கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்ஸிசம் தேசியவாதம் புலிவாதம்

Page 1
H
DIT UITGV/ LEGJITĒől
இலங்கை தமிழ் எழுத்தாண்மை பர்
 

இலங்கைத் தமிழ் தேசியம் பற்றிய ஒரு கருத்துங்கு
ஆப்வுக் கட்டுரை 0
தேசியவாதம் புலிவாதம்
தசியவாதத்தின் வரலாற்று றிய உசாவல்
வைத்திளம்பரா

Page 2

மார்க்ஸிசம் தேசியவாதம் புலிவாதம் : இலங்கை தமிழ் தேசியவாதத்தின் வரலாற்று எழுத்தாண்மை பற்றிய உசாவல்
இரவீந்திரன் வைத்கீ*

Page 3

மாறுநிலை / உருவாக்கம் : இலங்கைத் தமிழ் தேசியம் பற்றிய ஒரு கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரை - 1
மார்க்ஸிசம் தேசியவாதம் புலிவாதம் : இலங்கை தமிழ் தேசியவாதத்தின் வரலாற்று எழுத்தாண்மை பற்றிய உசாவல்
இரவீந்திரன் வைத்திஸ்பரா
வரலாற்றுத் துறை, மணிற்ரோபா பல்கலைக்கழகம்
தமிழாக்கம் : தை.தனராஜ்
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (CES)

Page 4
Introduction to the translation
The International Centre for Ethnic Studies (ICES) Sri Lanka Studies Program assisted by the Norwegian Agency for Development Cooperation (NORAD) aims at doing cutting edge research on issues of 1. multiculturalism, nationalism and identity 2. studies on war, suffering and memory 3. studies on globalization, foreign aid and economic reform This is a translation of a paper presented at the "Trans/Formations: A Conference on Sri Lankan Tamil Nationalism" organised by the ICES in Colombo from December 14-16, 2004. There were seventeen papers
presented at this conference and the edited collection of papers will be published by the ICES with an international publisher this year.
Published by International Centre for Ethnic Studies 2, Kynsey Terrace Colombo - 8 Sri Lanka
Copyright 2007 by ICES
Printed by Kumaran Press Private Limited 361 1/2 Dam Street, Colombo - 12 Tel: +9411242 1388

மார்க்ஸிசம் தேசியவாதம் புலிவாதம் : இலங்கை தமிழ் தேசியவாதத்தின் வரலாற்று எழுத்தாண்மை பற்றிய உசாவல்
கொழுந்து விட்டு எரிகின்ற இனத்துவ பிணக்கும் அதனோடு இணைந்த தீவிர தமிழ் தேசியவாதமும் சேர்ந்து இலங்கை தமிழ் தேசியவாதம் என்னும் பொருள் பற்றிய ஆர்வத்தை பெருமளவுக்கு ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக தமிழ்தேசியவாதம் மற்றும் தீவிரவாதம் மீதான சார்பிலக்கியங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றில் புலமை சார்ந்தனவும் அல்லாதனவும் உள்ளன. இவ்வாறு சார்பிலக்கியம் பெருகிய போதும் இன்று வரை அதன் சாதனைகளை மதிப்பீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை என்றே கூறலாம். இந்த ஆரம்பநிலை தேடுகையின் நோக்கம் இந்த சார்பிலக்கிய தொகுதியை விமர்சன ரீதியாக அணுகுவதாகும். குறிப்பாக அதன் பிரதான செல்நிலைகள் முனைப்புகள் மற்றும் பிரதானமாக அதன் கருத்தில் கொள்ளப்படாத பகுதிகளை ஆழ்ந்து நோக்குவதாகும். இக்கட்டுரையின் குவிமையம் தமிழ் தேசியவாதத்தின் தீவிர கட்டம் மீதான புலமைசார் சார்பிலக்கியத்தை விசாரணைக்கு உட்படுத்துதல்
1. இந்த வகையில் முன்னைய முயற்சிக்குப் பார்க்கவும்: ("Review Essay: Reinterpreting Tamil and Sinhala Nationalisms”, South Asia Bulletin, Vol. 7, 1987, pp.39-46; Michael Roberts, “Narrating Tamil Natioanlism: Subjectivities and Issues' South Asia : Journal of Soutn Asian Studies, Vol. XXVII, no. 1, April 2004, pp. 87-108. றொபர்ட்டின் மீளாய்வு ஜே. வில்சனுடைய தமிழ் தேசியவாதம் பற்றிய விரிவுபடுத்தப்பட்ட விமர்சனமாகும். இது ஓரளவு முழுமையாக இருந்த போதிலும் வில்சனுடைய ஆய்வில் முழுக்கவனம் செலுத்துவது அதன் முழுமைக்குத் தடையாக உள்ளது. அத்துடன் வில்ச னுடைய ஆய்வில் இல்லாத சமூக வரலாற்று அணுகுமுறை அல்லது வர்க்கம் சார்ந்த பகுப்பாய்வை பற்றியும் றொபர்ட் கவனத்தில் கொள்ளவில்லை.
O1

Page 5
என்ற போதினும் இந்த நோக்கத்தை தளமாகக் கொண்டு இக்கட்டுரை தேசியவாதம் பற்றியும் அதன் இயல்பு மற்றும் இலங்கையின் அதன் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பரந்த வரைவிலக்கணத்தை கட்டி எழுப்பவும் முனைகிறது.
இலங்கையின் தேசியவாதம் மீதான வரலாற்று எழுந்தாண்மையின் ஒரு முக்கிய அம்சம் தேசியவாதமானது தாங்க முடியாத துன்பங்களை ஏற்படுத்திய போதும் அது பொதுவாக அபிவிருத்திகுறைந்ததாகவும் இருப்பதுதான். இந்திய தேசியவாதம் பற்றிய செழுமிய புலமைசார் சார்பிலக்கியத்துடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மையாக அமைகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மிகத் தெளிவான காரணங்களில் ஒன்று மக்களைத் தளமாகக் கொண்ட குறிப்பிடக் கூடிய அகில இலங்கை தேசியவாத இயக்கம் எதுவும் இருக்கவில்லை. இருந்த சிறிய பல்லினத்துவ இயக்கமானது சிறு எண்ணிக்கையான இடதுசாரி தாராளவாத உயர்குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்தது. மக்கள் மீதான அவர்களது கருத்தியல் மேலாண்மை இந்தியாவுடன் ஒப்பிடும் போது இன்னும் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. இந்திய தேசியவாதமானது “மேலாண்மையற்ற ஆதிக்கம்” எனப்பட்டது. பல புலமையாளர்களின் கருத்துப்படி இலங்கையின் தேசியவாதமானது ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கம் இல்லாத காரணத்தினால் பெருமளவுக்கு இனத்துவம் சார்ந்ததாகவே இருந்தது. அத்துடன் சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது முழுமையான முதிர்ச்சி நிலையை அடைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
இலங்கை தமிழ் தேசியவாதம் பற்றிய வரலாற்று எழுத்தாண்மையானது அதன் கருத்தியல் வேர்களை 19ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் முகிழ்த்த தமிழ்/சைவ சீர்திருத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் தேடுகிறது. இவ்வியக்கம் ஆறுமுக நாவலரினால் தோற்றம் பெற்றது. ஏனைய தென்னாசிய சமயகலாசார மறுமலர்ச்சி இயக்கங்களைப் போன்றே இதுவும்
2. இந்திய தேசியவாதம் பற்றிய இந்த வியாக்கியானம் இந்திய வரலாறு மீதான அடிநிலை ஆய்வுகளிலிருந்து எடுக்கப்பட்டது. பார்க்கவும்: Ranajith Guha Dominance without hegemony
O2

பிரித்தானிய காலனித்துவம் மற்றும் மிஷனரி செயற்பாடுகளினால் சுதேசிய மரபுகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிரான தற்காப்பு பதிற்குறியாகவே அமைந்தது. நாவலரின் மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய ஆரம்பகால சார்பிலக்கியங்கள் பிரதானமாக அவரது ஆதரவாளர்களினால் எழுதப்பட்டவை. எனவே அவை விமர்சனரீதியானவை அல்ல. எனினும் 1970களின் பிற்பகுதியில் நாவலரின் பணிகள் பற்றி புலமைசார் எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கின. மேற்கத்திய விழுமியங்கள், கருத்துக்கள், அறிவுநிலை மரபுகள் தொழின் முறையியல் ஆகியவற்றுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் அவற்றின் செல்வாக்குகளின் நடைமுறைகளினாலேயே வடிவமைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டெழுந்த தமிழ்/சைவ சீர்திருத்த மறுமலர்ச்சி இயக்கத்தை மீள்வியாக்கியானம் செய்ய முயன்றவர்களில் கைலாசபதியும் சிவத்தம்பியும் முன்னோடிகளாக உள்ளனர்.
முக்கியமாக இந்த மறுமலர்ச்சியின் வகுப்பு/சாதி சார்ந்த அடிப்படையை அவர்கள் சுட்டிக் காட்டினர். இந்த மறுமலர்ச்சி யானது இலங்கையின் வடபகுதியிலும் தமிழ்நாட்டிலும் ஒரு சேர எழுந்த பரந்த தமிழ்/சைவ மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததுடன் யாழ்ப்பாண புத்திஜீவிகள் இவ்விடயத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்ததோடு முக்கிய வகிபங்கினையும் கொண்டிருந்தனர். 19ஆம் நூற்றாண்டில் வடஇலங்கையின் சனத்தொகையில் 50% வெள்ளாள சாதியினரைக் கொண்ட அசாதாரணமான சாதி உருவாக்கம் இருந்தது. பிரித்தானிய காலனித்துவம் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி செயற்பாடுகளினால் சமூக-கலாசார ஒழுங்குக்கு ஏற்பட்டிருந்த அறைகூவல்களுக்கு மத்தியில் மேற்படி வெள்ளாள சாதியினர் தமது மரபுசார்ந்த மேலாண்மை மீள் உறுதிப்படுத்துவதற்கு இந்த மறுமலர்ச்சியை அவர்கள் தொடர்புபடுத்திக் கொண்டனர்.
3. s. 60) satsuguiar "Cultural & Linguistic Consciousness of the Tamil Community" in Ethnicity and Social Change in Sri Lanka, Colombo: Social Scientist Association, 1979, pp. 107-20; K. Sivathamby, Hindu Reaction to Christian Proselytization and Westernization' Social Science Review, Vol. 1, No. 1, 1979.
O3

Page 6
இந்த ஆரம்பகால தமிழ் /சைவ மறுமலர்ச்சி பற்றி அண்மைக்காலத்தில் யங் மற்றும் ஜெபநேசன்' ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்குதல்" களுக்கு எதிராக நாவலருக்கு முன்னர் பிரதானமாக பிராமணர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பியக்கத்தை அடையாளம் கண்டனர். அத்துடன் இந்த தமிழ்/சைவ மறுமலர்ச்சியை யாழ்ப்பாண உயர் குழுவின் பழமைவாதத்துடனும், அது மட்டுமின்றி அதனை கொழும்பிலிருந்து கொண்டு பழமைவாத அரசியல் செய்த பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ் அரசியல் உயர்குழுவினருடனும் கூட தொடர்புபடுத்தினர்.
றோஹான் பஸ்தியானுடைய ஆய்வுகள் இதனை இன்னும் ஒரு படி முன்னே கொண்டு சென்றன. பஸ்தியன் மிக முக்கியமான ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அதாவது இந்த ஆதிக்கம் நிறைந்த சாதி/வகுப்பு தமிழ்/சைவர் “உயர் கலாசாரம்” எவ்வாறு இனத்துவ அடையாளம் மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க இரட்டைத்தன்மை கொண்ட சிங்கள/தமிழ் எல்லைப் பிராந்தியங்களின் மக்கள் மத்தியில் பரவியது?. இவரது ஆய்வு உண்மையில் மிகவும் முக்கியமான ஒரு வினாவை முன் வைக்கிறது. அதாவது 19ஆம் நூற்றாண்டின் தமிழ்/சைவ சீர்திருத்த இயக்கத்தில் எல்லாவகையான அடிநிலை சமரசம் சார்ந்த மரபுகள் காணாமல் போய்விட்டனவா? அல்லது பிடுங்கி எறியப்பட்டு விட்டனவா? இந்த ஆய்வுகளும் ஏனைய விரிவான ஆய்வுகளும் கிறிஸ்தவ மிஷனரி செயற்பாடுகளுக்கு பதிற்குறியாக எழும்பிய தமிழ்/சைவ மறுமலர்ச்சி இயக்கத்தில் தங்கியிருந்த உயர் குழுவினரின் கலாசார நடைமுறைகள் பற்றியும் காலனித்துவ காலத்திலிருந்து இன்று வரை தமிழர் மத்தியில் மாறுகின்ற பால்நிலை வகிபங்குகள் மற்றும் ஆண்மை பற்றிய கருத்தியல் வளம் பற்றியும் ஆய்வுகளை வடிவமைப்பதற்கு ஒரு வசதியான பகுப்பாய்வு சட்டகத்தை அமைத்து தருகின்றன."
4. tuli LDfbg/lb 6sguGissai, The Bible Trembled: Hindu-Christian Encounters
in Northern Sri Lanka.
5. சித்ரா மெளனகுரு, மாலதி அல்விஸ், ராதிகா குமாரசாமி, நெல்பர் டி. மெல் g,5Guit fair "Studies on Gender roles and masculinity” aous gungs பகுப்பாய்வுக்கான சட்டகமாக அவர்கள் அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.
O4

