கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்

Page 1

、。
ரும்பசிட்டி ہے۔ :கனகரத்தினம்

Page 2

அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்
தொடர் வெளியீடு 1
آitلد ها و ..، 2 al diالtf
தமிழ்த்துறை ஆசிரியர்
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்
இந் நூலில் இடம்பெற்ற தமிழர் வாழும் நாடுகள்
馨 ரினிட்டாட், டொபேக்கோ
* மாட்னிக்
* தென்னபிரிக்கா
பீஜி
உலகத்தமிழர் பாதுகாப்புக் கழகம அமைப்போம். உலகத்தமிழர்களைக் காப்போம்

Page 3
முதற் பதிப்பு: 14 ஜனவரி, 1973
aôfabv Gu5u ar: 1—60
ஆசிரியரின் பிற நூல்கள்:
। * * * * * * "25,00000 மக்கள் தலைவர்” "தமிழரசுத் தந்தை” "அமரர் வன்னியசிங்கம் நினைவுமலர்”
காணிக்கை
உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்ருக இணைய வேண்டும்; ஒரு அமைப்பின் கீழ் வலி வும் சிறப்பும் பெற்றுத் தலை நிமிரவேண்டுமென்ற குறிக்கோளை முன் வைத்துப் பணியாற்றும் அனைவர்க்கும்

மலர்க்குவியல்!
(ஆசிரியரின் ஏனைய படைப்புக்களுக்கும், அவர் தொகுத்துவரும் ஈழத்தமிழர் சுதந்திரப் போராட்டவரலாற்றுச் செய்திக் கோர்வைகளுக்கும் கிடைத்த பாராட்டுச் செய்திகள் சில வற்றை இங்கு வாசகர்களுக்குத் திரட்டித் தருவதில் பெருமை கொள்கிருேம்-ஆசிரியர் "செய்தி")
* இலங்கையின் சமீப சரித்திரத்தில் எத்தனையோ தமிழ் நூல்கள் வெளிவந்த போதிலும் தற்கால அரசியல் நிலை மையைத் தெள்ளத் தெளிவாக விளக்கியும் சோதனைமிக்க தருணத்தில் சோர்ந்து போயிருந்த ஒரு இனத்தை விடு தலைப் போராட்டத்துக்கு ஊக்குவிப்பதுமான முதல் நூல் திரு. குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் நூலாகவே இருந்ததென்று கூறுவது சிறிதும் மிகையாகாது!
கே. வி. எஸ். வாஸ், ஆசிரியர் வீரகேசரி.
* திரு. S. J. W. செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நூல் ஆசிரியரது திருமணத்தின் போது வள்ளுவரும் வாசுகியும் போல் வாழுங்கள் என வாழ்த்தி னேன். இன்று அது நிதர்ஸனமானது கண்டு பெருமை கொள்கிறேன். இலங்கை பூ ரா வும் அறிமுகமான இளைஞரான அவர் இலங்கையில் முதன் முதலாகத் தமிழ்த் தலைவர்களின் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் திரட்டித் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர். ஈழத்தமிழின வரலாற்றுத்துறைக்கு அவர் செய்துவரும் சேவை மகத்தானது!
அ. அமிர்தலிங்கம் முன்னுள் வட்டுக்கோட்டை பா.உ.
* அஞ்சா நெஞ்சமும் செந்தமிழ்த் தனி வழியும் கொண்டு உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியுள்ள ஆசிரியரின் நூல் ஈழத்தமிழர்கள் துயர் துடைத்திட, திரண்டெழுந்து போராட வைத்திடச்செய்யும் திறமை கொண்டது. அவர் ாழுத்துக்கள் மக்களுக்கு வீரமூட்டி எங்கே பகை? எங்கே பகை? எனத்துள்ளி எழ வைக்கும் வேகங்கொண்டவை. ஈழத்தமிழன் மட்டுமல்ல - தாயகத் தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் அவை!
டாக்டர் இரா. இளவழகன் எம். ஏ. ஆசிரியர் 'தமிழோசை’ (தமிழகம்)

Page 4
ஈழத்தமிழர் வ ர லா ற் று த் துறை க் கு திரு. இரா. கனகரத்தினம் செய்துவரும் சேவை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் வகித்த பங்கு போன்று அமைகிறது!
கே. துரைரத்தினம், பருத்தித்துறை பா.உ.
* தாய் மொழியை மறக்கும் புதிய நாகரீகத்திலிருந்து தப்பிச் சென்று கொண்டிருக்கும் திரு. இரா. கனகரத்தினம் ஈழத்தமிழின வரலாற்றைத் தயாரிக்கச் செய்யும் தியாகம், செலவிடும் பணம், புரியும் தொண்டு மலைப்பைத் தருகிறது! தமிழ் ஊறும் குரும்பசிட்டிக் கிராமம் இவரிடத்தே இந்த
ஆர்வத்தை ஊட்டி அலேயவைக்கிறது!
ஈழநாடு
* கால வெள்ளத்தால் அழிந்து போகாத மிகப் பெரும் பணியை எனது நீண்ட கால நண்பர் திரு. இரா. கனகரத்தினம் செய்து வருகிருர், எதிர்காலத் தமிழர் சரித்திரத்தில் அவருக்கு ஒரு நல்ல இடமுண்டு!
எஸ். இராஜதுரை, மட்டக்களப்பு பா.உ.
* உயிரூட்டும் தமிழ் நடையில் எழுதக்கூடிய நல்லதொரு எழுத்தாளர் என்பதைத் தம் எழுத்துக்கள் மூலம் நிரூ பிக்கும் திரு. இரா. கனகரத்தினம் தேறல் சேர்க்கும் தேனீ போன்றவர்!
எஸ். டி. சிவநாயகம், ஆசிரியர் 'தினபதி
முதல் அமைச்சர் கருணுநிதிக்கு
கைகொடுத்த நூல்
(தமிழக சட்டசபையில் 1972, ஏப்ரல் முதல் வாரத்தில் சுதந் திராக் கட்சி உறுப்பினர்களால் சுயாட்சிக் கோரிக்கை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாண்புமிகு. முதலமைச்சர் மு. கருணநிதி விளக்கம் தரும்போது கூறியது)
“இச்சபையிலும் வெளியிலும் எமது சுயாட்சிக் கோரிக்கை பற்றி சுதந்திராக் கட்சி உறுப்பினர்கள் காரசாரமாகக் கண்டனம் தெரிவித்து வருகிருர்கள் ஆனல் அவர் களது தலைவரான ராஜாஜி அவர்களோ பல ஆண்டுகளுக்கு முன்னமேயே இது போன்ற திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கைக்குப் பலத்த ஆதரவு தெரி வித்து, அவர்கள் கோரிக்கை நியாயமானதொன் றென்றும் கட்டாயம் அதுவழங்கப்பட்டாக வேண்டுமென்றும்கூறியுள்ளார். இது 1960ம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட நூலொன் றில் ("25,00000 மக்கள்தலைவர்”) வானேர் தூவும் தேன் மல ரோ” என்ற தலைப்புடன் பிரசுரமாகியிருக்கிறதென்பதையும் அக்கட்சியின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.”

அணிந்துரை.
தமிழர் இன்று இலங்கை, இந்தியா, மலேசியா, பர்மா மொரீசியஸ், பீஜீ, தென் ஆபிரிக்கா, ரினிட்டாட்,டொ பேக்கோ மாட்னிக் முதலிய பல தேசங்களில் வாழ்கின்றனர். அரசியற் பரிபாலனத்திலும் கல்வியிலும் தமிழ் மொழி தென்னகத்திலும் ஈழத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மொரீசியசிலும் பீஜியிலும் பல்வேறு தரத்தில் வழக்கிலிருந்து வருகின்றது. பர்மாவிலும் தென்னுபிரிக்காவிலும் தனிப்பட்டவர்களின் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அவர்களுக்கென இலக்கியமுண்டு; மூன்று செல்வாக்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளுமுண்டு. மொரீசியஸ் பீஜி, தென்ஆபிரிக்கா ஆகிய இடங்களில் பத்திரிகைகள் இை யிடையே தோன்றிமறைகின்றன.
ஈழத்திலும் தென்னகத்திலும் தமிழர் தமிழராக வாழ் கின்றனர். மற்றைய தேசங்களிலே தமிழர் தமது பண்பாட் டைப் படிப்படியாக இழந்து வருகின்றனர். பலர், தமிழிற் பிறர் பேசும்போது தமக்கு விளங்கினுலும் பேச முடியாமல் இருக்கின்றனர். பலர் பெயரளவில் மட்டும் தமிழராக இருக் கின்றனர். எனவே, இவர்களைப் பொறுத்தவரையில் தமிழர் பண்பாடு வரலாற்றிற் குறிக்கப்படுவதோடு நிற்பதா? இவ் விடங்களிலே தமிழை வாழவைக்கவும் இவ்விடங்களிலுள்ள தமிழரோடு தொடர்பு கொள்ளவும் வழியுண்டா?
இப்பரிதாப நிலையிலுள்ள தமிழரின் முன்னேற்றம் கருதி வெளிவருவதே "அலைகடலுக்கு அப்பால் தமிழர்" என்ற நூல். இதன் ஆசிரியர் இரா. கனகரத்தினம் தமிழுணர்ச்சி மிகுதியாக வுள்ள தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். உலகின் பல பாகங் களிலும் உருக்குலைந்து அழியும் நிலையிலுள்ள தமிழரைக் காப்பாற்ற 'உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம்" அமைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர். இக் குறிக் கோளிலிருந்து உருவாகி, அவரின் உள்ளத்தின் வெளிப்பாடாகி, தமிழ் உணர்ச்சி யுள்ளோரை நெகிழவைக்கும் தன்மையதாகி இந்நூல் வெளிவருகின்றது. -
இப்பெரியாரின் இலட்சியம் கைகூடத் தமிழ் மக்கள் பேராதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு, அன்னுரின் அரும்பணி செழித்தோங்குக!
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
பேராதனை, தமிழ்த் துறைத் தலைவர்
4-1-1973. இலங்கைப் பல்கலைக் கழகம்

Page 5
உலகத்தமிழர்களின் இன்றைய நிலை அழிவின் விளிம்பிலிருக்கிறது என்பதை நம் நாட்டு அறிஞர் கள் மட்டுமல்ல வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும் உணரத்தலைப்பட்டிருக்கும் இக் கால கட்டத்தில், முழு அழிவிலிருந்து நம் இனத்தைக் காப்பாற்ற உருப்படியாகவும் உடனடியாகவும் ஏதாவது செய்தாகவேண் டும் என்ற உயர்ந்த குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டு வெளிவரும் முதல் தமிழ் நூல் இது
இந்தப் படைப்பில் ஆங்காங்கே நான் தொட்டுக் காட்டி யிருக்கும் சில அம்சங்கள், குறிப்பாக “உலகத்தமிழர் பாது காப்புக் கழகம்’ ஒன்றினை அமைக்கவேண்டுமென்ற எனது வேண்டுகோள், பல்லாண்டு காலமாகவே என் இரத்தத்தோடு இரத்தமாக, அணுவோடு அணுவாகக் கலந்து ஒன்றிவிட்ட இலட்சியக் கருத்துக்கள். எனவே இயல்பாகவே எழுந்த எனது உணர்ச்சிகளினதும் நெகிழ்ச்சிகளினதும், மன உழைச்சல் களினதும் அறுவடைக்குவியலே இந் நூல் என்ருல் அது மிகையல்ல!
இதனை உலகெலாம் பரவிய என் தமிழன்னையின் பாத கமலங்களில் கண்ணிருடன் காணிக்கையாக்குகிறேன்!
இந் நூலினைப்படித்து முடித்தபின் தமிழ்மக்களிடையே எழும் எதிரொலியில் தான் இந்த நூல்வெளியீட்டு இலட்சி யத்தின் முழு வெற்றியுமே தங்கியுள்ளது. நல்ல கருத்துக்கள் கால வெள்ளத்தைத் தாண்டி நிலைப்பவை. இயல்பாகவே மக்களை வழிநடத்தும் தன்மை படைத்தவை. இது என் அசைக்க முடியாத நம்பிக்கை அது உலக நியதியுங் கூட!
*செய்தி” வார இதழில் தொடர் அம்சமாக இடம் பெற்ற இக் கட்டுரைகள் அதே காலத்தில் நூல் வடிவாகவும் வெளியாகின்றன. இந்த முறையில் நூல் ஒன்றினை வெளியிடும் போது ஏற்படும் தவறுகள் தவிர்க்கமுடியாதவை, மன்னித்திட வேண்டுகிறேன்!
நூலுக்குமுன்னுல் அதன் ஆசிரியர் சிலவார்த்தைகள் எழுதுவது சம்பிரதாயமாகும். இதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்நூல் வெளியிட ஒத்துழைப்பு நல்கிய எல்லா அன்புள்ளங் களுக்கும் என் மனங்கனிந்த நன்றியைக் கூறிவைக்கிறேன்!
அன்பன்
கண்டி, குரும்பசிட்டி. இரா. கனகரத்தினம்
4-1-1973.

அன்ருெரு நாள்!
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கு ஒலி நீர்ஞாலத்து இருள் கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்.
Tேசிடு தண்டியலங்காரம் போற்றும் நம் தமிழன் னையின் புகழ் மூவேந்தர் காலத்தில் உலகின் மூலே முடுக் கெல்லாம் பரவியிருந்தது. "கல் தோன்றி மண் தோன் முக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்'; தமிழ்க் கலாச்சா ரங்கள் அப் பெரு மன்னர் காலத்தே கீழை நாடுகளான ஜாவா, சுமத்திரா, பாலி, கம்போடியா, தாய்லாந்து மலேசியா, சீனம் போன்ற நாடுகளை மட்டுமன்றி மேலே நாடுகளான உரோமம், கிரேக்கம் போன்ற நாடுகளையும் வசீகரித்திருந்தன. உலகப் பெருங் கடல்களிலெல்லாம் தமிழி னின் வாணிபக் கலங்கள் கம்பீரமாக வலம் வந்து கொண் டிருந்தன. "திரை கடலோடியும் திரவியம் தேடு சான்ற மூதுரை, தமிழனின் இலட்சியமாக, "என்னை நன்ருக இறைவன் படைத்தனன்; தன்னை நன்று கத் தமிழ் செய்யு மாறே என்ற உயர்ந்த நம்பிக்கை அவனது திரு மந்திர மாச; "யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த கொள்கை உயிர் மூச்சாகக் கொண்டு உலகத்து மக்களுட னெல்லாம் கூடி வாழ்ந்து குதூகலித்த பொற்காலம் அது!
புக் கொற்கை, துறைமுகங்களெல்லாம் அன்னிய வணிகர்களால் நீரம்பி வழித்தன, "கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காளகத் தாக்கமும்" கொண்டு தமிழகம் சீரும் சிறப்பும் பெற்ற ஒரு நாடாக உலக அரங்கில் தலையெடுத்த காலம் அது. இக் காலக் கட்டத்தில் இந்து சமுத்திரமே தமிழனின் பூரண கட்டுப் பாட்டில் அவனது ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. தம் வாணிபக் கலங்களின் நடமாட்டத்தை எதிர்த்த பகை வர்கள் கொட்டம் அடக்க, தமிழ் வணிகர்களுக்குத் துன் பம் விளைவித்த வேற்று நாட்டு மன்னர்கள் திமிர் அடக் கத் தமிழனின் தரைப் படையும் கடற்படையும் பல தடவை உலகப் பெருங் கடல்களைக் கடந்து சென்றிருக் கின்றன. பல கீழைநாடுகளெல்லாம் அவனது ஆதிக்கத் தின் கீழ் வந்துள்ளன. இது சகித்திரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் அவ்வப்போது அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்படும் தமிழ்க் கல்வெட்டுகள், உலக மொழி கள் பலவற்றிலும் "கப்பல்" என்ற தூய தமிழ்ச் சொல்

