கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லியொன் ட்ரொட்ஸ்கியும் 20ம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்
Page 1
శొ 。 ఛ
ாண்டின் பிரச்சினைகளும்
*
Page 2
லியொன் ட்ரொட்ஸ்கியும் 20ம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்
டேவிட் நோர்த்
தொழிலாளர் பாதை வெளியீடு
Page 3
முதற் பதிப்பு : 1998
தொழிலாளர் பாதை வெளியீடு
அச்சகம் ஹேலி கிரபிக்ஸ் 8891/2, மருதானை வீதி, கொழும்பு-10.
வெளியீடு தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள் 90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை, கொழும்பு-10,
அறிமுகம்
இப்பிரசுரத்தில் 1998 ஜனவரி ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சிட்னியில் நடாத்திய அனைத்துலக கோடைப் t ] ↑Ꮴ Ꮜ , ᏯᎭ fᎢ ᏊᏈ) ᎧuᏍ வரிாரிவுரை களில் முதலாவது வரிாரி வரை வெளியாகின்றது.இந்த விரிவுரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் டேவிட் நோர்த்தினால் நிகழ்த்தப்பட்டது.
ஒரு கிழமை பூராவும் நடைபெற்ற இந்தப் பாடசாலையில் பல நாடுகளையும் சேர்ந்த 200 க்கும் அதிகமான தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் கலந்து கொண்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் சோசலிசத்துக்கான போராட்டத்தின் படிப்பினைகளை ஆய்வு செய்து, எதிரில் வரும் நூற்றாண்டுக்குள் உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களுக்கு முன்நோக்கு வழங்க இந்தப் பாடசாலை பிரமாண்டமான பங்களிப்பு செய்தது.
உற்பத்தியின் பூகோளமயத்துடன் உலகத் தொழிலாளர் வர்க்கம் உலகளாவிய ரீதியில் புரட்சிகரப் போராட்டங்களுள் காலடி வைக்கும் காலப்பகுதியினுள் நாம் நுழைந்து கொண்டுள்ளோம். அந்தப் போராட்டங்களின் வெற்றிகளை உத்தரவாதம் செய்ய சோசலிசப் புரட்சியின் முன்நோக்கினை உலகத் தொழிலாளர் வர்க்கத்துக்கு வழங்கியாக வேண்டும். சமூக ஜனநாயகத்தினாலும் சிறப்பாக ஸ்டாலினிசத்தின் கொடிய தாக்குதலினால் சிதறடிக்கப்பட்ட மார்க்சிச கலாச்சாரத்தை மீண்டும் பரந்த ரீதியில் கட்டியெழுப்புவது இந்த பிரமாண்டமான கோட்பாட்டு, கல்வி திட்டத்தின் நோக்கமாகும். அதைச் சாதிக்கும் பொருட்டு, தனது தகுதியை வரலாற்று ரீதியில் ஊர்ஜிதம் செய்துகொண்டுளள ஒரே அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும். . அனைத்துலகக் குழுவின் முன்னணித் தலைவர்கள் பலரும் ரூஷ்ய வரலாற்றாசிரியர் வடிம் றொகோவினும் நிகழ்த்திய இந்த விரிவுரைகளை இலங்கையினுள் தீவடங்கிலும்
Page 4
4
சோசலிச சமத்துவக் கட்சி நடாத்தி வருகின்றது:
இந்த விரிவுரைத் தொடரில் பின்வரும் விரிவுரைகள் அடங்கும்: லியொன் ட்ரொட்ஸ்கியும் 20ம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்
பூகோளமயமாக்கம்: அதன் வரலாற்று அர்த்தமும் புரட்சிகரப் பாத்திரமும்
சீர்திருத்தமும் புரட்சியும்- பேர்ண்ஸ் டைனுக்கு எதிரான போராட்டமும் வரலாற்று முன்னோக்கும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலினிசம்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் நிரந்தரப் புரட்சி: இந்தியாவினதும் சீனாவினதும் படிப்பினைகள் நிரந்தரப் புரட்சி: காஸ்ட்ரோவாதமும் குட்டி முதலாளித்துவ தேசியவாதமும் தொழிற்சங்கங்களின் 150 வருடகால மார்க்சிச மதிப்பீடு கலை, கலாச்சாரம், சோசலிசம் சோசலிச சமத்துவமும் புரட்சிக் கட்சியின் வேலைத்திட்டமும்
றக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் -1899ல் ஜேர்மன் சமூக ஜனநாயகத் தன் மாபெரும் மார் க் சரி ச கோட்பாட்டாளரான பிரான்ங் மேஹிரிங் (Franz Mehring) 19ம் நூற்றாண்டு நம்பிக்கையினதாக இருந்திருக்குமானால் 20ம் நூற்றாண்டு புரட்சிகர பூர்த்தியினதாக விளங்கும் என எழுதினார். வரலாற்று முன்னேற்றத்தின் அணிநடையானது எதிர்பார்த்ததைவிட பெரிதும் சிக்கலானதாக இருக்கும் எனவும் எதிர்காலத்தை அடியோடு நிச்சயமாக எதிர்வுகூறும் எந்த ஒரு ஆண்டவனின் தூதுவனும் அங்கு இருந்தது கிடையாது எனவும் மேஹிரிங் ஒப்புக் கொண்டார். "ஆனால் மகிழ்ச்சி நிறைந்த மனவுறுதியோடும் பெருமைபடைத்த சுயநம்பிக்கையுடனும் வர்க்க நனவுடனான பாட்டாளி வர்க்கம் 20ம் நூற்றாண்டின் வாயில் படியை கடந்து செல்லும் "என அவர் பிரகடனம் செய்தார்.
மேஹிரிங்கின் வார்த்தைகள் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோசலிச இயக்கம் பூராவும் நிலவிய பரந்த திட நம்பிக்கையை வெளிக்காட்டியது. சோசலிசத்தின் வரலாற்றுப் பயணத்தில் உணர்ச்சி பூர்வமான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இயக்கத்துக்காக அவர் பேசினார். மார்க்சும் எங்கேல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதி 50 ஆண்டுகள் கழியவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னர்தான் மார்க்ஸ் லண்டனில் ஒரு வறிய, தனிப்பட்டுப்போன புரட்சிகர நாடுகடத்தப்பட்ட ஆளாக வாழ்ந்து கொண்டிருந்தார். அத்தோடு சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிஸ்மார்க் ஜேர்மனியில் சகல சோசலிச நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்கி இருந்தான். ஆனால் 19ம் நூற்றாண்டு ஒரு முடிவுக்கு வந்ததும் சமூக ஜனநாயகக் கட்சி, சோசலிச எதிர்ப்பு சட்டங்களில் இருந்து தப்பி அந்நாட்டில் ஒரு பெரும் அரசியல் கட்சியாகியது.மேலும் சோசலிசம் ஜேர்மனியின் எல்லைக்கு அப்பால் ஒரு பலம் வாய்ந்த அனைத்துலக இயக்கமாகியதோடு அதன் ஆதரவாளர்களுள் அசாதாரணமான
Page 5
6
தைரியம் கொண்ட எண்ணற்ற ஆண்களையும் பெண்களையும் காணக் கூடியதாக இருந்தது மட்டுமன்றி பலரும் நிஜ மேதைகளாகவும் விளங்கினர்.
திடநம்பிக்கை என்பதற்கு சோசலிஸ்டுகள் ஒரு சிறப்பான புரட்சிகர அர்த்தம் வழங்கினர்.இது சமுதாயத்தின் முதலாளி வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் நாகரீகமான தட்டினர் உட்பட்டவர்களிடையே பரந்த அளவில் உணரப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் வெடித்ததன் பின்னர் ஆஸ்த்திரிய எழுத்தாளர் ஸ்ரீபன் ஸ்விக் (Stefan Zwig) எழுதிய நினைவுக் குறிப்புக்களில்: ஒரு பிரிந்து சென்ற பலம்வாய்ந்த ஆத்ம நண்பரைப் போல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவிய ஆத்ம நம்பிக்கையை நினைவு கூர்ந்தார்.
"உருவாகக் கூடிய உலகுகளில் சிறந்த உலகினை நோக்கி நேரானதும் சரியானதுமான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக 19ம் நூற்றாண்டின் லிபரல் கருத்தியல்வாதம் நிஜமாக நம்பிக்கை வைக்கச் செய்யப்பட்டது. முன்னைய சகாப்தங்களை அலட்சியமாக நோக்கிய ஒருவர் - அவற்றின் யுத்தங்கள், பஞ்சங்கள், கலம்பகங்களுடன் - மக்கள் முதிர்ச்சி காணாதவர்களாயும் போதுமானமட்டில் விழிப்பு அடையாதவர்களாகவும் இருந்த காலத் தில் தடையற் றதும் நிறுத்த முடி யாததுமான "முன்னேற்றம்'மீதான நம்பிக்கை இந்தச் சகாப்தத்தில் ஒரு மதத்தின் சக்தியைக் கொண்டிருந்தது. ஒருவர் பைபிளில் நம்பிக்கை வைத்ததைக் காட் டி லும் முன்னேற்றத் தில் கூடுதலான நம் பரிக்கை வைத்தார்.அத்தோடு இந்த நற்செய்தி (உபதேசம்) விஞ்ஞானத்தினாலும் தொழில்நுட்பத்தினாலும் சிருஷ்டிக்கப்பட்ட தினசரி அதிசயங்களின் மூலம் அடியோடு நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தது."1
இந்த நம்பிக்கையின் மிகச் சிறியதே 20ம் நூற்றாண்டின் மன அதிர்வுகளில் இருந்து தப்பிப் பிழைத்தது. சில தருணங்களில் அது சகல மனிதர்களது நம்பிக்கையினதும் சுடுகாடாகத் தோன்றி வந்துள்ளது. இருப்பினும் நூற்றாண்டில் இடம்பெற்றுள்ள
அனைத்தினதும் பயங்கர வெளிச்சத்தில் - இரண்டு உலக யுத்தங்கள், எண்ணற்ற பிராந்திய யுத்தக் களரிகள், தோல்வி கண்ட புரட்சிகள், மனிதப் படுகொலைகள் - 19ம் நூற்றாண்டின்
கடைசி ஆண்டுகளின் நம்பிக்கை இருந்து கொண்டுள்ள நம்பிக்கையீனத்தின் பின்னணியில் மனித அறிவு கள்ளம் கபடமற்ற நம்பிக்கையினதும் முன்னேற்றத்திலான நியாயப்படுத்த முடியாத நம்பிக்கையினதும் வெளிப்பாடாகக் காணப்பட்டது.
நாம் 21ம் நூற்றாண்டையும் புதிய பல்லாயிரம் ஆண்டுகளை நோக்கி செல்லும் இந்த தருணத்திலும் மனித இனத்தின் வாழ்க்கை நிலைமையில் நாடகப் பாணியிலான முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் என சிறிய எதிர்ப்பார்ப்புக்களே கொண்டுள்ளோம். புதிய நூற்றாண்டில் மனிதன் கடந்து சென்றதைக் காட்டிலும் கூடுதலான பயங்கரங்களில் இருந்து விடுபட முடியும் என்ற பதட்டமும்
7
நம்பிக்கைச் சிதைவும் பெருமளவில் காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு சங்கடமானதும் மகிழ்ச்சி இல்லாததுமான பயணம் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்ததைப் போல, இந்த நூற்றாண்டின் நெருங்கியுள்ள முடிவு வேறு எதைக் காட்டிலும் ஒரு நிம்மதி உணர்வைத் தோற்றுவித்துள்ளது என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மையாகும்.
நாளை மறுநாள் எம்மீது பொழிந்து தள்ளப்படும் யுகத்தின் இறுதியில் என்ன நாதகிதம் ஆதிக்கம் செலுத்துமோ என நினைத்துப் பார்ப்பது கஷ்டம் அல்ல.20ம் நூற்றாண்டு என்பது கற்பனை செய்ய முடியாத பயங்கரங்கள், பரந்த மனிதப் படுகொலைகள், சர்வாதிகார காட்டுமிராண்டித்தனத்தின் நூற்றாண்டாகும். இந்த விளக்கம் எதுவித சந்தேகத்துக்கும் அப்பாற்பட்ட விதத்தில் ஓரளவுக்கு நியாயமானதாகும். ஆனால் அவை துஷ்பிரயோகம், மேலதிகப் பிரயோகம் மூலம் மட்டரகமான பண்பைப் பெறலாம். உண்மையில் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் கைகளில் இந்த வாக்கியங்கள் போட்டியாகப் பரிணாமம் கண்டு, அவை வெளிச்சம் பெற வைப்பதற்குப் பதிலாக மொட்டையாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த விடயத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ளவையைக் கொண்டு ஒருவர் 20ம் நூற்றாண்டின் வன்முறையையும் சோகங்களையும் சகல “சிந்தனாவாதங்களதும்” - சிறப்பாக மார்க்சிசத்தின் - அழிவு செயற்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக பயன்படுத்த முடியும் எனவும் இருந்துவரும் சமூக அமைப்பை புரட்சிகரமான முறையில் விமர்சனம் செய்வது அர்த்தமற்றது என நிரூபிக்க அதைப் பயன்படுத்த முடியும் என்பதாகும்.
இந்தச் சாந்தப்படுத்தும் நற்செய்திகளில் இருந்து பிலிஸ்தீன்கள் ஆறுதல் பெறட்டும். எவ்வாறெனினும் எதிர்வரும் வருடங்களில் அவர்கள் முகம் கொடுக்க நேரிடுபவை, இதன் மூலம் அவர்களை அதிசயங்களுக்கு தயார் செய்துவிடும் என்பதை நான் பெரிதும் சந்தேகிக்கின்றேன். 21ம் நூற்றாண்டு 20ம் நூற்றாண்டின் முடிவுபெறாத வேலைகளைப் பூர்த்தி செய்து வைப்பதில் பெரிதும் ஆழ்ந்திருக்கும். இந்த 20ம் நூற்றாண்டின் முடிவடையாத வேலைகள் இவை எவ்வளவுதான் "சித்தாந்த" ரீதியானவையாக ஒலித்தாலும் அவை உலக சோசலிசப் புரட்சியினதாகும்.
ஒரு முழுமையாக எடுத்து நோக்கின் 20ம் நூற்றாண்டு உலக வரலாற்றில் பெரிதும் பிரமாண்டமான எழுச்சிகளைத் தரிசித்துள்ளது. உண்மையில் "உலக வரலாறு" என நாம் அழைப்பது 20ம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்கள் என்ற வடிவில் ஒரு நிஜமான நவீனமானதும் திடமானதுமான பண்பைப் பெற்றுக் கொண்டது. இந்த நூற்றாண்டில் இருந்தது போல் வெகுஜனங்கள் முன்னர் ஒரு போதும் இத்தகைய ஒரு நாடகப் பாணியிலான அளவிலும் ஒரு "அதி உயர்ந்த அளவிலான நனவுடனும் தீவிரம் கண்டு இருந்தது கிடையாது. மாறாக புரட்சிகர வெகுஜன
Page 6
8
இயக்கங்களை நசுக்கிவிட பலாத்காரமும் வன்முறையும் இவ்வளவு இரக்கமற்றதாக முன்னர் ஒரு போதும் கையாளப்பட்டது கிடையாது. இந்த விதத்தில் முதலாளித்துவ வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் தார்மீகவாதிகள் பொதுவாகக் குறிப்பிடத் தவறிவிடும் இந்த நூற்றாண்டின் படுபயங்கரமான குற்றங்கள் நேரடியாகவோ( ஜேர்மனியிலும் ஸ்பானியாவிலும் போல்) அல்லது மறைமுகமாகவோ (சோவியத் யூனியனில் போல்) உலக முதலாளித்துவ அமைப்பை காக்கவே இறக்கப்பட்டன என்பதைக் குறிப்பிட என்னை அனுமதியுங்கள்.
20ம் நூற்றாண்டில் படுபயங்கரமான துயரங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது கிடையாது. ஆனால் அந்தத் துயரங்கள் அவைமுலம் அவை பொறுப்பேற்ற வரலாற்று பணிகளில் பிரமாண்டமான அளவின் வெளிப்பாடாகிக் கொண்டுள்ளன. முதல் தடவையாக மனித இனம் நடைமுறைப் பணி என்ற வகையில் வர்க்க சமுதாயத்தை ஒழித்துக் கட்டும் அதனது நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது. வேறு வார்த்தையில் சொன்னால் மனிதன் வரலாற்றுக்கு முன்னைய மனித இனத்தை ஒரு முடிவுக்குக் கொணர முயன்றான். 1917 அக்டோபர் போல்ஷிவிக் புரட்சி அதைத் தொடர்ந்து வந்த சோவியத் யூனியனின் தலைவிதி என்னவாக இருந்த போதிலும் மனிதனின் வரலாற்று முன்னேற்றத்தில் அழிக்க முடியாத ஒரு மைற்கல்லாகும். இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ஒரு "திடமான" கருத்துப்பாடு என்னதான் "பஷன்" இல்லாததாகத் தோன்றினாலும் மனிதன் ஒரு சமூக மிருகம் என்ற முறையில் மனிதனின் விதிகளால் ஆளப்பட்ட அபிவிருத்தியின் மிகச் சக்திவாய்ந்த போக்கானது -எதிர்பார்ப்பாக மட்டும் இருந்து வந்தது அக்டோபர் புரட்சியில் ஒரு அவசியமான வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டது. 1917ல் ஆரம்பிக்கப்பட்டதை பூர்த்தி செய்து வைக்க ஒரு புதிய முயற்சி-அந்த வார்த்தையின் ஆழமான அர்த்தத்தில் தவிர்க்க முடியர்தது ஆகியுள்ளது.
ஆதலால் எமது காலகட்டத்தின் பிரமாண்டமான அரசியல் புத்திஜீவி பணியானது முதலாவது பாட்டாளிவர்க்க சோசலிஸ்ட் புரட்சியான 1917 அக்டோபர் புரட்சியையும் அதன் பின்னரும் சோவியத் ரூஷியாவில் மட்டுமன்றி உலகம் பூராவும் ஆய்வு செய்வதாக விளங்க வேண்டும். இது அதன் மொத்தத்தில் தொழிலாளர் வர்க்கத்தை 21ம் நூற்றாண்டில் வழிநடாத்துவதற்கான கோட்பாட்டு, நடைமுறைப் படிப்பினைகளை மார்க்சிஸ்டுகள் கறந்து கொள்ள வேண்டிய மூலோபாய, வரலாற்று அனுபவங்களின் தொகுப்புக்களிடையே மிகவும் அத்தியாவசியமான மூலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
ஆதலால் இறுதி ஆய்வுகளில் சோசலிசத்துக்கான சாத்தியங்கள் பற்றிய எந்த ஒரு தீர்க்கமான கலந்துரையாடலும் மனித இனத்தின் எதிர்காலமும்- அக்டோபர் புரட்சியை ஆய்வு செய்வதை
9
உள்ளடக்கியாக வேண்டும். இந்தப் புரட்சி ஆதரிக்கப்படலாம் அல்லது எதிர்க்கப்படலாம். ஆனால் இதைப் புறக்கணித்துவிட முடியாது. இன்றைய காலகட்டப் பிரச்சினைகளுக்கு ஒருவர் வழங்கும் பதில்கள், அக்டோபர் புரட்சி அதன் பின்னைய காலப்பகுதி அதன் தலைவிதி, உரித்துச் சம்பந்தமான ஒருவரின் மதிப்பீட்டுடன் பிரிக்கமுடியாத விதத்தில் இணைந்து கொண்டுள்ளது.
அக்டோபர் புரட்சி தோல்வி கண்டிருப்பின் போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரம்பத்தில் இருந்தே ஒரு உயிராபத்தான முயற்சியாக இருந்திருந்தால், ஸ்டாலினிசம், போல்ஷிவிசத்தின் தவிர்க்க முடியாத விளைவாக இருந்திருப்பின் ஸ்டாலினிச சகாப்தத்தின் அட்டூழியங்கள் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற அதே கருத்துப்பாட்டில் இருந்து பெருக்கெடுத்து இருப்பின், சோவியத் யூனியனின் இறுதி வீழ்ச்சி சோசலிச பொருளாதாரத்தின் வங்குரோத்தினை நிரூபிப்பின், மார்க்சிசம் என்ற கப்பல் அரசியல், புத்திஜீவி, தார்மீக ரீதியில் விபத்துக்கு உள்ளாகி விட்டதை ஒப்புக்
ଜୋର ୫, ୮T ତ୪6] L– ୮t $' வேண் டும் . இ ன் று பல கலை க் கழக கல்வியாளர்களிடையே மேலாதிக்கம் செலுத்தும் நோக்கு இதுவேயாகும்.
மறுபுறத்தில் அக்டோபர் புரட்சி யதார்த்தமான முறையில் தன்னுள் ஏனைய சாத்தியங்களையும் கொண்டிருந்திருக்குமானால் ஸ்டாலினிசம் போல்ஷிவிசத்தின் பெறுபேறு அல்ல அதன் எதிரிடையானதாக இருந்திருக்குமானால், உண்மையில் ஸ்டாலினிசத்தின் எழுச்சி மார்க்சிஸ்டுகளால் எதிர்க்கப்பட்டு இருந்திருக்குமானால் அப்போது புரட்சிகர சோசலிசத்தின் வரலாற்று நிலைமை முதலாளி வர்க்கத்தின் அரசியல், புத்திஜீவி பிரதிநிதிகளால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதில் இருந்து பெரிதும் வேறுபட்டதாக விளங்கும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இரண்டாவது
நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத விதத்தில் பரிற் போக்கின் அப் பட்டமான வக் கீல் களாக இருந்து வந்துள்ளவர்களுடன் மட்டுமன்றி வெகு சமீபகாலம் வரை தம்மை சோசலிஸ்டுகளாக கருதிக் கொண்டவர்களிடையே தாராளமாகக் காணப்பட்ட அவநம்பிக்கை, மனமுடைவு, அரசியல் துறவறத்துடன் மோதிக் கொள்ள வைக்கின்றது.
சரி றப் பாக ஸ் டா லின? சத் தின் செல் வாக்குக் கு ஆட்பட்டவர்களிடையே-அவர்கள் தீர்க்கதரிசனமாக காண அடியோடு தவறிவிட்ட ஒரு நிகழ்வான சோவியத் யூனியனின் வீழ்ச்சி, அக்டோபர் புரட்சி சம்பந்தமாகவும் வரலாற்றில் அதன் இடம் தொடர்பாகவும் அவர்களின் மனப்பான்மையை தீவிரமாக மாற்றம் காணவைத்தது. ட்ரொட்ஸ்கி ஒரு தடவை குறிப்பிட்டது போல் பிற்போக்கு வெற்றி கொள்வதுடன் மட்டுமன்றி நம்பிக்கை கொள்ளவும் வைத்து விடுகின்றது. சோவியத் யூனியனின் பல நீண்டகால நண்பர்கள்
Page 7
O
அல்லது பெரிதும் சுருக்கமாகச் சொன்னால் லெனினையும் மாபெரும் அக்டோபர் புரட்சியையும் பெரிதும் வியந்து பாராட்டிக் கொண்ட சோவியத் அதிகாரத்துவமும் அங்ங்னம் செய்வதன் மூலம் தம்மைப் பெரிதும் முற்போக்கான மக்களாக நினைத்துக் கொண்டவர்களும் இன்று அக்டோபர் புரட்சியை ஒரு பெரும் நாசம் ஆகவும் அது இடம் பெற்று இருக்கவே கூடாது எனவும் நினைத்துக் கொள்கின்றார்கள். ஆட்சியைக் கைப்பற்றியமை ஒரு பயங்கரத் தவறு என அவர்கள் நம்புகின்றார்கள். 1917 அக்டோபருக்கும் அதன் பின்னரும் ஏதேனும் ஒரு படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முழுப் புரட்சிகர சோசலிசத் திட்டமும் மார்க்சினால் வலியுறுத்தப்பட்டு லெனினால் அமுல் செய்யப்பட்ட துன்பகரமான முறையிலும் மாற்றப்படாத முடியாத வகையிலும் தவறென நிரூபிக்கப்பட்டு விட்டதாக நம்புகின்றார்கள்.
பிரித்தானிய வரலாற்றாசிரியரான எறிக் கொப்ஸ்போம் எழுதிய ஒரு புதிய நூலில் இருந்து இம்முன்னோக்குத் தோன்றி உள்ளது. இவர் பல வருடங்களாக பிரித்தானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவராக விளங்கியவர். வரலாற்றின் மீது (On History ) என்ற தனிலப்பிலான இந்த நூல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் நிகழ்த்திய விரிவுரைகளையும் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அவரது இந்த எழுத்துக்கள் பல்வேறுபட்ட தலைப்புக்களைக் கொண்டதாக இருந்த போதிலும் இந்தத் திரட்டின் முக்கிய நாதம் அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமாகும்.
