கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடலும் படகும்

Page 1

— ------ ! |- |- ---- -- |- |-
|-|- ---------|- |- !■ |------|- 《 sis !
|-
:
--

Page 2


Page 3

கடலும் படகும்
(A Series of talks on grammer over the C. B. C.)
க. வீரகத்தி
இலங்கைப் பண்டிதர் சங்கம்
வாணி, கரவெட்டி.

Page 4
முதற் பதிப்பு: செப்ரெம்பர் 1971
பதிப்புரிமை : ஆசிரியர்க்கு
ஆசீர் வாதம் அச்சகம் யாழ்ப்பாணம்

காணிக்கை
தமிழே! என்னருமைத் தமிழே! உனக்கினிய வாழ்வும் வளமும் மனக்கினிய மரபுநெறிக் குள்ளென்றே கூர்த்த மதிவளத்தால் குருத்தெறிக்கும் சிந்தனையால் நித்தம்நீ குடைந்தாடி முத்துப்போல் ஒளிகால, தொல்காப் பியக்கடலைத் தொட்டுவைத்த பெருமேதை ஒல்காப் பெரும்புகழின் உயர்தவத்தொல் காப்பியஞர் திருந்துமொழி நூலுலகப் "பிதாமகர்’- அன்னவரை நீ s அறிவாயோ? அறிந்தால், * கடலும் படகும்”- ஆம், இந்த மருமிகுந்த நன்னூல் மலரை அத்தெய்வமகன் திருவடிக்கு காணிக்கை யாக்கிக்
கரங்கூப்பி வணங்குமென வாழ்த்துவாய்! வளர்த்திடுவாய்! உன்னை யெனக்கீந்து என்னைநீ ஏற்றிடுவாய் அல்லவோ
வணக்கம்!
-9-1971

Page 5
பதிப்புரை
"கடலும் படகும் இலங்கைப் பண்டிதர் சங்கத்தின் கன்னி வெளியீடு. கன்னி வெளியீடு என்பதாலன்று, கருத்துள்ள வெளியீடு என்பதாலும் சங்கம் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்ளுகின்றது.
"கடலும் படகும் நண்பர் திரு. க. வீ. *இலக்கணச் சுடர்' என்ற தலைப்பில் இலங்கை வானெலியிற் தொடர் பாக நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகளைக் கொண்டது; இலக்கணத் தத்துவங்களைப் புதுமையாகவும் அருமையாக வும் கூறுவது.
‘கடலும் படகும் புலமையை மதித்திடுபவருக்குப் புதுவிருந்து! இலக்கணத் துறைவிரும்பும் மாணவர்களுக்கு, திசை பிடிக்கும் ஒரு வெளிச்சம்!
* கடலும் படகும் கல்வி அமைச்சினல் நூல்நிலையநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் இங்குக் கூறத்தானே வேண்டும் .
வணக்கம்
குக. வயிரவனுர் செயலாளர்.
இலங்கைப் பண்டிதர் சங்கம், வாணி, கரவெட்டி, 1-9-71

அணித்துரைகள்
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
தமிழ்த்துறைத் தலைவர் இலங்கைப் பல்கலைககழகம்
தமிழ்மொழிக்கு இலக்கணம் வேண்டுமா என்பது இன்று சிலர் கேட்கும் வினவாகும். காலத்துக்குக் காலம் பல திறப்பட்ட வகையில் மாறிக்கொண்டு செல்லும் தமிழ் மொழிக்கு இலக்கணம் தேவையில்லை என்பது சில ரின் வாதமாகும். சோம்பல் மிகுந்துள்ள இக்காலத்திலே, யாவற்றிற்கும் குறுக்கு வழி தேடும் இந்நூற்றண்டிலே, இலக்கணம் அறியாத பலர், அறியாத விரும்பாத பலர், அறிய முயற்சி செய்யாத பலர், பழைய இலக்கிய நூல்களைப் படிக்காத பலர் தமிழுக்கு இலக்கணம் தேவையில்லை என்று எழுதியும் பேசியும் வருகின்ருர்கள்.
ஆனல், ஆராய்ந்து பார்க்கும் போது பேச்சு வழக்கி லுள்ள தமிழ் மொழிக்கு இலக்கண அறிவு முக்கியமென் பது தெளிவாகும். இலக்கணம் என்ற சொல் சங்கதத்தி லுள்ள 'லக்கூடிண’ என்பதன் தமிழ் ஆக்கம். சிறப்பு, அழகு,தன்மை என்பன இதன் பொருள். ஒரு மொழிக் குச் சிறப்புக் கொடுப்பது இலக்கணம். வயலுக்கு வரம்பு எவ்வாறு இன்றியமையாததோ, குளத்திற்கு அணைக்கட்டு எவ்வாறு இன்றியமையாததோ அவ்வாறே உயிருள்ள மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. வயலுக்கு வரம்பில்லாதுவிட்டால் அதிற் பாய்ச்சும் நீர் அதிலே தங்காது: வயலிலுள்ள பயனையும் தன்னுடன் கொண்டு வேறிடம் நோக்கிச் சென்றுவிடும். குளத்திற்கு அணைக் கட்டுஇல்லாத இடத்து நீர் பெருகி மக்களுக்குச் சேதமும் ஏற்படும். இவை போலவே மொழிக்கு இலக்கணம்

Page 6
இல்லாத இடத்து, மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர்கெட்ட நிலையை எய்தும். ஆகவேதான் இலக்கணம் மொழிக்கு முதுகெலும்பாகும்.
ஆயினும் மாணவர் இலக்கணத்தை விரும்பிப் படிப்ப தில்லை. பிள்ளைகளுக்குப் பிடிக்காதவற்றுள் முதலாவதுவிளக் கெண்ணெய்;அடுத்ததுஇலக்கணம். குணத்தில் நல்லது செய் வதில் விளக்கெண்ணெய்யும்; இலக்கணமும் ஓரினத்தைச் சேர்ந்தவை. ஆமணக்கு எண்ணெய் உடம்புக்கு நல்லது இலக்கணம் மொழிக்கு நல்லது. குடலைச் சுத்திசெய்கிறது ஆமணக்கு மொழியைத் தூய்மை செய்கிறது இலக்கணம். பெற்றேரின் கட்டாயத்தின்மீது மூக்கைப் பிடித்து ஆம ணக்கெண்ணெயை விழுங்குவது போல, ஆசிரியரின் பிரம் படிக்கும் நுள்ளுக்கும் காது முறுக்குக்கும் பயந்து இலக் கணத்தை வெறுப்புடன் படித்துத் தப்பும் தவறுமாக ஒப்புவித்துத் தொலைக்கின்றனர் மாணவர். இதனலேயே மாணவர் இலக்கண வெறுப்பைச் சிறுவயதிலேயே மேற் கொண்டு விடுகின்றனர்.
இந்த வெறுப்புக்குக் காரணம் இலக்கணத்தை மாண வர் விரும்பிக் கற்கக்கூடிய முறையிற் படிப்பிக்காததே, அவர்களுக்கு விளங்கக் கூடிய உதாரணங்களோடு இனிய முறையிற் கற்பிக்கும்போது அதில் அவர்கள் ஆர்வம் கொன்டு எளிய முறையிலே கற்றுக் கொள்கின்ருர்கள். இந்த வகையிலே தமிழ் இலக்கணத்தைச் சுருக்கமாகத் தெளிவான முறையில் இனிமையாகக் "கடலும் படகும்" என்னும் நூலில் எடுத்துக் கூறுகின்றா, பண்டிதர் வீர கத்தி அவர்கள். இந் நூலைப் படிக்கும்போது சாதாரண ifts இலக்கண நூல் ப்டிப்பது போன்ற உணர்ச்சி ஏற் படுவதில்லை. அவ்வளவு இலகுவாகவும், தெளிவாகவும் யாவருக்கும் தெரிந்த உதாரணங்கள் மூலம், தமிழின் ஐவகை இலக்கணத்தையும் விளக்கிச் செல்கின்முர் பண்டிதர் வீரகத்தி அவர்கள்.

முதற்பகுதியில் இலக்கணத்தின் தோற்றத்தையும் பயனையும் விளக்கிக் கூறும் ஆசிரியர் சரியாக எழுதுவதற் கும் பேசுவதற்கும் பயன்படும் இலக்கணம் சொற் சிக்க னத்திற்கும் பழைய இலக்கியங்களைக் கற்றுக் கொள்வதற் கும் பயன்படும் என்பதனை எடுத்துக் காட்டுகின்ருர்.
இலக்கணத்தின் நோக்கத்தினையும் பயனையும் முதலிற் கூறிய ஆசிரியர், 'சொற்படு விற்பனம், எனும் இரண் டாம் பகுதியில், சாத்தன், வெப்பம், மருமகன், சிறிய தந்தை, துடைப்பம், வெள்ளாடு, அருமந்த என்ற சொற் களைத் தந்து சொற்களை ஆக்குவதில் நமது மூதாதையர் காட்டிய திறனைச் சுவைபட விளக்குகின்ருர் . அதன் மேல், தமிழின் ஐவகை இலக்கணத்தில் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகிய ஈரிலக்கணத்தையும் மிகவும் சுருக்கமாக விளக்குகின்றா. எழுத்திலக்கணத்திற்புணர்ச்சி பற்றிக் கூறும்போது பழைய புணர்ச்சி விதிகளை மித மிஞ்சிக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதனைக் குறிப் பிடுகின்ருர், உயிருள்ள மொழி முன்னேற வேண்டும்; எனவே, தமிழ் மொழிக்கு இலக்கணம் விலங்காக அமை தல் கூடாது. அதற்குச் சிறப்புக் கொடுக்கும் ஆபரணமாக அது அமைதல் வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது.
*பாட்டைத் திறப்பது பண்ணுலே" என்ற பகுதி யாப் பிலக்கணத்தைக் கூறுவதாகும். நுணுக்கமும் அழகுங் கொண்டு உள்ளத்தைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் கலைக்கு உண்டு. அழகு கொழிக்கும் அற்புதக் கலையே தமிழிலுள்ள யாப்பிலக்கணம் . யாப்பிலக்கண அறிவே உயர்ந்த கவிஞர்களைப் படைத்துள்ளது. ஒசை வரையறை பற்றிய யாப்பிலக்கணத்தைப் படிக்க விரும்புவோன் ஒசை அலைகளின் தன்மையையும் எல்லைகளையும் அறிந்து கொள் வது இன்றியமையாததாகும். ஏனெனில், ஒசையின் மொழிவடிவமே பாட்டு.

Page 7
ஒசை பற்றி எழுந்த வெண்பா, அகவற்பா, கலிப்பா வஞ்சிப்பா ஆகிய பாக்களின் அசை, சீர், தளைகள் பற்றி யும் ஒவ்வொரு பாவுக்குமுரிய ஓசையின் தன்மைபற்றியும் ஆசிரியர் இப்பகுதியிலே தெளிவுறக் கூறுகின்ருர், தாழிசை, துறை, விருத்தம் பற்றியும் குறிப்பிடும் ஆசிரி யர், எதுவாயினும், மொழிக் கூண்டில் அடைபட்டு நிற்கும் கவிதைக் கிளி, பண்ணுல் திறந்துவிட்ட பிற்பாடே அழகும் உணர்வும் தரும் அதிசயமும் அருமைப்பாடும் தரும்' என்று முடிக்கின்ருர் .
பேச்சுக்கும் செய்யுளுக்கும் அழகு தருவது உவமை" என்னும் அணி கூற எடுத்துக்கொண்ட பொருளை ஒளிர வைக்கும் கருவியே உவமை. உவமை என்ருல் என்ன, உவமையின் பயன் யாது, அதன் பலவகைக் கோலங்கள் யாவை, நோக்கங்கள் யாவை என்பனவற்றை விரிவாக ஏற்ற உதாரணங்களுடன் தமக்கே உரிய நடையில் ஆசிரி யர் "உவமை" என்ற பகுதியில் விளக்குகின்றார்.
"ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி வாழ்க’’ என்ற வாழ்த்துரையை வைத்து மிக நுணுக்கமாக உவமையின் சிறப்பினை ஆராய்கின்ருர் . உவமை பொரு ளுக்கு ஆழத்தைத் தருகின்றது; உறைப்பையும் அழுத் தத்தையும் தருகின்றது; உணர்வையும் நளினத்தையும் கவர்ச்சியையும் கருத்தாழத்தையும் தருகின்றது என்பன வற்றைச் சிறந்த உதாரணங்கள் மூலம் காட்டுகின்ருர் . உவமையில் பயன் இவ்வளவு பரந்ததாக இருப்பதணு லேயே சாதாரண மக்களும் கவிஞர்களும் உவமைகளைக் கையாண்டனர் ..
நாளாந்த வாழ்விலும் காவியங்களிலும் நீதி நூல்க ளிலும் உரையாசிரியர்களின் விளக்கங்களிலும் பெரிதும் கையாளப்படும் உவமை, ஒப்புமையின் வெளிப்பாடாகும்.

இதனையே பிற்கால ஆசிரியர் பற்பல கோலத்திற் பாங்கு றப் புனைந்து அழகு திகழப் பலவகை அணிகளாக விரித்து வினுேதங்களைச் செய்தனர். ஆனல், தொல்கர்ப்பியர் உவமை என்ற ஒரியலையே நுணுக்கமாக விரித்துச் சொன் ஞர். தொல்காப்பியர் உவமையியலிற் கூறியவற்றைப் பண் டிதர் வீரகத்தி அவர்கள் தொகுத்துத்தருகின்றர். வினை, பயன், மெய், உருவம் ஆகிய நான்கில் ஒன்றே அல்லது பலவோ ஒப்புமைகளாகக் கொண்டு காாணப்படும் உவமை, ஒப்புமையைச் சுட்டிச் சொல்லலாம் : சுட்டாமலும் சொல் லலாம். சுட்டாமற் சொல்லாதாற் சில வேளைகளில் விப ரீத விளைவு ஏற்படக் கூடுமாயினும் சுட்டாமற் சொல் வதே சிறப்பென்பதனை ஆசிரியர் விளக்கிச் செல்கின்ருர்,
அகப் பொருள் இலக்கியத்திற்கு அணி செய்வது உள்ளுறை உவமம். ஏற்ற உவமைகளைக் கையாண்டு பொருளைக் குறிப்பாக்க் கூறும்போது, அகப் பொருட் பாத்திரங்களின் மதி நுட்பம் வெளிப்படுகின்றது; அகப் பொருளும் சுவைபட அமைகின்றது தோழிக்கும் தலை மகனுக்குமுள்ள உரையாடலிலே உள்ளுறை அடுக்கடுக் காக அமைவதைக் காணலாம் உதாரணங்கள் மூலம் இதனை ஆசிரியர் எடுத்துரைக்கின்ருர் .
தெரியாத பொருளைத் தெரிவிக்கப் பயன்பட்ட உவமை நோக்கிற் பல்வகைப்பட்டு, உத்தியிலும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் விரிவடைந்து வளர்ச்சியுற்றிருப்பதை **ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி விட்டது" என உவமை ஆரம்பத்தில் வழங்கிய sessi) மூலம் இப்பகுதியை ஆசிரியர் விளக்கி முடிக்கின்றர்.
சிலேடை, அணிகளில் ஒன்று. ஒவ்வொரு காலப்பகுதியி லும் வாழ்ந்த புலவர்கள் சிலேடைகளைக் கையாண்ட போதும், விசயநகர மன்னன் காலத்திலும் நாயக்கமன் னர் காலத்திலும் வாழ்ந்த புலவர்களே சிலேடையைப்

Page 8
பெரிதும் கையாண்டனர். சிலேடையின் தன்மையையும் வகைகளையும் பயன்களையும் சான்றுகளோடு 'சிலேடை என்னும் பகுதியில் ஆசிரியர் இயம்பிச் செல்கின்றர்.
நூலின் இறுதிப் பகுதியாக அமைந்துள்ளது “அன் பின் ஐந்திணை' பற்றிய இலக்கணத்தின் விளக்கம். 'எடுக் கிறது நல்லதாக இருப்பது போல, முடிக்கிறதும் நல்ல தாக இருக்கவேண்டும்’ தமிழின் ஐவகை இலக்கணமா கிய கடலை, இலக்கண நூல்களாகிய படகுகளின் துணை கொண்டு கடக்கத் தொடங்கிய ஆசிரியர், அன்பின் ஐந்திணையோடு கடத்தலை முடிக்கின்றர். தமிழ் மொழிக் குள்ள தனிப்பெருஞ் சிறப்புக்களில் ஒன்று அதன் பொருள் இலக்கணம், அகப்பொருள் புறப்பொருள் ஆகிய இரு வகைப் பொருளில் அகப் பொருள் பற்றியே பெரும் பாலான பழைய நூல்கள் எழுந்தன ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் அன்பின் அடிப்படையிற் களவிற் கூடி கற்பில் இல்லறவாழ்க்கை நடத்தும் ஒழுக்கமே * அன்பின் ஐந்திணை"யாகும். இவ்வன்பின் ஐந்திணை இயல் பினை ஆசிரியர் சுருக்கமாக எடுத்துக் கூறுகிருர். "கள்ளக் காதல் நல்லது; சிறந்தது; அது கந்தருவர் காதல், என நூலை முடிக்கிருர் ஆசிரியர். *?
எழுத்து, சொல், யாப்பு, அணி “ና பொருள் ஆகிய ஐவகை இலக்கணத்தின் சிறப்புடைய பண்புகளைச் சுருக்க மாகவும் சுவைபடவும் மனம் கொள்ளக்கூடிய முறையிற் கூறிவிட்டார் ஆசிரியர். ஐவகை இலக்கணம் பற்றி ஓரளவு அறிய விரும்புவோர், வெறுப்பின்றி விரும்பிப் படிக்கக் கூடிய நூல் இது. உயர்தர வகுப்பு மாணவர் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்; குறைந்த முயற்சியோடு கூடுதலான பயனைப்பெற வழிவகுக்கும் நூல் இது.

பண்டிதர் வீரகத்தி அவர்களின் இலக்கிய உள்ளமும், இலக்கண ஞானமும், உலகியல் அறிவும், கருத்துரை வன்மையும், மனித அனுதாபமும் நூல் முழுவதிலும் இழையோடுவதை நாம் காணலாம் அவரின் எழுத்துப் பணிக்குக் கைகொடுத்து, அவரை மேன்மேலும் இத்துறையில் ஊக்குவிப்பது நன் மக்கள் கடன்.
சு விந்தியானந்தன் பேராதனை,
20-9-97

Page 9
முன்னுள் வடமாநில வித்தியாதிபதி
திருமதி இரத்தினம் நவரத்தினம் மக்களுக்குப் பெருமையும் மேன்மையும் தருவது அவர்கள் பேசும் மொழியின் சிறப்பு ஆகும். அம் மொழிச் சிறப்பு மொழிக்குரிய மரபு அல்லது இலக்கணம் என்பதி லேதான் அதிகம் தங்கியுள்ளது. என்றென்றும் மொழி யைப் பேணி வருவது திருத்தமான இலக்கண நெறியே ஆகும்.
மிகத் தொன் மொழிகளில் ஒன்ருகிய தமிழ்மொழி இன்னமிழ்தப் பொலிவுடன் விளங்குவதற்குக் காரணம் அருமைப்பாடான இலக்கண அமைப்பே என்க. நெறிப் படத் தமிழ்வளர விரும்பும் ஒவ்வொருவரும் தமிழ் இலக் கண அமைப்பைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல்
இன்றியமையாதது.
இந்த நோக்கில் "கடலும் படகும் மிகச் சிறந்த தமிழ்ப பணியாகக் கருதப்படும். இலக்கண அடிநிலக் கோட்பாடு களைப் புதுமையாகவும் தெளிவாகவும் திருத்தமாகவும் சுவையுற நவில்கின்றது கடலும் படகும். தமிழ் இலக்கணத தின் செறிவும் சிறப்பும் என்ன என்ற பிரச்சினைகளுக்கெல் லாம் பண்டிதர் க. வீரகத்தி அவர்கள் குறிப்பிடும் விளக்கம் மதி நுட்பம் மிக்கது. ஆறு சட்டுரைகளும் வெகு சிரத் தையுடன் தீட்டப் பெற்ற ஆறு வைரமணிகள் எனலாம். தமிழ்த் துறையில் ஈடுபடவிரும்பும் ஒவ்வொருவரும், தமிழை ஒரு பாடமாகக் கொண்ட பல்கலைக் கழக மாணவர் களும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிப் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வரும், க. பொ. த. உயர்கலே மாணவர்கள் அனைவரும்
விரும்பிப் படிக்கவேண்டிய நூல் கடலும் படகும். - தமிழயிமானிகள் இந் நூலை ஆதரித்து வாங்கி ஆசிரிய ருடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்களென நம்புகிறேன்.
'திருவடி’ இரத்தினம் நவரத்தினம் கொழும்புத்துறை ۶یر நவராத்திரித்திங்கள் 1971

FORWARD
I have pleasure in contributing this forward to this publication which comprises six talks on Grammar given by Pundit Veeragathy over the C B. C. iri Tamil. These talks are of such, interest and depth that they could not be comprehended adequately in one hearing. They have to be read and digested and this publication will serve the purpose of a follow up of the radio talks. Its readers will agree that the talks are provocative of deep thought.
It is usually opined that the Universitiss are the only cent T es of research and scholarship. Recent developments would however indicate that instead of making material contributions to knowledge, the Universities have degenerated into centres of intrigue and nepotism and stadiums for musical chairs and rat races, than for disinterested research and dynamic thought. Youth indicipline is apparently at its worst there.
Some years ago, the Jaffna Oriental Studies Society Published a small hand book to guide research scholars. It is unfortunate that the Libraries in Jaffna have not thought it essential to provide facilities for research. Scholars, like the Pundit, had followed the Gurukula tradition and attracted round them aspiring scholars and led them into the intricacies of Tamil studies. To most of them he was a scholar not second to any in Tamil Nad, , the home of Tamil. He had met the best of them and did credit to Ceylon by confounding them with h is depth of k owledge, versatility and criica

Page 10
talents, gleams of which could be se em in these talks. These talks should help considerably to dispel, the superiority complex which South Indian scholars tend to assume, when they think of Ceylon.
Another feature which I noted, wh!n I had discussions with the Pundit, is the unbiased, disinterested way in which he views other languages in Ceylon. He would see and concentrà te on areas of agreement in the structure and development of the languages, with a view to the understanding of the wholeness of the culture of the country and promoting goodwill. This is a feature unfortunately missing in the Universities. It is unfort u na te that scholars with this liberal out look did not get opportunities in the higher seats of learning. If this Pundit had been in the University or even on the staff of a training institution he would have contributed much to peace and harmony in this distraught land. I trust he will get a chance even
at this stage.
I have used the English medium in this forward with a definite purpose I wish this publication would introdu e the Pundit to a much wider field. I wish him all succes in his service to Tamil
and the country as a whole.
S. U. Somasegaram Retired Director of Education Vidya Ashram Member Ceylon Nitinol Jaffna 30-8-71 Library Services Board.

