கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்களப் பழமொழிகள்

Page 1
AA
索飞
* *-
SIN
 


Page 2

சிங்களப் பழமொழிகள்
SINHALA PROVERBS

Page 3
ஆசிரியரின் பிறநூல்கள்
இலங்கைத் 2001
திரையுலக
முன்னோடிகள்
இலங்கைத் 1994 தமிழ்ச் 2000
சினிமாவின் கதை
பொன்விழாக் 1999 கண்ட சிங்களச் சினிமா
நெஞ்சில் 1975 ஓர் இரகசியம்
இறைவன் 1976 வகுத்த வழி
மூன்று 1977 பாத்திரங்கள்
தேர்ந்த சிறுகதைஞம் 1998 நாகம்மாள் நாவலும்
சினிமா காந்தளகம்
(சென்னை)
dolfort காந்தளகம் (மறுபதிப்பு) (சென்னை)
$6tupsT வித்தியாதீபம் (வடகிழக்கு கொழும்பு)
மாகாண சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
நாவல் வீரகேசரி (மொழிபெயர்ப்பு (கொழும்பு)
நாவல் வீரகேசரி (மொழிபெயர்ப்பு (கொழும்பு)
நாவல் என்.சி.பி.எச் (மொழிபெயர்ப்பு (சென்னை)
. . . விமர்சனம் வித்தியாதீபம்
க.பொ.த. (உத (கொழும்பு)

சிங்களப் பழமொழிகள்
தம்பிஐயா தேவதாஸ் B.A. (CEY), BEd (CEY), M.A.JOURNALISM AND MASSCOMMUNICATION
ち733の
வித்தியாதீபம் பதிப்பகம் 90/9 புதுச் செட்டித் தெரு. கொழும்பு - 13. TP. 2448743

Page 4
Title :- Sinhala Palamoligal
(Sinhala Proverbs)
First Edition :- 24.04.2005 Author :- Mr. Thambiaya Thevathas
B.A (Cey) BEd (Cey)
M.A. Journalism And Mass Communication
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியற் தரவு
தேவதாஸ், தம்பிஐயா
சிங்களப் பழமொழிகள் (Sinhala Proverbs) / தம்பிஐயா தேவதாஸ் - கொழும்பு : ஆசிரியர். 2005. ப. 136 : செ.மீ. 21
ISBN 955-96785-1-5 விலை 200.00
i. தலைப்பு 22 {ئیi. 598.9148 || al
1. ஆசிரியர் 2. பழமொழிகள், சிங்களம்
ISBN. :- 955-96785-1-5 Graphics Designer - Sudath Wijesinghe Printed by :- E.Kwality Graphics (Pvt) Limited
315, Jempetta St, Col- 13. T.P.: 2389848
Publication :- Vidyatheepam Publication
90/9, New Chetty Street, Colombo - 13. T.P: 2448743
Pages :- 124+xii=136
Price :- 200/=
(iv)

SLDru600TLb
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
(புங்குடுதீவு - 11)
தோற்றம் 05.10.1910 மறைவு 06.04.1980
என் அம்மாவின் அம்மா அம்மம்மா - நீ பழமொழிகளில் என்னை பாராட்டினாய் பலமொழிகளில் எனக்கு ஆர்வமூட்டினாய் சில மொழிகளில் உன்னை பாராட்டமுடியாது அதனால் பழமொழிப் புத்தகம் உனக்கே சமர்ப்பணம்
அன்புப் பேரன் தம்பிஐயா தேவதாஸ்
(v)

Page 5
இந்நூலானாது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
எச்சரிக்கை
இந்நூலிலுள்ள பழமொழிகளை எவரும் மீள்பிரசுரம் செய்யக் கூடாது. கல்வித் தேவைகளுக்காக மீள்பிரசுரம் செய்யவேண்டிய தேவை ஏற்படினும் ஆசிரியரின் அனுமதி பெற்றேயாக வேண்டும்.
(vi)

முன்னுரை
நம் முன்னோர்களின் அனுபவ மொழிகளே பழமொழிகள். அம்முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி காலங்காலமாக தொடர்ந்து வரும் பழையவாக்குகளை பழமொழிகள் என்று கூறலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பு இந்தப் பழமொழிகளுக்குண்டு.
பழமொழிகள் ஒரு மொழியின் மரபுச்சின்னங்களாகவும் விளங்குகின்றன. அந்த மொழியின் வரலாற்றுக்கு-மரபுக்குஇலக்கியத்துக்கு ஏற்ற விதத்திலேயே அமைந்து விடுகின்றன.
தமிழில் கிராமியக் கதைகளில் இறுதியில் வரும் கூற்றுக்கள் பழமொழிகளாக மாறியிருக்கின்றன. அவ்வாறான கிராமியக் கதைகள் சிங்கள மொழியிலும் இருக்கின்றன. அக் கதைகளின் இறுதிக்கூற்றுகள் சிங்கள மொழியிலும் பழமொழிகளாக உருவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
பல மொழிகளிலும் பொதுவாக விளங்கும் சில பழமொழிகள் சிங்கள மொழியிலும் இருக்கின்றன. சில சிங்களப் பழமொழிகள், தமிழ் மொழியில் இருப்பன போன்று அதே கருத்துடன் விளங்குகின்றன. சில வித்தியாசமாகவும் அமைகின்றன.
'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்கிறது தமிழ்ப்பழமொழி. ஆனால் இந்தப் பழமொழி சிங்கள மொழியில் "கஞ்சியும் வேண்டும் மீசையும் வேண்டும் ' என்று அமைந்திருக்கிறது. தமிழில் கூழ் என்று இருப்பது இங்கு கஞ்சி என்று மாறியிருக்கிறது. ஆனால் உட்கருத்து ஒன்றுதான்.
(νii)

Page 6
இவ்வாறு சில சிங்களப் பழமொழிகள் தமிழ்ப் பழமொழி களுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. இவை பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
எனது அம்மம்மா திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து அதிகம் படித்ததில்லை. ஆனால் அழகான தமிழ்ப் பழமொழி களை அள்ளி வழங்குவார். அவர் ஒரு கருத்தை சொன்னால் அதில் ஐம்பது பழமொழிகளை அடுக்கிவிடுவார். இந்தப் பழமொழிகள் மீது உள்ள ஆசையை அவரே எனக்கு ஏற்படுத்தினார். அதனால்தான் அதிகமான பழமொழிப் புத்தகங்களை சேர்க்க முனைந்தேன். தமிழ்ப் பழமொழிகள், ஆங்கில பழமொழிகள், இந்திய மொழிப் பழமொழிகள் என்று பல்வேறு பழமொழிப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை எல்ல்ாம் சேர்த்து வைத்திருக்கிறேன்.
சிங்கள மொழியிலுள்ள பழமொழிகளையும் தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை இப்பொழுது நிறைவேறி யிருக்கிறது.
அதிக கஷ்டப்பட்டு ஆயிரக்கணக்கான இலங்கைப் பழமொழிகளைச் சேர்த்தேன். அவற்றில் அழகான பழமொழி கள் ஆயிரத்தை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன். அவற்று க்கு பொருந்தக் கூடிய எதுகை மோனைகளைச் சேர்த்தேன். இப்பொழுது எனது புத்தகத்தை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறேன். என் முயற்சிக்கு அறிஞர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் ஆதரவு தர வேண்டும்.
90/9 புதுச்செட்டித் தெரு அன்புடன் கொழும்பு - 13. தொ.பே. 2448743 தம்பிஐயா தேவதாஸ் 1204.2005
(viii)

அணிந்துரை
மொழிபெயர்ப்புப் படைப்புகளும் இலக்கியங்களே என்பதைப் பலர் அறிவதில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டுக் கோலங்களை, மற்றொரு இனம் அறிந்துகொள்ள உதவுகின்ற உன்னதமான இலக்கியப் பணியை இவை ஆற்றிவருகின்றன. அவ்வாறெனில் கடந்த மூன்று. நான்கு தஸாப்தங்களுக்கு மேலாக, சிங்கள நாவல்கள், சிறுகதைகள் என்பனவற்றை மொழி பெயர்த்து வருவதனூடாகவும் சிங்களச் சினிமாவை கட்டுரை களினூடாக அறிமுதுகப்படுத்தி வருவதனூடாகவும் சிங்கள மக்களது பண்பாட்டுக்கோலங்களை எமக்கு தெரியப்படுத்தி வருகின்ற இந்நூலாசிரியரின் பணி முதற்கண் பாராட்டிற் குரியதல்லவா? அதே வேளையில், முற்கூறிய நூல்களினை விட, சிங்களப் பழமொழிகள் பற்றிய இந்நூலின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது நாட்டார் இலக்கிய வகை சார்ந்தது.
இவ்விடத்தில் நாட்டார் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிச் சற்று எடுத்துரைப்பதவசியம். ஏனெனில் எழுத்து இலக்கியத்தினைவிட நாட்டார் இலக்கியமே ஒரு சமூகத்தி லுள்ள பெரும்பான்மையோரின் - விளிம்பு நிலை மக்களின் உரத்த குரல்களாக வெளிப்படுகின்றன. இத்தகைய நாட்டார் இலக்கியமும் நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், விடுகதைகள், பழமொழிகள் என பல வகையானது. இவற்றுள்ளும் பழமொழிகள் முதன்மையானவை.
பழமொழிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், அவை மக்களது நெடுங்கால வாழ்வியல் அனுபவங்களின் இனிய சாறாக உள்ளவை (பழைய மொழி > பழமொழி > இனிய மொழி) என்பதனாலாகும்.
(ix)

Page 7
நாய்க்கு நடுக்கடலிலே போனாலும் நக்குத்தண்ணி நக்குத் தண்ணிதான்' - சிறு பராயத்தில் எனது தாயிடமிருந்து அடிக்கடி கேட்டுள்ள பழமொழி இது.
'சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் நாம் திருப்பிக் குரைக்க முடியுமா?" - எனது மகளுக்கு நான் அடிக்கடி கூறும் பழமொழி இது.
மலைநாட்டில் நான் தங்கியிருந்தபோது, பக்கத்து வீட்டில் ஆச்சியொருத்தி கூறக் கேட்ட பழமொழி. இது ஆடு கடிக்குது என்பா, அவிச்ச மீன் கொத்துது என்பா, அம்மாசி இருட்டுக்குப் பேயாய் பறப்பா'
'எல்லாப் பாதையும் ரோம்' நகருக்குத்தான் போகின்றன என்பது மாணவருக்கு நான் அடிக்கடி கூறும் பழமொழி.
என்னடா. எலி அம்மணமாய் ஓடுது என்று பார்த்தால், அது சீலையைக் கட்டிக்கிட்டு, சிரிச்சிக்கிட்டு ஓடுது' - இது அயல் வீட்டிலுள்ள ஒருவர் அடிக்கடி கூறுவது.
தனக்கு விளங்காத சிங்களம் தனது பிடரிக்குச் சேதம்' - சிறுவயதில், பண்டிதரான எனது மாமனாரிடம் கேட்டறிந்த
பழமொழி இது.
வேலைகளைச் சரியாக முடிக்க முடியாத நிலையில் - அதற்குப் பல காரணங்கள் உள்ள நிலையில் - எனக்குள் அடிக்கடி கூறி என்னை நான் அமைதிப்படுத்தும் சிங்களப் பழமொழி : அம்மியும் அப்படி, குழவியும் அப்படி, அரைக்க வந்த கிழவியும் அப்படி
(x)

இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் நாளாந்த வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மன அமைதிப்படுத்த, மன மகிழ்ச்சிக்காக, இலகுவான போதனைக்காக, கோபத்தை வெளிப்படுத்த, இடக்கரடக்கலாக - பழமொழிகளைப் பயன் படுத்தி வருகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காகவே. இத்தகைய சூழலில், பலவேளைகளில் புதுமையானதாகவும், புலமைத்துவம் சார்ந்த மகிழ்ச்சியினைத் தருவதாகவும் உள்ளன, இத்தொகுப்பிலுள்ள சிங்களப் பழமொழிகள் என்பதனை, இவற்றை ஆழ்ந்து வாசிக்கும்போது என்போன்று, நீங்களும் உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும், இத்தொகுப்பிலுள்ள சிங்களப் பழமொழிகளுள் சில தமிழர் மத்தியில் அவ்வாறே வழங்கிவருகின்றன எ-டு. நாய் புல்லைத் தின்னுவதுமில்லை. மாட்டைத் தின்ன விடுவதுமில்லை'
தமிழில் இவை உள்ளமை பற்றி நாம் பெருமிதம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறமையக் காரணங்க ளுள்ளன. ஒருபுறம் நாட்டார் இலக்கிய வகைகள் ஊடுருவிப் பரவும் தன்மை வாய்ந்தவையாகவுள்ளன. மறுபுறம், பல்வேறு சமூக மனிதர்களிடையேயும் ஒத்த சிந்தனைகள் காணப்படு கின்றன. இவ்வடிப்படையில் நோக்கும்போது இத்தொகுப்பி லுள்ள பழமொழிகள் சிந்தனைக்கு விருந்தாகிவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இங்குள்ள சிங்களப் பழமொழிகளுள் சில, சிங்கள - தமிழ் மக்களது பரஸ்பரத் தொடர்புகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன எ-டு 'மட்டக்களப்புக்குப் போயும்
(xi)

Page 8
ஒரு சாரமாவது கொண்டு வராதது போல' இவை எமது ஆய்வுத்தேடல்களை அகலப் படுத்துகின்றன எனலாம்.
இவ்வாறெல்லாம் முக்கியத்துவம் பெற்றுள்ள இம் மொழி பெயர்ப்பு இன்னொரு விதத்தில் இருமடங்கு பாராட்டிற் குரியதாகின்றது.
பழமொழிகளை தமிழிலே எளிமையாக, தெளிவாக, சிறப்புறத் தந்துள்ளமை மட்டுடன்றி. அவற்றின் பொருளையும் தந்திருப்பதே அதுவாகும். இதனால் பிறருதவியின்றி இப் பழமொழிகளை இலகுவிலே விளங்கிக்கொள்ள முடிகின்ற தல்லவா?
ஆக, இத்தியாதி முயற்சியில் ஆசிரியர் தொடர்ந்து ஈடுபட வேண்டும். சிங்கள நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், விடுகதைகள் என்பனவற்றையும் மொழிபெயர்த்து வழங்க வேண்டும். இதுவே, என் போன்றோரது எதிர்பார்ப்பாகின்றது. இந் நூலாசியரால் அது இயலக்கூடியதென்பதிலே எனக்கு மிகு நம்பிக்கையுள்ளது:
கிழக்குப் பல்கலைக்கழகம் வாழ்த்துக்களுடன், வந்தாறுமூலை கலாநிதி செ. யோகராசா 04-04-2005 தலைவர்,
மொழித்துறை
(xii)

சிங்களப் பழமொழிகள்
அதிகாலையில் எழும் பறவைகள் புழுக்களைப் பிடித்தே தீரும்.
எந்த வேலைகளையும் எவர் முதலில் ஆரம்பிக்கிறாரோ அவருக்கு வெற்றி கிட்டியே தீரும்.
அடுத்தவர்களின் திருமணவீட்டில் பந்திச் சோறு பரிமாறியதுபோல.
அடுத்தவர்களின் செலவில் தமது உறவினர்களுக்கு சலுகை வழங்குதல்.
அடுத்தவர்களுக்குத் தோண்டிய குழியில் அவனே விழுவான்.
அடுத்தவனுக்கு செய்யும் துன்பம் அவனுக்கே திரும்பி வரும். அட்டாளையிலிருந்து புகைக்குள் பாய்ந்தது போல.
விபத்திலிருந்து தப்ப முனைபவன் மீண்டும் பெரிய விபத்துக்குள் அகப்படுதல்.

Page 9
தம்பிஐயா தேவதாஸ்
10.
அட்டாளையை உடைத்து புட்டுவம் செய்தது போல.
சிறிய பலனைப் பெறுவதற்காக அதைவிடப் பெரிய பொருளை அழித்தல்.
அத்தி மரம் பூப்பூத்தது போல.
அரிதாக நடைபெறும் நிகழ்ச்சி.
அழுதவன் கண்ணுக்குள் விரலால் குத்தினாற்போல.
ஒரு துன்பத்தை அனுபவிக்கையில் வேறொரு துன்பம் வருதல்.
அசலைப் பெரஹெராவில் பறைமேளம் இல்லாமல் போகுமா? பூரணமான நிகழ்ச்சி நடைபெறுதல்.
அடிக்கடி குரைக்கும் நாய் வேட்டைக்கு ஆகாது.
எந்த நேரமும் சத்தம் போடுபவர்கள் உரிய வேலையை செய்து முடிக்கமாட்டார்கள்.
அடுத்தவரின் ரூபாவைவிட உனது சதம் மேலானது.
அடுத்தவர்களிடமுள்ள மேலான பொருளை விட உன்னிடமுள்ள சிறிய பொருள் பிரயோசனமானது.

சிங்களப் பழமொழிகள்
11.
12.
13.
14.
15.
16. .
17.
அறிவுரையை விட உதாரணம் மேலானது.
அறிவுரை கூறுவதைவிட உதாரணங்கள் காட்டுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
அங்கவீனர்கள் மத்தியில் முடவன் வீரன்.
திறமையில்லாதவரிடையே சிறிய திறமையாளனே பெரிய சாதனையாளன்.
அடுத்தவரின் கோடரியைவிட உன்னுடைய பற்கள் மேலானவை.
அடுத்தவர்களின் பெரிய பொருள்களைவிட உன்னிடமுள்ள சிறிய பொருள் பிரயோசனமானது.
தனக்கு உடுப்பு இல்லாதவன் நாய்க்கு சட்டை தைத்தது போல.
சொந்த வேலையை செய்ய முடியாதவன், அடுத்தவர்களின் வேலையை செய்ய முடியாது.
அறிமுகமான நாய்களின் குரைப்பொலி போல.
நடிப்புக்காக நல்லவர்போல நடந்து கொள்ளல்.
அப்பா இல்லாதவன் அப்பாவுடன் விருந்துண்ண அழுதானாம்.
இல்லாத ஒன்றுக்காக ஏங்குதல்.
அழுக்கு மீன் சுற்றிய கடதாசி போல.
துர்க்குணனுடன் சேர்பவனும் பழி கேட்பான்.

Page 10
தம்பிஐயா தேவதாஸ்
18.
9.
20.
21.
22.
23.
அப்புகாமியிடம் குரக்கன் இருப்பது அவன் மனைவியின் பல் இளிப்பில் தெரியும்.
ஒரு பொருள் இருக்கிறது என்பதை ஏதாவது ஒரு அடையாளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அக்காமார் இருப்பார்களாயின் மைத்துனர்மார்களுக்குமா பஞ்சம்? பணம் வேண்டிய மட்டும் இருந்தால் வாங்கவேண்டிய பொருள்களில் பஞ்சம் இல்லை. அடுத்தவர் பொருளில் தானம் கொடுப்பதுபோல. மற்றவர்களின் பொருளைக் கொடுத்து தன்னை உயர்த்திக் கொள்ளல். அம்மா இல்லாத பிள்ளைகள் அழும்பொழுது அம்மான்மாருக்கு பால் சுரக்குமாம்.
சகோதரியின் பிள்ளைகள்மேல் மாமன்மாருக்கு பாசம் அதிகமாகும்.
அப்பக் காசுக்கு காணி கொடுத்தது போல.
பெறுமதியற்ற பொருளுக்கு பெறுமதியான பொருளைக் கொடுத்தல். அடித்து விட்டுக் கட்டினாலும் கட்டிவிட்டு அடித்தாலும் ஒன்றுதான்.
இரண்டு வேலைகளாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதான்.

சிங்களப் பழமொழிகள்
24.
25.
26.
27.
28.
29.
அம்மாவின் முலையைத் தின்றவன்
அடுத்த தோட்டத்துக் கோழிக்குஞ்சை
மிச்சம் வைப்பானா?
பெரிய தவறுகளை செய்தவன் சிறிய தவறுகளைச் செய்யாமல் இருக்கமாட்டான்.
அது செய்ததை அது அனுபவிக்கும்; அவன் செய்ததை அவன் அனுபவிப்பான்.
எவன் எது செய்கிறானோ அதன் பலன் அவனுக்கே கிடைக்கும்.
அட்டையை தூக்கி மெத்தையில் வைத்ததுபோல்.
ஒருவனை பொருத்தமில்லாத இடத்தில் வைத்தல். w
அட்டை ஒரு இடத்தில் கால் வைத்துக் கொண்டுதான் மற்ற இடத்தில்
கால் பதிக்குமாம்.
ஒரு இடத்தை தயார் செய்து கொண்டே அடுத்த இடத்துக்கு போகவேண்டும்.
அளவுகோல் இருக்கும்போது
கையால் அளத்தல்.
தேவைக்கு ஏற்ப பொருளைப் பயன்படுத்தாமல் தேவையற்றதைப் பயன்படுத்தல்.
அடுப்புக்குள் உப்பைப் போட்டது போல.
கோபத்தில் படபடத்துப் பேசுதல்.

Page 11
தம்பிஐயா தேவதாஸ்
30.
31.
32.
33.
34.
35.
36.
அம்மி நல்லதென்றால் தேங்காயும் நல்லதே.
வீட்டுச் சூழல் நல்லதானால் சிறுவர்கள் தீயவர்களாக மாட்டார்கள்.
அடிக்க அடிக்க வணங்குபவனும், வணங்க வணங்க அடிப்பவனும் மூடர்களே.
அடிப்பவனுக்கு பயப்படுவதும் பயப்படுபவனுக்கு அடிப்பதும் தவறான செயலாகும்.
அணிலுக்கு கொய்யாமரத்தை பொறுப்பு கொடுத்தது போல.
தந்திரக்காரனுக்கு ஏதாவது பொறுப்புக் கொடுத்தல்.
அடுப்பில் சாம்பல் எடுக்க ஆசான்
அனுமதி எதற்கு?
தங்களுடைய வேலைகளுக்கு அடுத்தவர்களின் அனுமதி தேவையில்லை.
அரசனாக ஆசைப்பட்ட நரியைப்போல்.
தேவைக்கு அதிகமாகவே ஆணவம் வந்து அழிதல்.
அதிகாரிக்காக இறைவனுடன் பேசுதல் போல.
கிடைக்காத பொருளுக்காக முயற்சி செய்தல்.
அனுமான் விறகு கொத்துவது போல்.
அமைப்பு ஒழுங்கு இல்லாத வேலை.

