கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண இடப்பெயர்வு

Page 1


Page 2


Page 3

யாழ்ப்பான இடம்பெயர்வு
(1995ஆம் ஆண்டு ஐப்ப்சி, கார்த்திகை மாதங்களில் நிகழ்ந்த மக்கள் இடப்பெயர்வு)
கலாநிதி. கா. குகபாலன்
முதுநிலை விரிவுரையாளர் புவியியற்துறை
புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம். 1996

Page 4
Title of the BOOk.
Author:
Address:
EditiOn: *
Copyright
Size:
Page:
PrinterS:
Prize:
ஆசிரியர்:
முகவரி:
பதிப்பு: பதிப்புரிமை:
g|ബബ:
பக்கம்:
அச்சகம்:
Jaffna Migration.
Karthigesu Kugabalan B..A.. Hons, (Cey) M. A. Ph.D. (Jaf.) Post M.A. Diploma in Population studies (Madr)
Department of Geography, University of Jaffna, Jaffna,Sri Lanka.
First Edition - November 1996
To the Author 178 Bank Paper (70gms.) 21.5C.mx 14.0 cm i - viii + 152 + Table 1.1 Admiral Graphics, Colombo.
200/-
யாழ்ப்பாண இடப்பெயர்வு கலாநிதி கார்த்திகேசு குகபாலன் புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை முதலாம் பதிப்பு நவம்பர் 1996
ஆசிரியருக்கு 1/8 UTÉ) (70 dŠg|Tub), 21.5 Crm. X 14.0 Cn.
i-wi+ 152+ அட்டவணை 1.1.
அட்மிரல்கிரபிக்ஸ், கொழும்பு.
200/-

உள்ளடக்கம்
வாழ்த்துரை
அணிந்துரை
என்னுரை
1
வரலாற்றுப்பின்னணி
2
தூண்டப்பட்ட இடப்பெயர்வு
3
சேரிட வாழ்வு
4
குடியிருப்புக்கள்
5
கல்விச்செயற்பாடுகள்
6
தொழில் நிலை
7
பிறசெயற்பாடுகள்
8
யாழ்ப்பாணம் மீள் இடப்பெயர்வு
உசாத்துணை.
பக்கம்
15
35
50
87
108
120
136
151

Page 5
புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கார்த்திகேசு குகபாலன் அவர்கள் "யாழ்ப்பாண இடப்பெயர்வு" என்ற நூலை வெளியிடுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இவர் எனது பல்கலைக்கழக மாணவன், குடித்தொகைக்கல்வியில் சிறப்புப்புலமை பெற்றவர். தனது முதுகலைமாணி, கலாநிதி, முதுகலைமாணிப்பின் டிப்ளோமா பட்டக்கல்வி ஆகியவற்றில் குடித்தொகைக்கல்வியை - குறிப்பாக இடப்பெயர்வு சம்பந்தமாக ஆய்வினை மேற்கொண்டவர். அத்துடன் இவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், எழுதப்பட்ட கட்டுரைகளில் பெரும்பாலானவை குடித்தொகைக்கல்வியுடன் தொடர்புடையதாகவிருப்பதைக் காணமுடிகின்றது.
எமது பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக குடித்தொகைக் கற்கை நெறியினை கற்பித்து வருவதனாற் பெற்றுக்கொண்ட அனுபவமும் யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது சேர்ந்து இடம் பெயர்ந்த அனுபவமும் இந்நூலைச் சிறப்பாக எழுதுவதற்குத்துணைபுரிந்துள்ளன எனலாம்.
கலாநிதி குகபாலன் அவர்களால் வெளியிடப்படும் மூன்றாவது நூல் இதுவாகும். முதலாவதாக வெளியிடப்பட்ட "திவகம் - வளமும் வாழ்வும்" என்ற நூலுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் சாகித்திய விருதும், வடக்குக்கிழக்கு மாகாண சபையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்குரிய விருதும் பெற்றவர். இரண்டாவதாக வெளியிடப்பட்ட "குடித்தொகைகோட்பாடுகளும் பிரயோகங்களும்" என்ற நூலி பல கலைக்கழக மாணவர்களாலும் வாசகர்களாலும் விரும்பியேற்கப்பட்டது.
வரலாறு காணாத யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றி குடிப்புள்ளியியல் ரீதியாக மட்டுமன்றி சமூகவியற் கண்ணோட்டத்துடன் வெளியிட்டுள்ளார். நிச்சயமாக இந்நூல் மக்களால் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.
 

கலாநிதி.கா. குகபாலன் அவர்கள் புவியியல் சார்ந்த ஆய்வு நூல்களையும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றவகையில் நூல்களையும் மேலும் வெளியிடவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்வதுடன் அவரது இப்பெரு முயற்சி வெற்றிபெற எனது வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பேராசிரியர். பொ.பாலசுந்தரம்பிள்ளை உபவேந்தர் அலுவலகம், பதில் உபவேந்தர் யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 6
இந்நூலின் ஆசிரியர் கலாநிதி. கா.குகபாலன் அவர்கள் எமது துறையில் மூத்த விரிவுரையாளர். புவியியலில் ஒரு கூறான குடித்தொகைப் புவியியலில் அவர் ஆளுமை பெற்றவர். இன்று நாம் அனுபவரீதியாக உணர்ந்து கொண்ட வடபுல மக்கள் இடப்பெயர்வினை மையமாகக்கொண்டு இந்த நூலினை இயற்றியுள்ளார்.
இந்நூல் இவரது மூன்றாவது வெளியீடாகும். "தீவகம் - வளமும் வாழ்வும்", "குடித்தொகை - கோட்பாடுகளும் பிரயோகங்களும்" என்பவற்றைத் தொடர்ந்து இந்நூல் வெளிவருகிறது. அதனையிட்டு பெருமைப்படுகின்றேன்.
இலங்கை சாகித்திய மண்டலத்தினதும், வடக்குக் கிழக்கு மாகாண சபையினதும் பரிசில்களைப் பெற்றவர் கலாநிதி, குகபாலன் அவர்கள். அனுபவமும் அறிவும் சேர்ந்த ஆராய்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. உலகத்தில் பல பகுதிகளில் அரசியல் ரீதியாக மக்கள் இடம்பெயர வைக்கப்படுகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பல்லின மக்கள் வாழும் அரசுகளில் ஒரு இன மக்களால் ஏனைய இனங்கள் நசுக்கப்படும் போது இவ்வாறான நிலை தோன்றுகின்றது. சமூக ஒருங்கிணைவு (SOCid Cohesion) இல்லாததே இதற்குக் காரணம், நீண்ட காலமாக தனித்தன்மையான கலாச்சாரத்தினைக்கொண்ட தமிழ் மக்கள் உள்நாட்டினுள் பல பாகங்களை நோக்கியும், வெளிநாடு நோக்கியும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை முற்றுமுழுதாக எடுத்துக்காட்ட முடியாவிட்டாலும் யாழ்ப்பாண இடப்பெயர்வு மூலம் அதனை விளங்க வைக்க ஆசிரியர் முயன்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நிலமையில் ஆராய்ச்சி செய்வதோ அதனை வெளியிடுவதோ எளிதான காரியமல்ல. தென்னிலங்கை போன்ற வசதிகள் இங்கு இருக்குமானால் பல மடங்கான முயற்சிகள் வெளிவந்திருக்கும்.
iii
 

ஆயினும் "முயற்சி மெய்வருந்தக் கூலி தரும்" என்பதற்கிணங்க கலாநிதி குகபாலனின் விடா முயற்சி அமைந்துள்ளது. புகைப்படங்கள், வன்ரபடங்கள், என்பனவும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும். அடுத்த வெளியீடுகளில் அனைத்தையும் சேர்த்து வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொருவர் இல்லத்திலும் இடம்பெற வேண்டியது இந்நூல்.
பேராசிரியர். செ.பாலச்சந்திரன் புவியியற்றுறை, தலைவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
iv

Page 7
விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியானது நாம் வாழும் உலகினைச் சுருங்க வைத்துள்ளது. ஒரு கோடியிலிருக்கும் ஒருவன் மறு கோடியிலி ருக்கும் பலருடன் ஒரு வினாடிக்குள்ளே பல்வேறுவகையான தொடர்பினை ஏற்படுத்தக்கூடியளவில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக மக்களிடையே அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒருமைப்பாடு காணப்படாதவிடத்தும் பல விடயங்களில் உடன்பாடு நிலவிவருவதைக் காணக் கூடியதாக விருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் உலகில் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டதுடன் புதிய நிலப்பரப்புக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து அந்நாடுகளின் மக்கள் சர்வதேச இடப்பெயர்வு களை மேற்கொண்டு பொருட்தேட்டங்களைப் பெற்று வந்தனர். தாங்கள் சென்றடைந்த பிரதேசங்களிற் தமது நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களை இன, மத, சாதியடிப்படையிற் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு செயற்பட்டுவந்துள்ளனர். இத்தகைய பண்பின் விளைவுகளில் இலங்கையிற் தமிழர் பிரதேசத்தின் வரலாறு காணாத யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வும் ஒன்றாகும் என்றால் மிகையாகாது.
உலகில் - குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில்-குடியேற்ற வாதத்திலிருந்து விடுபட்ட காலங்களிலிருந்து தொடர்ச்சியாக கிளர்ச்சிகள், ஆட்சிக்கவிழ்ப்புகள், இன, மத, சாதியடிப்படையிலான கலவரங்கள் போன்றன மிகச்சாதாரணமாக நிகழ்ந்த வண்ணமுள்ளன. இத்தகைய செயற்பாடுகளினால் மக்கள் இன, மத, சாதியடிப்படையிற் கொல்லப்படுவதும், தாம் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து தூண்டப்பட்ட இடப்பெயர்வுக்குட்பட்டு குறிப்பிட்ட நாடுகளுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கோ அன்றில் அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கோ செல்லும் நிலை அண்மைக்காலங்களில் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது.
 

உலகில் வரலாற்றுக் காலந்தொட்டு பெளதிக, பண்பாட்டுக் கோலங்களின் விளைவாகப் பெரும் எண்ணிக்கையிலானதும் சிறியள விலானதுமான தன்னிச்சையிலான இடப்பெயர்வும், தூண்டப்பட்ட இடப்பெயர்வும் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக ஆரியர், திராவிடர் இடப்பெயர்வு போர்த்துக்கல், ஸ்பெயின் நாடுகளிலிருந்து லத்தின் அமெரிக்காவுக்கான இடப்பெயர்வு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் நாடுகளிலிருந்து வட அமெரிக்காவுக்கான இடப்பெயர்வு, ஐக்கிய இராச்சியத்திலிருந்து அவுஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கான இடப்பெயர்வு, தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, தென்ஆபிரிக்கா, மொரிசஸ், மலாயா போன்ற நாடுகளுக்கான இடப்பெயர்வு, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகள் என்ற போர்வையில் வட அமெரிக்காவுக்கான இடப்பெயர்வு எனப்பல இடப்பெயர்வுகள் மேற்குறித்த இருவகையான இடப்பெயர்வுக்கு உட்பட்டிருந்துள்ளன. இவை தவிர பெளதிக ரீதியில் வரட்சி, புவிநடுக்கம், எரிமலைகக்குதல், பனிக்கட்டி உறைதல்-நகருதல், மண்வளமிழத்தல், கரையோரம் அரிக்கப்படல் போன்ற காரணிகளின் விளைவாகவும் மக்கள் இடப்பெயர்வை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றுப் பெருமை மிக்க காவிரிப்பூம்பட்டினம் கடலோடு சங்கமமாகிய வரலாறு தெரிந்தவிடயமேயாகும். ஆசிய பசுபிக் பகுதிகளிற் புவிநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பெளதிக, பண்பாட்டுக் காரணிகளின் விளைவாக மட்டுமன்றி உலகநாடுகளில்-குறிப்பாக மூன்றாம் உலகில் அரசியற் காரணிகளின் விளைவாக மக்கள் முன்னெப்போதுமில்லாதவாறு இலட்சக் கணக்கிற் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு இடம் பெயர்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் ஆபிரிக்க நாடுகளான நுவண்டா, புரூண்டி, சயரே கிழக்கைரோப்பாவில் பழைய யூகோசெலவியாவில் சேர்பியா, குறோசியா, பொஸ்னியா, ரஸ்யாவில் செச்செனியா போன்ற பிரதேசங்களில் வரலாறு காணாத மக்கள் இடப்பெயர்வு கடந்த ஐந்தாண்டுகளாக நிகழ்ந்த வண்ணமிருந்து வருகின்றன. இதேபோலவே இலங்கையில் 1958ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்குக் காலம் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதன் விளைவாகத் தமிழர்கள் தூண்டப்பட்ட இடப்பெயர்வுக்குட்பட்டுள்ளனர். இவ்விடப்பெயர்வுகளில் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தொட்டுத் தொடர்ச்சியாக வலிகாமம் பிரதேசத்திலிருந்து தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளுக்கும் அங்கிருந்து யாழ்ப்பாணக் கடனிரேரியைக் கடந்து வன்னிப் பெருநிலப்பரப்புக்கும் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் தமிழர்களின் எதிர்கால அரசியல் ஸ்திரப்பாட்டிற்குச் சவாலாகவும் அமைகின்ற ஒன்றாகுமென சர்வதேச, உள்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தூண்டப்பட்ட இடப்பெயர்வானது.
தற்போது நிகழ்ந்துவரும் இடப்பெயர்வு மட்டுமே எனக் கூறமுடியாது. வரலாற்றுக் காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் அவர்களது

Page 8
எதிராளிகளுக்குமிடையில் நிகழ்ந்த யுத்தங்கள், தென்னிந்தியப்படையெடுப்புக்கள் போன்றனவற்றின் காரணமாக மக்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களை நாடிச்சென்றனர் என வரலாறு தெரிவிக்கின்றது. குறிப்பாக சோழர் படையெடுப்பினைத் தொடர்ந்து 10ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்களவர்கள் அனுராதபுரத்திலிருந்து பொலநறுவைக்கும் அதனைத் தொடர்ந்து தென்மேற்குப் பிரதேசம் நோக்கியும் பெருமளவில் இடப்பெயர்வினை மேற்கொண்டு பாதுகாப்பான பிரதேசங்களைச் சென்றடைந்தனர் என அறிகின்றோம். இவ்விடப்பெயர்வு உண்மைதானென்றாலும் நிகழ்ந்த காலப்பகுதி ஏறத்தாழ 400 வருடங்களாகும். இவ்விடப்பெயர்வில் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவானாலும் ஏற்கனவே மக்கள் வாழ்ந்திருந்த பிரதேசத்தில் மலேரியா, கொலரா போன்ற கொடிய நோய்களினால் மக்கள் இறந்ததுடன் நோயுற்றவர்களாகவும் காணப்படவே அவ்வப் பிரதேசங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களைச் சென்றடைந்தனர் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவுப் பகுதியிலிருந்து 1990களின் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட மக்கள் இடப்பெயர்வினைத் தொடர்ந்து ஆறாண்டுகளுக்குப் பின்னர் அப்பிரதேசமானது அப்பிரதேசத்து காலநிலைக்கேயுரித்தான அதிவரஸ்வலைய தாவரப்போர்வை யினால் மூடப்பட்ட பிரதேசமாக காணப்படுவதைப் பார்க்கும் போது மிக நீண்ட காலமாக மக்கள் இடப்பெயர்வு மேற்கொண்ட வரண்ட வலையப் பிரதேசம் இரண்டாந்தரக் காடுகளாக வளர்ச்சி பெற்றுக் காணப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல.
யாழ்ப்பாண இடப்பெயர்வானது பத்து நாட்களுக்குள் இடம்பெற்ற நிகழ்வாகும். ஏறத்தாழ 525,000 மக்களது இடப்பெயர்வாகும். இவ்விடப்பெயர்வின் அடிப்படைக்காரணி தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கப்படு வதுடன் தொடர்புடையதென்ற போதிலும் இந்நூல் அரசியற் காரணிகளுக்கு முக்கியத்துவங்கொடுக்காது இடப்பெயர்வினால் மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சனைகளைப் பற்றியதாக வேயுள்ளது. கடந்த இரு தசாப்தங்களாகக் குடித்தொகை சம்பந்தமான ஆய்வுகளில்-குறிப்பாக இடப்பெயர்வு பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவன் என்பதன் காரணமாக இவ் "யாழ்ப்பாண இடப்பெயர்வு" என்ற நூலை எழுதத்துணிந்தேன். இந்நூல் முழுமையான தொரு ஆய்வு நூல் என்று கூறுவதிற்கில்லை. எனினும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு ஆவணமாக இது அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒரு தூண்டப்பட்ட இடப்பெயர்வு மக்களிடையே எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதையே இந்நூல் விளக்கிச் செல்கின்றது. எவ்வாறெனினும் “யாழ்ப்பாண இடப்பெயர்வு" பற்றி பல்வேறு கோணங்களி லிருந்து ஆவணப்படுத்தப்படல் வேண்டும். இதன் மூலமே இடப்பெயர்வு பற்றிய முழுமையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்நூலை எழுதுவதற்கு என்னைத் தூண்டியதற்கான முக்கிய காரணி பல இலட்சக்கணக்கான இடப்பெயர்வாளரில் நானும் ஒருவனாக
vii

இருந்தேன் என்பதுமாகும். இடப்பெயர்வு பற்றி என்னால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தாலும் அதன் செயற்பாட்டினை நேரே அனுபவித்தவன் என்ற வரையிற் தூண்டப்பட்ட இடப்பெயர்வினால் விளையக்கூடிய பண்புகளை வெளிக்கொணர முடிந்தது. இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் பொருளாதார, சமூக, பண்பாட்டு பிரச்சனைகளால் மக்கள் பட்ட கஷ்டத்தை நேரில் அனுபவித்தவன். எனவே இந்நிகழ்வினை நூல்வடிவிற் கொண்டு வந்து தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற அவாவினால் பெறப்பட்ட அறுவடையே இந்நூலாகும்.
இந்நூலை வெளியிட வேண்டுமெனத் தீர்மானித்த வேளை எனக்குச் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதி உபதலைவர் திரு. த. அன்பானந்தன் அவர்களுக்கு எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலினை மீள்பார்வை செய்து நூலுருப்பெறுவதற்குகந்தது எனச் சிபாரிசு செய்தது மட்டுமல்லாது வாழ்த்துரையுந் தந்துதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் செ. பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்நூலினை அச்சேற்றும் காலத்தில் தகுந்த பல ஆலோசனைகளைத் தந்துதவிய இளைப்பாறிய ஆசிரியர் திரு. ஈ. கே. நாகராசா அவர்களுக்கும் எனது நன்றிகள். அத்துடன் நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரையை வழங்கிய சமஸ்கிருதத்துறைத் தலைவர். பேராசிரியர். வி. சிவசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலினை வெளியிடுவதற்குச் சகல வழிகளிலும் ஒத்துழைப்பினை வழங்கிய புவியிற்றுறையைச் சேர்ந்த அனைத்து கல்விசார், கல்விசாரா நண்பர்களை என்னால் மறக்கமுடியாது. இந்நூலினை எழுதிய காலத்தில் முதலிரு பிரதிகளைத் தட்டச்சில் பதித்துதவிய புவியிற்றுறையில் கடமையாற்றிய செல்வி. சுமதிக்கும் என் நன்றிகள். அத்துடன் இந் நூலினைச் சிறப்புற அச்சேற்றித்தந்த அட்மிரல் அச்சகத்தினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இந்நூலினை வாசித்து அடுத்த பதிப்புக்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆலோசனைகளை எனக்குத் தந்துதவுமாறு வாசகள்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
கலாநிதி. கா. குகபாலன். புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம்.
viii

Page 9

1.
வரலாற்றுப் பின்னணி
இலங்கையிற் தமிழர்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்லாது பல்வேறு பிரதேசங்களில் நீண்ட வரலாற்றைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டிற்கு வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரிய பரம்பரையின ராகிய சிங்களவர்களைப் போன்று தென்னிந்தியாவிலிருந்து திராவிடப் பரம்பரையினராகிய தமிழர் காலத்துக்குக்காலம் பொருளாதாரத் தேட்டத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் படையெடுத்து நாட்டினைக் கைப்பற்றித் தம்வசப் ாடுத்துவதற்காகவும் வருகை தந்துள்ளனர். இவ்வாறாக வந்தடைந்த தமிழர் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற் பிரதேசங்களிற் செறிவாக வாழ்ந்து வந்துள்ள போதிலும், காலப்போக்கில் அனுராதபுரம், பொலநறுவை இராச்சியங்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்தும் வடமத்திய பிரதேசங்களிலிருந்து நோய் ம்ற்றும் பாதுகாப்புக் கருதியும் வடக்கு, கிழக்கு, வடமேற்குப் பிரதேசங்களைச் சென்றடைந்தனர் எனப் புவியியல் மற்றும் வரலாற்று குடிப்புள்ளியியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிய முடிகின்றது. எனவே மிக நீண்டகாலமாக இப்பிரதேசங்களிற் பரவலாக வாழ்ந்து வந்தமையால் இப்பிரதேசங்களைத் தமிழர் தங்கள் தாயகப் பிரதேசமாகக் கருதிச் செயற்பட்டு வருவதுடன் தமது உரிமைகளையும் நிலை நிறுத்தி வருகின்றனர்.
ஐரோப்பியர், குறிப்பாக ஆங்கிலேயர் வருகையினைத் தொடர்ந்து அவர்கள் தம் பொருளாதாரப் பாங்கின் விளைவாக மேற்குறிப்பிட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாது பொருளாதார,பண்பாட்டு விழுமிய

Page 10
ங்களுக்கமைய நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டு தமிழர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள் வாழத் தலைப்பட்டனர். இதற்கு முக்கியமான காரணமாயமைந்தது பெருந்தோட்ட விவசாயத்தின் பொருட்டு தென்னிந்தியத் தமிழர்களை வரவழைத்தமையேயாகும். அதாவது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு பிரதேச மக்களிற் கணிசமானோர் ஆங்கிலமொழியூடாகக் கல்வி கற்றவர்களாவர். இவர்கள் ஆங்கிலேயத் தோட்ட உரிமையாளருக்கும் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தினருக்குமிடையில் இணைப்புப்பாலமாக இருப்பதற்காக ஆங்கிலே யரால் விரும்பி அழைக்கப்பட்டவர்களாவர். அத்துடன் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் அரச தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளிற் பரவலாகவுஞ் சிதறலாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்-வருகின்றனர்.
தென்னிந்தியாவில்-தமிழ்நாட்டுக்கு அண்மையில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருவதும் அவர்களது சகோதரர்களாக இருந்து வருவதும் குறித்துப் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கு கசப்பான அனுபவங்களையே கொடுத்து வந்துள்ளது. இவை தற்போதுமட்டுமல்லாது வரலாற்றுக் காலங்களிலிருந்தே பகைமையையும் வெறுப்பையும் கொடுத்து வந்துள்ளது. எனினும் காலத்துக்குக் காலம் இவ்விரு இனத்தவர்களும் ஒற்றுமையாகவும் வாழ்ந்துள்ளனர் என்பதை வரலாறு தெரிவிக்கின்றது. குறிப்பாக பிரித்தானியரிடமிருந்து விடுபட இவ்விரு இனத்தவர்களும் இணைந்தே செயற்பட்டுள்ளனர்.
வளர்ச்சியடைந்துவரும் சமூக அமைப்பில்-பல்வேறு நாடுகளிற் பெரும்பான்மை இனத்தவர்களாற் சிறுபான்மையினர் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில் நசுக்கப்பட்டு வரும் நிலை உலகின் பல நாடுகளில் காணப்பட்டு வருகின்றது. அதேபோலவே இலங்கையிலும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மறைமுகமாகவும் நாடு சுதந்திரமடைந்த பின்னர் வெளிப்படையாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக - அவர்களது சுயநிர்ணய உரிமைகளுக்கு மாறாக. மனித உரிமைகளைப் பேணத்தகாத வகையில் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் செயற்பட்டு வரத் தொடங்கினர். அதன் போக்குச் சுதந்திரத்தின் பின்னர் படிப்படியாக விஸ்வரூபம் எடுத்து வரத் தொடங்கியது. மொழியுரிமை, குடியுரிமை, தொழிலுரிமை மட்டுமல்லாது தமிழர்களின் சொத்தான தடையற்ற கல்வி கற்கும் உரிமையுங்கூடப் படிப்படியாகப் பறித்தெடுக்கப்பட்டன. இதன் விளைவுகள் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சனையும் தமிழர்களின் அவலநிலையுமாகும்.
இலங்கையின் சுதந்திரத்தினைத் தொடர்ந்து இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு பேரினவாத அரசு களினால் நிறைவேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை இலங்கைத் தமிழர்களும், இந்தியத்தமிழர்களும் எதிர்த்த போதிலும் அரசுகளின் செயற்பாடுகள் இறுக்கமாகவே இருந்து வந்துள்ளன. இலங்கையில் ஆட்சி அமைப்பவர்கள் நாட்டின் பொருளாதாரப்பிரச்சனைகளிலும்பார்க்க இன

வேறுபாட்டினையும் இனங்களுக்கெதிரான செயற்பாடுகளையும் விரிவுபடுத்தியே ஆட்சிப்பீடம் ஏறினர். யார் இனவாதத்தை அதிகளவில் வெளிக்கொணர்கின்ற னரோ அவர்களுக்கே சிங்கள மக்கள் வாக்களித்தார்கள். இதனை உணர்ந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா 1956ஆம் ஆண்டிற் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிபப்பீடம் ஏறினார். அதன்படியே செயற்பட்டார். இருந்தபோதிலும் தனது ஆட்சிக்காலத்திற் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களையுள்ளிட்ட பிரதேசங்களிற் சமஷ்டி ஆட்சியை கொண்டு வரும் நோக்குடன் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைச் செய்ய முனைந்தார். எனினுஞ் சிங்கள பேரினவாதிகளின் தலையீட்டினால் அது கிழித்தெறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும்முகமாக சாத்வீக அடிப்படை யிற் போராடியபோது அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கவேண்டிய தாயிற்று. 1958ஆம் ஆண்டு தமிழருக்கு எதிராகப் பெரும்பான்மையினத்தவர்கள் மேற்கொண்ட மோதல்களாற் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பலகோடி பெறுமதியான உடமைகளுஞ் சேதமாக்கப்பட்டன. பெரும்பான்மை யினத்தவர்களுடன் வாழ்ந்து வந்த தமிழர், தமிழர் பிரதேசங்கள் நோக்கி இடப்பெயர்வினை மேற்கொண்டனர். பின்னர் காலப்போக்கில் அவர்களிற் பெரும்பாலானோர் மீண்டும் தென்னிலங்கைக்குச் சென்றுவிட்டனர்.
1950களின் பிற்பட்டகாலப்பகுதிகளிலிருந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும்நோக்குடன் செயற்பட்ட சமஷ்டிக்கட்சி வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் விளைவாகப் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழர் பிரச்சனைகளையும் அதற்குத் தீர்வு காணவேண்டிதன் அவசியத்தினையும் வெளிக்கொணர வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கு மாறாக முன்னரைப் போன்றே சிங்களவர்களின் செல்வாக்கினைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும், பூரீலங்கா சுதந்திரக்கட்சியும் போட்டி போட்டு இனவாதத்தைத் தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் விளைவாக இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டன.
இனங்களுக்கிடையிலான நல்லுறவினைப் பேணுவதற்குப் பதிலாக, அவர்களிடையே பகையுணர்வினை அதிகரிக்கும் வகையில் 1964ஆம் ஆண்டு இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகிய இந்தியத் தமிழர்களை இந்திய அரசின் உதவியுடன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் விவகாரம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விவகாரம் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 1964ஆம் ஆண்டில் ரீமாவோ-சாஷ்திரி உடன்பாட்டின் அடிப்படையில் 525,000 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்புவதற்கு உடன்பாடு காணப்பட்டது. இதனை நிறைவேற்றவேண்டியதன் அவசியம் யாதெனில், இலங்கையிற் தமிழர்களின் இன விகிதாசாரத்தைக் குறைக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, பெருந்தோட்டத்துறையில் வேலையற்றிருக்கும் சிங்களவர்களுக்கு இடங்கொடுப்பதற்காகவுமேயாகும். எனவே இந்தியத்தமிழர்

Page 11
விவகாரத்தில் இந்தியத்தமிழர் தலைவர்களுடன் இலங்கைதமிழர் தலைவர்களும் இணைந்து பல்வேறு வழிகளில் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டத் தொழிலில் ஏகபோக உரிமை கொண்டிருந்த இந்தியத் தமிழருடன் சிங்களவர்களும் இணைந்து கொண்டதால் தற்போது அப்பகுதிகளில் இனரீதியாக உறவுகள் பாதிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
1970கள் இனப்பிரச்சனையின் வடிவத்திற்கு சிங்கள அரசுகள் பழைய முகங்களுடன் புதிய முகங்களையுஞ் சேர்த்து வலுப்படுத்திய காலப்பகுதியாகக் கொள்ளலாம். இலங்கையிற் பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதியில் - குறிப்பாக விஞ்ஞானக்கல்விக்கான அனுமதியினைப் பொறுத்தவரை - சிங்கள மாணவர்களுக்கிணையாக அல்லது அதற்கும் அதிகமாகத் தமிழ் மாணவர்கள் திறமையடிப்படையிற் தெரிவு செய்யப்பட்டு வந்தனர். 1971ஆம் ஆண்டு பொறியியல்பிடத்திற்கு முன்னர் எப்போதுமில்லாதவாறு பெரும் எண்ணிக்கையான தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமை சிங்களப் பேரினவாதிகளின் மனங்களை உறுத்தத்தொடங்கியது. எனவே சுதந்திரமான முறையிற் செயற்பட்டு வந்த உயர்கல்வி வாய்ப்புக்கு ஆப்பு வைக்கப்பட்டது. அதுதான் தரப்படுத்தல் என்பதாகும். இதனால் விரக்தியடைந்த தமிழ் இளஞர்கள் முதலிற் தமிழரசுக்கட்சியுடனும் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியினருடனும் இணைந்து சாத்வீக வழிகளிற் போராட முன்வந்தனர். ஆனால் தரப்படுத்தலை அரசு தொடர்ந்து பின்பற்றி வந்தது. இந்நிலையாற் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் அனுமதி கிடைக்கப்பெறாததால் இளஞர்கள் விரக்தியடைந்தனர். அக்காலப்பகுதிகளிலே சிறு அளவிலான ஆயுதப்போராட்டம் உருவானது. A
1974ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் வருடாந்த மகாநாட்டில் தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது. அக்காலத்தினைத் தொடர்ந்த காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுப் பல விடுதலை இயக்கங்களை இளைஞர்கள் ஆரம்பித்தனர். LTE, PLOTE, EROS, EPRLF, TELO, TELA போன்ற இயக்கங்கள் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ளவென ஆயுதமேந்திப்போராடப் புறப்பட்டன. காலப்போக்கில் மேற்குறித்த இயக்கங்களுடன் விரக்தியடைந்த இளைஞர்கள் ENDLF EPDP போன்ற அமைப்புக்களை உருவாக்கி மேற்குறித்த குறிக்கோளைப் பெற்றுக்கொள்ள வெனப் புறப்பட்டனர். ஆரம்ப காலங்களில், பொதுவான ஒருமித்த கொள்கைகளுக்கமைய இணைந்து செயற்பட்டனராயினும், காலப்போக்கில் அவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை.
சோல்பரி யாப்பில் சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதுகாப்பாகவிருந்த 29வது சரத்து 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் பிரகாரம் நீக்கப்பட்டது. இதுவுந் தமிழர்களைப் புண்படுத்தியது எனலாம். 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்தினால் அரச தொழில்களிற் தமிழர் சேர்க்கப்படுவது படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு வருகின்றது. அத்துடன் அரச ஊழியர்கள் சிங்களமொழியைக் கற்க வேண்டும் என்ற அரசின் உறுதியான தீர்மானமும்

தமிழர்கள் மத்தியிற் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது கல்வி கற்ற குறிப்பாக உயர்கல்வி கற்ற தமிழர்கள் மேலைநாடுகளுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளத் தூண்டியது. அவர்களிற் பொரும்பாலானோர் அவ்வவ் நாடுகளின் நிரந்தரக்குடிகளாகிவிட்டனர்.
1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசு 1978ஆம் ஆண்டில் குடியரசு யாப்பினை யாத்தது. அந்த யாப்பிற் கூடத் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதற்கு முன்னரும் மாவட்ட அபிவிருத்திச்சபை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழர் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என அரசு கருதியது. ஆனாற் காலப்போக்கிற் தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதேவேளை 1974ஆம் ஆண்டிற் தீர்மானிக்கப் படாதிருந்த 150,000 இந்தியத்தமிழரில் 75,000 பேரை இந்தியா ஏற்றுக் கொள்வதெனவும், 75,000 பேரை இலங்கை ஏற்றுக் கொள்ளும் எனவும் பூரீமாவோ-இந்திரா உடன்பாட்டின் மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசு தமிழர் விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிடியினை வைத்திருந்தது. 1974ஆம் ஆண்டு தொட்டு 1983ஆம் ஆண்டு வரையும் ஆங்காங்கே சிறு அளவிலான ஆயுதப்போராட்டத்தினை தமிழ் இளைஞர்கள் நடாத்தி வந்தனர். 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோந்து வந்த இலங்கை இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோக்குடன் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் மற்றும் அவர்கள் தம் பொருளாதார நிலைகள் மீது மிகக் கொடுரமான முறையில் தாக்குதல்களை நடாத்திப் பல ஆயிரக்கணக்கானவர்களைப் பலி வாங்கிய நிலையுடன், தமிழர் பிரச்சனையானது சர்வதேசமயப் படுத்தப்பட்டது. இத்தாக்குதலை கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படுகின்றது. 1983 கலவரத்த்ை தொடர்ந்து 3,000 த்திற்கு மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டதுடன் 18,000 மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளதுடன் 125,000 மக்கள் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடப்பெயர்வாளர்களாகச் சென்றனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
1980களில் இலங்கைப் பிரச்சனையில், தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட இந்திய ஆதரவு நிறையக் கிடைக்கப் பெற்றது. தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரின்பால் மிகுந்த அனுதாபங்கொண்டிருந்தனர். இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசு குரல்கொடுத்ததுடன் இளைஞர் குழுக்களுக்குத் தங்குமிட வசதிகளும் ஆயுதப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அதேவேளை 1983ஆம் ஆண்டுக் கலவரத்தை யடுத்து ஏறத்தாழ 200,000 மக்களை அகதிகளாக இந்தியா ஏற்றுக்கொண்டது. காலத்துக்காலம் இந்திய அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்தியாவின் நலனை மையமாகக் கொண்டு இலங்கை அரசுக்கு அழுத்தங்கொடுத்துவந்தது. இதற்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடாத்தியதுமட்டுமல்லாது தமிழர்

Page 12
அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு உதவி செய்துவந்துள்ளது. எது எவ்வாறெனினும் 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்-ராஜீவ் உடன்பாடு ஒன்று ஏற்பட்டது. இதன் பிரகாரம் இந்திய இராணுவம் தமிழர் பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் மாகாணசபைகளை அமைப்பது என்பது முதன்மைப்படு த்தப்பட்டது. இதனை மிதவாதக்கட்சிகளும் சில ஆயுதக்குழுக்களும் ஏற்றுக் கொண்டபோதிலும் மிகமுக்கியமான பலம்வாய்ந்த அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்காக இயக்கம் ஆரம்பிப்கப்பட்டதோ அதுவே தீர்வாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்பினர். இதுவே அவர்களது நிலைப்பாடாகவிருந்தபோதிலும் உடனடிக்காரணிகள் சில இந்திய அமைதிப்படையுடன் போராட வேண்டிய நிலையை உருவாக்கியது.
மாகாணசபையை ஏற்றுக்கொள்ளாத விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்குமிடையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து யுத்தம் மூண்டது. விடுதலைப்புலிகளை அழிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்த இந்திய இராணுவ நடவடிக்கையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களையும், பல கோடிக்கணக்கான பொருள் இழப்புக்களையுஞ் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது துர்ப்பாக்கியமானது. இஃது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மாகாணசபையை எதிர்த்து வந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவுக்குமிடையில் நல்லுறவு நிலை ஏற்படவே இலங்கை அரசின் அழுத்தங் காரணமாக இந்திய அமைதிப்படையை இந்தியா வாபஸ் பெற்றது. இந்நிகழ்வு 1989ஆம் ஆண்டு இறுதிக்காலத்தில் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு யூலை மாதம் வரை நல்லுறவு கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையில் விரிசல் அதிகரிக்கவே மீண்டும் இரண்டாங் கட்ட ஈழப்போர் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தினை அனுபவித்துவருகின்றனர். குறிப்பாக உயிரிழப்புக்கள் மக்களிடையே அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க, தமிழரின் பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகள் பலமாகத் தகர்க்கப்பட்டு வருகின்றன எனலாம்.
1994ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியை மையமாகக்கொண்ட பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் ஜனாதிபதித் தேர்தலிற் பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவி யேற்றதைத் தொடர்ந்து மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கையரசு க்குமிடையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை ஆரம்பமானது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது முதலாவது கட்டமாகவும் அதனைத்தொடாந்து அரசியற் பிரச்சனைகள் ஆராயப்படும் எனவும் ஆரம்பத்திற் தெரிவிக்கப்பட்டதாயினும் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்கும் விடயத்தில் முட்டுக்கட்டை ஏற்படவே இருபகுதியினருக்குமிடையில் இருந்துவந்த இணக்க

உடன்பாடு முறிவுற்றதைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் வெடித்தது. இதனால் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி தமிழர் பிரதேசத்திற் பாரியளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆவல் கொண்டது. இதன் விளைவே யாழப்பாண மாவட்டத்தில் 670 சதவீதமான மக்கள் வாழ்ந்து வந்த வலிகாமப் பிரதேசத்தினை மீட்டெடுக்க சூரியப்பிரகாசம் 1 (ரிவிரச 1) என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கையினை 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடுத்தனர். இராணுவப் பிடிக்குள் சிக்குறாது வாழும் பொருட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வே "வலிகாமம் இடப்பெயர்வு" அல்லது "யாழ்ப்பாண இடப்பெயர்வு" எனலாம்.
ஈழப்போடும் மக்கள் இடப்பெயர்வும
இலங்கையிற் தமிழர் தமது உரிமைகளைச் சாத்வீக அடிப்படையிற் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுந் தோல்வியடையவே, இளைஞர்கள் ஆயுதமேந்திப்போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனை அடக்கிப் பேரினவாதத்தை நிலை நிறுத்தும் பொருட்டு இலங்கையிற் காலத்துக்காலம் தமிழ் மக்களைத் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்குந் நிலை தொடர்ந்து வருகின்றது. அதேபோலவே சிங்கள, மூஸ்லீம் மக்களிற் கணிசமானோர் இப்போரின் விளைவாகத்தாம் வாழ்ந்த வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களை நாடிச் செல்லும் நிலையுங் காணப்படாமலில்லை. எ..து எவ்வாறெனினும் இத்ததைய இடப்பெயர்வுகள் மக்களது பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்களைச் சீர்குலைத்துள்ளது. தொடர்ந்தும் சீர்குலைத்து வருகின்றது.
1958-1982 ஆம் ஆண்டுகளில்மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வு
இடப்பெயர்வினைப் பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வது வழக்கமாகும். தன்னிச்சையான இடப்பெயர்வு, தூண்டப்பட்ட இடப்பெயர்வு என்பனவே அவையாகும். ஒரு இறைமையுள்ள நாட்டில் ஒரு பிரசை அந்நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வருதலோ அன்றில் குடியிருப்பினை அமைத்துக் கொள்வதோ சாதாரண செயற்பாடாகும். இதனைத் தன்னிச்சையான இடப்பெயர்வு எனக்கொள்ளலாம். ஒரு நாட்டின் பிரசை தான் வாழும் பிரதேசத்திலிருந்து மறைமுகமாகவேனும் நேரடியாகவேனும் உந்தப்பட்ட நிலையில் மேற்கொள்ள ப்படும் இடப்பெயர்வினை தூண்டப்பட்ட இடப்பெயர்வு எனக் கொள்ளலாம்.
இலங்கையிற் சிறுபான்மையினத்தவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களி லிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட அண்மைக்கால வரலாறு 1958ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. இதற்கு முன்னர் வரலாற்றுக் காலங்களிற்

Page 13
பெரியளவிலான மக்கள் இடப்பெயர்வு சிங்களவர்களாலும் தமிழர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வரலாறு தெரிவிக்கின்றது. இதற்கு இவ்விரு இனங்களிடையே இருந்து வந்த பகையுணர்வே காரணமாகும். 1958ஆம் ஆண்டு தென்னிலங்கையிற் தமிழர்களுக்கு எதிராக, பெரும்பான்மையினத்தவர் களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளினாற் பல்வேறு மார்க்கங்கள் மூலமாககுறிப்பாக கப்பல்கள் மூலமாக யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் ஏனைய தமிழர் வாழும் பிரதேசங்களுக்கும் தமிழரின் இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கி ன்றது. தமிழர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் பணியில் முன்னாள் தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த திரு. அல்பிரட் தம்பிஐயா அவர்கள் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலக்கிரமத்தில் இடப்பெயர்வினை மேற்கொண்டவர்கள் மீண்டும் தமது பொருளாதாரத் தேட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் முகமாக சிங்களவர் அதிகளவில் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று விட்டனர்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியுள்ளிட்ட பகுதிகளிற் தமிழரசுகளும் சிற்றரசுகளும் இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கின்றது. இவை காலத்துக்குக் காலம் தமிழர்களால் ஞாபகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை 1920களில் சேர். பொன். அருணாசலம் அவர்களால் ஞாபகப்படுத்தப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றினைத் தமிழர் தமது வரலாற்றுப் பெருமையாகக் கொள்ளும் நிலைப்பாட்டைஇல்லாதொழிக்கும் வழிவகைகளைப் புத்திக் கூர்மையுடன் சிங்களத்தலைவர்கள் செயற்படுத்தி வந்தமையைக் கடந்த அரைநூற்றாண்டு கால அரசியல் நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்த சிங்கள அரசியற் தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கனையுள்ளிட்ட தமிழர் பிரதேசத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். அதாவது இந்த நாடு சிங்களவர்களுடையது, பெளத்த சமயத்தைச் சார்ந்தது என வலியுறுத்தி வந்தனர். 1944 ஆம் ஆண்டிற் சட்ட சபையில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் சிங்களமொழியே அரசகரும மொழியாகவிருக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது இலங்கையின் முதலாவது பிரதமர் டீ. எஸ். சேனநாயக்கா அவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற் தமிழரின் இனவிகிதாசாரத்தைக் குறைப்பதன் மூலமே தமிழர்தாயகக் கோட்பாட்டினை இல்லாதொழிக்கலாம் என்பதிற் தீவிர அக்கறை கொண்டிருந்தார். எனவே தான் கல்லோயா அபிவிருத்தித்திட்டம் என்ற பாரிய பலநோக்குத் திட்டத்தினைக் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றி அதன் மூலம் பெரும்பான்மை இனத்தவர்களை அங்கு குடியமர்த்தும் பணியினைச் செவ்வனே நிறைவு செய்தார். 1953ஆம் ஆண்டுதொட்டு வரண்ட பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்வதன் வாயிலாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் மற்றும் வடமாகாணத்தின் எல்லைப் பிரதேசங்களிலும் பல்வேறு குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டதன் வாயிலாக இனவிகிதாசாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதாரணமாக 1921ஆம் ஆண்டு

குடிக்கணிப்பிற் திருகோணமலை மாவட்டத்தில் 4.2 சதவீதமாகவிருந்த சிங்கள மக்கள் 1981ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் 33.4 சதவீதமாக அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேபோலவே அம்பாறை மாவட்டத்திலும் இஸ்லாமியரை விஞ்சும் அளவிற்குச் சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகின்றனர். எனவே மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகளின் செயற்பாடுகளின் விளைவாக அவர்களின் நோக்கம் திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களில் வெற்றியளித்துள்ளதைக் காணமுடிகின்றது. இவை தவிர புனிதநகள் பிரகடனம், அரச தேவைகளைக் கருத்திற் கொண்ட நிலச் சுவீகரிப்பு, துறைமுகவிருத்தி, மீன்பிடிவிருத்தி, கைத்தொழில் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது பெரும்பான்மை யினத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் மூலமாகவும் இனவிகிதாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பெருமளவில் வெற்றியுங் கண்டுள்ளனர்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நிலப்பரப்பில் மூன்றிலிருபங்கு சிங்கள மக்களுக்குரிய வகையிற் திட்டமிட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு ள்ளமை கவனத்திற்குரியது. இத்தகைய செயற்பாடுகளிற்குத் தமிழ்த் தலைவர் களின் எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாகவிருந்தபோதிலும் அரசுகள் அதனை அலட்சியம் செய்த வரலாற்றையே அதிகமாகக் காணமுடிகின்றது.
1970களின் பிற்பகுதிகளிலும் 1980களிலும் வடக்கு கிழக்குப்
பிரதேசங்களில் விடுதலை அமைப்புகளுக்கும் அதனைக்கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் அரச துருப்புக்கள் அப்பிரதேசங்களில் வாழும் மக்களைக் கொன்றும் துன்பப்படுத்தியும் உடமைகளை நாசப்படுத்தியும், வீடுகளை எரித்தும் விடும் செயற்பாடுகள் மிகச் சாதாரணமாகவே நிகழ்ந்து வந்துள்ளன. 1980 களைத்தொடர்ந்து விடுதலை அமைப்புக்கள் பலம் பெற்றுக் காணப்படவே மோதல்களும் அதிகரித்தன. இதன் விளைவுதான் பாதுகாப்பான இடங்களை நாடி இடப்பெயர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையாகும். இதனால், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அகதி முகாம்களிலும், பாதுகாப்பான பிரதேசங்களிலும் இந்தியாவிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
1983ஆம் ஆண்டில் என்றுமில்லாத வகையில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் நாடளாவிய ரீதியிற் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதற்கு அப்போதைய அரசும் அரசுத் தலைவர்களும் உற்சாகம் அளித்ததன் விளைவாகச் சர்வதேச சமூகத்தினரின் கண்டனக் குரல்கள் இலங்கை அரசுக்கு சரமாரியாகக் கிடைத்தவண்ணம் காணப்பட்டன. எனினும் அதனைத் தடுத்து நிறுத்துவதில் அரசு காலத்தைக் கடத்தியது. இந்தியாவுட்பட உலக நாடுகளின் அழுத்தத்தினால் இனரீதியிலான வன்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலுஞ் சிங்களவர்-தமிழரிடையேயான உறவுகள் பாதிப்படைய லாயின. தமிழர்கள் யாவருச் சந்தேகப்பார்வையுடனேயே நடாத்தப்பட்டனர். மேற்குறித்த வன்செயல்களினால் தென்னிலங்கை வாழ் தமிழர்கள்

Page 14
ஆலயங்களிலும் பள்ளிகளிலும் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களிற் கணிசமானோர் தமது தாயகப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பின் நிமிர்த்தம் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர் எனலாம்.
இதனைத் தொடர்ந்து தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதையுணர்ந்து ஆயுதமேந்திய பல குழுக்கள் "தமிழீழம்" என்ற ஒரு தனி அரசே முடிந்த முடிவேயாகும் என்பதைத் தமது பிரதான கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வந்ததுடன் இவ்வியக்கங்கள் இந்தியாவின் பல்வேறுபட்ட உதவிகளைப்பெற்று வலுப்பெறத் தொடங்கின. கரந்தடிப்படைகளாக இயங்கி பாதுகாப்புப்படையினருடன் மோதத் தொடங்கினர். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிற் பாதுகாப்பு படையினருடன் மோதத் தொடங்கினர். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிற் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தமையாற் கரந்தடிப்படையினரின் தாக்குதல்கள் நிகழுமிடத்து அப்பிரதேசங்களைச் சூழவுள்ள தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டும், குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டும், விரட்டப்பட்டும் வருவது சாதாரண நிகழ்வுகளாக இருந்து வந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்திற் தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தமையால் மக்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கும் பாதுகாப்பான பிரதேசங்களுக்கும், அகதி முகாம்களுக்கும் அகதிகளாகச் சென்று வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவுக்கு 200,000ற்கும் மேற்பட்ட அகதிகள் 1983ஆம் ஆண்டினை அடுத்த காலப்பகுதிகளில் சென்று குடியேறியுள்ளனர். 1987ஆம் ஆண்டுவரை தஞ்சம் கோரியோருக்குச் சுமாரான வசதிகளை இந்திய அரசும், தமிழ்நாட்டு அரசும் செய்துவந்துள்ள போதிலும் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் தொட்டு இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் தொடங்கவே அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழர்களுக்குரிய வசதிகள் பல குறைக்கப்பட்டன. மறைமுகமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்தனர். காலத்துக்கு காலம் UNHCR இன் உதவியுடன் இலங்கைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு ஒரு தொகுதியினர் திருகோணமலைக்குக் கூட்டி வரப்பட்டுள்ளனர். அதாவது 1993ம் ஆண்டில் 6900 இலங்கைத் தமிழர்களை UNHCR இன் உதவியுடன் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது இராணுவத்துடன் போரிட்டதைக் கருத்திற் கொண்டு, பல்வேறு இன்னல்களுக்குட்பட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றிக் கவலை கொள்ளும் நிலையிலிருந்து இந்தியா தன்னைப் படிப்படியாக விடுவித்துக்கொள்ளத் தொடங்கியது. 1991ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தென்னிந்தியாவிற் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் உள்ள அரசியற் தலைவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்திற் தமக்கு முன்பிருந்த கொள்கைகளுக்குப் பதிலாகப்
10 :

புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி விமானங்கள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொட்டலங்களை தமிழர் பிரதேசத்தில் போட்ட இந்திய அரசு 1990களில் பல்வேறு சிரமங்களுக்குட்பட்டுக் காணப்படும் தமிழர்கள்பால் எந்தவித அனுதாபமும் தெரிவிப்பதில் பின்னிற்கின்றனர். மாறாக றிலங்கா அரசுக்குச் சார்பாகத் தமது அணுகுமுறையினை மாற்றிக் கொண்டு ள்ளனர். எனினும் 1995ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் இந்தியாவில் 125,000 இலங்கைத்தமிழர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோர்
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே யுத்தநிலை தொடர்ச்சியாக காணப்பட்டிருந்த போதிலும் இதனுடைய தாக்கம் நாட்டின் சகல பாகங்களிலும் எதிரொலித்து வருவதைக் காணமுடிகின்றது. வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் இனவிடுதலைப்போராட்டத்தின் விளைவாக வடமாகாணத்திலிருந்து ஏறத்தாழ 75000 முஸ்லீம் மக்கள் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதன் விளைவாக அவர்களில் பெரும்பாலானோர் வடமேல், வடமத்திய, மேல்மாகாணங்களில் அகதி முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீளவே விருப்பங் கொண்டுள்ளனர். இவர்கள் சாதகமான அரசியற் சூழ்நிலையினை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். எவ்வாறெனினும் இவர்களிற் கணிசமானோர் இடப்பெயர்வினை மேற்கொண்டு ஆறாண்டுகள் கழிந்துவிட்டதனால் தாம் சென்றடைந்த பிரதேசங்களில் தற்காலிக நிரந்தர இடப்பெயர்வாளராக இருப்பதானல் காலப்போக்கில் நிரந்தர இடப்பெயர்வாளர்களாக மாறும் சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.
நாட்டின் யுத்தநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக எல்லைக் கிராமங்களில் வாழ்ந்துவந்த சிங்கள மக்களும் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளும்முகமாக அயல் மாவட்டங்களுட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழ், முஸ்லீம் இடப்பெயர்வாளர்களைப் போலல்லாது வசதியாக வாழ்வதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன எனலாம்.
கொழும்பில் இயங்கிவரும் அரசசார்பற்ற இணையத்தினால் 1993ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் பிரகாரம் 150,120 குடும்பங்களைச் சேர்ந்த 563,029 மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலுள்ள 519 நலநோன்பு நிலையங்களிலும் தனிப்பட்டரீதியிலும் வாழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களில் 82.0 சதவீதமான மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1

Page 15
அட்டவணை 1.1)
இலங்கையில் புத்தளம், அனுராதபுரம், குருனாகல், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் கணிசமான இடப்பெயர்வாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மொத்த இடப்பெயர்வாளரில் 13.6 சதவீதத்தினராகும். வடமாகாணத்தி லிருந்து. இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் புத்தளம் மாவட்டத்தையே தெரிவு செய்தமைக்குக் காரணம் முஸ்லீம்கள் அதிகமாக விருப்பதனாலேயாகும்.
சர்வதேச இடப்பெயர்வாளர்
குறித்த ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு மக்கள் இடப்பெயர்வு மேற்கொள்வதைச் சர்வதேச இடப்பெயர்வு எனக் கொள்ளலாம். இலங்கையில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களிலிருந்து இத்தகைய இடப்பெயர்வு வரலாற்றுக் காலங்களிலிருந்தே நிகழ்ந்துவரினும் அண்மைக்காலங்களிற் பொருளாதார, சமூக, பண்பாட்டுக்காரணிகளின் விளைவாக, குறிப்பாக ஸ்திரமற்ற அரசியற் சூழ்நிலைகள் காரணமாகச் சர்வதேச இடப்பெயர்வு தூண்டப்பட்டு வருகின்றது.
இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் சர்வதேச இடப்பெயர்வினை மேற் கொண்டமைக்கு நீண்டகால வரலாறுண்டு. ஆங்கிலேயர் வருகையினைத் தொடர்ந்து மலாயாவிற் பெருந்தோட்டக் கைத்தொழிலிலும் அரச சேவைகளிற் தொழில் புரிவதற்கெனவும் இலங்கையில் ஆங்கிலக்கல்வி பெற்றவர்களை ஆங்கிலேயர் விரும்பியேற்றனர் 1911ஆம் ஆண்டு ஐக்கிய மலாயா அரசின் குடிக்கணிப்பில் 9370 இலங்கையர் அங்கு வாழ்ந்துள்ளதாகவும் இவர்களில் 82.8 சதவீதத்தினர் தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 1931ஆம் ஆண்டுக் கணிப்பீட்டில் 18,490 இலங்கையரும் 1947ஆம் ஆண்டுக் கணிப்பில் 22,762 இலங்கையரும் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டுக்கணிப்பில் 16783 பேர் இலங்கைத் தமிழர்களாவர். இவர்கள் பொருளாதாரத் தேட்டத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டுச் சென்றமையால் நாட்டிற்கோ அன்றில் குறித்த சமூகத்தினருக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. காலப்போக்கில் இவர்களிற் கணிசமானோர் தாயகம் திரும்பிவிட்டனர்.
மேலும் இந்நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலிருந்து இந்தியாவுக்கும் இலங்கையர்-குறிப்பாகத் தமிழர் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இவ்விடப்பெயர்வாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ச்சியடைந்து வந்துள்ளது. 1901ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் 5,273 பேரும் 1961ஆம், 1971ஆம் ஆண்டுக் குடிக்கணிப்புகளின் பிரகாரம் முறையே 28,627, 37,800 ஆக உயர்ந்து காணப்பட்டனர். தொழில்வாய்ப்பு, உயர்கல்விபெறல் என்பவற்றிற்காக இவ்வகை இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவர்களில் இலங்கைத்தமிழர்களே அதிகமாக இருந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கான சர்வதேச இடப்பெயர்வும் சிறிதளவில் நிகழ்ந்து ள்ளது. 1971ஆம் ஆண்டு அவுஸ்திரேலியக் கணிப்பீட்டின்படி 9091 இலங்கையர்
12


Page 16
நலநோன்பு நிலையங்களிலும் வெளியிலுள்ள நலன்புரி மை
DIT6ht Lib நலநோன்பு
நிலையங்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம் 233 மன்னார் 8 கிளிநொச்சி 10 வவுனியா 7 திருகோணமலை 27 மட்டக்களப்பு 22 அம்பாறை 22 முல்லைத்தீவு 8 கொழும்பு 7 65tbu85T a--- காலி
களுத்துறை m குருனாகல் 37 அனுராதபுரம் 50 பொலநறுவை 13 மொனறாகலை wam பதுளை – மாத்தறை aஅம்பாந்தோட்டை amn மாத்தளை 3 கண்டி நுவரெலியா கேகாலை reஇரத்தினபுரி umann புத்தளம் 62
மொத்தம் - இலங்கை 519
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் 347
சதவீதம் 66.9
வெளியே வாழு
மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை
நோன்பு நிலையத்தில்வாழும் குடும்பங்கள் குடும்பங்கள் ۔
3005 30743 886 5604 7659 3349 1777 4308 4792 4229 1611 91.76 458 1978 472 2892 490 1562 1911
47
374 848 875 3114 1365 989 398
--- 23
· 153
-- 90 136 129 283 344
era 97
w 11
-- 33 8877 2483
77456 72664
63009 62279
81.3 85.7
- 150,120
அட்டவை eggsmytb : NGO COns

பங்களிலும் இடம்பெயர்ந்த மக்களது எண்ணிக்கை 30.09.93
மொத்த
இடம்பெயர்ந்த குடும்பங்கள்
60848 13790 11008 6085 9021 10787 6136 763 2052 1911
47
374 1723 4479 1387 23 153 190 136 412 344
97
11
33 11360
158120
125288
79.2
1.
tium, Colombo.
நலநோன்பு நிலைய ங்களில் இடம்பெயர்ந்த மொத்த மக்கள்
67649 32441 28564 7401 18870 7421 15603 19405 1722
32427
254954
1973.54
77.4
மொத்த மக்களது எண்ணிக்கை
வெளியேவாழும்
இடம்பெயர்ந்த
LDis856i
55114 1979 15450 17355 16662 2894
4052 6839 6977
815.5
24 1709 3707 5523 1707 88 653
791 562 1213 1420
4O1
490
155 101.78
308075
264,132
85.7
563,029
மொத்த இடம்பெயர்ந்த மக்கள்
222763 52160 44014 24756 35.532 36362 19655 26244 8699
8155
214
1709
7477 20133 6229
88 653 79 562 1762 1420
401 490
155 42605
563029
461486
82.0

Page 17

அந்நாட்டில் வாழந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. 1995ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் 26,000ற்கும் மேற்பட்ட இலங்கையர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்தில் மூன்றுபங்கினர் இலங்கைத் தமிழர்களாவர்.
1970களில் தமிழரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இனவிடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக விருத்திபெறத்தொடங்கவே இடைத்தர, ஆரம்பக் கல்விகற்றவர்களின் சர்வதேச இடப்பெயர்வு முனைப்புப் பெறுகின்றது. அதன் விளைவாக இலங்கைத் தமிழர்கள் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, நோர்வே, கனடா மற்றும் விருத்திபெற்ற நாடுகளுக்கும் அரசியற் தஞ்சம் என்ற போர்வையிற் பொருளாதாரத் தேட்டத்தினைப் பெற்றுக்கொள்ள இடப்பெயர்வினை மேற்கொள்ளத் தொடங்கினர். எனினும் 1970களில் 25,000-30,000 மக்களே இத்தகைய இடப்பெயர்வுக்குட்பட்டவர்களாவர். இவர்களில் சிலர் கல்வி வாய்ப்பினைக் கருத்திற் கொண்டு இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களாவர். சீதன அதிகரிப்பு, உயர்கல்வியிற் தரப்படுத்தல்முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமை, சர்வதேச போக்குவரத்து முறைமைகளில் சுலபத்தன்மை, சென்றடையும் நாடுகளின் உள்வரவுச் சட்டங்களின் இறுக்கமற்றதன்மை, 1970களில் தமிழர் பிரதேசத்தில் உபஉணவுப் பயிர்ச்செய்கை உற்பத்தியில் அதிக வருமானம் கிடைக்கப்பெற்றமை போன்ற பல காரணிகள் சர்வதேச இடப்பெயர்வுக்கு ஊக்கம் கொடுத்திருந்தன எனலாம். 1980களில், தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள். சிங்கப்பூர் போன்றவற்றில் வீட்டுப்பணி, கூலிவேலை செய்தல் மற்றும் இடைநிலைத்தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு ஆண்களும் பெண்களும் தொடர்ச்சியாக இடப்பெயர்வினை மேற்கொண்டிரு ந்தனர். இவர்களிற் கணிசமானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் இலங்கையிலிருந்து நாட்டின் அசாதாரண நிலையினைச் சாட்டாகக்கொண்டு மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான இடப்பெயர்வு துரிதப்படுத்தப்பட்டது. இவ்விடப்பெயர்வாளரில் 95.0 சதவீதத்தினர் இலங்கைத் தமிழர்களாவர். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் 54,000 பேரும் நெதர்லாந்தில் 3,500 பேரும் சுவிற்சலாந்தில் 25,000 பேரும் இத்தாலியில் 6,000 பேரும் ஜேர்மனியில் 36,000 பேரும் பிரான்சில் 40,000 பேரும் இலங்கையர்களாகவிருந்துள்ளனர். கனடாவில் அந்நாட்டின் உள்வரவு அகதிகளுக்கான சபையின் அறிக்கைப்படி 35,000-40,000 ற்குமிடையில் இலங்கையர் வாழந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கின்றது. அவுஸ்திரேரியா, நியூசிலாந்து, நோர்வே போன்ற நாடுகளில் முறையே 10,000, 4,000, 16,000 இலங்கையர் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. இவர்கள் தவிர உலகின் பல நாடுகளில் 10,000 இலங்ககைத் தமிழர் வாழ்ந்து வருகின்றனர். எனவே மேற்குறித்த நாடுகளில் 1990ஆம் ஆண்டு வரையும் 235,000 மக்கள் இலங்கையைச் சோந்தவர்களாக விருந்துள்ளனர் எனலாம். ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் புள்ளிவிபரப்படி 250,000 தமிழர்கள் மேற்குலகநாடுளில்
13

Page 18
1993ஆம் ஆண்டு வாழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 1990-1994ஆ ஆண்டுகளிடையில் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான மொத்த சர்வதேச இடப்பெயர்வாளராக மேலும் 200 சதவீதமானோர் சென்றுள்ளன எனக் கொண்டால் மேலும் 47,000 மக்கள் சர்வதேச இடப்பெயர்வினை மே கொண்டுள்ளனர் எனக் கொள்ளலாம். இவ்விடப்பெயர்வாளரிற் பெரும்பாலானோ வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
14

2
தூண்டப்பட்ட இடப்பெயர்வு
இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தின் பிரதான பிரதேசம் யாழ்ப்பாணக் குடாநாடாகும். யாழ்ப்பாண வரலாறு மிக நீண்டகால வரலாறாகும். இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் தமிழர்களுக்கும் இப்பிரதேசம் பரிச்சயமானது மட்டுமல்லாது எல்லோராலும் நேசிக்கப்படும் பிரதேசமுமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற் பெரும்பாலானோர் தமிழர்களாவர். இப்பிரதேசம் மயோசின் காலத்துச் சுண்ணக்கற்பாறைகளினால் ஆக்கப்பட்டவை. தீவகப்பகுதி, வலிகாமப்பகுதி, வடமராட்சிப்பகுதி, தென்மராட்சிப் பகுதி என நான்கு தரைத்தோற்றப் பிரிவுகளைக் கொண்டு இது காணப்படுகின் றது. இப்பிரதேச மக்கள் பொருளாதார, சமூக, பண்பாட்டினடிப்படையில் மிக நீண்ட காலமாகச் சிறப்புற்று வாழ்ந்தவர்கள். மேற்குறித்த சிறப்பான பண்புகளைக் கொண்டிருந்தமையால் உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுபவர்கள்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்களின் அரசியல் ரீதியான அமைப்புகளுக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டவர்கள்-செயற்பட்டு வருபவர்கள், ஆயுதப்போராட்டக் குழுக்களுக்கும் தலைமைவகித்துச் செயற்பட்டு வருபவர்கள். இலங்கையில் மிக நீண்டகாலமாகப் பொறுப்பான பதவிகளை அலங்கரித்தவர்கள். தமிழர்களின் உரிமைகள் சிங்கள அரசுகளினால் ஒடுக்கப்படுவதற்குக் குரல்கொடுப்பதில் முன்னிற்கின்றவர்கள். இத்தகைய சிறப்புப்பெற்ற யாழ்ப்பாணப் பிரதேசமும் அங்கு வாழும் மக்களும் உரிமைகளைப்
15

