கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனை நூறு

Page 1
து
றிய
இய
 

|றிப்
கவிதைகள்'
LSLSSSLSLSYYL LSLSLSLLLLLSLSSSLLLLS ஹொன்னம்பலம்

Page 2

சிவமயம்
ச. சு. பொன்னம்பலம் அவர்கள்
இயற்றிய
III II
தமிழவேள் இக, கந்தசுவரி தமிழ்த்துல் ற ஆசீசியர்
ভপbঙভ3
(பிரதிஉரிமை ஆக்கியோனுக்கே)
விலை ரூபா 6.10

Page 3
முதற்பதிப்பு 1981
வெளியிடுபவர்:
ச. சு, பொன்னம்பலம் 81, செட்டித் தெரு
கல்லூர் யாழ்ப்பாணம்
6S
பூரீ நிரஞ்ஜளு அச்சகம் நல்லூர்

முகவுரை
கற்பகதருவாகிய பனை மரத்துக்குப் பல நூல்கள் இருக் கின்றபொழுதும் நிலைக்கக்கூடிய நூலொன்றும் இல்லாமை கண்டு, இந்தச் சிறியதுா?ல 'பனை நூறு' என்னும் மகு டத்தோடு நூறு பாக்களால் யாத்துள்ளேன். பெரிய நூலாகச் செய்தால் அதிகமானவர்கள் வாசிப்பதற்கு வாய்ப்புப் பெறமாட்டார்கள் என்பதஞலேயே இந்த அள வைக் கைக்கொண்டேன்.
தமிழரின் கொள்கை ஆடவருக்கு வீரமும், பெண்க ளுக்குக் கற்புமே ஆகும். தமிழர் காதல் மணத்திலேயே நம்பிக்கை உடையவர்கள் என்பதை கோவை என்னும் இன நூல்கள் விளக்குகின்றன. கோவை என்பதை கா தற் சாத்திரம் என்று கூறலாம். கோவை நூல்களைச் சாதாரணமானவர்களால் படித்தறிய முடியாதாகையால் இந்த நூலிற் காதற் கட்டங்களில் முக்கியமான சில வற்றைக் கூறியுள்ளேன்.
கவியின்பத்தைக் கற்ருேருக்கு மாத்திரமின்றி மற்ருே ருக்கும் கொடுக்க வேண்டுமென்று இலகுவான தமிழில் செய்யுட்களை யாத்ததுமன்றி அவற்றினுள் அகப்பொருட் சுவையையும் வைத்துள்ளேன். வள்ளுவர் உண்மை கண்பும் கொள்கைகளையும் இரண்டடிப் பாக்களால் கூறியுள்ளார். பலருக்கு இரண்டடிப்பா எடுத்துக்காட்டாகக் கூறுவதற்கு கூடிவிட்டது. ஆகையால் இந்த நூலில் சில பாக்களின் கடைசி அடியில் கொள்கைகள் உண்மைகளை அமைத்துள் ளேன். எடுத்துக்காட்ட விரும்புகிறவர்களுக்குச் சுலபமா கும்
இந்தநூலிற் காணப்படும் பர்க்களில் அநேகமானவை இசைப்பாக்களாகும். மனனம் பண்ணி பாடிப்பாடி மகி
முக்கூடியவை.

Page 4
பனை எமக்குச் செல்வத்தையும் இன்பத்தையும், பலத் தையும், ஞானத்தையும் தருகின்றது. இவற்றை இந் நூலை வாசிப்பவர்கள் நன்றக் விளங்க முடியும், அறிஞர் களுக்கு இன்பத்தைப் பெருக்குவதற்காக, சில செய்யுட் களுக்கு அரிய அலங்காரங்களும் அமைத்துள்ளேன்.
வாழ்க பனை நாடு
இங்ஙனம் ச; சு. பொன்னம்பலம் (அரசாங்கத்திற்குத் தமிழ்ச்சேவை செய்து ፲ 4-] 2-79 ஓய்வு பெற்றவர்)

