கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னூல் காண்டிகையுரை-எழுத்ததிகாரம் - பகுதி 1

Page 1

lap) slidit

Page 2


Page 3

ஆறுமுக நாவலர் : ந ன் னு ல்
காண்டிகையுரை - பகுதி-1
எழுத்ததிகாரம்
பதிப்பாசிரியன் :
புலியூர்க் கேசிகன்
முல்லை நிலையம்
43, புதுத்தெரு, மண்ணடி, சென்னை-1

Page 4
முதற் பதிப்பு இரண்டாம் பதிப்பு
முல்லை
நூற்பெயர்
ஆசிரியர்
பதிப்பித்தவர்
பதிப்புரிமை
தாள்
நூலின் அளவு
பக்கங்கள்
வெளியிடுவோர்
விற்பனை உரிமை
பொருள்
அச்சிட்டோர்
விலை
டிசம்பர் - 1991
: GLA - 1994
21
நன்னூல் காண்டிகையுரை
பவணந்தி முனிவர்
புலியூர்க் கேசிகன் ஆறுமுக நாவலர் பதிப்பினைத் தழுவி அமைத்தது.
முல்லை நிலையம்
10.5 கி.கிராம்
18.5 செ.மீ. X 12.5 செ.மீ.
ž 14 - 6 = 220
முல்லை நிலையம் 43, புதுத்தெரு,
மண்ணடி, சென்னை-1
பாரி நிலையம் 184, பிராட்வே, சென்னை-108
தமிழ்மொழி இலக்கணம்
பூரீ வெங்கடேஸ்வரா அச்சகம்,
7|40, கிழக்குச் செட்டி தெரு, பரங்கிமலை, சென்னை-600 018
es. 32-00

முதற் பதிப்பின் பதிப்புரை எந்தத் துறையானாலும், அந்தத் துறையின் இலக் கணங்களை நன்றாக அறிந்தவர்களே. அந்தத் துறையில் வெற்றியும் புகழும் பெறுவார்கள். இந்த விதியானது மொழித்துறைக்கும் பொருந்தும்.
தமிழ்மொழியைத் திருத்தமாகவும் சிறப்பாகவும் பேசியும், எழுதியும், வாழ்வில் வெற்றிபெற வேண்டு மானால், தமிழ் மொழியின் இலக்கண விதிகளையும் முறையாகக் கற்று அறிந்திருக்க வேண்டும்.
இந்த வகையில் தமிழ் நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மேல்நிலை வகுப்புக்களில் சிறப்புத் தமிழ் பயிலுகின்ற மா ன வ மாணவியர்களுக்கு, அந்த இரண்டாண்டுகளுக்குள் அவர்கள், "நன்னுல்" முழுவதை யும் கற்கவேண்டும் என்று கல்வித் துறையினர் ஏற்படுத்தி யுள்ளார்கள். இது மிகவும் பாராட்டுதற்கு உரியதாகும்.
தமிழ் இலக்கண நூல்களுள் நன்னூல் தமிழ் மொழி யின் இலக்கண விதிகளை மாணவர்களுக்குப் புரியும்படி எளிமையாகவும் இனிமையாகவும் சொல்வதாகும். நன்னூலுக்கு வெளிவந்துள்ள உரைகளுள் காண்டிகை யுரை மிகவும் சிறப்புடையதாகும்.
எனவே, நன்னுாலைக் காண்டிகையுரையுடன் பதிப் பித்து மாணவ மாணவியரின் தமிழிலக்கணக் கல்விக்கு உதவ வேண்டும் என்னும் ஆர்வத்துடன், இந்த நன்னூற் காண்டிகையுரைப் பதிப்பை நாங்கள் வெளியிடுகின்றோம். உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் இதனைச் சரி பார்த்து அச்சிடுவதற்கு உதவினர். மாருதி அச்சகத்தார் நல்ல முறையில் அச்சிட்டுத் தந்தனர். இவர்கட்கு எங்கள் நன்றி உரியதாகும்.
நன்னூலைக் கற்பிக்கும் தமிழாசிரியர் பெருமக்களும், கற்கும் மாணவ மாணவியரும். இப் பதிப்பினை விரும்பி வாங்கிப் பயன்படுத்தி எங்கள் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகின்றோம்.
பதிப்பகத்தார்

Page 5
முனனுரை "ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு" என்று உழவர் பெருமக்களுக்கு அறிவுரை கூறுகின்றது திருக்குறள்.இந்த அறிவுரையானது நம் தாய்மொழியான தமிழ்மொழியின் வளமையைப் பெருக்கிப் பயன்பெறுவ தற்கும் பொருந்தும்.
தமிழ்மொழிப் பயிரைக் கெடுக்கும் களைகளை அகற்றி, அது மேலும் செழிப்பதற்கு ஆவன செய்வதுடன், அதன் நலம் கெடாதபடி காப்பதற்கும் ஆவன செய்ய வேண்டும். தமிழ் மக்களின் முதற்பெருங் கடமை இது வாகும்.
இலக்கண வரம்புகளை வழுவாமல் காத்தால்தான், தமிழ் மொழி, என்றும் எழிலிற் குன்றாது சிறப்பாக விளங்கும். தமிழ் இலக்கண நூல்களுள் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்தவற்றுள் அனைவரும் விருப்புடன் கற்று வந்தது பவணந்தி முனிவரின் நன்னுரல் ஆகும். பவணந்தி முனிவர் சமணச் சான்றோர்; இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள சனநாதபுரம் என்னும் சனகை என்னும் ஊரிற் பிறந்தவர். சீய கங்கன் என்னும் அப்பகுதி
அரசனால் ஆதரிக்கப் பெற்றவர்.
எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் என்னும் ஐந்து இலக்கணங்களுள், முதல் இரண்டுமான எழுத்தையும் சொல்லையும் குறித்த இலக்கணங்களை மட்டுபே இந் நன்னூல் கூறுகின்றது.
இதன் உரைகளுள் மயிலைநாதர் உரை பழைமை யானது. இதனையடுத்துத் திருநெல்வேலிச் சீமையிலுள்ள சேற்றுார்ச் சமத்தானப் பெரும்புலவரான சங்கர நமச்சி வாயரின் விருத்தியுரை வெளிவந்து, பலரின் பாராட்டு தலுக்கும் உரியதாயிற்று.
இதனை அப்படியே வைத்துக் கொண்டு, தாம் கருதிய சில திருத்தங்களையும் மாற்றங்களையும் சேர்த்து மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் தம் விருத்தியுரை யினை வெளியிட்டனர். இதனை மேலும் சிறிது திருத்தி

V
யும், புதிய விளக்கங்களைச் சேர்த்தும் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் (1822-1879) தம்முடைய நன்னுாற் காண்டிகை உரைப்பதிப்பை வெளியிட்டனர். நாவலர் பதிப்புத் தமிழ் அறிஞரால் விரும்பி வரவேற்கப் பெற்ற சிறந்த பதிப்பாகும்.
ஆறுமுக நாவலரின் காண்டிகையுரைப் பதிப்பில் சிற்சில திருத்தங்களை மட்டுமே செய்து, வெளியிடப் பெறுவது இந்தப் புதிய பதிப்பாகும்.
முகவை இராமாநுசக் கவிராயர், விசாகப் பெரு மாளைர், சட்கோப இராமநுசாச்சாரியர் முதலான தமிழ்ப் புலவர்களும், மற்றும் பலரும். இந் நன்னூலுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளனர். ஆங்கில அரசாட்சியில் தோன்றிய கல்விச்சாலைக்களுக்கு உதவியாகவே பெரும் பாலான உரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன.
தமிழின் பெருமையை உலகுக்கு எல்லாம் எடுத்துக் கூறி மகிழ்ந்த ஜி. யு. போப்பையர் அவர்களின் உரைப் பதிப்பு ஒன்றும் கி.பி. 1857ல் வெளிவந்தது. இது ஆங்கில விளக்கங்களையும் கொண்டது.
இவ்வாறு நன்னூலைப் பரப்பும் தமிழ்ப்பெரும் பணி யிலே ஈடுபட்டுப் புகழ்படைத்துள்ள அறுஞ்ர் பெருமக்கள் அனைவரையுமே நினைந்து போற்றுகின்றேன்.
இந்த உரைகட்கெல்லாம் ஆதியான விருத்தியுரை யினைச் செய்துதவிய சங்கரநம்ச்சிவாயருக்கும், என் நன்றியும் வணக்கமும் உரியதாகும்.
முல்லை நிலையத்தார் இந் நூலை வெளியிடுகின்றனர்; மாருதி அச்சகத்தார் அழகாக அச்சிட்டுள்ளனர். இவர் கட்கும் என் நன்றி உரியதாகும்.
இதனைத் தமிழுலகம் விரும்பி வரவேற்கும் என்று நம்புகின்றேன். அன்னை பராபரையின் அருளைப் போற்றி வணங்கி, இதனைத் தமிழ் மாணவருலகுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி காண்கின்றேன்.
அன்பன்,
புலியூர்க் கேசிகன்

Page 6
உள்ளுறை
சிறப்புப் பாயிரம்
பொதுப் பாயிரம்
சிறப்புப் பாயிர இலக்கணம்
எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்
நூற்பா அகரவரிசை
80
33
37
75
106
159
191
209

பரமபதி துணை நன் னு ல் J5 TT GÒT q. 6) Jb5 U 6O UT
சிறப்புப் பாயிரம்
மலர்தலை யுலகின் மல்கிருளகல இலகொளி பரப்பியாவையும் விளக்கும் பரி தியி னொருதா னாகி முதலீ றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் 5 மனவிரு விரிய மாண்பொருண் முழுவதும் そ முனிவற வருளிய மூவறு மொழியுளுங் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் 10 தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி யிருநில முழுவதுங் தனதெனக் கோலித் தன்மத வாரணங் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் 15 திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை வினோதனமரா பரணன் மெழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் 20 பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே.

Page 7
2 நன்னூல்
(இ-ள்.) மலர் தலை உலகின்-பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்ணே; மல்கு இருள் அகல-நிறைந்த கண்ணிருள் கெட இலகு ஒளி பரப்பி - விளங்குங் கிரணத்தை விரித்து; யாவையும் விளக்கும் பரிதியின்" கட்பொறிக்கு விடயமாகிய உருவங்கள் எல்லாவற்றையுங் காட்டும் சூரியனைப் போல; ஒரு தான் ஆகி-உலகங்களுக் கெல்லாந் தானொரு முதலேயாகி; முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த-தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்புமாகிய இவை களினின்றும் இயல்பாகவே நீங்கி நிற்றலினாலே தலை வனாகிய அற்புத மூர்த்தி-ஞானமே திருமேனியாக உடையவன்; தன் அலர்தரு தன்மையின்-தனது மலர்ந்த குணமாகிய கருணையினாலே, மன இருள் இரிய-உயிர் களின் மனத்திருளாகிய அஞ்ஞானங் கெட மாண்பொருள் முழுவதும்-மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளையும்; முனிவுஅற அருளியவிருப்புடன் அருளிச் செய்த மூவறு மொழியுளும்பதினெண் நிலத்து மொழிகளுள்ளும், குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின்-கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியாகுமரியும் மேற்கே குடக நாடும் வடக்கே திருவேங்கடமும் என்று சொல்லப்படும் நான்கு எல்லையினையுடைய நிலத்து மொழியாகிய; இருந்தமிழ்க் கடலுள்-பெரிய தமிழென்னுங் கடலுள்; அரும்பொருள் ஐந்தையும்-அருமையாகிய எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்து பொருளையும்; யாவரும் உணர-இலக்கியப் பயிற்சியில் வலியவரேயன்றி எளியவரும் அறியும் பொருட்டு; தொகை வகை விரியின் தருக என-தொகுத்தும் வகுத்தும் விரித்தும் செய்யப்படும் யாப்பினாலே பாடித் தருக வென; துன்னார் இகல் அற நூறி-பகைவரது பகைமைகெட அவரை அழித்து; இரு நிலம் முழுவதும் தனது எனக் கோலி-பெரிய பூமி முழு வதையும் தன்னுடையதாகப் பற்றிக் கொண்டு; தன் மதவாரணம் திசை தொறும் நிறுவிய திறல் உறு-தன்

சிறப்புப் பாயிரம் 3
மதயானைகளை எட்டுத் திக்கிலும் திக்குயானைகள்போல நிறுத்திய வெற்றி மிகுந்த தொல் சீர்-தொன்று தொட்டு வருங் கீர்த்தியையும், கருங்கழல்-பெருமை பொருந்திய வீரக் கழலையும்; வெண்குடை-வெண்கொற்றக் குடை யையும்; கார் நிகர் வண்கை-மேகம் போலுங்கொடையை யுடைய கையையும்; திருந்திய செங்கோல் - கோடாத செங்கோலையும் உடைய சீய கங்கன்-சிங்கம் போன்ற கங்கன்; அருங்கலை வினோதன்-அருமையாகிய நூல்களை
ஆராய்தலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையவன்; அமர் ஆபரணன்-போர் செய்தலினாலே தன் மேற்படும் பெரிய காயங்களையே ஆபரணமாக உடையவன்; மொழிந்தனன் ஆக-சொன்னானாக;
முன்னோர் நூலின் வழியே-தொல்லாசிரியருடைய இலக்கணநூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்நன்னூல் என்னும் பெயரினாற் செய்தனன், பொன் மதிற் சனகை-பொன் மதிலினாலே சூழப்பட்ட சனகாபுரத் துளிருக்கும் சன்மதி முனி அருள்-சன்மதி முனிவன் பெற்ற; பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னும் நாமத்து-சொல்லு தற்கரிய ஞானவொழுக்கச் சிறப்பையும் பவணந்தி யென்னுங் பெயரையுமுடைய இருந் தவத்தோன்-பெரிய தவத்தினையுடையோன் என்றவாறு.
(வி-ம்) ; சூரியன் தன் கிரணத்தினாலே புறவிருனை அகற்றிக் கட்பொறிக்கு விடயமாகிய உருவங்களை விளக்குதல் போலக், கடவுள் தன் கருணையினாலே அக விருளை அகற்றி அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளையும் விளக்கப்பெற்ற பதினெண் பாடைகளுள்ளும், கிழக்கே கீழ்கடலும் தெற்கே கன்னியா குமரியும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமும் எல்லையாகவுடைய நிலத்து மொழியாகிய தமிழ்ப் பாடை யினுள், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்திலக்கணத்தையும், இலக்கியப் பயிற்சியின் வலியவரே யன்றி எளியவரும் அறியும் பொருட்டுத், தொகுத்தும்

Page 8
4 நன்னூல்
வகுத்தும் விரித்துஞ் செய்யப்படும் யாப்பினாற் செய்து தருக எனச் சீயகங்கன் சொல்லத், தொல்லாசிரியர் நூலின் வழியே; நன்னூல் என்னும் பெயரினாற் செய்தனன் பவணந்தி முனிவன் என்பதாம்.
*1. ஆக்கியோன் பெயர் - பவணந்தி முனிவன்
2. வழி - முன்னோர் நூலின் வழி 3. எல்லை - குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்னும் நான் கெல்லை
4. நூற் பெயர் - நன்னூல் 5. யாப்பு - நிகண்டு கற்று, இலக்கியப் பயிற்சி செய்தபின் இந்நூல் கேட்கத் தக்கது. 6. நுதலிய பொருள் - அரும்பொருள் ஐந்து 7. Gas Gustir - இலக்கியப் பயிற்சி செய்தவர் 8. பயன் - மொழித்திறத்தின்
முட்டறுத்தல் 9. காலம் - சீயகங்கன் காலம்
10. 56.7 lb - சீயகங்கன் சபை
11. காரணம் - சீயகங்கன் சொன்னமையும் யாவரிடத்தும் இரக்கமுடை மையும்
சிறப்புப் பாயிரம் முற்றும்
*பொதுப்பாயிரத்தில் கூறப்படும் சிறப்புப்பாயிரத் திற்குரிய பதினோர் இலக்கணங்களும் இதன்கண் அமைந்துள்ளமை காண்க.

பொதுப்பாயிரம்
பாயிரத்தின் பெயர்கள்
1 முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
(இ-ள்) முகவுரை. பாயிரம் - முகவுரை பதி கம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பன பாயிரத்திற்குப் பெயர்களாம்.
(வி-ம்) பாயிரம் - வரலாறு. முகவுரை - நூற்குமுன் சொல்லப்படுவது நூன்முகம் என்பதும் அது. பதிகம் - ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருளையுந் தொகுத்துச் சொல்வது. அணிந்துரை - நூலினது பெருமை முதலியன விளங்க அலங்கரித்துச் சொல்வது; புனைந்துரை என்பதும் அது. புறவுரை - நூல் சொல்லிய பொருளல்லாதவைகளைச் சொல்வது. தந் துரை - நூலிலே சொல்லப்பட்ட பொருளல்லாதவைகளை
அதற்குத் தந்து சொல்வது. 1
w பாயிர வகை
2. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.
(இ-ள்) பாயிரம் பொதுச் சிறப்பு என இருபாற்று= பாயிரமானது பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் என இரு வகையினை யுடைத்து. ஏகாரம் - ஈற்றசை. 2
பொதுப்பாயிரம் இன்னது என்பது
3. நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்.
(இ-ள்) நூல் (திறன்) - நூலினது வரலாறும்; நுவல் வோன் (திறன்)-ஆசிரியனது வரலாறும்; நுவலும் திறன்

Page 9
6 நன்னூல்
அவ் வாசிரியன் மாணாக்கனுக்கு நூலைச் சொல்லுதலின் வரலாறும்; கொள்வோன் (திறன்) - மாணாக்கனது வர லாறும்; கோடற் கூற்று - அவன் கேட்டலின் வரலாறும்; ஐந்தும் எல்லா நூற்கும் ஆம் –ஆகிய இவ்வைந்தும் எல்லா நூல்களுக்குமாம்; இவை பொதுப்பாயிரம் - ஆதலால் இவ் வைந்து வரலாற்றையும் விளங்க உணர்த்துவது பொதுப்பாயிரமாம். 3
1. நூலினது வரலாறு நூல் இன்னது என்பது
4. நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரங் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதங் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே. (இ-ள்) நூலின் இயல்பு நுவலின் - நூலினது வரலாற் றைச் சொல்லின்; ஓரிரு பாயிரம் தோற்றி - இருவகைப் பாயிரத்நையும் முன்னுடைத்தாகி; மும்மையின் ஒன்றாய் - மூவகை நூலுள் ஒன்றாகி; நாற்பொருட் பயத்தோடு - நான்கு பொருளாகிய பிரயோசனத்தோடு கூடி எழு மதம் தழுவி - எழுவகை மதத்தையுந் தழுவி; ஐயிரு குற்றமும் அகற்றி-பத்துக் குற்றத்தையும் ஒழித்து; அம் மாட்சியோடு பத்தழகுடனே, எண்ணான்கு உத்தியின் - முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு; ஒத்துப் படலம் என்னும் உறுப் பினில்-ஒத்தும் படலமுமென்று சொல்லப்படும் இருவகை அவயவத்தோடு, சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடைபெறும் - சூத்திரமும் காண்டிகையுரையும் விருத்தியுரையுமாகிய வேறு பாட்டு நடைகளைப் பெற்று வரும். 4

பொதுப்பாயிரம் 7
மூவகை நூல்
5. முதல்வழி சார்பென நூன்மூன்றாகும்.
(இ-ள்) முதல் வழி சார்பு என - முதனூல் வழி நூல் சார்பு என; நூல் மூன்று ஆகும்-நூல் மூன்று வகையினை உடைத்தாம். 5
முதனூல் இன்ன தென்பது
6. அவற்றுள்,
வினையி னிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனு லாகும்
(இ-ள்) அவற்றுள்-அம் மூவகைநூலுள்; வினையின் நீங்கி விளங்கிய அறிவின்-இயல்பாகவே வினையினின்று நீங்கித் தானே விளங்கிய அறிவினையுடைய முனைவன் கண்டது முதனூல் ஆகும் - கடவுள் உயிர்களுக்கு ஆதி காலத்திலே செய்தது முதனுாலாம். 6
வழி நூல் இன்னது என்பது
7. முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும்.
(இ-ள்) முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து- கட வுளும் அவனருள்வழிப் பட்டோருமாகிய தொல்லாசிரியர் நூல்களினுடைய பொருண்முடிபு முழுவதும் ஒத்து பின் னோன் வேண்டும் விகற்பங் கூறி-வழிநூல் செய்வோன் முதனூலிருக்கவுந் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய வேறுபாடுகளையும் உடன் சொல்லி, அழியா மரபினது வழி நூல் ஆகும்-அவ் வேறுபாடுகள் அறிவுடை யோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையால் அழியாது நிலை பெற்று விளங்குந்தன்மையையுடையது வழி நூலாம்.

Page 10
8 நன்னூல்
(வி-ம்) முதனுாலை முழுவதும் ஒத்துச் சிறிது வேறு பட்டிருப்பது வழிநூல்.
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறலாவது, பழைய இலக்கணங்களாகிய இக்காலத்து வழங்காதவைகளை "இறந்தது விலக்கல்’ என்னும் உத்தியினாலே விலக்கியும் புதிய இலக்கணங்களாகிய இக்காலத்து வழங்குமவைகளை "எதிரது போற்றல்' என்னும் உத்தியினாலே தழுவியுங் கூறுதல் முதலியன. 7
சார்புநூல் இன்னது என்பது 8. இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநுா லாகும். (இ-ள்) இருவர் நூற்கும் ஒரு சிறை தொடங்கி- முத னுால் வழிநூல் என்னும் இருவகை நூல்களுக்கும் பொருண் முடிபு ஒருபுடை யொத்து, வேறு திரிபு உடையது புடை நூல் ஆகும்-மற்றவைகள் எல்லாம் ஒவ்வாமையை உடை யது சார்பு நூலாம்.
(வி-ம்) முதனுால் வழி நூல்களுக்குச் சிறுபான்மை யொத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாகும்.
திரிபு வேறுடையதும் உற்று நோக்குவோருக்குப் பொருளால் ஒருங்கொத்தே நிற்கும். 8
வழிநூலுக்குஞ் சார்புநூலுக்கும் எய்தியதன் மேற் சிறப்புவிதி 9. முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்-முன் (னோரின் வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்குங் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.

பொதுப்பாயிரம் 9
(இ-ள்) முன்னோர் மொழிபொருளே அன்றி-முன் னோர் சொல்லிய பொருளையே யன்றி; அவர் மொழி யும் பொன்னே போற் போற்றுவம் என்பதற்கும்-அவரது சொல்லையும் பொன்னைப்போலவேகாத்துக்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகவும்; முன்னோரின் வேறு நூல் செய்தும் எனும்-முன்னோர் நூலையே சொல்லாது அந் நூலினின்றும் வழிநூல் சார்புநூல் என வேறு நூல் செய்தோ மாயினும், மேற்கோள் இல் என்பதற்கும் - ஆசிரிய வசனம் இந்நூலினிடத்து இல்லையென்று சொல்லுங் குற்றம் ஒழிதற்காகவும்; பழஞ் சூத்திரத்தின் கோள் கூறு - அவர் சொல்லிய பழஞ் சூத்திரங்களையும் ஒரோரிடங்களில் எடுத்துச் சொல்லு
(வி-ம்) எனினும் என்பது எனும் என இடைக் குறைந்து நின்றது. ஆசிரிய வசனம், மேற்கோள், பழஞ் சூத்திரம் என்பவை ஒரு பொருட் சொற்கள். 9.
நாற்பொருட் பயன் 10. அறம்பொருளின்பம்வீடடைதனுாற் பயனே.
(இ-ள்) அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்-தரும மும் அர்த்தமுங் காமமும் மோட்சமடைதலுமாகிய நான்கும்; நூல் பயன் - நூலால் எய்தும் பிரயோசனமாம். Ꭵ Ꭴ எழு மதம் 11. எழுவகை மதமே உடன்படல், மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே. பிறர் நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே, (இ-ள்) எழு வகை மதம்- எழு வகை மதமாவன: உடன் படல் - பிறர் மதத்திற்குத் தான் உடன் படுதலும்;

Page 11
10 நன்னூல்
மறுத்தல்-பிறர் மதத்தை மறுத்தலும் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு - பிறர் மதத்திற்கு உடன்பட்டுப் பின்பு மறுத்தலும்; தான் நாட்டித் தனது நிறுப்பு-தானே ஒரு பொருளை எடுத்து நாட்டி அதனை வருமிடந்தோறும் நிறுத்துதலும் இருவர் மாறுகோள் ஒருதலை துணிவுஇருவரால் விரோதமாகக் கொள்ளப்பட்ட இரண்டனுள் ஒன்றணிடத்துத் துணிதலும்; பிறர் நூற் குற்றங் காட்டல்பிறர் நூலிலுள்ள குற்றத்தை எடுத்துக் காட்டுதலும் பிறிதொடு படா அன் தன் மதம் கொளல் - பிறர் மதத் திற்கு உடன்படானாகித் தன் மதத்தையே கொள்ளுதலு LDT Ld. II பத்துக் குற்றம் 12. குன்றக் கூறல், மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று வரித்தல் சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயனுன்மை, என்றிவை ஈரைங் குற்ற நூற்கே.
(இ-ள்) குன்றக் கூறல் - குறித்த பொருளை விளக்கு தற்கு வேண்டுஞ் சொற்களிற் குறைவுபடச் சொல்லு தலும்; மிகைபடக் கூறல் - குறித்த பொருளை விளக்கு தற்கு வேண்டுஞ் சொற்களினும் அதிகப்படச் சொல்லு தலும்; கூறியது கூறல் - முன் சொன்ன பொருளையே பின்னுஞ் சொல்லுதலும் மாறுகொளக் கூறல் - முன் சொன்ன பொருளுக்குப் பின் சொல்லும் பொருள் விரோ தப்படச் சொல்லுதலும்; வழுஉச் சொற் புணர்த்தல் - குற்றமுடைய சொற்களைச் சேர்த்தலும்; மயங்க வைத் தல் - இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என மயங்க வைத்தலும்; வெற்றெனத் தொடுத்தல் - பொருள் வெளிப் படையாகத் தோன்றச் சொற்களைச் சேர்த்தலும்; மற்று ஒன்று விரித்தல்-சொல்லத் தொடங்கிய பொருளை விட்டு இடையிலே மற்றொரு பொருளை விரித்தலும்; சென்று

பொதுப்பாயிரம் 11
தேய்ந்து இறுதல் - செல்லச் செல்லச் சொன்னடை பொருணடை தேய்ந்து முடிதலும் நின்று பயன் இன்மைசொற்களிருந்தும் ஒரு பிரயோசனமு மில்லாமற் போத லும்; என்ற இவை நூற்கு ஈரைங் குற்றம் - என்று சொல்லப்பட்ட இவை நூலுக்குப் பத்துக் குற்றமாம். 12
பத்து அழகு
13. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கிணிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னுாலற் கழகெனும் பத்தே.
(இ-ள்) சுருங்கச் சொல்லல் - சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும்; விளங்க வைத்தல்சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இட மாகாது விளங்க வைத்தலும்; நவின்றோர்க்கு இனிமைவாசித்தவருக்கு இன்பத்தைத் தருதலும்; நன்மொழி புணர்த்தல் - நல்ல சொற்களைச் சேர்த்தலும்; ஓசை உடைமை-சந்தவின்ப முடைத்தாதலும்; ஆழம் உடைத்து ஆதல் - பார்க்கப் பார்க்க ஆழ்ந்த கருத்தை யுடைத்தாத லும்; முறையின் வைப்பு - படலப் ஒத்து முதலியவை களைக் காரண காரிய முறைப்படி வைத்தலும்; உலகம் மலையாமை - உயர்ந்தோர் வழக்கத்தோடு மாறுகொள் ளாமையும்; விழுமியது பயத்தல் - சிறப்பாகிய பொரு ளைத் தருதலும்; விளங்கு உதாரணத்தது ஆகுதல் - விளங் கிய உதாரணத்தை உடையதாதலும்; நூலிற்கு அழகு எனும் பத்து-நூலினுக்கு அழகென்று சொல்லப்படும் பத்து. 13, முப்பத்திரண்டு உத்தி 14. நுதலிப் புகுதல் றை வைப்ே
தொகுத்துச் :::ಜ್ಜೈ p.ー2

Page 12
12 நன்னூல்
முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்தல் தொடர்ச்சொற் புணர்த்தல் இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்கல் எதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் உரைத்து மென்றல் உரைத்தா மென்றல் ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென உத்தியெண் ணான்கே.
(இ-ள்) நுதலிப் புகுதல் - இது செய்யின் இப்படி யாகுமென்று கருதிப் புகுதலும்; ஒத்து முறை வைப்பு - இயல்களைக் காரண காரிய முறைப்படி வைத்தலும்; தொகுத்துச் சுட்டல் - பலவற்றையுந் திரட்டிக் காட்டு தலும் வகுத்துக் காட்டல் - அப்படித் திரட்டிக் காட்டப் பட்டவைகளை வெவ்வேறாகக் கூறுபடுத்துக் காட்டு தலும்; முடித்துக் காட்டல் - தான் மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டுதலும்; முடிவு இடங்கூறல்-தான் சொல் லும் இலக்கணத்திற்கு இலக்கியந் தோன்றுமிடத்தைச் சொல்லுதலும்; தான் எடுத்து மொழிதல்-பழைய சூத்தி ரத்தைத் தான் ஒரோ விடத்து எடுத்துச் சொல்லுதலும்; பிறன்கோட் கூறல்-தனனுரலிற் பிறனது கோட்பாட்டைச் சொல்லுதலும் சொற்பொருள் விரித்தல் - சொல்லினது பொருள் விளங்குதற்கு உருபு முதலியவுைகளை விரித்துச்

பொதுப்பாயிரம் 3.
சொல்லுதலும்; தொடர்ச்சொற் புணர்த்தல்-ஒன்றற் கொன்று சம்பந்தமுடைய வாக்கியங்களைத் தொடுத் தலும்; இரட்டு உற மொழிதல்-ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படச் சொல்லுதலும்; ஏதுவின் முடித்தல் -முன் காரணம் விளங்கப் பெறாத தொன்றைப் பின் காரணத்தான் முடிவு செய்தலும்; ஒப்பின் முடித்தல்ஒன்றற்குச் சொல்லப்படும் இலக்கணம் வேறொன்றற் கும் ஒத்து வருமாயின் அதற்கு அதுவே இலக்கணமாக உடன் முடிவு செய்தலும்; மாட்டெறிந்து ஒழுகல்-ஒன்றற் குச் சொல்லப்பட்ட இலக்கணத்தை அதனைப் பெறுதற் குரிய மற்றொன்றற்கும் மாட்டிவிட்டு நடத்தலும்; இறந் தது விலக்கல்-முற்காலத்து வழங்கிய இலக்கணங்களுள்ளே பிற்காலத்து வழங்கா தொழிந்ததை நீக்குதலும்; எதிரது போற்றல்-முற்காலத்து வழங்காது பிற்காலத்து வழங்கி வரும் இலக்கணத்தைத் தழுவிக் கொள்ளுதலும்; முன் மொழிந்து கோடல்-பின்பு வேண்டு மிடந்தோறும் எடுத் தாளும் பொட்டு முன்னே ஒன்றனைச் சொல்லிக்கொள்ளு தலும், பின்னது நிறுத்தல்-ஒரு பொருளுக்குக் கருவியாக முன்வைத்தற்குரியது அங்கே வைத்தற்கு இடம் பெறாதா யின் அப்பொருளின் பின் அதனை வைத்தலும், விகற் பத்தின் முடித்தல்-வெவ்வேறாக முடித்தலும்; முடிந்தது முடித்தல் - வெவ் வே றாக முடிந்ததைப் புலப்பட வேண்டித் தொகுத்து முடித்தலும்; உரைத்தும் என்றல்பின்னே சொல்லப்படுவதை முன்னே ஒரு நிமித்தத்தினாலே சொல்ல வேண்டின் இதனைப் பின்னே சொல்வோமென் பது தோன்ற அங்கே சுருக்கிச் சொல்லுதலும்; உரைத் தாம் என்றல்-முன்னே ஒரு நிமித்தத்தினாலே சொல்லப் பட்டதைப் பின்னே சொல்ல வேண்டியவிடத்து இதனை முன்னே தானே சொல்லினோ மென்பது தோன்றச் சொல் லாது விடுதலும்; ஒருதலை துணிதல்-இருவராலே விரோத மாகக் பொள்ளப்பட்ட இரண்டு பக்கத்துள் ஒரு பக்கந் துணிதலும்; எடுத்துக்காட்டல்-தான் சொல்லும் இலக்க ணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதலும்;

Page 13
14 நன்னூல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்-தான் சொல்லும் இலக் கணத்தைத் தானெடுத்துக் காட்டிய இலக்கியத்திலே பொருந்த வைத்தலும்; இன்னது அல்லது இது என மொழிதல்-சந்தேகிக்க நின்றவிடத்து இப்படிப்பட்டது அல்லாதது இதுவெனச் சொல்லுதலும்; எஞ்சிய சொல் லின் எய்தக் கூறல்-சொல்லாது விடப்பட்டவைக்குச் சொல்லப்பட்டதனால் இலக்கணம் பொருந்தச் சொல்லு தலும்; பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்-பிற நூலிலே முடிந்த முடிபைத் தான் அங்கீகரித்தலும் தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்-தான் புதிதாகக் குறித்து வழங்குவதைப் பல விடங்களிலும் எடுத்துச் சொல்லுதலும்; சொல்லின் முடிவின் அப்பொருள் முடித் தல்-சொல்லின் முடிவிலே அதன் பொருளையும் முடித்த லும்; ஒன்றின முடித்தல் தன் இனம் முடித்தல் - விதியால் ஒற்றுமைப் பட்டவைகளை யொருங்கு கூட்டி முடித்தல் ஒன்றைச் சொல்லுமிடத்து அதற்கினமாகிய மற்றொன் றையும் அதனோடு முடித்தலும்; உய்த்து உணர வைப்புசில சூத்திர விதிகளைக் கொண்டு ஆராய்ந்தறியும்படி ஒரு பொருளை வைத்தலும்; என உத்தி எண்ணான்கு-எனத் தந்திர வுத்திகள் முப்பத்திரண்டாம்.
(வி-ம்) ஒன்றின முடித்தல் தன்னினமுடித்தல் என்னும் இரண்டும் ஓர் உத்தி. இம் முப்பத்திரண்டே யன்றி, உரை யிற்கோடல், மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல், உடம்பொடு புணர்த்தல், ஏற்புழிக் கோடல் எனப் பிறவும் உள எனக் கொள்க.
முன் சொல்லிய மதங்களுக்கும் உத்திகளுக்கும் உதார ணம் இந் நூலினுள்ளே பின் வரும் இடந்தோறுங் காட்டப்படும். 14 உத்தி இன்னதென்பது 15. நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி அறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துதல் தந்திர வுத்தி.

பொதுப்பாயிரம் 15
(இ-ள்) நூற் பொருள்-ஒரு நூலால் அறிவிக்கப்படும் பொருளை வழக்கொடு வாய்ப்பக் காட்டி-நூல் வழக் கோடும், உலக வழக்கோடும் பொருந்தக் காண்பித்துச் ஏற்புழி அறிந்து- ஏற்குமிடத்தை அறிந்து; இதற்கு இல், வகை ஆம் எனத் தகும் வகை செலுத்துதல்-இவ்விடத் திற்கு இப்படியாகு மென்று நினைத்துத் தக்கபடியாகச் செலுத்துவது; தந்திர வுத்தி- தந்திர வுத்தியாம்.
(வி-ம்) தந்திர மென்பது நூல்; உத்தி யென்பது பொருந்துமாறு. 15
ஒத்து இன்னது என்பது 16. நேரின் மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.
(இ-ள்) நேர் இன மணியை நிரல் படவைத்து ஆங்கு - ஒரு சாதியாயுள்ள மணிகளை வரிசையாகப் பதித்தாற் போல; ஓரினப் பொருளை ஒரு வழி வைப்பது-ஒரு சாதியா யுள்ள பொருள்களை ஒரு வழிப்படச் சொல்வது; ஒத்து என மொழிப ஒத்துறப்பாமென்று சொல்லுவர்; உயர் மொழி புலவர்-உயிர்க்கு உறுதிபயக்கு மெய்ம் மொழி களை யுடைய புலவர்.
நேர்தல்-ஒன்றுபடுதல். 16
படலம் இன்னது என்பது 17. ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரின் அதுபடல மாகும்.
(இ-ள்) ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்-ஒரு வழிப்படாது கலந்த பல பொருள்களினாலே, பொது மொழி தொடரின்-பொது மொழியாகத் தொடரப் பெறின்; அது படலம் ஆகும்-அது படல உறுப்பாம்.

Page 14
16 நன்னூல்
(வி-ம்) : பொது மொழி - பொதுவாகச் சொல்லப்படு வது; ஒரு பொருளையே நுதலி வருவது சூத்திரம்; ஓரினப் பொருன்களையே தொகுப்பது ஒத்து; பலவினப் பொருள் களுக்கும் பொதுவாகிய இலக்கணங் கூறுவது படலம். பல சூத்திரங்களினது தொகுதி ஒத்து; பல ஒத்துக்களினது தொகுதி படலம். ஒத் தென்றது இயலை படலம் என்றது அதிகாரத்தை. 7
சூத்திரம் இன்னது என்பது 18. சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்.
(இ-ள்) ஆடியின் - பெரிய சரீர முதலியவைகளின் சாயையைத் தன்னுள்ளே செவ்வகையாக அடக்கி இனி தாகக் காட்டுஞ் சிறிய கண்ணாடி போல; சில் வகை எழுத் தில் பல்வகைப் பொருளை-சிலவகை யெழுத்துக்களா லாகிய வாக்கியத்திலே பலவகைப்பட்ட பொருள்களை செவ்வன் செறித்து இனிது விளக்கி-செவ்வகையாக அடக்கி இனிதாகக் காட்டி; திட்பம்-குற்ற மில்லாமையாற் சொல்வலி பொருள் வலிகளும்; நுட்பம்-ஆழமு.ை னம் யாற் பொருள் நுணுக்கங்களும்; சிறந்தன சூத்திரம்சிறந்து வருவன சூத்திரங்களாம். 18
சூத்திர நிலை 19. ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னகுத் திரநிலை. (இ-ள்) சூத்திர நிலை-மேற்கூறிய சூத்திரங்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்கும் நிலைகள்; ஆற் றொழுக்கு-இடையறாது ஒடுகின்ற ஆற்று நீரோட்டத் தையும்; அரிமா நோக்கம்-முன்னும் பின்னும் பார்க்கின்ற சிங்கத்தினது பார்வையையும் தவளைப் பாய்த்து-இடை யிட்டுக் குதிக்கின்ற தவளையினது பாய்ச்சலையும்;

பொதுப்பாயிரம் 17
பருந்தின் வீழ்வு-நெடுந் தூரத்தினின்றும் ஒன்றை வேளவிப் போதற்கு வீழ்கின்ற பருந்தினது வீழ்ச்சியையும், அன்ன - போல்வனவாம். 19 சூத்திரங்களுக்குக் காரணவகையால் வரும் பெயர் வேறுபாடு 20. பிண்டம் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். (இ-ள்) : சூத்திரம் - மேற்கூறிய சூத்திரங்கள்; பிண்டம்-பிண்ட சூத்திரமும்; தொகை-தொகைச் சூத்திர மும்; வகை-வகைச் சூத்திரமும்; குறி-குறிச் சூத்திரமும்; செய்கை-செய்கைச் சூத்திரமும்; கொண்டுஇயல் புறனடை" இவைகளை அலைவறக் கொண்டு இவைகளின் புறத்து அன்டயாய் வரும் புறனடைச் சூத்திரமுமாகிய, கூற்றன. ஆறு பிரிவை யுடையனவாம்.
(வி-ம்) : பிண்ட சூத்திரமாவன பலதிறப் பொருள் களையும் உள்ளடக்கிக்கொண்டு பொதுப்பட வருவன: அவை 'நன் கியம்புவன் எழுத்தே" (சூத்திரம் 56) என்றாற் போல்வன்.
தொகைச் சூத்திரமாவன அப் பலதிறப் பொருள் களையும் வேறு வேறாகத் தொகுத்துச் சொல்வன; அவை "பன் னிருபாற்றதுவே" (சூத்திரம் 57) என்றாற் போல்வனி.
வகைச் சூத்திரமாவன அத் தொகுத்துச் சொல்லப் பட்டவைகளை வேறு வகுத்துச் சொல்வன; அவை எண்ணிலக்கண முதலாக வகுத்தோதிய சூத்திரங்கள் போல்வன.
குறிச் சூத்திரமாவன இவை உயிர், இவை ஒற்று, இவை பெயர், இவை வினை என்றற் றொடக்கத்து அறிதன் மாத்திரையாய் வருவன; அவை "அம்முத லிரா றாவி" (சூத்திரம் 63) என்றாற் போல்வன.

Page 15
18 நன்னூல்
செய்கைச் சூத்திரமாவன புணர்ச்சி விதி யறிந்து புணர்த்தலைச் செய்தலும் முடிபு விதி யறிந்து முடித் தலைச் செய்தலும் முதலியன; அவை "ணன வல்லினம் வரட் டறவும்." (சூத்திரம் 209) எனவும், "முதலறு பெயரல தேற்பில முற்றே' (சூத்திரம் 323) எனவும் வருவன போல்வன.
புறனடைச் சூத்திரங்கள் “மொழியாய்த் தொடரினும்' (சூத்திரம் 127) எனவும், "இதற்கிது முடிபென்று' (சூத்திரம் 257) எனவும் வருவன போல்வன.
புறன்+அடை - புறனடை, புறத்து அடையாய் வந்தது; புறம் + நடை - புறநடை வேறு விதமாகிய நடக்கை எனினும் பொருந்தும்.
ஆறு வகைப்படச் சொல்லினும்; குறிச் சூத்திரஞ்
செய்கைச் சூத்திரம் என்னும் இரண்டினுள்ளே மற்றை
நான்கும் அடங்கும். 20 உரையினது பொதுவிலக்கணம்
21. பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனோ டாசிரிய வசனமென் றீரே ழுரையே.
(இள்) : பாடம்-மூல பாடமும்; கருத்து-கருத்துரை யும்; சொல் வகை-பதச் சேதமும்; சொற் பொருள்-பதப் பொருளும்; தொகுத்துரை-பொழிப்புரையும்; உதாரணம்உதாரணமும்; வினா - வினாவும்; விடை - விடையும்; விசேடம்-வேண்டியவைகளைத் தந்துரைத்தலும்; விரிவுவேற்றுமை யுருபு முதலியவைகளைத் தொக்கு நிற்பின் அவைகளை விரித் துரைத்தலும்; அதிகாரம்-எடுத்துக் கொண்ட அதிகாரம் இதுவாதலின் இச் சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைத்தலும்; துணிவு-சந்தேகிக்க நின்ற

பொதுப்பாயிரம் 19Ꮕ
விடத்து இதற்கு இதுவே பொருளெனத் துணிரைந்துரைத் தலும்; பயன்-இப்படிச் சொல்லியதனாற் வந்த பயன் இது வென உரைத்தலும்; ஆசிரிய வசனம்-ஆசிரிய வசனங் காட்டுதலும்; என்ற ஈரேழ் உரை-என்று சொல்லப்பட்ட பதினான்கு வகையாலும் உரைக்கப்படும் நூலுக்கு உரை. 2I
காண்டிகையுரை இன்னதென்பது
22. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றிலும் அவற்றொடு வினாவிடை யாக்க லானுஞ் சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.
(இ-ள்) : கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்கருத்துரையும் பதவுரையும் உதாரணமுமாகிய மூன்றனை யுஞ் சொல்லுதலாலும்; அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்-அம் மூன்றனோடு வினா விடை என்னும் இரண்டனையுங் கூட்டிச் சொல்லுதலாலும்; சூத்திரத் துள் பொருள் தோற்றுவ காண்டிகை-சூத்திரத்துள்ளிருக் கின்ற பொருளை விளக்குவன காண்டிகையுரைகளாம். 22
விருத்தியுரை இன்னதென்பது 23. சூத்திரத் துட்பொருளன்றியு மாண்டைக்
கின்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
(இ-ள்) சூத்திரத் துள்பொருள் அன்றியும் - சூத்தி ரத்திலுள்ள பொரு ளல்லாமலும்; ஆண்டைக்கு இன்றி அமையா யாவையும் விளங்க- அவ் விடங்களுக்கு இல்லாமல் நிறையாத பொருள்களெல்லாம் விளங்கும்படி தன் உரை யானும் பிற நூலானும்-தானுரைக்கு முரையாலும் ஆசிரிய வசனங்களாலும்; ஐங் காண்டிகை உறுப்பொடுமேற்கூறிய காண்டிகை யுறுப்பு ஐந்தினாலும்; ஐயம்

Page 16
_究鬣 நன்னூல்
அக்ல எஞ்சாது மெய்யினை இசைப்பது விருத்தி-சந்தேகந் தீரச் சுருங்காது மெய்ப்பொருளை விரித் துரைப்பது விருத்தியுரையாம். w 23
*நூல்" என்னும் பெயர்க் காரணம்
24. பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சர்த கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியுமாறு. (இ-ள்) தன் சொல் பஞ்சியா-தன் சொற்கள் பஞ்சாகவும்; பனுவல் இழைஆக-செய்யுள் இழையாகவும்; செஞ்சொற் புலவன் சேயிழையா-செய்விய சொற்களை அறிந்த புலவன் நூற்கின்ற பெண்ணாகவும்; எஞ்சாத வாய் கையாக-குறையாத வாய் கையாகவும்; மதி கதிர் ஆக-அறிவு கதிராகவும்; மை இலா நூல் முடியும் ஆறுகுற்றமில்லாத கல்வி நூலானது முடியும் வழி இது.
(வி-ம்) ஆதலால், நூலென்றது உவமையாகுபெய ரெனக் காண்க. 24
25. உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய் தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டங் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டங் தீர்க்குநூன் மாண்பு. (இ-ள்)புரத்தின் உரத்தின் வளம் பெருக்கி-உடம் பினுள்ளிருக்கின்ற ஞான வளத்தை வளர்வித்து, உள்ளிய தீமை வளம் முருக்கி-நினைக்கப்பட்ட தீமையாகிய அஞ் ஞான வளத்தைக் கெடுத்து; பொல்லா மரத்தின் கனக் கோட்டந் தீர்க்கும் நூல் அஃதே போல்-கெட்ட மரத் தினது மிகுதியாகிய கோணலைப் போக்குகின்ற எற்று நூலின் அம் மாட்சிமை போலவே, மாந்தர் மனக் கோட்டந் தீர்க்கும்-மனிதருடைய மனத்தினது கோண

பொதுப்பாயிரம் 罗葛
லைப் போக்கும்; நூல் மாண்பு-கல்வி நூலினது மாட்சிமை -шптатф].
(வி-ம்) ; இதனாலும் நூல் என்றது உவமை யாகு பெயராம். நூன் மாண்பு பெருக்கி முருக்கி மனக்கோட்டந் தீர்க்கும் எனக் கூட்டுக. V 25.
2. ஆசிரியனது வரலாறு நல்லாசிரியன் இலக்கணம்
26. குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னுரலுரை யாசிரி யன்ன்ே.
(இ-ள்) குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மிைஉயர்குடிப் பிறப்புஞ் சீவகாருண்ணியமுங் கடவுள் வழிபாடுமாகிய இவைகளால் எய்திய மேன்மையும்; கலை பயில் தெளிவு - பல நூல்களிலே பழகிய தேற்றமும்; கட்டுரை வன்மை - நூற்பொருளை மாணாக்கர் எளிதின் உணரும்படி தொடுத்துச் சொல்லும் வன்மையும்; நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் - நிலத்தையும் மலையையுந் துலாக்கோலையும் பூவையு மொத்த குண களும்; உலகு இயல் அறிவு-உலக நடையை அறியுமறிவும்: உயர் குணம் இணையவும் அமைபவன் - உயர்வாகிய குணங்கள் இவை போல்வன் பிறவும் நிறையப் பெற்ற வன்; நூல் உரை ஆசிரியன்-நூல் கற்பிக்கும் ஆசிரிய னாவான். 26岁 27. தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா கும்மே. (இ-ள்) தெரிவு அரும் பெருமையும் - பிறரால் அறியப் uடாத உருவத்தின் பெருமையும், திண்மையும் - பெரிய

Page 17
22 நன்னூல்
பாரஞ் செய்து தன்மேலே நெருங்கினவைகளாற் கலங்காத வலிமையும்; பொறையும் - தன்னையடுத்த மனிதர் தோண்டுதன் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும்; பருவ முயற்சி அளவில் பயத்தலும் - பருவத்திலே உழவர் செய்யும் முயற்சி யளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதலும், நல் நிலம் மருவிய மாண்பு ஆகும் - நல்ல நிலத்தினிடத்துப் பொருந் திய குணங்களாகும்.
(வி-ம்) பிறரா லறியப்படாத கல்வியறிவின் பெருமை யும், பெரியவாதஞ் செய்து தன் மேலே நெருங்கினவராற் கலங்காத வலிமையும், தன்னை யடுத்த மாணாக்கர் இகழ் தல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும், பருவத்திலே மாணாக்கர் செய்யும் முயற்சி யளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதலும் ஆசிரிய னிடத்துப் பொருந்திய குணங்களாதலால் நிலம் அவனுக்கு உவமானமாயிற்று. 27
28. அளக்க லாகா அளவும் பொருளுங்
துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே. (இ-ள்) அளக்கல் ஆகாஅளவும்-அளவு செய்யப்படாத தன் வடிவந்தின் அளவும், (அளக்கலாகப்) பொருளும் - அளவு செய்யப்படாத பல வகைப் பொருளும்; துளக்கல் ஆகா நிலையும்-எப்படிப்பட்ட வலிமை உடையவராலும் அசைக்கப்படாத உருவத்தினிலையும், தோற்றமும்-நெடுந் தூரத்தினுள்ளாராலுங் காணப்படும் உயர்ச்சியும்; வறப் பினும் வளம் தரும் வண்மையும்-மழை பெய்யாமல் வறந்த காலத்திலுந் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர்வளத்தைக் கொடுக்குங் கொடையும்; மலைக்கு - மலைக்குள்ள குணங் களாகும்.
(வி-ம்) அளவு செய்யப்படாத தன் கல்வியி னளவும் அளவு செய்யப்படாத பலவகை நூற்பொருளும் எப்படிப் பட்ட புலமையை உடையோராலும் அசைக்கப்படாத

பொதுப்பாயிரம் 23
கல்வி யறிவினிலையும், நெடுந்தூரத்திலுள்ளாராலும் அறியப்படும் உணர்ச்சியும் பொருள் வருவழி வறந்த காலத்திலும் தன்னைச்சேர்ந்த மாணாக்கருக்கு கல்விப் பொருளைக் கொடுக்கும் கொடையும் ஆசிரியனுக்குள்ள குணங்களாதலால் மலை அவனுக்கு உவமானமாயிற்று. - 28 29. ஐயந் தீரப் பொரிளை யுணர்க்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (இ-ள்) ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் - சந்தேகந் தீர நிறுக்கப்பட்ட பண்டத்தின் அளவைக் காட்டலும், மெய்ந் நடுநிலையும் - உண்மை பெறத் தான் இரண்டு தட்டுக்களுக்கும் நடுவே நிற்றலும், நிறைகோற்கு மிகும் - தராசு கோலினிடத்துக் குணங்களாக மிகும்.
(வி-ம்) சந்தேகந் தீர வினாவப்பட்ட சொற்பொருள் இயல்பைக் காட்டலும், புலவரிருவர் மாறுபட்டாராயின் உண்மை பெறத் தான் அவ் விருவருக்கும் நடுவாக நிற்ற லும் ஆசிரியனிடத்துக் குணங்களாக மிகுமாதலால், நிறைகோல் அவனுக்கு உவமானமாயிற்று. 29
30. மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே. (இ-ள்) மங்கலம் ஆகி - சுப கருமத்திற்கு உரியதாகி; இன்றி அமையாது - யாதொரு செயலும் அலங்கரிக்குந் தானில்லாது முடியாதாக; யாவரும் மகிழ்ந்து மேற்கொளகண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னைச் சூடிக் கொள்ள மெல்கி-மெல்லிய குணமுடையதாகி;பொழுதின் முகம் மலர்வு உடையது - மலர்தற்குரிய காலத்திலே முகம் விரிதலை யுடையது; பூ - பூவாகும்.
(வி-ம்) சுப கருமத்துக்கு உரியானாகி யாதொரு செயலுஞ் சிறப்பிக்குந் தானில்லாது முடியாதாகக் கண்டோர் யாவரும் களித்து மேலாகத் தன்னை வைத்துக் கொள்ள, மெல்லிய குணமுடையவனாகிப், பாடஞ்

Page 18
24 நன்னூல்
சொல்லுதற்குரிய காலத்திலே முக மலர்தலையுடையவன் ஆசிரியனாதலால், பூ அவனுக்கு உவமானமாயிற்று. 30
ஆசிரிய ராகாதவர் இலக்கணம்
31. மொழிகுண மின்மையும் இழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலுங் கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோ ரிலரா சிரியரா குதலே. (இ-ள்) மொழி குணம் இன்மையும்-பாடஞ் சொல்லுங் குணமில்லாமையையும்; இழிகுண இயல்பும்-இழிகுண மாகிய இயற்கையையும்; அழுக்காறு-பிறருக்கு வருங் கல்வியைக் குறித்துக்கொள்ளும் பொறாமையையும் அவா-பொருளின் மேல் அதிகமாக வைக்கும் ஆசையையும், வஞ்சம்-மெய்ப்பொருளை மறைத்துப் பொய்ப் பொருளைக் காட்டி வஞ்சித்தலையும், அச்சம் ஆடலும்கேட்போருக்கு அச்சம் உண்டாகப் பேசுதலையும்; கழற் குடம் மடற் பனை பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பு என~கழற்குடமும் மடற்பனையும் பருத்திக் குண் டிகையும் முடத்தெங்கும் ஆகிய நான்கனையும் ஒப்பென்று சொல்ல, முரண்கொள் சிந்தையும் உடையோர்-மாறுபாடு கொண்ட கருத்தையுந் தம்மிடத்திலுடைவர்; ஆசிரியர் ஆகுதல் இலர்-கற்பிக்கும் ஆசிரியராகுதல் இலராவர். 31
32. பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே, (இ=ள்) பெய்த முறை அன்றி-தன்னுள்ளே போட்ட முறையினாலன்றி; பிறழ உடன் தரும் செய்தி-முன் போடப்பட்டவையும் பின் போடப்பட்டவையும் அம் முறை பிறழ்ந்து போக விரைவிலே தன்னுள்ளே கொண்ட சுழற் காய்களைக் கொடுக்குஞ் செய்கையானது; கழற் பெய்குடத்தின் சீர்-சுழற்காய் போட்ட குடத்தினது குணமாம்.