Page 19
பெற்றுக்கொள்ளச் சாத்வீக அடிப்படையிலும் ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவுஞ் செயற்பாடுகளை விரிவுபடுத்தவே அரசு அதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்கி ஒடுக்கியுள்ளது. குறிப்பாக 1961ஆம் ஆண்டில் சத்தியாக்கிரக நடவடிக்கையைக் கட்டுப்படுத்தியமை, 1974ஆம் ஆண்டில் தமிழாராய்ச்சி மகாநாட்டினைக் குழப்பியமை, உலகப் புகழ்பெற்ற யாழ் நூல் நிலையத்தினை எரித்தமை, காலத்துக்குக் காலம் தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றிக் கொன்றமை, சிறையிலடைத்தமை போன்ற பல நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகின்றன.
1980களின் முன்னரைப் பகுதி இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தன்னிச்சையான முறையில் ரோந்து வந்த காலப்பகுதியாகவிருந்தது. ஆனால் பின்னரைப் பகுதிகளில் விடுதலை இயக்கங்கள் பலம் பெற்றுக் காணப்பட்டமை யாற் பாதுகாப்புப் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, மற்றும் ஆயுத தளபாடங்கள் போன்றன விமானம், மற்றும் கடற்படை களின் உதவியுடனேயே வழங்கப்பட்டன. இக்காலப்பகுதிகளில் பலாலி, ஆனையிறவு, கோட்டை, போன்ற இடங்களில் இராணுவத்தினரும் காரைநகரில் கடற்படையினரும் நிலைகொண்டிருந்தனர். பொலிஸ் படையினர் பல பகுதிகளிற் தமது நிலையங்களை அமைத்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட விடுதலை இயக்கங்கள் பாதுகாப்புப் படையினர் மீது காலத்துக்காலம் தாக்குதல்களை மேற்கொள்ளுவதனால் அவர்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாகத் தமது முகாம்களை விஸ்தரித்தலில் ஈடுபாடு கொண்டனர். பலாலித்தளம் இராணுவ ரீதியாக மிக முக்கியமான தளமாக இருந்தமையாலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தைத் தம்வசம் கொண்டிருக்கவுமாக அப்பிரதேசத்தை விஸ்தரிப்பதை இரு வழிகளில் மேற்கொண்டிருந்தனர். இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகப் பிரதேசத்தை அதிகரிப்பது முதலாவதாகவும் எறிகணைகள், மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் அயற் பிரதேசங்களை மனித நடமாட்டமில்லாத பகுதிகளாக்கிக் கொள்வது இரண்டாவதாகவும் மேற்கொள்ளப் பட்டது. இந்தவகையில் பலாலி இராணுவ முகாம் கிழக்கே பலாலியையும் மேற்கே மயிலிட்டியையும், தெற்கே வசாவிளான் மற்றும் கட்டுவன் பகுதி களையும் வடக்கே பலாலி, மற்றும் மயிலிட்டியையும் எல்லையாகக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் முகாம்களுக்கு முடக்கி வைக்கப்படவே எறிகணைகள், துப்பாக்கிச்சூடு, விமானக் குண்டுகள் வீசல் போன்றவற்றினால் படிப்படியாக முகாமின் எல்லைப் பிரதேசங்களைக் கூட்டிச் சென்றுள்ளனர். 1985ஆம் ஆண்டு முகாமைச் சுற்றி நான்கு பக்கமும் இராணுவ அழுத்தத்தினால் பல ஹெக்டேயர் நிலப்பரப்பினைக்கைப்பற்றிய போதிலும் பின்னர் பழைய இடங்களுக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் 1990ஆம் ஆண்டு இராணுவம் தமது நிலையைப் பலப்படுத்தும் முகமாக நிரந்தரமாகப் புதிய பல கிராமங்களை ஆக்கிரமித்ததன் விளைவாக அக்கிராமங்களில் வசித்து வந்த மக்களை நிரந்தர அகதிகளாக்கியது மட்டுமல்லாது அவர்களது
16

உடமைகள் உட்பட வீடுகள் யாவும் தரைமட்டமாக்கப்பட்டு முகாம் பெருப்பிக்கப்பட்டது. அதாவது மேற்கே மயிலிட்டி, தையிட்டி, ஊறணி, காங்கேசன்துறை, கீரிமலை, வீமன்காமம், மாவிட்டபுரம், தெல்லிப்பளையின் வடபகுதியையும், கிழக்கே பலாலி, இடைக்காடு, வளலாய், பத்தமேனி, ஒட்டகப்புலம் பகுதிகளையும் தெற்கே கட்டுவன் வடக்கு, குரும்பசிட்டி, குப்பிளான் பகுதிகளையும், வடக்கே மயிலிட்டி, பலாலிப் பிரதேசங்களையும் தம்வசப் படுத்தவே அக்கிராமங்களில் வாழ்ந்த சுமார் 50,000ற்கும் மேற்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த பூமியினைவிட்டுக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் தென்னிலங்கையிலும் அகதி வாழ்வு வாழத்தொடங்கினர். இந்நிகழ்வானது 1990ஆம் ஆண்டு யூன் மாதத்திலிருந்து நிகழ்ந்ததாகும். இவர்களிற் பலர் பலாலி வீதியை அண்டிய கிராமங்களிற் குடியேறியிருக்கின்றனர் என்பதைக் காணமுடிந்தது.
இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் தீவுப்பகுதியினைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்ற நோக்கில் 1991ஆம் ஆண்டு தீவுப்பகுதியைத் தம்வசப் படுத்தினர். இராணுவத்தின் பிடியிலிருந்து தம்மை மீட்டுக் கொள்ளும் முகமாக வேலணை உதவி அரச அதிபர் பிரிவிலிருந்து 9,000 குடும்பங்களைச் சேர்ந்த 38,480 மக்களும் ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பிரிவைச்சேர்ந்த 9,191 குடும்பங்களைச் சேர்ந்த 40,018 மக்களும் இடப்பெயர்வினை மேற்கொண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வெளிநாடுகளு க்கும் அகதிகளாகச் சென்றுள்ளனர். இக்காலப்பகுதியில் இராணுவப்பிடியி, லிருந்து தம்மை மீட்டுக் கொள்ளமுடியாதிருந்த வேலணை உதவி அரச அதிபர் பிரிவில் 5,388 மக்களும் ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பிரிவில் 4,143 மக்களும் வாழ்ந்துள்ளனர். அகதிகளாக இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களில் 12,577 மக்கள் 25 இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்ந்துள்ளனர். இவர்களிற் கணிசமானோர் காலப்போக்கிற் தனிக் குடிசைகளை அமைத்து வாழத்தொடங்கினர் எனலாம்.
தீவுப்பகுதி இராணுவ மயப்படுத்தப்படவே ஏறத்தாழ 78,500 மக்கள் தமது பொருளாதார தேட்டங்களைக் கைவிட்டு வெளியேறினராயினும் யாழ்ப்பாண நகரமும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் ஏற்கனவே பழக்கப்பட்ட பகுதிகளாகவிருந்துள்ளது ஒரு புறமிருக்க, தீவுப் பகுதியைச் சேர்ந்தோர் நகரிலும் நகர விளிம்புப் பகுதிகளிலும் நிரந்தரக் குடியிருப்பாளர் களாகவிருந்துள்ளதால் அவர்களது உதவிகள் ஆரம்ப காலத்தில் நிறைய கிடைத்தன. அத்துடன் தீவுப்பகுதியைச் சேர்ந்தோரிற் கணிசமானோர் வசதிபடைத்தவர்களாகவும் கல்வியுடன் கூடிய தொழில் பார்ப்பவர்களாகவு மிருந்ததால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் நிரந்தரமான குடியிருப்புக்களை வாங்கிக் கொண்டனர். அதேபோலவே விவசாயத்துடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே குடியேற்றத்திட்டங்களுக்கு (வன்னிப்பகுதிகள்) சென்றவர்களின் உதவியை நாடியுஞ் சென்றுவிட்டனர். எஞ்சிய மக்கள் 25 இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கிவிட்டனர்.
17

Page 20
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தாக்குதல்கள் அதிகரி க்கவே யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த கடற்கரையோரப் பிரதேசங்களை தம்வசப்படுத்தும் நோக்குடன் 1992ஆம் ஆண்டில் கீரிமலைப் பகுதியிலிருந்து சேந்தான்குளமூடாக மாதகல் கரையோரம் வரை தமது நிலப்பரப்பினை இராணு வத்தினர் அதிகரிக்கவே அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வலிகாமம் மேற்குப் பகுதிகளில் அடைக்கலம் கோரவேண்டியேற்பட்டது. தீவுப்பகுதி மக்களைப் போலன்றி வலிகாமம் மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் யாழ்ப்பாண நகரத்துடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை யாதலால் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அண்மையிலேயே தமது இடம்பெயர்ந்த முகாம்களையும் குடியிருப்புக்களையும் ஏற்படுத்தியிருந்தனர்.
இதேபோலவே யாழ்ப்பாண நகரத்தில் கோட்டைக்குள் அமைந்திருந்த இராணுவ முகாம் யாழ்ப்பாண நகர மையப்பகுதிக்கும் யாழ்ப்பாணம்-தீவுப்பகுதி பாதையான பண்ணைக்கும் பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி வந்துள்ளது.
1986ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமது பாதுகாப்பின் பொருட்டும் இயக்கங்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல்கள் கொடுப்பதன் வாயிலாகவும் கோட்டைப் பகுதியான பறங்கித்தெரு, கொட்டடி, நாவாந்துறை, பொன்னம்மா மில் (சி. எஸ். கே. மில்) பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எறிகணை, மற்றும் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இடம்பெயர்ந்து நகரின் உட்பகுதிகளிலும் அவர்களுக்கேற்ற தொழில் வாய்ப்புள்ள பகுதிகள் நோக்கியும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்ததைக் காண முடிகின்றது.
1987ஆம் ஆண்டு வடமராட்சி மீது மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கையின் விளைவாக உயிர்ச் சேதங்களும், உடமையிழப்பு க்களும் ஏற்பட்டிருந்தன. அதனால் மக்கள் தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளிற் தஞ்சமடைய வேண்டியேற்பட்டது. இந்தியப்படைகளின் உள்வரவினால் அப்பிரதேச மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனையிறவு இராணுவ முகாம் தாக்கப்பட்டதைத் தொடர்நது பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கைகளின் விளைவாகக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதிகளான வெற்றிலைக்கேணி, கட்டைக்காடடுப் பகுதிகளிலும் இயக்கச்சி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் தவிர்க்க முடியாதவாறு பளை, எழுதுமட்டுவாள், நாகர்கோவில், மருதங்கேணி போன்ற பகுதிகளுக்கு அகதிகளாக சென்றிருக்கிறார்கள்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணக்குடாநாடு உட்பட நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொள்ளவே அவர்கள் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ளும் பிரதேங்களி லிருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்கள் நோக்கி இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக அவர்கள் முன்னேறிவரும் பகுதிகளில் தவிர்க்க முடியாது வாழ்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் பாதுகாப்பான
18

இடங்களை நோக்கி நகள்வினை மேற்கொண்டனர். உதாரணமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைக் கைப்பற்றும் நோக்குடன் போர் உக்கிரமடைந்த வேளை தீவுப்பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களும் அவர்களது உற்றார், உறவினர்களும், நண்பர்களும் தீவுப்பகுதியைச் சென்றடைந்தனர். போருக்கு இடையில் அகப்பட்ட பல அப்பாவித் தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டு வீதியோரங்களில் எரிக்கப்பட்டுள்ளனர். தஞ்சமடைந்த முகாம்களுக்குள் எறிகணைகள், பீரங்கித் தாக்குதல்களை நடாத்தியமையாற் பலர் கொல்லப் பட்டும் ஊனமுற்றுமுள்ளனர். உதாரணமாக கொக்குவில் இந்துகல்லூரியில் ஒரு நாளில் 38 பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் யாவரும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் புதைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்
தககது.
இவ்வாறாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் ஏறத்தாழ 400 சதவீத மக்கள் தூண்டப்பட்ட இடப்பெயர்வுக்குட்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாது கடற்கரையோரங்களைச் சார்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானோர் கடலிலிருந்து ஏவப்படும் பீரங்கித் தாக்குதல்களுக்கு அஞ்சி உள்ளுர் பகுதிகளுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளவேண்டியது தொடர்ச்சியாகத் தவிர்க்க முடியாததாயிருந்துவருகின்றது.
பொதுவாக இராணுவ அழுத்தங்களினால் இடப்பெயர்ந்த மக்கள் புதிதாகச் சென்றடைந்த இடங்களிற் பட்டுவந்த பிரச்சனைகள் பல. தாம் ஏற்கனவே வாழந்து வந்த பிரதேசத்திற் செய்து வந்த தொழில்களைப் பொருளாதாரத்தடை, எரிபொருட்தடை, மற்றும் பல்வேறு தடைகளின் விளைவாகத் தொடர முடியவில்லை. எனவே தமதும் தமது குடும்பத்தினரதும் ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்காக மிகக் கடினமானதும் தமக்குப் பழக்க மில்லாததுமான தொழில்களை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததா கிவிட்டது. குறிப்பாக விறகு சேகரித்து விற்றல், பெட்டிக்கடைகளை அமைத்தல், கூலிவேலை செய்தல், சைக்கிளில் மீன்வியாபாரம் செய்தல் போன்ற பலவற்றைச் செய்ய வேண்டிய நிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாது போசாக்கற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலை தொடருமாயின் ஆயுள் எதிர்ப்பார்ப்பு படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. பொருளாதார சமூக ரீதியில் உன்னத நிலையில் வாழ்ந்த மக்களிடையே இத்தகைய அவலநிலை தொடருமாயின் இச்சமூகம் நீண்டநாட்கள் வாழமுடியாதவர்களாகவே மாறவேண்டியது தவிர்க்க முடியாததாகும். இந்நூலாசிரியரும் இடப்பெயர்வுக்குட்பட்டிருந்தபடியாற் தனது அனுபவத்தையும் இணைத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகும். '
வலிகாமம் இடப்பெயர்வு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய யாழ்ப்பாணம் உட்பட வலிகாமப்பகுதி 31.4 சதவீத நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதுடன் 62.8 சதவீத மக்கள்
19

Page 21
வாழும் பிரதேசமாகவுள்ளது. இப்பிரதேசத்தின் பெளதீக வளங்களான தரைத்தோற்றம், மண்வளம், தரைக்கீழ்நீர் என்பன பெரும்பாலான பிரதேசங்களிற் சிறப்புற்றதாய் அமைந்தள்ளது மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழர்களின் தாயகப் பூமியாகவும் இது விளங்கி வருகின்றது. வரலாற்றுக் காலங்களில், தமிழர் இராசதானி அமைத்து ஆட்சி செய்த பிரதேசம் இவ்வலிகாமப் பகுதியாகும். இப்பிரதேசமே இலங்கையில் அதியுன்னத அரசியல் வாதிகளைப் பெற்றெடுத்த பிரதேசமென்றாலும் மிகையாகாது. இப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாயத்துக்குகந்த செம்மண் பரப்பினைக் கொண்டு ள்ளதுடன் விவசாய வளங்களின் அபரிதத்தன்மையும் அதனுடாகச் செழிப்பான சமூகமும் குறிப்பாக கல்விசார் அமைப்புக்களின் விருத்தியும் இப்பிரதேசத்தி லேயே காணப்படுகின்றது.
வலிகாமப்பகுதியுட்பட யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற் கடந்த 6 ஆண்டுகாலம் இருந்து வந்துள்ளது. இங்கு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் மட்டுமல்லாது நீதி, நிர்வாக ரீதியாகவுந் தம்மைப் பலப்படுத்தி-தமக்கேயுரித்தான நீதி நிர்வாகத்தை நடாத்தி வந்துள்ளனர். எனவே தீவுப்பகுதி, வலிகாமம் மேற்குப் பிரிவின் சிலபகுதி, வலிகாம் வடக்கு பிரிவின் வடபகுதி, வலிகாமம் கிழக்குப் பிரிவின் சில பகுதிகள் என்பவற்றைக் காலத்துக்குக்காலம் இலங்கை இராணுவம் தம்வசப்படுத்திய போதிலும் யாழ்ப்பாண நகரம் உட்பட குடாநாட்டைக் கைப்பற்றினால் மட்டுமே விடுதலைப்புலிகளை இல்லா தொழிக்கலாம் என அரசு கருதியது. விடுதலைப்புலிகள் பொதுசன முன்னணி அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிவடையவே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் முறியடிக்கவேண்டும், அதன் பின்னரே இனப்பிரச்சனைக்கான தீர்வு கொண்டு வரப்படும் எனக் கூறிய போதிலும் முன்னேறிப்பாய்தல் படையெடுப்பின் மூலம் அரசுக்கு வெற்றி கிடைக்காது போகவே புதிய உத்தியினைக் கையாண்டனர்.
முன்னேறிப்பாய்தலும் இடப்பெயர்வும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடந்த காலங்களிற் காலத்துக் காலம் இராணுவ நடவடிக்கையின் காரணமாக மக்கள் பல சந்தர்ப்பங்களிற் குறுகியதுர இடப்பெயர்வினையும் சில சந்தர்ப்பங்களில் நீண்டதூர இடப்பெயர்வினையும் மேற்கொண்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை வெற்றி கொள்வதற்குப் பல இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1995ஆம் ஆண்டு ஆடி மாதம் நான்காம் திகதி வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு பிரதேசங்களான சுண்ணாகம், மருதனாமடம், உடுவில், சீரணி, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, மானிப்பாய், கட்டுடை, தொட்டிலடி, ஆனைக்கோட்டை, நவாலி போன்ற இடங்களை நோக்கி முன்னேறிய இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களினால் மக்கள் கையில்
20

அகப்பட்டதை எடுத்துக்கொண்டு கோப்பாய், புத்தூர், ஆவரங்கால், கைதடி, சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்களை நோக்கி இடப்பெயர்வினை மேற்கொள்ளவேண்டியேற்பட்டது. (ஈழநாடு 5.795). இந்நேரத்தில் குறோசியசேர்பிய யுத்தத்தில் பல இலட்சக்கணக்கான அகதிகள் இடம்பெயர்ந்த நிலையை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. இவர்களிற் கணிசமானோர் தம்மிடம் திரும்பிய போதிலும் பல குடும்பங்கள் சேர்விடத்திலேயே தமது வாழ்வினை ஆரம்பித்ததைக் காணமுடிந்தது.
இ.'து இவ்வாறிருக்க 9.7.95ஆம் திகதி இலங்கை இராணுவம் "முன்னேறிப்பாய்தல்" என்ற பெயரினைச் சூட்டி மாதகலில் இருந்து பொன்னாலைப் பாலம் வரை ஊடறுத்துச் சென்று காரைநகருக்கும் பலாலிக்குமிடையில் தரைவழிப்பாதையை அமைக்கும் நோக்குடன் யுத்தத்தை ஆரம்பித்தது. முதல் நாட் போரில் பல இலட்சம் மக்கள் அகதிகாளாக்கப்ட்டனர். ஒரு நாளில் 150000 மக்கள் வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்குப் பகுதிகளிலிருந்து யாழ்ப்பாண நகரப் பகுதிகள், தென்மராட்சி போன்ற இடங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக அமைந்துவிட்டது. (ஈழநாடு 11.795) தொடர்ச்சியான பாரிய தாக்குதல் காரணமாக 250,000 ற்கும் மேற்பட்ட மக்கள் உடமைகளை இழந்து தென்மராட்சி, வடமராட்சி, யாழ்ப்பாண நகரப்பகுதிகளிலும் வலிகாமத்தின் ஏனைய பகுதிகளிலும் பாடசாலைகள், ஆலயங்கள், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் அகதிகளாயினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 4000 அகதிகள் பல்கலைக்கழக சமூகத்தினராற் பராமரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடநெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு அரியாலைப்பகுதி, தென்மராட்சி நோக்கியும் மக்கள் இடம்பெயர வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. (ஈழநாடு 12,795). அது மடடுமல்லாது அகதி முகாம்களிற் காணப்பட்ட இட நெருக்கடியினால் மரநிழலிலும், அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரமும். அதனைச் சார்ந்த பகுதிகளும் பெருமளவு மக்களைத் தங்க வைக்கக் கூடியதாகவிருந்ததாலும் விரைவில் இராணுவ நடவடிக்கை மீளப்பெறப்பட்டமையினாலும் முன்னேறிப்பாய்த லினாற் பெரும்பாலான மக்கள் நீண்டகாலம் வாழவேண்டியநிலை ஏற்பட்டிருக்கவில்லை.
முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையினால் அகதிகளாக்கப்பட்ட நிலையில், பாடசாலைகள் இடம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் கொடுக்க வேண்டியிருந்த மையால் யாழ்ப்பாண மாவட்டக் கல்விப்பணிப்பாளர்கள் 11.7.95ஆம் திகதியிலிருந்து காலவரையறையின்றி பாடசாலைகளை மூடிவிடும்படி பணித்தனர். மேலும் அளவெட்டி, சண்டிலிப்பாய், கந்தரோடை, சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, பண்டத்தரிப்பு, தொட்டிலடி, பலாலி, ஆனைக்கோட்டை, சித்தங்கேணி, உடுவில், சுழிபுரம், வழக்கம்பரை, சுதுமலை, பண்ணாகம், பொன்னாலை, சில்லாலை, அராலி, வட்டுக்கோட்டை, சங்குவேலி, மல்லாகம் போன்ற வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு பகுதிகள் மக்கள் நடமாட்டமற்ற
21

Page 22
பகுதிகளாக் கப்பட்டுத் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளுக்கு இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
மக்கள் விரைவாக இடம்பெயரவேண்டியதற்கு 9.7.95 ஆம் திகதி நவாலி சென். பீற்றஸ் தேவாலயத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த மக்கள் மீது வீசப்பட்ட விமானக்குண்டு வீச்சினால் 175 மக்களுக்குமதிகமான உயிர்களை பலி கொள்ளப்பட்டதுங் காரணங்களில் ஒன்றாகும். (ஈழநாதம் 12.7.95) இவை மட்டுமல்லாது எதிர்பாராத விதமாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டதால் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள் 300 ற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைச் சவச்சாலை நிரம்பி வழிந்ததாகவும் இறந்த பலரை அடையாளங் காணமுடியாதுள்ளது எனவுந் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாடு 14.7.95)
இவ்வாறாகத் தூண்டப்பட்ட இடப்பெயர்வின் விளைவாக மக்கள் இதற்கு முன்னர் எப்போதும் அனுபவித்திராதவகையிற் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டனர். இதற்கு முன்னர் தீவுப் புகுதி மக்களது இடப்பெயர்வும் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் அவர்களுக்கு யாழ்ப்பாண நகரத்தில் வாழந்த தீவக மக்களின் ஆதரவு கணிசமானளவு கிடைத்திருந்தது.
இதேவேளை விடுதலைப்புலிகள் புலிப்பாய்ச்சல் என்ற பெயரிலான இராணுவத்தினருடனான யுத்தத்தில் வட்டுக்கோட்டை, அராலி, சங்கானை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, தொட்டிலடி, சீரணிச்சந்தி போன்ற இடங்களில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்தனர். (உதயன் 16.795) அத்துடன் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையினால் சுமார் 75 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். (ஈழநாடு 17.7.95) இ.து இவ்வாறிருக்க, 20ஆம் திகதி உள்ளுர் அறிவித்தலின்படி அளவெட்டி தவிர்ந்த ஏனைய பிரதேச மக்கள் எவ்வித பயமுமின்றித் தங்கள் தங்கள் பகுதிகளிற் சென்று வாழலாம் என அறிவுறுத் தப்பட்டது. இவ்வாய்ப்பினைக் கருத்திற் கொண்டு தென்மராட்சி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்தோர் மீண்டுந் தமது முன்னைய இடங்களிற்கு மீண்டனர். (ஈழநாடு 21.7.95) எவ்வாறெனினும் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையின் விளைவாக 400 ற்கு மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் 300 க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், மற்றும் ஆலயங்கள், பாடசாலைகள் எனப் பலவுஞ் சேதமாக்கப்பட்டிருந்தன. அழிக்கப்பட்ட நிலையிற் காணப்படும் வீடுகளுக்குப் பலர் திரும்பிச் செல்லாது தாம் சென்றடைந்த இடங்களில் அகதிகளாகத் தொடர்ந்தும் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் 9ஆம் திகதி காலை அறிவித்த ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக 275 மணித்தியாலயங்கள் வரை அமுல் செய்யப்பட்டு 20ஆம் திகதி நீக்கப்பட்டதாக இலங்கை வானொலி அறிவித்தது.
முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கை தொடராது என அரசு தெரிவித்த போதிலும் (ஈழநாடு 27.7.95) அன்றைய தினம் வலிகாமம்
22

வடக்குப்பிரிவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் விளைவாக சுண்ணாகம், மல்லாகம், ஏழாலைப் பகுதி மக்கள் அனைவரும் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு நீர்வேலி, புத்தூர், சிறுப்பிட்டி, கோப்பாய், மற்றும் தென்மராட்சிப் பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றனர். (ஈழநாடு 28.7.95) அதேபோலவே வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து முன்னேறிய படையினர் உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, போன்ற இடங்களுக்கு எறிகணை வீச்சினை மேற்கொண்டு முன்னேற முற்பட்ட வேளை சுமார் 1000 குடும்பங்கள் வெளியேறி செம்பியன் பற்று, மாமுனை, குடாரப்பு, நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர்.
எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்ட முக்கியமான இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக மக்களது உடமைகள், உயிர்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதனால் மக்கள் பெரும் விரக்தி நிலையிற் காணப்பட்டுள்ளனர். இடிமுழக்கம், சூரியப்பிரகாசம் ஆகிய இராணுவ நடவடிக்கைகள் மேலும் மேலும் மக்களை விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிட்டன என்பது வேதனைக்கு உரியது.
சூரியப்பிரகாசடும் மக்கள் இடப்பெயர்வும்
சூரியப்பிரகாசம் இராணுவ நடவடிக்கை வலிகாமத்தை ஏனைய பிரதேசங்களிலிருந்து கூறுபோட்டு அச்சுவேலி, இடைக்காடு, வளலாய், ஆவரங்கால், புத்தூர், நீர்வேலி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, செம்மணி, கொழும்புத்துறையூடாக யாழ்ப்பாண நகரத்தை வந்தடைவது எனத் தீர்மானித்து 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதற்கிழமை இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திற் பலாலித்தளத்திலிருந்து அச்சுவேலி, இடைக்காடு, வளலாய், வல்லைப்பாலம் போன்ற இடங்களை நோக்கி முன்னேறுவதற்காகப் புறப்பட்ட இராணுவம் மக்கள் உயிர் வாழுங் குடியிருப்புக்கள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள், விவசாய உற்பத்தி நிலங்கள் எனப் பாகுபாடு பார்க்காது சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டு முன்னேறினர். எதிர்த் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட போதிலும் மேற்குறித்த இடங்களைப் கைப்பற்றியதன் விளைவாக, அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தமக்குக் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இம்மக்களின் ஒரு பகுதியினர் வடமராட்சியை நோக்கியும் மறுபகுதியினர் தென்மராட்சி நோக்கியும் இடப்பெயர்வினை மேற்கொண்டனர். சிறுபகுதியினர் யாழ்ப்பாணம் நகரம் சார்ந்து இடப்பெயர்விணை மேற்கொண்டனர் எனலாம். இராணுவம் மேற்குறித்த பகுதிகளிற் தமது நிலைகளை ஸ்திரப்படுத்திய பின்னர் மீண்டும் ஆவரங்கால். புத்தூர் நோக்கி முன்னேறத் தொடங்கினர். பொதுவாக மக்கள் வலிகாமத்தையும்
23

Page 23
வடமராட்சியையும் இணைக்கும் வல்லைப் பாலத்தைக் கைப்பற்றிய பின்னர் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவார்கள் என்றே நம்பியிருந்த போதிலும் ஆவரங்கால், புத்துர் நோக்கிய இராணுவ நடவடிக்கையால் மேற்குறித்த பிரதேச மக்கள் கையில் அகப்பட்ட உடமைகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறினர். இவர்களுக்கு மீண்டும் போய் உடமைகளை எடுப்பதற்குக் கால அவகாசமிருக்கவில்லை. இதனால் இப்பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சென்றடைந்த பிரதேசங்களிற் பொருளாதார மற்றும் குடியிருப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர்.
புத்துாரிற் தங்கிச் சில நாட்கள் தமது நிலைகளை ஸ்திரப்ப டுத்திய பின்னர் மீண்டும் முன்னேறும் பொருட்டுப் புறப் பட்டவேளையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை அடிக்கடி சந்திக்க வேண்டி யேற்பட்டது. இதனால் இராணுவத்தினர் வேகமாக முன்னேற முடியவில்லை. எனினும் பெரும்படையுடன் முன்னேறிய இராணுவம் மிகப்பெரிய எண்ணிக்கையான எறிகணைகளை ஏவியவண்ணம் முன்னேறி வந்தவேளை விடுதலைப்புலிகள் புத்தூருடன் தடுத்து நிறுத்தி திருப்பி இராணுவத்தை பின்வாங்கச் செய்வர் என்றே பெரும்பாலான மக்கள் நம்பியிருந்தனர். எனினும் நம்பிக்கை வீணானது. நீர்வேலியை வந்தடைய இராணுவத்தினர் நீண்டநாட்களை எடுத்தனர் என்றே கூறல் வேண்டும். நீர்வேலி இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி இலங்கையின் ஒலி, ஒளிக் காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படவே யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் சலிப்பும் வேதனையும் அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும். மக்கள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினாற் பாதிப் படையாதிருப்பதற்காக விரைவிற் தமத கைகளில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக வெளியேறினர். ஆனால் அவ்விடப்பெயர்வாளர் யாழ்ப்பாணம் நோக்காது, கோப்பாய் ஊடாகத் தென்மராட்சி சென்று அங்கு உறவினர், நண்பர்கள் மற்றும் அரவணைப்போர் வீடுகளிலும், கோவில்கள், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தனர்.
ஒக்டோபர் 20ஆம் திகதியளவில் நீர்வேலியிற் பெரும்பகுதியைத் தம்வசப்படுத்திய பின்னர் யாழ்ப்பாணம் நோக்கிய நகர்வுக்காக இராணுவம் தயாராகிக் கொண்டிருந்தது. வலிகாமப்பகுதி மக்கள் இராணுவத்தின் பிடியிலிருந்து வெளியேற வேண்டிய செயற்பாடே அவசியம் என்பதை மக்கள் தம்முட் கூடிக்கலந்துரையாடிய காலப் பகுதியே அக்காலப்பகுதியாகும். எனினும் ஒட்டு மொத்தமாக வெளியேறினால் ஏற்படப்போகும் பல்வேறு வகையான அசெளகரியங்கள் பற்றியுந் தம்முள் பேசிக்கொண்டார்கள். போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையோர் இடப்பெயர்வின் அவசியத்தினை வெளியிடத் தொடங்கினராயினும் அது சாத்தியப்படக் கூடியதா என்பதை அவர்களும் யோசிக்காமலில்லை,
24

நீர்வேலியை அடுத்த கிராமம் கோப்பாய் ஆகும். அங்கு தான் "மாவீரர் துயிலும் இல்லம்" மாவீரர் நினைவாக-மிகச் சிறப்பாகப் பக்தியுணர்வுடன் பராமரிக்கப்பட்டு வந்தது. மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றுவிட வேண்டும் என படையினர் கங்கணங் கட்டிக் கொண்டனர். தொடர்புச் சாதனங்களில் இப்பிரதேசம் கைப்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தினை வெளியிட்டனர்.
ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மக்கள் மத்தியில் ஒரு பதட்டநிலை தோன்றியது. இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர் எனவும் அவர்கள் விரைவாக யாழ்ப்பாணத்தை நெருங்கக்கூடும் எனவும் யுத்தத்திற்கிடையில் அகப்பட்டு அல்லலுறாமல் இருக்கவேண்டுமாயின் வலிகாமப் பிரதேசத்தைவிட்டு வெளியேறுவதே சிறந்தது எனப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இச் செய்தியானது வலிகாமத்தில் வாழ்ந்து வந்த அனைவருக்கும் சென்றடையவே மக்கள் தாம் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதிற் தளம்பிய நிலையிற் காணப்பட்டனர். கடந்த இரண்டு தசாப்த காலங்களாக அல்லலுற்று வாழ்ந்த மக்கள் தமது உயிரையாவது பாதுகாக்கும் நோக்குடன் அன்றைய தினமே புறப்படத் தொடங்கினர். எவ்வாறெனினும் விடிவதற்கு முன்னர் நாவற்குழிப்பாலத்தைத் தாண்ட வேண்டும் என்ற நோக்கிற் தமது பயணத்தைத் தொடங்கினர். இவ்விடப்பெயர்வு தற்காலிகமானதாக வேயிருக்கும் என்ற நம்பிக்கையிற் பெரும்பாலானோர் ஆகக் குறைந்தளவிலான உடுபுடவைகளை மட்டுமே எடுத்துச் சென்றனர். எப்பொருள் முக்கியமானது, எவ்வளவு காலம் இடம்பெயர்ந்து வாழப்போகின்றோம், எவ்விடத்தில் வாழப் போகின்றோம் என்பதைக்கூடத் தெரியாதநிலையில் அமைந்த இடப்பெயர்வு இதுவாகும். ஏற்கனவே அச்சுவேலியிலிருந்து கோப்பாய் வரையிலான மக்கள்ே இடம் பெயர்ந்திருந்தினர். ஏனைய பிரதேசங்களில் ஏறத்தாழ 500,000 மக்கள் வரையில் வாழ்ந்துள்ளனர்.
எல்லாக் குடும்பங்களுமே பொருளாதார ரீதியாகச் செழிப்பானவர்களாக இருப்பதில்லை. பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தமது வாழ்க்கையை வாழ்பவர்கள். பலர் அன்றாடக் கூலிக்காரர். அன்றைக்கன்று உழைத்து வாழ்பவர்கள். "எலிவளையானாலும் தனிவளை வேண்டும்" என்பதற்கிணங்க பெரும்பாலா னவர்கள் தனித்தனிக் குடும்பங்களாகத் தத்தமது பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்களுக்கமைய வாழ்ந்து வந்தவர்கள். ஆயுள் எதிர்பார்ப்பினைப் பொறுத்தவரை இலங்கையில் ஆயுள் எதிர்பார்ப்பு கூடிய மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று. பெரும்பாலான குடும்பங்களில் வயது சென்ற பெற்றோர், வயோதிய உறவினர்கள், அங்க வினர்கள் போன்ற பலரைத் தமது குடும்ப அங்கத்தவர்களாகக் கொண்டு வாழ்ந்த மக்களிடையே இடம்பெயர வேண்டியநிலை அதிர்ச்சியை ஊட்டியது. சிந்தித்துச் செயலாற்றக்கூடக் கால அவகாசம் இருக்கவில்லை. விரைவாக வலிகாமப் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டியதே முதன்மையாக இருந்தது.
தமிழர் தங்கள் பொருளாதாரத் தேட்டத்தினை மிகக் கவனமான முறையிற் கையாளுபவர்கள். அதாவது கிராமிய வழக்கிற் கூறுவதாயின்
25

Page 24
"வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிப் பொருள் பண்டந் தேடுபவர்கள்" தமிழர் தமது பண்பாட்டிற் சீதன வழக்கு முறையை இறுக்கமாகப் பிணைத்துள்ளவர்கள். பொருட்தேட்டத்தை மேற்கொள்பவர்களாயினுங்கூட ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்தே செயலாற்றுபவர்கள். அத்தகைய தமிழரிடையே மிகக் குறுகிய கால அவகாசத்துடன் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஒன்று உருவாகவே அடிவயிறு நெருப்பாகியது. ஒரு குடும்பத்தில் அவர்களது வீட்டிலிருக்கும் பொருட்கள் அனைத்தும் ஏதோ தேவைக் காகப் பெறப்பட்டவையே. அவை எல்லாம் முக்கியமானதே. கால்நடைகள், செல்லமாக வளர்த்த வீட்டுப் பிராணிகள் குறிப்பாக நாய்கள், பூனைகள் அவற்றுடன் உடு புடவைகள், அத்தியாவசியப் பொருட்கள், குசினிப்பொருட்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டுவிடலாம். போடப்பட்டது தான். ஆனால் உடு புடவைகளுக்கும் மனித உயிர்களுக்கும் முக்கியத் துவங் கொடுத்து தாம் வாழும் பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. பொன்னாலை, பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, சுண்ணாகம், உரும்பிராய் போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து மட்டுமல்லாது இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்தும் உயிராபத்தினைக் கருத்திற் கொண்டு தத்தம் வீடுகளை விட்டு மக்கள் வீதிக்கு வந்தனர். வலிகாமப் பகுதிகளி லுள்ள வீதிகள் எக்காலத்திலுங் கண்டிராதவகையில் மக்கள் கூட்டம், பலர் தாம் விண்ணர்கள் என்ற நோக்கிற் துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகளில் விரைவாகச் சென்றுவிட வேண்டும் எனப் புறப்பட்டனர். ஆனால் வீட்டிலிருந்து வீதி வரையுமே ஓட முடிந்தது. ஏனெனில் வீதியோ மக்கள் வெள்ளத்தைத்தாங்க முடியாது தவித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளைத் தோளிலும் மார்பிலும் சுமந்து செல்லுந் தாய்மார்கள், சிறுவர், பெரியோர் எனப் பாகுபாடின்றி எல்லோரது தோள்களிலும் தலைகளிலும் சுமக்கப்படும் பொருட்கள், வயோதிபர்களை அரவணைத்துச் செல்லும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அங்கவீனர்களையும் , வயோதிபர்களையும் துவிச் சக்கரவண்டியின் பின் ஆசனத்திற் கதிரையைக் கட்டி அதன் மேல் இருத்தி அவர்களையுங் கதிரைகளையும் இணைத்துக் கட்டிச் செல்லும் காட்சிகள் என்பன நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளாகக் காணப்பட்டன. தாங்கள் வளர்த்த நாய்களையும், ஆடுகள், கோழிகளைப் பெட்டிகளிற் கட்டியுஞ் சைக்கிளிற் கொண்டு செல்லும் காட்சிகள் பல. இவை போன்ற நெஞ்சைக் கல்லாக்கும் வகையிலான இடம்பெயரும் மக்கள் கூட்டத்தின் பல்வகை அவலங்கள் சொல்லில் அடங்காது.
எறிகணை வீச்சினால் கோப்பாய் - கைதடிப் பாதை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. நாவற்குழியை சென்றடைவதற்கு இரு பாதைகளே எஞ்சியிருந்தன. நல்லூர், நாயன்மார்கட்டுடாகச் செல்லுஞ் செம்மணிப்பாதையும் கச்சேரியூடாகச் செல்லும் கண்டி வீதியுமே அவையாகும். பொதுவாக பெரும்பாலான மக்கள் நல்லூர் முருகனிடம் தமது கஷ்ட துன்பத்தை எடுத்துக்கூறிய பின்னர் நாயன்மார்கட்டுடாகச் செம்மணி வீதியும் கண்டிவீதியும் ஒன்று சேரும் இடம் வரை சென்றால் மட்டுமே அதன்பின்னர் ஒரளவுக்கு பிரச்சனையில்லாமல் செல்லலாம் என்ற ஆதங்கத்துடன் மக்கள் வெள்ளம்
26

அலை அலையாகச் சென்று கொண்டிருந்தது. கண்டி வீதி வழியாக வாகனப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த போதிலும் பொதுமக்களும் விதிக்கரைகளைப் பயன்படுத்தி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர்.
வலிகாமப் பெருநிலப்பரப்பில் மானிப்பாய் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி போன்ற பெரு வீதிகள் மட்டுமல்லாது சிறுவீதிகள், வண்டிற்பாதைகள், நடைபாதைகள் எல்லாவற்றினூடாகவும் மக்கள் வெள்ளம், இரவு 12.00 மணிக்கு முன்னர் நாவற்குழிப்பாலத்தைக் கடந்து விட வேண்டும் என்ற அவலத்துடன் பயணமான நிகழ்வு உலகின் எந்த மூலையில் வாழும் மக்களும் அனுபவிக்கக்கூடாதது. ருவாண்டாவிலிருந்து அயல்நாடுகளுக்கு மக்கள் பெருவாரியாக இடம் பெயர்ந்ததை செய்தித் தொடர்புகள் வாயிலாகவும் படங்கள் மூலமாகவுங் கண்டிருக்கின்றோம். வலிகாமம் மக்களோடு ஒப்பிடும் போது ருவாண்டா மக்கள் வறியவர்கள். அவர்கள் எத்தகைய துன்பத்தை அனுபவித் திருப்பர் என்பதை இவ்விடப்பெயர்விற்குட்பட்டவர்கள் அறிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். அந்தவகையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில் அல்லது நடந்தோ சென்று விடலாம் என்றே புறப்பட்டனர். ஆனால் வீதிக்கு வந்தபின்னர் தான் எள்ளுப்போடக் கூட இடமில்லை என்பதைத் தெரிந்து கொண்டனர்.
பொதுவாகக் கடந்த பல ஆண்டுகள் தமிழர் வாழும் பிரதேசங்களிற் போக்குவரத்துச் சாதனங்கள் மிக அரிதாகவே காணப்பட்ட காலப்பகுதியாகும். இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரி 4 அல்லது 5 துவிச்சக்கரவண்டிகள் இருந்துள்ளன. வரலாற்றில் பதிவு பெறக்கூடிய இந்த இடப்பெயர்வின் போது அக்குடும்பங்களினது அத்தியாவசியப் பொருட்களை காவிச் செல்வதற்குத் துவிச்சக்கரவண்டிகளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டன. 500,000 மக்களின் இடப்பெயர்வில் ஏறத்தாழ 200,000 துவிச்சக்கரவண்டிகளும் வீதியால் இடம்பெயர்ந்து சென்றன. அதற்கிடையில் அரச திணைக்களங்கள், வர்த்தகள்கள், தனியார்கள் போன்றோரின் வாகனத் தொடர் கண்டிவீதிவழியாகத் தொடர்ச்சி யாகச் சென்று கொண்டிருந்தது. இந்நூலாசிரியரின் அனுபவத்தினையும் இணைத்துக் கூறும் போது இடப்பெயர்வின் பாங்கினை அறிந்து கொள்ளமுடியும், 30ஆம் திகதி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டபோது முதலில் உடனடியாக இடம்பெயர வேண்டுமா என்று சற்றுச் சிந்தித்தவர்கள் சிலர் உளர். சிலர் இடம்பெயர்ந்தேயாக வேண்டும் அல்லது பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிவரும் அல்லது எறிகணை வீச்சினால் உயிர்களை இழக்க வேண்டி வரும் என்று சிந்தித்தவர்களும் பலர் உள்ளனர். உடன் இடம்பெயர வேண்டுமா எனச் சிந்தவர்களுக்குக் குடும்ப அங்கத்தவர்கள் தடையாகவிருந்துள்ளனர். ஏதாவது சிக்கலுக்குள் அகப்பட்டு விட்டால் என்ன கதியேற்படும் என குடும்ப அங்கத்தவர்களால் எடுத்துரைக் கப்படவே "ஊரோடு ஒத்தோடு ஒருவனோடக் கேட்டோடு” என்ற முதுமொழிக்கிணங்கப் புறப்படுவது என்ற தீர்மானம் பலராலுமே எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
27

Page 25
மாலை 7.00 மணியளவில் நல்லூர் முருகன் கோவிலடிக்கு வந்தடைந்தவர்களைப் பொறுத்த வரை பின்வரும் துயரங்கள் எதிர் கொண்டன. 100 யார் தூரத்தைச் சென்றடைய குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் பிடித்தது. இதனை யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் உண்மையே. அதாவது நல்லூர் முருகன் ஆலயத்திலிருந்து யாழ்ப்பாணம் கல்வித்திணைக் களமூடாக வெயிலுகந்தபிள்ளையார் கோவிலடிதூரம் ஏறத்தாழ அரைக்கிலோ மீற்றராகும். அவ்விடத்தைச் சென்றடைவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தது. காரணம் கல்வியங்காட்டிலிருந்து பருத்தித்துறை வீதியால் வந்த மக்களும் நல்லூர் முருகன் கோவிலிருந்து வந்த மக்களும் கிட்டுப்பூங்காவடியில் (முத்திரைச்சந்தை) இணைந்து செல்ல வேண்டியிருந்ததால் அரைகிலோமீற்றர் தூரத்தை இரண்டு மணித்தியாலத்திற் சென்றடைய வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாது கண்டி வீதியாற் திசைதிருப்பப்பட்ட வாகன அணிக்கே சமூக மேம்பாட்டுத் தொண்டர்களால் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் செம்மணி வீதியாற் செல்பவர்கள் அசையக் கூட முடியாத நிலையில் அடிக்கு மேல் அடி என்று கூடக் கூற முடியாது ஒரே இடத்தில் மணித்தியாலக்கணக்கில் கால்கடுக்க நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள், கர்ப்பினிகள் என்ற பாகுபாடின்றி சகலரும் மேற்குறித்த நிலையிற் செல்ல வேண்டியிருந்தது.
மக்களின் அவலநிலையை மேலும் அவலமாக்கும் வகையில் மழையும் இடைக்கிடையே பெய்தவண்ணமிருந்தது. சனநெரிசல் ஒருபுறம்-மழை வெள்ளத்தால் வீதிகள் சகதிகளாகக் காணப்பட்ட நிலை-வயல்வெளிகளில் வெள்ளம்-கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டமை, ஆங்காங்கே வரம்புகள் மட்டுமே தெரிந்த நிலை. இதனால் மக்கள் வயல்வெளியால் நடந்து செல்ல முடியாத நிலை-எனவே சகதி நிறைந்த வீதியையே பயன்படுத்த வேணி டியிருந்தது. சிலர் வரம்புகளாற் சென்றால் விரைவாக நாவற்குழிப்பாலத்தைத் தாண்டிவிடலாம் என வரம்புகளைப் பாவித்த போதிலும் அதன் விளைவாக ஆகக் குறைந்தது இருவர் இறப்பினைத் தழுவிக் கொண்டனர்.
பெரும்பாலான மக்கள் இரவு நேரச் சாப்பாட்டினைக் கூட சாப்பிடாது வீட்டைவிட்டுப் புறப்பட்டவர்கள். சிலர் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு வந்தவர்கள். ஆனால் அவர்களிற் பெரும்பாலானோர் சாப்பாட்டினைச் சாப்பிடமுடியாது வயல் வெள்ளத்தில் எறிந்துவிட்ட காட்சி இன்றுங் கூட நினைத்துப்பார்க்க முடியாதுள்ளது. உடமைகளைக் கூட எடுத்துவர முடியாதவர்கள், குடிநீரைக் கூட எடுத்து வருவார்களா? பசி ஒரு பக்கம், தண்ணிர் தாகம் மறுபக்கம், ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தினைக் கடக்க இரவு 9.30 மணியிலிருந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிவரை அதாவது 9 மணி 30 நிமிடங்கள் பிடித்தது. ஒரு மைல் தூரத்தை ஆகக்கூடியது 30 நிமிட நேரத்தில் நடந்து செல்ல முடியும். அதாவது நடந்ததிலும் பார்க்க நிலையாக நின்ற நேரமே கூட என்பது இதிலிருந்து புலனாகின்றது. நல்லூர் முருகன்
28

கோவிலிருந்து கண்டி வீதியும் செம்மணி வீதியும் இணையுமிடத்திற்கு வந்தடைய 12 மணித்தியாலங்களை எடுக்கவேண்டியிருந்தது.
இவ்விடைத்துTரத்தில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் தொல்லைகளை நினைவு கூருவது அவசியமானது. இரவு நேரமானதால் நித்திரைக் களைப்பு ஒருபுறம் நிலையாக-தொடர்ச்சியாக நின்றமையாற் கால் வீக்கம் கண்டவர்களின் அவலக்குரல் மறுபுறம் - பசியால் வாடுங் கைக் குழந்தைகளின் கூக்குரல்கள், தள்ளாத வயதிலுந் தமது பிள்ளைகளாற் காவப்பட்டும் நடந்தும், மயக்கமுற்றுங் காணப்பட்ட வயோதிபர்கள், மிகச் சிறிது காலத்திற்கு முன்னரேயே பெற்றெடுத்த தாய்மார்கள் துவாயினால் சுற்றி நெஞ்சோடு அணைத்துக் கொண்ட சிசுக்களினது பரிதாப நிலை, நிறைமாதக் கர்ப்பிணிகளின் தொடர்ந்த நடை, நடக்க முடியாது களைப்புடன் வெள்ளப்பரப்பிற் கால்களை நீட்டிக்கொண்டு இருந்தவர்களின் அவலநிலை, அலையலையாக வந்த மக்களது பாதங்களை துவிச்சக்கர வண்டியின் முன்சில்லும் பெடலும் வலிக்கத்தக்க வகையிற்தொடர்ச்சியாக முட்டிச் செல்லுந் நிலை, நித்திரைத் தூக்கத்தினாலுங் களைப்பினாலும் சோர்வடைந்த குழந்தைகளின் அவல ஒலம், வயது வகை வேறுபாடின்றி மயக்கமுற்ற நிலையிற் சகதிக்குள் வளர்த்தி வைத்திருக்கும் சிலரின் உடல்கள், தண்ணிர் தண்ணிர் என்று தாகத்தால் வாடும் மக்கள் கூட்டத்தின் அவலம், மழை பெய்கின்ற போது குடையினை மல்லாத்திப்பிடித்து அதனுள் விழுந்த நீரைக் குடிக்கும் மக்கள் என விரிந்த காட்சிகளை மேற்குறித்த 12 மணித்தியாலங்களிற் காணமுடிந்தது.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குப் பொழுது சாதுவாக புலர்ந்த போது கண்டி வீதியும் செம்மணி வீதியும் இணையுமிடத்திற்கு 150 மீற்றர் தூரமிருக்கும் போது முன்னால் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டி இறால் பதனிடுந் தொழிற்சாலைவரையும் மிக நெரிசலாக மக்கள் சென்று கொண்டிருப்பதையும் பின்னால் திரும்பிப் பார்த்தால் மக்கள் வந்த பாதை நெடுக எள்ளுப்போட இடமில்லாது நெருக்கமாக மக்கள் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு வர, கண்டி வீதியால் தொடராக வாகனங்கள் வந்து கொண்டிருப்பதையும் துணிந்து பேசக்கூடியோர் அவர்களுடன் வாக்குவாதப்படு வதையுங் காணமுடிந்தது. எனினும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதைப் போல - செவிடன் காதில் சங்கூதியதைப் போல வழி விடுபவர்கள் காணப்பட்டனர். வாகன அணியினை விரைவாகச் செல்லுமாறு தொண்டாகள் ஒலிபெருக்கி மூலங் கூறிக் கொண்டிருப்பதையுங் காணமுடிந்தது. ஒடுங்கிய வீதியான படியாற் பல வாகனங்கள் வீதியோரங்களிற் புதைந்து எடுக்க முடியாதநிலையிற் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
கண்டி வீதி - செம்மணி வீதி இணையுமிடத்தினைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவலக்குரல்களை எழுப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தனர். அவலக்குரல்கள் பலவகையாகவிருந்தன. தமது குடும்பத்தில் வயோதிபர்களை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டோமே எனக் கதறும் குரல்கள்
29

Page 26
- மக்கள் வெள்ளத்தில் இளவயது குழந்தைகளைத் தவறவிடப்பட்டவர்கள் - பெற்றோரைத் தவறவிடப்பட்டவர்கள் - பெற்றோரைத் தவறவிட்ட குழந்தைகள் - குடும்ப உறுப்பினர்களைக் காணாது அவலப்படும் மக்கள் - வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட பொதிகள் - பெட்டிகளைத் தவறவிட்டவர்கள், சொத்து சுகங்களை இழந்த நிலையில் ஓலமிடுபவர்கள் போன்ற பல்வேறு தரத்தினர் தமது துன்பங்களைச் சொல்லினாலும் செயலினாலும் காட்டி நின்றதை அவதானிக்கும் போது கல்நெஞ்சம் படைத்தவர்க்கும் கண்ணிர் கசிந்துருகும். காலை வேளையானதும் மக்கள் தமது காலைக் கடன்களைக் கூட கழிக்க முடியாதநிலையிருந்தது. ஏனெனில் அதனை நிறை வேற்றுவதற்கு வசதியான பற்றைகள், மறைவுகள் எல்லா இடங்களிலும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். இதனையும் மீறி காலைக் கடன்களைக் கழித்தவர்களினது கழிவுகளாற் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்த நிலையினை வழிநெடுக அவதானிக்க முடிந்தது
முழு இரவினை நின்றும் நடந்தும் கடந்து வந்த மக்களிற் கண்டிவீதிசெம்மணி வீதி இணையுமிடத்திற் கணிசமானோர் களைப்பாறுவதற்கு ஈரநிலத்தில் அமர்ந்திருக்க, சிலர் தாம் எடுத்து வந்த பொருட்களைத் தலையணையாக்கிக் கொண்டு நித்திரை செய்வதையுங் காணமுடிந்தது. பலர் முண்டியடித்துக் கொண்டு நாவற்குழிப் பாலத்தைத் தாண்டி எங்காவது ஒர் இருப்பிடத்தைத் தேடிக் கொள்வதற்காகத் தொடர்ச்சியாகக் கைதடியூடாகச் சாவகச்சேரி நோக்கி நடையாகச் சென்ற காட்சியை இனிமேற் திரும்பிப் பார்க்க முடியுமோ என்பது கேள்விக்குறியே. இரவிரவாக உண்ணாமல், உறங்காமல், நடந்து வந்தமையாற் களைப்புற்ற பல குடும்பங்கள் கைதடியில் அமைந்துள்ள நவீல்ட் பாடசாலை, சித்த மருத்துவத்துறை, ஆயுள்வேத போதனா வைத்தியசாலை, வயோதிபர் இல்லம் போன்றவற்றின் விறாந்தைகளிற் படுத்துறங்குவதையுங் காணமுடிந்தது. கணிசமான மக்கள் நாலு சில்லு வாகனங்களைத் தவிர இரு சில்லு வாகனங்கள், துவிச்சக்கரவண்டிகளையும் பெரும்பாலுங் கைதடிச்சந்தி வரை உருட்டிக் கொண்டே செல்ல முடிந்தது.
மக்கள் பொருட்களை எவ்வாறு காவிச் சென்றனர் என்பது பற்றியும் அவர்கள் காவிச் சென்ற பொருட்கள் எவை என்பதையும் அறியும் போதே இவ்விடப்பெயர்வின் அவலத்தினை வெளிக்கொணர முடியும். பொதுவாக சூட்கேஸ், சாக்கு, யூரியா உறைகள் போன்றவற்றிற் கையில் கிடைத்ததைப் போட்டு அவற்றை துவிச்சக்கர வண்டியின் பின்னாற் கட்டிக் கொண்டு வந்தனர் பலர். பெரும்பாலானோர் ஆணானாலுஞ் சரி, பெண்ணானாலுஞ் சரி சிறுவர்களா யினுஞ் சரி தலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பொதிகளைச் சுமந்துகொண்டுவந்த காட்சியுடன் துவிச்சக்கரவண்டியிற் பொதிப் பொருட்களுடன் கணிசமானவர்கள் கோழிகளைக் காலைக் கட்டி பொதிகளுக்கு மேலும், முன்னால் துவிச்சக்கரவண்டியின் கான்ரிலிலும் தலைகீழாக கொழுவிக்கொண்டு சென்றதையுங் காண முடிந்தது. மேலும் பெறுமதி மிக்க ஆடுகள், மாடுகள் போன்றவற்றை இழுத்துவரும் காட்சி, மிகச் சிலர் குசினிச் சாமான்களுடன்
30

வழியில் தேனீர் வைத்துக் குடிக்கலாம் என்ற நோக்கிலோ என்னவோ விறகுகளைக் கொண்டுவருங் காட்சிகள், கைகள் இரண்டிலும் பொருட்களை எடுத்து வரும் பெண்கள் தமது குழந்தைகளை மார்புப் பகுதியில் ஏணைபோற் சீலையாற் கட்டிக் குழந்தைகளைக் காவுங் காட்சிகள் போன்றவற்றை காணமுடிந்தது.
தமது சொந்த வீடுகளிலிருந்து மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறிக் கொண்டிருந்த வேளை அவர்களுடன் அவர்களது செல்லப் பிராணியாக நாய்களுங் கூடவே வந்தன. வரும் வழியில் நாய்களின் சண்டை ஒரு புறமிருக்க விரைந்து செல்லும் வாகனங்களினால் அவைகளிற் சில அடித்துக் கொல்லப்பட்டு வீதியோரங்களிற் காணப்பட்டன. பல நாய்கள் அநாதரவாக உணவின்றி அலைந்து இறந்து கிடந்ததைப்பின்னர் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
வரலாறு காணாத இவ்வலிகாமம் இடப்பெயர்வுக்குட்பட்ட மக்கள் குறித்து விடுதலைப்புலிகள் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வன்னிப்பிராந்திய த்திலும் உள்ள வீட்டுச் சொந்தக்காரர்கள், பாடசாலை நிர்வாகிகள், சமூக சேவை நிறுவனங்கள் போன்றவர்களுக்கு அகதிகளாக வருபவர்களை அரவணைத்து தங்குமிட வசதியுட்பட அன்றாட வாழ்க்கையைத் தொடர அன்புடன் உதவி வரவேற்குமாறு விண்ணப்பித்திருந்தனர். இவ்விண்ணப்பங் குறித்து மேற்குறித்த பிரதேசங்களிலுள்ள குடியிருப்பாளர்கள் தமது வசதியைக் கருத்திற்கொண்டு செயற்பட்டனர் என்றே கூறல் வேண்டும். சில குடியிருப்பாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ இடப்பெயர்வாளரை ஏற்க வேண்டியவர்களாக இருந்துள்ளனர். பெரும்பாலான குடியிருப்பாளர் வேறு யாரும் நிர்ப்பந்தத்தின் பேரில் யாரையாவது கொண்டு வந்து குடியிருக்கவிட்டு விடுவார்களே என்ற அச்சத்திற் தமது நண்பர்கள், உறவினர்கள் போன்றோரைத் தேடிப் பிடித்துத் தமது குடியிருப்புகளிற் குடியிருத்தினார்கள். கணிசமான மக்கள் தமக்குத் தெரியாதவர்களின் வீடுகளிற் தாமே கேட்டுக் குடியிருந்தனர். பொருளாதார வசதி வாய்ப்பற்ற ஏதிலிகளிற் பெரும்பாலானோர் மரநிழல்களிலும் பாடசாலைகளிலும், பொது ஸ்தாபனங்களின் கட்டிடங்களிலும் முண்டியடித்துக் கொண்டு தமது குடியிருப்பினை உறுதிப்படுத்தினர்.
ஒக்டோபர் 30ஆம், 31ஆம், நவம்பர் 1ஆம், 2ஆம் திகதி வரை தொடர்ச்சியாக வலிகாமத்திலிருந்து மக்கள் வெளியேற்றங் காணபப்பட்டது. இவர்களிற் பெரும்பாலானோர் தென்மராட்சிப் பகுதிகளில் நிலை கொள்ளவே, வடமாராட்சியுடன் ஏதோ வகையில் தொடர்புடையவர்கள் அங்கும், வன்னிப் பெருநிலப்பரப்புடன் தொடர்புடையவர்கள் நேராகக் கிளாலி நோக்கியுந் தொடர்ச்சியாக அலைஅலையாகச் சென்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகமும், அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன குறிப்பாக பொதுஸ்தாபனங்களில் அகதிகளாக வாழ்பவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அக்கறை
31

Page 27
கொண்டிருந்தன. யாழ்ப்பாண மாநகர சபையும் சாவகச்சேரி நகர சபையுடன் இணைந்து சுகாதார சேவைகளை வழங்கிச் சுற்றுப்புற சூழலைத் தம்மால் இயன்ற வரை தூய்மைப்படுத்தி வந்தனர். எவ்வாறெனினும் எதிர்பாராத திடீர் இடப்பெயர்வானபடியாற் தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளில் உணவுப் பொருடகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவியது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போற் தமது உடைமைகளை இழந்து வந்த மக்களை அத்தியாவசியப் பொருட்கள் - குறிப்பாக மரக்கறி, மாமிச உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களின் விஷம் போன்ற விலையுயர்வு மேலும் பாதித்தது. இந்நிலை யாழ்ப்பாண வியாபார ஸ்தலங்களிலிருந்து பொருட்களை நகர்த்தும் வரை பல மடங்கு அதிகரித்திருந்தாலும் பின்னரும் பெருமளவிற் குறைந்தபாடியில்லை. நலநோன்பு நிலையங்களில் மக்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்படாததால் துன்பக் கடலிற் துயருற்றது மட்டுமல்லாது தமக்கு நேர்ந்த இந்நிலைக்கு எவரும் செவிசாய்க்காததினால் மக்கள் காலத்துக் காலம் விரக்தியடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.
தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பிரதேசங்களும் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வும்
வலிகாமம் பிரதேசத்திலிருந்து இடப்பெயர்வு மேற்கொண்ட மக்களில் ஏறத்தாழ ஐந்தில் மூன்று பங்கு மக்கள் தென்மராட்சியிலும் ஏனையோர் வடமராட்சி மற்றும் வன்னியிலுந் தற்காலிகமாகக் குடியேறினர். தென்மராட்சியில் மூலை முடுக்குகள் எல்லாவிடங்களிலும் மக்கள் கூட்டம், நள்ளிரவுக்குப்பின்னர் விடியற் காலை 4 மணிவரையுந்தான் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவிருந்துள்ளது. சாவகச்சேரி, பளை பருத்தித்துறை, கைதடி, வரணி, கிளிநொச்சி, வட்டக்கச்சி, மல்லாவி, நெல்லியடி போன்ற முக்கியமான சேவை மையப்பகுதிகளிற் காலைதொட்டு இரவு வரை மக்கள் நெரிசலாகக் காணப்படுவர். அதாவது அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு வருபவர்களாலும். அலுவலகங்களுக்கும் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருபவர்களாலும் இப்பகுதிகள் வழிந்து நிறைந்திருந்தன. தென்மராட்சியிற் சுமார் 1000 சதுர அடி கொண்ட வீட்டில் 25 தொட்டு 150 பேர் வரை கூட இடம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். விவசாயப் பூமியான வலிகாமம் இராணுவக் கட்டுப்பாட்டிற்காகக் காத்துக் கொண்டிருந்த காலப்பகுதிகளில், அதாவது நவம்பர் 9ம் திகதி வரை வலிகாமப் பகுதிகளில் உள்ள தமது விவசாய உற்பத்திப் பொருட்களைச் சிலர் எடுத்து வந்து சந்தைப்படுத்தினர். இடம்பெயர்ந்த இடங்களில் வர்த்தகர்கள் தாம் நினைத்தபாட்டில் விலை நிர்ணயஞ் செய்து பொருட்களை விற்பனை செய்தனர். மனிதாபிமானமுள்ள வர்த்தகர்களும் ஆங்காங்கே காணப்படாமலில்லை. எவ்வாறெனினும் உயிர் வாழ்வதற்கு என்ன விலை கொடுத்தேனும் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையிருந்தது.
32

வன்னிப் பிராந்தியத்திற்குச் செல்பவர்களுக்குப் பல்வேறு ஊக்கங்கள் வழங்கப்பட்டமையால் வன்னிப் பகுதியைப் பலர் நாடினர். 1950களிலிருந்து குடியேற்றத்திட்டங்களுக்கும் ஏனைய தொழில்களை மேற்கொள்ளவுஞ் சென்ற மக்களின் உறவினர்கள் வன்னிப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தனர். வன்னிப்பெருநிலப்பரப்பு பெரிதாக இருந்த போதிலும் மக்கள் எழுந்த மானத்திற் சென்று குடியிருக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிராத பகுதியாகும். வட பிரதேசக் கல்விமான்கள் வன்னிப்பிராந்தியத்தை வளர்த்தெடுத்தாலே யாழ்ப்பாணத்திற் காணப்படுகின்ற அதிகரித்த குடித்தொகைக்கு ஈடு செய்யலாம் எனக் கூறி வந்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ மக்களைக் கொண்டு சென்று அப்பகுதி இயற்கைவளத்தினை மனிதவளத்தின் உதவியுடன் வென்றெடுக்க முடியாது. 1953 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு குடியேற்றத்திட்டங்கள் செயற்படுத்தப்படினும் பெருமளவிற்குக் கவர்ச்சி கொண்ட பகுதிகளாக இதுவரை இவை காணப்படவில்லை. அரசினால் விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளினால் எந்தவித உட்கட்டுமானப் பணிகளையுந் திறம்பட செய்யமுடியாது. எனவே வன்னிப் பிராந்தியத்திற்கான மக்கள் நகர்வில் மிகுந்த அவதானம் தேவையாகும்.
வடமராட்சிப் பிரதேசம் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட சமூக, பொருளாதார, பண்பாட்டம்சங்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பிரதேச மக்கள் கல்வியிற்றான் பெருமதிப்பு வைத்திருப்பவர்கள். இப்பிரதேசத்தை நாடிச் சென்றோரில் 90.0 சதவீதமானோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலேயே தங்கவேண்டி வந்துள்ளது. இடப்பெயர்வாளருக்குத் தென்மராட்சி யூடாக வடமராட்சி தொலைவிலிருந்தமையாலும் பெருமளவில் உபசாரம் கிடைக்காது என்று எதிர்பார்த்ததாலுமே மக்கள் அப் பிரதேசத்தை அதிகளவில் நாடவில்லை. இருப்பினும் கல்வி, அரசதொழில்களுடன் கூடிய மத்தியதர வர்க்கத்தினர் இப்பகுதி நோக்கிய இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர்.
இது ஒருபுறமிருக்க, நவம்பர் முதலாந் திகதி தொட்டுத் தொடர்ச்சியாகச் சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் பொருத்தப்பட்டிருந்த இலவச ஒலிபெருக்கிச் சேவையிற் காணாமற் போனோரினதும் பொருட்களினதும் பட்டியல்களைத் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டிருந்தனர். சனநெரிசலினாற் சந்திகளிலும் வேறிடங்களிலுந் தவறவிடப்பட்ட பொருட்களை எடுத்தவர்கள் அதனை ஒப்படைக்கும் பட்சத்தில் தகுந்த சன்மானங் கிடைக்கும் எனவும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களைப் பிரிந்தோர் குறிப்பிட்ட இடத்தில் வருகை தருமாறும் ஒலிபெருக்கியிற் கோரிக்கைகள் விடப்பட்ட வண்ணமே இருந்தன. இத்தகைய அறிவிப்புகள் ஏறத்தாழ இரண்டு மாதங்களாக ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. அதுமட்டுமல்லாது குடாநாட்டிலிருந்து வெளிவரும ஈழநாதம், உதயன், ஈழநாடு ஆகிய நாழிதழ்களின் வாயிலாகவும் மேற்குறித்த விண்ணப்பங்கள் செய்தியாகவும், விளம்பரமாகவும் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தமையுங் குறிப்பிடத்தக்கது.
33

Page 28
வலிகாமத்திலிருந்து தொடர்ச்சியான இடப்பெயர்வு
ஒக்டோபர் 30 ஆம் திகதி சுமார் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வலிகாமம் மக்கள் அன்றிரவே நாவற்குழிப் பாலத்தைக் கடந்துவிட்ட போதிலும் நவம்பர் 1ஆம், 2ஆம், 3ஆம் திகதிகளிலுந் தொடர்ச்சியாகத் தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வு தொடர்ந்த வண்ணமேயிருந்தது. இராணுவப்பிடியிற் சிக்கிக் கொள்ள விரும்பாத மக்கள் எந்தளவிற்கு விரைவில் வெளியேறிவிட வேண்டுமோ அவ்வளவு விரைவில் அதனைச் செய்தனர். ஆனால் வயோதிபர், அங்கவீனர்கள், நோயாளரைக் குடும்ப உறுப்பினராகக் கொண்டவர்கள், எங்கு செல்வதென்று தெரியாதவர்கள், பொருள் பண்டங்களை விட்டு வெளியேற விருப்பமற்றவர்கள், இராணுவப் பிடியில் சிக்கி இருந்தால் என்ன என்று நினைத்தவர்கள் போன்றோர் முதல் நாளில் வெளியேற விரும்பவில்லை அடுத்தடுத்து மக்கள் வெளியேறியமையால் மனித சஞ்சாரமற்ற பிரதேசத்தில் அகப்பட்டு விடுவோமா என்ற அச்சத்தில் முதல் நாள் வந்தவர்களிலும் பார்க்க அத்தியாவசியப் பொருட்களை ஒரளவுக்கு திட்டமிட்டு எடுத்துக் கொண்டு தென்மராட்சிக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பிட்ட சில மக்கள் இடப்பெயர்வினை விரும்பியிராத போதிலும் பல்வேறு ஆலோசனைகளின் பேரில் வலிகாமத்தை விட்டு நவம்பர் 16ம் திகதி வரை வெளியேறினர். இருந்த போதிலும் எவரது கண்களிலும் படாதவாறு ஒதுங்கி வாழ்ந்த சுமார் 2000 மக்கள் இடப்பெயர்வினை மேற்கொள்ளாது வலிகாமத்திலேயே தங்கி விட்டனர். அதாவது சுமார் 550,000 மக்களில் 2,000 மக்களே தொடர்ந்தும் வாழ முற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிகாமம் சென்றுவர அனுமதி
வலிகாமம் பகுதியிலிருந்து பெருமளவிற்கு மக்களின் வெளியேற்றம் பூர்த்தியடையவே வன்னி நிலப்பரப்புக்குச் சென்றவர்களைத் தவிர தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிற் தஞ்சமடைந்தோர் குடும்ப வாழ்வில் நாளாந்த பிரச்சனைகளை அனுபவிக்கத் தொடங்கினர். வர்த்தகள்கள் மற்றும் தொழிற்றுறை சார்ந்தோர் போன்ற பலர், அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர் போன்றோர் இராணுவத்தினர் தாம் சென்று பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களுக்கு வந்து சேர்வதற்கு முன்னர் தமது உடமைகளை எடுத்துவர அவசரப்பட்டனர். கையில் அகப்பட்டதை மட்டுமே எடுத்து வந்த மக்கள் ஆகக் குறைந்தபட்சம் தமக்குத்தேவையான அத்தியாவசியப்பொருட்களையாவது எடுத்துவர முயன்றனர். எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று பிற்பகலுக்கு முன்னர் திரும்பி வரக்கூடியதாக வலிகாமஞ் சென்று பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. நவம்பர் மூன்றாம் திகதியிலிருந்து மக்களுடன் பொருட்களை ஏற்றி வர வாகனங்களும் செல்லத் தொடங்கின. லொறிகள், உழவுயந்திரங்கள், லாண்ட்மாஸ்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் சகிதம் சமயாசமய இடப் பெயர்வு வலிகாமத்திற்கு
34

மேற்கொள்ளப்பட்டது. அங்கு சென்றோர் தமது குடும் பத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை எடுத்து வந்தனர். தங்களது பொருட்கள் முழுவதையும் பாதுகாக்க அதனை எடுத்து வர யாருக்குத் தான் விருப்பமில்லை. ஆனால் எடுத்து வராமைக்கு முதற்காரணி எல்லாப் பொருட்களையுந் தாம் சென்ற துவிச்சக்கரவண்டி போன்றவற்றில் கொண்டு வர முடியாதிருந்தது. இரண்டாவது காரணி நீட்டி நிமிர்ந்து படுக்க இடமில்லாத போது கொண்டு வரும் பொருட்களை எங்கே வைப்பது என்பதாகும், மூன்றாவது காரணி இடைவழியில் இடைமறிக்கப்பட்டு இராணுவந் திருப்பி அனுப்பப்பட்டால் இப்பொருட்களை மீண்டும் சுமப்பதா எனும் எண்ணமுமாகும். எவ்வாறெனினும் இளைஞர்கள் உள்ள குடும்பங்கள் நாள் தோறும் அல்லது ஒன்றுவிட்ட ஒரு நாள் சென்று பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர். பொருட்களை எடுக்கச் சென்றவர்கள் தம்மிருப்பிடந் திரும்பும் வரை குடும்பத்தினர் ஏங்கித் தவித்தனர். வந்த பின்னர் தான் நிம்மதி மூச்சினை விட்டனர்.
நவம்பர் 3ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரையுந் தனியார் மட்டுமல்லாது அரச திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய பாடசாலை அதிபர்கள் தமது அலுவலக முக்கிய ஆவணங்களை எடுத்து வந்துள்ளனர். அதனை எடுத்து வருவதற்கு விடுதலைப்புலிகள் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சில அரச நிறுவனங்களின் உடமைகளை அவர்களே எடுத்து வந்து அவ்வத்துறை தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோப்பாய் தாண்டி இருபாலையை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர்
அங்கு தமது நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்த வேளை 10ஆம் திகதி வரையுமே வலிகாமம் சென்றுவர அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே 10ஆம் திகதி வரையுமே தமது உடமைகளை எடுத்து வருவதில் அக்கறையுடன் காணப்பட்டாலும் இராணுவம் இருபாலைக்கு வந்தடைந்த பின்னர் எறிகணை வீச்சுத் தொடர்ச்சியாகக் காணப்பட்ட மையால் மக்கள் வலிகாமம் நோக்கிச் சென்று வருவதைப் படிப்படியாக நிறுத்திக் கொண்டனர். 10ஆம் திகதி வலிகாமத்திற்குப் போக்குவரத்து அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டதும் அன்றிலிருந்து பொதுமக்கள் வலிகாமஞ் செல்வது தடைசெய்யப்பட்டது.

