கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வார்ப்புகள்

Page 1


Page 2

வார்ப்புகள்
- பாரதி -
பெண் கல்வி நிலைய வெளியீடு - இல. 27 37, கின்ரொஸ் வீதி,
கொழும்பு-6.
இலங்கை,

Page 3
முதற்பதிப்பு : ஜூலை 1990
விலை : ரூபா 10/-
Publishers :
Women Education Centre
37, Kinross Avenue, Colombo-4. Sri Lanka.
Printed by :
The Kumaran Press, 201, Dam Street, Colombo-12.

பிரசுரிப்போர் முன்னுரை
பாரதியின் "வார்ப்புகளை" வெளியிடுவதில் பெண் கல்வி நிலை யத்தார் பெருமைப்படுகிறோம். பாரதி, யார் என்பது எம்மில் பல ருக்குத் தெரியாது. சென்னையில் வசிக்கும் இவர் வரலாற்றை சிறப்பியலாகப் பயின்று பச்சையப்பாக் கல்லூரியில் விரிவுரையாள ராக பணி ஆற்றுகிறார். பெண் விடுதலையின் தாத்பரியத்தை பூரணமாக உணர்ந்தவர். அவருடன் அதைப்பற்றி கலந்துரையாடு வதும் விவாதிப்பதும் ஒரு பெருமகிழ்ச்சிக்குரிய விடயம். “இலட் சியப் பெண்’ என்ற பெண் விடுதலை இதழை வெளி யி டு வதற்கு பெரும் ஆதரவு நல்கும் இவர் அவ்விதழில் தொடர்ச்சியாக "வார்ப்புக்களை" வெளியிட்டார். அதை சிறு புத்தக வடிவில் கொண்டு வருவதற்கு உடன்பட்ட அவருக்கும் "இலட்சியப்பெண்" பத் திரிகையாளருக்கும் எமது நன்றி.
வார்ப்புகள் பற்றி.
சொல்ல வேண்டிய கருத்துக்களை கருத்துக்களாகவே கூறினால் பலருக்குப் புரியாது. சிலருக்கு அது அலுப்புத் த்ட்டும். அதை சிறு கதை போல பாத்திரங்கள் மூலம் நாம் அன்றாடம் சந்திக்கும் நம் அயலவர்கள் மூலமாகவும் நாம் அன்றாடம் கேட்கும் சம்பாஷணை 956)6. அர்த்தபாவத்துடனும் கருத்துச் செறிவுடனும் எடுத்துக் கூறு வதிலும் பாரதி, ப்ெஞ் வெற்றி அடைந்துவிட்டார். பெண்மையில் ஏற்றப்பட்டிருக்கும் கருத்தியல்கள் (Ideology) பல வகைப்பட்டன: அவற்றை இனங் காணுவது ஒரு பெரு முயற்சி. அதற்கு சமுதாய ரீதியாக விளக்கங் காணுவது அதைவிடப் பெரு முயற்சி. இவை இரண்டையும் பாரதி வெகு சாதுரியத்துடன் திறம்படச் செய்துள் ளார். நடை அழகும் கருத்துச் செறிவும் ஒருங்கே இணைந்து எம் மில் பலரை ஏன், இது இப்படி என்று சிந்திக்க வைக்கிறது வார்ப் புக்கள். கடுகு போன்ற இக் கட்டுரைத் தொகுதியின் காரம் எமக்குப் பயன்தரும் என்பதில் ஐயமில்லை. ܖ
செல்வி திருச்சந்திரன்

Page 4
10.
பொருளடக்கம்
பொறாமை பெண்மைக்கா?
வெளித்தோற்றமும் பெண்மையும்
ஆண் குழந்தையும் பெண் குழந்தையும்
வார்ப்புகள்
பெண்மையின் அச்சம்
பெண் உடற் கூறும்
அதன் கருத்தியலும்
ஆண் ஈகோவும் அதன் வளர்ச்சியும்
அயலவளாகும் "சொந்த" LDésør
கூட்டுக்குடும்பத்தின் பச்சைப்பாம்புகள்
கனவுத்திருடர்கள்
பக்கம்
II
13
8
22
23
30

1. பொறாமை பெண்மைக்கா ?
"ஏன்டி சுஜி: பக்கத்து வீட்டுக்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டி வந்து இறங்கிச்சே என்னன்னு பார்த்தியா? கலர் டி. வி.யா இருக் குமோ?"
'நானும் அப்படித்தான் நெனைச்சேன், சந்திராகிட்ட துருவித் துருவி கேட்டு பார்த்தேன். அழுத்தகாரி: லேகல சொல்லலை, புதிசு ஒண்ணுமில்லையாம். பழைய டி. வி. யதான் ரிப்பேருக்கு கொண்டு போயிட்டு வந்தாங்களாம்."
*அவ்வளவுதானா விஷயம். அது தான் அவ சொல்லலை. இல் லாட்டி தெருபூரா தமுக்கடிச்சியிருப்பாளே?*
இதுபோன்ற உரையாடல் வீட்டுக்கு வீடு வாசற்படி விஷயம்!
**பெண்கள் என்றாலே குறுகிய மனம் படைத்தவர்கள்; பொறாமை பிடித்தவர்கள்; ஒரு பெண்ணின் வளர்ச்சியை இன்னொரு பெண் னால் தாங்கிக்கொள்ளவே முடியாது ' என்றெல்லாம் யாராவது பேசினால் நம்முடைய சொந்த அநுபவமே "ஆமாம்" என்று பலமாக இப்படி முத்திர்ை குத்துவதற்கு முன்னால் 'ஏன் இந்த கெட்ட பெயர்? என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
மூன்று தலைமுறைக்கு முன்புவரை கல்வியோ, வெளியுலக வாழ்ர் : கயோ அறியாதவர்களாய் சமையலறையே சாம்ராஜ்யமாகக் கொடி) தி, மிஞ்சுகிற நேரத்தை கிணற்றடி வம்புகளில் செலவழித்து. வாழ் ககையை முடித்துக்கொண்டவர்களாய் பெண்கள்!
எல்லைகள் குறுக்கப்பட்டதினால் மன வளர்ச்சி ஊனமாக்கப் பட்டு சிறிய தொட்டிக்குள் குட்டையாய் நின்று போன "பான்சாய்" மரங்களின்நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பெருந்தன்மை யும், சமூக கண்ணோட்டமும் காணாமல் போனதில் வியப்பே இல்லை.
سے 11 حـــــــــ۔

Page 5
கல்விக்கண் திறக்கப்பட்டு வெளியுலக வாழ்க்கையும் ஏற்பட்ட பிறகு பெண்களின் போக்கில் பல மாற்றங்கள் பழமையான வழக் கங்கள் பலவற்றையும் தங்கள் வசதிக்கேற்றபடி மாறிக்கொண்டிருக் கிறார்கள். உடை, உணவு பழக்கங்களில் நவீனமாகியிருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில் “பான்சாய்’ குறுகலிலிருந்து விடுபட்டு விசாலமாகியிருக்கிறார்களா?
அந்த அலுவலகத்தில் நிர்மலாதான் ஜூனியர் அதிகாரி தன் திறமை மீதும், தோற்றத்தின் மீதும் அவர்களுக்கு அபார நம்பிக்கை. அதற்குப் போட்டியாக யாரேனும் ஒருத்தி அந்த செக்ஷனுக்கு மாற்றலாகி வந்து விட்டால் தாங்கவே மாட்டாள். தன். கோஷ்டி களான ராஜி: கலா சுந்தரி எல்லோரையும் தூண்டிவிட்டு மறை முகமாக சீண்டி விளையாடுவாள். அவதூறு கற்பிப்பதை ஆயுதம் பிரயோகிக்கும் லாவகத்தோடு செய்வாள். நிர்மலாவின் நாக்கு அழற்சிக்கு பயந்து கொண்டு உத்தியோகத்தையே விட்டுவிடலாமா என்று நினைத்து குறைந்தபட்சம் மாற்றலாவது வாங்கிக்கொண்டு போன பெண்கள் பலர்! Ο
வெற்றிலைப்பாக்கு மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்து வம்பு பேசும் பாட்டிமார்களின் நவீன பிரதிநிதிதான் ஃபைல்களைப் புரட்டும் நித்யா!
... "
இந்த போக்கு இப்படிய்ே நீடிப்பதில் எத்தனை நஷ்டம். சமு தாயத்தில் இரண்டாம் தர நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் அதிலிருந்து மீளவேண்டுமானால் சமுதாய உணர்வும், பொறுப்பான ஒற்றுமையும், அதிகமாகவே தேவைப்படுகிறது. மனித நேயமும், பெருந்தன்மையும் இழந்துவிட்டால் எதைத்தான் சாதிக்க, முடியும்? நீ இழுப்பதா? நான் இழுப்பதா என்ற போட்டியில் முன் னேற்றம் என்ற தேர் நிலையை விட்டு நகரப்போவதில்லை.
வெளிப்படையான மாற்றங்கள் மட்டுமே சாதனையாகாது. பாரம்பரியமாக திணிக்கப்பட்டு விட்ட, நம்மையறியாமல் நா:ே0 தீனிபோட்டு வளர்த்துக் கொண்டுவிட்ட குறுகிய மனப்பன்மையின் சுழற்சியிலிருந்து விடுபட எதுதான் வழி?
ஆளுமையை வளர்க்காத, வாழ்க்கையோடு தொடர்பில்லாத நமது கல்வித் திட்டமும் கைகொடுக்கப் போவதில்லை.
வளர்க்கும் முறையில்தான் கவனம்செலுத்தியாக வேண்டும். மிகுந்த அனுபவசாலியான ஒரு பெண்மணி.

"தேவகின்னு எனக்கு ஒரு உறவுகாரப் பெண் ரொம்பவும் சந் தேக குணம் ! அந்தஸ்த் துப் பேதமும் பார்ப்பாள். கீழ்வெட்டு வெட் டிப் பேசியே யாரையும் கிட்ட நெருங்க விடாம இருப்பா, அவ வீட் டுக்கு சமீபத்துல போயிருந்தேன். அவளோட எட்டு வயசுப் டெண் அனு என்கிட்ட ரொம்ப பிரியமாய் பழகினாள். சாவியைத் திருகி, பீரோ வைத் திறக்க தவித்துக்கொண்டிருந்தது. உதவி செய்யலா மேன்னு நான் கிட்டே போனேன்.”
'நீங்க அந்த சோபாவிலே உட்காாந்திருங்க ஆண்ட்டி, பக்சத் துல யாரையும் வெச்சுகிட்டு பீரோவைத் திறக்க கூடாதுன்னு அம்மா சொல்வாங்க. கண்ணு பட்டுடுமாம்."
எனக்கு முகத்துல அைறஞ்சாப்போல ஆயிடுச்சு.
இதுல ஒரு விஷயத்தை கவனிக்கணும். இதுபோன்ற விஷயங் களில் பெண் குழந்தைகளைத்தான் அதிகமா Influence செய்யறாங்க பையன்கள் இந்த போதனைகளை சீக்கிரம் உதறிடறாங்க!'
அவரது வார்த்தைகள் அத்தனையும் உண்மை. பெண் குழந்தை கள் வீட்டுக்குள் அதிகமாக புழங்குகிறார்கள். அம்மா, அத்தை, பாட்டி, அடுத்த வீட்டு மாமிகள் ஆகியோரின் பேச்சில் சுவராஸ்ய மாய் கலந்துகொள்கிறார்கள். தாங்களே சமயத்தில் விஷயதானம் செய்து வைக்கிறார்கள். பெரியவர்கள் காட்டும் உற்சாகம் அவர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் வளர்க்கிறது.
தாய்வழி சொத்தாக குறுகிய மனப்பான்மையை வளர்ப்பதை விட்டு விட்டு விதைக்கும் எண்ணங்களை விசாலமானதாக விதைத்து வெளிச்சம் காட்டுவோம்: 外
2. வெளித்தோற்றமும் பெண்மையும்
அந்த தர்ய் சேய் நல மருத்துவமனையின் வராண்டாக்களில் உறவினர்கள் கூட்டம். அவர்களின் முகங்களில் கவலையும் எதிர் பார்ப்பும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது. லேபர் வார்ட்டி லிருந்து அவ்வப்போது, ஆயாக்கள் வெளியே வந்து சம்பந்தப்பட்ட வர்களிடம் குழந்தை பிறந்துவிட்டதை அறிவித்துக்ாெண்டிருந்
5 T
"ஆணா? பெண்ணா? என்ற கேள்வியுடன் உள்ளே போனவர் களில் பெரும்பாலோர் தொய்ந்த முகத்துடன் வெளியே வந்தார் கள். 'பெண் குழந்தை அதிலும் கறுப்பாக வேறு பிறந்து வெச் சிருக்கு!" என்ற அங்கலாய்ப்பு காதுகளில் விழுந்தபோது நமக்குள் சில கேள்விகள் எழுகிறது!
حست 8 ستہ