பேராசிரியர் ஹொப்ஸ் போமின் நூலைப் பற்றிப் பல கண்டனங்களை நான் தெரிவிக்க வேண்டி இருந்த போதிலும் ஒரு வரலாற்றாசிரியன் என்ற முறையில் அவரின் நீண்ட தொழில்சார் பணியில் அவர் பல பெறுமதி வாய்ந்த அறிவுசார் படைப்புக்களை எழுதியுள்ளார் என்பதை தெளிவாகக் கூறி, எனது முன்னுரையை ஆரம்பிக்க இடமளிக்கவும். பிரான்சியப் புரட்சிக்கும் 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கும் என அவர் ஒதுக்கி உள்ள பக்கங்கள் சிந்தனை நிறைந்தவையும் உணர்ச்சிமிக்க ஆய்வுகளுமாகும். சமீபத்தில் வெளிவந்த ஒரு நூல் A Critical Analysis of the Nationalism And the Nation State - a ஆரோக்கியமானதும், காலத்துக்கு உகந்த நுண்ணறிவுகளையும் வழங்கி உள்ளது.
எவ்வாறெனினும் ரூஷ்யப் புரட்சி என்ற விடயம் பேராசிரியர் ஹொப்ஸ்போமுக்கு ஒரு ஆபத்தான பிராந்தியமாக உள்ளது. இந்தத் துறையில் அவரின் பாண்டித்தியம் அவரின் அரசியலினால் சமரசத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர் என்ற முறையில் தாம் ரூஷ்யப் புரட்சியைப் பற்றியும் 20ம் நூற்றாண்டு பற்றியும் எழுதுவதைத் தவிர்த்துக் கொண்டு விட்டதை ஹொப்ஸ்போம் ஒரு முறை ஒப்புக் கொண்டார்.
ஏனெனில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு தாம் முற்றிலும் உண்மையாக இருப்பதைத் தடை செய்திருக்கும் என அவர் கூறினார். பொய்யைச் சொல்லும்படி தம்மைக் கட்டாயப்படுத்தும் ஒரு கட்சியின் அங்கத்தவராக ஏன் அவர் தொடர்ந்து இருந்து வந்தார் என்பது ஒரு கேள்வியாகும். அதற்கு அவர் என்றும் ஒரு திருப்தியான பதில் வழங்கியது கிடையாது. எந்தவிதத்திலும் அவர் எழுதிக் கொள்வதை 1900க்கு முன்னைய நிகழ்வுகளுடன் தொடர்ந்து வரையறுத்துக் கொள்வாரேயாயின் அது அவருக்கும் நல்லது: வரலாற்று எழுத்துக்கும் இழப்புக்கள் இல்லாதது. ஹொப்ஸ்போமின் நூலில் உள்ள மிகவும் முக்கியமான பத்திரம் அவர் சமீபத்தில் -1996 டிசம்பரில்- நிகழ்த்திய "நாம் ரூஷ்யப் புரட்சியின் வரலாற்றை எழுத முடியுமா? "என்ற தலைப்பிலான ஒரு விரிவுரையாகும்.
விரிவுரையின் தொடக்கத்தில் பேராசிரியர் ஹொப்ஸ்போம் ஒரு செல்லுபடி யானதும் முக்கியமானதுமான வரிடயத்தை வெளியிடுகின்றார். "இருபதாம் நூற்றாண்டு ரூஷ்ய வரலாற்றினைப் பற்றிய மிகவும் சூடான விவாதங்கள் இடம்பெற்றது, நடந்தது என்ன என்பதைப் பற்றியது அல்ல. ஆனால் என்ன நடந்திருக்கும்? "என்பதைப் பற்றியேயாகும். சோவியத் யூனியன் பற்றிய கலந்துரையாடல்கள் இதன் மூலம் "எதிரிடை உண்மை" வரலாற்றுப் பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக இவர் குறிப்பிடுகின்றார்.அதாவது ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைமையைக் கணக்கில் கொள்ளும்போது என்ன இடம்பெறவில்லை அல்லது என்ன நடைபெற்றிருக்கும் என்பதைப் பற்றி எந்த அளவுக்கு ஒரு செல்லுபடியான கருத்தும் தீர்ப்பும் எடுப்பது சாத்தியமாகும். ஹொப்ஸ்போம் சோவியத் யூனியனின் வரலாறு பற்றிய கலந்துரையாடல் எண்ணற்ற எதிரிடை உண்மை கேள்விகளை எழுப்புகின்றது எனக் குறிப்பிடும் போது அவர் நிலைப்பாடு உண்மையில் சரி. சோவியத் வரலாற்றினைப் பற்றி கேட்கப்படக் கூடிய எதிரிடை உண்மை கேள்விகள் எல்லாவற்றுள்ளும் மிகவும் முக்கியமானது ரூஷ்யப் புரட்சி ஸ்டாலினிச சர்வாதிகாரத்துக்கு இட்டுச் சென்றதைவிடக் கணிசமான அளவு வேறுபட்ட பாதையில் சென்றிருக்க முடியுமா என்பதேயாகும்.
புரட்சியின் அனுதாபி எனக் காட்டும் வகையிலும், லெனினதும் போல்ஷிவிக் கட்சியினதும் கொள்கைகள் 1917ல் இருந்துவந்த அரசியல் நிலைமையின் கண்டிப்பான யதார்த்தங்கள் என அவர்கள் உள்ளிர்த்துக் கொண்டதில் இருந்து முன்னேறியதாக அவர் வாதிடுகின்றார்.அத்தோடு அவர்கள் ஒரு பலம் வாய்ந்த தடுத்து நிறுத்த முடியாத ஒரு வெகுஜன ஆதரவு அலையுடன் ஆட்சிக்கு வந்தனர். ஹொப்ஸ்போம் இறுதியில் புரட்சி அது உண்மையில் நடைபெற்றதை விட கணிசமான அளவு வேறுபட்ட விதத்தில் இடம்பெற்றிருக்கும் என வாதிடுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது என்ற முடிவுக்கு வருகின்றார்.
ஹொப்ஸ்போம் இந்த முடிவுக்கு வரும் விதிமுறையை கவனமாக
Page 8
12
ஆய்வு செய்வது முக்கியம். அக்டோபர் புரட்சி ரூஷ்ய மக்கள் மீது ஈவிரக்கமற்ற சோசலிஸ்ட் சித்தாந்தங்களினால் திணிக்கப்பட்ட ஒரு கொடிய சதி எனக் கொள்ளும் பைப்ஸ், மாலியா போன்ற வலதுசாரி போலி அறிஞர்களைப் போல் அல்லாது ஹொட்ஸ்போம் புரட்சியினுள் செயற்பட்ட பாரிய சக்திகளை உண்மையில் அங்கீகரிக்கின்றார். எவ்வாறாயினும் ஹொப்ஸ்போம் புறநிலைச் சக்திகளை கையாளும் விதம் பெரிதும் ஒரு புறப் பண்பைக் கொண்டுள்ளது. அதாவது அவர் வரலாற்றுப் போக்கில் அகநிலைக் காரணிகள் -கட்சிகள், கொள்கைகள், அரசியல் தலைவர்கள், வெகுஜன நனவு, ஆகியன பற்றி எந்த ஒரு கணிசமான மதிப்பீட்டையும் வழங்கத் தவறிவிடுகின்றார். ஹொப்ஸ்போம் ஒரு கண்டிப்பான வரலாற்றாசிரியன் என்ற முறையில் அவர் அகநிலைக் காரணிகள் இருந்து கொண்டுள்ளதையும் நிகழ்வுகளின் விளைவுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றதையும் அறிவார். ஆனால் அவர் அகநிலை, புறநிலை காரணிகளுக்கு இடையேயான உறவுகளைப் பற்றி அவர் கூற வேண்டியவை குழம்பியும் நிலையற்றும் சரியற்றும் நிச்சயமற்றும் உள்ளன. லெனினைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் எழுதுகையில் ஹொப்ஸ்போம் இந்த இரண்டு மனிதர்களது உள்ளிடும் இல்லாமல் ரூஷ்யப் புரட்சியின் வரலாறு உண்மையில் பெரிதும் வேறுபட்டதாக இருந்திருக்கும்"3. அந்த வரலாற்றில் என்ன வேறுபட்டதாக இருந்திருக்கும் என்பதை மிகவும் திட்டவட்டமாக கூற அவர் தவறிவிடுகின்றார்.
ஹொப்ஸ்போம் லெனின் ரூஷ்யப் புரட்சியில் ஒரு முக்கிய பாத்திரத்தினை வகித்தார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் லெனின் இல்லாத வரலாற்று வரைவில் -எதிரிடை உண்மைகளைபதிலிடுகளை கருத்தில் எடுக்க மிகவும் தயங்குகின்றார். 1917ல் சுவிற்சலாந்தில் இருந்து லெனின் ரூஷ்யாவுக்கு திரும்பியிருக்காவிட்டால் விடயங்கள் இந்த விதத்தில் அல்லாது பெரிதும் வேறுபட்ட விதத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதற்கு மேலாக வேறேதும் இடம் பெற்றிருக்கும் எனக் கூறுவதற்கு இடம் இருந்திராது என ஹொப்ஸ்போம் எழுதுகின்றார். "நாவலுக்குத் தள்ளப்பட்ட ஒன்றைவிட நீண்டதுாரம் பயணம் செய்ய முடியாது"4
ஸ்டாலினின் வரலாற்று பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமது விரிவுரையின் மற்றொரு பந்தியில் ஹொப்ஸ்போம் குறிப்பிடுவதாவது : "ஒருவர் சோவியத் அரச திட்டமிடலின் துரித கைத்தொழில்மயமாக்கத் திட்டத்தில் கடும்போக்கிற்குக் கூடவோ அல்லது குறையவோ இடம் இருந்தது என வாதிடலாம். ஆனால் சோவியத் யூனியன் அத்தகைய ஒரு திட்டத்தில் அன்று ஈடுபட்டு இருந்தால்- இலட்சோப லட்சம் மக்களின் நிஜ பொறுப்புக்கள் எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும் சோவியத் யூனியன் ஸ்டாலினைக் காட்டிலும் குறைந்த கடூரமும் கொடுமையும் கொண்ட ஒருவரினால் தலைமை தாங்கப்பட்டு இருப்பினும் கூட அது
13
நல்ல அளவிலான பலாத்காரத்தை வேண்டி க் கொண்டு இருந்திருக்கும்."5
இந்த இரண்டு பந்திகளிலும் அடிநாதமாக உள்ள கருத்துப்பாடு என்னவெனில் பிரமாண்டமான புறநிலைச் சக்திகளின் எதிரில் அகநிலை மூலகங்களின் தாக்கம் எந்த ஒரு தீர்க்கமான முக்கியத்தையும் வகிக்கவில்லை என்பதேயாகும். இந்தவிதத்தில் இது முற்றிலும் புத்திசாலித்தனமற்றதாக இல்லாது போனாலும் சில அகநிலைக் காரணிகளின் பிரசன்னத்தினால் அல்லது பிரசன்னமின்மையால் வரலாறு எப்படி மாற்றம் கண்டிருக்கும் என்பதைப் பற்றி தீர்ப்பு வழங்குவது பெரிதும் கஷ்டமானது.
ரூஷ்யப் புரட்சிக்கான வரலாற்று பதிலீடுகளைக் கணக்கில் எடுத்து நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவுரையில் இந்த வகையிலான வாதம் ஸ்டாலினிசத்துக்கு அடியோடு மன்னிப்புக் கோருவதாக மாறுகின்றது. லெனின் ஜேர்மனியில் புரட்சி நிச்சயம் எனவும் சோவியத் யூனியனை ஆபத்தில் இருந்து மீட்கவரும் நம்பிக்கையுடனும் 1917ல் போல்ஷிவிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதாக ஹொப்ஸ்போம் வாதிடுகின்றார். இது ஒரு நாசகரமான அர்சியல் தப்புக் கணக்காகியது.எப்படி இருந்த போதிலும் லெனின் இதற்கு முரணான விதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். உலக யுத்தத்தின் முடிவில் ஒரு ஜேர்மன் புரட்சிக்கான 1ாரது ரமான எதிர்பார்ப்புக்கள் இருக்கவில்லை. 1918ல் ஜேர்மன் தொழிலாளர் வர்க்கம் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்ற வாதத்தை ஹொப்ஸ்போம் ஒரு கட்டுக்கதை எனத் தள்ளுபடி செய்கின்றார். "ஒரு ஜேர்மன் அக்டோபர் புரட்சியோ அல்லது அதை ஒத்த ஒன்றோ தீர்க்கமானதாக இருக்கவில்லை. ஆதலால் காட்டிக் கொடுப்பதற்கு எதுவும் இருக்கவில்லை."6
ஒரு ஜேர்மன் புரட்சிக்கான சாத்தியங்கள் பற்றிய ஹொப்ஸ் போமின் மதிப்பீட்டை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. அவர் பெரிதும் தப்பு என்பதைத் தவிர நான் ஒன்றும் கூறவில்லை. அவரின் தவறு, நான் மேலே சுட்டிக்காட்டிய அகநிலை, புறநிலைக் காரணிகளுக்கு இடையேயான உறவுகள் தொடர்பான அதே உயிராபத்தான கருத்துப்பாட்டில் இருந்தே ஊற்று எடுக்கின்றது. அவர் நிகழ்வுகளின் போக்கில் அகநிலை அரசியலின் தாக்கத்தைப் புறக்கணிக்கின்றார். நான் இந்த விடயத்துக்கு திரும்பி வருவேன். ஆனால் முதலில் நான் ஹொப்ஸ்போமின் வாதத்தை முடித்து வைக்கின்ற பந்தியைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவரின் ஒரு பக்கச் சார்பான வாதம் எந்த விதத்தில் ஸ்டாலினிசத்துக்கான ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக திரும்புகின்றதைச் சுட்டிக் காட்டுகின்றது. 1917 அக்டோபரின் ஒரு ஜேர்மன் பதிப்புக்கு ஒரு வாய்ப்பு இராததால் "ரூஷ்யப் புரட்சி சோசலிசத்தை ஒரு பின்தங்கியதும் அடியோடு அழிந்து போனதுமான நாட்டில் கட்டியெழுப்பும் தலைவிதிக்கு
Page 9
4
உள்ளானது."7 இந்த விதத்தில் "போல்ஷிவிக்குகள் 1917ல் அரசியல் அதிகாரத்தை தெட்டத் தெளிவாக யதார்த்தமற்ற ஒரு சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்துடன்"8 கைப்பற்றி இருந்தனர். இங்கு ஹொப்ஸ்போம் முரண்பட்டுக் கொள்கின்றார். அகநிலைக் காரணியின் பரிரமாண் டமானதும் தீர் க்கமானதுமான பாத்திரத்தை அங்கீகரிக்கின்றார். அதாவது, அவர் லெனினின் தவறுக்கு பிரமாண்டமானதும் நாசம் நிறைந்ததுமான வரலாற்று விளைவுகளை ஒதுக்குகின்றார். எந்த விதத்திலும் லெனினின் நம்பிக்கை எவ்வளவுதான் நேர்மையானதாகவும் அவரின் நோக்கம் எவ்வளவுதான் மதிப்புக்குரியதாகவும் இருந்தாலும் சூதாடி தோற்றுப் போனார்.தனிநாட்டில் சோசலிசம் அதன் பெறுபேறாகியது. "வரலாறு என்ன நடந்தது என்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்" என ஹொப்ஸ்போம் பிரகடனம் செய்கின்றார். "ஏனையவை ஊகங்கள்."9
"என்ன நடந்தது" என்பதற்கு ஒரு இலகுவான கருத்துப்பாடு -செய்திப் பத்திரிகைகளில் அன்று அறிக்கை செய்யப்பட்டதற்கு மேலாக ஒன்றும் கொள்ளாத இடத்து- உண்மையில் வரலாற்றுப் போக்கின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. வரலாறு பொதுவில் "என்ன நடந்தது" என்பதுடன் மட்டும் அக்கறைப்பட்டுக் கொள்ள முடியாது. ஆனால் ஏன் ஒன்றோ அல்லது மற்றொன்றோ நடந்தது அல்லது நடக்கவில்லை அத்துடன் என்ன இடம் பெற்றிருக்கலாம் என்பதையிட்டும் அக்கறைப்பட வேண்டும். இது பெரிதும் முக்கியமானது. ஒருவர் ஒரு நிகழ்வை கணிக்கும்போது -அதாவது,
"என்ன நடந்தது "-ஒருவர் போக்கினையும் அடிப்படையையும் கணக்கில் எடுக்கும்படி தள்ளப்படுகின்றார். ஆம், 1924ல் சோவியத் யூனியன் "தனிநாட்டில் சோசலிசம் "என்ற கொள்கையை
இயற்றியது. அது "நடந்தது". ஆனால் "தனிநாட்டில் சோசலிசத்துக்கு "எதிரான எதிர்ப்பும் கூடவே "நடைபெற்றது." ஹொப்ஸ்போம் ஒரு வார்த்தை தன்னும் கூறாத ஸ்டாலினிச அதிகாரத்துவத்துக்கும் இடதுசாரி எதிர்க் கட்சிக்கும் இடையேயான மோதுதலும் "நடைபெற்றது." சோவியத் யூனியனை ஒரு வேறுபட்ட கொள்கைத் திசையில் இட்டுச் செல்ல முயன்ற எதிர்க்கட்சி சக்திகளை ஹொப்ஸ்போம் முக்கியம் இல்லாதவையாக வேண்டும் என்றே விலக்குகின்றார் அல்லது தள்ளுபடி செய்கின்றார். என்ன "நடைபெற்றது" என்பதற்கான அவரின் வரைவிலக்கணம் ஒரு பக் க சி சார் பானதாகவும் ஒரு பரிமாணத் தினதாகவும் பயன்பாட்டுவாதத்தினையும் ஒரு மிகவும் சிக்கலான வரலாற்று யதார்த்தத்தினை கடைகெட்ட முறையில் இலகுபடுத்துவதையும் தவிர வேறொன்றும் அல்ல. ஹொப்ஸ்போமைப் பொறுத்தவரையில் "என்ன நடைபெற்றது" என்பதில் இருந்து தொடங்குவது என்பது "யார் வென்றது" என்பதுடன் தொடங்கி முடிப்பதையே கருதுகின்றது.
"என்ன நடந்தது" என்பதில் தொடங்கி முன்னேறுவதைத்
தீர்க்கமாக ஆய்வு செய்யுமிடத்து ஒரு பரந்த துறையாகும். வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறும் பெரிதும் மனச்சாட்சியுள்ள வரலாறு உரைப்போன் கூட "என்ன நடந்தது "என்பதன் ஒரு சிறிய பங்குடனேயே கையாள முடியும். வரலாற்று ஆய்வும் எழுத்தும் எப்போதும் ஒரு கணிசமான அளவு தெரிவினையும் சிறப்பாய்வையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஆனால் இந்தத் தெரிவும் சிறப்பாய்வும் குறைந்த பட்சம் வரலாற்றுப் போக்குக்கேனும் உண்மையானதாக இருக்க வேண்டும் . இது வரலாற்றுப் போக்கு நெய்யப்பட்டுள்ள பிரிதான நூல்களை ஒன்று சேர்க்க வேண்டும். எவ்வாறெனினும் "என்ன நடந்தது" என்பதை நடைமுறைக் கிட்டவர்களால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளாலும், அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைகளாலும் வரைவிலக்கணம் செய்யப்பட முடியும். எவ்வாறெனினும் ட்ரொட்ஸ்கியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் கம்யூனிஸ்ட் கட்சியினால் நிராகரிக்கப்பட்டு , அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டதும் நிஜ வரலாற்று அக்கறைக்கு உரித்தில்லாதனவாகிப் போகிவிட்டன என்ற விதத்தில் ஹொப்ஸ்போம் முன்னேறிச் செல்கின்றார்.
ஒருவர் ஒரு கல்வியாளனின் நேர்த்தியான வசனநடைக்கு கீழே தள்ளப்படின் ஒருவர் வரலாற்றை "இறைச்சியும் உருளைக் கிழங்கும்" கோணத்தில் இருந்து அணுகத் தள்ளப்படுகின்றார். ஹொப்ஸ்போம் எமக்குக் கூறுவது , "அவர் அங்கனம் இல்லாது போயிருந்தால் என்ன நடந்திருக்கும் எனக் கணக்கிடுவதில் உண்மையில் அர்த்தம் இல்லை " என்கின்றார். என்ன நடந்தது என்பதற்கு அப்பால் செல்வதானது வரலாற்றுப் போக்கினை அதன் ஸ்துலமான சாத்தியத்தின் முழுப் பரப்பில் இருந்து ஆய்வு செய்வது- அதாவது, வரலாற்று யதார்த்தத்தில் இருந்து விடுபட்டுச் செல்வதும் ஆதாரமற்ற முடிவுகளை நோக்கிப் பறப்பதும் சுயதிருப்தி சலனங்களுக்கும் செல்லும் -- ஊகங்களேயாகும் என்ன நடைபெறவில்லை என்பதையிட்டு நாம் எதையும் அறிய முடியாதவிடத்தே "என்ன நடந்தது" என்பதையிட்டு நாம் பேச முடியும்.
இந்த இழிவான பொது உணர்வு அணுகுமுறை மேலே கணக்கில் கொள்ளப்பட்ட வரலாற்று போக்கினை ஒற்றை அளவு இழிவுபடுத்தல் வகையை அடிப்படையாகக் கொண்டதாகும். வரலாற்றுப் போக்கில் முரண்பட்டதும் மோதிக் கொள்வதுமான மூலகங்களை "என்ன நடந்தது "என்பதுடன் சேர்த்துக்கொண்டால் என்ன நடந்தது என்பதற்கும் என்ன நடைபெறவில்லை என்பதற்கும் இடையேயான இடைவெளி ஹொப்ஸ்போமின் ஊகத்துக்கு இடமான ஆதாளபாதாளம் அல்ல. எல்லாவற்றையும் விட வரலாற்றுப் போக்கினை முழுமையாகவும் பூரணமாகவும் ஆய்வு செய்வதானது குறைந்தபட்சம் என்ன "நடைபெறவில்லை" என்பதன் ஒரு பகுதியையாவது "என்ன நடைபெற்றிருக்கும்" என மாறச் செய்யும். தீர்மானம் செய்வோர் இருந்து கொண்டுள்ள பதிலீடுகளை
Page 10
16
ஆய்வுசெய்து கணக்கில் கொள்ள வேண்டியது, "என்ன நடந்திருக்கும்" என்பது வெறும் ஊகங்கள் அல்ல என்பதேயாகும். வரலாற்றைக் கணக்கில் கொள்ளும்போது என்ன நடைபெற்று இருக்கும்? என்பதை நாம் விலக்கிவிடின் வரலாற்றை ஆய்வு செய்வதில் உண்மையில் பயன் இல்லை. எவ்வாறெனினும் வரலாறு எமக்கு எதையோ போதிக்கின்றது. w
20ம் நூற்றாண்டின் . முதல் அரைப்பகுதியில் அனைத்துலக முதலாளி வர்க்கம் அனுபவித்தது ஒருசில பேராபத்துக்கள் அல்ல. இந்த அநுபவங்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து சில கற்றுக் கொள்ளப்பட்டன. ஜோன் மேனாட் கீன்ஸ் (John Maynard Keynes) முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்த சமாதான உடன்படிக்கையின் கடும் விமர்சகராக விளங்கினார். வார்ஷெயில்ஸில் இருந்து பெருக்கெடுத்த பேரழிவுகளினால் தூய்மைப்படுத்தப்பட்ட முதலாளி வர்க்கம் கீன்சின் கருத்துக்களை இரண்டாம் உலக யுத்தத்துக்கு பிந்திய கொள்கைகளின் அடிப்படையாகக் கொண்டது.
வரலாற்று பதிலீடுகளின் கணிப்புக்கள் - அதாவது "கடைப்பிடிக்காத பாதை" -ஒரு எல்லைக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஊகங்களாகுவது உண்மைதான். அத்தோடு ஒரு விதிமுறையியல் நிலைப்பாட்டில் இருந்து பதிலிட்டுக் கணிப்புக்கள் உண்மையில் இடம்பெற்றதைக் காட்டிலும் பெரிதும் வேறுபட்ட உருவில் வரலாற்றுப் பரிணாமங்கள் இடம்பெற உள்ள சாத்தியங்களைப் பெருமளவில் குறைக்கும் புறநிலை காரணிகளை புறக்கணிப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ பதிலிட்டைக் கணிக்கையில் இடம்பெற வேண்டியதாக தெரிகின்றது. வரலாற்றை ஆய்வு செய்கையில் அத்தகைய நியாயமற்ற ஊகத்துக்கிடமான அணுகுமுறைகளையிட்டு மார்க்சிஸ்டுகள் தெளிவான செல்லுபடியான விமர்சனங்கள் செய்துள்ளனர்.