වචනයක්.
" වයාකරණ රශේම (ඉලක්කන සුඩර්) යන මැයෙන් පණඩිත කෝ. වීරකත්තී මැතිතුමා ලංක , ගුවන් විදුලියේ දෙමළ)ෙශය මගින් පවත්වනු ලැබූ දෙශන හය, ශ්‍රී ලංකා පණඩිත සංගමය මගින් මුහුදන් යාතූනාවන් (කඩලම් පඬ නූම්) යන නමින් කුඩා පොතක් හැටියට ප්‍රයිඩ කිරීමට අදහස් කිරීම පුශoසා හිය. භාෂාවට ආභරණයක් වන වයාකරණය හැදැරීම බෙහෙවින් අඩුවයන සමයක මෙවැනි පොත් අතයවශ23ය.
දෙමළ පොතකට සිංහලෙන් හැඳින්වීමක් ලිවීම අනවශ්‍ය වැඩක් හැටීයෂs පෙනෙන්ට පුලුවන. නමුත් කතීබෘ විසින් ලියන ලද, **සියංහල-දෙමළ භාෂාවන්හි වාසාකරණවල ඇති සම අසමකම්” යන වය) කරණ ගුන්ථය ඉතා ඉක්මණින් පාඨකයින් අනට පත්කිරීමට අදහස්කරන නිසා මෙසේ හැඳින්වීමක් කිරීම උචීතයයි සිතමි.
මේ පොතේ උපමා උපමේය හා ගෙලෂ සමිබන්ධ ©යන් දක්වා තිබෙන අදනස් සිංහල වාෂාකරණයට ද අනුකුලය. විවාපත් යුවලට නුගගසමෙන් පැතිරී වැඩෙන්ට ප්‍රාතීවීනයා කිරීමේ යොගන්‍යතාවය පිළිබඳව කෙරෙන චඝඛයන්‍යයාන සිත්ගන්නා සුලුය. වාෂාකරණය නමැති සයුර තරණයට කිරීම ඉවහල්වන යාතුං වශයෙන් සැලෙකන පොත් අතරට කතිරිංගේ කෘතීන්ද එක්වනු දැකීම ප්‍රීතියකි.
1968දී දෙවන වරට මදුරාසියේදී පැවත්වූ සමසන , ලොක ද්‍රවිඩ සම්මේලනයේදී **දෙමළවායාකරණයට නිව්ටන්'' යන විරුදාවලී ලන් පණඩිත වීරකත්තිගේ වාඛ්‍යකරණ දැනුම කාගේත් පුශoසාවට ලක්වී තිබේ. එමතුද නොව ශිෂ්‍ය ශිෂ්‍යයා වන්ගේ ප්‍රයෝජනය සඳහා ලියතලද **ෙපාදු අරිවුප් සූඩිකා' නම් සාමානන්‍ය දුනුම පීළිබඳ ග්‍රන්ථයද ජන ප්‍රියවී තිබේ. දෙමළ සාහිතන්‍යයට - විශේෂයෙන්ම වායාකරණයට මෙතුමාෙගන් වන සේවය, සිංහල වාසාකරණය වෙනුවෙන් ද යෙදවීමට අදහස් කිරීම සිංහල උගතුන්ගේ ෙගහරවයට පාතුවනු නොඅනුමානය.
86,තන්තිරීමුල්ල, &5.5. 2)2S3 c52s2S3cs, පානදුරය. විශුපාලත් විදුහල්පතිම. 1971.8.29

Page 11
(மொழிபெயர்ப்பு)
ஒரு வார்த்தை
பண்டிதர் வீரகத்தி அவர்கள் இலக்கணச்சுடர் என்ற தலைப்பில் இலங்கை வானெலியில் (தமிழ்ப்பிரிவில்) நிகழ்த் திய சொற்பொழிவுகளை பூரீ லங்கா பண்டிதர் சங்கம் ‘கடலும் படகும் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட எண்ணியமை பாராட்டுக்குரியது. இலக்கியத்துக்கு ஆப ரணங்களாக விளங்குகிற இலக்கணப்படிப்பு அதிகமாகக் குறைந்து போகின்ற இந்நாள்களில் இத்தகைய நூல்கள் வெளிவருதல் இன்றியமையாதது.
தமிழ் நூலொன்றுக்குச் சிங்களத்தில் அணிந்துரை எழுதுவது அநாவசிய வேலை போலச் சிலருக்குத் தோன்ற லாம். ஆனல், நூலாசிரியர் சிங்களத்திலும் தமிழிலும் வேற்றுமை அமைப்பிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிடுவதற்கு எண்ணி யிருக்கிற படியால் இவ்வாறு எழுதுவது உசிதமென்று நினைக்கிறேன்.
இப்புத்தகத்திலே காட்டியிருக்கிற உவமை சிலேடை பற்றிய கருத்துக்கள் சிங்கள இலக்கணத்திற்கும் பொருத்த மானவை. இந்நூலில் மணமக்களை வாழ்த்தும்போது ‘ஆல்போல் தழைத்து' என்பதிலுள்ள சிறப்பைப்பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிற கருத்துக்கள் எனது மனதைக் கவர்கின்றன.
இலக்கணமென்ற கடலைக் கடப்பதற்கு உதவியாயிருக் கிற பட்.குகளான நூல்களோடு இவருடைய புத்தககமும் இன்னேர்படகாகச் சேர்வதைக்கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இரண்டாவது உலகத் தமிழ் மகர்நாட்டிலே சொல் இலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு" என்ற தலைப்பில் சமர்ப்பித்த இவரது கட்டுரைக்காக 'தமிழ் இலக்கணத் திற்கு ஒரு நியூட்டன்' என்ற பாராட்டைப் பெற்றவர் இவ்வாசிரியர். இவருடைய இலக்கணப் புலமை மற்றை யெல்லோரின் பாராட்டுக்குப் பாத்திரமாகி விட்டது. அது மட்டுமன்றி இவராற் பிள்ளைகளுக்காக எழுதப்பட்ட *பொதுஅறிவுப் பூங்கா" என்ற நூலும் பலரின் பாராட் டைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்துக்கு விசேட மாக இலக்கணத்திற்கு இவராற்றிவரும் பணி, சிங்கள இலக்கணத்திற்கும் விரிவுபடுதல் சிங்கள அறிஞர்களுடைய நன்மதிப்பிற்கும் பாத்திரமாகுமென்பதிற் சந்தேகமே இல்லை.
இப்படிக்கு lo. O. boroušany இளைப்பாறிய கல்லூரி அதிபர், 88, தந்திரிமுல்ல, பாணந்துறை 29-8-7

Page 12
கடலும் படகும்
-ooooo
கடலும் படகும் ge 8 s. a
சொற்படு விற்பனம் se e ao .S UN S
பாட்டைத் திறப்பது பண்ணுலே
if (o)) 6 -
சிலேடை * a
அன்பின் ஐந்திணை gy
பக்கம்
7
25
a 7
45

கடலும் படகும்
கொந்தளிக்கும் அலையிடையே தத்தளிக்கும் இவர் களைக் காத்திட எவரும் இல்லையா ? கரையிலிருந்து அதிக தூரத்திற்கும் செல்லவில்லை. ஓரளவு தூரத்திலேயே சீரழிகின்ருர்கள் : பாவம், ஆழமறியாது காலை விட்ட கதி இதுபோலும் ! இன்னும் சிலர் கடலில் முட்டுக்குளித்துவிட்டு, கரைக்கு வந்து குடித்த நீர்முழு வதையும் அப்படியே வாந்தியெடுத்துக் கொண்டிருக் கிருர்கள். சற்று அப்பாலும் பார்ப்போம்.
கரைக்குக் கிட்டிய தூரத்திலேயே தலைமறைவுத் தண்ணீரபாயத்திலே தவிக்கின்ருர்கள் ஒருசிலர். மதி நுண்மையும், மனத் திண்மையும் அற்ற இவர்களுக்கேனே கடற்குளிப்பு ? எங்குப் பார்த்தாலும் இதயங் கறுக்கும் அனுபவங்கள் ! ஆழச் சுழியோடி முத்தும் பவளமும் கொணருவோம் என்று அந்த ஆழ்கடலின் அடித்தளம் சென்ற சிலர்.என்ன விந்தை-சேறும் சுரியுமாக மிதக்கி ரூர்கள் ! கற்பாறைகளில் மோதிய காயங்களுடன், அழுகிப்போன சாதாளைகளைக் கையிற்கொண்டுவந்து, "ஆகா ! என்ன முத்துக்கள் வலம்புரி, வலம்புரி என்று வாய் ஓயாது கூப்பாடு போடுகிருர்கள். உப்பு நீர் கண்ணை எரித்திட்டதோ, என்னவோ ? ஆஞலும், கரையிற் காத்து நின்ற வியாபாரிகள் இச் சாதாளைகளையும் வாங்கத் தவ றுவதில்லை.
ஏமாற்றம் நிறைந்த துன்ப அனுபவங்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கும் ஏற்படாமலில்லை. ஆழச் சுழி யோடிய ஆற்றல் மிக்க வல்லுநர் சிலர் முத்தும் பவள மும் கொணர்ந்து கரைமுற்றமெங்கும் குவித்திடுகின் றனர். அன்னவர் முகப் பெருமிதத்தில் முத்தின் மகிமை யும் இழையோடுகின்றது. காத்திருந்த வணிகர் கூட்டம் கொள்வது குறைபடாமல் அவற்றைக் கொள்முதல் செய்கின்றது. இவை தலைச்சங்கம் தரு முத்துக்கள்

Page 13
2 கடலும் படகும்
போலும் இளைஞர் சிலரும் "ஒல்லி" களினுதவியுடன் கடற்கரையிற் கும்மாளம் போடுகின்றனர். கற்றவர் இதுகண்டு களிப்படைகின்றனர்.
கரையிலும், கரைக்குச் சற்றுத் தூரத்திலுமாகத் துளாவிக் கொண்டிருந்த கண்கள், இன்னும் சற்றுத் தூரம் கடலுட் பாய்கின்றன. என்ன புதுமை ! சாதாரண மாகக் கலங்கரை விளக்கத்தைத் துறைமுகக் கரையிலே தான் காண்போம். ஆனல், இந்த அதிசயக் கடலில், கரையிலிருந்து குறிப்பிடத்தக்க தூரத்திற்கப்பால் கடலுட் காணப்படுகின்றது கலங்கரை விளக்கம். அந்த ஒளியிற் தெரியாத பொருளெதுவுமில்லை : "முன்னவர் சிந்தனைச் செல்வமெல்லாம் என் பக்கல் மண்டிக் கிடக்கின்றன’ என்று கரைந்திடும் கலங்கரை விளக்கம் அது. அதோ, அவ்விளக்கைச் சுற்றிச் சுற்றி அழகிய சிறிய படகொன்று வளைந்து வளைந்து ஓடி வருகின்றது. படகோ மூர்த்தியிற் சிறிதாயிலும் கீர்த்தியிற் பெரிது.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 'சுக துக்சங் கள்” போல் ஏமாற்றமும், நம்பிக்கையும் கலந்த இக் காட்சிகளையெல்லாம் கண்கொட்டாமற் கவனித்துக் கொண்டே இருக்கின்ருன் கரையில் ஒரு கவிதைப் புலவன். அகலத்திறந்த அவன் விழிகள் திடீரென்று மூடிக்கொள்ள, உதடுகள் வெளியில் ஏதேதோ உதிருகின்றன. கவிதைக் கனியொன்று முத்துப்போல் உருண்டுவருகின்றது.
"தொல்காப் பியக்கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப் பல்காற்கொண் டேகும் படகென்ப-பல்கோட்டுக் கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர நேமிநா தத்தி னெறி"
கடல் எது ? படகு எது ? இதுவரை புரியாத புதிர் இப்பொது புரிந்துவிட்டதல்லவா ? தொல்காப்பியக் கடல்- ஆம், தொல்காப்பியம் ஒரு கடல், பெரும் பரவை ! அங்கே நீரலைகள், இங்கே சொல்லலைகள்: அங்கே வெண்ணுரை, இங்கே ஒலிப்புணர்ச்சியென்னும் நுரை. அங்கே கற்பாறைகள், இங்கே சொற்ருெடர்ப் பாறைகள். அங்கே கலங்கரை விளக்கம்; இங்கே

கடலும் படகும் قرر
சொல்லதிகாரமென்னும் விளக்கு. அங்க முத்தும் பவளமும், இங்கே சிந்தனை முத்துக்கள். அங்கே அழகிய சிறிய படகு, இங்கே நேமிநாதம் என்னும் சிற்றிலக்கண நூல் 1
தொல்காப்பியம் மிகப் பழைய இலக்கண நூல். அதற்குமுன்புள்ள இலக்கண நூல்களெதுவும் இன்றுஇல்லை. உள்ளவற்றில் தொல்காப்பியமே தொன்மையான து; மிக விரிவானது; மிகநுணுக்கமானது; எழுத்து,சொல்,பொருள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பி யம், மொழி மரபு மாத்திரம் கூறிவிடவில்லை. மனிதனின் அகப்புறப் போராட்டங்களையும் கூறுகின்றது. மனித வாழ்வின் முடிவான குறிக்கோளையும் தெளிவாகக் கூறி யுள்ளது. மக்களோடும் சுற்றத்தோடும் கலந்து அன்பு வழி இல்லறம் நடத்திய ஒருவனின் இல்லறப் பயன் இறைவழிபாட்டிலே முடியவேண்டுமென்று கூறுகின்றது.
*" காமஞ் சான்ற கடைக்கோட் காலே ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’
இது தொல்காப்பியர் வாக்கு. இவ்வாறு வாழ்க்கை முனை ஒவ்வொன்றையும் அடக்கிய இந் நூல் மிகத் தொன் மையானது என்ருல், அத்தொன்மை அற்பசொற்ப காலத்தைக் குறிப்பிடவில்லை. சுமார் 3000 ஆண்டுகட்கு முற்பட்டது என்கிருர் நாவலர் ச. சோமசுந்தரபார தியார். தொன்மையும், நூலின் தன்மையும் கலந்து இந் நூலுக்குப் பெயரிட்டது, எண்ணுந்தோறும் எண்ணுந் தோறும் இன்பந் தருகின்றது. காப்பு என்பது காவலைக் குறிக்கும் மாற்றுப்பதம் மொழிப் பயிர் பிறவற்ருல் ஊறுபடாது, செழித்தோங்கி வளர்வதற்கு இட்ட காவல் வேலி என்பது இதன் கருத்து. வயலுக்கு வரம்புபோல, மொழிக்கு இலக்கணம் வரம்பு. காவல் - வேலி. காப்பு என்பதாகும். தொல்+காப்பு+இயம் என, தொல்காப்பி யம் பிரிந்து பொருள்கொடுக்கும். இலக்கியம், வாக்கியம்

Page 14
4 கடலும் படகும்
என்பனபோல் அமைந்த சொல் அமைப்பு இதுவாகும். தொல்காப்பியர் எழுதிய இலக்கண நூலுக்கு, அதன் தன்மை நோக்கிப் பின்னுள்ளோர் கொடுத்த பெயர் இதுவாதல் வேண்டும். அன்றி, தம்பெயரையே தம் நூலுக்கும் பெயராக வைத்தாரெனக் கருதுவது அறி வுடையோர் நாணுக்கு இழுக்குத் தரும் முயற்சியாகும். எதுவாயினும், இலக்கணத்தின் தன்மையைக் காப்பு" எனக் குறிப்பிட்டுத் தொல்காப்பியமென அந்நூல் பெயர் தேடிக்கொண்டது புலமையுணர்வுக்கு விருந்தேயாகும்.
1610 சூத்திரங்களைக்கொண்ட தொல்காப்பியம் மிகப் பரந்ததென்பதில் ஐயமில்லை. பரப்பாலும் தரத்தாலும் தொல்காப்பியம் கடல் போன்றதே. தொன்மையான, நமக்கும் மொழிக்கும் நன்மையான இக்கடலில் நாமும் இறங்கிப் பார்த்தால் என்ன? இவ் இறக்கத்தால் நமக்கு என்ன பயன் ஏற்படும்? பயனை நிதானித்த பின்பே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்திடல் வேண்டும். நல் லது, இலக்கணம் என்பது என்ன. அதனுல் நமக்கு ஏற் படும் பயனென்ன என்பதை முதலில் பார்ப்போம்!
மொழி நம் கருத்தைப் பிறர் புரிந்திடவும் பிறர் கருத்தை நாம் அறிந்திடவும் உரிய சாதனமாகும். அறி தல், புரிதல் என்ருல் இலகுவாக, தெளிவாக, சிரம மின்றி உணருவதையே அவை கருதும். இம் முயற்சி எளிதாக நடைபெற, பேசுவோனுக்கும், கேட்போனுக் கும் பொதுவான மொழிப் பொதுநிலை அல்லது மொழி மரபு ஒன்று வேண்டும். இதுவே இலக்கணம் ஆகும். இந்தப் பொதுநிலை அல்லது மரபு அல்லது இலக் கணம் இன்றேல் நாம் சொல்லுவதும் எழுதுவதும் நம் முடனேயே நின்றுவிடும். இலக்கண நியதிக்கு உட்படாது அவரவர் பேசுவதுபோல் எழுதுவதுமாயிருந்தால் நெடுங் கணக்கு ஒன்றேயானலும் மொழி, வேறு வேறு மொழி களாகிவிடும். பேச்சுவழக்கென்னும் வேற்றுமைக்கிடை யில் ஒற்றுமையை ஏற்படுத்தியதே, இலக்கணம் மனித னுக்குச் செய்த மாபெரும் நன்மையாகும்.

கடலும் படகும் 5
இவ்வுண்மையைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட 5ம் முன்னேர், பேச்சு மொழியையும் எழுத்துமொழி யையும் நன்கு ஆராய்ந்து சொற்களிலும், சொற்ருெடர் களிலும் ஒன்ருக ஒடிய பொதுமைகளைப் பிரித்தெடுத்து அவற்றிற்கு மரபு அல்லது இலக்கண மென்று பெயரிட்டு, அவற்றை நாம் எவ்வாறு கையாளவேண்டுமென விதி வடிவிற் சொல்லித், தம்பணியை நிறைவுறச் செய்துள் ளார்கள். இவ்விதிகளைக் கூறும் நூல்களே இலக்கண நூல்கள்.
இவ்வாறு ஏற்பட்ட இலக்கணம் சரியாக எழுதுவ தற்கும், பேசுவதற்கும் மாத்திரம் அன்று, நமக்குச் சொற்சிக்கனத்திற்கும் வழிகாட்டுகின்றது. ‘இது ஒரு பசு' எனச் சொல்லவேண்டியதில்லை. இது பசு என்ருலே போதும். அப்படியே இது ஒரு பெரிய மரம் என்று சொல்வது பிழையாக, இது பெரிய மரம் என்பது சரி யாகிறது. இது என்ற சொல்லே ஒருமையுணர்த்தும் சுட்டுப் பெயர். மீண்டும் ஒரு எனக் கூறுவது கூறியது கூறலாகும். அது குற்றம்: இப்படியே இவன் பணக்காரணுயிருக்கிருன், இவன் நல்லவனுயிருக்கிருன் என்பவற்றை இவன் பணக்காரன், இவன் நல்லவன் என்று கூறிவிடலாம். "நான் வருகிறேன் நீ போ' என்பதனை, வருகிறேன் போ என்று கூறிவிடலாம். இவ்வசதியை நமக்குத் தந்துகொண்டிருப்பது தமிழ் இலக்கண அமைப்பேயாகும். தமிழ் இலக்கணத்தின் ஆண், பெண், பலர், ஒன்று, பல என்ற பாற்பாகுபாடும், அவன், அவள், அவர், அது, அவை என்னும் சுட்டுப் பெயர்த்தோற்றமும், மூவிடப்பெயர்களும், எண்ணுப் பெயர்களும் மொழிச்சிக்கனத்திற்குக் காரணமாகின்றன. தந்தியடிப்பதற்குக் கூட நமது தமிழ், பேருதவியாகிப் பணத்தையும் மீதப்படுத்துகின்றது. ‘மனிதர் இருவர் வந்துள்ளனர், நீ அவசியம் வா", எனத் தந்தி கொடுப் பது பிழையாவதுடன் பணத்தையும் பறித்துவிடுகிறது. இதனை "இருவர் வந்துள்ளனர், அவசியம் வா’ எனத் தந்தியிற் கொடுக்கலாம்.

