கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானிப்பாய் கிரீன்

Page 1

தமிழ் வாழ்வின்
சு ட ர் க ள்
ரீன்
கி
Ιπιiι
9 bloodaburiasstir

Page 2

இ. அம்பிகைபாகன் ‘அம்பி’ எனும் புனை பெயரில் ஆக்க இலக்கியங்களை படைத்த இவர் அரசாங்க பதிப் புத்துறையிலும் பப் புவா நியுகினியாவில் ஆசிரியராகவும் பணிபுரிந்தபினர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். இவர் கிறீனின் வாழ்வும் பணியும் பற்றி பல ஆண்டுகள் ஆய்வு செய்து. கிறீனின் அடிச்சுவடு (1967), மருத்துவத் தமிழ் GypsiGot Tig-56i (1995). Scientific Tamil Pioneer (1998) எனும் மூன்று நூல்களை எழுதியவர். 1998இல் இலங்கை அரசு கிறீன் நினைவு முத்திரை வெளியிடுவதற்கு அயராது உழைத்தவர்.

Page 3

ஈழத்துத் தமிழ் வாழ்வின் ஒளிச்சுடர்கள் வரிசை
மானிப்பாய் டாக்டர்கிறீன் வாழ்வும் பணியும்
தமிழ்மணி இ. அம்பிகைபாகன்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57வது ஒழுங்கை, கொழும்பு - 6, இலங்கை.
2003

Page 4
நூல் வெளியீட்டு எண் :3
ISBN: 955 - 8564 -
Zதிம்/ : புரட்டாதி 2003 தசை24/ : மானிப்பாய் டாக்டர் கிறீன் வாழ்வும் பணியும் ஆகி%/ : தமிழ் மணி இ. அம்பிகைபாகன் வென22 : கொழும்புத் தமிழ்ச் சங்கம் விலை : ரூபா 100.00
Edition : October 2003
Title : MANIPPAY DOCTER GREEN VALVUMPANIYUM Author: R. Ambihaipahan "Published by: Colombo Tamil Sangam
Price : Rs 100.00
இது ஒரு நூலகக்குழுவின் செயற்திட்டம்
தமிழ்ச் சங்க வெளியீடுகளிலுள்ள கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை. அவை சங்கத்தின் கருத்துக்களல்ல.

அறிமுகம்
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் ~ கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
இருபதாம் நூற்றாண்டு விடியும் காலையில் அமரகவி பாரதி இட்ட ஆணை இது. இவ்வாறு ஆணையிடுமுன் அதற்கான காரணத்தையும் பாரதி தொகுத்தளித்தார்.
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவதில்லை - அதைச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமீசை ஒங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்
இவ்வாறு துடித்த பாரதி, அந்த வசைமொழியை ஏற்க முடியாத நிலையிலே, தமிழ் அறிஞருக்கு ஆணையிட்டான். எட்டுத்திக்கிலும் செல்லுங்கள். மேலைத் தேசங்களில் வளருகின்ற புத்தம் புதிய அறிவியற் கலைகளைத் தமிழ் மொழியில் தாருங்கள். தமிழில் அந்தப் புத்தம் புதிய கலைகளைச் சொல்லவுங் கூடுவதில்லை; சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கு இல்லை என்ற வசை மொழியை அழியுங்கள். மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற மனப்பாங்கைவிட்டு, தமிழில் அது முடியும் அறிவியலை தமிழில் எழுதலாம், பரப்பலாம் என்ற நம்பிக்கையுடன் செயலில் ஈடுபடுங்கள் என்று அன்று அவர் ஆணையிட்டார். இது. 1900இன் துவக்கத்தில். ஆனால் - அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னதாகவே அறிவியலைத் தமிழில் தருவதற்கு மனங்கொண்டு உழைத்தவர் தமிழரல்லாத அறிஞரான டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிறீன். மானிப்பாய் கிறீன் என்பது, அவரைக் குறிப்பிடுவதற்குப்

Page 5
பொருத்தமான சொற்றொடர். 1848இல் அவர் ஆரம்பித்துவைத்த மருத்துவமனை இன்று மானிப்பாயில் ஓங்கி வளர்ந்து நின்று உருப்படியான மருத்துவசேவையை மக்களுக்கு அளித்து வருகிறது.
இலங்கைக்கு வருகை
அமெரிக்காவிலே, மசச் சூசற்ஸ் மாநிலத்தில், வூஸ்ரர் எனும் கிராமத்திலே 1822-10-10 அன்று வில்லியம் ஈ கிறீன் தம்பதிகளுக்கு கிறீன் புத்திரனாகப் பிறந்தார். சாமுவேல், தமது பத்தொன்பதாவது வயதிலேயே சாதாரண எழுதுவினைஞராக வாழ்க்கையை ஆரம்பித்தார். இளமையிலே இருந்து இயல்பான ஆற்றலை அவர் இனங்காணத் தவறவில்லை. அதனால் - 1841 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே மேற்கொண்ட எழுதுவினைஞர் தொழிலைச் சில மாதங்களிலே விட்டுவிட்டு முழுநேர வைத்தியக் கல்வியை மேற்கொண்ட அவர், விரிவுரைகளைக் கேட்டும், சத்திரசிகிச்சைகளைப் பார்வையிட்டும், வைத்திய அறிவை சேகரித்துக்கொண்டார். பின், அதே ஆண்டில், ஒற்றோபர் மாதத்தில், நியூயோர்க்கிலிருந்த ஒரு வைத்தியக் கல்லூரியிற் சேர்ந்து வைத்தியங் கற்கத் தொடங்கினார். கல்லூரியிற் பிரவேசித்துப் படிப்பை ஆரம்பித்த அவர் விரைவில் ஒரு நல்ல வைத்தியராகத் தேர்ச்சி பெற்றார்.
1844ஆம் ஆண்டிலேயே மிஷனரிப் பணிசெய்யும் எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. "எனது உடனலம் குறைவு தான்; ஆனால் சுவாத்திய மாற்றம், பழக்க வழக்க மாற்றம் போன்றவை உடனலனைச் சீராக்கக்கூடும்" என்று தமது சகோதரிக்கு அவர் எழுதித் தன் மனதை வெளியிட்டார்.
இவையெல்லாம் இளமையிலேயே அவரது மனப்பக்குவத்தைப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய மனப்பாங்குடன் வைத்தியங் கற்ற கிறின் 1845 ஆண்டு மே மர்தம் 13ம் திகதி வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்றார். சில நாட்களுள்ளேயே நியூயோர்க்கிலிருந்த ஒரு சிகிச்சைசாலையில் நியமனமுங் கிடைத்தது. ஆனால், சொந்த ஊரிலே சென்று வாழ விரும்பிய அவர் அதை ஏற்கவில்லை. தமது ஊராகிய வூஸ்டருக்குச் சென்று தொழிலை ஆரம்பித்தார். ஆயினும் - மிஷன் சேவை செய்யும் எண்ணம் மட்டும் மாறவில்லை. நான் பயன்படக்கூடிய ஓர் இடத்திற்குச் செல்லுதல் நன்றல்லவா? இந்த எண்ணமே மேலோங்கி, அவரை வழிப்படுத்தியது.
நமது நாட்டிலே அடியெடுத்து வைத்துச் சமயத் துறையிலுங் கல்வித் துறையிலும் ஈடுபட்டு ஆலயங்களும் பாடசாலைகளும் நிறுவிய அமெரிக்க மிசன் ஊழியர்கள், வைத்தியத்துறையிலும் சேவை செய்ய ஆரம்பித்தமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். 1819ஆம் ஆண்டிலே, வைத்திய சேவையையும் ஆரம்பிப்பதெனத் தீர்மானித்து, யாழ்ப்பாணத்துக்கு ஊழியரை அனுப்பியதுடன், வைத்திய மிசனரிச் சேவை அங்குரார்ப்பணமுஞ்

செய்யப்பட்டது. அமெரிக் கமிசன் வைத்திய சேவையை ஆரம்பித்து நடாத்தவென டாக்டர் யோன் ஸ்கடர் தம்பதிகள் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களின் முதலாவது வைத்தியநிலையம், 1820ஆம் ஆண்டு பண்டத்தரிப்பிலே நிறுவப்பட்டது. 1836 ஆம் ஆண்டிலே, ஸ்கடர் தம்பதிகள் தாயகந் திரும்பினார்கள். வைத்திய சேவையைத் தொடர்ந்து நடாத்த டாக்டர் நேதன் உவாட் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பத்து ஆண்டுகளின் பின், அன்னாரின் சேவைக் காலம் முடிவடைந்ததும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தவர்தான் சாமுவேல் பி.கிறீன் வைத்தியர் ஆவர்.
1846ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பல அமெரிக்க மிஷன் ஊழியர்கள் அங்கிருந்து இந்தியாவிற்குக் கப்பலிற் பயணஞ் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இலங்கையில் பணியாற்றியவர்களான வண. லீவை ஸ்போல்டிங், டாக்டர் ஜோன் ஸ்கடர் ஆகியோரும் அவர்களுள் இருவர். அவர்கள் புறப்படுமுன் டாக்டர் கிறீன் அவர்களைச் சந்தித்துப் பேசி, அமெரிக்கமிஷன் ஊழியராகப் பணியாற்றத் தமக்குள்ள ஆர்வத்தையும் டாக்டர் ஜோன் ஸ்கடருக்குத் தெரிவித்தார். அதன் பலனாக, இலங்கையில் அமெரிக்க மிஷன் வைத்தியராகப் பணியாற்றுவதற்கு நியமனம் கிடைத்தது.
விரைவிலே தமது நண்பர்களையும் ஊரையும் விட்டுத் தூர தேசத்திற்குச் செல்ல வேண்டுமென்பது அவர் மனதிலே ஓர் உணர்ச்சி ஓட்டத்தை ஏற்படுத்தியது. அந்த மன உணர்வை அவர் இவ்வண்ணம் குறித்து வைத்தார் :
"அன்று நள்ளிரவிலே துயிலின்றி என் அந்தரங்க ஆத்மாவின் உணர்வோடு இயைவு பூண்ட தெனத் தோன்றிய அம் மங்கிய நிலவொளியில் வியா குலத்துடன் உலாவிக் கொண்டிருந்தேன். சந்திரன் கீழ்த்திசையில் உதயமாகிக் கொண்டிருந்தான். அத் திசையை நோக்கி என் எதிர்காலம் என்னை அழைத்தது. என் விதி எவ்வித தடுமாற்றமோ சந்தேகமோ இன்றித் தங்கக் கரங்கள் சுட்டி அறிவுறுத்திக் கொண்டிருந்தது. கேள்வி வழியில் மட்டும் அறிந்திருந்த கீழைத்தேசக் காட்சிகளை விழிப்புநிலையிற் கற்பனை செய்துகொண்டிருந்தேன். இரவின் அழகில் ஒளிபட்டதைக் காணுந்தோறும் ஏதோ ஒரு அறிவுறுத்த முடியாத மன நெகிழ்ச்சி ஏற்பட்டது. யான் தன்னந் தனியாகி என் சுற்றம், எனக்கு இனியவர்களை ஒருமுறை எண்ணுங்கால் இப் பேரிளம் மதியன்றோ என் ஆத்மாவுக்குத் தண்ணொளி தந்து சாந்தப்படுத்தும்! ஆ1 இலட்சம் பேர்களின் குரல் என்னை அழைக்கிறது! நான் நிற்கவொண்ணாது!"
இந்த மனவுணர்வுடன், வூஸ்டரில் இருந்து புறப்பட்டுநியூயோர்க்கிற்குச் சென்று பிரயாணத்திற்கான ஆயத்தங்களைச் செய்தார். கப்பல் எப்போது புறப்படுமென்பதை அறியாதபடியால், இலங்கையில் இருந்து திரும்பிய மிஷன் ஊழியர் ஒருவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்தார். ஏலவே லத்தீன், கிரேக்கம். பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவராகையால்.

