகை கூட்ட உண்டியைச் சுருக்கியும், இடையை மெலி தாக்க ஒட்டியாணமும், கால்களை சிறுகவைக்க இரும்புக் காலணிகளையும் மாட்டிவைத்து உணர்வற்ற பாவைகளாக தமது மாளிகைகளில் கொலுவைத்தது.
கலை என்ற பெயரில் நிர்வாணச்சிலைகளை கோவிற் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் செதுக்கி வைத்தது. மதவாதிகள் தமது மனோநிலைகளுக்கேற்ப் மாயப்பிசாசுகளாகவும் கோயில் தெய்வங்களாகவும் பெண்களை ஆக்கிக்கொண்டனர். அன்றைய புலவர்கள்கூட பிரபுத்துவ வர்க்கத்தின் பெருவெறியைத் தீர்க்க பெண்களின் அங்கங்களை பலவாறாக வர்ணித்துச் சென்றனர். அறநெறி உரைத்த அறிஞர்களும் ஆளும் வர்க்கத்தின் சுகபோகங் களுக்கு எப்படிப் பெண்கள் துணைபோக வேண்டும் என் பதையே பெண்களின் கடமைகளாக வகுத்துவைத்தனர்.
ஆளும் வர்க்கம் அறிவியல், மத, கலை, கலாச்சாரங் களுக்கூடாக ஊட்டிய இக்கருத்துக்களை அடிமைத்தனத் திலும் ஏழ்மையிலும், அறியாமையிலும் மூழ்கியிருத்த அன்றைய ஆண்களும் பெண்களும் ஏற்று நடத்தினர். ஆளும் வர்க்கம் வாழ்ந்த வாழ்வே உயர்ந்த வாழ்வுக்கு இலக்கணமானது.
முதலாளித்துவமும் பெண்களை ஒடுக்குவதில் தனது பங்கைவிட்டுவைக்கவில்லை. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரக் காட்சிப் பொருட்களாகவும், புத்தக அட்டைகள் முதல் சினிமாப் படங்கள்வரை நிர்வாணக் கோலங்களைக் காட்டிக் காசாக்கும் குறுக்கு வழிகளைக் கையாள்கிறது. கதாநாயகியை வில்லனிடமிருந்து காப்.

Page 50
96
பாற்றும் வீரயுகக்காதலையும் தவறான பழமைக் கருத்துக் களையுமே பெண்களிடம் மேன்மேலும் திணிக்கிறது.
இதனால் அறியாமையும், பழைமையையும் மூடத் தனங்களையும் ஆண்களைவிட அதிகம் பேணுபவர்கள் பெண்களாகவே உள்ள்னர். இவைகளை இவர்கள் மீற முடியாத சமூதாய விதிகளாகவே கருதுகின்றனர். அடிமைத் தனத்தையும், ஒடுக்கு முறைகளையுமே தமக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி அன்பு, காதல், தாய்மை, பதிவிரதா தன்மை என்று ஏற்று வாழும் அடிமையுணர்வு இன்றும் தொடர்கிறது. ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் இடையே அன்பும், காதலும், தியாகமும், உள்ளது என்பது எவ்வளவு பொய்யானது ஏமாற்றானது.
பல்லாயிரம் ஆண்டுகாலம் நீடித்து உறுதிபெற்ற ஆணர திக்கச் சமூதாயம் மனிதகுலம் தாண்டி வந்த பிரபுத்துவ, முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டங்கள் அனைத்திலும் பெருமளவு மாற்றமடையாமல் தொடர்ந்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் ஒருதாரமண முறையும், தனி யுடைமைப் பொருளாதாரப் பிடிப்பும் மாறுதலடையவில்லை. அதுபோலவே ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் மொழி, மத, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவு மாற்றமடையவில்லை. இவையே பெண்ணடிமை இன்று வரை நீண்டு தொடரக் காரணமாகிறது.
முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும் சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டும் தங்கி நின்று ஒரு குடும்பம் வாழ முடியாத நிலையை உருவாக்கிய போது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இரட்டைச்சுமைகளும், ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள், பிரிட்டன், அமெரிக்கா, போன்ற தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே முதலில் ஏற்பட்டன. இன்று தீவிர பெண்நிலை வாதிகள், மார்க்ஸியப்

97
பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவினராக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் தீவிர பெண்நிலை வாதத்கை ஆதரிப்போர் ஆண்களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயங்கங்களை ஆதரிக்க மறுக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும், மார்க்கியப் பெண் நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து பொதுப் போராட்டங்களை ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத எமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல் உடற்கூற்றுக்காரணங்கள் எதனைக் கூறினும் இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள், ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராடவேண்டும்.
பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங் களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டும். பகுதியும் முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்தமுடியும்.
நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்கு முறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாச்சாரம், மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரண மாகிறது. முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த

Page 51
98
ஒருசாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:
மனித வாழ்வைத் தீர்மானிப்பது எண்களோ, ஆண்டவன் தலையில் எழுதிய எழுத்துக்களோ, மாறும் கிரகங்களோ அல்ல. ஒரு நாட்டின் அரசும் அதன் ஆளும்முறையும்தான் என்பதே உண்மை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பணமும், பண்டங்களும், சுதந்திரப் போராட்டச் சந்தைகளும் அவர்களையே அந்நியமாக்கி, அநாதைகளாக்கியுள்ளது. அதிஷ்டத்தையும் அமானுட சக்திகளையும் நம்பிவாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. அரசை அமைத்தவர் களும் அதனைச்சாந்தவர்களும் தம்மை அதிஷ்டசாலிகளா கவும், ஆண்டவனின் ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை கூறிக்கொள்கின்றனர்.
எனவே மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம், மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் மார்க்கத்தையே காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலை பெற்ற நாடு களில் பெண் ஒடுக்குமுறை போன்ற பல்வேறு ஒடுக்குமுறை களும் முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந் துள்ளது.
மார்க்சியம் வளர்ச்சியடையாத மூடுமந்திரம் அல்ல. அது இயங்கியலை தனது தத்துவ அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராயுதம். வரலாறு என்பது என்றும் ஒரு பக்கமானதல்ல, கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகள் எவராலும் எதிர்பார்க்கப்படாததுமல்ல, ஒடுக்கு பவர்களுக்கும் ஒர்வரலாறும் வளர்ச்சியும் உண்டு. மார்க்சியம் பிறந்தபோதே அதைப் பூதமாகக் கண்டு அஞ்சியவர்கள் அதன் போர்க்குணம் கண்டு மிரண்டிருக்கிறார்கள். நேர் நின்று எதிர்க்க வலுவற்று புறமுதுகிட்டிருக்கிறார்கள். இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்து கொண்டு வளைந்து கொடுக் கவும் நிமிர்ந்து நிற்கவும் கற்றுக் கொண்டுள்ளார்கள். பல

99
வகையான பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான அரசு சார் பற்ற உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப்பரவியுள்ளன இதன்மூலம் சிறு சிறு உதவிகளை வழங்கி விட்டு பெருந்தொகையான இலா பத்தை கொள்ளையடித்துச் செல்வதுடன் தமது கலாச்சார சிந்தனைகளைப் பரப்புவதிலும் வெற்றிகண்டுள்ளனர். குறிப்பாக சிறுமுதலாளித்துவ சிந்தனை உலகெங்கும் ஊட்டி வளர்க்கப்படுகிறது.
முழுமனித குலத்தையுமே ஒடுக்குகின்ற போர்வெறி கொண்ட அவர்கள் சோஷலிச அரசுகளையும் சோஷலிசத்தை நோக்கிய விடுதலைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்து வதற்காக தாமும் சில ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட் டங்களை வளர்த்தெடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர். உதர்ரணங்களுள் ஒன்றாக கொரிய மாணவர்களினதும் மக்களினதும் வீரஞ்செறிந்த போராட் டத்தை எதிர்த்து நிற்கும் அமெரிக்கா, சீனப்பல்கலைக்கழகச் சுவர்களில் ஏதாவது தெரிகிறதா என்று ஆராய்கிறது. இதனால் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் தவறான தென்பதல்ல. அவை மக்களின் நலன்களிலிருந்தா அல்லது ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களிலிருந்தா முன்னெடுக்கப்படுகின்றன என்பதே இங்கு பிரதான கேள்வி யாகும். பெண்விடுதலை இயக்கங்கள் முன்னும் இப் பிரச்சனை எழவே செய்கிறது. மார்க்சியப் பெண்நிலை வாதிகள் இதில் தெளிவாகவே உள்ளனர்.
பத்தென்பதாம் நூற்றாண்டின் பின்னர் நடந்த பல்வேறு விடுதலைப் போராட்டங்களிலும் பெண்விடுதலைக்கான குரல்கள் எழுந்தன, ருஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி இந்திய சுதந்திரப் போராட்டம், கியூபாபுரட்சி கொறியா, வியட்னாம், கம்பூச்சிய, மற்றும் தென்னமெரிக்க விடுதலைப் போராட்டங் கள் போன்ற அனைத்திலும் இக்குரல்கள்எழுந்தன, பாரதி யின் பெண்விடுதலைக்கான அறைகூவல் தமிழர்கள் மத்தியில்

Page 52
1.00
மட்டுமல்ல இந்தியாவெங்கும் ஒலித்தது. ஆனால் பெண் விடுதலையை உறுதியான கொள்கையாக ஏற்காத இந்தியா போன்ற நாடுகளில் வெறும் போர்க்கால சமத்துவக் குரலாக நலிந்து ஒடுங்கியுள்ளது. போர் என்பது ஆயுதத்தை மட்டு மன்றி மனிதவளத் தேவையையும் அடிப்படையாக கொண்டது. இந்தவகையில் மக்கள் தொகையில் பாதிப் பேர்களான பெண்களும் ஆயுதம் ஏந்துவது வரலாற்றில் புதியதல்ல.
இன்று உலகெங்கும் நடைபெறும் விடுதலை போராட் டங்கள் அனைத்திலும் பெண்கள் பெரும்பங்கு வகிக் கின்றனர். எமது நாட்டில் 1966ஆம் ஆண்டில் வடபகுதியில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டங்களிலும், 1971ஆம் ஆண்டில் தென்பகுதியில் ஜே.வி.பி. இயக்க நடவடிக்கைகளிலும் பெண்கள் பங்குகொண்டனர், 1983இல் இருந்து கூர்மை அடைந்துள்ள தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்குகொண்டு வருகின்றனர். சமூகத்தில் இன்றும் நிலவும் பெண் ஒடுக்குமுறையின் தூண்டலே பெருந்தொகையான இளம்பெண்கள் இவ்விடுதலை போராட்டங்களில் பங்கு பற்றுவதற்கு காரணமாகும். பெண்கள் ஆயுதம் ஏந்திப் போர் முனிைகளில் நிற்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பெண் விடுதலையை ஒரு உறுதியான கொள்கையாக ஏற்று செயற்படுத்துவதன் மூலமே ஒருபுதிய சமூக மாறுதலை ஏற்படுத்த முடியும்.
தனியுடைமை அமைப்பை வரலாற்றில் உருவாக்கி உறுதிப்படுத்தியது ஒருதாரமணக் குடும்பமும் அதன் வழித் தோன்றிய அரசும் எனலாம். இரண்டும் இன்றுவரை தந்தை அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் இயல்பாகப் பேணும் நிறுவனங்களாகவே உள்ளன அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் காரணமான அரசை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றி காலப்போக்கில் உதிர்ந்து மறைந்து போகச் செய்துவிடும் என்ற மார்க்சியசத்தின் அதிநீண்டகால

0.
இலட்சிய நோக்கு பெண்களை ஒடுக்கும் ஒருதார மணக் குடும்பத்தின் அழிவையும் அவ்வாறே சுட்டிக்காட்டிகிறது.
உலகில் எந்த ஒரு நிகழ்வும் இயக்கமும் திடீரென நிகழ்வதில்லை. ஒரு இயங்கியல் வளர்ச்சிப்போக்கு எங்கும் வியாபித்திருக்கிறது. அரசின் தோற்றமும், வளர்ச்சியும் உறுதிப்பாடும் உதிர்ந்து போதலும் இவ்வியங்கியல் வரை யறைக்குட்பட்டது. அதுபோன்றே ஒருதார மணக்குடும்பத் தின் வளர்ச்சியும் மறைவும் அமைந்துள்ளது, ஒரு ஒடுக்கும் அரசுக்கெதிரான போராட்டத்தின் போதே விடுதலை பெற்று உருவாக போகும் அரசின் கொள்கை அதிகாரம், ஆட்சி முறை, படிப்படியாக உருவாக்கப்படுகிறது. அதுபோன்றே ஒருதார மணக்குடும்பத்தின் அழிவின்போதே படிப்படியாக ஒருபுதிய குடும்பத்தின் தன்மைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. அரசியலில் பழைய அரசை அழிப்பதோடு புதிய அரசை உருவாக்கும் நடைமுறையை மறுக்கும் அராஜக வாதம் போல பெண் விடுதலையில் ஒருதார குடும்ப அழிவை மட்டும் தீவிர பெண்நிலைவாதத்தை ஆதரிப்போர் ஆடை களை மாற்றுவது போல் ஜோடிகளை மாற்றவே விரும்பு கின்றனர். சுதந்திரம் என்பது பழைய நிலைக்கு மீள்வதல்ல. மனிதர் தம்மை மேன்மேலும் ஒழுங்கமைத்துக் கொள்ளவே வேண்டப்படுகிறது.
இன்றைய சமூக்த்தின் சிறிய அலகான குடும்பம் என்ற உறவுமையம் பலநிலைகளில் உள்ளவர்களுக்கும் சுமையாகப் படுகிறது. பெண்ணடிமையை நிலைநிறுத்தும் ஒருகளமாக குடும்பம் அமைவதால் பெண்நிலைவாதிகளுக்கு அது ஒரு சிறைக்கூடமாகத் தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள ஆண் களுக்கு முதலாளித்துவப் பொருளாதார சிக்கல்களுடன் கூடிய குடும்பப் பொறுப்பு தமது ஆயுளைமுடித்து ஆண், பெண், இருவரது ஆளுமைகளையும் அழிக்கும் பொருளியல் பிணைப் பாகப்படுகிறது. எதிலும் பொறுப்பற்று வாழவிரும்பும் ஆண்
ஆ-7

Page 53
102
களுக்கும் பெண்களுக்கும் முன்னால் குடும்பம் ஒருதடைச் சுவராக எழுந்து நிற்கிறது.
பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டு குடும்ப உறவு களை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் மேற்கூறிய முரண்பாடுகள் நிறைந்த தனிக்குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சி யையும், போராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.
இத்தகைய காரணங்களை வைத்து இக்குடும்ப அமைப்பு இல்லாதொழிய வேண்டும், மாற்றத்துக்குட்பட வேண்டும், என்ற இருவகையான கருத்துக்கள் இன்று பெண் விடுதலையை முன்னெடுப்பவர்களிடம் காணப்படுகிறது. குடும்பம் என்ற அமைப்பின் தோற்றத்திற்கும், அது நிலை பெற்றிருப்பதற்குமான வரலாற்றுக் காரணிகள் முற்றாக அழியும் வரை குடும்ப அமைப்பு நிலைத்திருக்கும். எனினும் உலகெங்கும் நடந்துவரும் பெண் விடுதலைக்கான சிறுசிறு போராட்டங்களின் பேறாகவும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்பவும் குடும்ப அமைப்பில் புதிய மாறுதல்கள் இன்று ஏற்பட்டு வருகின்றன.
முன்பு தாய், தந்தையர், பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக் குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக் குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர், உற்றார் உறவினருக்குக் கீழ்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலை பெற்று வருகின்றாள். சோஷலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவு முறைக்கான கருக்கள் வளர்ந்து வருகின்றன. அங்கு திட்டமிட்ட கல்விமுறையும், வயது வந்த பெண்கள்

103
அனைவருக்கும் வேலை வாய்ப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம் பெண்கள் பெற்றோரில் தங்கிநிற்கும் நிலைமாறு கிறது. தனிசொத்தின் பெறுமதி அங்கு குறைக்கப்படுவ தனால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கை துண்ை வனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகிறாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக கணவனில் தங்கி வாழ்ந்து அவனுக்கு அடிமையாகும் நிலை யிலிருந்தும் அவள் விடுபடுகிறாள் இணைந்து வாழ முடியாத அளவிற்கு இருவரிடமும் மனமுறிவு ஏற்படும்போது நடுவராக இருந்து இருவரும் மீண்டும் புரிந்து கொள்ளலை ஏற்படுத்தி இணைந்து வாழவைப்பதற்கு குடும்ப நல மன்று கள் உண்டு. முற்றிலும் இணைய முடியாத அளவிற்கு உறவு முறிவுகள் ஏற்படும்போது பிரிந்து செல்வதற்கான சட்ட ரீதியான உரிமையும் அதற்கான சமூகத்தின் அங்கிகாரமும் உண்டு. எனவே சமத்துவ அடிப்படையில் உண்மையான அன்பு காதல் என்ற அடிப்படையில் பெண்களும் ஆண்களும் இணைந்து வாழும் புதிய குடும்ப உறவுக்கான ஆரம்பம் அங்கு நிகழ்கிறது அங்கு ஓரிரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் என்ற திட்டமிட்ட வாழ்க்கைமுறை பெண்களுக்கு இருந்த பெரும் சுமையைக் குறைக்கிறது அரசினாலும் தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும பிள்ளைகள் பரா மரிப்பு நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பலுவைக் குறைக்கிறது சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான். முதியவர்களான போது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு. இதனால் சமூக நலனை நோக்கி திட்டமிடப்படாத பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புகளில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலை பெறக்கூடிய வாய்ப்புக் கிட்டுகிறது. -

Page 54
104
அரசே அவர்களது நலன்களை உறுதி செய்வதால் தனி யுடைமை அமைப்பு காலம் காலமாக வளந்துவந்த தன்னல வெறி உணர்வு தளர்வடைகிறது. பிற்ர்தலம் பேணும் பொது நோக்கு உருவாகிறது. ஆன்மீகவாதிகள் கற்பனையில் கண்ட 'நான்” “எனது” என்ற மமதையும். ஆணாதிக்க உணர்வின் அதியுயர்ந்தபடியான ஆணகம் என்ற பொருள் படும் "ஆணவம்’ என்ற அகந்தையும் அழிந்த மனிதன் அங்கு உருவாகிறான் "நாம்” " எமது” என்ற சமூக உணர்வோடு, தனக்குள் உலகையும் உலகினுள் தன்னையும் காணும் புதிய மனிதன் உருவாகிறான். பெண்களை மட்டுமல்ல இனம் மொழி, மதம், சாதி, நிறம், நாடு : தேசம் என்ற எல்லை களைக்கடந்து மனிதரை மனிதர் நேசிக்கும் மானுடத்தின் உயர்பண்பு அங்கு மலர்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகாலம் நாம் அழிழ்ந்து கிடந்த சேற்றுக்குள் இன்றும் இருந்துகொண்டு சிந்திக்கும் போது இவைகள் கனவாகலாம். மனிதப்பதிலிகளையும், பரிசோ தனைக் குழாய் குழந்தைகளையும் உருவாக்கிவிட்டகாலம் இது. மனிதகுலம் வளர்ந்து வருகிறது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு மக்கள் சுதந்திரத்தை உணர்ந்துவருகிறார்கள். ஒடுக்குமுறைகளை இனம் காணு கிறார்கள். விழிப்படைகிறார்கள். அது வர்க்கவிடுதலை தேசிய இனவிடுதலை, தேசவிடுதல்ை என்ற பலமுனைகளில் இன்று வெளிப்படுகிறது. இவைகளில் பெண்களின் பங்கும் இணைவதால் பெண்விடுதலையும் இவைகளால் உந்தித் தள்ளப்படுகிறது. வளரும் இவ்விடுதலை உணர்வுகள் மக்கள் நலன் சார்ந்திருந்தால் வரலாறு முன்னேபாயும். ஏகாபத்தியங்களின் வழிகட்டலுக்குட்பட்டால் சிறிது வேகம் தணியும். ஆனால் வரலாறு என்றும்முன் நோக்கியே செல்லும்
பெண்விடுதலையும் சமூகவிடுதலையும் ஒன்றை ஒன்று சாந்து நிற்பவை பல்லாயிரமாண்டின் பழை சிந்தனையின்

105
வெளிப்பாடான பெண்ஒடுக்குமுறை ஒரு சமூகப்புரட்சியி னாலும் அதைத்தொடர்ந்த பலபண்பாட்டுப் புரட்சிகள் மூலமே முற்றுமுழுதாக ஒழிக்கப்பட முடியும். அதுபோன்றே மக்கள் தொகையில் பாதிப் பேர்களான பெண்களின் விழிப்புணர்வும் பங்குபற்றலுமின்றி அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் சமூகப்புரட்சிச் சாத்திய மாகாது. எமது நாட்டின் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்கள் சுதந்திரத்தின் அடிப்படையில் உருவாகும் போதே ஏனைய சுதந்திரங்களும் நின்றுநிலைக்கும். எனவே ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதித்து ஒன்றுபட வேண்டும் பெண்விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

Page 55
தேசிய இலக்கியமும் கட்சி இலக்கியமும் ந. இரவீந்திரன்
கலை - இலக்கியத்திற்குப் பயன்பாட்டுக் குறிக்கோள் ஏதும் உண்டா என்ற அடிப்படையான கேள்விக்கு இன்னமும் விடை பெறப்படாதிருக்கலாம்; அழகியலுணர்வை தோற்று விப்பதற்கு அப்பால் கலை - இலக்கியம் வேறு பயன்பாடெ தையும் கொண்டிருக்கக்கூடாதென்ற கருத்தும், கலை - இலக்கியத்திற்குச் சமூகப்பயன் பாட்டுக்குறிக்கோள் இருக்க வேண்டும் என்ற கருத்தும் எழக் காரணமான அந்த அடிப் படைக்கேள்வி ஒரு புறமிருக்க, பயன்பாட்டு நோக்கத் துடனான படைப்புகள் ஏராளமாய் உற்பத்தியாகியவாறி
ருப்பது யதார்த்தமாயுள்ளது,
தமிழிலக்கிய வரலாற்றை ஆதாரமாக எடுத்தால் பயன் பாட்டுக் குறிக்கோளை நிராகரிக்கும் வாதம் மிகவும் பலவீன தசையடையும். ஆரம்பந்தொட்டு இன்றைய நவீன இலக்கி யங்கள் வாை பெரும்பாலன படைப்புகள் பயன்பாட்டுக் குறிக்கோளுடனேயே ஆக்கப்பட்டிருப்பதை யாரும் மறுக்க மாட்டார்.
சங்ககாலப் பாடல்களாய் அறியப்பட்டவை வீரம், காதல், கொடைச்சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவன எனப் பொதுவாகக் கூறப்படுவதுண்டு; வீரம், காதல், கொடைச் சிறப்பு ஆகியன தமிழரின் தனிப்பண்பு என்று ஒருசாரார் கூறிய போதிலும் ஒப்பியலாய்வுகள், ஏனைய மொழி இலக்கி யங்களின் வீரயுகப் பண்புடன் நெருக்கமுடையதாய் இத்தமிழர் பாரம்பரியத்தை இனங்காட்டியுள்ளன. இவற்று டாகச் சில தனித்துவ அம்சங்களை அடையாளங்காண முடிந்தாலும், இவை வீரயுகப்பண்பையே பெரிதும் வெளிப் படுத்துகின்றன.