Page 15
கடலும் படகும்
இலக்கணப்பயன் இவ்வளவுடன் நின்றுவிடவில்லை. நம் முதுபெருஞ் சொத்து என்று கொண்டாடப்படும் இலக்கிய நூல்களைக் கற்றுக்கொள்வதற்கும் இலக்கண, அறிவு வேண்டப்படுகின்றது. இலக்கண அறிவு இன்றிச் செய்யுள் மூலத்துடன் சேர்ந்து அனுபவிப்பது சாத் தியமில்லை.
இப்பொழுது கடலிற் குதிப்பதற்கு நமக்கு ஆவேசம் ஏற்படுகிறது. இருந்தாலும் பாதுகாப்புத் தேவை. அதற் கும் நேமிநாதம் நம்மிடம் உள்ளதே. பயம் வேண்டா. கி. பி 12-ம் நூற்ருண்டில் வாழ்ந்த குணவீரபண்டிதர் என்ற சைனரால் எழுதப்பட்ட மிகச் சுருக்கமான இலக் கண நூலே நேமிநாதம். தொல்காப்பியத்தைக் கற்ப தற்கு முன்னேடியாக இதனை எழுதினர் என்பர். இதற்கு ஒரு நூற்றண்டுக்கு முன்பாக வீரசோழியம் என்ற இலக்கண நூல் எழத்தான் செய்தது. பகுபதவியல் கண்ட நன்னூலாருக்கு வழி திறந்துவிட்ட புதுமைப் பெருமையைத் தனக்கெனத் தேடிக்கொண்டதாயினும் வீரசோழியம் தமிழ் மரபுடன் வடமொழி மரபும் கூற முற்பட்டு, இலக்கணப் படிப்புக்கு மயக்கமும் தொல்லையும் தந்தது. இதனல் தொல்காப்பியத் தமிழ் இலக்கணத்தை நெறிப்பட நினைப்பதற்கு வீரசேர்ழியம் பயன்படவில்லை. மாருக, நேமிநாதமோ தொல்காப்பியப் பரவையிற் குளிக்க உதவிதந்து விட்டது. தொடக்க மாணவர்கள் தொல்காப்பியத்தைப் படிப்பது அவ்வளவு இலகுவான தன்று. தொல்காப்பியச் சொல், சொற்ருெடர் அமைப்பு, சொற்களின் பொருள்நிலைகள் ஒரளவு மொழிப்பயிற்சி இல்லாதவர்களுக்குப் புரிந்துவிடுவன அல்ல. 12-ம் நூற்ருண்டுவரை தொல்காப்பியத்துக்கு உரைவிளக்கம் கூடக் கிடையாது. தொல்காப்பியனருக்குப் பின் குண வீர பண்டிதர் வரையும் மொழி வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலையையும், இலக்கணப் படிப்பில் ஏற்பட்ட பெரு வெட்டையையும் வீரபண்டிதர் நன்கு உணர்ந்திருக்கின் முர். இதஞலேதான் சின்னூல் எனப்படும் நேமிநாதம் தோன்றியது. பண்டிதரின் தமிழ்ப்பணி தமிழுக்கு இன்றியமையாததாய் முடிந்தது. , ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ .

கடலும் படகும்
எவ்வளவு இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூற முடியுமோ அவ்வளவுக்குக் கூறியவர் பண்டிதர். தொல் காப்பியர் எழுத்திலக்கணத்தை 483 நூற்பாக்களில் எழுதினர். குணவீர பண்டிதரோ 24 வெண்பாக்களிற் சொல்லிவிட்டார். தொல்காப்பியச் சொல்லதிகாரம் 463 நூற்பாக்களில் அடங்கியதாக, நேமிநாதச் செர்ல் லதிகாரம் 70 வெண்பாக்களால் முடிந்தது. தொல்காப் பியரை அடியொற்றி, பண்டிதரும் சொல்லதிகாரத்தை மாத்திரம் 9 இயல்களாக வகுத்துச் சொல்லிலக்கணத்தை அருமையாகச் சொல்லிவிட்டார். குணவீர பண்டிதரின் இலக்கணப் புலமையுந் தெளிவும் நேமிநாத த்ன்தப் பட காக்கிவிட்டதில் புதுமையெதுவுமில்லை. நேமிநாதத்தைப் படித்துத் தொல்காப்பியத்தைப் படிக்கும் பழக்கம் நாட் டில் ஏற்பட்டுவிட்டது. தொல்காப்பியச் சொல்லதி காரத்தில் இடர்ப்பாடு ஏற்படும் பொழுதெல்லாம் மீண்டும் நேமிநாதத்தைப்படித்து, அவ் இடர்ப்பாட்டி லிருந்து வெளியேறும் தன்மையும் மாணவரிடையே உண்டாய் விட்டது. இப் படிப்பு முறையைக்கண்டு இதயம் களித்திட்ட புலவர் ஒருவரே நேமிநாதம் ஒரு படகென்று உருவகித்து, அதன் அருமைப்பாட்டையும், பெருமைப்பாட்டையும் அழகிய பாடல் ஒன்றில் வெளிப்
படுத்தினர்.
"தொல்காப்பியக் கடலின் சொற்றீபச் சுற்றளக்கப்
பல்காற் கொண்டேகும் படகென்ப !**
ஆம், தொல்காப்பியம் கடல், நேமிநாதம் படகு!
படகு தயாராக உள்ளபோது கடற்குளிப்புக்கு இனி யும் நாம் ஏன் தயங்குதல் வேண்டும். ஒரு படகன்று, இன்னுமொரு கெட்டியான படகும் நம்மிடம் இப் பொழுதுண்டு. கி. பி. 12 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் வாழ்ந்த பவணந்தியார் என்ற மற்றுமொரு சைனர் நன்னூல் என்ற பெயருடன் இரண்டாவது படகையும் ஓடவிட்டார். ஆணுல் இலக்ணந்தான் ஒடவில்லை. அது கண்டு, ஆறுமுகநாவலர் அவர்கள் இக்கால முறைக்

Page 16
கடலும் படகும்
கேற்ப உரைநடையில் 'இலக்கணச் சுருக்கம்' என்னும் கட்டுமரத்தையும் மிதக்கவிட்டுள்ளார். இதற்கிடையில் வேறு எத்தனையோ வள்ளங்களும் படகுகளும் கட்டப் பட்டாலும், அவையெல்லாம் காலக்கற்பாறையில் மோதி உக்கி விட்டன. நம் குறிக்கோளுக்கு அவைதேவையு மில்லை. கெட்டியான படகு இரண்டு, உறுதியான கட்டு மரம் ஒன்று நமக்கென உண்டு. இவை போதுமான பாதுகாப்புக் கலங்கள்.
நமது மொழி உயிர்த்துடிப்புள்ளதாக இயங்க மொழி வரம்புகளைப் பாதுகாப்பதும். வேண்டுமென்ருல் புதிய வரம்புகளை ஏற்படுத்துவதும் நம் தலையாய கடமையாகும். இலக்கணம், மொழிக்குக் கொடுக்கவேண்டிய காயகற் பம். இளமைப் பூரிப்புக்குக் காயகற்பம் தேவை. தொல் காப்பியர் தமிழுக்குக் கொடுத்த காயகற்பமே தொல் காப்பியம். அதனை உண்டதனுலேதான் தமிழ் அன்னை கன்னித் தமிழ் ஆணுள், என்றும் தமிழ்க் கன்னியாகவே வாழ்வர் ள். இலக்கணம் அற்ற மொழிகளெல்லாம் காலப் போக்கில் அழிந்தொழிந்துவிடும் .
"மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?? என்று திருவிளையாடற்புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் வாய்கொள்ளப்பாடி, தமிழின் வாழ்வையும், வாழ்வின் காரணத்தையும் வெளிப்படுத்தி இருப்பது நம் சிந்தனையைத் தூண்டவேண்டும்.
நோக்கம் புரிகிறது, பயன் தெரிகிறது. எனவே தாமதம் 3.t-sigil, பாதுகாப்புமுண்டு, trusser b தொடங்குவோம்.

சொற்படு விற்பனம்
"சீர்த்தானேடு கொண்டாட்டம் வைத்தல் கூடாது; வைத்தால் முடிவு சாத்தான்' என்று என் ஆசிரியர் அடிக்கடி எச்சரிக்கை செய்வார். ஆசிரியர் எச்சரிக் கையைப் பணிவோடு ஏற்றுக்கொண்டதுடன், சாத்தான் யார், எங்கேயிருக்கிருன், எப்படிப்பட்டவன் என்று அறிந்துகொள்வதற்கும் துடித்தேன். தீய சக்திகளின் விளைவு - பயன் - துக்ககரமான சாவிலேதான் முடிகின்றது எனக் கண்டுகொண்டதும், "சாத்தானை'யும் கண்டு கொண்டேன். நம் முன்னேர், பெயர் வைக்கும் வித்தை யில் எத்துணை வல்லவர்கள் என அறிந்து இறும்பூது எய்தினேன். ஒரு செயலின் பயனையே அச்செயலின் காரணத்திற்குப் பெயராக வைத்து, சொல்லாக்க நெறியை விரிவுபடுத்தியிருப்பது, இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இன்பம் தருவதாகும் . தீய சக்திகள் காரணம்; சாதல் காரியம். இக்காரியத்தையே காரணத் துக்குப் பெயராகக் கொண்டு சாத்தான் என்றுவிட் டார்கள். இவ்வாறே காரணத்தின் பெயரைக் காரியத் திற்கு வைத்ததும் உண்டு. வெப்பு வயிற் பில் உண்டா கும் ஒரு நோய். இதன் காரணம் வெப்பம் . வெப்பம், வெப்பு இரண்டும் ஒரு பொருள் தருவன. வெப்பத்தி ஞல் உண்டாகும் நோய் வெப்பு என்ரு யது. சொற் காரணம் அறியும் இச்சுவை, மேலும் முன்னேரின் மதி வன்மையை அறியும் முயற்சியைத் தூண்டியது.
இந்தச் சிந்தனை ஒட்டத்தில், மருமகன் என்ற சொல் மிதந்தது. இதனல் மருமகனையும் கண்டு கொண் டேன். மணமகன்தான் மருமகன் ஆகிவிட்டான். மணம் என்ற கருத்துத் தரும் இன்னெரு சொல் மரு. மருக் கொழுந்து என்பதில் "மரு’ ‘மணம்" ஆதல் காண்க. மணத்தை எடுத்துவிட்டு, பதிலாக மரு என்பதைச் சேர்த்துவிட்டான், அவ்வளவுதான்! மறுமகன் மருமகன்
2

Page 17
10 s-S?) Lh L u l-G5th
ஆகியது எனக் கூறுவோரும் உண்டு. சொந்த மைந்தர் களில், ஒருமகன் இவன்; மறுமகன் அவன் என ஒருவன் குறிப்பிடலாம். அன்றியும் மறு என்ற சொல்லுக்குக் களங்கம் என்ற பொருளும் உண்டு. எல்லா மருமக்களும் மறு ஏற்படுத்துவது இல்லை. மருமகளும் இப்படித்தான் வந்தவள். இவ்வகையான பெயராக்கம் இன்னெரு வகை.
சிறிய தந்தை பெரிய தந்தை என்ற சொற்களைப் பார்ப்போம். இவை சிறிய மரம் பெரிய மரம்போற் கருத்துத் தரவில்லை. அதாவது தந்தை சிறியவன், தந்தை பெரியவன் என்ற கருத்தில் இல்லை. இப்படியான மற்ருெரு ஆக்கம்.
சிறிய தந்தையைக் கண்டு கொண்டதும், எதிரே காணப்பட்ட தும்புத்தடி மனக் கண்ணிற் பட்டது. தும்புக்கட்டைக்கு இன்னெரு பெயர் துடைப்பம். துடைத்து விடுவோம் என்ற கருத்தில், 'துடைப்பம் ஒரு வினைச்சொல். தன்மைப் பன்மை வினைமுற்று என இலக் கணம் அதனைக் கூறும். வினை நிகழ்ச்சியைக் குறிப்பிடும் ஒரு சொல்லை, அந் நிகழ்ச்சியை முடிப்பதற்குக் கருவி யான ஒரு பொருளுக்குப் பெயராக வைத்த ஆக்கப் பாட்டை நினைந்து நினைந்து எவரும் வியப்புறத்தான் செய்வர். இவ்வாறே ஆற்ருள்” என்ற வினைச்சொல் அகத்தாள் ஆகி, அன்னையைக்குறிக்கும் பெயர்களில் ஒன்ருயதும், அறிய மகிழ்ச்சி தருவதாகும். குழந்தையின் துயர்கண்டு சிறிதும் ஆற்ருதவள் தாய் என்பது சொல் லித் தெரியவேண்டியதில்லை. அம்மன நிலையையே அவ ளுக்குப் பெயராக அமைத்தது வியப்பில்லையா?
** அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்”*
எனவரும் பட்டினத்தடிகளின் பாடலில் இலக்கிய வாழ் வும் பெற்றிட்ட ஆத்தாளின் அருமைப்பாட்டை நர்ம் அறிய முடியும். ஆத்தாள் என்ற சொல்லே நாட்டு வழக்கில், 'ஆத்தை ஆகி நிற்பதும் அறிக. இப்போக்குப் பிறிதொரு வகையான சொல்லாக்க முயற்சியாகும்.

சொற்படு வி -&
AD so 47 نعت :
துடைப்பத்தைக் கண்டு கொண்டதும், வெள்ளாடு கண்ணிற்பட்டது. இந்தக் கன்னங்கரிப் ஆட்டிற்கு வெள்ளர்டு என்று ஏனே பெயர் வைத்தார்கள்? மற்றைச் செம்மறிகளைப் போலல்லாமல் தூ ப்மையாய் இந்த ஆடு காணப்படுவது காரணமோ? அல்ல து கறுப் பில் ஏற்பட்ட வெறுப்போ? பயப்பீதியில் குற்றமே பெரி தாக உடைய செவ்வாய்க் கிழமைக்கு மங்கள வாரம் என்று பெயர் வைக்கவில்லையா? இதே பீதியில் சுடுகர்டு நன்காடு ஆகவில்லையா? உணர்ச்சி அடிப்படையாகப் பெயர் வைக்கும் இம்முறை மற்ருெரு வகையானதாகும்.
அருமந்தன்ன பிள்ளை அருமந்த பிள்ளையாய்விட்டது. தாரத்துக்கு உரிய பராபரிப்பு தாபரிப்பு ஆகிவிட்டது. (இதுபேர்லக் கொழு கொம்பு கெர்மும்புஆகவில்லை.) சொற் சிக்கனமும் எளிமையும் வேண்டி இந்தப் "பிடி"யிலும் முன் னேர்கள் பெயர்களை ஆக்கிக்கொண்டமை, இத்துறையில் ஈடுபடுவோர், பின்பற்றலுக்கு உரியதாகும்.
இப்படியிப்படியெல்லாம் எத்தனை எத்தனைமுறைகளில் பொருட்கள் அத்தனைக்கும் நம்முன்னேர்கள் பெயர் வைத்துள்ளார்கள். சொல்லாக்க வித்தையில் அஃதர் வது சொற்படு விற்பனத்தில் நம் மூதாதையரை எவரும் மிஞ்சிவிட முடியாது. ஆனல் இவ்வித்தையில் இலக்கணம் நாட்டம் செலுத்தவில்லை. செலுத்துவது அதன் நோக் கத்துக்கு அப்பாற்பட்டதுங்கூட.
**மொழிப் பொருட் கர்ரணம் விழிப்பத் தோன்ரு' என்று தொல்காப்பியனரே கூறி, இம்முயற்சிக்கு முற்றுப் புள்ளியும் இட்டுவிட்டார். இருந்தாலும், சொற் பொருட் தன்மையைத் தெரிந்துகொள்ளும் - அஃதாவது 'பெர்ருண்மை தெளியும்" துறைகளில் இம் முயற்சியை யும் அடக்கி ஆராயலாம்.
இலக்கணத்தின் விசாரமெல்லாம் சொல்லின் தன்மை தெரிவதைப்பற்றியது என்றது, “செர்ன்மை தெரிதல்" எனத் தொல்காப்பியராற் கூறப்படுவதாகும் , சொல் லின் தன்மையெனவே, சொல் எதனுல் உண்டாக்கப்படு கிறதோ அதன் தன்மையும், செர்ல் எதனை உண்டாக்

Page 18
12 கடலும் படகும்
குமோ அதனுடைய தன்மையும் அடங்கும். ஒலியால் உண்டாவது சொல்; ஆகவே ஒலியின் தன்மை பற்றிய எழுத்திலக்கணமும், சொல் தொடரை உண்டாக்கின்றது. ஆகலே தொடரின் தன்மைபற்றிய தொடர் இலக்கணமும், இலக்கணம் என்றதில் அடங்குவனவாம். கும்மி அடிக்கும் சிறுமி அல்லது கோலாட்டம் அடிக்கும் சிறுவனைப் போன் றது சொல்லிலக்கணம்.
இலக்கணநூல்கள் எழுத்திலக்கணத்தை ஒரு பிரிவா கவும் சொல்லின் தன்மையையும், தொடரின் தன்மை யையும் சேர்த்து இன்னெரு பிரிவாகவும் கூறும் எழுத் திலக்கணத்தில் தமிழ் நெடுங்கணக்கின் எண்ணிக்கை, ஒலிப்பெயர், ஒலி ஒழுங்கு, ஒலிப்பிறப்பு, ஒலி வடிவம், ஒலி அளவு, மொழி முதல் ஒலிகள், மொழி இறுதி ஒலிகள், இன்ன ஒலியுடன் இன்ன ஒலிதான் ஒன்றுபட்டு இணைந்து மயங்கி நிற்கும் என்ற இடைநிலைமயக்கம், பதில் ஒலிகள், கூட்டொலிகள் ஆதியான ஒலி இலக்கணம் எல் லாம் கூறப்படும். மேலும், ஒரு தொடரில் நிலைமொழி இறுதி ஒலியும், வருமொழி முதல் ஒலியும், எவ்வெச் சந்தர்ப்பங்களில் எவ்வெவ்வாறு நிற்குமெனவும் எழுத் திலக்கணம் விரிவாகக் கூறும். இது புணர்ச்சியியல் எனப் படும். இயல் என்ருல் இயல்பு. - புணர்ச்சி பற்றிச் சிறிது குறிப்பிடவேண்டும். பொரு ளைச் சிதைக்கும் நடையைக் கடினமாக்கும் அளவுக்குப் புணர்ச்சி கூடாது. இப்போக்கு மொழியின் நோக்கத் தையே தகர்த்துவிடும். உதாரணமாக, 'தொல்காப்பியர் ஒர் அறிவுள்ள மனிதர் என்ற தொடரைத் தொல்காப்பியர் ஓரறிவுள்ள மனிதர் என்று எழுதினல், எப்படிப் பொருள் சிதையும் என்பது தெரிந்துவிடும். தொல்காப்பியர் ஒரறி வுள்ள மனிதரா? அவர் புல், பூண்டுவகையைச் சேர்ந்த வரா? தொல்காப்பியரில் நமக்கென்ன கோபம்? அவரைச் சிறுமைப்படுத்துவதா நமது பெருமை? என்றெல்லாம் கேட்கத் தோன்றும். ஓர் அறிவு ஓரறிவு ஆவதற்கு விதி உண்டுதான். ஆனல் விளைவையும் பார்த்திட வேண்டும் இன்னும் ஓர். உதாரணம் பார்ப்போம். பண்டிதர் ஆ. பரமேஸ்வரன் என்றதைப் பண்டிதரா பரமேஸ்வரன். என்றுவிட்டால் முடிவு என்ன? ரகர மெய்யுடன் ஆகா ரத்தைச் சேர்க்கச் சத்தில்லாமற் போய்விடுமே. மேலும்,

