கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதி இலங்கையில் இந்துமதம்

Page 1
பரு பிரசுரம்
இரவிழா நிஇனவு நிரே - ஐயாத்தினம் உருவச் சிே திறப்புவிழா சிறப்புமவர் தெரிவிப்பழை (1978) பக், சீ-கி.ே
 

பேராசிரியர் கா. இந்திரபாலா வரலாற்றுத்துறை இலங்கைப் பங்கலேக் கழகம், யாழ்ப்பான வளாகம்,
s

Page 2


Page 3
ஆதி இலங்கையில்
தென்னசியாவில் பல்லாயிரம் ஆண்டு களாகப் பல்வகைப்பட்ட இனங்கள் மத்தி யிலே வழங்கிவந்த பல வழிபாட்டு முறை களும் தத்துவங்களும் காலப்போக்கில் இணைந்து இன்று இந்துமதம் என்னும் பொதுப்பெயரைப் பெற்றுள்ளன. எனவே, இந்துமதத்தின் வரலாறு பிற மதங்களின் வரலாறு போன்று குறிப்பிட்ட ஒரு காலத் திலிருந்து குறிப்பிட்ட ஒரு வழியிலே சென்ற வரலாருகாது. இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்தியத் துணைக் கண் டத்திலிருந்து மக்கள் இங்கு வந்து குடி யேறத் தொடங்கிய காலத்திலிருந்து இந்து மதக் கருத்துக்களும் கிரின்யகளும் நிலவி வந்துள்ளன எனலாம்.
ஆதி இலங்கையில் இருந்த இந்துக்கள் பற்றியும் இந்துக் கோயில்கள் பற்றியும் போதிய தகவல்கள் எங்களுடைய இலக்கிய ஆதாரங்களிலே பேணப்படவில்லை. தொல் பொருளியல் ஆராய்ச்சி நாடு முழுவதும் பரவலாகச் செய்யப்படாத காரணத்தினுல் தற்போது எமக்குத் தொல்பொருளியற் சான்றுகளும் போதிய அளவில் இல்லை. ஆகவே, கிடைத்துள்ள ஒரு சில சான்று களை வைத்துக்கொண்டு முழுமையற்ற முறையில் இக் கட்டுரையை எழுத வேண்டி யுள்ளது. பதினறு ஆண்டுகளுக்குமுன் இவ் விஷயத்தைப் பற்றி யான் எழுதும்போது இருந்த நிலையிலிருந்து, தற்பொழுது சான்று களைப் பொறுத்து அதிக முன்னேற்றம் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை.
இலங்கை வரலாற்றுக்குக் கிடைத் துள்ள பழைய இலக்கிய மூலாதாரங்கள் பெளத்த பாளி நூல்களாகும்.இவற்றில் தற் செயலாக இடம்பெறும் குறிப்புக்களை விட இந்துக்கோயில்களைப் பற்றியோ இந்துக்

கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு அன்பளிப்பு
க. குமரன் இந்துமதம்
பேராசிரியர் கா. இந்திரபாலா, வீரலாற்றுத்துறைத் தலைவர், இலங்கைப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாண வளாகம்
களைப் பற்றியோ தகவல்கள் இல்லை. இந்து மதத்தைப் பற்றிக் கூறும் தமிழ் நூல்கள் மிகவும் பிற்பட்ட காலத்தவையாய் இருப் பது ஆராய்ச்சியாளருக்குப் பல கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் மனதில் வைத்தே இலங்கையில் இந்துமதம் பற்றிய இவ் வ ர லா ற் றை விளங்கிக்கொள்ள வேண்டும்.
கி.மு. மூன்ரும் நூற்றண்டில் இலங்கை யின் தெளிவான வரலாறு தொடங்குகின் றது எனலாம். இதற்கு முன்பே இந்தியா விலிருந்து பல இனங்கள் இங்கு வந்து குடியேறியிருந்தமையால், அவர்களுடன் கூடவே இந்துமதமும் பரவியது என்பதில் ஐயமில்லை. கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் முதன்முறையாகச் சாசனங்கள் பொறிக் கப்பட்டபோது, பிராமணர்களும், "சிவ" என்ற பெயரைத் தாங்கிய பலரும் இலங்கை யில் இருந்தமை பற்றி இச் சாசனங்களால் அறியலாம். இதே சான்றுகளை இலங்கை யின் மிக முக்கியமான பாளி நூலாகிய மகாவங்சத்திலும் பெறலாம். இவற்றை ஆராயும்போது, பெளத்தம் பரவுவதற்கு முன் இலங்கையில் இருந்த சிறிய அரசுகளை ஆண்ட மன்னர்கள் பிராமணியச் செல் வாக்கிற்கு உட்பட்டோராய்ப் பிராமணர் களைத் தம் ஆசிரியர்களாகவும் வைத்தியர் களாகவும் நியமித்திருந்தனர் என்றும், பொதுவாகச் சைவமதத் தொடர்புடை யோராகக் காணப்பட்டனர் என்றும் ஊகித்துக்கொள்ள இடமுண்டு. உதாரண மாக, தேவதம்பியதிஸ்ஸ மன்னனுக்கு ஒரு பிராமணன்-கோபூதி என்பான் ஆசிரிய ஞகவும் வைத்தியணுகவும் கடமையாற்றி ஞன் என இரு பிராமிக் கல்வெட்டுக்களால் அறியலாம்:

Page 4
(1) மஹரஜஸ தெவனபியஸ் கமிணி திஸஸ வெஜ பமண கொபுதிய லெணெ ஸ்கஸ் ஸிவபுதிய ஸ்கய லெண ஸகஸ.3
(தேவாநம்பிய காமிணி திஸ்ள மகாராசாவின் வைத்தியன் பிரா மணன் கோபூதியின் குகை சங் கத்துக்கு (க் கொடுக்கப்பட்டது.) சிவபூதியும் சேர்ந்து கொடுத்த குகை சங்கத்துக்கு).
(2) மஹரஜஸ தெவன பியஹ அசிரிய
பமண கொபுதிய லெணெ.4 (தேவாநம்பிய மகாராசாவின் ஆசிரியன் பிராமணன் கோபூதி யின் குகை.)
இவற்றை ஒத்த வகையிலேதான், மகாவங்சத்திலும், தேவாநம்பிய திஸ்ஸ மன்னனுக்கு முன் ஆண்ட பண்டு வாசு தேவ மன்னன், பண்டுகாபய மன்னன் ஆகியோர் பிராமணர்களைத் தங்கள் சோதிடர்களாகவும் ஆசிரியர்களாகவும் புரோகிதர்களாகவும் கொண்டிருந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.*
கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்ருண்டுக ளிற் பல சிற்றரசுகளிலே ஆட்சிபுரிந்த அர சர்கள், இளவரசர்கள் ஆகியோருள் "சிவ" என்ற பெயரைப்பெற்ற பலர் சாசனங்க ளிலே குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரண
(1) ரஜ ஸிவ புத அய விவஹ புத அய ஸிவஹ மஹஸ"தஸ்நெ லெனெ6 (சிவ மன்னன் மகன் சிவ இள வரசனுடைய மகன் சிவ இள வரசனுடைய மகா ஸுதர்சனக் குகை). (2) தெவனபியஸ பதிக ரஜ துஸதரஸ புத அய ஸிவஸ புத அய துஸ்தர புதஸ கமணி ஸிவென கரித மஹஸ"தஸ்னெ லெனெ.7 (தேவாநம்பிய திஸ்ஸனுடைய சகோதரன் துஸதர மன்ன

