கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 13வது சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை

Page 1
RUE-DEF
 

தர் நினைவுப் பேருரை

Page 2

நுண்மதி என்ற மரபுவழி என்னக் கருவைத்
தகர்ப்புக்கு உள்ளக்குதல்
(Deconstructing the Traditional Concept of
Intelligence)
பேராசிரியர் சபா ஜெயராஜா தலைவர் கொழும்பு தமிழ்ச் சங்கம்
சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை-13
நினைவுப் பேருரைச் செயற்குழு கிழக்குப் பல்காலக்கழகம்

Page 3
: . 66J
சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினத்தையொட்டி கிழக்குப் பல்கலைக்கழத்தினால் சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை செனட் சபையின் முடிவிற்கேற்ப வருடா வருடம் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இவ்வருடம் நடைபெறும் பதின்மூன்றாவது பேருரைக்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
முத்தமிழ் வித்தகராம் சுவாமி விபுலாநந்தரின் ஆய்வுப் பணிகளின் முக்கியத்துவம் அளப்பரியது. இவர் தமிழிசை வரலாறு, இலக்கிய வரலாறு, தமிழ் நாடக வரலாறு, மொழியியல் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு, தமிழிசை போன்ற துறைகளில் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் அவர் கொண்டிருந்த பாண்டித்தியம் “யாழ் நூல் பிறப்பதற்கு ஆதாரமாயமைந்தது. பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை பெளதிக அறிவைப் பிரயோகித்து எழுதிய அவரது யாழ் நூல், தமிழிசை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பங்களிப்பாகும்.

சுவாமி விபுலாநந்தரின் நினைவாக நடைபெறும் 86ձ750)(1}tL பேருரை, யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் முன்னாள் பேராசிரியரும், கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக கல்வி முதுமானி வருகைதரு விரிவுரையாளருமான பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்களால் “நுண்மதி என்ற LDUL5Mự} எண்னக்கருவைத் தகப்புக்கு உள்ளாக்குதல்” எனும் தலைப்பின் கீழ் நிகழ்த்தப்படுவது எமக்குப் பெருமையளிக்கிறது.
நினைவுப் பேருரைத் தொடர் தொடர்ந்தும் சிறப்புற என் மனமாள்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலாநிதி நா. பத்மநாதன் உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 4

நுண்மதி என்ற மரபுவழி எண்ணக் கருவைத் தகர்ப்புக்கு உள்ளாக்குதல்
(Deconstructing the Traditional Concept of
Intelligence)
பேராசிரியர் சபா ஜெயராஜா தலைவர்/ கொழும்பு தமிழ்ச் சங்கம்
சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை-13 2009
நினைவுப் பேருரைச் செயற்குழு
கிமக்கட்
வந்தாறுமூலை
இலங்கை

Page 5
வாழ்த்துரை
சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினத்தையொட்டி கிழக்குப் பல்கலைக்கழத்தினால் சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை செனட் சபையின் முடிவிற்கேற்ப வருடா வருடம் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இவ்வருடம் நடைபெறும் பதின்மூன்றாவது பேருரைக்கு வாழ்த்துரை வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
முத்தமிழ் வித்தகராம் சுவாமி விபுலாநந்தரின் ஆய்வுப் பணிகளின் முக்கியத்துவம் அளப்பரியது. இவர் தமிழிசை வரலாறு, இலக்கிய வரலாறு, தமிழ் நாடக வரலாறு, மொழியியல் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு, தமிழிசை போன்ற துறைகளில் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் அவர் கொண்டிருந்த பாண்டித்தியம் “யாழ் நூல் பிறப்பதற்கு ஆதாரமாயமைந்தது. பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை பெளதிக அறிவைப் பிரயோகித்து எழுதிய அவரது யாழ் நூல், தமிழிசை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பங்களிப்பாகும்.

சுவாமி விபுலாநந்தரின் நினைவாக நடைபெறும் இன்றைய பேருரை, யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் முன்னாள் பேராசிரியரும், கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக கல்வி முதுமானி வருகைதரு விரிவுரையாளருமான பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்களால் “நுண்மதி என்ற மரபுவழி எண்ணக்கருவைத் தகர்ப்புக்கு உள்ளாக்குதல்” எனும் தலைப்பின் கீழ் நிகழ்த்தப்படுவது எமக்குப் பெருமையளிக்கிறது.
நினைவுப் பேருரைத் தொடர் தொடர்ந்தும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலாநிதி நா. பத்மநாதன் உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 6
முன்னுரை கலை கலாசார பீடத்தின் சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைச் செயற்குழுவினால் நடத்தப்படும் பேருரை வரிசையில் இந்த உரை 13வது நினைவுப் பேருரையாகும். மட்டக்களப்பு புளியந்தீவு கிராமோதய சபையின் அனுசரணையுடன் அப்போது தலைவராக இருந்த சிவனேசராஜாவின் ஒத்துழைப்புடன் இது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இவ்வுரைத் தொடரின் முதலாவது S-60J60)ij
இலக்கியக் கலாநிதி எவ்.எக்ஸ்.சி. நடராஜா நிகழ்த்தினார். தொடர்ந்து இந்தப் பேருரைகளை பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் சின்னையா மெளனகுரு, பேராசிரியை LD(360T சபாரத்தினம், பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா,
பேராசிரியர் எம்.ஏ.நு.மான், பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு , அருட் சகோதரி கலாநிதி மார்க்கிரட் பஸ்டியன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ், பேராசிரியர் பி.மூர்த்தி ஆகியோர் இன்றுவரை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த வகையில் இவ்வருடம் நடைபெறும் 13° நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கல்வித்துறை பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்கள் ஆற்றுகின்றார். பேராசிரியர் சபா ஜெயராஜா 96)ir b6ft 2-6)5. LabpGuigi New Fronties in Education, The Mythical Journal 2 L'UL U6) guj63F சஞ்சிகைகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், கல்வியியல், உளவியல் , நுண்கலை, இலக்கியம், திறனாய்வு, சிறுவர் இலக்கியம் எனப் பல்துறைகளிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். கல்வித்துறையின் புதிய கண்டுபிடிப்புகளாக கற்பித்தலில் இருதள அணுகுமுறை ( Dual Plane Approach), g) 6T65u656b LD607061(géd இயங்கியல் கோட்பாடு (Emodalities Theory), அறிகைச் சிக்கல் அமைப்பாக்கல் கோட்பாடு (Cogon, Complex Formation) SA,&lu J6)lsb60B L|6D60)Du|6D&löG5
நல்கியவர்.
தமது நூல் வெளியீட்டு மேன்மை காரணமாக அமெரிக்க நூற்பட்டியல் நிறுவனத்தால் "2004ம் ஆண்டின் உலக மனிதர்’ என்று சிறப்பிக்கப்பட்டவர். கொழும்புத் தமிழ்ச்

Page 7
சங்கத்தால் ‘சங்கச் சான்றோர்” என்று பட்டம் வழங்கிக்
கெளரவிக்கப்பட்டவர்.
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றாலும் தமது எழுத்துப் பணிகளுக்கும் கருத்துரைகளுக்கும் ஒய்வு கொடுக்காத பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்கள் தற்போது கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்கள், தமிழ் இசைத்துறையில் பல ஆய்வுகள் செய்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு “யாழ்நூலை வழங்கிய 8,6IITLs விபுலாநந்தரின் புலமையுள்ளத்திற்கு உவப்பான விதத்தில் அமையும் “நுண்மதி என்ற மரபுவழி எண்ணக்கருவைத் தகர்ப்புக்கு உள்ளாக்குதல்’ எனும் பொருத்தமானதுமான தலைப்பில் இவ்வாண்டில் 13வது சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரையை பேருரையாற்ற உடன்பட்டமைக்காக பேருரைச் செயற்குழு மிகவும் மகிழ்ச்சியடைகின்றது நன்றி பாராட்டுகின்றது!
இப் பேருரைத் தொடர் தொடர்ந்தும் சிறந்த முறையில் நிகழ்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.
செல்வி. எஸ்.பொன்னையா பீடாதிபதி
கலை கலாசாரபீடம்

இதுவரை நடைபெற்ற சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைகள்
1.
இலக்கியமாகிய சிலப்பதிகாரமும் மக்கள் காவியமாகிய கண்ணகி வழக்குரையும்
எவ், எக்ஸ். சி. நடராசா- 1989
சூழலும் சமூகப் பண்பாடும்- சுவாமி விபுலாநந்தரின் நோக்கு
பேராசிரியர் சி. தில்லைநாதன் - 1992
நடிப்பு முறைமைகள் பற்றிய எண்ணக்கருக்கள்
பேராசிரியர் சி.மெளனகுரு - 1996
விபுலாநந்தரின் கல்வியியல் தரிசனம் -
பேராசிரியை மனோ சபாரத்தினம்- 1997
இலங்கையில் இன முரண்பாடும் மூன்றாம் தரப்பு
மத்தியத்தினுடான தீர்வும்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா - 1999
மொழி இயலும் இலக்கியத் திறனாய்வும்கலாநிதி எம்.ஏ.நுட்மான்- 2001
ஈழமும் தமிழரும்: புராதன காலக் குடிகளும் மட்டக்களப்பு தேசமும்- பேராசிரியர்.சி.பத்மநாதன்2002

