கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தித்தால்

Page 1

リー。 ضرورياً
--- אר
es Sayyit) ផ្សំហើញប្រែr
<" ;585:یور" حصہ= Asia -- ܐܸܣܛܝܵܐ } PSG 需 மச்றோரு ' ) _
ΠαDα αυ

Page 2


Page 3

(ஓய்வு பெற்ற அதிபர்)
வெளியீடு
து இலக்கியச் சோலை
ஒளவையார் வீதி,
திருக்கோணமைைல, 1998

Page 4
blaupfufງ
நூல் பெயர்
தொகுப்பாசிரியர்
முதற்பதிப்பு
பக்கம்
பிரதிகள்
வெளியிடுவோர்
அச்சகம்
அட்டை வடிவம் ஓவியம் விலை
9
"சிந்தித்தால்.” (நற்செய்திக் கதைகள்)
F.S. ஆஞ்சலின்
ஆவணி 1998
50
1 OOO
ஈழத்து இலக்கியச் சோலை 21, ஒளவையார் வீதி, திருக்கோணமலை.
றுநீ கணேச அச்சகம்.
28B, புதிய சோனகத் தெரு, திருக்கோணமலை
அமர் தாபி ரூபா 45/=
an یہ سٹص="جوم నీ 电

உள்ளே
θ σΙΩήύUαπth 9ே அறிமுகவுரை - 91 buof 5. DT3 .91661 9ே ஆசியுரை - அருட்பணி ஜோர்ஜ் திஸாநாயக்கா
g}|||||||||||||||||hi||||||||||||||||||||||||||||||||
9ே இடங்களோடு சில நிமிடங்கள்
* F. S. ஆஞ்சலின் 9ே வெளியீட்டாளர் உரை
- த. சித்தி அமரசிங்கம்
பக்கம்
01. கிறிஸ்து என் கணினாடி O
02. அவர் இருக்கப் பயமேன்.? O7
o3. Lffaufdh GUITGGITruh. 14
04. தேடி வருகிறார் 19
05, இறங்கினால். 24
06. குறை போக்குபவர் 28
07. நமது விசுவாசமே. S2
08. முன்னோடி 35
09. சீந்தித்தால்...? 39
10. நாம் தயாரா..? 42
11. நற்கிரிகை 46

Page 5

சமர்ப்பணம்.
நீருக்கோணமலைக் கணவவாளி நாடக மன்றத்திள்
ங்ரவுனரும், திருக்கோனமணல புனித மரியாள் பேராலய பங்கைச் சேர்ந்தவரும்
8ങ്ങ്ഥu് ിത്ര & Brit(ഥrമr
அருட்பணி ஜே. கருணையோசப் அடிகளார்க்கு
சமாப்பனம்.

Page 6

திருக்கோணமலை புனித குவா லுப்பே அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தையும் திருக்கோணமலை மறை மாவட்ட மறைக்கல்வி இணை இயக்குனருமான
அருட்பணி ஜோாஜ் திஸாநாயக்கா அடிகளாரின்
ஆசியுரை
ஆன்மீக வளர்ச்சிக்கு குருக்கள், துறவிகள் மட்டு மன்றி இல்லறத்தோராகிய பொது நிலையினரும் தமது பங்களிப்பைச் செய்தல் வேண்டும் என்று எமது திருச்சபை எதிர்பார்க்கிறது.
இந்த வகையில், இந்தச் சிறிய நூல் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
நூலாசிரியர் திருமதி. F. S. ஆஞ்சலீன் ஆசிரியை மிக நீண்ட கால ஆசிரிய, அதிபர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அது மட்டுமன்றி மறைக் கல்வி வளர்ச்சிக் கும் தம்மாலான ஒத்துழைப்பையும் வழங்கி வருபவர்.
எமது மறை மாவட்டத்திலிருந்து, இவ்வாறான நூல் இறை மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இவரது பணி மேலும் ஓங்க வாழ்த்துகிறேன்.
அருட்பணி ஜோர்ஜ் திஸாநாயக்கா. O2-08-1998

Page 7
உங்களோடு சில நிமிடங்கள்.
நான் எழுத்தாளன் இல்லை.
அவ்வப்போது எழும் நற்செய்தி பற்றிய சிந்தனை களை எழுதி வருவதுண்டு. அவ்வாறு எழுதியவற்றில் சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பே இந்நூலாகும்.
விவிலியத்தில் நம்மவர்க்கு தெரிந்த விடயங்கள் தான் இவை. அவற்றின் மூலம் எமது சிந்தனையை தூண்டு வதும், அதன் மூலம் எமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே எனது தளராத நம்பிக்கையாகும்.
இவ்வாக்கங்களை நூலுருவில் வெளியிட உந்து சக்தியாக இருந்து ஊக்கம் அளித்த எனது கணவருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
தொண்டன் சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்களை இந்நூலில் சேர்க்க அனுமதியளித்த அதன் ஆசிரியர் "மலர்வேந்தன்” அவர்களுக்கும் எனது நன்றி.
இதனை ஈழத்து இலக்கியச் சோலை நிறுவனத்தின் ஒன்பதாவது, படைப்பாக வெளியிட்டு உதவிய அதன் நிர்வாகி சித்தி அமரசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றி.
அறிமுகவுரை வழங்கி உதவிய புனித மரியாள் பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி. தி. றாகல் அடிகளா ருக்கும், ஆசியுரை வழங்கி உதவிய புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி. ஜோர்ஜ் திஸாநாயக்கா அடிகளாருக்கும் என் பணிவான நன்றிகள்.
92, தபாற் கந்தோர் வீதி, AY திருக்கோணமலை. F. S. ஆஞ்சலின் O6-08-1998 (ஓய்வு பெற்ற அதிபர்)

வெளியீட்டாளர் உரை
சிந்தித்தால்.
இது, எமது ஈழத்து இலக்கியச் சோலையின் ஒன் பதாவது வெளியீடு என்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
திருக்கோணமலையின் பல்துறைப்பட்ட இலக்கியங் களை வெளிக் கொணரவேண்டும் என்பதே எமது அவா.
அந்தவகையில் திருமதி. T. S. ஆஞ்சலின் அவர் களின் "சிந்தித்தால். "நூல் எமது வெளியீட்டின் சமய ரீதியான இலக்கிய படைப்பின் முன்னோடியாகும்.
திருமதி. F. S. ஆஞ்சலின் அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
1957ம் ஆண்டுப் பகுதியில் "அறிவுச்சுடர்"கையெழுத் துப் பத்திரிகையின் ஆசிரியர் தாபி. எஸ்.ரமணியோடு நெருங் கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நட்பு திருக்கோண மலைக் கலைவாணி நாடகமன்றத்தின் ஆரம்பத்தோடு நெருக் கமாகியது. கலை இலக்கியத் துறையில் நாம் இணைந்து செயல்பட்டதன் விளைவாக இவர் ஆஞ்சலின் அவர்களைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் நட்புக்குன்றாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிக் கொண்டதன் காரணமாக நான் ஆஞ்சலீன் ரீச்சரை நன்கு அறிந்து உணர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு நிறைய ஏற்பட்டிருந்தது.
தான் கொண்ட மார்க்கத்தில் மிகவும் இறுக்கமாகப் பற்றுக் கொண்டபோதும், இவர் பாடசாலை நாட்களில் தேவைக்கேற்ப கலை இலக்கியத் துறையிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்ளத் தவறவில்லை.
பாடசாலை தவிர்ந்த நாடகத் தயாரிப்புக்கள் அனைத்தும் இறைசிந்தனை சம்பந்தப்பட்டவையாகவே இருந்தன. நாடகம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து செயல்படுபவர்போல் இருப்பதாகவே நான் உணர்ந்தேன் (கருதினேன்.)

Page 8
நாடகம் என்பது அகம் - நாடு. அகம் என்றால் வீடுமோட்சம் - இறைவன் எனவும் பொருள்படும். எனவே நாடகம் என்பது இறைவனை நாடுவது என்பதே. ஆகவே இவர் தனது நாடகத்தின் ஊடாக இறைசிந்தனையையும் இறைவனை அடையும் வழிகளையுமே வெளிப்படுத்தி வந்தார்.
இவரது அனைத்து நாடகங்களிலும் நான் பங்களித் துள்ளேன். இவர்தன் கலை இலக்கிய ஆக்கிங்கள் அனைத் தினூடாகவும் இறைசிந்தனையையே வெளிக் கொணர்ந்தார் என்றால் மிகையாகாது.
இவரது இந்நூலை வெளியிடுவதில் நாம் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் அடையும் அதே வேளை மக்க ளும் பயன் அடைவர் என்பதில் ஐயமில்லை.
இந்நூலிற்கு நூலாசிரியர், அறிமுகவுரை நல்கிய புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்பணி தி. றாகல் அடிகளார்க்கும், ஆசியுரை நல்கிய புனித குவாட்ட லூப்பே அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் திஸாநாயக்கா அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித் துக் கொள்ளும் அதே வேளை இந்நூலை அழகுற அச் சிட்டுத் தந்த பூரி கணேச அச்சகத்தாருக்கும் அதன் ஊழி யர்களுக்கும் எமது நன்றிகள்.
எமது ஆக்கங்களை ஊக்குவித்து ஆதரவு நல்கிய அனைவரும் இந்நூலையும் ஆதரித்து ஊக்குவிக்க வேண் டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
த. சித்தி. அமரசிங்கம் 21, ஒளவையாா வீதி, ஈழத்து இலக்கியச் சோலை திருக்கோணமலை. O5-08-1998

O
حضيض الخمسص جستستضص الإختخصص أحد
கிறிஸ்தர எண் கண்ணா
43. Nsome1 , aa121 , Nassa1 , Nam4 fi NS
استصبا
காலை ஒன்பது மணி.
நண்பனின் வீட்டில் பலதும் பத்துமாகக் கதைத்துக் கொண்டிருக்கிறேன். அப்போது நண்பனின் இளைய மகள் அஜந்தா அவசர அவசரமாக ஓடி வருகிறாள்.
"அப்பா, வெளிக்கிடுங்க கெதியா. இண்டைக்கு ஸ்ரூடியோவுக்குப் போய், ஆமி அயிடின்டிக்காக போட்டோ எடுக்க வேணும். வெளிக்கிடுங்க”
தந்தையின் பதிலையோ, அவரது முடிவையோ எந்த விதத்திலும் எதிர்பார்க்காத அந்த மகள் வீட்டின் உள் அறைக்குள் ஓடுகிறாள். அறையில் இருந்த நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு, தன்னை அவள் பார்க்கி றாள். தொடர்ந்து தன்னை முற்று முழுதாக அலங்கரிக்கத் தொடங்குவதை நான் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இப்போது மணி பத்து.
"கெதியா வெளிக்கிடுங்க” என்று தந்தையை அவசரப் படுத்திய அவள் இன்னும் இந்தக் கண்ணாடியை விட்டு வெளியே விலகவில்லை.
அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது. p
கண்ணாடி, உள்ளதை அட் படியே காட்டும் அல்லவா?
மகளும் வெளிக்கிட்ட பாடா இல்லை, தந்தையும் அதே நிலைதான்.
என் சிந்தனை.அந்த சூழலை விட்டு எங்கேடிழத்து முயற்சிக்கிறது.
கிறிஸ்து, அவரே என் கண்ணாடி!

Page 9
O2
கிறிஸ்து என்னும் அந்தக் கண்ணாடி முன் நான் நிற்கிறேன்.
"அவர்” சாயலை நாம் அணிந்து கொண்டுள்ளோம் என்று வேதாகமம் கூறுகிறது. அந்தக் கண்ணாடியை உற்று நோக்குகிறேன்.
"அவர் சாயல் என்னில் தெரிகிறதா. ?
பிறவிக் குருடனின் கண்களில் உமிழ்ந்து கிறிஸ்து கையை வைத்த போது அந்தக் குருடனின் கண்கள் பார்வை பெறுகின்றன. தெளிவாக உலகைப் பார்க்கிறான்.
ஆன்மீக வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் குருடா யிருக்கும் எங்கள் கண்களும் பார்வை பெறுதல் வேண் டாமோ..?
நாம் பரம்பரைக் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். ஆனால். நாம். எம்மில் கிறிஸ்துவைக் காணாவிட்டால். அதன் பயன்.?
எம்மில் அவரும். அவரில் நாமும் தென்படாவிட் டால். "கிறீஸ்தவர் நாம்" என்று பெருமையோடு மார் தட்டுவதில் அர்த்தம் ஏதும் இருக்க முடியுமா..?
எம் பெருமான் கிறீஸ்து, செல்கின்ற இடமெல்லாம் அனைவருக்கும் அன்பு காட்டினார். துன்பம் துடைத்தார்.
அவர் வழியைப் பின்பற்றும் நாம்.
அவர், சென்ற இடமெல்லாம் தந்தையோடு செபத் தில் இணைந்து இருந்தார். ஆனால் நாம். p
தந்தையோடு உரையாட, கிறிஸ்து கையாண்ட கருவியே செபம் ஆகும். அவர் தனியாக செபித்தார்.

