கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்
Page 1
கன்ேமு இராச்சிறு
முஸ்லி
"" స్వైధ
తత్ఫల్డ్
IEEEEEEEEELELLE,
GᏁ2 , ᏓᏅ3
pV*Slg CâĐỐ
ఫైకస్ట్రో-AZCNیجےمحN O
వనీని Z
国
■
■
Page 2
கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்
ஏ. எம். நஜிமுதீன் (நீதிமன்ற முதலியார்)
උඩරට මුස්ලිමිවරුන්ගේ සිංහල පෙළපත්නාම චී. එම්. නවිමුදීන් (දෙමළ)
Page 3
முதற் பதிப்பு : 1998. நவம்பர்
உரிமை : ஆசிரியருக்கே
Publisher: A. M. Najimudeen No. 77, Dole Road, Matale, Sri Lanka. Te: 066 - 31 31
Cover Design: Teles P. Mihindukulasooriya District Court - Kandy
Printed by: Nuwan Offset - warakamura, Matale.
Typeset by: Windows Systems, 1914, Kandy Road, Warakamura, Ukuwela, Sri Lanka.
Te: Office : 066 - 44655
II
சமர்ப்பணம்
என்னை வளர்த்து ஆளாக்கி, இப்பூவுலகில் உலவவிடும் இறைவனின் பெரும் பொறுப்பைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றி, இன்று என்னில் நின்றும் நீங்கி விட்ட ‘பன்னகாமம் கதிப் அப்துலி கப் பார் லெப்பையுடைய மகன் அஹமது லெப்பை' ஆகிய எனது தந்தைக்கும், எனதருமைத் தாயாருக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்கின்றேன்.
- ஏ. எம். நஜிமுதின் -
Page 4
පෙරවදන
මහනුවර දිස්ත්රික් විනිශේචයකාර කේ. සුනිල් ගාමිණි පෙරේරා,
· මැතිතුමාගෙන්...
“උඩරට මුස්ලිමිවරුන්ගේ සිංහල පෙළපත් නාම” මැයෙන් මහුනවර දිසා අධිකරණයේ ඒ. එමි. නවිමුදින් මහතා විසින් ලියන ලද මෙම ගුන්ථයට වදනක් සැපයීමට ලැබීම භාගන්යයක් සේ සළකමි.
මෙවන් ගුන්ථයක් ලිවීම ෙඑතිහාසික වශයෙන් ඉතා වැදගත් කමක් ලැබෙන ක්රියාවක් බව කිවයුතු නොවේ. උඩරට ඉතිහාසය සලකා බැලීමේදී උඩරට ජීවත්වූ මුස්ලිම්වරුන්ට මවගේ පැවැත්මෙන් එන සිංහල වාසගම යොදා ඇත්තේ වෙළඳාම පිණිස මෙම දිවයිනට පැමිණි අරාබිවරුන් එවකට රාජ්ය පාලනය කළ රජවරුන්ගේ අනුග්රහයෙන් සිංහල කාන්තාවන් සමග විවාහවු නිසා බව සඳහන් කළ යුතු ය. ලoකාවේ වෙනත් ප්රදේශවල වාසය කරන මුස්ලිමීවරුන් මෙන් නොව උඩරට ප්රදේශයේ වාසය කරන බොහෝ මුස්ලිම් ජාතිකයන්ට සිංහල වාසගම ඇති බව මා මුලින්ම දැනගත්තේ මහනුවර දිසා අධිකරණයේ නඩු විභාග කරන විට ය. මේ සම්බන්ධයෙන් මා බලවත් කුතුහලයට පත්වූ අතර, මේ සමිබන්ධයෙන් මුස්ලිම් ජාතිකයෙකු වන අධිකරණයේ භාෂණ පරිවර්තක නපිඹුලීන් මහතාගෙන් විමසු අවස්ථාවේදී ඔහු දන්වා සිටියේ දැනටමත් උඩරට මුස්ලිම්වරුන්ගේ සිංහල වාසගම ඇතුළත් ගුන්ථයක් ඔහු විසින් දෙමළ භාෂාවෙන් සකස් කරගෙන යන බවත්, යථා කාලයේදී එය මුද්රණයෙන් එළිදකින බවත් ය.
මෙවැනි පර්යේෂණ ගුන්ථයක් රචනා කිරීම උඩරට රාජ්යය ඉතිහාසයේ මෙන්ම ශ්රී ලoකාවේ ඉතිහාසය හදාරන සියල්ලන්ට ම වැදගත් වූවක් වන්නේ මා විග්වාසය කරන අයුරින් එවන් උත්සාහයක් මෙයට පෙර කිසිවෙකු විසින් කර නොමැති නිසා ය.
උඩරට රාජධානියේ වාසය කළ මුස්ලිම්වරුන්ට ලැබූ සිංහල පෙළපත් නාම ඔවුන් වෙත රජු විසින් ප්රධානය කිරීමේදී ඒකාකාරී භාවයක් නොගත් අතර, ඒ ඒ මුස්ලිම් ජාතිකයා විසින් කරන ලද සේවයට අනුකුල ලෙස නම් ප්රදානය කර ඇති බව පෙනී යන්නේ ය. රජුගේ හා රජයේ ආරක්ෂාව පිණිස සිංහල රජුගේ විග්වාසය දිනාගෙන හමුදාවේ සේවය කළ මුස්ලිමීවරුන්ට “කටුපුල්ලේ” වැනි පෙළපත් නාම දී ඇති බව පෙනී යයි. ජෛවද්ය සේවයේ යෙදුණු මුස්ලිම්වරුනට “ගොවද්යතිලක වාසල මුදියන්සේලාගේ’ හා “ ඩේත්ගේ මුහන්දිරම්” වැනි ගෞරව නාම විශේෂයක් දී ඇති බව පෙනී යන්නේ ය. ගම් නායකයින් වශයෙන් මුස්ලිම්වරුන්ට ලැබු නම් වශයෙන් "ගමිමෙහ්ලා’, "කoකානමිලාගේ’, මුහන්දිරම සහ විදානේ ආදි වශයෙන් භාවිතා වූ බව පෙනී යයි.
IV
උඩරට රාජධානියේ විවිධ ප්රදේශවල වාසය කළ මුස්ලිමිවරුනට උඩරට කුල ක්රමය අනුව පෙළපත් ප්රදානය කර ඇති බව පෙනී යන අතර, මෙය ඉතා විග්මයට oභිතුවන කරුණක් වන්නේ ඉස්ලාම් භක්තිකයන් අතර ලොව කිසිම තැනෙක එවන් කුල ක්රමයක් නොතිබුන හෙයිනි. "මුදලි”, “මුදියන්සේ” ආදී පෙළපත් නම් ලැබූ මුස්ලිමිවරුන් උඩරට ප්රදේශය තුළ වාසය කළ බව පෙනේ. එවැනි පෙළපත් නමි ලැබුවන් උසස් ගොවිකුලයේ මුස්ලිම්වරුන් බව එවකට සළකා ඇත. කෙසේ වුවද උඩරට මුස්ලිම්වරුන් ඔවුන්ගේ සිංහල වාසගම ඉතා ගෞරවයෙන් සළකනු ලබනවා විනා. එවන් කුලබේදයක් උඩරට මුස්ලිමිවරුන් අතර තිබේයයි මම නොසිතමි. ඔවුස්ලිමිවරුන්ට පොදුවේ දී ඇති නාම වශෙයන් යෝනක, මරක්කල, තමිබි ආදි නමි ගිනිය හැකිය.
ඉපැරිණි උඩරට මුස්ලිමිවරුන් ෙබාහෝ අවස්ථාවලදී, උඩරට රජවරුන්ට ඉතා පක්ෂපාතිව මෙන්ම හිතවත්ව කටයුතු කළ අතර වර්තමානයේ සමහර ඉස්ලාමී භක්තිකයන් ඔවුනට පමණක් වෙන්වු පළාත් සභාවක් නැගෙනහිර ප්රදේශයෙන් ඉල්ලා සිටින අවස්ථාවක. එසේම ඉස්ලාමී මුලධර්ම වාදය මත පදනමි වූ දේශපාලන රටාවන් ගොඩනැoවීමට වෑයම් කරන අවස්ථාවක, පැරණි උඩරට රාජධානියේ වාසය කළ මුස්ලිමිවරුන් එකී රාජධානියේ උන්නතිය තකා අගනා සේවයක් කළ බව කිව හැක. බොහෝ විට ඔවුන් සිංහලයින් සමග එකතු වී තමන්ගේ පොදු සතුරන්වූ බටහිර ජාතීන් සමග සටන් කළ බව ඉතිහාසයේ දැක්වේ. විටෙක පෘතුගීසීන්ට විරුද්ධව ද විටෙක ලoෙද්සීන්ට විරුද්ධව ද තවත් විටෙක ඉංග්රීසින්ට විරුද්ධව ද මෙසේ ඉස්ලාම් ආගම ඇදැහු මුස්ලිමිවරුන් පෙරමුණ ගෙන සටන් කළ අතර, මේ හේතුව නිසාම සමහර අවස්ථාවලදී සිංහල රජුගෙන් ගමිවර පවා තැගි ලැබු බව ඉතිහාසයේ දැක්වේ. කෙසේ වුවද ඉහතකී යුරෝපීය යටත් විජිත ආක්රමණිකයන් අතුරින් සුළු ජාතීන් සහ මහ ජාතිය අතර, බේද ඇති කොට පාලනය කිරීමට ඉමහත් දක්ෂතාවයක් දැක්වු බ්රිතාන්ය අධිරාජ්යවාදින් උඩරට සිංහල රාජධානියේ අවසාන කාලයේදී මෙපමණ හිතවත් කමකින් සිටි සිංහලයන් හා මුස්ලිම්වරුන් අතර බේද ඇතිකොට ඔවුන් අතර පැවැති මිතුත්වය ෙබාහෝ අවස්ථාවලදී කඩා බිඳ දැමීමට සමත්වූ බව ඉතිහාසය පරිශීලනය කිරීමේදී (පෙනී යන්නේය. මෙම ජාතින් දෙක අතර මෙවන් සමීප සමිබන්ධතාවයන් ගෙනහැර පෑම සඳහා සුළු වශයෙන් හෝ සේවයක් කිරීම අරඹයා ඒ. එමි. නෆිමුදීන් මහතා විසින් රචිත “උඩරට මුස්ලිමිවරුන්ගේ සිංහල පෙළපත් නාම” යන ගුන්ථ ඉතිහාසඥයින්ට Gමන්ම ඉතිහාසය හදාරන ලොකු කුඩා සැමටම ද පොදුවේ ශ්රී ලාංකිකයන්ට ද ඉතා වැදගත් ගුන්ථයක් බව මගේ හැගීමයි. මෙකී ගුන්ථයේ සිංහල සහ ඉංග්රීසි පරිවර්තනයක් ද එළිදැක්වීමට නරිමුදීන් මහතා නුදුරු අනාගතයේදී කටයුතු කරතයි මා විග්වාස toÓ9.
ඒ මහතාගේ අනාගතයට සුභ පතමි.
ෙක්. සුනිල් ගාමිණී පෙරේරා
దేదో లెటిలి(విదుర - 196లిర
1998 සැප්තැමිබර් 30 වැනි දින. €5లిర దొ రిదిదర0
Page 5
தமிழாக்கம்:
கெளரவ கண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே. சுனில் காமினி பெரேரா அவர்கள் வழங்கிய
அணிந்தரை
“கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்’ என்ற மகுடத்தின் கீழ் கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் கடமையாற்றும் திரு. ஏ. எம். நஜிமுதின் அவர்களால் எழுதப்பெற்ற இந்நூலுக்கு அணிந்துரையொன்றினை வழங்கக் கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் எனக் கருதுகின்றேன்.
9
இவ்வாறான நூலொன்றினை எழுதுவது, வரலாற்றில் மிக முக்கிய செயல் என்று கூறாமல் இருக்க முடியாது. கண்டி இராச்சிய வரலாற்றினை ஆராய்ந்து பார்க்கும்போது, கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தவர்களுக்குத் தாய் வழிமுறையில் வருகின்ற சிங்கள வம்சாவளிப் பெயர்கள் குறிக்கப்பட்டிருப்பது வாணிப நோக்கமாக இத்தீவிற்கு வருகை தந்த அராபியர்கட்கு, அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களின் அனுசரணையுடன் சிங்களப் பெண்மணிகளைத் திருமணம் செய்ததால் ஏற்பட்டது எனக் குறிப்பிட (Մlգպլb.
இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தவர்களைப் போலல்லாது, கண்டி இராச்சியத்தில் உள்ள பிரதேசங்களில் வாழுகின்ற அநேகமான முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு சிங்கள வம்சாவளிப் பெயர் இருப்பதை கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் நான் முதலில் அறிந்தேன். இது சம்பந்தமாக நான் மிகவும் சந்தோஷமடைந்ததுடன், இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த நீதிமன்ற முதலியார் நஜிமுதீன் அவர்களிடம் விசாரித்தபோது, தற்போது அவர் கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் எனும் மகுடத்தின் கீழ் நூலொன்றினைத் தமிழ் மொழியில் எழுதிக் கொண்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அது அச்சிட்டு நூலுருவில் வெளிவர இருப்பதாகவும் என்னிடம் கூறினார்.
இவ்வாறான ஆய்வு நூலொன்று எழுதுவது, கண்டி இராச்சிய வரலாறு மட்டுமன்றி இலங்கையின் வரலாற்றைக் கற்கின்ற சகலருக்கும் மிக முக்கியமானது என நான் குறிப்பிடுவது, நான் நம்பிக்கை கொள்ளும் அளவில் இதற்கு முன் இவ்வாறான முயற்சியில்
V
எவராவது ஈடுபட்டிருப்பதை நான் காணமுடியாமல் இருப்பதினா லேயாகும் கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிங்கள வம்சாவளிப் பெயர்கள், மன்னரினால் வழங்கப்படும்போது, ஒரே தன்மையுடையதாகக் காணப்படவில்லை என்பதுடன், அவ்வந்த முஸ்லிம் சமூகத்தவரால் செய்யப்பட்ட சேவைகளுக்கு ஏற்புடையதாக பெயர்கள் வழங்கப்பட்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. மன்னரின், மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்பு தொடர்பாக சிங்கள மன்னரின் நம்பிக்கையை வென்றெடுத்து, படையில் சேர்ந்து கடமை புரிந்த முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு ‘கட்டுப்புள்ளே’ போன்ற வம்சாவளிப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். வைத்தியத் துறையில் சேவை செய்த முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு “வைத்திய திலக வாஸல முதியன்சேலாகே” மற்றும் "பெத்கே முஹந்திரம்கே" போன்ற விசேஷ கெளரவப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். கிராமியத் தலைவர்களாக முஸ்லிம் சமூகத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் 'கம்மஹேலே, *கங்ங்ானம்லாகே’, ‘முகந்திரம்', ‘விதானை' போன்ற பெயர்கள் பாவிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
கண்டி இராச்சியத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு, கண்டி இராச்சிய குல அமைப்புப்படி வம்சாவளிப் பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், இதில் மிகவும் அதிசயப்படக் கூடிய விடயம் என்னவெனில், இஸ்லாமியர்கள் மத்தியில் உலகில் எவ்விடத்திலும் அவ்வாறான குல அமைப்பு காணப்படுவ தில்லை என்பதாகும். ‘முதலி’, ‘முதியன்சே ஆகிய வம்சாவளிப் பெயர்களைப் பெற்ற முஸ்லிம் சமூகத்தவர்கள் கண்டி இராச்சியத்தில் வாழ்ந்துள்ளனர். இவ்வாறான வம்சாவளிப் பெயரைப் பெற்றவர்கள் உயர்ந்த விவசாயக் கோத்திரத்தைச் (கொவிகுல) சேர்ந்தோர் என அக்காலத்தில் கருதப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கண்டி இராச்சிய முஸ்லிம் சமூகத்தவர்கள் தமது சிங்கள வம்சாவளிப் பெயர்களை மிகக் கெளரவமாக மதிக்கின்றனர். எனினும் கண்டி இராச்சிய முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு மத்தியில் குல வேறுபாடுகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை. பொதுவாக முஸ்லிம் சமூகத்தவர்களுக்குக் குறிக்கப்படும் பெயர்களில் ‘சோனகர்’, ‘மரக்கல', 'தம்பி’ போன்ற பெயர்களையும் குறிப்பிடலாம்.
அநேகமான சந்தர்ப்பங்களில் பழமையான கண்டி இராச்சிய முஸ்லிம் சமூகத்தவர்கள், கண்டி இராச்சிய மன்னர்களுக்கு மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் கருமமாற்றினர். நிகழ்கால சில இஸ்லாமியர்கள் அவர்களுக்கென மட்டும் வேறு மாகாண
VI
Page 6
சபையொன்று கிழக்குப் பிரதேசத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அத்தோடு இஸ்லாமிய அடிப்படையினை மையமாகக் கொண்ட அரசியலை உருவாக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில், புராதன கண்டி இராச்சிய முறையில் வாழ்ந்த முஸ்லிம சமூகத்தவர்கள் கண்டி இராச்சியத்தின் உயர்ச்சிக்காக அளப்பரிய சேவைகள் செய்துள்ளனர் எனக் கூறலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து, தமது பொது எதிரியாகிய வெளிநாட்டவர் களுடன் யுத்தம் செய்துள்ளமை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் போர்த்துக்கேயருக்கு எதிராகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒல்லாந்தருக்கு எதிராகவும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றிய முஸ்லிம் சமூகத்தவர்கள் முன்னணியில் நின்று யுத்தம் செய்துள்ளதுடன், இவ்வாறான செயல் திறமையினால் சில சந்தர்ப்பங்களில் சிங்கள மன்னர்களிடமிருந்து கிராமங்களையும் பரிசாகப் பெற்றுள்ளமையை வரலாற்றில் காணமுடியும். எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய காலணித்துவ ஆக்கிரமிப்பாளர்கள், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தி ஆட்சி புரியும் திறமையைக் காண்பித்த பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், கண்டி இராச்சிய இறுதிக் காலத்தில் இவ்வாறு அன்புடன் இருந்து வந்த சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு இடையில் வேற்றுமையை உருவாக்கி அவர்களிடையே இருந்து வந்த சினேகத் தன்மையைப் பல சந்தர்ப்பங்களில் உடைத்து நொறுக்குவதில் வெற்றி கண்டுள்ளதை வரலாற்றினைப் பார்க்கும் போது அறிய முடிகின்றது. இவ்விரு சமூகங்களுக்கும் மத்தியிலுள்ள இவ்வாறான நெருங்கிய தொடர்பினை எடுத்துரைப்பதற்காக ஒரு சிறிதளவேனும் சேவையாற்றும் நோக்குடன் திரு. ஏ. எம். நஜிமுதீன் அவர்களால் நூலுருவாக்கப்பட்ட "கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்” எனும் நூல், வரலாற்று அறிஞர்களுக்கும், வரலாற்றைக் கற்கும் பெரியோர், சிறியோர்க்கும், பொதுவாக இலங்கையர்களுக்கும் மிகவும் முக்கியமான நூல் என்பதே எனது அபிப்பிராயமாகும். இந்நூலின் சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் எதிர்காலத்தில் வெளிக்கொணர திரு. ஏ. எம். நஜிமுதீன் அவர்கள் ஆவண செய்வாரென நம்புகிறேன்.
நூலாசிரியரின் எதிர்காலத்திற்கு என் நல்லாசிகள் உரித்தாகட்டும்.
கே. கனில் காமினி பெரேரா
1998 GABs liberi 30kb fagf மாவட்ட நீதிபதி - கண்டி மாவட்ட நீதிமன்றம் - கண்டி.
Vʻ | |
பொருளடக்கம்
පෙරවදන
அணிந்துரை
முன்னுரை
அத்தியாயம் - 1
கண்டி இராச்சியமும்
ஆதி அரேபியரும் 1.
அத்தியாயம் - I
சிங்கள - முஸ்லிம் வம்சப் பரம்பரை 13
அத்தியாயம் - II
கண்டிய முஸ்லிம்களின் இராஜியத்தொடர்புகளும் சிங்கள வம்சாவளிப் பெயர்களும் 23
gigsguTub - IV
பெளத்த விகாரை தேவாலயங்களில்: கண்டிய முஸ்லிம்கள் பெற்றச் சிறப்புகளும்,
சிங்கள வம்சாவளிப் பெயர்களும் 52
அத்தியாயம் - V
சிங்களவர்களது குல அமைப்பில்
முஸ்லிம்களது பரம்பரைப் பெயர்கள் 83
அத்தியாயம் - VI
சமூக வாழ்க்கையில் முஸ்லிம்களது சிங்கள வம்சாவளிப் பெயர்கள் 19
அத்தியாயம் - VII
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பொதுவான பெயர்கள் 156
Page 7
முன்னுரை
கண்டிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், தெளிவான சிங்கள மொழி அமைப்புடைய பல்வேறு வகையான பெயர்களைத் தமது வம்சாவளியாகக் கொண்டுள்ளார்கள். தமது பெயருடனுள்ள சிங்கள வாசகங்களை உச்சரிக்கும் போது, இவர்கள் சப்தத்துடன் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கூறும் பாங்கை, இன்றும் அவதானிக்கலாம். இந்த பெருமிதம் கொள்ளும் தன்மை ஏற்படக் காரணம், அப்பெயர்களில் காணப்படும் தொல் பொருளியல் அந்தஸ்தை, அவர்கள் உணர்ந்து வைத்திருப்பதேயாகும்.
கண்டிய முஸ்லிம்களின் பெயர்களை அரவணைத்துக் கொண்டுள்ள இப்பெயர் வழிகளைச் சிங்கள சமூகத்தவர் செவியுறும் போது மலைப்போடு நோக்குவதுடன், வரலாற்று பூர்வீகங்களை அறிந்தவர்கள், மறைக்கமுடியாத பழமையான தொடர்பு சிங்களவர்களுக்கு முஸ்லிம்களுடன் இருப்பதை உணராமலில்லை.
பெயர் விடயம் தானே! இது ஒரு பெரிய விஷயமா - எனக் கருதி இதனை தட்டிக்கழிக்க இயலாது. ஏனெனில் இது, முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம்கள் அறிய வேண்டிய, பிறிதொரு அத்தியாயம் ஆகும். அத்தோடு, சிங்களச் சகோதரர்களுக்கும் இந்தச் செய்தி சென்றடைய வேண்டும் என்பது எனது அவா. ஏனெனில், இது முஸ்லிம்களைப் பற்றிச் சிங்களச் சமூகத்தவர் அறிவு பெற வேண்டிய ஓர் அத்தியாயமும் ஆகும். இது ஒரு வரலாறு அல்ல. வம்சாவளிப் பற்றிய எனது ஆய்வின் ஆரம்ப அறிக்கையாகவே இதனை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
கண்டி இராச்சியத்தில் குடியேறி பன்னெடுங்காலங்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனத்தவர் எனக் கூறலாம். உலகில் எந்தவொரு நாகரீகத்திலும் காண்பதற்கு அரிதானவாறு, தாம் சேர்ந்த சமூகத்தவரின் பெயர்வழியை, அவர்களது
இவர்களைச் சாருகின்றது.
முஸ்லிம்களைச் சிங்களவர்கள் நம்பிக்கையானவர்களாகவும், அவசியமானவர்களாகவும் கருதினார்கள். அவர்களின் மதச் சுதந்திரத்திற்கு மன்னர்களும், சிங்கள மக்களும் மதிப்பளித்ததோடு பள்ளிவாசல்களை நிர்மாணித்து, பராமரிக்கவும் உதவியுள்ளார்கள். இது சிங்கள, பெளத்த மக்கள் முஸ்லிம்களுடன் கொண்டிருந்த நேசத்தின் அடையாளமாகும்.
ஒரு சம்பவம்,
13ம்நூற்றாண்டு காலப்பகுதியில், இந்தியாவை அடுத்துள்ள அரக்கானிய என்ற நாட்டை, பெளத்த மதத்தைச் தழுவியிருந்த மன்னர்கள் அரசாண்டார்கள். இங்கு, இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியங்களும் வளர்ந்தோங்கத் தொடங்கியது. பர்மிய மன்னனின் தாக்குதலுக்குள்ளானதால், நரமெய்க்கலா என்ற மன்னன் இந் நாட்டை இழந்தான். பின்னர் முஸ்லிம் சேனையொன்றின் உதவியுடன் இழந்த நாட்டை திரும்ப மீட்டான் என்று ஒரு வரலாறு கூறுகின்றது.
முஸ்லிம்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக, அவர்கள் பெளத்தராக இருந்தபோதிலும், அந்நாட்டு நாணயங்களில் இஸ்லாமிய திருக்கலிமாவைப் பொறித்தார்கள். அத்தோடு "அலிகான்”, “கலிமா ஷா”, “ஹாசைன் ஷா” போன்ற இஸ்லாமிய பெயர்களை மன்னனின் குடும்பத்தவரே ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறே,
முஸ்லிம்களும், சிங்கள பெளத்த மக்களும் கொண்டிருந்த உறவிற்கு அடையாளமாக, இச்சிங்கள வம்சாவளிப் பெயர்களை கண்டிய முஸ்லிம்கள் ஆட்டிக்கொண்டார்கள் எனலாம்.
எடுத்துக்காட்டாக,
"முதலி” எனவும் "முதியன்சே” எனவும் சிங்கள உயர்குல அமைப்புப்பெயர்கள் இன்றும் கண்டிய முஸ்லிம்களிடம் வம்சாவளியாக காணப்படுகின்றன. இந்தப் பெயர்கள் இன்று நேற்று ஆட்டிக்கொள்ளப்பட்டவை அல்ல. மிகப்பழமையான காலத்தில், இன்றைய முஸ்லிம்களின் மூதாதையருக்கு சிங்கள மன்னர்களாலும், சிங்கள சமூகத்தவராலும் ஆட்டப்பட்டு பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களால் பேணப்பட்டுவரும் நாமங்களாகும். இவ்வம்சாவளிப் பெயர்கள், சிங்கள சமூகத்துடன் முஸ்லிம்களை இணைக்கும் பாலம் என்றால் அது மிகையாது. அத்துடன், கண்டிய முஸ்லிம்கள் சிங்களவர்கள் மத்தியில் பெற்றிருந்த சமூக அந்தஸ்திற்கு, இவை ஒரு சான்றாக அமைவதுடன், முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மைகளை ஆய்வதற்கும் சாதகமாக அமைகின்றது.
Χ
Page 8
நான் தற்போது சேவையாற்றும் கண்டி மாவட்ட நீதிமன்றத்தின் மிகப் பழமை வாய்ந்த வழக்குகள் எனது இந்த ஆய்விற்கு பேருதவியாக அமைந்தன. 1833ம் ஆண்டில் இந்நீதிமன்றம் தாபிக்கப்பட்டது. அந்த ஆண்டின வழக்கேடு முதல், ஒலைச்சுவடிகள் வரை அதன் ஏடுகள் களஞ்சிய அறையில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்று சரித்திர ஆய்வாளர்களின் முக்கிய தகவல் dygbg5LDITE (8 JTop LIGLD A GAZETTEER OF THE CENTRAL PROVINCE OF CEYLON 6T6örg)Lb LD5:Suu LDITasI60OTLb ugbg5 A. C. (36umfi என்பவரால் எழுதப்பட்ட அகரவரிசை நூலுக்கு பெரும்பாலான ஆதாரமாக அமைந்தவை, இந்த நீதிமன்ற ஏடுகளேயாகும். அவர் இந்த கிரந்தத்தை எழுதி முடிப்பதற்காக 1873 முதல் 1892 வரையான 19 வருட காலம் இந்நீதிமன்றத்தில் மாவட்ட நீதிவானாக சேவையாற்றியுள்ளார். 165 ஆண்டு கால இந்நீதி மன்ற வரலாற்றில், இவரே அதிக காலம் சேவையாற்றிய மாவட்ட நீதிவானாவார். இவரது கையெழுத்திலான வழக்குக் குறிப்புகள், தீர்ப்புகள், இவரது தெளிவான புகைப்படம் உட்பட்ட அனைத்தும் இந்நீதிமன்றத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த நீதிமன்ற ஏடுகள் எனது ஆய்விற்கும் பேருதவியாக அமைந்தன. இச்சிறிய நூலில் ஏராளமான வழக்குக் குறிப்புக்களை நான் ஆதாரங்களாகச் சேர்த்துள்ளேன். அவை எதிர்கால் ஆய்வாளர்களுக்கும் , பொதுமக்களது தேவைகளுக்கும் பிரயோசனமளிக்கும் என நம்புகின்றேன்.
இந்நூலுக்கான தகவல்களைச் சேர்த்துக் கொள்ள எனக்கு உதவிய கண்டி தேசிய சுவடிகள்கூடத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி பிரேமா முத்துவத்த அவர்களுக்கும், கண்டி, மாத்தளை காணிப்பதிவுகள் திணைக்களத்தின் எனது நண்பர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அரபி மொழி விளக்கங்களை எனக்கு பெற்றுத்தர உதவிய, மாத்தளை அந்நஜாஹற் அரபிக் கலாசாலையின் பதில் அதிபர் மெளலவி S. H. பெளசுர்ரஹீம் (நஜாஹி) அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாவதாக.
A.M. நஜிமுதீன் நீதிமன்ற முதலியார் மாவட்ட நீதிமன்றம் கண்டி. 77, டோலை வீதி, மாத்தளை - இலங்கை.
XI
அத்தியாயம் - 1
கண்டி இராச்சியமும் ஆதி அரேபியரும்
இலங்கையில் மன்னராட்சி நிலவிய இறுதி இராச்சியம் கண்டி
பிரதேசங்களைத் தமது ஆளுமைக்கு உட்படுத்திய காலத்திலும், ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் 19வருட காலமும், இங்கு மன்னர்களே அரசாண்டார்கள். சில இராச்சியங்களின் பெயர்கள் கூட காலப்போக்கில் மறைந்து போய் விட்டப்போதும், கண்டிய இராசதானியின் சிறப்பும், அதன் அரசமாளிகையும், கலாச்சாரப் பாரம்பரியங்களும் இன்று வரை மதிக்கப்படுபவையாக உள்ளன.
நாட்டின் உட்பிரதேசமான கண்டிய இராச்சியத்தின் மக்கள், ஐரோப்பிய ஆதிக்கத்தின் எதிர்ப்புகளுக்கு ஈடு கொடுத்து, பல நூற்றாண்டுகளாக தமது சுதந்திரத்தைத் தக்கவைத்துப்
வாழும் சிங்களவர்களின் மாறுப்பட்ட குணாதிசயம் காரணமாக இவர்கள் "உடரட சிங்களவர்” எனவும், கரையோரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் "பாத்தரட சிங்களவர்” எனவும் அழைக்கப்படலாயினர். உடரட சிங்களவர்களின் தனித்துவமான சமூக கட்டுப்பாடுகளின் காரணத்தினால், உடரட விவாக, விவாகரத்துச் சட்டம் போன்றச் சட்டங்கள் பிற்காலத்தில் நியதிகளாக்கப்பட்டும், அதற்கென பிரதேச எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டும், அம்மக்களின் முன்னோரது பெருமைகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளன.
உடரட சிங்களநாட்டுப் பெண்களை இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் மணமுடித்துக் கொண்டதால், இங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் "உடரட மரக்கல” என்ற வகையினராயினர். இம்முஸ்லிம்கள் கொண்டிருந்த சில விஷேட பண்புகளினால், இலங்கை சோனகளின் ஒரு வித்தியாசமான பிரிவினராக
Page 9
- “கண்டிய முஸ்லிம்கள்” என்றும் இவர்களை வேறுபடுத்தலாம்.
கண்டி இராச்சியம்
1815 பெப்ரவரி 15ம் திகதி, பிரித்தானியர் கண்டிய இராச்சியத்தின் கடைசித் தலைநகரான கண்டியைக் கைப்பற்றும் வரையில் இங்கே மன்னர் ஆட்சி நிலவியது. அதனால், இலங்கையின் மன்னர் ஆட்சி பற்றிய தெளிவான வரலாற்றுச் சான்றுகளும், மக்கள் வாழ்க்கைப் பற்றிய குறிப்புகளும் இங்கேயே அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
மிகப் பழைமையான காலத்தில் இலங்கைத்தீவு மாயா, ராச, ருஹானு என மூன்று இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆளப்பட்டு வந்தது. இதனை “திரீசிங்களய” என அழைத்தார்கள். இதில் ‘மாயா" என்ற “மாயரட்டை" முன்னர் "மலய தேசம்” அல்லது "மலய மண்டலம்” எனவும் அழைக்கப்பட்டது. இலங்கைத் தீவின் முழு மலைநாடும், அதன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பிரதேசமும் இதற்கு உட்பட்டதாகும். கி.பி. 6ம் நூற்றாண்டு தொடக்கம் 11ம் நூற்றாண்டு வரையில் மலய மண்டலம் “மலயராஜா” என்னும் இளவரசனால் ஆளப்பட்டு வந்தது. அப்போது அதற்கு 28 பகுதிகள் உட்பட்டு இருந்தன. கி.பி. 13ம் நூற்றாண்டில் தம்பதெனியாவில் மாயாரட்டையின் இராசானி அமைந்திருந்தது. பின்னர் இது யாப்பஹாவாவிற்கும், குருநாகலைக்கும் மாற்றப்பட்டது. அதன்பின்னர் இத்தலைநகர் மலைநாட்டில் கம்பளைக்கு மாற்றப்பட்டது. இங்கு ஆட்சி நிலவிய கி.பி. 1345 - 1412 வரையிலான 67 வருட குறுகிய காலப்பகுதி கம்பளை யுகமாக கூறப்படுகிறது. இதன்பின்னர் மாயாரட்டையின் தலைநகர் அழகிய மகாவலி கங்கையின் அருகாமையில் அமைந்துள்ள, செழிப்பான செங்கடகலைக்குக் கொண்டுவரப்பட்டது. இது செங்கோட்டம் என்னும் தமிழ்ப் பதத்திலிருந்து மருவி வந்ததாகவும் கூறப்படுகிறது.(1)
இந்த இராசதானியைச் சூழ உள்ள பகுதிகள் “ரட” என அழைக்கப்பட்டன. இவற்றில், (1) கொத்மலை, உடபுலத்கமை, உடுநுவரை (2) யட்டிநுவரை (3) தும்பறை (4) தும்பனை, ஹாரிஸ்பத்துவ (5) ஹேவா ஹெட்ட என்ற 05 பகுதிகளும் அடங்கின. இந்த மலைப்பாங்கான பிரதேசங்கள் "கந்த உடரட” என அழைக்கப்பட்டன.(2) இதன்பின்னர் "மாயாரட”, “உடரட” என பெயர் பெற்றது. ஆங்கிலேயர்கள் இத்தலை நகரை "கெண்டி” என குறிப்பிட்டார்கள். அதனால் இது "கண்டி” என தமிழில் அழைக்கப்படுகிறது.
உடரட இராச்சியத்திற்கு (கண்டிய இராச்சியம்) உட்பட்ட பிரதேசங்கள் பற்றி கண்டிய மன்னர்கள் ஆட்சிகாலத்திலே, தெளிவான எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டிருந்தன. இது அக்காலத்தில் 21 பிரிவுகளைக் கொண்டிருந்தது. இதில் பிரதான 12 பிரிவுகள் "திசாவை" (திசாவணிகள்) என வழங்கப்பட்ட திசாவை மார்களின் அதிகாரங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. (1) நாலு கோரளை (2) ஏழு கோரளை (3) ஊவா (4) சப்பிரகமுவை (5) மாத்தளை (6) மூன்று கோரளை (7) வலப்பனை (8) உடபலாத்தை (9) நுவரகலாவிய (வன்னி) (10) வெள்ளவாய (11) பின்தென்னை (12) தம்மன்கடுவ என்பனவே அத் திசாவைகளாகும்.(3)
கண்டிய இராச்சியம் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டதன் பின்னர், இப்பிரதேசங்கள் (Kandyan Povince) கண்டிய மாகாணங்கள் என்பதாகவும் அழைக்கப்பட்டன. (4) இப்பிரதேசங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சிங்கள மக்கள் Kandyan - உடரட சிங்களவர்கள் எனவும், ஏனைய பகுதியில் வசித்த சிங்களவர்கள் "பாத்தரட மினிசு” எனவும் அழைக்கப்படலானார்கள். கண்டிய மக்களுக்கு எழுத்தினாலான ஒரு சட்டம் முன்னர் காணப்படவில்லை. இப்பிரதேசத்தில் சமூக வாழ்க்கையில் காணப்பட்ட பழக்க வழக்க நடைமுறை வேறுபாடுகள் காரணமாக, இலங்கையின் சட்ட வகைகளில் ஒரு பகுதியாக இன்று திகழும் கண்டியர் திருமண விவாகரத்துச் சட்டம் இப்பகுதி சிங்களவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.
1890 ஆம் ஆண்டு 3ஆம் இலக்க கண்டியர் திருமணக் கட்டளைச் சட்டத்தில், கண்டிய பிரதேசங்கள் எவை என குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் சட்டம் திருத்தியமைக்கப்பட்டு, அதன் ஆளுமைப் பிரதேசங்கள் குறைக்கப்படடன. 1952ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க திருத்திய கண்டியர் திருமண விவகாரத்து சட்டத்திற்கமைய “கண்டிய” பிரதேசங்களாக மத்திய, வட மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களும், மற்றும் சில மாவட்டப் பிரிவுகளும் உடரட மாகாணங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பிரதேசங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த சிங்களவர்கள் “உடரட சிங்களவர்கள்” (Kandyan) என அழைக்கப்படுகின்றனர்.
அதே வேளை, மிகத்தொன்மையான காலம் முதல், கண்டிய இராச்சியத்தில் கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக, கண்டிய மன்னர்களது ஆட்சி காலத்தில் போற்றப்பட்ட ஓர் இனமாக இவர்கள் இருந்துள்ளார்கள். இப்பகுதி சிங்கள மக்களுடன், மிக நெருங்கிய பரஸ்பர நல்லுறவோடு
で3
Page 10
இவர்கள் நடந்து வந்தார்கள். அதனால் கண்டிய சிங்களவர்களது சமூக அமைப்பின் சில விசேட தன்மைகள், இப்பகுதியில் வாழ்ந்த ஆதி முஸ்லிம்களிடமும் ஊடுருவி, அது அவர் களது பரம்பரையினரிடமும் தொடர்ந்து பேணப்பட்டு வந்தன. இத்தன்மை தீவின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களின் நடைமுறையினின்றும் மாறுபட்டவையாக இருந்தன. எனவே சிங்களவர்களை கண்டிய சிங்களவர்கள் என சிறப்பிட்டு அழைத்தது போன்று, இங்கு பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களையும் “கண்டிய முஸ்லிம்கள்” என அழைத்தல் பொருத்தமாகும்.
கண்டிய சிங்களவர்களிடையே காணப்படுவது போன்ற * வம்சாவளிப் பெயர்களை” இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் கொண்டிருந்ததை, இச்சமூக அமைப்பின் சிறப்பம்சமாகக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் பயன்படுத்திய இப் பரம்பரைப் பெயர்கள், தனிச் சிங்களத்திலேயே இருந்தன. இது கண்டிய முஸ்லிம்களிடையே மாத்திரம் காணக்கூடியதாக இருந்த தனி முத்திரையாகும். இன்றும் மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் வாழ்ந்து வரும் ஆதி கண்டிய முஸ்லிம்களின் வழித்தோன்றல்களிடையே, இந்த சிங்கள வம்சாவளிப் பெயர்ப் பாவனை இருந்து வருவது அதற்கான சான்றாகும்.
வியாபாரத்தை நோக்காக கொண்டே, முஸ்லிம்களது மூதாதையரான அரேபியர்கள் இப்பகுதிகளை நாடி வந்தனர் என பொதுவாக சொல்லப்படுகிறது. மிகப் புராதனக் காலத்திலேயே அரேபியர்களது நடமாட்டம் இப்பிரதேசத்தில் காணப்படமைக்கான பல சான்றுகள் உள்ளன. அத்துடன் அவர்கள், இவ்வியற்கை எழில்மிகு ஆழலில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள். தம்பதெனிய யுகத்தில், பழமையான கண்டிய இராச்சியத்தில் முஸ்லிம்கள் சிறப்புற்று விளங்கினார்கள். கம்பளை யுகத்தில், வியாபார ஆதிக்கம் முழுமையாக முஸ்லிம்கள் வசம் இருந்தது.(5) கண்டிய ராச்சியத்தின் தலைநகர் செங்கடகலைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் “கந்த உடரட” எனக் கூறப்படும், இராசதானியைச் சுற்றிய அநேக ஊர்களில், முஸ்லிம்களது குடியேற்றங்கள் தோன்றலாயின. கண்டியை ஆண்ட மன்னர்களின் நன்மதிப்பையும், கெளரவத்தையும் இவர்கள் பெற்றிருந்தமையே, இங்கு நிரந்தர வசிப்பிடங்கள் அமைப்பதற்கு இவர்களுக்கு வாய்ப்பளித்தன. அத்துடன், அரச சேவைகளிலும், முஸ்லிம்களுக்குச் சந்தர்ப்பமளிக்கப்பட்டன. அதனால், இலங்கையின் வரலாற்றில் எடுத்தியம்பத்தக்க ஆதாரங்களுடன் கிடைக்கப்பெறும் ஏராளமான முஸ்லிம்கள் பற்றிய தரவுகள், இக்கண்டிய பிரதேசத்து முஸ்லிம்கள் பற்றியனவாகவே உள்ளன.
牟
கண்டிய இராச்சியத்தில் இஸ்லாமியரது மூதாதையர்
இஸ்லாம் மார்க்கம் என்பது மக்கா நகரில் பிறந்த முஹம்மத் நபி ஸல்லல்லாஹ" அலைஹிவஸல்லம் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தோன்றிய ஒரு வேதம் அல்ல. அது மனிதரில் முதல் மனிதர், ஆதி பிதா நபி ஆதம் (அலை) அவர்களில் இருந்து ஆரம்பமாகிறது. நபி ஆதம் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் முதல் நபியுமாவார்கள். இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள், இஸ்லாமியர் என அழைக்கப்படுகின்றனர்.
மதச்சார் நம்பிக்கைகளும், வரலாற்று வழித் தரவுகளும் ஒன்றுக் கொன்று வேறுபட்டவை எனக் கூறுதல் இயலாது. மதச்சார் நம்பிக்கைகளுக்கு வரலாற்றுத் தரவுகள் சில தருணங்களில் ஆதாரமாகவும் அமைகின்றன. ஆகையால், மதவிசுவாசம் சரித்திரச் சான்றுகளாகிவிடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.
இந்த நிர்ணயத்திற்குட்பட்டதொன்றுதான், கண்டிய இராச்சியத்தில் சப்பிரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பாவா ஆதம் மலை என்னும் மலையாகும். இச்சிகரத்தின் உச்சியில் காணப்படும் பாத அடையாளம், முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களுடையது என்பது பன்னெடுங்காலமாக உலகளாவிய இஸ்லாமியர்கள் கூறிவரும் கூற்றாகும். இது ஆதம் (அலை) அவர்களுடைய பாதச்சுவடு என்பதற்கான தகுந்த சான்றுகளையும் அவர்கள் முன்வைத்து வருகின்றார்கள். (பி.கு.) ፩
இக்கூற்றின்படி புராதன கண்டி இராச்சியத்தில், இஸ்லாமியரது வருகை நபி ஆதம் (அலை) அவர்களில் இருந்து ஆரம்பமாகி விட்டது எனலாம். எழில் மிகு இலங்கை நாட்டை முற்கால அரேபியர்கள் “சரன்தீப்” என்னும் பெயர் சொல்லி அழைத்தார்கள்.
"நபி ஆதம் (அலை) அவர்கள் "ஹிந்து" பகுதியில் சரன்தீபில் உள்ள மலையில் இறங்கினார்கள். இதனால் தான் அப்பகுதியில் இருக்கும் மரங்களில் இருந்து வாசனை வீசுகின்றது” என இஸ்லாமியரது வேதநூலான அல்குர்ஆனுக்கு விரிவுரை எழுதும் இமாம் இஸ்மாயில் ஹக்கீ அல் புரூஸ்வி அவர்கள் குறிப்பிடுகி றார்கள்.(6) அரேபிய நாடுகளில் எழுதப்பட்ட பல புராணக்
கிரந்தங்களில் இலங்கையையும், நபி ஆதம் (அலை) அவர்களையும்
பிது ()ம்மலையை பெளத்தர்கள் "சமணல கந்த" என்று அழைப்பதுடன் அப்பாத அடையாளம் புத்தபிரானுடையது என நம்புவதால் "ரீ பாத” எனவும் அழைக்கின்றனர். இந்துக்களால் இது சிவனெனிபாத மலை என வழங்கப்படுகிறது. W
5
Page 11
தொடர்புபடுத்தி எழுதப்பட்ட இது போன்ற குறிப்புகளை அவதானிக்கலாம். (பி.கு.)
"ஹிந்து” எனவும் “சிந்து” என்றும் இந்தியா முற்காலத்தில் அழைக்கப்பட்டது. அதேவேளை, இலங்கையும் இந்தியாவின் தென் பகுதியும் ஒரு காலத்தில் கடலால் பிரிக்கப்படாது லெமூரியா கண்டத்தின் ஒரு பகுதியாக இணைந்து காணப்பட்டது. புவியியற் கூற்றுப்படி இலங்கை இந்தியாவின் ஒரு தொடர்ச்சியாகவேயுள்ளது. இலங்கையின் வடசமவெளி தென்னிந்தியாவையும், தீவின் நடுவிலுள்ள மலைகள் மேற்கு மலைத்தொடரையும் ஒத்திருக்கின்றது. ஆதம் (அலை) என்னும் முதல் மனிதர் இறக்கப்பட்டது "ஹிந்து” பூமியில் எனவும், அங்கு ஒரு மலையிலே அவர் இறங்கினார் என்றும், அந்த புனிதமிகு மலை “ஸ்ரந்தீப்” என தாம் அழைத்து வந்த இலங்கையில் இருப்பதையும் அரேபியர்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தார்கள். இம்மலையை "நூத்” என பக்தாது நாட்டவர் அழைத்தார்கள்.
இறுதி நபியாக வந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்களாவார். அவர்கள் சொன்னவை, செய்தவையை "ஹதீஸ்” என்னும் மூலாதாரமாக இன்று இஸ்லாமிய சட்டத்தில் இணைந்துள்ளன. இவ்வதீஸ்களின் வாயிலாக பிற்கால அரேபியர் நபி ஆதம் (அலை) அவர்களது வருகைப்பற்றி துல்லியமாக, அவர்கள் இலங்கையிலே இறக்கப்பட்டார்கள் என அறிந்து வைத்துள்ளதனை அறியலாம். அதனால் திறமையான கடலோடிகளான அரேபியர்கள் தமது ஆதி பிதாவின் பாதச்சுவட்டை தரிசிக்கும் நோக்கத்துடன் இலங்கையை நாடி வரலானார்கள். இவை இங்கு வருகைத்தந்த பல தேசச் சஞ்சாரிகளது பிரயாண குறிப்புகளில் விபரமாக சொல்லப்பட்டுள்ளன.
கி.பி. 323 இல் இம்மலையை தரிசிக்க மகா அலெக்சாண்டர் இலங்கை வந்தார். இவர் ஆதமின் பாத அடையாளம், அம்மலையில் உள்ளதால், அதனைத் தரிசிக்கவே இப்பயணத்தை மேற்கொண்டார் என அஷ்ரப் என்னும் பாரசீகக் கவி கூறுகிறார். கி. பி. 851 இல் சுலைமான் என்னும் அராபியப் பயணி சப்பிரகமுவையில் உள்ள இம்மலைக்கு ஏறினார். இம்மலையை அவர் "அல்றுாஹ"ன்” என அழைத்தார். கி. பி. 1347ல் தேசச்சஞ்சாரி இப்னு பதூதா அவர்கள்
பி.கு.: 1. அத்தப்ஸிருல் கபீர் பாகம் - 2 (கி. பி. 1175 ஆண்டளவில் எழுதப்பட்டது) 2. அத்துர்ருள் மன்தூர் பாகம் - ககம் $5 கி. பி. 1475 ஆண்டளவில் எழுதப்பட்டது) 3. தப்ஸிர் காஸின் பாகம் - 1 பக்கம் 50 (கி. 11 1300 ஆண்டளவில் எழுதப்பட்டது) இது போன்று பல அராபிய குர்ஆன் விரிவுரை நூல்களில் இதே மாதிரியான குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.
இம்மலையைப்பற்றி நீண்ட குறிப்பொன்றை தமது “ரிஸாலத் இப்னு பதுதா” என்னும் பயண அனுபவ நூலில் விபரித்துள்ளார். அதில் அவர், s
‘நான் இந்தத் தீவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, ஆதம் அவர்களின் புனித பாத அடையாளத்தைத் தரிசிக்கும் அவா தவிர வேறெதுவும் எனக்கில்லை' என தனது நோக்கத்தைப் புத்தளக் கரையில் இறங்கிய போது, மன்னனுக்குச் சொன்னதாக எழுதுகிறார். அராபியர்களது இலங்கைப் பயணத்தின் பிரதான நோக்கமாக, பாவா ஆத மலையை தரிசிப்பதே இருந்துள்ளது. அதாவது அக்கால கண்டிய இராச்சியத்தின் அராபியர்கள் இம்மலையைத் தரிசிப்பதற்காகவே இங்கு வருகை தந்தார்கள்.
இது வரையில் கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின்படி, இலங்கையில் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தொல்பொருட் தடயங்கள் பாவாஆதமலை அடி வாரத்தை யொட்டிய சப்பிரகமுவா பிரதேசத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளன. இவை பல வரலாற்று யுகங்களுக்கு முற்பட்டவையாக மதிப்பிடப்பட்டுள்ளன. சப்பிரகமுவை பிரதேசத்தில் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள ஆதிகால தடயங்கள், முழு உலகிலுமே காண்பதற்கு அரிதானவையாக உள்ளன. பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மனித என்புக் கூடுகள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று உலகில் உயிர்வாழாத, அழிந்துபோன உயிரினங்கள் சிலவற்றின் எலும்புருவங்களும் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றுள் ‘ஹிபடோமஸ், டையினோசர்ஸ், போன்ற, கதைகளில் அறியும் அபூர்வ விலங்கினங்களது எலும்புக் கூடுகளும் உள்ளன, “பெல்மடுல்லை’ என்னும் ஊரில் இவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சப்ரகமுவையில் வாழ்ந்த ஆதி மனித இனங்கள்பற்றி, குருவிட்ட, பலாங்கொடை பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட புராதன மனித எலும்புக்கூடுகள் மூலம் அறியக்கூடியனவாக உள்ளன. பலாங்கொடை தன் ஜன் தென்னை என்ற இடத்தில் கிடைத்த ஒரு மனித எலும்புக்கூட்டு உருவத்தின் நெற்றி தாழ்ந்தவையாகவும், முகத்தின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே காணப்பட்ட அங்க லட்சணங்களின் இடைவெளி தற்போதைய மனிதனைப் போலல்லாது மிகத்தூரமானதாகவும். பல், மூக்குத்துவாரம், பாதம் என்பன மிகப்பெரியதாகவும் இருந்தன. இது இம்மனித உருவம் மிக விசாலமானதாகவும் வேறுபட்ட முகத்தோற்றத்தை உடையதாகவும் இருந்ததைக் காட்டுகிறது.(7) அத்துடன், இப்பகுதியில’ஆதி வாசிகளின்
Page 12
வசிப்பிடங்களாக கருதக்கூடிய கற்குகைகள் சிலவற்றை இன்றும் அவதானிக்கலாம். இப்பகுதியில் "எக்நெலிக்கொடை என்ற கிராமத்தில் உயரம் 250 அடியாகவும், நீளம் 500 அடி ஆகவும் உள்ள பெரியதொரு கற்குகை காணப்படுகிறது. இக் குகையினுட் பகுதி 30 அடி உயரத்தையும், 50 அடி அகலத்தையும் கொண்டது. இவை உலகில் விசேட கண்டு பிடிப்பாகக் கருதப்படுகின்றன.
இவை ஆதிகால மனிதர்கள் உயரத்திலும், பருமனிலும் மிக விசாலமானவர்களாக இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஆதாரங்களாக உள்ளன. பாவா ஆதமலையில் பதிந்துள்ள பாதச்சுவடின் நீளம் பலரால் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னு பதுதாவின் கணிப்பின் படி, அது 11 சாண் (8அடி) எனவும், 10 முழம் எனவும், தற்போது இப்பாதச்சுவட்டின் அளவு 512 அடி எனவும் குறிப்பிடப்படுகிறது. அரேபிய வரலாற்று ஆய்வாளர்களின் தரவுகளின்படி, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களது உயரம், 60 முழம் (சுமார் 90 அடி) எனவும், மற்றுமொரு குறிப்பில் 60 அடி எனவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இவர்கள் 1000 வருடகாலம் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள். 60 முழம் உயரமுடைய ஒருவருக்கு 10 முழம் பாதம் அமைந்திருப்பது புதுமையானதொன்றல்ல. அத்துடன், சப்பிரகமுவ பிரதேசத்து மனித எலும்புருவங்களின் அங்க லட்சணங்களும் ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் பற்றிய அரேபிய குறிப்புகளுக்கு ஆதாரம் காட்டுபவையாக அமைந்துள்ளன.
இலங்கைத் தீவினதும், கண்டிய இராச்சியத்தினதும் சிறப்பிற்கு பாவா ஆதமலையின் அமைவு ஒரு காரணமாகியது. இதனால், ஆய்வாளர் பலரின் நுண்ணிப்பான ஆராய்ச்சிகள் இம்மலையைச் சூழவுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரதேசத்து புவியமைப்பில் வேறு எங்குமே காணமுடியாத தெளிவான பல இலட்சணங்கள் காணப்படுவதாக இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(8)
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவில், ஐரோப்பாவில் போன்று உறை பனிக்கட்டிக் காலங்கள் வந்ததுண்டு.(9) ஆதம் நபி (அலை) பற்றிய அரேபிய வரலாறுகளில், அவர்கள் இப்பகுதியில் குளிரின் கொடுமை தாங்க முடியாது அல்லலுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றும் மலைப்பாங்கான இவ்விடத்தில் குளிர்ச்சியான ஆழலையே காணக்கூடியதாக உள்ளது. இந்த ரம்மியமான சூழலில், இங்கு காணப்படும் நீர் நிலைகளின் அமைப்பு விசேட தன்மை பெற்றுத் திகழ்ந்தது. இங்கிருந்து பிரதான நதிகளும், கிளை ஆறுகளும் ஊற்றெடுத்து ஒடுகின்றன. இந்நதிகள் ஒன்றுக் கொன்று சமாந்தரமாக வடிந்தோடுவது, இப்பகுதி கொண்டுள்ள
விஷேட பூகோள அமைப்பாகும். இப்பிரதேசத்திலே இலங்கையின் அதிகமான நீர்வீழ்ச்சிகளைக் காணக்கூடியதாக உள்ளன. பிரதான நீர்வீழ்ச்சிகளாக லக்ஷயான, எடம்ஸ்பீக், காட்மோர், செயார்லோன். என்பனவும் இவற்றில் அடங்குகின்றன. இந் நீரோட்டங்கள் இச்சூழலுக்கு மேன்மேலும் வனப்பூட்டுபவையாக உள்ளன. சதா எங்கும் நீர் வழிந்தோடும் ஓர் அழகிய இயற்கைச் சூழழை இங்கே காணமுடிகிறது. பாவா ஆதமலையின் அடிவாரத்தில் நல்லதண்ணி என்ற பெயரில் ஓர் இடமும் உள்ளது.
இலங்கையை சைலான்’ எனவும் அரேபியர்கள் அழைத்தார்கள். நீர் வடிதல், நீர் ஓடுதல், வழிந்தோடும் தண்ணிர் என்பது இவ்வரபிப் பதத்தின் விளக்கமாகும்.(10) கண்டிய இராச்சியத்தில், மலைச்சாரல் ஆழலில் நீர் அருவிகளையும், நீர் வீழ்ச்சிகளையும் காணக்கூடியதாக இருப்பதை அவதானித்த அரேபியர், இப்பெயரை ஆட்டியிருக்கலாம். இந்த சூழ்நிலையை அவர்கள் இலங்கையில் கண்டிய இராச்சியத்திலேயே அனுபவித்தார்கள். அதனால் சைலான்’ என்பது, கண்டிய (உடரட) இராச்சியத்திற்கு அரேபியர்கள் வழங்கிய சிறப்புப் பெயர் என்றும் கருதலாம். * உடரட’வுக்கு வழங்கப்பெற்ற இப்பெயரே இலங்கைக்கு ஏற்பட்டதெனவும் கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் அதனை 'சிலோன்' என அழைக்கலானார்கள்.
இவ்வாறு தனி சிறப்புப் பெற்ற ஒரு புண்ணிய பூமியாக பாவா ஆதமலைப் பிரதேசம் விளங்கியது. சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் "உலகில் சிறந்த பூமி ஆதம் நபி அவர்கள் இறக்கப்பட்ட இடமாகும்" என குறிப்பிடுகிறார்கள். மேலும் "இந்தியாவின் தென் திசைப் பகுதியிலிருந்து ஆதி இஸ்லாத்தின் தென்றலை நான் நுகர்கிறேன்” எனவும் தெள்ளத் தெளிவாக இப்பிரதேசத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனால் இப்பகுதியின் மகத்துவம் பற்றி அரேபியர்கள் தெளிவான அறிவு பெற்றிருந்தார்கள். அதனால் அவர்கள் கண்டிய இராச்சியத்தின், இம்மலையை அடையும் நோக்கத்துடன் வர ஆரம்பித்தார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் படைக் கப்பட்டு பல வருடகாலங்கள் சுவனத்தில் உலவினார்கள் என்பது இஸ்லாமியர் நம்பிக்கையாகும். இவரும், இவரது மனைவி ஹவ்வா (அலை) யும் அங்கிருந்தே பூமிக்கு இறக்கப்பட்டார்கள். "நீங்கள் பூமிக்கு இறங்குங்கள். பூமியில் உங்களுக்கு வசிப்பிடம் இருக்கிறது” என முஸ்லிம்களது வேதநூலான புனித அல்குர்ஆனில் ஆதம் (அலை)
Q
Page 13
அவர்களுக்கு, இடப்பட்ட கட்டளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பூமிக்கு இறங்கும் போது, சுவர்க்கத்து மர இலைகளால் தமது உடலை மறைத்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே இறக்கப்படும்போது அவ்விலைகளுடன், சில தானியங்களும் இருந்தன. அந்த சுவர்க்கத்து இலைகளின் மூலமாகவே இப்பகுதியில் வாசனைத் திரவியங்கள் உற்பத்தியாயின என அரேபிய அல்குர்ஆன் விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளன.
அதேபோன்று, நபி தோழர் அலி (ரலி) அவர்கள் தமது நண்பர்களிடம், ஏலம், கறுவாய், கராம்பு ஆகிய வாசனைப் பொருட்களைச் சுட்டிக்காட்டி பின்வருமாறு கூறுகிறார். "ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வரும் போது, அவர்களின் உடலில் கவனத்து இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவை காற்றால் பரத்தப் பட்டு கீழே விழுந்தன. விழும் போது, அவை எந்த மரத்தில் போய் விழுந்தனவோ அவை நறுமணம் பெற்று விட்டன” என்றார்கள்.
இலங்கையில், மத்திய மலைப் பிரதேசத்திலேயே ஏலம், கராம்பு, கருவா முதலான வாசனை திரவியங்கள் விளைந்தன. அவை அரேபியரைக் கவரும் பிரதான வர்த்தகப் பொருட்களாக, மிகப்பழமையான காலம் முதலே திகழ்ந்து வருகின்றன. அத்தேரடு பாவா ஆதமலையைச் சூழ உள்ள பிரதேசத்தில், இந்நறுமணப் பொருட்கள் கிடைப்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் எனலாம். அக்கால அரேபியரது வர்த்தகத்தின் முக்கிய இடம்வகித்த இரத்தினங்களும், மாணிக்கங்களும், இந்த புண்ணிய பூமியிலேயே கிடைத்தன. இரத்தினதுவிபம், மாணிக்கத்துவீபம் என்ற பெயர்கள் இலங்கைக் கு ஏற்பட்டதும் கணி டிய இராச்சியத் திணி இச்சொர்க்கப்பூமியின் சிறப்பாலேயே ஆகும். அரேபியர்கள் இங்கு வந்து போவதில் பரிச்சயம் பெற்றிருந்ததினால், இப்பொருட்களின் வர்த்தகத்தைத் தம் வசப்படுத்திக் கொண்டார்கள்.
உறுதியான மதநம்பிக்கையின் காரணமாகவே, இஸ்லாமியர் இம்மலையை நாடி வரக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இப்பகுதியில் காடும், மலையுமாக காணப்பட்டதனால் இங்கு பயணம் செய்வது மிக மிகச் சிரமமாக இருந்தது. இதனைப்பற்றி தேசச்சஞ்சாரிகள் தமது பயணக் குறிப்புகளில் வர்ணிக்கிறார்கள். ஆதிகாலம் தொட்டே பாவா ஆதமலையை அடைவதற்கு இரு வழிப்பாதைகள் இருந்து வந்தன. இவை கடுங் கானகத்தை ஊடறுத்தே செல்பவையாக இருந்தன. இங்கு ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பாதைகளை,
| 0
யானைகளே ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறான உயிர் ஆபத்து மிக்க பயணத்தை அரேபியர்கள் மேற்கொள்ள காரணமாக இருந்தது, வியாபார நோக்கம் அல்ல. இந்த மலையின் அகமியங்களை அவர்கள் அறிந்து, அதனை காணும் ஆர்வத்திலேயேயாகும்.
இஸ்லாமிய ஞானிகளும், அறிஞர்களும் இம்மலையின் மகத்துவத்தைக் காண்பதற்காக வந்து போயுள்ள பல சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்றன. சிலர் இங்கேயே மரணித்து அடக்கஞ் செய்யப்பட்டும் உள்ளார்கள். இவர்களின் சூபித்துவ வழியைப் பின்பற்றிய ஞானிகளை நினைவு கூர்ந்து, இன்றும் முஸ்லிம்கள் அவர்களது கல்லறைகளுக்குக் கண்ணியம் கொடுத்து வருகின்றனர். இன்று முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றுகளில் முக்கிய இடம் வகிப்பனவையாக இக்கல்லறைகள் காணப்படுகின்றன. மாத்தளை கோட்டக்கொடை என்னும் கிராமத்தில் அஷசெய்கு முத்தலிப் (வலி) என்னும் பெரியாரது மண்ணறையில், இவ்வாறான அடையாளம் ஒன்றைக் காணக்கூடியதாக உள்ளது. இது 40 முழம் (60அடி) நீளம் கொண்டது. இவர் இப்பகுதிக்கு வந்த காலம் மிகப் பழமையானது எனக் கணிக்கப்படுகிறது.(பி.கு) இவர் பாவா ஆதமலையைத் தரிசிக்க வந்தவர் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு கண்டிய இராச்சியத்தில் இஸ்லாமியரது வருகை ஆரம்பமாகி, இப்பகுதியில் அவர்களது வர்த்தக ஆதிக்கமும் நிலை பெறலாயிற்று. அரேபிய வழி தோன்றல்களான முஸ்லிம்கள், கண்டிய மன்னர்கள் காலத்தில் இங்கு, அவர்களது நிரந்தர வதிவிடங்களை அமைத்துக் கொண்டார்கள்.
பி.கு.: ஒருவர் மரணித்து விட்டால் அவரை மண்ணில் குழிதோண்டி அடக்கம் பண்ணுவது இஸ்லாமியரது வழி முறையாகும். அத்துடன் முஸ்லிம்கள் தொழுகையில் முன்னோக்கும் திசையில் மரணித்தவரது முகத்தை நேராக திருப்பி வைத்து அடக்கம் பண்ணுவது, இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாகவும் உள்ளது. இத்திசை ‘கிப்லா" என அழைக்கப்படுகிறது. இற்றைக்கு சமார் 1400 வருட காலமாக முஸ்லிம்கள் 'க'யா' என்னும் மக்கா மா நகரின் பள்ளிவாயிலையே நமது ‘கிப்லா" வாக கொண்டுள்ளனர். கி.பி. 1250 ஆண்டு காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த நபி மூஸா (அலை) அவர்களது கூட்டத்தவர் ஜெருசலத்தில் உள்ள ‘பைத்துல் முகத்திஸ் பள்ளிவாயிலை தமது கிப்லாவாக கொண்டிருந்தார்கள். இது கட்யாவின் திசையிலிருந்து 90° பாகை செங்குத்தான திசையில் காணப்படுகின்றது. இந்த கோட்டக்கொடை பெரியாரது மண்ணறை தற்போதைய 'க'யா'வின் திசையை பின்பற்றாது ‘பைத்துல் முகத்திஸ் திசையை
கிராமத்தில் அடங்கப்பெற்றுள்ள அஷ்செய்கு முத்தலிப் (வலி) அவர்கள் நபி மூஸா (அலை) அவர்களது காலத்தவர் எண்பதே இன்றைய மார்க்க ஞானியரின் கூற்றாகும். (ஆசிரியர்)
Page 14
7.
10.
සිංහල සාහිතන්ය වංශය, පූක්ෂවිඛණ්ඩාර සන්නස්ගල පණ්ඩිත, 309 පි. ලංකා ඉතිහාසය, එස්. පි. පෙරේරා පියතුමා (1948), 4. පි. සංහල සමාජ සංවිධානය. මහනුවර යුගය, රුල්ෆ් පීරිස්, (1964) KANDYAN LAW – EARLE MODDER. Cl9l4) ගමිපොල යුගය, කහටපිටියේ ධීරානන්ද හිමි. (1965 පෙබ.) 71 128 8. தப்ஸிர் ரூஹால் பயான், பாகம் 1, பக்கம் 3. (இமாமவர்களது மறைவு ஹிஜ்ரி வருடம் 1137) සපරගමු දශින, රාජකීය පණ්ඩිත කිරිඇල්ලේ කඳාණවිමල හිමි 1967, 14ළි සිරිපා පහස ලද සමිපත්, (නව යුගය), විමල ලොකුලියන, 39ෆි வியத்தகு இந்தியா (வரலாறு) - A. L. பசாம். பக்கம் 13 முன்ஜித் - அரபி அகராதி
2
அத்தியாயம் - I
சிங்கள-முஸ்லிம் வம்சப்பரம்பரை
சனங்களில் சிலரை சிலர் பிரித்தறிவதற்காகவே வம்சப்பரம்பரைகள் தோன்றின. பரம்பரை என்பது, ஒரு தேசத்தை அல்லது ஒரு சமூகம் வாழ்ந்த ஓர் இடத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதொன்றாக பொதுவாகக் கொள்ளலாம். ஒரு
குறிப்பிடப்படுகின்றது. இதற்கு “பரவணி" எனும் பதம் பயன்படுத்தப் படுகின்றது. பரம்பரை பரம்பரையாக பாட்டன், முப்பாட்டன்மார்கள் மூலமாக உரித்தானதொன்று “பரவணி" என வழங்கப்படும். சமஸ்கிருதப் பாஷையில் கோர்வையாகப் பின்னப்பட்ட கூந்தலுக்கு “பிரவேணி” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. ஒன்றன் பின்னென்றாக ஒரே கொடியில் வருவது என்னும் பொருளை அது கொள்ளுகிறது. பாளிப் பாஷையில் “பவேணி" என அழைக்கப்படும் இச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. மாலை, உரித்து, பரம்பரை, சம்பிரதாயம், பழக்கம், வழக்கம் என்னும் பல பொருள்கள் கூறப்படுகின்றன. ஒரு குடும்பம் மிக நீண்ட காலமாக அநுபவித்து வரும், ஓர் உரிமையாளில் நின்றும் வருகின்ற காணி "பரவணி நிலம்" என அழைக்கப் படுகின்றது.(1) பரம்பரை பரம்பரையாக அதில் ஆட்சி பெற்று வருபவர்கள் அந்த நிலத்தில் பரவனி உரிமைக்கு ஏற்புடையோராகக் கருதப்படுவார்கள். முதற்தடவையாக இப்பழங்கால காணிகள் சாசனங்களில் பதியப்படும்போது “பரவணியாகிய குறித்த காணி" என குறிப்பிட்டு, எழுதப்படல் வேண்டும்.2
இடத்தைக் குறிக்கும் "பரவணி” எனும் இப்பதம் வம்சாவளி என்பதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதொன்றாகும். "Hereditary" என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பதத்திற்கு வம்சப்
பாரம்பரியம், பாரம்பரிய குணம் என்ற பொருள்கள்,
3
Page 15
கொள்ளப்படுகின்றன.(3) பரம்பரை அல்லது பரவணி என்னும் பதங்களை சிங்கள மொழியில் "பெலபத” (eeகு)ை என கூறுகிறார்கள். கோத்திரம் எனவும் இது குறிப்பிடப்படுவதுண்டு. அது சிங்களத்தில் "கோத்ர" (eவினு என குறிப்பிடப்படும். இவ்வாறு கோத்திரங்களையும், ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியும் முகமாக அவற்றிற்கு பெயர்கள் சூட்டப்பட்டன. அப்பெயர்கள் பரம்பரைப் பெயர் அல்லது வம்சாவளிப் பெயர் என வழங்கப்பட்டது. சிங்களத்தில் இதனை "பெலபத்நாம” (eeeeவி9ை) என்பர். இந்த "பெலபத்நாம” என்னும் பதத்தை சாதாரண சிங்கள மக்கள் "வாசகம" (அeை) என்னும் பதத்தைக் கொண்டு அழைத்து வருகிறார்கள்.