107
புராதனப் பொதுவுடைமைக் குலமுறையைத் தகர்த்து மூவேந்தர் ஆளுகைக்குள் தமிழகத்தைக்கொணரும் போர்த் திறத்துக்கு ஏற்புடையதாக வீரம் அங்கே பாடுபொருளா யிற்று; தனியுடைமை அமைப்பு வேண்டிநிற்கும் குடும்ப அமைப்பிற்கு (தன் சொத்தைத் தனது வாரிசுக்கு விட்டுச் செல்லும் தந்தை ஆதிக்கச்சமுகம் ஆணின் விருப்பத்துக்கு அமை வாகப் பெண்ணை ஒரு குடும்ப வரையறைக்குள் கட்டுப்படுத்து வதற்கு) ஏற்புடையதாகக் காதல் அங்கே பாடுபொரு ளாயிற்று; சமூகத்திலிருந்து பிறந்து சமூகத்துக்கு மேலான தாய்த் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அரசை நியாயப் படுத்தும் சாதனமாய் கொடைச்சிறப்பு அங்கே பாடுபொரு ளாயிற்று.
சங்கமருவிய காலப்படைப்புகள் வெளிப்படையாகவே நீதிபோதனைக் குறிக்கோளைப் பறைசாற்றுவன. சங்க மருவியகாலம் அறநூற்காலம் எனவும் சொல்லப்படுவதைக் கவனிக்கலாம்.
பக்திப்பேரியக்கப் படைப்புகளும், பின்வந்த காப்பியங் களும் சிற்றிலக்கியங்களும் அநேகமாய் ஆன்ம ஈடேற்றக் குறிக்கோளை நேரடியாயோ மறைமுகமாயோ உணர்த்தி நிற்கும். நாயக்கர் காலப்படைப்புகளில் பல பிரபுக் குலத்தின் இச்சைக்கு இரைபோடுவதாய் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
வெறும் அழகியல் ၈ -☎ff၈] வெளிப்பாட்டுக்கான இலக்கியங்கள், வேறு வார்த்தைகளில் கூறின் "கலை கலைக்காக’ என்ற தூயநோக்குடைய இலக்கியங்கள், காணக்கிடைப்பது மிக அரிது. இந்த நோக்கைச் சாத்திய மாக்க முயன்ற க, நா. சு. கூட ஒரு சமூகக் குறிக்கோளுக்காக தம் படைப்புகளைக் களமாக்கிக் கொண்டதை பேராசிரியர் க. கைலாசபதி காட்டியுள்ளார்.
அந்தவகையில் இலக்கியம் ஒரு குறிக்கோளை வெளிப் படுத்துவது தவிர்க்கவியலாதது. அக்குறிக்கோளின்தன்மைக்

Page 56
108
கேற்ப சமூக இலக்கியம், சமூகச்சீர்திருத்த இலக்கியம், வரலாற்று இலக்கியம், தேசிய இலக்கியம், கட்சி இலக்கியம், அரசியல் இலக்கியம். இதை மிகக் கறாரான வரையறை யாகக் கொள்ளவேண்டியதில்லை; ஒவ்வொரு படைப்புக்கும் செயற்கையான பகுப்பை ஏற்படுத்தவேண்டிய கட்டர்யமு மில்லை.
சில படைப்புகள் அவை வெளிவந்த காலத்தில் அரசியல் இலக்கியங்களாக இனங்காணப்பட்டிருக்கலாம். படைப்பாளி தன்னளவில் அரசியல் இலக்கியமாகவே அவற்றை உருவாக்கியிருக்கவுங்கூடும். ஓரிரு தசாப்தங்கள் கடந்தபின் அத்தகைய படைப்பொன்றை ஒருவர் பார்க்க நேரும்போது அவ்வாறு அரசியல் இலக்கியமாக அதை உணராமல், வரலாற்று இலக்கியத்துக்கான குணாம்சம் மிகையாக இருப் பதாகக் கூறக்கூடும். உண்மையில் அத்தகைய படைப்பு களில் இத்தகைய இரு அம்சங்களும் பொதிந்திருக்கும், (க. தணிகாசலத்தின் "பிரம்படி’ சிறுகதைத்தொகுதி அரசியல் இலக்கியமா, வரல்ாற்று இலக்கியமர் என்ற சர்ச்சை கிளப்பப் பட்டதை இங்கு நினைவு கூரலாம்.)? இரு அம்சங்களின் இணைப்பை வைத்து அரசியல் இலக்கியமனைத்தும் பின்னர் வரலாற்று இலக்கியங்களாய்க் கருதப்படலாம் என்றோ, வரலாற்று இலக்கியங்கள் அனைத்தும் ஆக்கப்பட்டபோது அரசியல் இலக்கியமாக இருந்தன என்றோ சொல்ல (piqu Tigj.
பிரதான அம்சம், கறாரான வரையறை சிலவேளை பொருந்தாமற் போகலாம் என்பதுதான். அதற்காக இவ்வாறு வகைப்படுத்தல் ஏற்புடையதல்ல எனக்கூற முடியாது. மிகையாக வெளிப்படும் அம்சத்தைக் கொண்டு ஒரு வகை இலக்கியமாக இனங்காணல் சாத்தியமானதாகும் - ஏனைய அம்சங்கள் பொதிந்திருப்பதை இந்த வரையறுப்பு மறுதலிக்காது.
வேறுபடுத்த முடியாத சிக்கலான வரையறுப்பு தேசிய இலக்கியம், கட்சி இலக்கியம், அரசியல் இலக்கியம் என்ப

09
வற்றிடையேயும் உண்டு. இவை தேசிய விழிப்புணர்வு என்ற ஒரே வரலாற்று அடிப்படையிலிருந்து வெளிப்பட்டி ருப்பது அதற்கான பிரதான காரணியாகும். தமிழிலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை இம்மூன்று வகைகளின் முன்னோடியாக பாரதியை இனங்காண்கிறோம்.
பாரதி இந்திய தேசிய விடுதலைக்காகக் குரலெழுப்பிய தேசிய இலக்கியவாதி. அத்தேசிய விடுதலையை காங் கிரஸின் தீவிரவாத அணியினர் தலைமையில் ஈட்ட முடியும் என்று கண்டு, அதனைப் பிரச்சாரப்படுத்திக் கவிதைகள் கதைகள் புனைந்த கட்சி இலக்கியவாதி. ஏகாதிபத்தியம் காலனித்துவம் ஆகியவற்றை தகர்ப்பதோடு சமூக அமைப்பில் சமத்துவத்தையும் கொணரும் அரசியல் குறிக்கோளை இலக் கியமாக்கிய அரசியல் இலக்கியவாதி.
தேசிய எழுச்சி வெகுஜனப்பங்களிப்பின் காரணமும் காரியமும் ஆகும் - மக்கள் வரலாற்று உருவாக்கத்தில் நேரடிப்பங்காற்ற முனைந்த செயலூக்கத்தின் காரணியாகும். அந்த வகையில் அரசியற் செயற்பாட்டில் மக்கள் ஈர்க்கப்படக் கால்கோலாயமைந்தது தேசிய எழுச்சி. பாரதியின் 1907ஆம் ஆண்டு திருப்பள்ளி எழுச்சிப் பாடலையும், அந்த ஆண்டில் மக்கள் கிளர்ந்தெழுந்து வெகுஜனப் போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டமையும் இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு நோக்குகையில் தேசிய இலக்கியமும் கட்சி இலக்கியமும் அரசியல் இலக்கியத்தின் உட்பிரிவுகளாய்க் கருதத்தக்கன. பாரதியின் தேசிய இலக்கியம் திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிர அணிக்கட்சியின் கட்சி இலக்கியமுமாய் அமைந்தவாறையும், இவற்றிடையே முரணற்ற நிலை காணப்பட்டமையையும் நாம் இங்கு கருத்திற்கொள்ள வேண்டும். பாரதியின் அரசியல் இலக் கியம் சிறந்த முன்னோடி இலக்கியமாக அமைய முடிந்தது இத்தகைய முரணற்ற போக்கின் காரணமாயே எனலாம்.

Page 57
110
ஆயினும் இன்று தேசிய இலக்கியத்திற்கும் கட்சி இலக் கியத்திற்குமிடையே ஒரு முரண்நிலை எழுந்து வருவதை அவதானிக்க முடியும். "இந்திய வகை (அல்லது திராவிடர் வகை அல்லது தமிழர் வகை) மார்க்சியத்தின் அடிப்படையில் இலக்கியம் படைக்கும் ஆர்வமுடைய சிலர் அது கட்சி இலக் கியமாய் அமைய வேண்டியதில்லை என வாதிடுவதை இந்த முரண்நிலையின் வெளிப்பாடாகக் கருதலாம்
ஞானியின் 'மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்” என்ற நூல் மார்க்சிய இலக்கியம் கட்சி இலக்கியமாய் அமைய வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் அண்மைக்கால வெளியீடாகும். இதன் முன்னுரையில் அக்னிபுத்திரன், இந்நூலில் "மார்க்சிய விமரிசனம் தன்னை "சுயவிமரி சனம் செய்து கொள்கிறது” என்று குறிப்பிட்டிருப்பதற் கேற்ப கடந்தகால மார்க்சிய இலக்கியம் பரவலான விமர் சிப்புக்குள்ளாகியிருப்பதைக் காணலாம்.
பாட்டாளி வர்க்கக் கட்சிகள் கொண்டிருந்த ஒருமுனை வாதப் போக்கைச் சுட்டிக்காட்டும் ஞானி தவறான அணுகு முறைகளால் நண்பர்களைப் பகைவர்களின் அணிக்குள் தள்ளும் பிழையைப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இழைத்து விடுகின்றன என எடுத்துக் காட்டுகிறார். இதன் முடிவாக கட்சி அணிக்குள் நண்பர்களை ஐக்கியப்படுத்தும் வகையில் கட்சி அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து வெளிப் பட்டிருக்க வேண்டும். மாறாக, கலை - இலக்கியக் கட்சி அணி தகர்க்கப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாகத் தனது கருத்துகளை முன் வைக்கிறார்.
**. மார்க்சியச் சார்பினர் மக்கள் சார்பான நிலைப் பாட்டை ஏற்கையில், கட்சி சார்பான" மார்க்சியப் போக்கை மறுக்க வேண்டியுள்ளது. பொருளியல் தேவைகள் போலவே ஆன்மீகத் தேவைகளும் ஆதாரமானவை. ஆனால் பொருளியல் தேவைகளுக்கே முதன்மை கொடுக்கும் போக்கு

111
இன்றைய கட்சி சார்ந்த மார்க்சியப் போக்காக உள்ளது. பொருளியல் நிலைகள் மாற்றம் பெற்றால் பண்பாட்டுச் சிக்கல்களும் தீர்வுகண்டு விடும் என்றும், வர்க்கப் போராட்டம் நடந்து விட்டால் மற்ற சாதி, மத, மொழி, தேசிய இனப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்றும் புதிய மூடநம்பிக்கைகள் கட்சி சார்ந்த மார்க்சிய வட்டாரங்களில் தோன்றியுள்ளன”8 என்ற அக்னிபுத்திரனின் முன்னுரை வாசகங்கள் ஒருவகையில் ஞானியின் கருத்துகளது செறிந்த சாராம்சம் எனக்கொள்ள முடியும். நூல் முழுமையிலும் வெளிப்படும் கருத்தின் நூற்றுக்கு நூறு வீத உடன்பாட்டுடன் கூடிய சுருங்கிய வடிவமாய் இந்த வாசகங்கள் அமையாவிடினும் பெரும் பாலும் இவ்விடயத்தில் இருவர் கருத்துகளும் உடன்பாடு கொண்டவை.
*வர்க்கப் போராட்டத்தின் பெறுபேறாக பாட்டாளி வர்க்க அரசு ஏற்பட்டுப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் சாதி மத மொழி தேசிய இனப் பிரச்சனை களும் தீர்க்கப்படும் சாத்தியம் உண்டு" என்ற விரிவான அர்த்தத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சியினர் கூறுவதை மேற்படி மேற்கோளிலுள்ளவாறு சுருக்கமாய்க் கூறுவது அக்னிபுத்திரனின் நோக்கமாயின் அதைப் புதிய மூடநம்பிக் கையாக" அவர் கொள்ள வேண்டியதில்லை. அந்த ‘மூட நம்பிக்கை' மார்க்ஸ், லெனின், மாஒ ஆகியோரை உள்ளிட்டு - அவர்களை அடியொற்றி, வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கும் “பழைய மூடநம்பிக்கை'தான். இன்றைய ஸ்தூல நிலை சாதி, மத, மொழி, தேசிய இன முரண்பாடுகளில் ஒன்றையோ சிலவற்றையோ கூர்மையாக் கினால் மார்க்சியவாதிகள் அச்சூழ்நிலையை எவ்வாறு அணுக வேண்டும் என்பது ஒரு விடயம், பாட்டாளி வர்க்க அரசின் கீழ் இந்த முரண்பாடுகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்படும் என்பது வேறொரு மறுக்க முடியாத விடயம்.
சோவியத் ருஷ்யா லெனின் - ஸ்டாலின் தலைமையின் கீழ் சோஷலிச நாடாக இருந்தவரை (பாட்டாளி வர்க்க

Page 58
112
அரசு இருந்தவரை), இத்தகைய முரண்பாடுகள் குறிப்பிடத் தக்க வகையில் அங்கு வெளிப்பட்டதில்லை. சோஷலிசத்தி லிருந்து பூரணமாய்ப் பிறழ்ந்த கையோடு லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா, ஜோர்ஜியா, ஆர்மேனியா, மொல்டேவியா ஆகிய குடியரசுகள் சோவியத் குடும்பத் தினின்றும் பிரிந்து செல்வதற்குத் தீர்மானம் நிறைவேற்றி யதைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனைய சோஷலிச நாடுகளில் பிரிவினை வாதத்தை எவ்வளவு முயன்றும் விதைத்து விருட்சமாக்க முடியவில்லை. இதற்கான அண்மைக்கால உதாரணம், திபெத்தில் பிரிவினைக் கருத்தை விதைக்க மேலாதிக்க வாதிகள் எடுத்த முயற்சி சோஷலிச சீனத்தின் சரியான அணுகுமுறையால் தகர்க்கப்பட்டமை யாகும். 1989இல் டொலர் ஆடிய கூத்தில் திபெத் தலைநகர் லாஷாவில் சில கடைகள் எரிந்தன; ஆயினும் எதிர்பார்த்த எழுச்சி எதுவும் திபெத் மக்களிடம் ஏற்பட்டுவிடவில்லை. எரிப்புத் தொடங்கிய குதூகலத்தில் தலாய்லாமாவுக்கு வழங்கிய 89ஆம் ஆண்டுக்கான ‘சமாதான நோபல் பரிசு கூட சிறந்த எரிபொருளாக மாறத்தவறிவிட்டது.
சோஷலிஸ் நாடுகளைப்போல சமூகப்பிரச்சனைகளை ஏனைய நாடுகளிலும் வெற்றிகரமாய்த் தீர்ப்பதற்கு வர்க்கப் போராட்டம் சரியான திசையில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அதற்கு முயலும் பொருட்டும் வெற்றிகொள்ளும் சோஷலிச அரசைக் கட்டியெழுப்புதற்கும் பாட்டாளிவர்க்கக் கட்சியொன்று மிக மிக அவசியம். மார்க்சியத்தின் அடிப் படையே இதுதான்-பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமை யிலான புரட்சியின் வாயிலாய் முதலாளித்துவ அரசு இயந் திரத்தைத்தகர்த்து, சோஷலிஸ அரசை நிர்மாணித்து, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகித்து, இறுதி யில் வர்க்கங்களை அறவே ஒழித்து, அதன் வாயிலாய்த் தன் இருப்பையும் நீக்கி, வர்க்கங்களற்ற பொதுவுடைமைச் சமூகத்தை (கம்யூனிஸ் சமுதாயத்தைப்) படைத்தல் என்ற மூலநோக்கத்தை நீக்கிவிட்டால் மார்க்சியத்தின் ஜீவன்

113
அற்றுப் போய்விடும். இந்த அடிப்படையை மார்க்சியத்தின் ஜீவனாக (ஆன்மாவாக) கொண்டால் பாட்டாளிவர்க்கக்கட்சி உடலாகக் கொள்ளத்தக்கது.
மேற்குறித்த மார்க்சிய ஜீவனில்லாத பாட்டாளி வர்க்கக் கட்சி வெறும் சவம்; அவ்வாறே பாட்டாளிவர்க்கக்கட்சி என்ற உடலில்லாத மார்க்சிய ஆன்மாவின் சுயம்புநிலைச் சீவியமும் சாத்தியமில்லாதது. அப்படிச் ‘சுயம்புநிலை மார்க்சியத்தை" யாரும் பேணவிரும்பின் அதனால் மக்களுக்குப் பயனேதும் விளையாது-தன்னையுமறியாமல் (அல்லது தெரிந்துகொண்டே) மார்க்சியத்தின் விரோதிகளுக் குத்தான், சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் * சுயம்புநிலை மார்க்சியம்’ சேவைசெய்யும்.
மார்க்சியத்தின் பணி உலகை வியாக்கியானம் செய்வ தல்ல, பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையில் வெகுஜனப் பங்களிப்போடு உலகை மாற்றியமைப்பது.
அந்தவகையில் மக்கள் சார்பை மேற்கொள்ளும் அதியுயர்ந்த புனிதத்திற்காகவுங்கூட மார்க்சிய சார்பினர் கட்சிச் சார்பை மறுக்கமுடியாது. உண்மையில் பாட்டாளி வர்க்கக்கட்சி வெகுஜனங்களுக்குத் தலைமைதாங்குவதுதானே மக்கள் சார்புடையது. இயங்கும் பாட்டாளிவர்க்கக் கட்சியேதும் இப்பண்பினின்றும் பிறழ்ந்து செயற்பட்டால், அதனைச் சுட்டிக்காட்டி விடுவதும்-முற்றாகவே பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமாகவும் மக்களுக்குத் துரோக மிழைத்தும் செயற்பட்டால், அக்கட்சியை நிராகரித்து உண்மையான பாட்டாளிவர்க்கக் கட்சி அமைப்பொன்றை கட்டியெழுப்ப முயல்வதும் மார்க்சியச் சார்பினர் பணியே யன்றி கட்சிச் சார்பற்ற மார்க்சியத்தின் இருப்பு சாத்தியமென விவாதித்துக் கொண்டிருப்பதல்ல.
இது பிரச்சனையின் ஒரு அம்சம், இன்னொரு அம்சம் வரலாற்றுப் போக்கின் நியதிகாரணமாகக் கட்சி சார்பற்று

Page 59
14
மார்க்சியத் தத்துவத்தின்பால் மதிப்புக்கொண்ட பலர் யதார்த் தத்தில் இருக்கிறார்கள் என்பதை பாட்டாளிவர்க்கக் கட்சிகள் ஏற்றாகவேண்டும் என்பதாகும். உலகின் முதலாவது சோஷலிசப் புரட்சியின் தலைவராகிய லெனின் கட்சி சார் பற்ற-பேராசிரியர்த்தனமான-மார்க்சியர்களோடும் ஐக்கிய முற்றே புரட்சியின் வெற்றியை பெற முடிந்ததெனக் கூறி யிருக்கிறார். கட்சிச்சார்பற்ற மார்க்சியர்களின் பங்களிப்பை மாற்றத்துக்கு அமைவாகப் பயன் படுத்துவது கட்சியின் பணியாகும். பாட்டாளிவர்க்கக் கட்சி விமர்சனம் கண்டு பதட்டமுறுவதுமில்லை சுயவிமர்சனத்துக்கு பின்னிற்பது மில்லை என்ற வகையில் கட்சிசார்பற்ற மார்க்சியர்களின் விமர்சனத்திற்கு செவிசாயிக்க அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் உண்மையில் நட்புசக்திகளே, அவர்களை "நண்பர் களாக நடிக்கும் வேஷதாரிகள்’ எனக் கணித்து பிற்போக்கு வாதிகள் என முத்திரை குத்துவது புரட்சிக்கு ஒருபோதும் நன்மைபயக்காது.
கட்சி இலக்கிய நிர கரிப்புக் கருத்துத்தோற்றம் பெற கட்சி இலக்கியவாதம் ஒருமுனைவாதப் போக்கைக் கடைப் பிடித்தமையும் ஒரு காரணம் என்பதை ஏற்றாக வேண்டும். பாட்டாளி வர்க்கக் கட்சி இலக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை அதற்கப்பால், மனுக்குல விடுதலை நோக்கிய முற்பாய்ச்சலுக்குப் பங்களிப்பு நல்கும் இலக்கியங்கள் கட்சிசார்பற்றும் இருக்கமுடியுமென்ற உண்மையை ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இத்தகைய மனப்பாங்கு முற்போக்குச் சக்திகளிடம் இருந்தது குறிப்பாக உலகம் பாசிஸ் அபாயத்தை எதிர்நோக்கியவேளை பாட்டாளிவர்க்கத் தலைமையில் உல்க முற்போக்குச் சக்திகள் அனைத்தும் அணிதிரண்டன. இதன் பிரதிபலிப்பை இந்தியாவிலும் காணமுடிந்தது.
சுதந்திரம் பெறப்பட்டதும் இந்திய முதலாளிவர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது- முற்போக்கு அணியில்

11.5
தவிர்க்கவியலாத மோதல் தொடங்கியது. அந்தத் தத்து வார்த்தப் போராட்டத்தின்போது பாட்டாளிவர்க்க அணி அதிதீவிரவாதப்போக்கைக் கையாண்டதன் விளைவாய், முற்போக்கு அணியில் தொடர்ந்து ஐக்கியப்படுத்தி முன் னெடுத்துச் சென்றிருக்கவேண்டிய நட்பு சக்திகளையும் பிற்போக்கு முகாமுக்குள் தள்ளும் தவறு நேர்ந்தது.
ரவீந்திரநாத்தாகூர் பற்றிய கணிப்பை ஓர் உதாரணத் துக்கு எடுக்கமுடியும் சர்வதேசப் பாட்டாளிவர்க்க இயக் கமும் இந்திய மார்க்சியவாதிகளில் பெரும்பாலானோரும் தாகூரை முற்போக்கு அணியின் நட்புச் சக்தியாயே கண்டு காட்டிவந்தனர். ஆயினும் இந்திய மார்க்சிய இயக்க முன்னோடிகளில் ஒருவராகிய பவானி சென் தாகூரை 1948இல் ஓரளவு நிதானமாய் மதிப்பிட்டதை மறந்து, ஓராண்டுக்குள் (1949இல்), தாகூருக்குப் பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தினார். அப்போதும் சரி பின்னரும் சரி இந்திய மாக்சியவாதிகள் பெரும்பாலானோர் இக்கணிப்பை நிராகரித்து தாகூரின் முற்போக்கு அம்சங்களை வெளிக் கொணர்ந்தனர்.
இடையில் சிறிதே நிகழ்ந்த தடம்புரளல் ஒரு முனைவாதத்தின் வெளிப்பாடாகும். பவானிசென்கூட அறுபதுகளில் தாகூர் பற்றிய பழைய கணிப்பைக் கைவிட்டு விட்டார். (அப்போது முன்னைய அதிதீவிர இடதுசாரித் தவறுக்குப் பிரதியாக அவர் வலதுசாரி சந்தர்ப்பவாத சகதிக் குள் அழுந்தி, இடதுசாரி அதிதீவிரவாதம் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தின் சரண் புகும் என்ற உண்மையை வெளிப் படுத்தியிருந்தார்.)
தாகூரை மார்க்சிய நோக்கில் மதிப்பிட்ட அருண் சௌதுரி வார்த்தைகளில் கூறினால், இறுதி ஆய்வில் இந்திய மார்க்சிய வாதிகள் “ரவீந்திரரை மார்க்சியவாதியென்றோ அல்லது அதற்கு நேரெதிராக பிற்போக்குவாதியென்றோ அழைப் பதில்லை. ரவீந்திரர் படைப்புகளில் பலமுரண்பாடுகளும்

Page 60
116
பொருத்தமின்மைகளும் காணப்பட்டாலும் அவற்றின் இலக்கிய மதிப்பை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அவரை வாழ்க்கைப்போராட்டத்தில் மக்களின் நம்பிக்கைக்குரிய தோழராகவும் முற்போக்குக் கூடாரத்தின் விலைமதிப்பற்ற சொத்தாகவுமே கருதி வருகிறார்கள்.”*
ஆயினும் பிற்போக்குச் சக்திகள் விடாப்பிடியாக தமக்குள் ஒருவராய்த் தாகூரைக் காட்டி, பவானி சென்னின் 49ம் ஆண்டுக் கணிப்பை எப்போதும் உச்சாடனம் செய்து, தம்மையும் தாகூரின் தளத்துக்கு உரியவராய்க் காட்டத்தவற வில்லை, அப்பணியை அன்றுதொட்டு இன்றுவரை பிற் போக்குவாதிகள் செய்துகொண்டே வருகிறார்கள்.
பாட்டாளிவர்க்க அணியில் அவ்வப்போது வெளிப்படும் இதையொத்த ஒருமுனைவாதத் தவறுகள் பல பிற்போக்குச் சக்திகளின் அணிக்குள் நட்புச்சக்திகளைத் திணிப்பதற்கு உதவியிருக்கின்றன. பாட்ட்ாளிவர்க்கக் கட்சி இலக்கிய வாதியாய் இல்லாததற்காக பாரதியையும் இறுக்கமான பூர்ஷ்வாக்கவிஞனாகக் காட்டும் முயற்சிகளை நாம் கண்டு வந்திருக்கிறோம். பாட்டாளி வர்க்கக்கட்சி இல்க்கியம் தோன்றக்கூடிய சூழல் உருவாகுமுன் மறைந்த பாரதியை அவர் வாழ்ந்த காலப் புறநிலை யதார்த்த அடிப்படையில் ஆராயமறுத்து, அவர் வெளிப்படுத்திய ஆன்மீக வாதத்தை பிற்போக்குவாதத்தத்துவமாய்க் காட்டுவதையும் கண்டிருக் கிறோம்.
தாகூர், பாரதி போன்ற தேசிய இலக்கிய வாதிகள் பாட்டாளிவர்க்கக் கட்சி இலக்கியத்துக்கு அனுசரணையாகத் தம்மை இனங்காட்டாத போதிலும் எதிர்நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியதில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய பிரதான அம்சமாகும். தேசிய அபிலாஷைகள் நிறைவுபெறாத மூன்றாம் உலக நாடுகளில் தேசிய இலக் கியத்தைப் படைத்தல் கட்சி இலக்கியவாதிகளும் முன் னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையாகும்.