னுடைய மகன் சிவ இளவரசன் மகன் துஸ்தர இளவரசனுடைய மகன் காமிணி சிவஞல் அமைக் கப்பட்ட மஹாஸ"தர்ஸனக் குகை.)
இரண்டாவது கல்வெட்டிலே குறிப் பிடப்பட்டுள்ள காமிணி சிவனுடைய நக ரின் பெயர் சிவநகரம் என இன்னுெரு கல்வெட்டுக் கூறுகின்றது. சாசனச் சான் றினைப் போன்றே மகாவங்ஸ்த்தின் சான் றும் அமைகின்றது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றண்டுகளிலே சில மன்னர்களும் இள வரசர்களும் "சிவ” என்ற பெயரைப் பெற்றிருந்தனர் என மகாவங்ஸ்த்தால் அறியலாம். கிரிகண்ட சிவ இளவரசன், முடசிவ மன்னன், மகாசிவ மன்னன் ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள்?. இவற்றை எல்லாம் தொகுத்து நோக்குமிடத்து, இலங்கையிலே பெளத்தம் பரவுதற்கு முன் னர் அரச குடும்பத்தினருள்ளும் பொது மக்கள் மத்தியிலும் சைவ மதத்தைத் தழுவியோர் இருந்தனர் என்று கூறலாம்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றம் நூற்றண்டுக்கு முன் இலங்கையில் இந்துத் தெய்வங்களின் வழிபாட்டுக்காகக் கோயில் களும் இருந்திருக்க வேண்டும். ஆதிகாலத் தில் வர்த்தகர்கள் வந்து சென்ற பழந் துறைகளாகிய மாதோட்டம், திருகோண மலை ஆகியவற்றிலிருந்த திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகிய கோயில்களின் தொடக்கம் கி. மு. மூன்ரும் நூற்ருண் டுக்கு முன்னராக இருக்க முடியும். எனி னும், அக்காலத்து இந்துக் கோயில்கள் பற்றிய சான்றுகள் எமக்கு நம்பகமான வகையிலே கிடைக்கவில்லை. ஒரு விதி விலக்காக, அநுராதபுரத்தில் அமைக்கப் பட்ட சிவலிங்க வழிபாட்டுத்தலம் பற்றிய குறிப்பொன்று மகாவங்ஸத்திலே இடம் பெற்றுள்ளது. கி. மு. நான்காம் நூற் ருண்டில் அநுராதபுரத்தை அமைத்தவ ஞகக் கருதப்படும் பண்டுகாபய மன்னன் *சிவிகாசாலா" ஒன்றையும் அங்கு கட்டு வித்தான் என மகாவங்ஸ் குறிப்பிடுகின் றது.10 "சிவிகாசாலா" என்பது சிவலிங்கக்

Page 5
கோயில் எனவும் பொருள்படும் என்று மகாவங்ஸ்த்தின் உரைநூல் கூறுவதால், பண்டுகாபய மன்னன் அநுராதபுரத்தில் சைவத்தலம் ஒன்றை அமைத்திருந்தான் எனப் பலரும் கொள்வர்." பின்னர், தேவாநம்பிய திஸ்ஸ மன்னன் ஆட்சி நடத்தியபோது அநுராதபுரத்திலே திய வாஸ் என்ற பிராமணனுடைய தேவகிருகம் (தேவாலயம்) ஒன்று இருந்ததாக மகா போதி வங்ஸ் என்ற இன்னுெரு பழைய பாளி நூலால் அறிகின்ருேம்"2. நாட்டின் பிற பாகங்களிலும் இப்படியான இந்துக் கோயில்கள் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
கோயில்களைப் போன்று, இந்துக்க ளுடைய யாகசாலைகளும் இருந்தன என அறிய முடிகின்றது. அநுராதபுரத்தில் பண்டுகாபய மன்னன் ஒரு பெரு வேள்விச் சாலையை அமைத்தான் என மகாவங்ஸ் கூறும் வெஸ்ஸகிரியிலுள்ள பிராமிக் கல் வெட்டு ஒன்றிலே ஒருவன் 'யகதத" (யாக தத்த - வேள்வி செய்வோன்) எனக் குறிப் பிடப்பட்டுள்ளான்.14
பெளத்தம் இலங்கையிலே கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் உத்தியோக பூர்வ மாகப் பரப்பப்பட்டதுடன் பிற சமயங்கள் மறைந்துவிட்டன் என்ற ஓர் அபிப்பிரா யத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய பாளி நூல்களின் வரலாறு அமைந்துள்ளது. ஆனல் அப்படியன்றி, ஆதியில் இருந்த பெளத்தமல்லாத சமயங்கள், சிறப்பாகச் சைவமும் சமணமும் தொடர்ந்து பல இடங்களிலே செல்வாக்குடன் விளங்கின என்பதைப் பிறஆதாரங்களால் அறியலாம். பெளத்தம் பரவத்தொடங்கி மூன்று நூற் ருண்டுகளுக்குப் பின்னர் கூடச் சில சிற் றரசர்கள் பெளத்தத்துக்கு மாருது இருந் திருக்கிருர்கள். திஸ்ஸமஹாராமையி லுள்ள ஒரு கல்வெட்டு அங்கு கி. பி. முதலாம் நூற்றண்டில் ஆட்சி நடத்திய சிற்றரசன் பெளத்தத்துக்கு மதம் மாறியது பற்றிக் கூறும்.1 அதுவரை அவனுடைய வம்சத்தவர்கள் தங்கள் பழைய மதத் தையே கடைப்பிடித்து வந்திருந்தனர் என ஊகிக்க முடிகின்றது. அம்மதம் இந்து