எனினும் யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்ட தமிழ்/ சைவ மறுமலர்ச்சியின் விசித்திர தன்ன்ம் குறித்து குறிப்பாக அதனை தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது எழும் பல வினாக்களுக்கு விடை தேட வேண்டியுள்ளது. அத்தகைய ஒப்பீடு யாழ்ப்பாணத்திலும் தமிழ் நாட்டிலும் எழுந்த தமிழ்/சைவ மறுமலர்ச்சியின் பல்லினத்தன்மை மற்றும் கருத்தியல் சார்ந்த வீச்சு ஆகியவற்றை உருவாக்கிய பல்வேறு காரணிகளை விளங்கிக் கொள்ள எமக்கு உதவியாக இருக்கும். நாவலரினால் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி தமிழ்நாட்டினத்தை விட கூடுதலான பழமைவாதத்தையும் பிராமணியத்தையும் யாழ்ப்பாணம் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் தமிழ்/சைவ மறுமலர்ச்சி பொதுவாக பொதுமக்களினால் நாவலர் காலத்திலேயே அவருக்கு எதிரான கருத்துடையவராகவே வாழ்ந்த இராமலிங்க சுவாமி களின் ஆளுமையுடனும் இணைத்து அடையாளம் காணப்பட்" டது. தமிழ்நாட்டின் தமிழ்/சைவ மறுமலர்ச்சியில் ஈடுபட்டோரின் பட்டியலில் இராமலிங்க சுவாமிகளின் ஆளுமையுடனும் இணைத்து அடையாளம் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் தமிழ்/ சைவ மறுமலர்ச்சியில் ஈடுபட்டோரின் பட்டியலில் இராமலிங்க குழுவினரைப் போல ஆதிக்கமற்ற சாதிகளைச் சேர்ந்த பலரைக் காண முடியும். உதாரணமாக மறுமலர்ச்சிக்காரரின் முக்கிய குருவான சோமசுந்தர நாயக்கர் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். நாயக்கரின் வாழ்வு மற்றும் அவரது பணிவினைக் கூர்ந்து நோக்கினால் அவர் சைவத்தை மீள் வியாக்கியானம் செய்வதற்கு பல காரணிகளுக்கு மத்தியில் வேதாந்திகளுடன் குறிப்பாக நவீனவேதாந்திகளான ஆரிய-சமாஜிகள், பிரம்ம சமாஜிகள் மற்றும் வைஷ்ணவர்கள் குறிப்பாக வடகலை வைஷ்ணவர்களுடன் அவர் நடத்திய தர்க்கங்கள் அவனியில் கூடிய செல்வாக்கு செலுத்தியுள்ளதைக் காணலாம். நாவலரின் ஆரம்பகால கிறிஸ்தவ தொடர்பு கள் பின்னர் அவர் அதனை நிராகரித்தமை அடங்கலாக நாவலரை சைவத்தை மீள் வியாக்கியானம் செயய வைத்த காரணிகள் பற்றிய விளக்கமான ஆய்வு இல்லாத போதும் அவரது சீர்திருத்த மற்றும் மறுமலர்ச்சிப் பணிகளில் செல்வாக்கு செலுத்திய வேறு பல காரணிகள் இருக்கவே வேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டிலும் வட இலங்கையிலும் வெள்ளாள சாதியினர் வைசியர்கள் அல்லது
O5

Page 7
தூய சூத்திரர்கள் என நடந்த விவாதத்தில் நாவலர் தூய சூத்திரர் பக்கமே வாதிட்டார். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்த அவரது சகபாடிகளுக்கு எதிரான இவரது இந்நிலைப்பாடு அவர் வர்ணாசிரம தர்மத்தின் இந்திய பிராமணிய மாதிரிகையுடன் ஒன்றிணைய விரும்பியதைக் காட்டி நின்றது. அத்துடன் நாவலரும் அவரது சீடர்களும் தமிழ்நாட்டில் நடந்த ஆரிய-திராவிட விவாதங்கள் மற்றும் வெளிப்படுத்துகைகளிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
இலங்கையை பொறுத்தமட்டில் சமூக-பொருளாதார அரசியல் வலுவாண்மை வெள்ளாள சாதியினரிடமே இருந்தது. ஒரு சமூக-கலாசார கருத்தியல் என்ற அடிப்படையில் ஆரியரிடை" யேயும் பிந்திய காலத்தில் கொஞ்சம் அடக்கமாகவே வந்து சேர்ந்தது. எனவே வட இலங்கையில் திராவிடவாதம் ஆர்வமாக தழுவிக் கொள்ளப்படாமை குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அத்துடன் இது இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மிஷனரிகளின் தயக்கத்துக்கு வினையாக உருவெடுத்த தமிழ்/சைவ மறுமலர்ச்சியானது, தமிழ் கிறிஸ்தவ உயர் குழுவினரையும் இணைத்துக் கொண்டு இக்காலத்தில் உருவான தமிழ் உயர் குழுமத்தினரின் தரகு முதலாளித்துவ அம்சங்களை தேடுவதற்கான வாய்ப்புகளை இது தடுத்து விடுகிறது. உண்மையில் தமிழ்/சைவ மற்றும் தமிழ் கிறிஸ்தவ உயர்குழுமங்களுக் கிடையிலான சிக்கலான இணக்கப்பாடும் அதன் தொடர்ச்சியும் இன்னும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய அம்சமாகும்.
கலாசாரம் மற்றும் கருத்தியல் சார்ந்த இந்த ஆரம்ப முனைப்புக்குப் பின்னர் இலங்கை தமிழ் தேசியவாதமானது தீர்க்கமாக அரசியல் வரலாற்றுக்கு மாறுகிறது. கொழும்பை மையமாகக் கொண்ட அபிவிருத்திகள், அரசியல் யாப்பு அபிவிருத்திகள் மற்றும் அவற்றுக்கு கொழும்பில் வாழ்ந்த தமிழ் உயர் குழுமத்தினரின் பதிற்குறிகள் ஆகியவை இங்கு முக்கியத் துவம் பெறுகின்றன. இவ்விடயம் தொடர்பாக எம். குணசிங்கத்தின் அண்மைக்கால ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் மகாஜன சபை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) போன்ற தமிழ் அரசியல் அமைப்புகள் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு வளர்ந்தமை; கொழும்பில் ஏற்பட்ட அரசியல் யாப்பு மாற்றங்கள்
O6

தமிழர் நலன்களை போதியளவுக்கு பாதுகாக்கத் தவறியமை, இதனால் தமிழர் மத்தியில், தாம் ஒதுக்கப்படுகின்றமை குறித்த ஒர் அச்சத்தின் பதிற்குறியாகத் தோன்றிய தற்காப்பு அரசியல் எதிர்வினைகள் குறித்து குணசிங்கம் தேடியுள்ளார். தமிழ் அரசியல் அமைப்புகள் மற்றும் தமிழ் தேசியவாதம் குறித்த இந்த வரலாற்றில் 1930களில் கொஞ்ச காலத்துக்கேனும் எழுச்சிபெற்றது நின்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தனியாக நிற்பதைக் காண முடிகிறது. இது இந்திய தேசிய இயக்கத்தின் குறிப்பாக காந்தியின் தாராளவாத/சீர்திருத்தவாதத்தின் அல்லது இலங்கை" யில் அக்காலத்தில் எழுச்சி பெற்ற முற்போக்கு இடதுசாரி இயக்கத்தினால் உந்தப் பெற்ற யாழ்ப்பாணத்தின் இலட்சியவாத இளைஞர்களினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அரசியல்ரீதியாக மிகவும் வேறுபட்டிருந்த காந்தி, நேரு, என்.எம். பெரேரா, ஜே. ஆர். ஜெயவர்தனா, சீ இராஜகோபாலாச்சாரி போன்றவர்களை அவர்கள் அழைத்திருந்தமையானது அவர்களின் தெளிவற்ற இயக்க நிலையைக் காட்டுகிறது. அவர்களே சுயாட்சி, சிறுபான்மையினரின் அரசியல் ஆகியவற்றை நிராகரித்து இந்தி யர்களைப் போல “பூரண சுவராஜ்’ கோரிக்கையை முன்வைக்க பொறுப்பாக இருந்தனர் (பிரித்தானியரிடமிருந்து பூரண சுதந்திரம்). அவர்களது அரசியல் தாராளவாதம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் கொஞ்சம் மார்க்சியம் ஆகியவற்றை கொண்ட ஒர் அசாதாரண கலவையாக இருந்தது. எனினும் அவர்கள் இலங்கை தேசியவாதத்தின் இடதுசாரிகள் மத்தியில் பிரபலமாகவே இருந்தனர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்காரர்களின் செயற்பாடுகள் இலங்கை தேசியவாதத்தின் இடதுசாரி கூறுகளை பிரதிநிதித்துவம் செய்தன எனக் கூறப்படுகிறது."
தமிழ்தேசியவாதத்தின் 1970இன் தீவிரவாத இளைஞர்களின் எழுச்சி வரையிலான பகுதி அரசியல் அபிவிருத்தி மற்றும் அரசியல்
6. (yposit (56037 fish, Sri Lankan Tamil Nationalism: A Study of its Origins.
Sydney; MVPublications, 1999.
7. unidissolub : Frtisifov6or sgist Dit, "The Left Tradition in Lankan Tamil Politics" in Rajan Phillipsed. Sri Lanka. Global Challenges and National Crises. Colombo: Ecumenical Institute for Study and Dialogue and Social Scientists Association, 2001. pp. 265-94.
O7

Page 8
வரலாறாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்த அரசியல் மாற்றங்கள் தமிழர்களை ஒதுக்கி அவர்களின் அரசியல் அதிகாரத்தைப் பாதித்தமையினால் இலங்கை தமிழ் தேசியவாதம் ஒரு தற்காப்பு தேசியவாதமாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் கூறப்படுபவை தெரிந்தவைகளே. அதாவது சுதந்திரத்துக்குப் பின்னர் சிங்களவர்கள் எவ்வாறு (முன்னர் தமிழர்கள்) பிரித்தானியர் ஆட்சியில் தாம் கொண்டிருந்த மிதமிஞ்சிய செல்வாக்கை விரைவாக மாற்றியமைத்தனர் என்பதைக் கூறுகிறது. சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் 1949இல் இந்திய வம்சாவளி தமிழர்களின் குடியுரிமை" யைப் பறித்து அவர்களது அரசியல் உரிமைகளை நீக்கியது; 1956இல் சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கியது; தமிழ் பேசும் “பாரம்பரிய” பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டது; 1072இன் குடியரசு யாப்பின் மூலம் பாரபட்ச கொள்கைகளை நிறுவனமயப்படுத்தியது. இதற்குப் பதிற்குறியாக 1940களில் தோன்றிய பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் உரிமைகளை யாப்பின் மூலமும் வன்முறையற்ற முறைகளின் மூலமும் முன்னெடுத்தனர். எனினும் இவை தோல்வியடைந்தன. இதனால் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதம் தலையெடுத்தது. தமது முன்னோர்களின் பாராளுமன்ற வழிமுறைகளில் நம்பிக்கை இழந்த இவர்கள் ஆயுதப் போராட்" டத்தின் மூலம் தமிழ் அரசினை அமைக்க முயன்றனர்.
அத்துடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC), சமஷ்டிக் கட்சி, தமிழரசுக் கட்சி (FP) என பெயர் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (TTAK) ஆகியவை முன்னெடுத்த முயற்சிகளும் குறிப்பிடப்படுகின்றன. எனினும் இக்கட்சிகள் கொழும்பைத் தளமாகக் கொண்டிருந்த உயர்குழு மக்களைச் சார்ந்த தமிழர்களின் நலன்களையே பிரதிபலித்தன. ஆனால் பின்காலப் பகுதியில் தமிழ் இளைஞர்களின் தீவிரவாத அரசியல் கலாசாரம் முதன்மை பெற்றது. இவ்வாறாக தமிழர்களின் அரசியல் ஒத்திசைவு, மிதவாதம், சமஷ்டி முதலியவற்றிலிருந்து தமிழ் இளைஞர்களின் தீவிரவாத எழுச்சியுடன் தீவிரவாதம், இனவாதம் என்னும் பரிமாணங்களைப் பெற்றது. ஆங்கிலம் கற்ற தமிழர்களின் உயர் குழுமங்களினால் வழிநடத்தப்பட்ட அரசியல்; மார்க்ஸிசம், இனவாதம் முதலியவற்றைப் பின்னணியாகக் கொண்ட தீவிரவாத
O8

இளைஞர்களின் அரசியலாக மாற்றமடைந்தது. இவ்விளைஞர்களில் பெரும்பாலானோர் சுயமொழியில் கல்வி கற்ற கீழ் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். A.J. வில்சன், மு. நவரத்தினம், S.அரசரட்ணம் உட்பட பல அறிஞர்கள் தமிழ் தேசியவாதம் பற்றிய தமது எழுத்துக்களில் மிகவும் புலமையுடன் இந்த அபிவிருத்திகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் வேறுபாடுகள் இருந்த போதும் இவையாவும் தமிழ் தேசியவாதம் பற்றிய உயர் குழுமம் மற்றும் தாராள-தேசியவாதத்தின் கருத்தியல்களையே தளமாகக் கொண்டுள்ளன.
வரலாற்று எழுத்தாண்மையின் பொதுவான செயல்நெறி யானது உயர்குழுமம் சார்ந்த இரு முகம் கொண்ட தேசியவாதத்" தின் விளக்கமாக இருந்தது. ஒவ்வொரு தமிழரது பாரபட்சமான சட்டவாக்கமும், நிகழ்வும் தமிழருக்கு பதிற்குறியுடன் விளக்கப்படுகின்றன. இந்த சட்டவாக்கங்களையும், நிகழ்வுகளையும் ஏற்படுத்திய சிக்கலான அரசியல் களத்தை விளக்கும் முயற்சி யினை காண முடியவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்த விளக்கங்கள் யாவும் தமிழர்களுக்கும் மற்றும் தமிழர்களின் பதிற்குறிகளுக்கும் எதிராக பிரதான சிங்கள கட்சிகள் மேற்கொண்ட செயற்பாடுகள் - சமூக, அரசியல் மோதல்கள் - ஒரு சிக்கலான களத்தில் நடைபெற்றன என்பதை உள்ளடக்க” வில்லை. அவர்கள் ஏனைய குழுவினர்களைத் தவிர்த்து இனத்துவ குழுமங்களிலேயே முழுக்கவனமும் செலுத்தினர். வகுப்பு/சாதி, இனத்துவம், சமயம், பிரதேசம், பால்நிலை முதலிய பல்வேறு அம்சங்களில் பிளவுபட்டிருக்கக்கூடிய பின் காலனித்துவ பல்லின சமூகத்தில் இந்த தவிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. என்பது உண்மையாகும். இவ்வாறான binary விபரிப்புகளின் குறைபாட்டுக்கு மிகச் சிறந்த சான்று. இனத்துவ பிணக்கு வளர்ச்சியடைந்த இதே காலகட்டத்தில் தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரால் (JVP) முன்னெடுத்துச் செயற்பட்ட இளைஞர்
8. ஆரம்ப நவீன இலங்கையின் மிகச் சிறந்த வரலாற்றாசிரியர் எஸ். அரசரட்ணம் ஆரம்ப நவீன இலங்கையின் சமூக, பொருளாதார வரலாறு பற்றி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார். எனினும் நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றாசிரியர் என்றளவில் அவர் சமூக வரலாற்று அணுகுமுறையை முற்றாகக் கைவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
09