பொதுப்பாயிரம் 25
(வி-ம்) தமக்குக் கற்பித்த முறையினாலன்றி முன் கற்பிக்கப்பட்டவையும் பின் கற்பிக்கப்பட்டவையும் அம் முறை பிறழ்ந்து போக விரைவிலே தம்முள் கொண்ட நூற் பொருள்களைத் தருஞ்செய்கையானது ஆசிரியரா காதவரது குற்றமாதலால் கழற்குடம் அவருக்கு உவமானமாயிற்று. 、32
33. தானே தரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை. (இ-ள்) தானே தரக் கொளின் அன்றி-தானே தன்னிடத்துள்ள பழங்களைத் தரக்கொண்டாற் கொள்ள லாமேயன்றி; தன்பால் மேவிக் கொளக்கொடா இடத்ததுஒருவர் தன்னிடத்து நெருங்கி வந்து பறித்துக்கொள்ள அப்பழங்களைக் கொடாத இடத்தையுடையது; மடற் பனை-தன் வடிவ முழுவதும் மடல் விரிந்த பனை,
(வி-ம்) தாமே தம்மிடத்திலுள்ள நூற் பொருள் களைச் சொல்ல அறிந்துகொண்டாற் கொள்ளலாமே யன்றி ஒருவர் தம்மிடத்து நெருங்கி வந்து வினாவி அறிந்துகொள்ள அந்நூற் பொருள்களைச் சொல்லாத விடத்தை யுடையவர் ஆசிரியராகாதவ ராதலால் மடற் பனை அவருக்கு உவமானமாயிற்று. 33
34. அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (இ-ள்) அரிதின் பெயக் கொண்டு-பஞ்சைக் கொண்ட போதும் வருத்தத்தோடு சிறிது சிறிதாக அடைப்பத் தன் னுள்ளே கொண்டு; அப்பொருள் தான் பிறர்க்கு எளிது ஈவு இல்லது-கொடுக்கும் போதும் அப் பஞ்சைத் தான் பிறர்க்கு எளிதிற் கொடாத குற்றமுடையது; பருத்திக் குண்டிகை - பஞ்சு போட்ட குடுக்கை,
(வி-ம்) கல்வியைக் கற்றபோதும் வருத்தத்தோடு சிறிது சிறிதாகக் கற்பிக்கத் தம்முள்ளே கொண்டு பாடஞ் சொல்லும் போதும் அக் கல்வியைத் தாம் பிறர்க்கு எளிதிற்

Page 19
26 நன்னூல்
கொடாத குற்றமுடையவர் ஆசிரிய ராகாதவ ராதலால், பருத்திக் குண்டிகை அவருக்கு உவமான மாயிற்று. 34
35. பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே.
(இ-ள்) பல் வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு-நீர் விடுகை முதலாகிய பலவகை யுப காரங்களையுஞ் செய்து தனக்கு வழிபாடு செய்யுஞ் குணத்தி னின்றும் அல்லாத பிறருக்கு; அளிக்குமதுதன்னிடத்துள்ள காய்களைத் தருங் குற்றமுடையது; முடத்தெங்கு-வேலிக்கு அப்புறம் வளைந்த தென்னைமரம்.
(வி-ம்) பொருள் கொடுத்தல் முதலாகிய பல வகை யுபகாரங்களையுஞ் செய்து தமக்கு வழிபாடு செய்யும் குணத்தினின்றும் அல்லாத மாணாக்கருக்குத் தம்மிடத்தி லுள்ள கல்விப் பொருளைத் தருங் குற்ற முடையவர் ஆசிரியராகாதவராதலால், முடத்தெங்கு அவருக்கு உவமானமாயிற்று. 35
3. பாடஞ் சொல்லலினது வரலாறு
36. ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதினோக்கிச் சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவனுங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. (இ-ள்) ஈதல் இயல்பு இயம்புங் காலை-பாடஞ் சொல்லுதலினது வரலாற்றைச் சொல்லும்போது காலமும் இடனும் வாலிதின் நோக்கி-உரிய காலத்தையும் உரிய விடத்தையுந் தூயனவாகப் பார்த்து சிறந்துழி இருந்துசிறந்த விடத்திருந்து; தன் தெய்வம் வாழ்த்தி-தான் வழிபடுங் கடவுளைத் துதித்து; உரைக்கப்படும் பொருள்

பொதுப்பாயிரம் 27
உள்ளத்து அமைத்து-பாடஞ் சொல்லப்படும் பொருளைத் தன் கருத்தின்கண் நிறைத்து விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து - விரையானாகியும் கோபஞ் செய்யானாகியும் இச்சித்து முக மலர்ச்சியை யடைந்து: கொள்வான் கொள்வகை அறிந்து - கேட்பவனது கேட் கும் அறிவின் வகையை அறிந்து அவன் உளம் கொள - அவனது மனம் ஏற்றுக்கொள்ள கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப - மாறுபாடில்லாத மனத்துடனே நூலைக் கொடுத்தலாகும் என்று சொல்லுவர் புலவர். 36
37. தன்மகனாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற் குரைப்பது நூலே. (இ-ள்) தன் மகன்-தன்புதல்வனுக்கும்; ஆசான் மகன்தன்னாசிரியன் புதல்வனுக்கும்; மன் மகன்-அரசன் புதல்வனுக்கும்; பொருள் நனி கொடுப்போன் - பொருளை மிகுதியாகக் கொடுப்போனுக்கும்; வழிபடுவோன்-வழி பாடு செய்வோனுக்கும்; உரைகோளாளற்கு - தன்னாற் சொல்லப்பட்ட உரையை விரைவிலே கற்கும் அறிவுடை யோனுக்கும்; உ  ைர ப் பது நூல் - சொல்லப்படுவது நூலாகும். 37
4. மாணாக்கனது வரலாறு மாணாக்கர் இலக்கணம்
38. அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். (இ-ள்) அன்னம் ஆ (அன்னர்) தலை (மாணாக்கர்)- அன்னத்தையும் பசுவையும் போல்வார் முதன் மாணாக்கர்; மண்ணொடு கிளி (அன்னர்) இடை (மாணாக்கர்)- மண்ணையுங் கிளியையும் போல்வார் நடு மாணாக்கர். இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் கடை
ந.-3

Page 20
28 நன்னுரல்
மாணாக்கர் - பொள்ளற் குடத்தையும் ஆட்டையும் எருமையையும் பன்னாடையையும் போல்வார் கடை மாணாக்கர்.
(வி-ம்) அன்னம் பாலையும் நீரையும் வேறு பிரித்துப் பாலை மாத்திரங் குடித்தல் போல முதன் மாணாக்கர் குணத்தையுங் குற்றத்தையும் வேறு பிரித்துக் குணத்தை மாத்திரங் கொள்ளுதலாலும், பசு மிகுந்த புல்லையுடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஒரிடத்திற் போயிருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக்கொண்டு மென்று தின்றல் போல, முதன் மாணாக்கர் மிகுந்த கல்வியுடைய ஆசிரியனைக் கண்டால் அக் கல்வியைத் தன்னுள்ளம் நிறையக் கேட்டுக்கொண்டு பின்பு ஓரிடத்துப் போயிருந்து சிறிது சிறிதாக நினைவிற் கொண்டுவந்து சிந்தித்தலாலும், அவருக்கு அவ் விரண்டும் உவமானமாதலறிக.
மண் உழவர் வருந்திப் பயிர்செய் முயற்சியளவின தாகிய விளைவைத் தன்கண் காட்டல்போல, இடை மாணாக்கர் ஆசிரியன் வருந்திக் கற்பிக்கும் முயற்சி யளவினதாகிய கல்வியறிவைத் தங்கண் காட்டுதலாலும், கிளி தனக்குக் கற்பித்த சொல்லையன்றி வேறொன்றையுஞ் சொல்ல மாட்டாமை போல, இடை மாணாக்கர் தமக்குக் கற்பித்த நூற்பொருளையன்றி வேறொரு நூற் பொருளையுஞ் சொல்ல மாட்டாமையாலும், அவருக்கு அவ்விரண்டும் உவமானமாதலறிக.
பொள்ளற் குடம் நீரை வார்க்குந் தோறும் ஒழுக விடுதல் போலக் கடைமாணக்கர் நூற்பொருளைக் கற்பிக்குந் தோறும் மறந்து விடுதலாலும், ஆடு ஒரு செடி யிலே தழை நிறைத்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேய்தல் போலக் கடைமாணாக்கர் ஒராசிரியனிடத்து மிகுந்த கல்வியிருந்தாலும் புலமை நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடங் கேட்டலாலும், எருமை குளத்து நீரைக் கலக்கிக் குடித்தல்

பொதுப்பாயிரம் 29
போலக் கடைமாணாக்கர் ஆசிரியனை வருத்திப் பாடங் கேட்டலாலும், பன்னாடை தேன் முதலியவற்றைக் கீழே விட்டு அவற்றிலுள்ள குற்றங்களைப் பற்றிக் கொள்ளுதல் போலக் கடை மாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத் தீய பொருளைச் சிந்தித்துப் பற்றிக்கொள்ளு தலாலும், அவருக்கு அந் நான்கும் உவமான மாதலறிக.38
மாணாக்கராகாதவர் இலக்கணம்
39. களிமடி மானி காமி கள்வன்
பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன் தறுகணன் பாவி படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. (இ-ள்) களி-கள்ளுண்டு களிப்பவனும், மடி - சோம் பேறியும், மானி-அகங்காரம் உடையவனும்; காமி-காம முடையவனும், கள்வன்-திருடனும் பிணியன் - நோயாளி யும்; ஏழை-அறிவில்லாதவனும்; பிணக்கன்-மாறுபாடுடை யவனும், சினத்தன்-கோபமுடையவனும்; துயில்வோன். மிகத் தூங்குவோனும் மந்தன்- புத்தி நுட்பமில்லா வனும், தொன்னுாற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன்-பழைய நூல்களைக் கண்டஞ்சித் தடுமாறும் உள்ளத்தை உட்ைய வனும் தறுகணன்- அஞ்சத்தக்கவைகளுக்கு அஞ்சாத வனு ம; பாவி-பாவஞ் செய்வோனும்; படிறன் - பொறு பேசுவோனும், இன்னோர்க்கு - ஆகிய இப்படிப்பட்ட குற்றத்தை யுடையவருக்கு; நூல் பகரார்-நூலைச் சொல்வார் ஆசிரியர். 39
5. பாடங் கேட்டலின் வரலாறு
40. கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்ன வார்வத் தனாகிச் சித்திரப் பாவையி னத்தக வங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர்.

Page 21
30 நன்னூல்
(இ-ள்) கோடல் மரபு கூறுங்காலை-பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது, பொழுதொடு சென்று-தகுங் காலத்திலே போய்; வழிபடல் முனியான் - வழிபாடு செய்தலின் வெறுப்பில்லாதவனாகி; குணத்தொடு பழகி-ஆசிரியன் குணத்தோடு பொருந்தப் பயின்று; அவன் குறிப்பிற் சார்ந்து-அவன் குறிப்பின் வழியிலே சேர்ந்து இரு என இருந்து - இருவென்று சொன்னபின் இருந்து; சொல் எனச் சொல்லி-படியென்று சொன்னபின் படித்து; பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி. பசித்துண்பவனுக்கு உணவினிடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி; சித்திரப் பாவை யின் அத்தகவு அடங்கி-சித்திரப் பாவையைப் போல அவ் வசைவறு குணத்தினோடு அடங்கி; செவிவாய் ஆக நெஞ்சு களன் ஆக-காதானது வாயாகவும் மனமானது கொள்ளு மிடமாகவும்; கேட்டவை கேட்டு - முன் கேட்கப்பட்ட வற்றை மீண்டுங் கேட்டு; அவை விடாது உளத்து அமைத்து - அப்பொருள்களை மறந்துவிடாது உள்ளத் தின்கண் நிறைத்துக்கொண்டு; போ எனப் போதல் - போ என்றபின் போகுதலாகும்; என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். 40
41. நூல்பயி லியல்பே நுவலின்வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே மடகனி யிகக்கும். (இ-ள்) நூல் பயில் இயல்பு நுவலின்-நூலைக் கற்றலி னியல்பைச் சொல்லின்; வழக்கு அறிதல்-உலக வழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய இருவகை நடையையும் ஆராய்ந் தறிதலும்; பாடம் போற்றல்-மூலபாடங்களை மறவாது பாதுகாத்தலும்; கேட்டவை நினைத்தல்-தான் கேட்ட பொருள்களைப் பலகாற் சிந்தித்தலும்; ஆசாற் சார்ந்து

பொதுப்பாயிரம் 3.
அவை அ  ைம வர க் கேட்டல் - ஆசிரியனையடுத்து அவைகளைத் தன் மனத்துள் அமையும்படி மீட்டுங் கேட்டலும்; அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்அக் கற்குந் தொழிலையுடையவரோடு பழகுதலும்; வினாதல் தான் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவு தலும்; வினாயவை விடுதல்-அவர் வினாவியவைகளுக்குத் தான் உத்தரங்கொடுத்தலும்; என்று இவை கடனாக் கொளின்-என்று சொல்லப்பட்ட இச் செயல்களை முறையாக மாணாக்கன் கொண்டால்; மடம் நனி இகக்கும்-அறியாமையானது அவனை மிகுதியும் விட்டு நீங்கும். 41
42. ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே. (இ~ள்) ஒரு குறி கேட்போன்-ஒரு நூலைப் பாடங் கேட்பவன்; இரு கால் கேட்பின்-ஒரு தரங் கேட்ட அளவின் அமையாது இரண்டு தரங் கேட்டானாயின் நூலில் பெருகப் பிழைபாடு இலன்-அந் நூலிலே மிகுதியும் பிழை படுதல் இலனாவன். 42
43. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.
(இ-ள்) முக்கால் கேட் பின்-மூன்று தரங் கேட்டா னாயின், முறை அறிந்து உரைக்கும்-ஆசிரியன் கற்பித்த முறையை உணர்ந்து பிறர்க்குச் சொல்லுவான். 43
44. ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும். (இ~ள்) ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்ஆசிரியன் கற்பித்த பொருளைத் தன் அறிவி னிடத்து நிறையக் கற்றானாயினும்; காற் கூறு அல்லது பற்றலன் ஆகும்-புலமைத் திறத்திற் காற்பங்கல்லது அதற்கதிகமாகப் பெறாதவனாவன். 44
45. அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.

Page 22
32 நன்னூல்
(இ-ள்) அவ் விளையாளரொடு பயில் வகை ஒரு கால்அக் கற்குந் தொழிலாளரோடு பழகும் வகையாற் காற் கூறும்; செவ்விதின் உரைப்ப அவ் விரு காலும்-தன் மாணாக்கருக்குஞ் சபையாருக்கும் உணர விரித்துரைத்த லால் அரைக் கூறுமாக மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்-குற்றமற்ற புலமையானது நிரம்புதலுடைத்தாகும்:
46. அழலி னிங்கா னணுகா னாஞ்சி
நிழலி னிங்கா னிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே. (இ-ள்) அழலின்-குளிர் கா ய் வோ ன் விட்டு நீங்காமலும் நெருங்காமலும் இருக்கின்ற நெருப்பைப் போல ஆசிரியனை நினைத்து; அஞ்சி நீங்கான் அணுகான்அச்சமுற்று விட்டு நீங்கானாகியும் நெருங்கா னாகியும் இருந்து; நிழலின் நீங்கான்-விடாது பின் செல்லும் நிழலைப் போலத் தொடர்ந்து சென்று நிறைந்த நெஞ்ச மோடு-அன்பு நிறைந்த கருத்துடனே கூடி எத் திறத்து ஆசான் உவக்கும்-எத்தன்மையினாலே ஆசிரியனானவன் மகிழ்வான்; அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சி-அத் தன்மையோடு பொருந்தி அறத்தினின்றும் வேறுபடாது நடத்தலானது; வழிபாடு-மாணாக்கன் செய்யும் வழி பாடாகும்.
அழலி னென்பதற்கு ஆசிரியன் கோபித்தா லெனப் பொருள் கூறினும் பொருந்தும். 46
பொதுப்பாயிரம் முற்றிற்று

சிறப்புப்பாயிரம் சிறப்புப்பாயிரத்துக்குப் பொதுவிதி 47. ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே.
(இ-ள்) ஆக்கியோன் பெயர்-நூல் செய்தோன் பெயரும்; வழி- நூல் வந்த வழியும்; எல்லை-நூல் வழங்கு நிலமும்; நூற் பெயர்-நூலினது பெயரும்; யாப்பு-இந் நூல் முடிந்த பின்பு இந்நூல் கேட்கத் தகும் என்னும் இயைபும் நுதலிய பொருள்-நூலிற் சொல்லப்பட்ட பொருளும்* கேட்போர்-இந்நூல் கேட்டற் குரிய அதிகாரிகள் இவரென்பதும்; பயன்-கேட்டலாற் பெறப்படும் பயனும் ஆய் எண் பொருளும்-ஆகிய எட்டுப் பொருளையும் வாய்ப்பக் காட்டல்-விளங்க உணர்த்துதல்; பாயிரத்து இயல்பு-சிறப்புப்பாயிரத்தினது இலக்கணமாம். ஆகிய வென்பது ஆயென் றாயிற்று.
48. காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிகரு முளரே. (இ-ள்) காலம்-நூல் செய்த காலமும்; களன்-நூலரங் கேற்றிய சபையும்; காரணம்-நூல் செய்தற்குக் காரணமும் என்று இம் மூவகை ஏற்றி மொழிநரும் உளர்-என்று இம் மூன்றனையும் அவ் வெட்டனோடு கூட்டிப் பதினொன் றாகச் சொல்லுவாருஞ் சிலர் உளர். 2
நூற்பெயருக்குச் சிறப்புவிதி 49. முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. (இ-ள்) நூற்கு-ஒரு நூலுக்கு முதல்நூல்-அந் நூலின் முதனூலும்; கருத்தன்-அந் நூல் செய்தவனும்; அளவு

Page 23
34 நன்னுால்
அந் நூலினளவும்; மிகுதி - அந்நூலிலே சொல்லப்படுவன வற்றுள் மிகுதியாகிய கூறும்; பொருள்-அந் நூலிலே சொல்லப்பட்ட பொருளும் செய்வித்தோன்-அந்நூல் செய்வோனுக்குப் பொருளுதவி செய்து அதனைச் செய்வித்தவனும்; தன்மை-அந்நூலின் குணமும்; முதல் நிமித்தினும்-முதலாகிய காரணங்களாலும், இடுகுறி யானும்-இடுகுறியாலும்; பெயர் எய்தும்-பெயர் வரும்.
(வி-ம்) முதனுாலாற் பெயர்பெற்றன பா ர தம் முதலாயின; கருத்தனாற் பெயர்பெற்றன தொல்காப்பியம் முதலாயின; அளவினாற் பெயர்பெற்றன நாலடி நானுாறு முதலாயின; மிகுதியாற் பெயர்பெற்றன களவியன் முதலாயின; பொருளாற் பெயர்பெற்றன அகப்பொருண் முதலாயின; செய்வித்தோனாற் பெயர்பெற்றன சாத வாகனம் முதலாயின; தன்மையாற் பெயர்பெற்றன நன்னூல் முதலாயின; இடுகுறியாற் பெயர்பெற்றன கலைக்கோட்டுத் தண்டு முதலாயின. 3.
வழியின் வகையாகிய நூல் யாப்புக்குச் சிறப்பு விதி 50. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.
(இ-ள்) தொகுத்தல்-விரிந்து கிடந்ததைத் தொகுத்துச் செய்தலும்; விரித்தல்-தொக்குக் கிடந்ததைத் விரித்துச் செய்தலும்; தொகை விரி-தொகுத்தும் விரித்துஞ் செய்தலும்; மொழி பெயர்ப்பு-ஒரு பாடையில் உள்ள நூலை மற்றொரு பாடையிலே திருப்பிச் செய்தலும்; எனஎன்று தகுநூல் யாப்பு ஈரிரண்டு என்பதக்க நூல் யாப்பானது நால்வகைப்படும் என்று சொல்லுவர் புலவர்.
(வி-ம்) "மலர்தலை' என்னுஞ் சூத்திரத்துள்ளே தொகை வகை விரியாப் பென்று சொல்லியது இந் நான்கு பிரிவினுள் இல்லையே யெனின் நடு நின்றவகை பின்னின்ற விரியைக் குறிக்கும்போது தொகையாகவும், முன்னின்ற

பொதுப்பாயிரம் 35,
தொகையைக் குறிக்கும்போது விரியாகவும் நிற்றலினாலே, "தொகை வகைவிரி' யென்றது தொகை விரியென்ப தனுள் அடங்குமெனக் கொள்க. 4
சிறப்புப்பாயிரம் செய்தற்குரியார்
வரென்பது 51. தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா னாக்கன் றகுழுரை காரனென் றின்னோர் பாயிர மியம்புதல் கடனே.: (இ-ள்) தன் ஆசிரியன் - தன்னுடைய ஆசிரியனும்; தன்னொடு கற்றோன் - தன்னோடு பாடங்கேட்டவனும்; தன் மாணாக்கன் - தன்னுடைய மாணாக்கனும்; தகும் உரை காரன் - தன்னுரலுக்குத் தகும் உரையைச் செய்த வனும்; என்று இன்னோர் - என்று சொல்லப்பட்ட இந் நால்வருள் ஒருவர்; பாயிரம் இயம்புதல் கடன் - சிறப்புப் பாயிரத்தைச் சொல்லுதல் முறைமையாகும்,
(வி-ம்) தன்னொடு கற்றோனெனினும், ஒரு சாலை மாணாக்கன் எனினும் ஒக்கும், 5 சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம் 52. தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே. (இ-ள்) தோன்றாதோற்றித் துறை பல முடிப்பினும் - தோன்றாத நுட்பங்களெல்லாங் காட்டிப் பல துறைப் பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தாலும்; தான் தற்புகழ்தல் தகுதி அன்று - தானே தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் தகுதியன்றாம். 6.
தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் 53. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுக் தன்னைப் புகழ்தலுங் தகும்புல வோற்கே.

Page 24
36 நனனுரல
(இ-ள்) மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும் - அரசனது சபைக் கெழுதுஞ் சீட்டுக் கவியிலும்; தன்னு டைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்வி வலிமையை அறியாதாரிடத்திலும்; மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - பெரிய சபையில் வாதஞ் செய்து வெல்லும் பொழுதும்; தன்னை மறுதலை பழித்த காலையும்-தன்னை எதிரி பழித்த காலத்திலும்; தன்னைப் புகழ்தலும் புலவோ ற்குத் தகும்-தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளலும் புலவனுக்குத் தகும். 7 பாயிரம் நூலுக்கு இன்றியமையாச் சிறப்பின தென்பது 54. ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே. (இ-ள்) ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் - ஆயிரம் உறுப்புக்களால் விரிந்த தாயினும்; பாயிரம் இல்லது பனுவல் அன்று-பாயிர மில்லாதது நூலன்றாம். 8
55. மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்-நாடிமுன் ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. (இ=ள்) மாடக்குச் சித்திரமும்-மாளிகைக்குச் சித்தி ரமும்; மாநகர்க்குக் கோபுரமும்-பெரிய பட்டணத்திற்குக் கோபுரமும், ஆடு அமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி-நடிக்கின்ற மூங்கில் போலும் தோள்களை யுடைய மங்கையருக்கு ஆபரணமும் போல நினைத்து: ஐது உரையா நின்ற அணிந்துரையை உரையா - அழகிய பொருளைச் சொல்லுகின்ற பாயிரத்தையுரைத்து; எந் நூற்கும் முன் பெரிது பெய்து வைத்தார் - எவ் வகைப் பட்ட பெரிய நூலுக்கும் முதலிலே பெரும்பாலும் சேர்த்து வைத்தார் ஆசிரியர். 9
சிறப்புப்பாயிரம் முற்றிற்று

முதலாவது எழுத்ததிகாரம்
(எழுத்தினது அதிகரித்தலையுடைய படலம்) 1. எழுத்தியல் கடவுள் வணக்கமும் அதிகாரமும்
56. பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே.
(இ-ள்) பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகற்றொழுது-பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலின்கண் எழுந்தருளியிருந்த நான்கு திருமுகங்களை யுடைய கடவுளை வணங்கி; எழுத்து நன்கு இயம்புவன் - எழுத்திலக்கணத்தை நன்றாகச் சொல்வேன் யான்.
எழுத் தென்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை.
எல்லாம் வல்ல கடவுளை வனங்கலால் இனிது முடியு மென்பது கருதி நன்கியம்புவ னென்று புகுந்தமையின், இது நுதலிப் புகுத லென்னும் உத்தி. 1
எழுத்திலக்கணத்தின் பகுதி 57. எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (இ-ள்) எண்-எழுத்தினெண்ணும்; பெயர்-பெயரும்; முறை - முறையும்; பிறப்பு - பிறப்பும்; உருவம்-வடிவமும்; மாத்திரை - அளவும்; முதல் (நிலை) - முதல்நிலையும்; ஈறு (நிலை)-கடை நிலையும்; இடை (நிலை)-இடைநிலை யும்; போலி-போலியும்; பதம் - பதமும்; புணர்பு-புணர்ச்சி யும்; எனப் பன்னிருபாற்று - என்று பன்னிரு பகுதியினை யுடைத்தாகும்; அது - அவ் வெழுத்திலக்கணம். w

Page 25
38 நன்னூல்
(வி-ம்) இச் சூத்திரந் தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி; மேல் வருவனவெல்லாம் வகுத்துக் காட்டல்.
இப் பன்னிரு பகுதியுள்ளும், எண் முதலிய பத்தும் எழுத்தின் அகத்திலக்கணம், பதம் புணர்பு என்னும் இரண் டும் புறத் திலக்கண மென்பது தோன்ற என்றாவென்னும் எண்ணிடைச் சொற் கொடுத்துப் பிரித்தோதினார்.
எழுத்தின் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியல் என ஒரியலாகவும் புறத்திலக்கணம் இரண்டனுள் அவ் வெழுத்தாலாம் பதத்தைப் பதவியலென ஒரியலாகவும் அப் பதம் புணரும் புணர்ப்பை உயிரீற்றுப் புணரியல் மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியலென மூன்றிய லாகவும் ஒத்து முறைவைப் பென்னும் உத்தியால் வைத்தார். 2.
1. எண்
எழுத்து இன்னதென்பதும் அதன் வகையும்
58. மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.
(இ-ள்) மொழி முதற் காரணம் அணுத்திரன் ஆம் ஒலி எழுத்து-மொழிக்கு முதற்காரணமும் அணுத்திரளின் காரியமுமாகிய ஒலியாவது எழுத்து; அது முதல் சார்பு என இரு வகைத்து - அது முதலெழுத்துஞ் சார்பெழுத்து மென இரு வகையினையுடைத்து.
(வி-ம்) அணுத் திரள் - அணுக்கூட்டம். இங்கே அணு வென்றது செவிப்புலனா மனுவை; அது ஒலி நுட்பம். மொழிக்கு முதற்காரணம் எழுத்தானாற்போல, எழுத்திற்கு முதற்காரணம் அணுக் கூட்டமாம். அணுக் கூட்டத்தின் காரியம் எழுத்தானாற்போல எழுத்தின் காரியம் மொழியாம்.

எழுத்தியல் 39
காரியமாவது ஆக்கப்பட்டது. காரணமாவது காரியத் திற்கு இன்றியமையாததாய் அதற்கு முற்காலத் திருப்பது. முதற் காரணமும் துணைக் காரணமுமெனக் காரணம் இருவகைப்படும். முதற்காரணமாவது காரியத்தோடு ஒற்றுமை யுடையது. துணைக்காரணமாவது முதற் காரணத்திற்குத் துணையாய் அது காரியப்படுமளவும் உடன்நிகழ்வது. குடங்காரியம்; அதற்கு முதற்காரம் மண்; துணைக் காரணம் திரிகை. மொழி காரியம்; அதனின் வேறாகாது அதனோடு ஒற்றுமையுட்ையது எழுத்தாத லால், அதற்கு எழுத்து முதற்காரணம். எழுத்துக் காரியம்; அதனின் வேறாகாது அதனோடு ஒற்றுமை யுடையது செவிப்புலனாம் அணுவாதலால் அதற்கு அவ்வணு முதற் காரணம். 3 முதலெழுத்தின் விரி 59 உயிரும் உடம்புமா முப்பது முதலே
(இ-ள்) உயிரும் - உயிரெழுத்துப் பன்னிரண்டும்; உடம்பும்-மெய்யெழுத்துப் பதினெட்டும்; ஆம் முப்பதும் முதல்-ஆகிய முப்பதெழுத்தும் முதலெழுத்தாம். 4 சார்பெழுத்தின் வகை
60. உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉஐஒள மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். (இ-ள்) உயிர்மெய்-உயிர்மெய்யும்; ஆய்தம்-ஆய்த மும்; உயிரளபு - உயிரளபெடையும்; ஒற்றளபு - ஒற்றள பெடையும்; அஃகிய இ-குற்றியலிகரமும்; (அஃகிய) உகுற்றியலுகரமும்; (அஃகிய) ஐ - ஐகாரக் குறுக்கமும்; (அஃகிய) ஒள-ஒளகாரக் குறுக்கமும்; (அஃகிய) மஃகான்மகரக் குறுக்கமும்; (அஃகிய) தனிநிலை-ஆய்தக் குறுக் கமும்; பத்துஞ் சார்பெழுத்து ஆகும்-ஆகிய பத்துஞ் சார்பெழுத்தாகும். அஃகுதல் - சுருங்குதல்; தனிநிலை - ஆய்தம்.

Page 26
40 நன்னூல்
சார்பெழுத்தின் விரி 61. உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயிரளபெழு மூன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஒளகா னொன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. (இ-ள்) உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு-உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; உயர் ஆய்தம் எட்டு-முற்றாய்தம் எட்டு; உயிரளபு எழுமூன்று-உயிரளபெடை இருபத் தொன்று; ஒற்றளபெடை ஆறேழ்-ஒற்றளபடை நாற்பத் திரண்டு; அஃகும இ முப்பானேழ் - குற்றியலிகரம் முப்பத் தேழு; (அஃகும்) உகரம் ஆறாறு-குற்றியலுகரம் முப்பத் தாறு; (அஃகும்) ஐகான் மூன்று-ஐகாரக் குறுக்கம் மூன்று; (அஃகும்) ஒளகான் ஒன்று-ஒளகாரக் குறுக்கம் ஒன்று; (அஃகும்) மஃகான் மூன்று-மகரக் குறுக்கம் மூன்று; (அஃகும்) ஆய்தம் இரண்டொடு-ஆய்தக் குறுக்கம் இரண்டுடனே சார்பெழுத்து உறு விரி ஒன்று ஒழி முந் நூற்றெழுபான் என்ப-சார்பெழுத்தினது மிகுந்த விரி முந்நூற்றறுபத்தொன்பதாம் என்று சொல்லுவர் புலவர். இவை இத்தனையவாதல் அவ்வவற்றின் பிறப் பிலக்கணத்திற் காண்க. 6 2. பெயர் பெயர்க்கெல்லாம் பொதுவிலக்கணம் 62. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின
(இ-ள்) இடுகுறி காரணப் பெயர்-இடுகுறிப் பெயருங் காரணப் பெயருமாகிய இரண்டும்; பொதுச் சிறப்பினபல பொருளுக்குப் பொதுப்பெயராயும் ஒவ்வொரு பொருளுக்கே சிறப்புப் பெயராயும் வருவனவாம். Y

எழுத்தியல் 4丞
இடுகுறிப் பெயராவது ஒரு காராணமும் பற்றாது வழங்கி வரும் பெயர், காரணப் பெயராவது யாதேனு மொரு காரணம் பற்றி வழங்கிவரும் பெயர்.
(உ-ம்) மரமென்பது, ஒரு காரணமும் பற்றாது வழங்கும் பெயராய் மா, பலா முதலிய பல பொருள் களுக்கும் பொதுவாய் நிற்கையால், இடுகுறிப் பொதுப் பெயர்.
மா, பலா என்பன, ஒரு காரணமும் பற்றாது வழங்கும் பெயராய், ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் நிற்கை யால், இடுகுறிச் சிறப்புப் பெயர்.
அணியென்பது அணியப்படுதலாகிய காரணம் பற்றி வழங்கும் பெயராய் இடுவன தொடுவன கட்டுவன கவிப்பன முதலிய ஆபரணங்கள் பலவற்றிற்கும் பொது வாய் நிற்கையாற் காரணப் பொதுப்பெயர்.
முடி-கழல் என்பன, முடியிற் கவிக்கப்படுவதுங் கழலிற் கட்டப்படுவதுமாகிய காரணம் பற்றி வழங்கும் பெயராய், ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் நிற்கை யாற் காரணச் சிறப்புப்பெயர்.
இனி இரட்டுற மொழிதலென்னும் உத்தியால் இச் சூத்திரத்திற்கு வேறுமொரு பொருள் உரைக்கப்படும்; அது வருமாறு:-
இடுகுறி காரணப்பெயர்-இடுகுறியென்றுங் காரண மென்றுஞ் சொல்லப்படும் இலக்கணங்களையுடைய பெயர்கள்; பொது-இடுகுறி காரணமென்னும் இரண் டற்கும் பொதுவாயும், சிறப்பின-இடுகுறிக்கே சிறப்பாயுங் காரணத்திற்கே சிறப்பாயும் வருவனவாம்.
எனவே இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரண இடுகுறிப்பெயர் எனப் பெயர் மூவகைப்படுமென்றா ராயிற்று.

Page 27
நன்னூல் 42۔
காரண இடுகுறிப் பெயராவது: காரணங் கருதிய பொழுது அக் காரணங்களையுடைய பல பொருள் களுக்குஞ் செல்வதாயும், காரணங்கருதாதபொழுது இடு குறியளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வ தாயுள்ள பெயராம்.
(உ-ம்) பொன் எ ன் பது இடுகுறிப் பெயர். "பொன்னன்’ என்பது காரணப் பெயர். முக்கணன், அந்தணன், முள்ளி, கறங்கு என்பன காரண இடுகுறிப் பெயர். முக்கணன் என்பது காரணங்கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்ச் சிவபெரு மானுக்குச் செல்லுதலாலும், காரண இடுகுறிப் பெயரா யிற்று. மற்றைப் பெயர்களுக்கும் இப்படியே காண்க. 7
எழுத்தின் பெயர்
63. அம்முத லீரா றாவி கம்முதன்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்.
(இ-ள்) அம் முதல் ஈராறு ஆவி (என)-நெடுக்கணக் கினுள் அகர முதலிய பன்னிரண்டனையும் உயிரெழுத் தென்றும்; கம் முதல் மூவாறு மெய் என-ககர முதலிய பதினெட்டனையும் மெய்யெழுத்தென்றும் விளம்பினர் புலவர்-சொன்னார் அறிவுடையோர்.
(வி-ம்) அகர முதலிய பன்னிரண்டும் உயிர் போலத் தனித்தியங்கும் வன்மையுடைமையால் உயிரெனவும் ககர முதலிய பதினெட்டும் உயிரோடு கூடியல்லது இயங்கும் வன்மையில்லாத மெய்போல அகரத்தோடு கூடியல்லது இயங்கும் வன்மையில்லாமையால் மெய்யெனவும் பெயர் பெற்றன. இவை உவம ஆகுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின. பிறவும் இப்படியே வருதல் காண்க. 8
64. அவற்றுள்,
அ இ உ எ ஒக்குறி லைக்தே.

எழுத்தியல் 43
(இ-ள்) அவற்றுள்-ஆவியு மெய்யு மென்றவற்றுள்; அ இ உஎ ஒஐந்து குறில்- அ, இ, உ,எ,ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்தாம். s
65. ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள நெடில்,
இ-ள்) ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள நெடில்-ஆஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழும் நெட்டெழுத்தாம். 10
66. அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே.
(இ-ள்) அஇஉ-அ, இ, உ, என்னும் மூன்றும், முதல் தனிவரின் சுட்டு-மொழிக்கு முதலிலே தனித்துச் சுட்டுப் பொருளைக் காட்டவரின் சுட்டெழுத்தாம்.
முதலெனப் பொதுப்படச் சொன்னதினாலே, புறத் தும் அகத்தும் வருமெனக் கொள்க.
(உ-ம்) அக் கொற்றன், இக் கொற்றவன், உக் கொற்றன் - புறத்து வந்தன.
அவன், இவன், உவன்-அகத்து வந்தன. அகரந்தூரத்திலுள்ள பொருளையும், இகரஞ் சமீபத் திலுள்ள பொருளையும் உகரம் நடுவிலுள்ள பொருளை யுஞ் சுட்டுதற்கு வரும். ll
67. எயா முதலும் ஆ ஓ வீற்றும்
ஏ யிரு வழியும் வினாவா கும்மே. (இ-ள்) எ யா முதலும்-எகரமும் யாவும் மொழிக்கு முதலிலும், ஆ ஓ ஈற்றும்-ஆகாரமும் ஒகாரமும் மொழிக்கு இறுதியிலும் ஏ இரு வழியும்-ஏகாரம் இவ் விரண்டிடத் திலும், (தனி வரின்) வினா ஆகும்-தனித்து வினாப் பொருளைக் காட்டவரின் வினாவெழுத்தாம்.
மேலைச் சூத்திரத்திலே தனிவரின்" என்றது இதற்குங் கூட்டப்பட்டது.
ஒன்றின முடித்தல் தன்னின முடித்தலென்னும் உத்தி யால் உயிர்மெய்யாகிய யா வினாவும் உடன் கூறப் . القوسا سالك
ந.-4

Page 28
44 நன்னூல்
இவை புறத்தும் அகத்தும் வருதல் ஏற்றபடி கொள்க. (உ-ம்) எக் கொற்றன்? யாங்ங்ணம்? என எகரமும் யாவும் முதலிலே புறத்து வந்தன.
எவன்? யாவன்? என எகரமும் யாவும் முதலிலே அகத்து வந்தன.
கொற்றனா? கொற்றனோ? என ஆகாரமும் ஒகாரமும் ஈற்றிலே புறத்துவந்தன.
ஏவன்? கொற்றனே? என ஏகாரம் முதலில் அகத்தும் ஈற்றிற் புறத்தும் வந்தது. I2
68. வல்லினம் க ச ட த ப ற வென வாறே.
(இ-ள்) க ச ட த ப ற என ஆறு வல்லினம்-க்,ச்,ப் த், ப், ற் என்று ஆறும் வல்லெழுத்தாம். இவை வன்கணம் எனவும் பெயர்பெறும். 13
69. மெல்லினம் நு ஞ ண ந ம ன வென வாறே.
(இ-ள்) ங் ஞ ண ந ம ன என ஆறு மெல்லினம்-ங், ஞ், ண், ந், ம், ன் என்று ஆறும் மெல்லெழுத்தாம். இவை மென்கணம் எனவும் பெயர்பெறும். 14
70. இடையினம் ய ர ல வ ழ ள வென வாறே.
(இ-ள்) ய ர ல வ ழ ள என ஆறு இடையினம்-ய், ர், ல், வ், ழ், ள் என்று ஆறும் இடையெழுத்தாம். இவை இடைக்கணம் எனவும் பெயர் பெறும். 15.
இனவெழுத்து
71. ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்
திவ்விாண் டோரின மாய்வரன் முறையே.
(இ-ள்) ஐ ஒள இ உச் செறிய-இனமில்லாத ஐகார ஒளகாரங்கள் ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய இகர

எழுத்தியல் 45
உகரங்களைத் தமக்கும் இனமாகப் பொருந்த முதலெழுத்து இவ்விரண்டு ஓரினம் ஆய் வரல் முறை- முதலெழுத்துக்கள் இவ்விரண் டோரினமாய் வருதன் முறை; ஆதலால்; அவை இனவெழுத்தெனப் பெயர்பெறும்.
சுருங்கச் சொல்லல் எனினும் அழகுபற்றி முதலெழுத் தெனப் பொதுப்படக் கூறினார்; ஏற்புழிக் கோட லென்ப தனால், இவ்விரண்டு ஓரினமாய் வருதல் இடையின மொழிந்த மற்றவைகளுக்கே கொள்க. .
(உ-ம்) அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஐ-இ, ஒ-ஓ, ஒள-உ எனவும் க~ங், ச-ஞ. ட-ண, த-ந, ப-ம, ற-ன எனவும் இவ் விரண்டு ஓரினமாய் வந்தமை காண்க. 16
னமென் ற்குக் காரணம்
s):5(1)(5
72. தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே.
(இ-ள்) தானம்-பிறப்பிடமும்; முயற்சி-தொழிலும்; அளவு-மாத்திரையும்; பொருள்-பொருளும்; வடிவு-உருவ மும்; ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு-ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக ஒரு புடையொத்தலால்; இனம்-இனமாம்.
முன் காரணம் விளங்காமற் கூறப்பட்ட இனம் என் றதை இங்கே காரணங் காட்டி முடிவு செய்தலால், இச் சூத்திரம் ஏதுவின் முடித்தல் என்னும் உத்தி.
ஆய்தந் தனிநிலை யாதலாலும்; மற்றைச் சார் பெழுத்துக்களுக்கு அவ்வவற்றின் முதலெழுத்துக்களின் பெயர்களே பெயர்களாய் அடங்குதலாலும் சார்பெழுத் துக்களுக்குப் பெயர் சொல்லாதுவிட்டார். 17

Page 29
3. முறை 73. சிறப்பினும் இனத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே.
(இ-ள்) சிறப்பினும் இனத்தினும் செறிந்து-சிறப்பி னாலும் இனத்தினாலும் பொருந்தி; ஈண்டு அம் முதல் நடத்தல் தானே - இவ் வுலகத்தில் அகர முதலாக வழங்கு
தலே; முறை ஆகும்-எழுத்துக்களது முறையாம்.
தனித்தியங்கும் வன்மையுடைய உயிரெழுத்துக்கள் அவ்வன்மை யில்லாத மெய்யெழுத்துக்களுக்கு முன் நிற்ப தும் குறிலினது விகாரமே நெடிலாதலாற் குற்றெழுத்துக் கள் நெட்டெழுத்துக்களுக்கு முன் நிற்பதும் வலியவர் மெலியவருக்கு முன் நிற்றல் போல வல்லெ முத்துக்கள் மெல்லெழுத்துக்களுக்கு முன் நிற்பதும் சிறப்பினால் எனவும், குற்றெழுத்துக்களுக்குப்பின் அவ்வவற்றிற்கு இனமொத்த நெட்டெழுத்துக்கள் நிற்பதும் வல்லெழுத் துக்களுக்குப் பின் அவ்வற்றிற்கு இனமொத்த மெல் லெழுத்துக்கள் நிற்பதும் இனத்தினால் என வுங் கொள்க. 1.
4. பிறப்பு பிறப்பின் பொது விதி
74. நிறையுயிர் முயற்சியினுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே. (இ-ள்) நிறை உயிர் முயற்சியின்-ஒலி யெழுத்தாகிய காரியத்திற்கு வேண்டுங் காரணங்களிற் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்; உள் வளி துரப்ப எழும் அணுத்திரள்-உள்ளே நின்ற 'உதானன்' என்னுங் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக் கூட்டம்; உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று-மார்பும்

எழுத்தியல் 47
கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கிடத்தையும் பொருந்தி; இதழ் நாப்பல் அணத்தொழிலின்-உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயுமாகிய நான்கனுடைய முயற்சிகளால்; வெவ்வேறு எழுத்து ஒலிஆய்வரல்-வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல்; பிறப்பு
அவற்றின் பிறப்பாம். 19 முதலெழுத்துக்களுக்கு இடப்பிறப்பு 75. அவ்வழி,
ஆவி யிடைமை யிடமிட றாகும் ع#
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (இ-ள்) அவ்வழி-முன் சொன்ன வழியாற் பிறக்கு மிடத்து, ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்-உயி ரெழுத்துக்களுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத் தாகும்; மென்மை மூக்கு மேவும்-மெல்லினம் நாசியை இடமாகப் பொருந்தும்; வன்மை உரம் பெறும்-வல்லினம் மார்பை இடமாகப் பெறும் 20
முதலெழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு 76. அவற்றுள்,
முயற்சியுள் அ ஆ வங்காப் புடைய. (இ-ள்) அவற்றுள்-மேலிடம் வகுக்கப்பட்ட முதல் எழுத்துக்களுள்; ஆ ஆ முயற்சியுள் அங்காப்பு உடையஅ, ஆ இரண்டும் நால்வகை முயற்சியுள் அண்ணத்தின் தொழிலாகிய அங்காத்தலை யுடையனவாய்ப் பிறக்கும். அங்காத்தல்-வாயைத் திறத்தல். 21
77 இ ஈ எ ஏ ஐ அங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே. (இ-ள்) இ ஈ எ ஏ ஐ - இ, ஈ, எ, ஏ, ஐ ஐந்தும்; அங் காப்போடு-அங்காப்புடனே; அண்பல் நா முதல் விளிம்பு உற வரும்-மேல்வாய்ப் பல்லை நாக் கடியினது ஒரமானது பொருந்தப் பிறக்கும். அண்பல்-நா விளிம்பால் அணுகப் படும் பல். 22

Page 30
48 நன்னூல்
78. உ ஊ ஒ ஓ ஒள விதழ் குவிவே.
(இ-ள்) உ ஊ ஒ ஓ ஒள - உ, ஊ, ஒ, ஓ, ஒள ஐந்தும் பிறத்தற் சேதுவாகிய முயற்சி; இதழ் குவிவு-உதடுகள் குவிதலாம். 23
79. கங்வுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே.
(இ-ள்) கங் (நா) முதல் (அண்ண முதல்)-கவ்வும் நுவ்வும் நாக்கினடி மேல்வாயடியையும், சஞ (நா) விடை (அண்ண விடை) - சவ்வும் ஞல்வும் நாக்கினடு மேல்வாய் நடுவையும்; ட ண (நா) நுனி (அண்ண நுனி) உற-டவ்வும் ணவ்வும் நாக்கின் கடை மேல்வாய்க் கடையையும் பொருந்த முறைவரும்-இம்முறையே பிறக்கும். 24
80. அண்பல் அடிநா முடியுறத் தநவரும்,
(இ-ள்) அண்பல் அடி நா முடி உற-மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கு நுனி பொருந்த; த ந வரும்தவ்வும் நவ்வும் பிறக்கும். 25
81. மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும்.
(இ-ள்) மீ (இதழ்) கீழ்இதழ் உற-மேலுதடுங் கீழுதடும் பொருந்த; பம் மப் பிறக்கும். பவ்வும் மவ்வும் பிறக்குழ்,
2 82. அடிநா வடியன முறயத் தோன்றும்.
(இ-ள்) நா வடி அண வடி உற-நாக்கினடியானது மேல்வாயடியைப் பொருந்த, ய தோன்றும்-யகரமானது பிறக்கும். 27
83. அண்ணம் நுனிநா வருட ஏழவரும்.
(இ-ள்) அண்ணம் நா நுனி வருட-மேல்வாயை நாக்கு நுனியானது தடவ ர ழ வரும்--ரவ்வும் ழவ்வும் பிறக்கும். 28 84. அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.

எழுத்தியல் 49
(இ-ள்) அண்பன் முதல் நா விளிம்பு வீங்கி ஒற்ற லகாரம் (ஆய்)-மேல்வாய்ப் பல்லடியை நா வோராமானது தடித்து நெருங்க லகாரமாகியும், அண்ணம் (நா விளிம்பு) வீங்கி வருட ளகாரம் ஆய் - மேல்வாயை நா வோர மானது தடித்துத் தடவ ளகாரமாகியும்; இரண்டும் முறை பிறக்கும் - இரண்டெழுத்துக்களும் இம்முறையே பிறக்கும். 29
85. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே.
(இ-ள்) மேற் பல் இதழ் உற-மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த, வ மேவிடும்-வ கரமானது பிறக்கும்,
O
86. அண்ண நுனிநா கனியுறிற் றனவரும்.
(இ-ள்) அண்ணம் நா நுனி நனி உறின்-மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்தின் றன வரும்-றவ்வுப் னவ்வும் பிறக்கும். 3. சார்பெழுத்துக்கு இடமுயற்சி 87. ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுங் தம்முத லனைய. (இ- ள்) ஆய்தக்கு இடம் தலை முயற்சி அங்காஆய்தம் பிறத்தற்கு இடந்தவை; தொழில் வாயைத் திறத்தலாம்; சார்பெழுத்து ஏனவும் தம் முதல் அனைய ஆய்த மொழிந்த மற்றைச் சார்பெழுத்துக்களும் இடப் பிறப்பு முயற்சிப் பிறப்புக்களினாலே தத்தம் முதலெழுத் துக்களை ஒப்பனவாம். 32 பிறப்புக்குப் புறனடை 88. எடுத்தல் படுத்த னலித லுழப்பிற் றிரிபுங் தத்தமிற் சிறிதுள வாகும். (இ-ள்) (பல வெழுத்திற்குப் பிறப்பு ஒன்றாகச் சொல் லப்பட்டன வெனினும்) எடுத்தல் - உயர்த்திக் கூறுதலும், படுத்தல் - தாழ்த்திக் கூறுதலும் நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியும் கூறுதலும் ஆகிய; உழப்பின்-எழுத்திற்குரிய ஒலி முயற்சியால், திரிபும் தத்தமின் சிறிது உள ஆகும் - ஒன்றற் கொன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றின் கண்ணே சிறிது சிறிது உள்ளனவாம். 33

Page 31
50 • நன்னூல்
உயிர்மெய்
89. புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய்.
(இ-ள்) புள்ளி விட்டு-மெய் புள்ளியை விட்டு; அவ்வொடு முன் உரு ஆகியும் - அகரத்தோடு கூடியவழி அவ்விட்ட வுருவே உருவாகியும்; ஏனை உயிரோடு உருவு திரிந்தும்-அஃதொழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும்; உயிர் அளவு ஆய்-தன் மாத்திரை தோன் றாது உயிர் மாத்திரையே மாத்திரையாய்; அதன் வடிவு ஒழித்து-தன் வரிவடிவின் விகார வடிவே வடிவாய் உயிர் வடிவை யொழித்து; இருவயிற் பெயரொடும்-உயிரும் மெய்யுமாகிய இரண்டிடத்தும் பிறந்த உயிர்மெய்யென் னும் பெயருடனே; ஒற்று முன் ஆய்-ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாகி; உயிர்மெய் வரும் - உயிர்மெய் யெழுத்து வரும்.
பன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய் மேலுந் தனித் தனி ஏறிவருவதலால், உயிர்மெய் இருநூற்றுப்பதினா றாதல் காண்க. 34
முற்றாய்தம் 90. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
(இ-ள்) ஆய்தப் புள்ளி-புள்ளி வடிவினதாகிய ஆய்தம்; குறியதன் முன்னர்-குற்றெழுத்தின் முன்னதாய்; உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து-உயிரோடு கூடிய வல்லெ ழுத்தாறனுள் ஒன்றன் மேலதாய் வரும்.
(உ-ம்) எஃகு, கஃசு, இருபஃது, பஃறி என வரும்.
இச் சூத்திரம் மேற்கோளாதலால், தானெடுத்து மொழிதலென்னும் உத்தி.