ஆனால் ஹொப் ஸ் போம் செய்வது இத்தகைய எச்சரிக்கையானதும் செல்லுபடியானதுமான எதிர்ப்புக்கள் அல்ல. மாறாக ரூஷ்யப் புரட்சியையும் சோவியத் யூனியனையும் பற்றிய வரலாற்றுக் கணிப்பில் அவர் அளப்பரிய திடகாத்திரமும் அளவுகடந்த நோக்கமும் உயிராபத்தான அணுகுமுறையையும் கையாள்கின்றார்."என்ன நடந்தது" என்பதற்கு நடைபெறக் கூடியது போல் தோன்றும் வேறு பதிலீடுகள் இருக்கவில்லை. இயற்கையினை சமூகப் புரட்சிப் போக்கின் ஒரு இலகுபடுத்தல் இனங்காணலின் அடிப்படையில் இந்த அணுகுமுறை நியாயப்படுத்தப்படுகின்றது. "ஆனால் இந்தக் கட்டத்தில் நாம் ஊகங்களை ஒரு புறம் தள்ளிவிட்டு, புரட்சியில் ஒரு ரூஷ்யாவின் ஒரு நிஜ நிலைமைக்குத் திரும்ப வேண்டும். அடிமட்டத்தில் மாபெரும் வெகுஜன புரட்சிகள் வெடித்துக் கிளம்புவது -வரலாற்றில் அத்தகைய ஒரு புரட்சிக்கு 1917ன் ரூஷ்யா நிச்சயமாக -மிகவும் அச்சுறுத்துகின்ற ஒரு
7
உதாரணமாகும்- ஒரு அர்த்தத்தில் 'இயற்கைத் தோற்றப்பாடாகும்' அவை பூமியதிர்ச்சியையும் இராட்சத வெள்ளப் பெருக்கையும் போல்- சிறப்பாக ரூஷ்யாவில் போல்- அரசின் மேற்கட்டுமானத்தையும் தேசிய நிறுவனங்களையும் அடியோடு சிதறுண்டு போகச் செய்தது.அவை ஒரு பிரமாண்டமான அளவுக்கு கட்டுப்படுத்த முடியாதவையாக விளங்கின." (பக்கம்-249)
ஒருபுறத்தில் பூமியதிர்ச்சிக்கும் வெள்ளப் பெருக்குகளுக்கும் மறுபுறத்தில் புரட்சிகளுக்கும் இடையே ஒரு ஆழமான வேறுபாடு இருந்து கொண்டுள்ளது. நிலத்தின் அமைப்புத் தகட்டினதோ அல்லது ஆறுகளதோ இயக்கம் சிந்தனையை உள்ளடக்கி கொண்டது அல்ல. நிலம் உருண்டோட தீர்மானிப்பதும் இல்லை ஆறு அதன் கரைகளை கடந்து புரண்டு ஓடுவதன் பெறுபேறுகளை எடைபோடுவதும் இல்லை. எவ்வாறெனினும் சமூகப் புரட்சிகளில் நனவு ஒரு பிரமாண்டமான காரணியாக உள்ளது. ஒன்றில் அல்லது இன்னொரு மட்டத்தில் புரட்சி சிந்தனை படைத்த மனித இனத்தின் நடவடிக்கைகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. தனது முழு வாழ்க்கையையும் அதன் தயாரிப்புக்காக அர்ப்பணம் செய்து கொண்டுள்ள புரட்சியாளன் தொடக்கம் வாழ்க்கை நிலைமைகள் சகிக்க முடியாதனதாகிவிட்டதால் இன்றைய அமைப்பு முறையை எதிர்த்துப் போராட வேண்டும் என தீர்மானம் செய்துள்ள ஒரு சாதாரண தொழிலாளி வரை சமூகப் புரட்சி ஒரு நனவான நடவடிக்கையாக இருந்து கொண்டுள்ளது."துாயமான" முறையில் புறநிலை எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் முதலிய சக்திகள் சமூக வெடிப்புக்கு அடிப்படையாக இருப்பவை-சமுதாயத்தில் "தூயபுறநிலை" என்றொரு தோற்றப்பாடு கிடையாது. அந்த அர்த்தத்தில் ஒவ்வொரு புறநிலைப் போக்கும் மனித இனத்தின் பிரஜைகள் ஊடாக முன்னோக்கிச் செல்கின்றது. ஒரு புரட்சிகர நிலைமையானது புறநிலை உத்வேகங்கள் மனித மனத்துக்கு வழியைத் தேடிக் கொண்டுள்ளதோடு கணிசமான அளவு சிக்கலான வடிவங்களிலான அரசியல் சிந்தனைகளாகவும் மாற்றிக் கொண்டுள்ளது. இவ்வாறாக சில வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் செல்லுபடியானதாக இருக்கையில் சமூகப் புரட்சிகளை பல்வேறு நாசகரமான இயற்கைத் தோற்றப்பாட்டுடன் ஒப்பிடுவது மிகவும் தவறான வகை யரில் கையாளப் படும் ஒரு வகை உருவணியாக(Metaphor) உள்ளது. இயற்கையின் செயற்பாட்டுக்கும் மனிதனின் செயற்பாட்டுக்கும் இடையேயான முக்கியமான வேறுபாடுகள் குறிப்பிடப்படாது போனால் உருவணியானது (Metaphor) வரலாற்றுப் போக்குகளைத் திகைப்படையச் செய்யவும் திரிக்கவும் பொய்யாக்கவும் மட்டுமே சேவை செய்கின்றது.
இந்த அத்தியாவசியமான வேறுபாட்டைப் புறக்கணித்துவிட்டு ஹொப்ஸ்போம் கீழ்க்கண்ட அசாதாரணமான தடையுத்தரவை
Page 11
8 A.
விடுக்கின்றார்:
"நாம் ரூஷ்யப் புரட்சியை போல்ஷிவிக்குகளதோ அல்லது வேறு எவரினது இலக்குகள், நோக்கங்களில் அவர்களின் நீண்ட கால மூலோபாயங்களில் ஏனைய மார்க்சிச விமர்சகர்களது
வேண்டும்."
ஒருவர் ஹொப்ஸ்போமின் பணிப்புக்களை எற்றுக்கொள்ள வேண்டுமானால் ரூஷ்யப் புரட்சியைப் பற்றிய ஒரு முரண்பாடற்ற வரலாற்றை வழங்கவோ அல்லது அதைப் புரிந்து கொள்ளவோ இயலாது இருக்கும். இது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான வரலாற்று அபிவிருத்தியின் அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளவற்றை புரிந்து கொள்ளும் அவரின் இயலாமையை அம்பலப்படுத்துகின்றது: வரலாற்று நிர்மானத்தில் நனவினது முன்னொரு போதும் இருந்திராததும் அசாதாரணமானதுமான பாத்திரம் பரந்த சோசலிசக் கட்சிகளின் தோற்றம் ஒரு புதிய வரலாற்றுத் தோற்றப்பாட்டை வெளிக்காட்டின. அது இரண்டு 11 ஸ் பரம் உறவு கொண்ட போக்குக் களின் பரஸ்பரர் நடவடிக்கைகளின் ஆள1ாக தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் மட்டுமே சாத்தியமாகின.
19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் கூட சோசலிசப் புரட்சி வேலைத் திட்டம் அர சரியல் கட சிகளின் பதாகைகளில் பொறிக்கப்பட்டுவிட்டது. சமூக அபிவிருத்தியின் புறநிலைவிதிகளின் பார்வையினால் மார்க்சினாலும் எங்கேல்சினாலும் புத்திஜீவி ரீதியில் ஆயுதபாணியாக்கப்பட்டு புதிய சோசலிசக் கட்சிகளின் தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கு தயார் செய்வதில் இறங்கினர். இதில் இது ஒரு முன்னணியானதும் தீர்க்கமானதுமான பாத்திரத்தை வகிக்கத் தள்ளப்பட்டது.
சமூக அபிவிருத்தி விதியினுள் ஒரு விஞ்ஞான அடிப்படையிலான நோக்கினை ஈட்டிக் கொண்டு- அதன் மூலம் இதுவரை காலமும் இருந்திருக்க முடியாத அளவுக்கு சமகாலத்துவ அடிப்படையில் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் அளவுக்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவமும் விளைவுகளும் விரிவடைந்தன. வரலாற்றுப் போக்கில் அரசியல் அமைப்புக்களின் ஆய்வுகளும் முன்நோக்குகளும் மூலோபாயங்களும் வேலைத்திட்டங்களும் முன்னொருபோதும் இல்லாத பாத்திரத்தினை வகித்தன. வரலாறு சும்மா "இடம்பெறுவது" நின்று போயிற்று. இதுவரை காலமும் இயலாததாக இருந்து வந்தது எதிர்பார்க்கப்பட்டது. தயார் செய்யப்பட்டது . நனவான முறையில் நெறிப்படுத்தப்பட்டது. இனங்காணப்பட்டு ஆய்வு செய்யப்பட் சமூகபொருளாதார முரண்பாடுகளின் விளைவுகளாக புரட்சி. எதிர்பார்க்கப்பட்டது. 19ம் நூற்றாண்டுகளின் கடைசி ஆண்டுகளில் அல்லது 20ம் நூற்றாண்டின் முதலாண்டுகளில் அரசியல் நடவடிக்கைகளில் காலடி வைத்த மார்க்சிஸ்ட் தலைமுறையினர்
9
தமது சொந்த அல்லது எதிரிகளின் அரசியல் வேலைகளை புரட்சிக்கான இறுதி முக்கியத்துவத்தின் அர்த்தத்தில் உள்ளிர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் மட்டுமே வேறுபட்ட கொள்கைகள் ஆற்றும் வர்க்க நலன்களை அம்பலப்படுத்தவும் அரசியல் போக்குக்களின் "வர்க்கத் தன்மையை"இனங்காணவும் மார்க்சிச வாதங்கள் கொண்டுள்ள காலால் நசுக்கும் அத்தகைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். -
ஹொப்ஸ்போம் எமக்குச் சொல்வதை மீண்டும் ஒரு தடவை கவனத்தில் எடுப் போம் : "நாம் ரூஷ் யப் புரட்சியை போல்ஷிவிக்குகளதோ அல்லது வேறு எவரினது இலக்குகள் நோக்கங்களில் அவர்களின் நீண்டகால மூலோபாயங்களில் ஏனைய மார்க்சிச விமர்சகர்களது நடவடிக்கைகளின் அர்த்தத்திலும் சிந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்."
அத்தோடு ரூஷ்யப் புரட்சியின் அபிவிருத்தியானது 1917க்கு முன்னைய வருடங்களில் ரூஷ்யாவில் எதோ ஒரு விதத்தில் சுறுசுறுப்பாக இருந்த சகல அரசியல் கட்சிகளதும் போக்குக்களதும் இலக்குகள், நோக்குக்கள், மூலோபாயங்கள், விமர்சனங்களது ஆழமானதும் துரதிருஷ்டி மிக்கதுமான !றநிலை முக்கியத்துவத்தை அம்பலமாக்கின. 1917 ஏப்பிரலுக்கும் அக்டோபருக்கும் இடையே முக்கிய அரசியல் நடிகர்கள் செய்தது என்ன? தீர்க்கமான போராட்டங்களில் அவர்கள் அணிதிரண்டு நின்றது எங்கே Pஎன்பது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற மாபெரும் கோட்பாட்டு, அரசியல் போராட்டங்களில் பிரதிபலித்தது.
சுண் டெ லிகளதும் மனிதர் களதும் திட்டங் களை பொருத்தமற்றதாக்கிய புரட்சியை ஒரு கட்டுப்படுத்த முடியாத ஒரு பேராபத்து என வருணிப்பது மேலெழுந்த வாரியாக நியாயம் போல் தோன் றலாம் . ஆனால் நனவானது அதிகம் கணக்கெடுக்கப்படாவிட்டால் கோட்பாட்டுத் துரதிருஷ்டி க்கு ஒரு புரட்சிகர சகாப்தத்தின் குழப்பங்க்ளுக்கிடையே சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படாவிட்டால் ஒருவர் எப்படி 1917 புரட்சியின் போதும் அதற்கு முன்னரும் சிறப்பாக அதன் பின்னரும் லெனின்-ட்ரொட்ஸ்கி இருவரதும் பணிகளை மதிப்பீடு செய்ய முடியும்.?
1905 புரட்சியின் பின்னர் ரூஷ்ய சமூக ஜனநாயகத்தின் பல்வேறு கன்னைகள் தொழிலாளர் வர்க்கத்தின் பணிகளை அந்தப் பாரிய வெடிப்புக்களின் அனுபவங்களின் வெளிச்சத்தில் வரையறுக்க முயன்றன. அவர்கள் வழங்கிய பதில்கள் தொடர்ந்து வந்த நிகழ்வுகளில் அவர்களின் சொந்தப் பாத்திரங்களை நிர்ணயிப்பதற்கு ம்ட்டுமல்லாது ரூஷ்யப் புரட்சியின் எதிர்காலப் பாதையையும் நிர்ணயிப்பதாக விளங்கியது. "லெனின் இலக்காகக் கொண்டதும்இறுதி ஆய்வுகளில் கட்சிக்குள் லெனின் எடுத்த பாதையும் - தொடர் பற்றதாக விளங் கியது." என ஹொப்ஸ் போம் வலியுறுத்துகின்றார். (247)
Page 12
20
இந்தக் கோரிக்கை லெனினின் ஏப்பிரல் ஆய்வுகளின்-(April Thesis)
அடிப்படையில் போல்ஷிவிக் கட்சி 1917 இளவேனிற் காலத்தில் மறு தகவமைவு செய்யப்படாமல் - அதாவது, லியொன் ட்ரொட்ஸ் கியினால் முன்னர் உருவாக்கப்பட்ட மூலோபாயப் போக்கினை கடைப்பிடித்தமை- போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியாது என்ற சாதாரண உண்மையால் பொய்யாக்கப்படுகின்றது. புரட்சிகள் உண்மையில் பலம் வாய்ந்த நிகழ்வுகள்; ஆனால் கொள்கையும் வேலைத்திட்டமும் -நனவினது உற்பத்திகள் - அவற்றினுள் ஒரு பிரமாண்டமானதும் சில நிலைமைகளின் கீழ் தீர்க்கமானதுமான பாத்திரத்தை வகிக்கின்றது. ஹொப்ஸ்போம் புரட்சிகரப் போக்கில் நனவினது பாத்திரத்தைமறுக்கும் புள்ளிவரை குறைக்க முயற்சிக்கின்றார்.லெனின் "நாளாந்தம் உடனடி உயிர்பிழைக்கும் உடனடி பேரழிவில் இருந்து காப்பதற்கும் இடையே அவசியமான தீர்மானங்களை எடுப்பதற்கும் அப்பால் மூலோபாயமோ அல்லது முன்நோக்கோ கொண்டிருக்கவில்லை. புரட்சிகரத் தீர்மானங்களின் சாத்தியமான நீண்டகால விளைவுகளை கருத்தில் கொள்ள முடியும். அவை இப்போது எடுக்கப்பட வேண்டும் இல்லாது போனால் புரட்சிக்கு ஒரு முடிவு இருக்கும்; கருத்தில் கொள்ள வேறு விளைவுகள் இருக்க முடியாது.
நிகழ்வுகள் அவை தோன்றிய விதத்திலேயே பயன்பாட்டுவாத ரீதியிலும் உள்ளுணர்வு அடிப்படையிலும் பிரதிபலிக்கும் வகையில் லெனினை ஒரு சாதாரண. அரசியல்வாதியாக இங்ங்னம் வருணிப்பதும் ஹொப்ஸ்போம் முன்வைத்த அர்த்தத்தில் கூட அர்த்தம் இல்லாததாக்கி விடுகின்றது. புரட்சியைக் காப்பதும் கூட ஒரு மூலோபாய கருத்துப்பாடு. அது வெற்றிகரமான முறையில் யதார்த்தமாகுவது ரூஷ்ய சமுதாயத்தின் வர்க்க அடிப்படையினுள்ளும் சலனத்தின் உள்ளும்- செய்யும் ஒரு நனவான பார்வையின் மீதே தங்கியுள்ளது. லெனினும் ட்ரொட்ஸ்கியும் உண்மையில் புரட்சியின் போதும் உள்நாட்டு யுத்தத்தின் போதும் மிகவும் சுறுசுறுப்பான மனிதர்களாக விளங்கினர். ஆனால் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் எழுத்துக்களை ஆய்வு செய்கையில எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரசுகளுக்காக ட்ரொட்ஸ்கி தயார் செய்த மாபெரும் விஞ்ஞாபனமும் பேச்சுக்களும்அவர்களின் மூலோபாய பார்வையின் ஆழம் அகலத்தையிட்டு மேலும் ஆச்சரியத்தை துரண்டுகின்றது. புரட்சியினதும் உள்நாட்டு யுத்தத்தினதும் நீர்ச்சுழியில் தொழிற்பட்ட சகல அரசியல் சக்திகளினுள்ளும் அசாதாரணமான கஷ்டங்களுக்கிடையே ஒரு பரந்ததும் கலாச்சார ரீதியில் பல்வேறுபட்டதுமான இலட்சோப இலட்சம் மக்களை ஐக்கியப்படுத்தத் தக்க ஒரு மூலோபாயப். பாதையை உருவாக்கும் பதாகையை வழங்கப் போல்ஷிவிக்குகளால் மட்டுமே முடிந்தது. கார் (B.H. Carr) பொருத்தமான முறையில்
2
குறிப்பிட்டது போல் உள்நாட்டு யுத்தத்தில் போல்ஷிவிக்குகளின் வெற்றி, அழிவுப் பண்புக்கு மாறாக லெனினின் மேதாவித்தனம் ஆழ்ந்த சிருஷ்டித்தனத்தில் தங்கி இருந்தது அற்பசொற்பம் அல்ல. அரசியல் நனவினை முக்கியத்துவம் இல்லாத ஒரு மூலகமாக்கும் ஹொப்ஸ்போமின் போக்கானது போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றியது எப்படிP உள்நாட்டு ய்த்தத்தில் அவர்கள் வெற்றி கொண்டது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் செய்கின்றது. அரசியல் கட்சிகள் வெறுமனே வரலாற்றின் எரிமலை வெடிப் பரின் கருணையில் இருந்து கொண்டிருப்பரின் - போல்ஷிவிக்குகளின் வெற்றியானது. உங்களின் கருத்தின்படிஅவர்களின் அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது. அல்லது அவர்களின் எதிரியின் துர்அதிர்ஷ்டத்தினால் எற்பட் டதாகும். V−
புரட்சிக்கு முன்னைய காலப் பகுதிக்கு ஹொப்ஸ் போமின் நிலைப்பாட்டை பிரயோகித்தால் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல் ஸ்டாலினிசத்துக்கான ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது."கட்டுப்படுத்தமுடியாத வரலாற்றுச் சக்திகளின் தாக்குதலை அவஸ் தையான பதில் நடவடிக் கையோடு எதிர் கொண்ட போல் ஷிவிக்குகளின் தலை விதி 1921ல்ே யே தீர்மானம் செய்யப்பட்டுவிட்டது." ஹொப்ஸ்போம் எழுதுவதுபோல் "இத்தடவை இதனது எதிர்கால பாதை கூடவோ அல்லது குறையவே தீர்மானிக்கப்பட்டது. "10 அதே தொகுதியில் வெளியாகியுள்ள மற்றொரு கட்டுரையில் ஹொப்ஸ்போம் இந்தக் கருத்தை இன்னும் நன்கு அழுத்தமாக வெளியிடுகின்றார்: " துர்அதிஸ்டவசமாக நான் ஒரு யதார்த்தமான ஜோசியத்தை நினைத்துப் பார்க்க முடியாது. அது நிசமாக வந்துள்ளதை விட பெரிதும் வேறுபட்ட விதத்தில் சோவியத் யூனியனின் நீண்டகால எதிர்காலத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கும்."11
இந்த விதத்தில் சோவியத் வரலாறு மிகவும் கொடூரம் குறைவான திசையில் வளர்ச்சி காணக் கூடியதாக இருந்த போதிலும் வரலாற்று போக்கின் பெறுபேறானது அடிப்படையில் 1921ல் தீர்மானிக்கப்பட்டது. அனாவசியமான வன்முறையுடன் என்றாலும் கூட ஸ்டாலின் சாதாரணமாக செயற்பட்டது அபிவிருத்தியின் முன்னைய பாதை வேண்டிய விதத்திலாகும்.
ஹொப்ஸ்போம் எமக்கு இங்கு முன்வைப்பது சாதாரண பிற்போக்கு ஆய்வின் "இடது" மாற்றமாகும்: ஸ்டாலினிசத்துக்கு மாற்று இருந்து இருக்க முடியாது. ஸ்டாலினிசத்தின் சர்வாதிகாரம் மார்க்சிசத்தின் தவிர்க்கமுடியாத பெறுபேறு என்பதை ஹொப்ஸ்போம் உண்மையில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவர் ஸ்டாலினிசம் தவிர்க்க முடியாதவிதத்திலும் உறுதியான முறையிலும் தோன்றியது. 1917க்குப் பின்னர் சோவியத் யூனியன் முகம் கொடுத்த புறநிலை நிலைமைகளில் இருந்தாகும் என்கிறார். உண்மையில் நடைபெற்றது என்ன என்பதைப் பற்றிப் பேசுவது முழு ஊகங்களில்
Page 13
22
ஈடுபடுவதாகும்: புறநிலை நிலைமைகள் ஓர் பதிலீட்டை அனுமதிக் கவரில் லை ஆட்சியாளர் களின் கொள் கைகள் இதைக்காட்டிலும் கொடூரத்தில் குறைந்ததாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த வேறுபாடு அளவில் அல்லாது தன்மையில் அல்ல. இந்த மதிப்பீட்டுடனான எமது வேறுபாடுகள் என்ன? ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எப்போதும் போல்ஷிவிக் கட்சியினதும் சோவியத் அரசினதும் ஸ்டாலினிச சீரழிவானது இறுதி ஆய்வில் அடிப்படையில் ரூஷ்யாவின் வரலாற்று பின்னடைவு, உலக யுத்தம், புரட்சி, உள்நாட்டு யுத்தம் மூலம் 7 ஆண்டுகளாக இடைவிடாது இடம்பெற்ற பொருளாதார அழிவுகளையும் இறுதியாக முதலாவது உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் -சிறப்பாக ஜேர்மனியில் தொழிலாளர் வர்க்கம் கண்ட தோல்வியின் பெறுபேறாக இடம்பெற்ற சோவியத் அரசின் நீண்டுவந்த தனிமைப்படுத்தல்கள் ஆகியவற்றின் பாதகமான புறநிலை நிலைமைகளின் சிருஷ்டியாகும்.
எவ்வாறெனினும் ஸ்டாலினிசததின் புறநிலை சட நிலைமையை அங்கீகரிப்பதற்கும் அந்நிலைமைகளின் அடிப்படையில் ஏற்படக் கூடியது ஒரு அரசியல் பெறுபேறு மட்டுமேயாகும்- சோவியத் யூனியனின் மாற்ற முடியாத அதிகாரத்துவ சீரழிவும் 1991ல் அதன் இறுதி வீழ்ச்சியும்- ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கும் இடையே ஈடுசெய்ய முடியாத வேறு பாடு உள்ளது. சோவியத் வரலாறு பற்றிய இந்தக் கருத்துப்பாட்டில் ஒரு சிறிய அம்சம் தொலைந்துவிட்டது: அதாவது , அரசியலினதும் வேலைத் திட்டத்தினதும் பாத்திரமும் போக்குக்களின் போராட்டங்களது பாத்திரம், நனவின் பாத்தரம்- வரலாற்று போக்கினுள் கூடவோ அல்லது குறையவோ அரசியல் பார்வையுடன் தனியாட்களால் பெறப்பட்ட தீர்மானங்களின் முக்கியத்துவமும் அவர்கள் செய்ய எதிர்பார்த்தது என்ன என்பது பற்றியும் வரலாறு முற்றிலும் ஒரு வெறும் உயர் திடசங்கற்ப போக்காக பரிணாமம் செய்யப்பட்டுள்ளது: அனைத்தும் குருட்டு, கட்டுப்படுத்த முடியாத சக்திகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. வரலாறு, போல்ஷிவிக்குகளை ஆட்சிக்குக் கொணர்ந்தது. அதன் பின்னர் அவர்களை ஆட்சியில் இருந்து வெளியே தள்ளாது போனாலும் குறைந்தது முட்டுச் சந்துக்குள் தள்ளியது.