Page 9
கிளர்ச்சியாகும். இதில் 60,000க்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்."
அதாவது இதில் இன்னுமொரு விடயமும் விபரிக்கப்பட வில்லை. இக்கால கட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் இடதுசாரி இயக்கங்களின் செயற்பாடுகள் எதுவும் வெளிப்படுத்தப்பட வில்லை. தமிழ் இடதுசாரி இயக்கம் தமிழ் சமூகத்தையும் அரசியலையும் முற்போக்கு சார்ந்த தீவிரவாதநிலைக்குத்தான் இட்டுச் சென்றது. அத்துடன் இனத்துவ பிணக்கு தொடர்பாக பிரதான தமிழ்க்கட்சிகளையும் மற்றும் அவர்களது அரசியலையும் கேள்விக்குட்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகித்தன. காலப்போக்கில் மோசமடைந்த இனத்துவ பிணக்கு மற்றும் அவற்றின் தீர்வுக்கான படிமுறை தொடர்பாக தமது சொந்த நிலைப்பாட்டினை மேற்கொள்ளவும் அவை வழிவகுத்தன." தமிழ் இடதுசாரி இயக்கம் தொடர்பாகவோ தமிழ் தேசியவாதம் மற்றும் இனத்துவ பிணக்கின் வளர்ச்சி தொடர்பில் அதனுடைய வரலாற்றை இணைக்கும் முயற்சிகள் தொடர்பாகவோ ஆங்கிலத்தில் எவ்வித விளக்கமான புலமைசார் ஆவணங்கள் எதுவுமில்லை. அத்துடன் தற்போதுள்ள நூல்களும் கூட தமிழ் இளைஞர்களின் தீவிரவாதத்துடன் 1970களில் தமிழர்களின் அரசியல் கலாசாரம் “திடீரென” தீவிரவாதத் தன்மையைப் பெற்றுக் கொண்டமையை விளக்குவதற்கு தவறுகின்றன. சகல தீவிரவாத குழுக்களும் ஏதோவொரு விதத்தில் மார்க்சிய சோஷலிச
9. இந்த இரு இயக்கங்களினதும் ஒருமைத்தன்மை பற்றி இன்னும் கூடிய ஆய்வு தேவைப்படுகிறது. Moore பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ".VPயின் எழுச்சிக்கு சகல கீழ்மட்ட குழுக்களும் ஆதரவு வழங்கின. தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் ஆங்கிலம் தெரியாத மத்திய, கீழ் மத்திய வகுப்பு தரமக்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒரேயொரு அரசியல் இயக்கமாகும். (M.Moore, Lanka Guardian, 1992)
10. இவற்றுக்கு சில புறநடைகள் பிறைன் பேபன்பெர்கர் மற்றும் இமைய வரம்பன் ஆகியோராவர். இந்த விடயம் தொடர்பான ஆவணம் தமிழில் மட்டுமே உள்ளது. பார்க்க: இமையவரம்பன்.
11. உதாரணமாக தனது அண்மைக்கால ஆய்வில் புஸ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஆரம்பகால தமிழ் தீவிரவாதிகள் தமது வன்முறைகளை கம்யூனிஸ்ட் மற்றும் சாதி விரோத தீவிரவாதிகளிடமிருந்தே பெற்றுக் கொண்டனர். பார்க்க: ஈழ போராட்டத்தில் எனது சாட்சியம், சென்னை: அடையாளம், 2003, பக். 38-39.
1O

பார்வையைக் கொண்டிருக்கவே செய்கின்றன. எனினும் அவற்றின் தோற்றுவாயை அறிய எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.
1950களிலேயே தமிழ்ப்பகுதிகளில் இடதுசாரி இயக்கமே மிக முக்கிய பங்களிப்பினைச் செய்யத் தொடங்கிவிட்டன. கோயிற் பிரவேசம், தேநீர் கடைகளில் நுழைதல், பாடசாலைகளில் சமத்துவம் முதலிய விடயங்களில் உயர் சாதியினரின் வன்முறை சார்ந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தீண்டாமையை ஒழிப்பதற்கு பஞ்சமர்கள் மேற்கொண்ட போராட்டங்களை அவர்கள் வழிநடத்திச் சென்று உரத்துக் குரலெழுப்பினர் (Pfafneberger, 1994). பென் பேர்சர் குறிப்பிடுவது போல, தமிழ் இடதுசாரிகள் தமிழ் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தியதோடு, அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக ஐக்கியப்பட்ட தமிழர் எதிர்ப்புக்கு அடித்தளத்தையும் இட்டனர். இடதுசாரி இயக்கத்தின் அடிப்படைகளைப் பொறுத்தமட்டில் இது ஓரளவு வினோத" மானது. தமிழ் இடதுசாரிகளின் இந்த முக்கிய வரலாறு குறிப்பினை தமிழ் தேசியவாதத்தின் வளர்ச்சியுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பினை சரியான முறையில் ஆய்வு செய்யப்படாமை ஒர் இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது." AO இந்த தற்காப்பு தமிழ்தேசியவாத வளர்ச்சி பற்றி ஆங்கி லத்தில் விளக்குவதற்கு ஒரு சில முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்களம் மட்டும் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டமையில் முடிந்த மொழி தொடர்பான சிக்கலான அரசியலை Robert Kearney விளக்க முயல்கிறார். இது ஒர் அரிய முயற்சியாகும். குறிப்பாக இனவாதத்தை தோற்கடிப்பதில் இடதுசாரிகள் அடைந்த தோல்வி உட்பட மொழி தொடர்பாக ஏற்பட்ட சிக்கலான அரசியலையும் அவர் விளக்க முயல்கிறார்." இந்த பார்வையை R.சேரனுடைய அணி மைக் கால கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மேலும் முன்னெடுக்கிறது. எனினும்
12. இவ்விடயம் தொடர்பாக தமிழில் உள்ள ஒரேயொரு தனிவரைபு நூல். பார்க்க: சாத்தியமும் அதற்கெதிரான போராட்டங்களும், யாழ்ப்பாணம், புதிய பூமி, 1988.
13. .................. Communalism and Language of Politics in Ceylon. Durham
NC: Duke, 1967.
11

Page 10
அவரது ஆய்வின் குவிமையம் தேசியவாதம் பற்றிய சமகால கோட்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தி தமிழ் தேசியவாதம் உட்பட தமிழ் தேசியவாதத்தை விளங்கிக் கொள்வதற்கான கோட்பாட்டு மாதிரிகளை முன்வைப்பதாகும்." இவ்வாய்ப்புலத்தில் வழிகாட்டும் மிக முக்கிய ஆய்வு இமயவரம்பனின் தமிழரசுக் கட்சியின் அரசியல் பற்றிய ஆய்வாகும். துரதிஷ்டவசமாக இது தமிழில் மட்டுமே உள்ளது.*
இனி இலங்கை தமிழ்தேசியவாதத்தின் தீவிரவாத கட்டம் சார்ந்த சார்பிலக்கியங்களை நோக்கலாம். இலங்கை தமிழ் தேசியவாதம் பற்றிய விடயத்தில் கவனம் பெருகுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தமிழ்தீவிரவாத இனத்துவ மோதல் அதிகரித்தமையு பற்றியும் புலமைசார் ஆய்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இனத்துவ துவம் சம் பல்வேறு பின்னணிகளைக் கொண்டுள்ளதனால் எழுத்தாளர்களையும் புலமையாளர்களையும் கவர்ந்துள்ளது. இவர்களில் எவரும் எவ்வித ஆய்வு அனுபவமும் கொண்டவர்களல்லர்". வன்முறை, எதேச்சாதிகாரம், இராணுவவாதம், சிங்கள/பெளத்த பேரினவாதம் முதலிய அரசியல் கலாசார சீரழிவினால் பாதிக்கப்பட்ட இந்த
14. தமிழ் தேசியத்தின் ஆரம்ப கட்டம் பற்றி இடதுசாரி நோக்கினை வழங்குவதில் சேரனின் நூல் மிகவும் முக்கியமானது. பார்க்க: Cheran, R, Changing Formations: Nationalism and National Liberation in Sri Lanka and the Diaspora, Unpublished PhD. Thesis, York University, Toronto, 2001.
15. இமையவரம்பன் தந்தையும் மைந்தரும்: தமிழரசு கட்சி அரசியலின்
விமர்சனம், கொழும்பு புதிய பூமி 2000.
16. எனினும், தமிழர் அரசியல் மற்றும் தேசியவாதம் பற்றி குறிப்பிடத்தக்க நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவை யாவும் போராட்டத்தில் பங்கு பற்றியோர், தமிழ் அரசியல் கட்சிகள்/ தீவிரவாதக் குழுக்களின் உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், சிவில் அல்லது இராணுவ அதிகாரி களினால் எழுதப்பட்டன. உதாரணமாக: நாராயண் சுவாமி, 1994. சிவநாயகம், 2001, ஹில், 1990, பாலசிங்கம், 2003இவை பெறுமதிமிக்கவை என்ற போதிலும் இவை ஆழமான ஆய்வை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஒரு பக்கம் சார்ந்தவை, பத்திரிகை சார்ந்தவை, உணர்ச்சிகரமானவை. இவற்றில் விதிவிலக்காக தற்போதைய ஆவணங்களை மீள் வியாக்கியானம் செய்பவை அமைந்துள்ளன. சில அரசியல், இனக்குழு விவரணம் அல்லது சமூகவியல் சார்ந்தவை. உதாரணம்: டேனியல், 1996, ஜெகநாதன் மற்றும் இஸ்மாயில் 1955, சிவத்தம்பி, 1986, தம்பையா 1996, வில்சன், 2000, கிருஷ்ணன், 1999, ராஜநாயகம் 1994.
12

ஆய்வாளர் பலர் அச்சீரழிவுக்கான காரணிகளை விளங்கிக் கொண்டு வியாக்கியானம் செய்ய முயன்றனர். இந்த பின்னணியில் 5T6i Grib (BJ 6i 6.5) glib 60 uun 6ilai Sri Lanka: fratiricide and Dismanthing of Democracy” GT Goi GDJLið BiT Gở Qypë gluu DTT 5 வாசிக்கபட வேண்டிய ஆவணமாகிறது. மேற்படி அரசியல் கலாசார சீரழிவை நேரடியாகவே அனுபவித்த அவர் இலங்கை மக்களின் இரட்டை மரபுவழியையும் ஆங்கில மொழியாற்றலின் வீழ்ச்சியையும் விபரிக்கின்றார். ஆரம்ப காலத்தில் வெளிவந்த நூல்கள் பலவும் இடதுசாரி தாராளவாத அறிஞர்களினால் எழுதப்பட்டன. இவர்கள் கொழும்பு மற்றும் வெளிநாடுகளில் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவை விசேடமாக சிங்கள பெளத்த தேசியவாத எழுச்சியை விளங்கிக் கொண்டு அதன் கூட்டினை உடைப்பனவாக விளங்கின. தமிழ் தேசியவாதம் சிங்கள தேசியவாதத்தினோடு ஒப்பிடும் போது தற்காப்பு தன்மையையும் கூடியளவு மிதமானதாகவுமே அமைந்திருந்தது. குறிப்பாக 1983 இன அழிப்புக்குப் பின்னர் இலங்கை தமிழர் பற்றிய அனுதாபம் சர்வதேசரீதியாக அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு சிறந்த உதாரணம் 1980களின் பிற்பகுதியில் பெருமைக்குறிய அமெரிக்க சஞ்சிகையான Journal ofAsia Studies இன் ஒரு விசேட இதழ் இலங்கை இனத்துவ பிணக்கினை பற்றியதாக வெளிவந்தமையைக் குறிப்பிடலாம்.
எனினும் 1980களின் பிற்பகுதியில் பல்வேறு தமிழ் தீவிரவாத குழுக்கள் மத்தியில் ஏற்பட்ட சண்டைகளும் யுத்தங்களும் அவற்றைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமிழர்கள் மத்தியில் முதன்மை பெற்றமையும் தமிழ்த்தேசியவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றிய அனுதாப அலைகள் மறுபுறமாகத் திரும்புவதற்குக் காரணமாயின; இந்த மாற்றத்துக்கு இந்திய சமாதான படை இலங்கை வந்ததும் தொடர்ந்து அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட யுத்தமும் முக்கிய காரணமாக அமைந்தது. ஆங்கிலத்தில் எழுதும் அறிஞர்கள் மத்தியில் இவ்வாறான மாற்றம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அது
17. GribunaiGSGsg.subaout in Sri Lanka. Ethnic Fratricide and the Dismantling
of Democracy, Chicago: Chicago University Press, 1986.
13