எழுத்தியல் 5t
வல்லின வகையால் இயல்பாக வரும் ஆய்தம் ஆறுச்
அவ்+கடிய = அஃகடிய எனத் திரிதலென்னும் புணர்ச்சி
விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்று; அ+கான் = அஃகான்
என விரித்த லென்னுஞ் செய்யுள் விகாரத்தால் வரும்
ஆய்தம் ஒன்று; ஆக முற்றாய்தம் எட்டாதல் காண்க. 35 உயிரளபெடை
91. இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற்றினக்குறில் குறியே.
(இ-ள்) இசை கெடின்-பாட்டில் ஓசை குறையின்; மொழி முதல் இடை கடை நிலை நெடில் - மொழிக்கு முதலிலும் நடுவிலும் இறுதியிலும் நின்ற நெட்டெழுத் தேழும்; அளபு எழும்-அவ் வோசையை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மிக்கொலிக்கும்; அவற்று அவற்று இனக்குறில் குறி - அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு அவற்றின் பின் அததற்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வரும்.
(வி-ம்) "ஒஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்." எனவும், *உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு." எனவும், "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா னுசுப்
நல்ல படாஅ பறை," எனவும் வரும். (பிற்கு இவற்றுள், 'ஒதல்' என்பதில் ஒ வென்னு நெட்டெழுத்து மொழிக்கு முதலிலும்; "உறார்" என்பதில் ஆ வென்று நெட்டெழுத்து இடையிலும்; "படா’ என்பதில் ஆ. வென்னு நெட்டெழுத்துக் கடையிலும் அளபெடுத்தவாறு காண்க.
"செறாய்" என்பதில் ஆ வென்னு நெட்டெழுத்து ஈ ரளபெடுத்து வந்தது.

Page 32
あ2 தன்னுரல்
செய்யுளோசை குன்றாவிடத்தும் இன்னிசை நிறைக் கவுஞ் சொல்லிசை நிறைக்கவும் வரும் அளபெடைகளும் உண்டு. இன்னிசை நிறைக்க வரும் அளபெடையாவது குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு இன்னிசை நிறைத்தற்பொருட்டு அளபெடுப்பது. சொல்லிசை நிறைக்க வரும் அளபெடை யாவது பெயர்ச்சொல் வினை யெச்சச் சொல்லின் இசையை நிறைத்தற் பொருட்டு அளபெடுப்பது.
(உ-ம்) "கெடுப்பது உங் கெட்டார்க்குச் சார்வாய்மற் யெடுப்பதூஉ மெல்லா மழை." [றாங்கே
இதனுள்,
"கெடுப்பதும், 'எடுப்பதும்" என நிற்பினுஞ் செய்யு ளோசை குன்றா தாயினும்; இன்னிசை நிறைத்தற் பொருட்டுக் குறில் நெடிலாய் அளபெடுத்தமை காண்க.
"உரணசைஇ யுள்ளந் துணையாக சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்."
இதனுள்,
'உரனசை', 'வரனசை" என நிற்பினுஞ் செய்யு ளோசை குன்றாதாயினும்; விருப்பமெனப் பொருள்படும் நசையென்னும் பெயர்ச்சொல், விரும்பி யென வினை யெச்சப் பொருள்படும் பொருட்டு வினையெச்சச் சொல் லாதற்கு "நசைஇ' என அளபெடுத்தமை காண்க.
நெட்டெழுத்தேழும் மொழிக்கு முதல், இடை, கடை யென்னும் மூன்றிடத்தும் அளபெடுக்குமெனவே, உயிரள பெடை இருபத்தொன்றாதல் பெறப்படும்; ஒளகாரம் மொழிக்கு நடுவிலுங் கடையிலும் வாராமையால் அவ் விரண்டுங் கழிக்க, நின்ற உயிரளபெடை பத்தொன்பது; அப்பத்தொன்பதோடு இன்னிசை நிறைக்க வரும் அள பெடை சொல்லிசை நிறைக்க வரும் அளபெடை என்னும் இரண்டுங் கூட்ட, உயிரளபெடை இருபத்தொன்றாதல் காண்க. 36

எழுத்தியல் 53
ஒற்றளபெடை
92. ங்ஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ பூழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே.
(இ-ள்) (இசை கெடின்-பாட்டில் ஒசை குறையின்); குறிலிணைக் (கீழ்) குறிற் கீழ் இடை கடை-குறிலிணை யின் கீழுங் குறிலின் கீழும் மொழிக்கு நடுவிலும் கடை யிலும் நின்ற ங் ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் - ங்ப் முதலிய இப்பத்தும் ஆய்தமுமாகிய பதினோரெழுத்தும்; அளபு ஆம் - அவ் வோசையை நிறைக்கத் தத்தம் மாத் திரையின் மிக்கொலிக்கும்; அவற்றின் குறி வேறு மிகல் ஆம்-அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துக்களே வரிவடிவில் வேறறிகுறியாய் வரும்.
முன் சூத்திரத்தில் இசைகெடின்' என்றது இதற்குங் கூட்டப்பட்டது.
(உ-ம்) "இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்.' எனவும் "எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயா
னெங்ங் கெனத்திரிவா ரின்." எனவும் 'மடங்ங் கலந்த மனனே களத்து
விடங்ங் கலந்தானை வேண்டு." எனவும் "அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து நங்ங் களங்கறுப்பா தாம்." எனவும் வரும்.
இவற்றுள்: "இலங்கு' என்பதிற் குறிலிணைக்கீ பூழிடையிலும், *எங்கு" என்பதிற் குறிற்கீழிடையிலும் ங்கரம் அளபெடுத் தது. "மடம்” என்பதிற் குறிலிணைக் கீழ்க் கடையிலும், “அம்” என்பதிற் குறிற் கீழ்க் கடையிலும் மகரந் திரிந்த ங்கரம் அளபெடுத்தது.

Page 33
54 நன்னூல்
(உ-ம்) 'விலஃஃகி வீங்கிருளோட்டுமே மாத ரிலஃஃகு முத்தி னினம்." 'எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு." இவற்றுள், ‘விலஃகி" என்பதிற் குறிலிணைக்கீ பூழிடையிலும், "எஃகு" என்பதிற் குறிற்கீ Nடையிலும் ஆய்தம் அளபெடுத்தது.
பதினோ ரொற்றும் குறிலிணைக் கீழிடை குறிற் கீழிடை குறிலிணைக் கீழ்க்கடை குறிற்கீழ்க்கடை என்னும் நான் கிடத்தும் அளபெடுக்குமெனவே ஒற்றளபெடை நாற்பத்து நான்காதல் பெறப்படும் ஆய்தம் ங்கரம்போல விதி யீறாகவும் வாராமையால் அதற்குக் குறிலிணைக் கீழ்க்கடை குறிற் கீழ்க்கடை என்னும் இரண்டிடத்தைக் கழிக்க; ஒற்றளபெடை நாற்பத்திரண்டாதல் காண்க. 37 குற்றியலிகரம் 93. யகரம் வரக்குறளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவினிகரமுங் குறிய. (இ-இ) யகரம் வரக் குறள் உத் திரி இகரமும் - யகரத்தை முதலிலேயுடைய சொல் வரக் குற்றியலுகரந் திரிந்த இகரமும்; அசைச்சொல் மியாவின் இகரமும் அசைச் சொல்லாகிய மியாவென்பதின் மகரத்தின் மேலி ருக்கிற இகரமும்; குறிய - குற்றியலிகரங்களாம்.
நாகு + யாது - நாகி யாது எஃகு + யாது - எஃகி யாது வரகு + யாது = வரகி யாது கொக்கு + யாது = கொக்கி யாது குரங்கு + யாது - குரங்கி யாது தெள்கு + யாது = தெள்கியாது எனவும்:
கேண்மியா எனவும் வரும்.

எழுத்தியல் 55
பொதுப்படக் கூறிய குற்றியலுகரம் முப்பத்தாறி னாலும்; அசைச்சொன் மியாவினாலுங் குற்றியலிகரம் முப்பத்தேழாதல் காண்க 38
குற்றியலுகரம்
91. நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் மிறமேற்றொடரவும் பெறுமே.
(இ-ள்) நெடிலோடு-தனி நெடில் ஏழுடனே; ஆய்தம்ஆய்தமொன்றும்; உயிர் - சொல்லுக்கு நடுவிலும் கடையி லும் வாராத ஒளகாரம் நீங்கிய உயிர் பதினொன்றும்; வலி-வல்லெழுத் தாறும்; மெலி - மெல்லெழுத் தாறும்; இடை-வல்லெழுத்துக்களோடு தொடராத வகரம் நீங்கிய இடை யெழுத்தைந்தும் ஆகிய முப்பத்தாறனுள் ஒன்றி னாலே; தொடர - ஈற்றுக்கு அயலெழுத்தாகத் தொடரப் பட்டு:மொழி இறுதி வன்மை ஊர் உகரம் - சொல்லினிறு தியில் வல்லெழுத்துக்களுள் யாதாயினும் ஒன்றன் மேல் ஏறி வரும் உசரமானது: அஃகும்-தன் மாத்திரையில் குறுகும்; பிற மேல் தொடரவும் பெறும்; இவற்றுள்ஆய்தத்தொடர் முதலிய ஐந்து தொடரும்; வன்மை யூருகரத்தை ஈற்றயலெழுத்துத் தொடர்தலே யன்றிப் பிறவெழுத்துக்களுள் ஒன்றும் பலவும் அவ் வீற்றய லெழுத்தின் மேலே தொடரவும் பெறும்.
"நெடிலோடு" என நெடிலை ஒடுக் கொடுத்துப் பிரித் தார்; பிற மேற்றொடர்தல் அதற்கில்லையென்பது தோன்றுதற் கென்க; பிறமேற் றொடரின் உயிர்த்தொட ரெனப்படும்; உயிர் என்பது குறில் நெடில் இரண்டையும்.
(உ-ம்) நாகு, காசு, நீறு என்பன நெடிற்றொடர்க் குற்றியலுகரம்.
எஃகு கஃசு, இருபஃது என்பன ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்.

Page 34
56 நன்னூல்
வரகு, பலாசு, கயிறு, போவது, ஒன்பது, இறும்பூது என்பன உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
கொக்கு, கச்சு, பற்று, பிண்ணாக்கு, விளையாட்டு, குருத்து என்பன வன்றொடர்க் குற்றியலுகரம்.
சங்கு, பஞ்சு, அம்பு, கன்று, பட்டாங்கு, சுண்ணாம்பு என்பன மென்றொடர்க் குற்றியலுகரம்.
வெய்து, சால்பு, தெள்கு என்பன இடைத்தொடர்க் குற்றியலுகரம்.
இங்கே ஈற்றய லெழுத்தைக் கொண்டு குற்றியலுக ரத்தை அறு வகையாகச் சொல்லியது, பின்னே புணரிய லில் எடுத்தாளுதற் பொருட் டென்க, இது முன்மொழிந்து கோடலென்னும் உத்தி.
மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழி யாததனையும் முட்டின்று முடித்தலென்னும் உத்தியால் நுந்தை யென்னும் முறைப்பெயரின் முன்னின்ற நகர மெய்யின்மேல் ஏறி நிற்கும் உகரமுங் குறுகுமெனக் கொள்க,
மெல்லின மெய்யின்மேலும் இடையின மெய்யின் மேலும் ஏறி நிற்கும் உகரமும், தனிக் குற்றெழுத்தினாலே தொடரப் பட்ட வல்லின மெய்யின்மேல் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம். 39 ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் 95. தற்சுட்டளபொழி யைம்மூ வழியும் நையு மெளவு முதலற் றாகும். (இ-ள்) ஐ-ஐகாரம், தற்சுட்டு அளபு ஒழி மூவழியும்தன்னைக் குறித்துத் தன் பெயர் சொல்லுமளவிற் குறு காது சொல்லுக்கு முத லிடை கடைகளிலே எங்கே நிற் பினும்; நையும்-தன் மாத்திரையிற் குறுகும், ஒளவும் முதல் அற்று ஆகும் - ஒளகாரமுந் தன் பெயர் சொல்லுமளவிற் குறுகாது சொல்லுக்கு முதலிலே தன் மாத்திரையிற் குறுகும்

எழுத்தியல் 57
(உ-ம்) ஐப்பசி, இடையன், குவளை. எனவும்,
மெளவல் எனவும் வரும். இடவகையால ஐகாரக் குறுக்கம் மூன்றும் ஒளகாரக் குறுக்கம் ஒன்றும் வருதல் காண்க. 40 மகரக் குறுக்கம் 96. ண ன முன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.
(இ-ள்) ண ன முன்னும்-ணகர னகரங்களில் ஒன்று நின்று தொடர அதன் முன் வரினும் வஃகான் மிசையும்வகரம் வந்து தொடர அதன் மேல் நிற்பினும்; மக் குறுகும்மகரம் தன் மாத்திரையிற் குறையும்.
(உ-ம்) "வெருளினு மெல்லாம் வெருளுமஃதன்றி
மருளினு மெல்லா மருண்ம்' எனவும்,
'திசையறி மீகானும் போன்ம்' எனவும்,
தரும் வளவன் எனவும் வரும்.
இவற்றுள், மருளும் என்பது "மருண்ம்" எனவும்: போலும் என்பது 'போன்ம்" எனவும் வருதலால், செய்யு மென்னும் வாய்பாட்டு முற்றுச் சொல்லின் ஈற்றயலிலே உகரங் கெட நின்ற ளகர லகரந் திரிந்த ணகர னகரமே இங்கே சொல்லிய ணகர னகரம் என்றறிக.
இச் சூத்திரக் கருத்தைப் பின்வருஞ் சில சூத்திரங் களைக் கொண்டு உய்த்துணர வைத்தலால், இது உய்த் துணரவைப்பு என்னும் உத்தி.
"மருளும்", "போலும்" என்பன செய்யுமென் வாய் பாட்டுத் தெரிநிலை வினைமுற்றென்பது.

Page 35
.58 நன்னூல்
"பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே." 348 என்னுஞ் சூத்திரங் கொண்டும்,
முற்றிறுதி யுகர வுயிர் கெடுமென்பது.
"செய்யுமெனெச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளு ஞம்முந் தாகலு முற்றே லுயிரு முயிர்மெய்யு மேகலு முளவே." 341
என்னுஞ் சூத்திரங் கொண்டும்.
லகர ளகர மெய்களின் முன் மகரம் மயங்காதென்பது, "லளமுன் கசப வயவொன் றும்மே” 17 என்னுஞ் சூத்திரங் கொண்டும்,
லகர ளகரங்கள் மகரத்தின் முன் முறையே னகர னகரங்களாகத் திரியு மென்பது,
"லளவேற் றுமையிற் றடவு மல்வழி
யவற்றோ டுறழ்வும் வலிவரினாமெலி மேவி னணவு மிடைவரினியல்பு மாகு மிருவழி யானு மென்ப." 227 என்னுஞ் சூத்திரங் கொண்டும்;
இந்த ணகர னகரங்களுள் ஒன்றுடன் ஈரொற்றாய் மகரங் குறுகு மென்பதும் இவைகளின் முன் குறுகுதல் செய் யுளினிடத்த தென்பதும்;
"லளமெய் திரிந்த னணமுன் மகார
நைந்தீ ரொற்றாஞ் செய்யுளுள்ளே” 120 என்னுஞ் சூத்திரங் கொண்டும் உய்த்துணரப்படும்.
இச் சூத்திரம் பருந்தின் வீழ்வு. T மகரக் குறுக்கம் இடவகையால் மூன்றாதல் காண்க.41

எழுத்தியல் 59
ஆய்தக் குறுக்கம்
97. லளவீற்றியைபினா மாய்த மஃகும்.
(இ-ள்) ல ள ஈற்று இயைபின் ஆம் - லகர ளகார
ஈற்றுப் புணர்ச்சியில் ஆகின்ற ஆய்தம்.
"குறில்வழி லளத்தவ் வணையி னாய்த
மாகவும் பெறுாஉ மல்வழி யானே" 228
என்ற ஆய்தம், அஃகும்-தன் அரை மாத்திரையிற் குறுகும்.
(உ-ம்) கல்+ தீது-கஃறீது, முள்+ தீது-முஃடீது என வரும்.
இது முடிவிடங் கூற லென்னும் உத்தி.
ஆய்தக் குறுக்கம் இட வகையால் இரண்டாதல் காண்க. 42
5. உருவம்
98. தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர வொகரமெய் புள்ளி.
(இ-ள்) எல்லா எழுத்தும் தொல்லை வடிவின - எல்லா எழுத்துக்களும் பலவேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவினையுடையனவாம்; ஆண்டு எகரம் ஒகரம் மெய் புள்ளி எய்தும்-அவ் வடிவுடையனவாய் வழங்கு மிடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளியைப் பெறும்.
ள், ஒ எனவும் க், ங், ச், ஞ், ட், த், ந், ப்,ம், ய், ர், ல்,
ந.-5

Page 36
6. மாத்திரை
எழுத்துகளின் மாத்திரை 99. மூன்றுயிரளபிரண் டாநெடி லொன்றே குறிலோ டையெளக் குறுக்க மொற்றள பரையொற் றிஉக் குறுக்க மாய்தம் கால்குறண் மஃகா னாய்த மாத்திரை. (இ-ள்) உயிரளபு (மாத்திரை) மூன்று (ஆம்)-உயிரள பெடைக்கு மாத்திரை மூன்றாம்; நெடில் (மாத்திரை) இரண்டு ஆம்-நெட்டெழுத்திற்கு மாத்திரை இரண்டாம் குறில் ஐ (க் குறுக்கும் ஒளக் குறுக்கம் ஒற்றளபு மாத்திரை ஒன்று (ஆம்)-குற்றெழுத்திற்கும் ஐகாரக் குறுக்கத்திற்கும்" ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒற்றள பெடைக்கும் தனித் தனி மாத்திரை ஒன்றாம்; ஒற்று இக் (குறுக்கம்) உக் குறுக் கம் ஆய்தம் (மாத்திரை) அரை (ஆம்)-மெய்யெழுத்திற்குங் குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் ஆய்தத்திற்கும் தனித்தனி மாத்திரை அரையாம்; குறள் மஃகான் (குறள்) ஆய்தம் மாத்திரை கால் (ஆம்)-மகரக் குறுக்கத்திற்கும் ஆய்தக் குறுக்கத்திற்கும் தனித்தனி மாத்திரை காலாம்.
மேலே 'உயிரளவாய்' (சூத். 89) என்றதனால், இங்கே உயிர்மெய்க்கு மாத்திரை கூறாதொழிந்தார்; இது உரைத் தாமென்னும் உத்தி. -
*செறாஅ அய் வாழிய நெஞ்சு" என உயிரளபெடை சிறுபான்மை நான்கு மாத்திரையினதாய் வருதலுமுண்டு. 44. மாத்திரை இன்னதென்பது 100. இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை.
(இ-ள்) மாந்தர் இயல்பு எழும் இமை நொடி-மனிதரு டைய இயல்பாக உண்டாகுகின்ற கண்ணிமைப்பொழுதுங் கைந்நொடிப் பொழுதும் மாத்திரை-ஒரு மாத்திரையென் னும் வரையறைப் பொழுதாம்.

எழுத்தியல் 61
இவ்வளவு கருவியை முற்கூறாது பிற்கூறியது பின்னது நிறுத்தல் என்னும் உத்தி. 45 மாத்திரைக்குப் புறனடை 101. ஆவியு மொற்றுமளவிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். (இ-ள்) ஆவியும் ஒற்றும்-முதலுஞ் சார்புமாகிய உயிரெழுத்துக்களும் அவ்விருவகை மெய்யெழுத்துக்களும், அளவு இறந்து இசைத்தலும் மேவும்-முன் சொன்ன அளவைக் கடந்து மிக்கொலித்தலையும் பொருந்தும்: இசை விளி பண்டமாற்று ஆதியின் - இராகமும் அழைத்தலும் பண்ட மாற்றலு முதலியவைகளிடத்து.
ஆதி யென்றதனால் முறையீடு, புலம்பல் முதலியவை களுங் கொள்க.
இராகத்தில் அளவிறந் தொலிக்குமிடத்து, உயிர் பன்னிரண்டு மாத்திரை யீறாகவும், ஒற்றுப் பதினொரு மாத்திரை யீறாகவும் ஒலிக்கும் என்றார் இசை நூலார்; இது பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் என்னும் உத்தி.
இச் சூத்திரம் "இயல்பெழும்' (சூ. 100) என்னும் சூத்திரத்தைத் தழுவாது அதற்குமுன்நின்ற "மூன்றுயிரளபு' (சூ.99) என்னும் சூத்திரத்தைத் தழுவி நின்றதனாலே, தவளைப் பாய்த்து. 46
7. முதனிலை
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 102. பன்னி ருயிருங் க ச த ந ப ம வ ய
ஞ ங் வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். ( இ-ள்) பன்னீர் உயிரும்-பன்னிரண்டு உயிரெழுத்துக் களும்; க ச த ந ப ம வ ய ஞ ங் ஈரைந்து உயிர் மெய்யும்

Page 37
62 நன்னூல்
ககர முதல் ங்கர மீறாகச் சொல்லப்பட்ட பத்து உயிரேறிய மெய்யெழுத்துக்களும், மொழி முதல்- சொல்லுக்கு முதலாகும்.
(உ-ம்) அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, ஏடு, ஐயம், ஒதி, ஒதி, ஒளவியம் எனவும்,
களி, சவடி, தளிர், நலம், படை, மலை, வளம்,
யவனர், ஞமலி, அங்ங்ணம் எனவும் வரும்.
உயிர் போலத் தனித்து முதலாக மாட்டாமையால், உயிர்மெய்யென்றார்; இது இன்ன தல்ல திது வென மொழிதல் என்னும் உத்தி. 47. பொதுவிதியுட் சிறப்புவிதி 103. உஊ ஒ ஓ வலவொடு வம்முதல்.
(இ-ள்) உ ஊ ஒ ஓ அலவொடு - உ, ஊ, ஒ, ஓ, என் னும் நான்குமல்லாத எட்டு உயிர்களோடும்; வ முதல்வகர மெய் (சொல்லுக்கு) முதலாகும்.
(உ-ம்) வளி, வாளி, விளி, வீறு, வெளி, வேளை, வைகல், வெளவு என வரும். 48.
104. அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல்.
(இ-ள்) அ ஆ உ ஊ ஒ ஒள (ஒடு)-அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள, என்னும் ஆறு உயிரோடும், ய முதல்-யகர மெய் (சொல்லுக்கு) முதலாகும்.
மேலைச் சூத்திரத்தின் "ஒடு" இங்கே வருவிக்கப் பட்டது.
உ-ம்) யவனர், யானை, யுகம், யூகி, யோகி, யெளவனம் என வரும். 49
105. அ ஆ எ ஒவ்வோ டாகும் ஞம்முதல்.
(இ-ள்) அ, ஆ, எ ஒவ்வோடு-அ, ஆ, எ, ஒ என்னும் நான்கு உயிரோடும்; ஞ முதல் ஆகும்-ஞகர மெ ய் (சொல்லுக்கு) முதலாகும்.

எழுத்தியல் 63
(உ-ம்) ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று என வரும். 50
106. சுட்டியா வெகர வினாவழி யவ்வை
ஒட்டி நுவிவு முதலா கும்மே.
(இ-ள்) சுட்டு யா (வினா) எகர வினா வழி-மூன்று சுட்டும் யா வினாவும் எகர வினாவுமாகிய இடைச்சொற் களின் பின், அவ்வை ஒட்டி நல்வும் முதல் ஆகும்அகரத்தைச் சேர்ந்து நுகர மெய்யுஞ் (சொல்லுக்கு) முதலாகும். V (உ-ம்) அங்ங்னம், இங்ங்ணம், உங்ங்ணம், எங்ங்ணம் யாங்ங்ணம் என வரும்.
ங்ன மென்பது இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பல பொருளொரு சொல்.
ஒரு விதத்தினாலே முதலாகையால், ங்வ்வு மென இழிவு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார். முதலாகா தென்பவருக்கு உடன்படுதலும் மறுத்தலுமாதலால், இது பிறர்தம் மத மேற் கொண்டு களைவு என்னும் மதம்.
முதலா மென்ற பத்துயிர்மெய்யுள் வகர முதலிய நான்கினையும் விதந்து கூறவே, ஒழிந்த ஆறு மெய்யும் பன்னிரண் டுயிரோடும் முதலா மென்பது அருத்தாபத்தி யாற் பெற்றாம். 5 I
8. இறுதிநிலை மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள் 107. ஆவி ஞணருமன யரலவ ழளமெய் சாயு முகரநா லாறு மீறே.
(இ-ள்) ஆவி-தனி த் தும் மெய்யோடும் வரும் பன்னிரண்டு உயிர்களும்; ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்-இப் பதினொரு மெய்களும் சாயும் உகரம்= குற்றிய லுகரமுமாகிய; நாலாறும் ஈறு - இருபத்துநான்கெழுத்தும் மொழிக்கு ஈறாகும்.

Page 38
64 நன்னூல்
(உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ எனவும், விள, பலா, கரி, தீ, கடு, பூ, சேஎ, தே, தை, நொ
போ, கெள
எனவும்,
உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர்" வேல், தெவ், வீழ், வாள், அஃகு எனவும் வரும். 32
சிலவற்றிற்குச் சிறப்பு விதி
108. குற்றுயிரளபி னிறா மெகரம்
மெய்யோ டேலா தொங் நவ்வொ டாமெள ககர வகரமோ டாகு மென்ப. (இ-ள்) குற்றுயிர் அளபின் ஈறு ஆம் - அ, இ, உ, எ, ஒ என்னுங் குற்றுயிர்கள் அளபெடையிலே வரிவடிவில் அறிகுறியாகத் தனித்து ஈறாகும்; எகரம் மெய்யோடு ஏலாது - எகரம் மெய்யோ டீறாகாது; ஒ நவ்வொடு ஆம்ஒகரம் நகர மெய்யொன்றுடன் ஈறாகும்; ஒள ககர வகர மொடு ஆகும்-ஒளகாரங் ககர வகரங்களிரண்டு மெய்களுடன் ஈறாகும்; என்ப-என்று சொல்லுவர் புலவர்ச் (உ-ம்) பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ, கோஒ, கெள உ
எனவும்,
நொ எனவும்" கெள, வெள எனவும் வரும். நொ-துன்பப்படு. கெள - வாயாற் பற்று, வெள - கொள்ளையிடு. 53 எழுத்தினது முதலும் ஈறும் 109. நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே.

எழுத்தியல் 65
(இ-ள்) நின்ற நெறியே - மெய்முன்னும் உயிர் பின்னு யாக ஒலித்து நின்ற வழியே உயிர்மெய் முதல் ஈறு-உயிர் மெய்க்கு மெய் முதலாகும் உயிரீறாகும்.
எனவே, உயிரும் ஒற்றும் ஆய்தம் முதலிய ஒன்பது சார்பு எழுத்துக்களும் ஒரெழுத்தாகையால், அவற்றிற்கு முதலும் ஈறும் அவையேயாமென்பது அருத்தாபத்தியாற் கூறினார்; இது எஞ்சிய சொல்லின் எய்தக் கூறலென்னும் உத்தி. இப்படிச் சொல்லாதவையெல்லாஞ் சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தலென்னும் உத்தி. 54
9. இடைநிலை மயக்கம்
110. க ச த ப வொழித்த வீரேழன் கூட்டம்
மெய்ம்மயக் குடனலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே.
(இ-ள்) க ச த ப ஒழித்த ஈரேழன் கூட்டம் மெய்ம் மயக்கு (ஆகும்) - க, ச, த, ப என்னு நான்கையும் நீக்கிய பதினான்கு மெய்களும் பிற மெய்களோடு கூடுங் கூட்டம் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகும்; ர ழ ஒழித்து ஈரெட்டுக் (கூட்டம்) உடனிலை (மெய்ம்மயக்கு) ஆகும்-ர, ழ என்னும் இரண்டனையும் நீக்கி மற்றைப் பதினாறு மெய்களும் தம்மோடு கூடுங் கூட்டம் உடனிலை மெய்ம்மயக்கமாகும்; இவ் விருபால் மயக்கும் மொழி இடை மேவும்-இவ் விரு வகை மயக்கமும் ஒரு மொழிக்கும் தொடர் மொழிக்கும் நடுவில் வரும்: உயிர்மெய் மயக்கு அளவு இன்று-உயிருடன் மெய்யும் மெய்யுடன் உயிரும் மாறி உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறையில்லை; வேண்டிய வாறே மயங்கும்.
கூட்ட மெனினும் மயக்க மெனினும் ஒக்கும்.
பின் உடனிலை என்றதனால், முன் பிறமெய் யென்பது கொள்ளப்பட்டது.

Page 39
66 நன்னுால்
இச் சூத்திரத்தால், மெய்யுடன் மெய்மயங்குமிடத்துக் க, ச, த, ப என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்கு மெனவும், ர, ழ என்னும் மிரண்டும் தம்மொடு பிறவே மயங்கு மெனவும் ஒழிந்த பன்னிரண்டு மெய்யும் தம்மொடு தாமும் பிறவும் மயங்குமெனவும் பெற்றாம்.
உயிரும் மெய்யும் மயங்குதற்கு உதாரணம்: அல், புள் என உயிருடன் மெய் மயங்கின. கா, பூ என மெய்யுடன் உயிர் மயங்கின. மற்றவைகளுக்கு உதாரணம் மேல் வருஞ் சிறப்புச் சூத்திரங்களிற் காண்க. 55
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி
111. நும்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.
(இ-ள்) ங்ம் முன் க வம் முன் ய ஆம்-ங்கரத்தின் முன் ககரமும்; வகரத்தின் முன் யகரமும் மயங்கும்.
(உ-ம்) கங்கன் எனவும்,
தெவ் யாது எனவும் வரும். 56 112. ஞருமுன் றம்மினம் யகரமொ டாகும்.
(இ-ள்) ஞ ந முன் தம் இளம் யகரமொடு ஆகும். ஞகர நகரங்களின் முன் அவற்றிற் கினமாகிய சகர தகரங் களும் யகரமும் மயங்கும்.
(உ-ம்) கஞ்சன், உரிஞ் யாது எனவும்,
கந்தன், பொருந் யாது எனவும் வரும், 57 113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்.
(இ-ள்) ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும்-டகர றகரங்களின் முன் க, ச, ப என்னு மூன்று மெய்களும் இணங்கி மயங்கும்.
(உ-ம்) கட்கம், கட்சி, திட்பம் எனவும்,
கற்க, கற்சிறார்,கற்ப எனவும் வரும். 58

எழுத்தியல் ●7T
114. ண ன முன் னினங்கச ஞபமய வவ்வரும்.
(இ-ள்) ண ன முன்-ணகர னகரங்களின் முன்; இனம் அவற்றிற்கினமாகிய டகர றகரங்களும்; க ச ஞ ப ம ய வ வரும்-ககர முதலிய இவ்வேழு மெய்களும் மயங்கும்.
(உ-ம்) விண்டு, வெண்கலம், வெண்சோறு, வெண் ஞமலி, வெண்பல், வெண்மலர், மண் யாது, மண் வலிது எனவும், نجه
புன்றலை, புன்கண், புன்செய், புன்ஞமலி, புன்பயிர், புன்மலர், பொன் யாது, பொன் வலிது எனவும் வரும். 59:
115. மம்முன் ப ய வ மயங்கு மென்ப.
(இ-ள்) மம் முன் ப ய வ மயங்கும் என்ப-மகரத்தின் முன் ப, ய, வ என்னும் மூன்று மெய்களும் மயங்குமென்று சொல்லுவர் புலவர்.
(உ-ம்) கம்பன், கலம் யாது, கலம் வலிது என வரும். 60
116. யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்.
(இ-ள்) ய ர ழ முன்னர் - ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன்; மொழி முதல் மெய் வரும்-மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும்.
(உ-ம்) வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது; சிறிது தீது, பெரிது, நீண்டது, மாண்டது, ஞான்றது, யாது, வலிது-இவற்றையும் அம் மூன்றுடன் கூட்டுக.
வேய்ங் குழல், ஆர்ங் கோடு, பாழ்ங் கிணறு
என வரும்.

Page 40
68 நன்னூ ல்
சுருங்கச் சொல்லல் என்னும் அழகு பற்றி மொழிமுதன் மெய்யெனக் கூறலால், யகரத்தின்முன் யகரம் மயங்கும் உடனிலை இங்கே கொள்ளாதொழிக. 61
117. லளமுன் கசப வயவொன் றும்மே.
(இ-ள்) ல ள முன் க ச ப வ ய ஒன்றும்-லகர ளகரங் களின் முன் ககரம் முதலிய இவ்வைந்தும் மயங்கும்.
(உ-ம்) வேல் கடிது, வாள் கடிது; சிறிது, பெரிது, வலிது, யாது-இவற்றையுங் கூட்டுக. 62
உடனிலை மெய்ம்மயக்கத்தின் சிறப்பு விதி 118. ரழவல்லன தம்முற் றாமுட னிலையும்.
(இ-ள்) ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும் - ரகர ழகர மல்லாத பதினாறு மெய்களும் தமக்குமுன் தாம் உடனின்று மயங்கும்.
(உ-ம்) அக்கம், அங்ங்ணம். அச்சம், அஞ்ஞானம்,
அட்டு, அண்ணம், அத்து, அந்நீர், அப்பு,
அம்மை, அய்யம், அல்லி, அவ்வை, அள்ளல், அற்றம், அன்னை.
என வரும். 63
தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவை, மொழிக்கு உறுப்பாக மயங்காதன இவை
119. யரழவொற் றின்முன் கசதப நுஞநம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா.
(இ-ள்) ய ர ழ முன் ஒற்றின் க ச த ப ங் ஞ ந ம-ய, ர ழ என்னும் மூன்று மெய்களும் இவற்றின்முன் மயங்கு மென்ற பத்து மெய்களுட் ககர முதலாகிய இவ்வெட்டு

எழுத்தியல் 69
மெய்களும், ஈரொற்று ஆம்-தனி மெய்யும் உயிர்மெய்யுமாகி மயங்குதல் அன்றியும், ஈரொற்றாயும் மயங்கும்; ர ழ த் தனிக் குறில் அணையா-ரகார ழகார மெய்கள் தனிக் குறிற்கீழ் ஒற்றாக மயங்கா. (உ ம்) வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை எனவும் வேய்ச்சிறை, வேர்ச்சிறை, வீழ்ச்சிறை, எனவும், வேய்த்தலை, வேர்த்தலை, வீழ்த்தலை எனவும், வேய்ப்புறம், வேர்ப்புறம், வீழ்ப்புறம் எனவும், வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு எனவும் தேய்ஞ்சது, கூர்ஞ்சிறை, பாழ்ஞ்சுனை எனவும், காய்ந்தனம், நேர்ந்தனம், வாழ்ந்தனம் எனவும், வேய்ம்புறம், ஈர்ம்பணை, பாழ்ம்பதி எனவும் வரும். 64 செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துக்கள் 120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யுளுள்ளே.* (இ- ள்) ல ள மெய் திரிந்த னண முன் மகாரம்-லகார ளகார ஒற்றுத் திரிந்த னகார ணகார முன்வரும் மகர வொற்று; நைந்து ஈரொற்று ஆம் செய்யுளுள் - முன் சொன்ன படியே குறுகி அந்த மெய்களுடனே ஈ ரொற்று டன் நிலையாம், பாட்டினுள்.
(உ-ம்) 'திசையறி மீகானும் போன்ம்" எனவும்,
"மயிலியன் மாதர் மருண்ம்' எனவும் வரும். 65 முதனிலை இறுதிநிலை இடைநிலைகளுக்குப் புறனடை 121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப. *செய்யு ளுள்ளே' என்றமையால் முன்னர்க் கூறிய மயக்கம், வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டிலும் வரும் என அறிக.

Page 41
70 நன்னூல்
(இ-ள்) தம் பெயர் மொழியின்-தம்முடைய பெயர் களைச் சொல்லி நிலைமொழி வருமொழிகளாகப் புணர்க்கு மிடத்து; முதலும் மயக்கமும்-மொழி முதலுக்கும் இடை நிலை மயக்கத்திற்கும்; இம்முறை மாறியும் இயலும்இப்படி விதிக்கப்பட்டனவும் விலக்கப்பட்டனவுமாகிய எல்லா எழுத்துக்களும் முதலாகியும் மயங்கியும் வரும்: என்ப-என்று சொல்லுவர் புலவர்.
இப்படி எல்லா எழுத்துக்களும் தனித்தனி அதற்கதுவே முதலாமெனவே, ஈற்றிற்கு விதிக்கப்பட்டனவும் விலக்கப் பட்டனவுமாகிய எல்லா எழுத்துக்களும் தனித்தனி அதற் கதுவே ஈறாமெனத் தானே விளங்குதலால்; ஈறு மென மிகைபடக் கூறா தொழிந்தார்.
(உ-ம்) "அவற்றுள், லளஃகான் முன்னர் யவ்வும் தோன்றும்" இதிலே லகரம் முதலாகியும்; கூனிறுதி ளகர மெய்யோடு மயங்கியும் வந்தது.
கெப் பெரிது-இதில் எகரம் மெய்யோடீறாய் வந்தது. (கெ-பெரிது) 66
10. போலி
மொழி யிறுதிப் போலி
122. மகர விறுதியஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே.
(இ-ள்) அஃறினைப் பெயரின் இறுதி மகரம்-பால்பகா அஃறிணைப் பெயர்களிடத்து ஈற்றிலே நின்ற மகர மெய்; னகரமோடு உறழா நடப்பன உள-னகர மெய்யோடு ஒத்து நடப்பவை உண்டு.
மகரம் னகரத்தோடொத்தலாவது: பெயரினிறுதி யிலே மகரம் நின்றவிடத்து னகரம் வந்து நிற்பினும்

எழுத்தியல் 7.
வேற்றுமை யின்றியொத்தலாம். இம் மகரம் குறிலிணைக் கீழ் மகரமென்றறிக.
(உ-ம்) அகம்-அகன், நிலம்-நிலன் என வரும்.
இவ் விறுதிப்போலியை முற் கூறியதனால்
சுரும்பு-சுரும்பர், வண்டு-வண்டர்
என மென்றொடர்க் குற்றியலுகரப் பெயரிறுதி உகரம் அன்பு என்பதனோடொத்து வருதலும். *
பந்தல்-பந்தர், சாம்பல்-சாம்பர் எனச் சில லகர மெய்யீற்றுப் பெயரினிறுதி லகர மெய் ரகர மெய்யோடொத்து வருதலுங் கொள்க. 67
மொழிமுதற் போலியும் மொழியுடைப் போலியும்
123. அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்.
(இ-ள்) முதல் இடை-சொல்லுக்கு முதலிலும் நடு விலும், அ ஐ ஒக்கும்-அகரமும் ஐகாரமும் வேறுபாடின்றி ஒத்து நடக்கும்; ச ஞ ய முன்-சகர ஞகர யகரங்களுக்கு முன் வருமாயின்.
இங்கே 'முன்’ என்றது, கால முன் எனக் கொள்க.
(உ-ம்) பசல்-பைசல், மஞ்சு-மைஞ்சு, மயல்-மையல் எனவும்,
அமச்சு - அமைச்சு, இலஞ்சி - இலைஞ்சி, அரயர் - அரையர் எனவும் வரும். 68
மொழியிடைப் போலி
124. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்மரு முளரே.

Page 42
72 நன்னூல்
(இ-ள்) சில் வழி-சொல்லுக்கு நடுவே சிலவிடத்து; ஐகான் (வழி) யவ் வழி-ஐகாரத்தின் பின்னும் யகர மெய் யின் பின்னும்; நவ்வொடு ஞஃகான் உறழும்-இயல்பாய் வரும் நகர மெய்யினோடு ஞகரமெய் ஒத்து நட க்கும்; என் மரும் உளர்-என்று சொல்வாருஞ் சில ருண்டு. (உ-ம்)
"செய்ஞ்ஞன்ற நீல மலர்கின்றதில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள் கண்டுமகிழ்ந்து நிற்க நெஞ்ஞன் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞன்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்
கொண்டு காண்பதென்னே."
எனவும்,
சேய்நலூர்-சேய்ஞலூர், ஐந்நூறு-ஐஞ்ஞாறு எனவும் வரும்.
மண்யாத்த கோட்ட மழகளிறு- "மண்ஞாத்த கோட்ட மழகளிறு." எனவும்,
பொன்யாத்த தார்-"பொன்ஞாத்த தார்." எனவும், ணகர னகர மெய்களின் முன் வருமொழி வினைச் சொல்லின் முதலிலே யா நின்றவிடத்து ஞா நிறபினும் ஒக்கும் போலிக்கு ஆசிரியர் தொல்காப்பியர் சூத்திரஞ் செய்தபடி இவ்வாசிரியர் கூறா தொழிந்தது இறந்தது விலக்கல் என்றும் உத்தி. 69
* சந்தியக்கரம்
125. அம்மு னிகரம் யகர மென்றிவை
எய்தினையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன.
*சந்தி+அக்ஷரம் = கூட்டு எழுத்து (ஐ= அ+இ அல்லது
அ+ய், ஒள = அ+உ அல்லது அ+வ்)

எழுத்தியல் 73
(இ-ள்) அம் முன் இகரம் யகரம் என்ற இவை ஒத்து எய்தின் ஐஇசைக்கும் - அகரத்தின்முன் இகரமும் யகரமும் என்று சொல்லப்பட்ட இவை தம்முளொத்துப் பொருந்தி னால் ஐ என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும்; அவ்வோடு உவ்வும் வவ்வும் (ஒத்து) ஒரன்ன (எய்தின்) ஒள (இசைக்கும்)-அகரத்தோடு உகரமும் வகர மெய்யுந் தம்முளொத்து ஒரு தன்மையனவாகப் பொருந்தினால் ஒள என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும்.
யகர வகர மெய்கள் நடுவிலே கலக்கு மெனக் கொள்க.
மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழி யாத தனையு முட்டி ன்று முடித்தல் என்னும் உத்தியால் - அகரக் கூறும் இகரக் கூறுந் தம்முளொத்து எகர மொலிக்கும்; அகரக் கூறும் உகரக் கூறும் தம்முளொத்து ஒகர மொலிக்கும் எனக் கொள்க. 70.
எழுத்தின் சாரியைகள்
126. மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும்
ஐயெளக் கானு மிருமைக் குறிலிவ் விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும் பிற.
(இ-ள்) மெய்கள் அகரமும் - ஒற்றுக்கள் அகரச் சாரியையும்; நெட்டுயிர் காரமும்-உயிர் நெடில்கள் காரச் சாரியையும்; ஐ ஒளக் கானும் - அவற்றுள் ஐகார ஒளகாரங்கள் காரச் சாரியையுடனே கான் சாரியையும் இருமைக் குறில் இவ்விரண்டோடு கரமும் - உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் காரம், கான் என்னும் இரண்டுடனே கரச் சாரியையும்; ஆம் சாரியை பெறும் - ஆகின்ற சாரியைகளைப் பெறும்.
மெய்க ளவ்வு மென்னாது அகரமு மென்றதனால், இப்படியே கரங் காரங் கான் வரின், அவை சாரியையாகிய அகரத்தினது சாரியை எனக் கொள்க.

Page 43
நன்னுரல்
குற்றெழுத்தோடு கான் சாரியை புணரும்போது இடையே ஆய்தம் விரியும்.
மெய்கள் சாரியை பெறாதும் உயிர்மெய் நெடில்கள் சாரியை பெற்றும் வருதலில்லை.
(உ-ம்) க, ங் எனவும்,
ஆகாரம், ஐகாரம், ஒளகாரம் எனவும், ஐகான், ஒளகான் எனவும், அகாரம், அஃகான், அகரம், மகாரம், மஃகான், மகரம் எனவும் வரும். விகற்பத்தின் முடித்தல் என்னும் உத்தியால் மேல் விரிந்து முடிந்து கிடந்தனவற்றை விளக்கவேண்டி இங்கே தொகுத்து முடித்தலால், இச் சூத்திரம் முடிந்தது முடித்தல் என்னும் உத்தி, 71
இவ் வியலுக்குப் புறனடை
127. மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே.
(இ-ள்) எழுத்து - இவ்வெழுத்துக்கள்; மொழியாய்த் தொடரினும் - பதமாயினும் அப் பதம் தம்மோடும் உரு போடும் புணர்ந்தாலும்; முன் அனைத்து - முன் சொல்லப் பட்ட அப்பத்திலக்கணத்தையும் உடையனவாகும்.
எழுத்தென்பது சாதியொருமை யாதலால், அனைத் தென்னும் ஒருமையோடு முடிந்தது. 72
எழுத்தியல் முற்றிற்று.

2. பதவியல்
1. பதம் பதம் இன்னதென்பதும் அதன் வகையும்
128. எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற்
பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப.
(இ-ள்) எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதம் ஆம் - எழுத்துக்கள் தாமே ஒவ்வொன்றாகத் தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளைத் தருமாயின் அது பதமாம்; அது பகாப்பதம் (என) பகுபதம் என இருபாலாகி இயலும் - அப் பதம் பகாப்பதமெனவும் பகுபதமெனவும் இரண்டு வகையினை யுடையதாகி நடக்கும்; என்ப - என்று சொல்லுவர் புலவர். l
ஓரெழுத்தொருமொழி
129. உயிர்மவி லாறுந் தபருவி லைந்துங்
கவசவி னாலும் யவ்வி லொன்னு மாகு நெடினொது வாங்குறி லிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின.
(இ-ள்) உயிர், மவில் ஆறும் - உயிர் வருக்கத்திலும் மவ் வருக்கத்திலும் அவ்வாறும்; த ப நவில் ஐந்தும் - தவ் வருக்கத்திலும் பவ் வருக்கத்திலும் நவ் வருக்கத்திலும் ஐவ் வைந்தும்; க வ சவில் நாலும் - கவ் வருக்கத்திலும் வவ் வருக்கத்திலுஞ் சவ் வருக்கத்திலும் நந்நான்கும்; யவ்வில் ஒன்றும் -யவ் வருக்கத்தில் ஒன்றும்; ஆகும் நெடில் - ஆகும் நெட்டெழுத்தாலாகிய மொழி நாற்பதும்; நொது ஆம்
四.ー6。

Page 44
76 நன்னூல்
குறில் இரண்டோடு - நொவ்வுந்துவ்வும் ஆகுங் குற்றெழுத் தாலாகிய மொழி இரண்டுடனே; ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின - ஒரெழுத்தாலாகிய மொழிகள் நாற்பத்திரண்டுஞ் சிறப்பினவாம்.
(உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ எனவும்"
மா, மீ, மூ, மே, மை, மோ எனவும், தா, தீ, தூ, தே, தை எனவும், பா, பூ, பே, பை, போ எனவும். நா, நீ, நே, நை, நோ எனவும். கா, கூ, கை, கோ எனவும், வா, வீ, வை, வெள எனவும், , சா, சீ, சே, சோ எனவும், யா எனவும், நொ, து எனவும் வரும்.
இவற்றுள் ஊ - இறைச்சி, ஓ - மதகுநீர் தாங்கும் பலகை, பே - றுரை; நே - அன்பு: சோ - மதில்; நோ - துன்பப்படு; து - உண்.
இவை சிறப்பினவெனவே, கு, கெள, பீ. வே, எனச் சிறப்பில்லாதவைகளுஞ் சில வுள வென்றறிக. 2
தொடரெழுத்தொருமொழி
130. பகாப்பத மேழும் பகுபத மொன்பதும்
எழுத்தீ றாகத் தொடரு மென்ப.
(இ-ள்) பகாப்பதம் ஏ(ழெழுத்து) ஈறுஆக - பகாப் பதங்கள் இரண்டெழுத்து முதல் ஏழெழுத்து ஈறாகவும்: பகுபதம் ஒன்பது எழுத்து ஈறுஆக - பகுபதங்கள் இரண் டெழுத்து முதல் ஒன்பதெழுத்து ஈறாகவும்; தொடரும் என்ப - தொடரும் என்று சொல்லுவர் புலவர்.

பதவியல் 77
(உ-ம்) அணி, அறம், அகலம், அருப்பம்,தருப்பணம்,
உத்திரட்டாதி எனவும், கூனி, கூணன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத் தான், உத்திரட்டாதியான் எனவும் வரும்.
நடத்துவிப்பிக்கிறான் எனப் பகுதி முதலிய உறுப்பு வேறுபட்டு வருவனவற்றிற்கு இவ் வரையறை இல்லை யென்றறிக. 8
பகாப்பதம்
131. பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்.
(இ-ள்) பகுப்பால் பயன் அற்று-பிரிக்கப்படுதலினாலே பகுதி விகுதி முதலாகிய பயனில்லாமல்; இடுகுறி ஆகி முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற-காரணமின்றி இடப்பட்ட குறியாகிப் படைப்புக் காலந்தொட்டு ஒன்றாகி முடிந்து நடக்கின்ற பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் - பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய நான்கும் பகாப்பதங்களாம்.
(உ-ம்) நிலம், நீர், நெருப்பு, காற்று என்பன பெயர்ப்
பகாப்பதம். நட, வா, உண், தின் என்பன வினைப் பகாப்பதம். மன், கொல், போல், மற்று என்பன இடைப் பகாப்பதம்.
உறு, கழி, நனி, தவ என்பன உரிப்பகாப்பதம். 4

Page 45
78 நன்னூல்
பகுபதம் 132. பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.
(இ-ள்) பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர் - பொருளும் இடமுங் காலமுஞ் சினையுங் குணமுந் தொழிலுங் காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும்;பொழுது கொள் வினை-தெரிநிலை யாகவுங் குறிப்பாகவுங் காலத்தைக் கொள்ளும் வினைச் சொற்களும்; பகுபதம்-பகுபதங்களாகும்.
பொழுது கொள் வினை பகுபதமெனவே, அவ் விரு வகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாம் என்பது அருத்தாபத்தியாற் கூறினாரென அறிக.
(உ-ம்) பொன்னன் என்பது பொருட்பெயர்ப்
பகுபதம். அகத்தன் என்பது இடப்பெயர்ப்பகுபதம், ஆதிரையான் என்பது காலப் பெயர்ப்
பகுபதம். கண்ணன் என்பது சினைப்பெயர்ப் பகுபதம்" கரியன் என்பது குணப்பெயர்ப் பகுபதம். ஊணன் என்பது தொழிற்பெயர்ப் பகுபதம். நடந்தான், நடக்கின்றான், நடப்பான் என்பன உடன் பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்.
நடந்த, நடக்கின்ற, நடக்கும் என்பன உடன்பாட்டுத் தெரிநிலை வினைப் பெயரெச்சப் பகுபதம்.
நடந்து, நடக்க, நடக்கின் என்பன உடன்பாட்டுத் தெரிநிலை வினை வினையெச்சப் பகுபதம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடவான் என்பன எதிர் மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்.
நடவாத என்பது எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சப் பகுபதம்.

