கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம்

Page 1
நம்பிக்கையோ | LL TIT Loui A N ---
 

G. Lib DiGDL IIIT
TEODOTILD
寸 \ ,

Page 2

ഗ
賈 N
நம்பிக்கையோடு நிம்மதியை நாடும்
貓
"யாழ்ப்பாணம்'
பி. மாணிக்கவாசகம்
Pss

Page 3
நூல் தலைப்பு ! நம்பிக்கையோரு நிம்மதியை நாரும்
யாழ்ப்பாணம்
முதற் பதிப்பு டிசம்பர் 1994
ಆb எஸ். தில்லை நடராஜா
உரு பி. மாணிக்கவாசகம்
அச்சுப் பதிவும் வெளியீடும் : கலைமகள் அச்சகம் வவுனியா
விலை ரூபா 20/-
விற்பனை பூபாலசிங்கம் புத்தகசாலை
340, செட்டியார் தெரு, கொழும்பு 11. இலங்கை.
செய்திகள் கட்டுரைகளில் வெளிவந்தவற்றை மீள் பதிப்பு செய்வதற்கு அனுமதியளித்த வீரகேசரி ஆசிரியருக்கு நன்றி

பொதுவாக இலங்கை என்றால் சுறுசுறுப்பையும் புத்து ணர்வையும் தருகின்ற தேயிலையின் நினைவு தான் எல்லோருக்கும் வருவது வழக்கம்.
இது அன்றைய நிலை.
ஆனால் இன்று . . . ? இலங்கை அல்லது பூரீலங்கா என்பதைவிட, 'தாண்டிக்குளம்”, கிளாலி’, ‘பூனகரி” என்று இலங்கையின் வடபகுதியில் உள்ள
ஏதாவது ஒரு குக் கிராமத்தையும், யாழ்ப்பாணத்தையும் குறிப்பிட்டாலே போதும், உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு இலங்கையைப் பற்றிய எண்ணங்கள் உடனடியாக மனதில் மின்னலடிக்கும்.
அந்தளவிற்கு, இலங்கையின் வடபகுதி சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமைக்கு, கடந்த பத்து ஆண்டுகளாக இனப்பிரச்சினையைமையமாகக் கொண்டு இடம்பெற்றுவருகின்ற யுத்த நிலைமையே காரணமாகியுள்ளது.
தொடர்ச்சியான நெருக்கடிகளுக்கும் யுத்த மோதல்களுக்கும் நிலைக்களனாக விளங்கிவருகின்ற "யாழ்ப்பாணம் கடுமையான யுத்த நிலைமைக்குள்ளே எப்படி இருக்கின்றது? அங்கு வாழும் மக்கள் எவ்வாறான வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்” என்பதை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
கடந்த ஆகஸ்ட் 1994 இல் இலங்கையில் இடம்பெற்ற பத்தாவது பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பாக புதிய அரசாங்கம் கொண்டுள்ள அணுகுமுறையுமே, பலரது கவனத்தையும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில், அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மீது குவியச் செய்தது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, கடந்த 1990 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின்பு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள் ள புதிய அரசாங் கத்துக் கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையே "நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள்’ என்ற அடிப்படையில் நேரடித் தொடர்புகள் ஏற்பட்டன.

Page 4
இதனையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கரிய யுத்தமேகங்கள் கவிந்து வெடிகுண்டுகள் இடியென முழங்கி அதிர்ந்த யாழ் மண்ணில் சமாதான ஒளிக்கீற்றுக்கள் தோன்றத் தொடங்கின. அரச பிரநிதிகளுக்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே யுத்த பூமியாகிய யாழ்ப்பாணத்தில் நேரடிப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்குரிய திகதி குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.
தென்னாபிரிக்கா, பலஸ்தீனம் போன்ற நாடுகளை அடியொட்டி இலங்கையிலும் பிரச்சினை தீர்ந்து சமாதானம் ஏற்படுவதற்குரிய உறுதியான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. உலகின் கவனம் இலங்கையின்பால் ஆர்வத்தோடு திரும்பியது. பலரும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று யுத்தம் சூழ்ந்த மண்ணில் வாழ்க்கை எப்படி இருக்கின்றது. சமாதான முயற்சிகளுக்கு எவ்வாறான வரவேற்பு உள் ளது என்பதை அறிவதற்கு விரும்பினார்கள். எனினும் அங்கு விஜயம் செய்வதற்கு எல்லோருக்கும்
வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொழும்பைச் சேர்ந்த சர்வதேச ரோட்டரிக் கழகப் பிரதிநிதிகள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரியும், நல்ல கலைஞரும் எழுத்தாளருமாகிய எஸ். தில்லை நடராஜா ஆகிய அதிர்ஷ்டம் மிக்கவர்களது யாழ்ப்பாண விஜயங்களின் மூலம், தொடர்ச்சியான போரின் மத்தியில் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வந்த யாழ்ப்பாணத்தின் உண்மையான தரிசனங்கள் முதலில் வெளியில் தெரியத் தொடங்கின.
தலைநிமிர்த்தும் புதிய சமுதாயம்
அங்கு தொடர்ச்சியானெதாரு யுத்தம் நடைபெற்ற போதிலும், அரசியல் விடுதலைக்கான போராட்டம் பலதரப்பட்ட முனைகளில் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் மண்ணுக்கேயுரிய கடுமையான சாதிக்கட்டமைப்புகளையும், மனதைத் துளைக்கும் மனிதப்பிரிவினை வாழ்க்கை முறைகளையும் தகர்த்தெறிந்து, ஆரோக்கியம் மிக்கதொரு புதிய சமுதாயமாக யாழ்ப்பாணம் தலைநிமிர்த்தியுள்ளது.
அங்கு சாதிச் சண்டைகள் இல்லை. பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இல்லை. கற்பழிப்பு மற்றும் கலாசார சீரழிவுமிக்கக்
2