உயர்வு தாழ்வு காட்டி பிரித்தறியும் பழக்கம் மிகப்பழமையான காலம்
குலநிந்தனை செய்த குற்றத்திற்காக குரூர தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கும் வரலாறுகளை, புராதன சிங்கள இதிகாச நூல்களில் காணலாம்.
ஒரு சிங்களக் கிராமம் என்பது ஒரே குலத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஒன்றிணைந்த, சிங்கள குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பத்தில் உருவாக்கிய ஊர் ஆகும். இது "சிங்கள கம” எனக்
பழங்குடி மக்களின் பரம்பரையினராவர். அதனைத் தவிர அவ்வூர் உண்டாவதற்கு அல்லது விளைநிலங்களை விஸ்தரிக்க துணை நின்றோரின் வழித்தோன்றல்களும், (இவர்கள் "உள்குடி” என அழைக்கப்பட்டனர்) அத்தோடு பூர்வ குடிகளல்லாதவர்களும் அங்கு வாழநதாகள.
சிங்களத்தில் வம்சாவளி என்று பொருள்படும் "வாசகம” என்னும் பதத்தில் "வாழ்ந்து வந்த கிராமம்" என்னும் கருத்து தொங்கி நிற்பதை அவதானிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற தாம் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இடங்களை “முல்பதின்சிய" இgeலிே)ை என அவர்கள் அழைத்தார்கள். பெரும்பாலான சிங்களவர்களிடையே அவர்களது வம்சாவளிப் பெயர்களில் வாழ்ந்த பழங்குடியின் பெயர் (9ஞ்சலில்) பரம்பரைப் பெயராகக் கொள்ளளப்படுகிறது. கண்டிய சிங்களவர்களே இவ்வாறு இதனை அதிகமாகப் பயன்படுத்துவோராக உள்ளனர்.
அத்தோடு கண்டிய சிங்களவர்களின் பரம்பரை நாமங்களில் இருவகைப் பெயர் வழிகள் காணப்படுகின்றன. சாதாரண சிங்களவர்கள் "கெதரநம” (egைo இை) எனவும் “வாசகம” (அகஇை) எனவும் இதனைக் குறிப்பிடுகின்றார்கள். “பெலபத்" என்னும் பரம்பரைப் பெயரே இவ்வாறு இரு வகைகளில் இவர்களால் பிரித்தறியப் படுகிறது. "கெதர நம” என்பதை "வீட்டுப் பெயர்’ எனக் குறிப்பிடலாம். தமிழில் சில முஸ்லிம் பெயர்களில் “கெதர” என்பது “வீட்டு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. “கெதர” என்று வரும் வம்சாவளிப் பெயர்களில் அந்த சொல் சேர்ந்து காணப்படுவதை அவதானிக்கலாம். தமது மூதாதையர் வசித்த பூர்வீக வீட்டின், தோட்டத்தின், கிராமத்தின் அல்லது அங்கு காணப்பட்ட மரங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர்வழித் தொடர்கள் வருகின்றன.
கோத்திரங்களுக்கிடையே சிங்களவர்கள் உயர்வு தாழ்வு காட்டியது போன்றே, பரம்பரைப் பெயர்களிலும் வேறுபாடு காட்டினார்கள். ‘முதலி’, ‘முதியான்சே போன்ற வம்சங்களை கொவிகுலத்தின் உயர் வம்சங்களாக சிங்களவர்கள் மதித்ததனால், இப்பெயர்களைச் சார்ந்தவர்கள் உயர் குலத்தினராக தம்மைக் காட்டிக் கொண்டார்கள். கண்டிய சிங்களவர்கள் தங்களது கோத்திரப் பெயரை, தமது பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். இக்குலப்பெயர்களை “வாசகம” என சாதாரண மக்கள் குறிப்பிடலானார்கள்.
கெதர நம', 'வாசகம' என்னும் இரண்டு தொடர்களையும் சிலர் தமது பெயரில் சேர்த்துக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக, திசாநாயக முதியன்சேலாகே உள்பென் கெதர விக்கிரமசிங்க என்ற பெயரில் "கெதர நம” யும் வாசகமையும் கலந்துள்ளது. இதில் "உள்பென் கெதர விக்கிரமசிங்க” என்பது அவரது வீட்டுப் பெயர் (கெதரநம), "திசாநாயக முதியன்சேலாகே” என்ற பெயர் வழி அவரது 'வாசகம ஆகும்.
16ம் நூற்றாண்டில் கண்டிய இராச்சியத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அரசப் பிரதானிகளான, அலுவிஹாரே வணிகசேகர முதியன்சே உடுபிஹில்ல குலதுங்க முதியன்சே போன்றோரது வம்சா வளிகளில் அலுவிஹாரை, உடுபிஹில்ல என்னும் அவர்களது பரம்பரை பூர்வகுடி கிராமத்து பெயர்களுடன் "முதியன்சே” என்னும் வம்சப்பெயர் அணைந்திருப்பதை அவதானிக்கலாம்.
Page 16
வெறுமனே "கெதரநம” மாத்திரமே தமது பரம்பரையாக பிரயோகிப்போரும் உள்ளனர். சிலவேளை இவர்கள் வம்சாவளியில் தாழ்குலத்தவராகவும் கொள்ள ஏது உள்ளது. இடப்பெயர்களில் மிகமிக அபூர்வமான விட்டுப்பெயர்கள் காணப்படுவதையும் அவதானிக்கலாம். மீ கொன் பட்டி கெதர அப்புவா” என்பது அப்புவா என்னும் ஒருவரது வம்சாவளிப் பெயராகும்.4) இதன் தமிழ் கருத்தாவது "எருமை மாட்டுப்பட்டி விட்டு அப்புவா” என்பது ஆகும்.
கண்டிய சிங்களவர்களது அனேக பெயர்களில் வம்சாவளித்
பெயரின் இறுதியில் "கே" என்ற உச்சரிப்பு வருவதைக் காணலாம். இதனால் வம்சாவளிப் பெயரை சிங்களத்தில் "கேநம” (eங்க9) எனவும் வழங்குவர். (பி.கு.)
தற்போதைய "கேநம” வம்சாவளிப் பெயர் முறைப் பாவனை போர்த்துக்கேயர் தோன்பு பதிவு பண்ணும் காலத்தில் (1613) இருந்தே ஆரம்பமாகியுள்ளது. தோன்பை எழுதிக் கொடுக்க வரும் மனிதரிடம் அதனை எழுதும் அதிகாரிகள் "நீ என்ன கே” என வினவியதாக மரபுக் கதைகள் உள்ளன.5
தேசிய சேவையில் ஈடுபாடு உள்ளவர்களது தலைமுறையில் வந்தவர்கள், தமது மூதாதையரது பதவிவழிப் பெயர்களையும் தமது வம்சாவளியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதேபோன்று, வைத்திய துறையில் கைதேர்ந்து, பலவகைப் பட்டங்களைப் பெற்ற, தமது மூதாதையரின் பட்டப்பெயர்களைத் தமது பெயருடன் மரபு வழியாக்கிக் கொண்டவர்களும் உளர். இவ்வாறு சிங்களவரிடையே வம்சாவளிப் பெயர்கள் பல வகைகளில் பிரயோகம் செய்யப்படுகின்றன.
காலத்திற்குக் காலம் இப்பரம்பரைப் பெயர்களை பயன்படுத்தும் முறையிலும் வேறுபாடுகள் காணப்பட்டன. சில பெயர்கள் அவ்வக்காலங்களில் பிரபல்யம் பெற்று அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. மிகப்பழமையான காலத்தில், மேலே கூறப்பட்ட முறையில் வம்சாவளிப் பெயர் முறை சிங்களவர் மத்தியில் இருந்தமைக்கு சாட்சிகள் அரிதாகவே உள்ளன. தமது பெயருடன் தந்தையின் பெயரைச் சேர்த்து அழைக்கும் வழக்கம் அவர்களிடையே முன்னர் காணப்பட்டுள்ளது. பருமக பளிகட புத்பருமக ஹரும என்பது
பி. கு. The children belong to the wife's family and may take their mother's
"ge" name. (Kamidyam Law) "Laws of Ceylon - K. Balasingham, (1933). P. 565 (689)
போன்று. அதாவது "பளிகட” என்பவரது மகன் “ஹரும” என்பதாகும்.
ஆனால், கண்டியச் சிங்களவர்கள் தமது தாய்வழி வம்சாவளியைப் பரம்பரைப் பெயர்களில் பயன்படுத்தினார்கள். தாய் வ யர்குலத்தைச் சேர்ந்தவளாக இருக்கும் சந்தர்ப்பம் அதிகமாக இருந்தமையால், அவர்கள் இதனை விரும்பினார்கள். அத்தோடு கண்டியச் சிங்களவரிடையே காணப்பட்ட மாறுபட்ட திருமண முறைகள் காரணமாக, சொத்துரிமைத் தத்துவங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. பிள்ளைகளது வாரிசுரிமை தாயின் குடும்ப வழியிலிருந்து வந்தமையால், அவர்கள் தாயின் வம்சாவளிப் பெயர்களில் அழைக்கப்பட்டார்கள்.(6)
கண்டிய முஸ்லிம்களிடத்திலும், இத்தகைய நடைமுறை இருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம்கள் கண்டிய கொவிகுல சிங்களப் பெண்களை மணந்து கொண்டமையால், அவர்கள் கண்டிய இராச்சியத்தில் குல வகைகளுக்கு உட்பட்டார்கள். தாய் சிங்கள இனத்தவளாக இருந்தமையால் அவர்களது வம்சாவளியிலும் தாய் வழியாக வந்த "சிங்கள வாசகம” குலப்பெயர்கள் ஒன்றிணைந்தன. அரேபியர்களிடையே இது போன்ற பெயர்கள் இருந்திருக்காதது கண்கூடான விடயமாகும். இன்றும் கண்டிய முஸ்லிம்கள் மத்தியில் இப்பெயர் பிரயோகம் வழக்கில் இருப்பதைக் காணலாம்.
இலங்கை பண்டைக் காலத்தில் தாய்வழித் தலைமுறை நாடாக இலங்கியதும், இத்தாய்வழி வம்சாவளிப் பெயர்கள் தோன்றியமைக்கு ஒரு காரணமாகக் கூறலாம். கி.பி. 851இல் இலங்கைக்கு வந்த தேச சஞ்சாரி சுலைமான் என்பவர், இலங்கையுட்பட பல தீவுகளைப் பெண்களே அரசாளுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்து கண்டியச் சிங்களவர்கள் பூர்வீகக் குடிப்பெயர், குலவழிப்பெயர், பதவிமரபுவழி பட்டப்பெயர்கள் என அனைத்தையும் தமது பெயரில் உள்ளடக்கி, மிக நீண்டவையாக தமது பெயர்களை வைத்துக் கொள்வதில் விருப்பங் கண்டார்கள். இன்றும் இந்த வழக்கம் கண்டியச் சிங்களவர்களிடையே காணக்கூடியதாக உள்ளது. கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய செனரத்வில என்ற கிராமத்தில் வசித்த ஒருவரது பெயர், விஜேசுந்தர ராஜகருண நவரத்ன பண்டாரநாயக்க முதியன்சே ராலஹாமிலாகே போஅங்கே உடஹ வளவ்வே நவநந்த பண்டார போஅங்க என்பதாகும்.(7) இவ்வாறான பெயர்த் தொடர்கள், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், அவர்களது முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்ளும் சிறந்த
7
Page 17
சாதனமாக இவை உள்ளன எனலாம்.
முஸ்லிம்களது வம்சாவளி
முஸ்லிம்களது வம்சாவளிப் பெயர் முறைகள் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையிலேயே சூட்டப்படுகின்றன.
இஸ்லாமிய மார்க்கம் என்பது, நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையாகும். புனித அல்குர்ஆனையும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிகளையும் பின்பற்றி வாழ்ந்து வருபவர்களே இன்று முஸ்லிம்கள் எனப்படுவர். இவ்விரு மூலாதாரங்களிலும் மனிதர்களைக் குறிப்பிடும் போது "ஆதமின் மக்களே” என பல இடங்களில் சுட்டிக்காட்டிச் சொல்லப்பட்டுள்ளன. ஆகையால், ஒருவர் மற்றொருவரது சகோதரராவார். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் மனிதர்களை ஆக்கியுள்ளதாக புனித அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதனால் ஒரு சாரார் மற்றவரை விட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நற்செயல்கள் மூலமே ஒருவர் கண்ணியப்படுத்தப்படுவார். நற்செயல்கள் புரியும் விடயத்தில் பின்னடைந்தவர் தமது மூதாதையரது சிறப்பு, பெருமை காரணமாக விரைந்து முன்னேறி விட மாட்டார் என்பதே இஸ்லாமிய அடிப்படைச் சித்தாந்தமாகும்.
குழந்தை பிறந்ததும் அதற்கு அழகியதொரு பொருளுடைய பெயரைச் சூட்டுவதை, அதன் பெற்றார் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்களது பெயர்களில் தமது தகப்பனின் பெயரைச் சேர்த்து அழைப்பதே மரபாகும்.
எடுத்துக்காட்டாக, “மீராகண்டு விதானை உடைய மகன் பக்கீர் லெப்பை என்பது போன்ற பெயர்கள் முன்னர் வழக்கில் இருந்தன. இதனை அரபியில் பக்கிர் லெப்பை இப்னு மீராகண்டு விதானை எனக் குறிப்பிடப்படும். இஸ்லாமிய சன்மார்க்க நம்பிக்கையின்படி, ஒவ்வொரு மனிதனும் மரணித்ததன் பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். அப்போது அவர்களது பெயர்கள் அவரவர் தந்தையின் பெயருடன் சேர்த்தே அழைக்கப்படும் என இஸ்லாமிய மூலாதாரங்கள் கூறுகின்றன. இதே போன்று, தந்தையின் பெயர் சொல்லி அழைக்கப்படுவதான இன்னும் சில சந்தர்ப் பங்களும்
8
இம்மூலாதாரங்களில் காணப்படுகின்றன. (பி.கு.) இதனை அடிப்படையாக வைத்தே முஸ்லிம்கள் தகப்பன் வழி வம்சாவளியைக்
கொண்டவர்கள் எனக் குறிப்பிடலாம்.
சிறப்பானவர்களை, சிறப்புப்பெயர் கொண்டு அழைப்பதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. அரபி மொழியில் "லகப்” என்னும் பட்டப்பெயர்; “குன்யத் என்னும் இடுகுறிப்பெயர்; 'அலம்’ என்ற வைத்தபெயர்; நிஸ்பத் இணைப்புப்பெயர் போன்றவற்றைக் கொண்டு ஒருவரை அழைக்கலாம்.8
வம்சப் பெயர்களையும், வாழ்ந்த பூர்வீக இடப்பெயரையும் தமது பரம்பரைப் பெயராக சேர்த்துக்கொள்ளும் வழக்கம் முஸ்லிம்களில் அரேபிய வழித்தோன்றல்களிடையே காணப்படுகிறது. பெரும்பாலும் சன்மார்க்கத்தின் கண்ணியமிக்க அந்தஸ்துடையவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.
குத்புல் அக்தாப் முஹிய்யிதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இது ஒரு பிரபல்யமான முஸ்லிம் மகானின் பெயராகும். இவரது பெயரில் ஆரம்பத்தில் உள்ளவை அவருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களாகும். "அப்துல் காதர்” என்பது அவருக்கு வைத்த பெயர். ஜிலான் அவர் பிறந்த ஊர். இதே போல்,
செய்யத் சைனுல் ஹழ்ரமிய்யி செய்யிது சாலிஹ ல் மதனி மெளலானா
எனவும் பெயர்கள் உள்ளன. இதில், ‘செய்யது என்பது இவர்களது வம்சத்தைக் குறிக்கும் பதமாகும். ஹழ்ரமிய்யீ, மதனி என்பன அரபியில் ஊர்ப் பெயர்கள்.
ஒரு தலைமுறையின் வம்சம் சம்பந்தமான கண்ணியம், இஸ்லாமிய மார்க்க அடிப்படையில், மூன்று வகையினருக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. முதலாவது, மார்க்கத்தை மக்களுக்குச் சொல்ல வந்த நபிமார்களது கிளையைச் சேர்ந்தவர்களுக்கு; அடுத்தது கற்ற மார்க்கக்கல்விக்குத் தக்க ஒழுக்கமுடையவர்களுக்கு; மூன்றாவது நன்னடத்தை உடையவர்களுக்குமாகும். இவ்வாறான முஸ்லிம்களே வம்சாவளி பெயர் தொடரில் அழைக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பி.கு: அம்மான் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நிச்சயமாக அல்லாஹ தஆலா எனது கப்று (அடக்கஸ்தலம்) இடத்தில் ஒரு மலக்கை(துரதுவர்) சாட்டி இருக்கின்றான். ஒருவர் என்மீது ஸலவாத்து (அல்லாஹற்வின் கருணை) சொல்வாரேயானால் அவருடைய பெயரையும், அவருடைய தந்தையின் பெயரையும் அந்த மலக்கு எனக்கு எத்தி வைப்பார்.(இண்ணாருடைய மகன் இன்னர் ஸலவாத்து சொல்லுவதாக agawi)
றதில் (ஆதாரம் : பற்சார்)
Page 18
கண்டிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்.
ஒரு பரம்பரையின் கலாச்சாரப் பாரம்பரியங்கள் அது உருவான இடத்தின், தேசத்தின், நாகரீகத்தின் அடிப்படைகளுக்கும், கட்டுக்கோப்புகளுக்கும் இயைவானதாகவே அமைந்திருக்கும். அதனால் பரம்பரைத்தன்மை அடிப்படையில் மாற்றம் அடைவது கிடையாது. அரேபியரது பரம்பரை, அரேபிய பாலைவனத்தில் நின்றும் தோற்றமெடுக்கின்றது. அவர்களது வழித் தோன்றல்களான இலங்கைச் சோனகரும், இன மத ரீதியாக அரேபியரது பரம்பரைத் தன்மைகளைக் கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.
இலங்கையின் கரையோரங்களில் தமது குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்த முஸ்லிம்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் நிம்மதியற்ற நிலையில் வாழ்க்கை நடாத்தினார்கள் எனலாம். முஸ்லிம்கள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அவலமான ஆழ் நிலையில் சீவியம் பண்ணினார்கள். அதேவேளை கண்டிய இராச்சியத்தில் குடியேறி வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களுடனும், சிங்கள மக்களுடனும் நேரடி தொடர்பு வைத்து அச்சமற்று வாழ்ந்ததினால் அவர்களிடையே சமூக முன்னேற்றம் காணப்பட்டது. சிங்கள மக்களது நன்னம்பிக்கையை இவர்கள் பெற்றிருந்ததனால், அவர்களுடன் குடும்ப உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். வர்த்தகத்தில் காட்டிய ஆர்வத்தைப் போன்றே விவசாயத்திலும் முஸ்லிம்களின் ஆர்வம் மிகுந்து காணப்பட்டது. அதனால் கொவிகுலத்தைச் சேர்ந்த பெண்களை மணமுடித்துக் கொண்டார்கள். இதனால் முஸ்லிம்களது சமய, இன பாரம்பரியங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முக்கியமான இடங்களில் முஸ்லிம்களுக்குத் தொழுவதற்கான பள்ளிவாசல்களைக் கட்டிக் கொள்ளவும் கண்டி இராச்சியத்தில் இடமளிக்கப்பட்டிருந்தது. கண்டிய இராஜதானியான கந்த உடரடயில் 1650க்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரு முளப்லிம் பள்ளிவாசல் இருந்துள்ளதாக ரொபட் நொக்ளப் குறிப்பிடுகிறார். தமது வருகைக்கு முற்பட்ட காலத்தில், ஒரு கண்டிய அரசன் மூலம் அனைத்து சுதந்திர நாட்டுவாசிகள் மூலமாகவும் இந்த பள்ளிவாசலுக்கு காணிக்கை செலுத்த அரச கட்டளை பிறப்பித்திருந்த விடயத்தை அவர் தமது நூலில் குறிப்பிடுகிறார்.(பி.கு.)
பி.கு: ரொபட் நோக்ஸ் (1837 - 89) வரை 19 ஆண்டுகள் 6 மாத காலும் கண்டிய இராச்சியத்தில் சிறைப்பட்டு விகதியாக உலவி வந்தார். இவர் கண்டிய மன்னன் செனரத் (0ே4-1833தின் மரணச்சடங்கு நடக்ரும் தருவாயில் முன்னின்றதாக குறிப்பெழுதுகின்றார். ஆகையால் இப்பள்ளிவாசல் இம்மன்னனின் காலத்திற்கு முற்பட்டதாகவும் 1ம் விமரதர்மசூரிய (1591-1804) மன்னனின் காலத்துக்குரியதாக கொள்ளலாம். An historical clation of thc island Ceylon. By Robert Knox (168)
፰[]
இங்கு முஸ்லிம்களுக்கு ஆட்சியாளர்கள் தேசிய சேவையில் பதவிகளை வழங்கியும், காணிகளை நன்கொடையளித்தும் கெளரவப் படுத்தியதால், சமூக வாழ்க்கையில் சிறந்த அந்தஸ்து அவர்களுக்குக் கிடைத்திருந்தது. ஆகையால் முஸ்லிம்கள் இங்கு தனித்த ஒரு இனமாகக் கருதப்படாது சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்த ஒரு சமுக அமைப்பைப் பெற்றிருந்தார்கள்.
இதற்கு சிறந்ததொரு நிதர்சனமாகக் கொள்ளக் கூடியதாக இருப்பது, இன்று வரையில் கண்டிய முஸ்லிம்களின் பெயர்களில் காணப்படும் சிங்களப் ‘பரம்பரைப் பெயர்களாகும். கண்டிய சிங்கள மக்கள் மத்தியில் வழக்கில் காணக்கூடிய அதே "பெலபத் நாம என்னும் வம்சாவளிப் பெயர்களை முஸ்லிம்களும் பயன் படுத்துகின்றார்கள். வதியும் இடப்பெயராலும், குலப்பெயர்களாலும், மன்னன் காலத்து பதவி வழிப் பெயர்களாலும் சிங்கள மக்களைப் போன்றே இப்பகுதியில் வாழும் முஸ்லிம்களும், தமது வம்சாவளிப் பெயர்களைக் கொண்டுள்ளார்கள். சிங்கள மொழியிலேயே முஸ்லிம்களது வாசகம" யும் உள்ளது. வீட்டுப் பெயர்களில் "கெதர என்ற சிங்களப் பதப்பிரயோகமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இளப்லாமியர்களது பெயர்களாகக் கருதப்படும் அகமது லெப்பை, உதுமா லெப்பை, அபூபக்கர் என முடிவு பெறுவதால் மாத்திரமே இவ்வாறான பெயர்கள் முஸ்லிம்களுக்குரியன என கூறுமளவில் மாற்றமில்லாது சிங்கள வம்சாவளிப் பெயர்களாக இவை காணப்படுகின்றன.
கண்டிய இராச்சியத்தின் விசேடமாகக் காணப்பட்ட குலகோத்திர வகைகள் சிங்களவர்களுக்கே உரியனவாகும். என்றாலும், அவற்றில் பெரும்பான்மையான குல வகைகளில், முஸ்லிம்களும் சார்ந்து இருப்பதை அவர்களது வம்சாவளிப் பெயர்களில் இருந்து அறியக்கூடியனவாக உள்ளன. பல தலைமுறைகளாக இங்கு குடியேறி வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் எந்தச் சிங்களப் பரம்பரையோடு தொடர்பு கொண்டு, குடும்ப உறவை ஏற்படுத்திக் கொண்டவர் என்பதை, அவர்களது பிச்சளங்களின் பரம்பரைப் பெயர்களில் இருந்தே கூறிவிட முடிகிறது. அவை இஸ்லாமிய அடிப்படையிலான வம்சாவளி மரபுகளுக்கு உட்படாத பெயர்களாதலால், கண்டிய சிங்கள மக்கள் மூலம் இங்கு வாழ்ந்த ஆதிப் பழங்குடி கண்டிய முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட சமூக அந்தஸ்து எனக் கொள்ளலாம். அத்துடன் அவர்களது கிட்டிய உறவின் தொடர்பை இவை எடுத்துக் காட்டுபவையாகவும் உள்ளன. அதனால், முஸ்லிம்கள் இப்பெயர்களை சன்மார்க்க அடிப்படையில்
21
Page 19
மதிப்பீட்டுக்குள்ளாக்காது சமூக அடிப்படையில் அதற்கு அந்தஸ்து வழங்கி வரலானார்கள். அந்த மரபுரிமையை இன்று வரையில் அவர்கள் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
கண்டிய முஸ்லிம்கள் தமது பெயருடன் இணைத்துக் கொண்ட சிங்கள வம்சாவளிப் பெயர்களும் எந்தச் சந்தர்ப்பங்களில் அவை அவர்களுக்கு வழங்கப்பட்டன என்பது போன்றவையும், அதனால் அவர்கள் பெற்ற கீர்த்திகளும், முஸ்லிம்கள் அவற்றைப் பயன்படுத்திய முறைகள் தொடர்பானதுமான விளக்கங்கள் இந்நூலின் உள்ளே இடம் பெறுகின்றன.
1) ලංකාවේ පුරාණ ඉඩම් බුත්තිය හා අදායම. සග උග කොඩ්රිටෝන් (1980) 15පි ” 2) நொதாரிசு A. L. M. இஸ்மையில் சின்னமரிக்காரின் காணி உறுதிகள்.
இல. 356, 360 ( 15.10.1862) 3) Report of the Temple Land Com (1857 - 1858) P.10 4) கண்டி மாவட்ட நீதிமன்றம் பிரிவிடல் வழக்கிலக்கம் 4359P காணி உறுதி
இல. 250 (1.2.1893), பாத்த ஹேவாஹெட்ட. 5) සිළුමිණ - වජු ජයන්තිසමරු සංග්රහය (1930 - 1990) 141 සහ 142පි. 6) Laws of ceylon-K. Balasingham - (1933), P565(689) 7) கண்டி மா.நீதிமன்றம் பரிவிடல் வழக்கிலக்கம்13836/P 8) மங்ானி-அல்லாமாசெய்யிது முஹம்மது லெப்பை, (1994) பக் 349.
Σ2.
அத்தியாயம் - II
கண்டிய முஸ்லிம்களின் இராஜிய தொடர்புகளும் சிங்கள வம்சாவளிப் பெயர்களும்
கண்டிய இராச்சியத்தில், முஸ்லிம்கள் பெருமிதம் அடையும் படியான பல பதவிகளை வகித்துள்ளார்கள். சிங்கள மக்களுடன் சமமாக அவர்களது சேவையும் போற்றப்பட்டதுடன், கெளரவப் பட்டங்களையும், காணிகளையும் நன்கொடையாகவும் பெற்றார்கள். முஸ்லிம்கள் நம்பிக்கையானவர்களாகவும், மன்னனுக்கும், சிங்கள மக்களுக்கும் பிரயோசனம் அளிப்பவர்களாகவும் இருந்ததனாலேயே அவர்கள் இராஜிய உறவுகளில் நெருங்கி ஈடுபாடு காட்டும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. முஸ்லிம்களிடம் காணப்பட்ட பரவலான அறிவு, ஆற்றலின் காரணத்தினாலும் தேசிய சேவையில் கண்டிய மன்னர்கள் காலத்தில், அவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. சில முஸ்லிம்கள் தனித்துவமான திறமையைக் கொண்டவர்களாகவும் விளங்கி உள்ளார்கள்.
சிங்கள மக்களில் அரசனுடைய பணிகளை ஆற்றிய வர்களுக்கு கெளரவங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது போன்றே முஸ்லிம்களுக்கும் கிடைத்தன. சிங்கள மக்களில் அரச சேவையில் கடமையாற்றியவர்கள், தமது பதவிவழி, விருது வழிப் பெயர்களைக் கொண்டு தமது வம்சாவளியை அமைத்து கொண்டார்கள். அதேபோன்றே, கண்டிய முஸ்லிம்களும் தமது பெயர்களுடன் சிங்கள மொழிவடிவிலான பதவிவழிப்பெயர்களையும், சிறப்புப்பெயர்களையும் இணைத்துக்கொண்டார்கள். அது அவர்களது பரம்பரை பெயராகியது. முஸ்லிம்கள் இங்கு வகித்தப் பதவிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற். போன்று, ஓர் உயர் நிலை புராதன கண்டிய ராச்சியத்தில், மத்தியகால யுகத்தில் ஏற்பட்டது. இது இவ்விராச்சியத்தின் இராசதானி குருநாகலையில் அமைந்திருந்த காலப்பகுதியில், சிங்கள
Page 20
கிரீடத்தின் உரிமையை ஏற்று ஒரு முஸ்லிம் மகன் சிம்மாசனம் ஏறிய சம்பவமாகும். சிங்கள வம்சாவளியில் மன்னன்வழிப் பரம்பரைப் பெயரை இவர் மூலம், முஸ்லிமொருவர் கண்டிய இராச்சியத்தில் பெற்றுக்கொண்டார்.
மலய தேசத்தின் அரியணையில் ஒரு முஸ்லிம் மன்னன்
கண்டிய இராச்சியம் மலய தேசம் என வழங்கப்பட்ட மிக பழமையான காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள். கி.பி. 11ம் நூற்றாண்டு தொடக்கம் 15ம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலயுகத்தில் தம்பதெனிய, யாபாஹ"வ, குருநாகலை, ஆகியன இவ்விராச்சியத்தின் தலை நகர்களாக விளங்கின. முதலாம் புவனேகபாகு மன்னன் (1273-84) தம்பதெனியாவில் தனது அரசாட்சியை ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னர் அவனது மகனான இரண்டாம் புவனேகபாகு மன்னன் தனது ஆட்சியில் புகழ் பெற்று விளங்கினான். இம்மன்னனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இவனது மகன், நாட்டு மக்களது நல்லாதரவை இழந்ததனால், மிகக் குறுகியதொரு காலமே அவனது ஆட்சி நிலைத்தது. இவன் தனது இராஜதானியை "அத்துகல் புரய” என்ற தற்போதைய குருநாகல் நகரில் அமைத்திருந்தான்.
குருநாகலைப் பிரதேசத்தில் அஸ்வெத்தும என்னும் கிராமத்தைச் சேர்ந்த அழகிய முஸ்லிம் பெண்ணுடன், இரண்டாம் புவனேகபாகு மன்னன் கொண்டிருந்த தொடர்பின் மூலம் பிறந்தவனே இவ்விளம் மன்னனாகும். இந்தக் கதை ஆதார பூர்வமானதொன்றாகும் என, எச். டபிள்யு. கொட்ரிங்டன் என்னும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.(1)
இம்முஸ்லிம் அரசிளங்குமரன் வட்டிமி (வத்திமீ) பண்டார என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டான். இவனது இயற்பெயர் செய்யது இஸ்மையில் என்பதாகக் கூறப்படுகிறது. இவனது ஆட்சியை மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதனால், அவனை கொலை செய்வதற்கான சதித் திட்டமொன்றினைத் தீட்டினார்கள். உயரமான கற்பாறை ஒன்றின் மேல் மன்னனுக்கு ஒரு வைபவத்தை ஏற்பாடு செய்து, செங்குத்தான அக்கற்பாறைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். பின்னர், மிகத் தந்திரமாக மன்னனுக்கு அமைத்திருந்த மேடையில் இருந்து அவனைத் தள்ளி விட்டு கொலை செய்தார்கள். மரபுக் கதைகளின்படி ‘வத்திமி பண்டார என்னும் இம்முஸ்லிம் மன்னன் கற்பாறையில் இருந்து விழுந்து இறந்ததால் 'கலே பண்டார தெவியோ? என சிங்களவர்களால் அழைக்கப்படுகிறார். அத்தாகல என்னும் இடத்தில் இச்சம்பவம் நடந்ததாக பரம்பரைக் கதைகளில்
2.
சொல்லப்படுகிறது. வத்திமி பண்டாரவின் கல்லறை இன்றும் முஸ்லிம்களின் பொறுப்பிலேயே இருந்து வருகின்றது. இவ்விளம் அரசன் இரவு வேளைகளில் தனது போர்க் குதிரை மீதேறி, அந்தப் பிரதேசத்தில் சவாரி வருவதை தாம் கண்டுள்ளதாக அனேக கிராமவாசிகள் கூறிவருகின்றனர். இந்தக் கல்லறை அமைந்துள்ள இடம் இன்று ஒரு மலேய மனிதரின் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பெளத்தர்களும் முஸ்லிம்களும் இன்று இந்த தளத்திற்குக் கண்ணியம் செலுத்தி வருகின்றனர்.
“பண்டார' என்பது ‘பண்டாரம் என்னும் தமிழ்ப் பதத்திலிருந்து மருவி வந்த ஒரு சொல்லாகும். அரசர்கள் இந்த வம்சாவளிப் பெயர்களைக் கொண்டிருந்தார்கள். தர்மபால’ என்ற அரசன் “பெரிய பண்டார'என அழைக்கப்பட்டான். 1521ம் ஆண்டளவில், கோட்டை இராச்சியத்தின் மன்னனாக மத்தும பண்டார' என்பவன் அரசேறி இருந்தான். இன்றும் ‘பண்டார' என்னும் வம்சாவளிப் பெயர் பரவலாக சிங்களவர்களிடம் காணக்கூடியதாக உள்ளது. கண்டிய இராச்சியத்தின் அரசப் பரம்பரையிலும் முஸ்லிம் ஒருவர் தமது வம்சாவளியை கொண்டிருந்தார் என்பதற்கு வத்திமி பண்டார மன்னன் ஓர் உதாரணமாகும்.
இம்மன்னனின் தாயான முஸ்லிம் மங்கை வாழ்ந்ததாகக் கூறப்படும், "அஸ்வெத்தும' என்னும் கிராமம் தற்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு கிராமமாகும். 1901ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி அங்கு வாழ்ந்த மொத்த மக்கள் தொகையில் பாதிபேர் முஸ்லிம்களாவர். இவ்வூரில் வாழ்ந்த நான்கு முஸ்லிம் விதானைமார்கள், வில்பாவே பத்தினி ஆலயத்தின் காணிகளைப் பரவணியாக பெற்றிருந்தார்கள்.(2)
வத்திமி பண்டார மன்னனது ஆட்சி காலத்தில், அவருக்குப் பிரியமான 'கோபால பிராமண முதியன்சே” என்பவருக்குப் பரிசாக வழங்கிய ஊர் “கொபல்லாவ என பின்னர் மாறியதாக ஒரு மரபுக் கதையுள்ளது.(3)
இப்னு பதூதா (1344) இலங்கையில் தேச சஞ்சாரம் செய்யும் போது 'கொனகார் (இது குருநாகலை என சொல்லப்படுகிறது) இல் ஒரு முஸ்லிம் பள்ளிவாயில் இருந்ததாக அவரது பயண அனுபவத்தில் குறிப்பிடுவது இந்த 'கலே பண்டார தளமாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(4) சிங்கள மணிமுடியை அணிந்து கொண்ட இம்மன்னனின் ஆட்சியானது, பெளத்த மக்களை சினம் கொள்ளச் செய்தது எனவும்; அவர் அரச
25
Page 21
மதமாக இஸ்லாத்தைப் பரப்ப முயற்சி எடுத்தார் எனவும் சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் முஸ்லிம்களுக்கு சலுகை காட்டினார் என்பதும், குருநாகலை இராசதானி கம்பளைக்கு மாற்றப்படுவதற்கு இச்சம்பவங்களும் காரணம் என்பது அவர்களது கூற்றாகும்.5)
பிரதான ராஜதந்திர கருமங்களில் முஸ்லிம்கள்
கண்டிய மன்னர்களின் கீழ் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அரச தூதுவர்களாக, வேவு பார்ப்போராக, மற்றும் படைப்பிரிவுகளிலும கடமையாற்றியுள்ளார்கள். தீவுக்குள்ளேயும், வெளியேயும் இவர்கள் வர்த்தக நோக்கமாக சுற்றித் திரிபவர்களாக இருந்தமையால், இது போன்ற கருமங்களை ஆற்றுவதற்கான விசேட திறமையைப் பெற்றிருந்தார்கள்.
கண்டியை அரசாண்ட இரண்டாம் இராஜசிங்க மன்னன் (1629-87) காலத்தில், ஒல்லாந்த உயர் ஸ்தானிகராக சேவையாற்றி வந்த “ட்ராக் என்பவர் 1670ம் ஆண்டு ஜூலை மாதம் மரணமடைந்தார். மன்னன், அவரது பூதவுடலை கொழும்பிற்கு அனுப்பி வைக்கும் பணிக்கு, ஐவர் அடங்கிய நல்லெண்ணத் தூதுக் குழுவொன்றையும் அனுப்பி வைத்தான். அதில் ஒரு பிரதானியாக “கோபால முதலி என்ற முஸ்லிம் இடம் பெற்றிருந்தார். அவர் தமது அறிவுத்திறமையால் ஒல்லாந்தருக்கும் மன்னனுக்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்தி பாராட்டும் பெற்றார்.(6)
இம்மன்னனின் ஆட்சியின் போது, எல்லா வகையினரையும் உள்ளடக்கிய 70,000 பேர் கொண்ட படையொன்றைத் திரட்டியதாக ‘ஹடஹன் காவிய என்னும் கிரந்தத்தில் குறிப்பிடப்படுகிறது. கண்டிய படையில் 60,000 அல்லது 70,000 பேர் இருந்தனர் என ‘மந்தாரம் புற புவத’ (1647-1702) என்னும் கிரந்தம் கூறுகிறது. இப்படையில், ஏராளமான முஸ்லிம்களும் சேவையாற்றியுள்ளனர்.
1628ம் ஆண்டில் கண்டிய இராச்சியம் மூன்று சிற்றரசுகளாக பிரிக்கப்பட்டு, மாத்தளையின் அரசு பொறுப்பை கொடபொல விஜேபால இளவரசன் ஏற்றிருந்தான். அம்மன்னன், போர்த்துக்கேயர் கைவசம் இருந்த திருகோணமலைக் கோட்டையை மீட்கும் முகமாக, இந்த பிரதேசத்தில் இருந்து சகலரையும் உள்ளடக்கிய ஒரு சேனையைத் திரட்டிய செய்தியை ‘மாத்தளை கடயிம் ஏடுகள் கூறுகின்றன. இதில், முஸ்லிம்களும் இடம் பெற்றிருந்தனர் என சில தரவுகளின் வாயிலாக கூற முடிகிறது. இதே மன்னனுக்கும், இரண்டாம் இராஜசிங்கன் மன்னனுக்கும் இடையே ஊவாவில் வைத்து யுத்தமொன்று மூண்டது.
26
போர்த்துக்கேயர் ஊவாவில் விஜேபால மன்னனுக்கு சார்பாக செயற்பட்டு அவனை கோவாவிற்கு அனுப்பினர்.(7) ஆனால், இவனின் மகனை, 2ம் இராஜசிங்க மன்னன் மிக மோசமான முறையில் கொலை செய்தான். இது பற்றிய விசாரணையை 1669ல் ஒல்லாந்தர் நடாத்தினர். அதில் வாக்குமூலம் கொடுத்தவர்களுள் கலகம என்னும் அதிகாரியின் பெயருக்கு அடுத்தபடியாக மொஹோட்டால கோபால முதலி என்ற முஸ்லிமின் பெயர் இருந்தது.8 முஸ்லிம்கள் கண்டியப் பிரதானிகளுடன் முக்கிய ராஜதந்திர கருமங்களில் ஈடுபாடு காட்டியுள்ளதை இது காட்டுகிறது.
உளவறியும் விடயத்தில் முஸ்லிம்கள் கொண்டிருந்த திறமையை எடுத்துக்காட்ட, பிறிதொரு சம்பவத்தையும் குறிப்பிடலாம். 1760ம் ஆண்டில், மொலதண்ட பத்வடன நிலமே என்பவர், கண்டிய மன்னன் கீர்த்தி ரீ ராஜசிங்க (1781-98) மன்னனுக்கு எதிராக கலகமொன்றை ஏற்படுத்த இரகசியச் சதியொன்றை மேற்கொண்டான். இந்தச் சதித்திட்டத்தைப்பற்றி கோபால முதலி என்னும் முஸ்லிம் ஒருவர் செய்தியறிந்து, அரசனுக்குத் தக்க தருணத்தில் வெளிப்படுத் தினார். இதனால், இச்சதி முறியடிக்கப்பட்டதுடன், மொலதண்ட நிலமையின் நிலபுலன்களையும், ஊர்களையும் மன்னன் அரசுடமை யாக்கி, அதனை கோபால முதலிக்கு சன்மானமாகக் கொடுத்தான். அத்துடன் விஜயதிலகராஜகருண கோபால முதலியார் என்னும் பட்டத்தை மன்னன் அவருக்கு வழங்கியதோடு, அரசியின் நோயைக் குணப்படுத்தி யம்ையால் பேத்கே முகந்திரம என்னும் கெளரவப் பெயரையும் சூட்டினான்.8A
பிற்காலத்தில் சோனகர்களும், மலாய முஸ்லிகளும் கண்டிய இராச்சியத்தின் படையில் சேவையாற்றினார்கள். சோனகர் 250, மலாயர் 250 அல்லது 300 பேர் யுத்தப்பயிற்சி பெறுவது பற்றிய தகவலொன்று 1810ம் ஆண்டில் பிரித்தானியருக்குக் கிடைத்ததாக, ஆங்கிலேய ஆளுனர் சேர் ஜோன் டொயிலி தமது தினப் பதிவேட்டில் (1-9டிசம்.1810)குறிப்பிடுகிறார். அத்துடன், கண்டிய மன்னனின் 'ஹேவபன்ன” என்னும் பிரிவிலும் முஸ்லிம்கள் சேவையாற்றியுள் ளார்கள்.
கண்டிய இராச்சியத்தில் அரச தூதுவர்களாகக் கடமையாற்றிய கட்டுபுள்ளே என்னும் ஒரு பிரிவினரும் இருந்தனர். இவர்கள், அதிகாரம் மார்களின் செய்திகளைக் கொண்டு செல்பவர்களாக செயற்பட்டனர். அத்துடன், இப்பதவியில் உள்ளவர்கள் பொலிஸ் படைக்குச் சமமான ஒரு சேவையை ஏற்றிருந்தனர். முஸ்லிம்கள் இப்பிரிவில் சேவையாற்றியமைக்கான உறுதியான சான்றுகள் உள்ளன. அது,
-
Page 22
அவர்கள் தமது பெயருடன் இணைத்துள்ள இப்பதவி வழி சிங்கள வம்சாவளியின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. தும்பனை உட்பிரதேசத்தைச் சேர்ந்த கலகெதர மடிகே, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். இங்கு 1899ம் ஆண்டிற்கு முன்னர் கட்டுபுள்ளே கெதர குப்பதம்பி (9) என்னும் முஸ்லிம் ஒருவர் வாழ்ந்துள்ளார். இவரது பரம்பரையினர் இன்றும் இவ்வம்சாவளிப் பெயரைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இவரது மூதாதையர், அர்ச காலத்தில் ‘கட்டுபுள்ளே’ என்னும் பதவியை வகித்துள்ளதை இது காட்டுகின்றது. இவருக்கு கண்டி மகா தேவாலயத்தின் எனுதென பங்குவயில் விசாலமான விஸ்தீரணமுள்ள பயிர்செய் நிலத்தில் பங்குகளும், அவற்றிற்கு நீர் பெற்றுக்கொள்வதற்கான குளமொன்றும் நன்கொடையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.(10) முஸ்லிம்கள் இப்பெயரை “காட்டுப்புள்ளே' என்றும் உச்சரிக்கின்றனர். “கட்டு புள்ளே’ என்பதிலும் பாதி தமிழ் உச்சரிப்பேயாகும்.(11) இப்பாதுகாப்புச் சேவை, ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய ஆரம்ப காலத்திலும் செயற்பட்டுள்ளது. சேர் எட்வர்ட் பார்ன்ஸ் என்ற தேசாதிபதி 1828ல் ரீ தலதா மாளிகாவையில் நடைபெற்ற பெரஹரா வைபவத்தின் பாதுகாப்பிற்காக 48 கட்டுபுள்ளே பிரமுகர்களை பயன் படுத்துமாறு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.(12)
முஸ்லிம்கள் கண்டிய இராச்சியத்தில் கடன்மயாற்றிய ஏனைய பாதுகாப்பு தொடர்பான துறைகள் பற்றிய தெளிவான விபரங்கள் கிடைப்பதற்கு அரிதாகவே உள்ளன. அத்துறைகளில் ஈடுபட்டவர்களது வம்சாவளிப் பெயர்கள் கூட, இன்று வழக்கொழிந்து விட்டன எனலாம்.
மருத்துவக் கலையைச் சார்ந்தவர்களின் வம்சாவளிப் பெயர்கள்
கண்டிய மன்னர்கள் காலத்திலேயே இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் மருத்துவக் கலையில் சிறப்புற்று விளங்கினார்கள். கண்டி, குருநாகலை, கேகாலை போன்ற கண்டி இராச்சியத்தின் பல பிரதேசங்களிலும், இத்துறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் குடிபதியாக இருந்துள்ளார்கள். இவர்களில் சிலர் அரசவை மருத்துவர் களாகவும் சேவையாற்றி, சிங்கள மன்னர்களது பாராட்டுதல்களையும், விருதுகளையும் பெற்றதுடன் அவர்களுக்கு அரசன் நிந்தகம காணிகளையும் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளான்.
வைத்திய திலக்க ராஜகருணா என்பது கண்டிய மன்னனால் முஸ்லிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டமாகும். மன்னனது அரச வைத்திய பணியை மேற்கொண்டவர்கள் வாசல வைத்திய முதியன்சே என்ற நாமஞ் சூட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.அத்துடன் பேத்கே
28
நிலமே என்ற பதவியையும் முஸ்லிம்கள் வகித்துள்ளார்கள். இவர்களது பரம்பரையைச் சேர்ந்த வழித்தோன்றல்கள், மூதாதையரது வைத்தியக் கலையை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்கள் அத்துடன் தமது முன்னோருக்குக் கிடைத்த கெளரவப் பட்டங்கள் அடங்கிய வம்சாவளிப் பெயர்களையும் தமது பெயர்களோடு சேர்த்துக் கொண்டார்கள். இன்று அவர்களது மூதாதையர் பெற்றிருந்த மறையாத வரலாற்றுச் சிறப்பை, சிங்கள மொழி மூலம் கொண்ட இவ்வம்சாவளிப் பெயர்கள் காட்டி நிற்கின்றன.
நான்கு கோரளை பிரதேசத்தில், கெக்கிரி கொடை என்னும் கிராமத்தில் வாழ்ந்த அஹமது லெப்பை ஹபீபு லெப்பை (1872 முன்) என்ற முஸ்லிம், வைத்திய ரத்ன முதலியார் என்னும் சிறப்புப் பெயரைத் தமது பெயருக்கு முன்னால் பயன்படுத்தினார்.(13) குருநாகலை பிரதேசத்தில் ரம்புக்கத்தன” கிராம வாசியான உமர் லெப்பை அவர்கள் (1872 முன்) தமது பெயரின் பின்னால் வெத குருனனேஹே என்னும் வைத்திய பிரதானி பட்டத்தைச் சேர்த்திருந்தார்.(14)
முஸ்லிம்கள் மிகுந்து வாழும் கலகெதர என்னும் ஊரில் கறுகல வெதரால என்னும் முஸ்லிம் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவரது பிச்சளத்தைச் சேர்ந்தவர்கள் கலுகல்ல வெதராலலாகே கெதர எனும் வம்சாவளிப் பெயரை தமது பெயருக்கு முன்னால் குறிப்பிடு கிறார்கள்.(15) இதே போன்று யட்டிநுவர மெதபலாத்தை தெஹியங்கை என்னும் ஊரிலும் “வெதராலலாகே கெதர” என்னும் பரம்பரைப் பெயரைக் கொண்டவர்கள் உள்ளனர்.(16)
நாவலப்பிட்டிக்கு அருகில் உள்ள பலன்தொட்டை என்னும் சிற்றுாரில் வெதராலலாகே என்னும் கே நம யுடன் அழைக்கப்படும் முஸ்லிம் வைத்திய பரம்பரையொன்று இருந்துள்ளது. வெதராலலாகே சேகு அபூபக்கர் ஆராச்சி என்னும் பெயர்ப் பரம்பரை இன்றும் வழக்கில் உள்ளது. அந்த வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த விட்டுத் தொகுதியின் வளவின் பெயர் கொண்டும் பேத்கே வளவ்வே என்னும் வம்சாவளிப் பெயருடன் அழைக்கப்படும் அவ்வூர் முஸ்லிம்கள் Arpagipetit.17
அத்துடன் சிலர் தமது பெயர்களுடன் வெதராளை என்ற பட்டத்தை இணைத்துக் கொண்டிருந்தனர். உடுநுவரை வட்டதெனியாவில் வாழ்ந்த கீரப்பனை லிந்தைக் கொட்டுவை ஆதம் லெப்பை வெதராளை என்பவர் பரவணி காணிகள் பெற்று சிறப்புற்று
TAQ
Page 23
விளங்கிய ஒரு வைத்தியராவார். (1862) (18) ‘வெதராளை’ என்னும் இந்தச் சொல், அக்குரணைப் பகுதியில் வைத்தியனார் என தமிழ் உச்சரிப்பிலும் பிரயோகிக்கப்பட்டது. தெலம்புகஹ வத்தை என்னும் பிரிவைச் சேர்ந்த ஒருவரது பரம்பரைப் பெயரில் மலலதன்னே வைத்தியநார் என்னும் தொடர் சேர்க்கப்பட்டுள்ளது.19)
மீரா லெப்பை வெத நயிதே என்ற பெயருடைய ஒருவர் பரகாதெனிய என்னும் ஊரில் மருத்துவத் துறையில் ஈடுபட்டிருந்தார்.(20) இங்கு ‘நயிதே' என குறிப்பிடப்பட்டிருப்பது அவரது வம்சத்திற்குரிய பெயராகும்.
வாழ்ந்த ஊர் பெய்ரைக் கொண்டும் வைத்தியத் துறையைச் சார்ந்தவர்கள் தமது பெயரை அழைத்துக் கொண்டார்கள். என்டறு தென்னே வெதராலலாகே கெதர காசிம் லெப்பை (1903) என்பதை எடுத்துக்காட்ாகக் app21 (10equ) & \81) i fod STIL(ckes, LucColuQfof
તે & : - r, ) . . . . . . . مسیر - t இது போன்று, பல்வகைச் சிறப்பு நாமங்களில் மருத்துவக் கலையைச் சார்ந்தவர்களது பரம்பரைகள் அழைக்கப்பட்டன. சிங்களி அரசர்களுடனும், கண்டிய சிங்கள மக்களுடனும் செளஜன்ய உறவு பூண்டு, இவ்வைத்திய துறையில் பணியாற்றியதனாலேயே சிங்களப் பட்டப்பெயர்கள் கொண்டு இவர்கள் அழைக்கப்பட்டார்கள். '.
v. * : } نم : f00;Tा8स्53f "கண்டிய யுகத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதிகளிலும், மருத்துவக் கலையில் சிறப்புற்று விளங்கியதோடு, வரலாற்றுே ரீதியாகவே பாராட்டும் பெற்றவர்கள் கோபாலச் சோனகர் எனப்படுமி முஸ்லிம்களாவர். இவர்கள் கண்டிய அரசர்களுடன் நெருங்கிய உறவுெ கொண்டிருந்தார்கள். ஏனைய கருமங்களில் விசேட திறமையைக் காட்டியவாறே, சிங்கள மன்னர்களுக்கு வைத்திய பணி புரிந்து, கெளரவ நாமங்களையும், காணிகளையும் நன்கொடையாகப் பெற்றுக் கிொண்டார்கள். அந்த இடங்களில் இன்றும், அவர்களது பரம்பரையினர் அப்பட்டப்பெயர்களைத் தமது பெயர்களுடன் இணைத்து, மன்னுக்2 காலத்தில் பெற்ற மதிப்பைப் பறைசாற்றி வருகின்றனர்பூசூ பூmaia.ஓ i to a нo ?... ; , : . . ,\ וןa 7 ; % 5 * ர்ர் சிங்கள நாட்டு வைத்தியர் கொண்டை கட்டுபவர்களாக் இருந்தது போன்றே இவர்களும் கொண்டை கட்டினார்கள். 122 கோபாலச் சோனகர்கள் மொகலாயப் பட்டாணி என்னும் இனத்தைச் சார்ந்தவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். தேவநம்பிய திஸ்ஸ மன்னனின் காலத்தில் இந்தியாவில் இருந்து அரச மரத்தின் கிளை கொண்டு வரப்பட்ட பூோது பல்வேறு புதிய மக்கள் கூட்டங்களும், இங்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதாகசிங்களழ்
30
( , r
புராணங்கள் கூறுகின்றன. மகா :tசம் என்னும் கிரந்தத்தில் இவ்வாறு 18 குலத்தவர்கள் இருந்ததாக :) :பபிடப்படுகின்றது. அதில மருத்துவத் துறையைச் சார்ந்த எட்டு வகை குலத்தினர் அடங்கினர். ஆனால் சமன்த பாசா தீகா என்னும் புராண நூலில் எட்டு வகை குலத்தினர் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் தரப்படாவிடினும் அதில் ஒரு குலத்தினர் கோபால என்னும் வகையினராவர்.(23) கோபாலச் சோனகர் வட இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களாவர். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கோபாலச் சோனர்களது வைத்தியத்துறையின் ஈடுபாடு மிகத் தொன்மை வாய்ந்த தாகும். அதனால் இவர்கள் இராஜாங்க வைத்தியர்களாக சேவையாற்றும் வாய்ப்புகள் கிடைத்தன.
உடுநுவரை கடம்பேரியில் வாழ்ந்த இப்பரம்பரையைச் சேர்ந்த ஒருவர், கீர்த்தி ரீ இராஜசிங்க மன்னனின் நோயைக் குணப்படுத்திய தனால், அவருக்கு வைத்திய திலக ராஜகருண கோபால முதலி என்ற சிறப்புப் பட்டமும் பேத்கே முகந்திரம் என்னும் பதவியும் வழங்கப்பட்டன.
அரசனது வைத்தியத்துறை முகந்திரமாக பணியாற்றிய பல்கும்புரே வைத்திய திலக ராஜகருண கோபால முதியன்சேலாகே சேகு முஹம்மது உடையார் என்பவரது பெயர் வரலாற்று நூல்களில் சிறப்புற்று கூறப்படுகிறது. இவருக்கு சன்னஸ் மூலம் பல காணிகள் நன்கொடையாகக் கிடைத்தன. இவர்கள் வாழ்ந்த வீட்டு வளவுகளை இன்றும் காணக்கூடியதாக உள்ளன.
அரசப் பரம்பரைக்கு மருத்துவப் பணியாற்றியவர்களது பரம்பரையினர் இன்றும் தமது மூதாதையரது பட்டப்பெயர்களை வம்சாவளியாகப் பயன்படுத்தி வருவதோடு, அவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாக வைத்திய கலையிலும் சிறந்து விளங்குகின்றனர். உடுநுவரை வெலம்பொடை என்னும் ஊரில் ராஜகருணா வைத்திய திலக கோபால முதியன்சேலாகே பேத்கே வளவ்வே சேகு அபூபக்கர் உடையார் ஆராச்சி” அல்லது “பேத்கே வெதராலலாகே சேகு உதுமா லெப்பை உடையார் சேகு அபூபக்கர் உடையார் ஆரச்சி (1905) என்னும் மிக நீண்ட சிங்கள மொழி கலப்புள்ள வம்சாவளிப் பெயரைக்கொண்ட வைத்திய பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.24) இப்பரம்பரையினர் அரச வைத்திய துறையில் ஈடுபட்டவர்களின் வரிசையில் வந்தவர்களாவர். அத்தோடு கோபால சோனகரில் உதுமான், உடையார் என்னும் பெயர்கள் அனேகமாக இடம்பெறுவதையும் அவதானிக்கலாம்.
Page 24
இதே போன்று, யட்டிநுவர தெஹியங்க என்னும் கிராமத்தில் ராஜகருண வைத்திய திலக கோபால முதியன்சேலாகே சேகு அப்துல் காதர் உடையார் என்பவரது பரம்பரையினர் வாழ்கின்றனர்.(25)
கண்டிய இராச்சியத்திலே குருநாகலைப் பிரதேசத்தில் இவ்வைத்தியத்துறை முஸ்லிம்கள் அதிகமாக குடியேறியிருந்தனர். இன்றும் மிரிஹம்பிட்டியா என்ற ஊரில் கோபாலச் சோனகரது குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. இவர்கள் கோபால முதியன்சே என்ற பரம்பரைப் பெயரைத் தமது பெயருடன் பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் தமது மூதாதையர் வாழ்ந்த வீட்டை கோபால கெதர என்னும் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள்.
குருநாகலைப் பிரதேசத்தில் கொப்பல்லாவ என்னும் கிராமம், கோபால சோனகருக்கு கொடையாக வழங்கப்பட்டதாலேயே அப்பெயர் பெற்றதாக செவிவழிக் கதையொன்று உள்ளது.
இப்பிரதேசத்தில் இப்பாகமுவ என்ற ஊரில் வாழ்ந்த இக்பால் என்பவருக்கு கீர்த்தி ரீ இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தில், அரசாங்க மருந்துக் களஞ்சியத்தில் முகந்திரம் பதவி வழங்கி வைத்திய திலக ராஜகருண ராஜபக்ஸ் கோபால முதியன்சே என்ற விசேட விருதும் வழங்கப் பட்டுள்ளது.(26) சப்ரகமுவை முஸ்லிம்கள் வைத்தியத் துறையில் சிறந்து விளங்கியமைக்கான பல சான்றுகள் உள்ளன. ஹெம்மாதகமை என்ற கிராமத்தில் விக்ரம ராஜகருண வாஸல வைத்திய திலக முதியன்ஸே ராலஹாமிலாகே சேகு அஹமது உடையார் சேகு முஹம்மது உடையார் (1876 - 1967) என்பவர் ஒரு பரம்பரை வைத்தியராக வாழ்ந்து வந்தவராவார். இவர் மிக நீண்ட சிங்கள வம்சாவளியைக் கொண்டிருந்ததோடு, சிங்கள ஆயுர்வேத வைத்தியர்களைப் போன்று கொண்டை கட்டுபவராகவும் இருந்தார்.[26A) இவரது மூதாதையர் கண்டிய மன்னனின் அரண்மனை வைத்தியராக பணியாற்றியமையால் வாஸல வைத்திய திலக என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இங்கு ‘வாஸல என்பது "ரஜவாஸல” அல்லது "மஹவாஸல” என மன்னனின் மாளிகையைக் குறிப்பிடும் பதமாகும்.
“வைத்திய திலக” என்னும் விருது கண்டிய மன்னர்களால் வழங்கப்பட்ட பிரதான விருதாகும் (வைத்திய துறைத் திலகம்). இவ்விருது பெற்றவர்கள் அரசனின் மருத்துவப் பணியோடு தொடர்புபட்டு, அவர்கள் அரசனின் விருப்பத்துக்குரியவர்களாக இருந்த மையால் "ராஜகருணா” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
32 ,
முஸ்லிம் வைத்தியர்கள் "மேஸ்திரியர்”, “பாரியர்” எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களது வைத்தியக்கலை அனுபவம், மனிதர்களோடு மாத்திரம் மட்டுப்படாது கால்நடை வைத்தியம், யானை, குதிரை வைத்தியத் துறையிலும் கைதேர்ந்து விளங்கியது குறிப்பிடத் தக்கதாகும்.
மடிந்த “மடிகேயும்” பெருமை கூறும் பெயர்களும்
கண்டிய முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரே அரச கருமபீடம் மடிகே யாகும். கண்டிய இராச்சியத்தின் பாதைகள் சீரமைக்கப்படும் வரையில், இக்கரும பீடத்தின் தேவை இருந்தது. அதன் பின்னர் இது அழிந்து போனது. அதனால், இது மிகத்தொன்மையான காலந்தொட்டே இயங்கி வந்துள்ளது தெளிவாகிறது.
முற்காலத்தில், மலைப்பாங்கான கண்டிய பிரதேசத்துக்குள் பயணம் மேற்கொள்வது மிகச் சிரமமான காரியமாக இருந்தது. அம்மலைகளினூடே அடிபாதைகள் மாத்திரமே காணப்பட்டன. அக்காலங்களில், முஸ்லிம்கள் வர்த்தக நோக்கமாக இங்கு வந்து போவோராக இருந்தனர். இங்கு விளைந்த பாக்கு, அவர்களுக்கு அதிக இலாபம் ஈட்டித் தரும் பொருளாக இருந்தது.இப்பகுதியில் வீட்டுத்தோட்டங்களில் பாக்கு மரங்கள் விளைந்தன. இதனை வீடு வீடாகப் போய் சேகரிக்க முஸ்லிம்களுக்கு அனுமதியிருந்தது. இவ்வாறு ஊர் ஊராக சேகரிக்கப்பட்ட பாக்கு நாட்டின் கொட்டியாரம், மட்டக்களப்பு, கல்பிட்டி, புத்தளம் போன்ற கரையோரப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்நிய தேசங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒல்லாந்தர் (1670-76) காலத்தில் இலங்கை - இந்திய வர்த்தகத்தில் பாக்கு மிகுந்த இலாபமீட்டித் தரும் பண்டமாக இருந்தது. அதற்கு பண்டமாற்றாகத் துணி, வெங்காயம், கருவாடு, உப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள், கண்டிய சிங்களவர்களுக்கு முஸ்லிம்களால் கொண்டு வரப்பட்டன. இப் பொருட்களைச் சிரமமான பாதை வழியே கொண்டு செல்கையில் முஸ்லிம்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தார்கள். சாக்குகளில் அல்லது பைகளில் கட்டப்பட்ட பொதிகளைக் காளை மாடுகளின் முதுகின் மீது ஏற்றி எடுத்துச் செல்லும் முறையை இதற்காகக் கையாண்டார்கள். இவ்வாறு, பொதிகளை மாடுகளின் மீது ஏற்றிச் செல்வதை ‘தவளம் என அழைத்தார்கள். தவளத்துக்குப் பயன்படுத்தும் மாடுகளுக்கு விசேடமான முதுகுக்காப்புகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், வர்த்தகத் தேவைக்காக மாடுகளை வளர்த்து பராமரிக்கும் அவசியமும் முஸ்லிம்களுக்கு இருந்தது. இதனால், அவர்கள் காலப்போக்கில்
33
Page 25
பட்டி தொட்டிகளை, வீட்டுத் தோட்டங்களை அமைத்து இங்கே படிப்படியாக குடியேற ஆரம்பித்தார்கள்.
கண்டிய மன்னனுக்குச் சொந்தமான பல கால்நடைப் பட்டிகள் முஸ்லிம்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. மாத்தளையில் கொங்காவலை என தற்போது அழைக்கப்படும் இடத்தில் “கொன்கால என்று முன்னர் அழைக்கப்பட்ட, அரசனுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையொன்று இருந்துள்ளது. இதனை, அங்கு வாழும் முஸ்லிம்களது மூதாதையரே பராமரித்தனர்.27)
இப்பண்ணைகளுக்கு, கண்டிய மன்னன் பிரதானிகளை நியமித்திருந்தான். பட்டி முகந்திரம், பட்டி விதானை, பட்டி விதானை நிலமை என இவர்களில் பல்வகை உத்தியோகத்தர்கள் இருந்தனர். இவை "படிக்கார லேக்கம்” என்னும் கருமங்களுடன் தொடர்புடைய பதவிகளாகும். பட்டி முகந்திரம் என்பவர், அரசனின் அல்லது ரதலை எனப்படும் சிங்கள உயர்குலத்தினைச் சேர்ந்த பிரதானிகளின் கால்நடைப் பண்ணைகளை பராமரிக்கும் பட்டிப் பிரதானிகளாவர். இப்பதவிகளை முஸ்லிம்கள் வகித்தனர். "லேக்கம் மிட்டிய” என்ற குறிப்பேடுகளில் பட்டி விதானைமார்கள் ஆட்சி செலுத்திய காணிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மடவளைக்கருகில் பொல்கொல்லை என்னும் இடத்தில் பட்டி முகம்திரம்லாகே கெதர வத்த என்ற முஸ்லிம்களுக்குப் பரம்பரை பரம்பரையாக உரிமையான தோட்டமொன்று காணப்படுகிறது.(28) தவளம் மாடுகள் மீது பொதிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான கருமபீடம் மடிகே என அழைக்கப்பட்டது. மடி’ என்னும் பதத்திற்கு பை அல்லது பொதி என அர்த்தம் கொள்ளலாம். கண்டிய இராச்சியத்தில் மடிகே கருமபீடங்களை முஸ்லிம்களே நடாத்தி வந்தார்கள்.29
அக்காலத்தில், மிகவும் அவசியமான திணைக்களமாக இது இருந்தது. கண்டிய இராச்சியத்தின் பொருட்களைக் கொண்டு செல்லும் முக்கிய தரைவழிப் போக்குவரத்துச் சேவையாக இதனைக் குறிப்பிடலாம். மடிகே சேவை நடந்துள்ள கிராமங்கள் மடிகே என்ற விசேடபெயரையும் பெற்றன. மடிகே' கருமபீடம் அழிந்துவிட்டாலும், கண்டிய மன்னர் காலத்தில் இவ்வாறு பல பிரதேசங்களிலும் மடிகே கிராமங்கள் இருந்துள்ளதை இன்று அக்கிராமங்களுக்கு நிலைத்திருக்கும் பெயர்களில் இருந்து அறிய முடிகிறது. இக்கிராமங்கள் அனைத்திலுமே, முஸ்லிம்களே பரம்பரைப் பரம்பரையாக செறிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1901 ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் அடிப்படையில் சில மடிகே கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் பற்றிய விபரம் வருமாறு
மாவட்டங்கள்:கிராமங்கள் | ஃ |ே
கண்டி மாவட்டம்:
கலகெதர மடிகே 277 249
தெஹிதெனிய மடிகே 189 142
LDL61606) D9Gs 470 466 குருநாகலை மாவட்டம்:
மடிகே மிதியாலை 287 286
மடிகே கொட்டம்பரபிட்டிய 53 53
பலவத்தன மடிகே கம 49 49 (335566) DIT6Lib:
கன்னத்தொட்ட மடிகேகம 267 208
குருனகொட மடிகேகம 102 97
அதே போன்று, கண்டி இராச்சியத்தின் ஆதிக்கத்துக்குட்பட்ட தமன்கடுவ பிரதேசம் 12 பற்றுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று, மடிகே பற்று' என்பதாகும். இது ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்த ஒருபிரதேசமும் ஆகும்.
கண்டி இராச்சியத்தில் இது போன்று இன்னும் ஏராளமான மடிகே கிராமங்களைக் காணலாம். இன்று வரை, நிலைத்திருக்கும் அவற்றின் பெயர்களில் இருந்து முஸ்லிம்கள் இத்துறையில் பெற்றிருந்த பெருமையை அறியக் கூடியதாக உள்ளது.
மடிகே கருமங்களுக்காக கண்டிய மன்னனால் ஓர் அதிபதி நியமிக்கப்படுவார். அவருக்கு கீழாக மடிகே திசாவைகள் (ஆள்வார்) இருந்தனர். அத்துடன் மடிகே திசாவையின் கீழ் ஒரு விதானை செயல்படுவார். இவர் அதிபதியால் நியமிக்கப்படுவார்.(30) இவர்களுடன், மடிகே தொடர்பான லேக் கம்களாகவும், முகந்திரம்களாகவும் முஸ்லிம்கள் கடமையாற்றி வந்தார்கள்.
முஸ்லிம்கள் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி இராமல், வியாபாரத்திற்காக காற்றை போன்று பல இடங்களுக்கும் சுற்றித்திரிபவர்களாகவே இருந்தனர். இதனால் ‘சுலங் பத்த மடிகே என்ற வகையில் அவர்கள் கணிக்கப்பட்டதோடு, அவர்களிடம் வரியும் அறவிடப்பட்டது. சுலங்பத்த முகந்திரம், லேக்கம் போன்றோர் தமது பதவிக்கான வரியை மடிகே திசாவைக்கு செலுத்தினர்.உதாரணமாக, தும்புளுவாவ கிராமத்து முஸ்லிம்கள் ‘சுலங் பத்த மடிகே என்ற பெயரால் அழைக்கப்பட்டவர்களாவர். இந்த மடிகே கருமபீடத்தில்
3S
Page 26
முகந்திரம் ஒருவரும், 8 அல்லது 10 பேர் உதவியாளர்களாகவும் இருந்தார்கள். தும்புளுவாவ வாசிகள் கண்டிய மன்னனின் கடமைகளைப் புரிந்துவந்தார்கள். இவர்கள் சிறிய வயல் பங்குகளைத்தவிர, வேறு சேவை காணிகளைப் பெற்றிருக்கவில்லை. இந்த வயல் பங்குகளும் மற்றவர்களின் இடங்களில் பெற்று, புதிய விளைச்சலுக்காக தயார் படுத்திய நிலங்களே.30A இவர்கள் ‘கராவ' (eை) என்னும் குலத்தினராக அழைக்கப்படலானார்கள். இக்கராவை குலம் ‘நயிதே குல வகை ஐந்தில் ஒன்றாகும். கேகாலை பிரதேசத்தில், அலுத் நுவரையில் வாழும் முஸ்லிம்களின் வம்சாவளிப்பெயர்கள் சுலங் பத்த மடிகே’ மூதாதையரின் வழிதோன்றல் என்பதை எடுத்துக்காட்டுபவையாக உள்ளன. ஏனெனில், சரக்குகளைக் கொண்டு செல்லக் கூடியவர்கள் ‘நயிதே குலத்தவராக அழைக்கப்பட்டார்கள். இங்கு, தும்புளுவாவேநயிதேலே உதுமாலெப்பை காதர்லெப்பை என்பவரும்; அதே வம்சாவளிப் பெயரைக் கொண்ட ஈசபு லெப்பை என்பவரும் , கணி டி மகாதேவாலயத்தின் பரவணிகாணிகளைப் பெற்ற விடயம் 1872 ஆண்டு விகாரகம, தேவாலகம பதிவில் இடம் பெற்றுள்ளது.[30B
கண்டிய மன்னன் ரீ விக்கிரம இராஜசிங்கனின் (1798-1815) ஆட்சிகாலத்தில், மகா அதிகாரம் நிலமே பிலிமத்தலாவுவ விஜய சுந்தர ராஜகருணா செனவிரத்ன வாசல அபயகோன் பண்டித முதியன்சே ராலஹாம் அவர்கள் கி. பி 1806 ம் ஆண்டில், வகித்தப் பதவிகள் ஒரு சன்னசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ‘. அக்குரண்பட மடிகே, கொங்காவல மடிகே, போவத்த மடிகே. என பல மடிகேகளில் அவர் அதிபதியாக இருந்துள்ளதை காணலாம்.31) 1798 இல் வழங்கப்பட்ட மற்றுமொரு சன்னசையில் இவர் “உடரட சுலங்பத்த மடிகே, சந்கோரளை மடிகே ...” என அவர் அதிபதியாக இருந்த பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. சத்கோரளை (ஏழு கோரளை) மடிகேயில் மடிகே திசாவை பதவிக்கு இக்காலப்பகுதியில், முஸ்லிமொருவர் நியமனம் பெற்றிருந்தார். இவர் மாகுல முகந்திரம என அழைக்கப்பட்டார்.