மதிப்புரை
--会<>令-一*
யாழ் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக்கழகத் தலை வரும், முன்னுள் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக்கலா
சாலை அதிபரும், வல்வை சிதம்பராக் கல்லூர் அதி
பரும், இலங்கை கல்விச் சேவையிலிருந்து
ஒய்வு பெற்றவருமாகிய SU5. Sà. Sào (555Tg5sšt M.A., Dip-In-Ed. அவர்கள் வழங்கியது,
சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பிலே முதலியார் பொன்னம்பலம் அவர்களை அறியாதவர் எவருமில்லை, சென்ற இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலத்திலே அரசியல் சேவையில் மிக முக்கியமானதும் உயர்ந்ததுமாகிய சிறந்த பதவியை வகித்து அக்கால அரசினரதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெரி தும் பெற்றிருந்தார்,
இதனினும் சிறந்தது அவர் அக்காலத்தில் புரிந்த அரும்பெரும் தமிழ்த் தொண்டாகும். அன்னச் இன்று பெருமிதத்தோடு விளங்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தைத் தேர்ற்றுவிப்பதிலும், வளர்ப்பதிலும் எடுத்த முயற் சியும் கண்ட வெற்றியும் அக்காலத்தில் அங்கிருந்த எம் போன்றவர்களே நன்கு அறிந்து போற்றுவர்.
அரசுப்பணியிலிருத்து ஓய்வுபெற்றபின் கொழும்பி லிருந்துகொண்டே தமிழுக்கும் தமிழ்ப்பெருங் குடிமக்க ளுக்கும் தம்மாலான பணிகளைச் செய்து வந்தார். சில ஆண்டுகளின் முன் பிறந்த ஊராகிய யாழ்ப்பாணத்தில் வாசஞ்செய்யத் தொடங்கிய நாள்முதல் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைக்கிரங்கி, வருந்தி, தமிழ்மக்களின் பொருளாதார கபீட்சத்துக்குரிய வழிவகை களைச் சிந்திப்புாராயினர். அங்ங்ணம் எழுந்த சிந்தனைகளை அவ்வப்போது மக்களோடு கலந்துரையாடி வெளியிட்டு வருங்கால், எங்கள் செல்வச் சுரங்கமாகிய கற்பக தரு

Page 5
iv
பனைமரத்தைப் பாராட்டி, தமிழன் தான் இழந்த உன் னத நிலையை மீண்டும் அடைய வேண்டுமானல் அவன் பனைமரத்தைத் தழுவவேண்டும் என்ற கருத்தை மிகவும் தெளிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
பெரியாரின் ஆழ்ந்தகன்ற சிந்தனையில் விளைந்ததே 'பனை நூறு” என்னும் இச் சிறு நூலாகும். சொல் அள விற் சிறிதாயினும் பொருள்வளத்திற் பெரிதாகிய இந்நூல் எல்லா நலன்களும் கொண்டு மிளிர்கிறது. தமிழ் இலக் கண மரபு தழுவி இயற்றப்பெற்ற இந்நூல் இலக்கிய தயங்கொண்டு கற்ருேர்க்கு நல்விருந்தாக அமைவதோடு நின்றுவிடாது எங்கள் சமுதாயம் எதிர்காலத்தில் பொரு ளியல் வளம்பெற வேண்டி யுழைப்பார்க்கு ஒரு கைநூ லாகவும் துணை செய்கின்றது.
பனையைப்பற்றிய பல நூல்கள் வெளிவந்துளவேனும் இந்நூல் பல சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றது. காந்தி படிகள் பசுவைத் தாய் என்றழைத்ததுபோல, இப் பெரி யார் பனையைத் தாய் என்றழைப்பது, இவர் அதற்கு வழங்கும் சிறப்பைக் குறிக்கின்றது, "ஒண் கைகளினிற் றேங்கும் ஒலையாயின எல்லாம் சிரமேத்தி ஏங்கிச் செய் யும் ஈறில் தவத்தாய்! அன்னையே" என்றும் "துப்பிற் கென்றே தோன்றிய 'அன்னே" "மூப்புற்றேர் நூருண் டுகள்மேலே முறையாக வாய்ப்புத் தீன்கள் தந்து வளர்க் கும் மாதா” என்றும் தாயனைய பனையின் பயன்களைச். சுவைத்த கவிஞர் தம் நன்றிமிக்க ஆராமையைக் கூறி மனஅமைதி பெறுகின்ருர்,
பனையில், பொருளியல்பினைக் கூறும்போதும் ஆசிரி யர் இலக்கிய இரசனையையும் எமக்களிக்கின்றர்.
"மூரிமைந் தர்கள் முறையில் நனைத்திடு
நாரினற் செய்வர் நல்ல கயிறுகள் வாரிறுக் கிடும் மங்கையர் மயிலினம் சோர வாடுவர் தொங்குமீக் கூசலே"