O3
முழந்தாட்படியிட்டுச் செபித்தார் (லூக் 22:42)
முகம் குப்புற விழுந்து செபித்தார் (மத் 20: 36)
"எங்கே, என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் கூடி யிருக்கிறீர்களோ, அங்கே நான் இருப்பேன்’ என்று கிறீஸ்து பெருமான் வாக்களித்திருக்கிறார்.
ஆனால்.எமது செப வாழ்வு. ?
அவரது பிரசன்னத்தை உணரக் கூடியதாக எமது செப வாழ்வு உள்ளதா.
"நான் உங்களுக்கு அன்பு செய்தது போல, நீங்க ளும் ஒருவர் ஒருவருக்கு அன்பு செய்யுங்கள்” (அரு. 13:34) இதுவே, கிறிஸ்து பெருமானின் அன்புக் கட்டளையாகும்.
இந்த வேண்டுகோள் எங்கள் வாழ்வில் கடைப்பிடிக் கப்படுகிறதா..?
"தாகமுள்ளவன் என்னிடத்தில் வரட்டும்" (அரு 7:37) இது கிறிஸ்துவின் வரவேற்பு மொழி.
ஆனால்.
நாம் தாகமுள்ளவராக இருக்கிறோமா. ?அவ் வாறான வேளைகளில் எங்கு செல்கின்றோம். ? அவரி Lub G36ö68BTLDT. ? அல்லது.
அந்தச் சமாரியப் பெண், அன்று நிறைவு காணத் துடித்துக் கொண்டிருந்தான். ஆறு மனிதர்களோடு சுப போக மாக வாழ்ந்து கொண்டிருந்த போதும், அவளால் நிறைவு காண முடியவில்லை.
இந்த நிலையில் ஒருநாள் சமாரியப் பெண் கிறீஸ் துவைச் சந்திக்கிறாள்.

Page 10
O4
அவளது ஆன்மீகக் கண்கள் திறக்கப்படுகின்றன. இதுவரை அவள் காணாத நிறைவை, அவள் காணுகிறாள். அவள், நிறைவைக் கண்டதோடு திருப்தியடையவில்லை. அந்த நிறைவை, நிறைவுக்குக் காரணமாயிருந்த கிறீஸ் துவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள - மற்றவர்களும் கிறிஸ்துவை அறிந்து கொள்ள, அதன் மூலம் மற்றவர்க ளும் தன்னைப் போல் மகிழ்ச்சி பெற - பயன் பெற ஒடோ டிச் செல்கிறாள். தன் அயலவர் சுற்றத்தாருக்கு அறிவிக் கிறாள்.
நாமும் பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்துவின் அன்பை - அவரது ஆளுமையை அவரது - ஆன்மீக தயவைப் பெறு கிறோம் - பெற்று வருகிறோம்.
ஆயினும். அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோமா? பகிர்ந்து கொடுக்கும் மனநிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறதா..? பகிரக்கூடிய மனப் பாங்கை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோமா..?
எம் வாழ்வு முழுவதும், வேதனையும் சோதனை யும், துன்பமும் துயரமும், பாடுகளும் கஸ்ரங்களும் நிறைந் ததாகவே இருப்பதாக நாம் உணர்கிறோம். இதில் பெரு மளவு உண்மை இல்லாமல் இல்லை.
ஆயினும், அந்தப் பாடுகள் கஸ்ரங்களுக்கு மத்தி யிலும் - துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் - வேதனைகள் சோதனைகளுக்கு மத்தியிலும், தேவ அன்பின் வெளிப்பாடு கிடைப்பதை நாம் ஏன் உணர்வதில்லை.?
முட்களைக் காணும் போது, அதன் நடுவே அழ கான ரோஜா ஒன்றைக் காணும் மனநிலை, சப்பாணி ஒரு வரைக் காணும் போது, அவர்களுக்கு மத்தியில் காலால், நடந்து செல்லும் ஒருவனைக் காணும் மனநிலை, ஏன் நமக்கு ஏற்படுவதில்லை?

O5
துன்பங்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று தான்
அதற்காக,
நாம் முற்று முழுதாகச் சோர்ந்து விடத்தான் வேண்டுமா?
நமது நாயகன் கிறிஸ்து, படாத துன்பங்களா? அனுபவிக்காத வேதனைகளா? இல்லை. இவை எல்லாம் நமக்கு அற்பமே!
நமக்கு வரும் கவலைகளும் துன்பங்களும், கிறிஸ் துவின் பாதைக்கு இட்டுச் செல்லும் படிக்கற்களாகவே உள்ளன என்பதை, நாம் ஒரு கணம் எண்ணிப் பார்ப்போ மானால்.அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.
"வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி எங் களை அவர் கைவிட மாட்டார்" (1 கொரி 10 13) என்ற நற்செய்தி நம்மை மென்மேலும் உற்சாகப் படுத்தி, தொடர்ந்து அவர் வழியைப் பின்பற்ற. அதன் மூலம் அவ ராகவே மாற.
"நாமெல்லோரும் திறந்த முகமாய், கடவுளின் மகி மையை, கண்ணாடியில் காண்கிறது போல கண்டு, கிறீஸ் துவின் சாயலாக மாறி, மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபமாக்கப்படுகிறோம்."
"நான் தயார் அப்பா"
புகைப்படத்திற்கு ஏற்றவாறு கோலம் போட்டு வந்து நிற்கும் நண்பனின் இளைய மகள் எதிரே நிற்கிறாள்.
எனது சிந்தனைக் கயிறு அறுகிறது.
எனது நண்பன் என்னை உற்றுப் பார்க்கிறான்.
அது பரிதாபமான பார்வையாக எனக்கு தோன்றுகிறது.

Page 11
O6
"அழகு பண்ணிய மகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை தந்தைக்கு.தவிர்க்க முடியாதது.
எனவே,
எல்லோரும் வெளியே புறப்படத் தயாராகிறோம். நானும் புறப்படத் தயாராகிறேன்.
91 DTub நாங்கள் அனைவரும் கிறிஸ்து என்னும் கண்ணா
டியில் எம்மைப் பார்ப்பதற்குத் தயாராவோம்.
நம்மை நாங்களே அளவிட்டு, அதற்கேற்றவாறு சரியான நேர் பாதையைத் தேர்ந்து கொள்வோம்.
(தொண்டன் பெப்ரவரி 1969)

O7
འ, s KM. sa 2 ഴ്ച 95&Bằở5ử LJ)LJ(ểID6)ĩ? 綴
நாங்கள் யாவரும் இந்த உலகத்தின் பிரயாணிகள்.
இது எல்லாருக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடு.
ஆனால்.
நாங்கள் கிறிஸ்துவை நல்ல ஆயனாக ஏற்றுக் கொண்ட பிரயாணிகள் ஆவோம்.
உலகம் என்ற இந்தக் கப்பலில், கிறீஸ்துவோடு பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் நாம்.
நாம்,
எமது ஆண்டவர் கிறிஸ்துவின் மேல் முழு நம் பிக்கை வைத்துப் பிரயாணத்தைத் தொடருகிறோம். ஏனென்
றால்.கிறிஸ்துவும் எமது பிரயாணத்தில் எங்களோடு இருக்கிறார்.
இடி இடித்தாலென்ன, மின்னல் மின்னினாலென்ன, மழை பெய்தாலென்ன, புயல் வந்தாலென்ன, நாம் கிறிஸ்து வில் வைத்திருக்கும் நம்பிக்கையில், எந்தவித பயமுமின்றி எமது பிரயாணம் தொடருகிறது.
இது போன்று ஒரு பிரயாணம் விவிலியத்தில் .
அது அமைதியான கடல்
படகுகள் தென்படுகின்றன.
அவற்றில் ஒரு படகில்.

Page 12
O8
கிறிஸ்துவும் அவரது சீடர்களும் காணப்படுகின்றனர். படகு மெல்ல மெல்ல அசைந்தாடிச் சென்று கொண்டி ருக்கிறது. அமைதியான கடல் அது. மெல்லிய தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. உடலுக்கு மாத்திரமல்ல மனதிற்கும் கூட இதமானதாக இருக்கிறது அந்தத் தென்றல்
அந்தப் படகின் பின்னணியத்தில் கையைத் தன யணையாக்கிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிற கிறீஸ்து. "பாவம்" கிறிஸ்து. ஒய்வு என்பதே கிடைக்கா அவருக்கு, இந்தக் கடற்பயணத்தில் கிடைக்கும் சொற் நேரம் ஒரு ஓய்வாகவே இருக்கிறது. எந்தவித தொந்தரவு இல்லை. அவரும் மனித சுபாவத்திற்கு உட்பட்டவர் தானே சோர்வு, களைப்பு, என்பன அவருக்கும் வரும்தானே!
அதனால் இந்தக் கடற்பயணத்தை, இந்தச் சந்தர்! பத்தைப் பயன்படுத்துகிறார். நல்ல நித்திரை.
சீடர்களுக்கும் அரைகுறை நித்திரைச் சோர்வு.
கிறீஸ்துவே நித்திரை கொள்ளும் போது, சீடர்கள
நித்திரை கொண்டாலென்ன? ஒருவேளை, இப்படியும் அவர் கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
 

O9
படகு சிறிது தூரம் சென்றிருக்கும்.
திடீரென அமைதி குலைகிறது. படகு தத்தளித்து ஆடத் தொடங்குகிறது. அந்த ஆட்டத்தின் தொந்தரவால் விழித்த சீடர்கள், தூங்கிக் கொண்டிருக்கும் சீடர்களைத் தட்டி எழுப்புகின்றனர்.
எங்கிருந்து இந்தத் திடீர்க் காற்று வந்தது?
திசையெல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள். தெரிவ தாக இல்லை. காற்றின் வேகம் வர வர கூடிக் கொண்டே வருகிறது. சீடர்கள் திகைப்படைந்து போகின்றனர்.
“படகுப் பிரயாணம்" "கடற்காற்று" என்பவை ஒன்றும் அவர்களுக்குப் புதியவை அல்ல. அவர்கள் வாழ்வோடு, அவர்கள் பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்தவைதான். தொழிலுக்காக கடலினுள் செல்லுமுன், திடீரென எழும் காற்று, மழை என்பவை எப்போது ஏற்படும் என்பதையும் அதற்கு ஏற்றவாறு முன்னாயத்தமான நடவடிக்கைகளையும் நன்கு எடுக்கத் தெரிந்தவர்கள். தங்களின் அனுபவ ஆற்ற லால் படகோ, ஆட்களோ சேதம் ஏற்படாமல் பாதுகாக் கக்கூடிய வல்லமை படைத்த கடற்றொழிலாளர்கள் அவர்கள்
மேலே பார்த்து, வானத்தில் தென்படும் அறிகுறி களைக் கொண்டு இப்போது காற்று வருமா? மழை வருமா? வருமானால் அது எந்தத் திசையில் இருந்து வரும்? தொழி லுக்காக கடலுக்குச் செல்லலாமா என்று தாங்களாகவே முடிவு செய்யக்கூடிய அனுபவஸ்தர்கள் அவர்கள்.
இன்றும் அப்படித்தான்
திசையெல்லாம் திரும்பிப் பார்த்து, இது என்ன காற்று? இது எங்கிருந்து வருகிறது, சேதம் ஏற்படாமலிருக்க படகை எந்தத் திசைக்குச் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் அவர்கள் படகில் ஏறினார்கள்.