117
இதற்கு இலங்கையின் இலக்கியவரலாற்று அனுபவம் அனுசரணையாக அமைந்துள்ளது இலங்கையில் முற் போக்கு எழுத்தாளர் சங்கம் (மு.எ.ச) உதயமானது 1950ஆம் ஆண்டுகளிலேயே. நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் தோற்றம் பெற்ற மு.எ.ச. தனது பிரதான கடமையாக தேசிய இலக்கியத்தையே வரித்துக்கொண்டது. இந்தியா வில் மு.எ.ச, அணி குலைந்தபோது இலங்கையில் புதிய உத்வேகத்தோடு பலம் பொருந்திய அமைப்பாக மு.எ.ச. கட்டியெழுப்படமுடிந்தமைக்கான புறக்காரணி என்ன?
சுதந்திர இலங்கையின் ஆளும் வர்க்கமாய் தரகு முதலாளிவர்க்கம் இருந்தது; அதன் அபிலாஷைக்கேற்ப அந்த வர்க்கத்தின் பிரதிநிதியாகிய யு என்.பி. ஆட்சி நாட்டைஅரைக்காலணி- அரை நிலப்பிரபுத்துவ அமைப்பில் கொண்டு நடத்தியது. தேசப்பற்றுமிக்க சக்திகளனைத்தும் இதற்கெதிராய்க் கிளர்ந்ததெழுந்தனர். பாட்டாளிவர்க்கத் தலைமையில் 1958 ஒகஸ்ட்டில் புகழ்பூத்த ஹர்த்தால் போராட்டம் வெடித்து, யு.என்.பி. அரசை ஸ்தம்பிதம் அடையவைத்தது. நிலத்தில் ஓரங்குல நிலந்தானுமின்றி, நடுக்கடலில் கப்பலில் மந்திரிசபை கூடவேண்டிய அவலம் யு.என்.பி. அரசுக்கு அப்போது ஏற்பட்டது. இத்தகைய உணர்வுக் கொந்தளிப்பு நிலை உருக்கொண்டபோதுதான், பின்னர் பெரு முதலாளிவர்க்கமாகப் பரிணமித்த தரகு முதலாளிவர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளிவர்க்கம், விவசாயி வர்க்கம். சிறு முதலாளிவர்க்கம், தேசிய முதலாளிவர்க்கம், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தொடுத்த கூரிய வர்க்கப்போராட்டத் தொடக்க சூழலிற் தான், இலங்கையில் மு. எ.ச. ஸ்தாபிதம் பெற்றது.
பாரதி தொடக்கிவைத்த தேசிய இலக்கியம் சுதந்திர இலங்கையில் முனைப்புடன் வளர்ந்தது. இத்தேசிய இலக்கி யத்தை நெறிப்படுத்தி வளர்த்ததில் முக்கிய இடம் வகிக்தவர்
ஆ-8

Page 61
118
பேர்ாசிரியர் க. கைலாசபதி, தேசிய இலக்கியத்தின் அவசி யத்தை அவர் வலியுறுத்திய வேளை கனக செந்திநாதன் முதலிய மறுமலர்ச்சிக்கால இலக்கிய கர்த்தாக்கள் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தவிக்கவியலாத வரலாற்றுத் தேவையைக் கையேற்கத்தயங்கி 'மின்னனலோடு உரை யாடவும் தென்றலோடு விளையாடவும் விழையும் அவர்கள் போக்கை க. கைலாசபதி அம்பலப்படுத்தினார். M
இதன்பொருள் ஒரு தசாப்தத்தின் முன் (40ம் ஆண்டு களில்) முனைப்புடன் செயலாற்றிய மறுமலர்ச்சிக் காலத்தில் யதார்ந்த இலக்கியம் அறவே எழவில்லையென்பதல்ல. 11-7-1943இல் யாழ்ப்பாணம் தமிழிலக்கிய ம்றுமலர்ச்சிச் சங்கம் நடாத்திய கூட்டத்தில் மறுமலர்ச்சி இலக்கிய கர்த்தா அ.செ. முருகானந்தம் ஆற்றிய உரையில் மொழி மனிதன் சிருஷ்டித்த கருவியென்று கூறி மொழியில் மாற்றத்தை மறுதலிக்கும் பண்டிதர்களின் போக்கை நிராகரித்து, 'திருக்குறளும் தொல்காப்பியமும் மட்டுந்தான் தமிழல்ல, ஐந்து வயதுக் குழந்தை பேசும் சொற்களும் தமிழ்தான்.” என்று வலியுறுத்தி யதார்த்த இலக்கியத்தை ஆதரித்துப் பேசியதை அவதானிக்கமுடியும். அவருடைய ஆக்கங்கள் அக்கால மக்கள் வாழ்வைப் பிரதிபலிக்குமாறையும் அவதானிக்க முடியும்.
ஆயினும் 'பழைமையை அத்திவாரமாகக் கொண்டு புதுமையை எழுப்பவேண்டும். புதிய புதிய சிருஷ்டிகள் எல்லாம் எங்கள் தமிழில் உண்டாகவேண்டும். பழைமையை மட்டும் புதுப்பித்துக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. புத்துயிரும் புத்தழகும் கொண்ட் புதுப்புது முறைகளில் தமிழி லக்கியம் விரியவேண்டும்” என அழுத்திப் பிரகடனப்படுத்து வதற்குமேல் அவ்வுரையும் அமையவில்லை, மறுமலர்ச்சிக்கால இலக்கியவாதமும் வளரவில்லை.
மறுமலர்ச்சிக்கால இலக்கியவாதிகள் தமிழ் நாட்டைத்தம் தாயகமாய் (ஈழத்தை அதன் சேயாகித்) தரிசித்தார்கள். அக்

119
காரணத்தால் புதிய வரலாற்றுத் தேவையாக முகிழ்த்த தேசிய இலக்கியக் கோட்பாட்டை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் தேசிய இலக்கியம் மண்வாசனை, சமகாலப் பிரச்சனைகளின் வெளிப்பாடு, சாதியத்துக்கு எதிரான போர்க்குணம், வறுமை ஒழிப்பு ஆகிய வற்றை வெளிப்படுத்தி நின்றது. தேசிய எழுச்சி விவசாய வர்க்கத்தின் எழுச்சியுடன் தொடர்புடையதென்றவகையில் இந்த அம்சங்கள் விரவிநின்றமை புரிந்துகொள்ளக்கூடியதே. உழைக்கும் மக்களின் இலக்கியக் குரல் என்ற வகையில், தேசிய இலக்கியம் தவிர்க்கவியலாத வகையில் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு முரணற்றதாயும் அமைந்து விடுகிறது.
அந்நிய தேசங்களின் நலிவு இலக்கியங்களின் இறக்கு மதிக்கெதிராக தேசிய இலக்கியவாதிகள் விழிப்புடன் இருந் தனர். அவற்றுக்கு மாற்றீடாக உள்ளூர் நலிவு இலக் கியங்கள் மலிந்து போய்விடாமலும் தத்துவார்த்தப் போர்) தொடுத்து வந்தனர். க. கைலாசபதி இதுகுறித்துக் கூறிய வார்த்தைகள் கவனத்தை ஈர்ப்பது : 'அரசியல் அரங்கில் "தேசியம்’ என்னும் சொல்குறித்த விதேசிய எதிர்ப்பு உணர்ச்சி, சுதேசிய நாட்டம் என்பனவற்றோடு, சுதேசிய நாட்டத்தின் தன்மையையும் தகைமைமையும் "மண்வாசனை' என்னும் தொடர் புலப்படுத்தியது. ஆனால், அந்த அளவுடன் விடயம் முடிந்துவிடவில்லை, விதேசியத்தின் எதிர்நிலையான "சுதேசியம்’ எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்பதிலும் தேசிய இலக்கியவாதிகளுக்கு ஆழ்ந்த அக்கறை இருந்தது. ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களைப் பாராட் டுதல் கூடாது என்னும் கருத்தும் தேசிய இலக்கிக் கோட் பாட்டின் முக்கியமான உட்கிடையாக இருந்தது. சுருங்கச் சொல்வதாயின், விதேசியச் செல்வாக்குகளையும் ஊடுருவல் களையும் வெளிப்படையாக எதிர்த்ததைப் போலவே, தமது மத்தியில் இச்செல்வாக்குகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வாயில்களாய் இருந்தவர்களையும், அவர்களது கருத்துக்

Page 62
120
களையும் கண்ணோட்டத்தையும் தேசிய இலக்கியவாதிகள் எதிர்த்துப் போராடினர். இதனால் தொடக்கத்திலிருந்தே தேசிய இலக்கியம் என்பது போர்க்குணமிக்க இயக்க சக்தி யாயும் விளங்கியது. போர்க்குணம் அதன் சிறப்பியல்பு களின் ஒன்றாய் அமைந்துவிட்டது”9
இப்பகைப்புலத்திலேயே நீண்ட பயணம், பஞ்சமர், செ. யோகநாதன் கதைகள், சொந்தக்காரன், உதயம், போடியார் மாப்பிள்ளை, நிலக்கிளி, குமாரபுரம், காட்டாறு, வாடைக்காற்று, புதியகாற்று போன்ற மண்வாசனை செறிந்த கலை இலக்கிய ஆக்கங்கள் முகிழ்க்கமுடிந்தது. ஈழத்து இலக்கியம் தன் தனித்துவ முத்திரையை தொடர்ந்தும் பதிக்கக் கூடியதாயிருந்தது.
தேசிய இலக்கியத்தை வரையறை செய்து நெறிப்படுத்து வதில் அயராதுழைத்த க. கைலாசபதி பாட்டாளிவர்க்கக் கட்சி இலக்கியத்தின் விருத்திக்கும் உதவியுள்ளார், 1970 களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி - கம்யூனிஸ்ட்கட்சி (பீற்றர் கெனமன் - விக்கிரமசிங்க தலைமையிலானது) - சமசமாஜக் கட்சி ஆகியவை இணைந்த கூட்டரசாங்கம் இழைத்த சந்தர்ப் பவாதத் தவறுகளை மு. எ. ச, கண்டுகொள்ளத்தவறி. சப்பைகட்டிக்கொண்டு ஆதரித்தச் சூழலில் மு எ.ச, விலிருந்து புரட்சிகரசக்திகள் வெளியேறி, தேசிய கலை இலக்கியப் பேரவையைத் தோற்றுவித்தனர். தே. க. இ. பேரவையின் ஸ்தாபகர்களில் ஒருவராக அமைந்த க. கைலாசபதி, பேரவை வெளியீடாக வந்த தாயகம்' சஞ்சிகையில் "இங்கிருந்து எங்கே?' என்ற தலைப்பில் முற்போக்குச் சக்திகளின் புதிய பணியைத் தெளிவுபடுத்தி எழுதினார். 1974 இல் எழுதிய அக்கட்டுரையில் வர்க்கக்கண்ணோட்டத்தில் சமுதாயத்தை ஆய்வு செய்து, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அமைவாகக் கட்சி இலக்கியம் அமைக்கப்படும் புதியதேவையை வலியுறுத்தி இருந்தார்.19
பாட்டாளிவர்க்கக் கட்சி இலக்கியத்தை முனைப்புடன் வளர்க்கும் சஞ்சிகையாய் தாயகம் பிறந்தபோதிலும் தேசிய

121.
இலக்கியக் கோட்பாடு நிராகரிக்கப்படவில்லை. தாயகம் ஆசிரியர் தலையங்களில் (ஆசிரியர் குழுவின் சார்பில் அவற்றை எழுதிய) கே. ஏ. சுப்பிரமணியம் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை வலியுறுத்தி எழுதியவை கட்சி இலக்கியம் - தேசிய இலக்கியம் ஆகியவற்றிடையே நிலவ வேண்டிய நெருக்கமான உறவையும் வெளிப்படுத்திநின்றன, ஆயினும் 74ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தாயகம் முதற் தொடர் அன்றைய ஆசிரியர் குழுவின் இறுக்கமான கட்சி இலக்கியவாத - ஒருமுனைவாத மனோபாவம் காரணமாய் உள்ளடக்கத்தில் வறட்டுவாதப்போக்கு ஏற்பட்டு, கையேற்ற பணியைத் தொடர முடியாமற் போய், வெளியீடு ஓராண் டினுள் தடைப்பட்டுவிட்டது.
இத்தவறிலிருந்து கற்று, 1983 லிருந்து வெளிவந்த தாயகம் இரண்டாவது தொடரில் கே. ஏ. சுப்பிரமணியம் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள், மேலும் பரந்துபட்ட ஐக்கியமுன்னணிக்கான அவசியம் வலுப்பெறும் போக்கில் தேசிய-சர்வதேச சூழ்நிலை மாறியமையப் புலப்படுத்துவன (அவருடைய அந்த ஆசிரியர் தலையங்கங்கள் தனியாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியன). கட்சி இலக்கியம் - தேசிய இலக்கியம் ஆகியவற்றிடையே பிணக் கற்ற வகையில் இணைவையேற்படுத்தி உள்ளடக்கத்தை அமைத்துவரமுடிந்தமையால் தாயகம் 2வது தொடர் மிகுந்த இடர்ப்பாடுகளின் மத்தியிலும் தொடர்ந்து வருவதை அவதானிக்கலாம்.
இன்று எமது தேசம் மூன்றுகட்டப்போராட்டங்களை எதிர்நோக்கியுள்ளது, தேசிய ஜனநாயக அமைப்பை வென்றெடுத்து புதிய - ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்து, சோஷலிஸ் அமைப்பை அடைந்தாக வேண்டிய நிலை இங்கு நிலவுகிறது. முதலிருகட்டங்களிலும் கூட்டர சாங்கங்களின் தேவை தவிர்க்கவியலாதது. அதிலும் தேசிய ஜனநாயக அமைப்பு பாட்டாளிவர்க்கத் தலைமையிலன்றி தேசிய முதலாளிவர்க்க்த் தலைமையில் முன்னெடுக்கப்பட

Page 63
122
வேண்டியது, பாட்டாளிவர்க்கத் தலைமையிலான புதிய -
ஜனநாயக சமுதாயத்திற்கு தேசிய அபிலாஷைகளை இறுதி யாகப் பூர்த்திசெய்யும் கடமை இருக்கும்.
இத்தகையச் சூழ்நிலையில் தேசிய இலக்கியம் இன்னமும் அவசியமானதே. அதேவேளை மனுக்குல விடுதலையில் பாட்டாளி வர்க்கத்தலைமையின் தவிர்க்கவியலாமையை ஏற்றவகையில் வெளிக்காட்டத்தக்க பாட்டாளிவர்க்கக் கட்சி இலக்கியமும் இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும். பாட்டாளிவர்க்க இலக்கியவாதிகள் இந்த இணைவைப் புரிந்து கொண்டு, வெகுஜனப் புரட்சியின் திசையில் மக்களை ஈர்க்கத் தேசிய இலக்கியத்தைப்படைப்பதோடு, அப்புரட் சியில் பாட்டாளி வர்க்கத்தலைமையை நிலைநிறுத்தக் கட்சி இலக்கியத்தையும் படைத்து வருகிறார்கள்.
குறிப்புகள்
1. க கைலாசபதி 'திறனாய்வுப் பிரச்சனைகள்” (க, நா. சு. குழுபற்றி ஓர் ஆய்வு) சென்னை புக்ஸ் 61. தாயார்சாகிப் 2வது சந்து, சென்னை 600 002. டிசெ 1986 பக் 26-27.
2. நான்கு நூல்கள் விமர்சன அரங்கு (தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடுகள்) யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற போது விரிவுரையாளர் சிவநாதன் இது குறித்த சர்ச்சையைக்கிளப்பினார்.
3. ஞானி, ** மார்க்சியமும் தமிழிலக்கியமும்”. பரிமாணம். 123, காஸிஸ்வரர் நகர், காட்டூர், கோயம்புத்தூர் 641 009. மார்ச் 1988.
4. இ. எம் எஸ். நம்பூதிரிபாட், * மார்க்சியமும் இலக்கியமும்” சென்னை புக்ஸ், முதலாளித்துவ சக்திகளின் சந்தர்ப்பவாதப் போக்கினால் தவிர்க்க

10.
1.23
வியலாது மு. எ. ச. தகர்ந்தமையை சுட்டிக்காட்டிய தோடு, இவ்விடயத்தில் மார்க்சிய இயக்கம் இழைத்த தவறுகளை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் இந்நூலின் பிரதான அம்சமாய் இருப்பதை அவதானிக்கமுடியும்.
அருண் சௌதுரி, * மார்க்சிய பார்வையில் ரவீந்திரர்’ சென்னை புக்ஸ், டிசெம்பர் 1988 பக் 74.
கா. சிவத்தம்பி, 'ஈழத்தமிழிலக்கிய வரலாறு” NCBH 41 LS. dalG86r 6T6hpGL. Ghafsir606or-600.098.
அ. செ. முருகானந்தன், 'மனிதமாடு” யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவை. டிசெம்பர் 1986, யாழ்ப்பாணம் பக் 158-164.
ந. இரவீந்திரன், “தேசிய இலக்கியக் கோட்பாடும் கைலாசபதியும்” தாயகம்-20, 1511 மின்சார நிலைய வீதி யாழ்ப்பாணம், ஓகஸ்ட்-செப்ரெம்பர் 1989 பக் 13-30,
க. கைலாசபதி, 'இலக்கியச்சிந்தனைகள்” NCBH, ஜூலை 1987, பக். 17.
மேற்படி நூல் பக் 21-27.

Page 64
மலையகத் தொழிலாளரும் வேதனமும் ஜெ. சற்குருநாதன்
புதிய அத்தியாயத்தை தோற்றுவித்த கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஆதிக்க வெறிகொண்ட ஐரோப்பிய நாடுகள் பல நாடுகளை குடியேற்றவாதத்திற்குட்படுத்தின. இவ்வாறு குடியேற்ற வாதத்திற்கு உட்படுத்திய நாடுகளுள் பிரித்தானியாவும் ஒன்றாகும். தனது உச்ச சுரண்டலை மையமாகவும், அதிக இலாபத்தை பெறுவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டவையே பெருந்தோட்ட பயிர்களாகும். குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தனது காலனித்துவத்தை செலுத்தி இந்நாடுகளில் சுதேசிய பொருளாதார அமைப்பை சின்னாபின்னமாக்கியது. ஆசிய நாடுகளில் பிரதான இடமாக விளங்கும் இலங்கையை 1796ஆம் ஆண்டு கைப்பற்றிய பின் 1815இல் தனது காலடிக்குள் கொண்டு வந்தது. இங்கு பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கு சாதகமான காலநிலையும் பெளதீகச் சூழ் நின்லகளும் காணப்பட்டன. இங்கு அதிக சுரண்ட்லை. உச்சப்படுத்தும் நோக்கத்துடன் 1830ஆம் ஆண்டு தொடக்கம் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
படிப்படியாக கோப்பி செய்கையை தொடர்ந்து தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வேலை செய்வதற்கு உள்ளூர் சமுகம் தேவையான தொழிலாளர்களை தரக்கூடிய நிலையில் இல்லை. கண்டிய சிங்களவர்கள் இத்தொழிலை அவசியமற்றது எனக் கருதி இத்தொழிலை புறக்கணித்தனர். இந்நிலையில் பிரித்தானியருக்கு இந்தியாவிலிருந்து தொழி லாளர்களை கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியச் சமூக அமைப்பில் குறிப்பாகத் தமிழ்ச் சமூக அமைப் பில் மூடநம்பிக்கையும் சாதி அமைப்புக்களும், பண்ணை

125
அடிமை முறைகளும் மிக மோசமான நிலையில் இருந்தது. பொருளாதார அமைப்பு. இம்மக்கள் மத்தியில் வாழ்க்கை நடத்துவதற்கேற்ப அமையவில்லை. பசியும் பட்டினியும் தலை விரித்தாட பிரித்தானியாவின் நயவஞ்சக அழைப்பிற்கு இரை யாகினர். ஆடுமாடுகளைப்போல் கப்பல்களில் ஏற்றியும், எத்தனையோ இடர்களை அனுபவித்தும், உயிர்களைத் துறந்தும் கூட இம்மக்களை பெருந்தோட்டப் பகுதியில் குடியமர்த்தினர். அன்று முதல் இவர்களின் சோகமான வாழ்க்கை ஆரம்பமானது. அன்று முதல் இவர்களின் வாழ் வியல் அம்சத்தோடு தொடர்பற்றதாகப் பொருளாதார நிலை விளங்குகின்றது. பிழைப்புக்காக வந்த இம்மக்களின் ஆரம்ப நோக்கமே தமது வாழ்க்கையை நடத்துவதற்கே. எனவே சம்பள அமைப்பை பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை. சம்பளம் பற்றி அறியும் ஏடுகள் எதுவும் அப்போதிருக்க வில்லை. பிரித்தானியா அபரிமிதமான உழைப்பை இம் மக்களிடம் வாங்கி கொண்டு மிக சொற்ப அளவிலேயே கூலியை கொடுத்தனர். இந்நிலையின் அம்சத்திலே வேதன அமைப்பு பற்றி ஆராய்வது சிற்ப்பானதாகும்.
மிகவும் மோசமான பனிமலைகளில் குடியமர்த்தப்பட்ட இம்மக்கள் பனியிலும், மழையிலும் மலைப்பாங்கான பிரதேசத்தில் கடுமையான உழைப்பை வழங்கினர். இவர் களின் வாழ்க்கையை நடத்துவதற்கு தந்திரமாக சில தானியங்களை வழங்கியும் மிகவும் குறைந்த கூலியை கொடுத்தும் பிரித்தானியர் உழைப்பை வாங்கினர். தொழி லாளியின் உடல் பலத்தில் வேலை செய்யும் போது திருப்தி கரமான உழைப்பை வழங்கலாம். ஆனால் மலையகத் தொழிலாளியின் உடல் பலத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை. வயிறு நிறைந்தால் போதும் என்ற நிலை யிலும் அரைகுறை வயிறு என்ற நிலையில் பிரித்தானியரின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து வேலை செய்தனர். பிரித் தானிய தனியார் கம்பனிகள் இத்துறையில் முதலீடு செய் திருந்தனர் குறை கூலியில் 1918ஆம் ஆண்டின்படி ஒரு

Page 65
26
பெண் தொழிலாளியின் சம்பளம் 15 சதம் என்றும் ஆண் தொழிலாளிகள் கவாத்து வெட்டினால் அவர்களுக்கு 25 சதம் வழங்கப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
சம்பள விதியை பற்றிய விபர ஏடுகளோ சம்பளத்தை இவ்வளவுதான் என தீர்மானிப்பதற்கு ஏற்ற ஆவணங்களோ, தொழிலாளர் ஸ்தாபனங்களோ இருக்கவில்லை. இவ் வாறான ஸ்தாபனங்களை பிரித்தானியர் உருவாக்கவு மில்லை. குறிப்பாக இம்மக்களுக்கு கல்வி வசதி அளிப்பதற்கு இவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.
ஏ. ஈ. குணசிங்காவுடன் இணைந்து இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தில் பங்கு கொண்ட நடேசய்யர் இம் மக்களின் வேதனத்தோடு கூடிய சில உரிமைகளைக் கேட்டார். ஏ.ஈ. குணசிங்காவின் இனவாத போக்கும் அப்போதுள்ள இலங்கை தேசிய வாதிகள் என கருதப்பட்டவர்கள் கூட இம்மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை மறுத்தனர். நடேசய்யர் 1919ஆம் ஆண்டு வெளியிட்ட தோட்டத் தொழிலாளரின் உரிமையும், கடமையும் என்ற நூலில் சம்பளம் பற்றி கூறியிருந்தாலும், படிப்பறிவு குறைந்த இம் மக்களுக்கு இதனைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. நடேசய்யர் ஏ.ஈ. குணசிங்காவின் இனவாத போக்கை கண்டு அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய அமைப்பை உருவாக்கினார். இவருடைய நடவடிக்கை இந்தியச் சார்பான ஒரு நடவடிக்கையாக காணப்பட்டது. ஆனால் அக்காலத்தில் இவரின் பங்களிப்பு ஒரு மதிப்பு வாய்ந்த செயலாகும்.
1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்பினை வழங்கியதோடு 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்வசன வாக் குரிமையை வழங்கிய பிரித்தானியா இலங்கையின் புதிய அரசியல் நிலையை உருவாக்கினர். இந்த டொனமூர் யாப்பின் விளைவாக இம்மக்களின் அரசியல் வெளிப்பாடு