Page 11
அமைந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புலமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து UTHR(J) என்னும் பெயரில் வெளியிட்ட பிரசுரங்களாகும். இந்த எழுத்துக்கள் 1980களின் பிற்பகுதியில் வடக்கு கிழக்கில் இந்திய படைகள், இலங்கைப்படைகள் மற்றும் தமிழ் தீவிரவாத குழுக்கள் புரிந்த படுகொலைகளை ஆவணப்படுத்தின. அதுமட்டுமில்லாது இனத்துவப் பிணக்கின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பிணக்கோடு தொடர்புபட்ட பல்வேறு தரப்பினர் பற்றிய அவர்கள் பல பகுப்பாய்வு களையும் வெளியிட்டனர். இவர்களின் முதல் பிரசுரம் 1988இல் The Broken Palmyra: The Tamil Crisis in Sri lanka - An Inside Accounts " என தனிவரைபு நூலாக வெளிவந்தது.
இந்த நூலானது வரலாற்றுரீதியான பகுப்பாய்வுகளையும் வடக்குகிழக்கில் நடக்கும் வன்முறைகள் மற்றும் தீவிரவாதம் பற்றிய விவரணங்களையும் ஒருங்கே கொண்டிருந்தது. தமிழ் இளைஞர்களின் தீவிரவாதத்துக்கு முன்னரான இனத்துவ பிணக்கு மற்றும் தமிழர் போராட்டம் பற்றிய அதன் பகுப்பாய்வுகள் சிங்கள/பெளத்த தேசியவாதம் மற்றும் தமிழ் தேசியவாதம் பற்றிய புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தின. வகுப்பு/சாதி மற்றும் பால்நிலை அம்சங்களின் அடிப்படையில் இத்தேசியவாதங்களை அவை விளக்க முயன்றன. இதனை எழுதியவர்களில் இருவரின் இடதுசாரி சார்பு இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். எனினும் இவர்களது எழுத்துக்களில் சமநிலை காணப்படவில்லை. இனத்துவ பிணக்குக்கு இட்டுச் சென்ற அரசியல் வளர்ச்சி பற்றிய பகுப்பாய்வு தொடர்ந்து வடக்கு கிழக்கில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் மற்றும் பல்வேறு தமிழ் குழுக்களினால் அவிழ்த்து விடப்பட்ட குழப்பங்கள் வன்முறை மற்றும் வெளிப்படையான காட்டுமிராண்டித்தனம் பற்றி இவர்கள் விபரிக்கின்றனர். அரச அமைப்புகள் மற்றும் தாராளவாத நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தீவிரவாத இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பநிலை பற்றிய அவர்களது எழுத்துக்"
18. Dinggir adjai Lopgub 6,60607 Gun(ojLf The Broken Palmyra. The Tamil Crisis in Sri Lanka - An Inside Account, Claremont: The Sri lanka Studies Institite, 1988.
14

கள் காரசாரமான சான்றுகளை முன் வைத்தன. நவீன இலங்கை வரலாற்றில் மிக மோசமான காலகட்டத்தின் வன்முறைகளையும் குழப்பநிலையையும் ஆவணப்படுத்தக் கூடிய தைரியத்தை இவர்கள் கொண்டிருந்த போதும் அவர்கள் எதிர்பார்க்காத விளைவும் அவர்களது எழுத்துக்களினால் தோன்றியது. அதாவது தமிழ் இளைஞர்களின் தீவிரவாத இலட்சியத்தை அவர்கள் நெறி இழந்த இளைஞர்களின் இலக்காகவும் அவர்களது செயற்பாடுகளும் வன்முறையும் சீக்கிரமே தறிகெட்டு அவர்கள் பாதுகாக்கப் போவதாகவும் விடுதலை செய்யப் போவதாகவும் கூறிய ஒவ்வொரு தமிழரது வாழ்வையும் சீரழிக்கப் போவதாகவும் ஒரு கருத்து நிலை அவர்கள் எண்ணாமலே அவர்களது எழுத்துக்களிலிருந்து வெளிவந்தது. இந்நூலுக்கான முன்னுரையை எழுதிய பிரையன் செனிவிரத்ன பின்வருமாறு குறிப்பிட்டார். Broken Palmyra சங்கடமான கதையைக் கூறுகிறது. பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் “வீரர்கள்” மற்றும் அகிம்சையான அரசியல்வாதிகள் உண்மையில் யார் என்பதைக் கூறுகிறது. அவர்கள் எவ்வாறு தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள் என்பதை விடுத்து அவர்களது உண்மையான உருவத்தை வெளிப்படுத்துகிறது." எனவே இவர்களது எழுத்துக்கள் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதத்தில் எவ்வித நோக்கமும் இல்லை எனவும் தமிழ் தீவிரவாதத்தில் எவ்வித நோக்கமும் இல்லை எனவும் தமிழ் தீவிரவாத போராட்டம் பயனற்றது எனவும் கூறுகின்றன.
பொதுவாக எல்லா தீவிரவாத குழுக்களையும் இவர்கள் விமர்சித்த போதும் விடுதலைப் புலிகளின் எழுச்சியையும் அவர்களது செயற்பாடுகளையும் அவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். "எதேச்சாதிகாரம்”, “பாசிசம்”, “சமயவெறி” போன்ற சொற்களைப் பயன்படுத்தி அவர்கள் விடுதலைப்புலிகளைச் சாடுகின்றனர். 1986களின் முற்பகுதியில் உறுதிப்பட்ட புலிகளின் தலைமைத்துவம் தற்குறியாகவும் எதேச்சாதிகார சிந்தனை கொண்டதாகவும் இருந்தது? இன்னுமொரு பந்தியில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்:
19. மேற்படி பக். V 20. மேற்படி பக் 77
15

Page 12
“ஒரு தசாப்த கால தேசிய விடுதலைப் போராட்டமும் பெருந்தொகையான உயிர்களை பலிகொடுத்து மக்களின் மன வலிமையை சிதைத்து தயவுதாட்சண்யமின்றி பெற்றுக் கொண்ட தலைமைத்துவமும் புலிகளுக்கு எதனையும் பெற்றுக் கொடுத்து விடவில்லை. அவர்கள் திசையறியாத நிலையில் நிற்கின்றனர். விடுதலையை பலிகொடுத்து அவர்கள் மேலாண்மையை பெற்றுக் கொண்டுள்ளனர். தமது தலைவர் மீது அவர்களது படையணிகள் வெறித்தன. மான அர்பணிப்பைக் கொண்டுள்ளனர். சகல குறுகிய தேசியவாதம் மற்றும் பாசிச இயக்கங்களைப் போலவே விடுதலைப்புலிகளும் சிதையும் நிலையில் உள்ளனர். *
அவர்களது எழுத்துக்களில் “விடுதலை” சார்பு காணப்பட்டபோது “விடுதலைப் போராட்டத்தை” விடுதலைப்புலிகள் பாசிசத்துடன் கைப்பற்றிக் கொண்டமைக்கு பின்னுள்ள சமூக பொருளாதார சக்திகளை அவர்கள் பகுப்பாய்வு செய்ய எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்களது எழுத்துக்களில் அவர்களது மரபுசார்ந்த தாராண்மைவாத உணர்வுகள் விஞ்சிநிற்பதை காண முடிகிறது. அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளனர்: “புதிய சத்திகள் இலட்சியங்கள் இல்லாமலிருக்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களது இலட்சியம் சமய சார்புநிலை கொண்டதாக இருந்தது. ஆனால் இவர்களுக்கும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை” எனவே Broken Palmyrah வின் புலமைசார் பகுப்பாய்வு
களில் சமநிலையைக் காணமுடியவில்லை. ஒரு புறம் அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் இரட்டை விளங்கங்களுக்கு அப்பால் செல்வதாகக் கூறுகின்றனர். மறுபுறத்தில் தமிழ்தீவிரவாதத்தின் வன்முறை மற்றும் நோக்கமின்மை பற்றி மிக எளிமையான உணர்ச்சிமயமான விளக்கத்தை முன் வைக்கின்றனர். இவர்களது இந்த விசித்திரமான நிலைப்பாடும் தமிழ் தீவிரவாதத்தைப் பற்றி மாற்றுக் கருத்துக்கள் ஆங்கிலத்தில் வெளிவராமையுமே
. மேற்படி பக். 414
16

அவர்களது எழுத்துக்கள் தமிழ் தேசியம் பற்றிய ஆங்கிலப் புலமை உலகில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. இருமுகப்போக்கும் தெளிவற்ற தன்மையும் கொண்டிருந்தபோதும் அரசியல் மற்றும் வரலாற்றை இணைத்து வெளிந்த இந்நூல் தனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொடர்பு காரணமாக ஆய்வு நூல் என்னும் வல்லமையைக் கொண்டுள்ளது.
எமது வரையறைகள் மற்றும் (எமது குழுவில் ஒருவரேனும் புலமைசார் வரலாற்றாசிரியர் அல்லர்) எமது மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் நாங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பெரபோனிசியன் யுத்தத்துக்கு தூஷிடைடஸ் என்ன செய்தாரோ அதனையே தற்போது நாம் செய்ய முயன்றுள்ளோம் *. தமக்கு விசேட நிபுணத்துவம் இல்லை என்று பணிவுடன் தெரிவித்துள்ள போதும் விவரண வலிமை, நிறுவன தொடர்பு மற்றும் அமைவிடம் காரணமாக இந்நூல் ஆய்வு நூல் என்னும் வல்லமையைக் கொண்டுள்ளது.*இந்நூலின் பிரசுரத்தின் பின்னர் South Asian Bulletinggi) “Broken Palmyra 606), 6 ITd:55 largOTif இலங்கையின் அரசியல் நிலைமை பற்றிய சிந்தனைகள்” என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பை காட்டி நிற்கிறது". இந்நூலின் முக்கியத்துவம் மற்றும் புலமைசார் அதிகாரத்தை பெருமைப்படுத்தும் இக்கட்டுரை பின்வருமாறு கூறுகிறது. “இலங்கையின் நிலைமை பற்றி அண்மைக்காலத்தில் வெளிவந்த நூல்களில் இது மிகவும் முக்கியமான நூலாகும். இதனை யாழ் பல்கலைக்கழகத்தைச்
22. மேற்படி பக். 33
23. மேற்படி பக். 33
24. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் (யாழ்ப்பாணம்) அண்மைய வெளியீடுகள் அவர்களது முன்னைய பகுப்பாய்வு அல்லது மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களது உப தலைப்புகளே அதனை நிறுவுகின்றன. பார்க்க: Fascism: The Hearts Cry of the Mediocirty". See Rajan Hoole. Sri Lanka, The Arrogance of Power: Myths, Decadence and Murder: Colombo: University Teachers for Human Rights, 2001.p.412.
25. Lutiidas G.s. 6.5Geggsstay "Thoughts on the Political Situation in Sri Lanka based on the reading of The Broken Palmyra". South Aisa Bulletin, 1989,9(2), pp. 8-19.
17

Page 13
சார்ந்த நான்கு பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். அவர்களில் ஒருவரான ரஜினி திராணகம சுட்டுக் கொல்லப்பட்டார்.*. இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டும் இக்கட்டுரை ஆசிரியர் விஜேதாச மூன்றாம் றிச் (Third Reich) சுடன் தொடர்புள்ள சமய Cutt போன்றே விடுதலைப்புலிகளும் உள்ளனர். என்ற Broken Palmyra வின் கூற்றை அழுத்திக் கூறுகிறார்.
“மூன்றாம் றிச்சின் உத்தியோகபூர்வ சமயத்தைப் போன்று இவர்களின் சமயத்தை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. அத்தகைய சமயம் மனித சிந்தனையை ஆட்கொண்டு நாகரீகம், ஒழுக்கம் தொடர்பான சகல நியமங்களையும் நிராகரிக்கச் செய்வதோடு அவர்களை வெறிபிடித்த ஒர் அழிவுச் சக்தியாக மாற்றக் கூடிய வல்லமையையும் கொண்டது”.
விடுதலைப் புலிகள் பற்றிய இத்தகைய பார்வையினைக் கொண்டிருப்பதால் மட்டும் இந்நூல் விஜேதாசவின் பாராட்டைப் பெற்றுவிடவில்லை. இந்நூலானது எளிமையான, கருத்தியல் சார்ந்த கலைச் சொற்களை கொண்டிருக்கவில்லை, அத்துடன் “சகல சிங்களவர்களும் இனவாதிகள் அல்லது கொடூர சிந்தனை உள்ளவர்கள்; தமிழர்கள் எல்லாரும் வீரர்கள்’ என்னும் பார்வைக்கு அப்பால் செல்வதால் இந்நூலானது பரந்த வாசகர் கூட்டத்தை கொண்டிருக்க முடியும்* என்பதாலும் இந்நூலை விஜேதாச பாராட்டுகிறார். ஆனால் தமிழ் இலக்கிய மற்றும் அறிவுலகத்தில் இந்நூலுக்கான எதிர்வினை மிகவும் எச்சரிக்கை" யுடன் முன்வைக்கப்படடது". இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் தமிழ் இளைஞர் தீவிரவாதம் மற்றும் விடுதலைப்புலிகளை விமர்சித்தும் ஏற்கெனவே பல தமிழ்நூல்கள் வெளிவந்துள்ளன. இவை கனடாவிலும் ஐரோப்பாவிலும் குடி யேறிய தீவிரவாதத்தை கைவிட்டுவிட்ட எதிர்க்குழுவினர் இந்நூல்களை வெளியிட்டனர். உதாரணமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் சார்பு எழுத்தாளர் ஒருவர்
26. மேற்படி பக். 8
27. மேற்படி பக். 11
28. மேற்படி பக். 8 29. இவை பல்வேறு தமிழ் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
18