Page 6
சீதோஷ்ணத்தை பொறுத்து அமைகிறது நிறம்? மாநறமுய கருமையும் நமக்கு இயல்பான விஷயங்கள் தானே? இதை ஏன் சாப மாக கருதுகிறார்கள்? அதையும் ஏன் பெண்களிடம் மட்டும் எதிர் பார்க்கிறார்கள்? • לי
அவனுக்கென்ன ஆண்பிள்ளை. ராஜா, கறுப்பாயிருந்தால் என்ன சிவப்பாயிருந்தால் என்ன? என்று பெருந்தன்மையுடன் விட்டு விடுவது உண்மைதானே?
அழகள்க சிவப்பாக ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் ‘கண் ணைப்பார்; திராட்சை மாதிரி! இது பெரிசானா இந்த ஊரையே வளைச்சு போட்டுடும் போலிருக்கே’, என்பது போன்ற வர்ணனை களைச் சொல்லி இங்கு யாரும் வெட்கப்படுவதில்லை.
ஏன்?
ஆண் ஆளப் பிறந்தவன்! அவன் அனுபவிக்கப் பிறந்தவன். பெண் சமுதாயத்தின் மரபு ரீதியான இந்தப் பார்வையை தற் காலப் பெண்களின் படிப்போ, உத்தியோக அந்தஸ்தோகூட மாற்ற வில்ல்ை என்பது எத்தனை வருந்தத்தக்க விஷயம்!
இந்த பார்வைக் கோளாறு காரணமாகத்தான் பெண்மீது வேண் டாத சில விஷயங்களைத் திணித்து அவளை அதற்கு அடிமை யாக்கி விடுகிறார்கள்.
குழந்தைகள் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அலங் காரப் பொருள்களுக்கும், அணிமணிகளுக்கும் ஆசைப்படுகின்றனர்.
அம்மாவின் கை வளையலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படும் ஆண் குழந்தையிடம் "சீச்சீ உனக்கெதுக்குடா கண்ணா இதெல்லாம் பொம்பளைங்கதான் வளையல் எல்லாம் போட்டுப்பாங்க. என்பார் கள். ஆபரணங்கள் அவன் ஆண்மைக்கு முன் சிறுமைப்படுத்தப்படு கின்றன. அவற்றை அலட்சியப்படுத்தி கம்பீரமாக நடைபோட் பழகுகிறார்கள். ஆனால் பெண் குழந்தையின் அலங்கார ஆசையை மேலும் தீனிபோட்டு வளர்க்கிறார்கள். "பெண் குழந்தையாயிற்றே ஆசைப்படத்தான் செய்யும்" என்று அங்கீகாரம் செய்வார்கள்.
இப்பவே அம்மா கழுத்து செயினை பிடித்து இழுக்கறதைப் பாரு.பொண் குழந்தைங்கறது சரியா இருக்கு ." என்று நகை ஆசையை பெண்ணின் பிறப்போடு பிறந்த விஷயமாக்கிப் பேசுவார் கள் சில மேதைகள்! .
-- ... −

ஏதாவது திருமண விசேஷங்களுக்குப் போகும்போது அம்மாக்கள் தங்கள் பெண்களின் உடையலங்காரத்தில் விசேஷ அக்கறை காட்டு வதையும் பார்க்கிறோம். "உன் பையனா இவன்.புத்திசாலியாக இருக்கிறானே' என்று யாராவது தம் மகனைப் பாராட்டினால் எப்படி மகிழ்ந்து போகிறார்களோ அதே அளவுக்கு “உன் பெண் அழகாய் இருக்கிறாள்" என்ற பாராட்டுக்கும் பூரித்துப் போவார்கள்! "
அழகுணர்ச்சி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவித எல் லைக்குள் அடங்கியே இருக்கவேண்டிய ஒன்று. ஆண்களைவிட பெண் கள் இந்த விஷயத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதும், தங்கள் கெளர வமே இதில் தான் அடங்கியிருக்கிறது. என்று எண்ணுவதும் எத் தனை விபரீதம்! இந்த போக்கில் அவர்களை வளர்ப்பதன் விளைவு களை யாரும் யோசிப்பதில்லை.
பத்து வயசு உமா தன் பட்டுப் பாவாடையில் ஜரிகை இன்னும் அகலமாக இல்லை என்பதற்காக முகத்தை தூங்கி வைத்துக்கொண்டு முரண்டு பிடிப்பதும். そ
"இந்த புடவை நல்லாயிருக்கு ஆனா ப்ளெஸ்தான் மேட்ச் 呜ó இல்லை" என்று அலுவலகத்தில் யாராவது சொல்லிவிட்டால் அந்த நாளின் பயனே கழன்று போனது போல் ரம்யா மிருகுவதும்,
நான் மட்டும் இன்னும் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்." என்ற எண்ணத்தை செயலாக்க கிரீம்களுக்கும்; வேக்ஸிங் செய்து கொள்ளவும் சுனிதா பணத்தை வாரியிறைப்பதும்,
இன்றைக்கு கல்லூரிக்கு ஏன் தான் திடீரென்று விடுமுறை அறி வித்தார்களோ தீபாவளி டிரஸ், அதற்கேற்ற தலையலங்காரம்: ஹேர் க்ளிப்; ரோஜாப்பு. அத்தனையும் வீண்.ச்சே.என்று மாலதி அங்கலாய்ப்பதும்.
“பல்வரிசை அப்படி ஒன்றும் தேங்காய்த் துருவி ஏகமில்லை. இருந்தாலும் கொஞ்சம் எடுப்பானது போல் தோன்றுகிறதே" என்ற கவலை மனசை அரிக்க பல் டாக்டரிடம் போய் இயற்கைப் பல்லை பிடுங்கி செயற்கையான ஒன்றை பதிய வைத்துக்கொண்டு ஜெர்ஸி ஹிம்சைப்படுவதும்.
ஏதோ தற்செயலான விஷயம் என்று நினைக்க முடியவில்லை. ஊட்டி வளர்க்கப்பட்ட உணர்வுகளின் தடுமாற்றங்கள்; வயது காலத்

Page 7
தில் அதிகப்படியான முக்கியத்துவம் தரப்பட்டாலும் குடும்பப் பொறுப்புகளில் கரைந்து போகக் கூடும் என்று எளிதாக ஒதுக்க முடியவில் லை. o
பத்தாம் வகுப்பு படிக்கும் பாமா படிப்பில் கெட்டிக்காரி. அவள் அம்மாவுக்கு அது பெரிய விஷயமில்லை. தன் மகள் அழகாக இருப் பதில்தான் அதிக பேருமை. "இது எங்கள் பாமாவுக்கு செய்த நெக்லஸ் அவ கழுத்துக்கு பொருத்தமா இருக்கு அவ அழகுக்கு எவன் வேண்டுமானாலும் கொத்திக்கொண்டு யோவான்" என்று மற்ற வர்களிடம் ருெமையடித்துக் கொண்டதும் முகத்திற்கு எதிரே அவ ளைப் புகழ்ந்து பேசியதும் வீண் போகவில்லை. புத்தகமும் கையுமாக இருக்கும், பாமா இப்போது கண்ணாடி முன்பு அதிக நேரம் செல வழிக்கிறாள். தன் அழகு மிகப் பெரிய அந்தஸ்தான வாழ்க்கையை தனக்குத் தேடித்தரும் என்று நிச்சயமாக நம்புகிறாள். கண்களில் கனவுகளே பிரதானமாக. படிப்பார்வம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.
முப்பது வயதைத் தாண்டி விட்ட கனகாவுக்கு நெற்றியில் திட் டாக தோல் சுருங்கி கறுப்பாகிவிட்டது. தன் முகமே விகாரமாகிப் போனதாக வருத்தப்பட்டாள். "அவளுக்கு முகத்தில் மாசு மரு இருக்கக்கூடாது. எனக்கு ஒரு கஷ்டம் வந்திருக்க வேண்டாம். இனி அவர் முன்புபோல் என்னிடம அன்பாக இருக்கமாட்டார்' என்று அவள் புலம்பியபோது அதிர்ச்சியாக இருந்தது.தாம்பத்திய வாழ்க் கைக்கு ஆதாரமே தன் அழகுதான் என்று' எத்தனை தீவிரமாக நம்புகிறாள்? நாளை தன்னிடத்தில் மெல்ல மெல்லப் பரவப்போகும் வயே திகத்தை இவள் எப்படி ஜீரணிக்கப் போகிறாள். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் கணவருக்கு தன் சுயமதிப்பு உணர்த்தியிருக்க வேண்டாமோ? V
ஆண்களுக்கு படிப்பும், உத்தியோக் அந்தஸ்தும் சுயமதிப்புகள், அறிவுபூர்வமான அந்த வளர்ச்சிக்கு எல்லை கிடையாது. அது மேலும் மேலும் கம்பீரத்தைக் கொடுக்கும். ஆனால் இந்தப் பெண்களோ அழகை ஆதார்மாகக் கொண்டு உடல் பாரமாகி உணர்வு ரீதியான வாழ்க்கைக்கு ஆட்பட்டு பலவீனத்தில் திளைக்கிறார்கள் சுய மதிப்பை இழந்து போகிறார்கள்!
உங்கள் மகனின் வெளித் தோற்றத்திற்கு எந்த அளவுக்கு கவ னம் செலுத்துகிறீர்களோ அதே அளவுக்கு மகளிடமும் செலுத் தினால் போதும். இந்த விஷயத்தில் "பெண்" சலுகைகள் எதுவும் தேன்வயிலலை.

சரியான, தெளிவான பாதையில் உங்கள் மகளை கம்பீரமா? நடைபோடச் செய்யுங்கள். பாரம்பரிய வார்த்தைகளை அவள் காது படச் சொல்லி, அவ்ளை திசை திருப்பி அவள் ஆளுமையை அழித்து விடாதீர்கள்!
3. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும்
சந்தியாவுக்கு வளைகாப்பு தலை கொள்ளாமல் பூவைச் சுற்றி,
கை நிறைய வளையல் அடுக்கியிருந்தார்கள்.
கையில் கமராவுடன் அலைந்துகொண்டிருந்த சந்தியாவின் அண் ணன் “சீக்கிரமே என் பிள்ளைக்கு ஒரு அழகான பெண்ணை பெத் துக் கொடு” என்று அவளைச் சீண்டினான்.
பக்கத்தில் ஆரத்தி தட்டுடன் நின்றுகொண்டிருந்த சந்தியாவின் மாமியார் ஷாக் அடித்தவள் போல் அலறினாள். "எங்க வம்சம் தழைக்க ஒரு ஆண் குழந்தை பிறக்காதான்னு நான் ஏங்கிட்டிருக் கேன். நீ என்னடாப்பா. இப்படி ஒரு வார்த்தை சொல்றியே? என்றாள்!
*6Tair Drtí), பெண் குழந்தை பிறந்தா மட்டும் உங்க வம்சம் தழைக்காதா என்ன?" என்று அவளை வம்புக்கிழுத்தாள் சந்தியா வின் தங்கை ኳ
'வம்சம் நமைக்கிறது இருக்கட்டும்டிம்மா, எனக்கு ஏற்கனவே ஒரு பெண் கல்யாணத்துக்கு காத்திண்டிருக்கா. இதுல என் பிள் ளைக்கு வேற பெண் பிறந்து அவனை கடனாளியாக்கணுமாக்கும். பையன்னா வரவு, பொண்ண செலவுதான் தெரிஞ்சுக்கோ? என்று நிஷ்குரமாகச் சொன்னாள் மாமியார்.
மன்னியின் அலங்காரத்தில் லயித்திருந்த அணுவிற்குத் தன் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு அவமானமாக இருந்தது. இருப்பு கொள்ளாமல் நெளிந்தாள்.
சந்தியாவின் அம்மா நிலைமையை சமாளிக்க ள்ண்ணி சம்மந்தி யம்மா, நமக்குப் பேரன்பிறக்கணும்னுதான் சுந்தர காண்டம் வாங் கித் தந்து சந்தியாவை தினமும் படிக்கச் சொல்லியிருக்கேன். பலன் இல்லாப் போகாது" என்றாள்.
திடீரென்று தான் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டது போல் தோன்றியது சந்தியாவுக்கு. பாஸாக வேண்டுமே, வேலை கிடைக் க வேண்டுமே, நல்ல கணவனாக அமையவேண்டுமே என்று இதுவரை தான் அனுபவித்த திகிலுடன் கூடிய எதிர்பார்ப்புகளை
- 7 -