மதமோ என்பது தெரியவில்லை. ஆனல் நிச்சயம் இந்துமத வழிபாடு மாதோட்டம், திருகோணமலை, ஏருவூர்(?) போன்ற பல இடங்களில் பிற்பட்ட நூற்ருண்டுகளிலும் தொடர்ந்து நிலவியது என்பதைப் பாளி நூல்கள் மூலீமாகவும் பிற ஆதாரங்கள் மூலமாகவும் அறிய முடிகின்றது.
அரச ஆதரவு இல்லாமை இந்து மதத் தைப் பெரிதும் பாதித்தது ஐயமில்லை. வலிமை வாய்ந்த பெளத்த மன்னர்கள் அனுராதபுரத்தில் ஆட்சி நடத்தியபோது இப்படியான பாதிப்பு ஏற்பட்டது. உதாரணமாக, கி. பி மூன்ரும் நூற்றண்டிலே மகாயானச் செல்வாக்கினல் ஒரு பெளத்த தீவிரவாதியாக மாறிய மகா சேன மன்னன் கோகண்ண(திருகோண மலை), ஏரகாவில்ல (ஏருவூர்?), பிராமண கலந்தனின் ஊர் (கிழக்கு மாகாணத்தில் ஆகிய இடங்களில் பிராமணீயத் தெய்வங் களின் கோயில்களை அழித்து, (அவ்விடங்க ளில்) மூன்று விகாரைகளை அமைத்தான்' என்று மஹாவங்ஸ் கூற, இதனை விரித்து மஹாவங்ஸ்த்தின் உரைநூல் கூறுவதாவது: * இலங்கைத்தீவு அனைத்திலும் (பெளத் தத்தில்) நம்பிக்கையில்லாதோரது ஆலயங் களை அழித்து, சிவலிங்காதியவற்றை ஒழித்து புத் தசாசனத்தை நிறுவினன்." மகா சேனனின் இச் செயலால் இலங்கையில் முற்ருகச் சைவமதம் நசுக்கப்பட்டது என்று கூறுவதற்கில்லை. வெகுவிரைவிலே திரும் பவும் சைவ ஆலயங்கள் எழுச்சி பெற்றன. இது நடைபெறுவதற்கு நாட்டிலே குறிப் பிடத்தக்க அளவில் சைவ மக்கள் இருந் திருக்க வேண்டும்.
மகாசேனன் இறந்து அறுபது ஆண்டு களுக்குள் மீண்டும் மாதோட்டத்திலும் திருகோணமலையிலும் இந்துக் கோயில்கள் எழுச்சியுற்றிருந்தன என்று கொள்ளத் தகவல்கள் கிடைக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் அவ்வாறு எழுச்சி பெற் றிருந்த கோயில்கள் திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் ஆகலாம். நான் காம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் கீர்த்தி பூணூரீ மேகன் அநுராதபுரத்தில் ஆண்டபோது மாதோட்டத்திலே ‘அழகிய தேவாலயம்"

Page 6
i
ஒன்று இருந்ததாக தாடாவங்ஸ் என்ற இன்னெரு பாளி நூல் அறிவிக்கின்றது.18 அதே ஆட்சிக்காலத்தில் மகாநாக இள வரசன் திருகோணமலையில் கடலை நோக் கிக்கொண்டு கிரியை ஒன்றில் பங்குபற் றியமை பற்றிச் சூளவங்ஸ் கூறுகின்றது.9 இதேபோன்ற கிரியை பின்னரும் ஏழாம் நூற்ருண்டில் திருகோணமலையில் இன்னுேர் இளவரசனுல் (மானவர் மஞல்) நடத்தப் பட்டது என்றும், அத்தருணம் அவன் உருத்திராக்ஷ மாலை ஒன்றைக் கையிலேந்தி மந்திரம் ஒன்றை உச்சரிக்க மயில்மிது ஏறிய ஸ்கந்தகுமாரன் தோன்றி வரமளித் தான் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.*0 இவற்றை நோக்குமிடத்து, இந்த இள வரசர்கள் நடத்திய கிரியைகள் இந்து மதக் கிரியைகள் என்றும் திருகோணமலை யில் சுவாமிமலையிலே திருக்கோணேஸ் வரத்தில் இவை நடைபெற்றிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. மகாசேனன் காலத் துக்குப் பின்னர் பெளத்த இளவரசர்களும் இந்துமதச் செல்வாக்கிற்கு உட்படும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கவேண்டும். அநுராதபுரத்தில் ஆண்ட மன்னர் சிலர் இந்துமதத்தை ஆதரித்தும் வந்தார்கள் என்பது சூளவங்ஸத்திலுள்ள வேறு சான் றுகளாலும் வெளிப்படுகின்றது. உதாரண மாக, எட்டாம் நூற்ருண்டில் ஆண்ட இரண்டாம் மகிந்த மன்னன் " அங்கும்
இங்குமாக அழிந்திருந்த தேவாலயங்களைப்
புனருத்தாரணம் செய்து (அவற்றுக்கு) விலையுயர்ந்த விக்கிரகங்களைச் செய்வித்து, பிராமணர்களுக்கு மன்னர்கள் உண்பது போன்ற இனிய உணவும் கொடுத்து, பொற்கிண்ணங்களிலே அவர்களுக்குச் சர்க்கரையுடன் பாலும் கொடுத்தான்" என்று சூளவங்ஸ் வர்ணிக்கிறது.? மேலும், இரண்டாம் காசியப்பன் "சாதாரண மக்கள், பிக்குகள், பிராமணர்கள் ஆகி யோர் அவரவர்க்குத் தகுந்த வாழ்க்கையை நடாத்த ஊக்குவித்து,உயிர்க்கொலை புரியக் கூடாது என்னும் கட்டளையை அமுல் செய்தான்*** என்று சூளவங்ஸ் கூறுவதை நோக்குமிடத்து, எட்டாம் நூற்றண்டு இலங்கையில் எந்தளவுக்குப் பிராமணர்க் கும் அதனல் இத்துமதத்துக்கும் ஆதரவு

4 -
கிடைத்தது என்பதை அறிய முடிகின்றது: பின்னர், ஒன்பதாம் நூற்ருண்டில் ஆட்சி புரிந்த இரண்டாம் சேனமன்னனும் பிரா மணர்களுக்குத் தானங்களை வழங்கி அவர் களை ஆதரித்தான் எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. சூளவங்ஸத்திலே இவ் விஷயம் மிகைப்படுத்திப் பின்வருமாறு கூறப்பட் டுள்ளது. "" அவன் பொன்னலான ஆயிரம் சாடிகளில் முத்துக்களை இட்டு நிரப்பி, ஒவ்வொன்றின் மேல் ஒவ்வொரு விலை யுயர்ந்த இரத்தினக்கல்லை வைத்து அவற்றை ஆயிரம் பிராமண்ர்க்கு இரத் தினக்கல் பதித்த பாத்திரங்களிலே பாற் சோறும் அத்துடன் பொன நூலும் தான மாக வழங்கியபின் கொடுத்தான்.? இது அப்படியே உண்மை எனக் கொள்ள (pigt in விட்டாலும் மன்னன் பிராமணர்களை ஆதரித்தான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெளத்தம் பரவுதற்கு முன்பிருந்த இந்துமதச் செல்வாக்குப் பொதுவாக அரச சபையிலிருந்து ஒருபோதும் நீங்கவில்லை என்றே தோன்றுகிறது. சில குடும்பக் கிரியைகளையும் சம்பிரதாயங்களையும் பெளத்த பிக்குகள் கவனிக்க முடியாதாகை யால் இவற்றுக்காக மன்னர்கள் எப்பொழு தும் பிராமணர்களை ஆதரித்து வந்தனர் என் றே தோன்றுகிறது. ஐந்தாம் நூற்றண் டின் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த சீன யாத்திரிகளுகிய பாஹியன் இலங்கை மன்னன் கடுமையான பிராமணிய விதி களின்படி தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டான் என அறிவித்துள்ளான்.24 இவ் வழக்கங்கள் சிங்கள அரசுகள் மறை யும்வரை நிலைத்திருந்தன.
இப்பொது Lourt Sair stproof Lont 5 இந்துமதம் தொடர்ந்தும் வளர்ந்து வந்தது என்று கூறுவதுடன், ஆரும் நூற்ருண்டின் பின்பாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சமய மறுமலர்ச்சியின் விளைவாகவும் இலங் கையிலே இந்துமதச் செல்வாக்கு, குறிப் பாகச் சைவசமயச் செல்வாக்கு, அதிகரித் தது எனலாம் இம் மறுமலர்ச்சிக் காலத் திலே தமிழ்நாட்டு வர்த்தகர்கள் கடல்