இந்நூலின் ஆசிரியர்கள் இருவரின் மார்க்சிய சார்பு பற்றியும் விடுதலைப்புலிகளின் மீதே விமர்சனத்தை மையப்படுத்தியிருப்பதை பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது ஏனைய தீவிரவாத குழுக்களையும் விமர்சனத்துக்கு உட்படுத்தியிருந்தால் இந்நூல் நடுநிலையாக இருந்திருக்கக் கூடும் என அவர்கள் வாதிடுகின்றனர். அத்துடன் இவ்வாறு விடுதலைப் புலிகளை மாத்திரம் தெரிவு செய்து விமர்சனம் செய்திருப்பதால் அத்தகைய விமர்சனத்தை காத்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக் காட்டுகின்றார். *
எனினும் அவர் கூறுவதிலுள்ள முக்கிய விடயம் என்னவெனில் Broken Palmyraமுன் வைக்கும் பார்வையானது பல்வேறு தீவிரவாத குழுக்களினதும் வகுப்பு அடிப்படை அல்லது கருத்தியல்களை விளங்கிக் கொள்ள எமக்கு உதவமாட்டாது. UTHR இன் எழுத்துக்கள் தமிழ் புலமை உலகத்தில் மிகவும் கவனமாக பதிற்குறியைப் பெற்றுக் கொண்ட போதிலும் தமிழ் தீவிரவாதம் குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றி புலமைசார் விமர்சனங்களும் நூல்களும் ஆங்கிலத்தில் எழுதப்படுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தது". இவ்வாறாக இதன் பின்னர் வந்த நூல்கள் தமிழ் தேசியவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றிய அனுதாபத்திலிருந்து விலகிச் செல்வதைக் காணலாம். ருவுர்சு போலவே அதன் பின்னர் வந்த நூல்கள் தமிழர் சமூகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பரந்த அமைப்புரீதியான மாற்றம் பற்றியோ தமிழ் தீவிரவாதத்துக்குப் பின்னால் எழும்பி நிற்கும் சமூக சக்திகளைப் பற்றியோ கவனம் செலுத்துவதை விடுத்து தமிழர் போராட்டத்தின் “பாசிச” தன்மைபற்றியே கவனம்
30. சிவசேகரம் தமது விமர்சனத்துடன் இணைத்து வன்முறையும் சட்டமின்மையும் மிதமிஞ்சிய தருணத்தில் வெளிப்டையாகக் கூறும் ஆசிரியர்களின் தைரியத்தை புகழ்கிறார். பார்க்க: சிவசேகரம், “முறிந்த பனை” பனிமலர், லண்டன் 3, 1991 ஜூலை பக். 202-210.
31 UTHRஇன் நூல் புலமை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்ல அதன் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் சிங்கள பெளத்த தேசியவாதிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்திய எழுத்தாளர்களும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் மரபுரீதியாக தமிழ்நாட்டின் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள் என்பது பொதுவாக தெரிந்த விடயமே.
19

Page 14
செலுத்தவும் ஆவணப்படுத்தவும் முனைந்தன*. இவ்வாறான நிலைமைகளில் ஏற்படக் கூடிய சமூக-பொருளாதார அரசியல் மாற்றங்களை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு இரண்டு முக்கிய உதாரணங்களைத் தருகிறேன். ஒன்று ராம் மாணிக்கலிங்கம் Tigerism and other Essays என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள்". இவற்றில் தமிழ்த் தீவிரவாதத்தினால் ஏற்பட்ட நிலைமாற்றங்கள், சமூக சத்திகள் பற்றி எவ்வித பகுப்பாய்வும் இல்லை. ஆனால் தமிழ்தீவிரவாதத்தின் வன்முறை மற்றும் பாசிச இயல்பினாலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்தது. எல்லாரையும் போல மாணிக்கலிங்கமும் தமிழர் போராட்டமும் மிதமான தற்காப்பு தேசியவாதமாகத் தொடங்கி பின்னர் தயவுதாட்சண்ணியமற்ற பாசிச வடிவத்தை எடுத்ததாகவும் விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் “சாதாரண காரியத்துக்கு இடமிருக்கவில்லை” எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் இந்த நிலைமைக்கான காரணம் பற்றியோ அதற்குப் பொறுப்பான சமூக சக்திகள் பற்றியோ எதுவும் கூறவில்லை. பதிலாக “வரலாற்றி லிருந்து பெற்றுக் கொண்டு வரலாற்றையே மறுக்கும் குறிப்பாக ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வு வாழும் வரலாற்றை மறுக்கும் இனத்துவ அத்தியாவசியவாதத்தின் மீது (essentialism) குற்றம் சாட்டுகிறார். “விடுதலைப்புலிகள் ஆவேசமாக வலிந்துரைக்கும் ஐக்கியமானது. தமிழ் அத்தியாவசியத்தின் காரணமும் காரியமுமாகிவிட்டது. தொடர்ந்து அது புலிவாதம் என்னும் புதிய அரசியல் கருத்தியலாக வளர்ச்சியடைந்தது" என வாதிடும் அவர் தனது அரசியல் வெளிப்பாட்டையும் தெளிவாகவே முன் வைக்கிறார்: “தமிழர்களின் அபிலாஷைகள் அரசியல்ரீதியாகவும் கருத்தியல்
32. தமிழ் தீவிரவாதத்தின் வன்முறை அல்லது தற்கொலை மரபில் கவனம் செலுத்தும் போக்கு உள்ளதாக வாதாட முடியும். இதில் சமூக அல்லது அரசியல் காரணிகள் விலக்கப்பட்டுள்ளன.
33. Tith LDITGoofliasasiisub Tigerism and Other Essays, Colombo: Ethnic Studies
Group, 1995.
34. மாணிக்கலிங்கம் விடுதலைப் புலிகளின் வன்முறை, முஸ்லிம்கள் பற்றிய அவர்களது கொள்கைகள், அரசியல் எதிரிகளை கொலை செய்தல் முதலிய விடயங்களை ஆவணப்படுத்துகிறார். மேற்படி பக். 5.
2O

ரீதியாகவும் விடுதலைப்புலிகளிலிருந்து துணி டிக்கப்படாத வரையில் தமிழர் போராட்டம் முன்னேற்றம் காண முடியாது".
இன்னுமொரு முக்கிய உதாரணம் கத்ரி இஸ்மாயில் 6T6tLIG) fair 6TCup;55/556ir "Boys will be Boys: Gender and National Agency in Franzs Fanon and the LTTE' 676i golf -96).jpg| கட்டுரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பிரான்ற்ஸ் பெனனையும் அவர் ஒப்பிடுகிறார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒரு காலனித்துவ எதிர்ப்பாளரையும் காலனித்துவத்திற்குப் பின்னர் வாழும் ஒரு இனத்துவ-தேசியவாத இயக்கத்தின் தலைவரையும் ஒப்பிடுவதற்கான காரணத்தை அவர் முன் வைக்கவில்லை. இந்த ஒப்பீடு அவர்கள் இருவரது ஆணாதிக்க செயற்பாடுகளையும் தமது போராட்டங்களில் பெண்களை ஒதுக்கி வைத்தமையையும் விமர்சிப்பதற்கே அவரால் பயன்படுத்தப்படுகிறது. கத்ரி இஸ்மாயில் பின்வருமாறு கூறுகிறார்: பிரான்ற்ஸ் பெனன் ஓர் அர்ப்பணிப்புள்ள மானிடவாதி, பிரபாகரன் ஒரு அர்ப்பணிப்புள்ள பாசிஸ்ட். எனினும் இந்த இருவரதும் பொதுமை குறிப்பிடக் கூடியது. (இது பின் காலனித்துவப் பகுதிகளில் பெனனை ஒரு பிரச்சினைக்குரிய நபராக்குகிறது) இருவருமே ஆணாதிக்கமும் வன்முறையும் கொண்டவர்கள். இந்த குறைபாடு பெண்னை பொறுத்தமட்டில் பரிதாபமானது; பிரபாகரனை பொறுத்த மட்டில் கேலிக்கூத்தாகும்."
பெனனையும் பிரபாகரனையும் ஒரு சேர பார்க்கும் இந்த பார்வை பெனனை ஆழமாக வாசித்து அல்லது விடுதலைப் புலிகளை ஆழமாக ஆய்வு செய்து பெறப்பட்டதால் அதிலும் பிரபாகரனைப் பற்றிய கருத்துக்கள் கதைகளை சான்றுகளாகப் பாவித்துள்ளதைக் காட்டுகின்றன. உதாரணமாக பிரபாகரனின் ஆணாதிக்க சார்புக்கு காரணம் அவர் கிளின்ற் ஈஸ்ட்வூட்டின் மீது கொண்டிருந்த வியப்பு எனவும் தனது உருவாக்கத்துக்கு அவர் தனது தந்தையை மட்டுமே எடுத்துக்காட்டாகவும் கத்ரி
35. மேற்படி பக். 9 36. 35if garbudstufa) "Gender and National Agency in Franz Fanon and the
LTTE" Economic and Political Weekly, p. 1678.
21

Page 15
இஸ்மாயில் குறிப்பிடுகிறார். Broken Palmyra போலவே இங்கும் விடுதலைப்புலிகளின் அல்லது பிரபாகரனின் எழுச்சிக்கு காரணமான பரந்த அமைப்புசார்ந்த, சமூகம் சார்ந்த மாற்றங்களைப் பற்றிய விளக்கத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக தமிழ் தீவிரவாதத்தின் பாசிஸ்ட் இயல்பினை வெளிக்காட்டுவதிலேயே கூடிய கவனம் செலுத்தப்படுகிறது".
வன்முறை மற்றும் "பயங்கரவாதம்” பற்றிய ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்னும் கருத்து இந்த எழுத்துக்களில் முன்வைக்கப்பட்ட போதும் இவை முறையான ஆய்வையோ அல்லது மூலங்களை பரிசோதிப்பதையே தளமாகக் கொண்டிருக்கவில்லை. இதில் ஆபத்தான விடயம் என்னவெனில் இவை மிகவும் இலகுவாக தமது முடிவுகளை முன்வைப்பதோடு இதில் இனி ஆய்வு செய்வதற்கு அல்லது கண்டறிவதற்கு ஒன்றுமேயில்லை என்னும் பிரமையையும் தோற்றுவிக்கின்றன. இந்த எழுத்துக்களின் முக்கிய குறைபாடு இவை இலங்கை தமிழர் பற்றி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட காத்திரமான புலமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்காமையாகும்.நான் இங்கு எஸ். அரசரட்னம், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய புலமையாளர்களின் பங்களிப்புகளைக் குறிப்பிட விரும்புகின்றேன். அவர்கள் இலங்கை தமிழர் சமூகத்தின் நவீனத்துவம் சார்ந்த உருமாற்றத்தினை பொருளியல், அரசியல், வர்க்கம், சாதிமுறை போன்றே மிக உறுதியான கட்டமைப்பு சார்ந்த காரணிகளின் அடிப்படையில் விளக்க முயற்சித்தனர்". இதன் காரணமாகவே நாவலரின் தமிழ்/
37. அல்ஜீரிய போராட்டத்தில் பெண்கள் பற்றிய பெனனுடைய ஆழ்ந்த பகுப்பாய்வுக்கு பார்க்க: ஆண் மெக்கிளின்ரொக், “No Longer in a Future Heaven" இங்கு பாசிசம் என்பது கோட்பாட்டு ரீதியாக அல்லது ஒரு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சொல்லாக பயன்படுத்தப்படுகிறது என்னும் சந்தேகம் உள்ளது.
38. agitprooTLDITs Liniidas: 6 rai. 9idsgl 607 b "Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century" The Indian Economic and Social History Review, Vol. XVII, Nos 3 and”: K. Kailasapathy, The Cultural and Linguistic Conciousness of the Tamil Community in Sri Lanka’; கே. சிவத்தம்பி, யாழ்ப்பாண சமூகம், பண்பாடு, கருத்துநிலை, கொழும்பு: குமரன் அச்சகம், 2000.
22

சைவ சீர்திருத்தம்/மறுமலர்ச்சியிலிருந்து நாம் எவ்வாறு விடுதலைப்புலிகளின் தமிழ் தேசியவாதத்துக்கு மாறினோம் என்னும் கேள்விக்கு விடைதேடுவதற்கு இடைஞ்சல்படுகிறோம்.
தெற்கிலும் வெளிநாடுகளிலும் அணி மைக் காலமாக வெளிவந்துள்ள ஆய்வுகள் தமிழ் தீவிரவாதத்தின் வன்முறையில் மட்டுமே மிகையாக கவனம் செலுத்திய போதிலும் ஒரு சில ஆய்வுகள் தமிழர் சமூகத்தின் கட்டமைப்பு மாற்றங்களையும் முகிழ்த்தெழுகின்ற சமூக சக்திகளையும் விளங்கிக் கொள்ள முயற்சி எடுத்துள்ளன. இப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒன்று வீ. நித்தியானந்தனின் தமிழ் தேசியவாதத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பொருளாதார அடிப்படை குறித்த ஆய்வாகும். இது ஒரு சிறு ஆய்வாக இருந்த போதிலும் தமிழ் இளைஞர் தீவிரவாதத்துக்கு பொறுப்பான வர்க்க நலன்களையும் இனங்காண முயல்கின்றது". இன்னமொரு முக்கிய முயற்சி 1960களில் நடைபெற்ற சாதி எதிர்ப்பு எழுச்சி மற்றும் தமிழ் தேசியவாதத்துக்கிடையிலான தொடர்பினை விளங்கிக் கொள்ளும் Brian Pffanberger இன் ஆய்வாகும்?. ஆங்கிலத்தில் உள்ள இன்னுமொரு முக்கிய நூல் தமிழ் தீவிரவாதம் குறிப்பாக விடுதலைப்புலிகளைப் பற்றிய g)usTg|BTu15ógleði (Dagmar Helmean Rajannayagam) g6ðflo).16ðJL1 நூலாகும்". இராஜ நாயகத்தின் ஆய்வில் மையப் பொருளாக அமைவது தமிழ் இளைஞர் எழுச்சியை விசேடமாக வெள்ளாளர் அதிகம் நிறைந்த சமூகத்தில் “கரையார் சாதியினர்”தலைமையில் விடுதலைப் புலிகளின் எழுச்சியை அவர் விளக்க முயல்வதாகும். விடுதலைப் புலிகளின் வெற்றி வெகுஜனங்களை கீழ் மத்திய சாதி/
39. a. p53guitarisai "An Analysis of Economic Factors behind the origin and Development of Tamil Nationalism in Srilanka.” In Facets of Ethnicity in Sri Lanka, eds. Charles Abeysekera and Newton Gunasinghe, 100-17 l. Social Scientists Association, Colombo, 1987.
40. Saopair GuairGujasi, "Temple Entry Movement...." in Pfaffenberger, Bryan & Chelvadurai Manogaran, eds. The Sri Lankan Tamils. Ethnicity and Identity. Boulder, San Francisco, Oxford: Westview Press, 1994.
41. சில கட்டுரைகளுக்குப்புறம்பாக இலங்கை தமிழ் தேசியவாதம் தொடர்பாக அவர் தனிவரைவு நூல் எழுதியுள்ளார். பார்க்க டக்மார் ஹெல்மன் guitsgpsiustib The Tamil Tigers. Armed Struggle for Identity, Stuttgart: Franz Steiner Verlag, 1994.
23