மடிகே என்பது, மிகப் பழமை வாய்ந்த ஒரு கருமபீட மாகையால், அதில் பதவிகளை வகித்த முஸ்லிம்களது தொகை அதிகமாக இருந்தாலும், தொழில் வழி வம்சாவளிகள் மிக மிக அரிதாகவே உள்ளன.
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வர்ழ்ந்த சிலரது வம்சாவளிப் பெயர்களில், மடிகே தொடர்புடைய ஒரு சில வம்சப் பெயர்களைக் காணக் கூடியதாக உள்ளன. மாத்தளை
36
கொங்காவலையில், மாவுக்க முகந்திரம் சின்னத் தம்பி ஆராட்சியார என்பவர், 1877ம் ஆண்டளவில் வாழ்ந்துள்ளார்.(32) உடதலவின்னை மடிகேயில், வசித்த ஒருவர் தமது பெயருடன் மடிகே முகந்திரம் பதவி வழியைச் சேர்த்துள்ளார். அவரது பெயர் அலுத் மடிகே முகந்திரம்லாகே கெதர அகமது (1900) என்பதாகும்.(33) இதில் சிங்களப் பெயர் உச்சரிப்பு கலந்து உள்ளதை அவதானிக்கலாம்.
கண்டிய முஸ்லிம்களின் பலரது பெயர்களுடன் முகந்திரம் என்னும் பதவிவழி பரம்பரைப் பெயர் இணைந்துள்ளது.
பொல்வத்தை முஹந்திரமலே கெதர இஸ்மாயில் லெப்பை (1872) (34) குருந்து கொல்லே முஹந்திரம்லாகே கெதர நுாஹற் லெப்பை (35) கலகாவ முஹந்திரமலே கெதர செலேமா லெப்பை (36) மடவள முஹந்திரமலகே கெதர மீராசாகிபு லெப்பை 37)
என வாழ்ந்த இடங்களின் பெயர்களுடன் சேர்ந்த, ஏராளமான முகந்திரம் என்று வரும் வம்சாவளிப் பெயர்கள், முஸ்லிம்களிடம் காணப் படினும், இவை அனைத்துமே மடிகே தொடர்புடையோரது என உறுதியாக கூற இயலாது.
குருநாகலை பிரதேசத்தைச் சேர்ந்த, தல்கஸ்பிடியவில் வாழ்ந்த முஸ்லிம்கள் மடிகே கருமபீடத்தின் லேக்கம் எனும் பதவிகளில் சேவையாற்றியுள்ளார்கள். அதனை, தமது வம்சாவளிப் பெயராக அப்பரம்பரையினர் தமது பெயர்களுடனும் சேர்த்துக் கொண்டார்கள்.
லேக்கமலாயே கெதர சாய்பு கண்டு குருனனேஹ் ஆதம்புள்ளே அஹமது லெப்பை லேக்கம் (38) 1872 என்பது அவ்வாறான ஒரு பெயராகும். இப்பகுதி வாழ் முஸ்லிம்களின் அனேகருக்கு இச்சிங்கள வம்சாவளிப்பெயர்கள் உள்ளன. அவர்களுட் சிலர், மகாநுவர பத்தினி தேவாலயத்திற்குச் சொந்தமான வயல் நிலங்களில் சரக்கேற்றும் பணிக்கு, தவளம் மாடுகளை வழங்கியும் வந்துள்ளார்கள். இதனால், அவர்கள் தேவாலய வயற் காணிகளை நன்கொடையாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்று, பாத்த ஹேவாஹெட்ட ஓவிஸ் ஸக் கோரளையைச் சேர்ந்த பட்டியகம உடகம என்பதும் ஒரு மடிகே கிராமமாகும். பட்டியகம’ என்னும் சிங்களச் சொல்லிலும், பட்டி அமைந்துள்ள ஓர் ஊரைக் குறிக்கும் பொருள் தொங்கி நிற்கிறது. இங்கே, மரக்கார்தம்பி மகள் லேகமலாகே கெதர சுலைகா உம்மா (39) என ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு மடிகே லேக்கம் பதவி வழி
37
Page 27
வீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் பட்டியகம முகந்திரம் விட்டு அபூபக்கர் ஆராட்சி உதுமாலெப்பை (40) என்றும் மடிகே முகந்திரம் பதவி வழிப்பெயர் காணி உறுதியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காணி உறுதி தமிழில் எழுதப்பட்டுள்ளதால், இங்கே ‘கெதர' என்றச் சிங்களப்பதம் ‘வீட்டு' எனத் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மடிகே கருமபீடத்தில் விதானை பதவிகளையும், முஸ்லிம்கள் வகித்துள்ளனர். மாத்தளை கொங்காவளை மடிகேயில் இசுமா புள்ளே விதானே சின்னத்தம்பி (1894) 41) என்பவரது மூதாதையர் இப்பதவியில் பணிபுரிந்துள்ளனர்.
1815ம் ஆண்டில் கண்டிய இராச்சியம் ஆங்கிலேயர் வசமா னதன் பின்னர், இங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது எனலாம். 1818ம் ஆண்டில் முஸ்லிம்களை கண்டிய அதிபதிகளின் பரிபாலனத்தில் இருந்து சுதந்திரமளித்து, அவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஊர்களில் முக்கிய பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. 05.10.1818ம் திகதி கண்டிய பிரதேசங்களின் பரிபாலனத்திற்குப் பொறுப்பான ஆணையாளர் சபையின் கூட்டத்தில், சேர். ஜோன் டொயிலி அவர்க்ள், "முஸ்லிம்களை கொண்ட மடிகே திணைக்களங்களின் மடிகே பிரதானிகளாக பிரபல்யமான முஸ்லிம்கள் நியமிக்கப்படவேண்டும்." என குறிப்பிட்டார்.42
இதன் பின்னர், மடிகே தலைவர்களாக பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டார்கள். மாத்தளை மடிகே நாயக்க (மடிகே பிரதானி) வாக ராஜகருணா நவரத்ன முதலியா அபூகிர் லெப்பை அவர்கள் 01.12.1818ம் திகதி முதல் ஆளுனர் சேர். ஆர். பிறவுண்ரிக் என்பவரால் நியமிக்கப்பட்டார். அரசாங்கத்திற்குத் தேவைப்படும் தவளம் மாடுகளை வழங்குவதே இவரது பணியாக இருந்தது.
1815ல் கண்டிய மன்னர் ஆட்சி அஸ்தமித்து விட்டதால் ‘ராஜ கருணா', ‘நவரத்ன என்பன அதற்கு முன்னரே மன்னராட்சிக் காலத்தில் இவருக்கு கிடைத்த சிறப்பு பட்டங்கள் எனக் கொள்ளலாம். இவ்வாறான பட்டங்களின் சிறப்பைக்கருதி தமது வம்சாவளிப் பெயராக முஸ்லிம்கள் அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு தெளிவாகிறது. அதே போன்று, போவத்தை, அக்குரம்பட மடிகே நாயக்கவாக லெப்பை நயினா மரிக்கார் தம்பி சந்திரா முகந்திரம
38
நியமிக்கப்பட்டார்கள். இவ்வாறு ஏழு கோரளையிலும் முஸ்லிமொருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. (43) இப்பதவிகள் கண்டிய மன்னர் காலத்தில் மகா அதிகாரம்களுக்கு வழங்கப்பட்டிருந்த மிக முக்கிய பதவிகளாகும்.
மடிகே முகந்திரம்களாகவும் ஆங்கில ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை நியமித்தார்கள். சத்(ஏழு) கோரளை மிரிஹம்பிட்டியைச் சேர்ந்த ராஜ கருணா விசங்க பால பூர்லி விமல சேகர முதியன்சேகலாகே சேகு உசன் சின்ன உடையார் என்னும் நீண்ட சிங்கள வம்சாவளிப் பெயரைக் கொண்ட முஸ்லிமொருவர் வில்லியம் ஹென்றி கிரகரி என்னும் ஆங்கிலேய ஆளுனரால் நியமிக்கப்பட்டார். இவரது நியமனப் பத்திரத்தின் மூலப்பிரதியை இன்றும் இவரது பரம்பரையினர் பாதுகாத்து வைத்துள்ளனர்.(ஆர்)
1830ம் ஆண்டிற்குப் பின்னர், ஆங்கிலேயர் கண்டிய பிரதேசங்களுக்கான பாதைகளை அமைக்கும் வேலைகளைத் துரிதமாக மேற்கொண்டார்கள். அதன் பின்னர் மடிகே கருமபீடத்தின் தொழிற்பாடுகள் தளர்ச்சி கண்டன. காலப்போக்கில் இது தூர்ந்து போகும் நிலையை அடைந்தது. பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர், முஸ்லிம்கள் மாற்று வழிகளைக் கையாண்டார்கள். அதன் பின்னர் கரத்தைக் கட்டும் தொழிலை அவர்கள் ஆரம்பித்தார்கள். ஒற்றை மாட்டுக்கரத்தை, இரட்டைமாட்டுக் கரத்தை என கரத்தைச் சேவைகளை அறிமுகப்படுத்தி, பொருட்களைத் துார இடங்களுக்கு எடுத்துச் சென்றார்கள். 1880ம் ஆண்டு காலப்பகுதியில், மாத்தளை பண்ணகாமத்து கடை வீதியில் முஸ்லிம்களால் பட்டிக்கணக்கில் கரத்தைமாடுகள் விற்பனை செய்யப்பட்டமைக்காக எழுதப்பட்ட உறுதிப்பத்திரங்கள், அவர்கள் இந்த சேவையைத் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டமைக்கு சான்றுகளாகின்றன. (44)
ஊர்த் தலைவர்களின் தலைமுறைப் பெயர்கள்
கண்டிய இராச்சியத்தில் மன்னனுக்குச் சொந்தமான பல கிராமங்களில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாசஞ் செய்துள்ளார்கள. சில சிற்றுார்களில் முழுமையாக முஸ்லிம்கள் மாத்திரமே குடியேறியிருந்தனர். இப்படியான கிராமங்களில் தலைமைப் பொறுப்புக்களைப் பங்கேற்கும் சந்தர்ப்பமும் கண்டிய மன்னன் காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை அவர்கள் அடைந்த மற்றுமொரு சிறப்பாகும். அவ்வவ் ஊர்களில் இத்தகையோர் மதிக்கத்தக்க முக்கிய மாணவர்களாகக் கணிக்கப்பட்டதோடு,
39
Page 28
அவர்களின் சேவைப் பெயரிலேயே அழைக்கப்பட்டாாகள். இன்றும் அக்குடும்பங்களில் அவ்வம்சப் பரம்பரைப் பெயர்கள் புழக்கத்தில் உள்ளன.
மிகப் பழைமையான காலத்தில் 'ஊர்' எனப்படுவது தற்போது உள்ளதைப் போலல்லாது மிக விஸ்திரமான பிரதேசமாக கொள்ளப்பட்டது. அவ்வாறான ஊர் பெயர்கள் கூட இன்று வழக்கில் இல்லை. இன்று பெயர் சொல்லி அழைக்கப்படும் ஊர்கள் முன்னைய காலத்தில் அவற்றின் பகுதிகளேயாகும்.
ஒவ்வொரு ஊரும் குலத்தின் அடிப்படையில், “கமரால அல்லது கம்மஹே என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட ஊர் பிரதானிகள் ஒருவர் அல்லது இருவர் மூலம் பரிபாலிக்கப்பட்டு வந்தன. குளத்து நீரைக் கொண்டு விவசாயத்தை மேற்கொள்ளும் பிரதேசங்களில், அக்குளத்தைச் சுற்றி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே குலத்தைச் சார்ந்தவர்களின் குடும்பங்களே அங்கே குடியிருப்பது வழக்கமாக இருந்தது. அவ்வாறான ஊர்கள் பரம்பரை “கம்மஹே' கள் மூலமே பரிபாலிக்கப் பட்டு வந்தன. “கம்மஹே' மார்களுக்கு பரவணி நிலங்கள் கிடையா. ஆனால் ‘கம்வசம்’ எனப்படும் ஊர்பகுதிகள் அவர்களுடைய அதிகாரத்துக்குள்ளேயே இருந்தன இவ்வூர் உருவாக காரணகர்த்தாக்கள் இவர்களேயாவர். (45)
9
கண்டிய இராச்சியத்தில் பல கிராமங்கள் முஸ்லிமான "கம்மஹே’லாக்கள் மூலம் ஆளப்பட்டுள்ளனவையாக கருதச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக குருநாகலைப் பிரதேசத்தில் *ஜாகம', 'கரஸ்தென்ன என்பன அடுத்தடுத்த இரு கிராமங்களாகும். இக்கிராமங்களுக்கருகில் ஒரு குளமும் உள்ளது. 1901ம் ஆண்டு சனக்கணிப்பின்படி ஜாகமையின் மொத்தச் சனத்தொகை 42. அதில் அனைவரும் முஸ்லிம்களே ஆவர். அதுபோல் கரகளில் தென்னையில் வசித்த 75 பேரில் அனைவருமே முஸ்லிம்களாவர். இதனை ஒரு முஸ்லிம் 'கம்மஹே' மூலம் உருவாக்கப்பட்ட ஊராகக் கருதலாம்.
முஸ்லிம்களில் 'கம்மஹே லாக்களாக இருந்தவர்களது
பயன்படுத்துகின்றனர்.
கண்டி பள்ளேசியபற்று மேற்கில் கும்புக்கந்துரை என்பது முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு கிராமமாகும். இங்கே கம்மஹேலாகே கெதர லெப்பை தம்பிகே புத்திர லெப்பை கதிபாதிலி (கதிப் பாதிரி) உன்னேஹே (1903) என்பவர் இவ்வூரில் வசித்தவர்
A.
ஆவார். 46) மடிகே கிராமங்களில் முஸ்லிம்கள் “கம்மஹேலா" களாகவும் இருந்துள்ளார்கள். இவர்கள் அதிகமான காணிகளையும் ஆட்சி செலுத்தினார்கள். நாலு கோரளையில் தல்கொமுவ என்னும் மடிகே கிராமம் இதற்கு ஒர் உதாரணமாகும்.
இதுபோல், பாத்ததும்பர உடகம்பஹ கோரளையில் குண்ணே பான மடிகேயில், கம்மஹே ஒருவர் வசித்துள்ளார்.
யாத்து கம்மஹேலாகே கெதர மீரா லெப்பை (1892) என அவர் தமது மூதாதையரின் புகழ் நாமத்தை வம்சாவளியாக பயன்படுத்தியுள்ளார்.(47) மிகப் பழமையான கிராமமான அக்குரணை குருகொடையிலும், முஸ்லிம் கம்மஹே ஒருவரின் பரம்பரையினர் வாழ்ந்துள்ளனர். இது போன்று இப்பகுதியில் அங்கும்புர என்னும் கிராமம் முஸ்லிம்களது ஆரம்பகால குடியேற்றம் அமைந்த ஓர் இடமாகும். இக்கிராமப் பெயருடன் கூடிய வம்சாவளிப் பெயர் கொண்ட கம்மஹே குடும்பத்தவர்கள் பற்றிய குறிப்பொன்று, கண்டி நாத தேவாலயத்தின் இராஜகாரியம் பற்றி கூறும் பதிவேட்டில் (Register Under Ord. No. 40/1870) uğ86)ırrefuj6ü6Igöı.
அன்கும் புரே கம்மஹெலாகெதர பாக்கிர்தம்பி அதே வம்சாவளியுடைய ஒமரு கம்மஹே, உதுமாலெப்பை உமறு ஆகிய இம்மூவரும் அத்தேவாலயத்துக்குரிய, கண்டி யட்டிநுவரை வட்டபுளுவையில் விசாலமான விஸ்தீரணமுள்ள வயல், சேனை நிலங்களைப் பரவணியாக பெற்றிருந்தார்கள். இவர்கள் இதற்காக நாததேவாலயத்திற்குத் தானியங்களை வழங்கியதோடு, அதன் பஸ்நாயக்க நிலமைக்கு ஒரு கருவாட்டுக் கூறியும், வெற்றிலை 40ம் வருடம் தோறும் வழங்கி வந்தார்கள். மாத்தளை கொங்காவளைக் கடைவீதியில் இஸ்மயில் புள்ளே கம்மஹே வத்த என்னும் காணிபற்றிய உறுதியொன்று 1886இல் எழுதப்பட்டுள்ளது. 47A) இதன் படி இவர் மிகப் பழைமையான காலத்தில் இவ்வூரில் ஆரம்ப கர்த்தாவாக இருந்து இவ்விடத்தை ஆட்சி செய்தவர் என்பது புலனாகிறது. கம்மஹே பற்றிய விடயம் மிகப் பூர்வீகமான தொன்றாகையால் வம்சாவளிப் பெயர்கள் மிக அரிதாகவே உள்ளன.
கண்டிய மன்னர்கள் காலத்தில் சிறுபிணக்குகளைத் தீர்ப்பதற்கும், கடன் பிரச்சனைகள் பற்றி விசாரிப்பதற்கும் “கம்யபே அல்லது கம்சபாவ என்னும் நீதிமன்ற முறையொன்றிருந்தது. இதனை நடாத்துவதற்காக அனுபவமும் ஆற்றலும் மிக்க ஊர்ப்பிரதானிகள் நியமிக்கப்பட்டார்கள். தலதா சீலா லிபியில் வரும் குறிப்பொன்றின்படி இப்பிணக்குகளைத் தீர்ப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றி
41
Page 29
ருநததாக அறியமுடிகிறது.
இதனால், இந்த கம்சபைகள் இந்தியாவில் காணப்படும் "பஞ்சாயத்து' என்பதற்கு ஒத்ததெனுமோர் கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், இதிலும் ஐரே பினக்குகளை விசாரித்தனர். இதில் பண்ணையார் எனப் பெயர் கொண்ட ஊர் பிரதானிகளும் இடம் பெற்றிருந்தனர். கண்டி, ஊவா பிரதேசங்களில் மன்னனுக்குச் சொந்தமான காணிகளில் பரம்பரை விவசாயிகளில் (பண்ணயாரைப் போன்று) ஐந்து பேர்கள் "பட்டபெந்தோ' என்னும் அந்தஸ்த்தைப் பெற்றவர்களாக இருந்தவர்கள். இவர்கள் ஒரு பட்டியை அணிவது வழக்கமாகும். கம்மஞ்சியாா என்ற முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த ஊர்களில், பிரதானிகளாக இருந்தவர்களும் இந்த ஐவர் குழுக்களில் தொடர்புள்ளவர்களே எனக் கூறலாம்.
ஆறசியப்பத்து உட கம்பஹ அக்குரணையிலிருக்கும் ஒருவரது வம்சாவளியில், வட்டப்புளுவே கம்மஞ்சியார் வீட்டு சுலைமாப்பிள்ளை அபீபு லெப்பை ஆராட்சியார் (1892 ஆண்டிக்கு முன்னர்) என இந்த பரம்பரையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 48 குருகொடை அகமதுக் கண்டு பிள்ளை கம்மாஞ்சியார் இப்றாம்பிள்ளை (1871) என்னும் பெயர் தமிழ்க் காணி உறுதியொன்றில் பதிவாகியுள்ளது. ABA
கண்டிய பிரதேசங்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயன்படுத்தும் மற்றுமொரு பரம்பரைப் பெயர் நாமம் குருன்ன்ேஹே என்பதாகும். கண்டிய மன்னர்கள் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்த "ரடசபாவ' என்னும் பரிபாலனமுறையில் இதுவும் ஒரு பதவியாகும். இச்சபாவையில் கமரால அல்லது கம்மஹே போன்றோருக்கு அடுத்தபடியாக கந்தைய்யா, விதானே, ஹேனய்யா, பண்டிதையா, குருன்னேஹே என ஐவர் இருந்தனர். இவர்கள் தொழில் அடிப்படையில் தாழ்ந்த குலத்திலிருந்து, ஊர்ப் பகுதிகளின் வாரியாக தெரிவுசெய்யப்பட்டார்கள். ரடசபாவை பரிபாலன முறையும் நீதித்துறையின் ஒரு அங்கமாகவே செயற்பட்டது எனலாம்.
முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்ந்த பெரும்பாலான ஊர்களில் குருன்னேஹேலாக அவர்கள் பதவி வகித்தார்கள். இப்பதவி மூலமாக தேசிய சேவையில் அவர்கள் பங்குபற்றியதால், ஊர் மக்களிடையே முக்கியஸ்தர்களாகத் திகழ்ந்தார்கள் எனலாம்.
குருநாகலை போகஹ கொடுவ என்னும் கிராமத்தில், தல்கஹற்பிட்டியே குருனனேஹேலே சாய்பு கண்டு குருன்னேஹே என்பவரின் பரம்பரையினர் இப்பதவி வகித்ததுடன் அவரும் குருன்னேஹேவாக இருந்துள்ளார்.49) இதே ஊர் வாசியான குருனனேஹேலாகே கெதர
니고
அஹமது லெப்பை குருனனேஹே என்பவரின் பரம்பரையினரும் இப்பதவியை வகித்து வந்துள்ளார்கள்.(50)
மில்லருபேப் விலான என்னும் இடத்தைச் சேர்ந்தவரான கமே குருனேஹேலாகே கெதர ஒமர்லெப்பை குப்பதம்பி என்பவரது முன்னோர்கள் 'கமே குருனேஹே' என சிறப்புப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளார்கள். (50) இவ் வம்சாவளி அக் குரனைப் பிரதேசத்தில் பிரசித்தமானதாகும். அதே போன்று ‘ஹாரிஸ்பத்துவ குருனனேஹேலே கெதர என்ற பெயரும், இங்கு முஸ்லிம்களிடையே வழக்கில் உள்ளது. (52) உடுநுவர யெலந்தையிலிருக்கும் புள்ளக்கப்பிட்டியே குறுநாகெலா கெதர உதுமாலெப்பை அவர்கள் 1862ம் ஆண்டளவில் அப்பிரதேசத்தில் வாழ்ந்தவராவர்.(53) அவரது பரம்பரையினர் குறுன்னேஹே பதவி வகித்துள்ளார்கள் எனலாம். அக்குரணையில், மோதிம குருனனேஹெலா கெதர என்னும் வம்சப்பெயருடன் அப்துல் மஜீத் ஆலிம் என்ற இஸ்லாமிய மார்க்க கல்விமானொருவர் 1920 ஆண்டளவில் வாழ்ந்துள்ளார். இஸ்லாத்தில் தொழுகைக்காகப் பள்ளியில் பாங்கு எனப்படும் அறைகூவல் விடுப்பவர் இங்கு மோதிம என்னும் அரபிப்பதத்தால் அழைக்கப்படுகிறார்.53A இவ்வூரில் மோதியார் அகமதுலெப்பை என்பது போன்ற பட்டப்பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம். (53A
கேகாலை பிரதேசத்திலும் இப்பதவிவழிப்பெயர்கள் உள்ளன. அங்கே அழுத்துவரை என்ற கிராமத்தில் வாழும் ஒரு முஸ்லிமின் பெயர் மொலதண்டே குருன்னேஹேலே ஆதம்லெப்பை பகிர்விலப்பை என்பதாகும் (54) மடவல மடிகேயில் பங்களாவே கெதர நொலிஹாத் (அல்லது) குருன்னேஹெலாகே கெதர என்னும் "வாசகம படள்ளது.55)
இவ்வம்சாவளிப் பெயர்களில், சிங்களவர்களின் பெயர்களில் காணப்படுப்படுவதைப் போன்ற பிரதான தன்மைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளன.
ரடசபைகளின் முக்கிய பிரதானிகளின் ஒருவர் "மொஹொட்டால' என்பவர் ஆவர். ஓர் ஊரில் குல நிந்தனை அல்லது முறைகேடான திருமணங்கள் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கும் தருணம், அந்த ஊரிற்குச் சென்று, அதனை விசாரிப்பது மொஹோடாலையின் பணியாகும். கோபாலச் சோனகரான மொஹொட்டால கோபால முதலியார் என்பவர் 1669ம் ஆண்டளவில் இப்பதவியை வகித்துள்ளார்.(56)
Page 30
கண்டிய ராச்சியத்தில் மாத்தளை, தமன் கடுவை, நுவரகலாவிய (வன்னி) போன்ற பிரதேசங்களில் ஆங்கிலேயரது ஆட்சிகாலத்திலும் "ரடசபா மூலம் பிணக்குகளைத் தீர்க்கும் முறை நடைமுறையில் இருந்தது.
கண்டிய இராச்சியத்தில் ஆளுமைப்பிரதேசம் பல திசாவணிகளாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. திசாவணியின் பகுதி கோரளை எனப்படும். கோரளை பல பற்றுகளாகப் பிரிக்கப்பட்டன. இவை பல வகையையும் சார்ந்த சிறு முலாதானிமார்களால் நிர்வகிக்கப்பட்டன. இந்த முலாதானிமார்களின் தலைவராக கோரளை விதானை என்பவர் இருந்தார்.
விதானை மார்களிலும் பல வகையைச் சார்ந்தவர்கள் காணப்பட்டனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த அரசனுக்குரிய ஊர்களில், விதானைகளாக முஸ்லிம்களை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆங்கிலேயரது ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே கண்டிய இராச்சியமெங்கும் மேற்கொள்ளப்பட்டன.(57) இதன் காரணமாக முளப்லிம்களில் பலர் விதானை பொறுப்புக்களை ஏற்றார்கள். அந்தந்த பிரதேசங்களில் அரச காணிகளுக்கு இவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். அத்துடன், பட்டி விதானைமார்களாகவும், மடிகே கரும பீட விதானைகளாகவும் முளம் விம்கள் கடமையாற்றியுள்ளார்கள்.
'விதானே' என்பது கண்டிய சிங்களவர்கள் மத்தியில் பயன் படுத்தப்பட்டுவரும் மதிப்புக்குறிய ஒரு வம்சாவளியாகும். இது சில சந்தர்ப்பங்களில் அவர்களிடையே ஒரு குலப்பெயரையொத்த அந்தஸ்த்தைப் பெறுகிறது. கண்டிய முஸ்லிம்கள் மத்தியில் கடந்த நூற்றாண்டில் விதானை என்பது போற்றப்பட்ட ஒரு பதவியாக இருந்தது எனலாம். முஸ்லிம்களும் சிங்களவர்களைப் போன்றே இவ்வம்சாவளியைப் பல அமைப்புகளில் தமது பெயர்களுடன் சேர்த்துப் பயன்படுத்தினார்கள். இங்கு இவர்களுக்கிடையே, சிங்கள மொழிப்பெயர்களும் இஸ்லாமிய அரபிமொழிப் பெயர்களும் மாத்திரமே வித்தியாசப்படுபவையாக இருந்தன.
ஊர்ப்பெயர்களுடன் சேர்த்து இவ்வம்சாவளியைப் பல பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பயன்படுத்தினார்கள். இவை மிகப்பழமையான வம்சாவளிப் பெயர்களாகும். உடதலவின்னை மடிகேயில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே தொம்ப கொள்ளே விதானேலே கெதர என்னும் பெயர் உள்ளது.58) இதே போன்று, மடவலை
-
மடிகேயில் மாத்தளை விதானலாகே கெதர (59) என்னும் விட்டுப் பெயரும்; அக்குரனையில் புத்தளம் விதானலாகே கெதர (50) என்ற பெயரும் இன்றும் இப்பகுதிகளில் வசிப்பவர்கள் தமது பெயருடன் இனைத்து பெருமையுடன் பயன்படுத்தும் வம்சாவளிகளாகும்.
மாத்தளையில் பள்ளேசியப்பத்து நிககொல்ல என்ற கிராமத்தில், வாழ்ந்த உதுமான் கண்டு விதானை என்பவரது வழித்தோன்றல்கள் அப்பெயரை உதுமான் கண்டு விதானை வாப்பு லெப்பை (51) என்பது போன்றும், மாத்தளை கொங்காவலை வாசியான ஒருவர் மீரா கண்டு விதானை பக்கீர் லெப்பை (62 என்பதாகவும். வீட்டுப் பெயரில் குறிப்பிடாது தமது பெயரில் ஒரு பகுதியாக "விதானை' என்பதைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
குருநாகலையில், மாதுரே கோரளை அஸ்வெத்தும என்னும் கிராமத்தில் வாழ்ந்த வாப்புதம்பி, அசனாலெப்பை, இஸ்மாலெப்பை, குப்பத்தம்பி என்பவர்களது பெயரின் ஆரம்பத்தில் விதானேலே என்பதாக இவ்வம்சாவளித்தொடர் அமைந்தள்ளது. (உ-ம் விதானேலே குப்பத்தம்பி) (33)
கண்டியில் உக்குரளிப்பிட்டிய கிராமத்தில், "பட்டாணி விதானலாகே கெதர என்ற பெயர் வழக்கு காணப்படுகிறது.64) இதில் "பட்டாணி’ என்பது ஓர் இனத்துக்குரிய பெயராகும். இதே இடத்தில், "முத்துக கண்டு விதானை' என்பவரும் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது.
சிங்ளவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஒரு வம்சாவளிப் பெயர் (ஆ) "பேல்லவ விதானலாகே கெதர...' என்பதாகும். இதனை, மடவலை பொல்கொல்லை முஸ்லிம்களின் பரம்பரைப் பெயரிலும் அவதானிக்கலாம். (65)
விதானைமார்களுக்கு சேவைக்காணி நிலங்கள் கிடைத்தன. அவர்கள் மரணித்தால் அக்காணிகள் அவர்களுக்கு வாரிசுகள் இருக்குமிடத்து, அவர்களுக்கு உரித்தாகும் வழக்கம் சிங்கள மன்னர் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துள்ளது.
விதானை மார்களுக்கு அடுத்த தரத்தில் உள்ள உத்தியோகத்தர்கள் கங்ங்ானம்மார்களாவர். சிங்கள மக்களிடையே 'கங்ஙானம்லாகே' என்னும் "கேநம இன்றும் நடைமுறையில் உள்ளது. சில கோரளைகளிலும், பற்றுகளிலும் கங்ங்ானம் மார்கள் கடமையாற்றினார்கள். அரசாங்க நிதியங்களுக்குப் பொறுப்பாகவும்
Page 31
(162987) இவ்வுத்தியோகத்தர்கள் கடமையாற்றியுள்ளதைப் பற்றி ரொபட் நொக்ஸ் குறிப்பிடுகிறார். முஸ்லிகளிலும் கங்ஙனம்மார்கள் இருந்துள்ளதை அவர்களது பரம்பரையினரின் பெயர்களில் இருந்து அறிய முடிகிறது.
உடதலவின்னை மடிகேயில் வசித்த அசனா புள்ளே காதர் சாயு என்பவருக்கு காங்கானமலாகே கெதர (1909) என்னும் பெயர் வழங்கப்பட்டு வந்தது. 65 வட்பாரன்தென்னை என்னும் இடத்திலுள்ள கங்காராம விகாரையில் வயல் நிலமொன்று இப்ராஹிம் கங்கானற இஸ்மாயில் லெப்பை” அவர்களுக்குப் பரவனியாக கிடைத்துள்ளது.67) அதே போல், உடுநுவரை கந்துபலாத்தை வட்டதெனிய என்னும்
லெப்பை கங்காரச்சியார்(1863) என்பது அவருடைய பெயராகும்.58) சிறந்த, பற்றுதியுள்ள, விகவாசமான சேவை மனப்பான்மை கண்டிய
கிடைக்கக் காரணமாயின எனலாம்.
ஆராச்சிமார்கள் என்பவர்கள் கங்ங்ானம்மார்களை அடுத்து தேசிய சேவையில் தொடர்பு பட்டவர்களாவார்கள். கோரளையொன்றுக்குப் பொறுப்பானவர்கள் கோரளை ஆராச்சி என அழைக்கப்பட்டார்கள். உயர் அதிகாரிகளின் ஆணைகளை நடைமுறைபடுத்துதல் இவர்களது பொறுப்பாக இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியின் போது ஏராளமான முஸ்லிம் ஆராச்சிமார்கள் இப்பிரதேசங்களில் சேவையாற்றினார்கள். குருந்து கொல்ல, வெல்கம, பல்கும்புற போன்ற இடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவை முஸ்லிம் ஆராச்சிமார் கிராமங்கள் என AC. லோரி என்பவர் தமது நூலில் குறிப்பிடுகிறார். 69) இது போன்று, ஏராளமான முஸ்லிம் கிராமங்கள், முஸ்லிம்களை ஆராச்சிமார்களாக
வட்டபுழுவே ஆராச்சிேை ைமுதலியா ைெம்பை இது பரகஹதெனியா என்றும் ஊரில் வாழ்ந்த ஒரு ஆராச்சியின் பெயராகும் 70 வழமையாக முஸ்லிம்கள் இதுபோன்று, ஆராட்சி என்னும் பெயரைத் தமது பெயர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.
கண்டிய முஸ்லிம்கள் மிகப் பரவலாக பயன்படுத்தும் மற்றுமொறு வம்சாவளிப் பெயர் நாமம் முகந்திரம’ என்பதாகும்.
ப் போன்ே AO NA ந்திரம் இருந்தனர். முஸ்லிகம்ளின் அனேகர் பட்டிமுகந்திரம், மடிகே
46
முகந்திரம் போன்ற பதவிகளுடன், கோரளை முகந்திரம், டவுன் முகந்திரம் என்னும் பதவிகளையும் வகித்துள்ளார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த பல ஊர்களில், முகந்திரம் என்னும் வம்சாவளிப்பெயர் பெற்ற முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக அவற்றில் சில வறுமாறு:
மடவல குன்னேயான மடிகேயில், ஹபுகள் தென்ன முறந்திரமாைகே கெதர" எனவும்(71) அக்குரனையில் குருகொட முறந்திரம்னகே கெதர எனவும்(72) தஸ்கரை என்னும் கிராமத்தில், எல்பிட்டியே முஹந்திரம்லாகே கெதர எனவும்(73) அதேபோன்று, அக்குரணையில் காசி முஹந்திரம்ாைகே கெதர என்றும்74) வீட்டும் பெயர்கள் நடைமுறையில் உள்ளன. கலுகமுவ முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள மொலதனர்டே முகந்திரமலே கெதர என்னும் வம்சாவளிப் பெயரும் (75) யட்டிநுவரையிலும், குருநாகலைப் பகுதியிலும் பொல் வத்தே முகந்திரமலே கெதர 75 என்ற பெயரும் பிரசித்தம் பெற்றவைகளாகும். இதுபோல் இப்பட்டியல் நீண்டதொன்றாகும்.
முஸ்லிம்களில் இன்னும் சில வகையைச் சார்ந்த முலாதானிகளும் இருந்துள்ளனர். அதில் வெல்முாைதான என்னும் பதவிப்பெயரை தமது பெயருடன் சிலர் இணைத்துள்ளனர். ‘வெல் என்பது வயலைக் குறிக்கும் சிங்களப் பதமாகும். “வெள்ளல எனப்படுவது கொவிகுலத்தைக்குறிக்கும் தமிழ்வடிவமாகும். ஆகையால், வெல்முலாதானி என்பது தமிழிலும் அதே கருத்தைத் தாங்கி நிற்கிறது. பாத்தஹேவாஹெட்டையில் பட்டியகம, உடகம கோனாகொடையில் கல்பொத்தே கெதர சேகு அப்துல் காதரின் மகன் ?.ார் மொஹிதீன் வெல் மூனதானியா (1922) என்பவரது பெயர் ஒரு
முஸ்லிம்களது பெயர்களிலும் ‘வெல் முாைதானியா’ என்னும் அவர்களது சேவைப்பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. (அ) அகமது லெப்பை யாராச்சியார் முகம்மது லெப்பை வெல் மூலாதானியார் (1871) இவர் கையொப்பம் இடும் போதும் வெலமுாைதானி எனவே கையொப்பம் இட்டுள்ளதை, மேற்படி இப் பெயர் பதிவாகியுள்ள தமிழ் காணியுறுதியில் அவதானிக்க முடிகிறது. (78 (ஆ) உதுமா லெப்பை வடப்யணர் கனை லெப்பை வெல்முாைதானியார் (1871) (79) எனவும் ஒருவர், இக்கால பகுதியில் இங்கு வசித்துள்ளர். இவரது பெயரில் காளப்படும் “அடப்பனார்’ எனும் வம்சாவளிபற்றிய விரிவான விளக்கம் பின்னல் குறிப்பிடப்பட்டுள்ளன.
47
Page 32
வன்னியா, முதியன்சேகளாக முஸ்லிம்கள்
தம்மன்கடுவ பிரதேசம் கண்டிய இராச்சியத்தில் பிரதான திசாவணிகளின் ஒன்றாகும் 1815ம் ஆண்டில் கலகம திசாவை என்பவர் இங்கு திசாவையாக இருந்துள்ளார். அக்காலத்தில் இப்பிரதேசம்12 பற்றுக்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. பிற்காலத்தில் சிங்களப்பற்று, மரக்கலப்பற்று அல்லது மெகொடபற்று, எகொட பற்று என விசாலித்த மூன்று அலகுகளாக இப்பிரதேசம் பிரிக்கப்பட்டது.
தம்மன்கடுவையின் பரிபாலனத்திற்குப் பொறுப்பாக இருந்த முலாதானி வன்னியா’ என அழைக்கப்பட்டார். 1833ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நிர்வாக மறுசீரமைப்புக்கமைய தேசிய முலாதானிகள் தம்மன்கடுவை முதியன்சே என அழைக்கப்பட்டனர். சிங்களபற்றில் சிங்களவர்களும், மரக்கலபற்றில் சிங்கள வர்களும், முஸ்லிம்களும் பெருபான்மையாக வாழ்ந்தனர். எகொடபற்றுவில் முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகமாக குடியேறி இருந்தனர். 1841ம் ஆண்டில் தமன்கடுவை வன்னியாவும் முதியன்சேயும் என இரண்டு முலாதானிகளால் நிர்வகிக்கப்பட்டது. அதில் ஒருவர் சிங்களவர் மற்ற இரு பற்றுகளிலும் தமிழ் பேசும் இனத்தவர்களான முஸ்லிம்களும், தமிழர்களும், வாழ்ந்ததால், அங்கு ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டார். இவ்வாண்டில் சிங்களப்பற்று வன்னியாவும் முதியன்சேயும் பதவிக்காக நியமிக்க ஒரு சிங்களவரைத் தேர்தெடுப்பதில் சில கருத்து வேற்றுமைகள் நிலவியதால், அந்த பற்றையும் இம்முஸ்லிமே நிர்வகித்தார். 1859 வரையில், முஹம்மது அலிபா அஹமது லெப்பை என்ற முஸ்லிமொருவர் முழு தமன்கடுவ பிரதேசத்திலும் வன்னியாவும் முதியன்சேயும் ஆக இருந்தனர். இவர்கள் வன்னியா என்னும் வம்சாவளிப் பெயரையும் தமது பெயருடன் சேர்த்துக் கொண்டார்கள். வன்னியா என்பது சிங்கள உயர் குலத்தைச் சார்ந்த ஒரு வம்சமாகும்.80 குஞ்சு வன்னியன் சேகுத் தம்பி இப்ராஹிம என்பது போன்ற பெயர் வழிகள் புத்தளம் பிரதேசத்தில் வழக்கில் இருந்தன.
அதே போன்று, மிகப்புராதனக் காலத்தில் புத்தளம் திசாவை என்று அழைக்கப்பட்டு, கண்டி இராச்சியத்திற்குட்பட்டிருந்த ஏழு பற்று ரட்டயில், பண்டித்த பற்றுவைக்குப் பொறுப்பான முலாதானியாக குமார வன்னி உன்னேஹே என்பவர் நியமிக்கப்பட்டடிருந்தார். அவர் நல்லண்டியவையில் பிறந்த ஒரு முஸ்லிமாவார். இவர், கண்டிய மன்னன் இராசாதி இராசசிங்கனின் மாமா ராமசாமி என்பவரிடம் ஒரு தொகை பணத்தைக் கடனாகப் பெற்று, உரிய காலத்தில் செலுத்தத் தவறியதனால், அம்பிட்டிய, கொனகம ஆகிய இடங்களில் சிறைக் கைதியாக இருந்தார்.
48
தமன்கடுவையில் வன்னியாவும், முதியன்சேக்கும் துணையாக 9 டையார் என்பவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1860ம் ஆண்டில் தமன்கடுவை முஸ்லிம் (மரக்கல) பற்றுக்கு உடையாராக அகமது லெப்பை அவலம் முதியன்சே என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்களது பரம்பரையினர் உடையார் என்னும் வம்சாவளிப் பெயரைக் கொண்டோராக இருந்தனர். இது போன்று, இன்னும் பல பதவிகளிலும் முஸ்லிம்கள் தேசிய சேவையில் பங்காற்றி அப்பதவி வழி வம்சாவளிகளைப் பெற்றனர் என கூறலாம்.
1. இலங்கையின் சுருக்க வரலாறு (தமிழ் மொழிபெயர்ப்பு) மூலம்
1.W கொடிறின் (1960) 71ம் பக்கம். 2. Service Tenures Regiestor (Sing :- 1872)- Kurunagala SLNA P. 2341 1. කන්ද උඩරට සමාජ සංවිධානය - මිරුන්ඩෝ ඔබේසේකර (1993)පි.43 4. ගම්පොල යුගය - කහටපිටියේ ධීරානන්ද හිමි (1965) පි. 122 * සිළුමිණ, වජු ජයන්ති සමරු සංග්රහය - E. W. පෙරේරා. පි.4 6. Van Goens to Directors. 30 Nov. 1670, K.A. 1164, of 55, 10/01/1671 of 306,
G.G&C. 16/7/1671 KA (ලංකා ලංදේසි බලය - ආචාර්ය එස්. අරසරන්නම් . පි.55) 7. කඩඉම් පොත් විමර්ශනය - එච්. ඒ. පි. අභයවර්ධන.M.A.:PhD (1978) පි.142 ,ே இலங்கைச் சோனகர் பற்றிய கடந்த கால நினைவுகள்(1981)பக். 237 RA. A GAZETTEER - of the CENTRAL PRO of Ceylon - A. C.LAWRIEP.601 9. காணி உறுதி இல. 11887(3.5.1899) - நொதாரிசு. சுரவீர 10. Service Tenures Registor (Sing - 1872) - Kurunagala SLNA - P 1708 11. 8-coG cooá3Đn 8)-coco - (EPZ. Vol. 111 P 109) q?o 12. මධායම ලංකා පුරාවෘකත - රාජකීය පණඩිත නාවුල්ලේ ධම්මමනනු නායක
සමවරයන් වහන්සේ (1969) පි. 21 අනුව. 13 Service Tenures Registor (Sing - 1872) – Kegalla P229 SILNA 14 Service Tenures Registor (Sing - 1872)- Kurunagala P2262 15 Service Tenures Registor (Sing - 1872 -) Kurunagala P. 1708
and KANDY D. C. cass No. P3904 - Deed No. 775 (14.10 1912) 6. KANDY D. C. cass NO.P 2089 - Deed No. 7820 (27.5.1915) 7. KANDY D. C. cass No. P7261 - Deed No. 5504 (19.12.1905) 19. அறுதிச்சாசனம் (தமிழ்) இல. 356 (15.10.1862) நொதா. A.C.M. சின்னலெப்பை
மரிக்கார் 19. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலP 8360. தமிழ் காணி உறுதி
(ல.12250 (1904) 20. Service Tenures Registor (Sing - 1872) - Kurunagala P.119 21. கண்டி மா. நி. பி. வழக்கு இல.P.12890(1903) 22. Census of Ceylon 1921. Vol - 1 - P 208 23. මාතලේ කඩඉම් පොත් විමර්ශනය - පි. 135–136 24. கண்டி மா. நீ. மன்ற பிரிவிடல் வழக்கு இல. P.7261 (காணி உறுதி இல. 5504,
1905.12.19 தொ. கொதலாவல) 13, asasing LorT. J. D. Gnipais P 6148 (asT6áis gf 28606 - 1932.7.11) J.W.
இலங்கதிலக (இது இவருடைய மகனுடைய உறுதியாகும்) 26. කන්ද උඩරට සමාජ සංවිඩානය - පි. 43. 26A.வாழ்வோரை வாழ்த்துவோம் - 1994 (ப. 187)
7. Administration Report of the Goverment Agent Central Privice - 1867 2. கண்டி மன. நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 11380
49
Page 33
29. ලංකා විශේව විදාපාලයේ ලංකා ඉතිහාසය (1972) පි. 131 30. සිංහල ආණඩුක්රමය පිළිබඳ ... සර්. ජෝන් ඩොයිලි . පි.18 30A. සිංහලේ ආන්ඩුකූමය පිළිබඳ ලුහුඩු සටහන් - එස්. ජෝන් ඩොයිලි.. පි. 19 30B. SL/NA. Service Tenures Register (1872) - Kegalla - P. 202 31. இரத்தினபுர மாவட்ட சன்னஸ் பாகம் 1 (90) இ.சு.தி 32. காணி உறுதி K முருகேசுப்பிள்ளை NP (தமிழ்) இல. 716 (17.1.1877) 33. கண்டி மா. நீ. ம. வழக்கு P. 11208 34. Service Tenures Register (sing . 1872) P 154 - KANDY 35. 560 rig DIT. E. D. 61 gaig P. 8326 36. கண்டி மா. நீ. ம. வழக்கு P. 11174 37. காணி உறுதி கந்தப்பா - கணபதி பிள்ளை , இல, 14(தமிழ்) 38. Service Tenures Register (sing . 1872) - Kurunagala P . 1712 39. காணி உறுதி நொ. கந்தையா - கணபதிபிள்ளை (தமிழ்) இல. 91 40. காணி உறுதி நொ. கந்தையா - கணபதிபிள்ளை (தமிழ்) இல. 73 41. காணி உறுதி நொ. கந்தையா - முருகேசபிள்ளை (தமிழ்) 2.12.1894 42. උඩරට මහ කැරැල්ල II කා. විමලානන්ද තෙන්නකෝන්, පි. 282-283 43. III zoo. 8。213 44. நொ. கந்தையா - முருகேசபிள்ளை (தமிழ்) உறுதி.1435 (12.12.1880)
1552 (12.6.1885) 45. ලංකාවේ පුරාණ ඉඩමේ බුක්තිය හා ආදායම - එච්.ඩබ්.කොඩ්රිටෙන්,
පි. 1, 2 සහ 3 46. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு. P. 12430 காணி உறுதி
இலக்கம் 11916 (7.2.1903) 47. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு. P. 7343 47A கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு இல. 11581 (வழக்கு தாக்கல் 29.5.1897) . . A. உக்குபண்டா நொ/காணி உறுதி 12024 (11.2.1886) 48. அ. லெ. முகம்மதுலெப்பை N. P. காணியுறுதி (தமிழ்) இல. 12250 (11
வைகாசி 1892), 3008 (1.8.1891) 48A. மேற்படி நொ. உறுதி இல. 127 (தமிழ்) 03.07.1871 49. Service Tenures Registor (Sing - 1872)- Kurunagala SL./N.A. P. 1708 50. Service Tenures Registor (Sing - 1872)- Kandy SL./N.A. P. 1712 51. Service Tenures Registor (Sing - 1872)- Kandy SL./N.A. P.540 52. Service Tenures Registor (Sing - 1872)- Kandy SL./N.A. P. 169 53. நொ. A. L. M. சின்னலெப்பை மரிக்கார் காணி உறுதி (தமிழ்).
இல. 345 (15.10.1862) 53A. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P11451ல் காணி
உறுதி இல. 4090 (26.4.1920 - நொ/S. M.P. விஜேதிலக) 53B. நொ/A. L. முஹம்மது லெப்பை - தமிழ் காணி ஊறுதி இல. 409
(18.12.1872) 54. Service Tenures Registor (Sing - 1872)- Kegalla P202 55. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலP 3114. காணி உறுதி
இல. 35529 (10.6.1942) 56. இலங்கைச் சோனககர் பற்றிய கடந்த கால நினைவுகள். பக்கம் 237 57. கண்டிய மாகாணத்திற்கான செயலாளர் ஜோர்ஜ் லுசிக்கனுக்கு 30.10.1818ல் சேர். ஜோன் டொயிலி (ஆணையாளர்) எழுதிய கடிதம். (C9eI-8-95) 58. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 11208 59. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 12434 60. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 8560.
ናበ
61. நொகந்தையா முருகேசுபிள்ளை காளி உறுதி இல. 1170 (19.07.1879).5Lisp 62. கந்தையா முருகேசுபிள்ளை காணி உறுதி இல. 1456 (18.12.1882)தமிழ் 63. Service Tenures Register (Sing - 1872)- Kurunagala P2341 64. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 13258 63. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 11380 66. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 11374 காணி உறுதி
இல. 12716 (L. T விஜயரத்ன) 18.3.1903 67. Service Tenures Register (Sing - 1872)- Kandy 68. நொ (A.L.M. இஸ்மாயில் லெப்பை மரிக்கார் (தமிழ்) இல. 401 (14.1.1863) 69. Central Province of Ceylon - A. C. Lawrie Vol.11 DJ. Kandy District Court.
(1898) 70. Service Tenures Register (Sing - 1872)- Kurunagala P. 119 71. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P.7756, காணி உறுதி
இல, 284 72. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல P. 11736 73-74. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 3103 75. கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு இலக்கம் L 176 (17.11.1938) 76. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவில் வழக்கு இலக்கம் P. 2089 காணி
உறுதி இல. 10488 (20.12.1945) 77. கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இலக்கம் P. 3784 காணி
உறுதி இல. 1694 (23.6.1922) 76. நொ IAL. முஹம்மதுலெப்பை தமிழ் காணி உறுதி இலக்கம் 98
(10.04.1871) 79. நொ IAL. முஹம்மதுலெப்பை தமிழ் காணி உறுதி இலக்கம் 108
(O3.05.1871) 1. තමන්කඩුව (1815-1900) ආචාර්ය උක්කුබණඩා කරුණානන්ද,
8 8 ebao 5.
5
Page 34
அத்தியாயம் - IV
பெளத்த விகாரை, தேவாலயங்களில்
கண்டிய முஸ்லிம்கள் பெற்ற சிறப்புகளும் சிங்கள வம்சாவளிப் பெயர்களும
புத்த பெருமானுக்குக் கோயிலாகவும் , பெளத்த பிக்குமார்களின் தங்கும் மடமாகவும் கருதப்படுபவை விகாரைகளாகும். இவ்விலங்கைத் திருநாட்டில், புத்த மதக் கோட்பாடுகள் வேரூன்றத் தொடங்கிய காலம் தொட்டே சிங்கள மன்னர்கள் பெளத்த தர்மத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக அதனை வளர்க்க அரும்பாடுபட்டார்கள். பக்திசிரத்தையோடு விகாரைகளையும்; புத்தபகவான் தரித்திருக்கும் சைத்தியங்களையும் நாட்டின் சகல பகுதிகளிலும் அமைத்தார்கள். அவற்றில் வணக்க வழிபாடுகளை நடாத்த உதவும் பொருட்டு இச்சித்தஸ்தானங்களுக்காக மன்னர்கள் நிந்தகம’ என்னும் காணிகளைக் கொடையாக வழங்கினார்கள். இவை விகாரகம’ என வழங்கப்பட்டன. ஏனெனில், நாட்டின் காணி நிலங்களின் முழு உரிமையும் மன்னன் கைவசமே இருந்தது. அவற்றை தாம் விரும்பும் எவருக்கும் வழங்கும் அதிகாரம், பழமையான காலத்திலிருந்து அவர்களுக்கு இருந்தது. அதனால், பெரும் தொகையான காணிகளை, இவர்கள் விகாரைகளுக்குப் பூஜை செய்தார்கள். கணி டி நகரில் புத்தரின் புனித தந்தம் வைக்கப்பபட்டிருக்கும் யூரீ தலதாமாளிகைக்கு மாத்திரம் மன்னர்களால் பூஜை செய்யப்பட்ட நெற்காணிகள் சுமார் 185 ஏக்கரும், மேட்டு நிலமாக சுமார் 500 ஏக்கரும், 1858ம் ஆண்டு கணிப்பின்படி பதிவு பண்ணியும், பதிவாகாமலும் இருந்துள்ளன.(1)
முற்காலத்தில் கெளதம புத்தர், இந்துக்களால் ஓர் இந்துக் கடவுளாக வழிபாடு செய்யப்பட்டார். அதனால் இந்து தெய்வங்கள் மீதும், இந்நாட்டு மக்கள் ஈடுபாடு கொண்டிருந்தனர். இத்தெய்வ வழிபாடுகளுக்காக கண்டிய அரசர்கள் தேவாலயங்களை
5う
அமைத்தார்கள். கண்டியில் பழமை வாய்ந்த ‘நாத தேவாலயம் என்பது மூன்றாம் விக்கிரமபாகு மன்னனால், நாலாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் நாத, விஷ்ணு, முருக, பத்தினி போன்ற தெய்வங்கள், கண்டிய ராச்சியத்தின் மக்களால் உயர் ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்பட்டன. கண்டியில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தென்னிந்திய மன்னர்களின் ஆட்சி நிலவியதையும் இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம். இதனால் தேவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதோடு, அவற்றிக்கு ஏராளமான காணிகளும், மன்னர்களால் மானியமாக வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இவை ‘தேவாலகம என அழைக்கப்படுகின்றன.
விகாரகம, தேவாலகம போன்றவற்றின் முழு உரிமையும், மன்னர்கள் மூலம் சன்னஸ, துடபத வாயிலாக மானியமாக வழங்கப்பட்டதால், அவ்வாறான ஒன்றை, பின்னால் வரும் எந்த அரசனுக்கும் மாற்றும் அதிகாரம் இருக்கவில்லை. அவை காலா காலமாக அவ்விகாரைக்கு அல்லது தேவாலயத்திற்கு மாத்திரமே உரித்தானவையாக இருந்தன. வயல் நிலங்களும், சேனைகள், வீட்டுத்தோட்டங்கள் போன்ற மேட்டு நிலங்களும் இவற்றில் அடங்கின. வயற் காணிகளில் அதிகமானவை "முத்தெட்டு' எனப்படும் வகையைச் சார்ந்தவையாக இருந்தன. இவை விகாரைகளுக்காக அல்லது தேவாலயத்திற்காக விளைச்சல் பண்ணும் நெற்காணிகளாகும். அதன் விளைச்சல், அதற்குரிய பரவணி விவசாயியின் மூலமாக, அல்லது பங்குதாரர் மூலமாக விகாரை, தேவாலயத் தானியக் களஞ்சியங்க ளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
விகாரகம, தேவாலகம நெற்காணிகளும், சேனை, வீட்டுத்தோட்டம் என்பனவும் பரவணியாக, சூழவாழ்ந்த ஊர் வாசிகளுக்கு வழங்கப்பட்டன. இக்காணிகளைப் பரவணியாக பெற்றவர்கள், விகாரை, தேவாலயத்திற்குக் காணிக்கையாகவும், வரியாகவும் பணம், தானியம், எண்ணெய் முதலானவற்றைச் செலுத்துவதோடு, அவற்றிற்காக சில சேவைகளையும் ஆற்றிவரல் வேண்டும். எதுவித சேவையும் செய்யாது உரிமையாக்கிய இடங்களும், அல்லது மிகச் சிறியதொரு சேவைப் பணத்தை வரியாகச் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்ட இடங்களும் இவற்றில் அடங்கின.
கண்டிய இராச்சியத்தில், முஸ்லிம்கள் விசாலமான விஸ்தீரணமுள்ள விகாரகம, தேவாலகம காணிகளைப் பரவணியாகப் பெற்றார்கள். இப்பிரதேசத்தில் இவர்களது பாராட்டத்தக்க சேவைக்காக, பல காணிகள் அன்பளிப்புகளாகக் கிடைத்தன. ஒருகை
S3
Page 35
வெற்றிலை(பி.கு.) கொடுத்தும், வெள்ளைக் கைக்குட்டை ஒன்றைக் கொடுத்தும், விகாரை, தேவாலயக் காணிகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம்களும் இருந்தனர். பெளத்த விகாரை, தேவாலயக் காணிகள் ஏராளமானவற்றில் பரவணி உரிமை பெற்ற முஸ்லிம்கள், கண்டி இராச்சியத்தின் பல ஊர்களிலும் வாழ்ந்து வந்தனர்.
மதத்தால் சிங்களவர்களும், முஸ்லிம்களும் வேறுபட்டிருந் தாலும், மாற்று மதத்தை மதித்து நடக்கும் அவர்களது கோட்பாட்டுக் கமைய, பெளத்த மதத் தலங்களோடு நெருங்கிய தொடர்பை கண்டிய முஸ்லிம்கள் வைத்திருந்தார்கள். விகாராதிபதிகள், பெளத்தமத குருமார்களோடு அவர்களுக்குக் கிட்டிய உறவு காணப்பட்டது. சிங்கள கலாச்சாரத் தொடர்புகளில் முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டார்கள். ஆனால், அவர்களது இஸ்லாமிய சன்மார்க்க சட்டங்களுக்கு மாசு ஏற்படாத வகையில் சிங்களவர்களும், பெளத்த தலைவர்களும் மதிப்பளித்துள்ளதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளன.
இக்காணிகளின் பரவணி உரிமைகள், முஸ்லிம்களை பலவழிகளில் வந்தடைந்தன. மிகப்பழமையான காலத்தில், மன்னன் விகாரைக்குக் காணிகளைப் பூஜை பண்ணும் போது, அந்த காணிகளைப் பெற வேண்டியவர்களது பெயர்களையும் சன்னஸையில் குறிப்பிடுவதுண்டு. மன்னனது மதிப்பிற்குப் பாத்திரமான முஸ்லிம்கள் இவ்வாறும் இக்காணிகளைப் பெற்றிருக்கலாம்.
1870ஆம் ஆண்டு நவம்பர் 04ம் திகதி கட்டளைச் சட்டத்திற்கமைய விகாரகம, தேவாலகம காணிகளின் பங்கு பதிவுகள்(1872) ஏட்டில், பரவணி உரிமையுடையவர்களது விபரங்கள் பதியப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மூதாதையரின் காலந்தொட்டு, அவர்கள் ஆட்சி செலுத்தி வருமாற்றை அதிலிருந்து அறியக் கூடியனவாக உள்ளன.(பி.கு.I)
பி.கு.: இது சிங்களத்தில் ‘புளத் ஹாருள்ள இ&ல் இC&g) என குறிப்பிடப்படும். இது 40 வெற்றிலைகளைக் குறிக்கும்.
பி.கு.: இக்காணிகளின் தொடர்பான விரிவான விபரங்களை 1. REPORT of the TEMPLE LAND COMMISSIONERS on the PROGRESS AND
RESULTS OF THE COMMISSION (1857-1858) 2. Service Tenures Register - 1872 3. BUDDHST TEMPORALITEES Ordinarice No. 8. of 1905 4. 1931 අංක 19 දරණ විහාර දේවාලගම ආඥා පනත. 5. 1870 වේ වැඩ වසම් ආඥා පනත.
54.
அப்பிரமாண்டமான ஏடுகளில், கண்டிய பிரதேசத்தில், பரவனியாகக் காணிகளைப் பெற்றுள்ள முஸ்லிம்களது பெயர்களை நோக்கும் போது, அவற்றில் ஒரு சில பெயர்களைத் தவிர ஏனைய அனைத்துமே சிங்கள வம்சாவளிப் பெயர்களாகவே உள்ளன. முஸ்லிம் ஆண்,பெண் இருபாலாரினது பெயர்களிலும் இதனை அவதானிக்க முடிகிறது. இவ்வேடுகளில் காணப்படும் சில சிங்களவர்களது அதே பரம்பரைப் பெயரை முஸ்லிம்களும் கொண்டுள்ளனர். அத்தோடு, சிங்கள வம்சாவளிப்பெயர் சித்தாத்தங்களுக்கு அமையவே முஸ்லிம்களது பெயர்களும் பதிவாகியுள்ளன. அங்கே தகப்பன் பெயர் குறிப்பிடப்பட்டு வாரிசுவின்
முஸ்லிம்கள் ஏராளமான விகாரகம, தேவாலகம காணிகளைப் பெற்றுள்ளமைக்கு அவர்களது பெயர்வழியையும் ஒரு ஏதுவாகக் கொள்ளலாம்.
கண்டிய முஸ்லிம்களுக்கு உரித்தான விகாரை, தேவாலயக்
அவர்களது சிங்கள மொழி வம்சாவளிப் பெயர்களுடன் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.
குளத்துடன் நிலம் பெற்ற கோமான்கள்
ஸ்லிம்களின் க்கிய தொழிலாக வி
நுாறு ஆண்டுகளுக்கு முன்னர், கண்டிய முஸ்லிம்களில் விவசாயிகளும், நெல் வயல் சொந்தகாரர்களுமே அதிகமாக இருந்தனர். அவர்களால் எழுதப்பட்ட சீட்டுக்கள், உறுதிகளில் அதிகமானவை வயல் நிலங்கள் சம்பந்தப்பட்டவையாகவே உள்ளன. விகாரகம, தேவாலயகம நிலங்களிலும் முஸ்லிம்கள் பரவனியாக பெற்ற நிலங்களில் அதிகமானவை, நெல் வயல்களாகவே
கண்டிய நாட்டின் நிர்வாகப் பிரிவுக்குள் கட்டுப்பட்ட குருநாகலை ஹேவாவிசே கோரளையில், போகஹகொடுவை என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் நெல்வயலில், 9 அமுனம் 1 பாடி 8 குர்னியும்; சேனை நிலத்தில், 6 அமுனமும் 2 பாடியும் முஸ்லிம்கள் ஏழுபேருக்கு கண்டி மகா தேவாலயக் காணியில் இருந்து பரவனியாக வழங்கப்பட்டது. (பி.கு.) இது ‘எனுதெணு என்னும.
பி.கு: 1 அமுனம் (49க) - 2 ஏக்கர் (டிவில0) விண்திரளமும் அல்லது 22 ஏக்கர்
2 பாடி (ee) - 1 ஏக்கர்
1 siafi (zóéS) - S Luišas 1 Lung (OEC) - 10 apJëJab (erg)
a sings.
SS
Page 36
பங்கு வகையைச் சேர்ந்தது. இதனை விசாலமான விஸ்தீரணமுள்ள ஒரு நன்கொடை காணியாகக் கருதலாம் (2) அத்துடன் இவ்வயற் காணியிலும், சேனையிலும் விளைச்சலுக்கு அவசியப்படும் தண்ணிரைப் பெற்றுக்கொள்ள 1 ஏக்கர் விஸ்தீரணமுள்ள குளமொன்றும் இவர்களுக்கு கொடுத்து கெளரவிக்கப்பட்டமை ஒரு விசேஷ நிகழ்வாகும். இக்குளத்தை, பயன்படுத்தும் உரிமையை இந்த ஏழு பேரும் கொண்டிருந்தனர். இவர்களது வம்சாவளிப் பெயர்களிலிருந்து, அவர்கள் சமூகத்தில் அந்தஸ்து பெற்று விளங்கிய பிரதானிகள் என்பதை அறியமுடிகிறது. அவர்களது பெயர்கள் வருமாறு:-
தல்கஸ்பிட்டியே குருனநே ஹேலே சாயுபு கண்டு குருன்னேஹே. இவரும், இவரது மூதாதையரும் ஊர் பிரதானிகளாக பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ளமை, அவரது வம்சாவளிப் பெயர்களில் தெளிவாகிறது. குளத்து நீரைக் கொண்டு விவசாயம் பண்ணும் பிரதேசங்களில், அதனை பராமரிக்கும் பொறுப்பை ஊர் பிரதானிகள் சிலரிடம் ஒப்படைப்பதே இவ்விராச்சியத்தின் மரபாகும். அடுத்தவர், புளுகோஹோதென்னே தேசே குருனனேஹேலே அலியுதுமா புள்ளே என்பவராவார். இவரின் பெயருடன் இணைந்துள்ள தேசே என்னும் பதம், மிகப் பழமையான காலத்தில், இவரது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அறிமுகப் பெயராக கருதலாம். அத்துடன் அக்குரணை பள்ளேகம்பஹவில், லொகு தேசே குருன்னர்ன் சேலாகே கெதர என மற்றுமொறு வம்சாவளித் தொடரும்(3) இன்றும் பிரபல்யமானதொரு பரம்பரைப் பெயராகப் பயன்படுத்தபட்டு வருகிறது. (பின்னால் இப்பெயர் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது)
இவ்வாலயத்தில், காணிப் பங்கு பெற்றவரில் அடுத்தவர், கலகெதர கட்டுபுள்ளே கெதர குப்பதம்பி என்பவராவர். இவரது முன்னோர் கட்டுப்புள்ளே என்னும் தேசிய சேவையில் ஈடுபட்டதால் இவருக்கு இவ் வம்சாவளிப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் கலகெதர கலுகல வெதராலலே கெதர அகமது லெப்பை, அதே வைத்திய துறை வம்சாவளியை உடைய பள்ளி அடியன லெப்பை (பள்ளிவாசல் பக்கத்தில் வசித்தவர் என பொருள்படும்) மற்றும், கலகெதர ஹெட்டிபொல கெதர ஹஜ்ஜியுள்ளே, அதே சிங்கள வம்சாவளியுடைய கயிகண்டு என்னும் ஏழுபேர்கள் அந்த விசாலமான காணிகளில் பங்குதாரர்களாக இருந்தார்கள்.
இவ்வயல் நிலங்கள் அந்த விவசாயிகள் மூலமாக விளைச்சல்
பண்ணப்பட்டு வந்துள்ளதை, இவர்கள் இக்காணிக்காக ஆற்ற வேண்டிய இராசகாரியம் சம்பந்தபட்ட விபரங்கள் மூலம்
56
அறியமுடிகிறது.(பி.கு.) அத்துடன் வருடம் தோறும் இவர்கள் ஒவ்வொருவரும் 5 கொத்து தானியம் தேவாலயத்திற்கும், 12 கொத்து தானியம் அதன் பஸ்நாயக நிலமை அவர்களுக்கும் வழங்கியதோடு ‘பெனும் வட்டி ஐந்துடனும், 40 வெற்றிலையுடனும், தேவாலயத்திற்கு சமுகம் அளிப்பதும் அவர்களது இராசகாரியமாக இருந்தது. ‘பெனும் (Geஜூ-இல5889) என்னும் சமுகம் தருதல் ஒரு பரிசாகக் கருதப்பட்டு வந்தது. அத்துடன் கத்பத்த (ண்ை&ை) என்னும் உணவுப் பொருட்களின் வரியையும், இவர்கள் செலுத்தினார்கள்.
கண்டி மகா தேவாலயத்தில் முஸ்லிம்கள் பெற்றிருந்த செல்வாக்கு
கண்டியில் வருடாந்த பெரஹரா வைபவம் மகா தேவாலயத்தில் ஆரம்பமானதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் சிங்கள மன்னர்களின் பட்டாபிஷேக விழாவின் ஒரு பகுதி இத்தேவாலயத் திலேயே நடந்தேறியுள்ளது. இத்தேவாலயம் நரேந்திரசிங்கன்(170739) என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் 1731இல் அமைக்கப்பட்டது. ஆகையால் கண்டிய மன்னர்கள் ஊர், காணிகள், பெறுமதி வாய்ந்த வஸ்த்துக்களை வழங்கி இதனைக் கெளரவித்து வந்துள்ளார்கள். இத்தேவாலயத்திற்குச் சொந்தமான கிராமங்கள் கேகாலைப் பிரதேசத்திலும் காணப்படுகின்றன. வையிதரத்ன முதலியார் அகமது லெப்பை ஹபீபு லெப்பை என்பவரும், கலாரட கெதர காதர் லெப்பை குப்பத்தம்பி மிஸ்கின் பாவா என்பவரும் கண்டி மகா தேவாலயத்தில் சில முக்கிய கருமங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்கள். உற்சவ காலத்தில் இதற்கு தோரணம் கட்டும் வேலை இவர்களால் செய்யப்பட்டது.