Page 7
கடந்து வாணிபத்தில் பெரிதும் ஈடுபட, அவர்களுடன் கூடவே சமயச் செல்வாக் கும் இலங்கை, தென்கிழக்காசியா போன்ற இடங்களுக்குப் பரவியது. இலங்கையின் பிரதான துறைகளிலிருந்த பழைய சைவக் கோயில்கள் இந்த வர்த்தகர்களுடைய ஆதரவினுல் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண் டும் ; புதிய கோயில்களும் கட்டப்யட் டிருக்க வேண்டும். நிச்சயமாக இலங்கை யின் இரு சைவக் கோயில்களாவது தமிழ் நாட்டாராலும் புனிதமான பழங் கோயில்
கள் எனக் கருதப்படும் அளவுக்கு இங்கு
சைவம் உயர்வு பெற்றிருந்தது; அக் கோயில்கள் தான் திருக்கேதீஸ்வரமும் கோணேஸ்வரமும். இவற்றை நோக்கி ஏழாம் நூற்ருண்டில் ஞானசம்பந்தர் பாடியமை பலரும் அறிந்ததே.** இதே கால மளவில் கரையோரங்களிலிருந்த முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற சைவக் கோயில்களும் பிரசித்தி பெற்ற வையாய் இருந்திருக்கவேண்டும். இவற்றின் வரலாற்றைச் சரியாக ஆராய்வதற்கு விஞ்ஞானரீதியான சான்றுகள் குறை வாகவே கிடைத்துள்ளன,
பெளத்த மதத்தில் இடம்பெற்ற இந் துத் தெய்வங்களின் கோயில்களும் இந்துக் களால் வழிபடப்பட்டு வந்தன எனலாம். பெளத்தம் பரவுவதற்கு முன்பிருந்தே வழி படப்பட்ட பல தெய்வங்கள் காலப்போக் கில் மகாயான பெளத்தத்தி00 செல்வாக் கினல் இலங்கைப் பெளத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அத் தெய்வங்களுக்குச் சிறப்பான ஆலயங்களும் அமைக்கப் பட்டன, அவற்றுள் இலங்கையின் தென் கரையிலே தெவுந்தரையில் வருணதேவ னுக்கு அமைக்கப்பட்ட கோயில் முக்கிய மானது" வருணனை இலங்கையில் * உபுல் வண் (உற்பலவண்ணன்) என்ற பெயரால் வழங்கியதால் இக்கோயில் உபுல்வண் கோயில் எனப்படும். ஏழாம் நூற்றண்டில் முதலாம் தப்புலமன்னன் இத் தெய்வத் துக்குக் கோயிலமைத்தான் என அறிகின் ருேம்." விஷ்ணு, இந்திரன், பிரமன், அகஸ்தியர், யமன் (தர்ம), விபீஷணன், குபேரன் ஆகியோரும் இவ்வாறே பெளத் தர்களால் வழிபடப்பட்டனர். இந்திரன்,

வருணன், யமன், பிரமன் ஆகியோருடைய எட்டாம் ஒன்பதாம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த வெண்கல விக்கிரகங்கள் பெளத்த அழிபாடுகளிடையே கண்பிடுடிக்கப் பட் டுள்ளன.*8 ஒன்பதாம் நூற்றண்டளவில் எழுதப்பட்ட பாலராமாயண, அநர்க ராகவ என்ற இரு வடமொழி நாடகங் களிலே சிவனுெளிபாதமலைக்கு அருகாமை யில் அகஸ்தியர் ஆலயம் ஒன்று இருந்தமை பற்றிய குறிப்பு வருகின்றது.*
இவற்றை நோக்குமிடத்து, கிறிஸ்து வுக்கு முற்பட்ட நூற்ருண்டுகளில் பரவ லாகக் காணப்பட்ட இந்துமத வழிபாட்டு முறைகள் பெளத்தத்தின் வருகையினல் பூரணமாக அழிந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. பழைய இந்து வழிபாட்டுக் களின் பிரதான பண்புகளைக் கைவிடாது மக்கள் பெளத்தத்தை ஏற்றிருந்தனர். இதனுல் நவீன காலம்வரை இந்துத் தெய் வங்களின் வழிபாடு இலங்கைப் பெளத் தத்தின் இன்றியமையாத ஒரு பாகமாக இருந்துவந்துள்ளது.
இவ்வாருக, இலங்கையின் வரலாற் றில், அநுராதபுரக் காலம் எனப்படும் ஆதிக் காலகட்டத்தில் இந்து மதம் அழி யாத ஒரு மதமாக இந்துக்கள் மத்தியில் மட்டுமல்லாது பெளத்தர்கள் மத்தியிலும் செல்வாக்குடன் இருந்துவந்தாலும் ஏழாம் நூற்ருண்டுக்கு முற்பட்ட காலகட்டத்திற்கு அது பற்றிய 'தொல்பொருளாதாரங்கள் இதுவரை குறிப்பிடத்தக்க வகையிலே வெளிப்படுத்தப்படவில்லை. ஏழாம் நூற் முண்டுக்கும் பத்தாம் நூற்ருண்டுக்கும் இடைப்பட்டவை என்று கருதக்கூடிய சாசனங்கள், சிற்பங்கள், கட்டிடங்கள் அநுராதபுரத்திலும் வேறு சில இடங்களி லும் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்ருண் டுக்கு முன்னர் கிடைப்பவற்றுள் மிகிந்தலைச் சைத்தியத்தின் " வாகல்கட" என்னும் வாசற்புறத் தூணில் இடம்பெறும் பிள்ளை யார் (கணேசர்) சிற்பம் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கது. தமிழ்நாட்டிலே கூடப் பிள்ளை யார் வழிபாடு பிரபல்லியம் பெருத ஒரு காலத்தில், அதாவது கி. பி. மூன்ரும் நூற்றண்டளவில், இலங்கையில் பெளத்தர்