Page 16
வர்க்க தலைமைத்துவத்தின் பின்னால் அணிதிரட்டியதாகும் என அவர் கூறுகிறார். எனினும் ஏனைய குழுக்களுடன் ஒப்பிடும் போது விடுதலைப் புலிகளின் மார்க்சிய அல்லது சோசலிச கருத்தியல் மிகவும் எளிமையானது. அவர் விடுதலைப் புலிகளின் சோசலிச கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார். இங்கு அவர் விடுதலைப் புலிகளின் மீது அனுதாபம் காட்டிய போதிலும் அவர்களின் குறுகிய வெறித்தனமான தேசியவாதம் பற்றியும் “பாசிச” போக்குகளை பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கிறார். இந்த தன்மைகளுக்கு விடுதலைப்புலிகளின் சிறு முதலாளித்துவ தலைமைத்துவத்தை அவர் பொறுப்பாளி: யாக்குகிறார். அவரது கருத்தின்படி விடுதலைப் புலிகளின் கவர்ச்சி சிறுமுதலாளித்துவ கீழ் மத்திய வர்க்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகளின் அடிப்படையில் தேசிய விவாதங்களுக்கு மசிந்து விடக்கூடியது". அவரது ஆய்வின் பிரதான பலவீனம் அவரால் அவரது கூற்றுக்களை நிரூபிக்க முடியாமலிப்பதாகும். அவரது ஆய்வில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது செயற்பாடுகள் பற்றிய விபரங்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் அவரது ஆய்வில் முக்கியமானது தமிழ் இளைஞர் தீவிரவாதத் தையும் விடுதலைப் புலிகளின் எழுச்சியையும் தமிழர் சமூக உருவாக்கம் மற்றும் அதன் உள்ளார்ந்த போராட்டங்கள், கால ஒட்டத்தில் அதன் மாற்றங்கள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் விளக்க முயல்வதாகும். A.
இராஜநாயகத்தின் அணுகுமுறையில் வெளிவந்த இன்னொரு ஆய்வு சுமந்ராபோஸ் அவர்களுடையதாகும். தமிழர் தீவிரவாதம் மற்றும் தேசியவாதம் பற்றிய லெனினிஸ் கோட்பாட்டு அடிப்படையைக் கொண்ட அவரது ஆய்வுநூல் தமிழர் தீவிரவாதம் மற்றும் இந்திய தலையீடு பற்றி கூறுகின்றது". தேசியவாத இயக்கங்களில் ஏற்படக்கூடிய தீவிர சமூக உருமாற்றம் பற்றிக் கூறும் போஸ் தேசியவாதம் பற்றி லெனினது எச்சரிக்கையையும்
42. மேற்படி பக். 136
43. Guitar), 5, LDig5urt States, Nationas, Sovereignty: Sri Lanka, India and the
Tamil Ealam Movement. New Delhi: Sage Publications, 1994.
24

முன்வைக்கிறார்: “அதாவது தேசியவாதத்தை நாம் தெளிவற்ற ஒழுங்கற்ற கலாசார கோளமாக தள்ளி விடாது அதனை அரசியல் மற்றும் இயக்கவியல் சார்ந்த தலையீடாக நோக்க வேண்டும். அவர் பின்வருமாறு கூறுகிறார்: ஒரு புறம் தீவிர சமூக உருமாற்றம் பற்றி கருத்தில் கொள்ளும் போது தேசிய இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்குமிடையில் சிக்கலான இயங்கியல் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மறுபுறத்தில் காத்திரமான சமூக உருமாற்றங்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன. சம்பந்தபட்டவர்கள் லெனினது அறிவுரையை கருத்தில் கொண்டால் சரியான வழியில் செல்ல முடியும்*" விடுதலைப் புலிகளின் எழுச்சியை அதன் சாதி/வர்க்க பின்னணியில் ஒரு முற்போக்கான தோற்றப்பாடாகப் பார்க்கும் போஸ் தமது “சிறுமுதலாளித்துவ சார்புநிலை” காரணமாகவே அவர்கள் தவறுகளைச் செய்தனர் என விளக்க முயல்கிறார். “விடுதலைப் புலிகள் தமிழர் சமூகத்தின் மீது செயற்கையாக திணிக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல, அது யாழ்ப்பாண சமூகத்தின் இறுக்கமான வெளிப்பாடாகும். தமிழர் சமூக உருவாக்கத்தின் தளமான தோற்றபாடாகும்*’ என போஸ் கூறுகிறார். கடுமையான துன்பங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை விளக்க முயலும் போஸ்” தேசிய, சமூக அம்சங்களுக்கிடையே உள்ள இயக்கங்களை கருத்தில் கொண்டால் மட்டுமே தமிழ் ஈழ போராட்டத்தின் மீதான வெகுஜன ஈர்ப்பை விளங்கிக் கொள்ள முடியும்" என முடிக்கிறார்.
எனினும் போஸ் மேன்மையான கோட்பாட்டுரீதியான கூற்றுக்களை முன்வைத்த போதும் தனது வாதத்தை நிலைநிறுத் தக் கூடிய ஆய்வுரீதியான தரவுகளை சமர்ப்பிக்கத் தவறிவிடுகிறார். விடுதலைப் புலிகளை விமர்சனரீதியாக நோக்குவதற்கு அவர் தவறியதால் அவரது ஆய்வு விமர்சனத்துக்குட்படுகிறது: “விடுதலைப்புலிகளின் வீரப்பிரதாபங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதே போல அவர்களின் எதிர்ப்பு முறைகளை"
44. மேற்படி பக். 33 45. மேற்படி பக். 89 46. மேற்படி பக். 92
25

Page 17
யும் அவர்கள் எதிர்க்க விரும்பும் எடுகோள்களையும் நடைமுறை" களையே உருவாக்குவதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை”. இராஜநாயகத்தினதும் போஸ்சினதும் ஆய்வுகள் சில வரையரைகளைக் கொண்டிருந்த போதும் தமிழ்தேசியவாதம் பற்றிய சமகால ஆய்வுகளிலிருந்து அவை வேறுபட்டு நிற்கின்றன. தமிழ் சமூகம் பற்றிய முன்னைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமது பகுபாய்வுகளை அவர்கள் செய்துள்ளனர். அத்துடன் தற்போதைய நிலைமைக்கு பொறுப்பான உருமாற்றங்களையும் அடையாளப்படுத்தியுள்ளனர்". இவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்று போக்குகளை வெளிக் கொண்டு வந்ததுடன் மட்டுமல்லாது தமிழ் சமூகத்தின் உள்ளக வர்க்கம் மற்றும் சாதி இயங்கியலை மையமாகக் கொண்டு தமது பகுப்பாய்வுகளைச் செய்துள்ளனர்".
இந்த ஒரு சில ஆய்வு முயற்சிகளைத் தவிர மேலாதிக்கமான தமிழ் தீவிரவாதத்தையும் தமிழர் போராட்டத்தையும் ஒரங்கட்டுவதாகவே இருக்கிற வன்முறை “பாசிசம்”, “பயங்கரவாதம்” ஆகிய்வற்றை ஆவணப்படுத்தும் அளவுக்கு இத்தகைய வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற பரந்த கட்டமைப்பு மாற்றங்கள் பற்றியும் சமூக சக்திகள் பற்றியும் அக்கறை காட்டப்படவில்லை. இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் கட்டமைப்பு மாற்றங்கள், தமிழ் தீவிரவாதத்தின் மாறுகின்ற வர்க்க/சாதி அடிப்படை மற்றும் அதன் தலைமைத்" துவம் பற்றி கவனம் செலுத்தலை தவிர்க்கும் போக்காகும். இந்த தவிர்ப்புக்கு காரணமான நலன்களும் இங்கு முக்கியமானவை. இவ்வாறு தவிர்ப்பவர்கள் உயர்தர கலாசார கோட்பாடுகளின்
47. பார்க்க: ஸ்ரீவன் கெம்பரின் ஜெ. வில்சன் பற்றிய மீள்பார்வை SUV Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism and Sumantra Bose, State, Nations and Soverignity, India and the Tamil Ealam Movement in Journal of Asian Studies, 1994, pp.608-10
48. இங்கு நாராயண் சுவாமி போன்றோரின் உணர்ச்சிமயமான எழுத்துக்களை
விளக்கியுள்ளேன்.
49. உதாரணத்துக்கு விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய நாராயணன் சுவாமியின் பயனுள்ள ஆனால் உணர்ச்சிமயமான எழுத்துக்களைப் பார்க்கவும்
26

பாதுகாவலர்கள் மட்டுமல்லர். தமிழ் தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களும் கூடத்தான். இந்த பின்னணியில் தமிழ் தேசியவாதத்தைப் பற்றிய விடுதலையாளர்களின் (Liberationist) கருத்து மற்றும் இவ்விடயத்தில் புலமை பெற்றோரின் கருத்து ஆகிய இரண்டின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது நன்மை பயக்கும். இந்த வகையில் தமிழ் தேசியவாதம், தீவிரவாதம் இன்றைய தேக்கநிலை பற்றி அண்மையில் தமிழில் வெளிவந்த விடுதலையாளர் அணுகுமுறையிலான “ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கம்: சமூக சக்திகள் பற்றிய விவாதத்திற்கான முன்னோடி குறிப்புகள்’ (ஜன.2001) என்னும் கட்டுரை". இதில் தமிழில் வெளிவரும் ஆய்வு சஞ்சிகையான “உயிர்ப்பில்’ வெளிவந்தது. இதன் பகுப்பாய்வு பல இடங்களில் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு சில இடங்களில் தெளிவான தேசியவாத தன்மை கொண்டிருப்பினும் (விடுதலை வேட்கையை தாமே பறைசாற்றிக் கொண்ட போதிலும்) இவ்விடயம் தொடர்பான தற்போதைய புலமையுடனான வேறுபாட்டையும் ஒப்பீட்டையும் குறிப்பிடத்தக்க விதமாக காட்டி நிற்கிறது.
இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடக் கூடிய அம்சம் இலங்கையில் காலனித்துவ தாக்கம் குறித்த பெனோனியன்/ கப்ரேலியன் (Femonian/Cabralian) சார்பு விமர்சனமாகும். இதில் இன்னும் முக்கியமானது புதிய வர்க்கத்தினரை உருவாக்கி கட்டமைத்தமையாகும். ஆசிரியர்களின் கருத்துப்படி இன்றைய இனத்துவ நெருக்கடிக்கு இதுவே காரணமாகும். இவ்வாறாக தற்போதைய பிணக்கின் அடித்தளம் டச்சு மற்றும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தேடப்படுகிறது. அவர்களின் கருத்துப்படி இக்காலகட்டத்தில் மரபுசார்ந்த வர்த்தகம், குடியிருப்பு ஆகியவை வேகமாக மாற்றமடைந்தன. அத்துடன் இக்காலத்தில் தான் தமது மரபுசார்ந்த தாயகத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாத ஒட்டுண்ணியான சிறிய பரவிய தரகு முதலாளித்துவ தமிழ் உயர்குழுமத்தினர் உருவாகினர். இவர்கள் தமது மக்களை அரசியல் மயப்படுத்துவதையோ
50. உயிர்ப்பு 7 ஜன. 2001. (இந்த இதழ் 7) 5 வருட இடைவெளிக்குப் பின்னர்
வருவதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
27

Page 18
வலுவூட்டலையோ தவிர்த்து தமது குறுகிய சுயநலன்களை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள உயர் வர்க்கத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்". இந்த தரகு முதலாளித்துவ தமிழ் உயர் குழுமத்தினரின் சொல்லும் செயலும் முதலில் பிரித்தானியர் சார்பும் அடுத்து இலங்கை சார்பும் கடைசியாகத்தான் தமிழர் சார்பும் கொண்டிருந்தன.
இந்த விடுதலை சார்பு கருத்தோட்டத்தின் இரண்டாவது முக்கிய அம்சம் தமிழ் தீவிரவாதத்தை நோக்கிய அதன் நகர்வினை தமிழ் சமூகத்தினை முற்போக்கான முறையில் தீவிரப்படுத்துதல் மற்றும் தமிழ் அடிநிலை வகுப்பினரை அரசியல்மயப்படுத்தி வலுவூட்டியதன் விளைவு எனக் கூறுவதாகும். இவ்வாறாக தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் இளைஞர் இயக்கங்களின் வளர்ச்சியானது தமிழ் சமூகத்தினை முற்போக்" கான முறையில் தீவிரப்படுத்தலின் பகுதியாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வளர்ச்சியினூடே தமிழரின் அரசியல் வலு கொழும்" பிலிருந்து வடக்குகிழக்குப் பகுதிகளுக்கு படிப்படியாக நகர்கிறது. அத்துடன் தமிழரின் அரசியல் தலைமைத்துவத்தின் இயல்பு மாறுவதையும் இது காட்டி நிற்கின்றது. பிரித்தானிய யாப்பு வாதத்தையும் சட்டகலாசாரத்தையும் பிரதிபலிக்கும் தமிழ்வெள்ளாள ஆங்கிலமயப்படுத்தப்பட்ட தலைமைத்துவம் சுயமொழியில் கல்வி கற்ற வடக்கு கிழக்கு கலாசாரத்தில் ஆழ்ந்துள்ள கீழ் மத்திய வகுப்பினரின் கைகளுக்கு மாறுவதைக் காண முடிகிறது. அணுகுமுறையில் தீவிர உறுதிப்பாட்டைக் காட்டும் ஆபத்து இருந்த போதிலும் தமிழ் தலைமைத்துவத்தின் இயல்பு தீவிரமடைவதை இந்த வாதம் கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது நகரம் சார்ந்த தரகு முதலாளித்துவ தமிழ் உயர்குழு தலைமைத்துவம் அரசியல்மயப்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்தின் துன்பதுயரங்களையும் தேவைகளையும் கருத்தில் கொண்ட ஒரு தலைமைத்துவமாக மாறுகின்றது ?.
51. மேற்படி பக். 19-21 52. மேற்படி பக். 42-46
28