மேலும், இந்த ஆலயத்திலும், அலுத்நுவர தேவாலயத்திலும் நிர்மாண, பழுதுபார்த்தல் வேலைகளுக்குத் தேவையான மரங்களை வழங்குவதும், தேவாலயத்தில் சாதாரணமான திருத்த வேலைகளைச் செய்வித்தலும் இவ்விருவரினதும் பொறுப்பாக இருந்தது.
இக்கருமங்களுக்காக இவர்களுக்கு, இத்தேவாலயத்திற்குச் சொந்தமான கேகாலை நாலு கோரளை பிரதேசத் து கல்பொடகோரளையில் கெகிரிகொட என்னும் ஊரில் உள்ள 17 ஏக்கர் விஸ்தீரணமுள்ள கொஹொவிலே வத்த என்னும் தோட்டம் பரவணியாக வழங்கப்பட்டது.
இத்தேவாலயங்களில், சிங்கள வருடத்தின் அடிப்படையில், பழைய சம்பிரதாயப்படி நான்கு உற்சவங்கள் நடை பெறுவது
பி.கு re - (அந்த கொவியா) - இது சகி என சொல்லப்படும். அதனால் பாதி
விவசாயி என குறிப்பிடலாம் (Coq0ை‘ைபங்குகாரயா" எனவும் அழைக்கப்பட்டனர்.
57
Page 37
வழக்கமாக இருந்தது. புதுவருடப்பிறப்பு, எசல மாதத்து பெரஹரா உற்சவம், கார்த்திகை வைபவம், அத்துடன் அறுவடைமுடிந்து விளைச்சலை கொண்டுசெல்லும் ‘அலுசால்மங்கலய வைபவங்கள் என்பனவே அவையாகும். இந்நான்கு வைபவங்களிலும் கலந்து பங்குபற்றவேண்டியது, இவ்விரு முஸ்லிம்களினதும் பொறுப்பாக இருந்தது. இவர்கள் இவ்விழாக்களின் போது, இரண்டு கைக்குட்டைகளைப் பரிசளிப்பதோடு, வாழைக்குலை, தேங்காய், அரிசி போன்றவற்றையும் மகா தேவாலயத்திற்குச் செலுத்த வேண்டியிருந்தன.(4)
இவ்விருவரது வம்சாவளிப் பெயர்களிலிருந்து, இவர்கள் சில பொறுப்பு வாய்ந்த கருமங்களுடன் தொடர்புபட்டவர்கள் என அறியலாம். வையிதரத்ன முதலியார் என்னும் பட்டம் அதில் ஒருவருக்கு உள்ளது. கலாரட கெதர என்பது, மிகப்பழமையான முஸ்லிம்களின் வம்சாவளியாக கொள்ளலாம். முதலாம் இராஜசிங்கனின் ஆட்சி நிலவிய காலத்திலிருந்து, கண்டிய ராச்சியத்தின் ஒரு பிரதேசமாக இருந்த நுவர கலாவிய உடன் இவரது மூதாதையர் தொடர்புபட்டிருந்ததினால் இப்பெயர் தோன்றியிருக்கலாம். மிகப்பழமையான காலத்தில், கண்டிய பிரதேசங்கள் மாத்தளை ரட, தும்பர ரட என்றே வழங்கப்பட்டன. கலா ரட என்பதும் இதுபோன்ற தொன்றே. கம்சபைக் காலத்தில், இப்பிரதேசம் 3 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதில் ஒருபிரிவு “கலாகம' என்பதாகும். “கலாவெவ என்ற வாவியும் இப்பிரதேசத்தைச் சேர்ந்ததே. ‘கலாரட கெதர என்னும் வம்சாவளிப் பெயரில் இருந்து மிகப்பழமையான காலத்தில், இம்முஸ்லிமின் மூதாதையர் கண்டிய இராச்சியத்தில் வாழ்ந்துள் ளார்கள் எனக் கருதக்கூடியதாக உள்ளது.
சரக்கேற்றி காணிகளைப் பெற்ற முஸ்லிம்கள்
முஸ்லிம்களுக்குத் தவளம் மாடுகள் இருந்ததினால், அவர்கள் மாடுகளின் துணையோடு நெல்லையும், தானியங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றுமொறு இடத்திற்குக் கொண்டு செல்பவர்களாக இருந்தார்கள். தேவாலயத்தின் முத்தெட்டு வயல்களின் நெல்லையும், நெற்கதிர்களையும் இவ்வாறு ஏற்றிச் சென்றதற்காக “பட்டவிலி பங்கு எனும் சரக்கேற்றும் சேவைப் பங்குக் காணிகளை, அவர்கள் நன்கொடையாக பெற்றுள்ளார்கள். இவை நிலபங்குகள்’ என குறிப்பிடப்படுகின்றன.
செங்கடகலபுரயின் நான்கு தேவாலயங்களில் ஒன்றான
பத்தினி தேவாலயத்தின் பட்டவிலி பங்கு காணிகள் முஸ்லிம்களுக்குக்
58
கிடைத்தன. இதில் நெற்காணிகள், வீட்டுத்தோட்டம், சேனை என்பன அடங்கின. குருநாகலை பிரதேசத்தில் இத்தேவாலயத்திற்குச் சொந்தமான முத்தெட்டு, முத்தெட்டு அல்லாத வயல்களிலிருந்து விளையும் நெல்லையும், தானியங்களையும் தவளம் மாடுகள் மூலமாக வருடாவருடம் தேவாலயத்தின் களஞ்சியத்துக்குக் கொண்டு வருவது, இவர்கள் ஆட்சி செலுத்திய காணிகளுக்காக ஆற்றும் ஊழியமாக இருந்தது. இதைத்தவிர வருடமொன்றுக்கு 15 கொத்து தானியமும், ஏனைய மாதங்களில் அரிசி 2 கொத்து, தேங்காய் இரண்டு, பூசணிக்காய் ஆகியவற்றையும் இவர்கள் வழங்கினார்கள்.
தல்கஸ்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த இம்முஸ்லிம்கள், மடிகே கருமபீடத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் என அவர்களின் வம்சாவளிப் பெயர்கள் மூலம் அறிய முடிகிறது.
அ) பட்டியே வத்தே ஹசன் கண்டு ஆ) லேக்கமலாயே கெதர சாயிபு கண்டு குருனேஹே
இ) லேக்கமலாயே கெதர வாப்பு லேக்கம் ஈ) குருனனேஹேவாயே கெதர அஹம்மது லெப்பை
குருனனேஹே.
‘லேக்கம்’ என்னும் இவர்களுடைய தொழில் வம்சாவளி, மடிகே கருமபீடத்தில் இவர்கள் ஆற்றிய பணியைக் குறிப்பிடுவதாகும். சிலர் பரம்பரை லேக்கம்களாக இருப்பதையும் (ஆ) என்பதிலிருந்து அறியலாம். (அ) வில் சொன்ன பட்டியே வத்தை என்பது - இங்கு பட்டியொன்று இருந்ததை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.5
கண்டிய இராச்சியத்தின் அரசியலமைப்பு என்னும் நூலில், சேர் ஜோன் டொயிலி நாலு கோரளையில் மடிகே கருடபிடத்தைச் சேர்ந்தவர்கள், கண்டிய மன்னர்கள் காலத்திலே லேக்கம், முகந்திரம் பதவிகளை வகித்ததாகக் குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்டவர்கள் கண்டிய மன்னர் காலத்திலிருந்தே வாழையடி வாழையாக இப்பதவிகளில் இருந்து வருவதை அவதானிக்கலாம்.
பிரசித்திபெற்ற கண்டி தெகல் தொரு விகாரைக்குச் சொந்தமான, அக்குரணைக்கு அருகாமையில் அமைந்துள்ள, துனுவில என்னும் இடத்திலுள்ள, “பட்டவிலிப்பங்கு நிலமொன்றை, சேகதி நயிதேலா கெதர இப்ராஹிம், பக்கிர், உமர் (6) என்னும் மூன்று சகோதரர்கள் நன்கொடையாக பெற்று ஆட்சி செய்தார்கள். 1872ம் ஆண்டு இவ்விகாரைப் பதிவுக் குறிப்பின்படி, இவர்கள் இதற்காக ஒருதொகைப் பணத்தை வரியாகச் செலுத்தி வந்தார்கள். இவர்களது
59
Page 38
மூதாதையர் சிங்கள குல வகையின் ‘நயிதே' என்னும் வம்சத்தவராகக் கணிக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு, முற்காலத்தில் இவர்கள் சரக்கேற்றும் பணியை ஆற்றியுள்ளார்கள் எனலாம்.
குருநாகலை மாதுரே கோரளையில், புகழ் பெற்ற ரிதி விகாரையுடன் முஸ்லிம்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். இவ்விகாரையின் முத்தெட்டு வயலிலிருந்து நெல்லை ஏற்றி வருவதற்காக, வருடாவருடம் நான்கு நாட்களுக்கு ஐந்து மாடுகளைக் கொடுத்துதவும் கருமத்தை ஒமர் லெப்பை வெத குருனனேஹே(7) என்பவர் செய்து வந்தார். அத்துடன், அவசியம் ஏற்படும் போது ஆற்றிலிருந்து மணலைக் கொண்டு போய், விகாரை மலுவிற்கும், விகாரைக்குரிய வீடுகளுக்கும் கொடுப்பதும் இவரது பணியாகும். இந்த சேவைக்காக இவருக்கு, 2 ஏக்கர் வயலும், ஒரு ஏக்கர் வீட்டுத்தோட்டமும், 5 ஏக்கர் அளவிலான சேனை நிலமும் நன்கொடையாக வழங்கப்பட்டன. அத்துடன் அரிசி, குரும்பை, தேங்காய், மீன்கூறி, நெத்தலி, பூசணிக்காய், வாழைப்பழம், மற்றும் தானியமும் வருடந்தோறும் விகாரைக்குக் குறிப்பிடப்பட்ட தொகை செலுத்த வேண்டும். இவரது வம்சப் பெயரில் இருந்து இவர் பிரபல்யமான வைத்தியத்துறையைச் சார்ந்த ஓர் ஊர் பிரதானியாக இருந்தவர் எனலாம்.
முஸ்லிம்களுக்கு பெளத்தர்கள் வழங்கிய 针 சம அந்தஸ்த்து
சிங்கள, பெளத்த மக்களின் பரம்பரைப் பெயர்களையொத்த நாமங்களை, விகாரைகளுடன் தொடர்பு பூண்டிருந்த முஸ்லிம்களிடம் அதிகமாகக் காணமுடிகின்றது. பெயர்கள் அடிப்படையில் நோக்கும் போது, பண்டைய சிங்களவர்களின் பண்பாட்டு, சம்பிரதாயங்களுக்கு இசைவாக முஸ்லிம்களின் வம்சாவளி நாமங்கள் இருந்தன. பெளத்த வழிபாட்டுத் தலங்களுக்கு உரித்தான நிலமாக இருப்பினும், காணிகள் பகிர்ந்தளித்த போது முஸ்லிம்கள், சிங்களவர்களோடு சமஅந்தஸ்த்தில் வைத்து கணிக்கப்பட்டமைக்கு, முஸ்லிம்களின் இப்போக்கு ஒரு காரணமாகும். கண்டிய நாட்டில், வரலாற்று பெருமைமிக்க பெளத்த மதத் தலங்களில், சகல விதமான கருமங்களையும் முஸ்லிம்கள் ஆற்றி வந்ததுடன், விகாராதிபதிகளுடனும் பிக்குமாரோடும் அக்காலை தோழமையோடு நடந்துகொண்டார்கள்.
கண்டிப் பிரதேசத்தில், மங்களகம' எனும் கிராமத்தில், மொரவெல கெதர டிங்கிரியா செல்மா லெப்பை என்பவருக்கு வேரகல விகாரையின் வயற்காணி நிலப்பங்காக கிடைத்தது. இவ்வயலின் மற்றுமொரு பங்குகாரராக அதே விகாரையின் பஸ்நாயக்க நிலமை அவர்கள், பரவேணி உரிமை பெற்றார். நிலபங்கு என்பதால், இவர்கள்
60
சம உரிமை பெற்றவர்களாகிறார்கள். ஒடு வேயப்பட்டிருந்த இவ்விகாரையின் திருத்த வேலைகளைச் செய்து கொடுப்பதும், நான்கு மங்கள வைபவங்களிலும் அதற்குரிய வேலைகளைச் செய்து
கொடுப்பதும் இம்முஸ்லிமானவரது இராஜகாரியமாகும்.8
புராதன அம்பெக்க தேவாலயத்தில், பஸ்நாயக்க நிலமைமார்களில் ஒருவராக ஒரு முஸ்லிம் பணியாற்றியதாகவும், மரபுவழிக் கதையொன்று உள்ளது. முஸ்லிம்கள் இவ்வாறான பதவிகளை வகித்தாலும், அவர்களது மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்கவில்லை. பெளத்தர்கள் கூட அவற்றிக்கு மதிப்பு கொடுத்து ஒழுகும் படியாக அவர்களது வாழ்க்கை முறை அமைந்திருந்தது.
சப்பிரகமுவை மாகாணத்தில், கல்படக் கோரளைத் தெற்கில் அமைந்துள்ள, தெவனகல ரஜமகா விகாரை, பல சரித்திரப் பிண்ணனிகளோடு தொடர்புபட்ட ஓர் உன்னத தலமாகும். 16ம் நுாற்றாண்டில், முதலாவது விமலதர்மசூரிய மன்னனினால், இவ்விகாரைக்குக் காணிகள் பூஜை செய்யப்பட்டன.
இவ் விகாரையின் காணிகளிலி, ஒரு நெல் வயலி கெக்கிரிகொடை கிராமவாசிகளான, கொத்மைே நயிதெலே ஆதம்லெப்பை, அதே வம்சாவளியுடைய உதுமாலெப்பை என்னும் முஸ்லிம்கள் இருவருக்கும், அல்பிட்டியே கெதர அப்பு வெதரா ைஎன்ற சிங்களவருக்கும் கன்வசம்’ என்னும் பங்குகளாக வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் இருவரும் இதற்காக வருடமொன்றுக்கு அரிசி 40 கொத்து, தேங்காய் 15, வெற்றிலை 40, பணியாரம் என்னும் இனிப்பு 100, ஆகியனவற்றை விகாரைக்குச் செலுத்தினர்கள். அதே போன்று ‘அப்பு வெதரால” என்ற சிங்களவர் விகாரையில் திருத்த வேலைகளைச் செய்தல், மற்றும் பன்சலைக்கான பணிகளை ஆற்றும் படி பணிக்கப்பட்டிருந்தார்.9
இவ்வூரைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு உகந்த சேவைகள் வழங்கப்பட்டிருப்பதனையே இது காட்டுகிறது. இது போன்ற பல சந்தர்ப்பங்களை இது தொடர்பான ஏடுகளில் காணக்கூடியனவாக a 6irGT60.
பிக்குமாரோடும், பெளத்த மதத் தலைவர்களோடும் முஸ்லிம்கள் பரஸ்பர நல்லுறவு பூண்டவர்களாக விளங்கினார்கள். பிக்குமார்களும் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக பன்சலைகளில் பல வகைத் தேவைகளையும்,
முஸ்லிம்களைக் கொண்டே நிறைவேற்றிக் கொண்டதோடு, கொடுக்கல்
6
Page 39
b Gagaus G டார்கள். இப்பழக் SSS SSS SSS காலங்களில் கூட காணப்பட்டன.
எடுத்துக்காட்டாக, முஸ்லிமொருவருக்கும், ஒரு பெளத்த மதகுருவுக்கும் இடையே நடை பெற்ற ஒரு வாடகைப் பொருத்த ஒப்பனை மூலம் இதனை அறிய முடிகிறது. 17ம் திகதி, ஆடி மாதம், 1877ம் ஆண்டில் இவ்வுறுதி கண்டியில் வைத்து தமிழில் எழுதப்பட்டடுள்ளது. அதில்,
‘துங்கோரளைப் பத்துவே கனேகொட பன்சலையைச் சேர்ந்த, கண்டி நாலு கடவத்தை ஊருக்குள்வுள்ளதான மள்வத்தே பணிசலையில் வந்திருக்கும் பருஸ்சல் லே தம்ம ஜோதி தெருண்ணான்சையாகிய நான் ஒரு புறமாகவும் மேற்படி காயற் பட்டணத்தைச் சேர்ந்த. கண்டியிலிருக்கும் நுாருலெப்பை ஆஜியார் முகம்மது லெப்பை நான் மறுபுறமாகவும் ஆக நாங்களிருவரும்யெழுதிக் கொள்ளும் வாடை பொறுத்த ஒப்பனையாவது,
1- முதலில் குறித்த பருஸ் சலி வை தம்மஜோதி தெருண்சையாகிய நான் ஆட்சி பண்ணி வருகிற கனேகொடை விகாரைக்குடைய சப்றகமை ரெஜிஸ்டர் கந்தோரில் பதியப்பட்டு குறித்த கனேகொடை விகாரைக் கருகாமையிருக்கிற முவந்தென்னே சேனை. (இவ்வாறு 5 காணிகள் இம்முஸ்லிமுக்கு எழுதப்பட்டுள்ளன.
இதற்கு சாட்சியாக: அதற கோறளே பறணகூது கோரளை கலபிடிய சலவ விகாரையிலிருக்கும் பறனாதன சொமன உன்னான்செ என்பவர் கையொப்பம் இட்டுள்ளார்(10). இது பன்சலையைச் சார்ந்த காணிகளை அதன் பிரதான மதகுருமார்கள் மூலமாகவும், முஸ்லிம்கள் பெற்று அநுபவித்துள்ளதைக் காட்டுகிறது.
வரலாற்று புகழ்மிக்க றுநீதலதா மாளிகையும், கண்டிய முஸ்லிம்களது பங்களிப்புகளும்
இலங்கைத் திருநாட்டில் அனைத்து விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்கும் மகுடமாக விளங்கும் பெளத்தத்திருத்தலம், சரித்திரப் புகழ்பெற்ற கண்டி ரீதலதா மாளிகையாகும்.(பி.கு) புத்தரின் தந்தங்கள் இங்கு வைக்கப்பட்டிருப்பதே, அதன் சிறப்புக்குக்
is: BUDDHIST TEMPRORALITIES (CEYLON) XXIV-1920B/Tem. Ordinance No. 8 of 1905 as இலங்கையின் விகாரைகள் பற்றி அட்டவணையில் (SCHEDUIEA) தலைப்பிடும் போது "Dalada maligawa and Temples' (தலதா மாளிகையும் ஆலயங்களும்) என தலதா மாளிகைக்கு
SaláhosLab SÓLŮUG6iCg4 Page 35
காரணமாகும். கீர்த்தி ழரீமேகவர்ண மன்னனது (கி.பி. 303 - 331) ஆட்சிக் காலத்தில், இத்தந்தங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தின் இளவரசி ஹேமமாலினி குமாரி, தந் தகுமாரர் என்பவர் மூலமாக இவை இங்கு எடுத்துவரப்பட்டன. அரசாட்சிக்கு அருகதையுடையவர், புத்தரது இப்புனித தந்தங்களைப் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றவரே என்னும் சம்பிரதாயம் புராதான காலத்திலேயே இங்கு நிலவியது. எல்லாச் சிங்கள இராசதானிகளிலும் அதனை வைத்துப் போற்றிப் பாதுகாத்துள்ளார்கள். அநுராதபுரம், பொலனறுவை, தம்பதெனிய, usTugsb%), குருநாகலை, கம்பளை ஆகிய இராசதானிகளில் தந்ததாது வைத்துப் பாதுகாக்கப்பட்டது. பின்னர் அப்புனித தந்தங்கள் கோட்டை இராச்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து ஹிரிபிட்டியே ராகு என்பவர், அதனை இரத்தினபுரிக்குக் கொண்டு சென்றார். முதலாவது விமலதர்மசூரிய எனும் கண்டி மன்னன், இப்புனித தந்தங்களை, இரத்தினபுரியிலிருந்து கண்டி செங்கடகலபுரக்கு கொண்டு வந்தான். இம் மன்னனால் 1592ம் ஆண்டளவில் கண்டி ரீ தலதா மாளிகை அமைக்கப்பட்டு, அதில் இப்புனித தந்தங்கள் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. சுமார் 1500 வருடகாலமாகப் பேணிக்காக்கப்படும் இப்புனித தந்தங்களைத் தாங்கிய வெள்ளிப்பேழை, யூரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டிருப்பதுவே இன்று வரை அதன் பெருமைக்குக் காரணமாக உள்ளது.
அத்துடன், எசல மாதத்தில் நடைபெற்று வரும் மகா பெரஹரா மூலம், தற்போது உலகப் பிரசித்தம் பெற்றச் சின்னமாக, ரீ தலதா மாளிகை திகழ்கிறது எனலாம். இது பெளத்த பராம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒர் உற்சவமாகக் கருதப்பட்டாலும், இதன் கலாசார நிகழ்ச்சிகள் சகலரையும் கவரும் படியாக அமைந்துள்ளன. தற்போது நடைபெறுவது போன்று, எசல மாதத்தில் நடைபெறும் பெரஹரா வைபவம் கீர்த்தி யூரீ இராஜசிங்க(1747-81) என்ற கண்டி மன்னன் காலத்தில் ஆரம்பமாகியது. 1815ம் ஆண்டில், கண்டி ஆங்கிலேயரினால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் சில காலங்கள் இப் பெரஹரா நடைபெறவில்லை. 1828 ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
ரீ தலதா மாளிகைக்கு ஏராளமான நிலப்பரப்புகள் மன்னர்களாலும், அரச பிரதானிகளாலும், மகா ஜனங்களாலும் பூஜை செய்யப்பட்டன. இதற்குச் சொந்தமான நிலங்கள் நாட்டின் சகல ஊர்களிலும் உள்ளன.
Page 40
கண்டிய மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த, இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள், தலதா மாளிகையுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஏனெனில் இம்மாளிகை, மன்னர்களின் மாளிகையிலும் ஒரு பகுதியாகவே இருந்தது. அக்காலம் முதலே ரீ தலதா மாளிகையின் காணிகளை முஸ்லிம்கள் பரவனியாக
அனுபவித்து வந்தார்கள் எனக்கூறலாம்.
முஸ்லிம்கள் கண்ணியமாகவும், நன்னம்பிக்கை மிக்கவர்கள கவும் ரீ தலதா மாளிகையில் நடாத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் மாளிகைக்கு ஆற்றி வந்த சேவைகளே தக்க சான்றுகளாகும்.
ஆபரணங்கள் செய்யும் கலையில் முஸ்லிம்கள் இன்று போல் அன்றும் சிறப்புற்று விளங்கினார்கள். கண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வெள்ளியினாலான பொருட்களே பயன்படுத்தப்பட்டன. இதனைக் கொண்டு பொருட்களைத் தயாரிப்பதற்கு இலகுவாக இருந்ததும், விலை குறைவுமே அதற்குக் காரணமாகும். பதக்கங்கள், மாலைகள், வெள்ளிக் குஞ்சங்கள், பாத்திரங்கள் என்பன வெள்ளியினால் வடிவமைக்கப்பட்டன. புத்தர் சிலைகள், கரடு முதலான பூஜைக்குரிய பொருட்கள் தங்கத்தால் வார்க்கப்பட்டன. இது “பட்டல் சேவை என இங்கு அழைக்கப்பட்டிது. தலதா மாளிகைகான பட்டல்’ சேவையில் சிங்களவர்களுடன்
இணைந்து முஸ்லிம்களும் கருமமாற்றியுள்ளார்கள்.
கண்டிய இராச்சியத்தில், முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்பாகிய ஹாரிஸ்பத்து வாசிகள் ‘பட்டல் சேவையில் சிறப்புற்று விளங்கினார்கள். அங் Së fஸ்பக்கே னேஹே கெதர அகமது லெப்பை, அதே வம்சாவளிப் பெயரைக் கொண்டிருந்த உமர் லெப்பை, காதர் லெப்பை ஆகிய மூவரும், தலதா மாளிகைக்கு உரித்தான தங்கம், வெள்ளியினாலான பொருட்களில் திருத்த வேலைகளைச் செய்தல், புதிதாகப் பொருட்களைச் செய்யவேண்டிய சந்தர்ப்பங்களில் அவற்றிக்கு அவசியப்படும் தங்கம், வெள்ளியை மாளிகையிலிருந்து எடுத்துச் சென்று அதனைச் செய்து கொடுத்தல்; முதலான காரியங்களை ஆற்றினார்கள். அத்துடன் மாளிகாவையின் தங்க, வெள்ளிப் பொருட்களைச் சுத்திகரிக்கத் தேவையான கரியை மாளிகையிலிருந்து பெற்று, மிளிரச் செய்யும் வேலையினையும் மேற்கொள்ளலானார்கள். இவர்கள் வருடத்திற்கு இரண்டு தடவை ரீ தலதா மாளிகைக்கு வருகை தருவதோடு, முதற்தடவை விஜயம் செய்யும் போது, அதன் தியவடன நிலமைக்கும், காரிய கரணரால என்னும் உத்தியோகத்தருக்கும், விதானைக்கும் வெள்ளியினால்
64
செய்யப்பட்ட பொருளொன்றை வழங்குவதுடன் 40 வெற்றிலைகளை யும் கொடுத்தல் இவர்களது கடமையாகும்.
இவர்கள் மாளிகையில் ஆற்றிய இப்பொறுப்பு மிக்க கருமத்திற்காக, முன்வத்துகொடை எனும் கிராமத்தில் தலதா மாளிகையின் சொத்தான நான்கு வயல் நிலங்கள், இரண்டு வீட்டுத்தோட்டங்கள், மூன்று சேனைகள் என்பவற்றைப் பரம்பரை பரம்பரையாக ஆட்சி பண்ணும் உரிமையைப் பெற்றுக் கொணி டார்கள் . (11)
பல் வகையான சிங்களமொழி அமைப்புடைய வம்சாவளிப் பெயர்களைக் கொண்ட முஸ்லிம்கள், முரீ தலதா மாளிகையின் தங்கம், வெள்ளியினாலான விலை மதிப்புமிக்க ஆபரணங்களையும், ஏனைய பொருட்களையும் பாதுகாத்துப் பத்திரப்படுத்தும் கஜானாவின் காவலர்களாகவும் கடைமையாற்றியுள்ளார்கள். இவர்கள் ‘காரியகரண முரய' என்னும் சேவையைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டார்கள்.
அ) பொல்வத்தே முஹன்திரமலே கெதர இஸ்மாயில்லெப்பை ஆ) பொல்வத்தே முதியன்சேலே கெதர மதார்லெப்பை இ) ஹாரிஸ்பத்துவே குருனனேஹேலே உமருலெப்பை அதே வம்சாவளி (முன்கூறப்பட்டுள்ள) அகமதுலெப்பை இவர்களுடன் இதே காரிய கரண முரய' என்னும் சேவையில் அ) மீவல தெனியே குருனனேஹேலே இஸ்மாயில்லெப்பை ஆ) கலகமுவே குருனனேஹேலே கெதர உதுமாலெப்பை என்போரும் தலதா மாளிகையில் கடமை புரிந்தார்கள்.(12
‘காரிய கரண முரய' என்னும் காவற்சேவை தேவைப்படும் வருடங்களில் அவர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாகும். தலதா மாளிகையின் தியவடன நிலமை, தேவாலயத்தின் பிரதான பஸ்நாயக்கை ஆகியோரினால் இவ்வாறான முலாதானிமார்கள் நியமிக்கப்பட்டார்கள். தலதா மாளிகையில் நியமனம் பெறும்போது, மேற்படி சேவைக்காக இவர்கள் 30 பவுண்களும், ஒரு கை வெற்றிலையும் தியவடன நிலமை அவர்களுக்கு வழங்கினார்கள். அத்துடன் புதுவருடப்பிறப்பு வைபவத்தில், சம்பிரதாய முறைப்படி தியவடன நிலமை அவர்கள் முன்னால் இவர்கள் சமுகம் தருவது வழக்கமாகும். இந்த காவல் சேவை இல்லாத வருடங்களில், எசல மகா பெரஹராவுக்கு சமுகம் தரவேண்டியது இவர்களின் கருமங்களில் ஒன்றாகும். இச்சேவைக்காக இவர்களுக்கு முன்வத்துகொடை கிராமத்தில் விசாலமானதொரு வயல் வெளி உரிமையாக்கப்பட்டி ருந்தது. அதன் விஸ்தீரணம் சுமார் பதின்மூன்று ஏக்கர்களாகும்.
6S
Page 41
இதனைத் தவிர நம்பிக்கையும், நாணயமும் மிக்கோராக இவர்கள் மாளிகையின் தலைவர்களால் மதிக்கப்பட்டமையால், மேலும் பல சலுகைகளையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இவை மிகப் பழமையான காலத்திலிருந்து முஸ்லிம்கள் அனுபவித்து வரும் சலுகைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்வத்தை, ஹாரிஸ்பத்து, மீவலதெனிய, கலுகமுவ எனப் பல கிராமங்களிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்களும் தலதா மாளிகையில் சேவையாற்றி யுள்ளதை அவர்களது மரபுவழிப் பெயர்களிலிருந்து அறியமுடிகிறது.
றுநீ தலதா மாளிகைக்குச் சொந்தமான நெற்காணிகளில் முத்தெட்டு வயல்களே அதிகமானவையாகும். இவற்றிலிருந்து கிடைத்து வந்த நெல்லரிசி, மாளிகைக்கு ஒரு பிரதான வருவாயாக இருந்தது. அதனால் நெல்லரிசியை ஒழுங்கான முறையில் சேகரித்து மாளிகைக்குக் கொண்டுவர, பல தரத்தையும் சேர்ந்த உத்தியோகத் தர்கள் சேவையாற்றி வந்தார்கள். அவற்றில் கம்மெஹெலா; ‘துாரயோ’ ‘மினும்’ என்போரும் அடங்குவர். இப்பதவிகளில் முஸ்லிம்களும் சேவை புரிந்தார்கள்.
பொல்வத்தே முஹன்திரமலே கெதர இஸ்மாயில்லெப்பை
பொல்வத்தே முதியன்சேலே கெதர மதார்லெப்பை
ஹாரித்துவே குருனனேஹேலே ஒமர்லெப்பை என முன் கூறப்பட்டவர்கள் தெல்கஹகும்புற எனும் வயலில் ‘துார பங்கு காணிகளைப் பெற்றார்கள்.
மாளிகையில் வருடாவருடம் நடைபெறும் பிரதான நான்கு விழாக்களிலும், மாளிகையை அலங்கரிக்கும் வேலைகளை இவர்கள் மேற்கொண்டார்கள். மாளிகைக்குச் சொந்தமான முத்தெட்டு வயல்களில் வேலைகளைச் செய்வித்தல், அத்தோடு அவ்வேலைக ளுக்குத் தாமும் கைகொடுத்துதவுதல் இவர்களது கடமையாக இருந்தது. அத்தோடு வருடத்திற்கு நான்கு நாட்கள் தியவடன நிலமையினது வேலைகளையும் செய்து கொடுத்தார்கள்.(13)
அலதெனிய என்னும் கிராமத்தில், தாகஹதெனியே அலி யுதுமா லெப்பை விதானே மஹம்மது மரிக்கார் என்பவர், நெல் அளத்தல் தொடர்புபட்ட ‘மினும்பங்கு' வயலொன்றை மாளிகையின் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளார். தலதா மாளிகையின் முத்தெட்டு வயல்களின் அறுவடையின் பின்னர் பெறப்பட்ட விளைச்சலை, ‘அட்டுவ என்று அழைக்கப்பட்ட நெல்லுக்கொட்டிலில் வைத்து அளந்தெடுக்கும் பொறுப்பான பணியை இவர் ஆற்றிவந்தார்.(14)
தலதா மாளிகையின் முத்தெட்டு நெல்லைக் கொண்டு வந்து குவிப்பதற்காக மாளிகாவே மகா அட்டுவ’ என அழைக்கப்பட்ட ஒர் இராச்சிய நெற்களஞ்சியம், கண்டியில் மாளிகைக்கு சில மைல்கள் துாரத்தில் உள்ள குருதெனிய என்னும் கிராமத்தில் காணப்பட்டது. இங்கிருந்து நெல்லையும், அரிசியையும் யானைகளின் மீது ஏற்றி தலதா மாளிகைக்கு எடுத்துச் செல்வது, மிகப்பழங்கால வழக்கமாக இருந்தது. அறுவடை கால உற்சவம் ‘அலுத்சால் மங்கல்லய' என அழைக்கப்பட்டது. இது கண்டியில் நடைபெற்ற நான்கு பிரதான வைபவங்களில் ஒன்றாகும். இது ஜனவரி மாதத்தில் நிகழ்ந்து வருவது வழக்கமாகும். குருதெனியவிலிருந்து அரிசி கொண்டு வரும் நிகழ்ச்சி, ஒரு பெரஹரையை ஒத்த ஊர்வலம் போன்று நடைபெற்றுள்ளது. கண்டி பத்தினி தேவாலயத்திற்காக, குருதெனியிலிருக்கும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட விளைச்சலை எடுத்துச் செல்லும் போது, அவ்வூர்வலத்தில் கொடிகளைத் துாக்கிச் செல்ல இருவரை அனுப்பி வைக்கும் பொறுப்பு சில முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக குருநாகலையில் மெட்டியன் பொத்த என்னும் கிராமத்தில் நிலபங்கு காணிகளை சில முஸ்லிம்கள் பெற்றார்கள். அவர்களில், லேக் கமலாகே கெதர இஸ்மாயில் லெப்பை ஆரச்சி அதே வம்சாவளியுடைய வாப்பு லெப்பை (15) இவர்களுடன் இன்னும் சிலரும் அடங்குவர். சில சிங்களவர்களும் இச்சேவைக்காக காணிகளைப் பெற்றுள்ளனர்.
தலதா மாளிகைக்குரிய முத்தெட்டு வயல்களில் “அந்த விவசாயிகளாக இருந்த கம்மெஹேலா', 'துாரயோ’ என்போரிடம் வேலை வாங்கும் மேற்பார்வை கடமைகளையும் மாளிகைக்காக முஸ்லிம்களில் பலர் வகித்தார்கள். அத்தோடு 'கத்பத்த சேகரிக்கும் கத்ராஜ காரிய' என்னும் பதவியை தாகஹதெனியே உதுமாலெப்பை என்பவர் வகித்துள்ளார். கம்மெஹேலா, துாரயோ என்பவர்கள் வழங்கும் ‘மஹேகன்’ எனப்படும் மரக்கறிவகை 20 , பழுத்த வாழைப்பழம் ஒரு குலை, எண்ணெய் ஒரு சுண்டு என்பவற்றை தலதா மாளிகைக்குக் கொண்டு வந்து கொடுப்பது, இவரது பணியாகும். அத்தோடு மாளிகையின் தியவடன நிலமையின் சில பணிகளையும் இவர் ஆற்றினார்.(16) விதுஹம்பொல என்ற இடத்தில் வசித்த தாகஹதென்ய இசிபு (ககபு) லெப்பை என்பவரும்,(17) இதே கருமங்களை ஆற்றியதுடன், இவர்கள் மாளிகையின் இச்சேவைக்காக சேவைக்காணிகளையும் பெற்றுக் கொண்டார்கள். இதே கிராமத்தில் வாழ்ந்த தாகஹ தெணிய இஸ்மாயில் அகமது லெப்பை என்பவர் ‘தூரபங்கு ராஜகாரிய' என்னும் சேவையை ஆற்றினார். இவருக்குக் கிடைத்த மாளிகையின் பரவணி நிலத்திற்கு சேவையாக “மஹேகன் என்னும் வரிக்குரியவற்றைச் செலுத்தியதுடன், தலதா மாளிகையின்
67
Page 42
திருத்த வேலைகளுக்கு உதவி செய்வதும் இவரது பணியாக இருந்தது. மாளிகைக்குரிய முத்தெட்டு வயலில் சூடு மிதித்தலுக்கு மூன்று பிணை எருதுகளை களத்துக்கு அனுப்பி வைப்பதும், இவரது கடமையாக இருந்தது.(18) இவ்வாறு தலதா மாளிகைக்குரிய வருவாயை திரட்டிக் கொடுக்கும் சகல கருமங்களையும் கண்டிய முஸ்லிம்கள் ஆற்றியுள்ளார்கள்.
விகாரைக்குரிய இராஜகாரியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பதிவேடுகளில் தாகஹதெனியே என சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள இக்கிராமத்துப் பெயர் தமிழ் மொழியில் 1872-73 ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட காணி உறுதிகளில் நாககதெனியே என எழுதப்பட்டுள்ளது. ஹாரசியப்பத்து மெதசியப்பத்துவில் குருந்துகொல்ல என்னும் கிராமம் முழுக்க முஸ்லிம்களே வாழும் ஒரு கிராமமாகும்.(பி.கு.) இக்கிராமத்தில் நாககதெனிய அலிபுதுபாலெப்பை விதானையின் மகன் உதுமாலெப்பை(19) என்னும் ஒருவரது காணி
கக் குறிப்பிடலாம். அலியுதுமாலெப்பை விதானை என்பவரது சந்ததி யினர் தலதாமாளிகையின் காணிகளைப் பெற்றுள்ளதை மேலே காணக்கூடியதாக உள்ளது.
குருந்துகொள்ள என்னும் இதே ஊரில் வர்ழ்ந்த முஸ்லிம்கள், தலதாமாளிகைக்குரிய பல கருமங்களைச் செய்து, பயிர்செய் நிலங் களை நன்கொடையாகப் பெற்றுள்ளர்கள்.
பட்டாடி கெதர பாவாசாயிபு etifysgodio ரஹ்மான் என்பவர் இங்கு *பதவிலி' என்னும் பங்குக்குரிய காணியொன்றைப் பெற்றவராவர். இவருடன் எகொட கெதர குப்பகண்டு என்பவரும் இப்பங்குக் காணியொன்றைப் பெற்றார். தலதாமாளிகையின் மாளிகா மலுவைக்குத் தூவுவதற்குப் போதிய அளவு மனலை மகாவலி கங்கையிலிருந்து எடுத்து வந்து குவிப்பதுவும்; மாளிகையின் திருத்த வேலைகளுக்காக ஐந்து கரத்தை மணலைக் கொடுப்பதுடன் இன்னும் சிலகருமங்களையும் இவர்கள் ஆற்றவேண்டியிருந்தது.20
இஹ ைகெதர ஆதம் லெப்பை செல்ற லெப்பை என்பவர் இக்காணியின் பிறிதொரு பங்கைப் பெற்றுள்ளர்.21
களுகழுவை என்னும் கிராமத்தில் ‘கங்கானன்” என்னும் சேவைப் பங்குகளை, தலதா மாளிகைக்குரித்தான காணியிலிருந்து
பி.கு: 1901ம் ஆண்டு குடிசனக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த சனத்தொகை
198. அதில் 197 பேர் முஸ்லிம்களாவர்.
6.
சில முஸ்லிம்கள் பெற்றார்கள். மொல்லிகொட நயிதே உதுமா லெப்பை என்பவர் அதிலொருவர்.(22) மொல்லிகொட கெதர என்ற வம்சாவளிப் பெயர் தற்போதும் களுகமுவையில் வழக்கில் காணப்படுகிறது.[23 இவ்வூரில் வாழ்ந்த முஸ்லிம்கள் மிகப் பழைய காலத்தில, மரத்தினால் செய்யப்பட்ட வள்ளங்களை மகாவலி கங்கையில் ஒட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த வம்சாவளிப் பெயர்களை உடையோர் வள்ளமோட்டிகளாகவும் இருந்துள்ளார்கள். அத்துடன், மொலதண்டே முஹந்திரமலே கெதர என்ற வம்சாவளியும் இவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வம்சாவளியை உடையோரும் இங்கு வாழ்கின்றனர். உதாரணத்திற்காக, மொலதண்டே முஹன்திரமலே கெதர மொஹம்மது லெப்பை என்னும் ஒருவரின் பரம்பரையினர் களுகமுவையில் வாழ்கிறார்கள்.(24 அத்துடன் ‘நயிதே' எனும் குலவழிப் பெயர் பெற்றவர்களின் வாரிசுகள், மிகப் பழமையான காலம் தொட்டே இக்காணிகளில் ஆட்சி பெற்று வருகின்றார்கள்.
உடுநுவரை கந்துபலாத்தையில் வட்டதெனிய என்னும் ஊரில் யஹலேதென்னே நயிதேலேகெதர மம்மது தம்பி என்பவர் பழங்காலம் முதல் ஆட்சி பெற்று வந்த “அடலாஹே கும்புற (எட்டு லாச்சம் வயல்) என்னும் வயலுக்கு, தற்போதைய சொந்தக்காரரது பெயராக அவரது பூதலின் உரிமைக்காரர் அதே வம்சாவளிப் பெயருடைய ஆதம் லெப்பை எனக் குறிப்பிடப்படுகிறது. (1872இல்) இது தலதா மாளிகைக்குரிய ஒரு வயலின் நிலப்பங்காகும். இது மிகப் பழமையான காலம் தொட்டே இவரது மூதாதையர் மாளிகையில் பணியாற்றி வருவதை எடுத்துக் காட்டுகிறது.(25) இக்கிராமத்தில் ஒரு காணியை அபன்வெல நிலமை என்பவர் 1808 இல் ஒரு முஸ்லிமுக்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளார். (பி.கு)26) இவை முஸ்லிம்கள் பெளத்த மதத்தினரோடு கொண்டிருந்த கிட்டிய உறவிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.
பழங்காலத்து கண்டிய முஸ்லிம்கள், தலதா மாளிகையுடனும், ஏனைய பெளத்த விகாரைகளின் மதத்தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், பிற்காலத்தில் பிராணி களை அறுக்கும் விடயத்தில் பெளத்தர்கள் முஸ்லிம்களை விமர்சிக்க லானார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு இனவுணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் கூட முன்வைக்கப்பட்டன. முஸ்லிம்கள் பெளத்த கோட்பாடுகளுக்கு முரணாக உயிர்வதை செய்வோராகக் கணிக்கப் பட்டார்கள்.
பி.கு: வட்டதெனியாவில் 1881இல் 145 முஸ்லிம்களும், 1891இல் 120 பேரும், 1901இல் இங்கிருந்த மொத்த சனத்தொகை 170இல் 168 முஸ்லிம்களும் வாழ்ந்த ஒரு கிராமமாகும்
69
Page 43
சில பிராணிகளின் இறைச்சியைச் சாப்பிடுவது முஸ்லிம் க்கு அவர்களது மார்க்கத்தில் நிக்கப்பட்டிருப்பினும், அவற்றை அறுத்தல் தொடர்பாக கண்டிப்பான பல விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அத்தருணத்தில், அப்பிராணி வீணாக வதை செய்யப்படாமல் மென்மையாக நடாத்தப்படல் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இச்சட்ட விதிகள் பேணப்படாமல் அறுக்கப்படும் பிராணிகளது இறைச்சியைச் சாப்பிடுவது முஸ்லிம்களுக்கு கடுமையாக விலக்கப்பட்டுள்ளது. இதனால், தமக்குரிய மாமிசத்தைப் பெற முஸ்லிம்களே பிராணிகளை அறுப்பது இன்றியமையாத செயலாக உள்ளது. ஆனால் வீணாகப் பிராணிகளை அறுப்பவர் முஸ்லிம்களது கண்ணோட்டத்தில் பாவியாவார். (பி.கு.)
சிங்கள மக்களும் இறைச்சி உண்பதை விரும்பினார்கள். இவ்விடயத்தில் கண்டிய இராச்சியத்தில் இவர்களிடையே கருத்தொற்றுமை நிலவி வந்துள்ளதை அவதானிக்கலாம்.கண்டிய இராச்சியத்திற்குட்பட்ட நிர்வாகப் பிரதேசமான தமன்கடுவையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். இம் முஸ்லிம்கள் மிருகங்களை அறுத்து அதன் இறைச்சியைக் காய வைத்து வெளிப்பிரதேசங்களுக்கு கொண்டுபோய் விற்பனை செய்வோராக இருந்தார்கள். இதற்காக அவர்கள் காடுகளில் மான் மரை போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வேட்டையாடியும் வந்தார்கள்.
இதுவரையில் கூறப்பட்டதை விட ஒரு வித்தியாசமான பணியை ஆற்றி, தமன்கடுவை முஸ்லிம்கள் ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான சேவைக் காணிகளைப் பெற்றுள்ளார்கள். இப்பிரதேசத்தில் கல்லேல்ல பத்துவையில் தொட்டுமுல்ல ன்னற கிராமத்தில், கண்டி தலதா மாளிகைக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூஜை காணிகள் இருந்தன. அதில் பெரும்பகுதி காணிகளில் முஸ்லிம்கள் பரவணியாக ஆட்சி செலுத்தினார்கள். இதற்காக அவர்கள் கண்டி தலதா மாளிகைக்கு ஒவ்வொரு வருடமும் 30 சிலின்களைத் தொகையாகச் செலுத்தியதோடு, காய வைத்த வேட்டை மிருகத்தின் இறைச்சி அல்லது மரை இறைச்சி 600 துண்டுகளை எடுத்துச் சென்று கண்டி தலதா மாளிகைக்குக் கொடுத்தல் வேண்டும்.
பி.கு. இஸ்லாமிய சட்டத்தின் முக்கிய மூலாதாரமான நபி முஹம்மத் ஸல்லல்லாஹர அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸில் இதுபற்றி அவர்கள் குறிப்பிடும்போது "இறைச்சி உண்பது பற்றி நான் உங்களை அச்சுறுத்துகின்றேன். ஏனெனில், அதனை வழக்கமாக்கிக் கொள்வது மதுவருந்துவதைப் வழக்கமாக்கிக் கொள்வது போன்றதாகும். அன்றியும், நிச்சயமாக அல்லாஹற்வும் வழக்கமாக இறைச்சி உண்னும் குடும்பத்தார் மீது சினமுறுகிறான்" எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (றலி) ஆதாரம் - முஅத்தா ஹதீஸ் கிரந்தம்)
70
அவ்வேட்டை மிருக இறைச்சியில் 300 துண்டுகள் ரீ தலதா மாளிகைக்காகவும், 100 துண்டுகள் அதன் தியவடன நிலமை அவர்களுக்கும், எஞ்சியதில் விதானைக்கு 100 துண்டுகளும், 50 துண்டுகள் காரியகரண்ணா பதவி வகித்தவர்களுக்கும், 25 துண்டுகள் படி இரு கங்ங்ானம்மார்களுக்கும் இவை பிரித்துக் கொடுக்கப்படும்.27) சிலின் 30தில் 10 மாளிகைக்கும், 10 தியவடன நிலமை அவர்களுக்கும், 10 விதானைக்கும் கொடுக்கப்பட்டது. உணவு தொடர்பான விடயத்தில், கண்டிய மன்னர்களும், மதத் தலைவர்களும் முஸ்லிம்களை நம்பிக்கையாளர்களாக மதித்ததினால் இவ்வாறு அவர்களுக்கு சேவைக் காணிகளை நன்கொடையாக வழங்கி, தமக்குப் பிரியமான உண்டிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
தலதா மாளிகையில் நடைபெறும் எசல மாதத்துப் பெரஹரா வைபவத்தில் முஸ்லிம்கள் தமது பங்களிப்பைக் காட்டியுள்ளமை, அவர்களுக்குக் கிடைத்துள்ள சேவைக் காணிப் பங்குகள் மூலம் அறிய முடிகிறது. பெரஹரா ஊர்வலத்தின் போது மேள வாத்தியங்கள் இசைத்தவர்களுக்கும், நடனக்காரர்களுக்கும் மாளிகையின் நிலங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இது "ஹேவிசி பங்கு' எனப்படும். முஸ்லிம்களுக்கும் இப்பங்குகளுக்குரிய நிலங்கள் கிடைத்தன. என்றாலும் அவர்கள் அதற்காகப் பணம் மாத்திரமே செலுத்தி வந்துள்ளார்கள். இது கண்டிய மன்னர் காலத்திலிருந்தே முஸ்லிம்களுக்கு கிடைத்து வரும் கண்ணியமாகும்.
கமே குருனேஹேல்ே கெதர உமர்புள்ளே குப்பதம்பி அதே வம்சாவளிப் பெயருடைய நெயினா ஒமரு புள்ளே என்னும் இருவர்! 'ஹேவிசி பங்கு காணிகளை தலதா மாளிகையிலிருந்து பெற்றுள்ளார்கள். இவை மில்லருபேப் விலான என்னும் இடத்தில் அமைந்துள்ளன. இந்தப் பங்குக்குரித்தான இராஜகாரியம் 'ஹேவிசி' நடன மேளக்காரர்களாக பெரஹராவில் பங்குபற்றுவதேயாகும். என்றாலும், இவர்கள் இக்காரியத்திற்குப் பகரமாக வயற்பங்குகளுக்கு பாடியொன்றுக்கு 4 சிலினும், 40 வெற்றிலையும், கருவாட்டுக் கூறியொன்றும் தியவடன நிலமை அவர்களுக்கு வழங்குவது கடமையாகும்.28) இச்செயல் முஸ்லிம்களின் மதநம்பிக்கைகளுக்கு பெளத்தர்கள் அளித்த கண்ணியமாகக் கருதலாம். ஏனெனில், இந்தப் பங்குகளைப் பெற்ற சிங்கள மக்கள் "ஹேவிசி பணிகளை ஆற்றினார்கள்.
என்றாலும், பெரஹரா நடை பெறும் நாட்களில் ஐந்து தினங்கள் அதற்குரிய ஏனைய வேலைகளைக் கவனிப்பதற்காக
சிலர் தலதா மாளிகைக்கு வருகை தருவது அவர்கள் பெற்றிருந்த
7
Page 44
நிலங்களுக்காகச் செய்யும் ஊழியமாகக் கருதப்பட்டது. அத்தோடு, தலதா மாளிகை பெரஹராவுடன் நான்கு மகா தேவாலங்களின் பெரஹராவும் சேர்ந்தே நடை பெற்று வந்தன. கண்டி பத்தினி தேவாலயத்தின் நிலங்களைப் பெற்றிருந்த சில முஸ்லிம்கள், அத்தேவாலயத்தின் சார்பாக எசல மகா பெரஹராவிற்காக பத்து நாட்கள் பெரஹராவிற்கான சோடனை வேலைகளைச் செய்வதற்கும், தீவெட்டி - பந்தம் துாக்கும் காரியங்களைச் செய்வதற்காகவும் இருவரை அனுப்பிவைக்க பணிக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் சேவைக்காக மெட்டியன் பொத்த என்னும் இடத்தில் பத்தினி தேவாலயத்தின் சேவைப் பங்குகள் லேகமலாகே கெதர இஸ்மாயில் லெப்பை ஆராச்சி என்னும் இவருக்கும், மேலும் சில முஸ்லிம் ஊர்பிரதானிகளுக்கும் கிடைத்தன. முஸ்லிம்களது மதக்கோட்பா டுகளை மதித்து, மேற்சொன்னது போன்ற கருமங்களுக்காக அவர்கள் கூலிக்கு ஆட்களைக் அனுப்பி செய்து கொடுக்க இத்தேவாலயத்தில் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அங்கு ஆற்றிய மற்றும் சில கருமங்களுக்கும் ஆட்களை வழங்கவே இடமளிக்கபட்டிருந்தன. புதுவருட வைபவத்திற்கு இரண்டு பேரை அனுப்பி சோடனை பண்ணுவித்தல், கார்த்திகை தீபம் (காந்திமங்கள) போது இருவர் சென்று அலங்கரித்தலும், தீபங்களை ஏற்றிவைத்தலும் ஏனைய கருமங்கள் புரிதலும்; அறுவடை வைபவத்தின் போது இருவர் சென்று அலங்காரம் பண்ணுதல், அறுவடை எடுத்துவரும் போது அவ்வூர்வலத்தில் கொடி பிடித்தல் என்பன அவற்றில் சிலவாகும்.(29)
இது போன்று இன்னும் பல கருமங்களை இவ்வரலாற்றுப் புகழ் மிக்க தலதா மாளிகைக்காக முஸ்லிம்கள் ஆற்றி தமது பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
புகழ் பெற்ற விகாரை, தேவாலயங்களில் கண்டிய முஸ்லிம்களின் பணியும் அவர்களது பரம்பரைப் பெயரும்.
பிரசித்தம் பெற்ற கண்டி அஸ்கிரிய விகாரைக்குரிய விகாரகம நிலங்கள், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் அக்குறணை எனும் ஊரில் உள்ளன. 1887 இல். தமிழில் எழுதப்பட்ட ஒரு காணி ஒப்பனையில் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "5 லாட்சம் நெல்லு விதைப் பாடுள்ள நிலம். முழுவதையும் நான் அஸ்கிரி விகாரைக்கு இராசகாரியம் பண்ணி நானாட்சி பெற்று வருகிற குறித்த கொட்டு வத்து கோட்டும் எனும் வயலை.” என்பதாக30) இவ் விகாரை தேவாலயங்களுக்குச் சொந்தமான காணிகள் ‘பண்டாரபங்கு”,
72
பரவணி பங்கு' என இரு வகைப்படும். பண்டாரபங்கு என்பது இந்த விகாரையின் அல்லது தேவாலயத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட நிலங்க ளாகும். அவை, ஆட்சி பண்ணியவருக்கு ஆட்சியின் மூலமாக எவ்வளவு காலம் கடந்தாலும் உரிமையாகப் போவதில்லை. முஸ்லிம்கள் பரம்பரைப் பரம்பரையாக அனுபவித்து வரும் மேலே சொல்லப்பட்ட காணிகள் பரவணி எனும் வகையைச் சார்ந்த வையாகும். இவை இராஜ காரியத்திற்குட்பட்ட பங்குகளாகும். இப்பங்குக்குரியவர் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வருடகாலங்கள் இராஜகாரியம் செய்யத் தவறுவாரேயாயின் அப்பங்கின் உரிமையை இழந்தவராவார். குறித்த இராஜகாரியத்திற்குப் பதிலாக, காலத்திற்கு தோதான வகையில் குறிப்பிடப்படும் வரியை இவர் செலுத்தலாம். இக்காணிகளை மற்றவர்களுக்கு அறுதிச்சாசனங்கள் மூலமாக விற்கலாம். ஆனால், அதனைப் வாங்கியவர் குறித்த இராசகாரியத்தைப் புரிதல் வேண்டும்.
மேலே கூறப்பட்ட ஒப்பனை மூலம் காணியை விற்பனைச் செய்தவர், புளுகொஹொத்தென்னை எனும் ஊரில் வசித்த பிரிஅடி வீட்டு மீராநெய்நார் பிள்ளை ஆவார். இது போன்ற விகாரகம காணி உறுதிகளை இப் பகுதியில் காணக்கூடியதாக உள்ளன. அத்துடன், குறித்த இப்பரம்பரைப்பெயர் பரவலாக இப்பகுதியில் பாவனையில் உள்ளது எனலாம். சிலர் இதன் சொற்பிரயோகத்தை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியுள்ளனர். பீலிக்கரை ஆதம்பின்ளை மகன் இகமா லெப்பை(1871) என ஒருவர் அதனை பிரயோகித்துள்ளார்.31)
அஸ்கிரிய அலுத் விகாரைக்கு உரித்தான நிலங்களை அக்குறனை வாசிகள் பெற்ற குறிப்புக்கள் 04.11.1870 சட்டபரவணி விகார காணிகள் பதிவிலும் காணக்கூடியதாக உள்ளன. பிஹிலிதெனியே கெதர நூறும்மா (1872) எனும் முஸ்லிம் மங்கை இவ்விகாரையின் காணியில் ஒரு பங்கைப் பெறுகிறார். இது முஸ்லிம் பெண்களுக்கும், ஆண்களைப் போன்றே சிங்கள மொழியிலான வம்சாவளிப் பெயர்கள் இருந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இங்கே பிஹிலிதெனியே என்பது முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த ஒரு கிராமத்தைக் குறிப்பதாகும். இக்காணியின் ஏனைய பங்குகளை கலகம கெதர செல்மா புள்ளே என்பவரும் முஹந்திரமலாகே கெதர மஹம்மதுலெப்பை என்பவரும் பெற்றுள்ளனர்.(32) இங்கே குறிப்பிடப்படும் கலகம கெதர' என்னும் வம்சாவளிப் பெயர் மிகப் பழமையானதாகும். கண்டி இராச்சியத்தின் திசாவணிகளில் தமன்கடுவையில் 1815 இல் திசாவையாக கலகம திசாவ’ என்பவர் அதிகாரத்திலிருந்தார். இவ்வம்சாவளிப் பெயரிலும், சிங்களவர்கள்
73
Page 45
சூட்டிக் கொண்டுள்ளதைப் போன்றே முஸ்லிம்களுக்கும் இடப்பட்டுள்ளது. இதேபோன்று கலகம அஹமது லெப்பை ரகுமத் நாச்சியா (1872) என்னும் முஸ்லிம் பெண்மணி அஸ்கிரிய விகாரைக்கு உரித்தான தொடன் கொல்ல வத்த என்ற நிலத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளார். இவை “ எனுதென’ சேவைப் பங்குக்குரிய நிலங்களாகையால், இராஜகாரியத்திற்குப் பதிலாக கருவாட்டு கூறியும், வெற்றிலை 40தும், தலைக்கு ஒரு சிலினுமாக செலுத்தினார்கள்.
அக்குறனையில் வசித்த முதுகொகோ தெணிய வீட்டு சேகுலெப்பை அலியுதுமாபிள்ளை மகள் கதிஜா நாச்சியா எனும் பெண்மணி, கண்டி அஸ்கிரிய விகாரைக்கு இராசகாரியம் செய்து ஆட்சி பெற்று வரும் ஒரு நிலத்தை விற்பனைச் செய்த உறுதியொன்று 1891ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது.33) இது இப் பெண்மணியின் தகப்பன் வழியாக வந்தடைந்த ஒரு பரவணி நிலமாகும். இந்த வம்சாவளிப் பெயர் இவரது தகப்பனாருக்கும் இருப்பதை ஒரு காணி உறுதியில் காணமுடிகிறது (நொIA.L.முஹம்மதுலெப்பை உறுதி இல. 64 - 15.03.1871) இந்த வம்சாவளிப் பெயர் அக்குறணைப் பகுதியில் வழக்கில் உள்ள ஒரு பெயராகும்.
அஸ்கிரிய விகாரையுடன் மிகப் பழமையான காலந்தொட்டே முஸ்லிம்களுக்கு தொடர்பு இருந்துள்ளதாக கூற ஏது உண்டு. கி. பி. 1312 இல் பண்டித மகா பராக்கிரபாகு மன்னனால் இவ் விகாரைக்கு கண்டி மாப்பனாவத்துரை என்ற நகர் எல்லைக்குட்பட்ட காணிகள் புனித பூமியாக அளிக்கப்பட்டன. அதன் எல்லைக்குள் வசித்தவர்களது விபரங்கள் கையோலைச் சுவடியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கொன்பத்தன் என்ற குலத்தினர் பற்றியும் பொறிக்கப்பட்டுள்ளது.34) கொன்பத்த என்னும் வரிச் செலுத்தியோரில் முஸ்லிம்களும் அடங்கினர் என சில நூல்கள் குறிப்பிடுகின்றன.
அத்தோடு, மிகப்பழமையான வம்சாவளிகள் எனக் கருதும் பெயர்களைக் கொண்ட சிலரும் இவ்விகாரைக் காணிகளைப் பெற்றுள் ளார்கள். அதில், அ) முதியன்சேலாகே கெதர மொஹம்மது லெப்பை ஆ) கொதகே நயிதேலாகே உமருலெப்பை இ) அபூபக்கர் லெப்பை வெதரால இவர்களுக்கு வயல், வீட்டுத்தோட்டம் என்பன பமுனுபொல என்னும் இடத்தில் கிடைத்தன. மரக்கறிவகைகளையும், வருடத்திற்கு இரண்டு சிலினும், 40 வெற்றிலையும் இதற்காக இவர்கள் வழங்கினார்கள்.(35) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதியன்சே, நயிதே, வெதரால என்பன இவர்களது குலவகையைக் குறிக்கும் சிறப்புப் பெயர்களாகும்.
74
நயிதே என்னும் கெளரவப் பெயருடைய பொல்வத்தே நயிதேலா கெதர சல்கா உம்மா என்னும் முஸ்லிம் பெண்மணிக்கு கனேகொட தேவாலயத்தின் நிலமொன்று கனேகொட கிராமத்தில் கிடைத்தது. இதற்காக இப்பெண்மணி வருடத்திற்கொரு தடவை தேவாலயத்திற்கு 8 போத்தல் எண்ணெய், 8 கொத்து அரிசி கொடுத்ததுடன் புது வருட வைபவத்திற்கு ஒரு கருவாட்டுக் கூறியும் செலுத்தி வந்தார். பெண்கள் ஏனைய வரிகளில் நின்றும் விலக்களிக் கப்பட்டவர்களாக இருந்தார்கள். இத் தேவாலய நிலம் ‘எனுதெனுபங்குக்குரியதாகும்.(36) ஆகையால் தமது பரம்பரை உரிமையில் மாத்திரமின்றி பெண்களுக்கு என வழங்கப்பட்ட விகாரகம, தேவாலயகம நிலப் பங்குகளையும், முஸ்லிம் பெண்கள் பெற்றுள்ளமையை இவை காட்டுகின்றன.
உடுநுவர மெதபலாத்தையில் பிரசித்தம் பெற்ற ‘அம்பெக்கே தேவாலயம் உள்ளது. இதற்குச் சொந்தமான பதுாவன் கொடை கிராமத்து வயற்காணிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் இந்த தேவாலயத்தில் முக்கிய பொறுப்புக்களையும் முஸ்லிம்கள் வகித்துள்ளார்கள். தொடந்தெனியே அகமது லெப்பை என்னும் பெயரைக் கொண்டவருக்கு ‘தொடந்தெனியே கங்வசம்' பங்குக்குரிய தேவாலய வயற்காணி கொடுக்கப்பட்டிருந்தது.[37) இந்நெற்காணியின் பெயரும் ‘தொடந்தெனியே கும்புற என்பதாகும். இவர் இந்த தேவாலயத்தில் மிகவும் மதிக்கத்தக்கவராக இருந்து, பல முக்கிய கடமைகளை ஆற்றியுள்ளார். வருடாவருடம் நடைபெறும் நான்கு பண்டிகை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபற்றினார். பெரஹரா காலத்தில் 15 நாட்கள் இவர் தேவாலயத்திற்கு வருகை தந்து, அதில் முக்கியஸ்தராகக் கலந்து கொண்டார். இவருக்கு அளிக்கப்பட்டிருந்த நெற்காணியின் ஆட்சிக்காக, மேலும் சில இராசகாரியங்களையும் இவர் செய்துள்ளார். ஒடு வேயப்பட்டிருந்த இவ்வாலயத்தின் கூரை வேலைகளுக்கான ஒடு, ரீப்பை போன்ற பொருட்களையும், வருடத்துக்கொரு தடவை பெரஹரவிற்காக ஒலைகள் பத்தையும் வழங்கினார். பஸ்நாயக்க நிலமை அவர்கள் அம்பெக்கவுக்கு விஜயம் மேற்கொள்ளும் போது, அவருடன் சேர்ந்து கருமாற்றியும் வந்துள்ளார். அதனால் இவர் தேவாலயத்தின் ஒரு முக்கியஸ்தராகக் கணிக்கப்பட்டிருந்தார். இத்தேவாலயத்தில் ‘தெல் தென பங்குக்குரிய காணிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டி ருந்தன. தேவாலயத்திற்குத் தேவைப்படும் எண்ணெயின் ஒரு பகுதியை இதற்காக இவர்கள் செலுத்தி வந்தார்கள்.
இதே தேவாலயத்தில், தொடந்தெனிய உதுமா லெப்பை என்பவருக்கு ‘அம்பெக்க எனனும் இடத்தில் தேவாலயத்திற்கு
75
Page 46
உரித்தான வயல் நிலமொன்று தலபத் பங்குக்குரிய கொடையாக வழங்கப்பட்டிருந்தது. இவ்வயலை தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட ஒரு வயலாகக் கொள்ளலாம். இவர் இப்பங்குக்குரிய கடமைகள் சிலவற்றை வகித்ததுடன் அம்பெக்க தேவாலயத்தில் இரவு காவல் சேவையிலும் ஈடுபட்டார்.38 தேவாலயம், விகாரை என்பவற்றைக் காவல் புரிதல் அக்காலத்தில் மிக முக்கிய கருமமாக மதிக்கப்பட்டது. இதற்காக ‘அத்தப்பத்து பங்கு” காணிகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த விசுவாசம் காரணமாக இப்பொறுப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது எனலாம்.
வறபுகளில்தலாவ என்பது பஸ்பாகையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இங்கு தற்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் வாழ்ந்த ஹபுகஸ்தலாவெ கெதர இஸ்மா லெப்பை என்னும் பரம்பரைப் பெயரை உடைய ஒருவருக்கு ஹங்குரன்கெத்த மகா தேவாலயத்தின் நிலபங்கு வயல் பரவணி யாக வழங்கப்பட்டிருந்தது. இவ்வயல் உலப்பனை என்னும் கிராமத்தில் உள்ளது. தேவாலயத்திற்குரிய முத்தெட்டு வயல்களின் அறுவடை செய்யப்படும் மொத்த நெல்லையும் உலப்பனையில் இருக்கும் தேவாலயத்திற்குரிய அட்டுவைக்குக் கொண்டுசென்று ஒப்படைப்பது இவரது பணியாகும்.39) உலப்பனையில் வாழ்ந்த முஸ்லிம்களில் அனேகர் அரபி மொழியிலேயே கையொப்பம் இடுவோராக இருந்தார்கள்.
கேகாலை மாவட்டத்தில் மெதகொடையைச் சேர்ந்த, தொரவக நாத தேவாலயத்தின் காணிப்பங்குகளில் அனேகமானவற்றை அவ்வூர் முஸ்லிம்கள் பரவணியாகப் பெற்றிருந்தார்கள். அங்கு பிரசித்தமான வம்சாவளியான ‘கல்ஹிந்தபுரே" என்ற பரம்பரைப் பெயர் ஊர் வாசிகள் ஏராளமானோரின் பெயர்களின் முன்னால் இடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. எடுத்துக்காட்டாக, கல்ஹிந்தபுரே பாவாலெப்பை (1872) இவ்வாறு தேவாலயச் சேவையில் ஈடுபட்டவராவார். 39A) கேடயத்திற்குப் பதிலாக சாமரை துாக்குவது இவர்களது இராஜகாரியமாகும். ஒரு காலத்தில் இவ்வூர் முஸ்லிம்கள் படைச்சேவையில் ஈடுபட்டமைக்காக காணிகளைப் பெற்றுக் கொண்டமையால் இங்கே கேடயம்’ என்னும் யுத்த ஆயுதம் குறிப்பிடப்பட்டிருக்கலாம். பிற்காலத்தில், இச்சேவையின் அவசியம் இல்லாமல்போனதனால் சாமாரை துாக்கும் இராஜகாரியம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.
76
முஸ்லிம்களது பள்ளிவாசல்களுக்கு விகாரை தேவாலயச் சொத்துக்களிலிருந்து வழங்கப்பட்ட உதவிகள்.
முஸ்லிம்களின் குடியேற்றங்கள் அமைந்த இடங்களில் அவர்களுக்கென ஒரு பள்ளிவாயிலும் மையவாடியும் அமைந்திருப்பது ஒரு நியதியாக முற்காலம் முதல் இருந்து வந்துள்ளது. 1505ம் ஆண்டில், போர்த்துக்கேயர் இலங்கை மண்ணில் காலடி வைத்த தறுவாயில், கொழும்பில் ஒரு முஸ்லிம் பள்ளிவாயிலும், மையவாடியொன்றும் இருந்துள்ளது. (40) கந்தேதுவர என அழைக்கப்பட்ட கண்டிய இராச்சியத்தின் தலை நகரில், ஒரு முஸ்லிம் பள்ளிவாயில் இருந்ததாக ரொபட் நொக்ஸ் குறிப்பிடுகிறார். அத்துடன், இப்பள்ளிவாயிலுக்கு அனைத்துச் சுதந்திர பிரஜையும் காணிக்கையாக ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்பது கண்டியை அரசாண்ட முற்கால மன்னன் ஒருவனின் கட்டளையாக இருந்தது. (41) கண்டிய மன்னர்கள் முஸ்லிம்களது மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளித்ததோடு, அவர்களின் இறைவழிப்பாட்டு வணக்கங்களுக்காகவும் வசதிகளை செய்து கொடுத்திருந்தார்கள் என்பதனை இது காட்டுகிறது. இதே போன்று பெளத்த வழிபாட்டுத் தளங்களில் கண்டிய முஸ்லிம்கள் பெறுமதி வாய்ந்த கருமங்களை ஆற்றி வந்ததனால் பெளத்த குருமார்கள், பஸ்நாயக்க நிலமைமார்கள் முஸ்லிம்களின் மத வழிபாடுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொண்டார்கள்.
விகாரை, தேவாலயக் காணிகளில் பரவணிப் பங்குகளைப் பெற்று குடியேறிய முஸ்லிம்கள், அவ்விடங்களில் அவர்களது தொழுகைக்காக பள்ளிவாயில்களையும் அமைத்துக்கொண்டார்கள். பல ஊர்களில் விகாரகம, தேவாலகம நிலங்களிருந்தே இப்பள்ளிவாசல்களைப் பராமரிக்க உதவிகளும் பெளத்த மக்களால் வழங்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
கண்டி நகரில் புராண கவிகாரவீதியில் அழகிய கலை அம்சத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காம (கத்தரகம) தேவாலயம் காட்சி தருகிறது. இத்தேவாலயத்திற்குச் சொந்தமான, விசாலமான விஸ்தீரணமுள்ள வயல், வீட்டுத்தோட்ட, சேனைக்காணிகள் குருநாகலைப் பிரதேசத்தில் வேவுடக் கோரளையில் உள்ளன. இக்கோரளையில், பரகாதெனிய என்னும் கிராமத்து முஸ்லிம்களில் அனேகருக்கு இத்தேவாலயத்தின் காணிப்பங்குகள் வழங்கப் பட்டுள்ளன.