Page 13
O
ஆனால் இப்போது.
முடிவெடுக்க முடியாதபடி காற்றின் வேகம் படிப் படியாக அதிகரிக்கிறது. கொந்தளிக்கும் கடல் நீர் படகிற் குப் பாயத் தொடங்குகிறது.
சீடர்கள் முற்றும் முழுவதுமாகவே பயந்து விட்டார்கள்.
காற்று, இப்போது புயலாக மாறிச் சிறிக் கொண்டி ருக்கிறது. படகு நீரால் நிறையத் தொடங்குகிறது. அலைகள் ஆளுயரத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில வினாடிகளில் படகு மூழ்கப் போகிறது சீடர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.
இனிச் சாவின் மடிதான். அப்போதுதான் திரும்பிப் பார்க்கிறார்கள்.
கொந்தளித்துத் தத்தளிக்கும் அந்தப் படகின் பின்னணியத்தில் கையைத் தலையணையாக்கிக் கொண்டு எந்துவித சலனமுமின்றி "கிறிஸ்து" சுகமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்.
அவரைப் பிடித்து சீடர்கள் உலுக்கினார்கள்.
"குருவே. குருவே. எழும்புங்கள் சீக்கிரம்.வேறு
வழியில்லை நாங்கள் எல்லோரும் சாகப் போகிறோம். எழும்புங்கள் குருவே."
கண் விழித்த கிறிஸ்து ஆச்சரியமாகச் சீடர்களைப் பார்க்கிறார்.
புயலின் வேகம் உச்சஸ்தாயில் இருந்தது.
வெளியே பார்த்து, காற்றையும் புயலையும், கடுமை யாகக் கடிந்து கொண்டார் (லூக் 08:24)
என்ன ஆச்சரியம். t

அதுவரை வீரியங் கொண்டு வீசிய புயற்காற்று எங்கே? படகை அலைக்கழித்த அந்த கடல் கொந்தளிப்பு எங்கே?
முன்போல் யாவும் அமைதியாயிற்று மெல்லிய தென்றல் இப்போது வீசுகிறது. சீடர்களின் முகத்தில், அகத்தில் வியப்பு. ஆனால், கிறிஸ்துவின் முகத்திலோ ஆத்திரம். "உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று?”
இப்படிக் கேட்டு விட்டு, பின்னணியத்திற்குச் சென்று மீண்டும் முன் போல நித்திரையைத் தொடருகிறார்.
"காற்றும் கடலும் இவர் கட்டளைக்கு அடங்குகின் றனவே காற்றுக்கும் கடலுக்கும் இவர் கட்டளை இடுகி
றாரே! அப்படியானால் இவர் யாராய் இருக்கக் கூடும்?"
இந்தக் கேள்வியினால் சீடர்களின் நெஞ்சங்கள் ஏங்குகின்றன.
கிறிஸ்துவின் வல்லமைகளை ஏற்கனவே பல தட வைகள் கண்டு, கேட்டு அனுபவித்து அவரைப் பின் தொடர்ந்தவர்கள் அவர்கள். இருந்தும் இந்தச் சந்தர்ப்பத் தில் அவற்றை எல்லாம் மறந்து விட்டார்களா?
கிறிஸ்து ஏன் அவர்களைக் கண்டித்தார்?
எங்களுக்குள் ஒரு சிந்தனை
சீடர்களுக்கு இப்போது பிரச்சினை, அதுவும் உயி ராபத்துப் பிரச்சினை. எனவே கிறிஸ்துவை அவர்கள் நாடி னார்கள். இது பிழையா?
பிரச்சினை ஏற்படும் போது ஆண்டவர் கிறீஸ்துவை அவர்கள் நாடக் கூடாதா? நாடினால் அது பிழையா?

Page 14
12
இல்லை. அது சரி. நமது பிரச்சினைகளுக்கு சரி யான, முடிவான விடையளிக்கக் கூடிய ஒரேயொருவர் அவர் தான். எனவே நாம் அவரை நாடுவது முற்றிலும் சரியே.
"அப்படியானால் அவர் சீடர்களைக் கடிந்ததேன்?"
அந்தத் திடீர்ப் புயலில் தம்மை, படகை காப்பாற்ற ஆன மட்டும் முயன்றும், முடியாத நிலையில் அச்சத்துட னும் ஆத்திரத்துடனும் ஆண்டவரை அவர்கள் எழுப்பினார் கள். பல்வேறு மக்களின் துயர் துடைத்த "அவர்” இந்தச் சந்தர்ப்பத்தில் தமக்கு உதவுவார் என்றே அவரை எழுப் பினார்கள்.
அது பிழையாயின் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் ஆரிடந்தான் செல்வார்கள்?
சற்றுச் சிந்திப்போம்.
நம்மால் ஒன்றும் இயலாத நிலையில், அவரிடந் தான் அடி பணிய வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை.
அப்படியானால் "அவர்” ஏன் சீடர்களைக் கடிந்து கொள்கிறார்.?
அவர் என்ன சொல்லிக் கடிந்து கொள்கிறார்?
"அற்ப விசுவாசம் உள்ளவர்களே! உங்கள் விசு வாசம் எங்கே போயிற்று?”
சீடர்களின் செயலில் அவர் குறை காணவில்லை. மாறாக, அவர்களது விசுவாசத்திலேயே குறை காணுகிறார். அதனாலேயே அப்படிக் கடிந்து கொள்கிறார்.
"ஆண்டவர் எம்மோடு இருக்கிறார். அப்படியிருக்க நாம் ஏன் கலங்க வேண்டும்?" என்ற திட விசுவாசத்தை அவர்கள் இழந்தது குறித்தே அவர் கடிந்து கொள்கிறார்.

3
அன்று, கடலில் தத்தளித்த படகு போல, எமது வாழ்க்கைப் படகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தளிக் கிறது. காற்று வீசுகிறது, புயல் எழுகிறது, துன்பங்கள், துயரங்கள் எம்மைச் சூழ்ந்து நின்று பயமுறுத்துகின்றன.
ஆயினும்,
ஆண்டவர் உறங்கினாலும் சரி விழித்திருந்தாலும்
சரி எப்போதும் "அவர்” நம்முடன் இருக்கிறார் என்ற விசு வாசமே நமக்கு அரண்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
உண்மை விசுவாசத்தை "அவர்” வார்த்தைகளால் பலப்படுத்திக் கொள்வோம். துன்பங்கள் துயரங்களை வெல்
(36.JTLb.
(தொண்டன் நவம்பர் 1993)

Page 15
4
ஆமீண்டும் போவோம் ஆ
“மீண்டும் போவோம்"
மணலில் கிடந்த வலையைத் தூக்கித் தோளில் போட்டவாறு கூறினார் இராயப்பர்.
"நாமும் வருகிறோம்" கூட நின்ற அனைவரும் இவ் வாறு கூறிக் கொண்டு, படகைக் கடலில் தள்ளிவிட்டு அதில் ஏறிக் கொண்டனர்.
மீன் பிடித்தல் என்பது அவர்களது பரம்பரை பரம் பரையான தொழில். கைவந்த தொழில். ஆனால் இன்று அது மறந்துவிட்ட தொழிலாக, புதியதொரு தொழிலாகத் தென்படுகிறது.
காரணம் என்ன?
நன்றாக ஞாபகம் வருகிறது.
“என் பின்னே வாருங்கள். உங்களை மனித நெஞ் சங்களைப் பிடிப்பவர்களாகப் பயிற்றுவிக்கின்றேன்"
(லூக், 05 - 10)
இவ்வாறு இயேசு எந்த நிமிடம் அழைத்தாரோ, அந்த நிமிடமே எந்தவித மறுப்பும் கூறாமல் கையிலிருந்த வலைகளையும் தோணிகளையும் விட்டு விட்டு அவர் பின்னே சென்ற காட்சி நினைவுக்கு வருகிறது.
அதற்குப் பிறகு - ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்குப் பிறகு.
இன்று,
"மீண்டும் போவோம்” என்று அழைத்துச் செல்கி றார் இராயப்பர். மறக்க முடியாத அந்த மூன்றாண்டுகளில்

5
அவர்கள் பெற்ற அனுபவங்களும், அதனுடாக அவர்கள் அடைந்த ஆனந்தங்களும்தான் எத்தனை? எத்தனை?
"மனிதனது வாழ்விற்கு அப்பம் மாத்திரமல்ல. தேவ னுடைய வார்த்தைகளே போதும்” என்ற பொன் மொழியைக் கேட்டவர்கள். அதனைச் செயல் வடிவிலும் கண்டு உணர்ந் தவர்கள். எந்த ஒரு வேளையிலும் உணவுக்கென, உறங் கலிருக்கைக்கென கஸ்டப்படாதவர்கள், அவற்றைப் பற் றியே கவலைப்படாதவர்கள, அது மாத்திரமன்றி, அவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகப் பெற்றுக் கொண்டவர்களு
D6.
இப்படி இந்த மூன்று வருட காலத்தை அனுபவித் தவர்கள், இன்று மீண்டும் பழைய தொழிலுக்கு - பழைய நிலைக்கு காலடி எடுத்து வைக்கிறார்கள்.
இது ஒரு மனிதப் பலவீனம்.
"நம்மோடு ஒன்றித்து - நம்மையெல்லாம் வழி நடத் தும் ஒரு தலைவன் - நெஞ்சார, மனமார ஏற்றுக் கொண்ட எமது வாழ்வின் வழிகாட்டி - மீட்பின் இரட்சகர் - இப்படி ஒரு அன்புப் பிணைப்பை நாம் கிறிஸ்துவோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள போதும், சில சந்தர்ப்பங்களில் பலவீனமான இதயப் பாரத்தோடு - இதயப் பாரத்தால் மீண்டும் நாமும் பழைய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம் இல்லையா?

Page 16
6
இது ஏன்.
"யார் மறந்தாலும் நான் உம்மை மறக்க மாட்டேன்” என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிய இராயப்பர் இன்று மீண்டும் வலையைத் துக்கிக் கொண்டு கடலுக்குச் செல் கிறார்.
காலைக் கழுவ இயேசு முயற்சிக்கும் போது “அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்" என்று அடம் பிடித் தவர். நான் கழுவாவிட்டால் என்னில் உனக்குப் பங்கில்லை" என்று எச்சரிக்கப்பட்டபோது, அப்படியானால் என் காலை மாத்திரமல்ல தலையையும் உடம்பையும் கழுவும் ஆண்ட வரே" எனக்கதறி இயேசுவின் அந்த அன்புப் பிணைப்பை இழக்க விரும்பாதவராக அவரை ஏற்றுக் கொண்டவர்.
இன்று. p
இயேசு அவர்களோடு இல்லை. ஆனால் அவர் வார்த் தைகளையும் மறந்து விட்டார்களா?
அதனால் "மீண்டும் போவோம்" என்று அழைத்துக் கொண்டு தொழிலுக்கு முன்னே போகிறார் இராயப்பர்.
சீடர்களில் சிலர் இயேசுவை விட்டு பிரிந்து சென்ற வேளையில், எஞ்சியிருந்த பன்னிருவரைப் பார்த்து "நீங்க ளும் போய்விட நினைக்கிறீர்களா" என்று இயேசு கேட்க
"ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? முடி வில்லா வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம் அன்றோ உள் ளது" என்று ஆணித்தரமாகக் கூறியவர் இராயப்பர்.
இப்போது இயேசு இல்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு விட்டார். இனி என்ன செய்வது? இறங்கி விட்டார்கள் கடலில் தொழிலுக்காக. என்னே தடுமாற்றம்.?
இது மனித மன தடுமாற்றம். ஆனால் இறைவனின் சித்தம்.?

17
இரவெல்லாம் கண் விழித்து வலை விரித்தார்கள். (Pl.96...............
கண்ணெரிச்சல், வயிற்றெரிச்சல்தான் மிச்சம். ஒரு மீன்கூட வலையில் அகப்படவில்லை.
“ ‘பசியின் ஆற்றாமை மேலோங்குகிறது.
அவர்கள் இயேசுவை விட்டு வெகு தொலை தூரத் திற்கு ஓடி விட்டார்கள்.
ஆனால்.இயேசு.?
அவர்களைத் தேடி வருகிறார். வருவது மாத்திர மல்ல, அவர்களின் அப்போதைய மனநிலையை உணர்ந்த வராக - தேவையை நன்கு அறிந்தவராக - அதைப் பூர்த்தி யாக்கும் வல்லமையோடு - சித்தத்தோடு வருகிறார்.
களைப்புடன் - வெறும் வலைகளுடன் வரும் அவர் களை இயேசு கரையில் வரவேற்கிறார்.
“பிள்ளைகளே! மீன் ஒன்றும் அகப்படவில்லையா?” வாஞ்சையுடன் கூடிய கேள்வி இது.
“இல்லை. இல்லை.ஒன்றாவது அகப்படவில்லை” சலிப்புடன் கூடிய பதில் இது.
"அப்படியா! படகின் வலது பக்கம் வீசுங்கள், மீன் அகப்படும்”
பரம்பரையாகக் கடலில் தொழில் புரிந்து அனுப வப் பட்ட அவர்களுக்கு இரவு முழுவதும் கண் விழித்து வலை வீசி வெறுங்கையுடன் வந்து நின்ற அவர்களுக்கு இந்த வேண்டுகோள் எத்தனை எரிச்சலை Yஉண்டாக்கி யிருக்க வேண்டும்?
போதாதற்கு இன்னும் அவர்கள் அவரை அடையா ளமே காணவில்லை.
இருந்தும்.அந்த வாதிகதழுதிஸ்ரீேம்ைபேர்டு"
நம்பினார்கள் - அந்த வார்த்தைக்குப் பணிந்தார்கள்.