பதவியல் 79 ۔
நடவாது, நடவாமல் என்பன எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சப் பகுபதம்.
பொன்னன், ஊணன், அற்று, இற்று, எற்று என்பன உடன்பாட்டுக் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்.
கரிய, பெரிய என்பன உடன்பாட்டுக் குறிப்புவினைப் பெயரெச்சப் பகுபதம்.
பைய, மெல்ல என்பன உடன்பாட்டுக் குறிப்புவினை வினையெச்சப் பகுபதம்.
அல்லன், இல்லன், அன்று, இன்று என்பன எதிர் மறைக் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்.
அல்லாத, இல்லாத என்பன எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சப் பகுபதம்.
அன்றி, இன்றி, அல்லாமல், இல்லாமல் என்பன எதிர் மறைக் குறிப்புவினை வினையெச்சப் பகுபதம்.
நடந்தான், நடந்தவன் என்பன தெரிநிலை வினை யாலணையும் பெயர்ப் பகுபதம்.
பொன்னன், பொன்னவன் என்பன குறிப்பு வினை யாலணையும் பெயர்ப் பகுபதம்.
பெயர்ப் பகுபதம் பகுதி விகுதியிரண்டிலும் பொருட் சிறப்புடையதாய்க் காலங் கொள்ளாது வேற்றுமையுரு பேற்று வரும்.
வினைக் குறிப்பு முற்றுப் பகுபதம் பகுதியிற் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமையுருபேலாது வரும்.
வினைக் குறிப்புமுற்று வினையாலணையும் பெயர்ப் பகுபதம் விகுதியிற் பொருட் சிறப்புடையதாய்க் காலத் தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமையுருபேற்று வரும்.

Page 46
80 நன்னுfால்
இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடாம்.
பொன்னனை வணங்கினான்
சாத்தன் பண்டு பொன்னன்
பண்டு பொன்னனைக் கொணர்ந்தேன் என வரும்.
தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் பகுதியிற் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தை வெளிப்படையாகக் காட்டி வேற்றுமையுரு பேலாது வரும் தெரிநிலை வினை யாலணையும் பெயர்ப் பகுபதம் விகுதியிற் பொருட் சிறப்புடையதாய்க் காலத்தை வெளிப்படையாகக் காட்டி வேற்றுமை யுருபேற்று வரும். இவையே இவ்விரண்டிற்கும் வேறுபாடாம்.
சாத்தன் நடந்தான், நட ந் தானை த் தடுத்தேன் என வரும்.
எல்லாச் சொற்களையுங் கூறுங்காற் பொருள் சிறக்கு மிடத்தெழுத்தை எடுத்தும், அயலெழுத்தை நலிந்தும், மற்றையெழுத்துக்களைப் படுத்துங் கூறுக.
மேற்கூறிய பெயர்ப் பகுபதங்களுள் அடங்காது வேறாய் வருவனவும் சில வுள. அவை தொழிற்பெயரும், பண்புப்பெயரும், பிற பெயருமாம்.
நடத்தல், வருதல், உண்டல், சேறல் எனவும், செம்மை, கருமை எனவும், சோர்ந்தார்க்கொலி, உடுக்கை எனவும் வரும். 5
பகுபத வுறுப்புக்கள்
133. பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்.

பதவியல் 81
(இ-ள்) பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் - முதனிலையும் இறுதிநிலையும் இடை நிலையுஞ் சாரியையுஞ் சந்தியும் விகாரமும் ஆகிய இவ்வாறு உறுப்பினுள்ளும்; ஏற்பவை முன்னிப் புணர்ப்பபொருளமைதிக்கு ஏற்பவைகளை நினைத்து அறிவுடை யோர் கூட்டி முடிக்க, எப்பதங்களும் முடியும்-எவ்வகைப் பட்ட பகுபதங்களும் முடிவு பெறும்.
(உ-ம்) கூனி என்பது கூன்+இ எனப் பகுதி விகுதி யால் முடிந்தது.
உண்டான் என்பது உண்+ட் + ஆன் என அவ்விரண் டுடன் இடைநிலை பெற்று முடிந்தது.
உண்டனன் என்பது உண்+ட்+அன்+அன் என அம் மூன்றுடன் சாரியை பெற்று முடிந்தது.
பிடித்தனன் என்பது பிடி+த்+த்+அன்+அன் என அந் நான்குடன் சந்தி பெற்று முடிந்தது.
நடந்தனன் என்பது நட+த்+த்+அன் + அன் என அவ்வைந்தும் பெற்றுச் சந்தியால் வந்த தகர வல்லொற்று மெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று முடிந்தது.
பதப் புணர்ச்சிக்கு விதிக்கப்பட்ட தோன்றல் முதலாய மூன்று புணர்ச்சி விகாரங்களையும் வலித்தல் முதலாகிய ஒன்பது செய்யுள் விகாரங்களையும் இது பெறுமென மாட்டுதலால், இது மாட்டெறிந்தொழுகல் என்னும் உத்தி. 6
2. பகுதி
பகுதி இன்னவென்பது
134. தத்தம்,
பகாப்ப தங்களே பகுதி யாகும்.

Page 47
82 நன்னூல்
(இ-ள்) தத்தம் பகாப்பதங்களே - பெயர்ப் பகுபதங் களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் அவ்வவற்றின் முதலில் நிற்கின்ற பகாப்பதங்களே பகுதி ஆகும் - பகுதி களாம்.
பெயர்ப் பகுபதங்கட்கும் வினைக்குறிப்புப் பகுபதங் கட்கும் பெரும்பான்மையும் பெயர்ச்சொற்களுஞ் சிறு பான்மை இடைச்சொற்களும் பகுதிகளாம்.
(உ-ம்) குழையன், அகத்தன், ஆதிரையான், பல்லன், செய்யன், கூத்தன் எனப் பெயர்ப் பகுபதங்கட்குக் குழை, அகம், ஆதிரை, பல், செம்மை, கூத்து என்னும் பொருளாதியறுவகைப் பெயரும் பகுதியாய் வந்தன.
வினைக்குறிப்பு முற்றிற்கும் இவையே உதாரணமா மெனக்கொள்க.
அவன், எவன், பிறன் எனப் பெயர்ப் பகுபதங்கட்கு இடைச்சொற்கள் பகுதியாய் வந்தன.
அற்று, இற்று, எற்று என வினைக்குறிப்பு முற்றுப் பகுபதங்கட்கு இடைச் சொற்கள் பகுதியாய் வந்தன. 7
பண்புப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி 135. செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே.
(இ-ள்) செம்மை.நுண்மை-செம்மை முதல் நுண்மை யீறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும்; இவற்று எதிர்இவைகளுக்கு எதிரான வெண்மை முதலானவைகளும்; இன்னவும்-இவை போல்வன * பிறவும்; பண்பின் பகா
* அருமைXஎளிமை, இளமைXமுதுமை
குறுமைXநெடுமை, புலமைXமடமை முதலியன.

பதவியல் 88፦
நிலைப் பதம் - பண்புப் பொருளினின்றும் வேறு பொருள் பகுக்கப்படாத நிலையையுடைய பதங்களாம்.
இவையெல்லாஞ் சொல் நிலையாற் பகுபதமாயினும் மை விகுதிக்குப் பகுதிப் பொருளல்லது வேறு பொருள் இல்லாமையினாலே பொருள் நிலையாற் பகாப்பதமாம். என்பது அறிவித்தற்குப் பண்பிற் பகா என்றும், இவை மை விகுதியின்றி இயங்காமையினால் இவ் விகுதியும் பகுதியாகவே நிறுத்தி மேல் வரும் விகுதியோடு புணர்க்கப் படும் என்பது அறிவித்தற்கு நிலைப்பதம் என்றுங் கூறினார்.
பண்புப் பகாப்பதமென்னாது பண்பிற் பகாநிலைப் பதம் என்றது சொற்பொருள் விரித்தல் என்னும் உத்தி; செம்மை, சிறுமை, சேய்மை, தீமை முதலிய வாய்பாடுகள் எடுத்துக்காட்டல் என்னும் உத்தி, 8.
136. ஈறு போதலிடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல் தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக லினையவும் பண்பிற் கியல்பே.
(இ-ள்) ஈறு போதல்-இறுதியிலுள்ள மை விகுதி கெடு தலும் இடை உகரம் இ ஆதல்-நடுநின்ற உகரம் இகர மாதலும், ஆதி நீடல்-முதல் நின்ற குறில் நெடிலாதலும்; அடிஅகரம் ஐ ஆதல்-முதல் நின்ற அகரம் ஐகாரமாதலும்; தன் ஒற்று இரட்டல் - தன் மெய் நடுவே மிகுதலும்: முன்னின்ற மெய்திரிதல்-முன்னின்ற மெய் வேறொரு மெய்யாதலும்; இனம் மிகல் - வருமெழுத்திற்கு இன வெழுத்து மிகுதலும்; இணையவும்-இவை போல்வன பிறவும்; பண்பிற்கு இயல்பு-அப்பண்பினுக்கு இயல்பாகும்:
இவ்விகாரங்கள் பதப் புணர்ச்சிக்குங் கொள்க. இது ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி.
(உ-ம்) நல்லன்- நன்மையின் மை விகுதி கெட்டது.

Page 48
84 நன்னூல்
கரியன்-கருமைபின் மை விகுதி கெட்டு நடு நின்ற உகரம் இகரமாயிற்று.
பாசி - பசுமையின் மை விகுதி கெட்டு ஆதி நீண்டது.
பைந்தார் - பசுமையின் விகுதியும் நடுநின்ற உயிர் மெய்யுங் கெட்டு; வரு மெழுத்திற்கு இனவெழுத்து மிகுந்து முதலிலிருந்த அகரம் ஐகாரமாயிற்று.
வெற்றிலை - வெறுமையின் மை விகுதி கெட்டுத் தன்னொற்றிரட்டியது.
சேதாம்பல் - செம்மையின் மை விகுதி போய், ஆதி நீண்டு, முன்னின்ற மகர மெய் தகர மெய்யாகத் திரிந்தது.
இவ்விகாரங்கள் அன்பன், அழகன் முதலிய வாய்பாடு களுக்கு எய்தாது செம்மை, சிறுமை முதலாக எடுத்துக் காட்டிய வாய்பாடுகளுக்கே எய்த வைத்தலால் இது எடுத்த மொழியின் எய்தவைத்தல் என்னும் உத்தி. 9
தெரிநிலை வினைப்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி 137. கடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வெளவுரி ஒதுண்பொருந் திருந்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
றெய்திய விருபான் மூன்றா மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே.
(இ-ள்) நட.அஃகு என்று - நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வெள, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று; எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்றவும்-முதனிலை யாகப் பொருந்திய இருபத்திமூன்றாகும் உயிரும் மெய்யுங் குற்றியலுகரமுமாகிய ஈற்றையுடைய இவை முதலாகிய வாய்பாடுகளெல்லாம்; செய் என் ஏவற் பகாப்பதம்-செய்

பதவியல் 85
யென்னும் ஏவலினது பகாப்பதமாகிய பகுதியும்; வினைப் பகாப்பதம் மற் றை வினைப் பகாப்பதங்களாகிய பகுதியுமாம்.
(வி-ம்) விகற்பத்தின் முடித்தலென்னும் உத்தியால் இருபத்து மூன்றீற்றனவாக விகற்பித்து எடுத்துக்காட்டும் வாய்ப்பாடுகளெல்லாம் இப் பொது வாய்பாட்டில் அடங்குமென்பார் முடிந்தது முடித்தலென்னும் உத்தியாற் செய்யெனவுங் கூறினார்.
செய்யென் வினைப் பகாப்பதம் என்ற அளவிலே செய்யென் ஏவற் பகாப்பதமும் அடங்குமாயினும் நட வா முதலிய முதனிலைகளே ஏவற் பொருளுணர்த்தாது ஆய் விகுதியோடு புணர்ந்து நின்று உணர்த்து மென்றறிவித் தற்கு வேறு கூறினார். ஏவற் பகுதிக்கு உதாரணம் :
நடவாய், வாராய், உண்ணாய், தின்னாய், அஃகாய் எனவும்,
தடமின், வம்மின், உண்மின, தின்மின், அஃகுமின் எனவும் வரும்.
முன்னிலை யேவ லொருமை வினைச்சொற்கள் ஆய் என்னும் விகுதி குன்றி நட, வா, உண், தின், அஃகு என நிற்குமென அறிக. நிற்பினும் விகுதியோடு புணர்ந்தவை களேயாம். இப்படி விகுதி புணர்ந்து கெட்டு நிற்குஞ் சொற்கள் இன்னும் பலவுண்டு. அவையெல்லாம் பின் காட்டப்படும். மற்றை விணைப்பகுதிக்கு உதாரணம் :
நடந்தான், வந்தான். மடித்தான், சீத்தான், விட் டான், கூவினான், வெந்தான், வைத்தான், நொந்தான், போயினான், வெளவினான், உரிDனான், உண்டான், பொருநினான், திருமினான், தின்றான், தேய்த்தான், பார்த்தான், சென்றான், வவ்வினான், வாழ்ந்தான், கேட்டான், அஃகினான், என வரும்.

Page 49
86 நன்னூல்
இந் நூலாசிரியர் வடநூல் மேற்கோளாக ஒரு மொழியை விதந்து பகாப்பதம் பகுபதமெனக் காரணப் பெயர் தாமேயிட்டு, எழுத்தேயென்னுஞ் சூத்திர முதல் இதுவரையும் பகாப்பதம் பகுபதமெனப் பலதரஞ் சொல் லுதல் தன் குறி வழக்க மிக வெடுத்துரைத்தலென்னும் உத்தி.
இத் தெரிநிலைவினைப் பகுதிகள் விகுதியோடு புணரும்போது தொழுதான், உண்டான் எனச் சில இயல் பாதலன்றியும்,
செல் - சேறல், என முதல் நீண்டும், தா - தந்தான் எனத் தனிநெடில் குறுகியும், சா - செத்தான் என முதல் ஆகாரம் எகரமாகியும், கொணா - கொணர்ந்தான் என முதனிலைய லெழுத் துக் குறுகி ரகர மெய் விரிந்தும்,
விரவு - விராவினான் என நடுக்குறில் நீண்டும், முழுகு - முழுகினான், மூழ்கினான் என இயல்பும் விகாரமுமாக உறழ்ந்தும்,
வா - வருகிறான் எனத் தனி நெடில் குறுகி ஒருயிர் மெய் விரிந்தும், - கல் - கற்றான் என ஈற்று மெய் வரு மெய்யாகத்
திரிந்தும்,
செல் - சென்றான் என ஈற்று மெய் வருமெழுத்திற்கு இனமாகத் திரிந்தும் இன்னும் பலவாறு விகாரப்பட்டும் வரும்.
கா, சா, தா - இவை முறையேகாத்தான், செத்தான், தந்தான் எனவும்,
கல், நில், புல், சொல் - இவை கற்றான், நின்றான், புல்லினான் சொன்னான் எனவும்,
ஒரு நிகராகிய பகுதிகள் பல விதமாக விகாரப்படு தல நூல், அவையெல்லாந் தனித்தனி சொல்லப்புகின் விரியு

பதவியல் 87
மாதலால் செய்யுள் வழக்கத்தையும் உலக வழக்கத்தையும் பார்த்துச் செய்யுள் விகாரமும் புணர்ச்சி விகாரமுங் கொண்டு அமைத்துக் கொள்க.
தெரிநிலைவினைப் பகுபதங்கட்கு, நட வா, முதலிய வினைச் சொற்களேயன்றிச் சிறுபான்மை பெயர்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும் பகுதிகளாய் வரும்.
சித்திரித்தான், கடைக்கணித்தான் என்பவற்றில் முறையே சித்திரம், கடைக்கண் என்னும் பெயர் சொற்கள் பகுதியாயின.
பொன்போன்றான், புலிநிகர்த்தான் என்பவற்றில் முறையே போல், நிகர் என்னும் இடைச்சொற்கள் பகுதி யாயின.
சான்றான், மாண்டான் என்பவற்றில் முறையே சால் மாண் என்னும் உரிச்சொற்கள் பகுதியாயின.
பிறவும் இவ்வாறு வருதல் காண்க. 10
ஏவற் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
138. செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவலிணையினி ரேவல்,
(இ.ஸ்) செய் என் வினை வழி விப்பி தனி வரின்- செய் யென்னும் வாய்பாட்டு முதனிலைத் தனி வினையின் பின் விவ்விகுதியாயினும் பிவ் விகுதியாயினுந் தனித்து வரு மாயின் செய்வி என் ஏவல்-செய் யென்னும் ஏவலின்மேல் ஓர் ஏவலாய்ச் செய்வியென்னும் வாய்பாட்டே வற் பகுதியாம்; இணையின் ஈரேவல்-அவ்வினையின் பின் இவ் விகுதிகள் தன்னொடும் பிறிதொடும் இணைந்து வரு மாயின் செய்விப்பியென்னும் வாய் பா ட் டே வ ற் பகுதியாம்.
(உ-ம்) நடப்பியாய், நடப்பிப்பியாய், வருவியாய், வருவிப்பியாய் என வரும்.

Page 50
88 நன்னூல்
சிறுபான்மை உரையிற்கோடலென்னும் உத்தியால் கு. கு, டு, து, பு, று என்னும் ஆறு விகுதிகளுள் ஒன்று பெற் றும் சில பகுதிகள் விகாரப்பட்டும் அப்படி வருமெனக்
கொள்க.
(உ-ம்) போ-போக்கு,பாய்-பாய்ச்சு, உருள்-உருட்டு, நட-நடத்து, எழு-எழுப்பு, துயில்-துயிற்று.
எனவும்,
இயங்கு-இயக்கு,திருந்து-திருத்து,தோன்று தோற்று, ஆடு - ஆட்டு, தேறு - தேற்று உருகு - உருக்கு எனவும் வரும். W
வினைப் பகுதிக்குப் புறனடை 139. விளம்பிய பகுதிவே றாதலும் விதியே
(இ-ள்) விளம்பிய பகுதி-ஏவற் பகுதி வேறாதல் போல் அதன் பின்னே சொல்லப்பட்ட மற்றை வினைப் பகுதிகள் வேறு ஆதலும் விதியே-வேறுபடுதலும் விதியேயாகும்.
(உ-ம்) நடத்தினான் நடப்பித்தான் நடத்துவிப்பித் தான் என வரும்.
இங்கே தன்வினைப் பகுதிகள் பிறவினைப் பகுதிக ளானமை காண்க. 12
3. விகுதி 140. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அ ஆ குடுதுறு என்ஏன் அல்அன் அம்ஆம் எம்ஏம் ஓமோ டும்மூர் கடதற ஐஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவு மென்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினும் சிலவே.

பதவியல் 89.
(இ-ள்) அன்.என்பவும் பிறவும்-அன் முதல் முப்பத் தேழாகச் சொல்லப்பட்டவைகளும் இவை போல்வன பிறவும்; வினையின் விகுதி-தெரிநிலை வினைமுற்றுப் பகுபதங்களின் விகுதிகளாகும்; பெயரினும் சில-பெயர்ப் பகுபதங்களிலும் இவற்றுட் சில விகுதிகளாகும்.
உம் ஊர் க ட த ற - உம்மென்ப தேறிய க, ட, த, ற, வொற்றுக்கள். அவை கும், டும், தும், றும் என்பன அன் விகுதி தன்மைக்கு எதிரது போற்றலென்னும் உத்தியாற் சேர்க்கப்பட்டதாகலின், வலியுறுத்தற்குப் பின்னுங் கூறினார்.
(உ-ம்) நடந்தனன், நடந்தான் - இவை ஆண்பாற்
d566).95. நடத்தனள், நடந்தாள் - இவை பெண்பாற் Lll Të g045. நடந்தனர், நடந்தார், நடப்ப. நடமார்இவை பல்லோர் படர்க்கை. நடந்தன, நடவா-இவை பலவின் படர்க்கை. நடக்கு உண்டு, நடந்து, சேறு, நடந்தனென் நடந்தேன் நடப்பல், நடப்பன்-இவை ஒருமைத் தன்மை, நடந்தது, கூயிற்று, குண்டுகட்டு-இவை ஒன்றன் படர்க்கை. நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம். நடப்போம், நடக்கும், உண்டும், நடந்தும், சேறும்-இவை தன்மைப் பன்மை. நடந்தனை, நடந்தாய், நடத்தி - இவை ஒருமை முன்னலை. நடமின் நடந்தனிர், நடந்தீர்-இவை பன்மை முன்னிலை. நிலீயர், நடக்க, வாழிய-இவை வியங்கோள். நடக்கும்-இது செய்யுமென்னும் முற்று.
பிறவு மென்றதனால் மறால், அழேல், சொல்லிக் காண் என ஆல், ஏல், காண் முதலிய விகுதிகளும் வரும். வினைக் குறிப்பு முற்றுக்கள் குறிப்பாகக் காலங்காட்டு வனவாதலால் இவ் விகுதிகளுள்ளே தாமே காலங்காட்டும்

Page 51
90 நன்னூல்
விகுதிகளொழித்து ஒழிந்த அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம். ஏம், ஒம், ஐ, ஆய், இ இர், ஈர் என்னும் இருபத்திரண்டு விகுதி களோடு வரும் எனக் கொள்க.
(உ-ம்) கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குறுந்தாட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர் என வரும்.
பெயரினுஞ் சில என்றதனால், இவ் விகுதிகளுள் அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், அ, து, இ, என்னும் பத்தோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் பதின்மூன்றும் பிறவும் பெயர் விகுதிகளாம்.
(உ-ம்) குழையன், வானத்தான், குழையள், வானத் தாள், குழையர், வானத்தார், தேவிமார், குழையன, யாது, பொனணி, வடமன், கோமான், கோக்கள, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல், பிறன், பிறள், பிறர், அவ் என வரும்
இன்னும், வினையின் விகுதி பெயரினுஞ் சில என்ற தனாலும்; பிறவும் என்றதனாலும் பல வகைப்பட்ட வினைகளுக்கும் பெயர்களுக்கும் இவ் விகுதிகளுள் அடங்கியும் அடங்காதும் வரும் விகுதிக ளெல்லாங் கொள்ளப்படும்.
தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள் அ, உம், என்னும் இரண்டுமாம்,
(உ-ம்) செய்த, செய்கின்ற, செய்யும் என வரும். குறிப்புவினைப் பெயரெச்ச விகுதி அ ஒன்றேயாம். உம் விகுதி இடைநிலை யேலாது தானே எதிர்காலங் காட்ட, லாற் குறிப்புவினைப் பெயரெச்சத்துக்கு வாராது.
(உ-ம்) கரிய என வரும்.

பதவியல் 91
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் உ, இ, ய், பு, ஆ" அன, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியில் கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்,
(உ-ம்) நடந்து, ஓடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுர, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டக்கால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானேனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான். உண்பாக்கு, செய்தக் கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே என வரும்.
குறிப்பு வினையெச்ச விகுதிகள் அ, றி, து, ஆல், மல், கால்,கடை, வழி, இடத்து என்னும் ஒன்பதும் பிறவுமாம். (உ-ம்) மெல்ல, அன்றி, அல்லது, அல்லால் அல்லாமல், அல்லாக்கால், அல்லாக்கடை, அல்லாவழி அல்லாவிடத்து என வரும்.
தொழிற்பெயர் விகுதிகள் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
(உ-ம்) நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும். மை விகுதி, செய்தமை, செய்கின்றமை என இறந்த கால இடைநிலை நிகழ்கால இடைநிலைகளோடு கூடியும் வரும்.
துவ் விகுதி, அவர் செய்தது, செய்கின்றது, செய்வது என முக்கால இடைநிலைகளோடு கூடியும் வரும்
ந.-7

Page 52
射& நன்னூல்
பண்புப்பெயர் விகுதிகள் மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், அர் என்னும் பத்தும் பிறவுமாம்.
(உ-ம்) நன்மை, தொல்லை, மாட்சி, மாண்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வரும்.
பிறவினை விகுதிகள் வி.பி.கு, சு, டு து, பு, று என்னும் எட்டுமாம்.
(உ-ம்) செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு" உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று என வரும்.
கரை, தேய் என வருந் தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாகிய முதனிலைகள், சிறுபான்மை இவ் விகுதி வேண்டாது
கரைத்தான், தேய்த்தான்; கரைத்திலன், தேய்த்திலன்; கரைக்கின்றான், தேய்க்கின்றான்; கரைக்கின்றிலன், தேய்க்கின்றிலன்; கரைப்பான், தேய்ப்பான், கரைக்கான், தேய்க்கான் எனப் பிறவினைப் பொருளை தரும்போது, வல்லெழுத்துமிக்கும். கரைந்தான், கரைந்திலன், கரைகிறான், கரைகின் றிலன், கரைவான், கரையான் எனத் தன்வினைப் பொருளைத் தரும்போது, வல்லெழுத்து மிகாதும் வருமென்றறிக. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும் வினைமுதற் பொருளையுஞ் செயப்படுபொருளையுங் கருவிப்பொரு ளையும் உணர்த்தும்.
(உ-ம்) அலரி, பறவை, எச்சம் என்பன வினைமுதற் பொருளையுணர்த்தின.
ஊருணி, தொடை, தொல்காப்பியம் என்பன செயப் படு பொருளையுணர்த்தின.
மண்வெட்டி, பார்வை, நோக்கம் என்பன கருவிப் பொருளையுணர்த்தின.
விடு, ஒழி விகுதிகள் துணிவுப் பொருளையுணர்த்தும்.

பதவியல் 98
(உ-ம்) செய்துவிட்டான், செய்தொழிந்தான் எனவரும் கொள் விகுதி வினைப்பயன் வினைமுதலைச் சென்று அடைதலாகிய தற்பொருட்டுப் பொருளையுணர்த்தும்.
(உ-ம்) அடித்துக்கொண்டான் என வரும். படு, உண் விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
(உ-ம்) கட்டப்பட்டான், கட்டுண்டான் என வரும். மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும். (உ-ம்) பொன்மை, ஆண்மை என வரும். இரு, இடு என்பன தமக்கென வேறு பொருளின்றிப் பகுதிப் பொருள் விகுதியாய் வரும்.
எழுந்திருக்கின்றான், உரைத்திடுகின்றான் என வரும். முன்னிலை யேவலொருமை ஆய் விகுதியும், பெய ரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும் வினை முதற் பொருளை யுணர்த்தும் இகர விகுதியும், செயப்படு பொருளையுணர்த்தும் ஐ விகுதியும் பகுதியோடு புணர்ந்து
பின்கெடுதலும் உண்டு. கெடினும் புணர்ந்து நின்றாற் போலவே தம் பொருளை உணர்த்தும்.
நீ நட, நீ நடப்பி, நீ செல் என்பவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.
கொல் களிறு, ஓடாக் குதிரை என்பவைகளிலே பெய ரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு என்பவைகளிலே தல் என்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி, திரை, நுரை, அலை என்பவை
களிலே வினைமுதற் பொருளுணர்த்தும் இகர விகுதி புணர்நது கெட்டது.

Page 53
94 நன்னூல்
ஊண், தீன், கோள் என்பவைகளிலே செயப்படு பொருள் உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டது,
சிறுபான்மை வரிப்புனைபந்து என்பதில், வரிந்து
என்னும் வினையெச்ச விகுதியும், கொள்வாருங் கள்வருநேர் என்பதில் நேர்வர் என்னும்
முற்று விகுதியுங் கெட்டு வந்தன. இவ்வாறே பிற விகுதிகளுள்ளுஞ் சில கெட்டுவரு மெனவுங் கொள்க. 13
4. இடைநிலை
பெயரிடைநிலை
141. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே. (இ-ள்) இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம் பலின்-அறிவுடையோராலே நியமிக்கப்பட்ட இலக்கியத் தைப் பார்த்து அவ் விலக்கியத்திற்கு அவ் விலக்கியத்தின் அமைதியே இலக்கணமாகச் சொல்லுதலால், பகுதி விகுதி பகுத்து-முன் சொல்லப்பட்ட பகுதியையும் விகுதியையும் பிரித்து, இடை நின்றதை வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனல்-நடுநின்றதை வினையாலணையும் பெய ரல்லாத பெயர்களுக்கு இடைநிலை யென்று சொல்லுக.
(உ-ம்) அறிஞன், வினைஞன், கவிஞன், என்பன ஞகர இடைநிலை பெற்றன.
ஒதுவான், பாடுவான் என்பன வகர இடைநிலை பெற்றன. Va
இடைச்சி, வலைச்சி, புலைச்சி என்பன சகர இடை நிலை பெற்றன.

பதவியல் 95
வண்ணாத்தி, பாணத்தி, மலையாட்டி, வெள்ளாட்டி என்பன தகர இடைநிலை பெற்றன.
செட்டிச்சி, தச்சிச்சி என்பன இச்சிடைநிலை பெற்ற
இறந்தகாலவினை யிடைநிலை
142. தடறவொற்றின்னே யைம்பான் மூவிடத்
திறந்த காலங் தருந்தொழிலிடைநிலை
(இ-ள்) த ட ற ஒற்று இன்-தகர டகர றகர மெய்களும் இன்னென்னுங் குற்றொற்றும்; ஐம்பால்மூவிடத்து இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை - ஐம்பால் மூவிடங்களி லும் இறந்தகாலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினு டைய இடைநிலைகளாகும்.
(உ-ம்) நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர்.
எனவும்,
உண்டான் எனவும், சென்றான் எனவும் உறங்கினான் எனவும் வரும். சிறுபான்மை இன் இடைநிலை எஞ்சியது எனக் கடை குறைந்தும், போனது என முதல் குறைந்தும் வரும். 15 நிகழ்காலவினை யிடைநிலை
143 ஆகின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. (இ-ள்) ஆநின்று கின்று கிறு - ஆநின்றைன் பதுங் கின் றென்பதுங் கிறு வென்பதும்; ஐம்பால் (மூவிடத்தின்) நிகழ்பொழுது அறை வினை இடைநிலை - ஐம்பால் மூவிடங்களிலும் நிகழ்காலத்தைக் காட்டும் வினைப் பகு பதங்களினுடைய இடைநிலைகளாகும்.

Page 54
96 தன்னுரல்
(உ-ம்) நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான் என வரும்
மற்றைப் பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க. 6
எதிர்காலவினை யிடைநிலை
144. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு
திசைவினை யிடைநிலை யாமிவை சிலவி.ை
(இ-ள்) பவ-பகர மெய்யும் வகர மெய்யும்; ஐம்பால் மூவிடத்து எதிர்பொழுது இசை வினை இடைநிலை ஆம்ஐம்பால் மூவிடங்களிலும் எதிர்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலைகளாகும்; இவைசில இல - இம் முக்கால இடைநிலைகளும் சிலமுற்று வினையெச்சவினைகட்கு இலவாம்.
(உ-ம்) நடப்பான் வருவான் என வரும். மற்றைப் பாலி. ங்களிலும் ஒட்டிக்கொள்க. இவை சிலவில வெனவே; காலத்தை விகுதியாயினும் பகுதியாயினும் வேறிடைநிலையாயினுங் காட்டுமென்பது பெற்றாம்; அவை பின்வருஞ் சூத்திரத்திற் காண்க. 17
காலங்காட்டும் விகுதி 145. றவ்வொ டுகரவும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிர்வுமின்னேவல் வியங்கோ எளிம்மா ரெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே.
(இ-ள்) றவ்வோடு உகர உம்மை நிகழ்பு அல்லவும் - றகர மெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும்; தவ்வொடு (உகர

பதவியல் 97.
உம்மை) இறப்பும் எதிர்வும் - தகரமெய்யோடுகூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்தகாலத்தையும் எதிர்காலத் தையும்; டவ்வொடு (உகர உம்மை) கழிவும் - டகர மெய் யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்த காலத்தையும்; கவ்வோடு (உகர உம்மை) எதிர்வும்-ககர மெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் எதிர் காலத்தையும்; மின் ஏவல் வியங்கோள் இ மார் எதிர்வும்-மின் விகுதியும் மற்றை முன்னிலை யேவல் விகுதிகளும் வியங்கோள் விகுதிகளும் இகர விகுதியும் மார் விகுதியும் எதிர்காலத்தையும்; ப அந்தம் செலவொடு வரவும் - பகரவிகுதி இறந்தகாலத்தையும், எதிர்காலத்தை யும்; செய்யும் நிகழ்பு எதிர்வும் - செய்யுமென்னும் வாய் பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தை யும்; எதிர்மறை மும்மையும் - எதிர்மறை ஆகார விகுதி மூன்று காலத்தையும்;ஏ ற்கும்-ஏற்று வரும் ஈங்கு - மேலைச் சூத்திரத்து இவை சிலவில வென்றவைகளுள்.
சென்று, சென்றும் என்பன. முறையே சென்றேன், சென்றோம் எனப் பொருள்பட்டு இறந்தகாலங் காட்டின. சேறு, சேறும் என்பன முறையே செல்வேன், செல்வேம் எனப் பொருள்பட்டு எதிர்காலங் காட்டின.
வந்து, வந்தும் என்பன முறையே வந்தேன், வந்தேம் எனப் பொருள்பட்டு இறந்தகாலங் காட்டின.
வருது, வருதும் என்பன முறையே வருவேன், வருவேம் எனப் பொருள்பட்டு எதிர்காலங் காட்டின.
உண்டு, உண்டும் என்பன முறையே உண்டேன். உண்டேம் எனப் பொருள்பட்டு இறந்தகாலங் காட்டின, உண்கு, உண்கும் என்பன முறையே உண்பேன், உண்பேம் எனப் பொருள்பட்டு எதிர்காலங் காட்டின.
உண்மின், உண்ணிர், உண்ணும். உண்ணாய் என மின், ஈர், உம், ஆய் என்னும் ஏவல் விகுதிகளும்,

Page 55
98 நன்னூல்.
உண்க, வாழிய, வாழியர் எனக் க, இய, இயர் என்னும் வியங்கோள் விகுதிகளும், சேறி என இகர விகுதியும்; உண்மார் என மார் விகுதியும் எதிர்காலங் காட்டின. சேறி என்பது செல்வாய் எனவும் உண்மார் என்பது உண்பார் எனவும் பொருள்படும்.
உண்ப என்பது உண்டார் எனவும் உண்பார் எனவும் பொருள்பட்டு இறந்தகாலமும் எதிர்காலமுங் காட்டின. உண்ணும் என்னும் செய்யுமென் வாய்பாட்டு முற்று நிகழ் காலமும் எதிர்காலமுங் காட்டிற்று.
உண்ணா என்னும் எ தி ர் மறை முக்காலமுங் காட்டிற்று.
இகர விகுதி எழுத்துப்பேறாய் வருந் தகர மெய்யின் மேல் ஏறி வரும்; அவ்விகுதி சென்றி, செல்லாநின்றி என இறந்த கால இடைநிலை, நிகழ்கால இடைநிலைகளோடு கூடி வரும் போது அவை காலங்காட்டாலாற் றான் காலங் காட்டாது நிற்கும்.
இவை சிலவில என்றவைகளுள்ளே; காலங்காட்டும் விகுதிகளை மாத்திரஞ் சொல்லிக் காலங்காட்டும் பகுதி யையும் பிற இடைநிலையையுஞ் சொல்லாமையால், அவை சிறுபான்மையின; வந்த விடங்களிற் கண்டுகொள்க என்று ஆயிற்று. அவை வருமாறு:-
கு, டு, று, என்னும் மூன்றுயிர்மெய் யீற்றுச் சில குறிலிணைப் பகுதிகள் தம்மொற் றிரட்டி இறந்தகாலங் காட்டும்.
புக்கான், நக்கான் எனவும், தொட்டான், விட்டான் எனவும் உற்றான், பெற்றான் எனவும் வரும். யகர இடைநிலை இறந்தகாலமும், ஆகிடந்து, ஆவிருந்து என்னும் இரண்டிடைநிலைகளும் நிகழ்காலமுங் காட்டும்.

பதவியல் 99蛟
போயது எனவும்,
உண்ணாகிடந்தான், உண்ணாவிருந்தான் எனவும் வரும்.
இசின் என்பது இறத்தகால இடைநிலையாயும், மகர மெய்யும் மன் என்பதும் எதிர்கால இடைநிலைகளாயுஞ் செய்யுளில் வரும்.
என்றிசினோர் எனவும்,
என்மர், என்மனார் எனவும் வரும்.
ஈங்கே என்ற மிகையால் வருதி என இகர விகுதி நிகழ்" காலங் காட்டுதலையும் பெயரெச்ச வினையெச்சங்களில் இடைநிலையின்றி விகுதி காலங் காட்டுதலையும். அமைத்துக் கொள்க.
(வி-ம்) பகுதி விகுதி என்னுஞ் சூத்திரம் முதல் இச் சூத்திரம் வரையும் பகுபதங்களை மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டினமையால், முடித்துக்காட்டலென்னும் உத்தி. முன்னைத் தமிழ் நூல்களில் இல்லாதவைகளை இவ்வாசிரியர் தாமே பகாப்பதம் பகுபத மென முன்னே நாட்டி இச் சூத்திரம் வரையும் அவைகளுக்கு இலக்கணங்" கூறி நிறுத்தினமையால், தாஅனாட்டித்தனுதுநிறுப் பென்னும் மதம். 18
5. வடமொழியாக்கம்
ஆரியமொழி தமிழில் வடமொழியாதல் 146. இடையி னான்கு மீற்றிலிரண்டும்
அல்லா வச்சை வருக்கழுத லீறு யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும். (இ-ள்) இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சு - ஆரியமொழியுள் அச் சென்று வழங்கும் உயிர்

Page 56
நன்னூல்
பதினாறனுள்ளும் இடையில் நின்ற நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஒழிந்து நின்ற s <鹦, இ. F, ?ー, DaI, 6アー ஐ, ஓ, ஒள என்னும் டத்தும்; ஐ வருக்க முதல் ஈறு - அல்லென்று வழங்கும் மெய் முப்பத்தேழுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கங்களின் முதலில் நின்ற க, ச, ட, த, ப என்னும் ஐந்தும் ஈற்றில் நின்ற ங், ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும்; ய ஆதி நான்மை - ய, ர, ல,வ என்னும் நான்கும்; ள ஆகும் ஐயைம் பொது எழுத்து-ளவ்வு மாகிய இருபத்தைந்தெழுத்துக்களும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்துக்களாம்; ஒழிந்த நாலேழும் திரியும்இவையன்றி மேலே உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங் களினும் இடைகளில் ஒழிந்த பதினைந்தும் முப்பதா மெய் முதலிய எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழுமாகிய இருபத் தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்துக்களாய்த் தமிழிலே தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாய்த் திரிந்து வரும்.
சிறப்பெழுத்துத் திரியுமென வரையறை கூறவே, பொதுவெழுத்து இயல்பாயுந் தமக்கேற்ற விகாரமாயும் வருமென்பதும் கூறினார் ஆயிற்று.
ஆரியத்துள் உயிரை அச்சு, சுரம் எனவும், மெய்யை அல், வியஞ்சனம் எனவுங் கூறுவர்.
ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொது வெழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும்.
அமலம்; கமலம்; காரணம்; குங்குமம். இவை பொதுவெழுத்தாலாகிய தற்சம மொழி. ஆரியத்திற்கே உரிய சிறப்பைழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும்.
சுகி, போகி, சுத்தி.

பதவியல் 0.
இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்குந் தற்பவ மொழி.
அரன், செபம்; ஞானம், அரி.
இவை பொதுவுஞ் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்குந் தங்பவ மொழி ஆரியமொழி வடமொழியாதற்குச் சிறப்பு விதி 147. அவற்றுள்
எழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் மேலொன்று சடவு மிரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவி றையுமீயீ றிகரமும்.
(இ-ள்) அவற்றுள் - முன்னே திரியுமென்ற சிறப்புஎழுத் துக்களுள் ஏழாம் உயிர் இய்யும் இருவும் - ஏழா முயிரெ ழுத்து இகரமாகவும் இருவாகவுந் திரியும்; ஐ வருக்கத்து இடையின் மூன்றும் அவ்வம் முதலும் - ஐந்து வருக்கங்க ளிலும் இடைநின்ற மும்மூன் றெழுத்தும் அவ்வவ் வருக் கத்தின் முதலெழுத்தாகத் திரியும்; எட்டு யவ்வும்-எட்டாம் மெய்யாகிய எழுத்து மொழியிடையில் யகரமாகவுத் திரியும் முப்பது சயவும் - முப்பதா மெய்யாகிய எழுத்து மொழி முதலிற் சகரமாகவும் இடையில் ஏற்றபெற்றி சகரமாகவும் யகரமாகவுந் திரியும்; மேல் ஒன்று ச ட வும்முப்பத்தொராம் மெய் எழுத்து மொழி முதலிற் சகர மாகவும் இடையிலுங் கடையிலும் டகரமாகவுந் திரியும்; இரண்டு ச த வும்-முப்பத்திரண்டா மெய்யாகிய எழுத்து மொழி முதலிற் சகரமாகவும் இடையில் ஏற்றபெற்றி சகர மாகவுந் தகரமாகவுந் திரியும்; மூன்று அக வும்-முப்பத்து மூன்றாம் மெய்யாகிய எழுத்து மொழி முதலில் அகர மாகவும் இடையிலுங் கடையிலும் ககரமாகவுந் திரியும்;

Page 57
102 நன்னூல்
ஐந்து இருகல்வும் - முப்பத்தைந்தாம் மெய்யாகிய எழுத்து இரண்டு ககரமாகத் திரியும்; ஆ ஈறு ஐயும்-பொது வெழுத்துக்களுள்ளே மொழியிறுதி ஆகாரம் ஐகாரமாகத் திரியும்; ஈ ஈறு இகரமும் மொழியிறுதி ஈகாரம் இகரமாகத் திரியும்.
பயின்று வருவனவற்றிற்குத் திரிபுகூறி ஒழிந்தன வந்த இடத்திற் காண்க என்பார், இகரமு மாகு மெனப் பயனிலை கொடுத்து முடியாது இகரமுமென அவாய் நிலையாக முடித்தார்.
இடபம் எனவும்,
மிருகம் எனவும்,
ஏழா முயிர் இகரமும் இருவுமாயிற்று.
நகம், நாகம், மேகம் எனவும்,
சலவாதி, விசயம். சருச்சரை எனவும்,
பீடம், சடம், கூடம் எனவும்,
தலம், தினம், தரை எனவும்,
பலம், பந்தம், பாரம் எனவும், ஐந்து வருக்கத்திலும் இடைநின்ற மும்மூன் றெழுத்தும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத் தாயின. பங்கயம் என எட்டாம் மெய் மொழி யிடையில் யகரமுமாயிற்று.
சங்கரன் எனவும்,
பாசம், தேயம் எனவும், முப்பதாம் மெய் முதலிற் சகரமும் இடையிற் சகரமும் யகரமுமாயிற்று.
சண்முகன் எனவும்,
விடம், பாடை எனவும்,
முப்பத்தொராம் மெய் முதலிற் சகரமும் இடையிலும் கடையிலும் டகரமுமாயிற்று.

பதவியல் 103
சபை எனவும்,
வாசம், மாதம் எனவும், முப்பத்திரண்டாம் மெய் முதலிற் சகரமும் இடையிற் சகரமுந் தகரமுமாயிற்று.
அரன் எனவும்,
மோகம், மகி எனவும், முப்பத்து மூன்றாம் மெய் முதலில் அகரமும் இடையிலுங் கடையிலும் ககரமுமாயிற்று. *
பக்கம் என முப்பத்தைந்தாம் மெய் மொழியிடையில் இரண்டு ககர மாயிற்று.
மாலை என ஆகார வீறு ஐகார வீறாயிற்று.
புரி என ஈகார வீறு இகர வீறாயிற்று.
உரையிற்கோடலால், கீரம் என முப்பத்தைந்தாம் மெய் மொழி முதலில் ஒரு ககரமுமாகு மெனக் கொள்க. 20
148. ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முதலிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுதலாகிமுன் வருமே. (இ-ள்) ரவ்விற்கு அம்முதல் ஆம் முக் குறிலும் - ரகத் திற்கு அ, இ, உ என்னும் மூன்று குற்றெழுத்துக்களில் ஒன்றும், லவ்விற்கு இம்முதல் இரண்டும் - லகரத்திற்கு இ, உ என்னும் இரண்டிலொன்றும்; யவ்விற்கு இய்யும் - யகரத் திற்கு இகரமும்; மொழி முதல் ஆகி முன் வரும் - அவ் வெழுத்துக்களை முதலினுடைய வடமொழிகளுக்கு முதலாகி அம்மூன்றெழுத்துக்களுக்கு முன்னே வரும்.
* முப்பத்துமூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகர மாகத் திரியு மென்றல் பொருந்தாது; கெடு மென்றலே பொருந்தும். அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும்.இவைகளிலே ஹகார மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

Page 58
194 நன்னூல்
அரங்கம், இராமன், உரோமம் எனவும்,
இலாபம், உலோபம் எனவும்,
இயக்கன் எனவும் வரும். 2遭 149. இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற.
(இ-ள்) இணைந்து இயல் காலை - ஆரிய மொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஒரெழுத்தைப் போல நடக்கும் போது; ய ர லக்கு இகரமும் - பின்னின்ற யகர ரகர லகரங் களுக்கு இகாரமும்; மல் வக்கு உகரமும் - மகர வகரங் களுக்கு உகாரமும்; நகரக்கு அகரமும் - நகரத்திற்கு அகாரமும்; மிசை வரும் - மேலே வந்து வடமொழி களாகும்; ரவ்வழி உவ்வும் ஆம் - இணைந்து முன்னின்ற ரகரத்திற்குப்பின் உகாரமும் வரும்.
(உ-ம்) தியாகம், வாக்கியம், கிராமம், வக்கிரம், கிலேசம், சுக்கிலம் எனவும்,
பதுமம், பக்குவம் எனவும்,
அரதனம் எனவும்,
அருத்தம் எனவும் வரும், பிற வென்றதனால் சத்தி கட்சி, காப்பியம், பருப்பதம் இவை முதலாகிய திரிபும்; தூலம், அத்தம், ஆதித்தன் இவை முதலாகிய கேடும் மற்றும் விகாரத்தால் வருவனவுங் கொள்க. 22
தமிழெழுத்திற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும்
150. றனழ எ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள
பல்லாச் சார்புக் தமிழ்பிற பொதுவே. (இ-ள்) ற ன ழ எ ஒவ்வும் - முதலுஞ் சார்புமாகிய தமிழெழுத்து நாற்பதுகளிலே றகர னகர ழகர எகர ஒகரங்

பதவியல் 105.
களைந்தும்; உயிர்மெய்யும் உயிரளபு அல்லாச் சார்பும் - உயிர்மெய்யும் உயிரளபெடையு மல்லாத சார்பெழுத் தெட்டும்; தமிழ் - தமிழுக்கே சிறப்பெழுத்துக்களாம்; பிற பொது ஒழிந்த இருபத்தேழு எழுத்துக்களும் பொது எழுத்துக்களாம்.
குறிப்பு : அக்காலத்தில் வடமொழிச் சொற்கள் பல தமிழ்நாட்டில் வழங்கத் தொடங்கினமையால், தமிழ் மொழியின் அமைப்புக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு எடுத்தாள வேண்டும் என்பதற்கு நன்னூலார் விதிகளை வகுத்துள்ளார்; பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்று வழங்கும்போது தமிழ் மரபுக்கேற்ப அவற்றை மாற்றம் செய்தே வழங்க வேண்டும் என்று அறிவிப்பதும் இது.
பதவியல் முற்றிற்று

Page 59
3. உயிரீற்றுப் புணரியல்
1. புணர்ச்சி
புணர்ச்சி இன்ன தென்பது
151. மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களுக்
தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.
(இ-ள்) மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் - மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக வுடைய பகாப் பதம் பகுபதம் என்னும் இரண்டு பதங்களும்; தன்னொடும் பிறிதொடும் - தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய்; அல்வழி வேற்றுமைப் பொருளின் பொருந்துழி - அல்வழிப் பொருளினாலேனும் வேற்றுமைப் பொருளினாலேனும் பொருந்து மிடத்து: நிலை வரு மொழிகள் இயல்போடு விகாரத்து இயைவது - நிலைமொழியும் வருமொழியும் இயல்போ டாயினும் விகாரத்தோ டாயினும் பொருந்து வது; புணர்ப்பு - முன் சொல்லப்பட்ட புணர்ச்சியாம்.
மெய்யுயிர் முதலீறா மெனவே, மெய்ம் முதல் மெய் யீறு, உயிர்முத லுயிரீறு, மெய்ம் முத லுயிரீறு, உயிர் முதல் மெய் யீறு என நால் வகைப்படு மென்றா ராயிற்று.
இயல்பு, இயற்கை, தன்மை என்பன ஒருபொருட் சொற்கள்.
விகாரம், செயல், செயற்கை, விதி என்பன ஒரு பொருட் சொற்கள். l

உயிரீற்றுப் புணரியல் 07
அல்வழி வேற்றுமை இவையென்பது
152. வேற்றுமை யைம்முத லாறா மல்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே.
(இ - ள்) வேற்றுமை ஐம் முதல் முதல் ஆறு தழுவு தொடர் ஆம் - வேற்றுமைப் புணர்ச்சி ஐ, ஆல், கு இன், அது, கண் என்னும் ஆறுருபுகளும் மறைந்தாயினும் வெளிப்பட் டாயினும் வரப் பதங்கள் பொருந்துந் தொடர்ச்சியாம்; அல்வழி - அல்வழிப் புணர்ச்சி; தொழில் (தழுவு தொடர்) - வினைத்தொகையும்; பண்பு (தழுவு தொடர்) - பண்புத்தொகையும்; உவமை(தழுவு தொடர்)- உவமைத்தொகையும்; உம்மை (தழுவு தொடர்)-உம்மைத் தொகையும்; அன்மொழி (தழுவு தொடர்) - அன்மொழித் தொகையும்; எழுவாய் (தழுவு தொடர்) - எழுவாய்த் தொடரும்; விளி (தழுவு தொடர்) - விளித்தொடரும்; ஈரெச்சம்(தழுவுதொடர்) - பெயரெச்சத்தொடரும் வினை யெச்சத் தொடரும்; (ஈர்) முற்றுத் (தழுவு தொடர்) - தெரி நிலை வினைமுற்றுத் தொடரும் குறிப்பு வினைமுற்றுத் தொடரும்; இடை (தழுவு தொடர்) - இடைச் சொற் றொடரும்; உரி (தழுவு தொடர்)-உரிச்சொற் றொடரும்; அடுக்கு - அடுக்குத் தொடரும்; என ஈரேழ் - எனப் பதங்கள் பொருந்தும் தொடர்ச்சி பதினான்காம்,
(உ-ம்) வேற்றுமை
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி 1. நிலங்கடந்தான் [ஐ) நிலத்தைக் கடந்தான் 2. கல்லெறிந்தான் (ஆல் கல்லா லெறிந்தான் 3. கொற்றன் மகன் (கு) கொற்றணுக்கு மகன் 4. மலை வீழருவி (இன்) மலையின் வீழருவி
ந.-8

Page 60
108.
12. 13. 14.
சாத்தன் கை குன்றக் கூகை
(உ-ம்)
நன்னூல்
(அது சாத்தனது கை (கண் குன்றத்தின்கட் கூகை
அல்வழி
ஐந்து தொகை நிலைத்தொடர்
கொல்யானை
கருங்குதிரை சாரைப்பாம்பு
மதிமுகம் இராப்பகல் பொற்றொடி
வினைத்தொகை பண்புத் தொகை இருபெயரொட்டு பண்புத்தொகை உவமைத்தொகை உம்மைத் தொகை அன்மொழித் தொகை
ஒன்பது தொகா நிலைத்தொடர்
சாத்தன் வந்தான் சாத்தா வா வந்த சாத்தன் வந்து போனான்
வந்தான் சாத்தன்
. பெரியன் சாத்தன்
மற்றொன்று நனிபேதை பாம்புபாம்பு
எழுவாய்த் தொடர் விளித் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் தெரிநிலை வினைமுற்றுத்
தொடர் குறிப்பு வினைமுற்றுத்
தொடர் இடைச்சொற்றொடர் உரிச்சொற்றொடர் அடுக்குத் தொடர்
(வி-ம்) தழுவு தொடர் ஆறும் பதினான்கும் எனக் கூறவே, அவ்விரு வழியிலுந் தழாத்தொடருஞ் சில உள என்றாராயிற்று. கைக்களிறு என்பது கையை யுடைய களிறு என விரிக்கப்படுதலால், கையென்பது களிறென் பதைத் தழுவாது தொடர்ந்தது; இது தழாத்தொடராகிய வேற்றுமைப் புணர்ச்சி. சுரையாழ அம்மி மிதப்ப என்பது

உயிரீற்றுப் புணரியல் 109
சுரை மிதப்ப அம்மி யாழ எனக் கூட்டப்படுதலால், சுரையென்பது ஆழ என்பதையும் அம்மியென்பது மிதப்ப என்பதையுந் தழுவாது தொடர்ந்தன. இவை தழாத் தொடராகிய அல்வழிப் புணர்ச்சி. தழாத்தொடராவது நிலைமொழியானது வருமொழியைப்பொருட் பொருத்த முறத் தழுவாத தொடர். பொருட் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர். 2
இயல்பு புணர்ச்சி گپ 153. விகார மனைத்து மேவல தியல்பே.
(இ-ள்) விகாரம் அனைத்தும் மேவலது இயல்பு - மேல் வரும் விகார வகையனைத்தும அடையாதது இயல்பாகும்.
(உ-ம்) பொன்யலை, புகழழகிது, ஒளிமணி எனவரும்,
விகாரப் புணர்ச்சி 154. தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும். (இ-ள்) தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் - எழுத்தாயினுஞ் சாரியையாயினுந் தோன்றுதலும் வேறு படுதலும் கெடுதலும் முன் சொன்ன விகாரமாகும்; மூன் றும் மொழி மூவிடத்தும் ஆகும் - இம் மூவகை விகாரமும் நிலைமொழி வருமொழிகளுடைய முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் ஏற்றபடி வரும்.
(உ-ம்) பூ+கொடி=பூங்கொடி - வருமொழி முதலில் மெய் தோன்றிற்று.
பல்+தலை = பஃறலை - வருமொழி முதலிலும் நிலைமொழியீற்றிலும் உள்ள மெய்கள் திரிந்தன.
நிலம் + வலயம் = நிலவலயம் - நிலைமொழி யீற்று மெய் கெட்டது.