w
முதலிய பல கவிகளை இந்நூலில் பரக்கக் க்ண்டின்புறலாம்.
'பசித்தவரிலைக் கூழ் பனை நல்கலால்
நிசித்தலை யஞ்சு வாரில்ல்ை நிறுவவில் குசத் தொடோலை குவிந்து கிடத்தலாற் கசத் தவரிலைக் கட்டியுண் பெற்றியால்"
என்ற செய்யுள் கம்பரையும்,
"ஊமலா டிடவோர் சிலர் காவினிற்
ருேமில் ராட்டினஞ் சற்றுவ ரோர்சிலர் நாம மேனும் நவிலறியாச் சிறர் சாமமென்னக் கிலுக்கான் சத்திப்பரே"
என்பது சேக்கிழாரையும் நினைவுசெய்வதுபோல, ஏக்சம் செய்யுள்கள் தமிழ்ப்பெரும் புலவர் பலரின் மரபினை வினச் கஞ் செய்கின்றன.
இங்ங்ணம், இவ்வரும்பெரும் நூலை, பழுத்த முது மைப் பருவத்தில் யாத்துத் தமிழ்ப் பெருமக்கள் வளமான வாழ்வைப் பெறவேண்டும் என்னும் பனைபோலுயர்ந்த நோக்கத்தைக் கொண்டு வெளியிடுகின்ருர், அவர் தாம் உள்ளத்தையும் தொண்டினையும் பாராட்டிப் போற்றி, அன் ஞர்தம் பெரும்படைப்பைப் பேணிப்படித்துப் பயன் பெறுவது தமிழராகிங் எங்கள் எல்லோரது கடமையும் ஆகும்.
இங்ங்னம் 14-12-1979 கி. சிவகுருநாதன்

Page 6

A. சிவமயம்
பனை நூறு
கடவுள் வணக்க்ம்.
ஆனைமுதத்தனை ஆறுமுகத்தனை அம்பிகையைக் கூனலிழ்ம்பிறை கூட்டிய செஞ்சடை முக்கணனைத் தேனுதிர் வெண்மலர் தேடியுறைந்திடு வாணியினை நானடி பேணினெ நல்கிடு மாறுயர் வானருளே
(அரும்பத உரை) கூனலிளம்பிறை - வளைந்த பால சந்திரன், ச்ெ ஞ் சடை முக்கணனை . சிவபெருமர்ன. வாணி. சரஸ்வதி, '
அவையடக்கம் .
கற்றுமிக் கறிந்துள கலைஞர்முன் இந்தநூல் சிற்றறி வேனுரை செய்திட நின்றிடல் உற்றநல் லழகுசேர் ஒங்குமாளிகை முனர்ச் செற்றரு புற்றெனச் செப்பிடும் பாலதே. (அ - ரை), ,་ செற்றரு (செல் - தரு) - கறையானுற் செய்யப்பட்ட
போலிநா கரிகமிந் நாட்டினும் புக்கதாற் றலமீ யுதவிகள் தள்ளியே அந்நியர் காலில்வீழ்ந் திடுபவர் கண்களைத் திறக்கவே நூல்பனை நூறிதை நுவலலுற் றேனரோ (goy -- Goopyr) - தாலமீ . பனை கொடுக்கிற, நுவலலுற்றேன் . கூறியுள் ளேன். அரோ , அசைநிலை.