இங்கு வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல வித்தியாசமான வம்சாவளிப் பெயர் வழக்குகள் இருந்துள்ளதை இக்காணிகளின்
לל
Page 47
பரவணி உரிமை பெற்றவர்களின் பட்டியலில் இருந்து அறியக்கூடியன வையாக உள்ளன.
பொல்கொல்லே கெதர அபூபக்கர் புள்ளே என்பவருக்கும், இதே போன்ற வம்சப் பெயர் கொண்ட இன்னும் இருவருக்கும் பொல்கொல்லே கெதர பங்கு எனும் காணிப் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. வீரககண்டு விதானேலே கெதர அகமது புள்ளே, செல்மா புள்ளே என்னும் இருவருக்கும் ‘வீரககண்டு விதானேலே கெரவல் பங்குவ’ என்னும் சேவைப்பங்குக்குரிய காணிகள் கதரகம தேவாலயத்தினால் வழங்கப்பட்டுள்ளன. 16 அமுனம் விஸ்தீரனம் கொண்ட ‘கம்வசம’. ஊரின் பங்குகள் ‘கெரவல்பங்கு' என அழைக்கப்பட்டன.
இதே போன்று “மீரா நெயினா கலிகுரு வத்த கெரவல் பங்கு எனும் சேவைக்காணி, மீரா நெயினா கலின்கிராத்தர் பகிர் மிதீன் (ராவுத்தர் பக்கீர் மொஹிதீன்) என்பவருக்கு நன்கொடை செய்யப்பட்டது. (42) கண்டி கதரகம தேவாலயக் காணிகளின் பங்குகள் அதனைப் பெற்றவர்களது பெயருடன் தொடர்புபட்டவையாக உள்ளன. இதே போன்று, இத்தேவாலயத்துக்குரிய காணிகளில் பள்ளியே பங்கு' என அழைக்கப்பட்ட காணிப் பங்குகளும் உள்ளன. இவை இக்கிராமத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயிலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலமாகும். இந்த பள்ளியே பங்கு நிலத்தில் பள்ளிவாயிலுக்காக சுமார் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இக்காணியைப்பற்றி 1872ம் வருட தேவாலய பரவணிக் காணிப் பதிவில் இது மரக்கல பள்ளியின ஆட்சியின் கீழ் உள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (43)
இப்பள்ளிவாயிலைப் பராமரிப்பதற்கான செலவையும் தேவாலயக் காணியில் இருந்தே காணிக்கையாக அறவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிவாயிலின் பொறுப்பாளியான லெப்பை(கதீப்)யின் வருமானத்திற்காக பள்ளியெ குருனனேஹேலே பங்குவ' என்னும் சேவைக் காணியில் பல பங்குகள் பரவணியாக வழங்கப்பட்டு, அதிலிருந்து பெறப்பட்ட காணிக்கைத் தொகை பள்ளிவாயிலின் லெப்பைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலமொன்று அலி உதுமா புள்ளே பாத்துமா என்பவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இதற்காக ஒவ்வொரு வருடமும் காணிக்கைத் தொகையாக எட்டு பெண்ச பணத்தை வழங்க வேண்டும் என பணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பள்ளியே குருனனேஹேலே சேவைப்பங்கு க்குரிய எட்டு பங்கு நிலங்கள் பலருக்கு பரவணியாக வழங்கப்பட்டு காணிக்கை பெறப்பட்டுள்ளன. இத்தொகை கதீபிற்காக ஒதுக்கப்பட்டது. பள்ளிவாயிலுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு நெற்காணியும்
78
இதில் அடங்கும். அது பள்ளிய காவ வயல் (பள்ளியருகில் உள்ள வயல்) எனக் குறிப்பிடப்படுகின்றது.(44)
இந்தக் பள்ளிவாயிலுக்கருகில் வாழ்ந்த, இக்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலரது வம்சாவளிப் பெயரிலும் பள்ளிவாயில் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. அபூபக்கர் லெப்பை பள்ளி அடியன் மரியன் பீபி, பள்ளியே அடியன் புள்ளே ஆராட்ச்ச, என்பன பரகாதெனிய முஸ்லிம்கள் தங்கள் பெயருடன் சூட்டிக்கொண்ட சிறப்பு நாமங்களாகும். (45)
முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் கொண்டிருந்த செளஜன்ய உறவின் காரணத்தால், பெளத்தமத வழிபாடுகளுக்கு வசதி செய்து கொடுக்கும் முகமாக விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்கும் பூஜை செய்யப்ட்ட நிலபுலன்களின் வருவாய்களை, முஸ்லிம்களது பள்ளிவாயில்களுக்குச் செலவு செய்தார்கள். இவ்வாறான நடை முறை சிங்களத்தில் ஒ(த்)து. (இ)ை என வழங்கப்பட்டது. (பி.கு) ஒ(த்)து என்ற சேவைக்காக விகாரை, தேவாலயங்களால் ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒ(த்)து பங்கு' என அழைக்கப்பட்டன.
குருநாகலையில் மாதுரே கோரளையில் ரிதீகம என்ற ஊரில், மிகப்பழைமை வாய்ந்த ரிதீவிகாரை அமைந்துள்ளது. இவ்விகாரை ஆமண்டகாமினி (கி.பி.19-29) என்னும் மன்னன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் துட்டகைமுனு மன்னனின் (கி.பி.161-137) காலத்தில் ரிதிவிகாரைப் பிரதேசம் அழகுபடுத்தப்பட்டது எனவும் ஒரு கூற்று நிலவுகிறது. (46)
பெளத்தர்களின் வரலாற்றுப் புகழ் மிக்க இவ்விகாரைக்குச் சொந்தமான நிலத்தில் கிடைத்த வருமானத்தை றம்புக்கத்தன என்னும் கிராமத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களது பள்ளிவாயிலொன்றின் லெப்பையின்(கதீப்) செலவுக்காக வழங்கப்பட்டு வந்தமை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இவ்விகாரையின் ஒ(த்)து சேவைப் பங்கு காணி இதற்காக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
பி.கு:- கடலாதெனிய (செல்லிபி)EZIV - 12, 32 இன்படி 14ம் நுாற்றாண்டில் ஒ(த்)து என்ற சொல் முதற்றடவையாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். பிரதானியொருவர் காணியொன்றின் பிரயோசனம் பெரும் உரிமையைத் தன்னுடைய சொந்தக்காரர் ஒருவருக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அதில் கிடைக்கும் வருவாயை அழுத் விகாரைக்கு(அஸ்கிரிய விகாரை) பூஜை செய்யுமாறு குறிப்பிட்டிருந்தார். இங்கு ஒ(த்)து எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.(ec8ை8 800 ஒலஇ இன்கில கல apex58 -H. W. කොඩිරීඩාංටන් - 48ළි)
79
Page 48
ரிதீகம கிராமத்தில் 'பள்ளிய தெத்கே ஒ(த்)து பங்கு' என்னும் சேவைக்காணி நிலமொன்று சிங்களவரான பள்ளிய தெத்கெதர உக்குமெனிக்கா என்பவரின் மூதாதையர்களில் இருந்தே ஆட்சி செலுத்தப்பட்டு வருகிறது. இது முஸ்லிம் பள்ளிவாயிலின் வருமானத்திற்காக ரிதீ விகாரையினால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒரு நிலமாகவும் இருக்கலாம்.(47) ரம்புக்கத்தன என்னும் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் ரிதீவிஹாரையில் பெளத்த பிக்குமார்களுடனும் விகாரைப் பிரதானிகளுடனும் பல சகாப்தங்களாக உள்ளன்பு வைத்து நம்பிக்கை மிக்கோராக நடந்து வந்துள்ளார்கள். அதனால், இவர்கள் ‘அடப்பயலா’ என்னும் சிறப்பு நாமம் கொண்டு அழைக்கப்பெற்றார்கள். இஹலகம என்னும் ஊரில் உள்ள அடப்பயாகே பங்குவ என்ற சேவைக்காணி றம்புகந்தன ஊரைச் சேர்ந்த உமர்லெப்பை வெதகுருனனேஹே என்பவருக்கு ரிதி விகாரையினால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில், நெல்வயல் இரண்டு ஏக்கர், ஓர் ஏக்கர் தோட்டம், சேனை சுமார் ஐந்து ஏக்கர் என்பன அடங்கி இருந்தன.(48)
இது போன்று இலுப்பெலெஸ்ஸ என்னும் கிராமத்தில் ரிதிவிகாரைக்குரிய தோட்டமொன்று தெலபுகொல்லே மீராலெப்பை என்னும் வம்சாவளிப் பெயர் கொண்ட ஒருவருக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. 49
கண்டிய இராச்சியத்தில் மன்னராட்சி அஸ்தமனமாகி, ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய ஆரம்ப காலப்பகுதியில், முஸ்லிம்கள் பல சலுகைகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து அடைந்து கொண்டார்கள். அதில் முஸ்லிம்களைக் கண்டிய பிரதானிகளின் அதிகாரங்களில் நின்றும் விடுவித்தல் தொடர்பான அறிக்கையொன்றில் விகார, தேவாலயம் தொடர்பாக, ஆணையாளர் சேர் ஜோன் டொய்லி (27.10.1818ல்) அவர்கள் குறிப்டும்போது, முஸ்லிம் மக்கள் விசேடமாக கண்டிய இராச்சியத்தில் விகாரை, தேவாலய பிரதானிகளின் ஆணைக்கு அடிபணிந்து, தானியம் அல்லது உப்பு போன்றவற்றை அந்தந்த இடங்களுக்குக் கொண்டு போவது போன்ற சேவைகளை விகாரை, தேவாலயத்திற்காக செய்வது கண்டிய அரச கட்டளைப்படி கட்டுப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்கிறார். (50)
கண்டியைக் கைப்பற்றியதன் பின்னர், ஆங்கிலேயர் மிகத் துரிதமாக போக்குவரத்துக்கான பாதைகளை அமைக்கும் வேலைகளை மேற்கொண்டார்கள். இது ஆணையாளர் கோல்புறுக்கின் காலத்தில் நடந்தது. அவ்வேலைகளுக்காக விகாரை, தேவாலய நிலங்களை அநுபவித்து வரும் பரவணி உரிமையாளர்கள்
80
பயன்படுத்தப்பட்டார்கள். அதனால், விகாரை தேவாலய இராஜகாரியங்களை மேற்கொள்வதில் அவர்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்ததை ஆணையாளர் உணர்ந்திருந்தார். அதனால், விகாரை தேவாலயத்திற்கு ஆற்றும் ஊழியத்திற்காக, பணத்தைச் செலுத்தும் வசதியைச் செய்து தருமாறு விவசாயிகளிடமிருந்து ஒரு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, கண்டிய இராச்சியத்தில் பெருமையோடு வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு இந்த வரப்பிரசாதம் கிடைக்கப்பெற்றதாக கண்டிய இராச்சியத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளரது அறிக்கைக் கூறுகிறது.(51)
04.11.1870 ஆம் திகதியிடப்பட்ட கட்டளைச் சட்டத்தின் பிரமானங்களின் பிரகாரம், விகாரை தேவாலயக் காணிகளில் ஆட்சி பெற்று வருபவர்கள், குறிப்பிட்ட ஊழியத்திற்குப் பகராக செலுத்தப்பட வேண்டிய பணத்தின் தொகை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விகாரகம, தேவாலயகம சொத்துக்களில், இன்றும் முஸ்லிம்கள் பரம்பரைப் பரம்பரையாக ஆட்சி செலுத்தி வருகிறார்கள். இதற்கான இராஜகாரியத்திற்குப் பதிலாக, அவர்கள் குறிப்பிடப்படடுள்ள ஒரு தொகையை செலுத்தி; தமது மூதாதையர் சிங்கள மக்களோடு கொண்டிருந்த சமூக தொடர்பிற்கு சான்று பகர்கிறார்கள் எனலாம்.
REPORT OF THE TEMPLE LAND COM. ON THE PROGRESS AND RE SULTS OF THE COM. (1857-1858)P25-51 2. SL/NASERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P.1708 a கண்டி மாவட்ட நீதிமன்றம் வழக்கு இல. L 15093 (1935) காணி உறுதி 3032. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KEGALLA. P.229 5. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P. 1712 6. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.540 7. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P2262 8. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY 9. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KEGALLA. P353 10. நொIAL.M. காசீம் காணி உறுதி இல. 173 (17ஆடி 1877) 11. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P. 169 12. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P/163, 165 13. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P. 154 14. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P629 15. SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KRUNAGALA. P. 1721 16. SL/NA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.631 17. SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.643 18. SLVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P641
Page 49
9.
20. 2. 22. 23. 24. 25. 26.
27.
30.
31.
32. 33. 34. 35. 36. 37. 38. 39.
நொA.L.M. முஹம்மது லெப்பை(தமிழ்) Vol.2/(1872-1873) உறுதி இல. 329 பதிவு 11.6.1872 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY P647 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P649 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.751 கண்டி மாவட்ட நீதிமன்றம் வழக்கு இல. L 176 (17.11.1938) கண்டி மாவட்ட நீதிமன்றம் வழக்கு இல. L 176 SLVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.363 A GAZETTEER OF THE CENTRAL PROVINCE OF CEYLON (VOL.11) A. C. LAWRIE (D.J.KANDY) 1898 - P917-918 SL/NASERVICE TENURES REGISTER-TEMANKADUWAP-(1-35), 41/ 733 (තමන්ක ඩුව 1815-1900 ආචාර්ය උක්කුබ-ඩා ேைகூkை) என்ற புத்தகத்திலிருந்து SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.540 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA. P.1721 கண்டி மாவட்ட நீதிமன்றம் பிரிவிடல் வழக்கு இலP 8497 காணி உறுதி இல. 2720 (12.10.1887) நொIAL. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி Vol. (1871-1872) இல. 40 30.01187 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.524 கண்டி மாவட்ட நீதிமன்றம் பிரிவிடல் வழக்கிலக்கம் P. 6478 உறுதி இல61 අස්ගිරිය තල්පත පි. 6 සහ 7 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P. 533 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.788, SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.251 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.477 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KANDY. P.788
39 A. SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KEGALLA. P396
40. 41. 42. 43. 44. 45.
46. 47.
48.
49.
50. 5.
ලංකා ඉතිහාසය - S. G. පෙරේරා පියතුමා (1948) 17 පි escoe 80 (Robert Knox 1681) 1959 260 8. SLIVNA SERVICE TENURES REGISTOR(SIN. 1872). KURUNAGALA P926 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA. P947 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALAP944 SLJNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P926(6)
අපේ ජනකලා 113 පිටුව SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P2.161 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA.
P.2262 SLIVNA SERVICE TENURES REGISTOR (SIN. 1872). KURUNAGALA. P.2220 උඩරට මහා කැරැල්ල්,- II වන කාණඩය - තෙන්නකෝන් විමලානන්ද 307 පිටුව රජය, ආගම හා අධාපනය - ජෝන් ඩොයිලි (G.A.2/23 වන්නේගෙදර උන්නාන්සේට විරුද්ධව පැවැරු නඩුව 14. 05. 1817) 117 පිටුව (ම-ගල ඉලංගසි-හ)
<-CXXXXXXX=o
82
அத்தியாயம் - V சிங்களவர்களது குல அமைப்பில் முஸ்லிம்களது பரம்பரைப் பெயர்கள்
குலம் பற்றி சிங்கள - இஸ்லாமிய கருத்துக்கள் m
மனிதகுலம் பற்றிக் குறிப்பிடும் போது, தெய்வீக நிலையில்
இக்குல அமைப்பு தோன்றியதாக புராதன சிங்கள ஏடுகள் குறிப்பிடுகின்றன.
தெய்வத்தன்மை நீங்கி, மனித இயல்பை அடையப்பெற்ற சந்தர்ப்பத்தை மனதைத் தொடும் சிங்களக் காவியமான “ஜனவங்யை விபரிக்கும் போது, “உணவை உண்ட தருணத்தில் கசிவுத் தன்மையுடைய முன்பின் துவாரங்கள் ஆணுறுப்பு, பெண்ணின் யோனி, ஆணுமற்ற பெண்ணுமற்ற அலியும் தோன்றின. அவர்கள் இவ்வாறான மனிதனின் குணநலன்கள் அமையப்பெற்று, மனித இயல்பைப் பெற்றனர். இம்மானுட இயல்பை அடக்கியாளும் வல்லமையற்றுப் போனதினால், அவர்கள் கவர்க்கலோகத்து வசிப்பிடத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டதுடன், மனித உலகிலும் குழப்பங்களும், சச்சரவுகளும், கலகங்களும் தோன்றுவதற்கு சந்தர்ப்பமாகியது என மனித குலம் தோன்றியதன் பூர்வீகம் பற்றிக் குறிப்பிடுகின்றது.(1)
இஸ்லாமியரது கூற்றின்படி ஆதம் (அலை), ஹவ்வா(அலை) ஆகிய இருவரும் கவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, உலகிற்குத் தூக்கி எறியப்பட்டதிலிருந்து மனிதகுலம் பூமியில் உண்டானது. சுவர்க்கலோகத்தில் இவ்விருவரும் பேரின்பமாாக வாழும் சந்தர்ப்பத்தில்ர்ப்பத்தில், இறைவனால் விலக்கப்பட்டக் கனியைப் புசித்ததினால் முதற்
அணிந்திருந்த சுவனத்து ஆடைகள் அவர்களது உடலை விட்டு அகன்றது. இறைவனின் அருட்கொடையினால் அவர்களுக்கு.
83
Page 50
அளிக்கப்பட்டிருந்த சுவனத்து வாழ்வு பறிக்கப்பட்டு, உலவிற்கு வெளியேற்றப்பட்டார்கள். அத்துடன் மனிதர்கள் பூமியில் குழப்பம் செய்து இரத்தம் சிந்தக் கூடிய சந்ததி எனவும் புனித அல் குர்ஆனில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சிங்கள - இஸ்லாமியரிடையே மனிதகுலத் தோற்றம் பற்றி அண்மித்த கருத்து நிலவுவதை இதிலிருந்து தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அவ்வாறே, குலம் கோத்திரம் தொடர்பாகவும் பெளத்த இஸ்லாமிய கோட்பாடுகளில் ஒருமித்த நோக்கு இருப்பதைக் காணலாம். இஸ்லாமியரது வேத நூலான புனித மிகு அல் குர்ஆனில், குலம் கோத்திரம் பற்றி பின்வருமாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் சிருஷ்டித்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களின் ஒருவர் மற்றவரை விட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை. (எனினும்), உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கின்றானோ, அவன்தான் அல்லாஹற்விடத்தில் நிச்சயமாக கண்ணியவான்” (சூரத்து காஃப் - பாகம் 26:13) இங்கு ‘கிளை என்பது குலத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். மனிதர்கள் உயர்வு, தாழ்வு காட்டிக் கொள்வதற்காக குலங்கள் கோத்திரங்கள் அமையவில்லை என்னும் இஸ்லாமியக் கோட்பாட்டை இவ்வாக்கியங்கள் வலியுறுத்துகின்றன. (பி. கு.) அதற்கு விளக்கம் தருவது போன்று, முஹம்மத் நபி (ஸல்) அவர்களது ஒரு வரலாற்றுப் பெருமை மிக்க சொற்பொழிவு அமைந்திருந்தது. இதனை அவர்கள் கி. பி. 632 இல் அரபிகள் மத்தியில் கூறினார்கள். "அரபிகள் அஜமிகளை (அரபிகள் அல்லாதவர்கள்) விட உயர்ந்தவர்களுமல்லர். அஜமிகள் அரபிகளை விடவும் உயர்ந்தவர்களுமல்லர். உங்கள் எல்லோரின் உரிமைகளும் ஒரே விதமானவையே. அதில் உயர்வு தாழ்வு கிடையாது. உங்கள் செயல்களில் தூய்மையான
பி.கு: நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல் குர்ஆனின் வசனங்கள் ஏதேனும் காரணங்களை அடிப்படையாகவோ, சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறோ இறக்கப்பட்டு வந்தன. இவ்வத்தியாயம் இறக்கப்படும் போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மக்காவை வெற்றி கொண்ட தினம் நாயகத் தோழர் பிலால் (ரழி) அவர்களை அழைத்து, புனித கட்பா என்னும் முஸ்லிம்களின் பிரதான பள்ளிவாயிலில் 'பாங்கு (தொழுகைக்கு மக்களை அழைப்பது) சொல்லும் படி முஹம்மத் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்த பிலால் (ரழி) அவர்கள் கறுப்பராகவும், ஓர் அடிமையாகவும், ஏழையாகவும் இருந்தார்கள். இத்தகைய உயர்வான நாளில் இந்த மேலான காரியத்தை செய்வதற்கு நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இவரைத் தவிர வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்தக் கறுப்பு காகம் தான் கிடைத்ததா? என பலவாறாக அவரது ஏழ்மை நிலையையும், நிறத்தையும் சுட்டிக்காட்டி மக்காவாசிகளில் முஸ்லிம் அல்லாதோர் கதைக்கத் தொடங்கினார்கள். வம்சங்களைக் கொண்டு பெருமை பாராட்டிக் கொள்வதை எச்சரிக்கவே, இந்த சந்தர்ப்பத்தில் இவ்வசனங்கள் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டன. (ஆதாரம் - தப்ஸிர் ஸாவி)
84
எண்ணங்களை நோக்கங்களாகக் கொள்ளுங்கள்.” என அச்சொற்பொழிவில் குறிப்பிடுகிறார்கள்.
புத்த சாசனத்திலும் குல, வம்சப் பிரிவுகளைக் காட்டி, உயர்வு தாழ்வு காட்டப்படுவது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிறப்பினால் ஒருவர் உயர்வு தாழ்வு அடைய முடியாது; எல்லோரும் பெண்ணொருத்தியின் வயிற்றில் இருந்து பிறந்தவர்களே என்பது, பெளத்த மதத்தினரின் கொள்கையாகும். பெளத்த சித்தாந்தங்களில் அவர்களின் வேத நூல்கள் முதன்மை படுத்திக் கூறுவது "ஜாதிமதோ, கோத்தமதோ” என்னும் கோட்பாட்டையே. அதாவது, மனிதர்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம், சீனர் என்னும் வகைகளில் பிரிந்து காணப்படுகிறார்கள். இது 'சாதி ஆகும். ஒவ்வொரு சாதிக்குள்ளும் மேலும் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்துள்ளார்கள். அது “கோத்திரம் என சொல்லப்படும். புத்தர் இவ்வாறு சாதி, குலம், கோத்திரம் அடிப்படையாக மனிதர்களை உயர்வு தாழ்வு காட்டுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என பெளத்த வேத நூல்களின் உறுதியான கூற்றாகும். (2)
නජවිචා වසගෙලඹී හොති නජවිචා හොඬ බ්රහ්මයෝණ) කමිමනා වසගෙලර් හොති කමිමනා හොති බුහ්මනෝණා
(වසල සුන්ත) ‘வசல சுன்த' என்னும் பெளத்தச் சித்தாந்த கிரந்தத்தில் மேலே கூறப்பட்ட வேத வாக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கருத்தாவது, சாதியினால் ‘வசலயோ’ என்போர் இழிவானவர்களும் அல்லர். சாதியினால் ‘பிராமணர்கள்’ என்போர் உயர்வானவர்களும் அல்லர். அவரவர்களின் செயல்களினாலேயே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களா கின்றனர் என்பதாகும். கெளதம சாக்கிய முனினந்தர வஹன்சே என்பவர் மனித குலத்தைத் தவிர வேறு ஒரு குலம் இல்லை எனக் குறிப்பிடுகிறார். 13
என்றாலும்,
ஆதிகாலம் தொட்டே குலம் கோத்திர அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கம் சிங்களவரிடையே இருந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. குலம், கோத்திரம், வம்சம் என்னும் பேதங்கள் சிங்கள சமூக அமைப்பில் வேரூன்றி இருந்ததெனவே குறிப்பிடலாம்.
இச்சமூகப்படி நிலை எந்த அளவில் அவர்களிடையே ஊடுருவி இருந்ததென்றால், குலக் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்களினால் அக்குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க மரண தண்டனை
85
Page 51
கூட வழங்கினார்கள். புராண சட்டங்களில் இதுபோன்ற தண்டனைகள் நியாய பூர்வமானதாகக் கணிக்கப்பட்டன. ஒரு சாதியார் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆட்பட்டால் 'மாராபை' என்ற நீதிமன்றங்கள் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன. பிற்காலத்தில் குலம், வகுப்பு விவகாரங்கள் கண்டிய இராச்சியத்தில் ரட்டசபாக்களின் மூலம் விசாரணை செய்யப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியிலும் குலநிந்தனையைக் குற்றமெனச் சட்டத்திற்குட்படுத்தி இருந்தார்கள். குலம், சாதி, வம்சம் என்பன மிகப்பழமையான காலம் தொட்டே உண்டானது; அது மாற்றமுடியாத தலைவிதி என்னும் விசுவாசம் மனதில் குடிகொண்டிருந்தமையால், தம்மை விட உயர் குலத்தாருக்குக் கண்ணியமளித்து தலை சாய்த்தல், தமக்களிக்கப்பட்ட கடமையென இழிந்த குலத்தவர் சுயமாகவே ஏற்றுக்கொள்ளலாயினர். குல அமைப்பு என்பது உறுதியாகவும் சட்டரீதியாகவும் இருந்ததால், அதனை விமர்சிக்க முடியாத தன்ை
காணப்பட்டது.
சிங்கள குல அமைப்பும் முஸ்லிம்களின் கலப்பும்
வறயேக்கெல் என்பவரின் கூற்றுப்படி, மனிதர்கள் 12 வகைப்பட்டவர்களாக பிரிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒரு பிரிவினர் திராவிடர்கள் ஆவர். இவர்களில் தக்கானர்களும், சிங்களவர்களும் அடங்குவர். திராவிடப் பிரிவினைச் சார்ந்தவர்கள் ஈழம் தொடங்கி கங்கையாறு வரை இருந்தனர். அத்துடன் திராவிடர் குடும்பத்துக்குரிய பண்டைய பெயர் தமிழ்க் என்பதாகும்.4) சிங்களவர்கள் புராதன காலம் தொட்டே தென்னிந்திய தமிழர்களுடன் இடைவிடாத நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால், சிங்களவர் களிடையே தமிழர்களிடம் காணப்பட்ட குல அமைப்பு முறை ஊடுருவிக்காணப்பட்டது. இதன் காரணமாக, தமிழர்களிடம் காணப்பட்டதைப் போன்றே விவசாயிகளுக்கு முதன்மை இடம் அளிக்கும் வழக்கம் சிங்களவர்களிடமும் காணப்பட்டது. பிராமண அமைப்புடன் தொடர்புபட்டுக் காணப்பட்ட தமிழர்களின் குல அமைப்பில் பிராமணக் குலம் உயர்வானதாகக் கருதப்பட்டது. அதனால் இலங்கையிலும் குல முறையில் பமுன (பிராமண), அரச, கொவி என்றவாறு சிங்களவர்களிடையே குலப்படி நிலை அமைந்திருந்தது. பிற்காலத்தில் வணிக குலமும் இதனுடன் இணைந்தது. ஆனால், அது குறிப்பிடும் அளவில் இங்கு காணப்படவில்லை. பிராமணர்கள் சமய நெறியைப் பின்பற்றுவதில் சைவர்களாகவோ, வைணவர்களா கவோ இருந்தனர். அதனால், இந்த பெளத்த கோட்பாடுகளைப் பிரதானமாகக் கொண்ட இராச்சியத்தில் பிராமணர்களுக்கு
86
இடமளிக்கப்படவில்லை. அடுத்து, அரசகுலம் என்பதும் அரச குடும்பத்தினரோடு மாத்தரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததனால் குல அமைப்பைப் பற்றி கருதும் போது கொவிகுலம்’ (வெள்ளாலக்குலம்) சிங்களவர்களிடையே இன்று வரை உயர் குலமாகக் கருதப்படுகிறது. (5) கண்டிய யுகத்தில் கொவி வம்சம் உத்தமமான நிலையில் வைத்து மதிக்கப்பட்டதுடன், அவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் கருதப்பட்டார்கள். சமுதாயத்தில் எல்லா வகுப்பினரும் கண்டிய இராச்சியத்தில் விவசாயத்தில் ஈடுபாடு காட்டினார்கள்; அதனைப் புனித மிக்க, உயர்ந்த உஊதியமாகவும் மதித்தார்கள். அதனால் சனத்தொகையில் அதிகமான பகுதியினர் கொவி வம்சத்தினராகவே இருந்தனர்.
கண்டி இராச்சியத்தில் குடியேறி வாழ்ந்த முஸ்லிம்களும்
விவசாயத்தைப் பிரதானமாக மதித்தனர். மன்னன் வழங்கிய நிலங்களிலும், மற்றும் வழிகளில் கிடைத்த இடங்களிலும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபடலானார்கள். முஸ்லிம்கள் வாழும் அனேக கிராமங்கள் விவசாயக் கிராமங்களாக இருந்துள்ளமை அதற்குச் சான்றாகும். இதனால், முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் அன்யோன்யமாகப் பழகி சமூக உறவுகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தன. இங்கு குடியேறிய முஸ்லிம்கள், சிங்கள கொவிகுலத்தைச் சேர்ந்த பெண்களை மணந்து கொண்டார்கள். கொவி குலத்தார் உயர் சாதியினராகக் கருதப்பட்டாலும், கண்டிய முஸ்லிம்களுக்கு இத்திருமணங்களின் மூலம் அந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவர்கள் கொவிகம மக்களைவிடவும் இழிந்தவர்களாகவே மதிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தைக் கைவிடாது விடாப்பிடியாக இருந்தமையே அதற்குக் காரணமாகும். கொவி வம்சத்திலும் உயர்ந்த, தாழ்ந்த கோத்திரங்களும் குலங்களும் காணப்பட்டன. என்றாலும் இம்முஸ்லிம்கள் சிங்களக் கோத்திரத்தின் ஒரு பிரிவினராகவே கணிக்கப்பட்டார்கள்.
சிங்கள கொவிகுலப் பெண்களுடன் முஸ்லிம்கள் செய்துக்கொண்ட திருமணங்கள் சமூக ரீதியாக சிங்களவர்களால் அங்கீகாரம் பெறவில்லை. பொதுவான கருத்துப்படி, நாட்டுச் சிங்களப் பெண்ணொருத்தி முஸ்லிம் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால், அவள் தன் குலத்தில் இருந்தும் சமூக அந்தஸ்த்திலிருந்தும் முழுமையாக நீக்கி வைக்கப்படாள். தமது பெற்றோரின் சொத்துரி மையில் அவளுக்குரிய பங்கு வழங்கப்படவில்லை (15.03.1826 கண்டிய ஆணையாளர் அறிக்கை).
婷
87
Page 52
ஆனால் கண்டிய இராச்சியத்தை அரசாண்ட சிங்கள மன்னர்கள் சிங்களப் பெண்களை முஸ்லிம்களுக்கு மணமுடித்து வைத்த பல சந்தர்ப்பங்கள் மரபுக் கதைகளாகக் கூறப்படுகின்றன.
குலம், கோத்திரம் மூலம் உயர்வு தாழ்வு காட்டியது போன்று பெயர்களிலும் பேதம் காட்டும் வழக்கம் பழங்காலச் சிங்களவர்கள் தொட்டே காணப்பட்டு வருகின்றது. கண்டிய யுகத்து ‘வித்தி கிரந்தங்களில் இவற்றை அவதானிக்கக் கூடியனவையாக உள்ளன.
சிங்கள இனத்துப் பெண்களை முஸ்லிம்கள் திருமணம் செய்து கொண்டதன் மூலம், கண்டிய சமூக வழக்கப்படி முஸ்லிம்களின பெயர்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. சிங்களக் குல அமைப்பின் அடிப்படையில் அமைந்த பெயர்களை அவர்களது பெயர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள் எனலாம். கண்டிய குல அமைப்பில் பல்வேறு குல வகையினையையும் சார்ந்த பெண்களை, முஸ்லிம்கள் திருமணம் செய்திருப்பதை அவர்களது குலவழிப் பரம்பரைப் பெயர்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் எக்குலத்தவராக கருதப்பட்டார் களோ, அக்குலத்து நாமத்தை தமது ‘வாசகம யாக ஆட்டிக் கொண்டார்கள் எனவும் கூறலாம். என்றாலும், சிங்களப் பெண்களை மணந்து கொண்ட முஸ்லிம்களை ஒரு குறிப்பிட்ட கொவிகுலத்துப் பிரிவினராகவே கருதியதாக குலவமைப்புப் பற்றிக் குறிப்பிடும் சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், கண்டிய மன்னர்கள் மூலம் வழங்கப்பெற்ற கெளரவ விருதுகள் மூலமாகவும் சில குலப்பெயரை முஸ்லிம்கள் பெற்றார்கள். தொழில் ரீதியான ‘வெடவசம் முறையிலும் கண்டிய மக்கள் பலகுல அமைப்புகளைப் பெற்றிருந்தார்கள். ஒரு குழுவினருக்கு வழங்கப்பட்ட சேவைப்பாங்கு ஏனையோருக்கு வழங்கப்படவில்லை. அதிலும் பேறுபாடுகள் இருந்தன. இதனால், தொழில் ரீதியாகவும் பல குலப் பிரிவுகள் தோன்றி இருந்தன. அந்தந்த குலத்தவர்களுக்கான அந்தஸ்துகளும் சலுகைகளும் கிடைக்கப்பெற்றதனால் சிங்கள யுகத்தில் மக்கள் குல பேதத்தால் அதிருப்தி கொள்ளவில்லை. என்றாலும் பெயர்களிலும் கூட குலத்துக்கு குலம் பாகுபாடு காணப்பட்டன. இதன்படி தொழில் ரீதியாகவும் முஸ்லிம்கள் சில குல வழி வம்சபெயர்களைப் பெற்றிருந்தார்கள்.
88
கண்டிய முஸ்லிம்களின் பிரதான சிங்கள குலவழிப்பெயர்கள்
பண்டாரவலிய
கொவி வம்சத்தில் அதி உயர்ந்த கோத்திரமாக பண்டாரவலிய என்பது விளங்கியதாக ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் ஆமர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது சிங்கள இராச்சியத்தில் அரியணைக்குரிய இளவரசர்களின் வழி வருவோரை குறிக்கும் குடும்ப வம்சாவளியாகும்.(6) இந்தப் பரம்பரையில் வருவோர் ஆட்சியுரிமைக்குரிய வாரிசுதாரர்களாவார்கள். அதனால், தற்போது பண்டார என வழங்கப்படும் பெயர்கள், முற்காலத்தில் அந்தஸ்து பெற்ற வம்ச நாமங்களாக இருந்தன. மிகப் பழமையான பண்டார வம்சாவளிக்குரியவராக வத்ஹிமி பண்டார என்ற முஸ்லிம் அரசா வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்படுகின்றார்.(7) மலய நாடு என்பது முற்காலத்தில் கண்டிய இராச்சியத்திற்குக் கூறப்பட்ட பெயராகும். அதன் இராசதானி குருநாகலையில் அமைந்திருந்த தருணத்தில் இம் மன்னன் முடியாட்சி செய்தான். இரண்டாம் புவனேகபாகு மன்னனுக்கும், அஸ்வத்தும என்னும் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருத்திக்கும் பிறந்தவரே இந்த வத்ஹிமி பண்டார மன்னன் எனக் கூறப்படுகிறது. இதனால் இவர் முற்கால கண்டிய இராச்சியத்து மணிமுடிக்கு வாரிசானார். இவரை கலே பண்டார எனவும் அழைப்பர். வீதிய பண்டார, கீர்த்தி பண்டார எனும் நாமங்களும், கொங்காலே கொட பண்டார, பண்டார வன்னியன் எனப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்களது திருநாமங்களும் உயர் வம்ச அந்தஸ்தைப் பெற்று விளங்கிய பெயர்களேயாகும். தென்னிந்தியாவில் குலவழக்கின்படி, “பண்டர்’ எனும் ஒரு சாதியினர் உள்ளர். இவர்கள் மலபார் நாயக்கர்களை ஒத்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் போர்த் தொழிலிலும் ஈடுபட்டார்கள். நாட்டுத் தலைவர்களாகப் பண்டர்களும் இருந்தனர். இவர்கள் பயிர்ச் செய்கை செய்யும் வகுப்பாரில் சிறப்புற்றவர்களாக விளங்கியுள்ளார்கள்.8 பிற்கால பண்டார' என்போர் இவர்களை ஒத்தவர்களாகவே காணப்பட்டார்கள். குலபரப்பு பெண்ணின் பரம்பரை வழியை அடிப்படையாகக் கொண்டு, பாண்டர்களிடம் இருந்ததைப் போன்றே கண்டிய இராச்சியத்திலும் தாய்வழி வம்சாவளி காணப்பட்டது.
கண்டிய இராச்சியத்தில் அரச பரம்பரைக்குரிய வம்சாவளியை முஸ்லிம்கள் பெற்றுள்ளமைக்கு இது ஒர் அழியாச் சான்றாகும்.
89
Page 53
முதலி வம்சம்
கொவி வம்சம் மூன்று பிரிவுகளாப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் பிரதானமானது முதலி பேருவ அல்லது ரதலை பேருவ என்பதாகும்.(9) இதனை ‘முதலி வம்சம் அல்லது ‘ரதலை வம்சம் எனக்கூறலாம். கலப்பற்ற பயிர்த்தொழில் செய்யும் வகுப்பாரும், பண்டாரவலிய வம்சத்தில் அல்லது வெள்ளால பெண்ணொருத்திக்கு, அரசனின் மூலமாகக் கிடைக்கும் வாரிசுகளும் கொவி வம்சத்தின் உயர் குலமாகக் கருதப்படும் ‘முதலி வம்சம் அல்லது ‘ரதலை வம்சத்தில் அடங்குவர் என புராண சிங்கள ஏடான 'நீதி நிகண்டு’வையும் கண்டிய காலத்துக் குறிப்பேடுகளும் எடுத்துக் கூறுகின்றன.(10)
கண்டிய இராச்சியத்தின் திசாவணி, அதிகாரம் போன்ற உயர் பதவிகளை, அரச குலத்தைச் சார்ந்திருந்த ரதலை வம்சத்தினரே வகித்தனர். கண்டிய மன்னர்களோடு மிக நெருங்கிய தொடர்பு பூண்டிருந்தவர்களும், தமது வீரதீரச் செயல்களின் மூலம் நாட்டிற்காக சாதனைகளைப் படைத்தவர்களும், எக்குலத்தவராகக் கருதப்படினும் ‘ரதலை’ எனும் அந்தஸ்தையும், தகுதியையும் அடையப் பெற்றார்கள். கம்பளை யுகத்தில், இவ்வாறு தேசிய சேவை ஆற்றிய பிரதானிகள் முதலிமார்கள் எனப் பெயர் பெற்றார்கள் .
கண்டிய சிங்கள மன்னர்களின் ஆட்சி காலத்திலேயே ‘முதலி எனும் பட்டத்தைத் தமது வம்சப் பெயராகக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளமைக்கு அவர்களது வம்சாவளிப் பெயர்கள் சான்றுகளாக உள்ளன.
1760ம் ஆண்டில் கண்டிய மன்னன் கீர்த்தி யூரீ இராஜசிங்கனுடைய அரசாட்சியின் போது ஒரு முஸ்லிம் வைத்தியர் வைத்திய திலக ராஜகருணா கோபால முதலி எனும் விருதைப் பெற்று கெளரவிக்கப்பட்டார். கோபால முதலி என்ற வம்ச நாமத்தைப் பெற்ற முஸ்லிம்கள் கணிசமான தொகையினர், கண்டிய இராச்சியத்தின் சகல பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களில் வைத்தியத் துறையைச் சார்ந்தவர்கள் மாத்திரமின்றி, ஏனைய துறைகளில் சிறப்புற்றோரும் இச்சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தனர். தேசிய சேவையில் இவ்வாறு உயர் கெளரவம் பெற்றவர்கள் ‘ரதலை எனப் பெயர் பெற்றார்கள்.
1818இல் மாத்தளை மடிகே நாயக்க பதவிக்கு நியமிக்கப் பட்ட ராஜகருணா நவரத்ன முதலியா அபூகிர் லெப்பை அவர்களது
90
பெயர் வழித் தொடரில் இருந்து, அவர் கண்டி மன்னன் காலத்திலேயே முதலியா எனும் கெளரவ நாமத்தைப் பெற்றிருந்தவர் என்பது தெளிவாகின்றது.
நாலு கோரளை தும்பனாத்தப்பத்துவையைச் சேர்ந்த வாடியத்தென்னை என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஒருவர் இஸ்மாயிலெப்பை முதலி லெப்பை என்னும் திருநாமத்தை வம்சாவளியாகக் கொண்டிருந்தார். இவர் 1820ம் ஆண்டில் இருந்து இங்கு பரவனியாக ஒரு நிலத்தை ஆட்சி செய்து வந்துள்ளார்.(11)
இதேபோன்று, உடபலாத்தை கலகெதரை என்னும் கிராமத்தில் நயினா முதலி இஸ்மாயில் லெப்பை குருன்னேஹே என்பவரது மூதாதையர் மிகப் பழமையான காலந்தொட்டு இங்கு குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்கள்.(12) முதலி எனும் நாமம் அவரது முன்னையோரின் வம்சப் பெயராகும்.(1878 இன் காணி உறுதிப்படி). கண்டிய பிரதேசங்களில், சிங்கள பகுதிகளுக்குள்ளே முதலியார் எனவும் சிலர் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.
நாலு கோரளையில் கெக்கிரிகொட என்னும் ஊரில், வைத்தரத்ன முதலியார் அகமது லெப்பை (13) என்பவரின் பரம்பரையினர் கண்டிய மன்னர்களது காலத்தவர்களெனக் கருதக் கூடியதாக உள்ளது. 1840இல் எழுதப்பட்ட தமிழ்மொழியிலான அடமானச் சீட்டு ஒன்றில், மாத்தளையில் வாழ்ந்த பிச்சைக் கண்டு வாய்பு கண்டு முதலியார் என்பவர் ஆட்சி செலுத்திய வயற் காணி பற்றிய குறிப்பொன்றை தேசிய சுவடிக் கூடத் திணைக்களத்தில் காணலாம்.(14) 1863ம் ஆண்டில் எழுதப்பட்ட காணி உறுதியொன்றில் கொத்மலைப் பகுதியில் ரம்படை எனும் கிராமத்தில் மீரா சாகிபு சோர முதலியார் என்பவர் வாழ்ந்துள்ளார்.(15 1878ம் ஆண்டில் மாத்தளை மாபேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த சோர முதலியார் உமறு சாகிபு என்னும் ஒருவர் பற்றிய குறிப்பொன்றும் உள்ளது.(15A அதேவேளை, கும்புக்கதுற கிராமத்து ஆரம்பகால முஸ்லிம்களில் சேரமுதலியார் என்னுமொருவர் வாழ்ந்துள்ளார்.(15B மாத்தளை கொங்காவளைக் கடை வீதியில் சேர முதலியார் சாயிபு ஹர்ஜியார் என்பவர் 1886க்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவராவர்.(15C) அக்குரனை புளுகொஹொத்தென்னை என்னும் கிராமத்தில் முதலியார் வீட்டு எனும் வீட்டுப்பெயர் மிக நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.(16) மேலே கூறப்பட்டவை ‘முதலி' என்னும் பதத்தின் திரிபாகவும் கருதலாம். ஆனால், முதலியார் என்னும் பதம் வேறும் பல அர்த்தங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக,
9.
Page 54
தெஹிபாகொட என்ற கிராமத்தில், கொஹொஜ முதலியார் என்னும் வம்சாவளிப் பெயர் முஸ்லிம்களிடையே உள்ளது. இது கொஹலான என்ற ஊர்ப் பெயர்களில் நின்றும் திரிபு பெற்ற ஒரு பதமெனக் கருதலாம்.(16A அக்குரணையில், காளி முதலியார் (1873) என்பவரது பரம்பரையினர் வாழ்கின்றனர்.(16B)
சிங்களப் பகுதிகளில் ‘ரடேராலை” என்னும் பதவிகளை வகிப்பவர்கள் கரையோரப் பகுதிகளில் முதலியார் என அழைக்கப்பட்டனர்.(17) இவர்களே, பிற்காலத்தில் ரடே மஹத்தயா என அழைக்கப்படலாயினர். இவர்களது அதிகாரத் தத்துவத்தை தற்போதைய ஒரு பிரதேசச் செயலாளரின் (G. A.) பரிபாலனத்தோடு தொடர்பு படுத்தலாம். புராண சிங்கள இலக்கியங்களில் கம்முதலl எனும் பதம் குடிகளின் பிரதானிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலி என்பது ‘முதல்-பணம் என்ற அர்த்தத்தைக் கொடுத்தாலும் “ஊரைப் போசனை செய்பவர்’, ‘ஊரைப் பராமரிப்பவர்’ என்னும் கருத்தை இக் கம்முதலி என்னும் பதம் கொள்கிறது. இவைகள், ஒன்றுக்கொன்று தொடர்பு பட்ட, பரிபாலனத்தோடு சம்பந்தப்பட்ட பதங்களாக இருப்பதை இங்கே அவதானிக்க முடிகிறது.
கண்டிய பிரதேசத்து எல்லைக்குட்பட்ட தமன்கடுவை முஸ்லிம்கள், இப்பதவியை வகித்ததோடு தமது பெய்ரிலும் ‘முதலியார் எனும் நாமத்தை இணைத்துக் கொண்டார்கள். அங்கே, முஸ்லிம் பத்துக்கு பொறுப்பான கோராளையாக (உடையார்) 1869இல் அவலட் முதலியார் என்னும் முஸ்லிம் நியமிக்கப்பட்டிருந்தார்.(18) இங்கே குறிப்பிடப்படும் முதலியார் என்பவர் தமிழ்ப் பகுதிகளில் ‘மணியார், ‘அடிக்கார்’, ‘வன்னியார்’ எனவும் அழைக்கப்பட்டனர். கண்டிய இராச்சியத்தில் மட்டுமன்றி, தீவின் ஏனைய பகுதிகளில் அரசாட்சி செய்த சிங்கள மன்னர்களும், முஸ்லிம்களுக்கு முதலி பட்டங்களை வழங்கி கெளரவப்படுத்திய சான்றுகள் காணப்படுகின்றன.
பேருவளையில் வாழ்ந்த பெரிய முதலி மரைக்கார் என்பவருக்கு, நாட்டுக்காற்றிய சேவையைக் கருத்திற் கொண்டு கி.பி.1016இல் ஒரு சிங்கள மன்னன் செப்போலைப் பத்திரத்தின் மூலம் கட்டளையொன்றை வழங்கி கெளரவப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.19)
முதியன்சே
கொவி குலத்தின் மற்றுமொரு முக்கிய இடம் ‘ரடே எத்தன்' எனப்படுவோருக்குக் கிடைத்தது. இவர்கள் ‘ஹாமுதுருவோ’ என்னும் கெளரவப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டனர். ‘ஜனவங்ஸ்’ என்னும்
92
சிங்கள இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குல அமைப்புக்களிலும் இவர்களே முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். அதில் ‘ஹன்துருவோ என இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
17ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில், இந்த ‘ஹான்துருக்களின் பலருக்கு கண்டிய மன்னன் ‘நயிட்' எனும் பதவிக்குச் சமமான ‘முதியன்சே” என்னும் கெளரவப் பதவிகளை வழங்கி கண்ணியப்படுத்தினான் என, ரொபட் நொக்ஸ் குறிப்பிடுகிறார். இப் பதவி அந்தஸ்தைப் பெறுவோருக்கு தங்கம் அல்லது வெள்ளியினாலான பதக்கம் பதிக்கப்பெற்ற நெற்றிப் பட்டியொன்று அரசன் மூலமே அணிவிக்கப் பட்டது.(20) இவர்கள் ‘பட்டபெந்திகள் (சிட்டானோ) எனப்படுவர். இவர்கள் ‘முதியன்சே எனும் பட்டபெந்தி பெயர் கொண்டே அழைக்கப்பட்டார்கள். இவர்களில் மிக உயர் அந்தஸ்தைப் பெற்றவர்கள், ‘அப்புஹாமி’, ‘ராலஹாமி’ என்னும் கெளரவ நாமங்களையும் சேர்த்து அழைக்கப்பட்டார்கள். 1806ம் ஆண்டில், கண்டிய மகா அதிகாரம் பிலிமத்தலாவை அவர்கள் பிலிமத்தலவுவே விஜேசுந்தர ராஜகருணா செனவிரத்ன வாசல அபேகோன் பண்டித்த முதியன்சே ராலஹாமி எனும் மிக நீண்ட வம்சாவளிப் பெயரைக் கொண்டிருந்தார். முதியன்சே ராலஹாமி எனும் ‘பட்டபெந்தி சிறப்பு நாமம் இவருக்கிருந்தது.
இவருடன் சேர்ந்து, கண்டிய மன்னன் மூலம் நியமனம் பெற்ற வைத்திய பரம்பரையைச் சேர்ந்த ராஜகருணா கோபால முதியன்சே ராலஹாமி என்னும் சோனகரும் முதியன்சே ராலஹாமி எனும் பட்டபெந்தி பெயரைப் பெற்றிருந்தார்.[21] இவரைப் போன்றே, கோபாலச் சோனகர் பரம்பரையில் தோன்றிய பலருக்கு கண்டிய இராச்சியத்தில் வைத்தியதிலக ராஜகருணா ராஜபக்ஷ கோபால முதியன்சே எனும் பட்டபெந்தி கெளரவம் கிடைத்தன.
கண்டிய இராச்சியத்தின் பிற்காலப் பகுதியில் பலர் ரதலை வம்சத்தின் முதலிமார்கள், முதியன்சே என்னும் பட்டபெந்தி நாமம் சூட்டி, கண்டிய அரசர்களினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.
அரச மாளிகையில் அல்லது அரசவையில் சிறப்பான பதவிகளை வகித்தவர்கள் வாஸல முதியன்சே எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டாார்கள். கேகாலைப் பிரதேசத்து முஸ்லிம் வைத்தியப் பரம்பரையினரிடையே விக்ரம ராஜகருண வாஸல வைத்தியதிலக முதியன்சே ராலஹாமி எனும் வம்சாவளித் தொடர் இன்றும் வழக்கில் உள்ளது.
93
Page 55
பகுதியில், தகுதி கருதாது பிரயோகிக்கப்படத் தொடங்கியதால், கணிசமான முதியன்சே பிரிவினர்கள் உண்டாயினர் எனும் கருத்தும் சரித்திர ஆசிரியர்களிடையே நிலவுகின்றது. சிங்களவர்கள் தாமாகவே இவ்வுயர்குல பெயர்வழியை, பிற்காலத்தில் தமது வம்சாவளிப் பெயருடன் இனைத்துக் கொண்டுள்ளார்கள். “இஹலகெதர முதியன்சே, பஹலகெதர முதியன்சே என்பது போன்று.
என்றாலும், முஸ்லிம்களிடையே இப்பெயர் வழக்கு கண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே தமது பெயருடன், கெளரவப் பெயராக
எனலாம். முஸ்லிம்களின் ஏனைய வம்சாவளி குலப்பெயர்களுக்கு இருக்கும் பூர்வீகத் தன்மையே இதற்கும் உள்ளது. கண்டிய குல அமைப்பு முறை பிரதானமாக சிங்கள சமூகத்துடன் தொடர்பு
சிங்களமொழி வடிவ வம்சாவளியில் இவ்வம்சாவளி நாமமே முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகக் காணக்கூடியதாகவும் உள்ளது. ஆனால், அநேகமான முஸ்லிம்கள் பட்டன், முப்பாட்டன் மூலமாகப்
விடாமல தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள் எனலாம்.
செனரத் மன்னனுடைய (1604-1635) அரசாட்சியின் போது, கண்டிய இராச்சியம் மூன்றாகப் பிரித்து அரசாளப்பட்டது. இது 1628ம் ஆண்டளவில் நிகழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வமயம், விஜேபால இளவரசன், மாத்தளை கொடபொலயில் தமது இராஜதானியை அமைத்துக் கொண்டாள். அவனது அரச
பராமரித்ததால், ர் ஒரு "கம்முதவியாக பதவி வகித்துள்ளதை டுத்துக்காட்டுகின்றன. மாத் Guago 6 sals பெறுமதி மிக்க “முதலி மார்களிடையே உள்ள பிரதான முதியான்சேமார்கள் முதலி பேருவேயில் மிக உயர்ந்த மட்டத்தினராகக் கணிக்கப்பட்பார்கள்.
புராதன காலத்தில் சீதாவாக்கை என அழைக்கப்பட்ட அவிசாவலைக்கருகாமையில், தல்துவ என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமத்து முஸ்லிம்களிடையே துவேகொட முதியன்சேலாகே என்ற சிங்கள பரம்பரை நாமம் மிகப்பிரசித்தமானது. இப்பரம்பரைப் பெயரைக் கொண்ட அநேகர் இன்று இங்கே வாழ்ந்து வருகிறார்கள். 1872ம் ஆண்டில் பதிவாகியுள்ள ஒரு குறிப்பின்படி துவே கொட முதியன்சேலாகே தம்பிலெப்பை என்பவர், இக்கிராமத்தில் கண்டி மகா தேவாலயத்திற்கு உரித்தான சித்திலெப்பை தோட்டம் எனும் காணியின் பரவணி சொந்தக்காரராக இருந்துள்ளார். இதற்காக இவர் வருட மொரு முறை வெள்ளைக் கைக் குட் டையொனி றை தேவாலயத்திற்குப் பரிசாக வழங்கி வந்தார்.(23) இப்பரம்பரையினர் மிக நீண்ட காலமாக இப்பகுதியில் குடிபதியாக இருந்து வருவதற்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.
முஸ்லிம்களுக்கு கண்டிய மன்னர்களால் உயர் கெளரவம் கொடுத்து போற்றப்பட்ட ஒர் ஊரான அக்குரணைப் பகுதியில், மிகப் பழமையான வம்சாவளி நாமமாக "முதியன்சேலாகே கெதர' எனும் பெயர்வழக்கு உபயோகத்தில் உள்ளது(24) இவ் வம்சாவளி பெயருடையவர்களது மூதாதையர்களில் சிலர், புகழ் பெற்ற அஸ்கிரிய விகாரைக் காணிகளை நன்கொடையாகப் பெற்றிருந்தார்கள்.(25) புளுகொஹொத்தென்னை கிராமத்திலும் இவ்வம்சாவளிப் பெயர்க்குரி யோரின் மூதாதையர் வாழ்ந்துள்ளார்கள் எனக் கூறலாம். அதே போன்று, ‘காதி முதியன்சேளாகே.’ என்னும் பரம்பரைப் பெயரும் இப்பகுதியில் வழக்கிலுள்ள ஒரு தலைமுறைப் பெயர் வழியாகும்.(26)
குருநாகலைப் பிரதேசத்தைச் சேர்ந்த, மிரியம்பிட்டிய கிராமத்து முஸ்லிமொருவருக்கு 1847 ம் ஆண்டில் சத்கோரளை மடிகே முகந்திரம் பதவி ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவர் ஒரு நீண்ட வம்சாவளிப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். ராஜ கருணா விசங்கபால பூர்லி விமல கெதர முதியன்சேலாகே சேகு உசன் சின்ன உடையார் என்பது அவரது பெயராகும். இங்கு முதியன்சே என்னும் பரம்பரைப் பெயர் கண்டிய மன்னன் காலத்தையது என்பது அவரது பெயரில் உள்ள ‘ராஜகருணா’ என்ற சிறப்புப் பெயரில் இருந்து தெளிவாகிறது. மடிகே கருடபிடங்களில் சேவையாற்றியவர்கள் மடிகே முதியன்சே என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.27)
கண்டி தலதா மாளிகைக்குரிய சேவைக் காணியொன்றை முன்வத்துகொடையில் பெற்றிருந்த மதார் லெப்பை என்பவரின் வம்சாவளிப் பெயரில் பொல்வத்தே முதியன்சேலே கெதர என்ற சிங்கள
95
Page 56
வம்சாவளித் தொடரைக் காணலாம்.28 முதியன்சே என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள் கொவி வம்சத்தின் உயர் குலத்தவராக கணிக்கப்பட்டவர்களாவர். மேற்கூறப்பட்டவை, முஸ்லிம்களும் அந்த அந்தஸ்தை சிங்கள சமூகத்தின் மத்தியில் பெற்றிருந்தமைக்கு எடுத்துக்காட்டுகளாகின்றன. கண்டிய சிங்களவர்களிடையே இன்னும் "முதியன்சே எனும் பெயர்வழி சிறப்புற்று விளங்குகிறது.
கண்டிய சமூக அமைப்பின்படி, குல அமைப்பு முறை இன, மத பேதமின்றிக் காணப்பட்டுள்ளதை இப்பரம்பரைப் பெயர்கள் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன. சிங்கள மக்களும் இதே முதலி, முதியன்சே என்னும் பெயர்களைத் தமது பரம்பரைப் பெயராக இணைத்துக் கொண்டிருப்பதுடன், இவ்வகுப்பினர் உயர் சமூக அந்தஸ்தையும் பெற்றிருந்தனர். முஸ்லிம்களின் குலவழிப் பெயர்கள அவர்கள் சிங்கள மக்களுடன் கொண்டிருந்த செளஜன்ய உறவையும், வாழ்க்கை முறையையும், அவர்களுக்கு கண்டிய சிங்கள சமூகத்தின் மத்தியில் கிடைத்த அந்தஸ்த்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சாதனமாகும். முஸ்லிம்களின் சமூக அமைப்பின்படியும், இப்பெயர்வழியுடையோர் உயர்வாக கெளரவிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்களிடையே பாரிய அளவில் உயர்வு தாழ்வுப்படுத்தும் தன்மை இதனால் முஸ்லிம் சமூக அமைப்பில் ஏற்படவில்லை. கண்டிய சிங்களச் சமூகத்துடன் முஸ்லிம்கள் நெருங்கிய உறவு பூண்டிருந்தாலும், மதக்கோட்பாடுகளில் அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களாகத் திகழ்ந்தே இதற்குக் காரணமாகும்.
வம்சம், கோத்திரம், கிளை என வகுப்புகளக சார்ந்து வாழ்வது இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக கருதப்பட்டது. புனித திருக்குர்ஆனிலும், இஸ்லாமிய சன்மார்க்கக் கிரந்தங்களிலும் வம்சம், கோத்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூது கிளையார், குறைஷிகுலத்தவர், ஹாசீம் வம்சத்தார் என பல்வேறு பெயர் சொல்லி கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அரபி மொழியில் வம்சம், கோத்திரம், கிளை என்பன முறைப்படி ‘நஸப்', 'கயிலா’, ‘கவுப் அல்லது 'ஆல்' என உச்சரிக்கப்படுகின்றன. 8ம் நுாற்றாண்டில் இலங்கையில் முதன் முதலில் குடியேறிய முஸ்லிம்கள் ‘ஹாசீம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என, வரலாற்று ஆசிரியர் சேர். அலக்சாண்டர் யோன்சன் குறிப்பிடுகிறார்.
இதனாலேயே, கண்டிய இராச்சியத்தில் காணப்பட்ட குல அமைப்புகளை இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு,
96
சிங்கள மக்களைப் போன்றே தமது வம்சாவளிப் பெயரிலும் குலப்பெயர்களை இணைத்துக் கொண்டார்கள்.
கண்டிய முஸ்லிம்கள் தொழில் ரீதியாக கொண்டிருந்த குல வகைகள்
கண்டிய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும், ஏகோபித்தமாக ஒரே குலத்தினராக சிங்கள சமூக அமைப்பில் கருதப்படவில்லை. அவர்கள் செய்த தொழில்களை அடிப்படையாக கொண்டு சிலர் உயர் குலத்தவராகவும் சிலர் இழி குலத்தினராகவும் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான கருமங்களை ஆற்றுவதற்குத் தேவையான மனிதர்கள்’ எனக் கருதப்பட்டவர்கள், தமது சீவனோபாயத்திற்காக மற்றவர்களுக்காகச் சில தொழில்களை செய்து வந்தார்கள். இவர்கள் இழிந்த குலத்தினராகவும் - தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் மதிக்கப்பட்டார்கள். ஒரு சில இழிந்த சாதியரைத் தவிர, ஏனைய அனைத்து தாழ்ந்த குலமக்களும் ஒரு குறிப்பிடத்தக்க தொழிலைச் செய்து வந்ததனாலேயே ஒரு குல அடிப்படையில் கட்டுப்பட்டனர். அத்துடன், கண்டிய மன்னர்கள் ஆட்சியின் போது, இக்குலவகையைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரியை செலுத்துபவர்களாகவோ அல்லது ஓர் ஊழியத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவோ இருந்தார்கள். இவ்வரி ‘பத்த (லeே) என அழைக்கப்பட்டது. கண்டிய பிரதேசத்தில் ‘பத்த கருமங்களோடு தொடர்புபட்டவர்கள் இழிந்த குலத்தவராகக் கருதப்பட்டார்கள். ஒரு குலத்தை உயர்வு, தாழ்வு படுத்தும் தத்துவம் கண்டிய யுகத்தில் மன்னர்களின் கைவசமே இருந்தது எனக் கூறலாம்.
மடிகே கருமபீடத்தில் தொழில்களைப் புரிந்த முஸ்லிம்கள், ‘சுலங்பத்த’ என்னும் வரியைச் செலுத்தக் கடமைப்பட்டிருந்தார்கள். அதனால் மடிகே ஊர்களில் வசித்த முஸ்லிம்கள் கொவிவம்சத்தில் தாழ்ந்த குலமான கராவோ’ என்னும் குலத்தவராகக் கருதப்பட் டார்கள். இக்கராவோ குலத்தில் ஒரு வகுப்பாரே வள்ளமோட்டி களாகவும் இருந்தனர். 'டேவி' எனும் ஆங்கிலேய சரித்திர ஆசிரியரின் குறிப்பொன்றின்படி, இழிந்த சாதிகளில் முக்கியமானதாக இக் கராவைக் குலம் கருதப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஏனெனில், தவளம் மாடுகளை வைத்திருந்த முஸ்லிம்கள் கண்டிய மன்னனின் தானியங்களை அங்கும், இங்கும் கொண்டு சென்றார்கள். கரையோரப் பகுதிகளிருந்து உப்பையும் கருவாட்டையும் கொண்டு வந்து, அரசனுக்கு வழங்கியதாலும், மன்னனுக்காக வர்த்தக தொடர்புகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதனாலும் இவர்கள் வகைப்படுத்தப்பட்ட
97
Page 57
கராவை குலம் உயர் நிலையில் மதிக்கப்பட்டது.29 அத்துடன் கொவி வம்சத்தின் தாழ்ந்த கோத்திரமான பட்டிகளைச் சேர்ந்தவர்கள் எனும் வகையையும் இவர்கள் சார்ந்திருந்தனர். இம்முஸ்லிம்கள் அரசனுக்குச் சொந்தமான கால் நடைப்பட்டிகளையும் பராமரித்தார்கள். பட்டி முகந்திரம்லாகே கெதர எனும் வம்சாளியுடைய முஸ்லிம் பெயர்களும் இதற்கு சான்றாக இருந்துள்ளன.
கண்டிய மன்னர்களின் காலத்திலேயே இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள், பல்வேறு வகைக்குட்பட்ட தொழில் துறைகளிலும் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். இதனை முஸ்லிம்கள் வகைப்படுத்தப்ட்ட குல அமைப்பு பற்றிய தரவுகளில் இருந்தும்; பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தி வரும் சிங்கள வடிவமைந்த வம்சாவளிப் பெயர்களில் இருந்தும் அறியக் கூடியதாக உள்ளன.
நவன்தத்த’ எனும் குலத்தில் கண்டிய முஸ்லிம்கள்
பல்வகைப்பட்ட தொழில்களைச் சார்ந்தவர்கள் நவன்தத்த எனும் இக்குலத்தில் அடங்கினர். ஆசாரிகள், கொல்லர்கள், தங்கம், வெள்ளி கன்னான்மார்கள், தச்சர்கள் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான பொருட்களான சட்டிமுட்டி, கத்தி, பாணி, கருப்பட்டி என்பவற்றை வினியோகம் பண்ணுவோரும்; மரம், கல் தொடர்பான தொழிற்றுறையைச் சார்ந்தவர்கள் முதலானோர் இக்குலத்தில் அடங்கினர். சிங்களக் காவியமான 'ஜனவங்ஸவின்படி இக்குலத்த வர்கள் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆசாரிகள் அல்லது கொல்லர்கள் ஒரு பிரிவினராகும். அடுத்தவர் தச்சர்களும், மரம், கல் தொழில் வகைகளைச் சேர்ந்தவர்களும் ஆவர். கண்டிய முஸ்லிம்களில் பலர் இவ்வாறான பலவகைத் தொழில்களையும் சிங்கள மன்னர்கள் காலத்திலேயே செய்து வந்ததால் அவர்களும் இக்குலவகையினுள் அடங்கினர் எனலாம்.
‘நவன்தத்த குலக்குடும்பம் ஒன்பது உப- பிரிவுகளைக் கொண்டிருந்தது. ‘நவ' என்னும் ஒன்பது தொழில் ரீதியான குல “நிலைகளைக் குறிப்பிடுவதால் இப்பெயர் இக்குலத்திற்கு தோன்றி யிருக்கலாம். இவ்வொன்பது பிரிவினரிலும் ஆசாரி அல்லது குருன்னேஹேலா எனும் “கம் மல் வேலையில் ஈடுபட்ட கன்னான்மார்களும், பட்டஹெல்லு (0ெஞ்ைலு என்று அழைக்கப்பட்ட தங்கம்,வெள்ளியினால் பொருட்களைச் செய்யும் பொற்கொல்லர்களும், பித்தளை-மற்றும் ஏனைய உலோகங்களால் வேலை பார்க்கும் கொல்லர்களும், தச்சர்களும் பிரதான பிரிவினராக கருதப்பட்டனர்.30)
98
“பட்டவெறல்லு' குல முஸ்லிம்கள்
கண்டிய இராச்சியத்தின் தலைநகர் செங்கடகலையில் இருந்த காலப்பகுதியில், மன்னனின் மாளிகைக்கு அருகாமையில் வேலைத்தளங்களை அமைத்து, அரண்மனைக்கு அவசியமான அனைத்துப் பொருட்களும் செய்விக்கப்பட்டன. இவ்வேலைகளைச் செய்வதற்காக கொல்லர்கள், தச்சர்கள் என்போர் இராசதானியைச் சூழ உள்ள ஊர்களில் வாழ்ந்தவர்களே பெரும்பாலும் பணியாற்றினர். மன்னர் மாளிகைக்கு அருகில் உள்ள கிராமத்து முஸ்லிம்களிற் சிலர் ஆசாரி அல்லது குருன்னேஹெலா, பட்டஹெல்லு, மற்றும் தச்சு குலப்பிரிவுக்குரிய தொழில்களை ஆற்றி வந்துள்ளார்கள். அதனால், இவர்களும் இக்குலப்பிரில் அடங்கினர் எனலாம்.