குற்றச் செயல்கள் இல்லை. குடிப்பதையே தொழிலாகக் கொணடு, குடித்துவிட்டுச் சண்டித்தனம் காட்டும் சம்பவங்கள் இல்லை. கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு தெருக்களிலும் வீடுகளிலும் கூத்தடிப்போரும் அங்கு இல்லை.
நேர்த்தியும், சுத்தமும் மிக்க அலுவலகங்களின் மூலமாக, கட்டமைப்புமிக்க நிர்வாகம் நடைபெறுகின்றது. வீதி ஒழுங்குகள், சட்டம், பாதுகாப்பு விதிமுறைகள் என்பன முறையாகப் பேணப்படுகின்றன. வீதி ஒழுங்குகளை, அந்த மண்ணுக்கே உரிய காவல் துறையினர் சீராகக் கவனித்துப் பேணிவருகின்றார்கள்.
போக்குவரத்துக் குப் பொதுவாக மக்கள் துவிச்சக்கரவண்டிகளையே பெரிதும் பயன்படுத்திவந்தபோதிலும், போக்குவரத்து வீதி ஒழுங்கு முறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றத்தவறுவது இல்லை. சாகசம் காட்டும் இளைஞர்களது சைக்கிளோட்டங்களோ அல்லது சோடி சேர்ந்து அல்லது மூன்று நான்கு பேர் கைகோர்த்த நிலையில் சைக்கிளோடிச் செல்லும் காட்சிகளும் கிடையாது. வீதி ஒழுங்குமுறைகளை மீறுபவர்கள் உடனடியாகக் கண்காணிக்கப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டு ஒழுங்குகள் பேணப்படுகின்றது.
காவல்துறையினருக்கு உதவியாகத் தீர்க்கப்படாத பிணக்குகள், குடும்ப விவகாரங்கள், காணிப்பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவை தொடர்பான வழக்குகளை நேர்த்தியான முறையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் முறையான வழிகளில் விசாரணை செய்து தீர்ப்பளித்து செயற்பட்டு வருகின்றன.
சட்டக்கல்லூரியொன்று இயங்கி வருகின்றது. அங்கே முறைப்படி சட்டநுணுக்கங்களைத் தெரிந்துகொண்ட பின்னரே சட்டத்தரணிகள் இந்த நீதிமன்றங்களில் பணியாற்றிவருகின்றார்கள். அது போலவே, வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் முறையாகப் பயிற்றப்பட்ட பலர் அந்தந்த துறைகளில் பணியாற்றுகின்றார்கள். இத்தகைய புத்திஜீவிகளை முழுக்கமுழுக்க வடகிழக்கின் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய விரிவான திட்டங்களும் அங்கு நடைமுறையில் உள்ளது.
இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வுகண்டு அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்த
3

Page 5
முனைந்துள்ள புதிய அரசாங்கத்தின் உறுதியான செயற்பாடுகள், வடக்கின் இந்த தலைநிமிரலுக்குப் புதிய உத்வேகத்தையும், கூடிய நம்பிக்கையையும் அளித்துள்ளன.
ஷெல்லடிகள் இல்லை. வாழ்க்கைச் சுமைகள் குறையத் தொடங்கியுள்ளன. வான் தாக்குதல்களும் குண்டு வீச்சுக்களும், ஹெலிக்கப்படர்களின் கலிபர் தாக்குதல்களும் மறைந்துவிட்டன. மின்சாரம் மற்றும் பெற்றோல், டீசல் ஆகிய எரிபொருள்கள், போதிய விறகு, போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் போன்ற, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமையிலும் யாழ் மக்கள் நிம்மதி மூச் சுவிடத் தொடங்கியுள்ளார்கள்.
அங்கு, பொது நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, கல்வி முயற்சிகள், கலாசாரப் பண்பாடு என்பவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளுக்குச் சமமான முறையில் இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தின் பொது நன்மைகளையும் வளர்ச்சியையும் அடிப் படையாகக் கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மிகமோசமானதொரு நெருக்கடிக்கு மத்தியிலும், பற்றாக்குறைகளைப் போக்கவும் பொதுத்தேவைகளையும், தனிப்பட்ட வாழ்க் கைத் தேவைகளையும், சுயமாகப் பூர்த்திசெய்து கொள்வதற்கான ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என்பன தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயம், கைத்தொழில், இயந்திரப் பாவனை போன்ற பலவகைகளிலும் இந்த கண்டுபிடிப்புகள் சிறந்தமுறையில் பயன்படுத்தப்படுவதையும் அங்கு சாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.
சுய தேவைப் பூர்த்தியை நோக்கி . .
Mer கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வடபகுதி கடுமையானெதாரு பொருளாதாரத் தடைக்கும், இறுக்கமானதொரு இராணுவ முற்றுகைக்கும் உள்ளாகியுள்ளது. குடாநாட்டுப் பகுதி, பெரு நிலப் பரப்பிலிருந்தும், தீவுப்பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு மோட்டார் சைக்கிள்கள், தண்ணீர்

இறைக்கும் இயந்திரங்கள் என்பவற்றை இயங்கச் செய்வதற்கு பெற்றோல் கிடையாது. இதற்கு மாற்றாக ஒடிக்கொலோனைப் பயன்படுத்தியமையும் ரேடியோவை இயக்குவதற்குத் தேவையான பற்றறிகளுக்குப் பதிலாக சைக்கிள் டைனமோவிலிருந்து மின்சாரம் பெற்றமையும் பழைய கதைகள் - ஏற்கனவே தெரிந்த விடயங்கள்.
இப்போது சிரட்டைக்கரியைப் பயன்படுத்தி (எரித்து) அதிலிருந்து கிடைக்கும் சக்தியைக் கொண்டு, தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் இயக் கப்படுகின்றன. வடபகுதிக் கான மின்விநியோகம் இல்லாத நிலைமையிலும், வாகனங்களுக்கும் இயந்திரங்களின் மூடிகள் போன்றவைக்கும் “ஸ்பிறே பெயின்ட்” அடிக்கும் வேலைகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.
இதுபோல பற்றாக்குறைமிகுந்த பலப்பல தேவைகளுக்கும் சிறந்த மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின்சாரம் இல்லாத போதிலும், இருளின் உள்ளேயும் பிரகாசமான முயற்சியுடன் அங்கு வாழ்க்கை நடைபெறுகின்றது. மிகமோசமான அழிவுகளுக்கு மத்தியிலும், அந்த மக்கள் மிகவும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கின்றார்கள். அவர்களது ஒழுங்கு, கட்டுப்பாடு, எதனையும் திட்டமிட்டு, மிகக் கச்சிதமாகச் செய்யும் விதம் என்பன பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலத்தில், அவர்கள் தமக்கேயுரிய பல்வேறு வாழ்க்கை முறைகளையும், பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இரவு நேரத்தில் மாணவர்கள் தமது கல்வி தொடர்பான வீட்டு வேலைகளைச் செய்யவோ, படிப்பதற்கோ மின்சாரம் கிடையாது. இவர்களது கல்விக்கு உறுதுணைபுரிவதற்காகவே, பல இடங்களிலும் “மாணவர் அறிவியற் கழகங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அங்கு சென்று, ஜெனரேட்டர்கள் மூலமாகக் கிடைக்கும் மின்னொளியில் படிக்கலாம். அத்துடன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளிலும் ஈடுபடலாம்.
மாணவர்கள், மாணவிகள் என்று தனித்தனியே பிரிந்திருந்து படிப்பதற்கும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்குத் தேவையான போதனை வசதிகளும் இந்த அறிவியற் கழகங்களில் செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் தமது பெற்றோருடன் அல்லது,
உறவினரது துணையோடு வந்திருந்து படிக்கலாம். ஆய்வு,
F