Page 8
மத்தியிலே அத் தெய்வத்துக்கு இருந்த செல்வாக்கை மிகிந்தலையிலுள்ள புடைப் புச் சிற்பம் காட்டுகின்றது எனலாம்,
அநுராதபுரத்தில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருளாதரெங்கள் சென்ற நூற்ருண்டின் இறுதிபில் H. C. P. Bell என்ற ஆராய்ச்சியாளரால் வெளிக்தொண ரப்பட்டவையாம். 1892இலும் 1893இலும் அவர் அங்கு அகழ்வாராய்ச்சி நடத்திய போது பல சைவக் கோயில்களின் அழி பாடுகளும் ஒருசில தமிழ்க் கல்வெட்டுக் களும் அநுராதபுரத்தின் வடக்குப்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.30 சைவக்கோயில் களின் இடிந்த பாகங்களும் பிராமணர் இல்லங்களின் பாகங்களும் அங்குமிங்கு மாகச் சிதறுண்டு காணப்பட்டன. பல சிவலிங்கங்களும் இவ்விடத்திலே அசழ்ந்து வெளிப்படுத்தப்பட்டன. பெண் தெய்வ வழிபாட்டுக்குரிய கோயில்களும் காணப் பட்டன. இக்கோயில்கள் அனைத்தும் ஒரே வடிவினதாய் எளிமையான முறையில் பல்லவர்காலக் கோயில்களைப் போன்று அடித் தளங்களைக் கொண்டிருந்தன. அவற்றின் பிரதான Lurras iš 356MT nr 5 அந்தராளம், அர்த்தமண்டபம், கர்ப் பக்கிருகம் ஆகிய மூன்றும் செங்கல் அத்தி வாரங்களைக் கொண்டு கட்டப்பட்டிருந் தன. இந்த அழிபாடுகளிடையே கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்கள் அங் கிருந்த கோயில் ஒன்றில் 'நியதி ஒரு திரு வமிர்து மொரு நொந்தா விளக்கும் " வைப்பதற்குச் செய்யப்பட்ட ஒழுங்குகளைக் கூறும்." இவற்றுக்குக் குமாரகணம் என்ற நிர்வாகக் குழுவினர் பொறுப்பாக இருந் ததை நோக்குமிடத்து, தமிழ்நாட்டிற் போலவே இலங்கையிலும் சைவக் கோயில் களின் நிர்வாகம் அமைக்கப்பட்டிருந்தது என ஊகிக்க இடமுண்டு.
அநுராதபுரத்தின் வடக்குப் பாகத்தில்
டைத்தவையாக மேலே குறிப்பிடப் பட்டுள்ள அழிபாடுகளை விட, அப் பழைய நகரின் வேறு பாகங்களிலும் அங்குமிங்கு மாகப் பல சைவ அழிபாடுகள் கிடைத் துள்ளன.* உதாரணமாக, வசவக்குளத் துக்கு வடக்கில் சிவலிங்கங்களும், அக்

6 -
குளத்தின் மடைக்கு அருகாமையில் கல் அடித்தளமுடைய பிள்ளையார் கோயிலும், நடுநகரத்தில் (Citadel) நந்தியும் ஒரு லிங் கத்தின் பாகமும், தூபாராமத் தூபிக்கு வடக்கே ஒரு சிறிய கோயிலும் விஜயா ராமத்தில் சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோ ரது புடைப்புச் சிற்பங்களும் கண்டுபிடிக்கப் ւմ ւ ւ- 60 մ) குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை நோக்குமிடத்து அநுராதபுரத் திலே ஏழாம் நூற்றண்டிற்குப் பின்பாக இந்துமதம் மேலும் வளர்ச்சியுற்றுக் காணப் பட்டது எனத் தோன்றுகிறது. கூடுதலாக வர்த்தகரும் பிறரும் தமிழ் நாட்டிலிருந்து அந்நகருக்கு அக்காலத்தில் வந்திருந்தமை யினல் இந்நிலை உருவாகியிருக்க வேண்டும்.
இதேபோன்ற நிலை பழைய துறைக ளிலும் இருந்திருக்க வேண்டும். ஆனல் இதுபற்றிய தொல்பொருளாதாரங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. மாதோட்டம் எட்டாம் ஒன்பதாம் நூற்றண்டுகளில் பெளத்தர்களாலும் ஒரு புனித இடமாகக் கருதப்பட்டது என்பது மட்டும் சிங்களச் சாசனங்களால் வெளிப்படுகின்றது. தமிழ்ச் சாசனங்களின் இறுதியிலே வரும் ஓம் படைக்கிளவிகளுள் ஒன்ருகி **கங்கை யிடைக் குமரியிடைக் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைப் பெறக்கடவதாக வும்" என்ற வாசகம் எவ்வாறு கங்கை யும் குமரியும் புனிதமானவை என்பதைக் காட்டிநிற்கின்றதோ, அதேபோலப் பத் தாம் நூற்ருண்டுச் சிங்களக் கல்வெட்டுக் கள் சிலவற்றில் காணப்படும் ஒம்படைக் கிளவி "மாதோட்டத்தில் Lu & GodoGouš கொன்ற பாவத்தைப் பெறக்கடவாராக" என அமைகின்றது" இந்தியாவிலே கங்கை, குமரி போன்று இலங்கையிலே மாதோட் டம் ஒரு புனித தலமாகக் கருதப்பட்ட மையே இதற்குக் காரணம் என்பதில் ஐய மில்லை. அவ்வாறு அது கருதப்படுவதற்கு அங்கு சிறப்புப்பெற்ற பெளத்த தூபியோ வழிபாட்டுத் தலமோ இருந்ததாகச் சான் றில்லை. திருக்கேதீஸ்வரக் கோயில் அங் கிருந்தமைதான் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.
இவ்வாருக அநுராதபுரக் காலம் பத் தாம் நூற்ருண்டின் இறுதியில் முடிவடைந்த

Page 9
போது இந்துமதம் எதிர்ப்பில்லாது வளரக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. பதினே ராம் நூற்ருண்டில் சோழர் இலங்கையைக் கைப்பற்றியதன் விளைவாக மேலும் இந்து மத வளர்ச்சிக்குச் சாதகமான ஒரு சூழ் நிலை தோன்றியது. நாட்டின் பல்வேறு பாகங்களில் சைவ, வைஷ்ணவக் கோயில் களும் சதுர்வேதி மங்கலங்கள் எனப்பட்ட பிராமணக் குடியேற்றங்களும் அமைக்கப் பட்டன. இவற்றுக்குச் சோழமன்னர்க ளுடைய பெயர்களே பொதுவாக இடப் பட்டன. பழைய இந்துக் கோயில்களும் சோழராட்சியின் போது புதுப் பித்தும் பெருப்பித்தும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக் கோயில்களின் நிர்வாகமும் அமைப்பு முறையும் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்த நிலையை ஒத்திருந்தன. ஆனல் கோயில்கள் சிறியனவாகக் கட்டப்பட் டிருந்தன. இவற்றின் கட்டிடப்பாணி சோழரது தமிழ்நாட்டுக் கோயில்களின் கட்டிடப் பாணியாகவே அமைந்தது.84
சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான கோயில்களின் அழிபாடு கள் இன்றும் பழைய நகரங்களிலே பேணப் பட்டுள்ளன. பதினேராம் நூற்ருண்டு தொடக்கம் பதின்மூன்ரும் நூற்ருண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த முப்பதுக்குக் குறையாத சைவ, வைஷ்ணவக் கோயில்களின் அழிபாடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலன்னறு வையில் மட்டும் பத்துச் சிவன் கோவில் களும், ஐந்து விஷ்ணு கோயில்களும் ஒரு காளி கோயிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல சோழர் காலத்தவை. பொலன்னறுவையிலே குறிப்பிடத்தக்க தொகையினராக இந்துக்கள் வாழ்ந்தனர் என்பதை இவை உணர்த்துகின்றன.
பொலன்னறுவையிலுள்ள சோழர் காலக் கோயில்களுள் மிகச் சிறந்தது வான வன் மாதேவி ஈஸ்வரமாகும். வானவன் மாதேவி என்ற பெயரைப் பெற்ற பல சோழ அரசியர் இருந்திருக்கின்றனர். எனினும் பொலன்னறுவைக் கோவில் முதலாம் ராஜராஜ சோழனுடைய பட்டத் தரசியின் பெயரால் அமைக்கப்பட்டது

