கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களும் சுவையான விவரங்களும்

Page 1


Page 2


Page 3

NA உலகெங்கும் வாழும் N4
? ஈழத்தமிழர்களும்
சுவையான விவரங்களும்
1 NA f மணிமேகலைப் பிரசுரம் ,1447: தபால் பெட்டி எண் ܐ 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. : தொலைபேசி : 4342926. Y தொலை நகல் : 044-43462.
Lssör göğFóò : e-mail : manimegalai@eth.net
V NA Z W

Page 4
நூல் தலைப்பு & உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
ஆசிரியர் S பாக்கியநாதன்
மொழி S தமிழ்
பதிப்பு ஆண்டு 조 2000
பதிப்பு விபரம் S முதல் பதிப்பு
மி ஆசிரியருக்கு מLתיfl6_פ
தாளின் தன்மை S. 11.6 a.a
நூலின் அளவு S கிரெளன் சைஸ் (12%x18% செமீ)
அச்சு எழுத்து அளவுலி 12 புள்ளி
மொத்த பக்கங்கள் S 64 \ நூலின் விலை லி ரூ.1500
ஜமால்
அட்டைப்பட ஓவியம்லி
லேசர் சிஸ்டம்ஸ், சென்னை-17.
லேசர் வடிவமைப்பு S
公
நூல் கட்டுமானம்மி
வெளியிட்டோர் S மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை - 17.
எம்.கே.எண்டர்பிரைசஸ்
அச்சிட்டோர்
தையல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

内ー
எமதுரை.நீல்
புலம் பெயர் ஈழத்தமிழர்கள் என்ற தலைப்பில் -
முக்கியமாக எமது இக்கட்டுரையிலே ஜேர்மனியில் தமிழர் நடவடிக்கைகளே முக்கியமாக இடம் பெறச் செய்துள்ளோம். ஈழத்தமிழர்கள் பரந்து உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள். உலகிலே ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களிலும் குடியேறிப் பரந்துபட்டரீதியில் வாழும் ஒரு இனம் ஈழத்தமிழினம் என்றே கூறமுடியும். இவர்கள் தாம் வாழ்வது, தம் சந்ததியை வளர்ப்பது என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் தத்தம் மொழி கலாச்சாரம், மதம் என்பனவற்றையும் இங்கே நாற்று நாட்டு வளர்ப்பது போல் வளர்த்து வருகின்றார்கள் என்பது பெருமைக்கு உரிய விடயமாகும்.
ஒரு மொழியானது பேசப்படும் சொந்த நாட்டினரால் மட்டும் நன்கு தெரிந்ததொன்றாக இருப்பது பொதுவிதி. ஆனால் தமிழ் மொழியோ உலகத்திலுள்ள மற்ற இனத்தவர்களும் அறிந்து கொள்ளக் கூடிய, ஒரு பரிச்சய மொழியாக இன்று உலகளாவிய மொழியாக மாறிவருவது பாரதியாரின் கனவை நனவாக்குவதுபோல் அமைந்துள்ளது அல்லவா?
4ے۔ -ܠܐ

Page 5
r യു
புலம்பெயர்தமிழர்கள் என்பது மிகவும் விரிந்த ஆழமான வரலாறு ஆகும். அதன் நீள அகலம், தோற்றம், வளர்ச்சி என்பவை ஆய்வுக்குரிய பொருளாகி ஒரு நீண்ட வரலாற்றுச் சரிதமாக அமையும். அந்த ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டிய விடயங்களின் ஒரு சிறு நுழைவாயிலாகவே இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது. எனவே இக்கட்டுரையிலுள்ள விடயங்கள் மிகவும் சுருக்கமானதாகவும் மேலோட்ட மானதாகவும் அமைந்துள்ளன. நாம் எழுதி முற்றுப் பெறாமல் உள்ள புலம் பெயர் தமிழர்கள் என்ற ஆய்வுக்கட்டுரை நூலின் ஒரு சிறுமுன்னோடியே இந்நூல் என்பதை உங்களுக்கு அறிவிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம். கால நேரம், சாதகமான சூழ்நிலை என்பவற்றைப் பொறுத்து நாம் எழுதிக்கொண்டிருக்கும் அந்த ஆய்வு நூல் விரைவில் வெளிவரும் என்பதைக் கூறும் இவ்வேளையிலே இந்நூலுருவாக்கம் செய்த மணிமேகலைப் பிரிகரத்தினருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சு. பாக்கியநாதன் பீ.ஏ.
ار ܢܠܐ

23e
பொருளடக்கம்
தலைப்பு பக்க எண் :
வெளிநாட்டில் தமிழர் குடியேற்றம். 7
வெளிநாடுகளில் தமிழர்களின் 66luséfésodbinessessessessessssssssssssss...... 39
6606V6/6/64-meterm. 49
でS2に

Page 6

வெளிநாட்டில் தமிழர் குடியேற்றம் இ

Page 7
8 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
ஒரு மனிதன் தனது சுயதேவைகள் இலகுவாக எங்கு எங்கு அமைகின்றதோ அங்கு அங்கு குடியேறுவான். வரலாற்று நோக்கில் பார்க்கும்போது துவக்கத்தில் ஆற்றோரங்களில் குடியேறினான். ஆரம்பத்தில் தனது அத்தியாவசிய தேவையான உணவு, உடை, உறையுளுக்கு - அதிமுக்கியமான உணவுக்காக ஆற்று ஓரங்களில் குடியேறி விவசாயம் மூலம் தனது உணவுத் தேவையையும் ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்யத்
தொடங்கினான்.
பின்பு நாகரீக வளர்ச்சி காரணமாக பல காரணங்களை மையமாகக் கொண்டு மக்கள் குடியேற்றத்தில் மாற்றங்கள் உண்டாயின.
இலங்கையினர், இந்தியத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குக் குடியேறினாலும், ஈழத் தமிழர்களே அதிகமாகக் குடியேறினார்கள். தமிழர்கள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் கல்வி, தொழில் வாய்ப்பை

