கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்ரநெற் தமிழ் 2000 (ஆய்வுரைத் தொகுப்பு)

Page 1

t

Page 2

இன்ரநெற் தமிழ் 2OOO
(ஆய்வுரைத் தொகுப்பு)
தொகுப்பாளர். வாகரைவாணன்

Page 3
முதற் பதிப்பு: 01. 06 , 1999,
SY UL. ; ஆய்வு இலக்கியம்
வெளியீடு ; கலை பண்பாட்டுக் களரி
(1) இல 1. யேசு சபை வீதி,
மட்டிக்களப்பு. m
霹實數為
உரிமை வண. பிதா, போல்
சற்குணநாயகம், யே ச
அச்சுப் பதிப்பு : ஜேஸ்கொம் அச்சகம்
மட்டிக்களப்பு
விலை e5ust 75/-

ஒரு தேசிய இனத்தின் இரு கண்கள்
இலங்கைத் தமிழினம் இன்று ஒரு தேசிய இனமாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் - ஒன்று - இவ்வினம் பேசும் பழமையும், இலக்கியச் செழுமையும் மிக்க தமிழ்மொழி - மற்றது - இவ்வினத்தின் பாரம்பரியப் பிர தே சம். (ஒன்றிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்கள்.) இவ்விரண்டில் ஒன்றைத்தானும் இலங்கைத் தமிழினம் இழந்து போகுமாயின் அதன் அஸ்தமனத்தை யாராலுமே தடுத்து நிறுத்திவிட முடியாது.
இக் கருத்தினை - தந்தை செல்வநாயகம் உருவச் சிலைத் திறப்பு விழாவில் (ஏப்பிரல் 26, 1999) இலங்கைத் தமிழ்த் தேசியத் தின் தந்தை" எனும் பொருளில் யாழ். பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ச. சத்தியசீலன் அவர்கள் மிகத் தெளிவாகவே தெரிவித்திருந்தார்.
'ஓர் இனத்தின் இருப்பிற்கு மொழியும் நிலமும் இரு கண் கள் போன்றவை. இரண்டில் ஒன்றைத் தானும் பலவீனமாக்குவது அச் சமுதாயத்தின் இருப்பையே அழிக்கும் முயற்சிக்கு ஒப்பானதா கும்." (தினக்குரல் - 11 . 95 - 99)
பேராசிரியரின் மேற்படிச் சொற்கள் இலங்கைத் தமிழர் ஒவ் வொருவரினதும் கண்களை அகலத் திறந்து விடக் கூடியவை என்ப தில் ஐயமில்லை.
பேராசிரியர் அவர்களைப் போலவே மட்டக்களப்பு கலை பண்பாட்டுக் களரியும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடாகவே "இன்ரநெற் தமிழ் 2900" எனும் இந்நூல் உங்கள் முன் தனது முகத்தைக் காட்டுகின்றது. ஐந்து ஆய் வுரைகளின் தொகுப்பான இந்நூல் ஓர் ஆரம்ப முயற்சியாகும்.
5 : 6 1999ல் மட்டக்களப்பு சாள்ஸ் கூடத்தில் கலை பண் பாட்டுக் களரியினால் நடத்தப்படவிருக்கும் "பயில் நெறி'யில் மேற்
A

Page 4
படி ஆய்வுகள் சம்பந்தப்பட்டோரால் நிகழ்த் த ப் படும். அதை. தொடர்ந்து கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
இந்நூல் வெளிவருவதில் பெரிதும் துணை நின்றவர்களில் முக்கியமானவர், களரியின் புரவலர் தவத்திரு போல் சற்குணநாயகம் யே. ச. அவர்களே. இதற்காக அடிகளாருக்கு களரி தன் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும் - நூலுக்கான ஆய்வுரைகளைத் தந்துதவியவர்கள் - நூலினைச் சிறப்பான முறையில் அச்சிட்டுத் தந்த மட்/ ஜெஸ்கொம் அச்சக முகாமையாளர், ஆளணியினர் அனைவர்க்கும் களரி தன் நன்றி உணர்வைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது.
வாகரைவாணன் கலை பண்பாட்டுக் களரி,
இல 1, யேசு சபை வீதி
மட்டக்களப்பு 14, 5, 1999.
V
 

2 sin Gamt.
மொழியும் அதன் பயன்பாடும்
rea
தமிழ் மொழியில் புதிய சொல்லாக்கம்
தகவல் யுகத்தில் - தமிழ்
மொழி பெயர்த்தல் - சில சிந்தனைகள்
*
வருங்காலத் தமிழ் P ع
(6ft. . . . . . . . .
auiTsportavoir
திருமதி நூபி வலன்ரீனா
பிரான்சிஸ்
சி. ஜெயசங்கரி
எல். ஏ. லேயோள்
GoF. Gununrasprintarnir
LLLLC0CLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
V

Page 5
(పో*************************ప్రోవి
: கிழக்கிலங்கையில் ۔ 穴 O g கல்வி வளர்ச்சிக்குக் 禁 禁 d. O is 灾 6T6) R * * 然 火 င္ကိုဋ် இயேசு சபைத் 火
துறவிகளுக்கு ལྕིའི་ 9 禁 இந் நூல் 禁
杰 காணிக்கை 禁
灾 ξε το "το ξε
سےة

மொழியும் அதன் பயன்பாடும்
வாகரைவாணன்
lDaoféidir பேசத் தெரிந்த ஒரு விலங்கு. இந்தப் பேச்சுத் திறனே ஏனைய விலங்குகளில் இருந்து அவனைப் பெரிதும் வேறுபட்டவனாக வைத்திருக் கின்றது என்பர் மானிடவியலாளர்.
மனிதன் பேசுவதற்கு ஏதுவாக இருப்பது அவனது மொழி மொழி என்பது தமிழில் சொல் என்றும் மொருள் தரும். இதனைப் பழந்தமிழ் நூல்களில் ஒன்றாகிய தொல்காப்பியம் ‘ஓர் எழுத்து ஒரு மொழி ஈர் எழுத்து ஒரு மொழி" எனும் நூற்பாவால் தெளிவுறுத்தும்,
மொழி அல்லது சொல்லின் அடிப்படையாக இருப்பது எழுத்து. எழுத்து ஒலியில் இருந்து எழுவது. தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவினையே தொல்காப்பியம் **கண் இமை நொடி என அவ்வே மாத்திரை" என்று குறிப்பிட்டுள்ளமை இதனை நன்கு உணர்த்தும், இன்னும், இலக்கணச் சுருக்கம் தந்த ஆறுமுகநாவலரின் எழுத்தாவது சொல்லுக்கு முதற் காரணமாகிய ஒலியாம் என்னும் விவரணமும் மேற்படிக் கூற்றை அரண் செய்து நிற்கும். எழுத்துக்கள் பிறக்கும் இடம் எட்டு என்று தொல்காப்பியம் இயம்பும். இதனை
உந்தி முதலா முந்து வளித் தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை இப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்' எனும் நூற்பாவின்கண் காணலாம்.
எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் எட்டு என்று தொல்காப்பியம் இயம்பினும் - எழுத்துக்களாலான சொற்கள் நாவில் இருந்தே வெளி வருகின்றமை கண்கூடு. இதன் காரணமாகவே ஆற்றல் மிகு பேச்சா சாளர்களை நாவேந்தர்கள் என்று அழைக்கும் வழக்கு ஏற்பட்டது. இதனை ஒட்டியே அறிவுத் தெய்வமாகிய சரஸ்வதிக்கு இந்துக்கள் நாமகள் என்று நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர்.
O

Page 6
மொழி - லத்தினில் LINGUA என்று குறிக்கப்படும். LINGUA என்னும் சொல்லுக்கு நாக்கு என்றும் பொருள். நாக்கில் இருந்தே சொல் பிறக்கின்றமையை LtNGUA எனும் சொல் நமக்கு உணர்த் துகிறது. ஆங்கிலத்தில் மொழி LANGUAGE எனப்படும். இச் சொல் LINGUA எனும் சொல்லில் இருந்தே எழுந்தது. எனவே இம் மொழி வழக்கில் இருந்து நாவே மொழியின் அரங்கமாகத் திகழ்கிறது என்பது வெளிப்படை.
மொழியை இரு வகைப் படுத்தலாம். ஒன்று பேச்சு மொழி மற்றது இலக்கிய மொழி. இவ் விரு வகைகளையும் திருந்திய மொழி (CLASSIC) திருந்தா மொழி (DIALECT) என்று குறிப்பிடலாம். இவ்விரு மொழிகளிலும் பேச்சு மொழி ஒன்றே மக்கள் மனங்களில் வாழும் வாய்ப்பைப் பெற்றது. இதன் காரணமாகவே இது உயிர் த் துடிப்பு மிக்கதாகவும் விளங்குகின்றது. அதே நேரம் இப் பேச்சு மொழி பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறு படுகின்றமையால் அவற்றிலிருந்து புதியதோர் மொழி தோன்றும் வாய்ப்பும் உண்டு. தமிழில் இருந்து மலையாளம் கிளைத்தெழுந்தமைக்கும் அத்தகையதொரு சூழ்நிலையே ஆதாரமாக அமைந்தது.
ஒரு மொழி பிரதேசத்திக்குப் பிரதேசம் மாறுபட்டு, வட்டார மொழியாக உருவெடுக்கும் நிலையிலேயே இலக்கணத்தின் முக்கியத் துவம் உணரப்படுகின்றது. இலக்கணம் என்பது இலட்சணம். இலட்ச 1ணம் என்றால் அழகு என்று அர்த்தம். இதிலிருந்து இலக்கணம் ஒரு மொழியை ஒழுங்கு படுத்த அல்லது அழகு படுத்த உருவாக்கப்பட்ட ஓர் விதி என்பது தெளிவாகின்றது ஆயினும், அழகுக்காக ஆக்கப்பட்ட இவ் விதி இலக்கியங்களை அசிங்கப்படுத்தி விடுவதும் உண்டு. வட மொழி வாணர்களில் ஒருவரான பேராசிரியர் சிவசாமி அவர்கள் தமது ' சமஸ்கிருத சிந்தனைகள்’ எனும் நூ லில் இவ்விதம் எழுது கிறார்,
இலக்கணமின்றிச் சிறந்த கவிதையை எ ந் த மொழி பிலும் இயற்றலாம். வடமொழியிலும் இலக்கணம் சோபையை (அழகினை அளிப்பதற்குப் பதிலாக கவிதையின் அழகைப் பாதித்தும் உள்ளது.
தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் பேராசிரியர் கூறும் தாக்கம் தாராளமாகவே உண்டு. காவியப் பெட்டகம் என்று வர்ணிக்கப்படும் கம்பராமாயணத்தில் அளவுக்கதிகமாகவே பயன் படுத்தப்படும் உயர்வு நவிற்சி அணி சில சந்தர்ப்பங்களில் செயற்கைத் தன்மையைச் சிருஷ் டித்து விடுவதைக் காண்கின்றோம்.
இலக்கணம், சில இலக்கியங்களை, பெரும்பாலான பழைய பண்டிதர் வித்துவான்களின் ஆக்கங்களை, அதிகமாகவே ஆக்கிரமித்து விட்டது
2.

என்பற்காக அதனை மொத்தமாக ஒதுக்கி விடுவது ஒரு மொழியின் கட்டமைப்புக்கு உகந்ததல்ல. மாறாக - அதில் காலச் சூழ்நிலைக்கேற்ப சில விட்டுக் கொடுத்தல்களை - நெகிழ்ச்சிகளை நாம் உருவாக்கலாம். உருவாக்க வேண்டும் நன்னூலார் தொல்காப்பியத்திலிருந்து சில இடங்களில் மாறுபடுகின்றமைக்கு அவர் வாழ்ந்த காலச் சூழ் நிலையே காரணம். ஒரு மொழியின் வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாததாகும்
இலக்கணம் எங்கேயோ இருந்து கொண்டு வ ர ப் பட்டு இலக்கியத்துக்குள் திணிக்கப்பட்ட ஒன்றல்ல. எள்ளில் இருந்து எடுபடும் எண்ணெய் போன்று இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் உருவாக் கப்படுகின்றது. இதனைப் பின்வரும் பாடல் இவ்விதம் சொல்கின்றது
இலக்கியமின்றி இலக்கணம் இன்றே எள்ளின்றாயின் எண்ணெயும் இன்றே. எள்ரிைன்றெண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்
இப் பாடலின் கருத்தினையே நன்னூலார் -
இலக்கியங் கண்டதற்கிலக்கணமியம்பலில்.
என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
எந்த ஒரு மொழியிலும் முதலில் பிறந்தது கிராமியக் கவிதை இலக்கியம் தான்* இதனை, கற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பிற்காலத்தில் இப்படி இப்படி இந்தப் பா ட் டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தாம் கற்ற அறிவுக்கேற்ப, அவற்றுக்குச் சில விதி முறைகளைச் செய்து வைத்தார்கள். அந்த விதி முறைகளே இலக்கணம்
676); D,
இனி, இலக்கிய மொழிக்கு வருவோம். இம் மொழி ஏடு *ன்னும் சிம்மாசனத்தில் ஏறி அமரும் பெற்றி வாய்ந்தது; இலக்க ணத்திற்கு இசைவாக எழுதப்பட்டது. படித்தவர்கள், பண்டிதர்கள் என்போரால் மட்டும் பயன் படுத்தப் படுவது. இதன் காரணமாகப் பாமரர்களுக்கு இது எட்டாக் கணியாகவே இருந்து விடுகிறது. இலக் கிய மொழியின் இந்த இரங்கத்தக்க நிலையை உணர்ந்தமையால் தான், மகாகவி பாரதி, சுவை புதிது, பொருள் புதிது, இலக்சியங்களைப் படைக்கத் தலைப்பட்டான். இலக்கண விதி என்னும் கயிற்றால் இறுக் கப் பட்ட இலக்கியம் ஒரு மொழியின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற் கின்ற மையை பாரதி உணர்ந்தது போல் இன்றைய தமிழ் க் கல்வி மான்களும் உணர்தல் இன்றியமையாத தொன்றாகும்,
O3

Page 7
ஒரு மொழியின் பழமையும் அதன் பரம்பரைச் சிறப்பும், இலக்கண வரம்பும், அதனைச் செவ்வியல் மொழி (CLASSIC) ஆக்கு சின்றன என்பதற்கு லத்தின், கிரேக்கம், ஹிபுரு, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகள் சான்றாகத் திகழ்கின்றன என்பர். ஆயினும் ஒரு மொழி யின் செவ்வியலுக்கான அம்சங்களே அதன் வளர்ச்சிக்குத் தடையாக நிற்பதையும் நாம் மறந்து விடுதல் கூடாது. தமிழ் மொழி இதற்குத் தக்கதோர் உதாரணம்.
ஒரு மொழி அம் மொழியைப் பேசும் மக்களின் மனங்களைக் காட்டும் கண்ணாடி என்பர் மொழியின் உட்கிடக்கை (The psychology of language) GT Spy Lib g5ÍT GÓGOM GOT 6TuP6) uLu pillsbury, meader aT SMy Lih அறிஞர்கள். இவ்வறிஞர்தம் கூற்று ஆங்கில மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பெருமளவு பொருந்தி வருவதைக் ணகாலாம்.
இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர் ந் த ஜேர்மன் மொழியின் ஒரு கி  ைள யா ன ஆங்கிலம் அதன் ஆரம்ப காலத்தில் ANGLO -SAXON என்றே அறியப்பட்டது. இம் மொழி தோற்றம் பெற்ற காலம் கி. பி. 5ம் நூற்றாண்டாகும். ANGLO SAXON எனும் இப் பழைய ஆங்கிலம் முதலில் பிரென்சு, பின் லத்தீன் மொழியின் பெரும் செல்வாக்கிற்குட்பட்டே வளர்ந்தது. இன்று, உல கின் பல்வேறு மொழிகளின் சொல் வளங்களையும் த ன தாக் கி க் கொண்டு உலக மொழியாக அது திகழ்கிறது.
ஆங்கில மொழியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இரு பிரதான காரணிகளை முன் வைக்கலாம்.
1) ஆங்கிலேயரின் தாராள மனப்பான்மை, 2) ஒரு காலத்தில் பிரித்தானியப் பேரரசுக்கு இருந்த அரசியல்
செல்வாக்கு.
இவ்விரண்டு ஏதுக்களில், ஆங்கில மொழியில் புதுப் புது ச் சொற்கள் உருவாகின்றமைக்கு ஆங்கிலேயரின் தாராள மனப்பான்மை யையே நாம் விதந்து பேச வேண்டும். இவ்விடயத்தில் அவர்களிடம் குறுகிய கண்ணோட்டத்திற்கு இடமேயில்லை. மாங்காய் எனும் தமிழ் ச் சொல்லை MANGO எனத் தமதாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெட்டிக் குறைத்து, ஒன்றோடொன்றை ஒட்டி புதிய சொல் படைப்பதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். இது போன்றே , பிறமொழிச் சொற் களி ன் பிறப்பு மூலம் கண்டு அதற் கேற்பத் தம் மொழியில் சொற்களை ஆக்குவதில் அவர்கள் நிபுணத் துவம் வாய்ந்தவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக DTCTTONARY GT GØDjib G FtTổiv GMG) iš GOOGST 67 GMT Gvir Lib. DáF GOFIT ấv DICTION, ARRAY
04

எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். இவ்விரு சொற்களும்
சொற்களின் ஒழுங்கு வரிசை எனும் பொருள் தரும். DICTION எனும் சொல் DTCO அல்லது DTCTTO எனும் எத்தீன் சொ ற்
களில் இருந்து பிறந்ததாகும்.
இதை ஒத்ததே HOSPES எனும் லத்தீன் சொல். இச் சொல் 6ărGMoGuu eyp av 5 GT LD nr as 3; G) 51T6ốoTG - HOSTI, HOSTEL, HOSPITAL HOSPITALITY, HOSTESS 67g9ld Glgorrsö களை உருவாக்கிக் காட்டிய ஆங்கிலேயரின் மொ ழி ப் புல  ைம போற்றத்தக்கதன்றோ!
பிறமொழிச் சொற்களின் பிறப்பு மூலத்தை நன்குணர்ந்து அதற்கேற்பச் சொல் அமைத்தமைக்கு CUTTURE எனும் சொல்லைக் காட்டலாம். இச் சொல்லின் மூலமாக இருப்பவை CUTTURA, CUTTUS எனுன் லத்தீன் சொற்கள். இவற்றின் பொருள் பண்ர் படுத்துதல், gasfour diggi) GTairugatai Teyib. CUTITIVATION எனும் ஆங்கிலச் சொல்லுக்கும் மேற்படி லத்தீன் சொற்களே ஆதாரம்,
ஒரு மொழியின் வளர்ச்சியின் அடையாளமாக விளங்கு ம் புதுச் சொல்லாக்கத்தில் தமிழர், ஆங்கிலேயருக்கு நேர் மாறானவர்கள். இதற்கு, தமிழர்சளின் பழமை பேணும் பண்பே (CONSERV ATTSM)காரணம் எனலாம்.
தமிழ் மொழியில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதச் சொற் கள் நுழைந்து விட்டமையை அக்கால இலக்கியங்கள் சில காட்டும். பிற்காலத்தில், சமஸ்கிருத சொற்களின் வரவு அதிகரித்தமையை 14ம் நூற்றாண்டில் எழுந்த வில்லி பாரதத்தில் நாம் காணலாம். ஆனால் காலகதியில் இப்பெருக்கம் தமிழ் நாட்டில் இரு வேறு எதிர் விளை வுகளை உருவாக்கியது ஒன்று - வட மொழியாளர்களின் தமிழ் மொழி பற்றிய ஏளனப் பேச்சு; மற்றது - இந்த ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழர் பழமை வாதம் கிளர்ந்தெழுந்தமை. இக் கிளர்வே 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவாமி வேதாச்சலம் எனும் மறைமலை அடிகளின் தலைமையில் தன் உச்சத்தை அடைந்தது. இக் கிளர்ச்சியினால் தமிழ்மொழி வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட போதும், அதற்குச் சில புதிய சொற்கள் கிடைத்தன என்பது உண்மை,
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேரா சிரியராக விளங்கிய டாக்டர். ச. அகத்தியலிங்கம் அவர்கள் மொழி
இயல்பு பற்றிப் பேசுங்கால், தமிழ், துருக்கி போன்ற மொழிகளை ஒட்டு மொழி என்பார், பல்வேறு இலக்கணக் கூறுகளைத் தமிழில் உள்ள
05

Page 8
பகுபதங்கள் கொண்டிருக்கின்றமையே அதனை ஒட்டு மொழி என்று பேராசிரியர் குறிப்பிடக் காரணமாகும்.
இது போன்றே. கிரீக், லத்தின், ஆங்கிலம் போன்ற மொழி களில் இலக்கணக் கூறுகள், ஒட்டுகள், வேர்ச்சொல்லோடு மிக வும் பிணைந்திருப்பதால் அவற்றை உட் பினணப்பு நிலை மொழி என்று கூறுவர்.
பேராசிரியரின் மேற்படிக் கருத்தினைக் கவனிக்கையில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்த பத உறுப்புக்களை அல்லது குறைப் பதங்களைக் கொண்டவை எ ன் பது தெளிவாகின்றது.
எனவே, புதிய தமிழ்ச் சொல்லாக்கத்தில் தமிழ் மொழியின் இலக்கண இயல்புகளை அனுசரித்து போக வேண்டிய நிலை நமக்கி ருப்பினும் - தமிழ் இலக்கண மரபு, சமய சமூக ச் செல்வாக்கிற்கும் உட்பட்டிருப்பதனால் அவற்றைத் த வி ர்த் து விட்டு இலக்கணத்தை மொ ழி யோ டு மட்டும் தொடர்பு படுத்தி காலத்தின் தேவை யையும் கருத்தில் கொண்டு புதிய சொல்லாக்கப் பணியில் ஈடு படுதல் விரும்பத்தக்கதொன்றாகும்.
புதுச் சொல்லாக்கத்தில், பிறமொழி அறிவு - குறிப் பாக ஆங்கில மொழிப் பயிற்சி அதிகம் தேவை எ ன் பது சொல்லாமலே விளங்கும். culture எனும் ஆங்கிலச் சொல்; அதன் மூலச் சொல் ஆகியவற்றின் பொருளை நன்கு அறிந்து கொண்டமையால் தான் டி கே. சி. அச்சொற்களுக்கிணையாகவும் பண்பாடு எனும் சொல்லைத் தந்தார் என்பதை இத் தருணத்தில் நாம் நினைத்துப் பார் த் த ல்" நலலது,
புதுச் சொல்லாக்கத்தில், கற்ற பெரும் புலவர்களுக்கிருக்கும் பங்கு சாதாரண பொது மக்களுக்கும் இருக்கின்றது. இடுகுறிப் பெயர்கள், காரணப் பெயர்கள் போன்றவை சாதாரண சனங்களின் உருவாக்கமே . உதாரணத்திற்கு, கா கா என்று காகம் கரைவதைக் கேட்ட நம் முன்னோர் அதற்குக் காகம் என்று பெயர் சூட்டியமை நினைந்து இன்புறத் தக்கதன்றோ !
புதுச் சொல்லாக்கத்தில் மொழித் தூய்மை எனும் கோட்பாடு பொருத்தம் அற்றது என்பதைக் காலம் நமக்கு உணர்த்தியுள்ளது தூய்மை என்பது எதிலும் இல்லை எனும் சுவாமி விபுலாநந்தரின் வாக்கை மேற்படிக் கோட்பாட்டாளர்கள் சீர் தூக்கிப் பார்ப்பார்களாக.
06

ஒரு மொழியின் இன்னுமொரு சிறப்பம்சம் மொழி பெயர்த்தல் ஆகும். இவ்வரிய கலையைப் பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று கூறி உற்சாகப்படுத்திய பாரதி அதில் தானும் முனைப்பாக ஈடுபட்டான் எ ன் பது நாமும் அறிந்ததொன்று,
தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் அது எவ்வளவுதான் பழமையும் இலக்கியச் செழுமையும் பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு விடயத்தைத் தமிழில் தரும் போதுதான் அதன் பெரும் குறைபாடு நமக்குப் புலனாகிறது. உதாரணத்திற்கு pretty எனும் சொல் அழகான பெண் பிள்ளையையும் Handsome எனும் சொல் அழகான பையனையும் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழில் இருவரையும் குறிக்க அழகான அல்லது வடிவான என்னும் சொற்களையே பாகுபாடின்றிப் பயன்படுத்துகின்றோம். தமிழில் சொற்களின் போதாமையைக் காட்ட இது போல் பல நூறு உதாரணங்களைத் தர முடியும், தமிழில் உள்ள இக் குறைபாட்டை தவிர்க்க வேண்டுமாயின் புதிய சொற்களை ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மொழி பெயர்ப்புக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்
மொழியின் பயன்பாடு பற்றிப் பேசுங்கால், உடனடியாக நம் மனதில் ஓடி வரும் எண்ணம் அது ஒரு கருவி என்பதாகும். ஒருவர் தம் கருத்தை இன்னுமொருவரோடு பகிர்ந்து கொள்வதற்கு உதவும் ஒர் ஒப்பற்ற கருவி, மொழி என்பது உண்மையே. ஆயினும் அதன் பயன்பாடு, இதனை விட மிகப் பெரியது என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.
மொழியை - ஒரு கருவி என்று மட்டும் கருதுபவர்களுக்கு, மிக அண்மையில் வெளிவந்த தமிழ் நாட்டின் "தினமணி" பத்திரிகையில் பேஜா அருண் அவர்கள் எழுதியுள கருத்தாழம் மிக்க வாசகங்கள் விழிப்பூட்டும் என நம்புகிறோம். அருண் சொல்கின்றார் 3 -
ஒரு பண்பாட்டை அழிக்கவோ அதை வளர்க்கவோ வேண்டு. மெனில் மொழிதான் தொடக்க முனை. கிரேக்க மயமாக்குதலிலும், ஆங்கில மயமாக்குதலிலும், இந்தி மயமாக்குதலிலும் மொழியைக் கொண்டு தான் பண்பாட்டு சிதைவு நிகழ்ந்திருக்கின்றது. மொழியை சிதைக்கின்ற போதும் பண்பாட்டையும் அழித்து விடலாம் என்கிற தெளிவு ஆதிக்கச் சக்திகளுக்கிருந்திருக்கிறது. பண்பாடு சிதைந்து மறை கின்ற போது ஆதிக்க வர்க்கத்தின் பண்பாடு அவர்களின் மொழியோடு திணிக்கப்படுவது மிக எளிது என்கின்ற கூர்மை இருந்திருக்கிறது.
07

Page 9
மொழி வாரியாக வாழ்க்கை முறையை, பூகோள அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். பல் வேறு மொழி பேசி கூட்டுறவு வாழ்வு வாழ்ந்தாலும் அது ஒரு சிறப்பு என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையான ஒற்றுமை ஒரு மொழிக் குழுமத்துள்தான் இருக்கிறது என்பதை வரலாறு சொல்லும்,
ஆறாம் நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டு வரை மேதி யர்கள், பேர்சியர்கள், ரோமானியர்கள், துருக்கியர்கள் போன்ற பல ராலும் கைப்பற்றப்பட்டு அடக்குமுறை ஆளுகைக்குட்படுத்தப்பட்ட ஆர்மீனியர்கள் இன்றும் தமது தாய் மொழி இலக்கியத்தை இழப்பதற்குத் தயாராக இல்லை. இலட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்ட போதும் தமது மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்ற பற்று மறைந்து விடவில்லை. ருவாண்டாவில் "ஹ") ட் ரு சு" *ருட்சி" என்கிற, இரண்டு இனக் குழுக்களும் காலம் காலமாக நடந்து வருகின்ற போர் நிலத்துக்கான போராட்டம் என்று மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், அவர்களது பண்பாடு, பண்பாட்டோடு சேர்ந்த மொழி அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் அவர்களது இனக் கலவரத்துக்கான ஆழமான காரணமாகும் இதே கருத்தமைவு தான் இலங்கை இனப் போருக்கும் மூலகாரணமாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
ஆக, இவ்வறிஞரின் கருத்துப்படி - மொ ழி என்பது அம் மொழியைப் பேசுகின்ற இனத்தின் பண்பாட்டோடு இரண்டறக் கலந் திருக்கிறது என்பது தெளிவாகின்றது. இதற்கு ஒர் நல்ல எடுத் து க் காட்டாக, இலங்கையில் இரு ந் து புல ம் பெயர்ந்தவர்கள் - தாம்: வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை கைநெகிழ்ந்துள்ள ஒரு சூழ் நிலையில் பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டு வருவதனை நாம் கொள்ள, (Մ)ւգ պւն,
மொழி - ஓர் இனக்குழுவின் பண்பாட்டின் சிறப்பு அம் சமாகும். ஓர் இனத்தைப் பற்றிப் பேசும் போது முதலில் வ ரு வ து அவர்களின் மொழிதான். தமிழ் இல்லாமல் தமிழர்கள் இல்லை. ஆங்கிலம் இல்லாமல் ஆங்கிலேயர் இல்லை. இந்த வகையில் மொழி ஓர் இனத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது. தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழ் அவர்களோடு பின்னிப் பிணைந்தே வந் துள்ளது. இந்தப் பிணைப்பே இடைக்காலத்தில், தமிழின் வளர்ச்சிக்குக் குறுக்கே பல்வேறு தடைகளும் இடர்களும் நின்ற போது, அவற்றைத் தடுத்து நிறுத்தத் தமிழருக்கு உதவியது.
08.

மொழி ஒற்றுமையின் அத்திபாரம். ஒரு கல்யாண வீட்டிலோ இழவு வீட்டிலோ பலரையும் ஒன்று சேர்த்து வைக்கும் கருவியாக மொழியே விளங்குகின்றது. முந்து தமிழகத்தைச் சேர, சோழ பாண் டியர் மூன்று கூறுகளாக்கி ஆண்ட போது அவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் அற்புதத்தை அவர்களின் மொழியே சாதித்தது போர்க்களம் புக இருந்த அரசர்களை ஒளவையார் போன்ற புலவர் களால் சமாதனத்தின் முன் நிறுத்திடவும் இந்த மொழியால் தான் முடிந்தது.
மொழி ஒரு மனிதனின் உள இயலோடும் நெருங்கிய தொ டர்புடையது. வாயில் இருந்து வரும் வார்த்தைகளே அவனின் உள் ளத்தை நம் முன் உரித்து வைக்கும். இதனைத் திருவள்ளுவர்.
நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்
என்றுரைத்தார்.
மொழி ஒருவனைப் பண்படுத்தும், அதே நேரம் வெறி கொள் ளவும் செய்யும். அத்தகைய ஆற்றல் மொழிக்குண்டு.
மனித ஞானத்தைப் பாதுகாத்து வைக்கும் அரும் பெரும் பெட் டகம் என நாம் மொழியை வர்ணிக்கலாம். இந்த மொழி இல்லை என்றால் வேத உப நிடதங்களோ தமிழரின் சங்க இலக்கியங்களோ அல்லது கிரேக்க மகா காவியங்களான இலியட் ஒடிசியோ நமக்குக் கிடைத்திருக்குமா? ஏன் இன்றைய வியத்தகு அறிவியல் கண்டு பிடிப் புகளை மொழி இன்றி முன்னெடுத்திருக்க முடியுமா?
முடிவாக - இன்றைய மனிதன் அடைந்திருக்கும் மாபெரும் வளர்ச்சிக்கு மொழி ஒரு பெரும் காரணியாக இருந்திருக்கிறது என்பது உண்மை, கற்கால மனித வாழ்வு தொடங்கி - இன்றைய கணிப் பொறி யுகம் வரை மனிதன் அடைந்துள்ள அத்தனை நாகரிக. அறிவியல் தொழில் நுட்ப, முன்னேற்றங்களுக்கெல்லாம் மொழிதான் அச்சாணி யாக அமைந்திருக்கின்றது. இந்த மொழியே மனிதனின் - எதிர் கால - ஏனைய கிரகப் பிரவேசங்களுக்கும் ஏதுவாக இருக்கப் போகின்றது எனவே, இத்தகைய ஆற்றலும் சிறப்பும் வாய்ந்த மொழியை வளர்த் தெடுப்பதில் முன்னிற்றல் நமது முக்கியமான கடமை அன்றோ !
09