Page 8
. 10.
11.
12.
புலப்பெயர்வும் பண்பாடும்- ஈழத் தமிழரின்
இலக்கியம்
பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு2004
விபுலாநந்தர் தம் யாழ்
அருட் சகோதரி கலாநிதி மார்க்ரெட் பெஸ்ரின்-2005
விபுலாநந்தர் ஆய்வுத் திறனும் நவீன நோக்கும்
பேராசிரியர் அ. சண்முகதாஸ் - 2006
சுவாமி விபுலாநந்தரின் தமிழியில் ஆய்வுகள்
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் 2007
Culture of Peace and Non-Violence in the New Millennium
Prof.P.Moorthy - 2008

நுண்மதி என்ற மரபுவழி எண்ணக் கருவைத் தகர்ப்புக்கு உள்ளாக்குதல் ((Deconstructing the Traditional Concept of Intelligence)
சுவாமி விபுலாநந்தரின் கல்விச் செயற்பாடுகள் எழுச்சி கொண்ட காலப் பகுதியில் பிரித்தானியரது கல்வி நடவடிக்கைகள் ஒற்றைப் பரிமாண நோக்கில் தீவிர வளர்ச்சி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒற்றைப் பரிமாண நோக்கு என்பது வர்க்க அமைப்புடைய சமூகத்தின் இயல்பை வலிதாகக் கட்டிக் காக்கும் நடவடிக்கையாகும். அந்த இயல்பை இறுகிய நிலையிலே மீள வலியுறுத்தும் பொருட்டு பிரித்தானியாவில் 1944 ஆம் ஆண்டின் பட்லர் கல்விச்
சட்டம் (BUTLER EDUCATION ACT)
உருவாக்கப்பட்டது. நுண்மதிப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு பதினோராம் வயதில் மாணவரைத் தரம் பிரித்தல் அந்தக் கல்விச் சட்டத்தில் தலையாய எழுபொருளாய் வலியுறுத்தப்பட்டது.
பிரபுக்கள் உள்ளிட்ட எழு குழாத்தினரது பிள்ளைகள் சிறந்த தரத்திலான கல்வியைக் கற்கும் இலக்கணப் ustLIT606)85(65&g (GRAMMAR SCHOOLS) செல்வதற்கான ஏற்பாட்டை அது உறுதி செய்தது.

Page 9
அதேவேளை தொழிலாளர்களது பிள்ளைகள் தொழிற் பாடசாலைகளுக்குச் சென்று தொடர்ந்து தாழ் நிலையில் வாழ்வதற்குரிய இறுகிய கல்வி ஏற்பாட்டை அது ஏற்படுத்தியது. சமூக ஏற்றத்தாழ்வை மீளப் பிறப்பிக்கும் கல்வி நடவடிக்கையாக அது அமைந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே வர்க்க சார்பான கல்வியமைப்பைக் கட்டியெழுப்புவதற்குரிய பலமான வடிவமாக நுண்மதிப் பரீட்சை உருவாக்கப்பட்டது. நுண்மதி அல்லது விவேகம் பற்றிய கருத்து கல்வியிலே நெடிது வேரூன்றியிருந்தாலும் அதனை ஒடுக்குமுறைக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தும் முறைமை முதலாளியத்தின் வளர்ச்சியோடு எழுச்சி கொள்ளலாயிற்று. காலனித்துவ ஆட்சியும் கல்வி முறைமையும் பற்றி விரிவாக ஆராய்ந்த போலோ பிறேறி அவர்கள் “ஒடுக்குமுறைமைக்கான ஆசிரியம்’ (PEDAGOGY OF THE OPPRESSED) 6T6arp (BT606) வெளியிட்டார். ஒடுக்குவோர் ஒடுக்கப்படுவோருக்கு எதிராகக் கல்வியை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை தென் அமெரிக்க அனுபவங்களை
அடியொற்றி அவர் விரிவாக விளக்கினார்.

பிரித்தானியக் கல்வி முறைமையின் ஒற்றைப் பரிமாண நோக்கின் குறியீடாகவும், வர்க்க நிலையின் குறியீடாகவும் அமைந்த நுண்மதிப் பரீட்சையும் அதனையொட்டி மேற்கொள்ளப்பட்ட முடிவுகளும் ஒடுக்குமுறைக்குச் சாதகமானவையாயும் ஒடுக்குமுறைக்கு அரண் செய்வதாயும் அமைந்தன. பிரித்தானிய அரசால் முன்வைக்கப்பட்ட கல்விக் கருத்துக்களைத் திறனாய்வு செய்யாது அவற்றைச் சிலாகித்துப் பேசும் எழுகுழாத்தினரின் (ELITES) செயற்பாடுகள் ஒருபுறம் நிகழ அவற்றை மறுதலித்து
வினைப்பட்ட ஆய்வறிவாளர், “கல்வியும் அறிவும்” தொடர்பான பன்மைத் தளங்களிலே செயற்படுவோராயும் LDTgbDiš சிந்தனைகளை
முன்மொழிவோராயும் அமைந்தனர். அந்த வகையில் முதன்மை கொண்ட ஒரு வினைப்பாட்டளராக சுவாமி
விபுலாநந்தர் விளங்கினார்.
அறிவு நிலையிலும் வினைப்பாட்டு நிலையிலும் அவரின் தொழிற்பாடுகள் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்து நடவடிக்கைகளில் வெளிப்பட்டன. 1928 ஆம் ஆண்டில் கீரிமலை வைத்திலிங்கம் மடத்தில் நிகழ்ந்த மாணவர் காங்கிரஸ்
560)6)60)LD உரையில் முன்வைத்த கருத்துக்கள்

Page 10
(S.KADIRGAMAR, 1980) fig5ITGofuji, asgö6i முறையின் அமைப்பையும் உள்ளடக்கத்தையும்
திறனாய்வு செய்வதாய் அமைந்தன.
சுவாமி விபுலாநந்தரால் பின்வரும் முற்போக்குக்
கல்விக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
1. தாய்மொழியே கல்வி மொழியாக அமைதல் வேண்டும். அதேவேளை பிறமொழிகளையும் கற்று அறிவுத் தேட்டத்தை வளம்படுத்துதலிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
2. சுதேச விழுமியங்களுக்கு முதன்மையளித்தலும் கண்மூடித்தனமாக மேலைப் புலப் பண்பாட்டுக்கு அடிமையாதலைத் தவிர்த்துக் கொள்ளலும் ஏற்புடைய சிறந்த நடவடிக்கைகளாகின்றன.
3. குறிப்பிட்ட ஒருசில இடங்களில் மட்டும்
LGFT6O6)856)6 அமைப்பதற்கு முண்டியடிப்பதைத் தவிர்த்து, பாடசாலைகள் இல்லாதவிடங்களிலே அமைப்பதற்கு முன்வரல்
வேண்டும்.

. பெருந்தோட்டத்துறைச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து
கொடுத்தல் வேண்டும்.
, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தீய பழக்கங்களில் இருந்து மக்களை விடுவிப்பதற்குரிய அறிவுரைகளைப் பரவலாக்குதலே சிறந்தது.
. சாதிப் பாகுபாட்டை ஒழித்து “சம ஆசனம் சம
போசனம்” என்ற செயற்பாட்டை
முன்னெடுப்பதற்கு கற்றோரும் மற்றோரும் உதவுதல் வேண்டும்.
. சமயப் போட்டிகளைத் தவிர்த்து சமய சகிப்புத்
தன்மையைக் கட்டியெழுப்புதல் வேண்டும்.
. சுயராச்சியம், பொருளாதார விடுதலை
முதலியவற்றுக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடல் வேண்டும்.