Page 61
110 நன்னூல்
ஆறு + பத்து = அறுபது - நிலைமொழி முதலுயிர் திரிந்து வருமொழி யிடையொற்றுக் கெட்டது.
பல + பொருள் = பல் பொருள் - நிலைமொழி யீற்றுயிர் கெட்டது.
நாழி+உரி - நாடுரி - நிலைமொழி யீற் றுயிர்மெய் கெட்டு டகர மெய் தோன்றிற்று.
தமிழ் + பிள்ளை - தமிழப்பிள்ளை - நிலைமொழி யீற்றிற் சாரியை தோன்றிற்று.
பனை + காய் - பனங்காய் - நிலைமொழி யீற்றுயிர் கெட்டுச் சாரியை தோன்றிற்று. 4
செய்யுள் விகாரம்
155. வலித்தன் மெலித்த னிட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.
(இ-ள்) வலித்தல் - மெல்லொற்றை வல்லொற் றாக்க லும்; மெலித்தவ் - வல்லொற்றை மெல்லொற் றாக்கலும்; நீட்டல் - குற்றெழுத்தை நெட்டெழுத் தாக்கலும்; குறுக் கல் - நெட்டெழுத்தைக் குற்றெழுத் தாக்கலும்; விரித்தல்இல்லாத எழுத்தை வருவித்தலும் தொகுத்தல் - உள்ள எழுத்தை நீக்கலும்; செய்யுள் வேண்டுழி வரும் - செய்யு ளிடத்து அடி, தொடை முதலானவைகளை நோக்கி அமைக்க வேண்டு மிடத்து வருவனவாம்.
(உ-ம்) 'குறுத்தாட் பூதஞ் சுமந்த வறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே"-இங்கே குறுந்தாள் எனற் பாலது குறுத்தாள் என வலிந்து நின்றது.
'தன்டையி னினக்கிளி கடிவோள் பண்டைய ளல்லண் மானோக் கினளே' - இங்கே தட்டை எனற்பாலது தண்டை என மெலிந்து நின்றது.

உயிரீற்றுப்புணரியல் 111
"தீத்தொழிலே கன்றித் திரிதருந் தெருவைபோற் போத்தறார் புல்லறிவினார்’-இங்கே பொத்தறார் எனற் பாலது போத்தறார் என நீண்டு நின்றது.
'யானை-யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருத்தார் நன்றென்றேன் றியேன்” - இங்கே தீயேன் எனற் பாலது தியேன் எனக் குறுகி நின்றது.
"சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே’-இ ங் கே விளையுமே எனற்பாலது விளையும்மே என மகர மெய் விரிந்து நின்றது. சிறியவிலை எனற்பாலது சிறியிலை என யகர வுயிர்மெய் தொக்கு நின்றது. 5
156. ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே.
(இ - ள்) ஒரு மொழி மூவழிக் குறைதலும் - ஒரு சொல்லினுடைய முதல், இடை, கடை யென்னும் மூன்றில் ஓரிடத்துக் குறைந்து வருதலும்; அனைத்து - அச் செய்யுள் விகாரமாம்.
(உ-ம்) “மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி"- இங்கே தாமரை எனற்பாலது மரை என முதற் குறைந்து நின்றது.
*வேதின வெரிநி னோதி முதுபோத்து" - இங்கே ஓந்தி எனற்பாலது ஒதி என இடைக் குறைந்து நின்றது. 'நீலுண் டுகிலிகை கடுப்ப" - இங்கே நீலம் எனற் பாலது நீல் எனக் கடைக் குறைந்து நின்றது.
உரையிற்கோடலால், விதி யின்றி வருவனவாகிய புணர்ச்சியில் விகாரங்களுங் கொள்க. அவை தோன்றல் திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதல் என்பனவாம்.
(உ-ம்) யாது - யாவது-இது தோன்றல், மாகி - மாசி; கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்புச் உயர்திணை மேல - உயர்திணை மேன-இவை திரிதல்.
யாவர் - யார்; யார் - ஆர்; யானை - ஆனை யாடு
ஆடு யாறு - ஆறு - இவை கெடுதல்.

Page 62
112 நன்னூல்
பொழுது - போழ்து; பெயர் - பேர் - இவை நீளல்.
வைசாகி - வைகாசி; மிஞறு - Dமிறு; சிவிறி - விசிறி: தசை - சதை-இவை எழுத்து நிலைமாறுதல்.
கண்மீ - மீகண்; இல்வாய் - வாயில்; நகர்ப்புறம் " புறநகர்- இவை சொல் நிலை மாறுதல். 6
புணர்ச்சி விகாரத்தில் வருவதோர் ஐயம் ஒழித்தல்
157. ஒருபுணர்க் சிரண்டு மூன்று முறப்பெறும்.
(இ-ள்) ஒரு புணர்க்கு - ஒரு புணர்ச்சிக்கு இரண்டு மூன்றும் உறப் பெறும் - ஒன்றே யன்றி இரண்டு மூன்றும் வரப் பெறும்.
(உ-ம்) யானை +கோடு = யானைக்கோடு - ஒரு
விகாரம். நிலம்+பனை = நிலப்பனை-இரண்டு
விகாரம். பனை +காய் = பனங்காய்-மூன்று விகாரம்,7
2. பொதுப் புணர்ச்சி எல்லா வீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
158. எண்மூ வெழுத்தீற் றெள்வகை மொழிக்கும்
முன்வரு ஞ ந ம ய வக்க ளியல்புங் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலுமாம் ண ள ன ல வழிகத் திரியும்.
(இ-ள்)எண்மூ வெழுத்து ஈற்றுஎவ்வகை மொழிக்கு முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் - இயல்பினாலாயினும் விதியினாலாயினும் இருபத்துநான் கெழுத்தையும் ஈறாக வுடைய பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பலவகைப்

உயிரீற்றுப் புணரியல் 13
பட்ட சொற்களுக்கும் முன்னே வரும் ஞகர, நகர, மகர, யகர, வகரங்கள் அல்வழி வேற்றுமை இரண்டிலும் இயல் பாதலும், குறில் வழி ய தனி ஐ நொது முன் மெலி மிகலும் ஆம்; குற்றெழுத்தின் பின்னின்ற யகர மெய்யே ஒரெழுத் தொருமொழியாகிய உயிர் உயிர்மெய் என்னும் ஐகாரமே நொவ்வே துவ்வே என்பவைகளுக்கு முன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் பிற சொற்களின் முன் இயல்பாத லன்றி மிக்கு முடிதலும் ஆகும்; ண ள ன ல வழி ந திரியும் - ண, ள, ன, லக்களின் முன் வரும் நகரம் பிற வீற்றின் முன் இயல்பாதலன்றித் திரியும்.
விதியீறாவது இயல்பாக நின்ற உயிரேனும் ஒற்றேனும் போய் மற்றோ ருயிரீறாகவேனும் ஒற்றீறாகவேனும் நிற்பது.
புணரியலில் அல்வழி வேற்றுமைகளுள் ஒன்றைக் குறிப் பாகவேனும் வெளிப்படையாகவேனும் விதவாத இடமெல் லாம் அவ்விரண்டையுங் கொள்க.
(உ-ம்) 1. விள, பலா புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கெள, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், எஃகு என்னும் நிலை மொழி, களோடு, அல்வழிப் புணர்ச்சிக்கு உதார ணமாக ஞான்றது; நீண்டது, மாண்டது; யாது, வலிது என்னும் வருமொழிகளை யும், வேற்றுமைப் புணர்ச்சிக்கு உதாரண மாக, ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை என்னும் வருமொழிகளையுங்
கூட்டி, அல்வழி வேற்றுமை விள ஞான்றது விள ஞாற்சி விள நீண்டது விள நீட்சி விள மாண்டது விள மாட்சி விள யாது - விள யாப்பு விள வலிது விள வன்மை
என எல்லா வீற்றின் முன்னும் ஞ, ந, ம, ய, வக்கள் இயல் பாதல் காண்க.

Page 63
114 நன்னூல்
உரிஞ்+ஞான்றது-உரிஞஞான்றது; பொருந்+ஞான் றது = பொருநுஞான்றது; வேல்+ஞான்றது=வேன் ஞான்றது; வாள் + ஞான்றது=வாண் ஞான்றது; மரம்+ஞான்றது = மரஞான்றது என நிலைமொழி யீறுகள் விகாரப்படுதல் அவ்வவ் வீற்றுச் சிறப்பு விதிகளிற் காண்க. -
அல்வழி வேற்றுமை (உ-ம்) 2. மெய்ஞ் ஞான்றது மெய்ஞ் ஞாற்சி
மெய்ந் நீண்டது மெய்ந் நீட்சி மெய்ம் மாண்டது மெய்ம் மாட்சி கைஞ் ஞான்றது கைஞ் ஞாற்சி கைந் நீண்டது கைந் நீட்சி கைம் மாண்டது கைம் மாட்சி
எனக் குறில் முன்னின்ற யகரத்தின் முன்னுந் தனி ஐம்
முன்னும் மெலி மிகுதல் காண்க.
(உ-ம்) 3. நொ, து முன் மெலி மிகலுமாம் என்ற எச்ச வும்மையால், அவ் விரண்டன் முன்னும் இடை யெழுத்து மிகலுமாம் என்றா ராயிற்று.
நொ+ஞெள்ளா - g) + GG 56it GT T =
நொஞ்ஞெள்ளா துஞ்ஞெள்ளா " நாகா - நொந்நாகா , நாகா - துந்நாகா ' மாடா = நொம்மாடா I , மாடா =தும்மாடா " யவனா = நொய்யவனா , யவனா = துய்யவனா " வளவா = நொவ்வளவாl , வளவா = துவ்வளவா
இவை வினைச்சொற்களாதலால், அல்வழியிலே மிகுந்தன. (உ-ம்) 4. ண, ள, ன, ல வழி நத் திரியு மென்றது பின் வரும் "ன ல முன் ற ன வும்" என்னஞ் சூத்தி ரத்திலே காண்க. இச் சூத்திரம் முதலியன, ஒன்றற்கொன்று தொடர்ச் சியாகப் புணர்த்தலால், தொடர்ச் சொற் புணர்த்த லென்னும் உத்தி. 8

உயிரீற்றுப் புணரியல் II5。
பொதுப்பெய ருயர்திணைப்பெய ரீறு
159. பொதுப்பெயருயர்திணைப் பெயர்களிற்றுமெய்
வலிவரி னியல்பா மாவி யரமுன் வன்மை மிகாசில விகாரமா முயர்திணை.
(இ-ள்) பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய்வலி வரின் இயல்பு ஆம் - பொதுப் பெயர்களுக் கும் உயர்திணைப் பெயர்களுக்கும் ஈற்றிலுள்ள மெய்கள் வல்லெழுத்து முதல் மொழிகள் வரின் இயல்பாகும்; ஆவி ய ர முன் வன்மை மிகா - உயிரையும் யகர ரகர மெய்களை யும் ஈறாகவுடைய அவ்விருவகைப் பெயர்களுக்கும் முன் வரும் வல்லெழுத்துக்கள் மிகாவாம்; உயர் திணை சில விகாரம் ஆம் - மெய்யீறும் உயிரீறுமாகிய உயர்தினைப் பெயர்களுள் சில பெயர்கள் நாற்கணங்களோடும் புணரு மிடத்து நிலைமொழி வருமொழிகள் விகாரப்படுதலும் உடையனவாம்.
பொதுப்பெயராவது உயர்திணை அஃறிணை இரண்டுக் கும் பொதுவாய் வரும் பெயர். பொதுப்பெயர் விரவுப் பெயர் என்பன ஒரு பொருட் சொற்கள். உயர்திணை அஃறிணை இரண்டினும் விரவுதலுடைய பெயர் விரவுப் பெயர். விரவுதல் கலத்தல்.
நாற்கணமாவன:-வன்கனம், மென்கணம், இடைக் கணம், உயிர்க்கணம் என்பனவாம்.
நிலைமொழிச் செய்கையாய்த் திரிதற்குரிய எழுத்துக் கள் திரியா தியல்பாதலும், வருமொழிச் செய்கையாய் மிகுதற்குரிய எழுத்துக்கள் மிகாது இயல்பாதலும் கருதி, ஈற்றுமெய் இயல்பாம் என்றும், வன்மை மிகா என்றும் பகுத் தோதினார். உயிர்போல வருமொழிச் செய்கையாய் வன்மை மிகுதற்கு உரியனவாகிய ய ர ழக்கண் மூன்றினுள் ளும், ழகரம் பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்களுக்கு ஈறாகாமையால், இங்கே ஒழிக்கப்பட்டது.

Page 64
1Ꮨ16
நன்னூல்
(உ-ம்) 1. சாத்தன், கொற்றன், ஆண் இவற்றின் முன்
is all-to) 2.
குறிது, சிறிது, தீது,பெரிது; குறியன், சிறியன், தீயன், பெரியன், கை, செவி, தலை, புறம் இவற்றை வருவித்து, சாத்தன் குறிது சாத் தன் குறியன், சாத்தன் கை எனழுறையே கூட்டிப் பொதுபெயரீற்று னகர ணகர மெய் இரு வழியும் இயல்பாதல் காண்க. ஊரன், அவன் இவற்றின் முன் குறியன், சிறியன், தீயன் பெரியன்’ கை, செவி, தலை, புறம் இவற்றை வருவித்து, ஊரன் குறியன், ஊரன் கை என முறையே கூட்டி, உயர்திணைப் பெயரீற்று னகர மெய் இருவழியும் இயல்பாதல் காண்க. தோன்றல் வேள் இவற்றின் முன் குறியன், சிறியன், பெரியன்; கை, செவி, தலை, புறம் இவற்றை வருவித்து, தோன்றல் குறியன்: தோன்றல் கை என முறையே கூட்டி உயர் திணைப் பெயரீற்று லகர, ளகர மெய் இரு வழி யும் இயல்பாதல் காண்க. தோன்றல் + தீயன்= தோன்றறியன்; தோன்றல் + தலை= தோன்ற றலை எனவும்; வேள் + தீயன் = வேடீயன் வேள் +தலை = வேடலை எனவும்; லகர ளகர மெய் தகரம் வருமிடத்துக் கெடுதல் மயக்க விதி யின்மைப்பற்றி யென்றறிக.
சாத்தி, கொற்றி, தாய் இவற்றின் முன் குறிது, சிறிது, தீது, ತಿಳಿಸಿ: குறியள், சிறியள், ፮፻። பெரியள் கை, செவி,தலை,புறம் இவற்றை வரு வித்து, சாத்தி குறிது, சாத்தி குறியள், சாத்தி கை என முறையே கூட்டிப் பொதுப்பெயரீற்று உயிர் யகர மு ன் வலி இரு வழியும் இயல் பாதல் காண்க. நம்பி,விடலை இவற்றின் முன், குறியன், சிறியன் தீயன், பெரியன், கை, செவி, தலை, புறம் இவற்றையும், அவர் ஒருவர் இவற் றின் முன், குறியர், சிறியர், தீயர், பெரியர், கை, செவி, தலை, புறம் இவற்றையும் வரு வித்து, நம்பி குறியன் நம்பி கை; அவர் குறியர், அவர் கை என முறையே கூட்டி, உயர்திணைப் பெயரீற்று உயிர் ரகர முன் வலி இருவழியும்
இயல்பாதல் காண்க.

உயிரீற்றுப் புணரியல் 117
(உ-ம்) 3. கபிலன் + பரணன்-கபிலபரணர்; வடுகன் + நாதன்-வடுகநாதன்; அரசன் + வள்ளல்அரசவள்ளல் - இவை ஈறு கெட்டியல்பாய் முடிந்தன. ஆசீவகர் + பள்ளி=ஆசீவகப்பள்ளி; வாணிகர்+தெரு = வாணிகத்தெரு -இவை ஈறு கெட்டு, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந் தன. குமரன்+கோட்டம் = குமரகோட்டம்; குமரக்கோட்டம்; வாசுதேவன்+கோட்ட்ம் = வாசுதேவகோட்டம் வாசு தேவக் கோட்டம்இவை ஈறு கெட்டு, வருமொழி வல்லெழுத்து இயல்பாயும் மிக்கும் முடிந்தன. பார்ப்பான் + கன்னி-பார்ப்பனக்கன்னி - இது ஈற்றயல் குறுகி, அகரச்சாரியைப் பெற்று, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிந்தது. வேளாளன் + பிள்ளை = வேளாண்பிள்ளை என நிலைமொழி யீற்று அன் கெட்டு ளகரமெய் ணகர மெய்யா கத்திரிந்து முடிந்தது. மக்கள் + பண்பு - மக்கட் பண்பு; மக்கள் + சுட்டு - மக்கட்சுட்டு என நிலைமொழி யீற்று மெய்திரிந்து முடிந்தது. 9
வினாப்பெயர் விளிப்பெயர்முன் வல்லினம் 160. ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே.
(இ-ள்) ஈற்று (வினா முன்)-ஆ, ஏ, ஓ என்னும் மூன் றிற்று வினா முன்னும்; யா வினா (முன்)-யா வென்னும் வினாப் பெயர் முன்னும்; விளிப்பெயர் முன் - உயிரீறும் மெய்யீறுமாகிய விளிப்பெயர் முன்னும்; வலி இயல்பு - வரும் வல்லெழுத்துக்கள் இயல்பாகும். (உ-ம்) 1. நம்பியா கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும், உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா, எனவும் ஈற்று வின

Page 65
18 நன்னூல்
முன் வலி இயல்பாதல் காண்க. (உண்கு+ஆ= உண்கா உண்பேனா இறுதி ஏகார ஓகார வினாக்களுக்கு உதாரணம் - "இடைச்சொல் லேயோ" என்னுஞ் சிறப்புச் சூத்திரத்திற் பெறப்படும். யா குறியன, சிறியன, தீயன, பெரியன என யா வினா முன் வலி இயல்பாதல் காண்க.
(உ.ம்) 2. நம்பி, நம்பீ; விடலை, விடலாய்; கிள்ளை, கிள் ளாய், தாய், தாயே - இவற்றின் முன் கொள், செல், தா, போ இவற்றை வருவித்து நம்பி கொள், நம்பி செல், நம்பி தா, நம்பி போ என முறையே கூட்டி, விளிப்பெயர் முன் வலி இயல்பாதல் காண்க. 10
முன்னிலைவினை ஏவல்வினைமுன் வல்லினம்
161. ஆவியரழ விறுதிமுன் னிலைவினை
ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே.
(இ - ள்) ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல் முன் - உயிரையும் ய, ர, ழ என்னும் மூன்று மெய்களையும் இறுதியாகவுடைய முன்னிலை வினை முன்னும் ஏவல் வினைமுன்னும், வல்லினம் இயல்பொடு விகற்பு - வருங் க, ச, த, பக்கள் இயல்புடனே விகற்பமாம்.
முன்னிலைவினை யென்றது, தன்மைவினை படர்க்கை வினைகளுக்கு இனமாய், முன்னின்றான் தொழிலை யுணர்த்தும் வினையை ஏவல்வினை யென்றது, இன மின்றி முன்னிலை யொன்றற்கே உரியதாய், முன்னின்றா னைத் தொழிற்படுத்தும் வினையை 3.
விகற்பமாவது, ஒருகால் இயல்பாயும் ஒருகால் விகார மாயும் புணர்வது. விகற்பம், உறழ்ச்சி என்பன ஒரு பொருட் சொற்கள்.

உயிரீற்றுப் புணரியல் 119
(உ-ம்) 1. உண்டி, உண்டனை, உண்டாய் எனவும்,
உண்டனிர், உண்டீர் எனவும் நிறுத்தி, சாத்தா, கொற்றா, தேவா, பூதா எனவும், சாத்தரே, கொற்றரே, தேவரே, பூதரே எனவும் வருவித்து, உண்டி சாத்தா, உண்டனிர் சாத்தரே
எனக் கூட்டி, ஆவி, ய, ர இறுதி முன்னிலை வினை முன்
இயல் பாதல் காண்க. کبر
ழகர மெய் முன்னிலைவினைக்கு ஈறாகாது; முன்னிலை வினை முன் விகற்பம் வந்த வழிக் காண்க. (உ-ம்) 2. கொணா, எறி, விடு, ஆய் சேர், தாழ் என நிறுத்தி, சாத்தா, கொற்றா, தேவா, பூதா என வருவித்து, கொணா சாத்தா என
முறையே கூட்டி, ஆவி, ய, ர, ழ இறுதி ஏவல்வினை முன் இயல்பாதல் காண்க.
நடகொற்றா, நடக் கொற்றா, எய் கொற்றா, எய்க் கொற்றா என ஏவல்வினை முன் விகற்பித்தல் காண்க. 11
3. உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி உயிர்முன் உயிர் புணர்தல்
162. இ ஈ ஐவழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.
(இ-ள்) இ ஈ ஐ வழி யவ்வும் - இகர ஈகார ஐகாரங் களின் முன்னே யகரமும்; ஏனை உயிர் வழி வவ்வும் - அ ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இவ் வேழுயிர்களின் முன்னே வகரமும்; ஏ முன் இவ் விருமையும் - ஏகாரத்தின் முன்னே யகரமும் வகரமும் உயிர் வரின் உடம்படுமெய்

Page 66
120 நன்னூல்
என்று ஆகும் - உயிர் முதன் மொழி வரின் உடம்படு மெய் என்று வரப்பெறும்.
உடம்படுமெய் யென்பது, நிலைமொழி யீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்.
உடம்படுத்த லெனினும் உடன்படுத்த லெனினும் ஒக்கும்.
வரும் உயிருக்கு உடம்பாக அடுக்கு மெய் யெனினும் பொருந்தும். (உ-ம்) 1. மணி, தீ, பனை இவற்றின் முன், அழகிது, அழகு முதலிய உயிர் முதன் மொழிகளை வருவித்து மணியழகிது, மணி யழகு எனக் கூட்டி, இ, ஈ, ஐம் முன் இரு வழியும் யகரம் பெறுதல் காண்க. உடம்படுமெய்யின் மேல் வருமொழி முதலுயி ரேறுதல், "உடன்மேலுயிர்" (சூ. 204) என்னுஞ் சூத்திரத்தாற் பெறப்படும். (உ-ம்) 2. விள, பலா, கடு, பூ, நொ, கோ, கெள இவற்றிற்கு முன், அழகிது, அழகு முதலிய உயிர் முதன் மொழி களை வருவித்து, விள வழகிது, விள வழகு எனக் கூட்டி, மற்றை. யுயிர்களின் முன், இரு வழியும் வகரம் பெறுதல் 56. (உ-ம்) 3. அவனே+ அழகன்-அவனே யழகன் என இடைச் சொல்லாகிய ஏ முன் யகரமும், ஏ+ எலாம் = ஏவெலாம், சே + உழுதது= சேவுழுதது என ஒரெழுத்தொருமொழியாகிய உயிர்மெய் என்னும் ஏ முன் வகரமும், சே+ அடி =சேயடி சேவடி எனச் செம்மை யென்னும் பண்புப் பெயரின் விகார மாகிய சே முன் யகரமும் வகரமும் பெறுதல் காண்க. 2

உயிரீற்றுப் புணரியல்
12r.
வினாச் சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல்
163.
எ கர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே.
(இ-ள்) எகர வினா (முன்னர்) முச்சுட்டின் முன்னர்எகர வினா விடைச்சொல்லின் முன்னும் மூன்று சுட்டிடைச் சொல்லின் முன்னும்; உயிரும் யகரமும்: எய்தின் வவ்வும் - உயிரும் யகரமும் வரின் வகரமும்; பிற வரின் அவையும் - யகர மொழிந்த மெய்கள் வரின் அவ்வந்த மெய்களும்; தூக்கில் சுட்டு நீளின் யகரமும்செய்யுளின்கட் சுட்டு நீண்டு வருமிடத்து யகரமும்: தோன்றுதல் நெறி - மிகுதல் முறை ய்ாம்.
(a--úb) í.
(al-b) 2.
(ol-b) 3.
எவ் வணி, எவ் யானை அவ் வணி, அவ், யானை, இவ் வணி, இவ் யானை, உவ் வணி, , உவ் யானை என எகர வினா முச்சுட்டின் முன் உயிரும் யகரமும் வர, வகரந் தோன்றுதல் காண்க எக் குதிரை, எச் சேனை, எத் தண்டு, எப், படை, எஞ் ஞாலம், எந் நாடு, எம் மனை, எவ் வளை, எங் ங்ணம் என யகர மொழிந்த மெய்கள் வர, அவ்வந்த மெய்கள் தோன்றுதல் காண்க. ஒழிந்த மூன்று சுட்டுக்களோடும் இப்படியே கூட்டுக. உயிர் வந்த வழித் தோன்றிய வகர  ெம ய் இரட்டுதல் ‘தணிக்குறின் முன்னொற்று" (கு 205) என்னும் சூத்திரத்தாலும், இரட்டிய மெய்யின் மேல் வருமொழி முத லுயி ரேறுதல், "உடன்மே லுயிர் ' (கு. 204) என்னுஞ் சூத்திரத் தாலும் பெறப்படும். ஆ+இடை- 'ஆயிடைத்தமிழ் கூ று ந ல் லுலகத்து' எனச் சுட்டு நீண்ட விடத்து யகரந் தோன்றுதல் காண்க.

Page 67
122 நன்னூல்
நெறி யென்றமையால் யாங்ங்னம் என யா வினா முன்னும், ஆங்ங்ணம், ஈங்ங்னம், ஊங்ங்ணம் என நீண்ட சுட்டின் முன்னும் ங்கர மிகுதலும்,
ஈது எனவும், ஆங்கு, ஈங்கு, ஊங்கு எனவும், ஆண்டு, ஈண்டு எனவும் சுட்டுப்பெயர் நீளலும்,
"விண்வத்துக் கொட்கும்" எனவும், "செல்வுபூழிச் செல்க" எனவும் 'சார்வுபூழிச் சார்ந்த தகையள்" எனவும், மெய் யீற்றின் முன் உயிர் வர, இப்படி உடம்படுமெய் யல்லாத வகரம் பெறுதலுங் கொள்க.
எகர வினா முச்சுட்டின் முன் உயிர் வரின் வகரமும், நீண்ட சுட்டின் முன் உயிர் வரின் யகரமுந் தோன்று மென்றது "இ ஈ ஐ வழி' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்,
யகரம் வரின் வகரமும், பிற மெய்களுள் ஞ, ந, ம, வ வரின் அவையுந். தோன்று மென்றது ‘எண்மூ வெழுத்திற்று' (சூ. 158) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்.
க, ச, த, ப, ங் வரின், அவை தோன்றும் என்றது எய்தாத தெய்துவித்தல். 13
குற்றியலுகர முன்னுஞ் சில முற்றியலுகர முன்னும் உயிரும் யகரமும் புணர்தல்
164. உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்
யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி.
(இ-ள்) உக்குறள் உயிர் வரின் மெய் விட்டு ஒடும் குற்றியலுகரம் உயிர் முதன் மொழி வந்தால் தனக் கிடமாகிய மெய்யை விட்டுக் கெடும்; தய வரின் இய்யாம் - யகரம் முதன் மொழி வந்தால் அது இகரமாகத் திரியும்; முற்றும் அற்று ஒரோ வழி - முற்றியலுகரமும் அவ் விரு விதியும் பெறும் ஒவ்வோரிடத்து.

உயிரீற்றுப் புணரியல் 123
(உ-ம்) 1. நாகு, எஃகு, வரகு, கொக்கு, குரங்கு, தெள்கு இவற்றின் முன், அரிது, அருமை முதலிய உயிர் முதன் மொழிகளை வருவித்து, நாகரிது, நா கருமை எனக் கூட்டி, இரு வழியும் உயிர் வரக் குற்றியலுகரந் தானேறி நின்ற வல்லின மெய்யை விட்டுக் கெடுதல் காண்க. குற்றிய லுகரங் கெடநின்ற மெய்யின் மேல் வந்த வுயி ரேறுதல் "உடன் மே லுயிர்" (கு. 204) என்னுஞ் சூத்திரத்தாற் பெறப்படும். (உ-ம்) 2. நாகு முதலியவற்றின் முன், யாது, யாப்பு என வருவித்து நாகி யாது, நாகி யாப்பு எனக் கூட்டி, இரு வழியும் யகரம் வரக் குற்றிய லுகரம் இகரமாகத் திரிதல் காண்க. (உ-ம்) 3. கதவு+அழகிது=கத வழகிது; கதவு+யாது: கதவி யாது எனவும், அது+ஐ= அதை எனவும் முற்றியலுகரம் ஒரோரிடத்து அவ்விரு விதியும் பெறுதல் காண்க. கெடும் என்னாது ஒடும் என்றாமையால், குற்றிய லுகரம் ஒரோரிடத்து "இ ஈ ஐ வழி" (சூ. 162) என்னுஞ் சூத்திரப் பொதுவிதி பெறுதலுங் கொள்க. வரலாறு
'தன்முக மாகத் தானழைப் பதுவே" இதில் *அழைப்பது" என்பது குற்றுகர மொழி; ஏகார இடைச் சொல் வர ‘அழைப்பதே" என முடிதற்பாலது, அங்ங்னம் முடியாது வகரவுடம்படு மெய் பெற்று "அழைப்பதுவே" என முடிந்தது.
'அடித்தடித்து வக்காரமுன் றிற்றிய வற்புத மறியேனே' இதில் 'அடித்து' என்பது குற்றுகர மொழி: அக்கார மென்னும் உயிர் முதன் மொழி வர, "அடித்தக் கார மென முடிதற்பாலது, அங்ங்ணம் முடியாது, வகர வுடம்படுமெய் பெற்று, ‘அடித்து வக்காரம்" என முடிந்தது.
互ー9

Page 68
24 நன்னூல்
குற்றியலுகரம் உயிர் வரிற் கெடும் என்றது "இ ஈ ஐ வழி" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்; யவ் வரின் இய்யாம் என்றது எய்தாத தெய்துவித்தல்.
ஒரோவிடத்து முற்றியலுகரம் இவ்விதி யிரண்டனுள் முன்னையது பெறும் என்றது "இ ஈ ஐ வழி' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்பு விதி; பின்னையது பெறும் என்றது எய்தாத தெய்துவித்தல். 14.
4. உயிரீற்று முன் வல்லினம்
உயிரீற்றின் முன் வல்லினம் புணர்தல்
165. இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன்
க ச த ப மிகும்வித வாதன மன்னே.
(இ-ள்) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன்இயல்பினாலும் விதியினாலும் இறுதியாக நின்ற உயிர் களின் முன் க ச தப மன் மிகும் - வருங் க, ச, த, பக்கள் பெரும்பாலும் மிகும். விதவாதன - பின் சிறப்பு விதியிற் சொல்லாதவைகளுள்.
(உம்-) 1. ஆடூஉக் குறியன், நம்பிக் கொற்றன் எனவும்
ஆடூஉக் கை, செட்டித் தெரு எனவும், உயர்தினைப் பெயர் முன் இரு வழியும் வல்லெழுத்து மிக்கன,
சாத்திப்பெண் எனப் பொதுப்பெயர் முன் அல் வழியில் வல்லெழுத்து மிக்கது. விளக்குறிது, தாராக் கடிது, தீப் பெரிது, வடுத்
தீது, கொக்குக் கடிது, கொண்மூக் கரிது, சேச் சிறிது, சோப்பெரிது எனவும்.

உயிரீற்றுப் புணரியல் 125
(al-ti) 2.
(all-b) 3.
(al-D) 4.
(o-to) 5.
ஒற்றைக் கை, வட்டக் கல், தாழக் கோல் எனவும் அஃறிணைப்பெயர் முன் அல்வழியில் வல்லெழுத்து மிக்கன. இவற்றுள், ஒற்றை, வட்ட, தாழ என்பன விதி யீறு.
விளக்கோடு, பாலாக்காய், கிளிச்சிறை, தீக் கடுமை, கடுக்காய், கொக்குக் கால், வண்டுக் கால், கொண் மூக்குழாம், சேக்கொம்பு, தினைத் தாள், சோப்பெருமை என அஃறிணைப் பெயர் முன் வேற்றுமையில் வல்லெழுத்து மிக்கன.
ஆடிக் கொண்டான், ஆடாக் கொண்டான், ஆடூஉக்கொண்டான். ஆடெனக் கொண்டான், ஆடக் கொண்டான். உண்பாக்குச் சென்றான், பூத்துக் காய்த்தது, பொள்ளெனப் பரந்தது, சாலப்பகைத்தது என வும், இருளின்றிக் கண்டார், பொருளன்றிக் காணார் எனவும், தெரிநிலை வினையெச்சத்தின் முன்னுங்குறிப்பு வினையெச்சத்தின் முன்னும் வல்லெழுத்து மிக்கன.
கூவிற்றுக் கோழி எனவும், குண்டுகட்டுக் களிறு எனவும் தெரிநிலை வினைமுற்றின் முன்னுங் குறிப்பு வினைமுற்றின் முன்னும் வல்லெ ழுத்து மிக்கன. ஆங்குக் கொண்டான், இனிச் செய்வேன், மற்றைத் தெரு என இடைச் சொல்லின் முன் வல்லெழுத்து மிக்கன. தவப்பெரியன், கடிக்கமலம், பணைத்தோள் என உரிச்சொல்லின் முன் வல்லெழுத்துமிக்கன. சொன்றிக் குழிசி எனத்திசைச்சொன் முன்னும், கங்கைச் சடை என வடசொன் முன்னும் வல்லெழுத்து மிக்கன.

Page 69
126 நன்னூல்
விதவாதன பெரும்பாலும் மிகும் எனவே, விதந்தன சிறுபான்மை மிகும் எனவும், விதவாதன சிறுபான்மை மிகா எனவுங் கூறினாராயிற்று. அவை வருமாறு:-
1. நொக்கொற்றா, துக்கொற்றா, சாத்தா, தேவா, பூதா என்பன "ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே" (சூ.161) என முற் கூறிய சிறப்புவிதி பெறாது, வல்லெழுத்து மிக்கே வந்தன. எனவே, நொ, து முன் மூவினமும் மிகு மென்றாராயிற்று. 2. ஏரிகரை, குழவி கை, குழந்தை கை, "பழமுதிர் சோலை மலைகிழவோனே" எனவும், கூப்புகரம், ஈட்டுதனம், நாட்டுபுகழ் எனவும், முறையே வேற்றுமையிலும் அல்வழியிலும் பின் விதவாதன மிகாவாயின. வல்லினம் உயிரீற் றுயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களுக்கு முன் மிகும் என்றது “ஆவி யரமுன் வன்மை மிகா” (சூ. 159) என எய்தியதன்மேற் சிறப்புவிதி; அஃறிணைப் பெயர்களுக்கு முன்னும் வினை முதலியவை களுக்குமுன்னும் மிகும் என்றது எய்தாத தெய்துவித்தல். 15 உயிரீற்றுச் சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல் 166. மரப்பெயர் முன்னரினமெல் லெழுத்து
வரப்பெறுனவுமுள வேற்றுமை வழியே. (இ-ள்) மரப் பெயர் முன்னர் - உயிரீற்றுச் சில மரப் பெயர்களுக்கு முன் இன மெல்லெழுத்து வரப் பெறுனவும் உள - மேற்கூறிய பொது விதியால் வரும் வல்லெழுத்து மிகாது அவற்றிற்கினமாகிய மெல்லெழுத்து மிகப்பெறு வனவுஞ் சிவவுளவாம்; வேற்றுமை வழி - வேற்றுமை வழியில்.
(உ-ம்) விள+காய்-விளங்காய், கள + கனி - களங் கனி, மா+துளிர்=மாந்துளிர், காயா+பூ- காயாம் பூ என வரும்.

உயிரீற்றுப் புணரியல் 127
இது "இயல்பினும் விதியினும்" (சூ. 165) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 16
5. அகர வீற்றுச் சிறப்புவிதி
167. செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாறனுருபே அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே.
(இ-ள்) செய்யிய என்னும் வினையெச்சம் - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்ச வினையும்; பல் வகைப் பெயரினெச்சம் - பல வகைப்பட்ட பெயரெச்ச வினையும்; (பல்வகை) முற்று - பல வகைப்பட்ட முற்று வினையும் ஆறனுருபு - ஆறாம் வேற்றுமை அகர வுருபும்; அஃறிணைப் பன்மை - அஃறிணைப் பன்மைப் பெயரும்; அம்ம - அம்ம என்னும் உரையசை இடைச்சொல்லும்; முன் இயல்பு - ஆகிய அகர வீற்றுச் சொற்கள் ஆறன் முன்னும் வல்லெழுத் துக்கள் இயல்பாம்.
முதலிலும் ஈற்றிலும் அகர வீற்றுச் சொல் வைத்தமை யால், இடை நின்றனவும் அகர வீற்றுச் சொற்கள் என்பது பெற்றாம்.
பல் வகைப் பெயரெச்ச மென்றது, வினையடி நான்கினும் பிறந்த பெயரெச்சங்களை; பல் வகை முற்றென்றது, வினையடி நான்கினும், பிறந்த முற்று வினைகளை. வினையடி நான்காவன: - இயல்பாகிய வினையடி ஒன்றும், மற்றைப் பெயர், இடை, உரியடியாகப் பிறந்த செயற்கை வினையடி மூன்றுமாம்.
முன்னே முற்றென விதந்தமையால், அஃறிணைப் பன்மையென்றது பெயரை.

Page 70
128
(ο -ίο) 1.
(உ-ம்) 2.
(உ-ம்) 3.
நன்னூல்
உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனச் செய்யிய வென்னும் வினை யெச்சம் முன் இ யல் பாயின. உண்ணிய9 6ððf Gððf. உண்ட, உண்ணாநின்ற, உண்ணாத எனவும்? கடைக் கணித்த, சித்திரித்த,வெளுத்த, சினவிய, கறுவிய, அமரிய எனவும், திண்ணென்ற பொன் போன்ற எனவும், சான்ற, உற்ற எனவும் வரும். நால்வகைத் தெரிநிலைப் பெய ரெச்ச வினை முன்னும், அமர்முகத்த, கடுங் கண்ண, சிறிய, பெரிய, உள, இல, பல, சில எனவும் வரும் மூவகை வினைக்குறிப்புப் பெய ரெச்ச முன்னும், குதிரை, செந்நாய், தகர் பன்றி, இவற்றை வருவித்து, உண்ட குதிரை? உண்ட செந்நாய், உண்டதகர் உண்ட பன்றி எனழுறையே கூட்டிப், பல்வகைப் பெயரெச்ச முன் இயல்பாதல் காண்க. குறிப்புவினை, இயற்கை வினையடி ஏலாமையால், மூவகை
யாயிற்று.
உண்டன, உண்ணா நின்றன, உண்பன, உண்ணாதன என்னுந் தெரிநிலை வினைமுற்று
முன்னும்,
அமர்முகத்தன, கரியன என்னுங் குறிப்பு வினை முறநூறு முன்னும், குதிரை, செந்நாய், தகர், பன்றி இவற்றை வருவித்து, உண்டன குதிரை, உண்டன செந் நாய் எனக் கூட்டி, முற்று முன் இயல்பாதல்
9565 இனி, மேற்காட்டிய பெயரெச்சவினைகட்கும், அன் பெறாத அகரவீற்றுப் பல்வகை முற்று வினைகட்கும், பொருள் வேறுபாடன்றிச் சொல் வேறுபாடின்மையால், அவையே உதாரணமாகக் கொள்க.

உயிரீற்றுப் புணரியல் 129
வாழ்க கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வியங்கோண் முற்றின் முன் இயல்பாயின. வாழிய என்பதனோடும் இப்படியே கூட்டுக. முற்று முன் இயல்பாம் எனவே, அருத்தாபத்தி யால்;* இவ் வினைமுற்று வினையெச்சமாகியுங் குறிப்புமுற்று ஈரெச்ச மாகியும் நின்றபோது வரும் வல்லினம் இயல்பாதலுங் கொள்க. வரலாறு:- உண்ட கண்டன. இது உண்டு கண்டன எனப் பொருள்படுவதால், வினைமுற்று வினையெச்சமா யிற்று.
அமர்முகத்த கலக்கின. இது அமர்முகத்தவாகிக் கலக் கின எனப் பொருள்படுவதால், குறிப்புமுற்று வினை யெச்சமாயிற்று.
அமர்முகத்த குதிரை வந்தன. இது அமர்முகத்தன வாகிய குதிரை வந்தன எனப் பொருள்படுவதால், குறிப்பு முற்றுப் பெயரெச்ச மாயிற்று.
இவற்றின் முன் வல்லினம் இயல்பாதல் காண்க. (உ-ம்) 4. தன கைகள், செவிகள், தாள்கள், பதங்கள் என
ஆற னுருபின் முன் இயல்பாயின. (உ-ம்) 5, பல குதிரைகள், செந்நாய்கள், தகர்கள், பன்றி
கள் எனவும், பல கொடுத்தான், செய்தான். தந்தான், பெற் றான் உனவும், அஃறிணைப் பன்மைப்பெயர் முன் இரு வழியும் இயல்பாயின. (உ-ம்) 6. அம்ம கொற்றா, சாத்தா, தேவா, பூதா என உரையசை யிடைச்சொன் முன் இயல்பாயின.
*அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக் கூறிய மாத்தி ரத்தால் அதன் குறிப்பைக் கொண்டு கூறப்படாத மற் றொரு பொருளையும் அறிவது.

Page 71
130 நன்னூல்
இது "இயல்பினும் விதியினும்" என்னுஞ் சூத்திரத் தால் (சூ. 165) எய்தியது விலக்கல். If 168. வாழிய வென்பதனீற்றினுயிர்மெய்
ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. (இ-ள்) வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகலும் உரித்து-வாழிய என்னும் வியங்கோண் முற்றினுடைய இறுதியிலுள்ள யகர வுயிரமெய் குறைதலும் உரித்தாகும்; அஃது ஏகினும் இயல்பே-அவ் வுயிர்மெய் குறைந்து இகர வீறாய் நின்றாலும் வல்லினம் பொது விதியினாலே மிகாது சிறப்புவிதியிற் கூறிய இயல்பேயாம். (உ-ம்) 1. ஆ வாழி; அந்தணர் வாழி என ஈற்றுயிர்மெய்
குறைந்தது. (உ-ம்) 2. வாழி கொற்றா, சாத்தா, தேவா, பூதா என ஈற்றுயிர் மெய் குறைந்த இடத்தும் வல்லினம் இயல்பாயின. வியங்கோண் முற்றின் ஈற்றுயிர் மெய் குறையும் என் றது எய்தா தெய்வித்தல். ஈற்றுயிர்மெய் குறைந்த இடத் தும் வரும் வல்லினம் இயல்பேயாமென்றது "செய்யிய" என்னுஞ் சூத்திரத்தால் (சூ.167) எய்தியது இகந்துபடா மைக் காத்தல் 18
169. சாவவென் மொழியீற் றுயிர்மெய்சா தலும்விதி.
(இ-ள்) சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதலும் விதி-சாவ வென்னுஞ் செயவெ னெச்சவினைச் சொல்லி னுடைய இறுதியில் உள்ள வகர வுயிர்மெய் கெட்டுப் புணர்தலும் விதியாகும்.
(உ-ம்)சாவ+குத்தினான்-சாக் குத்தினான் எனவரும். இப்புணர்ச்சி சாவக் குத்தினான் என்னும் புணர்ச்சி போற் சிறந்ததல்லாமையாற் சாதலும் விதி என்றார்.
இது நிலைமொழிக்கு எய்தாத தெய்துவித்தல். 19

உயிரீற்றுப் புணரியல் 18
170. பலசில வெனுமிவை தம்முன் றாம்வரின்
இறல்பு மிகலு மகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற. (இ-ள்) பலசில எனும் இவை தம்முன் தாம்வரின்-பல, சில என்னும் இவ்விரு சொல்லுந் தமக்கு முன்னே தாம் வருமாயின் இயல்பும் மிகலும் - இயல்பாதலும் மிகுதலும்; அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும் - அகரங் கெட லகரம் றகரமாகத் திரிதலும்; பிற வரின் அகரம் விகற்பம் ஆகலும் உள-இவற்றின் முன் பிற மொழிகளுள் யாதாயினு மொன்றுவரின் அகரம் நிற்றலும் நீங்கலும் உளவாம். (உ-ம்) 1. பலபல, சிலசில என இயல்பாயின. (உ-ம்) 2. பலப்பல, சிலச்சில என மிக்கன. (உ-ம்) 3. பற்பல, சிற்சில என அகரங் கெட லகரம் றகர
மாயிற்று.
(உ-ம்) 4. பலகலை, பல்கலை; பலசாலை, பல்சாலை; பலதாழிசை, பஃறாழிசை, பலபடை, பல்படை; பலஞானம, பன்ஞானம்; பலநாள், பன்னாள்; பலமணி, பன்மணி, பலவளை, பல்வளை பலயாழ், பல்யாழ்; பலவணி, பல்லணி: பலவாயம், பல்லாயம்; எனப் பிற வர அகரம் விகற்ப மாயிற்று.
பிறவென்ற மிகையினாலே, பல்பல சில்சில என அகரங் கெட லகரம் றகர மாகாது ஒரோ விடத்து அருகி வருதலும், இன்னும் அகர வீற்றுப் புணர்ச்சியுள் அடங் காது வருவனவுங் கொள்க.
'பலசில வெனு மிவை தம் முன் றாம் வரி னியல்பு" என்றது, வருமொழிக்குச் "செய்யிய' என்னுஞ் சூத்திரத். தால் (சூ. 167) எய்தியது இகந்துபடாமைக் காத்தல்; மிகல் என்றது, அதன் மேற் சிறப்பு விதி; இம் மிகுதல் "செய்யிய"

Page 72
丑3易 நன்னுரல்
என்னுஞ் சூத்திரத்தால் விலக்கி இங்கே விதித்திமையாற் சிறப்புவிதி. அகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்பமாதலும் உள என்றது நிலைமொழிக்கெய் தாதது எய்துவித்தல். 20
6. ஆகார வீற்றுச் சிறப்புவிதி 171. அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா.
(இ-ள்) அல்வழி ஆ மா-அல்வழியில் ஆவும் மாவு மாகிய இருபெயரும், மியா-மியா என்றும் முன்னிலை யசை இடைச்சொல்லும், முற்று-ஆகார வீற் றஃறிணைப் பன்மை எதிர்மறை முற்று வினையுமாகிய முன் மிகாஇவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும். (உ-ம்) 1. ஆ குறிது, மா குறிது, சிறிது, தீது, பெரிது என அல்வழியில் ஆவு மாவுமாகிய இரு பெயர் முன்னும் வலி இயல்பாயின. மா - இங்கே விலங்கு.
(உ-ம்) 2. கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா என மியா என்னும் முன்னிலையசை யிடைச் சொன் முன் வலி இயல்பாயின.
(உ-ம்) 3. உண்ணா குதிரைகள், செந்நாய்கள், தகர்கள், பன்றிகள் என ஆகார வீற் றஃறிணைப் பன்மை யெதிர்மறை முற்று வினை முன் வலி இயல் பாயின. உண்ணாக் குதிரைகள் எனப் பொது விதியால் மிகுமாயின், தகர வீறு குறைந்த எதிர்மறைப் பெயரெச்சமாமெனக் கொள்க.
ஆமா என்ற மாத்திரமே காட்டுப்பசு எனவும் பொருள் பட இரட்டுற மொழிந்தமையால், ஆமா என்னும் பெயர் முன்னும் வலிமிகாமை கொள்க.
(வ-று) ஆமா குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.