ஹாரிஸ் பத்துவே குருனனேஹே கெதர அகமதுலெப்பை அதே வீட்டுப்பெயருடைய ஒமருலெப்பை, காதர்லெப்பை என்னும் மூவரும் தலதா மாளிகையில் பட்டல் (லஞ்ை) பங்குக்குரிய நெற்காணி, வீட்டுத்தோட்டம், சேனைநிலம் ஆகியவற்றைத் தாம் வகித்த பொற்கொல்லர் (இOஞ்ைலு பணிக்காக நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் மாளிகைக்கு உரித்தான தங்கம் வெள்ளிப்பொருட்களை புதுப்பித்து திருத்திமையத்ததுடன் புதிதாகவும் பொருட்களைச் உருவாக்கும் பணியையும் ஆற்றினார்கள். இதற்கு அவசியமான தங்கம், வெள்ளியை மாளிகையில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இவர்களால் வெள்ளியினால் செய்யப்பட்ட பொருளொன்றின் மாதிரி மாளிகையின் தியவடன நிலமை அவர்களுக்கும், விதானை, காரிய கரன்னராலைக்கும் வருடமொரு தடவை வழங்குவது இவர்களது கடமையாகும். இக்குறிப்பு தலதா மாளிகைக்குரிய காணியைப் பரவணியாக வழங்குதல் தொடர்பான ஏட்டில் காணக்கூடியதாக உள்ளது.131]
கண்டியில் அங்கிலேயரது ஆட்சி நிலவிய ஆரம்ப காலத்தில் ஆணையாளர் சபையிலும் உயர் ஸ்தானிகராகவும் மொழிபெயர்ப்பா ளராகவும் கடமைபுரிந்த சேர் ஜோன் டொயிலி (1818) தமது ‘சிங்கள அரசியலமைப்பு' பற்றி எழுதிய நுாலில் கண்டிய மன்னனின் மாளிகையில் சேவை புரிந்த பொற் கொல் லர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மடவலையைச் சேர்ந்த பொற்கொல்லர்களும் (இலஞ்ஜக) யட்டிநுவரை பொற்கொல்லர்களும் 6 பேர் ஆக, எல்லாம் 12 பேர் இராச்சிய (நிதியத்திற்கான) பொற் கொல் லர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
99 :
Page 58
அவர்களில் ஒருதொகுதியினர் எப்பொழுதும் கண்டியில் தங்கியிருத்தல் கட்டாயமாகும். (மடவளையைச் சேர்ந்தோர் தங்கி இருந்தனர்) அவர்கள் மாளிகைக்குள்ளேயே “பட்டல்’ என்னும் வேலைத் தளத்தை அமைத்துக் கொண்டார்கள். எல்லா வகையான வெள்ளி, செம்பு, பித்தளை பாண்டங்களையும் அவர்கள் செய்தார்கள். பழுது பார்க்கும் பணியையும் செய்தனர். நான்கு திருவிழாக்க ளுக்காகவும் பண்டங்களைச் செய்து கொடுக்க அவர்களுக்கு மூலப்பொருட்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட மூலப்பொருட்களினால் செய்யப்பட்டதின் மாதிரியொன்றை லேக்கம் மார்கள் ஐவருக்கும் கங்ங்ானம்ரால ஐவருக்கும் ஒவ்வொரு வருடமும் இவர்கள் கொடுக்க வேண்டும். வேலைத்தளத்தின் பிரதான வாயிலைத் திறப்பதற்கு லேக்கம் ஒருவரும் கங்ங்ானம் ஒருவரும் வருதல் வேண்டும் என இக்குறிப்பில் சேர் ஜோன் டொயிலி குறிப்பிட்டுள்ளார்.(32)
ஒரு குறிபிட்ட சிறிய தொகையினரே அரசனுக்குரிய மாளிகைக்கான தங்கம், வெள்ளி, செம்பு முதலான உலோக வேலைகளை ஆற்றியுள்ளார்கள். இதில் முஸ்லிம்களும் இருந்துள்ளதை இக்குறிப்பில் நின்றும் அறிய முடிகிறது. ஏனெனில், மேலே கூறப்பட்ட முஸ்லிம்கள் முன்வத்துகொடை என்னும் கிராமத்தில் வசித்தவர்களாவர். அக்கிராமம் மெதபலாத்தை யட்டிநுவரையில் அமைந்துள்ளது. டொயிலியின் குறிப்பின்படி, பொற்கொல்லரில் ஒரு சாரார் யட்டிநுவரை வாசிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மடவளை எனும் ஊரில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்தனர். அத்தோடு கண்டிய இராச்சியத்தில் பட்டல் சேவையில் ஹாரிஸ்பத்து வாசிகள் சிறப்புற்று விளங்கியுள்ளார்கள் என ஆய்வுகள் எடுத்துக்காட்டு கின்றன.(33) இங்கே கூறப்பட்டவர்களின் வம்சாவளிப் பெயர்கள், அவர்களின் பரம்பரையினர் ஹாரிஸ்பத்துவையின் பூர்வ குடிகளைச் சேர்ந்தவர்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக உள்ளன.
பொற்கொல்லர்களும் (eைஞ்ைலு பித்தளைத் தொழிலில் ஈடுபட்டோரும் ‘நவன்தத்த’ என்ற குலத்தில் உயர் வகுப்பினராக மதிக்கப்பட்டார்கள். அவர்கள் “கம்லத்தோ' (இைegee) எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப் பெற்றனர்.(34)
மில்லருபேப்விலான எனும் கிராமத்தில் வசித்த(1872) கமே குருனனேஹேலஹே கெதர மீரா நயினா ஒமருபுள்ளே (35) என்பவரது பெயரில் கமே குருனனேஹே எனும் அவரது மூதாதையருக்கு வழங்கப்பெற்ற பட்டப்பெயர் வம்சாவளியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புராண காலத்தில் “கம்லத்தோ’ என அழைக்கப்பட்டவர்கள், பின்னர் 'கமரால’ எனவும் அழைக்கப்பட்டனர். கமே குருனனேஹே என்பதும்
100
அதனை ஒத்ததாகவே அமைந்துள்ளது. இதே போல், அக்குரணையில் 'கமே குறுனகே வீட்டு மீரான் நாச்சியார்(1872) என்னும் பெண்மணி தமது முன்னையோரது பட்டப் பெயரை வம்சப் பெயராக சூட்டியுள்ளார்.[36) 1901ம் ஆண்டில் சனத்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விபரங்களுக்கமைய கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களில் பொற்பொல்லர்கள் 14 பேரும், வெள்ளி தொழிலாளர் ஒருவரும், இரும்பு மற்றும் உலோக வேலைகளில் ஈடுபட்டவர்கள் 10 பேரும் இருந்துள்ளனர். (VOL-I)
‘நயிதே குலத்து முஸ்லிம்கள்
பட்ட ஹெல்ல எனும் தங்கம் , வெள்ளி தொழிற் குலத்தவர்களும் சில தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும் ‘நயிதே' என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படலாயினர். இவர்களும் நவன்தத்த’ எனும் குலத்தைச் சேர்ந்தவர்களே. பொதுவாக கண்டிய முஸ்லிம்கள் ‘நயிதே' என்னும் குலத்தில் இரண்டாவது தரத்தில் வைத்து மதிக்கப்பட்டு வந்தார்கள்.(பி.கு) இந் நயிதே குலத்தவரான முஸ்லிம்களில் அதிகமானோர் மிகப் பழமையான காலத்திலிருந்தே கண்டிய பிரதேசங்களில் வாசஞ்செய்து வருகின்றனர் எனலாம். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நயிதே குலத்தவர்கள் முஸ்லிம்களில் மிகப் பழமையான இனமாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் ‘நயிதே' என்ற பதத்தைத் தமது பெயரில் ஒரு பகுதியாக பயன்படுத்தினார்கள். கண்டிய சிங்களக் கிராமங்களில் உள்ளது போன்று டிக்கிரிநயிதே, கிரிஅப்பு நயிதே என்னும் சிங்கள இனத்தவரின் குலப் பெயர் வழக்கைப் போன்றே, இங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் அபூபக்கர் நயிதே,பக்கீர் நயிதே என தமது பெயருடன் ‘நயிதே' எனும் பதத்தை இணைத்துக் கொண்டார்கள். மேலே கூறப்பட்டவர்கள் மாத்தளையில் வாழ்ந்த முஸ்லிம்களாவர். இப் பகுதியில் இப்பெயர்வழி தற்போது வழக்கொழிந்து விட்டன.
நயிதே குலத்தில் ஐந்து வகைக் குலப்பிரிவுகள் காணப்பட்டன. ஆசாரி, பட்டஹெல்ல, கராவ, மதின்னோ, மரக்கலயோ என இக்குலங்கள் சிங்களத்தில் கூறப்படுகின்றன. இக்குலப்பிரிவுகள் பல வற்றில் முஸ்லிம்கள் அடங்கியதால் அவர்களின் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு நயிதே குலம் பற்றி விளக்கம்
பி.கு: முஸ்லிமான ஓர் ஆடவருடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்ட கொவிகுல அல்லது நாட்டுச் சிங்களப் பெண்ணொருத்தியின் நிலைப்பற்றி 'உடகெதர முன்னால் கோரளை ஆராச்சியாருக்கு எதிராக ஏக்க நாயக்க கெதர டிங்கிரி மெனிக்கே என்ற வழக்கில் முஸ்லிம்கள் சமூக அந்தஸ்த்தின்படி ‘நயிதே குலத்தின் இரண்டாவதாக கணிக்கப்பட வேண்டுமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
(க.நீ.கொ.ச. 21-3-1829, 19-12-1829)
101
Page 59
அளிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களில் மடிகே கருமபீடத்தைச் சேர்ந்தவர்கள் ‘கராவ' குலத்தினராகக் கணிக்கப்
நயிதேகள் எனக் கருதப்பட்டார்கள்.
"மரக்க ைநயிதே' என்னும் குலப்பிரிவு முளல்லிம்களையே குறித்துக் காட்டியது. இக் குலம் முற்காலத்தில் மரக்க ைமாைள நயிதே என வழங்கப்பட்டது.(பி.கு) இவர்கள் இறைச்சி, மீன் போன்றவற்றை வினியோகம் செய்து வந்தார்கள். இதனால் இப்பெயர் TTT TT TT LL L T L TT eLeLSeqqqLLLL LLLLe LLLeL eeLeL TT
வாழ்ந்த முஸ்லிம்கள், காடுகளுக்குச் சென்று மரை போன்ற
iC GÜL LEGA (GS, AalauhGasa a கொண்டு போய் விற்பனைச் செய்தும் வந்தார்கள். கண்டியில் ரீ
முஸ்லிம்கள்ar TIIGò Gaian இறைச்சி Qıpsiikası (O X டுள்வது.
கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் 1841ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இல. 6819 என்னும் குடியியல் வழக்கின் ஆதனத்தின்பர்.
TTTTT MLTT LLTLT GLLLTATLT LLSLLLS LLLLL T TTTT TTTT TLLLLLLL LLLS
22 ஜனவரி 1836 இல் எழுதிய ஒர் அடமானச் சாசனத்தில்
றிப்பிடப்பட்டுள்ளது.
ம் இந்த வம் G ம்பிட் - சேர்ந்தவர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்குளயிந்தை என்னும் சிங்களக் குடியானவருடன் இவ் ஒப்பனை எழுதப்பட்டுள்ள
முண்லிம்கள் பலரது பெயர்களில் இந்தப் பதமும் பயன்படுத்தப்பட்டது. பாத்தனை Alami iò (1875) dai gigli anni மீதுளெப் asi- Caiacii
இவர்கள் மாப்பிள்ளை பற்றி பின்வருமாது குறிப்பிடுகின்றார். “முன்விம் ஆட்சி காந்ைதிற்கு
ifu நீக்க விரும்பி iñaashid as fhai
sigalio Chai as G us TTLTT TTTTTT LLTLTLMTTLLLLLLL LLLLLL TLL MMTLLLL LL LL SLS LLLLLT LLTLLLLLLL SLLL LLLLLL TLTTTTTT TLT TLTTTT T TLTTTLLLLL LL LLL LLTTLTL L LLLLLLLLSLSLLT LLLLTLTTL LSLLLLL LLLLLLLT Ng Arcaigu máis finasaí Cumai o hir Graighi AW
O2
இச்சாசனமானது தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதுடன் நொதாரிஸ் தமது கையொப்பத்தை அரபி மொழியில் வைத்துள்ளார். இதனால் இவ்வடமானச் சாசனத்தின் மறுதரப்பாளிரான மணவாள நயிதே என இங்கே குறிப்பிடபபடுவது ஒரு முஸ்லிமைக் குறிக்கும் பதமெனக் கொள்ளக் கூடியதாக உள்ளது
ஒவ்வொரு வகை நயிதே குலத்தவர்களும் சில ஊழியங்களைப் புரிவதைக் கடமையாக் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, இரும்பு வேலை செய்யும் குலவகையைச் சார்ந்தவர்களின் பிரதானி ஹங்க்கிடியோ (மூoகிெea) என அழைக்கப்படலாயினர். இவர்கள் (ஜூoகிெ அGே) ஹங்கிடி நயிதே எனும் குலத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கத்தி, மண்வெட்டி முதலான பொருட்களை வழங்குவதைத் தமது பொறுப்பாகக் கொண்டிருந்தனர். முஸ்லிம்களிலும் ‘நயிதே' என்னும் வம்சாவளிப் பெயரைக் கொண்டிருந்தவர்கள் விகாரை, தேவாலயங்களுக்காக இராசகாரியம் புரியும் போது, பல வகையான பொருட்களை அவற்றிக்கு வழங்கி வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
கேகாலை கெக்கிரிகொடையைச் சேர்ந்ந கொத்மலே நெய்தேலே ஆதம் லெப்பை உதுமா லெப்பை என்பவர் தெவனகல விகாரைக்காக அரிசி 40 கொத்து, தேங்காய் 15, பனியாரம் 100 போன்றவற்றை வழங்கினார்.[37) கனேகொடையைச் சேர்ந்த பொல்வத்தே நெய்தேலா கெதர சல்கா உம்மா என்னும் வீட்டுப் பெயருடைய முஸ்லிம் பெண்மணி இவ்வூர் தேவாலயத்திற்கு அரிசி 8 கொத்து, தேங்காய் எண்ணெய் 8 போத்தலும் வருடம் தோறும் வழங்கி வந்துள்ளனர்.38) வட்டதெனியாவில் வசித்த யஹலேதென்ன நயிதேலே கெதர மம்மது தம்பி என்பவரின் உரிமைக்காரர்கள் கண்டி பூரீ தலதா மாளிகைக்கு அரிசி 15 கொத்து வருடம் தோறும் கொடுத்து வந்தார்கள்.(39 அத்துடன், மேலே குறிப்பிட்டவர்களது வம்சாவளிப் பெயர்களுடன் கொத்மலை, பொல்வத்தை, யஹலதென்ன என்று அவர்கள் வசித்த பூர்வகுடிகளின் பெயர்களும் இணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
தெஹியங்கை என்பது கண்டி நகருக்கு எட்டு மைல்தொலைவில் அமைந்துள்ள முஸ்லிம்கள் வாழும் ஒரு கிராமமாகும். இங்கு கொட்டன் நயிதேலா கெதர இஸ்மாயில் லெப்பை என்பவரின் சந்ததியினர் அவ்வூரில், ‘கலு குருன்னேஹே என்பவர் வாழ்ந்த காணி ' எனும் இடத்திற்கு ஒரு வழக்கின் மூலம் உரிமை
103
Page 60
கோரினர். (40) இங்கே ‘கொட்டன” என்னும் பதம் மரக்குற்றிகளைக் குறிக்கும் சிங்கள பதத்தை ஒத்துள்ளது. நவன்தத்த’ எனும் குலத்தில் மரம் தொடர்பான தொழில்களைச் சார்ந்தோரும் அடங்குவது குறிப்பிடதக்கதாகும். அத்துடன் நயிதே குலவகுப்பாரும் ‘நவன்தத்த குலத்தைச் சார்ந்தவர்களே.
கேகாலைப் பிரதேசத்து முஸ்லிம்கள் வித்தியாசமான ‘நயிதே வம்சாவளிப் பெயர்களைக் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அவற்றில், அதலி நயிதேலாகே அகமது லெப்பை(41) தும்புளுவாவே நயிதேலே உதுமாலெப்பை காதர்லெப்பைஜ (42) என்பது போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் 1870ம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் வாழ்ந்தோராவர். இதே போன்று கண்டியைச் சூழ உள்ள பமுனுபொலை எனும் கிராமத்தில் ஒருவரது பெயர் கொதகே நயிதேலாகே உமர்லெப்பை(43) என்பதாகும். ஹாரிஸ்பத்துவை பிஹில்லதெனிய என்றும் கிராமத்தில் குட்டி நயிதேலாகே கெதர(44) என்னும் பெயர் வழக்கு முஸ்லிம்கள் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது. 1845 இல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மனுவொன்றில் ஒரு ஹாரிஸ்பத்துவை வாசியின் பெயர் கப்பு கண்ட விதானே சின்ன நயிதே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (45) சேகாதி நயிதேலா கெதர என்னும் பரம்பரைப்பெயர் வழக்கும் இப்பிரதேசத்தில் இருந்துள்ளது.(46)
‘நயிதே' என்னும் சொல் நாயுடு என தமிழில் குறிப்பிடும் பதத்துடன் தொடர்புபட்டுள்ளதை அவதானிக்கலாம். ‘நாயுடு என்னும் பதப்பிரயோகம் தெலுங்கு மொழியிலிருந்து வந்ததாகும். இப்பதத்தை முதன்முதலாக சிங்கள பிரதானிகளாக மாறிய நாயக்கர் சாதியினரே பயன்படுத்தியதாக அபேசிங்க என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகின்றார். பின்னர் இழிந்த குலத்தவர் மத்தியில் இது பிரயோகம் பண்ணப்பட்டதாக கருதமுடிகிறது. தென்னிந்திய குலஅமைப்பில் ‘நாயுடு” என்பவர்கள் பிரசித்தமானவர்களாக மதிக்கப்படுகின்றனர். அவர்கள் கண்டிய இராச்சியத்தில் கம்முலாதானிகளை (ஊர் பிரதானிகளை) ஒத்தவர்களாக இருந்தனர்.
தென்மாகாணத்தில் ஆரம்பகால முஸ்லிம்கள் ‘நாயுடு என்னும் பதத்தை தமது பெயருடன் பயன்படுத்தியுள்ளார்கள். கி.பி. 800ம் ஆண்டில் கோனியாவிலிருந்து இங்கு வந்திறங்கிய அரபி இளவரசரான ஜமால்தீன் என்பவரின் பரம்பரையினர் இங்கு குடியேறி வாழ்ந்தனர். அந்த வம்சாவளிப்பட்டியல் முஸ்லிம்களால் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு பட்டியலாகும். அதில் மஃதும்நாயுடு, உதுமான் நாயுடு என அப்பரம்பரையினர் சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. (47) இவை கண்டிப் பிரதேசத்தில்
104
காணப்பட்ட அபூபக்கர் நயிதே, பக்கீர் நயிதே என்னும் பெயர்களை ஒத்ததாக அமைந்துள்ளன.
கண்டிய 'ரதலை வம்சத்தவர்களும் ‘நயிதா' என்னும் பதத்தை தமது பெயருடன் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். எனவே இவ்வம்சாவளி நாமம் சிங்களவரிடையேயும், முஸ்லிம்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு விசேடமான தொடராகக் கொள்ளக் கூடியதாக உள்ளது.(பி.கு.)
ஆசாரி அல்லது குருன்னேவுேறலா என்னும் கொல்லர் குலம்
*குருன்னேஹேலா’ என்னும் வம்சாவளிப் பெயருடன் கண்டிய பிரதேசத்தின் பல ஊர்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நூலில் 3ம் அத்தியாயத்தில் இவர்கள் பற்றிய சில விபரங்கள் தரப் பட்டுள்ளன. என்றாலும், இவர்கள் இக் குலத்தை சார்ந்திருந்தமைக்கான உறுதியான சான்றுகள் கிடைப்பதற்கு அரிதாகவே உள்ளது. ‘குருன்னேஹேலா’ எனப்படுவோர் கண்டிய ‘ரடசபாவ’ என்னும் பரிபாலன முறையின் கீழ் இருந்தோருக்கும் வழங்கப்பட்டது. சிங்களவர்களிடையே கொல்லர் குலத்தைச் சார்ந்தவர்களுக்கு (ல06அe apex863) பட்டபொல ஆசாரிகே, ரயிகம ஆசாரிகே எனும் வம்சாவளிகள் இக்குலத்தைக் குறிக்கும் பெயராக உள்ளன. (48) அத்துடன் ஹங்கிடி (oைகிகி) கெதர எனும் பெயர் வழியும் உள்ளது. ஆனால் முஸ்லிம்களில் இப்பெயர்கள் பயன் படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை ஆனால், கண்டிய பிரதேசங்களில் 1901ம் ஆண்டின் சனக்கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களில் இரும்பு, உலோக வேலைகளைப் புரிந்து வந்தவர்களில் குறிப்பிட்ட தொகையினர் பல மாவட்டங்களிலும் இருந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கண்டி மாவட்டத்தில் 10 பேர், கேகாலை மாவட்டத்தில் 44 பேர், குருநாகலை மாவட்டத்தில் 21 பேர் இத்தொழிற் துறையில் ஈடுபட்டிருந்ததை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. ஆனால் இதில் இரும்புவேலை செய்த கொல்லர்கள் மிகச்சிலரேயாவர்.
‘வுறதுரு" எனப்படும் காவற்கார குலத்தினர்
இவர்கள் தாழ்ந்த குலத்தினைச் சார்ந்தோராக இருந்தனர் காவற்காரர்கள் இக்குலத்தில் அடங்கினர். காவற்காரர்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் கொவிகுலத்தினராக இருந்தார்கள்.
பி.கு: சிங்களத்தில் எழுதப்படும் போது ‘நயிதே' எனும்பதம் 'கிைe' எனவும் குை' எனவும் எழுதப்படுகின்றன
105
Page 61
கண்டிய இராசதானியில் வஹம்புர அல்லது கந்தேதுரயோ என்போர் ஹதுரு என்னும் இழிந்த வகுப்பாராகக் கருதப்பட்டனர்.49 இதில் ‘துரயா’ என்ற பதத்தை சிங்கள மக்கள் அவர்களுடைய வம்சாவளிப் பெயர்களுடனேயே சேர்ந்துக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. ‘நயிதே' எனும் பதத்தைப் பயன்படுத்தியது போன்றே களுதுரயா போன்ற பெயர்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. கண்டி குலுகம்மன என்னும் கிராமத்தில் காணியொன்றை காதர்கனியின் மகள் ஆயிஷா உம்மா என்பவர் கந்தே மஹதுரயலாகே கெதர என்ற பரம்பரைப் பெருடைய ஒரு சிங்களவருக்கு விற்பனை செய்ததாக ஒரு காணி உறுதி கூறுகிறது.(50) இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கந்தேதுரயா என்னும் குலப்பெயரும் காணப்படுகிறது. இவர் ‘ஹதுரு’ என்னும் குலத்தை சார்ந்தவராவர். அதே வேளை, வஹம்பொல என்னும் கண்டி நகர் பிரதேசத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள், மன்னர் மாளிகைக்காக ‘துரயா'வாக இராசகாரியம் செய்து பரவணி நிலங்களையும் பெற்றுள்ளார்கள்.
தாகஹதெனியே ஈசுபுலெப்பை, தாகஹதெனியே இஸ்மாயில் அகமது லெப்பை என்னும் வம்சாவளிப் பெயர்களைக் கொண்டவர்கள் இவ்வாறு ‘துரயா'வாக கருமமாற்றியவர்களில் சிலராவர். இதில் அஹமது லெப்பை என்பவருக்கு துர (go) இராசகாரியத்திற்குரிய ‘துரபங்கு காணிகள் வழங்கப்பட்டன.(51) அலதெனிய என்ற கிராமத்து முஸ்லிம்களும் இவ்வாறு ‘துரயா' வாகக் கடமை புரிந்துள்ளார்கள். ஆனால், இவர்கள் தமது பெயருடன் சிங்களவர்களைப் போன்று ‘துரயா’ என்னும் குலப்பெயரைச் சேர்த்திருக்கவில்லை. அத்துடன், முஸ்லிம்களிடையே இவ்வம்சாவளிப் பெயர்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், காவல் தளங்களில் பணி புரிந்தமையை சுட்டிக்காட்டக் கூடிய வம்ச நாமங்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. காவற்தளங்களை சிங்களத்தில் மொறப்பொல இ06அe) எனக் குறிப்பிடுவர். அக்குரணையில் மொறப்பொல அடப்பனார் வீட்டு அகம்மது கண்டு ஆராச்சியார் உதுமா லெப்பை ஆராச்சியார் என்ற ஒருவர் 1871ம் ஆண்டு காலப்பகுதியில் வசித்துள்ளார்.(52) இவரது மூதாதையரது வீட்டுப் பெயரை வம்சாவளியாக இவர் பயன் படுத்தியுள்ளார். இப்பெயர் வழியில் இருந்து, இவரது மூதாதையர் ஒரு காவல் தளத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் என்று கருதக் கூடியதாக உள்ளது. அவ்வாறாயின், அவர்கள் கொவி குலத்தைச் சேர்ந்தோராக இருந்திருப்பர் எனலாம். இவ்வூரைச் சூழ உள்ள பல கிராமத்து முஸ்லிம்களிடம் இந்த வம்சாவளிப் பெயர் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
106
எடுத்துக்காட்டாக, கண்டி மாவட்டத்தை நோக்கும் போது இங்கு மிகச் சிலரே முஸ்லிம்களில் காவற்காரர்களாக பணியாற்றியுள் ளார்கள். 1901ம் ஆண்டில் சனத்தொகை மதிப்பீட்டின்படி, தொழில் ரீதியாக கண்டி மாவட்டத்தில் காவற்காரர்களாக இருந்த முஸ்லிம்கள் 11 பேரேயாவர். மாத்தளை மாவட்டத்தில் ஒருவர் மாத்திரமே இருந்துள்ளார்.
கண்டிய முஸ்லிம்கள் சார்ந்திருந்த ஏனைய குல வகைகள்
சிங்கள மன்னர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய நேசத்தை காட்டும் சில வம்சாவளிப் பெயர்கள், கண்டிய முஸ்லிம்களால் வாழையடி வாழையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளன. இவை மன்னனின் அந்தரங்கமான சில தேவைகள், முஸ்லிம்களையும் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதைக் காட்டும் ஆதாரங்களாக அமைகின்றன. அத்துடன், மன்னன் தன்னுடன் தொடர்பு பட்ட பணிகளுக்காக தனக்கு நம்பிக்கையான ஒரு சிலரையே தேர்ந்தெடுத்திருந்தான் எனலாம். சில பணிகளின் சுயரூபங்கள் இழிந்த குலத்துக்குரிய தொழில்களோடு தொடர்பு பட்டவையாகத் தோன்றினும், கண்டிய அரசர்களை அண்மித்து இந்தப் பதவிகளை வகித்ததில் தனிச்சிறப்பும், பெருமையும் இருந்தது. இப்பதவிகளுக்கு உரிய தகுதிகளை விடவும் மன்னனும், அரச பிரதானிகளும் விருப்பம் கொள்ளும் மக்களாக அவர்கள் இருப்பதே பிரதானமாகக் கருதப் பட்டது. இதனால் அவர்களுக்கு நிந்தகம நிலங்களும் கிடைத்தன. இவ்வாறான பதவிக்குரியவர்கள் குறிப்பிட்ட தொகையினரே இருந்ததால், இப்பதவி வகித்தவர்கள் கண்டிய பிரதேசத்தில் தனிக் குலத்தினராகக் கணிக்கப்படவில்லை எனலாம். கண்டிய நாட்டின் தலைநகரை அண்மித்த ஹாரசியப்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் இவ்வாறான பெயர் வழக்குகள் உள்ளன.
சட்டம்பி
மன்னனது குளியல் அறை உள்பென்கே' என அழைக்கப் பட்டது. கண்டிய மன்னர்களின் குளியல் அறைக்குப் பொறுப்பாக இருந்தவர் மகா தியவடனை நிலமை அவர்களாவர். இவர் மன்னனின் அந்தரங்கமான கருமங்களை ஆற்றினார். அரசன் ஸ்நானம் பண்ணிய தன் பின்னர் அவரது தலைமுடியை சீவி சிங்காரித்து விடுவது இவரே. மகா தியவடனை நிலமை அவர்கள் மூலம் மன்னனின் அனுமதியுடன் சட்டம்பிமார்கள எனப்படுவோர் 10 பேரும், 'LJ60)6)Lඅsffffffආ6ff' 10 (3LJ([5ub (ශථිටමිබිවරු සහ පණිවිඩකාරයෝ) நியமிக்கப்பட்டார்கள். இச்சட்டம்பிமார்கள் மன்னனின் குளியல்
07
Page 62
அறையின் பணிகளைச் செய்தார்கள். சட்டம்பி மூலம் கொண்டு வரப்படும் தண்ணிரை அரசன் ஸ்நானம் செய்யும் போது, சில சந்தர்ப்பங்களில் மகா தியவடனை நிலமை மூலம் அரசனின் தலைக்கு வார்க்கப்படுவதுண்டு. ஆனால், பொதுவாக அரசனின் தலைக்கு நீர் ஊற்றி அரசனைக் குளிப்பாட்டுவது சட்டம்பி ஒருவர் மூலமாகவே நிறைவேற்றப் படுவதுண்டு. இதனால் சட்டம்பிமார்களில் இருவர் அரச மாளிகையில் சேவையாற்ற தயாராக, மாறி மாறி அங்கு தங்கி இருப்பது கடமையாகும். அத்துடன், சட்டம்பிமார்கள் எப்பொழுதும் அரசனுக்குரிய நகரிலேயே தங்கி இருப்பார்கள்.53)
இந்தப் பணியினை முஸ்லிம்கள் சிலரும் செய்துள்ளதை அவர்களின் வழித்தோன்றல்களின் பரம்பரைப் பெயர்களிலிருந்து அறிய முடிகிறது. 1871ம் ஆண்டில் அக்குரணையில் வசித்த ஒருவரின் பெயர் சட்டம்பியார் விட்டு அகமது லெப்பை முகம்மது லெப்பை என ஒரு பழமையான காணி உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.54) இவரது மூதாதையர்கள் சட்டம்பியாக இருந்ததை இவ்வீட்டுப் பெயர் தெளிவு படுத்துகின்றது.
மன்னனின் உள்பென்கே உடன் தொடர்பு கொண்டவர்களில் 50 குடும்பங்களில் உப பிரதானியாகவும் இச்சட்டம்பிமார்கள் திகழ்ந் தார்கள். சிங்களத்தில் ரஜக (Cைே-Ce) என குறிப்பிட்ப்படும் வண்ணான் எனப்படும் குலத்தைச் சார்ந்தோராக இவர்கள் வகைப்படுத்தப் பட்டாலும், கண்டிய மன்னனின் பரிவாரத்தில் ஒரு கூட்டத்தினராக இவர்கள் மதிக்கப்பட்டார்கள். இது ‘ரஜக கரும பீடம் எனக் குறிப்பிடப்படுகிறது. அந்தந்தக் கோரளைகளில் வசித்து வந்த இக்கரும பீடத்தினைச் சேர்ந்த ரஜகக்களுக்குப் பொறுப்பாக ஒரு ‘விதானேஹேன’ இருந்தார். அவரது ஆணைப் பிரகாரமே ரஜக பணியாளர்கள் சேவையாற்றினர்.
ஹாரசியபத்து, குளுகம்மன என்னும் ஊரில் உக்ரஸ்ஸ
பிட்டிய என்னும் கிராமம் உள்ளது. அங்கே, சட்டம்பி விதானலாகே கெதர சேகு உசன் என்னும் வம்சாவளிப் பெயருடைய ஒருவர் 1900ம் ஆண்டளவில் வாழ்ந்துள்ளதை கண்டி மாவட்ட நீதிமன்றத்தின் பிரிவிடல் வழக்கின் ஆதனம் ஒன்று கூறுகிறது.55) இது இக்கருமபீடத்தின் விதானைப் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இதுபோல், “பயின்டகார என்னும் பதவிகளையும் பல முஸ்லிம்கள் வகித்துள்ளார்கள்.
08
குறுண்ணான்சே
கண்டிய மன்னனின் அரண்மனை, அரசவை என்பன “மஹா வாஸல என அழைக்கப்பட்டன. இவ்வரண்மனையின் பகுதிகளாக ‘மெத வாஸல', 'பள்ளே வாஹல" என்பன அமைந்திருந்தன. இப்பள்ளெ வாஹல மாளிகையின் துணிகள் தொடர்பான கருமங்களைக் கவனிக்க ‘ஹலுவடன நிலமை என்னும் ஒரு பிரதானி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது வேலைகளுக்குத் துணையாக கருமமாற்ற மாத்தளை, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ, ஹேவாஹெற்றை, பாத்ததும்பரை போன்ற பிரதேசங்களில் இருந்து அவ்வப்பகுதிக்குரிய திசாவணிமார்கள் மூலமாக, மாறி மாறி முன்னர் குறிக்கப்பட்ட ரஜக எனப்படும் சலவைத் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டார்கள். ஆரம்பத்தில் இவர்கள் 20 பேர்கள் இருந்தார்கள்.(பி.கு) அவர்களில் ஒரு தடவைக்கு, ஐவர் வீதம் வந்து ஒருமாத காலம் சேவையாற்றி னார்கள். (இவர்களில் நாலு பேர்கள் இருந்ததாக சில குறிப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.) அவர்களுக்கு பிரதானி ஒருவர் இருக்கவில்லை. என்றாலும், இவ் ஐவரில் ஒருவர் மன்னன் மாளிகையின் துணிகளைச் சேகரிப்பதற்கு பொறுப்பாக, தியவடனை நிலமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அரண்மனையின் ‘அதுல் வாஹல" என்னும் மன்னனின் பிரதான படுக்கையறை வரை செல்லும் அதிகாரம் பெற்றிருந்தார். அவரே சலவைக்கான துணிகளை எடுப்பார். அரசமாளிகையில் ‘ஹேனய்யா' (G&ேைலி என்னும் சலவைத் தொழிலா ளியின் பிரதானியாக இருந்த அவருக்கு குறுன்னான்சே? நாமம் சூட்டப்பட்டது. (பள்ளே வாஹலயில் ஹேனய்ய என்னும் கரும பீடத்தில் 16 பேர்களில் தலவின்னையைச் சேர்ந்த ஒருவரும், குன்னேயானயைச் சேர்ந்த ஒருவரும் அடங்கி இருந்தனர்.) குறுன்னான்சே அவர்கள் தினமும் அதிகாலையில் தியவடனை நிலமையிடம் அல்லது ‘ஹலுவடன நிலமையின் மூலமாக துணிமணிகளைப் பெற்றுக் கொள்வார். இவர் சேவையாற்றும் காலத்தில் அவருக்கு அரச களஞ்சியத்திலிருந்து நெல்லும், குயவன் மூலம் மாளிகைக்கு வழங்கப்படும் மட்பாண்டங்களில் இருந்து சிலவும் அவர் தேவைக்கு கிடைத்து வந்தன.(56)
குறுன்னான்சே என்னும் வம்சாவளிப் பெயரைக் உடைய முஸ்லிம்களில் ஒரு பரம்பரையினர் மிக நீண்ட காலமாக ஹாரிஸ் பத்துவைப் பகுதியில் வாழ்ந்து வருவதை பல குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகிறது. கண்டி வடக்கு மாவட்ட நீதிமன்றம் செயற்பாட்டில் இருந்த காலப்பகுதியில், இலக்கம் 2328 (18088) என்னும்
பி.கு. 1901ம் ஆண்டு சனக்கணிப்பின்படி கண்டி மாவட்டத்தில் வண்ணானாக தொழில் பார்த்த முஸ்லிம் ஒருவர் மாத்திரமே இருந்துள்ளார்.
109
Page 63
வயற்காணியொன்று தொடர்பான வழக்கொன்று ‘அதிகாரி கெதர ரன்மெனிக்கா’ என்பவரால் 6 பெப்.1844 இல் அந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் எதிராளியாக ஹாரிஸ்பத்து புளுகொஹொத்தென்னையில் வசித்த தேசே குறுன்னான்சேலா கெதர மீராலெப்பை என்பவர் இருந்தார். இவ்வழக்குப் புத்தகம் இன்றும் கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது இவ்வம்சாவளியின் தொன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நொத்தாரிசு அ.லெ.முகம்மது லெப்பை அவாகள் மூலம் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இலக்கம் 89, (11 மே 1871) எனும் காணி உறுதியொன்று கண்டி காணிப்பதிவாளர் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது (பாகம் 1:1871 - 1872) அதில் அளவத்துகொடையில் வசித்த ஒருவரது பெயர் தேசே குறுணனாசே வீட்டு உதுமாலெப்பை மஃமுதுலெப்பை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நொதாரிசு கந்தப்பா கணபதிபிள்ளை அவர்கள் மூலம் தமிழ் மொழியில் 1900ம் ஆண்டிற்கு முன்னர் எழுதப்பட்ட அவரது தொடர் இலக்கம் 14 எனும் ஆரம்ப காணிப்பதிவொன்றில் லொகு தேசே குருனான்சைலாகே கெதர உமறு லெப்பை ஆலிம் சாகிபு என ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இங்கு 'ஆலிம் எனப்படுவது அரபி மொழிப் பதமாகும். அது இஸ்லாமிய மார்க்க அறிஞரைக் குறிப்பதாகும். அத்துடன், கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் காணி தொடர்பான வழக்கிலக்கம் எல். 15093 இல் இணைக்கப்பட்டுள்ள இலக்கம் 3032 எனும் ஒப்பனையின் படி அக்குரனை பள்ளேகம்பஹயில் லொகு தேசே குறுன்னான்சேலாகே கெதர செய்யது முகம்மது என்பவரது வாரிசுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்பரம்பரையினர் மிகப்பழமையான காலத்தில் இருந்தே இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருவதை அவர்களது வம்சாவளிப் பெயர் பாவனையில் இருந்தும், அப்பரம்பரையினர் ஆட்சி செலுத்தி வரும் நிலபுலன்களில் இருந்தும் அறிய முடிகிறது.
இவ்வம்சாவளியில் தேசே (eded) என்னும் சிங்களப்பதமும் சேர்ந்தே பல்வேறுபட்ட ஆதனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தேசே என்னும் பதம் சிங்களத்தில் வெளிநாட்டவரைக் குறிக்கும் பதமாகக் கொள்ளலாம். சிங்களத்தில் ’தெஸ்' (eஆகி), 'தேஸ்' (e&) என்பன ‘தேசய' (e&லo) என்னும் தேசத்தைக் குறிப்பிடும் பதமாகும். கம்பளை ஊடாக பாவா ஆதமலைக்கு போகும் பாதை வழியே அடலொஸ் தேச வாசீன் (eroeed e&லe)ஜிே) என்னும் 18 நாட்டவர் பிரயாணம் செய்ததாக “பூஜாவலிய' என்ற சிங்கள புராண ஏடு கூறுகிறது. இதில் சோனக, ஜாவக, சீன, சோழ, வங்க என 18 தேசத்தவர்
O
பற்றிய விபரக் குறிப்பு "ரீசுமங்கள” சிங்கள அகராதியில் எழுதப்பட்டடுள்ளது. அத்துடன், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகு தியில் வரையப்பட்ட மாத்தளை எல்கை ஏடுகளின்படி (அeைஞ்ெைஒ9 e)ை யுத்தச் சேனையொன்றில் மாத்தளையில் பங்குபற்றியோர் பற்றிய குறிப்பொன்றில் (eeலிை eலை இgைe) ‘தேசே வெளிநாட்டவர் அடங்கிய படைப்பிரிவொன்றும் கலந்திருந்ததாக வரையப்பட்டுள்ளது.
தேசே என இங்கு வம்சாவளிப் பெயரில் இடம் பெற்றுள்ள ஹாரிஸ்பத்து பிரதேசத்தில் வாழ்ந்த, இப்பரம்பரைப் பெயருக்குரிய மூதாதையரும் சமகாலத்தவர் என கருதலாம். ஏனெனில், சோனகர்கள் வெளிநாட்டார்’ என அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டுள்ளார்கள். H. W. கொடிறின்றனின் ‘இலங்கையின் கருக்க வரலாறு' என்னும் நூலில் சோனகர் - செட்டிகள் பிறநாட்டார் என கருதப்பட்டமையால் *ஊழியம் செய்ய வேண்டியவராயினர். (தமிழ் மொழி பெயர்ப்பு - ப.142) எனக் குறிப்பிடுகின்றார்.
இதனடிப்படையில், இப்பரம்பரைப் பெயரில் தேசே குறுன்னான்சே என வரும் வாசகங்கள் வெளிநாட்டவரான ஒரு குறுண்ணான்சேக்குக் கூறப்பட்ட ஒரு சிறப்புப் பெயராக கருத இடமுண்டு. (பி.கு.)
ஆனால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தேசே குறுன்னான்சே எனும் பரம்பரையினர் பற்றி பிரிதொரு கருத்தும் இவ்வூரில் நிலவுவதை அறியக் கூடியதாகவுள்ளது. இச்சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப் பட்டவர், அக்குரனைப் பகுதியில் குடியேறிய சோனகர்களின் முன்னேரில் ஒருவர் எனவும், இவர் இஸ்லாமிய சன்மார்க்க அறிஞரான ஓர் 'ஆலிம் எனவும் செவிவழிக் கதையொன்று உள்ளது. முஸ்லிம்கள் சிங்களப் பெண்களை மணமுடித்துக் கொண்டதாக வரும் மரபு வழிக்கதைகளில், சிங்களப் பெண்ணொருத்தியிடம் ‘கித்துல் மீரா” எனப்படும் பதநீர் அருந்திய போது, ஏற்பட்ட ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, அவளை கண்டிய மன்னர் ஒருவர் அச்சோனகருக்கே திருமணம் செய்து வைத்ததாக ஒரு வரலாறும் உள்ளது. கண்டிய மன்னன் அவருக்கு சகல விதமான வசதிகளையும் செய்து கொடுத்தான் எனவும், அக்கதை கூறுகிறது. அச்சோனகர் ‘ஓர் ஆலிம் எனவும் கூறப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதொன் றாகும்.57
பி.கு: அக்குரனை புளுகொஹொதென்னை எனும் கிராமத்தில் தேசே குருன்னஹேலே அலிபுதாயுள்ளே (1872) என்னும் ஒருவரும் வசித்துள்ளார்.
11
Page 64
முஸ்லிம்களில், முற்காலத்தில் வாழ்ந்த ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) “குருகம' என சிங்களத்தில் அழைக்கப்படும் மந்திரம், தாயத்து, சூனியம் வெட்டுதல், பால்பார்த்தல், இராசி பார்த்தல் போன்ற வைத்திய முறையையும் மதவேறுபாடு காட்டாது செய்து வந்தார்கள். மார்க்க ஈடுபாடு மிக்க முஸ்லிம்கள் மீது சிங்கள மக்கள் மிகுதமாக நம்பிக்கையை பழமையான காலத்திலேயே கொண்டிருந்தமைக்கு பல ஆதாரங்கள் உள்ளன. சிங்களவர்கள், இஸ்லாமிய அவ்லியாக்கள்மார்களின் சியாரங்களை தரிசித்து, அதற்கு சங்கை செய்து பிரயோசனங்களையும் அடைந்து வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.(பி.கு.) இதனால் இவ்வாறான அறிஞர்களை குருன்னான்சே என அழைக்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.
வஹன்சே (ஜூஜீைலகி) என்னும் சிங்களப்பதம் கெளரவ அர்த்தத்தை வெளிபடுத்த சிங்களத்தில் உபயோகிக்கப்படுகின்றது. (உ-ம் புதுன்வஹன்சே) அதே வேளை சிங்களவர்களிடையே மதகுருமார்களை மரியாதையாக அழைக்கும் போது உன்னான்சை (உ-ம் சொமன உன்னான்சை தம்ம ஜோதி தெருண்னான்சை என ஓர் ஒப்பனையில் எழுதப்பட்டுள்ளது) என கூறப்பட்டுள்ளது. உன்னான்சே (C&8ை36) என்னும் பதம் உன்வஹன்சே (Cஜூண்ைடு)ே என்னும் பதத்தின் திரிபேயாகும். சொல்லகராதி முறையில் உன்னான்சே என்னும் சொல் அவ்வளவு சிறப்பான ஒரு சொல்லாகாது. இங்கும் குருன்வஹன்சே (இoல்eைed) கெளரவமான கருத்தைத் தாங்கி வரும் பதம் திரிபடைந்து குருன்னான்சே (இ0&ண்ைடு)ே என்னும் சொல்லாகியுள்ளது எனக் கூறலாம்.(58) இஸ்லாமிய மதப் போதகர்களும் இதனையொத்த கெளரவ நாமங்கள் கொண்டு அழைக்கப்பட்டுள்ளதை வம்சாவளியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அப்பெயர்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
பாத்ததும்பறை உடகம்பகை குண்ணாபானையில் அப்துல் காதர் லெப்பை பாதிலி உன்னேஹெ (அ88 e&CைGS) என்பவர் 1910ம் ஆண்டளவில் வசித்துள்ளார்கள். இது முஸ்லிம் மதப் பாதிரி ஒருவரைக் குறிப்பிடுகிறது. இதே பெயர் வம்சாவளிப் பெயராக 1866 இல் பாதிலி (அ)&இ) குருன்னஹலாகே கெதர ஆதம் புள்ளே லெப்பை (59) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பெளத்த மதகுருமாரை அழைப்பதைப் போன்றே இப்பெயர்களும் உள்ளன.
அத்துடன், ‘குரு' என்னும் சொல்லடியாகக் கொண்ட *குருக்கள’ என அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் தென்னிந்தியர்
பி.கு. அவ்லியாக்கல் - இறைநேசர்களான ஞானியர். சியாரம் - கள்
12
குலவகைகளில் அடங்கியிருந்தனர். இவர்கள் சமய சடங்குகளை நடாத்தி வைப்பவர்களாக இருந்தனர். இவர்களின் ஆண்கள் ‘நயினார்’ எனவும் பெண்கள் நாச்சியார் எனவும் (பி.கு.) பொதுவாக அழைக்கப்பட்டனர்.60 மேலே குறிப்பிடப்பட்ட ‘தேசே குருன்னான்சே என்ற வம்சாவளியைக் கொண்டிருந்தவர்களின் பெண்வாரிசுகள் *செய்னபு நாச்சியார், ரஹற்மத்நாச்சியார்’ என்னும் பெயர்களைக் கொண்டிருந்தார்கள்.(61) சிங்களவர்கள் மத்தியிலும் குருகுலத்துடன் தொடர்புபட்ட ‘குருகே, குருகெதர என்ற வாசகங்கள் வழக்கில் உள்ளன. கடுகண்ணாவையில் மாத்கமுவ என்ற இடம், ஒரு குருகெதர அமையப் பெற்றதனால் குருக்குத்தலை எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதே போல், கண்டி நகருக்குக் கிட்டிய தொலைவில் அமைந்திருக்கும், கொண்டதெனிய கிராமத்தில் 1913ல் வசித்த ஒருவரது தலுக்கே கெதர அம்பாவில்ல குருக்குகே கெதர ஆதம் லெப்பை என்னும் வம்சாவளிப்பெயரில், ‘குருக்குகே’ என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இவரது மகளின் பெயர் ஹவ்வா நாச்சியார் என்பதாகும். கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் இலக்கம் 12386 என்னும் பிரிவிடல் வழக்கில் இப்பெயர்களை காணமுடிகிறது. எழுபது வயது நிரம்பிய ‘ஹவ்வா நாச்சியார்’ என்னும் மூதாட்டியான முஸ்லிம் பெண்மணி இவ்வழக்கில் இந்நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் (1997ல்) சிங்கள
முஸ்லிம்களது சிங்கள மொழித் தேர்ச்சிக்கு அவர்கள் ‘குஞ்கெதர என்பவற்றுடன் தொடர்பு வைத்திருந்தமை யையும் ஒரு காரணமாகக் கருதலாம்.
சாலிய அல்லது சலாகம
தையற்காரர்கள், நெசவாளர்களக வாழும் முஸ்லிம்களின் மூதாதையரது ஓர் இனமாக சலாகம அல்லது சாலிய குலத்தினைக் குறிப்பிடலாம். கண்டிய இராச்சியத்திலும் இவ்வினத்து முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். கண்டிய பிரதானிகளும், ஊர்ப் பிரதானிகளான கம்முலாதானிமார்களும் இடுப்புக்கு அணியும் துப்பட்டி என்னும் துணியை, இவர்கள் நெய்தார்கள். வருடம் தோறும் ஒன்று அல்லது அதிற் பாதித் துப்பட்டியை இக்குலத்தவர் வரியாக செலுத்தி வந்தார்கள். கண்டிய மன்னன் முதலாவது இராஜசிங்கனுக்கு (155493) அறுபது முஸ்லிம்கள் வருடம் தோறும் துப்பட்டி வரி செலுத்தி வந்தார்கள்.
பி.கு.: "நாச்சியார்’ என்பது பற்றிய பிறிதொரு விளக்கம் பின்னல் எழுதப்பட்டுள்ளது. (ஆர்) ஹாரிஸ்பத்து உடகம்பஹ விலான என்னும் இடத்தில் பிட்டியே கெதர வாப்பு நயினா என்பவர் (1890) வாழ்ந்தார். அவரது மனைவியின் பெயர் பாத்தும்ாநாச்சியர் எண்பதாகும் முஸ்லிம்களில் “நயினார்’ என்ற பெயர் கொண்டர்வர்கள் அனேகர் உள்ளனர்)
113
Page 65
மாத்தளையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமான கொங்காவலையில் "துப்பட்டி குருன்னேஹே’ என்னும் ஒருவர் வசித்தஇடம்பற்றி 1870ம் ஆண்டு காணி உறுதியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1901 ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டில் தொழில் அடிப்படையில், மாத்தளை மாவட்டத்தில் 35 பேரும், கண்டி மாவட்டத்தில் 172 பேரும் முஸ்லிம்களில் தையற்காரர்களாக இருந்துள்ளார்கள். (தொகு.I இன்படி)
கோபாலச் சோனகர்
முஸ்லிம்களில் மாத்திரம் காணப்பட்ட வர்க்கத்தாரில் கோபால சோனகர்கள் பிரபல்யமானவர்களாக இருந்தார்கள். கண்டிய இராச்சியத்தில் சகல பிரதேசங்களிலும் வாழ்ந்த இவர்கள் கோபால என்னும் நாமத்தைத் தமது பரம்பரைப் பெயர்களுடன் சூட்டிக்கொண் டார்கள். இவர்கள் வாழ்ந்த இடங்களினின்றும் இடம் பெயர்ந்து போனாலும் வசித்தமைக்குத் தடயமாக, இவர்களது வம்சப்பெயர் அங்கே காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, பாத்தும்பரை குண்னேயமன என்ற கிராமத்தில் கோபால கொடுவே வத்தே என்ற ஒரு தோட்டம் காணப்படுகிறது. இவர்கள் வாழ்ந்த வீடுகள் “கோபால கெதர, கோபால வளவ்வ எனவும் அழைக்கப்டுகின்றன. இவர்கள் பற்றி விரிவான விவரங்கள் ஏற்கனவே இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
LL6 of
இக்கோபாலச் சோனகர்கள் பட்டாணி எனும் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள். அதேவேளை பட்டாணி என்ற வம்சாவளிப்பெயரைக் கொண்டு கண்டிப் பிரதேசத்தில் முஸ்லிம் குடும் பங்கள் பல வாழ்ந்து வந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. பாத்தஹேவாஹெட்டை உடதெனிய என்ற கிராமத்தில் பட்டாணி கெதர வத்த என்ற இடத்தில் பட்டாணி ஈசா முஹம்மது மீரா சாகிபு என்பவர் வாழ்ந்தமை பற்றிய குறிப்பொன்று 1886 இல் எழுதப்பட்ட காணி உறுதியொன்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.62)
உக்குரஸ்பிட்டிய என்ற கிராமத்தில் மிக நீண்ட காலங்களுக்கு முன்னர் பட்டாணி விதானலாகே கெதர அபூபக்கர் என்பவர் வசித்துள்ளார். இவர் பெயரில் வரும் பட்டாணி என்பது இவரது குலப்பெயரையும், இவர் பரம்பரையில் ஒருவர் விதானையாக பதவி வகித்துள்ளதையும் இது காட்டுகிறது. அத்துடன், இவர் வாழ்ந்த இடத்தின் பெயர் முத்துகண்டு விதானகே வத்தே எனக் குறிப்பிடப்
4
பட்டுள்ளது. இது அந்த விதானையின் பெயராகும். இவ்விவரங்கள் கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 13258 இல் காணப்படுகின்றன.
கண்டி மாவட்டத்தில் மெதசியப்பத்துவில் குருந்துகொல்ல என்பது முஸ்லிம்கள் வாழும் ஒரு கிராமமாகும். (பி.கு) இது முஸ்லிம்களின் ஆரம்ப குடியேற்றம் அமைந்த கிராமங்களில் ஒன்றாகும். இக்கிராம பெயரைக் கொண்ட குருந்து கொல்லே முஹந்திரம்லாகே கெதர என்னும் வம்சாவளிப் பெயர், அக்குரணைப் பிரதேசத்தில் பிரசித்தமானதாகும்.(63) இது இவ்வூரில் ஒரு முஸ்லிம் முஹந்திரம் வாழ்ந்துள்ளமைக்கு சான்றாகிறது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வூர் முஸ்லிம் ஆராச்சி வசமாக இருந்ததாக ஏ.சீ லோரி என்னும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இவ்வூரில் ரீ தலதா மாளிகைக்கு பூஜை செய்யப்ட்ட காணிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதற்காக அவர்கள் மாளிகை திருத்த வேலை நடைபெறும்போது சமுகமளிக்கக் கடமை பட்டிருந்தார்கள். பட்டாடி கெதர பாவா சாயுபு அப்துல் ரஹ்மான என்பவரின் பெயரும் 1872ம் அண்டு ஜாபிதாவில் இடம் பெற்றுள்ளது.64) பட்டாணி’ என்பது இங்கு பட்டாடி’ எனத் திரிபடைந் துள்ளது எனலாம்.
வம்சாவளிப்பெயர்கள் அடிப்படையில் முஸ்லிம்களை மேலும் பல பிரிவினராக வகைப்படுத்தலாம். அதே போன்று கண்டிய குல91மைப்பில் பரம்பரைப் பெயர்களில் குலவழிப் பெயர்களைச் சேர்ந்துக் கொள்ளாமலும்
முஸ்லிம்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
குலமும் குடியும்
கண்டிய இராச்சியத்தில் பிந்திய காலப்பகுதியில் வம்சத்தின் வேறுபாடுகள் வசிப்பிடங்களை வைத்தும் தீர்மானிக்கப்பட்டன. ரதலைமார்கள் வாழ்ந்த வீடுகள் வளவ்வ அல்லது வளவ்வு' என வழங்கப்பட்டன. இது தமிழில் இருந்து மருவி வந்த ஒரு சொல்லாகும். ‘வளவ்வ' என்னும் வாசகத்தை தமது வம்சாவளியுடனும் சிங்களவர்கள் இணைத்துக் கொள்ளலானார்கள். இது வீட்டுப் பெயராக உபயோகிக்கப்பட்டு வந்தது. ஒரு சில முஸ்லிம்களிடை யேயும் இந்நடைமுறை இருந்துள்ளதை இங்கே அவதானிக்கலாம்.
பி.கு.: 1901ம் ஆண்டு சனங்களின்படி இங்கு மொத்த சனத்தொகை 198 பேர் அதில் 197 பேர் முஸ்லிம்களாவர்.
15
Page 66
உடுநுவரை வெலம்பொடையில் வசித்த ஒருவரின் பெயர் பேத்கே "வளவ்வெ சேகு அபூபக்கர் உடையார் (1905) என்பதாகும்.(65) வைத்தியனார் வீட்டு வளவ்வு என இதனைத் தமிழில் குறிப்பிடலாம். மாத்தளை உடசியபத்துவையில் மருதிலவ “வளவ” சுவரகன மருது மரைக்கார் (1876) என்னுமொருவர் தமது வளவ்வின் பெயரை வம்சாவளியுடன் இணைத்துள்ளதை காணலாம்.(66) தெல்தொட்டை என்னும் கிராமத்தில் வழக்கில் உள்ள தென்னே வழவ்வே கெதர என்ற வம்சாவளிப்பெயரில் ‘வளவ்வ’ என்ற பதப்பிரயோகம் காணப்படுகின்றது.
ஊரின் பெரிய வீடுகளும், ஒரடுக்குள்ள வீடுகளும் பங்களா' என ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்டன. வீட்டுப் பெயர் சூட்டிக் கொண்டவர்கள் இப்பெயரையும் தமது வம்சாவளிப் பெயராாக்கிக் கொண்டுள்ளார்கள்.
பாத்தும்பரை மடவளை மடிகேயில் பங்களாவே கெதர நொஹொத் (அல்லது) குருன்னேஹேலாகே கெதர எனும் வம்சாவளிப் பெயர் கொண்டோரின் பரம்பரையினர் வாழ்ந்து வருகின்றனர்.(67) இதில் ஆரம்பத்தில் ‘குருன்னேஹேலாகே கெதர என்ற பெயர் உள்ளவரே பங்களாவே கெதர என்ற பெயரைத் தமது பெயருடன் சேர்த்துக் கொண்டுள்ளார் என்பது இங்கு புலனாகின்றது.
இவ்வாறு குலப்பெயருடன் ‘வளவ்வ' போலான குடிப்பெயர் களை இணைக்கும் பழக்கம் முற்காலத்தில் காணப்படவில்லை.
1) ජන ව • ශය 9සහ 11 ජි ටු (සි ඉංහල සමාජ සංවිධානය - 181 ජී .
මහනුවර යුගය - රැල්ෆ් පීරිස් අනුව) 2) කෙලෙස එක්දහස' පන'සියය - මහාචාර්ය රේරැ කානේ චන්දවිමල
1973. (පිටු අංක 10, 11 හා 14) 3) සමයාන්තර විශේව කෝෂය - ඩේවිඩ් කරුණාරත්න (759පි)(1956) 4) தென் னிநிதியக் குலங்களும் குடிகளும் - தொகுதி ஒன்று ஆங்கிலம் மூலம் - எட்கர் தர்ஸி டண் . தமிழில் . முனைவர். க. இரத்தினம் (தஞ்சாவூர்) 5) මධ්ය කාලීන සිංහල කලා - ආනන්ද කේ. කුමාරස්වාමි. පරිවර්
Noē). Noē0.gads)C6z5 - 962 - 203 6) උඩරට මහා කැරැල්ල III කාණඩය-275පි 7) ගම්පොල යුගය - කහටපිටියේ ධීරානන්ද හිමි - 122 පි. 8) தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி ஒன்று பக்.189 9) මධාස කාලීන සිංහල කලා - 20පි 10) උඩරට මහා කැරැල්ල III කාණඩය- (272 සහ 395 ජ) 11) நொ/A.L.M. இஸ்மாயில் லெப்பை மரிக் கார். காணி உறுதி
இல. 360(தமிழ்) - 15-10-1862. 12) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கிலக்கம் P8665 காணி
உறுதி இல. 983 (30-12-1878)
116
13) SL/NASERVICETENURESREGISTORKEGALLA (1872) P229 14) N.A. 18/4 1833 & 1840 - 42 Diary of the Kandy Kachchri G. A. No.94 15) நொIA. L. M. முஹம்மது லெப்பை மரிக்கார் (தொகுதி-2)
காணி உறுதி இலக்கம் 408 (1901-1863) N 15A)நொ-கந்தையா முருகேசுபிள்ளை காணி உறுதி (VOL-3)
sao. 1105(25-12-1878) 15B)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P2934 காணி உறுதி இல.
427, 129-1936(தர்மசேன நொதாரிசு) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 6271 (1962.7.23) 15C)கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இல. 11581 (29.5. 1897) 16) நொIA. L. முஹம்மது லெப்பை (தொகுதி 2) காணி உறுதி
இலக்கம் 333, 13-06-1872 : க.மா.நீ பிரிவிடல் வழக்கு P9652 16A)கனர் டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 9944
காணி உறுதி இல. 9498 (7-3-1964) 16B)நொIA.I. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 429
(13-1-1873) 17) ஜனக்கணிப்பு தொகுதி 1-1901 பக்கம் 191(16) 18) තමන්කඩුව (1815-1900) ආචාර්ය උක්කුබණඩා කරුණානන්ද,68පි 19) நம் முன்னோர் - முஹம்மது ஸ்மீர் பின் ஹாக, இளம் மாயிலி
எபெண்டி(1979) பக்கம்.02 20) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - 048 21) இலங்கைச் சோனகர் பற்றி கடந்தகால நினைவுகள்(1981) பக்கம் 231 22) A GAZETTEER - CEBTRAL PROVINCE OF CEYLON VOL - 11 A. C.
LAWRIE(DJ - KANDY) - 1898 P-513,530 23) SLVN.A SERVICE TENURES REGISTOR KEGALLA (1872) -P 889 24) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 9652 25) S.LJN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 533 26) நொகந்தப்பா - கணபதிபிள்ளை காணி உறுதி இல.06.மும்
கண்டி மாவட்ட நீதி மன்ற பிரிவிடல் வழக்கு P3718 (1867 காணி உறுதி) 27) කන්ද උඩරට සමාජ සංවිධානය - ආචාර්ය මිරැන්ඩෙෆ් ඔබේසේකර - 388. 28) S.LVN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 154, 163 29) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - රැල්ෆ් පීරිස් :1964 - 188පි 30) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - රැල්ෆ් පීරිස් :1964 - 192පි 31) S.LVN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 169 32) සිංහල ආණඩු ක්රමය පිළිබඳ ලුහුඩු සටහන් - සර් ජෝන් ඩොයිලි
(පරිවර්තනය) (1966) 33) අපේ ජන කලා 34) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - 192පි. 35) SLJN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P-540 36) நொA.L. முஹம்மது லெப்பை (தமிழி) காணி உறுதி இல .
306 (23-4-1872) 37) S.LVN.A. SERVICE TENURES REGISTOR KEGALLA (1872) P-353 38) S.LVN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 788 39) S.LJN.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P-363 40) கண்டி மாவட்ட நீதி மன்ற வழக்கிலக்கம் P. 13200 காணி
உறுதி இலக்கம் 9333 (607-1916) நொMW இலங்கதிலக்க.
117
Page 67
41-42) S.L/N.A. SERVICE TENURES REGISTOR KEGALLA (1872)
43) 44) 45) 46) 47)
48) 49) 50)
51) 52)
53) 54)
55)
56)
57)
58)
59
60) 61) 62)
63) 64) 65)
66) 67)
P - 202/203 S.L/N.A. SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 533 கண்டி மாவட்ட நீதிமன்றம் P. 11208 வழக்கில் N.A.G. 18/6-3-10-1845 (C.R. BULLES - G.A) SERVICE TENURES REGISTOR KANDY (1872) P - 540 நம் முனி னோர் - முஹம்மது ஸ்மீர் பினி ஹாகி இஸ் மாயரிலி எபெண்டி (1979) பக்கம். 24 கண்டி மாவட்ட நீதிமன்றம் காணி வழக்கிலக்கம் 18540 සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - 6 හා 186ෂි கண்டி மாவட்ட நீதிமன்றம் வழக்கிலக்கம் P. 2253 காணி உறுதி இல.7525 (6.1.1936) SERVICE TENURES REGISTOR KANDY P643,645,641 காணி உறுதி நொ/A.IL முஹம்மது G6) 60) u $6ხ. 64 (21-11-1871) மற்றும் இல. 125, 376 (தமிழ் உறுதி) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - රැල්ෆ් පීරිස් (1964) நொ/AL முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 175 (21-11-1871)
கண்டி மாவட்ட நீதிமன்றம் பிரிவிடல் வழக்கு இல. P8476 (காணி உறுதி இல 18329 -299-1953) සිංහල සමාජ සංවිධානය - මහනුවර යුගය - 195පි හා සිංහල ආණඩු ක්රමය පිළිබඳ ලුහුඩු සටහන් - සර් ජෝන් ඩොයිලි 156පි இலங்கைச் சோனகர் பற்றிய கடந்தகால நினைவுகள் பக்கம் (221. 222) (S.E.N. நிக்கலஸ்-த டைம்ஸ் ஒப்சிலோன். 1951 ஒப்ஸர்வர்) நொ/ALM காசிம் (தமிழ்-காணிஉறுதி) 17ஆடி 1877 இல. 173 இதில் ‘சொமன உன்னான்சே தம்ம ஜோதி தெருண்ணான்சை” என பெயர்கள் இடம் (බLughp]6itōment. ජීවg5g|L6) සමයාන්තර විශේවකෝෂය - 833 පි கணி டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 6032 (2280 27-10-1866) காணி உறுதி) தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி - ஒன்று பக்கம் 402 கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இலக்கம்(காணி) L 15093
கணி டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இலக்கம் (காணி) P 6583 காணி உறுதி இல. 5705 (1886 மார்ச்) கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இலக்கம் P 8326 SL/NA SERVICE TENURES REGISTOR KANDY - P. 647 நொ/M கொதலாவல இல .5504 (19-12-1905) கணி டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இல. P. 7261 நொ-கந்தையா முருகேசுபிள்ளை காணி உறுதி இ-465(17-3-1876) கணி டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 3114 காணி உறுதி இல. 35529(106-1942)
చళCసభఛళ
18
அத்தியாயம் VI
சமூக வாழ்க்கையில் முஸ்லிம்களது சிங்கள வம்சாவளிப் பெயர்கள்
முஸ்லிம்களின் சமூகச் சூழல்
கம (9ை) என்னும் சிங்களப் பதம் ‘கிராமம்’ என்னும் அர்த்தத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது. கண்டி பிரதேசத்தில் தனியான ஒரு காணிக்கு அல்லது வயலொன்றுக்குக் கூட இப்பதத்தைப் பரவலாக பிரயோகிப்பது வழக்கமாக இருந்தது. வயல்களின் பெயரைக் கொண்டு கிராமங்களின் பெயர்களும் இருப்பதை காணலாம். எடுத்துக் காட்டாக பல்கும்புர, கொட்டியாகும்புர என்ற சில கிராமங்களைக் குறிப்பிடலாம். ஆகையால், கண்டிய கிராமங்கள் வய்லையும், வயலைச் சார்ந்த மேட்டுநிலமான தோட்டத்தையும் கொண்டவையாக காணப்பட்டன. அதனால், விவசாயம் என்பது கண்டிய பிரதேசத்தில் உயர்வானதும், புனிதத்தன்மை மிக்கதுமான ஒரு தொழிலாக மதிக்கப்பட்டது. சமுதாயத்தின் சகல வகுப்பினரும் விவசாயத்தில் ஈடுபாடு காட்டினார்கள். உயர்வான சமூகத் தகைமையைக் கொண்டிருந்த ஒரு சிலரைத் தவிர, ஏனையோர் வயற் சூழலில் விவசாயத்தின் மூலம் ஒன்றிணைந்தார்கள். அவர்கள் கிட்டிய உறவு பூண்டு செயற்பட்டார்கள். இது அக்கால கண்டிய சமூக அமைப்பின் ஒரு பிரதான இலட்சணமாகும்.
கண்டிய முஸ்லிம்களினதும் பிரதான தொழிலாக, விவசாயம் இருந்தது. மிகப் பழமையான காலத்திலே, இங்கு குடியேறிய பூர்வீக முஸ்லிம்கள் காணி நிலங்களைப் பெற்றுக் கொண்ட வழிமுறைகளை நோக்கும் போது இது தெளிவாகின்றது. முற்காலத்தில் முஸ்லிம்கள் 'நிரந்தர வதிவு அல்லது ‘இல்லிடம் இல்லாதவர்' என்னும் பொருள் பட ‘சுலங் பத்த மடிகே வாசிகள் என அழைக்கப்படலாயினர். அவர்களுக்குச் சேவைக்காணிகள் இருக்கவில்லை. மற்றவர்களுக்கு உரித்தான சிறிய வயற் காணிகளில் விளைச்சல் செய்வோராகவே
19
Page 68
அவர்கள் இருந்தார்கள். ஆனால், கண்டிய மன்னனின் கருமங்களை இவர்கள் ஆற்ற கடமைப்பட்டிருந்தார்கள். இதற்காக, இப்பிரதேசத்தில் வசிப்பிடங்களை அமைத்துக்கொள்ள, மன்னனால் அனுமதி வழங்கப்பட்டது. இதனை இவர்கள் பெறுமதிமிக்க நன்கொடையாகக் கருதினார்கள். பின்னர் முஸ்லிம்கள் அரசனுக்காக விவசாயம் செய்யும் ‘கெதக்' என்னும் வயல் நிலங்களிலும், ஏனைய வயல்களிலும் முத்தெட்டு பங்குகளைப் பெற்று நெல் விளைச் சலில் ஈடுபடத்தொடங்கினார்கள்.
நாலு கோரளை திசாவணியில் மடிகே கருமபீடத்திற்காக 12 ஊர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மடிகே கருமங்களை முஸ்லிம்களே ஆற்றி வந்தனர். கண்டிய மன்னன் மூலமாக நியமிக்கப்பட்ட அதிபதியின் கீழ், இந் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டன. ஒரு அமுனம் நிலத்தில் விளைச்சலை மேற்கொள்ளும் ஒருவர், பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக மாடொன்றை வழங்கியாக வேண்டும். அரசனுக்கு உரித்தான ஊர்களில் இருந்து, நெல்லை எடுத்துச் செல்வது மடிகே முஸ்லிம்களின் கடமையாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு மாடொன்றிற்காக ஒரு லாட்சம் நெல்லு கிடைத்தது.
அத்தோடு, கண்டிய ராச்சியத்தில் விகாரகம, தேவாலயகம காணிகளில் நெல் விளைச்சல் தரும் அனேக நிலங்களில் முஸ்லிம்கள், விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்கள். நெல்லையும், தானியங்களையும் விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்கும் எடுத்துச் செல்வது போன்ற பணிகளையும் இவர்கள் ஆற்றி வந்தார்கள்.
இவை அனைத்தும், கண்டிய முஸ்லிம்களின் ஆரம்ப குடியேற்றங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே உதயமாகியுள்ளதை எடுத்துக் காட்டுபவையாக உள்ளன. அத்துடன் இவர்கள் சிங்களச் சமூகத்துடன் சேர்ந்தே உழவுத் தொழிலில் ஈடுபட்டார்கள். சிங்களவர்களிடையே காணப்பட்ட வயற் சடங்கு கலாச்சாரங்கள் முஸ்லிம் விவசாயிகளிடமும் ஊடுருவி இருந்தன. ஆயினும், முஸ்லிம்களது மத அனுட்டான முறைகளுடன் அவை தொடர்பு பட்டவையாக காணப்பட்டன. கண்டிய இராசதானியில் நடைபெற்று வந்த வருடாந்த அலுத்சஹல் மங்களய’ எனப்படும் புது அறுவடை வைபவத்தில், இன்றைய கண்டிய முஸ்லிம்களின் மூதாதையர் தாமும் கலந்து சிறப்பிப்பதை வழக்கமாகவும், கடமையாகவும் கொண்டிருந்தார்கள்.
கந்த உடரட்ட மன்னர் ஆட்சிகாலத்தில், அரசர்களினால் முஸ்லிம்களுக்கு ஊர்களும், நிலங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
120
முஸ்லிம்கள் ஆற்றிவந்த பல வகை ஊழியங்களுக்குச் சேவைப்பங்காகவும் காணிகள் கிடைத்தன.