Page 11
இலங்கையின் கல்வியிலே பெரும் திருப்புமுனையாக அமைந்த கன்னங்கராவின் விதப்புரைகளுக்கு முன்னரே
பொருத்தமானதும் முற்போக்கானதுமான கல்விக் கருத்துக்கள் சுவாமி விபுலாநந்தரால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுவாமி
தலைமை தாங்கிய “மாணவர் காங்கிரஸ்” பின்னர் “இளைஞர் காங்கிரஸ்” என்ற பெயருடன் இலங்கையின் கல்வி வரலாற்றிலும், சமூக வரலாற்றிலும் தடம்பதித்த நிறுவனமாக முகிழ்த்தெழுந்தது. அதன் உறுப்பினராக இருந்த ஆய்வறிவாளர்களே இலங்கையின் கல்வி முறைமையையும், பாட உள்ளடக்கங்களையும், தெரிவு முறைமைகளையும் நுண்மதியுள்ளிட்ட பரீட்சை முறைகளையும் பின்னர் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தினர்.
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வர்க்கச் சார்புடன் இணைந்த கல்வி விரிவாக்க நடவடிக்கைகள் மனித D 6T ஆற்றல்களின் எழுச்சியைப் பல நிலைகளிலே வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் வந்தன. ஆற்றல் என்பது புலன் உணர்வோடும் புலக் காட்சியோடும் இணைந்துள்ள
நிலையில் “அட்டாவதானி” “சதாவதானி” போன்ற

எண்ணக்கருக்கள் வளர்ச்சியடையலாயின. புலன் உணர்வுகளுக்கும் புலன் பதிவுகளுக்கும் அந்த எண்ணக் கருக்கள் முன்னுரிமை வழங்கின.
தமிழ் மரபில் வீரமா முனிவர் இயற்றிய பரமார்த்த குருகதை நுண்மதி என்ற எண்ணக்கருவை எதிர்மறைக் கண்ணோட்டத்தில் அணுகி விபரிப்பதாக அமைந்தது. தரங்கம் பாடியில் அமைந்திருந்த டேனிஸ் திருச்சபையைச் (DANISH MISSION) சார்ந்தோருக்கு எதிராக எழுதப்பட்ட புனைவு என்றும்
அதனைக் கொள்வர்.
தமிழ் மரபிலே மனக்கணிதம் என்ற அறிகைச் செயற்பாடும் நுண்மதியை அளவிடும் கருவியாகத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலே பயன்படுத்தப்பட்டது. நாட்டார் கல்வியில் நொடியும், நொடி அவிழ்த்தலும் நுண்மதிச் செயற்பாடுகளாக் கருதப்பட்டன. அதேவேளை சமகாலக் கல்வி உலகில் அதிகம் பயன்படுத்தப்படுதலும் அதிகம் துஷ்பிரயோகத்துக்கும், கேடுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவதுமான இயல்பைக் கொண்டவையாக நுண்மதிச் சோதனைகள்
விளங்குகின்றன.

Page 12
நுண்மதிப் பரீட்சைகள் தீவிர பரிசீலனைக்கும்
திறனாய்வுக்கும் உட்படுத்தப்பட்டுவரும் வேளையில் எமது நாட்டில் அவற்றின் எதிர்மறை உட்கிடக்கைகளை அறியாது உயர் பதவிகளுக்குரிய ஆளணியினரைத் தெரிவு செய்வதற்கும், உயர் கல்வி நிலையங்களுக்குரிய அனுமதியை வழங்குவதற்கும் நுண்மதிப் பரீட்சைகளையே பயன்படுத்தி வருதல்
ஒருவித முரணுரையாகவேயுள்ளது.
மரபு வழியான நுண்மதிப் பரீட்சைகள் பல்வேறு விதமான தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. நுண்மதிப் பரீட்சைகளிலே குறைந்த அடைவுகளைப் பெறுவோர் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்றும் மெல்லக் கற்போர் என்றும் தமக்குத் தாமே தற் கருத்தேற்றம் (AUTO SUGGESTION) Gaugl கொள்கின்றனர். கல்விச் செயற்பாடுகளிலே சிறப்பார்ந்த
அறிபொருளாகும் நுண்மதிக்கு உலகளாவிய முறையிலே பின்வரும் வரைவிலக்கணங்கள் தரப்பட்டன.
1. “நுண்மதி என்பது புதிய தேவைகளுக்கு ஏற்றவாறு தனியாட்கள் தம்மை இசைவுபடுத்திக்
கொள்வதற்குரிய பொதுவான ஆற்றல்”
-ஸ்ரேண் (1914)

. “உண்மை அல்லது உறுநேர்வு (FACT) என்ற நோக்கிற் குறிப்பிடுவதானால் சிறந்த துலங்கலை ஏற்படுத்தக்கூடிய உளவலுவே
நுண்மதியாகின்றது.”
-தோண்டைக்
- (1914)
. “அருவ நிலையான சிந்தனையை ஒருவர் எந்த அளவில் முன்னெடுத்துச் செல்கின்றார் என்பதைப் பொறுத்தே அவரின் நுண்மதி கணிக்கப்படும்”.
-ரேர்மன்(1921)
. “புதிதானதும், மாறிவருவதுமான சூழலை ஒருவர் அறிந்துகொள்ளும் ஆற்றலும், இசைவாக்கம் செய்துகொள்ளலுமான திறனும்
நுண்மதியாகின்றது”.
-வக்னொன்
(1937) . நுண்மதி என்பது உள்ளத்தைப் பயன்படுத்தலுக்கு உட்படுத்தும் செயலாகின்றது. ஒரு சந்தர்ப்பத்தைக் கையாளுதலும் அல்லது ஒரு செயற்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி வைத்தலும் பயன்படுத்துதலும் ஆகிய செயலாகின்றது”.
-வூட்வேர்த் மற்றும் மார்க்கஸ் (1948)
9

Page 13
6. “சூழலுக்கேற்றவாறு ஒருவர் இசைவாக்கம் செய்து
கொள்ளும் ஆற்றலே நுண்மதியாகின்றது”.
- பியாசே (1952)
மேற்கூறிய வரைவிலக்கணங்களை ஆழ்ந்து
நோக்கும்பொழுது அவை மனித ஆற்றலை ஒற்றைப்
பரிமாணத்தில் விளக்கும் வகையில் அமைந்திருத்தலைக் BBT600 (ԼԶlջեւյւb. அதாவது ஒருவரின் இசைவாக்கத்திறனே அங்கு முதன்மைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அவற்றை அடியொற்றி ஒற்றை வழிக்கோட்பாடு
(MONARCHIC THEORY) எழுச்சி கொண்டது.
அதாவது, மனிதரது நுண்மதிச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படையான 63(5. திறனே தனிக்காரணியாக அமைகின்றதென்ற வலியுறுத்தல், முக்கியத்துவம் பெறுகின்றது. அதனை அடியொற்றிய ஆய்வுகள் வளர்ச்சியடைய நுண்மதியை நிர்ணயிக்கும் இரு காரணிக் கோட்பாடு, பல காரணிக் கோட்பாடு முதலியவை எழுச்சியடையத் தொடங்கின.

வரலாற்று நோக்கிற் பார்க்கும்பொழுது, நுண்மதி தொடர்பான பிரதான ஆய்வினை 1904 ஆம் ஆண்டிலே
ஸ்பியர்மன் (SPEARMAN, C.E.1923) என்ற பிரித்தானிய உளவியலாளர் வெளியட்டார். உள ஆற்றலைக் கண்டறியும் குறிப்பிட்ட 6905 சோதனையிலே கூடிய புள்ளிகளைப் பெறும் ஒருவர் அந்த ஆற்றலைக் கண்டறியும் வேறொரு சோதனையிலும் கூடிய புள்ளிகளையே பெறுவர் என்பது ஸ்பியரிமனின் கருத்தாக அமைந்தது. மேலும் கணிதவியலிலே பயன்படுத்தும் காரணிப் பகுப்பாய்வு முறையைத் துணையாக்கி நுண்மதி அளவீட்டு முறையினை அவர் முன்னெடுத்துச் சென்றார்.
நுண்மதித் தேர்விலே தனியாள் வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய இரண்டு காரணிகளை ജൂഖ് குறிப்பிட்டார். அவற்றுள் முக்கியமானதாகவும்
முதலாவதாகவும் அமையும் காணிக்கு GC GUIglá5Ty65ón” (GENERAL FACTOR-g) 616ögo பெயரிட்டார். இரண்டாவது காரணி குறிப்பிட்ட சோதனையோடு இணைந்த காரணியாகின்றது. “பொதுக் காரணி என்றால் என்ன என்பதை ஆரம்ப
காலத்தில் அவரால் விளக்க முடியாதிருந்தது.