Page 6
தமிழ்மொழி கற்பதில் சிரமம் இருக்காது என்பது அவர் எண்ணம். அங்கு மூன்று மாதம் வரை தமிழ் கற்பதற்கு அவகாசம் கிடைத்தது.
நான் தனியாகச் சென்று இந்துப் பிரதேசத்தை அறியும் வரை மணஞ் செய்யமாட்டேன்" என்று தமது சகோதரி ஒருவருக்குக் கூறிய டாக்டர் கிறீன். 1847ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20ஆம் திகதி ஜேக்கப் பேர்க்கின்ஸ் என்ற கப்பலில் அமெரிக்கத் துறைமுகமொன்றான பொஸ்ரனில் இருந்து புறப்பட்டார். அந்தக் கப்பலில் கிறீனுடன் இன்னுமொரு பிரயாணி மட்டுமே இருந்தார். அவருக்குச் சமயத்தில் எதுவித அக்கறையும் இருக்கவில்லை. எனினும், கப்பலில் யாவருடனுமே கிறீன் அனுதாபத்துடன் பழகினார். தமிழ்மொழி படித்தார். விஞ்ஞான இலக்கிய நூல்களை வாசித்தார்.
1847ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் நான்காம் திகதி சென்னையை அடைந்த டாக்டர் கிறீன், இன்னொரு மிஷன் ஊழியரான திரு. ஹன்றி என்பவருடன் 20ஆம் திகதி குதிரையிலே பயணத்தைத் தொடர்ந்தார். சென்னையிலிருந்து 205மைல் தூரம் சென்ற அப்பயணம் ஒற்றோபர் 2 ஆம் திகதி நிறைவுற்றது. பின்பு ஆறாம் திகதி கடலைக் கடந்து யாழ்ப்பாணத்தின் வடபால் உள்ள பருத்தித்துறையை அடைந்தார். அங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில் வல்வெட்டியிலே அன்றிருந்த அமெரிக்கமிஷன் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வல்வெட்டிக் கிராம மிஷன் நிலையத்தில் அன்று பணியாற்றியவர் மிஷன் ஊழியர் திரு கோய்ஸ் என்பவர். அவருடன் தங்கியிருந்த கிறீன், பின்பு தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, உடுவில், வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய ஊர்களில் இருந்த மிஷன் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அறிமுகஞ் செய்யப்பட்டார். s
யாழ்ப்பாணத்தில் டாக்டர் கிறீனின் வைத்தியப் பணி வட்டுக்கோட்டையில் ஆரம்பமாகியது. அங்கு மிஷன் வைத்தியராகப் பணியேற்றப்ோது, அவருக்கு வயது 25. மறுநாள் அவரது பிறந்ததினம். அதுபற்றித் தன் குடும்பத்தினருக்கு எழுதுகையில்,
"எனது அடுத்த கால்நூற்றாண்டை இங்கு ஆரம்பிக்கிறேன். நாளை என் வயது இருபத்தைந்தாகும்."
இவ்வாறு உணர்ச்சிததும்ப எழுதினார். அங்கிருந்து அடுத்த கால்நூற்றாண்டு காலத்திற்கு தமிழில் மேனாட்டு வைத்திய அறிவை வளர்க்கப் போகிறேன் என்று மானசீயமாக உணர்ந்தாரோ, என்னவோ.
வட்டுக்கோட்டையில் கிறீன் வைத்திய சேவையை ஆரம்பித்த முதற் சில நாட்கள் அவரது சேவையை நாடியவர்கள் மிகச் சிலரே. பொதுவாக, அன்றைய சமூகத்தினர் சுதேச வைத்தியர்களிடம் மிக நம்பிக்கை கொண்டிருந்தனர். தமது வைத்தியர்களிடம் நம்பிக்கை வைத்தவர்கள் அவர்களை விட்டுப் பிறரிடம் செல்லத் தயங்கினார்கள். மேலும்,

இளமைக்கால கிறீன் (1847 அளவில் எடுக்கப்பட்டது)

Page 7
10
கிறிஸ்தவமதத் தொடர்பில்லாதவர்கள் மிஷன் வைத்தியர்களை நாடுவதுங் குறைவாகவே இருந்த காலம் அது. எனவே, புதிய மேனாட்டு வைத்தியரான கிறீனிடம் சென்று சிகிச்சை பெற நோயாளிகள் ஆர்வங் காட்டவில்லை.
இரண்டு வாரங்களுள் நிலைமை மாறும் சம்பவம் ஒன்று நடந்தது. மூத்த தம்பி என்ற பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் கடுஞ் சுகயினமுற்றிருந்தார். தமது வயிற்றுள் ஏற்பட்ட வலியினால் வேதனைப்பட்ட அவர் மரணத்துடன் போராடினார். அவருக்கு வைத்தியஞ் செய்த சுதேச வைத்தியர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, கிறீன் வைத்தியரிடஞ் செல்வதா இல்லையாவென உறவினர் ஆலோசித்தனர். இறுதியில், கிறீன் வைத்தியரிடஞ் சிகிச்சைக்குச் செல்வதென முடிவு செய்தனர்.
கிறீன் வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டார். அறுவைச் சிகிச்சை செய்தல் அவசியமெனக் கூறினார். உறவினரும் நோயாளியுஞ் சற்றுச் சிந்தித்தபின் அதற்கு உடன்பட்டனர்.
அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. நோயாளி குணமடைந்தார். வைத்தியரின் புகழ் பரவியது.
டாக்டர் இ. வைத்தியலிங்கம் என்னும் பழைய மாணவன், கிறீன் காலமான பின்பு, பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு கீறினின் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறுவைச் சிகிச்சையின் பின்னணி பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:
"1847ஆம் ஆண்டிலே மிகச் சில ஆங்கில வைத்தியர்களே இருந்தனர். யாழ்ப்பாணத் தமிழர்களும் மேனாட்டு வைத்திய முறை பற்றி அறிந்திருக்கவில்லை. தமது சுதேச வைத்தியர்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தவர் எதுவும் பேசத் துணிய மாட்டார்கள். எனவே, இந்தப் புதிய வைத்தியர் (கீறீன்) மக்கள் அறியாமையைப் போக்கி மனப்பாங்கைச் சாதகமாக்க வேண்டிய தேவை இருந்தது. தமிழ் சமஸ்கிருத அறிஞரும் மிஷன் ஊழியருக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியிருமாகிய திரு. முத்ததம்பி (எனது மாமனார்) பல நாட்களாகச் சுரங்கண்டு வேதனையுற்றார். எனது தகப்பனாரே வைத்தியஞ் செய்தார். அவர் நோயினின்றுத்தப்புவார் என்ற நம்பிக்கை அற்றநிலை. மற்றைய சுதேச வைத்தியர்களும் கைவிட்ட நிலையில், டாக்டர் கிறினை அழைத்து ஆலோசனை கேட்போமென எனது தந்தையாருக்குக் கூறினேன். பலத்த ஆலோசனையின் பின் டாக்டர் கிறீனை அழைக்கச் சம்மதித்தனர். அறுவைச் சிகிச்சை அவசியமென அவர் கூறினார். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. புகழ் பரவியது! அன்று முதல், டாக்டர் கிறீன் பூரீகடவுள் அவதாரமென எண்ணி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் அன்னாரை நாடினர்.
கிறீனிடம் வைத்தியங்கற்று, பின்பு குடியேற்ற நாட்டு அறுவை வைத்தியராகப் பணியாற்றிய டாக்டரின் புகழுரை இது!

11
முதன் முதலாகச் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவெய்தியதுடன் கிறீன் வைத்தியரின் பெயரும் புகழும் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றும் பரவியது. அவரை நாடி வந்த நோயாளர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், அவரது அன்றாட வேலைப் பழுவும் தொடர்ந்து அதிகரித்தது.
IDTøfzzLIII ufé LGBBS/62ILDæ6ør
1848 பெப்பிரவரியிலே, வட்டுக்கோட்டையிலிருந்து மானிப்பாய்க்கு மிஷன் மருத்துவசேவை இடம் பெயர்ந்தது. மிஷன் நிர்வாகிகளின் முடிவால், கிறீனின் மருத்துவ சேவை மானிப்பாயில் தொடர்ந்தது. வட்டுக்கோட்டை செமினரியில் பல்வேறு சேவைகளும் நிகழ்ந்தபடியால் இப்பெயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். கிறீனின் மருத்துவ சேவைக்குப் போதிய இடவசதி தேவைப்பட்டதும் இன்னொரு காரணமாக இருக்கலாம். எக்காரணத்தால் அப்பெயர்வு நிகழ்ந்ததெனினும் இற்றைவரை மிஷனின் மருத்துவசேவையின் மையமாக விளங்குவதுமானிப்பாயே!
கிறீன் வைத்தியருக்கு அன்றிருந்த பொறுப்புக்கள் மூன்று வகை. [1 !ዘÍ 60Í6∂O6)!:
1. நாளும் அதிகரித்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்தல்.
2. முன்பு டாக்டர் ஸ்கடர் பயிற்றுவித்து, பல்வேறு அமரிக்க மிஷன் வைத்திய நிலையங்களிலும் கடமையாற்றிய வைத்திய உதவியாளரை மேற்பார்வை செய்து வழிப்படுத்துதல்.
3. மேனாட்டு வைத்தியக் கல்வியைச் சுதேசிகளுக்கு பயிற்றுதல்
வேண்டுமென்ற மிஷன் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.
இம்மூன்று பொறுப்புக் களையும் அவர் மனப்பூர்வமாக ஏற்று. மற்றையோர் வியப்புறும் வகையில் நிறைவேற்றினார்.
சுதேசிகளுக்கு மருத்துவக் கல்வி
சுதேசிகளுக்கு மேனாட்டு வைத்தியக் கல்வியை கற்பித்தல் வேண்டுமென்பது மிஷனின் நோக்கங்களுள் ஒன்று. அதை நடைமுறைப் படுத்துவதில் கிறின் வைத்தியர் பெரும்பங்கேற்று அயராது உழைத்தார்.
சுதேசிகளுக்கு வைத்தியங் கற்பிக்கத் தொடங்கிய போது, முதலில் இரு மாணவர்களும் சில மாதங்களுள் இன்னுமொரு மாணவனும் சேர்ந்தனர். எனவே, 1848 முதல் 1850 வரை வைத்தியங் கற்றுகிறீன் வைத்தியரின் ஆரம்ப வகுப்பில் பயின்ற "வைத்தியர்கள் மூவர்.