Page 17
18
அவர் கூறியபடி மீண்டும் படகின் வலப்பக்க வலையை வீசினார்கள்,
என்ன ஆச்சரியம்.?
வலை கொள்ளா அளவுக்கு மீன்கள்.
இரவு முழுவதும் அதே இடத்தில் துளாவு துளா என்று துளாவியும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. ஆனால் இப்போது வலை கொள்ளாத மீன்கள்.
அப்படியானால்.அவர்.?
"ஆண்டவரே!" அத்தனை பேரும் ஒருமித்துக் கூவுகின்றனர். அது அவர்கள் வாழ்வில். எமது வாழ்வில். இப்படி எத்தனை சந்தர்ப்பங்களில் அருகில் நிற்கு ஆண்டவரைக் கண்டு கொள்கிறோம்?
"நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமா அருள் செய்யும் ஆண்டவரின் அழைப்பை எத்தனை தடை உதாசீனப்படுத்தி விட்டு உதறித் தள்ளிவிட்டு - அவரை விட் தூர விலகி ஓடியிருக்கிறோம்.? அவர் செய்த செய் வருகிற அளவற்ற உதவிகளை அவ்வப்போது மறந்து பழை நிலையிலேயே வாழ்ந்த சந்தர்ப்பங்கள்தான் எத்தனை?
"?ሩ சிந்திப்போம்! இத சீர்படுவோம்!
"மீண்டும் போவோம்" அவரிடம்,
(தொண்டன் யூன் - யூலை 1993
 
 
 
 
 
 

19
தேடி வருகிறார்.
ஜெருசலேம் தேவாலயம் .
அதனருகே ஒரு குளம், அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் அடங்கிய கட்டிடம் ஒன்று இயற்கைக்கு மேலும் மெருகூட்டுவதாக இந்த அமைப்பு காணப்படுகிறது.
குதூகலமாகக் காணப்படும் இந்த அழகை ரசிக்கக் கூடியிருக்கும் ஜனத்திரளைப் பார்க்கிறேன். அழகை ரசிப்பதற் குப் பதிலாக அங்கே காணப்படுபவை அழகை மாசுபடுத்து வதாகவே எனக்கு தோன்றுகிறது.
சற்று, அந்தக் குளத்தை நெருங்கிச் செல்கிறேன் இறைவனின் படைப்பில் இப்படியும் ஒரு பேதமா..? ஆமாம் அங்கே காணப்பட்டவர்களின் கோலத்தைப் பார்த்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்
இறைவன் அளித்த இந்த இயற்கை அழகை கண்டு ரசித்து அனுபவிக்க முடியாத குருடர்கள் ஒரு புறம். கானன்பவற்றை எடுத்துச் செல்ல முடியாத ஊமைகள் மறுபுறம், இருந்த இடத்தை விட்டு நகர முடியாத முடவர்கள் இன்னொருபுறம், மேலும் குஷ்ரரோகிகள். பயங்கர நோயாளி கள் இப்படி மண்டபம் நிறைந்து காணப்படுகிறது.
அழகு கொளிக்கும் அந்த ஜெருசலேம் தேவாலயத் தில் இப்படியான அருவருக்கும் காட்சிகள். இந்தப் பகுதியி லுள்ள எல்லா நோயாளிகளுமே இங்கே வந்து விட்டார்களோ என்று நினைக்கும் அளவிற்கு நிறைந்து கானப்படுகிறார்கள்
இத்தனை பேரும் ஏன் இங்கே கூடியிருக்கிறார்கள்? வேறு இடம் கிடைக்கவில்லையா?
இப்படி வினவிய எனக்குக் கிடைத்த பதில்,

Page 18
2O
"ஆண்டவரின் தூதன், சில வேளைகளில் இந்தக் குளத்து நீரைக் கலக்குவார். கலங்கிய நீரில் முதன் முதலில் இறங்குபவன் எப்படிப்பட்ட நோயுற்றிருந்தாலும் பூரணமாகக் குணமடைவான் (அரு 05 : 04)
இவர்கள் அங்கு காத்திருப்பதன் காரணமே அது தான்
இன்னும் சற்றுத் தள்ளிச் செல்கிறேன்.
அங்கே, ஓரிடத்தில்
எழுந்து நடக்க முடியாத முடவன் ஒருவன் படுத் திருந்தான். இன்று நேற்றல்ல, ஏறக்குறைய 38 ஆண்டுகளாக பிணியோடு படுத்துக்கிடக்கிறான். குளம் கலக்கப்படும் போது கலங்கிய நீரில் இறங்க அவனால் முடியவில்லை. தூக்கிக்கொண்டு போய் இறக்கி விடவும் ஒருவரும் முன் வரவில்லை.
எனக்கு விமோசனமே இல்லையா? என்று ஏங்கும் அவனது ஏக்கம் என் காதில் விழுகிறது.
"இனி எப்போது ஆண்டவரின் தூதுவர் வருவார்? அப்படி வந்து குளத்து நீரைக் கலக்கினாலும், இந்த முடவனை யார் குளத்தில் இறக்கி விடுவது? நான். எனது அந்தஸ்து பதவி இதற்கு இடம் கொடுக்குமா? சமூகம் என்ன நினைக்கும்,” مد
இப்படி நான் சிந்தனை வயப்பட்டுக் கொண்டிருந்த போது என்னை நோக்கி யாரோ வருவது தெரிகிறது, இல்லையில்லை என்னை நோக்கியல்ல அந்த முடவனை நோக்கி.
அந்த நோயாளியின் தேவையை நன்கு உணர்ந் தவர் போல் தெரிகிறது. அவனுக்கு அருகில் சென்று "அவர்” "குணமடைய விரும்புகிறாயா” என்று ஆதரவாகக் கேட்கிறார்.

2
"ஆண்டவரே, தண்ணிர் கலக்கப்படும் போது குளத் தில் என்னை இறக்கிவிட ஒருவருமில்லை ஆண்டவரே!"
அவ்வளவு தான் அந்த முடவன் சொன்னது.
"எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நட”
இப்படிக் கட்டளையிடுகிறார் அவர்.
என்ன ஆச்சரியம்!
"அவர்” கூறிய வார்த்தை அவனை உடனடியாகவே விடுதலை யாக்குகிறது. அவன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடக்கிறான்.
அது ஒரு ஓய்வு நாள்.
பாரமான பொருட்களைச் சுமப்பது சட்டப்படி குற்ற மான காரியமாகும். யூதர்கள், நடக்கும் அந்த முன்னாள் முடவனை அதட்டி, படுக்கையைச் சுமப்பது ஓய்வு நாளில் முறையன்று என்று வெருட்டுகிறார்கள்.
ஆனால் அவனோ, சுகமடைந்தது மட்டுமன்றி புதுப் பெலன் அடைந்தவனாக எவ்வித தயக்கமுமின்றி "என்னைக் குணமாக்கியவரே, படுக்கையைத் தூக்கிக்கொண்டு போகச் சொன்னார்” என்று கூறினான்.
தன்னைக் குணப்படுத்தியவர் இயேசு என்பதை அவன் அறியாதிருந்தான். ஆயினும் இயேசு இவனைத் திரும்பவும் சந்திக்க விரும்புகிறார் போலும்.
மீண்டும் அவ்விடம் இயேசு வருகிறார், தன்னை யாரென்று அறிமுகம் செய்கிறார். அவன். அந்த முன்னாள் முடவன் தன் ஆனந்தம் நிறைந்த நன்றியைக் கூறுகிறான்.
அப்போது இயேசு அவனை நோக்கி,

Page 19
22
"இதோ 38 வருடங்கள் திராத நோயிலிருந்து நீ குணமடைந்துள்ளாய், இதிலும் கேடான எதுவும் உனக்கு நேராதபடி இனிப் பாவம் செய்யாதே" it
"என்ன அற்புதமான செயல்' lili
அந்த முபவன் தன்னை யாராவது தூக்கிவிட வருவார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தான். அதற்காகக் காத்துக் கெண்டிருந்தான்.
நாமும் எத்தனையோ தாக்கங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாராவது கைதுக்கிவிடுவார் களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
主) - in ஆனால், அவனைப்போல் காத்திருக்கிறோமா? காத்திருந்த அவனைத் தேடி வந்தார் இயேசு. வந்ததோடு மாத்திரமல்ல, அவன் வேண்டுகோள் விடுக்காம லேயே அவனை நோக்கி "குணமடைய விரும்புகிறாயா? என்றும் கேட்டார்.
TTE Tell
ஆனால் அவனோடதனினர் கலக்கப்படும்போது என்னைத் தூக்கி குளத்தில் இறக்கிவிட ஆளில்லை" எனறான,
துன்பங்கள், கஷட்ங்கள் நிறைந்த நேரத்தில் எம்மை நோக்கி தேடி"இயேசு வருகிறார்.
TA I
துன்பங்களிலிருந்து குணமடைய விரும்புகிறாயா? என்று கேட்கிறார். ஆனால் நாமோ "ஆம்" என்று சொல்வ தற்குப்பதிலாக, அந்த முLவனைப்போல ஏற்கனவே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேறு எதையெல்லாமோ கூறுகிறோம்.
முடவன் அப்படிப் பதில் சொல்லி விட்டான் என்பதற்காக இயேசு அவனைப் புறக்கனித்து விடவில்லை "படுக்கையைத் தூக்கிக்கொண்டு நL" என்று கட்டளையிட்டு அவனைச் சுகப்படுத்துகிறார். அதுவல்லவோ தெய்வீக அன்பு'

Α.Ε.
குணமடைந்த ஆவனை யூதர்கள் மறி த்துக் விவிக்கு மேல் கேள்வி கேட் ன்றனர். "இது ஓய்வு நாள்,
Iசிகையைத் தூக்கிக்கொண்டு
வருட்டுகிறார்கள். அந்த வெ வே இல்லை.
போவது பாவம்" என்று ருட்டுக்கு அவன் செவி சாய்க்
"என்னைக்குணமாக்கியவரே படுக்கையைத் தூக்கிக் பாண்டு போகச் சொன்னார்" என்று அடித்துச் சொல்கிறான்.
எந்தனையோ சந்தர்ப்பங்களில். துன்ப வேதனைகளில், இயேசு நம்மைத் தொட்டுக் தனமாக்கியுள்ளார்.
ஆனால்..?
குணமாக்கியவரை அறியாதிருக்கிறோம்
அந்த பு:160ாப் போஸ்,
அதனால் ஏதேதோ காரணங்களைச் நைட்டுக்கொண்டிருக்கிறோம்.
சொல்லிக்
இயேசுவுக்காக காத்திருப்போம்! அவர் தேடி வரும்போது அவரை எதிர்கொள்வோம் அவர் விருப்பத்தை ஏற்றுக் கொள்வோம்! அவருக்கு நன்றி சொல்வோம் அவர் புகழை அனைவருக்கும் பகிர்வோம்
தொணர்டன் தை மாசி பங்குனி 1981

Page 20
24
இறங்கினால்...!! {O 0 (0 0 (0 00 0 O 0 0 0 (0.
அதோ!
அந்தக் குள்ளமான மனிதன் ஏன் அப்படிப் பலமாக யோசிக்கிறான். ஏதாவது பணப்பிரச்சனையோ? அப்படியிருக் காது. அவன்தான் பெரிய பணக்காரன் ஆயிற்றே. வரி அறவிடுவதில் ரொம்ப கரார்ப்பேர்வழி. பணத்திற்கா குறைவு? அப்படியானால் அவன் யோசனைக்குத்தான் காரணம் என்ன?
அயலூர்களில் அதிசயங்கள் செய்கின்ற பெரியவர் ஒருவர் இந்த ஊருக்கும் வருகிறார் என்று அவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுவும், தான் இருக்கும் இந்த வழியாகவே வருகிறார் என்று அறிந்த நேரத்திலிருந்து அவனுக்கு யோசனை கூடிக்கொண்டே போகிறது. எப்படியும் அந்த அதிசயம் செய்யும் மனிதரைப் பார்த்துவிட விரும்பி னான். பார்த்துவிடத்தானே, அதற்கேன் யோசனை?
எல்லோரையும் விட அவன் சற்றுக் குள்ளமாக இருந்தான். அதனால் நெருக்கடியான நேரங்களில் தான் நினைப்பதை உடன் செய்து முடிக்கப் பல தடவைகளில் கஷ்ரப்பட்டிருக்கிறான்.
இந்த அனுபவத்தைக் கொண்டு, சனங்கள் புடை சூழ வந்துகொண்டிருக்கும் அந்த அதிசய மனிதரை தங்கு தடையின்றி பார்ப்பதற்கு என்ன செய்யலாம் என்று பலமாக யோசித்த அவன் கண்களில், வீதியின் அருகில் நின்ற அத்தி மரமொன்று பட்டது. அவ்வளவுதான், ஓடிச்சென்று மளமளவென்று அதில் ஏறிக்கொண்டு செளகரியமாக உட் கார்ந்து கொண்டான்.
சற்று நேரத்தின் பின்.