சிங்களப் பழமொழிகள்
37.
38.
39.
40.
41.
42.
43.
அல்லிப்பூவும் சிறு மீன்களும் ஒரே குளத்தில் உருவாகின்றன.
நல்ல செயல்களும் கெட்ட செயல்களும்
ஒரே இடத்தில் உருவாகக் கூடியன.
அல்லிப்பூக் குளத்திலேயே தவளைகளும் வாழுகின்றன.
ஒரே குடும்பத்தில்கூட வித்தியாசமான குணமுள்ள குழந்தைகள் பிறக்கலாம்.
அடுத்தவர்களின் விளக்கில் வெளிச்சம் பார்த்தல்.
அடுத்தவர்களின் உதவியில் வாழுதல்.
அறுக்குளா மீன் இருக்கையில் சேற்று மீனை உண்டதுபோல்.
நல்ல பொருள் இருக்கையில் தீயபொருளை தெரிவு செய்தல்.
அருகில் இருக்கும் ஈ, தூர இருக்கும் வண்ணத்துப் பூச்சியை விட மேலாம்.
கிடைக்காத பெரிய பொருளைவிட கிடைக்கும் சிறிய பொருள் மேலானதாம்.
அட்டைக்குப் பாய் விரித்தது போல்.
பயனற்ற வேலை பற்றிக் கூறும் பழமொழி.
அரண்மனைப் புறாப் போல.
எதுவித குறைவுமின்றி சுதந்திரமாக வாழுதல்.

Page 12
தம்பிஐயா தேவதாஸ்
44.
45.
46.
47.
48.
அடித்து வளர்க்காத பிள்ளையும், ஆத்திச் சமைக்காத குழம்பும் ஒரே மாதிரியாம்.
குழந்தைகளை வளர்க்கும்போது அவர்கள் செய்த தவறுகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
அடி வாங்கினாலும் ஆண்மகன் முன்னேதானாம்.
நேருக்கு நேர் சண்டை செய்வது தர்மம். பின்னின்று தாக்குவது ஆணின் அழகு அல்ல.
அனைத்துப் பொருட்களையும் பார்க்கும் கண்ணுக்கு தன்னை பார்க்க முடியாதாம்.
அடுத்தவர்களது சிறுதவறுகளை அறியும் சிலருக்கு தமது பெரிய தவறுகள் தெரியாதாம்.
அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்பு வரை உண்டது போல்.
கெட்டவர்களின் எண்ணம் அடிக்கரும்பிலிருந்து
சாப்பிட்டது போலாகும்.
அரசனானாலும் நாய் செருப்பைக் கடிக்குமாம்.
தாழ்ந்தோர் தமது தாழ்ந்த
பழக்கத்தை கைவிட
மாட்டார்கள்.

சிங்களப் பழமொழிகள்
49.
50.
51.
52.
53.
54.
அரசர்களிடமிருந்து தப்பினாலும் அரண்மனை நாய்களிடமிருந்து தப்பமுடியாது.
தலைவனிடமிருந்து தப்பலாம். ஆனால் சேவகர்களிடமிருந்து தப்ப முடியாது.
அவிழ்ந்திருக்கும் பையைச் ஆராய்ந்து பார்த்தல்.
தனக்கு எதுவும் கிடைக்குமா என்ற எண்ணத்தில் சோதித்தல்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ஒடுமாம்.
தொடர்ந்து துன்பம் வந்தால் எவரும் அதிலிருந்து தப்ப முயல்வர்.
அரக்கன் காய்ந்த பாக்குக் குவியல்மீது ஓடுவது போல்.
மிகவும் கடூரமான சத்தம் அல்லது கொடூரமான காட்சி சம்பந்தமாக கூறப்படுவது.
ஆமை ஒடுகூட மருந்துக்கு உதவுமாம்.
பெறுமதியற்ற பொருட்களும் சிலவேளை
பிரயோசனப்படும்.
ஆமையிடம் இறகு கேட்பது போல்
இல்லாத பொருளைக் கேட்டல்.

Page 13
தம்பிஐயா தேவதாஸ்
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
ஆமை எப்போது மரத்தில் ஏறியது?
பழக்கமில்லாத வேலையில் ஈடுபட்டு தோல்வி அடையக்கூடாது.
ஆமையிடம் தோற்ற முயலைப் போல்.
தங்கள் மீது அளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்து தோல்வி அடைதல்.
ஆமை ஆகாயத்தில் பறந்தது போல். பொருத்தமில்லாத வேலையில் ஈடுபட்டு அழிந்துபோதல்.
ஆபத்தில் உதவுபவனே அருமையான
நண்பன்.
உண்மையான நண்பன் ஆபத்தில் உதவுவான்.
ஆகாயமும் பூமியும் நின்று நிலைக்குமாம்.
சதாகாலமும் நின்று நிலைப்பன.
ஆகாயத்தையும் பெண்ணையும் நம்பாதே.
ஆகாயத்தில் எப்பொழுது மழை வரும் என்று நம்பமுடியாது. அவ்வாறே பெண்ணின் உள்ளமும் மாறக் கூடியது.
ஆகாயத்தை காலால் உதைத்தது போல.
இயலாத காரியத்தைச் செய்ய முயலுதல். ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல்,
செய்ய முடியாதத்தைப் பற்றிப் பேசுதல்.
10

சிங்களப் பழமொழிகள்
63.
64.
65.
66.
67.
68.
69.
ஆணை இடுவதைக் காட்டிலும் அதனை ஒழுகி நடத்தல் கவிழ்டமாகும்.
புத்திமதிகளை இலகுவாகச் சொல்லலாம்.
ஆனால் அதை ஏற்று நடத்தல் கஷ்டம்.
ஆகாய இடி முழக்கத்துக்கு பயந்து ஓடிய முயலைப் போல்.
வீணாகப் பயப்படுதல்.
ஆகாயத்துக்கு ஏணி கட்டியது போல்.
பிரயோசனமற்ற முயற்சி.
ஆகாயத்தில் அம்புலிமாமா தெரிவது போல.
மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் தெரியும் பொருள்.
ஆசானை ஏமாற்றி கத்தி செய்தல் போல.
அடுத்தவனை ஏமாற்ற நினைத்து தானே ஏமாறுதல்.
ஆந்தை அரசனானாலும் முகத்தில் கடுமையை மாற்றாதாம்.
துஷ்டன் உயர்பதவி பெற்றாலும் தனது
குணத்தை மாற்ற மாட்டான்.
ஆறு நித்திரை கொள்ளுகிறதா என்று பார்த்ததுபோல்.
மடமையை விளங்கப்படுத்தும் பழமொழி.
11

Page 14
தம்பிஐயா தேவதாஸ்
70.
71.
72.
73.
74.
75.
ஆற்றங்கரையில் உழவு தொழில் செய்து நரிகளின் பெருமையை பார்ப்பான்போல்.
ஆபத்து ஏற்படும் இடத்தில் வேலை செய்யும்பொழுது ஏற்படும் பிரச்சினை பற்றிச் கூறுதல்.
ஆற்றின்மீது உள்ள கோபத்தினால் குளிக்காமல் இருத்தல்.
அடுத்தவர் மீது கோபம் கொண்டால் தமக்கே நட்டம்.
ஆமை நீரில் போகும்பொழுது அது ஐயோ என்றதாம்.
தேவையை மனதில் வைத்துக் கொண்டு விருப்பம் இல்லாததுபோல் காட்டிக் கொள்ளல்.
ஆமைக்கு வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையாம்.
வாயை மூடிக்கொண்டு இருக்காவிட்டால் ஆபத்து ஏற்படும்.
ஆட முடியாமைக்குக் காரணம் நிலம் (8aste00T6)IT b.
இயலாமையை மறைப்பதற்கு வேறு காரணத்தைச் சொல்லுதல்.
ஆற்றில் பருகி கடலில் வளருதல்.
உதவியவர்கள் பின்னே நிற்க மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுத்தல்.
12

சிங்களப் பழமொழிகள்
76.
77.
78.
79.
80.
ஆறுகள் எத்தனை விழுந்தாலும் கடல் நிரம்புவதில்லை.
மனிதனுக்கு பணம் எவ்வளவு கிடைத்தாலும் அவன் திருப்தியடைவதில்லை.
ஆலம் விதை மிகவும் சிறிதானாலும் ஆலமரம் மிகப்பெரியது.
மிகவும் சிறிதாக ஆரம்பிக்கும் வியாபாரமானாலும் காலவோட்டத்தில் பெரிதாக உயரும்.
ஆமை வாய் திறந்ததால் இறந்தது போல.
தேவையில்லாத விடயங்களில் தலையிட்டால் நஷ்டம் ஏற்படும்.
ஆற்றின் மீது உள்ள அன்பால் உடல் கழுவாமல் இருந்தது போல்.
சோம்பேறித்தனம் பற்றிய பழமொழி (பழங்காலத்தில் சோம்பேறி ஒருவன் ஆற்றுநீர் வற்றிவிடும் என்று குளிக்காமல் இருந்தானாம்). ஆகாயத்திற்கும் பெற்ற தாயாருக்கும் சுதந்திரம் கிடையாது.
வெயிலோ மழையேவா அதிகம் என்றால் ஆகாயத்தை திட்டுவர். பிள்ளைகள் சிெய்த தவறுக்காக தாயைத் திட்டுவர்.
13

Page 15
தம்பிஐயா தேவதாஸ்
81.
82.
83.
84.
85.
86.
ஆற்று நீர் கலங்கினால் கூனிறாலுக்குத்தான் லாபம்.
மற்றவர்களின் பிரச்சனையால் சிலர் தப்புகின்றனர்.
ஆலமர நிழல் குளிர்காலத்தில் உஷணமாம்; உஷணகாலத்தில் குளிர்மையாம்.
கிணற்று நீரும் செங்கற்களால் கட்டப்பட்ட வீடும் ஆலமர நிழலும் குளிர்காலத்தில் உஷ்ணத்தையும் உஷ்ணகாலத்தில் குளிரையும் தருமாம்.
இரவில் விழுந்த கிடங்கில் பகலில் விழாதே.
ஒருமுறை ஏமாற்றப்பட்டால் மறுமுறை ஏமாறக் கூடாது.
இஞ்சியைக் கொடுத்து மிளக்ாய்
வாங்கியது போல்.
நல்ல பொருளைக் கொடுத்துக் கூடாத பொருளைப் பெறுதல்.
இறால் தலையில் அசுத்தத்தை வைத்துக் கொண்டு தான் சுத்தமானவன் என்று கூறுமாம்.
சிலர் தங்களிடம் தவறுகளை வைத்துக் கொண்டு தாம் தவறு இல்லாதவர்கள் என்று பேசிக் கொள்வார்கள்.
இரண்டு நாக்குப் பேச்சு.
மாறுபடும் பேச்சு.
14

சிங்களப் பழமொழிகள்
87.
88.
89.
90.
91.
92.
93.
இறகுகளை வெட்டி விட்டு பறக்கும்படி
கூறுதல்.
தடையாக இருந்துகொண்டே அதைச் செய்யும்படி சொல்லுதல்.
இடிக்கும் மாடு உழவுக்கு நல்லதாம்.
சக்தி உள்ள ஒருவராலேயே வேலை செய்ய முடியும்.
இன்று அவர்களுக்கென்றால் நாளை நமக்கு.
மற்றவர்களுக்கு வரும் துன்பம் எங்களுக்கும் வரலாம்.
இடைநடுவில் கைகோர்ப்பு அறுந்ததுபோல.
ஒரு முயற்சியை செய்து கொண்டு போகும்போது இடையில் திடீர் என்று அழிந்துபோதல்.
இழகின இரும்பைக் கண்டால் கொல்லன் துள்ளித் துள்ளி அடிப்பானாம்.
அப்பாவிகளைக் கண்டால் சிலர் துன்பப்படுத்துவர்.
இலைகள் இல்லாத மரங்களின் கீழ் நிழல்கள் எப்படி வரும்?
நல்லிதயம் இல்லாத பணக்காரர்களினால்
ஏழைகளுக்கு பயனில்லை.
இரண்டு பணத்துக்கு குதிரையும் வேண்டும் மதிலுக்கு மேலால் பாயவும் வேண்டும்.
சிறுபணத்துக்கு பெரிய பயனை எதிர்பார்த்தல்.
15

Page 16
தம்பிஐயா தேவதாஸ்
94.
95.
96.
97.
98.
99.
1 OO.
இயற்கையில் இல்லாத பொருளை தேடுபவன் போல்.
எப்போதுமே கிடைக்காத பொருள்.
இரை போட்டு மீனைப் பிடித்தது போல.
இலஞ்சம் கொடுத்து ஏதாவது பெற்றுக் கொள்ளல்.
இருப்பவரோ இருவர், நடுவில் நித்திரை கொள்ளவும் வேண்டுமாம்.
செய்ய முடியாத வேலையில் ஈடுபடல்.
இருந்தாலும் கஷ்டம் இல்லாவிட்டாலும் நஷடம் அவர்கள்தான் உறவினர்கள்.
உறவினர்கள் இருந்தாலும் கஷ்டம் இல்லாவிட்டாலும் கஷ்டம்.
இருண்ட வீட்டுக்குள் பலகாரத்தை நீட்டியதுபோல்.
பிரயோசனமற்ற செயல்.
இரையை விழுங்கிய மீனைப்போல.
பின் விளைவுகளை யோசிக்காமல் செயற்படல்.
அரக்கன் காய்ந்த பாக்குக் குவியல்மீது ஒடுவது போல்.
மிகவும் கடூரமான சத்தம் அல்லது கொடூரமான காட்சி சம்பந்தமாக கூறப்படுவது.
16

சிங்களப் பழமொழிகள்
101.
102.
103.
104.
105.
106.
107.
இருந்தாலும் ஆயிரம் இறந்தாலும் ஆயிரம்.
தந்தங்கள் உள்ள யானையின் சிறப்பு.
இரண்டு பக்கமும் வெட்டும் வாள்போல். நம்பிக்கையீனமானவனிடம் கவனமாகப் பழக வேண்டும்.
இலங்கையில் பிறந்த அனைவரும் இராவணர்களா?
ஒரு நாட்டில் பிறந்த அனைவரும் கெட்டவர்களல்ல.
இரண்டு கற்களால் அடுப்புச் செய்தது போல.
சரியாகச் செய்யாத செயல்.
இரண்டு எண்ண முன்பு ஒன்று
எண்ண வேண்டும்.
படிப்படியாக வேலை செய்ய வேண்டும்.
இறந்த மனிதர்களின் சாதகத்தைப் பார்ப்பவன் போல்.
பலனற்ற வேலையில் முயற்சி பண்ணல்,
இறந்த மனிதனின் மூக்கை வெட்டுவதற்கு சுலபமானது.
மொட்டைக் கத்தியைப் பற்றிய பழமொழி.
17

Page 17
  

Page 18
121.
122.
123.
124.
125.
126.
தம்பிஐயா தேவதாஸ்
உபாசகம் என்பதும் எல்லா வேளைகளிலும் நல்லதல்லவாம்.
எல்லா வேளைகளிலும் நல்லவனாக இருக்கக்
கூடாது.
உலக்கையை விழுங்கியவன்போல்.
தலைக்கனம் உள்ள மனிதனை விபரிக்கும் பழமொழி.
உண்ணாமல் இருக்கும் வீட்டை விட கஞ்சியாவது குடிக்கும் வீடு நல்லது.
இல்லாமையைவிட ஏதாவது சிறிய பொருளையாவது பெறுதல் மேலாகும்.
உயர்குலம் தாழ்குலம் என்ற வித்தியாசத்தை நீக்கும் மருந்துதான் பணம்.
பணம் இருந்தால் தாழ்குலத்தவன் என்ற பெயரும் அழிந்துபோகும்.
உழுந்து விதைத்து பாசிப்பயற்றை எதிர்பார்க்காதே.
வேலை செய்யும் தரத்துக்கு ஏற்பவே பலனும் கிடைக்கும்.
உலகத்தை உண்டு தண்ணிர் குடித்தவன்.
மிகவும் தந்திரமானவனை அறிமுகப்படுத்தும் பழமொழி
20

சிங்களப் பழமொழிகள்
127.
128.
129.
130.
131.
132.
133.
உண்மை சொல்வதற்கும் நிலத்தில் இருப்பதற்கும் பயப்படத் தேவையில்லையாம்.
உண்மை பேசவும் நிலத்தில் இருப்பதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
உண்மையில் பணமும் இல்லை, சமயமும் இல்லை.
சமயவிரோதச் செயல்களுக்குப் பணம் சேர்த்து அதையும் அழித்துக்கொள்ளுதல்.
உருளும் கல்லில் பாசி பிடிக்காது.
உடலை வருத்தி வேலை செய்பவனுக்கு நோய் நொடி வருவதில்லை.
உரையாடல் பயணத்துக்கு ஏணியாம்.
உரையாடிக் கொண்டு போகும்போது பயணம் சலிப்பதில்லை.
உண்டவனுக்குத் தான் உருசி தெரியும்.
அனுபவித்தவனுக்கு அதன் பெருமை தெரியும்.
உப்பு அதிகமான குழம்புபோல.
தேவைக்கு அதிகமான பொருட்களைச் சேர்ப்பதால் பிரச்சனைகள் ஏற்படும்.
உப்பளத்தில் இருந்துகொண்டு கடல்நீருடன் சாப்பிட்டதுபோல.
குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் இடத்தில் இருந்தும் அப்பொருள் கிடைக்காமை.
21

Page 19
134.
135.
136.
137.
38.
139.
140.
தம்பிஐயா தேவதாஸ்
உப்பு உவர்ப்புச் சுவையுடையதே.
எவரும் தம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.
உறவைவிட தேவை பெரிதாம்.
உறவினர்களைவிட தேவை முக்கியமானது.
உறவினர்களிடம் கொடுக்கல் வாங்கல் (36600TLITLp.
உறவினர்களிடையே கொடுக்கல் வாங்கல்
வைத்துக் கொண்டால் உறவு அழித்து போகுமாம். உறவினர்களைப் பார்த்துப் பார்த்து பலகாரம் பரிமாறினாளாம்.
அறிந்தவர்களுக்கு உபகாரம் அதிகம் கிடைக்கும்.
உடலில் இருந்து கொண்டு காதை கடித்தது போல.
உதவும் ஒருவருக்கே தீங்கு செய்தல்.
உழாமல் அறுவடை செய்ய முடியாது.
ஏதாவது காரியத்தில் ஈடுபடாமல்
பயன்கிடைக்காது.
உடலில் இருந்து ஒரு எலும்பு போனது போல.
ஏதாவது ஒரு பொருளை விருப்பமின்றி மற்றவருக்கு வழங்கல்.
22

சிங்களப் பழமொழிகள்
141.
142.
143.
144.
145.
46.
உரம் போடும் அளவுக்கே பயிரும் செழிப்படையும்.
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் அளவுக்கே
அவர்களது நல்லகாலம் அமையும்.
உலக்கையை விழுங்கிய மலைப்பாம்பைப்போல்.
தலைக்கணத்தினால் உயர்ந்த ஒருவனைப் பற்றிய பழமொழி.
உபாயம் தெரிந்தோர் அபாயத்தில் அகப்படார்.
ஏதாவது ஒரு உபாயம் அறிந்தவர்கள் அபாயத்தில் சிக்கமாட்டார்கள்.
உட்கடலில் வைக்கப்பட்டுள்ள
வாள்போல்,
எதிர் பார்த்திருக்கும் ஆபத்து.
உதவியற்றவனுக்கு உதவுவது மரணத்தின் பின்பா?
நன்றிக்கடன் செய்வது அவன் இறந்த பின்பா?
ஊசியை ஊசியால் எடுக்க முடியாவிட்டால் உலக்கையால் எடுக்க முடியுமா?
ஒரு பொருளை அழிப்பதற்கு அதே பொருள் தேவைப்படுகிறது.
23

Page 20
தம்பிஐயா தேவதாஸ்
147.
48.
149.
150.
151.
152.
153.
ஊற்றுண்ட பொருளை நக்கி உண்டாலும் இலாபம் தானாம்.
அழிந்து போகும் பொருளில் சிறிய பகுதியையாவது பயன்படுத்த வேண்டும்.
ஊசி முனையில் தவம் செய்வது போல்.
இயலாத காரியத்தை செய்ய முனைதல்.
ஊஞ்சல் அந்தப் பக்கம் போனாலும் இந்தப் பக்கமும் வரும்.
எல்லா வேலைகளுக்கும் முன்னேற்றமும் பின்னடைவும் உண்டு.
ஊமை கண்ட கனவு போல.
யாருக்குமே பயன்படாத யாருக்குமே சொல்ல முடியாத விடயம்.
ஊமையின் பாடலை கேட்டு செவிடன் கைகொட்டினான் என்று சொல்வதைப்போன்று.
நடக்க முடியாத செயல்.
எட்டுக் கத்தரிக்காய்களுக்குள் ஒரு சுரைக்காய் விற்றதுபோல்.
ஏதாவது பொருள்பற்றி தெளிவில்லாத
விளக்கம் கூறல்,
எலும்பு இல்லாத நாக்குப்போல்.
சொன்ன சொல்லை மாற்றிப் பேசுபவர்கள்.
24

சிங்களப் பழமொழிகள்
154.
155.
156.
157.
158.
159.
160.
எரியும் நெருப்புக்குள் வைக்கோலைப் போட்டது போல.
அழிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் மேலும்
அழிவை ஏற்படுத்துவதுபோல.
எங்கள் பணம் எங்களுக்கே அடிக்கும் என்று சொன்னது போல.
நன்றி மறந்த ஒருவருக்கு இவ்வாறு சொல்லலாம்.
எழுதமுடியாதவரின் பேனை கஜபா மன்னனின் இரும்புக்கோலைவிட பாரமானதாம்.
படிக்காதவர்களினால் ஏற்படும் பிரச்சனை.
எருமைமாட்டுடன் பசுமாட்டை இணைத்தல் போல.
பொருத்தமில்லாத இருவரை இணைத்தல். எலிக்கு மரணமாம் பூனைக்கு கல்யாணமாம்.
ஒருவருக்கு விளையாட்டு இன்னொருவருக்கு வேதனையாக அமைவதுண்டு.
எந்த நாளும் கோடையானாலும் ஒருநாள் மழை பெய்யவே செய்யும்.
எந்த நாளும் துன்பம் அனுபவித்தாலும் ஒரு நாளாவது இன்பம் வந்தேதீரும்.
எப்போதாவது கல்லின் மீது பூப்பூத்ததுண்டா?
நடைபெறாத விடயம் பற்றிய பழமொழி.
25