Page 7
நூல்
ஓங்கிச் சென்றே வானில் வளர்ந்தொண் கைகளினிற் றேங்கும் மோலை யாயின வெல்லாஞ் சிரமேத்தி ஏங்கிச் செய்யு மீறில் தவத்தா பனையேயெம் பங்கிற் கொண்ட நின்பரி வார்க்குப் பகர்வொண்ணும்.
(அ  ைரை)
ஒண் = ஒளிபொருந்திய, கைகளினில் க கைகளைப்போன்று, அனேயே தாயே, பரிவு இரக்கம், பகர் வொண்ணும் - சொல்லமுடியும்,
நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
பூண்டா யன்னே பூவுலகத்தில் நின்னைப்போல்
யாண்டு மிலாதால் வைரமுடைநற் றருவெனில்
தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மோ. 2
(Joy • Gour)
கார் . கறுத்த, யாண்டும் க எவ்விடத்தும், இலாதால் - இல்லை. (ஆல்) - அசைநிலை, தாரு . மரம்.
செப்பஞ் செய்யாழ்ப் பாணமுடன்றென் றமிழ்நாட்டின் வெப்பஞ் செய்யு மொப்பு நிலத்து மேவிடுவார் துப்பிற் கென்றே தோன்றிய வன்னே சுவையிய அப்புத் தேடிப்பா தளஞ்சேற லளியன்றே. 3
(அ - ரை)
செப்பஞ்செய் . எதனிலும் திருத்தத்தை உடைய தென் தமிழ்நாட்டின் - தமிழர் வாழுகின்றதாகிய தென் Eந்தியாவின் தென்பகுதியின், ஒப்புநிலத்து - மலைகளில் லாத சமதரையில், மேவிடுவார் - வாழ்பவர்கள். துப்பு - உணவு, அப்பு - நீர், சேறல் . சேர்தல், அளி - அன்பு, அன்றே : அசைநிலை

எக்கா லத்தும் பாசில சூடுமெழில்ன்னே தக்கா ரென்பர் தாம்பெறு மீக்க செல்வத்தைத் திக்கார் பேரை வேண்டி விரயஞ் செய்யாது சிக்கே கொள்வர் காண்மி னெனவுஞ் செப்புவையே, 4
(அ - ரை) பாசிலை . பசிய இலை, எழில் - அழகு; திக்கார்பேரை - பல திசைகளிலும் செல்கின்ற புகழை, விரயம் - செலவ சிக்கே - சிக்கனத்தையே,
சொல்லும் "வெள்ளைச் சொரிமணல் மீதுந் துப்பென்றும் நல்குஞ் செம்பாடும்முவர் மீதும் நலிவீயும் கல்லுங் காடு மென்று கருதா யிதுதேரிற் செல்லும் மிசையாழ்ப் பாணமெல்லாமோர் திறமைத்தே. 5
(அ-ரை) சொல்லும் (அழகியதாதலாற்) புகழ்பெற்ற, நலிவு - துன்பம், என்றுகருதாய் - நிலங்களின் வேறுபாட்
டைப் பொருட்படுத்தாது எல்லா இடங்களிலும் வளரு கின்ருய், துப்பு - உணவு, தேரில் - ஆராய்ந்து பார்க்கு மிடத்து, செல்லும் மிசை யாழ்ப்பாண மெல்லாம் ஓர் திறமைத்தே - புகழை வெளியிடங்களுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறதாகிய யாழ்ப்பாணத்தின் எல்லா இடங் களும் ஒரே தன்மையை உடையன வாகும்.
தோப்புத் தோப்பாய்த் தொல்லிசை பெற்ற யாழ்நாட்டில் மூப்புற் றேர்நூறண்டுகள் மேலே முறையாக வாய்ப்புத் தீன்கள் தந்துவளர்க்கும் மாதாவைக் கூப்பிக் கூப்பிக் கைகளிரண்டாற் கும்பிடலே 6
(அ-ரை) தொல் - பழைய காலத்திருந்து வரும், இசை - புகழ், கும்பிடலே - கும்பிடுவது தான் தகமைத்தாகும்.