பாக்கியநாதன் s 9.
அடிப்படையாகக் கொண்டு குடியேறினார்கள். இவர்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குக் குடியேறியவர்கள், மேற்படிப்பை மேற்கொண்டு உயர்ந்த பதவியைப் பெற்று வாழ்ந்தார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வைத்தியர்களாகவும், பொறியாளராகவும். அன்றும் இன்றும் காணப்படுகிறார்கள்.
தற்போதைய ஈழத்தமிழர்களின் குடியேற்றத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 20 வருட குடியேற்றத்தில் அகதிகளாகவே, 99 சதவீதம் பேர் காணப்படுகின்றனர். எமது தமிழ் ஈழப் போராட்டத்தினால், போரினால் நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலையில் வெளிநாடு செல்ல முயன்றனர். பொதுவாக இலங்கை அரசின் அசுர கொடுமையினால் இளைஞர்கள் வெளியேற வேண்டிய நிலைக்குள்ளாயினர். அதிகமான மக்கள்
ஐரோப்பாவை நோக்கி குடியேறத் தொடங்கினர்.
எமது நாடு சுதந்திரம் பெற வேண்டும். அதற்காக தமது உயிரைத் துச்சமாக மதித்து எமது நாடு, எமது

Page 8
10 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
s சுதந்திரம், விரைவில் ஈழம் பெறுவோம் என்ற
போராட்டத்தில் முழுமையாக தம்மை அர்பணித்துக்
கொண்டவர்கள், ஈழத்தில் வாழ்கின்றனர்.
எமது போராட்டம் உலகத்திலேயே சிறந்தது. உயிரைத் துச்சமாக எண்ணி சுதந்திரமே எமது உயிர் என்று எண்ணும் ஈழத்தமிழனின் வீரத்தை உலக நாடுகள் பார்த்து பிரமிக்கின்றன என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. *
வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் நாட்டுப்பற்றுக் கொண்டு தம்மாலான பெரும் உதவிகளை நாட்டுக்குச் செய்து வருகின்றனர்
என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
வெளிநாடுகளில் தமிழர் குடியேற்றத்தை எடுத்து பார்க்கும் போது இதில் ஈழத்தமிழர்களின் குடியேற்றமே மிக, மிக அதிகம். இவர்களின் குடியேற்ற நாடுகளான, ஐரோப்பாவில் - ஜெர்மனி, பிரான்ஸ், கொலண்ட், இத்தாலி, சுவிஸ்ஸர்லாந்து, டென்மார்க், பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில் அதிகமாக

பாக்கியநாதன் 11
ஈழத்தமிழர்கள் ஓரளவு நிரந்தர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர், இரசியா, போலந்திலும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் தாம் வேறுநாடுகளுக்கு செல்லும்வரை நிரந்தரமற்ற வாழ்க்கையாக, துன்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழர்கள், அமெரிக்கா போன்ற கண்டங்களிலும் பரந்து வாழ்கிறார்கள்.
கனடாவை எடுத்துக் கொண்டால் அங்கும் குறிப்பிடக் கூடியளவு தமிழ் மக்கள் வாழுகிறார்கள். குறிப்பாக, மொன்றியல், டொரண்டோ ஆகிய நகரங்களில் அதிகமான தமிழர்கள் வாழ்வதால் இதை குட்டி யாழ்ப்பானம் என்றே அழைப்பார்கள். போர் 5 ITT600TLDIT5, அகதிகளாக 2G) 35 நாடுகளில் அதிகமான இடங்களில் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர்.
1978ஆம் ஆண்டில் இருந்து 1983ஆம் ஆண்டு வரை தமிழர்கள் ஐரோப்பியாவில் அதிகமாகக் குடியேறினார்கள். இவர்கள் குடியேறும் போது,

Page 9
12 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
அதாவது அகதிகளாக, தம்மைக் கருதிக் கொண்டு அகதி விண்ணப்பம் கோரி - உதாரணமாக, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு அதிகமாகக் குடியேறத் தொடங்கினர். அந்த கால கட்டத்தில் ஈழத்தில் பெரும் போர் நடக்கவில்லை. இதனால் இங்குள்ள அரசாங்கமும் தற்காலிகமாக 6 மாத விசா மட்டுமே கொடுத்துவந்தது எனலாம்.
விசா (இருப்பிட அனுமதி பத்திரம்) என்னும் விடயத்தை நிச்சயமாக இதில் குறிப்பிடவேண்டும். பொதுவாக, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் 6 மாத, 3 மாத (அகதிகள் விண்ணப்பம்) தஞ்சக் கோரிக்கை விண்ணப்பம் என்ற அடிப்படையில், விண்ணப்பம் பரிசீலனை செய்யும் வரை விசாக்களைக் கொடுத்தனர். இவ்விண்ணப்ப பரிசீலனை, 6 மாதமாகலாம், 6 வருடங்களும் ஆகலாம். குறிப்பாக ஏனைய நாடுகளைவிட ஜேர்மனியில் 1995ஆம் ஆண்டு முன்னர் இந்தப் பரிசீலனை அதாவது அகதிகளாக ஏற்றுக்

Lunaisupinssi
கொள்வதா இல்லையா? என்பதை விரைவில் செய்வதில்லை. சிலருக்கு 12 வருடங்கள் வரை தீர்வு முடிவை எதிர்பார்த்த பின்பும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, குடியேற்ற அதிககால வாழ்வு என்ற அடிப்படையில் விசாக்களைப் பெற்று வாழ்கின்றனர்.
பொதுவாக ஈழத்தில் போர் நடை பெறுகிறது. எனவே அங்கு வாழ்வது சிரமம் என கருதி, தமது Duff' பாதுகாப்புக்காக வெளிநாடு செல்லுகின்றனர். வெளிநாட்டு அரசாங்கம் உடன் வரவேற்று இவர்களுக்கு உடன் விசா கொடுக்கிறார்கள். இவர்கள் இலகுவாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள் என்று எல்லோரும் நினைப்பது மிக மிக தவறு.
பொதுவாக உலகநாடுகளில் (அகதிகள்) தஞ்சம் எல்லோரும் கோரலாம். ஆனால் அந்த நாடு (அரசாங்கம்) அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்குரிய ஆதாரங்களைக் கூறல் வேண்டிய