ஹொப்ஸ்போம் ஏற்கனவே எமக்கு கூறியிருப்பதாவது போல்ஷிவிக்குகளதோ அல்லது எவருடையதோ நோக்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் நீண்டகால மூலோபாயம், அவர்களின் நடைமுறை தொடர்பாக ஏனைய மார் க்சிச விமர்சனங்களின் மூலம் ரூஷ்யப் புரட்சியைப் பற்றி சிந்திப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்." இதன் உண்மை அர்த்தம் என்னவெனில் 1920பதுகளில் போல்ஷிவிக் கட்சியினுள் இடம்பெற்ற் அரசியல் போராட்டங்கள் தொடர்பாக எமது கவனத்தை எதுவிதத்திலும் செலுத்துவதில் அர்த்தம் இல்லை என்பதேயாகும்.
2.
ஹொப்ஸ்போமைப் பொறுத்தமட்டில் ஸ்டாலினிசத்தை பற்றி ட்ரொட்ஸ்கி எழுதியவைகள், சோவியத் கொள்கை சம்பந்தமாக, அவர் வெளியிட்ட விமர்சனங்கள், அவர் முன்வைத்த நீண்டகால மூலோபாயத்துக்கும் ஸ்டாலினிச தலைமைக்கும் இ ையேயான மோதுதல்கள் ஒரு சிறிதும் முக்கியத்துவம் இல்லாதவை. சோவியத் யூனரியனரின் தலைவரிதி ஏ ற் கன வே 1921 ல் கற் களில் பொறிக்கப்பட்டுவிட்டன. எவர் ஆட்சியில் இருந்தால் எண் 60
கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் செய்யக் கூடி யது எதுவும் இருக்கவில்லை. அது எந்தவித அடிப்படை மாற்றத்தையும் 1ற்படுத்தி இருக்கமாட்டது. இதற்கு மாறாக விவாதங்கள் செய்வது
ஊறிப்போல ட்ரெட்ஸ் கிஸ்டுகளின் பயனற்ற ஒரு ஆ கங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல என ஹொப்ஸ்போம் நிலைக்கின்றப் என ஒருவர் சந்தேகிக்கலாம். ஆதலால் ஹொப்ஸ்போமின் விரிவுரை ஸ்டாலினிசத்துக்கு 6 | Sh). If í öð இடதுசாரி எதிர்க் கட்சியினதும் ட்ரொட்ஸ் கியிதுைப் போராட்டப் பற்றி குறிப்பிடுவதை 凯A யோடு நிறுத்திக் கொண்டுள்ள1ை1) ஆச்சரியம் இல்லை. உண்மையில் 20ம் நூற்றாண்டின் வரலாற்றில் அக்டோபர் புரட்சியின் இடம் என்பதை அடி நாதமாகக் கொண் 1 300 பக்கங்களை க் கொண்ட கட்டுரைகளையு விரிவுரைகளையும் கொண் ஒரு ரு, லில் ட்ரொட்ஸ்கியின் பெயர் ஒரு தடவை மட்டுமே தோன்றுகின்றது.
மார்க்சிசம் ஸ்டாலினிசத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டுப் என ஹொப்ஸ்போம் நேரடியாகக் கூறவில்லை. ஆo011ல் அவர் வலியுறுத்துவது போல் அக்டோபர் புரட்சியின் ஒரே பெறுபேறு; ஸ்டாலினிச சர்வாதிகாரமானால் போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றியது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கும் வரலாற்று முன்னேற்றத்தின் காரணிக்குப் உதவுகின்றது எனக் கூறுவது பெரிதும் கஷ்டம். இவை அனைத்துக்குப் பின்னர் ஒருவருக்கு மிஞ்சுவது 1917 அக்டோபர் 7 ஒரு பயங்கரமான தவறு எனவும் லெனின் அல்லாது ஆயுதக் கிளர்ச்சியின் எதிர்ப்பாள11க விளங்கிய கமனேவ் போல்ஷிவிக் கட்சியின் கலந்துரையாடல்களில் வெற்றி கண்டிருப்பின் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கும் வரலாம். ஹொப் ஸ்போம் உறுதிய co முறையில் இதையே சைகை செய்கின்றார்.
ஹொப்ஸ்போமின் இந்த வாதம் அக்டோபர் புரட்சியின் அரசியல் நியாயப்படுத்தலை பிரச்சினைக்கு உள்ளாக்குவதோடு மட்டுமன்றி முழு சோசலிச திட்டத்தினதும் (Socialist Project) செல்லுபடியான தன்மையையும் ஒரு பெரிதும் இருண்டதும் பயங்கரமானதுமான முகிலோட்டத்தின் கீழ்க் கொணர்கின்றார்.
எவ்வாறெனினும் எந்த ஒரு சோசலிசப் புரட்சியும் அதன் இறுதி வெற்றிகள் உத்தரவாதம் செய்யப்பட்ட அந்தளவுபரிபூரணமான நிலைமைகளின் கீழ் இடம்பெறும் எனக் கற்பனை செய்வது கடினம். புரட்சி அதன் தன்மை காரணமாக இதுவரை
Page 14
24
காலமும் இருந்துவந்த அமைப்பின் பழைய அரசியல், பொருளாதார பொறிமுறையின் பிரமாண்டமான குழப்பமும் வீழ்ச்சியும் இல்லாமல் இடம்பெறும் என நினைத்தும் கூடப் பார்க்க முடியாது. அது குறைந்த பட்சம் கணிசமான அளவுமே-அறிந்திராத உலகுக்கு பாய்ச்சல் எடுப்பதாகும். புறநிலை நிலைமைகள் அபாயம் நிறைந்தவை. இந்த நிலைமையின் மீது ஆதிக்கம் செலுத்த அவற்றின் எதிர்கால அபிவிருத்தியின் மீது செல்வாக்கு செலுத்தவும் புரட்சிகர வேலைத்திட்டத்துக்கு அவற்றைக் கீழ்ப்படுத்தவும் தம்மால் முடியும் என நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் ஒரு அரசியல் அமைப்பினால் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு புரட்சிகர ஆயுதக் கிளர்ச்சிக்கு அழைப்பதானது பொறுப்பற்ற படுகொலைத்தனமானது இல்லாது போனாலும் அது அசட்டு தைரியம் மிக்க ஒன்றாகும். புரட்சிக் கட்சிகள் என்பது எவ்வளவுதான் பயங்கரமானதாக இருந்தாலும் வரலாற்றுப் போக்கினால் தரப்பட்ட எந்த ஒரு கட்டளையையும் நடைமுறைக்கிட நேரிடும் ஒரு துர்அதிஸ்டவசமான உபகரணங்களாகும். 1917 அக்டோபரும் அதன் பின்னைய படிப்பினைகளும் புரட்சிக் கட்சி தனித்து புறநிலை நிலைமைகளின் கருணையின் கீழ் இருந்துவருவன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு இருந்து வருவன என்பது எந்தளவுக்கு நியாயமானது
p
மேலும் ஹொப்ஸ்போமின் உயர்திடசங்கற்ப நிலைப்பாடானது ஸ்டாலினைப் பற்றிய மன்னிப்புக்கு காரணங்கள் வழங்குவதோடு மட்டுமன்றி- "புறநிலை நிலைமைகள் அவரை இதைச் செய்ய வைத்தன" என சமூக மாற்றத்தின் ஒரு கருவியாக புரட்சியை கையாண்டதற்கு எதிராகும் சாஸ்திரிய தாராண்மை முதலாளித்துவ ஜனநாயகவாதத்தையும் நிரூபிக்கின்றது.
ஆனால் ஹொப்ஸ்போமின் நிலைப்பாடு உள்ளடக்கம் இல்லாதது; முதலாவதாக இது ஒரு பொய் விதிமுறையை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவதாக உண்மைகளைக் கையாள்கையில் ஒரு அஜாக்கிரதை போக்கு - நான் நேர்மையீனம் என்ற வார்த்தையை தவரிர் க்க வரிரும் புகின் றேன் ஹொப் ஸ் போ மரின் உயர்திடசங்கற்பவாதத்துக்கும் வரலாற்று சடவாத விதிமுறைக்கும் இடையே பொதுத் தன்மை எதுவும் கிடையாது. ஹொப்ஸ்போம் புறநிலை நிலைமைகளை அவை ஏதோ ஒரு கூட்டம் அணிவகுப்பு கட்டளைகள் போல் உதவிக்கு அழைக்கின்றார். அவை கட்சிகளுக்கும் மக்களுக்கும் தெரிவதை விட்டுவைப்பதில்லை.சொன்னதைப் போலவே அவற்றைச் செய்ய வேண்டும். அத்தகைய ஒரு கருத்துப்பாடு தீவிரமான் விதத்தில் தெளிவானவை.
1921ன் பின்னர் ரூஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியினுள் ஆரம்பித்த பிளவுகள், புறநிலை நிலைமைகள் ஒரு பரந்த அளவிலான செல்வாக்கைச் சிருஷ்டித்ததை நிரூபிக்கின்றது. கட்சித் தலைவர்கள் அத்தகைய பிரச்சினைக்கு அக்கறை காட்டிய விதத்தையும் அந்த
25
அக்கறையைச் சூழ போக்குக்கள் அணிதிரண்ட விதத்தையும் சுட்டிக்காட்டுவது புறநிலை நிலைமைகள் பற்றி வேறுபட்ட மதிப்பீடுகள் செய்வது மட்டும் அல்ல. வேறுபட்டதும் சிலவேளை ஒன்றுக்கு ஒன்று முரணான சமூகச் சக்திகளுடனான அவற்றின் உறவுகளாகும்.
புறநிலை நிலைமைகளுக்கு ஸ்டாலின் காட்டிய அக்கறை வளர்ச்சி கண்டுவரும் அரச அதிகாரத்துவத்தின் புறநிலை அவசியங்கள் வெளிப்படுத்திக் கொண்ட சமூக நிலைப்பாடுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டதாகும். இங்கு அங்கத்தவர்கள் நகர்ப்புற கீழ்த்தட்டு, மத்தியதர வர்க்கங்களில் இருந்து திரட்டப்பட்டனர்.
மறுபுறத்தில் ட்ரொட்ஸ்கியினதும் இடதுசாரி எதிர்க் கட்சியினதும் கொள்கைகள் சோவியத் யூனியனின் கைத்தொழில் பாட்டாளி வர்க்கத்தின் உயர்ந்த நனவு வடிவத்தை வெளிப்படுத்தின. சோவியத் யூனியனுள் மார்க்சிச அரசியலுக்கான அடிப்படை அங்கமான இந்த சமூக சக்தி உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய பொருளாதார, சமூக சீரழிவுகளின் அளவுக்கு சோசலிச கொள்கைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அமுல் செய்வதற்கும் பாதகமாகியது. ஆனால் இந்த சாதகமற்ற நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாத வானிலையியல் தோற்றப்பாடாகக் கொள்ள வேண்டியதில்லை. அவற்றை திட்டவட்டமான அரசியல் பதங்களில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது,குரோதம் கொண்ட சமூக சக்திகளின் போராட்டத்தின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். உள்நாட்டு யுத்தத்தினால் பெரும் அழிவுகளுக்குள் தள்ளப்பட்ட கைத்தொழில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமை தேய்ந்து போகச் செய்யப்பட்டதும், தொழிலாளர் வர்க்கத்தின் மார்க்சிசத் தலைவர்கள் கட்சிக்குள் இருந்தும் அரச அதிகாரத்துவத்துள் இருந்தும் அதிகரிதத அளவில் ஈவிரக்கமற்றதும் வன்முறையானதுமான எதிர்ப்பைச் சந்தித்தனர். இந்த மூலகங்கள் இடதுசாரி எதிர்க்கட்சி முன்வைத்த கொள்கைகளை தமது சட நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கண்டனர்.
1920பதுகள் பூராவும் கம்யூனிஸ்ட் கட்சியினுள்ளும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உள்ளும் தலைவிரித்தாடிய அரசியல் போராட்டத்தின் சாராம்சம் இதுவே.
பேராசிரியர் ஹொப்ஸ்போமுக்கோ அனுமதிக்க முடியாத அளவுக்கு ஊகத்துக்கு உரியதாயும் ஒழுங்கான வரலாற்று ஆய்வு எல்லைக்கு அப்பாற்பட்டதாயும் தோன்றும் ஒரு தொகை அறிக்கைகளை நான் இக்கட்டத்தில் வெளியிடுகின்றேன்.
முதலாவதாக, ரூஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியினுள் இடதுசாரி எதிர்க்கட்சியின் போராட்டம் வெற்றி கண்டிருக்குமானால் அனைத்துலக சோசலிசத்தின் காரணிகள் அளப்பரிய முறையில் பலமூட்டப் பட்டிருக்கும். குறைந்தபட்சம் 1930பதுகளின் எதிர்ப்புரட்சி பேரழிவுகள்- எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மன் பாசிசத்தின் வெற்றி தவிர்க்கப்பட்டிருக்கும்.
Page 15
26
இரண்டாவதாக, சோவியத் பொருளாதாரத்தினதும் அரசியல் வாழ்க்கையினதும் முழுப் பண்பும் ஒப்பிட முடியாத அளவுக்கு பெரிதும் முற்போக்கான பாதையில் அபிவிருத்தி கண்டிருக்கும். 1930பதுகளில் சோவியத் யூனியன் சர்வாதிகார வழியில் நச்சு வளைகோட்டின் ஊடாக கீழ்நோக்கி செல்வது "புறநிலை நிலைமைகளின் PGTILT J, கட்டுப்படுத்த முடியாத விதத்தில் முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது என்பது " எதுவிதத்திலும் உண்மையானது அல்ல. சோவியத் யூனியன் சோசலிச பாதை வழியே வளர்ச்சி காண "புறநிலை நிலைமைகள்" வரவர பாதகமாகியது என்ற விடயம் எல்லாவற்றுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கி உட்பட்ட இடதுசாரி எதிர்க்கட்சிக்கு கிடைத்த தோல்வியின் அரசியல் விளைவாகும். ۔۔۔۔۔۔
மூன்றாவது, இந்த விடயம் முதல் இரண்டு விடயங்களையும சுருக்கித் தருவதாகும்-சோவியத் யூனியனும் அனைத்துலக தொழிலாளர் வர்க்கமும் சோசலிச இயக்கமும் இதைத் தொடர்ந்து முகம் கொடுத்த பேரழிவுக்கான- இன்று நாம் உயிர்வாழ்வது அதன் நிழலின் கீழாகும் முழுக் கதவு திறந்தது ட்ரொட்ஸ்கி உட்பட்ட இடதுசாரி எதிர்க்கட்சி அடைந்த தோல்வியினாலாகும்.
நான் இன்னும் ஒரு அம்சத்தையும் இத்துடன் சேர்க்க விரும்புகின்றேன்: ட்ரொட்ஸ்கியின் தோல்வியின் விளைவுகள் சம்பந்தமாக அதற்கு உரிய கவனம் செலுத்தப்படாது போகின் 20ம் நூற்றாண்டின் சோசலிசத்தின் தலைவிதி பற்றிய எந்த ஒரு கலந்துரையாடலையும் ஆழமானதாகக் கொள்ள முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஸ்டாலினின் கீழ் என்ன "நடந்தது என்பது "மட்டும் அல்ல , ட்ரொட்ஸ்கி வெற்றி பெற்றிருந்தால் "என்ன நடந்திருக்கும்" என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
இது கட்டாயமாக ஒரு ஊகமா? அத்தகைய ஒன்று புத்திஜீவித்தனமான முறையில் உகந்ததா? எனக் கேட்பது நியாயமானது என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் எதிரிடையான உண்மைகளை கையாளும் போது நாம் நியாயமற்ற ஊகங்களிலும் எதிரிடை விருப்பம் கொண்ட சிந்தனைகளிலும் நாம் ஈடுபடும் ஆபத்தைக் காண்கின்றோம். வரலாற்று அபிவிருத்தியின் மாற்று பாதைகளைப் பற்றி கணிக்கையில் அக்காலத்தில் நிச்சயமாக கிடைக்கக் கூடியதாக இருந்த சாத்தியங்களின் பரிமாணத்துக்கு அப்பால் நாம் செல்லக் கூடாது. கூடவே நாம் ஒரு உறுதியான உணர்வையும் கொண்டிருக்க வேண்டும் -ஒரு தரப்பட்ட சமுதாயத்தின் பொருளாதார அடிப்படைகளையும் தொழில்நுட்ப மட்டத்தையும் வர்க்க அமைப்பு முறையையும் பூரணமாக ஆய்வு செய்து, உள்ளிர்த்துக் கொள்வதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இதுவும் திட்டவட்டமான வரலாற்று ரீதியில் - அமைக்கப்பட்ட நிலைமைகளின் வெளிப்பாடு,
27
உற்பத்தி- பற்றி நாம் உறுதியான கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணமாக பிரித்தானிய ரியூடர் காலத்தின் வரலாற்றாசிரியர் அவருக்கு வேண்டுமானால்- எட்டாம் ஹென்றியின் முதலாவது மனைவியான அர கன் கதரின் ஒரு ஆண் வாரிசை பிரசவித்திருந்தால் இங்கிலாந்தின் அபிவிருத்தியில் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கும் என நோக்கலாம். சில அறிவுமிக்க ஊகங்கள் சாத்தியமாகும். ஆனால் தெளிவாக பெரிதும் ஊகங்கள் கொண்ட வரையறைகளுள் நுழைந்து கொள்ளாமல் நாம் நீண்ட தூரம் செல்ல முடியாது. கதரின் ஆண் வாரிசை பெற்றிருந்தால் அந்தக் குழந்தை,-குழந்தைப் பருவத்தை தாண்டி உயிர் வாழ்ந்திருந்தால் தனது காமவெறி கொண்ட கணவனிடமிருந்து அவள் விவாகரத்துக்கு முகம் கொடுக்காமல் இருந்திருக்கக் கூடும் . அது அப்படி இருந்திருப்பின் ஹென்றியின் அடுத்து வந்த ஆட்சிக் காலங்கள் குறைந்தபட்சம் அவனின் சொந்த வாழ்க்கையின் அர்த்தத்தில் கடந்து சென்ற காலத்தைப் போல் ஒளிமயமானதாக இருக்கமாட்டாது. இது நிச்சயம் இல்லாது போனாலும் சாத்தியமானது.
எவ்வாறெனினும் அரச குடும்பத்தின் திருமண நெருக்கடியை தவிர்ப்பதன் மூலம் இங்கிலாந்து ஒரு பெரிதும் கத்தோலிக்க நாடாக தொடர்ந்து இருந்து வந்திருக்கும் என்ற முடிவுக்கு நாம் அதில் இருந்து வர முடியுமா? அது உண்மையில் நிலைமையை நீட்டுவதாகும். விவாகரத்து நெருக்கடி ஒரு அரசியல் நெருக்கடியை முன்னணிக்கு கொணர்ந்தது. அது ஐரோப்பா முழுவதும் பரந்து ஆழமாக வேரோடி இருந்த சமூக, பொருளாதார போக்கின் அம்சமாகும். எட்டாம் ஹென்றியின் காலப்பகுதி பற்றி ஆய்வு செய்யும் போது பதிலளிக்கப்பட வேண்டிய தீர்க்கமானதும் முக்கியமானதுமான கேள்வி எல்லாவற்றுக்கும் மேலாக தெளிவான விதத்தில் வழக்கமான நெருக்கடி இல்லாது போனாலும் அரச குடும்பத்தின் விவாகரத்து பிரச்சினை ஆழமான புரட்சிகர விளைவுகளுடன் திருச்சபையும் அரசும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக மாறியது எப்படி? என்பதேயாகும். இந்தத் தரப்பட்ட பின்னணியினுள் தனிப்பட்டவர்களின் உந்துதல்கள் -தமது நடவடிக்கைகளின் பெறுபேறுகளதும் வரலாற்று பரிமாணங்களைப் பற்றியும் அவர்கள் அடியோடு நனவற்றவர்கள்- அவ்வளவு தீர்க்கமானதாக தோன்றவில்லை. l நாம் பிரான்சுப் புரட்சி வரையும் பல நூற்றாண்டுகள் முன்நோக்கிச் சென்றால் வரலாற்று புள்ளிகள் இன்னமும் தம்மீது கொணரும் புறநிலை வரலாற்று சக்திகளின் அழுத்தங்களையிட்டு வரையறுக்கப்பட்ட நனவுடன் மட்டும் பிரதிபலிக்கும் ஒரு நிலைமையைச் சந்திக்கின்றோம். உண்மையில் அங்கு றொபிஸ்பியர் எட்டாம் ஹென்றி மட்டும் அல்ல ஒலிவர் குரோம்வெல்லை எடுத்துக் கொண்டாலும் ஒரு மாபெரும் வேறுபாடு உள்ளது. 18ம்
Page 16
28
நூற்றாண்டின் கடைப்பகுதியில் சமூக சக்திகளின் நனவான விழிப்பும் நலன்களும் ஒரு நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடியதைக் காட்டிலும் உண்மையில் பெரிதும் கூர்மையானதாக விளங்கியது.ஆனால் வரலாற்று அவசியங்களின் சக்திகள் இன்னமும் உரிய விஞ்ஞானரீதியான சிந்தனை வடிவங்களாக மாற்றம் காணவில்லை. நவீன முதலாளித்துவத்தினது அபிவிருத்தியுடனும் தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றத்துடனும் மட்டுமே இதை அடைவது சாத்தியமாகியது. இதன் மூலம் பிரான்சியப் புரட்சியின் ஒவ்வொரு கட்டங்களிலும் அதன் முன்னணி புள்ளிகளின் புகழ்களுக்கு இடையேயும் நிகழ்வுகள் வரலாற்று அவசியங்களின் சக்தியின் வெற்றியினால் உருவமைக்கப்பட்டது.
இது நிகழ்வுகள் வேறு விதத்தில் இடம்பெற முடியாது இருந்தது என்பதைக் குறிக்கவில்லை. சம்பவங்களின் பயணத் திசை மாற்றியமைக்கக் கூடிய ஒரு தொகை "எதிர்க் காரணிகளை" ஒருவர் கற்பனை செய்ய முடியும். ஆனால் தரப்பட்ட சமூக அபிவிருத்தி மட்டமும் வரலாற்று அபிவிருத்தியின் கீழான விதிகளுள் மனிதனின் வரையறுக்கப்பட்ட பார்வையின் காரணமாக அரசியல் நடிகர்களால் வரலாற்று அபிவிருத்தியினுள் அந்த மாற்றங்களை அறிமுகம் செய்தது, தமது நடவடிக்கைகளின் பெறுபேறுகளைப் பற்றிய விஞ்ஞானரீதியான விளக்கத்தின் அடிப்படையில் அல்ல. வரலாற்று அபிவிருத்தியின் பாதையை நனவான முறையில் மாற்றுவதற்கு-அதாவது சமூக, பொருளாதார போக்கின் புறநிலை அளவையியலை புரிந்து கொள்வதன் மூலம் தொழிற்படுவதற்கு - புறநிலை சாதனங்களோ அல்லது அதில் இருந்து பெருக்கெடுக்கும் அதற்கு இணங்கிய விஞ்ஞான ரீதியான ஊடுருவலை புரிந்து கொள்ளும் மட்டமோ பிரான்சினுள் 1794ல் இருக்கவில்லை." சந்தேகத்துக்கு இடம் இல்லாத விதத்தில் பொதுஜன பாதுகாப்பு கமிட்டியின் அங்கத்தவர்கள் (அன்று பிரான்சினுள்) செயற்பட்டது புரட்சியின் ஊக்கமான சமூக சக்திகள் பற்றி முற்றிலும் நனவற்ற அர்த்தத்தில் அல்ல. நனவான முறையில் செயல்பட்டது. உதாரணமாக டன் டனுக்கு முதலாளி வர் க் கத்தின் சில பகுதியினரிடையே பலம்வாய்ந்த ஆதரவாளர்கள் இருந்ததை றொபெஸ்லியர் சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் அறிந்திருந்தார். இன்டல்ஜென்டுகளுடனான (Indulgents) மோதுதலுடன் உருவாகக் கூடிய ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டிருந்தார், ஆனால் றொபஸ்பியர் ஒரு நவீன அர்த்தத்தில் அவரது நடவடிக்கைகளின் வரலாற்று தாக்கங்களையிட்டு நனவு பெற்றிருக்கவில்லை. வரலாற்று சடவாதத்தின் அபிவிருத்திக்கான புறநிலை முன்நிபந்தனைகள் இன்னமும் பக்குவம் அடைந்து இருக்கவில்லை. வரலாற்று நடத்தைகளை ஊக்குவித்த நிஜ சக்திகள் இன்னமும் பல்வேறு குழப்பமான சித்தாந்த வடிவங்களிலேயே உள்ளிர்க்கப்பட்டுள்ளன; அர்த்தப்படுத்திக் கொள்ளப்பட்டன.(அதாவது, காரணம், மனிதனின்
29
உரிமை, நல்லொழுக்கம், சகோதரத்துவம்)
இந்த விதத்தில் பிரான்சுப் புரட்சியின் வரலாற்று பதிலீடு பற்றிய எந்த ஒரு கலந்துரையாடலும் ஒரு உயர்ந்த ஊகப் பண்பை கொண்ட எடுகோளை நோக்கி வேகமாக திரும்பத் தள்ளப்படுகின்றது. முன்னணிப் பிரமுகர்கள் தமது சொந்த நடவடிக்கைகளின் வரலாற்று விளைவுகளை முன்னறிய முடியாது இருந்ததைப் போலவே ஜக்கோபியன் கன்னையின் வெற்றி வேறொன்றைப் பார்க்கிலும் உறுதியோடு தொடர்ந்து வந்த வரலாற்று பாதையை மாற்றியிருக்கும் அது மாறுவது எப்படி என்பதை கூறுவது கஷ்டம்.
