கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றுக் கருத்தின் மதிப்பு

Page 1
மாற்றுக் கரு
KNS
NS
N
A. كانت |
 

ܪ .
பாதுகாப்பதற்கான இயக்கம்
:
ÄNNUKNNNNNNKNNNKN

Page 2

மாற்றுக் கருத்தின் மதிப்பு

Page 3

மாற்றுக் கருத்தின் மதிப்பு
இலங்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்

Page 4
ஆசிரியர் குழு சார்ள்ஸ் அபேசேகர குமாரி ஜயவர்த்தன குரியா விக்கிரமசிங்க
மேற்பார்வை ஆசிரியர் (தமிழ்) வே.கணபதிப்பிள்ளை
மொழிபெயர்ப்பு ஏ.ஏ.லத்தீஃப்
திட்ட இணைப்பாளர் ரஞ்சித் பெரேரா
அட்டைச் சித்திரம் 35/7/7 L Gor
பின் அட்டை ஐ.உ.பா.இ.சின்னம் ரிச்சர்ட் கேட்பிறியல்
டு இலங்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம். ஈ.எம். போஸ்டர் எழுதிய Two Cheers for Democracy என்ற நுாலிலிருந்து நான் நம்புவது என்ற கட்டுரை எட்வர்ட் ஆர்னல்ட் (வெளியீட்டாளர்கள்) லிமிட்டெட்டின் அனுமதியுடன் எடுக்கப்பட்டது. பதிப்புரிமை 1951 மறைந்த ஈ.எம்.போஸ்டரின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், 1972.
வெளியிட்டவர் பேர்னடன் சில்வா, இலங்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம், 37 சார்ள்ஸ் இடம், கொழும்பு 3.
முதலாவது பதிப்பு - ஜூன் 1992 இரண்டாம் பதிப்பு - ஜூன் 1996
அச்சிட்டவர் வரையறுக்கப்பட்ட கருணாரத்ன உம் புதல்வர்களும் லிமிட்டெட் 647, குலரத்ன மாவத்த
கொழும்பு 10
இலங்கை

"மாற்றுக் கருத்தின் மதிப்பு” வெளியீட்டின் முதலாவது இதழை வண செலஸ்ரீன் பர்னாந்து அவர்களின் நினைவுக்கு நன்றியறிதலுடனும் மரியாதையுடனும், பரிவன்புடனும் சமர்ப்பிக்கின்றோம்.
இவ்வெளியீட்டுத் திட்டம் முதலாவதாக உருப்பெற்ற போதுவன செலஸ்ரீன் பர்ணாந்து அவர்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் தலைவராக இருந்தார். திட்டம் பற்றி உற்சாகம் காட்டினார். அது குறித்து புதிய போக்கில் சிந்தித்தார். பெரியதோர் தொகுப்பாக வெளிக்கொணர்வதற்குப் பதிலாக தனி ஏடுகளாக பிரசுரிக்க வேண்டுமென்பது அவருடைய கருத்தாகும். அவர் காத்திரமான கொள்கைகளிலும் உறுதியான கோட்பாடுகளி லும் நம்பிக்கையுடையவர். இப்பிரசுரங்கள் மூலம் ஊக்குவித்துச் செழுமைப்படுத்த முனையும் சகிப்புத் தன்மை, கருத்துச் சுதந்திரத் துக்கு மரியாதை போன்ற பண்புகளை அவர் உருவகப்படுத்தினார்.
உறுப்பினர் என்ற முறையிலும், பிரதித் தலைவர் என்ற முறையிலும் - இறக்கும்போது தலைவர் பதவியை வகித்தார் - தனது நேரத்தையும் சக்தியையும் எமது ஸ்தாபனத்துக்கு மிகத் தாராளமாக வழங்கிய வண செலஸ்ரீன் பர்ணாந்து அவர்களின் அறிவார்ந்த வழிகாட்டலும், மெல்லிய நகைச்சுவையும் இல்லாது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் பேரிழப்புற்றுள்ளது.

Page 5
இலங்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் பின்குறிப்பிடப்பட்டவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. - ஆலோசனை கோரும் எமது கடிதங்களுக்கும், அதேபோல் "இன்டெக்ஸ் ஒன் சென்ஸர்ஷிப்” ஏட்டில் பிரசுரிக்கப்பட்ட அது போன்ற வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து செயல்பட்ட அனை வருக்கும் நன்றி. - எமது முதல் இதழுக்கு விஷய தானம் வழங்கிய ஸ்ரீபன் ஸ்பெண்டருக்கும், அன்ட்ரூ பிலேன், ஷெர்மன் கர்ரொல், டொரதி கொன்னல், மானல் பொன்ஸ்ேகா, ரிச்சர்ட் ரியோக் மற்றும் பார்னட் ஆர். ரூபின் போன்ற மனித உரிமை உலகைச் சேர்ந்த எமது சகாக்களுக்கும் நன்றி. - “இன்டெக்ஸ் ஒன் சென்ஸர்ஷிப்” ஏட்டுக்கும், விசேஷமாக அதன் பணிப்பாளர் பிலிப் ஸ்பெண்டருக்கும் - அவருடைய உற்சாகமான ஊக்குவிப்பும் நடைமுறை ரீதிய்ான ஆதரவும் இன்றி இத்திட்டம் அடியெடுத்து வைத்திருக்க முடியாது - எமது நன்றி.

உள்ளடக்கம்
அறிமுகம்
ஸர் பெஞ்சமின் வார்ட்
டாக்டர் ஜோன் ஸ்நோ முன்னோடியாக ஆற்றிய பணி வாந்திபேதி பரவுத்ல் தடுப்பு
ஈ.எம்.பொஸ்ட்டர்
நான் நம்புவது
வில்லியம் ஷேக்ஸ்பியர்
லியர் மன்னரின் சோக நாடகம்
ஆதம் மிச்னிக்
சிறைச்சாலைக் கடிதங்கள்
லூயி பிரண்டைஸ்
LSLLLLLSLSLLLLLSLLLSLLLSLCSLLSLLSL LLSLLLLLSSCSSSSLSLLSLLSLLLLSLLSSLLSSLLSSLLSSLLLSGSSS
விட்னிக் - கலிபோர்னியா வழக்கு
கெளதம புத்தர்
காலாம சூத்திரம்
sforfaerir sív6luevarl-f
கிழக்கு ஐரோப்பாவில் மாற்றுக்கருத்தின் எதிர்கால்ம்
15
19
23
25
28

Page 6

அறிமுகம்
இவ் வெளியீடு - "மாற்றுக்கருத்தின் மதிப்பு" குறித்து - இலங்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் தொகுத்துள்ள பூர்வாங்க தொகுப்புக்களில் முதலாவதாகும். முரண்பட்ட கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதில்தான் முன்னேற்றம் தங்கியுள்ளதென்பதே இத்தொகுப்புக்களின் கருப் பொருள். வெறுமனே நல்ல அரசாங்கம் மட்டுமன்றி, நாகரிகத்தின் - கலாச்சார, விஞ்ஞான, பொருளாதார - வளர்ச்சி இதனையே மையமாகக் கொண்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் இலங்கையைச் சீர்குலைத்த பூதாகர வன்முறை, அதைத்தொடர்ந்து தலைதூக்கிய பயங்கரமான சகிப்பின்மை இவையே இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கான யோசனை உருவாகக் காரணம். அரசியல் அரங்கில் பங்குபற்ற முன்வந்த நபர்கள் மட்டுமன்றி அரசியலில் சம்பந்தப்படாத சமாதான விரும்பிகளான பொதுமக்கள்கூட அரசியல் சக்திகளாலும், அதனை எதிர்த்தோராலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளுக்குப் பலியாகினர். வாக்களித்தமை அல்லது வாக்களியாமை, பகிஷ்கரிப்பு நாட்களில் கடைகளைத் திறந்து வைத்தமை அல்லது திறக்கத் தவறியமை, ஆர்ப்பாட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் பங்குபற்றியமை அல்லது பங்குபற்றத் தவறியமை, ஒரு குழுவினருக்கு அல்லது இன்னொரு குழுவினருக்குப் பிடிக்காத கருத்துக்களைக் கூறியமைக்காகவெல்லாம் மக்கள் உயிருக்கு அஞ்சவேண்டிய நிலையேற்பட்டது. ஒருவர் தன் கருத்துக்களை வாய்விட்டுச் சொன்னதற்கு அல்லது சொல்லாமல் விட்டதற்கு தண்டனை மரணம். அறியாத, அடையாளங் காணப்படாத வட்டாரத்திலிருந்து, அல்லது எதிர்முகாமிலிருந்து, அல்லது அரச ஒடுக்குமுறையின் பாரம்பரிய முகாம்களிலிருந்தெல்லாம் ஆபத்து தலைகாட்டியது.
இப்பின்னணியில் குடிமகனின் உரிமைசார்ந்த சில மதிப்பீடுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும், மாற்றுக்கருத்து வெளியிடும் உரிமை மட்டுமன்றி மாற்றுக்கருத்தின் மதிப்பு பற்றிப் புரிந்துணர்வையேற்படுத்துவதற்குமான தேவையின் முன்னுரிமையை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் அடையாளங்

Page 7
கண்டுகொண்டது. இச்சாதாரண உண்மை மீள உறுதிப்படுத்தப்படல், விளக்கப்படல் வேண்டும். எனவேதான் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் மாற்றுக் கருத்தின் மதிப்பை விளக்கும் விடயங்களைத் தொகுக்கவும், மொழிபெயர்க்கவுஞ் செய்கின்றது. பின்வருவன உட்பட இக்கருப்பொருளுக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு பகுதிகளிலிருந்தும் விடயங்களை எடுத்துத்தாள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
- அரசியல் விற்பன்னர்கள், தத்துவஞானிகள், மற்றுஞ்
சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்.
சட்டத் தீர்ப்புகள்
- தாம் வாழ்ந்த காலத்தில் மாற்றப்பட முடியாத தெய்வீகப் புனிதமானவையெனக் கருதப்பட்ட நம்பிக்கைகளுக்குச் சவால் விட முன்வந்த தனிமனிதர்களின் துணிவு காரணமாய் மானிட அறிவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் முதலியவற்றின் வரலாறு.
- ஸ்தாபிக்கப்பட்ட சக்திகளுக்கும் தனிமனிதனது மனச் சாட்சிக்குமிடையே ஏற்படும் மோதலைச் சித்தரிக்கும் இலக்கியங்கள், நாடகம் முதலியன.
முக்கியமான நிகழ்கால விவகாரங்களின் விவரணைகள் உட்பட தனிமனிதனது மாற்றுக்கருத்து - ஒத்துப் போக மறுத்தல் பற்றிய வேறு சுவைமிகு உதாரணங்கள்.
இவ்வெளியீடு இரு தேசிய மொழிகளிலும் உருப்பெறும். பொருளடக்கத்தின் பெரும்பகுதி ஆங்கில வாசகர்களுக்கு ஏலவே அறிமுகமானதாயிருப்பினும் சிங்களத்திலோ தமிழிலோ இவை இதுவரை கிடைக்கக்கூடியதாய் இல்லை. மாற்றுக்கருத்தின் மதிப்பை அங்கீகரிப்பதென்பது மாற்றுக்கருத்தைச் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை மதித்தல் என அர்த்தப்படும். தனிநபர் காட்டும் மறுப்பு பெரும்பாலும் அற்பமாகத் தோன்றலாம். பித்துக்குளிகளின் உளறல்கள் அல்லது நடப்பியல் அளவுகோலின்படி அவ்வாறு கருதப்படுபவையும் இதில் அடங்கும். ஆனால் மாற்றுக்கருத்து எந்தளவு சகித்துக்கொள்ளப்படுகின்றதோ அந்தளவு சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பிரதிபலிப்பதோடு முன்னேற்றத்துக்கான சாத்தியப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டிருப்பதையும்