127
இலேசாக தலைகாட்டத் தொடங்கியதும் சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஒரு சிறிய அளவே முன்னேற்றம் காணப்பட்டது. நடேசய்யர் சட்ட நிருபண சபையில் அங்கத்தினராக குரல் எழுப்பினாலும் அப்போதுள்ள ஏனைய இனவாத அங்கத் தினர்கள் இதனை நிராகரித்தனர். உணவு தேவையை மட்டும் அதுவும் அரைகுறையாக நிரப்பவே வேதனம் வழங்கப்பட்டது. சொந்த மண்ணையும் துறந்து இம் மண்ணில் ரத்தத்தை சிந்திய இம்மக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது. கண்ணுக்குப் புலப்படாத சம்பளத்தை மலையகத் தொழிலாளிகள் பெற்றுக் கொண்ட போதிலும் அவை கங்காணிமார்களின் கைகளில் போய் சேர்ந்துவிடும். கங்காணிமார்களின் இறுக்கமானதும் கொடுமையான நடவடிக்கைகள் காரணமாக பல தொழிலாளி கள் இறந்திருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன.
1935ஆம் ஆண்டு இலங்கையில் இடதுசாரிகள் ‘எருங்கிய வாத” இயக்கத்தை தொடங்கியது தோட்டத் தொழிலாளர்கள் பக்கம் சிறிய அளவிலான தேசிய பார்வை செலுத்தப்பட்டது. ஆனால் இடதுசாரிகளின் தத்துவார்த்த பிளவுகளாலும் வரலாற்றில் தாமும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கமும் இவர்களின் நடவடிக்கை மந்த போக்காக காணப்பட்டது. இருப்பினும் தோட்டத் தொழிலாளர்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு பரவின, இரப்பர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர் மத்தியில் இக்கருத்துக்களை கொண்டு சென்றோர் நிலப்பிரபுத்துவ அமைப்பை சர்ர்ந்த வர்கள். சம்பள பிரச்சனை சம்பந்தமான முற்போக்கான கொள்கைகளை கொண்டிருந்த போதிலும் அது செயலுக்கம் பெற்றதாக இருக்கவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் அபரிதமான உழைப்பை பிரித்தானியருக்கு வழங்கி கொண்டி ருந்தனர். பிரித்தானியா இம்மக்கள் மத்தியில் இடதுசாரி கருத்துக்கள் பரவுவதை விரும்ப்வில்லை. சம்பள சம்பந்த மான போராட்டங்களும் உரிமை தொடர்பான போராட்டங் களும் நடைபெற்ற போதிலும் ஒழுங்கான தலைமைத்துவம்,

Page 66
128
போராட்ட வடிவம் போன்றவைக்கு அக்காலச் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை. இரண்டாம் உலகப்போரும் பொதுவுடைமை கருத்துக்களின் வேகமும் குறிப்பாக 1917 அக்டோபர் புரட்சியும் சீனாவின் பொதுவுடைமையோடு தொழிலாளர்களின் எழுச்சியும் இலங்கை மட்டுமல்லாது ஆசிய நாடுகளில் புதிய விடுதலை அலைகள் வீசின. தொழிலாளர்கள் பற்றிய அவர்களின் உரிமைகள் பற்றிய செயற்பாடுகளும் அதிகரிக்க தொடங்கின. அதில் இலங்கையும் உட்பட்டிருந்த போதிலும் பிரித்தானியரும் D.S. சேனநாயக்கா போன்ற தேசியவாதத் தலைவர்களும் சொற்ப அளவில் சம்பளச் சலுகைகள் கொடுத்து ஏமாற்றினர். இருப்பினும் ஐக்கிய நாட்டு பொதுச்சபையின் தோற்றமும் சர்வதேசத் தொழிலாளர் சட்ட முறைகளும் 1945இல் சம்பளத்தை பற்றிய அறிக்கைகள் கண்களுக்கு இலேசாக புலப்பட்டன. உள்ளூர் முதலாளி வர்க்கமும், பிரித்தானிய ஏகாதிபத்தியமும் தொழிலாளர் சட்டமுறைகள் மலையகத்தில் பரவ விட்டதை நாசுக்காக தடுத்து வந்தனர்.
1945இல் உருவாக்கப்பட்ட சம்பள சம்பந்தமான சபை உருவாக்க்ப்பட்டது. இதில் ஆணையானர், உதவி ஆணை யாளர். தொழிலாளர் பிரதிநிதிகளை கொண்டிருந்த போதிலும் இதனுடைய செயற்பாடுகள் பெயரளவிலேயே காணப்பட்டன. தொழிலாளர் பிரதிநிதிகள் சிறுபான்மை யாகவும், அங்கு பேச தயக்கத்துடன் காணப்பட்டமையாலும் இச்சம்பள சபை எவ்வித செயற்பாடுகளையும் ஆக்கபூர்வ மான முறையில் மேற்கொள்ளவில்லை. பெருந்தோட்டதுறை தவிர்த்து மற்றைய துறைகளின் சம்பள முறை அதிகரிக்கப் பட்டதோடு பல சலுகைகளும் வழங்கப்பட்டன. உதாரண மாக கைத்தொழில் துறை, பொறியியற் போக்குவரத்து போன்றவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேதனம் கூடுதலாக வழங்கப்பட்டது.
பெருந்தோட்டத் துறையில் தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றில் வேலை செய்யும் மணி நேரமும் வரையறை

129
யற்றுக் காணப்பட்டது. வேலை பகுப்புமுறைக்கு ஏற்பவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலதிக நேர வேலைக்கும் சம்பளம் கண்ணுக்குப் புலப்படாத தொகையே வழங்கப் பட்டது. பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்தவரை இவ்வாறான நடவடிக்கைகளே மேற்கொள் ளப்பட்டன. மிகவும் குறைந்த சம்பள முறையில் மலையக மக்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கு தங்களது இரத்தத் தையும், வியர்வையையும் சிந்தி பிரித்தானியருக்கு அதிக இலாபத்தை உழைத்துக் கொடுத்தனர்
1948ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்தை பிரித்தானிய பாணியிலான அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்த பிரித்தானியர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை நிர்கதி யாக விட்டுச் சென்றனர். பிரித்தானியாவைப் போல் இம் மக்களிடம் உழைப்பை எதிர்பார்த்த முதலாளி வர்க்கம் அதனை பின்பற்றி தொழிலாளர்களை வழிநடத்தியது, 1947 தேர்தலில் மலையக மக்கள் தமது வாக்குரிமையை பயன் படுத்தி இடதுசாரித் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினர். இது மலையக தொழிலாளர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இதனுடைய எதிர்கால ஆபத்தை உணர்ந்த டி. எஸ். சேனநாயக்காவும், அவரது சகாக்களும் வஞ்சகமான முறையில் 1948 செப்டெம்பர் 15ம் திகதி இவர்களின் வாக்குரிமையைப் பறித்தெடுத்தனர். இதன் விளைவாக இவர்களின் வாழ்க்கையில் பார்தூரமான விளைவு கள் ஏற்பட்டன. 1946ம் ஆண்டு மலையகத் தோட்ட தொழி லாளர்களின் தொகை 66 58 53 ஆக இருந்தது. இக்காலப் பகுதியில் இந்தியாவிலுள்ள செட்டிமார்கள் சிந்துமார்வாரி யினர், குஜராத் வர்த்தகங்கள் போன்றோரும் வியாபாரிகளா கவும், தோட்ட உடைமையாளர்களாகவும் காணப்பட்டனர். இவர்களின் கைகளிலும் அகப்பட்டு இத் தோட்ட தொழி லாளர்கள் பல இன்னல்கனை சந்திக்க வேண்டியிருந்தது.
ஏனைய துறையினரோடு ஒப்பிடும்போது மிக குறைந்த மூலதனமாக 2. 87 சதம் வழங்கப்பட்டது. 1955, 1968ஆம்

Page 67
130
ஆண்டுகளுக்கிடையில் தேயிலை தோட்டத் தொழிலாளியின் ஊதியம் 27% மட்டுமே அதிகரிக்க ஏனைய பயிற்றப்படாத அரச ஊழியர்களுக்கு 63. 4% மாக அதிகரித்து காணப் பட்டது. 1950 ஆண்டிற்குப் பின்னரே முறையான மூலதனம் கணிக்கப்பட்டு மாதாந்தம் வழங்கப்பட்டது. 1945 சம்பள நிர்ணய சட்ட (2)ம் பிரிவுப்படி வேலை செய்வதற்கு விருப்ப முள்ள ஒரு மாதத்தில் வேலை செய்யும் நாட்களுக்கேற்ப கூலி வழங்கப்படும் என கூறியது. ஆனால் நாட்டின் முதுகெலும் பாக இருக்கும் இவர்களுக்கு கிழமையில் 3 அல்லது 4 நாட் களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்பட்டது. இவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இந்தியாவுக்கு செல்வோர் அங்கு மீண்டும், பழையப்படி பட்டினியோடு இருக்க வேண்டி நிர்க்கதியான நிலை காணப் பட்டது.
தொடர்ந்து வந்த 1952 ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1957 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்றன அற்ப, சொற்ப அளவு மூலதனத்தைக் கொடுத்தாலும் இவர் களின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் கடுமையாக உழைத்தனர். சிலர் ஒப்பந்தங் களுக்குப் பலியாகி இந்தியா திரும்பினர். பிரித்தானியா, ஆட்சிக் காலத்திலிருந்தே வீடுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. 1963 மத்திய வங்கி ஆண்டறிக் கையின்ப்டி மலையக தோட்டத் தொழிலாளர் 51.4%னர் உழைப்பவர்களாக காணப்பட்டனர். 1953ற்கும், 1963ற்கும் இடையில் இவர்களின் தலா வருமானம் 45ல் இருந்து 75 சதவிதம் மட்டுமே அதிகரிப்புக் காணப்பட்டது. இவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு இது போததாக காணப் பட்டது. அரசாங்கத் துறைகளிலே காணி போன்றவற்றில் வரும் வருமானமும் மிக குறைவாக காணப்பட்டது. அரசாங்க வேலை செய்வோரின் தொகையும் மிகக் குற்ைவு, வாழ்க்கை செலவிற்கேற்ப ஊதியமும் வழங்கப்பட வில்லை.

13.
தொண்டமானை தலைவராக கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்மக்களுக்கு ஒரு சிறிய சம்பளப் பிரச்சனையைப் பற்றி பேசினாலும் சந்தர்ப்பவசத்தால் அடிக்கடி பலவீனமானது. 1967இல் பஞ்சம் ஏற்பட்டபோது 17.50 சதம் பஞ்சத்திற்கு வழங்கும்படி எல்லா தொழிற்சங் களும் போராடின. கடைசிவரை நின்ற தொண்டமான் இடையில் கழுத்தறுத்து அரசாங்கத்திற்கு சார்பாக நின்ற தால் இது தடைப்பட்டது. சி.வி. வேலுப்பிள்ளை, வெள்ளையன், அய்யாத்துரை, அஸிஸ், சண்முகதாசன் போன்ற தொழிற்சங்கவாதிகளின் பங்களிப்பு மலையகத்தில் அக்காலக் கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.
பாராளுமன்ற இடதுசாரிகள் தெளிவான ஒரு பார்வை இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் வலுவான ஒரு நிலையினை ஏற்படுத்த முடியவில்லை. வாழ்க்கை செலவிற் கேற்ப மற்றைய துறையினருக்கு கூலி வழங்கினாலும் மலையகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை, ஆனால் பெருந்தோட்டத்துறை 60 சதவீதமான பங்களிப்பை மொத்த தேசிய உற்பத்திற்கு வழங்கினர். 1972 ஐக்கிய முன்னணி அரசாங்கம் வந்ததும் பெருந்தோட்டதுறையை தேசியமயப் படுத்தியதை தொடர்ந்து ஓரளவு சம்பள உயர்வு வழங்கப் பட்டது. 1975ஆம் ஆண்டு 5.06 சதமாகவும், 1984ஆம் ஆண்டு 16, 19 சதமாகவும் 1990ஆம் ஆண்டு வாழ்க்கைச் செலவுப்படி ஒரளவு சதவீதத்துடன் சராசரியாக 49 ரூபாவாக வழங்கப்படுகிறது. 1975ற்கும் 1984ற்கும் இடைப்பட்ட வேதன உயர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது வாழ்க்கைச் செலவிற்கு அமைய வழங்கப்படவில்லை. இதுபோலவே 1984ற்கும் 1990ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் சராசரியாகவேகமாக அதிகரிக்க தொழிலாளர்களின் சம்பளவீதம் மிக குறை வாகவே வழங்கப்படுகிறது. 1984இல் தோட்டத் தொழி
லாளர்களின் வேலை நிறுத்து 鬣 * தால் சம்பள உயர்வு 镰 து இதன்படி

Page 68
132
நாளாந்த அடிப்படையில் பின்வரும் அட்டவணையின் பிரகாரம் வழங்கப்பட்டது.
ஆண்(ரூபா) பெண் (ரூபா) சிறுபிள்ளைகள் (ரூபா)
தேயிலை 4.51 4.32 4 07 இறப்பர் 2.55 2.53 2 30
வேலைநாட்கள் அதிகரிக்கப்பட்டாலும் இக்காலப்
பகுதியில் அரசின் நடவடிக்கை தொழிற்சங்களை திருப்தி படுத்துவதாக இருந்ததே ஒழிய தொழிலாளர்களுக்கு எவ்வித திருப்தியும் தரவிவலை ஏனெனில் வாழ்க்கைச் செலவின் குறைந்த அடிப்படையில் வழங்கப்பட்டதாகும். 1977ற்கு பின்னர் ஜனவச, உசவசம என இரண்டு அரசநிறுவனங்கள் பெருந்தோட்ட துறையை நிர்வகித்ததால் ஊழல் அதிகரித்து முகாமைத்துவ அம்ைப்பு மிகவும் மோசமாக காணப்பட்டதன் விளைவாக பல தோட்டங்கள் நட்டத்தில் ஓடின இதனை காரணம் காட்டி அரசாங்கம் சம்பளத்தை வழங்க மறுத்தது. தவறு அரசாங்கத்தில் தானே தவிர தோட்டத் தொழிலாளர் களில் அல்ல. தேயிலை உற்பத்தி 1950இல் 143.7ஆக காணப்பட்டது. 1970இல் 212.2 ஆகவும் 1983 இல் 199.3 ஆகவும் இருந்தது. 1990இல் 233.2ஆக இருந்தது. இதன்படி உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இது மத்திய வங்கி ஆண்டறிக்கையின் புள்ளி விபரங்களாகும்.
தேயிலை வருமானம் (பத்து இலட்சம் ரூபாய்களில்)
1950 752 1970 1,116 1983 5,293
ஆக காணப்படுகிறது. 1990ஆம் ஆண்டு தேயிலை 1989ஆம் ஆண்டைவிட 13 சதவீத அதிகரிப்பை பதிவு செய்தது. பெருந்தோட்ட துறையின் பங்கு 39 சதவீதமாக காணப்பட்டது.

133
தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை நோக்கும் போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுறது.
தோட்டத் தொழிலாளர்களின் மாத வருமானம் (ரூபாய்களில்)
1975 - 100.45 சராசரி 12. 315 -س 1985 1990 - 715.23
ஆக காணப்படுகிறது வாழ்க்கைச் செலவுப்படி வாழ்க்கைச் செலவு சுட்டெண் 1990 ஆம் ஆண்டு டிசம்பரில் 1094.9 புள்ளியாக இருந்தது. இப்படியிருக்க 715 ரூபா எப்படி? தொழிலாளர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
தற்போது அனைவருக்கும் பிரஜா உரிமை வழங்கப்பட்டு இந்நாட்டவர்களாக இருக்கின்றனர் எனக் கூறுப்படு கின்றது. ஆனால் நாட்டில் எனைய துறைகளில் கொடுக்கப் படும் சம்பளத்தைவிட மிகக்குறைவாகவே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பிள்ளைகளின் படிப்பு, உணவு, உடை போன்ற செலவீனங்களுக்கு போதியனவாக வில்லை. மாதச்சம்பள முறை கேட்டும் எவ்வித நடவடிக் கையும் அரசாங்கம் மேற் கொள்ளவில்லை. அண்மையில் ஆசிரியர்களுக்குக் கூட 300/- சம்பளம் உயர்த்தியும் இம் மக்களுக்கு இன்னமும் வாழ்க்கைக்கு ஏற்றபடி ஊதியம் வழங் காதது அரசின் அசமந்த போக்கைக் காட்டுகிறது. மேலும் திட்டமிட்டு கைத்தொழில் துறையை வளர்த்து இந்நாட்டை முதலாளிகளின் கையில் அன்னிய ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்புக்களிடமும் கொடுத்து பெருந்தோட்ட துறையை பின்தங்கிய துறையாக மாற்ற அரசு எத்தனித்து வருகிறது.
கணிசமான வருமானத்தை பெற்றுக் கொடுத்த மக்கள்
இந்த வருமானத்தில் இத் தொழிலாளர்களை தொடர்புறாத வகையில் வேறு துறைகளுக்கு செலவிடப்படுகின்றன.
அ-9

Page 69
134
இவர்கள் வாழ்க்கை நலனில் அக்கறை காட்டுவதாகவும் இல்லை. உழைப்பை வாங்கிக் கொண்டு மிக மோசமாக இவர்களை சுரண்டி வருகின்றனர். விலைவாசி உயர்வு, பணவீக்க நிலைமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப வருமான பங்கிடோ சம்பள உயர்வோ'வழங்கப் படவில்லை. ஒரு தொழிலாளர் சாதாரணமாக வாழ்க்கை நடாத்த இப்போது உள்ளதை போன்று இரண்டு மடங்காக உயர்த்தாவிடில் இவர்களின் வாழ்க்கை பழைய நிலைமை
லேயே நின்று கொண்டிருக்கும் .தற்போது தலா வருமானம் 418 ஆக உள்ளது. ஆனால் மலையக மக்களை பொருத் தவரை 250க்கு குறைவான அமெரிக்க டொலராகவே காணப்படுகிறது
150 வருடங்களாக இந்த நாட்டிற்கு முதுகெலும் பாக உழைத்து கொடுத்த இந்த மக்களின் வாழ்க்கையில் அடிமைமுறையும், அநீதியும் அடக்குமுறைகளுமே காணப் படுகிறது. தற்பொழுது இத்துறை தனியார் கம்பனிக்கு கொடுக்கப் போவதாக அரசு கூறுகிறது சொந்தமான வீடு சொந்தமான காணி வேலைவாய்ப்பிலும் புறக்கணிப்பு இப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படமுடியும்?
இம்மக்களை நேசிக்கும் உண்மையான ஜனநாயக சக்திகள் தேசிய ரீதியில் இவர்களின் பிரச்சனையை ஒரு முனைப்படுத்தி சம்பளப் பிரச்சனையை வென்றெடுக்க வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தொழிற்சங்க அமைப்புகளினாலும் அல்லது மலையக மக்கள் முன்னணி போன்ற குறுகிய பார்வையுடைய அமைப்பாலும் இம்மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. இவ்வாறு தொழிற்சங்கள் குறுகிய பார்வை செலுத்துமானால் இம்மலையகதொழிலாளர் இருபதாம் நூற்றாண்டின் நவ அடிமைகளாக வாழவேண்டி வரும்.

135
உசாந்துணை நூல்கள்
1.
2.
பொருளியல் நோக்கு 1981 மார்ச்
மத்திய வங்கி ஆண்டறிக்கை 1963, 1990ஆம் ஆண்டுகள்
இனத்துவமும் சமூக மாற்றமும் விஞ்ஞானக் கழக வெளியீடு
தேச பக்தன் நடேசய்யர் - சாரல்நாடன்
THE PLANTATION TAMILS OF SRI LANKA (MAYANVILE)
வீரகேசரி, தினசரன் நாளிதழ்களும் வாரவெளியீடு களும் தொழிலாளர் சிறப்புப் பேட்டிகள்.
இந்திய வாழ் தமிழர்களின் குடியகல்வு - ஜெயசிங்

Page 70
மலையக மக்களின் அரசியல் எதிர்காலம்
29. öúb6D) U LLUIT
இலங்கை நாட்டின் ஆயிரம் அடி உயரத்திற்கு மேற்பட்ட மத்திய மலைப்பகுதிகளில் தொழிலாளர்களாக பெரும்பாலோ னோரும், மத்திய பகுதி நகரங்களிலும் கொழும்பிலும் தற்போது வவுனியாவை உள்ளிட்ட வன்னி மாவட்டங்களிலும் கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் சனத் தொகையில் ஏறக்குறைய எட்டு சதவீதமானோராவர். இச் சமுகத்தினரின் பெரும்பாலோனோர் மத்திய மலைநாட்டில் வாழ்வதாலும் இவர்களில் ஏறக்குறைய 98 சதவீதமானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருப்பதாலும் மலைய மக்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தமிழ் மொழியை பேசினாலும் இவர்கள் வடக்கு கிழக்கு தமிழ்மக்களிலிருந்து ஒரு வித்தியாசமான சமூகமாக அடையாளம் கொண்டிருப்பதாலும் தனித்துவமான சமூகமாகத் திகழ்கின்றனர். இவர்கள் கலாசாரம், பொருளா தாரம் வாழ்க்கை முறை என்பவற்றில் வித்தியாசமான தனித் துவமான அம்சங்களை கொண்டுள்ளனர். இவர்களில் பெரும் பகுதியினர் மலைநாட்டில் நீண்டகாலமாக வாழ்வதால் மலை நாடு இவர்களின் சொந்தப் பிரதேசமாக கொள்ளப்படுகிறது. இவர்கள் ஏறக்குறைய 180 வருடங்களுக்கு முன்னர் இந்தியா விலிருந்து வந்தவர்களாவர்.
மனித சமூக விடுதலை போராட்டத்தில் இனம், மதம், மொழி, நாடு, சாதி, பிரதேச்ம் என்பன யாவும் இறுதியில் அர்த்தமற்றவை என்பதில் எவ்வித அபிப்பிராய பேதமும் இருக்க முடியாது. ஆனால் இன்று எல்லாவற்

1.37
றுக்கும் அடிப்படையாக இரண்டு அணுகு முறை களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஒன்று மக்களை அடக்குவதும் சுரண்டுவதும் யார் என்பதும், இரண்டா வது மக்கள் எவ்வகையில் அடக்கப்படுகிறார்கள் என்பதுமாகும். மக்கள் இன ரீதியாகவும் சாதி, மத, பிரதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் அடக்கப்படும் போதும் சுரண் டப்படும்போதும் அவ்வகை அடக்குமுறைகளுக்கு எதிராக ஸ்தாபனப்பட்டு போராடவேண்டியதும் அதேவேளை அவ் வாறு ஸ்தாபனப்பட்டுப் போராடுபவர்கள் அவர்களது போராட்டத்தினை ஏனைய அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கவேண்டியதும் அவசியம்.
இலங்கை நாட்டில் இனப்பிரச்சினையும் இன அடக்கு முறையும் பிரதான அரசியல் பிரச்சினையாக இருப்பதால் இன விடுதலைக்கான போராட்டமும் - விடுதலையும் இலங் கையின் முழு மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அந்தவகையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனமாக இருக்கும் இந்திய வம்சாவளி மக்கள். மலையக மக்கள் மீது திணிக்கப்படும் இன அடக்கு முறைக்கு எதிராக போராடவேண்டியதுடன் அதற்கு தீர்வு காணப் படவும் வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இனவன்முறைகளில் மிகவும் உச்சமானதென 1983இல் நடைபெற்ற வன்முறையை குறிப்பிடலாம். அதனை அடுத்து மலையக மக்கள் என்ன செய்வது என்ற வினாவிற்கு பொதுவாக மூன்று விடைகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவுக்குச் செல்வது. வடக்கு கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்வது, மலையகத் திலேயே இருப்பது என்ற அந்த மூன்று யோசனைகளில் மலையகத்திலேயே இருந்து விடுவது என்பது ஸ்திர மாகி இன்று இலங்கை நாடு எமது நாடு மலையகம் எமது பிரதேசம் என்ற தேசிய உணர்வு மேலோங்கியுள்ளதை அவத்ானிக்க முடியும், அவர்கள் ஒருதேசிய இனமாக வளர்க்

Page 71
138
கப்பட வேண்டியதும் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியதும் தவிர்க்க முடியாததாகி விட்டது,
இலங்கையில் மிகவும் பலம் கொண்ட தொழிலாளர் வர்க்கமான தோட்டத்தொழிலாளர்கள் வர்க்கரீதியாக ஒன்று பட்டு இலங்கையில் ஏனைய தொழிலாளர் விவசாய மக்க ளுடன் ஸ்தாபனப்பட்டு வர்க்கப்போராட்டத்தை முன் னெடுப்பது சாத்தியமில்லையா அல்லது தேவையற்றதா என்ற கேள்வி எழ இடமுண்டு.
முதலாளித்துவம் இதனுடைய அரசியல் வாழ்வை நீடிப் பதற்காக இனம், மதம், மொழி சாதி போன்ற குறுகிய பேதங்களைப் பயன்படுத்தி மனித சமுதாய ஒற்றுமையை குலைத்து விடுதலையை தடுக்கும் யுக்திகளை செய்து வருவது அறியாதவர் இலர். அடக்குமுறைகள் மிகவும் மோசமான இராணுவ நடவடிக்கைகளாகவும் மேற்கொள் ளப்படுகின்றன. அடக்கு முறைகளுக்கெதிரான சரியான போராட்டங்களை முறியடிப்பதற்கு முதலாளித்துவம் அத னாலான சகல அடக்குமுறைகளையும் மேற்கொண்டு வரு கின்றது. அதுமட்டுமல்ல அவ்வகையான போராட்டங்களை மழுங்கடிக்க அல்லது பலவீனப்படுத்த சகல நவீன யுக்தி களையும் கையாள்கிறது.
எந்தவொரு போராட்டமும் மக்கள்போராட்டமாக முன் னெடுக்கப்படாதிருக்க அல்லது மக்களின் ஒரு பிரிவினரான மத்தியவர்க்க அல்லது இளைஞர்களின் போராட்டமாகவே இருக்க முதலாளித்துவம் சூழ்நிலைகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துகிறது ஒரு சமுகத்தின் மீது சுமத்தப்படும் அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் அச்சமூகத்தின் ஒரு பிரி வினரின் அக்கறையை மட்டும் அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட முதலாளித்துவம் வேண்டிய அணுகு முறைகளைச் செய்து வருகிறது, விடுதலை இயக்கங்கள் மக்களிலிருந்து அந்நியப்படுத்தப்படவும் இயக்கங்களில் மக்களுக்கு எதிரான போக்கு மேலோங்கவும் இயக்கங்களில்