Page 8
விட தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணT, பெண்ணா என் பதில் தான் தன் எதிர்கால அந்தஸ்தே தொக்கி நிற்பதாகத் தோன்றி ԱմՖl. -
அவளுடன் வேலை பார்க்கும் பவானியின் நிலைமை இன்னும் மோசம். பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்குப் புறப்பட்ட பவானி யிடம் அவள் மாமியார் 'ஆண் குழந்தை பிறந்தா திரும்பி இந்த வீட் டுக்கு வா! பொட்டையைப் பெத்தா வரவேண்டாம், என்று கண்டிபி பாக சொல்லிவிட்டாளாம். பவானியின் மாமியாரை விடத் தன் மாமியார் எவ்வளவோ மேல்” என்று சமாதானம் தேடிக்கொண்டாள் சந்தியா !
வேறு எந்த ஜீவராசிகளிலும் இல்லாத அளவுக்கு ஆண் பெண் பேதம் மனித இனத்தில் மட்டும் ஏன் இப்படி நச்சு வளையமாகப் பற்றியிருக்கிறது. ஆண் ஆளப் பிறந்தவன், பெண் அடங்கி நடக்க வேண்டும். ஆண் பலசாலி, பெண் பலவீனமானவள். ஆண் உயர்ந் தவன், பெண் தாழ்ந்தவள். இந்த பேதங்களை நடைமுறையில் அர்த்தமற்றதாக்கியிருப்பவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.
இந்த சமூக அமைப்பில் பாதிக்கப்படும் பெண்கள் சீறி எழாமல் மெளன அங்கீகாரம் அளித்துக் கொண்டிருப்பதுதான் அதிர்ச்சியான விஷயம்! இந்த சராசரித்தனமான போக்குக்கு எது காரணம்?
உடல் அமைப்பில் இரு பாலாருக்கும் வித்தியாசம் உண்டு, ஒப் புக்கொள்கிறோம். வித்தியாசமே பலவீனழா கி விடுமா என்ன? பலவீன
மானது, என்பதைவிட பலவீனமாக உணர்த்தப்பட்டிருக்கிறது என்றே
தோன்றுகிறது. அதனால்தான் இந்த மெளன அங்கீகாரம்.
ஒரு பெண் பிறப்பதற்கு முன்பே எப்படிப்பட்ட வரவேற்பு பார்த்தீர்களா? அவளை வளர்க்கும் முறை பற்றியும் கொஞ்சம். ஆராய்ந்து பார்ப்போமா? - . .
ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது இங்கே, இந்த சமூக அமைப்பில் எந்த ஒரு பெண்ணும் வளர்க்கப்படுவதில்லை. அவளுக் கென்றே தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான அச்சில் வார்க்கப்படு
கிறாள்.
*
ஆம் ! நமது பெண்கள் இயல்பாக ஆரோக்கியமான வளர்ப்புகள் அல்ல! வகுக்கப்பட்ட பாதையில் கட்டி இழுத்துச் செல்லப்படும் பயணிகள் அல்ல கைதிகள், நிர்ணயிக்கப்பட்ட அச்சின் வார்ப்புகள்
سے 8 --سے

4. வார்ப்புகள்
'பட்டாசுன்னா ஒரு பெண் குழந்தைக்குப் பயம் இருக்காதா? துளிகூட இல்லை எங்க சுமிக்கு அசாத்திய துணிச்சல்!” என்று ஆச்சர்யப்படும் தாய்மார்கள் பெண் குழந்தை என்றா பயம் அதன் அடிப்படை இயல்பு என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்!
'ஏய் ரம்ா உள்ள போடி!" என்று தங்கையை விரட்டிக் கொண் டிருந்தான், அந்த சிறுவன். விரட்டப்பட்ட சிறுமிக்கு வயது நான்கு இருக்கும் காரணத்துடன் அவன் விரட்டியதாய் தெரியவில்லை. அம்மா கடைக்குப் போயிருப்பதால் அவன் ஸ்தானத்தை தான் பிடித்துக் கொண்டு அவளை இமிடேட் செய்கிறானோ? அப்படித் தான் இருக்க வேண்டும். பக்கத்தில் நிற்கும் ஆறு வயது தம்பியை அவன் விரட்டவில்லையே ஏன்? தனக்கும் தம்பிக்கும் தெருவில் எந்நேரமும் ஓடி விளையாடும் சுதந்திரம் அம்மாவால் தரப்பட்டி ருக்கிறது அவனுக்குத் தெரியும்.
இப்படி விரட்டப்படுவது எதற்காக என்று அந்தப் பெண் குழந் தைக்குப் புரிய வில்லை. காரணத்தை ஆராயும் பக்குவம் வரும் முன்பே இது போன்ற கட்டளைகளுக்குப் பணிய சித்தமாகிவிடுகிறது
இயல்பாகவே துணிவும் துள்ளலுமாய் இருக்கும் பெண் குழந் தைகள் நாளாவட்டத்தில் எதற்கும் பயந்து, மருண்டு ஓடி ஒளியும் கோழைகளாக்க்ப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!
"தெரு வாசல்ல போய் நிக்காதன்னா கேக்கறியா? நாலுபேர் பார்த்தா என்ன நினைப்பாங்க? வளர்ந்திருக்கே இது கூட தெரிய, லையே’
இப்படி உடல் ரீதியாகவே பெண்ணைப்பார்த்து அதற்கேற்றாற் போல் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறார்கள்! ஆண்களின் மோசமான பார்வைகளுக்கு அவள்தான் ஒதுங்கிப் போகவேண்டும். அவனைக் கண்டிக்கச் சமுதாயத்தால் முடியாது! பெண்தான் உள்ளே போய் ஒளிய வேண்டும் VM
இது போன்ற அறிவுறுத்தல்கள் அவள் உள்ளத்தைச் சுருக்கி ஒருவித பய உணர்வை அவளுக்குள்ளே விதைத்து விடுகிறது.
"பன்னிரண்டு வயதை நெருங்கும்போதே அவளது வெளி விவ காரங்கள் குறைக்கப்பட்டு விடுகிறது. விளையாட்டுக்குத் தடை! சினேகிதிகள் வீட்டுக்குப் போகத் தடை! அவளது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. கண்டிக்கப்படுகின்றன. பள்ளி நேரம்
- 9 -

Page 9
போக, வீட்டுப் பறவையாய் முடக்கப்பட்ட அவள் பொழுது சமை யலறையில் அம்மாவுக்கு உதவியாய் கொஞ்சம் பகிரப்படுகிறது. வெளி வட்டாரத் தொடர்புகளால் அறிவு புல துறைகளில் மலர ல்ேண்டிய பருவத்தில் அவள் அடைக்கப்பட்டு விடுகிறாள்.
வெள்ளமாகப் பாய்ந்த அவளின் வேகம் தேக்கி வைக்கப்படுகி றது! அந்த தேக்கத்தில் மென்மையாய் மழுங்கியும் போகிறாள். *அடக்கமான பெண்" என்ற கிரீடம் சூட்டப்படுகிறாள். அந்த மென்மைக்கு மென்மை சேர்க்க லலிதகலைகளில் ஆர்வம் காட்டு கிறாள். நகப்பூச்சு உதிர்ந்து விகாரமாய்த் தெரிவதற்கும் கவலை கொள்கிறாள்.
, “வீட்டில் ப்யூஸ் போய்விட்டது! நான் போய் சரி பார்க்கிறேன்" என்று புறப்பட்ட சாந்திக்குத் தடை உத்தரவு. "நீ போய் கரண் டுல கையை வைக்கிறதா? வெளையாடுறியா? அண்ணன் வந்து பார்க்கட்டும்" என்று அம்மா அலறாத குறையாகக் கத்திய போது தான் உண்மையில் ஷாக் அடித்தது போல இருந்தது சாந்திக்கு! தன் பயத்தைப் பெரும் பாலான தாய்மார்கள் மகள் மீது சுமத்தி அவ்ளைக் கோழையாக்கி விடுகிறார்கள். இந்த பாதிப்பு பையன்களுக்கு இல்லை. ஏனென்றால் இவர்களுக்குத்தான் "ஆண்பிள்ளை" அடிப் படையில் துணிச்சலானவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை யாயிற்றே! இவர்களின் தேவையில்லாத அச்சங்களுக்கு சாந்திகள் தான் பலி!
‘ஏணிமேல் ஏறாதே! கீழே விழுந்து கையை காலை முறுச்சி கிட்டா உங்கப்பாவுக்கு ' நான் பதில் சொல்ல முடியாது" என்று உஷா கண்டிக்கப்படுகிறாள்.
"என்னது? சைக்கிள் கத்துக்கறியா? அதெல்லாம் ஒண்ணும் வேண் டாம்! எக்கு தப்பா ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கு எவன் தலை யில கட்டறது? விலை போற பண்டம்னு நெனைப்பில்லையா?” என்று முகத்திலடித்தாற்போல் சொல்வதற்கு பெற்றோர்கள் தயங்குவதே கிடையாது. *
*பெண்ணுக்கு ஊனம் என்றால் திருமணமாவது கஷ்டமாயிற்றே. ஆண் எப்படியிருந்தாலும் அவனுக்கு பெண் கொடுக்க தயாராக
- 10 -

இருக்கிறார்கள்" என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது. இதன் அடிப் படையில்தான் பெண்ணை பயமுறுத்தி, பலவீனமாக்கி விடுகிறார் கள். பெண் தைரியசாலியாகி, சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறே தன்னைக் காத்துக் கொள்பவளாக உருவாகும் போது சமுதாயம் கம் பீரமாகத் தலை நிமிரும். ஆனால் அது முக்கியமில்லை. பெண் என்று பெற்று விட்டால் அவளை முழுசாக ஒருவனிடம் ஒப்படைப் பதுதானே சாதனை? இப்படிப்ப்ட்ட குறுகிய நோக்கில் பெண் முடக் க்ப்படுவதுதான் பல சமூகக் கேடுகளுக்கு உரம்போடுவதாகிறது.
5. பெண்மையின் அச்சம்
எதற்கெடுத்தாலும் பயம்! வெளியில் போகவேண்டுமானால் துணைக்கு யாராவது போக வேண்டும் என்ற கட்டாயம்! ஆபத்து நெருங்கும் போது கத்துவதற்குக்கூட குரலெழுப்ப விடாமல் குரல் வளையைப் பிடித்து அடைக்கும் பயம்! இதுதான் இங்கே பல பெண் களின் இயல்பாக்கப்பட்டிருக்கிறது.
"புகுந்த வீட்டில் பிரச்சனை என்றதும் அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு உந்தித் தள்ளுகிற பயம்!" V−
பொறாமை காரணமாக யாராவது அவதூறாகப் பேசிவிட்டால் மனமுடைந்து சித்தம் கலங்கும் நின்லக்கு ஆளாக்கும் பயம்!"
"கொடுமை இழைக்கும் கணவனையும் சமூகத்துக்குக் காட்டிக் கொடுக்க பயந்து குட்டக் குட்ட குனியச் செய்யும் பயம்!
இதற்கு நடுவில் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் கொண்ட பெண்களைத் தேடவேண்டியிருக்கிறது.
நமது சினிமா மீடியத்தின் கதாநாயகிக்கு "பயம்" என்ற அம்சம் மிக மிக அவ்சியம்! வில்லன் இவளை துரத்திப் பிடிக்கும்போது பயந்து ஓடுவாள். காப்பாற்ற கதாநாயகன் கண்டிப்பாக வருவான்! அவன் வில்லனுடன் சண்டை போடும் போது நடு நடுவில் கெமரா இவள் பக் கம் திரும்பும்! பரபரப்பும் அச்சமும் கலந்த பாவத்தைக் காட்டி காட்சிக்கு மெருகூட்டுவாள் பக்கத்தில் கிடக்கும் ஒரு கல்லை எடுத்து பிரயோகிக்கக் கூடவா அந்தக் கைகளுக்கு இயலாமல் போகும்? என்ற