Page 6
கண்டுபிடிப்பு முயற்சிகளுக்குத் தேவையான ஊக்குவிப்பு உதவிகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
தொடர்ச்சியான படிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படுகின்ற களைப்பு சோர்வு என்பவற்றை போக்கி புத்துணர்ச்சி பெறுவதற்குத் தேவையான உள்ளக விளையாட்டு (Indoor Gomes) வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு உதவுவது போலவே, வளர்ந்தவர்களது அறிவுப்பசியைத் தீர்ப்பதற்காகப் பல இடங்களிலும் "மாவீரர் படிப்பகங்கள்" அமைக்கப்பட்டுள்ளன . நாட்டு நடப்புகளையும் புதினங்களையும் கூறும் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் அரசியல், பொருளாதார, விவசாய, கலை, கலாசாரப் பண்பாட்டுத் துறைசார்ந்த சஞ்சிகைகள் நூல்கள் என்பன இங்கு தாராளமாக உள்ளன.
பொருளாதார முயற்சிகள்
பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தைப் புலிகள் இயக்கத்தினர் நடாத்தி வருகின்றார்கள். அதன் கீழ் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றாகிய பசுமை வேளாண் சேவை, விவசாயிகளுக்குத் தேவையான அடியுரம், விதைபொருட்கள், கிருமி நாசினிகள் போன்ற உள்ளீடுகளையும், விவசாயத்திற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றது. இந்த ஊக்குவிப்பு உதவிகளின் உறுதுணையோடு யாழ் விவசாயிகள் தமது வேளாண்மை முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் மூலம் சுயதேவைப்பூர்த்தியை நோக்கி வடபகுதி விவசாயிகள் தலையெடுப்பதற்கு வழியேற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் உலகப்பிரசித்தி பெற்றுள்ளமை எல்லோருக்கும் தெரியும். இதற்குச் சற்றும் குறையாத வகையில், "கிட்டு பப்பாசிப்பழம்” என்னும் ஒருவகை பப்பாசிப்பழம் வடக்கில் இப்போது பிரபல்யம் பெற்றுள்ளது. சுவையும் நிறையும் கூடிய இந்த பப்பாசிப்பழத்தின் மரம் வியக்கத்தக்க அளவில் உயரம் குறைந்ததாக அமைந்துள்ளது என்பதும் யாழ்ப்பாணத்திற்கு இந்த இனப் பழவகையை புலிகளின் தலைவர்களுள் ஒருவராகிய கிட்டுவே அறிமுகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நீதித்துறை என்பவற்றை உள்ளடக்கிய ஒரு நேர்த்தியான நிர்வாகம் யாழ்குடா நாட்டிலும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியிலும் நடைபெற்று வருகின்றது. பெற்றோல் டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருள்களுக்கு கடுமையான தடை நிலவுகின்றபோதிலும், கடுமையான யுத்தநிலை காரணமாக வீடுகளிலும், மறைவிடங்களிலும் ஒதுங்கிக் கிடந்த தனியார் வாகனங்கள், மண்ணெண்ணெயிலும், அத்துடன் சேர்ந்த ஒரு கலவை எரிபொருளில் ஒடத் தொடங்கியுள்ளன. புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ் எழுத்துடனான இலக்கத்தகடுகளை இந்த வாகனங்கள் கொண்டிருப்பது அங்கு சாதாரண காட்சியாகும்.
எரிபொருள் பற்றாக்குறை, பொருளாதாரத் தடைபோன்ற கஷ்டநிலைகளுக்கு, யாழ் மண்ணின் பாரம்பரிய வாழ்க்கை சாதனங்களும் வாழ்க்கை நடைமுறைகளும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. மாட்டுவண்டிகள் விவசாயத் தேவைகள் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்ல, நோயாளிகளை ஏற்றிச் செல்லவும், சில வேளைகளில் கல்யாண வைபவங்களில் மணமக்களது அலங்கார ஊர்வல ஊர்த்திகளாகவும் பயன்படுத்தப்படுவது
குறிப்பிடத்தக்கது.
7.