சொற்படு விற்பனம் 3
திகழ்தசக்கரம் என்றதைத் திகடசக்கரம் எனச் சேர்க்க, நடைகடினமடைகின்றது. ஏன் வாசகனுக்கு அவசியமற்ற தாமதத்தை உண்டாக்க வேண்டும்? எனவே, புணர்ச்சியின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நடை போடுவதே நல்லது.
இனி, சொல்லிலக்கணத்துக்கு வருவோம். ஏதோ ஒவ்வொரு காரணம் பற்றி எழுந்த சொற்கள் தொழிற் பாடு நோக்கிப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகையாகச் சொல்லிலக்கணத்தில் வகுக்கப்பட்டுள்ளன. பெயர்கள் தோன்றும் வகையையும், வினைகள் ஆகுமாற் றையும் சொல்லிலக்கணம் விரிவாகச் சொல்லும், பெயர்த் தோற்றமும், வினை ஆக்கமும் சொற்படு விற்பனமே. சொற்படு விற்பனம் என்ருல் சொல் உண்டாகும் வித்தை, சொல்லை உண்டாக்கும் வித்தை என்று பொருள்படும். இப் பொருள்களால் சொல் தானக உண்டாகின்றதோ, அல்லது உண்டாக்கப்படுகின்றதோ என்ற விஞ எழும் , தாடிக்காரனைப் பார்த்து, "அண்ணே! ஏன் தாடி வளர்க் கிறீர்கள் என்று கேட்டால், "நான் வளர்க்கவில்லை அது தானே வளர்கிறது" என்று அவன் பதில் தருவதாக வைத்துக்கொள்வோம்; பதில் ரசமாக இருக்கிறது. அவன் செய்த வேலையெல்லாம் வளர்ந்து கொண்டுவரும் தாடியை நறுக்காமல் விட்டதுதான். இதுபோன்றதே சொல்லின் தன்மை தெரியும் சொல்லிலக்கணத்தில் சொல்லாகும் முறையும் , - w
திணை, பால், எண், இடம், கால அமைப்புகளை நோக்கி சொற்கள் வளர்ந்துகொண்டு வருகின்றன. மேலும் அடிச் சொற்கள் சுட்டுப் பெயர்களாயும், எண்ணுப் பெயர்களா யும், மூவிடப்பெயர்களாயும், தோற்றம் பெற்றுள்ளன. பொன் என்ருெரு சொல். ‘அன்’ விகுதிபெற்று பொன்னன் ஆகி உயர்திணை ஆண்பால் உணர்த்தும்; இகர விகுதி பெற்றுப் 'பொன்னி ஆகி உயர்திணைப் பெண்பால் உணர்த்தும்; அர் விகுதி பெற்றுப் பொன்னர் ஆகி அத்திணைப் பலர்பால் உணர்த்தும். இவ்வாறு பெயர்த் தோற்றங்களைக் காண்க.
‘மண" என்ற வினைப் பகுதியிலிருந்து மணம் என்ற பண்புப் பெயரும், ம்ணத்தல், மணப்பு என்ற தொழிற்

Page 19
l4 கடலும் படகும்
பெயர்களும் உண்டாதல்போக மணந்தான், மணந்தாள், மணந்தார், மணந்து, மணந்தன என்று இறந்தகால ஐம்பால் வினைமுற்றுக்களும் ஆகின்றன; மணக்கிருன், மணக்கிருள், மணக்கிருர், மணக்கிறது, மணக்கின்ற என ஐம்பாலுக்கும் நிகழ்கால வினை முற்றுக்களாகும்; மணப் பான், மணப்பாள், மணப்பார், மணக்கும் என எதிர் கால முற்றுக்கள் ஆகும். மணக்கும் எதிர்காலத்தில் ஒரு மைக்கும் பன்மைக்கும் பொதுவாக நிற்கும். இவ்வளவும் படர்க்கை இடத்திற்கு உரியவை.
மணந்தேன், மணந்தோம் என இறந்த காலத் தன் மைக்கும், மணந்தாய், மணந்தீர்கள் என இறந்த கால முன்னிலைக்கும்வரும், இவ்வாறு ஏனைய முற்றுக்களும் ஆகும். மேலும், மணம் என்ற வினைப்பகுதியிலிருந்து, மணந்த என்ருெரு இறந்தகாலப் பெயரெச்சமும், மணந்து, மணக்க என்ற வினையெச்சங்களும் ஆகின்றன, "மணந்து" இறந்த கால வினையெச்சம் மணக்க முக்காலப் பொது வினையெச்சம். இன்னும், மண என்ற வினைப் பகுதியே அடைமொழியாகிக் கூட்டுப் பெயர்களையும் தோற்று விக்கும். அவை மணவினை, மணமலர், மணப்பந்தல், மன மாலை என வரும்.
இவ்வளவுடன் நின்றுவிடல் இல்லை. மண என்ற பகுதி யிலிருந்து மணக்கப்பட்டது, மணக்கப்படுகின்றது, மணக் கப்படும், என முக்காலச் செயப்பாட்டு வினை முற்றுக் களும் ஆக்கம் பெறும் மணப்பித்தான், மணப்பிக்கிருன், மணப்பிப்பான் எனப் பிறவினை முற்றுக்களும் ஆகும். இத்தன்மைத்தாக ஒரு வினைப்பகுதியிலிருந்து எத்துணைச் சொற்கள் உண்டாகின்றன என்று தெரிகின்றது அல்லவா?
இனி, இடைச் சொல்லின் இயல்பு பற்றிச் சிறிது ஆராய்வோம். மொழிக்கு வாழ்வும் வளமும் தருவன இவை, நம் சிந்தனையின் வளைவு நெளிவுகளையெல்லாம் வனப்புற எடுத்தியம்ப வழி செய்வன இவை. இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ந்தும் உவகையும், வாழ்வுக்கு ஊற்றும் தரும் குழந்தை போல மொழிக்கு ஏற்றம் தருவன இடைச்

சொற்படு விற்பனம் . Η 5
சொற்கள். சருத்து வளம் இடைச் சொல்லின் வளமா கும். இடைச் சொற்கள் இல்லாத மொழி மொட்டை மொழி. எடுத்துக்காட்டாக, 'ஐயரும் வந்துவிட்டார்” என்ற தொடரில் 'உம்' என்ற இடைச்சொல், ஐயருடன் சேர்ந்துகொண்டு ஆற்றும் விநோதங்களைப் பார்ப்போம். மற்றவர்கள் எல்லாரும் முன்பே வந்துவிட்டார்கள், வர வேண்டிய ஐயரும் இறுதியாக வந்துவிட்டார் என்பது ஒரு கருத்து, வாவிருப்பமின்றி இருந்த ஐயரும் வந்து விட்டார் என்பது இன்னெரு கருத்து. ஐயரும் வந்து விட்டார், இன்னுமேன் சுணக்கம் என்பது மற்ருெரு கருத்து. அடே ஐயரும் வந்துவிட்டாரோ என்ற நையாண்டி வேறு. இவ்வளவும் 'உம்' என்ற இடைச் சொல்லின் விண்ணுணம். இப்படியே 'தம்பியும் படிக் கின்ருய் போல’ என்ற தொடரிலும் நையாண்டி, கிண் டல், ஏதோ ஒரு காரியத்தைச் செய்விப்பதற்கான அவா வும் பரபரப்பும் ஆதிய எல்லாம் காண்க. மலர் பூக் கடையிற் காணப்படும்பொழுது அதன் பெறுமதி ஒன்று. இறைவன் பாதத்திற் காணப்படுகையில் இன்னென்று. இடைச் சொற்கள் இறைவன் திருவடியிற் காணப்படும் மலர் போன்றவை.
இறுதியாக உரிச் சொற்கள் பண்பை உணர்த்தும் சொற்கள் என்பதை நினைவிற்றருவதுடன் நின்று சொற்கள் தொடராகு மாற்றையும் சிறிது பார்ப்போம். ஒரு சொல் இன்னெரு சொல்லுடன் சேரும்பொழுது தொடர் ஆகின் றது. தொடருவது தொடர். தொடராகும்பொழுது சொற்களுக்கிடையில் திணை, பால், எண், இடம், கால இசைவு வேண்டப்படும். மேற்குறிப்பிட்டவற்றில் ஒன்றுக் கொன்று தொடர்பு வேண்டும். தொடர்பை உடையது தொடர். இத் தொடரை வேற்றுமைத் தொடர், அல் வழித்தொடர் எனப் பிரித்து, இலக்கணம் ஆராயும். இத் தொடர்கள் முழு வாக்கியமாயும் ஆகும். பொரு ளின் தன்மை தெரிவிக்கும் சொற்ருெடராயும் நிற்கும். * வாணி வந்தாள்’ என்பது முழு வாக்கியம். "கலைவாணி? என்பது வாணியின் தன்மையைத் தெரிவிக்கும் ஒரு குறைச் சொற்ருெடர், தொடராக்கமும் சொற்படு விற்பனத்தில்

Page 20
16 கடலும் படகும்
ஒரு பகுதியே. தொடராக்கத்தில் இலக்கண இசைவு இன்றேல், அது தொடராகாது, பேசுவோனுக்கும் கேட் போனுக்கும் பெரும் இடராகும்.
இதுவரை, எழுத்தின் தன்மையோ சொல்லின் பண்போ தொடரின் இயல்போ எல்லாம் சொற்படு விற் பனம் எனக் கண்டுகொண்டோம். இலக்கணப் படிப்பு நமக்கு இன்ருயின், நம்மிடத்து இயல்பாக உள்ள சொற் படு விற்பனமும் மங்கி மறைந்து விடும். அஃதாவது பட்டுப்போகும், படச்சொல்வது விற்பனமன்றிப், படச் செய்வது வித்தையாகாதே!

பாட்டைத் திறப்பது பண்ணலே
கூரிய மதிவன்மையும் சீரிய சிந்தனை வளமும் இயல் பிற் கைவரப்பெற்ற பலர் உலகின் கண்களிற் படுவதில்லை. அன்னவர் சிந்தனைச் செல்வத்தை எல்லாம் வாரி வழித் தெடுத்து இலகுமுறையிலும் சரள நடையிலும் பொது மக்களுக்குத் தருகின்ருர்களே சிலர், இவர்களுக்குத் தான் எத்துணை மதிப்பும் பாராட்டும்? சூரிய ஒளியைப் பிரதி பலிக்கும் இந்தச் சந்திரனுக்கு எவ்வளவு வாழ்த் தும் வர வேற்பும் என்று எண்ணியபடியே அந்த அழகு நிலவில் கடற் கரையோரமாக நடந்துகொண்டிருந்தேன். என் நண்பர் ஒருவரும் என்கூட வந்துகொண்டிருந்தார். உள்ளம் பணித் தபடியே உலாவிக்கொண்டு போம்பொழுது எங்கிருந்தோ திடீரென்று ஈரடிகள் எம் செவியில் விழுந்தன. இரண் டாம் அடியுடன் நண்பன் நின்று விட்டான். அந்த முதல் அடியோடேயே நான் நின்றுவிட்டேன். ஆனல் என் சிந் தனை சிறகடித்தது.
'பாட்டைத் திறப்பது பண்ணுலே?"
என்னை நிறுத்திய அந்த முதலடி இதுதான். அடக்க மான தாக்கமான அடி. பாரதியின் அடியல்லவா?
பா, பாட்டு, பண் - இம்மூன்று சொற்களும் சிந்தனைத் திரையில் நிழலிட்டன. பா என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்த சொல் பாட்டு. பா என்ருல் பரந்து பட் டுச் செல்லும் ஓசை என்ருர் அறிஞர் ஒருவர். பரந்து பட்டுச் செல்லும் ஒசையின் மொழி வடிவமே பாட்டு என்பதாகும். பா, பண் என்பன ஒசை என்னும் பொருள் தரும் இரு சொற்கள். தாள அறுதியில் ஒழுங்கு படுத் கப்பட்ட ஒலி ஒசை, ஒழுங்காகப் பண்ணப்பட்ட ஒலி பண். ஆகவே, பா, பண் என்ற இரு சொற்களில் ஒரு சொல் மனத்திரையிலிருந்து மறைந்தது. பண்ணிலும் பாட்டிலும் (பண்பாட்டிலே) சிந்தனை ஒளி சிதறியது.
7

Page 21
8 கடலும் படகும்
ஆம், பாட்டுப் பற்றிய பலமான தத்துவம் ஒன்றைப் பாரதி பாட்டாலேயே சொல்லி விட்டான். எதனுல் பாட்டு உண்டானதோ அதனலேயே அந்தப் பாட்டைத் திறந்து விடவும் வேண்டும். அல்லாக்கால் பாட்டு கூண்டுக் கிளி போல் சோர்ந்து நிற்கும். அவிட்டு வாணக்கொட்டு முனையில் நெருப்பைப் பிடிக்கும் பொழுதே வெடித்து மேலே சென்று பல்வேறு வண்ண ஒளிகளை வானத்திற் பரப்புகின்றது. இது போன்றதே கவிதையும் பாட்டின் மொழி வடிவம் வெறும் வாணக் கொட்டு-வார்த்தைச் கட்டு, ஒசையால் திறக்கின்ற பொழுதே அந்தக் கொட்டு வெடித்து, கட்டு அவிழ்ந்து, உணர்ச்சி நரம்புகளைத் தாக்கி, கவிஞன் அனுபவித்த உயர்ச்சிகளே நாமும் அனுபவிக்கச் செய்கின்றது. இதனுல் அன்ருே, பா ஒதல் என்று நம் முன்னேர்கள் சொல்லிவைத்தார்கள். ஒசையுடன் படிப்ப வர்களே ஒதுவார்கள்.
இந்த ஓசைதான் பாட்டையும்,/ உரைநடையையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கல்லும் ஆகும். நல்லது, ஒசையென்ருல் என்ன? மிகச் சேய்மையில் ஒருவன் பாடு கின்றன். அவனே எழுத்து வாசனை அற்றவன். செவி வழியாக நினைவுபடுத்திய பாடலை வாய்வழியாக விடுகின் ருன். அவ்வளவுதான். பாடலைக்கேட்டுக் கொண்டு இருந்த நாம், அந்த ஒசையிலிருந்து அவன் பாடிய பாட்டு, இன்ன வகைப்பாட்டு என்றுவிடுகின்ருேம். அஃதாவது அவன் பாடியது வெண்பா என்ருல், வெண்பா என்போம். அகவல் என்ருல் அகவல் என்பேர்ம். இப்படியே ஏனைய பாக்களுக்கும் ஒசையைக் கொண்டு, இன்ன பா என்போம். இவ்வாறு இன்ன பாட்டு என்று நாம் அறிந்திடுவதற்கு ஏதுவர் ய் இருந்த ஓசையே; பா எனப்படும். பக்கத்து அறையில் பலாப்பழம் உண்டு. அதை நாம் பார்க்க வில்லை, மணத்தைக் கொண்டு பலாப்பழம் அறைக்குள் உண்டு எனப் பகர்ந்து விடுவோம். இதே போலத்தான் மிகத் தூரத்திலிருந்து படித்தவனுடைய பாடலையும் ஓசையைக் கொண்டு தீர்மானித்து விடுவோம். இந்த விளக்கத்திலிருந்து தெரிவது ஒசையின் மொழி வடிவம் பாட்டு என்பதே. இம் மொழி வடிவத்தை ஒகையால்

பாட்டைத் திறப்பது பண்ணுலே 9
திறந்துவிட வேண்டுமென்று பாரதி ஒதியது தருக்க ரீதியானது. ஓசைதான் பாடகன், சுவைஞன், கவிஞன் ஆகிய மூவர் இதயங்களையும் மின்னல் வேகத்தில் பிணைத் தும் இணைத்தும் விடுவதாகும். பாடலை உரைநடைபோல் வாசிப்பது அப்பாடலை ஏளனம் செய்வதாக முடியும் . உரை நடை வாசிப்பிலும் பார்க்க, பாடலைப் படி எடுத்துப் பலருக்கும் கொடுத்துவிடலாம் அல்லவா? தனியாகக் கவி அரங்கம் ஏன்? இந்த இடத்தில் வசன கவிதை என்பதைப் பற்றியும் இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும். வசன கவிதை முயற்கொம்பு போன்றது. முயல் என்ற ஒரு பொருளும் உண்டு. கொம்பு என்ற பொருளும் உண்டு ஆனல் முயற்கொம்புதான் இல்லை. வசனமும் உண்டு, கவிதையும் உண்டு, வசன கவிதை மாத்திரம் இல்லை.
எஃகு செவியும் நுண்ணுணர்வுமுடைய முன்னேர்கள், குறிப்பிட்ட ஒசை தருவதற்கான சீர், தளை அமைப்புக் களை நன்கு உணர்ந்தனர், கண்டு கொண்ட யாப்பின் பொது அமைப்புக்களை இலக்கணமாக்கியும்தந்துவிட்டனர், நம்மிற் பலருக்கு எஃகு செவி இல்லை. உள்ளது வெறும் காது. அது ஒன்றிலும் அடங்காது, ஒன்றையும் அடக் காது. அதனல் முன்னேர்கள் மொழிந்த ஒசை இலக் கணத்தை அஃதாவது யாப்பிலக்கணத்தை நாம் அறிந்து தான் ஆகவேண்டும். யாப்பு என்ருல் கட்டு என்று பொருள். அசை, சீர், தளை, அடி தொடை என்னும் உறுப்புக்களைக் கொண்டு கட்டும் கட்டு என்பதாகும். எலும்பு, தோல், மச்சை முதலியவற்ருல் உண்டாக்கப் படும் நமது உடலாகிய யாக்கை போன்றதே யாப்பும். இவ்விரு சொற்களும் யா என்ற வினையடியிலிருந்து பிறந் தனவே. சுருங்கச் சொல்லின் ஒசை அலைகளின் வரை யறை பற்றிய இலக்கணமே யாப்பு எனப்படும். கூடவே யாப்பிலக்கணம் எதற்காக வேணடுமென்ற வினவும் எழுகிறது. w
'காரிகை கற்றுக் கவிபாடுவதிலும், பேரிகை கொட்
டிப் பிழைப்பது நன்று" என்ருெரு முதுமொழியுண்டு. யாப்பறிவு கவிதை பாடுவதற்காகத்தான் என்ற தனி

Page 22
20 கடலும் படகும்
நோக்கத்தையே, இம் முதுமொழி கிண்டல் பண்ணுகின் றது. 'மனிதன் சிந்திக்கும் பிராணி," "பாலூட்டிகள் முதுகெலும்புடையன", "கொம்புடையன எல்லாம் அசைபோடுவன' என்றிடும் கூற்றுக்கள் போல் இம் முது மொழி, தொகுப்பளவை முறையிற் காணப்பட்ட பொது உண்மை அன்று. தனியொருவரின் அபிப்பிராயமே இம் முது மொழிக் கூற்று. இயல்பிற் கவித்துவம் கைவரப் பெற்ற ஒருவனும் அவ்வல்லபம் பீறிட்டுப் பிரவகிப்ப தற்கான கவிதை வடிவங்களை முதலிற் பழகத்தான் வேண் டும். இது இருவழியிற் சாத்தியம் ஆகலாம், முதல் வழி, நான்கு வகைப்பட்ட ஓசைகளையும் நன்கு வெளிப் படுத்தக்கூடிய ஒதுவார் ஒருவரிடமிருந்து ஓசை அலைகளின் தன்மையையும், எல்லையையும் அறிந்து கொள்வதாகும்.
இதற்கு எஃகு செவியும் வேண்டும், ஒதுவாரும் வேண்டும்.
இரண்டாவது வழி, முன் குறிப்பிட்ட இரண்டும் கெட்ட நிலையில் யாப்பிலக்கணத்தைப் படிப்பதே. கவிஞன் ஆவது வேறு, கவிதை எழுதப் பழகிக் கொள்வது வேறு, எதற் கும் உட்தூண்டுதல் இல்லாமல் எதுவும் நடக்காது. யாப் பிலக்கணமும் உயர்ந்த கவிஞர்களை உற்பத்தி செய்வதை விட, தாழ்ந்த தரக் கவிஞர்களைக் கவிதை பண்ணும் கலையிலிருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது என்று கூறுவது மிகப் பொருத்தமாகும். குறிப்பிட்ட முதுமொழி அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட முதுமொழியன்று.
கவிதை வடிவு கைவரப் பெறுதல் தவிர, யாப்பிலக் கணப் படிப்புக்கு வேறு சில நோக்கங்களுமுண்டு. பாடல் சரியெனத் தீர்மானிக்க யாப்பறிவு உதவுகின்றது. தருக் கம் படித்தவர்கள் அனைவரும் நுட்பமாகத் தருக்கிக்க முடியாவிடினும் ஏனையோர் விவாதத்தில் ஏற்படும் வழுக்களையும் குற்றங்களையுஞ் சுட்டிக் காட்ட முடியும். மூன்ருவதாகப், பழைய செய்யுட்களைப் படித்து விளக்கம் பெற யாப்பறிவு அவசியம். மோனை எதுகைத் தொடர்பு களைக் கொண்டு, சொற்களைத் தீர்மானிக்க முடியும். தொடைகளின் தன்மையைப் புரிந்து கொண்டால் மாத் திரம் பொருள் விளக்கம் ஏற்படும் இறுதியாக, இயல்

பாட்டைத் திறப்பது பண்ணுலே s 21
இலக்கணத்தை விளங்கிக் கொள்வதற்கு யாப்பமைதி அறிந்துதான் ஆகவேண்டும். செய்யுளில் வளர்ந்த மொழி தமிழாகும். அமைப்பு சொல்லிலக்கணத்தை அதிகம் பாதித்துவிட்டது.
யாப்பிலக்கணம், ஒசை பற்றி எழுந்த பாக்களை வெண்பா, அகவற்பா, கவிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகையாகப் பிரித்து ஒவ்வொன்றின் இயல்புகளையும் தெளிவுறக் கூறுகின்றது. முதலில் ஒசையின் மொழி நடைக்கு வேண்டிய அசை, சீர், தளைகள் பற்றி நுணுக்க மாக விளம்புகிறது. அடுத்து ஒவ்வொரு பாவுக்குமுரிய ஒசையின் தன்மைகளை ஒவ்வொன்ருகக் கூறும். ஒரே ஒசையிலேற்படும் பல்வேறு சந்தவிகற்பங்களையும், அஃதா வது வண்ணங்களையும் யாப்பியல் நுவலும். யாப்பியல், பாட்டியல் என்பன யாப்பிலக்கணத்துக்குரிய மறுபதங் களாகும்.
முதற் கண் வெண்பாவைப்பற்றி அறிவோம். வெண்பா " " கடுமையான சீர், தளை நியமங்களுக்கு உட் பட்டது. குறிப்பிட்ட தளைகள் தவிர வேறு தளை விர வாதது. வெண்பா என்ருல் தூய்மையான பர் என்பது பொருள், அன்றி, வெள்ளைப் பாட்டு என்ற கருத்தன்று. தன்மையினல் வெண்பாவை அந்தணக் கன்னிக்கு ஒப் பிடுவர்.
பிராமணக் கன்னி யெர்ருத்தி நோய்வாய்ப்பட்டாள் என வைத்துக்கொள்வோம். பிராமணர் அல்லாத வைத் தியர் ஒருவர் சிகிச்சை கொடுப்பதற்காக அழைத்துவரப் படுகிருர் அவர் நோயாளியின் கையை நேரே தொட்டு நாடி பார்க்க முடியாது. நோயாளியின் கையைப் பட்டுச் சேலை ஒன்ருற் சுற்றிய பிறகே வைத்தியர் தன் கையை வைத்து நாடி பார்த்திடல் வேண்டும். அந்தக் காலங் களில் இப்படித்தான் நடந்ததாம் . இந்த உண்மையால் வெண்பாவின் கற்பும் விளங்கிவிடுகின்றது.
எந்தவகையிலும் எந்த இடத்திலும் தளைக் கலப்பு நிகழாத" வெண்பாவுக்கு உரிய ஓசை செப்பல் என்று முன்ஞேர் செப்பியுள்ளனர். ஒருவன் ஒன்றை விஞவ.