Page 10
தமிழ் மொழியில் புதிய சொல்லாக்கம்
திருமதி. றுாபி வலன்ரீனா பிரான்சிஸ்
கிழக்குப் பல்கலைக்கழகம்,
னி த ன் பயன்படுத்தும் தொடர்பாடல் ஊடகங்களுள் மொழியே மிகப் பிரதானமானது" என மொழியியல் அறிஞர்கள் பலர் கூறுவர். மொழி - பேச்சு மொழி, எழுத்து மொழி என இரு வகைப்படும். காலத்தின் கட்டாயத் தேவைகளுள் மொழி வளர்ச்சியும் ஒன்று. ஏனெனில் மொழி ஒரு சமூகசாதனம். எனவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும், வளர்ச்சிகளும் மொழியில் பாதிப் பினை ஏற்படுத்தக் கூடியன. இது குறித்து M. A. நுஃமான்' வருமாறு கூறுவார்.
'மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ப அச் சமூகத்தின் மொழி பெறும் இணக்கப்பாட்டைக் குறிக்கும். காலம் தோறும் ஏற்படும் சமூக வளர்ச்சி, அச் சமூகத்தின் தொடர்பாடல் தேவையை அதிகரிக்கின்றது. அதனை ஈடு செய்யும் வகையில் மொழியும் வளர்ச்சியடைகின்றது' 1
மொழி வளர்ச்சி எவ்வெவ் நிலைகளில் ஏற்படுகின்றது என்பதைக் குறிப்பிடுகையில், அது புதிய சொற்களின் பெருக்கத்தை மட்டுமன்றி & 65 Lu 60 LD L L (Phonology), Garrá 6060) is till (Morphology),
O

வாக்கிய அமைப்பு முதலிய மொழியின் அனைத்து நிலைகளிலும் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்குவதாக அவர் குறிப்பிடுகின் றார். 2
மொழிப் புதுமையாக்கத்தில் (Modernisation) மூன்று கூறுகள் முக்கியமானவையெனக் கருதப்படுகின்றன. 3
1. தொழி ல் நுட்பத் திறனை மொழிக்குக் கொண்டு
ai (156)/ğil.
2. மொழி வளத்தை விரிவுபடுத்துவது
3. சமூக மதிப்பீடுகளுக்கு ஏற்ப மொழிப் பொருள் அமைப்பு
(Semantic Structure) LDT.gia)gl.
தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி நோக்குகையில் மேற்குறிப் பிட்ட கருத்துக்களையும் 10னங் கொள்வது அவசியமானது.
தமிழ் மொழியில் புதிய சொல்லாக்கம் பற்றிப் பேசுகையில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படும் மேனாட்டு மயமாக்கம் (Wester-nisation) அறிவியல் கூறுகள் என்பனவும் செல்வாக்குச் செலுத்து வதைக் குறிப்பிட வேண்டும் . இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் அப்பால் ‘அறிவியல் தமிழ் தற்காலத்தில் இணைந் திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
**அறிவியல் தமிழ் என்பது பல்வேறு அறிவியல் துறைகளில் அறிவியல் கருத்துக்களை எடுத்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் தமிழாகும்." 4
என, கி. கருணாகரன் கூறுவார். அறிவியல் தமிழின் வரவு தமிழில் புதிய சொல்லாக்கத்திற்குப் பெருந்துணை புரிகின்றது. பிறமொழிச் சொற்களின் பயன்பாடும் அல்லது பிறமொழிச் சொற் களைத் தமிழிற் பயன்படுத்துவதன் மூலமும் தமிழில் புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலைமைகளும் உள்ளன. பல்வேறு சூழ்நிலை களின் (அரசியல் தொடர்பு, வணிகம், பொருளாதார நடவடிக்கை கள், குடியேற்றம், மதப் பரப்புதல் முதலிய இன்னோரென்ன காரணி களின் செல்வாக்கு) காரணமாக பிறமொழிச் சொற்கள் பல தமிழிற் கலந்துள்ளன. சொற்களை - விசேடமாக வடசொற்களைக் கடன் வாங்குகையில், தமிழ் ஒலி மரபிற்கேற்பவும் - பொதுவாகவும் பயன்
* - * ヘ ー ェ・ དེ་༣༨༠- ༡. 46) கொ :-) : '
~. 兹 多 ܚ
1

Page 11
படுத்தும் வழக்கம் பழங்காலந் தொடக்கம் இருந்திருக்கின்றது. அதன் பின்னரே தமிழில் போர்த்துக்கேயச் சொற்களும் (உ+ம்: சாவி ஜன்னல்), ஒல்லாந்துச் சொற்களும் (உ+ம்: உலாந்தா, தோப்பு) பிரெஞ்சுச் சொற்களும் (உ+ம்: பட்டாளம், குசினி), ஆங்கிலச் சொற்களும் (உ+ம்: சினிமா, பொலிஸ்) கலந்தன.
தமிழ்மொழியில் புதிய சொல்லாக்கம் எனக் குறிப்பிடும் போது அறிவியலின் துரித வளர்ச்சி பல புதிய சொற்களை ஆக்கியுள்ள தன்மையையே விசேடமாகக் கவனிக்க வேண்டும். இவ்வடிப்படையில் "கலைச்சொல்லாக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அறிவியற் கருத்துக்களையும், அறிவியற் கூறுகளையும் தமிழில் அறிமுகப்படுத்தும் போது உருவாக்கப்படும் சொற்கள் "கலைச் சொற்கள்" ஆகும்.
"ஒரு மொழியில் இல்லாததொரு சொல்லுக்கு
வேற்று மொழியினின்று நேரிடையாகச் சொற்களைப் பெற்றோ, அல்லது அவற்றை ஒலிபெயர்த்தோ அல்லது மொழிபெயர்த்தோ புதுச் சொற்களை, புதுக்கருத்தினைப் புகுத்தி மொழி அல்லது அறிவியற் பணிக்கு ஏற்றம் தருவது கலைச் சொல்லாக்கம் எனப்படும்."
என, கி. கருணாகரன் கூறுவார்; 5
இத்தொடர்பில், கலைச் சொல்லாக்கம்" பற்றிய சில மகா நாடுகள் பற்றிக் குறிப்பிட்டுச் செல்லலாம்.
(அ) 1936ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற
மகாநாடு.
(ஆ) 1958ல் கோவை - தமிழாசிரியர் மகாநாடு.
(இ) 1963ல் தென்னிந்திய புத்தக நிறுவனக் கருத்தரங்கு.
(ஈ) 1968இல் உலகத் தமிழ் மகாநாடு. (உ) 1978இல் திராவிட மொழிக் கருத்தரங்கு.
(ஊ) 1982இல் மருத்துவக் கருத்தரங்கு , தமிழ்ப் பல்கலைக்
கழகம், 6
2

இவற்றுடன், 1996 இல் இலங்கையில் (திருகோணமலையில்) இடம் பெற்ற தமிழ் மொழிப் பிரயோகம்; கணக்கெடுப்பும், பிரச்சினைக ளும்’ எனும் ஆய்வரங்கும் முக்கியத்துவம் உடையது. 7
தமிழில் கலை ச் சொல்லாக்கம் பல்வேறு வழிமுறைகளில் இடம் பெறுகின்றது. அவற்றுட் சில வருமாறு:-
(1) பழஞ் சொற்களைப் பயன்படுத்துதல், (Use of old words) D +ub:- LD(55gis (Medicine)
(2) சொற்பொருள் விரிவு.
(Extention of Meaning) உ+ம்:- மின் - மின்சாரம் (Electricity)
(3) L313 GarbusinLili (Word Creation)
உ+ம்: - அதிர்வு, ஒளிர்வு, உயிரி, ஊக்கி, கணிப்பான்,
உளவியல்
(4) GuDTyp GuuřůL (Translation)
d---tb:- G.5med GGus (Telephone)
தொலைக்காட்சி (Television) 626f&#C3Ftřåš6Mas (Pholosynthesis) lfsiror gy (Electron)
(5) si si QL psù (Borrowing)
al-b:- 5Garr LifisDrt (Kilometer)
Titlst (Radar)
மேலும், சொல்லின் ஒரு பகுதி கடன் சொல்லாகவும் மறு பகுதி தமிழ்ச் சொல்லாகவும் அமைவதன் மூலம் (அமைக்கப்பட்டும்) தமிழில் புதிய சொற்கள் உருவாக்கப்படுவதனைக் காணலாம்,
--- th:- Safe Custody - G& LD& smily. s
Financial Control - is Gungyli.
3.

Page 12
இம் முறை "கடன் கலப்பு முறை’ எனப்படும், இன்னும் சில சொற் கள் கடன் சொல்லின் பொருளைத் தரும் முறையில் உருவாக்கப்படுதலும் உண்டு.
a-- tib: Blue Print - pßGyös Tair Gol6/6ðITG335 TL (9ÜL IL-',
Anamaith. கருவூலக் கணக்கில் சேராப் பணம்
ஒரு கலைச் சொல்லிலிருந்து அதன் பகுதியை மாற்றி வேறு ஒரு கலைச்சொல் படைக்கும் போது புதிய சொற்கள் உருவாக்கப்
படுதலுண்டு.
உ+ம்: Exhibit - காட்சிமயப்படுத்தல். Exhibition - பொருட் காட்சி. Evaluation - up5th SG). Compensative value - FLG LDSLily.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களோ உருவாக்கப்படுதலும் உண்டு.
sa -- th: - Academic Year - sabaiuntain (B)
Higher Grade - GuD6) ia)6n), olui 5 utub: Correspondent சு தொடர்பாளர், செய்தியா ளர், நிருபர், செய்திவரை
Instruction * அறிவுறுத்தல், அறிவூட்டல்,
பணித்தல், போதனை, கற்பித்தல்.
ஏற்கனவேயுள்ள நீண்ட தொடர்களை எளிமைப்படுத்துவதன் மூலமும் சொற்கள் ஆக்கப்படுவதுண்டு.
உ+ம்:- அஞ்சல் நிலையம் - அஞ்சலகம் . 8
புதிய சொல்லாக்கம் பல்வேறு ஊடகங்கள் மூலம் பயன்பாட்டிற்கு வருகின்றது. முக்கியமாக செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்
காட்சி, சஞ்சிகைகள் மற்றும் பாட நூல்கள் ஆகியவற்றிலும் இவை பயன்படுத்தப்படுவதனைக் காணலாம். கலைச் சொற்களின் வளர்ச்சி
4.

வின் மூலம் சொற்களஞ்சியத்தின் வளர்ச்சி பெருகுவதோடு இவற் றைப் பயன்படுத்துவதற்கென புது அமைப்புகள் சில வும் புதிய மொழிநடைகளும் தோன்றி வருவதனையும் அவதானிக்கலாம் கலைச் சொல் லா க்க அடிப்படையில் தொகுக்கப்பட்ட சு. சக்திவேலின் "மொழியியல் கலைச் சொல் அகராதி" என்ற நூலும் கி. அரங்கனின் "மொழியியல் கலைச் சொல் அகராதி" என்ற நூலும் குறிப்பிடத் தககன.
தமிழில் கலைச் சொற்களைப் பயன்படுத்துகையில் தனித் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டுமெனவும் ஒரு சாரார் வற்புறுத்துவர். வேறு சிலர் வடசொற்களையும் பொருத்தம் நோக்கி பயன்படுத்தலாம் என்ற கொள்கையுடையவர்கள். இன்னும் சில ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் ப யன் படுத் துவ தில் தவறில்லை; மக்களுக்கு அவை விளங்கினால் சரி என்ற கொள்கை யுடையவர்கள். இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் தமிழில் புதிய சொல்லாக்கத்தில் காலம்தோறும் தம் செல்வாக்கைச் செலுத்தி வந் திருப்பதனை அவதானிக்கலாம்.
'தனித் தமிழ்க் கொள்கை"யானது நாகரிகம் அடைந்த ஒருவன் மிருகப் பிராயமான நிலைக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியதாகவே முடியும்" என S. வையாபுரிப்பிள்ளை குறிப்பிட் டாலும் 9, இக் கொள்கை தொன்மை மீட்புவாதமாக’க் கருதப்பட் டாலும், மேலும் இக் கருத்துக்களின் காரணமாகப் பழந் தமிழில் ஏலவே பயன்பாட்டிலிருந்த சில சொற்களையே மீளப் "புழக்கத் திற்கு"க் கொண்டு வருவதாகக் கூறினாலும். நுணுக்கமாய் நோக்கு மிடத்து பழந் தமிழ்ச் சொற்களாயினும், அவற்றைப் புதுப் படிமத் துடன் கையாளும் திறன் அவதானத்திற்குரியது.
a -- b: - Post Office - ĝo(5(apé5 5760)6v Ljuba
Tuetter Box - 5cts (ps' Liaopagitator
Almyrah - நிலைப்பேழை. Bicycle - ஈருருளி. Certificate - 560s, 60 D (pLiivasai
Sea - Voyage - sul- fið GDF GDP
5

Page 13
இவை, இளமுருகனார் (இயற் பெயர்: சோ. பாலசுப்பிர மணியம்) தன் கட்டுரை ஒன்றிற் 10 பயன்படுத்திய தனித்தமிழ்ச் சொற்கள்.
Anthropology - LDGirl 1605 DIT di
Physics - பூத நூல். Chemistry - வேதி நூல் Literature - இயல்.
Music - இசை, Universities - செழுங்கலை நியமங்கள்
இவை, சுவாமி விபுலாநந்தர் தன் கட்டுரையொன்றிற் 11 பயன்படுத்திய சொற்கள். 1936 செப்டம்பர் 20ல் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில், சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தினரின் ஆதரவுடன் ந  ைட பெற்ற 'கலைச்சொல்லாக்கம் குறித்த மகா நாட்டில் தலைமையுரை ஆற்றிய சுவாமி விபுலாநந்தர் இன்னும் சில சொற்களை அதிற் குறிப்பிட்டிருந்தார்.
ad.--H- Lib:- COinductOrS  ைஉகைவன:
Non-Conductors /
TinsulatOrs - தகைவன. Tight effect - ஒளி வீச்சு. Discharge - தாக்கல், 12
இ ல ங் கை யின் இனப் பிரச்சினை, தொன்மை மீட்பு வாதமாகிய 'தனித்தமிழ்க் கொள்கைக்கு மீளவும் புத்துயிர் கொடுத் திருப்பதனை தமிழ்ப் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் அதிலும் சிறப்பாக "பாதுகாப்பற்ற (?) வலயங்களாகக் குறிப்பிடப் படும் (இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள்) பகுதிகளின் ‘நிர்வாக நடைமுறை”களிற் காண முடிகின்றது.
D + lb:- Bakery - வெதுப்பகம்,
Bread - வெதுப்பி. Economics- Guit (D567 fullb. Saloon - முடி திருத்தகம்.
6

இலங்கையின் நிர்வாக மொழி சிங்களமாக இருப்பது பல் வேறு புதிய சொற்கள், இலங்கைத் தமிழிற் புகுத்தப்பட்டுள்ளமைக்கு காரணமாக இருக்கின்றது.
உ+ம்: " போ யா, சலுசல, லக்சல, மஹாஜன சம்பத, ஜாதிக சம்பத, வாசனா சம்பத, சியவத, சாகித்திய மண்டலய சமுர்த்தி, ஒசுலா, ஜய பூமி, அமா வேலைத்திட்டம்.
இது குறித்து எஸ். ஸ்கந்தராஜா வருமாறு கூறுவார்.
'{மேற்குறித்த) சிங்களப்பதங்கள் அப்படியே தமிழ்மொழி நிர்வாகத்தில் பயன்பாட்டிலிருந்து வருகின்றமை தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என எண்ணத் தோன்றுகின்றது" 13
இலங்கையில் பல்வேறு மட்டங்களிலும் தமிழ் மொழியின் அமுலாக்கல் தொடர்பாக தீர்க்கமான முடிவு இன்னமும் எடுக்கட் படாமையாலும், அது ந  ைட மு  ைற ப் படுத்தப்படுவதில் தயக்கம் காட்டப்படுவதாலும் பெரும்பான்மையினத்தோரின் மொ ழி யாசி" சிங்களம் பல்வேறு மட்டங்களிலும் தமிழ்ச் சொல்லாக்கத்தில் தன் செல்வாக்கைச் செலுத்தியிருப்பதனையுணரலாம்.
பல்வேறு துறை சார்ந்த நூல்கள் தமிழ் மொழியில் எழுதப் 'கிேன்ற போது அல்லது அவ்வத் துறை சார்ந்த கருத்துக்கள் தமிழ் மாழியில் எடுத்துக் கூறப்படுகின்ற போது அதற்கொப்ப தமிழ்ச் சொற்களை உருவாக்குவதில் பல இடர்ப்பாடுகள் உண்டென்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம், மருத்துவம், சட்டம், கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளில் இச் சிக்கல்களை நோக்கலாம். சட்டத் துறையில் ஏற்படுத்தப் பட்டுள்ள மொழிபெயர்ப்புச் சொற் களைப் பற்றிக் குறிப்பிடுகையில், சட்டச் சொற்றொடர்களுக்குரிய நேரொத்த தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தை யும் இலங்கையில் இத்தகைய பணி ஏற்படுத்தியுள்ள இரட்டிப்புச் சிரமத்தையும் கு. செ ல் வச் சந் தி ர ன் தனது கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார். 14
இலங்கையில் கலைச் சொற்றொகுதி வெளியீட்டில் அரச
கரும மொழித் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் என்பன மிக முக்கியத்துவமுடையனவாகக் கருதப்படுகின்றன.
17