Page 10
14 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
துர்ப்பாக்கிய நிலை ஈழத் தமிழர்களுக்கு மிக மிக அதிகமாகக் காணப்பட்டன. உதாரணமாக வியட்நாம் நாட்டிலே போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உலக நாடுகளில் உடனடியாக தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆஸ்திரேலியா ஒரே தடவையில் 20,000 பேரை அழைத்தது.
ஈழத்தில் கடந்த 10 வருடங்களாக கடும் போரினால் அதிகமான மக்கள், அதிகமான இளைஞர்கள் சட்ட விரோதமாக அன்றும் இன்றும் அரசாங்கத்தின் கொடு பிடியினால் தாக்கப்பட்டு வருகிறார்கள். சிறைச் சாலைக்குள் வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டு துன்புறுத்தப் படுகிறார்கள். போர் ஒழுங்கு முறைகளைக் கைவிட்டுவிட்டு அரசாங்கம் - இராணுவத்தினர், இளம் பெண்மணிகளைக் கற்பழிப்பதும், எல்லாப் பொதுமக்களையும் தாக்குவதும், துன்புறுத்துவதும், ஆகிய விடயங்கள் யாவும் உலக நாடுகளுக்குத் தெரிந்தும் இன்றும் தமிழர்களின் அகதி

WTatarupnassig 1S
விண்ணப்பம் 99% நிராகரிக்கப்பட்டுவருகிறது. மேற்காட்டிய விடயத்தை எடுத்துக்கொண்டால் உடன் ஈழத் தமிழனுக்கு அகதிகள் தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் மிக விரைவில் தற்போது நிராகரித்துவிடுகின்றன. 3, 4 வருடங்களுக்கு முன்பு பல காலங்களுக்குப் பின்புதான் பரிசீலனை செய்வார்கள். ஆனால் தற்போது குறைந்தது மூன்று மாதத்துக்குள் முடிவு எடுத்து திரும்ப நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த முறை அதிகமாக ஜேர்மனியில் கையாளப்படுகிறது. ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் விரைவில் தீர்வுகளை எடுத்து நாட்டுக்கு அனுப்ப முனைகின்றார்கள். பலமுறை பல விடயங்களை ஐரோப்பா - அரசாங்கத்துக்கு ஈழத்து நிலையை எடுத்துக் கூறியும் அதைக் கவனியாமல் கண்மூடிக் கொண்டு இருப்பது ஏன் என்று இதுவரை புரியவில்லை.

Page 11
16 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
குறிப்பாக ஜேர்மனியை எடுத்துக்கொண்டால், தற்போது இங்கு குடியேறிய தமிழ் மக்கள் ஈழப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்டு இங்கு அரசியல் தஞ்சம் கோரியவர்களுக்கு நிரந்தர விசா கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். உண்மையாக அரசியல் போராட்டத்தில் இறங்கியவர்களுக்கு விசா மறுத்தும், அரசியல் என்றால் என்ன? என்று அறியாத மக்களுக்கு அகதிகள் தஞ்சம் ஏற்றுக்கொண்டும் நிரந்தர விசாக் கொடுத்துள்ளனர். இது ஏன்? இந்த விடயத்தைப் பார்க்கும் போது ஒரு குழப்பமாகவே இருக்கிறது.
இங்குள்ள சட்டமன்றங்கள், அரசாங்க சட்ட மன்றம் இவர் அகதிதான் என்று ஏற்றுக் கொண்டால் மற்ற சட்டமன்றம் நிராகரிக்கிறது. குற்றச் செயல் செய்தவன், குற்றவாளி என்பதை நிரூபித்துவிட்டால் குற்றவாளி இல்லை என நிரூபிக்க மேற் கோர்ட்டுக்கு எனது விசாரணையைச் செய்ய வேண்டும் என்பது போல இந்த தஞ்சக் கோரிக்கையை இந்த அரசாங்கம் செய்கிறது.

Lundséuprig56i 17
ஜேர்மனியில் அகதிகளாக விண்ணப்பம் செய்து தீர்வு வரும் வரை தான் வாழும் நகரத்திலும் அதைச்சுற்றி 50 கி.மீ. வரைதான் அவர் செல்லலாம். ஏனைய நகரங்களுக்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றால் அபராதம் கட்ட வேண்டும். கட்டாயமாக அடுத்த நகரத்துக்குச் செல்ல வேண்டுமாயின் பொலிஸ் (வெளிநாட்டு) அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். தனது மனைவி 100 கிலோ மீட்டர் தஞ்சகோரிக்கை விண்ணப்பம் கோரி இருந்தார். தனது மனைவி கணவனும் அனுமதி இன்றிப் பார்க்க முடியாது; தங்கி இருக்க முடியாது. மனைவிக்கு தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார். இந்த சட்டம் அன்றும் இன்றும் உள்ளது. இப்படி ஜேர்மனியில் அகதிகள் விண்ணப்பம் செய்தவர்களுடைய நிலை படுமோசமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு வந்தவர்களின் தஞ்சக் கோரிக்கையை சரிவரப்
பார்க்காமலும் மிகவும் தாமதமாக முடிவு

Page 12
18 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
எடுத்ததினால், அதிகமாக இங்கு ஈழத்தமிழன் வாழ்ந்துவிட்டதாலும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர விசா கிடைத்ததே யொழிய அகதிகள் மற்றவர்களுக்கு தங்க, விசா கிடைக்கவில்லை
என்பது திட்டவட்டமான உண்மை.
ஜேர்மனியில் அகதிகள் விண்ணப்ப விசா அதிகமாக 99% நிராகரிக்கப்பட்டாலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கொலண்ட், கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்ட நடிவடிக்கைகள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எப்படி இருப்பினும் ஈழத் தமிழர்களின் திறமையினாலும் தமது புத்திக் கூர்மையினாலும் - சட்ட ஆலோசகர், சட்டத்தரணி போன்றவர்களைத் தொடர்பு கொண்டு, தமக்கு இருப்பிடத்தைத் தேடிக் கொண்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்று கூறுவது பொருத்தமாகும்.
မြို့မြို့မြို့

unitatus

Page 13
20 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன்
GREAT BRITAN
21