Page 29
3.
சேரிடவாழ்வு
வலிகாமம் நிலப்பரப்பும் குடித்தொகையும்
தமிழரின் தாயகப் பிரதேசத்தில் பொருளாதார, சமூக, பண்பாட்டின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியாகும். இப்பிரதேசம் 1036.81 சதுரகிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்டதுடன் 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின் பிரகாரம் 738,791 மக்கள் வாழ்ந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரி ஆண்டுக்கான குடித்தொகை வளர்ச்சி வீதம் 1.3 ஆகக் காணப்படும் எனக் கருத்தில் கொள்ளும் போது, 1995ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும், எனினுங் காலத்துக்குக்காலம் மேற் கொள்ளப்பட்ட வெளியிடப் பெயர்வினால் - ஏறத்தாழ 25 சதவீதத்தினர் சர்வதேச மற்றும் உள்நாட்டு இடப்பெயர்வினால் வெளியேறியிருப்பார்கள் எனக் கருத்திற் கொண்டு நோக்கும் போது, இம்மாவட்டத்தில் 1995ம் ஆண்டு மார்கழி மாதத்தில் 750,000 மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 735,264 மக்கள் வாழ்ந்துள்ளதாக அரச செயலகம் தெரிவித்துள்ளது.
புவியியல் ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தினை நான்கு புவியியற் பிரதேசங்களாக பிரித்து நோக்கலாம். தீவுப்பகுதி, பெரிய யாழ்ப்பாணம் உட்பட வலிகாமம் பகுதி, தென்மராட்சி, வடமராட்சி என்பனவே அவையாகும். அட்டவனை 3.1 இல் புவியியல் ரீதியாக நிலப்பரப்பும் 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின் பிரகாரம் குடித்தொகையின் எண்ணிக்கையுந் தரப்பட்டுள்ளது.
36

அட்டவணை 3.1
புவியியல் ரீதியாக நிலப்பரப்பும் குடித்தொகையும் (1981)
பிரதேசம் நிலப்பரப்பு குடித்தொகை
ச.கி.மீ வீதம் மொத்தம் வீதம்
தீவுப்பகுதி 189.11 18.2 816O2 11.1
பெரியயாழ்ப்பாணம் 46.24 4.5 159600 21.6
வலிகாமம் 278.82 26.9 304630 41.2
தென்மராட்சி 233.55 22.5 71543 9.7
வடமராட்சி 289.09 27.9 121416 16.4
மொத்தம் O3681 100.0 73879 100.0
sg|TJib- Joffnd District in Focts and Figures, 1987,
தீவுப்பகுதி மக்களில் 78.0 சதவீதத்தினர் 1991ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் யாழ்ப்பாண நகரம் உட்பட வலிகாமம் பிரதேசத்திற்கும் தென்மராட்சி, வன்னிப்பிரதேசம் மற்றும் வெளிநாடுகளுக்கும் தூண்டப்பட்ட இடப்பெயர்வினை மேற்கொண்டிருக்கின்றனர். பெரிய யாழ்ப்பாணப் பிரதேசம் உட்பட வலிகாமம் பிரதேசத்தின் நிலப்பரப்பு மாவட்ட நிலப்பரப்பில் 314 சதவீதம் ஆகும். எனினும் இம்மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 62.8 சதவீத மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். தென்மராட்சி, வடமராட்சிப் பிரதேசம் இம் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 50.4 சதவீதமாகவிருந்த போதிலும் மொத்தக் குடித்தொகையில் 26.1 சதவீதத்தினரே இங்கு வாழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த புள்ளிவிபரத்தைக் கருத்திற் கொண்டு ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பினைக் கொண்ட வலிகாமப் பிரதேசத்தில் (பெரிய யாழ்ப்பாணம் உட்பட) மூன்றிலிரு பங்கு மக்கள் வாழ்ந்து வருவதற்கு அப்பிரதேசத்திற் காணப்பட்ட பெளதீக பண்பாட்டுக் காரணிகளின் சிறப்புத்தன்மையேயாகும் என்றால் மிகையாகாது.
வலிகாமம் பிரதேசத்தின் பெளதீக பண்பாட்டு வளங்கள்
வலிகாமம் பிரதேசத்தின் பெளதீகக் காரணிகளின் சிறப்புத் தன்மையினால் இப்பிரதேசங்களில் வரலாற்றுக் காலந்தொட்டு அதிகரித்த மக்கள் வாழ்ந்து வந்துள்ளமையை வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. வளமான மண்வளத்தினையும் அதிகளவில் நன்னீர் படுக்கைகளைக் கொண்ட தரைக்கீழ் நீர் வளத்தினையுங்
37

Page 30
கொண்டு காணப்படும் இப்பிரதேசம் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருங் குடித்தொகையின் விளைவாக நீர்வளம் அதிகளவில் நுகரப்படுவதனால் வலிகாமத்தின் கடற் கரையோரஞ் சார்ந்த பகுதிகளில் நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. எ.து எவ்வாறெனினும், பெளதீக வளத்தின் சிறப்புத் தன்மையின் விளைவாக மக்கள் இங்கு அதிகமாக வாழ்ந்து ள்ளமையால் அவர்களுடாகப் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்கள் வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேரிடங்களின் பெளதீகவளங்கள்.
இலங்கை அரசினாலும் விடுதலைப்புலிகளினாலும் விதிக்கப்பட்ட நடைமுறைகளை அனுசரித்தே வடமாகாணத்திற்கு வெளியே இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டிய நிலை கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்த போதிலும் கொழும்பிற் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வன்முறைகளின் விளைவாகத் தமிழர் பிரதேசத்திலிருந்து தென்னிலங்கைக்கு உள் இடப்பெயர் வினை மேற்கொள்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக வலிகாமத்திலிருந்து வெளியிடப் பெயர்வினை மேற்கொண்ட மக்களிற் பெரும்பாலானோர் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வன்னிப் பெருநிலப் பிரதேசங்களுக்கே சேரிடத் தெரிவினைத் தவிர்க்க முடியாதபடி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளனர். இருப்பினும் 1996ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை வலிகாமத்திலிருந்து தென்னிலங்கைக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டவர்கள் ஏறத்தாழ 25,000 ஆக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தென்மராட்சிப் பிரதேசம் பெளதீகரீதியாகச் சமதரைப் பாங்காகக் காணப்படுவதுடன் பெரும்பாலான பிரதேசங்களில் மணல் மண் மேற்பரப்பை மூடிக் காணப்படுகின்றது. எனினும் கைதடிப் பிரதேசங்கள் செம்மண்படையினால் மூடிக் காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் நன்னீர் வளத்தினைக் கொண்டிருக்கின்றது. வடகீழ்பருவப் பெயர்ச்சிக் காலத்திலேயே பெருமளவிற்கு மழையைப் பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் தரைக்கீழ் நீர் பெருமளவிற்கு உவர்த்தன்மை கொண்டதாகவும் இடத்திற்கிடம் நீரின் நிறம் வேறுபட்டதாகவுங் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. நன்னீர் கிணறுகள் கோவில் சார்ந்த பிரதேசங்களில் மட்டுமல்லாது கற்பார் காணப்படுமிடங்களிலுங் காணப்படுகின்றன. குறிப்பாக, வேம்பிராய் பகுதியினை உதாரணமாகக் குறிப்பிடலாம். இப்பிரதேசத்தின் மண்வளம், நீர்வளம் என்பனவற்றின் செல்வாக்கின் விளைவாகத் தெங்குப் பயிர்ச்செய்கையுடன் மா, பலா மற்றும் கானல் பயிர்வகைகள் பெருமளவில் பயிரிடப்படக்கூடியதாகவிருக்கின்றது.
வடமராட்சிப்பிரதேசம் பெளதீக ரீதியாக சமதரையாகக் காணப்படுவ துடன் பெரும்பாலான பகுதிகளில் நரை மண்ணையும் மணல் மண்ணையும் மேற்படையாகக் கொண்டு காணப்பட்டாலும் ஆங்காங்கே செம்மண் படலத்தினை
38

அவதானிக்க முடிகின்றது. வடமராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் நீரில் உவர்த்தன்மையையே கொண்டிருக்கின்றது. எனினும் தென்மராட்சியைப் போலன்றி வடமராட்சியில் நன்னீர் வளம் ஆங்காங்கே காணப்படுகின்றது. எனினும் குடித்தொகை அடர்த்தியாகக் காணப்படுமிடங்களில் நீர் படிப்படியாக உவர்த்தன்மை கொண்டதாக மாறிவருகின்றது.
வன்னிப் பெருநிலத்தின் தரைத்தோற்றமானது அலைவடிவில் அமைந்து காணப்படுவதுடன் வடமேற்கே அதிவரஸ் காலநிலையையும், ஏனைய பகுதிகளில் வரட்சிக் காலநிலையையும் கொண்டிருக்கின்றது. தரைக்கீழ்நீர்வளம் பெருமளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் பருவகால ஆறுகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் நீரைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. எனினும் அண்மைக் காலங்களிற் தொழில்நுட்பவிருத்தியின் காரணமாகக் குழாய்க் கிணறுகள் தோண்டப்பட்டு நீர் பெற்றுக் கொள்ளப்படினும் வரட்சிக் காலங்களில் இப்பிரதேசங்களில் நீரினைப் பெற்றுக் கொள்வது சிரமமானதாகவே உள்ளது. இப்பிரதேசத்தின் மண்வளம், நீர்வளம் என்பன பற்றி ஆங்காங்கே ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன எனினும் வன்னிப் பிராந்தியம் முழுவதும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர் காலத்தில் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியானது இப்பிரதேசத்திற்குக் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இங்கு அதிகரித்த குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படலாம்.
வலிகாமம் இடப்பெயர்வு
வலிகாமம் பிரதேசத்திலிருந்து தூண்டப்பட்ட வெளியிடப் பெயர்வினை மேற்கொண்டவர்கள் 125,779 குடும்பங்களைச் சேர்ந்த 515,062 மக்கள் என யாழ்ப்பாணம் அரச அதிபர் பணிமனைக் குறிப்புத் தெரிவிக்கின்றது. (Agendo OfE.S.C. Meeting 25.3.1996). இவர்களில் 79,690 குடும்பங்களைச் சேர்ந்த 268,583 மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராடகி, வடமராட்சி, கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பிரதேசச் செயலர் பிரிவிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர். இம் மாவட்டத்தை விட்டு 246,479 மக்கள் வெளி மாவட்டங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர் என மேலும் அக் குறிப்புத் தெரிவிக்கின்றது. இதே செயலகத்தினால் முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பளை செயலர் பிரிவிலும் 303,974 இடம்பெயர்ந்த மக்கள் வாழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு புள்ளி விபரங்களுக்கிடையில் 35391 மக்கள் அதிகமாகவிருந்துள்ளனர். அதாவது மக்களில் கணிசமானோர் வெளிமாவட்டங்களுக்குச் சென்றிருக்கலாம் அல்லது உலர் உணவு அட்டை விநியோகத்திற் குறைபாடுகள் காணப்பட்டிருக்கலாம். எ.து எவ்வாறெனினும் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது உடமைகளை இழந்து உளரீதியாகப் பாதிக்கப்பட்டு வலிகாமத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
39

Page 31
1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் ஈழத்தமிழர்களுக்கு ஓர் மறக்கமுடியாத நாள். அன்று தான் வரலாறு காணாத இடப்பெயர்வினை மக்கள் சந்தித்தனர். தொடர்ச்சியாக வெளியிடப்பெயர்வினை மேற்கொண்ட வலிகாமம் மக்களிற் பெரும்பாலானோர் தாம் எங்கு செல்வது என்றே தெரியாத நிலையில் நாவற்குழிப் பாலமூடாக வெளியேறினர். தென்மராட்சியில் மக்கள் நெருக்கடி அதிகரிக்கவே சாவகச்சேரி பேருந்து நிலையத்திலும் கொடிகாமத்திலும் ஒலிபெருக்கி மூலம் வன்னிப் பெருநிலப்பரப்புக்கும் வடமராட்சிக்கும் இடம்பெயருமாறும் அங்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. எனவே கணிசமான மக்கள் வன்னிப் பகுதியையே வடமராட்சியிலும் பார்க்க விரும்பியமையாலும் இலவச பிரயாண ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தமையாலும் நேரே கிளாலிக்குச் சென்றனர்.
தென் மராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே வீடுகளிற் பெருந் தொகையானவர்கள் வாழ்ந்து வருவதாலும் தொடரும் அடை மழையினாலும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கிக் காணப்பட்ட மையாலும் புதிதாக இடம்பெயர்ந்து வருவோரை ஏற்க முடியாத நிலை காணப்பட்டது. அதேவேளை வயோதிபர்களை அழைத்து வந்த குடும்பத்தினர் தொடர்ந்தும் அவர்களைத் தம்முடன் இடப்பெயர்வுக்குட்படுத்துவதிற் காணப்பட்ட சிரமத்தின் விளைவாக கைதடியில் உள்ள வயோதிபர் இல்லத்திற் சேர்த்துவிட்டுச் சென்றனர். நூற்றுக்குங் குறைவான வயோதிபர் வாழ்ந்த இவ்வில்லம் 450க்கு மேற்பட்ட வயோதிபர் வாழும் இல்லமாகச் சில தினங்களில் மாறியிருந்தமை குறிப்பிடத் தககது.
வன்னிப் பிரதேசத்திற்கு மக்கள் செல்வதற்கு வசதியாக இலவசப் போக்குவரத்து, படகுச்சேவை, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நிவாரண உதவிகளை வழங்கல் என்பனவற்றை அரசும் அரசு சாராத நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியமையால் மக்கள் தொடர்ச்சியாகப் கிளாலியைக் கடந்தனர்.
ஒட்டு மொத்தமாக வலிகாமம் மக்கள் தமது வாழ்விடத்தை விட்டுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டியிருந்தமையால் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் கொழும்புக்கு விரையத் தொடங்கினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களது விபரங்களை அறிய ஆவல் கொண்டவர்களாக இருந்துள்ளமையைப் பத்திரிகைகளில் வெளிவந்த "தேடப்படுகின்றார்கள்" என்ற விளம்பரங்கள் வெளிக்காட்டியிருந்தன.
பொஸ்னியாவில் நிகழ்ந்த இடப்பெயர்வினைப் போல வலிகாமம் மக்களால் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வினால் உணவு மற்றும் சுகாதார பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. தென்மராடகியிற் தொடர்ந்தும் நெருக்கடியினால் அவதியுற்ற மக்களிடையே வன்னிக்கான இடப்பெயர்வு தொடர்ந்தது. குறிப்பாக இடப்பெயர்வின் பத்தாவது நாளிலிருந்து
40

நாளாந்தம் 5,000 பேர் கிளாலியைக் கடந்து ஆலங்கேணியூடாகச் சென்றுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இ.'து இவ்வாறிருக்க நாவற்குழி, கைதடி, மட்டுவில் பகுதிகளை நோக்கிய இராணுவத்தினரது எறிகணை வீச்சு, விமானத் தாக்குதல்களினால் கைதடி, நாவற்குழி, நுணாவில், மட்டுவில், பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கா னோர் இடப் பெயர் வினை மேற்கொள்ள வேணி டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் இவர்களிற் பெரும்பாலானோர் மீண்டுந் தமது இருப்பிடத்திற்குச் சென்றனராயினும் நிரந்தரமாக வாழக்கூடிய பகுதிகளாக இவை இருக்கவில்லை. அத்துடன் வலிகாமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வின் பின்னர் இரு கிழமைக்குள் வடமராட்சியில் சில பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அகோர எறிகணை வீச்சினால் மக்கள் வன்னி நோக்கிய இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இராணுவம் இடைமறிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து தாம் வலிகாமத்திற்குத் திரும்பிச் செல்லலாம் எனவும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் படிப்படியாகக் குறைவடையத் தொடங்கி நவம்பர் 9ம் திகதி வரை மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரச் சென்று வந்தார்கள். 10ஆம் திகதியிலிருந்து அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் தாம் சென்றடைந்த பிரதேசங்களிற் தற்காலிகக் குடியிருப்புக்களை அமைப்பதிலுஞ் சென்றடைந்த உறவினர், நண்பர்கள், மற்றும் ஆதரவளித்தோர் இல்லங்களிற் குடியிருப்புகளை ஒழங்குபடுத்துவதிலும் ஆர்வங் கொள்வது தவிர்க்க முடியாததாகியது. வேறு சிலர் கிளாலிக் கடனிரேரியைக் கடந்து வன்னிப் பெருநிலப்பகுதிகளுக்குச் சென்ற வண்ணமிருந்தனர். ஏனெனில் இராணுவம் கோப்பாய், இருபாலை, கோண்டாவில் நோக்கி முன்னேறியமையேயாகும்.
வரலாறு காணாத இவ்வலிகாமம் இடப்பெயர்வினால் அகதிகள் பிரச்சனை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்தபோதிலும் இடப்பெயர்வாளருக்கு உதவும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டுப்படுத்தி வைத்திருந்ததுடன் இப்பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என அரசு கூறித் தட்டிக்கழித்துக் கொண்டும் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்திக் கொண்டும் இருந்தது.
பதினைந்து நாட்களை கடந்த நிலையில் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களில் 182 நலநோன்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 17,011 குடும்பங்களைச் சேர்ந்த 69482 மக்கள் அவற்றிற் தஞ்சம் புகுந்தனர். சாவகச்சேரி (32), கொடிகாமம் (27), கைதடி (46), வரணி (25), மட்டுவில் (20), ப்ளை (24), வடமராட்சி (8) ஆகிய பிரதேசங்களிலேயே மேற்குறித்த நலநோன்பு நிலையங்கள் செயற்பட்டு வந்தன. அதேவேளை நலநோன்பு நிலையங்களிற் தஞ்சமடைவதில் ஏற்பட்ட கஷ்டங்களை உணர்ந்தும் விரைவாகத் தமக்கு
41

Page 32
வசதியான இடத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் 1,500 குடும்பத்தினர் மடுக் கிராமத்திற்கு இடப்பெயர்வினை மேற்கொண்டனர்.
பொதுவாக தென்மராட்சிப் பகுதிகளிற் பல தரப்பட்ட இடப்பெயர்வாளர் தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளுக்கேற்ப உறவினர், நண்பர் மற்றும் ஆதரிப்போர் வீடுகளில் வாழ, ஒரு பகுதியினர் நலநோன்பு நிலையங்களிற் தஞ்சமடைய, வேறு ஒரு பிரிவினர் தமது வசதி வாய்ப்புகளுக்கேற்ப பொதுக்காணிகளிலும் கோவில் காணிகளிலும் ஏற்கனவே அறிமுகமானவர்களின் காணிகளிலும் கொட்டில்கள் அமைத்து வாழ முற்பட்டனர். இத்தகைய காணிகளிற் கொட்டில்கள் அமைத்து வாழ்வோர் ஒப்பீட்டு அடிப்படையில் வடமராட்சியிலும் பார்க்கத் தென்மராடகி, வன்னிப் பகுதிகளில் அதிகமாகவிருந்துள்ளனர். வடமராட்சிப் பகுதிகளுக்குச் சென்றவர்களிற் பெரும்பாலானோர் மத்தியதர வர்க்கத்திற்கு மேற்பட்டவர்கள். இவர்களிற் கணிசமானோர் அரச தனியார் துறைகளிற் தம்மை இணைத்துக் கொண்டவர்களாவர்.
இருபாலை, கோண்டாவில் பகுதிகளில் இரு சாராருக்குமிடையிற் சண்டை உக்கிரமடைந்த நிலையில் சூரியக்கதிர் நடவடிக்கையின் ஒரு மாத பூர்த்தி நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆகும். இக்காலத்தில் இராணுவம் யாழப்பாண நகரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருந்தமை ஒருபுறமிருக்க வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் எறிகணை வீச்சினை இராணுவம் நடாத்தி உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவற்றைத் தவிர்ப்பதற்காக வன்னிப் பகுதிக்குச் சென்று வீண் இழப்புக்களைத் தவிர்க்குமாறும் அறிக்கை ஒன்று நவம்பர் 20ஆம் திகதி வெளிவந்தது. இவ்வறிவித்தலைச் செவிமடுத்த மக்கள் வன்னிப் பிரதேசத்திற்குச் செல்லலாயினர், இதன் விளைவாகக் கிளிநொச்சிப் பாடசாலைகளில் மேலும் 50,000 அகதிகள் தஞ்சமடையவேண்டி ஏற்பட்டது.
மிகக் குறுகிய இடைவெளியில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் குறுகிய பாதையூடாகக் கொட்டும் மழையிலும் பல மைல் தூரம் நடந்து பாதுகாப்பாக வெளியேறிய நிகழ்வானது இந்நூற்றாண்டில் நிகழ்ந்த பாரிய நிகழ்வென்று வெளிநாட்டுச் செய்தியானர் வர்ணித்துள்ளனர். எனினும் அரசு பல்வேறு வழிகளைப் பின்பற்றி இந்த அவலநிலை வெளியுலகத்திற்குத் தெரியவருவதில் இடையூறுகளை ஏற்படுத்தியது என்றே கூறல் வேண்டும். மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டு ஒரு மாதம் பூர்த்தியடைந்த காலப்பகுதி, இராணுவம் முன்னேறி நல்லூர், கந்தர்மடப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் மோதும் காலப் பகுதியாகவிருந்துள்ளது. வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் குறிப்பாக உணவு, மருத்துவம், சுகாதாரம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறுவதிற் சிரமப்படுகின்றனர் எனவும் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்து வன்னிப் பிரதேசங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளுமாறு வேண்டுதல் மீண்டும் விடுக்கப்பட்டது.
42

வன்னியிற் போர் அபாயச் சூழலற்ற நிலையில் நிம்மதியாக வாழலாம் எனவும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தலாம் எனவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களுடாகப் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவுந் தெரிவிக்கப்பட்டது. இவ்விடப்பெயர்வினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் எங்கு செல்ல விரும்புகின்றார்களோ அவ்விடம் வரை இலவசப் பிரயாண ஒழுங்குகளைச் செய்து கொடுப்பதற்கு வடபிரதேச போக்குவரத்துக் கழகத்தினர் தயாராகவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வறிவித்தல் டிசெம்பர் மாதம், 3ஆம் திகதி உள்ளுர் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது. யாழ்பர்பாணம், கோட்டை, போன்றவற்றில் மோதல் இடம் பெற்ற காலப்பகுதியே இதுவாகும். வலிகாமம் பகுதிகளுக்கு இனிமேல் செல்வது இலகுவானதல்ல என்பதை மக்கள் உணரத் தொடங்கினர். எனவே தாம் வாழ்ந்த பகுதிகளிற் குடியிருப்புப் பிரச்சனைகளை அனுபவித்து வந்த மக்களிற் கணிசமானோர் இவ்வறிவித்தலுக்குச் செவிமடுத்தனர். எனவே வன்னிப் பகுதிக்கான இடப்பெயர்வு தொடர்ந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் நலநோன்பு நிலையங்களிலும் நண்பர்கள், உறவினர், ஆதரவளிப்போரின் வீடுகளிலும் 1995 டிசெம்பர் மாத முற்பகுதியில் 138,000 வலிகாமம் மக்கள் உள்ளிடப் பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் ஒரு பிரிவினர் 52 நலநோன்பு நிலையங்களிற் தங்க வைக்கப்பட்டனர். பளை (19), கரைச்சி (17), பூநகரி (8), கண்டாவளை (8) ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இவ் 52 நிலையங்கள் நிறுவப்பட்டன. இவர்களைத் தவிர மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கும் மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர்.
மீண்டும் இரு நாட்கள் கழித்து வலிகாமம் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அச்சுறுத்தித் தனது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரவழைக்க கிளாலி கடனிரேரிப் பாதையைத் தடை செய்வதற்கான முயற்சிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது என அறிக்கை ஒன்று வெளிவந்தது. அரசின் தந்திரோபாயத்தை முறியடிக்க வலிகாமத்தி லிருந்து இடம்பெயர்ந்த மக்களை வன்னிப் பகுதி நோக்கி இயன்றனவு செல்லுமாறு அவ்வறிக்கை மூலம் கேட்டுக்கொண்டனர். இவ்வறிவித்தலைக் கணிசமானோர் ஏற்றுக் கொண்டாலும் பெரும்பாலானோர் மீண்டும் ஒரு இடப்பெயர்வினை மேற்கொண்டு தொடர்ச்சியான துன்பத்தை அனுபவிக்க விரும்பாமற் காணப்பட்டனர். பலாலி, காங்கேசன்துறை பகுதியினைச் சேர்ந்தோரும் தீவுப்பகுதியைச் சேர்ந்தோரிற் பெரும்பாலானோரும் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். அவர்களுட்பட பெரும்பாலானோர் தொடர்ந்து இடம்பெயர்வதை விரும்பவில்லை. ஆனால் வலிகாமம் மக்களிற் பெரும்பாலானோர் இத்தகைய கஷடத்தை அனுபவிக்காதவர்கள். எவ்வாறெனினும் பாடசாலைகள், வணக்கத்தலங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் இருந்தவர்களுக்கு வன்னிக்குச் செல்லுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்ட போதும் அவர்களிற் பொருளாதார வாய்ப்பற்ற - எங்கு சென்றாலும்
43

Page 33
ஒரே நிலை எனக் கருதிய - சிறுஎண்ணிக்கையினர் அதனை ஏற்றுச் சென்றனர். கணிசமானோர் அரசினதும் அரசு சார்பற்ற நிறுவனங்களினதும் உதவியுடன் கொடடில்கள் (சிறுகுடிசைகள்) அமைத்துக் குடியிருக்கலாயினர். எனினுங் குறிப்பிட்ட சிலர் பல பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நிலைக்கு இடையூறாகத் தொடர்ந்தும் 1996ஆம் ஆண்டு ஏப்பிரல் பிற்பகுதி வரை அடம்பிடித்தவாறு வாழ்ந்து வந்தனர். இவர்களை வேறு இடங்களிற் குடியமர்த்துவதற்கு யாழ்ப்பாண அரச அதிபரும், அரச சார்பற்ற நிறுவனங்களும் முயற்சி செய்து வந்தனர்.
இ.'து இவ்வாறிருக்க, தென்மராட்சியின் நிலப்பரப்பு பெரிய அலகாகக் காணப்பட்டாலும் ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்களையே போவழிக்கக்கூடியதாக இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து தென்மராட்சிப் பிரதேசத்தில் 242,559 வலிகாமம் மக்களும் இணைந்து கொண்டனர். வடமராட்சியில் 50,616 மக்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பிரதேச செயலர்பிரிவில் 10,799 மக்களும் ஏற்கனவே இருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டதாக 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உதவி அரசாங்க அதிபர்களின் நிவாரண வேலைகள் தொடர்பான கூட்டத்திற் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான அதிகரித்த குடித்தொகையின் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தென்மராட்சிப் பிரதேசம் சாவகச்சேரி, கைதடி, மட்டுவில், கொடிகாமம், வரணி என ஐந்து பிரிவுகளாக பிரித்து ஐந்து பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1995ஆம் ஆண்டு டிசெம்பர் மாத நடுப்பகுதியில் வடமராட்சி நோக்கிய எறிகணைத் தாக்குதல்களினால் பருத்தித்துறை செயலர் பிரிவிலிருந்து 2850 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 255 குடும்பங்கள் எட்டு பொது இடங்களில் அகதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் இக்காலப் பகுதிகளிற் தொண்டமானாறு வடக்கு, தெற்குப் பகுதிகளிலிருந்து வரும் எறிகணை வீச்சிலிருந்து தப் பித்துக் கொள்ள இப்பகுதி மக்கள் வெளிஇடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். இத்தகையோரை வன்னியிற் குடியமர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை வடமராட்சிப் பகுதிகளில் கெருடாவில் தெற்கு, வடக்குப் பகுதிகள், வல்வெட்டித்துறை வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு,தென்மேற்குப் பகுதிகள், பொலிகண்டி மேற்கு, கிழக்கு பகுதிகள், அல்வாய் மேற்கு, வடமேற்கு, வடமத்தி, வடக்கு, வியாபாரி மூலை, புலோலி வடக்கு போன்ற கிராமசேவகர் பிரிவுகளிலிருந்து 2,666 குடும்பங்கள் எறிகணை வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இடப்பெயர்வினை மேற்கொண்டார்கள் எனப் பருத்தித்துறை பிரதேசச் செயலர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக வன்னிப் பிரதேசத்தில் குடியிருப்புக்கள் ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகவே காணப்படுகின்றன. புவியியல் ரீதியாக வன்னிப் பிரதேசம் பெருநிலப்பரப்பாகக் காணப்பட்ட போதிலும் அரசினால் 1953ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களால் குறைந்தளவு மக்களையே கவரக்கூடியதாகவிருந்துள்ளன. பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள்

மேற்கொள்ளப்படும் பட்சத்திலேயே அதிகளவு மக்களைக் குடியமர்த்த முடியும். அதாவது சிறப்பான திட்டமிடல் மூலமே இவ் வெற்றியைக் காணமுடியும். ஏனெனில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் மக்களைக் குடியமர்த்துவதற்குப் பெருந்தொகைப்பணம் செலவு செய்யப்பட்டது என்பதும் வெளிநாடுகளின் உதவிகள் பெருமளவிற்குப் பெறப்பட்டன என்பதுங் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், காடுகளாகச் காணப்படும் பிரதேசங்களை மனிதவலுவினை மட்டுங் கொண்டு குடிசைகள் அமைத்து குடியிருப்பினை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்வது கடினமான செயற்பாடு எனலாம். அதனைச் செய்வதற்குச் சிறப்பான உட்கட்டுமானத்துறை வேண்டப்படுகின்றது.
இடப்பெயர்வில் இழுவிசை, தள்ளுவிசை என்ற இரு காரணிகள் செயற்பட வேண்டும். தான் வாழும் பிரதேசம் தனக்கு வாய்ப்பானதல்ல என்ற நிலை ஏற்படும் பட்சத்திலேயே அவனுக்கு தள்ளுவிசை பயனளிக்கும். அதேபோலவே தான் சென்றடையும் பிரதேசம் தனக்கு மிகவும் வாய்ப்பானது என்று கருதும் பட்சத்திலேயே இழுவிசைக்கு உட்படுவான். ஆனால் வலிகாமம் இடப்பெயர்வோ தூண்டப்பட்ட தள்ளுவிசைக்குட்பட்டதேயொழிய இழுவிசையின் பாற்பட்டதல்ல. அதேநேரம் வலிகாமத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலுஞ் சுயதேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வசதி படைத்தவர்களாகவும் அப்பகுதிகளிலேயே தொழில்களை மேற்கொண்டிருந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்கு இவ்விடப்பெயர்வு நிர்ப்பந்தமானது. எனவே மீளச் செல்வதிற் கால தாமதம் ஏற்பட்டிருக்குமாயின் அவர்கள் புதிய இடச் சூழலுக்குத் தவிர்க்க முடியாதவாறு பழக்கப்படவேண்டியவர்களேயாவர்.
குடியிருப்புக்கள், குடிநீர் பற்றாக்குறை, மற்றும் பொருளாதாரச் சுமை ஒரு புறமிருக்க எறிகணை வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் ஆங்காங்கே நடாத்தப்பட்டமையால் மாற்று வழியில்லாது வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடப்பெயர்வு தொடர்ந்த வண்ணமிருந்தது. 1995ஆம் ஆண்டு டிசெம்பர் மாத முற்பகுதியல் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின் படி 87,526 குடும்பங்களைச் சேர்ந்த 232,127 பேர் வன்னிக்குச் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 34,819 குடும்பங்களைச் சேர்நத 137,971 மக்கள் இடப்பெயர்வாளராகவிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலப்பகுதியில் வடகீழ் பருவக்காற்று மழை பெய்து கொண்டிருந்தமை யாலும் கிடுகுகள் பெறுவதிற் சிரமமிருந்ததாலும் குடிசைகள் அமைத்தல் சிரமமாகவிருந்தது. எனவே நலநோன்பு நிலையங்களிலேயே மக்கள் தஞ்சமடைய வேண்டியிருந்தது. இந்நிலை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமன்றி வன்னிப்பிரதேசம் முழுவதுங் காணப்பட்டது. இதனால் கிளாலியைக் கடந்து வன்னியிற் குடியேறிச் சென்றோரிற் பல குடும்பங்கள் உழவுயந்திரங்கள், மாட்டுவண்டிகள், கிடுகுகள், குடிசை அமைப்பதற்குரிய மரங்கள், கூரைத் தகடுகள், குசினிச் சாமான்கள் உட்படப் பல பொருட்களையும் படகுகள் மூலமாக எடுத்துச் சென்றனர். மீனவர் குடும்பங்கள் கட்டுமரங்கள், படகுகள், றோலர்கள் போன்றவற்றைத் தம்முடன் எடுத்துச் சென்றனர்.
45

Page 34
இதேவேளை இக் காலப் பகுதியில் அரசாங்கம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை வந்து குடியேறுமாறும் சகல வசதிகளுஞ் செய்து கொடுக்கப்படும் எனவும் விண்ணப்பித்துக் கொண்டனர். எனினும் மக்கள் பாதுகாப்புக் கருதி படையினர் நிலைத்திருக்கும் வரை அங்கு திரும்பிப் போவதைத் தவிர்த்துக் கொள்வதையே விரும்பினர். இடப்பெயர்வினால் மக்கள் சொல்லொணாத் தொல்லைகளை அனுபவித்து வந்தபோதிலும் கிழக்கு மாகாண அனுபவத்தினை மக்கள் பேசிக் கொண்டனர்.
இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் பூர்த்தியடைந்து 1996ஆம் ஆண்டை எட்டிப்பிடித்தது. மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு எப்போது போவது என அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். வதந்திகள் பலவாறு நாளுக்கு நாள் வந்து கொண்டிருந்தன. தைப்பொங்கலைத் தத்தம் வீடுகளிற் கொண்டாடலாம் எனப் பலர் தமக்குள்ளே பேசிக் கொண்டனர். இதற்கு அளிக்கப்பட்ட காரணங்கள் வெவ்வேறுபட்டவையாகவிருந்தன. பொங்கல் நாள் வந்ததும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இ.'து இவ்வாறிருக்க, சோதிடர்களின் கணிப்புக்கள் வெவ்வேறுபட்டவையாகவிருந்தன. அவர்களது கணிப்புகளிலும் வலிகாமஞ் செல்வதற்கான நாட்களைத் தெரிவித்திருந்தனர். தமிழர் வருஷப்பிறப்புக்கு வலிகாமஞ் செல்லலாம் எனச் சிலர் கூறினர். அவர்களது சோதிடமும் பலிக்கவில்லை. புத்தாண்டும் வந்தது. மக்களின் அவலவாழ்வுக்கு விடிவு ஏற்படவில்லை. தொடர்ந்தும் வதந்திகளும் சோதிடர்களின் ஆருடங்களும் வந்த வண்ணம் இருந்தன. இதனை மக்கள் நம்பத் தயாராகவில்லை. மக்களின் துன்பங்களை மறைக்கவே இவ்வாறு பேசப்பட்டது என்பதைப் பின்னர் உணரக் கூடியதாக இருந்தது.
இ.து இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்து வர்த்தகர்களும் வசதி படைத்தவர்களும் கிளிநொச்சி வவுனியா நகரங்களில் வீடு, மற்றுங் காணிகளைக் கொள்வனவு செய்யத் தொடங்கவே அப்பிரதேசங்களில் என்றுமில்லாதவாறு காணிகளின் விலை உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளதைக் காணமுடிந்தது. இது ஒருபுறமிருக்க பாடசாலைகளிற் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்றி அவர்களுக்கு வாழ்விடத்தைக் கொடுக்க அரச நிலங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை வழங்கி அவர்களது குடியிருப்புப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட அரச அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதன் முதற் கட்டமாக வவுனிக்குளம், பாண்டியன் குளம் பகுதிகளில் 3000 குடும்பங்களுக்கு நிலங்களை வழங்கவெனத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு தைமாத முற்பகுதியில் தென்மராட்சி, வடமராட்சிப் பாடசாலைகளிலும், வணக்கத் தலங்கள், பொது நிறுவனங்களிலும் தஞ்சம் புகுந்த மக்களை வெளியேற்றி பாடசாலைகளை இயங்க வைப்பதற்காக யாழ்ப்பாண அரச செயலகம், யாழ்ப்பாண மாநகரசபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து 3000 வீடுகளை
46

அமைத்துக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக மிருசுவிலில் கரம்பகம் பிரதேசத்திலேயே இக்குடிசைகள் அமைக்க ஏற்படாகியிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தொகை வீடுகள் அமைக்கப்படவில்லை. யாழ்ப்பாண அரச செயலக அறிக்கையின் படி 300 வீடுகளே அமைக்கப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு தை மாத நடுப்பகுதியில் வன்னிப் பகுதியில் பல குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வலிகாமம் மக்களிடம் கையளிக்கப்பட்டது, புதுக்குடியிருப்பில் சிதம்பரம் குடியிருப்பு தோராவில் மில்லர் குடியிருப்பு, கோணாவிலில் காந்தரூபன் குடியிருப்புக்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. தொடர்ந்தும் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மேலும் பல குடியிருப்புக்கள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம், சிவநகள், பொன்நகர், அக்கராயன் குளத்தில் ஊற்றுப்புலம், பூநகரியில் முழங்காவில், நாச்சிக்குடா, மன்னார் மாவட்டத்தில் மடு, இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், கொம்பன், காஞ்சான் பகுதிகளிலும், முல்லைத்தீவில் பொன்நகள், இடைக்காட்டிலும் ஒட்டிசுட்டானில் புத்துவெட்டுவான், மாங்குளம் பகுதிகளிலும் புதுக்குடியிருப்பில் இரணைப்பாலப்பகுதிகளிலும் துணுக்காயில் அம்மிவைச்சான் குளத்திலும் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம், போரூட், ரெட்பானா, கெயர், மனித முன்னேற்ற நடுநிலையம், செடக் என்பன இதற்கு உதவியளிக்க முன்வந்தன. இதேவேளை வலிகாமத்திலிருந்து இடம் பெயர்ந்தோரைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு உதவ சர்வதேச நிறுவனங்களுக்கு அரசு தடை விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடப்படல் (3660 (6 b.
மேலும் தை மாதப் பிற்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் 192,547 மக்கள் என அப்பிரதேச அரச அதிபர் தெரிவித்துள்ளார். அவர் புள்ளி விபரரீதியில் பின்வருமாறு பிரதேச செயலர் அடிப்படையில் இடப்பெயர்வாளரின் எண்ணிக்கையினைக் கணிப்பிட்டிருந்தார். (அட்டவனை 3.2) யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பின்வரும் பிரதேசசெயலர் பிரிவுகளில் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவளிப்போர் வீடுகளில் 43,464 குடும்பங்களைச் சேர்ந்த 169,609 மக்கள் வாழ்ந்துள்ளார்கள் எனவும் அதேபோலவே 66 நலன்புரி நிலையங்களில் 5,715 குடும்பங்களைச் சேர்ந்த 22,938 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவுந் அவரால் தெரிவிக்கப்பட்டது.
47

Page 35
அட்டவணை 3.2 கிளிநொச்சி மாவட்டத்தின் இடப்பெயர்வாளர் (1996.01.20) நலன்நோன்பு நிலையங்கள்
பிரதேச செயலர் நலன் நோன்புநிலையம் குடும்பம் மொத்தமக்கள்
f
ரிவு
கரைச்சி 22 2391 9822 கண்டாவளை 14 1135 4381 பூநகரி 11 1176 4776 U66 19 1013 3959
மொத்தம் 66 5715 22938
கிளிநொச்சி மாவட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவளிப்போர் வீடுகள்
பிரதேசசெயலர் குடும்பம் மொத்தமக்கள்
பிரிவு
f
கரைச்சி 27571 106872 கண்டாவளை 54.71 23103
பூநகரி 6936 26995 606 34.86 12639
மொத்தம் 43464 169609
ஆதாரம்:- அரச அதிபர் காரியாலயம், கிளிநொச்சி, தை, 1996.
இ.து இவ்வாறிருக்க, வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்கள் வன்னிப் பிராந்தியத்திற்கு இடம்பெயரச் செய்வதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. மக்களின் பாதுகாப்பை மையமாகக்கொண்டே இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வறிவுறுத்தல்களுக்கு கணிசமான மக்கள் செவிசாய்த்த போதிலும் அரச ஊழியர்கள், தொழில்வாய்ப்பு உள்ளோர், குடிசை வாழ்வை விரும்பாதோர், வன்னிப் பிரதேசத்தின் பெளதீக பண்பாட்டு நிலைமையினை நன்கறிந்தோர் போன்றவாகள் இவ்வறிவுறுத்தல்களை ஏற்காதிருந்தனர். அதேவேளை ஏற்கனவே வன்னிப் பகுதிகளுக்கு குடும்பமாகச் சென்றோரிற் சிலர் அங்குள்ள அசெளகரியங்களைப் பொறுக்காது மீண்டும் தென்மராட்சி பகுதிகளுக்குத் திரும்பினர். குறிப்பாக பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டோரும் இவர்களுள் அடங்குவர்.
48

இலங்கை அரசு வடபகுதியில் இடம் பெயர் நீத மக்களை மீளக்குடியமர்த்துவதற்காகப் புனரமைப்பு, புனர்வாழ்வு என்பவற்றிற்குச் சகல அதிகாரங்களைக் கொண்ட அதிகாரசபை ஒன்று அமைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் அதன் செயற்பாடுகள் வடபகுதி மக்களைச் சென்றடையவில்லையாயினும் வலிகாமப்பகுதியில் செயற்பட்டு வந்துள்ளது. இதேவேளை வடபகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வலிகாமத்தைச் சேர்ந்தோரை வலிகாமத்திற்கு அழைத்துச் செல்ல அரசு முற்பட்டது. மாசி மாத நடுப்பகுதியில் இவ்வாறாக 100 தமிழர்கள் வலிகாமத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதியாக, வலிகாமத்திலிருந்து ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வினால் அரசியல் இலாபம் இருக்கலாம் எனக் கருதப்பட்ட போதிலும் அவர்கள் தம் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியாகப் பாரிய தாக்கத்திற்கு உட்பட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. சொத்திழந்து. சுகமிழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். எனினும் வன்னிப் பிரதேசத்திலா யினுஞ் சரி வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசத்திலாயினுஞ்சரி மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஏனெனில் அரசின் இராணுவ நடவடிக்கை மேலும் விஸ்தரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அது எப்போது, எங்கு இடம்பெறப் போகின்றது எனத் தெரிவித்தாலும் அவ்வாறு நிகழ்ந்தால் பாதுகாப்புப் பிரதேசம் எது என்பது தெரியாததாலும் நிம்மதியற்றவர்களாக விருந்துள்ளனர். இடப்பெயர்வினை மீண்டும் மேற்கொள்ள வேண்டிவரின் அதனைத் தாங்க முடியுமா என்பதையும் மக்கள் நினைத்துப் பார்க்காமலில்லை. மேலும் மக்கள் இடப்பெயர்வு நீடிக்குமாயின் உளரீதியாக மட்டுமன்றி பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் பாரிய தாக்கங்களைப் பெற வேண்டியது மட்டுமல்லாது உயிராபத்துக்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாதாக இருந்திருக்கும்.
49

Page 36
குடியிருப்புக்கள்
வலிகாமம் பிரதேசத்திலிருந்து 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி தொடக்கம் மக்கள் தமது சொத்து சுகங்களை இழந்து நவம்பர் 16ஆம் திகதி வரையிலான 18 நாட்களில் நாவற்குழிப் பாலமூடாக தென்மராட்சி, வடமராட்சி, வன்னி மற்றும் தென்னிலங்கை நோக்கி ஒட்டு மொத்தமாக வெளியேறினர். எனினும் முதல் ஐந்து நாட்களிலும் 95.0 சதவீதத்தினர் வலிகாமத்திலிருந்து வெளியேறிவிட்டனர். ஏனையோர் 16ம் திகதிக்கு முன்னரே வெளியேறிவிட்டனர். எனினும் ஏறத்தாழு 2000 மக்கள் இடப்பெயர்வினை மேற்கொள்ளாது வலிகாமத்திலேயே தங்கிவிட்டனர். இலங்கையில் வாழுகின்ற மொத்த இலங்கைத் தமிழரில் 25.0 சதவீதத்தினர் இத்தூண்டப்பட்ட இடப்பெயர்வுக்குட்பட்டுள்ளனர். இவ்விடப்பெயர்வில் வர்க்க, சமூக, மற்றும் சமூகப்படிமுறை வேறுபாடின்றி யாவரும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர் 61606)[TLD.
இடப்பெயர்வாளர் தமது குடும்ப அங்கத்தவர்களின் அளவு, வயோதிபர், குழந்தைகளின் எண்ணிக்கை, உடனலக் குறைவானோரின் எண்ணிக்கை, இடப்பெயர்வுக்கு முன்னரேயே தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளிலுள்ள நண்பர்கள், உறவினர்கள் போன்றோரின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை, விரைவிற் தாம் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடலாம் என்ற நப்பாசை, இடப்பெயர்வாளரின் பொருளாதார நிலை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவிற்குத் தற்காலிகக் குடியிருப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அவாநிலை போன்ற பல காரணிகள் இடப்பெயர்வாளரின் தூரத்தை நிர்ணயித்தது என்றே கூறவேண்டும்.
50

கொட்டும் மழையில் முதல் மூன்று நாட்கள் நாவற்குழியைக் கடந்தவர் களிற் பெரும் பாலானோர் எங்கு செல்வது என்பது தெரியாதவர்களாகவிருந்துள்ளார்கள். எனினும் தென்மராட்சி பகுதியையே முதலிற் தெரிவுசெய்யவேண்டியது பெரும்பாலானோருக்குத் தவிர்க்க முடியாததா கிவிட்டது. ஏனெனில் நல்லுார் முருகன் கோவிலடி, யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதிகளிலிருந்து நாவற்குழிப் பாலம் வரையிலான சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை முதலிரு நாட்களிற் கடுஞ் சிரமத்தின் மத்தியிற் சென்றடைவதற்கு 12 - 15 மணித்தியாலங்கள் பிடித்திருந்தன. இதனால் பசிக்களைப்பு, உடற் களைப்பு, உளக்களைப்பு ஆகியவற்றாற் தொடர்ந்தும் வன்னி, வடமராட்சிப் பகுதிகளுக்குப் பிரயாணம் செய்ய முடியாதவர்களாகக் காணப்பட்டனர்.
1981ம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டின்படி தென்மராட்சிப் பிரதேசச் செயலர் பிரிவில், சதுர கிலோமீற்றருக்கு 306 மக்கள் காணப்பட்டனர். 1996ம் ஆண்டு வலிகாமம் மக்கள் உள்வரவுக்குப் பின்னர் சதுரகிலோ மீற்றருக்கு 1340 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம், வடமராட்சிக்கு அடுத்ததாகப் பெருநிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம் தென்மராட்சி ஆகும். அத்துடன் பொதுவாக இப்பிரதேசக் குடியிருப்பு நிலங்கள் பெரிய நிலப்பரப்பாக இருக்கின்றன. வயல் நிலங்கள் தவிர்ந்த பெரும்பாலான மேட்டு நிலங்களிற் தென்னை, மா, பலா, புளி மற்றும் வான் பயிர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. எல்லை வேலிகளில் பூவரசு, முள்முருங்கை கதியால் போன்ற மரங்கள் நடப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு குடியிருப்புகளிலும் இலை, குழைகள் போடுவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஒட்டு மொத்தமாக வெளி யேறிய வலிகாமம் மக்களுடன் அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கைத்தொழிற் கூடங்கள், வர்த்தகர்களின் பொருட்கள், கால் நடைகள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாகத் தேவைப்படும் அத்தியா வசியப் பொருட்கள், போக்குவரத்துவாகனங்கள் போன்றனவும் இடப்பெயர்வு க்குட்பட்டிருந்தன. அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்து தமது செயற்பாடுகளைத் தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு மேற் பிடித்தது. எனினும் மக்களின் குறைந்தபட்ச உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன் இணைந்து அரச - அரசசார்பற்ற நிறுவனங்கள் பெரிதும் உதவின என்றே கூறல் வேண்டும். அவர்கள் பின்வரும் இடப்பெயர்வாளர் பிரிவுகளுக்குத் தங்கள் பணியை முடுக்கிவிட்டிருந்தனர்.
அப்பிரிவுகளாவன:-
அ) : மரநிழலில் வாழ்பவர்கள். ஆ) : பாடசாலைகள், வணக்கத்தலங்கள், பொதுக்
கட்டிடங்களிற் தஞ்சம் புகுந்தவர்கள்.
51

Page 37
@): குடிசைகள் அமைத்து வாழ்பவர்கள். F): உறவினர், நண்பர்கள், ஆதரவளிப்போர்
இல்லங்களில் வாழ்ப்வர்கள். 2-): வடபகுதிக்கு வெளியே செல்வதற்கான அனுமதி
யினைப் பெற்று வவுனியா மற்றும் தென்னிலங் கையில் வாழ்பவர்கள் என ஐந்த பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.
அ). மரநிழலில் வாழ்பவர்கள்
வரலாறு காணாத இடப்பெயர்வின் முற்பகுதியில் மக்கள் எங்கு செல்வது என்பதைக்கூட தெரிந்திராத வகையில் தாம் வந்து களைப்பாறிய இடங்களில் உள்ள மரநிழல்களிலும், கோவில்களிலும் மழை, குளிர் என்று பாராத வகையில் வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை கணிசமான மக்களுக்கு ஏற்பட்டது. இது நாவற்குழியிலிருந்து பளை மற்றும் கிளாலி வரையும் அவதானிக்க முடிந்தது. இத்தகைய குடியிருப்புக்கள் ஏறத்தாழ இரண்டு கிழமைகளில் இல்லாதொழிந்தன என்றே கூறல் வேண்டும். ஏனெனில் இவ்வாறு வாழ்ந்து வந்த மக்கள் வன்னிப்பிரதேசம் வரவழைக்கின்றது என்ற அறிவுறுத்தலினை ஏற்று எங்கு சென்றாலும் ஒரே வாழ்வு என நினைத்துச் செல்லத் தொடங்கினர். எனவே இத்தகைய குடியிருப்பு வாழ்வு நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை.
ஆ) பாடசாலைகள், வணக்கத்தலங்கள், பொதுக்கட்டிடங்களிற்
தஞ்சம் புகுந்தோர்.
பொதுவாகத் தூண்டப்பட்ட இடப்பெயர்வில் மேற்குறித்த பொதுக் கட்டிடங்களில் அதிகமானவர்களைத் தங்க வைப்பது சாதாரண வழக்காகும். வலிகாமம் பகுதிகளிலிருந்து குறித்த சில நாட்களுக்குள் தென்மராட்சியூடாக இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசங்களைச் சென்றடைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படவே விரைவாக தமது குடியிருப்புக்களை விட்டுச் சென்றவர்கள் தென்மராட்சி, வடமராட்சி, மற்றும் வன்னிப் பகுதிகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் வணக்கத்தலங்களிலும் பொதுக்கட்டிடங்களிலும் தஞ்ச மடைந்தனர். இடப்பெயர்வை மேற்கொண்டதிலிருந்து பதினைந்து நாட்கள் வரை ஏறத்தாழ 100,000 மக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் வாழவேண்டி யிருந்தது. அரசினாலும், அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் இவர்களுக்குச் சமைத்த உணவு ஆரம்பத்தில் வழங்கப்பட்டு வந்தது. மருத்துவ சுகாதார வசதியீனங்களைக் கருத்திற் கொண்டு காலத்துக்குக்காலம் வன்னிப்பகுதி க்குச் செல்லுமாறு ஆலோசனை கூறப்பட்டது. அதேவேளை ஏற்கனவே வன்னிப் பகுதிக்குச் சென்றோரிற் கணிசமானோர் தொடர்ந்தும் மேற்குறித்த வாழ்விடங்களில் தங்கியிருந்தனர். 20.01.1996ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் அறிக்கையின்படி 22,938 மக்கள் பொதுக் கட்டிடங்களிற் தங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52

பாடசாலைகளின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் பொதுக்கட்டிடங் களில் அன்றாட கடமையினை மேற்கொள்ளவும் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்ற வேண்டியது அவசியமாகவிருந்தது. குறிப்பாக முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையின் முன்பிருந்தே பாடசாலைகளை காலத்துக்குக் காலஞ் செயலிழந்திருந்தமையால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர்களின் வேண்டுகோளையேற்று தஞ்சமடைந்தோரை வெளியேற்றிவிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னிப் பகுதியிலும் பாடசாலைகள் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்விசார்துறைகளைச் சேர்ந்தோர் அடிக்கடி கூடி எவ்வாறு இதனை முன்னெடுத்துச் செல்வது என ஆலோசித்தனர். கல்வித் திணைக்களமும் கல்விப்பேரவையும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து மாணவர் கல்வியினை முன்னெடுக்கவேண்டும் என முயற்சிகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் பலவந்தமாக மக்களை வெளியேற்றாத நிலை காணப்படவே, தாம் தங்கியிருக்கும் பொதுக்கட்டிடங்களுக்கு வெளியில் சென்று வாழ்வது சிரமம் என்பதை உணாந்து வெளியேறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை மக்கள் விதித்திருந்தனர். தங்களுக்குக் குடியிருப்புக்கள், சுகாதார மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படின் வெளி யேறுவதற்குத் தயார் எனத் தஞ்சம் அடைந்தோர் கூறியிருந்தனர். இதனை உணர்ந்த அரச அதிபர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கு இலவசமாகக் குடியிருப்புக்கள் வழங்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங் களின் உதவியுடன் செயற்படத் தொடங்கினர். அத்துடன் வன்னிப் பிராந்திய த்திற்குச் சென்றால் பாதுகாப்புடன் சகல வசதிகளுங் கிடைக்கச் செய்யலாம் என்ற அறிவிப்பும் அதிகமான மக்களைக் கவர்ந்திழுத்திருந்தது. எனவே 1996ஆம் ஆண்டு தை மாதத்தில் இவ்விடங்களில் வாழ்ந்திருந்த மக்களில் ஏறத்தாழ 750 சதவீதத்தினர் மேற் குறித்த கட்டிடங்களை விட்டு வெளியே றினர். எஞ்சியோரிற் பெரும்பாலானோர் வன்னிப் பிராந்தியத்திறகுச் செல்ல விரும்பவில்லை. அதேநேரம் தமக்கு வசதியான குடியிருப்புக்கள் கிடைக் கப்பெறும் பட்சத்தில் மட்டுமே வெளியேறுவோம் எனக்கூறிவிட்டனர். எனவே இத்தகையோரை குறித்த சில பாடசாலைகளிற் தங்க வைத்து ஏனைய பாடசாலைகளை விடுவித்தனர். குறிப்பாக கிளிநொச்சியிலுள்ள பாடசாலை களிலும் தென்மராட்சியில் றிபேக்கல்லூரி, மகளிர் கல்லூரி, வீரசிங்கம் மகாவித்தியாலயம், விக்கினேஸ்வரா வித்தியாலயம், வரணி மகாவித்தி யாலயம் போன்ற பாடசாலைகளில் தொடர்ந்தும் அகதிகள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களுக்கு அரசாங்கம் உலர் உணவினை நிறுத்தப்போவதாகக் கூறிய போதிலும் அவர்கள் வெளியேற மறுத்தனர் கல்வித்திணைக் களமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு வழிவிடுமாறு கூறிய போதிலும் வாழ்வதற்கு இருப்பிடம் இல்லாத நிலையிற் பிள்ளைகளுக்குக் கல்வி எதற்கு எனத் தஞ்சம் அடைந்தோர் கூறியிருந்தமை இங்கு நோக்கற்பாலது. இந்நிகழ்வு சூரியப் பிரகாசம் 11 நடவடிக்கை தொடரும் வரை காணப்பட்டிருந்தமையை காண முடிந்தது.
53

Page 38
இ) குடிசைகள் அமைத்து வாழ்பவர்கள்.
வரலாறு காணாத இவ்விடப்பெயர்வின் விளைவாக மக்களிடையே உணவு, மற்றும் உறையுளைப் பொறுத்தவரை பல்வேறுபட்ட சிரமங்களு க்குட்பட்டனர். தமிழர்களைப் பொறுத்தவரை "எலிவளையானாலும் தனிவளை வேணும்" என்பதைப் போல் மக்கள் கூட்டுக்குடும்ப முறையினை பெரிதும் விரும்புவதில்லை. தேசவழமை கூட இதனை வெளிப்படுத்தியிருக்கின்றது. தென்மராட்சி, வடமராட்சி, மற்றும் வன்னிப் பகுதிகளிற் தவிர்க்கமுடியாதவாறு கூட்டுக்குடும்ப அமைப்பு முறையினை ஏற்றுக் கொள்ள வேண்டியவர் களானார்கள். எனினும் பல்வேறுபட்ட பொருளாதார சமூக பண்பாட்டு நிலைமைகள் காரணமாகத் தவிர்க்க முடியாதவாறு தனிக்குடித்தனங்களை அமைத்து வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இடப்பெயர்வின் ஆரம்ப காலங்களில் தென்மராட்சிப் பகுதிகளில் பொதுக்கட்டிடங்களில் வாழ்ந்தவர்கள் வன்னிப்பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டதையடுத்துப் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகச் சிறிய சராசரி 10 நீளம் X 8 அகலமான குடிசைகளைப் பொதுக் காணிகளிலும் கோவிற் காணிகளிலும் உள்நாட்டில் இல்லாதவர்களின் காணிகளிலும் அமைக்கத் தொடங்கினர். இக்குடிசைகளைப் பொறுத்தவரை மலசலகூட வசதிகளோ அன்றில் குடிநீா வசதிகளோ பெருமளவிற் காணப்படவில்லை. மலசல கூடமானது திறந்த வெளியிலோ அன்றில் பற்றைக்காடுகளிலோ காணப்பட்டிருந்தன. இத்தகைய சுகாதாரச் சீர்கேட்டினைத் தவிர்த்துக் கொள்வதன் பொருட்டுக் குறிப்பிட்ட சில குடும்பத்தின ருக்கு ஒரு மலசலகூடத்தினை அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் யாழ்ப்பாண மாநகர சபையின் உதவியுடன் செய்து கொடுத் தனர். எனினும் இவை போதுமானதாக இருக்கவில்லை. இத்தகைய சிறிய குடியிருப்புக்கள் தென்மராட்சி மற்றும் வன்னிப் பகுதிகளிலுங் காணக்கூடிய தாகவிருந்தன. வருமானங்குறைந்தவர்கள் மட்டுமல்லாது மத்தியதரவர்க்க த்தினர் கூட இரு காரணிகளின் விளைவாக மேற்படி குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். இத்தகைய குடியிருப்புக்கள் தென்மராட்சி, மற்றும் வன்னிப் பிரதேசங்களிற் காணக்கூடியதாகவிருந்தன. எனினும் வடமராட்சியில் மிகக் குறைவாகவே குடிசைகளை அமைத்திருந்தனர்.
1. கூட்டுக்குடும்ப அமைப்புமுறைகளை விரும்பாதவர்கள். 2. முதலில் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவளிப்போரின் இல்ல ங்களில் வாழ்ந்து பின் வீட்டுரிமையாளர்களுடனான மனக்கசப்பின் விளை வாகக் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
வசதியற்றவர்கள் மற்றும் கூட்டுக்குடும்ப அமைப்பை விரும்பாத மத்தியதர வர்க்கத்தினர் நண்பர்கள், உறவினர்களின் காணிகளில், குறிப்பாக கிணறு, மலசல கூட வசதிகள் காணப்படுமிடத்து அக்காணிகளிற் தமது சொந்தச்
54