Page 14
எவ்வாறிருப்பினும், ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குரிய தேசி தமிழ்ச் சொல்லைப் புதிதாக ஆக்குகையில் இடத்துக்கிடம் வெவ்வேறு பட்ட நடைமுறைகள் கையாளப்படுவதனையும் குறிப்பிட வேண்டும். இது பல சிக்கல்களை அதாவது ஒரு சொல்லுக்கு பல வடிவங்கள் தரப்படும் நிலைமையினை ஏற்படுத்தும். இவற்றுள் எதை ஏற்பது? எதை விடுவது? எல்லாவற்றையும் பயன்பாட்டுக்குக் கொணருவதா? என்ற சிக்கல்கள் எழும். இது தொடர் பா க கா, இந்திரபாலா கூறும் கருத்துக்கள் ஈண்டு நோக்கற்பாலன.
*"Bacteria என்ற பதத்திற்கு சென்னையில் வெளியான 'கலைச் சொற்கள்" என்ற தொகுதியில் நுண்ணம் என்ற தமிழ்ச் சொல் கொடுக்கப் பட்டுள்ளது. இதனை ஏற்காத இலங்கை அரச கரும மொழித் திணைக்களத்தார் பற்றீசியம் என்று Bacteria என்பதைத் தமிழ்ப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட பல கலைச் சொற்கள் பிறமொழிகளி லிருந்து பெறப்பட்டுத் தமிழ்ப்படுத்தப் பட்டபோது வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை நீக்குவது மிக அவசியம்** 15
தற்காலத் தமிழில் வினைச்சொல் அமைப்பி லும் புதிய சொல்லாக்கங்கள் இடம் பெற்றிருப்பதனை அவதானிக்கலாம். காலக் குறிப்புகள் பல்வேறு விதமாக வெளிப்படுமாற்றை பொற்கோ(பொன் கோதண்டராமன்) பின்வருமாறு குறிப்பிடுவார்.
* 'இன்றைய தமிழில் பல்வேறு காலக் குறிப்பையும் நாம் வினைச் சொற்களில் காண்கிறோம். வந்தான், வருகிறான், வருவான் முதலான வினைச் சொற்களோடு வந்து விட்டான், வந்து தொலைத்தான். வந்து பார்த்தான், வந்து கொண்டிருக்கிறான், வரப் பார்த்தான், வரமுடியும், வரலாம், வரவேண்டும் என இப்படிப்பட்ட பல்வேறு சொல் வளர்ச்சியை நாம் இன்றைய தமிழில் காண்கிறோம்.' 16
வேற்றுமைச் சொல்லுருபுகளின் சண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளமையைச் சுட்டிக் காட்டும் இவர், பின்வரும் எடுத்துக்
18

காட்டுக்களைத் தருகின்றார். "உங்களைக் கு றித் துப் பேசினார். * * உங்களைப் பற்றிப் பேசினார், ! உங்களைத் தவிர எல்லோரும் வந்தார்கள்" இவற்றில் வந்துள்ள ' குறித்து", " பற்றி", "தவிர *. என்பவை வேற்றுமைக் கருத்தை விளக்க வந்த சொல்லுருபுகளாகக் கொள்ளத்தக்கனவென அவர் குறிப்பிடுகின்றார். 17
துணைவினைகளின் பயன்பாடு தற்காலத்தில் அதிகரித்திருப்ப தும், புதிய பல சொற்களின் உருவா க் கத்திற்கு க் காரணமாய் அமைந்துள்ளது. ஜி. யு. போப், துணைவினைகள் குறித்துப் பின் வருமாறு கூறுவார்.
"இன்றைய தமிழில் துணைவினைகள் பெருகிக்
கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பெருகும்.
மொழி வளர, வளர நுட்பமான கருத்துவேறுபாடுகளைப் புலப்படுத்துவதற்கு அவை தேவைப்படுகின்றன. 18
துணைவினை குறித்து ஆ. வேலுப்பிள்ளை கூறும் பின்வரும் கருத்துக்களும் அவதானத்திற்குரியவை.
" "வினை தொடர்ந்து நடப்பதைக் குறிக்கப் பழைய தமிழில் வினையமைப்பு இல்லை. முதல் வினை வினையெச்சத்தைத் தொடர்ந்து கொண்டு" அதன் பின் "இரு” என்பன வந்து தற்காலத் தமிழில் வினைத் தொடர்ச்சியைக் குறிக்கின்றன.
படித்துக் கொண்டிருந் தான்: படித்துக் கொண்டிருக்கிறான், படித்துக் கொண்டிருந்து; முதலியன. 19
வினைசளுக்குப் புதிய பொருள்களை உண்டாக்குவதற்குத் துணை
வினைகள் அடிப்படையாக விளங்குகின்றன. அத்து டன் பொருள்
வேறுபாடுகளை உணர்த்தவும் இவை பயன்படுகின்றன.
உ+ம்: செய்து விடு, விட்டுத் தொலை,
இவற்றில் செய் என்பதில் இல்லாத ணிவுப் பொருள் . °蟹°邀ö டுே"என்பதிலும், ஃப"ேஇலோேர்ஷ்ன்ேஃ
19

Page 15
தொலை என்பதிலும் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. புலமை சான்றோர் தம் நூல் ஆக்கங்களின் போது புதிய பல சொற் களை யு ம், தொடர்களையும் பயன்படுத்துவதும் உண்டு. இதனைப் பல்வேறு நூல்களில் கண்டு தெளியலாம்.
al-LDITas:
புலமைப் பரப்பமைவு வரலாறெழுது முறை புலமைத்தளம் பயில் வழக்கு குழுமம் பிரக்ஞை
இவை கா சிவத்தம்பி அவர்கள் எழுதிய "தமிழில் இலக்கிய வரலாறு" (1988) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட உதாரணங்கள்
தமிழில் புதிய சொல்லாக்க முயற்சிகளை ஏற்படுத்தி வருவ தில் பெண்ணிலைவாத அமைப்புகளும், அந் நிலைவாத சிந்தனை யாளர்களும் முக்கியத்துவமுடையோராய் மாறி வருவதனைத் தற் காலத்திற் காணலாம். w
இன்னொரு வார்த்தையிற் கூறுவதானால் பெண்ணிலைவாத சிந்தனைகள் முனைப்புப் பெற்றுள்ள இக்கால கட்டத்தில், அத் துறை சார்ந்தும் புதிய சொல்லாக்கங்கள் உருவாவதனை அறியலாம்.
உ+ம்: கற்பழிப்பு என்ற சொல்லாக்கம் பாலியல் வல்லுறவு
எனக் குறிப்பிடப்படுதல், விபசாரி - பாலியல் தொழிலாளி
இத் தொடர்பில் மெள. சித்திரலேகா கூறும் பின்வரும் கருத்துக்கள் அவதானிப்பிற்குரியன.
"ஒரு சமூகத்தில் புதிய வளர்ச்சிகள் ஏற்படும்போது அவற்றை உள்வாங்கும் வகையில் மொழியில் சொற்கள் உருவாவது வழக்கமாகும். எனினும் அவை உணர்வு பூர்வமாக மனிதராலேயே
20

உருவாக்கப்படுகின்றன. பெண்நிலை வாதச் சிந்தனைகள் எம் மத்தியில் வளரத் தொடங்கிய காலத்திலிருந்து கடந்த சுமார் பத்து, பதினைந்து வருடங்களாக சில புதிய சொற்றொடர்கள் வழக்கில் வந்துள்ளன. பெண்ணியம், பெண் நிலை வாதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்: பால் வாதம், தந்தையாதிக்கம், ஆணாதிக்கம் போன்றவையும் இத்தகையனவே" 20
இலங்கையின் தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் கெடுபிடி கள் காரணமாகவும் பல புதிய சொற்கள் தமிழில் புகுந்துள்ளமை வியக் குறிப்பிட வேண்டும். பல்வேறு அனுபவங்களையும், சுமைகளை யும், வேதனைகளையும், பயங்கரங்களையும் கூட அவை ஆழமாய்ப் Hதைத்து வைத்திருப்பது இலங்கைத் தமிழர் வரலாற்றை அக்கறை யுடன் பார்ப்போருக்கும், அறிய விழைவோர்க்கும் தெள்ளிதின் புலனா கும். அந்த வகையில் ஒரு சில உ+ங்களை இங்கு நோக்கலாம்.
"டம்பிங்" அல்லது "டம்ப் பண்ணுதல்" "மண்டையில் போடுதல்" * பங்கருக்குள் போடுதல்" "முன்னாள் போராளி"
பயங்கரவாதம்”
"பயங்கரவாதி"
போராளி", பெண் போராளி'; *கரும்புலி’ * வண்டு" (உளவறியும் - ஆளில்லா விமானம்) * கோள்மூட்டி" (சீ - பிளேன்) "தலையாட்டி"
"பொம்மை"
'ரவுண்ட் அப்" * பெடியள்” / “பெடியன்கள்" "வால்கள்?
"நில மீட்பு", "()ெறக்கி , ஆட்டிலறி, எறிகணை.
குழுஉக் குறி க ளா க இவை பயன்படுத்தப்படினும் இவை புதிய கருத்துப் படிமங்களாகவும் அமைந்துள்ளவை. இச் சொற்கள்

Page 16
தருகின்ற அர்த்தப்பாடுகள் இவை வழங்கும் சூழலில் வைத்தே கணிப் பிடப்படவேண்டியவை.
தொகுத்து நோக்குமிடத்து. பல்வேறு சூழ்நிலைகளின் கார ணமாக தமிழ்மொழியில் புதிய சொல்லாக்கம் இடம் பெற்று வருவ தனை அவதானிக்க முடிகின்றது. இச் சொல்லாக்கம் இனியும் பெருகு வதோடு, இ ன் னு ம் சில புதுப்புது அர்த்த வடிவப்பாட்டினையும் எடுக்கக்கூடும். தமிழின் வளர்ச்சிக்கு ‘புதிய சொல்லாக்கம்” அத்தியா வசியமானது; "எளிமையாக்கப்பட்ட வடிவத்தில் அவை பயன்படுத்தப் படுவது அதன் ஆயுள் நீட்சிக்கு உத்தரவாதமானது அப்போதுதான் மொழியில் அவை நிலைபெறும்.
Ο O O
92
 

2
4.
5.
6.
அடிக்குறிப்புகள்
எம். ஏ. நுஃமான் (பதிப்பாசிரியர்); 1993
தொடர்பாடல் மொழி நவீனத்துவம்" வெளியீடு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கொழும்பு. "மொழி வளர்ச்சி: இலக்கணத் தூய்மையும்
மொழித் தூய்மையும்."
- எம்3 ஏ. நுஃமான்; பக்: 9.
G3LDAh Lu L: LUš: 10.
அண்ணாமலை. இ. - "மொழிப் புதுமையாக்கத்தில்
அகராதியின் பங்கு" * தொடர்பாடல் மொழி நவீனத்துவம்" 1993, பக்; 62; ப - ர்: எம். ஏ. நுஃமான். வெளியீடு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கொழும்பு.
கருணாகரன், கி. சண்முகம்" சி.
சிவசண்முகம். சி. (பதிப்பாசிரியர்) 1989
அறிவியல் உருவாக்கத் தமிழ்"
மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 1
மேற்படி பக். 2,
சக்திவேல். சு. 1994, சொற்கள்"
ச. இராஜேந்திரன்:
மணிவாசகர் பதிப்பகம், சென்னை: பக், 159
23

Page 17
7. வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,
விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்தியது.
8. இவை பின்வரும் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டன.
O கருணாகரன். கி. சண்முகம், சி. சிவசண்முகம் சி. (ப - ர்) : 1989: "அறிவியல் உருவாக்கத் தமிழ்" மணிவாசகர் பதிப்பகம், சென்னை
O கருணாகரன். கி: 1988: * மொழி வளர்ச்சி’
மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்,
O நுஃமான். எம். ஏ. (ப =ர்) : 1993, *தொடர்பாடல் மொழி நவீனத்துவம்" வெளியீடு" இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கொழும்பு.
9. வையாபுரிப்பிள்ளை. எஸ். 1953. (2ம் பதிப்பு)
"தமிழின் மறுமலர்ச்சி"
10. இளமுருகனார். சோ. 'தனித்தமிழ் கிளவியாக்கம்"
ஈழகேசரி: 04.06. 1933.
11. சுவாமி விபுலாநந்தர்
செழுங்கலை நியமமும் வடமொழிக் கல்வியும்"
கலாநிதி: 1948: ஏப்ரல்,
12. செல்வநாயகம். அருள், (தொகுப்பாசிரியர்) 1961
"விபுலாநந்த வெள்ளம்" ஓரியன்ட் லாங்மன்ஸ், சென்னை: பக்:
இல் இருந்து எடுக்கப்பட்டது.
e4

13. ஸ்கந்தராஜா. எஸ். - நிர்வாகத்தில் தமிழ்மொழிப் பிரயோகம்"
- களநிலை. ஆய்வரங்கக் கட்டுரைகள் - 1996, "தமிழ்மொழிப் பிரயோகம் - கணக்கெடுப்பும் பிரச்சினைகளும்"
Ludii: 13 வெளியீடு: வடக்கு - கிழக்கு மாகாண கல்வி,
பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு,
14. செல்வச்சந்திரன், கு. - தமிழில் சட்டமொழி பெயர்ப்பிலுள்ள
சிக்கல்கள்" "நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டு நினைவு மலர்" - 1ம் தொகுதி.
பதிப்பாசிரியர்:- சு. வித்தியானந்தன்.
யாழ்ப்பாணம்.
15. இந்திரபாலா. கா. விஞ்ஞானக் கலைச்சொல்லாக்கம்"
*சிந்தனை? : 19 ஆடி பக்: 35
16. பொற்கோ, (பொன், கோதண்டராமன்) : 1996: *இலக்கண உலகில் புதிய பார்வை” - தொகுதி. 3
பூம்பொழில் வெளியீடு: சென்னை, பக்.9
17. மேற்படி நூல் : பக்: 9.
18. Pope. G. U. 'A Hand book of the Ordinary Dialect of the Tamil Tuanguage'
19. வேலுப்பிள்ளை. ஆ. 1966 : ‘தமிழ் வரலாற்றிலக்கணம்”
பாரி நிலையம்: சென்னை; பக்: 242
20. சித்திரலேகா. மெள, - மொழியும் அதிகாரமும்"
- பெண்ணிலை நோக்கிலான சில குறிப்புகள் - இளந்தென்றல்: 1998: பக்: 11
தமிழ்ச்சங்கம், கொழும்புப் பல்கலைக்கழகம்"
25

Page 18
தகவல் யுகத்தில் தமிழ்
சி. ஜெயசங்கர் கிழக்குப் பல்கலைக்கழகம்
ன்றைய உலகம் தகவல் யுகம் என்றழைக்கப்படுகின்றது
தொடர்பாடல் ஒளியின் வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்
கிறது. ஒரு சமூகத்தின் பலமான இருப்பு, தகவல்களையும்,
அறிவையும் அதிகளவில் பரவச் செய்வதில் தங்கியுள்ளது. வரலாற்றில் அதி முக்கியத்துவம் உடையதான தகவல் புரட்சி, ரத்தம் சிந்தாத புரட்சியாக, புத்திசாதுரியம் மிக்கவர்களும், கடும் உழைப் பாளிகளுமான பல மனிதர்களின் பல ஆண்டுகால உ  ைழ ப் பில் கனிந்து கொண்டிருக்கிறது.
தக வல் தொழில் நுட்பங்களில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள் தகவல் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு தொழில் நுட்பங்கள் இதில் பங்கெடுக்கின்றன. ஒன்று தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம், மற்றையது, பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் தகவல்களை புறோசஸ் செய்வதற்குரிய நவீன கணினி முறைமைகள் என்பவையே அந்த இரண்டுமாகும்.
** இன்று தகவல்களை ஆள்பவர் உலகத்தை ஆள்பவராகிறார்.
பொருளை உற்பத்தி செய்வதில் அல்லது பெருக்குவதில் அறிவின் அதிகரித்த முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது தகவல் புரட்சி, பொருட் செல்வத்தின் முக்கியத்துவத்தை இழக்க ச் செய்து, அறிவைச் செல்வமாகக் கொள்ளச் செய்திருக்கிறது. உண்மையில் பொருட்செல்வம் அறிவுச் செல்வத்தின் மூலமே ஈட்டப்படுகிறது
26