Page 14
22 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன் பாககயநாதன 73
SCANDNAVA
(2
še 熱 e 冬
W O OSLO
sodhOLM9
O. GOTEBORG
习 E) COPEuHAGEN

Page 15
24 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன் 72S
GERMANY
O HAMBURG
O BERLIN
O HANOVER
Q ESSEN ODUISBURG
O DUSSELDORF O DORTMGUND
8 coLOGNE
O FRANKFURT
O NUREMBURG
O STUTTGART
O MUNICH

Page 16
26 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன் 27
FRANCE
8. RENNES QNANTES
OBORDEAUX
O LYONS
6) TOUILOUSE
MARSEILLES

Page 17
28 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 


Page 18
30 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

31
பாக்கிய
WNNRIA
wnlı Snsd

Page 19
32 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன் 33
BELGUM
O BRUSSELS

Page 20
34 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

பாக்கியநாதன் 35
NORTH AMERICA ()
" ao
لاح کCد کسی

Page 21
36 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
 

37
日トをQ/「● 3N ÌnogTow” Nonômago
O DNODNOTTONA
● 盘AGNaas3GIVTEQy O 3T1SVONAGN
�3NVgSŋg
3TTIASNA AOL
unTitsRau
WITVAMISınwy

Page 22

வெளிநாடுகளில் தமிழர்களின்
கலாச்சாரம்
39

Page 23
40 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
கிலாச்சாரம் என்னும் போது, ஒரு நாட்டு இனம், அதாவது அந்நாட்டுச் சமுதாயம் தாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு, தாமே தமக்குள் வரையறுத்துக் கொண்ட பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்று கூறின் மிகவும் பொருத்தமுடையதாகும். தத்தம் வாழ்விடச் சூழ்நிலை, காலநிலை, இயற்கைத் தோற்றம் என்பவற்றை ஆதாரமாக வைத்து ஒரு இனமானது தாம் இப்படி வாழ வேண்டும், என்று ஒரு வரையறையான கட்டுக்கோப்புகளைத் தாமே உருவாக்கி, அதற்கமைய வாழ்கின்ற ஒரு ஒழுங்கு முறையே மரபு முறை, எனப்படும் கலாச்சாரத்தின்
பொதுவிலக்கணம் எனலாம்.
குறிப்பாக அகதிகளின் குடியேற்றத்தினால் உலக நாடுகளின் முக்கிய இடங்களில் தமிழர் பண்பாடு பரவியது. எங்கு சென்றாலும் ஈழத்தமிழர்களின் பண்பாட்டு, கலாச்சார துடிப்பு ஒவ்வொரு இடங்களிலும் காணப்படுகின்றன. ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போர் நெருக்கடியும், சுதந்திர சிந்தனையும், நாட்டு

பாக்கியநாதன் 41
நிலையும், அதிக பாதிப்பும் ஈழத் தமிழர்களில் அதிகம் பாதித்தமையே காரணமாகும்.
சுமார் 25 அல்லது 30 வருடங்களுக்கு மேல் குடியேறிய வெளிநாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, போன்ற நாடுகளில் இவர்கள் உயர்ந்த கல்வி கற்பதற்கும் உயர் பதவி வகிக்கலாம் என்பதற்கும், அதிக பணத்தை உழைக்கலாம் என்ற நோக்கில் குடியேறினார்கள். இந்த கால கட்டத்தில் தமிழர்களின் கலாச்சார
துடிப்பு, பரம்பல் இல்லை என்றே கூறலாம்.
போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் கலாச்சார புரட்சி செய்த காலம் 1980 - 2000 என குறிப்பிடலாம்.
இயல், இசை, நாடகம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது எல்லா நாடுகளிலும் அதாவது தமிழர் குடியேறிய நாடுகளில் அதைக் கடைப்பிடித்தனர். தாய்மொழி என்பது, உடலுக்கு

Page 24
42 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் கலாச்சாரத்துக்கு மொழி முக்கியம். உலகத்தில் தாய்மை முக்கியம் பெறுகிறது; அதுபோல மனித கலாச்சாரத்தில் தாய் மொழி முக்கிய இடம் பெறுகிறது. இன்று உலக ரீதியாகப் பார்க்கும்போது ஈழத்தமிழர்களின் செயற்பாட்டினால் அங்கு வாழும் மக்கள் அந்த நாட்டின் மொழியையும் பேசிக்கொண்டு, (உரையாடுதல்) தாய்மொழியையும் கதைக் கின்றனர். தமது பிள்ளைகளுக்கும் தாய் மொழியான தமிழையும் கற்றுக் கொடுக்கின்றனர். இதனால் தமிழ் உயிர் பெறுகிறது; வாழுகிறது; வளருகிறது.
உதாரணமாக மொரிசஸ் தீவு - இதை எடுத்துக் கொண்டால் அங்கு வேலை வாய்ப்புக்காகச் சென்ற தமிழர்கள் தமிழைப் பேசாது அங்குள்ள மொழியை மட்டும் பேசுகின்றனர். ஆனால் அவர்களுடைய சைவ வழிபாட்டு முறையில் தேவாரங்கள் தமிழில் பாடப்படுகின்றன. சைவ மதத்தினால் ஓரளவு
96), f 5 (el 60) lulu கலாச்சாரம் சிதறாமல்