உயிரீற்றுப் புணரியல் 33
"முற்று முன்மிகா” எனவே, அருத்தாபத்தியால், அவ் வினையாலணையும் பெயர் முன்னும்; அவ்வினைமுற்று வினையெச்சமாயவற்றின் முன்னும் அவ்வாறு மிகாமை கொள்க.
(வ-று) உண்ணா கிடந்தன, சென்றன, தந்தன, போயின என வரும். இங்கே, உண்ணா என்றது வினை யாலணையும் பெயராயின் உண்ணாதனவாகிய குதிரை கள் கிடந்தன எனவும்.
வினைமுற்று வினையெச்சாமாயின் உண்ணாதன வாய்க் கிடந்தன எனவும் பொருள்படும்.
உண்ணாக் கிடந்தன எனப் பொதுவிதியால் மிகு மாயின், உண்டு எனப பொருள்படுஞ் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமும்; உண்ணாது எனப் பொருள் படுந் துவ்வீறு குறைந்த செய்யா எனனும் எதிர்மறை வினையெச்சமுமா மெனக் கொள்க.
இது "இயல்பினும் விதியினும்" (கு. 165) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது ஒரு மருங்கு விலக்கல். 21
172. குறியதன் கீழாக் குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல் புமாங் தூக்கின்
(இ-ள்) குறி யதன் கீழ் ஆக் குறுகலும் - குற்றெழுத் தின் கீழ் நின்ற ஆகாரம் அகர மாதலும்; அதனோடு உகரம் ஏற்றலும் - அல்வகர மாதலுடனே உகரம் பெறு தலும்; இயல்பும் - அவ்விரண்டு மின்றித் தன்னியல்பில் நிற்றலுமாகிய மூன்று விதியும்; ஆம் தூக்கின்+ஆகும் பாட்டினிடத்து.
நிலவிரி கானல்வாய் நின்று-நிலாவிரி-குறுகல்
மருவினென் செய்யுமோ நிலவு-நிலா-குறுகலோடு உகர மேற்றல்
நிலாவணங்கு வெண்மணன் மேனின்று-இயல்பு

Page 73
134 நன்னூல்
செய்யுளில் இம் மூன்றுமா மெனவே, வழக்கில் இரண்டும் ஒன்றுமாம் என்றா ராயிற்று. வ-று) உதித்தது நிலவு, உதித்தது நிலா, கண்டேன் கனவு, கண்டேன் கனா எனக் குறுகுதலோடு உகரமேற்றலும் தன்னியல்புமாகிய இரண்டும் வந்தன. தரா, மிடா எனத் தன்னியல்யு ஒன்றுமாய் நின்றன. "ஆக் குறுகலும் அதனோடு உகர மேற்றலுமாம்" என்றது எய்தாதன எய்துவித்தல்; "இயல்புமாம்" என்றது அவ்விடத்து வருவதோர் ஐயமறுத்தல். 22,
7. இகர வீற்றுச் சிறப்புவிதி
173 அன்றி யின்றியென் வினையெஞ் சிகரக்
தொடர்பினு ஞகர மாய்வரி னியல்பே.
(இ-ள்) அன்றி இன்றி என் வினை யெஞ்சு இகரம் அன்றி இன்றி என்னும் வினையெச்சக் குறிப்புச் சொற் களின் ஈற்றிலுள்ள இகரம்; தொடர்பினுள் உகரம் ஆய் வரின் - செய்யுளில் உகரமாய்த் திரிந்து வரின் இயல்புவருங் க, ச, த, ப க்கள் பொதுவிதியான் மிகாது இயல் .gbחLJ (உ-ம்) வாளன்று பிடியா வன்கணாடவர்-வாள், அன்றி
விண்ணின்று பொய்ப்பின்-விண், இன்றி
உகரமாகத் திரியாவிடின் வாளன்றிப் பிடியா, விண் னின்றிப் பொய்ப்பின் என வல்லெழுத்து மிகுமெனக் காண்க.
"வினையெஞ் கிகரந் தொடர்பினுள் உகரமாய்" என்றது எய்தாத தெய்துவித்தல்; அஃதெய்தியவிடத்துப் புணரும் வல்லினம் இயல்பாம் என்றது; "இயல்பினும் விதியினும்" என்னுஞ்சூத்திரத்தால் எய்தியது விலக்கல், 23

உயிரீற்றுப் புணரியல் 135
174. உரிவளி னாழியி னிற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகரவுயிர் மெய்யா மேற்பன வரினே.
(இ-ள்) உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட டகரம் மருவும் - உரி எனனும் அளவுப்பெயர் வரின், நாழி என்னும் அளவுப்பெயரினது ஈற்றிலுள்ள பூழிகர வுயிர் மெய் நீங்க டகர மெய் வரும்; உரியின் வழி யகர வுயிர் மெய் ஆம் ஏற்பன வரின் - உரி யென்னும் அளவுப் பெயரின் பின் யகர வுயிர் மெய் வரும் அவ்வுயிர்மெய் வருவதற்கு ஏற்ற வருமொழிகள் வருமாயின். (உ-ம்) 1. நாழி+உரி - நாடுரி என நாழியின் ஈற்றுயிர் மெய் கெட்டு டகரந் தோன்றிற்று; இது நாவுரி என இக்காலத்து மருவிற்று. (உ-ம்) 2. உரி+உப்பு - உரியவுப்பு. உரியபயறு உரிய மிளகு, உரிய வரகு என உரியின் பின் யகர உயிர் மெய் வந்தது. ‘ஏற்பன வரின்’ எனவே, ஏலாதன வரின் உரியரிசி உரியாழாக்கு, உரியெண்ணெய் எனப் பொதுவிதி பெறுதல் கொள்க. ஆழாக் கிரண்டு கொண்டது உழக்கு உழக் கிரண்டு கொண்டது உரி; உரி யிரண்டு கொண்டது நாழி.
“உரி வரின் நாழியின் ஈற்றுயிர்மெய் கெட டகர மருவும்" என்றது இ ஈ ஐ வழி” என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்; ‘உயிரின் வழி யகர வுயிர் மெய்யாம் ஏற்பன வரின்’ என்றது எய்தாத தெய்துவித்தல். 24
175. சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும்.
(இ-ள்) சுவைப் புளி முன் - அறு சுவையுள் ஒன்றை யுணர்த்துகின்ற புளி யென்னும் பெயர் முன் இன மென்மையும் தோன்றும் - வரும் வல்லெழுத்துக்கண் மிகுத

Page 74
36 நன்னூல்
லன்றி அவற்றிற்கு இனமாகிய மெல்லெழுத்துக்களும் ஒரோவிடத்து மிகும்.
(உ-ம்) புளிங்கறி, புளிஞ்சோறு, புளிந்தயிர், புளிம்
பாளிதம் என வரும்,
புளிப்பாகிய கறி எனவும், புளிப்பையுடைய கறி எனவும் விரிக்கப்படுதலால், இரு வழிக்கும் இவையே உதாரணமா மென்க.
மென்மையும் என்ற இறந்தது தழிஇய இழிவு சிறப்பும்மையால், புளிக்கறி எனப் பொதுவிதியால் வரும் வல்லெழுத்து மிகலே சிறப்புடைத் தெனக் கொள்க.
"இன மென்மையுந் தோன்றும்" என்றது "இயல்பிலும் விதியினும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்பு விதி. 25,
8. இகர ஐகார வீற்றுச் சிறப்புவிதி
176. அல்வழி இ ஐம் முன்ன ராயின்
இயல்பு மிகலும் விகற்ப முமாகும்.
(இ-ள்) இ ஐம் முன்னர் - இகர, ஐகார ஈற்றஃறிணைப் பெயர் முன்; அல்வழி ஆயின் - வல்லினம் அல்வழி யினிடத்து வருமாயின்; இயல்பும் - இயல்பாதலும் மிகலும் - பொது விதியான் மிகுதலும்; விகற்பமும் ஆகும் - ஒன்றற்கே ஒருகான் மிகாமையும் ஒருகான் மிகுதலும் ஆகும்
ஒப்பின் முடித்தலால், ஐகாரஈறும் உடன் கூறினார்.
இயல்பு எழுவாய்த்தொடர், உம்மைத்தொகைகளிலும் மிகுதி பண்புத்தொகை, உவமைத்தொகைகளிலும் விகற்பஞ் சில பெயர் முன் எழுவாய்த் தொடரிலுங் கொள்ளப்படும்.

உயிரீற்றுப் புணரியல் 盟37
(உ-ம்) 1. பருத்திகுறிது, யானை கரிது என எழுவாய்த் தொடரிலும் பரணிகார்த்திகை, யானைகுதிரை, g உம்மைத் தொகையிலும் வலி இயல்பாயின. ፶*
(உ-ம்) 2. மாசித்திங்கள், சாரைப்பாம்பு எனப் பண்புத் தொகையிலும், காவிக்கண், பனைக்கை என உவமைத்தொகையிலும் வலி மிக்கன.
(உ-ம்) 3. கிளி குறிது, கிளிக் குறிது, தினை குறிது, தினைக் குறிது என எழுவாய்த் தொடரில் விகற்பித்தன. இயல்பு என்றது "இயல்பினும் விதியினும் என்னுஞ் சூத்திரத்தால் எய்திய தொருவழி விலக்கல். மிகல் என்றது எய்தியது இகந்துபடாமைக் காத்தல்; விகற்பம் என்றது எய்தியது விலக்கலுடன் விலக்காமை. 26,
9. ஈகார வீற்றுச் சிறப்புவிதி
177. ஆமுன் பகரவியனைத்தும் வரக்குறுகும் மேலன வல்வழியியல்பா கும்மே.
(இ-ள்) ஆ முன் பகர ஈ அனைத்தும் வரக்குறுகும் - ஆ. என்னும் பெயர் முன் நின்ற பகர ஈகாரம் இரு வழியும் நாற்கணமும் வரிற் குறுகும் அல்வழி மேலன இயல்பு ஆகும் - குறுகி விதி இகர ஈறாக நின்ற அதன்மேல் வரும் வல்லினம் அல்வழியிலே மேலைச் சூத்திரத்துட் கூறிய விதி மூன்றனுள் இயல்பைப் பெறும்.
பகர வீ என்றது இடக்கரடக்கல்; வருஞ் சூத்திரத்தில் பவ்வீ என்பதும் அது. இடக்க ரென்பது சபையிலே சொல்லத்தகாத சொல். இடக்கர், அவையல்கிளவி என்பன ஒரு பொருட் சொற்கள். இடக்கரடக்கல் என்பது சொல் லத்தகாத சொல்லை அவ் வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் சொல்லல்.

Page 75
138 நன்னூல்
(உ-ம்) ஆப்பி யரிது, ஆப்பி குளிரும், ஆப்பி நன்று, ஆப்பி வலிது எனவும்,
ஆப்பி யருமை, ஆப்பி குளிர்ச்சி, ஆப்பி நன்மை, ஆப்பி வன்மை எனவும் வரும்.
'ஆ முன் பகரவீ அனைத்தும் வரக்குறுகும்" என்றது எய்தாத தெய்வித்தல்; அஃதெய்திய வழி வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும் என்றது மேலைச் சூத்திரத்தால் எய்தியது. இகந்துபடாமைக் காத்தல். 27
178. பவ்வீ நீமீ முன்னரல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே. (இ-ள்) பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி இயல்பு ஆம்பகர மெய்யின் மேல் ஏறி நின்ற ஈகார ஈற்று இடக்கர்ப் பெயரும் நீ என்னும் முன்னிலைப் பெயரும் மீ என்னும் மேலாகிய பண்பையும் மேலிடத்தையும் உணர்த்தும் பெயருமாகிய இம்மூன்றன் முன்னும் வரும் வல்லினம் அல் வழியில் இயல்பாகும்; மீக்கு வலி (மிகலும், ஆம்) மெலி மிகலும் ஆம்-இவற்றுள்ளே மீ யென்னுஞ் சொற்கு முன் வல்லெழுத்து மிகுதலுமாகும் மெல்லெழுத்து மிகுதலு மாகும். (உ-ம்) 1. பீ குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்,
நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும், மீகண் எனவும் இயல்பாயின. (உ-ம்) 2. மீக்கூற்று, மீக்கோள் என எய்தியதிகந்து
படாமல் வலி மிக்கது; மீந்தோல் என மெலி மிக்கது. மீகண் என்பது, கண்ணினது மேலிடம் எனப் பொருள் தந்து நிறகுமாயினும், வருமொழி நிலைமொழியாக மாறி நி ன் ற த ன ரா ல் , இலக்கணப்போலியாய், அல்வழி யாயிற்று. மீக்கூற் றென்பது புகழ். அது மேலாய சொல்லாற் பிறந்தது எனப் பொருள்படும். மீக்கோ

உயிரீற்றுப் புணரியல் 139
ளென்பதுமேற் போர்வை; அது சரீரத்தின்மேற் கொள்ளப்படுவது எனப் பொருள்படும். மீந்தோல் என்பது மேற்றோல்; இது இக் காலத்துப் பீந்தோல் என மருவிற்று. நீ என்னும் பொதுப்பெயர், அல்வழியிலே நீ என்றும் வேற்றுமையிலே நின் என்றும் நிற்கையினாலே, "பொதுப் பெய ருயர்திணைப் பெயர்’ என்னுஞ் சூத்திரத்துள் அடங்கவில்லை.
"பவ்வீ, நீ, மீ, முன்ன ரல்வழி யியல்பாம்" என்றது ஒருவழி 'இயல்பினும் விதியினும்' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கல்; "மீக்கு முன் வலி மிகலாம்" என்றது அச்சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைக் காத்தல், "மீக்கு முன் மெலி மிகலாம்" என்றது அச்சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல், 28
10. முற்றுகர வீற்றுச் சிறப்புவிதி 179, மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டி
றாகு முகர முன்ன ரியல்பாம். (இ-ள்) மூன்று (உருபு) - மூன்றாம் வேற்றுமை யுருபிற்கும்; ஆறு உருபு - ஆறாம் வேற்றுமை யுருபிற்கும்; எண் - இயல்பாயும் விகாரமாயும் வரும் எண்ணிற்கும்; வினைத்தொகை - வினைத்தொகைக்கும்; சுட்டு - சுட்டுப் பெயருக்கும்; ஈறு ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம் - ஈறாகிய முற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் இயல் பாகும். (உ-ம்) 1. சாத்தனொடு கொண்டான், சென்றான் தந்தான், போயினான் என மூன்றாம் வேற்றுமை யுருபின் முன் இயல்பாயின. (உ-ம்) 2. சாத்தனது கை, செவி, தலை, புறம் என ஆறாம் வேற்றுமை யுருபின் முன் இயல்பாயின. (உ-ம்) 3. ஒரு கை, செவி, தலை, புறம் என எண்ணுப்
பெயர் முன் இயல்பாயின. இரு, அறு, எழு, 巫ーl0

Page 76
140 நன்னூல்
ஏழு, என்பவற்றோடும் இப்படியே ஒட்டுக. ஏழு என்பது இயல்பாய எண்ணுப் பெயர்; மற்றவை விகார எண்ணுப்பெயர்.
(உ+ம்) 4. அடுகளிறு, சேனை, தானை, படை என வினைத் தொகை முன் இயல்பாயின. தரு, புகு, தெறு, எழு, விரவு முதலியவற்றோடும் இப் படியே ஒட்டுக.
(உ-ம்) 5. அது குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்,
அது கண்டான், செகுத்தான், தந்தான், படைத் தான் எனவும் சுட்டுப்பெயர் முன் இரு வழியும் இயல்பாயின. இது, உது என்பவற்றோடும் இப்படியே ஒட்டுக. உது காண், உதுக் காண் என விகற்பித்து வருவது "இயல்பின் விகாரமும்" என்னும் இரண்டாம் வேற்றுமைப் புறனடைச் சூத்திரத் தில் 'அன்ன பிறவும்" என்பதனால் அமையும்.
இது "இயல்பினும் விதியினும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கல். 29
180. அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின்.
(இ - ள்) அது முன் வரும் அன்று - அது என்னுஞ் சுட்டுப் பெயர் முன் வரும் அன்று என்னும் வினைக் குறிப்பு முற்று தூக்கின் ஆன்று ஆம் - பாட்டினிடத்து முத னிஞம்.
(உ-ம்) அது + அன்று = அதான்று என வரும். ஆன்றேயாம் என இயல்பை விலக்காமையால், அதுவன்று, அதன்று எனவும் வரும்.
"அன் நான் றாம்" என்றது எய்தாத தெய்துவித்தல். 30

உயிரீற்றுப் புணரியல் 141
11. குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி 181. வன்றொடரல்லன முன்மிகா வல்வழி.
(இ-ள்) வன்றொடர் அல்லன முன் அல்வழி மிகா -வன் றொட ரொழிந்த ஐந்து குற்றியலுகர வீற்றின் முன்னும் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும். (உ-ம்) நாகு கடிது, எஃகு சிறிது, வரகு தீது, குரங்கு
பெரிது, தெள்கு கொடிது எனவும், ஏகு கால், அஃகு பிணி, பெருகு தனம், ஒங்கு குலம், எய்து பொருள் எனவும், சேறு கொற்றா, வருது சாத்தா, வந்து தேவா, செய்து பூதா எனவும், பொருது சென்றான், அறிந்து தந்தான், எய்து கொன்றான் எனவும் அல்வழியில் இயல்பாயின. ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர நின்ற அங்கு, இங்கு, உங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, ஊதுகு, யாங்கு, யாண்டு என்னும் மென்றொடர்க் குற்றுகர ஈற் றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.
(உ-ம்) அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண்டான், எங்குக் கொண்டான், ஆங்குக் கொண்டான், ஈங்குக் கொண்டான், ஊங்குக் கொண் டான், யாங்குக் கொண்டான், யாண்டுக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும்.
ஏழாம் வேற்றுமைக் காலப்பொரு ஞணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து என்னும் மென்றொடர்க் குற்றுகர வீற்றிடைச்சொற்களின் முன் வரும் வல்லினம், அன்று கண்டான். இன்று சென்றான், என்று தந்தான், பண்டு பெற்றான், முந்து கொண்டான் என இயல்பாயே முடியும்
இது "இயல்பினும் விதியினும்' என்னுஞ் சூத்திரத்தால் எய்திய தொருவழி விலக்குதல். 3.

Page 77
卫42 நன்னூல்
182. இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாகெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை.
(இ-ள்) இடைத்தொடர் (முன்) - இடைத்தொடர் முன்னும்; ஆய்தத்தொடர் (முன்) - ஆய்தத்தொடர் முன்னும்; ஒற்று இடையின் மிகா நெடில் (தொடர் முன்)- ஒற்று இடையே மிகாத நெடிற்றொடர் முன்னும்; ஒற்று இடையின்மிகா உயிர்த்தொடர் முன் - ஒற்று இடையே மிகாத உயிர்த்தொடர் முன்னும்; வேற்றுமை மிகா - வரும் வல்லினம் வேற்றுமையில் இயல்பாம். (உ-ம்) 1. தெள்கு கால், சிறை, தலை, புறம் என இடைத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமை யில் வலி இயல்பாயின. (உ-ம்) 2. எஃகு கடுமை, சிறுமை, தீமை, பெருமை என ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் இயல்பாயின. (உ-ம்) 3. நாகு கால், செவி, தலை புறம் என ஒற்றிடையே மிகாத நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் இயல்பாயின. (உ-ம்) 4. வரகுகதிர்,சோறு,தாள், பதர் எனஒற்றிடையே மி க |ா த உயிர்த்தொடர்க் குற்றியலுகரத் தின் முன் வேற்றுமையில் இயல்பாயின. ஒற்றிடையே மிகும் நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் வருஞ் சூத்திரத்தாற் கூறப்படும்; அவற்றின்முன் வரும் வல்லினம் மிகும்.
இதுவும் "இயல்பினும் விதியினும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்திய தொருவழி விலக்குதல். 32
183. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. (இ-ள்) நெடில் (தொடர்) உயிர்த்தொடர்க் குற்றுகரங் களுள் - நெடிற்றொடர்களும் உயிர்த்தொடர்களுமாகிய

உயிரீற்றுப்புணரியல் 143
குற்றியலுகர மொழிகளுள்; ட ற ஒற்று - அவ்வுகரப் பற்றுக் கோடாகிய வல்லொற் றாறனுள் டகர, றகர மென்னும் இரண்டொற்றும்; மிக வேற்றுமை இரட்டும் - பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும்.
வரு மெழுத்தைச் சொல்லாமையால் நாற்கணமுங் கொள்க.
(உ-ம்) ஆடு+கால் = ஆட்டுக்கால், பாறு+கால் = பாற்றுக்கால், முருடு + கால் - முருட்டுக்கால், முயிறு+ கால் = முயிற்றுக்கால் என வரும்.
செவி, தலை, புறம், ஞாற்சி, நிறம், மயிர், காப்பு வன்மை, அடி என்பனவற்றையும் ஒட்டி, வேற்றுமையிலே ட, ற வொற்றிரட்டுதல் காண்க.
இவ்விரண் டொற்றும் பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும் எனவே, சிறுபான்மை வேற்றுமையில் இரட்டா மையும்; சிறுபான்மை அல்வழியில் இரட்டுதலும், சிறு பான்மை இரு வழியும் பிற வொற்று இரட்டுதலும் கொள்க. (வ-று) 1. "காவிரி புரக்கு நாடு கிழவோனே"
'காடக மிறந்தார்க்கே நாடுமென் மனனே
9, Tatar'' "கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை" என்பனவற்றுள்; நாடு கிழவோன், காடகம், மிட றணியல் என வேற்றுமையிலே ட, ற ஒற் றிரட்டா வாயின. (வ-று) 2. காடு + அரண் = காட்டரண், ஏறு+ ஏனம் க ஏற்றேனம், வரடு+ஆடு = வரட்டாடு, குருடு+ கோழி = குருட்டுக்கோழி, வெளிறு+பனை ஊ வெளிற்றுப்பனை என அல்வழியிலே ட, ற ஒற்றிரட்டின. (வ-று) 3. வெரு கு+கண்-வெருக்குக்கண், எருது + கால்=
எருத்துக்கால் எனவும்: எருது+மாடு= எருத்து மாடு எனவும் இரு வழியும் பிறவொற் றிரட்டின.

Page 78
144 நன்னுரல்
ட ற வொற்று மெய் வரின் இரட்டும் என்றது எய்தாத தெய்துவித்தல்; உயிர் வரின் இரட்டும் என்றது ‘உயிர் வரி னுக்குறள்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன் மேற் சிறப்புவிதி. 33
184. மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
றம்மின வன்றொடராகா மன்னே.
(இ - ள்) மென்றொடர் மொழியுள் சில - மென் றொடர்க் குற்றியலுகர மொழிகளுள்ளே சில மொழிகள்; வேற்றுமையில் தம் இனம் வன்றொடர் - வேற்றுமையிலே தமக் கினமாகிய வன்றொடர்க் குற்றியலுகர மொழி களாக ஆகாமன் - ஆதலை யொழிந்தன பெரும்பாலன.
வரு மெழுத்தைச் சொல்லாமையால், நாற்கணமுங் கொள்க.
(உ- ம்) மருந்து + பை = மருத்துப்பை, சுரும்பு + நாண் = சுருப்புநாண். கரும்பு+வில் = கருப்பு வில், கன்று + ஆ = கற்றா என வரும்.
வண்டுக்கால், பந்துத்திரட்சி முதலியன வெல்லாம் வன்றொடராகாதன.
சில வன்றொடராம் எனவே; ஆகாதன பல வென்பது தானே வந்தியையவும். மன்னே என்ற மிகையாலே, எற்புடம்பு, அற்புத்தளை, குரக்குமனம் எனச் சிறுபான்மை அல்வழிக்கண் வன்றொட ராதலுங் கொள்க.
சில மென்றொடர்க் குற்றியலுகர மொழிகள் மூவின மும் வரிற் றம் மினம் வன்றொடராம் என்றது எய்தாத தேய்துவித்தல்; உயிர் வரின் தம்மினம் வன்றொடராம் என்றது "உயிர்வரி னுக்குறள்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்புவிதி. 34

உயிரீற்றுப் புணரியல் 145
185. ஐயீற்றுடைக்குற் றுகரமு முளவே.
(இ-ள்) ஐ ஈற்று உடைக் குற்றுகரமும் உள - ஐகாரச் சாரியையை இறுதியிலே பெற்று வரும் மென்றொடர்க் குற்றியலுகர மொழிகளுஞ் சில வுளவாம்.
மேலைச் சூத்திரத்தைச் சார வைத்தமையால், இதுவும் மென்றொட ரென்பது பெற்றாம். வரு மெழுத்தைச் சொல்லாமையால், நாற்கணமுங் கொள்க.
(உ-ம்) பண்டு+ காலம் = பண்டைக்காலம், இன்று+
நாள் = இற்றை நாள் எனவும்: அன்று + கூலி - அற்றைக் கூலி, இன்று+நலம் = இற்றை நலம் எனவும் இருவழியும் வரும்" மேலைச் சூத்திரத்தைச் சார வைத்தாரேனும்? ஐயீற்றுடைக் குற்றுகரம் எனப் பொதுபடக் கூறின மையால்,
நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது எனவும், நேற்று + கூலி = நேற்றைக் கூலி எனவும் இருவழியும் வன்றொடர் ஐகாரச் சாரியை பெறுதலும்,
ஐயீற்றுடைக் குற்றுகரம் என உடைமை யாக்கிக் கூறினமையால், வருமொழி நோக்காது,
ஒன்று - ஒற்றை, இரண்டு - இரட்டை என ஒரு மொழியாக நின்று ஐகாரம் பெறுதலும்,
ஒராண்டு - ஒராட்டை, ஈராண்டு - ஈராட்டை எனத் தொடர் மொழியாக நின்று ஐகாரம் பெறுதலுங் கொள்க. சில மென்றொடர்க் குற்றியலுகர மொழிகள் ஐகாரச் சாரியை பெறும் என்றது எய்தாத தெய்துவித்தல்; வன்றொடராதலொடு ஐகாரச் சாரியையும் பெறும் என்று "மென்றொடர் மொழி" என்னும் மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்புவிதி. 35
186. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலு மாம்பிற.

Page 79
146 நன்னுரல்
(இ-ள்) திசையொடு திசையும் பிறவும் சேரின் - திசைப் பெயரோடு திசைப்பெயரும் பிற பெயர்களும் புணரு மிடத்து; நிலை ஈற்று உயிர்மெய் கவ் வொற்று நீங்கலும் - நிலைமொழியீற்றிலே நின்ற உயிர்மெய்யும் அதன்மேல் நின்ற ககர மெய்யுங் கெடுதலும் றகரம் ன ல ஆத் திரிதலும் ஆம் - அவ்விடத்து நின்ற றகர மெய் னகர மெய்யாகவும் லகர மெய்யாகவும் திரிதலும் ஆகும்.
பிற என்ற மிகையினாலே, திசைப்பெயரோடு திசைப் பெயர் புணரும்போது நிலைமொழி பெருந்திசை வரு மொழி கோணத்திசை எனவும், நிலைமொழியாய் நிற்பன வட க்குந் தெற்குமே எனவும், தெற்கு என்பதன் றகரம் னகரமாகவும் மேற்கென்பதன் றகரம் லகரமாகவுந் திரியும் எனவும், மேற்கு என்பதன் றகரந் தகரம் வரும் வழித் திரியாது எனவும், கிழக்கு என்பதன் ழகரத்து அகரங் கெட்டு முத னிண்டே வரும் எனவும் கொள்க.
(உ-ம்) வடக்கு - வடமேற்கு, வடதிசை, வடபால்,
வடமலை, வடவேங்கடம் எனவும், தெற்கு - தென்கிழக்கு,தென்மேற்கு, தென்குமரி, தென்மலை, தென்வீதி எனவும், மேற்கு - மேல்கடல், மேனாடு, மேல்வீதி, மேற்றிசை எனவும், குடக்கு - குடதிசை, குடகடல், குடநாடுஎனவும், குணக்கு - குணதிசை, குணகடல் எனவும், கிழக்கு - கீழ்கரை, கீழ்சார், கீழ்த்திசை எனவும் வரும். இன்னும், பிற என்ற மிகையாலே. கீழைக்குளம், கீழைச்சேரி, மேலைக்குளம், மேலைச் சேரி என ஐகாரம் பெறுதலும்,
வடக்கூர், வடக்குமலை; தெற்கூர், தெற்குமலை என மேற்காட்டிய விகாரமின்றியும் வருதலும், பெருந்திசை யோடு பெருந்திசை புணரும்போது,

உயிரீற்றுப் புணரியல் 147
தெற்குவடக்கு, வடக்குத்தெற்கு, கிழக்குமேற்கு மேற்குக்கிழக்கு எனப் பொதுவிதி பெறுதலுங் கொள்க.
வடகிழக் கென்பது வடக்குங்கிழக்கு மாயதோர் கோணம் என உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. வடதிசை யென்பது வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை. வடமலை யென்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை, தெற்கு வடக்கு என்பது தெற்கும் வடக்கும்என உம்மைத்தொகை.
இது எய்தாதது எய்துவித்தல். 36 187. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்.
(இ-ள்) காய்வரின்- காய் என்னுஞ் சொல் வருமாயின் தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் - தெங்கு என்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றிலுள்ள உயிர்மெய் நீங்கும். (உ-ம்) தெங்கு+காய்=தேங்காய் என வரும்.
கெட்டே புணரு மென்னாமையானால், தெங்கங்காய் என வருவதுங் கொள்க. 37
188. எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுண் முதலீ ரெண்முத னீளு மூன்றா றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும் ஏகு மேற்புழி என்மனார் புலவர்.
(இ-ள்) எண் நிறை அளவும் பிறவும் எய்தின் - எண்ணுப் பெயரும் அளவுப்பெயரும் பிற பெயர்களும் வரின் ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள் - நிலை மொழியாக நின்ற ஒன்று முதல் எட்டீறாகும் எண்களுள் முதல் ஈரெண் முதல் நீளும் - முதலிலுள்ள இரடெண் களும் முதற் குறில் நீளும்; மூன்று ஆறு ஏழ் (முதல்)குறுகும் - மூன்றும் ஆறும் ஏழும் முதல் நெடில் குறுகும்; ஆறு ஏழு

Page 80
148 நன்னூல்
அல்லவற்றின் ஈற்று உயிர்மெய்யும் ஏழன் (ஈற்று) உயிரும் ஏகும் - ஆறும் ஏழும் அல்லாத ஆறெண்களினுடைய இறு தியிலுள்ள உயிர்மெய்களும் ஏழனுடைய இறுதியிலுள்ள உயிருங் கெடும்; ஏற்புழி என்மனார் புலவர் - ஏற்குமிடங் களில் என்று சொல்லுவர் புலவர்.
இச்சூத்திரத்துத் கூறிய விகாரமும், இப்புணர்ச்சி முற்ற முடித்தற்குப் பின் ஐந்துசூத்திரத்தாற் கூறும் விகார மும், பண்புத்தொகைக்கே உரியனவாம்.
ஏற்புழி என்றதனால், முதலிரண் டெண்ணும் முதல் நீள்வது உயிர் வரும் வழி எனவும், மெய் வரும் வழி நீளா எனவும், மூன்றும் ஆறும் ஏழும் முதல் குறுகுவது மெய் வரும் வழி எனவும், உயிர் வரும் வழிக் குறுகா எனவும். ஆறும் ஏழும் அல்லாதவைகளின் ஈற் றுயிர் மெய்கெடுவது நாற் கணமும் வரும்வழி எனவும், ஏழு என்பதன் ஈற்றுயிர் கெடுவது முதல், குறுகா வழி எனவுங் கொள்க. ஏற்புழி என்பதை இப்பொருண்மை யதிகாரம் முற்றுமளவும் உய்த் துரைத்துக் கொள்க.
ஏழு என்பது, முற்றியலுகர வீறாயினும், ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்த லென்னும் உத்தியால் இங்கே சொல்லப்பட்டது.
உ-ம்) ஆறு+பத்து-அறுபுது, அறுகழஞ்சு, அறுநாழி,
அறுவட்டி என நெடு முதல் குறுகி முடிந்தது.
ஏழு + பத்து== எழுபது, எழுகழஞ்சு, எழுநாழி, எழுவகை என ஏழு நெடு முதல் குறுகி முடிந்தது.
ஏழு + கடல் = ஏழ்கடல் என ஏழன் ஈற்றுயிர் கெட்டது.
ஏழாயிரம் என உயிர் வருமிடத்து உகரங் கெடு தல் முற்றுமற் றொரோவழி என்பதனாற் கொள்க.
மற்றவைகளுக்கு உதாரணம் பின்னே காட்டப் படும்.

உயிரீற்றுப் புணரியல் 149
இன்னும், ஏற்புழி என்றதனால், ஒன்று முத லெட் டீறா மெண்ணுள், இரண்டு முதலியன, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து பூதம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுக் கோடி எனப் பொதுவிதியால் முடி தலும், "ஒன்று தேரினானொருவன் கூற்றமே" எனச் சிறுபான்மை ஒன்றும் அங்ங்ணம் முடிதலுங் கொள். 38
189. ஒன்றன் புள்ளி ரகர மாக گنج
இரண்ட னொற்றுயி ரேகவுள் வருமே.
(இ-ள்) ஒன்றன் புள்ளி ரகரம் ஆக - ஈற்றுயிர்மெய் கெட நின்ற ஒன்று என்னும் எண்ணினது னகர மெய் ரகர மெய்யாக, இரண்டன் ஒற்று உயிர்ஏக - இரண்டு என்னும் எண்ணினது ணகர மெய்யும் ரகரத்தை ஊர்ந்து நின்ற அகர வுயிருங் கெட, உவ் வரும் - அவ்விரண்டு ரகர மெய் மேலும் உகரமும் வரும்-(ஏற்புழி - ஏற்குமிடத்து.)
ஏற்புழி என்றதனால், ரகர மெய் உகரம் பெறுவது மெய்வரின் எனவும், உயிர் வரின் உகரம் பெறா எனவுங் கொள்க.
(உ-ம்) ஒருபது, இருபது, ஒருகழஞ்சு, இருகழஞ்சு, ஒரு
நாழி, இருநாழி, ஒருவகை, இருவகை எனவும்.
ஒரொன்று, ஈரொன்று, ஒரெடை, ஈரெடை, ஒருழக்கு,ஈருழக்கு, ஒரிலை ஈரிலை எனவும் வரும். இன்னும், ஏற்புழி என்றதனால், ஆயிரம் வரு மிடத்து, ஒராயிரம், ஈராயிரம் என முடிதலே யன்றி. ஒராயிரம், இராயிரம் என முதல் நீளாது முடிதலும், யகரம் வருமிடத்து, ஒரு யானை, இரு யானை என முடிதலே யன்றி, ஒர் யானை, ஈர் யானை என உகரம் பெறாது முதல் நீண்டு முடிதலுங் கொள்க. 39

Page 81
190. மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும்.
(இ-ள்) மூன்றன் உறுப்பு - இறுதி யுயிர்மெய் கெட நின்ற மூன்று என்னும் எண்ணியது னகர மெய் அழிவும்கெடுதலும் வந்ததும் ஆகும் - வரும் மெய்யாகத் திரிதலும் ஆகும் (ஏற்புழி-ஏற்குமிடத்து)
ஏற்புழி என்றதனால், னகர மெய் கெடுவது உயிர் வருமிடத் தெனக் கொள்க. (உ-ம்) மூவொன்று, மூவெடை, மூவுழக்கு, மூவுலகு
எனவும், முப்பது, முக்கழஞ்சு, முந்நாழி, முந்நூல், முவ் வட்டி என வும் வரும். இன்னும், ஏற்புழி என்றதனால், வகரம் வருமிடத்து முவ்வட்டி என முடிதலே யன்றி, மூவட்டி என முதல் குறுகாது னகர மெய் கெட்டு முடிதலும், யகரம் வரு மிடத்து முவ் யானை என னகர மெய் வகர மெய்யாகத் திரிந்து முடிதலுங் கொள்க. 40
191. நான்கன் மெய்யே லறவாகும்மே.
(இ-ள்) நான்கன் மெய் - இறுதி யுயிர்மெய் கெட நின்ற நான்கு என்னும் எண்ணினது னகர மெய் ல ற ஆகும் - லகர மெய்யாகவும் றகர மெய்யாகவும் திரியும் (ஏற்புழி - ஏற்குமிடத்து.)
ஏற்புழி என்றதனால், னகர மெய் லகரமாகத் திரிவது உயிரும் இடையினமும் வருமிடத் தெனவும், றகரமாகத் திரிவது வல்லினம் வ ரு மி ட த் தென வும் மெல்லினம் வருமிடத்து னகர ஈற்றுப் புணர்ச்கி போல் முடியும் எனவுங் கொள்க. (உ -ம்) நாலொன்று, நாலெடை, நாலுழக்கு, நாலடி
எனவும், நால்வட்டி எனவும், நாற்பது, நாற்கழஞ்சு எனவும். நான்மணி, நானாழி எனவும் வரும். 4t

உயிரீற்றுப் புணரியல் 15I
192. ஐந்தனொற் றடைவது மினமுங் கெடும்.
(இ-ள்) ஐந்தன் ஒற்று - இறுதி உயிர்மெய் கெட நின்ற ஐந்து என்னும் எண்ணினது நகர மெய்; அடை வதும் - வரும் மெய்யாகத் திரிதலும்; இனமும் - வரும் மெய்க்கினமாகத் திரிதலும் கேடும் - கெடுதலுமாம் (ஏற்புழி-ஏற்குமிடத்து).
ஏற்புழி என்றதனால், நகர மெய் வரும் மெய்யாகத் திரிவது மெல்லினம் வரு மிடத் தெனவும்; இனமாகத் திரிவது வல்லினம் வருமிடத் தெனவும், கெடுவது உயிரும் இடையினமும் வருமிடத் தெனவுங் கொள்க. (உ-ம்) ஐம்மூன்று, ஐஞ்ஞாண் எனவும்,
ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐம்பொறி எனவும், ஐயொன்று எனவும், ஐவட்டி எனவும் வரும். அடைடதும் இனமும் என்றமையின், அருத்தாபத்தி யால் நகர தகரங்கள் வருமிடத்து ஐந்துாறு: ஐந்தூணி என நகர மெய் தன்னியல்பில் நிற்றலுங் கொள்க.
இன்னும், ஏற்புழி என்றதனால், வகரம் வருமிடத்து ஐவண்ணம் என முடிதலே யன்றி, ஐவ்வண்ணம் என நகர மெய் வரும் மெய்யாகத் திரிந்து முடிதலுங் கொள்க. 42
193. எட்ட லுடம்புணல் வாகு மென்ப.
(இ - ள்) எட்டன் உடம்பு - இறுதி யுயிர்மெய் கெட
நின்ற எட்டு என்னும் எண்ணினது டகர மெய்; ண ஆகும் என்ப - நாற்கணமும் வர ணகர மெய்யாகத் திரியும் என்று சொல்லுவர் புலவர். (உ-ம்) எண்பது, எண் கழஞ்சு, எண்கலம், எண்குணம்
எனவும்,
எண்ணாழி எனவும்,
எண் வகை எனவும்,
எண்ணைந்து எனவும் வரும் 43

Page 82
I52 நன்னூல்
194. ஒன்பா னொடுபத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு தகர நிறீஇப்பஃ தகற்றி னவ்வை நிரலே ணளவாகத் திரிப்பது நெறியே.
(இ-ள்) ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் - ஒன்பதுடனே பத்து என்பதும் நூறு என்பதும் வந்து புணருமாயின்; முன்னதின் ஏனைய முரணி - முன்ன தாகிய நிலை மொழியினின்றும் மற்றை வருமொழிகளாகிய பத்தையும் நூற்றையும் முறையே நூ றெனவும் ஆயிர மெனவுந் திரித்து; ஒவ்வொடு தகரம் நிறீஇ-நிலைமொழி முதலிலுள்ள ஒகர வுயிரோடு தகர மெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி, பஃது அகற்றி - அந்நிலைமொழி யிறுதியிலுள்ள பஃதைக் கெடுத்து; னவ்வை நிரலே ண ள ஆத்திரிப்பது நெறி - அம் மொழி முதற்கு அயல் நின்ற னகர மெய்யை முறையே னகர மெய்யாகவும் ளகர மெய் யாகவுந் திரிப்பது முறையாகும்.
நெறியேளன்ற இலேசானே தனிக் குறில் முன் னொற் றிரட்டித்தலுங் கொள்க. (உ-ம்) 1. ஒன்பது + பத்து = (1) ஒன்பது நூறு (2) தொன் பது நூறு (3) தொன் நூறு (4) தொண் நூறு (5) தொண்ணுரறு. (உ-ம்) 2. ஒன்பது + நூறு = (1) ஒன்பது ஆயிரம் (2) தொன்பது ஆயிரம் (3) தொன் ஆயிரம் (4) தொள் ஆயிரம் (5) தொள்ளாயிரம். இது தொளாயிரம் என இக்காலத்து மருவியது. பஃதகற்றி யென்பதனோடு பொருந்த ஒன் பஃதனோடு என்னாது ஒன்பானோடு என்றமையால், ஒன்பது நின்று புணரினும் இவ்விதியே பெறு மென்றறிக. 44
195. முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேக லாய்த மாகல் எனவிரு விதியு மேற்கு மென்ப,

உயிரீற்றுப் புணரியல் 153
(இ-ள்) முதல் இரு நான்குஆம் எண் முனர்ப் பத்தின் - ஒன்று முதலாகிய எட்டு எண்களின் முன்னும் வரும் பத் தென்னும் எண்ணினது; இடை ஒற்று ஏகல் - நடு நின்ற தகர மெய் கெடுதலும்; ஆய்தம் ஆகல் - தகரம் நின்ற விடத்து அது கெட ஆய்தம் வருதலும் என இரு விதியும் ஏற்கும் என்ப - என்னும் இவ்விரண்டு விதியும் பொருந்தும் என்று செல்லுவர் புலவர்.
(உ-ம்) ஒருபது, ஒருபஃது; இருபது, இருபஃது; முப்பது, முப்பஃது; நாற்பது, நாற்பஃது ஐம்பது, ஐம் பஃது; அறுபது, அறுபஃது; எழுபது, எழுபஃது: எண்பது, எண்பஃது என வரும். 45.
196. ஒருபஃது தாதிமுன் னொன்று முதலொன்பான்
எண்ணு மவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுங் தவ்வே.
(இ-ள்) ஒருபஃது ஆதி முன் - ஒருபஃது முதலாசிய எட்டு எண்களின் முன்னும்; ஒன்று முதல் ஒன்பான் எண் னும் - ஒன்று முதலாகிய ஒன்ப தெண்களும்; அவை ஊர் பிறவும் எய்தின் - அவ்வெண்களை ஊர்ந்த மற்றவையும். வந்து புணருமாயின் ஆய்தம் அழிய த ஆண்டு ஆகும் - நிலை மொழியிலே நின்ற ஆய்தம் கெட இயல்பாகிய தகரம் அவ்வாய்தம் நின்றவிடத்து வரும்.
(உ-ம்) ஒருபத்தொன்று, இருபத்தொன்றேகாலேயரைக் கால், முப்பத்தொருகழஞ்சு, எண்பத்தெண்கலனே துணி, எண்பத்தொன்பதியாண்டு என வரும், மற்றவைகளும் இப்படியே.
ஆய்தம் கெடத் தகரம் வரும் என்றமையின் அருத்தா
பத்தியால்; ஆய்த மில்லாத ஒருபது முதலானவைகளுந் தகரம் பெறு மென்றாராயிற்று. 46

Page 83
154 நன்னூல்
197. ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே (இ-ள்) ஒன்று முதல் ஈரைந்து ஆயிரம் கோடி எண் - ஒன்று முதலிய பத்தும் ஆயிரமுங் கோடியுமாகிய எண்ணுப் பெயரும், நிறை - நிறைப் பெயரும் அளவும் - அளவுப் பெயரும்; பிற வரின் - பிற பெயரும் வந்து புணரு மாயின; பத்தின் ஈற்று உயிர்மெய் கெடுத்து - நிலைமொழி யாகிய பத்தினது இறுதியிலுள்ள தகர வுயிர் மெய்யை அழித்து; இன்னும் இற்றும் ஏற்பது ஏற்கும் - இன் சாரியை யாயினும் இற்றுச் சாரியையாயினும் அவ்விடத்திற் கேற் பது ஏற்று நிற்கும். ஒன்பதும் இனைத்து - ஒன்பதென்னும் நிலை மொழியும் இப்படியே எண்ணுப் பெயர் முதலா னவை வந்து புணருமாயின் இன்னாயினும் இற்றாயினும் அவ்விடத்திற்கு ஏற்பது ஏற்று நிற்கப்பெறும்.
(உ-ம்) பதினொன்று பதின் மூன்று பதினாயிரம், பதின்கழஞ்சு, பதின்கலன், பதின் மடங்கு எனவும், பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி, பதிற்றுத்தூணி, எனவும், ஒன்பதினாயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம், ஒன்பதின்மடங்கு எனவும், ஒன்பதிற்றொன்று ஒன்பதிற்றிரண்டு, ஒன்ப திற்றுக்குறுணி எனவும் வரும் மற்றவைகளும் இப்படியே, பதினொன்று - உம்மைத் தொகை; பதிற்றொன்று-பண்புத்தொகை.
"ஏற்ப தேற்கும்" என்றதனால், பத்துக்கோடி, ஒன்பது
கோடி எனப் பொதுவிதிப்படியே முடிந்து நிற்றலுங் கொள்க. 47

உயிரீற்றுப்புணரியல் I55
198. இரண்டு முன்வரிற் பத்தினிற் றுயிர்மெய்
கரந்திட வொற்றுனவ் வாகு மென்ப.
(இ-ள்) இரண்டு முன் வரின் - இரண்டு என்பது முன் வருமாயின் பத்தின் ஈற்று உயிர்மெய் கரந்திட - பததென் னும் நிலைமொழியானது ஈற்றிலுள்ள துகர உயிர்மெய் கெட, ஒற்று ன ஆகும் என்ப - தகர மெய் னகர மெய்யாகத் திரியும் என்று சொல்லுவர் புலவர்.
(உ-ம்) பன்னிரண்டு என வரும். இது உம்மைத்தொகை. 48
199. ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின் முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.
(இ-ள்) ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் - ஒன்பதென்னும் எண் ஒன்றனையும் ஒழித்து நின்ற ஒன்று முதற் பத்து ஈறாகிய ஒன்பது எண்ணினையும் இரட்டித் துச் சொல்லின்; முன்னதின் முன் அல ஒட - நிலைமொழி யினது முதலெழுத் தல்லாதவைக ளெல்லாங்கெட, உயர் வரின் வவ்வும் - உயிர் முதலான எண் வரின் வகர மெய்யும் மெய்வரின் வந்ததும் - மெய் முதலான எண் வரின் வந்த மெய்யும்; மிகல் நெறி - மிகுதல் முறையாம்.
(உ-ம்) ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந் நான்டு, ஐவைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ் வெட்டு, பப்பத்து என வரும்.
நெறி என்றமையால், நந்நான்கு என நான்கிற்குக் குறுக்கமும் ஒரோ வொன்று, ஒன்றொன்று, கழக்கழஞ்சு என இரட்டித்தலும், இன்னுஞ் குற்றியலுகரப் புணர்ச் சியுள் அடங்காதனவுங் கொள்க. 49
p-11

Page 84
56 நன்னூல்
12. ஊகார வீற்றுச் சிறப்புவிதி 200. பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்.
(இ- ள்) பூப் பெயர் முன் - பூவென்னும் பல பொருட் பெயர்ச்சொலலின் முன்; இன மென்மையும் தோன்றும் - வல்லினம் வரிற் பொது விதியால் மிகுதலே யன்றி அவற் றிற்கு இனமாகிய மெலலினமும் மிகும்.
(உ-ம்) பூங்கொடி, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பணை'
என வரும்.
இவைகளுள்ளே பூ வென்பது மலராயின், இரண்டாம் வேறறுமைத்தொகை அழகாயிற் பண்புத்தொகை.
இனமென்மையுந் தோன்றும் என்றது "இயல்யினும் விதியனும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்பு விதி. 50
13. ஏகார ஓகார வீற்றுச் சிறப்புவிதி
201. இடைச்சொல் லேயோ முன்வரி னியல்பே.
(இ-ள்) இடைசொல் ஏ (முன்) ஒ முன் - இடைச்சொல் லாகிய ஆறு ஏகாரத்தின் முன்னும் எட்டு ஓகாரத்தின் முன்னும் வரின் இயல்பு - வல்லினம் வரிற் பொதுவிதியால் மிகாது இயல்பாகும்.
(உ-ம்) 1. அவனே கொண்டான் என்பது பிரிநிலையும் வினாவும் ஈற்றசையுந் தேற்றமுமாம். "ஏயே தனையென்றோரிருடி வினவ' என்பது இசை நிறை. (உ-ம்) 2. அவனோ கொண்டான் என்பது ஒழியிசை
முதலிய எட்டுமாம்.
ஏ ஒ முன வரின் இயல்பு என்றது "இயல்பினும் விதியி னும் என்னுஞ் சூத்திரததால் எய்தியது விலக்கல். 5芷

உயிரீற்றுப் புணரியல் 157
14. ஐகார வீற்றுச் சிறப்புவிதி
202. வேற்றுமை யாயினைகா னிறுமொழி
ஈற்றழி வோடுமம் மேற்பவுமுளவே. (இ-ள்) ஐகான் இறுமொழி - ஐகார வீற்றுச்
சொற்கள்; வேற்றுமை ஆயின் - வேற்றுமைக்கண் வருமாயின் ஈற்று அழிவோடும் அம் ஏற்பவும் உள - ஈற்று ஐகாரங் கெடுதலுடனே அம்முச் சாரியை பெற்று முடிவனவும் சில வுள.
அழிவோடும் என்றமையால், அழியாமையோடும் அம் ஏற்பவுமுளவெனக் கொள்க. வருமெழுத்துச் சொல்லாமை யால், நாற்கணத்துள் ஏற்பன கொள்க.
(உ-ம்) 1. வழுதுணை + காய்- வழுதுணங்காய், தாழை+ பூ= தாழம்பூ, ஆவிரை+வேர் -ஆவிரம்வேர் என ஈற்று ஐகாரம் கெட்டு அம்முச் சாரியை பெற்றன.
2. புன்னை + கானல்- புன்னையங்கானல், முல்லை + புறவம்=முல்லையம்புறவம் என ஈற்று ஐகாரங் கெடாமல் அமமுச் சாரியை பெற்றன.
ஏற்பவுமுள என்றதனால், முல்லைப்புறவம் என வரினுங் கொள்க.
இது எய்தாத தெய்துவித்தல். 52
203. பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்முந் திரள்வரினுறழ்வும் அட்டுறி னைகெட்டங் நீள்வுமாம் வேற்றுமை. (இ-ள்) பனை முன் - பனை யென்னும் பெயர் முன், கொடிவரின் மிகலும் - கொடி யென்னும் பெயர் வருமா யின் வந்தது மிகுதலும்; வலி வரின் ஐ போய் அம்மும் - க, ச, த பக்கள் வருமாயின் நிலைமொழி யீற்று ஐகாரங் கெட்டு அம்முப் பெறுதலும் திரள் வரின் உறழ்வும் -

Page 85
58 நன்னூல்
திரள் என்னும் பெயர் வருமாயின் வந்தது மிகுந்தும் ஐ போய் அம்முப் பெற்றும் விகற்பித்தலும்; அட்டு உறின் ஐ கெட்டு அந் நீள்வும் - அட்டு என்னு பெயர் வருமாயின் ஐகாரங் கெட்டு வரு மொழி அகரம் ஆகார மாதலும்; ஆம் வேற்றுமை - ஆகும் வேற்றுமைக்கண்.
(உ-ம்) பனைக்கொடி எனவும்,
பனங்காய், செறும்பு, தூண், பழம், எனவும், பனைத்திரள், பனந்திரள் எனவும், பனாட்டு எனவும் வரும்.
பனைக்கொடி - பனையை எழுதிய கொடி, பனாட்டு பனையினது தீங்கட்டி.
பனை முன் கொடி வரின் மிகும் என்றது "இயல்பினும் விதியினும்’ என்னும் சூத்திரத்தால் எய்திய திகந்து படாமைக் காத்தல்; வலி வரின் ஐ போய் அம்முப் பெறும் என்றது “வேற்றுமையாயின், என்னும் மேலைச் சூத்திரத் தால் எய்திய திகந்துபடாமைக் காத்தல்; திரள் வரின் உறழ்வும் என்றது "இயல்பினும்' என்பதனாலும் மேலைச் சூத்திரத்தாலும் எய்திய திகந்துபடாமைக் காத்தல்; அட்டுறின் ஐ கெட்டு அந் நீள்வும் என்றது இ ஈ ஐ வழி" என்பதனால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 53
உயிரீற்றுப் புணரியல் முற்றிற்று

4. மெய்யீற்றுப் புணரியல் 1. மெய்யீற்றின் முன் உயிர்
204. உடன்மேலுயிர்வங் தொன்றுவ தியல்பே.
(இ - ள்) உடல் மேல் - நிலைமொழி யீற்றில் நின்ற மெய்யின் மேல்; உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - வரு மொழி முதல் உயிர் வந்து ஒன்றுபட்டு இணங்கி நிற்பது இயல்பு புணர்ச்சியேயாம்.
(உ-ம்) தோன்றல் + அழகன் = தோன்றலழகன் உரிஞ்+அழகிது - உரிஞழகிது புகழ்+அழகிது = புகழழகிது எனவும், வேல் + எறிந்தான் = வேலெறிந்தான் எனவும் வரும்.
205. தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்.
தனிக் குறில் முன் ஒற்று - தனிக் குற்றெழுத்தின் முன்னின்ற மெய், உயிர் வரின் இரட்டும் - உயிர் வரின் இரட்டித்து நிற்கும்.
(உ-ம்) மண் + அரிது- மண்ணரிது
பொன்+அரிது:பொன்னரிது எனவும், மண் + அகம்- மண்ணகம் பொன்+ஒளி=பொன்னொளி எனவும் வரும்.
இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்பு விதி, உயிர் ஏற இடங் கொடுத்தலே யன்றி இரட்டித்தும் நிற்கு மென்றலின், &

Page 86
160 நன்னூல் 2. மெய்யீற்றின்முன் மெய் 206. தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந் துன்னு மென்று துணிகரு முளரே. (இ-ள்) தன் ஒழி பெய்ம் முன் - தன்னை யொழிந்த ரூ, ண, ந, ம, ன, ர, ல, வ, ழ, ள எ ன் னு ம் பத்து மெய்களின் முன்னும்; ய வரின் - யகரம் வந்தால்; இகரம் துன்னும் என்று துணிநரும் உளர் - இகரச் சாரியையைத் தன்முன் பொருந்து மென்று அரிதிற் கொள்வாருஞ் சிலருளர். (உ-ம்) வேளி யாவன், மண்ணி யாது எனவும்,
வேளி யானை, மண்ணி யானை எனவும் வரும். துணிநரு மென்ற எதிர்மறையாய இழிவுசிறப்பும்மை யால், வேள் யாவன், மண் யாது எனப் பொதுவிதி பெறுமென்பார் பலருளரெனக் கொள்க.
இது "எண்மூ வெழுத்தீற்று' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்புவிதி. 3
207. ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு மேவ லுறாசில சில்வழி. (இ-ள்) ஞணநமலவளன ஒற்று இறு தொழிற் பெயர் ஏவல் வினை - ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் எட்டு மெய்களும் இறுதியாகிய முதல்நிலைத் தொழிற் பெயர்களும் ஏவல் வினைகளும்; ய அல் மெய் வரின் - யகர மொழிந்த மெய்கள் வருமாயின், நனி உ, உறும் - பெரும்பாலும் உகரச் சாரியையை இறுதிக்கட் பொருந்தும்; சில ஏவல் சில் வழி உறா - சில ஏவல் வினைகள் சிலவிடங்களிலே அவ்வுகரச் சாரியையைப் பொருந்தாவாம்.
முதல்நிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குன்றி முதல்நிலை மாத்திரம் நின்று தொழிற் பெயர்ப் பொருளைத் தருவதாம்.