Page 6
விரவி நிற்கும் தன்ன்ம இவையெல்லாம் அலைகடல்களுக் கப்பால் அன்று தமிழனும் தமிழ் மொழியும் பெற்றி ருந்த செல்வாக்கினே இன்றும் கொடி கட்டிக் காட்டுகின் றன. இவற்றுள் சில குறிப்புகளை மட்டும் ஈண்டு தருவ தன் மூலம் பண்டைத் தமிழகமும், தமிழனும், தமிழ் மொழியும் உலக அரங்கில் பெற்றிருந்த சிரினையும் சிறப் பினையும் சுட்டிக் காட்டி விட்டு மேலே செல்லலாமென விழைகிறேன். இன்றைய தமிழினம் உலகப் பூப்பந்தின் பல் வேறு நாடுகளிலும் படும் இன்னல்களையும் தன்னையும் தன் உயிரனைய தமிழ் மொழியையும் பேரழி வி லிருந்து காப்பாற்ற நடாத்தும் ஜீவ மாணப் போராட் டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இச் சிறு குறிப்புகள் உதவும் என் புது என் நம்பிக்கை.
g so to
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன் AF657 நாட்டில் வாழ்ந்த பான்கோ என்ற சீன அறிஞர் தமக வரலாற்று நூலில் ஹாவாங்சே (காஞ்சி) நாட்டுக்குத் தம் நாட்டுச் சீன வணிகர்கள் அடிக்கடி செல்வார்களென் றும் அப்படிச் செல்லும் போது அவர்கள் தமிழர்களுக் குச் சொந்தமான கலங்களிலேயே பிரயாணஞ் செய்வார் களெனவும் தமிழ் மக்கள் அவர்களை அன்ாேடு வரவேற்று உபசரிப்பார் களெனவும், முத்து, வைடூரியம், துகில் முதலியவற்றை அவர்கள் வாங்கிக் கொண்டு சீன செல் வார்களெனவும் குறிப்பிடுகிருர் .
தமிழக மக்கள் வீரம் மிக்கவர்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், சிறந்த அறிஞர்களாகத் திகழ்பவர் கள் எனப் போற்றிப் புகழ் கிருர் 1300 ஆண்டுகளுக்கு முன் சீனத்தில் வாழ்ந்த யுவான்ச் வாங் என்ற இன்னுமொரு வரலாற்று அறிஞர்.
கி. பி. 1298-ம் ஆண்டு சீனத்தை ஆண்ட மன்னன் ஒருவன் சோழ மண்டலத்துக்குத் தங்கமும் வெள் ளியும் ஏராளமாகத் தன் நாட்டிலிருந்து ஏற்றுமதியாவ தைத் தடுத்தான் என்கிறது வரலாறு.
சீனுவில் அகழ் வாராய்ச்சி நடைபெற்ற இடங் களில் கிடைத்த தமிழ்க் கல் வெட்டுக்கள் ஏராளம்.
* கம்போடியா
இங்கு காணப்படும் அங்கோவாட் ஆலயம்' திராவிட சிற்பக்கலையை ஒட்டி அமைக்கப் பட்டிருப்பது டன் ஏராளமான சிவன், இந்திரன் போன்ற தெய்வங்க ளின் சிலைகளும் இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

* நியூசிலாந்து
சோவியத் ஒன்றியத்தின் ஆராய்ச்சி நிபுணர் கில்டர் என்பவர் 15-ம் நூற்றண் டிலேயே தமிழர் நியூசி லாந்தைக் கண்டு பிடித்துள்ளார்களென ஆதார பூர்வமாக நிரூபிக்கிறர். அந்நாளில் தமிழ் மாலுமிகள் பாவித்த கப்பலின் இடிபாடுகள் நியூசில்ாந்து நாட்டின் வட பகுதி யில் ரக்லன் என்ற சிறிய நகரின் கடலோரத்தில் கண்டு பிடிக்கப் பட்டதோடு அக் கப்பலில் பாவித்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட மணியும் வெலிங்டன் நகர தொல் பொருள் கூடத்தில் இன்றும் காட்சிக்காக வைக் கப்பட்டுள்ளது,
* மலேசியா
‘தொடு கடல் காவல் கடு முரண் கடாரமும் பாப் பெரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி’ எனப் புகழப் படும் இராசேந்திர சோழன், கடாரம் (இன்றைய கெடா) இராச்சியத்தை வென்று அங்கு வெற்றிக் கோ வில் எழுப்பினன். இவனது பாரிய கடற்படையைச் சேர்ந்த படைக் கலங்களை நிறுத்த இடம் போதாது இன்றைய தெலுங்கான்சன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்ரு ன் என்கிறது வரலாறு. இவன் கடாரம் மீது படை எடுத்தமைக்கு அன்றை1 கட ரீார மன்னனுக்கும் அங்கு வாழ் ந்த தமிழ் வணிக ருக்குமிடையே ஏற்பட்டபகைமையே காரணம் எனக் கூறுகிறர் ஆராய்ச்சி அறிஞர். இராசமாணிக்களுர்,
* தாய்லாந்து
தமிழகத்தில் ஒரு காலத்தில் மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வந்த ஊஞ்சல் திருவிழா 55 rü லாந்தில் மிகவும் அண்மைக்காலம் வரை கொண்டாடப் பட்டு வந்துள்ளது. ஈசு வெள் (ஈசன்) தெய்வத்தை முன் னிட்டுக் கொண்டாடப் பட்டு வந்த இவ்விழாவில் பாவி த்த ஊஞ்சல் கட்டிய பெரு மரங்கள் இன்றும் இங்குள்ள வட்ட சுதாத் ஆலய முன்றவில் காணப்படுகின்றன. தாய் லாந்து மன்னர் முடி சூட்டு விழாக்களிலும் 'திரியம் பாவே" -நிரிபாவே" திருவிழா (தேலோத்சவம்) விலும் மாணிக்க வாசகப் பெருமாளின் 'ஆதியும் அந்தமுமில்லா" எனத் தொடங்கும் திருவாசகம், இராமேஸ்வரத்திலிருந்து சென்ற பிராமணச் சந்ததியினரால் இன்றும் TLபட்டு வருகிறது. இந் நாட்டின் தென்கரையிலுள்ள தக் கூபா (தக்கோலம்) என்ற துறைமுகப் பட்டினத்தில் கிடைத்த தமிழ்க் கல் வெட்டு கி. பி. 5-ம் நூற்ருண்டில் பூம்புகாரிலிருந்து அங்கு சென்று குடியேறிய தமிழ் வணிகர் நகர்’ ஒன்றினை நிறுவி 'அவனி நாரணம்” என்ற ஏரி தோண்டி, திருமால் கோவிலொன்றினையுங் கட்டி யெழுப் பியதாகக் கூறுகிறது. திருமால் சிலை உட்பட 6TT Fran மான தெய்வச் சிலைகள் இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

Page 7
* சுமத்ரா
இங்கு இன்றும் தமிழ்ச் சந்ததியினரிடையே சேரர், சோழர், பாண்டியர், தெக் காணர் என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு மலைக்கு "குறிஞ்சி" என்ற அழகிய தமிழ்ப் பெயர் வழங்கப் பட்டு வருகிறது.
* ஜாவா
சாவகம் என்று பழந் தமிழ் நூல்கள் போற்றும் இத் தீவில் ஏராளமான சைவ ஆலயங்களும் தமிழ்க் கல் வெட்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. 15 சிறிய கோவில்களால் சூழப் பட்ட பெரம்பனன் சிவாலயம், கடல் கடந்த நாடுகளில் தமிழனல் செய்யப்பட்ட தெய் வப் பணிகளுக்குச் சாட்சியாக இன்றும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
* பாலி
இந்து சமயம் பூரணத்துவ நிலையில் கைக் கொள் ளப்படும் பாலித் தீவில் கோயில்களெல்லாம் "கவில்" களென அழைக்கப்படுகின்றன. திரு. ஆனந்தா குக் அவர் களால் இங்கு கண்டெடுக்கப் பட்ட விநாயகர் சிலை ஏறத் தாழ 1250 வருடங்களுக்கு முந்தியதெனக் கணிக்கப்படு கிறது. ሎ
* கிரேக்கம்-உரோமம்
தமிழகத்தில் சோழ மண்டலக் கரைப்பிரதேசத் தில் நெல்லூரிலிருந்து புதுச்சேரி வரை கிடைத்துள்ள ஏராளமான கிரேக்க, உரோம நாணயங்கள் பண்டைய தமிழகம் வாணிபத் துறையில் உலகின் கேந்திர ஸ்தானங் களில் ஒன்ருக, மேற்கும், கிழக்கும் சந்திக்கும் ஒரு உலகச் சந்தையாக விளங்கியதைக் காட்டுகின்றன. உரோமுக் கும் கிரேக்கத்துக்கும் தமிழகக் கப்பல்கள் ஏராளமாகச் சென்றன. பாண்டிய மன்னன் ஒருவன் வர்த்தகத் தொட ர்பு கொள்ள ரோமாபுரி மன்னன் அகஸ்தன் என்பவனுக்குத் தூது அனுப்பினுன் என்கிறது வரலாறு. உலகப் பேரழகி கிளியோ பட்ராவின் தளிர் மேனியைத் தமிழக முத்து வைடு ரியங்கள் அழகு படுத்தின என்கிறது சரித்திரம்.
இத்தகு பேருமை பொருத்திய அன்றைய நிலையை
'சீன மிசிரம் யவனரகம்-இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை ஞானம் படைத்த தமிழ்..." எனப் போற்றி புகழ்கிருன் பாவேந்தன் பாரதி. இத்துணைச் சிறப்புடன் வாழ்ந்த தமிழும், தமிழினமும் கால வெள்ளத்தில் சிக்குண்டு சீரழிந்த கதை: S Lófaur வரலாற்றில் சோகம் நிரம்பியதோர் காவியமாகும் இதனை அடுத்துவரும் பக்கங்களில் தொட்டுக் காட்டிவிட்டு மேலே செல்லலாம் என நினைக்கிறேன்.

தமிழர் புலப்பெயர்வின் பின்னணி
¿967 பேரேட்டின் பல பக்கங்கள் புரட்டப் படுகின்றன. கால தேவனின் ஊழிக் கூத்தினுல் உலக வரலாற்றில் எத்தனேயே7 மாற்றங்கள்! திருப்பங்கள் !! டியாட்சிகள் மறைந்தன. குடியாட்சிகள் மலர்ந்தன! * குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்த மன்னதி மன்னர் கள் உலக மக்களின் காட்சிப் பாவைகளாயினர். நாகரீகத் தின் உச்சியில் திகழ்ந்த பல இனங்கள் நாடோடிக் கூட் டங்களாயின. மூலையில் மூக்காடிட்டுக் கிடந்த முன் பின் தெரியாத நாடுகளெல்லாம் உலக வல்லரசுகளாகி முன் னணிக்கு வந்தன: சட சட்வெனச் சரித்த சாம்ராஜ்யங் கள் பலப்பல!
மனித இன வரலாற்றின் நீண்ட கதை இது! தமி ழின வாழ்விலும் ஒரு பெரும் மாற்றம். ஒரு மாபெரும் திருப்பம். ஆண்ட இனம் அடிமை நிலைக்குத் தள்ளப் பட் டது. பொன்னும் மணியும் துகிலும் உணவும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மாபெரும் போர்க் களங் களைச் சந்தித்த தமிழினம்-கேவலம் தன் அன்ருட வாழ் க்கையை நடத்தவே பெரும் போராட்டம் நடத்த வேண் டிய கட்டத்தில் வந்து நின்றது. உலகப் பெரு மொழிக ளில் ஒன்ரூக அகில உலகமும் புகழ்பரப்பிவாழ்ந்த அன்னை தமிழ் அன்னிய மோழிகளின் ஆதிக்கத்தால் வலுவிழந்து செயலி ழந்து அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டது. 19-ம் நூற்ரூ ண்டு தமிழின வரலாற்றிலே ஒரு கறை படிந்த, துயர் தோய்ந்த ஒரு நூற்ருண்டாகும். இந் நூற்றண்டில்தான் தமிழ் மக்கள் தம் அன்ருட வயிற்றுப் பிழைப்புக்காக *கூலிகளாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கப்பலேறிய சம்பவம் நிகழ்த்தது.
சூரியனே அஸ்தமிக்காத மகா சாம்ராஜ்யம் எனப் புகழப்பட்ட பிசிட்டனின் கரங்களில் உலகின் பல பாகங் களும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன. லண்டனிலுள்ள குடியேற்ற நாடுகள் காசியாலயத்தால் நிர்வகிக்கப் பட்டு வந்த இந்த நாடுகள் பொருளாதாரத்துறையிலும் கட்டுக் கோப்பிலும் சீரழிந்த நிலேயில் இருத்தன. இந் நிலையில் இந் நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி ஐக் கியத்தை உருவாக்கினல் மட்டும்ே தன் ஆதிக்கத்தை ஆங்காங்கே நிலைநாட்டவும் அகப்பட்டதைச் சுருட்டவும் மூடியுமென உணர்ந்திருத்தது பிரிட்டன். இந்நாடுகளில் பண முதலீடு செய்து பல்வேறு கைத் தொழில்களேயும் தொடங்க சீமைத்துரைகள் பலர் ஏற்கேனவே மூட்டை

Page 8
முடிச்சுகளுடன் வந்து இறங்கியிருந்தனர். காடு சளை அழி க்க, கழனிகளை உண்டாக்க, தேயிலை, ரப்பர், கரும்பு, தென்னை முதலியன பயிரிடத் திட காத்திரமான , சுறுசுறுப் புள்ள மலிவான கூலிகள் தேவைப்பட்டனர். இந்த ஆங்கி லத் துரைகளுக்கு அடிபணிந்து நடக்க, கட்டுப்ப டான முறையில் வேலை செய்து ஒத்துழைப்பு நல்க சுதேசி மக் கள் அக்கறை காட்டிட வில்லை. பண முதலீடு செய்யத் தயாரான நிலையிலிருந்த தம் இன மக்களே ஊக்கப்படுத்த வேண்டிய கடமைப்பாடு ஒருபுறமிருக்க, இந்த ஊக்கத் தினை அளிக்கா விட்டால் இக் குடியேற்ற த டுகளை ஸ்திர மான நிலைக்கு கொண்டு வர மடியா தென்பதையும் பிரிட்டிசார் கண்டு கொண்டனர். குடியேற்ற த{rடுகள் தம் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய நிதிக்கு இங்கிலாந்தை எதிர்பாக்க கூடாது; அத்த அத்த நாடுக ளில் காணப்படும் வளத்தைத் திரட்டி அதற்கான வழி வகைகளைக் காண வேண்டும் என்பது, அன்று லண்டன் குடியேற்ற நாடுகள் அலுவலகம் கடைப் பிடித்த பிரசி ததமான கோட்பாடாகும். எனவே உலகின் எ தீ த க் கோடியிலிருந்தாலும் கூவிகளைக் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பிரிட்டனல் நியமிக்கப்பட்ட s 6ufř 60 riř கள் தள்ளப்பட்டனர். அத்தாட்களில் பிரெஞ்சு ஆதிக்கத் துக் குட்பட்ட பிரதேசங்களிலும் ஏறக் குறைய இதே நிலை தான் நிலவியது.
தமிழன் என்றேர் இனமுண்டு தனியே அவர்ககோர் குண முண்டு
ஆரம்ப காலத்தில் ஸ்பெயின், போத்துக்கல், ஆபிரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளிலிரு ந்து இத்த ஆங்கிலேய, பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு கூலிகளை அமர்த்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆஞல் இந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. இதன் பின்பே இந்தியர் பால் கவனஞ் செலுத்தப்பட்டது. இந் திய மக்கள், குறிப்பாகத் தமிழர் தாம் வாழும் மண்ணை தேசிக்க ஆரம்பித்து விட்டால் மண்ணும் பொன்னுகும் என் பது வரலாற்று உண்மை! இதை இங்கு குறிப்பிடும் போது சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் தம் "செங்கோல்" இதழில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் என் ஞாபகத்திற்கு வருகிறது. விஞ்ஞான ரீதியாக அவர் அளித்த பதிவில் காட்டப்பட்ட விஷயம் சாத்தியமாகி றதோ இல்லையோ அதில் வொதித்துள்ள ஒரு ad areo Le தமிழ் மக்கள் சித்தனைக்கு சிறந்த உணவாக அமையுமெ ன்பது என் நம்பிக்கை, அந்தக் கேள்வி-பதில் ஏறக் குறைய கீழ் கண்டபடி அமைந்திருந்ததாக ஞாபகம்,
கேள்வி:- அமெரிக்கர்கள் சந்திரனில் srdy வைத்து விட்டார்களே நம் தமிழர்கள் எப்போ