அக்கால கண்டிய இராச்சியத்தில் செல்வம் படைத்த சிங்களவர்கள் சொற்பமானவர்களே காணப்பட்டனர். அவர்கள் வியாபாரத்தில் ஆர்வம் காட்டவில்லை, வியாபாரத்தை வெறுப்போடு நோக்கினார்கள் எனலாம். அதனால் கண்டிய நாட்டின் வர்த்தகம் முஸ்லிம்களினதும், மலபார் வாசிகளினதும் வசமாகியது. ஏனெனில், இவர்களே அதிகம் செல்வம் படைத்தவர்களாக இருந்தார்கள். கம்பளையில், கண்டிய நாட்டின் தலை நகர் இருந்த காலத்தில், முஸ்லிம்களது கையே வியாபாரத்தில் ஓங்கி இருந்தது.
அத்துடன் முஸ்லிம்களில் பொருள் படைத்தவர்கள் சிங்கள மக்களுக்குக் கடனாக வெள்ளி நாணயங்களைக் கொடுத்து, நெல்லையும், தானியங்களையும் பெற்றதுடன், சில சந்தர்ப்பங்களில் நிலபுலன்களையும் அடையப் பெற்றார்கள். முற்கால கண்டிய வழக்கப்படி ஒருவர் ஒரு நிலத்தை விற்றால், அதனை அவரது சீவிய காலத்துக்குள் தாம் பெற்ற தொகையையும், அதன் முன்னேற்றத்திற்காக செலவான தொகையையும் செலுத்தி, மீட்டிக் கொள்ளலாம். அதனால் நிலத்தை விலை கொடுத்து வாங்கும் வழக்கம் அரிதாகவே காணப்பட்டது.
முஸ்லிம்கள் தனித்து வாழாது, கூட்டாக குடும்பங்களாகச் சேர்ந்து வாழும் சமூக அமைப்பைக் கொண்டிருந்தார்கள். அதனால் பல குடும்பங்கள் ஒன்றிணைந்த கிராமங்கள், கண்டி இராச்சியத்திலும் தோன்றின. நதிக்கரையோரங்களிலும், அதனை அண்மித்த கணவாய் பகுதிகளிலும் அதிகமாக அவர்கள் குடியேறினார்கள். அவர்களது குடியேற்றங்கள் அமைந்த கிராமச் சூழலில் அனேகமாக வீட்டை அண்மித்து வயலும், வீட்டுத் தோட்டமும் காணப்பட்டன. முஸ்லிம்கள் கால் நடை வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்தியதால், பட்டித் தொட்டிகளும் காணப்பட்டன. w
அத்துடன், முஸ்லிம்கள் விவசாயத்திலும், கொடுக்கல் வாங்கல்களிலும், ஏனைய தொழில் துறைகளிலும் சிங்களவர்களுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்கள். ஊரின் முன்னேற்றத்திற்காக இவர்கள் ஒன்றுசேர்ந்து உழைத்தார்கள். இந்த கலாச்சார சமூக சூழலானது, சிங்களவர்களைப் போன்று முஸ்லிம்களும் தமது பெயரை வைத்துக் கொள்ளும் அளவு பிணைப்பை ஏற்படுத்தியது.
ஊரும் பேரும்
புராதன கண்டிய குடும்பங்கள் தமது பேர் மீதும், ஊர்மீதும் மிகவும் அன்பு கொண்டோராய் இருந்தனர். பேரையும், ஊரையும் பாதுகாப்பதனை உயர்வானதொன்றாகக் கருதினார்கள். உயர்
22
Page 69
தராதரத்தில் இருந்தவர்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, பொதுவாக அவரது பழமையான அல்லது முக்கியமாக நிலபுலன்கள் அமைந்த ஊர் பெயர் கொண்டே குறிப்பிடப்படுவது வழமையாக இருந்தது. இந்த வழமை சிங்களவர்களைப் போன்றே முஸ்லிம்களிடமும் காணப்பட்டது.
முஸ்லிம்கள், கண்டிய இராச்சியத்தில் விவசாயத்திற்கு உகந்த சுவாத்தியமான பகுதிகளையே, தாம் குடியேறி வாழ்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளதை, அவர்களது குடிப்பரம்பலைச் சீர்தூக்கிப் பார்க்கையில் தெளிவாகிறது. அத்துடன், விவசாயத்தில் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அவை எடுத்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.
‘தெனிய' எனப்பரும் கிராமங்கள்.
கண்டிய பிரதேசத்தில் ‘தெனிய” எனப் பெயர் கொண்ட பல கிராமங்களைக் காணமுடிகிறது. இவற்றில் அனேகமானவை முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களாகும். தெனிய எனப்படுவது இரு மலைகளுக்கிடையே காணப்படும் நிலப்பரப்பாக கருதப்படுகிறது. இது வயல் நிலம் அல்லாவிடினும், பொதுவாக நெல் விளைச்சலுக்கு உகந்த பூமி அமைப்பைக் கொண்ட பகுதியாகும். இப்பூமி ஈரலிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். A.
கண்டிய இராச்சியத்தில் முழுமையாக முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களில் ‘தெனிய' எனப் பெயர்பெரும் கிராமங்களே அதிகமானவையாகும்.
1901ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ‘தெனிய' கிராமங்கள் (VOL- )
மாவட்டங்கள்/கிராமங்கள் மொத்த முஸ்லிம்களின்
சனத்தொகை எண்ணிக்கை கண்டி மாவட்டம்:
எல்மல் தெனிய 116 114 வட்ட தெனிய 170 168 ஊரா தெனிய 116 113 பிஹில்ல தெனிய 98 90 தெஹி தெனிய மடிகே 189 142 கேகாலை மாவட்டம்:
திபுலா தெனிய 64 63
122
மாவட்டங்கள்/கிராமங்கள் மொத்த முஸ்லிம்களின்
சனத்தொகை எண்ணிக்கை கிரிந்த தெனிய ” 389 320 குருநாகலை மாவட்டம்:
ரன் தெனி கம 83 52
‘தெனிய’ என முடியும் பல ஊர்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது பெயருடன் அவ்வூர்ப் பெயரையும் வம்சாவளியாகப் பயன் படுத்தியுள்ளார்கள். இவர்கள் தாம் பெயர்கொண்ட ஊரை விட்டு, வேறு இடங்களில் வசித்தமையை பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. திருமணம் முதலான தொடர்புகள் மூலம் இவர்கள் தமது பூர்வீக ஊரைவிட்டு இடம் பெயர்ந்திருக்கலாம்.
பாத்ததும்பர மடவலை நாபான என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒருவர்; பிஹில்ல தெனியே கொட்டுவே கெதர ஹபீபு லெப்பை எனப் பெயர் பெற்றிருந்தார். (1) அக்குரணையில் வாழ்ந்த பரகாதெனிய கெதர அகமது லெப்பை என்பவரது பரம்பரையினர், அப்பரம்பரைப் பெயரை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.(2) தெஹியங்கை முருத்தலாவை கிராமத்தில் அலகொல தெனிய கெதர என்னும் வம்சப் பெயர் முஸ்லிம்களிடையே வழக்கில் உள்ளது (3) அலதெனிய கிராமத்து முஸ்லிம்கள் மத்தியில் தாகஹ தெனிய” என்ற பெயர் கொண்டவர்கள் பலர் வாழ்ந்து வந்துள்ளார்கள்.(4) பிரசித்திபெற்ற அம்பெக்க தேவாலயத்தில் முக்கிய பொறுப்புக்களை ஏற்றிருந்த, அகமது லெப்பை அவர்கள் தொடந்தெனியே அகமது லெப்பை என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.(5) முறி தலதா மாளிகைக்குச் சேவை செய்த முன்வத்துகொடையில் வாழ்ந்த முஸ்லிம் ஒருவர் மீவல தெனியே குருனனேலே இஸ்லாயில் லெப்பை என்னும் பெயரைக் கொண்டிருந்தார்.(6) இதே போன்று வட்ட தெனியே குருன்னேஹேலாகே கெதர என்ற பரம்பரை நாமமும் முஸ்லிம்களிடம் காணப்பட்டது.17) அக்குரணையில் 1871 இல் வசித்த முதுகொகோ தெனிய வீட்டு சேகு லெப்பை அலியுதுமாப்பிள்ளை என்பவரது பரம்பரையினர் தலைமுறை தலைமுறையாக இவ்வம்சாவளிப் பெயரைப் பயன் படுத்தி வருகின்றார்கள்.8
மேலே காணப்படும் வீட்டுப் பெயர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த இடச் சூழலை தெளிவாகக் குறிப்பிடுபவையாக உள்ளன. அவர்கள் ‘தெனிய” என அழைக்கப்பட்ட, சுவாத்தியத்தைக் கொண்ட, கிராமச் சுற்றாடல்களில் அதிகமாக வாழ்ந்துள்ளதையும் இவ்வம்சாவளி நாமங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் முஸ்லிம்கள் வாழ்ந்த
123
Page 70
கிராமங்களில் தெனியே கும்புர (வயல்) எனவும் தெனியே தோட்டம எனவும் பெயர்கள் குறிப்பிடப்படுவதை அவதானிக்கலாம்.9
‘தென்ன, “fi qu” கிராமங்கள்
கீழே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களைச் சீர்தூக்கிப் பார்க்கையில் "தென்ன”, “பிட்டிய” என்று முடியும் கிராமங்களிலும் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் அதிகமாக இருந்தது எனலாம். கண்டிய இராச்சியத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு உகந்த பிரதேசமாக இவை காணப்பட்டன. இக்கிராமப் பெயர்களில் அனேகமானவை, அங்கு காணப்பட்ட மரங்களின் பெயரைக் கொண்டு ஆரம்பிப்பவையாக உள்ளன. அம்பகஸ் (மாமரம்), என்டறு (ஆமணக்கம்), உகிரஸ் (கருகி காயம்), கொட்டம் பா (கொட்டங்காய்),தல்களில் (பனைமரம்), கரகளில் (முற்களை கொண்ட ஒரு வகை மரம்) என சிங்கள மொழியில் மரங்களைக் குறிப்பிடும் பதங்களே இக்கிராமப் பெயர்களாக ஆகியுள்ளன. இப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
1901ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தெண்ன - பிட்டிய கிராமங்கள் (VOL- 1)
மொத்த முஸ்லிம்களின் சனத்தொகை எண்ணிக்கை
மாவட்டங்கள்கிராமங்கள்
தென்ன:
&660Eq EDGALÊb:
புளுகொஹ தென்ன 285 285 அம்பகஸ் தென்ன 152 150 யஹல தென்ன 46 45 தெவதகஹ முல தென்ன 135 132 தெம்பட்டகஸ் தென்ன 5 15
குருநாகலை மாவட்டம்:
கரகளில் தென்ன 75 75
கேகாலை மாவட்டம்:
கலபொட கோரளை கனேதென்ன 192 3. வாடியத் தென்ன 173 17
24
மாவட்டங்கள்/கிராமங்கள் சஃக ಆಯ್ಸಿ! பிட்டிய: கண்டி மாவட்டம்:
Dažot 9u 389 388 பிட்டியகம உடகம 404 267 பிட்டியகம பள்ளேகம 491 414 கஹட்டப் பிட்டிய 1002 443 எல்ப்பிட்டிய 209 100
குருநாகலை மாவட்டம்:
மிரிஹம் பிட்டிய 200 65 கொட்டம்பா பிட்டிய 53 53 தல்களில் பிட்டிய 31 30
கேகாலை மாவட்டம்:
தல்கஸ் பிட்டிய (சிங்களகம) 366 187
இவ்வாறான ஊர்களில் பூர்வகுடிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் அவ்வூர் பெயர்களைச் சிங்களவர்கள் பயன்படுத்தியதைப் போன்றே தாமும் வம்சாவளியாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஹாரசியப்பத்து அக்குரணையில் இவ்வாறான வம்சாவளி நாமங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
"என்டறு தென்னே கெதர" என்ற வம்சாவளி இங்கு வாழும் முஸ்லிம்களிடையே பிரசித்தமானதாகும்.(10) இங்கு கசாவத்தை என்னும் கிராமத்தில், 1873இல் விலான கொடத் தன்னே உதுமாப் பிள்ளை என்பவரது குடும்பத்தினர் வாழ்ந்துள்ளார்கள். விலான கொடத் தன்னை என்பதும் ஒரு கிராமப் பெயராகும்.(11) அக்குரனைணயில், 1904ம் ஆண்டு பதியப்பட்ட காணி உறுதியொன்றின்படி மலல தன்னே வைத்தியநார் மகுமுது லெப்பை என்னும் ஒருவர் வாழ்ந்துள்ளார்.(12) பாத்ததும்பற உடகம்பஹே குண்ணேபான கிராமத்தில் ஹபுகஸ்தென்னே முஹந்திரமலாகே கெதர என்னும் வம்சாவளிப் பெயர் கொண்ட குடும்பமொன்று இருந்துள்ளது.(13) வட்டதெனியாவில், யஹலேதென்ன நயிதேலே கெதர என்னும் வம்சாவளிப் பெயர் கொண்டவரின் பரம்பரையினர் தலதா மாளிகைக்காக ஊழியமாற்றி வந்துள்ளார்கள்.(14) இதே போன்று, 1871ம் ஆண்டு காலப்பகுதியில் யகளேதென்ன தாவூது பிள்ளை முகம்மது லெப்பை என்னும் ஒருவர் அக்குரணையில் வாழ்ந்துள்ளார்.(15) இவ்வூர் பெயர் காணப்படுவோரில் பலர் உயர் தராதரப் பதவிகளை வகித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
125
Page 71
பட்டிய என்னும் பெயரையும் முஸ்லிம்கள் மிகப்பழமையான காலத்திலிருந்தே பயன்படுத்தி வரலானார்கள். தல்கஸ்பிட்டிய என்னும் ஊர் பெயரில் குருநாகலை ஹேவா விசே கோரளையில் தல்கள் பிட்டியே குருனனேஹெலே சாய்பு கண்டு குருன்னேஹே என்பவரது பரம்பரையினர் கண்டி மகாதேவாலயக் காணிகளைப் பெற்றுள்ளர்கள். (16) கம்பளை கஹட்டப்பிட்டிய என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஓர் இடமாகும். இங்கு வாழ்ந்தவர்களின் மூதாதையர் கஹட்டப் பிட்டியே கெதர என்னும் வம்சாவளியைப் பயன் படுத்தியுள்ளனர். இப்பரம்பரைப் பெயருடைய வர்கள் அக்குரணை குருந்துகொல்லையிலும், கலகெதர மடிகே போன்ற ஊர்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வம்சாவளிப் பெயர் கஹட்டப் பிட்டியே டிராநந்த ஹிமி (17) என்பதாக ஒரு பெளத்த மதப் பிக்குவான, வரலாற்று நூலாசிரியரின் பெயரிலும் காணப்படு கின்றது. இதே போன்று, இப்பிரதேசத்தைச் சேர்ந்த எல்பிட்டிய என்னும் கிராமப்பெயரில் எல்பிட்டிய முஹந்திரமலாகே தும்மன்னா கொட கெதர என்னும் வம்சாவளிப் பெயர்த்தொடர் முஸ்லிம்களிடம் காணப்படு கின்றது.(18) ஹாரிஸ்பத்துவ உடகம்பஹ விலானை என்ற இடத்தில் பிட்டியே கெதர வாப்பு நயினா என்பவர் பரவணி காணி உரிமை பெற்று 1890ம் ஆண்டிற்கு முன்னர் வாழ்ந்துள்ளார். அதுபோன்று, அக்குரணை வாசியொருவரது பரம்பரைப் பெயர் தெம்பட்டகஸ் பிட்டியே உமறு லெப்பை என்பதாக 1878இல் எழுதப்பட்ட காணி உறுதி யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.19 உடுநுவரை மெதப்பலாத்தையில் பூஜியஹ பிட்டியே குருன்னேஹேலாகே கெதர என்ற தலைமுறைப் பெயருடைய முஸ்லிம் குடும் பங்கள் வாழ்கின்றன.120 இப்பிரதேசத்தில், குருந்துகொல்ல என்னும் கிராமத்தில் ஹிரிப்பீட்டியே கெதர ஈகபு லெப்பை செல்மா லெப்பை வெல் முலாதானியா என்னும் ஒருவர் 1867இல் வாழ்ந்துள்ளார். 20A V
இது போன்ற பெயர் வழக்குகள் கண்டிய முஸ்லிம்களிடையே பரவலாக காணக் கூடியதாக உள்ளன. முஸ்லிம்கள் தமது வாசஸ் தானங்களை அமைத்துக்கொள்ள இவ்விடங்களையே பெரும்பாலும் தேர்தெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் விவசாயம், கால் நடை வளர்ப்பு, வியாபாரம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபாடு காட்டியுள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.
கொட்டுவையும், வத்தையும்
கொட்டுவை என்பது வீட்டைச் சுற்றி அல்லது வயலருகில் காணப்படும் சிறு பயிர்செய் தோட்டங்களுக்கு வழங்கப்படும் பெயராகும். கொட்டுவை என்னும் பெயர்களும் பெரும்பாலும் மரங்களின் பெயர்களை முதன்மையாகக் கொண்டே அமைந்துள்ளன.
126
ஒரு குறிப்பிட்ட மரம் காணப்படும் இடத்தில் உள்ள கொட்டுவையை, அந்த மரத்தின் பெயரால் அழைக்கப்படும் மரபே பொதுவாக நடை முறையிலுள்ளது. இங்கு அனேகமாக ஊர் பெயர் குறிப்பிடப்படாமல், இடப் பெயரைக் கொண்டு வம்சாவளிப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
பெளத்தர்கள் அரச மரத்தைக் கண்ணியமிக்க ஒரு மரமாகப் போற்றி வருகின்றனர். அதனால், அம்மரத்தின் பெயரை தமது பெயருடன் சேர்த்துக் கொள்வதை அவர்கள் கண்ணியமாகக் கருதுகின்றனர். அரசமரம் போகஹ’ எனச் சிங்கள மொழியில் அழைக்கப்படும். முஸ்லிம்களின் வம்சாவளிப் பெயர்களிலும் “போகஹ” என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படும் நாமங்கள் உள்ளன. அக்குறணையில், போகஹ கொட்டுவே கெதர தாவூதுப் பிள்ளை முகம்மது லெப்பை என்பருக்கு இப்பெயர்வழி இருந்தது. இவர் 1878ல் இங்கு வசித்தார்.21) இவ்வூரில், கப்புக் கொட்டுவே கெதர என்ற வம்சாவளி அனேக குடும்பங்களிடையே வழக்கில் இருந்துள்ளது. 22 மடவளை மடிகே வாசி முஸ்லிம்களிடையே மயிலகஹ கொட்டுவே கெதர எனவும் தெஹிகஹ கொட்டுவே கெதர எனவும் பரம்பரைப் பெயர்கள் தற்போதும் நடைமுறையில் இருப்பதை அவதானிக்கலாம். 23) மாத்தளை தெற்கில் உள்ள வெலிகல உக்குவளை என்னும் கிராமத்தில் தல கொட்டுவ ஆலிம் சாகிப என்னும் இஸ்லாமிய கல்விமான் ஒருவர் 1918 ம் ஆண்டளவில் வாழ்ந்துள்ளார். இதே இடத்தில் நித்துல்கஹ கொட்டுவே கெதர என்ற பெயரையும் முஸ்லிம்கள் பயன்படுத்தினர். (24)
பாத்ததும்பறை மீகம்மன என்ற இடத்தில் ஒரு சிங்களப் பெண்மணியின் பெயர் கல்லேன கொட்டுவ சோமாவதி என்பதாகும். இதே பெயரில், அதே இடத்தில் கல்லேன கொட்டுவ சம்சுதீன என்ற முஸ்லிமும் வாழ்ந்துள்ளதை ஒரு காணி வரைப்படக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது. 25) ஒரே இடத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும், சிங்களவர்களும் அந்த இடப் பெயரை தமது பெயரிலும் பேதமில்லாமல் சேர்த்துக் கொள்ளும் மரபிற்கு, இது ஒர் உதாரணமாகும்.
இங்கு வம்சாவளிப் பெயராகக் குறிப்பிடப்படும் “கொட்டுவே கெதர” என்ற பெயரில் சில கிராமங்களும் கண்டிய பிரதான ஊர்பகுதிகளில் காணப்படுகின்றன. மடவலை மடிகே, மாத்தளை போன்ற ஊர்களிலும் இப் பெயரால் கிராமப் பிரிவுகள் உள்ளன. மடவலையில், கொட்டுவே கெதர ஆதம்லெப்பை என்ற வம்சாவளி கொண்டவரது மூதாதையர் அவ்விடத்தில் வாழ்ந்ததை இது
127
Page 72
காட்டுகிறது. 26) இதேபோல், தும்பரயே கொட்டுவே கெதர செல்மா லெப்பை என்பவர், தெஹியங்கை என்னும் ஊரில் வாழ்ந்தார்.27 மடவலை மடிகே என்பது ‘தும்பறை மடவலை எனவும் பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுவது வழக்கமாகும். மேற்சொன்ன வம்சாவளியில், மடவலையில் உள்ள கொடுவேகெதர' என்னும் தொனிப் பொருள் பொதிந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. தஸ்கரை என்னும் கிராமத்தில் கேம்பொல கொட்டுவேகெதர என்ற வம்ச பரம்பரையினர் வாழ்ந்துள்ளனர். 28) கம்பொல’ என்பது திரிபடைந்து இப் பெயர் உருவாகி இருக்கலாம்.
தோட்டம் என்பதைக் குறிக்கும் சிங்களச் சொல்லே 'வத்தை? என்பதாகும். பிற்காலத்தில் கண்டிய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் சிறப்புற்றமைக்குப் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையில் அவர்கள் காட்டிய ஈடுபாடு பிரதான காரணமாகியது. ‘வத்தை” என வழங்கப்படும் முஸ்லிம்களது வம்சாவளிப் பெயர்களில், மிகப் பிரசித்தம் பெற்ற பரம்பரைப் பெயர்களாக விளங்குபவை, பொல்வத்தை முஹந்திரம்லே கெதர என்பதும் பொல் வத்தை முதியன்சேலே கெதர என்பதும் ஆகும். இப்பரம்பரையினர் மன்னர் மாளிகையில் பணியாற்றியவர்களாவர்.(29) அத்துடன் இது மிகப்புராதன காலத்துக்குரிய குலவழிப் பெயருமாகும். “பொல்வத்தை' என அழைக்கப்படும் கிராமங்கள் கண்டி, குருநாகலை (பி.கு) என பல மாவட்டங்களிலும் உள்ளன. பொல்வத்தை என்பது தமிழில் ‘தென்னந் தோட்டம்’ என்று குறிப்பிடப்படுகின்றது. ஹாறகியப்பத்து உடகம்பஹவில 1872ல் வாழ்ந்த ஒருவர் ‘தென்னம் தோட்டத்து உதுமாங் கண்டு பிள்ளை” என தமிழிலேயே உச்சரித்து, தமது பரம்பரைப் பெயரை காணி உறுதியொன்றுக்கு சமர்ப்பித் துள்ளார்.30) கந்து பலாத்தை யட்டிநுவரையில் வல்கம்பாயவில் ஒரு முஸ்லிம், பொத்வத்தே முஹந்திரம் கே கெதர என்னும் வம்சாவளியை உடையவராக இருந்தார்.31) கங்க பலாத்தை உடுநுவரை தெஹிபாகொடையில், “கொஹொலான வத்தே கெதர” என்ற வம்சாவளி பெயர் கொண்ட முஸ்லிம்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.32) உடுநுவரை எலதெக்கே பகுதியில் முஸ்லிம்கள் அம்பர பொல வத்தே கெதர என்ற பரம்பரை நாமத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.(33) கொஸ் வத்த ஆராச்சியார் வீட்டு உதுமான் பிள்ளை ஆராச்சியர் என்பவர் குண்ணாப்பானை என்ற கிராமத்தில், 1890ம் ஆண்டிற்கு முன்னர் வாழ்ந்தார்.34) குருநாகலை தல்களில் பிட்டியவில் வாழ்ந்த முஸ்லிமொருவர் பட்டியே வத்த அசன்கண்டு (1872) என்ற பெயர்வழியைக் கொண்டிருந்தார்.(35 கஹவத்தே ராலலே கெதர ஆதம் புள்ளே (1872) என்னும் பெயர் பரகாதெனியவில் வழக்கில் உள்ளது.[35A)
பி.கு.: 1901ம் ஆண்டு சனக்கணிப்பின் படி குருநாகலை 'பொல்வத்தை கிராமத்தில் மொத்த சனத்தொகை 18 பேர் மாத்திரமே. அதில் 17 பேர் முஸ்லிம்களாவர்.
128
வத்தை (தோட்டம்) என்பது, சிங்கள கிராமத்தில் ஒரு பகுதியாக கருதப்பட்டது. இதில் வதிவிடம் அமைந்த தோட்டம் அல்லது 'வீட்டுத் தோட்டம் அரம்ப' என பல வகைகள் காணப்பட்டன. அரம்ப (ecஇ) என அழைக்கப்படுவது, பாக்கு மரங்கள் வளர்ந்துள்ள சிறிய தோட்டப் பகுதிகளாகும். கண்டிய இராச்சியத்தில், பாக்கு பெரும்பாலும், வீட்டுத் தோட்டங்களிலேயே விளைந்தது. அக்கால முஸ்லிம்களின் பிரதான வர்த்தகப் பொருளாக இது விளங்கியது. இவர்கள் கண்டிய பிரதேசத்தில் சேகரித்த பாக்குகளை மடிகே கருமபீடத்தின் தவளம் மாடுகள் மூலம், கரையோர துறைமுகங்க ளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கொண்டு சென்றார்கள். அக்கால இந்திய இலங்கை வர்த்தகத்தில், மிகுந்த பொருளிட்டித்தரும் ஒரு பண்டமாக பாக்கு விளங்கியது. கண்டி பிரதேசத்தில் தெஹிதெனிய மடிகே, முஸ்லிம்களின் பிரதான ஒரு மடிகே கிராமமாகும். இது ஹதரலியந்தை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே மஹ இ ைச06இ) அரம்பே விதானேலா கெதர மொஹமட் ரபீக் என ஒருவரது வம்சாவளிப் பெயர் அமைந்துள்ளது.[35B) இது இவரது மூதாதையர் விசாலமான விஸ்தீரணமுள்ள அல்லது மன்னனுக்குச் சொந்தமான ஒரு பாக்கு தோட்டத்து விதானையாக பதவியாற்றியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
உடுநுவரை தஸ்கரை தெல்மட என்னும் கிராமத்தில், அரம்பே (CFCடுகி) கெதர என்னும் வம்சாவளிப்பெயர் கொண்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.(35C) தவுலகல என்னும் கிராமத்தில், அரம்ப கெதர முகம்மது லெப்பை என்னும் வம்சாவளிப் பெயரில் ஒருவர் இருந்துள்ளார். (1909).[35D இது போன்று, முஸ்லிம்களுக்கு உரித்தான இடங்களும் இப்பெயரில் இருந்தன. பாத்ததும்பற பறணகமையில் உடஅறம்ப சேனை என்பது, ஒரு காணியின் பெயராகும். முற்காலத்தில், தோட்டங்களில் விளையும் காய்களிலும், தானியங்களிலும் வரி அறவிடப்பட்டன. தேங்காய், பனை என்பன புதிதாக நடப்பட்டுள்ள தோட்டங்களில், 10 காய்களுக்கு ஒரு காய் வீதம் வரி சேகரிக்கப்பட்டது. இது போன்று, வெற்றிலைக் கொடி, தோடம், வாழை போன்ற உபயோகமளிக்கக் கூடிய மரங்களைக் கொண்ட தோட்டங்களில் இருந்தும், வருடத்திற்கு அவற்றில் ஒருபகுதியை வரியாக செலுத்த வேண்டும். விகாரைகம காணிகளில், ஏராளமான தோட்டங்களை, முஸ்லிம்கள் பரிபாலித்து வந்தார்கள். இவை 'உயன்' என அழைக்கப்பட்டன.
இயற்கைத் தடயங்களும் சில காரணப் பெயர்களும்.
பரம்பரைப் பெயருக்குள், தாம் வசித்த சூழலின் இயற்கைத் தடயங்களையும் கண்டிய முஸ்லிம்களும், சிங்களவர்களும்
பயன்படுத்தினார்கள். நீரோடைகள், கல்லு, மரங்களின் பெயர்கள்,
129
Page 73
வழிப்பாட்டுத்தலங்கள் என்பவற்றை, இவ்வாறு தாம் வாழும் இடத்தை குறிப்பிட உபயோகித்தனர். இவை மாற்றமடையாமல் நிரந்தர சுவடுகளாக இருந்ததே அதற்குக் காரணமாகும். இதனைத் தவிர இப்பெயர்களில் எந்த குறிப்பிடத்தக்க விஷேட தன்மையும் காணப்படவில்லை. பீலிக்கரை ஆதம் பிள்ளை மகன் இசுமா லெப்பை என்ற பெயரையுடைய ஒருவர் 1871ம் ஆண்டளவில் அக்குறணையில் வாழ்ந்தார்.[36) இவர் "பீலி எனப்படும் நீர்நிலைக்கு அருகாமையில் வாழ்ந்த காரணத்தினால் இப் பெயர் தோன்றியுள்ளது எனக் கூறலாம். இவ்வூர்ப் பகுதியில் புளுகோதென்னை கிராமத்தில் பீலிஅடி வீட்டு மீரா நெய்னாப்பிள்ளை உமறு லெப்பை என்னும் ஒருவர் 1887ம் ஆண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்தார்.137) இக்குறிப்பின்படியும் அவரது மூதாதையர் பீலிக் கருகாமையில் வசித்ததால் இப்பெயர் உண்டாகியுள்தெனக் கருதலாம். நதி மரத்தடி வீட்டு உதுமா லெப்பை என ஒருவரது வம்சாவளி பெயர் குறிப்பு அக்குறணையில் 1873ம் ஆண்டு காணிப் பதிவு ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது.(38) இதே கருத்துப்பட சித்தோடை மீராலெப்பை என ஒரு காரண வம்சாவளிப் பெயரும் அக்குறணையில் உள்ளது.(39)
மேலே குறிப்பிடப்பட்ட வம்சாவளிப் பெயர்கள், தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஆதனங்களிலே பெரும்பாலும் காணப்படுகின்றன. இவ்வாறு தமிழ்ப் பதிவுகளில் ‘கெதர என்னும் சிங்களப் பதம் ‘வீட்டு' எனவும், ‘வத்தை' என்பது ‘தோட்டம்' எனவும் குறிப்பிடப்படுவது போன்று, ஏனைய முஸ்லிம்களின் வம்சப் பெயர்களும் மொழி மாற்றம் பெறுகின்றன. இவற்றை எழுதிய நொத்தாரிசுமார்கள் முஸ்லிம்களாகவும், தமிழர்களாகவும் இருந்தார்கள். அத்துடன் இவ்வம்சாவளிப் பெயர்களில் இஸ்லாமிய மரபு முறைகளும் பேணப்பட்டுள்ளன. அதாவது, ஒருவரது பெயர், அவரது தகப்பன் வழிப் பெயர் குறிப்பிடப்பட்ட பின்னர், குறிப்பிடப்படு வதைக் காணக்கூடியதாக உள்ளது. W
இந்த வரிசையில், 1873ல் பாத்ததும்பறை உடகம்பகை குண்ணாபானையில் கலகாவா (eெeை) விதானேலே கெதர முஹம்மது அப்துல் காதர் லெப்பை என்னும் அங்கு வசித்த ஒருவரது பெயர் குறிப்பிடப்படுகின்றது.40) இப்பகுதியில் இந்த வம்சாவளிப் பெயர் மிகப் பிரசித்தமானதாகும். ஏனெனில், இக்கிராமத்தோடு இணைந்த மடவலை மடிகே என்னும் கிராமத்தில் கலகாவா முஹந்திரமலே கெதர என்னும் பரம்பரைப் பெயரை உடைய குடும்பங்கள் பல உள்ளன.(41) இந்த வம்சாவளிப் பெயர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மேற்கூறியவரது பெயருடன் கீழ்வருமாறு ஒரு விவாக அத்தாட்சிப்
130
பத்திரத்தில் எழுதப்படுகிறது. அபுகஸ்தென்னை கல்லடி விதானை விட்டு முகம்மது அப்துல் காதிரு லெப்பை எனத் தொடர்கிறது.(42) இதேபோன்று, கல்பொதெக் (ஞ்ைoeeலிை கெதர சேகு அப்துல் காதர் என்ற பரம்பரைப் பெயருள்ளவரது பரம்பரையினர் பாத்தஹேவாஹெட்ட ஹேவாவிஸ்ஸ கோரளை, பட்டியகம உடகமயில் வாழ்ந்தார்.(43) பாத்ததும்பரை உடதலவின்னை கிராமத்தில் கொணாகல கெதர என்னும் வம்சப் பெயர் உள்ளது. இப்பெயர் கொண்ட காசி முஹம்மது ஹனிபா என்பவரது மரண சொத்து தொடர்பான T2202 இலக்க பூதல் வழக்கொன்று கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் காணப்படுகிறது.
இவ்வாறான பெயர்வழிகள், தாம் ஆட்சி செலுத்தி வரும் நிலபுலன்களின் சொத்துரிமை தொடர்பான வம்சாவளியை (தோம்பு) உறுதிப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன. காணி எல்லைகளில் பெளதீக ரீதியான தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகிறது. இதனால், இடத்தில் அமைந்துள்ள பிரதான மரங்களை அடிப்படையாகக் கொண்டும் வம்சாவளிகள் அமைக்கப்படுகின்றன. அக்குரணைப் பகுதியில் லிலிந்திமரத்தடி வீட்டு முகமது லெப்பை என்ற பெயருடன் 1857ம் ஆண்டில் வாழ்ந்தவர் பற்றிய தமிழ்க் குறிப்பொன்று காணப்படுகிறது. இதே வம்சாவளிப் பெயர் சிங்களத்தில் பிலிஜகஹமுள கெதர (இ88ைைஇe) என எழுதப்படுகிறது.(44) இங்கு, நீரல்லை கிராமத்தில் அத்தியடி (அத்திமரத்தடி) என்ற மிகப் பழமையான பெயர்வழியும் காணப்படுகிறது. பாத்ததும்பறை பள்ளேகம்பஹ பறன்கம் என்ற கிராமத்தில் பிராசமரத்தடி வீட்டு முகம்மது லெப்பை (1901) என்பவரது பரம்பரையினர் வாழ்ந்துள்ளனர்.(44A பட்டியகம உப-கம் கோணா கொடயில் கொரொக்கஹ கெடே (eGைOண்ைை 6ை9) கெதர சேகு அப்துல் காதர் என்னுமொரு பரம்பரைப் பெயரும் உள்ளது. 45) இவை இவர்களது வசிப்பிடம் அமைந்த இடங்களை தெளிவாக அறியும் சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
தும்பனே உடபலாத்தை கலகெதர மடிகே என்னும் ஊரில், பள்ளி அடியன்” என்று வரும் பரம்பரைப் பெயர்கள் காணப்படுகின்றன. பள்ளிவாசலின் அருகில் வசித்ததினால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. கலுகல்ல வெதரால்லாகே கெதர பள்ளி அடியன் லெப்பே (1899) என பல வம்ச குறிப்புகளுள் அப்பெயர் காணப்படுகிறது.(46) குருநாகலை பிரதேசத்து வேவுட கோரளை பரகஹதெனிய என்னும் ஊரிலும், பள்ளி அடியன் மரியன் பீபி (1872) என இவ்வம்சாவளிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.(47) மாத்தளை கொங்காவளை கிராமத்தில், ஊர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்த ஒருவர் பள்ளியகாவா கெதர பக்கிள் தம்பி (1899) என அழைக்கப்பட்டுள்ளார்.48 கல்பிஹில்லகாவா கெதர
131
Page 74
என்னும் குடும்பப் பெயர் கொண்ட முஸ்லிம்கள், உடுநுவரை மெதபலாத்தை அபகஸ்தென்ன (கம்பளை) என்னும் கிராமத்தில் உள்ளனர்.49) இது போன்று பல வடிவங்களில் வம்சாவளி கொண்ட முஸ்லிம்கள், கண்டிய பிரதேசத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
கண்டிய முஸ்லிம்களின் “அஸ்வெத்தும்காரயோக்கள்
கண்டிய முஸ்லிம்கள் விவசாயத்தில் காட்டிய் ஈடுபாட்டை எடுத்துக் காட்டும், பல சிங்கள மொழிப் பதப் பிரயோகத்தினாலான வம்சாவளிப் பெயர்கள் உள்ளன. அவற்றுள் பிரதானமானது அஸ்வெத்தும (a9ே&இ) என்னும் பரம்பரை பெயராகும். சிங்கள சமூகத்தில் அனேகரிடம் இவ்வாசகம் காணப்படுகிறது.
ஆரம்பம் முதல் காணக்கூடியதான வயல் நிலங்களுக்குப் பிறகு, நெல் விதைப்பதற்காக புதிதாக உருவாக்கப்படும் நிலம் அஸ்வெத்தும' என அழைக்கப்படும். அநேகமாக தனியொருவரினால் விவசாயத்திற்காக தயார் செய்யப்படும் அஸ்வெத்தும நிலங்கள் மிக அரிதாகவே காணக்கூடியவையாக உள்ளன. இவ்வாறு, முதன் முறையாக நெல் விளைச்சலற்ற நிலத்தை சில கட்டுப்பாடுகளுக்கு அமைய, விவசாயத்திற்கு உகந்த வயலாக ஆக்கியவர்களைச் சிங்களத்தில் அஸ்வெத்தும் காரயோ (ereே&g9 0ைGo) என அழைப்பர். கண்டிய முஸ்லிம்களிலும், இவ்வுயர் பணியைப் புரிந்த அஸ்வெத்தும் காரயோக்கள் இருந்துள்ளதை அவர்கள் கொண்டிருந்த வம்சாவளிப் பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன.
யட்டிநுவர மெதபலாத்தை தெஹியங்கை என்னும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமத்தில், அஸ்வெத்துவே கெதர உமரு லெப்பை (1895 க்கு முன்னர்) என்னும் ஒருவரின் வீட்டுப் பெயரிலிருந்து, அவரது மூதாதையரில் அஸ்வெத்தும்காரர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.(50) குருகம என்னும் ஊரில் இந்த அஸ்வெத்தும வயல் உள்ளது.
இவ்வாறான அஸ்வெத்தும வயல்களுக்கு அஸ்வெத்துவக் காரர் மூலமாகப் பணம் செலுத்தி, அதனை கண்டிய இராச்சியத்தில் ஒரு கருமபீடத்திற்குரிய சேவைப் பங்காக பதிவு செய்து கொள்ளும் வழமையும் காணப்பட்டது. அக்காணிகள் நிந்தகம உரிமையாளரின் பரிபாலனத்திலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருந்தன. இதனால் அஸ்வெத்தும் காரயோக்களின் பெரும்பாலானவர்கள், கண்டிய அரச
132
சேவையுடன் தொடர்புள்ளவர்களாக இருந்து, அக்காணிகளை அடையப் பெற்றார்கள். கோத்தாவல என்னும் கிராமத்தில், மெதமலுவே விகாரைக்குச் சொந்தமான வயலில், பரவணி பங்குதாரர்களாக அஸ்வெத்துவே விதானேலாயே கெதர அகமது லெப்பை என்பவரும், அதே வம்சாவளியுடைய சாயுபு லெப்பை என்பவரும் உரிமை பெற்றிருந்தார்கள். இவர்களது மூதாதையர் விதானைமார் களாக இருந்துள்ளதை அவ்வம்சாவளிப் பெயர் காட்டுகிறது. இவர்கள் விகாரைக்கு, அவ்வயல் நிலத்திலிருந்து ஒத்து (இ)ை எனப்படும் விளைச்சலில் மூன்றிலொரு பங்கைச் செலுத்தினார்கள்.(51) இவ்வாறே, தெல்தெனிய கும்புகதுற என்னும் கிராமத்தில், அஸ்வெத்துவே கம்மெஹெலாகே கெதர என்னும் பரம்பரைப் பெயர், முஸ்லிம் குடும்பங்களிடையே காணக்கூடியதாக உள்ளது.52) இப்பரம்பரை யினரின் மூதாதையர் கம்மெஹெலாவாக இருந்து இவ்வயற் பங்கைப் பெற்றுள்ளமை இதிலிருந்து தெளிவாகின்றது. இதே ஊரில் அஸ்வெத்துவே விதானெலாகே கெதர என்ற வம்சாவளியும் உள்ளது.52A
குருநாகலை மாதுரே கோரளையில் அஸ்வெத்தும என்னும் ஒரு கிராமம் உள்ளது. இங்கு அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். (பி.கு.) இக்கிராமத்தில் வசித்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்குப் பிறந்த புதல்வனே, ‘வத்மிஹி பண்டார' என்னும் முஸ்லிம் மன்னன் எனக் கூறப்படுகிறது. இக்கிராமத்தில் வில்பாவே பத்தினி தேவாலயத்திற்கு உரித்தான வயலின், “அஸ்வெத்துவே பங்குகளை வாப்புதம்பி, அசனா லெப்பை, இஸ்மா லெப்பை, குப்பதம்பி ஆகிய நான்கு பேருக்கு வழங்கப்பட்டன.(1872) இவர்களது வம்சாவளிப் பெயர்களில் விதானேலே (விதானேலே வாப்புதம்பி) எனும் பதவி வழிப் பெயர் காணப்படுகிறது.(53) இவர்களது மூதாதையரான விதானை மூலம், இது "அஸ்வெத்துவ செய்யப்பட்டு பரம்பரை பரம்பரையாக பரவணி ஆட்சி பெற்று வரும் வயல் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இப்பரம்பரைப் பெயரைப் போன்றே பேலவ (ege) விதானேலாகே கெதர என்னும் வம்சபெயர், பாத்ததும்பர உடகம்பஹ குண்ணேபான என்னும் கிராமத்தில் முஸ்லிம்களிடம் காணப்படுகிறது.54) பள்கும்புற என்ற விவசாய கிராமம், முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரு பகுதியாகும். 1901ம் ஆண்டு குடிசனக்கணக்கெடுப்பின் படி
பி.கு: 1901ம் ஆண்டு சனக்கணிப்பின் படி அஸ்வெத்துவே கிராமத்தில் மொத்த சனத்தொகை 129. அதில் 63 பேர் முஸ்லிம்களாவர். இதன் அருகே பொல்வத்த என்ற முஸ்லிம் கிராமம் உள்ளது. இங்கு சனத்தொகை (18க்கு 17 பேர் முஸ்லிம்கள்)
133
Page 75
இங்கு வாழ்ந்த மொத்த சனத்தொகையான 62 பேரில் அனைவருமே முஸ்லிம்களாவர். இவ்வூர் பெயர் கொண்டு பள்கும்புறே முஹந்திரம் மீரா நெய்னாப்பிள்ளை முஹம்மது லெப்பை (55) என்பவர் 1871ம் ஆண்டு காலப்பகுதியில் முகந்திரமாக இருந்திருப்பதை, அவரது பெயரில் இருந்து அறியமுடிகிறது.
உடரட்ட பிரதேச பெயர்களில் சில வம்சாவளிகள்
கண்டிய அரசர்கள், நாட்டை அரசாட்சி செய்ய இரண்டு பிரதான அதிகாரம்மார்களை நியமித்திருந்தார்கள். அவ்விருவரும் பள்ளேகம்பஹ, உடகம்பஹ என அழைக்கப்பட்டார்கள். இவ்வதிகாரம் களின் மூலம் முழு கண்டிய இராச்சியமும் பொதுவாக பரிபாலனம் செய்யப்பட்டது. ஆனால், இராச்சியம் பல பிரிவுகளகப் பிரிக்கப்பட்டு, இவர்களின் ஆதிபத்தியத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள் வேறுபடுத்தப்பட்டிருந்தன.
முதலாவது அதிகாரத்தின் கீழ் ஏழு கோரளை, மாத்தளை, ஹாரிஸ்கத்துவை, தும்பரை முதலான பிரதேசங்கள் காணப்பட்டன. சத் கோரளை என சிங்களத்தில் அழைக்கப்பட்ட பிரதேசமே ஏழு கோரளையாகும். மாத்தளை அஸ்கிரி கோரளையில், நிககொல்லை என்னும் முஸ்லிம் கிராமத்தில் சத் கோரளே விதானேலாகே கெதர ஹபிபு லெப்பை என்னும் ஒருவர் வாழ்ந்துள்ளார்.56) ‘சத்கோரளை என்ற வம்சாவளிப் பெயரை உடைய முஸ்லிம்கள் குருநாகலையில்
என பிரசித்தம் பெற்றிருந்த பகுதி ஏழு பத்துவைரட” என அழைக்கப்பட்டது. இது ஏழு கோரளையுடன் தொடர்பு பட்டு, கண்டிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. அக்குரணையில் ஒரு கிராமத்து முஸ்லிம்களிடம் புத்தளம் விதானாைகே கெதர என்ற வம்சாவளிப்பெயர் காணப்படுகிறது. அதே போன்று இங்கு 1873 ம் ஆண்டில் பரவனியாக ஒரு காணியை ஆட்சி செய்து வந்த ஒருவரது பெயர் புத்தளத்து மரைக்கார் அகமதுலெப்பை மரைக்கார் என தமிழ் காணி உறுதியொன்றில் இடம் பெற்றுள்ளது.57 மாத்தளை மகா திசாவணியின் பெயரைக்கொண்டு, மாத்தளே விதானேலாகே கெதர செய்து மொஹம்மது என்னும் வம்சாவளியைக் கொண்டவர் பாத்ததும்பறை மடவளையில் வாழ்ந்தார்.58) இப்பகுதியில் சிங்களச் சமூகத்தினரிடமும் இவ்வாசகம் இருப்பதைக் காணலாம். கண்டி இராசதானியைச் சூழ உள்ள ‘ரட' என பெயர் பெற்ற ஹாரிஸ் பத்துவை, தும்பரை போன்ற பிரதேச பெயரை தமது பெயரில் சேர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம்களும் வாழ்ந்துள்ளனர்.
34
முன்வத்துகொடையில் வசித்த ஹாரிஸ்பத்துவே குருனனேஹேலே கெதர அகமது லெப்பை என்பவர் பிரசித்தம் பெற்றவர்களில் ஒருவராவர்.(59) தெஹியங்கை என்னும் கிராமத்தில் தும்பறயே கொடுவே கெதர என்ற பெயர்வழி, முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.(60)
இரண்டாவது அதிகாரம் மின் பரிபாலனத்திற்குரிய சதரகோரளை உடபலாத்தை, கொத்மலை போன்ற பிரிவுகளில் காணப்படும் பிரதேச பெயர்களையும், தமது வம்சாவளியாக முஸ்லிம்கள் கொண்டிருந்தார்கள். சதர கோரளை என்பது கண்டிய இராச்சியத்தில் ஒரு திசாவணியாகும். இது கல்பொடை, பரணகூறு கிந்திகொட, பெளிகல் என நான்கு கோரளைகளைக் கொண்டதால் இப் பெயர் ஏற்பட்டது. இதில் பரணகூறு கோரளையில், பள்ளி போருவே என்ற ஒரு இடம் உள்ளது. தும்பனே பள்ளே பலாத்தையில், ஹதரலியந்த மடிகேயில் தெஹிதெனிய வாசி ஒருவர் பள்ளி போருவே கோரலே கெதர இப்ராஹிம் லெப்பை என்ற வம்சப்பெயரைக் கொண்டிருந்தார்.(61) கேகாலை மாவட்டத்திலும் பள்ளிபோருவ (மரக்கலகம) என ஒரு கிராமம் உள்ளது. இங்கு 1901ம் ஆண்டின் சனக்கணிப்பின்படி இங்கு மொத்த சனத்தொகை 121. அதில் 117 பேர் முஸ்லிம்களாவர். தெஹியங்கையில் ஹதரகோரலே குருன்னேஹேலே கெதர என்னும் வம்சாவளிப்பெயர் கொண்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.62 உடபலாத்தை திசாவணியின் ஒரு பிரதான ஊரான கம்பளை, கண்டி ராச்சியத்தின் ஒரு புராதன தலை நகரமாகும். இவ்வூர் பெயரில் கம்பளை முஹந்திரமலாகே கெதர என்னும் வம்சாவளி நாமம் உடைய முஸ்லிம்கள் அரச்வாவெல என்ற கிராமத்தில் இருந்தனர்.(63) கேகாலை கெக்கிரி கொடை கிராமத்தில், ‘கொத்மலே நயிதேலே' எனும் பரம்பரைப்பெயரில், முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.64) இக் கொத்மலை ஊர் கந்தஉடரட என்று அழைக்கப்பட்ட பிரதேசத்துக்குரிய ஒரு பகுதியாகும். இத்தோடு துவர கெதர என்ற வம்சாவளிப்பெயர் பரணகமயில் ஹபீபு மொஹமத் ஆலிம் சாகிப் (1929) என்பவருக்கு இருந்தது.(65) இது கண்டிய தலை நகரைக் குறிப்பிடும் ஒரு பெயராகும்.
வறாரசியப்பத்து முஸ்லிம்களின் வம்சாவளிப் பெயர்கள்
கண்டிய இராச்சியத்தில் இன்றும், முஸ்லிம்களிடையே சிங்கள வம்சாவளிப் பெயர்கள் பல இடங்களில் வழக்கில் இருந்து வருகின்றன. கேகாலை,குருநாகலை மாவட்டத்தில், ஒரு சில ஊர்களில் முஸ்லிம்கள், தமது மூதாதையரது மரபுவழி நாமங்களை தமது பெயர்களுடன் சேர்த்துப் பயன்படுத்துகின்றார்கள். தொழில் வழிப்
3S
Page 76
பெயர்களைத் தவிர, சமூக அமைப்பில் பயன்படுத்திவரும் பெயர்வழிகளைப் பல்வேறு அமைப்புகளிலும் காணக்கூடியதாக உள்ளன. அவை அந்தந்த பிரதேசங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வான பரம்பரை நாமங்கள் மேற்கூறிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழும் பல கிராமங்களில் வழக்கில் உள்ளன. கண்டிய நாட்டின், முன்னைய இராஜதானியாக திகழ்ந்த கம்பளை பகுதியில், இவ்வாறான பெயர் வழக்கு தற்போது அரிதாகிவிட்டது. அதே போன்று, மாத்தளைப் போன்ற மாவட்டங்களிலும் சிங்கள வம்சாவளி வழக்கு, வழக்கொழிந்து விட்டது எனக் கூறலாம். கண்டிய ஆட்சியின் கடைசி தலைநகரைச் சூழ உள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும், வாசகம முறை இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளதனை, அது சம்பந்தமாகக் கிடைக்கும் ஏராளமான தரவுகளில் இருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
சிங்கள சமூக அமைப்பில் இருப்பதைப் போன்று முஸ்லிம்களில், வம்சாவளிப் பெயர்கள் பயன்படுத்தப்படும் பிரதான பகுதியாக ஹாரசியப்பத்து - ஹாரிஸ்பத்து விளங்குகிறது. இது ‘ஆறிசியபத்து' எனவும் வழங்கப்படும், ஹாரசியப்பத்துக்குரிய குலுகம்மனசியபத்துவ, மெதசிய பத்துவ என்னுமிரு பற்றுக்களிலும்; பள்ளேகம்பஹ, உடகம்பஹ என்ற கோரளைகளிலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல கிராமங்கள் மிகப்பழமையான காலம் தொட்டே இருந்து வருகின்றன. இவ்விரு கோரளைகளிலும் காணப்படும் முஸ்லிம் கிராமங்கள் பொதுவாக ‘அக்குரணை’ எனக் குறிப்பிடப்படும். * அக் குரணைக் குடி’ எனவும் இது அழைக்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர் கண்டிய இராச்சியத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தின் ஒரு கேந்திர ஸ்தானமாக இப்பிரதேசத்தைக் குறிப்பிடலாம்.
கண்டிய மன்னன் இரண்டாவது இராஜசிங்கனின் அட்சிக் காலத்தில்(1635-87), போர்த்துக்கேயருக்கு எதிராக துணிச்சலுடன் அரசனின் பக்கமிருந்து போராடிய, மூன்று அரேபியர்கள் மீது அளவில்லா விருப்பம் கொண்ட அரசன் அவர்களை கண்டியில் குடியமர்த்திக் கொண்டான் அம்மூவரும் கண்டிய சிங்களப் பெண்மணிகளை விவாகம் செய்து கொள்ள விரும்பினார்கள். மன்னன் அவர்களுக்கு அளித்த தைரியத்தின் காரணத்தால் அவர்கள், கண்டி பெரஹரையின் போது மூன்று சிங்கள இளம் மங்கைகளை கவர்ந்து சென்று அரச மாளிகையிலேயே மறைத்து வைத்தனர். பின்னர் மன்னனின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டு, அக்கன்னியரின் பெற்றோர்கள் அவர்களை அரேபியர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க இணங்கி
136
னார்கள். இவர்களை கண்டிய மன்னன் அக்குரணையில் குடியேற்றினான் என அக்குரணை முஸ்லிம்களின் மூதாதையர் பற்றிய ஒரு மரபுக்கதை உள்ளது.
1901 ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி வறாரிஸ்பத்துவையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமங்கள்
கிராமங்கள் తాడికిపీడ్ ပ္မ္ယက္စိမွိုဂျိ။ குலுகம்மனசிய பத்துவ:
என்டறு தென்னை . 103 98 இனிகல 194 182 உக்ரஸ் பிட்டிய 389 388 மெதசியப் பத்துவ:
குருந்து கொல்ல 198 197 பல் கும்புற 62 62 ஹனன் ஒய 14 12 பள்ளே கம்பவற கோரளை:
அக்குரணை 340 334 வெலிகெட்டிய 248 248 புளுகொஹோ தென்னை 285 285 கல்ஹின்ன - 310 310 ஹல் கொல்ல 43 43 உட கம்பவற கோரளை:
பங்கொல்லா மட 251 239 குருகொடை 412 406 விலான உடகம 293 102 அக்குரணை ஹபுகஹமுல்ல 108 97 அக்குரணை வராகஸ் ஹின்ன 64 63 அக்குரணை தெலம்புகஹவத்த 220 220 அக்குரணை தெம்படகஸ்தென்ன 115 115 அக்குரனை தெவடகஹ
முலதென்ன 135 132 அக்குரணை மல்வானகேஹின்ன 192 192 அக்குரணை நீரல்லை 303 303
இம்மரபுக்கதைக்கு முற்பட்ட காலத்திலேயே, முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன. பழமையான தவளம் கருமபீடமொன்று இங்கு இயங்கி வந்துள்ளமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. பங்கொல்லாமட எனும் கிராமத்துக்கருகில்,
137
Page 77
துணுவில என்ற இடத்தில், நயிதே குலத்து முஸ்லிம்கள் சரக்கேற்றும் இராசகாரியத்தை தெகல்தொறுவை புராண விகாரைக்காக ஆற்றிவந்துள்ளர்கள்.65) குருகொடையில் ஒரு மடிகே கருமயிடம்
ஆரம்பகாலப்பகுதியில், அக்குரனை குருகொடை மடிகே நாயக்க என்ற பதவியை மொஹிதீன் பாவாலெப்பை என்பவர் வகித்துள்ளார். இவர் 1-12-1818 இலிருந்து அரச சேவைக்காக தவளம் மாடுகளை வழங்கி வந்தார். இங்கே நீரல்லை என்ற கிராமத்தில் காலங்காலமாக முஸ்லிம்கள் ஆட்சிபெற்று வரும் பரவணி இடங்களிற் சில கானச்சேனை, தவத்தென்ன என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டன. (1879ம் ஆண்டு ஒரு குறிப்பின்படி 80A) இங்கு காளே என்பது சிங்கள மொழியில் கால (eை) என்பதன் மருவுதலாகக் கொள்ளலாம். இவை, தவளம் மாடுகளைக் கட்டும் இடங்களாகும். குருகொடையில் கொன்காவல கெதர என்பது மிகப் பழைய வம்சாவளியாகும். 1887ம்
என்பவர் இவ்வாசகமையைக் கொண்டிருந்தார்.67) இங்கு மடிகே கருமபீடம் அமைந்திருந்ததால், மடிகே முகந்திரம் பதவியை வகித்தோரும் இருந்துள்ளர்கள். குருகொடை முகந்திரம் விட்டு என்ற பரம்பரை பெயர் அக்குரணையில் உள்ளது.68 1871ம் ஆண்டில் வாழ்ந்த ஒருவர் இப்பெயர்வழியைக் கொண்டிருந்தார். “வீட்டு எனப்படும் பெயர்கள் பலதலைமுறைகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் பெயர்களாகும். இவ்வம்சாவளிப் பெயர்கள் மிகப் பழமையானவை. ஆகையால், சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் குடும்பங்களிலும், இப்பெயர்வழியைக் காணக்கூடியதாக உள்ளது. மாத்தளையில், மடிகே கிராமமான
கெதர என்ற வம்சாவளிப் பெயர் கொண்ட முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளர்கள்.69 குருகொடை ஊர் பிரதானியாக குருகொடை அகமது கம்மஹே என்பவர் மதிக்கப்பட்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக
வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் முகந்திரம் என்னும் பட்டத்தைத் தமது பெயர்களுடன் இணைத்து இருந்தனர். எடுத்துக்காட்டாக, 1870ம் ஆண்டளவில், பங்கராமத்து முகந்திரம் உதுமாலெப்பை முகம்மது லெப்பை என்பவர் இப்பதவியை வகித்துள்ளார்.(70) இதே காலப்பகுதியில், பன்கோறனே முகந்திரம என்னும் பதவியை கலைமா லெப்பை உதுமாலெப்பை என்பவர் வகித்தார்.711 அக்குரணையில் பள்கும்புறே முகந்திரம் மீரா நெய்தாப்பிள்ளை என்னுமொருவரும்
இக்காலப்பகுதிக்கு முன்னர் இப்பொறுப்பில் இருந்தார்.72 1873ம்
138
ஆணி டில் காசி முகந்தரம் அலியுதுமாலெப்பை என்பவர் வாழ்ந்துள்ளார்.(73) ஹாரிஸ்பத்துவையில், வழங்கப்பட்டு வரும் வம்சாவளிப் பெயர்களில் ஹாரிஸ்பத்துவே குருனனேஹே கெதர, தேசே குருண்ணான்சே கெதர, கமே குருண்ணாசே கெதர போன்ற முஸ்லிம்களின் பிரபல்யம் பெற்ற வம்சாவளிகளைப் போன்று, சிங்களவர்களின் சமூக அமைப்பில் பொதுவாகக் காணக்கூடிய பெயர்களும் இப்பிரதேசத்தில் நடைமுறையில் இருந்தன.
சிங்களவர்களும் பயன் படுத்தும் ஒரு வாசகமயான கந்தே கெதர என்பதை அக்குரணை முஸ்லிம்களும் பயன்படுத்தினார்கள். கந்தே கெதர யூசுப் லெப்பை என்னும் ஒருவரிடம் (1871) இப்பரம்பரைப் பெயர் காணப்பட்டது.74) அதுபோல் இரு மருங்கிலும் சிறிய மரங்களினாலான வேலிகளையும், அதற்கூடாகச் செல்லும் அடிபாதையையும் கொண்டுள்ள அமைப்பு, இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அதிகமாகக் காணக்கூடியதொரு இலட்சணமாகும். இது தெவட்ட என வழங்கப்படும். இதனை வம்சாவளிப் பெயராக சிங்களவர்கள் பயன்படுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. தெவடே கெதர செல்மா புள்ளே பாவாதம்பி என்பவரின் மூதாதையரும் இவ்வாசகத்தை தமது பெயருடன் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அவர் 1867ம் ஆண்டளவில் பல்கும்புறை கிராமத்தில் வாழ்ந்தார்.75) இது போன்றே எகொட கெதர நொஹெத் (அல்லது) விதானேலாகே கெதர என்ற பெயரையுடைய குடும்பங்கள், குருந்து கொல்லை எனும் கிராமத்தில் வாழ்ந்துள்ளனர்.76) இவ்வாறே, இஹல இeை) குருனானேஹேலா கெதர என்னும் பரம்பரைப் பெயரிலும், முஸ்லிம் குடும்பங்கள் இதே ஊரில் வாழ்ந்தன.(77) எகொடகெதர, இஹல கெதர என்பன சிங்களவர்கள் மிகுதமாக பயன்படுத்தும் பெயர்களாகும். தெமட்ட கொல்லே கெதர என்பது அக்குரணையில் வழங்கப்பட்டுவரும் மற்றுமொரு பழமையான பரம்பரைப் பெயராகும்.(78)
சிங்கள குல அமைப்பில் அடங்கும் ‘நயிதே' என்னும் வம்சப்பெயர்களை அக்குரணை வாசிகளில் பலர் கொண்டிருந்தார்கள். குட்டி நயிதைலா கெதர என்ற பெயர், ஹாரிஸ்பத்துவையைச் சேர்ந்த பல கிராமங்களில் முஸ்லிம்களிடையே பாவனையிலிருந்தன.(79) அக்குரணையில், வெதகும்பற நயிந்தை மீராப்பிள்ளை வெதருளை உதுமாலெப்பை அவர்கள் 1899 இல் வாழ்ந்தார்கள்.(80) என்டறுதென்ன நயிதேலாயே கெதர இஸ்மாயில் புள்ளே உதுமாலெப்பை என்பவர் 1886 இல் அக்குரணையில் வாழ்ந்துள்ளதாக ஒரு குறிப்பு 11.01.1871 இல் கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இல. 54265 என்னும் வழக்கேட்டில் காணப்படுகிறது. இவை மிகப் பழமையான காலம் முதல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் வம்சாவளிகளாகும்.
139
Page 78
தழப்பத்து விட்டு அகமது லெப்பை கலைமாலெப்பை என்றவர் 1879 ல் நிரல்லை கிராமத்தில் வாழ்ந்தவர். இங்கு தழப்பத்து' என்பது சிங்களத்தில் தல்பத்தை (ஒலையை)க் குறிக்கும் பதமாக இருக்கலாம்.(80A அக்குரணையில் வழக்கில் இருந்து வரும் இதுபோன்ற வம்சாவளிப்பெயர்கள், இந்நூலில் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளன. அவை தவிர்ந்த சில பெயர் வழிகளே மேலே கூறப்பட்டவையாகும்.
இங்கு காணப்படும் ஒரு சில வம்சாவளிப்பெயர்கள் சிங்கள சமூக அமைப்பில் உள்ள, வாசகமயின் மூல அமைப்பியல்புடன் ஒன்றுபட்டாலும், பல்வேறு வித்தியாசமான சொரூபங்களைக் கொண்டவையாக அவை அமைந்துள்ளன. அனேகமான பரம்பரைப் பெயர்கள் தமிழ்மொழி பத உச்சரிப்பைக் கொண்டவையாக உள்ளன. அத்தோடு, அவை பேச்சு வழக்கு மொழியிலும் அமைந்திருந்தன. இப்பகுதியின் காணி உறுதிகளையும் வேறு ஆதனங்களையும் தமிழ் மொழியில் எழுதிய நொத்தாரிசுமார்கள், அப்பெயர்களை அவ்வாறே எழுத்திலும் வடித்தார்கள். எடுத்துக்காட்டாக;
அக்குரணையில் உஸசா கொடையார் அகமது லெப்பை மீரா லெப்பை என, 1871 இல் அங்கு வாழ்ந்த ஒருவரது பெயர்வழி தமிழில் எழுதப்பட்டுள்ளது.81) இப்பரம்பரை வாசகம் உஸஸாக கொடையார் விட்டு என, பிறிதொரு தமிழ்க் காணி உறுதியொன்றில் எழுதப்பட்டுள்ளது.(82) இங்கு குறிப்பிட்டுள்ள உஸஸாக கொடையார் என்பதற்கு எந்த விசேட தமிழ் அர்த்தமும் கிடையாது. இது, உஸ்ஸாகொட (eங்eைலை) என்ற இடப்பெயரைக் குறிக்கும் ஒரு பதமாகும் . உஸ் ஸாகொட கெதர ஹபீபு லெம்பை என இவ்வம்சாவளிப்பெயர் சிங்களமொழி வம்சாவளி வடிவில் கண்டி மாவட்ட நீதிமன்றத்தின் இல. 5912 என்ற பிரிவிடல் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறே, அக்குறணை புளுகொஹோத் தென்னையில், அழகொடையார் தோட்டத்து அலியுதுமாபிள்ளை (83) எனும் பெயரைக் கொண்டடோரது பரம்பரையினர் 1899இல் வாழ்ந்தனர். இதில் அழகொடையார் எனப்படுவது அழகொட (ree)ை என்ற இடத்தைக் குறிப்பிடும் பதமாகும்.
இப்பிரதேசத்தில் மிகமிகப் பழமையான ஒரு வம்சப் பெயர் கலகம கெதர' என்னும் பெயராகும். இம்மரபுவழிப்பெயர் கொண்டவர்கள், அஸ்கிரிய விகாரைக்குரிய நிலங்களைப் பெற்றிருந்தார்கள். இப்பெயர் திரிபடைந்து இன்று கலகாமத்தார் என்பதாக அழைக்கப்படுகிறது. 70 வயது நிரம்பிய ஹபீபுலெப்பை
40
என்னும் அக்குரணை வர்சி, தமது பரம்பரைப்பெயரை கலகாமத்தார் வீட்டு என்பதாக நீதிமன்றச் சாட்சியமொன்றின் போது குறிப்பிட்டார்.(84) இதில் 'கம’ என்னும் பதம் தமிழில் ‘காமம்’ என்பதாக பிரயோகிக்கப்பட்டுள்ளது. (உ-ம்:- வத்தேகம - வத்து காமம்) அது போன்று, கலகம' என்பது ‘கலகாமம் என இங்கே திரிபடைந்துள்ளது. ஆனால், இவ்வூரில் கழுகாமத்தார் வீட்டுச் சுலைமா லெப்பை எனவும் ஒருவரது பரம்பரைப்பெயர் (1901ம் ஆண்டில்) குறிப்பிடப்பட்டுள்ளது.(85) இப்பெயர்வழியும் கலகம’ என்பதின் திரிபு எனக் கொள்ளலாம். என்றாலும், கழுகமுவே குருன்னேஹேலே கெதர என்பது போன்ற வம்சாவளிப்பெயர்கள், கழுகமுவ ள்ன்னும் கிராமப் பெயரை அடிப்படையாகக் கொண்டு, முன்வத்துக்கொடை முஸ்லிம்களிடையே வழக்கில் உள்ளன. இப்பெயர்வழிகளுடன் கிட்டிய தொடர்புடைய ‘களாத்தார் வீட்டு அலியுது மாப்பிள்ளை’ என்னும் தலைமுறை பெயரும் 1872ம் ஆண்டில் அக்குரணையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.(86) மாத்தளை அஸ்கிரிய பள்ளேசியப்பத்துவ கோரளையில் கலகம’ என்னும் ஒரு கிராமம் உள்ளது.
இவ்வாறு சிங்கள வாசகம அமைப்பிலான பெயர்களை, முஸ்லிம்கள் தமிழ் மொழி உச்சரிப்பில் தமக்கே உரிய தனித்துவமான அமைப்பில் பயன்படுத்தியுள்ளனர். இப்பெயர்கள் மிகப்பழமையான காலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வருபவையா கையால் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவர்களினாலும் கூட அவற்றிக்கு உரிய விளக்கத்தையும், தோற்றுவாயையும் கூறமுடியாது உள்ளன. அதனால் , சமூக மட்டத்தில் காணப்படும் இவ்வாறான பரம்பரைப்பெயர்களின் வரலாற்று வழிகளை, யூகங்களாகவேனும் கூற முடியாத நிலை உள்ளது.
அக்குரணையில் வாழ்ந்த முஸ்லிம்கள், மாத்தளை முஸ்லிம்களுடன் கொண்டிருந்த பூர்வீகத் தொடர்புகளை எடுத்துக்காட்ட அங்கே நடைமுறையிலுள்ள சில வம்சாவளிப் பெயர்களைச் சான்றாகக் குறிப்பிடலாம். அப்பெயர்களும் மேலே கூறப்பட்ட அமைப்பிலேயே காணப்படுகின்றன.
வறாக்காமுறையார் வீட்டு என்னும் பரம்பரைப்பெயர் இங்கு பிரசித்தமானதாகும். இப்பெயர் வறக்காமுறையார் இசுமாயிலெப்பை செய்யது லெப்பை என்னும் வடிவத்திலும் உபயோகிக்கப்பட்டன.187) வறக்காமுறை என்பது மாத்தளை அருகில் உள்ள ஓர் கிராமமாகும். இது போன்று மாறுகோனை என்னும் கிராமப்பெயரில், மாறுக்கொணயார் வீட்டு பக்கீர்ப்பிள்ளை என்ற வம்சாவளிப்பெயரும், பாண கொமுவார் வீட்டு என மற்றுமொரு வம்சாவளிப் பெயரும் காணக்கூடியதாக
14
Page 79
உள்ளது.(89) அதுபோல், இங்கு 'கம்பலகெதர என்ற வம்சாவளிபெயர் கம்பளயார் வீட்டு எனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (89A) ஹாரிஸ்பத்துவையில் 1877 இல் வாழ்ந்த ஒருவர் வடசடையார் ராவுத்தார் மகன் கலுங்கு அகமது என பெயர் பெற்றிருந்தார்.(90) குருகொடை வாசியொருவர் நகரியார் வீட்டு இசுமாயில் பிள்ளை (1872) என்னும் பெயர் கொண்டிருந்தார்.(91) இவ்வாறு பல்வகை அமைப்பில் இப்பகுதி முஸ்லிமீகள் தமது தலை முறைப் பெயரை பயன்படுத்தியுள்ளனர்.