Page 10
வியப்பு ஒருவருக்கும் எழுவதில்லை. பெண்ணால் அதெல்லாம் முடி, யாது’ ‘பயந்து கத்தி கூச்சலிடத்தான் முடியும்" என்று முனைச் சலவை செய்யப்படுகிறது. *
எப்போதும் ஆண் துணையை நம்பி இருக்க முடியுமா? ஆபத்து என்று வரும் போதுதானே அதை சமாளிச்கும் பயிற்சி பெண்களுக்கு அவசியம் என்பதை பெற்றோர் உணர்வதில்லை. அவளைக் கோழை யாக்கி ஒருவரிடம் ஒப்படைத்து ‘இனி எல்லாம் அவன் பொறுப்பு” என்று விட்டுவிடுகிறார்கள். அந்த 'அவன்’ பல பெண்களுக்கு எம னாகி விடுகிற இந்தக் காலத்தில் இதுபோன்ற வளர்ப்பு முறை பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.
மதுரைக்கு அருகே ஒரு வீட்டுக் கதவை திருடர்கள் தட்டு கிறார்கள். எப்படியும் உள்ளே நுழையப்போவது நிச்சயம். தனியாக மாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஏதாவது செய்து தப்பிக்கவேண் டும். பயத்தை உதறுகிறாள். மூளை பரபரப்புடன் வேலை செய் கிறது. டின்னில் இருந்த மண்ணெண்ணையை பக்கெட்டில் ஊற்றித் தயாராக வைத்துக் கொள்கிறாள். கதவை உடைத்து உள்ளே நுழைந்த வர்கள்மீது வாரி இறைக்கிறாள். ஸ்தம்பித்துப் போன அவர்கள்மீது தீக்குச்சியை உரசிப் போடுவதாக பாவனை செய்கிறாள். அடுத்த கணமே ஓடிவிடுகிறார்கள் அந்த முரடர்கள்! Y
தன் உயிரைப் பெரிதாக நினைக்காமல், தன் பொறுப்பில் பிர யாணம் செய்த பயணிகளைக் காப்பாற்றி இரத்தம் சித்தி உயிர்த் தியாகம் செய்த நீரஜா செளத்திரியை அவ்வளவு எளிதாக Lonjch jh முடியுமா?
நாமக்க்ல் அருகே ஒரு வயதான ஆயா தன் பொறுப்பில் பள் ளிக்கு குழந்தைகளை அழைத்துப் போகிறாள். ஒரு பூங்காவுக்கருகில் நல்ல பாம்பு தயாராக நிற்கிறது. அந்தப் பெண் ஒரு கணம் தாம தித்து இருந்தாலும் பிள்ளைகளில் ஒன்று பலியாவது நிச்சயம். குழந்தைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தானே அந்த நச்சுப் பாம்பை எதிர்கொண்டு மாண்டு போகிறாள்.
எவ்வளவுதான் பயத்தை விதைத்து பெண்ணை இயலாதவளாக ஆக்கினாலும் அதையெல்லாம் மீறி துணிச்சலுடன், சமயோசித அறி
- 2 -

வுடன் செயல்படும் உணர்வு பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்பதை ஆங்காங்கே சிலர் நிரூபித்து வருகிறார்கள்!
இதுபோன்ற துணிச்சலான பெண்கள் அபூர்வமாகத்தான் இருக் கிறார்கள். பெரும்பான்மை பெண்கள் கூட்டம் இங்கே கோழை களாக உழன்று விடுவதுதான் உண்மை! எச்சரிக்கை உணர்வைத் தந்து சூழ்நிலையில் அபாயத்தை புரியவைத்து பெண்ணை வளர்த் தால், துணிவும் வளரும்.
6. பெண் உடற்கூறும் அதன் கருத்தியலும்
சக்தியும் சிவனும் நடனத்தில் சிறந்தவர் யார் என்று போட்டி போட்டார்களாம். சிவன் காலை உயர்த்தி அபினயித்து காட்டினா ராம். ஆனால் சக்திக்கு அதேபோல் செய்ய முடியவில்லைய்ாம்! அந்த சமயம் பார்த்து மாத விலக்கு ஏற்பட, நடனத்தில் தோற்று போனாளாம்! என்று வரிந்து வரிந்து பெண் உடற் கூறு ரீதியாக ஆணோடு சரி நிற்க முடியாது என்று மட்டம் தட்டுகிறது புராணம்.
மாத விலக்கும் பிரசவமும் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தண் டனை என்றே சொல்கிறது. பைபிளும் குரானும்!
ஒரு ஆணுக்கு அவன் பிறந்த நேரத்தைக் கொண்டே விதிப் பயன் அமைகிறது. ஆனால் பெண் ஆணைச் சேர்ந்தவள் என்பதால் அவள் ருதுவாகும் நேரம் மிக முக்கியம்! அதைத்தான் அவள் ஜாத கம் கணிக்கப்படவேண்டும்! அவள் எதிர் காலத்தில் திருமணம் செய்து கொண்டு பிறவிப் பயனை அடைவது அந்த நேரத்தின் நல் லது கெட்டதைப் பொறுத்ததே என்கிறது ஜோதிட இயல்
பருவமடைந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் செய்துவிட வேண்டியது தகப்பனின் கடமை. ஏனென்றால் மணமாகாத பெண் ணுக்கு நேரும் ஒவ்வொரு மாதவிலக்கும் ஒரு சிசுவதைக்குச் சமம்! அந்த பாவம் அவள் தகப்பனையே சேரும். சிசு வதை என்பது சாதாரண மில்லை. பஞ்சமா பாதகங்களின் ஒன்று! என்று பயமுறுத்தியது மனு சாஸ்திரம், "இந்தப் பெண் வயதிற்கு வரும்வரை காத்திருந்து மாப்பிள்ளை தேடுவதற்குள் எத்தனை சிசுவதை பாவம் நம்மை வந்து சேருமோ! அதற்கு இடம் தராமல் வயதிற்கு வரும் முன்பே அவளை ஒருத்தன் கையில் பிடித்துத் தந்துவிட்டால்.” என்று தங்கள் பிரச் சனைக்கு தகப்பனார்கள் கண்ட தீர்வுதான் பால்ய விவாகமாகப் பரி:ளித்தது ஒரு காலத்தில்!
- 13 -

Page 11
ஆக உலகத்தில் உள்ள எந்த ஜீவராசிக்கும் இல்லாத ஒரு சிறப் பான விஷயமாக "பெண் பருவமடைகிற சம்பவம் காலம் காலமாக சமுதாயத்தில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது.
விசேஷம் என்றால் மேளம் கொட்டி மாலை போட்டு ஊரைக் கூட்டி கொண்டாடாமல் இருக் முடியுமா? அந்த காலத்தில் பொழுது போக்கு அம்சங்கள் அதிகம் இல்லாத சூழ்நிலையில் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் தங்களுக்குள் கூடி மகிழ இதுபோன்ற சம்பவங்களை வைபவங்களாக்கிக் கொண்டிருக்கவேண்டும்.
N
“எங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள்." என்று அறிவிக்கும் முகமாக விழாக் கொண்டாடினார்கள் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. அதுதான் காரணம் என்றால் செய் தித் தாளில் மேட்ரி மோனியல் பகுதி வெளிவரும் வசதி ஏற்பட்டு விட்ட இந்த காலத்திலும் அதைத் தொடரவேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
"பெண்ணுக்கு அந்த சமயத்தில் ஏற்படும் அச்சம்; உபாதையால் விளையும் சுயபச்சாதாபம் போன்றவற்றை தவிர்க்க அவளுக்கு அலங்காரம் செய்து பெருமைப்படுத்துவது அவசியமே, என்று முழங்கி, இருந்தது ஒரு பிரபல பெண்கள் பத்திரிகை,
*செண்பகம் ஆடிட்டர் வீட்டுப் பெண்ணுக்கு விசேஷமா 'செஞ் சாங்களாமே, நீ போயிருந்தியா?"
'அடாடா.என்னா ஜோடனை,எவ்வளவு நகைங்க, வெச்சகண்ணு வாங்காம பார்த்துட்டிருந்தேன். மாமாம்மாரு சீதனமா கல்வளை யல் செஞ்சு போட்டிருந்தாங்க!" என்று விவரித்தாள் வள்ளி.
A
"அடேங்கப்பா கல்யாணம் மாதிரிதான் பணத்த தண்ணியா செலவளிச்சு செஞ்சிருக்காங்க."
‘ஆமா, மொத்தம் அம்பதாயிரம் ரூபா செலவாச்ச்ன்னு அந் தம்மா பெருமையா சொல்லிவிட்டிருந்தாங்க!" ܝ
"அவ்வளவு பணம் இருந்தா நம்ம வீட்டு பொண்ணுகளுக்கு கல் யாணமே செஞ்சிருக்கலாம். ஹஜூம், செண்பகத்தின் ஆதங்கம் பெரு மூச்சாய் வெளியேறியது. ܗܝ
திருமணச் செலவை கருத்தில் சொண்டு பெண்ணை பெரும் சுமையாக நினைக்கின்ற இந்த சமுதாயத்தில் இது போன்ற இயல்
a- I -

பான சம்பவங்களை மிகைப்படுத்தி விசேஷமாக்கி பணத்தை வீண் விரயம் செய்வது முரணான விஷயமாகவே இருக்கிறது.
வசதி இருந்தால் பெரிதாகக் கொண்டாடுவதும், வசதி இல்லாத குடும்பங்களில் பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டாளே, என்ற கவலையில் சலித்துக்கொள்வதுமாக இந்த சம்பவம் பெண்ணின் வளர்ப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.
வெறும் பொருளாதார நிலைமையைப் பொறுத்த விஷயமாக மட் டும் இதைப் பார்க்காமல் மனோதத்வரீதியிலும் இதன் விளைவுகளை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
துணி துவைக்கும் கல்மீது உட்கார்ந்து காலுக்கு மருதாணி பூசு வதில் கவனமாயிருந்த சுந்தரியை ஒரக்கண்ணால் நோட்டமிட்டாள் வேலைக்காரி கண்ணம்மா, எஜமானியம்மாளிடம் பேச்சுவாக்கில் 'நம்ம சின்னம்மாவுக்கு எப்ப விசேஷம்னு காத்திருக்கேன். விசேஷமா செஞ்சி எல போட்டு சாப்பிட்டாத்தான் எனக்கு திருப்தி’ என்றாள்!
ஆமாம் கண்ணம்மா! மத மதன்னு வளர்ந்திருக்கா. சீக்கிரமே உக்காந்துடுவான்னு தோணுது. பெரிய,செலவு காத்திருக்கு,தயாரா யிருங்கன்னு அவுங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன். திடீர்னு அந்த நேரத்துல போய் பட்டு பாவாடை, தாவணி வாங்க முடியுமா? முன்னாடியே வாங்கி வைக்கணும், அடுத்த வாரம் காஞ்சிபுரம் போக லாம்னு இருக்கேன். ' M−
அம்மாவின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண் டிருந்த சுந்தரிக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. பட்டுப் பாவாடை தாவணி போட்டு, ஜடை வைத்து ஜோடனை செய்தால் தனக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள்! படிப்பில் கெட்டிக்காரியான சுந்தரிக்கு அலங்கார மோகத்திற்கு ஆரம்ப விதைகள் இப்படித்தான் தூவப்பட்டது.
அலங்கார ஆசை, நகையாசையாய் கிளைவிட்டு, அந்தஸ்து ஆசை யாய் வேர்விட்டு சராசரி வாழ்க்கைக்கு பெண்கள் மிக எளிதாக இட்டுச் செல்லப்படுவது இப்படித்தான். படிப்பார்வமும் அறிவு தேடலும் பின்னுக்குத் தள்ளப்பட்டதில் ஆச்சர்யமேயில்லை. வெறும் திருமண வாழ்க்கைக்கு உடல் ரீதியாக தயாராகும் ஆர்வம் மட் டுமே மிஞ்சியது.
பெண்ணுக்கு விழா கொண்டாடி பெருமைப்படுத்துவதாக சொல் லிக்கொண்டு மீள முடியாத பகுதியில் அவளைத் தள்ளிவிடுவது