Page 8
வேறு
பனை வளர்ந்திடு பாணமென் னுட்டினில் முனிவருந்தமிழ் முத்துறை யோர்களும் நனிமலிந்திடல் நாமெதற் கோதிடல் தினமு மோர்பொருள் தீந்தருவீயவே . 7
(அ - ரை) பாணம் . யாழ்ப்பாணம்.
முத்துறை - இயல் இசை நாடகம், நனிக அதிகமாக, ஒதிடல் - கூறுவது, தீம் . இனிய
பசித்தவரிலேக் கூழ்பனை நல்கலால் நிசித்தலை யஞ்சு வாரில்லை நிறுவவில் குசத்தொடோலை குவிந்து கிடத்தலால் கசத்தவரிலைக் கட்டியுண் பெற்றியால். 8
(அ- ரை) கூழ் - உணவு, நிசி - இரவு இல் - வீடு, குசம் - மரம், கட்டி - பனங்கட்டி, பெற்றியால் - தன் 6LDuntd.
வேலி யெங்கணும் வீட்டிற் கரண்செயும் ஒலை உக்கிப் பின் சாலிக் குரந்தரும் கூலம் வீட்டிற் குவித்திடக் கூடைகள் நீலக் கண்ணியர் நிலவி லிழைப்பரே. 9
(gy - 6onlar) அரண் - பாதுகாப்பு, சாலி - நெற்பயிர் கூலம் - தானியங்கள், நீலக்கண்ணியர், நீலோற்பல மலர் போன்ற அழகிய கண்களையுடைய பெண்கள்,
ஓடுவார்கள் துலாவுரக் காளையர் கூடுமாண்டினர் கூவல் மிதி நின்று பாட லோடுதண் ணிப்பட்டை கோலியீர்த் தோடப் பீலியுகுத்து நிற்பார்களே. O

5.
(அ- ரை) உரக்காளையர் - பலம்மிகுந்த வாலிபர், கூடு மாண்டினர் - வயது கூடியவர்கள், கூவல் - கிணறு, ஈர்த்து * இழுத்து, உகுத்து - கொட்டி, (இங்கே, துலா - துலா வைத் தாங்கும் தூண்கள், மிதி, பட்டை, பீலி ஆகிய வெல்லாம் பனையினலேயே செய்யப்பட்டவை.)
ஏறுவார் பள்ள ரெங்கும் பனைகளைக் கோறுவார் சிலர் கூடும் வயிரத்த கீறுவார் தச்சர் கேடில் மனை செய சிறுங் கொல்லுலைச் சேர்ந்திடு மூமலே 11.
(அ - ரை) கோறுவார் - தறிப்பார், சீறும் - சீறுதல் போன்ற சத்தத்துடன் எரியும். (பலருக்கும் பனை தொழில் கொடுக்கின்றது என்பது புலணுகும்.
சட்டுவம்பல கோலுவர் தையலர் இட்டியாவர்க்கு மீந்திடு மாசையால் பட்டையாயின கோலுவர் கைபடி எட்டு மாண்டுக் கிழவர்க ளெங்குமே 12
(அ - ரை) சட்டுவம் ப்னமேர்லையால் செய்யப்படுகின்ற உண்கலன், கைபடி - கையாற் செய்து பழகிய, எட்டு மாண்டு வயது கூடிய.
வடலி யுண்பன மாட்டிளங் கன்றுகள் படலை யாருந் திறப்பது பார்த்துப் போய் குடலை யாயின வெட்டிக் கோடரி கொடு மட விளைஞர்க ளுண்பர் மறைவிலே, 13
அ - ரை) குடலை வடலித் குள்ளே இருக்கின்ற சுவை மிகுந்தி குருத்து, மடவிளைஞர்கள் - வாலிபரிற் குறைந்த வயதுடைய இளைஞர்கள்

Page 9
ஒலை யுண்டபசுக்க ளுறைமடி நூலை யொத்த நுசுப்பினர் பற்றித்தீம் பாலே யிர்த்துக் கலநிறை பாய்தரக் கோல வாண்முகம் பங்கயங் கொள்ளுமே 14
(அ - ரை) உறைமடி - மடியுறை, நுசுப்பு . இடை நிறைபாய்தர . நிறைந்து வெளியே பாய கோல வாண் முக்ம் - அழகிய ஒழி பொருந்தியமுகம், பங்கயங் கொள்ளுமே . தாமரைமலர் போன்ற தாகிவிடும்
ஏழைப் பெண்களிழைப்ப ருமல்களை மாழைக் கண்ணியர் வாய்க்கு மனதொறும் தோழிக் கூட்டத்தர் சொல்லி வியந்திடப் பேழைகள் செய்வர் பெய்கலன் வைக்கவே 15
(அ - ரை) மாழைக்கண்ணியர் . கார்முகில் போன்ற கண்களையுடைய பெண்கள், பேழைகள் - திருத்தமான பெட்டிகள், பெய்கலன் . அணிகின்ற ஆபரணங்கள்
மூரி மைந்தர்கள் முறையில் நனைத்திடு
நாரினுற் செய்வர் நல்ல கயிறுகள்
வாரிறுக்கிடும் மங்கையர் மயிலினம்
சோர வாடுவர் தொங்கு மீக் கூசலே. 16
W M (அ - ரை) மூரி - பலம்மிகுந்த, மைந்தர் - ஆடவர், வார் - பெண்கள் மார்பிற்கு அணியும் சட்டை, மயிலினம் சோர. மயில்கள் தங்களிற்பார்க்கப் பெண்கள் அழகுடையவர் களென்று வருந்தும் படி, ஊசல் - ஊஞ்சல்
செல்வ ரோலையிற் செய்த குடையுளர்
நல்ல பெட்டி சுளகுகள் நாரியர்க்
கில்லவர்க்குக் காவோலை யிருத்தலால்
அல்ல ஆர்க்கு மின்றகு மழையினுல் 17
( Aי 67