Page 23
22 கடலும் படகும்
மற்றவன் விடை சொல்லும் நடையில் அமைவது செப்பல் ஓசை எனப்படும். செப்பு என்ருல் விடையென்ற கருத் தாகும்.
'யாதானும் நாடாமால் ஊராமால் என்னுெருவன்
சாந்துணையும் கல்லாத வர்று. ’’ இது ஒரு குறள் வெண்பா. நீரோசையர்கச் செல்லும் சீரோசையையும். சீரோசை தரும் செப்பல் ஓசையை யும் அருமையாக வெளிப்படுத்துகிறது. பொருளுக்குத் தக செப்பல் ஒசை விரிந்து செல்வதையும் உணர்க.
வெண்பாவை அடுத்து அகவற்பாவை யாப்பியல் கூறும். அகவற்பா, ஆசிரியப்பா, அரசர்பா எனினும் ஒன்றே. அகவல் ஒசையுடையது அகவற்பா , அகவுதல் என்ருல் அழைப்பது என்று பொருள். ஒருவர் மற்ருெரு வரைக் கூவி அழைக்கும் வகையிற் செல்வது அகவல் ஒசை. இது ஆற்றெழுக்குப் போன்ற தன்மையைக் கொண்டது.
'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தே விழைக்கும் நாடனெடு நட்பே' இப்பாடலைப் படிக்கப் படிக்க அகவல் ஓசை அலை புரள் கின்றது.
ஆசிரியப்பாவை அடுத்து, கலிப்பாவின் தன்மை கூறப் படும். கலி என்ருல் துள்ளல், எழுச்சி, பொலிவு, வேகம் என்றெல்லாம் பொருள் உண்டு. மனித மெய்ப்பர்டுகளை வெளிப்படுத்தி, உணர்ச்சிகளை எழுப்புதற்கான ஒசையே கலி ஆகும். இக் கலியோசையைத் துள்ளல் எனக் குறிப் பிடுவர். போர்க்களத்தில் செல்லும் குதிரை நடை யுடையது துள்ளல் நடை பாடலை எழுப்பி எழுப்பிக் கொடுக்கும்.
*அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர். வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான்,கேளினி",

பாட்டைத் திறப்பது பண்ணுலே 23
இவ்வரிகள் கலிப்பாடலொன்றின் ஒரு பகுதி. துள்ளல், வரிக்கு வரி துள்ளுகிறது.
தனதான தனதந்த தனதான தனதந்த தனதான தனதந்த தனதான தனதந்த என்று ஒசை அலை போடுவதை உணரமுடிகிறது.
இறுதியான வஞ்சிப்பா, தூங்கல் ஓசையைக் கொண் யாப்பிலக்கண உரையாளர்கள் "தூங்கல்' என்ற ه از مست. சொல்லுக்குரிய மறு பதங்களை விளக்கமாகத் தந்து விட்ட னர். இதனை ஒத்துக் கொள்ளுவது சற்றுக் கடினமாகும். "தூக்கல்’ என்பதே வஞ்சியின் ஒசையாதல் வேண்டும். எடுத்துக்கூறும் இசை என்று பொருள். வஞ்சிப்பா இரு சீரடியாலும், முச்சீரடியாலும் ஆவது - அதாவது சிறிய வடிவங்கொண்டது. குழந்தைகளைப் பெரியவர்கள் தூக் கிக் காட்டுவது போல் இதனையும் ஒசையர் ல் தூக்கிக் காட்டுதல் வேண்டும். நாளடைவில் தூக்கல் தூங்கலா கியது போலும். ஐந்தாம் வேற்றுமைக்குரிய நீக்கற் பொருளை நீங்கல் எனக் கூறிக்கொள்வதுபோல் இதுவும் ஆயிற்ருே ? துரங்கல்தான் இசையாயிருந்தால் வஞ்சிப்பா தூங்கிவிட்டது, மிகச் சரியானது. வஞ்சிப்பாவை இப் பொழுது ஒருவரும் பாடுவதில்லை. * ‘பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயலிடைக் களவாயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மனமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழ மகிழ்தூஉங் கூரன் புகழ்த லாஞப் பெருவண் மையனே’’
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் என்பது வரை வஞ்சி அடிகள். "தனதனதனதனதன’ என்று ஓசை எடுத்துத்
தான் கூறப்படுவதை உணர்க. இதுவரை குறிப்பிட்ட
நான்கு பாக்களைத் தவிர, தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்களுமுண்டு. ஒசையில் வழுவியவற்றையும்,

Page 24
24 கடலும் படகும்
புதுமையான கவிதை வடிவங்களையும் பாவினங்களாக வகுத்துக்கொண்டார்கள். இப் பாவினங்களின் தன்மை யையும் கூட யாப்பியல் மிக விரிவாக விளம்பும். இன் றைய கவிஞர்கள் பாவினங்களில் தம் கருத்துக்களை வெளியிடத்தான் விரும்புகின்ருர்கள்; வெளியிடுகிருர்கள். இம் மூன்றிலும் தாழிசையே மிக்க செல்வாக்குப் பெற்று விட்டது. அடுத்து, விருத்தம், கவிஞர்களால் வருத்த மின்றிப் பாடப்படும். தமிழ்த் துறையில் ஒரளவு நுழைந் தவர்களே ஒரு துறை'யில் நிற்கிருர்கள். அதுவும் கட்ட ளைக் கலித்துறை, எதுவாயினும் மொழிக் கூண்டில் அடைபட்டு நிற்கும் கவிதைக் கிளி, பண்ணுல் திறந்து விட்ட பிற்பாடே அழகும், உணர்வும் தரும்; அதிசய மும் அருமைப்பாடுந் தரும் என்று நினைத்துக் கொண்டு சிந்தனை உலகத்திலிருந்தே விடுபட்டேன். இரண்டாம் அடியுடன் நின்றுவிட்ட நண்பன் இன்னும் மீளவில்லை. * 'இன்ப - வீட்டைத் திறப்பது பெண்ணுலே' என்று பர்டிக் கொண்டேயிருந்தான்.

9d 66). O
தாலி கட்டி முடிந்தது. தம்பதிகள் மனப் பூரிப் போடு மணவறையில் வீற்றிருக்கின்ருர்கள். மணமக்களின் கோணவிழிகள் ஒன்றையொன்று துளாவிக் குறும்பு செய் தாலும், இருப்பு நிலையில் அவர்கள் சித்திரப் பாவைகளே. மணப்பந்தலில் உள்ளே அத்தனை பேரின் அகலத் திறந்த கண்களும் வானத்துப் பட்சிகள் போல் தம் திகளைச் சுற்றி வட்டமிடுகின்றன. கலக்கவேண்டிய கண்கள் அவத்தைப் படும் பொழுது, வேண்டாத கண்கள் கலந்து கொள்கின் றன. மணவினை முடித்த மறையவர் மாபெரும் சாதனை ஒன்றை முடித்த கம்பீரத் தொனியில், இனி **அறுகரிசி’ என்ருர் . வயது வந்த ஒவ்வொருவரும் தலையிலே சால் வையைத் தலைப்பாகைபோற் கட்டிக்கொண்டு வாழ்த் துக்கு விரைகிருர்கள்; வாழ்த்துகின்ருர்கள். நகமும் சதையுமாக, மலரும் மணமுமாக, அகமும் முகமுமாக, கணியும் சுவையுமாக, சிவனும் உமையுமாக - இன்னும் இப்படிப் பல சொல்லி வாழ்த்திக் கொண்டிருக்கிருர்கள். இந்த இடையில் முதியவர் ஒருவர் எழுந்தார். இரண் டாவது குழந்தைப் பருவத்தை ஓரளவு எட்டிக்கொண் டிருக்கும் வயதினர். அறிவுக்கு நரைத்த நரையெனச் சாந்தி குடிகொண்ட முகமும், நெற்றிச் சுருக்கங்களும் சொல்லிக்கொண்டன. மோகனப் புன்னகையுடன் மண வறை நோக்கிச் சென்ருர், அறுகரிசியைக் கையில் எடுத் துக் கொண்டு ‘ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழ்க’’ என மழலைத் தமிழ் சொரிந்தார். கட்டிப் போட்டதுபோல் இருந்த மணமக்களும் சருகு உதிர்க்கும் மரம்போல மெல்ல அசைந்து அம் முதியவரை ஏற இறங்கப் பார்த்துத், தங்கள் நன்றியைத் தெரிவிப் பவர்கள் போல் புன்முறுவல் பூத்தனர். அந்த இன்ப முறுவலை இதே சாட்டாக வைத்து ஒருவரையொருவர் நோக்கிப் பங்கிட்டும் கொண்டார்கள்.
25

Page 25
26 கடலும் படகும்
வயது பதினறு இருக்கும். இளவயது மைந்தன் ஒருவன் முதியவர் வாழ்த்தையும், அதனுல் தம்பதிகளில் உண் டான உள்ளக் கிளுகிளுப்பையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன். முதியவர் திரும்பி வந்திருந்ததும் அவர் பக்கம் அவ்விளைஞனும் சென்று மிக அடக்கமாக இருந்துகொண்டு, அதிவிநயத்துடன் 'பெரியவரே எதற் காக இப்பழைய உவமையைச் சொன்னீர்கள்?’பாசிபோல் படர்ந்து, கோரைபோல் வேரூன்றி, அல்லது, ஊற்றுப் பேனையின் அலகும் கட்டையும் போல் என உவமை சொல்லி வாழ்த்தக்கூடாதா? என்று சொல்லிச் சிரித்தான்.
பெரியவரும் சிரித்தார். அவர் சிரிப்பிலேதான் எத் துணை ஆழம்! கைப்பிரம்பை ஊன்றி முகத்தில் சாயவிட்ட படி, அவ் இளைஞனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கி ஞர். தம்பி! குடும்பம் பெரிய விருட்சம் போன்றது. அதை வாழ்த்தும் பொழுது சொல்லுகின்ற உவமையால் இல்வாழ்வின் நோக்கங்களையும், பயன்களையும், தெளிவாக வெளிப்படுத்திவிட வேண்டும். அதனுலே தான் அந்த உவமையைக் கூறினேன்.
ஆலமரம் மற்றெல்லா மரங்களிலும் பார்க்க விரை வாக ஓடி வளர்வது; அதிக உயரத்திற்குச் செல்வது; அடி மரம் அதிக சுற்றுடையது; ஆலமரத்தின் ஒவ்வொரு உறுப் பும் உயிரினத்திற்குப் பயன்படுவது. பவளம் போன்ற ஆலம் பழம் எத்துணைச் சிறியது தெரியுமா? அதன் விதையோ “சிறு மீன் சினையிலும் நுண்ணியது' என்கிருர் புலவர் ஒருவர். அவ் வளவு சிறிய விதையில் இருந்து எவ்வளவு பென்னம்பெரிய ஆலமரம் தழைத்துநிழல் தருகின்றது பார்! ஓர் அரசனும் அவன் பெரும்படையும் இருக்கக்கூடிய நிழலென்றும் அப் புலவர் கூறியுள்ளாரே! குடும்ப விருட்சமும் நொந்துபடும் சமுதாயம் தங்குவதற்கு நிழலாதல் வேண்டும். மரகத மணிப் பந்தலில் பவளக் கனிகள் தூங்கும் அந்நிழலே அவர் களுக்கு ஒரு பெரும் ஆறுதலாகும்.
அதன் விழுதுகளோ ஆலமரத்தைக் கெட்டியாகக் காத்துக்கொள்கின்றன. கடும் புயலுக்கும் முறிந்துவிடாது, தூண்போன்ற விழுதுகள் கிளைகளையும், மரத்தையும் கண்

of 3) 27
போற் காப்பனவாம். இதேபோல் பேரப்பிள்ளைகள் கூடக் குடும்ப ஒருமைப்பாடுணர்ச்சியுடன் தாம் பிறந்த குடும்பத்தைக் காத்துக் கொள்ளவேண்டும்.
ஆலின் பாலும் பட்டையும் மருந்துப் பொருட்கள். உவர்ப்பான ப்ாலுள்ள விழுதுக் குச்சி பற்களுக்கு உறுதி தருகின்றது. "'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்பது உனக்குத் தெரியும். இதேபோல் தம்பதிகளின் செல்வ மும் ஏழைகட்குப் பசிப்பிணி மருந்தாகவேண்டும்.
ஆலிலை யானைக்கு விருப்பமான தீனி. மக்களுக்கு உண்கலமாக உதவுகிறது. ஆலம் சுள்ளிகள் யாகம் செய்வ தற்கான சமித்து வகையில் ஒன்று. இவ்வாறே, இவர்கள் பெறும் செல்வம் உயர்ந்த காரியங்களுக்குப் பயன்படுதல் வேண்டும்.
ஆலங்கட்டை விரைவாக நெருப்பில் எரியாது; கெதி யாகத் தண்ணிரில் உக்காது; கிளை காற்றுக்கே வளைந்தும் முறிந்தும் கொடாது. அடிமரம் மண்ணில் சுருங்கிய காலத்தில் உக்கிப்போகக் கூடியதன்று; ஐம்பூதங்களா லுமே நினைத்த மாத்திரத்தில் அழிக்கமுடியாதது ஆல மரம். வாழ்க்கையில் ஏற்படும் வெப்பம், துன்பப்புயல், ஆசைக்கடல், நாற்றமெடுக்கும் அனுபவம ண் ஆகியனவற் ருல் குடும்பம் அழியாமல் இருத்தல் வேண்டும்.
இந்து சமயத்தில் ஆலுக்குத் தனிப் புனிதப் பண்பு உண்டு. ஆனைமுகத் தெய்வத்தின் வீடெல்லாம் ஆலமரத் தடிகளல்லவா ? இதனுல் 'ஆலமரத்தைச் சுற்றி அடி வயிற்றைத் தொட்டுப்பார்ப்பதுபோல் ' என்ருெரு உவமையும் எழுந்துவிட்டதே. இதேபோல் தம்பதிகள் வாழும் இல்லம் தெய்வம் வாழும் கோயிலுமாதல் வேண்டும். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
இனி, அறுகோ மண்ணின் மேலும் கீழும் சமமாகப் பரவி வளர்வது, அறுகம் வேரை இலகுவில் அழித்து விட முடியாது. அறுகுக்கற்றைகள் மண்ணரிப்பைத் தடுப் பது, யாருக்கும் தெரியும். அறுகம் புல்லைச் சாணிப்பிடி யில் இட்டதும், பிள்ளையாராகி, நம்பிக்கைக்குத் தும்

Page 26
58 கடலும் படகும்
பிக்கையினன் அருள் தருதலும் அனைவரும் அறிந்த்து. அறுகின் தன்மைகளையும் குடும்பத்துடன் இப்ப்ொழுது பொருத்திப் பார்.
அறுகு பிள்ளையாராகி ஆலமரத்தடியில் அருள்பொழி யும் சிறப்பை நோக்க, குடும்பமே என்றும் எங்கும் தெய்வ மணம் கமழ வேண்டும் என்ற உண்மையும் புலப்படுகின் றதே. தம்பீ. இப்பொழுது தெரிகிறதா யான் சொன்ன உவமையின் சிறப்பு என்று முதியவர் அடைமழைபோல் விளக்கம் தந்தார். இளைஞன் வியப்படைந்தான். பணி வன்புடன் முதியவருக்கு நன்றியும், வணக்கமும் தெரி வித்தான். தனக்குள், ஆதாமையும் ஏவாளையும் ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழ்க எனத் தெய்வம் வாழ்த்தியிருத்தல் வேண்டும். மனிதன் இன்று, ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி விட்டானே எனச் சிந்தித்தான்போலும், சிறிய சிரிப்பொன்று அவன் இதழ்களில் தவழ்ந்தது. உவமை பொருளுக்கு ஆழத்தைத் தருகின்றது என எண்ணினன்.
முதியவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது முதியவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அக்கூட்டத்தில் ஒருவன் நெடுகக் கதைத்துக்கொண்டே இருந்தான். இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவா களில் ஒருவர் கதைத்துக்கொண்டிருந்த மனிதனை நோக்கி *வைக்கற்பட்டடை நாய் போல் வாழ்வது நல்லதன்று? என்ருர் . மிகச் சினத்தோடு கதைத்தவர் எழுந்து சென்று விட்டார். நீயும் கேட்கிருயில்லை; மற்றவனையும் கேட்க விடுகிருயில்லை, என்று சொல்லியிருந்தால் அது கதைத்த வரின் மனதில் அவ்வளவு உறை த்திருக்காது. உவமை பொருளுக்கு உறைப்பையும். அழுத்தத்தையும் தருகின் றது என்று சிந்திக்கவும் அவ்விளைஞன் தவறவில்லை.
அக்கூட்டத்தில் இருந்து கொண்ட இன்னுெருவர், முதியவர் பேச்சையும் கேட்டுக் கொண்டே, மணமகளை யும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். மன மகள் மிக மிகப் பிஞ்சாய் இருந்தாலும் அவள் வேல்

2GIGA) 29
விழிகளும். வாய் இதழ்களும் காதல் நுரைகளைக் கக்கிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். சங்கப்பாடல் ஒன்று இதயத் திரையில் நிழலிட்டது போலும் ., அதனைத் தன் பக்கத்திலிருந்த சிலருக்குச் சொல்லிக்காட்டினர்.
* வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரனட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி ஞேரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கி வள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே'
இந்தச் சிறிய உயரில் - அதனைத் தாங்கும் பிஞ்சுட லில் நுங்கும் நுரையுமாகப் பெருக்கெடுக்கும் காதலுக்கு, மிகச் சிறிய தண்டு ஒன்றில் தூங்கும் அறப்பெரிய பலாப் பழம் உவமையாக வந்துள்ளது. சிலர் சிரித்தார்கள். சிறுவனுக்கு - பருவப் பொருத்தமுமாகலாம் - உவமை நன்கு பிடித்துக் கொண்டது. காதலுக்குப் பலாப்பழம் உவமையாகக் கூறப்பட்டது அவன் கருத்திற்கு இனிப் புத் தந்தது. காதற் பலாப்பழத்தை அவன் சுமந்து கொண்டான். அதிகம் குந்து இல்லாமல் இருக்கவேண்டு மென்று ஆசைப்பட்ட அவ்விளைஞன், ஆம், உவமை பொருளுக்கு உணர்வையும், நளினத்தையும், கவர்ச்சியை யும் கருத்தாழத்தையும் தருகின்றது எனவும் கண்டு கொண்டான்.
நிச்சயமாக அவ்விளவயது மைந்தன் நினைத்தது முழுக்க முழுக்கச் சரியே. கறிக்குத் தாளிப்புப்போல் பொருளுக்கு மணமும், முத்துச் சிவிகைக்கு மின்விளக்குப் போல் பொளுருக்குத் தெளிவும், பிரகாசமும், சிவந்த முகத்திற் காணப்படும் கரியபுள்ளி அல்லது காய்போல் பொருளுக்குக் கவர்ச்சியும் நளினமுந் தந்து விடுகின்றது உவமை. ஏன், போதைப் பொருட்கள் போல் மனித ணுக்கு உணர்வு வெறியையும் ஊட்டி விடுகின்றது. மதி வன்மை மிகுந்த அரசியல் வாதி கையாளும் உவமை சமுதாயத்தை அப்படியே சொக்கவைத்து, மந்திரவாதி யின் மந்திரக்கோலுக்கு ஆடும் பூதங்கள், பிசாசுகளைப் போல் மனிதனைக் கட்டிவைத்துக் கருமம் பார்க்கின்றது.