11
அங்கே குடியேறப் போகின்றர்கள்?
ம. பொ. சி :- கூடிய விரைவில் ஏராளமான தமிழர் அங்கே குடியேறப் போகிருர்கள். சந்திர னில் கரடு வெட்ட, கழனிகள் ச ைமக்க வீதிகள் அமைக்க, வீடுகள் கட்ட தம்மவர் களை விட்டால் உலகில் வேறு யார் இருக் கிருர்கள்! எனவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிப் புறப்படத் தயாராகுங்கள்!
அண்மையில் தமிழக முதல் அமைச்சர் மாண் பு மிகு கருணநிதி அவர்கள் கூட, ஒரு பொதுக் கூட்டத்தில் சொற் பெருக்காற்றும் போது இன்னுமொரு உண்மையை வெளியிட்டார். 2 - வது உலகப் பெரும் போரில் பேரழிவுற்ற ஜெர்மன் நாட்டைக் கட்டியெழுப்ப அந் தாட்டுப் பிரதமர் இந்திய மக்களேத் தந்துதவும் படி கேட் டுக் கொண்டதாகவும் அதற்கு மறைந்த பிரதமர் நேரு அவர்கள் ' என் தாட்டு மக்களே அடிமையாக இனி வெளி நாடுகளுக்கு ஒரு போதும் அனுப்பமாட்டேன்" என ஆணித் தரமாகக் கூறி விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.
கப்பல்கள் புறப்பட்டன!
பட்ட சலுகைகளும் வசதிகளும் செய்து زن و رنه لا தரப்படும் f ன்ற உறுதி மொழிகளுக்கிடையே தமிழகத் தின் கரைய்ோரப் பிரதேசங்களிலிருந்தும் பிரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரி காரைக்கால் போ ன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான தமிழ், தெலுங்கு மக்கள் கப்பலேறினர். வட இந்தியாவில் கல்கத்தா, பம்பாய் போன்ற துறைமுகங்களிலிருந்து புறப்பட்டனர் வட இந் திய மக்கள். கப்பல்கள் புறப்பட்டன! தமிழின வரலாற் றிலும் கறை படிந்த ஒரு அத்தியாயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. பிறந்த நாட்டையும் வளர்ந்த வீட் டையும் விட்டுப் பிரிவதே ஒரு பெருந்துன்பம் தூரத்தி லுள்ள ஒரு ஊருக்கோ அண்மையிலுள்ள ஒரு நாட்டுக் கோ செல்லும் நாம் நம் உடன் பிறந்தாரை, உற்ருர் உறவி னரை விட்டு பிரியும் போது பெரிதும் கண் கலங்கி விடுகிரூேம். அலைகடல்களுக்கப்பால் அன்று முன் பின் தெரிந்து கொள்ளப்படாத நாடுகளுக்கு பின்பு:திரும்பி வருவோம்; உற்ருர் உறவினரைச் சந்திப்போம் என்ற உறுதியற்ற நிலையில் புறப்பட்ட நம் தமிழ் மக்கள், அந் நாளில் எப்படிப்பட்ட பிரிவுத் துன்பத்தை அனுபவித்தி ருப்பார்கள் என்பதை நாம் கற்பனை செய்து u tirri iš க வேண்டும். குடியேற்றத்துக்காக ஆட்கள் திரட்டப் பட்ட போது கூட, அவர்கள் எந்த நாட்டுக்கு குடியேற் றப்படவிருக்கிருர்களென்பது திட்டவட்டமாகத் தெரிவிக் கப்படவில்லை: ஆடு மாடுகளின் பல்லேப் பார்த்து விலை பேசுமாப்போல் ஆட்களைப் பார்த்தே அவர்கள் சேல்லும் நாடு எதுவெனத் தீர்மானிக்கப்பட்டதாம். எனவே தான்

Page 9
இலங்கைக்கென்று "ஏற்றுமதி" யாகியவர்கள் கயாளுவில் போப் இறங்கினர். பக்கத்தேயுள்ள மலாயாவுக்கெனப் புறப்பட்டவர்கள் கரிபியன் தீவுகளுக்கும், பசிபிக் பெருங் கடல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இப்படி யாக, பீஜி, மொறிசியஸ், ரீயூனியன், ரினிட்டாட் டோப் கோ, குவாட்லோப், மாட்னிக், தாஹித் தி, நியூ கலிடோ னியா, தென் ஆபிரிக்கா, கயான, வியட்நாம், சூரினும் உரோடேசியா, காயென், பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குக் குடி யேறிய தமிழர் அந் நாட்களில் பட்ட துன்பங்கள், அணு பவித்த கஷ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியா தன. நீண்ட கடற் பிரயாணத்தில் நோய் கண்டு கப்பலி லேயே ஏராளமானுேர் மாண்டனர். கொள்ளை நோய்க ாால் பீடிக்கப்பட்டும் சுதேசி மக்களால் கொல்லப்பட் டும் வெள்ளையரின் சித் திரவதைக் குட்பட்டும் LD fT6ðsl டோர் தொகை ஏராளம். இத் தமிழ் மக்கள் குடியேறிய இந்நாடுகளில் பட்ட இன்னல்களை ஒரு சோக காவியமா கத் தன் கவிதை மூலம் வர்ணித்துப் புலம்புகிருன் மகா கவி பாரதி. w
**ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென் முனையடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள பற்பல தீவினும் பரவியில் வெளிய தமிழச் சாதி தடி யுதை யுண் டும் காலுதை யுண்டும் கயிற்றடியுண் டும் வருந்திடும் செய்தியும் மாய்ந்திடு, செய்தியும் பெண் டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறது. செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும் பிணி களாற் சாதலும் பெருந்தெலேயுள்ளதம் நாட்டினப் பிரிந்த நலிவிஞற் சாதலும் இஃ தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன். என அழுது புலம்பினுன் அன்று!
ஜனநாயகம் ஒரு சர்வதேச மோசடி
Da நாட்டுத் தமிழர்களாகிய நாம் எமது பெற் ருேர் பாட்டன்மார் எவ்வாறு தலையில் பொதியுடன் கப் பலால் இறங்கிக் கால் நடையாக கண்டி, ஹட்டன், பதுளை வரை நடந்து சென்ருர் களென்பதையும் அந்நா ளில் அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் கதை கதை யாகக் கேள்விப்பட்டிருக்கிருேம். இக் கதைகள் பழைய கதைகள் தான்! இ வ ற் றினை இ ன்  ைற ய * இடி அமின்கள் புரிந்து கொள்ளவில்லை. இல்லை
* (இடி அமின் உகண்டாவின் ஜனதிபதி. 3 மாதத்துள் உகண்டாவில் குடியேறிய ஆசிய மக்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமெனத் திடீர் உத்தரவு பிறப்பித் தவர்)

13
புரிந்தாலும் காட்டிக்கொள்ளத் தயாராக இல்லை! எனவேதான் தாலியைப் பிடுங்கிக் கொண்டு தமிழர் களை நாம் நாட்டை விட்டு விரட்டவில்லையே எனப் பகிரங்க மேடையில் நாக் கூசாமல் கூறி விட்டு இறங்கிச் செல்ல இவர்களால் முடிகிறது! நம் நாட்டின் வளத்துக்குத் தம் தாலியை அறுத்த தோட்டத் தமிழ் தாய்மார் எத்தனை பேர்? இதனை மறைத்துக் கொண்டு மேடையில் முழங்குவதும் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுவதும் ஒரு சர்வதேச மோசடியாகும்! அன்னியச் செலாவணி மோசடி செய்பவனை, கள்ளக் கடத்தலில் சர்வதேச மோசடி செய்பவனை, ரத்தினக் கற்கள், தங்கம் போன்றவற்றில் சர்வதேச மோசடி செய்பவனைச் சட்டத் தின் பிடியில் கொண்டுவர முடியும்; முடிகிறதென்றல் ஜன நாயகத்தில் சர்வதேச மோசடி செய்பவர்களே ஏன் நிதியின் முன் நிறுத்த முடியாது? சிந்திக்க வேண்டிய அத் தியாவசியமான விஷயம் இது!
உண்மையைக் கூறப்போனல் ஜனநாயகம் உல கில் எப்போதோ செத் தொழிந்து விட்டது. வலியவனின் குரல் உலகுக்கு எட்டுகிறது. அதற்கு ஏக தட புடலான வரவேற்புமிருக்கிறது! ஆனல் நலிந்தவன் குரலோ உலகின் ட ல்வேறு பாகங்களிலும் மேலும் மேலும் அமுக்கப்படுகி றது! நசுக்கப்படுகிறது! இந்தப் பச்சைத் துரோகத்திற்கு ஜனநாயகம் என்ற பொன்னுடைவேறு போர்த்தப்படுகி றது!
உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறிய நம் தமிழினம் இந்த ‘நவீன ஜனநாயக யுகத்தில் படும் இன் னல்களையும் இடுக் கண்களையும் இந்நூல் மூலம் விளக்கிட லாம் என்ற நம்பிக்கையோடு தமிழர் குடியேறிய தீவுகள் பல கொண்ட கரிபியன் கடல் பிரதேசத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்:

Page 10
14
ரினிட்டாட், டோபேக்கோ தீவுத் தமிழர்கள்
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரிபியன் கடற் பிரதேசத்தில் ஏராளமான சிறுசிறு தீவுகள் உண்டு. இவற்றுள் ரினிட்டாட் , டோபேக்கோ, மாட்னிக், குவாட் லோப் தீவுகள் பிரபலமானவை. தமிழகத்திலிருந்து ஏறக் குறைய 7000 மைல்களுக்கப்பால் உள்ள இத்தீவுகளுக்கு 1845-ம் ஆண்டிலிருந்து 1916-ம் ஆண்டு வரையும் அதன் பின்பும் ஏராளமான இந்தியர் குடிபெயர்ந்தனர். ரினிட் டாட், டோபேக்கோ தீவுகள் இரண்டும் இன்று ஒரே ஆட்சியமைப்பைக் கொண்ட சுதந்திரத் தீவுகளாக இருப் பினும் ரினிட்டாட் தீவு ஸ்பானியர்களால் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டு 18-ம் நூற்ருண்டில் பிரிட்டனின் ஆளு கைக்குட்பட, டோபேக்கோ தீவு டச்சுக் காரசிடமிருந்து பிரெஞ்சுக் காரரிடமும் பின்பு ஆங்கிலேயரிடமும் ᏯᏛᏈᎠ ᏑᎦ மாறிற்று. 1962-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற இத்தீவுகளிலொன்றன ரினிட்டாட், ஏறக்குறைய 900 சதுர மைல் பரப்பளவுடன் வடக்கே காடுகளடங் கிய மலைத் தொடர்களையும், தெற்கே கரும்புத் தோட் டங்களையும் சுற்றிவர அழகிய ரம்மியமான கடற் கரைக ளேயும் கொண்டதாகும். இதன் தலைநகர் போட் ஒவ் ஸ்பெயின் தான் இரு தீவுகளுக்கும் பொதுவான நகர மாக விளங்கி வருகின்றது. டோபேக்கோ , 100 சதுர மைல் விஸ்தீரணமுடன் அழகிய பசுமலைத் தொடர்களையும், வாவி கள், நீர்த்தேக்கங்களையும் தன்னகத்தே கொண்ட சிறிய தீவாக அமைந்துள்ளது. இப்படி ஏராளமான இயற்கை வளங்கள் கொண்ட இத்தீவுகள் உல்லாசப் பிரயாணிக ளின் சொர் க்கமாக, நாட்டு வருவாயின் கணிசமான பகுதி யை ஈட்டித் தருவனவாக அமைந்தது வியப்புக்குரிய தொன்றல்ல!
இந்த இரண்டு தீவுகளின் மொத்த ஜனத்தொகை ஏறக்குறைய 1 கோடியாகும். இந்த ஜனத்தொகையில் 40 விழுக்காட்டினர் ஆபிரிக்க வம்சாவளியினர். 35 விழுக் காட்டினர் இந்தியர். சீனர் 10 விழுக்காட்டினர். ஏனையோர் பல இனத்தையும் சேர்ந்த மக்களாகும். எனவே ஒன்றுக் கொன்று முரணுன பல இன, பல மத, கலை, கலாச்சார பா ர ம் பரி யங் களை க் கொண்ட ஜனநாயக நாடு களில் காணப்படும் அத்தனை பிரச்னைகளும் இங்கும் காணப்படுவது புதுமையான தொன்றல்ல. உதாரணமாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரினிட்டாட் ராணு வத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் ஒன்று இனக்கலவர மாகிப் பல உயிர்கள் பலியாவதற்குக் காரஸ்யமாகியது. இக்கலவரத்தில் தலை நகரான போட் ஒவ் ஸ்பெயினுக்குக்

15
கிழக்கே நான்காவது மைலில், துப்ஞ என்ற நகரிலுள்ள சைவக் கோவில் கறுப்பர் இயக்கப் பயங்கரவாதிகளால் குண்டு வீசிச் சேதப்படுத்தப்பட்டது.
ரினிட்டாட், டோபேக்கோ தீவுகளில் 5ιτ (5) Φς άξη அழித்து விவசாய அபிவிருத்திக்குட்படுத்தவும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யவு மென, கவர்ச்சிகரமான சலுகைகளும் வசதிகளும் தரப்படுமென்ற உறுதிமொழி யுடன் வட இந்திய மக்களும் தென்னிந்திய மக்களுமாக ஏராளமானேர் "ஏற்றுமதி செய்யப்பட்டனர். தமிழகத் தில் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், செங்கற் பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்க களின் சந்ததியினராக ஏறக்குறைய 15,000 தமிழர்கள் ரினிட்டாட்டிலும் டோபேக்கோவிலும் இப்போ வாழ்கி (?ர்களென மதிப்பிடப்படுகிறது. வங்கம், கல்கத்தா போன்ற பகுதிகளிலிருந்து கப்பலேறிய வட இந்தியரின் சத்ததியினரே இன்று ரினிட்டாட்டில் செல்வாக்குடனும் குடிபெயர்ந்த இந்தியருள் பெரும்பான்மையினராகவும் வாழ்கிருர்கள்.
ரினிட்டாட், டோபேக்கோ தீவுகளின் மூக்கிய அர சாங்க மொழி ஆங்கிலமாகும். பாடசாலைகளில் ஆங்கில மொழியுடன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சுதந்திரம் கிடைக்கும் வரை ஆபிரிக்க இந்திய மொழிகளைக்கற்றுக் கொடுக்க அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எந்த ஒரு நவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாருக, ஆபிரிக்க இந்திய மொழி களைக் கற்க விரும்பிய மக்களுக் கெதிராகவும் அம் மொ ழிகளைக் கற்பிக்கப் புகுந்த பல்வேறு மக்கள் இயக்கங்க ளுக்கெதிராகவும் கண்டிப்பான போக்கினைக் 60 it inrart பிரிட்டிஷார் தமது ஆதிபத்திய உரிமைகளுக்கு இத்தகு இயக்கங்கள் சவால் விடக் கூடியனவாக வளரவிடாது நசுக்கியும் வந்துள்ளனர். ஆனல் இன்று தம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பு ஆபிரிக்க, இந்திப் மொழி களைப் பாடசாவே மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டு மென்ற எண்ணம் அரசினரிடத்தில் ம்ே லோங்கி நிற்கி நிறது.
இத் தீவுகளில் வாழும் ஏறக்குறைய 15,000 தமிழ்ச் சந்ததியினர் ஹிந்துஸ்தானிய மொழியையும் ஆங் கில மொழியையுமே பேசுகின்றனர். தமிழ் மொழி Լ1ւգ-ւն படியாக மறைந்து வருகிறது. இன்றும் வயது முதிர்ந்த தமிழ் மக்களிடையே தமிழ் மொழி பேச்சு வழக்கிலுள் ள ஒரு மொழியாக இருக்கிறதாயினும், இன்றைய தலே முறையினரான தமிழ்ச் சந்ததியினருக்குத் தம் முன்னேர் கள் எங்கிருந்து வந்து குடியேறினர்களென்பது tJÁfö)Gum. தாம் ஓர் புகழ் பெற்ற மொழி, கலை, கலாச்சார, பண்பா டின் சொந்தக்காரர்களென்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை. ஆளுல் இவர்களில் அநேகரை ஏனைய மக்களிடமிருந்து பிரித்து அறியக்கூடியது அவர்களின் தோற்றமும் பெயருமேயாகும். பல் வேறு சமூகத்து டனும் கலந்தும் தனித்தும் வாழும் இம் மக்களில்