மார்க்சிசத்தின் வருகையோடு மனிதன் தனது சொந்த வரலாற்றுக்குக் காட்டும் உறவு ஒரு ஆழமான ட்ரிணாமத்துக்கு உள்ளாகியது. மனிதன் புறநிலை சமூக, பொருளாதார அர்த்தத்தில் தனது சிந்தனையையும் நடவடிக்கைகளையும் நனவான முறையில் அர்த்தப்படுத்தும் இயலளபைப் பெற்றுக் கொண்டான். அதன்மூலம் தனது சொந்த நடவடிக்கைகளை ஒரு தொடர் புறநிலை வரலாற்று சம்பந்தங்களுள் இருத்தவும் முடிந்தது.
ரூஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உள்ளும் இடம்பெற்ற போராட்டத்தின் மாற்று பெறுபேறுகள் பற்றி கணக்கில் எடுப்பது ஒரு உதவாக்கரையான ஊகம் சம்பந்தப்பட்ட பணி அல்ல. இங்கு இற்றைக்கு 130 வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் அரசியல் குழுக்கள் இருளில் தடவிக் கொண்டும் தாமறியாத சமூக, பொருளாதார சக்திகளால் தள்ளப்பட்டுக் கொண்டும் , தமது நடவடிக்கைகளை பெறுமளவுக்கு கருத்தியல்வாதத்தின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இருந்து வந்தன.
மாறாக லியொன் ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க் கட்சியும் சோவியத் யூனினும் அனைத்துலக சோசலிச இயக்கமும் முகம் கொடுத்த விவகாரங்களின் அரசியல் தாக்கங்களை அபரிமிதமான தூரதிருஷ்டி மிக்க விளக்கத்துடன் போராட்டத்தினுள் நுழைந்தனர். சோவியத் யூனியனின் உள்நாட்டு, அனைத்துலக முரண்பாடுகள் பற்றிய தமது ஆய்வுகள் இரண்டிலும் , ஸ்டாலினிஸ்டுகளுக்கு எதிராக அவர் நெறிப்படுத்திய எச்சரிக்கைகளிலும் ட்ரொட்ஸ்கி அதிகாரத்துவத்தினது வளர்ச்சி கண்டு வரும் ஆளுமையினதும் சோவியத் தலைமையின் போலி கொள்கைகளது இறுதி விளைவுகளையிட்டு எந்த ஒரு சந்தேகமும் கொண்டிருக்கவில்லை. 1923 டிசம்பரில் "அதிகாரத்துவம் சீரழிவின் ஆபத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளதா? இல்லையா"P என ட்ரொட்ஸ்கி \கேட்டார். "இதை மறுக்கும் எவரும் குருடர்களாக இருப்பர்" என்றார்.
தலையெடுத்து வந்த ஸ்டாலினிச ஆட்சிக்கு எதிரான ஆரம்பக் கட்டப் போராட்டத்தில் இது எழுதப்பட்டு இருந்தது. அந்த ஆரம்பக்
Page 17
30
கட்டத்தில் கூட ட்ரொட்ஸ்கி கம்யூனிஸ்ட் கட்சியின் "முற்போக்கு சீரழிவு" "எதிர்ப்புரட்சி வெற்றி காணும் அரசியல் பாதையாகிவிடக் கூடும் "என்பதை ஏற்கனவே எழுப்பி இருந்தார்.
ஆபத்து எவ்வளவுதான் பாரதூரமானதாக இருந்த போதிலும் மார்க்சிச ஆய்வினை அடிப்படையாகக் கொண்ட நனவான அரசியல் பார்வை அந்த நெருக்கடியில் இருந்து தலையெடுப்பதற்கான சாத்தியத்தை வழங்கியுள்ளது என ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.
"நாம் இந்த எடுகோள்களை நேரடியாக முன்வைப்பது அவை வரலாற்று சாத்தியமானவை எனக் கணிப்பதால் அல்ல. ' (இதற்கு மாறாக அவற்றின் சாத்தியம் குறைந்த மட்டத்தில் உள்ளது ) ஆனால் பிரச்சினையை இந்த விதத்தில் முன்வைப்பது மட்டும் பெரிதும் சரியான , அனைத்து புறங்களிலும் வரலாற்று தகவமைவுகளை சாத்தியமாக்கி அதன்மூலம் சகல தடுப்பு நடவடிக்கைகளையும் எடுப் பதை சாத்திய மாக்குவதாகும் . மார்க்சிஸ்டுகளான நாம் பெரிதும் உயர்ந்து நிற்பது, புதிய போக்குக்களையும் புதிய ஆபத்துக்களையும்-அவை இன்னமும் கரு நிலையில் மட்டும் இருந்து கொண்டிருக்கையில் - இனங்கண்டு உள்ளிர்த்துக் கொள்வதிலேயே தங்கி உள்ளது. "13
இடதுசாரி எதிர்க் கட்சியின் வெற்றி சோவியத்தினதும் உலக வரலாற்றினதும் திசையை கணிசமான அளவு மாற்றி இருக்குமா என்பதை கணிக்கும் போது , நாம் சோவியத் யூனியனின் தலைவிதியை நிர்ணயம் செய்கையில் அடிப்படை முக்கியத்துவம் கொண்ட மூன்று விவகாரங்களை திட்டவட்டமாக ஆய வேண்டும் எனப் பிரேரிக்கின்றோம்:
1. உட்கட்சி ஜனநாயகம் 2. பொருளாதாரக் கொள்கை 3. அனைத்துலகக் கொள்கை.
சோவியத் யூனியன் ஆரம்பத்தில் இருந்தே ஏதோ ஒரு வடிவில் அழிவுக்கு உள்ளாக இருந்தது எனக் கூறும் சகல அரசியல் புத்திஜீவி போக்குக்களும்-மார்க்சிசத்தின் "உயிர் ஆபத்தான குறைபாடுகளால் " அல்லது போல்ஷிவிசத்தை எதிர்கொள்ளும் அசாத்தியமான புறநிலை நிலைமைகளால் -இடதுசாரி எதிர்க்கட்சி முன்வைத்த கொள்கைகளைத் திட்டவட்டமாக ஆய்வு செய்ய ஒரு போதும் முயன்றது கிடையாது என்பதை குறிப்பிடுவது முக்கியம். இன்றுவரை ட்ரொட்ஸ்கி சோவியத் வரலாற்றில் "மாபெரும் குறிப்பிடப்படாதவராக" இருந்து கொண்டுள்ளார். எந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அருமைபெருமையாக குறிப்பிடப்படுகின்றாரோ அது வழக்கம் போல் அவரின் பணிகளை குழப்பியடித்து , பொய்மைப்படுத்திக் காட்டுவதற்கேயாகும்.
இந்த மெளனமும் பொய்களும் ஸ்டாலினிசத்துக்கு எதிரான ட ரொட் ஸ் கரியரினர் போராட் டத் தின் வரலாற்று முக்கியத்துவத்துக்கு(எதிரிகள்) தமது சொந்த வழியில் செய்யும் ஒரு வடிவிலான பங்களிப்பாகும். சோவியத் யூனியனின் அழிவு
3.
தவிர்க்க முடியாதது; சோசலிசப் புரட்சி அதன் தன்மை காரணமாக ஒரு கற்பனை முயற்சி; ஆதலால் அக்டோபர் புரட்சி ரூஷ்யத் தொழிலாளர் வர்க்கத்தை அவர்கள் தப்பிப்பிழைக்க முடியாத முட்டுச் சந்தினுள் இட்டுச் சென்றுள்ளது: மார்க்சிசம் தவிர்க்க முடியாத விதத்தில் சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கின்றது ஆதியன எல்லாம் இடதுசாரி எதிர்க்கட்சி விட்டுச் சென்றுள்ள வரலாற்று அறிக்கைகள் மூலம் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. அது முன்வைத்த கொள்கைகளின் அர்த்தத்தில் ஒரு தாக்கிப் பிடிக்கக் கூடியதும் கோட்பாட்டு ரீதியில் கூர்மையானதும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு ஒரு சக்திவாய்ந்த அரசியல் எதிர்ப்பையும் தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்தது.
நான் தெரிந்தெடுத்த மூன்று விவகாரங்களை நோக்கி நாம் இப்போது முன்செல்வோம்: எல்லாவற்றுக்கும் முதல் கட்சி ஜனநாயகம் பற்றிய பிரச்சினை. இது ஒரு வரலாற்று உண்மையாகும்.-நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய 1923 பத்திரத்தின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ட்ரொட்ஸ்கி தமது இந்தப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் - ஸ்டாலினிசம் என்ற பதம் அரசியல் பாவனைக்கு இன்னமும் வந்துவிடுவதற்கு முன்னர்அதிகாரத்துவத்தின் வளர்ச்சியும் உட்கட்சி ஜனநாயகத்தின் சிதைவும் போல்ஷிவிசத்துக்கும் சோவியத் ஆட்சியின் உயிர்வாழ்வுக்கும் ஒரு உயிராபத்தாக தோன்றியுள்ளதை இனங்கண்டார். எண்ணற்ற பத்திரங்களில் ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க் கட்சியும் போல்ஷிவிக் கட்சியினுள் ஒரு ஜனநாயக நிர்வாகம் இல்லாமல் , சோவியத் கொள்கையை புத்திக்கூர்மையான முறையிலும் சரியான உருவிலும் -ஒரு மார்க்சிஸ்ட் காரியாளருக்கும் அத்தோடு தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த தட்டினருக்கும் அரசியல் கல்வி புகட்டுவது பற்றி கூற வேண்டியதில்லை. கற்பனை செய்தும் கூடப் பார்க்க முடியாது என வலியுறுத்தி உள்ளார்.
கருத்து முரண்பாடுகளாலும் வேறுபாடுகளாலுமே கட்சியினுள் பொதுஜன அபிப்பராயம் தவிர்க்க முடியாத விதத்தில் செயல்படுகின்றது என ட்ரொட்ஸ்கி 1923ல் எழுதினார். "இந்தப் போக்கினை உபகரணங்களுள் மட்டும் மட்டுப்படுத்துவதும் அப்போது சுலோகங்கள் கட்டளைகள் முதலானவற்றின் வடிவில் தமது உழைப்பின் பலனை அங்கத்தவர்களுக்கு வழங்குவது அதற்காகக் கையளிப்பது என்பது கட்சியை சிந்தனாமுறையிலும் அரசியல் ரீதியிலும் மலட்டுநிலைமைக்கு உள்ளாக்குவதாகும். கட்சியின் முன்னணி அமைப்புக்கள் பரந்த கட்சி வெகுஜனங்களின் குரல்களுக்கு செவிமடுக்க வேண்டியதோடு அனைத்து விமர்சனங்களையும் ஒரு கன்னைவாதத்தின் வெளிப்பாடாகக் கொண்டு, அதன் மூலம் நனவும் கட்டுப்பாடும் கொண்ட கட்சி அங்கத்தவர்கள் கன்னைவாதத்தினுள் வீழ்ந்து போகச் செய்யக் கூடாது. " 14
கட்சியின் தலைமைச் சபைகளின் தீர்மானங்களுக்கு உள்ள
Page 18
32
எதிர்ப்பை, எதிரி வர்க்க சக்திகளின் நலன்களின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகக் கொள்ளும் சுயசேவை கோரிக்கைகளை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்
"ஒரே பிரச்சினையை பல்வேறுபட்ட வழிகளில் தீர்க்க கட்சியால் முடியும். இந்த வழிகளில் சிறந்ததும் பெரிதும் துரிதமானதும், அதிகம் சிக்கனமானதும் எது என்பது தொடர்பாக வேறுபாடுகள் எழுகின்றது. இந்த வேறுபாடுகள் பிரச்சினைகளைப் பொறுத்து கட்சிகளின் கணிசமான பகுதியினரைத் தழுவிக் கொள்கின்றது. ஆனால் அது நிச்சயமாக அங்கு இரண்டு வர்க்கப் போக்குக்கள் இருந்து கொண்டுள்ளதை குறிக்காது.
"எமது பாதை கஷ்டமானதும் அரசியல் பணியும் அத்தோடு சோசலிச அமைப்பின் பொருளாதார பிரச்சினைகளும் தவறாத வகையில் கருத்து முரண்பாடுகளையும் தற்காலிக அபிப்பராய குழுப் பிரிவுகளையும் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் நாம் ஒன்றல்ல டசின் கணக்கான கருத்துவேறுபாடுகளை கொண்டிருப்போம். மார்க்சிச ஆய்வுகள் மீதான சகல வேறுபாடுகளையும் அரசியல் நிரூபணங்களும் எமது கட்சியினால் எடுக்கப்படும் எப்போதும் மிகவும் பயன்தரக்கூடிய தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கும். ஆனால் அது அங்கு இரண்டு வர்க்கப் போக்குக்கள் நிச்சயமாக இருந்து கொண்டுள்ளதை கருத வேண்டியதில்லை."15 உட்கட்சி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் வெறுமனே ஒரு பிரித்தெடுக்கும் அடிப்படைக் கொள்கை அல்ல. கட்சி ஆட்சியின் தன்மை சோசலிச நிர்மாணப் பணியின் அடிப்படையில் நேரடியாக தாக்கம் கொணர்கின்றது. எண்ணற்ற தடவைகளில் ட்ரொட்ஸ்கி விளக்கியது போல் திறமையான பொருளாதார திட்டமிடல், அக்கறையானதும் ஜனநாயக ரீதியிலானதுமான வெகுஜனங்களின் பங்களிப்பை தீர்மானம் செய்யும் போக்கில் வேண்டி நிற்கின்றது. இது உயர் மத்தியமயமாக்கப்பட்ட அதிகாரத்துவ சாசனத்துடன் ஒத்துப் போகாது.
இந்த விதத்தில் ட்ரொட்ஸ்கி சோவியத் பொருளாதாரத்தின் முரண்பாடுகளின் தீர்க்கதரிசனம் வாய்ந்த மதிப்பீடுகளையும் அவற்றை திருப்தியான நிலைமைக்கு கொணர்வதற்கான திட்டவட்டமான யோசனைகளையும் வழங்கினார். ஒரு சரியான பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதும் அமுல் செய்வதும் ஒரு ஜனநாயக ரீதியான கட்சி ஆட்சி முறையில் தங்கியுள்ளது என அவர் வலியுறுத்தினார்.
இது இரண்டாவது விடயத்தை எழுப்புகின்றது. அது இடதுசாரி எதிர்க்கட்சியின் பொருளாதாரக் கொள்கை. இது ஒரு பரந்த விடயம். இதனை ஒரு சில மேற்கோள்களுக்குள் குறைத்துவிட முடியாது. இருப்பினும் சோவியத் பொருளாதார அபிவிருத்தி பிரச்சினைகள் சம்பந்தமான இடதுசாரி எதிர்க்கட்சி அணுகுமுறைக்கும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்துக்கும் இடையேயான ஆழமான
33
வேறுபாடுகளை குறைந்தது இவற்றில் சில மேற்கோள்கள் எடுத்துக்காட்டும்.
பொருளாதாரக் கொள்கை மீதான இடதுசாரி எதிர்க்கட்சிக்கும் ஸ்டாலினிஸ்டுகளுக்கும் இடையேயான மோதுதல் வரலாற்று முன்நோக்கு பற்றிய அடிப்படையான பிரச்சினையைச் சூழவே ஏற்பட்டது: சோவியத் யூனியன் அதன் சொந்த தேசிய வளங்களின் அடிப்படையில் சோசலிசத்தை கட்டி எழுப்புவது சாத்தியமா அல்லது இறுதி ஆய்வுகளில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி காண்பதன் அடிப்படையில் சோவியத் யூனியனின் சோசலிச அபிவிருத்தி சார்ந்து உள்ளதா? 1924 வரை சோவியத் கொள்கையின் சவால் செய்யப்படாத எடுகோள்-உண்மையில் 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் பொறுப்பெடுத்த முழுப் புரட்சிகர திட்டத்தினதும் அடிப்படை அதுவே- ரூஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியமை உலக சோசலிச புரட்சியின் "முதல் வெடித் தீர்வாக "மட்டுமே விளங்கியது. ஒரு தேசிய ரீதியில் உள்ளடக்கப்பட்ட சோசலிச அரசு , சிறப்பாக ரூஷ்யாவைப் போல், பொருளாதார ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் பின்தங்கிய ஒரு நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒன்று நின்று பிடிக்க முடியாது. 1924 இலையுதிர் காலத்தில் ஸ்டாலின் "தனிநாட்டில் சோசலிசம்" "கோட்பாட்டை"-அறிமுகம் செய்தமை உண்மையில் அது ஒரு கோட்பாடாகவே இருக்கவில்லை. மாறாக அது முன்னைய ஆண்டுகளில் ஜேர்மன் புரட்சியின் தோல்விக்கான ஒரு கொடூரமான பயன்பாட்டு பிரதி பலிப்பாகவும் மேற்கு ஐரோப்பாவில் புரட்சிகர இயக்கத்தின் தற்காலிக பின்னடைவாகவும் விளங்கியது- லெனின்ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ் போல்ஷிவிக்குகளால் பிரேரிக்கப்பட்ட அனைத்துலக தகவமைவுக்கு எதிரிடையாகவே ஸ்டாலின்
முன்வைத்தான்.
பேராசிரியர் ஹொப்ஸ்போம், "தனிநாட்டில் சோசலிசம் கொள்கை", அக்டோபர் புரட்சியின் மூலப் பார்வையில் ஒரு
மாபெரும் விலகல் என்பதை மறுக்கமாட்டார். இருப்பினும் அவர் இந்தப் பார்வை கூட எப்படி ரூஷ்யப் புரட்சி தவிர்க்க முடியாத விதத்தில் சோசலிசத்தை தனியொரு நாட்டில் கட்டியெழுப்பும் "தலையெழுத்துக்கு "உள்ளாகியதோ அல்லது குறைந்தது கட்டியெழுப்ப முயற்சித்ததோ அதைப் போலவே கூடவே யதார்த்தமானதும் அல்ல என உணர்த்துகின்றார்.இந்த நிலைப்பாட்டை பேணத் தள்ளப்படின் ஹொப்ஸ்போம் ஒரு பொது அர்த்தத்தில் கோட்பாட்டு சித்தாந்தம் ட்ரொட்ஸ்கியின் பக்கம் நின்று வந்தது
வும் நடைமுறை யதார்த்தம் உறுதியாக ஸ்டாலின் பக்கம் ) :றுவந்தது எனவும், வாதாடத் தள்ளப்படுவார் என நான் சந்தேகிக்கின்றேன். வசீகரிக்கும் வாசிப்புக்காக செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கியின் உலகப் புரட்சி பற்றிய கருத்துப்பாடு, 1920பதுகளின்
Page 19
34
நடுப்பகுதியில் சோவியத் யூனியன் எதிர்கொண்ட பொருளாதார, அரசியல் நிலைமையின் நிஜ அடிப்படையில் எதையும் வழங்க முடியாது இருந்தது. இந்த விதத்தில் ஸ்டாலின் நடைமுறைக்கிட்ட திட்டத்துக்கு நிஜ பதிலீடு ட்ரொட்ஸ் கிச கொள்கைகள் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக கூறுவதை ஒருவர் புரட்சிகர சலனங்களின் மூலம் தமது மனதைக் குளிரவைக்கச் செய்வதாகும் எனக் கொள்ளப்பட்டது.
உண்மையில் ஹொப்ஸ்போம் இந்த வழியில் சுருக்கமாக வாதாடுவார் என நான் எண்ணவில்லை.நான் ஒரு அளவுக்கு ஒரு சிறிது "ஊகத்தில்" ஈடுபட்டேன். இது ஹொப்ஸ்போமின் நிச்சயமான பார்வையாக இல்லாது போனாலும் கூட ஸ்டாலினிசத்தின் ஒப்புதல் வாக்குமூலக்காரரான முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் இந்த வாதத்தை பல தடவைகள் முன்வைத்ததை நான் கேட்டுள்ளேன். இந்த வாதத்தின் மிகவும் அடிப்படையான பிரச்சினை என்னவெனில் இது ட்ரொட்ஸ் கியின் மீதும் அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் மீதும் பெரிதும் பக்கச்சார்பான கருத்துப்பாட்டில் இருந்தும் அது முன்னேறிச் செல்வதேயாகும். தேசிய வளங்கள் சம்பந்தமாக யதார்த்தமான மதிப்பீட்டின் அடிப்படையில் சோவியத் யூனியனின் அபிவிருத்தி தொடர்பாக ஸ்டாலினின் பெரிதும் நிபுணத்துவமும் மத்தியமயமான ஈடுபாட்டுக்கும் முரணாக உலக முதலாளித்துவத்தின் தடை மதில்களை தகர்த்தெறியக் காட்டும் பதட்டத்துக்கும் வீரப் பிரதாபத்துக்குமான ஒரு விருப்பமாக ட்ரொட்ஸ்கியின் முன்நோக்கு தரம் இறக்கப்பட்டால் அதைத் தள்ளுபடி செய்வது பெரிதும் சுலபம்.
சோவியத் வரலாறு பற்றி எழுதுபவர்கள் ட்ரொட்ஸ் கி எழுதியவற்றை நிச்சயம் வாசித்திருக்க வேண்டும் என நாம் கட்டாயப்படுத்த முடியாது என்பது உண்மை. எவ்வாறெனினும் எவர் அவரின் கட்டுரைகளையும் நூல்களையும் அவற்றுக்கு அவசியமான முக்கியத்துவத்தடன் வாசிக்கின்றாரோ - எனது கருத்தின்படி இருபதாம் நூற்றாண்டின் மிகவும் மாபெரும் அரசியல் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுள் ட்ரொட்ஸ்கி ஒருவர்- அவர் சோவியத் பொருளாதார அபிவிருத்தியின் முரண்பாடுகள் பிரச்சினைகள் பற்றிய அவரின் சிறப்பு ஆய்வுகளில் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர அனைத்துலகவாதம் மிகவும் புத்திக்கூர்மையானதும் நுண்ணியதுமான வடிவத்தைப் பெறுவதைக் கண்டு கொள்ள முடியும்.
மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொழிலாளர் வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றும் வரை காத்திருப்பதை சோவியத் பொருளாதாரக் கொள்கை உள்ளடக்கிக் கொண்டிருக்க வேண்டும் என ட்ரொட்ஸ்கி கருதியதற்கு ஆதரவாகக் காட்டக் கூடிய எதுவும் அவரது எழுத்துக்களில் கிடையாது. உண்மையில் ட்ரொட்ஸ் கி சோவியத் பொருளாதாரப் பிரச்சினைகளில் கையாண்ட முக்கிய
3S
எடுகோள், கூடவோ அல்லது குறைந்தோ ஒரு நீண்ட இடைமருவு கால சகாப்தத்தில் நின்றுபிடித்து, அபிவிருத்தி காணக்கூடிய கொள்கைகளை தயார் செய்ய வேண்டும் என்பதே. அதாவது, காலப்பகுதியின் அளவை முன்னரே கூறிவைக்க முடியாது. சோவியத் யூனியன் முதலாளித்துவ அமைப்பின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு அனைத்துலக பொருளாதார சுற்றாடலில் இருந்து கொண்டிருக்கும். பொருளாதார அபிவிருத்தி விதிகளின் நிலைப்பாட்டில் இருந்து கணிக் கும் போது ஸ் டாலின சத்தினி "தனரிநாட்டில் சோசலிசம்"வேலைத் திட்டத்தின் பேரிலான ட்ரொட்ஸ்கியின் முக்கிய விமர்சனம், சோவியத் யூனியனின் தலைவிதிக்காக குறைந்த பட்சம் நீண்ட காலத்திலாவது உலகப் புரட்சியின் முக்கியத்துவத்தினை இது மறுத்தது என்பது அல்ல. (உண்மையில் 1920பதுகள் பூராவும் ஸ்டாலினிச அதிகாரத்துவம் எவ்வளவு ஈடாட்டமானதாக இருந்தாலும் அனைத்துலக புரட்சிக்கான சோவியத் யூனியனின் பொறுப்பை காட்டிக் கொண்டது.) மாறாக ட்ரொட்ஸ்கி அது அடிப்படையாகக் கொண்டுள்ள தேசியவாத தகவமைவு- தனிநாட்டில் சோசலிசம்அதிகாரம் கடந்த கொள்கைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. அது சோவியத் யூனியன் மீதான உலகப் பொருளாதாரத்தின் தாக்கத்தைநேரடி, மறைமுக- ஆபத்தான முறையில் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டுள்ளது.