உறுதிப்படுத்தும்.
இத்தொகுதிகளில் அடங்கும் அநேக எழுத்தோவியங்கள் அரசின் அதிகாரத்துக்கு சவால்விடுவதன் முக்கியத்துவத்தைக் காட்டுவன. இது இயற்கையே. ஏனெனில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பெரும்பாலும் அரச அதிகாரத்தைப் SJ யோகிப்பவர்களாலேயே எதிர்க்கப்படுகின்றது. இதனால் அரசாங்கங்கள் இயல்பாகவே ஒடுக்குமுறையானவை, அரசாங்கத்துக்கெதிராகக் காட்டப்படும் சகலவித எதிர்ப்புகளும் ஆதரிக்கப்பட வேண்டியவை என்பதல்ல. சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல் நிச்சயமாக அரசாங்கங்களிடமிருந்து மட்டுமே வருவதில்லை. வேறு வட்டாரங்களிலிருந்தும் - பல்வேறு சமூக, அரசியல் குழுக்கள், வகுப்புவாத, தனி நபர் போக்குகள் - ஏன், பெரும்பான்மை மக்கள் அபிப்பிராயம் முதலியவற்றிலிருந்தும் அவை வரலாம். உண்மையில், மாற்றுக் கருத்துக்களை அரசு எதிர்க்கும் இயல்பு அநேகமாகச் சமூகத்தின் பெரும்பாகத்தினரின் ஆதரவுடனேயே நிலவுகின்றது. அரசு பல்வேறு வகையில் சமூகத்தின் தப்பெண்ணத்தைப் பிரதிபலிக்கின்றது. இது எவ்வாறிருப்பினும் - சகிப்பின்மை எங்கிருந்து தலைதூக்கினும் அது சமூகத்துக்கு ஆபத்தானதே. எனவே சகிப்பின்மையை இனங்கண்டு எதிர்ப்பதே இக்கட்டுரைத் தொடர்களின் நோக்கம்.
இவ்வெழுத்தோவியங்கள் இப்போதைக்கு, குறிப்பிட்டவோர் ஒழுங்கில் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாய்த் தொகுக்கப் பட்டவையாயில்லை. இதைவிடச் சிறந்த முறையில் மீள ஒழுங்கமைக்கப்பட்டவொரு தொகுதியாக இவற்றைப் பின்னர் வெளியிடுவதற்கு உத்தேசமுண்டு. தொகுத்தல் என்பது தொடர்ச்சியானவொரு நடைமுறை. இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள முன்மாதிரிகள் வாசகர்களின் உற்சாகமான ஆலோசனைகளையும், பங்களிப்புகளையும் தூண்டிவிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Page 8
6morf GolesFulókorir eourTrt
டாக்டர் ஜோன் ஸ்நோ (1813 - 1858) முன்னோடியாக ஆற்றிய பணி
வாந்திபேதி நோய் பரவுதல் தடுப்பு
பொது மருத்துவராகவும், போதனாசிரியராகவும் தொழில்புரிந்த டாக்டர் ஜோன் ஸ்நோ நோய்கள் பரவுதல் சம்பந்தமான ஆய்வுத் துறையில் ஓர் முன்னோடியாவார். ஐரோப்பிய, ஆசிய நகரங்களைக் கதிகலங்கச் செய்த வாந்திபேதி நோய் எவ்வாறு பரவுகின்றது. அந் நோய் பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்பு விஞ்ஞானத்துக்கும், மனிதகுலத்துக்கும் ஸ்நோவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். ஸ்நோவின் புதுமையான கருத்துக்களை மற்றவர்கள் நீண்ட காலமாக எதிர்த்து வந்துள்ளனர். லண்டனில் மருத்துவத் துறையினரும், மத குருமாரும் தெரிவித்து வந்த ஐயப்பாடுகளுக்கு முகங் கொடுத்துத்தான் டாக்டரின் வெற்றி உண்மையில் நிலைநாட்டப்பட்டது. பல்வேறு முட்டுக்கட்டைகளையும் தாண்டிச் சென்று விடைகளைத் தேடுவதில் விடாப்பிடியாய் ஈடுபட்ட தனிமனிதர்கள் மீது சமுதாயத்தின் கடமைப்பாட்டுக்கு, ஜோன் ஸ்நோவின் சாதனை உற்சாகந்தரும் ஓர் உதாரணமாகும். அவரது நண்பரும் சகாவுமான சர் பெஞ்சமின் வார்ட் வாந்திபேதி நோய் பரவுவதைத் தடுப்புதில் ஸ்நோ ஆற்றிய அரும்பணியைப் பின்வருமாறு விவரிக்கின்றார்:
1848ம் ஆண்டு ஸ்நோ தமது மற்றைய வேலைகளின் மத்தியில், வாந்திபேதி நோய் உண்டாவதற்கும், பரவுவதற்கும் காரணிகளைக் கண்டறிவதில் தம் கவனத்தைத் திருப்பினார். வாந்திபேதி நஞ்சு உணவுக் கால்வாயைப் பாதிக்கும் நஞ்சாகும். அதாவது இது காற்றினூடாக, பொருள்களிலிருந்து புறப்படும் நுண்ணணுக்கள் உட்புகுவதால் உண்டாவதன்று. சிறு குடலின் சீத மென் சவ்வுடன் நேரடித் தொடர்பால் உண்டாவதாகும் என அவர் தமக்குள் தாமே தர்க்கித்துக் கொண்டார். முதலாவது இரத்தத்தில் நஞ்சு கலக்கும், அறியவரப்பட்ட சகல வியாதிகளிலும், விறைப்படைதல், தலையிடி, நாடித் துடிப்பு அதிகரித்தல் போன்ற சில குறிப்பிட்ட நோய்க்குறிகள் தென்படுகின்றனவென்றும், இந் நோய்க்குறிகள் யாவும் நோய் வெளிப்படுவதற்கு முன்னரே தோன்றி விடுகின்றனவென்றும், ஆனால் வாந்திபேதி வியாதியைப் பொறுத்தவரை இவ்விதி மீறப்படுகின்றதென்றும் அவர் ஆய்ந்துரைத்தார். நோய்க் குறிகள் முதலில் உணவுக்கால்வாயில் தோன்றுகின்றன. நோயின் பின்னால்

உண்டாகும் நோய்க்குறிகள் யாவும் உணவுக் கால்வாயிலிருந்து வெளிப்படும் வயிற்றுக்கழிச்சலின் விளைவாகத் தோன்றுபவையே.
இதிலிருந்து அவர் கொண்ட அனுமானம் வாந்திபேதி நஞ்சு வாய் வழியாய் நேரடியாக உணவுக் கால்வாயினுள் கொண்டு செல்லப்படுகிறது என்பதாகும். இக் கருத்து நஞ்சின் ஊடகம் பற்றியும், தன்மை பற்றியும் அவர் கவனத்தை ஈர்த்தது. ஒரே ஊடகமாய் அல்லாவிட்டாலும், பிரதானமாய்த் தண்ணிரையும் வாந்திபேதி நோயாளியின் மலத்தையும் குறிப்பிடுவதற்கு அநேகச் சூழ்நிலைகள் அவருக்குத் துணைபுரிந்தன.அவர் இக் கருத்துக்களை முதன்முதல் 1848லேயே வெளியிட்டார். எனினும் அவரது தரவுகள் போதியளவு தெளிவுள்ளதாய் இராதபடியால் அநேக மாதங்கள் காத்திருந்து, மேலும் நம்பகரமான தரவுகள் கிடைத்ததும் 1849ல் தம் கருத்துக்களை விரிவாக வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில், விசேடமாக 1854ல், லண்டனில் வாந்திபேதி நேரய் பாரிய அளவில் திடீரெனக் கிளம்பியபோது தம் மகத்தான கருத்தை விரிவுபடுத்த முனைந்து கிரமமாகப் பணியில் ஈடுபட்டார். அலுப்புச் சலிப்பின்றி உழைத்தார். எத்துணை அபாயங்களுக்கும், இழப்புகளுக்கும் முகங் கொடுத்து அவர் அயராதுழைத்தார் என்பதை அவரை நெருங்கி அறிந்தோரைத் தவிர வேறெவரும் அறிந்திலர். வாந்திபேதி நோயாளிகள் மத்தியில் அவரைக் காணலாம். சிறிது காலத்துக்குத் தொழில் வருவாயை உதறித் தள்ளினார்; அதிகாலையில் எழுந்து இரவு வெகு நேரங்கழித்தே ஒய்வெடுத்துக் ഠികTഞ്ഞTLITit. உடலுழைப்பால் கற்றறியக் கூடியதெல்லாம் தனியொரு மனிதனால் முடியாதென்ப தனையுணர்ந்து, தகுதி வாய்ந்த உதவியாளர்களின் உழைப்புக்கு ஏற்ற வேதனம் வழங்கினார்.
அவரது முயற்சிகளின் முடிவு, விஞ்ஞானத் திருப்தியைப் பொறுத்தவரை தலைநகரின் தென்மாகாணப் பகுதிகளில் வாந்திபேதி நோயினால் 1849ல் 286 பேர் உயிருக்கு ஆபத்தான விதத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான புள்ளிவிபரக் கண்டுபிடிப்பால் நிரூபிக்கப்பட்டது. இப் பகுதியில் ஸவுத் வாக் அன்ட் வாக்ஸ்ஸோல் தண்ணிர் கம்பெனி விநியோகித்த நீரில் மல அழுக்குகள் கலந்திருந்தன. மற்றொரு நிறுவனமான லம்பெத் கம்பெனி நன்னீர் விநியோகஞ் செய்தது. ஒவ்வொரு பத்தாயிரம் வீடுகளுக்கும் மரணத்தறுவாய்

Page 9
நோய்வாய்ப்பட்டோரின் விகிதாசாரம் ஸவுத் அன்ட் வுாக்ஸ்ஸோல் கம்பனி நீரினால் 75 ஆகவும், லம்பெத் கம்பெனி நீரினால் 5 ஆகவுமிருந்தது.
இது எவ்வாறிருந்தபோதிலும் இந்நோய் பரவிய போது மற்றெல்லாவற்றையும்விட ஸ்நோவின் கடின உழைப்பையும், அனுமானங்களையும் மற்றொரு அம்சம் ஈர்த்தது.
1854 ஆகஸ்ட் பிற்பகுதியில் புரோட் வீதிக்கு அயலில் (லண்டனின் நடு மத்தியில், பிக்காடில்லி சர்க்கஸ0க்கு அருகாமையில்) கோல்டன் சதுக்கத்தில் பயங்கரமான வாந்திபேதி நோய் வேகமாகப் பரவிற்று. கேம்பிரிட்ஜ் வீதி புரோட் வீதியுடன சேருமிடத்திலிருந்து 250 யார் துTரத்தினுள் பத்து நாட்களில் 500க்கும் அதிகமானோர் வாந்திபேதியினால் பயங்கரமாய்ப் பீடிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நோய் பரவுவதற்கான காரணத்தை ஆராய்வதைத் தம் மீது தாமே சுமத்திய பணியாகக் கொண்டார் ஸ்நோ. செப்டெம்பர் 7ந் திகதி மாலை உள்ளூர் செயிண்ட் ஜேம்ஸ் கோவில் மன்றத்தைச் சேர்ந்த குருமார்கள் பயபக்தியோடமர்ந்து சபை அங்கத்தினர் என்ற முறையில் இப்பயங்கர நோய் பரவியமைக்கான காரணத்தை ஆராய்ந்த வண்ணமிருந்தனர். 1664ம்/65ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பின்னர் லண்டனில் இதுபோன்று மக்கள் பதற்றங் கொண்டதில்லையாகையால் அவர்கள் பயபக்தியோடு காணப்பட்டது நியாயமே. மரணத்திலிருந்து தப்புவதற்காக மக்கள் வீடு வாசல்களையும், உடமைகளையும் அப்படியப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
குருமார்கள் மிகுந்த பயபக்தியுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கையில், புதியவொரு யோசனைக்கு செவிசாய்க்குமாறு அவர்களிடம் கோரப்பட்டது. அந்நியரொருவர் அடக்கமாகச் சில வார்த்தைகள் பேச அனுமதி வேண்டி நின்றார். அந்நியரான டாக்டர் ஸ்நோ பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு சில வார்த்தைகளில் அவர் தம் கருத்தை வெளியிட்டார். அப் பேரழிவுக்கு மூலகாரணமாயும் மையமாயும் விளங்கியது புரோட் வீதியிலுள்ள நீர்க்குழாய் எனக் கூறி அதில் தன் கவனத்தைச் செலுத்தினார். குழாயின் கைப்பிடி அகற்றப்படுவதுதான் மாபெரும் வைத்திய முறை என ஆலோசனை வழங்கினார். கோவில் விசாரணைக் கூட்டம் இதை நம்பாத போதிலும்