Page 14
1927 ஆம் ஆண்டளவில் அது ஒர் உளவலு”
(MENTAL ENERGY) 6T6ip g6, it 66missib
கொடுத்தார்.
உளவியலிலே இடம்பெற்ற கணிப்பீட்டு முறைகளின் வளர்ச்சி நுண்மதி என்ற எண்ணக்கருவின் வளர்ச்சிக்கும் அடையாளப்படுத்தலுக்கும்
பெருமளவிலே பயன்படலாயிற்று. “உளக்கணியவியல்” (PSYCHOMETRICS நுண்மதியின் கட்டுமானத்தைத்
தேடும் செயற்பாட்டுக்கும் வலுவூட்டியது. அதனை அடியொற்றி 6 ஆற்றல்களைக் கண்டறியும் சோதனைகள் உருவாக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட எழுத்து வழிப் பரீட்சைகளுக்கு சில
எடுத்துக்காட்டுகள் வருமாறு.
1. பின்வரும் தொடரில் அடுத்து வரும் இலக்கம்
என்ன
3,6,10,15,21 ...? 2. வேறுபட்டு நிற்கும் சொல்லின் கீழே கோடிடுக.
அண்ணா, அக்கா, அம்மா, அப்பா, தங்கச்சி

உள ஆற்றல்களைக் குறிப்பிட்ட தேர்வுகள் வழியாகக் கண்டறிய முடியும் என்று உளக்கணியவியலை
முன்னெடுத்தவர்கள் கருதினர்.
ஸ்பியர்மன்னின் இரு காரணிக் கொள்கையை மறுத்துரைத்த அமெரிக்க உளவியலாளர் எல். எல். தேஸ்டன் (THURSTON, LL 1938) 66jruti. அடிப்படையான உள ஆற்றல்களை ஏழாக வகுத்துக் கூறினார். அவற்றுக்கு அவர் “முதலாம் நிலை உள apps soir” (PRIMARY MENTAL ABILITIES)
என்று பெயரிட்டார். அவை வருமாறு.
1. சொல் சார்ந்த கிரகித்தல் 2. சொல் வெளிப்பாட்டுவளம் 3. எண்ணும் எண்கணித நிலைக் காரணங் காணலும் 4. விசும்பு அல்லது வெளி பற்றிய காட்சி கொள்ளல்
(SPATIAL VISULIZATION) 5. விதிவருவிக்கவல்ல காரணங்காணல் 6. Louisitid 6,606 (PERCEPTUAL SPEED) 7. நினைவுத்திறன் அல்லது ஞாபகத்திறன்

Page 15
இவர்களது முன்மொழிவுகளைத் தொடர்ந்து வேறுபல உளவியலாளரும் இத்துறையில் ஈடுபாடு காட்டலாயினர். ஆவர்களுள் கனடா நாட்டைச் சேர்ந்த பிலிப் ஈ வேர்ணன், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்.பி.கெற்றல் முதலியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
நுண்மதிச் சோதனைகள் சொல் சார்ந்த சோதனைகள்
என்றும் சொல் சாராத சோதனைகள் என்றும்
பாடுபடுத்தப்படும். சொல்சார்ந்த சோதனைகள் பொதுவாகப் பின்வரும் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும்.
1. சொல்வளத்தை (VOCABULARY) அறியும்
உருப்படிகள்.
2. ஞாபகத்திறனை அறிந்துகொள்ளக்கூடிய
உருப்படிகள்
3. கிரகித்தல் திறனை அறிந்துகொள்ளக்கூடிய
உருப்படிகள்
4. தகவல் அறிவைப் பரீட்சிக்கும் உருப்படிகள்

5. காரணங்காணும் திறனைக் கண்டறியும் உருப்படிகள், தருக்கத்திறன், பகுப்பாயும் திறன், தொகுத்தறிதல் திறன், விதிவிளக்கும் திறன், விதி வருவிக்கும் திறன் முதலியவை எழுத்து வடிவிலோ அல்லது சொல் வடிவிலோ
வழங்கப்படும்.
6. இணைக்கும் திறனைக் கண்டறியும் உருப்படிகள்ஒரே பண்புடையவை வேறுபட்டு நிற்பவை, குறித்த பண்புகளில் ஒன்றிணைபவை முதலியவை.
சொல் சாராத சோதனை, பொருள் வடிவிலும், பட வடிவிலும் வரைபுகளாகவும் இடம்பெறும். பொருள்களுக்கிடையேயுள்ள தொடர்புகள் மற்றும் வேறுபாடுகளை இனங்காணல் குறியீடுகளை இனங்காணல், பொருத்துதல், குழப்பமாக இடம்பெறும் படங்களை ஒழுங்குபடுத்துதல், பொதுமைகாணல், எறிவு செய்தல், பட வழியாக உருவாக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் முதலியவை இடம்பெறும்.
நுண்மதிச் சோதனைகள் தனியாள் சோதனைகள்
என்றும் குழுச் சோதனைகள் என்றும்

Page 16
பாகுபடுத்தபட்டாலும், தனியாள் சோதனையின் பயன்பாடுகளே பெருவழக்கில் உள்ளன. சமூக நிரலமைப்பின் இயல்பை வலியுறுத்தும் கல்வி முறைமை கூட்டு முயற்சிகளுக்கும் குழுச் செயற்பாடுகளுக்கும் இடமளியாது, தனி மனிதவாதத்தையும், தனியாட்களுக்கிடையே கூரிய போட்டிகளையும் வளர்க்கும் வண்ணமுமே உருவாக்கம்
பெற்று வருகின்றது.
நுண்மதிக்குப் பின்புலமாக அமையும் கருத்தியலை வளம்படுத்த அதனைப் பரந்த அடிப்படைகளில் விளக்க வேண்டும் என்ற கருத்து உளவியலாளரிடத்து முகிழ்த்தெழுந்து-அதாவது ஸ்பியர்மன் குறிப்பிடுதல் போன்று ஓரிரு காரணிகளுக்குள் அடக்காது விரிவுபடுத்துதல் வேண்டுமென்ற கருத்து எழுச்சி கொண்டது. அமெரிக்க உளவியலாளராகிய ஜே.பி.கில்பேட் 120 660)85UT6 ஆற்றல்களை உள்ளடக்கிய நுண்மதிக் கட்டமைப்புக் கோட்பாட்டை முன்வைத்தார் (1967). அது ஐந்து வகையான தொழிற்பாடுகளையும், நான்கு 66035UT6 உள்ளடங்கல்களையும், ஆறு வகையான தனித்தனி ஆற்றல்களையும் கொண்டதென்று குறிப்பிட்டார்.
அவ்வாறான வகைப்பாடுகள் ஒன்றிணைந்து

வளரும்பொழுது 5x4x6=120 நூற்று இருபது தனித்தனி ஆற்றல்களாக வேறுபிரித்தறியக்கூடியது என்று குறிப்பிட்டார். 1984 ஆம் ஆண்டில் அவ்வாறான தனித்தனித் திறன்களை 150 ஆக மேலும் விரித்து விளக்கினார்.
நுண்மதி என்பதை வர்க்கக் கண்ணோட்டத்திலே பயன்படுத்தும் செயற்பாடுகள் கடந்த நூற்றாண்டிலே மேலும் எழுச்சி கொண்டமை குறிப்பிடத்தக்கது. 1969 ஆம் ஆண்டிலே ஆதர் ஆன் ஜென்சென் என்பார் பரம்பரைக் காரணிகளால் மட்டுமே நுண்மதி தீர்மானிக்கப்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்தார். (HAWARD EDUCATIONAL REVIEW, 1969) வெவ்வேறு சூழலில் வளர்க்கப்பட்ட ஒத்த இரட்டையர்களிடத்து ஒரேவித நுண்மதி காணப்பட்டமையை தமது வாதத்துக்கு ஆதாரமாக அவர் காட்டினார். அத்துடன் மேலதிகமான கற்பித்தல் நடவடிக்கைகளினாலும் அதனை வளர்க்க முடியாது என்று அவர் தமது வாதத்தைத் தொடர்ந்தார்.
அந்த ஆய்வின் பின் விசையாக அமைந்த கருத்தியல் மிக முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியுள்ளது. கறுப்பின மக்களையும் தொழிலாளர் களையும் கல்வி
மற்றும் உயர் தொழில் வாய்ப்புக்களில் இருந்து

Page 17
ஓரங்கட்டி வடுவதற்கு அந்தக் கருத்தியில்
அமைந்திருந்தமை பின்னர் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதேவேளை, அறிகை உளவியலின் வளர்ச்சி,
நுண்மதி தொடர்பான ஆய்வுகளிலே மேலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தலாயிற்று. நுண்மதி
என்பது தகவல்களின் பிரதிநிதித்துவப்படுத்தல் தொகுதியை உள்ளடக்கியதென்றும் அவ்வாறான உளப் பிரதிநிதித்துவப்படுத்தலை ( MENTAL REPRESENTATION) தொழிற்படுத்துவதற்குரிய வழிமுறைகளின் தொகுதியை 55}29ک{ உள்ளடக்கியதென்றும் குறிப்பிட்டனர். அதாவது
நுண்மதி கூடியவர்கள் அதிகளவு தகவல்களை சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் செய்வோராயும், அந்த தகவல்களை விரைந்து இயக்கித் தொழிற்படவைப்போராயும் அமைவர் என்று மேலும் வலியுறுத்தப்பட்டது. அதாவது வேகம் அல்லது விரைந்து தொழிற்படல் என்ற செயற்பாடு அறிகை உளவியலிலே வற்புறுத்தப்பட்டது. ஆயினும் அந்த ஆற்றல் தொழிலாளர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் 22 –шй நிலையில்
முன்னேற்றம் பெறவில்லை என்பது உளப்பாங்கு