139
ஊடுருவியும் விடுதலைப் போராட்டங்களை முதலாளித்துவம் பலவீனப்படுத்துகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை யெல்லாம் மீறி ஒரு விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடை கின்றபோது குறித்த பிரச்சினைக்குத் தீர்வாகக் குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் தீர்வுகள் மேற்கொள்ளப்படுவதும் உண்டு,
அதைவிட ஒரு மக்கள் போராட்டத்துக்கானச் சூழ்நிலை, ஏற்படுமுன்னரே ஒரு நாட்டில் ஒரு சமூகத்தில் போராட் டத்தை செயற்கையாக திணித்து விடுவதனால் அவை காலத் துக்கு முந்திய போராட்ட நடவடிக்கையாக அமைந்து மக்கள் போராட்டமாக வளர்வதற்கு இடமில்லாமல் தோல்வி யடைய செய்யப்படுகின்றது.
இவ்வாறு முதலாளித்துவம் செயற்படும் போது அவற்றை கணக்கில் எடுக்காது வெறும் பேச்சில் மட்டும் கம்யூனிஸத்தைப் பேசிக் கொண்டு பாராளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலையே இலக்காகக் கொண்டு செயற்படும். ஸ்தாபனங்களையும், பாராளுமன்ற அரசியலை முற்றாக நிராகரித்து நடைமுறை யில் எவ்வித சரியான அரசியல் வேலைகளையும் செய்யாமல் தத்துவங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் ஸ்தாபனங் களையும் விமரிசன ரீதியாகப் பார்க்க வேண்டியதும் அவசியம்,
இன அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிராகப் போராட்டங்களை வர்க்கப் போராட்டதுடன் இணைக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு முழு மனித விடுதலையை நோக்கி முன்னேற திட்டமிட்டுச் செயற்படாதவிடத்து எந்த அரசியலும் முதலாளித்துவத்துக்கு மறைமுகமாக உதவுவ தாகவே இருக்கும்.
ஆனால் இன அடக்குமுறைகள் போன்றுவற்றுக்கு எதிரானப் போராட்டங்களை வெகுஜனப் ப்ோராட்டங்களாகி முன்னெடுத்து வர்க்க அடிப்ப்டையில் முன்னேறும் போது

Page 72
140
அவை புதிய உத்திகளைக் கையாண்டு வரும் முதலாளித்து வத்துக்குப் பெரும் சவாலாக அமையும்.
இன, மத, சாதி போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் பொறுப்பிலிருந்து மக்கள் ஸ்தாபனங்கள் பின் வாங்க முடியாது. அதற்கானப் போராட்டங்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியாத வகையில் நிலவும் சூழ்நிலைகளையும் தடைகளையும் கண்டறிந்து சரியான திசைமார்க்கத்துடன் கொள்கை நடைமுறைகளுடனும் முன்னேறும் வரை வெற்றி என்பது அடைய முடியாத ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாததாகும்.
வடக்குக் கிழக்கில் கிடைத்த அனுபவங்களைச் சரியான முறையில் தொகுத்து மலையகமக்கள் தங்களது சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லல் வேண்டும். வடக்குக்கிழக்கில் நிலவிய பாராளுமன்ற அரசியல் அதனால் அம்மக்களுக்குக் கிட்டாத உரிமைகளைப் பற்றியும் தீவிரவாதி அரசியலினால் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக் கும் விடயங்களையும் தேசிய போராட்டம் என்ற பெயரில் தெற்குப் பகுதியில் இடம் பெற்ற ஜே.வி. பி. இயக்க நடவடிக் கைகளையும் அதன் வீழ்ச்சியையும் தேசிய கட்சிகள் எனப்படு பவைகளின் அரசியல் வரலாற்றையும் சரியாக விளங்கித் தெளிய வேண்டும். அத்துடன் மலையக மக்களின் வரலாற் றில் கிடைத்த தொழிற்சங்க அரசியல் போராட்டப் படிப்பினை களையும் சரியாக மதிப்பிடுவதன் மூலமுமே எதிர்கால அரசியல் வாழ்க்கையைச் சரியாக தொடர முடியும்.
வடக்குக் கிழக்கில் தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற அரசிய லினால் தமிழ் மக்களின் இன உரிமைகளை வென்றெடுக்க முடியாதென்பதனால் அதனை முற்றாக நிராகரித்து தீவிர வாத அரசியல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வியக்கங் களில் சரியான வர்க்க நிலைப்பாடும் மக்கள் சார்ந்த மக்களை ஈடுபடுத்தும் தன்மையும் இல்லாதபடியாலும் தேசிய அரசிய லிலிருந்து பிரிந்து அந்நியச் சக்திகளின் செல்வாக்குக்குட்

141
பட்டபடியாலும் ஏற்பட்டதே தற்போதைய பின்னடைவுகள் என்பது பிழையான மதிப்பீடாக இருக்க முடியாது.
ஜே. வி. பி. யினை பொறுத்தவரை அது பரந்துபட்ட மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படாமல் இலங்கையில் “சோஷலிஸ் ஆட்சியை’ ஏற்படுத்துவதற்கான போராட்டம் எனக் கூறிக் கொண்டு தனிமைப்பட்டதுடன் சிறுபான்மை யினங்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்காது அவர் களின் போராட்டங்களுடன் தங்களது "தேசிய போராட்டம்” எனக் கூறப்பட்டதை இணைக்காமல் விட்டதால் மிக இலகுவாக மக்களிடையே அவ்வியக்கம் இல்லாமல் போய் விட்டது.
தேசியக் கட்சிகள் எனப்பட்டச் சில பாராளுமன்ற இடது சாரிக் கட்சிகள் இலங்கையில் சோஷலிஸத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை கொள்வதாக கூறிக் கொண்டு இலங்கையிலுள்ள பலவகைச் சமூகங்களிடையேயும் நிலவும் அடக்குமுறைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறை அரசியலை விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியா மலோ கைவிட்டதால் அடக்கப்படும் மக்களிடம் செல்வாக் கிழந்தன.
அடக்கப்படும் மக்களின் தலைமைகள் கூட பிற்போக்கு முதலளித்துவ சக்திகளின் கைகளிலேயே சிக்கித் தவிக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு தலைமை கொடுக்க பிற்போக்குத் தலைமைகள் இல்லாவிட்டால் வேறு ஆளில்லை என்ற நிலைமையும் ஸ்திரமாக்கப்பட்டு விட்டதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வகையிலேயே பலம் கொண்ட தொழிலாளர் வர்க்கமான தோட்டத் தொழிலாளர்களின் தலைமையாக இ. தொ. கா வின் முதலாளித்துவ வர்க்கத்தினர் வரமுடிந் தது; முதலாளிதுத்வத் தலைமையைக் கொண்ட இ.தொ.கா. வர்க்க ரீதியில் தோட்டத் தொழிலாளர்களின் அக்கறைகளுக்கு

Page 73
142
எதிராக இருந்தபோதும் பெரிய தொழிற்சங்கமாக வளர முடிந்துள்ளது. யூ. என். பி.க்கும் இந்நாட்டின் முதலாளித்து வத்திற்கும் எவ்வித அச்சுறுத்தலும் கூட தோட்டத் தொழி லாளர்களில் மத்தியிலிருந்து எழாத வகையிலான *அரசியலையே” இ. தொ. கா. கொண்டுள்ளது. மறுபக்கம் யூ.என். பி.யின் தொழிற்சங்கமான தேசியத் தோட்டத் தொழி லாளர் சங்கத்தை அங்கு பெரியதாகி கட்டிவளர்ப்பதில் யூ என். பி. அக்கறை காட்டிவருகின்றது. இது தொழிலாளர் வர்க்க நலன்களுக்கு எதிரானது என்பதை பற்றி விரிவாக ஆராய வேண்டியதில்லை.
சுதந்திரத்திற்கு முற்பட்டகாலத்தில் சாத்வீக கொள் கையை அடிப்படையாக கொண்டிருந்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு இலங்கை இந்தியன்- காங்கிரஸ் இயங்கியது. அதனது மக்கள் நலன் சார்ந்த தன்மைகளும் குறைத்து மதிப்பிட முடியாது. அக்காலத்தில் இலங்கையில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செய்த வேலைகளும் குறைவானவை அல்ல. தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களை கூட அமைக்க முடியாதிருந்த போது அம்மக்கள் மத்தியில் இலங்கை-இந்தியன் காங்கிரஸ் இடதுசாரி அரசியற் கொள் கையையும் அப்போது தேசிய ரீதியாக சரியான நிலைப்பாட் டையும் கொண்டிருந்த இடதுசாரி கட்சிகளுடன் புரிந்துணர் வுடன் செயற்பட்டது. அக்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட பலர் இலங்கைஇந்தியன் காங்கிரஸின் தலைமையிலும் சாதாரண மட்டத் திலும் இருந்தனர். அவர்களின் நேர்மையான அக்கறை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை இலங்கை- இந்தியன் காங்கிரஸ் முன்னெடுத்தது என்று கூறுவது பிழையாகாது. அத்துடன் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் முதலாளித்துவ வர்க்க வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை என்பதாலும் மக்கள் சார்ந்த அரசியலே ம்ேலோங்கியிருந்தது. அதன் வளர்ச்சிக்

43
கட்டத்திலேயே 1947-ஆம் ஆண்டு முதலாவது பாராளு மன்றத்தில் எட்டு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இடம் பெற்றனர். அத்துடன் அப்போது மலையக மக்கள் இடது சாரிகளை ஆதரித்தும் வாக்களித்தனர்.
ஆனால் 1948ல் மலையக மக்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதாலும் இலங்கை இந்தியன் காங்கிரஸில் ஏற் பட்ட மாற்றங்கள் காரணமாகவும் மலையக மக்களிடையே முதலாளித்துவ வர்க்க வளர்ச்சி ஏற்பட்டதாலும் பெரும் பாலான மக்களின் நலனுக்கான அரசியல் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்தது. இலங்கை - இந்தியன் காங்கிரஸின் தலைமை உயர்சாதி உயர் வர்க்க நலன்களுக் கானதாகி ஸ்திரமானதுடன் குறைந்த சாதி எனப்பட்ட வர்களை தனிமைப்படுத்தியது. அதன் பின்னர் திரு தொண்டமான் தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் கூட தொழிலாளர்களின் பலம் காரணமாக தொழிலாளர்களின் நலனில் சில இடங்களில் அக் கறை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிற்தேயின்றி அடிப் படையில் தொழிலாளர் வர்க்க தலைமை அல்லவே.
மலையக மக்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதற்குப் பிறகு வாக்குப் பலமிழந்து விட்டதால். பாராளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கிவிட்ட இடதுசாரிகளும் மலையக மக்களில் அக்கறை செலுத்துவதை கைவிட்டு வந்தனர். மார்க்சிஸ - லெனினிய அடிப்படையிலான சில அமைப்புகள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சரியான அரசியல் திசைமார்க்கத்தில் ஸதாபன ரீதியில் செயல்படத் தவறிதாலும் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவே மலையக மக்களின் பெரும் இயக்கமாக வளர்ந்தது. 1970 இலிருத்து 1977 வரை இருந்த இடதுசாரிகள் இணைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் மலையகமக்கள் பாதிக்கப்பட்டதாலும் அக்காலகட்டங்களில் தொழிலாளர் களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்துவதை கைவிட்டு அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்ததாலும் தோட்டத் தொழி

Page 74
144
லாளர்கள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத இடதுசாரிகளில் நம்பிக்கை இழந்தனர். அதனை இ. தொ. கா. சாதகமாக பயன்படுத்தி வளர்ந்தது. ་་་་་་་་་་་་
இடதுசாரிகள் அங்கம் வகித்தப்படியால் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தபோதும் அடக்குமுறைகளையே பெரிதும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஐக்கிய முன்னணி அரசாங்கம் இ.தொ.கா. முதலாளித்துவத் தலைவர்களுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் சொந்த மான் தோட்டங்களை காணி சுவீகரிப்பு திட்டத்தின் கீழ் சுவீகரித்து அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வெறுப்படைந் திருந்த இ. தொ கா. தலைவர்கள் மலையக மக்களை அணி திரட்டி ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற் படுவதில் அக்கறை காட்டினர். மலையக மக்கள் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மீதிருந்த அதிருப்தியைச் சாதிகமாக இ. தொ. கா. தலைமை பயன்படுத்தியது. அதன் வளர்ச்சி கட்டத்தில் 1977இல் யூ.என்.பியை ஆட்சிக்கு கொண்டுவரவும் அதனை தொடர்ந்து யூ. என். பியை ஆட்சி யிலேயே நிலைநிறுத்துவதற்கும் இ. தொ. கா வாக்குப் பலத்தை பயன்படுத்தி வருகிறது, பிரசாவுரிமை பரவலாக கிடைத்தபிறகு மலையகமக்களின் வாக்குரிமையைப் பயன் படுத்தி பாராளுமன்ற அரசியலையே நடத்துவதற்கு இ.தொ. காவும் அதற்குப் போட்டியாக ஏனைய சில தொழிற் சங்கங்களும் முற்படுகின்றன.
திரு. தொண்டமானுக்காக இந்தியாவும் வம்சாவளியினர் மீது அனுதாபம் கொண்டோ சில சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டதாக காட்டும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சில உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டமை தொண்ட மானுக்காகவோ மலையக மக்கள்மீது அனுதாபம் கொண்டோ அல்ல. அவர்கள் ஸ்தாபனப்படுத்தப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் இலங்கையின் முதலாளித்துவத் திற்குப் பெரும் சவலாக அமையும் என்பத்னாலும் அதனூடாக

145
மலையகத்தில் புதிய தலைமை உருவாக்கப்படும் என்ப தனாலும் அது யூ என்.பியின் ஆயுள் காலத்தை வரையறுத்து விடும் என்பதனாலும் ஆகும். மலையக மக்களின் உரிமை பற்றி கதைக்கும் தொண்டமான் அல்லது இ. தொ. கா முதலாளித்துவத் தலைமையே நிலைத்திருக்க வேண்டுமென் பதிலும் மக்கள் - மக்கள் சார்ந்த இயக்கமொன்று வளர விடாது தடுப்பதிலும் யூ.என்.பியும் கவனமாக இருந்து வரு கின்றது. அதே வேளை மலையகத்தில் இ. தொ. காவே ஒரு ஏகபோக அமைப்பாக இருக்கவேண்டும் என்பதில் அக் கறை கொண்டு இ. தொ, கா தலைமையும் வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. போராட்ட பாரம்பரியம் கொண்ட தோட்டத் தொழிலாளர்களை எவ்வித போராட்டத்திலும் ஈடுபடுத்தாது அவர்களை ஒரு பயந்த சமூகமாக்குவதில் இ.தொ. காவும் யூ, என். பியும் பாரிய முயற்சிகளை கொண்டுவருகின்றன. 1977 முதல் விஷேட மாக தேவையான கட்டங்களிலும் தோட்டத்தொழிலாளர் களைப் போராட்டத்தில் குதிக்கவிடாது திட்டமிட்டே இ. தொ. கா. தடுத்து வருகின்றது. எதனையும் அரசாங்கத் துடன் பேசித்தீர்க்க முடியும் என்று கூறிக்கொண்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத இழுத்தடிக்கப்படுகின்றது. அதற்குச் சார்பாக அவ்வப்போது இ.தொ.கா. பல சாமா தானங்களையும் சொல்லியும் வருகின்றது.
இதனால் மலையக இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கை களால் ஈர்க்கப்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. குறுகிய - பிரதேசவாத அடிப்படையிலான அரசியற் கருத்து களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றையெல்லாம் மீறி பாராளுமன்ற இடதுசாரி களினது தத்துவங்களை மட்டும் பேசிக்கொண்டிருந்த இடது சாரிகளினதும் வரலாற்றை விமர்சனரீதியாக தொகுத்து மலையகத்திலும் மக்கள் இயக்கமொன்றை கட்டி வளர்க்கும் பணியில் உண்மையான மார்க்சிய லெனினிஸ்ட்டுகள் 1978 முதல் ஈடுபட்டு வருகின்றனர். அந்த புதிய மார்க்சிய-லெனி

Page 75
46
னிஸ் சக்திகளின் அரசியல் பயணத்தில் பல தடைகள் இருந்த போதும் அவற்றையெல்லாம் மீறி முன்னேறுகின்றனர். அவர்கனின் அரசியல் வேலை மலையக, இளைஞர்களால் பெரிதும் ஆகர்சிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங் களிலும் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களைப் பொதுவான ஒரு அரசியல் ஸ்தாபனத்தில் இணைக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர். பரந்துபட்டு மக்கள் இயக்கத்தை கட்டிவளர்க்கும் பணியில் அவர்கள் தம்மை ஈடு படுத்திவருகின்றனர்.
1960 களில் மலையக்ப் படித்த இளைஞர்கள் மத்தியில் எழுந்த தேசிய இன உணர்வு சரியான பாதையில் இட்டுச் செல்லப்படாதபடியால் இ.தொ.காவே மலையக மக்கள் மத்தியில் இன்று பலமாக இருக்கின்றது. ஆனால் யூ.என்.பி இ.தொ.கா போன்றவற்றின் அரசியல் எவ்வாறிருந்த போதும் தற்போது மலையக மக்கள் மத்தியில் தேசிய் இன உணர்வு வளர்ந்து வருகின்றது. அந்த உணர்வினால் ஏற்படும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் சரியான திசையில் இட்டுச்செல்லப்பட தெரிவு செய்யப்பட வேண்டிய அரசியல் பாதை யாது என்பதே இன்று மலையக மக்களிடையே உள்ள கேள்வி ஆகும்.
தேசிய இன உணர்வானது குறுகிய இன வாதமாகவோ ஏனைய இனச் சமூகங்களுக்கு எதிரான்தாகவோ முன் னெடுத்துச் செல்லப்படாமல் அல்லது தனிப்பட அப்போராட்டம் மலையக மக்களின் ஒரு பிரிவினருக்குரிய தாக்கப்படாமல், முழு மலையக மக்களின் போராட்டமாக வளர்த்தெடுக்கப்படுவதுடன் இலங்கையின் ஏனைய அடக்கப் பட்ட போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். அத்துடன் இன்று தேசிய ரீதியாக எழுந்துள்ள தேசிய ஜன நாயகத்துக்கான போராட்டத்துடன் இணைக்கப்படவும் வேண்டும்.

47
தமிழ் பேசும் சிறுபான்மை இனமாக இருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீ கரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். அதனை நோக்கி அவர்களுக்கு எதிரான இன ஒடுக்கலுக்கு எதிராக சக்திமிக்க மக்கள் இயக்கமொன்றை கட்டி வளர்க்கவேண்டும்.
மலையக மக்களுடைய விடுதலைப் போராட்டம் முழு தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்பதால் மலையக மக்களின் உரிமைப் போராட் டத்தை கைவிடுவது என்றோ மலையக மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பதால் தேசிய விடுதலைப் போராட்டத்தை கைவிடுவது என்றோ அர்த்தம் கொள்ளப்படலாகாது. அவ்வாறு ஒன்றை செய்யும் போது ஏனையதை கைவிட்டதால் எற்பட்ட ஏற்படுகின்ற விளைவு கள் தொடர்பான அறிவை பெற்றிருக்காமல் இல்லை.
மலையக மக்கள் சிங்களமக்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்களின் போராட்டம் சிங்கள மக்களை சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து விரட்டுவதாகவே அமையும் என்ற பிழையான பிரசாரங்களுமே சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகள் முழு தேச மக்களுக்கும் சரியாக எடுத்துரைக்கப் பட்டு சிங்கள முஸ்லிம் மக்களுடனும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மலையக மக்களின் சரியான போராட்டங்களை முன்னெடுக்க உறுதியான சரியான ஸ்தாபனமொன்று தேவையாகும். அந்த ஸ்தாபனம் நீண்டகால நோக்கில் தொழிலாளர் வர்க்க அரசியலை கொண்ட முழு மக்களையும் அணி திரட்டக் கூடிய முழுமக்களின் நலனிலும் அக்கறைக் கொண்டதாக இருக்க வேண்டும். 2 -
தொழிற்சங்க ஸ்தாபனங்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் மலையக மக்களை அழைத்துச் செல்ல

Page 76
148
முடியாது என்பது உணரப்பட்ட விடயமே. ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்களை உருவாக்குவதால் மட்டும் தொழிலாளர் வர்க்கம் தனது இலக்கை அடைய முடியாது என்பது தெளிவு. அரசியல் இயக்கம் கட்டி வளர்க்கப்பட வேண்டும். அரசியல் இயக்கம் கட்டி வளர்க்கப்பட வேண்டு மென்பதால் தொழிற்சங்கங்களில் அரசியல் பிரிவுகளை ஏற்படுத்தி பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெல்லுவதாலும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அதற்கு ஏனைய பிரதேச அரசியல் நடவடிக்கைகளிலும் மலையக மக்களின் சொந்த அனுபவத் திலும் இருந்து பாடங்களை படித்துக் கொள்ள வேண்டும். தேசிய அரசியல் வர்க்க அரசியல் என்று கூறிக்கொண்டு ' பாராளுமன்ற பாதையை மட்டும் தரிசிக்கும் அமைப்புகள் குறித்தும் அவதானமாக இருக்க வேண்டும். யூ.என்.பி. அரசாங்கத்திற்கோ அல்லது வேறு அரசாங்கங்களுக்கோ முட்டுக் கொடுக்கும் அரசியலும் நிராகரிக்கப்பட வேண்டி யதே.
ஒரு பிரிவினரை மட்டும் கொண்ட குறுகிய பார்வையை கொண்ட பிரதேசவாத இனவாத அரசியலும் விடிவை தரப் போவதில்லை.
மக்கள் சம்பந்தப்படாத குறிப்பிட்ட சிலரின் தீவிரவாத நடவடிக்கைகளும் ஆக்கத்தையன்றி அழிவையே மீதமாக்கும் என்பதும் தெளிவு.
சரியான இயக்கமொன்றை தெரிவு செய்து கட்டி வளர்க்க வேண்டியது அவசியமாகும். 1948 இற்கு முன்னர் மலையக மக்கள் மத்தியில் இருந்து போராட்ட தியாக உணர்வு பொறுப்புணர்வு என்பனவற்றைவிட கூடிய தியாக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இன்று மலையக மக்களிடையே தொழிலாளர் வர்க்கத்தை விட புதிய சில வர்க்கங்கள் தோன்றி வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் பற்றி சரியாக மதிப்பிட்டு எல்லா

49
மக்களையும் ஐக்கியப்படுத்திச் செயற்படக் கூடிய அமைப் பொன்றை வளர்க்க வேண்டும். தொழிற்சங்க ரீதியாக பல கூறுகளாக்கப்பட்டுள்ள மலையக மக்களை எல்லோரையும் இணைக்கக்கூடிய, இருக்கும் தொழிற்சங்கங்கள், அமைப்பு களிடையே ஐக்கிய புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய தாகவும் இருக்க வேண்டும்.
அவ்வாறான ஸ்தாபனம் ஒன்றின் மூலமே மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தேசிய ஜனநாயக போராட்டத்துடன் இணைக்கும் தேவையை உணர்ந்து செயற்பட முடியும். நீண்டகால நோக்கில் வர்க்கப் போராட் டத்தின் தேவையை - மக்களின் தேவையை, விடுதலையை முதன்மைப்படுத்தி முன்னேற முடியும். வலதுசாரி இடதுசாரி பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை நிராகரித்து, குறுகிய பிரதேச இனவாத அரசியலை, தொழிற்சங்க நடவடிக்கைகளையும் போட்டிகளையும் தவிர்த்து வர்க்க நிலைப்பாட்டுடன் தேசிய நீரோட்டத்தில் கலக்க முடியும். தொழிலாளர்கள், இளைஞர்கள் போன்ற சமூகத்தின் பலதரப் பட்டோரையும் இணைத்து பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்டி வளர்க்க முடியும்,
அப்படியான நோக்கங்களையும் இலக்குகளை கொண்ட ஸ்தாபனமொன்றின் மூலமே தேசிய அரசியற் நீரோட்டத்தில் இணையும் மலையக மக்கள் அவர்களது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது பேணக்கூட உறுதிப்பாட்டை கொண்டி ருக்க முடியும்.
ஆ-1 0.