உலகப் புரட்சியின் மாபெரும் கதாநாயகனான ட்ரொட்ஸ் கி அவரது காலத்து எந்த ஒரு சோவியத் தலைவரைக் காட்டிலும் சோவியத் யூனியனுக்கும் உலக முதலாளித்துவ சந்தைக்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார தொடர்புகளிற்கு மாபெரும் முக்கியத்துவம் கொடுப்பது முரண்பாடுகள் கொண்டதாகத் தோன்றலாம். சோவியத் பொருளாதார அபிவிருத்திக்காக உலகச் சந்தையின் வளங்களுக்கு மார்க்கம் திறப்பதும் அனைத்துலக உழைப்பு பகுப்பை புத்திக்கூர்மையான விதத்தில் பயன்படுத்துவதும் அவசியம் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். பொருளாதாரத் திட்டமிடலின் அபிவிருத்தி குறைந்தபட்சம் அனைத்துலக மட்டத்தில் போட்டி மட்டத்திலான சாதகங்களையும் திறமைகளையும் வேண்டிக் கொண்டது. உலக முதலாளித்துவ சந்தையில் பெரிதும் குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதான பண்டத்தை சோவியத் நாட்டினுள் மீள உற்பத்தி செய்யும் வீணான முயற்சியில் அதனது வரையறுக்கப்பட்ட சொந்த வளங்களை விரயம் செய்வதற்கு எந்த ஒரு நியாயமான பொருளியல் காரணமும் இருக்கவில்லை.
எமது நம்பிக்கையை தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச அபிவிருத்தி மீதும் உலகப் பொருளாதாரத்தில் இருந்து சுதந்திரமான் ஒரு பொருளாதார அபிவிருத்தி வீதத்தின் மீதும் தங்கி நிற்பது முழுப் பார்வையையும் திரிக்கின்றது. என (o)fTITL6v af 1927aü எழுதினார். "இது எமது திட்டமிடல் தலைமையைத் தடம்புரள வைப்பதோடு உலகப் பொருளாதாரத்துடனான எமது உறவுகளின்
Page 20
30
சரியான விதிகளுக்கான வழிகாட்டும் நூலையும் வழங்குவதாய் இல்லை. நாமே எதை உற்பத்தி செய்வது, வெளியில் இருந்து எதைக் கொணர்வது என்பதை தீர்மானிப்பதற்கு வழி கிடையாது. ஒரு தனிமைப்படுததப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தினை திட்டவட்டமாக கைவிடுவது என்பது ஒரு சில வருட காலத்தில் எமது வளங்களை பெரிதும் பகுத்தறிவான முறையில் பயன்படுத்துவதற்கும் ஒரு விரைவான கைத்தொழில்மயமாக்கத்திற்கும் எமது சொந்த இயந்திர நிர்மாணத்தின் சிறந்த திட்டமிடலுக்கும் பெரிதும் பயனுள்ள சக்திவாய்ந்த பெருக்கத்துக்கும் செல்வதைக் குறிக்கும். இது வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு துரிதமான அதிகரிப்பையும் விலைகளில் ஒரு நிஜமான குறைப்பையும்- ஒரு வார்த்தையில் சொன்னால் முதலாளித்துவச் சூழலில் சோவியத் யூனியனை நிஜமாக பலப்படுத்துவதாகும்."16
ட்ரொட்ஸ் கி. முன்னேறிய நாடுகளில் முதலாளித்துவ அமைப்பினை கவனமாக அவதானிக்கவும் ஆய்வு செய்யவும் புரட்சிகர வெளிநாட்டு நாடுகடத்தலால் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்திய ரூஷ்ய மார்க்சிஸ்டுகள் தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதை மனதில் கொள்வது உதவியானது. அவர்கள் முதலாளித்துவத்தின் பெரிதும் வர்ணிக்கப்படும் "பயங்கரங்களுடன்" மட்டுமன்றி அதன் சாதனைகளுடனும் அறிமுகமானவர்கள். டாஸ் கப்பிட்டாலை (Das Capital) ஆய்வதற்கு அவர்கள் செலவிட்ட எண்ணற்ற மணித்தியாலங்கள், மூலதனத்தை நடவடிக்கையில் பல ஆண்டுகள் தரிசித்தமையால் வளப்படுத்தியது. அவர்கள் ரூஷ்யாவுக்கு திரும்பி வந்ததைத் தொடர்ந்து- இது சிறப்பாக நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் பல வருடங்கள் ட்ரொட்ஸ் கியின் நெருங்கிய சகாக்களாக இருந்தவர்களுக்கு பொருந்தும்- அவர்கள் தம்முடன் நவீன பொருளாதார அமைப்பின் சிக்கல்கள் பற்றிய ஓர் அக்கறையான விளக்கத்தைக் கொணர்ந்தனர். அரசியல் போராட்டங்கள் அத்தகைய ஆழமான துன்பகரமான தாக்கங்களை முதலீடு செய்திராவிட்டால் ரூஷ்யா வெறுமனே அதன் சொந்த சில்லறை உற்பத்திச் சாதனங்களை தேசியமயமாக்குவதன் மூலம் எப்படியோ சோசலிசத்தினுள் பாய்ந்து கொள்ளும் என்ற கருத்தைச் சிரிப்புக்கிடமானதாக்கி சும்மா தூக்கி வீசி இருப்பார்கள்.தேசிய சுயநிறைவின் அடிப்படையில் முதலாளித்துவத்தைக் கடந்து- தாண்டிச் செல்வதற்குப் பதிலாக சோசலிச அடிப்படையில் சோசலிச பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு முக்கியமான முன்நிபந்தனை, முதலாளித்துவ முகாமை, அமைப்பு, கணக்கியல், உற்பத்திகளின் அடிப்படைக் கைத்தொழில்நுட்பங்களை உள்ளிர்த்துக் கொள்வதே என ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.
ட் ரொட் கியினதும் ஸ் டாலினரினதும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையேயான முரண்பாட்டின் இந்த மேலெழுந்த
37
வாரியான நோக்கில், கூட்டுப் பண்ணைமயமாக்கம் பற்றிய பிரச்சினைகளை தொட்டுச் செல்வது அவசியம். நன்கு பிரசித்தமானது போல் 1929-1932க்கும் இடையேயான ஸ்டாலினின் பொறுப்பற்றதும் கொடூரமானதுமான விவசாயக் கூட்டுப்பண்ணை முறையில் ஏற்பட்ட அதிர்ச்சிகளின் விளைவுகளில் இருந்து சோவியத் விவசாயம் என்றுமே முழுமையாக தலையெடுத்ததே கிடையாது. சோவியத் விவசாயப் பிரச்சினைகளுக்கு ஒரு பெரிதும் பகுத்தறிவுமிக்க அணுகுமுறையானது சோவியத் யூனியனை அளவிடற்கரிய இழப்புக்கள், முடிவற்ற மரண ஒலங்களில் இருந்து விடுபடச் செய்திருக்கும் என்பது தெளிவு. இந்த அரங்கிலேயே ஒரு பதிலிட்டு கொள்கை பிரச்சினை ஒரு பிரமாண்டமான நடைமுறை முக்கியத் துவத்தை பெறுகின்றது. எனவே தான் வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் பொதுவாக அப்படி ஒன்றுமே இருந்திராததைப் போல் முன்நோக்கிச் செல்கின்றனர்.உண்மையில் 1920பதுகளின் கடைப்பகுதியில் ஸ்டாலின் இடதுசாரி எதிர்க்கட்சியின் துரித கைத்தொழில்மயமாக்க வேலைத் திட்டத்திற்கு இயைந்து போனதன் காரணமாகவே கூட்டுப்பண்ணைமயமாக்கம் எழுந்தது என்ற கூற்று அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் ட்ரொட்ஸ் கி ஸ்டாலினிஸ்டுகளால் தொடுக்கப்பட்ட வெறிபிடித்த கூட்டுப் பண்ணை மயமாக்கப் பிரச்சாரத்தை எதிர்த்ததோடு கண்டனமும் செய்தார். கூட்டுப்பண்ணைமயத்துடன் கைகோர்த்துக் கொண்ட போலி சோசலிச வாயடிப்புக்களுக்கு இடையிலும் ட்ரொட்ஸ் கி அந்தக் கொள்கை கைத்தொழில், நாட்டுப்புறம் இரண்டினதும் நிஜ உற்பத்தி இயலளயினை கணக்கு எடுக்காமல் பொறுப்பறற முறையில் அமுல் செய்யப்பட்டதாக எச்சரிக்கை செய்தார். "தனிநாட்டில் சோசலிசம்" என்ற அதே தேசியவாத, மார்க்சிச விரோத கருத்துப்பாட்டில் இருந்து அது முன்நோக்கிச் சென்றது. அது ஏற்கனவே தோல்வி கண்ட ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் பொருளாதார வேலைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்டாலினிச கூட்டுப்பண்ணைமயமாக்கம் பற்றி 1930ல் எழுதப்பட்ட ஒரு விமர்சனத்தில் ட்ரொட்ஸ் கி தாம் முன்னர் துரித கைத்தொழில்மயமாக்கத்தின் அபிவிருத்திக்கான வளங்களை வழங்கும் பொருட்டு விவசாயிகளின் (குலாக்) செல்வந்த பகுதியினர் மீது கடும் வரிவிதிப்புக்கும் கைத்தொழில்மயமாக்கத்தின் துரித வளர்ச்சிக்கும் வக்காலத்து வாங்கியதை ஏற்றுக் கொண்டார்.
"ஆனால் நாம் ஒரு போதும் கைத்தொழில்மயமாக்கத்துக்கான வளங்களை வற்றாத ஒன்றாகக் கணிக்கவில்லை "என ட்ரொட்ஸ் கி எழுதினார். "இதன் வேகத்தை நிர்வாக சவுக்கடி மூலம் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும் என நாம் ஒரு போதும் எண்ணியது கிடையாது கைத்தொழில்மயமாக்கத்துக்கான ஒரு அடிப்படை நிலைமையாக நாம் எப்போதும் தொழிலாளர் வர்க்கத்தின்
Page 21
38
நிலைமைகளில் ஒழுங்குமுறையான முன்னேற்றத்தின் அவசியத்தினை முன்வைத்து வந்துள்ளோம். நாம் கூட்டுப்பண்ணைமயமாக்கம் எப்போதும் கைத்தொழில்மயமாக்கத்தில் தங்கியுள்ளது எனக் கருதினோம். விவசாயப் பொருளாதாரத்தை சோசலிச ரீதியில் மறுநிர்மாணம் செய்வதை நாம் பல வருட காலங்களின் ஒரு எதிர்பார்ப்பாகக் கண்டோம். தனி ஒரு நாட்டில் சோசலிச மறுநிர்மாண காலத்தின் போது உள்வாரி மோதுதல்களின் தவிர்க்க முடியாத் தன்மைக்கு எமது கண்களை நாம் முடிக் கொண்டது கிடையாது. நாட்டுப்புற வாழ்க்கையில் முரண்பாடுகளை நீக்குவது என்பது நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையேயான முரண்பாடுகளை நீக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இது உலகப் புரட்சியின் ஊடாக மட்டுமே யதார்த்தமாகும். ஆதலால் ஸ்டாலினினதும் கிரிஸ்நோவ்ஸ்கியினதும் ஐந்தாண்டு திட்டத்தின் வரையறைக்குள் வர்க்கங்களை ஒழித்துக்கட்டி விடும்படி நாம் ஒரு போதும் கோரியது கிடையாது. கைத்தொழில்மயமாக்கத்தின் வேகம் பற்றிய பிரச்சினை அதிகாரத்துவ வினோதங்கள் பற்றிய ஒரு பிரச்சினை அல்ல; ஆனால் வெகுஜனங்களின் வாழ்க்கையும் கலாச்சாரமுமாகும். ஆதலால் சோசலிச நிர்மாண திட்டமும் ஒரு முன்னோடி அதிகாரத்துவ கட்டளையாக பிறப்பிக்கப்பட முடியாது. அது சோசலிச நிர்மாணம் யதார்த்தமாகக் கூடிய வகையில் பரந்த சோவியத் ஜனநாயகத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டு, திருத்தப்பட வேண்டும்."17
ட்ரொட்ஸ் கி ஸ்டாலினிச கூட்டுப்பண்ணைமயமாக்கம் பற்றிய தனது விர்சனத்தின் முக்கியமான அடிப்படைகளை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்:
"குறுகிய சாத்தியமான நேரத்தில்" ஒரு தேசிய சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் பணியை நாம் திரும்பத் திரும்ப தீர் க் கமான முறை யில் நிரா காரித் துள்ளோம் .
கூட்டுப்பண்ணைமயமாக்கமும் கைத்தொழில்மயமாக்கமும் உலகப் புரட்சியுடன் தகர்க்க முடியாத விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வுகளில் எமது பொருளாதாரத்தின் பிரச்சினைகள் அனைத்துலக அரங்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன." 18
இடதுசாரி எதிர்க் கட்சி வெற்றி பெற்றிருக்குமானால் அது எப்படி சோவியத் யூனியனின் வரலாற்றை மாற்றி அமைத்து இருக்கும் என எண்ணத் தலைப்படுகையில் "நாம் அது எப்படி வெளிப்பாடாகி இருக்கும் என்பதன் நிஜமான சித்திரத்தை வழங்க முடியும் என கூற முயற்சிக்கவில்லை. வருங்காலத்தை எதிர்வு கூறுவதைக் காட்டிலும் கடந்த காலத்தை ஒரு விரிவான அனுமானத்தின் மூலம் மறுநிர்மாணம் செய்வது பெரிதும் சங்கடமானது. 1924க்கு பின்னர் வேறுபட்ட கொள்கைகளை அமுல் செய்வது ஒரு பெருந்தொகையான புதிய அரசியல், சமூக, பொருளாதார மாறிகளை (Variables) வரலாற்றுச் சமன்பாட்டினுள்
39
அறிமுகம் செய்து வைத்திருக்கும் எனச் சொன்னால் அவை அவற்றின் பரஸ்பரம் எதிர்விளைவு சிக்கலினுள் நிகழ்வுகளின் பயணத்திசையை ஒரு பதிலீடுகளின் கடந்தகால மதிப்பீடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முற்றிலும் எதிர்பார்த்து இராத விதத்தில் நிகழ்வுகளின் பாதையை மாற்றி அமைக்கும். ஆனால் வரலாற்று "நிச்சயமின்மை" கொள்கைக்கு உரிய இடம் கொடுப்பது என்பது வரலாற்றுப் பதிலீடுகளைப் பற்றி திருப்தியான அல்லது புத்திக் கூர்மையான எதுவும் கூறமுடியாது என்பதைக் குறிக்காது. இடதுசாரி எதிர்க்கட்சியின் வெற்றி, சோவியத் பொருளாதாரத்தினைப் பெரிதும் பகுத்தறிவானதும் உற்பத்தி நிறைந்ததுமான மனித மதிப்பீட்டின் ஊடாகப் பயணம் செய்வது பெரிதும் சாத்தியமாகி இருக்கும் என தீர்மானிக்க பெரிதும் உறுதியான விடயங்களும் கோட்பாட்டு அடிப்படைக் காரணங்களும் உள்ளன.கைத்தொழில்மயமாக்கத்திற்கு "பலாத்காரம் நியாயமான அளவு"அவசியமாக இருந்தது எனக் கூறுவதன் மூலம் இந்தச் சாத்தியத்தை தள்ளுபடி செய்ய கொப்ஸ்போம் முயற்சிக்கின்றார். ஆனால் பிரச்சினை "எவ்வளவு "Pஎன்பதே . ஆனால் அது சோவியத் யூனியன் வரலாறு பிரமாண்டமான முறையில் நிரூபிப்பது போல் ஒரு சிறிய பிரச்சினை அல்ல. தொகைக்கும் பண்புக்கும் இடையேயான உறவினை மறந்து போகக் கூடாது. விவசாயிகளின் பணக்காரத் தட்டினர் மீது உயர்ந்த வரி விதிப்புக்கும் "ஒரு வர்க்கம் என்ற வகையில் குலாக்குகளை ஒழித்துக்கட்டுவதற்கும்"இடையே ஒரு ஆழமான வேறுபாடு இருந்து கொண்டுள்ளது. " இடதுசாரி எதிர்க் கட்சியின் பொருளாதாரக் கொள்கை ஸ்டாலினிச கூட்டுப்பண்ணை முறையின் பயங்கரத்தினை தன்னும் தவிர்த்து இருக்குமானால் இடதுசாரி எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருக்குமானால் அந்த ஆச்சரியத்துக்குரிய விடயம் இடம்பெற்றிருக்கும்.சோவியத் யூனியன் அந்தப் பிரமாண்டமான பேரழிவில் இருந்தும் அதில் இருந்த பெருக்கெடுக்கும் சகலதில் இருந்தும் தவிர்த்துக் கொண்டிருந்திருக்க முடிந்திருக்கும்.
இனி நாம் லியொன் ட்ரொட்ஸ்கியினதும் இடதுசாரி எதிர்க் கட்சியினதும் தோல்விகளின் பெறுபேறுகள் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தினையும் உலக சோசலிச இயக்கத்தினது தலைவிதியையும் பாதித்த விதத்தை ஆராயத் திரும்புவோம். இந்த முக்கியமான அனைத்துலக பரிமாணம் ஹொப்ஸ் போமின் பதிலீடுகளின் கணிப்பில் உள்ளடக்கப்படவில்லை. சோவியத் யூனியனின் இறுதி வீழ்ச்சி 1921ல் அது முகம் கொடுத்த புறநிலை நிலைமைகளினுள் இருந்து பெருக்கெடுத்து வந்தது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் ஸ்டாலினிச அதிகாரத்துவம் கடைப்பிடித்த அனைத்துலக கொள்கைகள் சோவியத் யூனியனின் பரிமாணத்தினை உண்மையில் எப்படித் தாக்கியது என்பதை ஆராய் வதற்கு ஹொப் ஸ் போம் எது வரித முயற் சரியும் செய்கிறாரில்லை.அனைத்துலக, உள்நாட்டு நிலைமைகளுக்கு இடையே
Page 22
40
ஒரு சிறிய உறவும் இருந்தது கிடையாது எனப் பிரேரிக்கும் அளவுக்கு அவர் சென்றுள்ளார். "ரூஷ்யப் புரட்சிக்கு உண்மையில் ஒன்றாகப் பின்னி இழைக்கப்பட்ட இரண்டு வரலாறுகள் உண்டு "ரூஷ்யாவின் மீதான அதன் தாக்கமும் உலகின் மீதான அதன் தாக்கமும் உள்ளன. நாம் இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக் Jn. Ligl. "19
ஆனால் இந்தப் பகுப்பு ஸ்டாலினிசம் என்ற தோற்றப்பாட்டை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக்குகின்றது. ஸ்டாலினிச அதிகாரத்துவம், லெனின்- ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ் போல்ஷிவிக் அரசாங்கம் உள்ளடக்கிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்துக்கு எதிராக ரூஷ்ய தேசியவாத பிற்போக்கின் அடிப்படையிலேயே தலையெடுத்தது. தமது சடfதியான நலன்களை சோவியத் யூனியன் பலம்வாய்ந்த ஒரு தேசிய அரசாக வளர்ச்சி கண்டதோடு இனங்காட்டிக் கொண்ட அதிகாரத்துவத்தின் சகல மூலகங்களுக்கும் தனி ஒரு நாட்டில் சோசலிசம் வேலைத்திட்டம் ஒரு பதாகையை வழங்கியது. உற்பத்திச் சாதனங்களின் அரசுடமை பொறிமுறை மூலம் அதிகாரத்துவம் அதனது வசதிவாய்ப்புக்களை பெற்றுக் கொண்டது. தமது வசதி வாய்ப்புக்களின் தேசிய அரச அத்திவாரம் பற்றிய அதன் நனவு வளர்ச்சி கண்டதும் அதிகாரத்துவம் அனைத்துலகப் புரட்சியின் அவசியத்தின் அடிப்படையில் இவற்றை பணயம் வைக்கும் அதன் விருப்பம் குறைந்து போனது. தனி ஒரு நாட்டில் சோசலிச வேலைத்திட்டம்; அனைத்துலக சோசலிச இயக்கத்தின் நலன்களை சோவியத் அரசின் தேசிய நலன்களுக்கு கீழ்ப்படுத்துவதை நியாயமானதாக்கியது.
அனைத்துலக வர்க்கப் போராட்டத்தின் மட்டத்தில் இடதுசாரி எதிர்க்கட்சியின் தோல்வியின் விளைவுகளே மிகவும் பயங்கரமானதும் நீண்டதுமாக விளங்கியது. ஆதலால் சோவியத் யூனியன் வேறுபட்ட பாதைகளில் வளர்ச்சி கண்டிருக்க முடியுமா என்ற கேள்வி மிகவும் ப யங் கரமான முறையிலும் ஆழமான பாதையரிலும் எழுப்பப்படுகின்றது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் வளர்ச்சி பற்றிய தமது சொந்த ஆய்வுகளில் ட்ரொட்ஸ்கி, அக்டோபர் வேலைத்திட்டத்திற்கும் பாரம்பரியங்களுக்கும் எதிராக சோவியத் யூனியனுள்ளான அரசியல் பிற்போக்கு, அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கம் அடைத்த தோல்விகளால் பெருமளவு பலம்பெறச் செய்யப்பட்டதை எப்போதும் வலியுறுத்தினார். 1923ன் இலையுதிர் காலத்தில் இடதுசாரி எதிர்க்கட்சி கண்ட ஆரம்பப் பின்னடைவுகள் ஜேர்மன் புரட்சியின் தோல்வியுடன் திட்டவட்டமான முறையில் பிணைக்கப்பட்டு இருந்தன. சோவியத் யூனியனின் உதவிக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் சமீப எதிர்காலத்தில் வருவர் என்ற நம்பிக்கை ஜேர்மன் புரட்சியின் தோல்வியுடன் இருண்டு போயிற்று. தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற தேசியவாத முன்நோக்கிற்கு ஒரு பரந்த பார்வையாளர்களைச் சிருஷ்டித்த காலநிலை இதுவே.
4.
கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் சோவியத் தலைவர்கள் கடைப்பிடித்த தேசியவாத போக்கினால் ஏற்பட்ட அரசியல் பிறழ்வுகள் சோவியத் யூனியனுக்கு வெளியே தொழிலாளர் வர்க்கத்தை அதிகமான தோல் விகளுக்கு இட்டுச் சென்றது. இந்தத் தோல் விகள் ஒவ்வொன்றும் சோவியத் யூனியனின் தனிமைப்படுத்தலை உக்கிரமாக்கியது. உலகப் புரட்சி முன்நோக்கு மீதான சோவியத் தொழிலாளர்களின் நம்பிக்கையை அரிக்கச் செய்தது. ஸ்டாலினிச ஆட்சியாளர்களுக்கு மார்க்சிச, அனைத்துலகவாதிகளிடம் இருந்து வந்த அரசியல் எதிர்ப்பை பாதித்தது.
புரட்சியை வரலாற்று அபிவிருத்தியின் சாதாரண பாதையை மீறுவதாகக் காணும் தமது தன்மைக்கு இணங்க புரட்சியின் சாத்தியம் சம்பந்தமாக பெரிதும் ஐயம் கொண்டுள்ள தொழில்சார் வரலாற்றாசிரியர்கள் அக்டோபர் புரட்சிக்கு உயிரூட்டிய அனைத்துலகவாத முன் நோக்கினை யதார்த்தம் அற் றதும் கற்பனையானதும் என தள்ளுபடி செய்வது சுகம் எனக் கண்டனர். ஒரு ஜேர்மன் புரட்சிக்கான சாத்தியங்களில் லெனின் கொண்டிருந்த நம்பிக்கையை எப்படி ஹொப்ஸ்போம் லெனினின் அரசியல் தீர்மானத்தின் ஒரு உயிராபத்தான தவறு எனக் கணித்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இருந்த போதிலும் ஹொப்ஸ்போம் தனி ஒரு நாட்டில் சோசலிசம் பற்றிய அரசியல் போக்குக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் பற்றி எதுவுமே கூறுவதாக இல்லை. இந்த விடயத்தில் கருத்துத் தெரிவிக்குமாறு அவர் கேட்கப்படின் அவர் 1918ல் லெனின் எப்படி இருந்தாரோ அப்படியே 1920பதுகளிலும் 1930பதுகளிலும் ட்ரொட்ஸ்கியின் அனைத்துலக முன்நோக்கு யதார்த்தமற்றதாக விளங்கியது. எனக் கூறி இருப்பார் என்பது நிச்சயம்.