நல்ல வேளையாக அதனைச் செயற்படுத்த முன்வந்தது. குழாயின் கைப்பிடி அகற்றப்பட்டது. நோய் பரவுவது தடுக்கப்பட்டது.
டாக்டர் ஜோன் ஸ்நோவுக்கு நாம் கடமைப்பட்டுள்ளதை வருங்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு அதனைக் குறித்துவைத்தல் தம் கடமையென உணர்ந்தார் பெஞ்சமின் வார்ட், t
டாக்டர் ஸ்நோவுடைய வாழ்நாளின் போது அவருக்கு ஆதரவாக நிற்கும் பாக்கியம் எமக்குக் கிட்டியது. அவரது பணி வீணாகி விட மாட்டாது என்பதனை உணர்ந்த அவரது வாழ்க்கைக் கதையை எழுதியவன் என்ற முறையில், உணவுக்கால்வாயினுள் நஞ்சு நுழைவது பற்றிய கோட்பாட்டின் மூலவர் என்பது மட்டுமன்றி, அந்தக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டதாய், அசுத்த நீர் விநியோகத்துக்கும் வாந்திபேதி நோய் பரவுவதற்கும் தொடர்புண்டு என்பதைக் கண்டுபிடித்தவரும் அவரே என்பதை நிறுவுவதும் இப்போது எம் கடமையாகின்றது. அவரது பணி என்றும் நிலைக்கும்.
டாக்டர் ஸ்நோ, அயரா முயற்சி உண்மையெனத் தாம் உணர்ந்ததன் மீது நேர்மையுடன் நிறுவப்பட்ட தம் அபிப்பிராயங்களை வெளியிடும் துணிச்சல் முதலியவை காரணமாக "விக்டோரியா சகாப்தத்தைச் சேர்ந்த மருத்துவத்தின் பிரதிநிதியாய் மிளிர்கின்றார்" என முத்தாய்ப்பு வைக்கின்றார் பெஞ்சமின் வார்ட்.
பிற்குறிப்பு கொள்ளைநோயின் தோற்றுவாயை அடையாளங் காண்பதற்கான தகவலைப் பதிவு செய்த டாக்டர் ஸ்நோவின் வரைபடம் அதற்கேயுரிய வகையில் பிரசித்தம்
பெற்றுள்ளது. ஆர். எட்வர்ட் டஃப்டே என்ற நவீன எழுத்தாளர் தரம்வாய்ந்த தகவலின் கட்புலக் காட்சி" (1983) - என்ற தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்:
Dr. Jhon Snows famous "dot map"

Page 10
கொள்ளைநோய் பரவிய மார்க்கத்தைக் காட்டும் மிகப்பழைய, பயன்மிக்க படம் டாக்டர் ஸ்நோவின் புள்ளிப்படமாகும். லண்டன் மத்திய பகுதியில் 1854 செப்டெம்பரில் வாந்திபேதி நோயினால் மரணம் நேர்ந்த பகுதிகளை இதில் ஸ்நோ காட்டுகிறார். மரணங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன. பதினொரு நீர்க்குழாய்கள் புள்ளடிகளால் காட்டப்படுகின்றன. படத்தின் மேற்பகுதியில் பரம்பலைப் பரிசீலித்து, புரோட் வீதி நீர்க்குழாய்க்கு அருகில் வாழ்ந்தோர் - அதிலிருந்து நீரருந்தியோர் - மத்தியிலேயே வாந்திபேதி பெரும்பாலும் முற்றாக ஏற்பட்டதென்பதை அவதானித்தார் ஸ்நோ. கறைபடிந்த நீர்க்குழாயின் கைப்பிடியை அகற்றச் செய்து, 500க்கும் மேலான உயிர்களைக் குடித்த, அப்பகுதியில் பரவிய அக்கொள்ளை நோயை அவர் தடுத்து நிறுத்தினார். (ஈ.டப்ளியூ. கில்பர்ட், "இங்கிலாந்தின் சுகாதாரத்தினதும் வியாதியினதும் முன்னோடியான தேசப்படங்கள், புவியியல் சஞ்சிகை, 124(1958), 172-183). "புரோட்" வீதியில் D க்கு வலப்பக்கம் படத்தின் நடுப்பகுதியில் நீர்க்குழாய் காட்டப்படுகிறது. குழாய்க்கும் வியாதிக்குமிடையிலான தொடர்பு வரைபுகளின்றி ஏதோ அதிர்ஷ்டம் காரணமாகவும், கடின உழைப்பாலும் கணிப்பீட்டின் மூலம், பகுப்பாய்வின்மூலம் வெளியிடப்பட்டிருக்கலாமெனினும், இங்கு வரைபுப் பகுப்பாய்வு, கணித்தலை விடவும்
அதிதிறமையாகத் தரவுகளை உறுதிப்படுத்துகின்றது.
6E. W. Gilbert, "Pioneer Maps of Health. and Disease in England," Geographical Journal, 124 (1958), 172-183.
 

ஈ.எம். பொஸ்ட்டர் (1879 - 1970)
நான் நம்புவது (1939)
1930களின் பிற்பகுதியில், யுத்த மேகங்கள் ஐரோப்பாவின் மீது கவிகின்ற வேளையிலும், யுத்தத் தின் போதும், ஆங்கில நாவலாசிரியர் FF.6TLb. பொஸ்ட்டர் பேச்சு சுதந்திரம், சகிப்புத் தன்மை, தாராளவாத விழுமியங்கள் இன்னோரன்ன, தம் மனதுக் குகந்த : பல்வேறு விவகாரங்கள் குறித்து அநேக கட்டுரைகளையும், வானொலி நிகழ்ச்சி களையும் எழுதினார். அவற்றுள் மிகவும் பிரசித்தம் பெற்றது "நான் நம்பு வது" அதிலிருந்து சில பகுதிகள் தரப்படு கின்றன.
மதக் கோட்பாட்டில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் இது மத நம்பிக்கையின் யுகம். எத்தனையோ மதக் கோட் பாடுகள் காணப்படுகின்றன. தற் ஈ.எம்.பொஸ்டர் பாதுகாப்புக்காக ஒருவர் தனக் கெனவும் ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சாதி, சமயக் கொடுமைகளால் துண்டாடப்பட்ட உலகில், அறியாமை அரசோச்ச, ஆளவேண்டிய விஞ்ஞானம் அடிமைச் சேவகம் புரிகிறது. சாந்தம், சகிப்புத்தன்மை, இரக்கம் - உண்மையில் இவை முக்கியம்தான். மனித இனம் சீரழிந்து போகாமல் காப்பதற்குக் காலதாமதமின்றி இவை முன்தளத்துக்கு வரவேண்டுமெனினும் இப்போதைக்கு இவை மட்டும் போதா. இராணுவ பாதரட்சையின் கீழ் மிதிபட்டுத் துவைந்து போன மலரை விட இவை செயல்வலுக் கொண்டனவல்ல. இவை கடினமுறல் வேண்டும் - இதனால் இவை முரட்டுத்தனம் கொண்டாலுஞ் சரி, மத நம்பிக்கையென்பது விறைக்கச் செய்யும் ஒரு போக்காகவே - மனதுக்குரிய ஒரு வகை கஞ்சிப் பசையாகவே - எனக்குப் படுகிறது. இதனை முடிந்த அளவு சிக்கனமாகவே உபயோகிக்க வேண்டும். எனக்குப் பிடிக்காத பொருள் இது. இதற்காகவென்றே இதனை நான் ஒருபோதும் நம்புவதில்லை.

Page 11
மதத்தில் நம்பிக்கை வைத்து அதனை மிதமிஞ்சி விழுங்க முடியாமல் தவிக்கும் மனிதரிடமிருந்து இது விஷயத்தில் நான் வேறுபட்டவன்.
நான் எங்கிருந்து தொடங்குவது?" இவ்வாறு கேட்டுவிட்டுத் தாமாகவே பதில் சொல்கிறார் ,பொஸ்ட்டர்.
வன்முறையும் குரூரக் கொடுமைகளும் மலிந்துள்ள உலகில் ஒப்புநோக்கும்பொழுது, சொந்த உறவுகள் உறுதியானவையே. சொந்த உறவுகள் இன்று நிந்திக்கப்படுகின்றன. அவை பூர்ஷாவா ஆடம்பரப் பொருட்களாய், இப்போது மறைந்த சீரான காலநிலையின் உற்பத்திப் பண்டங்களாய்க் கருதப்படுகின்றன. அவற்றைக் கைகழுவி விட்டு, உன்னதமானவோர் இயக்கத்துக்கோ இலட்சியத்துக்கோ எம்மை நாம் அர்ப்பணித்துவிட வேண்டுமென தூண்டப்படுகிறோம். இலட்சியங்கள் பற்றிய கருத்தை நான் வெறுக்கின்றேன். நாட்டைக் காட்டிக் கொடுப்பதா நண்பனைக் காட்டிக் கொடுப்பதா என இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை எனக்கேற்படின் எனது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துணிவு எனக்கு வர வேண்டுமென விரும்புகிறேன்.
இனி, .பொஸ்ட்டர் ஜனநாயக சமூகத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துத் தொடர்கின்றார்.
தனிமனிதன் மீது காட்டும் அன்பும், விசுவாசமும் அரசின் கடப்பாடுகளுக்கு முரணாகச் செல்லலாம். அவ்வாறு நிகழ்கையில் அரசு ஒழிக என்கிறேன் நான் - இதன் அர்த்தம் அரசு என்னை ஒழித்துவிடும் என்பதே.
இது என்னை ஜனநாயகத்தின் பால், அன்பின்பால், சுதந்திரத்தை உண்டு வாழும் அன்பார்ந்த குடியரசின் பால் கொணர்கின்றது. ஜனநாயகமென்பது உண்மையில், அன்பார்ந்த குடியரசன்று. அது ஒருபோதுமே அவ்வாறாகாது. ஆனால் ஏனைய நடப்பியல் அரச வடிவங்களையும் விட அது குறைவாக வெறுக்கப்பட வேண்டியுள்ளதால் அந்தளவில் அது ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றே. தனிமனிதன் முக்கியமானவன், ஒரு நாகரிகத்தை உருவாக்குவதற்கு எல்லா விதமானோருந் தேவை என்ற துணிவிலிருந்து அது தொடங்குகிறது. அது தன் குடிமக்களை ஆண்டான் அடிமையாகப் பிரிப்பதில்லை - வல்லமை வாய்ந்ததோர் ஆட்சி செய்ய முனைவது போல - உணாச்சியுள்ளோர், ஏதேனும் ஆக்க விரும்புவோர் எதையேனும்
10