Page 7
வடக்கில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லை. ஆனால், இந்தப் பெரிய குறைபாடு, பற்றாக்குறைக்கு மத்தியிலும் பல வியக்கத்தக்க விடயங்களை அங்கே காணலாம். மின்சாரம் இல்லாத போதிலும் தரமும் சுவையும் மிக்க ஐஸ்கிறீம் வகைகள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அங்கு 30 ரூபாவுக்கு ..புருட் சலட், நட்ஸ், ஜெலி ஆகிவற்றுடன் கூடிய ஐஸ்கிறீமை சுவைக்க முடியும். அதே போன்ற ஐஸ்கிறீமை கொழும்பில் 50 ரூபாவுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றால், 250 ரூபாவுக்கும் குறைவாக வாங்க முடியாது. யாழ்ப்பாணத்திற்கு நேரில் விஜயம் செய்பவர்களுக்கே இந்த உண்மை நிலைமை தெளிவாகப் புலப்படும்.
போதைப் பிரியர்களுக்கு அங்கு கள்ளு தாராளமாகக் கிடைப்பதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாராயம் ஒரு போத்தலின் விலை 500 ரூபா. சிகரட்டும் கிடைக்கிறது. ஆனால் விலை அதிகம். இவைபோன்ற ஏனைய பாவனைப் பொருட்களிலும் உள்ளூர் உற்பத்தியையும் சுயதேவைப்பூர்த்தியையும் முதன்மைப் படுத்தும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் சுருட்டு குறைந்தவிலையில் தாராளமாகக் கிடைக்கின்றது. சாராயத்தின் விலை அதிகமாக இருந்தாலும், வைத்திய தேவைகளுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. வைத்திய தேவைகள் பெரியார்களினால் அல்லது பொறுப்புமிக்க அதிகாரிகளினால் எழுத்து மூலம் உறுதி செயயப்படவேண்டும்.
கலை இலக்கியங்கள்
பலமுனைகளிலான போராட்ட வடிவங்களின் நிகழ்வுகள், சமுதாய மாற்றங்கள், முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட செயற்பாடுகள் என்பன பலதரப்பட்ட ஊடகங்களில் நல்ல முறையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வீடியோ, சினிமா, நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என்பன வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
‘மண்ணுக்காக, உயிராயுதம், காற்றுவெளி’, பிஞ்சுமணம்’, ‘எல்லைக்கற்கள்’ என்பன அங்கு தயாராகியுள்ள சினிமாப்படங்களில் சிலவாகும் . இவைகளே, அங்குள் ள அரங்குகளில் திரையிடப்படுகின்றன. இவற்றின் வீடியோ பிரதிகளும் கிடைக்கின்றன. "ஒளி வீச்சு” என்ற மாதாந்த வீடியோ சஞ்சிகையும் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படுகின்றது.

"அம்மாளைக் கும்பிடுறானுகள்” என்ற சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்துள்ளது. இது தவிர ‘நினைவழியா நாட்கள்’, "வானம் சிவக்கிறது', 'இரத்த புஷ்பங்கள்’ போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் காணக்கூடியதாக உள்ளது. ‘வெளிச்சம்' என்றொரு மாதாந்த சஞ்சிகையும் தொடர்ந்து வெளிவருவதோடு “முத்தமிழ் விழா மலரும்” வெளியாகியுள்ளது. இந்த படைப்புக்கள் யாவும், கனதியும் காத்திரமும் மிக்கதாக இருப்பதுடன், போராட்ட எல்லைகளைக் கடந்து, மனித விழுமியங்களைத் தொட்டு நிற்கின்றன. யாழ் மண்ணின் காத்திரமான இலக்கிய வளர்ச்சிக்கும் வீரியம் மிக்க அதன் கம்பீரத்திற்கும் இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.
சினிமா பாடல்களின் இடத்தை §: பிடித்துள்ளன. இதுவரையில் பல இசைப்பாடல் நாடாக்கள் யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ளன. “களத்தில் மலர்ந்தனிஸ், “கடலில் காவியம் படைப்போம்” “கடற் கரும்புலிகள்”, “க லீன் மடியில்” ஆகிய இசைப்பாடல் நாடாக்கள் அண்டிைஜில் வெளியாகியவற்றுள் குறிப்பிட்டுக் கூறத்தக்கவையாகும்.
ܕ݁ܠܸ܂ ܝܠܹܐ ܇ ܘ، ....܀ இதேபோல கலைகளையும் தமிழையும் வளர்ப்பதில் அங்கு கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. "இளம் கலைஞர் மன்றத்தில்” தினசரி கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. செல்வி பிறேமினி சாந்தலிங்கத்தின் பரதநாட்டிய அரங்கேற்றமும் இங்குதான் நடைபெற்றது.
இந்த கலையரங்கம் நிறைய மக்கள் வெள்ளம் இருக்கும். கண்களுக்கு நிறைவாக கனகாம்பர மலர்க்கொத்தோடு, காஞ்சிபுரம் பட்டு மண்டபம் முழுவதும் சரசரக்கும். கலைநிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தால், இதற்கு முற்றிலும் மாறாக பின்னலிட்டு, மடித்துக்கட்டிய கூந்தலோடு சீருடையில் யுவதிகள் விதிகளில் போய்வருவதைக் காணலாம். இதுதான் யாழ்ப்பாணத்தின் நிதர்சனம்
இதுமட்டுமல்லாமல் பல இடங்களிலும் ‘இலக்கிய முற்றம்’, நிகழ்கலையரங்கம்” என்றவகையில் பல கலைநிகழ்வுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்பன நாள்தோறும் நடத்தப்பட்டு, கலையையும் தமிழையும் வளர்ப்பதில் பலரும் ஈடுபட்டுள்ளார்கள்.

Page 8
ளிெய தமிழ்ப் பெயர்கள்
களஞ்சியம்’, ‘உணவகம்’, ‘சுவையகம்’, ‘விருந்தகம்’, 'பல்பொருள் அங்காடி’, எழிலகம்’ ‘மணிக்கூடு வானொலி தொழிலகம்', "ஊர்தி உதிரிப்பாக வாணிபம்’, ‘வெதுப்பகம்’, வெதுப்பி’ போன்ற இனிய தமிழ்ச் சொற்கள் யாழ்நகர வீதிகளின்
பெயர்ப்பலகைகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றன.
யாழ்மாநகர ஆணையாளர், யாழ்நகர வீதிகளின் மின் கம்பங்களில் மண்ணெண்ணெய் விளக்குகளை அமைத்து நகருக்கு அழகையும் ஒளியையும் ஏற்றியுள்ளார். இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி நாடு அடியெடுத்து வைக்க முனைந்துள்ள வேளையில் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்பட்டதைப் போன்ற உணர்வை இந்தக்காட்சி ஏற்படுத்தியபோதிலும், பாதசாரிகள், சைக்கிளோட்டிகளின் பாதுகாப்புமிக்க வீதிப் பாவனைக்கு இது பெரிதும் துணைபுரிகின்றது. இதேபோல, வீதிகள் கிரவல் பரப்பப்பட்டு, சிறந்தமுறையில் பராமரிக்கப்படுகின்றது. சூழல் பாதுகாப்பு, சூழல் சுத்தம் என்பனவும் மிகக் கவனத்தோடு இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
வீதியோரங்களில் அழகாக மரங்கள் நாட்டப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைத்து, பொறுப்போடு பேணப்படுகின்றன. அதே வேளையில், “வீதிதோறும் மரம் நடுவோம் விழி போலக் காத்திடுவோம்’, ‘மரமின்றிப் போனால் மழையின்றிப் போகும்’, ‘இன்றைய சிறு விருட்சம் நளைய பெருமரம்', போன்ற அழகிய சுலோகங்களையும் அமைத்து இனிய தமிழும் வளர்க்கப்படுகின்றது.
ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் 瞿
பகல் வேளைகளில் பல்வேறு தேவைகள் பொறுப்புக்கள் காரணமாக சைக்கிள்களில் ஒடித்திரியும் யாழ்மக்கள் இரவில் ஒய்ந்திருந்து கதைகள் பேசி, அயலவர் உறவினர் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்றார்கள். பாதிப்புக்கள், நெருக்கடிகள் காரணமாக ஏற்படும் ‘ம்னத்தாக்கங்கள், வடபகுதி மக்களை முறையானதொரு ஆன்மீக வாழ்க்கையில், ஆன்மீக வழிமுறைகளில் ஈடுபடச் செய்துள்ளன. இதனால் சமய விழாக் காலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண தினங்களிலும் ஆலய வழிபாடுகள், சமய அனுட்டானங்கள் என்பவற்றில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்” என்பது சமயப் பெரியார் ஒருவரது கருத்தாகும்.
1 O