செலவிலோ அன்றில் அரசினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும்
குறிப்பாகத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் உதவியுடன் குடிசைகள் அமைத்து வாழத் தொடங்கினர். இந்நிலையினைப் பெரும்பாலும் தென்மராட்சி, வடமராட்சிப்பகுதிகளிற் காணமுடிந்தது. வன்னிப் பிரதேசங்களின் ஏற்கனவே விருத்தி செய்யப்பட்ட பகுதிகளில் இத்தகைய குடியிருப்புக்கள் மத்தியதர வர்க்கத்தினைப் பொறுத்தவரை வசதியற்றதெனினும் தற்காலிகமான குடியிருப்புக்கள் எனக் கருதிக் காலத்தைக் கடத்தினர் என்றே கூறல் வேண்டும். மிருசுவிலில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களும் மத்தியதர வர்க்கத்தினரும் ஏராளமான குடிசைகளை அமைத்து வாழ்ந்துவந்தனர். மத்தியதர வர்க்கத்தி னைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபரின் அவலநிலையினை உதாரணமாகக் கொள்ளலாம். அதிபரின் குடிசை 15 X 10 பரப்பளவினைக் கொண்டது. அவரும் அவரது ஏழு உறுப்பினர் கொண்ட குடும்பமும் அக்குடிசையில் வாழ்ந்து வந்தனர். ஏற்கனவே அவ்வதிபருக்கு தனது சொந்தக் கிராமத்தில் ஒரு விடும், யாழ்ப்பாணத்தில் ஒரு விடும் சொந்தமாகவிருக்கின்றது. அதிபரும் அவர்களது வயது வந்த பிள்ளைகளும் தென்னைமர நிழலிலேயே படுத்துற ங்குவது வழக்கம். இந்நிலையில் அவரது தந்தையார் இறந்துவிட்டார். அக் குடிசையிலேயே மரணச்சடங்கு நடைபெற்றதுடன் அடுத்து வந்த செலவுகளுஞ் செய்யப்பட்டன. எனவே அவ்வதிபர் தனது நிலையையிட்டு மிகவும் மனம் வருந்தியிருக்கின்றார். வேறொரு உதாரணத்தையும் இவ்விடத்திற் கூறிச் செல்வது முக்கியமானதாகும். ஓர் பாடசாலை அதிபரும் தபால் அதிபரும் இணைபிரியாத நண்பர்கள். இருவரது குடும்ப எண்ணிக்கை சராசரி ஏழு பேராகும். இவர்கள் இடப்பெயர்வின் ஆரம்ப காலங்களில் உறவினர்களுடன் இணைந்திருந்தனர். ஆனால் அவ்விடத்தில் அவர்களுக்கு வாழ் விருப்பமில்லாததால் வேறு இடத்திற் குடிசை அமைத்து வாழ்வதே நன்று எனத் தீர்மானித்தனர். கல்வீடு அமைப்பதற்காக அத்திவாரம் போடப்பட்டு ஏழு அடி உயரத்திற் சுவருக்கு அரிகல்லும் அடுக்கப்பட்டிருந்தன. அவ்விடத்தை நண்பர்கள் மூலம் பெற்றுக் கொண்டு இருவரும் இரண்டு அறைகளுக்குக் கூரைபோட்டு, அதில் வாழ்ந்து வந்தனர். எனினும் அவர்களிடையே இருந்த நட்பு படிப்படியாக பாதிப்படைந்து இறுதியில் அவர்களிலிருவரும் பகையாளிகளாக மாறியதைக் காணமுடிந்தது. இதே போலவே பெரிய காணிகளில் பலர் கூடி குடிசைகள் அமைத்து வாழ்ந்திருந்த போதிலுங் கிணறு, மலசலகூடம், சுகாதாரம் பேணாமை, சிறுவர், குழந்தைகளிடையே சண்டை போன்ற பல காரணிகள் குடிசைவாழ் மக்களிடையே பல்வேறு பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளமையைக் காணமுடிந்தது. அதேபோல ஆண்களிடையே மதுபான பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கூட பல குடிசை வாழ் குடும்பத்தவர்களிடையே பிணக்குகள் ஏற்படக் காரணமாயிருந்துள்ளன. இவ்வாறாக பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வந்தாலும் மாற்றார் தலையிடாதவாறு குடும்ப வாழ்வு பல குடும்பங்களிடையே காணப்பட்டிருந் ததையும் அவதானிக்க முடிந்தது.
55

Page 39
கூட்டுக்குடும்ப அமைப்பினை விரும்பாத இடப்பெயர்வாளரிற் பெரும் பாலானோர் இடப்பெயர்வின் ஆரம்பகாலங்களில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலேயே குடியிருந்தனர். ஆனால் அங்கு காணப்பட்ட இடநெருக்கடி, மற்றும் வீட்டு உரிமையாளருக்கும் இடப்பெயர்வாளருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், கிணற்று நீர்ப்பற்றாக்குறை, மலசலகூடப் பற்றாக் குறை போன்ற பல காரணிகளால் குடிசை அமைத்து தனிக்குடித்தனம் நடத்த விருப்பம் கொண்டவர்களும் உளர். சில வீட்டு உரிமையாளர்கள் நேரடியாகவே வேறு குடியிருப்புக்களைப் பார்த்துப் போகுமாறு கூறினர். வேறு சிலர் நேரடியாகக் கூறாது மறைமுகமாகப் பல்வேறு செயல்கள், நடவடிக்கைகள் வாயிலாக வீட்டில் குடியிருந்தோரை வெளியேற்றினர். அல்லது வெளியேறுமாறு தூண்டப்பட்டனர் என்றே கூறல் வேண்டும். எனினும் தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பகுதிகளிற் சகல குடும்பங்களிடையேயும் இத்தகைய செயற்பாடுகள் இருந்ததெனக் கூறமுடியாவிட்டாலும் கணிசமான குடும்பங்களில் இதன் விளைவாகப் பெரிய கஷ்டங்களை எதிர் நோக்கினர் என்பதை மறுக்க முடியாது.
பொதுவாகக் குடிசைகள் அமைத்தலுக்கான செலவு சராசரி 10,000/- - 20,000/- ரூபாவுக்கிடைப்பட்டுக் காணப்பட்டது. சாதாரண காலங்களிற் கிடுகு மட்டை ஒன்று 4/- ரூபாவே பெறுமதியாகும். ஆனால் இடப்பெயர்வின் ஆரம்பத்தில் இது 16/- ரூபாவிலிருந்து காலஞ் செல்லச்செல்ல 26/- தொடக்கம் 30/- ரூபா வரையும் உயர்ந்து சென்றுள்ளது. இதேபோலவே பனைமரம் முழம் ரூபா 35/- வும், தென்னைமரம் முழம் ரூபா 20/- வாகவும் சலாகை ரூபா 25/- ஆகவும், கயிறு போன்றவற்றின் விலை பல மடங்காகவும் அதிகரித்திருந்தன. எனவே குடிசைகள் அமைப்பதில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் படிப்படியாகக் கிடைத்திருந்த போதிலுங் குறித்த மக்களுக்கு சென்றடைவதில் பல சிக்கல்களை எதிர்நோக்கினர்.
குடிசைகள் அமைப்பதைப் பொறுத்தவரை "இ" உணவு அட்டை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இந்த அடிப்படையிற் தென்மராட்சிப்பகுதியில் 26,940 குடும்பங்களுக்கு உடனடியாகக் குடிசைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அடையாளங் காணப்பட்ட போதிலும் 23,148 குடும்பங்களுக்குச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் பிளாஸ்டிக் சிற்றுக்கள் வழங்கப்பட்டன. இவை குடிசைகள் அமைப்பதற்கு பயன்பட்ட னவா என்பது கேள்விக்குறியாகும். மேலும் ரி.ஆர்.ஒ. ரி.ஆர்.ஆர்.ஒ, ஐ.சி.ஆர்.சி. யு.என்.எச்.சி.ஆர்., கெயர், றெட்பானா மற்றும் அரசாங்கம் போன்றன பல குடிசைகள் அமைப்பதற்குப் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்துள்ளன. அத்துடன் ஐ. சி. ஆர். சி, யு. என். எச். சி. ஆர்., கெயர் நிறுவனங்கள் வீட்டுத்தளபாடங்களை ஆங்காங்கே வழங்கியுள்ளனர். இவை வீட்டுத் தளபாடங்களை எடுத்துவராத சகல மக்களுக்குங் கிடைக்கும் வகையில் வழங்கப்படாதது பெருங் குறைபாடு என்றே கூறல் வேண்டும்.
56

குடிசை அமைத்து வாழ்பவர்களிடையே சுகாதார மருத்துவச் சீர்கேடு கள் மட்டுமன்றி மலசலசுடப் பிரச்சனைகளுஞ் சர்வசாதாரணமாகக் காணப் பட்டிருந்தன. குறிப்பாக, அரச அதிகாரிகள் குறிப்பிட்ட சில குடும்பங்கள் இணைந்து கேட்கும் பட்சத்திலேயே தற்காலிக மலசலசுடங்களை அமைத் துக் கொடுத்தனர். குறிப்பாக 30 குடிசைகள் - குடும்பங்கள் உள்ள இடங் களில் ஒரு மலசலகூடம் என அமைத்துக்கொடுத்தனர். இவற்றைத் தவிர பல குடிசை வாழ் மக்கள் குழிகள் அமைத்து அதற்குப் பலகை போட்டிரு ந்தனர். மலம் துர்நாற்றத்தைத் தராதவாறு சாம்பல், மற்றும் உமி போன்ற வற்றைப் பயன்படுத்தினர். இத்தகைய மலசலசுடங்கள் பெரும்பாலான குடிசை வாழ் மக்களிடையே காணப்பட்டிருந்தன.
தற்காலிக மலசலகூடத்தினை யாழ்ப்பாண மாநகரசபைப் பொறியிய லாளர்கள் மற்றுஞ் சுகாதாரத் திணைக்களத்தினர் வடிவமைத்திருந்தனர். அதாவது கழிவு சென்றடைவதற்கு இரண்டு பரல்களை இணைத்து நிலத்தின் அடியில் வைப்பதுடன் கோப்பையுடன் இணைப்பதற்குரிய ஒழங்குகளுஞ் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இருக்கையினை மாம்பலகையிற் செய்திரு ந்தனர். இதனைச் சுற்றி கிடுகுவேலி அடைப்பதுடன் மழை, வெயில்படாத வாறு கூரையும் அமைக்கப்பட்டிருந்தன. இம்மலசலகூடத்தைத் தனியார் மூலஞ் செய்வதாயின் 6,500/- ரூபா தேவைப்படும். குடிசைகள் அதிகமாகக் காணப்படுமிடங்களில் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி யுடன் இவை இலவசமாகக் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. வசதியுள்ள தனியார் பணம் கொடுத்துச் செய்து வைத்திருந்தனர். இம்மலசலகூடம் இரண்டாண்டுகளுக்குப் பயன்படும் என்ற போதிலும் பல குடும்பங்களின் பயன்பாட்டிலிருந்தமையால் மூன்று மாதங்களிலேயே மலம் நிறைந்து விடுவதால் அதனைக் கைவிடவேண்டிய நிலையும் பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை அறிய முடிந்தது.
ஈ) உறவினர், நண்பர்கள், மற்றும் ஆதரவளிப்போர்
இல்லங்களில் வாழ்பவர்கள்.
இடப்பெயர்வினை மேற்கொண்டு தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வன்னிப் பிரதேசத்திற்குச் சென்றடைந்தவர்களில் ஏறத்தாழ 600 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் மேற்குறித்தவர்களின் இல்லங்களில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தொட்டு தொடர்ச்சியாக 16ஆம் திகதிவரையும் வந்தடைந்த மக்களுக்குப் புகலிடம் அளித்து ஆதரவளிக்குமாறு பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையிலும் மக்களைத் தங்கள் வீடுகளிற் குடியிருத்தினர். பல இடப்பெயர்வாளர் தமது உறவினர் வீடுகளைச் சென்றடைந்தனர். வேறு பலர் தமது நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றனர். வேறு சிலர் தமக்கு முன்னர் ஒரு போதும் அறிமுகமில்லாதவர்களின் அல்லது
57

Page 40
உறவினர்களின் உறவினர், அல்லது நண்பர்களின் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றனர். ஏனெனில் வலிகாமத்திலிருந்து சில மைல் தூரத்தை பல மணி நேரத்திற் கடந்து வந்தமையாற் பசி, மற்றுங் களைப்பினால் எங்காவது ஒரு இடத்தில் ஆறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மேற்குறித்தவாறு வீடுகளுக்குச் சென்றடைந்தனர் எனலாம்.
மேற்குறித்த வரலாறு காணாத இடப்பெயர்வானாலும் சமூக அமைப்பு, மற்றும் வர்க்கபேதங்களுக்குட்பட்டே இடப்பெயர்வாளர் வரவேற்கப்பட்டனர். அதாவது சாதி,மற்றும் தொழில், பொருளாதார நிலை, அந்தஸ்து போன்றவ ற்றிலும் இடப்பெயர்வாளராயினுஞ் சரி இல்லிடம் அளித்தவர்களாயினுஞ் சரி பெருமளவிற்கு அதனை அனுசரித்தே நடந்து கொண்டதைக் காணமுடிந்தது. இதற்கு விதிவிலக்கு இல்லாமலும் இலலை. மேலும் மேற்குறித்த பகுதிகளில் வீடுகளில் இடப்பெயர்வாளர்களை அனுமதிக்காதுவிடின் கட்டாயப்படுத்தி வீடுகளிற் தமக்கு அறியாதவர்களைக் கொண்டு வந்து குடியமர்த்திவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக இயன்றளவு விரைவிற் தமக்கு அறிமுகமானவர் களைக் குடியமர்த்துவதிற் சென்றடைந்த இடத்துப் பிரதேச மக்கள் ஆர்வங் கொண்டிருந்ததை ஆரம்பத்திற் காணமுடிந்தது. எ.து எவ்வாறெனினுஞ் சென்றடைந்த பிரதேசங்களிலுள்ள மக்கள் தமது உடன் பிறவாச் சகோதரர்கள் என்ற கோதாவில் வரவேற்கப்பட்டனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. மேற்குறித்த பிரதேச வீடுகளில் ஆகக்கூடியது 75 பேராகவும் ஆகக்குறைந்தது 15 பேராகவும் இடப்பெயர்வின் ஆரம்ப காலங்களில், குறிப்பாக தென்மராட்சி, மற்றும் வன்னிப் பகுதிகளில் வாழ்ந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இடப்பெயர்வாளரில் கணிசமானோர் புதிய இடங்களைத் தெரிவு செய்து சென்றுள்ளனர். பொதுவாகத் தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகள் பெரும்பாலானவற்றில் சூரியகதிர் 11 இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்துள்ளனர் எனலாம்.
இடப்பெயர்வாளர் பொருளாதார ரீதியாக பலதரப்பட்டவர்களாக இருந் துள்ளனர். அதாவது அதிக வருமானம் கிடைக்கப்பெறுவதுடன் சேமிப்பு க்களை வைத்திருந்தவர்கள் சிலர், மாதாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்த வர்கள் வேறு சிலர், நாளாந்த வருமானத்தை நம்பியவர்கள் சிலர், இலவச உலர் உணவினைப் பெற்றுச் சீவிப்பவர்கள் பலர், வெளிநாட்டுச் செலவா ணியை நம்பி வாழ்பவர்கள் சிலர் எனப் பலதரப்பட்டவர்களாவர். எவ்வாறெ னினும் வலிகாமத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களிற் பெரும் பாலானோர் ஏதோ வகையில் நகை நட்டுக்களாகச் சேமிப்பைக் கொண்டிரு ந்தவர்கள். பணக்கவுடம் வரும் வேளைகளில் அதனை விற்றுஞ் சீவித்து ள்ளனர். கணிசமானோர் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் வாழவேண் டிய நிலை ஏற்பட்டது.
அதேவேளை தென்மராட்சி மக்களிற் பெரும்பாலானோரின் குடியிருப்பு நிலங்கள் வலிகாமம் பிரதேசத்துக் குடியிருப்புக்கள் போலன்றி விசாலமான
58

தாகும். எனவே அந்நிலங்களிற் பராமரிக்கப்படும் தென்னை, மா, பலா, முருங்கை, கொய்யா, வாழை, புளி மரங்களின் மூலம் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியனவாகவிருக்கின்றன. இவை தவிர பெரும்பாலானவர் களின் வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை வைத்திருப்பதுடன் தாழ்நிலங்களி காலபோக நெற்செய்கையையும் மேற்கொள்கின்றனர். எனவே தென்மராட்சிப் பிரதேச மக்களிற் பெரும்பாலானோர் விவசாயத்துடன் தொடர்புடைய வருமான த்தையே பெரிதுந் நம்பியுள்ளனர் எனலாம். இவை தவிர அண்மைக் காலங்களிற் கல்விவளர்ச்சி குறிப்பாகக் கலைப்பிரிவில் உயர்கல்வியைப் பெற்றும் வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளுக்கு அரசியற்தஞ்சம் என்ற போர்வையிற் பொருளாதாரத் தேட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுக் கணிசமானோர் சென்றுள்ளனர். எனினும் வலிகாம மக்களோடு ஒப்பிடும் போது தென்மராட்சி மக்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட வருமானத்தினைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சிப் பிரதேசத்திற் பெரும்பாலான நிலங்கள் மக்கள் வாழ்க் கைக்கு உவப்பானதாகவில்லை. வடமராட்சி தென்மேற்குப் பிரதேசம் விவசாய உற்பத்தியைப் பொறுத்தவரை சிறப்புடையதாகவிருக்கின்றது. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சி பெற்ற பிரதேசங்களில் வடமராட்சி முக்கியமானது. பொதுவாகப் பெரும்பாலானவர்கள் கல்வியறிவுடையவர்கள். எவ்வாறெனினும் தென்மராட்சி மக்கள் இடப்பெயர்வாளரை வரவேற்றது போல வரவேற்கமுடியாதிருந்தது எனினும், நண்பர்கள், உறவினர்கள் போன்ற இடப்பெயர்வாளர்களைத் தம்முடன் இணைத்து வைத்திருந்தனர் என்றே கூறல் வேண்டும். இதற்குக் காரணம் வலிகாமத்திற்கும் வடமராட்சிக்கும் இடையிற் காணப்பட்ட தூர இடைவெளியும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக வடமராட்சி நோக்கிய இடப்பெயர்விற் பெருமளவிற்கு அரச மற்றும் தனியார் துறைகளிற் தொழில் வாய்ப்புப் பெற்றவர்களும் மத்திய தரவர்க்கத்தினருமே அதிகமானவர் களாகவிருந்துள்ளனர்.
வன்னிப்பிரதேச மக்களின் பொருளாதார நிலை விவசாய நடவடிக்கை யுடன் தொடர்புடையதாயினும் அண்மைக்காலங்களிற் கல்வியில் வளர்ச்சி அடைந்து வரும் பிரதேசமாகவுள்ளது. இப்பிரதேசத்தில் மூன்று வகையான வேறுபட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1. பூர்வீகமாக வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
2. 1953ம் ஆண்டினையடுத்து குடியேற்றத்திட்டங்களுடன்
தொடர்புடைய யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.
3. இந்தியத்தமிழர் என்பவர்களே அவர்களாகும்.
இவர்களில் இரண்டாவது வகையினைச் சேர்ந்தோர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சென்று குடியேறிவர்களும் அவர்களது வாரிசுகளுமாவர். இடப்பெயர்வில் வன்னி மாவட்டங்களைத் தெரிவு செய்தோர் தமது உறவினர்,
59

Page 41
நண்பர்கள் அங்கு இருக்கின்றனர் என்ற காரணத்தினால் அப்பிரதேசங்கள் கவர்ச்சிப் பகுதிகளாக இடப்பெயர்வாளருக்கு அமைந்திருந்தன. அது மட்டு மல்லாது வன்னி மாவட்டங்களில் அரச மற்றும் அரசசார்பற்ற தொழில்களில் முன்னெப்போதோ ஈடுபாடுகொண்டிருந்தவர்கள், தற்போது தொழிலாற்றி வருபவர்கள் போன்றவர்கள் தமது நண்பர்களின் நட்பு கிடைக்கும் என்ற நோக்கிலுஞ் சென்றடைந்தனர். இவை தவிர விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று வன்னி மாவட்டங்களுக்கு இடப்பெயர் வினையும் மேற்கொண்டிருந்தனர். இத்தகையோரில் ஒரு பிரிவினர் அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும், தனிப்பட்ட ரீதியிலுங் குடிசைகள் அமைத்து வாழ, மறு பிரிவினர் தொடர்ந்தும் பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். உறவினர்கள், நண்பர்களிடஞ் சென்றவர்களிற் பெரும்பாலானோர் விரைவிற் தமது பொருளா தார நிலைக்கேற்பக் குடிசைகளை அமைத்துத் தனிக்குடித்தனஞ் செய்யத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் வன்னிப் பிராந்தியத்தில் வலிகாமம் போலவோ அன்றில் தென்மராட்சி, வடமராட்சி போலவோ பெரியதும், வசதியானதுமான வீடுகளைக் காணுதல் அரிது. இதனால் அதிக குடும்பங்கள் ஒன்றாக விருப்பது மிகச் சிரமமானது. இங்குள்ளவர்களின் நிலங்கள் விசாலமானதாக இருந்தமையாற் குடிசைகள் அமைப்பதற்கு வாய்ப்பாக இருந்துள்ளன எனலாம். மேலும் இடப்பெயர்வினை மேற்கொண்டவர்கள் ஏற்கனவே விருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களையே நாடிச்சென்றுள்ளனர். புதிய இடங்களைத் தெரிவு செய்தவர்களிற் கணிசமானோர் பல்வேறு சிரமங்களை அடைந்துள்ளமையால் மீண்டும் வேறு வசதியான இடங்களைச் சென்றடைந்த சம்பவங்களுங் காணப்படாமல் இல்லை.
இடப்பெயர்வினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள்
வலிகாமம் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மக்கள் இடப்பெயர் வானது ஒரு அசாதாரண நிகழ்வேயாகும். இவ்விடப்பெயர்வினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் பலவாறாகக் காணப்பட்ட போதிலும் அவை தவிர்க்கக் கூடியவை. ஆனால் தவிர்க்க முடியாதனவுங் காணப்பட்டன. முதலில் இடப்பெயர்வினை மேற்கொள்ளும் போது சகோதரர்கள், மற்றும் உறவினர்கள் யாவரும் ஒன்றாகவே புறப்பட்டனர். இதன் விளைவாகத் தாம் சென்றடைந்த பிரதேசங் களில் விரும்பியோ அன்றில் விருப்பமின்றியோ பல குடும்பங்கள் ஒன்றாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். சகோதரர்கள் மற்றும் உறவினர்களாயினும் அவர்களிடையே பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறையக் காணப்பட்டன. இடப்பெயர்வின் ஆரம்பத்திற் பொருளாதார நிலையிலும் பார்க்க உறவு முறையே பெரிதாகக் காணப்பட்டிருந்த போதிலும் ஒன்றாகக் குடியிருந்ததன் விளைவாகப் பொருளாதார நிலைமை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக அமைந்திருந்தது. இதனாற் தமது சேமிப்பான நகைகளை விற்றுக் கூட அன்றாட சீவியத்தை நடாத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததை

இடப்பெயர்வின் ஆரம்ப காலங்களில் நகை விற்குமிடங்களில் கூடியிருந்த மக்களைப் பார்க்கும் போது தெரியவந்தது.
இடப்பெயர்வின் ஆரம்பத்திற் பல குடும்பங்கள் தாம் சென்றடைந்த வீட்டின் உரிமையாளருடன் இணைந்து பொதுச்சமையலைச் செய்து வந்து ள்ளனர். இவை இரு காரணிகளின் நிமித்தம் நடைபெற்றது எனக் கொள்ள வேண்டும். முதலாவதாக இடப்பெயர்வாளர் தாம் இடம்பெயரும் போது சமையல் பாத்திரங்களைத் தம்முடன் எடுத்துச் செல்லாமையும் இரண்டாவதாக வீட்டு உரிமையாளர் விறகு, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களைத் தந்துள்ளமையாலும் வீட்டுக் குடியிருப்பாளர்களையும் இணைத்தே சமையல் செய்யப்பட்டது. இவ்வாறான சமையல் முறையினால் கெளரவத்தைப் பேணும் முகமாக இடப்பெயர்வாளர் குடும்பங்களில் உள்ள வசதிபடைத்தவர்களுக்கு சுமையாகக் காணப்பட்டது. இத்தகைய பொதுச் சமையல் பல குடும்பங்களின் பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டிருந்தமையாற் தனிக்குடித்தனம் செய்வதையே விரும்பினர். எனினுங் குடியிருப்பு வசதிகளின் பற்றாக்குறையுடன் குசினித் தளபாடப் பற்றாக்குறையும் அதனைப் பின்தள்ளிக்கொண்டே சென்றுள்ளது. இவர்களிற் சில குடியிருப்பாளர் வேறு புதிய குடியிருப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் அல்லது வன்னிப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். எனினும் அங்கும் வசதியான வாழ்வு வாழ்கின்றார்கள் எனக் கூறுவதற்கில்லை.
இடப்பெயர்வினால் விளைந்த மிகப் பெரிய பிரச்சினை குடும்பங் களிடையே நல்லுறவுகள் சீர்கெட்டதேயாகும். பெரும்பாலான குடும்பங்களில் சகோதரர்கள், உறவினர்களிடையே பிரச்சனைகள் காலத்திற்குக் காலம் ஏற்பட்டிருந்தன. ஆயிரம் ஆண்களோடு வாழலாம். இரண்டு பெண்களோடு வாழமுடியாது என்பர் நம்மவர். இருந்த போதிலும் தவிர்க்க முடியாதவாறு பெண்கள் ஒன்றாக வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருந்ததால் ஒரே கூரையில் வாழும் அவர்களிடையே பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியான ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனைகளைத் தோற்றுவித்திருந்தன. இவை எல்லாக் குடும்பங்களிலுங் காணப்படாவிட்டாலும் பெரும்பாலான கூட்டுக் குடும்பங்களில் மறைமுகமாகவேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன எனலாம். உடுபுடவைகள், உணவு, பொருளாதார நிலைகள், நகைநட்டுக்கள், இட்ப்பெயர்வுக்கு முன்னரே காணப்பட்ட மனஸ்தாபங்கள் போன்றனவே குடும்ப உறவினைப் பாதித்துள்ளன.
இவை தவிர கூட்டுக்குடும்பஅமைப்பு முறையிற் குழந்தைகள், சிறுவர்களினாற் பிரச்சனைகள் எழுந்திருந்தமை சாதாரண விடயமாகவிருந்து ள்ளது. சிறுவர்களின் விளையாட்டின் போது ஏற்படுஞ் சச்சரவுகள், குழந்தை கள் சத்தமிட்டு பேசிக்கொள்ளும் போது கண்டிக்க முற்படுமிடத்து ஏற்படுஞ் சச்சரவுகள், உணவு பரிமாறும் போது ஏற்படுஞ் சிக்கல்கள், கிணற்றினைப் பயன்படுத்தும் போதோ அன்றில் மலசல கூடத்தினைப் பயன்படுத்தும் போதோ ஏற்படுஞ் சிக்கல்கள் போன்றன பல குடும்பங்களிடையே உறவு சீர் கெட்டுப் ' போகக் காரணங்களாயிருந்துள்ளன.
61

Page 42
வீட்டு உரிமையாளர்களான பெரும்பாலான குடும்பத்தினர் இடப்பெயர் வாளரைப் பொறுத்தவரை பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளனர் என்றே கூறல் வேண்டும். குறிப்பாக இடப்பெயர் வின் விளைவாக வீட்டு உரிமையாளர்களுக்கு இருந்த சுதந்திரம் பாதிப்புக்குள்ளானது என்பது வெளிப்படை. பொதுவாக எல்லாக் குடும்பங்களிலும் பிள்ளைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இக்கல்விப் பாதிப்பு இடப்பெயர்வாளரது குழந்தைகளை மட்டுமன்றி வீட்டுரிமையாளரின் குழந்தைகளின் கல்வியைக் கூடப்பாதித்திருந்தது. அதுமட்டுமல்லாது கணவன் - மனைவியரிடையே கருத்துப் பரிமாற்றங்களுக்குக் கூட இடப்பெயர்வாளரின் உள்வரவு தடையாக விருந்துள்ளது. அத்துடன் தாம் விரும்பியதைச் சமைத்து உண்ணவோ அன்றில் சுதந்திரமாக வீட்டில் நடமாடவோ முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இவ்வாறான பிரச்சனைகளை நிரந்தரக் குடியிருப்பாளர்கள் அனுபவித்த போதிலுஞ் சில நிரந்தர குடியிருப்பாளர்கள் இடப்பெயர்வாளருக்குப் பல சிக்கல்களைக் கொடுத்து வந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.
மனிதனது அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பனவாகும். உணவினைப் பொறுத்தவரை இடப்பெயர்வாளர் சில பிரச்ச னைகளை அனுபவித்து வந்துள்ளனர். பொதுவாக கணிசமான தென்மராட்சி, வடமராட்சி மக்கள் தமது உணவில் அசைவத்தைச் சேர்த்துக் கொள்வ தில்லை. வேறு சிலர் விரத காலங்களில் அசைவ உணவை சமைப்ப தில்லை. உதாரணமாக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலிற் பங்குனித் திங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதுண்டு. அந்த மாதத்திற் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவினை சமைப்பதில்லை. அதேவேளை வலிகாமம் பகுதிமக்களிற் சிலரே பங்குனித்திங்கள் நாளைச் சிறப்பாக அனுஷ்டிக்கின்றனர். எனினும் வீட்டிலுள்ள பல இடப்பெயர்வாளர் குடும்பத்தினர் மாமிச உணவினைச் சமைக்கும் போது அதன் கழிவு நீரினால் சுற்றுப்புறச்சுழல் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மாமிச உணவினை சமைக்கக்கூடாது என்று தடை செய்திருந்தனர். இதன் விளைவாக அசைவ உணவினை உட்கொள்பவர்கள் பெருஞ் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக இத்தகையோர் அதனைச் சமைக்கும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிற் தமக்கு விருப்பமான அசைவ உணவினை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கு சென்று சாப்பிட்டு வருவதைக் காணமுடிந்தது. அசைவ உணவினைச் சமைக்க அனுமதியாதது ஒரு பிரச்சனை என்று கூறமுடியாது. இருப்பினும் இடப்பெயர்வாளர் தமது சொந்த வீட்டில் அனுபவித்த சுதந்திரத்தினை அனுபவிக்க முடியவில்லை என்று கூறலாமேயொழிய இதனால் இடப்பெயர்வாளர் பெரும் பிரச்சனையை அனுபவித்தனர் என்பதற்கில்லை. ஏனெனில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் போது பல்வேறு வகைப்பட்ட மாமிசங்களை உணவாக உட்கொள்ளலாம். அவ்வாறாயின் அதன் கழிவுநீர் வீட்டினையும் அதன் சுற்றுப் புறங்களையும் பாதிக்கவல்லது.
இடப்பெயர்வாளருக்கும் நிரந்தரக் குடியிருப்பாளருக்குமிடையே நிலவி வந்த பிரச்சனைகளில் மலசலகூட வசதிகளும் அதனோடு தொடர்புடைய
62

பிரச்சனைகளும் முக்கியமானது. குறிப்பாக வலிகாமம் பிரதேசத்தினைப் போலன்றி தென்மராட்சிப் பகுதிகளில் மலசலகூட வசதிகள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தன. குடியிருப்பு நிலங்கள் பெரிதாக இருந்துள்ளமையால் மலசல கூடத் தேவையினைச் சமாளித்து வந்துள்ளனர். அதேவேளை மலசலசுவட வசதிகள் காணப்படுமிடங்கள் மணற்பகுதிகளாகவிருப்பதனால் மலக்குழி யினைப் பெரிதாகக் கட்டி வைத்திருக்கவில்லை. குறிப்பாக தமது குடும்பங் களுக்கு ஏற்ற விதத்திலேயே சிறிய மலக்குழிகளை வடிவமைத்திருந்தனர். பல குடும்பங்கள் இத்தகைய மலசலகூடத்தைப் பயன்படுத்த வேண்டியிருந் தமையினாலும் நீரிணை மலக்குழிக்குள் அதிகமாக ஊற்றுவதன் விளைவாகவும் மிக விரைவிலேயே மலக்குழி நிறைந்து விடுகின்றது. இதனை அகற்றுவது அவசியமாகவிருந்தபோதிலும் இதனை யார் செய்வது என்ற பிரச்சனை வீட்டு உரிமையாளருக்கும் இடப்பெயர்வாளருக்குமிடையில் ஏற்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. எவ்வாறெனினும் இதனை யாராவது அகற்றியேயாக வேண்டியது தவிர்க்க முடியாதது. பல குடும்பங்கள் பங்குபோட்டுக் கழிவினை அகற்றியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது.
வீட்டு உரிமையாளர்களிற் சிலர் மலசலசுடத்தைப் பயன்படுத்தச் செல்லும் போது பாதணி அணியாமல் செல்லவேண்டும் என்று இடப்பெயர் வாளரிடம் கூறிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஏனெனில் சிறிய மலக்குழியாகவிருந்தமையாற் பாதணியுடன் மணல் சென்றுவிடும் என்பத னாலேயே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அசாதாரண சூழ்நிலையில் ஒரு குடியிருப்பில் பல அங்கத்தவர்கள் வாழ வேண்டியிருந்த மையால் காலை நேரங்களில் மலசலகூடத்திற்குச் செல்வதற்குப் பெரும் போட்டி நிலவியதையுங் காணமுடிந்தது. பொதுவாக மலசலகூடப் பிரச்ச னையைத் தீர்ப்பதற்காக வளர்ந்தோர் விடியற்காலையில் மண்வெட்டியுடன் அடிவளவுக்குச் சென்று வருவதுமுண்டு.
இடப்பெயர்வாளர் மட்டுமல்லாது நிரந்தரக் குடியிருப்பாளர்கள் அனுப வித்து வந்த பிரச்சனைகளில் முக்கியமானது நன்னிரோ அன்றில் உவர்நீரோ பெற்றுக் கொள்வதிலிருந்த சிரமமாகும். தென்மராட்சி, வன்னிப் பகுதிகளில் வடகீழ்பருவக்காற்று மழை வீழ்ச்சி பொய்த்தமையாற் குளங்களிலும், கிணறுகளிலும் 1996ஆம் ஆண்டு தை, மாசி மாதங்களுக்குப் பின்னர் நீர் வற்றிவிட்டதால் குடிநீர்ப் பிரச்சனை உட்பட பாவனைக்கு நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. வடமராட்சிப் பிரதேசத்திற் பெரும்பாலான பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு இருக்கவில்லை. தென்மராட்சி, வன்னிப் பகுதிகளில் மும் மடங்கு மக்கள் அதிகரித்ததன் விளைவாக நீர்ப்பாவனையும் அதிகரிக்கவே நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இதனால் இடப்பெயர்வாளர் மட்டுமன்றி நிரந்தரக் குடியிருப்பாளரும் பெருஞ் சிரமத்திற்குள்ளானார்கள். பொதுவாக நீரியலுடன் தொடர்புடையவர்கள் மே, யூன், யூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மராட்சி, வன்னிப் பகுதிகளில் நீருக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு என எச்சரித்திருந்தமையுங் குறிப்பிடத்தக்கது. சூரியப் பிரகாசம் 11 நடவடிக்கையின் விளைவாகவும் விடுதலைப்புலிகள் மீண்டும் மக்கள்
63

Page 43
வலிகாமம் செல்வது தொடர்பாக எவ்வித கருத்துக்களுந் தெரிவிக்காததன் விளைவாகவும் மக்கள் வலிகாமத்திற்கு மீள் இடப்பெயர்வினை மேற் கொண்டமையால் நீர்ப்பிரச்சனையுட்பட மக்களின் பல அன்றாட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. எனினும் வலிகாமத்தில் எதிர்காலத்தில் என்ன விளைவுகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்ற அங்கலாய்ப்புடனேயே மக்கள் மீள இடப்பெயர்வினை மேற்கொள்ளலாயினர்.
நிரந்தரக் குடியிடுப்பாளரின் நல்லெண்ணப்பாடுகளும் தப்பபிப்பிராயங்களும்
பொதுவாக நிரந்தரக் குடியிருப்பாளருக்கோ அன்றில் இடப்பெயர்வினை மேற்கொண்டவர்களுக்கோ மீள் இடப்பெயர்வு எப்போது நிகழும் எனத் தெரியாது. இடப்பெயர்வாளர் மிகவிரைவில் மீண்டும் தமடு இடம் திரும்பிவிடுவார்கள் எனப்பலர் எண்ணியிருந்தனர். காலத்துக்குக்காலம் மக்களிடையே பல வதந்திகள் அல்லது சோதிடர்களின் கருத்துக்கள் பரவ விடப்பட்டன. ஆரம்பத்திற் கார்த்திகை மாதம், 15ம் திகதிக்கு முன்னர் எனவும், கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் எனவும், தைப்பொங்கலுக்கு முன்னர் எனவும், இறுதியாக வருடப்பிற்ப்புக்கு முன்னர் எனவும் தமது சொந்த இடத்திற்கு செல்ல வழி பிறக்கும் எனப்பட்டது. நிரந்தர குடியிருப்பாளரிற் பலர் இடப்பெயர்வாளரை அன்புடன் லழியனுப்பிவைக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலமோ அதிகரித்துக் கொணர் டு சென்றது. இதனால் நிரந்தரக் குடியிருப்பாளர்களிற் கணிசமானோர் பொறுமையிழந்தனர். பலர் நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்ந்தும் உறவினைப் பேணி வந்தனர். எனினும் இத்தகைய இடப்பெயர்வோ அன்றில் பல்வேறு தரப்பினரைக் கொண்ட கூட்டுக்குடும்ப அமைப்பினையோ அறியாதவர்களாகவிருந்துள்ளமையால் இடப்பெயர்வாளரினால் எழுந்த பிரச்சனைகளைச் சிலர் பெரிதுபடுத்தினர். சில சந்தர்ப்பங்களில் நீதி கேட்டு காவல்துறைக்குச் செல்லவேண்டிய நிகழ்வுகளும் நிகழந்துள்ளன. அத்துடன் இடப்பெயர்வாளருக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்குமிடையிற் சில இடங்களிற் கைகலப்புக்களும் ஏற்பட்டிருந்தன. இதனாற் படுகாயமடைந்தவர்களுமுளர். இவ்வாறாக பல பிரச்சனைகளும் இவ்விருசாராருக்கும் இடையில் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கமுடிந்தது. இது சம்பந்தமாக இடப்பெயர் வாளருக்கும் நிரந்தரவாசிகளுக்குமிடையிற் காணப்பட்டிருந்த நல்லெண்ணப்பாடுகளையும் தப்பபிப்பிராயங்களையும் இடப்பெயர்வாளரிடையே மேற்கொள்ளப்பட்ட பேட்டிகளின் போது அறிந்துகொள்ள முடிந்தது. . . . . .
வலிகாமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வினால் மக்கள் பட்ட துன்பத்தை தமது துன்பமாகக் கருதிய நிரந்தரக் குடியிருப்பாளர் அறுவரிடம் பேட்டி கண்டபோது பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சங்கத்தானையை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் அவரது மகளுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். இவ்வாசிரியர்
64

தீவுப்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்குறித்த பிரதேசத்தில் விவாகஞ் செய்தவர். மனைவியை இரண்டாண்டுகளுக்கு முன்னர் இழந்தவர். அவரது வீடு விசாலமானது. ஏழு அறைகளையும், சமையல் அறை, களஞ்சிய அறை உட்பட இரண்டு பெரிய விறாந்தை களையும் கொண்டது. அத்துடன் இளைப்பாறிய ஆசிரியரும் மகளும் சைவ உணவினை உட்கொள்பவர்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்கள். பகவான் பாபாவை நேசிப்பவர்கள்.
இடப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் இவ்வாசிரியர் உதவி செய்வார் என்ற ரீதியில் 35 உறுப்பினர்களைக் கொண்ட பல குடும்பத்தவர்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் உறவினர்களேயாவார். ஆனால் ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின்னர் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 23 பேராகியது. ஏனையோர் வேறு இடத்திற்கு தமது குடியிரு ப்பினை மாற்றிக்கொண்டனர். எஞ்சியோரில் 13 பேர் 70 வயதினைத் தாண்டியவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்டவர்கள். இவர்களிடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள் தோன்றி வாய்ச்சண்டையில் ஈடுபடுவார்கள். இவ்வாறு நிகழும் சச்சரவுகளை தந்தையோ அல்லது மகளோ சமாளித்து அவர்களைச் சமாதானப்படுத்திக் கொள்வார்கள். மேலும் இடப்பெயர் வின் ஆரம்ப காலங்களிற் சமையல் எல்லோருக்கும் பொதுவானதாகவே செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இடப்பெயர்வாளர் தமது நலன் கருதி தனிச் சமையலை செய்யத் தொடங்கினர். மேலும் இடப்பெயர்வாளரில் சில குடும்பத்தினர் அசைவ உணவு உட்கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். அதற்குங் கூ ஆசிரியர் தடைசெய்யவில்லை. அவரிடமிருந்த மரம், கிடுகு போன்றவற்றைக் கொடுத்து வீட்டுக்கண்மையில் குடிசை ஒன்று அமைத்து அதற்குள் அசைவ உணவைச் சமைத்து சாப்பிடுங்கள் எனக் கூறினார். அதன்படியே செய்தனர்.
இடப்பெயர்வாளரின் பொருளாதார, சமூக, பண்பாடுகள் பல வகைப்பட்ட வையாகவிருந்துள்ளன. அதனை வெற்றிகரமாகச் சமாளிப்பதில் தந்தையும் மகளும் வெற்றி கண்டனர் என்றே கூறல் வேண்டும். இயலாத வயோதிபர்களுக்கு சமையலுக்கு உதவி செய்வதுடன் அவர்களைக் குளிப்பாட்டி தேநீர் கொடுக்கும் பணியினை மகள் செய்து வந்தார். தந்தையாரோ தேவைப்பட்ட பொருட்களை வாங்கி வந்து மகளிடம் கொடுப்பார். விறகோ, தேங்காயோ வெளியில் விலைக்கு வாங்க இடப்பெயர்வாளரை அனுமதிக்கவில்லை. எல்லாவற்றையும் அவரே இலவசமாக வழங்கி வந்தார். உண்மையில் இடப்பெயர்வாளர்களினால் வீட்டில் அவர்களது சுதந்திரம் அற்றுப்போயிருந்தது என்பது தான் உண்மை. இடப்பெயர்வாளருக்கு அறைகள், விறாந்தைகள் என்பவற்றைக் கொடுத்துவிட்டு தந்தையும் மகளும் களஞ்சிய அறையிலேயே கடந்த ஆறுமாத காலமாக வாழ்ந்துள்ளனர். வலிகாமத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்ததையடுத்து இடப்பெயர்வாளர்கள் புறப்பட தயாரான போது தந்தையும் மகளும் கண்ணிர் விட்டு அழுதனர். இடப்பெயர்வாளர்கள் வலிகாமப்பகுதியில் சிறப்பாக சந்தோஷத்துடன் வாழவேண்டும் என வாழ்த்தி அனுப்பினர்.
65

Page 44
சாவகச்சேரி சங்கத்தானையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரி பவரும் அவரது குடும்பத்தினரும் தாமோதரம்பிள்ளை வீதியில் வசித்து வந்தனர். சாவகச்சேரியில் பிரபல்யமான குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பமுடையவர்கள். வலிகாமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வினால் அவரது உறவினர் மட்டுமல்லாது தொழில்சார் நண்பர்களது குடும்பத்தினர்கள் அவரது இல்லத்தில் வந்து கூடிவிட்டனர். அவர்கள் தாங்களாக விரும்பிப் போகும் வரைக்கும் ஒரு சமையலே செய்யப்பட்டது. ஏறத்தாழ 20 அங்கத்தவர்களைக் கொண்ட சில குடும்பத்தினர் இடப்பெயர்வின் ஆரம்பகாலந் தொட்டு வலிகாமம் மீளும் வரையும் அவரது வீட்டிலேயே வாழ்ந்துள்ளனர் என்பது இங்கு நோக்கத்தக்கது. அது மட்டுமல்லாது இடப்பெயர்வாளரின் குடும்பங்களின் முக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பாக பிறந்ததின வைபவங்கள் மட்டுமல்லாது தொழில்சார் நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்படும் விருந்து வைபவங்களையும் சளைக் காது மனத்திருப்தியுடன் - விருப்பத்துடன் செய்து கொடுத்தனர். இவற்றிற்கெல்லாம் வீட்டுத்தலைவர் மட்டுமல்லாது அவரது மனைவி, தாய், சகோதரர் போன்றோரின் ஒத்துழைப்பும் அனுசரணையும் காரணமாக விருந்தது என்றால் மிகையாகாது. மேலும் வீட்டின் பெரும்பகுதியினை இடம்பெயர்வாளரின் பாவனைக்காக வழங்கிவிட்டு அவரும் அவரது குடும்பத்தினரும் மிகக் கஷ்டத்துடன் வாழ்ந்து வந்துள்ள போதிலும் அதனால் சந்தோஷப் பட்டார்களேயொழிய துன்பப்படவில்லை. வீட்டில் அவர்களது சராசரி மாதாந்தச் செலவிலும் பார்க்க பல மடங்காக செலவு அதிகரித்துள்ள போதிலும் அதனையிட்டு எள்ளளவும் கவலைப்படவில்லை என இடப்பெயர்வாள நண்பர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான மனிதாபிமானங் கொண்டவர்களின் ஒத்துழைப்பு இருந்தமையினாற் தான் கஷ்டங்கள் மத்தியலும் ஆறுதலடைய வாய்ப்பிருந்தது என இடப்பெயர்வாளர் கருத்துத் தெரிவித்தனர். இவ்வாறான அனுபவங்கள், அரவணைப்புக்கள், எல்லா இடப்பெயர் வாளருக்கும் இருக்கவில்லையெனப் பெரும்பாலான இடப்பெயர்வாளர் தெரிவித்துள்ளமையை இவ்விடத்திற் குறிப்பிடுதல் அவசியமாகும்.
சாவகச்சேரி டச்சு வீதியில் வசித்து வரும் மருத்துவ அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் வசதியாக வாழந்து வருபவர்கள். அவர்களது பெரும்பாலான உறவினர்கள் வெளிநாடுகளிற் சீருஞ் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வதிகாரி பல்வேறு பொதுநல அமைப்புக்களிற் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இடப்பெயர்வின் போது அவரது உறவினர், நண்பர்கள் என ஏறத்தாழ 40 இடப்பெயர்வாளர்கள் மருத்துவ அதிகாரியின் குடும்பத்துடன் இணைந்து கொண்டனர். இவர்களில் இரு குடும்பத்தினரைத் தவிர ஏனையோர் மீண்டும வலிகாமம் இடப்பெயர்வினை மேற்கொள்ளும் வரை இவ்வில்லத்திலேயே வசித்து வந்தனர். அவரது வீட்டிற் தொடர்ச் சியாக ஆறுமாத காலம் ஒற்றுமையாக வாழ தனது மனைவியே முழுக்கார ணமாக விருந்துள்ளார் எனப் பெருமையுடன் கூறுகின்றார் மருத்துவ அதிகாரி.
66

எந்தக் கட்டத்திலும் இடப்பெயர்வாளர் மனம் நோகாது நடந்து வந்துள்ளனர் என்பதை அடிக்கடி அங்கு சென்று வந்ததன் மூலம் அறிய முடிந்தது.
சாவகச்சேரி நுணாவிலில் வசித்து வருபவர் ஒரு பட்டதாரி ஆசிரியர் குடும்பம். இந்துமதக் கோட்பாடுகளில் இறுகிப் பற்றுக் கொண்டவர். அதன் படியே வாழ்ந்து வருபவர். பொருளாதார ரீதியில் வசதியானவர் எனக்கூற முடியாது. எனினும் நிலப்புலன்களுக்குச் சொந்தமானவர். அல்லலுற்று இடம்பெயர்ந்து வந்தவர்களுக்குப் புகலிடம் கொடுக்கவேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். தனது வீட்டு வளவுக்குள் ஏறத்தாழ 15 குடிசைகள் அமைத்து - அமைக்க இடங்கொடுத்து அவர்களது சேமநலனிற் தொடர்ச் சியாக அக்கறை செலுத்தி வந்துள்ளதைக் காணமுடிந்தது. அவரது வீட்டில் இருந்த தளபாடங்கள், குசினிச் சாமான்கள் யாவும் இடப்பெயர்வாளரின் பாவனைக்கு கொடுக்கப்பட்டது. இடப்பெயர்வாளரின் மருத்துவ சேவை மற்றும் நிர்வாகத் திணைக்களங்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற வற்றினை அவ்வாசிரியரே ஏற்றுக்கொண்டிருந்தார். இந்து சமயத்தின் அவலநிலை பற்றி இடப்பெயர்வாளருக்கு எடுத்துக் கூறுவார். இவ்வாறாக மனிதப்பண்புள்ள ஆசிரியர் மீது வலிகாமத்திற்கு மீள இடப் பெயர்வினை மேற்கொண்டவர்கள் நல்லெண்ணத்தினைச் சுமந்து சென்றதை அவர்களுடன் தொடர்பு கொண்ட வேளை அறிய முடிந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி குடியேற்றத்திட்டத்தில் இளைப் பாறிய ஆசிரியரும் அவரது குடும்பத்தினர் நால்வரும் வாழ்ந்து வருகின்றனர். இடப்பெயர்வினை மேற்கொண்டு வட்டக்கச்சிக்கு சென்ற அவர்களது நண்பர்கள், உறவினர்கள் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றனர். குடும்பத்தலைவர் ஆசிரியராக விருந்த போதிலும் வட்டக்கச்சியில் உள்ள சில பெரிய வீடுகளில் இவர்களது விடும் ஒன்று. பல ஏக்கள் நிலப்பரப்புக்குச் சொந்தமானவர்கள். இடப்பெயர்வாளர் செல்வதற்கு முன்னரே அவர்களது வளவுகளிற் பல பெரிய கொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. இடப்பெயர்வாளர்களைத் தமது வீட்டிற்படுக்கையினை வைத்திருக்கலாம் எனவும் விருப்பமாயின் சமையலை மேற் குறித்த கொட்டில்களில் வைத்துக் கொள்ளலாம் எனவுந் தெரிவித்தனர். அரிசி மற்றும் வளவில் உள்ள உற்பத்திப்பொருட்கள் இடப்பெயர்வாளருக்குத் தொடர்ச்சியாகப் * பகிர்ந்தளிக்கப்பட்டன. குழந்தைகள், சிறுவர்களின் விளையாட்டுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. இவை போன்ற நற்பண்புகளில் விளைவாக, இடப்பெயர்வாளர் சுதந்திரமாகத் தங்கள் வீடுகளில் வாழ்வதைப் போன்ற எண்ணப்பாட்டுடனேயே வாழ்ந்து வந்ததைக் காண முடிந்தது. மேற்படி வீட்டு உரிமையாளர் இடப்பெயர்வாளரைக் கெளரவமாக மதித்து அவர்களது துன்பத்தினைத் தீர்க்கும் வைத்தியர்களாக விளங்கி வந்தனர்.
வடமராட்சியில் மாலுச்சந்தியிலிருந்து வதிரிக்குச் செல்லும் வழியில் விவசாயி ஒருவர் தனது ஏழு பேர் கொண்ட குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அவரது பிள்ளைகள் இருவர் வலிகாமப்பிரதேசத்தில் விவாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டவர்கள். வலிகாமத்திலிருந்து இடப்பெயர் வினை
67

Page 45
மேற்கொண்ட போது அவர்கள் தங்களது உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். விவசாயத் தந்தையார் இடப்பெயர்வாளர் மனம் நோக நடக்கக்கூடாது எனத் தனது மனைவி, பிள்ளைகளுக்குக் கண்டிபபான உத்தரவினை இட்டிருந்ததார். அத்துடன் விவசாயத்தொழில் செய்யக்கூடியவர்களுக்குத் தனது நிலத்திலும் அயலில் உள்ளவர்களது நிலங்களிலும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் அவர்களது பொருளாதாரப் பிரச்சனையைத்தீர்க்க உதவினார். குறிப்பாக விவசாயத்தில் ஈடுபடக்கூடியவர்களுக்குத் தனது புகையிலைத் தோட்டத்தில் வேலைவாயப்ப்பினை வழங்கினார். பெண்களுக்கு உப உணவுப்பயிர்ச்செய்கை நிலங்களிற் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தார். எனவே இடப் பெயர் வாளர் முழுநேரமும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் அவர்களிடையே எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட்டிரு க்கவில்லை. மீள இடப்பெயர்வு மேற்கொள்ளும் போது மிகவும் சந்தோஷ த்துடன் அவர்களது இல்லங்கள், பொருளாதார நடவடிக்கைகள் எந்தவித சேதத்துக்குள்ளாகக்கூடாது எனப் பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.
எனவே இவ்வாறாகப் பல குடும்பத்தவர்கள் இடப்பெயர்வாளரின் துன்பங்களையும் அவர்களால் ஏற்படக்கூடிய துன்பங்களையும் தம்முள் அடக்கி அவர்களை அன்புடன் பராமரித்துள்ளனர் என்பதனை மேற்குறித்தவர்களின் செயற்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவர்களது இத்தகைய நற்செய்கையானது பலருக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்பலாம்.
மேலும் இடப்பெயர்வாளர்கள் தாம் வாழுவதற்கு இடமளித்த குடியிருப்பாளர்களுடன் சில சந்தர்ப்பங்களிற் பல்வேறு வகைப்பட்ட பிரச்ச னைகளை எதிர்நோக்கிய சம்பவங்கள் அதிகமாகக் காணப்பட்டிருந்தன. இதனால் சில குடும்பங்கள் தமது குடியிருப்புக்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேறு சில குடும்பங்கள் குடியிருப் பாளர்களினால் விதிக்கப்படும் நடைமுறையினைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. வேறு சிலர் குடியிருப்பாளருடன் எதுவிதமான தொடர்பு களும் அற்று, அதாவது உறவாடாது வாழ்ந்துள்ளனர். சில குடியிருப்பாளரு க்கும் இடப்பெயர்வாளருக்குமிடையிற் பகைமை முற்றிக் காவற்றுறை வரையுஞ் சென்றுள்ளனர். ஒரு சில குடியிருப்புக்களில் நிரந்தரக் குடியிருப்பாளரை ஒதுக்கி விட்டு இடப்பெயர்வாளர் வீட்டு உரிமையாளர் போல் நடந்துமுள்ளனர். பல இடப்பெயர்வாளர்கள் தேங்காய் மற்றும் வளவுகளிலுள்ள உற்பத்திப் பொருட்களை நிரந்தரக் குடியிருப்பாளரிடம் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சில குடியிருப்புக்களில் இடப்பெயர்வாளர்கள் வெளியே எங்கு சென்றாலும் நிரந்தரக் குடியிருப்பாளரிடம் கூறிவிட்டே செல்ல வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர். சில நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு இடப்பெயர்வாளர்களைத் தேடி விருந்தினர் வருவது விருப்பமில்லை. இவை தவிர பொதுவாகக் குடியிருப்புக்களில் அசைவ உணவு சமைப்பதிற்
68

கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இவை தவிர்க்க முடியாதவை. பொதுவாகப் பல குடியிருப்புக்களிற் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றே பலருங் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத்தகைய நிலைக்கு முற்றுமுழுதாக நிரந்தரக் குடியிருப்பாளரைக் குறைகூற முடியாது. காலமோ நீண்டுவிட்டது என்பது தான் உண்மை.
இடப்பெயர்வாளருக்கும் குடியிருப்பாளருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பெரிதாகவோ அன்றிச் சிறியளவிலோ ஏறத்தாழ 75.0 சதவீதத்தினரிடையே காணப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. பிரச்சனைகளின் வடிவங்களும் அளவுகளும் வேறுபட்டிருக்கலாம். பிரச்சனைகள் நிரந்தர குடியிருப்பாளர்களினால் மட்டும் ஏற்பட்டன எனக் கூறமுடியாது. இடப்பெயர்வாளரின் செயற்பாடுகளினாலும் ஏற்பட்டுள்ளன என்றே கூறல் வேண்டும். எனவே சில குடும்பங்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் இங்கு உதாரணத்திற்காக தரப்படுகின்றன.
இளைப்பாறிய நீதிமன்றக் காவலாளி குடும்பத்தினர் சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்குத் தென்மராட்சியிற் சொந்தமாக வீடோ அன்றில் நிலங்களோ இல்லை. கல்வயலிற் கோவிற் காணியில் இவ்வீட்டுக்கு வருவதற்கு முன்னர் வாழ்ந்து வந்தவர்கள். நாட்டு நிலமையினைச் சாதகமாக்கிக் கொண்டு மேற்குறித்த விலாசத்தில் உள்ள வீட்டில் எதுவித வாடகையுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். வீட்டுத்தலைவர் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகின்ற போதிலும் இக்குடும்பத்தில் உறவுமுறை சீராகவிருக்கவில்லை. இ.'து இவ்வாறிருக்க, அவர்களின் மூத்த மகளும், மூத்த மகனும் யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் கொக்குவிலில் உள்ள ஒரு குடும்பத்தவர்களுடன் மிக நெருக்கமான உறவுகளை வைத்திருந்தனர், அவர்கள் அக்குடும்பத்தவர்களை மிகவும் நேசித்தவர்கள். இதனால் அவர்களது குடும்ப நண்பர்களாகினர். ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வலிகாமம் மக்கள் ஒட்டு மொத்தமாக வெளியேற வேண்டியநிலை ஏற்படவே மூத்த மகன் வந்து தங்கள் வீட்டிற்கு நீங்கள் வருவதாக அறிவித்துவிட்டதாகவும், அங்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இவர் இதனைக் கூறுவதற்கு முன்னர் வடமராட்சிக்குச் செல்வதென்ற தீர்மானமே இருந்தது. எனவே அவரது அன்புக்கட்டளையை ஏற்று மிகக் கஷ்டப்பட்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றடைந்தனர். சென்றவர்கள் இரு குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு உறுப்பினர்களாவர். கல்வியுடன் தொடர்புடைய இக்குடும்பத்தினர் பொருளாதார ரீதியிலும் வலுவுள்ளவர்களாகவிருந்தனர். எனவே சென்றடைந்த இரண்டாவது நாளிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நிரந்தரக் குடியிருப்பாளரையும் இணைத்துப் பொதுச்சமையல் செய்யப்பட்டது. இதற்கான செலவினத்தில் 90.0 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்கினை இடப்பெயர்வாளர்களே ஏற்றுக் கொண்டனர். நிரந்தரக் குடியிருப்பாளர் குடும்ப எண்ணிக்கை ஏழாகும். ஆனால் இக்காலங்களில் அக் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
69

Page 46
பத்து பேராவது விருந்தினராக வருவதுண்டு. அவ்விருந்தினர் தொடர்ச்சியாக பகல், இரவு உணவினை உட்கொள்வதற்கு வருவார்கள். எனவே பல சந்தர்ப்பங்களில் வீட்டுத்தலைவிக்கு மட்டுமல்லாது இடம்பெயர்ந்தவர்களில் சிலருக்குக் கூட அவ்வவ்பொழுது சாப்பாடு கிடைப்பதில்லை. எனவே இவ்வாறான இடர்ப்பாட்டிலிருந்து விடுபட வீட்டுத்தலைவியின் சம்மதத்துடன் தனித்தனிச் சமையல் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இத்தினத்திலிருந்து இடப்பெயர்வாளரிடம் இருந்த நல்லுறவு படிப்படியாகப் பாதிப்படையலாயிற்று. எனினும் அதனை நேரடியாக "மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமல்" என்பதைப் போல் நடந்து வந்தனர். தனித்தனியாகச் சமையல் செய்யப்பட்டதேயொழிய மற்றெல்லாச் செலவுகளிலும் பெரும்பங்கினை இடப்ப்ெயர்வாளரே செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் காலஞ் செல்லச்செல்ல அவர்களிடம் நாள்தோறும் வரும் விருந்தாளிகளுக்கு இவ்விடப்பெயர்வாளர்கள் இருப்பது தாம் சுதந்திரமாக வருவதற்குத் தடை என எண்ணியதுடன் அதற்கு வீட்டின் தலைவியின் அனுசரணையையும் பெற்றுக் கொண்டனர். மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் எவ்வாறெனினும் வெளியேற்ற வேண்டும் எனத் தீர்மானித்த அந்த வீட்டுத் தலைவி "வேண்டாப் பெண்டாட்டிக்கு கைப்பட்டாலுங் குற்றம் கால் பட்டாலுங் குற்றம்" என்பதைப் போல் நடக்க முற்பட்டார். அவர் மட்டுமல்ல அவரது சிறிய குழந்தைகளையும் அவ்வாறு நடக்கச் செய்தார்.
இ.து இவ்வாறிக்க, 23.1195ம் திகதி சாவகச்சேரி தபாற்கந்தோருக்கு அண்மையிற் பாரீய குண்டு ஒன்று வெடித்ததன் விளைவாகப் பல மக்கள் இறக்க நேரிட்டது. பல வீடுகள் சேதமடைந்தன. அதனால் பாதிக்கப்பட்ட வீட்டுத்தலைவியின் அண்ணரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் மேற்படி வீட்டில் தஞ்சமடைந்தனர். ஆரம்ப காலங்களில் அவர்களுடன் மிக அன்னியோன்யமாகப் பழகியும் வாழந்தும் வந்தனர். ஆனால் அவர்களது உறவு ஒரு இரவில் அறுந்து போகும் என எவரும் நினைத்துக்கூடப் பார்க்கவிலை. அதாவது அக்குடும்ப உறுப்பினரும், நிரந்தர குடும்பத்தலைவியின் பன்னிரண்டு வயது மகளும் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களிடம் உதவி பெற கொழும்பு சென்றனர். காவலாளியாகவிருந்த தந்தை சுவிற்சலாந்திலிருந்து 13,000/-ருபாவை மட்டும் அனுப்பி வைக்க மற்றவரின் சகோதரர்கள் 75,000/- ரூபாவை அனுப்பி வைத்தனர். அதனை அந்தச் சிறுமி வந்து விபரமாக தனது தாயாரிடம் கூறிவிட்டார். இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் தனது அண்ணர் ரூபா 20,000/- பெறுமதியான நகையினைப் பெற்றுத் திரும்பத் தரவில்லை எனவும் அதனை வட்டியுடன் சேர்த்துத் தருமாறும் மாலை 6 மணியளவில் வீட்டுத்தலைவி தனது அண்ணரின் மனைவியிடம் கேட்கவே வாக்குவாதம் முற்றி விடிய எழும்பியதும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு வீட்டுத்தலைவி கூறிவிட்டார். அவர்களும் அப்படியே செய்து விட்டனர். இது கொக்குவிலில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் ஒரு பாடமாகவிருந்தது. எனவே அவர்கள் எப்பவும் வெளியேறுவதற்குப் புதிய இடங்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.
70