Page 27
30 கடலும் படகும்
நாளாந்த வாழ்வில் உவமை சொல்லாதவர்களே இல்லையெனலாம். அதுவும் கவிதைக் கன்னிக்கு மணமும் மலர்ச்சியும் அளிக்கும் வாசனைத்திரவியம் உவமையே. உவமையற்ற கவிதை உப்பற்ற கறிக்குச் சமம். கவிஞன் கையாளும் உவமையே அவன் கற்பனை வளத்துக்குச் சாட்சி கூறும். கவிதைக்கு வலக்கைபோல் பணிபுரிவது உவமையே.
தமிழ் இலக்கியத்தின் உவமை வளம் இலக்கியச் சுவைஞர்களுக்குப் பேரின்பம் தருதல் மாத்திரமன்று, அவர்கள் மூளைக்கு வேலையும் கொடுப்பதாகும். சங்கப் பர்டல்கள் சரி, இக்கால காவியங்களாயினும் சரி, உவ மைக் காடாகவே காட்சி தருகின்றன. அநேகமான காவியங்களின் காப்புச் செய்யுள்களிலேயே உவமை கண் சாடை காட்டத் தொடங்கிவிடும். உலகம் போற்றும் திருக்குறள் 'அகரமுதல எழுத்தெல்லாம்" என உவமை யுடனேயே அடிவைக்கத் தொடங்குகின்றது. நீதிக் கருத்துக்களெல்லாம் உவமை மூலமாகவே விளக்கப்பட் டுள்ளன. கவிஞர்கள் மர்த்திரமல்லர், இலக்கண உரை யாளர், காவிய உரையாளர் கூட ஆங்காங்கே பொருத்த மான உவமைகளைத் தந்து தத்தம் கோட்பாடுகளைத் திருத்தமாக வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு பேச்சிலும், எழுத்திலும் ரீங்காரம் செய் யும் உவமை என்ருல் என்ன என்ற விஞவுக்கு விடை காண்பது மிக அவசியமாகும். இரு பொருள்களுக்கிடை யில் காணப்படும் ஒப்புமைதான் உவமைக்கு ஏதுவாகிறது. எந்த இரு பொருளும் முழுமையாக ஒத்திருப்பதில்லை. ஒத்திருக்கவும் முடியாது. ஆனல் ஒன்று அல்லது ஒன் றுக்கு மேற்பட்ட தன்மைகளை அவை ஒப்புவமையாகக் கொண்டிருக்கலாம். இரு பொருள்களின் ஒப்புவமை அல் லது தொடர்புகளைக் காண்பதிலேதான் மூளை வன்மை கணிக்கப்படுகின்றது. உயர்தரமான கவிஞன் ஒருவன் பொருட்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை மிக விரை வாகக் கண்டு கொள்கிருன்.

66) 3.
பயிற்றங்காய் போன்ற கை என்று சொல்லும்போது இரண்டிற்குமுள்ள ஒப்புமை மெலிவு அல்லது மொத்தக் குறைவு என்பதாகும். இறுக்கமாகச் செலவுசெய்யும் இரு வரை பார்த்துச், சாடிக்கேற்ற மூடி என்று சொல்லுகி ருேம். இறுகப்பற்றுதல் ஒப்புமையாகும். சில ஒப்புமை கள் ஐம்பொறிகளால் அறியப்படக் கூடியவை. சில வற்றை ஆழச் சிந்தித்தே விளங்கவேண்டும். திருவள்ளு வர் முதற் குறளிலேயே உவமை கூறினர் என, முன்பு கண்டோம் . தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து அக ரம் . அகரத்துடன் தொடங்கியது அதுவும் அகரம் முத லான உவமையுடன் தொடங்கியது, தனிச்சிறப்பு ஆகும் , தெரிந்ததைக் கொண்டு தெரியாததைத் தெரியச் செய் வதுதான் உகந்த முறை . இம்முறையைத் தொடக்கத் திலே ஏற்றுக்கொண்டிருப்பதே அல்லது இம்முறையை ஏற்றுத் தொடங்கியதே அச் சிறப்பாகும். இவ்வுவமைக் கும் பொருளுக்கும் உள்ள தொடர்புகள் ஆழச்சிந்தித்துத் தான் அறிய வேண்டியவை. ஏன், கலியாண வீட்டில் முதியவர் கூறிய உவமைக்கும் பொருளுக்குமுள்ள தொடர்புகளும் இவ்வகையானவையே.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டனவோ பொது மைகளாகவுடைய உவமையின் அங்கிங்கெளுத செல்வாக் கைத் தொல்காப்பியனர் நன்குணர்ந்தார். அதனல் தாம் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார இலக் கணத்தில், உவமைக்கும் தனியாக ஓரியல் வைத்துவிட் டர்ர். மனித உணர்வுகளைக் கவிதையில் வெளியிடு வதற்கு உவமையைத் தவிரச் சிறந்த சாதனம் இல்லை யென்பது கருதிப்போலும், மெய்ப்பாட்டியலுக்கும் செய் யுளியலுக்கும் இடையில் உவமையியலை வைத்துள்ளார். தொல்காப்பியனருக்குப் பெருமைதரும் காரியங்களில் இவ் வமைப்பு முறையும் ஒன்ருகும். உவமையின் பல்வேறு தன்மைகளையும் அவ் இயலிற் கூறியுள்ளார். முதலில் இரு பொருட்களுக்கிடையில் உள்ள தொழில் ஒப்புமையால் ஏற்படும் வினை உவமையைக் குறிப்பிடுகிருர், பாம்பு போலச் சீறினன் என்பது வினையுவமையாகும். பயங்கர ச்

Page 28
32 கடலும் படகும்
சீறுதல் ஒப்புமை. அடுத்து, பயன் பொதுவாக உள்ள பயனுவமையைக் குறிப்பிடுவர். மாரி போலக் கொடுத் தான் பயனுவமை. நல்வாழ்வு பயன். துடி இடை என் பது வடிவ அல்லது மெய்யுவமை . இரண்டிற்கும் பொதுவான தன்மை மேலும் கீழும் அகன்று நடுவே ஒடுங் கியிருப்பதாகும். இறுதியாக, வண்ணம் அல்லது உருவு உவமையைக் குறிப்பிடுவர். பொன்மேனி என்பது இதற்கு
உதாரணம் ,
வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கில் ஒன்றே அல்லது பலவோ ஒப்புமைகளாகக் கொண்டு காணப்படும் உவமை எப்பொழுதும் உயர்ந்ததாதல் வேண்டும் என் றுங் கூறினர். பொருளுக்குச் சிறப்புத் தர எழுந்த உவமை உயர்ந்ததாக இல்லையேல், பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாய் முடியும், உவமையைக் கர்ட்டித் தரும் உருபுகளையும் விரிவாகக் கூற அவர் தவறவில்லை. 'பூனை போல் பதுங்கினன்' என்ற உவமைத் தொடரில் ‘போல்’’ என்பது உவமை உருபாகும்.
அநேகமாக உவமைகளில் ஒப்புமைகளைச் சுட்டிச் சொல்லுவதில்லை. இவ்வண்ணம் அமையும் உவமையைச் **சுட்டிக்கூரு உவமம்' என்பர். தேன்போலும் மொழி என்பது சுட்டிக் கூரு உவமம். இனிப்பு என்ற ஒப்புமை இங்கே கூறப்படவில்லை. ஒப்புமைகளைக் கூழுது விடுவத ஞல் தொல்லை ஏற்படுவதும் உண்டு. செம்மை நிறத் தால் பவளம் வாயிதழுக்கு உவமையாகக் கூறப்படும் .
பவளம் ஒரு கல். எனவே கல்போன்ற கடினமான இதழோ என்று ஒருவன் கருதி, பவள இதழ்ச் சுகத்தை அனுபவிக்காமலும் போகலாம் அல்லவா ? ஒப்பாக
வுள்ள ஒரு தன்மையைக் கருதாமல், பவளத்திற்குள்ள, இதழுக்கு இல்லாத இன்னுெரு தன்மையை எடுத்துக் கொண்டதனுல் ஏற்படும் விபரீதம் இது. இப்படிப் பல. ஒரு நாள் நண்பர் ஒருவர் கூட்டத்தில் வைத்து இன் ஞெருவரை அறிமுகப்படுத்தும் போது, 'இவர் காக்கை போன்றவர்' எனக் குறிப்பிட்டார். இப்படிக் கூறியது தான் தாமதம், அறிமுகப்படுத்தப்பட்டவர் எழுந்து நண்

dialo)) 33
பரை நையப்புடைத்துவிட்டார். நண்பர் கருதியது அவ ரின் பகுத்துண்ணும் பண்பாகும். அறிமுகப்படுத்தப்பட்ட வர் விளங்கியது காக்கையின் மலங் கிண்டும் இயல்பாகும். ‘என்னை இப்படி நையாண்டி பண்ணவோ" என்ற ஆத்தி ரத்தில் தன் கைகளுக்கு வேலை கொடுத்தார். இப்படிச் சில தொல்லை ஏற்பட்டாலும் ஒப்புமை கூருது விடுவதே உயர்வான உவமை அமைப்பு எனலாம்.
உவமைகளைக் கூறுகின்ற முறையில் - உவமையை வெளிப்படுத்துவதற்குக் கையாளப்படும் புதுப்புது உத்தி களால் உவமைத் தோற்றங்கள் பல்வேறு வகையாக அமைந்து விடுகின்றன. இதனுல் உவமையை இருபத்து மூன்று வகையாகக் குறிப்பிடுவர் தண்டியலங்கார ஆசிரி யர். உவமையணி பல்வேறு வகையாக வகைப்படுத்தப் பட்டது மாத்திரமன்று, சொல்லும் முறையால் ஏற்பட்ட அமைப்புகள் புதுப்புது அணிகளாகவும் கொள்ளப்பட்டு விட்டன. உதாரணமாகப் பவள இதழ் என்பது, ஓர் உவமைத் தொகைத் தொடர். இதனை மறுபாடாக மாற்றி, இதழ்ப் பவளம் என்று கூறும்பொழுது இவ் வமைப்பு உருவக அணியாகக் கொள்ளப்பட்டுவிட்டது. உவமை அமைப்பிலும் பார்க்க, உருவக அமைப்பு பொருட் சிறப்புக் கூடியது. இதழ்தான் பவளம், பவளமென வேறென்றும் இல்லை என்று கூறும்போது எந்தப்பெண் திான் பூரிக்கமாட்டாள், புகழ்ச்சியில் மெய்ம்மறக்க மாட்டாள்? இவ்வாருக உவமையில் இருந்து கிளைத்த Hதுப்புது அணிகளையும் தொல்காப்பியனுர் ஏற்றுக்கொண்டு வற்றை எல்லாம் 'வேறுபட வந்த உவமைத் தோற் நிறங்கள்" எனக் குறிப்பிடுவர். உவமையில் இருந்து புதுப் 14ஆ அணிகள் கிளைத்ததனைக் கவிஞர் ஒருவர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்:
"உவமை யென்னும் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்கும்"

Page 29
34 கடலும் படகும்
பிற்காலத்தில் கிளைத்தெழுந்த அணிகளிற்பலவும், உவமை யாகிய கூத்தாடும் பெண்ணின் பல்வகைக் கோலங்களா கும். அக் கோலங்கள் எல்லாம் கவிதைப் புலவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனவாம்.
இன்னும், உவமையை மாத்திரம் சொல்லிவிட்டுப் பொருளைக் கூருது விடுவதும் உண்டு. இதன் காரணம் நேருக்கு நேர் ஒரு கர்ரியத்தைக் குறிபபிடுவதற்கு ஏற் படும் மனத்தயக்கம் ஆகலாம், அல்லது மற்றவர் மேலுள்ள மதிப்பு, பிறரறிய வேண்டியதில்லை எனக் கருதும் இனிய பண்பு, ஏனையோர் விவேகத்தை மதிக்கும் நாகரிகக் குணம், அறிவு வளர்ச்சி ஆகலாம். இவ்வித் உவமை அமைப்பை "உவமப்பேர்லி அல்லது உள்ளுறை உவமம் எனக்குறிப்பிடுவர் தொல்காப்பியர். பிற்கால அணியாசிரியர்கள் உள்ளுறை உவமத்தை ஒட்டணி அல் லது பிறிது மொழிதல் எனக் குறிப்பிடுவர். உள்ளுறை உவமம் தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிச்சிறப்பும் என்பர். அதுவும் அகப்பொருள் இலக்கியங்களில் உள் ளுறை யுவமம் அடுக்கடுக்காக உண்டு. உண்மையில் காதல் விளைவுகளை, தாக்கங்களை வெளிப்படையர்கக் கூறு வது சுலபமன்று. பொருத்தமான உவமைகளைக் கூறிப், பொருளைக் குறிப்பால் அறிய வ்ைப்பதே நாகரிகமான நாணயமான வழியாகும்.
காதலன், கல்யாண நாளைக் கடத்திக்கொண்டே வருகிருன். இது காதலிக்குப் பெருந் துன்பத்தைத் தந்தது. களைகட்டிய கண்களே களைதட்டிவிட்டன; வெளிறிப் பசந்து விட்டன. கர்தலியின் இக் கோலக்கேடு அவள் தோழிக்குத் தீராத கவலைதந்தது. இதனுல் தானுகவே காதலனை எதிர்ப்பட்டுத் தலைவியின் தற்போதைய நிலைமை யைத் தெளிவாகச் சொல்லி, விரைவாகத் திருமணம் செய்யும்படி குறிப்பாக வேண்டிக் கொள்கிருள்.
'இளம்பிறையன்ன கோட்ட கேழல்
களங்கனி யன்ன பெண்டாற் புணரும் அயந்திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே”*

go o 翌5
"இளம்பிறை போன்ற கொம்புகளையுடைய ஆண் பன்றி களங்கனி போன்ற நிறமுடைய பெண் பன்றியுடன் புணர்ந்து இன்பமாக வதியும் நீர்வளமுள்ள மலைநாடனே! நீயாக விரும்பிய நின் காதலிகண்கள் பசலை நிறம் அடைந்துவிட்டன, என்பதைக் கண்டுகொண்டோம்" என்கிருள் தேர்ழி. அஃறிணைப் பொருளுக்குரிய உணர்ச்சி கூட நினக்கு இல்லையெனச் சொல்லாமற் சொல்லிக் காட்டுகிருள். பன்றிகளின் பண்பு அவள் சொன்ன உவமை. பொருளைக் குறிப்பாக அறியவைத்துள்ளாள். தலைமகனும் தலைமகளைப் புணர்ந்து தலைமகள் மனையிலே வதிதல் வேண்டும் என்பதே பொருள். இவ்வாருன உள்ளுறை உவமைகளைக் கொண்ட பாடல்கள் சங்கக் கவிதைகளில் ஆயிரம் ஆயிரம் உண்டு.
அணிகள் பலவாக மாறிப் பலகோலம் கொள்ளும் உவமைக்கூத்தி இடையிடையே திருகுதாளம் விடுவதும் உண்டு. ஓர் விவாதத்தில் இறங்கிய இரு கட்சியினருக் கும் உவமைக் கூத்தி கைகொடுப்பாள். இதனுல் துணிவு பிறவாத மயக்க நிலையே விவாதப் பயணுய் முடியும்.
மன்மதன், சிவன் தவத்தைக் கலைத்த செய்தியை எடுப்போம். கலைத்தது பிழையென வாதிடும்கட்சி, ஓர் உவமைமூலம் தன் கொள்கையை நிலைநிறுத்தப் பார்க் கிறது; ஒருவன் கையில் நெருப்புக் கொள்ளியைக் கொடுத் தால் அதனைக்கொண்டு அவன் சமையல் வேலைக்கு நெருப்பு மூட்டுவதைத் தவிர, வீட்டைக் கொழுத்தி வேடிக்கை பார்க்கக்கூடாது, அதுபோல் மன்மதன் சிவ பிரானைச் சிற்றின்ப வேட்கைக்கு இழுக்க முற்பட்டது பிழை என்கிறது. மறுகட்சியோ மன்மதன் செய்கை சரி யென எதிர்வாதிடுகின்றது. அரசன் ஒருவன் வரி வசூலிக் கும் அதிகாரத்தைக் குடிமக்களில் ஒருவனுக்கு வழங்கு கின்ருன். அதே அதிகாரம்தான் அரசனிடமிருந்து வரியை வசூலிப்பதற்கும் அதிகாரம் எனக் கூறுகின்றது. ஆகவே மன்மதன் சிவன் மோனத்தைக் கலைத்தது சரியென்கிறது. இதனலேதான் உண்மையான விவாதநெறியில் தலைப்படு பவர்கள் உவமைகூறும் தந்திரத்திற்கு இடம் தருவதில்லை.

Page 30
36 கடலும் படகும்
* ‘வாதியிலும் பிரதிவாதியிலும் ஒரே நோக்கிற் கண் விடும்' உவமையை "உவமையென்னுந் தவலருங் கூத்தி' எனக் கவிஞர் குறிப்பிட்டது பொருத்தமே !
பல்வகைக் கோலம் கொள்ளும் உவமையின் நேர்க்க மும் பல்வகைப்பட்டது. ஆரம்பத்தில் முன்பின் தெரி யாத பொருளைத் தெரியச் செய்வதற்காகவே உவமை பிறந்தது. புலி தெரியாத ஒரு பிள்ளைக்கு, 'புலி பூனை யைப் போல்' என்றுசொல்லி இன்னும் சில விபரங்களை விரிவாகக் கொடுத்துப் புலியை அறிமுகப்படுத்தலாம். என்ருே ஒரு நாள் பிள்ளை புலியைக் கண்டதும் பூனை போல் என்று முன்பு கூறிய எண்ணம் நினைவுக்கு வரப் புலியை அடையாளங் கண்டுகொள்கிறது. திருவள்ளுவர் முதற் குறளில் தந்த உவமையும் இவ்வகையானதே. நமக்குத் தெரிந்த அகர ஒலியைக் கொண்டு தெரியாத முதற் பொருளின் இயல்புகளைத் தெரிகின்ருேம். ஆதலி ணுலேதான் இந்திய தருக்க நூலோர், மனிதன் அறிவைப் பெற்றுக்கொள்ளும் பிரமாணங்களில் ஒன்ருக உவமானத் தையும் கொண்டுள்ளனர்.
இவ்வண்ணம் தெரியாத பொருளைத் தெரிவிக்க எழுந்த உவ்மை இன்று, நோக்கிலும், உத்தியிலும், உரு வத்திலும், உள்ளடக்கத்திலும் விரிவடைந்து மனித இத யத்தின் மகிழ்ச்சிதரும் விருந்தாக உயர்வு பெற்றுவிட்டது. ஆம், ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி விட் L... - ĝis 2.6aj 602 UD ! "

சிலேடை
அன்று சிலப்பதிகாரப் பாடம் என்ற நினைவு. ஆசிரியர் வெகு உற்சாகமாகக் காணப்பட்டார். சிலம் பும் சிலையும் என்ற தலைப்பிற் பாடம் நிகழ்ந்தது. இரண் டொரு நிமிடங்களிலேயே அவர் பேச்சிற் சூடுபிடித்துக் கொண்டது. வகுப்பறையைக் கடந்து கல்லூரியும் தீக் கிரையாகிவிடலாம் என்ற எண்ணமோ என்னவோ அறை யில் விறுவிறுப்பான அமைதி நிலவியது. எதற்காகக் கண்ணகிக்குச் சிலையெடுத்த்ல் வேண்டும்? கண்ணகிக்குச் சிலை எழுப்புவதாயின் கற்பொடு வாழ்ந்த பொற்புறு நங்கையர் அத்தனை பேருக்கும் சிலை எழுப்புதல் வேண் டாவோ? எங்காவது ஒரு கோடியில் ஒன்று தவறி இருக் கலாம், ஒருவருக்காக மற்றும் தாய்மார்கள் அனைவரை யும் ஏளனம் செய்வதா எனக் கூறிக்கொண்டே சென்ருர். மீண்டும், ஆம், எங்காவது ஒரு கோடியில் ஒன்று தவறி யிருக்கலாம் என்று அவர் அழுத்தியதும் அமைதி கலைந் தது, ஒரே சிரிப்பொலி!
கண்ணகிக்குச் சிலை எடுப்பதாயின், அதற்குமுன் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குச் சிலை எடுத்தல் வேண் டும். செழியன் சிலை இந்நிலவுலகில் நிலவுமாயின், ஆட் சிப் பீடத்தில் அமர்ந்து சமுதாயம் முழுவதையும் சீரழி வுக்குட்படுத்தும் அரசியல்வாதிகளுக்காவது அது நல்ல தோர் பாடம் படிப்பிக்கும். போகட்டும், கண்ணகிக்குச் சிலை எழுப்பு முன்பு கோப்பெருந்தேவிக்குச் சிலை எடுப்ப தல்லவா அறம்?
**கணவரை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தணளே மடமொழி'
கணவரை இருக்க விரும்பாமல் உயிர்நீத்த உத்த மிக்குச் சிலையெடுக்க வில்லையேல் சீலைக்கா சிலை? ஆமாம் வடமீனும் நாணும் அச்சீலைக்கு எடுக்காத சிலை சீலைக்கா என மீண்டும் முழங்கினர் வகுப்பறையில் ஒரே சிரிப்பொலி! 37

Page 31
38 கடலும் படகும்
முதலில், எங்காவது ஒரு கோடியில் ஒன்று தவறும் எனக்கூறியபொழுது அத்தொடர் இரு கருத்துக்குமேல் இடந்தந்தது. கோடி முதலில் இலக்கத்தைக் கருதியது. மீண்டுங் கூறிய பொழுது "கோடி" வீட்டுக்கோடியைக் கருதியிருத்தல் வேண்டும். இல்லாதுபோனல் மாணவர் கள் ஏன் சிரித்தார்கள்? இவ்வளவுடன் நிற்கவில்லை, கோடி குறிப்புப் ப்ொருளாகக் கன்னியரையுங் கருதலா மல்லவா?
கோப்பெருந்தேவி கணவரை இருக்க விரும்பாமல் உயிர் நீத்தாள் என்ருல், யாருக்குத்தான் ஆச்சரியம் பிறக்காது? ஆகவே, கணவரை என்ற சொல் கணவனைக் கருதாமற் கணப்பொழுதைக் கருதியது. இப்படி இன் னுெரு பொருள் தருவது மாணவருக்கு மகிழ்ச்சி தராதா
என்ன?
தொடர்ந்தும் அச்சீலைக்குச் சிலையின்றேல் சீலைக்கா சிலை என்று ஆசிரியர் கூறியபொழுது, சீலை இரண்டாய் விட்டது. ஒன்று சேலையைக் கருத மற்றது குண "சீலை’ என்றபொருளைக் கருதியது, சீலன் என்பதற்குப் பெண் . ע88% (r6חu
பேச்சில் கோப்பெருந்தேவி என்ன கற்பிலருந்ததியா என ஆசிரியர் கூறிக்கொண்டே சிலை உடைப்பு நிகழ்த்தி ஞர். அவள் என்ன கற்பில்லாத அருந்ததியா என்ருர் . ஒரே சிரிப்பொலி தொடர்ந்து பாடம் நடத்த முடிய வில்லை. வகுப்பறையிற் சிலம்பு மறைந்தது, சிலேடை பிறந்தது. அன்று முழுவதும் மாணவர் அனைவரும் சிலேடை விளையாட்டில் இறங்கினர்.
அடுத்த பாடத்தில் சிலேடை பற்றிச் சிறப்பான விளக்கம் தரவேண்டுமென ஆசிரியரை வேண்டிக்கொண் டார்கள். அடுத்த தமிழ்ப் பாடம், மாணவ நேயர் விருப் பப்படி சிலேடை. ஆசிரியர் பழைய புலவர்களின் சிலே டைகள் சிலவற்றை முதலிற் கூறிவிட்டு, சிலேடை பற் றிய பல பல கோணப்பார்வைகளையும் விளக்கிக்காட்டினர்.