காலனித்துவப்படுத்தப்பட்டதன் காரணமாகத் தமிழர் ச மூ கத் தி ன் அறிவுச் செல்வம் காலனியமயப்பட்டு, ஐரோப்பிய மையப்பட்டு இருப்பது ஆழ்ந்த கவனத்திற்குரியது. எனவே காலனிய மயப்பட்ட பார்வை அல்லது நோக்கிலிருந்து விடுவித்துக் கொள்வ தற்கான போராட்டமும், அது தொடர்பான உரையாடல்களும் இன்றைய அவசியத் தேவையாகி இருக்கின்றன.
எமது சமூக த் தி ல் அறிஞர்களாகக் காணப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய மையச் சிந்தனையாளர்களாக காலணி த்துவத்தின் குழந்தைகளாகவும்; அமெரிக்கமையச் சிந்தனையாளர்களாக நவகாலனித்துவத்தின் குழந்தைகளாகவும் இருக்கின்றனர், சமகாலத் தில் தமிழ் மொழியில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் போக் குகள் பற்றிய பிரக்ஞை அற்றவர்களாக இருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.
**ஆங்கில அறிவும், கணினி அறிவும் இல்லையேல் எதிர் காலம் இல்லை' என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருவதை இன்று பரவலாகக் காணமுடியும். இத்தகைய சிந்தனைப் போக்கு அவர்களது சுயத்தை கேள்விக்குள்ளாக்குவதைக்கூட புரிந்து கொள்ள முடியாத பரிதாபநிலை அவர்களுடையது
இன்று கணினி என்ற சாதனத்தின் அறிமுகம் கணினித் தமிழ் என்பதாகவும் இணையத் தமிழ் என்பதாகவும் வளர்ச்சி கண்டு வருகி றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இணையத்தமிழ் 99 மாநாடு இந்த வளர்ச்சிப் போக்கிற்கு சமூக, அரசியல், பண்பாட்டு முக்கியத்து வத்தை வழங்கியிருக்கிறது. இந்த வகையில் இணையத்தில் பூகோள தமிழ்க் கிராம உருவாக்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
தகவல் யுகத்தில் கணினிப் படிப்பறிவு முழுமை பெற ஆங்கில மொழியையும், கணினி மொழியையும் அறிந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்கப் பண்பாடுகளின் உன்னத அறு வ ைட யான கணினித் தொழில்நுட்பம் இயல்பில் ஐரோப்பியமயப்பட்டதாகவும் அமெரிக்கமயப்பட்டதாகவும் இருப்பது ஆச்சரியமானதல்ல. இதன் காரணமாக எமது சமூகத்தில் கணினித் தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன் அதன் ஆங் கி ல மயப்பாடும் தர்க்கபூர்வமான வளர்ச்சிநிலை ஆகின்றது. இது ஆங்கிலம் இல்லை யேல் எதிர்காலம் இல்லை என்ற நிலைப்பாட்டினை ஆழ மா க வேரூன்றவிட்டுள்ளது. உண்மையில் இங்கு நவகாலனித்துவம் வெற்றி பெற்றிருக்கின்றது.
27

Page 19
“ “ Medium is the message” GT6ồrp LDT rif Gş são LDiSMITH னின் பிரசித்தமான கூற்றை மேற்கூறிய பின்னணியில் நன்கு விளங் இக் கொள்ள முடியும். கணினி என்ற சாதனத்தின் வருகையுடன் பொதுவாக ஐரோப்பிய, குறிப்பாக அமெரிக்க மையப் போக்கும்: ஆங்கிலத்தின் மே லா தி க்க மும் மேலும் உறுதிப்பாடுடையதாகி இருக்கிறது.
இச் சூழ்நிலையில் இன்று உலகில் வாழும் ஒன்பது கோடி தமிழர்களும் ஆங்கி ல அறிவு பெற்று அதன் மூலமாகக் கணினி இணையம் என்பவற்றின் நன்மைகளைப் பெறுவது சாத்தியமாகாத விடயம். எனவே நவீனகால வளர்ச்சிகளில் தமிழ் மொழியை ஈடுபடுத்துவதன் அவசியம் பற்றிய சிந்தனை கூர்மதிகொண்டோரில் உதித்துத் தொழிற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழை மட்டுமே அறிந்தவர்களாதலினால் அவர் களுக்கும் கணினி பயனுள்ளதாக வேண்டுமேனில் இணையம் தமிழ் இணையமாக மாறவேண்டும் என்ற சிந்தனை செயற்பாட்டு வடிவம் பெற்று வருகிறது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் தகவல் யுகத்தில் தமிழ் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
உலகின் புராதன மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மொழியின் வரலாறு செம்மையானதாகவும், பரவலான உாசிப்பிற் குரியதாகவும் எழுதப்பட்டதாக இல்லை. பல்வேறு காரணங்களால் வரலாற்றின் பல்வேறு காலங்களில் ஏற்பட்ட தமிழர்களது பரம்பல் கள் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவச் செய்திருக்கிறது. தமிழர்களது வாழ்வியல் தமிழ் மொழியின் இருப்பை உறுதிசெய்திருக் கிறது. இந்த வரலாற்று வளர்ச்சி பற்றிய விரிவானதும் ஆழமானது மான எழுத்துக்களின் வரவு அவசியமாகிறது. இவ்விடயத்தில் சமூக வியல் மொழியியலாளர்களது பணி முக்கியமானதாகிறது.
ஏனெனில் தகவல் மைய நூற்றாண்டாகவும், அறிவுமைய நூற்றாண்டாகவும் அமைந்திருக்கின்ற 21ம் நூற்றாண்டிற்கு உரிய வகையில் தமிழ் மொழியை எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில் தமிழ் மொழியின் இன்றைய நிலை, எதிர்காலத் தேவை என்பவை பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது,
28

எந்தவொரு மொழியும் அந்த இனத்தின் பொருளாதார வாழ்வுக்குப் பயன்படாது விட்டால் அந்த மொழி காலத்தால் அழியும், மொ ழி அழிந் தா ல் இ ன அ டை யா ளம் வலு க் குன்று ம், இ ன த் தி ன் ம ன  ெவழு ச் சி கு ன்று ம் எனவே தமிழர் சமூகத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சி தமிழை, தமிழ்ச் சமூகத்தை முக்கியத்துவமுள்ளதாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக ஈட்டப்பட்டுக் கொண் டி ரு க் கிற இணையத்தமிழ் உலகளாவிய ரீதியில் தமிழர்கள், தமிழில் தொடர்பு கொள்ளவும், பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், சிந்தனைப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளவும் வழிவகுக்கின்றது. இந்த வகையில் பூகோளத் தமிழ்க் கிராமம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு இணை யத் தமிழ் 99 மாநாட்டில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன, தமிழ் விசைப்பலகையின் சீரமைப்பு, தமிழ் எழுத்துக்களுக்கான குறியீடுகளில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல், வருங்காலத் தமிழ் இணையம் பற்றிய ஆய்வு என்பவை யாகும். இந்தக் குறிக்கோள்களை நோக்கிய துரிதமான பயணிப்பு தகவல் யுகத்தில் தமிழின் வலுவை அதிகரிப்பதாக இருக்கும்.
பூகோள ரீதியாகத் தமிழரிடையே இணைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ் இணையம் இருவழித் தொடர்புடையதாக இருப்பதுடன், அதிகாரத்துவ மையத்தைத் தகர்த்து விடுவதாகவும் இருப்பது இதன் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பண்பாகும். தகவல் பகத்தின் முதன்மைச் சாதனத்தின் சமூக முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட நாம், மொழியின் தன்மையையும்; நோக்கையும் விளங்கிக் கொள்வோம்.
அரசியல் சமூக மற்றும் பண்பாட்டுச் சக்திகள் மொழியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இச்சக்திகள் ஒவ்வொரு அம்சத்திலும் மொழியின் வடிவமைப்பைத் தீர்மானிக்கின்றன. மிகவும் வெளிப் படையாகப் பேசுவோர் தொகையும் அவர்களது பரம்பலும் இச்சக்தி களால் தீர்மானிக்கப் படுகின்றன. இச்செயன்முறை மொழியின் சமூகவியல் என அழைக்கப்படுகின்றது. மேலும் சொற்களின் அர்த்தம்
பேச்சுமொழியின் உச்சரிப்பு முறைமை மற்றும் இ லக் கணத் தி ன்
அமைப்பு என்பனவும் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு சக்திகளா லேயே தீர்மானிக்கப்படுகின்றன;
29

Page 20
மொழி உலக நோக்கை வடிவமைக்கின்றது. எனவே சமூக மாற்றம் பற்றிச் சிந்திக்கின்ற பொழுது அது பயில் முறையிலுள்ள அல்லது புளக்கத்திலுள்ள மொழிவழக்கை மாற்றுவதுடன் தொடர்பு படுகிறது. சமகாலத்தில் சமூக நோக்கில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பெண்ணிலைவாதம், தலித்தியம், பல்லினப்பண்பாடு, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் போன்ற எண்ணக்கருக்களுடனும், பின் காலனித்துவ பின்நவீனத்துவக் கோட்பாடுகளுடனும் தொடர் ւI60ւ - ԱյՖ].
உத்தியோகபூர்வ மொழிகள் - யதார்த்த நிலை என்ற ஆங்கி லக் கட்டுரையில், உத்தியோகபூர்வ மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்க திரு. சாள்ஸ் அபயசேகரா அவர்கள், "ஒரு சமூகக் தில் மொழியின் பங்கு செயற்பாடற்ற (Passive) தன்மை கொண்ட கல்ல, வெறுமனே தொடர்பாடலுக்கான சாதனமாகச் சேவகம் செய்வகோ, நடைமுறையிலுள்ள சமூகத்தை அல்லது பண் பாட்டை பிரதிபலிப்பதோ மட்டுமல்ல. தமிழ் மொழி உரிமைக்கான போராட்டம் என்பது தமிழ் அரசியல் போராட்டத்துடன் உட் பொதிந்த பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்." என்று எழுதி u9an5&66örsorTrř. Gud fibuLQ- GSL (SOM Dr Official languages - the reality s76örn F6)6v a 1 GeF. 96 Sunday Observer si வெளியாகியிருக்கிறது.
மேற்படிக் கட்டுரையில் மகிப்பு மிக்க அறிஞரான Burke என்பாாையும் மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோள், "சமூ கத்தில் மிகவும் வலுவான சக்தியாக விளங்குகின்ற மொழி, மற்ற வரிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவோ அல்லது கட்டுப்படுத்தப்படுவ திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவோ தனிநபர்களால் அல்லது குழுக்களால் பயன்படுத்தப்படுகின்ாது" என்கிறது. தகவல் யுகத்தில் தமிழின் நிலையும் கட்டுப்படுத்தப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள் வதற்கான முயற்சியாகவே இருக்கின்றது.
ஒரு மொழியின் வரலாறு அம்மொழியைப் பேசும் மக்களு டைய வரலாற்றுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருப்பது. தமிழர் களுடைய வரலாற்றில் நிகழ்ந்த சமூக அரசியல் நிசழ்வுகள் அவர்கள் பேசும் மொழியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழர்களது தேசிய அடையாளம் தமிழ்ப் பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. இந்தத் தமிழ்ப் பண்பாடு தமிழ்மொழி
30

யால் தீர்மானிக்கப்படுவது, அரசியல் விடுதலைக்கான வரலாற்று இயக்கத்தில் தேசிய அடையாளமும், மொழியும் இணைந்து காணப் படுகின்றன.
காலனித்துவப்படுத்துவதில் குறிப்பாக நவகாலனித்துவப்படுத் துவதில் மொழியும், இலக்கியமும் சக்திமிக்க முறைமைகளாகத் திகழ் கின்றன. நேரடி ஆதிக்கத்தின் காலனியப்படுத்தப்பட்டவர்களின், மனங் களைகாலனியப்படுத்துவதன் மூலமாக நேரடியான ஆதிக்கம் இல்லா மலேதொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஊடகங்களாக மொழியும், இலக்கியமும் விளங்குகின்றன.
தமிழர் சமூகத்தில் தமிழ் பற்றிய நினைப்பு அல்லது மனப் போக்கு எவ்வாறு காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள, பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு பிரதித் தவிசாளர் பேரா சிரியர் சி. பத்மநாதன் அவர்கள், கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத் திய பண்டிதர், புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இரண்டாம், நாள் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கெக்ண்டு ஆற்றிய உரை உதவும்,
"தமிழ்ப் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் ஆங்கில மொழி யை இலகுவாகப் படிக்கப் பேசுவதற்குப் படிப்பிக்கின்றனர். ஆனால் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் இந்த ஆர்வம் காட்டப்படுவ தில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளைத் தாய்மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் தமது வாழ்க்கை யில் தமிழ் இலக்கியங்களைப் பொக்கிஷங்களாகக் கொள்ளக் கூடிய நிலைவேண்டும்" என்று உரையாற்றியிருப்பதாக 1 மார்ச் 99 தினகரன் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இங்கு தாய் மொழியான தமிழ்மொழி மீதான ஆர்வமின்மை யும்; ஆங்கில மொழி மீதான ஈடுபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ் மொழி மீது பிள்ளைகளை ஆர்வம் கொள்ள ச் செய்யும் பொறுப்பு பெற்றோர்கள் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் அறிஞர் கள், கல்வியாளர்களது பங்கு என்ன என்பது பற்றி அச்செய்தியிலி ருந்து அறியமுடியவில்லை.
மேலும் பேராசிரியர் சி பத்மநாதன் அவர்களும் தமிழ் மொழியைப் பொக்கிஷமாக நோக்கியிருப்பதையே அச் செய்தி யில் இருந்து அறிய முடிகிறது. இத்தகைய பொக்கிஷமாகப் பேணும் மனப்பான்மை தமிழைச் சமஸ்கிருதத்தின் நிலைக்கே இட்டுச்செல்லும்
31

Page 21
இவற்றுக்கு மாறாக மொழியைப் பயன்பாட்டு நோக்கில் அணுக வேண் டும். சமகாலப் பயன்பாட்டுக்குரிய வகையில் மொழியைச் சீர்திருத் துவது அல்லது மாற்றியமைப்பது பற்றியே சிந்திக்க வேண்டும்.
ஆங்கில மொழியின் வரலாறு என்ற அத்தியாயத்தில் மொழி யியலாளரான பிறாஜ் கதறுவின் கீழ்க்காணப்படும் கூற்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. " " 650க்கும் மேற்பட்ட செயற்கையான மொழி கள் தோல்வியடைந்த இடத்தில், ஆங்கிலம் வெற்றி பெற்றது; அரசி யல், பொருளாதார பலத்துடன் இருந்த பல இயற்கையான மொழி கள் தோல்வியடைந்த இடத்தில், ஆங்கிலம் வெற்றி பெற்றது. இந்த முக்கியத்துவத்திற்கு இருக்கின்ற ஒரு காரணம் ஆங்கிலமொழி கொண் டிருக்கிற (Prosperity) புதிய அடையாளங்களைப் பெற்றுக் கொள் கின்ற, உட்செரித்துச் கொள்கின்ற சக்தி, மொழி என்ற வகையில் காலனியத் தகர்வுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மை, வகைப்பாடுடையதாக வளரும் தன்மை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வேறு மொழிகள், பண்பாடுகள் நிலவும் சூழலிலும் இலக்கிய மற்றும் வேறு வகையான ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தக் கூடிய நெகிழ்ச்சியான சாதனமாக உள்ளது.'
எனவே தமிழ் மொழியினுடைய இன்றைய நிலைமைக்குக் காரணமாயிருக்கின்ற கூறுகளை அடையாளம் காண்பதும், வலுவான பயன்பாட்டு மொழியாக தமிழ் விளங்குவதற்குத் தேவையான விட யங்களை அடையாளம் காண்பதும்; அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மொழி வளர்ச்சி பற்றி ஆராய்வதும், அவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் மு ய ந் சி க  ைள முன்னெடுப்பதும் முக்கியமானதாக இருக்கின்றது.
தமிழரது சமூகப் பண்பாட்டு வரலாற்றில், மேற்கில் பெரு மாற்றங்களை ஏற்படுத்திய சைத்தொழிற் புரட்சி மற்று அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் விளைவுகள் காலனித்துவ ஆட்சி காரணமாக உள்ளே கொண்டுவரப்பட்டவை. அவை எமது சமூகத்துக்குரிய வகை யில் எமது சமூகத்தவர்களின் தெரிவுகளுக்குள்ளாகவில்லை. காலனித் துவ ஆட்சியாளர்களால் அவை எமது சமூகத்தின் மீது திணிக்கப்பட் டன. எமது இயல்பான வரலாற்று வளர்ச்சிப் போக்கு மிகப்பெரும ளவில் மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
நேரடிக் காலனியாதிக்கம் நீங்கினாலும், பொருளாதார ரீதி
யாகத் தங்கவைத்திருப்பதன் மூலம் காலனித்துவம் புதுப்பரிமாணம் பெற்றுக் கொண்டு நவகாலனித்துவமாயிற்று. காலனித்துவவாதிகளால்
3.