கண்டுபிடிக்க விரும்புவோர், வாழ்க்கையை அதிகாரஞ் செலுத்தும் நோக்கில் பார்க்காதோர் - இத்தகைய மக்களையே நான் பெரிதும் மெச்சுகிறேன். வேறெங்கிலும் விட ஜனநாயகத்தின் கீழ் இவர்கள் அதிக வாய்ப்பினைப் பெறுகின்றனர். சிறிய, பெரிய மதங்களை நிறுவுகின்றனர். இலக்கியத்தையும், கலையையும் படைக்கின்றனர். அல்லது. பாரபட்சமற்ற விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். அன்றேல், சாதாரண மக்கள் என்றழைக்கப்படும் அவர்கள் சொந்த வாழ்வில் ஆக்கத்திறன் வாய்ந்த மக்களாக மிளிரக்கூடும். உதாரணத்துக்கு, தம் பிள்ளைகளைச் சீரிய முறையில் வளர்ப்போராக, அயலவர்க்கு உதவுவோராக அவர்கள் இருத்தல் கூடும். இம்மக்கள் யாவரும் தம்மை வெளிப்படுத்த விரும்புகின்றனர். இதைச் செய்ய சமூகம் அவர்களுக்கு உரிமை வழங்காவிடின் அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. அவர்களுக்கு அதிகபட்ச உரிமை வழங்கும் சமூகம் ஜனநாயகமேயாம். برمج
ஜனநாயகம் மற்றொரு சிறப்பம்சம் பொருந்தியது. அது விமர்சனத்தை அனுமதிக்கின்றது. வெகுஜன விமர்சனம் இல்லாவிடின் ஊழல்கள் மூடி மறைக்கப்படலாம். எனவேதான் புளுகுகளும் கொச்சைத்தனமும் மலிந்திருந்த போதும் நான் பத்திரிகைகளில் நம்பிக்கை வைக்கிறேன்; பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்கிறேன். பாராளுமன்றம் அரட்டை மணிடபம் என அடிக்கடி எள்ளி நகையாடப்படுகின்றது. பாராளுமன்றம் அரட்டை மண்டபமாக இருப்பதனாலேயே அதனில் நம்பிக்கை வைக்கிறேன். தன்னையொரு தொந்தரவுக்காரனாக மாற்றிக்கொள்ளும் தனிப்பட்ட உறுப்பினர் மீது நான் நம்பிக்கை வைக்கின்றேன். அவர் ஒதுக்கித் தள்ளப்படுகிறார். அவர் மூளைக்கோளாறு கொண்டவரென்றும், விடயமறியாதவரென்றும் ஏளனஞ் செய்யப்படுகிறார். ஆயினும் அதிகார துஷ்பிரயோகங்களை அவர் அம்பலத்துக்குக் கொணர்கிறார். அவர் அவ்வாறு செய்யாவிடின் அவற்றைப் பற்றிய பேச்சு இருந்திராது. துஷ்பிரயோகமொன்று சுட்டிக் காட்டப்படுவதனாலேயே பெரும்பாலும் நிலை சீராக்கப்படுகின்றது. நன்னோக்கம் கொண்ட அரச அதிகாரியொருவர் சில சமயங்களில் தம் திறமை காரணமாக தலைவீங்கி, சர்வ வல்லமை படைத்த கடவுளாகவே தம்மைக் கருதி விடுவதுண்டு. இத்தகைய அதிகாரிகள் குறிப்பாக அரச உள்நாட்டுப் பணிமனையில் அதிகம். இனி, சீக்கிரத்திலோ அல்லது காலந் தாழ்த்தியோ பாராளுமன்றத்தில் அவர்களைப் பற்றிக் கேள்வியெழும். அப்போதவர்கள் கவனமாக
11

Page 12
கடந்துகொள்ள வேண்டி நேரும். பாராளுமன்றம் என்பது ஓர் பிரதிநிதித்துவ அமைப்பா அல்லது திறன் வாய்ந்த சபையா என்பது சர்ச்சைக்குரியதெனினும், விமர்சனங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடுவதாலும், அதன் அரட்டைகள் பரவலாக அறிவிக்கப்படுவதாலும் நான் அதனை வெகுவாக மதிக்கிறேன்.
எனவே, ஜனநாயகத்துக்கு இரு பாராட்டுகள்: ஒன்று, அது பல்வகைக் கருத்துக்களை அனுமதிப்பதால், இரண்டு, அது விமர்சனத்தை அனுமதிப்பதால், இரு பாராட்டுகள் போதுமானவை. மூன்றாவது பாராட்டை வழங்கச் சந்தர்ப்பமில்லை. அன்பார்ந்த குடியரசான அன்பு மட்டுமே அதற்குத் தகுதி வாய்ந்தது.
அப்படியாயின் பலாத்காரம் பற்றியென்ன சொல்வது? நாம் உணர்ச்சியுள்ளவர்களாக, வளர்ச்சியுள்ளோராக, பரிவும் சகிப்புத்தன்மையும் கொண்டோராக இருப்பதற்கு முயற்சிப்படும் அதே வேளை, விரும்பத்தகாத கேள்வியொன்று தலைதூக்குகிறது: எல்லாச் சமூகமுமே பலாத்காரத்தின் மீது தங்கியிருக்கவில்லையா? பொலிஸையும், இராணுவத்தையும் நம்பாமல் ஓர் அரசாங்கம் ஆள நினைப்பது எப்படி? ஒரு தனி மனிதன் தலையில் அடி விழும்போது அல்லது அவன் அடிமை முகாமுக்கு அனுப்பப்படும்போது, அவனது அபிப்பிராயங்கள் பெறும் முக்கியத்துவம் எம்மட்டு?
இச்சங்கடம் சிலரைக் குழப்புவதுபோல் எனக்கு கவலை தருவதில்லை. எல்லாச் சமூகமும் பலாத்காரத்தின் மீதே தங்கியிருப்பதனை நான் உணர்கிறேன். ஆனால் மகத்தான ஆக்கச் செயற்பாடுகள் யாவும், பண்புள்ள மனித உறவுகள் யாவும் பலாத்காரம் முன்தளத்துக்கு வர முடியாமற் போன இடைவெளிகளின்போதே நிகழ்கின்றன. இவ் விடைவெளிகளே முக்கியமானவை. இவை அடிக்கடி நிகழ்வனவாகவும், நீண்டகாலம் நிலைப்பனவாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இவற்றையே நான் நாகரிகம்" என்கிறேன். சிலர் பலாத்காரத்தை முடிந்தளவு பின்னணியில் வைத்திருப்பதற்குப் பதில் அதனை முன்னணிக்கு இழுத்து வந்து அதற்குப் பூஜை செய்கின்றனர். அவர்கள் தவறிழைக்கின்றார்களென நான் கருதுகிறேன். அவர்களுக்கு நேர்மாறாக பலாத்காரம் என்ற ஒன்றே கிடையாது என அறைகூவல் விடுக்கும் ஆன்மஞானிகளும் பிழை விடுகின்றனர். பலாத்காரம் இருப்பதை நான் நம்புகின்றேன். அது பேழைக்குள்ளிருந்து வெளியே வராமல் பார்ததுக்கொள்வது நம்
12

பணிகளில் ஒன்றெனவும் நான் நம்புகிறேன்.
எந்தவொரு நவ சமுதாயமும் கஷ்ட காலங்களுக்கு முகங்கொடுக்கும்போது ஏற்படும் நித்திய மயக்கத்தை பொஸ்ட்டர் கவனத்தில் கொள்கிறார்.
புகலிடம் தேடி நாம் வீர வழிபாட்டின் பால் திரும்பலாம். ஆனால் இதனால் யாதொரு நலனுமில்லையென்பதே எனது அபிப்பிராயம். வீர வழிபாடு ஆபத்தான ஒரு துன்மார்க்கமாகும். அதற்குத் தூண்டுதல் அளியாமை, அல்லது மாமனிதன் என அறிய வரப்படும் அடங்காப்பிடாரி வகையான பிரஜையை உருவாக்காமை ஜனநாயகத்தின் அற்ப நன்மைகளில் ஒன்று. பதிலாக அது வெவ்வேறு வகையான சிறு மனிதர்களை உருவாக்குகின்றது - இதனையொரு மேன்மையான சாதனையெனலாம். ஆனால் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாத மக்கள் இதனையிட்டு அதிருப்தி கொள்கின்றனர். கும்பிடுவதற்கும், குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்கும் ஒரு வீரனுக்காக ஏங்குகின்றனர். இன்று எதேச்சாதிகார வியாபார சரக்குகளின் ஒரு பூரணமான அங்கம் தான் வீர புருஷன் என்பது. உப்பு சப்பற்ற தன்மையை நீக்குவதற்காக ஒரு சில வீரபுருஷர்களை ஒட்டி வைக்காமல் ஒரு பயன்தரத்தக்க ஆட்சி இன்று நடைபெற முடியாது - ஒரு மோசமான கட்டிப் பாயசத்தை சாப்பிடச் செய்வதற்காக திராட்சை வற்றல்களைத் தூவி வைப்பது போன்று உச்சியில் ஒரு வீரன், இரு பக்கங்களிலும் ஒவ்வொரு குட்டி வீரர்கள் பிடித்தமானதொரு ஏற்பாடு. இந்தத் திரிசூலம் சக்தியற்ற கோழைகளுக்கும் சலிப்புற்றோருக்கும் ஆறுதலளிக்கும். அதன் முன் மண்டியிட்டு மேன்மையடைந்ததாகவும், வலிமை பெற்றதாகவும் அம்மனோர் கருதிக் கொள்வர்.
இல்லை. எனக்கு மாமனிதர்களில் நம்பிக்கையில்லை. தம்மைச் சுற்றி ஏக தோற்றமாய் விரியும் பாலைவனமொன்றை அவர்கள் உண்டாக்கிவிடுகின்றனர். பெரும்பாலும் அதிலோர் இரத்தத் தடாகமும் இருக்கும். அவர்களுக்கு குப்புற விழும்போதெல்லாம் ஒரு அற்ப மனிதனுக்குரிய மகிழ்ச்சி எனக்கேற்படும். அடிக்கடி பத்திரிகைகளில் இவ்வாறான செய்திகளை ஒருவர் படிக்கக் கூடும்; “சதி முயற்சி தோற்றுவிட்டது போல் தெரிகிறது. அட்மிரல் தோமா இருக்குமிடம் இன்னும் தெரிய வரவில்லை". அட்மிரல் தோமா ஒரு மாமனிதனுக்குரிய தகுதிகள் யாவும் பொருந்தியவராக இருக்கக்கூடும் - இரும்பு போல் திடசித்தம், காந்தக் கவர்ச்சிமிக்க தோற்றம், துணிவு, வேகம், ஆண்மைக்குறைவு - ஆனால் விதி சதி செய்துவிட்டது.
13

Page 13
பரிவாரங்களோடு வரலாற்றில் பவனி வராமல், அறிய வரப்படாத எங்கோவோரிடத்தில் அவர் ஒதுங்கிவிட்டார். எந்தவொரு கலைஞனோ, காதலனோ அனுபவிக்காத முழுமையோடு அவர் தோற்றுப் போகிறார். அவர்களைப் பொறுத்தவரையில் சிருஷ்டியின் போக்கே - செயன்முறையே - சாதனையாகின்றது. ஆனால் அவரைப் பொறுத்தவரை சாத்தியமான சாதனை வெற்றியொன்றுதான்.
இனி ,பொஸ்ட்டர் தனது முத்தாய்ப்பை நோக்கி நகர்கிறார். எந்தவொரு "சர்வாதிகார-வீரனாலும்”அரசியல் அமைப்பாலும் அழித்தொழிக்கப்பட முடியாத மனித தனித்துவத்தை அவர் பாராட்டுகிறார்:
மேலே காணப்படுபவை, தாராளவாதம் தன் கண்முன்னால் சீரழிந்து போவதைக் கண்டு முதலில் வெட்கமுற்ற ஒரு தனி மனிதவாதியின், தாராளவாதியின் சிந்தனைகளாகும். பின்னர், சுற்றிலும் பார்த்து மற்றைய மனிதர்களும் - அவர்கள் என்னதான் நினைத்தபோதிலும் - தன்னைப் போல் பாதுகாப்பற்றவர்களாய் இருப்பதைக் கண்டு, வெட்கப்படுவதற்கு விசேட காரணமெதுவும் இல்லையென அவன் தீர்மானித்தான். தனிமனித வாதத்தைப் பொறுத்தவரை ஒருவன் எவ்வளவுதான் விரும்பினாலும் அதனைத் தள்ளிவிடுவதற்கில்லை. சர்வாதிகாரி-வீரன் எல்லாரும் ஒரே விதமான ஆட்கள் ஆகும்வரை நாட்டுமக்களை அரைத்தெடுத்து மாவாக்க முடியும். ஆனால் அவர்களை ஒரேயொரு மனிதனாக உருக்கியெடுத்து உருவாக்க முடியாது. அது அவனது சக்திக்கு அப்பாற்பட்டது. அவர்களை ஒன்றுசேரும்படி அவன் கட்டளையிடலாம். பிரமாண்டமான அளவில் கோமாளித்தனமான செயல்களுக்கு அவர்களைத் தூண்டலாம். ஆனால் அவர்கள் வெவ்வேறாகப் பிறப்பதற்கும், வெவ்வேறாக மடிவதற்கும் கடமைப்பட்டோராவர். இவற்றின் காரணமாக தவிர்க்க முடியாத முடிவு, சர்வாதிகாரத் தண்டவாளத்தை விட்டு எப்பொழுதும் நழுவிக் கொண்டேயிருக்கும். பிறவி நினைவும், மரணம் பற்றிய எதிர்பார்ப்பும் மனித ஜீவனினுள் எப்பொழுதும் மறைந்திருக்கும். இது தனது சகஜீவிகளிடமிருந்து அவனைப் பிரித்து அவர்களுடன் அளவளாவுவது சாத்தியமாகின்றது.பூமியில் அம்மணமாக உதித்தேன். அம்மணமாக மடிவேன். நல்லதுதான். என் சட்டை எந்நிறமான போதும் அதனடியில் நான் அம்மணந்தான் என்பது நினைவுக்கு வருகிறது.
14