Page 11
16
சந்ததியினரிடையே தமிழ்ப் பெயர்கள் உருமாறிய நிலை யில் ஏராளமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. உதா gr GSOT DIT 35 :-
ஆர்முகம், சிஞன், கன்னை, மூன் g-n lé), சிவோத்திறி, சீரோயாயினி, கம்லா, கந்சாமி, சரவதி,
போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். மிக அண் மைக் காலம்வரை இத்தீவுகளில் தமிழ்மொழியைப் பேசக் m. - Lu ஏராளமானுேர் இருந்ததாகவும் இராஜாதே சிங்கு நல்லதங்காள், அரிச்சந்திர புராணம், போன்ற பல நாட கங்கள் மேடையேறி வந்துள்ளனவென்பதையும் இந்நாடு களுக்கு விஜயம் செய்த வண. தனிநாயக அடிகளார் மூலம் நாம் அறிய முடிகிறது. இது மட்டுமல்ல, ! J Gi) வேறு மேற்கிவுதிய நாடுகளில் குடியேறிய் தமிழ் மக்க ளுக்கும் ரினிட்டாட் தீவு தான் ஒரு கேந்திர ஸ்தான நாக நின்று; மொழி, கலை கலாச்சாரப் பரிவர்த்தனைக் குப் பயன் பட்டுவந்துள்ளது என்பதை நாம் அறியும் G3L_u mt ği , . Gô) u (tj560) LD கொள்ளாமல் இருக்க முடியுமா?
இத் தமிழ் மக்கள், காலஓட்டத்தின்மு ன் தாம் பிறந்த தாயகத்திலிருந்து முற்ரூரிகத் துண்டிக்கப்பட்ட நிலை யில், முன் பின் அறிமுகமில்லாத பல இன மக்கள் வாழும், முற்றும் புதிய சூழ் நிலேயில் எவ்வளவு காலந் தான் தம் மொழியைக் காப்பாற்றியிருக்க (tp Lգ եւ ձb?. அன்று இந் நாடுகளில் குடியேறித் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதைச் சிந்தித்தால் இப்படியான ஒரு நிலை எம் தமிழர்களுக்கு ஏற்படக் கூடியதொன்றுதான் என்பதை எவ ரும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இருப்பினும் தமிழர்தம் பண்பாடுகளும் கெய்வ வழிபாட்டு முறை க ளும் இன்னமும் இங்கே மறைந்து விடவில்லை. மாருக; மொழியைவிட மத நம்பிக்கை, பண்பாடு போன்றவற் றையே இங்குள்ள தமிழர் இறுகப் பற்றிக் கொண்டு வாழ்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்துக் கோவில்கள் உள்ளன. முக்கியமாக இங்குள்ள சோ விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள த மி ழர் வசிக்கும் "மெட்ராஸ் செட்டில் மெண்ட்" (சென்னைக் குடியேற்றம்) என்ற பகுதியில் பெரிய சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. 1910-ம் ஆண்டளவில் தமிழகத்தில் கோபிச் செட்டிப்பாளையம் என்ற பகுதியிலிருந்து ரினிட் டாட்டுக்கு குடியேறிய சேஷய்யர் என்ற அர்ச்சகர் குடும் பம் இங்கு கோவில் பூசகர்களாக இன்னமும் வாழ்த்து கொண்டிருக்கிருர்கள். திருமணம், மரணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ப் பண்பாட்டு முறையிலேயே தமி ழர் சந்ததியினரால் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. மலர்கள் பாவிப்பது, தாலி அணிவது போன்ற தமிழ் மங்கையரின் பல்லாண்டு கால தடை முறைகளை இங்குள்ள தமிழ்ப்பெண்கள் இன்னமும் கடைப் பிடித்து வருகிருர் கள், வட இந்தியர் இங்கு ஏராளமாக வாழ் வதால் அவர்கள் மொழி பண்பாடு ஆதிக்கமும் தமிழ

17
சிடையே திணிக்கப்பட்டிருப்பது கண் கூடு. உதாரணமாக இங்குள்ள தமிழ்ச் சந்ததியினரிடையே ஹிந்தி மொழி அறி முகமாகியுள்ளது போன்று அவர்கள் தாய் மொழியான தமிழ் அறிமுகமாகவில்லை. ஹிந்தி பேசும் ஏராளமான தமிழர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. இப்படி வாழும் இந்த தமிழ்ச் சந்ததியினர் எதர் காலம் என்ன? இதற்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் போன்ற அமைப்புகளும் முக்கி யமாகத் தமிழக அரசும் என்ன செய்ய உள்ளன என் பதில் தான் இவர்களை நாம் "தமிழர்” என்றபட்டியலில் சேர்ப்பதா அன்றி "உலகப் பிரஜைகள்’ எனக் கைகழுவி விடுவதா என்பது தங்கியுள்ளது.
டோபேக்கோ, ரினிட்டாட் தமிழர்கள் இன்று அர சாங்கத்தின் முக்கிய பதவிகளில் எல்லாம் இடம் பிடித் துள்ளனர். தனியார் துறைகளிலெல்லாம் முன்னேறி பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிக்கிறர்கள். முன்னுள் ரினிட்டாட் வர்த்தக சபைத் தலைவர்; இன்றைய இந்தி யாவுக்கான af Gof_ _ fr: *  ைஹ க மி ஷ ன ர் சினன்; ரினிட்டாட் எதிர்க்கட்சியான ஜனநாயக விடுதலைக் கட்சித் தலைவர் டாக்டர் கிளிவோட் ராமச் சந்திரன், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் தமிழ்ச் சந்ததியினரே! கரும்புச் செய்கையில் ஆரம்பத்திலீடுபட்ட தமிழர் படிப்படியாக நெற் செய்கை யிலும், உணவு பயிரிடுதலிலும் ஈடுபட்டனர். தமிழர்கள் தாம் வாழும் மண்ணை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அந்த மண்ணையே பொன்னக மாற்றிக் கtrட்டக் கூடி யவர்கள் என்பது வரலாற்று உண்மை! இன்று சினிட் டாட் அரசுக்குத் தேவையான நெற் சாகுபடி முழு வ துமே இவர் களதும் மற்றும் இந்தியரதும் கைகளிலே தங் கியுள்ள தொன்றே இதற்குப் போதிய சாட்சியாகும்.
கல்வி கற்ற வட இத்தியர்களும் தமிழர்களும் இன்று தம் முன்னேரின் தாயகமான இந்தியாவுடன் தொடர்பு கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறர்கள். தமிழக அரசு இதற்காவன செய்து அவர்களைத் தமிழர்க ளாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டியது தலையாய கடமையாகும். இதற்கு உலகத் தமிழர் பாது காப்புக் கழகம் அமைப்பதொன்றே வழியாகுமென்று கூறிக் கொண்டு கரிபியன் கடல் தீவுகளில் இன்ணுெ ன்றன மாட்டினிக் தீவுக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன்"

Page 12
மாட்னிக்திவுத் தமிழர்கள்
நி0 நாட்டில் இன்று நம் தமிழ் மொழி நாளுக்கு நாள் நசுக்கப்பட்டு, சிதைக்கப் பட்டு, சாகடிக்கப் பட்டு வருவது கண் கூடு வெளியுலகத் தமிழர்கள் தொடர்பும் நாசுக்காகத் துண்டித்து விடப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பெரும்பான்மை மக்களின் மொழியான சிங்களம் தமி ழர் தம் வாழ்வில் அன்ருடம் திணிக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர், வித்தியானந்தன் அவர்கள் கூறியது போல இந்த நிலை இப்படியே தொடர்ந்து நீடிக்கு மானுல் இன் னும் 50 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி இலங்கையிலிரு ந்து முற்ருசவே மறைந்து போய் விடக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. இதனை மறுப்பவர்கள் ரினிட்
டாட், மாட்னிக், குவாட்லோ ப், பீஜி, மொறிசியஸ், தாஹித்தி, நியூ கலிடோனியா, கயான தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை நினைவு கூரல் வேண்டும். ஒரு னத்
தை அழிக்க வேண்டுமானல் உயிரான அதன் மொழியை அழித்தால் போதுமானது என்ற எதேச்சாதிகார ஆட்சி யாளரின் சித் தாந்தத்துக்குத் துணை போகம் நம் தமிழர் க ளில் ஒரு பகுதியினர், மேற்படி நாடு சளின் சரித்திரம் தரும் அரிய படிப்பினைகளே ஈண்டு உணரல் வேண்டும் , சென்ற பக்கங்களில் ரினிட்டாட் வாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை அவதானித்தோம். இப்போ மாட்னிக் தீவுத் தமிழர் பற்றிக் குறிப்பிடலாமென விழைகிறேன்,
பிரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்ட இத்தீவு, அட் லாண்டிக் மாகடலில் கரிபியன் கடலில் காணப்படும் பல் வேறு தீவுக் கூட்டங்களில் ஒன்ரு கும், இத்தீவுக்கான தமிழர் புலப்பெயர்வு 1853ம் ஆண்டுக்கும் 1859 ம் ஆண் டுக்குமிடையில் ஏற்பட்டதாய் சரித்திரக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்தும், பிரெஞ்சு ஆதிக் கத்திற்குட்பட்டிருந்த புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான தமிழர் புலம் பெயர்ந்த னர். கரிபியன் பிரதேசத்திலுள்ள தீவுக் கூட்டங்களில் மாட்னிக்குக்கு மட்டுமே பெருமளவில் தமிழர் குடிபெயர்ந் துள்ளனர். 1882-ம் ஆண்டளவில் மாட்னிக் தீவில் ஏறக்குறைய 13,000 தமிழர்கள் வாழ்ந்ததாக அறியமுடி கிறது. இங்கு பின்பு ஏற்பட்ட ஒரு கொள்ளை நோயால் இத் தொகையில் கணிசமான பகுதித்தமிழர்கள் மாண் டொழி ந்தனர்.
இங்கு தமிழ் மொழியும் தமிழ்க் கலை கலாச்சார ங்களும் ஆரம்பகாலத்தில் மிகவும் உன்னத நிலையில் இரு ந்திருக்கின்றன. தமிழ்ப் பாடசாலைகள் திறக்கப்பட்டுத் தமிழ்ச்சிறுவர் சிறுமியர்க்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. கும்மி தெம்மாங்கு போன்றவை பண்டிகைக் காலங்களில் இடம் பெற்றதுடன் பல்வேறு நாடகங்களும்

9
அவ்வப்போது மேடையேறியுள்ளன. தைப் பொங்கல் புது வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற தமிழர் தம் விசே ட நாட்கள் மாட்னிக் தீவில் விடுமுறை நாட்களாகப் பிரகடனஞ் செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக பொங் கற் பண்டிகையின் போது தமிழர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென 1858-ம் ஆண்டு வெளியிடப் பட்டதோர் அறிக்கை தெரிவிக்கிறது.
சமயத் துறையிலும் பல் வேறு ஆக்கபூர்வ மான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பாஸி பொயின்ட், மைக் குயூபா, லா மொன்றி ருே, சென்ட் மாறி, ரினிட், சென்ட் பெயறி போன்ற இடங்களில் 7 க்கு மே ற் பட் ட இந் து க் கோ வி ல் க ள் இன்று முள்ளன. இந்த இடங்களில் ஒர் காலத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கிராமங்கள் அமைத்துக் கொண்டு தமிழ் கலை க லா ச் சா ர ங் கள் செழிக்க சிறப்புடன் வாழ்த் திருக்கிருர்கள். மாட்னிக், குவாட்
லோப் தீவுகளிலுள்ள கிராமங்களின் அமைப்பு இன்றும் தமிழக கிராம அமைப்பு முறையைப் போன்றே உள்ளன என்கிருர் கனடா ஆராய்ச்சி அறிஞர் ஜீன் பினயிஸ்ட் அவா கள . -
இப்படிச் சீரும் சிறப்புடனும் சிறிது காலம் வாழ் ந்த தமிழர், காலப்போக்கில் பிரெஞ்சு ஆட்சியினரின் மொழி, கலை, கலாச்சாரத் திணிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கினர். தாய் நாடான தமிழகத்தி லிருந்து முற்ற கப் பிரிக்கப்பட்டு எது வித தொடர்பும் காள்ள முடியாமல் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்த இத் தமிழர்களிடையே தமிழ் வழக்கிழந்து போயிற்று. பிரெஞ்சு மொழியையும் பிரெஞ்சை அடிப்ப டையாகக் கொண்ட திசை மொழிகளையும் பேசவும் கற்க வும் வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். பலர் கிறீஸ் தவ மதத் சிற்கு மதம் மாறியதோடு அன்னிய கலே கலாச் சாரத்தாலும் பிணைக்கப்பட்டனர். ஆபிரிக்க மக்களுடனும் ஏனைய இனத்தவரோடும் ஏராளமான தமிழர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இப்படியாக இன்று மாட்னிக் தீவில் வாழும் தமிழ்ச் சந்தியினரை அவர்களின் தோற்றத்தாலும் சிதைந்த நிலையிலுள்ள அவர்தம் பெயர் களாலும் மட்டுமே அடையாளங் காண முடியும். இவர் களில் பலர் விவசாயிகளாகவும், தோட்டக்குத்தகைக் காரர்களாகவும், வியாபாரிகளாகவும் வாழ்கிறர்கள்.
குடிபெயர்ந்த தமிழர் சந்ததியினரான இத்தமி ழர்களுக்குத் தம் முன்னேர்கள் வந்து குடியேறிய தமிழகத் தைப் பற்றியோ உலகப் புகழ் பெற்ற ஒரு மொழிக்குத் தாம் சொந்தக் காரர்களென்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை. அது மட்டுமல்ல! தம் பெயர்கள் கூடத் தமிழ் மொழிப் பெயர்களெனத் தெரிந்திராத தமிழர் கள் ஏராளம்! பாவடி (பார்வதி) மெளத்தமா (முத்தம் மா) கோவிண்டின் (கோவிந்தன்) கையிட்டன் கோவல் சாமி, நாராயோ மின், காப்பீன், வீறையில் (வீராஜி) மவுத்து சாமி (முத்துசாமி) போன்ற சிதைந்த தமிழ்ப்

Page 13
20
பெயர்களைக் கொண்ட இவர்கள், தம் தமிழ் மொழியை மறந்து விட்டாலும் தம் முன்னேர் கடைப் பிடித்து வந்த சில தமிழருக்கேயுரிய பழக்க வழக்கங்களை அதிர்ஷ்டவச மாக இன்னமும் கை விட்டு விடவில்லை. திருமண விழா தொடங்கி இறப்புவரை உள்ள அனைத் து நிகழ்ச்சிகளிலும் தமிழர் பண்டு தொட்டுக் கடைப்பிடித்து வந்த பாரம் பரிய முறைகள் ஊடுருவி நிற்கின்றன. இறை வழி பாட்டு முறைகளிலும் எதுவித மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. இம்மட்டல்ல; ஒரு சில வயது முதிர்ந்த சமிழர்களிடை யே இன்னமும் தமிழைப் பேசக் கூடிய வர் சள் காணப்படு கிருர்கள். அம்மக்களால், தாம் சிறு வயதில் நடித்த ராம நாடகம், இரணிய நாடகம், அல்லி அரசாணி மாலை, குற வஞ்சி போன்றவற்றையும் சிறுவயதில் தமிழ்ப்பாட சாலை சளில் பயின்ற கும்மி, சோலா ட்டம் போன்றவற்றை யும் நடித்தும் பாடியும் காட்ட முடிகிறது στοότ θαφή இத்தீவுகளுக்குச் சென்று வந்துள்ள பேராசிரியர் வண. தனி 15 Tu-J Js அடிகளார். தாம் காரில், தமிழ்ச் சந்ததியினர் வாழும் பகுதிகளுக் கூடாகப் பிரயாணஞ் செய்த போது தமிழருக்கே உரிய முருங்கை மரங்கள் வழிகளில் பூத்துக் குலுங்குவதைக் கண்டதாகவும் அடிகளார் குறிப் பிடுகிருர் .
சமிழன் எங்கு சென்று குடியேறினலும் அவனின் சில சிறப்1ான குண இயல்புகளும் அவனுடன் சென்று அந்நாடுகளில் குடியேறிவிடும். கறிக்குத் தேவையான முருங்கைக் காய் பெற முருங் ைசி மரத் தையே கடல் கடந் ஆயிரம் மைல்களுக்கு அப்ப7 ல் அன்றைய தமிழன் (6 لسا في எடுத்துக் கொண் டுசென்றதைச் சிந்திப்போமானல் நாமக் கல்லார் பாடிய 'தமிழன் என்ருேர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்ற கவிதையின் பொருளை நன்கு சுவைத்து ரசிக்க முடிகிறது. இம் மட்டல்ல! அந் நாட்டு மொழியில் நம் தமிழ்ச் சொற்களான குழம்பு, கறி, மாங்காய், என்பன கூட "கொலம்பு' வாக, கறி லா"க "மாங்கி" யாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்ப் பெண்கள் அணியும் ஒரு வகைத் தலைப்பாகைக்கு * மெட்ராஸ்" என்ற பெயர் வழங்கப் பட்டு வருகிறது. இன்று இத்தீவில் ஏறக்குறைய 15,000 தமிழ்ச் சந்ததியி னர் வாழ்ந்துவருகிருர் களென அறிகிறுேம் . இது போன்றே குவாட்லோப் தீவிலும் ஏறக்குறைய 12,000 தமிழ் மக் கள் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. இக்கரிபி யன் பிரதேசத்தில் உள்ள அன்ரில்ஸ் தீவுக் கூட்டங்களி லும் தமிழ் மக்கள் வாழ்வதாகத் தெரியவந்துள்ள போதி லும், இவர்களின் எண்ணிக்கை பற்றியோ இவர்களின் இன்றைய நிலை பற்றியோ இன்னமும் ஆராயப் l JL
தமிழ் அறிஞர் உலகம், காலம் தாழ்த்தாது கடல் கடந்த நாடுகளில் வாழும் இத்தமிழர்கள் விஷய மாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண் டும் என்ற வேண்டுகோளுடன், நிறவெறி தலைவிரித்தா டும் தென்ன பிரிக்காவுக்கு அடுத்து உங்களை அழைத்துச்
செல்கிறேன். ”