Page 21
தம்பிஐயா தேவதாஸ்
161.
162.
163.
164.
165.
166.
எல்லா வித்தைகளிலும் பார்க்க தன்னை காப்பாற்றம் வித்தையே பெரிதாம்.
எந்த இடத்திலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளல் முக்கியமானதாகும்.
எனது தோல் போகிறது. ஆனால் அடுத்தவர்களின் பெயர் வருகிறது.
ஒருவனின் முயற்சியும் புகழும் இன்னுமொருவருக்குப் போதல்.
எவருடைய சுண்ணாம்புப் பேழைக்குள்ளும் சுண்ணாம்பு இருக்குமாம்.
ஒருவனின் முயற்சியும் புகழும் இன்னுமொருவருக்குப் போதல்.
எங்கே போகிறாய் என்று கேட்டால் பையில் தேங்காய் என்றானாம்.
கேட்ட கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லாது வேறொரு பதிலைத் தருதல்.
எலும்பில்லாத நாவால் என்னதான் பேச முடியாது?
பொய்யன் ஒருவன் எப்படியான பொய்யைச் சொல்லவும் தயங்கமாட்டான்.
எல்லாம் நல்லன ஆனால் மூக்கு மட்டும் நன்றாக இல்லை.
எல்லாம் நன்றாக இருந்தாலும் பிரதான பொருள் மட்டும் இல்லை.
26

சிங்களப் பழமொழிகள்
167.
168.
169.
170.
171.
172.
173.
174.
ஏழை நன்றாக நித்திரை செய்வானாம்.
ஏழைக்கு நாளை என்ற கவலை இல்லை. அதனால் நன்றாக நித்திரை செய்வான்.
ஏழைக்கு சுடுசோறு எப்படிக் கிடைக்கும்?
ஏழைக்கு ருசியான உணவு கிடைப்பதில்லை.
ஏணிமீது முழங்காலால் ஏற முடியாது.
உரிய முறையிலே செய்ய வேண்டிய வேலையை பொருந்தாத முறையில் செய்ய முடியாது.
ஏழ்மை வால் அறுந்த மாடு போலாகும்.
உதவி செய்ய எவருமற்றவர்களே ஏழைகள்.
ஏறிய பின் ஏணியை உதைத்துத் தள்ளினானாம்.
உதவி செய்தவனை எண்ணிப் பாராமை.
ஏழை உறவினர்களை காணும் போது பணக்கார உறவினர்களுக்கு உடலில் மீன் நெளியுமாம்.
ஏழை உறவினர்களை பணக்கார உறவினர்கள் விரும்புவதில்லை.
ஐக்கியம் இருந்தால் ஏழ்மை நீங்குமாம்.
ஒற்றுமையின் தாற்பரியம்.
ஒரே பையில் உப்பு உண்ட ஒருவன்.
சமமான குணமுள்ள ஒருவன்.
27

Page 22
தம்பிஐயா தேவதாஸ்
175.
176.
177.
178.
179.
18O.
ஐந்து விரலானாலும் வெவ்வேறு வகையானவையாகும்.
ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.
ஐரோப்பாவுக்கு கொண்டு போனாலும் பூனை மியா என்றே கத்தும்.
உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பிறவிக்குணம் வந்தே தீரும்.
ஒரு கல்லால் இரண்டு பறவைகள்
ஒரு செயலால் இரண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ளல்.
ஒன்றாகச் சாப்பிட்டாலும் இரைப்பைகள் வேறுவேறாம்.
இருவர் ஒன்றாக வாழ்ந்தாலும் அவர்களுடைய எண்ணங்கள் வெவ்வேறானவை.
ஒரு பக்கத்தில் கதை மறுபக்கத்தில் கழுத்து நெரிப்பு.
ஒன்றாக வாழ்ந்தவாறே மறைமுகமாக விரோதம் காட்டுதல்.
ஒரு கண்ணுக்குள் குற்றினால் மறு கண்ணிலும் கண்ணிர் வருமாம்.
நெருக்கமுள்ளவர்களில் ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால் மற்றவருக்கும் துன்பம் வரும்.
28

சிங்களப் பழமொழிகள்
181.
182.
183.
184.
185.
86.
ஒரு நாட்டில் காற முடியாது, இன்னொரு நாட்டில் கொட்டாவி விட முடியாது.
நாட்டுக்கு நாடு போகும்பொழுது அந்நாட்டுக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு முறை அனுபவித்த துன்பத்தை துருவுபலகையால் அறியலாமாம்.
உணவுப் பஞ்சத்தை துருவுபலகை காட்டுமாம்.
ஒரு கல்லால் இரண்டு பறவைகளைக் கொன்றதுபோல்.
ஒரு முயற்சியில் இரண்டு வேலைகளைச்
செய்தல்,
ஒருநாள் அழுதாலும் உள்ளத் துன்பம் போய்விடுமா?
மரணவீட்டில் அழுதாலும் பயனில்லை.
ஒரு கோபத்தினால் கிணற்றுக்குள் பாய்ந்தால் பத்துக் கோபத்தினாலும் வெளியே ஏற முடியாது.
கோபம் நீக்க முடியாத பெரிய பிரச்சினையாகும்.
ஒரு மாடுதானும் இல்லாத இடத்தில் பத்துப் புலிகள் அழுதாலும் என்ன பயன்?
தன் கையால் தவறு ஏற்படாவிட்டால் தனக்கு துன்பம் வராது.
29

Page 23
தம்பிஐயா தேவதாஸ்
187.
188.
189.
190.
19.
192.
193.
ஒற்றையடிப் பாலத்தில் கைபிடி உடைந்ததுபோல்.
ஆபத்தில் அகப்பட்டிருக்கும்போது
மேலும்மொரு ஆபத்தில் அகப்படுதல். ஒட விட்டுவிட்டு வாலைப் பிடித்தல்.
ஆரம்பத்தில் பொருட்படுத்தாமல் இருந்து விட்டு
பிரச்சனை வந்த பின் கலவரப்படல் ஒட்டைக் குடத்தில் நீர் வார்ப்பது போல்.
பிரயோசனமற்ற வேலை.
ஓணான் கடித்த பெண்நாய் போல.
மெலிந்து இழைத்த பெண்ணைக் குறிப்பிடுவது.
ஒடும் மிருகங்களைப் போன்றே மெலிந்த பசுமாடும் ஒடுமாம்.
அடுத்தவர்கள் செய்வதைப் பார்த்துச் செய்தல். ஒடிய ஒட்டத்துக்கு ஏற்பவே மூச்சு வெளிப்படும்.
வேலை செய்த அளவுக்கு ஏற்பவே பலனும் கிடைக்கும்.
ஓணான் வைக்கோற் குவியலில் பாய்ந்தது போலாம்.
எந்தவித கவனமும் இல்லாத செயல்.
30

சிங்களப் பழமொழிகள்
194.
195.
196.
197.
198.
199.
200.
ஓணானுக்கு எண்ணெய் அடித்தது போல்.
ஒருவருக்கு மிகவும் கஷ்டமான செயல்களைச் செய்தல்.
ஒணானுக்கு தங்கநகை அணிவித்தது போல.
சிறியவனுக்கு மதிப்புக் கொடுக்கும்பொழுது அவன் வெளிப்படுத்தும் பெருமையுணர்வு.
ஒடத்தைவிட குல்லாக்கட்டை பெரிதாம்.
பிரதான பொருளைவிட உதவிப் பொருள் பெரிதாக இருந்தால் அழிவு ஏற்படும்.
கற்பூரம் எரிந்ததுபோல்.
எந்தப் பொருளும் மிஞ்சுவதில்லை.
கசப்பான வேப்பமரத்திலும் இனிமையான தேன்வதை கட்டுப்படுவதுபோல்.
பெற்றோர்கள் கெட்டவர்களானாலும் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.
கட்டில் கதிரைகள் இருந்தும் மரத்துக்குக் கீழ் தங்கவேண்டிய நிலைபோல.
எல்லாச் செல்வமும் இருக்கும் பொழுதும் துன்பத்தை அனுபவித்தல்.
கணவனுடன் கோபம் கொண்டு மூக்கை
அறுத்துக் கொள்ளுதல்.
குடும்ப உறவினருடன் கோபம் கொண்டு தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளல்.
31.

Page 24
20.
202.
203.
204.
205.
206.
2O7.
தம்பிஐயா தேவதாஸ்
கண் இல்லாத போது புத்தகம் வாங்கியது போல.
வயது முதிர்ந்து கண்பார்வை குறையும்போது புத்தகங்களினால் பயனில்லை.
கண்களை அழகு செய்ய உதட்டுக்கு மை பூசியதுபோல்.
அவசியமான விடயத்தைவிட அவசியமற்ற விடயங்களில் ஈடுபடல்.
கத்தி பொன்னால் ஆனாலும் குத்தினால் காயமே ஏற்படும்.
தன் பிள்ளைகள் செய்தாலும் குற்றம் குற்றமே.
கடலில் போட்டாலும் அளவுடன் போட (36.60 GLDITb.
எந்த வேலையைச் செய்தாலும் அளவுடனும் அமைப்புடனும் செய்யவேண்டும்.
கருவாட்டு வியாபாரத்துக்கு வந்து சந்தனத்தின் விலை கேட்கலாமா?
தான் வந்த விடயத்தைவிட வேறு விடயத்தைப்பற்றி அறிதல்.
கல்யாணத்துக்கு போக மறந்ததுபோல்.
பாரதூரமான ஞாபகமறதி
கட்டைப்பசு ஒடியதுபோல்.
ஒடுபவருடன் ஓடுதல் ஆடுபவருடன் ஆடுதல்.
32

சிங்களப் பழமொழிகள்
208.
209.
210.
211.
212.
213.
214.
கதிர்காமம் போயும் கிரிவிகாரையை பார்க்காமல் வந்தது போல்.
பிராயணம் செய்தபோது ஏற்படும் குறைபாடு.
கல்வி அழியாத செல்வமாகும்.
எவராலும் அழிக்க முடியாத செல்வம் கல்வியாகும்.
கரையில் இருப்பவர்கள் கப்பலைப் புரட்டியதுபோல.
தூரத்தில் இருந்து கொண்டே எதிரிகளை அழித்தல். கடுகு உண்ட மனிதனை மூக்கினால் அறியலாம்.
தாம் செய்த தவற்றைத் தாமே அறிவர் கட்டில் இருக்கும் போது தண்டுப் பந்தலில் தங்குதல் ஏன்?
நல்ல வழிகள் இருக்க கெட்ட வழியில் நடத்தல் ஏன்?
கட்டிக்கொண்ட மேளத்தை தட்டியே ஆக வேண்டுமாம்.
ஆரம்பித்த வேலையை முடித்தேயாக வேண்டும். கழுதைத் தோல் போர்த்த ஒநாயைப்போல்.
கெட்டவர்கள் நல்லவர்களைப்போல் நடித்தல்.
33

Page 25
தம்பிஐயா தேவதாஸ்
215.
216.
217.
218.
219.
220.
221.
222.
கல்லின் மேல் விதைப்பது போல்.
பொருத்தமில்லாத இடத்தில் முயற்சி செய்தல்.
கல்லை நகத்தினால் உடைக்கப் போனது போல்.
சத்தயில்லாமல் சண்டைக்குப் போதல். கல்லில் பூப் பூத்ததுபோல்.
நடைபெறாத நிகழ்ச்சி பற்றிய பழமொழி. கம்மாலையில் உள்ள நாய்போல்.
சூழலுக்கேற்ப மனிதனும் மாறியிருப்பான். கபறக்கொய்யாவுக்கு அடித்ததுபோல்.
சாதாரண தண்டனை வழங்கல்.
கடல் எத்தனை பெரிதாக இருந்தாலும்
தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியாது.
உலோப குணமுள்ள பணக்காரன் வீட்டில் எத்தனை பெரிய செல்வம் இருந்தாலும் அதனால் யாருக்கும் பிரயோசனமில்லை.
கடுகு விதைத்து உழுந்து அறுவடை செய்ய முடியாதது போல.
நல்லவை செய்தால் நல்லவையே கிடைக்கும். கம்பமும் கயிறும்போல்.
மிக நெருங்கிய இருவர் பற்றிய பழமொழி.
34

சிங்களப் பழமொழிகள்
223.
224.
225.
226.
227.
228.
கடல் கஞ்சியாக மாறினாலும் உணவு விருப்பமுள்ளவனுக்கு காணாதாம்.
சாப்பாட்டில் ஆசையுள்ளவன்
அதிகமாக சாப்பிடுவான்.
கடலில் வெட்டிப் போட்டாலும் அந்தச் சிறைக்குள் தள்ளவேண்டாம்.
பொருத்தமற்ற மணமகனுக்கு பெண்ணைக்
கொடுக்கவேண்டாம்.
கட்டை மனிதனையும் குட்டைப் புற்றையும் நம்பக்கூடாது.
கட்டை மனிதர்களும் புற்றுக்களும் ஆபத்தானவை என்று கூறும் பழமொழி.
கலியுகத்தில் முயற்சியைத் தவிர உறவினர் எதற்கு?
தன் முயற்சியே தனக்கு உதவியாக அமையும்.
கண்ணாடி வீடுகளில் இருந்து கொண்டு மண் வீடுகளில் இருக்கும் மக்களுக்கு கல் எறிதல் போல.
பிரச்சனையான இடங்களில் இருப்பவர்கள்
மற்றவர்களுடன் சண்டைக்குப் போகக்கூடாது.
கணவன் இல்லாத வீட்டில் கள்ளச்சாமியார் மன்மதனாம்.
முக்கியமானவன் இல்லாத இடத்தில் சாதாரண மனிதனும் பெரியவனாவான்.
35

Page 26
229.
230.
231.
232.
233.
234.
235.
236.
தம்பிஐயா தேவதாஸ் கள்ள மாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ள நல்லமாடும் கள்ளமாடாகுமாம்.
கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் கெட்டவர்களாக மாறுவர்.
கள்ளன் என்றால் அவனுக்கு நெஞ்சிடிக்கும்.
கள்ளனை நெஞ்சிடிப்பால் தெரிந்து கொள்ளலாம்.
கங்கை ஏழு காததுரம் இருக்கையில் கோவணம் கட்டியதுபோல்.
நிகழ்ச்சி நடைபெற அதிக நேரம் இருக்கையில்
அதற்கு முன்பே வெளிக்கிடல்.
கள்ளர்கள் சொல்லி விட்டா வருவார்கள்?
துன்ப நிகழ்ச்சிகள் எந்த வேளையிலும் ஏற்படலாம்.
கல்யாணம் செய்து வைத்து ஊரை விட்டுப்போனவன்போல.
பொய் சொன்னதால் சொந்த ஊரையே இழந்தமை.
கத்தியை கள்ளன் திருடினால் கம்மாலைக்காரனா பொறுப்பு?
ஒருவனுடைய பழி இன்னொருவன் மீது விழுதல்.
கத்திக்கு ஏற்ற தேங்காய்போல்.
ஒத்துப்போகக் கூடிய இருவர்.
கஞ்சியும் வேண்டும் மீசையும் வேண்டும்.
ஒன்றை இழக்காமல் மற்றதைப் பெற முடியாது.
36

சிங்களப் பழமொழிகள்
237.
238.
239.
240.
241.
242.
243.
கத்தி நல்லதென்றால் தோழ்பட்டையும் உடைந்து போகுமளவுக்கு வேலை செய்ய வேண்டி வருமாம்.
அளவுக்கு அதிகமாக நல்லவனாக இருக்கக் கூடாது.
கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் போல.
என்றும் அழியாதது. நிலையானது.
கல் மிதக்கிறது, காய்ந்த சாணம் தாழ்கிறது.
படித்தவர்கள் பின்னுக்கு போகிறார்கள். பணக்காரர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.
கல்லில் மலங்கழித்த பூனையைப்போல.
எதிர்காலத்தை எண்ணிப் பாராமல் காரியமாற்றிவிட்டு கலவரப்படல்.
கல்லில் நார் உரித்தல்போல.
மிகவும் கஷ்டமான காரியம்.
கடமையை செய்து விட்டு பக்கத்துக்குப் போனாலும் பரவாயில்லை.
கடமையைச் செய்துவிட்டு எங்கு போனாலும் பரவாயில்லை.
கடன் கொடுத்தால் நண்பனும் இல்லாமல் போவான், பணமும் இல்லாமல் போகும்.
பணம் கொடுத்தால் நண்பனும் இல்லாமல் போவான். பணமும் இல்லாமல் போகும்.
37

Page 27
தம்பிஐயா தேவதாஸ்
244.
245.
246.
247.
248.
249.
கழுதைக் கூட்டத்துக்கு புள்ளி போட்டதுபோல்
அடுத்தவரை ஏமாற்றி பணம் பறிக்கும் சூதுவிளையாட்டு.
கழுத்து இல்லாமல் தாலி எதற்கு
முக்கிய பொருள் இல்லாமல் முயற்சி வெற்றிபெறாது.
கல்யாண வீட்டுக்குப் போயும் செத்த வீட்டுச் சாப்பாடு கிடைத்ததுபோல்.
எதிர்பார்ப்புடன் போன பொருளுக்கு எதிர்மறையான பொருள் கிடைத்தல்.
கப்புறாளை இறைச்சியை எடுக்காமல் குழம்பை மட்டும் எடுத்துக்கொண்டது போல்.
பொய் வேடம் போடும் ஒருவனைப்பற்றிக் குறிக்கும் பழமொழி.
கருமத்தில் பிறந்த பிள்ளையையிட்டு வைத்தியன் என்ன செய்வான்?
கரும வினையால் பிறந்த பிள்ளையையிட்டு வைத்தியனால் ஒன்றும் செய்ய முடியாது.
கல் எறியும் விளையாட்டுக் கூடாது என்று காகங்கூடச் சொன்னதாம்.
விளையாட்டுக்காக எறிந்த கல்லானது கண் போன்றவற்றில் பட்டு பெரிய ஆபத்தையும் ஏற்படுத்திவிடலாம்.
38

சிங்களப் பழமொழிகள்
250.
251.
252.
253.
254.
255.
கடன் வாங்குதல் துன்பத்தின்
அன்னையாகும்.
கடன் பெறுதல் துன்பத்துக்கு மூல காரணமாகும்.
கறுப்போ வெளுப்போ தெரியாது.
ஒன்றுமே தெரியாத ஒருவர்.
கடித்த மூட்டைப் பூச்சியும் கடிக்காத
மூட்டைப் பூச்சியும் ஒன்றுதான்.
தவறு செய்தவர்களுக்கும் தவறு செய்யாதவர்களுக்கும் ஒரே தண்டனையை வழங்குதல்.
கடலாமையும் கோழியும் முட்டையிட்டது போல்.
கடலாமை அதிக முட்டையிட்டு விட்டு அமைதியாக
இருக்கும். ஆனால் கோழியோ ஒரு முட்டையிட்டு விட்டுக் கொக்கரிக்கும். போலிச்சத்தம் போடுபவர்கள்
பற்றிய பழமொழி.
கண் இல்லாதபோது புத்தகம் வாங்குவது வாசிக்கவா?
முக்கியமான பொருள் இல்லாதபோது சாதாரண பொருள் பிரயோசனமற்றது.
காகத்தின் அழகு பற்றி நரி வர்ணிப்பது போல்.
தந்திரமான முறைபற்றிய பழமொழி.
39

Page 28
தம்பிஐயா தேவதாஸ்
256.
257.
258.
259.
260.
261.
262.
காகம் செவ்விளநீர் குலையை மூடியதுபோல.
அழகான பொருளுடன் அவலட்சணமான பொருள் சேரும்போது ஏற்படும் நிலை.
காலம் பொன்னுக்குச் சமனானதாம்.
காலம் என்பது பெறுமதி மிக்கது.
காகம் வெள்ளை நிறம் என்றார்களாம்.
ஏற்றுக்கொள்ளமுடியாத பெரும் பொய்.
காய்ச்சல் நோயாளி தண்ணிர் கேட்பது போல்.
பரபரப்பான வேளைகளில் சிலர் ஏதாவது கேட்டு நிற்பர்.
காலை முதல் நீர் நிரப்பியும் மாலையில்
குடம் உடைந்ததுபோல்.
பெரிய எதிர்பார்புடன் தொடங்கப்பட்ட வேலை பயனற்றுப்போதல்,
காட்டுத்தாராக்கள் தண்ணிரில் பயமின்றி
விளையாடுவனபோல்.
தமக்கே உரிய இடத்தில் யாருக்கும் பயமின்றி வாழுதல்.
கானல் நீரை நோக்கி ஒடும் மான்களைப் போலவாம்.
பெரிய ஏமாற்றத்தை குறிக்கும் பழமொழி.
40

சிங்களப் பழமொழிகள்
263.
264.
265.
266.
267.
268.
காட்டை வெட்ட காட்டுத்தடியே தேவையாம்.
எவரும் அழிவதானால் அவருக்கு நன்கு தெரிந்த ஒருவராலேயே நடைபெறுகிறது.
காசுக்காரன் வண்டைப் போன்றவனாம்.
காசு அதிகமுள்ளவன் கண்டதுக்கும் செலவு செய்வான்.
காரியம் ஆகும்வரை எல்லோருமே செய்வது ஏமாற்றுவேலைதான்.
தங்கள் காரியம் நிறைவேறும்வரை எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் தான்.
காசு பணம் குறையும்போது அறிமுகம் அருகிப்போகுமாம்.
பணம் இல்லாவிட்டால் உறவினர் நண்பர் குறைவார்கள். அறிந்தவர்களும் அறியாதவர் போல் நடந்து கொள்வர்.
காட்டில் உள்ள அனைத்து மரங்களும் சந்தன மரங்களல்ல.
உலகத்திலுள்ள அனைவரும் நல்லவர்களல்ல.
காற்று வீசும் திசையில் பயிர் பச்சைகளும் சரியுமாம்.
ஒருவரின் குணத்தால் அவர் யார் என்று கண்டு பிடித்துவிடலாம்.
41

Page 29
தம்பிஐயா தேவதாஸ்
269.
270.
271.
272.
273.
274.
275.
காகம் எல்லா இறைச்சிகளையும் உண்ணும் ஆனால் அதன் இறைச்சியை உண்ண எதுவும் வருவதில்லையாம்.
ஒருவனை எல்லோரும் பயன்படுத்தவர். ஆனால் ஆபத்தில் அகப்பட்டால் அவனுக்கு உதவி செய்ய எவரும் வருவதில்லை.
கிணற்றுக்குள் ஊசி விழுந்ததுபோல்.
தேடிப் பெற முடியாத பொருள்.
கிராமத் தலைவனின் உரலைப்போல.
பல வேலைகளுக்கும் பயன்படும் ஒரே பொருள்.
கிராமத் தலைவனின் துப்பாக்கியைப் போல.
பிரயோசனப்படுத்தாத பொருள்.
கிராமத் தலைவன் தேவலோகம் போனதுபோல.
தேவைக்கு அதிகமாக விளம்பரப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து.
கிளையை வெட்டி காய் சாப்பிட்டவன் போல.
எதிர்காலத்தை எண்ணிப் பாராமல் சுயநலமாக வாழுதல்.
கிளைக்கு கிளை தாவும் பறவை நனைந்து சாகும்.
பல்வேறு வகையில் உள்ளத்தை சிதறவிடல் ஆபத்தை உண்டாக்கும்.
ad