வீட்டுத்தலைவி தனது குடும்பத்தினர் சுதந்திரம் இல்லாது காணப்ப டுவதாக நினைத்து இடப்பெயர்வாளர்களிடம் எப்படியாவது பிழைபிடிக்க வேண்டும் என்பதில் தொடர்ச்சியாகக் கண்ணும் கருத்துமாக இருந்தார். முதலிற் சிறுவர்களிடம் குறைகாண முயற்சிக்கப்பட்டது. சிறுவர்களை வழமை போல விளையாட அனுமதிக்கவில்லை. சிறுவர்களைக் கண்டபடி கடிந்து பேசினார். இடப்பெயர்வாள பெண்களிடம் குறைகாண முற்பட்டார். கிணற்றடியில் அதிக நேரம் செலவழிக்கப்படுகின்றது எனவும் தமது குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகவும் எடுத்துக்கூறப்பட்டது. ஏற்கனவே இடப்பெயர்வாளர் சமையலறைச் சாமான்களைக் கொண்டு வராததால் வீட்டுக்காரரின் பாத்திரங்கள் பகிர்ந்து பாவிக்கப்பட்டன. ஆனால் அதனைப் பாவிக்காத வகையில் உரிமை கொண்டாடப்பட்டது. அல்லது தான் பாவித்துக்கொண்டிருப்பதாற் தர வசதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மீட்டல் வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களை வராது செய்தார். விருந்தினர் மண்டபத்தில் இருந்த தளபாடங்களைப் பாவிக்காதவாறு அறைக்குள் போட்டுப்பூட்டப்பட்டது. இடப்பெயர்வாளரைத் தேடிவருபவர்களிடம் இல்லாத பொல்லாத வற்றை எல்லாம் உரத்துக்கூறி வேதனைப்படச் செய்தார். அது மட்டுமல்லாது இரவிற் படுக்கைக்குச் செல்லும் போது ஏற்கனவே இடப்பெயர்வாளர் படுத்துறங்கிய இடங்களிற் தனது பிள்ளைகளுக்கு படுக்கை போட்டுத் தடைசெய்தார். தங்களது குடும்பப் பிரச்சனைகளை இடப்பெயர்வாளருடன் எவ்வாறெனினும் இணைத்து அதனுாடாகப் பிரச்சனைகளைத் தோற்றுவித்தார். சுருக்கமாகக் கூறின் இடப்பெயர்வாளருக்கு எள்ளளவும் சுதந்திரம் இருக்கவில்லை என்றே கூறல் (86,605|(6ub.
இவ்வளவிற்கும் இடப்பெயர்வாளர்கள் பொருளாதார வசதி படைத்த வர்கள் மட்டுமல்லாது கல்வியுடன் தொடர்புடைய தொழில்களைப் பார்த்து வருபவர்கள். கெளரவத்தைப் பெரிதும் விரும்புபவர்கள். எனவே இவ்விரு பிரிவினருக்கிடையிலுள்ள இவ்வாறான பிணக்குகளின் விளைவாக இடப் பெயர்வாளர் சாவகச்சேரியில் வேறு ஒரு சிறிய வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு செல்லும் போது அவர்களது வீட்டில் வாழ்ந்த ஐந்து மாதத்திற்கும் 2.500/- வாடகை கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் விரும்பியேற்றனர். இடப்பெயர்வாளர் வேறு குடியிருப்பினை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் ஐந்து மாதங்கள் அவர்களுடன் வாழ்ந்ததை நினைவு கூர்ந்து அவர்களுடன் தொடர்ந்தும் அன்போடு பழகி வந்தனர். 1996ஆம் ஆண்டு சித்திரை 19ஆம்திகதி ரிவிரச 11 நடவடிக்கையின் விளைவாகத் தென்மராட்சிப் பிரதேசத்திற்குள் இராணுவம் விரைந்து வருவதை உணர்ந்த நிரந்தரக் குடியிருப்பாளர் வன்னிக்குச் செல்வதற்காக முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர். எனினும் இடப்பெயர்வாளர் ஐந்து மாதங்கள் அவ்வீட்டில் வாழ்ந்ததையும் அவர்கள் ஆரம்ப காலத்தில் செய்த உதவிக ளையும் தற்போது இடப்பெயர்வாளராகிவிட்டதையுமிட்டு கவலை கொண்டு ள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர் இடப்பெயர்வாளர் குடும்பம்.
71

Page 47
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சட்டத்தரணி குடும்பத்தினரும் அவர் களது உறவினர்களுமாக 16 உறுப்பினர் கொண்ட இடப்பெயர்வாளர்கள் அவர்களது நண்பர் ஒருவரின் உதவியுடன் 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி மீசாலையில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க தாயாரும் 38 வயதுடைய விவா கமாகாத பெண்ணுமே வாழ்ந்து வந்தனர். வீடு சுமாரான அளவுடையது. அங்கு குடியிருக்கச் சென்ற காலத்தில் இடப்பெயர்வாளர் குடும்பங்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். உதாரணமாக வீட்டில் சமையல் அறையினை இடப்பெயர்வாளரின் பாவனைக்காக கொடுத்துவிட்டுத் தாங்கள் சிறிய குடும்பம் என்பதால் வளவிலுள்ள ஒரு சிறிய கொட்டிலிற் சமையல் செய்து வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் வீட்டைக் காலி செய்யுமாறு பணித்தது மட்டுமல்லாமல் நாள் தோறும் தொடர்ச்சியாகக் காலையில் இருந்து மாலை வரையும் வீட்டு வாசலில் மகள் ஒலம் போட்டவண்ணமிருந்ததால் எவ்வளவு விரைவில் வெளியேற வேண்டுமோ அவ்வளவு விரைவில் வெளியேற பிரயத்தனம் செய்யத் தொடங்கினர். வெளியேறுவதற்கான அவர்களது குற்றச்சாட்டுக்கள் பின்வருமாறு: கிணறு வற்றிவிடுகின்றது எனவும், சிறுவர்கள் சத்தமிடுகின்றனர் எனவும் அதிகளவில் விருந்தினர் வருவதனாற் தமக்கு இடைஞ்சலாகவுள்ளது எனவுந் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அந்த வீட்டைச் சட்டத்தரணிக்கு எடுத்துக் கொடுத்த நண்பருடன் தொடர்ச்சியாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். எனவே வெளியேற வேண்டியிருந்ததால் பிள்ளைகளுக்கு ஒழுங்காகச் சமையல் செய்யாது நாள் முழுவதும் புதிய இல்லிடத்தினைத் தேடுவதிலேயே ஏறத்தாழ பதினைந்து நாட்களைச் செலவழித்து இறுதியில் நுணாவிலில் வீடு ஒன்றினைப் பெற்று வலிகாமம் திரும்பும் வரை வாழ்ந்து வந்தனர்.
யாழ்ப்பாண நகரில் பிரபல்யமான பாடசாலையின் ஆசிரியரும் அவரது 10 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினரும் வலிகாமத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு மீசாலையில் ரீச்சஸ் ஒழுங்கையில் நண்பர் ஒருவரின் உதவியுடன் ஒரு வீட்டின் பின்புறத்தில் - அடிவளவில் தேங்காய் மற்றும் விறகு போன்றவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்காக கட்டப்பட்ட 10 X 10 பரப்பளவுடன் ஒரு சிறிய அறையையும், விறாந்தையையும் கொண்ட கட்டிடத்தில் வசிப்பதற்கு இடம் கிடைத்தது. பெண்களும் பிள்ளைகளும் மட்டுமே அவ்வீட்டுக்குள் படுக்கலாம். பகலிற் தென்னைமர நிழலே ஓய்வு பெறுமிடமாகவும் காணப்பட்டது. ஆண்கள் பகலிலாயினுஞ் சரி, இரவிலாயினுஞ் சரி தென்னை மரநிழலிலேயே படுத்து உறங்க வேண்டியது தான். வேறு வழியில்லை. இடப்பெயர்வு மேற்கொண்ட காலம் மாரிகாலமாகவிருந்த போதிலும் மழை பெய்யாத வேளைகளில் தென்னை மரநிழலிலேயே சமையல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வளவிற்கு அது ஒரு வசதியற்ற வீடாகும். ஆனால் அக்குடும்பத்தினருக்கு வீட்டு உரிமையாளர்கள் சில அறிவுறுத்தல்களைக் காலத்துக்காலம் தெரிவித்து வந்தனர். வளவுக்குள் விறகு, மற்றும் உற்பத்திப் பொருட்கள் எவற்றையும் தொடக்கூடாது, அங்கத்தவர் எண்ணிக்கையைக்
72

குறைத்தல் வேண்டும் என்பனவே அவையாகும். ஏனெனில் மலக்குழி விரைவில் நிறைந்துவிடும் எனக் கூறினர். அதுமட்டுமல்லாது மாலை 6 மணிக்கு முன்னர் வீட்டிற்கு வந்துவிடவேண்டும். 6 மணிக்குப் பிரதான வாசல் மூடப்படும் என்றனர். தற்சமயம் தாமதிக்க வேண்டியிருந்தால் வேறு எங்காவது படுத்துவிட்டுக் காலை தான் வரவேண்டியிருந்தது. வயோதிபர்களை வீட்டில் வைத்திருக்க வேண்டாம் எனவுந் தெரிவித்தனர், இவ்வாசிரியருக்கு வலிகாமத்தில் இரண்டு வசதியான வீடுகள் உண்டு. காலப்போக்கில் நிரந்தரக் குடியிருப் பாளரின் நெருக்குதல்களைப் பொறுக்கமுடியாது வேறு வழியின்றி வேறு குடியிருப்பினை யும் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் வன்னிப்பெருநில த்திற்கு அவர்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி நோக்கிய இடப்பெயர்வும் இக்காலப்பகுதிகளில் அதிக மாகக் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து உயர்கல்வியுடன் தொடர்புடைய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்று கரவெட் டியில் நண்பர் ஒருவரின் உதவியுடன் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டனர். அந்த வீட்டில் கணவனை இழந்த இளம் விதவைப் பெண்ணும் இரு குழந்தைகளுமே குடும்ப உறுப்பினர்களாவர். ஆரம்பத்தில் இரு குடும்பத்தினரும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர். தனித்தனிச் சமையலாயினும் இரு குடும்பத்தவர்களின் கறிகள் மாறிமாறி பரிமாறப்பட்டன. இடப்பெயர்வாளர் பருத்தித்துறை சென்றால் அசைவ உணவினை இரு குடும்பத்தினருக்குமே வாங்கி வருவார். எதுவித பாகுபாடும் காட்டப்படவில்லை. காலஞ் செல்லச்செல்ல இரு குடும்பங்களிடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இடப்பெயர்வாளரின் சந்தோஷமான குடும்பவாழ்க்கை நிரந்தரக் குடியிருப்பாள ருக்கு ஏற்கனவே இருந்த தாக்கத்தை அதிகரித்துச் சென்றதால் தொடர்ந்தும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையினை அவர்களால் விரும்பியேற்க முடியவில்லை. நேரடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறாதுவிடினும் சிறுவர்களின் பிரச்சனைகள் பெரிதுபடுத்தப்பட்டது. எவ்வாறெனினும் ஏறத்தாழ ஐந்து மாதங்கள் வாழ்ந்த பின்னர் வேறொருவரின் வீட்டுக்கு இடம்மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தீவுப்பகுதியைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் குடும்பத்தினர் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் வாழ்ந்து வருகின்றனர். அவரது பிள்ளைகளிற் பலரும் வன்னிப் பகுதிகளிலேயே ஏற்கனவே தமது குடியிருப் புகளை அமைத்திருந்தனர். இவர்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் போது தனது சகோதரி குடும்பத்துடன் தனது மகளின் விவாகம் சம்பந்தமாக மனக்கசப்படைந்து அவர்களது வீட்டுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். ஆனால் ஒப்புக்கு உறவு முறைகளைப் பேணி வந்தார். இருந்தாலும் அடிமனதில் பகையுணர்வு இருந்துவந்துள்ளது. ஆசிரியரது உறவினர்கள் குறிப்பாக சகோதரி குடும்பம் வன்னிக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டனர். சகோதரிக்கும் பிள்ளைகள் நால்வருக்கும் வன்னிப் பிரதேசம் புதியதாகவிருந்துள்ளமையால் வட்டக்கச்சியில் உள்ள சகோதரரின் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தனர்.
73

Page 48
பிள்ளைகள் முதல் அதனை வரவேற்காதுவிடினும் தவிர்க்க முடியாது ஒப்புக் கொள்ள வேண்டியேற்பட்டது. அவர்களது வேறு உறவினர்கள் மிகத் தொலைவில் இருந்தமையால் அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. எவ்வாறெனினும் வட்டக்கச்சிக்குத் தனது சகோதரன் வீட்டுக்குச் சென்றபோது சகோதரனாலும், அவரது பிள்ளைகளாலும் வரவேற்கப்பட்டனர். அவர்கள் மாமியாரையும், மைத்துணிமாரையும் அங்கு தங்கியிருக்குமாறும் நிலைமை சீரானதும் யாழ்ப்பாணம் செல்லலாம் எனவுந் தெரிவித்தனர். அவர்களது இத்தகைய வரவேற்பு கண்டு தங்களிடையே இருந்து வந்த பழைய பகைமையை மறந்துவிட்டார்கள் என்று எண்ணினர். அதுமட்டுமல்லாது தனியே சமைப்பதற்குத் தடைவிதித்து ஒன்றாகவே சமைத்துக் கொண்டனர். ஆனால் தனது சகோதரர் குடும்பத்திற்கு இடையூறினையும் செலவினையும் கொடுக்கக்கூடாது என்று நினைத்த ஆசிரியரின் சகோதரி தனிச்சமையல் செய்து கொள்வதற்கு அனுமதியை சகோதரர் குடும்பத்திடம் கேட்கவே அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
காலம் உருண்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இளைப்பாறிய ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் கடந்த கால நினைவுகள் மீளவரத் தொடங்கின. அடிக்கடி பகிடியாகக் கதைத்து வந்தவர்கள் ஒரு நாள் அதனை வைராக்கிய மனதுடன் முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியதுடன் வெட்கமில்லாது தங்கள் வீட்டில் வந்து சேர்ந்துள்ளிகள் எனத் திட்டித்தீர்த்தனர். எனவே அவர்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறுமாறு எல்லோருமாகச் சேர்ந்து கூறிவிட்டனர். இடம் புதிதாக இருந்தாலும் வசதியாக வாழலாம் என ஆசை வார்த்தை கூறப்பட்டதாலுந் தாம் வன்னிக்கு வந்ததையிட்டு மனங்கலங்கியவாறு கிளிநொச்சி நகருக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்திற் தாம் வாழ்ந்த வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. நடந்த விடயங்களை அவரிடங் கூறவே அவர் மல்லாவி என்ற இடத்தில் குடிசை அமைத்து வாழ்வதற்கு உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றார். அவர் கூறியதன் பிரகாரம் தனது குடியிருப்புக்கு அண்மையில் குடிசை அமைத்துக் கொடுக்கவே ஒரளவு நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். வரலாறு காணாத இடப்பெயர்வில் பழைய மனஸ்தாபங்களும் மீளவெளிப்பட்டு வருவதைத் தமிழர் சமூகத்திற் காணக்கூடியதாக இருக்கின்றது.
நிரந்தரக் குடியிடுப்பாளடுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்
பொதுவாக வரலாறு காணாத இடப்பெயர்வின் விளைவாகப் பெரும்பா லான இடப்பெயர்வாளருக்குச் சொந்த இடங்களிலும் சென்றடைந்த இடங்களிலும் ஏற்பட்ட பொருளாதார, சமூக, பண்பாட்டுப்பிரச்சனைகள் பெருந்துன்பத்தை ஏற்படுத்தியிருந்ததையாவரும் அறிவர். பொதுவாக 75.0 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அனுபவித்த பிரச்சனைகள் குடும்பத்திற்குக் குடும்பம்,
74

இடத்திற்கிடம், தஞ்சமடைந்து வாழ்ந்த வீடுகளுக்கு வீடு என வேறுபட்டமை கின்றது. இவற்றிற் பெரும்பாலான பிரச்சனைகள் சென்றடைந்த பிரதேசங்களி லுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களால் ஏற்பட்டதாகவே இடப்பெயர்வாளர்கள் கருத்துக் களைத் தெரிவித் திருந்தபோதிலும் முழுமையாக நிரந்தர குடியிருப்பாளர்களைக் குறைசொல்வது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதற்கு ஒப்பானது எனலாம்.
இடப்பெயர்வாளரைத் தமது குடியிருப்புகளில் அனுமதித்தபோது மிகவிரைவில் மீண்டும் தம்மிடம் திரும்பி விடுவார்கள் என நம்பியிருந்தனர். அது மட்டுமல்லாது தமது வீட்டில் எவரையும் அனுமதிக்காதுவிடின் தமது விருப்பத்திற்கு மாறாக அறிமுகமில்லாதவர்கள் உள்வரக்கூடிய சாத்தியக் கூறுகளும் இருந்துள்ளன. எனவே தமது வீடுகளில் இடப்பெயர்வாளர்களைக் கட்டாயமாக விரும்பியேற்கவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. மேலும் இலங்கையில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களில் ஏறத்தாழ நாலிலொரு பங்கினரின் இடப்பெயர்வாகவிருந்ததுடன் இவ்விடப்பெயர்வு நிகழ்கால, எதிர்கால அரசியலுடன் தொடர்புபட்டிருந்தது. எனவே இடப்பெயர்வாளருக்கு ஆதரவளிப்பது அவசியம் எனக் கருதப்பட்டபோதிலும் காலமோ நீண்டுவிட்டது. கொழும்பு மற்றும் தென்னிலங்கை செல்வதற்கு இறுக்கமான கட்டுப்பாடு விதிக்கப்படடி ருந்தமை, பொருளாதார ரீதியிற் தொடர்ந்து வேறு பிரதேசங்களுக்குச் சென்று வாழமுடியாத நிலை போன்றவற்றாற் தொடர்ச்சியாக ஆரம்பசேரிடத்திலேயே தங்கவேண்டியேற்பட்டது. இவ்வாறான நிலைமைகளால் நிரந்தர குடியிருப்பாளர் பொறுமை இழக்கவேண்டியேற்பட்டமை தவிர்க்க முடியாததே.
மேலும் குடும்பங்களிடையே அதாவது நிரந்தர குடியிருப்பாளருக்கோ அன்றில் இடப்பெயர்வாளருக்கோ கருத்துப் பரிமாற்றங்களைக்கூட செய்வதற்கு முடியாத சூழ்நிலை காணப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது குடும்ப உறவினைக் கூடப் பாதிப்பனவாக அமைந்திருந்தது. குறிப்பாக இளவயது குடும்பங்கள் இதனால் பெரிதுங் கஷ்டத்திற்கு உள்ளானார்கள் என்றே கூறல் வேண்டும். இவை இடப்பெயர்வாளருக்கும் விதிவிலக்கல்ல.
பொதுவாகத் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதி வீடுகளிற் கணிசமானவை வசதியானவையாகும். ஆனால் வன்னிப்பகுதிகளில் வசதியான வீடுகள் மிகக்குறைவாகும். எவ்வாறெனினும் இடப்பெயர்வின் காரணமாக வீடுகள் மற்றும் வளவுகளிலும் இட நெருக்கடியினால் அதிகளவு மக்கள் வாழக்கூடிய வசதிகள் காணப்பட்டிருக்கவில்லை. இதனால் சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்மராட்சிப் பிரதேசத்தில் அடிக்கடி மலக்குழி நிறைந்த நிலை காணப்பட்டிருந்தது. இவை நிரந்தரக் குடியிருப்பாளருக்கு எரிச்சலை ஊட்டுவனவாக அமைந்திருந்தன எனலாம்.
நிரந்தரக் குடியிருப்பாளர் இடப்பெயர்வுக்கு முன்னர் சுதந்திரமாக, செளகரிகமாக வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக தமது உணவு, உடை மற்றும் பிள்ளைகளின் கல்வி, விரும்பியதை வாங்கிப் பயன்பெறும் நிலை
75

Page 49
போன்றன காணப்பட்டிருந்தன. ஆனால் இடப்பெயர்வாளரின் வருகையின் பின்னர் இந்நிலை மட்டுப்படுத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதிருந்தது. குறிப்பாக பிள்ளைகளின் கல்வியில் எதுவித அக்கறையுஞ் செலுத்த முடியா திருந்தமையுடன், வீட்டிற் கல்விகற்கக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று சேரிடத்தெரிவில் கல்விகற்றவர்கள், கல்விகற்காதவாகள் என்ற பாகுபாடு இருக்கவில்லை என்பது முக்கியமானது. குறிப்பாக இடப்பெயர்வாளரின் எண்ணிக்கையைப் பொறுத்து வீட்டிலுள்ள அறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும் பிள்ளைகளின் உளவளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டதாகவே காணப்பட்டிருந்தது. பாடசாலை செல்லாமை, பொழுது போக்கு வசதியின்மை, படுக்கை வசதி ஒழுங்காகக் காணப்பட்டிருக்காமை, பிள்ளைகளைப் பெற்றோர் பலவழிகளிலும் அடக்கி வைத்திருந்தமை போன்ற பல காரணிகள் நிரந்தரக் குடியிருப்பாளருக்கு மட்டுமல்லாது இடப்பெயர்வாளர் குடும்பங்களையும் பாதித்திருந்தன.
நிரந்தரக் குடியிருப்பாளருக்கும் இடப்பெயர்வாளருக்குமிடையிற் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அத்தகைய சூழ்நிலை யில் இருகுடும்பங்களும் பிரச்சனைகளையும் மனஉளைவுகளையும் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் இடப்பெயர்வின் பின்னர் நிரந்தரக் குடியிருப்பாளருக்குச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது என நிரந்தர குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இடப்பெயர்வும் உறவுகளில் பாதிப்பும்
பொதவாக இடப்பெயர்வினால் விளைந்த பல்வேறு பிரச்சனைகளில் உறவினர், நண்பர்களிடையே உறவுநிலை பாதிப்படைந்தமை துக்ககரமான சம்பவங்களில் ஒன்றாகும். இத்தகைய நிலை இடப்பெயர்வுக்குட்பட்ட எல்லா மக்களிடையேயும் காணப்பட்டது எனக் கூற முடியாதுவிடினும் கணிசமான குடும்பங்கள் இதனாற் பாதிப்படைந்ததை மறுக்கமுடியாது. இடப்பெயர்வினைச் சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பெரும்பாலும் ஒன்றிணைந்தே மேற்கொண்டிருந்தனர். அவர்கள் சென்றடைந்த பிரதேசங்களில் குறிப்பாக நண்பர்கள், உறவினர்களின் இல் லங்களில் சேர்ந்து வாழவேண்டியநிலை தவிர்க்க முடியாததாகவிருந்தது. இவ்வகையில் ஒன்றாக வாழவேண்டிய நிலை காணப்பட்டதனாற் காலப் போக்கிற் பல்வேறு பொருளாதார, சமூக, பண்பாட்டுக்காரணிகள் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுத்திரு ந்தது. குறிப்பாகப் பொதுச்சமையல், செலவு செய்தல், குழந்தைகள் பிரச்சனை, கெளரவப்பிரச்சனை, குடும்பப் பெண்களிடையே கருத்து முரண்பாடுகள், இடநெருக்கடி, காலையில் முற்றம் கூட்டல், நன்னீர் எடுத்து வருவதிலுள்ள பிரச்சனை போன்ற பல காரணிகள் உறவினரிடையே பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக நெருங்கிய உறவினர்கள் ஒன்றாக வாழ்வதும் பொதுச்சமையல் செய்யப்படும் போது அதற்கான செலவினத்தை ஈடுசெய்வதிற்
76

காணப்படுகின்ற குறைபாடுகளும் குடும்பங்களிடையே பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளன. இவை பற்றிச் சில உதாரணங்கள் மூலம் அறிந்து கொள்ளும் போது அதன் பல்வேறு வகைப் பரிமாணங்களையுந் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் குடும்பமாக ஒன்றாகவே இடப்பெயர்வினை மேற்கொண்டு சாவகச்சேரி மந்துவில் பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர். ஆண் சகோதரர்களில் மூத்தவர் அரச தொழிலில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது சகோதரர் சிறு வர்த்தகர். பெண் சகோதரர்களில் ஒருவர் விதவைப்பெண். மற்றவரின் கணவர் திருநெல்வேலிச்சந்தையில் ஈரொட்டி வியாபாரம் செய்தவர். இவர்களில் அரச தொழில் பார்ப்பவர் ஒரளவிற்கு வசதிபடைத்தவர். சந்தையில் தொழில் பார்ப்பவர் மதுப்பிரியர். விதவைப் பெண் இலவச உலர் உணவினைத் தவிர மூத்த சகோதரரினால் வழங்கப்படும் சிறுதொகைப்பணத்தினையும் கொண்டும் வலிகாமத்தில் இருக்கும் போது வீட்டுத்தோட்டத்தின் மூலமும் வாழ்க்கையை நடாத்தியவர். மேற்குறித்த நான்கு சகோதரர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். மேற்படி நான்கு சகோதரர்களும் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அரச தொழில் பார்ப்பவருக்கே நாளாந்தச் செலவு அதிகரித்துக் கொண்டு சென்றது. அது மட்டுமல்லாது இரண்டாவது சகோதரியின் கணவர் சாவகச்சேரி சந்தையில் உழைத்துவிட்டு மதுபானத்திற்கே அதிக செலவு செய்து வந்தார். இதனால் அரச உத்தியோகத்தரின் மனைவி கணவருடன் முறுகல் நிலை ஏற்படக்கூடிய வகையில் நடந்துவந்தார். குடியிருக்கும் வீட்டு உரிமையாளரும் அரச உத்தியோகத்தரும் நீண்ட நாள் நண்பர்கள். எனவே சகோதரிமார் இருவரும் வீண் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாது இருக்க அயல்வளவிற் குடிசை அமைத்து வெளியேறிவிட்டனர். சகோதரன் குடும்பத்தினர் வன்னிக்குச் சென்றுவிட்டனர். இதன் விளைவாக அவர்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் இருந்த சகோதர உறவு சீர்கெட இவ்விடப்பெயர்வு காரணமாக அமைந்துள்ளன என்றே கூறல் வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதியில் வசித்து வந்த மூன்று சகோதரிகள் குடும்பங்கள் இணைபிரியாதவர்கள். சிறுவயது முதற்கொண்டே அன்புரிமையுடன் வாழ்ந்தவர்கள். வெவ்வெறு துறைகளைச் சேர்ந்தவர்களை விவாகம் செய்தாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இடப்பெயர்வின் போதும் ஒன்றாகவே புறப்பட்டவர்கள். சாவகச்சேரி, மட்டுவிலில் மூத்த சகோதரியின் கணவருடன் தொழில் பார்க்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர். மூத்த சகோதரியின் குடும்பம் உத்தியோகரீதியிற் பலராலும் அறியப்பட்டவர்கள். மாதாந்தச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர். அடுத்த சகோதரியின் கணவர் யாழ்ப்பாணத்தில் சிறு வியாபாரம் செய்துவந்தவர். ஆனால் தொழிலில் விவேகமற்றவர். இளைய சகோதரியின் கணவர் அரச தொழிலிலிருந்து இளவயதிலேயே மருத்துவ காரணங்களைக் காட்டி ஒய்வு பெற்றவர்.
77

Page 50
இடப்பெயர்வின் ஆரம்ப காலந்தொட்டே மூன்று சகோதரிகளுக்குமி டையில் இருந்த உறவுநிலை குழந்தைகளினாற் பாதிப்படையத் தொடங்கியது. வீட்டு உரிமையாளருக்கு மனத்தாங்கல் ஏற்படக்கூடியளவிற்கு இரண்டாவது சகோதரியின் கணவரும் பிள்ளைகளும் நடந்து கொண்டதாக மூத்த சகோதரியின் கணவர் தெரிவிக்கின்றார். ஆனால் இரண்டாவது சகோதரியின் கணவரின் கருத்துப்படி மூத்த சகோதரியின் குடும்பத்தினர் தமது குடும்பத்தினை எள்ளளவும் மதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இடப்பெயர்வின் ஆரம்பகாலங்களில் மூன்று குடும்பங்களும் ஒன்றாகவே சமையல் செய்தார்கள். இரண்டாவது சகோதரியின் கணவர் வருமானப்பற்றாக்குறை உள்ளவரென்பதுடன் செலவு செய்வதில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்பவர். மூன்றாவது சகோதரி குடும்பத்தினர் மூத்த சகோதரி குடும்பத்தவர்களின் மேலாண்மையாற் தொடர்ச்சியாகத் துன்பப்பட்டு வந்துள்ளனர். எனவே இரண்டாவது, மூன்றாவது சகோதரிமாரின் கணவன்மார் இக்கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து கெளரவக் குறைவு ஏற்படுவதைத் தவிர்கதம் பொருட்டுத் தமது வெளிநாட்டு உறவினர் களிடம் பணத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு கொழும்பு சென்றனர். அவர்கள் நினைத்துச் சென்றது போல் பெருமளவில் உறவினர்கள் உதவி கிடைக்கப்பெறாதுவிடினும் சிறு உதவியினைப் பெற்றுக் கொண்டு சாவகச்சேரிக்கு வந்தனர். இது இடம்பெயர்ந்த நாலாவது மாதமாகும். இரு குடும்ப த்தினரும் தனித்து வாழ விரும்பிக் குடிசைகளை அமைத்து நல்ல நாள் பார்த்து சென்று வாழத் தொடங்கினர். சராசரி குடிசை ஒன்று அமைக்க 20,000/- ரூபாவினைச் செலவு செய்தனர். இவர்கள் மூத்த சகோதரி குடும்பத்துடன் நல்லுறவுகளை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களது பொல்லாத காலமோ என்னவோ தெரியவில்லை குடிசை அமைத்த 25 நாட்களுக்குள் அதனை விட்டுத் தமது சொந்த வீடுகளுக்குச் செல்லக் கூடியதாக நிலமை மாறியது. ஒவ்வொருவருக்கும் நட்டம் 20,000/- ஆகும். உறவும் பாதிப்படையலாயிற்று.
தீவுப்பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண்ணுக்கு ஆறு பிள்ளைகள். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இருவர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். மூவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தனர். மூத்த ஆண் சகோதரர் குடும்பத்தினர் ஏனைய சகோதர குடும்பங்களுடன் எந்தவிதத் தொடர்புமில்லை. ஆனாற் பொருளாதார ரீதியிற் கஸ்ட்ப்பட்டவர்கள். இரண்டாவது சகோதரன் கொழும்பில் வர்த்தகம் செய்பவர். வசதி படைத்தவர். விதவைத் தாயார் சம்பாதித்து வைத்திருந்த 125,000/- ரூபாவை முதலீடாகப் பெற்று கொழும்பில் வர்த்தகத்தைத் தொடங்கியவர். மூன்றாவது சகோதரி விதவைப்பெண். இரண்டு குழந்தைகளும் அவருடன் வாழ்ந்து வந்துள்ளனர். கடவுள் பக்தி நிறைந்த வர்கள்.
சகோதரர்களிடையே ஏற்பட்டிருந்த பூசலுக்கு பலிக்கடாகவாக விதவைத் தாயார் இருந்து வந்துள்ளார். மூத்த மகன் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு தாயாரை அழைத்திருந்தார். ஆனால் அவரது சகோதரனையும்,
78

சகோதரியையும் அழைக்கவில்லை. எனவே அந்த நிகழ்ச்சிக்குத் தங்களை அழைக்காததனாற் தாயாரும் போகக்கூடாது என இருவருங் கூறிவிட்டனர். அவர்களது சொல்வைக்கேட்காது சென்றமையால் தாயாரை வீட்டுக்கு வரவேண்டாம் எனக் கூறிவிடவே அவர் ஒன்றும் செய்யமுடியாது கைதடியில் உள்ள வயோதிபர் இல்லத்தில் வாழ வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்லாது அவராற் சேமித்து வைத்திருந்த பணப்பெட்டியை உடைத்து இருவரும் பணத்தை அபகரித்துக் கொண்டனர். தற்போது தாயார் அநாதையாகி விட்டார். சகோதரர்களிடையே உறவுநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்திற்கு இடப்பெயர்வாளர் அதிகஞ் சென்ற வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அங்கேயே வாழ்ந்து வருகின்றார். அவரது குடும்பம் மட்டுமல்லாது அவர்களது பல உறவினர்களும் அங்கேயே குடியிருப்புக்களை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இடப்பெயர்வினை மேற்கொண்டு சென்றவர்களை இரு கிழமைகள் தம்முடன் வைத்திருந்து விட்டு அவர்களுக்குக் காணிகளைப் பெற்று தனது கெளரவத்திற்கு ஏற்றாற் போல 50,000/- 75,000/- ரூபா வரை செலவு செய்து பெரிய குடிசைகளை அமைத்துக் கொடுத்தார். ஒரு சிலர் அப்பணத்தைச் செலுத்தி விட்டனர். ஆனால் நான்கு குடும்பத்தினரால் அவ்வளவு பணத்தினைக் கொடுக்க முடியாது போய்விட்டது. எனவே அவர்களிடம் பணத்தை தருமாறு நாள்தோறும் பிரச்சனையைக் கொடுத்து வருகின்றார். இவ்வளவுக்குச் செலவு செய்யாமற் சிறு குடிசைகளை அமைத்து வாழ்ந்திருந்தால் உறவு நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என இடப்பெயர்வாளர் அங்கலாய்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் உயர்கல்வி நிறுவனமொன்றில் உயர்பதவி வகிப்பவர் இடப்பெயர்வுக்கு ஆறு மாத காலத்திற்கு முன்னரேயே விவாகம் செய்தவர். மனைவி கர்ப்பவதியாகி நான்கு மாதங்களாகிவிட்டது. அவரது குடும்பத்தில் மனைவியின் தந்தையாரும், அக்கா முறையான உறவினர் ஒருவருமே அங்கத்தவர்களாவர். அவரது மனைவிக்கு நான்கு சகோதரர்கள் உண்டு. இருவர் வெளிநாட்டிலும், ஒருவர் கொழும்பிலும் ஒருவர் மிருசுவிலும் வசிக்கின்றனர். மிருசுவிலில் வசிப்பவர் மனைவியின் அக்காவாகும். அவர் ஆசிரியையாக பணிபுரிகின்றார். அவரது கணவர் அரச ஊழியராவர்.
இடப்பெயர்வின் போது எல்லோரையும் விட மனத்துணிவுடன் செல்வ தற்குக் காரணம் மிருசுவிலில் அக்கா குடும்பமிருப்பது என்பதாகும். அவர்கள் நிச்சயமாக தங்களை வரவேற்று உபசரிப்பார்கள் என்ற துணிவுடனேயே சென்றார்கள். ஒரு மாதம் கடந்து விட்டது. ஒரு மாதத்தின் பின்னர் வீட்டுக்கார அக்கா குடும்பத்திற்கும் இடப்பெயர்வாளரான தங்கை குடும்பத்திற்குமிடையில் முன்னரேயே முளைவிட்டிருந்த மனக்கசப்புக்கள் சிறிதுசிறிதாக வெளிப்படத் தொடங்கியது. அதற்கான காரணம் இது தான். மேற்படி சகோதரர்களின் தாயார் அவர்கள் சிறுவயதாகவிருக்கும் போதே இறந்து விட்டார். அவர்களை பராமரிப்பதில் உள்ள கஷ்டத்தின் காரணமாக மிருசுவிலில் வாழும் அக்காவை

Page 51
உறவினர் ஒருவர் வளர்த்து வந்தார். ஏனைய சகோதரர்களதும் உதவி தொடர்ந்தும் அக்காவுக்கு கிடைத்துவந்துள்ளது. எல்லோரும் இணைந்தே அவருக்கு அரச ஊழியர் ஒருவரை விவாகம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயானார். உயர்பதவி வகிப்பவரின் விவாகத்திற்கு வந்து சிறப்பாகச் செய்து முடித்துவிட்டு சென்றவர்கள் அக்கா குடும்பத்தினர். எவ்வாறெனினும் அக்காவுக்கு தனது தந்தையார், மற்றும் சகோதரி குடும்பத்திலும் பார்க்க தன்னை வளர்த்தவரிலேயே பாசமும் பற்றுங் கொண்டிருந்தார். இந்நிலையில் உயர்பதவி வகிப்பவரின் தங்கைக்கு மனைவியாரின் சகோதரனுக்கு விவாகம் செய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர் லண்டனில் வாழ்கின்றார். அதாவது மாற்றுச் சம்பந்தமாகும். இதனை அக்கா குடும்பத்தினர் அறவே வெறுத்தது மட்டுமல்லாது இவ்விவாகம் நடைபெறாதிருப்பதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வது உயர்பதவி வகிப்பவருக்கு தெரியாததல்ல. மைத்துனர் தனக்கு வாக்குறுதி தந்துள்ளார் என்ற ஆறுதலில் இருந்து வந்தார். எனவே இத்தகைய பிரச்சனையின் மத்தியில் ஒன்றாக வாழ்ந்தவர் களிடையே ஒரு மாதத்தின் பின்னர் எடுத்ததற்கெல்லாம் கண்டனக் கணைகள், மரியாதைக் குறைவான செயற்பாடுகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட வண்ணமேயிருந்து வந்தன. வீட்டில் மேலதிகமான தேங்காய், பால், முருங்கைக் காய், பலாப்பழம் போன்றவற்றிற்கு அதிக விலை கூறி சகோதரி குடும்பத்திற்கு விற்று வந்தார்கள் அக்கா குடும்பத்தினர். வாங்காமல் விட்டாலும் பிரச்சனை. வாங்கினாலும் நட்டம். நட்டத்தைப்பாராது வாங்கி வந்தார்கள்.
எனவே ஒரு நாள் அக்காவின் கணவர் தங்கையின் கணவருடன் கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு வந்துவிட்டார். அயலவர்கள் வந்து தடுத்து விட்டனர். அக்கா, தங்கை குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அவ்வீட்டில் இடப்பெயர்வாளராகவிருந்த வேறு இருகுடும்பங்களுக்கு பால் வார்த்ததைப் போலிருந்தது. ஏனெனில் தங்கை குடும்பம் வீட்டைவிட்டு வெளியேறினால் தாம் வசதியாக வாழலாம் என்பதனாலேயாகும். எனவே அடுத்த நாள் தங்கையின் கணவர் உடனடியாக வேறு இடத்திற் சென்று குடியிருக்க வேண்டும் என்ற உறுதியுடன் தென்மராட்சி, வடமராட்சிப் பிரதேசத்தில் வீடு தேடித்திரிந்தார். கிடைக்கவில்லை. வேதனையுடன் வீட்டுக்கு வரும் வழியில் மிருசுவிலில் நண்பர் ஒருவரை காணநேர்ந்தது. அவர் தனது நண்பருக்கு தனது துன்ப நிலையை எடுத்துக் கூறினார். அப்போது நண்பர் தனது வீட்டில் குடியிருந்த இரண்டு குடும்பத்தினர் நேற்றுத் தான் காலி செய்துவிட்டு வன்னிக்குச் சென்றுவிட்டனர் எனவும் அங்கு வந்து குடியிருக்கு மாறும் கேட்டுக் கொண்டார். உயர்பதவி வகிப்பவரின் வேதனையாவும் பனித்துளி போலாகியது. உடன் லான்ட்மாஸ்டரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வீடு சென்று தமது பொருட்களையும், குடும்பத்தினரையும் அதாவது மாமா, அக்கா, மனைவியையும் அழைத்துச்சென்று புதிய குடித்தனத்தினை மேற்கொள்ளத் தொடங்கினார். மேற்படி இடப்பெயர்வு இரு சகோதரக் குடும்பங்களைப் பிரிக்க உதவியது என்றே கூறல் வேண்டும். புதிய வீடு சென்ற ஒரு மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணம் வரநேர்ந்தது எனவும் அதன்
80

பின்னர் அக்கா குடும்பத்துடனான உறவு தொடர்ச்சியாக விரிசலடை யும் வாய்ப்பே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நகரில் சாதாரண காலங்களில் நண்பர்கள் மாலை நேரங்களில் ஒன்று கூடிப் பொழுதைக் கழிப்பது வழக்கமாகும். அத்தகைய ஒரு நண்பர் கூட்டம் இடப்பெயர்வின் போது ஒன்றாகவே சென்று நண்பர் ஒருவரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் பொதுக்கருத் தினைக் கொண்டவர்களல்லர். அவர்களின் செயற்பாடுகள் யாவும் அவரவரை மையமாகக் கொண்ட ஒரு நண்பர் குழாம் என்றால் மிகையாகாது. பொதுவாகக் கல்வியறிவு பெற்ற இந்நண்பர் குழாம் பொருளாதார, சமூக, பண்பாட்டுரீதியிற் பல்வேறு தரத்தினராகவிருந்தபோதிலும் ஒரு சில காரணிகள் அவர்களை ஒன்றிணைத்திருந்தன என்றே கூறவேண்டும். நாட்கள் செல்லச் செல்ல வீட்டு உரிமையாளநண்பர் குடும்பத்திற்கும் நண்பர் வட்டத்திற்குமிடையிற் கருத்து முரண்பாடுகள் மேலோங்கத் தொடங்கிய போது சில நண்பர்கள் வேறு இடத்திற்கு மாறிச் சென்றுள்ளனர். வேறு சிலர் எதனையும் தாங்கும் சுபாவத்துடன் தம்மை நிலைப்படுத்தி உள்ளே இருப்பதும் கஷ்டம், வெளியே செல்வதும் அவமானம் எனக் கருதித் தொடர்ந்தும் அங்கேயே வாழவேண்டிய தாயிற்று. வீட்டு உரிமையாளர்களோ தொடர்ந்தும் நண்பர்கள் தங்கள் வீட்டிலேயே வாழப்போகின்றார்கள் என நம்பியே மனக் கசப்பினை ஏற்படுத்தியிருந்தனர். நண்பர்கள் மிக விரைவிற் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்புவர் என எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நடந்ததோ வேறு. தமது சொந்த இடங்களுக்கு மீண்டுவிட்டனர். அத்துடன் நண்பர்களிடையே ஏற்கனவே இருந்த உறவுகள் முறிவடைந்துவிட்டது. வீட்டு உரிமையாள நண்பர் தனது நண்பர்களுக்கு இருப்பிடம் கொடுத்ததன் விளைவாக நண்பர்களை இழந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடக் கூடியதாகவிருக்கின்றது. நண்பர்களிடையே பகைமையினையும், மனஸ்தாபங்களையும் இவ்விடப்பெயர்வு வளர்த்துள்ளது. இத்தகையநிலை பெரும்பாலான நண்பர்கள், உறவினர் களிடையே பகைமையையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தியுள்ளதை இடப்பெயர்வுக் காலத்தில் பொதுவாக காணக்கூடியதாகவிருந்தது. இந் நூற்றாண்டின் முதலரைப் பகுதிக்கு முன்பாகக் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை காணப்பட்டிருந்த போதிலுஞ் சமூக, பொருளாதார, பண்பாட்டுவிருத்தியின் விளைவவாகக் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை சிதைவடைந்து வருகின்றது. அத்தகைய சூழ்நிலையிற் தவிர்க்க முடியாத இவ்விடப்பெயர்வு கூட்டுக்குடும்ப அமைப்பாக வாழ நிர்ப்பந்தித்தமையாற் பிரச்சனைகள் பல்வேறு வடிவில் எழுந்திருந்தன. இவ்விடப்பெயர்வுக்காலம் மேலும் அதிகரித்திருந்தால் மக்களிடையே பல்வேறு வகைப்பட்ட பிரச்சனைகள் எழுந்திருக்க வாய்ப்புண்டு.
81

Page 52
முதியோடும் இடப்பெயர்வும்
உலகில் இன்றைய மக்கள் பிரச்சனையில் அதிகரித்து வரும் முதியோரின் பங்கு முக்கியமானதாகும். சுகாதார மருத்துவ சேவையின் விருத்தியின் காரணமாக ஆயுள் அட்டவணை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. விருத்தி பெற்ற நாடுகளில் முதியோரைப் பராமரிப்பதில் அரசு மிகுந்த கவனம் எடுத்து அவர்களை முதியோர் பராமரிப்பு நிலையங்களிற் கவனமாகப் பராமரித்து வருவது சாதாரண நிகழ்வாகவிருக்கின்றது. எவ்வாறெனினும் அதற்கான செலவும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக அவ்வவ் நாட்டு சமூகநலத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையுட்பட வளர்முக நாடுகளிலும் ஆயுள் அட்டவணை அதிகரித்து க்கொண்டு செல்கின்றது. அதேவேளை இந்நாடுகளில் இன, மொழி மற்றும் சாதியடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதனால் அமைதியின்மை ஏற்பட்டு மக்கள் தாம் வாழும் பிரதேசங்கள், நாடுகளிலிருந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கும், சர்வதேசத்திற்கும் இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதனாற் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி வயோதிபர்களாவர். இத்தகையோர் வயோதிபர்களைத் தம்முடன் அழைத்துச் செல்லாத நிலை காணப்படுகின்றது. தம்மிடம் இருக்கும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் தம்முடன் கூட்டிச் செல்வதால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவும் தாம் வாழ்ந்த பிரதேசங்களிலேயே தமது வீடுகளில் வாழுமாறு கூறிவிட்டுச் செல்கின்றனர். இந்நிலை இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கும் பொருந்தும். தமிழர்கள் தமது பொருளாதாரத் தேட்டத்தினைப் பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே பெற்றுக் கொள்கின்றனர். எனவே தாம் எங்கு சென்றாலும் அதனைப் பராமரிப்பதிற் கவனஞ் செலுத்துகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில், நாட்டில் நிகழ்ந்து வரும் இனப்பிரச்சனையைச் சாட்டாகக் கொண்டு தென் இந்தியாவு க்கும் சர்வதேசத்திற்கும் அகதிகளாக - பொருளாதாரத் தேட்டத்தினைப் பெற்றுக் கொள்ளும் அகதிகளாகச் சென்றுள்ளனர். அவர்களது உறவினர் - குறிப்பாக வெளிநாடு செல்வதற்கான வசதி வாய்ப்புக் குறைந்த - வெளிநாடு செல்ல விருப்பமில்லாத சகோதரர்கள், உறவினர்களிடம் வயோதிபர்களைப் பராமரிக்கும் பொறுப்பினை அளித்துவிட்டுச் சென்றுள்ளனர். அது மட்டுமல்லாது பொருளாதார வலுவற்ற அரச மற்றும் அரசசார்பற்ற துறைகளில் தொழில் புரிபவர்களின் பெற்றோர்களும் காணப்படுகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஆயுதப் போராட்டத்தின் விளைவாகத் தாம் வாழ்ந்த பிரதேசங்களை விட்டு வெளியேறிப் புதிய இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்
82

தில் ஏறத்தாழ காற்பங்கினர் இருந்துள்ளனர். ரிவிரச 1 இராணுவ நடடிவடி க்கையின் பின்னர் இத்தொகை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்த க்கது. இந்நிலையில் அவர்கள் தமது வயோதிப உறுப்பினர்களைத் தாம் சென்றடைந்த பிரதேசங்களிற் வைத்துப் பராமரிப்பதிற் பல நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளனர். அது அவ்வாறிருக்க, வலிகாமம் பிரதேச மக்களது ஒட்டுமொத்தமான இடப்பெயர்வு வயோதிபர்களது எதிர்காலத்தினைக் கேள்விக்குறியாக்கிவிட்டது என்றே கூறல் வேண்டும். குறித்த நாட்களுக்குள் அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த மக்களிற் சிலர் தமது முதியோ ருக்குச் சில நாட்களுக்குப் போதுமான உணவினைச் சேகரித்து வைத்து விட்டு வெளியேறியமை பற்றி பலரால் தெரிவிக்கப்பட்டது. இவர்களிற் சிலரை குறித்த ஒரு கிழமைக்குள் தம்முடன் கூட்டிச் சென்றுவிட்டனர். எனினும் பலரை அநாதரவாகவே விட்டுச்சென்றுள்ளனர். தம்மைச் சமாளிக்க க்கூடிய வயோதிபர்கள் உணவினைச் சமைத்தோ அன்றில் அயலவர்களின் அனுசரணையுடனோ உண்டு உயிர்வாழ்ந்திருப்பதைப் பின்னர் கண்டு கொள்ள முடிந்தது. எனினும் கணிசமானோர் உணவின்றி, உடல் வலுக் குன்றி, தனிமையில் வாடி இறந்துள்ளதையும் அவர்களது உடல்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளாதிருந்தவர்கள் ஈமக்கிரியைகளைச் செய்து முடித்திருந்தமையை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.
இடப்பெயர்வினை மேற்கொண்ட முதல் நான்கு நாட்கள் இடப்பெயர் வாளருக்கு வேதனை தரும் காலப்பகுதியாகவேயிருந்தது. இதற்குள் வயோதிபர்களையும் அழைத்துச் செல்வது பிரச்சனைக்குரியதாக விருந்தது. தாம் எங்கு செல்கின்றார்கள் என்பதைக் கூட தெரிந்திராத நிலையில் செல்லுமிடத்தில் வயோதிபர்களையுஞ் சேர்த்துத் தமக்குப் புகலிடம் தருவார் களா என்ற ஐயம் ஏற்பட்டதிற் தவறில்லை. ஏனெனில் அக்காலப் பகுதியில் வயோதிபர்களை அழைத்தச் சென்றவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லுந் தரமன்று.
நாவற்குழி கடந்து தென்மராட்சிக்கு நுழையும் வாயிலில் 1954ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாந் திகதி திறந்து வைக்கப்பட்ட அரசினர் முதியோர் இல்லம் ஒன்று இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் 220 படுக்கை வசதிகள் கொண்ட ஆறு வாட்டுக்கள் இங்கு கட்டப்பட்டிருந்தன. பின்னர் 120 படுக்கை வசதி கொண்ட பெரிய வாட் கட்டப்பட்டு 340 வயோதிபர்கள் தங்கக் கூடிய கட்டிடமாக இது இருக்கின்றது. இதில் 220 கட்டில்கள் ஆண்களுக்கும் 120 கட்டில்கள் பெண்களுக்குமாகும். யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும் முதியோர் இல்ல முகாமையுஞ் சிறப்பாகப் பணியாற்றி வருகின்ற போதிலும் இங்கு அரசினாற் பல வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக முதியோரின் படுக்கைகள் மிகவும் பழையதாகவும் பாவனைக்கு உகந்ததல்லாதவையாகவும் காணப்படுகின்றன. தனியார் பலர் இவ்வில் லத்திற்கு உதவிகள் அளித்து வருகின்ற போதிலும் அது போதுமானதாகவில்லை. இவ்வாறாகச் சுமாரான வசதிகளைக் கொண்ட
83

Page 53
முதியோர் இல்லம் ஆரம்பித்த காலம் தொட்டுத் தொடர்ச்சியாக கொள்ளக்கூடியளவு வயோதிபர்களைப் பராமரித்து வந்துள்ளதாக இவ் இல்லத்தின் அதிபர் தெரிவிக்கின்றார். 1990ஆம் ஆண்டிலிருந்து இவ்வில்லத்தில் வாழ்ந்து வெளியேறிய, இறந்த வயோதிபர்களின் பட்டியல் ஒன்று அட்டவனை ஆகத் தரப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 257 வயோதிபர்கள் வாழ்ந்துள்ளனர். ஆனால் வலிகாமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர் வினாற் தொடர்ச்சியாகத் தாம் செல்லுமிடங்களில் வயோதிபர்களை அழைத்துச் செல்வதிலுள்ள இடையூறு காரணமாக வசதி குறைந்தவர்கள் மட்டுமல்லாது வசதிபடைத்தவர்கள் கூடத் தமது வயோதிப உறவினர்களை இவ்வில்லத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
84

#78I £6 £8 8L 8L I L
1909T19)
oooo Us@e) 1191,9-æ
68Z
#79||
6ț7I
9ᎭᎻ
#7f7|
LZI 1ņosfēès
ọ9Ưto 6īdī) —ı@rts
OL 90 9 | 9. I ZI £I
1,9119) 199f@ 1ụorio) spoof?
966 I
$L 8Z 89 0£ SZ LI
oooo 11@e)
Įrtogỗ giaĵoj
0£ 01 OI 寸[ L0 90
@foo$)|$rıņ09ọ9@ (Img)ī£đĩ)
6寸 9I Z£ #Z SZ If>
opos IIĢe)
Įurn@sooouuo
8£#7
98
£8 £6 ZL
ợ1$ $ Jone)
qıñIIĘsē [6] Lț7Z 9Z69 8ZIL LZ99 9ZL9 0ZZ9 1çorito) 1ņosfē oooo ugắe)
LSZ Z£Z f7ZZ ZZZ 86{ 661
oooo 11@elis įs-æ
† 661
£661 Z66|| [66] 066||
Tīırısı oologıs@s@ qstoïginqiúfē–1@ns qi-iqÐre
QI0909@ ||Urn@@fī) 613Ếogo ç561 - 0661 ĝơIGĒio - Ļurng giới)
I ‘o kasoorts-mjuk@
85

Page 54
இவ்வில்லத்தின் தலைவியின் கருத்துப்படி உண்மையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள், மற்றும் அங்கவீனர்கள் போன்றோரைக் கிராமசேவகரின் சிபாரிசுவிற்கிணங்க சமூக சேவைகள் உத்தியோகத்தரு டாகவே அனுமதிப்பது வழக்கமாகும். அவ்வாறெனினும் வலிகாமம் இடப்பெயர் வின் போது இந்நடைமுறைகள் பினபற்றப்படவில்லை. அதிகளவிற் வயோதிபர் வருகையினால் மனிதாபிமான அடிப்படையில் அதிபரே அனுமதித்துவிட்டுப் பின்னர் குறித்த அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகளும் இடப்பெயர்வாளரானபடியால் அவர்களது ஒத்துழைப்பையும் காலதாமதமாகவே பெறமுடிந்தது. அதிபர் அவர்களின் மனிதாபிமான செயலானது வயோதிபர் களைக் கொண்டுசெல்வதிலும் புதிய இடங்களில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் இடப்பெயர்வாளருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்ததன் விளைவாகவே தனது தற்றுணிவுடன் அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கின்றார்.
1995ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 257 வயோதிபர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால் இவ்வாண்டில் 438 வயோதிபர்கள் புதிதாக அனு மதிக்கப்பட்டனர். இது இவ்வில்லத்தின் வரலாற்றில் என்றுமில்லாத நிகழ் வாகும். அதேவேளை 79 வயோதிபர்கள் இல்லத்தைவிட்டு வெளியேறியு ள்ளனர். இக்காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆகும். வருட இறுதியில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 473 பேராகும். இவ்வெண்ணிக்கை இவ்வில்லத்திற்கு அதிகமானதாகவே இருந்தது. அதுமட்டுமல்லாது முன்னர் எப்போதுமில்லாத வயோதிபர் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன. இவர்களிற் பெரும்பாலானோர் இடப்பெயர்வின்போது கொண்டு வந்து விடப்பட்டவர்கள் என இல்லச் செயற்பாட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.
வயோதிபர்கள் அதிகளவில் இல்லத்திற்கு வருகை தந்திருந்தமையால் உணவு மற்றும் இருப்பிட வசதிகள், மருத்துவ சுகாதார வசதிகள் போன்றன பெருமளவிற்கு பிரச்சனையையே தந்துள்ளன. ஏனெனில் இவற்றோடு தொடர்புடைய உத்தியோகத்தரும் இடப்பெயர்வாளராகிவிட்டனர். முதியோரைப் பராமரிக்கக் கூடியவர்களாக அவர்களது உறவினர்கள் இருக்கின்ற போதிலும் முதியோர் ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பயன்களை எல்லாம் பெற்றுவிட்டு அவர்களைக் கறிவேப்பிலையாகப் புறக்கணித்து விடுகின்றனர். முதியோரை நோயிலும் நொடியிலும் பராமரிக்கக் கூடிய மனப்பக்குவம் இளஞ்சந்ததியினருக்கு இல்லை எனவும் குருத்தோலை களும் காவோலைகளாக மாறும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர் எனவும் இல்ல அதிபர் கலவையுடன் தெரிவித்துக் கொள்கின்றார். தற்போதைய சமூகம் வயோதிபர்களை பராமரிக்கக்கூடிய மனப்பக்குவத்தை பெறத்தவறுவ தாலேயே முதியோர் ஒதுக்கப்பட்டு அநாதைகளாக்கப்படுகின்றனர் எனலாம்.
86

O)
கல்விச் செயற்பாடுகள்
மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் வேண்டப்படுவன போல் அவன் திருப்திகரமான வாழ்க்கையை நடாத்துவதற்குக் கல்வி இன்றி யமையாதது மட்டுமன்றி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவு முள்ளது. பொதுவாக இலங்கைத் தமிழர் குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்கள், மிக நீண்டகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். பெளத்த மக்கள் எவ்வாறு பிரிவேனாக்கள் ஊடாக கல்வியை முன்னெடுத்துச் சென்றார் களோ அதேபோலவே தமிழர்கள் திண்ணைப்பள்ளிகள், நிலாப்பள்ளிகள், கோவிற்பள்ளிகள், பட்டறைப்பள்ளிகள், குருகுலக் கல்விகள் போன்ற பல்றுே வகைக்கல்வி அமைப்புக்களின்வாயிலாகத் தமது கல்விப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்
ஐரோப்பியர் வருகையுடன் முறைசார்ந்த கல்வி அமைப்பு முறை விருத்தியடையலாயிற்று. குறிப்பாகபோர்த்துக்கீசர், ஒல்லாந்தள் ஆகியோர் தம் மதத்தைப் பரப்புவதற்கு ஏற்ற வகையிலான கல்விஅமைப்புமுறையினை அறிமுகப்படுத்தினர். ஆனால் ஆங்கிலேயர் வருகையுடன் தான் கல்வி அமைப் பரிற் பெரிய மாற்றங்கள் ஏற்படலாயின. கத்தோலிக்க, கத்தோலிக்கமல்லாத மற்றும் ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நிறுவனரீதியிலமைந்த கல்வி அமைப்பு முறைகளுக்கு மாறாகச் சைவத்தையும், தமிழையும்வளர்த்தற் பொருட்டு இந்துப் பாடசாலைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. இவ்விருவகைப் பாடசாலைகளிலுங் கணிசமானவை ஆங்கிலக்கல்விக்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளன. அதன் விளைவாகத் தமிழர் மத்தியில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தமிழர்களிடையே ஆங்கிலக்கல்வியுடன் இணைந்த கல்வி வளர்ச்சியடையத்
87

Page 55
தொடங்கியது எனலாம். இதனால் அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டற்றுறை களிற் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்க லாயின. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணமக்கள் கல்வியைத் தமது முதவிடாகக் கொண்டு, அதற்காகத் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என்றே கூறல் வேண்டும். இத்தகைய கல்வி வளர்ச்சியானது எத்தகைய தடைகள் எற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் மக்களால் முன்னெடுக்கப்படுவதுடன் அதனைத் தமது வாழ்வின் ஒரு அங்கம் எனக்கருதியும் வருகின்றனர். பொதுவாக யாழ்ப்பாண மாவட்டமக்களிற் பெரும்பாலானோர் எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் வந்து சேரினுங் கல்வியைத் தளரவிடுவதில்லை. இவ்வாறான கல்வி வளர்ச்சிநிலை அண்மைக்காலங்களிற் தரப்படுத்தல் முறை, உரிய காலத்திற் பரீட்சையினை நடத்தாது விடல், மற்றும் இனப்பிரச்சனையின் விளைவாக காலத்துக்குக் காலம் பின்தள்ளப்பட்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது. குறிப்பாக 1980களிலும் 1990களின் முன்னரைப்பகுதிகளிலுங் கல்விக்கூடங்கள் குறித்த நாட்களுக்கு இயங்கின எனக் கூறமுடியாது. இராணுவத் தாக்குதல்கள், எறிகனை வீச்சுக்கள், விமானத்தாக்குதல்கள் மற்றும் அதிகரித்த விடுமுறைகள், அமைதியின்மை போன்ற பல காரணிகள் பாடசாலைகள் முழுமையாக இயங்கத் தடையாகவிருந்துள்ளன. எனினும் பெற்றோரின் அக்கறை மற்றும் மீட்டற்பள்ளிகள் போன்றவற்றின் காரணமாகத் தொடர்ந்தும் கல்விக்கான பெறுபேறுகள் சிறப்பாகவே இருந்துள்ளபோதிலும் மக்கள் கல்வியின் பால் கொண்டுள்ள அக்கறையினை குறைக்கச் செய்யும் நிர்ப்பந்தநிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தன என்றே கூறல் வேண்டும். பெற்றோரில் கணிசமானோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பு வதிலேயே அக்கறை கொண்டவர்களாக இருந்துவருகின்றனர். ஏனெனில் பொருளாதார வாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை உறுதிப்படுத்துவதற்குமேயாகும். பிள்ளைகளை வெளிநாடுகளு க்கு அனுப்புவபர்கள் ஓரளவிற்காவது பொருளாதார வசதி படைத்தவர்களாக வேயிருப்பர். ஏனெனிற் தஞ்சம் புகும் மேற்குலக நாடுகளுக்குச் செல்வதற்கு ஒருவருக்கு தற்போது குறைந்தபட்சம் ரூபா 500,000/- தேவைப்படுகின்றது. இ."து எவ்வாறாயினும் கணிசமானளவு பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் பெரிதும் அக்கறை கொண்டவர்களாகவிருந்துவருகின்றனர்.
இலங்கையில், பொதுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைகளிலும் தனியார் மீட்டல் நிறுவனங்களிலுஞ் சிறப்பான கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. இதேயளவு கல்வியைக் கொழும்பு நகரிற் பெற்றுக் கொள்வதாயின், பலமடங்கு பணச் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆகவே பிரச்சனைகள் தமக்கு நேரினும் யாழ்ப்பாணத்திலேயே பிள்ளைகளுக்கு கல்வியூட்டவேண்டும் என்பதில் பெற்றொர் அக்கறை கொண்டவர்களாக இருக்கி ன்றனர். ஆனால் இப்பிரதேசத்தின் அண்மைய நெருக்கடிச் சூழலானது, கல்வி குறித்த தமது பாரம்பரியப் போக்கினையும் தாண்டி மக்களைச் சிந்திக்க, செயற்படுத்த வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
88

முன்னேறிப்பாய்தலும் கல்விச் செயற்பாடுகளும்
1995ஆம் ஆண்டு யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையினால் வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்குப்பகுதி மக்கள் ஏனைய வலிகாமப் பிரதேசங்கள், யாழ்ப்பாண நகரம், தென்மராட்சி, வன்னிப்பிரதேசங்களை நோக்கி இடப்பெயர்வினை மேற்கொண்டமையால், அப்பிரதேச மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் சென்றடைந்தபிரதேச பாடசாலைகளில மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட பெரும்பாலான பாடசாலைகள் இரண்டு வாரங்களாக இயங்கவில்லை. எனினும் அதனைத் தொடர்ந்து பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இராணுவநடவடிக்கையின் விளைவாகப் பல பாடசாலைகள் சேதமடைந்தமை மட்டுமன்றி சில முண்ணணிப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டன. இதனால் மாணவர்கள் வேறு பாடசாலைகளுடன் இணைந்தே கற்கவேண்டியிருந்தது.
அரச விமானப்படை விமானம் ஒன்று 22.09.1995ஆம் திகதி வெள்ளி க்கிழமையன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்திற் குண்டுகளை வீசியமையாற் பதினாலுக்கும் அதிகமான மாணவர்கள் இறந்ததுடன் பல மாணவர்கள் காயங்களுக்குள்ளாயினர். அதன் விளைவாக மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குத் தயக்கங்காட்டினர். பெற்றோர்களும் பயத்தினாற் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கவில்லை. (உதயன் 28.09.95) இவ்வாறான மாணவர்கள் உயிரிழப்புக்குப் பல்வேறு பொது ஸ்தாபனங்களுங் கண்டனக் குரல்கள் எழுப்பின. குறிப்பாக இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் தமிழ் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியது. (உதயன் 28.09.1995)
இது இவ்வாறிருக்க, முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையினால் இடம் பெயர்ந்த வலிகாமம் மேற்கைச் சேர்ந்த பல குடும்பங்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பினர். வலிகாமம் மேற்கைச் சேர்ந்த சங்கானைக் கல்விக் கோட்டப் பாடசாலைகள் பலவும் இயங்க ஆரம்பித்துள்ளன எனவும் 60 சதவீதமான மாணவர்கள் தத்தம் பாடசாலைகளுக்குச் சென்று வருகின்றார்கள் எனவும் இது போன்ற நிலை நீடிக்குமானால் மேலும் மாணவர்களின் வரவு அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் கல்விக் கோட்டத்தினர் தெரிவித்தனர். (உதயன் 1.10.1995) எனினும் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையுடன் பல குடும்பங்கள் தென்மராட்சி மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதை அவ்வப் பிரதேசப் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையின் பின்னர், பொதுவாகக் குடாநாட்டிற் தொடர்ச்சியாக இராணுவத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டி ருந்தமையாற் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதிற்
89

Page 56
தயக்கம் காட்டினர். பாடசாலைகளிற் கல்விப்போதனைகளும் இக்காலங்களில் ஒழுங்காக நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்துவந்த இடிமுழக்கம் இராணுவ நடவடிக்கையின் விளைவாக அச்சுவேலி, பத்தமேனி, இடைக்காடு, ஆவரங்கல், புத்துார் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகள் இயங்க முடியவில்லை. இப்பிரதேச மக்கள் குறுகிய துார இடப்பெயர்வுக்குப் பதிலாக நீண்ட துார இடப்பெயர்வில் அக்கறை காட்டித் தென்மராட்சி மற்றும் வன்னிப்பகுதிகளுக்குச் சென்றுள்ளமையால் இப்பிரதேச மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் செயலிழந்தன என்றே கூறல் வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலையங்கள்
1994ஆம் ஆண்டுக்கான கல்வித் திணைக்களத்ததின் புள்ளி விபரப்படி 490 அரசாங்க மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. இவற்றிற் தரம் னைச் சேர்ந்த 89 பாடசாலைகளும் தரம் 11 ல் 143 பாடசாலைகளும், தரம் II ல் 258 பாடசாலைகளும் இயங்கி வந்துள்ளன. மற்றும் தரம் 1னைச் சேர்ந்த பாடசாலைகளில் Ob, 1C பாடசாலைகளும் அடக்கப்படுகின்றன. மேற்குறித்த பாடசாலைகள் தரத்தினடிப்படையிற் பிரதேசக் கல்விக் கோட்ட ரீதியாக அட்டவணை 5.1 இல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 5.1 தர ரீதியாக பாடசாலைகள் - 1994 - யாழ்ப்பாண மாவட்டம்
பிரதேச கல்விக் கோட்டம் தரம் 1 தரம் 2 தரம் 3 மொத்தம்
நெடுந்தீவு 1 2 7 10 ஊர்காவற்றுறை 5 5 16 26 வேலணை 4 15 21 40 யாழ்ப்பாணம் 13 13 6 32 நல்லூர் 8 12 19 39 சாவகச்சேரி 11 21 34 66 பருத்தித்துறை 8 8 17 33 கரவெட்டி 7 10 15 32 மருதங்கேணி 1. 5 13 19 கோப்பாய் 8 10 25 43 தெல்லிப்பளை 7 13 25 45 உடுவில் 5 10 18 33 சண்டிலிப்பாய் 8 10 21 39 சங்கானை 3 9 21 33 மொத்தம் 89 143 258 490
ஆதாரம் : நிர்வாக அறிக்கை, கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்
90