தென்னுயிரிக்காத் தமிழர்கள்
அதோ ஒரு பஸ் வந்து கொண்டிருக்கிறது. விழுந் தடித்துக் கொண்டு அதில் ஏற ஒடுகிருேம். பஸ் நுழை வாயலில் ஒரு அறிவிப்பு:
வெள்ளையர்களுக்கு மட்டும் !
அதிர்ச்சியடைந்து பின்வாங்குகிருேம். அடுத்த பஸ் வண்டி வரும்வரை, பக்கத்தேயுள்ள பஸ்தரிப்புக்கு அண்மையில் போய் நிற்போமே என்று அங்கு செல்கிருேம். “கறுப்பர்கள் இங்கே வர முடியாது! அதோ கருப்பர்கள் பஸ் தரிப்பு. அங்கே போ !”
இப்படிப் பொரிந்து தள்ளுகிருள்-ஏலவே அங்கு நா யொன்றுடன் நின்று கொண்டிருந்த வெள்ளைக் கீாரச் சீமாட்டி ஒருத்தி! திணறிப் போகிருேம்--இதே தடா புது உலகமாக இருக்கிறதே யென்று! இறைவன் படைத்த உலகத்திற்கே போட்டியாக இன்னுமோர் உலகத்தினைப் படைக்க முற்பட்டார்களாம் அத்தக் காலத்து அசுரர்கள்! புராணங்களிற் படித் திருக்கிருேம். இன்றும் இதே "அசுரர் கள் இப்படியான "நவீன உலகைச் சிருஷ்டிக்க முற்பட் டிருக்க ருர்கள். இறைவன் படைத்த பலவற்றையும் பிரி த்தான் மனிதன். ஆனல் சிலவற்றை அவனுல் பிரித்திட முடியவில்லை. தனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மகா சக்தி தோன்றியபோது, அங்கே தனது வர்க்க பேதத்தைப் புகுத்தமுடியாமல் அவன் திணறினுன்-திண்டாடினுன்ஈற்றில் தோற்றே போய்விட்டான்!
வெள்ளைத் தோலையும் கறுப்புத் தோலையும் மிக மிகச் சுலபமான முறையில் ஒப்பிட்டுப் பார்த்து வெள் ளைத் தோல் உயர்ந்த வர்க்கத்தாருக்கே உரிய தொன் றென ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானித்து விட்ட இந்தத் "தோலர்கள் வேறு யாருமல்ல! ஜனதாயகம் பற்றி வாய் கிழியக் கத்தும் பிரிட்டிஷ் காரணின் அப்பனன தென்ன பிரிக்க, வெள்ளையனே அவன் இருண்ட கண்ட மெனப்பல் லாண்டுகளாக வர்ணிக்கப் பட்டு வந்த இந்தப் "புண்ணிய பூமி" க்குக் கூட "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கோட்பாட்டில் பண்டு தொட்டு ஊறித் தோய்ந்த நம் தமிழ் வின் குடிபெயர்ந்து சென்ருன் என்ருல் சரித்திரத்தில் அது ஒர் அபூர்வமான சம்பவம்தான்! சந்தேகமே இல்லை! தென்ஞபிரிக்காவுக்கான தமிழர் புலப் பெயர்வு 1860-ம் ஆண்டளவில் ஆரம்பமாகியதெனலாம். தென் ஞ பிரிக்காவின் ‘அன்னியர்கள்" என்று ஒரு காலத்தில் நிற வெறி கொண்ட வெள்ளையர்களால் கணிக்கப்பட்ட இம் மக்கள், இன்று தம் தளராத முயற்சியாலும் தன்னலமற்ற நாட்டுப்பற்றினலும் விசுவாசமான உழைப்பாலும் அந

Page 14
22
நாட்டில் நிரந்தரமாக வாழும் ஒரு இனமாக-தென்னு பிரிக்க மக்கள் தொகையின் ஒரு அங்கமாக அதே வெள்ளை யர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தென்ன பிரிக்க சரித் திரத்திலே தம் சுவடுகளை ஆழமாகவும் அழுத்தமாக வும் பதித்துவிட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகத்திலிருந்தும் மற்றும் பம்பாய் கல்கத்தா போன்ற பகுதிகளிலிருந்தும் கரும் புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனக் கப் பலேறிய இந்திய மக்கள் சந்த கியினர், ஏறக்குறைய 6 இலட்சம் பேர் இன்று தென்னு பிரிக்காவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 6 லட்சம் இந்தியருள் முக் காற் பங்கினர் தமிழர்கள் . அதாவது ஏறக்குறைய நான்கு லட்சம் பேர் தமிழ் மக்கள். சமய அடிப்படை யில் இந்தியர்கள் நிலை பின் வருமாறு:-74 விழுக்காட் டினர் இந்துக்கள். 16 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 7 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். ஏனையோர் 3 விழுக் காட்டினரா கும். இப்படிப் பல மத, மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைக் கொண்ட இந்த இந்திய வம்சா வழி மக்கள் இத்தியாவில் வாழும் தம் இன மக்களை விட மிக வும் அன்னியோன்னியமாக, ஒரே குடும்பப் பிணைப்புடன் தென்ன பிரிக்காவில் இன்று வாழ்கிருர்களென்ருல் அவர் கள் வாழும் சூழ் நிலையும் அவர்களை எதிர்நோக்கும் ஒரே விதமான பிரசனைகளும்தான் காரணமாகும்.
தென்ன பிரிக்காவில் இன்று வாழும் இந்திய மக் களுள் .ெரும்பான்மையோர் நேத்தால் , டிரான்ஸ்வால் ஆகிய இரு மாநிலங்களிலுமே அதிகமாக வாழ்கிறர்கள். கரும்புத் தோட்டங்களில் கூலிகள்ாக ஆரம்பத்தில் வேலை செய்த இந்திய மக்கள், காலப்போக்கில் தகரங்களை நோக்கி நகர்ந்து வியாபாரிகளாக, டாக்டர்களாக, ஆசி ரியர்களாக, வழக்கறிஞர்களாக, தொழில் நுட்ப அறிஞர்
களாகக் கடமையாற்றி வருகின்ருர்கள். முக்கியமாக, மொத்த இந்திய வம்சாவளி மக்களில் 35 விழுக்காட்டி னரான வட இந்திய மக்கள், வர்த்தகத் துறையிலே வெள்ளையரையே அதிரவைத்துள்ளனர். இவர்களின்
இந்த முன்னேற்றத்தின் தாக்கம் தமிழர்கள் 2 - Jس அனைத்து இந்திய மக்களையுமே அரசியல் ரீதியாக அதள பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. இதனை அடுத்த பக்கங்களில் விரிவாக ஆராயலாமென நினைக்கிறேன். தென்னு பிரிக்காத் தமிழர்களின் இன்றைய நிலையை அணுகு வதன்முன் இங்கு வாழும் முழு இந்திய வம்சாவளி மக்க ளையும் எதிர்நோக்கும் பொதுப் பிரச்னைகளை ஆராயப் புகுவது சிறப்புடையதாகும்.
1814-ம் ஆண்டிலிருந்து பிரிட்டனின் ஆட்சிக் குட்பட்டிருந்த இந்தத் தென்ன பிரிக்கா அரசு 1910-ம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் அங்கத்துவம் கொண் ட சுதந்திர நாடாகியது. காட்டுமிராண்டித் தனமான நிற வெறிக் கொள்கையால் பின்னர் காமன்வெல்த் கூட்டிலிருந்து வெளியேறிய இந்நாடு, 1961-ம் ஆண்டு தன்னை ஓர் சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது. கேப், நேட்டால், டிரான்ஸ்வால், ஆரன்ஸ் பிறி ஸ்டேட் ஆகிய நான்கு மாநிலங்களைக் கொண்ட

23
தென்னு பிரிக்கா ஒரு சமஷ்டி ஆட்சி நாடாகும். வெள்ளை யர், கறுப்பர் என்ற இரு பெரும் பிரிவு மக்களைக் கொண் ட இந் நாட்டில் காணப்படும் அனைத்துமே இந்த இரு இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களான கறுப்பர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக நிலப் பங்கீட்டு முறையை எடுத்துக் கொண்டால் சிறுபான்மை யினரான வெள்ளையர்களுக்கு நாட்டின் இயற்கை வளஞ் செறிந்த 87 சத விகித நிலம் ஒதுக்கப்பட்டிருக்கையில் அவர்களை விட நான்கு மடங்கு ஜனத்தொகையில் கூடிய கறுப்பர்களுக்கு பண்படாத, விவசாயத்துக்கோ ஏனைய பொருளாதார முன்னேற்றத்திற்கோ வசதியில்லாத 13 சத விகிதமான நிலமே ஒதுக்கப்பட்டுள்ளது. நகரங்கள் கிராமங்கள் அனைத்தும் கறுப்பர் பகுதி வெள்ளையர் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வணக்க ஸ்தலங்களில் தனித் தனிப் பிரிவுகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பிரிவினைகள் கடற்கரையில் கறுப்பர் பீச் ; வெள்ளை யர் பீச் ஏன் ரயில் நிலையங்களில் கூட கறுப்பருக்கு தனி யான மேடை வெள்ளையருக்குத்தனியான மேடை . இப்படி எங்கும் எதிலுமே தென்னு பிரிக்க அரசு தன் இன வெறிக் கொள்கையை விட்டு வைக்கவில்லை. ஆனல் இதிலுமோர் நகைப்புக்கிடமான விஷயமென்னவெனில் சிறுபான்மை யினரான இவ் வெள்ளையர்களுக்கிடையே கூட ஆங்கில மொழி பேசும் பிரிட்டீஸ் பரம்பரையினர் ஆபிரிக்கன்ஸ் என்ற ஒருவகைமொழிபேசும்டச்சுமக்கள் பரம்பரையினர் எனஇருவ கைப் பிரிவினரும் இந்த இருபிரிவினருக்கு மிடையில் கூட வெறுப்பும் குரோதமும் நிறைய உண்டு. இருப்பினும் , கறுப்பர்களான தென்ன பிரிக்கப் பழங்குடி மக்களையும் இந்தியரையும் வெறுப்பதிலும் அவர்களை ஒதுக்கிவைப்பதி லும் இந்த இரு பிரிவு வெள்ளையர்களுக்கிடையிலும் பரந்த ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலவுகின்றது. கறுப்பு இனத் தவர்கள் என்ற பிரிவில் ஐரோப்பிய ஆபிரிக்க இரத்தத் தொடர்புடைய கலப்பு இனத்தவர், ஜ"சலு, நீக்ரோ போன்ற இனத்தவர், இந்தியர், பாகிஸ்தானியர் அடங் குவர். ஆட்சி மொழிகளாக இங்கு ஆங்கிலமும் ஆப்பிரிக் கன்ஸ் மொழியும் அரசோச்சுகின்றன.
பலவிதமான கஷ்டங்களுக்கும் சித்திரவதைகளுக் கும் கட்டுப்பாடுகளுக்குமிடையே வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கை நிலையில் 1893-ல் ஒரு பெரும் மாற்றம் ஏற் பட்டது. இந்த ஆண்டில்தான் தென்ன பிரிக்காவுக்கு மகாத்மா காந்தியடிகள் ஒரு குஜராத்திப் பிரமுகரின் வழ க்கு விஷயமாக வந்து சேர்ந்தார். இந்தியர்கள் படும் கஷ்டங்களை கண்டு மனம் மிக வருந்திய அவர். தாம் வநத நோக்கத்தினையும் மறந்து தம் மக்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தார். நேட்டால் இந்தியக் காங்கிரசையும் டிரான்ஸ்வால் பிரிட்டிஸ் இந்திய சங்கத் தையும் அமைத்து இந்திய மக்களனைவரையும் திரட்டி ஆட்சியாளரின் இன வெறிச் சட்டங்களுக்கெதிராகச் சத்தியாகிரக இயக்கங்களை நடத்தினர். இக்கால கட்டத் தில் அவரது இந்த இயக்கங்களுக்கு ஏனைய இந்திய சமூ கத்தவரை விடத் தமிழரும் தென்னிந்திய மக்களுமே பெரி தும் ஆதரவுதந்து போராட்டத்தில் குதித்தனர். மகாத்மா

Page 15
24
காந்தியடிகள் பின்பு இத் தமிழர்கள் பற்றிக் குறிப்பிடு கையில் "தமிழர்களிடமிருந்தே கடவுள் நம்பிக்கையையும் தியாகத்தையும் நான் கற்றுக் கொண்டேன். தென் ஆபி ரிக்காவில் நான் பங்கு கொண்டு நடத்திய சத்தியாக் கிரகப் போராட்டங்களிலெல்லாம் சிறை செல்லாததை ஒரு பெரும் அவமானமாகவே தமிழர்கள் கருதினர்' எனச் சொல்லிப் போற்றியுள்ளார். 17 வயதான வள்ளியம் மை மாரிட்ஸ்பார்க் சிறையிலடைக்கப்பட்டுச் சித் திரவதை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களுள் ஒரு வளாகும். சிறை யில் தேக நலங்கன்றியமையால் விடுவிக்கப் பட்ட இவளே மகாத்மா காந்தியடிகள் அணுகி 'வள்ளியம்மை நீ சிறை சென்றதற்காக வருந்து கிமு யா?" எனக் கேட்டபோது வள்ளியம்மை கூறிய வார்த்தைகள் மகாத்மா காந்தியடி களையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. அவள் கூறி னுள் "வருத்தமா? இல்லவே இல்லை பாபுஜி! எனது மக் களுக்காக இன்னுேரு தடவை சிறை செல்ல வேண்டுமா ஞலும் செல்லத் தயார்!’’ இப்படிக் கூறிய சில நாட்களுக் குள்ளே சிறை தந்த கடும் ஜ"ரத்தினுல் உயிர்துறந்தாள் வள்ளியம்மை, இது போன்றே உயிர்த் தியாகம் செய்த நாகப்பன், நாராயணன் போன்ருே?ரின் தியாக மனப் பான்மை மகாத்மா காந்தியடிகளைத் தமிழரிடத்திலும் தமிழ் மொழியிடத்திலும் அளவுகடந்த பா சவுணர்வை வளர்க்க உதவியதெனலாம். இப்படியான உயர்ந்த குணத் தினையும் தியாக மனப்பான்மையையுங் கொண்ட தமி ழர்களின் மொழியைக் கற்க அவர் பெரிதும் விரும்பினுர் . இந்தியர் நலன்களைக் கவனிக்கவும் அவர்கள் தேவைகளை அரசி னர் க்கு உணர்த்தவும் "இந்தியன் ஒப்பீனியன்" என்ற ஆங்கில வார ஏட்டினைத் தொடக்கினர். இது தமிழ் மொழியிலும் பிரசுரமாகியது. 1915-ல் மகாத்மா காந்தி யடிகள் தாயகம் திரும்பும் வரை தென்னு பிரிக்கா இந்தி யர்களின் மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்.
கறுப்பர்கள் என்ற பிரிவில் இந்தியரே பொரு ளாதாரத்தில் மிகவும் முன்னேறியுள்ளனர். நான் முன்பு குறிப்பிட்டது போலக் குடியேறிய வட இந்திய Loäsair வர்த்தகத் துறையிலும் கைத் தொழில் துறையிலும் முன் னுேடிகளாக, வெள்ளையர்களோடு போட்டி போடும் நிலை க்கு வளர்ந்துள்ளது; அரசியல் ரீதியாகத் தென்னுபிரிக்கா முழு இந்திய சமுதாயத்தையுமே பாதித்திருக்கிறது! வெளி நாட்டுத் தமிழர்கள் வரலாற்றில் ஈடு பாடு கொண் டவர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையைச் சுட் டிக் கர்ட்டுவது தவிர்க்க முடியாதது. தமிழர்கள் குடி யேறிய நாடுகளில் அவர்களுக்கெதிரான துவேஷ மனப் பான்மை பரந்தளவில் தலையெடுக்கக் காரணமானவர் களே ஒரு சில தமிழகப்பண முதலைகளும் மிகமுக்கிய மாக வடஇந்திய மக்களும் தான்! அலைகடலுக்கு அப் பால் பல நாடுகளிலும் குடியேறிய இந்தியர்கள் அத்தந்த நாடுகளை வளம்படுத்தச் செய்திட்ட தியாகம் பற்றி எந் தச் சரித்திராசிரியனும் போற்றினுல் நியாயமான அந்தப் பெருமையெல்லாம் போய்ச் சேரவேண்டியது ஏழைப் பாட்