வில்லியம் ஷேக்ஸ்பியர் (1564-1616)
லியர் மன்னரின் சோக நாடகம்
ஷேக்ஸ்பியரின் தலைசிறந்த நாடக மாகப் பெரும்பாலும் கருதப்படுவது லியர் மன்னன். விருத்தாப்பிய திசையுற்ற வேந்தன், அரச பாரத்தைச் சுமப்பதிலிருந்து ஓய்வு பெற வேண்டி, தன் புதல்வியர் மூவருக்கும் இராச்சியத்தைப் பிரித் துக் கொடுப்பதோடு நாடகம் தொடங்குகிறது. மூவரில் தன்மீது அதிக பாசம் வைத்திருப்பவள் யார் என அறிந்துகொள்ள விரும்புகிறான் முதியவன். வில்லியம் ஷேக்ஸ்பியர்
மூத்த புதல்வியர் இருவரும்
தந்தை மீது அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதாகப் பாசாங்கு புரிகின்றனர். ஆனால் மன்னனின் மனதுக்கினியவளான இளையவள் கோடீலியா தந்தை மேல் முகஸ்துதிக் கவி பாடவில்லை. மகள் தந்தை மீது செலுத்த வேண்டிய அன்பு எந்தளவினதோ அந்தளவுதான் அரசன் மீது பிரியம் வைத்திருப்பதாய்க் கூறுகிறாள் கோடீலியா,
"மாட்சி மிக்கவரே! தங்கள் மீது எனக்குள்ள கடமைக்கேற்பத் தங்களை நேசிக்கிறேன்; அதனை விட அதிகமாகவோ குறைவாகவோ அல்ல."
கோடீலியாவை விரட்டி விட்டு மூத்த மகள்மார் இருவருக்கும் இராச்சியத்தைப் பிரித்துக் கொடுக்கிறான் லியர். லியர் மன்னனின் எஞ்சியுள்ள அந்தஸ்தையும் மறுத்து, அவனது கெளரவத்துக்கு அவமானம் உண்டு பண்ணுவதற்காக இம் மூத்த இருவரும் சீக்கரமே கூட்டுச் சேர்ந்துவிடுகின்றனர். கோடீலியா மண முடித்து வெளிநாடு சென்றுவிடுகிறாள்.
ஷேக்ஸ்பியரின் நாடகக் கரு இரு புதல்வியருக்கும் அவர்களது கணவன்மாருக்கும் தவிர்க்க முடியாத வெற்றியை முதல் பாதியில் வழங்குகின்றது. மனித இரக்கமோ, சக மனித பிறவியிடம் மானிட
15

Page 14
உணர்ச்சியோ காட்டுவது தமது கடமையல்ல என்றும், தமது அதிகாரத்துக்குக் கட்டுப்பாடெதுவும் பொறுக்க முடியாதென்றும் வெளிக் காட்டினர்.
நாடகம் நிகழ்களமான உலகம் இருள்கின்றது. இரு புதல்வியரில் ஒருத்தியான ரீகனும் அவள் கணவனான கோர்ன்வால் டியூக் பிரபுவும்: லியர் மன்னனுக்கு கிளவ்ஸெஸ்டர் டியூக் பிரபு உதவ முயற்சிக்கும்போது அவனைப் பிடித்துக் கொள்கையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இருள் உச்சமடைகின்றது. அவனைக் குருடாக்குவதன் மூலம் பழி தீர்த்துக் கொள்ள அவர்கள் முடிவு செய்கின்றனர். கோர்ன்வால் அவனது ஒரு கண்ணைப் பிடுங்கி விடுகிறான். ஓலமிடுகிறான் கிழவன்; எனினும் உதவிக்கு வர யாரையுங் காணோம். கோர்ன்வாலின் ஆணையை நிறைவேற்றி வைக்கத் துணையாகவுள்ள மூன்று சேவகர்கள் மட்டுமே அங்குள்ளனர்.
அடுத்து, கிளவ்ஸெஸ்டர் பிரபுவுடைய மறுகண்ணைப் பிடுங்குவதற்காக நகர்கிறான் கோர்ன்வால், திடீரென மூன்று சேவகர்களில் ஒருவன் குரல் ஒலிக்கிறது.
முதல் சேவகன்: கையைக் கீழே போடும், என் எஜமானே. என் குழந்தைப் பருவம் தொட்டு உமக்கு நான் சேவகஞ்செய்கிறேன். எனினும் இப்போது கையைக் கீழே போடும் என நான் கூறுவதை விடச் சிறந்த சேவை உமக்கு நான் செய்திலேன்.
fascot: நாயே! அதெப்படி இப்போது?
முதல் சேவகன்: உமக்குத் தாடியிருந்தால் இச் சண்டையின்போது அதனைப் பிடித்து உலுக்கியிருப்பேன். நீர் என்ன சொல்ல வருகிறீர்?
கோர்ன்வால்: துரோகி (வாளை உருவிக் கொண்டு அவன் மீது
(ז60חשrסujálbחוL
முதல் சேவகன்: இல்லை. சரி வாரும் சினத்தின் பயனை நழுவிவிட வேண்டாம். (வாளையுருவுகின்றான். அவர்கள் சண்டையிடுகின்றனர். கோர்ன்வோல் காயமடைகின்றான்.)
ரீகன்: (இன்னொரு சேவகனிடம்) உன் வாளைத் தா. ஒரு கீழ்மகன்
16

இவ்வாறு துணிந்துவிட்டான்.
(அவள் வாளையெடுத்து முதல் சேவகன் பின்னால் சென்று அவனைக் குத்திக் கொல்கிறாள்.)
லியர் மன்னன் நாடகத்தைப் பார்ப்போர் மீது இச் சேவகனின் தலையீடு பிரமாண்டமான குறியீட்டுச் சக்தியாய் உண்டுபண்ணும் பாதிப்பை வெளியிடுவது கடினம். இக்காட்சி தன்னிச்சைப்படி வேண்டிய குற்றச்செயலைப் புரியும் கட்டுமட்டற்ற அதிகாரத்தின் பயங்கரமான கொடுமையைக் காட்டுவதாகும். நீதி செத்துவிடுகிறது. கிளவ்ஸெஸ்டர் காப்பாற்றப்படுவான் என்ற நம்பிக்கையைப் பார்வையாளர் இழந்துவிடுகின்றனர்.
இச் சந்தர்ப்பத்தில் சேவகன் குரல் ஒலிக்கின்றது - “கையைக் கீழே போடும், என் எஜமானே”. ஒவ்வொரு குடிமகனினதுங் குரலாகவே இது ஒலிக்கின்றது. தன்னையுஞ் சம்பந்தப்படுத்துங் கொடூர அநியாயத்தை, தன் சம்மதமோ, உடந்தையோ இன்றி நிகழும் அக் கொடுமையை யெதிர்த்துக் குமுறி வெடிக்கும் ஒவ்வொரு சாதாரணக் குடிமகனின் குரலாகவும் ஒலிக்கின்றது அது. இவ்வாறு குரலெழுப்புவதன் மூலம் காரிருளில் ஒரு தீக்குச்சியைத் தட்டி வெளிச்சம் ஏற்றப்படுகின்றது.
மேலும், மெல்லச் சுடர்விடும் ஒளியொன்றை இத்தீக்குச்சி பற்றவைக்கும் விதத்தில் கதை நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். இந்த அநாமதேயச் சேவகன் கொள்ளும் நிலைப்பாடு கொடூரமாய்ப் பயனற்றதாய்த் தோன்றலாம் - அவன் தலையீடு அவன் உயிரையே குடித்து விடுகிறது!
கிளவ்ஸெஸ்டர் பிரபுவைக் குருடாக்கி கோர்ன்வால் பழிதீர்த்துக் கொள்கிறான். எனினும் அச்சேவகனின் நிலைப்பாடு தீமைக்குக் குழிபறிப்பதில் நாடகத்தில் பிரதான நெம்புகோலாய் விளங்குகிறது. சண்டையில் ஏற்பட்ட காயத்தால் நோய்வாய்ப்பட்டு மடிகிறான் கோர்ன்வால். மனிதத்துவத்தையும் நீதியையும் மறுப்பதற்காகச் சதிராட்டம் போடும் பாத்திரங்களில் மிகவும் பயங்கரமானவன், ஈவிரக்கமற்ற கொடியவன் கோர்ன்வால். இது இரு சகோதரிகளின் உறவில் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. சதுரங்க பாத்திரத்தின் நான்காவது நபரான அல்பெனி பிரபு பெரிதும் குழப்பமுற்று "கட்சி மாற்றம்" செய்கிறார். சேவகனின் செயல் கோடிலியா, லியர் மன்னன் ஆகியோரின் மரணத்தைத் தடுக்காவிட்டாலும், துன்மார்க்கத்தின்
7

Page 15
பூரண வெற்றியைத் தடுக்கிறது. மனிதத்துவமான மாற்றுக்கருத்தின் சக்தியை அணைக்க முடியாதென்பதை நாடகம் பார்ப்போருக்கு
நினைவூட்டுகின்றது.
லியர் மன்னர் - (இடமிருந்து வலம்) ஜானிஸ் யங்கிளெமன்ட் வ.,வுலர், றெணி அவுபெர் ஜொனோய் ஆகியோர் பிற்ஸ்பேர்க், அமெரிக்கா 1965இல் முக்கிய கதாபாத்திரங்களூடாக, மக்கிறுTகில் நூல் வெளியீடு, அமெரிக்கா - உலக நாடக கலைக்களஞ்சியத்திலிருந்து - தொகுதி 4 - பக்கம் 400 - எடுக்கப்பட்டது.
18
 