எனக் கொள்ள இடமுண்டு. இந்த அழகிய கோயில் அழியாது முழுமையாகப் பேணப் பட்டுள்ளது. இதனைத்தான் பொதுவாக இரண்டாவது சிவ தேவாலயம் என்பர்.
பதவியாவிலும் பல சோழர்காலக் கோயில்களும் பிற்பட்ட கோயில்களும் அழிந்த நிலையிலே காணப்படுகின்றன: பதவியாவுக்கு பூரீபதி கிராமம் என்ற இந்துப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்ரும் நூற்ருண்டைச் சேர்ந்த ஒரு சாசனத்தின் மூலம் அறிகின்ருேம். 35 இங்குள்ள மிகப் பழைய கோயில் எனக் கருதப்படக்கூடியது இரவிகுலமாணிக்கFஸ்வரம் என்பதாகும், 3° இரவிகுலமாணிக்கம் என்பது முதலாம் ராஜ ராஜனின் விருதுகளுள் ஒன் ருகும்.
சோழர்காலத்துப் பிற கோயில்களுள் மாதோட்டத்திலிருந்த ராஜராஜேஸ்வரம், திருவிராமீஸ்வரம், அத்தாக்கடையிலிருந்த உத்தம சோழஈஸ்வரம், மதிரிகிரியாவில் இருந்த பண்டிதசோழ ஈஸ்வரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றின் அழிபாடு கள் இன்று கிடைக்கவில்லை. சாசனங்கள் மூலமாகவே இவற்றைப்பற்றி அறிகின் ருேம். மாகல என்ற இடத்திலிருந்து விக்கிரமசலாமேக ஈஸ்வரமும் சோழர் காலத்ததாக இருக்கலாம். இக் கோயிலின் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பெளத்த கோயில் ஒன்று இன்றும் உள்ளது. யாழ்ப் பாணத்திலும் சோழர் காலத்துக் கோயில் ஒன்றின் (சிவ வேளை அதற்கு முற்பட்ட காலத்ததாகவும் இருக்கலாம்) கல்வெட்டு நமக்குக் கிடைத்துள்ளது. ஆனல் இது சேத மடைந்திருப்பதால் கோயில் பெயரை அறிய முடியவில்லை.
கோயில்களின் அழிபாடுகளை விடப் பல இந்து விக்கிரகங்களும் கல்லிலும் வெண் கலத்திலும் செய்யப்பட்டவையாய்ப் பல இடங்களிலே கிடைத்துள்ளன.87 பொலன் னறுவையிலும் பதவியாவிலும் கிடைந்த வெண்கல விக்கிரகங்களுட் பல சிறந்த கலை வேலைப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
சோழர் காலத்தில் இலங்கையிலே பல பிராமணக் குடியேற்றங்களும் அமைக்கப்

Page 10
-
பட்டன. இவற்றைப் பொதுவாகச் சதுர் வேதி மங்கலம் என்பர். கந்தளாயில் ராஜராஜச் சதுர்வேதி மங்கலம், மகாகிரிந் தேகம என்ற இடத்தில் ஐயங்கொண்ட சலாமேகச் சதுர்வேதி மங்கலம் போன் றவை அமைக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக அடுத்து வரும் நூற்ருண்டில் பிராமணர்களுடைய செல்வாக்கு அதிகரித் தது எனலாம்.
சோழராட்சிக்குப்பின் பொலன்னறுவை யிலே சிங்கள பெளத்த மன்னர்களுடைய ஆட்சி மீண்டும் தொடங்கியபோதும் இந்துமதம் இவர்களாலே ஆதரிக்கப்பட்டு ம்ேலும் அதன் செல்வாக்குப் பரவியது என்றே கூறவேண்டும். சோழரை வெற்றி கொண்டு 'புத்த சாசனம் ரக்ஷக்க வேண்டி சங்கநியோகத்தால் திருமுடிசூடி" இலங் கையை ஆண்ட முதலாம் விஜயபாகுசுட இந்துமதத்தை ஆதரித்தான் என்பது அவன் பெயராலே கந்தளாயில் விஜயராஜ ஈஸ் வரம் என்னும் கோயில் இருந்தமையால் வெளிப்படுகின்றது.38 இவனுக்குப்பின் ஆண்ட இரண்டாம் கஜபாகு, விக்கிரம பாகு ஆகியோர் பெளத்தத்துடன் சைவத் தையும் தழுவியவராய் ஆண்டனரோ என ஐயுறத்தக்க வகையிலே சைவமதச் சார் புடையோராய் விளங்கினர். கஜபாகு கந்தளாயிலிருந்த பிராமணர் குடியிருப் புடன் திருகோணமலைக் கோணேசர் கோயி லுடன் நெருங்கிய தொடர்புடையவ்னுகக் காணப்பட, விக்கிரமபாகு தன்னைப் "பார்வ தீபதி தத்தாஸிர் வீரவிருஷ’ (பார்வதி நாதனின் கிருபை பெற்ற வீர இடபம் என வர்ணித்துக்கொண்டான்."9 இதனல், சூளவங்ஸ ஆசிரியர் தம்மகித்தி தேரர் இவர்கள் பல சமயங்களை வளர்த்தனர் எனக் குறைபட எழுதியுள்ளார்40. இவர் களுக்குப்பின் வந்த முதலாம் பராக்கிரம பாகுவின் அரண்மனையிலே பிராமணர்கள் பல்வகைக் கிரியைகளைப் புரிந்தனர்.4 இவன் பதின்மூன்று கோயில்களைக் கட்டு வித்து, 103 கோயில்களைப் புனருத்தார ணஞ் செய்து தொண்டாற்றினன் எனச் சூளவங்ஸ் கூறுவதால், இவனும் இந்து மதத்தை ஆதரித்தான் என அறியலாம்?.