Page 12
தான் உண்மை நடைமுறை வாழ்க்கையில் கல்வியும், உத்தியோக மும் அவசியப்பட்டு போன பின்பும் இடையில் அவளை தடுமாற வைத்து திசை மாற்றும் முயற்சி ஏன்?
எல்லாப் பெண்களுமே தாங்கள் விழாவின் நீாயகியாகிப் போன தில் சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. வருவோர் போவோரிடம் இதனைத் தகவலாய்த் தெரிவிக்கும்போது அவமானத் தில் சிறுத்து போவதும், கூசிக் குறுகுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பெண்ணின் தனிப்பட்ட விஷயமான இதனை தம்பட்ட மடிப்பது அவளைத்தான் !!ாதிக்கிறது.
சென்றவாரம் வரையில் சுதந்திரமாய் பள்ளிக்கு போய்வந்து கொண்டிருந்த மாலதிக்கு இப்போது வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக இருக்கிறது. தனக்கு விழா கொண்டாடி பிரகடனப்படுத் திய அம்மா அப்பாவின் மீது கோபமாய் வந்தது. "தெரு முனையில் நின்றுகொண்டு நாலைந்து பையன்கள் கேலிபேசி கலாட்டா செய்வ தெல்லாம் இவர்களால் வந்த வினைதானே? ச்சே.மானமே போச்சு! இதெல்லாம் அவங்களுக்கு எங்கே புரியப் போகுது."
இப்படி கிரீடம் சூட்டுவதாகச் சொல்லிக்கொண்டு தலையில் சுமையை ஏற்றுவது ஒரு புறம் இருக்க,.விஷயத்தை அறிவுபூர்வமாக அணுகிப் பார்க்காமல் இளம் உள்ளங்களை நோகடிப்பதும் அதிக மாவே இருக்கிறது.
கூடத்தில் கம்பத்தைப் பற்றிக்கொண்டு விசித்துக்கொண்டிருந்த அந்த சிறு பெண்ணைச் சூழ்ந்துகொண்டு தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இவ்வளவு சீக்கிரமா இது உக்காரலைன்னு யார் கவலைப்பட் டாங்க" என்று அங்கலாய்த்தாள் பெண்ணின் தாய் மீனாட்சி.
"அட, ஏம்மா அபசகுனமா சொல்றீங்க மங்கலமான விஷயம்! மக ஆளாயிருச்சுன்னு சந்தோஷப்படறதை விட்டு. இது கோடி வீட்டு ஆயா !
"நான் ஒண்ணும் அலுத்துக்கலை, சிலதெல்லாம் பதினைஞ்சு பதினாறும் ஆவுது. இது பொசுக்குனு பண்ணன்டு வயசு முடிஞ்ச கையோட ஆயிடுச்சேன்னுதான்."
"ஆமாக்கா, நாமதான் அவதிப்படறோமே. இந்த சின்னப்
புள்ளையுமா? ஹ"ம்." என்று முகாரி பாடினாள் அடுத்த வீட்டுக்காரி
- 6 -

தனக்கு நேர்ந்ததை ஒருவித அருவருப்பு உணர்ச்சியுடன் எதிர் கொண்ட அந்தப் பெண், இந்தப் பேச்சுக்களால் இன்னும் அதிக மாக பாதிக்கப்பட்டாள். இன்னதென்று புரிபாத குழப்பத்தில் மன சில் திகில் பரவியது. தான் காட்சிப் பொருளானதில் அவமானமும் வேதனையும் அடைந்தாள். துக்கம் தொண்டையை அடைக்கக் கண் கள் உடைந்து கன்னங்களில் வழிந்தது.
ஒருவாறாக அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜமானாள். பள்ளிக்கூடத்திலும் பாடங்களிலும் ஆழ்ந்து போனாள்.
ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக வந் தாள். முகத்தில் அச்சம் படர்ந்திருந்தது. "egyei utÍr gyüblonr..... எனக்கு மறுபடியும் அதே போல. வார்த்தைகள் சிக்கி, முகம் வியர்த்து கலங்கினாள்.
சினியன் பிடித்தவளே, LionTgFnr மாச்ம் இதுபோல் ஆகும்னு கூடத் தெரியாதா? மாடு மாதிரி வளர்ந்திருக்கே. கொஞ்சமாவது புத்தி இருக்கா? இதெல்லாம் கூடவா சொல்லித் தரணும்.”
வார்த்தைகளின் நிஷ்டூரத்தில் துவண்டாள் அந்தப் பெண் ‘ஐயோ கடவுளே. நான் ஏன் தான் "பெண்ணாப் பொறந்தேனோ' என்று மனசுக்குள் அரற்றினாள்! V
சில தாய்மார்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? உண்மை யில் பெண்ணின் உடற்கூறு பற்றிய அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் அதை ஆரோக்கியமாக அணுகத் தெரியாமல் இருக்கிறார் களோ? பாரம்பரியமாக இது பெண்ணுக்கு நேர்ந்த சாபம்." என் பதாக எண்ணிப் பழகிவிட்ட பலவீனம் தான் எரிச்சலாய் வெடிக் கிறதோ? அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த பின்னும்கூட இதனை ஓர் அருவருப்புடன்தான் எதிர்நோக்கத் தெரிந்திருக்கிறார்களோ? அப்படித்தான் இருக்கவேண்டும். முதலில் இங்கே தாய்மார்களுக்கே விஞ்ஞான மனோதத்துவப் பாடம் தேவைப்படுகிறது.
இந்தப் புது யுகத்தில் பெண்களுக்கென்று சுய மதிப்பும் ஆளுமை யும் அவசியம் தேவை அவை கல்வியாலும், விளையாட்டு, உடற் பயிற்சி, உற்சாகக் கலைகளாலும் மேலும் மேலும் வளரும்! அதுவே ஆரோக்கியமான வளர்ச்சி!
உலகின் எல்லா ஜீவராசிக்கும் பருவமடைவது ஒரு நியதி மனித குலத்திலும் இதற்கு பால் வேறுபாடு கிடையாது! ஆனால் பெண்கள்
- 17 -

Page 13
விஷயத்தில் மட்டும் இதனை பெரிதுபடுத்தி விழா கொண்டாடியோ அல்லது மனம் புண்படும்படி சலிப்பாக பேசியோ, அனாவசிய தடை உத்தரவுகளைப் பிறப்பித்தோ அவளது ஆளுமையை சிதைப்பது மிகக் கொடுமையான விஷயம்! கண்டிக்கத்தக்கதும், கூட. பாட்டி காலப் பழக்கங்களை இன்னமும் கண்மூடித்தனமாக பெண்மீது திணித்து அவள் கைகளுக்கு பொன்விலங்கு பூட்டவேண்டாமே.
தக்க சமயத்தில் அவளிடம் உடற்கூறு பற்றி விஞ்ஞான பூர்வ மாக விவரித்துச் சொல்வதில் தவறே இல்லை. பிறகு அது அவளது தனிப்பட்ட விஷயம் என்று விட்டுவிடுங்கள். மிகைப்படுத்தாத எது -வுமே நல்ல விளைவைத் தரும்!
உடல் மாற்றத்தை ஒரு பெரிய பலவீனம் என்று சுட்டிக்காட்டி னால்தான் பெண்ணுக்கு அது பிரச்சனையாகிறது. விஞ்ஞானபூர்வ மாக புரிய வைத்து அதை அவள் எளிதாக எடுத்துக்கொண்டு தன் ஆளுமையை காப்பாற்றிக் கொள்ள உதவுங்கள். -
7. ஆண் ஈகோவும் அதன் வளர்ச்சியும்
*"ஏய் சுந்தர்! என் பேனாவை ஏன் எடுத்தே கொடு அதை." "முடியாது போ! நான் எழுதிட்டுத்தான் தருவேன்."
"எழுதநியா நீ பொய் சொல்லாதே! இந்தப் பேனாவிலே படம் போட்டா பேனா கெட்டுடும். மரியாதைய்ாக் கொடுத் திடு; இல்லேன்னா அம்மாகிட்டே சொல்வேன்.'
"சொல்லிக்கேயேன். எனக்கென்ன LJuJưim?”’
சப்தம் கேட்டு சமையலறையிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்தாள் பங்கஜம்.
பொங்கி வந்த எரிச்சலில் ஓங்கி ரமாவின் முதுகில் அறைந்து மூலையில் தள்ளினாள். 'என்னடி ரகளை இங்கே, எப்பவும் அவ னோடு உனக்கென்ன தகராறு பெண்பிள்ளையா லட்சணமா இருக் 63 Tr?”
எதிர்பாராமல் விழுந்த அடியால் பீரிட்ட அழுகையுடன் சுருண்டு கிடந்தாள் ரமா.
*அடி வாங்கினியா வேணும்' என்று கிண்டல் செய்தான் சுந்தர்,
-- 18 -

* அம்மா ஏன் என்னை மட்டும் அடித்தாள்? போன வாரம்கூட சுந்தர் என் பேனாவை எடுத்து நிப்பை வளைத்து விட்டான் °岛 னால்தான் நான் அவனைத் திட்டினேன். நடந்தது என்ன, யார் பக்கம் நியாயம் என்று கூட கேட் காம என்னை ஏன் அடிக் 1ணும்? நர்ன் பெண்பிள்ளையாம்! அவன் வம்புக்கு போகக் கூட்ாதாம்!சே, அவன் சின்னப் பையன், நீ பெரியவள். கொஞ்சம் விட்டுக் கொடுன்னு சொல்லியிருந்தாக் கூட இத்தனை வேதனையாக இருக் காதே! நான் ஏன்தான் பெண்ணாகப் பிறந்தேனோ !”
கழிவிரக்கம் பெண்ணை இப்படித்தான் சூழ்ந்து கொள்கிறது. பிஞ்சுப் பருவத்தில் நெஞ்சுக்குள் வலுக் கட்டாயமாக விதைக்கப் படும் இந்த அடிமைத்தனமான அணுகுமுன்ற அவளை மெல்ல மெல்ல ஆதிக்கம் செய்யத் தொடங்குகிறது.
மணமாகும் வயதில் "என்ன இருந்தாலும் நீ பொண்ணு. ஆம் பிள்ளை அப்படி இப்படி இருந்தாலும் நீதான் அட்ஜஸ்ட் டண்ணி போகணும்" என்ற உபதேசத்தை ஆணியறைந்தாற் போல் சொல் லிக் கொடுத்தே புகுந்த வீடு அனுப்புகிறார்கள்.
"மல்லிகா புருஷன் அவளைப் பாடாபடுத்தறானாமே!"
"ஆமாக்கா! சரியான முரடன்! சதை பிஞ்சி போற மாதிரி அடிப்பான். நானே பார்த்திருக்கேன்!" மல்லிகாவின் அவலம் அந்த கிராமத்தில் இரண்டு பேர் கூடுமிடமெல்லாம் அலசப்படுகிறது. அவ, லட்சணமா இருக்கால்ல! அதனாலே அவ புருஷனுக்கு அவ மேலே சந்தேகம் வந்திருக்கும்!" காரணம் வேறு கற்பிக்கப்படுகிறது. 7
காரணமின்றி அடித்து நொறுக்கும் அவள் கணவன் குப்பன் ஒருநாள் மல்லிகாவிடமிருந்து மிரட்டி வாங்கிய அவள் நகை களை அடகு வைத்து, கையில் பணம் இருக்கும் தெம்பில் பஸ் ஏறி பட்டணம் வந்தான். நாள் முழுக்க ஸ்டூடியோக்சளின் பக்கமாக அலைந்து, தன் அபிமான நடிக நடிகையரின் தரிசனத்துக்காக காத் திருந்தான். ஒட்டல்களில் நுழைந்து புறப்பட்டு, கொஞ்சம் பட்ட ணத்துத் தண்ணியும் போட்டுப் பார்த்தவன். கடற்கரை பக்கம் கூடி யிருந்த ஒரு கும்பலைப் பார்த்து, "அது என்னவாக இருக்கும்" என்று ஆவலில் கும்பலில் தன்னை நுழைத்தான்.
திடீரென்று காக்கி உடைகள் சூழ்ந்து கொண்டதையோ எல் லோரும் சிதறி ஓடியதையோ அவன் புரிந்து கொள்வதற்குள், இரும்பாக ஒரு கரம் அவனைப் பற்றி இழுத்து வேனுக்குள் ஏற்றியது.
- 19 -