ஆதம் மிச்னிக் (பிறப்பு 1946)
சிறைச்சாலைக் கடிதங்கள்
தனது நாட்டிலும், சோவியத் கூட்டாக" இருந்து வந்த நாடுகளிலும் ஜனநாயக மாற்றம் வேண்டுமென்ற நிலைப்பாடு காரணமாய் போலந்துக்கு வெளியே கடந்த பத்தாண்டுகளாய்ப் பரவலாக அறியவரப்பட்டுள்ளார் ஆதம் மிச்னிக். இவர் 1980 சுதந்திர ஸொலிடாரிட்டி தொழிற்சங்கம் நிறுவப்பட்டதிலிருந்து அதனோடு நெருங்கிய தொடர்பு கொணர்டுள்ளவர். போலந்து ஆட்சி இராணுவச் சட்டத்தை 1981 டிசம்பரில் பிரகடனஞ் செய்ததிலிருந்து சுமார் பத்தாயிரம் ஸொலிடாரிட்டி தொழிற்சங்கவாதிகளோடு ஆதம் மிச்னிக்கும் இரண்டரை ஆண்டுகள் நீதி விசாரணையெதுவுமின்றி சிறையில் வைக்கப்பட்டார்.
தலைமறைவாய் இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட போலந்து ஜனநாயக எதிர்க்கட்சியில் தீவிரமாகப் பணியாற்ற முடியாத நிலையில் சிறையில் தலைசிறந்த நூல்களை எழுதினார். அரசின் கொள்கைக்கு மறுப்புத் தெரிவித்த பிரிவினரை ஒடுக்குவதற்கு இராணுவச் சட்டத்தின் கீழ் நேரடி பொறுப்பேற்ற அப்போதைய உள்விவகார அமைச்சர் தளபதி செஸ்லாவ் கிஸ்க்ஸாக்குக்கு முகவரியிட்டு 1983 டிசம்பர் 10ந் திகதி எழுதிய கடிதம் அவரது 'சிறைச்சாலைக் கடிதங்க"ளில் ஒன்றாகும். மிச்னிக் போலந்தை விட்டு வெளியேறச் சம்மதித்தால் விடுதலை செய்யப்படுவார் - பிரான்ஸின் தெற்குப் பகுதியில் நத்தார் கொண்டாடும் வகையில் அவ்வளவு விரைவாக, என்று ஓர் சமரச யோசனையை முன்வைத்தார் தளபதி மிச்னிக் அதனை மறுத்தால் வழக்கு விசாரணையை எதிர்நோக்க வேண்டும். நீண்டகாலம் சிறையில் வாட வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டதே இக்கடிதம்
அரசியலிலும், பொதுவாழ்விலும், தணிவாழ்விலும் அறம் திறம்பாமல் நடப்பதற்கு வழிகாட்டியாக மனசாட்சியின் அவசியத்தை அருமையாக வலியுறுத்துகின்றது கடிதம். மேலோங்கி நிற்கும் வெளிப்படையான வன்முறைக்கு முகம் கொடுக்கும் வகையில் சாத்வீகத்தையும், அதன் விழுமியங்களையும் வலியுறுத்துவதாகவும் இக்கடிதம் அமைந்துள்ளது. மிச்னிக் அஹிம்ஸையில் பரிபூரண
19

Page 16
நம்பிக்கை கொண்ட ஒரு சாத்வீகப் போராளியாவார். 1981 மே மாதம் ஒட்வொக் என்ற இடத்தில் ஆத்திரமடைந்த ஸொலிடாரிட்டி ஆதரவாளர்கள் ஒரு பொலிஸ்காரனை நையப்புடைத்துக் கொல்லவும் பொலீஸ் நிலையத்துக்குத் தீ மூட்டவும் எத்தனித்தபோது, தமக்கு நேர்ந்திருக்கக் கூடிய உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் மிச்னிக் தலையிட்டுத் தடுத்த சம்பவம் வெகு பிரசித்தம் பெற்ற நிகழ்வு இக்கடிதம் தமக்கும் கிஸ்க்ஸாக்குக்குமிடையே காணப்படும் வேறுபாட்டை விவரிப்பதாகத் தொடங்குகிறது.
மிச்னிக் எழுதுகிறார்:"வருங்காலம் பற்றி ஆரூடங் கூற என்னால் முடியாது. உண்மை வெற்றியடைவதை, தற்போதையத் தொழிலாளர் விரோத அரசுக்கெதிராக ஸொலிடாரிட்டி வாகை சூடுவதைக் கண்டு களிப்பதற்கு நான் உயிருடனிருப்பேனோ என்பது பற்றி எனக்குத் தெரியாது. தளபதி அவர்களே, என்னைப் பொறுத்தவரை, எமது போராட்டத்தின் பெறுமதி வெற்றியில் தங்கியிருக்கவில்லை; நமது இலட்சியத்தின் மதிப்பிலேயே அது தங்கியுள்ளது. இந்நாட்டில் நாளுக்கு நாள் படுமோசமாக இழிவடைந்து மானம், மரியாதை பற்றிய உணர்வுக்கு, அற்ப அடையாளமாய் நான் காட்டும் இம்மறுப்பு என் ஒரு சிறிய பங்களிப்பாய் அமையட்டும்."
பின்னர், போலந்தில் இராணுவ சட்டத்தின் கீழ் சிறை செய்யப்படுவதன் அர்த்தம் பற்றி ஆராய்கிறார் மிச்னிக்,
"தளபதி அவர்களே, என்னைப் பொறுத்தவரை, சிறைவாசம் அவ்வளவு வேதனை தரும் தண்டனையன்று. (1981 டிசம்பர் மாத இரவொன்றில் இராணுவச் சட்டம் பிரகடனஞ் செய்யப்பட்டு, மிச்னிக் கைது செய்யப்பட்டபோது), நான் தண்டிக்கப்படவில்லை, விடுதலையே தண்டனை பெற்றது; நான் சிறை செய்யப்படவில்லை, போலந்து தேசமே சிறை செய்யப்பட்டது.
"உம்முடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு, நான் உளவு பார்க்கவும், குறுந்தடியை உபயோகிக்கவும் தொழிலாளரைச் சுட்டுவீழ்த்தவும், கைதிகளை விசாரணை செய்யவும், வெட்கக்கேடான தீர்ப்புகளை வழங்கவும் நேர்ந்திருந்தால், என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்கு உண்மையான தண்டனையாய் இருந்திருக்கும். நான் சரியான பக்கம் இருப்பதையிட்டு, பழிவாங்குவோரின் பக்கஞ் சாராமல், பழி வாங்கப்படுவோரின் பக்கம் இருப்பதையிட்டு மகிழ்கிறேன்; அல்லாவிடின் நீர் இந்த முட்டாள்தனமான, கேடுகெட்ட
20

பிரேரணையை முன்வைத்திருக்க மாட்டீர்.
"தளபதி அவர்களே, கெளரவமான ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் நெருக்கடியான ஒரு கட்டம் ஏற்படுகிறது. கறுப்பு கறுப்புதான், வெள்ளை வெள்ளைதான் என்கிற ஒரு சாதாரணக் கூற்று பேரிழப்பைத் தருவதாய் முடியும். நகரக் கோட்டைச்சரிவுகளில், ஸ்ச்சென்ஹோஸன் முட்கம்பி வேலியின் பின்னால், மொகோடோவ் சிறைக் கம்பிகளின் பின்னால் உயிரைப் பறிகொடுக்க வேண்டி நேரும். அத்தகையதொரு நேரத்தில், தளபதி அவர்களே, நற்பண்புள்ள ஒரு மனிதனின் அக்கறை அவனுக்கு நேரக்கூடிய இழப்பு பற்றியதல்ல, கறுப்பு கறுப்புதான் வெள்ளை வெள்ளைதான் என்ற உறுதி பற்றியதாகும். இத்தகைய துணிவுக்கு வர ஒருவனுக்கு மனச்சாட்சி தேவை. நம் கண்டத்தைச் சேர்ந்த மாபெரும் எழுத்தாளர் ஒருவரது வாசகங்களின் பொழிப்புரையாக நான் கூறும் யோசனை, மனித மனச்சாட்சியைப் பெற்றிருப்பது என்றால் என்ன என்பதை நீர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வுலகில் நல்லவை, தீயவை என இருவகை உண்டு. இது உமக்குப் புதினமாகப் படலாம். புளுகு மூட்டையை அவிழ்ப்பதும், அவமதிப்பதும் நல்லவையல்லவென்பதை நீர் அறியாமலிருக்கலாம். காட்டிக் கொடுப்பது கேடுகெட்டது என்பதை நீர் அறியாமலிருக்கலாம். சிறையில் தள்ளுவதும் கொலை செய்வதும் அதனைவிடப் படுமோசமானவையென்பதை நீர் அறியாமலிருக்கலாம். இவை யாவும் நிலைபரத்துக்குப் பொருத்தமானவையாகலாம். ஆனால் இவை தடைசெய்யப்பட்டவை. ஆம், தளபதி அவர்களே, தடைசெய்யப்பட்டவை. நீர் வல்லமை படைத்த உள்விவகார அமைச்சராக இருக்கலாம்; எல்பேயிலிருந்து விளாடிவொஸ்டொக் வரை பரவிய ஆட்சியின், இந்நாட்டு முழு பொலீஸ் படையின் ஆதரவு உமக்கிருக்கலாம்; கோடிக்கணக்கில் காட்டிக் கொடுப்போரும், கோடிக்கணக்கான போலந்து நாணயமும் உம்மிடம் இருக்கலாம். உம்மால் துப்பாக்கிகளையும், நீர்ப்பீரங்கிகளையும், உளவுக் கருவிகளையும், அடிவருடிகளையும், கருங்காலிகளையும் பத்திரி கையாளர்களையும் விலைக்கு வாங்க முடியும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்று, இருளில் ஒரு வழிப்போக்கன் உம் முன்னால் தோன்றி, "இதை நீர் செய்தலாகாது என அடித்துக் கூறும்.
அதுதான் மனச்சாட்சி. ஆதம் மிச்னிக் ஜூலை 1984ல் பொது மண்ணிப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.
21

Page 17
ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு மூன்று வருடச் சிறைத்தணர்டனை விதிக்கப்பட்டார்.
இக்கடிதப் பரிவர்த்தனையின் கடைசி வார்த்தையைக் கூறி முத்தாய்ப்பு வைக்கும் சந்தர்ப்பத்தை மிச்ணரிக் 1989 ஜூன் மாதம் பெற்றார் என்பதைக் குறிப்பிடுதல் நல்லது. நாற்பதாண்டுகளுக்குப் பின் போலந்தில் நடைபெற்ற முதலாவது பகிரங்க பொதுத்தேர்தலில் ஸெஜ்ம் (பாராளுமன்ற) உறுப்பினராக மிச்னிக் தெரிவு செய்யப்பட்டார். கிஸ்க்ஸாக்கும் இத்தேர்தலில் போட்டியிட்டார்; ஆனால் தேர்தல்கள் முடிவுற்றவுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்காக இருவரும் சந்தித்தபோது இராணுவ அதிகாரி முந்திக்கொண்டு.
"நான் ஸெஜ்முக்கு நீர் தெரிவு செய்யப்பட்டதை வரவேற்கிறேன்" என்றார். அதற்கு மிச்னிக் கொடுத்த சூடான பதில்: “இல்லை, தளபதி அவர்களே, ஸெஜ்மில் வரவேற்று உபசரிப்பவன் நான் மட்டுமே."
22

லூயி பிரண்டைஸ் (1856 - 1941)
விட்னி - கலிபோார்னியா வழக்கு
விட்ணிக்கும் கலிபோர்னியாவுக்கும் இடையிலான வழக்கில், அமெரிக்க விடுதலை பற்றிய ஆரம்ப கோட்பாடுகளின் இவ்வுன்னத தொகுப்புரையை வழங்கினார் (1927) நீதிபதி பிரண்டைஸ்:
அரசாங்கத்தின் இறுதி இலட்சியம் மனிதர்கள் தம் ஆற்றல்களை விருத்தி செய்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு விடுதலை வழங்குவதாகும் என்றும், இன்னும் அதன் ஆட்சியில் எதேச்சாதிகார கொள்கையுடைய சக்திகளிலும் பார்க்க ஆய்ந்தோய்ந்து பார்த்துச் செயற்படும் சக்திகள் மேலோங்கியிருத்தல் வேண் டுமென்றும் (பிரிட்டனிலிருந்து) எமது விடுதலையை வென்றெடுத்தோர் நம்பினர். விடுதலையை ஓர் இலட்சியமாகவும், சாதனமாகவும் அவர்கள் மதித்தனர். மகிழ்ச்சியின் இரகசியம் விடுதலை, விடுதலையின் இரகசியம் துணிவு; விரும்பியவாறு சிந்திப்பதற்கும், நினைத்ததனைப் பேசுவதற்குமான சுதந்திரம் அரசியல் உண்மையைக் கண்டுபிடிப்பதற்கும், பரப்புவதற்கும் அத்தியாவசியமாகும்; சுதந்திரமும் ஒன்றுகூடலும் இன்றேல் கலந்துரையாடல் பயனற்றது என அவர்கள் நம்பினர். அவர்களைப் பொறுத்தவரை கலந்துரையாடல் வழக்கமாகச் சீர்கேடு விளைவிக்கும் சித்தாந்தம் பரவுவதிலிருந்து போதிய பாதுகாப்பு வழங்குகிறது. சுதந்திரத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மந்த குணம் படைத்த மக்களேயாவர் எனவும், பகிரங்கக் கலந்துரையாடல் ஓர் அரசியல் கடமையெனவும், இது அமெரிக்க அரசாங்கத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாடாய் இருத்தல் வேண்டும் எனவும் அவர்கள் நம்பினர். எல்லா மனித நிறுவனங்களும் எதிர்கொள்ள நேரும் ஆபத்துகளை அவர்கள் இனங்கண்டனர். ஆனால் ஒழுங்குமீறலுக்கான தண்டனை பற்றிய அச்சத்தின் மூலம் ஒழுங்கை நிலைநாட்டி விட முடியாது; சிந்தனையை, நம்பிக்கையை, கற்பனையை ஊக்கங்கெடச் செய்தல் ஆபத்தானது; அச்சம் ஒடுக்குமுறையை உற்பத்தி செய்கின்றது. அடக்குமுறை வெறுப்பை வளர்க்கின்றது. வெறுப்பு ஓர் நிலைபேறுடைய அரசுக்கு அச்சுறுத்தலாய் விடுகின்றது. உத்தேசிக்கப்படும் மனக் குறைகளையும், அவற்றின் பரிகாரங்களையும்
23