சிலேடை 39
புலவர் ஒருவர் தனவந்தர் ஒருவரிடம் ஐந்து தடவை களில் நூறு நூருகத் தருவதாக ஐந்நூறு ரூபா கடன் பெற்ருராம். முதல் மாத இறுதியில் நூறு ரூபா கொடுத்து விட்டார். இரண்டாந்தடவை தனவந்தர் பணங் கேட்க வந்தபொழுது, முன்னுாறு தந்துவிட்டேன், இருநூறு தரு கிறேன் என்ருராம். புலவர். புலவரின் புலமையுடலைப் பதம் பார்க்கும் அளவுக்குத் தனவந்தருக்குக் கோபம் கோபமாய் வந்தது. நூறு ரூபாவைத் தந்துவிட்டு, 'முந் நூறு' ரூபா என்று படுபொய் சொல்லுகின்றீரே ! புல வர் என்ருல் பொய்யில் புலவர் என்ரு கருத்து, எனப் பொரிந்து விழுந்தார் தனவந்தர். புலவர் சாடையாகச் சிரித்தார். **நான் பொய்யில் (லாத) புலவன்தான் என்ருர், முந்நூறு ரூபா தந்ததாகச் சொல்லவில்லையே! முன்பு நூறு ரூபா என்றல்லவா கூறினேன். இப்போது இங்கே இரு, நூறு ரூபா தருகின்றேன் என்றுதானே கூறுகின்றேன். என்னையா, விளங்காமற் கட்டியடிக்கப் பார்க்கின்றீரே எனப் புலவர் தொனி விளையாட்டுச் செய் தrர். தனவந்தர் முகத்தில் அசடு வழிந்த்து. இங்கே 'முன்னூறு ஓசை காரணமாக இரு பொருள் தந்துவிட் டது. எழுத்திற் கொடுத்திருந்தால், தனவந்தரும் தமிழ் படித்திருந்தால் இந்த மாய்ச்சல் ஏற்பட்டிருக்காது. (மூன்று + நூறு = முந்நூறு முன் + நூறு க முன்னூறு) இவ்விரு சொற்களும் எழுத்தால் வேறுபடினும் தொனி யால் ஒன்ருனவை.
கொழும்புக்குச் சென்ற புலவரொருவர் பல நாட் களாகச் சோறு தின்ன முடியவில்லை. பணமுடை கார ணம். சந்தித்த நண்பரொருவரிடம், "கொழும்புக்கு வந்ததும், சிவஞனேன், அன்னங்காணுமையால்" எனக் கூறினராம். அன்னம் என்ற சொல் சோற்றையுங் கரு தும், அன்னப்பட்சியையுங் கருதும். பிரமன் அன்னப் பட்சி வடிவமாகச் சென்று சிவனைக் கண்டுகொள்ள முடிய வில்லை. அதனுல் இந்த அழகிய சிலேடை பிறந்துவிட்டது.
இன்னும், விழிப்புணர்ச்சி, சாகுந்தலம், எல்லாந் தெரிந்தவர், முதலான சிலேடைத் தொடர்கள் பலவற் றையுங் கூறிச் சிலேடை அமைப்புப் பற்றிய விளக்கத் தில் இறங்கினர் ஆசிரியர்.

Page 32
40 ۔۔۔۔ கடலும் படகும்
ஒரு சொல் அல்லது சொற்ருெடர் உச்சரிப்பு வேறு பர்ட்டினுலும், அடுத்துவரும் சொற்களின் தன்மையின லும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவது சிலேடை ஆகும். சிலேடை தரும் நுட்பமான மகிழ்ச்சி கருதிப்போலும் செய்யுள் அணிகளில் ஒன்ருக அது கொள்ளப்பட்டுவிட்டது. எந்த அணி நூலும் சிலே டைக்குத் தகுந்த இடத்தை ஒதுக்கியுள்ளது.
சிலேடையை விரும்பாதவர்களே இல்லை எனலாம். குழந்தை கூட அம்மாவாணை தாத்தா என்றெல்லாம் கூறிக் கொள்ளும் பொழுது, சிலேடையில் மகிழுகின்றது. ஒவ்வொரு தொழில் நிப்ப்யத்திலும் ஒவ்வொரு வகைப் பட்ட சொற்கள் அடிக்கடி பேசப்படுவதால் ஓசை அழுத் தம் காரணமாகச் சிலேடைத் தொடர்கள் ஆகிவிடுகின் றன. வீட்டுக்காரனைப் பார்த்து, **அறுத்துத் தள்ளு வது தானே எங்கள் வேலை" என்று சொல்லிச் சிரித் துக் கொள்ளுகிருன் மேசன். பேருந்து நடத்துநர் எத் தனை சிலேடைத் தொடர்களையெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைகின்ருர்கள். 'நவாலி மாணிப் பாய் சில்லாலை ஏறு' என்று சொல்லியதும், பேருந்துச் சக்கரங்களில் ஏறியவரும் உண்டாம். ஆசிரியர் மாண வர்களைப் பார்த்து 'இருங்கடா' என்கிருர். சிகை அலங் கரிப்பவனுக்கு முன்பும் 'தலைகுனிய' வேண்டியுள்ளது. ஒலிப்பரப்பு நிலையங்களில் மறு ஒலிபரப்பு, கலைக்கோலம் பேரலை, பாமாலை முதலிய தொடர்கள் சிலேடைகளாக மாறியிருக்கின்றன. ஆலயத்துள் பழங்கள் உண்டு. கள் ளுக் கடையில் சாமரையும் உண்டு. இப்படி இப்படி யெல்லாம் சிலேடை வாழ்க்கையுடன் அத்துவிதமாகக் கலந்துவிட்டது. .
சிலேடையின் அமைப்பு நோக்கி, அதனை இருவகை யாகப் பகுத்துள்ளனர் அணியிலக்கண ஆசிரியர்கள். அவை செம்மொழிச் சிலேடையும், பிரிமொழிச் சிலேடை யும் ஆகும். சொல்லில் அல்லது சொற்ருெடரில் எவ்வித மாற்றமும் இன்றியே பல பொருளை ஒரே நேரத்தில் தருவது செம்மொழிச் சிலேடையாகும். சிலப்பதிகார,

சிலேடை 4.
வகுப்பிற் பளிச்சிட்ட கோடி, சீலை என்பன செம்மொழிச் சிலேடைகள், சோற்றுப் பருக்கை அறியாத புலவர் கூறிய ‘சிவனனேன் அன்னங்காணுமையால்’’ என்ற தும் செம் மொழிச் சிலேடையே. பல பொருள் (தரும்) இருசொல் தமிழில் மிக அதிகம் உண்டு. அதனல் செம்மொழிச் சிலேடை பிறக்கும் வாய்ப்பும் அதிகமாகிவிட்டது.
ஒரு சொற்ருெடர் பலவாழுகப் பிரிந்து பலபொருள் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படுகிறது. விழிப் புணர்ச்சி என்ற தொடரை இருவகையாகப் பிரிக்கலாம். விழி+புணர்ச்சி எனப் பிரித்துக் கண்ணுங் கண்ணுங் கலப் பதனைக் குறிப்பது ஒரு பொருள். விழிப்பு + உணர்ச்சி எனப் பிரிந்து உள்ளக் கிளர்ச்சியையும் குறிப்பிடுவது மற்ருெரு பொருள். ஒசை வேறுபட உச்சரிப்பதால் இவ்வாறு வேறு வேறு பொருள்கள் ஆகின்றன.
* எழுத்திற் திரியாப் பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பாற்பொருள் எய்தும் என்ப**
என இலக்கணத்தில் இதனைக் குறிப்பிடுவர் நன்னூ லாசிரியர். அவர் குறிப்பிடும் 'பொதுமொழி’ என்பதும் இப் பிரிமொழிச் சிலேடையில் அடங்கியதே. எட்டு, வேங்கை ஆதியன இப் பொதுமொழிக்கும் உதாரணங் கள் . இயல்பான பொருளைத் தவிர எள் +து எனப் பிரித்து எள்ளை உண் (து = உண்) என்ற கருத்தைக் கொள்ளு வதும், வே(கு)ம் + கை எனப் பிரித்து வெந்துபோகும் கை என்ற கருத்தைக் கொள்ளுவதும் பிரிமொழிச் சிலேடை களே. அணிகளில் ஒன்ருகக் கருதப்படும் சிலேடை, சொல்லிலக்கணத்தில்," "இசைத்திரிபால்பொருளெய்தும்' எனக் கூறப்பட்டுள்ளதைக் கவனித்தால் சிலேடை அணி தமிழ் மொழிக்குக் "கைம்மாற்று" அன்று என்பதும் எளிதிற் புலப்படும்.
அடுத்து, சிலேடை பிறந்த கதையைப் பார்ப்போம்.
புணர்ச்சியில் தோன்றிய இரட்டைகளே சிலேடை ஆகும்.
எல்லாப் புணர்க்சிகளிலுமன்று, சில புணர்ச்சிகளில் மாத்
திரம் இவ்வகையாக நிகழும். சிலவேளை ஒரே புணர்ச்சி
As

Page 33
42 . கடலும் படகும்
யில் இரண்டுக்கு மேற்பட்ட பொருள் பிறந்துவிடுவதும் உண்டு. அவ் இடம் என்ற இரு சொற்களும் புணரும் பொழுது அவ்விடம் எனச் சேரும். சேர்ந்தபின், அந்த இடம் என்ற பொருளையும், அந்த விஷம் என்ற பொருளை யும் கொள்ள முடியும். இவ்வ்ண்ணமே பாசவலை, கண்டே னல்லேன் என்ற தொடர்களிலும் இருபொருள் படுதல்
காண்க. அவ்விடை என்பது முப்பொருள் தருவதும் அறிக. மேலும் ஒருபொருள் இருத்தல் உணர்க. புணர்ச்சி யால் ஏற்படும் இவ்வாய்ப்பு, சிலேடையாக உருவெடுப்
பது அறிஞர்க்குப் பெரிதும் மகிழ்ச்சி தருவதாகும். புணர்ச்சி தரும் இரு பொருட் பேற்றை மணிவாசகஞர் எத்துணைச் சாமர்த்தியமாகத் தம் புலமையை அள்ளிச் சொரிந்த வன்மையைத் திருக்கோவையார்ச் செய்யுள் ஒன்றில் நாம் அறிந்து அநுபவிக்க முடியும்.
'சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்கம் மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே”*
தலைவனின் இடர்ப்பாட்டைக் குறிப்பிடும் தோழி யின் கவனத்தைச் சாதுரியமாக மாற்றிவிடும் தலைவி கூறுவதாக அமைந்தது இப்பாடல். தலைவியின் சாதுரி யத்துக்கும், மணிவாசகஞரின் சாதுரியத்துக்கும் மிகப் பொருத்தமாகவும் அமைந்துவிட்டது. மணிவாசகஞரின் சாதுரியமே இங்கு நோக்கவேண்டியது, நோக்குவோம்: முத்து யாம் என்ற இரு சொற்களும் "முத்தியாம்' என இலக்கணப்புணர்ச்சி விதிப்படி சேரும், சேர்ந்த பின், முத்து என்ற கருத்தைத் தவிர முந்தி என்ற கருத்துத்தருவதையும் மணிவாசனுர் கண்டுகொண்டார். அஃதாவது, சங்கு தருகின்ற முத்து என்ற ஒரு கருத்தும், இறைவன் பாதங் களிற் சங்கமமாகும் நிலை தருகின்ற முத்தி என்ற மறு கருத் தும்தோன்றியதைக் கவிஞன் கண்டுகொண்டான். இவை புணர்ச்சியிற் தோன்றிய இரட்டைகள் அல்லவா? முதலடி யிற் கண்டு கொண்ட சிலேடை நயம் பாடல் முழுவதையும்

சிலேடை 43
சிலேடையாக முடித்துவிட்டது. தில்லைத் தெய்வத்தை யும் சமுத்திரப் பரவையையும் ஒன்ருக்கிச் சிலேடை கண்டுவிட்டார் மணிவாசகஞர்.
புணர்ச்சியால் தோன்றிய பொருட் சிறப்பு நாளடை வில் பிரிமொழிச் சிலேடையிலும் ஏற்பட்டது. ஒலி அழுத் தத்தை வேறுபடுத்திக் கூறுவதன் மூலம் பிரிமொழிச் சிலேடை இன்பத்தைத் தமிழன் நுகர்ந்தான். இந் நுகர்ச்சியும், ருசியும், ஒலி ஒப்புமை மொழிகளிலும் தனி மொழியிலும், சிலேடையை அனுபவிக்கும் தன்மையைத் தோற்றியிருத்தல் வேண்டும். அதனுற் தனிமொழியில் அமையும் செம்மொழிச் சிலேடையும் பிறந்துவிட்டது. பலபொருள் ஒருசொல், தமிழில் இயற்கையாக அதிகம் காணப்படுவது செம்மொழிச் சிலேடை வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாயிற்று.
இனி, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிலேடை வளர்ச்சியைச் சிறிது பார்ப்போம். சங்க இலக்கியங்களிற் சிலேடை இடம்பெறவில்லை. காரணம் புலவர்களின் இயற்கை நோக்கு ஆகும். சங்க காலப்புலவர்கள் வாழ் வுக்காகவே இலக்கியம் எனக்கருதிய யதார்த்த வாதிக ளாவர். அதனற் சொல்வித்தைக்கு அவர்கள் அடிபணிய வில்லை. அமைதியாக இரண்டொரு இடங்களிற் சிலேடை உண்டு. அதுவும் புணர்ச்சியிற் தோன்றிய இரட்டைகளே. சங்கம் மருவிய காலத்தவர் எனக் கருதப்படும் காரைக் காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில், லேடை வகையில் அமைந்த பாடல் ஒன்று காணப்படுகின்றது. பெண்கள் எப்பொழுதும் சிலேடையாகப் பேசுவதில் வல்ல வர்களல்லவா ? அம்மையாருக்குப் பின், சிலேடை படிப் படியாகப் படையெடுத்தது. தேவார ஆசிரியர்கள் சிலேடை பாட மறக்கவில்லை. சிறப்பாக கி. பி. 15 ஆம் நூற்ருண்டிற்குப் பின் பாடல்கள் எல்லாம் சிலேடைமய மாகிவிட்டன. புலவர்கள். சிலேடைக்கு அடிமையாயினர். புலமையின் சின்னம் சிலேடை எனவும் கருதப்பட்டுவிட் டது. காளமேகப் புலவர் சிலேடைத் துறையில் கொடி கட்டிப் பறந்தார். சொல்வித்தையானலும், இரட்டை யர்களின் சிலேடை இதயத்தை இனிக்க வைக்கின்றது.

Page 34
44 கடலும் படகும்
அண்ணன் பழங் கந்தற் சீலையைக் கல்லிற் தப்பு தப் பென்று தப்பினன். தம்பிக்கு இது கவலை தந்தது. அண்ணனைப் பார்த்து, இப்படித் தப்பினல் நம்மை அது தப்பிவிடும் நீ செய்வது தப்பு என்றன். அண்ணனே **இந்தக் கந்தை போனலும் போகட்டும்'. இது வரை என்ன நம் மானம் போகாமலா இருக்கிறது ? போடா போ என்று கூறிமுடித்தான். இக்கவிதையை நாம் தப்ப விடக்கூடாது. விடுவதும் பெருந்தப்பு ஆகும். இதோ கவிதை:
"அப்பிலே தோய்த்து அடித்து அடித்து நாளுமதைத்
தப்பினுல் நம்மையது தப்பர்தோ - இப்புவியில் ஆனலும் கந்தை அதிலுமோர் ஆயிரங்கண் போனலும் போச்சென்ன போ' நமது ஈழத்துப் புலவர்களும் ஆங்காங்கே சிலேடை யிற் கைவரிசை காட்டத் தவறவில்லை. ‘சந்தனம் சும் மாவரிற் பூசலாம்' என்ற சுன்னை முருகேசுப் புலவரின் சிலேடைக் கருத்து அனைவரும் அறிந்ததாகும். தூதுக் குப் போன அன்னம் சும்மா வந்தால் பகைமையிலே தான் முடியும் என்பது சிலேடைக் கருத்து. (சந்து - தூது பூசல் - பகைமை) சுன்னுகத்துப் பிறந்த இன்னெரு புல வராகிய முத்துக்குமாரபிள்ளையின் ‘முடிவிலாதுறை சுன்ன கத்தான் வழி' என்ற சிலேடைப் பாடலை அறியாதார் அறியாதர்ரே !
என்றெல்லாம் சிலேடையைப் பற்றித் தெளிவாகவும் சிலேடையாகவும் சொல்லிய ஆசிரியர் இறுதியாகப் பார தியாரின் சிலேடை ஒன்றையும் சொல்லி வகுப்பை முடித் துக் கொண்டார். பாரதியர்ரின் நண்பரொருவர் பாரதி யாரை நோக்கி, 'பாரதி சின்னப் பயல்’ என்றதை இறுதியடியாகக் கொண்டு ஒரு வெண்பாப் பாடுக என்று கேட்டாராம். கேட்டவரின் பெயர் 'தனஞ்சயனர்" . உடனே பாரதியார் மூன்ரும் அடியின் இறுதிச் சீராகத் தனஞ்சயனுர் என்பதை வ்ைத்து வெண்பாவை முடித்து விட்டார். 'தனஞ்செயனுர் பார், அதி சின்னப்பயல்’ என்ற கருத்தைத் தந்துவிட்டது. பாரதியார் அடித்த அடி இந்தத் தனஞ்சயன் ஆர் என்று எல்லோரையும் கேட்க வைத்துவிட்டதே !
LSSSSLSLSSLSLSSLSS LSeeSSSSLLLLLSSLLS

இது ஒரு மகிழ்ச்சியான குடும்பம். மனித வாழ் வுக்கு வேண்டிய பல வசதிகளையும் குறைவறக் கொண் டது. அன்பினலே, தோல்வியறியாத வெற்றிகரமான பண்பினுலே, அனைவர் கருத்தையும் தன்பால் இழுத்துக் கொண்ட இலட்சியக் குடும்பம். குடும்பத் தலைவனின் அறிவு, ஆண்மை, முயற்சி, அன்பு ஆதியான அரும்பண்பு களால் இத்துணைச் செல்வர்க்குப்பெற்றுக்கொண்டது. அவன் மனைவியுமோ அரிய பண்புகளுக்கெல்லாம் எடுத் துக்காட்டானவள். மாசு மறுவற்ற வாழ்க்கைக்கும், வாழ்க்கை மலர்ச்சிக்கும் அவள் எப்பொழுதும் அவனுக் குத் துணையாக நின்ருள். இது அவனுடைய நல்வினைப் பேறு என்றே கருதவேண்டும். தாரமுங் குருவும் தலைவிதி யன்ருே 1 அன்பு மனைவியின் ஒத்துழைப்புக் காரணமாக அவன் 'தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக் கும் கொள்கை வழி இயங்கினன். ('தானும் என்பதற் குள் மனைவியும் மக்களும் சேர்ந்து கொள்கிருர்கள்) அத ஞல் கற்றவர்களுடன் கலந்து அறிவுத்துறையை அலங் கரிக்கின்றன். தன்னிடம் வரும் பாணருக்கும் சுற்றத்தின ருக்கும் அள்ளிக் கொடுக்கின்றன். சான்றேர்கள் சங்க நிதி போல் அவனை மதிப்பிடுகின்றர்கள். உற்றவர் களுக்கு எல்லாம் ஊருணிபோல் உதவி செய்கின்றன். இப்பெரு நன்மைப்பாடுகளினல் இறைவனே அவனைத் தூக்கித், தன்னடியில், முடியில் அணியும் கொன்றை மாலைபோற் குடிக் கொள்ளுகின்றன். மக்கள் பூசை மகே சுரன் பூசை என்பதற்கு அவன் இலக்கியம் போலும் !
பூத்துக் குலுங்கும் இக் குடும்ப அழகைக் கண்ட மணிவாசகப் பெருமான் அப்படியே இலயித்துப்போனர். குடும்பத்தலைவனைப் பாராட்டாமல் இருக்க அவரால் முடிய வில்லை. பாராட்டுகிருர், பாராட்டுத், திருக் கோவையின் இறுதி மாணிக்கக் கல்லாக ஒளி காலுகின்றது.
翠5 ܖ