Page 14
லாக்காப்பில்'தள்ளப்பட்ட குப்பனுக்கு புரியாத நிலை, போதைப் பொருளுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தான் ஒரு கிராமத்தான் என்றும் எவ்வளவு கதறியும் பயனில்லை. லத்தி அடிதாங்காமல் அலறியவன்,
* வேணுமின்னா என் பெண்சாதிக்குக் கடுதாசி போட்டு வர வளைக்கிறனுங்க. நான் சொல்றது பொய்யா நெசமான்னு அப் புறம் தெரியுமுங்க" என்று கெஞ்சி கேட்டு ஒரு கடிதம் வாங்கி போலீஸ்காரர் ஒருவரின் மூலம் ஊருக்கு தெரிவித்தான்.
கடிதத்தைக் கண்டு பரபரத்த மல்லிகா அதை தபால்காரரிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னாள். விபரமறிந்ததும் "ஐயையோ! ஆத்தாடி! என் புருஷ னைப் போலீஸ் புடிச்சுக்கிச்சாமே! நான் இப்ப என்னாத்த செய்வேன்." என்று வாயிலடித்துக்கொண்டு கதறினாள்.
"நீ மொதல்ல பட்டணம் போ. நான் எனக்கு தெரிந்த வக்கீல் ஒருத்தர்க்குக் கடிதம் தரேன். அவரையும் கூட்டிக்கிட்டு ஜெயிலுக் குப போய்ப் பார்1. விபரம் சொன்னா உன் புருஷனை வெளியே விட்டுடுவாங்க" என்று தைரியம் சொல்லி அனுப்பினார் அந்த ஊர் பள்ளிக்கூட ஆசிரியர்.
"கல்லானாலும் கணவன், புல்லர்னாலும் புருஷனாச்சுங்களே. விட்டுக் கொடுத்துட முடியுமா. ஜெயில்ல என்ன சாப்பிடுச்சோ. எப்படி இருக்குதோ' என்று புலம்பியபடியே யார் வார் காலிலோ விழுந்து கடன் வாங்கி பணத்தை சுருக்கி பையில் முடிந்து கொண்டு இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய்த் தன் இரு குழந்தை களையும் அழைத்துக் கொண்டு பட்டணம் வந்தாள்.
யார் யாரையோ வழிகேட்டு அலைந்து சுமார் ஐம்பதுக்கும் மேலான பொலிஸ் ஸ்டேஷன்களில் விசாரித்து ஒரு வழியாகப் புரு ஷனை கண்டு பிடித்தாள். பசியும் அசதியும் கண்ணை இருட்டக் களைத்துப் போயிருந்தவள் புருஷனைக் கண்டதும் நிம்மதியானாள். மறுநாள் வக்கீலைச் சந்தித்து அவர் உதவியுடன் புருஷனை மீட்டாள்.
எழுதப் படிக்கத் தெரியாத அந்தக் கிராமத்துப் பெண் பட் டணம் வந்து அதிகாரிகளிடம் பேசிச் சாதித்தது பெரிய விஷயம் தான். மனைவியின் சாமர்த்தியத்தைப் பார்த்து குப்பனே அசந்து போனான். நன்றியுணர்ச்சியும் வாஞ்சையும் அவள் மனத்தை நிறைப்பதற்குப் பதிலாக "இவள் வந்து என்னை மீட்க நான் என்ன இளிச்சவாயனா? என்றும் வக்கிர புத்திதான் தலை தூக்கியது.
سیسے . 20 . -----'

பிறகென்ன? ஊர் திரும்பியதும் பழைய பாணி அடி உதையுடன்
*பட்டணத்துலே பாத்தேனே. உன் யோக்கியதையை. கண்டவங் கிட்டே இளிச்சுப் பேசி , " என்ற புதிய வசை மொழியும் சேர்ந்து கொண்டது. ·
மல்லிகா சீறவில்லை “என்ன இருந்தாலும் ஆண்பிள்ளை அடிபட்ட ரோஷம் டோல" என்று சமாதானம் செய்து கொண்டாள்.
ஆணைத் தனக்கு எஜமானாகப் பாவித்து உச்சாணிக்கொம்பில் நிறுத்தி வைத்துப் பழகிவிட்ட மல்லிகா போன்ற பெண்கள் தங்களின் சுயமதிப்பை எப்படி உணர முடியும்? ዳ
வளர்க்கும் போதே பெண்ணை வளைத்துப் பழக்குவதும், ஆணை விறைப்பாக நிமிர்த்தி வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு இளம் எஜமான இனமாகவும் மற்றொன்று அதற்குப் பணிந்து போகும் இனமாகவே வளர்க்கப்படுகிறது. இந்த மூளைச் சலவையின் ஆரம்பம் சகோதரன், பிறகு கணவன், கடைசியாக மகன். கண வனின் ஆதிக்கம் வயதான காலத்தில் குறையக் குறைய மகன் தாய்க் குப் புதிய எஜமானன் ஆகிறான். சர்வாங்கமும் ஒடுங்க தான் வளர்த்த பிள்ளையின் முன் குறுகி நிற்கும் தாய்மார்கள்தான் இந்த மண்ணின் தியாகத் திலகங்கள்.
தன் எதிர்காலத்திற்கு அவன்தான் தூண் என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் தாய் மகனுக்குத் தரும் அளவற்ற சலுகைகள் அவனை ஆதிக்க வாதியாக விஸ்வரூபம் எடுக்கத் தூண்டுகிறது. இந்தக் கட் டத்தில் அவனின் ‘ஈகோ'வுக்குப் பாதகமாக அவனுக்கு மனைவி வாய்ப்பதை அவனும் விரும்புவதில்லை. அவனைப் பெற்றவர்சளும் விரும்புவதில்லை. அதனால் தான் அவனுக்கு அவனை விட வயதில் குறைந்த படிப்பில் குறைந்த அழகில் மட்டும் ரதியாக, அந்தஸ்து கூடுதலானால் சாதகம்தானே என்று அலைந்து அலைந்து பெண் தேடுகிறார்கள்.
தான் ஆதிக்க்ம் செலுத்த மனைவி வந்தவுடன் ஆண் மகனின் ஈகோ' சற்றே திருப்தியடைகிறது.
புதிதாக வந்தவளை எப்படியும் அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கமுடைய மகன் தாயையும் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறான். s அங்கும் ஒருவிதமான எஜமான விசுவாசத்தோடுதான் தாய் செயல் படுகிறாள். உண்மையிலேயே அவள் மகனை வழி நடத்தும் பெரிய மனுஷியாக அப்போதும் நிமிர்வதில்லை.
- 21 -

Page 15
8. அயலவளாகும் “சொந்த" மகள்
ஷண்முகம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன், 'உன் அக்கா மீனாட்சி ஊரிலிருந்து வந்திருக்கு" என்றாள் அம்மர். முகம் க்ளித் தான் ஷண்முகம். "ஆறு மாசம் முன்னாலே அவசரம்னு ஒரு ஐயா யிரம் ரூபாய் கேட்டபோது விளைச்சல் சரியில்லை. பணம் புரள லைன்னு புருஷனோட சேர்ந்துகிட்டு கை விரிச்சவதானே' என்று
மனம் கறுவியது.
பாராமுகமாக இருக்கும் தம்பி வீட்டில் எத்தனை நாள் இருப் பது? பத்து நாள் தங்கலாம் எனறு எண்ணி வந்த மீனாட்சி இரண்டே நாளில் புறப்பட்டுவிட்டாள். போகும்போது செலவுக்கு வச்சிக்கம்மர் என்று அம்மாவின் கையில் நூறு ரூபாய் நோட்டு இரண்டைத் திணித்தாள். - .
முகத்தைத் தூக்கிப் பரண்மீது வைத்திருந்த ஷண்முகம் ஆக் ரோஷமாய்ப் பாய்ந்தான். "அடுத்தவங்கிட்டே கை நீட்டிப் பணம் வாங்க வெக்கமா இல்லை? மரியாதையாத் திருப்பிக் கொடு" ஸ்ன்று மிரட்டினான்.
"இந்தாடியம்மா வச்சுக்க நமக்கு வேண்டாம் பொல்லாப்பு'என்று மகளிடமே பணத்தைத் திருப்பித் தந்தாள்.
"ஏம்மா இப்படி பயந்து சாவுறே? நானும் உன் வயித்திலே பொறந்தவதா னே?உனக்கு செய்ய்றத்துக்கு எனக்கு உரிமையில்லையா? அவன் தான் எதையோ மனசிலே வச்சுக்கிட்டு என்னை வேத்து மனுஷியாப் பேசறான்னா, நீ பெரியவளா நின்று புத்தி சொல்ல Gausso:TIT DIT?”
மகளின் கேள்வியில் தொனித்த நியாயம் மனசைக் குத்த, கண் கள் குளமாக, கேவியவாறே, "என்னை என்னம்மா செய்யச் சொ ல்றே, f என்னைக்காவது ஒரு நாள் வந்து'ட்டுப் போறவ, நான் காலத்துக் கும் அவனை நம்பி இருக்கேனே. அவனுக்குப் புத்தி சொல்ற நெல
மையிலே நான் இல்லையே." என்றாள்.
- 22 -

சார்பு நிலையால் விளைந்த சுய பச்சாதாப உணர்வில் மட்டும்
அந்தத் தாய் அழவில்ல்ை தான் விதைத்ததின் விளைவுகளை அறு வடை செய்யும் அவலம் லேசாகப் புரிந்ததாலும் அழுதாள். சம்பவங் களை வெறும் சம்பவங்களாக மட்டுமே பார்க்காமல் அதை அனு பவமாக அசை போட்டுப் பாடங் கற்கும் பக்குவம் வரும்போது இது போன்ற இழி நிலையைத் தவிர்க்கலாமோ?
9. கூட்டுக், குடும்பத்தின் பச்சைப் பாம்புகள்
உமாவின் கண்கள் சிவப்பேறி, முகம் சற்று வீங்கி இருந்ததை ரேவதி சவனிக்கத் தவறவில்லை, பரபரப்பான ஆபீஸ் சூழ் நிலையில் எதையும் கேட்க முடியவில்லை. விசாரணையை லஞ்ச்
டைமுக்கு ஒத்திப் போட்டாள்.
யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்ததுபோல கண் நுனியில் உதிர்ந்தது துக்கம், விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை. நேற்று சம்பளம் வாங்கிய சந்தோஷத்தில் தன் குழந்தை அருணுக்கு சட்டை ஒன்றை வாங்கிக் கொணடு போயிருக்கிறாள் உமா. அதை பிள்ளைக்கு போட்டு அழகு பார்க்கும்போது பிலுபிலுவென்று பிடித் துக் கொண்டாளாம் மாமியார். "இங்கே ஆயிரம் செலவு காத்தி ருக்கிறபோது இவ்வளவு விலை கொடுத்து சட்டையா? அதுவும் வளர்கின்ற பிள்ளைக்கு” என்று அவள் கத்த *சம்பாதிக்கிற எனக்கு இதுக்குக்கூட உரிமை இல்லையா” என்று பதிலுக்கு கேட்டிருக்கி fort Gir se. Lorr.
ஆபிஸிலிருந்து வந்த அவள் கணவன்' 'அம்மா கேட்டதில் என்ன தப்பு’ என்று கேட்டு தன் சத்புத்திர தனத்தை நிரூபித்தி ருக்கிறான். அழுது அழுது இன்னும் ஓயவில்லை உமா, இப்படி அந்த அலுவலக பெண்கள் தங்களுக்குள் பரிமாரிக் கொள்ளும் பெருமூச்சுகளுக்கு அளவேயில்லை.
திருமணமான பெண்களின் நிலை அவள் கணவனின் பெற்றோ ரின் மீதும் எந்த அளவுக்கு சார்ந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
ܚܙܝ- 8 2 ---