புதிய நம்பிக்கைகள்
நான்கு வருடங்களுக்கு மேலாக அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையில், நெருக்கடி மிக்க வாழ்க்கை நடத்திவந்த வடபகுதி மக்கள், புதிய அரசாங்கத்தின் நிவாரண அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆர்வத்தோடு வரவேற்றுள்ளார்கள்.
"யாழ்ப்பாண மக்கள் சமாதானத்தை மிக ஆவலுடன்’ எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, தற்போதைய அணுகுமுறைகளையும் மிகவும் அவதானத்துடன் அணுகத்தீர்மானித்துள்ளார்கள். கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தின் மீது இருந்ததைவிட புதிய அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருப்பது அந்த மக்களின் நடவடிக்கைகள் மூலம் புலனாகிறது’ என்று யாழ் சென்று திரும்பிய சர்வதேச ரோட்டரிக்கழக பிரதிநிதிகளில் ஒருவராகிய, ரோட்டரிக்கழகத்தைச் சேர்ந்தவருமாகிய சுரேஸ் எம். மெல்வானி கருத்துத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1994 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற பாடசாலைகளின் இன் ர றக்ட் கழகங்களுக்கான முதலாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, திரு. சுரேஸ் எம். மெல்வானியுடன் இணைந்து கொழும்பு மேற்கு ரோட்டரிக்கழக உதவித்தலைவர் ஜானக்க எதிரிசிங்க, கொழும்பு கிழக்கு ரோட்டரிக்கழக முன்னாள் தலைவர் குஷில் குணசேகர ஆகியோரும் சென்றிருந்தனர். "
'முந்திய அரசாங்கத்துடன் திருப்திகரமான உறவு இல்லாதிருந்த விடுதலைப்புலிகள், தற்போது புதிய உத்வேகத்துடன் சமாதானத்தில் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். புதிய அரசாங்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை சமாதான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சாதகமாகப் பிரதிபலித்து வருகின்ற நடவடிக்கைகள் புலப்படுத்துவதாக உள்ளது' என்று திரு குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.
‘முன்பு சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்று நாங்கள் பூரணமாக நம்பினோம். எனவே பிரிந்து வாழ்வதற்காகப் போராடினோம். தற்போது சேர்ந்து வாழலாம் என்று கருதுகின்றோம். எனவேதான் ஒன்றுசேர முயற்சிக்கிறோம்"
11

Page 9
என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் கே. கரிகாலன் தம்மிடம் தெரிவித்ததாக திரு. குணசேகர கூறியுள்ளார்.
"நாங்கள் தமிழீழத்துக்கு மாற்றீடான, அரசாங்கத்தின் தீர்வு யோசனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக ஏற்கனவே பலதடவைகள் அறிவித்திருந்தோம். கடந்த (1994) ஏப்ரலில் அதனை மீண்டும் வலியுறுத்தியிருந்தோம். எனவே, பந்து அரசின் பக்கமே உள்ளது. முழுமையானதொரு போர் நிறுத்தத்தை அறிவித் து பேச் சுவார்த் தைகள் பயனுடையதாக்கப்படவேண்டும்', என தமிழீழ நிர்வாகசேவை பொறுப்பாளர் ச.டொமினிக், சிரேஸ்ட அரச அதிகாரி எஸ்.தில்லை நடராஜாவுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே, ஒக்டோபர் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற முதலாம் கட்டப்பேச்சுவார்த்தைக்குச் சிலதினங்களுக்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் புலிகள் தரப் பில் , பேச் சுவார்த் தைக் குரிய பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருந்த அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் ஆ. ரவி, தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் ச. டொமினிக், அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் திரு. கே. கரிகாலன் ஆகியோருடனான தனித்தனியான சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி கருத்தாடல் நடைபெற்றது . இந்த சந்திப் பின் போது பொறுப்பாளர்கள் புலிகளின் நிலைப் பாடு குறித் து தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவர்கள் தலைவர் என்ற சொல்லை திரு. வே. பிரபாகரனைக் குறிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு தமது தலைவர் மீது விசுவாசம் என்று சொல்வதைவிட அவர்மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்களாக இருப்பதையே அவர்களது நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக இருக்கின்றது. M
விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக் கையை முன்வைக்கவில்லை. சிங்கள, அரசியல் தலைவர்களாலும் பெரிதும் போற்றி மதிக் கப்படுகின்ற தந்தை செல்வநாயக மே தமிழீழக்கோரிக்கையை முன்வைத்தார். சத்தியாக்கிரகம் - ஹர்த்தால், சட்டமறுப்பு இயக்கம், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் என்று பலவகையிலும் சாத்வீகமுறைகளில் போராடி பெரும் முயற்சி
12