அக்குரணைப் பகுதியில் முதலியார், முதியன்சே என்னும் வம்சாவளிப் பெயர்கள் பற்றிய விபரங்கள் முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளன. அது போன்று, இங்கு வழங்கப்பட்டுவரும் மிகப்பழமையானதொரு வம்சாவளியாக அடப்பயாலயே (aலegைடுd) என்ற பெயர் விளங்குகிறது. இதனை அடப்பனார் என தமிழில் எழுதுவர். கண்டிய அரசனது விசுவாசத்திற்கும், உள்ளன்பிற்கும் உரித்தான ஒரு குடும்பம் மன்னனால் இப்பட்டம் கொண்டு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதில் மிகப்பழமையான பெயர், முதுனே அடப்பயாலயே கெதர என்ற பரம்பரைப்பெயராகும். முதுனையடப்பனார் விட்டு அபூபக்கர் லெப்பை வயிதியநார் அகமது லெப்பை ஆராச்சியார் என்பவர் இப்பெயர் வழியுடன் 1870ம் ஆண்டளவில் இவ்வூரில், வாழ்ந்தாக ஒரு குறிப்பு கூறுகிறது.(92) இது போன்று முதுனே அடப்பனார் குடும்பங்கள் பற்றி ஏராளமான குறிப்புகள் கிடைக்கத்தக்கவையாக உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் குடும்பத்துக்குரிய பழமையான வீடு, அக்குரணையில் மல்வானஹின்ன என்ற கிராமத்தில் உள்ளது. ‘முதுனே’ என்பது உயரமான ஓர் இடத்தைக் குறிக்கும் சிங்களப்பதமாகும். ஹின்ன என்பதும் மலை முகடுகள் கொண்ட சிறிய காட்டுப்பகுதியான இடத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இக்குடும்பத்தவர் ஓர் உயரமான இடத்தில் கண்டிய மன்னனால் குடியமர்த்தப்பட்டதால், இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. உயர்வீட்டு அடப்பனார் என தமிழில் வழங்கப்படும் ஒரு வம்சாவளிப்பெயரும் இங்கு உள்ளது.(93 இது “முதுனே அடப்பனார்’ என்பதன் தமிழ் வடிவமாகக் கொள்ளலாம். இப்பிரதேசத்தில் கல்ஹின்ன, வராகஸ்ஹின்ன போன்ற முஸ்லிம் கிராமங்களும் ‘ஹின்ன என்ற நாமத்துடன் உள்ளன. இவையும் உயரமான பகுதிகளாகும்.
இக்குடும்பத்துடன், தொடர்புடைய தெனிய அடப்பனார் வீட்டு எனும் பரம்பரைப்பெயர் கொண்ட குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. தெனிய அடப்யனார் விட்டு மீரா லெப்பை உதுமாலெப்பை என்பவர் 1857ல்
42
இப்பிரதேசத்தில் சீவித்ததாக ஒரு அறுதிச்சாதனக் குறிப்பு கூறுகிறது.(94) இக்குறிப்பில் ஒரு வயல் நிலம் பற்றிய விடயம் எழுதப்பட்டுள்ளது. இக்குடும்பத்தவர் வயலருகே வாழ்ந்தமையினால் தெனிய எனும் காரணப்பெயரை இவர்கள் பெற்றிருக்கலாம். இதே போன்று பள்ளே கம்பஹ கோரளையில் வத்தே அடப்பநார் அகமது லெவ்வை ஆலிம் சாகிபு என 1891 இல் பதிவான ஒரு சாசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.(95) அக்குரணை நீரல்லையில், தெலும்புககவத்தே அடப்பனார் வீட்டு என்னும் வம்சாவளிப்பெயர் காணப்படுகிறது.(95A
மிகப் புராதன காலந்தொட்டே இப்பகுதி முஸ்லிம்கள் சிங்கள பெளத்த மக்களோடு, மிக நெருங்கிய தொடர்பு பூண்டு வாழ்ந்து வந்துள்ளமைக்கான சான்றுகளாகச் சில வம்சாவளிப்பெயர்கள் இங்கு காணப்படுகின்றன. அக்கால முஸ்லிம்கள் பெளத்தர்களின் புனித சின்னங்களைக் கூட தமது பெயர் வழியில் பயன்டுத்தியுள்ளார்கள். இதே ஊரில் ‘போகஹகொடுவ' எனவும், ஒரு குடும்பப்பெயர் இருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ‘கோவில் முதுனே வத்தை என்னும் இடம் தொடர்பான ஓர் ஆவணத்தில், குருகொடையில் வசிக்கும்(1872) இப்றாஹிம்பிள்ளை யூசுபுலெப்பை என்பவரது வம்சாவளிப்பெயர் விகாறே அடபயனார் விட்டு என பெளத்த மதத்தலத்தின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது.(96) அக்குரணையில் வலகம்பா மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ஒரு புராண கல்விகாரை காணப்படுகிறது. இதனை, நினைவுபடுத்தி இப்பெயர் வழித்தோன்றி இருக்கலாம். கண்டி இராச்சியத்தில் சில விகாரை நிலங்களில் ‘அடபயலாகே பங்கு’ என ஒதுக்கப்பட்டு அவை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குருநாகலைப் பிரதேசத்தில் ரம்புக்கந்தன என்னும் கிராமத்தில் ஒமர் லெப்பை வெத குருனனேஹே என்பவர் 'இஹலகமே அடபயாகே பங்கு’ எனும் 8 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பங்குகளை, பிரசித்தம்பெற்ற ரிதிவிகாரையில் இருந்து பெற்றுள்ளார். (1872)(97) இப்பகுதியில் வேவுட கோரளையில் பஹல வேலியே பொலயில் வசித்த ஒருவருக்கு குருவாலென விகாரையின் நிலப்பங்குகள் வழங்கப்பட்டிருந்தன. அவரது பெயர் இஸ்மயில்புள்ளே அடப்பயலே அப்துல் ரஹ்மான் புள்ளே குஞ்சி உடையார் என்பதாகும்.(98) இது முஸ்லிம்கள் மீது பெளத்தர்கள் கொண்டிருந்த நன்நம்பிக்கையின் காரணமாக, விகாரைகளுடன் தொடர்புடைய வர்களுக்கு கிடைத்த சிறப்பு நாமங்கள் எனக்கூறலாம்
அக்குரணையில் ‘அடப்பனார்’ என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட பெயர்வழிகளில், மற்றுமொரு பெயர் மொறப்போள அடப் பனார் வீட்டு என்பதாகும் . மொறப் பொல என்பது காவற்தலமொன்றைக் குறிக்கும் பதமாகும். இப்பெயர் வழியுடையோர்
143
Page 80
இங்கு பல கிராமங்களிலும் வாழ்கின்றனர். மொறப்போள அடப்பனார் வீட்டு அகம்மது கண்டு ஆராச்சியார் உதுமா லெப்பை யாராச்சியார். என்பவர் 1871 இல் இங்கு வாழ்ந்துள்ளது அதற்கு ஒர் உதாரணமாகும்.199) ஹாரிஸ்பத்துவையில் பல கிராமங்களில் அடப்பனார் வீடு எனப் பெயர் கொண்ட வீடுகளும் காணப்படுகிறன. இப்பிரதேசத்தின் இந்தப்பெயர் வழியின் பழமைக்கு இது ஒரு சான்றாகும். வெறுமனே ‘அடப்பனார் வீட்டு' என வம்சாவளிப் பெயரைப் பயன்படுத்துவோரும் இங்கு உள்ளனர். இவ்வூருக்கு அருகாமையில் அமைந்துள்ள கலகெதர மடிகே என்னும் ஊரிலும் ‘அடப்பயலே கெதர வம்சாவளிப்பெயர் இருந்துள்ளது. இங்கு வாழ்ந்த முன்னால் மடிகே ஆராச்சி இஸ்மாயில் லெப்பை அகமதுலெப்பை (1899) என்பவர் கஹட்டபிட்டியே அடயப்பயலே கெதர என்னும் வம்சாவளிப்பெயரைக் கொண்டிருந்தார்.(100)
கண்டிய முஸ்லிம்களின் வம்சாவளிப் பெயர்கள், அங்கு குடியேறிய சில குடும்பங்களின் ஆரம்ப வருகைப்பற்றிய எதிர்வு கூறல்களுக்கும் சான்றாக அமைகின்றது எனலாம். அக்குரணையில் காணக்கூடியதாக உள்ள சில வம்சாவளிப் பெயர்கள் இதனை உறுதிப்படுத்துபவையாக உள்ளன.
அஸ்செய்ஹற் அஹற்மது உடைய மகன் முஹம்மத் எனப் பெயர் பெற்ற, புகழ் பெற்ற ஆத்மீக ஞானி கசாவத்தை ஆலிம் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் அக்குரணையை பிறப்பிடமாகக் கொண்டு, அங்கேயே சமாதி (சியாரம்) அமையப் பெற்றுள்ளார்கள். இவர்கள் 1827 (ஹிஜ்ரி 1247)ம் ஆண்டளவில் பிறந்து, 1893ல் இறப் பெய்தினார்கள். அரபி மொழியையும், சன்மார்க்க ஞானங்களையும் தென்னிந்தியாவில் தெளிவுறக் கற்று, சிறந்த மார்க்க அறிஞராக புகழ் பரப்பினார்கள். இவரால் அரபியிலும், அரபித்தமிழிலும் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
அக்குரணையில் வழங்கப்படும் முதுனே அடப்பனார் வீட்டு என்னும் வம்சாவளிப் பெயருக்குரியவர்கள் இவர்களது மூதாதையரே. இவரது தந்தையாரும் ஒரு மார்க்க அறிஞராவார். மார்க்க அறிஞரை ‘ஆலிம்’ என அரபிப்பாஷையில் குறிப்பிடுவர். பல்வகை அறிவுக்கலைகள் அடங்கிய கிரந்தங்களை கற்றுத்தேறியவர்களே ‘ஆலிம்’ எனும் பட்டத்தைப் பெறுவர். கிரந்தங்கள்-கிதாபுகள் என அரபியில் குறிப்பிடப்படும். அக்குரணையில், கிதாபோதின லெப்பை அகம்மது லெப்பையின் மகன் முஹம்மது லெப்பை என்னும் பெயரில் அழைக்கப்படுவது இவரது தகப்பன் அஹற்மத் அவர்களையே எனக் கூறலாம்.101) 1871 இல் எழுதப்பட்ட பல பொது ஆவணங்களில்
44
இப்பெயர் இடம் பெற்றிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில், கையொப்பங்கள் அரபி மொழியிலேயே இடப்பட்டுள்ளன. அஹற்மத் லெப்பை ஆலிம் அவர்கள், அக்குரணையில் கசாவத்தை எனும் கிராமத்தில் தாம் திருமணம் செய்து கொண்டார்கள். இக்குடும்பம் தெனியடப்பனார் வீட்டு அல்லது கசா வத்தே வீட்டு (102) என அழைக்கப்பட்டடது. இதனாலேயே அறிஞர் முஹம்மத் லெப்பை அவர்கள் கசாவத்தை ஆலிம் (ரஹ்) என அழைக்கப்பட்டுள்ளார்கள். உயர் வீட்டு ஆலிம் சாகிபு எனவும் இக்குடும்பத்தாரிடையே பெயர் வழக்கு இருந்தது.(103)
அஹற்மத் லெப்பை ஆலிம் அவர்களது தகப்பனார் சுலைமா லெப்பை மரைக்கார் ஆவார். இவர் குஞ்சி மல்கர் என்பவரது மகனாவார். இக்குஞ்சி மல்கர், கண்டியை அரசாண்ட மன்னனொரு வனின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததுடன், மன்னன், இட்ட பணியொன்றை புத்தளம் சென்று ஆற்றியமையால் மல்வான ஹின்னையில் குடியேற்றப்பட்டார் என ஒரு மரபுக் கதை அவரது பரம்பரையைச் சேர்ந்தவர்களால் கூறப்படுகிறது.
புராதனக் காலத்தில் புத்தளம் கண்டிய மன்னனின் ஆட்சிக்குட் பட்டிருந்தது. கண்டிய சிங்கள மன்னர்கள், தமது முடிசூட்டு விழாவிற்காக புத்தளத்தின் நவன்கடுவ என்னும் இடத்திற்குச் செல்வது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டது. கண்டியை அரசாண்ட நரேந்திர சிங்க (1707-1739) மன்னனின் முடிசூட்டு விழாவின் போது புத்தளத்தில் வைத்து, அவனைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி அங்கு முஸ்லிம்களால் முறியடிக்கப்பட்டு மன்னனின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதனால், மன்னன் சோனகத் தலைவர்களுக்குக் கண்டிய அரசின் கொடியையும், பெறுமதியான நன்கொடைகளையும் வழங்கி அவர்களைக் கெளரவித்தாக வரலாறு கூறுகிறது. கீர்த்தி யூரீ ராஜசிங்க மன்னனின் (1747-1782) முடிசூட்டு விழா வரையில் நவன்கடுவைக்கு கண்டிய அரசர்கள் செல்லும் வழக்கமிருந்தது. குஞ்சி மல்கர் வாழ்ந்த காலமும் அண்ணளவில் இக்காலப்பகுதியென கணிப்பிடக் கூடியதாகவுள்ளது. அத்துடன் பழமையான காலம் தொட்டே புத்தளத்துடன் அக்குரணைக்குத் தொடர்பிருந்ததை புத்தளது மரைக்கார் அகமது லெப்பை மரைக்கார் (1873) என்பது போன்று, அக்குரணையில் அக்காலந் தொட்டே வழக்கில் இருந்து வரும், பரம்பரைப் பெயர்கள் சான்று பகர்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டவர் அக்குரணையில் பரவணியாக அதாவது, 1873ம் ஆண்டிற்கு முன்பிருந்தே பரம்பரை பரம்பரையாக ஒரு காணியை ஆட்சி செலுத்தி வந்துள்ளார்.
145
Page 81
குஞ்சி மல்கர் அவர்கள், ஒரு சிறந்த வம்சத்தைச் சேர்ந்த நூரு முஹம்மத் என்பவரது புதல்வராவார். நூரு முகம்மத் அவர்கள் இலங்கைவாசியும், இந்தியவாசியுமாவார் என, தமது குடும்பப் பரம்பரை பற்றி கசாவத்தை ஆலிம் அப்பா (ரஹற்) அவர்கள் அரபி மொழியில் எழுதிய குறிப்பொன்றில் கூறியுள்ளார்கள். இத்தரவுகளின்படி, முதுனே அடப்பனார் வம்சப் பரம்பரையினர் கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் விமலதர்மசூரிய (1687-1707) மன்னனது காலத்திற்குப் பின் அக்குரணையில் குடியேறியவர்கள் எனக் கருதலாம்.
அக்குரணை முஸ்லிம்களின் முன்னோர்களது சில பெயர்களில் , இந்தியத் துணை கண்டத்தைச் சேர்ந்த காயல்பட்டணத்துப் பழங்காலச் சோனகர்களின் பெயர்களின் சாயல்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளன. காயல்பட்டணத்தில் குடியேறிய அரேபிய வழித்தோன்றல்கள் முற்காலத்தில், கண்டிய இராச்சியத்துடன் தொடர்பு பூண்டவர்களாக இருந்துள்ளார்கள். காயல்நகர், முற்கால அரேபியரது முக்கிய தலமாக திகழ்ந்தது. துட்டகைமுனு மன்னனின் காலத்தில், கயிலபத்தானி (காயல்பட்டணம்) யிலிருந்து வந்த ஒரு சோனகரின் வழித்தோன்றல்களே, மாத்தளை பள்ளேசியப் பத்துவில் அமைந்துள்ள, நிககொல்லை கிராமத்து முஸ்லிம்களின் முன்னோர்கள் என மலை நாட்டைப்பற்றி எழுதிய A C. லோரி என்பவர் குறிப்பிடுகின்றார்.(104) பிற்காலத்தில் கண்டி, மாத்தளை, கம்பளை போன்ற ஊர்களில் அதிகமான காயல் வாசிகள் வாழ்ந்து வந்தார்கள்.
அப்துல் காதிர்’ என்னும் பெயர் காயல்நகரில் மிகவும் பிரபல்யமான பெயராகத் திகழ்ந்தது. சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் அங்கு இஸ்லாமிய சூபித்துவ ஞானி அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் ‘காதிரிய்யா தரீக்கா’ எனப்படும் இஸ்லாமிய மத அனுஷ்டான வழிமுறை அறிமுகமாகியதே அதற்குக் காரணமாகும்.
“காதி’ என பெயர்களில் வரும் பகுதி “காதிர்' என்பதன் சுருக்கமே ஆகும்.
1877ம் ஆண்டில் பதிவான ஒரு அறுதிச் சாசனத்தில் காயட்பட்டணம் கண்டி அக்காதி லெப்பை என்னும் பெயரில் ‘அக்காதி என்பது 'அப்துல் காதிர்’ என்னும் பெயரின் திரியேயெனக் கொள்ளலாம்.(105 அக்குரணையில், காதி முதியன்நெசேளாகே என்ற மிகப் பழமையான வம்சாவளி உடையோர் வாழ்ந்து வருவது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.(106) இலங்கையில் டச்சு காலத்தில், கடல் வாணிபத்தில் சிறப்புற்று விளங்கிய தென்காயல் நகரைச் சேர்ந்த, வள்ளல் சீதக்காதி (1650-1720) அவர்களின் பெயரிலும் ‘காதி என்னும்
146
பெயர் பகுதி உள்ளது. இவர், கண்டிய மன்னன் இரண்டாம் விமலதர்ம சூரியனின் (1687-1707) நெருங்கிய நண்பனாக விளங்கினார். இவரது சிபாரிசினால் கண்டிய அரசனிடம் சிக்கி கைதியாக இருந்த, ஐந்து ஆங்கிலேயர்களை மன்னன் விடுதலை செய்த வரலாறும் உள்ளது. சீதக்காதி’ என்பது ‘செய்தக்காதி" அதாவது ‘செய்யது அப்துல் காதிர்’ என்பதிலிருந்து மருவி வரும் பெயரேயாகும். சேகாதி என்பதும் இதே பொருளையே தருகின்றது. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சேகாதி நயினார்ப் புலவர்’ என்னும் புகழ் பெற்ற முஸ்லிம தமிழ்ப் புலவர் இதே காயற்பட்டணத்தில் வாழ்ந்துள்ளார். குல வழிப்பெயர் வரிசையில் அக்குரணையில் பங்கொல்லாமட கிராமத்தில் சேகாதி நயிதேலா கெதர என்னும் வம்சாவளி காணப்பட்டது. இப்பரம்பரையில் வந்த, சேகாதி நயிதேலா கெதர இப்ராஹிம், பகிர், ஒமர் என்போர் 1872இல் துணுவிலைக் கிராமத்தில் கண்டி தெகல் தொறுவே விகாரைக் காணிகளைப் பரவணியாகப் பெற்றிருந்தார்கள்.(107)
அக்குரணையில் வாழ்ந்த இப்பெயருடையவரது பரம்பரையின் தொன்மை, மேலே குறிப்பிட்ட காயல் பெரியார்களின் காலப் பகுதிக்குரியன எனக் கருதலாம். காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள், கண்டிய மன்னர்களுடன் தொடர்பு கொண்டிருந்தமையினால், சிலவேளை இவர்கள் காயல்பட்டண சோனகரின் வழித்தோன்றல்கள் எனக் கருதவும் இது வாய்ப்பளிப்பதாக உள்ளது. இதற்கு மற்றுமொரு ஆதாரமாக, அக்குரணை பழங்குடி முஸ்லிம்கள் வாழ்ந்த ஊர்களில் ,பெண்களுக்கு நாச்சியார் என்னும் பெயரைச் சூட்டிக்கொள்ளும் வழக்கம் இருந்து வந்ததைக் குறிப்பிடலாம். இது காயல்பட்டணத்தில் காணப்பட்ட ஒரு வழக்கமாகும். கி. பி. 875இல் எகிப்து (மிஸ்று) நாட்டிலிருந்து மரக்கல யாத்திரையின் மூலம் முஸ்லிம்களில் ஆண்களும், பெண்களுமாக 224 பேர் காயல்பட்டணக் கரையை அடைந்தனர். இவர்களை, அங்கே குடியேற்றிய பாண்டிய வேந்தன் ஜெயவீரு ராஜுக்கா நாயனி என்பவன் தமிழில் ஒரு பட்டயமும் இவர்களுக்கு வழங்கினான். அதில் காயல்கரைக்கு வந்த எகிப்து நாட்டுப் பெண்களை ‘நாச்சியார் பெண்டு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காயல்பட்டணத்தின் முஸ்லிம் பெண்களின் பெயர்களோடு ‘நாச்சியார்’ என்பதை இணைத்துக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது எனக் கருதலாம். அக்குரணையில் பழமையான பல குடும்பங்களிலும், இப்பெயர் காணப்பட்டுள்ளது. *முதுனே அடப்பனார் வம்சாவளியுடைய குடும்பத்தை இதற்கு ஒர் உதாரணமாகக் கொள்ளலாம். அதுபோன்று, மரைக்கார், நயினார் என்னும் பெயர்களும் காயற்பட்டணத்தில் வழங்கப்படுவது போன்றே இங்கும் நடைமுறையிலுள்ளது.
47
Page 82
இரு சமூகங்களும் ஒரே வம்சாவளியும்
கண்டிய சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் பாரம்பரிய பாகுபாடு காணப்பட்டாலும், வம்சாவளிப் பெயர் விடயத்தில் வேறுபாடு இருக்கவில்லை எனலாம்.
கொவி குலத்துச் சிங்களவர்கள், தமது குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது, முதன் முதலாக அக்குழந்தைக்கு சோறுாட்டும் நாளிலாகும். இது 'பத் கவப்புதா நம (லo eைee) இை) என அழைக்கப்படும். இப்பெயரின் ஆரம்ப எழுத்து, குழந்தை பிறந்த நேர சகுனத்திற்கு ஒத்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகப் பழமையான பெயரொன்றைச் சூட்டுவதே வழக்கமாகும். முஸ்லிம்கள் தமது குழந்தைகளுக்கு, பிறந்து ஏழாவது நாளில் அழகிய அரபி உச்சரிப்புடன் கூடிய பெயர்ச்சூட்டி அதனைக் காதில் ஊதுவார்கள். கண்டிய சமூக அமைப்பில் சிங்களவர்களது 'பத் கவாப்புதா நம என்ற பெயர்களையும், முஸ்லிம்களின் அரபிப் பெயர்களையும் தவிர அவர்கள் பெயருக்கு முன்னால் பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தி வந்த வம்சாவளிப் பெயர்கள் பெரும்பாலும் ஒரே அமைப்பிலேயே இருந்தன.
தெளிவான சிங்களமொழி அமைப்பு கொண்ட பல வம்சாவளிகளை கண்டிய முஸ்லிம்கள் தமது பெயருடன் பயன்படுத்தி வந்தமைக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன. இது போன்ற மரபு வழிகள் சிங்களவர்களிடமும் காணக் கூடியனவையாக உள்ளன.
உடுநுவரை தஸ்கரை எளதெக்கேயில், அகமது லெப்பை என்பவருக்கு அரநாயக்க வத்தே கெதர (1936) අරතඥයෙක් (අරනායක) වත්තේ ගෙදර [108] 6160Iබpub, மெதபலாத்தை கெடகும்புற தவுலகலயில் வசித்த ஒருவர் அம்பரபொல அன்கே மடித்தே கெதர (1914) අමිබරපොල අන්’ගේ මඩිත්තේ ගෙදර [109] 6I6) Lig5[I ආ 60]||16 , பாத்தஹேவாஹெற்றை உடதெனிய கிராமத்தில், உ.இஸ்மாயிலுக்கு ஒதலாவே கெதர (1899)
ඕතලාවේ ගෙදර [110] 616)[0]ub, பாத்ததும்பரை பள்ளேகம்பஹ வத்தே கெதரயில் குப்பத்தம்பிக்கு கோத்தளவை வீட்டு (1901) (111) எனவும்,
148
தெஹியங்கை என்ற கிராமததில், பக்கீர் லெப்பை அவர்களது பெயருடன்
கனஹறின்னே கெதர (1916)
කනහින්නේ ගෙදර (112) 6I@Iඛqub, மாத்தளை மெதசியபத்துவே பரகஹவெல கிராமத்தில், உதுமாலெப்பைக்கு,
கனவேகல கெதர (1921)
வலிைeை eஆை0 (113) என்ற பெயரும், குருநாகலை வேவுடகோரளை பறகாதெனியாவில், அகமது புள்ளே அவர்களுக்கு,
கரல்லியத் கெதர (1872)
කරලියද් ගෙදර [114] 616)[[Hub, தும்பனை பள்ளே பலாத்தை தெஹிதெனியே மடிகேயில், ஹபீபு லெப்பைக்கு,
கோட்டகொட ஆராச்சிலாகே கெதர (1940) කේටිටගොඩ ආරචිචිලාගේ ගෙදර [115] 6I6)[pub, பாத்ததும்பரை பலிஸ் பத்துகோரளை கும் புக்கதுரயில், மம்மதுமொஹிதீனுக்கு,
கல்வெடே கெதர (1942)
ஞ்ைஜல9 eஆை0 (116 என்பதாகவும், கலுகமுவை கிராமத்தில் சாரா உம்மா என்னும் பெண்மணிக்கு, பரகர கெதர (1938) edoை egைo (117) என்ற பெயர் வழியும், தெஹியங்கே கிராமத்தில் ஹபீபு லெப்பை சாயுபு என்பவருக்கு, பிலவுனுமுவே கெதர (1938)
පිලදානුමුවේ ගෙදර [118] 616)nug5Töඛpib, ஹாரசியப்பத்துவே மெதபலாத்தையில் பல்கும்புரயில், அபூபக்கர் லெப்பைக்கு,
புஸ்கொஹே கெதர (1867)
පුස්කොහේ ගෙදර [119]. 6I6)[pub, பாத்ததும்பர உடகம்பஹ மடவலையில், ஒமர் லெப்பை அஹமது லெப்பைக்கு,
திக்ஹீனென் கெதர (1873)
දික්හීනෙන් ගෙදර [120] 6ialකub, உடுநுவர மெதபலாத்தை எளதக்கேயில், மம்மது லெப்பை என்பவருக்கு,
தும்பல் அன்கே கெதர (1929) திeஞ் சகed eeைd (121) என்பதாகவும், உடுநுவரை கதுபலாத்தை மான்கமுவையில், காதர் லெப்பை இல்லகொல்லே கெதர (1930)
ඉල්ලගෙල්ලේ ගෙදර [122] 616)ඛpub,
49
Page 83
உடுநுவரை மெதபலாத்தை எளதக்கை கிராமத்தில், மம்மது லெப்பைக்கு, மாஹின்கொடே கெதர (1941) මාහින්ගොඩේ ගෙදර [123]. 616)[0]|Lib, பள்ளேகம்பஹ மெதசியபத்துவே பல்கும்புரையில் ஒருவருக்கு, மொறகொல்லே லேகமலாகே கெதர (1898) මොරගොල්ලේ ලේකමලාගේ ගෙදර [124] 616)go|Lib ඛIIbérirකI6fiuptib, உடுநுவரை மெதபலாத்தை அரச்வாவெல கிராமத்தில், மம்மது லெப்பைக்கு, மொல்லியாமலே (1941) මොල්ලියාමලේ [125] 6160I6ub, உடபலாத்த கலகெதர என்னும் ஊரில் தம்பிகண்டு ஹஜ்ஜிலெப்பை, ஹெட்டிபொல கெதர (1872) හෙට්ටිපොල ගෙදර [126] 6160Iඛquip, அதே ஊரில், ஈசுபு லெப்பை என்பவருக்கு, வட்டபுளுவே கெதர (1878) 8egஒ68 Gஆை0 (127) எனவும் பரம்பரைப் பெயர்கள் இருந்துள்ளதை சில எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். இதுபோன்று, கண்டி இராச்சியத்தில் முஸ்லிம்கள் வாழும் பல ஊர்களிலும் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் முஸ்லிம்களிடையே வழக்கில் உள்ளன.
கண்டிய முஸ்லிம்கள் வாழ்ந்த எல்லா ஊர்களிலும் இச்சிங்கள வம்சாவளி வழமை காணப்படாதது போன்று, சில குறிப்பிட்ட முஸ்லிம் பிரிவுகளிடையேயும், இப்பெயர்வழி காணப்படவில்லை. இங்கு வாழ்ந்த இந்திய வம்சாவளி முஸ்லிம்களிடம் இப்பெயர்வழி நடைமுறை காணப்படவில்லை. அதேபோன்று, தீவின் கரையோரப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்து, பின்பு இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்களும் சிங்கள வம்சாவளிப் பெயர்களைக் கொண்டி ருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, கண்டிய கடைசி மன்னன் றி விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) காலத்தில் கண்டியில் குடியேறிய, புகழ்பெற்ற ஓர் அறிஞரின் பரம்பரையினர் இப்பெயரைப் பெற்றிருக்கவில்லை. அது அறிஞர் சித்திலெப்பை (1838-1898) என்பவரது பரம்பரையாகும். 1878இல் எழுதப்பட்ட ஒரு காணி உறுதியில் அவரது பெயர் (நொ. AடM.காசீம்-காணி உறுதி இல.290) *இலங்கைத் தீவில் கணம் பொருந்திய கப்ரிங்கோட்டு பெருக்கோராகிய கண்டியிலிருக்கும் மேன்மைதகு முஹம்மது காசிம் சித்திலெப்பை" என மிக நீண்ட கெளரவ பட்டங்களுடன் எழுதப்பட்டுள்ளது. இவர் கண்டியில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இவ்வம்சாவளிப் பெயர் வழமை இவர் குடும்பத்தில் இருக்கவில்லை. இதனை, சிங்கள வம்சாவளிப் பெயர்களை உடையோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு குடியேறி வாழ்ந்து வருவதற்குச் சான்றாகக் &ngp6FTLD.
150
இப்பிரதேசத்தில் வாழ்ந்த மலாய இனத்து முஸ்லிம்களிடமும் இப்பெயர் வழக்கு காண்பதற்கு அரிதாக உள்ளது. ஓரிரு தொழில்வழிப் பெயர்கள் மாத்திரமே அவர்களிடம் காணப்பட்டது எனலாம். கண்டி கட்டுக்கலையில் வசித்து வந்த கண்டிய மன்னன் ரீ விக்கிரம இராஜசிங்கனின் மலேயபடையில் (ஜாவா படை) தலைமைப் பொறுப்பை ஹசன் முஹந்திரம் என்பவர் வகித்தார். இவர் மலே முஹந்திரம் என அழைக்கப்பட்டார். உக்ரஸ்பிட்டிய என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஒருவர் ஜா முகந்திரம்லாயே கெதர முதலிப்புள்ளகே மொஹமுது லெப்பை என்னும் வம்சாவளிப் பெயரைப் பெற்றிருந்தார்.(128)
1) 2) 3) 4) 5) 6) 7) 8)
9)
10) 11) 12) 13)
14) 15) 16) 17)
18)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P7756 கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு 48182 கண்டி மாவட்ட நீதிமன்ற பூதல் வழக்கு T 4212 SL/NASERVICE TENURES REGISTER - KANDY (1872) P629, 643, 645 SLJNA SERVICE TENURES REGISTER - KANDY (1872) P251 SL/NASERVICE TENURES REGISTER - KANDY (1872) P.165 கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இல. 44822 நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இலக்கம் 64 (15.3.1871) Voi-1 / 1871-1872 நொ. கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.14. கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு இல.15093-ஒப்பனை 3032 நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இலக்கம்445 (1.பெப்.1873) நொIA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி (7 வைகாசி 1904) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P5940, இல. 32702 (18.7.1938) காணி உறுதியில். SL/NASERVICE TENURES REGISTER - KANDY (1872) P. 363 நொIA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இலக்கம்.54 (30.1.1871) SL/NASERVICE TENURES REGISTER - KURUNEGALA (1872) P. 1708 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 11300, கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இல. L 181, (10.12.1938 தாக்கல் செய்யப்பட்டது)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P.12104
18A)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P3302 (ஒப்பனை 12706
19) 20)
(23.12.1890) நொ/A. L. M. காசிம் தமிழ் காணி உறுதி இலக்கம் 318 (20 ஆடி 1878) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P.11310 காணி உறுதி இல. 3787
20A)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P4022
21)
22)
காணி உறுதி இல. 1426 (19.1.1867) நொAL முஹம்மதுலெப்பை தமிழ்காணி உறுதி இல318 (20 ஆடி 1878) நொகந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.14.
S
Page 84
23)
24) 25) 26)
27) 28) 29) 30) 31) 32) 33) 34)
35)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 11380 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 11174 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 2223 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 11294 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3114 (இல. 35529 உறுதியில் சாட்சிக்காரர்) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3498 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 8328 (காணி உறுதி 3825 படி) S.L/N.A. SERVICE TENURES REGISTOR - KANDY (1872) P - 154 நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 296 (8.4.1872) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3991 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 9944 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 5477 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 7346. தமிழ் காணி உறுதி பி.நொ/முகம்மது காசிம் என்பவரால் 13.5.1892ல் எழுதப்பட்டது. S.L/N.A. SERVICE TENURES REGISTOR- KURUNEGALA (1872) . P- 172
35A)S.L/N.A. SERVICE TENURES REGISTOR - KURUNEGALA (1872)
P-926(5)
35B)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 12311 (வழக்காளி) 35C)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 8328 (5வது எதிராளி)
36) 37)
38) 39) 40)
41) 42) 43)
44)
நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 40 (30.1.1871) கண்டி மாவட்ட நீதி மன்ற வழக்கிலக்கம் P. 8497 தமிழ் காணி உறுதி இல. 2720 (12.10.1887) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 479 (5.3.1873) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 32 (11.5.1871) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 6030 - சிங்கள காணி உறுதி இல. 687 (22.9.1873) w கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 11174 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 6032 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3784 - காணி உறுதி இல.16914 (23.6.1922) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3103 - 1ம் குறிப்பு - காணி உறுதி இல.2687 (1857) (2) காணி உறுதி - 3004 (24.2.1864)
44A)நொ/கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.20.
45) 46)
நொ! சி. ஆறுமுகம். தமிழ் காணி உறுதி இல.109 (18. கார்.1917-அத்தியடி) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3784 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3904
47). SL/NASERVICE TENURES REGISTER - KURUNEGALA (1872)P. 926(6)
48) 49) 50)
51) 52)
நொ/ஜயவர்தன. காணி உறுதி இல.14853 (3.11.1899) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்குP2013 (1945ல் தாக்கல் செய்யப்பட்டது) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2089 காணி உறுதி இல. 7820 (27.5.1915) SL/NASERVICE TENURES REGISTER - KANDY (1872) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P8540, இல், வழக்காளி
52A)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2934
53)
(இல.4277 காணி உறுதி) SL/N.A SERVICE TENURES REGISTER - KURUNEGALA (1872) P. 2341
152
54)
55) 56) 57) 58)
59) 60) 61) 62)
63) 64) 65) 66) 67)
68) 69)
70) 7) 72) 73) 74)
75)
76)
77)
78) 79)
80)
80A
81) 82) 83)
84)
85) 86)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 659 (காணி உறுதி
6.845 - 18.1.1906) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 127 (37.1871) நொபி. த. எஸ். ஜயவர்தன-காணி உறுதி இல. 33033 (1.11.1960) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 516 (29.4.1873) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 12434 (வழக்காளியின் பெயரிலிருந்து) S.LVN.A. SERVICE TENURES REGISTOR – KANDY (1872) P - 169 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3498 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 12311 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 13200 காணி உறுதி இல. 9333 (6.7.1916)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2050 S.LVN.A. SERVICE TENURES REGISTOR - KEGALLA - P - 353 கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 1246. S.LINLA. SERVICE TENURES REGISTOR - KANDY (1872) P - 540 கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு இல. L. 852 - காணி உறுதி இல. 2888 (10.1.1877) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 184 (6.12.187) நொS. M.P. விஜேதிலக காணி உறுதி இல. 18867 (10.1.1917) யும் கண்டி மாவட்ட நிதி மன்ற பிரிவிடல் வழக்கு இல. P. 11736 நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 8 (18.1.187) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 88 (4.10.1871) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 127 (37.1871) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல463(22.2.873) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல.158(2.8.1871) கண்டி மாவட்ட நீதிமன்ற பூதல் வழக்கு T 1900 (1895) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P402 காணி உறுதி இல. 1426 (19.1-1867) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P402 - காணி உறுதி இல. 957 (11-5.1898) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்குP9752 - காணி உறுதி இல, 149 (7.7. 1866)
கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P448 - (வழக்காளி) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P4448 - காணி உறுதி இல. 5815 (24.9.1880- அக்குரணையில் P. 11208 இல் பிஹறிலதெவியாவில் கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 13852 - கணணி உறுதி இல. 4098 (9 αλδ 1899)- ) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 1025
நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 2106 (226.1879) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 27 (1871) நொகந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.20. (1901) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P8497 - காணி உறுதி இல9812 (215.1899) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல.P9752 - (118.1997 சாட்சியம்) நொகந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல7 (1901) நொA. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 368 (158.1872)
a 424 (30.12.1872)
53
Page 85
87) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 3008 (1.8.1891) 88) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 8 (18.1.1871)
இல,479 (5.3.1873) 89) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 296 (8.4.1872) 89A)நொ கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.333 (7.வைகாசி
1911) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 11451 காணி உறுதி இல.15190 (16.12.1913) 90) நொ/A. L. M. காசீம் - தமிழ் காணி உறுதி இல.202 (20. ஐப்பசி 1877) 91) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 304 (19.4.1872) 92) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 01 (31.12.1870) 93) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 8497 தமிழ் காணி உறுதி
இல.9812 (219.1899) 94) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3103 காணி உறுதி
இல.2687 (1857) 95) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 3008 (1.8.1891) 95A)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 1025 96) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல. 372 (19.8.1872)
நொ/கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.15 (3 மார்கழி 1909) 97) S.L/N.A. SERVICE TENURES REGISTOR - KURUNEGALA (1872)
P - 2262 98) S.L/N.A. SERVICE TENURES REGISTOR - KURUNEGALA (1872)
P - 904 99) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல.64 (15.3.1871) 100) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 3904 Ο
காணி உறுதி நொ/சுரவீர இல. 11887 (3.5.1899) 101) நொ/A. L. முஹம்மது லெப்பை தமிழ் காணி உறுதி இல.183 (30.11.1871)
இல, 184 (6.12.1871) 102) நொ/கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.20 (9 தை 1910) 103) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 3103 104) A GAZETTEER OF THE CENTRAL PROVINCE OF CEYLON - A.C
LAWRIE (D.J.KANDY) 1892 - P 640 105) நொ/A. L. M. காசீம் -N.P அறுதி சாசனம் (தமிழ்) இல. 146 (15 ஆனி 1877) 106) நொ/கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.6 107) SL/NASERVICE TENURES REGISTER - KANDY (1872) P. 540 108) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 8328 109) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2095 - (16.9.1914) 110) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 5705 111) நொ/கந்தப்பா கணபதிப்பிள்ளை. தமிழ் காணி உறுதி இல.79 (1901) 112) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 13206 113) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2223 தமிழ் காணி உறுதி
இல, 26517 (20.9.1921) 114) SL/N.A. SERVICE TENURES REGISTER - KURUNEGALA (1872) P.944 115) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 12311 116) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 2934 117) கண்டி மாவட்ட நீதிமன்ற காணி வழக்கு இல. L 176 (17.11.1938 இல் பதிவு) 118) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 3493 119) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 4022
54
120) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P 6032 - காணி உறுதி இல. 688
(22.9, 1873) 121) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P5477 - காணி உறுதி இல. 4336
(8.11, 1929) 122) கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு P 40009 123) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P5779 124) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 4022 . காணி உறுதி
இல, 14902 (26.11.1912) 125)கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 2050 - காணி உறுதி
இல, 10468 (16.8.1941) 126) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P8665. காணி உறுதி
இல, 983 (3.12.1878) 127) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P8665. காணி உறுதி
இல, 983 (3.12.1878) 128) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P2253 காணி உறுதி
இல, 1247 (17.1.1929)
Page 86
அத்தியாயம் - VII
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பொதுவான பெயர்கள்
Guó
இலங்கைச் சோனகரின் மூதாதையர் யோன், யோன எனச் சிங்களவர்களால் அழைக்கப்பட்டார்கள். ‘இலங்கை மக்கள் அரபிகள் மீது விருப்பம் கொண்டவர்களாக இருந்தார்கள்’ என்பதாக கி.பி. முதலாம் நுாற்றாண்டில் இங்கு வருகை தந்த ப்லினியஸ் சிக்கண்டஸ்(கி.பி.23-75) என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது அரேபியர்கள் சிங்களவர்களுடன் கொண்டிருந்த நேசம் 20 நுாற்றாண்டுகளுக்கு மேல் தொன்மையானது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. பெளத்தர்களின் புனித பிரதேசங்களில் பிரசித்தம் பெற்றதான அனுராதபுர நகரம் அரேபிய வர்த்தகர்களின் மிகப்பழமையான குடியேற்றங்களைக் கொண்டிருந்த ஓர் இடமாக இருந்தது. அங்கு கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், யாத்திரை மேற்கொண்ட பாஹியன் என்னும் சீனதேசத்து பெளத்த பிக்கு, அந்நகரில் அரேபிய வர்த்தகர்களின் அழகிய வசிப்பிடங்களைக் கண்ணுற்றதாக குறிப்பெழுதியுள்ளார்.
யோன என்னும் பதம் ஆரம்பத்தில் கிரேக்கர்களுக்கே வழங்கப்பட்டது. கி.பி இரண்டாம் நுாற்றாண்டின் பின்னர், அரேபியர்களும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படலானார்கள். இந்தியர்கள் இவர்களை யவனர் என அழைத்தனர். அங்கு கீழ்க்கரை போன்ற இடங்களில் வாழ்ந்த அரேபிய வழித்தோன்றல்கள் சோனகர் என அழைக்கப்பட்டனர். யவனர்' என்னும் பதமே திரிபடைந்து சோனகர் ஆகியது என்னும் கருத்து அங்கு நிலவுகிறது.
‘மகா வங்ஸ்’ எனும் சிங்கள காவியத்தில் அரேபியர்கள் பற்றி வரும் ஆரம்பக்குறிப்பில் பண்டுகாபய மன்னன் (கி.பி.307-377) அநுராதபுரத்தில் மேற்கு வாயிற்கருகில் சோனங் (eைை) களுக்காக
156
ஒரு நிலத்தை ஒதுக்கினான் எனக் கூறப்படுகிறது. (பி.கு) இங்கு யோன என்னும் பதமே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக கைகர் என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகின்றார். யோன என்னும் பதமே சோனகர் என்பதாக பிற்காலத்தில் திரிபடைந்துள்ளது எனக் கூறலாம். ‘சோனகத் தெரு’ என்பது சிங்களவர்களால் யோன் வீதிய என அழைக்கப்படுவதை இன்றும் அவதானிக்கலாம். நெலுந்தெனிய அலவ்வை பிரதான பாதையில் ஓர் இடத்தைத் தற்போதும், யோன் பள்ளிய என அழைக்கின்றனர். தம்பதெனிய இராச்சிய காலப் பகுதியில் அங்கு ஒரு முஸ்லிம் பள்ளிவாயில் இருந்துள்ளது. அதனருகே ஒடும் ஒரு நீரோட்டம் விழும் வயல் யோன்திய என கூறப்படுகிறது.(1) கம்பளை யுகத்தில் (கி.பி. 1347-1412) முஸ்லிம்களின் பலம் ஓங்கி காணப்பட்டதனால், அது சிங்கள ராச்சியத்திற்குச் சவாலாக இருந்தாக நிகாய சங்கிராய' என்னும் சிங்களக் காவியம் கூறுகிறது. அதில் கம்பளை யுகத்து முஸ்லிம்கள் யோனக என்றே அழைக்கப் பட்டுள்ளார்கள். அதே போன்று கம்பளை ஊடாக (சிறிபாத மலை) பாவாஆத மலை நோக்கிச் செல்லும் பாதை வழியே 18 நாட்டவர் யாத்திரைக்காகச் சென்றதாக ‘பூஜாவலிய’ என்னும் சிங்கள பெருங்காவியம் கூறுகிறது. ‘பூரீ சுமங்கள' என்ற அகராதியின் படி, இவர்களில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக சோனக (Goைை) என்பவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அதனால், ‘யோன’ என்பது சிங்களவர்களால் அரேபியர்களுக்கு வழங்கப்பட்ட மிகத்தொன்மை யான பொதுப் பெயராகக் கொள்ளலாம்.
மரக்கல
கண்டிய இராச்சியத்தில் முஸ்லிம்கள் மரக்கல (ஜூ0ண்eை) என்ற பொதுப் பெயராலும், சிங்கள மக்களினால் அழைக்கப்பட்டார்கள். கம்பளை யுகத்திற்குப் பிற்பட்ட காலத்திலேயே, இப்பெயர் கொண்டு முஸ்லிம்கள் அழைக்கப்பட்டார்கள் எனக் கூறலாம். இது அரபி வழித்தோன்றல்களான, பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம்களைக் குறிக்கும் ஒரு இனப்பெயராகும். இதன்படி முஸ்லிம்கள் மரக்கல மினிசு எனவும் குறிப்பிடப்பட்டார்கள்.
1872ம் ஆண்டின் விகாரை, தேவாலய பரவணி பதிவேடுகளின்படி, பரகாதெனிய என்னும் ஊரில், முஸ்லிம்களது வணக்கஸ்தலமானது மரக்கல பள்ளிய என அழைக்கப்பட்டது. அதே போன்று, குருநாகலை மடவலை விகாரைக்குச் சொந்தமான முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்கள் மரக்கயா ஹேன (சேனை) எனவும், ஹம்புளுவே விகாரை நிலமொன்று மரக்கல கெதர (வீடு) ஹேன எனவும் அழைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.(2)
பி.கு: ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில், அநுராதபுர நகரில் முஸ்லிம்கள் அதிகமாகவே வாழ்ந்து வந்தார்கள்.1871ம் ஆண்டில் சனக்கணிப்பின்படி அங்கு வாழ்ந்த மொத்த பெளத்தர்கள் 131 பேரும், முஸ்லிம்கள் 194 பேரும் இருந்துள்ளனர்.
157
Page 87
கண்டிய பிரதேசங்களில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த சில கிராமங்கள் மரக்கலகம என்னும் பெயரால் அழைக்கப்பட்டன. கேகாலை மாவட்டத்தில் தம்புளுவெவ (மரக்கலகம), பள்ளி போருவ (மரக்கலகம) என இரு கிராமங்கள் உள்ளன.(பி.கு.) அதே போல், கொத்மலைப் பிரதேசத்தில், கலப்பிட்டிய வசத்திற்கு உட்பட்ட முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மரக்கலகம என்னும் ஓர் சிற்றுார் உள்ளது.(பி.கு.) இது ஒரு நதிக்கரை கிராமமாகும். கண்டி ராச்சியத்தின் பரிபாலனத்திற்கு உட்பட்ட தமன்கடுவை என்னும் பிரதேசம், ஆங்கிலேயரது ஆட்சியில் மூன்று பிரதான நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதிலொன்று மெகொடபத்து என்பதாகும். அதனை மரக்கலபத்து எனவும் அழைத்தார்கள்.
"மரக்கல' என்ற பதம் தமிழில் “மரைக்கார் - மரிக்கார்’ எனப் பயன்படுத்தப்பட்டதாக 1901ம் ஆண்டின் சனக்கணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், கண்டிய இராச்சியத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த புத்தளம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் நான்கு ஊர்கள் அடங்கிய ஒரு பிரிவு மரிக்கார பத்து என அழைக்கப்பட்டது.
மரத்திலான கப்பலுக்கும், வள்ளத்திற்கும் தமிழில் மரம்-கலம் எனக் கூறப்படுகின்றது. தென்னிந்தியர்கள் மரக்கலம் வைத்து வணிகம் செய்பவர்களை மரைக்காயர் என அழைத்தனர். கி.பி 875 இல் ஜெயவீடு ராஜக்கா நாயன் என்னும் பாண்டிய வேந்தன், மிஸ்று (எகிப்து) நாட்டில் இருந்து மரக்கல யாத்திரைமூலம் இந்தியாவின் காயல்பட்டணக் கரையை அடைந்த முஸ்லிம்களை அங்கே குடியேற்றி, தமிழில் ஒரு பட்டயமும் வழங்கினான். அம்மன்னன் அவர்களை மரக்கலராயர்’ என அப்பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். பிற்காலத்தில் அப்பதமே மரக்காயர்’ என மருவியது.
மரைக்காயர்-மரைக்கார் என்னும் பெயர்கள் மிகப் பழமையான காலம் தொட்டே கண்டிய முஸ்லிம்களிடையே காணப்படுகின்றன. அக்குரணையில் வாப்பு மரைக்காயர்லா கெதர என்னும் வம்வாவளிப் பெயரொன்று உள்ளது.(3) கம்பளை யுகத்தில், அங்கு அரசாட்சி பண்ணிய மூன்றாம் விக்கிரமபாகு (1357-1374) என்ற மன்னனைத்
பி.கு.: 1901ம்ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி தம்புளுவெவ(ம.க)யில் மொத்த சனத்தொகை 172 பேர் அதில் 171 பேர் முஸ்லிம்களாவர். பள்ளி போருவ (ம.க)யில் 121க்கு 117 பேர் முஸ்லிம்கள்.
பி.கு.l: கலப்பிட்டிய - மரக்கலகமையில் மொத்த சனத்தொகை 83 பேர். அதில் 75 பேர் முஸ்லிம்களாவர்(1901ம் ஆண்டு கணக்கணிப்பு ) 1891 இல் இங்கு சனத்தொகை 63 பேர் மாத்திரமே
158
தமது பாண்டித்தியத்தால் கவர்ந்து, ஊழியம் ஆற்றிய ஒரு முஸ்லிம் கம்பளையில் அறகந்த என்னும் பகுதியில் காணிகளைப் பெற்றுள்ளார். கோட்டே மரைக்கார் என்பவரது வாரிசு என்பதாக இவரது பெயர், கி.பி. 1707 இல் எழுதப்பட்ட, இக்காணிக்கான ஓர் ஒலைச்சவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.(4) இவ்வாறான பெயர்கள் முஸ்லிம்களிடையே இப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டன.
கண்டிய இராச்சியத்தில் மரக்கல என்னும் பொதுப்பெயர் வழங்கப்பட்ட ஒரு பிரதானமான காரணமாக, முஸ்லிம்கள் இங்கு மரக்கலம் வைத்து வணிகம் செய்பவர்களாகவும், மரக்கலங்களை நிர்வகிப்பவர்களாகவும் இருந்துள்ளமையைக் குறிப்பிடலாம். இப்பிரதேசதத்திற்குள்ளேயே மகாவலிகங்கை, சுதுகங்கை, அம்பன்கங்கை போன்ற பிரதான நதிகள் ஒடிக் கொண்டிருந்தன. இதன் கரையோரங்களிலே முஸ்லிம்களது ஆரம்ப குடியேற்றங்கள் அமைந்திருந்தன. வரலாற்று ஆசிரியர் வில்லெல் கைகளின் கூற்றுப்படி: அரேபியர்களின் குடியேற்றங்கள் இலங்கையில் அமைந்த உடனே மரக்கலங்களும் வந்திருக்கலாம் என்கிறார். கப்பல் செலுத்தும் அளவில் இந்நதிகள் விசாலம் பெற்றில்லா விடினும், சிறிய மரக்கலங்கள் இந்நதிகளை கடந்து செல்ல பயன்படுத்தப்பட்டன. முஸ்லிம்களின் ஆரம்பகால நதிக்கரை குடியேற்றங்கள் பல ஒடத்துறைகளாகக் காணப்பட்டன. சிங்களத்தில் ‘தொட்ட - தொட்டுபல் என இத்துறைகளை அழைத்தார்கள்.
சப்பிரகமுவ மாகாணத்தில் கண்ணத்தொட்ட மடிகேகம முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு படகுத் துறையாகும். குருகொடை ஒயவும், பிட்டிகக ஒயவும் கலக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது. மிகப்புராதன காலத்திலேயே முஸ்லிம் வியாபாரிகள் இங்கு குடியேறி இருந்தார்கள். இது முற்காலத்தில் கண்ணன்துறை என அழைக்கப்பட்டது.(5) கம்பளைக் காலப்பகுதியில் நீர்வழிப்பாதைகள் வழியே முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனக் கருத இடமுண்டு. உடபலாத்தையில் கொத்மலே, பள்ளே கம்பஹா புளத்கம வசமைக்குரியவர்கள் கம்பளை, எல்பிட்டிய மடிகே கிராமம் - நீர்வழிப்பாதையை புனர்நிர்மாணம் புரிதல், அணைகளை அமைத்தல் முதலான இராஜகாரியங்களை ஆற்றிவந்துள்ளார்கள். கண்டிய காலத்தில் இப்பகுதிகளில் முக்கிய பொறுப்புக்களை முஸ்லிம்கள் வகித்துள்ளமைக்கு அப்பிரதேசத்தில் காணப்பட்ட வம்சாவளிப் பெயர்கள் சிறந்த சான்றுகளாகும். கம்பள முகந்திரமலா கெதர, எல்பிட்டியே முகந்திரம்லா கெதர என்பன அவற்றுள்
59
Page 88
சிலவாகும். கம்பளைக்கருகில் களுகமுவை என்பதும் முஸ்லிம்கள் வசித்து வரும் ஆற்றங்கரைக் கிராமமாகும். அங்கு ஒரு வள்ளத்துறை அமைந்திருந்தமைக்கான தடயங்கள் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டன. பஸ்பாகே பிரதேசத்தில் பலன்தொட்ட என்ற இடத்தில் ஒரு படகுத்துறை (தொட்ட) இருந்தமைக்கான தடயங்கள் உள்ளன. இது ஒரு விசாலமான தேயிலைத் தோட்டமாகும். இது மேஜர் லெப்பை என்னும் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானதாகும். இவ்வள்ளத்துறைக் கருகாமையில் ஒரு சிதறிய கல்வெட்டும் காணப்படுகிறது. விசாலமான மகாவலி கங்கையில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குக் கடந்து செல்ல, மன்னர்கள் காலத்தில் பாலங்கள் இல்லாமையால் அவற்றைக்கடக்க மரக்கலங்கள் அவசியமாகவிருந்தன. மரக்கலங்களை நிர்வகிப்பவர்களை தண்டல் எனத் தமிழில் அழைப்பர். இப்பிரதேசத்தில் மொலதண்டே முஹன்திரமலே கெதர என்ற வம்சாவளிப் பெயர் உடையோர் வள்ளத்துறைகளில் சேவையாற்றியவர்களே எனும் கருத்து நிலவுகிறது. களுகமுவையில் இவ்வம்சாவளிப் பரம்பரையினரான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.(6) ‘மொலதண்டே' என்பது ஒரு கிராமப் பெயராகும். என்றாலும் ‘தண்டல்’ என்னும் வாசகமும் அதில் காணப்படுவதை காணலாம்.
கண்டிய மன்னர்கள் காலத்தில் படகுத்துறைச்சேவை ஒரு பிரதான கருமபீடமாக இருந்தது. கண்டிய தலை நகர் செங்கடகலை இராஜதானியைச் சூழ ஒடிக் கொண்டிருந்த மகாவலி கங்கை ஒரு பிரதான காப்பரணாகக் கருதப்பட்டது. நகருக்குள் நுழைவதென்றால் பிரதான படகுத்துறைகளினூடகவே நுழைய வேண்டி இருந்தது. இவ்வாறு நான்கு துறைகள் காணப்பட்டன. அவை நான்கு *கங்தொட்ட' என அழைக்கப்பட்டது. அதில் கண்னொறுவ துறையைச் சூழ முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. அத்துறையில், முஸ்லிம்கள் இராஜகாரியம் புரிந்தார்கள் என கூறப்படுகின்றது. “ஒறுவ’ என்ற பதம் சிங்களத்தில் வள்ளத்தைக் குறிப்பிடப்படும் பதமாகும். நான்கு கங்தொட்டயில் கட்டுகளில் தொட்ட என்னும் வள்ளத்துறைக்கு ஹாரிஸ்பத்து வாசிகள் வள்ளங்களை வழங்கினார்கள் என சேர் ஜோன் டொயிலி குறிப்பிடுகின்றார். ஹாரிஸ்பத்துவையில் மரைக்காயர் (மரக்கலம் வைத்திருந்தவர்) என்ற பெயர் கொண்டவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. அது போல், அலுத் கங்தொட்ட, லேவெல்ல என்னும் இரு படகுதுறைகளுக்கும் தும்பரைவாசிகள் வள்ளங்களை வழங்கினார்கள். இந்த வள்ளத் துறைகள் தொடர்பான இராஜகாரிய மாற்றியவர்களுக்கு நிலபுலன்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தங்களது தேவைகளை
160
அடைந்து கொள்ளும் நோக்கிலே இச்சேவையைச் செய்தனர். கண்டி இராச்சியத்தில் இவ்வாறு சலுகைக்காட்டப்பட்ட கூட்டத்தவர் முஸ்லிம்களேயாவர். கண்டி இராச்சியத்தின் நீர்ப்பாதைகளின் மூலம் மரக்கலங்களைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மரக்கல” என்னும் பெயர் பெற ஒரு காரணமாக அமைந்தது எனக் கூறலாம். தவளம் மாடுகளின் மூலம் கொண்டுவரப்பட்ட பொருட்களை வள்ளத்துறைகளில் இருந்து மரக்கலங்களைப் பயன்படுத்தி அக்கரைக்கு முஸ்லிமகள் எடுத்து சென்றிருக்கலாம் என கருதலாம்.
‘ஹங்ஸ சந்தேஸய’ எனும் சிங்கள காவியத்தில் நீர்வழிபாதை வியாபாரிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவை முஸ்லிம்களையே குறிப்பிடுகின்றவையாக உள்ளன. அத்துடன், * மரக்கல’ என்ற பெயரால் சிங்களவர்கள் முஸ்லிம்களை அழைப்பதற்கு காரணமாக அமைந்தது மாவறெகப்பு லே என்னும் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும், மரபுக்கதையின் படியாகும் என்ற கருத்தும் சிங்கள-முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகிறது.
அரபிப் பொதுப் பெயர்கள்
முஸ்லிம் ஆண்களின் பெயர்களில் ஒரு நூற்றாண்டு முற்பட்ட காலத்தில் பொதுவாக எல்லாப் பெயர்களிலுமே லெப்பை என்னும் அரபிப்பதம் இருந்துள்ளது. அதனால், சேர் அலக்சாண்டர் ஜொன்ஸ்டன் என்ற வரலாற்று ஆசிரியர் சோனகரை லெப்பைகள் எனக் குறிப்பிகின்றார்.(7) இதற்கு எடுத்துக்காட்டாக, பழமையான முஸ்லிம்களின் குடியேற்றம் அமைந்த, ஓர் ஊரான மாத்தளை கொங்காவலையில் (பண் ணகாமம்), 1870-1890 ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களது “லெப்பைகள்’ எனப் பெயர் கொண்டிருந்தவர்களது விபரங்கள் வருமாறு; வாப்பு லெப்பை கதீபு அஹமது லெப்பை, அகமது லெப்பை ஆலிம் அபிபு முகம்மது, முஹம்மது லெப்பை மரைக்கார், வாப்பா நையினா லெப்பை, முஹம்மது அசனா லெப்பை, அகமது மீராலெப்பை, மீராகண்டு விதானே பைக்கீர் லெப்பை, மகமமது லெப்பை ஆலிம், அபி முகம்மது லெப்பை, வாப்பா நயினா லெப்பை காதிருசாகிபு, கதீபு அப்துல்கப்பார் லெப்பை, அப்துல் கபூர் லெப்பை, அசன மீராலெப்பை, சின்னத்தம்பி ஆராட்சியார் உமர் லெப்பை, உதுமாலெப்பை விதானே தம்பி லெப்பை, பக்கீர் தம்பி லெப்பை, லெப்பை விதானே தம்பி லெப்பை, அகமமது முகிய்யதீன் லெப்பை, செய்யது அகம்மது லெப்பை, அகமது மீரா லெப்பை அத்துடன், நுாஹி லெப்பை,
16
Page 89
சுலைமான் லெப்பை, சாகுனா லெப்பை, மாப்பிளை லெப்பை, லெப்பைத்தம்பி, அபூபக்கர் லெப்பை என்போர் இங்கு வாழ்ந்தவர்களின் சிலராவார். (ஆதாரம்:- சன்னஸ், பழைய காணி உறுதிகள், ஒலைகள் போன்றவற்றை பதிவு செய்தற்கான சட்டம் 20.10.1866க்கு பின்னர் எழுதப்பட்ட காணிப் பதிவுகள்) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அழைக்கும் போது இதோ அடிபணிந்தேன்’ என பொருள்படும் லப்பைக்குமி என மறுமொழி கூறுவது முற்கால அரபியர்களின் வழமையாக இருந்து வந்தது. அதனால், முஸ்லிம்கள் லெப்பை என்றும் அழைக்கப்படலானார்கள். 'தோழர்' எனப் பொருள்படும் சாஹிபு என்ற பெயராலும் முஸ்லிம்கள் அழைக்கப்பட்டார்கள். அதனால் சாஹிபு என பெயர் கொண்டோரும் அதிகமாக இருந்தார்கள். இப்பிரதேசத்தில் நயினார் என்ற பெயரையும் அனேக முஸ்லிம் பெயர்கள் கொண்டிருந்தன. இப்பெயர் இந்தியாவின் குருகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு வழங்கப்பட்டது. பெயர்களில் அகமது என்னும் பெயர் கூடுதலான முஸ்லிம்களிடம் காணப்பட்டன. இந்தியாவில் ஒரு சனக்கணக்கெடுப்பின்போது ‘முஸ்லிம்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அகமது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்களப் பெண்களிடையே காணப்பட்ட “மெனிகே’, ‘குமாரி ஹாமி’ என்னும் பெயர்களை போன்று முஸ்லிம் பெண்களுக்கு நாச்சியார், உம்மா என்ற பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டன. கிராமத்துச் சிங்களவர்கள் முஸ்லிம் பெண்களை "ஆச்சி என அழைக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. இது ‘நாச்சியார்’ என்றதில் நின்றும் திரிபு பெற்ற ஒரு பதமாகக் கருதலாம்.
தமிழில் பொதுப் பெயர்கள்
தமிழர்களின் சமூக அமைப்பில் காணப்பட்ட பெயர்களைப் போன்றே, முஸ்லிம்களும் சில பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். கண்டிய முஸ்லிம்களின் சில வம்சாவளிப் பெயர்கள் கூட இவ்வாறு அமைந்துள்ளன. பாத்ததும்பறை உடதளவின்னை கிராமத்தில் சின்ன புள்ளையார்லாகே கெதர8) எனவும் மடவளை மடிகேயில் பெரிய தம்பி குருன்னேஹேலாயே கெதர9) எனவும் வம்சாவளிப் பெயர்களைக் கொண்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அக்குறணையில் கணக்கு புள்ளேலா கெதர என்ற பரம்பரைப் பெயர்(10) இன்றும் வழக்கில் உள்ளது. பொதுவாக, முஸ்லிம்கள் பயன்படுத்திய தமிழ் பெயர்கள் வரிசையில் தம்பி, பிள்ளை என்னும் பெயர்களையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார்கள் எனக்கூறலாம். ஒரு நுாற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் வழக்கில் இருந்த சில முஸ்லிம் பெயர்களை எடுத்து நோக்கின்;
162
அலுத்கெதர கர்தம்பி (1921) யாஹலேதென்னே நயிதேலாகெதர மம்மது தம்பி (1872) மாவுக்க முகந்திரம் சின்னத்தம்பி(1877) ஹெட்டிபொல கெதர தம்பி கண்டு (1878) போன்ற பெயர்களிலும் அகம்மது தம்பி, முகம்மது தம்பி, குஞ்சுதம்பி, மரைக்கார்தம்பி, பக்கிர்தம்பி, சீனித்தம்பி, தம்பிலெப்பை, தம்பியன் (பி.கு) என்பன போன்ற பெயர்களில் தம்பி என்ற தமிழ் பெயரையும் சேர்த்திருப்பதை அவதானிக்கலாம். முஸ்லிம்களுக்கு உரித்தான காணிகள் சில தம்பிகே வத்த (தம்பியின் தோட்டம்) என அழைக்கப்படுவதைக் காணலாம். கொத்மலை பிரதேசத்தில் மரக்கலகம என்ற கிராமம் தம்பிலாகம என அழைக்கப்பட்டதாக AC லோரி என்பவர் குறிப்படுகிறார். ‘தம்பி என்ற தமிழ்ப் பதம் குடும்பத்தில் ஓர் இளைய சகோதரனைக் குறிப்பிடும் சொல்லாகும். தமிழ் நாட்டில் சேதுபதி என்ற மன்னர்கள் காலத்தில் (1605), சேதுபதியின் அன்பிற்கு பாத்திரமானவர்களுக்கு, “தம்பி” என்ற பட்டம் வழங்கப்பட்டது. கண்டிய மன்னனுடன் கிட்டிய தொடர்பு பூண்டிருந்த வள்ளல் சீதக்காதி அவர்கள் "விஜயரகுநாத தம்பி” என அழைக்கப்பட்டார்.
சிங்கள சமூகத்தினர் மத்தியிலும் முஸ்லிம்களை தம்பி எனவும் தம்பிலா எனவும் அழைக்கும் வழக்கமிருப்பதைக் காணலாம். இது முஸ்லிம்கள் இகழ்வுபடுத்தும் ஒரு பதமாக கருதப்பட்டாலும், இத்தம்பி என்னும் பெயர் கண்டியை அரசாண்ட தமிழ் மன்னர்களால் முஸ்லிம்களுக்கு வழங்கிய பட்டமாகவோ அல்லது ஆரம்ப முஸ்லிம்களது தாய்மார்கள் சிங்கள இனத்தவராகையால் அத்தொடர்பின் மூலம் ஏற்பட்ட ஒரு பெயராகவோ இதனைக் கருதலாம். முஸ்லிம்கள் சிங்களப் பெண்களை மணந்ததனால் அவர்கள் இழிகுலத்தவராகக் கருதப்படவில்லை. அவர்கள் தங்களது மார்க்கத்தில் பிடிப்பாக இருந்ததனாலேயே சிங்கள குலவழக்கின் படி தாழ்ந்த இனமாகக் கணிக்கப்படலானார்கள். தம்பி என்ற பதத்தில் காணப்படும் இகழ்வுத் தன்மை கண்டிய குல அமைப்பில் ஏற்பட்டதொன்றாகக் கொள்ளலாம்.
முற்காலத்தில் சிங்களவர்களுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தார்கள். கிராமங்கள், வீடுகள் தோறும் சிங்கள சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக முஸ்லிம் வியாபாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தொடர்பு படுத்தி உருவெடுத்த சிங்கள முது மொழிகள் இன்றும் கூறப்படுகின்றன.
பி.கு: அப்பெயருக்குரியவர்கள், மாத்தளை கொங்காவளை ஊரில் 1870-1890 ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்தவர்காைவர்(நொகந்தையா முருகேசுபிள்ளையின் காணி உறுதிதொகுதிகள்)
163
Page 90
தம்பியின் தொப்பி போல ( இைஇடுஞ் இேை8.5 அடு6ை) தம்பிக்கு பன்றி இறைச்சி போல (இைe அC இல் ஜூடுஞ6) என்பது போன்ற மரபுவழிகளில் முஸ்லிம்கள் ‘தம்பி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் பெணி மணிகளும் தமிழ் உச்சரிப் புள்ள பெயர்களைக் கொண்டிருந்தார்கள். தங்க உம்மா, சின்ன உம்மா, செல்ல உம்மா, தங்கச்சி என்பன அவற்றுள் சிலவாகும்.
ஆங்கிலத்தில் பொதுப் பெயர்கள்
முஸ்லிம்கள் முர் (Moor) என்னும் பெயரால், போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப் பற்றிய காலத்திற்கு முன்பிருந்தே அழைக்கப்படுகின்றார்கள். ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில், முஸ்லிம்கள் முகம்மதியர் என அழைக்கப்படலாயினர்.
1) අපේ ජනකලා - 89 පි 2) SL/NA. SERVICE TENURES REGISTOR (1872) KRUNAGALA P. 947,
1152 and 242 3) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு P. 7117 4) கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கிழக்கம் 46001 இல் இவ்வோலைச் சுவடியின்
ஆங்கிலய மொழிபெயர்ப்பு ஒன்று இணைக்கப்பட்டடுள்ளது.(1930) 5) සිංහල විශේවතෙකාෆ්ෂය - Vol - 6 - 190 6) கண்டி மாவட்ட நீதிமன்ற வழக்கு இல. L 176(வழக்காழி) 7) CEYLONGAZETTEER - ISLAND OF CEYLON - P 256. 8) கண்டி மாவட்ட நீதிமன்ற மரணச்சொத்து வழக்கு இல. T 4158 9) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 6032 காணி உறுதி 687
(22.9.1873) 10) கண்டி மாவட்ட நீதிமன்ற பிரிவிடல் வழக்கு இல. P 8498 காணி உறுதி. 4276
(21.9.1943) 11) A GAZETTEER of the CENTRAL PROVINCE of CEYLON
A. C. LAWRIE - P 819
164
கவனிக்க
இந்நூலில், தடித்த எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும், விளக்கங்களும் அவை திரட்டப்பட்ட காணி உறுதிகளிலும்,
ஏனைய ஆதனங்களிலும் காணப்பட்ட அதே மொழி வடிவில் இயன்ற வரையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
- ஆசிரியர் -
65
Page 91
Page 92
நக்கும் இந்த ண்டும் - என்பது
ஏ. எம். நஜிமுதின்
நீதிமன்ற முதலியார்