-
இவனுக்குப் பின்வந்த கலிங்க மன்னணுகிய நிஸ்ஸங்க மல்லன் பிராமண சத்திரம் என்ற ஒரு மடத்தினைக் கட்டுவித்தும் பிரா மணர்களை வேறு வழிகளில் ஆதரித்தும் வந்தான்.* கந்தளாயிலே பார்வதி சத்திரம் என்ற சத்திரத்தினையும் இவன் ஆதரித் தான்.** கந்தளாய் இவனுடைய காலத் திலே சதுர்வேதி பிராமணபுரம் எனப் பட்டது.45 தம்பதெனியைத் தலைநகராகக் கொண்ட இரண்டாம் பராக்கிரமபாகுவும் பொலன்னறுவையிலே பல கோயில்களைக் கட்டுவித்தான் எனச் சூளவங்ஸ் கூறும்.
பொலன்னறுவைக் காலத்துச் சிங்கள இலக்கியத்திலும் கோயில்கள் பற்றிய ஒரு சில குறிப்புகள் காணப்படுகின்றன. லத்தர்மாலங்காரய என்ற நூலிலே அநுராத புரத்துக்கு அருகாமையில் " புரதெவியா கோவில்" (நகரத்தெய்வத்தின் கோயில்) ஒன்று இருந்தமை பற்றிக் கூறப்பட்டுள் ளது, கவனிக்கத்தக்கது. இப்படியான காவற்தெய்வங்களின் கோயில்கள் இலங் கையில் வேறிடங்களிலும் இருந்தன என அறிய முடிகின்றது","சிறிது பிற்பட்ட காலத்துச் சிங்களக் கல்வெட்டு ஒன்று தெவிநுவரையில் இருந்த நகரீசர் (நகரத் தெய்வம்) கோயிலைக் குறிப்பிடுகின்றது?7>
பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ்ப் பிரதேசங்களாகிய யாழ்ப் பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக் களப்பு ஆகிய இடங்களிலே இந்து மன்னர் களும் சிற்றரசர்களும் ஆட்சிநடத்தத் தனிப்பட இந்துமதத்தின் செல்வாக்கே மேலோங்கியது. மட்டக்களப்பிலே திருக் கோவில் பாண்டியர் பாணியிலே கட்டப் பட்டது. கோணேஸ்வரர் கோயிலும் பாண்டியர் பாணியிலே திருத்திக் கட்டப் பட்டிருக்க வேண்டும். பதினேழாம் நூற் முண்டில் போத்துக்கீசர் இக் கோயிலை அழித்தபோது, இராமேஸ்வரத்துக்குச் செல்லும் யாத்திரீகர்களைக் காட்டிலும் கூடுதலான யாத்திரிகர்கள் செல்லும் பெருங் கோயிலாகக் கோணேஸ்வரம் விளங்கிற்றெனப் போர்த்துக்கீச ஆதாரங் கள் அறிவிக்கின்றன.48

Page 11
தமிழ்ப் பிரதேசங்களிற் போலவே தொடர்ந்தும் சிங்களப் பிரதேசங்களில் இந்துமதம் செல்வாக்குக்குன்ருது காணப் பட்டது எனலாம், அரசியற்பகை எவ்வாறு அமைந்தாலும் அது சமயங்களுக்கு இடையி லான உறவினைப் பாதிக்கவில்லை. பதின் மூன்ரும் நூற்ருண்டின் பின்னர் இஸ்லா மியர் படையெடுப்புக்களினலே பாதிக்கப் பட்ட பிராமணரும் பிறரும் இலங்கையின் இராச்சியங்களிலே தஞ்சம் புகுந்தனர். இந்து மன்னர்களைப் போலப் பெளத்த, மன்னர்களும் இவர்களுக்கு நிலத்தானங்கள் வழங்கினர், கோட்டையிலிருந்து ஆண்ட ஆருவது பராக்கிரமபாகு முன்னேஸ்வரத் திலும் தெவுந்தரையிலும் பிராமணர்க்கு வழங்கிய தானங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்?, ஜயவர்த்தனபுரம் எனப் பட்ட கோட்டைத் தலைநகரின் வெளியே அநுராதபுரத்திலிருந்த காவற்தெய்வத்தின் கோயிலைப் போன்று, ஓர் ஈஸ்வரன் கோயில் அமைந்திருந்தது. அங்கு வாத்தியங்கஸ் இசைக்கத் தமிழ்மொழியிலே தேவாரங்கள் பாடப்பட்டன எனச் சிங்கள நூலாகிய ஸலலிஹினி ஸ்த்தேஸ் கூறும்.* தென் மாகாணத்திலே அக்காலத்தில் தெவுந் தரைக்கும் பெந்தொட்டைக்கும் இடையில் நகரீசர் கோயில், கணேசர் கோயில், காளிகோயில், நாகர் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் இருந்தன எனப் பிற சிங்களக் கல்வெட்டுக்களாலும் நூல்களா லும் அறியலாம்". ஆரும் விஜயபாகுவின் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு கந்தசுவாமி கோயில் இருந்தது என அங்கு கிடைத்த ஒரு தமிழ்க் கல்வெட்டால் அறிய லாம், 52 இதே காலமளவில் களுத்துறையில் ஒரு காளிகோயில் காணப்பட்டது,58 இவற்றை நோக்குமிடத்து இலங்கையின் நாலாபுறக் கரையோரத்திலும் இந்துக் கோயில்கள் இடைக்காலத்திலே அமைக்கப் பட்டிருந்தன எனலாம்.
சிங்களப் பிரதேசங்களில் படிப்படியாக வளர்ந்துவந்த சைவமதச் செல்வாக்குப் பதினரும் நூற்ருண்டில் உச்சநிலையை

அடைந்தது. அந்த நூற்றண்டிலே போர்த் துக்கீசரைக் கடுமையாக எதிர்த்துப் போரா டிய சீதாவாக்கையின் மன்னணுகிய முதலாம் ராஜஸிங்ஹ தனது பாரம்பரிய மதமாகிய பெளத்தத்தை விட்டுச் சைவத்தைத் தழுவினன். அந்தளவுக்கு அரண்மனையிலே இந்துமதச் செல்வாக்கு மேலோங்கியிருந் ருக்க வேண்டும். கி. பி. 1577இல் மத காடையின் பத்தினி கோயிலுக்கு நித்திய ரியைகளுக்காக இம் மன்னன் கொடுத்த லத்தானம் பற்றி ஒரு சிங்களச் சாசனம் கூறுகின்றது? சீதாவக்கையில் இவன் ஒர் அழகிய கோயிலையும் கட்ட ஆரம்பித்திருந் தான். இது கட்டிமுடிக்கப்பெருத கோயி லாக, பெரெண்டி கோயில் என்னும் பெயரால், இன்றும் காணப்படுகிறது. இது விஜயநகரக் கட்டிடப் பாணியில் அமைந் துள்ளது. ராஜஸிங்ஹ மன்னன் சிவனெளி பாத மலையின் வருமானங்களைக்கூடச் சைவத்துறவியருக்கு வழங்கினன் எனச் சூளவங்ஸ் கூறுகின்றது,*
s
"سمه
இவ்வாருக, போர்த்துக்கீசர் காலம் வரை படிப்படியாக இந்துமதம் நாடு முழுவதிலும் செல்வாக்குப் பெற்று வளர்ச்சி யடைந்து வந்து, போர்த்துக்கீசர் வருகை யினுல் பெரிதும் பாதிக்கப்பட்டது, அது வரை பெளத்த மன்னரும் இந்து மன்னரும் ஒருங்கே அதனை ஆதரித்து வந்தனர். பெளத்தப் பொதுமக்கள் பெள்த்தத்துடன் இந்துமத வழிபாட்டு அம்சங்களையும் ஏற் றிருந்தனர். மகாசேனன் காலம் மட்டுமே விதி விலக் காகக் காணப்படுகின்றது, போர்த்துக்கீச, ஒல்லாந்தர் காலத்திலே சிங்களவர் வாழ்ந்த கரையோரப் பகுதி களில் இந்துமதம் ஆதரிப்பார் இல்லாது அழிவுற்றதோடு, ஐரோப்பியருடைய ஆக் கிரமிப்பினுலும் அழிவுற்றது; கோயில்கள் பல கரையோரங்களிலே காணப்பட்ட தால் அவை போர்த்துக்கீசர் தாக்குதல் களுக்கு இலகுவில் இலக்காகின. உள்ளே இருந்த கோயில்கள் பல பெளத்த வழி பாட்டுத் தலங்களாக மெல்லமெல்ல மாறி விட்டன.