சிங்களப் பழமொழிகள்
276.
277.
278.
279.
280.
281.
282.
கிளிபோல் பேசுதல்.
ஒரு பேச்சை மீண்டும் மீண்டும் பேசுதல்.
கிழங்கு ஒரு றாத்தல் வாங்க வந்தவன் சேனைப் பயிரின் எல்லையை விசாரித்தானாம்.
ஒரு காரியத்துக்கு வந்து இன்னுமொரு காரியத்தை விசாரித்துல்.
குறைகுடத்து நீர் தளம்பும்.
படியாதவர்கள் சஞ்சலப்படுவர்.
குருடர்கள் யானையின் உருவத்தைப் பற்றி சொன்னது போல.
உண்மையை அறியாமல் பேசுதல்.
குதிரைக்கு கொம்பு முளைத்தது போல.
செருக்கு உள்ளவனுக்கு மேலும் செருக்கு வருதல்.
குருடனுக்கு அழகிய படத்தை பரிசாக வழங்கியது போல.
எந்த பிரயோசனமுமற்ற பரிசை வழங்குதல்.
குதிரை மீது வைக்கப்பட்ட பூசணிக்காய் போல.
நிரந்தரமில்லாத செயல்.
43

Page 30
தம்பிஐயா தேவதாஸ்
283.
284.
285.
286.
287.
288.
289.
குரைக்கிற நாய் கடிக்காது.
வாயால் அதிகம் பேசுபவர்கள் செயல் வீரர்கள் அல்ல.
குறடு இருக்கும் பொழுது கையைச்
சுட்டுக் கொள்ள வேண்டாம்.
உரிய வழி இருக்கையில் குறுக்கு வழியில் முயற்சி செய்யக் கூடாது.
குட்டைப் பெண்ணையும் களிமண் புற்றையும் நம்பக்கூடாதாம்.
கட்டைப் பெண்ணும் மண்புற்றும் ஆபத்தானவை. குருவின் ரகசியம் தெரிந்தோர் துறவு விட்டோர் ஆவர்.
பிரிந்து சென்றோர் பழைய வரலாறு அறிவோர்.
குழந்தைகள் அழைந்த உணவு ருசியான போசனமாம்.
குழந்தைகள் மேலுள்ள அன்பு பற்றி பழமொழி. குடிசைவாசியே தீவைப்புக்கு உதவியாம். குறைபாடான கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கும் பழமொழி.
குருடனுக்கு இரவும் பகலும் ஒரே மாதிரியாம்.
நல்லது கெட்டது தெரியாத மூடர்களைக் குறிக்கும் பழமொழி.
44

சிங்களப் பழமொழிகள்
29O.
291.
292.
293.
294.
295.
296.
297.
குதிரைக்கு பற்கள் இருக்கவும் வேண்டும்; இரண்டு பணத்துக்கு வாங்கவும் வேண்டும்.
சிறிய பொருளைக் கொடுத்து பெரிய பொருளை வாங்க முயற்சித்தல். குளவிக் கூட்டுக்கு கல் எறிந்ததுபோல.
பலரையும் கோபப்படுத்துவது. குருடன் கல் எறிவது போல.
குறிக்கோள் இல்லாத முயற்சி.
குடிகாரனுக்கு சமயபோதனை எதற்கு?
குடிகாரனுக்கு என்ன புத்திமதி சொன்னாலும் பயனில்லை.
குற்றமற்றவர்கள் எவருமே இல்லையாம்.
தவறு செய்யாதவர்கள் உலகில் இல்லை.
குரக்கன் களி உண்ணப்போய் களியப்பம் உண்டது போல்.
ஒருவேலை செய்யப்போய் அதைவிட கூடாத பொருள் பெற்றுக்கொள்ளல்.
குருடன் பள்ளத்தில் இறங்கியதுபோல.
உயரத்தில் இருந்து இறங்கும்போது அவதானம் வேண்டும்.
குரங்கின் கையில் பூமாலை பூே
பெறுமதி தெரியாதவர் ஒருவரிடம் பெறுமதிமிக்க பொருள் போய்ச் சேருதல்.
45

Page 31
298.
299.
3OO.
301.
302.
3O3.
3O4.
டதம்பிஐயா தேவதாஸ்
குரங்குக்கு அறுபது வயது ஆனாலும் நிலத்தில் நடந்து போகாதாம்.
எவருடைய பிறவிக் குணத்தையும் மாற்றமுடியாது.
குளவி கூடு கட்டிய மரத்தை புண்ணியத்துக்கு வழங்கியதுபோல.
தமக்கு பிரயோசனமற்றதை தர்மத்துக்கு கொடுத்தல்.
குடிலுக்குப் போய் காவல் காத்தது பாய்க்குத்தான் தெரியும்.
உள்வீட்டுக் காரனுக்குத்தான் உள் விஷயம் தெரியும்.
குருட்டுக் கொக்கின் வெண்மை பறக்கும்போது தெரியுமாம்.
ஒருவரின் குணம் தெரியவருவது அவரது
உண்மையான வேலையின் போதாகும்.
குருடனுக்கு தயிரின் தன்மை பற்றிக் கூறியதுபோல.
தவறான முறையில் விளங்கப்படுத்துதல்.
குருடனும் முடவனும் கூத்துப் பார்த்ததுபோல்.
தங்களது லாபத்துக்காக ஏற்படுத்தும் ஒப்பந்தம். குளவிக்குக் கல் எறிந்ததுபோல். இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தல்.
46

சிங்களப் பழமொழிகள்
305.
306.
307.
3O8.
309.
31 O.
311.
குழம்பு கொதித்து வீடு எரிவதில்லை.
அதிக பாதிப்பு ஏற்படாத வேலை.
குழம்பு ருசியாவதற்கு சீனி போட்டது போன்று.
பொருத்தமில்லாத வேலை பற்றிய பழமொழி.
குதிரைக்குக் கொம்பு முளைத்தது போல.
அளவுக்கு அதிகமாக முரண்டு பிடிப்பவர்கள் பற்றிய பழமொழி.
குரங்குக்கு முன்பு வண்டியை பூட்டியது போல. முக்கியமானதை விட தேவையற்ற விடயத்தில் ஈடுபடல்.
கூடாத காலத்தில் வனவாசம் செய்.
கூடாத காலத்தில் இயலுமான வரை மனிதர்களிடம் இருந்து விலகி வாழ வேண்டும்.
பலவந்தப்படுத்தினால் போவானா?
பிறப்புவாசியை மாற்ற முடியாது.
கெட்ட நூறு பிள்ளைகளிைவிட நல்ல ஒரு பிள்ளை மேலாம்
அறிவில்லாத அதிக பிள்ளைகளைவிட அறிவுள்ள ஒரு பிள்ளை போதும்.
47

Page 32
தம்பிஐயா தேவதாஸ்
312.
313.
314.
315.
316.
317.
318.
கேசரசிங்கங்கள் எத்தனை பசியானாலும் புல்லைத் தின்னாது.
நல்லவர்கள் எந்தவொரு நிலையிலும்
தீயதைச் செய்யமாட்டார்கள்.
கையும் காலும் சுகமாக இருக்கும் காலத்திலேயே அன்பு இருக்குமாம்.
இலாபம் இருந்தால்தான் அன்பும் இருக்கும்.
கை ஆட்டாமல் வாய் ஆட்ட முடியுமா?
வேலை செய்யாவிட்டால் சாப்பாடு கிடைக்காது.
கை உயர்ந்தால் வயிறு குறையுமா?
உற்சாகமாக வேலை செய்தால் பலன் கிடைத்தேயாகும்.
கையில் இருக்கும் ஒரு பறவை, கூட்டத்தில் இருக்கும் ஆயிரம் பறவைகளைவிட மேலானதாகும்.
வேறு இடத்தில் இருக்கும் பெரிய பொருள்களை விட கையில் இருக்கும் பொருளை நழுவ
விடக் கூடாது.
கையை உடைத்து களவு எடுத்ததுபோல்.
இலாபம் பெறப்போகையில் நட்டம் ஏற்படுதல்.
கை பிடிக்க கிளையுமில்லை கால் வைக்க கொப்புமில்லை.
இரண்டு பக்கங்களாலும் துன்பம் வருதல்.
48

சிங்களப் பழமொழிகள்
319.
320.
321.
322.
323.
324.
கையில் இருந்த குருவிகளை விட்டுவிட்டு பற்றையில் இருக்கும் பறவைகளை பிடிக்கப் போனதுபோல.
கையில் இருந்த பொருளைவிட்டு விட்டு
இன்னொரு பொருளைத் தேடிப்போய் ஏமாறுதல்.
கையில் கருப்பட்டியும் தேங்காயும் இருந்தால் எந்தக் கிணற்றிலும் நீர் கிடைக்கும்.
கையில் பணம் இருந்தால் எதையும் செய்வதற்கு
பலரும் தயாராக இருப்பார்கள்.
கை நீட்டும் திசையிலேயே
நிழலும் செல்லுமாம்.
எவனோ ஒருவன் கை நீட்டும்பொழுது அங்கு இல்லாத தவறுகளும் தெரிய வருமாம்.
கொக்கு போலித்தவம் செய்ததுபோல்.
பொய்யாக நடித்தல்.
கொடிக்குக் காய் பாரமில்லையாம்.
பெற்றோருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பாரமாகத் தெரிவதில்லை.
கொன்ற கோழியை சுத்திகரிக்க நரிக்குக் கொடுத்ததுபோல்.
தந்திரக்காரனிடம் எதையாவது பாதுகாக்கக் கொடுத்தல்.
49

Page 33
தம்பிஐயா தேவதாஸ்
325.
326.
327.
328.
329.
330.
33.
கொல்லனின் வீட்டில் கத்தி இல்லையாம்
தனக்கு தேவையானதை பின்போடுதல்.
கொறுக்காய்ப்புளி உண்ட நரியைப்போல.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நிற்கும் நிலை.
கொடுத்த பொருள் நறுமணம் உண்ட பொருள் துர்நாற்றம்.
தர்மம் செய்தல் உத்தமமானது.
கொடியில் காய்த்த காய் கொடிக்குப் பாரம் இல்லையாம்.
எத்தனை கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளினால் ஏற்படும் கஷ்டம் பெற்றோருக்குத் தெரிவதில்லை.
கொடி ஏற்ற முடியாவிட்டால் கொடிக் கம்பத்தால் என்ன பயன்?
பொருள் என்றால் பிரயோசனமுள்ளதாக
இருத்தல் வேண்டும்.
கோழி தாராவின் முட்டையை அடைகாத்ததுபோல.
தன்னுடையது என்று எண்ணி அடுத்தவர்களின்
பொருளைப் பாதுகாத்தல்.
கோப்பிக்காலத்து வேலைபோல.
பழங்கால வேலைபோல்.
50

சிங்களப் பழமொழிகள் ܠ
332.
333.
334.
335.
336.
337.
338.
கோயிற் சேவலின் கொண்டைப்பூ வெள்ளையாம்.
அடிக்கடி காணப்படுபவரின் பெறுமதி குறைவாகும்.
சந்தன மரத்திலும் பாம்புகள் வாழுமாம்.
கெட்டவர்கள் நல்லவர்களுடனும் சேர்ந்திருப்பர்.
சட்டி விளக்கு நிலத்தில் இருந்தாலும் திரி இல்லாமல் ஒளி வருமா?
முக்கியமான பொருள் இல்லாது எதுவும் நடவாது.
சண்டைக்கு போக ஏணி தேவையில்லை; ஒரு பெண்ணே போதும்.
கெட்ட மனைவியால் கணவன்
சண்டைக்குப்போக வேண்டிவரும்.
சந்திரவட்டக்கல்லும் கல் என்று போதிலும் நீர் கசியுமாம்.
கடுமையானவர்களின் உள்ளத்திலும் இரக்கம் இருக்கவே செய்யும்.
சண்டைக்கு உதவாத வாள் வாழைமரம் வெட்டவா?
தேவைக்கு உதவாத பொருள் பயனற்றது.
சண்டைக்கு இரண்டு பேர் தேவையாம்.
தனியே சண்டை பிடிக்க முடியாது.
51

Page 34
தம்பிஐயா தேவதாஸ்
339.
340.
341.
342.
343.
344.
345.
சந்தன மரம் காயக் காய நறுமணம் வீசுமாம்.
நல்லவர்களை தீயவர்கள் திட்டினாலும்
அவர்களின் புகழ் உயர்ந்தே தீரும். சந்திரமண்டலத்துக்குப் போக ஏணி கட்டியது போல.
வெற்றிபெற முடியாத மூடத்தனமான வேலை.
சவரக்கத்தியால் கருவாடு வெட்டியது போன்று.
நல்லபொருட்களை தீய வேலைகளுக்குப் பயன்படுத்தல். A.
சந்திரனைப் பிடித்துத் தரும்படி கேட்டு அழுதல்.
கிடைக்காத பொருளை எதிர்பார்த்து கவலைப்படல்.
சந்தனக் காட்டிலும் மூஞ்சூறுகள் உண்டாம்.
நல்லவர்கள் வாழும் இடத்திலும் தீயவர்களும் இருக்கிறார்கள்.
சந்திரனைப் பார்த்தும்
நாய்கள் குரைக்குமாம்.
கீழ்மக்கள் உத்தமர்கள்மீதும் பழி சொல்லுவர்.
சத்தியபாலனும் பொய் சொல்லுவான்.
பெயரைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முடியாது.
52

சிங்களப் பழமொழிகள்
346.
347.
348.
349.
350.
351.
352.
சாப்பாடு தந்த உறுப்பை வெட்டிச் சாப்பிடுவதுபோல.
உதவி பெற்ற பின் தீங்கு செய்தல்.
சாப்பிட நினைத்து விட்டால் கபறகொய்யாவும் உடும்புதான்.
தேவை ஏற்படின் நல்லது கெட்டது தெரிவதில்லை.
சாரைப்பாம்பைக் கொல்ல வேண்டாம்.
அப்பாவிகளுக்கு துன்பம் கொடுக்கக்கூடாது.
சாரைப்பாம்புக்கு மந்திரம் கேட்காததுபோல.
சிறுகுணம் உடையவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.
சாப்பாட்டுத்தட்டில் மலங்கழித்தல் போல.
தனக்குத்தானே தீமை செய்தல்.
சாம்பலுக்குள் மறைந்திருந்த தீ
கொழுந்து விட்டு எரிந்ததுபோல.
காலம் கடந்து விட்டாலும் மீண்டும் மீண்டும் தொடரும் பிரச்சனைகளைப் பற்றிக் கூறுதல்.
சாம்பற் குவியலை வாயால் ஊதியது போல.
தேவையில்லாத வேலையில் ஈடுபட்டு மடமையை வெளிப்படுத்தல்,
53

Page 35
353.
354.
355.
356.
357.
358.
தம்பிஐயா தேவதாஸ்
சாம்பல் வாழைக்காய் இல்லாவிட்டால் கருப்பு வாழைக்காய் என்றாலும் பரவாயில்லை.
மிகப் பொருத்தமான பொருள் இல்லாவிட்டால் ஓரளவு பொருத்தமான பொருளை தெரிவு
செய்யலாம்.
சிறுவர்களை சேவைக்கு பயன்படுத்தக்கூடாதாம்.
துர்க்குணம் உள்ளவர்களுடன் பழகினால் ஆபத்து ஏற்படும்.
சிறுபோகமும் பெரும்போகமும் பாழடைந்ததுபோல்.
கிடைக்க இருந்தபொருளும் கையில் இருந்த பொருளும் இல்லாமல் போதல்.
சின்னம்ா வந்து சின்னப் பணியாரமாக்கினாளாம்.
எதிர்பார்ப்புடன் வந்து காரியத்தை நடத்தி அதில் பலன் பெறாமல் போதல்.
சிங்க எண்ணெயை விட்டு வைக்க தங்கப் பாத்திரம் வேண்டுமாம்.
உத்தமமான பொருள் தூயவனிடமே இருக்க வேண்டும்.
சிறுமீன் மேலே வரும்வரை கொக்கு தவம் இருப்பது போல.
போலி நடிப்பை விளங்கப்படுத்தும் பழமொழி.
54

சிங்களப் பழமொழிகள்
359.
360.
361.
362.
363.
364.
365.
சிறு குருவி பெருமலையை விழுங்க முயல்வது போல.
இயலாத வேலைகளில் ஈடுபட முயலுதல்.
சிறிது என்பதால் உண்ணவில்லை; பெரிது என்பதால் உண்ண முடியவில்லை.
பெரிது என்பதால் தாமதமாக ஆபத்தில்
விழுவது பற்றிய பழமொழி
சுக்கான் இல்லாத கப்பல் போல.
முக்கியமானவன் அற்ற வேலை.
சும்மா ஏற முடியாத ஏணியில் சுண்ணாம்புச் சுளகையும் கட்டிக்கொண்டு ஏறியதுபோல.
கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மேலுமொரு கஷ்டத்தை வருவித்துக் கொள்ளல்.
சும்மா இருக்கும் எனக்கு கல்யாணம் பேசிவிட்டுப் போனாலே போதும்.
கிடைக்காமல் இருப்பதைவிட கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்புடன் இருப்பது மகிழ்ச்சியாகும்.
சுங்கன் மீன் உள்ள குழிக்குள் கையைவிட்டது போல.
ஆபத்து விளைவிக்கும் மூடத்தனமான வேலை.
சுடச்சுடப் பலகாரம்போல்.
விரைவில் விற்று முடிதல்.
55

Page 36
தம்பிஐயா தேவதாஸ்
366.
367.
368.
369.
370.
371.
சும்மா ஆடிய பிசாசுக்கு தூபமேற்றிய சாம்பிராணியை கொடுத்ததுபோல்.
சும்மா இருந்த துர்குணனுக்கு உதவி செய்தது போல்,
சூரியன் உதிக்கும் வரைதான் பனித்துளி இருக்கும்.
நல்ல காலம் வரும் வரைதான் துன்பம் இருக்கும்.
சூடு என்பதால் குடிக்கவும் முடியாது; பால் என்பதால் வீசவும் முடியாது. இரண்டு தன்மை என்பதால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
சூரியனின் முன்னே மின்மினிப்பூச்சி எப்படி மின்னும்?
மிகப்பெரிய மனிதனின் முன்னே சாதாரண மனிதனின் வேலைகள் எடுபடாது.
சூட்டு ஒட்டிலிருந்து அடுப்புக்குள் விழுந்ததுபோல்.
ஒரு துன்பத்திலிருப்பவனுக்கு மேலுமொரு துன்பம் வருதல்.
சூரிய கதிர்களாலன்றி கண்களின் தன்மையாலேயே ஆந்தைக்கு கண்கள் தெரிவதில்லை.
தனக்கு வரும் துன்பம் தன்னாலன்றி மற்றவரால் வராது.
56

சிங்களப் பழமொழிகள்
372. செய்யும் செயலே வெற்றியைத் தரும்.
செய்யும் செயலுக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
373, செய்யாத வேலைக்கும் அடுத்தவர்கள்
செய்யும் வேலைக்கும் தானே செல்ல வேண்டுமாம்.
அடுத்தவர்களைக் கொண்டு செய்யும் வேலைகளினால் பலனில்லை.
374, செவிடனுக்கு கீர்த்தனை எதற்கு?
ஒரு பொருளை அனுபவிக்க முடியாதவனுக்கு அப்பொருளால் பிரயோசனம் இல்லை.
375. செவிட்டு யானைக்கு முன் வீணை
வாசிப்பதுபோல.
பிரயோசனமற்ற முயற்சி.
376. செல்லாக் காசை உண்டியல்
பெட்டியில் போட்டதுபோல.
தனக்கு நன்மை தராத பொருளை மற்றவர்களுக்கு கொடுத்தல்.
377. செய்வன திருந்தச் செய், இல்லாவிட்டால்
செய்யாமல் ஒடிப் போய்விடு.
ஏதாவது வேலையைச் செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் செய்யாமல் இருந்து விடுவது நன்று.
57

Page 37
தம்பிஐயா தேவதாஸ்
378.
379.
380.
381.
382.
383.
384.
செக்கில் கட்டப்பட்ட மாடு போல.
இடைவிடாது வேலை செய்பவனைப்பற்றிய பழமொழி
செய்யாத வைத்தியத்துக்கு கொசு எண்ணெய் ஏழு குப்பி வேண்டுமாம்.
ஏதாவது வேலையில் ஈடுபட விருப்பமில்லை யாயின் இல்லாத பொருளைக் கேட்பது சிலரின் குணமாகும்.
செய்த வினைகள் பலித்தே தீரும்.
செயலுக்கு ஏற்பவே பலனும் கிடைக்கும்.
சேற்றில் அமிழும் கிளையை மீட்க அதேபோல் இன்னொரு கிளை வேண்டுமாம்.
பெரியவன் ஒருவன் விழுந்துவிட்டால் அவனைத் தூக்கிவிட அவனைப்போன்று பெரியவனே தேவை.
சேவல் கூவ மறந்ததாம்.
பெரிய இழப்பைப்பற்றிக் கூறும் பழமொழி.
சேவலுக்கு முன்னால் வால் ஒடுதல்.
பின்புசெய்ய வேண்டியதை முன்பு செய்தல்.
சேவலின் மலமும் மருந்துக்குத் தேவைப்படுமாம்.
கணிக்கப்படாத மனிதர்களும் சில வேளைகளில்
கணிக்கப்படுவார்கள்.
58

சிங்களப் பழமொழிகள்
385.
386.
387.
388.
389.
சேற்றில் புதைந்த யானையை வெளியே இழுக்க அதைப்போன்ற யானையே வேண்டுமாம்.
பலசாலியொருவன் விபத்தில் அகப்பட்டால் அவனைப் போன்றவனாலேயே காப்பாற்ற முடியும்.
சொல்லும்போது அப்படியாம், செய்யும்போது இப்படியாம்.
சிலர் சொல்லுவது ஒன்று. செய்வது இன்னுமொன்று.
சொந்த ஊரில் முடியாவிட்டால் வேறு எந்த ஊரிலுமே முடியாது.
ஒருவன் தன் சொந்த ஊரிலே வாழ முடியாவிட்டால் வேறு எங்குமே அவனால் வாழ முடியாது.
சொன்னது கேளாத ஆசிரியர் அங்குசென்றால் அங்கு, இங்கு வந்தால் இங்கு.
சொன்ன சொல் கேளாதவருக்கு என்ன நடந்தாலும் ஒன்றுதான்.
சொல்பவன் என்ன சொன்னாலும் கேட்பவன் சுயபுத்தியுடன் கேட்கவேண்டுமாம்.
சொல்பவன் எதனையும் சொல்லிவிட்டுப் போகலாம். அதைக் கேட்பவன் புத்தியோடு தீர்வு காண வேண்டும்.
59