(ATTITUDE) - நிலையில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்தது.
உளத் தொழிற்பாட்டை விளக்க வந்த ஜென்சன், (JENSENA, 1969) 69(56)(560)Lu உள்ளத்தின் செயற்பாடுகள் அவரால் வைத்திருக்கப்படத்தக்க நுண்மதியின் அளவைச் சார்ந்தது என்றும் அது இணை ஆற்றல்கள் (ASSOCIATE ABILITIES) 6T6örpi) எண்ணக்கரு சார்ந்த ஆற்றல்கள் (CONCEPTUAL ABILITIES) என்றும் பாகுபடுத்தப்படத்தக்கவை என்று குறிப்பிட்டார்.
ஞாபகம், மீளவாக்கல், இனங்காணல், பிரித்தறிதல், தொகுத்தல், இணைத்தல், இடம் மாற்றல், பிரயோகித்தல் முதலியவை இணை ஆற்றலில் இடம்பெறும். இவை பொதுவாக நுண்மதிப் பரீட்சை
வினாக்களில் இடம்பெறுகின்றன. எண்ணக்கரு ஆற்றல்கள் அவற்றிலிருந்து வேறுபடுபவை. உயர்நிலையான சிந்தனை, காரணங்காணல்,
பகுத்தாராய்தல், பிரச்சினை விடுவிக்கும் ஆற்றல் முதலியவை எண்ணக்கரு சார்ந்த ஆற்றலில் இடம்பெறுகின்றன.

Page 18
இணை ஆற்றல்கள் ஒருவரது பிறப்புடன் இணைந்த உயிரியற் காரணிகளுடன் தொடர்புடையவை என்றும் ஆனால் எண்ணக்கரு ஆற்றல்கள் பண்பாட்டுடனும் கல்வியுடனும் இணைந்தவை என்றும் குறிப்பிட்டார்.
அறிகை உளவியலின் வளர்ச்சி புதியதொரு பரிமாணத்தைத் தோற்றுவித்தது. அதாவது மனித மூளையின் தொழிற்பாடுகளையும் கணனியின் தொழிற்பாடுகளையும் ஒப்புமை செய்து புதியதோர் கருத்தை முன்வைத்தனர். மனித மூளையில் நிகழ்த்தப்படும் தகவல் நிரற்படுத்தலின்போது குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரு செயற்பாடு மட்டும் இடம்பெறுவதில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகையான நிரற்படுத்தல் இடம்பெறுகின்றதென்றும் விளக்கினர். அந்த அடிப்படையிலிருந்து முக்கியமான ஒரு கருத்தாக்கம் எழுச்சிகொள்ளலாயிற்று. அது காட்னர் மற்றும் ஸ்ரேண்பேர்க் (GARDNER.H. 1983) ஆகியோரால் உருவாக்கப்பட்ட “பன்முக நுண்மதிகள்” (MULTIPLE INTELLIGENCE) (35TurtG gag b. அதாவது ஒரு நுண்மதி மட்டும் ஒருவரிடத்துக் காணப்படுதல் இல்லை. மொழிசார்ந்தது, தருக்க கணிதவியல் சார்ந்தது விசும்பு அல்லது வெளி

சார்ந்தது, இசை சார்ந்தது உடலியக்கம் சார்ந்தது, ஆளிடைத் தொடர்பு சார்ந்தது, ஆள் உள்தொடர்பு சார்ந்தது என்றவாறு அது விரிவடையும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிஞர்களின் ஆற்றல் வெளிப்பாடுகளைத் தொகுத்து நோக்கும்பொழுது “பன்முக நுண்மதிகள்” என்ற அமைப்பியலுடன் இணைந்து நின்றவர்களுள் சுவாமி விபுலாநந்தர் தனித்துவம் பெறுகின்றார். கலை நுண்மதி, அறிவியல் நுண்மதி, அழகியல் நுண்மதி என்ற அனைத்துப் பரிமாணங்களினதும் ஒன்றிணைந்த வெளிப்பாடுகள் அடிகளாரிடத்துக் காணப்பெற்றன.
யாழ் நூலிலே பயன்படுத்தப்பட்டுள்ள பன்முக அறிவியல் எண்ணக்கருக்களும், அவற்றின் சிக்கலாகிய பிரயோகங்களும் பன்முக நிலைகளிலே ஆழ்ந்து ஊடுருவிய அறிகைச் சிக்கலாக்கல் அமைப்பும்
(COGNO- COMPLEX FORMATION) குறிப்பிடத்தக்கவை. அறிவு என்பது ஆழ்ந்து ஊடுருவி வளர்ந்து செல்லும்பொழுது தவிர்க்க (piguus,
சிக்கலான வடிவைப் பிறப்பித்த வண்ணமிருக்கும்.

Page 19
அறிவின் சிக்கலாகிய வெளிப்பாட்டுக்குரிய மொழித்தளத்தை தமிழுக்கு சுவாமி விபுலாநந்தர் அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மார்க்சிய மற்றும் நவ மார்க்சிய உளவியலின் வளர்ச்சி, அறிகை நிலையில் அடிப்படையான திருப்பங்களை ஏற்படுத்தியது. நுண்மதி என்பது பரம்பரையின் இயல்பு என்ற கருத்தை அவர்கள் தகர்ப்புக்கு உள்ளாக்கினர். மேலைப் புலத்தினர் தமது மேலாண்மையை நிலைநிறுத்துவதற்கும் கறுப்பு இனத்தவரைப் புலமை நிலையில் ஒடுக்குவதற்கும் பொருத்தமானதொரு அறிகை வடிவமாக நுண்மதியைப் பயன்படுத்தலையும் மார்க்சிய உளவியலாளர் சுட்டிக்காட்டினர். சமூகச் சூழல் என்பது நுண்மதி ஆக்கத்தில் எவ்வாறு பங்குகொள்கின்றது என்பதைக் குறிப்பிட்ட பண்பாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து சோவியத் உளவியலாளர் எல்.எஸ். வைகோட்சி நிறுவினார். பயிற்சியால் நுண்மதி வளர்க்கப்பட முடியாது என்பதையும் அவர் தள்ளுபடி செய்தார். வளர்ந்தோரின் முயற்சியால் நடைமுறையில் எட்டப்படக்கூடிய மேம்பாட்டு மட்டத்துக்கும் சாதாரண ஒருவரின் அறிவு மேம்பாட்டு மட்டத்துக்குமுள்ள பொருண்மை கொண்ட இடைவெளிக்கு g|ഖ്

“அண்மை விருத்தி வலயம்” (ZONE OF
PROXIMALDEVELOPMENT) 6T6šip GuufůLTň. அந்த ஆய்வு அறிகை நிலையிலே பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
மார்க்சிய நவ மார்க்சிய உளவியல் நுண்மதிச் சோதனைகளைத் தீவிர திறனாய்வுகளுக்கு உட்படுத்தியதன் அவற்றின் விளைவாகப் பின்வரும்
கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. ஒருவரது D-L6) வெப்பத்தை அளவிடுதல் போன்று S2O 6T ஆற்றலகள் திட்பநுட்பமான
அளவீட்டுக்கு உட்படுத்தக்கூடியது அன்று.
2. பல நுண்மதித் தேர்வுகளிலே மாணவர் வேறு வேறு மதிப்பெண்களைப் பெறுதல், குறிப்பிட்ட ஒரு நபரது நுண்மதி மாறாத இயல்பைக்
கொண்டது என்ற கருத்தைத் தகர்ப்புக்குள்ளாக்குகின்றது.
3. நுண்மதிச் சோதனைகளில் இடம்பெறும்
உருப்படிகள் பெரும்பாலும் எழு குழாத்தினருக்கு

Page 20
(ELITE)ğ சார்பாகவே அமைந்துள்ளன.
அதாவது, அவை பண்பாட்டு ஒருச்சார்புடையவை.
. பயிற்சியாலும், போதனையாலும் நுண்மதிச் சோதனைப் புள்ளிகளை அதிகரிக்கக் கூடியதாயிருத்தல் கண்டறியப்பட்டுள்ளது. (நுண்மதித் திறன் இயற்கையானது (INNATE) என்றும் பயிற்சியால் அதிகரிக்க முடியாததென்பதும் சிறப்பாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மேற்கூறிய மாற்றுக் கருத்து எழுச்சி கொண்டுள்ளது.
. நுண்மதித் தேர்வுகளிலே கூடிய புள்ளிகளைப் பெற்று உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டோரது ஆற்றுகைத்திறன் உயர்நிலையிலே காணப்படுகின்றது என்பதை உறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது.
நுண்மதித் தேர்வுகளால் ஒருவரது மனவெழுச்சி gibgp6)560)6(3uit (EMOTIONAL ABILITIES) படைப்பு மலர்ச்சி ஆற்றல்களையோ (CREATIVE
ABILITIES) அளவிட முடியாதுள்ளது.