25
டாளிகளாக-கூலிகrாக, இன்றும் அங்கு வாழ்ந்து கொ ண் டிருக்கும் சாதாரணத் தமிழருக்கு என்றல் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல! தன் இரு கரங்களையும் சலியாத உழைப்புத் திறனையுமே மூலதனமாகக் கொண்டு கப்பலேறிய தமிழன் தரிசு நிலங்களையெல்லாம் பொன் கொழிக்கும் பூமியாக்கிக் காட்டினன். பணத்தைக் கொ ண்டு பணத்தை ஈட்டப் பணப்பைகளுடன் புறப்பட்ட வட இந்திய மக்கள் பன்னத்தையும் பெருக்கினர்கள் அத்து டன் முழு இந்திய சமுதாயத்தையுமே, சுரண்டற் காரர்கள்", * கள்ள மார்க்கட் காரர்கள்" என்ற நாம கரணங்கள் சூட்டப்படவும், ஒதுக் கப் பட்டு, ஒடுக்கப்பட்டு, விர ட்டியடிக்கப் படுவதற்கும் காரண கர்த்தாக்களாயினர் தாம் ஈட்டிய செல்வத்தைப் է 16Ն) வழிகளிலும் தம் தாய் நாட்டுக்கனுப்பத் தொடங்கிய இப்பணக்கும்பல்க ளின் செயல் இயல்பாகவே சுதேசி மக்களைக் கலவரம் அடைய வைத்தது. இது வியப்புக்குரிய தொன்றல்ல! மிக மிகச் சிறிய தொகையினரான வட இந்திய மக்களினதும் ஏனைய பெரும் வர்த்தகரினதும் இந்த ஆதிக்கம் நம் இலங்கையிற் கூட இலை மறை கன யாகச் செறிந்து காணப் படுவதை ஆழமாக நோக்குபவர்களால் இலகுவாக அவ தானித்திட முடியும்.
சமுதாயத்தின் மேல் மட்டத்தில் சொகுசானபகட்டான வாழ்க்கையை நடாத்தி க் கொண்டிருக்கும் இந்தப் "பாஸ் போட்" பிரமுகர்கள் தாம் வாழும் நாட் டில் ஒர் காலேயும், தம் தாயகத்தில் மறு காலையும் வைத் துக் கொண்டு அடிக்கடி ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருக்க; அலை கடலையே தம் வாழ் நாளில் காணுத ஏனைய சாதாரண இந்திய வம்சாவளி மக்கள் தாம் வாழும் நாடுகளில் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, எதுவித உரிமை க ரூமற்ற நிலையில் பழி பாவங்களைச் சுமந்து கொ ண்டு வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள்-இல்லை அழிந்து கொண்டிருக்கிருர்கள் ! உலகில் இந்தியர் குடியேறிய பல் வேறு நாடுகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான் இன்ன மும் நீடித்து வருகிறது. எனினும் இந்தச் சுரண்டற் காரர்கள் இன்று இனங்கண்டுபிடிக்கப்பட்டு ஏனைய சாதாரண இத்திய வம்சாவளி மக்களால் ஒதுக்கப் பட்டு வருகிருர்கள். உதாரணமாக மலேசியாவில் ஒரு தமிழன் புதிதாக இன்னுமொரு தமிழனைச் சந்திக்க நேர்ந்தால் முதற் கேட்கப்படும் கேள்வி 'நீங்கள் ஒரு காலா? இல்லை இர ண்டுகாலா?" என்பதாக இருக்கும். சிரிப்பூட்டும் ஆனல் சிந்தனைக்குரிய இக்கேள்வி மூலம், இந்த ஒடு காலிகளை வெறுத்தொதுக்கும் மனப்பான்மை இன்று அம் மக்க ளிடையே தலை தூக்கி வருவதை நம்மால் அவதானிக்க முடிகிறது! -
இவற்றையெல்லாம் விரிவாக இங்கு நான் குறிப் பிடுவதற்குக் காரணமுண்டு. மிகச் சிறுபான்மையினரான இத்தப் பணக்காரக் கும்பலின் செல்வாக்கு முழு இந்திய சமுதாயத்தையுமே, நிலை குலையச் செய்திருப் பதை ஏனைய நாடுகளை விடத் தென்னுபிரிக்காவில் இலகுவாக இன்று

Page 16
26
காணக் கூடியதாக இருக்கிறது, குடியுரிமை நிராகரிப்பு, சுதந்திர நடமாட்டத்துக்குத் தடை, விரும்பிய இடங்க ளில் வியாபார ஞ செய்யத் தடை, விரும்பிய இடங்களில் வசிக்கத் தடையென ஆயிரக் கணக்கான அநியாயச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிருர்கள் தென்னபி ரிக்கா ஆட்சியாளர்கள். நேத்தால் மாநில அரசு இந்த வித இன ஒதுக்கற் சட்டங்களை அமுல் நடத்த டிரான்ஸ் வால் மாநில அரசும் இதனைப் பின்பற்றிக் கொண்டது.
ஒரேஞ்பிறி ஸ்டேட் மாநில அரசு ஒருபடி முன்னேறி முழு இந்தியர்களுக்குமே கதவடைப்புச் செய்து விட்டது. வெள்ளையர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில்
அமைந்து விட்ட இந்தியர் கைத் தொழில், வர்த்தக நிறு வனங்களையும் குடியிருப்புக்களையும் மூடி விட வேண்டு மெனவும், மூடப்படும் இவற்றைக் கறுப்பர்கள் வாழும் ஜன நடமாட்டமற்ற இடங்களில் நிறுவும் படியும் வற்புறுத் தும் அரசு காட்டுமிராண்டித் தனமான இக் கொள்கை யால் இந்தியர்களின் பொருளாதார அரணை உடைத்து எறிந்து விடலாமென எண்ணுகிறது. இத்திட்டங்களின் உள் நோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ள இந்திய மக்கள் இதற்காக மனம் தளர்த்து விடாது கிடைக்கும் சந்தர்ப் பங்களை நன்கு பயன்படுத்தித் தென்ன பிரிக்க சமுதாயத் தில் தமது நிலையை வலுப்படுத்திவருகிருர்கள். தமக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலவினுல்தான் பொது எதிரி யான வெள்ளையரைச் சமாளிக்க முடியுமென்பதை இன்று எல்லா இந்திய மக்களும் ஒப்புக் கொள்கிருர்கள்.இத்திய மக்கள் தென்னுபிரிக்காவுக்கு 'அன்னியர்' எனவும் இவர்களைத் தென்னபிரிக்காவின் நிரந்தரக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பிரச்சாரஞ் செய்து வந்த வெள்ளையர், இன்று தம் கொள்கையில் மாற்றங் காட்டியிருப்பது மகிழ்ச்சிகரமான தோர் திருப்பமாகும். இந்த மனமாற்றம் சர்வதேச அரங்கில் இன்று நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட தொன் றென்ற லும், தமிழர்களும் ஏனைய இந்திய சமூகத்தினரும் நாட்டு அரசியலிலும் தனியார் துறைகளிலும் காட்டும் திறமை யும் விசுவாசமான உழைப்பும் முக்கிய காரணங்களாகும். வெள்ளையர்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்குமிடையே யுள்ள நிலை இப்படியிருக்க, தென்னுபிரிக்க சுதேசி மக்க ளான ஆபிரிக்கர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் உள்ள தொடர்பு வெள்ளையரின் திட்டமிட்ட பிரித்தா ளும் சதி காரணமாகப் பயங்கரமான ஒரு கட்டத்தை அடைந்து வருகிறது. "சமுதாயங்களின் தனித்தனி முன் னேற்றம்" என்ற ஆட்சியாளரின் புதிய கொள்கைத் திட் டம், எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் நிலையைத் தோற் றுவித்துள்ளது. ஆபிரிக்க மக்களை அலட்சியம் செய்வதி லுள்ள ஆபத்தினையும் பல்வேறு சுதந்திர ராஜ்யங்கள் தென் ஆபிரிக்காவைச் சுற்றித் தலையெடுத்து வருவதையும் இங்
குள்ள இந்தியத் தலைவர்கள் நிதானமாக அவதானித் : க் கொண்டு வருகிருர்கள். சுதந்திர வேட்கை கொண்ட ரு தன்னுபிரிக்காச் சுதேசி மக்களுக்கும் வெளளையர்களு கு
மிடையே எதிர்காலத்தில் எப பட்ட சூழ்நிலை வாகுமென்பதும் திட்ட வட . க் க கூடிய ன்றல்ல; எனவே மாறி : நி ை. கெ

27
நிஃயையும் மாற்றி அமைத்துக் கொள்வதே , , , اگر கென்ன பிரிக் காத் தமிழர்களதும் ஏனைய இந்திய சமுதா யத்தினரதும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் சுபீட் சத்திற்கும் நன்மை தர முடியும்.
இனி இங்கு வாழும் ஏறக்குறைய 4 லட்சம் த மிழ் மக்களின் நிலை பற்றிக் கவனிப்போம். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன், தம் கணவருடன் தென்ன பிரிக்கா சென்ற பிரபல தமிழ் எழுத்தாளர் லஷ்மி" அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க் கண்டவாறு அன்று அங்கு தாம் கண்ட காட்சியை வர்ணிக்கிருர்:-
'பேசிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தோம்" ஐந்து ஏக்கர் பூமியின் நடுவே அழகான சிறு கோபு ரத்துடன் கட்டப்பட்டிருந்த வைத்திய நாத ஈஸ்வரர் ஆலயம் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருக் தது. கோவிலின் முன்னுல் எழுப்பப்பட்டிருக்கும் து வஸ்தம்பத்தின் அருகே வந்து நினருேம் அதற்கு ஒரு சில அடி தூரத்திலிருந்த ஒரு சிறு அறையின்
வாயற்படியில் ஐரோப்பிய உடை தரித்த ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தார். எங்களைக் கண்ட தும் கையிற் பிடித்திருந்த சிகரட்டை வீசி எறி
ந்து விட்டு, தோட்டத்துக் குழாயில் கையைக் கழுவிக் கொண்டு விரைந்தோடிவந்து ஒரு கும்பிடு போட் டார், 'இவர் தான் கோவில் பூசாரி" என்று அறி முகஞ் செய்த நண்பர் எங்களைக் கோவிலுள்ளே அழைத்துச் சென்ருர் . . .
"...உற்சவம் ஊர்வலம் எல்லாம். இங்கே உண்டு போல் இருக்கிறதே" என்று கேட்டேன் மெல்ல! "கோவில் மதிற் சுவருக்குள்ளிருக்கும் தோ ட்டத்தைச் சுற்றிப் பல முறை சுவாமி உற்சவ கால த்தில் அன்ன வாகனத்தில் வலம் வருவார். வெள் ளை க்காரர் வசிக்கும் பிரதேசத்தில் கோவில் அமை ந்து விட்ட கோளாறினல் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடியவில்லை" என்ருர் என் கண வர். இதற்குள் அவசரமாக ஒரு வென்ளைப் புடவை யைத் "தனது நிஜார் மீது வேட்டி போலச் சுற்றிக் கொண்டு பூசாரி உள்ளே விரைந்து வந்தார் பூஜை வேளையின் போது வேட்டியும் இருக்க வேண்டு மென் பது கோவில் நிர்வாக நிபந்தனைகளிலொன்ரு கும்.
'... . . . . . . . . . சண்பகமும் மல்லிகையும் பூத்துக் குலுங் குகையில் கடவுளுக்குக் காட்டு மலர் மாலைகளைச் சூடி யிருக்கிறீர்களே ஏன்? என்று என்னுள் எழுத்த கேள்வியை அடக்க முடியவில்லை, கேட்டு விட்டேன் "என்ன செய்வது அப்பூக்களைக் கொண்டு அழகாக மாலை கட்ட இங்கு யாருக்கும் தெரியாது. எனவே காட்டு மலர்களைக் கோணி ஊசி கொண்டு இலகு வாகக் கோர்த்து மாலையாக்கியிருக்கிருேம்" என்ஞர் என் நண்பர்

Page 17
28
தமிழ் நாட்டிலுள்ள பொறையார் என்னும் ஊரில் பிறந்து தென்னு பிரிக்கா சென்று தமிழ்ப் பணியாற்றிய திரு. சோ, விருத்தாச்சலம் அவர்கள் இங்கு அந் நாட்க ளில் "விவேக பானு' என்ற ஒரு தமிழ்ப் பத்திரிகையை மிகவும் துணிச்சலோடு நடாத்திப் பெருமை பெற்றர். தென்னபிரிக்காவில் தமிழ் மொழியைப் பரப்ப இவர் தம் சொந்தச் செலவிலேயே தமிழ்ப் பள்ளிக் கூடம் வைத்துத் தமிழ்போதித்திருக்கிருர், தென்ன பிரிக்காத் தமிழர்களிடை யேஒரளவு தமிழ் மொழி இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது என்ருல்; அந்தப் பெருமையில் பெரும் பங்கு அறிஞர் விருத்தாச்சலம் அவர்களையே சாரும். எனினும் வாழும் சூழ்நிலையும் உத்தியோகத் தேவையும் தம் தாய் மொழியை விடுத்து ஆங்கிலத்தையே நாடும் நிலைக்கு இளஞ்சந்ததியி னர் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
ஆங்கிலம் காலகதியில் இவர்கள் வீட்டு மொழியாகவும் இடம்பிடித்துக் கொண்டதில் வியப்பில்லை. இந்த நிலையி லும் தம் மொழி, கலை, கலாச்சாரங்களை மீண்டும் வளர் க்க வேண்டுமென்ற ஒரு உத்வேகம்-ஒர் எழுச்சி, இம் மக் கள் மத்தியில் முன்னெருபோதுமில்லாத வகையில் இன்று தலையெடுத்துள்ளது. "நேத்தால் சைவ சித்தாந்தச் சங்கம்" "டர்பன் திருக்குறள் சங்கம்", "பீட்டர் மரிஸ் பேக் தமிழ்ச் சங்கம்", "ரான்ஸ் வால் பிரிட்டோரியா தமிழ் வீக்," "லா டிம் தமிழ்ச் சங்கம்" போன்றன தமிழ்ச் சந்ததியினரின் இந்தப் புத்தெழுச்சியின் விண்ச்சல்களாகும். தென்னு பிரிக்காத் தமி ழர் ஒன்றியம் என்ற அமைப்பு திரு. செல்லப்பக் கவுண் டர் என்ற பெரியாரின் தலைமையில் வியத் தகுசாதனைகள் பல புரிந்து வருகிறது. இக்கழகத்தின் முயற்சியால் 35 அரசினர் பாடசாலைகளில் அரசின் உதவியின்றி, பாடசாலை கள் முடிந்து 1 மணித் தியால நேரம் தமிழ்க் கல்வி போதி க்கப்பட்டு வருகிறது. இந்த இலவசத் தமிழ் வகுப்புகளில் ஏராளமான தமிழ் மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்று வருகிறர்கள். தென்ன பிரிக்காவில் தமிழர்கள் ஏராளமாக வாழும் நேட்டால், டிரான் வால், கேப் மா நிலங்களின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் இயக்கங்கள் முன் னணியிலிருந்து செயலாற்றி வருகின்றன. தான்கு தமிழர் கள் ஒர் இடத்தில் ஒன்று கூடி விட்டால்-அது உலகின் எந்தக் கோடியாக இருப்பினும்-அங்கே ஒரு தமிழ்ச் சங் கம் தோன்றுவது தவிர்க்க முடியாத தொன்று! இது நம்மவருக்கு இரத்தத்தில் ஊறப்போன-கை வந்த கலை! இது போலவே கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடா தென்பதும் தமிழர் வழிவந்த (t கோட்பாடு! தம் தாய் மொழியைக் கற்பதில் இருக்கும் ஆர்வத்தை விட இங்குள்ள தமிழர்கள் சமயத்துறையில் ஒரு LGமேலாகவே ஈடுபாடு காட்டி வருகிருர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல் வேறு சூழ் நிலைகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள், ஒரு வரை ஒருவர் சந்திக்க வும், மனந் திறந்து பேசவும், மற்றவர் சுகநலன்களை அறி ந்து ஆறுதலடையவும் இக் கோவில்களையே ஏற்ற இட மாகக் கொண்டுள்ளனர். நேத்தாலில் மாரியம்மன் கோவில், சுப்பிரமணியர் கோவில், வைத்திய நாத ஈஸ்வரன் கோவில் என்பன பிரபலமானவை. இங்குள்ள தமிழ்