பாக்கியநாதன் 43
இருக்கின்றன. இவர்களுடைய பெயரை முருகன், சுப்பிரமணியன், கந்தன் என்று வைத்து இருப்பதால் உற்சவ காலங்களில் நடனங்கள், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இன்றும் காணக் கூடியதாகவுள்ளது. இவர்கள் தமிழர்கள். தமிழ்க் கலாச்சாரம் உண்டு. ஆனால் அங்கே தமிழ்மொழி
இல்லை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அன்றில் இருந்து இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில தமிழர்கள், தமிழைப் பேசுவதிலும், தமிழர் என்று கூறுவதிலும் வெட்கப்படுகின்றனர். பாரதியார் கூறியது போல போச்சு போச்சு பாரத நாடு போச்சு நல்லறம் போச்சு, வேதம் போச்சு என்பது போலவும் நடிப்புச் சுதேசிகளாகவும் வாழ்கின்றனர்.
தமிழை வளர்ப்பதற்குரிய ஆரம்பத் தமிழ்க் கல்வியாக தமிழ் சஞ்சிகைகளை எடுத்துக்

Page 25
44 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக சஞ்சிகைகள் உருப்பெற்றன என்று கூறலாம். உதாரணமாக, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமான சஞ்சிகைகள் எழுந்தன. இதன் தாக்கம் அதிகமாக தமிழ் எழுத்தாளர்களை எழுதத் தூண்டியது. தமிழ் வாசனை தன்மைக்கு வித்திட்ட காலம் இது எனலாம். குறிப்பாக ஜேர்மனியை எடுத்துக்கொண்டால் ஜேர்மனியில் முதல் முதலாக தென்றல் என்ற சஞ்சிகையும் பின்பு' கலைவிளக்கு, வண்ணத்துப்பூச்சி, மண், ஏலையா, பிரவாகம், சிந்தனை, பூவரசு, அப்பிள் கடல், தூண்டில், அறுவை, தமிழ்நாதம், அலைகள், கமலம், பெண்கள் குரல், கலைக்கதிர், இளைஞன், மக்கள் குரல், வெகுஜனம், எனப்பல சஞ்சிகைகள் இந்த்ப் பட்டியலில் அடங்குகின்றன.
ஜேர்மனியில் வெளியான நூல்களை எடுத்துக்
கொண்டால் நாம் அறிந்தவரையில் முதல் முதலாக கலைவளர்ச்சியின் வெளியீடு - சிந்திக்கத் தூண்டிய

பாக்கியநாதன் 4.
ஜேர்மனிய கலாச்சாரம் என்ற நூல் 1984ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து வண்ணத்துப்பூச்சி சஞ்சிகை யாளர்களும் பல நூல்களை வெளியீடு செய்தனர். கலை விளக்கு நிர்வாகத்தினர், 10 வருடத்துக்கு முன்பே 10 புத்தகத்துக்கு மேல் வெளியீடு செய்தனர். புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இக்கால கட்டத்தில் சில நூல்களை வெளியீடு செய்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றைவிட நடைமுறை வாழ்வைப் பிரதிபலிக்கும் கவிதைத்
தொகுப்புகள் இன்று காணக்கூடியதாக உள்ளது.
ஜேர்மனியில் பத்திரிகையை எடுத்துக்கொண்டால் ஈழமணி, ஈழம், வெற்றிமணி, தமிழ் அருவி போன்ற பத்திரிகைகள் வெளிவந்தன, இவற்றில் ஒருசில தற்போது வெளிவர வில்லை. இப்பத்திரிகையின் தாக்கம் உண்மையில் எல்லா மக்களையும் ஈர்த்தது. எல்லாச் செய்திகளையும் தாங்கி கிழமைக்கு
ஒருமுறை அல்லது 2 கிழமைக்கு இரு முறை என

Page 26
46 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
தமிழ் மக்கள் வீடுகளில் காணக்கூடியதாக இருந்தது. எமது தாய்மண்ணை நினைக்கும் வகையில் சிந்தனையைத் தூண்டும் கருவியாக
இப்பத்திரிகைகள் காணப்பட்டன.
தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்வியினை கருத்திற் கொண்டு ஆங்காங்கே சிறிய தமிழ்ப் பள்ளிகளை இங்குள்ள தமிழர்கள் உருவாக்கினர். குறிப்பாக இங்கு தமிழ்க் கல்வி சேவை, கரிதாஸ் தமிழ்ப் பாடசாலை, தமிழ் ஆலயம், என்ற பெயர்களில் 100க்கு மேற்பட்ட பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் ஒவ்வொரு சிறுவர்களும் தமிழ்க் கல்வியைக் கற்பதற்கும் அதைப்பற்றி சிந்திப்பதற்கும் உருவான தளம் எனலாம். குறிப்பாக ஜேர்மன் தமிழ கல்விச் சேவையும் 1989ஆம் ஆண்டு (மன்றம் சபையும் உருபெற்றது.
இலங்கைப் பாடத் திட்டத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி ஒவ்வொரு

பாக்கியநாதன் 47
வருடமும் பரீட்சைகள் நடத்தி, திறமைகளுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் இருந்து இன்றுவரை நடைபெற்று வருகிறது. இச்செயற்பாடு பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டாலும், ஜேர்மனியில் தான் மிகவும் சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெறுகின்றது. கனடா சுவிர்சர்லாந்து அவுஸ்ரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
பாரதியார் கூறியது போல,
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.”

Page 27
48 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
இதை தமிழராகப் பிறந்த எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். தமிழர்களாகிய நாம் எங்கு வாழ்ந்தாலும் சிறப்பாக வாழ வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பாரதியார்,
“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”
என அறைகூவல் செய்வதை நாம் செவிமடுக்காமல்
இருப்பது நியாயமா?
ဒို့ဖွံ့ဖြိုခိုင္ငံဖြိုး