கடுமையான பொருளாதார எரிபொருள் தடையும் , போர்க்கால நெருக்கடியும் வடபகுதி மக்களின் பொது போக்குவரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன. சைக்கிள் வண்டிகளே அவர்களது போக்குவரத்துத் தேவையின் சகல ரோக நிவாரணியாகத் திகழ்கின்றது. மாணவர்கள், ஆசிரியர்கள், <9 可母。 ஊழியர்கள் ஆகியோரின் 6T 356T Tes சைக் கிள் திகழ்வதோடு அந்தமண்ணின் பூதாகாரப் பிரச்சினையாகிய விறகுத் தேவையைத் தணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்த பொதுப் போக்கு வரத்துச் சாதனத்திற்கு அத்தியாவசியத் தேவையாகிய . காற்றினை தேவையானபோது
... இலகுவாக டயர்களுக்கு 5 ... அடித்துக் கொள்வதற்காக , ரோட்டரி கழகம் போன்ற Te naš liewe e as iš பொது நிறுவனங்கள் ஆங்காங்கே வீதிகளில் "இலவச காற்றுப் பம்” சேவையை வழங்கி உள்ளன. "உடுக்கை இழந்தவன் கை போல” இந்த இலவச காற்று பம் சேவை யாழ் மக்களுக்கு அரிய சேவையை வழங்கி
வருகின்றது.
13

Page 10
செய்த அவரால், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லைல. இறுதியாக தமிழீழமே இதற்கு முடிவு எனக்கூறிய அவர், “எமது முயற்சிகளைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறையினர் இதுபற்றி - பிரச்சினைபற்றி பேசுவார்கள்’ எனக்கூறிச் சென்றார். அதன்படி அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் மிகுந்த தந்தை செல்வாவின் தமிழீழக் கோரிக்கையைப் பின்பற்றி இப்போது நாங்கள் பேசுகிறோம்".
* நாங்கள் சலுகைகளைக் கேட்கவில்லை . உரிமைகளுக்காகத்தான் போராடி வருகிறோம். நாங்கள் எமது போராட்டத்தை ஆரம்பித்த போது பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்புமிக்க போக்குவரத்துக்குரிய பாதை இருந்தது. அப்போது பொருளாதாரத் தடைகள் எதுவும் இருக்கவில்லை. போராட்டம் தீவிரமாகிய் பின்னர் ஏற்பட்ட இந்த நிலைமைகள் நீக்கப்படவேண்டும். போராட்டத்தில் சுமார் 7000 இயக்க உறுப்பினர்களும் 40,000 பொதுமக்களும் பலியாகியுள்ளனர். எனவே இவற்றை நீக்கும் சலுகைகளுக்காக நாங்கள் போராடவில்லை. எமது மக்களின் அரசியல் உரிமைகளும் சுயநிர்ணய உரிமையுமே எமக்குத் தேவை.
"இதனை இலக்காக் கொண்ட தமிழீழம் கோரி நாங்கள் போராடுகின்றோம். இதனை வழங்காவிட்டால் அதற்குரிய மாற்றீடான தீர்வை முன்வைக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும்”.
- இதுவே புலிகளின் நிலைப்பாடாக உள்ளது.
பொதுஜன ஐக்கியமுன்னணியின் தலைவி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே, யாழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையிலுள்ள கஷ்டங்களை நீக்கவும், சமாதானத்தை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளவும், எடுத்த முன்முயற்சிகள் யாழ் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினரில் சிலரும் பொலிசாரில் சிலரும் கடுமையாக இருந்தாலும் அவர்கள் தாண்டிக்குளம் தடைமுகாமி லும் வேறிடங்களிலும் மனிதாபிமானத்தோடு அன்பாகவும் பண்பாகவும் பழகுகின்றார்கள் என்ற கருத்தையும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
14

கோரிக்கைகள்
நீர், காற்று, உணவு போலவே, மனிதனின் பொது வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரம், மக்களின் அன்றாட சமையலுக்குத் தேவையான விறகு, யாழ், குடாநாட்டுக்கான பாதுகாப்பு மிக்க பாதை - என்பன வடபகுதி மக்களுக்கு இன்று முதன்மைமிக்க தேவைகளாக விளங்குகின்றன.
கடந்த சுமார் இரண் டரை ஆண் டுகளாக முழுமையானதொரு கடும் இராணுவ முற்றுகைக்கு யாழ்ப்பாணம் ஆளாகியுள்ளது. யாழ்குடாநாட்டை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கின்ற, ஆனையிறவு ஊடான நெடுஞ்சாலை, கடந்த 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமாகிய, இரண்டாம் கட்ட ஈழப்போருடன் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வெற்றிலைக் கேணியிலிருந்து ஆனையிறவு இராணுவ முகாமை இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட, இரண்டு கட்டங்களிலான பலவேகய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, இயக்கச்சி - கண்டாவளை பிரதேசங்களுக்கு இடையே ஊரியான், கொம்படி வழிகளிலான தரைவழிப் பாதையும் பொது மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதவாறு துண்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை முதல் யாழ் குடாநாட்டின் தீவுகளையும், பெருநிலப்பரப்பில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க பூனகரி பிரதேசத்தையும் அரசபடைகள் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததையடுத்து, சங்குப்பிட்டி - கேரதீவு ஊடான நிலவழிப் பாதையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. இந்த நிலைமையில், பரந்தனுக்கும், பூனகரிக்கும் இடையே, பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள நல்லூர் துறையிலிருந்து யாழ் குடாநாட்டு கரையில் உள்ள கிளாலி இறங்குதுறை ஊடாக யாழ்ப்பாணக் கடல் நீரேரியை ஊடறுத்து புதிய பாதையொன்று போக்குவரத்துக்காக புலிகளினால் திறக்கப்பட்டது. -
விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கை நோக்கிலான நடமாட்டங்களையும் போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்த கடலேரி ஊடான பாதை யைத் தடைசெய்து, மீறுவோர் மீது, வான், கடல், தரை வழிகளிலான மும்முனைத் தாக்குதல்கள் பலவற்றையும் மேற்கொண்டது.
15