Page 8
, (EagT6); "GIT LII (ii. (Surig (Joshua Danfaith) .ே ஜே. டெனிசன் (1. Dei;(n)
3. ஜே. வைத்திலிங்கம் (J. Wailingam)
இவர்களுள், ஜே டான்ஃபோர்த் (J.DInfrth) பின்பு கிரீன் வைத்தியர் தமிழில் வைத்திய நூல்களை மொழிபெயர்த்து வெளியிட உதவியவர் (.. DIrth என்ற ஆங்கில பெயர் ப. டன்னதர் என அக்காலத்தில் தமிழாக்கப்பட்டதை, அவர் மொழி பெயர்த்து அச்சிட்ட "இரண வைத்தியம்" என்ற நூல் மூலம் ஆறிய முடிகிறது)
இந்த ஆரம்ப வகுப்புக்குக் கற்பிப்பதன் மூலம் கிறீன் வைத்தியர் வைத்தியக் கல்விக்கான பாடத் திட்டமொன்றையும் வகுத்தார். எனவே, முறையான பாடத்திட்டத்துடன் ஆரம்பித்து நடாத்தியவதுப்பு 1851 - 1853ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதெனக் கூறலாம். அந்த வகுப்பில் கற்ற ஐந்து ாணவருடன் ய. டன்னிதரையும் சேர்த்து எடுத்த புகைப்படம் பல செய்திகளை நமக்குத் தருகின்றது. அவற்றை எல்லாம் படத்தைப் பார்த்தே கிரகித்துக் [ảl'I:"T#ĩlặTTạlỵTử.
பித்தினை பொறுப்புக்கள் இருந்தும் கிறின் வைத்தியர் தமது இலக்குத் தரைவில்லை. அதாவது, தமிழ் கற்றுப்பாண்டித்தியம் பெறும் நோக்கத்தைக் கைவிடவில்லை. ஆதற்கும் இரு வழிகளைக் கையாண்டார் :
1. தம்மிடம் வந்த நோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம்.
வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும் பயின்றார்.
2. ஆசிரியர் ஒருரிைடம் முறைப்படி கிரயமாகத் தமிழ் கற்றுத் தேர்ச்சி
பெற்றார்.
இத்தகைய விடாமுயற்சியால், இலங்கைக்கு வந்து எட்டு மாதங்களுள் தமிழை இதுவாகப் பேசுந் திறமை எய்தினார்.
தமிழ்மொழியில் தேர்ச்சி பெறுவதில் முன்னேற்றங் கண்ட கிரீனின் மனதில் இன்னோர் ஆசை. அது தமிழர்களுக்கு மேனாட்டு வைத்தியத்தை தமிழ்மொழி மூலம் கற்பித்தல் 1 ஆம். அன்றைய சமுதாயத்துக்குத் தேவையானதும் அதுவே என்று நம்பினார். ஆர்வத்துடன் செயற்படம்ை எண்ணினார். ஆயினும் அதற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்ய வேண்டுமே!
அக் காலத்தில் விவிலிய நூல் தமிழாக்கப்பட்டு விட்டது. அத் தமிழாக்கத்துக்கு என்ன பிரச்சினை இருந்ததோ, அதே பிரச்சினை தான் தம்மை எதிர்நோக்குனே எண்ணினார். "புதிய கருத்துக்கவை' எடுத்துக்கறைக் காடிய சொற்கள்" இதுனே பிரச்சினை, அதைச் சிறிதுசிறிது, முயன்று ைேற்றி கானாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது (அம்முர்சி

||4H :C) *Ĥogueof [pɛɔyʊ sɔ oopeudox!ẤdueltopejẤųıɛdeuex|
UsaeðLTH I는七子仁日記)」 「N|3|||W. 'S
LIEāuỊsepự[edçi:JLepesielu opyẢI|idoosťA
|possicoslon Ros@@@ơi șofi) șişeğiş s-ışı-ı

Page 9
14
பற்றிய விவரம் "தமிழில் விஞ்ஞானம்" என்ற அத்தியாயத்தில் உள்ளது). ஆயினும், மேனாட்டு வைத்தியத்தை முதலிலே ஆங்கிலத்தில் கற்பித்து வெற்றிகாண எண்ணினார்.
1850ஆம் ஆண்டிலே கிறீனுக்கு உற்சாகமூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. குடியேற்றநாட்டரசின் வடமாநில அதிகாரி மேனாட்டு வைத்தியக் கல்விக்குத் தமது ஆதரவை வழங்கியதே அந்தச் சம்பவம். இந்த உற்சாகம், ஓர் எதிர்காலத்திட்டமாக மனக் கண்ணிற்பட்டது.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளும், ஆறு மாணவர்களைப் பயிற்றினால்? ஆம்.
கடவுள் எனக்கு ஆயுட் பலந்தரின், காலப் போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியங் கற்ற சுதேசிகளால் நிரப்பிவிடுவேன்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் முற்பட்டார். 1851ஆம் ஆண்டிலேயே தமது பணியை முறைப்படி ஆரம்பித்தார் எனக் கூறப்பட்டது. கிறித்தவ சமயத்தளத்தில் நின்று வைத்திய சேவை செய்த கிறீன், கசடறக் கற்று அதன் பின் கற்றதற்கு முரணில்லா வகையில் ஒழுகிய பெருமகன் அன்றோ.
1848இற்கும் 1873 இற்கும் இடைப்பட்ட காலத்திலே கிறீனிடம் மருத்துவங் கற்றுத் தேறிய யாழ்ப்பாணத் தமிழரின் முழுப் யெர் விபரமும் வருமாறு: (சிலரின் பெயர்கள் மாற்றப்பட்டு, பழைய பெயர்கள் தரப்படவில்லை எனினும் பின்னாட்களில் பெயர் மாற்றப்பட்டவரின் பழைய பெயரும் தரப்பட்டுள்ளன. 1875இலே மருத்துவம் பயிலத் தொடங்கியவர்கள் கல்வியை நிறைவு செய்யுமுன் கிறீன் இந்நாட்டை விட்டுச் சென்றார்.)
Class of 1848 - 50
Joshua Danforth J. Dennison J. Waittilingam.
Class of 1851 - 53
J. Town N. Parker C. Mead A. C. Hall S. Miller
Class of 1853 - S6
T. Hopkins G. M. Reid C. McIntyre A. Mcfarland.
Class of 856 - 59
J.H. Bailey A. Blanchard J. P. Harward F. Latimer
J. Wilson J. Ropes J. Fluid D. P. Mann

Class of 1861 - 64
Karthekasar
Ethenayakam
Swaminathar
Kanakadattinam
Vitthilingam
S. Navaratnam
A. Appapilly
J. B. Shaw
alias
6 &
&
&
M. Hitchcock
C. T. MIS
S. W. Nathanicl
L. S. Strong D. W. Chapman Sivappirakasam
William Paul
L. Spaulding
15
Class of 1864 - 67. (The First in the Tamil Medium)
K. Elyapillay
A. Sivasidambaram
Samuel david
S. Mandalam
CaSS of 1867 - 70
A. Appapillay
S. Saravanamut thu
S. Kandavanam
Visuvanathan
Class of 1871 - 73
J. Amerasingar
V. Cartheravaloa
S. Sinnathamby
K. Vaithilingam
Class of 1872 - 75
A. A merasingam
C. Kumaravaloo
V. Sellappah
M. Nannithamby
S. Ponnambalam
N. Mutatamby
Kandapper
V. Sittambalam
Danie verrivalo
Samuel H. Murugesu
A. Appackutty V. Senivasagam
Edward Lovell
S. Vinasi thamby
S. Arunasclaim
V. Sathasivan Bates
S. Sinniah
K. Weliopilly
R. Ambalam
Richard S. Adams
N. l. Joshua
V. Ponna mbalam
Mtu tiyah S. Ropes
V. Verrea wanam
S. Sittambalam
S. Sinnappu R. S. Welopilly
Arumugam
S. Saminather
V. Vannitumby
M. Ramalingam
S. Saravanamuttu
K. Thilliampalam
T. Kanaggasaphy
Benjamin Lawrence
N. Thammimutthu
K, Ponnambaiam
Abraham V. NitS
Joshua K Pereatamby

Page 10
16
தமிழில் கற்பித்தல் பற்றிய எண்ணம்
மேனாட்டு வைத்தியங் கற்றவர்களுக்கு நமது சமுதாயத்தில் இன்றுள்ள மதிப்புந் தேவையும் யாவருமறிந்ததேயாம். எனவே, கிறீன் வைத்தியர் நமது நாட்டுக்கு வந்த காலத்திலே, நிலைமை எப்படி இருந்திருக்குமென்பதைக் கற்பனை செய்தல் இலகுவாகும். சுயநல வேட்கையும் பண ஆசையுமின்றிச் சேவையுள்ளங் கொண்டவர். ஆகையாற்றான், அன்று நமது நாட்டுக்கு வந்து பணிபுரிந்தார். இலங்கையிற் சேவை செய்வதற்கு வரத் தீர்மானித்தவுடனேயே, தமிழ் மொழியைக் கற்கவும் ஆரம்பித்து விட்டார். தாம் எந்த மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்ய எண்ணினாரோ, அந்த மக்களின் மொழியை ஏலவே அறிந்து கொள்ளல் வேண்டும் என்பது அவர் கொள்கை.
அக்காலத்திலே, இலங்கைக்கு வந்து சமய சேவை செய்து தாயகந் திரும்பிய பலர், தமிழ்ச் செல்வத்தையுந் தம்முடன் கொண்டு சென்றனர். அதனால், அமெரிக்காவிலிருந்த காலத்திலேயே கிறீன் வைத்தியர் தமிழ் மொழியை ஒரளவு கற்க முடிந்தது. ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மன். பிரெஞ்சு. கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர் கிறீன் வைத்தியர். அதனால், தமிழ்மொழியையுங் கற்றுத் தேர்ச்சி பெற்றதிற் புதுமையில்லை. ஆனால், தமிழில் நல்ல திறமை பெற்ற பின் அவர் மனதிலே ஓர் ஆசை எழுந்தது என முன்பு குறிப்பிட்டேன். மேனாட்டு வைத்தியத்தைத் தமிழில் வழங்கினால் அது நன்மை பயக்கும் அல்லவா? அம் முயற்சியை மேற்கொண்டால் ..!
தமிழ்மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்த கிறீன் வைத்தியர். தமிழ் மொழியையும் அறிந்திருந்தபடியால், மக்களின் வாழ்க்கை முறைகளையும் இன்ப துன்பங்களையும் விளங்கிக் கொள்ள முடிந்தது. மக்களின் உள்ளத்தையும், அவர்தங் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்ட்து. பரம்பரை பரம்பரையாகக் கையளிக்கப்பட்டு வந்த சுதேச வைத்திய முறையைக் கைவிடத் தயங்கிய மக்களையே அன்னார் ஈழத்திற் கண்டார். மேனாட்டு வைத்தியத்துடன் ஒப்பிடும்போது, அநாகரிகமாகவும் நோயாளரை வேதனைப்படுத்துவதாகவும் அமைந்த சில முறைகளை நீக்கிவிடுதல் அவசியமெனக் கிறீன் வைத்தியர் கருதினார். சுதேச வைத்தியமொன்றே பரவியிருந்த சமுதாயத்தில், உண்மையறிவை வளர்ப்பதற்கு மேனாட்டில் வளர்ந்த விஞ்ஞானமும் வைத்தியமுந் தமிழிற் பரவ வேண்டுமென்று நம்பினார். இந்த எண்ணத்துடன் தமிழில் வைத்திய விஞ்ஞானங் கற்பிக்கும் முயற்சி ஆரம்பமாகியது.
தமிழில் மேனாட்டு மருத்துவங் கற்பிப்பதென்றால், எண்ணிய மாத்திரத்தே வகுப்பறையில் நடைமுறைப்படுத்த இயலுமா? இல்லை. நூல்கள் வேண்டும். அதுவும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவி எழுதப்பட ல் வேண்டும். அதற்கு ஏற்ற கலைச் சொற்கள் வேண்டும். இதை எல்லாம் கிரீன் மிகக்