Page 16
w அந்தகாலத்தில் நிலவிய கூட்டுக் குடும்ப முறை இப்போது சிதைந்து விட்டது பிள்ளையுடன் பெற்றோர் சேர்ந்திருப்பதுகூட சில வீடுகளில் நடைமுறை சாத்தியமாக இல்லை. எங்கோ வெளியே அல்லது வெளி மாகாணத்தில் வேலைக்குப் போகும் மகன்களுக்குப் பெற்றோரைத் தங்களுடன் வைத்துக் கொளள முடிவதில்லை.
ஆனாலும் சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தில் மரபுகள், உணர்வுகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை குடும் பங்களில் விசேஷம மூத்தவர்களுக்குச் செய்யும் மரியாதை போன்ற நல்ல விஷயங்களுக்கு துணை நிற்கும் போது எந்தவித ஆட்சேமும் எழுவதில்லை. ஆனால் பெருந் தன்மையுடனும் விட்டுக் கொடுக் கும இயல்புடனும் உறவு நிலைகளை வளர்க்க நினைக்காமல் வெறும் ஆதிக்க உணர்வுடன் தேவையில்லாத வற்புறுத்தல்களை பிடிவாத மாக திணிக்க நினைக்கும் போது உறவுகள் கசந்து போகின்றன.
கூட்டுக் குடும்ப முறை மாறிவிட்டது என்றாலும் மனப்பான்மை மாறவில்லை. அது அரூபமாக ஒவ்வொரு குடும்பத்திலும் சில விஷ யங்களிலேனும் ஆட்சி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதிலே அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
டெண்கள் திருமணத்திற்கும் பின் வேறொருவீட்டிற்கு வேரோடு இடம் மாறுகிறவள். அங்கே ADUST செய்து கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் அவளுக்குத்தான் வற்புறுத்தப்படுகிறது. நமது பொது மக்கள் மீடியாக்கள் கூட இதைத்தான் பல ஆண்டுகளாக புதிய புதிய கோணங்களில் மெனக்கட்டு வற்புறுத்தி வருகின்றன.
எவ்வளவுதான் நவீனமான போதிலும் ஒரு இந்திய ஆண் எக் காரணத்தை முன்னிட்டும் பெற்றோரை புண்படுத்தவோ அவர்களுக்கு மனக்குறை உண்டாக்கவோ விரும்புவதில்லை. காரணம் அதை ஒரு
பாவமாக கருதுகிறான்.
ஒரு பெண் எந்தவிதத்திலும் ஒரு ஆணுக்கு சமமாக முடியாது என்று நம்பிக்கையில் ஊறியவன்தான் கணேஷ். பெண்பார்க்கும் போதே தனக்கும் தன் பெற்றோருக்கும் அடங்கியவளாகத்தான் தேடினான். அவனை மணந்து கொண்ட ப்ரியாவுக்கு அவனின் இந்த எண்ணம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ப்ரியாவை பிறர் முன் னிலையில் மட்டம் தட்டி அவளின் நியாயமான Suggestion 56061Tai கூட அலட்சியப்படுத்தி பெற்றோர்களை திருப்திபடுத்த எண்ணுகி றான். அவனின் பெற்றோர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நட்பு ரீதியான உறவை எதிர்பார்த்த அவளின் ஏமாற்றத்திற்கு
一 24一

அளவே இல்லை. தப்பித் தவறி கணவனிடம் தன் குறைகளைச் சொல்ல முயன்றால் 'அம்மாவை அனுசரித்து போகத் தான வேண் டும்’ என்று சீறுவான். தன் மனைவியின் உணர்வுகளைக் கொன்று குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்றி வருகிற கணேஷ் போன்றவர்கள் இன்னும் நிறையவே இருக்கிறார்க்ள்.
நவீன சமுதாய அமைப்பில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் தொழில் ஆகிய விஷயங்களில் கணவனின் பெற்றோரின் பங்கு மிக வும் குறைவாகிவிட்ட போதிலும் தங்களின் மகன் மீது அவர்களின் மறைமுகத் தலையீடு மிக அதிகமாகவே இன்னும் இருந்து வருகிறது.
கமலா வின் உடப்பு இன்னொரு பிரசவத்தைத் தாங்காது என்று டாக்டர் சொல்லியாகி விட்டது. எங்கோ திருநெல்வேலியில் ஒரு குக் கிராமத்தில் இருக்கும் அவள் மாமியார் "இரண்டு பெண்ணோடு நிறுத்தினால் எப்படி? நம் வம்சம் வளர பிள்ளை வேண்டாமா? அந்த காலத்தில் நாங்களெல்லாம் எத்தனை பிரசவங்களை தாங்கி இருக் கிறோம். டாக்டர் பேச்சைக் கேட்டுக்கிட்டு பிள்ளை வேண்டாம் என்று இருந்து விடாதே. நான் செத்துப்போனால் நெய்ப்பந்தம் பிடிக்க ஒரு பேரன் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் உன் இஷ்டம்" என்று லெட்டர் எழுதி விட்டாள்.
"அம்மா ஆசைப்படுகிறாள். பாவம் சின்ன வயசில் எனக்காக எவ்வளவோ கஷ்ட்ப்பட்டிருக்கிறாள். அவளுக்காவது.’ என்று கமலா வின் புருஷன் அடுத்த பிள்ளைக்கு அடிபோட ஆரம்பித்துவிட்டான்.
உடம்பு இருக்கும் நிலையில் இன்னொரு பிள்ளையை பெற்று அதை வளர்த்து. நினைக்கும்போதே கலங்கிப்போனாள் கமலா. கஷ்டப்படப்போவது அவள்தான், கிராமத்திலிருக்கும் மாமியார் உபதேசிப்பதுடன் சரி. ஒத்தாசைக்கு வரமாட்டாள்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்ப சூழ்நிலையில் வளரும் ஒரு பெண் அது போன்ற அமைப்புக்கு வளரும்போதே தயார் செய்யப்பட்டாள். அதற்கேற்றபடி தட்டி கொட்டி வளைக்கப்படுகிறாள். ஆனால் இப் போது தனிக் குடித்தன குடும்பங்களில் பிறந்து வளர்ந்து நவீன கல்வியும் பெற்று வருகின்ற தற்காலப் படித்த பெண்கள் ஆண் ஆதிக்கத்திற்கு முழுக்க தங்களை அடிமைப்படுத்திக் கொள்ள தயா ராக இல்லை.
அவள் வளர்ந்து வந்துள்ள சுதந்திர Secular சமுதாயம் ւմtp60ւ0 சமுதாயத்தில் இல்லாத ஒன்றாகிய கருத்து சுதந்திர போக்கில் வளர்க்
سس بی سسس

Page 17
பார்ப்பை வளர்த்துக்கொண்டு விடும் பெண்களுக்கு மாப்பிள்ளை
வளர்ப்பு பற்றியோ அவன் 1ndividualityயில் அவன் பெற்றோருக்
'வுடன் மேனாட்டு அடிப்படைகளைக் கொண்ட சமுதாயப் பிரிவில்
அவள் மைத்துணைன் ஒருமுறை, நாத்தி ஒருமுறை மனோகர் ஒரு
கப்பட்ட பெண் திருமணத்தை ஒரு சமநிலை Partnership ஆகே எதிர்பார்க்கிறாள்.
இப்படித் தங்களுக்குள் ஒரு எண்ணத்தை நியாயமான எதிர்
தேடும் பெற்றோர் அவன் குடும்ப அந்தஸ்து, படிப்பு, உத்தியோகம் இவற்றைத்தான் முக்கியமாக பார்க்கிறார்களே தவிர அவனது
குள்ள ஆதிக்கம் பற்றியோ ஒரு சிறிதேனும் அறிந்து கொள்ளாதவர் களாகவே இருக்கிறார்கள்.
பதவிகளில் வெற்றி பெற்று ஏராளமான செல்வத்தைக் குவித்த
தங்கள்ையும் இணைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புகிறார்கள். இப் படிப்பட்ட மனப்பான்மை அளவில் வேறுபட்டிருந்த போதிலும் இந் தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவுகிறது. பொதுவாக உணவு வகை, உண்ணும் முனற, உடை உடுத்தல், ஆங்கிலத்தில் பேசுதல், ரெஸ்ட்டாரண்டுக்ளுக்கு அடிக்கடி விஜயம் செய்தல் போன்ற லோsume மனப்பான்ம்ைபுடையதாகவே உள்ளது. ஆனால் அடிப்படை யில் Traditional ஆகவும் சிலர் 0rthodex ஆகவும் இருக்கிறார்கள். இல்லறத்தில் தோழன்மயையும் அறிவார்ந்த மதிப்புடமையையும் எதிர்பார்க்கும் பெண்களுக்கு இது போன்ற துணைகள் அமையும் போது அவர்கள் தங்களை சுருக்கிக்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். u
இந்த ஒரு Adjustment அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருப்பு இல்லை. திருமணத்திற்கான வயதில் ஏற்பட்ட மாற்றமும், கல்வி வளர்ச்சியும் பெண்களின் மனப்போக்குகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதிலும் ஒரு டிஸிப்ளின் வேண்டும் என்று நினைப்பவள் தோ அவள் பிறந்த வீட்டு டிரெய்னிங் அப்படி புகுந்த வீட்டில் எல் லோரும் அதற்கு நேர்மாறாக இருந்தார்கள். ஆரம்பத்தில் அன்த பெல்லாம் அவள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லைத்தான்.
ஆனால் அவளுக்கு சுஜா பிறந்தபோதுதான் பிரச்சினையும்
ஆரம்பமானது. குழந்தைக்கு ஈஸ்னோஃபீலியா இருப்பதால் இனிப் புப் பண்டங்களை தவிர்க்கவேண்டும் என்று நினைத்தாள் கீதா.
- 26 m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறை என்று ஆளாளுக்கு தத்தம் பங்குக்கு குழந்தைக்கு 'டாட்-T கூட்டிக் கொண்டு போய் சாக்லெட்டை வாங்கித் தந்தபோது அவர் களைக் கண்டித்துச் சொல்ல முடியாமல் மென்று விழுங்கவேண்டிய தாயிற்று.
அதுதான் போகட்டும் என்று பார்த்தால் குழந்தை விஷமம் செய்யும் போது கண்டிக்கக்கூட விடுவதில்லை. அவள் நியாயமாக கண்டிக்கும் போதெல்லாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக குழந் தைக்கு பரிந்து கொண்டு அவளையே குற்றம் சொல்வார்கள். அதிலே சமாதானமாகிப் போன குழந்தை சுஜா அம்மாவுக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடிவிடுவாள். இப்படி அதிக செல்லம் கொடுத்து குழந்தையை கெடுப்பதும் குழந்தைக்கு தன்மீது மரியாதை இல்லாமல் போன தும் கீதாவின் மன நிலையை மிகவும் பாதித்திருக்கிறது:
கணவனின் பெற்றோர்களைப் பொறுத்த வரையில் அவள்முழுக்க Traditional ஆகவே இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படு கிறது.
இன்றைக்கு பலகாரத்திற்கு பஜ்ஜி செய்தால் என்ன என்கிற ஆசை தப்பித்தவறிக்கூட சுகுனாவுக்கு வந்துவிடக்கூடாது. அப்படியே வந்தாலும் அவள் அதை வாய்விட்டுச் சொல்லிவிடக் கூடாது. அடுத்த நிமிடம் பிரளயமே வந்து விட்டது போல் சுத்துவான் சிதம் பரம். அம்மாவுக்கு 'பஜ்ஜி பிடிக்காதுன்னு தெரியாதா? எங்கம்மா சாப்பிடாததை நீ மட்டும சாப்பிடணுமா? அப்படி என்ன தாக்கு ருசி கேக்குதுர்" என்று கேட்கும் கேளவியில் நாக்கைகே பிடுங்கிக் கொள்ள வேண்டும் போல தோன்றிவிடும். அவனுக்கு வேண்டியதை ஒட்டலில் போய் சாப்பிட்டுக் கொள்வது வெளியில் தெரியுமா? பிள் ளைக்குத்தான் தன்னிடம் எத்தனை பாசம் என்று பங்காரம்மா மகிழ்ந்து போவாள்.
ஆனால் சுகுணாவுக்கு சர்க்கரை வியாதி என்பதை யார் நினைத் துப் பார்க்கிறார்கள். மாமியாருக்குப் பிடித்த ரவா கேசரியைச் செய்து தட்டில் வைத்து விட்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!
இந்த ஒரு Sadist மனப்பான்மையால் தன் ருசியால் மரத்துப் போகும் வரை குமுறிக் கொண்டிருக்கிறர்ள் சுகுனா.
பெண்கள் அறியாமை உடையவர்களாகவோ முன்போல் தங் கள் இஷ்டப்படி கையாளக் கூடியவர்களாவே இனியும் இல்லை என்கிற உண்மையை அவர்களின் கணவர்கள் கூட Daft மறுக் கிறார்கள்
H - Yo ----