இந்த செல்நெறியின் மூன்றாவது மிக முக்கிய அம்சம் பல்வேறு தமிழ் இயக்கங்களைப் பற்றிய ஆழ்ந்த பகுப்பாய்வும் விமர்சனமுமாகும். இது இவ்விடயம் பற்றி ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய புலமையை விட மிக விரிந்ததாகும். இது பிரதான தமிழ் இயக்கங்களின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டிடுவதோடு நில்லாமல் விடுதலைப்புலிகள் பற்றிய ஆழமான மனதைத் தொடுகின்ற ஆபத்தான விமர்சனத்தையும் முன்வைக்கிறது. இது Broken Palmyra ஐ விடவும் தீவிரமானது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். என்.எல்.எவ.ரி, தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை பொன்ற இடது சார்பு கொண்ட விடுதலை இயக்கங்களின் தோல்விக்கான சில காரணங்களைக் காட்டுவதுடன் நில்லாமல் விடுதலைப் புலிகள் பற்றிய ஆழமான ஊடறுத்துப் பார்க்கக் கூடிய விமர்சனத்தையும் முன்வைக்கிறது. இடதுசாரி சார்பு இயக்கங்கள் பிரிவினைவாதத்துக்கு அப்பாலான இலக்கு" களைக் கொண்டிருந்தன. இனத்துவத்துக்கு அப்பால் கீழ் வர்க்கங்கள்/சாதிகளை வலுப்படுத்தல், பெண்களை வலுவூட்டுதல் போன்றவற்றை அவை முன்னிலைப்படுத்தின. விடுதலைப்புலிகளின் வெற்றிக்குக் காரணம் அவர்கள் காத்திரமான, தயவுதாட்சணியமற்ற, குறுகிய நோக்கம் கொண்ட யுத்த பொறிமுறையைக் கட்டி எழுப்பியது தான் எனக் கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளின் எதேச்சாதிகாரமும் ஜனநாயக விரோத" முமே அவர்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குத் தடையாக அமைந்துள்ளன. வேளாளர்-உயர்குழு தலைமைத்துவத்தை விடுதலைப்புலிகள் உடைத்தெறிந்த போதிலும் இந்த வர்க்க/ சாதிநிலை கருத்தியலிலிருந்தோ அல்லது நாவலர் காலத்திலிருந்தே தொடரும் ஆவேசமான தந்தை வழிமரபிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. நடைமுறைக் காரணங்களுக்காக சாதி அமைப்பை தமது ஆளணி மத்தியில் கைவிட்ட போதிலும் தமிழ் மக்கள் இதனை கைவிடும் வகையில் தூண்டலோ பிரச்சாரமோ முறையாக முன்னெடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் பெண்களை தமது படையணிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. பின்னர் இக்கொள்கையை அவர்கள் மாற்றிக் கொண்டனர். இன்று அவர்களது படையணியின் அரைவாசி பெண்களாவர். எனினும்
29

Page 19
அவர்களது தமது படையணியில் அல்லது மக்கள் மத்தியில் பாலினவாதம் (Sexism), குறுகிய தன்னாதிக்க வாதம் (Chauvinism) ஆகியவற்றை நீக்குவதற்கு முறையான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. அதேபோல விடுதலைப் புலிகளின் கணி மூடித்தனமான தலைமைத்துவ பின்பற்றல் மற்றும் தமிழர்களின் கடந்த காலத்தை கண்மூடித்தனமாக பெருமைப்படுத்துதல் ஆகியவையும் விமர்சிக்கப்பட்டுள்ளன. எனவே விடுதலைப்புலிகள் தமிழரின் சமூக கட்டமைப்பை மாற்றி: யமைப்பதற்குப் பதிலாக அடக்குமுறை சார்ந்த சமூக-கலாசார நியமங்களையும் விழுமியங்களையும் அவற்றை மேம்படுத்திய வர்க்க/சாதி சக்திகளையும் உறுதிப்படுத்தக் கூடிய வண்ணம் தம்மை உச்சத்தில் தக்க வைத்துக் கொண்டனர். எனினும் ஆய்வாளர் விடுதலைப் புலிகள் பற்றிய தமது கடுமையான விமர்சனத்தை சமநிலைப்படுத்தவும் முயல்கின்றனர். சமூக இலக்குகள், விடுதலைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் புரட்சிகரமான போக்கினை வெளிக்காட்டவில்லை எனினும் காலப்போக்கில் சிலவேளை நடைமுறைப் பிரச்சினைகளால் தனது படையணியில் அடக்கப்பட்ட சாதிக் குழுக்களையும் பெண்களையும் இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் உண்மையான புரட்சிகரமான சமூக உருமாற்றத்துக்கான ஒரு கருவியாக அவர்கள் உருமாற்றம் பெற்றுள்ளனர்". தமது விமர்சனத்தை சமநிலைப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் இம்முயற்சி அவர்களது விமர்சனத்தை நியாயப்படுத்திக் காட்டுகிறது. ஆனால் இதுவே அதனை மிகவும் ஆபத்தானதாகவும் அழிவு சார்ந்ததாகவும் காட்டுகிறது.
ஆங்கிலத்தில் இலங்கைத் தமிழ் தேசியவாதம் பற்றிய சார்பிலக்கியங்கள் பற்றிய இந்த தேடலானது இந்த புலத்தில் சில சாதனை முயற்சிகள் இருந்த போதிலும் தமிழ்தேசியவாதத்தின் தீவிரவாத கட்டம் பற்றிய ஆய்வுகளின் தேவை அதிகமாக இருப்பதை காட்டுகின்றது. ஆரம்பகால தமிழ் மறுமலர்ச்சி தேசியவாதம் குறிப்பாக நாவலர் காலம் பற்றிய ஆய்வுகள் நிறையவே உள்ளன. எனினும் நாவலர் காலத்தின் தமிழ்/சைவம்
53. மேற்படி பக். 76-84
3O

பற்றிய கூடிய குவிமையமானது தேசியவாதம் பற்றிய ஒப்பீட்டு ஆய்வையும் இலங்கையில் தமிழர் உயர்குழும உருவாக்கத்தின் “தரகு” முதலாளித்துவ தன்மைகளை தேடியறிதலையும் பின் தள்ளியுள்ளன. தமிழ், சைவ மறுமலர்ச்சியின் மீதான இந்த குறுகிய குவிமையமானது தமிழ் புரட்டஸ்தாந்து சைவத்தின் ஒன்றிணைந்த தொடர்புநிலை பற்றிய தேடலை தடை செய்து விடுகிறது. இது தமிழ் தேசியவாதத்தின் அடுத்த கட்டத்துக்கும் பொருத்தமானது. இக் காலகட்டம் அரசியல் வரலாற்று நோக்கில் ஆய்வு செய்யப்படுகிறதே தவிர தமிழ் அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தின் சமூக வரலாற்றைப் பற்றியோ அல்லது சமூக தளம் பற்றியோ எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. இப்பின்னணியில் குமாரி ஜயவர்தனவின் ஆய்வு அறிவு சார்ந்ததாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளது". அரசின் பாரபட்சமான கொள்கைக்கு எதிரான தற்காப்பு, தமிழ் தேசியவாதம் பற்றிய விபரிப்பு இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும். இதில் ஏனைய எதிர்ப்புகளும் குறிப்பாக தமிழ் காங்கி ரஸ், தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டமைப்பு ஆகியவற்றின் அரசியலுக்கு எதிரான தமிழ் இடதுசாரிகளின் குரல்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்".
தமிழ் தேசியவாதத்தின் தீவிரவாத கட்டம் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலத்தில் குறைவாகவே உள்ளன. Broken Palmyra வுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தமிழ்தேசியவாதம் மற்றும் தீவிரவாதத்தை “ஒதுக்கி வைப்பதாக” அமைந்தன. அவை தமிழ் தீவிரவாதத்தின் வன்முறை மற்றும் “பாசிசம்” மீது வழங்கிய முக்கியத்துவத்தை அரசியல்-பொருளாதாரம் அல்லது வர்க்க நிலைகளுக்கு வழங்கவில்லை. இதன் காரணமாக தீவிரவாதத்தை தொடர்வதற்கும் பேணுவதற்கும் காரணமாக அமைந்துள்ள பரந்த அரசியல்/பொருளாதார/இராணுவ உருமாற்றங்கள் மற்றும் புதிய
54. Kumari Jayawardena, No bodies to Somebodies. The rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, Colombo: Social Scientists Association and Sajiva Books, 2003.
55. விசேடமாக பார்க்க: இமையவரம்பன், தந்தையும் மைந்தரும்: தமிழரசுக்
கட்சி அரசியலின் விமர்சனம், கொழும்பு: புதிய பூமி வெளியீடு, 2000
31

Page 20
பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமூக சக்திகள் பற்றி கவனத்தில் கொள்ளாத போக்கினை ஏற்படுத்தியுள்ளன".
சமூக, பொருளாதார வரலாற்றை கருத்தில் கொள்ளாத ஆனால் வன்முறை மற்றும் "பயங்கரவாதத்தில் கவனம் செலுத்தும் இந்த புலமைசார் பார்வை ஆங்கில-அமெரிக்க புலமைசார் உலகில் கோட்பாடு சார்ந்த உருமாற்றங்களின் செல்வாக்குக்கு உட்படவும் செய்கிறது. இதனால் தேசிய போராட்டங்களை விளக்குவதில் நவீன காலனித்துவ நடைமுறைகள் வர்க்க/சாதிப் போராட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாத புலமை உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளை ஒரு பாசிச அல்லது நல பாசிச இயக்கம் என கண்டிக்கும் Broken Palmyra வின் குற்றச்சாட்டை நாம் பாரதூரமாக எடுத்துக் கொள்வோமெனில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னாலுள்ள வர்க்க, சாதி அடிப்படை வர்க்க சக்திகள் பற்றி ஆராய வேண்டும் அத்துடன் கூடிய விடுதலை ஆர்வமும் மக்களை வலுவூட்டும் வல்லமையும் கொண்டிருந்த ஏனைய இயக்கங்களை முறியடித்து விடுதலைப் புலிகள் எவ்வாறு மேலெழும்பினர் என்பதையும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த பின்னணியில் புலமையாளர்கள் விடுதலைப் போராட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இவை யாவும் முரணற்ற அரசியல் வரலாறுகள் என ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் தமிழர் போராட்டம் பற்றியும் அதனுடைய தற்போதைய நிலை பற்றியும் ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய ஆவணங்களை விடச் சிறந்தவை" யாகும.
56. Winslow, Deborah, Woost, Michael.DigiGunfair gigorgoLDistra 65/regg
Economy, Culture and Civil War in Sri Lanka. Bloomington and Indianapolis: Indiana University Press, 2004.
32

உசாத்துணைகள்
Arasaratnam, Sinnapah. Sri Lanka. After Independence:
Nationalism, Communalism & Nation-Building. Madras: U. Madras, 1986,
LLL 0LLLL LLL LLLLLL LL LLL LL LL LLLL LLLL LL LLL LLL LLL LL LLL LLLLL L S “Social History ofa Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 1 th Century” The Indian Economic and Social History Review, Vol. XVIII, Nos 3 and 4.
0LLLLLSLSLLLLCLLC LL LLLLL LLLL LL LLCLCLS LLLLL LL LLLLL LL L LLLLL LLLLLS "Historical Foundations ofthe Economy of the Tamils of North Sri Lanka” Chelvanayagam Memorial Lecture: Jaffna: Thanthai Chelva. Date?
see a t t e o e a s so e s a e o os e a e o e e s 8 ..... "Nationalism in Sri Lanka and the Tamils” in Michael Roberts ed. Sri Lanka. Collective Identities Revisited, 2. Colombo: Marga Institute.
Balakrishnan, Janaki. Communist Karthigesan. Colombo: Janaki
Balakrishnan, 2002.
Balasingham, Adele Ann. The Will To Freedom: An inside view of Tamil resistance. Mitcham: Fairmax Publishing Ltd., 2001.
Balasingham, Anton, Viduthalai (Liberation). London: Fairmax
Publishing Ltd, 2003.
a « « s s e s e s s e e e e « » e o s s s e The Politics of Duplicity: Re- Visiting the
Jaffna Talks. Surrey: Fairmax Publishing, 2000.
Bandaranayake, Seneka. Ed. Ethnicity and Social Change in Sri
Lanka. Colombo: Social Scientists Association, 1979.