29
வைதீக சபை 30 இலட்சம் செலவில் 3 மாடிக்கட்டி டம் ஒன்றை எழுப்பி ஆத்மீகத் துறையில் அரும் பணி யாற்றி வருகிறது. 1963-ம் ஆண்டு அதன் பொன்விழாக் கூட மிகவும் தடல்புடலாகக் கொண்டாடப் பட்டது "சிவ மன்றம்" என்ற அமைப்பு நாட்டில் பல்வேறு கிளைக ளுடன் இயங்கி வருவதுடன் அதன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை, சமயச் சொற் பொழிவு முதலியன வாரா வாரம் நடை பெற்று வருகிறது. இப்படியான நிகழ்ச்சி களில் ஏராளமான தமிழர்கள் பங்கு பற்றி உற்சாக மூட்டி வருகிறர்கள். பொங்கல், தீபாவளி, புது வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகள் எல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்தி பூத்தாற்போல் இங்கே திரையிடப் படும் தமிழ்ப்படங்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்று வசூலில் சாதனையை நிலை நாட்டி வருகின்றன. தென்ன பிரிக்காவில் ஏனைய இந்திய சமூகத்தவரை விடத் தமிழர்கள் மிகப் பெரும்பான்மை யாக வாழ்ந்தாலும், இந்தியருக்கென ஆரம்பிக்கப்பட்ட சலிஸ்பேக் பல்கலக் கழக, கீழைத்தேய மொழிப் பிரி, வில், தமிழ் கற்பிக்கப்படாதது ஒரு பெருங்குறையாகும். மிக மிகச் சிறுபான்மையினரான வட இந்திய மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இந்தி, சமஸ்கிருதம், அரபி மொழி என்பன கற்பிக்கப் பட்டு வருகையில் தமிழ் மொழிப் பிரிவில் கல்வி போதிக் + த் தமிழ்ப் பேராசிரியர்கள் கிடைக்க வில்லையெனச் சமாதானம் சொல்லும் நிலை நீடி. த்து வருகிறது. இந்தக் குறை காலப் போக்கில் நிவிர் த்தி செய்யப்படும் என்று எதிர்பார்ப்போம்!
தென்ஞ பிரிக்காத் தமிழ் மக்களால் பல்வேறு கஷ்டங்களுக்கும் மத்தியில் ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் தமிழ் ஜோதி, மேலை நாட்டுக் கலாச்சார வெள்ளத்தால் அள்ளுண்டுபோகாமல் காப்பாற்றப்படவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு விரைவாகச் செயற்பட முடியுமோ அவ்வள வுக்கு நாம் அம் மக்களைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் இன்றைய தென்னுபிரிக்காத் தமிழ் இளைஞர்களிடையே ஏற் Lட்டுவரும் மேலை நாட்டு நாகரீகமோகம் முழு இனத்தையு மே பாதிக்கக் கூடிய கட்டத்தில் வந்து கொண்டிருக்கிறது!

Page 18
பீஜித் தீவுத் தமிழர்கள்
1970. D ஆண்டு அக்ரோபர் மாதம் 10-ம் திகதி! புனித நாளான விஜயதசமி பீஜி நாட்டுச் சரித்திரத்தில் அது ஒரு பொன்ஞள்!!
நியூஸிலாந்து விமானங்கள் பேரிரைச்சலுடன் ஆகாயத்தில் பறந்து சென்று பூமாரி பொழிய, "நாம் என்றும் ஒன்ரு க வாழ்வோம்’ என்ற சுலோகம் பொறித்த கொடிகள் "அல்பேட் பார்க்" எங்கணும் காற்றில் அ ைசந் தாட, ஐம்பதினுயிரத்துக்கு மேற் பட்ட மக்கள் பூங்காத் திடலில் குதூகலித்து ஆரவாரஞ் செய்ய, பிரதமர் ரத்து கமிஸி மாரா வும், க வர்னர் ஜெனரல் சேர். ருே பேட் போஸ் டர் அவர்களும் கையொலியெழுப்பி மகிழ, விருத்தினர்கள்
நாட்டின் பாரம்ப சிய t II F7" @Öy" l f) fT 6Är * கவா" அருந் கி மயங்க, இங்கிலாந்து முடிக்குரிய இளவரசர் சால்ஸ் சுதந்திரக் கொடியை ஏற்றி விடுதலைப் பிரகடனத்தை வாசித்துக் கையளிக்க, பிரிட்டீஸ் பொது நல நாடுகள் மன்றத்து 29-வது தேசமாக, ஐ. நா. சபையின்
127வது அங்கத்துவ நாடாக மலர்ந்தது சுதந்திர சுந் திர பீஜி! சரியாக 96 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1874-ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 10-ம் திகதி பிரிட் டனின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பவளத் தீவுகள், பஸிபிக் மா கடலின் வலிய அலைகள் ஆரத் தழுவ, அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே, நியூஸிலாந்திற்கு வடக்கே அமைந்து, தென் பஸிபிக் கடற் பிரதேசங்களு க்சே, உரிய பாரம்பரிய அழகுடன், மலைகளும், சரிந்த குன்றுகளும் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் ரம்மிய மான சமதரைகளும், அச் சம தரை கணில் நாட்டின் முக்கிய ஏற்று மதிப்பொருட்களைத் தரும் கரும்பும், தெங்கும், ' நெல் வயல்களுமாகப் பொலிந்து பேரழகுடன் விளங்கு கின்றன. பவளப் பாறை, சுண்ணும்புப் பாறை, மணற்றி டர் ஆகியவற்றிலான 844-க்கு மேற் பட்ட இத் தீவுக் கூட்டங்களில் மக்கள் வாழ்வது 100 தீவுகளில் மட் டுமே! இவற்றில் பெரியவை வனிலிவு வற்றிலிவுத் தீவுகள். தலைநகர் சுவா! எரிமலை குமுறியதால் இத்தீவுக் கூட் டங்கள் தோன்றின என்பர். இதனுலோ என்னவோ இங்கு வாழும் பீஜி சுதேசிய மக்களுக்கும் இந்திய வம் சாவளி மக்களுக்குமிடையே எரிமலை போன்ற பிரச்சனைகள் பல அடிக்கடி தோன்றிக் குமுறிக் குமுறி அடங்கி வருகின்றன,

31,
அன்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப இத் தீவுக் கூட்டங்களுக்குச் சென்ற ஆங்கிலப் பாதிரி மார்கள், காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த சுதேசி மக்களிடையே வகை யாக மாட்டிக் கொண்டு பெரும் அவஸ்தைப் பட்டிரு க்கிருர்கள். பல பாதிரி மார்களை உயிரோடு வதைத்துச் சாப்பிட்டுத் தீர்த்த இம் மக்கள் அவர்களனிந்து சென்ற சப்பாத்துக்களைக் கூட விட்டு வைக்க வில்லை. Lu T 3i) மார்களின் உடலுறுப்புக்களில் அவையும் ஒரு பகுதி என எண்ணி அவற்றினையும் வேகவைத்து உரித்துச் go nr . * mr tř 35 GMT nr LD !
f
இயற்கை வளங்கள் ம்லிந்த இத்தீவுகளில் கரு ம்பு, தெங்கு, நெல் சாகுபடியை மேற் கொள்வதன் மூலம் பொருளாதார மீட்சிக்கு வழி காணல்; மெலி நேசியன், பொலிநேசியன் கலப்பு இனமான சுதேசி மக்க ளில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொன் ருெ?ழித்த பயங்கரக் கொள்ளை நோயைக் கட்டுப் படுத்தி முழு அழிவிலிருந்து
அந்த இனத்தைக் காப்பாற்றுவது இவையிரண்டும் பிரிட்டனின் முதல் கவர்னர் சேர், ஆதர் G3ées T L - 6ir அவர்களையும் அவருக்குப் பின் பதவி ஏற்ற ஏனேய
கவர்னர்களையும் எதிர் நோக்கிய இரண்டு முக்கிய பிரச் சனேகளாகும் பக்கத்து நாடுகளிலிருந்து கூலிகளைத் திரட்டாது, சுதேசி மக்களின் மொழி, கலை, கலாச்சார த்துக்கு முற்றிலும் புறம்பான, வேறு பட்ட மொழி, கலே, கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு இ ன மக்களை பீஜிக்குள் கொண்டு வகுவதன் மூலம், அம் மக்களின் சொந்த இன அபிவிருத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அவர்கள் விரும்பினுர்கள்.
* பீஜி இந்தியர்கள் பிரிட்டீஸ்காரனின் உற்பத்தி’. * பீஜிக்கு வேண்டாத பண்டம்" என வாய் கிழியக் கக் தும இன்றைய பீஜித் தலைவர்கள் பிரிட்டீஸ் காரன் அன்று தமது இனத்தைக் காப்பாற்ற மேற் கொண்ட இத்திட்டத்தை - இந்த மாபெரும் சேவையை மறப்ப தும் மறைப்பதும் ஒரு பச்சைத் துரோகமான செயல் எனக் காரசாரமாகக் கண்டிக்கிறது "பீஜி நேஷன்' என்ற ஆங்கில வார இதழ்! இந்தியாவில் உத்தரப்பிர தேசத்திலிருந்து பெருமளவிலும் தமிழகத்திலிருந்தும் 1903-ம் ஆண்டிலிருந்து குடியேறிய இந்தியர் இன்று பீஜி சுதேசிகளை விடப் பெரும் பான்மை இனமாகப் பல் கிப் பெருகி விட்டமைக்கு மூன்று காரண்ங்கள் தரப்படு கின்றன.
(1) இந்தியரிடையே அன்றும் இன்றும் திருமண மாகக் கூடிய வயதுள்ள பெண்கள் தொகை, (2) சிறு வயதிலேயே திருமணஞ் செய்யும் அவர்களது வழக்கம். (3) குழந்தைகளின் குறைந்த மரண விகிதம்.
இன்றையபிஜீயின் ஜனத்தொகை, இன ரீதியாகக் கீழ்க் கண்ட படி அமைகிறது.

Page 19
32
இந்திய வம்சாவளி மக்கள்:-2,63,000. பீஜி பூர்வ குடி மக்கள்:-2,20,000. வெள்ளையர் :-44,000 ஏனையோர் சீனர், பிஸிபிக் தீவு மக்கள், பல்வேறுகலப்பு இன மக்கள்:
இனரீதியாக ஏறக்குறைய சமபலமுடைய பீ யில் என்றுமே இந்திய வம்சாவளி மக்களுக்கும் சுதே மக்களுக்கும் ஆதிக்கப் போட்டி நிலவி வருகிறது. இங்கு
பெருமளவில் பண முதலீடு செய்துள்ள அவுஸ்திரேலி யர், நியூஸிலாந்துக் காரர் உட்படப் பிரித்துக் கெடுக் குங் கலையில் கைதேர்ந்த பிரிட்டீஸ்காரர்களனைவரும்
இந்த ஆதிக்கப் போட்டியில் பீஜி சுதேசிகள் பக்கமாகச் சார்ந்து நின்று தம் நலன்களைக் கவனித்து வருகிருர்கள்.
"உங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டு வாருங்கள்; பின்பு சுதந்திரம் வழங்குவதைப் பற்றிப் பேசுவோம்" எனச் சாட்டுப் போக்குக் காட்டி வந்த
பிரிட்டிஸ்காரர்கள். இந்திய மக்களிடையே ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்திய் சம்மேளனக் கட்சித் தலைவர் திரு. எஸ். எம். கோ யா போன்றவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் சுதந்திரம் வழங்க வேண் டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். ஆளுக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் அரசியலமைப்பு ஏற்பட வேண்டுமெனப் போராடிய இந்திய சமூகத்தை மட்டந் தட்ட, நபருக்கு 4 வாக்குகள் என்ற கோஷத்தைக் கிளப்பி மிகவும் நாசுக் காக, ஆட்டக் காய்களே நகர்த்தித் தற்காலிக வெற்றி யை ஈட்டிய பிரிட் டிஸ் காரர் கொட்டம் பீஜியில் அடக் கப்படும் நாள் விரைவில் வந்து கொண்டிருக்கிறது என் பது மட்டும் உண்மை. சுருங்கக் கூறுவதாயின் அரசியல் திட்டம் என்ற கூண்டுக்குள் அடைக் கப்பட்ட, அடிபட்ட புலிகள் பீஜி இந்திய வம்சாவளி மக்கள்! இதுவே இன் றைய அவர்கள் நிலே!
பீஜிவாழ் தமிழர் பற்றி நான் நினைக்கும் போ தெல்லாம் தம் தள்ளாத வயதிலுஞ் சலியாது. தொண் டாற்றும் தமிழபிமானம் மிக்க திரு. அப்பாப்பிள்ளே அவர்களை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து போகி றேன். தமது நாட்டில் வாழும் தமிழர்கள் நிலையைப் பற்றி உலகத் தமிழர்கள் கவனத்தை ஈர்க்க, மறைந்து போய்க் கொண்டிருக்கும் தமிழ் மொழியின் ஆதிக்கத்தை மறுபடியும் ஆங்கே நிலை நிறுத்த அவர் பம்பரம் போல் சுழன்று பணியாற்றி வருகிமுர் . 'மித்திரன்' என்ற பத் திரிகையைக் கல் அச்சு மூலம் பதிப்பித்து தமிழ் உலகெங் கணும் அனுப்பி வைப்பதோடு தமிழர் உட்பட இங்கு வாழும் , தென்னிந்திய மக்கள் 90,000 பேரையும் 'தென் னிந்திய சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பின் கீழ்க்கொ ண்டு வந்து தமிழ் மொழியின் பால் ஈடு படுத்த அவர் சேய்யும் தொண்டு போற்றுதற்குரிய தொன்ரு கும். இது போலவே 'சங்கத்தின் தந்தை' எனப் போற்றப் பட்டு வரும் சாது குப்புசுவாமி அவர்களின் சேவை பீஜி சரித்தி ரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டி யதொன்று ! தென்னிந்திய மக்களிடையே கல்வித் துறை யில் மறுமலர்ச்சியும் விழிப்புணர்ச்சியும் தோன்றக் கார