Page 11
இதனால், நல்லூருக்கும் கிளாலி இறங்குதுறைக்கும் இடையே சுமார் 11மைல் தூரத்தைக் கொண்ட படகுப் பயணம் உயிராபத்துமிக்கதாக மாறியது. மூன்று மணித்தியாலங்கள் நீடிக்கும் இந்த இரவு நேர படகுப் பயணத்தின் போது பல மோதல்கள், கடும் சண்டைகள் நிகழ்ந்து படைகள், புலிகள் தரப்பில் மட்டுமல்லாமல், எண்ணற்ற அப்பாவிப் பொதுமக்களும் பலியாக நேரிட்டது. எனவே உயிரைப் பணயம் வைத்து, அத்தியாவசிய பயணத்திற்கு மட்டுமே பயன்பட்ட இந்த கடலேரி மார்க்கத்தின் மூலம், யாழ் குடாநாட்டுக்குத் தேவையான விறகு மற்றும் உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்களின் விநியோகத்தை திருப்திகரமாக மேற்கொள்ளமுடியாத இக்கட்டான சூழ்நிலை தோன்றியது.
அத்தியாவசிய உணவு மற்றும் பாவனைப் பொருட்கள் கொழும்பிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் கடல்வழியாக கப்பல்கள் மூலமாக அரசு அனுப்பிவைத்த போதிலும், யாழ்மக்கள் தமக்குத்தேவையான விறகை பெருநிலப்பரப்பிலிருந்து எந்தவகை யிலும் பெற்றுக்கொள்ளமுடியாத கஷ்ட நிலைமையும் ஏற்பட்டது. இதனால் யாழ் குடாநாட்டின் தென் பகுதி மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் உள்ள பற்றைக் காட்டுப் பிரதேசங்களிலேயே, தமது விறகுத் தேவைக்காக, யாழ்மக்கள், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாகத் தங்கியிருக்க வேண்டியதாயிற்று, பளை, இயக்கச்சி போன்ற பகுதிகளில் உள்ள தென்னந் தோட்டங்களும் இவர்களது விறகுத் தேவைக்கு உதவி வந்தபோதிலும், நிலைமை படிப்படியாகத் தீவிரமடைந்து யாழ் மாவட்டத்தில் இப்போது விறகுத் தேவை என்பது, ஒரு பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுத்துள்ளது. எனவே 'ஆனைப்பசி போன்ற அன்றாட விறகுத் தேவையை சமாளிக்கமுடியாமல் திணறும் அவர்களுக்கு அவசரமாக மாற்றீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு எல்.பி. கேஸ். போன்ற ஏதாவது ஒரு சமையல் தேவைக்குரிய எரிபொருளையாவது அரசாங்கம் ஏற்பாடு செய்தால் என்ன என்று அவர்கள் வினவுகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலையடுத்து வடபகுதி போர்முனைகளில் ஏட்டிக்குப் போட்டியான தாக்குதல்கள், மோதல்கள், இராணுவநடவடிக்கைகள் என்பன ஆறுதலடையும் அளவிற்குக் குறைந்துள்ள போதிலும், கிளாலி கடலேரியூடான படகுப் பயணம் , இயற்கை நிலைமைகள் காரணமாக பாதுகாப்பற்றதாகவே உள்ளது.
16

கிளாலி மற்றும் நல்லூர் இறங்கு துறைகள், சிறுபடகுகளில் பொதுமக்கள், இலகுவாக ஏறி இறங்கக் கூடியவகையில் நிர்மாணிக்கப்படவில்லை. இதனால், கோடை காலத்தில் கடல்நீர் வற்றி, சேற்று நிலமாக மாறும் கடற்கரையில் முழங்கால் அளவு புதையும் சேற்றில் பிரயாணிகள் நடந்து கஷ்டமடைய நேரிடுகின்றது. அதுமட்டுமல்லாமல், கரையிலிருந்து புறப்படும் படகுகளை, பிரயாணிகளே சேற்று நீரில் இறங்கி, குறிப்பிட்ட அளவு தூரம் தள்ளிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது .
மாரிகாலமானால், மழை இருட்டு காரணமாக படகோட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை இலகுவாக அறிந்து, படகைச் செலுத்த முடியாத கஷ்டம் ஏற்படுகின்றது . சிறிய கண்ணாடியிழையிலான படகுகளே, இந்த கடலேரி பயணத்தில் பயன்படுத்தப்படுவதனால், மாரி காலத்தின் கடற் கொந்தளிப்பிற்கும், வேகம் மிக்க காற்றுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் படகோட்டிகளும் பயணிகளும் பரிதவிப்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. அச்சமும், உயிராபத்தும் துன்பமும் நிறைந்ததாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போக்குவரத்து, பாதுக்காப்புமிக்க தரைவழிப்பாதைக்கு மாற்றப்படவேண்டும்.
கடலேரிப்பாதை கூட பொதுமக்களுக்கு வேறாகவும், இயக்க உறுப்பினர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. பொதுமக்கள் பிரயாணம் செய்வதற்கு 2 1/2 முதல் 3 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது. அதே தூரத்தைக் இயக்கத்தினர், வேகம் கூடிய வெளி இணை இயந்திரங்கள் இரண்டு அல்லது மூன்றை இணைப்பதால் சுமார் அரைமணி தொடக்கம் முக்கால் மணி நேரத்தில் கடந்து தமது இருப்பிடத்தை சோ ககூடியதாக இருக்கிறது. நேரத்தைக்காடடிலும் உயிராபத்துக்களே இங்கு அதிகமாக உள்ளது. எனவே பாதுகாப்பான ஒரு தரைவழிப் பாதை திறக்கப்படுவது அவசியம் என யாழ் மக்கள் விரும்புகின்றனர்.
சமாதானத்தை நோக்கி சாதகமான திருப்புமுனை ஏற்பட்டுள்ள இந்த வேளையில், சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், தபால்தொலைத் தொடர்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளின் உட்கட்டமைப்புக்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். வடக்கில் இப்போது ஓரளவு நிலவும் யுத்தமற்ற அமைதி, போர் நிறுத்தத்துடன் கூடிய நிரந்தர அமைதியாக மாற்றப்படவேண்டும்.
17