கலை வளர்ச்சி
49

Page 28
50 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
கிலையை எடுத்துக் கொண்டால் இதன் வளர்ச்சி மிகவும் ஆழமாகவும் துரிதமாகவும் வெளிநாடுகளில் வளர்ந்துள்ளது. பாரதியார் கூறியதுபோல, உலெகெங்கும் எமது கலைகளைப் பரப்புவோம் என்ற சிந்தனைகள் இன்றுதான் நிறைவு பெறுகிறது. பாரதியார் தீர்க் கதரிசி அல்லவா?
பொதுவாக வெளிநாடுகளில் முதல் முதலாக பரதம் தான் தமிழ் மக்களிடையே ஒட்டிக் கொண்டது. இந்த நடனம் மொழி தெரியாத வெள்ளை மக்களுக்கு சொஞ்சம் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஏனோ தெரியவில்லை வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் இவற்றை விட்டுவிட்டு பரதத்தில் மூழ்கி - இங்கு பரதம் என்றால் தமிழர்கள் என்ற ளவுக்கு எல்லா
நாடுகளிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.
பரதத்தினால் பல வகையான எமது ஈழத்துப்
போரின் நிலைப்பாட்டை, நாட்டிய நாடகம் மூலம்

untdéungai . S1
வெளிக் கொண்டு வந்த பெருமை ஈழத்து மக்களுக்கே உரியது. அதுபோல கர்நாடக சங்கீதத்திலும் இயல் இசை - காலத்துக்கு ஏற்ப பாடல்களை இயற்றி போர், சுதந்திரப் பாடல்களைப் பாடவைத்து, ஒரு மறுமலர்ச்சி, ஒரு புரட்சியை உருவாக்கினர். புனர்வாழ்வு கழகம், செஞ்சோலை,
கலாச்சார பிரிவுக்கே இதன் பெருமை சேருகிறது.
பரதநாட்டியத்தில் பழமையையே பார்த்த எமக்கு இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது? அதன் கரு போராட்டம் அதனை மையமாக வைத்து நாட்டியத்தில் புரட்சியை ஏற்படுத்தி இன்று எல்லோராலும் நாட்டிய நாடகம் என்றால் ஆவலுடன் பார்க்கிறார்கள். சிந்தனையைத் தூண்டும் கவிதைகளும், மனதை உருக்க வைக்கும் ராகமும், இசையும் எம்மை ஆச்சரியத்துக் குள்ளாக்குகிறது. கண்ணன் வெண்ணெய் திருடினான் எத்தனை முறை கேட்க முடியும்? இவற்றை யெல்லாம் மாற்றம் செய்த வெளிநாட்டில் வாழும்
தமிழர்கள் பாராட்டக்கூடியவர்களே!

Page 29
52 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
நாடகங்களை எடுத்துக்கொண்டால் இதுவும் காலத்துக்கு ஏற்ப கதைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் நிலை கொள்ளச் செய்தன. குறிப்பாக, பிரான்சு, ஜேர்மன் நாட்டில் நாடகம் ஓரளவு வளர்ச்சி பெற்றது. ஜெர்மனியில் டோர்ட்மெண்டில் அமெச்சூர் நாடக வட்டத்தின் செயற்பாடு அதிகமாகக் காணப்பட்டது. அத்துடன் லூஸ்மாஸ்கர், இன் பராசா அவர்களின் நகைச்சுவையும், கமலபாதம் குழு போன்றவர்களின் நாடகங்களும் குறிப்பிடக் கூடியவை. பிரான்ஸ் நாட்டைப்
பொறுத்தளவு தங்கராசாவைக் குறிப்பிடலாம்.
இதை விட பிரான்சிலும், ஜெர்மனியிலும் உருவான வீடியோப் பத்திரிகையான பாரீஸ் வீடியோ மலர், ஜெர்மனியின் கலைவிளக்கு வீடியோ பத்திரிகை, பேர்லினின் - மலரும் மாலைகள், தமிழ் அருவி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் கலை விளக்கு வீடியோப் பத்திரிகை மட்டுமே இயங்கிவருகிறது. இவ் வீடியோ பத்திரிகைகளும் கலைகளைத் தாங்கி எல்லோர் வீடுகளிலும் T.V.

பாக்கியநாதன் 53
பெட்டிக்கு முன்னால் இருந்து பார்த்து ரசிக்கச் செய்தன. இவை நல்ல கலை ஆர்வத்தைத் தூண்டச் செய்வது மட்டுமன்றி எல்லோரின் திறமையையும் ஏனையவருக்கு எடுத்துக் காட்டும் கருவியாகவும் விளங்கின.
அடுத்து நாம் வானொலியை எடுத்துக் கொண்டால் இது உண்மையில் ஒரு பெரும் செயல் நடவடிக் கைகளில் #5 6ᏡᎠ ᎧᏫ , & Glo mš& T JLib, போன்றவற்றில் முக்கிய பங்கை ஆற்றுகிறது எனலாம். வானொலி ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவ்வாறாக உலகம் முழுவதும் தமிழ் ஓசை பரப்பி வருகிறது. இதை முதன்முதலில் அதாவது தமிழ் மொழி உலகம் கேட்கக் கூடிய வகையில் ஆரம்பித்தவர், திரு. செல்வநாயகம் (ஜெர்மனி) ஆவார். இவர் உலகத் தமிழ்த் தொலைக்காட்சி என்ற பெயரில் ஆரம்பித்து பின்பு சில தவிர்க்க முடியாத நிலையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டு வழக்கு தற்போது

Page 30
உள்ளது.
இதன் பின்புதான் பிரான்ஸ், லண்டன், கனடா, போன்ற நாடுகளில் வானொலிகள் ஆரம்பமானது. தற்போது ஐரோப்பாவில் மூன்று வானொலிகள் - T. R.T; I.B.C; T. B.C. 6T6aT eup6ärpu aurrGarrcSassir 2 வருடங்களாக இனிது, சிறப்பாக நடைபெறுகிறது. இதனை உலகத்தில் ஈழத்தமிழர்களின் சாதனை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தற்போது ஒவ்வொரு வீடுகளிலும், தமிழ்ப் பாடல்கள், நாடகங்கள், செய்திகள், அரசியல் பேட்டிகள், நகைச்சுவை, சமயச் சிந்தனைகள், அறிவுக் களஞ்சியங்கள் - இப்படி பலவிதமான கலை கலாச்சார சிந்தனைகள் தமிழ் மொழியில் உலகெங்கும் ஒலிக்கிறது.
இதனைவிட மிக விசேடமாக (TRT) தொலைக் காட்சியும் தமிழ்ஒளி என்ற தொலைக்காட்சியும் இரண்டு வருடங்களாக இனிது நடைபெற்று