ட்ரொட்ஸ்கியின் அனைத்துலக வேலைத்திட்டத்தை ஒரு நின்று பரிடிக் கக் கூடிய ஒரு பதிலீடாகக் கொள்வது -அது கடைப்பிடிக்கப்பட்டிருப்பின் சோவியத் யூனியனின் வரலாற்றுத் திசையை மாற்றியிருக்கும் எனக் கொள்வதை மற்றொரு முட்டுச்சுவருக்கு இட்டுச் செல்லும் எதிரிடை உண்மையான ஊகங்கள் என ஹொப்ஸ்போம் வாதிடலாம்.
அப்படியானால் நாம் எப்படி நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான இடதுசாரி எதிர்க் கட்சியின் அனைத்துலகக் கொள்கைகள் கம்யூனிஸ்ட் அகிலத்தை பெருமளவு பலப்படுத்தி, சோவியத் யூனியனின் அனைத்துலக அந்தஸ்தை முன்னேறச் செய்திருக்கும் எனக் காட்ட முடியும்Pஉண்மையில் நாம் இடதுசாரி எதிர்க் கட்சியின் வெற்றி சோவியத் யூனியனுக்கு வெளியேயான ரட்சிகரப் போராட்டங்களின் வெற்றியை உத்தரவாதம் செய்வதை ஒரு அரசியல், தார்மீக உண்மை ஆக்கியிருக்கும் என நிரூபிக்க முடியாது. புரட்சிகர அரங்கில் பெறுபேறுகள் அளவையியல் நிரூபணங்களால் அல்லாது நிஜ உடல்ரீதியான போராட்டங்கள்
Page 23
42
மூலமே தீர்மானிக்கப்படுகின்றது என்பதை ஒப்புக் கொள்ள நாம் முற்றிலும் தயாராக உள்ளோம். எவ்வாறெனினும் நாம் வரலாற்று சாட்சியங்களின் அடிப்படையில் இடதுசாரி எதிர்க்கட்சியின் வெற்றியின் விளைவுகள் உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு கொணரக் கூடியதாக இருந்த சில பெறுபேறுகள் பற்றிய உண்மை போல் தோன்றும் முடிவுகளுக்கு வரமுடியாது என்பதைக் குறிக்காது.
அனைத்துலகத் தொழிலாளர் வர்க்க வரலாற்றில் இரண்டு தீர்க்கமான நிகழ்வுகளை நாம் மிகவும் சுருக்கமாக மட்டும் ஆராய்ந்து பார்ப்போம்.
முதலாவதாக, 1927ல் சீனப் புரட்சியின் துர்அதிஸ்டமான தோல்வி: இந்தத் தோல்விக்கான காரணம், சியாங்கைசேக் தலைமையிலான முதலாளித்துவ குவாமிங் டாங்குக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி அடிபணிந்து போனமை, ஸ்டாலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை சியாங்கைசேக்கையும் குவாமிங்டாங்கையும் ஜனநாயகப் புரட்சியின் அதிகாரபூர்வமான தலைமையாக ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருந்தார். இந்தக் கட்டளையின் அரசியல் பின்னணியை சியாங்கைசேக்குடன் ஒரு அரசியல் கூட்டின் ஊடாக சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவினைச் ஸ்தாபிதம் செய்வது ஸ்டாலினின் இந்தக் கட்டளையின் பின்னணியாக விளங்கியது. முதலாளித்துவ குவாமிங்டானுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை கீழ்ப்படியச் செய்வதானது 1917ல் போல்ஷிவிக் மூலோபாயத்தின் மிகவும் அடிப்படையான படிப்பினைகளை மீறுவதாகும் எனவும் தொழிலாளர் வர்க்கத்துக்கு நாசகரமான விளைவுகளை கொணரும் எனவும் ட்ரொட்ஸ்கி இடைவிடாமல் எச்சரிக்கை செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களும் சிறிதளவு தன்னும் நம்பிக்கை வைக்கத் தக்க ஒரு கூட்டாக சியாங்கைசேக் இருக்கவில்லை. சந்தர்ப்பம் உருவானதுதான் தாமதம் சியாங்கைசேக் அவனது ஏகாதிபத்திய, முதலாளித்துவ எஜமானர்களின் நெருக்குவாரங்களுக்கு பணிந்து கம்யூனிஸ் ட் ' கட்சிக்கும் புரட்சிகர ஷங் காய் தொழிலாளர்களுக்கும் எதிராக மிலேச்சத்தனமாகத் திரும்புவான். இந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. சியாங்கைசேக்கின் நடவடிக்கைகள் கொடூரம் கண்டு வந்த வேளையிலும் ஸ்டாலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை குவாமிங்டானுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுமாறு நெருக்கினான். சியாங்கைசேக்கின் படைகள் ஷங்காய் நகருக்குள் நுழைவதற்கு முன்னரே புரட்சிகரத் தொழிலாளர்கள் தம்மை நிராயுதபாணிகளாக்கிக் கொள்ள வேண்டும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து இறுதிக் கட்டளை பிறந்தது ஸ்டாலினின் கொள்கைகள் மீதான ட்ரொட்ஸ்கியின் கண்டனங்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஊடாக எதிரொலிக்கையில் சீனாவில் சம்பவங்கள் ஒரு பேரழிவு திசையில் திரும்பியது. ஷங்காய் நகரினுள் நுழைந்த சியாங்கைசேக்கின் படைகள்- ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க் கட்சியும் எச்சரித்தது போல் பல்லாயிரக் கணக்கான
43
கம்யூனிஸ்ட் தொழிலாளர்களை படுகொலை செய்வதில் ஈடுபட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே தலையெடுக்க முடியாத விதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியது.
இடதுசாரி எதிர்க் கட்சியின் கொள்கைகள் 1920பதுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியை நிச்சயமாக்கி இருக்கும் என்பன போன்ற அவற்றின் தன்மையைக் கொண்டு நிரூபிக்க முடியாதவற்றை உறுதியாகக் கூறுவது அவசியம் அல்ல - எனினும் நானோ அத்தகைய வெற்றி சாத்தியமாகி இருக்கும் என்றே நம்புகின்றேன்.ஆனால் 1927 ஏப்பிரலில் சியாங்கைசேக்கின் சதிக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பலிகடாவாகி இருக்கமாட்டாது என்பதையும் தொழிலாளர் வர்க்கத்தின நிலைமை இவ்வளவு பரிதாபகரமான முறையில் பலவீனம் கண்டிராது என்பதையும் உயர்ந்த அளவிலான நிச்சயத்துடன் கூற முடியும். ஸ்டாலினின் தலைமையின் கீழ் இடம்பெற்ற நிகழ்வுகளின்படி சீனாவில் தோல்வி வரலாற்று விளைவுகள் கணிப்பிடமுடியாத பரிமாணத்தை எட்டியது. சோவியத் யூனியன் மீதான அதன் உடனடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க அது அதனது அரசியல் தனிமைப்படுத்தலை ஆழமாக்கியது. அதன்மூலம் அதிகாரத்துவ ஆட்சியை பலப்படுத்தியது. 1927 தோல்வி சீனாவில் புரட்சிகர இயக்கத்தின் தன்மையை துன்பகரமான முறையில் மாற்றி அமைத்தது. சியாங்கைசேக்கின் எதிர்ப்புரட்சி தாக்குதலினால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமை நகரங்களுள் தகர்க்கப்பட்டதோடு, குழம்பிப்போன கம்யூனிஸ்ட் கட்சியின் மிச்சசொச்சங்கள் நாட்டுப்புறங்களுக்கு பின்வாங்கிச் சென்றதோடு தொழிலாளர் வர்க்கத்துடனான அதன் வரலாற்று தகவமைவினையும் கைவிட்டது.
அதில் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு மாஓவின் தலைமையின் கீழ்-தகர்க்கப்பட்ட கட்சியின் வலதுசாரி கன்னையில் நின்றவர்- விவசாயிகளை அடிப்படையாகக் கொள்ள நேரிட்டது. இதன் மூலம் 1949ல் ஆட்சிக்கு வந்த கட்சி தொழிலாளர் வர்க்கத்துடன் ஒரு சில முக்கியமான தொடுவைகளையே கொண்டிருந்ததோடு 1927 பேரழிவுக்கு முன்னர் இருந்து வந்த இயக்கத்தின் ஒரு சிறிய சாயலையே கொண்டிருந்தது. மாஓவின் வாரிசுகள் ட்ரான்ஸ் நஷனல் கூட்டுத் தாபனங்கள் சீன வெகுஜனங்களைச் சுரண்டுவதை ஊக்குவித்தும் கண்காணித்தும் வருகையில் நாம் 1927க்கு முன்னர் ஸ்டாலின் கடைப்பிடித்த நாசகரமான கொள்கைகளின் நேரடி தாக்கங்களின் கீழேயே வாழ்ந்து கொண்டுள்ளோம்.
இடதுசாரி எதிர்க் கட்சியின் வெற்றி , சீனாவில் ஸ்டாலினின் கொள்கைகள் சிருஷ்டித்த பேரழிவுகளை தவிர்ப்பதை தவிர வேறொன்றையும் சாதித்திராது எனக் கொண்டால் அது சோவியத் யூனியனினதும் அனைத்துலகப் புரட்சிகர இயக்கத்தினதும் நலனுக்கு வாய்ப்பாக உலக வரலாற்றின் பயணத் திசையை ஆழமான
Page 24
44
முறையில் மாற்றி அமைத்திருக்கும்.
இனி நாம் இரண்டாவது நிகழ்வினை எடுத்து நோக்குவோம்: பாசிசம் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்தமை. 1933 ஜனவரியில் ஹிட்லர் வெற்றி காண்பதற்கு முன்னர்- சமூக ஜனநாயகக் கட்சியும்(SPD) கம்யூனிஸ்ட் கட்சியும (KPD) 13 மில்லியன் வாக்காளர்களின் அரசியல் நம்பிக்கையை கொண்டிருந்தன. ஹிட்லர் சான்சலராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்ற கடைசி ஜேர்மன் தேர்தலில் இவ்விரண்டு கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த வாக்குக்கள் நாசிகளுக்குக் கிடைத்த வாக்குக்களைக் காட்டிலும் அதிகமானது. எவ்வாறெனினும் வாக்குக் களின் மொத்த எண் ணிக்கை சோசலிஸ்டுகளுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையேயான சார்பு பலத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அதிரடிப் படைகளுடன் ஹரிட்லரின் இயக்கம்- நிர்மூலமான குட்டி முதலாளித்துவ, லுTம்பன் தட்டை அடிப்படையாகக் கொண்டு உறுதியற் றதும் , ஒழுங் கற் றதுமான வெகுஜனங் களைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் இரண்டு சோசலிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. முக்கிய உற்பத்திச் சக்திகளுடனான அவற்றின் உறவு காரணமாக அவை பிரமாண்டமான உள்வாரி சக்திகளின் சமூக, அரசியல் பலத்தை பிரதிநிதித்துவம் செய்தன.
எவ்வாறெனினும் ஹிட்லர் அனுபவித்த ஒரு மாபெரும் சாதகம் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் பிளவாகும். சமூக ஜனநாயகக், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டினதும் தலைவர்கள் பாசிச ஆபத்தில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தை காக்க எந்தவிதமான கூட்டு நடவடிக்கையிலும் ஈடுபட மறுத்துவிட்டனர். சமூக ஜனநாயகத்தின் மனோபாவம் நாற்றம் கண்டுவரும் முதலாளித்துவ வைமர் ஆட்சிக்குக் கீழ்ப்படியும் அதன் கோழைத் தனத்தில் இருந்து பெருக்கெடுத்தது. பாசிஸ்டுகளுக்கு எதிரான சமூக ஜனநாயக, கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்த்தாக்குதலின் சாத்தியமான புரட்சிகர விளைவுகளையிட்டு அது அஞ்சியது.
தொழிலாளர் வர்க்கத்தினைப் பலவீனப்படுத்தும் இந்தப் பிரச்சினையில் இருந்து தப்ப பாசிச அச்சுறுத்தலை திரும்பித் தாக்கும் விதத்தில் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்க அழைப்பு விடுப்பதே கம்யூனிஸ்ட் கட்சி முகம் கொடுத்த மையப் பிரச்சினையாக விளங்கியது. சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் அரசியல் எதிர்ப்புக்கிடையேயும் , ஒரு ஐக்கிய முன்னணிக்கான கம்யூனிஸ் ட் கட்சியின் உத்தியோகபூர்வமானதும் நேரடியானதும் இடைவிடாததுமான வேண் டு கோள் கள் குறைந்தபட்சம் சமூக ஜனநாயகத் தொழிலாளர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சி ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தினிடையேயான பிளவுகளுக்கு கிஞ்சித்தும் பொறுப்பாளிகள்
45
அல்ல என்ற ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.ஹிட்லருக்கு எதிரான ஒரு தாக்கமான போராட்டத்துக்கு சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களதும் தொழிற்சங்கத் தலைர்களதும் எதிர்ப்பை தோற்கடி க்கும் சஜ. க. பரந்த அபிப்பராயம் தோல்வி கண்டாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான பிரச்சாரம் அதன் அந்தஸ்தை பல இலட்சோப இலட்சம் சமூக ஜனநாயகத் தொழிலாளர்களின் கண்களில் உயர்த்தி இருக்கும் ; அதன் கணிசமான பகுதியினரை தன் பக்கம் ஈர்த்தும் இருக்கும்.
ஆனால் அத்தகைய ஒரு பிரச்சாரத்தை ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் நடாத்தியது கிடையாது.கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் ஸ்டாலினிஸ்டுகளால் திணிக்கப்பட்ட அதிதீவிர இடதுசாரிவாத நிலைப்பாட்டு, "மூன்றாம் காலப்பகுதி"க்கு இணங்க கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஜனநாயகக் கட்சி ஒரு வகையான பாசிசம்"சமூக பாசிசம்" எனப் பிரகடனம் செய்தது. இந்த "சமூக பாசிசத்துடனான" சகல உடன்படிக்கைகளும் அனுமதிக்க முடியாதவையாகின. VM
1930 ஆண்டளவு முன்னதாகவே ட்ரொட்ஸ்கி துருக்கி கடற்கரைப் பக்கமான பிரிங்கிப்போ தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து கொண்டு, பாசிசம் ஜேர்மன், அன்ைத்துலக தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு பாரிய ஆபத்தினைப் பிரதிநிதித்துவம் செய்வதாக எச்சரிக்கை செய்தார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஐக்கிய முன்னணிக்குப் போராடத் தவறுமாயின் அது ஹிட்லர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாதையைத் திறந்து வைக்கும் என ட்ரொட்ஸ்கி எச்சரிக்கை செய்தார்.
1930 செப்டம்பர் 26ல் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது : "ஜேர்மனியில் பாசிசம் ஒரு நிஜ ஆபத்தாக வந்துள்ளது. முதலாளித்துவ ஆட்சியாளர்களின் ஆதரவற்ற நிலையினதும் இந்த ஆட்சியின் மீது சமூக ஜனநாயகத்தின் கன்சர்வேட்டிவ் பாத்திரத்தினதும் இருளை அழிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தியற்ற நிலைமையின் குவியலினதும் ஒரு மோசமான வெளிப்பாடாகி உள்ளது. இதை எவர் மறுக்கின்றாரோ அவர் ஒன்றில் குருடர் அல்லது வாய் ஜம்பம் அடிப்பவர்." 20 பாசிசத்துக்கு எதிரான ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு போராட்டம் "ஜேர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பான்மையுடன் அணி சேர்வதும் பாசிச ஆபத்துக்கு எதிராக சமூக ஜனநாயக தொழிலாளர்களுடனும் கட்சி சார்பற்ற தொழிலாளர்களுடனும் ஒரு ஐக்கிய முன்னணியை அமைப்பதாகும்"21 1931 நவம்பர் 26ம் திகதி ட்ரொட்ஸ்கி எழுதியதாவது : "அபாய அறிவிப்பு கொடுப்பது இடதுசாரி எதிர்க் கட்சியின் கடமை. கம்யூனிஸ்ட் அகிலம் ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை பிரமாண்டமான விட்டுக் கொடுப்புக்களை நோக்கி இட்டுச் செல்கின்றது. இதன் சாராம்சம், பாசிசத்தின் எதிரில் கிடுநடுங்கி விட்டுக் கொடுப்பதாகும். தேசிய சோசலிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது எல்லாவற்றுக்கும் மேலாக
Page 25
46
ஜேர்மன் பாட்டாளி வர்க்க மலரை நசுக்குவதையும் அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவதையும் அதன் நம்பிக்கையையும் அதன் எதிர் காலத்தையும் ஒழித்துக் கட்டுவதையும் குறிக்கின்றது. ஜேர்மனியிலான சமூக முரண்பாடுகளின் பிரமாண்டமான முதிர்ச்சியையும் தீவிரத்தையும் கணக்கில் கொள்ளும்போது இத்தாலிய பாசிசத்தின் படுகுழி வேலைகளை ஜேர்மன் தேசிய சோசலிஸ்டுகளின் வேலையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு வெளிறிப்போனதும் உண்மையில் ஒரு மனித சோதனையாகவும் தோன்றக் கூடும்." 22 ஹிட்லரின் வெற்றி ஒரு கம்யூனிஸ்ட் வெற்றிக்கே வழிவகுக்கும் என்ற ஸ்டாலினிச தலைவர்களின் பரிதாபமான வாதத்திற்குப் பதிலளிக்கையில் 1932 ஜனவரி 27ல் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: "பாசிசம் என்பது வெறுமனே ஒடுக்குமுறையினதும் காட்டுமிராண்டித்தனத்தினதும் பொலிஸ் பயங்கரத்தினதும் ஒரு அமைப்பு அல்ல. பாசிசம் முதலாளித்துவ சமுதாயத்தினுள் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் சகல மூலகங்களையும் துடைத்துக்கட்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறப்பான அரசாங்க அமைப்பு. பாசிசத்தின் பணி, கம்யூனிஸ்ட் முன்னணிப் படைகளை ஒழித்துக் கட்டுவதில் மட்டும் தங்கி இருக்கவில்லை.ஆனால் முழு வர்க்கத்தின் மீதும் திணிக்கப்பட்ட ஒற்றுமையின்மையை வன்முறையின் மூலம் முன்னெடுப்பதாகும்.இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளர்களின் மிகவும் புரட்சிகரமான பகுதியினரை ஒழித்துக்கட்டுவது மட்டும் போதுமானது அல்ல. இதற்கு அனைத்து சுதந்திர, சுயேச்சை அமைப்புக்களை தவிடுபொடியாக்குவதும், பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து பாதுகாப்பு அரண்களை தகர்ப்பதும் ஒரு நூற்றாண்டின் மூன்று கால் நுாற் றாண்டுகளாக சமூக ஜனநாயகமும் தொழிற்சங்கங்களும் சாதித்த அனைத்தையும் வேரோடு கிள்ளி எறிவதும் அவசியம்."23
நான் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் இருந்து மற்றுமோர் பந்தியை மேற்கோளாகக் காட்டுவேன்: ஹிட்லரின் வெற்றி ஜேர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான யுத்தத்தை தவிர்க்க முடியாததாக்கும் என எச்சரித்து ட்ரொட்ஸ் கி 1932 ஏப்பிரலில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தனது வார்த்தைகளை மிகவும் அவதானமாக பொறுக்கி எடுத்து எழுதுகையில் ட்ரொட்ஸ்கி தான் ஆட்சியில் இருந்திருந்தால் எப்படி ஜேர்மனியில் ஒரு பாசிசத்தின் வெற்றிக்கு பதிலளிப்பார் என்பதை விளக்கினார்:
"இந்தச் சம்பவம் பற்றிய ஒரு தந்திச் செய்தி கிடைத்ததும் நான் றிசேர்வ் படைகளை அணிதிரட்டும் கட்டளையில் கையொப்பம் இடுவேன்.நீங்கள் ஒரு உயிராபத்தான எதிரியை உங்கள் முன் கொண்டிருக்கும் போது யுத்தம் , புறநிலை நிலைமையின் அளவையியலின் அவசியத்துடன் பெருக்கெடுக்கும் போது எதிரி தன்னை ஸ்தாபிதம் செய்யவும் பலப்படுத்தவும் அவசியமான கூட்டுக்களை பூர்த்தி செய்யவும் அவசியமான உதவிகளை பெறவும்
47
மேற்கில் இருந்து மட்டும் அல்ல கிழக்கில் இருந்தும் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை திட்டங்களை தயார் செய்யவும், இதன் மூலம் பிரமாண்டமான ஆபத்து பரிமாணத்துக்கு வளர்ச்சி பெறவும் எதிரிக்கு இளகிய மனதோடு கால அவகாசம் கொடுப்பது மன்னிக்க முடியாததாகும்."24
பின்னர் இடம்பெற்றவை பற்றி நன்கு அறிந்த நாம் நாஸிகளின் வெற்றி, ஹிட்லருடனான ஸ்டாலினின் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் துரோகம், இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பு, ஒப்பரேசன் பபரோசாவில் இறங்கக் ஹிட்லர் ஆயத்தமான போது (ரூஷ்யாவுக்கு எதிரான ஜேர்மன் ஆக்கிரமிப்பு) ஸ்டாலின் கோழைத்தனமாக சோவியத் பாதுகாப்பு முகாம்களை அகற்றியமை ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்து எழுகையில் 27 மில்லியன் சோவியத் படையாட்களும் பொதுமக்களும் இறந்தமை ஒருவர் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை சேர்கமான இழப்பு, நாசம் என்ற உணர்வுகள் இல்லாது வாசிக்க முடியாது. ட்ரொட்ஸ் கியின் புரட்சிகர மார் க்சிசக் கொள்கைகள் கடைப் பிடிக்கப்பட்டு இருக்குமேயானால் 20ம் நூற்றாண்டின் பாதை எவ்வளவு வேறுபட்டதாக இருந்திருக்கும் , எவ்வளவு மனித துயரங்களும் இழப்புக்களும் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
அனைத்துலகத் தொழிலாளர் இயக்கத்தினுள் ஸ்டாலினிசம், ஆற்றிய எதிர்ப்புரட்சி பாத்திரமும் சோவியத் யூனியனின் பரிணாமத்தினில் அது ஏற்படுத்திய தாக்கமும் தொடர்பான விடயத்தின் ஒரு ஆரம்ப அறிமுக உரையாக விளங்கத் தன்னும் சீனா, ஜேர்மனியின் தோல்விகள் பற்றிய இந்த சுருக்க உரை போதுமானது அல்ல. ஆனால் ஒரு விரிவுரையின் வரம்பினுள் நியாயமான முறையில் முன்வைக்கக் கூடிய வரம்பினையும் நாம் ஏற்கனவே தாண்டிச் சென்றுள்ளோம். எவ்வாறெனினும் வரலாற்று தெளிவுக்காக நான் மற்றுமொரு விடயத்தையும் சேர்த்தாக வேண்டும். ஜேர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் தோல்வி, ஸ்டாலினிச ஆட்சியின் பரிணாமத்தினுள் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை குறித்துக் கொண்டுள்ளது. தனது சொந்தக் கொள்கைகள் முக்கிய பொறுப்பாக அமைந்த ஒரு சக்தி வாய்ந்த பாசிச ஆட்சியின் பாரதூரமான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த நிலையில் ஸ்டாலின் சோவியத் அரசுக்கும் உலக சோசலிச புரட்சி இலக்குக்கும் இடையே இன்னமும் இருந்துவந்த நூல் போன்ற தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளத் தள்ளப்பட்டான். இதன்மூலம் அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் இழப்புக்களின் பேரில் சோவியத் யூனியனை பாதுகாப்பது என்பது- நிலைமைகளுக்கு ஏற்ப ஜனநாயக அல்லது பாசிச ஏகாதிபத்திய அரசுகளுடன் அரசியல் கூட்டுக்களை அமைப்பதிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.உலக விவகாரங்களில் சோவியத் யூனியனின் பாத்திரம் ஒரு நேரடியான எதிர்ப்புரட்சி பாத்திரத்தைப் பெற்றது. ஒரு மாற்றமானது ஸ்பானியப் புரட்சியின்
Page 26
48
காட் டி க் கொடுப் பரிலும் பழம் போல் ஷிவரிக் குகள் வேட்டையாடப்பட்டதிலும் இறுதியாக ஸ்டாலின்-ஹரிட்லர் உடன்படிக்கையிலும் ஒரு படுகொலை வெளிப்பாட்டைப் பெற்றது. ஹொப்ஸ்போம் இவை அனைத்துக்கும் வெறும் குருடராக இருக்கவில்லை. அவரின் எழுத்துக்கள் அவர் இந்த அரசியல் கருத்துப்பாடுகளை விமர்சன ரீதியில் ஆய்வு செய்யத் தவறியதன் பெறுபேறாக பல தசாப்த காலங்களுக்கு பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கத்தவராக தொடர்ந்து இருந்து வர இடம் கிடைத்ததை எடுத்துக் காட்டுகின்றது. "சோவியத் சகாப்தத்தின் பயங்கரமான கூற்று" ஹொப்ஸ்போம் முகம் கோணாமல் எமக்கு கூறுவது "சோவியத் பொதுமக்கள் அனுபவித்த ஸ்டாலினும் வெளியே விடுதலை சக்தியாகத் தோன்றிய ஸ்டாலினும் ஒன்றாக விளங்குவதே. ஒரு பகுதியினருக்கு அவர் விடுதலையாளனாக விளங்கியது குறைந்த அளவுக்கேனும் அவர் ஏனையவர்களுக்கு ஒரு கொடூர ஆட்சியாளனாக விளங்கியதனால் ஆகும்." 25
உண்மையில் ஹொப்ஸ்போம் எழுதியிருக்க வேண்டியது இதுதான்: "சோவியத் மக்கள் அனுபவித்த ஸ்டாலினும் பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியினால் அவருக்கு மோசடியான விதத்தில் வரைந்து காட்டப்பட்ட ஸ்டாலின் சித்திரமும் உண்மையில் சமமானது அல்ல " என்பதாகும்.அதற்குப் பதிலாக ஹொப்ஸ்போம் துர்அதிஸ்டமான விதத்தில் ஒரு வரலாற்றாசிரியன் என்ற விதத்தில் ஒரு இழிவான ஸ்டாலினிச சார்பு பரிந்துரைகளில் ஈடுபடுவதன் மூலம் சமரசம் செய்து கொள்கின்றார். அதன் மூலம் தனது சொந்தப் புத்திஜீவி வாழ் க் கையரின் துன் பகரமான சுய முரண் பாடுகளை அம்பலப்படுத்துகின்றார்.