Page 12
-
அடிக்குறிப்புகள்
1.
6.
7.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28. 29,
30.
K. Indrapala, 'Hinduism in Ancient Hindu Dharma 1961-62 (Hindu Student 1962, pp. 15—18; 'Hindu Temples of Ancient Ceylon', Peradeniya, 1963, pp. 23-30.
S. Paranavitana, Inscriptions of Ceylon மேற்படி, பக். 83, இல, 1059. மேற்படி, பக். 83, இல. 1060. Mahavamsa, ed. W. Geiger, Colombo. S. Paranavitana, Inscriptions of Ceylon மேற்படி பக். 60.
மேற்படி பக். 61, Mahavamsa, 10 : 29, ll : l, XXI ; l. மேற்படி, 10 - 102. ی Mahavamsa-tika (Vamsatthapakasini), ed Mahabodhivamsa, ed. S. A. Strong, Lo Mahavamsa, 10 : 90. S. Paranavitana, Inscriptions of Ceylon S Paranavitana 'Brahmi Inscriptions Journal of the Ceylon Branch of the E p. 61, p. 58; 9. ØJ 历。 குணசிங்ஹ, ! Gosmru 1 968, Luis 1 53.
Mahavamsa, 37 : 4. Mahavamsa-tika, p. 685. Dathavamsa, ed. B. C. Law, Lahorel Culavamsa, ed. W. Geiger, Colombo l9 மேற்படி, 57 : 4-11. * மேற்படி, 48 : 143-144. மேற்படி, 48 23. மேற்படி, 51 : 65-67. Samuel Beal, Buddhist Records of the திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகங் யீடு, (சென்னை) பக். 518-520. S. Paranavitana, The Shrine of Upulv மேற்படி, S. Paranavitana, The God of Adam's மேற்படி பக். 18-20. H. C. P. Bell, Archaeological Survey ( for 1893, p. 5.

0 -
eylon: Epigraphic Sources of its History', s’ Union, University of Ceylon), Peradeniya,
Hindu Dharma 1962–63,
I, I, Colombo 1970, pp lxviii, 3, 57, 60, 61
1950, 9 : 2, 10 : 23, 79. , p 57.
. G. P. Malalasekara, I, London 1935, p. 207. mdon 1891, p. 135.
2, p. 7.
in Sinhalese Verse;
Royal Asiatic Society, XXXVI, 1945, No. 98, புராதன ரோகண ராஜ்யய, (சிங்களம்) நுகே
925, p. 42. 53, 41 : 80.
Western World, I, Boston 1885, p. lxxiv. கள், திருமுறை 2, பதிகம் 243, கழக வெளி
an at Devundara, Colombo 1953, pp. -5;
Peak, Ascona, 1957, pp. 49-52.
of Ceylon Annual Report for 1892, p. 5.

Page 13
3.
32.
33
34.
35.
36.
37.
38.
39.
40. 41.
42.
43.
44.
46.
47.
4S.
49.
50.
5.
- 1.
K. Indrapala, “Two Inscriptions from graphia Tamilica (EZ), I, Jaffna, 1971 புரத்திலுள்ள குமாரகணத்துப் பேரூர பேராதனை 1968, பக். 19-23.
H.C. P Bell, y:6ör Gsólin L-l’ILL'L- Ssó
3 1891ஆம் ஆண்டறிக்கை, பக். 5 S. Paranavitana, Inscriptions on the pura, E2, III, Luondon 1933, p 132 ; கா, இந்திரபாலா, இலங்கையில் திராவிட 20: சோழர் காலக் கோயில்கள் பற்றி
கா. இந்திரபாலா, யாழ்ப்பாண இராச்சி K. Indrapala, "An inscription of the
Epigraphia, Tamilica, II, l, p 33
Ananda K. Coomaraswamy, Bronzes fro, kumbuère, Polonnaruva Bronzes, Colomb
S. Paranavitana, A Tamil Slab Inscri
S. Paranavitana, “ Kahạmbiliyava (Kav bahu I”, E2, V, p. 407
Culaivamsa, 70 : 53—54 மேற்படி, 62 : 33 ft மேற்படி, 79 : 19-22. D. M. de Z. Wickremasinghe, "Polonnaru EZ, II, p. 174. D. M. de Z. Wickremasinghe, "Kantalai Malla, ʼ, . EBZ, II, p. 287— 288.
மேற்படி. ஸத்தர்மா லங்காரய, பதிப்பு : ஸத்தா, செய்யுள் 471 S. Paranavitana, The Shrine of Upulvc F. de Queyroz., The Temporal and Spi, II, Colombo 1930, p. 236. S. Paranavitana, The Shrine of Upulv A. Velupillai, Ceylon Tamil Inscriptions ஸலலிஹினி ஸந்தேஸ, செய்யுள் 22. கோகில சந்தேஸ், செய்யுள் 100; பரவி செய்யுள் 49; மேலேயுள்ள அடிக்குறி S. Paranavitana. “Epigraphical Summ Oct. 1933. p. 191. A. Veluppillai, op. cit., p. 44. H. C. P. Bell, Report on the Kegalle L Сиlayата, 93, 12.

-
the Hindu Ruins, Anuradhapura, Epi
pp. 1-5; கா. இந்திரபாலா, 'அநுராத "ார் கல்வெட்டுக்கள் *, சிந்தன. 1, 1,
க்கைகள், 1890ஆம் ஆண்டறிக்கை, பக்.2,
1898ஆம் ஆண்டறிக்கை பக். 3, Stone Canoe within the Citadel, Anuradha* Kataragama Inscriptions, Ibid., p. 225, க் கட்டிடக் கலை, கொழும்பு 1970, பக். 10ய விரிவான தகவல்களை இதிலே காண்க யத்தின் தோற்றம், கண்டி 1972, பக். 76 time of Rajaraja Cola I from Padaviya',
m, Ceylon, Colombo 1914, p. 9; C. E. Goda}o (n. d).
ption from Palamottai ”, EZ, IV, p. 19. udulu-vara) Slab Inscription of Wikrama
va: Priti-danaka Mandapa Rock Inscription”
Gal Asana Inscription of Kitti: Nissanka
திஸ்ஸ தேரர், கொழும்பு 1951, (சிங்களம்)
ип at Devипdara, p. 75.
ritual Conquest of Ceylon, Tr. S. G. Perera
an at Devundara, n. 71. I, I, Peradeniya 1971, p. 37.
சநதேஸ், செய்யுள் 68; கோகில சந்தேஸ
ւնւ 47, ary', Ceylon Journal of Science. G. II,
istrict, Colombo 1892, p. 58.

Page 14


Page 15


Page 16
சுன்னுகம்
திருமகள் அழுத்தகம்