இவை தவிர யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பளைக் கல்வி வட்டாரம் கிளிநொச்சிப் பிரதேசக் கல்வித் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திற் பாடசாலைகள் இயங்கி வருகின்ற போதிலும் இக்காலக் கல்விப் பிரச்சனைகள் இப்பிரதேச பாடசாலை மாணவர்களுக்கும் பொருந்தும்.
1991ஆம் ஆண்டு தீவுப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய தீவுகளில் உள்ள 18 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் யாவும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு இடம் பெயர்ந்தன. இப்பாடசாலைகளின் எண்ணிக்கை 58 ஆகும். IAB தரத்தினைச் சேர்ந்த வேலணை வைத்தியலிங்கம் துரைசுவாமி ம. ம. வி. புங்குடுதீவு மகா வித்தியாலயம், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லுாரி, காரைநகள் யாழ்ரன் கல்லூரி, காரைநகர் காலநிதி ஆ. தியாகராஜா ம. ம. வி, (இந்துக்கல்லூரி) போன்ற முன்னணிப் பாடசாலைகளும் இடம்பெயர்ந்த பாடசாலைகளில் முக்கிய மானவையாகும். இவ்விடப்பெயர்வின் விளைவாகத் தீவகத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் பெருமளவிற்குப் பாதிப்பினை அடைந்திருந்தன. ஒரு புறத்தில் மாணவர்கள் இடை விலகல் அதிகரித்துக்கொண்டு செல்ல, மறுபுறத்தில் ஆசிரியர் தமக்கு வசதியான பிரதேசங்களுக்கு இடமாற்றங்களைப் பெறத்தொடங்கினர். மாணவர்களும் குறித்த பிரதேசத்திலல்லாமல் பரந்து இடம்பெயர்ந்தமையால் பாடசாலைகள் தங்களது மாணவர்களை இழந்திருந்தன. அத்துடன் பாடசாலைகள் இயங்குவதற்குரிய கட்டிடங்கள், தளபாடங்கள் போன்றவற்றின் பற்றாக்குறையினாலுங் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிற் சிக்கல்கள் காணப்பட்டிருந்தன. கல்வித் திணைக்களம் காலத்துக் காலம் எடுக்கும் தீர்மானங்களுங் கூடத் தீவக மாணவர்களின் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாகவிருந்ததைப் பல்வேறு பொது நிறுவனங்கள் சுட்டிக் காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் கல்வித் திணைக்களம் பொது மக்களது கருத்துகளுக்குச் செவமடுக்கவில்லை என்பது அதன் செயற்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.
O1

Page 57
அட்டவணை5.2
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணவர்கள் 1991
கோட்டங்கள் 1 - 5b 6 - 11ub 12b மொத்தம்
ஆண்டுவரை ஆண்டுவரை ஆண்டுக்கு மேல்
வேலணை 8000 7849 387 16236 யாழ்ப்பாணம் 17054 21222 3422 41698 பண்டத்தரிப்பு 19960 21546 2238 43744 LD(bğ560TTTLDLLb 20593 21343 1875 43811 வடமராட்சி 15991 17253 2283 35527 சாவகச்சேரி 11530 10539 1065 23134 மொத்தம் 93128 997.52 11270 204150
ஆதாரம் : நிர்வாக அறிக்கை 1991, கல்வித் திணைக்களம்
இது இவ்வாறிருக்க இடிமுழக்கம் இராணுவ நடவடிக்கையின் விளைவாக வலிகாமம் கிழக்கு பிரதேசங்களிற் பாடசாலைகள் செயலிழந்தன. இங்கு கல்வி கற்ற மாணவர்களிற் கணிசமானோரும் பல ஆசிரியர்களும் தென்மராட்சி மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு இடப் பெயர்வினை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
சூரியப்பிரகாசடும் கல்வி நிலையும்.
சூரியப்பிரகாச இராணுவ நடவடிக்கையின் விளைவாக யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை தீவுப்பகுதி கோட்டங்களைச் சேர்ந்த 322 பாடசாலைகளுடன் அவற்றிற் கல்வி பயின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் இடப்பெயர்வுக்குள்ளாகினர். குறிப்பாக 1991ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 204,150 மாணவர்கள் பயின்று வந்தனர். தீவக மாணவர்களின் இடப்பெயர்வின் போது 3,151 மாணவர்களைத் தவிர்ந்த ஏனையோர் இடப்பெயர்வுக்குட்பட்டிருந்தனர். அட்டவணை 5.2ல் 1991ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் விபரம் தரப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு நிகழ்ந்த வலிகாமம் இடப்பெயர்வு யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலையை மட்டுமன்றி வன்னிப்பிராந்தியத்திலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 322 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களின் ஒட்டுமொத்தமான இடப்பெயர்வினால் கல்விச் செயற்பாடுகள் முற்றாகச் செயலிழந்தன. சூரியப்பிரகாச இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து
92

சாவகச்சேரி, பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி, பளை ஆகிய கல்விக் கோட்டங்களிலுள்ள 150 பாடசாலைகளிலும் இடம்பெயர்ந்தோர் வாழவேண்டியது தவிர்க்கமுடியாததாகவிருந்தமையால் கல்விச்செயற்பாடுகளை உடன் ஆரம்பிக்க முடியாத நிலை இக்காலத்தில் கல்வித் திணைக்களத்திற்கு ஏற்பட்டது.
கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள்
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல வலிகாமத்திலிருந்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வின் விளைவாக மக்களது பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்களில் எதிர்விளைவுகளே தோற்றுவிக்கப்பட்டிருந்தன என்பதை எவராலும் மறுக்கமுடியாது. குறிப்பாக இடப்பெயர்வாளரில் ஏறத்தாழ 40.0 சதவீதத்தினர் கல்விகற்கும் மாணவப்பருவத்தினராவர். கடந்த 10 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பிரதேசம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் மந்தகதியிலேயே காணப்பட்டுள்ளன. இந் நிலைமையினால் பெருமளவிலான மாணவர்கள் தமது பாடசாலை வாழ்விலிருந்து இடைவிலகுபவர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக கணிசமானோர் சர்வதேச இடப்பெயர்வுக்குட்பட்டிருந்தனர். கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து சென்றதாலும், மாணவர்கள் அமைதியான சூழலில் தமது கல்வியை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாலும் கல்விப் பெறுறுேகளும் தொடர்ச்சியாக மந்தகதியிலேயே தொடர்ந்தது எனலாம். இதற்கு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக த்திற்கு நுழைவதற்கான தரப்படுத்தல் முறையும், இன அடிப்படையிலேனும் தமிழருக்கு தொழில் வாய்ப்பினை அளிக்காத நிலையுமே முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இலவச உதவிகள் உரிய காலத்திற் கிடைக்கப்பெறாமையுடன் தென்னிலங்கை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் 21ம் நுாற்றாண்டுக்கு ரிதாக மாற்றமடைய யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாணவர்களது ஆற்றல்கள் படிப்படியாகப் பின்னோக்கிச் செல்வதற்கான நிலைமைகள் கூர்மையடைந்து வந்துள்ளன. இத்தகைய இடர்ப்பாடுகளைச் சுமந்து வந்தமக்களிடையே அரசியற் காரணிகள் தொடர்ச்சியாகக் குறுகியதுார, நீண்ட துார இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வில் அசாதாரண நிலையை எற்படுத்தியிருந்துள்ளன.
1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் நாள் தொட்டு நிகழ்ந்த மக்கள் இடப்பெயர்வு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெருந்தடையாக இருந்துள்ளதை அதனைத் தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி அளிக்காமையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது அறிய முடிகின்றது. ஏற்கனவே கூறப்பட்டது போல் தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மட்டுமல்லாது கோவில்கள்; பொதுஸ்தாபனங்களின் கட்டிடங்கள் யாவும் இடம்பெயர்ந்தோரால் நிரம்பி
93

Page 58
வழிந்தன. அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இடப்பெயர்வாளரின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உறையுள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அதிகளவிற்கு ஆர்வம் கொண்டிருந்தமையாலும் இடப்பெயர்வுக்கு உட்பட்ட பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனையிலும் பார்க்க ஏனைய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமையாலும் நவம்பர் மாதம் முழுவதும் பிள்ளைகளின் கல்வியில் எவரும் அக்கறை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் முடியாது. அத்துடன் வலிகாமப் பிரதேசத்திற் தொடர்ச்சியாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையாற் தங்களது உடைமைகளுக்கு ஏற்பட்டு வரும் சேதங்கள் பற்றியே மக்கள் அதிகம் சிந்திப்பவர்களாக இருந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டமுறுபவர்களாவும் அதனால் அன்றாடத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகநேரம் செலவழிப்பவர்களாகவும் இருந்தனர்.
நவம்பர் மாதம் இறுதிவாக்கில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை விடுதலைப்புலிகள் உட்பட சகலரும் உணரத் தொடங்கினர். எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 50,000 இடப்பெயர்வாளர் தஞ்சமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்குவேறு இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கும் பட்சத்திலேயே பாடசாலைகளை இயங்கவைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. (உதயன் 23.11.95) ஏனெனில் பொதுவாக முதலில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு முன்னர் வன்னிப்பிராந்தியத்திற் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனக் கல்வித் திணைக்களத்தினரும் கல்விச் செயற்பாட்டில் அக்கறை கொண்டவர்களும் தீர்மானித்திருந்தனர் எனவே கிளிநொச்சி உட்பட வன்னிப்பிரதேச பாடசாலைகள் 1996ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனவும் பாடசாலைகளிற் தஞ்சமடைந்துள்ள மக்களுக்குக் கொட்டகை அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராற் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாடு 13.12.95) ஆனால் சில நாட்கள் கழிந்த பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் ஐனவரி முதலாம் திகதி திறந்து கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் இடப்பெயர்வாளரை வெளியேற்றுவதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து தடி, கிடுகு, கயிறு போன்றவற்றை எடுத்துவர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரியால் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாடு 20.12.95) அதேவேளை பெற்றோர் மற்றும் கல்வியோடு தொடர்புடையவர்கள் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்தோரில் 40 சதவீதத்தினர் மாணவர்களாகவிருப்பதனால் அவர்களுக்குக் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினர். (ஈழநாடு 24.12.95) மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 30,000 மாணவர்கள் தஞ்சமடைந்துள்ளனர் எனச் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பிராந்தியங்களில் உண்மையில் எவ்வளவு இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைக் கண்டறியவும் அவர்கள் எவ்வெப்பாடசாலை மாணவர்கள் என்பதைக் கண்டறியவும் மாணவர்களால் அவ்வப்பாடசாலை
94

அதிபர்களிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இ.து இவ்வாறிருக்க 1996ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வடமராட்சி, தென்மராட்சி பாடசாலைகளில் ஆண்டு 1-5 வரையிலான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வித் திணைக்களத்தினர் அறிவித்தனர். (ஈழநாடு 27.12.95) அத்துடன் இடம்பெயர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளிற் கல்வியைத் தொடரலாம் எனவும் இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்களிற் தற்காலிகமாகக் கடமையாற்றுவதற்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவுந் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாடு 30.12.95)
ஏற்கனவே கல்வித் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது போல 1996ஆம் ஆண்டு ஐனவரி முதலாம் திகதி பாடசாலைகள் இயங்க ஆரம்பித்த போதிலும் அவை முழுமையாக இயங்கவில்லை. மாணவர்களின் வரவு குறைவாக இருந்தமையாற் காலை 10 மணியுடன் பாடசாலைகள் மூடப்பட்டன. பொதுவாக முக்கியமான பாடசாலைகளில் தஞ்சமடைந்தோர் தங்கியிருந்ததுடன் அரச திணைக்களங்கள், தபாலகங்கள். உணவுக் களஞ்சியங்கள் போன்றனவும் இயங்கி வந்தமையால் மாணவர்களின் கல்விக்குத் தொடர்ச்சியாக இடையூறு களே காணப்பட்டிருந்தன என்றே கூறல் வேண்டும். (ஈழநாடு 2.1.96) உதாரணமாக தேசியப் பாடசாலையான சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் யாழ்ப்பாண அரசசெயலகம் அதனுடன் இணைந்த திணைக்களங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொக்குவில் பல்தொழில்நுட்பக் கல்லுாரி, மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களினது களஞ்சிய அறைகள் என்பன அமைந்திருந்தன. அத்துடன் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணங்கள் கூட மேற்படி கல்லூரி மைதானத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இதனால் கல்லூரியின் செயற்பாடுகளை செயற்படுத்த முடியாது கஷ்டப்பட்டதாக கல்லூரி அதிபரால் தெரிவிக்கப்பட்டது. எனினும் பாடசாலைகளை இயங்கவைக்க வேண்டும் என்பதில் கல்வித்திணைக் களம் காட்டிய அக்கறையால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பிக்கப்பட்ட இரு நாட்களின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் வாழ்வதால் அவர்கள் கல்விச் செய்ற்பாட்டிற்குத் தடையாக இருக்கின்றனர் எனக் காரணங்காட்டி பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி, தென்மராட்சி கோட்டப் பாடசாலைகள் மறு அறிவித்தல் தரும் வரை மூடப்படும் என கல்விப் பணிப்பாளர்களின் அறிவித்தல் வெளி வந்தது. (ஈழநாடு 4.1.96).
வன்னிப்பிராந்திய பாடசாலைகளும் முன்னர் அறிவித்தவாறு முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டபோதிலும் மாணவர்கள் வரவு குறைவாகவே காணப் பட்டது. இதற்கான காரணங்களில் முக்கியமானது இடம்பெயர்ந்தோர் பாடசாலை களில் வாழ்வதால் கல்விச் செயற்பாடுகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை என்பதனா லேயாகும். (ஈழநாடு 5.196) இதேவேளை கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்கள் ஒரு புறமிருக்க, வலிகாமத்திலி ருந்த பிரபல பாடசாலைகளை வன்னிப்பகுதிகளில் ஆரம்பிப்பதற்குச் சிலர்
95

Page 59
ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தபோதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்ற செயல் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டனர். (ஈழநாடு 9.196).
பாடசாலைகளை இயங்கவைக்க வேண்டும் என்பதிற் பெற்றோர், கல்வித் திணைக்களத்தினர் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்துள்ளனர். இடநெருக்கடி, தளபாடம், மற்றும் ஆய்வுகூடப் பற்றாக்குறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவ்வவ் பாடசாலைகளின் அதிபர்கள் கேட்கப்பட்டனர். (ஈழநாடு 19.1.96) இந்நிலையில் முதலில் வசதியான பாடசாலைகள் இயங்கவைக்கவேண்டும் எனக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை அதிபர்களின் கூட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இனக் கட்டமைப்பபைப் பாதிக்கும் எனக் கண்டனந் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாடு 21.1.96).
கல்விச்செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ச்சியாகக் கண்டனங்களைத் தெரிவித்து வந்தள்ளனர். குறிப்பாக வலிகாமம் இடப்பெயர்வினாற் வடமராட்சி, தென்மராட்சி, வன்னிப்பிரதேசங்களில் 325,000 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் இந்நிகழ்வு அடிப்படை மனித உரிமையினை மீறுஞ் செயலாகும் எனவும் அகில இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர் (ஈழநாடு 27.196). மேலும் அவர்களின் கண்டனத்தில் பாலர் பாடசாலைகள் மூடப்பட்டதனால் 25,000ற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் வலிகாமம் இடப்பெயர்வினால் 350 பாடசாலைகளில் மக்கள் தஞ்சமடைந்து ள்ளனர் எனவும் வடமராட்சி, தென்மராட்சி, வன்னிப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் 150,000 மாணவர்களே கற்கக்கூடிய வசதியுண்டு எனவும் மேற்படி வளத்தினைக் கொண்டு 325,000 மாணவர்களைக் கற்க வைப்பதென்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது எனவும் அவர்களின் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல அரசு விரைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஈழநாதம் 27.196) அதேவேளை வலிகாமத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னிப்பகுதிகளிற் தங்கியுள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விப்பணிமனைகளிற் கடமையாற்றும் ஊழியர்களிற் சுமார் 500 பேருக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் வேண்டுவோர் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். (ஈழநாதம் 28.196).
இவ்வாறாகக் கல்விச் செயற்பாட்டை ஒழுங்குபடுத்தி அதனைச் செயற்படுத்துவதிற் காணப்பட்ட இடர்பாடுகளைக்களையும் பொருட்டு 4.2.96ஆம் திகதி கல்விப்பணிப்பாளர் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் வடமாகாணத்தில் ஆண்டு 1-5 வரையுள்ள வகுப்புகளையும், 1996ஆம் ஆண்டு ஆவணியில் தோற்றவுள்ள க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதலாம் திகதி கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. (ஈழநாதம் 11.2.96).

அ. பாடசாலைகளிற் தங்கியுள்ளோரை முழுமையாக மீளக்
குடியமர்த்தும் பட்சத்திற் பாடசாலைகளிற் படிப்படியாக வகுப்புக்களை ஆரம்பித்தல்.
ஆ. வன்னியில் மீளக் குடியமர்த்துதல் முற்றுப்பெற்றதும் 1.3.96 இலிருந்து ஆண்டு 1-5 வரையிலான வகுப்புக்களை நடாத் துதல்.
இ. வன்னியில் வகுப்புக்களை ஆரம்பித்த அடுத்த வாரத்தில்
வடமராட்சி, தென்மராட்சியில் 1-5 ஆண்டுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல்.
ஈ. 1.3.96ஆம் திகதி தொடக்கம் க.பொ.த. (உயர்தரம்) 1996
வகுப்புக்களை ஆரம்பிப்பது.
உ. வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் அடுத்துவரும் கிழமைகளில்
மேற்படி வகுப்புக்களை ஆரம்பிப்பது.
ஊ. ஏனைய வகுப்புக்களைச் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள்,
கல்விப்பணிப்பாளர்களின் அனுமதியுடன் ஆரம்பித்தல்.
மேற்குறித்த முடிவுகள் கட்டாயமாக அமூல்படுத்தப்படல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. கல்வித்திணைக்களத்தினர் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்த பாடசாலைகளை எக்காரணங் கொண்டு இணைத்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, இடம்பெயர்ந்த பாடசாலைகள் இயங்குவது தொடர்பாக இடநெருக்கடி, மாணவர் வரவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை இணைத்து அவ்வாறு இணைக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றினை முதன்மைப் பாடசாலையாகக் கொண்டு அதன் அதிபரை நிர்வாக அதிபராக்கி இயங்கவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆகக்குறைந்தது ஒரு பாடசாலையினையும், ஆகக்கூடுதலாக 12 பாடசாலைகளை ஒரே நேரத்தில் நிர்வாக அதிபரின் தலைமையில் இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக இணைக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் பத்திரிகைவாயிலாகவும் கல்வித்திணைக்களத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இதன் பிரகாரம் 1.3.96ஆம் திகதி ஆண்டு 1-5 வரையும் க.பொ.த உயர்தரம் 1996ற்கான வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. 6, 7, 8, 9, 10, 11, 12ற்கான வகுப்புக்கள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் எனவும் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் காலை 7.30 - 12.00 மணி வரையும் இடம்பெயர்ந்த பாடசாலைகள் 12.30 - 5.00 மணிவரையும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவுந் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலைகள் குறித்த நாளில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சகல பிரதேசங்களிலும் இடநெருக்கடி என்பது ஒருபுறமிருக்க, ஆசிரிய வளங்களை பகிர்ந்து கொள்ளல், மாணவர்களின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார
97

Page 60
வசதியினை வழங்குதல் போன்றவை தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் காணப்பட்டு வந்தன. இடநெருக்கடியாலும், தளபாடப் பற்றாக் குறையாலும் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பாதிப்புக்குள்ளாயினர். இதனை உணர்ந்த சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் அரச அதிபர்களின் முயற்சியினால் வடக்கு, கிழக்கு மாகாணசபை 11 மில்லியன் ரூபாவை வழங்கியது. (ஈழநாதம் 23.96) அத்துடன் UNHCR போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் கொட்டகைக்கான கூரைச்சீலைகளை வழங்கின. எவ்வாறெனினும் பல பாடசாலைகளில் மாணவர்கள் நிலத்திலிருந்தே கல்வி கற்று வந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.
இடம்பெயர்ந்த பாடசாலைகளில் வாழும் மக்களுக்குக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையவர்களாற் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்பட்ட போதிலும் பாடசாலைகளிற் தஞ்சமடைந்திருந்த மக்கள் வெளியேற மறுத்து விட்டனர். தொடர்ச்சியான வற்புறுத்தலின் விளைவாகச் சிலர் வன்னிப் பகுதிகளுக்கும் வேறு சிலர் புதிய குடிசைகளைக் கட்டிக் கொண்டும் செல்ல, கணிசமானோர் எவர் வந்தாலும் அசைய மாட்டோம் எனக் கூறிப் பாடசாலைகளிலேயே தங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்றுவதற்காக இலவச நிவாரணம் கூட நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் பல முன்னணிப் பாடசாலைகளில் ஒருபுறம் இடம்பெயர்ந்தவர்களின் அன்றாட செயற்பாடுகள் நடைபெற, மறுபுறத்தில் மாணவர்கள் கற்க வேண்டியிருந்தது. பாடசாலைகளிற் தஞ்சமடைந்தவர்களிடையே தொற்று நோய்கள் பரவியிருந்தன. அவை பாடசாலைகளுக்கு வந்த மாணவர்களையும் பாதித்திருந்தன. தென்மராட்சி மற்றும் வன்னிப்பகுதிகளிலேயே பாடசாலை களிற் தங்கியிருந்தவர்கள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிகாமத்திற் பாடசாலைகள் இயங்கிய காலத்தில் அவ்வவ் பாடசாலை மாணவர்கள் பாடசாலையின் விருப்புக்கு ஏற்ற வகையில் சீருடைகள் அணிந்து செல்வது வழக்கமாகும். ஆனால் இடம்பெயர்ந்த நிலையில் சீருடைகள் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் எத்தகைய உடுப்புக்களையும் அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். இது தவிர்க்க முடியாதது. இதன் விளைவாக வசதியானவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல வசதி குறைந்தவர்கள் அவ்வாறு செல்வதிற் சிக்கல் காணப்பட்டிருந்தது. அவர்களுக்கு இணையாக வறிய மாணவர்களால் உடைகளை அணிய முடியவில்லை என்பதே அதுவாகும். மேலும் மாணவர்கள் அதிக தூரத்தில் இருந்து தாம் வலிகாமத்தில் கற்ற பாடசாலைகளுக்கு வருகை தர வேண்டியிருந்தது. உதாரணமாக 10 மைல் தொலைவில் உள்ள கிளாலிப்பகுதியிலிருந்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இயங்கி வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு மாணவர்கள் வந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. வேறு சிலர் வடமராட்சியிலிருந்து நாள்தோறும் துவிச்சக்கர வண்டியில் வந்து சென்றனர். எவ்வாறெனினும் மாணவர்களின் வரவு மிகக் குறை
98

வாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு குறித்த தொகை மாணவர்கள் வன்னிக்குச் செல்ல, தாம் ஏற்கனவே கற்ற பாடசாலைகள் வெகுதுாரத்தில் அமைந்திருந்தமையால் அருகிலுள்ள பாடசாலைகளிற் கற்க வேண்டியிருந்தது. இந்நிலையானது மாணவர்களினது பாதுகாப்பையும் கருதியே செயற்படுத்தப் பட்டது எனவுங் கொள்ளலாம்.
மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 11.03.96ஆம் திகதி திட்டமிடப்பட்டபடி தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் க.பொ.த. (உயர்தரம்) 1996ஆம் ஆண்டில் பரீட்சை எடுப்பவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன, பல பாடசாலை மாணவர்கள் ஒன்றாக இருந்து கல்விகற்ற காட்சியை தனியார் மீட்டல் வகுப்புகளிலேயே முன்னர் காணமுடிந்தது. ஆனால் உண்மையில் பாடசாலைகளை ஒன்றிணைத்திருந்தமையால் இங்கும் இது சாத்தியமாக விருந்தது. இவ் வகுப்புக்கள் காலை 8.30 - 12.30 மணி வரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. (ஈழநாதம் 11.03.96) இவ்வாறாக மாணவர்களுக்கான வகுப்புக்கள் படிப்படியாக ஆரம்பிக்கப்படவே இடநெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. கிளிநொச்சி மற்றும் தென்மராட்சியிற் பல பாடசாலைகளில் மரநிழல்களில் வகுப்புகள் நடாத்தப்பட்டதை நேரடியாக காணமுடிந்தது. எனவே இத்தகைய கல்விச் செயற்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளினால் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் இடம்பெயர்ந்த வலிகாமப் பாடசாலைகள் முழுமையாக இயங்கவைக்க முடியாதுள்ளது எனவுஞ் சகலரிடமிருந்தும் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது எனவும் கல்வித் திணைக்களத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (உதயன் 25.03.96).
இவ்வாறாக நத்தை வேகத்தில் இயங்கி வந்த கல்விச் செயற் பாடுகளிடையே சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ஒரு கிழமை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளை 19.04.96ம் திகதி தொட்டு இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தமையால் கல்வி சம்பந்தமாகச் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன. எனினும் வன்னிப்பகுதிகளிற் கல்விச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
இடப்பெயர்வும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளும்
இலங்கையில் 1970களைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கான தரப்படுத்தல் முறையினை அரசு அறிமுகம் செய்ததன் விளைவாக மாணவர்களிடையே உயர்கல்வி கற்பதிற் போட்டி நிலை உருவாகத் தொடங்கின. குறிப்பிட்ட எண்ணிக்கையினைக் கொண்ட மாணவர்களே பல்கலைக்கழகம் நுழைவதற்கு அனுமதி பெறுவதனாற் போட்டி அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதனாற் போட்டி போட்டுக் கற்கவேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாதபடி ஏற்படத் தொடங்கியது.
99

Page 61
இதன் விளைவாகப் பாடசாலைக் கல்வி ஒரு புறம் நடைபெற மீட்டல் வகுப்புகளைத் தனியார் மேற்கொள்ளத் தொடங்கினர். இவை ஆரம்ப காலத்திற் க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கு மட்டுமே நடாத்தப்பட்டு வந்த போதிலும் பின் படிப்படியாக க.பொ.த சாதாரண தரத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டு ஏறத்தாழ 15 ஆண்டுகளாகப் பாலர் வகுப்புத் தொட்டு பல்கலைக்கழகம் நுழைவு வகுப்புகள் வரையும் தனியார் மீட்டல் வகுப்புக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமல்லாது நாடளாவியரீதியில் விரிவுபடுத்தப்பட்டதுடன் மாணவர்களின் ஈர்ப்புச்சக்தினை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் சினிமாக்களு க்கே அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களிற் பாடfதியாக கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பான விளம்பரங்களே இன்று அதிகளவிற் பத்திரிகைகளிலும் முக்கிய சந்திகளிலும் காணப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்பாக சாதக பாதகப் பண்புகளை வெளிக் கொணர்பவர்கள் பலர் காணப்பட்டாலும் அதன் வளர்ச்சி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாகும்.
பாடசாலைக் கல்வியிலும் பார்க்கத் தனியார் கல்வி நிறுவனங்களிற் கற்கும் கல்வியினை மாணவர்கள் விரும்பியேற்கும் நிலையினைக்காண முடிகின்றது. க.பொ.த உயர்தரம், சாதாரண தரத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஆண்டு ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யுமளவிற்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்றால் மிகையாகாது. ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களிற் பலர் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் பொருட்டு பாடசாலைகளுக்குச் செல்வது பரீட்சை நெருங்குங் காலங்களிற் குறைவாகவே இருந்துவருகின்றமையை அறியலாம்.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி போட்டுப் பல்கிப்பெருகிய தனியார் கல்வி நிறுவனங்களும் வலிகாமம் இடப்பெயர்வுக்குட்பட்டன. அக்கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் இடப்பெயர்வினை மேற்கொண்ட போதும் கல்வி நிலையத்தினைத் தம்முடன் எடுத்துச் செல்லவில்லை. அதாவது தளபாடங்களையே இங்கு குறிப்பிடப்படுகின்றது. இடப்பெயர்வின் போது இடப்பெயர்வாளர் எங்கு கொண்டு சென்று பாதுகாப்பது என்ற பிரச்சனைகளால் அவற்றினை எடுத்துச் செல்லவில்லை எனப் பிரபல தனியார் கல்வி நிறுவன இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வலிகாமத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொள்ளும் போது தனியார் கல்வி நிறுவன இயக்குனர்கள் சென்றடைந்த பிரதேசங்களில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே சென்றிருந்தனர். 1995ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி வரையும் கல்வி நிலை பற்றி எவரும் சிந்திப்பதாக இருக்கவில்லை. ஆனால் காலஞ்செல்லச் செல்ல கல்விச் செயற்பாடுகள் பற்றி பெற்றோரும், மற்றோரும் சிந்திக்கத் தொடங்கவே தனியார் கல்வி நிறுவனங்களும் ஆரம்பிக்கப்படல் வேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. கல்விச் செயற்பாடுகளுக்கும் அரசியற்காரணிகளுக்குமிடையில்
100

நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டிருந்தமையால் அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் அமைதி பேணவேண்டியவர்களானார்கள்.
பொதுவாக கல்வித் திணைக்களச் செயற்பாடுகளின் பிரகாரம் வன்னி மாவட்டங்களிற் கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரேயே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆரம்பிக்கப்படல் வேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. 1995ஆம் ஆண்டு மார்கழி தொட்டு 1996ஆம் ஆண்டு மாசி மாதம் வரை எந்த வகையிலுங் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்றே கூறல் வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டி இருந்தமையுடன் அவர்கள் தமது செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டுமாயின், அதிகளவில் முதலீட்டைச் செய்ய வேண்டியுமிருந்தது. இதேவேளை தனியார் கல்வி நிறுவனங்களைக் கிளநொச் சியில் ஆரம்பிப்பதில் எவ்வித ஆட்சேபனைகளும் தெரிவிக்காத நிலை யில் அரச பாடசாலைகள் ஆரம்பித்த 1.3.96ம் திகதியன்றே தனியார் கல்வி நிலையங்களும் அங்கே ஆரம்பிக்கப்பட்டன. வலிகாமத்தில் சிறப்பாக இயங்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரபல ஆசிரியர்கள் கிளிநொச்சியில் மீட்டற் கல்விக்கான வகுப்புக்களை ஆரம்பிக்கத் தொடங்கினர். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில், அதாவது தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் இதனை ஆரம்பிப்பதற்குக் காலதாமதம் ஏற்பட்டது. 11.3.96ஆம் திகதி உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவாக 1.4.96ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கலாம் எனத் தனியார் கல்வி நிறுவனங்களின் ஒன்றியத்தினால் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து (ஈழநாதம் 18.3.96) தற்காலிகக் கொட்டகைகளை அமைப்பது. மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது போன்றவற்றில் அக்கறை காட்டத் தொடங்கினர். பொதுவாக குடாநாட்டில் வெளிவந்த ஈழநாதம்,ஈழநாடு, உதயன் ஆகிய பத்திரிகைகளிற் தொடர்ச்சியான விளம்பரங்களும் வந்த வண்ணமிருந்தன. அதாவது தனியார் வகுப்புக்கள் 14.96ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கலாம் எனவும் தினமும் 3.00 மணிக்கு பின்னரே வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனவும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர வகுப்புக்கள் நடாத்தப்படலாம் எனவும் மேற்படி ஒன்றியத்தினால் அனுமதி வழங்கப்பட்டது. (ஈழநாதம் 18.3.96) தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கும் நாட்கள் பத்திரிகைகளில் வெளிவந்த போதிலும் அவற்றின் ஆரம்பம் மற்றும் செயற்பாடுகள் நத்தை வேகத்திலேயே சென்று கொண்டிருந்தன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல இலட்சக்கணக்கான செலவிற் கொட்டகைகள், தளபாடங்கள் போன்றவற்றை விலைக்குப் பெற்றுக் கொண்டனர். ஆனால் 18496ம் திகதியுடன் இந்நிறுவனங்கள் செயலிழந்தன. மாணவர்கள் தவிர்க்க முடியாதவாறு அனுமதிக்கான பணத்தினை விணே செலவு செய்ய வேண்டிய நிலை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி மாணவர்களும் மீள இடப்பெயர்வினை
1 O1

Page 62
மேற்கொள்ளவேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது. எனினும் வன்னிப்பகுதிகளிற் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகள் வழமை போல இயங்கி வந்தன.
தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிலிருந்து மீண்டும் வலிகாமத்திற்கு மீள இடப்பெயர்வினை மேற்கொண்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 66 கிராமசேவையாளர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்ற போதிலும் ஆசிரியர் பற்றா க்குறை, ஆய்வுகூடம், தளபாடப் பற்றாக்குறை போன்றவற்றினால் கஷ்டமுற்று வருகின்றனர் என்றே கூறல் வேண்டும். அத்துடன் அரசு விரைந்து கல்விச் செயற்பாட்டிற்குப் புனர்வாழ்வு அளிக்காதுவிடின் ஒரு நூற்றாண்டு காலம் பின் தள்ளப்பட்டவர்களாகவே வடபகுதி மாணவர் இருப்பர் என்பதிற் சந்தேகமில்லை.
வலிகாமம் மீள் இடப்பெயர்வும் கல்விப் பின்னடைவும்
இலங்கையிற் தமிழர்கள் கல்விச் செயற்பாடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாகப் படிப்படியாக வீழ்ச்சியடைந்து சென்றுள்ளதை யாவரும் ஏற்றுக் கொள் வர் . எனினும் வலிகாமம் இடப் பெயர் வினால் முன்னெப்போதுமில்லாதவாறு கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் மட்டுமன்றி அவற்றிற்கான உபகரணங்கள் மற்றும் பாடசாலைகளில் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியளவுக்குப் பாடசாலைகளின் வள வாய்ப்புக்களும் கூட அற்ற நிலையிற் காணப்படுகின்றன. இவற்றின் விளைவாகவும் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாகவும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதை மட்டுப்படுத்தியுள்ளனர். மேலும் இவ் வலிகாமம் இடப்பெயர்வில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளான இடப்பெயர்வில் ஈடுபட்டவர்கள் மீண்டும் தம்மிடம் சேரவே வன்னிப்பிராந்தியம் மற்றும் தென்னிலங்கைக்கு இடப்பெயர் வினை மேற்கொண்டோர் பல்வேறு காரணிகளினால் வலிகாமத்திற்கு மீளாதிருப்பதால் பாடசாலைகளில் இடப்பெயர்வுக்கு முன்னர் மாணவர்களின் வரவில் ஏறத்தாழ 40.0 சதவீதத்திற்குங் குறைவாகவே காணப்படுவதைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதே போலவே ஆசிரியர் வளம் கூடக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்த பகுதிகளுக்கான உள்வரவில் மக்களிடையே வரவேற்பிருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தீவுப்பகுதி மக்கள் தாம் சென்றடைந்த புதிய இடங்களிற் தற்காலிக நிரந்தர வசிப்பிடங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையால் மீண்டும் தமது இடம் செல்லத் தயங்குகின்றனர் அல்லது தத்தம் பிரதேசத்தைச் சேர்ந்தோர் ஒன்றிணையும் பட்சத்தில் செல்லலாம் என்றிருக்கின்றனர் எனவும் கொள்ளலாம். அரசு அதற்கள்ன வாய்ப்பினைச் செய்து கொடுக்காமையும் இதற்கான முக்கி காரணமாகவுள்ளது.
2

கல்வி நிலை பற்றிச் சிந்திக்குஞ் சிலர் இவை தற்காலிகப் பின்னடைவு எனக் கருதக்கூடும். ஆனால் அவ்வாறு கொள்வது தவிர்க்கப்படல் வேண்டும். முதலிற் பெற்றோரது நிலையினை எடுத்துக் கொள்வோம். பொதுவாக வலிகாமத் திலிருந்து மொத்தமாக மக்கள் இடப் பெயர் வினை மேற்கொண்டிருந்தனர். இதன் விளைவு, அவர்கள்தம் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கோலங்களைப் பெரிதும் பாதித்து விட்டது. சகல பெற்றோர்களும் வசதியானவர்கள் எனக் கொள்ள முடியாது. புதிய இடங்களைச்சேரிடமாகக் கொண்ட போது அவ்விடம் அவர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியிருந்தன. ஏனெனில் இவ்விடப்பெயர்வு தூண்டப்பட்டஇடப்பெயர்வாக இருந்தமையினாலேயாகும். எனவே அவர்களது சேமிப்புகள் பெருமளவிற்கு வீணடிக்கப்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. அந்நிலையில் வேறு இடத்திற் கூடப் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்ளாது இருந்தது போல மீள் இடப்பெயர்வினை மேற்கொண்ட போதிலுங் கூட அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் காணப்படாமை மட்டுமல்லாது பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியும் பாடசாலைகளுக்கு அனுப்பாதுவிடும் பண்பும் காணப்படாமல் இல்லை.
மாணவர்களின் அசிரத்தையும் எதிர்காலக்கல்வியினைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. மாணவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாகப் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளும் நிலை அங்குமிங்குமாகக் காணப்படுகின்றது. முன் எப்போதுமில்லாதவாறு இராணுவம் ஓரளவு கட்டுப் பாட்டுடன் நடந்துவரினும், கணிசமான மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடர பின்நிற்பதைக் காண முடிகின்றது. நகரப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஆசிரியவளம் குறைவாகக் காணப்படுவதனால் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் பண்பினையுங் காண முடிகின்றது. எனவே ஆசிரியவளங்கள் மீள் இடப்பெயர்விற்குட்படும் பட்சத்திலேயே கல்வி நிலை சிறப்படையும் எனலாம்.
மீள் இடப்பெயர்வின் பின்னர் கல்விச் செயற்பாடுகள்
அரசாங்கம் தமத கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிரதேச ங்களிற் கல்விச் செயற்பாடுகள் மட்டுமல்லாது சாதாரண காலங்களிற் செயற்பட்டு வந்தவற்றை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்றை விரைவில் வழங்கவேண்டுமெனச் செயற்படுவது போற் தெரிகின்றது. இருப்பினும் விரைவில் சகஜநிலையினை ஏறபடுத்திவிட முடியாது என்பது நடைமுறையிற் பெறப்பட்ட முடிவாகும். இந்தவகையிற் கல்விச் செயற்பாடுகள் பற்றி அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கல்வித் திணைக்களத்தின் அறிக்கையிற் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கல்விச் செயற்பாட்டிற்கு அவசியம் தேவைப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர். வலிகாமம் இடப்பெயர்வுக்கு முன்னர், அதாவது 1995ஆம்
103

Page 63
ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் 470 பாடசாலைகள் இயங்கி வந்தன. 1991ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கையில் 491 பாடசாலைகள் இயங்கி வந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடசாலைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்குத் தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள் சில ஒன்றிணைக் கப்பட்டமை காரணமாக இருக்கலாம். ஆனால் மீள் இடப்பெயர்வுக்குப் பின்னர் 7.6.96ஆம் திகதி கல்வித்திணைக்களத்தின் அறிக்கையின்படி 378 பாடசாலைகள் இயங்குகின்றன எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவற்றில் மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை கல்விப் பிரிவைச் சேர்ந்த பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை. இப் பிரதேசங்களுக்கு மக்கள் மீள் இடப்பெயர்வினை மேற்கொள்ளாமை பிரதான காரணியாகக் கொள்ள இடமுண்டு. இவற்றிற்கடுத்து தெல்லிப்பளைக் கல்விப் பிரிவில் 8 பாடசாலைகள் இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியவளத்தினைப் பொறுத்த வரை 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டக் கல்வி வலயங்களில் 6509 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் மீள் இடப்பெயர்வின் பின்னர் 4129 ஆசிரியாகள் அல்லது 63.4 சதவீதமான ஆசிரியர்களே கடமையேற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களில் இருந்து ஆசிரியர்கள் வன்னிப்பகுதிக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தமை மிகக் குறைவென்றே கூறல் வேண்டும். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களில் 80.0 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய நான்கு கல்விக்கோட்டங்களில் சமூகம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலணை, ஊர்காவற்றுறை கல்விக்கோட்டங்களில் ஏறத்தாழ 1/3 பங்கினரே சமூகமளித்துள்ளனர். ஏனைய கோட்டங்களில் 500 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சமூகமளித்துள்ளனர். தீவுப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களிற் பெரும்பாலானோர் வன்னிப்பிரதேசங்களிற் தமது உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் 80.4 சதவீதமான பாடசாலைகள் வலிகாமத்திற்கான மீள் இடப்பெயர்வின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக் கல்வித்திணைக்கள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் மாணவர்கள் வரவினைப் பொறுத்தவரை சாவகச்சேரி, உடுவில் ஆகிய கல்விக் கோட்டங்களைத் தவிர ஏனைய கல்விக்கோட்டங்களில் ஏறத்தாழ 1/3 பங்கு மாணவர்களே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் தெல்லிப்பளைக் கோட்டங்களில் மிகக் குறைவான மாணவர்களே சமூகமளித்துள்ளனர். இவற்றிலிருந்து நோக்கும் போது ஆசிரியர் களிலும் பார்க்க மாணவர்களும் பெற்றோர்களும் யாழ்குடாநாட்டில் இருந்து
1 sh4

வன்னிப்பிரதேசத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர் என்பதே உண்மை நிலை எனத் தெரிகின்றது. இவை தவிர 5.0 - 100 சதவீதத்திற்கிடையிலான மாணவர்கள் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைவிலகியுள்ளனர். பொருளாதாரக் கஷ்டநிலை, தாம் கற்ற பாடசாலைகள் தற்போது வாழுமிடத்திற்கு அதிக தூரத்தில் காணப்படுகின்றமை. அதாவது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 66 பிரிவுகள் மக்கள் செல்ல முடியாதுள்ளமையால் அப்பிரதேசங்களில் முன்னர் குடியிருந்தவர்கள் சிதறி வாழ்ந்து வருகின்றமை போன்ற காரணிகளும் மாணவர்கள் பாடசாலை செல்வதைத்தடுத்துள்ளன எனலாம். இத்தகையோர் காலப்போக்கில் நிரந்தரமாகவே பாடசாலைகளை விட்டு விலகிவிடவும் வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் இம்மாவட்டத்தில் 7.6.96ஆம் திகதிய கல்வித்திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 32.3 சதவீதமான மாணவர்களே பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம் மாவட்டத்தின் எதிர்கால கல்வி நிலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருத இடமுண்டு.
105

Page 64
ZoZo 0’s O 19 9'99 6°19' 6‛†ፖC 00寸 8'99 L’ț79
89寸
ክነ‛†I
O'y 9,9€. L'Zo
qgsfsgïo ystoloidi-unu「g)相9
geggge 垣后由哈巨"
asooqsự9-ırıņoțTuolį9Tā1ļogos||íTIŲ9ų9ųos1091||Gogoļū9
çț7179# [6Z6l 999] [9 8:719#899Í 9909186ț71 LL09Lț7061 9:66Z190ĆI 6899886€í €0£9£ILSI Z68ț760styl £690sgzysz -----ÇozI 8LS£00ț7 981ç09ț7 089 LZ£9 CZ OZ08țzț79ț7% q?cg9@R99661
(9661°90’L0) -
寸99 Ç'v6 ['[8 #"Z8 £'99 9'99 O'89 L'Z9 £'99
Z’Z8
#"Los 6'67 6′ZS ț7'69
qi@pooĝe 9099写9点9ggegunggg
hoffte splysoņRos:9110]
6.Zso 901 ZOỹ #78€. ț7L£ ț710 69Z LZ€. 997
yl 08 LZț7 1957
后99亏 1ņogoļrmno) 「1홍uen unuT3)地**
.mu-9%s ussin 행영을P3P":
城us CT山·łogłosoolsei@oftogặgsg)os) :
6099寸08 9LĂţ'6Z 9670'001 99寸0'001 ØLSL'L6 £6ț7Z寸L 寸9寸8’96 IZ9L'OL 907£” 18 . OI8sosy6 L01OoOOI 86l['8Z 89Z['99 808O'OOI 9ZLO‘Z6 S66||
8L£ 90 £9. Zɛ Zy
£z. 0€ 6Z 9Z
99 Os 60 €Ľ Oy £Z
仁99号 1ņ9ņ9ųTnTTS) qiqjfissão ŋ-iếıļ991unu「3)明9
Otto Ll
99
Z£
£#7 19 19 1寸 Z£
Os
3导 深 $
9661
qoqoqoŲ,91,919pysgoedelle-uri
圆
qúisistē
qi&qặugle) w&9田法)國民國的Don que)写n 6.7.1990? mmurm널u的3) usgeriņQ9Q9$€) დ9დ99) G Inırısıọ96īņ98 109009113?Isilo z qırmosoofto
yog) șostollo hogầgig)osje) qigos giftelsoņī5ē 100900909198) Įırēọ931 quaesunsțilm I qırmosoofto
qı-ı ırpg) quoqoo
119.gn
£’S1,900919 TT1G
106

இடப்பெயர்வின் பின்னர், யுத்தத்தின் விளைவாகப் பாடசாலைகள் பல சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள், தளபாடங்கள், ஆய்வுகூட உபகரணங்கள், காரியாலய - விளையாட்டு - மனையியல் உபகரணங்கள் போன்றன சேதமடைந்தும் காணாமற் போயுமுள்ளன. அவசரமாகப் பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு முதற்கட்டமாகத் தேவைப்படுவனவற்றை கல்வித் திணைக்களம், கல்வி உயர்கல்வி அமைச்சுக்கும், புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சுக்கும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண கல்வித்திணைக் களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்படி 136 பாடசாலைகள் அல்லது மொத்த மாவட்டப் பாடசாலைகளில் 27.7 சதவீதமானவை சேதமடைந்துள்ளன. இவற்றில் 29 Ob பாடசாலைகள், ! 25 IC பாடசாலைகள், 54 தரம் 2 பாடசாலைகள், 28 தரம் 3 பாடசாலைகள் என்பன அடங்கும். இவற்றைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கு 10,575,000/- ரூபா செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (கல்வித்திணைக்கள அறிக்கை 1996). இவை தவிர ஏனைய அத்தியாவசிய செலவினங்கள் பற்றியும் அரசுக்கு அறிவித்துள்ளது.

Page 65
6
தொழில் நிலை
ஒரு நாட்டின் செல்வம் அந்நாட்டு மக்களின் உழைக்கும் ஆற்றலைப் பொறுத்தமையும். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உழைப்பாற்றல் பூரணமாகப் பெறப்படுவதில்லை. இந்நாட்டில் மொத்தத் தொழிலாற்றல் உள்ளவர்களிடையே 150% - 20.0% சதவீதமானோர் வேலையற்றிருக்கின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற் கடந்த இரு தசாப்தங்களிற் தொழிற்றுறை பொருளாதார ரீதியாகப் பலவீன மடைந்து செல்வதற்கு அரசியற் காரணிகளும் அரசினது மறைமுகமானதும் நேரடியானதுமான பொருளாதார, அரசியற் கொள்கைகளின் விளைவென்றால் மிகையாகாது. இதன் விளைவாக யாழ்ப்பாண மாவட்ட மக்களில் உழைப் பாற்றல் கொண்டோரில் கணிசமானோர் வேலையற்றவர்களாகவிருப்பது மட்டுமல்லாது சர்வதேச இடப்பெயர்வுக்கு உட்பட்டவர்களாகவுங் காணப்படு கின்றனர்.
பொதுவாக வலிகாமப் பிரதேசம் உட்பட யாழ்ப்பாண மாவட்டத்தில் விரைவாக அதிகரித்துக் கொண்டு செல்லும் குடித்தொகைக்கேற்ப தலை க்குரிய நிலம் படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது. இப்பிரதேசத்திற் பெரும்பாலானோர் விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்களிலேயே ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். இவர்கள் மொத்த தொழிலாற்றலுடையோரில் 43.0 சத வீதத்தினராகும். 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பு அறிக்கையின் பிரகாரம் இம் மாவட்டத்தில் 182,925 பேர் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். இவர்களில் 35.0 சதவீதமானோர் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 280 சதவீதமானோர் கைத்தொழிலிலும் 15.3 சதவீதமானோர் விற்பனையாளர்களாகவும், 9.6 சதவீதத்தினர் வாழ்க்கைத் தொழிலாளர்களா
108

கவும், 7.2 சதவீதமானோர் எழுதுவினைஞர்களாகவும், 4.0 சதவீதமானோர் சேவைத்தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர் எனத்தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் 600 சதவீதமானோர் வலிகாமம் பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களைப் பொறுத்தவரை 99 சதவீதமானோரே தொழிற்படையில் உள்ளனர். ஏனையோர் ஊதியம் பெறாத குடும்பப் பெண்களாகவும் தொழிலில் ஈடுபடாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்திற் கடந்த இரு தசாப்தங்களாகக் காணப்பட்டு வரும் அசாதாரண நிலமைகளின் விளைவாகத் தொழிற்படையினரின் எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளது.
1980களைத் தொடர்ந்து வலிகாமம் உட்பட தமிழர் பிரதேசத்து மக்கள் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியாக பாதிப்படையத் தொடங்கவே இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அரசானது தமிழர்களுக்கு குறைந்த பட்சம் இன விகிதாசார அடிப்படையிலேனும் அரசதுறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதிற் கூட பின்னிற்கின்றது. அத்துடன் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான - குறிப்பாக உபஉணவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளும் படிப்படியாகச் சுருக்கமடையலாயின. சீமெந்துக் கைத்தொழில் உட்படப் பெரும்பாலான அரச, தனியாரது நடுத்தர மற்றுஞ் சிறு கைத்தொழிற்துறைகளும் மூலப்பொருட்கள், வலுப்பொருட்கள், சந்தை வாய்ப்புக்கள் அற்ற நிலையினால் இழுத்து மூடப்படவேண்டியது காலத்தின் கட்டளையாகவிருந்தது. அத்துடன் வெளிநாடுகளுக்குச் சென்றோர்கள் தமது பெற்றோரைத் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி அவர்களை ஒய்வு பெறச் செய்து அவர்களுக்கு "டிறாவ்ட்" மூலம் பணம் அனுப்புவதிற் கணிசமானோர் அக்கறை காட்டி வந்துள்ளனர்.
ஆயுதப்போராட்டம் வலுப்பெறத் தொடங்கவே அரசாங்கம் எரிபொருட் தடை, பொருளாதாரத்தடை, கடல்வலயத்தடைச்சட்டம் போன்ற பலவற்றை நடைமுறைப்படுத்தவே பல்வேறு துறைகளிற் தம்மை ஈடுபடுத்தி வருமானம் பெற்று வந்தோர் பலர் தொழில்களை இழக்கவேண்டியேற்பட்டது. குறிப்பாகக் கட்டிடத் தொழிலில் ஈடுபாடு கொண்ட தச்சுத்தொழிலாளர், மேசன் தொழிலாளர் போன்றோர் தொழில் வாய்ப்பினை இழந்திருந்தனர். மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடியில் 250 சதவீதமான பங்கு 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சார்ந்த கடற்பகுதிகளிலேயே பிடிக்கப்பட்டு வந்துள்ளதாக அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. 1991 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் பிரகாரம் 101,177 மக்கள் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்துள்ளனர். இவர்களில் 24,839 பேர் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என வடக்கு, கிழக்கு மாகாணசபையின் புள்ளி விபரத்திரட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்வலயத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக மீனவர்கள் மீன்பிடித்தொழிலைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது ஜீவனோபாயத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற
109

Page 66
மீனவர்கள் சடலங்களாக கரையொதுங்கிய சம்பவங்கள் பல. எனவே மீனவர்கள் தொழில் வாய்ப்பினை இழந்திருந்தமையால் அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியிற் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கினர் எனலாம்.
எவ்வாறெனினும் வலிகாமம் பிரதேசம் உட்பட யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பல்வேறு தடைகளின் மத்தியிலும் உள்ளுர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலான சந்தைவாய்ப்பை இழந்திருந்த நிலையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குடாநாட்டுச்சந்தைகளுக்கு வரத்தொடங்கின. இதனால் விவசாயிகள், மீனவர்கள் தம் அன்றாட வாழ்க் கையினை ஒரளவு சமாளிக்கக் கூடியவர்களாகக் காணப்பட்டிருந்தனர். எனினும் காலத்துக்குக்காலம் சந்தை விலை வீழ்ச்சியடைந்தமையால் விவசாயிகள் b. LLD60)Libgb60s.
மேற்படி பிரச்சனைகளின் விளைவாக வேலைவாய்ப்பினை இழந்தவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை ஒட்டுவதற்குச் சைக்கிளில் மீன் வியாபாரம், விறகு சேகரித்து விற்றல், துவிச்சக்கர வண்டி திருத்தகம் அமைத்தல், பெட்டிக்கடைகளை அமைத்தல், போக்குவரத்துச் சேவை சீர்குலைந்திருந் தமையாற் துவிச்சக்கரவண்டிகளில் பயணிகளை ஏற்றிச் சென்று வருமானம் தேடல், தட்டுப்பாடான பொருட்கள் - குறிப்பாக மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தல், தாண்டிக்குளப் பகுதி வரை துவிச்சக்கர வண்டிகளிலோ அன்றில் மோட்டார் சைக்கிள்களிலோ சென்று அரசினாற் தடைசெய்யப்பட்ட அல்லது இலாபம் தரக்கூடிய பொருட்களைக்கொண்டு வந்து விற்றல், கூலி வேலைக்குச் செல்லல் போன்ற பழக்கமற்ற தொழில்களை செய்யவேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. எனினும் அரச ஊழியர்கள், வர்த்தகர்கள் போன்றோர் சார்பு ரீதியாகப் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சமாளித்து வந்துள்ளனர். எவ்வாறெனினும் பெரும்பாலான வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள குடும்பத்தினரில் ஆகக் குறைந்தது ஒருவராவது சர்வதேச இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்து ள்ளதனால் அவர்களிடமிருந்து பெறப்படும் வருமானத்தினைக் கொண்டு பொருளாதாரச் சிக்கல்களைக் குறைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இத்தகைய தொழிலோடு கூடிய பிரச்சனைகளைச் சுமந்து வாழ்ந்துவந்த மக்களிடையே யாழ்ப்பாண இடப்பெயர்வானது அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டியது போலாகியது. தொழிலற்ற நிலையாயினும் தமது சொந்த வீட்டில் வாழ்ந்துவந்த மக்களுக்குத் தொழில், வாழ்விடம் என்பனவற்றை சேரிடத்தில் பெறமுடியுமா என்ற ஏக்கத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர்.
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பாங்கு பற்றி ஏற்கனவே பல இடங்களில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இடப்பெயர்வினை மேற்கொண்டவர்கள் குறிப்பாக கிளாலி கடந்தவர்களைத் தவிர வடமராட்சி, தென்மராட்சி, பளைப் பகுதி களை தமது சேரிடத் தெரிவாகக் கொண்டவர்கள் பால் வேறுபாடின்றி இளவயதினர் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்று உடமைகளை எடுத்துச்
1 10

செல்வதிலேயே ஆரம்பகாலத்தில் தமது நேரத்தைச் செலவு செய்தனர். அத்துடன் தாம் சென்றடைந்த பிரதேசங்களில் வாழ்விடங்களைத் தயார் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தனரே தவிர ஏதாவது தொழில்களைச் செய்து சம்பாதிக்கவேண்டும் என மனம் ஒப்புக்கெண்டிருக்கவில்லை. 10ம் திகதி வலிகாமத்திற்கான பாதை தடைப்பட்ட பின்னர்தான் தமது ஜீவனோபாயத்துக்கு உழைக்கவேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டனர். ஆனால் சென்றடைந்த இடங்களில் உடனடியாக மேற்கொள்ளக்கூடிய வேலை வாய்ப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. அன்றாட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கே நேரம் போதாதிருந்தது. தொழில்களில் பல சாதியடிப்படையில் அமைந்திருந்தமையாால் அவரவர் செய்துவந்த தொழில்களைச் செய்வதிலேயே பயிற்சி பெற்றிருந்தனர். தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளில் தொழில்களைச் செய்வதற்குரிய வசதி வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இடப்பெயர்வுக்கு முன்னர் வலிகாமப் பிரதேசங்களில் பொருளாதாரத் தடை, எரிபொருட்தடை போன்றவற்றின் காரணமாகத் தாம் செய்துவந்த தொழில்களை தொடர்ந்து செய்யமுடியாத நிலையில் அப்பகுதி மக்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாகக் கட்டிடத் தொழில், தச்சுத் தொழில், மீன்பிடித் தொழில் போன்றவற்றைச் செய்யமுடியாதிருந்தமையால் அவர்கள் வேறு தொழில்களிலேயே தம்மை ஈடுபடுத்தினர். அத்தகைய மக்களுடன் வலிகாமப் பகுதியில் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களும் இணைந்துகொள்ளவே வேலையில்லாப் பிரச்சனை பாரிய பிரச்சனைகளில் ஒன்றாக சேரிடங்களில் அமைந்துவிட்டது. சேரிடப்பகுதிகளிலுள்ள சேவை மையங்கள் எங்கும் எள்ளுப்போட இடமில்லாதவாறு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுவாக நாவற்குழியிலிருந்து பளை வரையும் புகையிரதப் பாதைகளில் மட்டுமல்லாது சந்திகள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் பெட்டிக்கடைகளை நிர்மாணித்து வியாபாரஞ் செய்து வந்தனர். இவ் வியாபாரமே பெரும்பாலானோரின் தொழிலாகவிருந்து. பொதுவாக வலிகாமத்தில் எந்தவகையான சேவைத்தொழிலைச் செய்து வந்தார்களோ அதனையொத்த தொழில்களிலேயே தம் மை ஈடுபடுத்திக் கொணி டார்கள். அதிகரித்த மக்களுக்கு அடிப்படைத்தேவையான உணவுப்பொருட்களை வன்னிப்பகுதிக்குச்சென்று எடுத்துவந்து விற்பனைசெய்தனர் ஒரு பகுதியினர். இவர்களிற் சிலர் இத்தொழிலில் முன்னர் ஈடுபடாதவர்களும் செய்து வந்ததை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இத்தொழில்களில் போட்டி நிலையையே காண முடிந்துது. பொதுவாகச் சேரிடப்பகுதிகளில் கட்டிட வசதிகள் பெருமளவிற் காணப்படாததால் சிறுசிறு கொட்டில்கள் அமைத்து தேனீர்க்கடைகள். பலசரக்குக் கடைகள், சிகை அலங்கரிப்புத் தொழிலகம், சலவைத் தொழிலகம், இரும்புவேலைப்பட்டறைகள், தையற்கடைகள், புத்தகக்கடைகள், இனிப்புப் பண்டங்கள் விற்கும் நிலையங்கள், மதுபானச் சாலைகள், மரத்தளபாட விற்பனை நிலையங்கள், கட்டிடத் தளபாட விற்பனை நிலையங்கள், பல நோக்குக் கூட்டுறவுச்சங்கக் கிளைகள், ஆடம்பரப்பொருட்கள் விற்பனை
111

Page 67
நிலையங்கள், மோட்டார் வண்டிகள் திருத்தகம் போன்றன மேற்குறிப்பிட்ட இடங்களில் குறிப்பாக புகையிரதப்பாதை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அவர்களைத் தவிர யாழ்ப்பாணத்தில் வசதிபடைத்த வர்த்தகர்கள் சேரிட சேவைமையங்களில் முற்பணத்தைச் செலுத்தி பெரியளவில் முதலிட்டு வர்த்தஞ் செய்துவந்தனர். இவற்றில் பலசரக்குக் கடைகள். மருந்தகங்கள், புடவையகங்கள், புத்தக நிலையங்கள் என்பன குறிப்பிடத்தக்க தாகும். இத்தகைய வர்த்தக நிலையங்கள் சாவகச்சேரி, கொடிகாமம், பளை, நெல்லியடி, பருத்தித்துறை, கிளிநொச்சி போன்ற சேவைமையங்களில் அமைந்திருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
வலிகாமத்தில் கூலித்தொழில் மற்றும் சாதி அடிப்படையிலான தொழில்களைப் புரிந்துவந்தோர் பெரும்பாலும் விறகு சேகரித்தல், துவிச் சக்கரவண்டிகள் மூலம் போக்குவரத்தில் ஈடுபட்டு உழைத்தல், துவிச்சக்கர வண்டித் திருத்தகங்களை அமைத்தல், மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடல் மீன் விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எனினும் வருமானத்திலும் பார்க்க செலவினங்கள் அதிகரித்துக் காணப்பட்டமையினால் பெரும்பாலானோருக்கு இலவசமாக வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் தாக்குப்பிடித்தன என்றே கூறல் வேண்டும்.
அரச தொழில்களில் ஈடுபட்டோரைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் ஏனையோரோடு ஒப்பிடும் போது பிரச்சனைகள் குறைவாகக் காணப்ப ட்டாலும் குடியிருப்புப் பிரச்சனைகளை அனுபவித்துவந்தனர் என்பதைக் கள ஆய்வின் மூலம் அறிய முடிந்தது. எனினும் ஆசிரியர் அல்லாதோர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த தமது அலுவலகங்களில் கடமையா ற்றவேண்டியநிலை காணப்பட்டது. இதனால் அவர்கள் இடம் பெயர்ந்த நிலையிற்கூட தமது குடும்ப விவகாரங்களில் அதிக கவனஞ் செலுத்துவதற்கு முடியவில்லை எனப் பல அரச ஊழியர்கள் கவலையடைந்தவர்களாகக் காணப்பட்டிருந்தனர். அரச ஊழியர்களில் ஒரு தொகுதியினர் கிளாலி கடந்து வன்னிபப்பகுதிக்கும் தென்னிலங்கைக்கும் சென்றுவிட்டனர். வன்னிப்பிரதேச த்திற்குச் சென்றவர்கள் அங்குள்ள தாங்கள் சார்ந்த அரச செயலகங்களிற் தற்காலிகமாகக் கடமையாற்றி வருகின்றனர். ஆனால் தென்னிலங்கை சென்றவர்கள் தங்களது தொழில் சார்ந்த தலைமையகங்களுடன் தொடர்பு கொண்ட வண்ணமிருக்கின்றனர். எனினும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் அவர்களிற் கணிசமானோர் தமது முன்னைய அலுவலகங்களுக்குச் சமூகமளித்திருந்தனர். இவ்வாறாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வெளியேறியோர் தமது தொழிலிலும் பார்க்கத் தமது குடும்பத்தினரது உயிர்களுக்கு உத்தரவாதத்தைத்தேடவே சென்றுள்ளனர் எனலாம்.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்த சிறிது காலத்திற்கு பின்னர் குறித்த பாடசாலைகளில் அல்லது கோட்டங்களில் நாள்தோறும் தமது வரவினை உறுதிப்படுத்தும் முகமாக கையொப்பமிடுமாறு கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தா
12

லும் குறிப்பிட்ட இடங்களிற் கையொப்பமிடப்பட வேண்டிய நிலை காணப்ப ட்டது. இச்செயற்பாடானது ஆசிரியரின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவ தற்கு வாய்ப்பாக இருந்துள்ள போதிலும் ஆசிரியைகள் உட்பட பல ஆசிரியர் சமூகத்தினர் வடமராட்சியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் ஏறத்தாழ 10 மைல் தூரம் வந்து கையொப்பமிட்டு விட்டு செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சில வகுப்புகள் தான் முதலிற் தொடக்கப்பட்டாலும் முழு ஆசிரியர்களும் வருகை தரவேண்டிய நிலை இருந்தது. அவர்களிற் பெரும் பாலானோர் பாடசாலைகளின் மர நிழல்களிற் காலத்தைக் கழித்துவிட்டுச் சென்ற காட்சியைப் பெரும்பாலான பாடசாலைகளிற் காணமுடிந்தது. வன்னிப் பிரதேசத்திற் கூட இந்நிலையினைக் காணக்கூடியதாகவிருந்தது. அங்கு இடம்பெயர்ந்தோரால் பாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்திருந்ததால் வகுப்புக்களை நடாத்துவதற்குப் பெருஞ் சிரமங் காணப்பட்டு வந்துள்ளது. உண்மை வெற்றி இராணுவ நடவடிக்கை மேலும் இதனை மோசமாக்கியுள்ளது.
மேலும் அரச ஊழியர்களுக்கான ஊதியம் காசோலைகளாக வழங்க ப்பட்டமையால் அதனை மாற்றுவதற்குப் பெருஞ் சிரமத்தை அடைந்தனர். பலர் கொமிசன் கொடுத்து மாற்றவேண்டியிருந்தது. பல ஊழியர்கள் அசாதா ரண சூழ்நிலைகளின் காரணமாக அவர்களது ஊதியத்தைக் கொண்டு மாதம் முழுவதையுஞ் சமாளிக்க முடியாதவர்களாகவும் இருந்துள்ளனர். கெளரவத்திற்காக வாழவேண்டிய நிலையிற் பலர் காணப்பட்டதை அனுபவ ரீதியாக அறிய முடிந்தது.
பல்வேறு தொழில் புரிபவர்களின் நிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு குடும்பத்தினரது தொழிலும் அதன் நிலைப்பாடு பற்றியுமான விபரம் இங்கு தரப்படுகின்றது.
கொக்குவில் மேற்கு சிப்பித்தரையைச் சேர்ந்த கள்ளு உற்பத்தி செய்யும் தொழிலாளியின் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாகும். அவரது மூத்த மகன் விவாகஞ் செய்து அக்குடும்பத்துடனேயே வாழ்ந்து வந்தார். ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியே தென்மராட்சி நோக்கி இடம்பெயர வேண்டியிருந்தது. ஏனெனில் அவரது அயலவர்கள் பெரும்பாலும் உடனேயே புறப்பட்டமையால் இவர்களும் பயத்தினால் வெளியேறினர். தென்மராட்சியில் தூரத்து உறவினராக இரு குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் அவர்களுக்குத் தெரியாது. அத்தூரத்து உறவினர்களும் வரவேற்று உபசரிக்கக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்பற்றவர்கள். எனவே எங்கு செல்வது என்று தெரியாமல் புறப்பட்ட இக்குடும்பத்தவர்களுக்குக் கொடிகாமம் சந்தைக்கட்டிடமே கிடைத்தது. அங்கும் மக்கள் கூட்டம். ஏற்கனவே சென்றவர்கள் தமக்குரிய இருப்பிடத்தைத்தெரிவு செய்திருந்தனர். இவர்கள் அங்கு சென்றதும் 10 x 8 சதுர அடிப்பரப்பளவுள்ள பகுதியே கிடைத்தது. சேமிப்பற்ற குடும்பமான இக் குடும்பத்தினர் அன்றாடம் உழைத்தே சீவித்து வந்தனர். எனவே இடம்பெயர்ந்த வாழ்வு அவர்களைப் பொறுத்த வரை ஒரு சவாலாகவே காணப்பட்டது. குடும்பத்தலைவரும் அவரது
113