Page 12
நம்பிக்கையூட்டும் சூழ்நிலையும் அடித்தளங்களும் உருவாக்கப்பட்டு, படிப்படியாகப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு உறுதியோடு செயற்பட வேண்டும். இதுவே யாழ்மக்களின் பேராவலாக உள்ளது.
நெருக்கடிகள் மிகுந்த கடந்த பல வருட காலத்தில், மக்களோடு விடுதலைப்புலிகள் வாழ்ந்ததாலும், பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாலும், பெரும்பாலான மக்கள் இயக்கத்தின்மீது விருப்பமும் விசுவாசமுமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். இங்கிருந்து சிரமப்படுவதைவிட வேறெங்காவது போனால் என்ன என்று சிலரிடம் கேட்டாலும் - சொந்த வீட்டில் சம்பலும் சோறும் தின்றாலும் சுதந்திரமாகச் சாப்பிடலாம். அத்துடன் எங்கள் கிணற்றுத் தண்ணீரில் குளிக்கும் சுகம் வேறு எங்கும் கிடையாது. இங்கே பிறந்தோம். இங்கே வாழ்வோம். மரணமும் இங்கேயே நடக்கட்டும் - என்கிறார்கள்.
இன்றைய யாழ்ப்பாணம்
முன்பெல்லாம் யாழ்ப்பாணம் சென்றால் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையைப் பார்த்து, கசறினா பீச் அல்லது கீரிமலையில் குளித்து, பலாலி விமான நிலையத்துக்குச் சென்று பின்னர் யாழ் நகரில் ஏதாவது ஒரு தியேட்டரில் நல்ல படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தின் பாடல்வரிகளை இரசித்து முணுமுணுத்துக் கொண்டு வீடு திரும்புவதுதான் அநேகரின் வழக்கம்.
ஆனால், இப்போது அப்படி இல்லை. மணற்காடு கடற்கரைக்குச் சென்று (நாகர்கோவிலுக்கும் வல்லிபுர கோவிலுக்கும் இடையே உள்ளது) கடலில் குளித்து மகிழ்ந்து விட்டு வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லப்பகுதிகளைப் பார்த்துவிட்டு, வல்வை - தீருவில் மைதானத்தில், குமரப்பா, புலேந்திரன் உட்பட ஏனைய போராளிகளுக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தையும் பார்த்தபின், கிட்டுப் பூங்காவுக்கு விஜயம் செய்து - அல்லிப்பளையில் புலிகளால் கைப்பற்றப்பட்ட யுத்த டாங்கியைப் பார்த்து, சிறுவர்களுக்கான பொழுதுபோக்குகளை இரசித்து மகிழலாம்.
18

விவசாயத் தேவைக்குரிய, தேசிய எரிபொருள் கிடையாது. விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலையை தடைகள் காரணமாக போதிய விவசாய உள்ளிடுகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியாது. ஆயினும், கடுமையான மனித உழைப்பும், இயற்கையோடு இணைந்த பாரம்பரிய விவசாய முறைகளும் யுத்தகால நிலைமைகளின் சவால்களை எதிர் கொள்வதற்கு யாழ் விவசாயிகளுக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன.
,ޤޗަ};%4.ށزلا
கடுமையான யுத்தநிலைமைகளுக்குள்ளே யாழ்மக்களின் அவசர அத்தியாவசிய வைத்தியம் மற்றும் யாழ் வைத்தியசாலையைச் சூழ்ந்த பகுதியின் பாதுகாப்பு என்பவற்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரும்பணியாற்றியது. போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பாருக்கும் (அரசுக்கும் புலிகளுக்கும்) இடையே மனிதாபிமான செயற்பாட்டு உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் சமாதானத்தை நோக்கிய இருசாராரின் கருத்துப் பரிமாறல்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பெரும் துணை புரிந்து வருகின்றது.
19

Page 13
அத்துடன் யாழ் நகரின் இடிபாடுகள், சிதைவுகளையும் அவற்றிற்கிடையே புதிய நிர்மாணத்தோடு - புதுப்பொலிவுடன் தலைநிமிர்த்தும் கட்டிடங்களையும் காணலாம். கற்குவியலாகக் காணப்படும் யாழ். பொலிஸ் நிலையம், சிதைவுகளாகக் காணப்படும் புகையிரதநிலையம், தொலைபேசி பரிவர்த்தனை நிலையம், வீரசிங்கம் மண்டபம் என்பவற்றையும் காணலாம். அத்துடன் இந்த அழிவுகளுக்கும், மனதை உருக்கும் மெளன கண்ணீருக்கும் மத்தியிலும், துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சித்றல்கள் துளைத்துள்ளபோதிலும் குலையாமல் - உடைந்து சிதறாமல், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தந்தை செல்வாவின் அதிசய நினைவுத் தூபியையும் பார்க்கலாம். இறுதியில், எம்மையறியாமலே அந்த மண்ணின் இசைப்பாடல் வரிகளை முணு முணுத்து மேனி சிலிர்ப்பதையும் உணரலாம்.
"சமாதானம் கிடைக்கும் என்ற நம்பிக் கையோடு வாழ்கிறோம். பல தடவைகள், பல வடிவங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
“பேச்சு வார்த்தைகள் தொடரும். பாதை திறக்கப்படும், பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். எல்லா இனங்களும் ஒன்றாகும் நாள் நாளை மலரும். அவ்வாறு மலரும் நாளை மகிழ்வுடன் வரவேற்கக் காத்திருக்கின்றோம்" - இதுவே குடா நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களினதும் ஏகோபித்த குரலாக இருக்கின்றது.
20


Page 14

பாதுகாப்புப்படையினரின் கடடுப்பாட்டிலுள்ள வவுனியா நகரில் அரச அதிபராக இருந்த எஸ்.தில்லைநடராஜா(தற்போது கிளிநொச்சி அரச அதிபர்) கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்கு செல்ல எண்ணியபோது, பலரும் அவரைத் தடுத்தனர்.
எனினும் சகலமக்களின் சமாதானத்துக்காகவும் சந்தோஷ வாழ்விற்காகவும் தனது உத்தியோகமோ உயிரோ போவதானால், அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதாகக் கூறிக் கொண்டு சென்ற திரு.தில்லைநடராஜா அங்கிருந்து திரும்பிவந்ததும் சந்தித்தேன்.
அவர் சொன்னவற்றையும் அப்போதைய செய்திகளில் வெளியானவற்றையும் உள்ளடக்கியதுதான் இச்சிறு வெளியீடு.

Page 15


Page 16
யாழ்ப்பாணச்
சமூகத்தை விளங்கிக் ெ
அதன் உருவாக்கம், இயல் பற்றிய ஒரு பிராரம்ப உச
கார்த்திகேசு
 
 
 
 

#3é高ぶ「
காள்ளல்
பு, அசைவியக்கம் ாவல்
பிரசுரம்