Page 38
390.
391.
392.
393.
394.
395.
396.
தம்பிஐயா தேவதாஸ்
சோறு சாப்பிடுவது வயிற்றுப் பசிக்காக அல்லவே?
அனைத்து வேலைகளுக்கும் ஏதோ காரணம் இருக்கும்.
சோற்றின் அருமை பசிக்களையின் போது தெரியுமாம்.
ஏதாவது பொருளின் பெறுமதி அது இல்லாத போதுதான் தெரியும்.
சோறாக இருப்பதைவிட அரிசியாக இருந்தால் பழுதடையாது.
சமையலின் போது சேமிப்பு வேண்டும்.
சோம்பேறியின் அகராதியில் முடியும் என்று சொல் இருக்காதாம்.
சோம்பேறியால் எதையும் செய்ய முடியாது.
சோறு உள்ள நாளில் பலாக்காய் கசந்ததுபோல.
அதிக பொருள் இருக்கும்போது சிறு பொருள்கள் மீது கவனம் செல்வதில்லை.
சோம்பல் பாவத்தின் முதல் தந்தையாம்.
துன்பத்துக்கு சோம்பலே காரணமாகும். சோம்பேறிக்கு வெயிலிலும் மழையாம்.
சோம்பேறி சாக்குப்போக்கு சொல்லி வேலை செய்ய மாட்டான்.
60

சிங்களப் பழமொழிகள்
397.
398.
399.
400.
401.
402.
403.
தலைக்கு மேல் கழுத்து எங்கு இருக்கிறது?
நிர்வாகியைவிட சேவகன் பெரியவனாகிவிட முடியாது.
தலைக்குள் மூளை இருக்க வேண்டுமாம்.
புத்தியுடன் வேலை செய்ய வேண்டும்.
தண்ணிருக்குக் கீழாக நெருப்பைக் கொண்டு செல்லல்.
கஷ்டமான சந்தர்ப்பத்திலும் தீவிரமாக செயற்படுதல்.
தலையில் பூப் பூத்தது போல். மிகவும் மகிழ்ச்சியான நேரம்.
தலையைத் தடவி கண்ணைப் பிடுங்கிக் கொள்ளல்.
சிறிய உதவி செய்து பெரிய காரியத்தை சாதித்துக் கொள்ளல்.
தரகனின் மகன் கோயிலை அசுத்தம் பண்ணினாலும் தெய்வம் கோபம் கொள்வதில்லையாம்.
தங்களுக்குள் ஒருவர் செய்யும் தவறுகளை பெரிதாக எடுப்பதில்லை.
தவளைகளை ஒன்று சேர்த்தல் போல.
கூட்டமாக பயணம் போகும்போது ஒருவர் மாறி ஒருவர் காணாமல் போதல்.
61

Page 39
404.
405.
406.
407.
408.
409.
41 O.
தம்பிஐயா தேவதாஸ் தட்டுபவனுக்கே கதவு திறக்கப்படும். முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.
தவறனைக்குள் உண்மை பேச இடமில்லையாம்.
குடிகாரர்கள் உண்மை பேசமாட்டார்கள்.
தவறணைக்காரனின் நாய் செத்தபோது வளவு நிறைய சனங்கள் வந்தனராம்.
தவறணைக்காரன் இறந்தபோது யாரும் வரவில்லையாம்.
தவறு செய்து பேச்சு வாங்குவதைவிட தவறு செய்யாமல் நித்திரை செய்வது மேலாம்.
ஒரு வேலையை சரியாக செய்ய முடியாவிட்டால் அவ்வேலையை செய்யாமல் விடுவது நன்று.
தச்சனின் வீட்டில் கதிரை இல்லையாம். பின்பு செய்யலாம் என்று தள்ளிப்போடுதல்.
தனிமரம் பூங்கா ஆகாதாம்.
தனிமனிதன் சமூகமாக மாட்டான்.
தங்கள் பை பின்பக்கமாம்
மற்றவர் பை முன்பக்கமாம்
தங்களுடைய தவறுகள் தெரியாமலும் மற்றவர்களுடைய தவறுகள் தெரியும்படியும் நடந்துகொள்ளல்.
62

சிங்களப் பழமொழிகள்
411.
412.
413.
414.
415.
416.
தனபாலாவும் திருட்டுத்தொழில் செய்கிறான்.
பெயரைக்கொண்டு ஒருவனை நல்லவன் என்று தீர்மானிக்கமுடியாது.
தம்புல்ல தேவாலயத்தை வணங்கிக்கொண்டு உடும்பைக் கொன்றவன் போல்.
நல்லவேலையையும் செய்துகொண்டு தீய வேலையும் செய்தல்.
தவறணைக்காரனின் மலர்ப்பூஜையை தூக்குவதற்கு அதிகம்பேர் வருவர்.
உணவுபானம் வழங்கப்படும் இடங்களுக்கு அதிகம்பேர் வருவர்.
தன் கண்களில் உள்ள தூசியைப் பார்க்காமல் அடுத்தவன் கண்ணைப் பார்ப்பது போல.
தமது பெரிய தவறுகளை கவனியாது மற்றவர்களின் சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டுதல்,
தந்தைமார் விதைத்தால்தான் தனையன்மாரால் அறுவடை செய்யமுடியும்.
பிள்ளைகளின் எதிர்காலத்தை தந்தைமாரே சிறப்பாக்குகின்றனர்.
தாமரை இலையில் காட்டுக்கோழி நடந்தது போல்.
மது பருகிய மனிதனின் தள்ளாடிய நடை
63

Page 40
தம்பிஐயா தேவதாஸ்
417.
418.
419.
420.
421.
422.
423.
தாய் ஊட்டிய பால் நினைவுக்கு வந்ததாம்.
பெரு விபத்து ஏற்பட்ட பின் உணர்வது.
தானியம் விதைத்தோர் தான் தானியம் கொண்டு செல்வர்.
நன்மை செய்தோர் நன்மையையும் தீமை செய்தோர் தீமையையும் பெறுவர்.
தாலி கட்டிய கழுத்தை தேடியதுபோல்.
மிகப்பெரிய ஞாபகமறதி
தாடி தீப்பற்றி எரியும்பொழுது சுருட்டுப் பற்றவைக்க வந்தானாம்.
ஒருவர் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது வேறொருவர் பலன்பெற முனைதல்.
தாகத்துக்கு உதவுவது கிணற்று நீர்தானாம்.
வறியவரே வறியவருக்கு உதவுவர்.
தாடி வளரும்வரை காத்திருந்ததுபோல்.
ஏதோ பொருளை எதிர்பார்த்து நீண்ட காலம் காத்திருத்தல்.
தாழங்காய் மேலே இருந்தாலும் ஒன்றுதான் கீழே இருந்தாலும் ஒன்றுதான்.
பிரயோசனமற்ற பொருள் எங்கிருந்தாலும் ஒன்றுதான்.
64

சிங்களப் பழமொழிகள்
424.
425.
426.
427.
428.
429.
திடீர் என்று முனகும் நோயாளி பசியில் இருக்கிறான்.
பசியானது முனகும் அளவுக்கு கொடுமையானது.
திறமையில்லாத கலைஞனே ஆட முடியாததற்கு நிலம் கோணல் என்பான்.
திறமையற்றவர்கள் ஏதாவது சாக்குப் போக்குச்
சொல்லுவார்கள்.
திராட்சைப்பழம் புளிக்கும் என்றதாம்.
சிலர் செய்யமுடியாத வேலையை
பிரயோசனமற்றது என்று கூறுவர்.
திமிங்கிலங்களுக்கும் சுறாக்களுக்குமிடையே சமாதானம் செய்து வைக்கப்போன நெத்தலி மீனைப்போல.
பெரிய மனிதர்களின் பிரச்சினைகளை
சிறுவர்கள் தீர்த்து வைக்கப்போதல்.
திஸ்ஸ வாவியின் மடைக்கதவு உடைந்ததுபோல்.
திடீர் என்று ஏற்படும் பெரிய விபத்து.
திசை நல்லதானாலும் தினம் கெட்டதானால் நீலஇரத்தினம் கிடைக்காதாம்.
காலம் கூடாதானால் நல்ல பெறுபேறு கிடைக்காது.
65

Page 41
430.
431.
432.
433.
434.
435.
தம்பிஐயா தேவதாஸ் திருட்டு நாய்க்கு தேங்காய்ப் பாதியால் எறிந்தது போல.
மூடத்தனமான தண்டனை வழங்குதல்.
தீவில் அகப்பட்ட நரி போல்.
தப்ப முடியாத விபத்து.
தீட்டுக்கு அகப்படவேண்டும் என்ற பயத்தில் காட்டில் ஒளிந்து இருந்ததுபோல்.
ஏதாவது ஒன்றிற்காகச் செய்யப்படும் மூடத்தனமான வேலை.
துத்திரிப்புல்லை பிடித்துக் கொண்டு வருவார்கள், பனைமரத்தையும் விழுத்திவிட்டுப் போவார்கள்.
வேலைபெற வருபவர்கள் அமைதியாக வருவார்கள். வேலை பெற்ற பின் கடுமையுடன் நடந்து கொள்வார்கள்.
துவர்ப்புச் சுண்டைக்காயை எண்ணெயில் பொரித்தாலும் பாலில் அவித்தாலும் துவர்ப்புத் துவர்ப்புத்தான்.
ஒரு பொருளின் இயற்கைத் தன்மையை மாற்ற முடியாது.
துத்திரிப்புற் கூட்டத்திலும் சிங்கங்கள் இருக்குமாம்.
எதிர்பாராத இடத்திலும் ஆபத்துக்கள் மறைந்து இருக்கும்.
66

சிங்களப் பழமொழிகள்
436.
437.
438.
439.
440.
441.
துர்க்குணனுடன் வாழ்வது எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணமாகும்.
கெட்ட மனிதனுடன் வாழ்ந்தால் துன்பங்கள் வந்தேதீரும்.
துணியின் அளவுக்கு ஏற்பவே சட்டையை வெட்ட வேண்டும்.
இருக்கும் பணத்துக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். துணியை அடவு வைக்கும் அளவுக்கு போதல்.
அதிகம் செலவு செய்தால் மிகவும் வறுமைக்கு தள்ளப்படுவர்.
தும்பற என்ற ஊருக்குப் போயும் படுக்க ஒரு பாய் கிடைக்கவில்லையாம்.
தும்பற பாய் உற்பத்திக்குப் பெயர்போன இடம். அப்படியான ஊரிலும் பாய் கிடைக்காமை பெரிய அப்பாக்கியம்.
தூக்குப் போடப் போன மனிதனும் குறைந்த விலையுள்ள கயிற்றைத் தேடினானாம்.
மனிதனின் கஞ்சத்தனம்.
தூண்டிலை விழுங்கவும் இரை தேவையாம்.
இலாபம் இல்லாமல் எவரும் எதையும் செய்யமாட்டார்கள்.
67

Page 42
442.
443.
444.
445.
446.
தம்பிஐயா தேவதாஸ் தூரத்தில் இருக்கும் மயில் இறைச்சியை விட அருகில் இருக்கும் காக இறைச்சி மேலானது.
தூரத்தில் இருக்கும் பெறுமதிமிக்க பொருளைவிட அருகில் இருக்கும் சாதாரண பொருள் மேலானது.
தூரத்தில் போகும் பாம்மைப் பிடித்து சேலைக்குள் போட வேண்டாம்.
தனக்கு தொடர்பில்லாத விடயத்தில் தலையிட்டு திக்குமுக்காடக் கூடாது.
தூத்துக்குடிக்குப் போனாலும் அந்தக் கையும் காலுந்தான்.
சோம்பேறி எந்த இடத்துக்குப்போனாலும் தன் சோம்பலை கை விடமாட்டான்.
தூரத்தில் இருக்கும் கம்மாலையை விட வீட்டிலிருக்கும் சாணைக்கல் மேலானதாம்.
தூரத்திலிருக்கும் நல்ல பொருளைவிட அருகில் இருக்கும் சாதாரண பொருள் மேன்மையானதாகும்.
தூசியைக் கிழறினால் அது தலை உச்சிவரை பறக்கும்.
தானே செய்த ரகசிய வேலையை தானே வெளிப்படுத்தி ஆபத்தில் விழுதல்.
68

சிங்களப் பழமொழிகள்
447.
448.
449.
450.
451.
452.
தூங்கும் சிங்கத்தின் வாயருகில் பாயும் மான்கள் உண்டா?
எத்தனை பெரியவனாக இருந்தாலும் தேவையில்லாமல் பிரச்சினைகளுக்கு போகக்கூடாது.
தூக்குமரத்தில் ஏறினாலென்ன வீட்டு நிலத்தில் இருந்தாலென்ன இரண்டும் ஒன்றுதானாம்.
வாழ்ந்தாலும் ஒன்றுதான் வீழ்ந்தாலும் ஒன்றுதான்.
தென்னம் மட்டையை விழுங்கியவன்போல்.
அகங்காரத்துடன் உடலை நிமிர்த்திக்கொண்டி
ருப்பவனைப் பற்றிய பழமொழி.
தெரிந்த விடயங்கள் சிறிதாம்; தெரியாத விடயங்கள் பெரிதாம்.
எவருக்கும் தெரிந்த விடயங்கள் சில. தெரியாத
விடயங்கள் பல.
தெரிந்து போனால் கதிர்காமம்; தெரியாமல் போனால் நிர்க்கதியாம்.
தயாராகப் போனால் வெற்றி பெறலாம். இல்லையேல் தோல்விதான்.
தெரிந்து செய்வது வியாபாரம்: தெரியாமல் செய்வது விவசாயம்.
வியாபாரத்துக்கு அறிவு வேண்டும். விவசாயத்துக்கு அவ்வாறில்லை.
69

Page 43
453.
454.
455.
456.
457.
458.
459.
தம்பிஐயா தேவதாஸ் தெரிந்தது சிறிது; தெரியாதது பெரிது.
ஒருவர் அறிந்தவைகளைவிட அறியாதவைகளே அதிகம்.
தேளுக்கு எண்ணெய் தெளித்தது போல். ஒருவருக்கு மிகவும் கொடுமை செய்தல்.
தேசத்துக்கு ஏற்றபடி வாழ்க.
இடத்துக்கு ஏற்றபடி வாழவேண்டும்.
தேங்காய்ப் பாதியைக் கொண்டு சென்ற நாயை தேங்காய்ப் பாதியாலே அடித்ததுபோல்.
நட்டத்தை இரண்டு மடங்காக்கும் பெரிய மூடன்.
தேங்காய் திருடுவது அல்ல, அதை தொங்கப் போட்டுக்கொண்டு இறங்கு என்று அடித்ததுபோல.
ஏதாவது சொல்லும் குற்றவாளியின் வேலை.
தேன்பாணியாலும் போதை வருவதுண்டாம்.
நல்லபொருளானாலும் அளவுக்கு அதிகமானால் தீமையை ஏற்படுத்தும்.
தேன் வதை கட்ட அதிக நாட்களானாலும் அதை அழிக்க அதிக நாட்கள் தேவையில்லை என்று சொன்னதுபோல். ஒருபொருளை ஆக்க அதிக நாட் செல்லும் அதை அழிக்க ஒருநாள் போதும்.
70

சிங்களப் பழமொழிகள்
460.
461.
462.
463.
464.
465.
466.
தேனை எங்கே வைத்தாலும் இனிய சுவைதானாம்.
நல்லவர் என்றும் நல்லவரே.
தேவை ஏற்படும்போது உறவு முறையும் அற்றுப்போகும்.
தேவை ஏற்படும்போது நீதி நியாயம் எல்லாம்
மறைந்துவிடும்.
தேவை ஏற்படும்பொழுது கபறக்கொய்யாவும்
உடும்பாம்.
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும்.
தேன் பானைக்குள் விழுந்த
சித்தெறும்பைப் போல்.
காதல் வயப்பட்ட இளைஞன் காதலி பின்னே செல்லுதல்,
தேன் வதையை உடைப்பது கையை நக்குவதற்காகவா?
மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது பிரயோசனம் பெறுவதற்கே தவிர சாமானிய வேலைக்கல்ல.
தேயிலையும் சீனியும்போல.
பொருத்தமான விடயத்தைக் கூறும் பழமொழி.
தேநீர் என்றால் தேநீர், பால் என்றால் பால்.
ஒன்று என்றால் ஒன்று இரண்டு என்றால் இரண்டு.
71.

Page 44
தம்பிஐயா தேவதாஸ்
467.
468.
469.
470.
471.
472.
473.
474.
தேவலோகத்தில் காகம் எப்படி வரும்?
துர்க்குணமுள்ளவன் மேலானவர்கள் இருக்கும் இடங்களுக்கு செல்ல மாட்டான்.
தைக்கும் ஊசி தங்கமானாலும் என்ன பயன்?
மிகவும் சிறிய இலாபத்தினால் பயன் இல்லை.
தொழுவத்தில் மாடு இல்லாவிட்டால்
புலி அழுதும் என்ன பயன்?
தனக்கு பிரயோசனமான பொருள் நாட்டில் இல்லையென்றால் பயனில்லை.
தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன் தந்திரம் செய்வதுபோல.
மிக முக்கியமான வேளையிலும் தந்திரம் செய்தல்
நனைந்த சேவலைப்போல்.
அப்பாவி பற்றிய பழமொழி.
நடனத்துக்கு ஏற்ப தாளம் போட்டதுபோல்.
ஒன்று போன வழியில் மற்றதும் போதல்,
நரிக்குக் கோழிக்கூட்டைப் பொறுப்புக் கொடுத்தது போல்.
அநியாயக்காரரிடம் அப்பாவிகளைக் கொடுத்தல்.
நரி அலங்கரிக்கப்பட்ட செடி கொடிக்குள் அகப்பட்டதுபோல். -
தந்திரமானவனொருவன் ஆபத்துக்குள் அகப்படல்.
72

சிங்களப் பழமொழிகள்
475.
476.
477.
478.
479.
480.
நல்லதற்கும் கெட்டதற்கும் வாய்தான் a5TJ6OOTLDTLb.
வாயினால் நல்லதைப் போலவே கெட்டதும்
நடைபெறும்.
நட்சத்திரத்தை விழுங்கிய மனிதனைப் (SuT6).
மிகவும் தந்திரமுள்ள மனிதன்.
நனைந்த சேவலுக்கு கூதல் தெரியாதாம்.
துன்பத்தை அனுபவித்த ஒருவனுக்கு மேலும் துன்பம் பெரிதாக தெரியாது.
நகம் இல்லாவிட்டால் புலியானாலும் என்ன பயன்?
உயர் குலத்தில் பிறந்தாலும் பணம் இல்லாவிட்டால் அவருடைய உயர்நிலையை காப்பாற்ற முடியாது.
நடனமாடும் கப்புறாளைக்கு குங்குலியம் வரம் கொடுத்தது போல.
எதிர்பார்ப்புடன் இருந்தவனுக்கு அனுமதி கிடைப்பது.
நண்பனை விரோதியாக்க விரும்பினால் அவனுக்கு கடன் கொடுங்கள்.
கடன் கொடுப்பதிலுள்ள தீமை.
73

Page 45
தம்பிஐயா தேவதாஸ்
481.
482.
483.
484.
485.
486.
நரகத்துக்குச் சென்றாலும் முதன் முதலில் செல்ல வேண்டுமாம்.
எந்த விடயமானலும் முதலில் செய்ய வேண்டும்.
நரிக்கு குடலை சோதிக்க அனுமதி கொடுத்ததுபோல்.
தந்திரமானவனுக்கு ஏதாவது வேலையைப்
பொறுப்புக் கொடுத்தால் அழிவுதான் வரும். நவக்கிரங்களில் ஒன்பதும் நல்லனவானாலும் பத்தாவது கிரகம் கெட்டதானால் கஷடமே.
ஒன்பது கிரகங்களும் நன்றாக இருந்து பலனில்லை.
பத்தாவது கிரகமாகிய மனைவி நல்லவளாக இருக்க
வேண்டும்.
நகத்தால் கிழிக்கக் கூடிய மரத்தை கோடரியாலும் கொத்த முடியாமல் போனதாம்.
சிறிதாக செய்யக்கூடிய வேலை காலவோட்டத்தில் செய்ய முடியாத பெரிய வேலையாக மாறிவிடும்.
நரிக்கு என்ன மாலை மரியாதை?
துர்க்குணர்களுக்கு மரியாதை தேவையில்லை.
நல்ல ஹோட்டலில் இன்னும் சாப்பிடவில்லை.
நோகும்படியாக இன்னும் அடி வாங்கவில்லை.
74

சிங்களப் பழமொழிகள்
487.
488.
489.
490.
491.
492.
493.
நல்லது செய்து பெற முடியாவிட்டால் தீயது செய்து பெறலாம்.
இரந்து கேட்டு முடியாவிட்டால் பலாத்காரத்தினால் பெறலாம்.
நடந்த கால் ஆயிரம் பெறும்.
நடந்தால் நல்வாழ்வுக்கு நன்மை தரும்.
நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமாம்.
எமது துன்பங்களுக்கெல்லாம் நாம் பேசும்
பேச்சே காரணமாகும்.
நரைத்த முடிக்கு சிறிதாவது மதிப்புக் கொடுக்க வேண்டும்.
வயது போனவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
நல்ல இல்லாள் இருந்தாள் என்றால் வீட்டில் விளக்கேற்ற வேண்டியதில்லையாம்.
வீட்டுத் தலைவியின் அழகையும் அருமையையும் பற்றிக் கூறும் பழமொழி. நல்லகாலம் வரும்போது குழியைத் தோண்டு.
பொருத்தமான காலம் வரும்போது வேலையை i v .. செய்து முடிக்க வேண்டும்.
நாகபாம்பு புடையன் பாம்பைக் கண்டதுபோல்.
எதிரிகள் இருவர் சந்தித்துக் கொள்வது.
75

Page 46
தம்பிஐயா தேவதாஸ்
494.
495.
496.
497.
498.
499.
நாட்டியக்காரன் விழுந்தால் அதுவும் ஒரு நாட்டியம் தானாம்.
தலைவன் ஒருவன் தவறு விட்ாலும் تیکہ(|gلن
நன்மையாகவே கருதப்படும்.
நாய் புல்லைத் தின்னுவதுமில்லை. மாட்டைத் தின்ன விடுவதுமில்லை.
சிலர் தாம் வேலை செய்வதுமில்லை மற்றவர்களை செய்ய விடுவதுமில்லை.
நாய்களுக்கு உரித்த தேங்காயைக் கொடுத்தது போல்.
பயன் அடைய முடியாத அளவிற்கு ஏதாவது கொடுத்தல்.
நாய்க்கு வேலையுமில்லை மெதுவான நடையுமில்லை.
சிலர் வேலை செய்யாமல் இருந்து கொண்டே பெரிய வேலை செய்பவர்போல் காட்டிக்கொள்வர்.
நாயின் வேலையை கழுதை செய்வதுபோல்.
தன் வேலையை தானே செய்யவேண்டும். தவறினால் சங்கடம் ஏற்படும்.
நாய் குரைத்து நிலவு கீழ் இறங்குமா?
சாதாரண ஒருவனின் சத்தத்துக்கு பெரியவன் ஒருவன் கீழ்வரமாட்டான்.
76.