அந்நிலையில் மனவெழுச்சி நுண்மதி, ஆக்க மலர்ச்சி நுண்மதி முதலாம் புதிய கருத்தாக்கங்கள் எழுச்சி பெறத் தொடங்கின.
7. குறிப்பிட்ட ஒரு வயதுக்குப் (11 ஆண்டு) பின்னர் நுண்மதி வளர்ச்சியடைய முடியாததென்ற கருத்து மனித ஆற்றலை குறுகிய வரையறைக்குள் சிறைப்பிடித்து விடுவதாக அமைந்துள்ளது. அதாவது மனித முயற்சிக்கு ஒருவிதமான தடையை விதிப்பதாக அமைந்துள்ளது.
நுண்மதிப் பரீட்சைகளிலே உயர் அடைவுகளைப் பெறுவோர் தாம் உயர்ந்த நுண்மதி படைத்தவர்கள் என்று எண்ணி ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையிலே செயற்படுதலும் கண்டறியப்பட்டுள்ளது
(MANGAL, S.K.,2007) G3Lobg56oaś6ð SDÓ6 figuurTa5 கறுப்பின மக்களை ஒடுக்குவதற்கு நுண்மதித்
தேர்வுகளைப் பயன்படுத்தியமை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வலியுறுத்தும் வண்ணம் பிறப்புரிமை வழியாகவே அது
தீர்மானிக்கப்படுவதாக எச்.ஜே.ஜஸ்னெக் தொடர்ந்து
வலியுறுத்தினார். (HARWARD EDUCATIONAL
REVIEW,1969) இச்சந்தர்ப்பத்தில் நுண்மதித்

Page 21
துறையிலே ஆய்வுகளை மேற்கொண்ட உளவியலாளர்களுள் சிறில் எல்.பேட் (1883-1971)
அவர்கள் மேற்கொண்ட 9(5 செயல் குறிப்பிடத்தக்கது. நுண்மதி என்பது ஒருவரின் பிறப்பு
இயல்புடன் இணைந்த “
அறிகை வினைப்பாட்டுத்திறன்” (GENERAL
COGNITIVE EFFICIENCY) 516ip sing 6 pg5
அவர் வாண்மை நிலையில் மேலோங்கி நிற்போரின்
உள்ளார்ந்த பொது
பிள்ளைகளிடத்து உயர் நுண்மதி காணப்படுவதாக விதந்துரைத்தார். அதாவது ஆய்வு ரீதியாக நுண்மதி என்பது உயர் குழாத்தினருக்குரிய ஒரு பண்புக்கூறு என்றும் அது பிறப்புரிமை வழி பெறப்பட்டதென்றும் விதந்துரைத்தார்.
ஆனால், சிறில்பேட்டின் இறப்புக்குப் பின்னர் அவர் வெளியிட்ட நுண்மதி தொடர்பான கருத்துக்கள்
ஏமாற்றுத்தனம் (FRAUD) GastóOiL606) 6T6irg
நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரது அனைத்து ஆவணங்களையும், நாட்குறிப்புக்களையும்
பரிசீலனை செய்த உளவியலாளர் லெஸ்லி ஹேர்சோ அது விஞ்ஞான பூர்வமான ஏமாற்றுத்தனம் என்பதைக் கண்டறிந்தார். அவரது கருத்தை

பிரித்தானிய உளவியற் கழகமும் ஏற்றுக்கொண்டது. (PALMERJ.A(ED), 2004) 9g56p615 Gg5TLfpi5g5
நுண்மதி தொடர்பாக உயர்ந்தோர்’ மட்டில் நிலவிய மனோபாவங்கள் தகர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டன. அந்தத் தகர்ப்பு கறுப்பின மக்களிடத்தும், தொழிலாளர்களிடத்தும், கற்றல் தொடர்பான குதுாகலிப்பை ஏற்படுத்தலாயிற்று.
ஆனாலும் பல்வேறு மட்டுப்பாடுகள் கொண்ட நுண்மதிப் பரீட்சைகளையே மூன்றாம் உலக நாடுகள் உயர் பதவி நிர்ணயங்களுக்கு இன்றும் பயன்படுத்தி வருகின்றன. உயர்கல்விக்குரிய தெரிவுப் பரீட்சைகளிலும் அதன் Luu 6öTLum(6
தொடர்ந்த வண்ணமுள்ளது.
மரபுவழி நுண்மதி பற்றிய எண்ணக்கருவிலே உட்பொதிந்திருந்த தவறுகளும், வழுக்களும், எதிர்மறைப் பண்புகளும் “மனவெழுச்சி நுண்மதி”
(EMOTIONAL INTELLIGENCE) பற்றிய ஆக்கத்துக்கு இட்டுச் சென்றது. கலாநிதி ஜோன்மேயர் மற்றும் கலாநிதி பீட்டர் சலோவே ஆகிய பேராசிரியர்கள் 1990 ஆம் ஆண்டளவில்
மனவெழுச்சி நுண்மதி என்ற எண்ணக் கருவை

Page 22
அறிமுகம் செய்தனர். ஆனால் அதனைப் பிரபல்யம் செய்வதில் அமெரிக்க உளவியலாளராகிய டானியல் கோல்மனுடைய பங்களிப்பு (1995) முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
மனவெழுச்சியைப் புலக்காட்சி கொள்ளல், சிந்தனையிலே பொருத்தமான வகையில் அதனை இணைத்தல், அது தொடர்பான விளக்கத்தைப்
பெறுதல், அதனை முகாமை செய்தல், முதலியவற்றை காரண காரிய அடிப்படையில் இயக்கும் திறன்களை மனவெழுச்சி நுண்மதி உள்ளடக்கி நிற்கின்றது. மனவெழுச்சி தொடர்பான ஆய்வுகள் மக்டுகலைத் தொடர்ந்து உளவியலில் எழுச்சி கொண்டாலும் உலகின் தொன்மையான அறிகை முறைமைகள் மனவெழுச்சியை உள்ளிர்ப்புச் செய்திருந்தன. தொன்மையான கலையாக்கங்களும் சடங்குகளும் மனவெழுச்சிகளின் வெளிப்பாட்டுடனும், நெறிப்பாட்டுடனும் தொடர்புபட்டிருந்தன. இன்பியல்துன்பியில் என்ற கிரேக்க நாடக வகைப்பாடும்,
“கதாசிஸ்” என்ற எண்ணக்கருவும் மனவெழுச்சியுடன் இணைந்திருந்தன. இந்திய மரபில் உருவாக்கம் பெற்ற இரசக் கோட்பாடும் மனவெழுச்சியை
அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.

சூழல் பற்றிய புலக்காட்சியிலிருந்து மனவெழுச்சி ஆரம்பிக்கின்றது. அது உடலும் உள்ளமும் சார்ந்த
எழுச்சி நிலைகளை உருவாக்குகின்றது. மனவெழுச்சி ஒருவரிடத்து நேரடியாகவும் வெளிப்படும் இடம்பெயர்ந்த வகையிலும்
வெளிப்படும். ஆக்கத்துக்குரிய விசையாகவும் அழிவுக்குரிய விசையாகவும் மனவெழுச்சி தொழிற்படவல்லது. மனவெழுச்சி ஆற்றல்களைப் Lju6öru(65glds கற்றலையும் வெளியீட்டு வடிவங்களையும் பயன்படுத்த முடியும். மனவெழுச்சி நுண்மதியின் முக்கியத்துவத்தை விளக்க வந்த கலாநிதி டானியல் கோல்மன் பின்வரும் சிறப்புப் பண்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். (MANGAL, S.K.
2007)
1. மரபு வழியான நுண்மதி அணுகுமுறையைக் காட்டிலும் மனவெழுச்சி நுண்மதி அதிக வலுவும்,
எதிர்காலப் பயனும் கூடியது.
2. மனவெழுச்சி நுண்மதி கூடியவர்கள்
வாழ்க்கையிலே ஒப்பீட்டளவிற் கூடுதலான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

Page 23
. வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்துச் செல்வதற்கும் அது அவர்களுக்குத் துணை செய்கின்றது.
. மனவெழுச்சிகளைக் கையாளல் விளைத்திறன் மிக்க தொழில் ஆற்றுகைக்கு இட்டுச் செல்கின்றது.
புலமை வாழ்க்கையிலே ஒருவரது வெற்றியை மனவெழுச்சி மற்றும் சமூக அளவீடுகளிலிருந்தே
கண்டுகொள்ள முடிகின்றது.
. வேலைச் சூழலை இங்கிதமாக்கவும் மனவெழுச்சி
நுண்மதி உயர்வே துணை செய்கின்றது.
மனவெழுச்சி நுண்மதி மேம்பாடு ஒருவரை பின்வரும்
வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச் செல்லும்.
மனவெழுச்சிகளை செப்பனிடப்பட்ட (REFINED) வகையில் வெளிப்படுத்த வல்லவராயிருப்பர்.