17
கவனமாகவும் தீர்க்கதரிசனத்துடனும் திட்டமிட்டார். 1850இலே, இம் முயற்சியை ஆரம்பித்த அவர், தமது மனதைத் திறந்து இவ்வாறு கூறினார்:
நான் மேற்கொண்டுள்ள இம் முயற்சியானது. தமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அத்திவாரமாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகின்றேன்.
இவ்வண்ணம் ஆசைகொண்ட வைத்தியர், தம்மிடம் வைத்தியங் கற்றவர்களுள் திறமை மிக்கவர்களையெல்லாம் விசேட பணிக்கமர்த்திச் செயலில் ஈடுபடச் செய்தார். ஆங்கிலத்தில் அவர்கள் கற்ற விடயங்களைத் தமிழில் எழுதுமாறு பணித்துத் தாமுந் தமது தமிழறிவுக்கெட்டிய அளவிலே தமிழில் விடயங்களை எழுதினார். பின், அவர்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளுடன் தமது தமிழ்ப் பிரதிகளை ஒப்பிட்டுச் சரிபார்த்தார். இத்தகைய பரிசோதனைகள் மூலம், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழிற் பிழையின்றித் தர அத்திவாரமிட்டார்.
முதன்முதலில் மொழிபெயர்ப்புக்கென எடுத்த நூல். டாக்டர் கல்வின் கற்றர் இயற்றிய அங்காதிபாதம் ஆகும். இம் முயற்சி 1851ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மொழிபெயர்ப்பதற்கு ஆரம்பித்த காலை, அமெரிக்காவிலிருந்த தமது சகோதரிக்குக் கிறீன் வைத்தியர் மேல்வருமாறு கடிதம் எழுதினார்:
இவ்வேலை மிகவுங் கடினமானதும் நாட்டக் கூடியதுமாகுமாயினும் மிக்க கவர்ச்சியுடையதுமாகும். இதனாற் பெறும் பலாபலனிலே, இப்போது செலவிடுஞ் சத்திக்கு ஏற்ற பிரதியுபகாரத்தையும் நாம் அனுபவித்தல் கூடும்.
இந்த நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பை ஆறுமாத காலத்திலே நிறைவேற்றினார். கிறீன் வைத்தியர். மொழிபெயர்ப்பு முடிந்ததும், வைத்தியர் அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு ஈடேயில்லை. 1852ஆம் ஆண்டு அந்நூல் அச்சுக்குத் தயாராகவிருந்த போது, தமது சகோதரிக்குப் பின்வருமாறு எழுதினார்:
எனது ஆறுமாத கால முயற்சியில் நான் இரு பலன்களைப் பெற்றுவிட்டேன். நல்லதோர் விடயத்தைத் தமிழிற் சேர்த்ததொரு பலன். தமிழில் எழுதும் அனுபவம் பெற்றது இரண்டாவது பலன். இவ்விடயத்திற்குறிப்பாக எமக்கிருந்த ஆர்வத்தாலே, மிகவும் அக்கறையுடன் எனது பணியைக் கவனித்தேன். குறிக்கோளின்றித் தமிழைக் கற்பதிலும் பார்க்க ஒரு நோக்கத்துடனே கவனாகத் தமிழை அணுகி நல்ல அநுபவம் பெற்றுள்ளேன்.
இக் குறிப்பும் எமக்கு நல்லதோர் பாடமாக அமைகிறது. புதிய துறையொன்றிலே பூரணத்துவம் பெறல் வேண்டுமாயின் முயன்று ஒர் சாதனையை நிலைநாட்டி அநுபவம் பெறல் அவசியமாகும். நீரின் வெளியே

Page 11
18
நின்று நீந்தக் கற்றலென்பது முயற்கொம்பாகும். பஞ்சணையிலிருந்தவாறு ஆக்க முயற்சிகளுக்குப்பாதகமான கருத்துக்களைக் கூறுவது தர்மமாகாது; பயன்தரு செயலுமாகாது. தமிழில் விஞ்ஞானங் கற்பிப்பதற்கு வல்லுநர் எங்கே? புத்தகம் எங்கே? இது முடியுமா? என்றெல்லாம் ஐயப்பாடுகளை எழுப்புதல், ஆக்க வேலைக்கு ஆதரவு தரும் பணியன்று. எண்ணித் துணிந்து திடசித்தத்துடன் முன்னேற்றப் பாதையிலே அடியெடுத்து வைத்தால் ஆற்றலும் வெற்றியுந் தாமாகவே வந்து சேரும்.
எந்த ஒரு இலட்சியத்தை எய்துவதற்கும் முதலிலே திட்டமும் முயற்சியும் வேண்டும். திட்டம் அமைத்துத் திடமனதுடன் அதற்கமையப் பணிபுரிதல் வேண்டும். அவ்வண்ணம் பணிபுரியும் வேளை, நமது முன்னேற்றத்தையும் விருத்தியையும் நாமே காலத்துக்குக் காலம் மட்டிடல் இயலும். எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய இடையூறுகள், தேவைகள் குறுக்கிடுமென அநுபவத்தால் உணர்ந்து தீர்க்க தரிசனத்துடன் செயலாற்றல் கூடும். முதன் முயற்சியும் அதனாற் பெறும் அநுபவமும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வித்திட்டு முன்னேற்றத்துக்குப்பாதை வகுக்கும்.
1852ஆம் ஆண்டிலே அச்சுக்குத் தயாராகவிருந்த கிறீன் வைத்தியரின் அங்காதிபாதம், விரைவில் அச்சுவாகனம் ஏற்றப்பட்டது. அந்நூலிற் பல பிரதிகள் அனுப்புமாறு தென்னிந்தியாவிலுள்ள திருநெல்வேலியிலிருந்து வேண்டுகோளொன்று வந்தது. இதனால், கிறீன் வைத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
தமது சேவை அயல்நாட்டுத் தமிழரிடையேயும் பரவுதலைக் கண்டு பெருமிதமடைந்தார். தக்க சமயத்திலேயே தாம் தமிழில் விஞ்ஞானம் பரப்ப முயலுவதாகவும், தாம் வாழ்ந்த சமுதாயத்துக்கு அத்தகைய சேவை தேவையென்பதும் உறுதி செய்யப்பட்டதாகக் கிறீன் வைத்தியர் கருதினார். எனவே, காலத்தினாற் செய்த சேவையென்றே தமது சேவையைக் கருதி முழு நேரத்தையுங் க்வனத்தையும் இத்துறையிற் செலுத்தினார். அதனால், 1855ம் ஆண்டிலேயே தம் மாணவருக்குத் தமிழ்மொழி மூலம் மேனாட்டு வைத்தியங் கற்பிக்க ஆரம்பித்தார். அது பரீட்சார்த்த முயற்சி என்பதை வலியுறுத்துதல் வேண்டும்.'
அன்றைய தேசாதிபதியின் கருத்தும் கிறீனின் Dബ്ബുബ്രക്രിff)
பணிசெய்தல் என் கடமை என்ற உணர்வுடன் செயலாற்றிய கிறீன் வைத்தியர், பல குணங்களாலும் நிறைந்து விளங்கினார் என்பதற்கு அன்னாரின் வாழ்க்கையிலே நிகழ்ந்த சம்பவங்கள் சான்று பகர்கின்றன. எடுத்த கருமத்தைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காக எத்துணை மனத் துணிவுடனும் ஆர்வத்துடனுஞ் செயலாற்றினார் என்பதை ஈண்டு ஆராய்வோம்.

19
வைத்தியக் கல்வியைத் தமிழ்மொழிமூலங்கற்பிக்க ஆரம்பித்தவுடன், தமிழிலே பல நூல்கள் வெளியிட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இடைக்காலத் தேவையை நிறைவேற்றுவதற்கு, ஆங்கில நூல்களிற் படித்த விடயங்களைத் தமிழிற் குறிப்பெழுதி, ஓர் அடி முன்னேறினார். வைத்தியக் கல்விக்குத் தேவையான கலைச்சொல் அகராதி ஒன்றும், ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றுந் தயாரித்தார். தொடர்ந்து, வைத்தியக் கல்விக்கு வேண்டிய நூற்றொகுதிகள் முழுவதையுந் தமிழில் மொழிபெயர்ப்பதற்குத் திட்டந் தயாரித்தார்.
இத்துணை ஆர்வத்துடனும் முன்யோசனையுடனும் படிப்படியாக முன்னேறத் திட்டமிட்ட வைத்தியர், அங்காதிபாத நூலின் திருத்திய பதிப்பொன்றை, 1856ஆம் ஆண்டிலே வெளியிட எண்ணினார்.
அதிக பக்கங்களும் பல படங்களுங் கொண்ட இந்நூலை அரசாங்கச் செலவில் அச்சிடுவதற்கு நிதியுதவி கோரி இலங்கைத் தேசாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினார்.
மாதங்கள் பல சென்றும் பதில் கிடைக்கவில்லை. பதில் வரத் தாமதமேற்பட்டதால், எத்தகைய பதில் வருமெனவுங் கிறீன் வைத்தியர் எதிர்பார்த்தார். எனவே, அன்று சென்னையில் நற்பதவியிலிருந்த திரு. ஹன்ற் என்பவர் வாயிலாக அந்நூலைச் சென்னையிலேயே அச்சிடுவித்தார். சென்னையிலிருந்த தென்னிந்தியக் கிறித்துவப்பாடசாலைப்புத்தகச் சங்கம், மூவாயிரம் பிரதிகளைப் பணங்கொடுத்து வாங்கி உதவியது. அமரிக்க - இலங்கை மிசன், ஆயிரம் பிரதிகளை வாங்கியது. அதனாற் கைம்மாறற்ற சேவைக்குத் தேவையான பண உதவி கிட்டியது.
இதற்கிடையில், தேசாதிபதியின் பதிலும் வந்தது. "அமெரிக்க மிசன் நடைமுறையிற் கொண்டிருக்கும் ஆங்கிலந் தவிர்க்குங் கொள்கை, பேராபத்தானதுந் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்” என்று தேசாதிபதி எழுதி, தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
குடியேற்ற நாட்டரசினர். இத்தகைய கருத்துக் கொண்டிருந்தமை அவர்களைப் பொறுத்தளவில் முற்றும் நியாயமானதென்றே கூறல் வேண்டும். மக்கள் கல்வியறிவு பெற்று அறிவுடையோராகி விட்டால், அடிமைகளாக வாழ்வதற்கு இணங்க மாட்டார்கள். அடிமைத் தளையை அறுத்தெறியவே முயல்வர். ஆதலால், மக்களுக்கு அறிவொளியேற்றும் பணி, அவ்வரசின் தற்கொலையாக முடியும் என்பதுண்மையே. மக்களை அடிமைகளாக வைத்து, குடியேற்ற நாட்டிலிருந்து தமது ஆதிக்கஞ் செலுத்துவதற்கு எண்ணிய அன்றைய அரசு, பிறிதொரு கருத்தைக் கொள்ளுமென நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்து பிறவிப் பயனைப் பெறல் வேண்டுமென்ற பொதுநலன் விரும்பிகளன்றோ மக்களுக்காகப் பணியாற்ற விழைவர்.