சிங்களப் பழமொழிகள்
500.
50.
502.
503.
504.
505.
நாயிடம் சொல்ல அது வாலுக்குச் சொன்னதாம்.
ஒருவரை வேலை செய்யும்படி சொன்னால் அதை அவர் இன்னுமொருவருக்கு பொறுப்புக் கொடுப்பது.
நாய்களுடன் தங்கினால் நாய்த்தெள்ளுகளுடன் தான் எழ வேண்டும்.
தவறானவர்களுடன் பழகினால் அவர்களுக்கு கிடைக்கும் அவப் பெயர்களையும் பெற வேண்டிவரும்.
நாய் நிற்கும்பொழுது தடி இல்லை. தடி இருக்கும்பொழுது நாய் இல்லை.
இரண்டு பொருட்கள் தேவைப்படும் பொழுது ஒன்று கிடைக்கும் மற்றது கிடைப்பதில்லை.
நாட்டைச் சுற்றி வேலி அடைத்தாலும் நாவைச் சுற்றி வேலி அடைக்க முடியாது.
அரட்டைப் பேச்சை நிறுத்த முடியாது.
நாக்கு நுனியில் தேன் இருந்தாலும் உள்ளம் முழுவதும் விஷமாம்.
நன்றாகப் பேசினாலும் உள்ளத்தில் வஞ்சகமுள்ள மனிதன்.
நாவிதனின் குப்பைக் கூடைபோல.
சிக்கலான கணக்கு வழக்குகளைப் பற்றிக்
கூறும் பழமொழி.
77

Page 47
தம்பிஐயா தேவதாஸ்
506.
507.
508.
509.
510.
511.
512.
நாய்களுக்கும் சோறு வேண்டாம் என்ற நிலைபோல்.
நாய்களுக்குக்கூட வேண்டாம் என்ற அளவுக்கு உணவு அதிகமாக இருத்தல்.
நாய் குரைத்தால் யானை பயப்படுமா?
சாதாரண ஒருவனின் மிரட்டலுக்கு பலசாலி பயப்படமாட்டான்.
நாய் மனிதனைக் கடித்தாலும் மனிதன் நாயைக் கடிக்கமாட்டான்.
உத்தமர்கள் தளம்புவதில்லை.
நான் சாப்பிடும் விதம்பற்றி அடுப்பு அறிந்து சொன்னதுபோல்.
ஒருவரது ஏழ்மை வாழ்க்கை வெளிப்படல்.
நாளை கிடைக்கவிருக்கும் யானையைவிட இன்று கிடைக்கும் ஒட்டகம் மேலானது.
நாளை கிடைக்க இருக்கும் பெரிய பொருளைவிட இன்று கிடைக்கும் சிறிய பொருள் மேலானது.
நாணயக் கயிறு போட்டதுபோல.
தமக்கு ஏற்றவாறு மற்றவரை வைத்திருத்தல்.
நினைத்து நடக்காது; நினையாதது
நடக்கும்.
சில வேளைகளில் நினைத்தது நடக்காது நினையாதது நடக்கும்.
78

சிங்களப் பழமொழிகள்
513.
514.
515.
516.
517.
518.
519.
நித்திரை செய்யும் புலியை எழுப்பியதுபோல்.
இல்லாத ஆபத்தை தானே ஏற்படுத்தல். நிலத்தில் உள்ள குரங்குகள் நீரில் உள்ள முதலைகளை கல்யாண ஜோடி சேர்த்தது எப்போது?
ஏதாவது ஒரு காரியத்தில் அதற்கு உரியவர்களே
ஈடுபடவேண்டும்.
நிரந்தரமற்ற உடலுக்கு நிரந்தரமான மருந்து ஏன்?
உடலின் நிலையாமையைப் பற்றிக் கூறும் பழமொழி.
நிலையில் அடிப்பாகத்தில் இருக்கும் பூனையைப் போல்.
நம்பமுடியாத ஒருவன்.
நித்திரைக்கு சுகம் தேவையில்லையாம்.
நித்திரை வந்தவுடன் பாயோ தலையணையோ
தேவையில்லை. எந்த இடத்திலும் நித்திரை கொள்ளலாம்.
நீர்வீழ்ச்சியில் இறங்கி கரையை ஏளனம் Gaguiu Lu6u6ör G<6No.
நன்றி உணர்வில்லாதவன்.
நீரோடையில் கருப்பட்டியை மறைத்தல்.
அழியும் இடத்தில் பாதுகாப்புக்காக
பொருளொன்றை வைத்தல்.
79

Page 48
தம்பிஐயா தேவதாஸ்
520.
521.
522.
523.
524.
525.
526.
நீர்க் காகத்தின் முதுகில் உப்பை மறைத்து
வைத்தல்.
மறைந்து போகும் இடத்தில் எதையாவது வைத்தல்.
நீரிலிருந்து நெருப்பு எழுந்ததுபோல.
மகிழ்ச்சியுடன் துன்பமும் உண்டாதல்.
நீரில் கிடக்கும் மீனைவிட கையில்
இருக்கும் மீன் துண்டு மேலானது.
தொலைவில் இருக்கும் பொருளைவிட கையில் இருக்கும் பொருள் மேலானது.
நீந்தத் தெரியாமல் நதிக்குள் பாய்ந்ததுபோல்.
தராதரம் தெரியாமல் வேலையில் ஈடுபட்டால் ஆபத்தே ஏற்படும்.
நீதிபதி தவறு விடும்பொழுது மனிதனொருவன் ஆறு அடி உயரத்தில் தொங்குவான்.
தவறான தீர்ப்பு ஒருவனை மரண
தண்டனைக்குள்ளும் தள்ளிவிடும். நீர் சூடாகும்வரை நண்டு நடனமாடுமாம்.
ஆபத்துக்கு முன் அமைதி கிடைக்கும்.
நெருப்பில் எரிந்த ஒருவரை வெய்யில் காய வைத்தார்களாம்.
ஆபத்தில் இருப்பவனுக்கு இன்னுமொரு ஆபத்து ஏற்படுதல்.
80

சிங்களப் பழமொழிகள்
527.
528.
529.
530.
531.
532.
533.
நெருப்பில் புழுக்களைப் போட்டதுபோல்.
பெரிய அநியாயத்தைக் கூறும் பழமொழி.
நெருப்புக்கரியைப் பிடித்தால் கை எரியும்; அணைந்த கரியைப் பிடித்தால் கை கறுக்கும்.
துர்குணன் ஒருவனின் பக்கத்தில் இருந்தாலும் தள்ளி இருந்தாலும் துன்பமே ஏற்படும்.
நெல் முற்றியபோது வேலியை பிரித்து விட்டது யார்?
நற்பயனை அனுபவிக்க முனையும்பொழுது அதற்கு அழிவு ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது. நோய் வாய்ப்பட்ட காகம் பலாப்பழம் உண்டதுபோல்.
வேண்டாவெறுப்புடன் ஆறுதலாக வேலை செய்தல்.
நோய்க்காகம் கொடி சாப்பிட்டதுபோல். வேண்டா வெறுப்புடன் வேலை செய்தல்.
நோயாளி சுகமடைவது சூனியம் செய்தல்ல.
ஒழுங்கான முறைகளில் செய்தாலே எந்த வேலையும் நடைபெறும்.
நோயாளிக்கு இல்லாத மருந்து எதற்காக?
தேவையான நேரத்தில் பொருத்தமான பொருள் இருக்க வேண்டும்.
81

Page 49
தம்பிஐயா தேவதாஸ்
534.
535.
536.
537.
538.
539.
540.
பருவம் தப்பிப் பழுத்த காயைப்போல. எதிர்பாராமல் கிடைத்த பொருள்போல.
பாய்வதற்கு முன் யோசித்துப் பார்.
ஒருவிடயத்தில் ஈடுபட முன்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பறிக்க முடியாத பூக்கள்
புத்த பூஜைக்கு போகட்டும் என்பானாம்.
பெறமுடியாத பொருளை வேறு ஒருவருக்கு கொடுத்தல்.
பழக்கமில்லாத வாளை எடுத்தால் வாழை மரத்தைக் கூட வெட்ட முடியாதாம். சரியான வழியிலேயே ஈடுபடுபவர்
தவறான வழியில் செயற்பட முடியாது.
பன்றிக்கு இன்னுமொரு பன்றி உதவி செய்யாதாம்.
தன் வேலையைத் தானே செய்ய வேண்டும்.
பன்றி பாற்சோற்றைக் கண்டால் ஓங்காளம் எடுக்குமாம்.
ஒருவருக்கு நல்லதாக தெரிவது இன்னொருவருக்கு கெட்டதாகத் தெரியும்.
பாற்கடலில் சந்திரன் உதித்ததுபோல்.
மிகவும் மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பம்.
82

சிங்களப் பழமொழிகள்
541.
542.
543.
544.
545.
546.
பன்றியின் முன்னே முத்துக்களைப் பரப்பியதுபோல்.
அருமை பெருமை தெரியாதவரிடம் பெறுமதி மிக்கப் பொருள் போய்ச் சேருதல்.
பன்றியின் வாயில் தங்கத்தைக் காட்டவேண்டாம்.
துர்க்குணமுள்ளவர்களை உயர்பதவியில்
நியமிக்கக் கூடாது.
பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக பிணைத்ததுபோல்.
பொருத்தமில்லாத இருவரை ஒன்றாக இணைத்துவிடல்.
பத்துக் கற்கள் எறிந்தால் ஒரு கல்லாவது படுமாம்.
ஒரு முயற்சியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது மூன்றாவது முறைகளில் வெற்றிபெறலாம்.
பனை ஒலையில் கிரவல் மண்ணைக் கொட்டியது போல்.
கரடுமுரடான வேலை.
பகலில் மிகேல் இரவில் தானியல்.
ஒருவர் முன்னுக்கு ஒரு மாதிரியும் பின்னுக்கு வேறு மாதிரியும் நடந்து கொள்ளல.
83

Page 50
தம்பிஐயா தேவதாஸ்
547.
548.
549.
550.
551.
552.
553.
பகல் நட்சத்திரம் தெரிதல்.
பாரதூரமான தவறு ஏற்படுதல்.
பல் இருக்கும்பொழுதே தேங்காயை கடிக்கும்படி சொன்னானாம்.
சந்தர்ப்பம் இருக்கும்பொழுது காரியத்தில் ஈடுபடவேண்டும்.
பண்டிதனால் ஒற்றையடிப் பாலத்தில் செல்ல முடியாதாம்.
பண்டிதன் பாலத்தின் குறைகளை நினைத்துப்
பார்ப்பான். மூடன் அவ்வாறு எண்ணுவதில்லை.
பழக்கமில்லாத திருமணத்தைவிட பழக்கமான விதவை நோன்பு உயர்ந்ததாம்.
பழக்கமானவரை திருமணம் செய்தல் நன்று.
படுத்த பாய்க்குக்கூட சொல்லாமற் போனதுபோல்.
திடீர் என்று யாருக்கும் சொல்லாமல் செல்லல்.
பலாப்பழத்தின் மீதும் இடி விழுமாம்.
விபத்து என்பது எவருக்குமே வரும்.
பல்லவராயன் இறந்தாலும் சிரிப்பானாம்.
பல் நீண்டவன் இறந்தால் அவனது பற்கள் சிரிப்பதுபோல் இருக்கும்.
84

சிங்களப் பழமொழிகள்
554.
555.
556.
557.
558.
559.
பள்ளப் பகுதியாலேயே தண்ணிர் வழிந்தோடும்.
பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகள் கடைசியில் சிறு மனிதர்கள் மீதே விழும்.
பரபரப்பில் அடுப்புக்குள் பாய்ந்தவன்போல்.
ஆபத்தில் இருப்பவன் மேலுமொரு ஆபத்துக்குள் அகப்படுதல்.
பரிசுபெற்ற பொருளை பரிசாக வழங்குதல் அதிசிறந்த பரிசாகும்.
பரிசாகப்பெற்ற பொருளை இன்னுமொருவருக்கு
பரிசாக வழங்குதல்.
பதநீர் பருகுவதற்கு கிணற்றைத் தூக்கியது போல்.
ஒன்றைப் பெற இன்னுமொன்றைச் செய்தல்.
பல் இல்லாத போது கரும்புத்துண்டு கிடைப்பது நெருப்பில் எரிக்கவா?
பொருத்தமான காலத்தில் பொருத்தமான பொருள் களிலிருந்து பிரயோசனம் பெற வேண்டும்.
பணக்காரனுக்கு சுவர்க்கம் போவது Bió)LJLD6)6).
பணக்காரன் தன் பணபலத்தால் பல தவறுகள் செய்கிறான்.
85

Page 51
தம்பிஐயா தேவதாஸ்
56O.
561.
562.
563.
564.
565.
பயந்த நாவிதனைக் கண்டால் ஆடு கூட தாடியைக் காட்டுமாம்.
யாராவது பயந்தவர்களைக் கண்டால் எவரும்
எடுப்பாக நடந்துகொள்வர்.
பண்டிதர்கள் நூறு பேரை வென்றாலும் மூடன் ஒருவனை வெல்ல முடியாதாம்.
ஒரு கருத்தைச் சொன்னால் பண்டிதர்கள் ஏற்றுக் கொள்வர். ஆனால் மூடர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பற்றைக்கு அருகில் நீங்கள் போக வேண்டுமே தவிர பற்றை உங்களுக்கு அருகே வராது.
நாமே சந்தர்ப்பத்தை நோக்கிப் போகவேண்டும்.
பலன் சொல்லாமல் கீரை பகிர்ந்ததுபோல்.
நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லுதல்.
பனி உள்ள மலரில் வண்டு எப்படி வரும்?
உலோபிப் பணக்காரர்களிடம் உதவி பெற எவரும் முன்வரமாட்டார்கள்.
பழுத்தி பழம் இருக்க பச்சைக்காய் விழுந்ததுபோல.
வயது போனவர்கள் உயிருடன் இருக்க இளையவர்கள் இறந்துபோதல்.
86

சிங்களப் பழமொழிகள்
566.
567.
568.
569.
570.
571.
பட்டம் பெறுவதற்கு முன்பு
நாட்டைப்பற்றிச் சிந்தி.
பெயர் புகழ் பெறுவதற்கு முன்பு தாய் நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
பணக்காரன் பம்பரம் போன்றவனாம்.
காசுக்காரன் கண்டகண்ட வேலைகளிலும் ஈடுபடுவான்.
பசிக்கொடுமையால் மெலிந்து போனதைப்போல.
மூடத்தனமான ஆணவத்தால் அழிந்து போதல் பற்றியது.
பழக்கமில்லாத நாட்டில் விளக்கமில்லாத உரையாடல் நல்லதல்லவாம்.
வெளியூருக்குப் போய்த் தன் பெருமைகளைச் சொன்னால் அவர்களின் அவச்சொல்லைக் கேட்கவேண்டிவரும்.
படிக்காதவனின் தலை பிசாசின் தொழிற்சாலையாகும்.
கல்வியறிவு இல்லாதவன் தான் நினைத்தபடி
நடந்து கொள்வான்.
பணம் கடவுளின் தம்பியாம்.
கடவுள் செய்யும் செயல் அனைத்தையும் பணம்
செய்வதால் பணம் கடவுளின் தம்பியாம்.
87

Page 52
தம்பிஐயா தேவதாஸ்
572.
573.
574.
575.
576.
577.
பலத்தால் முடியுமானவனுக்கே நாடு உரியதாம்.
அநீதிக்கும் லஞ்சத்துக்கும் அகப்பட்டு தனது பலத்தை வெளிப்படுத்து பவனைப்பற்றிக் கூறும் பழமொழி.
பழம் நிறைந்த மரத்தை நோக்கித்தான் குருவிக் கூட்டம் வருகிறது.
பலன் கிடைக்கும் இடத்தை நோக்கித்தான் அனைவரும் வருகின்றனர்.
பகிடி தெரியாத மனிதனுக்கு வில் பூட்டிய உலக்கையால் இடித்தாலும் தெரியுமா?
பகிடியை விளங்கிக் கொள்ள முடியாத மனிதனால் வேறு எதையும் விளங்கிக் கொள்ளமுடியாது. பலாக்காய் உள்ள இடத்துக்கு சோறு போனால் எப்படி?
சிறுபொருளைவிட பெரிய பொருளை மதித்தல்,
பால் சுரக்க வேண்டுமானால் அழ வேண்டுமாம்.
ஏதாவது வேண்டுமானால் கேட்டால்தான்
பெறலாம்.
பாலும் நெய்யும் சிறிதுமின்றி பசுவை வளர்த்து என்ன பயன்?
ஒரு காரியத்தில் பிராதன பலன் கிடைக்க வேண்டும்.
88

சிங்கள் பழக்மாழிகள்
578.
579.
580.
581.
582.
583.
584.
585.
பாலும் தேனும் போல.
அபூர்வமான பொருள்கள் இணைந்திருத்தல்.
பாலை உண்டு தேனில் கைகழுவி. எந்தவித குறையும் இல்லாத நிலைமை.
பாலூட்டி வளர்த்த பாம்மைப்போல்.
துர்க்குணமுள்ளவனுக்கு நன்றி செய்தல்.
பாம்புப் புற்றுக்குள் தவளைகள் எப்படி வாழும்?
எதிரியும் எதிரியும் ஒன்றாக வாழமாட்டார்கள்.
பாயும் நரிகளுக்கு ஏணி கட்டியதுபோல்.
அநியாயம் செய்பவர்களுக்கு மேலும் உதவி செய்தல்.
பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட பொருள்
பெரும் அழிவுக்குப் போனதாம்.
பாதுகாப்பாக இருந்த பொருள் வஞ்சனையால் வேறு ஒருவருக்கு போய் சேருதல்.
பாழடைந்த வீடடில் மட்பாண்டங்கள் உடைந்தது போல.
எதிர்ப்பாளர்கள் இல்லாத வீட்டில் சத்தம் போட்டுப் பேசுதல்.
பாற்குடத்தில் சிறிய சாணத்தைக் கலத்தல்.
பெருமுயற்சி சிறு தவறால் வீணாவது.
89

Page 53
தம்பிஐயா தேவதாஸ்
586.
587.
588.
589.
590.
591.
592.
பாயிலேயே கிழப்பருவம் அடைதல்.
விவாக வயதில் விவாகமாகாமல் வீட்டில் இருத்தல்.
பாற் கட்டியை பகிரும்படி கரடிக்கு கொடுத்ததுபோல்.
தந்திரக்காரனிடம் புத்திமதி கேட்பதுபோல. பாய்ந்தோடும் தண்ணிரில் முகம் கழுவிக்கொண்டால் போதுமாம்.
வீணாகப்போகும் பொருளில் சிறிதானாலும் பயன்பெறலாம்.
பாவம் இல்லாது சாபம் எங்கிருந்துவரும்?
பாவத்தினாலேயே சாபம் ஏற்படுகிறது.
பாலத்துக்கு மேலாக கப்பலைக்கொண்டு போனதுபோல.
எப்பொழுதுமே செய்ய முடியாத வேலை.
பாழடைந்த குடிசையில் செடியைப் பாதுகாத்ததுபோல்.
பிரயோசனமற்ற வேலையில் ஈடுபடல்.
பாழடைந்த வீட்டில் கிடங்கு தோண்டியதுபோல்.
எதிரி இல்லாதபோது அவனை ஏசுதலும் அவனது பொருளை அழித்தலும்.
90

சிங்களப் பழமொழிகள்
593.
594.
595.
596.
597.
598.
599.
பாணி இருக்கும் இடத்தில் சீனி எறும்புக்குக் குறைவில்லை.
இலாபம் உள்ள இடத்தில் கூட்டத்துக்கு குறைவில்லை.
பாயில் கிடக்கும் நெல்லை நோக்கி கோழிகள் வந்ததுபோல.
எல்லை இல்லாத நட்டம் அடைதல்.
பாம்புக்குக் கொடுத்த பொல்லடி தவறியதுபோல்.
எதிரியை வளரவிடுதல் ஆபத்தை ஏற்படுத்தும். பாம்பு கருடனிடம் சுகம் கேட்டதுபோல்.
உயர்வான இடத்திலிருந்து கொண்டு மற்றவரை ஏளனம் செய்தல்.
பாக்கு மரத்திலிருந்து இறங்குபவன்போல. மிகவும் இலகுவாகச் செய்யக் கூடிய வேலை.
பிணைக்குப் போவதைவிட பிரிந்த போய்விடுவது மேலானது.
பிணை என்பது பாரதூரமான விடயமாகும். அதற்குப் போகாதது நல்ல விடயமாகும்.
பிச்சையெடுத்துச் சாப்பிடுதல் திருடுவதைவிட மேலானதாம்.
திருடுதல் பிச்சை எடுத்தலைவிட மோசமானது.
91

Page 54
தம்பிஐயா தேவதாஸ்
600.
601.
6O2.
603.
604.
605.
606.
பிறந்தவுடன் தவழ முடியாதாம்.
எதைச் செய்தாலும் ஆரம்பத்திலேயே பலன் கிடைத்துவிடாது.
பிறந்த வீட்டின் பழக்கம் சூனியம் செய்தாலும் போகாது.
சிறுவயதில் பழகிய பழக்கம் இறப்புவரை தொடரும்.
பிறவிக் குருடனுக்கு பாலின் வெள்ளை பற்றி சொன்னதுபோல்.
எப்படிச் சொன்னாலும் புரியாத விடயம்.
பிறப்பதற்கு முன் தொப்புள் கொடியை வெட்டமுடியாதாம்.
ஏதாவது காரியம் முடிவதற்கு முன் பலனை எதிர்பார்க்கமுடியாது.
பிடித்த இரண்டு விரால் மீன்களில் நழுவிய மீன் பெரியதாம்.
கையில் இருந்தது காணாமல்போன பொருள் பெரியதாகத் தெரியுமாம்.
பிறப்பில் வந்ததைவிட பழக்கத்தில் வருவது பெரிதாம்.
பழக்கம் எல்லாவற்றையும்விட பெரிதாகும்.
பிறந்தவுடனே தவழுவதுபோல.
ஆரம்பித்த உடனேயே பலன்பெறுதல்.
92