25
அவன் ஆவலோடு எதிர்பார்த்த "அந்த பெரியவர்" அத்திமரமிருந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அநேகம் பேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டு வந்தனர். அவர்களின் வினாக்களுக்கு விடைகளை அளித்துக் கொண்டு நடந்து வந்த அவர். என்ன ஆச்சரியம்! அந்த அத்திமரத்தின் கீழ் நின்றுவிட்டார். அது மாத்திரமல்ல நிமிர்ந்து மேலே பார்த்தார்.
*சக்கேயுவே இறங்கி வா!"
"இன்று நான் உன் வீட்டில் தங்கவேண்டும் "
இப்படி அவர் - அந்தப் பெரியவர் சொல்வார் என்று கனவில் கூட அவன் எண்ணியிருக்கவில்லை. அவரைக் காண வேண்டும் என்ற ஆவல் மாத்திரமே அவனுக்கிருந்தது. அவருக்கு விருந்து கொடுத்து வீட்டில் தங்க வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் ஒரு போதும் எண்ணியிருக்கவில்லை.
படபடவென்று மரத்தை விட்டுக் கீழே இறங்கி ஓடி வந்தான், அந்த சக்கேயு எனப்பட்ட மனிதன்.
அந்தப் பெரிய மனிதர் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் இயேசு, சக்கேயுவின் வீட்டிற்குப் புறப் ULLTft.
"இன்று இவரை எங்கள் வீட்டிற்கல்லவா கூட்டிக் கொண்டு போக வேண்டும், விருந்து கொடுக்க வேண்டும்" என்று திட்டம் போட்டிருந்தோம். ஆனால் இவரோ இந்தப் பாவி மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாரே."
அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்து கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக் காட்ட திட்டம் போட்டிருந்த சில பெரிய மனிதக் கும்பல் ஆற்றாமையினால், சற்றுப் பெரிதாகவே இவ்வாறு முணு முணுத்தது.

Page 21
26
தன்னைப் பாவி என்று அவர்கள் சொல்வதைப் பற்றி சக்கேயு சிறிதும் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. பதிலாக ஆனந்தக் களிப்பில் மிதந்தவனாக
"ஆண்டவரே" எனக்குண்டான சொத்துக்களில் பாதியை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். அதுமட்டுமல்ல ஆண்டவரே , நான் இதுவரை ஏமாற்றி எதையாவது எடுத் திருந்தேனானால், அதைப்போல் நாலு மடங்கு திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறி இயேசுவின் காலில் விழுந்து பணிந்தான். ×
அவனைத் தொட்டு தூக்கி விட்டு,
“இன்று இந்த வீட்டிற்குச் மீட்பு உண்டாயிற்று" என்று இயேசு கூறினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட சக்கேயு வின் உள்ளத்தின் நிலை எப்படி இருந்திருக்கும்.?
சக்கேயு கிறிஸ்துவைப் பார்ப்பதற்கு மட்டுமே விரும்பினான்.
ஆமாம்! கிறிஸ்துவைப் பார்ப்பதற்கு மட்டுமே விரும்பினான். ஆனால் கிறிஸ்துவோ அவனோடு தங்கு வதற்கும், விருந்து உண்ணுவதற்கும் விரும்புகிறார். எவ் வளவு பாக்கியமான - மகிழ்ச்சிகரமான சம்பவம்.
மனிதனின் நினைப்பு ஒன்று, இறைவனின் செயற்பாடு வேறு ஒன்று.
ஆமாம்!
நாம் பல சந்தர்ப்பங்களில் இறைவனைப் பார்க்க
மட்டுமே விரும்புகிறோம், ஆனால் அவரோ நம்மோடு ஒன்றிக்க விரும்புகிறார்.

27
அந்த ஒன்றிப்பை நாம் உண்மையாக அனுபவிக்க வேண்டாமா? சக்கேயு இறங்கி வந்தான்.
தன் சொத்தில் பாதியை, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தான். நாமும்.
நம்மைச் சுற்றியுள்ள போலி அந்தஸ்து கெளரவம் என்பவற்றிலிருந்து இறங்க வேண்டும். நம்மிடமுள்ளவற்றை
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஏமாற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற வழி வகை செய்தல் வேண்டும்.
திறந்த மனதோடு, வாஞ்சையோடு, கிறீஸ்துவோடு நம்மை ஒன்றிக்கச் செய்வோம்
(தொண்டன் மார்கழி 1982)

Page 22
28
\ குறை போக்குவார்
2-ܓܠ
கலிலேயா என்னுமிடத்தைச் சேர்ந்த "கானா" என் னும் ஊரில் திருமணம் ஒன்று நடந்தது. அந்தத் திருமணத் திற்கு இயேசுவின் தாயாரும் போயிருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கலிலேயரின் பண்பாட்டின்படி திருமண வீட்டில் திராட்சை ரசத்தினால் செய்யப்பட்ட பானம் ஒன்று வழங்கப் படுவது பிரதானமாகும்.
குறிப்பிட்ட அத்திருமண வீட்டில் விருந்தினர் ஏராள மாக இருக்கும்போது ஆயத்தம் பண்ணப்பட்ட திராட்சை ரசப் பானம் குறைந்து போயிற்று. இதனால் அந்த விருந்து வீட்டிற்கு உரியவனான"பந்தி"விசாரிப்பவன் பெரிதும் கலக்க முற்றான்.
மிகுதியாக உள்ள வந்திருந்த விருந்தினர்க்கு பானத்தைக் கொடுத்து தங்கள் பண்பாட்டை எப்படி காப்பாற்றப் போகிறேன் என்று சிந்தித்துத் திகைப்படைந் திருந்தான் அவன்.
இதைக் கவனித்த இயேசுவின் தயார், இயேசுவை நோக்கி, திராட்சை ரசம் முடிவடைந்த செய்தியைத் தெரி விக்கிறார்.
அதற்கு இயேசு, "ஸ்திரியே! உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே." என்கிறார்.
இயேசு அப்படிச் சொல்லிவிட்ட போதிலும் தாயார், அங்கு நின்றிருந்த வேலைக்காரர்களை நோக்கி, "அவர் உங்களுக்கு என்ன சொல்கிறார்களோ அதன்படி செய் யுங்கள் என்கிறார்.

29
ஒவ்வோன்றும் இரண்டு அல்லது மூன்று குடம் நீர் கொள்ளத்தக்க பெரிய அளவிலான ஆறு கற்சாடிகள் அங்கே ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தனி.
இயேசு, அந்த வேலைக்காரரை நோக்கி “கற்சாடி களை நீரால் நிரப்புங்கள் என்றார். அவர்களும் அப்படியே நிரப்பினார்கள்.
பின்னர் இயேசு வேலைக்காரரை நோக்கி “நீங்கள் இப்போது கற்சாடிக்குள் இருப்பதை மொண்டு, அந்தப் பந்தி விசாரிப்புக்காரனிடம் கொண்டு போங்கள்” என்றார்.
அவர்களும் கற்சாடியிலிருந்து நீரை மொண்டு பந்தி விசாரிப்புக் காரனிடம் கொண்டு சென்றார்கள்.
அந்தத் திராட்சை ரசப் பானம் எங்கேயிருந்து வந் தது என்று, நீரை மொண்ட வேலைக்காரர்களுக்கு தெரிந் திருந்தேயன்றி, பந்தி விசாரிப்புக்காரனுக்கு தெரியவில்லை.
திராட்சை ரசமாக மாறிய நீரைக் குடித்து ருசி பார்த்த அவனுக்கு திகைப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. உடனடியாக மணவாளனைச் சந்தித்து "எந்த மணவாள னும் முதலில் திறமான திராட்சை ரசத்தையே பரிமாறுவான். விருந்தினர் திருப்தி அடைந்த பின்னரே ருசி குறைந்த ரசத்தைக் கொடுப்பான். ஆனால் நிரோ, இவ்வளவு திறமான திராட்சை ரசத்தை, இதுவரைக்கும் பரிமாறாமல் வைத்தி ருந்ததென்ன?" என்றான்.
இயேசு, தனது பகிரங்க வாழ்க்கையில் எல்லோரும் வியக்கும் வண்ணம் முதலாவது அற்புதத்தை வெளிப்படுத் திக் காட்டினார். (அரு. 02: 01-11)
இறைமகன் இயேசு நிகழ்த்திய இந்த முதலாவது
அற்புதம் நமக்கு அநேக விடயங்களைத் தெளிவு படுத்து கிறது.

Page 23
3O
திருமண வீட்டிற்கு இயேசு தனாகச் செல்லவில்லை, அழைக்கப்பட்டிருந்தார். (2:2) என்பது குறிப்பிடத்தக்கது. கலிலேயா நாட்டு வழக்கப்படி திருமண வீட்டில் திராட்சை ரசம் கொடுக்கப்பட வேண்டியது மிக முக்கியமான சடங் காகும் - கடமையாகும்.
இயேசு அங்கு அந்த வேளையில் அழைக்கப்பட்டி ராவிடில் திருமண வீடு அல்லோலகல்லோலப்பட்டிருக்கும் என்பது நிச்சயமாகும்.
அந்த வீட்டில் ஏதோ ஒரு குறைவு காணப்பட்டது. (2; 3) குறைவை நிறைவாக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.
நம்மிடையே குறைவு ஏற்பட்டால் - அது எவ்வாறான குறையாக இருந்தாலும், அதைத் தீர்த்து வைக்க நாம் இயேசுவை அழைக்க மனம் உள்ளவர்களாக இருக்க வேண் டும். அது மட்டுமல்ல, நாம் அவருக்காக - அவரது வேளைக் காகக் காத்திருக்க வேண்டும். (2 : 4)
இறைமகன் இயேசுவின் மூலம் நாம் பூரணமான நிறைவைப் பெற, நாம் செய்ய வேண்டியதென்ன? அவர் (இயேசு) சொல்கிறபடி செய்யுங்கள் (2 - 5) நற்செய்தி மூலம் நமது நித்திய பேரின்ப வாழ்விற்கு ஏராளமான வழிகளைக் காட்டியுள்ளார்.
அதில், அவர் சொல்கிறபடி செய்ய - நடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அவருடைய ஜீவனுள்ள வாக்கியங்களால் மனங்களை நிரப்புங்கள். (2:7)
ஆமாம், வானமும் பூமியும் அழிந்து ஒழிந்து போனா லும், மாறாத - மாற்ற முடியாத ஜீவனுடைய அவருடைய வார்த்தைகள் எம்மை நிரப்ப வேண்டும்.

31
அன்றும் இன்றும் என்று மாறாத இறைவன் எம்மை முற்றாக மாற்றுவார். (2 8) இதுவரை நாம் வாழ்ந்த விரும் பத்தகாத வாழ்வை விடுத்து அவருடைய வார்த்தையின்படி சீவித்து முற்றாக அவருள் மாறுவோம்.
திருமண வீட்டில் எவ்வாறு வெறும் நீர், திராட்சை ரசமாக மாறியதோ, அவ்வாறே வெறுமையாக எம்மை அவ ரிடம் ஒப்படைத்தால் அவர் முற்றாகவே மாற்றுவார். அள வற்ற அன்பை ருசித்துப் பாருங்கள் (2:9)
இயேசுவின் அளவற்ற அன்பை நாம் ருசித்து அனு பவிப்பதோடு நில்லாமல் அனைவருக்கும் அவற்றைப் பகிர்ந்
தளிப்போம்.
(தினபதி 12 - 01 - 1980)
كصاصيير
經

Page 24
32
நமது விசுவாசமே.
இறைமகள் இயேசு, ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான "ஜாபீர்” என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவனுடைய நோயுற்ற குமாரத்தியைச் சுகப்படுத்தும் நோக் கோடு சென்று கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அவரால் செய்யப்பட்ட அதி அற்புதங் களைக் கண்டும் கேட்டும் அனுபவித்திருந்த திரளான சனங் கள் அவரோடு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த வேளையில்.
பன்னிரண்டு வருடகாலமாக "பெரும்பாடு” என்னும் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பெண், அநேக வைத் தியர்களால் சுகமாக்க முடியாது என்று கைவிடப்பட்டு, தன் னிடமிருந்த சகல செல்வங்களையும் அந்த நோய்க்காகச் செலவழித்தும், சிறிதளவும் குணமடையாத நிலையில் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிறாள். (லூக் 8:43) அவரது தெய்வீக சக்தியைப் பற்றி அறிகிறாள்.
"நான் அவருடைய வஸ்திரத்தையாவது தொட்டால் சுகமடைவேன்” என்று நம்பிக்கை கொள்கிறாள். அந்த நோயுள்ள பெண், இயேசுவின் வஸ்திரத்தைத் தொடும் எண்ணம் ஏற்பட்டதுமே அதனை உடன் செயல்படுத்த ஆயத்தமாகிறாள்.
நெருங்கியடித்துக் கொண்டு செல்லும் அந்தத் திரளான ஜனங்களை ஊடறுத்து, முண்டியடித்து உள்ளே நுழைந்து முன்னேறி எப்படியோ இயேசு அணிந்திருந்த வஸ்த்திரத்தை எட்டித் தொட்டு தனது நினைப்பை நிறை வேற்றுகிறாள்.
அந்த நிமிடமே, அவளை 12 வருடங்களாக வாட்டி வதைத்த கொடிய நோய் அவளை விட்டு நீங்குகிறது. அவள் பூரண குணமடைகிறாள்.