Page 12
20
நமது நாட்டிலே கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்கு வந்த மிசன் ஊழியரான கிறீன் வைத்தியர், அரசாங்க உதவியோ நல்லாசியோ கிட்டாத போதிலுந் தமது தமிழ்த் தொண்டை விட்டுவிடவில்லை. 1856ஆம் ஆண்டிலே, பிரசவ வைத்திய நூலொன்றை" எழுதி முடித்து. மானிப்பாயில் இருந்த மிசன் அச்சகத்தில் அச்சிடக் கொடுத்தார். இந்நூல், 1857ஆம் ஆண்டிலே தயாராகியது. அந்நாட்களில் தமிழில் வெளியிடப்பட்ட மேனாட்டு வைத்திய நூல்களைச் சுதேச வைத்தியர் சிலர் ஆவலுடன் படித்ததை அறிந்து, கிறின் வைத்தியர் மேலும் உற்சாகம் அடைந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலே பத்தாண்டு சேவை முடிவுற்றதால், கிறீன் வைத்தியர் தாயகந்திரும்புங் காலம் வந்தது. மேல்நாட்டிலே வளர்ந்த வைத்திய முறையைத் தமிழிலே வேரூன்ற வைப்பதற்கு நல்லதோர் அத்திவாரமிட விரும்பிய கிறீன் வைத்தியர், இவ் வைத்திய முறையை நன்கு பயின்று பயிற்சி பெற்ற தமிழ் வைத்தியர்களை உருவாக்குவதற்கு ஆசைப்பட்டாராயினும், இந்த இலட்சியத்தை நிறைவேற்றுமுன் 1857ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதந் தாயகந்திரும்பினார்.
தமிழ்மக்களையும், தமிழ்நாட்டையும் விட்டுச் சென்றபோதிலும், கிறீன் வைத்தியரின் இலட்சியம் மாற்றமடையவில்லை. தமிழார்வங் குன்றவில்லை. மேனாட்டிலே விருத்தியடைந்தது போன்று, தமிழ்மொழியிலும் விஞ்ஞானம் விருத்தியடைதல் வேண்டுமெனத் தொடர்ந்தும் உழைத்தார். விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற வைத்தியர், தமது நாட்டிலிருந்துந் தமிழ்த் தொண்டாற்றும் பணியைக் கைவிடவில்லை.
தாயகத்தில் இருந்தபோது, சிறந்த வைத்திய விஞ்ஞான நூல்களைத் தெரிவுசெய்து, தமிழில் மொழிபெயர்க்கும் ஒழுங்குகளை மேற்கொண்டார். புதிய நூல்களையெல்லாம் படித்துத் தமிழில் எழுதி வெளியிட முயன்றார். தமிழில் நூல்களை வெளியிடத் தேவையான நிதியையும் அந் நாட்டிலேயே சேர்ப்பதற்கு முற்பட்டார். அதற்காகப் பல சுற்றுநிருபங்களைத் தயாரித்துப் பொது நிறுவனங்களுக்குந் தனிப் பிரமுகர்களுக்கும் அனுப்பி நிதியுதவி கோரினார். "தவறான வைத்திய முறையை நீக்கி நல்லதோர் உறுதியான வைத்திய முறையை நிலைநாட்டுவதும் இலட்சாதிலட்சம் தமிழ் மக்களுள்ளே நல்ல வைத்திய அறிவைப் பரப்புவதுமே”தமது நிதானமான நோக்கமெனத் தம் அமெரிக்க மக்களுக்கு அறிவித்து, அவர்தம் ஆதரவை வேண்டி நின்றார். தாம் தமிழ்மொழியில் வெளியிடக் கருதிய நூல்கள் தரங் குன்றாத நவீன அறிவைப் பரப்புதல் வேண்டுமென விரும்பி. 1858ஆம் 1859ஆம் ஆண்டுகளிலே புதிய வைத்திய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கெனத் தெரிவு செய்து, நியூயோர்க்கில் இருக்கும் பொழுதே அந்நூல் உரிமையாளரின் உத்தரவையும் பெற்றுக்கொண்டார். மேலும், அந் நூல்களுக்குத் தேவையான படங்கள். பட அச்சுகள் ஆகியனவற்றையும் அவர்களிடம் பெற்றுக் கொண்டார்.

2
விருமுறையின் பின் யாழ் வருகை
நெஞ்சில் நிறைந்த இலட்சியத்துடன் ஐந்து ஆண்டுகாலம் விடுமுறையைக் கழித்த கிறீன் வைத்தியர், 1862ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் மீண்டும் தம் பாரியாருடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சி மேலும் வலுவடைந்தது. அவ்வேளையிலே தென்னிந்தியாவில், மலையாள மொழியில் அங்காதிபாத நூல் ஒன்றை வெளியிடுவதற்குக் கிறின் வைத்தியரின் தமிழ்மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொள்ள அனுமதி வேண்டிக் கடிதம் ஒன்று வந்தது. இவ் வேண்டுகோள் வந்ததும், தமது முயற்சி அயல்நாட்டு அறிஞரின் அங்கீகாரத்தைப் பெறுகிறதென மன நிறைவு அடைந்தார்.
இவ்வண்ணம் பெயரும் புகழும் பரவத் தொண்டு செய்த கிறின் வைத்தியருக்கு 1863ஆம் ஆண்டிலே பொறுப்பு அதிகரித்தது. இராணுவ வைத்தியரிடமிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைப் பொறுப்பை ஏற்குமாறு அரசினர் அழைப்பு அனுப்பினர். அதை ஏற்பதா மறுப்பதா என முதலிலே சற்றுத் தயங்கினார். கிறீன் வைத்தியர். மூன்றுமாத காலம் பரீட்சித்துப் பார்ப்பதற்கு உடன்பட்டு, பின் தொடர்ந்து அச் சேவையையும் மேற்கொண்டார்.
அரசாங்க வைத்தியசாலைப் பொறுப்பு. தமது புத்தகத் தயாரிப்பு வேலையைப் பாதிப்பதை விரைவிலே கிறின் வைத்தியர் உணர்ந்தார். வேலை அதிகமாக இருந்தபடியால், ஒய்வுநேரமே கிடைப்பது அரிதாகவிருந்தது. பலதரப்பட்ட வேலைகளையும் வைத்தியசாலையிற் கவனிக்கும் அதே வேளையில், வைத்தியங் கற்பிப்பதும் தமிழில் நூல்கள் வெளியிடுவதுந் தடையின்றிச் செவ்வனே நடைபெறல் வேண்டுமெனவும் மனப்பூர்வமாக விரும்பினார். எனவே, தம்மிடம் வைத்தியங் கற்றுச் சிறந்த பயிற்சியும் பெற்ற சிலரின் உதவியுடன், நூல் வெளியிடும் பணியை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டார்.
இந்த நோக்கத்துடன், தம்மிடம் படித்தவர்களை அழைத்து. "வைத்தியங் கற்றுப் பட்டம் பெற்றுள்ள சிலர் பொதுநலன் கருதிச் சிறந்த வைத்திய நூல்களைத் தமிழில் எழுதித் தயாரித்து வெளியிடுவதற்கு முன் வந்து உழைப்பரென நான் எதிர்பார்க்கிறேன்" என்று தமது ஆசையை வெளியிட்டார்.
கிரீன் வைத்தியரின் இந்த ஆசையை நிறைவேற்றச் சிலர் Kd te; dH.N[ .V. Vt l} ;VdçitH>aoa2.47.22// a2.762/725/26 616ërgji) நூலையும், ப. டன்வதர் என்பவர். இரண வைத்த7// என்னும் நூலையும் எழுத ஒப்புக்கொண்டதால். கிறின் வைத்தியர் ஒரளவு ஆறுதல் பெற்றார்.
கிறீன் வைத்தியரின் சான்றாண்மையைத் தெளிவாக்குவதற்கு இன்னும் இரண்டொரு உதாரணங்களை எடுத்துக் காட்டுவது நலமென எண்ணுகிறேன். மக்கள் நல்லறிவு பெற்று விருத்தியடைந்து நாகரிகமுற வேண்டுமெனப்

Page 13
22
பாடுபட்டுழைத்த வைத்தியர், கருத்து முன்னேற்றத்தையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார். கருவிகளின் முன்னேற்றத்தால் உண்மை வளர்ச்சி பெறல் இயலாது. அது வளர்ச்சியுமல்ல என்பதை அன்னார் தெளிவாக எடுத்துக் கூறிய சந்தர்ப்பங்களும் உள.
மேனாட்டவரின் வருகையின் பின், நமது நாட்டவரின் நடையுடை பாவனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஈண்டு விபரித்தல் தேவையில்லை. தேசிய உணர்வு அற்றவர்களாகவும் நடையுடை பாவனைகளில் மேனாட்டவரைப் பின்பற்றுபவர்களாகவும் நின்ற தமிழரைக் கண்டு. 1864ஆம் ஆண்டிலே, கிறீன் வைத்தியர் யாது கருதினார் என்பதை இன்றைய சமுதாயமும் அறிதல் நன்று:
வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாற்றமடைகின்றன எனவே நான் எண்ணுகிறேன். கிறித்துவர்களாகாமல் தேசியத்தை இழப்பவர்களையே நான் காண்கின்றேன். ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களைவிடக் கிறித்துவ இந்துக்களையே நான் காண ஆசைப்படுகிறேன்.”
ஆம்! கிறித்துவராதல் என்பது தேசியத்தை இழத்தல் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறிய கிறீன் வைத்தியர், கருவிகளின் முன்னேற்றம் அல்லது மாற்றம், வெறும் போலி என்பதையுந் தேவையற்றது என்பதையும் உணர்த்தினார். தேசியத்தை இழக்காமலே உள்ளத்தாற் கிறித்தவராதல் வேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தினார்.
அது மாத்திரமல்ல, தமிழில் மேனாட்டு வைத்தியங்கற்பிப்பதன் மூலம் விஞ்ஞானந் தரும் நன்மையை எல்லா மக்களும் அனுபவிக்கக் கூடிய நிலையை உருவாக்குவதற்கும் வைத்தியர் விரும்பினார்.
"நோயாளியைப் பார்ப்பதற்கு அழைப்பு வரும் பொழுது, குதிரையும் வண்டியும் .
எதிர்பாராமல், அதிகம் பணத்தை நினையாமல், தேசிய உடையுடனே கால்நடையாகச் சென்று சேவை செய்வதற்கு உடன்படும் வைத்தியர்களை உருவாக்கலாமென நான் எதிர்பார்க்கிறேன்."
எனவே, மக்களின் நல் வாழ்விலும் ஓவாப்பிணியை ஒட்டுவதிலுமே கிறீன் வைத்தியர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். சமயத் துறையிலே ஈடுபட்டு உழைத்த இப்பெரியார், "உன்னைப் போல உன் அயலானையும் நேசிப்பாயாக" என்ற கிறித்துவ இலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ்ந்து, கிறித்துவத்தைப் பின்பற்றுதலே உண்மைக் கிறித்துவம் என்பதை உணர்த்தினார்.
தமது சான்றாண்மையால், கிறீன் வைத்தியர் தமது உதவியாளருடன் எழுதி மொழிபெயர்த்து அச்சிட்ட நூல்கள் தான் எத்தனை!

23
1. கல்வின் கற்றரின் "அங்காதிபாதம்,
சுகரணவாதம், உற்பாலனம்" [ ሀdb.204 1852, 1857
2. யோன்சயின் "பிரச வைத்தியம்" ዚJdb.258 1857
3. துருவதரின "இரண வைத்தியம்" Jđäb. 504 1867
4. கிரேயின் "அங்காதிபாதம்" ዚ jdb.838 1872
5. கூப்பரின் "வைத்தியாகரம்" Jib. 917 1872
6. வெல்சின் "கெமிஸ்தம்" Ludis. 516 875
7. டால்தனின் "மனுஷ சுகரணம்” Jd. 590 1883
8. வாநிங்கின் "சிகிச்சா வாகடம்" t.d5. 574 1884
9. Pharmacopoeia of India Lð. 574 888
10. மனுஷ சுகரண கலைச்சொற்கள் Ludö. 134 1872
11. அருஞ் சொல்லகராதி LJá5. 171 875
இவற்றைவிட கண், காது. கை, கால், தோல், வாய். உடல் சுத்தமாய் இரு வாந்திபேதி கால உதவிக் குறிப்புக்கள் முதலிய சிறு கைந் நூல்களும் சிறு வெளியீடுகளும் 110 பக்கங்கள்.
தமிழில் மருத்துவக் கல்வி
தமிழ்மொழி மூலம் மருத்துவக் கல்வியை நடைமுறைப்படுத்துதற்கு 1864 இலேயே துணிவுடன் அடி எடுத்து வைத்தார். அப்பொழுது தமது மாணாக்கர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என்பதையும் அவதானித்தார். ஆங்கிலமொழி மூலம் கற்றவர்கள் அன்று அரச சேவையிலே ஈடுபட்டு, பல்வேறு வசதிகளும் பெற்றனர். அந்த வாய்ப்பு. தமிழில் படிப்போருக்கு கிடையாது என அவர்கள் தயங்கினர். கிறீன் என்ன செய்தார்?
எல்லோரையும் பத்துநாள் விடுமுறையில் அனுப்பினார். "விடுமுறை காலத்தில்.நன்கு சிந்தித்துப் பாருங்கள். தமிழில் படிக்க விரும்பினால், திரும்பி வாருங்கள். இன்றேல், வேறு தொழிலைத் தேடுங்கள் இது அவரின் உறுதியான முடிவு. ஆம். தாம் பயிற்றுவிக்கும் வைத்தியர்கள், கிராமங்களிலே வாழ்ந்து. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவரது இலட்சியம்.
1864ஆம் ஆண்டிலே தமிழ் மூலம் மேனாட்டு வைத்தியங் கற்பித்தார். கிறீன் வைத்தியர் என முன்பே குறிப்பிட்டேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தமிழ் வகுப்பிற் படித்துத் தேர்ச்சி அடைந்த