Page 77
கம்னியூசத்தின் தற்காலிகப் பின்னடைவு? -ஏ. ஜே. கனகரத்தின
அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவெயின் (Mark Twain) உயிரோடு இருக்கும்போதே தனது மரண அறிவிப்பை வாசிக்கும் பாக்கியம் பெற்றவர்.
அப்பொழுது எனது மரணம் பற்றிய அறிவித்தல் மிகைப் படுத்தப்பட்ட, காலத்துக்கு முற்பட்ட ஒன்றாகும்’ எனக் கிண்ட லாகக் குறிப்பிட்டாராம்
பொதுவுடைமை வாதமும் (கம்யூனிஸமும்) சோசலிஸமும் மரணப்படுக்கையில் கிடக்கின்றன என்ற செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் வாசிக்கும்போது மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகின்றது.
மேலெழுந்தவாரியாக நோக்கும்போது, கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள் உலகந்தழுவிய கம்யூனிச இயக்கத் திற்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துவிட்டனபோல் தோன்றலாம்; கிழக்கு ஐரோப்பா பல கட்சி முறையை நோக்கித் "திடுதிப் பென திரும்பியுள்ளது; இந்த அமைப்பில் கம்யூனிஸ்ட்கட்சி பெரும்பாலாரின் ஆதரவைப் பெறாத சிறுபான்மைக் கட்சியாகக்கூட இருக்கலாம். ஹங்கேரியிலும், போலந்திலும், பொருளாதார அமைப்பைப் பொறுத்தவரை, கணிசமான பகுதி முதலாளித்துவ மயமாக்கப்பட்டுவருகிறது. சீனாவிலே, ஜனநாயக எழுச்சிக்கான் முனைப்புக்கள் தற்காலிகமாகவாவது, அடக்கியொடுக்கிவிடப்பட்டன.
கம்யூனிஸ உலகிற்கு வெளியே, 1970களிலிருந்து சோசலிஸ இயக்கம் நெருக்கடிக்கு உட்பட்டுவருகின்றது. 1980களின் பிற்பகுதி அளவில், தொழில்மயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நாடுகளில் பெரும்பாலானவை (முன்னைய

5.
மூன்றாம் உலக நாடுகளான தாய்வானும் தென்கொரியாவும் இவற்றுள் இப்பொழுது அடங்கும்) பொருளாதார நெருக்கடி யிலிருத்து தம்மை மீட்டுக்கொண்டது மட்டுமல்ல, தொழில் நுட்பரீதியாக முன்னேறி முன் பைவிட பொருளாதார வல்லமை பெற்றவையாக விளங்கின. எங்கும் சோசலிஸம் பின் வங்கிச் செல்வதுபோல் தெரிந்தது.
நம்பிக்கைச் சோர்வுமிக்க இந்த நோக்கு, உண்மையில் கடந்த இருபது ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலோட்டமான ஊக அல்லது அனுமான நீட்சியே.
குழப்பங்கள் நிறைந்த எத்தனையோ நூற்றாண்டு களுக்குப் பின்புதான், எத்தனையோ முன்னேற்றங்களும் பின்னடைவுகளும் கலந்த நீண்ட நிகழ்வுத் தொடருக்குப் பின்புதான், மேலாதிக்கம்பெற்ற உலகப் பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம் தன்னை நிலைநாட்டிக்கொள்ள முடிந்தது. எனவே, விரிவான வரலாற்றுப் பரிமாணத்தில், சோசலிஸத்தின் எழுச்சியைப் பொறுத்தவரை, '70 களும், '80களும் தற்காலிகமான பின்னடைவுகளாக இருக்கலாம்.
இன்று, சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பா விலும் ஏற்பட்டுள்ள "தலைகீழ் நிலைக்கு பலர்-குறிப்பாக வரட்டுவாதிகள்- கோர்பச்சேவை திட்டுகிறார்கள், ஆதர வாளர்களோ அவரது துணிச்சலை-ஒரே நேரத்தில் ஜனநாய கத்திற்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கும் அவர் கொடுத்துவரும் அழுத்தத்தை மெச்சுகின்ற்னர், யாருடைய கணிப்பீடு சரியென்பதை வரலாறுதான் எண்பிக்கும்.
மேலெழுந்தவாரியாக நோக்கும்போது, கம்யூனிச உலகிலே கொர்பச்சேவ் ஏற்படுத்தியுள்ள பூகம்பம், காலஞ் சென்ற பாப்பரசர் ஜோன் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்படுத்தியப் புரட்சிக்கு ஓரளவு ஒப்பானது.
வரட்டுவாதிகள் ஒன்றைமட்டும் நன்கு உணரவேண்டும். இன்றைய கம்யூனிச உலகிலே வாழ்பவர்கள் மார்க்ஸ் காலத்து

Page 78
152
மனிதர்களோ, மாசேதுங் காலத்து மனிதர்களோ அல்ல. வரலாறு என்னும் கடிகாரத்தின் முள் 1917 உடன் ஒடாது நின்றுவிடவில்லை. வெகுசன தொடர்புச் சாதனங்களின் துரித வளர்ச்சி, குறிப்பாக தொலைக்காட்சி ஊடகத்தின் வளர்ச்சி, முக்கியமாக இளம் தலைமுறையினரிடம் பாரிய கருத்தியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் வாழும் புறஉலகும் அகஉலகும் 1917ஆம் ஆண்டின் புற, அக உலகங்களிலிருந்து எவ்வளவோ வேறுபடுகின்றனர் இந்த அம்சம் இதுவரையும் ஆழ்ந்த மார்க்சிய ஆய்விற்கு உட்படுத் தப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஏற்பட்டுவரும் வளர்ச்சிப் போக்குகளை உன்னிப்பாக அவதானித்துவருபவர்கள் நியாயமான அச்சம் கொண்டுள் ளனர். பொதுவுடைமையமைப்பு வேரோடு கிள்ளியெறியப் பட்டு மீண்டும் முதலாளித்துவம் நிலைநாட்டப்படுமா என்பதே அந்த அச்சம்.
இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இடைவிடாது நடை பெற்றுக் கொண்டேயிருக்கின்றன; 21ஆம் நூற்றாண்டுக் கேற்ற திருப்திகரமான சோசலிஸமாதிரி இன்னும் உருவாக வில்லையென்பதே பொதுக் கருத்து.
கோர்பச்சேவ் , மேற்கொண்டிருக்கும் சோசலிஸத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளை வரலாற்றுப் பரிமாணத்தில் ஆராய்ந்தவர்கள் பின்வரும் அம்சங்களை வற்புறுத்து கின்றனர்.
முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக 19ஆம் நூற்றாண் -டில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் இன்னும் வலுவுடையன வாகவேயுள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சோசலிஸம் பற்றிப் பல்வேறு மாதிரிகள் முன்வைக்கப்பட்டன. இந்த மாதிரிகளுக் கிடையே மூன்று பொதுமைகள் காணப்பட்டன : 1) பொது வுடைமையுரிமை. 2) ஜனநாயக செயலாட்சி, 3) சமத்துவம்

153
இந்த மூன்று கொள்கைகளும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்பதில் உடன்பாடு கொள்ளப்படவில்லை.
1917க்குப் பின்னர் சோவியத்யூனியனிலே உருவாகிய சோசலிஸ பொருளாதார மாதிரி, மேற்கூறிய மூன்று முக்கிய கொள்கைகளை ஒன்றில் நிராகரித்தன அல்லது அவற்றில் தீர்க்கமான மாற்றங்களைச் செய்தன. 1) பொதுவுடைமை உரிமையென்பது ஈற்றில் அரசுடைமை எனப்பொருள் கொள்ளப்பட்டது. 2) திட்டமிடலுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் ஜனநாயக செயலாட்சியின் மறைவிற்கு வழி வகுத்தது. 3) 1931ஆம் ஆண்டுவரை, சமத்துவத்தை நோக்கிய வருமான மறுபங்கீடு, கோட்பாட்டிலும் நடை முறையிலும், கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. யூன் 1981இல் ஸ்டாலின் குட்டி முதலாளித்துவ பூரண சமத்துவத்தைக் கண்டித்து, சோசலிஸ் சமுதாயத்தைப் பயன் முனைப்பான முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் வருமான வேறு பாடு அதிகரிக்கப்படுவது இன்றியமையாதது என்ற முடிவுக்கு வந்தார்.
முழுமொத்த நோக்கில், 1930களில் இருந்து இன்று வரை வலுப்பெற்றிருந்த சோவியத் மாதிரி, ஆணை பிறப் பிக்கும் அதிகாரப்பாங்கான பொருளாதார அமைப்பாக (administrative Command Eonomy) 686Tilsi 6uj5:5j. மையப் புள்ளியிலிருந்தே நிர்வகிக்கப்பட்டது, சந்தைச் சக்தி களின் செயற்பாட்டிற்கு, குறிப்பிடத்தக்க ஆனால் மட்டுப் படுத்தப்பட்ட விட்டுக்கொடுப்புக்களிருந்தன.
சோசலிஸம் நிறுவப்பட்டதும், சந்தை அற்றுப்போகும் என 1917ஆம் ஆண்டுப் புரட்சிக்குப்பின் சோவியத் கம்யூனிச வாதிகள் நம்பினர். ஆனால் லெனின் புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்திலும், ஸ்டாலின் காலத்திலும் இக்கருத்து மாற்றத்துக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் இன்றைய சந்தை சோசலிஸம்" பற்றிய கருத்துக்களை நோக்கவேண்டும்.

Page 79
154
சோசலிஸ் அமைப்பு உருவாகியதும், பணத்திற்குப் பதில் உழைப்புச் சின்னங்கள் (Labour tokens) புழக்கத்திற்கு வரும் என்றும் அவற்றைப் பயன்படுத்தி உற்பத்தியாளர் தமது உழைப்பின் பங்களிப்புக்கு ஏற்ப பொதுக்கையிருப்பு வளத்திலிருந்து வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமையுடையவர்கள் என மார்க்ஸ் கருதினார். மூலவர்களின் கோட்பாட்டிலிருந்த கற்பனாவாதத் தன்மைக்கு இதுவோர் எடுத்துக்காட்டு.
இன்று கோர்பச்சேவின் ரஷ்யாவில் எதிர்கால சோஷலிச சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பழைமைவாதிகளுக்கும் (இவர்கள் ஒரு சில மாற்றங்களுடன் ஆணை அதிகாரப் பாங்கான பொருளாதார அமைப்பே தொடர்ந்தும் இருக்க வேண்டுமென வாதிடுபவர்கள்) தங்கு தடையற்ற சுதந்திர சந்தைவாதிகளுக்குமிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை, இப்பொழுதிருக்கும் அதிகாரத்துவ அமைப்பிற்குப் (bureaucratic System) பதில் புதிய வடிவங்களிலமைந்த உற்பத்தியாளர் ஜனநாயகம் உருவாக வேண்டுமா அல்லது முதலாளித்துவ அமைப்பை அப்படியே பின்பற்றுவதா அல்லது சற்று மாற்றியமைப்பதா என்ற பிரச்சனையும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விவாதங்கள் வெறும் அறிவு மட்டத்தில் நிகழும் இழுபறியல்ல, இவை சமூக, அரசியல் போராட்டங்களும்கூட. இவ்விவாதங்களின் முடிவு என்னவாக இருக்குமென்று எதுவும் திட்டவட்டமாக இப்பொழுது கூற முடியாத நிலை.
கோர்பச்சேவின் 'முதுசங்கள்' - தேக்கமுற்ற பொருளா தார அமைப்பு, ஜனநாயக சுதந்திரங்களின் மை-அவருக்குப் பெரும் சுமையாக இருப்பதோடு, இன்றைய சோவியத் மக்களின் மனப்பான்மையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கி யுள்ளது
அண்மையில் சோரெஸ் மெட்வடெவ் (Zhores Medvedew) Su Gouty' fog offbg (New Left Review no 179) 96ffigy

155
பேட்டியில், 17 ஆண்டுகளுக்குப் பின் தான் அண்மையில் தாயகத்திற்குச் சென்றதாகவும், அங்கு புதிய பொதுசன அபிப்பிராயம் செழித்தோங்கி வளரும் அதே வேளையில், நீண்டகாலப் பொருளாதாரத் தோல்விகளாலும் சமூக நெறி பிறழ்வுகளாலும் - அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் வீதமும், இனத்துவம் சார்ந்த பகைமைகள் மோசமடைந்து வரும் நிலையும் இதற்குச் சான்று பகருகின்றன - சோவியத் யூனியன் பெரும் நெருக்கடிக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு பேட்டியாளரின் ஒரு கேள்விக்குப் பின்வரு மாறு விடையளித்தார் : "சோவியத் மக்கள் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. புத்தி ஜீவிகள் உட்பட பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பது அன்றாட உணவுப் பற்றாக் குறைகள் போன்ற பொருளாதாரப் பிரச்சனைகளே. இதனால் அவர்களிடம் காணப்படுவது ஆத்திரமுற்ற மனநிலையே, சமூகத்தில் முறுகல்நிலை நிலவும் போதும், எல்லா வகையான அடிப் படை பண்டப் பொருட்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு நாளும் "கியூ" வரிசையில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் போதும், மக்கள் அறிவு பூர்வமாகச் சிந்திப்பதை நிறுத்தும் போக்கு தென்படத்தான் செய்யும். இந்நிலையில், சர்வதேச நிகழ்ச்சிகள் எங்கோ தொலைதூரத்தில் நடைபெறுவது போலவும், தமக்கும் அவற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பது போலவும் அவர்கள் சிந்திக்கத் தலைப் படுகின்றனர். வேறுநாடுகளில் நடைபெறுபவற்றைப்பற்றித் தீர்ப்பளிக்கத் தமக்குத் தார்மீக உரிமையில்லையென்றும் அவர்கள் எண்ணுகின்றனர். இன்று சோவியத் மக்களிடம் ஒருவகை தாழ்வுச்சிக்கல் காணப்படுகின்றது. இதனால் வேறு அரசுகளின் நடவடிக்கைகளைப் பலமாகக் கண்டிப் பதில் மனத்தடங்கல் ஏற்படுகின்றது. இது ஓர் வகை சுய ஈடுபாட்டிற்கு, தம்முள் அமிழ்ந்து கொள்வதற்கு வழிகோலி அப்போக்கிற்கு ஊக்கம் அளிக்கின்றது. மறுபுறம், இதற்கு ஈடாக சோவியத் மக்கள் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தமது சுய ஆட்சியை விருத்தி செய்து தமது

Page 80
1.56
சொந்தத் தீர்வுகளை கண்டுபிடிப்பதில் கஷ்டப்பட்டு முனை வதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.”
மேல்தரப்பட்டக் கூற்றில் தொக்கி நிற்பதைப் பற்றி சற்றுச் சிந்திப்போமானால், ரஷ்யாவின் இன்றைய சர்வதேச நிலைப்பாடும், மூன்றாம் உலக நாடுகளை அது ஏன் கைவிட்டுள்ளதென்பதையும், அமெரிக்காவுடன் لیگی "கொஞ்சிக்குலாவுவதையும் புரிந்து கொள்ளலாம்.
அப்ப, நாமும் சேர்ந்து கம்யூனிசம் இறந்து விட்டது என்று ஒப்பாரி வைக்க வேண்டியது தானா?
இல்லவே இல்லை.
மார்க்சியத்தைச் சமயமாகக் கருதுபவர்கள் வேண்டு மானால் அழுது புலம்பட்டும்.
விஞ்ஞான ரீதியான கோட்பாடாகவே மார்க்சியம் தன்னைக் கருதிக் கொள்கின்றது.
ஏறக்குறைய கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலக கம்யூனிச இயக்கமும், சோஷலிச இயக்கமும் எத்தனையோ அனுபவங்களைப் பெற்றுக்கொண்டன. இவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து, கற்க வேண்டியவற்றைக் கற்று மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளக் கம்யூனிசத்திடமும், சோஷலிசத்திடமும் உள்ளார்ந்த பலமும் வளமும் உள்ளன.
பெண்நிலைவாதம், சூழல் இயக்கம் போன்ற புதிய சமூக இயக்கங்களின் செயற்பாட்டால் பெறப்பட்டுள்ள அனுபவங்களும் இப்புதுப்பித்தல் முயற்சிக்கு வலுவூட்டும்.
மார்க்சிய மூலவர்களின் நூல்கள் வேதவாக்குகளல்ல என்பதை நன்குணர்ந்தவர்கள் - கட்டுப்பெட்டித் தன்மை நிறைந்த வரட்டுவாதிகள் இதற்குள் அடங்கமாட்டார்கள் - மார்க்சியத்தின் மரணச் செய்தி கேட்டு கலங்க மாட்டார்கள்.

157
மாறாக, ஈமக்கிரியைகளுக்கு ஆயத்தம் செய்பவர்களை விழித்து, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் மேற்கோள் காட்டிய மார்க்டுவெயினின் கிண்டலான பதிலையே அவர் களுக்கும் கூறுவார்கள்.
இன்று நடைமுறையிலுள்ள சோஷலிசத்தின் (actually existing Socialism) பலவீனங்கள் களையப்படக்கூடியவை. முதலாளித்துவத்தின் அடிப்படையே சுரண்டல் என்பதால், தன்னையே அது அழித்துக் கொள்ளும் அமைப்பம்சம் (systemic Weakness) அதனகத்தே அது கொண்டிருக்கின்றது.

Page 81
கத்திகள் கையிலேந்தி சி. சிவசேகரம்
உலகத்தை அவர்கள் மீண்டும் கூறுபோட விரும்பு கிறார்கள், கைகளினின்று குருதி சொட்ட, இடுப்புப் பட்டி களின் கீழ்ப் புதைத்துள்ளக் கட்டாரிகள் சகிதம் அவர்கள் ஜனநாயகத்தையும் விடுதலையையும் பற்றி இனிக்கப் பேசு கின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் சார்பு ஆட்சி களின் வீழ்ச்சியாலும் அண்மையில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றத்தாலும் அல்பானிய ஆட்சிக்குக் குழி பறிப் பதில் கண்ட வெற்றியாலும் உற்சாகம் மிகுந்துள்ள ஏகாதி பத்திய வயதிகள் ஒரு புதிய உலக அமைப்புப் பற்றி மீண்டும் பேசுகிறார்கள். சில மாதங்களிற் சீன அரசாங்கம் கவிழும் என்ற அவர்களது நம்பிக்கை நனவாகாவிடினும் கியூபா அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அவர்களது திட்டங்கள் அவர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் நிகழாவிடினுங்கூட அவர்கள் ஒயப் போவதில்லை. ஏகாதிபத்திய விரோத வலிமையின் எஞ்சி யுள்ள ஒவ்வொரு கோட்டையையும் இடித்துத் தள்ளும் அவர்களது முயற்சிகள் தொடரவே செய்யும் கத்தியும் துவக்கும் கொண்டு செய்ய இயலாததை அவர்கள் ஏமாற்றின் மூலமும் சதிகள் மூலமும் செய்ய முனைகிறார்கள், சர்வதேச மட்டத்திற் சீனாவின் மதிப்பைக் குலைக்கவும் சீனாவின் தேச ஒற்றுமைக்குக் குழிபறிக்கவும் சீனாவில் அரசியல் குழப்ப நிலையை உருவாக்கவும் ஏகாதிபத்தியவாதிகள் செய்யும் முயற்சிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில வருடங்களில் அவை முன்கண்டிராத உச்சத்தை எட்டியுள்ளன.
இக்கட்டுரையை நான் எழுதும் நோக்கம் சீனாவின் அரசியல் முனைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆதரிப்பதோ விளக்குவதோ அல்ல, சீன அரசியற் தலைமையின்

1.59
செம்மையை மதிப்பிடுவதும் என் நோக்கமல்ல. உலகின் சகல முற்போக்கு அரசியல் இயக்கங்களையும் போன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தவறிழைத்துள்ளது. தவறுகளைத் திருத்த முற்பட்டுள்ளது; திருத்தும் போக்கிற் தவறு செய் துள்ளது; பழைய தவறுகளினின்று கற்று அவற்றைத் திருத்தி ஒரு நவீன சோஷலிஸ் சமுதாயத்தைக் கட்டியெழுப்பு வதற்கான தன் பாதையை வகுத்துக்கொள்கிறது. தங்களை மார்க்ஸிய - லெனிஸவாதிகள் எனக் கருதுவோர் சீனாவின் சோஷலிசத்தின் ஒவ்வொரு அம்சத்துடனும் உடன்பட அவசியமில்லை. அத்தகைய ஏகமனதான அபிப்பிராயத்தை எதிர்ப்ார்க்க நியாயமில்லை. எவ்வாறாயினும், முக்கிய மானது யாதெனின் சீனாவில் சோஷலிஸத்தை விருத்தி செய்யும் போராட்டம் அடிப்படையிற் சீன மக்களின் கையி லுள்ளது என்பதே. சீனாவின் முனைப்புப் பற்றி விமர்சிக் கவும் கருத்துரைக்கவும் தமக்குள்ள உரிமையைப் பிரயோ கிக்கும் மார்க்ஸிஸ - லெனினிஸ் வாதிகளுக்குச் சீனாவின் உள் விவுகாரங்களிற் பிறநாடுகள், குறிப்பாகப் பெருவல்லரசுகள் தலையிடாதவாறு கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்உள்ளது.
சீனாவையும் பிற சோஷலிஸ் நாடுகளையும் பற்றிய தகவல் திரிப்புக்களை ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள் ஓயாது வெகுஜனங்கள்மீது பொழிந்தவாறுள்ளன. திபெத்தில் மனிதவுரிமைகள் பற்றியும் ஹொங்கொங்கில் ஜனநாயக அமைப்புப் பற்றியும் சீனாவில் ஜனநாயக இயக்கம் பற்றியும் பேசப்படும் நாசுக்கான வார்த்தைகளின் கீழ் முக்கியமான வரலாற்று உண்மைகளும் பின்னணித் தகவல்களும் புதைக்கப் பட்டு விடுகின்றன. ஏகாதிபத்தியவாதிகள் சீனாவிடம் அன்பு பாராட்ட வேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதற்கில்லை, ஏனெனில் 1949இல் சீனா தன்னை விடுதலை செய்து கொண்டதை அவர்கள் இன்னமும் மன்னிக்கவில்லை. மேற்கில் உள்ளி தாராளவாதிகளும் சிலவகையான சமூக-ஜன நாயகவாதிகளும் ஏகாதிபத்திய வாதிகளிலும் மோசமான வர்கள். ஏனெனில் அவர்களது ஒரே நோக்கம் இன்றைய

Page 82
160
உலக சமுதாய அமைப்பைப் பேணி அல்லது வரலாற்றுச் சக்கரத்தைச் சோஷலிசத்துக்குப் பாதகமானவாறு பின் னோக்கித் தள்ளிவிடும் அதேவேளை ஏகாதிபத்தியத்துக்கு ஒரு நாகரிகமான தோற்றத்தை வழங்குவது தான். ஏகாதி பத்தியத்திற்கு நிரந்தரமான கடனாளியாகவும் தன்இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் ஏகாதிபத்தியவாதி களதும் பன்னாட்டுக் கம்பெனிகளதும் உபயோகத்துக்காகச் சமர்ப்பிக்கும் நிலையிலும் உள்ள மூன்றாமுலகைவிட மேலாக அவர்கட்கு மனம் குளிர்விப்பது எதுவுமில்லை.
இக் கட்டுரையின் நோக்கம் ஏகாதிபத்தியவாதிகளாற் சீனா கிரமமானத் தாக்குதலுக்கு ஆட்படுத்தப்படும் சில விஷயங்கள் தொடர்பாக உண்மைகளைத் தெளிவுபடுத்து வதும் அவர்களது தாராளவாத சமூக-ஜனநாயக ஆதர வாளர்கள் சீனா பற்றிச் சொல்லும் பொய்களை அம்பலப் படுத்துவதுமாகும். சீனா விரோதத் தலைப்புக்களில் இன்று திபெத் அதிகம் செல்வாக்குடையதாகையால் முதலில் திபெத்திய சுயாட்சி பற்றியும் திபெத்தில் மனிதவுரிமைகள் பற்றியும் கவனிப்போம்.
முதலில் தலாய்லாமாவின் இயக்கத்துக்கு ஆதரவு தருவோர் தேசங்களதும் தேசியச் சிறுபான்மை இனங்களினதும் உரிமைகள் தொடர்பாகவும் இனப்பிரிவுகளது கலாச்சாரத் தனித்துவம் தொடர்பாகவும் எவ்வாறு நடந்துவந்துள்ளனர் என்று கவனிப்போம். தேசங்களின் உரிமைகளை மதிப்பதில் அமெரிக்காவின் (யூ.எஸ்) சாதனைப்பட்டியல் பேர்போனது. கடந்த 45 வருஷ சமாதானத்தின் கீழ் அமெரிக்கப் படை யெடுப்புக்கு ஆளான நாடுகளின் எண்ணிக்கை ஹிற்லரின் கீழிருந்த ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையிலும் அதிகம். அமெரிக்க நலன்கட்குச் சேவையாற்றாத நாடுகளில் அமெரிக்க சி.ஐ.ஏ. அரசாங்கங் களைக் கவிழ்க்க முயலாத நாடு எதுவுமில்லை. தேசிய சுதந்திரத்தையும் ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தையும் முன்னெடுக்கும் வெகுஜன இயக்கங்களில் சி.ஐ.ஏ. குழிபறிக்க