மெய்யீற்றுப் புணரியல் 161
(உ-ம்) 1. உரிதுக்கடிது, உண்ணுக்கடிது, பொருநுக் கடிது, திருமுக்கடிது, தின்னுக்கடிது, நீண்டது, வலிது எனவும்,
கடுமை, நீட்சி, வன்மை எனவும், தொழிற்பெயர்கள் இரு வழியும் உகரம் பெற்றன. மற்றவைகளும் இப்படியே. இவை, உரிஞதல் உண்ணல் என் புழி வரும் விகுதி குன்றி நின்றமை காண்க.
مجی உரிஞ கொற்றா, உண்ணு கொற்றா, பொருநு .2 (طا۔ ھ ) கொற்றா, திருமுகொற்றா, தின்னுகொற்றா, நாகா, வளவா என ஏவல் வினை உகரம் பெற்றன. மற்றவையும் இப்படியே. உகரச் சாரியை பெற்றும் பெறாதும் வரும் ஏவல் வினைகள் ன, ன, ல, ள என்னும் நான்கு ஈற்றனவுமாம். உண் கொற்றா, தின் சாத்தா, வெல் பூதா, துள். வளவா என வரும்.
ஞ, ந, ம, வ என்னும் நான் கீறும் உகரம் பெற்றே வரும். இது எய்தாத தெய்துவித்தல். 4 208. நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை.
(இ-ள்) நஇறு தொழிற்பெயருக்கு - நகர மிறுதியாகிய முதல்நிலைத் தொழிற்பெயருக்கு; அவ்வும் ஆம் வேற்றுமை - உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையு மாகும் வேற்றுமைக்கண்.
(உ-ம்) பொருநக் கடுமை, நன்மை, வன்மை என
(பொருநுதல் - ஒத்தல்; அது ஒருவர் மற்றொருவர் போல வேடங்கொள்ளும் பொருநரது தொழில். பொருநர்கூத்தர்.
இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேற் சிறப்பு. விதி. 5。

Page 87
162 நன்னூல்
3. ணகர னகரவீறு
209. ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயவ்பு மாகும் வேங்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே.
(இ-ள்) ண ன - ணகார ணகாரங்கள்; வேற்றுமைக்கு வல்லினம் வரட் டறவும் - வேற்றுமைக்கண் வன்கணம் வந்தால் முறையே டகரமும் றகரமும்; பிற வரின் இயல்பும் ஆகும் - மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பும் ஆம்; அல்வழிக்கு அனைத்து மெய் வரினும் இயல்பு ஆகும் - அல்வழிக்கண் மூவின மெய்களுங் வந்தாலும் இயல்பேயாகும். இ-ம்) 1. சிறுகண்+களிறு=சிறுகட்களிறு, பொன் + தகடு=பொற்றகடு என வேற்றுமையிலே வல் லினம் வர ண, னக்கள் திரிந்தன. (உ-ம்) 2. மண் ஞாற்சி, பொன்ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை என வேற்றுமையிலே மெல் லினமும் இடையினமும் வர ண, னக்கள் இயல்பாயின. (உ-ம்) 3. மண்கடிது பொன்கடிது, சிறிது தீது, பெரிது ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என அல்வழியிலே மூவினமும் வர ண, னக்கள் இயல்பாயின. ஒப்பின் முடித்தலால், னகரமும் உடன் கூறினார். பின்னே கூட்டிச் சொல்லப்படும் எழுத்துக்களுக்கும் இவ்வுத்தியே கொள்க.
210. குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (இ-ள்) குறில் அணைவு இல்லா ண னக்கள் - தனிக்
குறிலொன்றையுஞ் சாராது ஒருமொழி தொடர்மொழி களைச் சார்ந்த ணகார ணகார மெய்கள்; வந்த நகரம்

மெய்யீற்றுப் புணரியல் 163
திரிந்துழி - வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்க விதியில்லாமையினாலே திரிந்த விடத்து, கேடு நண்ணும் - கெடுதலைப் பொருந்தும். (உ-ம்) 1. துரண் + நன்று-தூணன்று
பசுமண் + நன்று - பசுமணன்று எனவும், + நன்மை எனவும் ணகரம் இரு வழியுங் கெட்டது. (உ-ம்) 2. அரசன் +நல்லன் - அரசனல்லன்
செம்பெர்ன் + நன்று = செம்பொனன்று எனவும், + நன்மை எனவும் னகரம் இரு வழியுங் கெட்டது. "ண, னக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடு" என்றது மேலைச் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 7
211. சாதி குழுஉப்பரண் கவண்பெயரிறுதி
இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற டவ்வா கலுமா மல்வழி யும்மே. (இ-ள்) சாதிப் (பெயர்) - சாதி பற்றி வரும் பெயர் களுக்கும்; குழு உப் (பெயர்) - திரள் பற்றி வரும் பெயர் களுக்கும்; பரண் கவண் பெயர் - பரண், கவண் என்னும் பெயர்களுக்கும்; இறுதி - ஈற்று ணகரம்; வேற்றுமைக்(கும்) இயல்பு ஆம் - வேற்றுமைக்கண்ணும் வல்லினம் வரின் இயல்பாகும்; உணவு எண் (பெயர்) - உணவுக்குரிய எள்ளின் திரிசொல்லாகிய எண் ணென்னும் பெயருக்கும்; afrtarist (பெயர்) - சாணென்னும் நீட்டலளவைப் பெயருக்கும்; (இறுதி) - ஈற்று ணகரம்; அல்வழியும் டவ்வாகலும் ஆம் - அல்வழிக்கண்ணும் வல்லினம் வரின் திரிந்து டகர மாதலும் பொருந்தும். (உ-ம்) 1. பாண்குடி, உமண்குடி எனவும்: அமண்குடி எனவும்; பரண்கால் எனவும்;

Page 88
I64 நன்னூல்
கவண்கல் எனவும் வேற்றுமையிலும் இயல் பாயிற்று. (பாண் - பாடுதற் றொழிலுடைய தொரு சாதி, உமண் - உப்பமைத்தற்றொழி லுடைய தொரு சாதி, அமண் - அருகனை வழிபடுவதொரு கூட்டம்.1
(உ-ம்) 2. எண் + கடிது = எட்கடிது, சாண் + கோல் = சாட் கோல் என அல்வழியிலுந் திரிந்தது. டவ்
வாகலுமாம் என்ற உம்மையால், எண்கடிது, சாண்கோல் என இயல்பாதலே சிறப்பாம். பிற என்ற மிகையால் வேற்றுமையில், பாணக் குடி என அகரச் சாரியை பெறுதலும், அட்டூண்டுழனி என்னும் இயல்பும், மட் குடம், மண்குடம் என்னும் உறழ்வும், இரு வழியிலும் இன்னும் ணகர ஈற்றுள் அடங் காதவை யுண்டேல், அவையுங் கொள்க.
"இயல்பாம் வேற்றுமைக்கு’ என்றது. "ணனவல் லினம் வரட் டறவும்' என எய்தியது விலக்கல்; “டவ்வா கலுமாம் அல்வழி யும்" என்றது “அல்வழிக் கனைத்து மெய் வரினு மியல்பாகும்" என எய்தியதன் மேற் சிறப்பு விதி. 8
212. னஃகான் கிளைப்பெயரியல்பு மஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே, (இ-ள்) னஃகான் கிளைப்பெயர் - னகரத்தை யிறுதி யிலுடைய சாதிப்பெயர்; இயல்பும் - வல்லினம் வர ஈறு திரியாது இயல்பாதலும்; அஃகான் அடைவும் - அகரச் சாரியை பெறுதலும்; வேற்றுமை பொருட்கு ஆகும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் ஆகும்.
(உ-ம்) எயின்குடி, எயினக்குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். (எயின் - வேட்டுவச்சாதி)
"பொருட்கே" என்ற மிகையால்,

மெய்யீற்றுப் புணரியல் I65
எயின மரபு, எயின வாழ்வு எயினவணி என மற்றைக் கணம் வரினும் அகரச் சாரியை பெறுதலும், எயினக் கன்னி, எயினப் பிள்ளை, எயின மன்னன் என அல்வழியில் அகரச் சாரியை பெறுதலுங் கொள்க
“வேற்றுமைப் பொருட்கு இயல்பு" என்றது "ண ன *வல்லினம் வரட் டறவும்" என எய்தியது விலக்கல்: அஃகான் அடைவு' என்றது பிறிது விதி வகுத்தல், 9
213. மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே.
(இ-ள்) மீன் -மீன் என்னும் மொழி யிறுதி னகரம்; வேற்றுமை வழி - வேற்றுமைக்கண் வலலெழுத்து வரின் றவ்வொடு பொரூஉம் - றகரத்தோடு உறழ்ந்து வரும்.
(உ-ம்) மீன் + கண் - மீற்கண், செவி, தலை, புறம் என வரும்.
*றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழி" என்றது *ணனவல்லினம் வாட்டறவும்" என எய்திய தொருவாற் றால் விலக்கல், 10
214. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
மேவி னிறுதியழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. (இ-ள்) தேன்மொழி - தேன் என்னுஞ் சொல்; மெய் வரின் இயல்பும் - மூவின மெய்களும் வரின் இறுதி னகர மெய் இயல்பாதலும்; மென்மை மேவின் இறுதி அழிவும் - மெல்லினம் வரின் அம்பெய் இயல்பாதலே யன்றிக் கெடுதலும்; வலி வரின் ஈறு போய் வலி மெலி மிகலும் ஆம்- வல்லினம்; வரின் அம்மெய் இயல்பாதலே யன்றிக் கெட வந்த வல்லினமாவது அதற்கினமாவது மிகுதலும் ஆகும்; இரு வழி - இரு வழிக்கண்ணும்(உ-ம்) 1. தேன்கடிது, தேன்ஞான்றது, தேன்யாது எனவும், தேன்மொழி, தேமொழி எனவும் தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு எனவும் அல்வழியில் வந்தன.

Page 89
166 நன்னூல்
(உ-ம்) 2. தேன் கடுமை, தேன் மலிவு, தேன் யாப்பு எனவும் தேன் மலர், தேமலர் எனவும் தேன் குடம், தேக்குடம், தேங்குடம் எனவும் வேற்று மையில் வந்தன. "இருவழி மெய்வரின் இயல்பு" என்றது "ண னவல் லினம் வரட் டறவும்" என எய்தியது விலக்கலும், "பிற வரினியல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினுமியல்பாகும்' என எய்தியது இகந்து படாமைக் காத்தலும் “மென்மை மேவினிறுதி யழிவும் வலிவரி னிறு போம்" என்றது இச்சூத்திரத்தில் இயல்பு என எய்தியதன் மேற் சிறப்புவிதி; "வலிமெலி மிகும்' என்றது "இயல்பினும் விதியினும்" என்பதனால் எய்தியதன்மேற் சிறப்புவிதி, 11
215. மரமல் லெகின் மொழி யியல்பு மகரம்
மருவ வலிமெலி மிகலு மாகும். (இ-ள்) மரம் அல் எகின் மொழி - மரம் அல்லாத அன்னத்தை யுணர்த்தும் எகின் என்னுஞ் சொல்: இயல்பும்-வேற்றுமையிலும் வல்லினம் வர இறுதி இயல் பாதலும்; அகரம் மருவ வலி மெலி மிகலும் ஆகும்-இரு வழியிலும் அகரச்சாரியை பொருந்த வரும் வல்லெழுத்தா வது அதற்கு இனமாவது மிகுதலும் ஆகும். (உ-ம்) 1. எகின்கால், சிறை, தலை, புறம் என வேற்றுமை யிலும் இயல்பாயிற்று, - (உ-ம்) 2. எகினப்புள், எகினம்புள் எனவும், எகினக்கால்? எகினங்கால் எனவும்,இருவழியிலும் அகரம் வர மெலி மிகுந்தன. அகரம் வருதற்கு வரு மெழுத்தைச் சொல்லாமையால்,
நாற்கணமும் கொள்க. எகின மாட்சி, எகின வாழ்க்கை, வழகு என வரும். *எகின்மொழி யியல்பு" என்றது ணனவல் லினம்வரட்" டறவும்" என எய்தியது விலக்கல்; "அகரம் மருவும் என்றது அச்சூத்திரத்தால் இருவழிக்கண்ணும் எய்தியது

மெய்யீற்றுப் புணரியல் 167
விலக்கிப் பிறிது விதி வகுத்தல்; "வலி மெலி மிகும்" என்றது "இயல்பினும் விதியினும்" என்பதால் எய்திய தன்மேற் சிறப்புவிதி. 12
216, குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே.
(இ-ள்) குயின் ஊன் - குயின் என்னும் பெயரும் ஊன் என்னும் பெயரும்; வேற்றுமைக் கண்ணும் இயல்பு - வேற்றுமையினிடத்தும் இயல்பாகும்.
(உ-ம்) குயின் கடுமை, ஊன் கடுமை, சிறுமை, தீமை,
பெருமை என வரும் (குயின்-மேகம் வேற்றுமைக் கண்ணு மியல்பு' என்றது ன ன வல்லினம் வரட்டறவும்" என எய்தியது விலக்கல். l3
217. மின்பின் பன்கன் றொழிற்பெயரனைய
கன்னவ் வேற்றுமை மென்மையோ டுறழும் (இ-ள்) மின் பின் பன் கன் தொழிற் பெயர் அனையமின் முதலிய நான்கு சொற்தளும் முதல்நிலைத் தொழிற் பெயர் போல யகர மல்லாத மெய்கள் வரின் உகரச் சாரியை பொருந்தும; கன் அ ஏற்று மென்மையோடு உறழும்-இவற்றுள் கன் என்னுஞ் சொல் உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையும் பெற்று வல்லினம் வந்தால் வருமெழுத்தாவது அதற்கு இனமாவது மிகப் பெறும்.
(உ-ம்) மின்னுக்கடிது, பின்னுக்கடிது. பன்னுக்கடிது கன்னுக்கடிது, நன்று. வலிது எனவும், கடுமை நன்மை, வன்மை எனவும், கன்னத்தட்டு, கன்னந் தட்டு எனவும், கன்னத்தூக்கு, கன்னந் தூக்கு எனவும், அல்வழி வேற்றுமையில் முறையே வந்தன. (பன் - பருத்தி, கன் -
தராசுத்தட்டு, "தொழிற்பெய ரனைய' என்றதும் 'அவ்வேற்கும்" என்றதும் "ணனவல் லினம்வரட் டறவும்" என்னுஞ்
சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்,

Page 90
168 நன்னுால்
"மென்மையோடுறழும்" என்றது "இயல்பினும் விதியி னும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியதன் மேற் சிறப்பு விதி. 14.
218. தன்னென் னென்பவற் றீற்றுனவ் வன்மையோ
டுறழு நின்னி றியல்பா முறவே. (இ-ள்) தன் என் என்பவற்று ஈற்று ன - தன், என் என்னும் விகார மொழிகளுடைய இறுதியிலுள்ள னகர மெய்; வன்மையோடு உறழும் - வல்லினம் வரிற் பொது விதியால் றகரமாகத் திரிதலும் அவ்விதி யேலாது இயல் பாதலுமாம்; நின் ஈறு இயல்பு ஆம் - நின் எ ன் னும் விகார மொழியினது இறுதியிலுள்ள னகர மெய் வல்லினம் வரிற் றிரியாது இயல்பேயாகும். (உ-ம்) தன் பகை, தற்பகை, என்பகை, எற்பகை, எனவும்
நின் பகை எனவும் வரும்.
*உறவே" என்ற மிகையால், மின் பின் முதலி யவை, மின்கடிது, மின்கடுமை என இரு வழியுஞ் சாரியை பெறுதலுந் திரிதலுமின்றி வருதலும், மான் குளம்பு, அழன் கை, கான் கோழி, வான் சிறப்பு, அலவன் கால், கலுழன் சிறை என வேற்றுமையிலே சிறப்பு விதி சொல்லப் பெறாதவைகள் இயல்பாதலும், வரிற் கொள்ளும் எனச் செயி னென்னும் வாய் பாட்டு வினையெச்சம் பொதுச்சூத்திரத்தால் இயல்பாகாது திரிதலும், இன்னும் னகர மெய் யீற்றுள் அடங்காதவை இருந்தால் அவையுங்
கொள்க. (அழன்-பிணம்) *னவ் வன்மையோ டுறழும்" என்றது "ண ன வல் லினம் வரட் டறவும்" என எய்திய தொருவாற்றால் விலக்கல்: “நின்னிறியல்பாம்" என்றது எய்தியது விலக்கல். ... 15

மெய்யீற்றுப் புணரியல் 169 4. மகரவீறு
219. மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவுமாகும். (இ-ள்) மவ் ஈறு - மகர ஈற்றுச் சொற்கள்; ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் - நாற்கணமும் வர இறுதியி லுள்ள மகர மெய் கெட விதி யுயிரீறாய் நின்று இயல்பு உயிரீறு போலப் புணர்வனவும்; வன்மைக்கு இனம் ஆத் திரிபவும் ஆகும் - வல்லினம் வரிற் கெடாது அவற்றிற்கு இனமாகத் திரிவனவும் ஆகும்.
உயிரீறொத்தலாவது. உயிர் வரின் அவை உடம்படு மெய் பெறவும், வல்லினம் வரின் அவை மிகவும், மெல்லின மும் இடையினமும் வரின் அவை இயல்பாகவும் புணர்தல். மகர மெய் உயிரும் இடையினமும் வல்லினமும் வரக் கெடுவது வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத்தொகை உவமைத் தொகைகளிலுமாம் எனவும். மெல்லினம் வரக் கெடுவது இருவழியிலுமாம் எனவுங் கொள்க
மகர மெய் வல்லினம் வரக் கெடாது இன மெல்லெ ழுத்தாகத் திரிவது பண்புத்தொகை உவமைத்தொகை யிரண்டு மொழித்தொழிந்த அல்வழிப் புணர்ச்சியிலாம் எனவும், வினையாலணையும் பெயரிறிதி மகரமும் தனிக் குறிலைச் சார்ந்த மகரமும், வேறறுமையிலும் வல்லினம் வரிற் கெடாது இன வெழுத்தாகத் திரியும் எனவுங் கொள்க (உ-ம்) 1. மரம் + அடி - மரவடி, மரம்+வேர் = மரவேர், மரம்+கோடு = மரக்கோடு என வேற்றுமையி லும், வட்டம் + ஆழி=வட்டவாழி, வட்டம் + வடிவம் - வட்டவடிவம், வட்டம்+கல்-வட் டக்கல் எனப்பண்புத்தொகையிலும், பவளம்+ இதழ் = பவளவிதழ், பவளம் + வாய்-பவள வாய், கமலம் + கண் = கமலக்கண் என உவமைத் தொகையிலும் உயிரும் இடையினமும் வல்லின மும் வர ஈறு கெட்டு உயிரீறு போல் முடிந்தன.

Page 91
170 நன்னூல்
மரம்+நார் = மரநார் எனவும், மரம்+நீண்டது = மரநீண்டது, வட்டம் + நேமி= வட்டநேமி எனவும், மெல்லினம் வா ஈறு கெட்டு உயிரீறு போன் முடிந்தன. (உ-ம்) 2. நாம்+கடியம் = நாங்கடியம், நிலம் + தீ=நிலந் தீ, உண்ணும் + சோறு:- உண்ணுஞ்சோறு, உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம், பூதனும்+தேவனும் = பூதனுந்தேவனும் என அல்வழிக்கண் எழுவாய்த்தொடர் முதலியவற் றில் வல்லினம் வர ஈறு திரிந்து முடிந்தது. சிறி யேம்+கை = சிறியேங்கை எனவும், நம்+கை = நங்கை எனவும், வினையாலனையும் பெயரிறுதி மகரமுந் தனிக் குறிலை சார்ந்த மகரமும் வேற் றுமையிலும் வல்லினம் வரத் திரிந்து முடிந்தன. "இனமாத் திரியும்" என்றமையின் அருத்தாபத்தியால், நாம் பெரியம், சிறியேம் பண்பு எனப் பகரம் வரு வழித் திரியாதென்பது பெற்றாம். 16
220. வேற்றுமை மப்போய் வலிமெலியுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள. (இ-ள்) வேற்றுமை மப் போய் வலி மெலி உறழ்வும் - வேற்றுமைக்கண் மகர விறுதி கெட வல்லினமானது அவற் றிற்கு இனமாவது மிகுதலும்; அல்வழி உயிர் இடைவரின் இயல்பும் உள - அல்வழிக்கண் உயிரும் இடையினமும் வரிற் கெடாதியல்பாதலும் உளவாம்.
மகரமெய் உயிரும் இடையினமும் வர இயல்பாவது பண்புத்தொகை உவமைத்தொகை இரண்டு மொழித் தொழிந்த அல்வழிப் புணர்ச்சியிலெனக் கொள்க. (உ-ம்) 1. குளம் + கரை = குளக்கரை, குளங்கரை என
வேற்றுமையில் ஈறு கெட்டு உறழ்ந்தது. (உ-ம்) 2. மரமடைந்தது, மரம் வலிதுஎனவும், வலமிடம், நிலம் வானம் எனவும், உண்ணுமுணவு, ஆளும்

மெய்யீற்றுப் புணரியல் 171
வளவன் எனவும், உண்டன மடியேம், உண்ட னம்யாம் எனவும், அரசனு மமைச்சனும், புலியும் யானையும் எனவும், எழுவாய்த் தொடர் முதலிய அல்வழியில் உயிரும் இடை யினமும் வர ஈறு கெடாதியல்பாக முடிந்தது. வினையாலணையும் பெயரிறுதி மகரமுந் தனிக் குறி லைச் சார்ந்த மகரமும், சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனவும், நம்மன்பு, நம் வாழ்வு எனவும், வேற்றுமையிலும் உயிரும் இடையினமும் வர இயல்பா மெனக் கொள்க. "மப்போய்' என்றது மேலைச் சூத்திரத்தால் எய்திய திகந்து படாமைக்காத்தால்; "வலிமெலியுறழ்வும்" என்றது "இயல்பினும் விதியினும்" என்னுஞ் சூத்திரத்தால் எய்தி யதன் மேற் சிறப்புவிதி; அல்வழி யுயிரிடை வரினியல்பும்" என்றது மேலைச் சூத்திரத்தால் எய்தியது விலக்கல். 17 221. நுந்தம்
எம்ரும் மீறா மவ்வரு ஞகவே. (இ-ள்) நும் தம் எம் நம் ஈறு ஆம் ம - நும் முதலிய நான்கு விகார மொழிகளுக்கும் இறுதியாகிய மகர மெய்: வரு ஞ ந - வரும் ஞகர நகரங்களாகத் திரியும். (உ-ம்) நுஞ்ஞாண், நுந்நூல், தஞ்ஞாண், தந்நூல், எஞ் ஞாண், எந்நூல், நஞ்ஞாண், நந்நூல், என வரும். ஞ, ந வரின் அவையாகத் திரியும் எனவே, ஒழிந்த மக ரம் வரின், நும்மணி என இயல்பா மென்பது பெற்றாம். 'மவ்வரு ஞ, ந' என்றது ‘மவ்வீ றொற்றழிந்து' என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 18 222. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.
(இ-ள்) அக முனர்ச் செவி கை வரின் - அகம் என்னும் இடப்பெயர் முன்இசவி, கை என்னுஞ் சினைப்
ந-12

Page 92
172 நன்னூல்
பெயர்கள் வந்தால்; இடையன கெடும் - நிலைமொழி யிறுதி மகரம் வன்மைக்கு இனமாகத் திரிதலேயன்றி அதன் நடு நின்ற ககர மெய்யும் அதன்மே லேறிய அகர வுயிருங் கெடும்.
(உ-ம்) அகம் + செவி = அஞ்செவி, அகம் + கை =
அங்கை என வரும்.
கெட்டே வரும் என்னாமையால், அகஞ்செவி,
அகங்கை என வருவனவுங் கொள்க.
'இடை யன கெடும்" என்றது "வன்மைக் கினமாத் திரியும்' என எய்தியதன்மேற் சிறப்புவிதி. 19
223. FF(uprål
கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
(இ-ள்) ஈமும் கப் மும் உருமும் - ஈம், கம், உரும் என் னும் மூன்று சொல்லும்; தொழிற்பெயர் மானும் - இரு வழியும் முதல்நிலைத் தொழிற்பெயர் போல யகர மல்லாத மெய்கள் வரின் உகரச் சாரியை பெற்று முடியும்; முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறும் - இவற்றுள்ளே முதற்கண் நின்ற ஈமும் கயமும் வேற்றுமைக்கண் உகரச் சாரியை யன்றி அகரச் சாரியையும் பெறும்.
(உ-ம்) ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது, நீண் டது, வலிது எனவும், கடுமை, நீட்சி வன்மை எனவும்,ஈமக்குடம், கம்மக்குடம் எனவும் வரும். (ஈம்-சுடுகாடு. கம்-கம்மியரது தொழில், உரும் = இடி.
இது 'மவ்வீ றொற்றழிந்து" என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 20

மெய்யீற்றுப் புணரியல் 17.3
וש 68 Lj w up .5
224. யரழ முன்னர்க் கசதப வல்வழி
இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். (இ-ள்) ய ர ழ முன்னர்க் க ச த ப - யகர ரகர ழகர மெய்களின் முன் ககர சகர தகர பகரங்கள் வரின்; அல்வழி இயல்பும் மிகலும் - அல்வழியில் இயல்பாதலும் மிகுதலும்; வேற்றுமை மிகலும் இனத்தோடு உறழ்தலும் - வேற்றுமை யில் மிகுதலும் வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும்; விதி ஆகும் - விதி யாகும்.
அல்வழி யியல்பு மிகுதி யிரண்டனுள் இயல்பு எழு வாய்த் தொடர் உம்மைத்தொகை வினைத்தொகைகளிலுங் மிகுதி பண்புத்தொகை உவமைத்தொகைகளிலுங் கொள்ளப்படும். யகர வீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்; ரகர வீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் இயல்பாம். (உ-ம்) . வேய்குறிது, வேர் சிறிது, யாழ்பெரிது எனவும், பேய் பூதம், நீர்கனல், இகழ்புகழ் எனவும், செய்கடன், தேர்பொருள், வீழ்புனல் எனவும், உண்ணியர் போவான் எனவும் எழுவாய்த் தொடர் முதலியவற்றில் இயல்பாயின. மெய்க் கீர்த்தி, கார்ப்பருவம், பூழ்ப் பறவை எனவும், வேய்த் தோள், கார்க்குழல், காழ்ப்படிவம் எனவும், போய்க்கொண்டான் எனவும் பண்புத் தொகை முதலியவற்றில் மிகுந்தன (உ-ம்) 2. நாய்க்கால், தேர்த்தலை, பூழ்ச்செவி என வேற்றுமையில் மிகுந்தன. வேய்க்குழல் வேய்ங் குழல், ஆர்க்கோடு, ஆர்ங்கோடு என வேற்றுமையில் இனத்தோடுறழ்ந்தன. "மேல்" என்ற மிகையால், வாய்புகுவதனினும் என வேற்றுமையில் இயல்பாதலும், பாழ்க்

Page 93
174 நன்னூல்
கிணறு, பாழ்ங்கிணறு எனப் பண்புத்தொகை யில் உறழ்தலும், காய் + யாது = காயாது, நோய் + யானை-நோயானை எனத் தனிக் குறிலைச் சாராத யகரத்தின் முன் யகரம் வரின் இரு வழியும் நிலைமொழி யிறுதி யகரங் கெடுதலும், இன்னும் அடங்காதவை களிருந்தால் அவைகளுங் கொள்க. 21
225. தமிழவ் வுறவும் பெறும்வேற்றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே. (இ - ள்)தமிழ் வேற்றுமைக்கு அ உறவும் பெறும்-தமிழ் என்னுஞ் சொல் நாற்கணமும் வரின் வேற்றுமைக்கண் அகரச் சாரியை பொருந்தவும் பெறும்; தாழும் கோல் வந்து உறுமேல் அற்று - தாழ் என்னுஞ் சொல் முன் கோல் என்னுஞ் சொல் வந்து பொருந்துமாயின் அவ்வகரச் சாரியைப் பெறும்.
(உ - ம்) தமிழப் பிள்ளை, தமிழ நாகன், தமிழ வளவன், தமிழவரசன் எனவும், தாழக்கோல் எனவும் வரும். தமிழையுடைய பிள்ளை, தாழைத் திறக்குங் கோல் என விரியும். (தாழக்கோல் - திறவுகோல்.] இது எய்தாத தெய்துவித்தல். 22 226. கீழின்முன் வன்மை விகற்பழு மாகும்,
(இ-ள்) கீழின் முன் வன்மை - கீழ் என்னுஞ் சொல்லின் முன் வரும் வல்லினம்; விகற்பமும் ஆகும் - ஒருகால் இயல்பாகியும் ஒருகால் மிக்கும் வரும் விகற்பத்தையும் பொருந்தும்.
(உ-ம்) கீழ்குலம், கீழ்க்குலம்; கீழ்சாதி, கீழ்ச்சாதி
என வரும். விகற்பமும் என்னும் இழிவுசிறப்பும்மையால்; இவற்றுள் இயல்பே சிறப்புடைத் தென்றறிக.

மெய்யீற்றுப்புணரியல் 175
“வன்மை விகற்பமுமாகும்" என்றது 'யரழ முன்னர்"
என்னுஞ் சூத்திரத்தால் (சூ. 224) எய்தியது பெரும்பாலும் விலக்கல். 23
6. லகர ளகர வீறு
227. லளவேற்றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பும்
ஆகு மிருவழி யானு மென்ப.
(இ-ள்) ல ள - லகர ளகரமாகிய இரண்டு மெய் யீறு
களும்; வலி வரின் - வல்லினம் வந்தால்; வேற்றுமையில் றடவும் - வேற்றுமைக்கண் முறையே றகார, டகார மெய் களும்; அல்வழி அவற்றோடு உறழ்வும் ஆம் - அல்வழிக் கண் றகார டகாரங்களுடனே உறழ்வனவும் ஆகும்; இரு வழியானும் - இரு வழிக்கண்ணும்; மெலி மேவின் ன ன வும் - மெல்லினம் வந்தால் முறையே னகார ணகார மெய்களும்; இடை வரின் இயல்பும் ஆகும் - இடையினம் வந்தால் இயல்பும் ஆகும்; என்ப - என்று சொல்லுவர் புலவர்.
نجھه
(உ-ம்) 1. கல்+குறை- கற்குறை, முள் + குறை-முட் குறை என வல்லினம் வர வேற்றுமையில் றகர டகரங்களாகத் திரிந்தன.
(உ-ம்) 2. கல்+குறிது = கல்குறிது, கற்குறிது; முள்+ குறிது = முள்குறிது, முட்குறிது என வல்லினம் வர அல்வழியில் ஒருகால் இயல்பாகியும் ஒரு காற் றிரிந்தும் உறழ்ந்தன.
(உ-ம்) 3. கல் + மாண்டது = கன்மாண்டது, முள் +
மாண்டது - முண்மாண்டது எனவும்; கல்+
மாட்சி-கன்மாட்சி, முள் + மாட்சி - முண் மாட்சி எனவும் மெல்லினம் வர இரு வழியும் னகர ணகரமாகத் திரிந்தன.

Page 94
17Ꮾ ; நன்னூல்
(உ-ம்) 4. கல்+யாது = கல்யாது, முள்+யாது=முள் யாது எனவும்; கல்+யாப்பு = கல்யாப்பு, முள்+ யாப்பு= முள் யாப்பு எனவும் இடையினம் வர இரு வழியும் இயல்பாயின. 'அல்வழி யவற்றோ டுறழ்வும்" என்றாரேனும்; இவற்றோடு மயங்காத தகரம் வரின், ஏற்புழிக் கோடலால் க ற் றீது முட்டீது எனத் திரி பொன்றுமே கொள்க. 24 228. குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம் ஆகவும் பெறுஉ மல்வழி யானே. (இ-ள்) குறில் வழி ல ள - தனிக் குறிலின் பின்னின்ற லகர ளகர மெய்கள்; அல்வழியான் த அணையின் - அல் வழிக் கண்ணே தகரம் வருமாயின், ஆய்தம் ஆகவும் பெறுTஉம்= றகர டகரங்களாகத் திரிதலே யன்றி ஆய்த மாகத் திரிதலையும் பொருந்தும்.
(உ.ம்) கல் + தீது = கஃறீது, முள்+ தீது = முஃடீது
என வரும். இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன் மேற் சிறப்புவிதி. 25
229. குறில்செறியாலள வல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபு மாவன வுளயிற. (இ-ள்) குறில்செறியா லள - தனிக் குறி லொன்ற னையுஞ் சாராத லகார ளகார மெய்கள்; அல்வழி வந்த தகரந் திரிந்தவபின் கேடும்- அல்வழிக்கண் வருமொழிக்கு முதலாய் வந்த தகரந் திரியு மிடத்துக் கெடுதலும்; ஈரிடத்தும் வருநத் திரிந்த பின் மாய்வும் - இரு வழிக் கண்ணும் வரு மொழிக்கு முதலாய் வந்த நகரந் திரியு மிடத்துக்கெடுதலும்; வலி வரின் இயல்பும் திரிபும் ஆவன உள - வல்லெழுத்து முதல்மொழி வந்தால் அல்வழிக்கண் உறழாது இயல்பாதலும் திரிதலும் வேற்றுமைக் கண்ணே திரியா தியல்பாதலும் பொருந்துவன வுள.

மெய்யீற்றுப் புணரியல் 177
ல ளக்கள் அல்வழியில் வல்லினம் வர உறழா தியல்பா வது எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை, விளித் தொடர், வினைமுற்றுத்தொடர், வினைத்தொகைகளி லும், திரிவது பண்புத்தொகை, உவமைத்தொகை, வினைசெச்சங்களிலு மெனக் கொள்க.
(உ-ம்) 1. வேல் + தீது = வேறீது, தோன்றல் + தீயன் = தோன்றறியன், வாள் + தீது: வாடீது, வேள் + தீயன் = வேடீயன் என அல்வழியிலே தகரந் திரியு மிடத்துக் கெட்டன,
(உ-ம்) 2. தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன், வேள் + நல்லன் - வேணல்லன் எனவும், தோன்றல்+ நன்மை = தோன்றனன்மை, வேள் + நன்மை = வேணன்மை எனவும் இருவழியிலும் நகரந் திரியுமிடத்துக் கெட்டன.
(உ-ம்) 3. கால் கடிது, மரங்கள் கடிய எனவும், கால்கை, பொருள் புகழ் எனவும், தோன்றல் கூறாய், மக்காள் சொல்லீர் எனவும், உண்பல் சிறியேன், கேள் சாத்தா எனவும், கால் சுடர், அருள்குரு எனவும் அல்வழியிலே எழுவாய்த் தொடர் முதலியவற்றில் உறழா தியல்பாயின. வேற்படைக் குமரன், வாட்படைக் கையன் எனவும், வேற்கண், வாட் கண்எனவும், வந்தாற் கொள்ளும் வந்தக்காற் கொள்ளும் எனவும் அல்வழியிலே பண்புத் தொகை முதலியவற்றில் உறழாது திரிந்தன.
(உ-ம்) 4. “கால்குதித் தோடிக் கடல்புக மண்டி', 'வாள் போழ்ந் தட்ட நீள் கழன் மறவர்" என வேற்றுமை யிலே வலி வரத் திரியா தியல்பாயின.
"பிற" என்ற மிகையால், தோன்றறாள், வேடோள் என நிலைமொழி உயர்திணைப் பெயரா யின். வேற்றுமையிலுந் தகரந் திரியுமிடத்துக் கெடுதலும், காற்றுணை, தாட்டுணை எனவும்,

Page 95
178 நன்னூல்
பிறங்கற்றோள், வாட்டானை எனவும் அல்வழியிலும் பண்புத்தொகை, உவமைத்  ெத ரா  ைக க ளி ற் கெடாமையுங் கொள்க. இன்னும் "பிற" என்ற மிகையால், தனிக் குறிலைச் சார்ந்த ல, ளக்களும், விற்படை எனவும் விற்புருவம் எனவும் பண்புத் தொகை, உவமைத்தொகைகளில் உறழாது திரிதலும், கொல்களிது, கொள்பொருள் எனவும், நில் கொற்றா, கொள் பூதா எனவும் வினைத்தொகை, வினைமுற்றுத் தொடர்களில் இயல்பாதலுங் கொள்க.
இது "லளவேற் றுமையிற் றடவும்' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 26
230 லளவிறு தொழிற்பெயரீரிடத்து முவ்வுறா
வலிவரினல்வழி யியல்புமா வனவுள.
(இ-ள்) லள இறு தொழிற்பெயர் ஈரிடத்தும் உவ் வுறா - லகாரத்தை யிறுதியாக வுடைய விகுதி பெற்ற தொழிற் பெயரும் ளகாரத்தை யிறுதியாகவுடைய முதல் நிலை திரிந்த தொழிற்பெயரும் இரு வழியிலும் யகர மல்லாத மெய்கள் வந்தால் உகரம் பெறாவாம்; வலி வரின் அல்வழி இயல்பும் ஆவன உள - வல்லினம் வந்தால் அல்வழிக்கண் உறழா தியல்பாவனவுஞ் சில வுள.
(உ-ம்) 1. ஆடல்சிறந்தது, ஆடற்சிறந்தது; ஆடனன்று, ஆடல்வலிது எ ன வு ம் ஆடற்சிறப்பு, ஆடனன்மை. ஆடல்வன்மை எனவும்; கோள் கடிது, கோட் கடிது; கோணன்று, கோள்வலிது எனவும்: கோட்கடுமை, கோணன்மை, கோள்வன்மை எனவும் இரு வழியும் உகரம் பெறாது பொதுவிதியான் முடிந்தன.
(உ-ம்) 2. நடத்தல் கடிது, நடப்பித்தல் கடிது எனச் சில உறழாது அல்வழியில் இயல்பாயின.

மெய்யீற்றுப் புணரியல் 179
இயல்பும் என்ற உம்மையால், பின்னல்கடிது, பின்னற் கடிது; உன்னல்கடிது, உன்னற்கடிது எனப் பொது விதியால் உறழ்தலே பெரும்பாலன வென்க.
"ஈரிடத்தும் உவ்வுறா" என்றது ஐயமறுத்தல்; "வலி வரினல்வழி யியல்புமா வனவுள' என்றது ஒருவாறு "அல்வழி யவற்றோ டுறழ்வும்' (கு. 227) என எய்தியது விலக்கல். 27
231. வல்லே தொழிற்பெயரற்றிரு வழியும்
பலகை நாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்.
(இ-ள்) வல் இரு வழியும் தொழிற்பெயர் அற்று - வல் என்னுஞ் சூதாடு கருவிப் பெயர் யகர மல்லாத மெய்கள் வரின் முதல் நிலைத் தொழிற்பெயர் போல இரு வழியும் உகரச் சாரியை பெறும்; பலகை நாய் வரினும் வேற்று மைக்கு அவ்வுமாம் - பலகை, நாய் என்னும் இரு பெயர் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையும் பெறும்.
(உ-ம்) 1. வல்லுக்கடிது, நன்று, வலிது எனவும், வல்லுக் கடுமை, நன்மை, வன்மை, எனவும் இரு வழியுந் தொழிற்பெயர் போல உகரச் சாரியை பெற். றது. (வல் - சூதாடு கருவி) (உ-ம்) 2. வல்லப்பலகை, நாய், புலி, குதிரை எனவும், வல்லுப் பலகை, நாய், புலி, குதிரை எனவும் வேற்றுமையில் அகரச் சாரியையும் உகரச் சாரியையும் பெற்றது. வல்லப்பலகை - வல்லின தறை வரைந்த பலகை, வல்லநாய் - வல்லினு னாய் என விரியும்.
இது "லளவேற் றுமையிற் றடவும்' (சூ. 227) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப்பிறிது விதி வகுத்தல். 28:

Page 96
180 நன்னூல்
232. நெல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும்ற கர மாகும். VK.
(இ-ள்) நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் - நெல் முதலிய நான்கு சொற்களின் ஈற்று லகர மெய்: அல் வழியானும் றகரம் ஆகும் - பொது விதியால் உறழாது அல்வழிக்கண்ணும் மேற்றுமை போல றகர மெய்யாகத் திரியும்.
(உ-ம்) நெற்கடிது செற்கடிது, கொற்கடிது, சொற் கடிது, சிறிது, தீது, பெரிது என வரும். (செல் - மேகம், கொல் - கொல்லன் )
இதுவும் "லளவேற் றுமையிற் றடவும்" (சூ.227) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். 29
233. இல்லெ னின்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமு மாகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும்.
(இ=ள்) இன்மை இல் என் சொற்கு - இன்மைப் பண்பையுணர்த்தி நிற்கும் இல் என்னுஞ் சொல்லுக்கு ஐ அடைய வன்மை விகற்பமும் - ஐகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வரும் வல்லினம் விகற்பித்தலும்; ஆகாரத் தொடு வன்மை ஆகலும் - ஆகாரச் சாரியை பொருந்த அவ்விடத்து வரும் வல்லினம் மிகலும்; இயல்பும் ஆகும் - இவ்விரு விதியும் பெறா தியல்பாதலும் பொருந்தும்.
சாரியை பெறுதற்கு வரு மெழுத்தைச் சொல்லாமை யால் நாற்கணமுங் கொள்க.
(உ-ம்) இல்லைப்பொருள், இல்லைபொருள், இல்லாப் பொருள், இல்பொருள், ஞானம், வன்மை, அணி என வரும்.

மெய்யீற்றுப் புணரியல் 18
இல் லென்னும் பண்புச்சொல் ஐகார ஆகாரச் சாரியை கள் பெறும் என்றதும் இயல்பாம் என்றதும் "லளவேற் றுமையிற் றடவு மல்வழி யவற்றோ டுறழ்வும்" (சூ. 176) என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல். ஐகாரச் சாரியை முன் வல்லினம் விகற்பமாம் என்றது 'அல்வ இஐம் முன்னராயின்' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைத் காத்தல்; ஆகாரச் சாரியை முன் வல்லி னம் மிகும் என்றது "இயல்பினும் விதியினும்" (சூ.165) என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது இகந்துபடாமைக் காத்தல். 30
234. புள்ளும் வள்ளுங் தொழிற்பெயர் மானும்.
(இ-ள்) புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் மானும் - இவ்விரு சொற்களும் இரு வழியும் யகர மல்லாத மெய்கள் வந்தாற் பொது விதியான் முடிதலே யன்றித் தொழிற் பெயர் போல உகரச் சாரியையும் பெற்றுப் புணரும். (உ-ம்) புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, நன்று, வலிது,
எனவும். புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுமை, நன்மை, வன்மை எனவும் வரும். ۔۔۔۔۔۔۔
இது "லளவேற்றுமையிற் றடவும்" என்னுஞ் சூத்தி ரத்தால் (சூ.227) எய்தியதன்மேற் சிறப்புவிதி. 31
7. வகர வீறு
235. சுட்டு வகரமூ வினமுற முறையே
ஆய்தமும் மென்மையு மியல்பு மாகும்.
(இ-ள்) சுட்டு வகரம் - அவ், இவ், உவ் என்னும் அஃ றிணைச் சுட்டுப்பெயர்களிற்று வகரமெய்; மூ வினம் உறவல்லினமும் மெல்லினமும் இடையினமும் வர முறையே ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும் - முறையாக ஆய் தமும் வரும் மெல்லினமும் இயல்பும் ஆகும்.

Page 97
182 நன்னூல்
(உ-ம்) 1. அவ்+கடிய=அஃகடிய, இவ்+ கடிய-இஃகடிய உவ்+ கடிய - உஃகடிய, என வல்லினம் வர ஆய்தமாகத் திரிந்தது.
(உ.ம்) 2. அவ்+ஞானம்-அஞ்ஞானம், இவ்+ஞானம்இஞ்ஞானம், உவ்+ ஞானம் = உஞ்ஞானம், என மெல்லினம் வர வரு மெழுத்தாகத் திரிந்தது.
(a-b) 3. அவ்+யாவை = அவ்யாவை, இவ்+யாவை = இவ்யாவை, உவ்+யாவை = உவ்யாவை என இடையினம் வர இயல்பாயிற்று.
வேற்றுமைப் புணர்ச்சிக்கு அற்றுச் சாரியை பெறும் என மேல் விதித்தலால், இவ்விதி அல்வழிக்கெனக் காண்க. 32.
236. தெவ்வென் மொழியே தொழிற்பெயரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.
(இ-ள்) தெவ் என் மொழி தொழிற்பெயர் அற்று - தெவ் என்னும் பகையை யுணர்த்தும் பெயர் யகர மல்லாத மெய்களோடு புணருமிடத்துத் தொழிற்பெயர் போல உகரச் சாரியை பெற்று முடியும்; மவ் வரின் வஃகான் மவ் வும் ஆகும் - மகர மெய் வரின் உகரச் சாரியைப் பெறுதலே யன்றி ஒரோவிடத்து வகர மெய் மகர மெய்யாகத் திரிய வும் பெறும். (உ-ம்) 1. தெவ்வுக்கடிது, தெவ்வுமாண்டது, தெவ்வுவலிது எனவும் தெவ்வுக்கடுமை, தெவ்வுமாட்சி, தெவ் வுவலிமை எனவும் இருவழியும் உகரச் சாரியை பெற்றது. (உ-ம்) 2. தெவ்வுமன்னர், தெம்மன்னர் எனவும், தெவ்வு முனை, தெம்முனை எனவும் இரு வழியும் மகர மெய் வர உகரச் சாரியை பெற்றும், மகர மெய் யாகத் திரிந்தும் வந்தது. 33

மெய்யீற்றுப் புணரியல் 183
8. வருமொழித் தகர நகரத் திரிபு
237. னலமுன் றனவும் ணளமுண் டணவும்
ஆகுந் தநக்க ளாயுங் காலே
(இ-ள்) ன ல முன் (த நக்கள்) ற ன வும் - னகர, லகரங் களின் முன் வருந் தகரம் றகரமாம் அவற்றின் முன் வரும் நகரம் னகரமாம்; ண ள முன் த நக்கள் ட ணவும் ஆகும் - ணகர, ளகரங்களின் முன் வருந் தகரம் டகரமாம் அவற் றின் முன் வரும் நகரம் ணகரமாம்; ஆயுங்கால் - ஆராயு மிடத்து.
(உ-ம்) பொன் + தீது = பொன்றீது, கல்+ தீது = கற்றீது பொன்+நன்று=பொன்னன்று, கல்+நன்று= கன்னன்று எனவும்,
மண் + தீது = பண்டீது, முள்+ தீது=முட்டீது, மண்+நன்று = மண்ணன்று, முள்+நன்று = முண் ணன்று எனவும் அல்வழியிலே திரிந்தன.
பொற்றீமை, கற்றீமை, பொன்னன்மை, கன் னன்மை எனவும்,
மட்டீமை, முட்டீன்மை, மண்ணன்மை, முண் ணன்மை, எனவும் வேற்றுமையிலே திரிந்தன,
"ஆயுங் காலே" என்றதனால், அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தாலன்றி மயக்கவிதியின்மையால் இப்படிப் புணரும் முதலீ றிரண்டனுள் ஒன்றேனும் இரண்டுமேனும் விகாரப்பட்டு மயங்கு தற்கு உரியனவாகிப் புணருமென்பதும், மயக்க விதியுள்ளனவற்றிற்கு வரும் விகாரம் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் வருமென்பது பெற்றாம். 34

Page 98
184 நன்னூல்
6. வேற்றுமைப் பொருட் புணர்ச்சியை
உருபு புணர்ச்சியோடு மாட்டெறிதல் 238. உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.
(இ-ள்) உருபின் முடிபவை - மேல் உருபு புணர்ச்சிக் கண் முடியும் முடிபுகள்; அப்பொருளினும் ஒக்கும் - அவ் வுருபின் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஒத்து முடியும்.
உருபு புணர்ச்சியாவது வேற்றுமை யுருபு வெளிப் பட்டு நிற்பப் புணரும் புணர்ச்சி உறிக்கட்டயிர் என்பது போல.
வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாவது வேற்றுமை யுருபின்றி அவ்வுருபினது பொருள்படப் புணரும் புணர்ச்சி உறித்தயிர் என்பது போல. (உ-ம்) 1. எல்லாவற்றதும் என்பது உருபு புணர்ச்சி; எல் லாவற்றுக்கோடும் என்பது பொருட் புணர்ச்சி மேல் உருபு புணரியலில்
"எல்லா மென்ப திழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே" (சூ.244) என்ற விதிப்படி எல்லாவற்றதும் என்ற உருபு புணர்ச்சிக்கு அஃறிணைக்கண் அற்றும் உருபின் மேல் உம்மும் பெற்றாற் போல எல்லாவற்றுக் கோடும் என்னும் பொருட் புணர்ச்சிக்கும் பெற்றன. எல்லா நமதும் என்பது உருபு புணர்ச்சி; எல்லா நங்கையும் என்பது பொருட் புணர்ச்சி.
'அன்றே னம்மிடை யடைந்தற் றாகும்பு என்ற விதிப்படி எல்லா நமதும் என்னும் உருபு புணர்ச்சிக்கு உயர்திணைக்கண் நம்மும் உரு பின் மேல் உம்மும் பெற்றாற் போல, நங்கையும் என்னும் பொருட் புணர்ச்சிக்கும் பெற்றன.