சிங்களப் பழமொழிகள்
6O7.
608.
609.
610.
611.
612.
63.
பிசாசுக்குப் பயமானால் சுடலைக்கருகில் வீடு கட்டக் கூடாது.
மற்றவர்களுக்குப் பயப்படாதவர்களைப் பற்றிக் கூறும் பழமொழி.
பிச்சைப் பாத்திரத்தில் இடி விழுந்ததுபோல்.
துன்பத்தை அனுபவிக்கும் மனிதனுக்கு மேலும் துன்பம் வந்ததுபோல்.
பிச்சைக்காரனின் புண்போல.
சிறிய பலன் பெற பெரிய துன்பத்தை அனுபவித்தல்.
பிறவிக்குணம் மாறாது.
பிறப்புடன் அமைந்த பழக்கம் என்றும் மாறாது.
பிள்ளைகளைத் தின்னும் நாட்டில் சேவல்களைப் பற்றி என்ன சொல்வது?
நம்பிக்கை வைக்க முடியாத ஒன்று.
பிச்சைக்காரனின் பாத்திரத்தில் மண் விழுந்ததுபோல்.
துன்பம் அனுவித்துக்கொண்டிருப்பவனிடம் மேலும் ஒரு துன்பம் வருதல்.
பிள்ளையில்லா வீட்டில் கிழவன் தவழுகிறானாம்.
உரிய பொருள் இல்லாதவிடத்து சொல்லப்படும் பழமொழி.
93

Page 55
தம்பிஐயா தேவதாஸ்
614.
615.
616.
617.
618.
619.
பீரோ அலுமாரிக்கு நான்கு கால்களாம்.
நான்கு பொருட்கள் தேவைப்படும்பொழுது மூன்று பொருட்களோ ஐந்து பொருட்களோ சரி செய்யாது.
புதுவருடத்துக்கு சாப்பிடப் போய் வெறும் வயிற்றுடன் வந்தது போல்.
எதிர்பார்த்துப்போன செயல்
நடைபெறாமல் போதல்.
புதுமையான ஊரை வாங்கப்போய் சொந்த
ஊரையும் இழந்தது போல.
பெருவெற்றியை அடையப்போய் இருந்த வெற்றியையும் இழத்தல்.
புத்தர் இல்லாத காலத்தில் சுரைக்காயும் கசக்குமாம்.
புத்தர் வாழாத காலத்தில் புதுமையான செயல்கள் நடைபெறும்.
புதுவருடம் நெருங்க நெருங்க உடை கிழிந்து போகும்.
நாட்செல்லச் செல்ல தேவை அதிகரித்தல்.
புலி வாலைப் பிடித்துக்கொண்டவனைப் போல்.
ஒரு காரியத்தை தொடரவும் விருப்பம்; அதைவிட்டு விடவும் விருப்பம்.
94

சிங்களப் பழமொழிகள்
620.
621.
622.
623.
624.
625.
626.
புல் வெட்டப்போய் கித்துல் மரத்தில் ஏறிய கதைபோல்.
ஒன்று செய்யப்போய் இன்னுமொன்றில் ஈடுபட்டு வெறுங்கையுடன் திரும்புதல்.
புதுப்பாத்திரத்தின் தண்ணிர்போல.
இனிமையைத் தெரிவிப்பது.
புகையிலைக் காம்புக்குச் சண்டைசெய்தல்.
மிகச் சாதாரண பொருளுக்காகச் சண்டைபிடித்தல்.
புத்தியுள்ள எதிரி புத்தியில்லாத நண்பனைவிட மேலானவன்.
மூட நண்பன் ஆபத்தை விளைவிப்பான்.
புலிக்கு முன்னே மாடு பாய்ந்ததுபோல்.
போகவேண்டிய ஆள் இருக்க சம்பந்தமில்லாத ஒருவர் வருதல்.
புலியின் புள்ளிகளை அழிக்க முடியுமா?
ஒருவருடைய இயற்கைக் குணத்தை மாற்றமுடியாது.
புலிக்கு வைத்த பொறியில் தானே விழுந்ததுபோல.
அடுத்தவர்க்கு செய்த தீங்கினால் தானே துன்பமடைதல்.
95

Page 56
627.
628.
629.
630.
631.
632.
தம்பிஐயா தேவதாஸ் புல் இருக்கும் இடத்தில் மாடு மேயாதாம்.
பொருள் அதிகமாக இருக்கும்பொழுது
அப்பொருளின் மதிப்புக் குறைவாக இருக்கும்.
புல்லு வெட்ட கித்துல் மரத்தில் ஏறியவனுக்கும் பதில் இருக்கின்றதாம்.
தவறு செய்து அதிலிருந்து தப்புவதற்காக ஏதாவது சொல்லுவது சம்பந்தமான பழமொழி.
புண்ணியத்துக்குக் கொடுத்த பொருள்
அழியவே மாட்டாது.
மரணத்தின் பின் மிஞ்சுவது புண்ணியத்துக்குக் கொடுத்த பொருட்கள் மட்டுமே.
புண்ணியச் செயலுக்கு இடையே மாட்டு ஆட்டம்போல.
நல்ல செயலுக்கு இடையே நடைபெறும் தீய செயல் பற்றிக் கூறும் பழமொழி.
புதிய விளக்குமாறு நன்றாகக் கூட்டும்.
புதியவர்கள் நன்றாக வேலை செய்வார்கள்.
புண்ணியவானைப் பார்த்துக் குரைக்கும் நாய்க்கு பல் விழுமாம்.
உத்தமர்களைப் பற்றி வீண்வார்த்தை பேசினால் தண்டிக்கப்படுவர்.
96

சிங்களப் பழமொழிகள்
633.
634.
635.
636.
637.
638.
புத்தகத்தின் அமைப்பைக் கொண்டே அது படிக்கப்பட்டிருக்கிறதா என்று கண்டுகொள்ளலாம்.
புத்தகத்தின் தாள்கள் அழுக்குப் பட்டிருக் கின்றதா என்பதைக் கொண்டே அது படிக்கப் பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.
பூனையின் கழுத்தில் சலங்கை கட்டியதுபோல்.
செய்யமுடியாத ஒன்றை செய்யமுடியும் என்று சொல்லுதல்.
பூனைகள் இரையைக் கண்டால் அசையாமல் இருப்பதுபோல.
பொய்யான அமைதி பற்றிய பழமொழி.
பூப்பறிப்பதற்கு விளா மரத்திற்கு தண்ணிர் வார்த்ததுபோல்.
பிரயோசனமற்ற முயற்சி.
பூப்பறிப்பதற்காக அத்தி மரத்துக்கு பாணி வார்த்ததுபோல்.
பிரயோசனமற்ற முயற்சி
பூவில் பிறந்த புழுவைப்போல.
பிறப்பு உயர்வான இடமென்றாலும் ஆள் தாழ்வானவன்.
97

Page 57
639.
640.
641.
642.
643.
644.
தம்பிஐயா தேவதாஸ்
பூனைகளைக்கொண்டு பலா விதைகளைப்
பிடிக்கச் செய்தல்.
சமூகத்தில் சிலர் மற்றவர்களைக்கொண்டே
தவறுகளைச் செய்கின்றனர்.
பெயருக்கு வாழைத்தோட்டமாம் தின்னக் காய் பிஞ்சு இல்லையாம்.
பெயராலோ ஊராலோ ஒருவரின் தராதரத்தை
அறிய முடியாது.
பெற்ற தாயின் இழப்பு பேரிழப்பாகும்.
தாயைவிட சிறந்த செல்வம் இல்லை.
பெரிய கப்பல் போகும் கடலில் சிறிய படகும் போகுமாம்.
பெரியவர்களால் மட்டுமல்ல சிறியவர்களாலும் சில வேலைகள் செய்ய முடியும்.
பெரிய வேலைகள் ஆரம்பமாவது, சிறிது சிறிதாகவாம்.
சிறிது சிறிதாக ஆரம்பித்த வேலையே பின்பு பெரிதாக வளரும்.
பெயர் எடுப்பதற்காக மூச்சடக்கிச் சங்கு ஊதியது போல்.
கெளரவத்துக்காக தேவைக்கு அதிகமாகக் கஷ்டப்பட்டு ஆபத்தில் விழுதல்,
98

சிங்களப் பழமொழிகள்
645.
646.
647.
648.
649.
650.
651.
பெண்ணின் தன்மை பாவடையில் தெரிவதுபோல்.
செல்வச் செழிப்பு ஆடை அணிகளில் தெரியும்.
பேச்சு பல்லாக்கில் பிரயாணமோ கால் நடையில்.
பேச்சு மட்டும் உயர்வாக இருக்கும். ஆனால் செயலோ கீழானதாக இருக்கும்.
பைத்தியங்கள் இருக்கும் இடத்துக்கு இன்னுமொரு பைத்தியம் வந்ததுபோல்.
ஒரு முரண்பட்ட குணமுடையவனுடன் இன்னுமொரு முரண்பாட்டுக் குணமுடையவன்
சேரும்போது பல பிரச்சனைகள் உருவாகும்.
பொறுமையால் அமைதி பெறலாம்.
பொறுமை என்பது மிக முக்கியமான குணமாகும்.
பொய் சொல்லவும் பழக்கம் வேண்டும். தீய செயல் செய்யவென்றாலும் அதற்கும் பழக்கம் வேண்டும்.
பொய்க்காலுக்கு கட்டுப்போட்டதுபோல.
பிரயோசனமற்ற வேலை.
பொய்யுக்கு ஆயுள் குறைவு.
எந்தநேரமும் பொய்யால் வெற்றிபெற முடியாது.
99

Page 58
தம்பிஐயா தேவதாஸ்
652.
653.
654.
655.
656.
657.
658.
பொறுப்புக் கொடுப்பதால் வேலை நடைபெறாது.
கடவுளுக்கு பாரப்படுத்துவதைவிட தன் முன்னேற்றத்துக்கு தானே முயற்சி செய்ய வேண்டும்.
பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட வேலை.
தர்மச் செயல் பற்றிய பழமொழி.
பொன் பாத்திரம் உடைந்தாலும் அதன் பாரமும் பெறுமதியும் குறையாதது போல்.
தூயவன் ஒருவன் ஏழையானாலும் அவனது நற்குணங்கள் குறைவதில்லை.
பொன் மலையில் இருக்கும் காகமும் பொன்நிறம்தானாம்.
தூயவனின் தொடர்பு ஏற்பட்டால் கெட்டவனும் நல்லவனாக மாறுவான்.
பொன்பால் நினைவில் வந்தது.
பயங்கரமான விபத்துக்கு ஆட்படுத்தல்.
பொம்மை அரசர்கள்.
நாட்டை ஆழும் அரசர்கள் இருக்கும்பொழுது பெயருக்குமட்டும் இருக்கும் அரசர்கள்.
போன அரக்கன் குண்டான் பானையையும் உடைத்துக் கொண்டு போனானாம்.
அழிவை ஏற்படுத்திக்கொண்டு மாறிப்போதல்.
100

சிங்களப் பழமொழிகள்
659.
660.
661.
662.
663.
664.
போன பிசாசு மண்பாத்திரத்தையும் உடைத்துக் கொண்டு போனதாம்.
திரும்பி வராதவன் தீங்கு விளைவித்துக்கொண்டு செல்லுதல்.
போதையிலிருக்கும் நோயாளிக்கு மருந்து செய்வதுபோல்.
தேவையில்லாத முயற்சியை குறிக்கும் பழமொழி. மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல்.
துன்பத்தில் வேதனைப்படும் ஒருவனுக்கு மேலும் ஒரு துன்பம் வருதல்.
மருந்து வழங்குபவனுக்கும் மருந்து தேவையாம்.
மருந்து வைத்திருப்பவனும் நோய் ஏற்பட்டவுடன் வேறு ஒருவனின் உதவியை நாட வேண்டியே வரும்.
மனைவிக்கு பயந்து வீட்டில் இருக்கவும் முடியாது; புலிக்குப் பயந்து காட்டில் ஒளியவும் முடியாது.
இரண்டு பக்கத்திலும் துன்பம் உண்டாதல். மற்றவர்களின் பொருள் என்றால் அது தங்கமானாலும் வேண்டாம்.
தனக்கு உரியபொருள் இல்லையென்றால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
101

Page 59
தம்பிஐயா தேவதாஸ்"
665.
666.
667.
668.
669.
670.
671.
மலையைக் கடந்தபின் ஊன்றுகோலை மறத்தல்.
நன்றி மறத்தலை வெளிப்படுத்தும் பழமொழி.
மரங்கொத்திப்பறவை வாழை மரத்தில் கொத்தியதுபோல்.
குழப்பம் விளைவிப்போன் சிலவேளைகளில் சங்கடப்படுவான்.
மரத்தால் விழுந்தவனை மாடு இடித்தல்.
ஒரு ஆபத்தில் இருப்பவன் மேலுமொரு விபத்தில் விழுதல்.
மரத்தை தெரிந்தவனுக்கு இலையைப்
பறித்துக் காட்டுதல்.
விடயம் தெரிந்த ஒருவனுக்கு அதே விடயத்தையே விளங்கப்படுத்துதல்.
மரத்துக்குமில்லை வயிற்றுக்குமில்லை.
அழிவில் எவருக்குமே பிரயோசனப்படாமை.
மரத்தின் கீழ் மழை இரண்டு மடங்காகும். திருடனை காப்பாற்றப்போன இன்னுமொரு திருடன் அதைவிட ஆபத்தான நிலைக்கு வருதல்.
மரம் விழும்பொழுது நிழலும் அழிந்துபோகுமாம்.
ஒருவர் இறந்தால் அவரது சேவையும் அழிந்துபோகுமாம்.
102

சிங்களப் பழமொழிகள்
672.
673.
674.
675.
676.
677.
678.
மரத்தின் மீது ஊசி தீட்ட வேண்டிய அவசியமில்லை.
பரம்பரைத் திறமையுள்ளவர்களுக்கு அதை மாற்ற வேண்டிய தேவையில்லை.
மறைந்து மறைந்து வேடம் புனைந்தாலும் வெளியிலேயே நடனமாடவேண்டுமாம்.
களவாகச் செய்கின்ற காரியம் வெளியே வநதேதீரும்.
மனம் உண்டானால் சிறங்கை சிறிதாகுமா?
விருப்பம் என்றால் இடம் உண்டு.
மஞ்சளும் கல்லும் நல்லதானால் நிறமும் நல்லதே.
பெற்றோர்கள் நல்லவர்களானால் பிள்ளைகளும் நல்லவர்களே.
மரமின்றி தளிர் எப்படி வளரும்?
காரணமின்றி எதுவும் நடைபெறாது.
மரத்துக்குப் பட்டையும் பட்டைக்கு மரமும் தேவைப்படுவதுபோல்.
ஒருவருக்குக்கொருவர் உதவியாக இருந்தாக வேண்டும்.
மண்ணைப் பிடித்து எண்ணெய் எடுக்க முயற்சி செய்பவன்போல.
பயனற்ற முயற்சி பற்றிய பழமொழி.
1 na

Page 60
679.
680.
681.
682.
683.
684.
685.
தம்பிஐயா தேவதா:
மரத்திலிருந்து விழுந்த குரங்கை கூட்டத்திலிருந்து நீக்கியதுபோல்.
சிலருக்கு ஏதாவது அகெளரவம் ஏற்பட்டால் தொடர்ந்து அங்கே இருக்க மாட்டார்கள்.
மழையாலன்றி புண்ணியத்தால் குளம்
நிரம்பாது.
பெரியவன் ஒருவனின் தொடர்பினால் மட்டுமே சாதாரணமானவர்கள் கணிக்கப்படுவார்கள்.
மயானத்துக்குப் பயமானால் பிசாசுடன் பழகுவானா?
பயமற்ற வேலை பற்றி பழமொழி.
மஞ்சட் குருவியிடம் காவியுடை கேட்டதுபோல்.
பெற முடியாத பொருளைக் கேட்டல்.
மட்டக்களப்புக்குப் போயும் ஒரு சாரமாவது கொண்டு வராததுபோல்.
பெரிய ஞாபகமறதியைப் பற்றிய பழமொழி.
மாறுவேடம் போட்டாலும் ஆடவேண்டியது மேடையில்தான்.
இரகசியமாக செய்யும் காரியம் வெளிவந்தேயாகும்.
மாமியின் அன்பு போல்.
நாளுக்கு நாள் குறையும் அன்பு.
104

சிங்களப் பழமொழிகள்
686.
687.
688.
89.
690.
691.
692.
மானுக்கு எய்த அம்பு பற்றைக்குப் பட்டதாம்.
ஒன்றைச் செய்ய முனையும்பொழுது வேறு ஒன்று கிடைத்தல்,
மாட்டிறைச்சி சாப்பிட்டால் அதை கழுத்தில் கட்டிக் கொண்டு சாப்பிட வேண்டுமா?
ஏதாவது கீழ்த்தரமான வேலை செய்தால் அதை ரகசியமாகச் செய்ய வேண்டும்.
மாட்டு ஈ மான்களிலும் மொய்க்குமாம். கெட்ட காலம் எல்லோருக்கும் வரும்.
மாடுகள் புல் மேய்வது உணவு go)6 on 60LDusteum?
எல்லோருமே தமக்கு விருப்பமானவற்றையே
செய்கின்றனர்.
மாணிக்கக்கல் இருக்கும்பொழுது பரற்கற்களை கிளறியதுபோல.
உயர்ந்த பொருள் இருக்கும்பொழுது தாழ்ந்த பொருளை எடுத்தல்.
மின்மினிப் பூச்சியிடம் விளக்குக் கேட்பது போல்.
பொருத்தமில்லாத இடத்தில் முயற்சி செய்தல்.
மாணிக்க மாலையை உடைக்க முயற்சித்த பன்றியைப்போல.
உத்தமர்களுடன் மோதப்போய் தோற்றுப் போனவர்கள்.
105

Page 61
தம்பிஐயா தேவதாஸ்
693.
694.
695.
696.
697.
698.
மின்னிப்பூச்சி வெளிச்சத்தில் புதைக்கப்பட்ட பொருளைத் தேடியதுபோல.
சிறு முயற்சியில் பெருலாபத்தைப் பெற முயலுதல்,
முள்ளம்பன்றியின் கூட்டுக்குள் அழுங்கு நுழைந்தது போல்.
மற்றவர் பொருளை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளல்.
முதலில் பிடிபடும் மீன் முதலிலேயே அழுகுமாம்.
முதலிலேயே வெற்றிபெறும் ஒருவன் முதலிலேயே பிரயோசனமில்லாதவனாவான்.
முதலில் வந்த செவியைவிட பின்பு வந்த கொம்பு பெரிதானதாம்.
முன்பு இருந்த உறவினர்களை விட பின்புவந்த நண்பர்களுக்கு சலுகை காட்டல்,
முட் பற்றைக் காட்டில் பூத்த மலர்போல.
பிரயோசனமற்ற இடத்தில் முக்கிய பொருள் இருத்தல்.
முத்தெடுக்க மூழ்கும்பொழுது
மூழ்குபவனைக் கட்டிய கயிற்றைக் கொடுப்பது மச்சானிடமாம்.
ஒரு மனிதனுக்கு மைத்துனன் மிகவும்
நம்பிக்கையானவன்.
106

சிங்களப் பழமொழிகள்
699
7OO.
701.
702.
703.
704.
705.
7O6.
முதலை பலாக்கனியை விழுங்கியதுபோல்.
சிலர் நல்லது கெட்டது என்று பாராது உண்ணுவர்.
முதலைக் குட்டிகளுக்கு நீந்தக் கற்பிப்பதுபோல்.
அதிகம் தெரிந்த ஒருவனுக்கு கற்பிக்கத் தேவையில்லை.
முதலைக் கண்ணிர் வடித்தல். போல்.
பொய்த் துன்பத்தை காட்டுதல்.
முழங்கிய அளவுக்கு மழை பெய்யவில்லையாம்.
பேசிய அளவுக்கு காரியம் நடைபெறவில்லை.
முப்பத்திரெண்டு பற்களுக்கும் நடுவே உள்ள நாவைப்போல.
தன்னைச் சுற்றியிருப்பவர்களின் தாக்குதலின்றி இருத்தல்.
முருங்கை மரத்தை கையில் வைத்தல்.
ஏமாற்றத்தைக் குறிக்கும் பழமொழி.
முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை வெட்டியெறிதல்.
முக்கிய பொருளில் சிறுபகுதியை நீக்குதல்.
முட்டை இட்ட கோழிபோல் கொக்கரித்தல்.
தன் பெருமைகளை சொல்லிப் புழுகுதல்.
107

Page 62
தம்பிஐயா தேவதாஸ்
707.
708.
709.
710.
711.
712.
713.
முடியிருந்தால் நான்கு பக்கத்திலும் கொண்டை முடிக்கலாம்.
தேவையான பொருள் இருந்தால் அளவுக்கு அதிகமாகவே செய்யலாம்.
முகத்தைக் கொஞ்சமும் காட்டாமல் மழைவிட்ட பின் வா என்று சொன்னதுபோல.
ஏதாவது கேட்டபோது கொடுக்க மனமில்லாமல் எதையாவது கூறுதல்.
முயல்கள் நண்பனைத் தேடிப்போனது போல்.
தங்களுக்கு தாங்களே உதவியே தவிர வேறு எவரும் இல்லை.
முடியை வெட்டினாலும் மூடன் மூடன்தான்.
சிலரின் பழக்க வழக்கங்களை எப்படியும் மாற்ற முடியாது.
முகம் அகத்தைக் காட்டும் கண்ணாடியாகும்.
ஒருவரின் முகத்தைக்கொண்டே அவரது குணத்தை கண்டுவிடலாம்.
மூக்கு இல்லாவிட்டால் பெண்கள் எதை என்றாலும் சாப்பிடுவார்களாம்.
பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லாவிட்டால் எந்த தவறான வழிகளிலும் ஈடுபடுவர்.
மூஞ்சூறைப் பூனையாக்க முடியுமா?
செய்யமுடியாத வேலை பற்றிக்கூறும் பழமொழி
108

சிங்களப் பழமொழிகள்
714.
715.
716.
717.
718.
719.
72O.
மூங்கிற்காடு தீப்பிடித்ததுபோல்.
சத்தமிட்டு எரியும் நிலை.
மூடனுக்கு பெண் இரத்தினமாம்.
மூடன் பெண்ணின் அழகில் மயங்கி சிக்கலில் வீழ்வான்.
மூக்குக்கு மேல் தண்ணிர் உயர்ந்தால் எவ்வளவு பெருகினாலும் பரவாயில்லை.
நடைபெறவேண்டிய கடுமையான விபத்து ஏற்பட்ட பின் அதற்கு மேல் என்ன விபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை.
மூன்று மாதம் பாதை தெரிந்த ஒருவர் விஷயமே தெரியாத ஒருவனிடம் உதவி பெறக்கூடாது.
ஓரளவு விஷயம் தெரிந்த ஒருவர் விஷயமே தெரியாத ஒருவனிடம் உதவி பெறக்கூடாது.
மூஞ்சூறு போன வழி போன்று.
நினைத்ததுபோல் நடந்து அவமானப்பட்டு தோல்வி அடைதல்.
மேலே கருப்பட்டி கீழே கத்தரிக்கோல்.
முன்னுக்கு இனிமையாகப் பேசினாலும் மனதில் சினத்தை வைத்திருத்தல்.
மேலே பார்த்துக்கொண்டு எச்சில் துப்பியதுபோல்.
தான் செய்த வினை தனக்கே வந்து சேரும்.
109.