O.
முயலாதது எதுவுமில்லை, பசிபிக் சமுத்திரத் தீவுகளில் வாழும் பொலினிஸிய மக்கள் அனைவரதும் வாழ்க்கை முறை ஏகாதிபத்திய வாதிகளின் வருகையாலும் இருப்பாலும் சிதைக்கப்பட்டுவிட்டது. இம்மக்களிற் பெருவாரியானோரது அமைதியான சுற்றாடலும் அழகான வாழ்க்கை முறையும் அழிக்கப்பட்டு அதனிடத்தில் மாசுமிகுந்த சூழலும் மானமும் பெருமிதமும் இல்லாத ஒரு சீவனமும் எஞ்சியுள்ளன. அமெரிக்க வாழ்க்கை முறையில் எதெல்லாம் அருவருக்கத் தக்கதோ அதெல்லாம் இந்த மக்களது வாழ்வின் மேல் ஆதிக்கம் செய்கிறது. ஏகாதிபத்தியச் சீரழிவெனும் விஷக் காற்று பசுபிக்கிற்கு அப்பாலுள்ள பல நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிந்திய மக்களும், நீக்ரோ , அடிமை களும் சிந்திய இரத்தத்தின் மீது கட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று ஆங்கிலத்தை அமெரிக்க (யூ.எஸ்) அரசகரும மொழியாக்குவதன் மூலம் ஸ்பானிய அமெரிக்கரது மொழியுரிமையை மறுக்க முற்பட்டுள்ளது.
பிரித்தானியாவை விட மோசமான சரித்திரத்தையுடைய கொலனித்துவமில்லை. இதைவிட அயர்லாந்து உட்பட பிரித்தானியத் தீவுகளில் உள்ள மூன்று முக்கிய மொழிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுள் வழக்கொழிந்து போயுள்ளன. மேற்கு ஐரோப்பா முழுவதும் சிறுபான்மை இனத்தவர்கள்மீதும் அவர்களது “கலாச்சாரத்தின் மீதும் சகிப்பின்மை மிகுதியாகவும் பரவலாகவும் உள்ளது. பிரான் ஸிலும் ஸ்பெயினிலும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தேசிய உரிமைக்காகவும் சுய நிர்ணயத்துக்காகவுமான போராட்டங்கள் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டுள்ளன. இதே அரசாங்கங்கள்தான் தமது நாடுகளில் சிறுபான்மை இனத் தவர் தமதுகலாச்சாரத்தையும் மொழியையும் மதத்தையும் வழக்கிலிருத்துவதை மறித்துக் கொள்ளும் அதே வேளை மூன்றாமுலகின் பல்வேறு தேசிய சிறுபான்மை இனங்கள் தமது தேசிய அடையாளத்தைப் பேணுவதன் அவசியம் பற்றிப் பேசுகின்றன. சோவியத் யூனியனிலும் சீனாவிலும்

Page 83
162
தேசிய சிறுபான்மை இனங்கள் வேறெந்த நாட்டிலிருந் தோரையும் விடச்சிறப்பாகத் தம்தேசிய இனப் பண்புகளைப் பேணியுள்ளனர். எனவே, திபெத் பற்றி ஏகாதிபத்தியவாதி களின் கரிசனைக்குக் காரணமென்ன?
ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதியா வதற்கும், அமெரிக்கா (யூ.எஸ்) ஒரு நாடாக அமைவதற்கு தன்னுடன் மெக்ஸிகோவின் பகுதியை இணைப்பதற்கும் வெகுகாலம் முன்பிருந்தே திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சீனா முழுவதையும் தன் ஆளுமைக்குக் கீழ்க் கொண்டுவர இயலாது போனமையையிட்டு பிரித்தானிய சாம்ராஜ்யம் கசப்புற்றே இருந்தது. இந்தியா மீது தமது ஆதிக்கம் இரண்டாம் உலகப்போரின் பின்னரும் தொடரும் என்ற நப்பாசையும் அவர்கட்கு இருந்து வந்தது. நேபாளமும் பூட்டானும் சிக்கிமும் தமது இருப்புக்கு கொலனித்துவ கால இந்தியாவின்மீதே தங்கியிருக்கச் செய்வதில் அவர்கள் வெற்றி கண்டனர். எனினும் திபெத்தை ஆதிக்கம் செய்யும் அவர்களது சதி தோல்வி கண்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கீழ் நடந்த புரட்சிகரப் போராட்டம் சீன விடுதலையைப் பெற்றதையடுத்து, 1950இல் திபெத்தின் அமைதியான விடுதலை திபெத் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. பிற முக்கிய தேசிய சிறுபான்மையினரது சுயாதிபத்தியம் போன்று திபெத்தினது சுயாதிபத்தியமும் மக்கள் சீனக் குடியரசால் மதிக்கப்பட்டது"
திபெத்திய மக்களைக் சுரண்டிக் கொள்ளையடிக்கும் உரிமையை இழக்கும் சாத்தியப்பாடுதான் தலாய்லா மாவையும் திபெத்திய நிலச்சுவான்தார்களையும் சஞ்சலத் திலாழ்த்தியது. சீன அரசாங்கம் திபெத்தில் சமுதாய சீர்திருத்தத்தை மேற்கொள்வதில் வெகு கவனமாகவே செயற்பட்டது. திபெத்திய சமுதாயத்தை மாற்றியமைக்க அது அவசரப்படவில்லை. ஆயினும் சுரண்டும் வர்க்கத்தினர் பொறுத்துப் பார்க்க ஆயத்தமாக இருக்கவில்லை. இந்தியா விலிருந்த பிற்போக்குவாதிகளின் உடந்தையோடு இயங்கிய

1.63
மேலை ஏகாதிபத்திய வாதிகளின் தூண்டுதலுடன் அவர்கள் 1959இல் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர். மக்களின் மிகுந்த ஆதரவோடு அக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. அன்று இந்தியாவுக்குத் தப்பியோடிய தலாய்லாமாவுக்கு இன்று வரை அங்கேயே புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. திபெத்தின் மற்ற முக்கிய மதத் தலைவரான பஞ்சென்லாமா கிளர்ச்சியை எதிர்த்ததோடன்றித் திபெத்தின் சமுதாய மாற்றத்தையும் ஆதரித்தார்.
இன்று திபெத்தில் மனிதவுரிமைகள் பற்றி முழக்கு பவர்கள் 1951-க்கு முன் அங்கு மனிதவுரிமைகளின் நிலை பற்றி மறந்து விடுகிறார்கள். தலாய்லாமாவின் தலைமையின் கீழான திபெத்திய தேசிய இயக்கத்தின் ஆதரவாளர்கள் எவரும் தலாய்லாமா பெரும் நிலச்சுவான்தார்களுள் ஒருவர் என்பதையோ அவர்கள் போன்று சாதாரண திபெத்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொணாத கொடுமைகட்குப் பொறுப்பானவர் என்பதையோ திபெத்தில் சித்திரவதை நடைமுறையிலிருந்தது என்பதையேய அறிய அக்கறையுடை யவர்களில்லை. திபெத்திலிருந்த சமுதாயம் அன்பும் இரக்க மும் பற்றி கெளதம புத்தரின் போதனைகளால் வழி நடத்தப் பட்டது என்று சித்தரிப்பதே அவர்களது நோக்கம்.
தலாய்லாமாவின் மேலை நாட்டு ஆதரவாளர்கள் பேண விரும்பும் திபெத்திய வாழ்க்கை முறை யாது? பழசுபட்ட நிலவுடைமை முறையும் மனிதரை அடிமைகளாக வைத்திருக் கும் வழக்கமுமா? பழைய இருண்ட சகாப்தத்துக்குத் திபெத்தை மீள அனுப்புவதா? இன்றைய திபெத் பற்றிய சில குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை அல்ல வெனினும் பெருவாரியானவை ஆதாரம் அற்றவை. சீன அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றங்களிள் பெரும்பகுதி சீனாவில் ஒரு அரசியற் குழப்பம் நிலவிய காலத்துக்கு உரியவை. அவை இன்று நிவர்த்திக்கப்படுகின்றன.

Page 84
164
திபெத், ஹான் எனும் சீனப் பெரும்பான்மைத் தேசிய இனத்தவரின் குடியேற்றத்துக்குட்படுகிறது எனவும் திபெத்தியரின் சனத்தொகை குறைகிறது எனவும் சொல்லப் பட்டவை பொய்களென நிரூபிக்கப்பட்டுவிட்டது. உண்மையிற் கடந்த 40 வருடத்தில் திபெத்திய தேசிய இனத்தவரின் சனத்தொகை அதிகரிப்பு அதற்கு முந்திய நாட்களில் அதை யொத்த கால இடை வெளியிலோ அல்லது அதிக காலத் திலோ ஏற்பட்ட அதிகரிப்பிலும் மிகக் கூடுதலானது கலாச் சாரப் புரட்சிக் காலத்தில் இடது தீவிர விஷமிகளால் சேதப் படுத்தப்பட்ட திபெத்திய கோவில்கள் இன்று புனரமைக்கப் படுகின்றன. திபெத்தில் மட்டுமன்றிச் சீனாவின் பிற பகுதி களிலும் கலாச்சாரப் புரட்சியின் போது இல்லாது போன மத சுதந்திரம் மீண்டுள்ளது. திபெத்தில் எழுத்தறிவு பெருகிய தால் திபெத்திய மொழி வேகமாக வளர்கிறது. திபெத்திய கலாச்சாரத்தின் வளம் முன்னெப்போதையும் விட அதிகள விற் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எட்டக் கூடியதாக உள்ளது. திபெத்தின் விவசாயம் தொழில் வளர்ச்சி, பொருளா தார அபிவிருத்தி என்பவற்றின் திட்டமிடலில் முன்பு தவறுகள் செய்யப்பட்டன. இன்று அவை திருத்தப்பட்டு விட்டன. திபெத்தில் வாழ்க்கைத் தரமும் விவசாயத் தொழில் உற்பத்தியும் உறுதியாக உயர்ந்து வருகின்றன. திபெத்தில் விவசாயக் கொள்கை தோல்வியடைந்த காலத்திலும் மக்களுடைய தேவைகள் நிறைவு செய்யப்படுமாறு சீன அரசாங்கம் கவனித்துக் கொண்டது.
தலாய் லாமாவும் அவருடைய மேனாட்டு ஆதரவாளர் களும் பாவிக்கும் இன்னொரு பிரசார ஆயுதம் ஹான் இனக் குடி அமர்த்தலால் திபெத்தியர் தமது பாரம்பரிய பிரதேசத்தி லேயே சிறுபான்மையினராக்கப் படுகின்றனர் என்பதாகும். இதினும் உண்மைக்குப் புறம்பானது எதுவுமே இருக்க முடியாது. திபெத்திய தேசிய இனத்தின் சனத்தொகை கூடிக் கொண்டே வரும் போது சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எதுவுமே திபெத்தில் மேற் கொள்ளப்பட

65
வில்லை. திபெத்துக்கு அனுப்பப்பட்ட ஹான் இனத்தோர் பயிற்றப்பட்டத் தொழிலாளரும் அரச ஊழியருமே. எவரும் அங்கு குடியேற அனுப்பப்படவில்லை. அவர்கள் முக்கியமாக அங்குள்ளவர்களுக்குத் தொழில் பயிற்றவே அனுப்பப் பட்டனர். திபெத்தியர் மத்தியில் தகுதி பெற்ற ஊழியர் தொகை அதிகரிக்க ஹான் இனத்தோர் தொகை குறைகிறது.
கலாச்சாரப் புரட்சியின் போது சீனா முழுவதும் நடந்த அத்துமீறல்களின் விளைவாகத் திபெத்திய தேசிய உணர்வுகள் ஓங்கியிருந்தன. திபெத்தினுள் வன்முறையைத் தூண்டிவிட விரும்பிய சில திபெத்தியர் இதைப் பயன்படுத் தினர். இவர்கள் பெரும்பாலும் சீனாவிற்கு வெளியே வாழ்ந் தோராவர். மேனாட்டுப் பத்திரிகைகளால் தலாய்லாமா திபெத்தியரின் ஜனநாயக வாத-மனிதாபிமானத் தலை வராகக் காட்டப்பட்டார். அவர் ஒரு நிலச்சுவாந்தாராகவும் அடிமைகட்கு உடைமையாளராயும் இருந்தது மறைக்கப் பட்டது. இப்பிரச்சாரத்துக்குச் சிகரம் வைத்தாற்போல் 1990 இல் அவருக்கு சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது. சமாதானத்துக்கும் இலக்கியத்துக்குமான நொபல் பரிசுகளின் அரசியற் தொனிகளை அறிவோருக்கு இது வியப்பளிக்காது.
கடந்த ஆண்டில் திபெத்தில் சட்டமும் ஒழுங்கும் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது சில ‘மனித உரிமைப் பிரச்சாரகர் கட்குக் கவலையூட்டியது. திபெத்தில் அவர்கள் எதிர்பார்த்த அரசாங்க விரோத வன்முறை நிகழவில்லை. எனவே அவர் களது கவனம் திபெத்தின் சுய நிர்ணயத்தை நோக்கித் திரும்பியுள்ளது. வரலாற்று ரீதியாகத் திபெத் சீனாவின் பகுதியாகவே இருந்து வந்தமையை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க அரசாங்கங்கள் மீது அந்த நிலைப் பாட்டை மாற்றுமாறு இவர்களால் நெருக்குதல் தரப்படு கிறது.
9-11

Page 85
66
திபெத்தில் மனித உரிமைகட்கான பிரச்சாரத்தின் நயவஞ்சகத்தை ஹொங்கொங்கில் ஜனநாயக அரசியலமைப் புக்கான பிரச்சாரத்தின் நயவஞ்சகம் மீறிவிட்டது. ஒரு நூற்றாண்டு பிரிட்டிஷ் கொலனி ஆட்சியின் பின் 1997இல் ஹொங்கொங் சீனாவின் அதிகாரத்துக்குள் மீளும் போது ஹொங்கொங் வாசிகளின் ஜனநாயக உரிமைகள் பற்றி இவர்களது கரிசனை மிக அதிகமானது. ஏனெனில் 196768இல் மக்களுக்கு ஜனநாயக உரிமை கோரி ஹொங்கொங்கில் பரந்த அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது பிரித்தானியா தன் கொலனித்துவச் சட்டத்தைக் கடுமையாகப் பிரயோகிக்க முற்பட்ட அவ்வேளை இந்த மனித உரிமை வாதிகள் எவருக்கும் ஜனநாயகத்தில் அக்கறை இருக்கவில்லை. ஜனநாயகம் பற்றியும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப் பட்ட நிர்வாகம் பற்றியுமான கவலை, கொலனி எஜமானர் களும் அவர்களது தாராளவாத அன்பர்களும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் 1997இல் ஹொங்கொங் சீனாவுக்கு மீளும் என்பது உறுதியான பின்னரே உண்டாயிற்று.
1997இன் பின் ஹொங்கொங்கை சீனாவால் நிர்வகிக் கப்பட முடியாததாக்கவும் அதன் செல்வத்தை வடித்து எடுக்கவும் சகல விதமான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. ஹொங்கொங் சமுதாயத்தின் செல்வந்தர்கள் தமது செல் வத்தை மேற்கு நாட்டுக்கும் கொண்டு போகுமாறு ஊக்குவிக் கப்படுகன்றனர். 1997 பற்றிய பதைபதைப்பை ஹொங் கொங்கிற் கிளறிவிட பிரித்தானியா எடுத்த முயற்சிகள் சில வகைகளில் அவர்கட்கே வினையாகிவிட்டன. அளவுக்கு அதிகமானோர் தமது பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்களைப் பாவித்து பிரித்தானியாவுக்ருக் குடிபெயர விரும்பினர். இவர்கள் விரும்பியபோது பிரித்தானியாவுட் புக முடியாத படி இக் கடவுச் சீட்டுக்களைச் செல்லாக் காசாக்கும் சட்டங்கள் சில வருடங்கள் முன்னரே நிறைவேற்றப்பட்டு விட்டன. ஹொங்கொங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவதற்கான விசாக்களின் தொகையை மட்டுப்படுத்துவதன் மூலம் செல்

67
வந்தர்களும் தொழிற் தகமையுடையவர்களும் மட்டுமே பிரித்தானியாவுள் புகுமாறு பிரிட்டின் குடிவரவுக்கொள்கையும் மாற்றப்பட்டு விட்டது.
ஹொங்கொங்கின் சேமிப்பு நிதியில் பெரும் பகுதியை விரயம் செய்யும் நோக்கத்துடன் அண்மையில் வகுக்கப்பட்ட புதிய விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம் சீனாவில் மறிக்கப்பட்டுவிட்டது, தனது நலன்களையும் ஹொங்கொங் வாசிகளது நலன்களையும் பேணும் விதமாகச் சீன அரசாங்கம் எடுத்த நடவடிக்கை நியாய மற்றது என்று குற்றஞ்சாட்டிய பிரித்தானிய செய்தி நிறுவனங்கள் ஹொங்கொங்கில் 1997க்கு முன்பு ஜனநாயக முறையை நிறுவ வேண்டு மென்று சில காலம் முன்னர் கடுமையாகப் பிரச்சாரம் செய்து தோல்வி கண் டன என்பது கவனிக்க உகந்தது. சீனாவில் உள்ளதினின்று வேறுபட்டதொரு பொருளாதார முறையை மட்டுமன்றி, சீனா ஹொங்கொங்கை நிர்வகிக்க முடியாதவாறு செய்யு மாறும் சீன அரசாங்கத்தின் அதிகாரத்திற்குக் குழிபறிக்க வசதியாகவும் ஒரு அரசியல் முறையையும் அவர்கள் ஹொங் கொங்கில் காண விரும்புகின்றனர். இத்தனைக்கும், சீன அரசாங்கம் இன்று ஹொங்கொங்கில் நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்புக்கள் 1997க்கும் 50 வருடங்கள் பின்னர் வரை தொடங்குவதற்குத் திரும்பத் திரும்ப உறுதியளித்து வந்துள்ளது.
ஒரு நூற்றாண்டு கால கொலனி ஆட்சி முற்றுக்கு வரும் நிலையில் ஜனநாயகம் பற்றிய பிரித்தானிய அக்கறை வெறும் விஷமத்தனமாக இல்லாது போனால் ஆசியாவிற் தன் இறுதி உடைமை இழக்கப்படுவது பற்றிய கசப்பின் விளைவேயாகும். ஹொங்கொங் பிரச்சனையை சர்வதேச அரங்கிற் சீனா பற்றி நன்மதிப்பைக் குலைக்கும் நோக்குடனேயே அது பயன்படுத்துகிறது.
தியான் ஆன்மென் சதுக்கத்தில் 1989 ஜூன் மாதம் நிகழ்ந்த சம்பவம் விடுதலைக்குப் பிந்திய சீன வரலாற்றில்

Page 86
168
மிக வருந்தத்தக்க தொன்று அதிற் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தம்மால் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது என்பதைப் பின்னர் மிகுந்த தயக்கத்துடன் மேனாட்டுச் செய்தி ஸ்தாபனங்கள் ஒத்துக் கொண்டன. இறந்தோரின் தொகை சீன அரசாங்கம் முதலில் சொன்னதற்கு நெருக்க மானது எனவும் இவை உடன்பட்டன. பத்தாயிரக்கணக் கானோர் காயப்பட்டனர் எனவும் ஆயிரக்கணக்கானோர் இறந்தனரெனவும் கூறிப் பின்னர் பொய்யாக நிரூபிக்கப்பட்ட செய்திகள் இன்னமும் சீனாவின் விரோதிகளாற் பாவிக்கப் படுகின்றன. மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் தற்செய லானதல்ல, அவை நன்கு திட்டமிடப்பட்டவை, முன்னைக் காலங்களில் , சீனாவின் சோஷலிஸத்தின் சாதனிைகளை இழிவு செய்யுமாறு தரப்பட்ட தகவல்களின் பாணியிலேயே அவை அமைந்திருந்தன. தாராளவாத செய்தி நிறுவனங்கள் சீனாவுடன் குரோதமுடைய பல செய்தி நிருபர்களைப் பயன்படுத்துகின்றன. அவர்களிற் சிலருக்குச் சீன அரசாங் கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்யும் கருணை மிகுந்த ஒரு செய்யலிற்கூட ஒரு கெட்ட நோக்கத்தைக் காணக் கூடிய அள வுக்குவக்கிரமான மனமுண்டு.
மேனாட்டுத் தகவல் நிறுவனங்களும் அவர்கள் சொல் வதை விசுவாசமாக ஒப்பிக்கிறவர்களும் செய்தி நிறுவனங் களில் அரசாங்கப் பிரச்சாரம் பற்றி என்ன சொன்னாலும், மேனாட்டார் என்றும் கற்பனை செய்ய இயலாதளவுக்குத், தேசிய விவகாரங்களில் சீனாவின் செய்தி ஊடகங்களில் மனந்திறந்த தன்மை உண்டு, நான்கு சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப் ப்ட்டதையடுத்து சீனாவிற் குற்றச் செயல்கள் அதிகரிப்புப் பற்றியும் அரச ஊழியர் மத்தியிலும் கட்சி ஊழியர் மத்தியிலும் ஊழல்கள் பற்றியும் வெளியாகவே ஒப்புக் கொள்ளப் பட்டது. நகர்ப்புறங்களில் வேலையின்மை பற்றியோ வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புப் பற்றியோ ரகசியங்கள். எதுவுமிருக்கவில்லை. சீனாவின் பொருளா தாரச் சீர்திருத்தக் கொள்கைகளின் இத்துணை விளைவுகள்

1.69
பற்றிச் சீனாவினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் நண்பர்கள் பலரிடையே உண்மையான துயரமிருந்தது. இக் குறை பாடுகள் பற்றிச் சீன மக்களும் அறிந்தனராயினும் அவற்றைச் சீன அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் நிவர்த்திக்க வல்லன என அவர்களுக்கு நம்பிக்கையிருந்தது. சீர்திருத்தங்களின் முதற் கால கட்டத்தின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று, கட்சி அலுவலர்கள் உட்பட பலர் பொருளாதாரச் சீர்திருத் தத்தை அரசியல் வேலைகட்கு ஒரு மாற்றீடாகக் கண்டமை யாகும். இதன் விளைவாக அரசியல் வேலைகள் புறக் கணிக்கப்பட்டன. இளைஞர்கட்கு, முக்கியமாக நகர்ப் புறத்தில் வாழ்ந்தோருக்குச் சோஷலிச அரசியல் பற்றிப் போதிய உணர்வும் இருக்கவில்லை. 1980களில் எவ் விஷயம் தொடர்பாகவும் கம்யூனிஸ்ட் கட்சி பாரிய தவறிழைத்ததாயின் அது வெகுஜன அரசியற் போதனை தொடர்பானதாகவே இருக்கும்.
பல புத்திஜீவிகள், முக்கியமாக சோஷலிசத்தைப் பற்றிய இறுக்கமான கொள்கைப் பிடிப்பில்லாதோர், முற் கூறிய சீர்திருத்தங்களை முதலாளித்துவத்தையும் மேலை முதலாளித்துவ நாடுகளிற் காணப்படும் தாராளவாதத் தையும் நோக்கிய பெயர்வுக்கான அறிகுறியாகவே கண்டனர். ஜனநாயகமென்றால் மேலை முதலாளித்துவ நாடுகளிலுள்ள பல கட்சி அரசியல் முறையே என்று கருது மாறு அவர்கள் பல இளைஞர்களைத் தூண்டினர். சுதந்திரம் பற்றியும் ஜனநாயக உரிமைகள் பற்றியும் அவர்களது கருத்து, மிகப் பெரும்பாலான மக்கள் பற்றிய கணிப்பின்றி ஒரு சிலருக்கு சுகவாழ்வின் பல்வேறு வசதிகள் இருப்பதையும் உற்பத்திச் சாதனங்கள் உட்பட்ட தனியுடைமைக்கான உரிமைமையும் வரவேற்றது.
மனிதவுரிமையும் ஜனநாயக உரிமையும் பற்றிய அவர் களது கோட்பாடு நகர் வாழ்வு உயர்மட்டத்தினரின் உரிமை களை வலியுறுத்திய அதேவேளை அதன் விளைவாக சீனா வில் மற்ற அனைவரும் பட்டினியால் அழிந்தாற்கூட அதை

Page 87
170
யிட்டுக் கவலைப்படவில்லை. முதலாளித்துவ மேற்கின் செல்வமும் அங்கு ஜனநாயகமும் பத்திரிகைச் சுதந்திரமும் பற்றிய தோற்றப்பாடும் அவர்களை எளிதாகவே கவர்ந்தன. அச்செல்வம் எவ்வாறு திரட்டப்பட்டதெனவோ அது எவ்வாறு தொடர்ந்தும் பெருகிவருகிறதெனவோ அவர்கள் கேட்கத் தயங்கினர். மேலை நாடுகளின் ஜனநாயகத்துக் கான விலையைச் சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் அவதியுறும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் கொடுக்கின்றனர் என்பதையோ அந்தச் சர்வாதிகாரிகள் இந்த ஜனநாயகவாதி களிடமிருந்து தாராளமான உதவியும் ஆதரவும் பெற்று வருவதையோ சுதந்திரமான செய்தி ஸ்தாபனங்கள் கோட்டீஸ்வரர்கட்கும் பெரிய கம்பெனிகட்கும் உரியன என் பதையோ பற்றி அறிய அவர்கட்கு அக்கறையில்லை. இவர்களிற்பலர் மேலை ஜனநாயகம் பற்றிய அறிவற்றோரும் சோசலிஸ் அரசியல் பற்றிய குறைவான விளக்கமுடை யோருமாவர். அதேவேளை வேறுசிலர் சீன விரோதச் சதிகாரர் கையில் இஷ்டபூர்வமாகவே இயங்க ஆயத்தமாக இருந்தனர்.
1989 வசந்தத்தின் கலவரமிக்க 56 நாட்களாக விருத்தி யடைந்த சம்பவங்கள் இன்று முன்னெப்போதையும் விடத் தெளிவாக விளங்குகின்றன. "ஜனநாயகத்துக்கான இயக்கம் சுயமான தன்மையுடையதோ ஜனநாயகம் பற்றியதோ அல்ல எனவும் சீன அரசாங்கத்தைக் கவிழ்த்து சீனாவில் சோசலி ஸத்துக்கு முடிவு கட்டத்திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்ட ஒரு சதி எனவும் இன்று தெரிகிறது. 1980களின் பிற்பகுதியின் உலகில், முக்கியமாக ஐரோப்பாவில் நடந்த சம்பவங்கள் இதற்கு உதவின
"நான்கு சீர்திருத்தங்கள் பற்றிய கொள்கையை நடை முறைப்படுத்துவதில் முன்னாட் கட்சிச் செயலாளர் ஹூயாஒபாங் விட்டதவறுகள் காரணமாக அவர் 1988இல் பதவி நீக்கப்பட்டார். அவரது மரணத்தையடுத்து "ஜன நாயகவாதத்திற்கான இயக்கம் தொடங்கப்பட்டது.