Page 18
சுதந்திரமாக கலந்துரையாடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதிலேயே பாதுகாப்பு தங்கியுள்ளது; தீய ஆலோசனைகளுக்குப் பொருத்தமான பரிகாரம் நல்லாலோசனைகளே என அவர்கள் அறிந்திருந்தனர். பகிரங்கக் கலந்துரையாடலில் பிரயோகிக்கப்படும் பகுத்தறிவில் நம்பிக்கை வைத்து - பலவந்த பிரயோகத்தின் படுமோசமான வடிவமாம் சட்டத்தால் திணிக்கப்படும் மெளனத்தை அவர்கள் விலக்கி வைத்தனர். ஆளும் பெரும்பான்மையினால் இடையிடையே மேற்கொள்ளப்படும் கொடுங்கோன்மைகளை இனங்கண்டு அவர்கள் சுதந்திரமான பேச்சுக்கும், ஒன்றுகூடலுக்கும் உத்திரவாதமளிக்கும் வகையில் அரசியல் யாப்பில் திருத்தஞ் செய்தனர்.

கெளதம புத்தர் (623 - 543 - கி.மு.*)
Stavril சூத்திரம்
மனிதர் தமக்குத் தாமே சிந்திக்க வேண்டும். வாழையடி வாழையாக வந்தது, கர்ணபரம்பரையாகக் கையளிக்கப்பட்டது, அல்லது மதத் தலைவருக்கு மரியாதை செய்வது என்ற முறையில் எதனையும் வெறுமனே ஏற்றுக்கொள்ளக் கூடாது. இது புத்தரது போதனையின் ஓர் முக்கிய தத்துவம். இது குறித்து அவரது அறிவுரை இங்கு விவரிக்கப்படுகின்றது.
புத்தர் சாந்தசொரூபி, சகிப்புத் தன்மை மிக்கவர் மட்டுமல்லர். சத்தியத்தை சத்தியத்துக்காகவே அடைவதற்கான தேடலில் அவர் பகுத்தறிவுவாதியாகவும் மிளிர்ந்தார். நாற்பத்தைந்து வருடங்கள் நீண்ட போதனைப் பயணத்தின்போது, மாரிகாலத்தில் ஓரிடத்தில் தங்க நேர்ந்த நான்கு மாதங்கள் தவிர, எஞ்சிய காலம் பூராவும் நாடு முழுவதும் அலைந்து திரிந்து கற்பிப்பதும் போதிப்பதும் அவர் வழக்கமாகவிருந்தது. இவ்வாறு அலைந்து திரிகையில் கோசல நாட்டில் விவேகிகளான காலாமர் என்னும் மக்கள் வாழும் பகுதியை வந்தடைந்தார் புத்தர். அச்சேதி கேட்டு அவரை வரவேற்பதற்காகக் காலாமர்கள் திரண்டுவந்தனர். அவர்கள் புத்தரின் பாதத்தடியில் அமர்ந்தனர். அப்போது இடம்பெற்ற கலந்துரையாடல் இது.
காலாமர்கள் கூறினர்: "சங்கைக்குரிய பகவானே, காலத்துக்குக் காலம் பல்வேறு மதபோதகர்கள் எம்மிடம் வந்தனர். அவரவர் கோட்பாடுகளை விவரமாக வியாக்கியானஞ் செய்தனர். ஒவ்வொருவரும் தாம் போதிப்பதுதான் உண்மையென்றும், மற்றவை யாவும் பிழையானவையென்றும் கூறுகின்றனர். இவ்விதமாகத் தம்மையும் தம் கோட்பாடுகளையும் மகிமை படுத்திக்கொள்ளும் அதே வேளை மற்றவர்மேல் குற்றங்காணுவதுடன் அவர்களை வெறுக்கவுஞ் செய்கின்றனர். பகவானே, எமக்குக் குழப்ப மாகவுள்ளது. இவர்களில் உண்மையுரைப்பவர் யார், பொய்யர் யார் என நாம் அறிந்துகொள்வது 6TJJ60TLD"
புத்தர் கூறினார்: "ஐயங்கொள்ள வேண்டிய இடத்தில்
* தேரவாத பாரம்பரியத்தின்படி. ஆனால் மகாயான பாரம்பரியத்தின்படி 563-483.
25

Page 19
ஐயங்கொள்வது இயற்கையே. இனி, கேளுங்கள். மரபினால் கையளிக்கப்பட்டதால், அல்லது வாழையடி வாழையாக வந்ததால் அல்லது கர்ணபரம்பரையாக வந்ததால் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். கிரந்தம் அங்கீகரிப்பதனால், தர்க்கம் அல்லது அனுமானம காரணத்தால், மேலோட்டமான அறிவினால் வெறுமனே ஒன்றை ஏற்றுக்கொண்டுவிட வேண்டாம்; ஒரு கோட்பாட்டின் மீது உண்டான பற்றினால் அல்லது அது பொருத்தமானதெனத் தென்பட்டதனால் ஏற்றுக்கொண்டு விடவும் வேண்டாம். இனி, குறிப்பிட்டவொரு மதபோதகர் மேல் வைத்திருக்கும் மதிப்பு காரணமாகவும் ஏற்றுக்கொண்டு விட வேண்டாம். ஆனால், காலாமர்களே, சில விஷயங்கள் நன்மையற்றவை, குறை கூறத்தக்கவை, ஞானவான்களால் கண்டிக்கப்பட்டவை, மேற்கொள்ளப்பட்டால் அல்லது கடைபிடிக் கப்பட்டால் இழப்பையும், துன்பத்தையும் தரக்கூடியவையென நீங்களாகவே அறிந்துகொண்டால், அப்போது, அவற்றை நீங்கள் நிராகரிக்க வேண்டும்"
“இனி, காலாமர்களே, என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுள் பேராசை தலைதூக்குவது அவனது நன்மைக்காகவா, நட்டத் திற்காகவா?”
"அவனது நட்டத்திற்காகத்தான், பகவானே."
"சரி, பேராசைக்காரனாக மாறி, பேராசைக்கு அடிமையாகி தன் நிதானம் இழந்து அவன் கொலையிலும், களவிலும் ஈடுபடுவதில்லையா? பிறன் மனை விழைவதில்லையா? பொய் சொல்வதில்லையா? அது மட்டுமன்றி அவன் பிறருக்கு பிழையான வழிகாட்டி தீமையின்பால், ஒழுக்கக்கேட்டின்பால் அவர்களை இழுத்துச் செல்வதில்லையா? நெடுங்காலமாக இழப்புக்கும் துன்பத்துக்கும் தன்னைத்தான் இட்டுச் செல்வதில்லையா?" . . . . .
"ஆம், பகவானே, அவன் அவ்வாறே செய்கிறான்."
"அதேப்ோன்று, வெறுப்பும் வன்மமும் மயக்கமும் அறியாமையும் மற்றும் இவை போன்ற தீய நிலைகளும் உண்டாகும்போது, அவை மக்களை நிதானமிழக்கச் செய்து சகல வகையான தீச்செயல்களுக்கும், ஒழுக்கக் கேட்டுக்கும் இட்டுச் சென்று இழப்பையும் துன்பத்தையும் தருவதில்லையா?”
இதனையும் காலாமர் "ஆம்" என்று அங்கீகரிக்க, புத்தர் மேலும்
26

தொடர்ந்து கூறினார்: "காலாமர்களே, மரபு எனபதற்காகவே ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டாமெனவும், அது தீயது - உங்களுக்கும் பிறருக்கும் தீமை தரக்கூடியது - என நீங்களாகவே அறிந்துகொண்டால் அதனை நிராகரித்து விட வேண்டுமெனவும் திட்டவட்டமாக உங்களுக்குக் கூறினேன். மறுபுறம், ஒருவர் பேராசையற்றவராக, வன்மமற்றவராக, மயக்கமற்றவராக இருப்பின், அதாவது, தாராளவாதியாக, கருணையாளராக, விவேகியாக இருப்பின் - என்ன நினைக்கிறீர்கள் - இப் பண்புகள் அவருக்கும் நன்மையையும், மகிழ்ச்சியையும் தரமாட்டாவா?”
"தரும், பகவானே"
"இன்னும் தாராளமும், கருணையும், விவேகமும்
கொண்டிருப்பதால் அவர்கள் சுயக்கட்டுப்பாடு உடையவர்களாக -
அடக்கமுடையவர்களாக - மாறி கொலை மற்றும் ஒழுக்கக்கேடான
செயல்களைத் தவிர்த்துக் கொள்ளமாட்டார்களா? இவை
அவர்களுக்கும் பிறருக்கும் நன்மைய்ையும் மகிழ்ச்சியையும் தர LDTLLT6. T?"
அங்குத்தர நிக்காய, 1,188
கென்னத் டப்ளியூ. மோர்கன் தொகுத்த
"புத்தரின் பாதையில்” என்ற நூலில்
பிக்கு ஜே. காசியப்பர் எழுதிய
அத்தியாயத்திலிருந்து
27

Page 20
ஸ்ரீவன் ஸ்பெண்டர் (பிறப்பு 1909)
கிழக்கு ஐரோப்பாவில் மாற்றுக்கருத்தின் எதிர்காலம்
மாற்றுக் கருத்தின் மதிப்பு பற்றிய இம் முதல் தொகுதியில், ஆங்கிலக் கவிஞர் ஸ்ரீவன் ஸ்பெண்டர், கிழக்கு ஐரோப்பாவிலும் முந்நாள் சோவியத் யூனியனிலும் நடைபெற்றுவரும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தம் சிந்தனையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பூகோளத்தின் அப்பகுதியில் சிதைந்துபோன அரசுகளின் இடத்தைப் பிடித்துவரும் புதிய அரசியல் கடடமைப்புகளில் சுடர்விடும் மாற்றுக்கருத்தின் தீப்பிழம்பு பற்றி அவரெழுப்பும் கரிசனைக் குரல் நம் சிந்தைகளில் எதிரொலி காண்கின்றது.
கிழக்கு ஐரோப்பாவிலும் முந்நாள் சோவியத் யூனியனிலும், கம்யூனிஸம் முழுமையாக வீழ்ச்சியுற்றதோடு - லெனின் உட்பட ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக - செவ்செஸ்கு, ஹொனெக்கர் போன்றோர் இன்று அவர்களின் வீழ்ச்சிக்குப் பின் தென் படுவதுபோல், கம்யூனிஸத் தலைவர்கள் ஆரம்ப நாள் தொட்டே கொடுங்கோலர்கள், ஊழல்மிக்கவர்கள், சிடுமூஞ்சிகள் என்பது அநேக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதுபோல் தெரிகிறது.
எனினும், ஊழல் மண்டியவர்களாய் இன்று அம்பலப்படுத்தப்படும் அதே தலைவர்கள் அவர்களது இளமைக் காலத்தின்போது இலட்சிய வேட்கையினராய், துணிவுமிக்கோராய், தன்னலமற்றவராயிருந்தனர். ஆனால், உலகையொரு சோஷலிஸ் சொர்க்கமாய் மாற்றிவிடும் நோக்குடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அத்தியாவசியமானது என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம். இன்று தம் வயதான காலத்தில் ஊழல் குற்றஞ்சுமத்தப்படும் தலைவர்கள் சிலர் அவர்களது இளமைக்காலத்தில் ஜெர்மனியில், ஆஸ்திரியாவில் அல்லது ஸ்பெயினில் பாசிசத்தின் எதிரிகளாய் மடிந்திருப்பின் - இது நடந்திருக்கக் கூடியது - இன்று அவர்கள் வீரபுருஷர்களாய்ப் போற்றப்பட நேர்ந்திருக்கும்.
அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் இத்தலைவர்களைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய அம்சம் அவர்களது ஜடவாத சித்தாந்தத்தின் முழு லட்சணமும், முற்று முழுதாய் 'விஞ்ஞான பூர்வம்' எனக் கருதப்பட்ட விளக்கமும், வரலாற்றை நெறிப்படுத்தும் முயற்சியும் ஆகும். தம் கொள்கைகள் - கட்சிக் கொள்கை - சம்ப வங்களின்
28