ஸ்டாலினிச ஆட்சிக்கும் இடதுசாரி எதிர்க் கட்சிக்கும் இடையேயான இன்றியமையாத வேறுபாடுகள் பற்றிய எமது ஆய்வுகளில் மூன்று துறைகளில்-கட்சி ஆட்சி, பொருளாதாரக் கொள்கை, அனைத்துலக மூலோபாயம்- நாம் ட்ரொட்ஸ் கிசத்தின் வெற்றி, அதாவது நிஜ மார்க்சிசத்தின் வெற்றி சோவியத் யூனியனின் வரலாற்றினதும் அனைத்துலக சோசலிச இயக்கத்தின் வெற்றியினதும் பாதையையும் நிச்சயமாக ஆழமான முறையில் புதுக் கி அமைத்திருக்கும் எனக் காட்ட முயன்றுள்ளோம். சோவியத் யூனியனின் வரலாற்றை ஒரு முழு வரலாற்று தோல்வி நிலைப்பாட்டின் வரம்பினுள் நின்று அர்த்தப்படுத்துவோர் இக்கருத்துப்பாட்டை தள்ளுபடி செய்துவிடுவர் என நாம் எதிர்பார்க்கின்றோம். சோசலிசத்துக்கான நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே அழரிவுக் குள் ளாக இருந்தன எனவும் கொள் கைகளும் வேலைத்திட்டமும் அகநிலை நடவடிக்கைகளின் ஏனைய சகல வடிவங்களும் வரலாற்றில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்துவது கிடையாது எனவும் திருத்தமுடியாத இந்த நம்பிக்கையிழந்தவர்களும் சந்தேகப்பிராணிகளும் நம்புகின்றனர்.
நாம் ஏற்கனவே விளக்கியது போல் ட்ரொட்ஸ்கியின் வெற்றி
49
நிச்சயமாக சோவியத் யூனியனின் உயிர் வாழ்க்கையையும் சோசலிசத்தின் வெற்றியையும் உத்தரவாதம் செய்திருக்கும் என நிச்சயமாகக் கூறிவிடுவது முடியாத ஒன்று. ஆனால் அத்தகைய ஒரு கோரிக்கை வரலாற்று பதிலீடுகளை அரசியல், புத்திஜீவி நியாயத்துடன் எமது கணிப்பை உத்தரவாதம் செய்வது அவசியம் அல்ல.அதாவது, வரலாற்றினுள் சோவியத் யூனியன் அடைந்துள்ள தீர்க்கமான புள்ளியில் வேறுவிதத்தில் சொன்னால் நிகழ்வுகளின் பெறுபேறு பெரிதும் சாதகமாக விளங்குவதற்கு வேறு , அதாவது : மார்க்சிச கொள்கைகளை நடைமுறைக்கிட வேண்டிய கிளைகளாகப் பிரிந்து கொண்டுள்ள சந்திக்கு வந்தது போல உண்மையில் இடம்பெற்றுள்ளதைக் காட்டிலும் பெரிதும் மாறுபட்ட வரலாற்று அபிவிருத்தி பாதைக்கான ஒரு நிஜ சாத்தியம் இருந்து வந்தது என்பதை ஸ்தாபிதம் செய்வது மட்டுமே எமக்கு அவசியம்.
இச் சந்தர் ப் பத்தில் நாம் மற்றொரு பிரச் சினையை எதிர்பார்ப்பதோடு அது தீர்க்கமானதும் பொருத்தமானதுமெனக் கொள்கின்றோம். கோட்பாட்டு நிலைப்பாட்டி ல் இருந்து நோக்குமிடத்து ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க்கட்சியுப் பிரதிநிதித்துவம் செய்த நிலைப்பாடுகள் ஸ்டாலினிச ஆட்சியின் கொள்கைகளுக்கு பதிலீடாக ஒரு நிஜ மார்க்சிச கொள்கையாகும் என நாம் உண்மையில் ஒப்புக் கொண்டால் சோவியத் யூனியனுள் இந்த இடதுசாரி எதிர்க்கட்சி உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியை பிரதிநிதித்துவம் செய்ததா? எல்லாவற்றுக்கும் மேலாக பதிலீடுகளை கணிக்கையில் அது பயனற்ற ஒரு ஊக நடவடிக்கையாக இல்லாது இருக்க வேண்டுமானால் இருந்துவந்த புறநிலை நிலைமைகளின் வரம்பினுள் சாத்தியமாக இருந்ததோடு மட்டும் அதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முக்கிய கேள்விக்கு பதிலளிக்கையில் நான் ஜேர்மன் வரலாற்றாசிரியர் மைக்கேல் ரீமனின் ஸ்டாலினிசத்தின் பிறப்பு( The Birth of Stalinism) at 657 so LD5. It LiS35, 6 (Is Lugo) tycol மேற்கோளாகக் காட்ட விரும்புகின்றேன்.
"இடதுசாரி எதிர்க்கட்சியின் முக்கியத்துவம் இலக்கியங்களில் பெரிதும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இடதுசாரி எதிர்க்கட்சி பரந்த கட்சி அங்கத்தவர்களிடையேயும் அதைக் காட்டிலும் குறைவாக சனத்தொகையின் பரந்த பகுதியினரிடையேயும் கணிசமான அளவு செல்வாக்கு கொண்டிருந்ததையிட்டு பல நூலாசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். அத்தகைய கருத்துக்களுடன் ஒருவர் உடன்படுவது கஷ்டம். அந்த ஆண்டுகளில் கட்சித் தலைமையில் இடதுசாரி எதிர்க்கட்சி சம்பந்தமாக செலவிடப்பட்ட தோட்டாக் கும்பலின - 5 காவியத் யூனியனின் மிகவும் தூரமான இடங்களில் கூட ஊடறுத்துக் கொண்டிருந்த பரந்த அரசியல் பிரச்சார இயக்கத்தை கணிக்காது போகின்-உத்தியோக பூர்வமான பிரகடனங்கள், அறிக்கைகள், சிறு பிரசுரங்கள், நூல்களின் வெளிச்சத்தில் இது முரண்பாடானதாகத்
Page 27
50
தோன்றும்.
"1926ன் வசந்த காலத்தில் பழையவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களுமான கட்சித் தலைவர்களின் அடிப்படையிலான
ஐக்கிய எதிர்க்கட்சி (United Opposition) சில முக்கியமான இடங்களை பிடித்துக் கொண்டது. அது லெனின் கிராட் , உக்ரேன். ரான் ஸ் கோ கா சரியா , ஊ ர ல் பரி ரா ந் தி யங் களிலும் , பல்கலைக்கழகங்களிலும் சில அரசாங்க மத்திய அலுவலகங்களிலும் பல மாஸ் கோ பக்டரிகளிலும் , மத்திய கைத் தொழில் பிராந்தியங்களிலும் உள்நாட்டு யுத்தத்தின் பெரிதும் கஷ்டமான ஆண்டுகளில் ட்ரொட்ஸ் கியின் தலைமையில் சேவையாற்றிய தரைப்படை, கடற்படையின் தலைமைச் சபைகளின்( Command staff ) அதிகாரிகளின் ஒரு பகுதியினரிடையேயும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. கட்சித் தலைமையின் அடக்குமுறை(இடதுசாரி) எதிர்க்கட்சி வளர்வதை தடைசெய்தது. ஆனால் அதன் செல்வாக்கு, கட்சி அலகுகளில்( Cells ) இடம்பெற்ற பல்வேறு வாக்கெடுப்புக்கள் மூலம் குறிப்பிடப்பட்டதைக் காட்டிலும் பெரிது என்பதைக் காட்டியது."26
1927 ஜூலை , ஆகஸ்டில் இடம்பெற்ற ஒரு மத்திய குழுக் கூட்டத் தொடரில் ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க் கட்சியின் ஏனைய முக்கிய தலைவர்களும் ரூஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். றிமர் எழுதுவதாவது : "கூட்டத் தொடருக்குப் பின்னரும் கூட கட்சி அமைப்புக்களில் -சிறப்பாக பெரும் நகர மையங்களிலும் இரண்டு தலைநகரங்களிலும் இடதுசாரி எதிர்க்கட்சி இலக்கியங்களும் துண்டுப் பிரசுரங்களும் பெருக்கெடுத்தன. பல்வேறு நகரங்களில் இருந்தும் அனைத்து மாகாணங்களில் இருந்தும்லெனின் கிராட், உக்ரேன், ட்ரான்ஸ்கோஷியா, சைபீரியா, ஊரல்ஸ் உண்மையில் இடதுசாரி எதிர்க்கட்சியின் தலைவர்கள் செயற்பட்ட மாஸ்கோ-இடதுசாரி எதிர்க்கட்சியின் அதிகரித்த செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள் வந்தபடி இருந்தன. சட்டவிரோத, அரைச்சட்டவிரோத கூட்டங்களில் கலந்து கொள்ளும் கைத்தொழில் தொழிலாளர்களதும் இளைஞர்களதும் எண்ணிக்கையில் பெரிதும் அதிகரிப்பு காணப்பட்டது. பல பெரும் கட்சி அலகுகளில் இடதுசாரி எதிர்க் கட்சியின் செல்வாக்கு கணிசமான அளவு அதிகரித்து வந்தது. இது ஸ்டாலினிச கட்சி இயந்திரத்தின் முன்னைய சுதந்திரமான தொழிற்பாட்டை தடை செய்தது. இடதுசாரி எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் இராணுவம் பலமாகப் பாதிக்கப்பட்டது. லெனின் கிராட் இராணுவ மாவட்டத்தில்இருந்தும் லெனின்கிராட் குரொன்ஸ்யாட் காவல் படை பிரிவுகளிலும் உக்ரேன், பைலோரூஷியா படைப்பிரிவுகளில் இருந்தும் இடதுசாரி எதிர்க் கட்சியின் அதிகாரத்தின் கணிசமான அதிகரிப்பு பற்றிய அறிக்கைகள் வந்தன.
"எவ்வாறெனினும் முக்கிய பிரச்சினை இடதுசாரி எதிர்க்கட்சியின்
51
செயற்பாட்டின் அதிகரிப்பு அல்ல.ஆனால் கட்சியினுள் முழு சமபலநிலையாகும். புகழ்பெற்ற அரசியல் தலைவர்களில் பெருந்தொகையானோர் இடதுசாரி எதிர்க்கட்சியின் பக்கம் நின்றிருந்தனர். பலவீனம் கண்ட கட்சித் தலைமையின் அதிகாரம்சிறப்பாக ஸ்டாலினதும் புகாரினதும்-கட்சிக் கொள்கையின் பின்னடைவுகளையும் தோல்விகளையும் வெற்றிகளாக்க போதியதாக இருக்கவில்லை." 27
அப்படியானால் ஸ்டாலின் கன்னை இடதுசாரி எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் செய்த சவால்களில் இருந்து தலையெடுத்தது எப்படி? றிமன் விளக்குகின்றார்: "ஜீ.பீ.யூவை போராட்டத்தினுள் கொணராமல் தலைமையினால் நிலைமைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை."28
சோவியத் யூனியனதும் அனைத்துலக சோசலிச இயக்கத்தினதும் தொடர்ந்து வந்த வரலாறானது, அதிகாரத்தையும், சலுகைகளையும் தமதாக்கிக் கொள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவம் கையாண்ட வன்முறைகளின் இரத்தம் தோய்ந்த விளைவுகளின் அறிக்கையாகும். ஸ்டாலினிச அடக்குமுறை தாக்கத்தையும் இழப்புக்களையும் ஆராய்ந்து பார்க்காமல் வரலாற்று பதிலீடுகளைப் பற்றிய கலந்துரையாடலை முடிவுக்கு கொணர்வது முடியாது. நாம் கண்ட்து போல் ஹொப்ஸ்போம் இந்த விடயத்தை புறக்கணித்துவட்டு பாய்ந்து ஓடிவிடுகின்றார். "சோவியத் யூனியன் ஸ்டாலினைக் காட்டிலும் கொடூரம் குறைந்த ஒருவரால் தலைமை தாங்கப் பட்டிருந்தாலும் கூட கைத்தொழில்மயமாக்கத்துக்கு ஒரு போதிய பலாத்காரம் அவசியம்" என ஹொப்ஸ்போம் எமக்கு கூறுகின்றார்.
அதிகாரத்துவம் ஒழுங்கு செய்த வன்முறையின் சமூக அடிப்படையையும் அரசியல் நோக்கத்தையும் ஹொப்ஸ்போம் அடியோடு புறக்கணித்துவிடுகின்றார்.ஸ்டாலினிச வன்முறை என்பது ஏதோ ஒரு வகையிலான புரட்சிகர அதீதம் அல்ல, ஆனால் எதிர்ப்புரட்சி பயங்கரமாகும்.
இந்த விடயத்தை கையாள ஹொப்ஸ்போம் அக்கறைப்படாது விடுவதற்கு காரணம் சோவியத் யூனியனதும் அனைத்துலக சோசலிச இயக்கமும் முகம் கொடுத்த இரத்தக் களரிகளின் விளைவுகளையும் வரலாற்று அர்த்தத்தையும் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்வது என்பது அவரது வரலாற்று பரிந்துரையாளர் பாத்திரத்துடன் ஒத்துப் போகாததன் காரணத்தினாலாகும். சோவியத் அபிவிருத்தியின் ஸ்டாலினிச தோற்றப்பாட்டுக்கு ஒரு பதிலீடு இருந்தது: ஸ்டாலினிச பயங்கரம் அந்தப் பதிலீட்டை ஒழித்துக்கட்டிவிட்டது. அக்டோபர் புரட்சியின் வெற்றிககு பங்களிபபு செய்த இலட்சோபலட்சம் புரட்சிகர சோசலிஸ்டுகள் சோவியத் யூனியன் பூராவும் இருந்த கொலைக் கூடங்களிலும் லிபியங்கா சிறைக் கூடத்திலும் தள்ளப்பட்டு நாசமாக்கப்பட்டனர். சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் சோவியத் சமூகத்தின் மீதுமான அவர்களின் செல்வாக்கு வெறும்
Page 28
52
அரசியல் கருத்துக்களை-பிரச்சாரம் செய்வதுடன் மட்டும் வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை.இந்தக் கருத்துக்கள் எவ்வளவுதான் முக்கியமானதாக இருந்த போதிலும் ஸ் டாலினால் பலியெடுக்கப்பட்டவர்கள் அவர்களது கூட்டு நடவடிக்கையில் ரூஷ்ய தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்துககு ஒரு உலக வரலாற்று முக்கிய்த்துவத்தை வழங்கிய அசாதாரணமான சோசலிச கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாவர்.
இந்தக் கலாச்சாரம் ட்ரொட்ஸ் கியிடம் அதன் உச்ச வெளிப்பாட்டைப் பெற்றது.
விக்டர் சேர்ஜ் பெரிதும் புகழ்வாய்ந்த விதத்தில் விளக்கியது போல் "ட்ரொட்ஸ்கி போன்ற மனிதன் தோன்றுவதற்கு நீண்ட வரலாற்று காலப்பகுதி பூராவும் ஆயிரம் ஆயிரம் ஆட்கள் இந்த மாதிரியை ஸ்தாபிதம் செய்ய வேண்டும். இது ஒரு சடுதியான வால்நட்ஷத்திரத்தின் மின்னல் அல்ல. இந்த மாபெரும் சமூக மாதிரியின் அமைப்பு- நவீன மனிதனின் உயர்ந்த கட்டம்- 1917ன் பின்னர் இல்லாமல் போய்விட்டது எனவும் அதனது உயிர்வாழும் பிரதிநிதிகள் 1936-37ல் ஸ்டாலினின் கட்டளைகளால் படுகொலை செய்யப்பட்டு விட்டனர் எனவும் நான் நினைக்கின்றேன். நான் இந்த வரிகளை எழுதும் போது பெயர்களும் முகங்களும் என் நினைவில் குவிகின்றன. எமது சகாப்தத்தின் நிலைமையை வேண்டிய அளவுக்கு கீழே தள்ளுவதற்கு இந்த விதமான மனிதர்களும் அவரின் முழு க் கலாச் சாரமும் , தலை முறையும் அ டி யோடு துடைத்துக்கட்டப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகின்றது. ட்ரொட்ஸ்கி போன்ற மனிதர்கள் சோம்பேறிகளதும் பிற்போக்கினதும் சகாப்தத்தில் உயிர்வாழ அனுமதிக்க முடியாத அளவுக்கு(பிற்போக்காளர்களுக்கு)--கெடுதியாக எதிர்காலத்தின் மனித சாத்தியங்கள்" 29
ஏன் நாம் கடந்த இரண்டு மணித்தியாலங்களையும் அக்டோபர் புரட்சியின் வரலாற்று விளைவுகளின் பதிலீடுகளின் சாத்தியத்தைக் கணிக்கச் செலவிட்டோம். கடந்த காலத்தை மாற்ற முடியாது. நாம் அதன் விளைவுகளுடன் வாழவேண்டும். ஆனால் நாம் எப்படி கடந்தகாலத்தை புரிந்து கொள்கின்றோம். அந்த விளைவுகள் எந்த போக்கின் ஊடாக அமைக்கப்படுகின்றன. இது இன்றைய வரலாற்று நிலைமையை புரிந்து கொள்வதற்கான அவசியமான அடிப்படையாகும். எதிர்காலத்தில் சோசலிசத்துக்கான சாத்தியங்களை பற்றிய எமது மதிப்பீடு, இந்த நூற்றாண்டின் போக்கில் அனுபவித்த தோல்விகளின் காரணி பற்றிய எமது வியாக்கியானத்துடன் பிரிக்கமுடியாத விதத்தில் இணைந்து கொண்டுள்ளது.
20ம்நூற்றாண்டில் இருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்ன?
53
முதலாம் உலக யுத்தம் வெடித்ததன் பின்னர் நடந்த சகலதும் கட்டுப்படுத்த முடியாததும் புரிந்து கொள்ள முடியாததுமான சக்திகளின் வெளிப்பாடுகள் எனக் கொண்டால் எதிர்காலத்தில் - உங்களின் தெரிவுகள், அதிர்ஸ்டங்களைப் பொறுத்து - நல்ல அதிர்ஸ்டம் கிட்டுவதாக என நம்புவதை அல்லது பிரார்த்தனை செய்வதைத் தவிர- ஒருவர் வேறொன்றும் செய்ய முடியாது.
ஆனால் இந்த நூற்றாண்டின் அனுபவங்களை ஆராய்ந்து உள்ளிாத்துக் கொண்டவர்களுக்கோ இன்றைய வரலாற்று நிலைமையும் எதிர்காலத்துக்கான சாதகங்களும் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. இந்த நூற்றாண்டின் நிகழ்வுகள் ஒரு பரந்த வரலாற்று மையத்தையும் அர்த்தத்தையும் பெறுகின்றது. வரலாற்றில் வேறு எந்த ஒரு காலப்பகுதியும் புரட்சிகர, எதிர்ப்புரட்சிகர அனுபவங்களில் இந்தளவு வளம் வாய்ந்தது கிடையாது. இந்த நூற்றாண்டில் இணைந்து கொண்டுள்ள மோதிக் கொள்ளும் சமூகச் சக்திகள் முன்னொரு போதும் இல்லாத அளவிலான உக்கிரம் அடைந்துள்ளன. தொழிலாளர் வர்க்கமும் அதனது முன்னேறிய மூலகங்கள் 1917ல் அதன் முதலாவது மாபெரும் புரட்சிகர வெற்றியை ஈட்டிக்கொண்ட போதிலும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அது முகம் கொடுத்த எதிர்ப் புரட்சியின் பயங்கர சக்தியின் எதிரில் அதனால் நின்று பிடிக்கமுடியாது போய்விட்டதை நிரூபித்தது. எவ்வாறெனினும் ட்ரொட்ஸ்கியினதும் இடதுசாரி எதிர்க் கட்சியினதும் நான்காம் அகிலத்தினதும் செயற்பாடுகள் மூலம் எதிர்ப்புரட்சியினது தன்மையும் தோல்விகளின் காரணிகளும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டன. இந்தக் கோட்பாட்டு, அரசியல் அடித்தளத்தின் மீதே நான்காம் அகிலம் எதிர்காலத்துக்காக நனவான முறையிலும் வளைந்து கொடுக்காத புரட்சிகர மனவுறுதியுடனும் தயார் செய்கின்றது.
Page 29
அடிக் குறிப்புக்கள்:
l.
17.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
Die Welt Vo Gestera: Erinnerungen eines Europeans (Frankfurt an Mair 1997) p. 17 - Stefan Zveig. On History 62 ugu Guri ibalopo lu gibar:50, Hobsbawm Luö55ub 243 - அதே பக்கம் - 245 - அதே பக்கம் - 246 - அதே பக்கம் - 247 - அதே பக்கம் - 247 - அதே பக்கம் - 247 - அதே பக்கம் - 243 - அதே பக்கம் - 249 - அதே பக்கம் - 244 - அதே பக்கம் - 11 - அதே பக்கம் - 88 - அதே பக்கம் - 89 - அதே பக்கம் - 79-80 - அதே பக்கம் - 84-85 The Platform of the Left Opposition - gll gig strf 615 it 3.9, f, மேடை - பக்கம் 41 Writings of Leon Trotsky, a Gust 6it "Gustaivaji. 67 (p5g) bid,6it - பக்கம் 115-117. On History வரலாற்றை பற்றி - பக்கம் 25 The Struggle Against Fascism in Germany Ggir LD60fusa) பாசிசத்துக்கு எதிரான போராட்டம் - பக்கம் 60
அதே பக்கம் -72 அதே பக்கம் -124-125 அதே பக்கம் -144 Writings of Leon Trotsky 1932 லியொன் ட்ரொட்ஸ்கி எழுத்துக்கள் 1932பக்கம் - 82 On History வரலாற்றை பற்றி - பக்கம் 252 The Birth of Stalinism The USSR & Second Revolution ஸ்டாலினிசத்தின் பிறப்பு, சோவியத் ரூஷ்யா, இரண்டாம் புரட்சி - பக்கம் 19-20
அதே பக்கம் -28-29 அதே பக்கம் -28 The Serge-Trotsky Papers (34Fitj-t GJITL 6ív fi) | 1552.JPél 3,6i (London 1994), L u ġġib l-209
Page 30
சோசலிச சமத்துவக் கட்சி
மாத இதழ் சந்தா (தபால் கட்டணம்
உட்பட) இதழ் 8 ரூ. 40 இதழ் 12 ரூ.60 இதழ் 24 ரூ. 120 இதழ் 48 গুচ. 240
விபரங்களுக்கு: தொழிலாளர் பாதை முகாமையாளர், 90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை, மருதானை, கொழும்பு-10 தொ.பே. 682220
...................................................................... 7//اl LJه)
முகவரி.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கையொப்பம் . . . . . . . . . . திகதி. இக் கூப்பனை அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச் செயலாளர், சோசலிச சமத்துவக் கட்சி 90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை, மருதானை, கொழும்பு-10 தொ.பே. 682220
Page 31
12.00
தொழிலாளர் பாதை gravrsi 90, 1வது மாளிகாகந்த ஒழுங்
விதி / கொழும்பு-10.
ISBN 955-923-58-0
வெளியீட்டாளர்கள்
Ꮘ)Ꮺ5 ,