Page 14
24
வைத்தியர்கள் பதின்மர். கே. இளையபிள்ளை, எஸ். சிற்றம்பலம், வி. சிற்றம்பலம், எஸ்.டேவிட், டானியல் வெற்றிவேலு, கந்தப்பர், ஏ. சிவசிதம்பரம், எஸ். சின்னப்பு, எஸ். முருகேசு, ஆர். எஸ். வேலுப்பிள்ளை ஆகியோரே அவர்கள். கிறீன் வைத்தியர், யாழ்ப்பாணத்திலே மேனாட்டு வைத்தியங் கற்பித்த அறுபத்திரண்டு பேர்களுள் முப்பத்துமூன்று பேருக்குத் தமிழ்மொழி மூலங் கற்பித்தாரென்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஒருவன் தெரிந்து எடுத்துக்கொண்ட உதவியாளருடனே செய்யத் தகுந்த வினையை ஆராய்ந்து, பின்னர் தானும் எண்ணிச் செய்து முடிக்கும் வல்லமையிருந்தால், எய்துதற்கரிய எதுவுமிலது. கிறீன் வைத்தியர் தமது உதவியாளருடன் கூடித் தமிழில் வெளியிட எண்ணிய நூல்கள் யாவை என 1864ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அங்காதிபாதம், கெமஸ்தம், மனுஷ சுகரணம், இரண வைத்தியம், வைத்தியம், கைத்திய கைவாகடம், வைத்தியாகரம், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் நோய்கள், கலைச் சொற்கள் ஆகிய நூல்களே அவை வைத்திய வகுப்புகள் நடாத்துவதோடு இந் நூல்களையும் அச்சிட முன்கூட்டியே திட்டமிட்ட அன்னார், எண்ணியபடியே அவற்றை அச்சிட்டு முடித்தார்.
"நான் எங்கே தொண்டு செய்தல் வேண்டுமென ஆண்டவன் எண்ணுகிறானோ, அங்கேயே நான் உள்ளேன் என்பதைக் கண்டு சாந்தியடைகிறேன்" என்ற ஆத்மீக உணர்வுடன் செயல் புரிந்தவர், கிறீன் வைத்தியர். இந்த இலட்சியவாதியின் பண்புகளைக் கண்டு, அவற்றாற் கவரப்பட்டதனால், தமிழில் அறிவியல் வளர்க்குங் கொள்கையை எதிர்த்த குடியேற்றநாட்டரசுகூடப்பிற்காலத்திலே அன்னாரின் உதவியை நாடியது.
கிறீன் வைத்தியர் இந்நாட்டிற் சேவை ஆற்றிய காலத்திலேதான். வாந்தி பேதி நோய் பெரும்பலி எடுத்தது. அதைத் தடுக்கும் பொருட்டு, பல துண்டுப் பிரசுரங்களை அவர் வெளியிட்டு, மக்கள் சுகாதார அறிவு பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுத்தார். இக்கொடிய நோயைத் தடுப்பதற்குக் கிறீன் வைத்தியர் ஆற்றிய பணியைப் புகழ்ந்து இலங்கை ஒப்சேவர்' பத்திரிகை அன்னாரை வாழ்த்தியது. தமிழில் வைத்தியநூல் வெளியிடுவதற்குப் பண உதவி அளித்தல் தற்கொலையாகும் என முன்பு கூறிய அரசாங்கங் கூட, கிறீன் வைத்தியரை நாடியது. அரசாங்கம் வெளியிடுவதற்கு எண்ணிய பிரசுரங்களைத் தமிழிலே எழுதுவதற்கும் பிரசுரஞ் செய்வதற்கும் கிறீன் வைத்தியரின் உதவியைநாடினார் தேசாதிபதி 1870ஆம் ஆண்டிலே, கிழக்கு மாகாண அரசாங்க அதிபராக விருந்த திரு. மொறிஸ் என்பவர், கிறீன் வைத்தியரின் நூல்களை அரசாங்கம் வாங்கி மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார்.

25
மேலும், 1873ஆம் ஆண்டிலே குடியேற்ற நாட்டரசின் வைத்தியரான டாக்டர் லூஸ் என்பவர். கிறீன் வைத்தியரின் சேவையைப் பாராட்டி எழுதுகையில், நீங்கள் இந்நாட்டை விட்டுச் சென்றபின்பும், "வைத்தியஞ் சம்பந்தமாகத் தமிழில் நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் உங்கள் நினைவுச் சின்னங்களாக விளங்கும். இந்நாட்டவர் உங்களை விரைவில் மறந்துவிட முடியாது" என்று குறிப்பிட்டார்.
கிறீன் வைத்தியரின் மகத்தான சேவையை அரசினர் உண்மையிலே உணர்ந்துகொண்டனர் என்பதை இது உறுதிப்படுத்துகின்றதல்லவா?
எனவே, வினைக்கண் திண்மை உடையவரான கிறீன் வைத்தியர், தாம் எண்ணியதை எண்ணியவாறே முடித்தார். அது மாத்திரமல்ல, குடியேற்ற நாட்டரசினரின் மனக் கண்ணையுந் திறந்து உண்மையொளியை ஏற்றிய பெருந்தகையும் ஆகினார்.
கலைச்செ7ல்ல7க்கம்
கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு ஆகியன பற்றி கிறீன் மிக அருமையான கருத்துகளை முன்வைத்தார்.
தமிழில் வைத்தியங் கற்பித்தல் வேண்டுமென எண்ணங் கொண்டவுடன், 1850ஆம் ஆண்டிலேயே கலைச் சொற்றொகுதியை அமைப்பதற்கு ஆரம்பித்தார் கிறீன் வைத்தியர். அவ்வேளையிலே, "அநேகஞ் சொற்கள் இப்பொழுதே தமிழில் உள்ளன. அவை அருமையான வைத்தியச் சொற்களாகும்” என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்." ஆயினும், தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் புதிய சொற்களை ஆக்கும் பணியிலும் ஈடுபடல் அவசியமாகியது. எனவே, கலைச் சொல்லாக்க விதிகளை அமைத்துப் புதிய சொற்களை ஆக்கினார். அன்றாடப் பிரயோகத்தில் இருந்த தமிழ்ச் சொற்களுள் மிகவும் பொருத்தமாகவுஞ் சுருக்கமாகவுங் காணப்பட்டன. வற்றுக்கு முதலிடங் கொடுக்கப்பட்டது." பின், தமிழ்ச் சொற்களிலிருந்து பொருத்தமான சொற்கள் சிறு மாற்றங்களுடன் அமைக்கப்பட்டன. ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பின், அவற்றுள் ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
தமிழில் இருந்து தேவையான சொல்லைப் பெற முடியாதாயின், உச்சரிப்பையும் ஒலியையும் பேணி ஆங்கிலச் சொல்லிலிருந்து முதனிலையைத் தெரிவு செய்து தமிழ் மரபுக்கு ஏற்றதாக விகுதி அமைக் கப்பட்டது. அஃதும் இயலாவிடத்து சமஸ்கிருதத்திலிருந்து தேவையான சொல் அமைக்கப்பட்டது.

Page 15
26
"அரும் பதங்களுள் சில செந்தமிழ்ச் சொற்கள். சில சமஸ்கிருதச் சொற்கள். அநேகம் தமிழ் எழுத்தில் சமைத்த இங்கிலிஷ் சொற்களாயிருக்கும். பதம் ஒவ்வொன்றும் தனித்தனி ஆராய்ந்து சேர்க்கப்பட்டது. ஆயினும், தாய் நூலிலே உள்ள இங்கிலிஷ் சொல்லை தமிழில் எழுதும்போதெல்லாம் அது குறளவும் அதற்குரிய ஓசை கெடாமல் ஏற்ற கோலங் கொள்ளவும் தக்கதாய் இயற்றி இருக்கும்'
என்பது வைத்தியரின் விளக்கம்.
இப்படியாக, திட்டமான விதிகளை அமைத்ததோடு நிற்கவில்லை. இந்திய நாட்டுத் தமிழரின் கருத்தை அறியவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடான கலைச் சொற்களைத் தமிழ்பேசும் மக்களிடையே பரப்பவும் ஆவல் கொண்டார் வைத்தியர். "ஒரே கலைச்சொற்களைப் பிரயோகிப்பதற்கு எல்லோருஞ் சம்மதிக்க முடியுமானால், அது குறித்துத் தாம் மகிழ்ச்சியும் ஊக்கமும் பெறக் காரணமுண்டு" எனத் திருவாங்கூரில் அன்றிருந்த டாக்டர் லோ என்னும் அறிஞருக்கு 1865ஆம் ஆண்டிலேயே எழுதினார். இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரல்லாத கிறீன் வைத்தியர் இத் துணை தீர்க்க தரிசனத்துடன் பணியாற்றியுள்ளாரே, அவரின் அடிச்சுவட்டை யாம் ஏன் தொடரவில்லை? இற்றைவரை கலைச்சொல் ஒருமைப்பாட்டை நாம் காணமுடியவில்லையே!
67 LIDITALÁDLILILINížinyzib -Saóəfizr6ó 35 Liégzb
இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் விஞ்ஞானந் தரும் பணியில் ஈடுபட்ட எமது கிறீன் வைத்தியர், மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறிய கருத்துகள் இங்கு நினைவூட்டற்குரியவை. இன்று. மொழிபெயர்ப்பிற் காணப்படும் பல வழுக்களை நீக்கவும் அன்னாரின் கருத்துகள் பாதை வகுக்கின்றன.*
வயலொன்றின் ஊடாக நாம் செல்லும் வேளையிலே, மேற்பார்வை செய்து நடந்து செல்லல் கூடும். உழுது செல்லுதலுங் கூடுமல்லவா? மொழிபெயர்ப்பின் போது தேவைப்படும் மாற்றங்களைக் கவனித்தால், மொழிபெயர்ப்பானது வயலினுடாக"மேற்பார்வை செய்து நடந்து செல்வதல்ல, உழுது செல்லல்"ஆகும் என்பது கிறீன் வைத்திரின் கருத்து.'
ஆம் எழுத்துக்கு எழுத்தும் சொல்லுக்குச் சொல்லுமாக வாக்கியங்களை மொழிபெயர்த்தல் உண்மையிலே சித்திரவதையாகும். 2.யிரை எடுத்து, ஊன உடலை நடமாட விடுவதாகும். மொழிபெயர்ப்பிலே, கருத்துத்தான் முக்கியம். மூல நூலாசிரியன் கூறும் பொருளை உள்ளது உள்ளவாறு உயிருடன் தருவதே உண்மை மொழிபெயர்ப்பாம். மூலநூலை மேலெழுந்தவாரியாகப் பார்த்து உயிர்ப் பொருளைக் காணல் முடியாது. துருவி ஆராய்ந்து, உண்மையை உணரல் வேண்டும். பின், அவ்வுண்மையைத் தமிழில்