மெய்யீற்றுப் புணரியல் 185.
(a-b) 2.
(p-to) 3.
எல்லார் தமதும், எல்லீர் நுமதும் என்பன உருபு புணர்ச்சி; எல்லார் தங்கையும், எல்லீர் நுங்கையும் என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில், "எல்லாரு மெல்லீரு மென் பவற்றும்மை-தள்ளி நிரலே தம்நும் சாரப்புல்லு முருபின் பின்ன ரும்மே" (கு. 246) என்ற விதிப்படி எல்லார் தமதும் எல்லீர் நுமதும் என்னும் உருபு புணர்ச்சிக்கு எல்லாரும் எல்லீரும் என்பவைகளின் இறுதியி லுள்ள முற்றும்மைகளைத் தள்ளிமுறையே தம்முச் சாரி யையும் நும்முச் சாரியையும் வந்து பொருந்த அவைகளினாலே தள்ளுண்ட முற்றும்மைகள் உருபுகளின் பின்னே வந்து புணர்ந்தாற்போல, எல்லார் தங்கையும் எல்லீர் நுங்கையும் என்னும் பொருட் புணர்ச்சிக்கும் முடிந்தன.
தனது தமது, நமது என்பன உருபு புணர்ச்சி; தன்கை, தங்கை, நங்கை என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில்,
"தான்தாம் நாம்முதல் குறுகும்" (கு. 247) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்குத் தான், தாம், நாம் என்பன முறையே தன், தம், நம் என விகாரப்பட்டாற் போலப் பொருட் புணர்ச்சிக்கும் விகாரப்பட்டன.
எனது, எமது, நினது, நுமது என்பன உருபு புணர்ச்சி; என்கை, எங்கை, நின்கை, நுங்கை பொருட் புணர்ச்சி.
'யான் யாம்-நீ நீர் என் எம் நின் நும் ஆம்" என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு யான் யாம் நீ நீர் என்பன முறையே என் எம் நின் நும் என

Page 99
86.
(al-lib) 4.
(a-b) 5.
(ol-b) 6.
நன்னூல் விகாரப்பட்டாற்போலப், பொருட் புணர்ச்சிக் கும் விகாரப்பட்டன. ஆனது, மானது, கோனது என்பன உருபு புணர்ச்சி; ஆன்கோடு, மான்கோடு, கோன் குணம் என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில்.
"ஆமா கோனவ் வணையவும் பெறுமே"
(சூ. 248) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு னகரச் சாரியை வந்தாற் போலப் பொருட்புணர்ச்சிக் கும் வந்தது. அவற்றது, இவற்றது, உவற்றது என்பன உருபு புணர்ச்சி; அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில்,
"வழ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே" (சூ.250) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு அற்றுச் சாரியை வந்தாற் போலப் பொருட்புணர்ச்சிக் கும் வந்தது.
அதனது, இதனது, உதனது என்பன உருபு புணர்ச்சி; அதன்கோடு, இதன்கோடு, உதன் கோடு என்பன பொருட் புணர்ச்சி. மேல் உருபு புணரியலில்,
"சுட்டின் முன் னாய்த மன்வரிற் கெடுமே" (சூ. 251) என்ற விதிப்படி உருபு புணர்ச்சிக்கு அன் சாரியைப் பேறும் ஆய்தக் கேடும் வந்தாற் போலப், பொருட் புணர்ச்சிக்கும் வந்தன.
இவை போல்வன பிறவும் இப்படியே முடித்துக்
கொள்க.
35

மெய்யீற்றுப் புணரியல் 187
10. புணரியல்களுக்குப் புறனடை
239. இடையுரி வடசொலினியம்பிய கொளாதவும்
போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே. (இ-ள்) இடை உரி வடசொலின் இயம்பியகொளா தவும்-இடைற்சொற்களுள்ளும் உரிச்சொற்களுள்ளும் வட சொற்களுள்ளும் உயிரீறும் ஒற்றிறுமான புணரியலிலே தோன்றல் திரிதல் கெடுதல் இயல்பாதல் எனச் சொல்லிய புணர்ச்சியிலக்கணங்கள் பொருந்தாது வேறுபட்டு வருவனவும்; போலியும்-இலக்கணப்போலி மொழிகளும்; மரூஉவும் -மரூஉ மொழிகளும்; பொருந்திய ஆற்றிற்கு இயையப் புணர்த்தல் - இரு வகை வழக்கிலும் நடக்கும் முறைமைக்குப் பொருந்துமாறு புணர்க்கை; யாவர்க்கும் நெறி - அறிவுடையோ ரெல்லார்க்கும் முறை.
(al-lb) 1. "மடவை மன்ற தடவு நிலைக்கொன்றை"
என அகரஈற்று இ  ைட ச் சொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயிற்று. ஆன் கன்று, மான்கன்று, வண்டின்கால், தேரின் செலவு, யாழின்புறம் என வேற்றுமைப் புணர்ச்சிக்கண் னகர வீற்றுச்சாரியை யிடைச் சொற்கள் திரியாது இயல்பாயின.
(உ-ம்) 2. மழகளிறு, உறுபுனல் எனவும் கமஞ்சூல், தடஞ் செவி, தடந்தோள், கயந்தலை எனவும் உயிரீற்று உரிச்சொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயும் மெல்லெழுத்து மிகுந்தும் வந்தன.
(உ-ம்) 3. அளிகுலம், தனதடம், ஆதிபகவன் என உயிரீற்று வடசொல் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாயின. ந.-13

Page 100
188
நன்னூல்
இல்+முன்-முன்றில், பொது+இல்-பொதியில் எனவரும் இலக்கணப்போலி மொழிகளும்; அருமருந்தன்ன பிள்ளை - அருமந்த பிள்ளை; குணக்குள்ளது - குண 1ா து; தெற்குள்ளது - தெனாது; வடக்குள்ளது - வடாது; சோழ னாடு - சோணாடு; பாண்டியநாடு - பாண்டி நாடு; மலையமானாடு - மலாடு, தொண்டை மானாடு - தொண்டை நாடு; தஞ்சாவூர் - தஞ்சை ஆற்றுார் - ஆறை; ஆதன்றந்தை - ஆந்தை: பூதன்றந்தை - பூந்தை; வடுகன் றந்தை - வடுகந்தை என வரும் மரூஉ மொழி களும் நிலைமொழி வருமொழிகளுள் ஏற்குஞ் செய்கையறிந்து முடித்துக்கொள்க. மற்றவை களும் இப்படியே.
வடமொழித் தொகைப் பதங்கள், தமிழில் ஆங்காங்கு
வருமிடத்துப் பெரும்பாலும் அவ்வடநூற் புணர்ச்சியே பெறும். புணர்ச்சியெனினும் சந்தியெனினும் ஒக்கும். அச்சந்தி, தீர்க்கசந்தி, குணசந்தி விருத்திசந்தி என மூவகைப்படும்.
(1) தீர்க்கசந்தி
அ, ஆ வின் முன் அ, ஆ வரின், ஈறும் முதலுங் கெட, ஆ வொன்று தோன்றும்:-
(உ-ம்) பத-+ அம்புயம் = பதாம்புயம்
சிவ+ ஆலயம் = சிவாலயம் சேநா+ அதிபதி=சேநாதிபதி சதா + ஆநந்தம் = சதாநந்தம்
2. இ, ஈயின் முன் இ, ஈ வரின், ஈறும் முதலுங் கெட,
ஈ யொன்று தோன்றும் :-

மெய்யீற்றுப் புணரியல் 189
(உ-ம்) கிரி+இந்திரன் - கிரீந்திரன்
கிரி+ஈசன் = கிரீசன் மகீ+இந்திரன் = மகீந்திரன் நதீ+ஈசன் = நதீசன்
3. உ, ஊ வின் முன் உ, ஊ வரின், ஈறும் முதலுங்
கெட, ஊ வொன்று தோன்றும்:-
(உ-ம்) குரு+உபதேகம் - குரூபதேசம்
மேரு + ஊர்த்துவம்=மேரூர்த்துவம் வதூ+உத்துவாகம்=வதூத்துவாகம்
வது + ஊரு = வதுTரு
(2) குணசந்தி
1. அ, ஆ வின் முன் இ, ஈ வரின், ஈறும் முதலுங்
கெட, ஏ யொன்று தோறும் :
(உ-ம்) நர+இந்திரன் - நரேந்திரன்
சுர+ஈசன் = சுரேசன்
தரா+இந்திரன்=தரேந்திரன் மகா + ஈசன் - மகேசன்
3. அ, ஆ வின் முன் உ, ஊ வரின், ஈறும் முதலுங்
கெட, ஒ வொன்று தோன்றும்:-
(உ-ம்) மாத* உதகம்=பாதோதகம்
ஞான+ ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன் கங்கா+உற்பத்தி-கங்கோற்பத்தி தயா+ஊர்ச்சிதன்-தயோர்ச்சிதன்

Page 101
90 நன்னூல்
(3) விருத்திசந்தி
1. அ, ஆ வின் முன் ஏ, ஐ வரின், ஈறும் முதலுங்
கெட, ஐ யொன்று தோன்றும் :- (உ-ம்) லோக+ ஏகநாயகன்-லோகைகநாயகன்
V சிவ+ஐக்கியம்-சிவைக்கியம்
தரா: ஏகவீரன் = தரைகவிரன் மகா+ஐசுவரியம் = மகைசுவரியம் 2. அ, ஆ வின் முன் ஓ, ஒள வரின், ஈறும் முதலுங்
கெட, ஒள வொன்று தோன்றும். (உ-ம்) கலச+ஒதனம்-கலசெள தனம்
திவ்விய+ஒளடதம் = திவ்வியெளடதம் கங்கா +ஒகம் - கங்கெளகம் - மகா = ஒளதாரியம்=மகெளதாரியம் 36
மெய்யீற்றுப் புணரியல் முற்றிற்று

5. உருபு புணரியல்
1. உருபுகள்
எட்டுருபுகளுஞ் சாரும் இடவகையால் இத்தனையா மென்பது
240. ஒருவ னொருத்தி பலரொன்று பலவென
வருபெயரைந்தொடு பெயர்முத லிருநான் குருபு முறழ்தர நாற்பதா முருபே,
(இ-ள்) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என வரு பெயர் ஐந்தொடு - ஒருவனும் ஒருத்தியும் பலரும் ஒன்றும் பலவும் என்று கருத வரும் ஐந்து பெயரோடும்; பெயர் முதல் இரு நான்கு உருபும் உறழ்தர - எழுவாய் வேற்று மையான பெயர் முதல் விளி யீறாக நின்ற எட்டுருபு களையும் பெருக்க; உருபு நாற்பதுஆம் - வேற்றுமை யுருபுகள் நாற்பதாகும்.
(வ-று) நம்பி, சாத்தி, மக்கள், மரம், மரங்கள் என்னும் இவற்றுள், நம்பி,நம்பியை நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பியது, நம்பிகண், நம்பி என ஒருவ னென்னும் வாய்பாட்டுயர்திணையாண்பாற் பெயரோடு எட்டுருபுகளும் வந்தன. மற்றை நான்கு பெயர்களோடும் இப்படியே யொட்டுக.
வேற்றுமை யுருபுகள் வருதற்குக் காரணமும் வரு மிடமும்
241. பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே.
(இ-ள்) உருபு - வேற்றுமை யுருபுகள்; தம் பொருள் தர - தம் பொருளைக் கொடுக்க; பெயர்வழி வரும் - பெயர்க்குப் பின் வரும்.

Page 102
192 நன்னூல்
(வ-று) நம்பி பெற்றான், நம்பியைப் பெற்றான், நம்பியாற் பெற்றான் என வரும். மற்றவைகளும் இப்படியே. 2
ஐம் முதலிய ஆறுருபும் நிலைமொழி வருமொழியோடு புணருமாறு 242. ஒற்றுயிர் முதலீற்றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே. (இ-ள்) ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் - நிலை மோழியோடு வருமொழியோடும் புணரும் மெய் யுயிர் களை முதலும் ஈறுமாக வுடைய ஐம் முதலிய ஆறு உருபு களும்; புணர்ச்சியின் மன் ஒக்கும் - இடைச்சொல்லா யினும் இயல்பொடு விகாரத் தியையும் புணர்ச்சி வகை யாற் பெரும்பானும் ஒக்கும், வேற்றுமைப் புணர்ப்பு - போன இரண்டிய லுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், அப்பெயர் - இயல்பொடு விகாரத் தியைந்த மெய் யுயிர் முதலீற்றுப் பெயர்களை,
மன் என்றமையால், சிறுபான்மை ஒவ்வா வென்ப தாம். (உ-ம்) நம்பிகண் வாழ்வு-இங்கே "ஆவி யரமுன் வன்மை மிகா" என்றும் "ணனவல் லினம் வரட் டறவும் பிறவரி-னியல்புமாகும் வேற்றுமைக்கு" என்றுஞ் சொல்லியபடியே கண்ணுருபின் முதலு மீறும் இயல்பாயின. உறிக்கட்ட யிர் - இங்கே "இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்" என்றும், "ணனவல் லினம்வரட் டறவும்" என்றுஞ்சொல்லிய படியே. கண்ணுருபின் முதலு மீறும் விகாரமாயின. பழிக்கஞ்சி - இங்கே "இயல்யினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்' என்றும், 'முற்றுமற் றொரோவழி" என்றுஞ் சொல்லியபடியே, குவ் வுருபின் முதலு மீறும் விகாரமாயின.

உருபு புணரியல் 193
நம்பிக்குப் பிள்ளை-இங்கே "ஆவி யரமுன் வன்மை மிகா” என்ற விதி யொவ்வாமற் குவ்வுருபின் முதல் வல்லொற்று மிக்கது.
மற்றவையும் இப்படியே வருதலை ஆராய்ந் தறிக. 3
2. சாரியை
சாரியை வருமாறு
243. பதமுன் விகுதியும் பதமு முருபும்
புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை
வருதலுக் தவிர்தலும் விகற்பழு மாகும்.
(இ-ள்) பத முன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி - பதத்தின் முன் இறுதிநிலையாவது பதமாவது உருபாவது புணருமிடத்து; சாரியை ஒன்றும் (சாரியை) பலவும் - ஒரு சாரியையாயினும் பல சாரியையாயினும்: வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும் - வருதலும் வாரா தொழிதலும் இவ்விரண்டுமாகிய விகற்பமும் ஆகும். (உ-ம்) 1. நடந்தனன் எனவும், நடந்தான் எனவும், நடந்தன, நடந்த எனவும், விகுதிப் புணர்ச்சி யுட் சாரியை வேண்டியும் வேண்டாதும் வந்தன.
(உ-ம்) 2. புளியங்காய் எனவும் புளிக்கறி எனவும் நெல்லின் குப்பை, நெற்குப்பை எனவும் பதப் புணர்ச்சியுட் சாரியை அவ்வாறாயின.
(உ-ம்) 3. அவற்றை எனவும், தன்மை எனவும், ஆனை, ஆவை, எனவும் உருபு புணர்ச்சியுட் சாரியை அவ்வாறாயின.
(உ-ம்) 4. ஆவினுக்கு, மரத்தினுக்கு - இவைகளிலே
சாரியை பல வந்தன. 4.

Page 103
194 நன்னூல்
சாரியைகள் இவை யென்பது 244. அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிறவும் பொதுச்சா ரியையே. (இ-ள்) அன்.ன - அன் முதல் னகர மெய் யீறாகச் சொல்லப்பட்ட பதினேழும்; இன்ன பிறவும் - இவை போல் வன பிறவும் பொதுச் சாரியை - விகுதி பதம் உருடென்னு மூன்று புணர்ச்சிகளிலுந் தனி மொழிகளிலும் வருதலினாலே பொதுச் சாரியை யாகும்.
அன் - ஒன்றன்கூட்டம், ஆன்-ஒருபாற்கு, இன் - வண்டின் கால், அல் - தொடையல், அற்று - பலவற்றை, இற்று - பதிற்றுப் பத்து, அத்து - மரத்திலை, அம்மன்றம், தம் - எல்லார்தம்மையும், நம் - எல்லாநம்மை யும், நும் - எல்லீர் நும்மையும், ஏ - கலனே தூணி, அ - நடந்தது, உ - சாத்தனுக்கு, ஐ - ஏற்றை, கு- உய்குவை, ன் - ஆன் என முறையே காண்க.
இன்ன பிறவும் என்றதனால், தன் - அவன்றனை தான் - அவன்றான்; தாம் - அவர்தாம்; ஆம் - புற்றாஞ் சோறு ஆ - இல்லாப்பொருள்; து - செய்துகொண்டான் என்பனவும், இன்னும் வருவன உளவாயின் அவையுங் கொள்க. 5.
3. உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
245. எல்லா மென்ப திழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அன்றே னம்மிடை யடைந்தற் றாகும்.
(இ-ள்) எல்லாம் என்பது - எல்லா மென்னும்
பொதுப் பெயர்; இழிதிணை ஆயின் (இடை) அற்று உருபின் மேல் உம் உறும் - அஃறிணையில் வரும்போது அதனோடு ஆறு உருபுகளும் புணரின் இடையிலே அற்றுச்

உருபு புணரியல் 195
சாரியையும் உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; அன்றேல் இடைநம் அடைந்து அற்று ஆகும் - உயர் திணையில் வரும்போது இடையிலே நம்முச் சாரியை யடைந்து உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.
(உ-ம்) எல்லாவற்றையும், எல்லாநம்மையும் என வரும்.
மற்றை யுருபுகளோடும் இப்படியே யொட்டுக.
எல்லாநம்மையும்-உயர்திணைத் தன்மைப் பன்மை, இனி, இரட்டுற மொழிதலால், ‘இழிதிணையாய் இன்
அற்றோடு" எனக்கொண்டு, எல்லாவற்றினையும் என வருதலுங் கொள்க. 6
246. எல்லாரு மெல்லீரு மென்பவற்றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே.
(இ-ள்) எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை தள்ளி - ஆறு உருபும் புணருமிடத்து எல்லாரும் எல்லீரும் என்னும் இரு பெயர்களினுடைய இறுதியிலுள்ள முற்றும்மை களைத் தள்ளி; நிரல் தம் நும் சார - முறையே தம்முச் சாரி யையும் நும்முச் சாரியையும் அவை யிருந்த இடங்களிலே பொருந்த உம் உருபின் பின்னர்ப் புல்லும் - அவற்றினாலே தள்ளுண்ட முற்றும்மைகள் உருபுகளின் பின்னே வந்து பொருந்தும்.
(உ-ம்) எல்லார்தம்மையும், எல்லாரையும் எனவும்,
எல்லீர் நும்மையும், எல்லீரையும்
எனவும் விகற்பித்து வந்தன. மற்றை யுருபுகளோடும் இப்படியே யொட்டுக.
நந்தம்மை, நுந்தம்மை எனப் படர்க்கைக்குரிய தம்முச் சாரியை தன்மை முன்னிலைகளில் வருதல் 'ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே" என்னும் வழுவமைதி. 7

Page 104
196 நன்னூல்
247. தான் தாம் நாம் முதல் குறுகும் யான்யாம்
நீ நீர் என் எம் நின்நு மாம்பிற குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல.
(இ-ள்) தான் தாம் நாம் முதல் குறுகும் - தான், தாம், நாம் என்னும் மூன்று பெயர்களும் உருபுகள் புணருமிடத்து நெடு முதல் குறுகி முயையே தன், தம், நம் என வரும்; யான் யாம் நீ நீர் என் எம் நின் நும் ஆம் - யான், யாம், நீ, நீர் என்னும் நான்கு பெயர்களும் உருபுகள் புணருமிடத்து முறையே என், எம், நின், நும், எனத் திரியும்; குவ்வின் அவ்வரும் - இவ்வேழு பெயரோடு குவ்வுருபு புனருமிடத்து நடுவே அகரச் சாரியை வரும்; நான்கு ஆறு இரட்டல - குவ்வுருபின் அகரச் சாரியை வரினும் ஆறாம் வேற்றுமை உருபு உயிர்கள் வரினும் இவ்வேழு விகார மொழிகளினுறுதியிலுள்ள னவாகிய தனிக் குறில் முன்னொற்றுக்கள் இரட்டாவாம்.
(உ-ம்) 1. தான் + ஐ = தன்னை, தாம்+ஐ- தம்மை, நாம் +ஐ- நம்மை, எனவும், யான்+ஐ= எம்னை, யாம+ ஐ = எம்மை, நீ + ஐ = நின்னை நீர்+நு= நும்மை எனவும்வரும். ஒழித்த உருபு களோடும் இப்படியே யொட்டுக.
(உ-ம்) 2. தனக்கு, நமக்கு எனக் குவ்வுருபு புணருமிடத்து
அகரச் சாரியை பெற்றன.
(உ-ம்) 3. தனக்கு எனவும், தனது, தனாது, தன எனவும் அகரச் சாரியையும் ஆறாம் வேற்றுமை உருபு உயிர்களும் வந்தவிடத்துந் தனிக் குற்றொற்று இரட்டாவாயின.
பிற என்ற மிகையால், நீ, நீர், என்பன முறையே உன், உம் எனவுந் திரிந்து வருதல் கொள்க. 8

உருபு புணரியல் 197
248. ஆமா கோனவ் வணையவும் பெறுமே.
(இ-ள்) ஆ மா கோ - ஆ வென்னும் பசுவின் பெயரும் மா வென்னும் விலங்கின் பொதுப் பெயரும் கோ வென் லும் இறைவனை புணர்த்தி நிற்கும் பெயரும்; னவ் அணையவும் பெறும் - உருபுகள் புணருமிடத்து னகரச் சாரியை பொருந்தவும் பெறும்.
(உ-ம்) ஆனை, ஆவை, மானை, மாவை, கோனை
கோவை என விகற்பித்து வருதல் காண்க. மற்றை யுருபுகளோடும் இப்படியே ஒட்டுக. அனையவும் என்ற உம்மையால், குவ்வுருபு, புண ரும்போது ஆனுக்கு மானுக்கு, கோனுக்கு என உகரச் சாரியையும் உடன்பெறுதலும். ஆவுக்கு, மாவுக்கு, கோவுக்கு என உகரச் சாரியை யொன்றே பெறுதலும்.
ஆவினுக்கு, மாவினுக்கு, கோவினுக்கு, என இன் சாரியையும் உகரச் சாரியையும் உடன் பெறுத லும், ஆவினை, மாவினை, கோவினை, என இன்னுரு பொழிந்த உருபுகள் புணரும் போது இன் சாரியை பெறுதலுங் கொள்க.
இனி, இரட்டுற மொழிதலால், ஆமா என ஒரு சொல்லாய்க் காட்டுப் பசுவை யுணர்த்தி நின்ற விடத்தும்,
ஆமானை, ஆமானுக்கு, ஆமாவினுக்கு என இவ் விதிகள் பெறுதலும். அணையுமென் றொழியாது பெறும் என்றமையால். ஆன், மான், கோன், ஆமான் எனத் தனி மொழிக் கண்ணும் னகரச் சாரியை வருதலுங் கொள்க. 9

Page 105
198 நன்னூல்
249. ஒன்று முதலெட் டீறா மெண்ணுரர்
பத்தின்முன் னான்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடு மொன்பது மிற்றே.
(இ-ள்) ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர் பத்தின் முன் - ஒன்று முதல் எட்டீறாகிய எண்களோடு புணர்ந்த பத் தென்னும் எண்முன் உருபுகள் புணருமிடத்து; ஆன்வரின் - ஆன் சாரியை வருமாயின் பவ் வொற்று ஒழிய மேல் எல்லாம் ஒடும் - அப்பத் தென்னும் எண்ணி னது பகர மெய் யொன்றுமே நிற்க அதன் மேலே நின்ற எல்லாவெழுத்துங் கெடும்; ஒன்பதும் இற்று - ஒன்ப தென் லும் எண் முன்னும் உருபுகள் புணருமிடத்து ஆன் சாரியை வரின் அதன் பகர மெய் நிற்க மேலே நின்ற எல்லா வெழுத் துங் கெடும். (உ-ம்) ஒருபானை ஒருபதை, ஒருபஃதை எனவும்.
ஒன்பானை, ஒன்பதை, ஒன்பஃதை எனவும்.
விகற்பித்து வ ரு ம். மற்றவைகளோடும் இப்படியேயொட்டுக. ஒருபது, ஒருபஃது என விகாரப்பட்டு வரும் பத்தென் பார். எண்ணுார் பத்தென்றார்.
ஆன் வருதலைப் பராமுகமாகச் சொன்னமையால் உகரச் சாரியை இன் சாரியைகளும் வேண்டியவிடத்து வரு மெனக் கொள்க. 10 250. வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே.
(இ-ள்) வவ்விறு சுட்டிற்கு - வகர மெய்யீற்று மூன்று சுட்டுப் பெயர்களுக்கும் அற்று உறல் வழி - உருபுகள் புணருமிடத்து அற்றுச்சாரியை பொருந்துதல் முறையாம்.
(உ-ம்) அவற்றை, இவற்றை, உவற்றை என அற்றுச்
சாரியை வேண்டியே வருதல் காண்க.

உருபு புணரியல் 199
வழியே என்ற மிகையால் அவற்றினை, இவற்றினை, உவற்றினை என இன் சாரியை வருதலும், தனிக் குறில் முன் னொற்று உயிர் வரின் இரட்டாமையுங் கொள்க. ஒழிந்த உருபுகளோடும் இப்படியே யொட்டுக. 11
251. சுட்டின்முன் னாய்த மன்வரிற் கெடுமே.
(இ-ள்) சுட்டின் முன் ஆய்தம் - அஃது இஃது, உஃது என்னும் மூன்று சுட்டுப்பெயர்களில் அம்மூன்று சுட்டெ ழுத்துக்களின் முன்னின்ற ஆய்தம்; அன் வரின் கெடும் - உருபுகள் பிணருமிடத்து அன் சாரியை வரிற் கெடும்.
(உ-ம்) அஃது+ஐ-அதனை; அஃதை, இஃது+ஐ- இதனை, இஃதை, உஃது+ஐ= உதனை, உஃதை எனச் சாரியை விகற்பித்து வருதலும் வந்த வழி ஆய்தங் கெடுதலுங் காண்க. அன் சாரியை வருதலை நோக்கி ஆய்தங் கெட்ட வழி, அது, இது உது என ஆய்த மில்லாச் சுட்டுப் பெயர் களாய்ப், பின்பு அன் சாரியை பெறுதலால், ஆய்தமில்லாச் சுட்டுப் பெயர்களுக்கும் அதுவே விதியெனக் கொள்க.
அன் வருதலைப் பராமுகமாகக் கூறலால், குவ்வுருபு புணரும்போது அதற்கு என அன் சாரியை தனித்து வரு தலேயன்றி அதனுக்கு என உகரச் சாரியையுடன் வருதலுங் கொள்க. l2
252. அத்தி னகர மகரமுனை யில்லை.
(இ-ள்) அத்தின் அகரம் - அத்துச் சாரியையினது அகர வுயிர்; அகர முனை இல்லை - இயல்பினும் விதியினும் நின்ற அகர வுயிரீற்றின் முன் வரின் வகர வுடம்படுமெய் பெறாது கெடும்.
(உ-ம்) மக+ அத்து+கை = மகத்துக்கை, மர+ அத்து
+ குறை= மரத்துக்குறை என இரண்டு அகர வீற்றின் முன்னுங் கெட்டது. 13

Page 106
200 நன்னூல்
4. புறனடை
1. சாரியைக்குப் புறனடை
253. இதற்கிது சாரியை யெனினள வின்மையின் விகுதியும் பதமு முருபும் பகுத்திடை நின்ற வெழுத்தும் பதழு மியற்கையும் ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே.
(இ-ள்) இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மை யின் - விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இதற்கு இது சாரியையென்று அளவு செய்து விதித்தனவற் றுள்ளும் ஒழிந்தனவற்றுள்ளுந் தனித்தனி சொல்லப் புகின் அளவு படாமையால்; விகுதியும் பதமும் உருபும் பகுத்து - விகுதிப் புணர்ச்சியையும் பதப் புணர்ச்சியையும், Ք-(U5ւմ புணர்ச்சியையுங் கண்ட விடத்துப் பகுத்து; இடை நின்ற எழுத்தும் பதமும் - நடுவே நின்ற ஏகாரம் அகரம் முதலிய எழுத்துச் சாரியையினையும்; அன், ஆன் முதலிய பதச் சாரியையினையும்; இயற்கையும் - இவ்விரண்டு சாரியையுந் தோன்றாத இயல்பினையும் ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி - தெரிய அறிவித்தல் பெரியோரது கடனாகும்.
(வ-று) 1. 'ஆன நெய் தெளித்து நான நீவி' என விதித்த பொருட் புணர்ச்சிக்கண், 'உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்' என்ற மாட்டேற்றால் அமைந்த னகர மெய்ச் சாரியை யன்றி, அகரச் சாரியையும் உடன் வந்தது.
(வ-று) 2. இனி விதியா தொழிந்தவற்றின் கண், பாட்டின்
பொருள் எனக் குற்றியலுகரத்திற்கு இன் சாரியை வந்தது.

உருபு புணரியல் 20 Ι.
(வ-று) 3. தன் கை, என் கை எனச் சாரியை யின்றி
இயல்பாக வந்தன.
இப்படியே மூவகைப் புணர்ச்சிகளையும் பகுத் துணர்ந்து கொள்க. l4
2. நான்கு புணர்ச்சிக்கும் புறனடை
254. விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே.
(இ-ள்) விகுதி பதம் சாரியை உருபு அனைத்தினும் - விகுதியும் பதமுஞ் சாரியையும் உருபும் ஆகிய நான்கின் புணர்ச்சியினிடத்தும்; உரைத்த விதியின் ஒர்ந்து - பொதுப் படச் சொல்லப்பட்ட விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த் துணர்ந்து; ஒப்பன கொளல் - எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ் விதியே அதற்குக் கொள்க.
(வ-று) 1. விகுதிப் புணர்ச்சியுள், 'றவ்வொ டுகர வும்மை நிகழ் பல்லவும்' எனப் பொதுப்பட விதித்தாரேனும், விதியுள தென்று நினைந்து, இவ்விகுதி வந்த விடத்தெல்லாம் இவ்விரண்டு காலமும் பொருந்தும் என்று கொள்ள ற்க; சென்று, சென்றும் என்ற விடத்து இறந்த காலமும், சேறு, சேறும் என்ற விடத்து எதிர் காலமும் பொருந்தும் என்று கொள்க.
(வ-று) 2. பதப் புணர்ச்சியுள், "அல்வழி இ ஐம் முன்ன ராயினியல்பு மிகலும் விகற்பமு மாகும்' எனப் பொதுப்பட விதித்தாரேனும் விதியுள தென்று நினைந்து ஆடி திங்கள் குவளை கண் என இயல்பா மென்றும், பருத்திக்குறிது, யானைக் குதிரை என மிகுமென்றுங் கொள்ளற்க:

Page 107
202
(வ-று) 3.
(வ.று) 4.
நன்னூல்
பருத்திகுறிது என எழுவாய்க் கண்ணும், யானைகுதிரை என உம்மைத்தொகைக் கண்ணும் இயல்பா மெனவும் ஆடித்திங்கள் எனப் பண்புத்தொகைக்கண்ணும் குவளைக் கண் என உவமைத் தொகைக்கண்ணும் மிகு மென வுங் கொள்க.
சாரியைப் புணர்ச்சியுள் 'பதமுன் விகுதியும் பதமு முருபும் புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும்" எனப் பொதுப்பட விதித்தாரேனும், விதி யுள தென்று நினைந்து நாட்டினினிங் கினான் என இன் னுருபிற்கு இன் சாரியை வருமென்றும், நாட்டுக்கணிருந்தான் எனக் கண்ணுருபிற்கு இன் சாரியை வாரா தென்னுங் கொள்ள ற்க; நாட்டின்க ணCருந்தான் எனக்
கண்ணுருபிறகு இன் சாரியை வருமென்றும்,
நாட்டி னிங்கினான் என இன் னுருபிற்கு இன் சாரியை வாரா தென்றுங் கொள்க.
உருபு புணர்ச்சியுள், "ஒற்றுயிர் முதலிற் றுருபுகள் புணர்ச்சியி னொக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே' எனப் பொதுப்பட விதித்தாரேனும், விதியுள தென்று நினைந்து நம்பிகு என உயிரீற்று உயர்திணைப் பெயர் முன்வந்த குவ் வுருபு மிகா தென்றும், நம்பிக் கண் என மன் னென்றமையாற் கண் ணுருபு மிகு மென்றுங் கொள்ளற்க; நம்பி கண் எனக் கண் ணுருபு மிகா தென்றும்; நம்பிக்கு எனக் குவ்வுருபு மன்னென்றமையால் மிகு மென்றுங் கொள்க.
மற்றவைகளும் இப்படியே காண்க, ls

உருபு புணரியல் 203
3. வேற்றுமைப் புணர்ச்சிக்குப் புறனடை
255. இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவுமாகுமை யுருபே (இ-ள்) இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும் - வேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த பொது விதியோடு தானும் ஒருங்கு முடிதலே யன்றியப்படி விதித்த இயல்பிலே விகாரமாகியும் விகாரத்திலே இயல்பாகியும்; உயர்திணை யிடத்து விரிந்துந்தொக்கும் - உயர்திணைப் பெயரிடத்து வெளிப்பட்டும் மறைந்தும்; விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும்-பொதுப் பெயரிடத்து வெளிப்பட்டும் மறைந்தும் அன்ன பிறவும் ஆகும் - அவை போல்வன பிற வேறுபாடு களாகியும் வரும்; ஐ யுருபு - இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி. (வ-று) 1. வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப எனவும் மகட் கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான், தாய்க் கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் எனவும் இயல்பாக வேண்டிய விடத்து விகாரமாயிற்று. (வ-று) 2. கனி தின்றான், வரை பிளந்தான், பந்து தந் தான் எனவும், மண் சுமந்தான், பொன் கொடுத் தான் எனவும், காய் தின்றான்,தேர் செய்தான், தமிழ் படித்தான் எனவும், பால் குடித்தான், வாள் பிடித்தான் எனவும், வரம் பெற்றான், செய முற்றான், மரம் வெட்டினான் எனவும் விகாரமாக வேண்டிய விடத்து இயல்பாயிற்று. இவ்விகாரத்து இயல்பு வருமொழி வினையாய விடத்தெனக் கொள்க. வருமொழி வினையாகாது பெயரேயாக இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க ந.-14

Page 108
204
.3 (D۔6J)
(வறு) 4.
நன்னூல்
தொகையிலே வேற்றுமைக்கென விதித்த பொதுவிதியோடு ஒருங்கொத்து விகாரத்தில் விகாரமாகும். மண் கூடை, புண்கை என ண்கர் ஈறு இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையிலும் இயல்பாம். மண் சுமந்தான் என்பது, மண்ணைச் சுமந்தான் என விரிதலால் இரண்டனுருபு மாத்திரந் தொக்க தொகை. மண்கூடை என்பது, மண்ணையுடைய கூடை என விரிதலால், உருபும்பயனும் உடன்தொக்க தொகை, கற்கறித்தான், கட்குடித்தான் எனத் தனிக் குறிலைச் சார்ந்த லகர ளகரம் வரு மொழி வினையாய விடத்தும், வேற்றுமைப் பொதுவிதி யேற்றல் காண்க. . நம்பியைக் கொணர்ந்தான், அரசனை வணங்கி னான் என உயர்திணைப் பெயரிடத்தே விரிந் தது. ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறியுஞ்சொல், நான்முகற் றொழுது
என உயர்திணைப் பெயரிடததே தொக்கது.
கொற்றனைக் கொணர்ந்தான் எனப் பொதுப் பெயரிடத்தே விரிந்தது. ஆண் பெற்றாள், பெண் பெற்றாள் எனப் பொதுப்பெயரிடத்தே தொக்கது.
அன்ன பிறவும் என்றதனால், தற்கொண்டான்" எற்பணியாள் என உறழ வேண்டிய விடத்துத் திரிந்தே வருதலும், விளக்குறைத்தான் என இன மெல்லெழுத்து மிக வேண்டிய விடத்து வல்லெழுத்து மிகுதலும், மரங் குறைத்தான் என மவ்வீறு கெட்டு வல்லெழுத்து மிக வேண் டியவிடத்து மகரம் இன மெல்லெழுத்தாகத் திரிதலும், மாடு கொண்டான், பயறு தின்றான் என ட, ற, ஒற்றிரட்ட வேண்டிய விடத்து

உருபு புணரியல் 205
இரட்டாமையும், மருந்து தின்றான் என மென் றொடர் வன்றொடராக வேண்டிய விடத்து அ ங் ங் ன மாகாமையும், வேறொட்டான், தாடொழுதான் என லகர வாகரந் தகரம் வரத் திரிய வேண்டிய விடத்துக் கெடுதலும், குரிசிற் றடிந்தான், அவட்டொடர்ந்தான் என உயர் திணைக்கண் கெடாது திரிந்து நிற்றலும், பிறவுங்கொள்க.
இன்னும், எண்ணின்கண் நின்ற இறந்தது தழி இய இழிவு சிறப்பும்மைகளால், வேற்றுமைக் கென விதித்த பொது விதியோ டொருங் கொத்து, தெள்கு பிடித்தான், எஃகு தொடுத் தான், நாகு கட்டினான், வரகு தந்தான் என இயல்பில் இயல்பாகியும், மகப் பெற்றான், பலாக் குறைத்தான், வடுப பெற்றான், சுக்குத் தின்றான், பூத் தொடுத்தான், சேப் பெற்றான் கோக் கறந்தான் என வருமொழி வினையாய விடத்தும் விகாரத்தில் விகாரமாகியும் வருதலே பெரும்பாலனவென்க. 16
256. புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
றம்மி னாகிய தொழின்மொழி வரினே வல்லினம் விகற்பமும் மியல்பு மாகும்.
(இ-ள்) புள்ளியும் உயிரும் ஆய் இறு சொல் முன்மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியுள் ஒற்றும் உயிரும் இறுதியாக நின்ற சொற்களின் முன்; தம்மின் ஆகிய தொழில் மொழி வரின்-கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என் பவற்றுட் கருத்தாவாகிய நிலைமொழிப் பொருள்களாகிய தொழிற் சொல் வந்தால்; வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும்-அவ்விடத்து வரும் வல்லினம் வேற்றுமைப் பொது முடிபேலாது உறழ்ச்சியும் இயல்பும் ஆகும்.

Page 109
206 தன்னுரல்
இவ்விதியும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி போல ஒப்பன கொள்க.
(வ-று) 1. பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான்; சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான் புலி கோட்பட்டான், புலிக்கோட்பட்டான் என வல்லினம் ஒருகால் மிகுந்தும் ஒருகா லியல் பாயும் விகற்பித்தன.
(வ-று) 2. பேய் பிடிக்கப்பட்டான், புலி கடிக்கப்பட்டான்
என வல்லினம் இயல்பாயின.
உம்மையால் அராத் தீண்டப்பட்டான், சுறாப் பாயப்பட்டான் என வேற்றுமைப் பொதுவிதி யால் மிக்கு முடிவனவே பெரும்பாலன வென்க. 17
4. எழுத்ததிகாரத்துக்குப் புறனடை
257. இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் யாதவும் வகுத்தனர் கொளலே.
(இ-ள்) இதற்கு இது முடிபு என்று - இதற்கு இது முடி பென்று; யாவும் எஞ்சாது விதிப்ப - இவ்வதிகாரத்துள் விதிக்கத் தகுவனவற்றை யெல்லாங் குறையாமல் தனித் தனி அளவு செய்து விதிக்கப் புகின்; அளவு இன்மையின் - அதற்கு ஒரள வில்லாமையால்; விதித்தவற்று இயலான் - வகுத்து விதித்தவற்றினுடைய இலக்கணங்களை ஏதுவாகக் கொண்டு; வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளல் - வகுத்து விதி யுரையாதனவற்றையுங் கருதலளவையால் வகுத்து விதியுரைத்துக் கொள்க.

உருபு புணரியல் 207
விதிப்ப எனற்பாலது அகரங் குறைந்து நின்றது.
(வ-று) 1. எழுத்தியலுள், "மொழிமுதற் கார ண மாமனுத்திரளொலி யெழுத்து" என உரைத்த மையால், "கட்புலனில்லாக் கடவுளைக்
காட்டுஞ் சட்டகம் போலச் செவிப்புல வொலியை யுட்கொளற் கிடுமுரு பாம்வடி வெழுத்தே" எனப் பிறர் கூறியவாறு இவ் வொலிவடிவைக் காட்டுதற்கு ஒர் கருவியாக எழுதிக்கொள்ளப்பட்டது வரிவடிவெழுத் தெனக் கொள்க.
(வ-று) 2. பதவியலுள், 'அன் ஆன் அள் ஆள்" என்னுஞ் சூத்திரத்திலே முறையே அன், ஆன் விகுதி ஆண்பாற்கென உரைத்தமையால், பெருமாள் என்னும் ப த ம் பெருமையை யுடையா னென்னும் பொருள் தோன்ற நின்ற பெருமான் என்னும் பதத்தினது ஆன் விகுதி ஆள் விகுதி யாக ஒரோ விடத்தே திரிந்து ஆண் பாலையே யுணர்த்தி நின்ற தெனக் கொள்க.
(வ-று) 3. உயிரீற்றுப்புணரியலுள், "இயல்பினும் விதி யினும் நின்ற வுயிர்முன் க ச த ப மிகும்" என்று சொன்னமையால், “ணனவல் லினம் வரட் டறவும்" என்ற விடத்து டகரமும் வல்லின மாதலின் மிகுந்த தெனக் கொள்க.
(வ-று) 4. மெய்யீற்றுப் புணரியலுள், 'நும் தம் எம் நம் மீறா மவ்வரு ஞநவே' என உரைத்தமையால், அம் மென்னும் சொல் லி று தி மகரமும் குற்றொற் றாதலின் தன்னொடு மயங்காத மெல்லினம் வரின் அதுவாய்த் திரிந்து அந்தலம் என அழகினது நல மென்னும் பொருளதாய் வருமெனக் கொள்க.

Page 110
208 நன்னூல்
(வ-று) 5. உருபு" புணரியலுள், "வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே" என உரைத்தமையால், அது போலும் வினாவும் எவற்றை என அற்றுச் சாரியை பெறுமெனவும், இரண்டாம் வேற்று மைக்கும் மூன்றாம் வேற்றுமைக்கும் புறனடை யுரைத்தமையால், ஏழாம் வேற்றுமையும் “வரைபாய் வருடை', 'மண்புகுந்தும் விண் பறந்து மாலுமயனுங் காணா வொருபொருள்" என வேற்றுமைப் பொதுவிதி யேலாது சிறு பான்மை வருமெனவுங் கொள்க.
இன்னும், இவ்வைந்தியலுள்ளும் வகுத்துரையாத
வற்றையெல்லாந் துன்பப்படாது இதுவே இடமாக முடித்துக் கொள்க. 18
உருபு புணரியல் முற்றிற்று
எழுத்ததிகாரம் முற்றுப்பெற்றது

நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை
எண்-நூற்பா எண்)
9ے அ ஆ உ ஊ 104 அ ஆ எ ஒவ் 105 அ இ உம் முதல் 66 அஐ முதல் இடை 12 அகமுனர்ச் செவிகை 222 அடிநா வடிஅணம் , 82 அண்ண நுனிநா நனி 83
அண்ணம் நுனிநா-வருட 86
அண்பல் அடிநா 80 அண்பன் முதலும் 84 அது முன் வரும் 80 அத்தின் அகரம் 252 அம்முத லீராறு 63 அம்முன் இகரம 12 அரிதிற் பெயக் 34 அல்வழி இ ஐம் 176 அல்வழி ஆமா 171 அவற்றுள், அ இ உ 64 அவற்றுள் ஏழாம் 147 அவற்றுள் முயற்சி 76
அவற்றுள், வினையின் 6
அல்வழி ஆமா 171 அவ்வழி, ஆயிடை 75 அவ்வினை யாளரொடு 45 அழலி னிங்கான் 46 அளக்க லாகா 28 அறம் பொருளின்பம் 1 O அன் ஆன் அள் ஆள் 140 அன் ஆன் இன் அல் 244
17.3 38
அன்றி இன்றி
அன்னம் ஆவே
Rگے ஆ ஈ ஊ ஏ 65 ஆக்கியோன் பெயரே 47 ஆசானு ரைத்தது 44 ஆநின்று கின்று 148 ஆமா கோனவ் 24& ஆமுன் பகர ஈ 177 ஆயிர முகத்தான் 54 ஆய்தக் கிடந்தலை 87 ஆவி ஞண நமன. 107 ஆவி ய ர ழ 161 ஆவியும் ஒற்றும் 101 ஆற்றொழுக்கு 19
இ
இ ஈ எ ஏ ஐ 77 இ ஈ ஐ வழி 162 இசைகெடின் 9. இடுகுறிகாரணப் 62 இடைச்சொல் 20 Ι இடைத்தொடர் 丑8& இடையினம் 70 இடை யினான்கும் 148 இடையுரி 239 இணைந்தியல் காலை 149 இதற்கிது சாரி 253 இதற்கிது முடிபு 257. இயல்பினும் விதி 165 இயல்யின் விகார 255 இயல்பெழு மாந்தர் 100 இரண்டு முன்வரின் 98

Page 111
210
இருவர் நூற்கும் இலக்கியங் கண்டு இல்லெ னின்மை
R ஈதலி யல்பே ஈமுங் கம்மும் ஈறு போதல் ஈற்றியா
உ ஊ ஒ ஓ ஒள உ ஊ ஒ ஓ வல உடன் மேலுயிர் உயிரு முடம்பும் உயிர் மவி லாறும் உயிர்மெய் யாய்தம் உயிர்மெய் யிரட்டு உயிர்வரினுக்குறள் உரத்தின் வளம் உரிவரி னாழியின் உருபின் முடிபவை
GT எகர வினாமுச் எடுத்தல் படுத்தல் எட்டனுடம்பு எண்ணிறை எண்பெயர் எண்மூவெழுத் எயா முதலும் எல்லாமென்பது எல்லாரு மெல்லீரும் எழுத்தே தனித்தும் எழுவகை மதமே
ஐ ஒள இ உச் ஐகான் அவ்வழி
124
நன்னூல்
ஐந்த னொற்று 192 யர் ப் 29 டேக் 185.
9 . ஒருகுறி கேட்போன் 41 ஒருநெறி இன்றி 17 ஒருபஃதாதி 196. ஒரு புணர்க்கு 157 ஒருமொழி மூவழிக் 盟56 ஒருவன் ஒருத் 240 ஒற்றுயிர் முதலீற் 24l ஒன்ப தொழித்த 199 ஒன்பானொடு 194 ஒன்றன் புள்ளி 189 ஒன்றுமுத லீரைந்து 197 ஒன்றுமுத லெட்டு . 249 ,
79 க ங் வள் ச ம் エ 9 F 2දී நிேத்த 110. கருத்துப் பதப் பொருள் 22 களிமடி மானி , ,: 89፡
கா காலங் களனே 48
கீழின் முன் 226,
(5 יא குலனரு டெய்வம் 26 குயினுான் வேற் 216 குறியதன் கீழாக் 172. குறியதன் முன்னர் 90 குறிலணைவில்லா 210 குறில் செறியாலள 229
குறில் வழி லள 328。

நூற்பா முதற்குறிப்பு
குற்றுயிரளபின் 108 குன்றக் கூறல் 2
கோ கோடன் மரபே 40
ங் ஞ ண ந மன 92 ங் ம் முன் கவ்வாம் 1ll
f சாதி குழு உப் 2I சாவவென 169
G Gର a
ல்வகை யெழுத்தில் 8 சிறப்பினும் இனத் 73
r
சுட்டியா வெகர 106 சுட்டின் முன் 251 சுட்டுவகரம் 235 சுருங்கச் சொல்லல் 13 சுவைப்புளி 175
(es சூத்திரத்துட் பொருள் 23
செ செம்மை சிறுமை I35 செய்யிய வென் 167 செய்யென் வினைவழி 138 (S5 ஞணநம லவளன 2O7 ஞந முன் றம்மினம் 2
21.
டறமுன் கசப 113
6t ணனமுன் னினம் 14 ணன முன்னும் 96 ணன வல்லினம் 209
活 தடற வொற்றின்னே 142 தத்தம் பகாப்பத 134 தமிழவ் வுறவும் 225 தம்பெயர் மொழியின் 121
தற்சுட்டள பொழி 勢5 தனிக்குறின் 205 தன் மகனாசான் 37 தன்னா சிரியன் 5. தன்னென் என் 28 தன்னொழி மெய் 2O6
தா தானம் முயற்சி 72 தானே தரக் さ;5 தான் தாம் 247
தி திசையொடு திசையும் 186
தெ தெங்கு நீண்டு 187 தெரிவரும் 27 தெவ்வென் மொழியே 236
தே தேன் மொழி 24

Page 112
212
தொ தொகுத்தல் விரித்தல் தொல்லை வடிவின
தோ
தோன்ற நிரிதல் தோன்றா தோற்றி
நடவாமடி
நவ்விறு தொழிற்
15师 நான்கன் மெய்
曲 நிறையுயிர் முயற்சி நின்ற நெறியே
நுதலிப் புகுதல் நுந்தம், எம் நம் T நுலி Eயல்பே
லே நுவல்வோன்
லியல்பே தூற்பொருள் வழக் நெ
நெடிலோ டாய்தம் நெடிலோ டுயிர்த் நெல்லுஞ் செல்லும்
நே நேரின மணியை
50 98
154
52
137 208
191
74 109
14 221
4l
15
94 183 232
16.
நன்னூல்
பகாப்பத மேழும் 180 பகுதி விகுதி 133 பகுப்பாற் பயனற் 131 பஞ்சிதன் சொல்லா 24 பதமுன் விகுதியும் 143 பலசில வெனும் 270 பல்வகை யுதவி 。5 பவ்வமூ விடத்து l44 பவ்வீ நீ மீ 176 பனை முன் 203 பன்னிருயிரும் O2 LT பாடங் கருத்தே 21 பாயிரம் பொதுச் 2
பிண்டம் தொகை 20
니 புள்ளியு முயிரும் 256 புள்ளிவிட் டவ்வொடு 89 புள்ளும் வள்ளும் 234
马 பூப்பெயர் முன் 200 பூமலியசோகின் 56.
பெ
பெயர்வழித்தம்பொருள்
241 பெய்த முறை 33
GouT பொதுப் பெயர் 159 பொருளிடம் 132

நூற்பா முதற்குறிப்பு
மகர விறுதி மங்கல மாகி மம்முன் பயவ மரப்பெயர் முன்னர் மரமல் லெகின்
122 30 115 166
215
மலர்தலை உலகின் சி.பா.
மவ்வீ றொற்றழிந் மன்னுடை மன்றத்து
. . ԼԴ):
மாடக்குச் சித்திரமும்
f
மின்பின்பன்
i
மீகிழ் இதழுற மீன்றவ் வொடு
(p முகவுரை பதிகம் முக்காற் கேட்பின் முதலிரு நான்காம் முதல்வழி சார்பென முதனுால் கருத்தன் முன்னோர் நூலின் முன்னோர் மொழி
ep
மூன்றனுறுப்பழிவு மூன்றாறு உருபுஎண் மூன்று யிரள பிரண்
2丑9
53
55
217
81 213
190
179
99
மெ. மெய்க ளகரமும் மெய்யுயிர் முத மெல்லினம் மென்றொடர்
Gun மேற்பல் லிதழுற
மொ
மொழிகுணம்
மொழி முதற் மொழியாய்த்
யகரம் வரக்
யரழமுன்னர்க் கசதப யரழ முன்னர் மொழி யரழ வொற்றின்
ரவ்விற் கம்முதல் ர ழ வல்லன
6 லளமுன் கசப லளமெய் திரிந்த லளவிறு தொழிற் லளவீற் றியை லள வேற்றுமை
6
வலித்தன் மெலித் வல்லினம்
2及零
I25・
I5 I 69
184 لـ ، ،
&5・
3I
58"
27
94
224。
116 19.
48 118.
117 120
230
97
227
155 68.

Page 113
2丑会
வல்லே தொழிற் வவ்விறு சுட்டிற் வன்றொடர் அல்லன
s
வாழிய வென்பதன்
வி
விகார மனைத்து
விகுதி பதஞ் சாரி விளம்பிய பகுதி
23.
250 181
168
I53
254 139
நன்னூல்
வே வேற்றுமை மப் 220 வேற்றுமை யாயின் 202 வேற்றுமை யைம் 52
றவ்வொடு உகர 145 ற ன ழ எ ஒவ்வும் 150
s னஃகான் கிளைப் 212 னலமுன் றனவும் 237


Page 114


Page 115
எமது நூல்கள் தமிழ் இலக்கணம் பழமொழி நானூறு நன்னூல் காண்டிகையுரை தொலகாப்பியம் எழுத்து இளம்பூ நாலடியார் முத்தொள்ளாயிரம் நந்திக் கலம்பகம் காளமேகம் தனிப்பாடல்கள் ஒளவையார் தனிப்பாடல்கத் பாஞ்சாலி சபதம் கைவல்ய நவநீதம் செல்வப் பெட்டகம் டாக்டர் அம்பேத்கார் அருட்சுடர் வள்ளலார் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ண புத்தர் போதனைகள் நாலாயிரம் பழமொழிகள் தில்லைத் திருநடனம் கண்ணனின் காதல் ஒவியம் தமிழ்ச் சான்றோர்கள் நம்பியகப்பொருள் கல்லாடம்
தமிழ் வழிபாடு
முல்லை நிலைய
43. புதுத் தெரு, மண்ண
சென்னை-600 001.