Page 63
தம்பிஐயா தேவதாஸ்
721.
722.
723.
724.
725.
726.
மேலே வைத்தாலும் முடியவில்லை, கீழே வைத்தாலும் முடியவில்லை.
பாரதூரமான பிரச்சனையையிட்டு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமை.
மேலே பாய்ந்தால் கீழே விழுந்தே ஆகவேண்டும்.
நான் என்ற ஆணவமுள்ளவன் விழுந்தே ஆவான்.
மேட்டு நிலத்தின் தரத்தை தெரிந்துகொண்டு கிணறு தோண்டவேண்டும்.
காரியத்தை சுகமாக செய்துவிட வேண்டும் என்று
எண்ணாமல் அக்காரியத்தை உரிய இடத்தில்
செய்தல் வேண்டும்.
மோதிரக் கையால் குட்டுப்பட்டாலும் சுகமாம்.
உத்தமர்களிடம் இருந்து திட்டுக் கிடைத்தாலும் வேதனையில்லை.
யமராஜரக்களின் வழக்குத் தீர்ப்புப்போல்.
பாரதூரமான தண்டனை வழங்கல்.
யமராஜனும் சிரிப்பானாம்.
யுத்தகளத்தில் பயந்து நிற்கும் அரசனைப் பார்த்து யமனும் சிரிப்பானம்.
110

சிங்களப் பழமொழிகள்
727.
728.
729.
730.
731.
732.
யானையை தாமரை நூலால் கட்டிப்போட முடியுமா?
செய்ய முடியாத காரியத்தை செய்ய முயலுதல்.
யானை விற்க முடியாதவனுக்கு
முளைக்கீரை விற்க முடியுமா?
பெரிய வியாபாரத்தை நடத்த முடியாதவனுக்கு சிறிய வியாபாரத்தையும் நடத்த முடியாது.
யானை போகும் கடின பாதை
இருக்கும்போது எறும்பு போகும் மரத்துளையை மூடுவது போல்.
பெரும் தவறு இருக்கையில் சிறியனவற்றை திருத்தப் போவது போல்.
யானைகள் சண்டை செய்யும்போது இடையிலிருக்கும் நகரைப் புற்கள் அதிருமாம்.
பலம் பொருந்திய் இருவர் சண்டை செய்யும்பொழுது இடையில் அகப்படும் அப்பாவிகள் துன்பப்படுவர்.
யானை போன பின் வாலைப் பிடித்ததுபோல்.
நிகழ்ச்சி முடிந்த பின் சமூகமளிப்பது.
யானை சென்ற பாதையைப் பார்க்க கண்ணாடி வேண்டுமா?
மிகவும் தெளிவாகத் தெரியும் பொருளுக்கு கண்ணாடி தேவையில்லை.
111

Page 64
தம்பிஐயா தேவதாஸ்
733.
734.
735.
736.
737.
738.
யானையை கொடுக்க முன்வந்தபோது எறும்பைக் கேட்டதுபோல.
பெரிய பொருளொன்றை கொடுக்க தயாரானபோது சிறிய பொருளைக் கேட்டு நிற்றல்.
யானை விழுங்கிய விளாம்பழம் போல்.
அகப்பட்டால் மிகுதி கிடைக்காது.
யானைக்கு காய்ந்த பலாக்காயைக் கொடுத்தது போல.
பிரயோசனமற்ற பொருளை வழங்குதல்.
யானையை வாங்க முடியுமாம் அங்குசத்தை வாங்க முடியாதாம்.
பெரும்பணம் செலவழித்து ஏதாவது வாங்கும் ஒருவருக்கு அதற்குத் தேவையான சிறிய பொருளை வாங்க விருப்பமில்லை.
யானையானாலும் சறுக்கி விழும் சந்தர்ப்பம் இருக்கத்தான் செய்கிறது.
மாவீரனும் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பம் இருக்கவே செய்கிறது.
யானையின் துதிக்கையுள் ஒணான் புகுந்ததுபோல்.
சிறியவனாலும் பெரியவனை வெல்ல முடியும்.
112

சிங்களப் பழமொழிகள்
739.
740.
741.
742.
743.
744.
745.
யானைக்கால் நோய்க்கு முதுகில்
மருந்து கட்டியதுபோல்.
பொருத்தமான இடத்தில் சரி செய்யாமல் பொருத்தமில்லாத இடத்தில் சரி செய்தல்.
யுத்தத்துக்கு இல்லாத வாள் பலாக்காயை வெட்டவா?
தேவைக்கு உதவாத பொருள் இருந்து
என்ன பயன்?
யுத்தம் என்பது சபலமான பொருள்.
யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்று கூறமுடியாத விடயம்.
வரும் விதம் சரியில்லை என்று நரியொன்று சொன்னதாம்.
எதிர்காலத்தில் கேடு நடக்கப் போகிறது.
வண்டியின் இருக்கையில் அமர்ந்து விட்டால் வண்டிக்காரனும் சக்கரவர்த்தி தானாம்.
உரிய இருக்கையில் இருந்துவிட்டால் எவனும் வீரனாவான்.
வதந்திகளுக்கு இறகுகள் இருக்கின்றனவாம்.
வதந்திகள் மிக விரைவாக பரவிவிடுகின்றன.
வயலில் கட்டிய வெருளிபோல.
செயலால் அன்றி பெயருக்கு மட்டும் நிற்கும் ஒருவரைப்பற்றிச் சொல்லும் பழமொழி.
113

Page 65
746.
747.
748.
749.
750.
751.
752.
தம்பிஐயா தேவதாஸ்
வளைந்த மரத்தின் நிழலும் வளைந்துதான் இருக்குமாம்.
தவறு செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளும்
தவறு செய்வார்கள்.
வயலில் உழுதால்தான் கலப்பையின் தன்மை தெரிய வரும்.
வேலை செய்யும் பொழுதான் உண்மைத்தன்மை
தெரியும்.
வரும் துன்பம் எல்லாம் இனிமையான சுவையாம்.
துன்பத்தை எதிர்கொண்டு வெற்றிபெறுபவனுக்கு அது இன்பத்தைத்தரும்.
வண்ணானின் மாற்றுடை போல.
எல்லோராலும் பயன்படுத்தும் பொதுவான பொருள்.
வலைமூலம் காற்றைப் பிடிக்க முடியுமா?
செய்யமுடியாத காரியத்தைப் பற்றிய பழமொழி.
வண்ணானின் குளத்தடிபோல்.
மிகவும் அசுத்தமான இடம்.
வணங்கப்போன கோயில் தலையில் இடிந்து விழுதல்.
ஆறுதல் பெறச்சென்ற இடத்திலும் துன்பம் அனுபவித்தல்.
114

சிங்களப் பழமொழிகள்
753.
754.
755.
756.
757.
758.
வளரும் மரத்தை இரண்டு பக்கத்தாலும் அறியலாம்.
ஒருவனின் வளர்ச்சியை அவன் சிறு வயதில் நடந்துகொள்ளும் முறையிலேயே அறிந்து கொள்ளலாம்.
வயது போனால் பிசாசும் விரதம் அனுஷ்டிக்குமாம்.
வயது போனால் உபவாசன் வேடமேற்கவேண்டிவரும்.
வயிற்றுப் பசிக்கு கடவுளின் பொருள் என்றாலும் பரவாயில்லையாம்.
பசி வந்துவிட்டால் மனிதன் எதையும் மறந்துவிடுவான்.
வயிற்றில் முட்டையை வைத்துக்கொண்டு பேசுதல்.
மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வேறு ஒன்றை கூறல்.
வயற்பயிரை மான்கள் மேய்ந்ததற்காக
வீட்டில் இருந்த மாட்டுத் தோலை அடித்ததுபோல்.
ஒருவன் செய்த குற்றத்துக்காக இன்னொருவனுக்கு தண்டனை வழங்குதல்.
வாய் அளவே நாடும் ஆடும்.
வாயால் உலகத்தை வெல்லலாம்.
115

Page 66
தம்பிஐயா தேவதாஸ்
759.
760.
761.
762.
763.
764.
765.
வாயை மூடிக்கொண்டிருக்கும் வரைக்கும் மூடனும் பண்டிதனே.
பேச்சில் ஒருவனின் தன்மை புரிந்துவிடும்.
வாய் பொய் சொன்னாலும் நாக்கு பொய் சொல்லாது.
பொய்யை மறைத்தாலும் அது எப்படியாவது வெளிப்பட்டுவிடும்.
வாள் எடுத்தோர் வாளாலேயே சாவர்.
ஒருவன் எதைக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கிறானோ அதனாலேயே அவன் அழிவான்.
வாய் உள்ள மகனையும் அழகுள்ள மகளையும் பெறவேண்டும்.
புத்தியுள்ள மகனையும் அழகுள்ள மகளையும் யாரும் விரும்புவர்.
வாயால் வற்றாளைச் செடியை நடுதல்.
கதைப்பார்கள் செயலில் காட்டமாட்டார்கள்.
வாக்குச் சாதுரியம் முதலாளித் தன்மையைவிட பெரிதாம்.
இனிமையான பேச்சின்மூலம் மக்கள் மனதைக் கவரலாம்.
வாய் நெளிந்த குடம்போல்.
புத்தியற்றவனுக்கு எவ்வளவுதான் புத்தி
சொன்னாலும் திருந்தமாட்டான்.
116

சிங்களப் பழமொழிகள் 766. வாழாத வாழ்க்கைக்குப் போனது ஏன்?
விவாகமானால் இல்வாழ்க்கையிலேயே ஈடுபட வேண்டும். 767. வாய் இனிக்கப் பேசினாலும்
கெட்ட மனிதனை நம்பக் கூடாதாம்.
கெட்ட மனிதன் கெட்ட மனிதனே. 768. விரலுக்கு ஏற்பவே வீக்கம் வேண்டும்.
இயல்புக்கு ஏற்காமல் அதிகமாக எண்ணுதல் தோல்வியைத் தரும்.
769. விறகு கொள்ளியால் சுடப்பட்டவன்
மின் மினிப் பூச்சிக்கும் பயப்படுவானாம்.
பெரிய விபத்தால் பாதிக்கப்பட்டவன் அதோடு தொடர்புடைய சிறிய விபத்துக்களுக்கும் பயப்படுவான்.
770. விதைக்காமல் முளைக்காது.
முயற்சி செய்யாமல் பலன் கிடைக்காது. 771. விரால் மீன் இல்லாத குளத்தில்
நன்னீர் மீன் பெரியவன்.
தலைவன் இல்லாத இடத்தில் சிறு ஊழியர்களும் முக்கிய இடத்தை பெறுவர். 772. விலாங்கு மீனைப்போல.
இடத்துக்கு ஏற்றவாறு மாறும் தன்மை கொண்டவர்.
117

Page 67
தம்பிஐயா தேவதாஸ்
773.
774.
775.
776.
777.
778.
விழுந்த நாட்டியக்காரன் நிலம் கோணல் என்றானாம்.
தனது தவறை மறைத்துக்கொள்ள ஏதாவது கூறுதல்.
விளக்கிலிருந்து விளக்காக நூறு விளக்குகள் ஏற்றப்பட்டாலும் முதலாவது விளக்கு ஒளி குறையாததுபோல.
ஆசிரியனின் கல்வி குறைவடையாது.
விழப்போன மனிதனை தள்ளிவிட்டதுபோல.
சிக்கலில் விழ இருந்த மனிதனை மேலும் சிக்கலில் விழுத்தல்.
விளையாட்டு வினையாகிப்போனது போல்.
விளையாட்டாக ஆரம்பித்த வேலை ஆபத்தில் முடிதல்.
விஷம் உள்ள பன்றிகள் இரவும் பகலும் நிலத்தை தோண்டுமாம்.
சுறுசுறுப்பானவன் வேலை செய்யும்பொழுது இரவு பகல் என்று பார்க்கமாட்டான்.
விழுந்த மரத்தின் இளங்காய்களையும் முட்டுக்காய்களையும் பிடுங்க சண்டை போட்டுக்கொண்டதுபோல.
இறந்த உறவினரின் சொத்துக்களை பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள்.
118

சிங்களப் பழமொழிகள்
779.
780.
781.
782.
783.
784.
785.
விழப்போகும்பொழுது முள்ளுக்கிளையை பிடித்துக்கொண்டதுபோல்.
ஒரு ஆபத்திலிருந்து தப்ப முயற்சிக்கும்பொழுது இன்னுமொரு ஆபத்தில் அகப்படுதல்.
விரிக்க முடியாவிட்டால் குடையால் 6T6060T uu60?
பொருள் என்றால் பிரயோசனம் உள்ளதாக
இருக்கவேண்டும். வீட்டில் அதிக புத்தகங்கள் இருக்கின்றன; ஆனால் ஒன்றுகூட நினைவில் இல்லை.
தமது கல்லாமையை மறைத்துக்கொள்ளல்.
வீணன் மொட்டையடித்தபோது கல்மழை பொழிந்ததாம்.
சோம்பேறிகளுக்கு துரதிஷ்டம் சும்மாவே வரும்.
வீதி இருக்கும்பொழுது காட்டில் தட்டுப்படுவதுபோல்.
உரிய வழி இருக்க தவறான வழியில் போதல்.
வீட்டுக்கு வந்த சீதேவியை பொல் எடுத்து விரட்டியதுபோல.
தனக்கு வர இருந்த அதிஷ்டத்தை விரட்டுதல்.
வீட்டு வளை முறிந்து விழுந்ததுபோல்.
பிரதான உறவினரின் இழப்புச் சம்பந்தமானது.
119

Page 68
786.
787.
788.
789.
790.
791.
792.
793
தம்பிஐயா தேவதாஸ்
வெட்ட முடியாத கையை முத்தமிடுபவன்போல.
பழி வாங்க முடியாதவிடத்து பணிந்து போதல்.
வெயில் எறிப்பது மழை பெய்வதற்காகவாம்.
பெரிய கோடையின்பின் மழை பெய்தேயாகும்.
வெயில் இருக்கும்பொழுதே வைக்கோலைக் காய வைக்கவேண்டும்.
பொருத்தமான வேளையில் உரிய வேலையை செய்யவேண்டும்.
வெடிப்பொருட்களுக்கு அருகில் நெருப்பைக் கொண்டுபோனதுபோல்.
பயங்கரச் சம்பவம் பற்றிக் கூறும் பழமொழி. வெள்ளைச் சுண்ணாம்பு அடித்தல்.
தவறை தவறு என்று காட்டாமல் மூடி மறைத்தல்.
வெள்ளை வெங்காயத்தை உரிக்காதே.
பொய் சொல்லி ஏமாற்ற முனையாதே.
வெட்கமின்மை முதலாளித்தனத்தைவிட பெரியதாம்.
வெட்கமற்றவனால் எதையும் செய்ய முடியும்.
வேண்டாக் கணவனுக்கு சொதி பரிமாறியது (3Lure).
வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்ளல்.
120

சிங்களப் பழமொழிகள்
794
795
796.
797.
798.
799.
800.
வேட்டை நாயை வீட்டில் கட்டிவிட்டு வீட்டு நாயை வேட்டைக்கு கொண்டு போனது போல்.
செய்ய வேண்டிய வேலையிருக்க தேவையற்ற வேலையில் ஈடுபடுதல்.
வேப்பம்விதைக்கு பால் வார்த்து செடியாக
வளர்த்தாலும் கசப்புப் போகாதாம்.
துர்க்குணம் உள்ளவர்களுக்கு எப்படித்தான் புத்தி கூறினாலும் மாறமாட்டார்கள்.
வேலி வாசலின் பலத்தைத் தெரிந்து கொண்டு கயிறு கட்ட வேண்டுமாம்.
லாபத்தின் அளவுக்கு செலவு செய்ய வேண்டும்.
வேலியற்ற தோட்டத்துக்குள் மாடு வருவது புதுமையானதல்ல.
புதுமையற்ற விடயம் பற்றிய பழமொழி.
வேலை வழங்கும் எஜமான் மகிழ்ச்சியை தரும் நண்பனாம்.
வேலை வழங்கும் ஒருவர் உத்தமமானவர்.
வேடர்கள் வீடு கட்டியதுபோல்.
செயலால் அன்றி வாயால் மட்டும் செய்யப்படும் வேலை.
வேப்பமரத்தில் பாகற்காய் கொடி ஏறியதுபோல.
துர்குணமுள்ளவர் இருவர் ஒன்று சேர்வது.
121

Page 69
801.
802.
803.
804.
805.
806.
தம்பிஐயா தேவதாஸ்
வேப்பமரத்தில் பிறந்த புழுவுக்கு
வேப்பிலை கைத்தாம்.
இனிமையற்ற பொருளும் அடிக்கடி சந்திக்கும்பொழுது இனிமையாகவரும்.
வேப்பமரத்தின் நிழலும் குளிர்மை பெறுகின்றதாம்.
இனிமையற்ற பொருளாயினும் பிரயோசனம் வழங்குகின்றது.
வேலியும் வரம்பும் பயிரைத் தின்னும் அநியாயத்தை யாரிடம் கூறுவோம்?
பாதுகாப்பவரே பாதுகாக்கும் பொருளை அழித்தல்.
வேலை நல்லதென்றால் முடிவும் நல்லதுதானாம்.
நல்ல வேலை என்றால் அதன் பலனும் நல்லதாகும்.
வேட்டையாட முடியாதவன் உடலைத்
தந்தாலும் காதை தந்தாலும் வாங்க வேண்டியதுதான்.
இயலாதவன் பிறர் தரும்பொருள் எதுவென்றாலும்
வாங்கிக்கொள்ள வேண்டும்.
வைக்கோற் குவியலில் இருக்கும் நாயைப்போல.
சிலர் வேலைகளை தாமும் செய்யமாட்டார்கள் பிறரைச் செய்யவும் விடமாட்டார்கள்.
122

சிங்களப் பழமொழிகள்
807.
808.
809.
810.
811.
312.
313.
வைக்கோற் குவியலில் தையல் ஊசி காணாமல் போனதுபோல்.
தேடிக்கொள்ள முடியாத பொருள்.
வைத்தியரிடம் நோயை மறைத்ததுபோல்.
உரிய இடத்தில் உரிய பொருளை சேர்க்காமல் விடல்.
ஜாடிக்கு ஏற்ற மூடிபோல்.
பொருத்தமானவர்களைக் கூறும் பழமொழி.
ரூபாய்க்கிடையே சதங்கள் இருக்கின்றன. பெரிய மனிதர்களின் பெரிய வேலைகளில் சிறுமனிதர்களும் சம்பந்தப்படுகிறார்கள்.
ரூபாயுடன் சதக்காசு சண்டைக்குப் போனது போல.
பெரியவர்களின் வேலைக்கு மத்தியில் சிறியவர்கள் தங்கள் வேலையை செய்ய முயலுதல்.
ரோஜாப் பூவின் காம்பில் முட்கள் இருக்குமாம்.
நல்ல பொருட்களிலும் கெட்டவை உண்டு.
றுஹணுைப் பிரதேசத்துக்குபோனபோதும் பாற்பாணி பருகாமல் வந்ததுபோல்.
மிகுந்த குறைபாடுடன் மீண்டும் வருதல்.
( δε
123

Page 70
தம்பிஐயா தேவதாஸ்
814. றெயில் பாதையின் இரும்பை
உண்டதுபோல்.
அரசாங்கப் பொருளைத் திருடுதல்.
815. ஹபரளைக் கிழங்கைச் சாப்பிட்டது போல்.
வாயாடியை அறிமுகப்படுத்தும் பழமொழி.
124


Page 71
நூலாசிரியர்பற்றி
இந்நூலாசிரியர் திரு தம்பிஐயா ே தம்பிஐயா ஐஸ்வரி தம்பதிகளின் மகாவித்தியாலயம், கொழும்பு வி பழைய மாணவர்
பேராதனை பல்கலைக்கழகத்தி கல்வி நிறுவகத்தில் "BEd L பல்கலைக்கழகத்தின் 'Dip. 1 காமராஜர் பல்கலைக்கழகத்தி Communication ULLLpf Gl
கொழும்பு கணபதி வித்தியாலய இவர் இலங்கை வானொலியி ரூபவாஹினி தொலைக்காட்சியி கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும்
பிரபலமான மூன்று சிங்கள நா வெளியிட்டுள்ளார். இலங்கை விழா கண்ட சிங்கள சினிமா, ! ஆகிய புத்தகங்களையும் சில பா ISBN - 955-96785-1-5

தம்பிஐயா தேவதாஸ்
தவதாஸ், யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மூத்த புதல்வர். புங்குடுதீவு கணேச வேகானந்தாக் கல்லூரி ஆகியவற்றின்
ல் B.A பட்டமும் மகரகம தேசிய பட்டமும் பெற்றவர் கொழும்புப் N Journalism' பட்டமும் மதுரை gir M.A. Journalism and Mass பற்றவர்.
பத்தில் ஆசிரியராக கடமையாற்றும் ல் பகுதி நேர அறிவிப்பாளராகவும்.
ல் பேட்டிக் காண்பவராகவும்,
பத்திரிகைத்துறைப் பகுதியில் கடமையாற்றுகிறார்.
வல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ்ச் சினிமாவின் கதை' 'பொன்
இலங்கை திரையுலக முன்னோடிகள் டநூற்புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
2OOE