தமது மனவெழுச்சிகளைத் தாமே கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் வல்வவர்களாயிருப்பர்.
தகவல்களையும் உணர்ச்சிகளையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டவர்களாயிருப்பர்.
உணர்ச்சி அழுத்தங்களுக்கு D-LULTgjl தீர்மானங்ககளையும் முடிவுகளையும் மேற்கொள்வோராயிருப்பர்.
தேவையற்றதும் பொருத்தமற்றதுமான
விவாதங்களில் ஈடுபடுதலைத் தவிர்த்துக் கொள்ளும் திறன் மேலோங்கி நிற்கும். g56irG60T601600lds35(5 (SELF CONCEPT) g5sbuig Dub (SELF IMAGE) தற்கணிப்பு ஆகியவை இங்கிதம் தழுவியதாய் அமையும்.
சமூக ஊடாட்டங்களில் எதிர்ச் சமூக
gblgogss6it (ANTI SOCIAL BEHAVIOUR) தோன்றவாய்ப்பிராது.

Page 24
மனவெழுச்சி நுண்மதி மேம்பட்டவர்களிடத்துப் பின்வரும் சிறப்புப் பண்புகள் காணப்படும்.
1. முகபாவனை, s L6) மொழி, குரல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறரின் மனவெழுச்சிகளைப் புலக்காட்சி கொள்ளலும் இனங்காணலும்
மேலோங்கியிருக்கும்.
2. தனது மனவெழுச்சிகளையும் உணர்வுகளையும்
உய்த்தறிந்து பயன்படுத்துதல் சிறப்படையும்.
3. மனவெழுச்சிகளைப் பொருத்தமான வகையிலே
சிந்தித்தலுடன் ஒன்றிணைக்கும் ஆற்றல் கைகூடும்.
4. தமது மனவெழுச்சி வெளிப்பாடுகளையும் அவற்றின் செறிவையும் அவற்றின் விளைவுகளையும் துல்லியமாக அறிந்து
கொள்ளலும், பயன்படுத்தலும் சிறப்படையும்.
5. மனவெழுச்சிகளைப் பொருத்தமான வகையிலே முகாமை செய்வதால் விளைவுகள் அதிகரித்துச்
செல்லும் வாய்ப்பை பெறும்.

6. மனவெழுச்சிகளோடு இணைந்த கற்றலையும் தொழிற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல (լքtջեւյլb.
மனவெழுச்சித் திறன்களை உரிய முறையில் வளர்த்துக் கொண்டவர்கள் தமது ஆற்றல்களை மேம்பட்ட நிலையில் வெளிப்படுத்துவோராயும் ஆற்றுகை செய்வோராயும், விளைதிறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்போராயும் காணப்படுகின்றனர். அதேவேளை சிறிதளவேனும் 9ഥ9 மனவெழுச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமக்குள் உளப் போராட்டங்களை
வளர்த்துக் கொள்பவர்களாகவும் அதன் விளைவாக
தெளிந்த சிந்தனையை வளர்த்துக்கொள்ள முடியாதவர்களாயும், வேலையாற்றலைக் குவியப்படுத்தி வெளியீட்டை மேம்படுத்த முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
(GOLEMAN, D. 1996)
மனவெழுச்சிகளை முகாமை செய்ய முடியாது முழுமையான செறிவுடன் அவற்றை வெளிக்கொட்டும் பொழுது வேலைச் சூழலின் இங்கிதம்

Page 25
பாதிக்கப்படுவதுடன் ஆளிடைத் தொடர்புகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். மனவெழுச்சி நுண்மதியை விளக்க வந்த சலோவேயும் மேயரும் அதனை ஐந்து பெரும் ஆட்சிகளுக்கு (DOMAINS) D UG5g 66miss60TsIsr. (SALOVEY
AND MAYER, 1996) 9,606.jurrou60T:
1. தனது மனவெழுச்சியைத் தாமே உற்றறிந்து கொள்ளல். எடுத்துக்காட்டாக, கோபம் என்ற மனவெழுச்சி தோன்றும்பொழுதே அதன் இயல்புகளை உடனடியாக விளங்கிக் கொண்டு இயங்குதல். அவ்வாறான நுண்மதிச் செயல் திறன்களை உடையவர்கள் வாழ்வின் அறைகூவல்களை எதிர்கொண்டு நிதானமாக முன்னேறிச் செல்வோராயும் இருப்பர். பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளலும்
அதனால் முன்னெடுக்கப்படும்.
2. மனவெழுச்சிகளை முகாமை செய்யும் திறன்: மனவெழுச்சிகளை முகாமை செய்ய முடியாதோர், கற்றலிலும், குடும்ப வாழ்க்கையிலும் தொழில் ஆற்றுகையிலும்
இடர்களை உருவாக்கிக் கொள்வோராயிருப்பர்.

3. மனவெழுச்சிகளை விளங்கித் தமக்குத்தாமே ஊக்கல்களை உருவாக்கிக் கொள்வோரும் வாழ்க்கையின் இங்கிதமான வெற்றிகளை
நோக்கி நகர்வோராயிருப்பர்.
4. மற்றவர்களது மனவெழுச்சிகளை இனங்காணலும், விளங்கிக்கொள்ளலும், ஒத்துணர்வு காணலும் (EMPATHY)
வெற்றிகளுக்கு இட்டுச் செல்லும்.
5. மனவெழுச்சிகளை விளங்கிக் கொண்டு பொருத்தமான தொடர்புகளை முன்னெடுத்தலும் மேம்பாட்டுக்கு அடிப்படையாகின்றது.
மனவெழுச்சி நுண்மதிப் பரீட்சை வினாப்பத்திரத்திலே பொதுவாகப் பின்வரும் உள்ளடக்கம் உட்பொதியப்பட்டிருக்கும்.
1. மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய தூண்டிகளும்
வேதனை தரவல்ல தூண்டிகளும் பற்றி அறிதல்.
2. மனவெழுச்சிகளை அணுகும் விதம் பற்றிய
விளக்கம் பெறுதல்.

Page 26
நேர்/எதிர் மனவெழுச்சிகளை ஒடுக்கிக் காணும் திறனும், விரித்துக் காணும் திறனும் பற்றிப் பகுத்து நோக்கல்.
நேர்/ எதிர் மனவெழுச்சிகளோடு இணைந்த நடத்தைக் கோலங்கள் பற்றி அறிதல்.
எதிர்பாராத நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள நேரிடும்பொழுது அவற்றை அணுகும் முறை பற்றி அறிதல்.
பிறரின் மனவெழுச்சிகளை வாசித்தறியும்
திறன்களை மதிப்பிடல்.
மனவெழுச்சிக் குறுக்கீடுகள் மத்தியில் தொழிற்படும் திறன்களை அறிதல். மனவெழுச்சிகளைப் uuj6öru(655g.
தொழிற்பாடுகளை வினைத்திறன் படுத்துதலை அறிதல்.
மனவெழுச்சிகளை முகாமை செய்யும்
ஆற்றல்களைத் தெரிந்துகொள்ளல்.