காட்சியும் 2 மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
தொலைகாட்சிகள் மேலும் சில ஈழத் தமிழர்கள் ஆரம்பிக்க இருக்கிறோம் என்பதனை வானொலி விளம்பரங்களில் அறியக் கூடியதாகவுள்ளது. எத்தனையோ சாதனங்கள் வந்தாலும் (ரேடியோ) வானொலி, தொலைக்காட்சி சேவைகள் இன்று தமிழர் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் குறைந்த மக்கள் வாழ்ந்தாலும், மூன்றுக்கு மேற்பட்ட வானொலிச் சேவையும், மூன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேவையின் இயக்கத்தையும் பார்த்தால் உண்மையில் தமிழ் கலை கலாச்சாரத்தில் ஈழத் தமிழனின் பங்கு எந்தளவு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். வானொலியை விட, தொலைக்காட்சிக்கு மிக, மிக அதிகமான முதலீடு வேண்டும். இவற்றை இலாப நோக்குடன் செய்வது மிகவும் கடினம். எனவே, இங்கு இலாப

Page 31
56 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
நோக்கத்தைக் கருதாது சேவை நோக்கமே
காணமுடிவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் தமிழ் பற்றிய ஆய்வு மகாநாடு பெர்லினில் நடைபெற்றது. இது பன்னாட்டு தமிழ் உறவு மகாநாடு என்ற பெயரிலே 1993-ஆம் ஆண்டு இம்மகாநாடு நடைபெற்றது என்பது யாவரும் அறிந்ததே.
மற்றும் கனடாவிலும் தமிழ் மகாநாடுகள் நடைபெற்றன. இப்படியாக தமிழ் ஆய்வு நூல் வெளியீடுகள், இலக்கிய சந்திப்புக்கள், கலை விழாக்கள் மற்றும் நூல் நிலையும் ஜேர்மனியில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இப்படியாக தமிழ் மொழி ஐரோப்பாவில் பரவலாகப் பரவியது.
மற்றும் இந்துக் கோவில்கள் ஐரோப்பாவில் அதிகமான இடங்களில் காணப்படுகிறது. லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கொலாண்ட்,
அமெரிக்கா, கனடா போன்ற தமிழர் வாழும்

பாக்கியநாதன் 57
இடங்களில் பல கோவில்கள் உருவாகியுள்ளன. ஜேர்மனியில் சுவற்ரா நகரில் தான் முதல் முதலாக இந்துக் கோவில் அம்பாள் ஆலயம் ஆரம்பிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து ஜேர்மனியில் பல கோவில்கள் உருவாக்கப்பட்டாலும் Hamm-ல் அமைந்த (அம்மாள்) “காமாகூவி அம்மாள் கோவில் உலகத் தமிழ் இந்து மக்களுக்கெல்லாம் தெரியும் வகையில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது உற்சவ காலங்களில் குறிப்பாக தேர்த் திருவிழாவுக்கு ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்கள் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் எனப் பெருந் தொகையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி வானொலியில் நேரடி அஞ்சல் நடைபெற்று உலக மக்களைக் கவரக் கூடிய முறையில் அமைந்து விடுகிறது. தேர்த் திருவிழாவுக்கு கிட்டதட்ட 10,000 மக்கள் கலந்து கொள்ளுகிறார்கள்.
ஜேர்மனியில் டோட்மூண்ட் நகரிலும் கோவில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால்

Page 32
58 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
'சிவன் கோவிலாக அமைந்திருந்தாலும் இங்கு விசேடமாக சனி பகவானுக்கு எள்ளுச்சட்டி எரிக்கும் நிகழ்ச்சி மிக, மிக விசேடமாக அமைகிறது. அத்துடன் சைவ சமய அறிவுப் போட்டியும் நடைபெற்று வருவதும் குறிப்பிடக் கூடிய
விடயமாகும் எனலாம்.
மற்றும் தமிழ் வளர வேண்டும். இந்துமதம் வளர வேண்டும் என்பதற்காக உலக நாடுகளில் சங்கங்கள், அமைத்தனர். அதைப் பதிவு செய்து இன்று வரை செயற்படுத்தியும் வருகின்றனர். ஜேர்மனியை எடுத்துக் கொண்டால் Frankfuit ஆரம்பித்த தமிழ் மன்றம்தான் அன்றில் இருந்து இன்றுவரை சிறப்பாக ஜேர்மனியில் நடைபெற்றுவருகிறது. 'தமிழ்நாதம்' என்ற சஞ்சிகையும் வெளியீடு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடக் கூடிய விடயம். (எதிர்காலத்தில் வெளிவர இருக்கும் "வெளிநாட்டில் தமிழர்கள்" என்ற விரிவான ஆய்வுக் கட்டுரையில் பெயர்களும் விபரமும் இடம் பெறும்.)

பாக்கியநாதன் S9
இப்படியாக சங்கம் அமைத்தும் தமிழை வளர்க்கிறார்கள். Lu G) கோணங்களில் பலவடிவங்களில் தமிழ் வளர வழிவகுக்கிறார்கள். ஓவியக் கலை வளரவும் ஓவியக் கண்காட்சிகளும் புத்தகக் கண்காட்சிகளும், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டில் தமிழர்களின் செயற்பாடு ஒரு உன்னதமான நிலையில் உள்ளது என்பதை யாவரும் அறிவர். தனக்கு நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்ற சிந்தனைத் தூண்டுதல் தான் மேற்காட்டிய துரித நடவடிக்கைளுக்கு வழிகாட்டின. ஏனைய தமிழர்களும் கலை, கலாச்சாரத்தில் பங்கு கொண்டு தமிழை - கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் தான். ஆனால் எமது போராட்டத்தின் தூண்டுதலால் ஈழத்தமிழன் நடவடிக்கைகள் உயிர்த்துடிப்பான நடவடிக்கைகளாக அமையத் தொடங்கின என்று
கூறுவதே மிகவும் பொருத்தமாகும்.