33
இயேசுவைக் குறித்து நாமும், மனதில் எழுந்த வாஞ் சையினால் அவரைத் தொட நினைக்கிறோம். நம்முடைய சகல பிரச்சினைகளுக்கும் அவரே தீர்வு என்று நம்புகிறோம்.
ஆனால். நெருக்கியடிக்கும் திரளான ஜனங்களைக் கண்டதும் (நெருக்கியடிக்கும் திரளான பிரச்சினைகளைக் கண்டதும்) நாம் விரைவாகப் பின் வாங்கிவிடுகிறோம்.
மாறாக,
எதிர்ப்புக்களையும் கஸ்டங்களையும் சகித்துக் கொண்டு முன்னேறி, அவரைத் தொட்டுச் சுகமடைந்த அந் தப் பெண்ணிடம் காணப்பட்ட “விசுவாசம், பொறுமை, தள ராத முயற்சி” என்பனவற்றை எமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அங்கே, திரளான ஜனங்கள் மத்தியில் இயேசு சென்று கொண்டிருந்த போதும், தன்னைத் தொட்ட யாரோ குணம் அடைந்ததை உணருகிறார்.
எவ்வளவு கருணையுள்ள தேவன்! எத்தனையாயி ரம் தேவைகளைப் பற்றி, எத்தனையாயிரம் மக்கள் அவரை நோக்கிக் கேட்டாலும் அவற்றை அவர் நிறைவேற்றுகிற அதே வேளையில் அந்தப் பெண்ணின் விசுவாசத்தையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
அந்தப் பெண்ணைப் பார்த்து "மகளே! உன் விசு வாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கிச் சுகமாயிரு” என்று கூறுகிறார்.
மேற்கூறிய இந்தச் சம்பவத்திலிருந்து நாம் உணரக் கூடியது என்ன? م
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சீவித்து, புதுமைகளைச் செய்து, நோய்களைக் குணமாக்கி, எமக் காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கி, உயிர்த்து

Page 25
34
எழுந்த அதே கிறிஸ்து இன்றும் எம்மோடிருக்கிறார். அன்று செய்த அற்புதங்களை விட மேலான அற்புதங்களைச் செய்து எமக்கு ஒரு நிறைவான - நிலையான வாழ்வைத் தரச் சித்தமாயிருக்கிறார் என்ற செய்தியை நாம் முழு மன துடன் ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.
அவரைப் பற்றிய பூரண விபரங்களை "நற்செய்தி” மூலம் அறியும் மனப்பக்குவத்தை நாம் ஆக்கிக் கொள்ளு தல் வேண்டும்.
இயேசுவின் கட்டளைகளை-நோக்கங்களை-வேண்டு கோள்களை ஒழுங்காக - முறையாக - உள்ளத் தூய்மை யுடன் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அனுட் டித்து, நாம் வாழ்வது அவருக்காகவே என்ற அனுபவத்தைப் பெறுதல் வேண்டும்.
இந்த அனுபவங்களை - இயேசுவின் அளவற்ற அற்புதங்களை அடைய - அனுபவிக்க வழிவகுக்கும்.
எனவே
"நானே வழியும் சத்தியமும்” என்று கூறிய இயேசு வின் வல்லமைகளை நன்கு அறிவோம். அதன் மூலம் அவர் பேரில் எம் விசுவாசத்தை உறுதி செய்வோம். அந்த விசு வாசத்தைத் துணையாகக் கொண்டு அவருள் சீவிக்க முயற்
fÜĞLUTLb,
அந்த முயற்சி நம்மை அளவற்ற - நித்திய பேரின்ப வாழ்விற்கு இட்டுச் செல்லும்.
(தினபதி 24 - 11 - 1979)
 

55.
முன்னோடி
குதுாகலம் நிறைந்த ரம்மியமான காலை வேளை,
இறைவன் ஏற்படுத்திய இயற்கை அமைவுகளின் ஆரம்பத் தோற்றம். பனிமயமான அந்த வேளைக்கு மேலும் ஒருபடி மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த இன்ப வேளையை எமக்களித்த இறைவனுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்.?
அதோ சக்கரியாஸ் என்றழைக்கப்படும் வயோதிபர் வருகிறார். வழக்கமாக அவர் நடையில் காணப்படும் சோர் வுக்குப் பதிலாக இன்று கெம்பீரம் காணப்படுகிறது. ஒரு நாளுமில்லாத திருநாளாக அவர் முகம் அளவற்ற ஆனந்த மயமாயிருக்கிறது.
அதோ, சற்றுத் தூரத்தில் தெரிகிறதே அந்த ஆல யம், அதை நோக்கியே அவரது கால்கள் வீறுநடை போடு கின்றன. இறைவனின் ஆசியும் அன்பும் அவரது இதயத்தை நிரப்பிக் கொண்டிருந்த போதும், ஏதோ ஒரு கவலை அவர் உள்ளத்தே மேலோங்கிக் கொண்டிருப்பது புரிகிறது.
தான் இப்போது மேற் கொண்டிருக்கும் மேலான பணியான இறைமைப் பணியை விடாது தொடர்ந்து மேற் கொள்ள, தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்று ஒரு காலத்தில் அவர் ஏங்கிக் கொண்டிருந்ததும் உண்டு. இப் போது அந்த ஏக்கம் முற்றாகத் தூக்கம் அடைந்து விட்டது என்றும் கூற முடியாது.
உடலில் வாலிப முறுக்குக் குறைந்து, வயோதிபப் பருவத்தை எட்டிவிட்ட தனக்குக் குழந்தைப் பேறு கிட்டாத ஒன்று என்றதனாலேயே, அந்த ஏக்கம் இப்போது 懿 மனதில் தலை காட்டுவதேயில்லை.கொழும் தி

Page 26
56
காலம் முழுவதும் ஆலயத்தில் "இறைமைப் பணியே தன் பணி” என்ற அவரது தீர்மானம் செயல்படும் அபூர்வ நாட்களில் ஒன்றாக, இன்றையப் பொழுது மலர்ந்திருப்பதே அவரது கெம்பீர நடைக்குக் காரணம்.
அதிஷ்டச் சீட்டு குலுக்கிப் பார்த்ததில், இறைவனுக் குத் தூபம் காட்டித் தொழும் பேறு இன்று அவர் பெயருக் குக் கிடைத்திருப்பதே அவரது ஆனந்தத்திற்குக் காரணம்!
ஆலயத்தின் உள்ளும் புறமும் எண்ணற்ற பக்தர் கள் செபிப்பதிலும், இறைவனின் அருட்கொடைகளைப் போற்றுவதிலும் தங்கள் நிலை மெய் மறந்திருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட அந்த எளிமையான பீடத்தில், அக்களிப்பும் ஆனந்தமும் நிறைந்த இதயத்தோடு சக்கரி யாஸ் தூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். நறுமணப் புகை பீடத்தை நிறைத்து, ஆலயத்தில் இறைமணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மண்டிய நறுமணப் புகை மண்டலத்தின் நடுவே, பீடத்தின் வலப்புறம் திடீரென ஒளிமயமாகிறது. மென்மை யும் வெண்மையுமான தோற்றம் கொண்ட இறைதூதன் ஒருவனை அந்த ஒளியின் மத்தியில் கண்டதும் சக்கரியாஸ் கலங்கிப் போனார். அச்சம் அவரையறியாமலேயே பற்றிக் கொண்டது. தன் நிலை மறந்தார்.
*சக்கரியாஸ் அஞ்ச வேண்டாம்! உமது வேண்டு கோள் நிறைவேற்றப்படுகிறது. உமது மனைவியாகிய எலி சபேத் ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு அருளப்பன் என்று நாமத்தைச் சூட்டுவீர். இதனால் உமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமே மகிழ்ச்சி உண்டாகும். மதுவை மனதாலும் தீண்டாத அவன், தாயின் வயிற்றிலிருக்கும் போதே "தூய" ஆவியினால் நிரப்பப்படுவான். இஸ்ராயேல் மக்களில் அநேகரை தேவனின் புத்திரராய் ஆக்குவான்.

37
ஆண்டவருக்கு ஏற்றவாறு மக்களை மனந் திருப்புவதற்கு, அவன் எலியாசின் ஞானத்தையும் வல்லமையையும் கொண் டிருப்பான்" (லூக் 1 13)
இறைதூதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வுடன் சக்கரியாஸ்ன் நிலை மேலும் குழப்பமாகியது. மன தில் ஏற்பட்ட சங்கடத்தைக் கேட்டார்.
"நானோ வயோதிபத்தின் விளிம்பில் நின்று கொண் டிருக்கிறேன். இந்த நிலையில். ၇)
"நான் ஆண்டவரின் தூதன் கபிரியேல். என்னால் சொல்லப்பட்ட இறைவார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாது சந்தேகப் பட்டதனால், உனக்குக் குமாரன் பிறக்கும் வரை நீ ஊமையாய் இருப்பாய்."
இப்படிச் சொல்லிவிட்டு தூதன் மறைந்து விட்டான்.
உணர்வுகள் யாவும் ஸ்தம்பித்துப் போய்விட்டன சக்கரியாஸ்"க்கு.
வழக்கத்தை விட, இன்று சக்கரியாஸ் பீடத்தில் மிக நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பது குறித்து, வெளியே கூடி நின்ற மக்களின் முகத்தில் ஆவல் கொந் தளித்துக் கொண்டிருந்தது.
இதோ!
தளர்ந்த நடையோடு சக்கரியாஸ் பீடத்தினின்று இறங்கி வருகிறார். “தாமதத்திற்குக் காரணம் என்ன” என்ற கேள்விக் கணையோடு அவரை மக்கள் மொய்த்துக் கொள் கின்றனர்.
ஆனால்.
அவரோ எந்தப் பதிலையும் கூற முடியாதவராக, கைகளால் சைக்கினை செய்து கொண்டிருக்கிறார். தூபம் காட்டும் போது, ஆலயத்தினுள் ஏதோ ஒரு காட்சியைக் கண்டிருக்கிறார் என்றதை மட்டும் அவர்களால் அப்போது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

Page 27
38
காலம் உருண்டோடியது.
மலடி என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட எலி சபேத் என்பவர். அதாவது சக்கரியாஸின் மனைவி ஒரு குமாரனை ஈன்றெடுத்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்து தேவ னுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள்.
எட்டாம் நாள் குழந்தைக்கு நாமகரணஞ் செய்யும் நாள். தகப்பனின் பெயரையே பிள்ளைக்கு வைக்க வேண் டும் என்றனர் அங்கு கூடியிருந்தோர். ஆனால், சக்கரியாஸோ அதை மறுத்து, பிள்ளைக்குச் சூடவேண்டிய நாமத்தை ஒரு கற்பலகையில் எழுதினார்.
"அருளப்பன்"
கற்பலகையில் தான் எழுதியதை வாசித்துக் காட் டினார் சக்கரியாளல்.
இதுவரை ஊமையாக, தான் நினைப்பதைச் சொல்ல முடியாதவராக, எல்லாவற்றையும் எழுதியே காட்டி வந்த சக்கரியாஸின் வாய் திறக்கப்படுகிறது. ஊமையாய் இருந்த அவரது வாய் பேசும் சக்தியைப் பெற்றுக் கொண்டது குறித்து அயலார், சுற்றத்தார் எல்லோரும் மகிழ்ச்சிக் கட லில் மிதந்தனர்.
குழந்தை அருளப்பனோடு இறைவன் இணைந்து நிற்கிறார் என்று வாழ்த்திப் போற்றினர். இவரது பிறப்பின் திருவிழா ஆனி மாதம் 24ஆந் திகதி கொண்டாடப்படுகிறது.
ஆமாம், கருவிலேயே கடவுளின் கருணையைப் பெற்று, உருவமாகி உலகத்தில் உதித்தபோது தேவனின் சித்தத்தை வெளிக்காட்டி, வனாந்தரத்தில் தவமிருந்து, தன் நாட்டை அஞ்ஞான அழிவுப் பாதைக்குச் செல்லவிடாது, அடிக்கடி எச்சரிக்கை செய்து, எல்லாம் வல்ல இறைமகனின் வரவிற்கு மக்களை ஆயத்தம் செய்து, அவருக்கு ஞான முழுக்குச் செய்யும் பேறையும் பெற்று, சத்தியத்தைப் போதித்ததற்காக தன் தலையை இழந்து, அளவற்ற மகி மையடைந்த அருளப்பரைப் போல் நாமும் அவர் வழி
நடந்து புனிதராவோம். (தொண்டன் ஆனி 1972)