கட்டமைக்கப்பட்ட பொருளாதார முறைமையும்; கல்வி முறைமையும் இதனைச் சாத்தியமாக்கிற்று நிகழ்ந்து கொண்டிருக்கிற தகவல் புரட்சி தொடர்பு சாதனங்களின் வழி செய்திகளாக, நிகழ்ச்சியாக, விளையாட்டுகளாக இன்னும் பலவாக கண்ணுக்குப் புலனாகா வகை யிலும் எம்மால் உணரப்பட முடியாத வகையிலும் நவகாலனித்துவ தொழிற்பாட்டை மிக வலுவாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தகவல் புரட்சியை எங்களுக்குரிய வகையில் மாற்றியமைத்துப் பயன்படுத்த முனையும் சமூகமாக தமிழர் சமூகம் மா றி யி ரு க் கி ன் றது. காலனித்துவத்தாலும் அதனைத் தொடர்ந்த, நவகாலனித்துவத்தாலும் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டி ருக்கிற சமூகத்தில் கணினித் தமிழ் என்ற வளர்ச்சிப் போக்கு புரட் சிகரத் தன்மை வாய்ந்தது. தகவல் யுகத்தில் தமிழும் ஆங்கிலம் போல் கணினித் தமிழ் ஆகியிருக்கிறது. காலனித்துவத்தால் உருவாக் கப்பட்டு, நவகாலனித்துவத்தால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டி ருக்கிற தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்து விடுவதில் இவ்வளர்ச்சி முக் கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது.
அதேவேளை, நவீன வளர்ச்சிப் போக்குகள் தமிழில் நிகழ்ந்து கொண்டிருப்பது உணரப்படாமல் இருப்பதும் பாதகமானது. புதிய அறிவியல் வளர்ச்சி தமிழ்மொழி மூலம் தமிழர்களால் தமிழ்ச் சமூகத் தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.
இணையத் தமிழ் 99 சென்னை மாநாடு பற்றி தமிழ்ப் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினகரன் அக்கறை கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும், குறிப்புகளையும் நேர்காணலையும் வெளியிடிருந்தன. இவற்றை வெளிப்படுத்துவதில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் முக்கிய பங்குவகித்திருந்தார். ஆங்கிலப் பத்திரிகைக GITT GOT Sunday Times, The Island6) (up GospGuu 5 IT "7 8a), D. B, S, ஜெயராஜ் காத்திரமான கட்டுரைகளை எழுதியிருந்தனர். இவை குறிப்பிடப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் கட்டுரைக்கு வீரகேசரிப் பத்திரிகை வெள்ளைக் காரச் சிறுமியொருத்தி கணினியை இயக்கும் புகைப்படத்தை பிரசு ரித்திருந்தது. நாங்கள் எந்தளவிற்கு ஆழமாகக் காலனித்துவப்பட்டுள் ளே T ம் என்பதை இது எங்களுக்கு அறிவிக்கிறது. கட்டுரைக்குப் பொருத்தமாக தமிழரொருவர் கணினியை இயக்கும் புகைப்படத்தை தெரிவது பற்றிய பிரக்ஞை இருக்கவில்லை என்பது அதனைம்ே வெளிப்படுத்துகிறது. எம் முள் புதைக்கப்பட்டும் , புணித்த்கப்ட்டுக்
. . |
33

Page 22
கொண்டு இருக்கின்ற காலனித்துவ நவகாலனித்துவ எண்ணங்களை சிந்தனைகளை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் சமூகமாகவும் தமிழர் சமூகம் மாற்றப்பட வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக எய்தப்பட்டுக் கொண்டிருக்கிற வளர்ச்சி, காலனித்துவத்தாலும் நவ காலனித்துவத்தாலும் கட்டிவளர்க்கப்பட்டிருக்கிற தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டு எழுந்து மேற்கூறிய கோட்பாட்டு ரீதியான எதிர் கொள்ளலுக்கான மனவெழுச்சியைத் தரும் ஆதாரமாக இருக்கக் கூடியது. மறுதலையாக காலனித்துவச் சிந்தனைப் போக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளாத சமூகத்தில் எந்தவொரு தொழில் நுட்ப வளர்ச்சியும் முழுமையான பயனை அளிக்கக் கூடியதாக விருத்திய 69)L-ILITăl.
எனவே தமிழில் நிகழ்ந்து கொண்டிருக்கிற தகவல் தொழில் நுட்பப் புரட்சி பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் விஞ்ஞான ரீதி யாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பரவலாகவும் ஆழமாகவும் முன் னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் பலரது கவனத்தை இத்திசை யில் திருப்புவது சாத்தியமாகும். ஏனெனில் இந்த மாற்றம் ஒரு துறையை மட்டுமல்ல, முழு வாழ்க்கை முறையையே மாற்றியமைக் சக் கூடியதாக இருக்கிறது.
மேலும்' சர்வதேச மொழியின் பெருமை" என்ற தலைப் பில் சிறிய கட்டுரையொன்று 19- 4- 99 தினக்குரலில் பிரசுரமாகியி ருந்தது. இதுவொரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. இக்கட்டுரையினை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னார் செயலாளர் நாயகமான பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி எழுதியிருக்கிறார், அதில், "சர்வதேச ஜனநாயகத்திற் கான நிபந்தனைகளில் ஒன்று பன்மொழித் தன்மையாகும். ஆனால் இந்தக் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை." நாடு களிடையே ஜனநாயக நடைமுறையை வளர்ப்பதற்குத் தம்மை அர்ப்ப ணித்துள்ள் சர்வதேச ஸ்தாபனங்கள் சர்வதேச ஜனநாயகத்திற்கான சூழலை உருவாக்குவது குறித்து அக்கறை காண்பிக்காது இருக்கின் றன." , " "அபிவிருத்தி, சூழல், மனித உரிமைகள், இதனங்களின் சமத் துவம் போன்று பன்மொழித் தன்மையும் ஒரு போராட்டமாகவே இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழில் தகவல் புரட்சி என்பது 'ஆங்கிலமில்லை யேல் எதிர்காலமில்லை' என்ற மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கும் நவகாலனித்துவத்தின் நுகத்தடியில் இருந்து தமிழர் சமூகத்தை விடு விப்பதாக மட்டுமல்லாமல், ஆங்கில மொழியின் மேலாதிக்கத்திற்கு மாற்றாக இயங்கும் பன்மொழித் தன்மையை முன்னிறுத்தும் சர்வ தேச ஜனநாயகப் போராட்டத்தின் கூறாகவும் ஆகியிருக்கிறது.
34

மொழிபெயர்த்தல் .
சில சிந்தனைகள்
எல். ஏ. லேயோன்.
ஒய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும், முன்னாள் டெலிக் இணைப்பாளரும்,
ழி பெயர்த்தலினால் ஏற்படும் நன்மைகள் என்ன? \O மொழி பெயர்த்தல் செய்ய வேண்டியது அவசியம்
தானா?
இந்த இரண்டு வினாக்களையும் பின்னணியாக வைத்து எனது இந்த ஆய்வுரையை வடிவமைக்கலாம் எனக் கருதுகின்றேன்
மனிதன் தன் புவியியல் எல்லைகளாகக் கருதும் கண்டம் சமுத்திரம், நாடு, நகரம், கிராமம் என்பவற்றைத் தாண்டி Global Village அல்லது பூகோளக் கிராமம் என்னும் சொற்றொடரில் தம் வாழ்க்கையை நிலைப்படுத்த முற்படும் இக்காலகட்டத்தில் பூகோளக் கிராமம் என்பது பொருளாதாரம் என்னும் ஒரு உலக மொழியில் செயற்பட்டுக் கொண்டு வருவதைக் காண்கின்றோம். பொருளாதா ரத்தின் கட்டமைப்பு உலக நாடுகளின் சமூக கலாசார அரசியல் நடவடிக்கைகளுடன் பின் னி ப் பிணைந்துள்ளது. நாடுகள் தமது பொருளாதாரத் தரத்தினையும், நடவடிக்கைகளையும் ஸ்திரப்படுத்தி நல்ல நிலையில் வைப்பதற்கு பிரயத்தனம் மேற்கொண்டு வரும் அதே
35

Page 23
வேளை, தத்தமது சமூக, கலாசாரம், அரசியல் மொழி என்பவற்றின் தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி உலகறியச் செய்வதில் அக்கறை கொண்டுள்ளன.
இதே வேளை பொருளாதார விஞ்ஞான அரசியல் விருத்தி கள் ஆங்கிலத்தை உத்தியோகப் பற்றற்ற உலக மொழியாக முன்னி லைப்படுத்தியுள்ளன. ஆங்கிலேயர் அல்லாத ஆங்கில எழுத்தாளர்க ளும் ஆய்வாளர்களும் பல் துறைகளிலும் பெரு வாரியான வெளியீடு களை ஆங்கிலத்தின் ஊடாக வருடந்தோறும் வெளிப்படுத்தி வருகின் றனர். அறிவின் சகல வளங்களும், வெளிப்பாடுகளும் ஆங்கிலத்தின் மூலம் உலகிற்குக் கிடைக்கின்றன.
சுய இன வட்டத்துள் இயங்கும் தமிழ் போன்ற பல மொழி கள் எவ்வித முன்னேற்றமும் இன்றித் தம் பழமையின் பெருமை யைப் பறை சாற்றுவதிலேயே காலத்தைக் கடத்துகின்றன. தமிழ் மொழி ஏனைய இன ரீதியான மொழிகளைப் போன்று பொருளா தார விஞ்ஞான அரசியுல் நடவடிக்கைகளில் எவ்விதமான தாக்கத் தையோ செயற்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. அதே போன்று சமூக கலாசார துறைகளிலும் தற்காலத்துக்கேற்ற எவ்வித அறிவை யும் வழங்கவில்லை. ஏதாவது ஆக்கங்கள் இருந்தால் அவை ஆங்கி லத்தின் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன. அல்லது தமிழில் வெளி வரும் போது தமது தமிழ் வட்டத்தினுள் அடங்கிப் போய் விடுகின் றன. உலகறியச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதைக் கருத்திற் கொண்டே, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தந்தை எனக் கருதப்படும் தனிநாயகம் அடிசளும் ஏனைய தமிழ் அறிஞர்களும் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தினர். ஆங்கிலத்தின் மூலமே அவர் கள் தமிழரின் சமூக கலாசார வளங்களை விசேடமாக - இலக் இய: வளங்களை உலகறியச் செய்தனர்.
திருக்குறள் போன்ற படைப்பு இதுவரை எந்த மொழியிலும் தோன்றியதில்லை என்பர். கிரேக்க இலக்கிய மேதை கோமரின் ஒடிசி, இலியட் போன்று கம்பரின் ராமாயணமும், மகாபாரத மும் அதி உயர்ந்த இலக்கிய ஆக்கங்களாக எம்மிடம் உள்ளன. அத்துடன் lu U 5 5 TLig-uud; 560) ay uub L6)as o uri 55 (Body Language) எனப்படும் அபிநயங்களைக் கொண்ட கலையாக உள்ளது. ஏனைய துறைகளில் உலகிற்குக் கொடுக்கக் கூடிய அறிவு எம்மிடம் எதுவும் இல்லையென்றே கூறலாம்,
முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் முன்னோ
3S

டிகளின் வழியில் நாம் செல்ல வேண்டுமாயின் தமிழ் ஆக்கங்சளை உலக மொழியாகிய ஆங்கிலத்தில் கிடைக்கக் கூடியதாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் ஆக்கங்கள் உலகின் கண்களில் பிரகா சிக்கும் என்பது தெளிவு.
தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று ஆங்கிலத்தில் உள்ள அறிவு நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதன் மூலம், தமிழ் இனத்தின் முன்னேற் றத்துக்கான திறவு கோலாகிய - அண்மைப்படுத்தப்பட்ட பல்வேறு துறைகளிலுமான அறிவைத் தமிழ் இளம் சந்ததியினர் பெறக் கூடிய தாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் இனத்தின் முன்னேற் றத்திற்குத் தேவையான அறிவு, தடையின்றி நடைமுறைக்கேற்ற தமிழில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் ஆயினும் இன்று இலங்கை யில் மொழி பெயர்த்தல் என்பது கல்வித்துறையில் மட்டுமன்றி ஏனைய ஸ்தாபனங்களிலும் ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்துக்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும் பெயர்க்கும் ஒரு காரியமாகவே நடை முறையில் உள்ளது. இதன் காரணமாக சிங்கள மொழி கருத்தைத் தழுவிய தமிழாக்கமே எமது தமிழ்ச் சிறார்களுக்கு கிடைக்கிறது இது தமிழ்ச் சிறார்களின் அறிவு வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் தவறான செயலாகும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற் றம் செய்வதில் பல நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்று. அடிப்படையில் தமிழ் அறிஞர்களும், மொழியியலாளர்களும் தமிழை சகல அறிவையும் உள் 677 L - å6? uu Go) LD 17 lÅ?uLuT 35 § 35(53J aJ ĝ5 Trái) (Selfcontained Luanguage) பிறமொழிச் சொற்களை உள்வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தமிழ் மொழியின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. இதே வேளையில், ஆங்கிலம் எம் மொழியில் இருந்தும் விசேடமாக ஐரோப் பிய மொழிகளில் இருந்தும் தேவைக் கேற்பச் சொற்களைப் பெற்றுத் தன தாக்கிக் கொள்கிறது. இதனால், ஆங்கில சொல்வளம் பல்கிப் பெருகிக் கொண்டு வந்துள்ளது. இன்று தமிழ்க் கல்விமான்களும், மொழியியலாளர்களும் தூய தமிழ்ச் சொற்களை உருவாக்குவதில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்புதுச் சொற்கள் வழக் கில் உள்ள சாதாரண ஆங்கிலச் சொற்களை விட கடினமாக அமை கின்றன. தூய தமிழ்ச் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துவது மிகவும் வரவேற்கப்பட வேண்டியவிடயம். ஆயினும் அவை நடைமுறைக்கு ஏற்ற வையாக அமைய வேண்டும். உதாரணத்திற்கு பஸ், கார் என்னும் ஆங்கிலச் சொற்களை இங்கே எடுத்துக் கொள்ளலாம். இச் சொற் களுக்கு மாற்றீடாக ஒரு சிலர் பேருந்து சிற்ருந்து என்னும் சொற் களைப் பயன்படுத்துவதை நாம் அறிவோம். ஆயினும் பஸ், கார்
37

Page 24
என்னும் ஆங்கிலச் சொற்களே பேச்சு வழக்கிற்குப் பெரும் உதவி யாக இருப்பதை நம் அனுபவம் எடுத்துக் காட்டுகின்றது. ஆங்கில எழுத்தோசைகள் சில (V. G. P. V. X. Z) தமிழில் இல்லை எ ன் பதை நாமறிவோம். இதன் காரணமாக இவ்வோசையோடு கூடிய சொற்களைத் தமிழில் கூறும் போதும் எழுதும் போதும் கஸ் டம் எற்படுகின்றது. இருப்பினும் தொடர்ச்சியான பயன்பாடு பிற சொற்களைத் தமிழுடன் ஜீரணிக்கச் செய்துவிடும். பஸ் போன்று ஏற்கனவே கிற்றார், பியானோ போன்ற பல பிறமொழிச் சொற்க ளும் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆங்கிலத்தைத் தூய ஆங்கிலமாக வைக்க வேண்டுமென ஓர் இயக்கம் 18ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. லத்தீன் பிரெஞ்சு மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் இருந்து நீக்கவேண்டு மென்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அம் முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று ஆங்கில அறிவு எப்படி ஒரு சமூக அந்தஸ்தைக் கொ டு க் கிற தோ அதே போன்று இங்கிலாந்திலும் பிரெஞ்சு, லத்தின் மொழிகள் ஆங்கிலேயர் மத்தியில் ஒர் அந்தஸ்தை ஏற்படுத்தின. பிரெஞ்சு - நாகரிக உலகில் கெளரவத்தைக் கொடுத் தது. லத்தீன் - சட்ட நீதித்துறையில் செல்வாக்கைக் கொண்டிருந்தது இவ்விரண்டு மொழிகளுடன் - கிரேக்கச் சொற்களும், விஞ்ஞான ஆங்கிலச் சொல்லாக்கங்களுக்கு இன்றும் துணைபோய்க் கொண்டிருக் கின்றன.
இவற்றைக் கவனத்தில் கொள்ளும் போது ஒரு மொழியின் வளர்ச்சி அதன் பயன்பாடு என்பன ஏனைய மொழிகளடன் அது தொடர்பை ஏற்படுத்தும் போதே ஏற்படுகின்றன, எனும் உண்மை பெறப்படுகின்றது. ஒரு மரம் எப்படி மண்ணில் உள்ள பல்வேறு கனியுப்புக்களை உறிஞ்சித் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறதோ அதே போன்று ஒரு மொழியும் ஏனைய மொழிகளில் இருந்து சொல், பொருள், அறிவு வளங்களைப் பெற்று வளர்வது அவசியமாகும்.
இன்று சகல அறிவுத்துறைகளும் விஞ்ஞானக் கண்ணோட்டத் துடன் நோக்கப்படுகின்றன சமய சித்தாந்தங்களும் உண்மை கிளும் கூட ஆய்வு கூடப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உதார ணமாக ரியுரினில் உள்ள (Holy Shroud) புனித வஸ்த விஞ்ஞான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் இருக்கும் இரத்தக்கறை உண்மையான மனித இரத்தமா? அல்லது வர்ணக் கலவையா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு, மனித இரத்த மென நிரூபிக்கப்பட்டுள்
38