Page 33
60 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
இவ்வாறான கலை கலாச்சாரத்தில் தமிழர்கள் வாழ்வில் பல பாதிப்புக்களும் உள்ளடங்குகின்றன. இங்குள்ள வேலைப் பளுக்களினால் வாழ்விலும் பெரும் பளுக்கள், நோவுகள் உண்டாகத்தான் செய்கின்றன. தமிழர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள், உலகெங்கும் கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ந்து வருவதும் உண்மைதான். ஆனால் அடுத்த பக்கம் பார்க்கும் போது எமது தாய் நாடான ஈழத்தில் அல்லது இந்தியாவில் வாழும் சுகம் எங்கே? தமிழ், கலாச்சாரத்தில் ஒட்டி இறுக்கமாக வாழும் கலாச்சார சுவாத்தியம் எமக்கும் கிட்டுமா? அன்பு, பாசம், சேவை, ஒன்று இணைப்பு, ஒன்று கூட்டல், ஒற்றுமை, இவையாவும், இலங்கை,
இந்தியாவில்தான் காணமுடியும்.
வெளிநாட்டில் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் வேலை, வேலை, பணம், பணம் என்று 10 மணித் தியாலத்துக்கு மேல் உழைக்கிறார்கள். இங்குள்ள சில நாடுகளில் கணவன் மனைவி இருவரும்
வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கையை நடத்த

பாக்கியநாதன் 61
முடியும். இதனால் இரு வரும் வேலைக் குச் செல்வதால் - உண்மையான அமைதி, உறவு, அன்பு, பாசங்கள் குறையத்தான் செய்கிறது. பொதுவாக இங்குள்ள வேலைகளும் மிகவும் கடினமானவையாக அமைவதினால் வேலைக்குச் சென்று வரும் போது மிகவும் சோர்வாகவும் மனகளைப்புடனும் வீடு சேர்வார்கள். ஒரு பக்கம் குளிரினாலும் கஷ்டப்படுவதுண்டு. சிலர் குளிரிலேயே 8 மணித் தியாலங்கள் வேலை செய்வதுண்டு. பொதுவாக இங்கு மனச்சோர்வு, களைப்பு, ஒரு விரக்திக்கு காரணம், தனது தாய் ஈழத்தில் வாழலாம், தனது பிள்ளை ஈழத்தில், அல்லது கனடாவில் அல்லது லண்டனில் வாழலாம். தனது மனைவி ஈழத்தில் அதுவும் 15 வருடங்கள் கூட பிரிந்து வாழ்கிறார்கள். ஒரு பிள்ளை மேற்படிப்புக்காக வெவ்வேறு இடங்களில் வாழ்வது தவிர்க்க முடியாத காரணங்கள்தான். ஆனால் ஒரு மனைவியை அல்லது கணவனைப் பிரிந்து
வாழ்வது ஒரு வாழ்வா? கணவன் மனைவியை

Page 34
62 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
பிள்ளைகளை ஈழத்தில் விட்டு விட்டு இங்கு வாழ்வது அதுவும் வருடக் கணக்கில் என்றால் எப்படியான துன்பமான சூழ்நிலை என்பதை யாவரும் அறிவார்கள். அதுவும் போர் நடைபெறும் வேளையில் இவர்களை மீண்டும் உயிருடன் காணமுடியுமா? இவ்வாறான சூழ்நிலையில் ஈழத் தமிழன் வாழ்வு செல்கிறது.
இங்கு வேலைப்பளு வினால் கணவன் மனைவியர் ஒற்றுமையில் இறுக்கம் குறையத்தான் செய்கிறது. அதுமட்டுமின்றி பிள்ளைகள், அம்மா அப்பா இவர்களுக்கிடையே இடைவெளி வர ஆரம்பிக்கிறது. உதாரணமாக பெற்றோர் வேலைக்குச் சென்று வருகிறார்கள், பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலைக்கும் இங்குள்ள அரசாங்கத்திலிருந்து வரும் கடிதங்கள், அது சம்பந்தமான பிரச்சனைகள், இவற்றைப் பார்க்கும் போது குடும்பத்தில் ஒன்றாக இருந்து மகிழ்ச்சிகரமாக வாழும் நேரம் குறைவாக
உள்ளது.

பாக்கியநாதன் 63
வெளிநாட்டில் வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள் எனக் கூறமுடியாது. ஆனால் அவர்களுக் குரிய நேரம் குறைவாகவுள்ளது. பிள்ளைகளைச் சரிவர பார்ப்பதற்குரிய நேரம் இன்மையால் பிள்ளைகள் தாய் தந்தை பாசத்தில் குறைவு காணப்படுகிறது. இதனால் பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் பாதிக் கப்படுகிறது. பிள்ளைகளும் வேறு கோணத்தில் சிந்திக்க முனைகிறார்கள். துர்ப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். தாய் தகப்பன் வீடுகளில் இல்லாத நேரங்களில் தொலைக்காட்சியில் வரும் தகாத காட்சிகளைப் பார்க்க முயல்கிறார்கள். அத்துடன் இங்குள்ள நாட்டவர்களுடன் பழகி அவர்கள் செய்யும் செயலையும் செய்ய
முற்படுகிறார்கள்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல துயரங்கள், கவலைகள் எங்கு வாழ்ந்தாலும், எல்லா நாட்டினருக்கும், இல்லாமல் இல்லை. ஆனால்
அவற்றின் வகைகள் தான் வேறுபட்டனவாய்

Page 35
64 உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் சுவையான விவரங்களும்
உள்ளன. கவலைகள், வாழ்க்கைப் போராட்டம் என்பன ஒவ்வொரு இடத்துக்கு இடம் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் இக்கால கட்டத்தில் எல்லா நாடுகளிலும் துரித மாற்றங்களும், வாழ்க்கை முறைகளும் பன்முகப்பட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது காலத்தின் தேவையும் இதுவே.
ဇွိုင္ငံဖွံ့ဖြိုချို့


Page 36


Page 37