171
பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடை முறைப்படுத்துவதில் ஹடு காட்டிய அவசரம் பாரிய பொருளாதாரப் பிரச்சினை கட்குக் காரணமாயிற்று. தனியார் மூலதனமும் அந்நிய மூல தனமும் வளர்வதை விரும்பினோர் அவரது பதவி நீக்கத்தைச் சீனாவின் சீர்திருத்தக் கொள்கையின் மறுப்பாகக் கண்டனர்.
ஹலி உண்மையிற் சீனாவின் சோசலிசக் கொள்கையின் எதிர்ப்பாளரல்லராயினும் முதலாளித்துவத்தையும் அதனுடன் சேர்ந்த மேனாட்டு ஜனநாயகத்தையும் பரிந்துரைப்போர் மத்தியில் ஹூ விருத்தியடையும் முதலாளித்துவ விழுமியங் களின் சின்னமாகக் காணப்பட்டார். கட்சியும் அரசும் ஹ9 பற்றிய புனர் மதிப்பீட்டைச் செய்யவேண்டும் எனக்கேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுங் கூட்டங்களும், ஆச்சரியத் துக்கிடமின்றி, கட்சியையும் சோஷலிச முறையையும் எதிர்க்கும் கூட்டங்களாக விருத்தி பெற்றன. இந்தத் தாக்குதல் முறை வெகுஜன ஆதரவு இல்லாது தோல்வி யடைந்த பின், கோஷங்கள் கட்சியை ஆதரித்து ஊழலை எதிர்ப்பனவாகவும் மேலும் ஜனநாயக உரிமைகளைக் கோருவதாகவும் மாற்றப்பட்டன. இதன் மூலம் மேலும் அதிக மாணவர்களை ஈர்க்க முடிந்தது. இம்மாணவர்களுட் பலர் சீனாவில் சோஷலிசத்தை உண்மையாக ஆதரிப்பவர்களும் பொருளாதாரச் சீர்திருத்தத்தினை ஒட்டிச் சோஷலிச விரோத மான சமுதாய விழுமியங்களின் எழுச்சியையும் ஊழலின் பரவுதலையும் பற்றிக் கவலையுடையோருமாவர். கட்சியை மேலும் ஜனநாயகப் படுத்த வேண்டுமென விரும்பினோரும் இருந்தனர். இவர்கட்கும் அப்பால், கசப்புணர்வு மிகுந்த தீவிர இடதுசாரிகளும் இருந்தனர். அவர்களது தகராறுகள் கலாச்சாரப் புரட்சியின் வீழ்ச்சியுடன் தொடர்புடையவை. அவர்களைப் பொறுத்தவரை, எதிரியை அடிக்க என்ன தடி அகப்பட்டாலும் அதன் பின் விளைவு பற்றிய கவலையின்றிப் பாவிக்கத் தயங்க மாட்டார் : கட்சியினதும் அரசினதும் தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டால் அவர்கட்குப் போது LD (T60Tg5.

Page 88
172
சீன அரசின் தலைவர்கள் எந்த நிலையிலும் ஆர்ப் பாட்டக்கார மாணவர்களுடன் கலந்துரையாட மறுக்க வில்லை. சோஷலிச அரசின் அடிப்படையையும் கட்சி யினதும் பிற சட்டரீதியான வெகுஜன ஸ்தாபனங்களினதும் சட்டரீதியான அந்தஸ்தையும் நிராகரிக்காத சகல கோரிக் கைகளையும் கருத்திற்கொள்ள அவர்கள் தயாராகவே இருந் தனர். உலகில் எந்தவொரு நாட்டிலேனும் சிறு தொகை வான ஆர்ப்பாட்டக்காரர் தம் இஷ்டப்படி முழுநாட்டு மக்களதும் நலன் சார்ந்த ஒரு சமுதாய முறையைக் கவிழ்க்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அற்பத் தொகையினரான சமூக விரோத சக்திகள் சீனாவை ஒரு முதலாளித்துவச் சமுதாயமாக்கும் உரிமையைத் தமக்கு வழங்கும் சதியில் இறங்கினர். தம்து நோக்கத்திற்கு வசதியாக இளைஞர்களது உத்வேகத்தையும் மக்களது நியாயமான குறைபாடுகளையும் பயன்படுத்தினர்.
அரசாங்க விரோத உணர்வுகளைக் கிளறியெழுப்பு வதற்கும் வன்முறையைத் தூண்டி விட்வும் தம்மாலான சகல முறைகளையும் பாவித்தனர். மக்கள் பொலிஸையும் மக்கள் விடுதலைச் சேனையையும் வன்முறைத் தாக்குதலில் இறக்க பல தடவைகளிலும் அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. மக்கள் விடுதலைச் சேனையினர் மீது கும்பல்கள் தாக்குதல் தொடுத்துப் படையினர் சிலர் இறந்து, வாகனங்கள் எரிக்கப்பட்ட பின்னரே மக்கள் விடுதலைச் சேனை செயலில் இறங்கிற்று. நாம் நினைவு கூரவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், சோவியத் ஜனாதிபதி கொர்பச்சொவ் சீனாவுக்கு அரசு விஷயமாக ஏப்ரல் 91இல் வருகை தந்த போது தியன் ஆன்மென் சதுக்கம் திட்டமிட்டு ஆர்ப்பாட்டக் காரர்களினால் நிரப்பப்பட்டிருந்ததன் காரணமாக கொர்பச் சொவ்வுடனான சீனத் தலைவர்களது சந்திப்பிற்குரிய இடத்தை மாற்ற வேண்டி நேர்ந்த போது கூடச் சீன அரசாங்கம் சினத்துடன் செயற்படவில்லை. சீனத் தலைப் மையின் சகிப்புத் தன்மையை சோஷலிசத்தை ஒழிக்க விரும்பிய விஷமிகள் அதன் பலவீனமாகக் கருதினர்.

173
"ஜனநாயகத்திற்கான இயக்கத்தின்’ முக்கிய சக்தி களாக இருந்த பேராசிரியர் ஃபாங் லிஷியும் அவரது மனைவி லிஷாஷியானும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப் பாளர்கள் என்றும் வுஏர்கைவழி போன்ற மாணவர் தலைவர் கள் அயலாரின கைக்கூலிகள் எனவும் சீன அரசாங்கம் சொன்ன குற்றச்சாட்டுக்கள் "ஜனநாயக இயக்கத்தின்’ ஆதரவாளர்களால் மறுக்கப்பட்டது. அடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை என்றே காட்டின. சம்பவங்களின் பின்னர் ஃபாங்லிஷயும் லிஷாஷி யானும் சீனாவிலிருந்து கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கான வசதி செய்யப்பட்டது. இங்கிலாந்து வந்து சேர்ந்த இவர்கள் அமெரிக்காவுக்குப்போக அதிகம் தாமதிக்க வில்லை. வு ஏர்கைவியும் அவரது கூட்டாளிகளும் சீனா விலிருந்து தப்பி வெளியேறியபின் தமது நடத்தை மூலம் தாம் யாரென்று அம்பலப்படுத்தி விட்டனர். இயக்கத்தின் தலைவர்கட்குப் பெருந்தொகையான பணமும் பண்டங்களும் ஹொங்கொங்கிலும் தாய்வானிலும இருந்த தரகர்கள் மூலம் வழங்கப்பட்டன என இன்று ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே, "ஜனநாயக இயக்கத்தின்" சின்னம் அமெரிக்காவின் சுதந்திரச் சிலையின் மட்டகரமான பிரதியாக அமைந்தது தற்செயலானதல்ல.
“ஜனநாயக இயக்கம்' அதன் உச்சக் கட்டத்தில் பத்து லட்சம் மட்டிலானோரது கவனத்தைக் கவர்ந்தாயினும் அது வெகுஜன இயக்கமாக இருக்கவுமில்லை அவ்வாறு இருப்பது அதன் நோக்கமுமில்லை. அந்த இயக்கப் பிரசாரத்தைக் கையாள்வதிற் கட்சியினதும் அாசினதும் தலைவர்கள் சிலரது தவறுகளே அதன் வெற்றிகரமான வளர்ச்சிக்குக் காரண மாயின. அதன் வருத்தத்திற்குரிய விளைவு இராணு ஒழுங்குச் சட்ட்த்தைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமும், எவ்வளவு குறைந்த தொகையினராயினும், குடிமக்களதும் படையினரதும் மரணங்களுமாகும். மேலை "ஜனநாயக நாடுகளிற்போன்று சீனாவிலும், நீர்ப்பீரங்கி, கண்ணிர்ப்

Page 89
174
புகைக் குண்டு, ரப்பர்த்தோட்டா போன்று கூட்டங்களைக் நட்டுப்படுத்துவதற்கான வசதிகள் இருந்திருப்பின் இராணுவ ஒழுங்குச் சட்டப் பிரகடனத்தின் பின்னும் மரணங்களிற் பெரும்பாலானவை தவிர்க்கப்பட்டிருக்குக்கூடும். எவ்வாறா யினும், "ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கட்குக் கலந்துரையாடல் பற்றியோ தமது கோரிக் கைகட்கு சோசலிஸ் அரசின் வரம்பிற்குள் தீர்வு காண்பது பற்றியோ அக்கறை இல்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் அந்நிய ஏகபோக முதலாளிகளது ஒத்துழைப்புடன் முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதே. அவர்களது எண்ணம் நிறைவேறாவிட்டாலும், குறுகிய காலத்திற்காயினும், சீனாவுக்குச் சர்வதேச அரங்கிலிருந்த மதிப்பைக் குறைப் பதில் வெற்றி கண்டுள்ளனர்.
மரணங்கள் பற்றி மேலை முதலாளித்துவ நாடுகள் குதுாகலமடைந்தன. சீனாவைத் தாக்குவதற்கு அவர்கட்கு ஒரு வலிய பிரச்சார ஆயுதம், கிடைத்துவிட்டது. மனித உரிமைகளை மீறியதற்கும் குடிமக்களைப் படுகொலை செய்வதற்கும் சீனாவைத் தண்டிப்பது பற்றிய வார்த்தை களைத் தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகத்தையும் சீனாவில் அந்நிய முதலீட்டையும் மறிக்கும் முயற்சிகள் நடந்தன. மிரட்டலுக்கும் சண்டித்தனத்துக்கும் சீனா பணிய மறுத்ததன் விளைவாக எதிரிகளின் இம்முயற்சிகள் தோல்வி யடைந்தன.
சீனாவைத் தனிமைப்படுத்தும் ஏகாதிபத்தியவாத முயற்சிகளின் தோல்விக்கு ஒரு காரணம் ஏகாதிபத்தியவாதி கட்குச் சீனாவுடன் வியாபாரம் அவசியமான அளவுக்குச் சீனாவுக்கு அவர்களுடன் வியாபாரம் அவசியமில்லை. சீனாவைத் தனிமைப்படுத்திச் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்த முடியும் ஆயினும் அதன் விளை வாகச் சீனமக்கள் மேலும் நெஞ்சுரமும் சுய சார்பில் உறுதியும் உடையோராவர். கடந்த காலத்திற் போன்று சீனா தன்னுடைய தொழில்நுட்பத்தை சுயமாக விருத்தி செய்யும்.

175
மேலை நாடுகளுக்குச் சீனா எனும் பெரும் சந்தைக்கு வழி கிடையாது போகும். மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கம் சீனாவுடன் தொடர்புகளைத் துண்டிப்பதால் மேலும் மோசமாகும். ஏகாதிபத்தியவாதிகள் சோஷலிச சீனாவைவிட முதலாளித்துவச் சீனாவை விரும்பி னாலும், அவர்களது நோக்கில், சீனாவுடைய நிபந்தனை கட்குட்பட்டுச் சீனாவுடன் வியாபாரம் செய்வது சீனாவுடன் வியாபாரமே செய்யாது விடுவதினினும் மேலானது. எனவே இப்போதைக்கு சீனாவைத் தனிமைப்படுத்துவது பற்றி அவர்கள் மிரட்டினாலும் அது பற்றி எதுவுமே செய்ய மாட்டார்கள். 'கண்ணியமான நடத்தை பற்றிப் பேசிக் கொண்டே சோசலிஸத்துக்குக் குழிபறிக்க முனைவார்கள். சீனா எப்போதும் போல் முதலாளித்துவ நாடுகளுடனான தன் விவகாரங்களிற் கவனமாகவே இருக்க வேண்டும். அதேவேளை சீனாவின் உள் விவகாரங்களில் அயலார் தலையிடுவதற்கில்லை என்று அப்பட்டமாகத் தெளிவு படுத்த வேண்டும்.
சீனா எப்போதுமே உலகத்திற்கு தன் கதவுகளை மூடியே வைத்துள்ளது என்ற பிரச்சாரம் சென்ற நூற்றாண்டின் அபின் யுத்தத்தின் நாட்களில் தொடங்கியது. அதற்கான காரணம் ஏதெனில் மேலை நாடுகள் சீனாவுக்கு அபின் விற்றுச் சீன மக்களை அபினுக்கு அடிமையாக்குவதைச் சீனா மறித்ததை ஏகாதிபத்தியவாதிகள் வெறுத்தனர். முன்னைய சீன ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியவாதிகட்குப் பணியவும் சேவகம் செய்யவும் தயாராக இருந்த போது சீனா தன்னைத் தனிமைப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1949இல் சீனமக்கள் நிமிர்ந்து நின்றபோது மேலை வல்ல ரசுகள் சீனாவைத் தனிமைப்படுத்தத் தம்மாலியன்ற அனைத்தையுமே செய்தனர். 1917புரட்சியின் பின் உருவான சோவியத் யூனியனை எவ்வாறு தனிமைப்படுத்த முயன் றனரோ அவ்வாறே சீனாவையும் நடத்தினர். 1972 வரை சீனாவை அங்கீகரிக்க மறுத்த யூ.எஸ். அரசாங்கம் சீனா

Page 90
176
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற் தன் உரிய ஸ்தானத்தை வகிப்பதை மறித்து வந்தது. சோவியத் யூனியன் ஐ.நா. ஸ்தாபனத்தை பகிஷ்கரித்த குறுகிய கால இடை வெளியில், சோவியத் யூனியன் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்க இயலாத நிலையைப் பயண படுத்தி, வடகொரியா மீது ஐ.நா. ஸ்தாபனத்தின் பேரில் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. கொரிய மக்களுக்குச் சீனா அளித்த ஆதரவைக் காரணமாகக் கொண்டு அடுத்து வந்த ஆண்டுகளிற் சீன விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன சீனா வுடனான வியாபாரம் யூ.எஸ் ஸில் தடைசெய்யப்பட்டது மட்டுமன்றி அமெரிக்கச் செல்வாக்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் அது மறிக்கப்பட்டது.
எந்தவொரு அயல் நாட்டைப் பற்றியும் சீனா எச்சரிக் கையாக இருப்பின் அதற்குக் காரணம் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவமாகவே இருக்கும் உலகில் சகல நாடுகளுடனும் சீனா சமாதான சகஜீவனத்தின் ஐந்து நெறிகளின் அடிப்படையிலான உறவை நாடுகின்றனர். எந்த ஒரு நாடும் தன் உள்விவகாரங்களில் se u6)rio தலையீட்டை விரும்பாது. சீனா விரும்புவதற்கும் காரணம் இல்லை.
சீனாவின் சனத்தொகைக் கட்டுப்பாடு, தொழில்விருத்தி, இயற்கை வளங்களின் விருத்தி சிறுபான்மைத் தேசிய இனங் களின் நிலை போன்ற விஷயங்களில் என்ன நடந்தாலும் சீனா பற்றிய மேனாட்டுச் செய்தி நிறுவனங்களின் கடும் விமர்சனம் விடாது நடைபெறும். சனத்தொகையைக் கட்டுப் படுத்தச் சீனா நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்டுப்பா டின்றிச் சனத்தொகையை அது பெருகவிடுகிறது; நடவடிக்கை எடுத்தாலோ மனிதர் விரும்பிய்வாறு பிள்ளை பெறும் மனித உரிமையை மறுக்கிறது. சீனா தன் சுய முயற்சி யால் தொழில் விருத்தியில் இறங்கினாற் பின் தங்கிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று குறை கூறப்படும்;

177
அயல் நாடுகளினின்று தொழில் நுட்பத்தைக் கோரினால் அது சீனாவுக்குப் பாதகமான முறையிலன்றி வழங்க மறுக்கப்படும். மூல வளங்களை விருத்தி செய்தால் சீனா சுற்றாடலை மாசுபடுத்துகிறது; செய்யாவிட்டால் அது தன் மூல வளங்களைச் சரிவரப் பயன்படுத்தும் திறைமையற்றது. தேசிய சிறுபான்மையினர் தம் கலாசாரத்தைப் பேணுமாறு ஊக்குவித்தால் அது அவர்களைப் பின் தங்கிய நிலையில் வைத்திருக்க விரும்புகிறது; அவர்களை நவீனமயப்படுத்த முனைந்தாலோ அவர்களதுவாழ்க்கை முறையைச் சிதைக் கிறது.
சீனா, சகல முன்றாமுலக நாடுகளையும் போன்று, ஏகாதிபத்தியவாதிகள் நினைத்தபடி நடக்காதவரை எதையுமே சரியாகச் செய்ய முடியாது. சீனாவுக்கும் பெரு வாரியான மூன்றாமுலக நாடுகட்குமிடையிலான வேறுபாடு ஏதெனில், சீனா மற்றோர் சொல்வதைக் கேட்கிறது, தன் தேசிய நலனுக்கு உகந்ததைச் செய்கிறது.
சீனா பற்றிய "மார்க்ஸிய விமர்சகர்கள் எதிர்நோக்க வேண்டிய கேள்வி ஒன்றே; சீனாவைக் கவிழ்க்க ஏகாதிபத்திய வாதிகள் செய்யும் முயற்சிகளில் அவர்களும் இணைய விரும்பு கிறார்களா? சீனாவை விமர்சிப்பது கெட்ட காரியமல்ல. அது அவசியமானதுங்கூட. ஆனால் எவ்வகையான விமர்சனம் சீனாவுக்கும் சீன மக்களுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நன்மையானது? சீன அரசாங்கத்தையும் வழக்கி லுள்ள அரசியல் முறையையும் தூக்கியெறியுமாறு கோரும் * மார்க்சியவாதிகள்' அவற்றினிடத்தில் எவ்வகையானவை வரும் என எதிர்பார்க்கின்றனர் என்று தம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும். “உம்மிலும் நான் புனிதன்' தரவழி மார்க்சியவாதிகள் மார்க்சின் காலத்திலிருந்தே இருந்து வருகின்றனர். ஏகாதிபத்தியமும் பாஸிஸமும் சோவியத் யூனியனைக் கவிழ்க்க முற்பட்டபோது சோவியத் அரசை விழுத்துமாறு அவர்கள் கூவினர். இன்று சீனாவே சோஷலிச

Page 91
178
நம்பிக்கைகளின் கோட்டையாகவும் எகாதிபத்தியத்திற்கு எதிரான மூன்றாமுலகப் போராட்டத்தின் ஆதாரமாகவும் உள்ளது. தேசிய சர்வதேசிய மட்டத்திற் சீனா என்ன செய்ய வேண்டுமென்பதிற் கருத்து வேறுபாடுள்ளோர் இருக்கலாம். இருப்பினும் சீனாவைத் தனிமைப்படுத்தி மூன்றாமுலக மக்களிடையே அவநம்பிக்கைக்குரியதாக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் பிரச்சாரத்தில் இணைவார்களாயின் அவர்கள் எவ்வகையிலும் புரட்சிவாதிகளல்லர்
திபெத்திய தேசிய வாதப் பிரச்சாரர்களும் சீனாவில் ஜனநாயகத்தின் ஆதரவாளர்களும் 1997 க்கு முன் ஹொங் கொங்கில் ஜனநாயக அரசியற் சட்டத்தை வேண்டுவோரும் மக்கள் நலனையே மனதிற் கொண்டுள்ளனரென எவரும் நம்புவாராயின் அவரது நம்பிக்கை தவறானது. சீனாவின் வட மேற்கில் ஷின்ஜியாங் சுயாட்சிப் பிரதேசத்திலும் மொங் கோலியாவிலும் தேசிய உணர்வுகளைக் கிளறும் முயற்சிகள் அதிக வெற்றியின்றித் தொடர்கின்றன. சீனாவில் மனித உரிமைகள்' ப்ற்றிய பேச்செல்லாம் சீனாவின் ஐக்கியத்தையும் சோசலிச முறையையும் முடிவுகட்ட முனைவோரின் நலன் சார்ந்தது. சீனாவில் மனிதவுரிமை மீறல்கள் காலத்துக்குக் காலம் நடந்துள்ளன. இவற்றுப்பல அரசியல் எழுச்சிக் காலங்கட்குரியன. முக்கியமானவை யாவைஎனின், பிழைகள் சுட்டிக் காட்டப்படும் போது திருத்தப்படுகின்றனவா என்பதும் விஷயங்கள் அவற்றுக்குரிய பின்னணியில் மதிப்பிடப்படு கின்றனவா என்பதுமே.
பிழைப்புக்கான உரிமை மிக அடிப்படையான மனித உரிம்ை. மனித உரிமை பற்றிய உபதேசிகளையும் கோடிக் கணக்கானோரின் இன்னல்கள் பற்றிப் புலம்புவோரையும் 1976 இல் காங்ஷான் பூகம்ப காலத்திற் காணக் கிடைக்க வில்லை. அப்போது லட்சக்கணக்கானோர். மரித்தனர். சீனா வில் 1991 யூலையிலும் ஓகஸ்ற்றிலும் நிகழ்ந்த பெருவெள் ளத்திற் பல கோடி மக்கள் அல்லற்பட்டபோது, அமெரிக்க செனற்றர்கள் மனித உரிமை மீறல்கள் காரணமாக சீனாவுக்கு

179
அமெரிக்காவுடன் வியாபாரம் செய்வதற்கான தீர்வைச் சலுகைகளை நிறுத்த வேண்டுமென்ற பிரேரணையை ஆதரித்தார்கள். வெள்ள அகதிகட்கு உதவி செய்யும் எண்ணமோ எந்த நிலையிலும் அவர்கட்கு எழவில்லை இது அவர்களின் மனிதாபிமானம்,
மனிதவுரிமைகள் மேலை நாடுகளில் ஒரு அரசியல் விளையாட்டாகி விட்டது. ஏகாதிபத்திய நலன்கட்கு ஊறு ஏற்படாதவரை அது நியாயமாக விளையாடப்படத் தோன் றும். ஒரு மார்க்சியவாதியின் மனிதாபிமானம் ஏகாதிபத்திய வாதிகளுடைய்து போலன்று அவ்வேறுபாடு ஒரு மாக்ஸிய வாதியின் உலக நிகழ்வுகள் பற்றிய ஆய்வுகளிற் புலனாக வில்லை என்றால் அது கரிசனைக்குரிய விஷயம்.

Page 92


Page 93