Page 21
Banks, Michael. "Caste in Jaffna." In Aspects of Caste in South India, Ceylon and North-west Pakistan, ed. E. R. Leach, Cambridge: Cambridge University Press, 1971. pp. 6177.
Bastin, Rohan. "The Authentic Inner Life: Complicity and Resistance in the Tamil Hindu Revival” In Sri Lanka: Collective Identities Revisited, Vol.1, ed. Michael Roberts, Colombo: Marga Instititute, 1997. 3 85-439.
Bose, Sumantra. States, Nations, Sovereignty: Sri Lanka, India and the Tamil Eelam Movement. Sage Publications, 1994.
Cheran, R. “Cultural Politics of Tamil Nationalism in Sri
Lanka” South Asia Bulletin, 7(1) Summer 1992.
0cL0LL Y LLLLLL LL LLLLLLY Y Y LLLL LL Y LL LLL LLL LLL Y L0L LLLLLLL LLLLLLLLL LLL LLL GLLL LLLL Changing Formations: Nationalism and National Liberation in Sri Lanka and the Diaspora, Unpublished PhD. Thesis, York University, Toronto, 2001.
C.R.D. (Committee for Rational Development) eds. Sri Lanka. The Ethnic Conflict: Myths, Realities and Perspectives. New Delhi: Navrang, 1984.
Daniel, Valentine E. Charred Lullabies: Chapters in an Anthropography of Violence Princeton: Princeton University Press, 1996.
Fuglerud, Øivind. Life on the outside : the Tamil diaspora and long distance nationalism. London; Sterling, Va. : Pluto Press, 1999.
Gamage, Sin & I. B. Watson, eds. Conflict and Community in
Contemporary Sri Lanka: Pearl ofthe East or Island of Tears' New Delhi: Sage Publications, 1999.
Gamage, Sin. "Radicalisation of the Tamil middle class and ethnic violence in Sri Lanka.” Journal of Contemporary Asia (Stockholm) 24, no.2 (1994): 16 1-178.

S SS SS LL LLL LLLL LL LLL LLL LLL LL LS LS LS S LS LSLL LLLL LLLL L0 L L0S LS L0L LLLLL LL LSSL LSS LS LS LS LS LLLLL LL LLL “Post-independent political conflicts in Sri Lanka: elites, ethnicity, and class contradictions.” South Asia: Journal of South Asian Studies (Nedlands, Western Australia) 20 (1997): 359-395.
Gunasingam, Murugar. Sri Lankan Tamil Nationalism: A Study
of its Origins. Sydney: MV Publications, 1999.
Hellmann-Rajanayagam, Dagmar.“ Arumuga Navalar: Religious Reformer or National Leader of Eelam?” The Indian Economic and Social History Review, 26, 1989, pp. 325夕7
L0S 0S 0S 0S LL LLL LLLL LL 0 LLL L0SLL 0S S 0S SLS LLL LLLS LL 0LL LSLS LL 0L LLLL 0 0SSS LLS SS 0LL LS LL LLL LLL LLL LLL LL "The Tamil Militants - Before the Accord and After.” Pacific Affairs 61, no.4 (1988-1989): 603-619.
.................................. "The Groups and the Rise of Militant Secessionism” in Pfaffenberger, Bryan & Chelvadurai Manogaran, eds. The Sri Lankan Tamils: Ethnicity and Identity. Boulder, San Francisco, Oxford: Westview Press, 1994.
LLLL LL LSLLL0L LLLLL S LL L0L LLSLS L LS L LS SSL L0 LLL 0S L0L LL LLL LLL LLLL LL LL SS LS LS LS LLLLL LL LLL LLLL LL LLL LL The Tamil Tigers: Armed Strugglefor
Identity. Stuttgart: Franz Steiner Verlag, 1994.
Hoole, Rajan & Daya Somasundaram. The Broken Palmyra: The Tamil Crisis in Sri Lanka: An Inside Account. Claremont: The Sri Lanka Studies Institute, 1990. (first published 1987)
Hoole, Rajan. Sri Lanka, The Arrogance ofPover: Myths, Decadence and Murder. Colombo: University Teachers for Human Rights, 2001.
Hoole, S. Ratnajeevan. The Exile Returned: A Self-Portrait ofthe Tamil Velahlahs of Jaffna, Sri Lanka. Etul Kotte: Bodhimoha Print House, 1997.

Page 22
Imayavaramban. On National Relations in Sri Lanka. Madras:
Chennai Books, 1988.
Imayavaramban, Tham thaiyum Maintbarum: Thamilara.574 Kathchi Araciyalin Vimarsanam. (Father and Children: A critique ofthe Politics ofthe Federal Pary) Colombo: Puthiya Bhoomi Publications, 2000.
Jayawardena, Kumari. "The national question and the left movement in Sri Lanka.” South AsiaBulletin (Albany, NY) 7, no.1-2 (1987):1 1-22
LLL LLLLL Y LLLL LL Y LLL Y 0S Y L LLLL LL LLL LLL LLL LLL L0L LSL 0L 0L 0LLSL LLLLLL 0L L0 0L 00 LLLLL LL LLL "Class/ethnic consciousness.” Seminar
(New Delhi) 337 (1987): 19-25.
LL LLLL LL LSLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL0 LLL LLLL YLLLLL LL LLL LLL LLLL LSL 0 LLLLL LLL LLLL Y L LLL LLLL LL 0 0L L0L LL Nobodies to Somebodies: The rise ofthe Colonial Bourgeoise in Sri Lanka, Colombo: Social Scientists Association and Sanjiva Books, 2003.
Jeganathan, Pradeep and Qadri Ismail, eds. Un making the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka. Colombo: Social Scientists' Association, 1995.
, Jothylingam, S.A. Ilankail Araciyal Katchimuramai (Political Party System in Sri Lanka). Colombo: Kumaran Press Pvt Ltd, 2001.
Kailasapathy, K. "The Cultural and Linguistic Conciousness of the Tamil Community in Sri Lanka” in Ethnicity and Social Change in Sri Lanka, Colombo: Social Scientist Asssociation, 1979, pp. 107-20
Karalasingham, V. The Way Outfor the Tamil Speaking People.
Colombo: Wesley Press, 1978.
Kearney, Robert N. "Ethnic Conflict and the Tamil Separatist Movement in Sri Lanka.” Asian Survey 25, no. 9 (1985): 898-9 17.

LLLL LL LLLLGLLLLL LLL LL G LL L0L LL LLL LLL LLGLL LLL LLLLLLLLLLLLLL LLL LGLL LLL LL Communalism and Language offolitics
in Ceylon. Durham NC: Duke, 1967,
Krishna, Sankaran. Postcolonial Insecurities, India, Sri Lanka and the Question of Nationhood, Minneapolis: University of Minnesota Press, 1999,
Manogaran, C. & B. Pfaffenberger, eds, The Sri Lankan Tamils: Ethnicity and Identity, Westview Press: Colorado, 1994,
Matthews, Bruce, "Radical Conflict and the Rationalization of Violence in Sri Lanka." Pac-McAffairs 59, no. 1 (1986): 28-44.
Navaratnam, V. The Fall and Rise ofthe Tamil Nation, Madras:
Kaanthalakam, 1991.
Nesiah, Devanesan. "The claim to self-determination: a Sri Lankan Tamil perspective." Contemporary South Asia 10, no.1 (2001): 55.71.
Nissan, Elizabeth & R.L. Stirrat. "The Generation of Communal Identities." In Sri Lanka. History and the Roots ofConflict, ed. Jonathan Spencer, London and New York; Routledge, 1990,
Nithiyanandan, V. "An Analysis of Economic Factors behind the origin and Development of Tamil Nationalism in Sri Lanka." In Facets ofthnicity in Sri Lanka, eds. Charles Abeysekera and Newton Gunasinghe, Social Scientists Association, Colombo, 1987. 100-171,
Pfaffenberger, Bryan. Caste in Tamil Culture: The Religious Foundations of Sudra Domination in Tamil Sri Lanka, New York: Syracuse University, 1982,
Pfaffenberger, Bryan & Chelvadurai Manogaran, eds. The Sri Lankan Tamils: Ethnicity and Identity, Boulder, San Francisco, Oxford: Westview Press, 1994.

Page 23
Ponnambalam, Satchi. Sri Lanka: National Conflict and the
Tamil Liberation Struggle. London: Zed Books, 1983.
Pushparajah, S. Eela Porattathil Enathu Saatchiyam, (My testament in the Struggle for Eelam) Chennai: Adaiyalam, 2003.
Roberts, Michael.” Filial Devotion in Tamil Culture and the Tiger Cult of Martyrdom.” Contributions to Indian Sociology 30, no.2 (1996): 245-272.
L L LS S LSS SS LSS LSS LSL LSL SLSS S LS0 L LL LLL LLLL LL0 LLL LLL 00 0 00 S LL S LL LL LL LS L0S 0S 0 S0 LSS "Narrating Tamil Nationalism: Subjectivities and Issues " South Asia: Journal of South Asian Studies, Vol. XXVII, no. 1, April 2004, pp. 87-108
Sanmugathasan, N. "Sri Lanka: The Story of the Holocaust.” Race & Class: A Journal for Black and Third World Liberation (London) 26, no. 1 (1984):63-82.
- Political Memoirs ofan Unrepentant
Communist. Colombo: N. Sanmugathasan, 1989.
Schalk, Peter. "Historisation of the Martial Ideology of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).” South Asia 20, no.2 (1997): 35-72.
Seneviratne, H.L. ed. Identity, Conciousness and the Past.
Delhi: Oxford University Press, 1997.
Senthivel, S.K. Vadapulathu Pothuvudamai Iyakkamum Tholar Karthigesanum. (Socialist Movement in the North and Comrade Karthigesu) Colombo: Putihiya Poomi Publications, 2003.
LL 0SLL LLLLSLLLL LLL LLSL L L L L L L L L Y LL 00L LL L0LL0 LLLLLS L L LS L SL LSLL SL L ilankai Idathusari Iyakkathin Aimbathu Andugal (50 Years of Sri Lanka's Left History). Madras: Surya Acchagam, 1995.
Sitralega, Maunaguru. "Gendering Tamil Nationalism: The Construction of "Women” in Projects of Protest and Control” in Jeganathan, Pradeep and Qadri Ismail, eds.

Unmaking the Nation: The Politics oflaentity and History in Modern Sri Lanka. Colombo: Social Scientists' Association, 1995.
Sivanandan, A., Kumari Jayawardena & N. Sanmugathasan. “Sri Lanka: Racism and the Authoritarian State” Race and Class 26, no. 1 (1 984): 198. v,
Sivathamby, Karthigesu. K. Sivathamby, Hindu Reaction to Christian Proselytization and Westernization” Social Science Review, Vol. 1, No. 1, 1979.
LS L SLSL LLLL SS LLL LL LL SLS LL LLL LLL LLLL LL 0L LL LLL LLL 0L LL LLL LLL LLLL LL LS LL LS LS LSS LLL LLL LLS LL LLL LL Yalpanam: Samugam, Panpatitu, Karuthunilai (Jaffna: Society, Culture and Ideology), Colombo: Kumaran Press Pvt Ltd. 2001.
LSLL LLLL LL LL LLL LSL LSL SSL LS SL LSL LSL LSL LSL LSL LSL LSL 00 LL0 LLLLL 00 LLSL L LLSLL LSLL LSLL LLLL LLL SL LSL LSL LSL LSL LSL LSL Sri Lankan Tamil Society and Politics.
South Asia Books, 1995.
Spencer, Jonathan, ed. Sri Lanka: history and the roots ofconflict.
London; New York: Routledge, 1990.
Tambiah, S.J. Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy. Chicago and London: The University of Chicago Press, 1986.
SLS LS 0S LSSS LS L LS L LS SLS LS LLL LLLL LL LLL LLS LLL LL LLL LLL LLLL LL 0SS LLL LS SLS LS LSS SLSS SLS LS 0S LLS LS LLL Levelling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia. Berkeley: University of California Press, 1996.
Uyirppu, “ Eelathamilfrakalin Viduthalai Iyakkam: Samuga Sakthikal Patriya Viwathathirkana Munnodi Kurripugal”, (The Liberation Struggle ofthe Eelam Tamils: First and Debatable Notes about its Social Basis). 7. Jan. 2001.
Vaitheespara, Ravindiran, "Caste, Hybridity and the Construction of Cultural Identity in Colonial South India 1850-1950". PhD. Dissertation. University of Toronto, 1999.

Page 24
LL LLL LLL LLL LLLL SS SL SL SL SS LSL S SL L SL L L L L L SLLL LLLL LL 0 0L SLS SL S0L SLLL SLL 0L SLL LL 0L SL "Discourses of Empowerment: Missionary Orientalism in the Development of Dravidian Nationalism” in Timothy Brook and Andre Schmid ed., Nation Work: Asian Elites and National Identities, Michigan: University of Michigan Press, 1999, pp. 5182.
LL LLLL LL LLLLL S LSL S 0SL 0SSL LSL S SL L S LSL LS LSSLL LS S LLLL 0 L 0 LL LL LLL SL L SLL LS S L S L S SL SL SL SL LLLL “Tamils” in Paul R. Magocsi, ed. Encyclopaedia of Canada's Peoples, Toronto: University of Toronto Press, 1999, pp. 1247-54.
LL LLL LLL LLLL LL 0S LL LSL LSL LSL S SSSS LSS LSLS 0SS SL 0 LL LL LLL LLLL LL LLL LLL 00 LL LLLLL LLLLS 00 LL L LS LSS S S “Poverty of South Asian Vernacular Modernity's?” Economic and Political Weekly, Vol. XXXVIII, No. 32, August 9- 1 5, 2003. pop, 3366-69.
Wilson, A. Jeyaratnam. S. J. V Chelvanayagam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947-1977: A Political Biography. London: Hurst and Company, 1994.
SLLL LLLL LL 0L LLLLL LLL LLS LL LLLL LSL LSL LSL LSL LSSL 0SL LLL 0L LL LLL LLL LLLL LSL LLL LLL LLLL LL 0 LLLLL LL LL0L LLL LSL Sri Lankan Tamil Nationalism: Its origin and development in the Nineteenth and Twentieth Centuries. London: Hurst and Company, 2000.
Jeyadeva Uyangoda, "Review Essay: Reinterpreting Tamil and Sinhala Nationalisms”, South Asia Bulletin, Vol. 7, 1987, pp. 39-46
Winslow, Deborah. And Woost, Michael D. Economy, Culture and Civil War in Sri Lanka, Bloomington and Indianapolis: Indiana University Press, 2004.


Page 25
FTi Ku Turri Press 3ğı 1 - 1/3. Durrı 5+ı Tl: 242 13E8, e-mit

3d by
Private Limited
"e, Colomba 12
Iil: k Luri Tıbhisling, Ik