Page 35
46 கடலும் படகும்
காரணி கற்பகம், கற்றவர் நற்றுணை; பாணரொக்கல் சீரணி சிந்தா மணி, யணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன்; தக்கோர்தம் சங்க நிதி; விதிசேர் ஊருணி யுற்றவர்க்கு; உன்ரன் மற்றியா வர்க்கும் ஊதியமே!
மன்பதையின் ஊதியம் - மன்பதைக்கு ஊதியம் என் கிறது இக் குடும்பத்தலைவனை மணிவாசகம். அவன் வாழ்வு அன்பின் ஐந்திணை வாழ்வு !
இப் பெருங்குடும்பம் எப்படித் தம் வாழ்வை ஆரம் பித்தது. இந்த நிலைக்கு இவர்களைக் கொண்டுவர எந்த அற்புதசக்தி காரணமாய் இருந்தது என அறிந்துகொள் ளுதல் சுவையும் சுகமுந்தரும் இவர்கள் இருவரும் நல்ல குடியில் பிறந்தவர்கள்; பெற்றேரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவர்கள்; குடும்ப பாரம்பரியத்தைப் பேணிக் காக் கும் அளவுக்கும், அதன்மேலும் அறிவும், பண்பும் வாய்ந் தவர்கள். ஆனலும் பெற்றேர் விருப்பப்படி அவர்கள் திருமணம் நடைபெறவில்லை. களவாகக்கூடி இன்றுவரை களையோடு வாழ்பவர்கள். அதாவது ஒருவரை ஒருவர் காதலித்துக் கலியாணங் கட்டியவர்கள். இளவயதில் கூடிக்குலாவி விளையாடியதும், ஒருவருக்கு ஒருவர்செய்த குறும்புகளும் உள்ளடங்கி நின்று தக்க பருவத்தில் காத லாகப் பரிணமித்திருக்கலாம் அல்லது இருவரின் பெருமை களையும் இருவரும் பரஸ்பரம் அறிந்து ஒருவரை ஒருவர் கண்டதும் காதல் உண்டாகி இருக்கலாம் அல்லது ஊழ் இவர்களைக் கூட்டி வைத்திருக்கலாம். மேலே குறிப்பிட்ட குடும்பத்தை ஊழ்தான் கூட்டிவைத்தது என்கிருர் திருக் கோவ்ையார் ஆசிரியரான மணிவாசகப் பெருமான். எதுவாயினும் இவர்கள் களவிற் கூடியவாகள். குறிப் பிட்ட காலம்வரை இவர்கள் கூட்டம் எவருக்கும் தெரி யாது. அவர்களோ கணவனும் மனைவியும்போற் பழகிக் G35rr Gior nr rit 95 Gir.
காதலித்து, களவாக ஒழுகிப், பின்பு திருமணம் செய்து அன்போடு வாழ்கின்ற இம்முறையை நம்முன் ஞேர்கள் அனுமதித்துள்ளனர். நேற்றிருந்த பாரதிகூட, "காதல், காதல், காதல், காதல் போயிற் சாதல் சாதல் சாதல்" என்று மூச்சு விடாமற் பாடியுள்ளானே.

அன்பின் ஐந்திணை 47
களவை அனுமதிக்கலாமா? அனுமதிப்பது அடாத செயலாகாதா? என்றெல்லாம் கேட்கத் தூண்டுகின்றது. தீமைதரும் சளவுதான் பஞ்சமாபாதகங்களில் ஒன்ருகி அறிஞர்களாற் தள்ளப்பட்டது. நன்மை தருங்களவு பயன் நோக்கி அறிஞர்களாற் கொள்ளப்பட்டுள்ளது. இதனைக், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் வைத்து அழகாக விளக்கு கின்ருர் இறையனர் களவியல் ஆசிரியர். ஆரும் இல்லர் விடத்தே அழுந்தித்தான் சாகவேண்டும் என்பதற்காக நஞ்சைக் கலந்து ஒரிடத்திற் பத்திரமாக வைக்கிருள் ஒருத்தி. இவளை அறியாமலே இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிருர் ஒருவர். அவள் விலகியதும், அவளுக் குத் தெரிய மல் அந்நஞ்சுக் கலவையை எடுத்து வெளியிற் கொட்டி விடுகின்ருர் அவர். அவர் செய்தது பச்சைக் சளவு. ஆனல் ஒருயிரைக் காப்பாற்றிய பெருமை அக்களவினல் ஏற்பட்டுவிடுகிறது என வாதிடுகின்ருர் கள வியலுரை ஆசிரியர். அவர் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. இன்ப விழைவுதான் வாழ்க்கைப் போராட் டத்தின் நோக்கம். களவில் அனுபவிக்கும் இன்பம் சாதார ணத்துக்குமேல் அதிக இன்ப்த்தைத் தருகின்றது. பெற் ருேர்கள் இல்லாத சமயம் பார்த்து ஏதேனும் உணவை யெடுத்துக் களவாக உண்பதில் குழந்தைக்குத்தான் எத் தனை இன்பம்! அன்னை கொஞ்சிக் கொஞ்சி ஊட்டிய அந்த உணவையே குழந்தை மறைவாக உண்ணும்போது அது அடையும் இன்பமே ஆனந்தத்தின் எல்லையை மிஞ்சி விடுகின்றது. இக் குழந்தைதானே பெரியவனும் ஆகிறது. தக்க பருவம் எய்தியதும் முந்திய மகிழ்ச்சி அனுபவம் வேறு வடிவம் கொண்டு வருவதில் புதுமை எதுவும் இல்லை. இருவர் களவாகக் காதலித்துக் கூடுவதனல் இன்னெரு பெரிய நன்மை ஏற்படுகிறது. மற்றவர்களுக் குத் தெரியாமல் இக் களவு நிகழ்வதால் காதலர் இரு வருடைய உள்ளங்களும், "எனக்கு நீ தான், உனக்கு நான்தான்' என்ற அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று நல்லாக ஒட்டுகின்றன. இது வச்சிர ஒட்டு. காதற் பசையில் ஒட்டிய இந்த ஒட்டுத்தான் எதிர்காலத்தில், குடும்ப வண்டி துன்பமேட்டில் ஏறும் பொழுதும், கவலைப் பள்ளத்தில் இறங்கிவிடும்பொழுதும் மணமக்களைப் பிரிய

Page 36
48 3, L-3) b ul-(35th
விடாமல் வைத்துக் கொள்வது. ‘பிரியேம், பிரியிற்
த ரியேம்" என்ற கையெழுத்திடாத காதல் ஒப்பந்தம்
முறிந்துவிடாமற் பார்த்துக்கொள்வது. களவு தந்த அள
விலாப் பெரு நன்மை இது எனலாம். ஒட்டிமறைந்து விளையாடிய இன்ப ஆடலில் ஏற்பட்ட ஒட்டு அல்லவா
இது! அதனுல் காதல் முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்
டியதே. இவ்வண்ணம் ஒத்த தன்மையுடைய இருவர்
அன்பே அடிப்படையாகக் களவிற்கூடிக் கற்பில் பொற் புறும் இல்வாழ்வின் அக ஒழுக்கங்களை "அன்பின் ஐந்திணை
வாழ்வு" என அற்புதமாகக் குறிப்பிடுகின்றன அழகுத்
தமிழ் இலக்கண நூல்கள்.
தினேயென்ருல் ஒழுக்கம். காதல் இதயங்கள் ஐந்து வகையாக இயங்கி முழுமையான வாழ்விற் திளைக்கின்றன. ஆகவே அக ஒழுக்கம் ஐந்திணையாயிற்று. இவ் ஐவகை ஒழுக்கங்களுக்கும் அன்பே அடிப்படை என்பதை மறந்து விடலாகாது. இல்வாழ்வு என்னும் இன்பக் காவியத்தின் பாவிகம் அன்பு என்பதே! இந்த அன்பு நூல் எந்த இடத் தில் அறுகின்றதோ அந்த இடத்தில் வாழ்வு நின்றுவிடும்; குலேந்துவிடும் உருக்குலைந்துவிடும். மணிமாலையைக் கோத்த நூல் அறுந்துவிட்டால் மணிகள் ஆங்காங்கே சிதறிச் சின்னபின்னப்படுவதுபோல் வாழ்வும் சின்னபின் னப்பட்டுச் சீரழிந்துவிடும். இதனுலேதான் இல்வாழ்க்கை யின் பண்பு, அன்பு என்ருர் பொய்யில் புலவரும், அன்பு தான் அடிப்படைச் செல்வம் என்ற கருத்தில் அன்பு உடைமை என்று கூறி, அன்புடைமை என ஒரு அதிகா ரமே அன்பாகத் தந்துள்ளார் அவர். களவோ களவின் மையோ வாழ்வின் மையவிசை அன்பு ஆகும். ,
அகத்தின் ஐவகை ஒழுக்கங்களே அன்பின் ஐந் திணை ஆயிற்று. இவ் ஐவகை ஒழுங்கங்களையும் உரிப் பொருள்களாகக் கொண்டு, இவ் உரிப்பொருட்கள் ஆக் கம் பெறுவதற்கர்ண சூழ்நிலையை நிலமும் பொழுதும் என இருவகைப் படுத்தி, ஆராய்வது அகப்பொருள் இலக்கணத்தின் நோக்கமாகும். புறத்தார்க்கு இது இப் படியெனக் கூறமுடியாத அக இன்பம் பற்றிய ஒழுக்கங்

அன்பின் ஐந்திணை 49.
களை அகப்பொருள் இலக்கணத்தில் அறியவைத்த நம் முன்னேர், வாழ்வுபற்றிய ஏனைய உணர்வு, இச்சை, செயல்களைப் புறப்பொருள் இலக்கணத்திற் கூறிச் சென் றனர். வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன் தான். இதையிட்டுத் தமிழ் மக்கள் அதிகம் பெருமைப் படுகின்ருர்கள். அகப்புறப்பொருள் இலக்கணங்களை அதி கம் விரிவாக உணர்த்தியவர் தொல்காப்பியனரே. அவ ருக்குப்பின், அகத்திணைக்கெனத் தனியாக இறையனர் களவியலும், நம்பியகப்பொருள் என்ற இலக்கண நூலும், புறப்பொருளுக்குத் தனியாகப் 'புறப்பொருள் வெண் பாமாலை" என்ற இலக்கண நூலும் எழுந்துள்ளன. தனி யாகவும் கூட்டாகவும் இலக்கணங் கூறும் வேறு சில நூல் களும் உண்டு.
இனி அன்பின் ஐந்திணை பற்றிய இயல்புகளைப் பார்ப் போம். புணர்தல், இருத்தல், ஊடல், பிரிதல், இரங்கல் என்ற ஐவகை ஒழுக்கங்களே அன்பின் ஐந்திணைகள் ஆகும். புணர்தல் ஒழுக்கம் குறிஞ்சித்திணை என்றும் . இருத்தல் முல்லை என்றும், ஊடல் மருதம் என்றும், பிரிவு பாலை என்றும், இரங்கல் நெய்தல் என்றுங் கூறப்படும்.
முன்பு மணிவாசகளுர் நமக்குக் காட்டிவைத்த இலட் சியக் குடும்பம், இவ் ஐவகை ஒழுக்கங்களையும் கொண் டதே. இவர்கள் கண்டதுங் காதல் கொண்டவர்கள். இதன் காரணம் விதி என்றே கூறப்படுகிறது.
முதலில் இக்காதலர்க் கிடையில் ஏற்பட்டது விழிப் புணர்ச்சி ஆகும்.
**கண்களும் கண்களும் கலந்து பேசின
கண்களும் கண்களும் கலந்து, பேசினபேச்சிற் பிறந்தது காதலே' என விழிப்புணர்ச்சி தரும் காதலை விந்தையுறக் கூறியுள் ளார் கவிமணி. காதலும் பேசிப்பிறந்ததாம். எப்படி இருக்கிறது கவிமணியின் செப்படிவித்தை ? விழிகள் ஏற் படுத்திய காதலை, அவ்விழிகளே சுமந்துசென்று காதலர் உள்ளத்தில் விட்டன. உள்ளங்கள் கூடின; உள்ளப்
7

Page 37
50 கடலும் படகும்
புணர்ச்சியும் முடிந்தது. உள்ளம் துய்த்த மிருதுவான காதலை அவ் உள்ளங்கள் தாங்கிச் சென்று இருவர் உடலி லும் விட்டன. மெய்யுறு புணர்ச்சியும் முடிந்தது. காதல் தடித்தது. இவ்வளவும் பிறரறியாமற் களவில் நடை பெற்றவை. இவ் ஒழுக்கமே குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி என்ருலே புணர்தல் என்பதுதர்ன் கருத்து. எட்டியிருந்த இரு விழிகள், இரு மனங்கள், ஈர்உடல்கள் ஒன்றை ஒன்று கிட்டுதல் - குறுகுதல் - சேருதல் ‘புணர்தல்' என்ருகிறது. 'குறு" என்ற அடியில் இருந்து பிறந்தது குறிஞ்சி. இக் களவு ஒழுக்கத்திற்கு மிகவாய்ப்பான நிலம் மலையும் மலை சார்ந்த நிலமும் என அகப்பொருள் இலக்கணம் கூறும். அன்றி மலைநாட்டினர்க்கே காதல் செய்யும் வாய்ப்புண்டு, அல்லாதவர்கள் காதல் செய்ய வழியின்றி மலைப்பர் என் பது கருத்தன்று. களவு ஒழுக்கத்திற்கு வாய்பான காலம் இரவு என அகப்பொருள் இலக்கணம் கூறும். அதில் தடையென்ன ? பகற்களவுக்கு எத்துணை விழிப் புணர்ச்சி வேண்டும். இவ் ஒழுக்கத்திற்குரிய தெய்வம் முருகன் ஆவன். இதனலேதான் இளநங்கையரும் நம்பியரும் முரு கனை அதிகம் வழிபடுகின்றனர்.
இவ்வாறு களவிற்கூடும் இருவர் காலவரையறை இன் றிக் களவினிலாடல் சாலாது. கதை அடிபடத் தொடங்கி விடும். பெற்ருேருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படும். ஒரு வகை இருட்டடிப்புக்குள்ளாவள் காதலி. ஆழந்தெரியா மற் காலைவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவுக்குக் காதலர் கலவரப்படுவர். பட்டாலும், காதலல்லவா ? அது மேலும் மொட்டுவிடுவதன்றிக் கட்டுவிடாது. இழுபறி நிகழ்ந்தாலும் திருமண முயற்சிகள் துரிதமாக நடக்கும். பெண்ணின் பெற்ருேர் மகள் மேற் காதலால், மகள் காதலை ஏற்றுக்கொள்ளுமிடத்து, பெண்ணின் வீட்டி லேயே திருமணம் நிகழும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காதலன் காதலியையுங் கூட்டிக்கொண்டு தன்வீட்டுக்குப் புறப்பட்டுவிடுவான். அவன் வீட்டிற் திருமணம் நிகழும். மணமக்களின் முழுமையான வாழ்வொழுக்கம் முல்லை எனப்படும். முழுமை என்ற பொருள் தரும் "முல்" என் னும் அடிச்சொல்லில் இருந்து பிறந்தது 'முல்லை", "வல்"

அன்பின் ஐந் Baré, "ಶ್ದಿ | ಶ |
என்ற அடியில் இருந்து வல்லை" என்ற சொற் பிறந்த் போல. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என இலக் கணம் கூறும். இங்கே மாயோன் என்னுந் தெய்வம் காதலர்களைக் கந்தனிடம் இருந்து பொறுப்பு ஏற்கிருன். என்றது, முல்லைநிலத் தெய்வம் திருமர்ல் என்பதாகும். வாழ்க்கையில் விசாலநோக்கு வேண்டும். விசாலமான கண்களையுடைய கண்ணன் முல்லைத் தெய்வமானது முழுப் பொருத்தமே.
இருத்தல் ஒழுக்கமான முல்லைத்திணைத் தம்பதிகளுக்கு இடையில் சிறு சிறு மனத்தாக்கங்கள் அவ்வப்பொழுது எழும். இத் தாக்கங்களால் மணமக்கள் ஒரு சிலநேரம் முகத்தைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கிற நிலையும் ஏற்படும். இது ஊடல் ஒழுக்கம் எனப்படுகிறது. சாப் பாட்டுக்கு அச்சாறு போல் மணமக்களின் அத்துவித மெய்க் கலப்பு இன்பத்திற்கு இவ்வூடல் தனிக் காரண மாகும். இதனுல் வேண்டுமென்றே மணமக்கள் ஊடலில் தலைப்படுத்ஓம் உண்டு. மணமக்கள் இன்ப உச்சநிலையில் மிதப்பதற்கு ஊடலொழுக்கமே ஏதுவாகும். மணவாழ் வுக்கு மணந்தருவது ஊடலே. இதனுல் ஊடலுக்குரிய திணை மருதம் ஆகும் , "மரு' என்றல் மணம், ஊடல் காரணம், வாழ்வு மணமுடைத்தாதல் காரியம். இக்காரி யத்தைத் தரும் ஊடல் ஒழுக்கத்தை வள்ளுவர் மிக அரு மையாக விளக்குகின்ருர்,
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'
ஊடல் ஒழுக்கத்திற்குரிய நிலம், வயலும் வயல் சார்ந்த பகுதியும் என்பர். அந்தக் காலங்களில் வயல் நிலமே கலைநிகழ்ச்சிகளுக்குக் களமாகும் வாய்ப்புற்றது. சில சந்தர்ப்பங்களில் இக் கலைஞர்களில் ஒரு சிலர் தலைவி யின் ஊடலுக்குக் காரணமாவதும் உண்டு. பச்சையாகச் சொல்லப்போனல், மருதம் திருமண வாழ்வின் பின்பு ஒரு காதற் பரிசோதனைக் களமாகப் பணிபுரிகின்றது. மருதத் தெய்வம் இந்திரன் ஆவன். சந்துபொந்தெல் லாம் இன்பம் விழைபவன் இந்திரன் ஆயிற்றே ,

Page 38
52 கடலும் படகும்
அன்றிற் பட்சிகள்போல் தம்பதிகள் இருவரும் வாணுள் முழுவதும் ஒன்றியிருத்தல் முடியாது. பொரு ளிட்டத்திற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்துதான் ஆதல் வேண்டும் இப்பிரிவு ஒழுக்கம் பாலை எனப்படும். 'பால்" என்ற அடியில் இருந்து பிறந்தது பாலை. அவ் அடிச்சொற்குப் பொருள் பிரிவு என்பதாகும்.
பிரிவுநிலையும் பருவநி%லயும் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் இரங்கும் தன்மையை உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இவ்வாறே இரங்குதல், நெய்தல் எனப்படும். பிரிவுச் சிந்தனைகள் குறுக்கும் மறுக்குமாக இழையோடி இரங்குதலை உண்டாக்குதலின் நெய்தல் எனப்பெயர் தந்தது மிகப் பொருத்தமே! கடலும் கடல் சார்ந்த நிலமும் இவ்விரங்கல் உணர்ச்சிக்குத் தூபம் போடுவன. இதனல் நிலமாகவும் முடிந்தது. நெய்தல் நிலத் தெய்வமாக வருணனைக் குறிப்பிடுவர் தொல்காப்பிய ஞர். பொருட் பெருக்கத்துக்கு மழைவேண்டும். மழை தருபவன் வருணன். பிரிவுக்குக் காரணமான இவன் பிரிவுணர்ச்சித் தெய்வமாகவும் மதிக்கப் பட்டுவிட்டர்ன்.
இவ்வாறு ஐவகை ஒழுக்கங்களிலும் மாறிமாறிப் புகுந்து மகிழ்ச்சியுறும் மணமக்கள் அன்பின் ஐந்திணை மணமக்கள் ஆவர். கற்பு ஒளிவிடும் இல்வாழ்வுக்குக் களவுக் காதல் அடியெடுத்துக் கொடுத்து, குடும்பக் காவி யத்தைக் குளிர்மையுறச் செய்கின்றது. காதலிற் களவு கூடாது; இது *கந்தறுவார் காதல்! கள்ளக் காதல் நல் லது; சிறந்தது. இது காந்தருவர் காதல்!


Page 39


Page 40