Page 68
மகனும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரையும் நாள்தோறும் வலிகாமத்திற்குச் சென்று தேங்காய், உணவுப் பொருட்கள், ஆடுகள், கோழிகள் போன்றவற்றை எடுத்து வந்து விற்பனை செய்து, அவ்வருமானத்தின் மூலம் ஏறத்தாழ ஒரு மாத காலத்தை ஒட்டக்கூடியதாகவிருந்தது. தங்களை மேலும் பத்து நாட்களுக்கு வலிகாமஞ் செல்ல அனுமதித்திருப்பார்களாயின் தமது பிரச்சனைகளை ஒரளவிற்கு சுமூகமாக்கியிருக்கலாம் என அக்குடும்பத் தலைவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவருக்கு இடம்பெயர்ந்த இரு கிழமைகளின் பின்னர் மலேரியாக் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் தொழில் எதுவுந் செய்வதற்கு அவரது உடல்நிலை இடந்தரவில்லை. அவரது மகன் இடையிடையே கூலி வேலை செய்வதன் மூலம் அன்றாட வாழ்வை நடாத்தி வந்தார்கள். எனினும் பணக் கஷ்டத்தால் அவதிப்பட்டார்கள். எவரிடமும் பணஉதவி பெற்றுக்கொள்ள முடியாத நிலை. ஏனெனில் இவர்களது உறவினர்களும் இவர்களை விடப் பொருளாதாரக் கஷ்டத்தை அனுபவித்து வந்தனர். இஃது இவ்வாறிருக்க, ஒன்றரை மாதங் கடந்த பின்னர் இவரது தூரத்து உறவினர் ஒருவர் தான் மரத்தைப் பெற்றுத் தருவதாகவும் உற்பத்தி செய்யப்படும் கள்ளினாற் பெறப்படும் வருமானத்தில் 50.0% சதவீதத்தைத் தமக்குத் தருமாறும் மிகுதியை விற்று வருமானத்தைத் தேடிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதனை இக் குடும்பத்தலைவரும் ஏற்றுக் கொண்டார். எனவே தொழிலுங்கிடைத்தது. நாளொன்றிற்குச் சராசரி 100 போத்தல் கள்ளு உற்பத்திசெய்ய முடிந்தது. 50 போத்தல் கள்ளை விற்பனை செய்வதால் வரும் வருமானத்தை இக்குடும்பம் பெற்றுச் சிறப்பாக வாழ வழியிருந்த போதிலும் குடும்பத் தலைவர் நாள்தோறும் 100/-, 150/- ரூபா வரை மதுபானம் அருந்தும் பழக்கமுடையவராக இருந்தமை யால் உழைப்பின் முழு ஆற்றலையும் அக்குடும்பம் அனுபவிக்க வாய்ப்பிருக் கவில்லை. இவரால் உற்பத்தி செய்யப்படும் கள்ளிற் பெரும் பகுதியைச் சங்கத்திற்கு விற்பனை செய்து வந்ததால் கிழமை முடிவிற்றான் மொத்தமாகப் பணம் கொடுப்பார்கள். சிறுஅளவில் வெளியே தெரிந்தவர்களுக்கு விற்குங்கள்ளின் மூலமே அன்றாட மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வாதாரப் பொருட் களை வாங்கக்கூடியதாக இருந்தது. எனவே ஏனைய பொருட்களை வாங்க நாள்தோறும் பணங் கிடைக்காமையால் மானிப்பாயைச் சேர்ந்த ஒரு வர்த்தகரை அணுகித் தனது உழைப்பின் தன்மையை எடுத்துக்கூறி கிழமைக்குக் கிழமை கடனைச் செலுத்துவதாகவும் தமக்கு கடன் அடிப்படையிற் பலசரக்குப் பொருட்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனை அவ்வர்த்தகர் ஏற்றுக்கொண்டு பொருட்களை விநியோகம் செய்தார். கள்ளை உற்பத்தி செய்வதற்குப் பனைமரங்களை வழங்கியவரின் வளவில் 2,500/- ரூபா செலவு செய்து சிறிய குடிசையினை நிர்மாணித்தார். உடனடியாக வலிகாமம் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டதன் விளைவாக, பலசரக்கு வர்த்தகருக்கு ரூபா 2,500/- கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் வலிகாமத்திலுள்ள தங்களது வீட்டைத்தேடி வந்து தனது பணத்தைத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க 500/- ரூபாவை கொடுத்ததாகவும் மிகுதிப் பணம் இன்னும் கொடுபடவில்லை
114

எனவுந் தெரிவித்தனர். எனவே இத்தகைய இடப்பெயர்வானது நாளாந்த உழைப்பாளி குடும்பத்திற்குப் பெருஞ் சிக்கலைக் கொடுத்துவிட்டது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.
தெல்லிப்பளையிலிருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவரான இளம் குடும்பத்தலைவர் ஆறாவது தடவையாக இடம்பெயர்ந்து சாவகச்சேரி மட்டுவிலில் கிறிஸ்தவ குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அக்குடும்பத் தலைவர் கோப்பாயில் நான்காவது தடவையாக இடம்பெயர்ந்திருந்த வேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை விவாகஞ் செய்து இரண்டு குழந்தை களுக்குத் தந்தையானார். தெல்லிப்பளையில் வாழ்ந்த காலத்தில் 16 பரப்பு காணியிற் தோட்டஞ் செய்தவர். அவர் பலரை வேலைக்கமர்த்தி தொழில் செய்தவர். ஆனால் இடப்பெயர் வினாற் தமது சொத்துச் சுகங்களை இழந்துள்ளதுடன் தொடர்ச்சியாகப் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திரு ந்தமையால், பொருளாதார வலுவை இழந்திருந்தார். இதனால் மட்டுவிலில் வழங்கப்படும் உலர் உணவினைத் தவிர ஏனைய பொருட்களை வாங்கு வதற்கு நாள் ஒன்றிற்கு 100/- - 150/- ரூபா வரை செலவாகும் என அவர் தெரிவித்தார். இதனை எவ்வாறு சமாளிக்கின்றீர்கள் எனக்கேட்டபோது தான் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் கூலிவேலைக்குச் செல்வதாகவும் நாளொன்றுக்கு 100/- - 125/- ரூபா வரை வருமானம் கிடைக்கும் எனவும் அதுவும் எல்லா நாட்களிலும் கிடைக்காது எனவும் தெரிவித்தார். தனது மனைவிக்குச் சீதனமாகத் தந்த 10 தங்கப்பவுண் நகைகளை இது வரை விற்று ஒரளவு சமாளிக்க முடிந்தது எனவுந் தெரிவித்த அவர் ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் வன்னிக்குச் செல்வதற்காக லாண்ட்மாஸ்டரில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அதன் பின்னர் அவர்கள் எங்கு சென்று வாழ்கின்றார்கள் என்பதை அறிய முடியவில்லை.
கீரிமலையைச் சேர்ந்த எட்டுப்பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்து ஆனைக் கோட் டையில் வசித்து வந்தார்கள். இவர்கள் வலிகாமம் இடப்பெயர்வுக்கு ட்பட்டுச் சாவகச்சேரி மந்துவிலிற் தற்காலிகமாக முன்னர் அறிந்திராத ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர். வீட்டுக்குடியிருப்பாளருடன் இவர்கள் இடம்பெயர்ந்த சிறிது காலத்திலிருந்தே மனஸ் தாபத்துடன் தான் வாழ வேண்டியிருந்தது. இடப்பெயர்வாளர் குடும் பத்தலைவர் வலிகாமத்திலிருக்கும் போது பாடசாலைகளுக்கு காகிதாதிப் பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பவர். பிள்ளைகள் வயது வந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களால் எந்தவிதமான உழைப்பையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் குடும்பத்தைக் கெளரமாகக் கொண்டு நடாத்துவதற்காகக் குடும்பத்தலைவர் நாள்தோறும் ஏறத்தாழ 10 மைல் தூரத்திலுள்ள பளைப் பிரதேசத்திற்குச் சென்று விறகு சேகரித்து அதனைப் பாகஞ் செய்து சாவகச்சேரிப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கமாகும். அவர் ஒரு தடவை விறகு சேகரிக்கச் சென்றால் எல்லாச் செலவுகளுந் தள்ளி 100/- ரூபா தான் மிச்சம்
115

Page 69
வரும் எனவும் இதனால் பெரிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவுந் தெரிவித்தார். ஏனெனில் ஒரு துவிச் சக்கர வண்டியின் ரயர் ஒன்றின் விலை அப்போது 1750/- - 2000/- ரூபா விற்குமிடையில் விற்பனை செய்யப்பட்டது. உதிரிப்பாகங்களின் விலை பல மடங்காக அதிகரித்திருந்தமை யாலும் அடிக்கடி வண்டிக்கு திருத்தவேலை செய்யவேண்டியிருந்தமையாலும் வருமானம் மிகக் குறைவாகவே காணப்பட்டதெனவுந் தெரிவித்துள்ளார். தான் விறகு சேகரித்தல் தொழிலைச் செய்வதற்கு முக்கிய காரணம் குடும்பத்தவர்கள் பட்டினியால் இறக்காமல் இருப்பதற்காகத் தான் எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரையூரைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை வலிகாமத்தில் வாழ்ந்த காலத்திற் பெட்டி மீன் வியாபாரம் செய்து வந்தவர். அவரும் அவரது குடும்பத்தவரும் இடம்பெயர்ந்து நெல்லியடியில் ஆரம் பத்தில் நலநோன்பு நிலையத்திலும் ஒரு மாதத்தின் பின்னர் அப்பிரதேச த்திலேயே அவ்வூரைச் சேர்ந்த ஒருவருடைய காணியிற் குடிசை அமைத்தும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இலவச உணவுப் பொருட்களை பெற்று வந்தாலுந் தமது குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு மேலதிகமாக 6000/- வருமானம் இருந்தால் மட்டுமே சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்றார். எனினும் மாதத்தில் 6000/- - 9000/- ரூபா வரையுந் தன்னால் உழைக்கக் கூடியதாக விருந்தது எனத் தெரிவிக்கும் குடும்பத் தலைவர் ஒவ்வொரு நாளும் காலையில் பருத்தித்துறையிலிருந்து மொத்தமாக மீனை வாங்கி வாடகை லொறியில் தென்மராட்சிக்கு கொண்டு வந்து விற்பதாகவும் அதனாற் சராசரி நாளொன்றிற்கு 300/- - 500/- ரூபா வரை வருமானத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் தனக்கு மதுபானம், மற்றும் சிகரட் செலவுக்காக சராசரி நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 200/- ரூபா வரை செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில் இத்தொழிலால் நட்டமும் ஏற்பட்டதாகவும் கூறிய அவர் தனது குடும்பத்தைக் கெளரவமாக நடாத்தி வருவதாகவுந் தெரிவித்திருந்தார்.
இடப்பெயர்வுக்கு முன்னர் நல்லூர்ப் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் இரண்டாந்தர அதிபராக இருந்தவரின் குடும்பத்தில் ஆறு அங்கத்தவர்கள் இருந்தனர். முதலில் சாவகச்சேரியில் ஒரு வீட்டில் பல குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்கள். அங்கு இடநெருக்கடியினாலும் ஏனைய அசெளகரியங்களாலும் கஷ்டப்பட்டதனால் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டியில் தூரத்து உறவினர் ஒருவரின் பழைய வீட்டில் அவர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தனர். அதிபருக்கு அவரது மாதாந்த சம்பளத்தைத் தவிர வேறு வருமானம் எதுவும் இல்லை. பொதுநல சேவைகளில் அதிக ஈடுபடு கொண்ட அதிபர், சங்கம் ஒன்றில் பொறுப்பான பதவி வகித்து வந்தவர். இச்சங்கத்தில் ஈடுபாடு கொணர் டதனால் இவருக்கு மேலதிக செலவேயெனினும் வருமானமில்லை. மிகவும் நேர்மையான சுபாவங்கொண்ட அதிபர் அவர்கள் உடுப்பிட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களுந் துவிச்சக்கர வண்டியில் 24 மைல் தூரம் பிரயாணஞ் செய்து சாவகச்சேரியிற் தனது கடமைகளை நிறைவேற்றி வந்தார். இடப்பெயர்வின் விளைவாக அவரது
116

வருமானத்திற்குஞ் செலவினத்திற்குமிடையிற் பெரியளவில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே நகைகளாகச் சேமித்து வைத்திருந்தவற்றில் சிலவற்றை விற்று இடைவெளியினை நிரப்புவதாகவும் எந்தநிலை வந்தாலும் கெளரவத்துடன் வாழவே தாம் விரும்புவதாகவுந் தெரிவித்தார். உலர் உணவு விநியோகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வருமானத்திற்கு மேற்பட்டவர் களுக்கு இலவசமில்லை என்பதால் எவற்றை வாங்கினாலும் பணங் கொடுத்தே பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதுவும் இவருக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் விடலைப்பருவத்தினராகப் பிள்ளைகள் இருந்தமையாற் செலவும் அதிகமாகவிருந்தது. ரிவிரச இடப்பெயர்வின் போது அதிபர் குடும்பத்தினர் வன்னிப்பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உயர்தொழிலில் சிரேஷ்ட அங்கத்தவராக விருப்ப வருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகள் மட்டுமேயாகும். இரக்க சுபாவங் கொண்ட அக்குடும்ப அங்கத்தவர் பொருள் வேண்டி வருபவர்களை வெறு மனே திருப்பி அனுப்பாதவர். இது அவரது சுபாவம். அத்துடன் அவர் தனது பெற்றோர், சகோதரர்களில் அளவில்லாத பற்று வைத்திருப்பவர். அவருக்கு ஏற்கனவே தென்மராட்சியில் சகோதரி ஒருவரின் குடும்பம் உண்டு. இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள் கழித்தே தென்மராட்சிக்குத் தனது குடும்பத்தினரையும் பெற்றோர் சகோதரர்களையும் அழைத்து வந்து தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். அந்தவிடு விசாலமானதும் பெரிய வளவினைக் கொண்டதுமாகவிருந்தமையால் இடம்பெயர்ந்த நாளிலிருந்து மீண்டும் வலிகாமம் வரும்வரை பல குடும்பத்தைச் சேர்ந்த 45 அங்கத்தவர்கள் அங்கு ஒன்றாகவே வாழ்ந்துள்ளனர். குடும்பத்தலைவரின் மனைவியும் உயர்கல்வியுடன் உயர்தொழில் பார்ப்பவர். சகோதரி குடும்பத்தவர்களும் உயர்கல்வியுடன் கெளரவமான அரச தொழில் பார்ப்பவர்கள். அதாவது இரு சகோதர குடும்பங்களும் வசதிபடைத்தவர்களாக இருந்தனர். இடம்பெயர்ந் தோருக்குத் தேவையான தேங்காய், விறகு, முருங்கக்காய் போன்றவற்றை அக்கா குடும்பத்தினர் நாள்தோறும் இலவசமாக வழங்கி வந்தார்கள். இடம்பெயர்நத காலத்தில் தேங்காய் ஒன்றின் விலை 40/- ரூபாவிற்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட அங்கத்தவர் குடும்பத்தினர் வசதி படைத்தவர்களான படியால் நாளாந்தச் செலவைப் பொறுத்தவரை அவர்களே பெரும்பங்கினை பொறுக்க வேண்டியவர்களானார்கள். அவரும் அவரது மனைவியுமே நாள் தோறும் சந்தைக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள். அவர்களது சகோதரர்களுங் காலமறிந்து செலவு செய்து வந்தனர். எனினும் நாளாந்த செலவினத்தைப் பொறுத்தவரை அவர்களே பெரும் பங்கினைப் பொறுக்கவேண்டியிருந்த போதிலும் சகோதரர் குடும்பங்கங்களுடன் எந்தவித மனக்கசப்பும் வராதவாறு நடந்து கொண்ட இவர்களுக்கு இடப்பெயர்வினால் மேலதிகமாக 120,000/- ரூபா வரையிற் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் மீள் இடப்பெயர்வு ஏற்படாதிருந்தால் பல்வேறு வகையான பிரச்சனைகளை அனுபவித்திருக்கவேண்டிவந்திருக்கும் எனவுந் தெரிவித்தார்கள்.
117

Page 70
இடம்பெயர்ந்த நிலையில் அரச ஊழியர்கள், தனியார் துறையைச் சேர்ந்தோர் மற்றும் கஷ்டத்தின் மத்தியில் அன்றாட சீவியத்திற்காகத் தொழில் செய்தவர்களைத் தவிர இடப்பெயர்வாளரிடையே தொழில் செய்யாது காலத்தை வீணே கழித்தவர்களே பெரும்பாலானோர்களாவர். இவர்கள் தொழில் செய்யாதிருந்ததற்கு முக்கிய காரணியான தொழில்வாய்ப்பின்மை என்பது ஒரு புறமிருக்க, தொழில் செய்யக்கூடிய மனநிலை அவர்களிடையே இல்லாதிருந்தமையும் குடியிருப்பு வசதிக் குறைவும் ஏனைய காரணிகள் எனலாம். அத்துடன் உழைக்கும் ஆற்றலிருந்தும் உழைப்பிலிடுபடாதிருந்தற்கு இலவசமாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றமையுங் கூட ஒரு சார்புக் காரணியாகக் கொள்ள வேண்டுமெனப் பலர் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இலவசமாகக் கிடைக்கும் உலர்உணவு தவிர்ந்த ஏனைய பொருட்களை வாங்குவதற்குத் தேவைப்படும் பணத்தினைத் தமது ஆரம்ப இடத்திற் சேமித்து வைத்திருந்ததைக் கொண்டோ அல்லது நகை நட்டுக்களை விற்றோ சமாளித்து வந்தனர் என்றே கூறல் வேண்டும். சேரிடத்தில் தம்மால் செய்யக்கூடிய தொழில்களை மேற்கொள்ளாமைக்கு வலிகாமம் பகுதிகளில் தாம் செய்து வந்த தொழில்கள் சேரிடப் பகுதிகளிற் காணப்படாமை ஒரு புறமிருக்க, காணப்படும் பட்சத்திலும் அதனை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லாதிருந்தமையும் அவர்களைப் பாதித்தது. தமது ஆரம்ப இடத்திற் செழிப்பான மண் வளமும் நன்னீர் வளமும் காணப்பட்டிருந்தமையால் விவசாய உற்பத்திகளைச் செய்து வருமானத்தைப் பெற்றவர்கள் அத்தகைய வசதிவாய்ப்பு சேரிடங்களில் காணப்படாமையால் அவர்களால் விவசாயத்தில் ஈடுபடமுடியவில்லை.
மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டோர் கடலில் மீன்பிடிப்பதனால் ஏற்படக் கூடிய உயிராபத்தினைத் தவிர்த்துக்கொள்வதற்காகப் பிளாஸ்ரிக் படகுகளை வைத்திருந்தோர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் வன்னிப் பெருநில ப்பரப்பிற்குமிடையில் கிளாலி - ஆலங்கேணிக்கான படகுச்சேவையிற் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். எனினும் இவர்களிற் சிலர் கடலிலேயே உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. அதேபோலவே வேறு தொழில்களற்ற மோட்டார் சைக்கிள் வைத்திருந்தோர் பயணிகளை ஏற்றியிறக்குஞ் சேவையினைச் செய்து உழைத்தனர்.
இயற்கை வளவாய்ப்புக்களுக்கு மேலதிகமாகக் குடித்தொகையானது சேரிடத்திற் திடீரென அதிகரித்திருந்தமையாலும் இடப்பெயர்வாளரில் பலர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தது. எனவே அவர்களது பொழுதுபோக்குகளாக காலையில் கியூவரிசையில் நின்று பாணைப்பெற்றுக் கொள்வது, அதேபோல் கூட்டுறவுக் கடைகளில் உலர் உணவினைப் பெற்றுக் கொள்வதுடன் சந்தைக்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருவது போன்றன அவர்களது முக்கிய பணியாக இருந்துள்ளது. இவை தவிர்ந்த வேளைகளில் சந்திகளிலும் வீதியோரங்களிலும் பொழுதைப் போக்குவதற்கு அரட்டை அடித்தல், காட்ஸ் விளையாடல், தாயம் விளையாடல் போன்றவற்றில்
118

ஈடுபடுவதுடன் மதுபானம் அருந்துவோர் மதுச்சாலைகளிற் காலங்கழிப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இத்த கையோர் வதந்திகளையும் பரப்பி வந்துள்ளதைக் காணமுடிந்தது. அதாவது அவர்களது கற்பனைகளை வதந்திகளாக வெளியிட்டனர் எனலாம்.
குறிப்பாக எந்நேரமும் கனகம்புளியடிச்சந்தி, புத்தூர்ச்சந்தி, கைதடிச்
சந்தி, கைதடி நூனாவிற் சந்தி, வேம்பிராய் - வரணிச்சந்தி, கொடிகாமச்சந்தி, நெல்லியடிச்சந்தி, மாலுசந்தி, கிராமக்கோட்டுச்சந்தி, கரடிபோக்குச் சந்தி, முறிகண்டிக் கோவிலடி போன்ற இடங்களிற் கூடி நின்று பலதும் பத்தும் சம்பாவழிப்பதைக் காண முடிந்தது. குறிப்பாகக் கனகம்புளியடிச்சந்தியில் ஐந்து வீதிகள் இணைகின்றன. சாவகச்சேரி,மீசாலை, நுணாவில், பருத்தி த்துறை, புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து இச்சந்தி வரை வீதிகள் வந்து சேர்கின்றன. இடப்பெயர்வுக்கு முன்னர் இச்சந்தியாற் செல்லுவதற்கு மக்கள் அஞ்சுவார்கள் என அவ்வூர் முதியோர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அச்சந்தி வயல் வெளிகளால் சூழப்பட்டிருந்தது. அத்துடன் மக்கள் நடமாட்டம் குறைவான சந்தியானபடியால் அடிக்கடி பல வழிப்பறிக் கொள்கைகள் இடம்பெற்றிருக் கின்றன என்பர். ஆனால் இடப்பெயர்வுக்குப் பின்னர் இச்சந்தியிற் பல சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டமை மட்டுமல்லாது வேலையற்ற கூட்டத்தினர் அச்சந்தியில் வந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பதையும் நேரிற் காணக்கூடிய தாகவிருந்தது. ஆனால் மீள் இடப்பெயர்வின் பின்னர் மீண்டும் இச்சந்தியானது மக்கள் நடமாட்டங் குறைந்த பிரதேசமாகக் காணப்படுவதை அனுபவரீதியாக அறிய முடிகின்றது.
இடம்பெயர்நத நிலையில் மிக நீண்ட நாட்களாகப் பாடசாலைகள் இயங்காமையினால் மாணவர்கள் கிளித்தட்டு, தாயம், கிறிக்கற் போன்ற விளையாட்டுக்களிற் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். இத்தகைய விளை யாட்டுக்களாற் சிறுவர்களிடையே சண்டைகள் ஏற்படுவதால் குடும்பங்களிடையே சச்சரவுகள், மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்ததையுங் காணமுடிந்தது.
இறுதியாக, தொழிலற்று வருமானமில்லாது காணப்பட்ட நிலையானது குடும்ப அங்கத்தவர்களிடையே நிறையுணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்திய துடன் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் மட்டுமல்லாது பெரும்பாலான இடப்பெயர்வாளரிடையே போசாக்கற்ற நிலை காணப்பட்டிருந்தது. அதற்கான மருத்துவசேவையுங் குறைவாகக் காணப்பட்டிருந்ததமையால் மக்களிடையே உடற்களைப்பு அதிகம் ஏற்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்து ள்ளன. அரிமாக் கழகம் போன்ற சமூக நிறுவனங்களின் உதவியுடன் நலநோன்பு நிலையங்களிலும், வேறு இடங்களிலும் வாழ்ந்தோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மக்களிடையே போசாக்கற்ற நிலை உருவாகியிருந்ததை அரசுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வைத்தியர்கள் தெரிவித்தி ருந்தமை இங்கு நோக்கற்பாலது.
119

Page 71
7
பிற செயற்பாடுகள்
நீரைப் பெற்றுக் கொள்ளல்
இடப்பெயர்வின் ஆரம்ப இடமான வலிகாமம் பிரதேசத்தில் பெரும் பாலான பகுதிகளில் நீர்வளம் - குறிப்பாக நன்னிர் வளம் - சிறப்பாகவே காணப்படுகின்றது. அத்துடன் மண்வளமும் அவற்றினுடாகப் பொருளாதார வாய்ப்புகளும் அதிகமாகவே இங்கு காணப்படுகின்றது. இந்நிலையில் வலிகாமத்தில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய நீர்வளம் போன்று சென்ற டைந்த தென்மராட்சி. வன்னிப்பிராந்தியம் மற்றும் வடமராட்சியிற் காணப்படா மைக்கு அப்பிரதேசங்களில் பெளதீக வள வாய்ப்புக்கள் பாதகமாகக் காணப்படுவதே காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வடமரா ட்சியை நோக்கிய மக்கள் இடப்பெயர்வு ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது சார்பு ரீதியாகக் குறைவாகவே காணப்பட்டது. வடமராட்சிப் பகுதி களில் நெல்லியடி, உடுப்பிட்டி, வதிரி, மாலுசந்திப்பகுதிகளில் நன்னிர்வளம் காணப்பட்டாலும் ஏனைய பிரதேசங்களிலும் அங்குமிங்குமாக நன்னிர்வளம் காணப்படுகின்றமையால் மக்கள் நீர்ப்பிரச்சனையை அனுபவிக்கவில்லை என்றே கூறல் வேண்டும். குறிப்பாக இடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி பருவகால மழைக்குரிய காலப்பகுதியாகவிருந்தமையால் வடமராட்சியில் நீர்ப் பரிரச்சனையை அனுபவிக்க வாயப் பரிருக்கவில்லை என இடப்பெயர்வாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
தென்மராட்சிப் பகுதிகளில் மொத்த இடப்பெயர்வாளரிற் பெரும் பாலானோர் வாழ்ந்து வந்தமையாலும் பெளதீகவளமானது தொடர்ச்சியாக
120

நீரினைப்பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பற்றிருந்தமையாலும் ஏற்கனவே தென்மராட்சியில் வாழ்ந்த மக்களிலும் பார்க்க அதிகமானோருக்கு நீரின் தேவையிருந்தமையாலும் நன்னீர் வளம் குறித்த சில பகுதிகளில் மட்டுமே காணப்பட்டிருந்தமையாலும் பருவ மழை வீழ்ச்சி மிகக் குறைவாகவிருந்த மையாலும் மக்கள் நீர்ப்பிரச்சனையை அனுபவிக்க வேண்டியிருந்த நிலை தவிர்க்க முடியாததாகவிருந்தது,
தென்மராட்சி மணற்பாங்கான பரப்பினைக் கொண்டிருந்தமையாற் தரைக்கீழ் நீர்வளமும் மட்டுப்படுத்தப்பட்டதாகவிருக்கின்றது. தரைக்கீழ் நீரினைப் பெற்றுக் கொள்ளுங் கிணறுகளின் விட்டம் வலிகாமப் பகுதிகளிலுள்ள கிணறுகளோடு ஒப்பிடும்போது குறைவானதாகக் காணப்படுகின்றதாலும் நீர்வளம் குறைவாகக் காணப்படுகின்றது. அத்துடன் தென்மராட்சி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வலிகாமப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளரில் 700 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமது வளவுகளில் உள்ள கிணற்று நீர் உவர்த்தன்மை கொண்டதாகவிருப்பதாகத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சிப் பிரதேசத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே அதுவும் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே - நன்னீர்வளம் காணப்படுகின்றது. குறிப்பாக வேம்பிராய், மீசாலை, கைதடியில் சில பகுதிகள் போன்ற இடங்களில் நன்னீர் வளம் காணப்படுகின்றது. இவை தவிர பெரும்பாலான கோவிற் கிணறுகளில் நன்னீர்வளம் உண்டு. அத்துடன் சாவகச்சேரி நகரின் மையப் பகுதியிற் சில கிணறுகள் நன்னினைக் கொண்டுள்ளன. அதேவேளை மிருசுவில், கொடிகாமம், உசன், வரணி, மீசாலையின் பெரும்பாலான கிணறுகளில் நீரானது மஞ்சள் நிறமுடையதாக இருக்கின்றது. இது வலிகாமம் இடப்பெயர்வாளருக்குப் புதிய அனுபவத்தையே கொடுத்திருந்தது. தென்மராட்சியில் மஞ்சள் நீர் காணப்படும் பிரதேசங்களில் மக்கள் தமது தேவைக்காக அந்நீரினைத் துணிகொண்டு வடித்தே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஏற்கனவே வாழ்ந்த அப்பிரதேச மக்கள் இவ்வாறே பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் இந்நீர் கலங்கலாக விருப்பதனால் நீரினை வேறு முறையில் வடித்தெடுக்கின்றனர். அதாவது குழந்தைகள் நித்திரை கொள்வதற்குத் துணியாற் தொட்டில் கட்டுவது போல கிணற்றடியிற் கட்டிய பின்னர் அதற்குள் கற்கள், மணற்றுணிக்கைகள், மணல் போன்றவற்றைப் போட்டு அதற்குள் நீரினை விடுவர். அவை பல படைகளுடாகக் கடந்து கீழேயுள்ள பாத்திரத்துள் விழுகின்றது. அவ்வாறாகப் பெறப்பட்ட நீரினையே அப்பகுதி மக்கள் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிந்தது. மீசாலை, கொடிகாமம், மிருசுவில் போன்ற இடங்களிலுள்ள கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரினை இத்தகைய முறைகளின் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். ஏனைய பகுதிகளில் பெரும்பாலான கிணறுகள் குறைவான உவர்த்தன்மை கொண்டவையாகவிருப்பதனாற் குடிப்பதற்குப் பயன்படுத்துவதில்லையெனினும் பெரும்பாலான குடும்பங்கள் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது.
121

Page 72
மக்களின் நுகர்வு அதிகரித்திருந்தமையாலும் பருவமழை வழமை போலல்லாதுகுறைவாகக் காணப்பட்டமையாலும் 1996ஆம் ஆண்டு மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மக்கள் நன்னிருக்காக அலைய வேண்டிய நிலையினை அனுபவரீதியாக அறிய முடிந்தது. நன்னீர் கிணறுகளிற் தொடர்ச்சியாக நீரினை மக்கள் பெற்று வந்தமையாற் பல கிணறுகள் வற்றிவிடும் நிலை கூடக் காணப்பட்டிருந்தது. நீர் மீண்டும் ஊறும் வரை மக்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல. இடம்பெயர்ந்த மக்களாயினுஞ் சரி நிரந்தர குடியிருப்பாளராயினுஞ் சரி பிளாஸ்டிக் கொள்கலன்களுடன் மிக நீண்ட தூரஞ் சென்று நீரினைப் பெற்று வந்துள்ளனர். குறிப்பாக வேம்பிராய்க் கோவிலடியில் உள்ள கிணற்றிலிருந்து எவ்வளவு நீரினை வெளியேற்றினாலும் அது வற்றுவதில்லை. எனவே ஏனைய நாளாந்தச் செயற்பாடுகளில் எவ்வாறு கியூ வரிசை காணப்பட்டதோ அதேபோல வேம்பிராயில் மட்டுமல்லாது மற்றும் பல நன்னீர்க் கிணற்றடிகளில் நீரைப் பெற்றுக் கொள்வதற்குக் கியூ வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையிருந்துள்ளது.
வலிகாமத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டோரிற் பெரும் பாலானோர் தூய நன்னீரையே உபயோகித்துக் பழகியிருந்தமையாற் தென்ம ராட்சிப் பகுதியில் நன்னிரைப் பெறுவதிற் பல்வேறு சிரமங்களை அனுபவித்தி ருந்தனர். எனவே ஆகக் குறைந்த பட்சம் குடிப்பதற்கு மட்டுமாவது பல மைல் தூரம் சென்றாவது நன்னீரினைப் பெற்று வந்துள்ளனர். உதாரணமாகப் பெரும்பாலானோர் துவிச்சக்கரவண்டிகளில் 4 அல்லது 5 லீற்றர் பிளாஸ்ரிக் கொள்கலன்களைத் தம்முடன் எடுத்துச் சென்று, வரும் வழியில் நன்னிரைப் பெற்று வருவதைக் காணமுடிந்தது. இந்நிகழ்வினைத் தென்மராட்சிப் பகுதிக ளிற் சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாகவிருந்தது.
யாழ்ப்பாணப் பிரதேசத்துத் தமிழர் உட்பட இலங்கைத் தமிழர்கள் சாதிப்பாகுபாட்டினை மிக இறுக்கமாகப் பேணி வருபவர்கள். அண்மைக் காலங்களில் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியின் விளைவாக சாதிப்பாகுபாட்டினை வெளிப்படையாகக் காட்டுவதில்லையாயினும் அதனை மறைமுகமாகத் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றனர். ஒட்டு மொத்தமான வலிகாமம் மக்களின் இடப்பெயர்வினைத் தொடர்ந்து தாம் சென்றடைந்த பிரதேசங்களிற் பெருமளவிற்குச் சாதியடிப்படையிலேயே தமது குடியிருப்புக் களை நிறுவியிருந்தனர். அதாவது மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு வந்த சாதிப்பாகுபாடு தவிர்க்க முடியாதவகையில் மீண்டும் எழாவண்ணமே அவ்வாறு தமது குடியிருப்புகளை நிறுவியோ அல்லது அதற்கேற்ப குடியிருப்பாளருடன் இணைந்தோ வாழ்ந்து வந்தனர் என்றே கூறல் வேண்டும். இதனைப் பொதுவாக தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பகுதிகளிலே அவதானிக்க முடிந்தது.
எவ்வாறெனினும் நீரினைப் பெற்றுக் கொள்ளும் வேளைகளிற் சாதிப் பாகுபாடுகள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கின. குறிப்பாகத் தென்மராட்சிப் பகுதிகளில் குடியிருப்பு நிலங்கள் பெரிதாகவிருக்கின்றன. அதிகளவில்
122

சேரிடத்தெரிவினை மேற்கொண்ட வலிகாமம் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குக் கிணறுகள் பற்றாக்குறையாகவிருந்துள்ளன. எனவே தற்காலிகமாகக் குடியிருப்பு வளவுகளில் நீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு நீரினைப் பெறச் செல்லும் போது சாதிப்பாகுபாடு ஆங்காங்கே காணப்பட்டதுடன் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கொடிகாமம், மீசாலை, மட்டுவில் போன்ற இடங்களில் இவை நடைபெற்ற தாக உள்ளுர் பத்திரிகைகளிற் செய்திகள் வெளிவந்திருந்தன. அத்துடன் குறித்த கிணறுகளில் நீரிணை அள்ளவிடாது மண்ணெண்ணெய், திராவகங்கள் மற்றும் பூனைகளை கிணற்றில் போட்ட சம்பவங்களும், படலையைப் பூட்டி வைக்கும் சந்தர்ப்பங்களும் காணப்பட்டிருந்தன. இதற்கு மாறாகப் பெரும்பாலான வீடுகளில் எந்நேரமும் எவரும் நீரினைப் பெற்றுக் கொள்வதற்கு அவ்வீட்டு உரிமையாளர்கள் அனுமதித்திருந்தனர். உதாரணமாக சாவகச்சேரி நகரப் பகுதியில் நன்னீர் கிணறு உள்ள ஒரு வீட்டில் இடப்பெயர்வாளரின் நலன் கருதி வீட்டு உரிமையாளர் அதிகாலையிலேயே தமக்குத் தேவையான நீரினைப் பாத்திரங்களிற் சேமித்து வைத்துவிட்டுப் பின்னர் கிணற்றுப் பக்கமே செல்வதில்லை என்பதையும் அறியக்கூடியதாகவிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நீர் பெறுவதிற் சாதிப்பாகுபாடு காட்டப்பட்டதனாற் சகல தமிழ் மக்களையும் மறைமுகமாகவே இது பாதிக்கச் செய்துள்ளது என்றே கூறல் வேண்டும்.
வன்னிப் பிரதேசத்திற் தரைகீழ் நீர்வளம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலானவர்களின் நீர்ப் பயன்பாடு குளத்து நீராகவேயிருக்கின்றது. வன்னிப் பிரதேசங்களும் வரட்சியான காலநிலைப் பிரதேசமாகவிருப்பதனாற் பெரும்பாலான பிரதேசங்கள் விருத்திசெய்யப்படாத பிரதேசங்களாகும். குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது மண்வளம், நீர்வளம் போன்றவற்றிற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு இடங்களைத் தெரிவு செய்தனர். அந்நிலப்பரப்பானது வன்னிப் பிரதேச நிலப்பரப்போடு ஒப்பிடுமிடத்து மிகக்குறைந்த நிலப்பரப்பேயாகும். பின்னர் காலப்போக்கில் அக்குடியேற்றத் திட்டங்கள் சார்ந்த பகுதிகளும் உள்ளுர் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களும் அவற்றின் எல்லைப் பிரதேசங்களும் ஒரளவிற்கு விருத்தி பெறலாயின. இந்நிலையிற் குடிநெருக்கமற்ற பெருநிலப் பரப்பாகக் காணப்பட்ட வன்னிப்பிரதேசம் தமிழர்களின் நிலப்பரப்பாகவிருப்பதனால் குடி நெருக்கமுள்ள பகுதிகளில் வாழுந் தமிழர்களை இப்பிரதேசங்களிற் குடியமர்த்துவதற்கு அரசியல்வாதிகளும் கல்விமான்களும் தத்தம் சார்ந்த துறைகளுடாக முயற்சி செய்து வந்துள்ளனர். எனினும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் அரசியல் பொருளாதார மாற்றங்கள் வன்னிப்பிரதேசம் நோக்கிய இடப்பெயர்வில் அக்கறை கொள்வதைத் தவிர்த்துச் சர்வதேச இடப்பெயர்விலேயே கூடிய கவனம் செலுத்த வைத்தன. குறிப்பாக வன்னிப் பிரதேசங்களுக்கான இடப்பெயர்வில் மக்கள் சிரத்தை கொள்ளாமைக்கு நீர்வளப் பற்றாக்குறை, பெரும்பாலான பகுதிகள் காடுகளாகவிருந்தமை, விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் போன்றனவும் முக்கியமானவையாக இருந்துள்ளன எனலாம்.
123

Page 73
இந்நிலையில் வலிகாமம் இடப்பெயர்வில் ஏறத்தாழ அரைப்பங்கினர் பல்வேறு காரணங்களைக் கருத்திற் கொண்டு வன்னிப் பிரசேங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளலாயினர். யாழ்ப்பாணக் குடாநாட்டினைப் போலல்லாது வன்னிப் பகுதிகளிற் பெரும்பாலான குடியிருப்புக்கள் வசதியா னவை எனக் கூறுவதற்கில்லை. அதாவது குடியிருப்புக்கள் மிகச் சிறியன என்றே கூறல் வேண்டும்.
வன்னிப்பிரதேச நீர்வளத்தைப் பொறுத்தவரை மட்டுபடுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. எனவே அப்பிரதேசம் நோக்கிச் சென்ற இடப்பெயர்வாளரிற் குறிப்பிடத்தக்கோர் குடியிருப்புப் பிரச்சனைகளையும் நீர்ப்பிரச்சனைகளையுமே அனுபவித்து வருகின்றனர். இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பருவமழைவீழ்ச்சி அதிகமாகவிருந்திருக்குமேயானால் மக்கள் நீர்த்தேவையை ஒரளவிற்குச் சுலபமாகப் பூர்த்தி செய்திருக்கலாம். எவ்வாறெனினும் நீர்ப்பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அரச, மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் குழாய்க்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்ப டுவதால் நீர்ப்பிரச்சனையை ஒரளவிற்குச் சமாளிக்க முடிகின்றது.
பொதுவாகக் குடிநெருக்கமுள்ள பிரதேசங்களிலிருந்து வன்னிப் பிரதேசங்களுக்கு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொள்ள வேண்டுமெனப் பல சந்தர்ப்பங்களில் இந்நூலாசிரியர் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள் ளார். ஆனால் அதன் வடிவம் வேறுபட்டது. இன்றைய உலகில் மக்கள் தமது இடப்பெயர்வில் நகரஞ் சார்ந்த இடப்பெயர்வுக்கும் சர்வதேச இடப் பெயர்வுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். வன்னிப் பிரதேசம் போன்ற விவசாயஞ்சார் கிராமங்களுக்கு மக்களை இடம்பெயரச் செய்வ தாயின் அப்பிரதேசங்களில் பல்வகைப்பட்ட உட்கட்டுமான வசதிகள் விரிவு படுத்தப்படும்பட்சத்திலேயே இது சாத்தியப்படும் என்றே கூறல் வேண்டும். தென்மாகாண அபிவிருத்தி தொடர்பாக தனியான திட்டம் ஒன்றினை அரசு செயற்படுத்தி வருவது போல வன்னிப் பிராந்திய பலநோக்கு அபிவிருத்தித் திட்டம் ஒன்றினைச் செயற்படுத்துவதன் மூலமே வன்னிப்பிரதேசத்தை வளம்படுத்தலாம். அத்துடன் வன்னிப்பிரதேசத்தினுாடாகச் செல்லும் பருவ கால ஆறுகளின் மூலம் கடலை அடையும் நீர் தடுக் கப்பட்டுச் சேமிக்கப்படுமாயின் மக்கள் தற்போது அனுபவிக்கும் பற்றாக்குறை நீங்கி போதுமான நீர்வளத்தினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புண்டு.
அரச நிறுவனங்களில் செயற்பாடுகள்
வலிகாமத்திலிருந்து மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டவேளை அவர்களுடன் இணைந்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இடம்பெயர்ந்திருந்தன. இவற்றில் மிகமுக்கியமானது யாழ்ப்பாண அரச அதிபர் பணிமனையுட்பட அரச திணைக்களங்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுமாகும். அரச திணைக்களங்களிற் பெரும்பாலானவை சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 26 வகுப்பறைகளிற் செயற்பட ஆரம்பித்தன. அரச
124

திணைக்களங்கள் மட்டுமல்லாது மக்களது அத்தியாவசிய தேவைப் பொருட்களின் களஞ்சியங்களும் இந்துக்கல்லூரி வகுப்பறைகளில் நிறைக்கப்பட்டிருந்தன. அத்துடன் வலிகாமப் பிரதேசங்களில் இயங்கி வந்த உதவி அரச அதிபர் பணிமனைகளும் இக்கல்லூரியிலும் வேறு கட்டிடங்களிலும் இயங்கத்தொடங்கின. எனினும் சில பணிமனைகள் வடமராட்சியில் இயங்கி வந்துள்ளன. பதிவாளர் நாயகத்தின் பதிவேடுகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திற் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தாலும் இதன் ஒரு பிரிவு சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இயங்கி மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளது. அதேவேளை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது செயற்பாடுகளை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் வைத்துச் செயற்படுத்தி வந்தது. வலிகாமத்தில் இயங்கி வந்த கமத்தொழில் திணைக்களக் காரியாலயங்கள் மீசாலையிலுள்ள கமத்தொழிற் சேவை நிலையத்தில் இடநெருக்கடியின் மத்தியில் இயங்கிவந்தன. இவை தவிர ஏனைய திணைக்களங்கள் அவ்வப் பிரிவு உயரதிகாரிகளின் விருப்புக்கேற்ப சாவகச்சேரிப் பிரிவில் அங்குமிங்குமாகச் செயற்பட்டு வந்துள்ளன.
இடப்பெயர்வாளர்கள் தென்மராட்சிப் பகுதிகளிலேயே பெருமளவிற்குச் சேரிடத்தைத் தெரிவு செய்துள்ளமையால் நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டுத் தென்மராட்சிப் பகுதியை 5 வலயங்களாகப் பிரித்து அவற்றிற்கு மேலதிக அரச அதிபர்கள் பொறுப்பாக இருந்து செயலாற்றினர். மட்டுவில், கைதடி, வரணி, சாவகச்சேரி, கொடிகாமம் என்பனவே அப்பிரிவுகளாகும். வடமராட்சியைப் பொறுத்தவரையில் நிர்வாக அலகுகள் முன்னரைப்போன்றே காணப்பட்டிருந்தன. அரச அதிபரின் நேரடிப் பொறுப்பிலிருந்த காரியாலயங்கள் தம்மாலான சேவையினைச் செய்து வந்துள்ளன. இருந்த போதிலும் நிதிப்பற்றாக்குறை, அரசின் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை, நிறைவேற்றுவதற்குக் கடினமான இடப்பெயர்வாளரின் அபிலாசைகள், அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் இடப்பெயர்வாளராகவிருந்தமை போன்ற பல காரணிகள் மக்கள் இடப்பெயர்வின் போது சிறப்பான சேவையைச் செய்வதற்குத் தடைகளாகவிருந்துள்ளன என்றே கூறல் வேண்டும்.
கல்வித் திணைக்களச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை வலிகாமம் பகுதியில் இயங்கி வந்த வலயம் , வலயம் II என்பன முறையே சாவகச்சேரி மகளிர் வித்தியாலயம், கரவெட்டி திருஇருதயக் கல்லூரியில் செயற்பட்டு வந்துள்ளன. வடமராட்சி, தென்மராட்சி, பிரதேச பிரதிக் கல்விப் பணிப்பாளர் பணிமனைகள் அவ்வவ்விடங்களிற் செயற்பட, இடப்பெயர்வுக்கு உட்பட்ட பிரதிக் கல்விப்பணிப்பாளர் பணிமனைகள் பெரும்பாலும் வலயம் இயங்கிவந்த சாவகச்சேரி மகளிர் வித்தியாலயத்தில் இயங்கி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் திணைக் களமும் இடப்பெயர்வுக்குட்பட்டிருந்தபோதிலும் உண்மையில் அநாதரவாகக் கைவிடப்பட்ட திணைக்களமாகவே இது காட்சியளித்தது. பிரதித் தபால்மாஅதிபரின் காரியாலயமும் யாழ்ப்பாணம்
125

Page 74
பிரதம தபால் நிலையமும் வேறு சில தபால் நிலையங்களும் சாவகச்சேரி மகளிர் வித்தியாலயத்தில் இயங்கி வந்தன. வலிகாமத்தில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் பல தென்மராட்சியில் உள்ள தபால் மற்றும் உபதபால் நிலையக் கட்டிடங்களிலும், பாடசாலைகளிலும் இயங்கி வந்தன. உதாரணமாக கொக்குவில் தபால் நிலையம் மிருசுவில் உபதால் நிலையத்தில் 10 X 6 சதுரஅடி பரப்பளவுக் கட்டிடத்தில் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. இதனாற் தபால் கந்தோரின் சேவையினைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெருஞ் சிரமத்திற்குள்ளானார்கள். பொதுவாக மேற்படி தபால் நிலையங்களிற் கடிதப் பட்டுவாடா மட்டுமே செயற்பாடாகவிருந்துள்ளது. யாழ்ப்பாணம் பிரதம தபால் நிலையத்தினர் அன்றாட சேவைகளை வழங்கி வந்துள்ளனர்.
காலப்போக்கிற் கல்விச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்காகச் சாவகச்சேரி மகளிர் வித்தியாலயத்தில் இயங்கி வந்த தபாற் திணைக்களப் பிரிவுகளை உடன் வெளியேறுமாறு கல்விப் பணிப்பாளரினால் பணிக்கப்பட்ட தைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு கிழமை தபால் திணைக்களம் செயலிழந் திருந்தது. இதன் பின்னர் மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள கராஜில் இயங்கிய நிலைமையைக் காணக் கூடியதாகவிருந்தது. இத்தகைய இடர்ப்பாடுகளுடன் கூடிய சேவைகளைச் செய்த தபால் திணைக்களம் மீண்டும் தமது பகுதிகளுக்குச் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய பீடங்களும் நிர்வாக மையமும் திருநெல்வேலியில் இயங்கி வந்து ள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவு மருதனாமடத்திலும், விவசாய பீடம் கிளிநொச்சியிலும், சித்தமருத்துவப் பிரிவு கைதடியிலும் இயங்கி வந்தன. இவற்றில் சித்த மருத்துவப் பிரிவு, விவசாயபீடம் தவிர்ந்த ஏனையவை மக்களுடன் சேர்ந்து இடப்பெயர்வுக்குள்ளாகின. ஏறத்தாழ 900 சதவீதமான பல்கலைக்கழக ஊழியர்கள் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளிற் தமது தற்காலிக சேரிடத்தைத் தெரிவு செய்திருந்தனர். எனினும் உயர் அதிகாரிகள் கிளிநொச்சியில் விவசாய பீடத்திலிருந்து செயற்பட்டனர். பொதுவாக வலிகாமம் இடப்பெயர்வினைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களிற் பெரும்பாலானோர் வடமராட்சி, தென்மராட்சிப்பிரதேசங்களில் தமது உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஊழியர்களைப் பொறுத்தவரை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இயங்கி வந்த பல்கலைக்கழக உப அலுவலகத்திற் தமது பெயரைப் பதிவு செய்து இருந்ததுடன் மாதாந்த ஊதியத்தையும் அங்கேயே பெற்று வந்தனர். மிகச் சிறிய எண்ணிக்கையானோர் கைதடியிலுள்ள சித்த மருத்துவப்பிரிவிற் பதிவு செய்திருந்ததுடன் ஏறத்தாழ 10.0 சதவீதத்திற்குங் குறைவான ஊழியர்கள் வன்னிப் பிரதேசத்திற்கும் தென்னி லங்கைக்கும் இடப்பெயர் வினை மேற்கொண்டிருந்தனர்.
126

பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளிற் பெரும்பாலானவை சாவகச்சேரி இந்துக்கல்லூரி உப அலுவலகத்தின் மூலமே செயற்பட்டு வந்தன.
வன்னிப்பிரதேசத்திற்கு இடப்பெயர்வினை மேற்கொள்ளுமாறு பல்வேறு மட்டத்தில் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்த போதிலும் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களைப் பொறுத்த வரை அவர்கள் இவ்வகை இடப்பெயர்வில் நாட்டங் கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணப் பல்கலை க்கழகத்தின் இறுதி வருடப் பரீட்சைகள், ஊழியர்கள் சம்பளக் கொடுப்பன வுகள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக ஏப்பிரல் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் மொத்த ஊழியர்களில் 900 சதவீதமான வர்கள் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிலேயே இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர்.
127

Page 75
S’L6L 6′0ż60 6′ZI80 9:9OI 8’S90 8"#760 I '990 L’ZI80 Zo [ [SI
qiqjfo oooo!!8!!19 umų,9|(919
oqqođìqoqoqoqosoqoriņ1999||Fīņđìılm‘ı909.goooooTŲîn -i
L’SI 0‘ s. Zoț72 6′′ S †y's į O'SI 寸、い 9, 1 ! Ç'f7Z 987 O LZ L'ZI
qiqjffo ooooŲ,91,919 的炮巨9949P
991
90 ŞI 60 OI Zs ț790 90 Sț7 8Z Ll Ll
8’9L 0'00s 0'001 Zo98 I "ZŁ 6°Z9 S’L8 978 O'98 9"#79 寸88 L’OL Ç’99 £'09 |(9L
qiqjţe ocoș golgolo Ļog) çoRolls?
018 ț71 6I 99 ! 9 6€. 89 I ZL 89 90 8£ 09. I 寸9 89 ZOI
(ạsynagogi gọiņmnogi-io)
990s #71 61 99 £#7 Z9 ZSI L8 08 ! { £ț7 #78|| 86 99 ț79 I
q阎城um9
qısı,sē
qīgĒĢIJG19) (zgiąàn) qıfles@@@@ qıftos@@@ơngĒĢự qirtos@@@@ (hņaig)quœ11494909 quousqÐ@Ųoq9rmųjųn-ā quous@@Ų9€Œu9T1) (z @@n) fiņőırılgo sını sırı (1 g@n) fiņőırılgoļiņTin (gif@sgāsī) fıstırılgotņIITTI (stogųıQQ909€1,91‰)199@11@ĪGILúG hoss@g)ąĝo 9,9€ŒFTITÚlf hosťg)ążą909&oq=Nourilo) youqī£ UR9ụs iyonglossos įsto
1įoqofteņēg)$ỆIT@ į9qogħdos
„są pozųn ņođịoooooooooTsırasınıņđìılm
i-l lorogorts-ızıl@
128

அதேபோலவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் 26.02.96ஆம் திகதி தொட்டு 18.03.96ஆம் திகதி வரை சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் நடாத்தப்பட்டன. அட்டவணை 7.1ல் இடம்பெயர்ந்த நிலையில் நடாத்தப்பட்ட இறுதி வருட பரீட்சையிற் சகல பீடங்களைச் சேர்ந்த 1,055 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களில் 76.8 சதவீதமான மாணவர்கள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பரீட்சை நிலையத்திலும் 15.7 சதவீதமான மாணவர்கள் கிளிநொச்சி விவசாயபீட பரீட்சை நிலையத்திலும் 7.5 சதவீதமானோர் வவுனியா பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பரீட்சை எழுதினர் என்பதிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்தனர் என்பது தெரிய வருகின்றது.
அத்துடன் ஏனைய வருட மாணவர்களுக்கும் மேற்படி நிலையங் களிலே பரீட்சைகளை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ரிவிரச II இராணுவ நடவடிக்கையின் விளைவாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன் திருநெல்வேலியிலுள்ள வளாகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிச் செயற்பாடுகள்
வலிகாமத்திலிருந்து ஒட்டு மொத்தமாக மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தமையால் அரச மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூடவே இடப்பெயர்வுக்குள்ளாகின. அவற்றில் வலிகாமம் பகுதிகளிற் செய ற்பட்டு வந்த இலங்கை வங்கி. மக்கள் வங்கி, சேமிப்பு வங்கிகளின் கிளைகளும் வர்த்தக வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி ஆகியனவும் இடப்பெயர்வினை மேற்கொண்டு தென்மராட்சி, மற்றும் வடமராட்சிப் பகுதி களிற் கட்டிட வசதிகள் கிடைத்தற்கேற்ப இயங்கத்தொடங்கின. இடப் பெயர்வின் பின்னர் ஏறத்தாழ பத்து நாட்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டளவிற் தமது சேவைகளை வழங்கி வந்துள்ளன. வலிகாமப் பகுதிகளில் இயங்கி வந்த சேமிப்பு வங்கிகள் யாவும் பருத்தித்துறை நகரிலிருந்து தமது செயற்பாடுகளை செய்து வந்தன. இலங்கை வங்கியின் மேற்றரக்கிளை பருத்தித்துறையிலும் இரண்டாம் கிளை மீசாலை கமத்தொழில் நிலையத்திலும் இயங்கி வந்தன. மற்றைய கிளைகள் தமது வசதிக்களுக்கேற்ப புதிய இடங்களிற் செயற்பட்டு வந்தன. குறைவான இடப்பெயர்வாளரைக் கவர்ந்த வடமராட்சியில் வங்கிக்கிளைகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் கட்டிட வசதிகள் பற்றாக்குறையினால் மக்கள் கருத்து வெற்றியளிக்கவில்லை. எவ்வாறெனினும் வாடிக்கையாளர்கள் அதிகமாகவிருந்த தென்மராட்சியில் இலங்கை வங்கியின் மேற்றரக்கிளையின் உபஅலுவலகம் ஒன்று சாவகச்சேரி நகரில் பின்னர் திறக்கப்பட்டது. இதேபோலவே தனியார் வங்கிகளும் தமது உப அலுவலகங்களைச் சாவகச்சேரியில் அமைத்துக் கொண்டன. பொதுவாக வங்கியாளர்கள் தமது குடியிருப்பு வசதிகளின் காரணமாகவே வடமராட்சியில்
129

Page 76
இருந்து செயற்படத் தொடங்கினரென மக்கள் கருத்துக்களைத் தெரிவித்திரு ந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் வங்கியின் செயற்பாடுகள் வாடிக்கையாளரின் நலனை முன்னிட்டுச் சாவகச்சேரியில் இயங்கியமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகின்றது.
பணப்புழக்கத் தட்டுப்பாடும் மக்கள் அவலநிலையும்
இடம்பெயர்ந்த மக்கள் பொருளாதார ரீதியிற் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர் என்பது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இடப்பெயர்வினை மேற்கொண்ட இரு கிழமைகளின் பின்னர் பணநோட்டுக்களுக்கான தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக 1000/-, 500/- ற்கான நோட்டுக்களைச் சந்தையிற் காண்பது மிக அரிதாகவேயிருந்தது. உதாரணமாக அரச ஊழியர் தமது சம்பளத்தினைப் பல தடவைகளிலேயே வங்கியிலிருந்து பெறக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக ஒரு நாளைக்கு வங்கிகளிலிருந்து 1000/- அல்லது 2000/- வினைப் பெற்றால் அடுத்த கிழமையே அதேயளவு பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி நிர்வாகங்கள் கூறின. வங்கி இருப்பில் இருந்து அதிகளவு பணத்தினைப் பெற்றுக்கொள்ள (8 6J 60ơi (6 LDT us6of Poay Order, Droft (3u T 6t 6u gj Arf DIT LT as (36) பெற்றுக்கொள்ளமுடிந்தது. அதாவது மக்களிடையே பணம் இருந்தாலும் அவற்றை நோட்டுக்கள் ஆக்குவதிற் பெரும் இடர்ப்பாட்டினை அனுபவித்ததால், மக்களின் வாங்குஞ் சக்தியும் பலவீனமடைந்திருந்தது. இக்காலபப்பகுதிகளிற் சம்பளத்தை மட்டும் நம்பியிருந்தவர்கள் காசோலைகளாகப் பெறப்பட்ட சம்பளத்தை 1000/- ரூபாவுக்கு 50/- முதல் 80/- ரூபா வரையிற் கொமிசன் கொடுத்து மாற்றவேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. அல்லது வியாபார நிலையங்களிற் சம்பளக்காசோலைகளைக் கொடுத்தால் 50% தொடக்கம் 75% சதவீதமானவற்றிற்குப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் நிர்ப்பந்தித்துள்ளனர். இதனாற் தமக்கு அத்தியாவசியமில்லாத பொருட்களைக் கூடபெற்றுக்கொள்ளவேணி டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. சில சந்தர்ப்பங்களிற் கூட்டுறவுக்கடைகளிலாயினுஞ் சரி, தனியார் வர்த்தக நிறுவனங்களிலாயினுஞ் சரி தம்மிடம் நீண்ட நாட்களாக விற்பனையாகாது தேங்கிக் கிடந்த அல்லது பழுதடைந்த பொருட்களிற் குறிப்பிட்ட அளவினை நுகரும் பட்சத்திலேயே காசோலைகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனவே நோட்டுக்களின் பற்றாக்குறையினால் அன்றாடம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரக்கறி, மீன் மற்றும் இறைச்சி வகைகளைப் பெறமுடியாதிருந்தமையை அனுபவரீதியாக அறிய முடிந்தது. இந்நிலையினைத் தென்மராட்சி, வடமராட்சிப் பிரதேசங்களில் மட்டுமல்லாது வன்னிப் பகுதிகளிலும் காணக்கூடிய தாகவிருந்தது. இத்தகைய நிலைமை ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை நீடித்திருந்தது.
இடப்பெயர்வின் பின்னர் பணநோட்டுகளுடன் தொடர்பாக, மாற்று வடிவில் மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கத் தொடங்கினர். ஆரம்ப காலங்களிற்
130

பெரிய நோட்டுக்களுக்கு இருந்த தட்டுப்பாடு மூன்று மாதங்களின் பின்னர் நீங்கி விடவே நோட்டு விடயத்தில் மக்கள் முன்னரை விட பாரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தொடங்கினர். அதாவது 1000/- 500/- ரூபாவிற்கான நோட்டுக்கள் தாராளமாகச் சந்தையிலும் வங்கியிலும் காணப்பட்டிருந்த போதிலும் 100/-, 50/, 20/, 10/- ரூபா நோட்டுக்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவத் தொடங்கியது. உதாரணமாக 500/- ரூபாவைக் கொண்டு சந்தைக்குச் செல்லும் ஒருவர் 300/-, 400/- ரூபாவிற்கு குறித்த ஒரு கடையிற் பொருட்களை வாங்கினாற்றான் அதனை ஏற்கச் சம்மதிப்பார்கள். 100/-, அல்லது 200/- ரூபாவிற்குச் சாமான்களைப் பெற வேண்டுமாயின் அவர்கள் பட்டகஷ்டங்கள் சொல்ல முடியாது. நண்பர்கள், உறவினர்கள் என்றாலுங் கூட நோட்டு விடயத்தில் அவர்களிடம் சாதகமான பதிலினை எதிர் பார்க்க முடியாது. பலர் 1000/-, 500/- ரூபா நோட்டுக்கள் இருந்தும் பொருட்களைக் கடைகளில் அல்லது சந்தையில் வாங்காது செல்லும் நிலையினைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவ ரீதியாகக் காண முடிந்தது.
இக்காலப் பகுதிகளில் 1000/-, 500/- நோட்டுக்களுக்குப் பெறுமதியிரு க்கவில்லை. உதாரணமாக மீன் சந்தைக்கு ஒருவர் 1000/- ரூபா நோட்டி னைக் கொண்டு சென்று மீன் வாங்க வேண்டியிருந்தால் ஒன்றில் மீன் விற்பனையாளர் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டும் அல்லது 1000/- ரூபாவினை அவரிடம் கொடுத்துவிட்டு நாள்தோறும் சென்று அவரிடமே மீனை வாங்கிக் கணக்கினை முடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அப்போதைய நிலையாகவிருந்தது.
வங்கிகளும் இக்காலங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தினை வழங்கும் போது 1000/-, 500/- என்ற அடிப்படையிலேயே வழங்கி வந்தனர். உதாரணமாக வாடிக்கையாளர் ஒருவர் 1750/- ரூபாவை வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 1000/-, 500/- ரூபாவிற்கான நோட்டுக்களை மட்டுமே கொடுப்பார்கள். மிகுதி 250/- ரூபாவினை வங்கியிருப்பில் அவரது பெயரில் வைப்பிலிடுமாறு கேட்கப்படுவார்கள் அல்லது 5/-, 2/, 1/, 50சதம், 25சதம் போன்ற சில்லறைகளைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பார்கள். இவ்வாறாக நோட்டுகளுக்கான தட்டுப்பாடு இடப் பெயர்வாளர்களை மட்டுமல்லாது நிரந்தரவாசிகளைக் கூட கஷ்டத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் இடம் பெயர்ந்து அவதியுற்ற நிலையில் வங்கிகள் தங்களாலான ஆகக் கூடியபட்ச சேவையினை வழங்கியிருந்தனர் என்றே சொல்லவேண்டும். அவர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள்.
பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களில் செயற்பாடுகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக நீண்ட காலமாகக் கூட்டுறவுச்சேவை நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது சிறப்படைந்திருந்தமை யாவரும்
131