27
எழுதுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு என்றால் என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வயலை உழுது செல்வதை உவமை கூறுதல், எத்துணை அழகாகவும் ஆழமாகவும் அமைகிறதெனக் காணலாம். கிறித்துவ வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்திலிருந்த வேதாகம சங்கம் 1840ஆம் ஆண்டில் ஈடுபட்டிருந்த போது, சென்னை வேதாகம சங்கத்தினர் விதித்த பிரமாணங்கள் பல. அவற்றுள் ஒன்று, "ஆங்கில மொழிபெயர்ப்பின் கருத்து மாத்திரமின்றி, வசன அமைப்பு, சொல்லடுக்கு. குறியீடுகள் எல்லாம் முற்று முழுதாகப் பாதுகாக்கப்படல் வேண்டும்" என்பதாகும்." உண்மையில், இத்தகையதோர் மொழிபெயர்ப்பு எத்துணை அலங்கோலமாகவும் அபத்தமாகவும் அமையும் என்பது வெளிப்படை, முதனூலைக் கருத்துப் பிறழாமல், யதார்த்தமாக மொழிபெயர்த்தல் வேண்டுமெனினும், குறியீடுகளும் வசன அமைப்பும் பிறவும் அப்படியே அமைதல் வேண்டும் என்பது மொழிபெயர்ப்பு ஆகாது. கருத்துப் பரிமாறும் பணியுமாகாது. ஆயின். இக்காலத்திலும் மொழிபெயர்ப்புப் பற்றி அத்தகையதோர் மனப்பான்மை இருக்கிறதா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. முன்பு கூறிய உதாரணங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டுகின்றன.
தமிழில் வைத்திய நூல்களை மொழிபெயர்க்கும் பணியில் கிறீன் வைத்தியர் ஈடுபட்டிருந்த காலத்திலே, "வைத்திய கைவாகடம்" என்னும் நூலை.ஜே. ஏ. எவட்ஸ் என்பவர் மொழிபெயர்ப்பதற்கு முன்வந்தார் என முன்பு குறிப்பிடப்பட்டதல்லவா? 1870ஆம் ஆண்டிலே மொழிபெயர்ப்பு முடிவுற்றதும். கிறீன் வைத்தியர் அதைப் பார்வையிட்டார். அம்மொழிபெயர்ப்பை ஏற்க விரும்பாமல் அதற்குரிய காரணத்தையுங் கூறினார் :
டாக்டர் எவட் சின் மொழிபெயர்ப்பு, ஆங்கிலச் சொற்களை இலக்கணத் தமிழிலே எடுத்துக் கூறுகிறது. ஆனால், ஆங்குள்ள பொருளே நமக்குத் தேவையாகும். அவரின் மொழிபெயர்ப்பின் மூலம் நாம் ஆங்கிலேயனைக் காணமுடிகின்றது. உண்மையில், மொழிபெயர்ப்பின் மூலம் நாம் தமிழனையே காணல் வேண்டும்."
ஆமாம். விஞ்ஞான நூல்களை மொழிபெயர்க்கும் நோக்கமே, விஞ்ஞான அறிவைப் பரப்புதல் ஆகும். மேனாட்டு நூலொன்றை மொழிபெயர்க்கும் போது. அதிற் கூறப்படும் பொருள் நமது நாட்டினருக்கு விளங்கக் கூடியதாகவும். நமது சூழலுக்கு ஏற்றதாகவும் எழுதுதல் வேண்டும். உவமைகளும் எடுத்துக் காட்டுகளும் நமது நாட்டுக்கும் மக்களுக்கும் பரிச்சயமானவையாக அமைதல் வேண்டும். அதுவே பயன்தரு மொழிபெயர்ப்பாம்.

Page 16
28
மொழிபெயர்க்கும் ஒருவருக்கு மூன்றுதகைமைகள் அவசியம் தேவை:
* மூல மொழியில் தேர்ந்த அறிவு.
* தமிழ் மொழியில் நல்ல புலமை.
* மூல நூற்பொருள் பற்றிய தெளிந்த அறிவு.
இத்தகைமைகள் இல்லாதோர் செய்த மொழி பெயர்ப்புகளின் பாதிப்பால் பலதசாப்தங்களாக நமது இனம் சமுதாயம் அவஸ்தைப்பட்டதை அறிந்தவர்கள் நாம். அதை விபரித்தல் இங்கு தேவை இல்லை.
விஞ்ஞான மொழி சில கருத்துகளையும் எண்ணங்களையும்
பிழையின்றி எடுத்துக்கூறல் வேண்டும். கருத்துக் குழப்பமின்றித் தெளிவாகவுஞ் சுருக்கமாகவும் அமைதல் வேண்டும். இலக்கியத்தில் இடம்பெற்றுச் சுவை நல்கும் அணிகளும் சிலேடைகளும் விஞ்ஞானத் தமிழில் இடம்பெற மாட்டா. சொல்ல எடுத்ததை அப்படியே கூட்டிக் குறைக்காமல் எடுத்து விளக்குதல் விஞ்ஞானத் தமிழின் தேவை. எனவே, விஞ்ஞானத் தமிழ் இலக்கியத் தமிழிலிருந்து வேறுபட்டது.
விஞ்ஞானத் துறையிலே சிறப்பான பல சொற்களுஞ் சொற்றொடர்களும் உள. இவை ஒவ்வொன்றும் குறித்த ஒரு பொருளைக் குறித்தல் அவசியமாகும். ஊருக்கூர், பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பொருள் திரிதல் தகாது. "மண்வாசனையால் வேறுபட முடியாது. தேவையற்ற சொற்பெருக்கு விஞ்ஞானத் தமிழுக்கு முரணானது. ஆயின், இன்றெல்லாம் சில விஞ்ஞானச் சொற்றொடர்களைத் தமிழாக்குவதில் நம்மவர் பெரும் இடர்ப்பாட்டுக்கு ஆளாகுகிறார்கள். "விஞ்ஞானத் தமிழ்” என்ற தனியான துறைக்கென மொழிமரபு ஒன்று வகுத்து நிலைபெறச் செய்யாதவரை இந்தப் பிரச்சினை திரக்கூடிய தல்ல.
இலக்கியத்துறையில் வளர்ந்துள்ள தமிழ், விஞ்ஞான உலகின் தேவையை முற்றாகப்பூர்த்தி செய்ய முடியவில்லை. கருத்துகள் வரும் வாயில் விரிவடைய விஞ்ஞானத்துறை தமிழிற் புகுந்து கொள்கிறது. பல சொற்றொடர்கள் வழக்கில் வரும்போது, தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சியில் உற்ற இடையூறுகள் நாள்தோறுந் தீர்க்கப்படும். புதிய மரபுநிலை நிறுத்தப்பட்டதும், கருத்தை எடுத்துக் கூறுவதில் ஒருமைப்பாடு தோன்றும். ஆக, காலப்போக்கிலே விஞ்ஞானத் தமிழ் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு, விஞ்ஞானக் கருத்துகளை எடுத்துச் சொல்லுஞ் சிறந்த சாதனமாகத் தமிழ்மொழி மலர்ந்து கமழும்.

29
கிறீனரின் அழச்சுவரு
சாமுவேல் பி. கிறீன் வைத்தியர் தமிழில் அறிவியற்கலை வளர்த்த காலமும், அன்றைய சமுதாயமும், அரசியற் சூழலும் எத்தகையன என்பதை ஆராய்ந்து அதன் மத்தியிலே கிறீன் வைத்தியர் பரப்பிய கருத்துகளும் எடுத்த முயற்சிகளும் எத்தகையன என்பதை அறியும் போதுதான் அன்னாரின் பெருமை, தியாக சிந்தை, அந்தரங்கத் தூய்மை எல்லாம் பொங்கிப் பொலிகின்றன. பெருகி இரட்டிக்கின்றன.
கிறீன் வைத்தியர் அமெரிக்கநாட்டவர். ஆனால், வைத்திய கலாநிதி பட்டம் பெற்ற பின்பு, இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டிற் பணிபுரிய மனமுவந்து வந்தார்.
அவர் தமிழரல்லர். ஆயின், தமிழைப் படித்து, அறிவியற் கலைகளையுந் தமிழிற் பரப்ப வேண்டுமெனப் பேரார்வங் கொண்டுழைத்தவர்.
புத்தம்புதிய கலைகளும், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களும் ஆங்கில மொழியறிவுடையோர்க்குமே அன்று எளிதிற் கிட்டவில்லை.
அந்தச் சமுதாயத்திற்றான். மேல்நாட்டு வைத்தியக் கலையைத் தமிழ்மூலம் போதித்த நல்லறிஞர்களை இந்நாட்டிலும் உருவாக்குவதற்கு 2. எாங் கொண்டுழைத்தார்.
அறிவியற் கலைகளையெல்லாந்தமிழில் "சொல்லவுங் கூடுவதில்லை" என்று எண்ணிய காலத்துக்கும் அரை நூற்றாண்டு முந்திய காலம், கிறீன் வைத்தியர் இத்துறையில் ஆரம்ப முயற்சி எடுத்து அடி வைத்த காலம். அன்று. விஞ்ஞான நூல்கள் தமிழிலே இல்லை. கலைச் சொற்றொகுதி இல்லை. பணங் கொடுத்து மொழிபெயர்ப்பித்து அச்சுவாகனமேற்றும் அரசு இல்லை. எனினுங் கலைச் சொற்களை அமைத்தார். உறுதியான விதிகளை அமைத்துப் புதிய பதங்களை உற்பத்தி செய்தார். தாமே நூல்களை மொழிபெயர்த்தும், மற்றோர் மொழிபெயர்ப்புகளைப் பார்வையிட்டுத் திருத்தியும் பதிப்பித்தார் என்றால் அன்னாரின் சிந்தை எத்துணை நிறைவுபெற்றது என்பது தெளிவன்றோ !
அன்றைய குடியேற்றநாட்டரசு அன்னாரின் ஆக்க வேலைகளுக்கும். அருமையான சேவைக்கும், நிதானமான கொள்கைக்கும் ஆதரவு சிறிதும் அளிக்கவில்லை. மாறாக, அறிவியற் கலைகளைத் தமிழிற் பரப்புதலும், கற்பித்தலும் "ஆபத்தானது. தற்கொலைக்கு ஒப்பானது" என்றுகூடக் கூறி உதவி செய்ய மறுத்தது.
அதுமட்டுமல்ல. கிறீனின் மாணவர்களே தமிழில் மேனாட்டு வைத்தியக் கல்வியால் பயனுண்டா எனவுஞ் சற்றுச் சலனமடைந்தனர்.

Page 17
30,
"எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறி தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரச சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். அது உண்மை. ஆனால், வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே எதிர்கால நோக்கமாகும். எனவே, பத்துநாட்கள் ஓய்வு கொடுத்து. வைத்தியக் கல்வியைத் தொடர்வார்களா அன்றேல் வேறு தொழிலைநாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்.
இத்தகைய சூழலிலேதான், கிறீன் வைத்தியர் தமதுள்ளத்திற் கொண்ட உயர்ந்த கருத்தை நிலைநாட்ட உறுதி பூண்டுழைத்தார். போலிப் பெயரும் புகழுந் தேடவோ, பணமும் பதவியுங் கருதியோ வாழ்வை வீணாக்காத படியாற்றான் அன்னாரை ஒரு பெரு மகனாக நாம் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
கிறீன் வைத்தியர் நமது நாட்டிற் சேவை செய்த காலத்திற் பிரயாண வசதிகள், மக்களிடையே தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் எல்லாம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை நாம் கற்பனை செய்வது கடினமாகாது. இருந்துங் கூட. கடலும் அலையும், காலமுந் தூரமும் அன்னாரின் அறிவுச்சுடரை மறைக்கவில்லை. தமிழ்நாட்டிலும் அன்னாரின் சேவை மதிக்கப்பட்டது. "தமிழில் விஞ்ஞானம்" பற்றிய விடயங்களிலே இறுதி முடிவு கூறுந் தகுதி வாய்ந்த அதிகாரியாகவும், வல்லுநராகவும் கிறீன் வைத்தியர் மதிக்கப்பட்டார் - தமிழ் நாட்டினராலுங்கூட!
தமிழில் விஞ்ஞானந் தந்த பிதாவென அவர் பாராட்டப்பட்டார். அவசியந் தேவையான ஒரு துறையிலே காலெடுத்து வைத்துத் துணிந்து பணியாற்றிப்புதுப்பாதை வகுத்த முன்னோடியெனக் கெளரவிக்கப்பட்டார். -
அன்னாரின் கைபட்டு மலர்ந்த நூல்களே. அருஞ்சேவையின் நினைவுச் சின்னங்களாக வாழுமென்று அறிஞர் வாழ்த்தினார்.
இவை எல்லாம் முற்றும் உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. அதனாலேதான் அன்னாரின் சேவைகளை, 150 ஆண்டுகளின் பின்பும் நினைவு படுத்தினோம்.
இன்றைய சந்ததியும் நாளைய சந்ததியும் அப் பெருமகனின் "காலத்தினாற் செய்த நன்றியை மறவாது, நினைவுபடுத்துதல் வேண்டும்.
மானிப்பாய் மருத்துவமனையின் 150 ஆவது ஆண்டில், கிறீனின் தபால் தலை" வெளியீடு பலருடைய மனக்கண்ணைத் திறந்தது. தமிழ்ச் சான்றோர் வரிசையில் கிறீனும் இடம்பெற்று வாழ்கிறார்.
மானிப்பாய் கிறீனின் கருத்துகள் காலத்தாற் சாகாதவை. காலத்தின் கோரத்தால் ஏலத்தில் போகாதவை. என்றும் எமக்கு கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டும். மருத்துவத் தமிழ் முன்னோடி மானிப்பாய் கிறீன்.