33
ணமான இப் பெரியாரின் முயற்சியால் இ ன் று சங்கம் 50-க்கும் மேற்பட்ட ஆரம்பப்பாடசாலைகளையும் 10-க்கு மேற்பட்ட உயர்தரக் கல்லூரிகளையும் நிர்வகித்து நடாத்தி வருகிறது. "சங்கம்" என்ற தமிழ் மாத வேனி யீடு இங்கு குறிப்பிடக் கூடிய தமிழ்ப்பணியாற்றிய பத்தி ரிகையாகும். இதன் ஆசிரியர் சுவாமி ருத்திரானந்தா அவர்கள். பாரதிவிழா தொடக்கம் கந்த சஷ்டிவரை அண் த் து இலக்கிய, சமயக் கொண்டாட்டங்களும் கூட்டுப் பிரார்த்தனே சகிதம் த வருது கொண்டாடப் பட்டுவரும் பீஜி தென்னிந்திய மக்களிடையே கலப்பு 1nணங்கள் ஏரா ளமாக நிகழ்கின்றன. உதாரணமாக இன்றைய கூட்டு அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பணியாற்றும் திரு. சுபுபா ரெட்டியவர்கள் பிறப்பால் தெலுங்கராயினும் தமிழ் வர்த்தகர் ஒருவர் மகளேத் திருமணஞ் செய்து கொண்டு தமிழ் விழாச்களிலும் கூட்டுப் பிரார்த்தனைக லும் தீவிரமாகப் பங்கெடுத்து வருகிறர். சுருக்கமாகக் கூறுவதாயின் பீஜி தென்னித்தியர் அனே வருமே இன்று ஒரே குடும்பமாக்-ஒரே இனமாகத் தமிழ் மொழியின் பால் பிணைக்கப் பட்டு விட்டனர். தென்னிந்திய மொழி களுள் தமிழ் மொழியொன்றே இங்கு ஓரளவுக்கேனும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது இதற்கொரு காரண மாக அமையலாம். முழு இந்திய சமுதாயத்துள்ளும் மூன்றில் ஒரு பங்கினரான இத் தமிழ்மக்களுக்கு இன்று எதிர் ' ப்பு எல்லாம் வட இந்திய மக்களிடமிருந்தே ஏற்படு வது இங்கு குறிப்பிடக்கூடியதொன்று. பத்திரிகைத் துறை தொடக்கம் அரசியல் வரை பல்வேறு துறைக விலும் பூரண ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் மறை முகமாகத் தம் மொழியான இந்தியையும் தம் கலே , கலாச்சாரங்சுளையும் தமிழர் பால் திணிப்பதிலும் அவர் களது எஜமானர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வ திலும் தீவிர ங் காட்டிவருகிருர்கள். தமிழ் மொழிடியை ஆரம்பப்பள்ளிகளில் கற்பிக்கக்கூடிய தமிழாசிரியர்கள் தட்டுப்பாடு இங்கு பலகாலமாகவே நீடித்துவருகிறது. இதனுல் தமிழ் மொழியை இன்றையதலேமுறையினருக்கு இலவசமாகக் கற்பித்துத் தரப் பல இயக்கங்கள் முன் வந்தும் கைகூடா மற் போய் விட்டது. எனவே இங்கு இந்தி மொழி தெரிந்த, தமிழ்மொழியை எழுத, வாசி க்கத் தெரியாத தமிழர்கள் தொகை பெருமளவிற் காணப்படுகிறது. இந்த நிலயினே எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இங்குள்ள தலைவர்க ளிடையே தீவிர யாகத் தலை தூக்கியுள்ளது. தம் மொழி கலை, கலாச்சாரங்களைக் காப்பாற்றப் பீஜி சுதேசி மக்களின் தலைவர்களேயே பெரிதும் நம்பி இருக்கும் தமிழர்கள் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் தமிழ் ஆசிரியர் களேத் தத்துதவும்படி தமிழக அரசை வலியுறுத்தி வருகிருர்கள். தமிழகத்தில் தடை பெற்ற 2-வது உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டின் போதுங் கூடப் பீஜீயை பிரதிநிதித்துவப் படுத்திய இந்திய ஹைகமிஷனர் மனைவி திருமதி. முருகேசன், இந்த நிலயினை இடித்துக் காண்பித்து பீஜியில் தமிழை வாழ வைக்கும்படி உருக்க மிாக வேண்டிக் கொண்டார். இதற்கு இன்று வரை எது விதமான நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாய்த் தெரிய வில்லை.

Page 20
34
"தமிழ் நாட்டில் மட்டும் தமிழை வளர்த்து என்ன காணப்போகிறீர்கள்? பீஜித் தமிழர்களைக் கை கழுவி விடுவதுதான் உங்கள் தோக்கமா?" எனத் தமிழக அர சைக்காரசாரமாகக் கண்டிக்கும் . 'மித்திரன்' ஆசிரி யர் திரு. அப்பாப்பிள்ளையவர்களிடம் " என்ருே ஒரு நாள் உலகத் தமிழினம் தனது நிலையினை உணர்த்து விழித்தெழத் தான் போகிறது! அது வரை பீஜீயில் தமிழ் வாழ முடி ந்த வரை பணியாற்றுங்கள்' என நாம் வேண்டுவதை விட வேறு என்ன தான் செய்யமுடியும்?
கடல் போலும் எழுக! கடல் முழக்கம் போல் கழறிடுக தமிழ் வாழ் கென்று! கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க !
-பாவேந்தன் பாரதிதாசன்.
உலகெங்கும் சிறு பான்மையினராகப் பரந்து வாழும் தமிழர்மிளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் *உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம்’ ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோமிக்கையில் இரண்டு பட்ட கருத்துக்கே இடமில்லை. நீண்ட நாட்xளாகவே நான் இதுபற்றிய சிந்தனை யில் ஈடுபட்டுள்ளேன். தமிழக அரசின் தலைவர்களோ, அறி ஞர்களோ வெளிநாட்டுத் தமிழர்கள் பற்றி எதுவித அக்க றையும் கொண்டவர்களாக இல்லை. தெரிந்தவர்களும் பேசத் தயங்கி ஒடுங்கி இருக்கிருர்கள். ஈழத்திலிருந்து திரு. குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களால் தகுந்த நேரத் தில் இப்படி ஒரு குரல் எழுப்பப்பட்டிருப்பது கண்டு உண்மை யில் மனமிக மகிழ்கிறேன்
டாக்டர் சாலை இளந்திரையன்,
டெல்கி பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர்.
 

விளம்பரப் பகுதி
(தயவு செய்து எமது விளம்பரதாரர்களே ஆதரியுங்கள்)

Page 21
With best compliments of
ESTATE
3.JPPLES CORPORATION TED.
49, COLOMBO STREET,
KANDY.
Telephorie: 448, Kandy. Telegraris: "“ESCO''
உங்களுக்குத் தேவையான
பலசரக்குச் சாமான்களுக்கும்
FT 1r så I FT LHT gå i gyj, GjLi
கண்டி ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள். வே. கந்தசாமி & ஆறுமுகம்
162, ஹேதெனியா, வெரலகம.
கிளே பூரீ முருகன் ஸ்டோர்ஸ், வியாபாரிமூலை
பருத்தித்துறை, யாழ்ப்பானம்,
ஆடவரும் மங்கையரும் விரும்பும் அழகிய பிடவை வகைகள் பலவித வண்ண நிறங்களில் பெற்றுக்கொள்ள
யூட்டிலிட்டிஸ்
12, கொட்டுக்கொடெல்ல வீதி, கண் டி.

f மஹர ராரை எல 27, திருகோணமலை வீதி, கண்டி
எங்களிடம் சாப்புச்சாமான்களும், உத்தரவாதமான தங்கத்தினுல் பூசப்பட்ட
ந கை களு ம் குறைந்த விஃலயில் பெற்றுக்கொள்ளலாம்.
FOr I ISI T Embroidery Threads
Embroidery laces POPAR STORES
Brassiers
Hand Bags 20, First Floor Hair Wigs Central Market A II kinds of Wools KANDY
& Fancy Goods
Visit for your Textiles, Trimnings, Fancy Goods Cera. I mics & Toys
MAHANUWARA STORES
35, Dalada Vidiya,
KANDY.
Specially for the Elegant Toys
FOR TTLE EOY 8 GRL.f. POPULAR STORES
20, Central Market
KAMDY

Page 22
- - - - - umi -
νας Ιτ " KAN TEXTA LES First Floor. 184, New Central Market, KANDY
jor
FASHONABLE SA REES OF DISTINCTION
With best Compliments of
S. Meera Saibo & Bros.,
General Merchants
24, Castle Hill Street,
KANDY .
திறமான புகையிலே, சுருட்டு, பீடி வகைகள் சாப்புசாமான்களும், தொகையாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
S. P. முருகுப் பிள்ளை
கிளே! 423, மெயின் வீதி 142, கொழும்பு வீதி மாத்தளே. கண் டி.
யாழ்ரன் ஸ்ரோர்ஸ் 110, கொழும்பு வீதி, கண்டி, இங்கே கன கலிங்கம், வி.எஸ்.எஸ்.கே. சுருட்டுகள், சுத்தமான யாழ்ப்பான நல்லெண்னே, தீன் புகையிலே, மூக்குத் தூள் முதலியன
சகாயமான விலையில் பெற்றுக்கொள்ளலாம்,
 

அழகிய தங்க நகைகளுக்குச் சிறந்த இடம் ஆனந்தா நகை மாளிகை
85, செட்டியார் தெரு, கொழும்பு-11
சார தர ஸ் 64, கொழும்பு வீதி - கண்டி.
எல்லாவிதமான நவீன பிடவை வகைகக்கும் திறமான தையல் வேலைகளுக்கும் இன்றே விஜயம் செய்யுங்கள்
தொலை பேசி எண் 7007
மதார் றேடிங் எஜென்ஸி 24, யட்டிநுவர விதி - கண்டி. பிளாஸ்டிக் சாமான்கள், நூல்வகைகள், பெட்ருேமாக்ஸ் உதிரிப்பாகங்கள், பிறவுண் பேப்பர் பேக்வகைகள் சகாய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
எல்லாவிதமான ஆங்கில, ஆயுர்வேத மருந்துகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்குமிடம்
லங்கா பார் மஸி
66ff's is
39, திருக்கோணுமலை வீதி - கண்டி தந்தி: "SELLPLS" தொலே பேசி: 606 கண்டி

Page 23
விருந்தும் மருந்தும் மூன்றுவேளை என்பர்!
மூன்று வேளை மருந்தென்ருலும்
முப்பது வேளை மருந்தென்ருலும் நம்பிக்கையான ஒரு இடத்தில் வாங்குங்கள்!
பொது மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான
ஓர் இடம்:
மார்க்கட் மெடிக்கல் ஸ்டோர்ஸ் 200, மத்திய சந்தை, கண்டி.
தொலை பேசி: 7691
உங்கள் தேவைகளுக்கான பித்தளை, அலுமினியம், இணுமல், எவர்சில்வர் பொருட்களுக்கு
விஜயம் செய்யுங்கள் ! மகேஸ்வரி ஸ்டோர்ஸ் 34, கொட்டுகொடல்ல வீதி, கண் டி. தொலைபேசி: 7433
With best Compliments from:
LANKAMOTOR SPARES 46, Peradeniya Road, K AND Y
Importers & Distributors of Motor Spares & Accessories Telephone: 7539

பலவித டிசையின்களிலான
அழகிய காப்புகள், காதணிகள் நூல்வகைகள் மற்றும் பிளாஸ்டிக் சாமான் வகைகளுக்கு நியூ லக் கி ஸ்டோர் ஸ் 28, ராஜ வீதி, கண்டி,
பாடசாலை சிலேட்டுகள், பென் சி ல் க ள் ,
பிறவுண் பேப்பர் பேக்ஸ்
முதலியனவற்றுக்கு
லாலித்ஸ் இன்டஸ்ரீஸ்
29/249, நுவரவெல, கண்டி.
உத்தரவாதமுள்ள அழகிய தங்க நகைகளுக்குச் சிறந்த இடம்
O O e த. பரமுப்பிள்ளை அன் சன்ஸ் நகை அடைவு பிடிப்பவர்கள்
40, அம்பகமுவ விதி, கம்பளை,
கண்டி மாநகரில் . . . . அறுசுவை உணவுக்கும் சிற்றுண்டி வகைகளுக்கும் அருமையான உபசரிப்புக்கும் சிறந்த இடம் விஜயா கபே
225, கொழும்பு விதி, கண்டி,

Page 24
ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பாவனைக்குரிய தமிழ், ஆங்கில, சமஸ்கிருத, சிங்களப் புத்தகங்கள் மற்றும் சகல வாசிகசாலைப்
புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கும் இடம்
கலைவாணி புத்தக நிலையம் பாடநூற் பிரசுரிப்பாளர்
130, திருக்கோணமலை வீதி, 10, மெயின் வீதி,
கண் டி. யாழ்ப்பாணம். தொலைபேசி: 7196 V தொலைபேசி: 221 தந்தி: 'கலை வாணி"
கருணநிதி அன் கோ. 122, 124, கொழும்பு வீதி,
கண் டி.
தொலை பேசி எண்: 7537 கண்டி,
6 T fil 95 Gill. LD - -
சகல வித மான உணவு வகை கள், எண்ணெய் வகைகள், ! லக் கில ண் ட் " பி ஸ் கட் வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

அழுக்கைப் போக்கி, தூயவெண்மையையும் பிரகாசத்தையும் தரவல்லவை
கல்யாணி நீலசோப், சங்கு சோப்
அனுலா பார் சோப்
தயாரிப்பாளர்கள் லங்கா சவர்க்காரத் தொழிற்சாலை
க ண் டி.
With best compliments of
ANANDA CORPORATION
JEWELLERS
25, Kotugodella Widiya KANDY
With best Compliments of
Island Forage Stores
DEALES IN: Poultry & Cattle Food Fertilisers & Agro-Chemicals
205, Colombo Street, KANDY.

Page 25
இந் நூலாசிரியர் பற்றி.
· ஈழத்தமிழரின் அரசியல், இலக்கியம், சமய பொதுப்பனரி போன்ற பல்வேறு துறைகளுக்கு க நூற்றுண்டுக்கும் மேலாகத் தமது "ஈழகேசரி"ப் பது சிகை மூலம் அருந தொண்டாற்றிய அமரர் திரு. பொன்னேயா அவர்கள் பிறந்த ஊர் புகழ்பூத்த குர பசிட்டிப் பதியாகும். அன்று அவர் ஏற்றிவை இனக்கிய இபத்தை இவ்வூரில் வாழும் இளந்த முள் பினர் இன்றுக மங்காது பாதுகாத்து வருகின்றா ஆம் இலக்கியத்துறையின் பல பிரிவுகளிலும் நி " நின்று பிரகாசித்து ஒளிவிடும் பத்து எழுதி " ஒருங்கே இவ்வூரில் இன்று வாழ்ந்துகொசு குப்பது ஒரு தியப்பயணுகும் அந்தப் பத்து எழுது ாாகளில் திரு இரா, கனகரத்தினமும் குறிப்பி கூடிய பெருமைக்குரிய ஒருவர்
"அந்த மாாக அகரக்கும் வேங்யை விட்டுப் புதிய துறையில் திரு. இரா கனகரத்தின ஆசிரிாறு நூங்களே வெளியிட்டார் ஆதர து நீவேர்" "தமிழரசுத் தந்தை", அமார் யார் சிேகம் நினவு மலர்" என்பன அவை, இம் மூன்.
தாங்கர்டும் பவரால் பாராட்டப்பட்ட
திரு. இரா. கனகரத்தினத்தின் திங் பேறுை வதும் புகழமிக்கதுமான இன்னுேம் முயற்சி பாரிய : ப்ேபுதிதிக முயற்சியாகும். ஈழத்தமிழகன் அரசி வரலாற்றைத் "திரட்டி வெட்டி ஒட்டிப் புத்தகமாக்கி படி காட்சிகளில் ஈவத்து இவர் பெரும் புகழீட்டி வ இரா. இது ஒரு சாதாரண முயற்சியங்வா மாபெரு முயற்சி! இதைத் தமிழக, ஈழத்தமிழறிஞர்கள் ஒருங்ே வாழ்த்திப் பாராட்டியுள்ளனர்.
தமிழகத்திலும் ஈழத்திலும் மாத்திரமே து ழர்கள் வசிக்கிருர்கள் என்ற நினப்பில் வாழும் து ழர்களுக்கு 'அஃப்கடல்களுக்கு அப்பால் தமிழர்" என் இந்நூல் மூலம் பல புதிய செது: அறிமுக செய்கிருர் காகரத்தினம்,
புதிய முயற்சி நல்ல பனரி வேண்டிய தொண்டு!!
- இரண்பிகமண்" கனக, செந்திநாதன்
s ܩܕ̄ܡܨܚܕ̄ܡܩ̈ மே அட்ட கண்டி 741 டிாழும்பு திேயிலுள்ள ரெங்ால் பிரிண்டாவளி அடிப் பதிவு செய்யப்பட்ட
15 ___11 ܐܲܢܹܐ: [5_______ܢ
 

|- |- |- ---- . .|- |- |--|- . . |-! ---- |-... ) │ │ ├─ :: - |( ) - ... No so - () | () ( )