Page 18
சமுதாயத்தில் தாங்கள் சந்திக்கும் பெண்கள் எந்த அளவுக்கு சுதந்திர மனப்பான்மை உடையவர்களாக இருப்பதை விரும்புகி றார்களோ அதே அளவுக்கு தங்களின் மனைவியரும் இருப்பதை ஆண்களில் பலர் விரும்புவதில்லை. மாறாக தங்களுக்கு "முழு க்க அடங்கிதங்களை மதித்து நடக்கின்ற மவிைகளையே அவர்கள் பெற விரும்புகிறார்கள்.
சுகுமார் தன் மனைவி உடுத்தும் புடனவ தன் விருப்பத்திற்கு ஏற்றது போலத்தான் இருக்கவேண்டுமென்ற பிடிவாதம் உடையவன்
வாயில் புடவைதான் என்றாலும் கொஞ்சம் மெல்லிய ரதத்தில் எடுத்துக் கொடுத்திால் என்னவாம். இத்தனைக்கும் வேலைக்குப் போகிறாள் சரசு. டிஸென்டாக உடுத்தவேண்டுமென்று ஆசைப்படுவ தில் என்ன தப்பு?"இப்படி மெல்லியதாக கட்டிக்கொண்டால் Office இல் எல்லோரும் வேலை செய்வதா? இல்லை உன்னையேமுறைத்துப் பார்ப்பதா?" என்று சொல்லி பெட்ஷீட் மாதிரி ரகத்தில் கெட்டிப் புடவைகளைத் தான் வாங்கி தருவான்.
திருமானமானவுடன் பெண்கள் எத்தனை பேர் கணவனை கைக் குள் போட்டுக் கொண்டு மாமியார், மாமனாரைப் புறக்கணிப்ப தில்லை. தனிக்குடித்தனம் போவதில்லை என்ற கேள்வி எழலாம்.
கூட்டுக் குடும்பத்தில் தன் உணர்வுகள் நசுக்கப்பட்டு தான் மூளையில் தூக்கி எறியப்படுவோம் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியவர்களாக" இருக்கிறார்கள். சில தனி மனிதர்கள் இதற்கு விலக்காக இருக்கலாம்.
கட்டுக் குடும்பத்தில் ஆதிக்க அச்சம் பொய்யாக இருக்குமேயா ளோல் மகனும மருமகளும் வீட்டோடு இருக்கவேண்டுமென்று எதிர் பார்க்கும் பெற்றோர் எவரும் தம் மகன்ஸ் கூட்டுக் குடுமபத்தில் திருமணம் ச்ெய்து கொடுக்க விரும்புவதில்லையே ஏன்? பெண்களை ஆதிக்கம் செலுத்தி அடக்கி வைத்துத்தான் குடும்ப ஒற்றுமையைக் கட்டிகாக்க முடியும் என்ற பழைய மெளடிகமனப்பானமையிலிருந்து மீளாதவரை கூட்டுக் குடும்பத்தில் நன்மைகள் போய் தீமைதான் மிஞ்சும் ஒருவரை அதிகமாக Exploit செய்வதும் மற்றவர்கள் ಸ್ಪ್ರೆಕ್Tತ இருப்பதுமான போக்கு பொது நன்மையை குலைத்து
டும்,
ஆபீஸில் 0. T செய்து சம்பாதிக்க தேவகி முயற்சி செய்வதே கிடையாது. எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தாலும் அவளுக்கு தரப் படுவது அன்றாட பஸ்சார்ஜும் டிபன் பாக்ஸில் தயிர்சாதமும் தீான். இதுபோன்ற பொருளாதார Exploitationக்கும் கூட்டுக் குடும் பத்தில் குறையவில்லை.
- 28 -

தற்போது உள்ள சுதந்திர ேேயா சமுதாயம் பழமை சமுதா யத்தில் இல்லாத ஒன்றாகிய கருத்து சுதந்திரத்தை பெண்ணுக்கு அளித்துள்ளது. அதனால் நவீன சுதந்திர போக்கில் வளர்க்கப்பட்ட பெண் திருமணத்தை ஒரு சமநிமை Partnership ஆகவே எதிர் பார்க்கிறாள்.
திருமணம் என்பதே ஒரு பெண்ணுக்கு திருப்திகரமான வாழ்க் கைப் பாத்திரம் என்கின்ற AWாபness அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அந்த உறவில் ஆணுக்கு சமமான பங்கினை தாம் வகிக்க வேண்டுமென்கின்ற தங்கள் விருப்பத்தை அடக்கிக் கொள்ள இயலா தவர்களாக இருக்கிறார்கள்.
ஆண்கள் பழைய வழக்கங்களின் தன்மைகளை பெண்கள்மாற்ற நினைப்பதை அனுமதிப்பதில்லை, பல முக்கியமான முடிவுகளை பழைய மரபுகளின் அடிப்படையிலேயே அவர்கள் மேற் கொள் ளுகிறார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் அவர்களின் சமூக கண்ணோட் டத்தில் " ஏற்பட்டிருக்கின்ற இந்த ஏற்றத் தாழ்வே பல திருமணங் களின் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
கணவன் மற்றும் அவனது குடும்புத்தின் பல்வேறுபட்ட தேவை களோடு ஒத்துப் போக உறுதியோடு பல முயற்சிகளை மேற்கொண்ட பின்னர்ே பெண்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற முடி வெடுக்கிறார்கள். இது சில நேரங்களில் விவாக ரத்துக்குக் கூட இட்டுச் செல்கிறது. விவாக ரத்துக்குப் பிறகு சிறந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையுடனேயோ அல்லது விருப் பத்துடனோ அவர்கள் இத்தகைய முடிவை எடுப் பதில்  ைல' திருமண வாழ்வில் தொடர்ந்து இருப்பது தங்களின் உயிருக்கே சவால் என்கின்ற அளவுக்கு அவர்கள் மனம், மற்ற உடற் கொடுமை களை அனுபவிக்கிறார்கள்.
தற்போதைய இந்தியாவின் கல்வியோ, சுதந்திர சிந்தனைச் சூழலோ, பழமையான குடும்ப மரபுகளையோ ஆணாதிக்கத்தையோ எதிர்த்துப் போராடக்கூடிய அளவுக்கு பெண்களை தகுதியுடைய வர்களாக ஆக்கவில்லை.
- 29

Page 19
பெண்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் எஜமானர்கள் தாங் களே என்கின்ற நினைப்பு ஆண்களிடமும் ப்ெற்றோர்களிடமும் இன் னும் இருந்து வருகிறது.
பெண்கள் இதை முழுவதும் எதிர்க்கவில்லை, எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அதை அவர்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மை.
10. கனவுத் திருட்ர்கள்
"நீங்க சுல்பமாகச் சொல்லிட்டீங்கம்மா அந்த ரெண்டு ஆம் பள புள்ளைங்களை படிக்க வெக்கணுமில்ல; இது ல இவ வேறு நீல்வாத்தான் படிக்கறா நான் இல்லன்னு செல்லலை. பொட் டப்புள்ளை படிச்சு என்ன செய்ய போகுது? வீட்டோட கிடந்தா எனக்கும் ஒத்தாசையா இருக்கும். இன்னும் ரெண்டு வருஷ்க்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் குடுத்துடுவோம்" கமல்ம்மாவின் பேச்சு அங்கலாய்ப்பாக ஆரம்பித்து தீர்மானத்தில் முடிந்தது.
அதற்கு மேல் என் வாதம் அவளிடத்தில் எடுபடாது என்று புரிந்தது. சாரதாவைப்பார்த்தேன். தாவணியின் நுனியைப் பிடித் துத் திருகிக் கொண்டு பாவம் போல் நின்றிருந்தாள்.
பக்கத்து வீட்டில்தான் கமலம்மாவின் குடும்பம். எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் வீட்டுக்கிணறும், தோட்டமும் சாக்கடையும்தான் காட்சிகள். அவள் புருஷன் வீட்டுத்தரகு வேலை பார்ப்பதால் வருமானத்துக்கு குறைவில்லை.
அந்தப்பெண் சாரதா சுவரில் சாய்ந்துக் கொண்டு வாய்விட்டு சத்தமாக எதையோ படித்துக் கொண்டும், கைநரம்புகள் புடைக் .சுப் பேனாவை இறுக்கிப் பிடித்து பக்கம் பக்கமாக எழுதிக்கொண் டும் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். "படிச்சிட்டு என்ன செய்யப்போறே சாரதா? என்று கேட்டால் 'நிறைய படிச்சிட்டு வேலைக்குப் போகப் போறேங்க்கா" என்பாள் பளிச்சென்று.
அவளுக்கு அடுத்த சங்கரும், சுப்புவும் படிப்பில் சுமார் ரகம் தான். ஆண்பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு எல்லாவற்றிலும் சலுகை, பெண்பிள்ளை என்பதால் சாரதாவின் ஆர்வம் பலியாக்கப் பட்டு விட்டதை என்னால் தாங்க முடியவில்லை.
ー 30ー

"படிப்பு நின்னு போனால் என்ன சாரதா? நீ ஒய்வு நேரத்தில் என்னிடம் வந்து நல்ல புஸ்தகங்கள் வாங்கிப்படி கைவேலையெல் லாம் சுற்றுக்கொள்" என்று சமாதானமாகச் சொன்னேன்.
கொஞ்ச நாளைக்கு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டி ருந்தாலும் மெல்ல மெல்ல வீட்டு வாசமும் வீட்டில் சின்ன சின்ன வேலைகளும் சாரதாவுக்கு பழகிவிட்டது. முகத்தில் ஒரு சந்தோஷம்"
கூட சாயை கட்டியது.
கைநிறைய வளையலடுக்கிக் கொள்வதும், கண்ணாடி முன் அழகு பார்ப்பதும் அதிகமாகி விட்டது. நேரத்தை உருப்படியாக கழிக்க நான் சொல்லும் யோசனைகள் இப்போதெல்லாம் அவளுக் குக் காதில் ஏறவில்லை. அவளைச் சொல்வி குற்றமில்லை. அந்த இளம் மனசில் பொறுப்பை வளர்ப்பதற்கு முன்பு திருமண ஆசையை விதைத்து திசை திருப்பி விட்டது கமலம்மாவின் கைங்கர்யமாயிற்றே!
இந்த ஆரம்ப சொகுசு அதிக நாளைக்கு நீடிக்கவில்லை? கமலம் மாவின் பொழுது அக்சும் பக்கத்து வம்புகளை மென்று துப்பவே சரியாக இருந்தது. பாவம் சாரதா நாள்முழுவதும் குவிந்து கிடக் கிடக்கும் அழுக்கு துணிகளுடனும் ஒரு சூளை பாத்திரங்களுடனும் போராட்டம். போதா குறைக்கு கடைகளுக்கும் அவளே போக வேண்டும், கர்ப்கறி முதல் கடுகு வரை வாங்கிவர அவ்வப்போது பரபரக்க ஓடுவாள்.
சங்கரும் சுப்புவும் தங்கள் வீட்டிற்கென்று ஒரு வேலையும் செய்து நான் பார்த்தது கிடையாது.
'கடைகளுக்கு பையன்களை அனுப்பக் கூடாதா?" என்று பொறுக்க முடியாமல் சீமலம்மாவிடமே கேட்டுவிட்டேன்.
ஆம்பள பசங்கள் அதிகமா கண்டிச்சு சொல்ல முடியுங்களா? என்றாள் அசட்டு சிரிப்புட்ன்.
'ள்ல்லிாம் நீங்கள் கொடுக்கின்ற இட்ம்தான்' என்று முணுமுணுத் கொண்டேன். கமலம்மா பையன்களை ஒசத்தியாகப் பேசுவதும் பெண்னை மட்டம் தட்டுவதும் வீண் போகவில்லை. எனிபயன்கள் உட்கார்ந்த இடத்திலேயே சாரதாவை எவிக்கொண்டு அதிகாரம் செய்ய சுற்றுக் கொண்டார்கள்.
க்ாலம் எவ்வளவோ மாறிவிட்டது. அதைப் பார்த்தும் உணரா தவர்களாக எத்தனை மெளடிகம்?
- 3 -

Page 20
திடீரென்று கமலம்மாவின் புருஷனுக்குப் பக்கவாதம் வந்து விட்டது. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அவனது முடக்கம் வருமானத்துக்கு வழியில்லாமல் செய்துவிட்டது. கமலம்மா தான் சேர்த்து வைத்திருந்த சில நகைகளை விற்றுப் பணமாக்கினாள். அதை வட்டிக்கு விட்டு ஏதோ கொஞ்சம் சாப் பாட்டுக்கு வழியாக்கிக் கொண்டாள்.
சாரதாவுக்கு என்றைக்கோ திணிக்கப்பட்ட கல்யாணக் கனவுகள் இலையுதிர்ந்த மரமாய் போயிற்று. வருஷங்கள் அவள் கட்டியிருந்த தாவணியை வளர்த்துப் புடவையாக்கியிருந்தது.
ரேஷன் கடையில் சாமான்களை வாங்கிக் கொண்டு, என் பின் னால் நின்றிருந்த சாரதாவுக்கு வழிவிட்டேன். அவள் அசையாமல் எங்கோ வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்த திசையில் நான் பார்வையை ஒட்டியபோது அங்கே பஸ்ஸுக்கு காத்திருக்கும் கல்லூரி மாணவிகளும், உத்தியோகப் பெண்களும்!
- 38 അ


Page 21