3
அமெரிக்காவிலே பிறந்து வைத்தியக் கல்வியை முடித்த கிறின் வைத்தியர் தமது வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. 1847ஆம் ஆண்டு தமது 25ஆவது வயதாரம்பத்தில் யாழ்ப்பாணத்திற் சேவையை ஆரம்பித்தார். அவரது பிறப்பு முதல் இறப்பு வரையான காலக் குறிப்பு இதுவாகும்.
1822 ஒற்றோபர் மாதம் 10ஆம் திகதி - பிறப்பு
1847 - 1857 : யாழ்ப்பாணத்தில் வைத்தியம், வைத்தியக் கல்வி, தமிழில்
விஞ்ஞானம் தரும் முயற்சிகள்.
1858 - 1862 : ஐந்தாண்டு காலம் அமெரிக்காவில். உடனலக் குறைவால்
சற்றுச் சலனமுற்றும் தமிழில் மேனாட்டு வைத்தியம் பரப்புவதற்கு வேண்டிய முயற்சிகளில் ஈடுபடத் தவறவில்லை.
1863 - 1872 : இரண்டாவது முறையாக யாழ்ப்பாணம் வந்து தாம் முன்பு ஆரம்பித்த "தமிழில் விஞ்ஞானம்" தரும் முயற்சியைத் தொடர்ந்தார்.
1873 - 1883 : அமெரிக்கா திரும்பியும், அங்கும் தமிழ் நூல்களைத் திருத்தியும் பார்விைட்டும் அச்சு வாகனமேற்ற வழிப்படுத்தினார்.
884 : மே மாதம் 28ஆம் திகதி இறைடி எய்தினார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது முறையாக 1862இல் வரும்போது திருமணமாகி வந்த அவருக்கு நான்கு பிள்ளைகள் யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்தனர். யாழ்ப்பாணத்தை விட்டுக் கப்பலில் செல்லும் போது நாம் எல்லோரும் இப்பயணத்தின் போது உலகை விட்டுச் செல்ல நேர்ந்தால், எமது சொத்தெல்லாம் யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவபீடம் ஒன்றமைக்க வழங்கப்படுவதாக" என்று பெருமனத்துடன் உணர்ச்சி ததும்ப எழுதினார். அன்னாரின் சான்றாண்மை காலத்தால் அழியும் சால்புடைத்தன்று. அது மட்டுமா? நாடு திரும்பி நோய்வாய்ப்பட்டிருந்த கடைசிக் காலத்தில். தமது நினைவுக்கல் எப்படி அமைதல் வேண்டுமெனவும் எழுதி வைத்தார்.

Page 18
32
எனக்கு ஓர் நினைவுக்கல்நாட்டப்படின் அது எளியதாக அமையட்டும். அதிலே பின்வரும் விபரம் பொறிக்கப்படட்டும்.
SAMUEL FISK GREEN
1822 - 188.
MEDICAL EVANGALIST TO THE TAMILS
Jesus my All
ஆம். நினைவுக் கல்லிலும், தாம் தமிழர்க்காகவும் தமிழில் மேனாட்டு வைத்தியத்தை எழுதிச் சேவை செய்தும் வாழ்ந்த இலட்சிய வாழ்வு பிரதிபலித்தல் வேண்டும் என்ற அவரது பெருமனம். நமது மனதைத் தொடுகின்றதல்லவா?
ஆஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்த நினைவுக்கல் மானிப்பாய் கிறீனின் கதை சொல்லி நிமிர்ந்துநிற்கிறது.
ஈழத்தில் தமிழ் வளர்த்த ADrafŽILITruú alýzíý
மானிப்பாய் கிறீன், கிறிஸ்துமத ஊழியராக யாழ்ப்பாணம் வந்து தமிழ் வளர்த்த சான்றோராவர். ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக பலரை ஈழத்தில் . தமிழ் வளர்த்த சான்றோராக வரிசைப்படுத்தலாம். அவர்கள் எல்லாம் தமிழ் இலக்கிய, இலக்கணத் துறைகளிலே தமது அடிச்சுவடுகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், மானிப்பாய் கிறீன் விஞ்ஞானத் தமிழ் வளர்த்த
முன்னோடியாக தமது தனித்துவ முத்திரை பதித்த அடிச்சுவட்டை விட்டுச்
சென்றுள்ளார்.
கிறிஸ்தவமத ஊழியராகத் தமிழ்நாட்டிலே மக்களிடையே வாழ்ந்து,
தமிழ்த் தொண்டராக விளங்கிய பலரையும் நாம் அறிவோம். அவர்களது
பெயர்கள் இன்றுந் தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டு வாழ்கின்றன.
குற்றை அகற்றி யதிற் கொம்பைச் சுழித்துக் குறைதீர்த்தோன் அற்றம் அறுந்த செயலை

33
இன்றுந் தமிழுலகம் போற்றுகிறது. ஆம். வீரமாமுனிவருக்குத் தமிழுலகில் அழியாய் புகழ் என்றுமே உண்டு. மற்றும் மத குருமாரான போய், சீகன்பால்கு, கால்ட்வெல், இரேனியுஸ், பார்சிவல், வின்ஸ்லோ போன்றோரின் தமிழ்ப் புலமையுந் தொண்டுஞ் சாகாவரம் பெற்றவை.
இப் பெருமக்களின் தமிழ்த் தொண்டுக்கும் கிறீன் வைத்தியரின் தமிழ்த் தொண்டுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இப் பெருமக்கள் எல்லாந் தமிழ் இலக்கிய இலக்கணத் துறைகளிலே நின்று பணியாற்றினர், இலக்கிய - இலக்கண வளர்ச்சிக்கு உழைத்தனர். அகராதிகளை எழுதி அகராதி முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தினர். அன்றைய சமுதாயம் அதை உணர்ந்து, அவர்களுக்குரிய இடத்தைக் கொடுத்துக் கெளரவித்தது.
கிறீன் வைத்தியரோ, தமிழுக்குப் புதிதான விஞ்ஞானத் துறையிலே நின்று பணி புரிந்தார். தமிழில் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தி, அத் துறையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதுவோ தமிழுக்குப் புதியதோர் துறை. அன்று, தமிழ் கற்றவர்களுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் இருக்கவில்லை. விஞ்ஞானம் ஆங்கில மொழியிலேனும் மக்களிடையே பரவியிருக்கவில்லை. எனவே, ஒன்றரை நூற்றாண்டு முன்னதாகவே கிறீன் வைத்தியர் இங்கு வந்து தமிழ்த் தொண்டாற்றினார் என்று கூறுதல் பொருந்தும். ஆக, அன்னாரின் அருமை பெருமைகளை நமது சமுதாயம் அன்று முற்றாக உணரவில்லை.
இன்று காலம் மாறிவிட்டது. இன்றைய சமுதாயம் கிறீன் வைத்தியரின் தீர்க்கதரிசனத்தையுந் திறமான புலமையையும் உரிய அளவு உணரும் வாய்ப்புண்டு. தெரிந்து எடுத்த இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்து முடிப்பவர்கள் எதையும் எய்துதல் சாலும் என்பது பொய்யாமொழி. எனவே, தமிழ் கூறும் நல்லுலகம் கிறீன் வைத்தியருக்கு உரிய கெளரவம் அளிக்கும் என எதிர்பார்ப்போமாக! அன்னாரின் அடிச்சுவடு இன்றைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டித் தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு மேலும் உதவுமென நம்பிக்கை கொள்வோமாக.
ஈழத்தில் தமிழ் வளர்த்த சான்றோர் வரிசையில் மானிப்பாய் கிறீன் முதலிடம் வகிப்பாராக!

Page 19
34
அழக்குறிப்புகள்
Life and Letters of Samuel Fisk Green, M.D., 1891, Complied by Ebenezar Cutler, p. 75.
Anatomy, Physiology and Hygiene by Dr. Calvin Cutler. Life and Letters of Samuel Fisk Green, M.D., p. 86.
Life and Letters .............. p. 114.
Life and Letters ............ p. 75.
Obstetrics
Physician's Vade Mecum.
The science nd Art of Surgery.
Life and Letters .......... , p. 2 ló.
Life and Letters................... p. 74. Aimin to have each term brief, euphonious and apposite in derivation and accounting
as practically Tamil any word in good general use, Seek for the term first in the Tamil thus:-
st Prefer a simple or compound word in common use or, If more appropriate some apt though abstruse word or, - Compound the word by uniting roots or a root and a practicle,
Rardly some apt radical word may be modified by giving it an ordinary terminati On Or, Where there are several words wider though similar in meaning, restrict one to specify the object or, a Translate and join the several members of the English compound word. Finding no term in Tamil transfer the English thus: 1 a. Write the word as a noun, tersely and smoothly, preserve its accent and the
sounds of its radical portion and terminate in ordinary Tamil form. b. Modify it when requisite byd the addition of an adpropriate particle. c. In compounds if there be for any member a good Tamil word combine it with
the English word. If the word cannot be satisfactorily Tamilised seek a term in the Sanskrit thus: * Prefer a term sanctioned by both an English and Sanskrit and a Sanskrit and
English dictionary. s: Should no appropriate term be found, adopt some word expressive of one or
more characteristics of the object to be named or. Compound the word by uniting roots or a root and a practicle. Adopt a word having the same meaning as the original of the English derivative. Where there are several words of wider though similar meaning, restrict one to specify the object. * If there be for any member of the English compound a good Tamil word combine
it with the Sanskrit.

35
13. "The translation requires so much alteration that it amounts to ploughing one's way
rather than a walk of survey over thc field'
Life and Letters .................
14. A Brief Narratine of Jaffna Auxiliary, p. 16.
15. Life and Letters................ p. 295.
உசாத்துணைநூல்கள்
அறிவொளி
கிறீன் ச.பி.
சப்மன், தனெல் வி.
டன்வதர் ய.
பவுல், வில்லியம்
வேங்கடசாமி, மயிலை சீனி -
ტწ.8%ვ.J.
செல்லப்பன், டாக்டர்
கலைச் சொற்கள்
Jones, shanley E.
Culter, Ebenezer
Technical and Scientific Terms
Glossaries of Technical Terms
Scientifically speaking
Van Nostrand's Scientific Encyclopedia
விஞ்ஞான சஞ்சிகை, இலங்கை (1964) அங்காதிபாதம், சுகரணம் உற்பாலணம் (1852)
மனுஷ சுகரணம் (1872)
கெமிஸ்தம் (1875)
வைத்தியம் (1875)
அருஞ்சொற்கள் (1875) மனுஷ அங்காதிபாதம் (1872)
மனுஷ சுகரணம் {1872)
Pharmacopoeia of India (1888)
இரண வைத்தியம் (1867)
வைத்தியாகரம் (1872) கிறித்துவமும் தமிழும் (1943) எப்படி எழுதினேன் (1943)
இராதா கலைச்சொல்லாக்கம் (1985)
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் (1938)
Mahatma Gandhi a Interpretation (1950)
Life and Letters of Samuel Fisk Green (1891)
Government of India (1947)
Dept. of Swabasha Ceylon (1955) Collecting of BBC Scripts (1978)

Page 20


Page 21