39
சிந்தித்தால்.
"உண்மை வழி நடப்பவனை இந்த உலகம் ஒரு போதும் கைவிடுவது இல்லை” எவ்வளவு அழகான சொற் றொடர்.
ஆனால். இந்த உலகத்தில் நாம் காண்பதோ..? இக்கூற்றிற்கு முற்றிலும் மாறான செய்கையே! உண்மை வழி நடப்பவனை இந்த உலகம் கை விடாது கசக்கி பிழிந்து அவனது ஆவியையே போக்கி
விடுகிறதே. இன்றைய - நேற்றைய வரலாறு எமக்கு இதைத்தானே காண்பிக்கிறது.
ஒருவர் வாழ்ந்தார்
அவர்.
ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நினையாது, துன்பப் பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்கள் துயர்துடைத்து, நோய் நீக்கி, ஊமை போக்கி அஞ்ஞானம் என்னும் இருளில் சிக்கித் திணறியவர்களுக்கு ஒளி விளக்காக வாழ்ந்து, உண்மையே பேசி உண்மையையே போதித்து, உண்மை யின் ஒளியாகத் திகழ்ந்தவர் தான் அந்த உத்தமர்.
அப்படிப்பட்டவருக்கு இந்த உலகம் அளித்த பரிசு.?
சவுக்கு அடி, முள்முடி, இரத்தக்காயம், இவ்வள வோடு நிறுத்தியிருந்தால் போதாதா? மரணதண்டனை வேறு. விதிக்கப்பட்ட தீர்ப்பின்படி இன்னும் இரண்டொரு நிமிடங் களில் அவரின் உயிர் பிரிந்துவிடும்.
மரண தாகம் அவரை வாட்டி வதைத்துக் கொண் டிருக்கிறது.
எல்லையற்ற வியாகுல மிகுதியால், வேதனையோடு
மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் மகனின் காலடியில் நிற்கிறாள் அந்த உத்தமரைப் பெற்ற அன்னை.

Page 28
4O
துஷ்டன் எ ன் று பெயரெடுத்த பிள்ளையைப் பெற்றவள் கூட அந்த பிள்ளை பிறரால் தண்டிக்கப்படுவதை மனதாலும் விரும்புவதில்லை. அப்படியிருக்க உலகின் ஒளியாய் ஒரு பாவமும் அறியாது வாழந்த தன் மகனுக்கு அதிகார வெறி அப்படி ஒரு தண்டனையை அளித்திருக்கும் போது, பாவம் அன்னை. அவளால் மனதுள் குமுறிக் குமுறி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
சீவியத்தில், அந்த உத்தமரின் போதனைகளைப் பின்பற்றியவர்களில் அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரு வரில், ஒரு சீடர் அன்னையோடு, அந்த உத்தமரின் மரண வேதனையைக் கண்டு துயரம் தாளாமல் துன்பப்பட்டுக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கிறார்.
நேரம் நெருங்குகிறது. V விண்ணும் மண்ணும் வேதனையடையும் வேளை. மரண வேதனையின் உச்சகட்டம்
அனைத்துலகின் ஆசாபாசங்களுக்காக குருதிப் பலியாக்கி சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் மீட்பரின் கண்கள், கிழே காலடியில் நின்று கண்ணிர் வடிப்பவர்களை நோக்குகின்றன. முதலில் அவர் கண்ணில் படுவது அவரது அன்பு அன்னை அடுத்து காணப்படுவது அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீடர்.
கலங்கித்தவித்துக் கொண்டிருக்கும் அன்னையை நோக்கி,
"அம்மா!”
"இதோ உன் மகன்” என்று தனது சீடரைக் காட்டு கிறார். அதைத்தொடர்ந்து அந்தச் சீடரை நோக்கி,
"இதோ உன் தாய்” என்று தன் அன்னையைக் காட்டுகிறார். நெஞ்சங்கள் இரண்டும் குமுறுகின்றன. பொங்கி
வரும் துன்பத்தை மறைத்துக் கொண்டு, அன்னையைத் தேற்றுகிறார் சீடர்.

41
மீட்பரின் வாழ்வையும் அவரது நற்போதனையையும் முழு மனதுடன் ஏற்று, அதனை உலகமெல்லாம் பரப்பும் பணியில் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர் தொகையோ பன்னிரண்டு, ஆயினும் அவரின் இறுதி நேரத்தில் - மரண வேளையில் அவரது காலடியில் நின்று கண்ணிர் விட்டு அழக்கிடைத்தது அந்த சீடர் ஒருவருக்கே. அது மட்டுமின்றி அந்த உத்தமரை ஈன்றெடுத்து அமுதூட்டி அரவணைத்துக் காத்து இதுவரை அவரோடிருந்த அந்த அன்னையையே தன் தாயாகப் பெற்ற அந்த சீடரின் பாக்கியந்தான் என்னே?
இந்த இடத்தில் நாம்.
நாமும் நாளாந்தம் இறைவனின் ஆலயத்தில் கண்ணிர் மல்க கழிவிரக்கப்பட்டு செபத்தில் ஈடுபடுகிறோம். ஆயினும் நம்மில் எத்தனை பேர் அந்தச் சீடராக மாறி யிருக்கிறோம்.
மீட்பரின் அன்னையை நம் அன்னையாகப் கொள் ளும் அளவிற்கு நாம் பாக்கியம் பெற்றவர்களா? இறுதிவரை இறைவனோடு ஒன்றித்து இருக்கக் கூடிய பக்குவத்தைப் பெற்றிருக்கிறோமா? மீட்பரின் அன்னையையே சுட்டிக்காட்டி எம்மைப் பார்த்து இதோ உன் தாய் என்று கூறுவாரானால் அதைவிட மேலான பாக்கியம் ஏதும் உண்டோ? அதற்கேற்ற பக்குவம் எமக்குண்டா?
மீட்பரின் அன்பையும் அன்னையின் அன்பையும் ஒருசேரப்பெற்ற அந்தச் சீடராக நாம் மாற முடியாதா?
சிந்தித்துச் செயலாற்றினால் காலம் விடை கூறும்.
(தொண்டன் புரட்டாதி 1971)

Page 29
42
(xx நாம் தயாரா..? xx)
மிக நீண்ட நாட்களாக அந்த வீட்டில் ஏதோ கொண்டாட்டம் நடைபெறுகிறது போலிருக்கிறது. இல்லை யில்லை, கொண்டாட்டம் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆமாம்!
அநேக காலமாக அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த வீட்டு எஜமான் இதோ வரப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. பின் மகிழ்ச்சிக்கு ஏது குறை? இன்றோ நாளையோ வரப்போகும் அந்த எஜமானுக்காக, அவர்கள் என்றோ கொண்டாட்டத்தைத் தொடங்கி விட்டார்கள்.
அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். பல நாட்கள் கழிந்து விட்டன.
எதிர்பார்த்த எஜமானைத்தான் இன்னும் காண வில்லை. காரணம் என்னவாயிருக்கும்? ஒருவருக்கும் புரிய வில்லை - தெரியவில்லை. ஒருவேளை எஜமான் வருவதற் குரிய வேளை வரவில்லையோ!
அந்த வீட்டிலுள்ள அத்தனை பேரின் உற்சாகங்கள் வரவரக் குறைவது போலிருக்கிறது. எத்தனை நாட்களுக் குத்தான் எதிர்பார்த்திருப்பது? தூர இடங்களில் இருந்து எஜமானின் வருகையில் பங்கு பெற - அவரைச் சந்திக்க என வந்திருந்த பலர் மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். இந்த உலகத்தில் அவர்களுக்கு அப்படியொரு அவசர வேலை காத்திருக்கிறது. என்ன செய்வது?
சற்று ஓய்ந்து போ யிருந்த வீட்டில் மீண்டும் குதுTகலம்

43
எதிர்பார்த்த எஜமான் வந்து விட்டாரா. இல்லை. எப்படியும் இன்று இரவு எஜமான் வந்து விடுவார் என்ற செய்தியே அவர்கள் குதூகலத்திற்குக் காரணம்.
அன்று பகல் முழுவதும் அந்த வீடு நிறைந்து வழிந்து காணப்பட்டது. வீட்டின் உள்ளும் புறமும் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மூலை முடுக்குகளெல்லாம் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வெளிவாசலில் பத்துப் பதினைந்து பேர் மாலையும் கையுமாக, நீண்டு கிடந்த அந்த வீதியைப் பார்த்த வண்ணம் ஆவலோடு நின்று கொண்டிருந்தனர். உள் வாசலில் ஏராளமானவர்கள், ஆங் காங்கே எஜமானின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்.
வீட்டின் வெளி வாசலுக்கப்பால், வெகு தூரத்தில் சிலர், அந்த வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள். அவர்களும் எஜமானின் வருகையை விரும்புபவர்களில் சிலராவர்.ஆனால் மற்றவர்களைப் போல் உள்ளே போய் அனுபவிக்க முடியாத படி அந்தஸ்து தடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தஸ்தால் அவர்கள் தடுக்கப்பட்ட போதும் அந்தரங்க சுத்தியாக எஜமான் மேல் அன்பு, பாசம், என்பன அவர்களையும் அந்த இடத்திற்கு வரப்பண்ணியிருந்தன.
உலகை இருளரக்கன் ஆட்சிபுரிய தொடங்குகிறான். இருளோடு குளிரும் கலக்கிறது. மாலையும் கையுமாக மாலை மறையும் வரை வெளி வாசலில் நின்றவர்களிடையே மீண்டும் சலிப்புத் தென்படுகிறது. கால் கடுக்கிறது. குளிர் கூடிக்கொண்டே போகிறது. மெதுவாக ஒருவர் பின் ஒருவராக வீட்டின் உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த ஆசனங் களில் அமருகின்றனர். சில மணி நேரம் செல்கின்றது. ஓய்வுக்காக அமர்ந்தவர்களை நித்திரை அனைத்துக் கொள்கிறது.
வீட்டின் உட்புறத்தில், எஜமானின் கதையோடு ஊராரின் கதைகளையும் சேர்த்து உரையாடிக்கொண்டிருந்த வர்களிடையே ஒரு வித சோர்வு. சிறிது ஓய்வெடுப்போம் என்றவர்கள் அப்படியே அயர்ந்து போய் விட்டார்கள்.

Page 30
44
எண்ணெய் குறைந்ததால், மூலைகளில் வைக்கப் பட்டிருந்த இரண்டு மூன்று விளக்குகள் அணைந்து விட்டன. இப்போது நள்ளிரவு, இந்த நள்ளிரவில் வீடு மிக மிக அமைதியாகக் காணப்படுகிறது. காரணம் அங்குள்ள அனைவரும் "சிறிது” ஓய்வெடுக்க நினைத்ததேயாகும்.
வெளி வாசலுக்கு வெகுதூரம் நின்றிருந்தவர்கள் மெல்ல மெல்ல வீட்டை அணுகுகிறார்கள். அவர்கள் வாசலில் இருந்த விளக்கிற்கு எண்ணெய் விட்டு ஒளி ஏற்றுகிறார்கள். அவையும் சில மணிநேரம் ஒளியை உமிழ்ந்து விட்டு அணைந்து விடுகிறது.
விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்க வேண்டும்.
மனிதனை நித்திரை, தன் பிடியில் சிக்க வைக்கும் மிகச் சிக்கலான நேரம் அது. ஆயினும் வாசலில் நின்ற அந்த ஊழியர்கள் விளக்குகளுக்கு எண்ணெய் விட்டு, விழித்தபடி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்டு கிடந்த, அந்த இருண்ட தெருவில் ஒரு ஒளி அந்த ஒளியின் உருவம் வரவரப் பெரிதாகிறது.
வாசலில் நின்றவர்கள் உஷாராகிறார்கள். ஆமாம், அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எஜமான் வந்து கொண்டிருக்கிறார்.
தோளில் கிடந்த சால்வையால் தங்கள் இடைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். தங்கள் கைகளில் இருந்த விளக்குகளை மேலும் தூண்டி விடுகிறார்கள். எஜமான் அவர்களைக் கண்டு புன்னகைத்து விட்டு உள்ளே வரும்படி சைகை பண்ணுகிறார்.
இரட்டிப்பு மகிழ்ச்சியோடு அவர் கள் அந்த ஏஜமானைப் பின் தொடர்கிறார்கள்.
வீட்டின் உள்ளே.