விஞ்ஞானபூர்வமான சரியான விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையென்றும், அவை புறவயமானவையென்றும், கட்சிக் கொள்கை அல்லது அரசாங்கக் கொள்கை பற்றி அவர்கள் ஒருமுறை தீர்மானித்துவிட்டால் அப்புறம் அக்கொள்கை பற்றிய எத்தகைய விமர்சனமும் தீமை பயக்குமென்றும், அது தம் பகைவர்களுக்கு - வர்க்க விரோதிக்கு - நன்மையாய் முடிந்துவிடுமென்றும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை, கட்சித்தலைமையின் முடிவு என்ற வகையில், அரசு இறுகிக் கல்லாகிவிடுவதில் முடிந்தது.
இரக்கமுள்ள சர்வாதிகாரம் - பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அதன் நலன்கள் எனக் கருதப்படுபவைக்ளுக்காக, அதன் பிரதிநிதிகள் என்று கருதப்படுவோரால் நடத்தப்படுவது என்ற எண்ணக்கரு - மனித இயல்புக்கு முரணானதெனச் சொல்வது உப்புச்சப்பற்றதாயிருத்தல் கூடும். ஆனால் உப்புச்சப்பற்ற தன்மைக்கெதிராக எவ்வாறு அது எம்மை வெகுண்டெழச் செய்ததென்பது சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றி மனச்சோர்வு தரும் அம்சங்களில் ஒன்றாகும். முதன்முதலில் நல்லெண்ணமும், பாரபட்சமற்ற தன்மையும் கொண்டோராயிருந்து காலப்போக்கில் முழு அதிகாரத்தையும் பெற்றமையே இவ்விவகாரத்தில் தீமை விளையக் காரணம்.
கம்யூனிஸத்தின் பிரத்தியட்சமான தோல்வி காரணமாய் முதலாளித்துவத்தின் சார்பில் கும்மாளமும், விரல் நீட்டி ஏளனஞ் செய்வதும் ஏற்பட்டுள்ளன. இது முதலாளித்துவத்தின் வெற்றியாகப் பரவலாக வியாக்கியானஞ் செய்யப்படுகிறது. ஆனால் இது குறைந்தபட்சம் முதலாளித்துவத்தின் பூர்த்தியாகாத தோல்வி காரணமாய் உண்டான பொருளாதார மந்தத்தின்போது, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் முதலாளித்துவ நாடுகளில் பண மோசடி ஊழல்கள் தலைவிரித்தாடும் வெகுமுக்கியமான காலகட்டத்தில், நேர்ந்துள்ளது. வெற்றியீட்டியது முதலாளித்துவமன்று, ஜனநாயகமே! மேற்கில் வல்லமைக்கும், அதிகார பலத்துக்கும், ஊழலுக்கும் எதிராய் ஒருவகை முட்டுக்கட்டையைப் போட்டமைக்காக, ஒரு ரொபர்ட் மாக்ஸ்வெல் ஒரு செவ்செஸ்குவாய் மாறுவதைத் தடுத்தமைக்காக, நியாயப் படுத்தப்பட்டுள்ள ஜனநாயகமே வெற்றியீட்டியதெனலாம்.
செவ்வாய்க் கிரகத்திலிருந்து வருகை தரும் ஓர் விருந்தாளி எம் உலகைப் பார்த்து, மேற்கத்திய ஜனநாயகத்தின் நிறுவன மயமாக்கப்பட்ட மாற்றுக்கருத்து நிலவுவதனால்தான், கம்யூனிஸ்
29

Page 21
நாடுகள் அடைந்த அழிவுகளிலிருந்து ஜனநாயக மேற்கு தப்பிப் பிழைத்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். மாற்றுக் கருத்துத் தெரிவிப்பது என்பது, குறைந்தபட்சம், அதிகாரத்திலுள்ளோரை விமர்சிப்பதற்கும், கேலிசெய்வதற்கும், அவர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் பிழைவிடும் மனித சுபாவத்திலிருந்து விழிப்புறும் வகையில் தாக்குவதற்கும் தனிமனிதர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று அர்த்தப்படும். உச்சபட்சத்தில் அது, மாறுபட்ட கருத்துடையோர் - ஒத்துப்போக மறுப்போர் - தம் அயலவர்கள்மீது அதிகாரஞ் செலுத்துவோரின் பத்தாம்பசலிப் போக்குகளுக்குச் சவால்விடும் உலக அபிப்பிராயங்களை முன்வைப்பது என அர்த்தப்படும்.
ஒரு சமுதாயத்தின் முழுமையான வரலாற்று வளர்ச்சியினுள், மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தல் என்பது நடைமுறை யிலுள்ளவைகளுக்கு மாற்றீடான வாழ்வின் குறிக்கோள்கள் தோன்றுவதற்கான சாத்தியப்பாட்டைத் திறந்து வைக்கின்றது என்பது சுதந்திரமான வளர்ச்சியை அனுமதிக்கும் திறந்த நிலையாகும். அது சர்வாதிகாரத்தினால் திணிக்கப்பட்ட வகையறாவாக நிகழ்காலம் இறுகிக் கல்லாகிவிடாமலிருப்பதற்கான நிலையெனலாம்.
இன்று உலகை நோக்குகையில், ஜனநாயகத்தின் வருங்காலம் சர்வானுகூலமாயிருக்குமென நினைப்பது கடினமே. புதியதொரு பொதுநலவாயத்தின் தேசிய உறுப்புக்களாய் சோவியத் யூனியன் சிதைந்திருப்பது, இவை யாவும் அல்லது இவற்றில் எவையேனும் பாராளுமன்ற ஆட்சியை அனுபவிப்பதை உத்தரவாதஞ் செய்யவில்லை. ஒருவரால் எதிர்பார்க்கக் கூடியதெல்லாம் இத்தனியுறுப்புக்களில் அநேகமானவற்றினுள் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்கும் அதிகாரத் தைத் தனிமனிதன் பெற்றிருக்க வேண்டும் என்பதே. மாற்றுக்கருத்துத் தெரிவித்தல் - ஒத்துப்போக மறுத்தல் -என்பது கனன்றெரியும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தீச்சுடர்கள் ஆகும். அவை காணப்படாத பகுதிகள் குருட்டிருட்டில் ஆழ்ந்துவிடும். ஒத்துப்போக மறுப்பவர்களும் ஆட்சியாளர்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து உண்மையான ஜனநாயக அமைப்பான பாராளுமன்ற ஆட்சியை அமைக்கும் வரை இத்தீச்சுடர்களே நெருக்கடியான காலகட்டத்தைத் தாண்டிச் செல்லத் துணைபுரிபவை. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் உருவாகிவரும் புதிய நாடுகளிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் ஆட்சியிலிருப்போர் யாராயிருப்பினும் அவர்கள்
30

குறைந்தபட்சம் ஒரு தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சர்வாதிகாரம் வழியல்லவென்பதைக் காலப்போக்கில் உணர்ந்து விடுவார்களென்பது எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும். இப்போதைக்கு மாற்றுக்கருத்து சுடர்விட்டு எரியச் செய்யப்பட வேண்டிய விளக்காகும்.
dhofavoir divoueurLft
கவிஞர், கட்டுரையாளர் , விமர்சகர் ஆகிய ஸ்ரீவன் ஸ்பெண்டர் லண்டனில் 1909ம் ஆண்டு பிறந்தார். ஆங்கில மொழியில் கவி எழுதுவதில் இன்று உயிருடன் இருக்குங் கவிஞர்களில் தலைசிறந்தவர். டபிள்யூ. எச். ஓடென், கிறிஸ்ரோபர் இஷெர்வூட் ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சமகாலத்தவரும் நண்பருமாகிய ஸ்பெண்டர் தமது ஆரம்பகால கவிதை நூல்கள் மூலம் புகழ் ஈட்டினார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் குடியரசுப் போர் வீரருடன் சேர்ந்து பாசிஸ் பிறான்ஸிஸ்கோ பிறங்கோவுக்கு எதிராகச் சேவை செய்தார். “கொறைசின்”, “என்கவுன்டர்" ஆகிய இரு சஞ்சிகைகளுக்குந் துணையாசிரியராய் செயற்பட்டார். இளமைப் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப்பட்டார். ஆனால், சொற்ப காலத்தில் கட்சியின் முடிவு கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட வேண்டுமென்பதையெதிர்த்துக் கண்டனக்கணை தொடுத்தார். எனினும், வாழ்நாள் முழுவதும் பாசிஸத்ததை உணர்ச்சிபூர்வமாக எதிர்த்ததுடன், சோஷலிஸக் கொள்கைகளை பூர்வாங்கமாக ஏற்றுக்கொண்ட இலட்சியவாதியுமாயிருந்தார். உலகம் முழுவதிலும் துன்புறுத்தப்பட்ட எழுத்தாளர்களை ஆதரிக்க வேறு சிலருடன் சேர்ந்து 1972ம் ஆண்டு நிறுவனமொன்றை ஆரம்பிக்கப் பொறுப்பாயிருந்தார். இந்நிறுவனம் "இண்டெக்ஸ் ஒன் சென்ஸர்சிப்” என்னும் பெயர் தாங்கி கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரப்பும் சர்வதேச சஞ்சிகையாக வெளியிடுகின்றது. கவிதைகள், நாடகங்கள் ஆக்கியோரின் நாடுகளில் தடைசெய்யப்பட்டிருப்பினும் "இன்டெக்ஸ்" அவற்றை வெளியிட்டு வரலாற்றில் ஒப்பற்ற இடம்பெற்றது. ஸ்ரீவன் ஸ்பெண்டர், பல்கலைக்கழகப் பேராசிரியர், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில மொழிப் பேராசிரியர், அமெரிக்க காங்கிரஸ் நூலகத்துக்கு கவிதையியல் ஆலோசகர். "உலகத்துள் உலகம்" (சுயசரிதை), "கவிதைத் தொகுப்பு", "ரீ.எஸ்.எலியற்", "விருப்பு வெறுப்புத் தொடர்புகள்", "1939-1983 வர்த்தமானப் பத்திரிகைகள்” என்னுஞ் சில அவரின் நூல்களில் அடங்கும்.
31

Page 22
ஓடென், இஷெர்வூட், ஸ்பெண்டர் ஆகிய முப்புலவர்களும், இளம் பராயத்தில். ஸ்பெண்டர் இஷெர்வூட் பக்கத்தில் நிற்கிறார்.
32
 

இத்தொடர்ச்சியின் தொகுப்பு தொடர்ந்து கொண்டே போகும். ஆலோசனைகள், கருத்துக்கள், மூலவாக்கியங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், வேறு விடயதானங்கள் வாசகர்களிலிருந்து வரவேற்கப்படும்.
மாற்றுக்கருத்து
31, சார்ள்ஸ் இடம்
கொழும்பு 3 - -
தொலைபேசி எண்: 574899

Page 23
Prillëdhy Kiruni