Page 77
அறிவர். யுத்த நிலை காரணமாக விடுதலைப் புலிகளின் வசமிருந்த பிரதேசங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவே அவ்வப் பிரதேசங்களில் மக்கள் இடப்பெயர்வோடு கூட்டுறவு சங்கங்களும் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு தீவுப்பகுதி களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த வேளை அப் பகுதிகளில் இயங்கிவந்த வேலணை, புங்குடுதீவு - நயினாதீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இடம் பெயர்ந்து அவ்வவ் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்த பிரதேசங்களிற் தமது செயற்பாட்டினை ஆரம்பித்து வெற்றியுடன் நடாத்தி வந்துள்ளர். அத்துடன் தமது செயற்பாட்டின் விவேகத் தன்மையினாற் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கும் உதவி புரிந்து வந்துள்ளனர் எனலாம். இந்நிலையில் ரிவிரச நடவடிக்கையின் போது மேற்படி சங்கங்கள் மட்டுமல்லாது வலிகாமத்தில் இயங்கி வந்த யாழ்ப்பாணம், நல்லூர், மானிப்பாய், பண்டத்தரிப்பு, அச்சுவேலி, நீர்வேலி, தெல்லிப்பளை, அளவெட்டி, சங்கானை, கட்டைவேலி, சுன்னாகம் போன்ற பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களும் தமது முதலீட்டில் எடுக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிற் கிளைகளை ஆரம்பித்துத் தமது பிரதேச மக்களுக்கு மட்டுமன்றி இடம் பெயர்ந்த மக்களுக்குத் தம்மாலான சேவைகளை செய்து வந்தன. இவற்றுடன் தென்மராட்சி, வடமராட்சி பிரதேசங்களிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து மக்கள் துயர் துடைத்து வந்துள்ளன எனலாம். உலர் உணவுப்பொருட்களைப் பொறுத் தளவில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க செயற்பட்டு வந்துள்ளன. எவ்வாறெனினும் வலிகாமப் பிரதேசத்திலுள்ள மக்களில் ஏறத்தாழ 500 சதவீதத்தினர் வன்னிப் பிரதேசங்கள் மற்றும் தென்னிலங்கை நோக்கிய இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தமையாற் குறைந்தபட்சம் வன்னிப் பிரதேசங்களிற் தமது செயற்பாட்டினை விரிவுபடுத்தும் வகையில் அங்கும் கிளைகளை அமைத்துச் செயற்பட விருப்பங்கொண்டனர். இதனால் மேற் குறித்த சங்கங்களில் வேலணை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, நயினாதீவு, பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் தமது செயற்பாட்டினை வன்னிப் பகுதி களுக்கும் விஸ்தரித்துள்ளன. அவர்களது செயற்பாட்டின் முக்கிய நோக்கம், தமது சேவைக்குரிய பிரதேசத்திலுள்ள மக்களிற் பெரும்பாலானோர் வன்னிப் பிரதேசங்களுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தமையால் அம் மக்களுக்குச் சேவையாற்றுவது இன்றியமையாதது என்ற கருத்தின் அடிப் படையிலேயே சென்றிருந்தனர் எனக் கொள்ளலாம்.
ரிவிரச II இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து தென்மராட்சி வடமராட்சிப் பகுதிகளில் இயங்கி வந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீள் இடம்பெயர்வினை மேற் கொண்டன. எனினும் தீவுப் பகுதியைச் சேர்ந்த சங்கங்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளன. ஏற்கனவே செயற்பட்டு வந்த சங்கங்களுடன் ஒரு பகுதி இணைக்கப்பட மறு பகுதியினர் போக்குவரத்துப் பிரச்சனை மற்றும் பல்வேறு காரணிகளின் விளைவாக இணையாமல் வன்னிப் பகுதியிற் செயற்பட்டு வருகின்றன. இவ்விரு
132

பகுதியினரும் விரைவில் இணைந்து பொதுமக்களின் சொத்தான பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டில் நிறைகள் எவ்வளவு உள்ளதோ அதேபோலவே குறைபாடுகளையும் மக்கள் தெரிவித்துக்கொண்டே வருகின்றனர். இது நாடாளவியரீதியில் எதிர்பார்க்கப்படும் விடயமாகும். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அரசியலுக்கு அப்பால் சமூகசேவை புரியும் நிறுவனமாகவிருக்கும்பட்டசத்தில் சிறப்பான சேவையினைப் புரியலாம்.
இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனை முன்னிட்டு இடப்பெயர்வு காலத்தில் பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினதும், அரச அதிபரினதும் அறிவுறுத்தலுக்கிணங்க வலிகாமத்தில் வாழும் போது எந்த சங்கத்துடன் தொடர்பினைக் கொண்டிருந்தாலும் தாம் இடம்பெயர்ந்து வாழும் பகுதிகளில் இயங்கும் எந்தச் சங்கங்களின் கிளைகளிலும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களைச் செய்திருந்தமை இடப்பெயர்வாளரின் துன்பத்தினை ஒரளவுக்குக் குறைத்திருந்தது என்றே கூறல் வேண்டும்.
பொதுவாக இவ்விடப்பெயர்வு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களு க்குப் பாரிய நட்டத்தினையே கொடுத்துள்ளது. வலிகாமத்திலிருந்து இடம் பெயருங்காலப்பகுதி 10 நாட்களாகவே இருந்தபடியால் அக்காலப்பகுதிகளிற் தமது முழுச் சொத்தையும் எடுத்து வர முடியாதிருந்தது. அதேபோலவே ரிவிரச II இராணுவ நடவடிக்கையின் விளைவாக சேரன், சோழன் பல் பொருள் வாணிப நிலையங்கள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள், புனர்வாழ்வு அமைச்சின் களஞ்சியங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் களஞ்சியங்கள், தனியார் வியாபார நிலையங்கள் போன்ற பலவும் உடைக்கப்பட்டுப் பொருட்கள் சூறையாடப்பட்டதன் விளைவாக நட்டத்துக்குள்ளாகின. உதாரணமாக சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குரிய புடவை, மற்றும் உலர் உணவு விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டதனால் அச்சங்கத்திற்கு 15 இலட்சம் ரூபாவுக்குமதிகமான பொருட்கள் நட்டத்திற்குள்ளாகின. இக்கொள்ளையில் ஈடுபட்டோரை இலகுவாக அடையாளம் காணக் கூடுமாயினும் நீதி, நிர்வாகம் அக்காலப்பகுதிகளில் செயற்பட்டிருக்காமையாற் தப்பித்துக்கொண்டனர் என்றே கூறல் வேண்டும்.
வர்த்தக நிலையங்களின் அமைப்பு
வலிகாமம் இடப்பெயர்வுக்கு முன்னர், சென்றடைந்த பிரதேசங்களில் உள்ளுர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கேற்ற வகையிலேயே வர்த்தக நிலையங்கள் காணப்பட்டிருந்தன. இடப்பெயர்வின் விளைவாகத்
133

Page 78
தங்களிடமிருந்த மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் ஆர்வம் கொண்டி ருந்தனர். நிரம்பலிலும் பார்க்கக் கேள்வி அதிகமிருந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதே சமயம் வலிகாமம் பிரதேசங்களிலிருந்து பல வர்த்தகர்கள் தமது பொருட்களை முடிந்தளவு எடுத்து வந்து சென்றடை ந்த பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களிடமே பெருமளவுக்கு விற்பனை செய்த னர். ஏனெனில் புதிய வர்த்தக மையங்களை அமைப்பதற்கு இடவசதியினைத் தேடிக் கொள்வதிலிருந்த சிரமம் ஒரு புறமிருக்க எடுத்து வந்த பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு இடவசதியின்மையும், தாம் அடுத்து எங்கு செல்வது என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்ததுமே காரணங்களாகும். எனினும் ஒரு சில வர்த்தகர்கள் சாவகச்சேரி, கொடிகாமம், பருத்தித்துறை, நெல்லியடி, கிளிநொச்சி போன்ற சேவை மையங்களிற் தமது வியாபாரத் தலங்களை அமைத்துக் கொண்டனர்.
வலிகாமப் பிரதேசங்களிற் சில வர்த்கக நடவடிக்கைகள் மற்றும் தேனீர் கடைகள், மண்ணெண்ணெய்க் கடைகள், சைக்கிள் திருத்தும் நிலையங்கள், உணவுச்சாலைகள், சிகை அலங்கார நிலையங்கள், வாகனங்கள் திருத்துமிடங்கள், மதுபானச்சாலைகள் மற்றும் படப்பிடிப்பு நிலையங்கள் போன்ற சேவை நிலையங்கள் பல நாவற்குழி தொட்டு பளை வரையும் ஏற்கனவே புகையிரதப் பாதையாகவிருந்து கைவிடப்பட்ட நிலத்திற் தொடர்ச்சியாகப் பெரிதுஞ் சிறியதுமான தற்காலிகக் கொட்டகை கள் அமைக்கப்பட்டுச் செயற்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகளும் அவர்களால் நடாத்தப்பட்ட உணவுச் சாலைகளும் தனியார் வைத்திய நிலையங்களும் ஆங்காங்கே புகையிரத வீதி மேடைகளில் அமைக்கப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாது நாவற்குழிப் புகையிரத நிலையத்திலிருந்து பளை புகையிரத நிலையம் வரையிலான புகையிரதப்பாதையிற் தெங்கு பணம் பொருள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினாலும் தனியாரினாலும் நடாத்தப்பட்ட 69 மதுபானச்சாலைகள் செயற்பட்டு வந்தன என்பதுங் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இடப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் மதுபானச்சாலைகள் பல திறக்கப்படாத நிலையில் ஏற்கனவே இருந்த மதுபானச்சாலைகளில் மதுவருந்த நீண்ட கியூ வரிசைகள் காணப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனாற் காலப்போக்கில் வலிகாமத்திலுள்ள மதுபானச் சங்கங்களும் கள்ளு உற்பத்தியாளர்களும் தமது சேவையினை ஆரம்பிக்கவே மதுபானத்திற்கான கிராக்கி குறைவடைந்து சென்றுள்ளது. அத்துடன் மக்களிடையே நோட்டுக்களுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது மட்டுமல்லாது பொருளாதாரத்தடை ஒருபுறம் காணப்பட தாம் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களை வெளியேற்றி விடுவர் என்ற பயமும் இணைந்து மதுபானப் பாவனையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு சென்றுள்ளதைக் காணமுடிந்தது.
134

தேடிய தேட்டங்களை விற்பனை செய்தல்
பல்வேறு பொருளாதார மட்டங்களைச் சேர்ந்தோர் இடப்பெயர்விற் பங்கு கொண்டிருந்தமையாலும் மிகக் குறுகிய கால அவகாசமே இடப் பெயர்வு மேற்கொள்வதற்கு இருந்தமையினாலும் சென்றடைந்த இடங்களில் மக்கள் குடியிருப்பு, அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமல்லாது குறைந்த பட்ச உணவினையாவது உட்கொள்வதற்காகப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் அவசியம் வேண்டப்பட்டது. எனவே தாம் சிறுகச் சிறுக சேமித்த நகைகள், தளபாடங்கள், கால் நடைகள் போன்றவற்றை விற்பனை செய்து பணத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. விலைவாசிகள் அதிகரித்துக் காணப்பட்ட மையாலும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது செயற்பாட்டை ஸ்தாபித்த முன்னரும் ஒரு இடைக்காலத்தில் மக்கள் பல்வேறு சிரமத்திற் குள்ளானார்கள். எனவே மேற்குறித்த சேமிப்புப் பொருட்களை விற்பதற்கு கூட நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டியிருந்தது. குறிப்பாக ஒருவர் தனது நகைகளை நகைக் கடையின் வாசலிற் கியூவில் இருந்ததால் மட்டுமே அதனை விற்கலாம். அதேவேளை நகைகளுக்கான சாதாரண விலையிலும் பார்க்கக்குறைந்த பெறுமதியே வழங்கப்பட்டதைக் காண முடிந்தது. எனினும், மக்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதிலேயே அக்கறை கொண்டிருந்தமையால் நகைகளின் விலைக் குறைப்பை காலப் போக்கிலேயே அவர்களால் உணர முடிந்தது. ஆனால் காலஞ் செல்லச் செல்ல நகைகள் விற்பனை செய்வதனை மக்கள் கட்டுப்படுத்திக் கொண்டனர். இதற்கான காரணங்கள் பலவுள்ளதை ஆய்வின் மூலம் அறியமுடிகின்றது.
135

Page 79
2) r
O)
யாழ்ப்பாணம் மீள் இடப்பெயர்வு
1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆந் திகதி தொட்டு வலிகாமப்பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வினைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பிரதேசம், மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றடைந்தமை பற்றி முன்னைய அத்தியாயங்களில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை மேற்படி இடப் பெயர்வின் பின்னர் வலிகாமப் பிரதேசத்தில் ஏறத்தாழ 2,000 மக்களும் தீவுப்பகுதிகளில் 12.250 மக்களும் இடப்பெயர்வுக்குட்படாது வாழ்ந்து வந்துள்ளனர்.
பொதுவாக ஓர் இடப்பெயர்வாளன் தான் வாழும் பிரதேசத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொள்ளும் போது சேரிடம் அவருக்குக் கவர்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது வழக்கமாகும். அதாவது சேரிடம் தன்னையும் தனது நோக்கத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே செல்லத் துணிகின்றான். சேரிடத் தெரிவினை இடப்பெயர்வாளர் தம் பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியாக நுணுக்கமாகத் தெரிவு செய்கின்றார்கள், ஆனால் மேற்படி இடப்பெயர்வானது தாம் வாழும் பிரதேசம் தமது உயிர் உடமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கிலே வெளியிடப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டதே தவிர சேரிடத்தைத் தெரிந்து கொண்டு செல்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. எனவே
136

இடப்பெயர்வினை மேற்கொண்டவர்கள் அப்பிரதேசம் தமக்கு ஏற்றதல்ல எனக் கருதும் பட்சத்தில் வேறு புதிய பிரதேசத்திற்கோ அல்லது மீண்டுந் தாம் இடப்பெயர்வினை ஆரம்பித்த இடத்திற்கோ செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவிருக்கும். இத்தகைய பண்புகள் இடப்பெயர்வுப் பாங்கிற் தவிர்க்க முடியாத நிகழ்வாகவே இருக்கும் எனலாம்.
வன்னிப் பெருநிலத்திற்குச் செல்லுமாறு காலத்துக்குக் காலம் மக்களைத் துாண்டிக் கொண்டிருந்து போதிலும் குறித்த தொகுதி மக்கள் சங்கிலித் தொடர் இடப்பெயர்வினை மேற்கொள்ள விருப்பமற்றவர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக அரச உத்தியோகத்தர் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் வசதியாக வாழ இடம் கிடைத்தவர்கள், வன்னிப் பெருநிலப்பரப்பில் நண்பர்கள், உறவினர்கள் அற்றவர்கள் போன்றோர் தொடர்ந்தும் மேற்குறித்த பகுதிகளிலேயே வாழ்ந்துவந்தனர். உதாரணமாக, கள்ளு உற்பத்தி செய்வோரிற் பெரும்பாலானோர் தென்மராட்சி, வடமராட்சிப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தவுடன் கள்ளு உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியதால் அதற்காக முதலிட்ட பணம் வீணாகிவிடும் என்ற நோக்கில், வன்னிப் பிரதேசத்திற்குச் செல்ல முற்படவில்லை. அதேபோல தமது சக்திக்கு அப்பாற்படட்ட வகையிற் தனிக்குடிசைகள் அமைத்திருந்கோர் மீண்டும் புதிய இடத்திற்குச் செல்வதானால் சிரமமாய் இருக்கும் எனக் கருதி இடப்பெயர்வினை மேற்கொள்ளவில்லை. எனினும் வலிகாமப் பிரதேசத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டவள் களில் அரைப் பங்குக்கு மேற்பட்டோர் வன்னிப் பெருநிலத்திற்கும் அதனுாடாக வவுனியா நகருக்கப்பாலும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர்.
இ.து இவ்வாறிருக்க, 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆந் திகதி தென்மராட்சியில் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலுக்கருகாமையில் இராணுவத்தினர் எவருக்குந் தெரியாத வகையில் வந்து சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்கனர். மக்கள் வழக்கம் போல விடியற்காலையில் இருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். எனினும் மக்கள் நடமாட்டத்தை எவருந் தடை செய்யவில்லை. ஆனால் அப்பிரதேச மக்கள் மத்தியில் ஓர் பதட்டநிலை காணப்படத் தொடங்கியது. அப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படும் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் யாவர் என்பதே அப்பதட்டத்திற்தகான காரணமாகவிருந்தது. நேரம் போகப் போக அங்கு இராணுவத்தினரே வந்துள்ளனர் என்பதை அறிந்த மக்கள் வழமை போலக் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். தமது கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு மட்டுவில் பிரதேச மக்கள் கனகம்புளியடிச் சந்தியூடாகப் புத்துார்ச் சந்தி, சாவகச்சேரி, கைதடி, நுணாவில் பிரதேசம், வரணி, மிருசுவில், மந்துவில் மற்றும் பளைப்பிரதேசங்கள் நோக்கி விரைந்தனர். விரைவாக இடம்பெயரவேண்டியதற்கான முக்கிய காரணம் அகோர எறிகணை வீச்சேயாகும். இவ்விடப்பெயர்வில் ஏற்கனவே வலிகாமப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது நிரந்தரமாக வாழ்ந்து வந்தவர்களும் அடங்குவர்.
137

Page 80
நீண்டகாலமாக இராணுவத்தினரைக் காணாது - அஞ்சி வாழ்ந்த மக்களுக்கு அவர்கள் பல்வேறு துன்பங்களைத் தருவார்கள் என்ற காரணத்தினால் மக்கள் தமது அடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தீர்மானிப்பதிற் கஷ்டமடைந்தனர். இராணுவத்தினரில் ஒரு பகுதி கைதடிச் சந்தி வரையும் முன்னேற, மறுபுறம் கனகம்புளியடிச் சந்தியூடாகப் புத்துார்ச் சந்தி வரையும் அன்றைய தினமே முன்னேறினர்.
ஆனால் மக்களுக்குப் பெரிய ஆச்சரியம் யாதெனில் இராணுவத்தினர் மக்களைத் துன்புறுத்துவர் என்றிருந்த வேளை அவர்கள் வெறுப்புணர்வு காட்டாததேயாகும். எவ்வாறெனினும் மக்களிற் கணிசமானோர் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குச் சென்ற வண்ணமே யிருந்தனர். அதாவது ஏப்ரில் மாதம் 19ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் எறிகணைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பாதுகாப்பான பிரதேசம் வன்னிப் பிரதேசம் எனக் கருதித் தமது உடமைகளைக் கைவிட்டுங் கூட உயிர் தப்பினாற்போதும் என்ற நிலையிற் சென்ற வண்ணமிருந் தனர். இவ்வாறு கிளாலிக் கடனிரேரியினால் பயணம் செய்தவர்களிற் சிலர் கடலில் இறந்த செய்தியும் வந்தவண்ணமேயிருந்தது.
இராணுவத்தினர் கனகம்புளியடிச் சந்தி - சாவகச்சேரி வீதியில் கெருடாவில் பிள்ளையார் கோவிலடி, கண்டிவீதியில் மீசாலை ஐயா கடைச்சந்தி, கச்சாய் வீதியில் அல்லாரைச் சந்தி, கண்டிவீதியில் கைதடி - நுணாவில் சந்தி ஆகிய இடங்கள் வரை முன்னேறி சாவகச்சேரி நகரினை அடைவதற்கு வசதியாகத் தம்மைத் தயார் படுத்தியிருந்தனர். அவர்களால் மக்களுக்கு எந்தவிதத் தீங்கும் இழைக்கப்படாதது மட்டுமல்லாது மக்களின் பகல் நேர நடமாட்டத்திற்குத் தடையேதும் விதித்திருக்கவில்லை. அதேவேளை யாழ்ப்பாண நகரம் உட்பட வலிகாமப் பகுதிகளுக்கு உள்வரவினை ஏற்படுத்தும் மக்களின் நலனுக்குரிய சகல வசதிகளுஞ் செய்து வைக்கப்பட்டுள்ளன எனவுந் தொடர்புச் சாதானங்கள் மூலந் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையிற் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் வாழ்ந்து வந்த வலிகாமப் பிரதேச மக்கள் தாம் விரும்பும் பட்சத்திற் தமது சொந்த இடங்களுக்குச் செல்லலாம் என இராணுவத்தினர் தெரிவித்தனர். எனினும் மிகச் சிறிய எண்ணிக்கையான மக்களே வலி காமம் வருவர் என எண்ணியிருந்தனர். அதற்கேற்ற வகையிலேயே மக்களுக்குரிய வசதிகள் செய்யப்பட்டிருந்தமையைப் பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்ந்த மக்கள் எவ்வளவு விரைவிற் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக விரைந்தனர். அதற்குரிய காரணிகளில் முக்கியமானது தமது வீடுகளில் எஞ்சியுள்ள பொருட்களையாவது பாதுகாக்க வேண்டியிருந்தமை யினாலேயாகும். ஆரம்பத்திற் பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் போகும் மக்களைப் பரிசோதித்தே அனுப்ப எண்ணி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அழைத்து அங்கு அவர்கள் சோதனையிடப்பட்டு அவர்களின்
138

அடையாளத்தை நிரூபிக்கும் நோக்குடன் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்து - குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அவரவர் வீடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். ஏனையோர் தங்க வைக்கப்பட்டடிருந்தனர்.
அதன் விளைவாக மக்கள் துவிச்சக்கரவண்டிகள், முச்சக்கர வண்டிகள், லாண்டமாஸ்டர்கள், உழவுயந்திரங்கள், லொறிகள், மினிபஸ்கள் போன்றவற்றின் மூலமாகவும் கால்நடையாகவும் விரைவாக வீடு செல்ல வேண்டும் என விரைந்தனர். மூன்றாவது நாளன்று இடப்பெயர்வாளரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லவே வேம்படி மகளிர் கல்லூரிக்கு செல்லாது நேரே அவரவர் வீடுகளுக்கு செல்லுமாறு - குறிப்பாக இராணுவத்தினராற் குறித்துரைக்கப்படாத பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என வற்புறுத்தப்பட்ட துடன் - வேறு குடியிருப்புகளிற் சென்று வாழுமாறு கூறப்பட்டது. ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மீள் இடப்பெயர்வானது தொடர்ச்சியாக மூன்று கிழமைகளாக நிகழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
வலிகாமத்திலிருந்து இடப்பெயர்வினை மேற்கொண்ட போது அவசரத்தில் தமது கைக்கு அகப்பட்டதையே எடுத்துச் சென்றிருந்தனர். ஆனால் வலிகாமத்திற்கு மீண்டுஞ் சென்று தமது அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரப் பத்து நாட்கள் அவகாசமிருந்தமையால் எடுத்து வரக்கூடியவர்கள் எடுத்து வந்தனர். அத்துடன் தாம் சென்றடைந்த பிரதேசத்திற் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இடம்பெயர்ந்து வாழ்ந்த ஆறுமாத காலத்திற் கொள்வனவு செய்திருந்தனர். அதுமட்டுமல்லாது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் - குறிப்பாக குடிசைகள் அமைப்பதற்குரிய பொருட்கள் மற்றும் தளபாடங்கள், உணவுப்பொருட்கள், தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன. எனவே திரும்பித்தமது சொந்த இடங்களு க்குச் செல்பவர்களுக்குத் தாம் இடம்பெயரும்போது கொண்டுவந்த பொருட் களிலும் பார்க்க அதிகளவு பொருட்களை எடுத்துச் செல்லவேண்டியிருந்ததாற் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். வாகனங்களு க்குரிய வாடகையானது சாதாரணமாக செலுத்தப்படுவதிலும் பார்க்கப் பல மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. வாகன உரிமையாளர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூறல் வேண்டும். எவ்வளவு செலவானாலும் வீட்டிற்குப் போய்த் தமது வீட்டிலுள்ள பொருட்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதையும் இடம்பெயர்ந்த நிலையிற் பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதையுந் தீர்மானித்தே தமது மீள் இடப்பெயர்வினை மக்கள் துரிதப்படுத்தினர் எனக் கூறலாம்.
இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிற் கடும் சமர் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மிக நீண்ட காலமாகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த மக்களிற் சிலர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதிற் தீவிரங் காட்டினர். சேரன், சோழன் வாணிப நிலையங்கள், பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்கள், அரசின் புனர்வாழ்வுப் பிரிவின் களஞ்சியங்கள், அகதிகளுக்கான
139

Page 81
ஐ.நா. உதவி நிறுவனக் களஞ்சியங்கள் மட்டுமல்லாது தனியார் கடைகளையும் உடைத்து அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவங்கள் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில் முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தன. குறிப்பாக அரிசி, மாவு, பருப்பு, சீனி, கடலை, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், மதுபானப் புட்டிகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட சில கூட்டத்தினர் ஆண், பெண், சிறுவர், வயோதிபர் என்ற பாகுபாடின்றி கொள்ளையடித்தனர். உதாரணமாக ஒரு இளம்பெண் தனது துவிச்சக்கரவண்டியில் 100கிலோ கிராம் நிறை கொண்ட இரண்டு சீனி மூடைகளை எடுத்துச் சென்றதைக் காணமுடிந்தது. அதுமட்டுமல்லாது பருப்பு மூடையொன்று 100/-ரூபா வாகவும் சீனி மூடை 300/- - 500/- ரூபாவாகவும் அரிசி மூடை 500/-வும் மண்ணெண்ணெய் லீற்றர் 20/- ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் மண் ணெண்னை லீற்றர் 90/- ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாகப் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தமையால் அவர்களால் வலிகாமத்திற்குச் காவிச் செல்லும் பொருட்களின் அளவும் அதிகரித்தது, அதனாற் பலர் பல்வேறு சிரமங்களுக்கும் உட்பட்டனர். அதேநேரம் கொள்ளைச் சம்பவங்களிற் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஆறுதலையும் அளித்ததாக பலர் பேசிக்கொண்டதைக் அறியமுடிந்தது. அதாவது வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிற் கொள்ளையிலீடுபட்டவர்கள் தம்மாற் பெறப்பட்ட பொருட்களை விற்பதிலும், சேமித்து வைப்பதிலும் அக்கறை கொண்டிருந்தமையால் வலிகாமத்திலுள்ள தமது வீடுகளில் பெரும்பாலான பொருட்கள் இருக்கும் என ஏனையோர் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதேயாகும்.
வலிகாமர் பிரதேச மக்கள் - இடப்பெயர்விற்கு முன்னடும் பின்னடும்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 14 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும் கிளிநொச்சி மாவட்ட த்திற்குட்பட்ட பச்சிலைப்பள்ளி உதவி அரச அதிபர் பிரிவுங் காணப்படுகின்றன. 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின் பிரகாரம் மொத்த மாவட்டக்குடித்தொகையில் 11.1 சதவீதத்தினர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் 9.1 சதவீதத்தினர் தென்மராட்சியில் வாழ்பவர்களாகவும் வடமராட்சியில் 16.4 சதவீதத்தினராகவுமிருக்க யாழ்ப்பாண நகரம் உட்பட வலிகாமத்தில் 62.8 சதவீதத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர் பளை உதவி அரச அதிபர் பிரிவில் 18,928 மக்கள் இக்காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் கிளிநொச்சி மாவட்டக் குடித்தொகையில் 18.8 சதவீத்தினராகும். வடக்கு, கிழக்குப் பிரதேசத்திற் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் விளைவாக 1991ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பு மேற்கொள்ளப் படவில்லை. எனினும் மதிப்பீடு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களும் அரசி
140

செயலகத்தினால் காலத்துக்குக் காலம் பெற்றுக் கொள்ளப்பட்ட கணிப்புகளுமே தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றன. (அட்டவணை 8.1, 8.2, 8.3)
1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இடம்பெயருவதற்கு முன்னர் யாழ்ப்பாணச் செயலக புள்ளிவிபரத் திணைக் களத்தினால் வழங்கப்பட்ட புள்ளி விபரங்களின் பிரகாரம் 735.264 மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது 1981 ஆம் ஆண்டினை விட 3,521 மக்கள் குறைவாகவேயிருந்துள்ளனர். இக்காலப்பகுதியில் தீவுப்பகுதி, தென்ம ராட்சி, வடமராட்சி, வலிகாமம் பிரதேசங்களில் முறையே 16, 11.5, 20.8, 66.1 சதவீதத்தினராக மக்கள் பரந்து வாழ்ந்திருந்தனர். 1995ஆம் ஆண்டு மேற்குறித்த பிரதேசங்களிற் காணப்பட்ட குடித்தொகைப் பரம்பற் கோலங்களிற் காணப்படும் மாற்றங்கள் இப்பிரதேசங்களிற் காணப்பட்ட யுத்தத்தின் விளைவாக அசாதாரண சூழ்நிலைகளினால் ஏற்பட்டவையாகும்.
தீவுப் பகுதி பெளதிக ரீதியாகப் பின்தங்கிய பிரதேசமாகவிருந்த போதிலும் பண்பாட்டு ரீதியாகத் தம்மை யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும் நாட்டின் ஏனைய பகுதிகளுடனும் இணைத்துக் கொண்டவர்கள் இப் பிரதேசமக்களிற் குறிப்பிடத்தக்கவர்களின் வருமானம் மேற்குறித்த பகுதிகளிலிருந்தே பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1960களைத்தொடர்ந்து இப்பிரதேச மக்களின் மத்தியதர வர்க்கத்தினருட்பட அதிக வருமானம் கொண்டவர்களிற் கணிசமானோர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தென்னிலங்கைக்கும் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் 1950களில் வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களுக்கும் வருமானம் குறைந்தவர்களிற் கணிசமானோர் சென்றுள்ளனர். எனினும் 1980களைத் தொடர்ந்து சர்வதேச இடப்பெயர்வில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவிருந்து ள்ளனர். சார்பு ரீதியாக யாழ்ப்பாணக்குடாநாட்டிலே தீவுப்பகுதி மக்களே அகதிகளை ஏற்றிருக்கும் நாடுகளுக்குச் சென்றவர்களிற் கணிசமானவர்களாவர். இந்நிலையில் நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவர்ச்சியைப் பெற்றுக்கொண்ட தீவக மக்கள் ஒரு புறமிருக்க, வருமானமட்டம் தாழ்வு நிலையில் உள்ளவர்களும் அரச தொழில்களில் ஈடுபட்டவர்களும் தொடர்ச்சியாக அப்பிரதேசங்களிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலை இவ்வாறிருக்க, அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பரப்பினை மீட்டெடுக்கும் நோக்குடன் தமது கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியது. அதன் ஒரு கட்டமாகக் கடல்களால் சூழப்பட்ட தீவுப்பகுதிகளை 1991ஆம் ஆண்டு தம்வசப்படுத்தினர். இவ்வாறான நடவடிக்கையின் விளைவாகப் புங்குடுதீவு, லைடன் தீவு, மண்டைதீவு, காரைநகள் போன்ற தீவுகளில் வாழ்ந்த மக்களிற் பெரும் எண்ணிக்கையாே பண்ணைப் பால மூடாகவும் பொன்னாலைப் பாலமூடாகவும் குடர்நாட்டுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களிற் பெரும்பாலானோருக்கு யாழ்ப்பாணநகரமும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும் ஏற்கனவே பரிச்சயமாகவிருந்தமையால்
141

Page 82
இடப்பெயர்வினாற் பெருமளவிற்கு துன்பத்தை அனுபவித்தார்கள் எனக் கூறமுடியாது. இருப்பினும் ஒரு தொகுதி மக்கள் அகதி முகாம்களிலும் சிறுகுடிசைகளிலுந் தமது காலத்தைக் கடத்த வேண்டிய நிலையிலும் காணப்பட்டனர்.
மேற்குறித்த இடப்பெயர்வானது நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு, எழுவைதீவு, வாழ் மக்களைப் பாதிக்கவில்லையாயினும் அவர்களுக்கான யாழ்ப்பாணக் குடாநாட்டுடனான சகல தொடர்புகளுந் துண்டிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை 8.1
உதவி அரச அதிபர் பிரிவினடிப்படையில் தீவுப்பகுதியின் குடித்தொகை 1981,1993,1995,1996.
உ.அ.அ.பிரிவு 1981 (1) 1993 (2) 1995 (3) 1996 (4.
--onn–p- ஒக்டோபர் ஒக்டோபர் (3LD நெடுந்தீவு 5608 6561 4299 4299 தீவுப்பகுதிதெற்கு 38411 44941 4050 5648 தீவுப்பகுதிவடக்கு 37583 43972 3901 6494 மொத்தம் 81602 95474 12250 16441
ஆதாரம் : (1) கணிப்பீடு, (2) மதிப்பீடு, (3), (4) யாழ்ப்பாண அரச
செயலக அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.
தீவுப்பகுதியின் குடித்தொகையானது 1981ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் 81,602 ஆகவிருந்தது. 1991ஆம் ஆண்டு இப்பிரதேச மக்களிற் பெரும்பாலானோர் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்த போதிலும் இடப்பெயர்வு நிகழவில்லை என்ற எடுகோளின் அடிப் படையில் 1993ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி 95,474 மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆந் திகதியன்று தீவுப்பகுதியில் 12,250 மக்கள் மட்டுமே வாழ்ந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெருமளவான இடப்பெயர்வின் போது இடம்பெயராது வாழ்ந்த மக்களிற் கணிசமானோர் கப்பல் மார்க்கமாகத் தென்னிலங்கைக்கும் வெளிநாடு களுக்கும் சென்றுள்ளதைக் களஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1996ஆம் ஆண்டு வைகாசி மாதக் கணிப்பீட்டின்படி தீவுப்பகுதி முழுவதிலும் 16,441 மக்கள் வாழ்ந்துள்ளனர். இவை காலப்போக்கில் அதிகரிக்க வாய்ப்புண்டு. தீவுப்பகுதியிலிருந்து 1991ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களிற் பெரும்பாலானோர் வலிகாமம் இடப்பெயர்வோடு வன்னிப் பிராந்தியத்திற்கும் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று விட்டனர். எனவே இப் பிரதேசம் நோக்கிய மீள் இடப்பெயர்வினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண குடாநாட்டில் தீவகத்தைச் சேர்ந்த மக்கள் குறைவாகவேயிருக்கின்றனர். அவ்வாறாக வாழும் மக்கள் கூட கடந்த ஆறு ஆண்டுகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமது குடியிருப்புக்களை நிரந்தரமாக்கி
142.

விட்டனர். எனவே இப்பகுதி நோக்கிய மீள் இடப்பெயர்வினை மேற்கொள்வதற்கு பெருமளவிற்கு வாய்ப்பில்லை என்றே கூறல் வேண்டும். எனினும் வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் வலிகாமம் நோக்கித் திரும்புவார்களேயானாற் தீவகம் நோக்கிக் கணிசமான மக்கள் மீள் இடப்பெயர்வினை மேற்கொள்ள வாய்ப்புண்டு.
தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் வாழ்ந்த தீவுப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் யாழ்ப்பாண நகரம் உட்பட வலிகாமம் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தீவுப்பகுதி நோக்கிய இடப்பெயர்வினை மேற்கொள்ளாமைக்கு இரு காரணிகள் செயற்பட்டு வருகின்றன. முதலாவதாக தீவுப்பகுதியிலிருந்து ஆறாண்டுக்கு முன்னர் தூண்டப்பட்ட இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தமையால் மீண்டும் அங்கு செல்வதற்குரிய சூழ்நிலை காணப்படவில்லை. வீடுகள், வளவுகள், வேலிகள் சீரழிந்து காணப்படுவது மட்டுமல்லாது வீடுகள் யாவும் திறந்த நிலையிற் காணப்படுவதாற் பெரும்பாலான வீடுகளிற் கால்நடைகளின் சாணங்கள் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து காணப்ப டுவதுடன் பல வீடுகளிற் கால்நடைகள் இறந்து உருக்குலைந்து கிடக்குங் காட்சிகளையுங் காணக்கூடியதாகவுள்ள்ன. வீட்டு வளவுகளிற் காவோலைகள், இலைகுழைச்சருகுகள் நிலத்தை மறைத்துள்ளன. கிணறுகளுக்குட் கூட கால்நடைகள் இறந்துள்ளதால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றது. கால்நடைகள் பெருகிக் கட்டாக்காலிகளாக விருப்பதனால் மனிதரைக் கண்டால் ஒடி மறையுந் நிலையையும் அவதானிக்க முடிந்தது. வீதியோரங்கள், வளவுகள், தோட்டங்கள், வயல்வெளிகளில் எருக்கிலை மரங்கள் மற்றும் அதிவரஸ் வலயத்திற்குரிய தாவரங்கள் நிலத்திற்குப் போர்வையாக காட்சி யளிக்கின்றன. பொதுவாகக் கூறினால் பாழடைந்த கிராமங்களாகக் காட்சியளிக்கின்றன. எனவே ஏற்கனவே வலிகாமம் வந்து சேர்ந்த தீவுப்பகுதியைச் சேர்ந்தோர் தமது வீடு, வளவுகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுகின்றனரே தவிர குடியிருக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமல்லாது குடியிருக்கச் செல்வோர் கூட, அப்பகுதி மக்களற்ற பிரதேசமாகக் காணப்படுவதால் பயத்தால் அஞ்சுகின்றனர். அத்துடன் வலிகாமப் பிரதேசத்திற்கும் தீவுப்பகுதிக்குமிடையிற் போக்குவரத்துப் பிரச்சனையும் மக்கள் சென்று வரத்தடையாகவிருக்கின்றது. மேலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆறாண்டுகளாக வாழ்ந்த வீடுகள் காணப்படுவது மட்டுமல்லாது, வீடற்றோர் குடியிருப்பாளர்களற்று வெறுமையாகக் கிடக்கும் வீடுகளில் அவ்வக் கிராமசேவையாளரின் உதவியுடன் சென்று குடியேறலாம் என அரசு தெரிவித்த பணிப்புரைக்கமைய வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் பிள்ளைகளின் கல்வி நிலையுட்பட பல செளகரியங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இதனாலேயே மீள் இடப்பெயர்வினை மேற்கொள்ள அவர்களது மனம் ஒப்பவில்லை.
இரண்டாவதாக, தீவுப்பகுதியைச் சேர்ந்தோருக்கு வன்னிப் பிராந்தியம் பழக்கப்பட்ட பிரதேசமாகவிருந்து வருகின்றது. ஏனெனில் ' 1950களிலிருந்து
143

Page 83
குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரண மாக இப்பிரதேச மக்களிற் குறிப்பிடத்தக் கோர் அப் பிரதேசம் நோக்கி இடப் பெயர் வினை மேற்கொண்டிருந்தனர். தற்போது வலிகாமம் இடப் பெயர்வுக்கு உட்பட்டவர்கள் அப்பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களதும் ஏனையோரினதும் உதவிகள் கிடைக்கும் என்ற எண்ணத்துடனும், வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்குடனும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமல்லாது மத்திய தர வர்க்கத்தினருஞ் சென்றுள்ளனர். அவர்கள் வன்னிப் பிரதேசத்திலிருந்து மீளும் பட்சத்திலேயே தீவுப்பகுதிக்கு மக்கள் மீளக்குடியேற வாய்ப்புண்டு.
இ.து இவ்வாறிருக்க, அரசாங்கம் வலிகாமம் பிரதேசத்தில் வாழும் தீவுப்பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்தோரை மீண்டும் தீவுப் பகுதிக்கு செல்வதைத் தூண்டும் முகமாக, உலர் உணவு நிவாரண உதவிகளை முன்னர் வாழ்ந்த பகுதிகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. இந்நடைமுறை எந்தளவுக்கு வெற்றி யளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறப்பான பெளதிக வளங்களைக் கொண்ட வலிகாமம் வடக்கு உதவி அரச அதிபர் பிரிவில் (தெல்லிப்பளை) 1981ஆம் ஆண்டுக் கணிப்பீட்டின் பிரகாரம் 72,448 மக்கள் வாழ்ந்துள்ளனர். தீவுப்பகுதிப் பிரதேசத்தினை 1991ஆம் ஆண்டு இராணுவம் தம்வசப்படுத்தவே மக்கள் அங்கிருந்து வெளியேறினர் ஆனால் வலிகாமம் வடக்குப் பிரதேச மக்கள் 1980களிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்து வந்துள்ளனர் அதாவது பலாலி விமானத்தளமும் இராணுவ முகாமும். காங்கேசன்துறையிற் துறைமுகமும் அமைந்திருக்கின்ற மையால் அப்பிரதேசத்தை மிகக்கூடிய பாதுகாப்புப் பிரதேசமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் அரசு ஆர்வம் கொண்டிருக்கின்றமையாலும் காலத்துக்குக் காலம் தமிழ்க்குழுக்க ளினால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வந்தமையாலும் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது இதன் விளைவாக பலாலித் தளத்திலிருந்து தெற்கு, மேற்கு, கிழக்குப் பிரதேசங்களை விஸ்தரிக்க முற்பட்டதன் விளைவாக இப்பிரதேச மக்கள் 1980களின் பிற்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து அயலிலுள்ள பிரதேசங்களில் இடப்பெயர்வாளர்களாக மிகச்சிரமத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பொதுவாக இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் பல தடவைகள் இடப்பெயர்வுக்குள்ளானார்கள். இவ்வாறாக இடம் பெயர்ந்த சிலரை தென்மராட்சியிற் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் படிப்படியாகத் தமது தேட்டங்களை இழந்து, தற்போது ஏதுமற்ற ஏதிலிகளாக வாழ்வதாகத் தெரிவித்ததுடன் தமக்கு இவ்விடப் பெயர்வானது பல்வேறு அனுபவங்களைத் தந்துள்ளதானவும் எவருக்கும் இந்நிலை ஏற்படக் கூடாது எனவுந் தெரிவித்தனர்
பொருளாதாரச் செழிப்பு மிக்க வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் ஏனைய பிரதேச இடப்பெயர்வாளரோடு ஒப்பிடுமிடத்துப் துர்ப்பாக்கியசாலிகள் என்றே கூறல் வேண்டும். இப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் 1996ஆம்
144

ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் திகதியிலிருந்து வலிகாமம் மக்களது மீள் இடப்பெயர்வின் பின்னர் இப்பிரதேசத்தில் 6237 மக்களே வாழ்ந்து வருவதாக அரச செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்பிரதேசத்தைச் சார்ந்த மக்களிற் கணிசமானோர் வலிகாமப் பிரதேசத்திற்கு உள்வரவினை மேற்க்கொண் டிருந்த போதிலும் அரசு அம்மக்களை அவர்களது சொந்த இடங்களிற் குடியமர்த்தத் தயங்குகின்றது. இது அவர்களது பாதுகாப்பின் நிமிர்த்தமாக இருக்கலாம். எனினும் காலப்போக்கில் இந்நிலை மாறக்கூடுமாயினும் பலாலி, காங்கேசன்துறை எல்லை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மீண்டுந் தமது பிரதேசத்திற்கு செல்வார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வலிகாமம் பிரதேசத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் காணப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் இம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 628 சதவீதமானோர் இப்பிரதேசங்களிலேயே வாழ்ந்துள்ளனர். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 66.1 சதவீதமாக இது அதிகரித்துக் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தீவுப்பகுதி மக்களில் கணிசமானோர் இப் பிரதேசங்களைத் தமது தற்காலிக வதிவிடமாகக் கொண்டிருந்ததாகும். எனினும் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வாழ்ந்த மக்களில் 46.9 சதவீதத்தினரே 1996ஆம் ஆண்டு மே மாதம் வாழ்ந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
வலிகாமம் பிரதேசத்தினை இலங்கை இராணுவம் விடுவிக்கப்பட்ட பிரதேசம் (Cleared Areas) விடுவிக்கப்படாத பிரதேசம் (Un Cleared Areas) என இருபிரிவுகளாக்கியுள்ளனர். இவ்விரு பிரதேசங்களையும் அடையாளம் காண்பதற்காக எல்லை வேலிகளைப் பலாலியிலிருந்து நாவாந்துறை வரையுந் தொடர்ச்சியாக அமைத்துள்ளனர். இதன் விளைவாக இவ் விரு பிரதேசங்களுக்குமிடையிலான போக்குவரத்தினைப் பொறுத்தவரை பெருஞ்சிரமத்தை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்றே கூறல் வேண்டும்.
145

Page 84
அட்டவணை 8.2
வலிகாமம் பிரதேசம் - குடித்தொகை வேறுபாடு 1981, 1995, 1996
உதவி அரச அதிபர் பிரிவுகள் 1981 1995 1996
கணிப்பு ஒக்டோபர் (3D யாழ்ப்பானம் 73252 83867 27628 [b6ზQსაrTht 86222 100885 43694 வலிகாமம் தென்மேற்கு S6651 62400 31657 வலிகாமம் மேற்கு 47620 62355 28397 வலிகாமம் தெற்கு 54762 56993 41.191 வலிகாமம் வடக்கு 72448 27634 6237 வலிகாமம் கிழக்கு 73143 91637 48998 மொத்தக்குடித்தொகை 46.4098 485771 227802 யாழ்ப்பாண மாவட்டக்குடித்தொகை 738791 735264 435965 சதவீதம் 62.8 66.1 S2,3
சிஆதாரம் : குடிக்கணிப்பு அறிக்கை 1981, அரச செயலக அறிக்கைகள் 1993, ஒக்டோபர், 1996 மே மாதம்.
விடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களையும் மற்றும் வலிகாமம் பிரதேசத்தில் வலிகாமம் கிழக்கு பிரிவில் வாதரவத்தை கிராமத்தையும் Tந்த மக்கள் ரிவிரச இராணுவ நடவடிக்கையின் போது இடப்பெயர்வுக் 9-ட்டிருக்கவில்லை. இப்பிரதேசத்தில் (வாதரவத்தை தவிர்ந்த) 1981ஆம் ஆண்டுக்குடித்தொகையின் பிரகாரம் 192954 மக்கள் அல்லது மாவட்டக் குத்தெரிகையில் 26.1 சதவீதமானோர் வாழ்ந்திருந்தனர். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 273223 மக்களாக அது உயர்ச்சியடைந்திருந்தது. அதாவது வருடாந்த வளர்ச்சி 28 சதவீதமாகும், பொதுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இக்காலs குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.3 சதவீதமேயாகும்.
146

அட்டவணை 8.3
வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசம் - குடித்தொகை வேறுபாடு 1981, 1995, 1996
உதவி அரச அதிபர் பிரிவுகள் 1981 1995 1996
கணிப்பீடு ஒக்டோபர் மே தென்மராட்சி 71543 84766 80046 வடமராட்சிதென்மேற்கு 70530 57525 வடமராட்சி வடக்கு 121411 64537 49355 வடமராட்சி கிழக்கு 17390 4736 மொத்தக்குடித்தொகை 192954 273223 191662 யாழ்ப்பாண மாவட்டக்குடித்தொகை 738791 735264 435965 சதவீதம் 26.1 32.3 440
ஆதாரம் : குடிக் கணிப்பு அறிக்கை 1981, அரச செயலக
அறிக்கைகள் 1995 ஒக்டோபர், 1996 மே மாதம்
1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வலிகாமப் பிரதேச மக்கள் ஒட்டு மொத்தமாகத் தமது வாழ்விடங்களை விட்டு வெளி யேறிய போது தென்மராட்சியூடாகவே தமது சேரிடத்தைதத் தெரிவு செய்திருந்தனர். ஏற்கனவே கூறப்பட்டது போல வடமராட்சியோடு ஒப்பிடுமிடத்து பெரும்பாலான மக்கள் தென்மராட்சியையே தெரிவு செய்திருந்த போதிலுங் காலப்போக்கிற் பல்வேறு காரணிகளின் விளைவாக வன்னிப் பிரதேசம் நோக்கிய இடப்பெயர்வு முனைப்பு பெற்றிருந்தது. அதேவேளை 1996ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஏறத்தாழ 30,000 மக்கள் வன்னிப் பிராந்தியத்திற்குச் சென்ற டைந்தனர். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 1996ஆம் ஆண்டு யூலை மாதத்தில் 70.1 சதவீதமானோரே எஞ்சியிருந்தனர். வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் சேர்த்துக்கொண்டு போனது போல வலிகாமம் மக்களுடன் இணைந்து தென்மராட்சி, வடமராட்சி மக்களும் பல்வேறு காரணிகளின் விளைவாகக் கிளாலி கடனிரேரியூடாக வன்னிக்குச் சென்றுள்ளனர். இந்நிலையினால் வலிகாமப் பிரதேசம் மட்டுமல்லாது ரிவிரச இராணுவ நடவடிக்கையினாற் பாதிக்கப்படாத வடமராட்சி, தென்மராட்சி பிரதேச மக்களும் பெருமளவிற்குப் பாதிப்படைய நேர்ந்தது துர்ப்பாக்கியமானதாகும்.
வலிகாமம் மக்கள் மீளலும் அங்கு காணப்பட்ட நிலமைகளும்
குடிசைகளானாலும் தனிக் குடித்தனத்தையே தமிழ் மக்கள் விரும்பியேற்பர். அதனை நீண்ட காலமாகவே பேணி வந்துள்ளனர். கூட்டுக்குடும்ப முறை நிலவி வந்தாலும் விரைவிற் தனித்தனித் குடித்தனத்தை
147

Page 85
விரும்பிச்செல்வது வழக்கமாகும். அது சமூகத்தின் பொதுவான பண்பாகும். இந்நிலையில் இடப்பெயர்வினை மேற்கொண்டு ஆறு மாதங்களாக அல்லலுற்ற மக்களுக்கு மீள இடப்பெயர்வுக்குரிய சாதகமான வாய்ப்பானது பசித்தவனுக்கு பால் வார்த்தது போலக் காணப்பட்டது. இந்நிகழ்வு சாதாரண மனிதனிடங் காணப்படும் குணவியல்பேயாகும்.
வலிகாமம் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் பலாலி, கோட்டை, காங்கேசன்துறை, மாதகல், காரைநகர், ஊர் காவற்றுறை, வல்வெட்டித்துறை, ஆனையிறவு போன்ற இராணுவ முகாம்களைச் சூழுவுள்ள பிரதேசங்கள் எறிகணை வீச்சுகள், விமானத் தாக்குதல்கள் போன்றவற்றின் விளைவாகச் சேதமுற்ற பகுதிகளாகக் காணப்படுவது மட்டுமல்லாது அப்பிரதேசங்கள் மக்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களாகவுங் காணப்பட்டிருந்தன. இவை தவிர மக்கள் குடியிருந்த பிரதேசங்களிலும் ஆங்காங்கே யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட சிதைவுகள் காணப்பட்டிருந்தன. எவ்வாறெனினும் இப்பிரதே சங்களில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
ரிவிரச இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக, ஆனால் படிப்படியாக மக்கள் தாம் வாழும் பிரதேசங் களிலிருந்து வெளியேறவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகியது. ஏற்கனவே கூறப்பட்டது போல வலிகாமம் இடப்பெயர்வு தூண்டப்பட்ட இடப்பெயர்வான மையாற் தாம் காலா காலமாகத் தேடிய சொத்துக்கள் அழிந்து போகப் போகின்றதேயென்ற அங்கலாய்ப்பு மக்களிடங் காணப்படுவது இயற்கையே யாகும். அதாவது உடனடியாகச் சேரிடத் தெரிவினை மேற்கொள்ள வேண்டியிருந்ததும் அங்கலாய்ப்பை ஏற்படுத்தியிருந்ததற்குரிய காரணிகளில் ஒன்றாகும். இவ்வாறாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருங்காலத்திற் காலத்துக்குக் காலம் வலிகாமத்திலுள்ள சொத்துக்கள் தொடர்பாகப் பல வதந்திகள் வந்த வண்ணமேயிருந்தன. குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகள், குறிப்பாக மெத்தை வீடுகள்யாவுந் தரையிறக்கப்பட்டுவிட்டன என்ற வதந்திகள் பல மக்களிடையே உலாவின. இதனாற் தங்களது வீடுகள், சொத்துக்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கவலைப்பட்ட வண்ணமே இருந்தனர். தங்கள் சேரிடத்திலிருந்து குடியிருப்புப் பிரச்சனைகள் இவற்றை மேலும் அதிகரித்த வண்ணமிருந்து வந்துள்ளன என்றே கூறல் வேண்டும். அதுமட்டுமல்லாது வீட்டுப் பாவனைப் பொருட்கள் சூறையாடப்பட்டுவிட்டன என்ற செய்திகளும் பரவின. யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள வீடுகள் பலவுஞ் சேதத்திற்குள்ளாகின என்ற செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருந்தன. கிளாலிப் பாதை அடைக்கப்பட்டமை, அப்பகுதிகளில் இராணுவத் தாக்குதல்களினால் வன்னிக்கு இடம்பெயர வழியின்றியும் குறிப்பிட்டளவு மக்கள் தமது பிரதேசத்திற்கு மீள் இடப்பெயர்வினை ஏற்படுத்தியமை பற்றியுங் குறிப்பிட்டிருக்கலாம். ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியினைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் வலிகாமப் பகுதி நோக்கி மீள் இடப்பெயர்வினை மேற்கொண்டிருந்தனர். தங்களது
148

வீடுகளிலுள்ள எஞ்சிய பொருட்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவசரப்பட்டுக் கொண்டனர். யுத்தம் நடைபெற்ற இடங்களில் வீடுகளும் வீட்டுத்தளபாடங்களும் சேதமாக்கப்பட்டும் கையாடப்பட்டும் காணப்பட்டதை வீட்டு உரிமையாளர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர். யுத்தம் நடைபெறாத பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் முக்கியமான பொருட்களை தவிர ஏனைய பொருட்கள் பெருமளவிற்குக் குழம்பிய நிலையிற் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அத்தனை பொருட்களும் வீடு முழுவதும் பரவிக் காணப்பட்டிருந்தன. அத்துடன் பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருந்தன. சில கிராமங்களில் ஒரிரு வீடுகள் மட்டுமே உடைக்கப்படாதிருந்துள்ளன. ஏன் அவ்வாறிருந்தது என்பது ஆச்சரியத்திற்குரியதே. உடைக்கப்பட்ட வீடுகளிற் குறிப்பிட்ட சில பொருட்கள் காணாமற் போயிருந்தன. எனினும் மேற்படி வீடுகளிற் காணாமல் போன பொருட்கள் வேறுபட்டனவாக இருந்து ள்ளதைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகக் கதிரைகளிற் போடப்படும் சொகுசு மெத்தைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், டெக் வகைகள், கதிரைகள், மேசைகள், சைக்கிள்கள், வாகனங்கள், கட்டில்கள், தையல்மெசின்கள், மெத்தைகள், அலவாங்கு, மண்வெட்டி போன்றன பெரும்பாலான வீடுகளிற் காணப்படவில்லை. அதேவேளை மேற்படி பொருட்களிற் பல அயலில் உள்ள வீடுகளிலிருந்து குடியிருப்பாளர்களால் பெறப்பட்டுமிருந்தன. அதாவது அப்பிரதேசத்தில் முகாமிட்டிருந்தவர்கள் தமக்குத் தேவையான பொருட்களைத் தாம் இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளிலிருந்து பெற்றிருந்துள்ளனர் எனக் கொள்ள்முடியும். அதேவேளை சமையலறைத் தளபாடங்கள் எல்லாம் பொதுவாக எல்லா வீடுகளிலும் பரவிக் காணப்பட்டிருந்தன. எனவே முதலில் வந்தவர்கள் தமது பொருட்களிற் கணிசமானவற்றை அயல் அட்டங்களிலிருந்து பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை புகைப்படங்களைச் சேமித்து வைக்கும் அல்பங்கள் பெரும்பாலான வீடுகளுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தன. இதனால் மழையினால் அவை பாவனைக்கு தவாதனவாக காணப்பட்டிருந்தன. இந்த ஞாபகச்சின்னங்கள் சிதைவுற்றமை, அல்லது காணாமற் போனமையிட்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிலிருந்து வலிகாமம் நோக்கிய மீள இடப்பெயர் வினை மேற்கொண்டவர்கள் தமது பொருட்களை அயலட்டங்களிலிருந்து பெற்றுக் கொண்ட போதிலும் இதனைச் சாட்டாக வைத்துச்சிலர் தமக்குச் சொந்தமில்லாத பொருட்களையுந் தமது உடமை என எடுத்துச் சென்றதாகப் பலரால் விமர்சிக்கப்படுகின்றது. வலிகாமத்திலிருந்து வெளியேறிய மக்களில் மீண்டோர் ஏறத்தாழ அரைப்பங்கினரேயாகும். எனவே அரைப்பங்கு வீடுகளிற் பொருட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியான கதையாகி வருகின்றன. இதனை நிதர்சனப்படுத்துவதற்கு வன்னிப் பிராந்தியத்திற்குச் சென்றவர்களும், நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றவர்களும் திரும்பிவரும்பட்சத்திலேயே சந்தர்ப்பம் உண்டு எனலாம்.
149

Page 86
இவர்களது உடமைகள் இவர்கள் மீளும்பட்சத்தில் கிடைக்குமோ என்பதுங் கேள்விக்குரியதாகும்.
மேலும் வலிகாமம் பிரதேசத்திற் காணப்படுகின்ற முக்கியமான அம்சம் யாதெனில் பல வீடுகளில் அஸ்பெஸ்ரஸ் சீற் வகைகள் கழற்றப்பட்டிருக்கினற மையாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள உபகரணங்கள், ரைப்றைற்றர், கணனி வகைகள், மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் பல காணாமற்போயுள்ளன. மற்றும் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் காணப்பட்டுள்ள போதிலும் மக்களற்ற பிரதேசமாகவிருந்த மையாற் கோவில் மணி ஓசையை வந்த காலத்திற் கேட்க முடியவில்லை. படிப்படியாக மக்கள் வரவு அதிகரிக்க மணியோசையையுங் கேட்கமுடிந்தது. யுத்தம் நடைபெற்ற இடங்களிற் காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சில அழிவுக்குட்பட்டுள்ளன.
உலகில் யுத்தங்கள் நடைபெறுமிடங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவது சகஜம். அது சாதாரண நிகழ்வென்றே கூறல் வேண்டும். வலிகாமத்தில் நிகழ்ந்த யுத்தத் தின் விளைவாக மக்களது சொத்துக் கள் அழிவுக்குட்பட்டுள்ளன. யுத்தம் நடைபெறும் போது தவிர்க்க முடியாத தாகியதாயினும் மக்கள் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எவ்வாறெனினும் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அவ்வவ்விடங்களில் எடுத்துக் கூறப்பட்ட வதந்திகள் பெருமளவிற்கு உண்மையானது எனக்கொள்ள முடியாதிருந்ததை வந்த பின்னர் மக்கள் அறியக் கூடியதாகவிருந்தது. குறிப்பாக மெத்தை வீடுகள் தரையிறக்கப்பட்டன என்ற கூற்றுப் பெருமளவிற்கு உண்மையில்லை என்பதை உணர முடிந்தது. எனினும் யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பிரதேசங்களைச் சார்ந்த பகுதிகளிலும் பாரியளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இறுதியாக வலிகாமப் பிரதேசத்தில் நிகழ்ந்த அனர்த்தங்கள் போல எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்படாதவகையிற் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து தீர்வு கண்டாலன்றி வலிகாமப் பகுதி மக்கள் மட்டுமல்ல இலங்கை வாழ் தமிழரிற் பலர் சர்வதேச அகதிகளாக, தமிழ்மொழியைப் பேசத் தெரியாத தமிழர்களாக வாழ வேண்டிய நிலை ஏற்படுவதுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கணிசமான குடியிருப்புக்கள் வெளவால் குடியிருப்புகளாக மாற்றம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகி விடும் எனலாம்.
150

உசாத்துணை
1. Arasaratnam.S. Historical Foundation of the Economy of the
Tamils of North Sri Lanka. Chelvanayagam Memorial Lectures 1982. Thanthai Chelva Memorial Trust, Jaffna. 1982.
2. Balasundarampillai. P & Rubamoorthy. K, Jaffna District in
Facts and Figures; Joyki Publications, No. 1, 1987.
3. Chandrakanthan. A.J.V; An Exodus Sans Destination, Quest 133: December 1994, University of Oxford, United Kingdom, 1994.
4. Christian Worker, Quarterly of the Christian workers Fellowship Colombo, 1st Quarter 1995 June, 4th quarter, 1958 1st quarter 1996 May.
5. Department of Census and Statistics, Census of Population
and Housing 1981, Colombo. 1984.
6. Department of Education, Emergency Programme to Re
Activate Education in the Jaffna District - 1996 June, Jaffna.
7. Hans Raj; Fundamentals of Demography. Surjeet Publications,
New Delhi. 1993.
8. Kachcheri, Project Proposal for Emergency Drinking water
supply, Jaffna District, Jaffna, 1995.
9. Letter from Embassy of Switzerland in Sri Lanka. 05.11.1991.
10. North East Provincial Council; Statistical Information of the
North East Province. 1994, Trincomalee - 1994.
11. Profile on Sri Lanka, Asia Partnership for Human
Development, Hongkong 1990
12. Sadruddin Agakhan & Hassan Bin Talal; Refugees Dynamics of displacement. A Report for the Independent Commission on International Humanitarian issues, Hongkong. 1986.
13. United Nations High Commission for Refugees: Refugees,
No.63, April 1989 Switzerland.
14. அரசசெயலகம், அரசசார்பற்ற நிறுவனங்களுடன் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான கூட்ட அறிக்கை 1996.03.25, சாவகச்சேரி.
151

Page 87
15.
16.
17.
18.
அரச செயலகம், உதவி அரசாங்க அதிபர்களுடன் நிவாரண வேலைகள் தொடர்பான கூட்டஅறிக்கை 1996.03.19, சாவகச்சேரி.
குகபாலன். கா: திவகம் வளமும் வாழ்வும், பாரதி அச்சகம்,
யாழ்ப்பாணம், 1994.
கைதடி அரசின் முதியோர் இல்லம், 41வது ஆண்டு சிறப்புமலர்
1995 கைதடி, யாழ்ப்பாணம், 1995.
நாளிதழ்கள்:
ஈழநாதம், உதயன், ஈழநாடு, வீரகேசரி மற்றும் ஆங்கில நாளிதழ்கள்.
waarodos
----
152

உசாத்துணை
1. Arasaratnam.S. Historical Foundation of the Economy of the
Tamils of North Sri Lanka. Chelvanayagam Memorial Lectures 1982. ThanthaiChelva Memorial Trust, Jaffna. 1982.
2. Balasundarampillai. P & Rubamoorthy. K, Jaffna District in
Facts and Figures, Joyki Publications, No. 1, 1987.
3. Chandrakanthan. A.J.V; An Exodus Sans Destination, Quest 133: December 1994, University of Oxford, United Kingdom, 1994.
4. Christian Worker, Quarterly of the Christian workers Fellowship Colombo, 1st Quarter 1995 June, 4th quarter, 1958 1st quarter 1996 May.
5. Department of Census and Statistics, Census of Population
and Housing 1981, Colombo. 1984.
6. Department of Education, Emergency Programme to Re
Activate Education in the Jaffna District - 1996 June, Jaffna.
7. Hans Raj; Fundamentals of Demography. Surjeet Publications,
New Delhi. 1993.
8. Kachcheri, Project Proposal for Emergency Drinking water
supply, Jaffna District, Jaffna, 1995.
9. Letter from Embassy of Switzerland in Sri Lanka. 05.11.1991.
10. North East Provincial Council; Statistical Information of the
North East Province. 1994, Trincomalee - 1994.
11. Profile on Sri Lanka, Asia Partnership for Human
Development, Hongkong 1990
12. Sadruddin Agakhan & Hassan Bin Talal; Refugees Dynamics of displacement. A Report for the independent Commission on International Humanitarian issues, Hongkong. 1986.
13. United Nations High Commission for Refugees: Refugees,
No.63, April 1989 Switzerland.
14. அரசசெயலகம், அரசசார்பற்ற நிறுவனங்களுடன் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான கூட்ட அறிக்கை 1996.03.25, சாவகச்சேரி.
151

Page 88
15. அரச செயலகம், உதவி அரசாங்க அதிபர்களுடன் நிவாரண
வேலைகள் தொடர்பான கூட்டஅறிக்கை 1996.03.19, சாவகச்சேரி.
16. குகபாலன். கா: தீவகம் வளமும் வாழ்வும், பாரதி அச்சகம்,
யாழ்ப்பாணம், 1994. i
17. கைதடி அரசின் முதியோர் இல்லம், 41வது ஆண்டு சிறப்புமலர்
1995 கைதடி, யாழ்ப்பாணம், 1995.
18. நாளிதழ்கள்:
ஈழநாதம், உதயன், ஈழநாடு, வீரகேசரி மற்றும் ஆங்கில நாளிதழ்கள்.
152


Page 89


Page 90
யாழ்ப்பாணப் பல்கலைக் -கழகப் புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர்களிலொருவரான கலாநிதி, கார்த்திகேசு குகபாலன் அவர்கள் ஏற்கனவே குறிப்பாகப் பல புவியியற் கட்டுரைகள், தீவகம் - வளமும் வாழ்வும்" "குடித்தொகைக் கோட்பாடுகளும் பிரயோகங்களும்" முதலிய நூல்கள் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகிப் புகழ் பெற்றவர். இவர் சிறப்பாக குடித்தொகைப் புவியியலின் ஆய்வுகள் மூலமாகவும் அது சம்பந்தமான விரிவுரைகளாற்றுவதன் மூலமாகவும் பிரபல்யம் பெற்றவர்.
தமது சிறப்புத் தகைமைக்குரிய குடித்தொகைப் புவியியலுடன் தொடர்புள்ள மக்கள் இடம்பெயர்வு - 1995ம் ஆண்டின் பிற்ககூற்றிலே
யாழ்ப்பாணம் வலிகாமப் பகுதியிலேற்ப பற்றியதும் காலத்தின் தேவைக்கேற் வெளியிடுகிறார். இந்நூல் குறிப்பி அவ்விடப்பெயர்வு தொடர்பான பல அ விளங்குகிறது.
புங்குடுதீவிலே சைவம், கல்வி, வர் குடும்பமொன்றிலே பிறந்த கலாநிதி. குக புவியியற் சிறப்புப் பட்டமும், யாழ்ப்பான கலாநிதிப்பட்டங்களும், சென்னைப்பல்க 'டிப்ளோமா' பட்டமும் பெற்றவர்.
பல சமூக, சைவசமயநிறுவனங்களில் ஒரு பணிகளைப் புரிந்து வரும் கலாநிதி, கா, ஆக்கிக் கல்விப் பணிகளைத் தொடர்ந்து
அவருடைய முயற்சிகளுக்கு எமது வாழ்த்
பேராசிரியர் வி. சிவசாமி, தலைவர், சமஸ்கிருதத்துறை, யாழ்ப்பானப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
 
 
 
 
 

Iட்ட பாரியளவிலான மக்கள் இடப்பெயர்வு றதுமான நூலொன்றினை இப்பொழுது ட்ட கால நிகழ்வுப் பதிவேடாகவும், ம்சங்களை அலசி ஆராயும் பிரசுரமாகவும்
த்தகம் ஆகியனவற்றிற்குப் பேர்போன பாலன் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே ாப் பல்கலைக்கழகத்திலே முதுகலைமாணி, 1லைக்கழகத்திலே குடித்தொகைக் கல்வியில்
முக்கிய உறுப்பினராகவிருந்து சமூக, சமயப் குகபாலன் மேலும் பல சிறந்த நூல்களை aglilea ng Ts,
துக்கள். " يولي