ளமையைக் குறிப்பிடலாம். இதே போன்று இஸ்லாமியரும் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் கொடுக்க முற்படுவதைக் காண்கின்றோம்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் ஆங்கில அறிவு முன்னிலையில் நிற்கின்றது. தமிழில் கூட இலக்கணப் பயன்பாடு அதி உன்னத நிலையில் உள்ளது. எந்த விஞ்ஞான விளக்கங்களையும் தமிழில் கொடுக்கலாம். பிரச்சினைகள் சொற் பயன்பாட்டில் தான் ஏற்படு கின்றன. ஆகவே, ஆங்கில விஞ்ஞானச் சொற்களைப் பயன்படுத்துவ தன்மூலம் துரிதகதியில் விஞ்ஞான அறிவினைத் தமிழ்ச் சிறார்கள் மத்தியில் வளர்க்கலாம்.
இதுவரை சொல்வளம் பற்றியும், ஆங்கிலச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் நிலை ஏற்படவேண்டும் என்பதும் நோக்கப் பட்டது. இனி ஆங்கில உரை நடை வாக்கியங்களையும், தமிழ் வாக்கியங்களையும் ஒன்றிலிருந்து மற்றதற்கு, மொழிபெயர்ப்பதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி நோக்கலாம்
~ ஆங்கில - தமிழ் வாக்கியங்களை நோக்கும் போது அடிப் 11டை வித்தியாசம் செ ஈ ல் ஒழுங்கில் உள்ளதைக் கவனிக்கலாம். He came home என்னும் ஆங்கில வாக்கியத்தைத் தமிழில் அவன் வீட்டிக்கு வந்தான் என எழுத முடியும். இங்கே முக்கிய வேறுபாடு என்னவெனில் ஆங்கிலச் சொல் ஒழுங்கு எழுவாய் + பயனிலை + செயப்படு பொருளாகவும், தமிழில் - எழுவாய் + செய ப்படுபொருள் + பயனிலையாக அல்லது செயப்படுபொருள் + எழு வாய் + பயனிலையாகவும் அமைவதைக் காணலாம்.
இது ஒரு இலகுவான வாக்கிய அமைப்பு என்பதால் மொழி பெயர்ப்புச் செய்வதில் கஸ்டம் இரு க் கா து. ஆனால் சிக்கலான வாக்கிய அமைப்புக்களில் எழுத்தாளனுடைய கருத்துக்கு இசைவாக மொழி பெயர்ப்புச் செய்யும் போது, அதில் ஈடுபடுபவர்களுக்கும் அது சவாலாக அமையும்.
மேலும், வாக்கியங்களில் வரும் சில சொற் கள் மேலோட்டமான கருத்துடன் உள் கருத்துக்களையும் கொண்டிருக்கும். இச் சந்தர்ப்பங் களில் மொழி பெயர்ப்பாளர் எழுத்தாளரின் கருத்தைக் கிரகித்து அதற்கேற்ப மொழி பெயர்க்க வேண்டும். இதே போன்று ஆங்கிலத் திலும் சரி, தமிழிலும் சரி சிலேடையாகச் சொற்கள் உபயோகிக் கப்டடுகின்றன. இவற்றை அதே தொனியில் தமிழுக்கோ அல்ல து ஆங்கிலத்துக்கோ மொழி பெயர்ப்பது கடினமாக அமையலாம்,
39

Page 25
பத்திரிகைத் துறை, விஞ்ஞான - இ லக் கி ய விமரிசனங்கள், சட்டம், நீதி, யாப்பு வேறு தொழில் துறைகள் என்பவற்றில் வெவ்வேறு பாணியில் சொற்பிரயோகம் - வாக்கிய நடை - பந்தி வடிவமைப்பு என்பன மேற்கொள்ளப்படுகின்றன. தமிழில் கூட ஆங்கில மாதிரியைப் பின்பற்றியே எழுதப்படுகின்றன . ஆகவே, மொழி பெயர்ப்பவர் இவற்றில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் சாதா ரண சத்தியக் கடதாசியைக் கூட ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதும் போது உரிய வடிவமைப்பு சொற்பிரயோகம் - என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் அவ்வகையான பத்தி ரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும், கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய ஆக்கங்களை மொழி பெயர்த்தல் தொடர்பாக என் அனுபவங்களை இவ்விடத்தில் கூறுதல் பொருத்தமாக அமையலாம். தேட் ஐ (Third Eye) ச ஞ் சி கையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆக்கங்கள் சிலவற்றை நோக்கலாம். கவிதையின் உயிரோ ட் டத்  ைத யும் கவி  ைத அ  ைம ப்பையும் மாற்றஞ் செய்ய ரது அப்படியே ஆங்கி லத் தி ல் மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகள் உண்டு பொதுக் கருத்தைக் கொண்டனவாகவும் தமிழ் கலாசார சொற் பதங்கள் இல்லாதனவாகவும் அமையும் கவிதைகளை அவ்வாறு செய் யலாம் (உ-ம் திரு. வாசுதேவன். - திரு. கே. கருணாகரன் என்போ prail as a 6055 gir (p65) spCu My Wishes .... The Vision 7670/ மொழி பெயர்க்கப்பட்டமை)
தமிழ்ப் பாரம்பரிய க லா சா ர நடைமுறைச் சொற்களைப் பயன்படுத்தி சுவைபட எழுதப்படும் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது நேரடியாக மொழி பெயர்த்தலோ அல்லது அக் கவிதைகளைத் தழுவியதாக மொழிபெயர்த்தலோ செ ய் ய க் கூடியதாகும் ஆனால் இதுமூலக் கவிதைக்கும் - அக்கவிஞனுக்கும் மொழி பெயர்ப்புக் கவிதைக்கும் தொடர்பில்லாதவாறு செய்து விடும் இவ் வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மூலக்கவிதையில் வரும் எல்லாக்கலாசாரச் சொற்களும் அப்படியே ஆங்கிலக் கவிதையில் கொடுக்கப்பட்டுள்ளன (உ-ம் ஏ. எஸ். பாய்வாவின் காத்திருப்பேன் என்னும் கவிதை will await you - என எம்மால் மொழிபெயர்க்கப் பட்டமை) கலா சாரக் சொற்களுக்குரிய ஆங்கிலக் கருத்து கவிதையின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இம் முறை புதுமையானதல்ல. ஏனெனில் ஆபிரிக்க - ஆங்கிலக் கவிதையில் இம் முறை கையாளப் படுவதை அவ தானிக்கலாம். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கும் போதும் இது, பரீட்சிக்கப்பட்டுள்ளது.
40

இதே போலவே கிறுகதைகளிலும் பேச்சு வழக்குச் சொற்கள் 26” –b,5 0-suuJT –á) (Fragmented dialogue) Guääs6or6) u0 (Speech Mannerism) என்பவற்றை அதே ந  ைடயி ல் மொழி பெயர்க்கும் தன்மையும் உள்ளது. (உ-ம் கெளரிபாலாவின் நீ அழைத் g55th fia) of 56.5 air SD15605 ' 'I Thought .....you Called ' ' (TGor மொழி பெயர்க்கப்பட்டமை.) ஒவ்வொரு மொழிக்கும் உரிய பேச்சு முறை - இலக்கிய ஆக்கங்களில் வரும் போது அதே முறையில் மொழி பெயர்த்தால் தான் மூல வடிவங்களின் தன்மையையும் பண்புகளையும் மொழி பெயர்ப்பு வடிவத்தில் பற்றி வைக்க முடியும். ஆயினும் மொழி பெயர்க்கப்பட்ட கதையை வாசிக்கும் தமிழ் அல்லாத ஒருவருக்கு அதை விளங்குவது கடினமாக அமையலாம். இது மொழிகளுக்கு இடையிலான பொதுவான பிரச்சனை. ஒவ்வொரு மொழியிலும் அ த ன் தனித்துவம் ' சமூக கலாசார பண் புக ளின் தாக்கம்" பேச்சு தடைமுறை வேறுபாடுகள் பிரதிபலிக்கும். இதன் வெளிப்பாட்டில் தான் ஒவ்வொரு மொழியின் வேறுபாடும் தனித்துவமும் ஏனைய மொழியா ளர்களுக்குத் தெரியப் படுத்துகின்றன.
எமிலி புறன் டேயின் சவுதறிங் கயிற்ஸ்" ஜேன் ஒஸ்ரினின் * பிறைட் அன்ட் பிரிஜஅடிஸ்" சாள்ஸ்டிக்கன்சின் "ரேல் ஒவ்ரூ சிற்றிஸ்" போன்ற நாவல்களை தமிழாக்கம் செய்வதானால் ஆக்கங்களின் முதன் மையான பின்னணியை அப்படியே வைத்துக் கொண்டு தமிழில் மொழி பெயர்க்கலாம். இவ்வகையான ஆக்கங்களை வாசிப்பவர்கள், அக் கதைகளின் முதன்மையான பின்னணியைத் தெரிந்தால் தான் அவற்றை நன்கு ரசிக்க முடியும். அல்லது இக்கவிதைகளைத் தழு வ லா க க் கொண்டு பூரணமாக எமது கலாசாரத்திற்கு ஏற்ப மொழி பெயர்ப்பு செய்யலாம். அவ்விதம் செய்யும் போது மூல ஆக்கத்தின் தன்மை, வடிவம், உயிரோட்டம் எல்லாம் மாற்றமடையும். இது எங்கிருந்து பெறப்பட்டது என்ற விட ய ம் இல்லாமல் போய்விடும் .இத்தகைய மொழி பெயர்ப்பை எந்தக்கதாசிரியனும் விரும்பமாட்டான். இத்தகைய செயல் இலக்கியக் களவாகவே (Tibeary Theft) கருதப்படுகிறது.
கவிதை, சிறுகதை, நாவல் என்பனவற்றை மொழி பெயர்க்கும் போது ஏற்படும் பிரச்சினைகளே நாடகங்களை மொழி பெயர்க்கும் போதும் ஏற்படுகின்றது. சிறுவர் நாடகமான முயலார் முயல்கிறார்" GT Gör SDJ lub 45 T-3s 3š 3035 (The clever hare) Gr6OT -jši ốMalvöĝ75 மொழி பெயர்த்தபோது இதனை என்னால் உணரமுடிந்தது. ஐரிஸ் நாடக ஆசிரியர் சிஞ்சின் 'றய்டஸ் ரூ த சீ" என்னும் நாடகம் கட லோடிகள் எனத் த மி ழ ஈ க் கம் செய்யப்பட்டு நடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இது பூரணமாக எங்கள் மீனவர்களின் வாழ்க்கைப்
41

Page 26
பின்னணியைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி பெயர்ப்பு இலகுவாகப் பொருந்தி விட்டது. ஆனால் சேகஸ் பியரின் நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்வதானால் மூலப் பின்னணியை வைத்துக்கொண்டே மாற்றம் செய்ய வேண்டும் ** ஹம்லட்' " எ ன் னு ம் நாடகம் ஆங்கிலத்தில் இருப்பது போலவே தமிழில்மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிஞ்சினுடைய தமிழாக்கப் பட்ட கடலோடிகளை மேடையில் பார் க் கும் போது அது ஐரிஸ் மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையாகத் தோன்றாது. சிஞ்சி னுடைய ஆக்கத்தின் மேன்மை புலப்படாது.
இவ்வாறு தான் தமிழ் ஆக்கங்களைத் தழுவலாக ஆங்கிலத்தில் கொடுக்கும் போது தமிழ்ப் படைப்ப? வாரின் திறமை வெளியுலகிற்குத் தெரியாமல் போய்விடும். ஆகவே தமிழில் உள்ளவற்றை நேரடியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச்செய்வதன் மூலம் தமிழ் எழுத்தாளர் கவிஞர்களின் பெருமையை - ஆக்கத்திறனை உலகறியச் செய்ய முடியும் இவ்வாறு செய்வதே மொழி பெயர்ப்பாளர் தமிழ்ப் படைப்பாளர் களுக்கும் தமிழுக்கும் செய்யும் மிகச் சிறந்த சேவை எனலாம்,
t (
42
 

வருங்காலத் தமிழ்
வளர.
ட செ. யோகராசா, எம். ஏ. -- கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்,
1. பாடசாலைகளில் இலக்கணக் கல்வி.
"வருங்காலத் தமிழ் வளர" என்று எனக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு பல்வேறு நோக்குகளில் அணுகப்படக் கூடியதொன்று. இவ்விதத்தில், பாடசாலைகளில் இலக்கணக் கல்வி பெறுமிடம் பற்றி இன்’ னொருவிதமாகக் கூறின், பாடசாலைகளில் இலக்கணம் கற்பிக்கும் முறைமை பற்றி சிந்திப்பது வருங்காலத் தமிழ் ஆரோக் கி ய மா ன வளர்ச்சியை எய்துவதற்கு உறுதுணை புரியக் கூடியது. ஏனெனில், மொழியைச் செம்மைபொருந்த எழுதுவதற்கேற்ற அடிப்படை இலக் கண அறிவு பாடசாலைக் கல்வியூடாக மட்டுபே) கிடைக்கின்ற வாய்ப்புள்ளது. அதேவேளையில் பாடசாலை அத்தகைய கல்வியை வழங்குவதிலே தனக்குரிய பங்களிப்பினைச் சரியாக வழங்கிவருகின் றதா என்றொரு கேள்விக்கிடமுண்டு.
2. ஆரோக்கியமற்ற நிலை:
மேற்குறிப்பிட்ட ஐயத்திற்கு அடிப்படையாக ஒரு சான்றினை மட்டும் குறிப்பிடுகின்றேன். பின்வரும் இலக்கண வழுக்கள் இங்கு கவனத்திற்குரியனவாகின்றன.
4

Page 27
1. உங்கல் சுகத்தினை அரிந்து கொல்ல ஆசைபடுகிறேன்"
(ஆண்டு 6 மாணவர் எழுதியது).
11. அன்பினைந்தினை (க. பொ. த. உயர்தர வகுப்பு மாணவர்
எழுதியது)
11. காவிய கர்தாவும் நாவலாசிறியனும் வாள்கையை வெவ்வேறு விதங்களில் நோக்குகின்றனர். இக் கூற்றின் பொறுத்தப் பாட்டினை ஆராய்க. (பல்கலைக்கழக மாணவர் எழுதியது, மேலே தரப்பட்டுள்ள உதாரணங்களை நோக்கும் போது பாடசாலையில் இலக்கணக்கல்வி ச ரி யா ன விதத்தில் வழங்கப்பட வில்லை என்றாகிறது. உண்மையும் அதுதான். பாடசாலை மாணவ ரைப் பொறுத்த வரையில் இலக்கணங்கற்றல் கசப்பிற்குரியதாகவும் கடினமானதாகவும் வெறுப்பு மிகுந்ததாகவும் (கால) விரயத்தை ஏற் படுத்துவதாகவும் அச்சம் தருவதாகவும் ஆர்வமற்ற தொன்றாகவும் அமைந்துள்ளது. இன்றைய ஆசிரியர் மட் டத் தி லும் அத்தகைய நிலையே காணப்படுகின்றது. எனவே, வருங்காலத் தமிழ் வளர்ச்சி யானது இதற்கான காரணங்கள் பற்றிய உசாவலை அவாவி நிற்கின் றது என்பதில் ஐயமில்லை. ஆதலின், அதுபற்றிச் சிந்தித்துப் பார்ப் பது அவசியமானது.
3. அதற்கான காரணங்கள்:
3. 1. பொருத்தமற்ற கற்பித்தல் முறைமை:
3. 1.1. பாடசாலை மட்டத் தி லே இலக்கணங் கற்பித்தல்
என்பது விதிவிளக்க முறையிலேயே இடம்பெற்று வருகின்
றது. எடுத்துக்காட்டாக, குற்றியலுகரம் என்பது பற்றிக் கற்பிக்கும் போது அது பின்வருமாறு ஆரம்பிக்கும்;
*ł
'தனிக் குற்றெழுத்தல்லாத மற் றை ய எழுத்துக் களுடன் சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.'
மேற்குறித்த விளக்கத்தின் பின்னர் தொடர்ந்து உதாரணம் கூறப்படும். இவ்வாறு விதிகூறி விளக்கும்போது குற்றியலுகரம்
44