10. பொருத்தமான சந்தர்ப்பத்திலே பொருத்தமான மனவெழுச்சிகளை வெளிக்காட்டும் ஆற்றல்களை
அறிதல்.
காலனித்துவக் கல்வி முறைமையின் ஒற்றைப் பரிமாணத்தளம் கல்வி முறைமை வாயிலாக ஆக்க மலர்ச்சியை (CREATIVITY) வளர்த்தெடுப்பதற்குரிய நடவடிக்கைகளுக்கு ஆக்கம் தருவதாக அமையவில்லை. ஆக்க மலர்ச்சி கல்வியைப் பொறுத்த வரை ஒரு வேண்டப்படாத செயற்பாடாகவே கருதப்பட்டது. அழகியற் பாடங்கள் இரண்டாம் பட்சமானதாகக் கருதப்பட்டதுடன் கற்பிக்கப்படாதும் விடப்பட்டன. ஒரேமுகமாகச் சிந்திப்பவர்களையும் அறிவின் புதிய வழித் தடங்களை நாடாதவர்களையுமே காலனித்துவக் கல்வி முறைமை பெருமளவில் உருவாக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய ஒரு கல்விப் பெறுபேறு ஒடுக்குமுறைக்குச் சாதகமாகவும் அமைந்தது. மேலும் ஆக்க மலர்ச்சி என்பது கலைப் பாடங்களுக்கு மட்டுமுரிய பரிமாணம் என்ற தவறான கண்ணோட்டமும் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்நிலையில் ஆக்க மலர்ச்சி பற்றிய விளக்கம்

Page 27
முதற்கண் முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. அனைவரிடத்தும் ஆக்க மலர்ச்சிக்கு என்ற பண்பு உட்பொதிந்துள்ளது. அது ஓர் அகிலப் பண்பு (UNIVERSAL) Ga5T60örL g05ILJ.
2. புதியது ஒன்றை உருவாக்குதல் அல்லது மாறுபட்ட வகையிலே சிந்தித்தல் ஆக்க மலர்ச்சியின் வெளிப்பாடு ஆகின்றது.
Ké 99
3. மாமூலான ծԼplջԱl சிந்தனையிலிருந்து
விடுபடலை ஆக்க மலர்ச்சி கொண்டுள்ளது.
4. பன்முகமாக விளைவுகளை ஆக்க மலர்ச்சி
உருவாக்கவல்லது.
5. ஆக்க மலர்ச்சியை நேர் வழியிலும் பயன்படுத்தலாம் எதிர் வழியிலும் பயன்படுத்தலாம்.
6. மரபுவழியான நுண்மதிச் சோதனைகளிலே குறைந்த புள்ளிகளைப் பெற்றோரிடத்துக்கூட

கூடிய ஆக்க மலர்ச்சிக் கண்டறியப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
7. மாமூலான பாடக் கணிப்பீட்டு முறைகளில் ஆக்க மலர்ச்சியைக் கணிப்பீடு செய்யும் முயற்சிகள்
வறிதாகவே காணப்படுகின்றன.
8. ஆக்க மலர்ச்சி மனவெழுச்சிகளுடன் இணைந்து
தொழிற்படுகின்றது.
9. பெருங் கவிஞர்கள் மட்டுமல்ல பெரும் விஞ்ஞானிகளும் ஆக்க மலர்ச்சி
மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர்.
10.ஆக்க மலர்ச்சி கொண்டவர்களது சிந்தனைகளுக்கும் உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனைகளுக்குமிடையே சில சந்தர்ப்பங்களிலே ஒப்புமை காணப்படுதல்
உண்டு.
11.ஆக்க மலர்ச்சி விரிசிந்தனை (DIVERGENT THINKING) யுடன் தொடர்புடையது. அதாவது சிந்தனையைக் குறிப்பிட்ட ஒரு திசையில் மட்டும்

Page 28
இயக்கிச் செல்லாது பல திசைகளிலும் பல நிலைகளிலும் இயக்கிச் செல்வது விரிசிந்தனையாகின்றது.
ஆக்க மலர்ச்சியை ஆராயும் உளவியலாளர் அதனை மூளையின் வலப்பகுதிச் செயற்பாடுகளுடன் இணைத்து விளக்குதல் உண்டு. அதேவேளை இட அரை மூளை காரண காரிய மற்றும் தருக்கச் சிந்தனைத் தொடர்புடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரு நூற்றாண்டுகளின் கல்விச் செயற்பாடுகள் இட அரை மூளையை வளர்ப்பதன் பொருட்டே இயக்கப்பட்டது என்ற திறனாய்வும் உண்டு. ஆக்கத்திறன் சோதனைகள் பின்வரும்
உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும்.
1. பிரச்சினைகளுக்கு எழுவுணர்ச்சி கொள்ளும்
இயல்பு 2. வெளியீட்டுச் செழும் ஆற்றல் 3. எண்ணங்கள் தழுவிய செழும் ஆற்றல் 4. நெகிழ்ச்சியின் தன்னெழுச்சிப் பாங்கு 5.56G60Typ6) satissib (ORIGINALITY) 6. தூர நிலை இணைப்புக்களை ஏற்படுத்தும் திறன் 7. மீள் வரைவிலக்கணம் கொடுத்தல்

8. அசாதாரண முறையில் விபரித்தல்
9. தெளிவின்மை மற்றும் கருகலாகிய தன்மை
முதலியவற்றை அனுபவித்தல்
10. மாற்று நோக்கு
11. கற்பனை வளம்
12. குவி சிந்தனையும், விரி சிந்தனையும்
வெளியீட்டுநிலை, விளைவுகளை உருவாக்கும் நிலை, புத்தாக்கம் செய்யும் நிலை, வேறு வேறுபட்ட LDfTsjögp சிந்தனைகளை உருவாக்கும் நிலை மிகப்பெரும் கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் நிலை என்றவாறு ஆக்க மலர்ச்சி வளர்ச்சியடைந்து செல்லும்.
உளப்பகுப்புக் கண்ணோட்டத்தில் ஆக்க மலர்ச்சியை விளக்குவோர் அதனை நனவிலி மனத்துடன் தொடர்புபடுத்தி அந்த மனத்தின் தொழிற்பாடுகளே ஆக்க மலர்ச்சியாக மேலெழுச்சி கொள்வதென விளக்குவர். குழந்தை நிலையிலிருந்தே அடக்கியும் அழுத்தியும் தேக்கியும் வைக்கப்பட்ட பெரும் அனுபவக் களஞ்சியமாக - நனவிலி மனம் உருவாக்கப்பட்டுள்ளதென்றும், அது மொழி போன்று

Page 29
கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளதென்றும் உளப்
பகுப்பு உளவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மார்க்சிய உளவியலாளர் சமூக இயல்புகளோடு தொடர்புபடுத்தி விளக்குவர். அதாவது சுரண்டலும் பறிப்பும் அற்ற ஒரு சமூக அமைப்பு ஒவ்வொரு மனிதரதும் ஆக்க மலர்ச்சியை முழுவீச்சில் முன்னெடுக்க உதவும் என மார்க்சிய உளவியல் வலியுறுத்துகின்றது. சமூக நுண்மதி பற்றிய விளக்கம் மார்க்சிய உளவியலிலே பரவலாகப் பேசப்படுகிறது.
மரபுவழி நுண்மதிச் சோதனைகளின் அமைப்பையும் உள்ளடக்கத்தையும் ஆராயும்பொழுது அறிவுக்கும் அதிகாரத்துக்குமுள்ள இணைப்பைக் கண்டுகொள்ள முடியும். உலகக் கல்வி வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில் வரன் முறையான கல்விச் செயற்பாடுகள் சமூக ஏறுநிரலமைப்பைப் பாதுகாக்கும் வகையிலும், ஆட்சி அதிகாரங்களை நிலை நிறுத்தும் வகையிலும் அமைந்து வந்துள்ளமையைக் காணமுடியும். காலனித்துவக் கல்வியமைப்பில் இந்தப் பண்பினை மேலும்
துல்லியமாகக் கண்டுகொள்ள முடியும். மத்திய

மயப்பட்ட கல்வி நிர்வாகக் கட்டமைப்பு அக்
கருத்தை மேலும் திடப்படுத்திக் காட்டுகின்றது.
மேற்கூறிய கருத்துக்களின் எழுபுலத்திலேதான் மரபுவழி நுண்மதிப் பரீட்சையின் உருவாக்கத்தையும் அதன் பயன்பாடுகளையும் விளங்கிக் கொள்ளவேண்டியுள்ளது.
நுண்மதி பற்றிய மாற்றுக் கருத்துகளும், “பன்முக
நுண்மதி”, “மனவெழுச்சி நுண்மதி” , * ஆக்க
மலர்ச்சி நுண்மதி” “சமூக நுண்மதி” பற்றிய நவீன கருத்துக்களின் எழுச்சியும் தமிழ் மரபில் சுவாமி விபுலாநந்தரின் ஆளுமைக் கோலங்களையே
நினைவுக்கு மேலுயர்த்துகின்றன.

Page 30
REFERENCE
Adler, H. (2006)
Burt, Cyril L.(1947)
Gardner, H (1983)
Goleman, D(1995)
Jensen A (1969)
Kadirgamar S.(1980)
Mangal S.K. (2007)
Palmer, Joy A. (2004)
Spearman, C.E (1923)
Thurston, L.L. (1938)
Boost your creative intelligence, New Delhi, Kogan Page
Mental and Scholastic Tests, London, Staples Press
Franws of Mind, The Theory of Multiple Intelligence, New York, Basic Books.
Emotional Intelligence, New York, Bantam Books
How much can we boost IQ and Scholastic Achievements. Educational Review-1969
Haward
The Jaffna Youth Congress, Jaffna, Handy Perinpanaygam commemoration Society.
Advanced Educational Psychology, New Delhi, Prentice Hall of India
Fifty Great Thinkers on Education, London, Routledge
The Nature of Intelligence and Principles of Cognition, London, Macmillan
Primary Mental Abilities, Chicago, University of Chicago Press.


Page 31