A5
பாவம், எஜமானுக்காக அந்த வினாடி வரை காத் திருந்த அத்தனை பேரும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாது ஊழியர்களைப் பந்தியமரச் செய்து, எஜமான் ஒவ்வொன்றாகப் பரிமாறுகிறார்.
எஜமானைப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிடைக்குமா என்று சந்தேகித்திருந்தவர்களுக்கு, பந்தியமரவும் எஜமானே பரிமாறவும் கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி மகிழ்ச் சிக் கடலில் ஆழ்ந்து போகிறார்கள்.
ஆனால். அதே வேளை.
மிக நீண்டகாலமாக அவரைப் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத் தில் இருந்ததால் சந்தர்ப்பத்தை இழந்தவர்களாக.
நம்மையெல்லாம் வழி நடாத்தும் நமது எஜமானும் என்றோ ஒரு நாள் நம்மைத் தேடி வருவார் என்பது நிச்சயம்
அந்த நாள் எது. ?
நாம் எஜமானைச் சந்திக்கத் தயாராக உள்ளோமா..?
எப்போதும் சந்திக்கதக்கதான பக்குவத்தோடு உள் ளோமா? அல்லது, அந்த வீட்டிலுள்ளவர்களைப் போல் ஒரு சில மணி நேரங்களுக்கு மாத்திரம் தயாராக உள்ளோமா?
இன்று இரவு நமது வீட்டிற்குத் திருடன் வருவான் என்று அறிந்தால் ஒரு சில மணிநேரம் மட்டும் விழித்து காவல் இருப்போமா? அல்லது விடியும் வரை விழித்து இருப்போமா?
எம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்வோம், எஜமானை எந்தநேரத்திலும் சந்திக்கத்தக்கதாக காத்திருப்
(8UTib. (தொண்டன் ஆவணி 1971)

Page 31
46
"போதிப்பது இலகு. சாதிப்பது கடினம். இன்றைய இந்த உலகில் சர்வ சாதாரணமாகப் பரந்து காணப்படும் சொற்றொடர் இது.
இன்று மாத்திரமல்ல, அன்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இச்சொற்றொடரின் கருத்து அவ் வாறானதாகவே இருந்துள்ளது.
யூத மக்களுள் கல்வியறிவு, மறையறிவு போன்ற இரண்டிலும் சிறந்தவர்களாய் இருந்தனர் ஒரு பகுதியினர். அதேவேளை அந்தப் பகுதியினர் அவற்றைத் தமது வாழ் வில் கடைப்பிடித்து வாழாதிருந்தனர். அவர்கள்தான் அன்று வாழ்ந்த பரிசேயர்.
ஒரு பரிசேயன் மிகவும் அக்களிப்புடன் வந்து கொண்டிருக்கிறான். இறைமகன் இயேசு, இவன் வீட்டில் விருந்துண்ணச் சம்மதித்து விட்டார். இவனது இப்போதைய மகிழ்ச்சிக்குக் காரணம் இதுதான்.
குறிப்பிட்ட நேரத்திற்கு விருந்து ஆரம்பிக்கப்படுகி றது. விருந்திற்கான விழாநாயகன் இயேசு, இதோ நடுநாயக மாக வீற்றிருக்கிறார்.
திடீரென எல்லோரின் முகங்களும் வாட்டமடைகின் றன. சுருங்குகின்றன. பல ஜோடிக் கண்கள் வீட்டின் தலை வாசலை நோக்குகின்றன.
வாசலில் ஒரு பெண்.
அவள் வேறு யாருமில்லை.
 

47
அங்கு வீற்றிருக்கும் அத்தனை பேராலும், ஏன் அந்த நகரத்து மக்கள் அனைவராலுமே நன்கு அறியப்பட் டவள். பெரும்பாவி என அழைக்கப்பட்டு அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவள்.
அப்படிப்பட்டவள் இறைமகன் இருக்குமிடம் வந்த தால் அங்கிருந்த பரிசேயர்களின் மனங்களெல்லாம் குமுறு கின்றன. துடிக்கின்றன.
இவர்களின் மனநிலைபற்றி அறியவோ, அன்றேல் இவர்களைப் பற்றி அக்கறை எதுவுமோ கொள்ளாத அந்தப் பெண் நேரே விறுவிறென்று இறைமகனின் அருகில் வருகி றாள். குனிந்து கண்ணிரால் அவர் பாதங்களைக் கழுவுகி றாள். தன் கருங்கூந்தலால், கழுவிய காலைத் துடைக்கி றாள். கையில் கொண்டு வந்திருந்த வாசனைத் தைலத் தைக் கால்களில் பூசுகிறாள்.
அங்குள்ளளோர் அனைவருக்கும் பேரதிர்ச்சி. விருந்திற்கு அழைத்த பரிசேயனுக்கோ படபடப்பு. "இவள் யாரென்று இயேசு அறியாரா?”
"அறிந்திருப்பின் தன்னைத் தொட அனுமதித்திருப் umgT?"
இதுதான் அங்குள்ளோரின் மனங்களை நிரப்பிக் கொண்டிருந்த கேள்வி. இது மனிதப் பலவீனம்.
இதை அறியாமலா இருப்பார் இறைமகன் இயேசு. சிறிதாகச் சிரித்துவிட்டு, பரிசேயனுக்கு மாத்திரமின்றி, ஐயங் கொண்ட அனைவருக்குமே கேட்கும்படி கூறுகிறார்.
“ஒரு கதை ஒன்று கூறப் போகிறேன். ஒரு எசமானி டத்தில் இரண்டு பேர் கடன் பட்டிருந்தார்கள். ஒருவன் பெற்ற

Page 32
48
தொகை 500 தெனியர். மற்றவன் பெற்ற தொகையோ 50 தெனியர். அந்த இருவருக்குமே கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலிருந்தது. அதனால் இரக்கம் கொண்ட எசமான்
இருவர் கடன்களையும் மன்னித்து விட்டார்."
என்று கூறி நிறுத்திவிட்டு,
"இந்த இருவரில் கடன் கொடுத்த அந்த எசமானை அதிகமாக நேசிப்பவன் யார்?"
என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அங்கிருந்த சீமோன் உடனடியாக
"எவனுக்கு அதிகமாக மன்னிக்கப்பட்டதோ, அவன் தான் அதிகமாக நேசிப்பான் என்று நினைக்கிறேன்" என்றான்.
உடனே இறைமகன் இயேசு,
"சரியாகச் சொன்னாய் சீமோன், இதோ இந்தப் பெண்ணைப் பார். நான் உன் வீட்டிற்கு வந்தேன். ஆனால் என் பாதங்களைக் கழுவவில்லை. இவளோ, என் பாதங் களைத் தன் கண்ணிரால் கழுவினாள். தன் கூந்தலால் துடைத்தாள். இதிலிருந்து உனக்கு தெளிவுபடுத்துவதாவது, இவள் அதிகமாக நேசிப்பதனால் இவளிடத்திலுள்ள அதிக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று சீமோனைப் பார்த் துக் கூறிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணை நோக்கி
"உன் பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன” என்றார்.
விருந்துண்ண வந்திருந்தவர்களின் மனங்களில்
இப்போதும் கேள்விகள் குவிகின்றன. "பாவங்களைக்கூட மன்னிக்கிறாரே! அப்படியானால் இவர் யார்?"

49
அகத்திலுள்ளதை அறியும் வல்லமை கொண்ட இறைமகன் அவர்களது ஐயங்களை உணருகிறார். ஆயி னும் அவர்களுக்கு எதையும் கூறாது, மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி,
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமா தானமாகப் போ” என்று அன்புக் கட்டளை இடுகிறார்.
இறைவனில் நாம் வைக்கும் அன்பு, உள்ளரங்க மானதாக மாத்திரமன்றி, செயல் ரூபத்திலும் காட்டப்படுதல் வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார் இறை மகன் இயேசு.
ஆலயம் செல்வதும், ஆண்டவரை நோக்கிக் கையுெ டுத்துச் செபிப்பதும் தேவையில்லை, பதிலாக உள்ளரங்க் மாகத் தியானித்தால் போதும் என்று எண்ணிக் கொண்டி ருக்கும் எமக்கெல்லாம் அது மாத்திரம் போதாது, நற்கிரி கைகளோடு கூடிய விசுவாசத்தையே இறைவன் விரும்பு கிறார் என்று இக்கதை மூலம் எமக்குப் பணிக்கிறார்.
மனமாற்றம் எமக்குள் அவசியமாகும்.
(தொண்டன் ஆடி 1971)

Page 33
5O ஈழத்து இலக்கிச் சோலை
21, ஒளவையார் விதி, திருக்கோணமலை
எமது வெளியீடுகள்
ஒற்றைப்பனை சிறுகதைத் தொகுப்பு த. அமரசிங்கம்
கோயிலும் சுனையும் : (நாடகத் தொகுப்பு)
தாபி. சுப்பிரமணியம்
கயல்விழி (கவிதை நாடகம்)
திருக்கோணமலைக் கவிராயர்
இலங்கை சாரணர் சங்கம் சாரணர் புதிய செயற்திட்டம்
தமிழாக்கம் இ. இராஜரஞ்சன்
93இல் கலை இலக்கிய ஆய்வு
(கட்டுரைத் தொகுப்பு) கலாவிநோதன் த. சித்தி. அமரசிங்கம்
இராவண தரிசனம் : (இலக்கிய நாடகம்)
வீணைவேந்தன்
கங்கைக் காவியம் (தொகுப்பு)
ஏ. எஸ். உபைத்துல்லா
கழகப்புலவர் பெ.பொ. சி. கவிதைகள்.
(தொகுப்பு) கலாவிநோதன் த. சித்தி. அமரசிங்கம்.


Page 34


Page 35
Ա IIլքL திருக்கோணம கொண்ட திரு. சுண்டிக்குளி பு புனித மரியான LISPLI LDTF "ஆசிரியரான இ கல்லூரியில் ஆரம்பித்து பிரதி அதிபராக உ 30 வருட சேவையின், பின் ஒ.
கலைப் பணியிலும் ஆ கொண்ட இவர் எமது புனித ம மறைக்கல்விக்குப் பொறுப்பாள யாற்றி மாணவர்கள், மாவட்ட தில் பல வருடங்கள் தொடர்ச் களில் வெற்றிக் கேடயத்தைப்
வானொலியில் கத் வழங்கும் இவர் "தினபதி" - "தெ களில் ஆக்கங்கள் எழுதுபவர். தொகுப்பே இந்நூலாகும்.
எமது மறைமாவட்டத் புணர்ச்சியை ஏற்படுத்த வல்ல வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்
தொடர்க அவர் பணி
இவ்வாறான நூல்கள் வாழ்த்துக்கள்.
புனித மரியாள் பேராலயம், திருக்கோணமலை, D5-Ո8-1998
 

ானத்தைப் பிறப்பிடமாவும், லையை வசிப்பிடமாகவும், மதி P. S. ஆஞ்சலீன், யாழ் களிர் கல்லூரி, திருமலை ா கல்லூரி, என்பவற்றின் Tவியாவர். பயிற்றப்பட்ட வர் திருமலை புனித மரியாள் ஆசிரியராகப் பணி  ைய உயர்ச்சி பெற்று (SLPS II) ப்வு பெற்றவர்.
ன்மீக பணியிலும் நாட்டம் ரியாள் பேராலயப் பங்கின் TTE J5 ETLb (3) மட்டத்திலும் தேசிய மட்டத் சியாக விவிலியப் போட்டி பெற துணையாக இருந்தவர்.
தோ லி க்க நற்சிந்தனை
ாண்டன்" போன்ற சஞ்சிகை இவ்வாறான ஆக்கங்களின்
திலிருந்து ஆன்மீக விழிப் இத் தொகுப்பு நூல் வெளி
தொடர்ந்து வெளிவர எம்
அருட்பணி தி நாகல் அடிகளi (பங்குத் தந்தை)