என்றால் என்னவென்பதனை மாணவர் தெளிவாக விளங்கிக்கொள்ள முற்படுவதில்லை. தவிர பெரும்பாலான மாணவருக்கு மேற்குறிப் பிட்ட விதியில் இடம் பெற்றுள்ள சில சொற்றொடர்கள் பற்றிய தெளிவு (எ-டு): தனிக் குற்றெழுத்து") இருப்பதில்லை. ஏனெனில், தனிக்குற்றெழுத்து என்றால் என்னவென்பதனைக் கூட, முன்னர் விதிவழி மனனம் செய்தே பழகியிருப்பர். போதிய விளக்கமின்றி விதியையும் உதாரணங்களையும் மனனம் செய்து வைத்திருப்பதனால் குற்றியலுகரம் பற்றிய வேறு உதாரணங்கள் வரும்போது அவற்றை இனங்காண இடர்ப்படுவர். சில சந்தர்ப்பங்களில் குற்றியலுகரம் தொடர்பான நன்னூல் சூத்திரங்களை மனனம் செய்யத் தூண்டப் படுவதுமுண்டு. (இலக்கணம் பற்றிய பயம் ஏற்படுவதற்குச் சூத்திரங் களை மனனம் செய்வித்தலுமொரு காரணமாகின்றது.)
3. 1, 2 கற்பிக்கும்போது பண்டு தொட்டுவரும் உதாரணங்கள் பெரும்பாலும் எடுத்தாளப்படுகின்றன. எடுத்துக்காட் டாக, காரியவாகுபெயர் என்பது பின்வருமாறு விளக்கப்படும்.
காரியவாகு பெயர்: அலங்காரம் கற்றான். 'இங்கே அலங்காரம் என்பது காரியத்தின் பெயர். அதனை உணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆவதாற்
காரியவாகு பெயர்'
மேற்கூறியவாறான உதாரணத்தினூடாக காரியவாகு யெயர் என்பது பற்றி விளங்கிக்கொள்வது இன்றைய நவீன கல்விச்சூழலில் பெருஞ் சிரமமாகும்.
3. 1, 3 தற்காலத்திற்குத் தேவையற்ற இலக்கண விடயங்களும்
கற்பிக்கப்படுகின்றன. (எ - டு ஆண்டு 9ல் உள்ள உரிச்
சொல் பற்றிய பகுதிகள்; ஆண்டு 8ல் உள்ள சிலவகைப் புணர்ச்சி விதிகள்.)
3. 1. 4. ஒரே இலக்கணப் பகுதிகள் பல வகுப்புகளுககுமிருக்
கின்றன . அத்தகையவற்றைக் கற்பிக்கும் போது வகுப்பு நிலையினை மனங்கொண்டு விளக்கமளிப்பதில்லை.
3. 1. 5. ஒரு வித ஒப்புமை காரணமாக மாணவருக்கு மயக்க
மளிக்கும் விடயங்கள் உள்ளன. எ - டு:
45.

Page 28
- தன் வினை, பிறவினை என்பவற்றிற்கும் செய்வினை
செயப்பாட்டு வினைக்குமிடையிலான மயக்கம்.
- பொருட் பெயருக்கும் சினைப் பெயருக்குமிடையிலான மயக்கம் (இவ்வாறே இடவாகு பெயருக்கும் தானியாகு பெயருக்குமிடையிலான மயக்கம்
- எழுத்துப் போலிக்கும் இலக்கணப் போலிக்குமிடையிலான
மயக்கம்.
இவைபற்றிய தெளிவினை வழங்குவதிலே ஆசிரியர் அக்கறை காட்டு வதில்லை. கற்பித்தல் அனுபவங்களூடாகவே இத்தகைய விடயங்கள்
பற்றி அறியமுடியும்.)
3. 1, 6. சில விடயங்கள் கற்பிக்கப்படும் போது அவ்விடயங்க வரின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பது பயனுடை யது. (எ - : புணர்ச்சி விதிகள் பற்றிய அறிவின் அவசியம்) ஏனெ னில், மாணவர் அத்தகு விடயங்களை ஆர்வத்துடன் கற்கக் கூடும். எனினும், இவ்வாறு நடைபெறுவது அரிதாகும்.
3. 1. 7. சுருக்க வினா - விடைகளையும் இலக்கணச் சூத்திரங் களையும் ம ன ன ம் செய்விப்பதும் பரவலாக நடை பெறுகின்றது.
3, 1, 8, மீள வலியுறுத்தல், பின்னூட்டல் என்பனவற்றைக் கரிசனை
யோடு மேற்கொள்வதும் அரிதான செயலாகக் காணப் படுகின்றது.
3. 2. ஆசிரியரது நிலை:
3. 2. 1 , இன்றுள்ள பெ ரும்பாலான ஆசிரியர்கள் போதிய முன்
ஆயத்தத்துடன் வகுப்பறைக்குச் செல்வதாகக் கூறமுடி
யாது. (வீட்டுச் சூழல், தம் மீதான அசாதாரண தன்நம்பிக்கை முதலியன காரணங்களாகின்றன).
3. 2, 2. தேர்விற்குத் தயார்ப்படுத்துவதையும் பாடத்திட்டத்தை
முடிப்பதையும் மு க் கி ய குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்று பெருகியுள் ளது.
46

3. 2, 3, தமிழ்மொழியில் விசேட புலமை பெற்றுள்ள ஆசிரியர் தொகை குன்றிவருகின்றது. அதற்கான வாய்ப்பு முன் னரைவிட குறைந்து வருகின்றது என்பது ஒருபுறமிருக்க, கற்கை நெறியில் ஆர்வங்குன்றி வருவதும் கண்கூடு. (பல்கலைக் கழக மட் டத்தில் விருப்பத்துடன் தமிழை ஒரு பாடமாகக் கற்போர் தொகை யும் வரவரக் குறைந்து வருகின்றது).
3, 2, 4, உயர்கல்வி நிறுவனங்களில் (எ - டு: ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரி, கல்வியியல் கல்லூரி) தமிழ்ப்பாடம் கற்பிக்கும்
ஆசிரியர் போதியளவு இல்லாததையும். இருப்பின் தகைமையுடைய ஆசிரியர் போதியளவு இல்லாததையும் அவதானிக்க முடிகிறது
3. 2. 5. வெளிவாரிப் பட்டம் பெற்றுள்ள ஆசிரியர் தொகை
அதிகரித்துவரும் அதே வேளையில் அத்தகையோரது
கல்வித்தரம் சிற்சில காரணங்களினால் குறைந்து வருவது கவனத் திற்குரியது.
3. 2. 6. மேற்கூறிய பரிதாபத்திற்குரிய பின்னணி உருவாக்கு கின்ற, அறியாமையும் ஐயமும் நிரம்பிய ஆசிரியர் குழாத்தினர் தமது அறிவினை விருத்தி செய்வதில் ஆர்வங்காட்டுகின் றாரில்லை. (க.பொ.த. உயர்வகுப்பு மாணவருக்காக சென்றவருடம் ரூபவாஹினி நடத்திய கல்விச் சேவை ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்றில் வகுப்பு நடத்தியவர்களே பயனிலை தொடர்பான வினா ஒன்றிற்கு தவறான விடையளித்தமை இவ்விடத்தில் நினைவிற்கு வருகின்றது: "ஆறு கடக்கும் வரை ஆண்ணன் தம் பி’ என்ற வாக்கியத்தின் பயனிலை கேட்கப்பட்டது!)
3. 3. பாடநூல்கள்;
3. 3. 1. பாடநூல்கள் மாணவருக்காகவா ஆசிரியருக்காகவா எழுதப்பட்டுள்ளன என்ற ஐயம் ஒரு புறமிருக்க, பில் சந்தர்ப்பங்களிலே மாணவரும் சில சந்தர்ப்பங்களிலே ஆசிரியரும் விளங்கிக் கொள்ள முடியாத சில இலக்கணப்பகுதிகள் பாடநூல் ளிலே இடம்பெற்றுள்ளன. (எ - டு; ஆண்டு 9ல் உள்ள உரிச்சொல்? ஆண்டு 10ல் உள்ள வாக்கியவகை பற்றிய விளக்கம்)
47

Page 29
3. 3. 2. இக்காலத்திற்குத் தேவையற்ற இலக்கணப் பகுதிகளுக்கு
முதன்மையளிக்கப்பட்டுள்ளன. (எ - ஆண்டு 9ல் உள்ள
உரிச் சொற்பகுதிகளுட் சிலவும் ஆண்டு 8ல் உள்ள புணர்ச்சி விதி களகட் சிலவும்)
8. 3. 3. ஒரே இலக்கண விடயங்கள் வகுப்புகளுக்கேற்ப கூட்டி யும் குறைத்தும் த விர்த் தும் எழுதப்பட வேண்டும்: அவ்வாறே, எல்லா வகுப்புகளையும் மனங்கொண்டு அவ்வகுப்புகளுக் கேற்ப விரிவான பாடத்திட்டம் முன்கூட்டியே தயாரிக்கப்பட வேண் டும். ஆயின், நடைமுறையில் இவ்வாறெல்லாம் நிகழ்வதில்ைை.
8. 3. 4. தவிர, இலக்கணத்துறையில் காலத்தோறும் ஏற்படும்
புதிய அணுகுமுறைகள் (எ - டு: மொழியியல்) புதிய
மாற்றங்கள் (எ - அறிவி ய ல் தமிழ், புகலிடத் தமிழ்) என்பன வற்றைப் பாடநூல்கள் பிரதிபலிப்பதில்லை.
3. 4. தேர்வு வினாத்தாள்:
+ 3, 4. 1. தேர்வு வினாத்தாள்கள் நன்கு திட்டமிட்டுத் தயாரிக் கப்படுவதில்லை. அவ்வேளைகளில் பழைய வினாத்தாள்
கள் கவனத்திற் கெடுக்கப்படுவதில்.ை சில சந்தர்ப்பங்களில் அவசரக்
கோலத்தில் அள்ளியிறைக்கப்படுவதுமுண்டு.
3. 4.2. புலமை சார் வினாக்கள் சில சந்தர்ப்பங்களிலே இடம்
பெறுகின்றன: (எ - டு; பின்வருவனவற்றுள் பால் காட்டும் விகுதிகள் எல் லாவற்றுடனும் இயைந்து வரக்கூடிய கால இடைநிலை (அ) இன் (ஆ) கிறு (இ) ப் (ஈ) கின்று
3. 4. 3. தவறான வினாக்களும் சில சந்தர்ப்பங்களில் இடம்
பெறுவதுண்டு (எ - டு: சென்ற வருட மும் அதற்கு முந்திய வருடமும் க. பொ. த. சாதாரண தர தமிழ் 1 ல் இடம் பெற்ற பல்தேர்வு வினாக்களுள் ஒன்று முன்பொரு தடவையும் இடம் பெற்றிருந்தது; ஆயின்" இருதடவைகளிலும் வெவ்வேறு விடைகள் சரியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தன!

3. 5. கல்வித் திணைக்களம்:
3, 5, 1. ஏனைய பாடங்களுக்கு காட்டப்படும் சரிசனை தமிழ்ப் பாடத்திற்குக் காட்டப்படுவதில்லை. (எ - டு: கருத்த ரங்கு நடத்துவது குறைவு)
3, 5, 2. கருத்தரங்கு பாடசாலை மேற்பார்வை என் ன நன்கு
திட்டமிட்டு நடத்தப்படுவதில்லை.
3. 6. கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
3. 6. 1. வகுப்புத் தரத்திற்கேற்ப இ லக் கண விடயங்களைக்
கூட்டியும் குறைத்தும் எழுதுவதில் அக்கறை கொள்வ தில்லை.
3. 6, 2. தமிழ் மொழி ஆலோசனைக் குழு, நூலாக்கக் குழு சார்ந்த உறுப்பினர்கள் தீவிர ஆலோசனைகளின் பின் னர் நியமிக்கப்படாதமை ஒருபுறமிருக்க, குழு உறுப்பினர்கள் மாறும் போது அவர்களது அபிலாஷைக்கேற்ப, பாடத்திட்டங்கள் மாறுவதை யும் அவதானிக்க முடியும்,
4. ஆரோக்கியமா வளர்ச்சிக்கான அவசியம்:
வெகுசனத் தொடர்புச் சா த ன ங் கள ர ன பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி முதலானவற்றின் ஆதிக்கம் முன்னரை விட இப்போது அதிகரித்து வருவது கண்கூடு. இவற்றை விட கணனி அச்சு முறைமை வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இத்தகைய சாதனங்கள் அ  ைன த் தும் தமிழ்மொழி வழுக்களைத் வெகு தாராளமாக அங்கீகரித்து வருகின்றன. இதற் கான அடிப்படைக் காரணம், இவற்றோடு தொடர்பு பட்டவர்களது குன்றிய தமிழறிவதான் என்பதில் ஐயமில்லை. எனவே, பாடசாலை களில் இலக்கணம் கற்பித்தல் முறைமை தொடர்பான, பொருத்த மற்ற கற்பித்தல் முறைமை தொடக்கம் கல்வி வெளியீட்டுத் திணைக் களம் வரையில் நிலவும் மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் உடனடியாக விழைந்து நிற்பது முதலுதவியையன்று: அவசரமானதும் நிதானமான துமான அறுவைச் சிகிச்சையாகும்!
49

Page 30
தமிழ்
தமிழ்
தமிழ்
தமிழ்
தமிழ்
தமிழ்
உசாத்துணை நூல்கள்
ஆண்டு 6 கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,
(p. Lu. I 986 ஆண்டு 7 மே. கு.
ஆண்டு ே மே. கு.
ஆண்டு 9 மே. கு.
ஆண்டு 10 மே. கு.
ஆண்டு 11 மே. கு.
 


Page 31
576iyā#Ú767 € காலத்தில் இருந்தது போலவே என்று கருதுவோர் தமிழ் வரே அறியாதோர் என்று தான் சக்திகளுக்கு விரோதமாக ஒரு கடிகாரத்தை நிறுத்தி விட
δύο ρ σ’
சொல்லின் வடிவம் மாற பொருளும் மாறும் ஆ துச் சொல்வின் வடிவும் ெ தீட்டி ன வ த் த ல் இன் உண்மை ஆங்கிலம் முதி வல்லுநர் அறிவர். நம் , உண்மையை அறிவரோ?
C
விஞ்ஞானத் துரையைச் வளரத் தொடங்கிய காலம் முதல் கொள்ளப்பட்டு வருகிறது . பேச் படுகிறது. த விண் மொழியியல் கொண்டது, இவ் விஷயத்திலேயே நூலாரிலிருந்து பெரிதும் வேறுப

வறுபாடும் இன்றி, தோன்றிய தமிழ்மொழி இருந்து வருகிறது ாறும், தமிழிலக்கிய வசலாறும் கூற வேண்டும். இப்ற்கைச் பா ரு ம் செல்ல முடியாது. டால் காலம் கழியாமல் நின்று
பேராசிரியர், எஸ். வையாபுரிப்பிள்ளை
மாற இலக்கணமும் கவே அவ்வக் காலத் பாருளும் இலக்கணமும் றியமையாதது. இதன் தலிய மே ன T ட் டு மொழி தமிழ் மொழி வல்லுநரும் இல்
1 பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை
சேர்ந்த ஒரு பிரிவாக மொழியியல் மொழி என்பது பேச்சு மொழி என்றே சின் நிழலாகவே எழுத்து மூ தி க்க ப் பே ச் சு மொழில் யே ஆதாரமாகக்
மொழியிலாளர் எடைய இலக்கண திகின்ரனர்.
D =ர். க.கைலாசபதி
* pi