7 :"ನಿ॰ory:ಅ அல்லல் - துன்பம், இன்ருகும் .
வெல்ல மீகுவென் விம்மலை கண்மணி, நல்ல பாணியைத் தந்தனென் நக்கிடு செல்வமேயெனச் சித்திர ஓதியர் ? கொல்லி மக்களிற் ருெண்டு புரிகுவர் 18
(அ-ரை) வெல்லம் . பனங்கற் கண்டு, ஈகுவென் - கொடுப் பேன், விம்மலை'. 'அழாதே, தந்தனென் . தந்துள்ளேன்: செல்வமே - செல்வக் குழந்தையே, சித்திர ஓதியர் . சித்தி
ரங்களாக தமது கூந்தலைப் பின்னியுள்ள பெண்கள், இற் 'ருெண்டு . வீட்டுவேலைகள்
கருக்கு ಊLಣ್ಣಲ್ಹಿ கட்டுவர் வேலிக்கு வரிச்ச தாகவேரும் மற்றேனுடைச் செருக்கு மட்டையிற் செய்குவ ரட்டளை விருப்பி னுேடவண் மேவி யுறங்கவே. 19
(அ - ரை) ஏணுடை . சிறப்புடைய, அட்டளே " அட் படாளை, மேவியுறங்கவே . இருக்கவும் படுக்கவும்.
உாம் லாடி_வோர்சிலர் காவினிற் ருேமில் ராட்டின்ஞ் சுற்றுவ ரோர்சிலர் 20 நாம மேனும் நவிலறியாச் &ჩცუfr சாம மென்னக் கிலுக்கான்>சத்திப்பரே
(அ- ரை) கா - சோலை, தோமில் . குற்றமற்ற நவில றியாச்சிருர் . சொல்லத் தெரியாத சிறுவர்கள் சாம மென்ன - சாமகீதம் போல.சத்திப்பரே - கிலுக்கு வார்கள்

Page 10
ஒற்றை யோலையி லோத விளஞ்சிருர் பற்றியாணி பயிலுவ ரோர் சிலர் சற்று நூல்க டமையறி பெற்றியோர் இற்ற தோளென ஏடு சுமப்பரே. 21
(அ- ரை) இளஞ்சிருர் - வயது குறைந்த சிறுவர், ஆணிஎழுத்தாணி, இற்ற தோளென - தோள் முறிந்து விட்டது என்று சொல்லத் தத்கதாக.
ஆணைக் காவல னச்சஞ்செ யோலையும் பூணு மின்பப் புணர்மண வோலேயும் சேணுற் றர்விடு செய்தியி னுேலேயும் நானுங் காதல ரோலேயும் நாடெலாம். 22
T* r、 (அ - ரை) ஆக்ஃகாவலன் - சக்தி மிகுந்த அரசன் சேணுற்ருர் தூரதேசம் சென்றவர்கள், புணர் மணம் - மணம் புணா.
ஒலை பேணி யுறுதியென் பாருளர் ஒலை கல்விக் குறையு ளென்பார் பலர் ஒலைப் பாயி லுறங்குவர் யாவரும் ஒலையிற் குழ லூதுஞ் சிறுவரே. 23
(அ - ரை) உளர் - செல்வர், உறையுள் - இருப்பிடம்,
ஆலயந் தொறு மாயும் புராணங்கள் சாலை வீடெங்கு மின்பச் சரித்திரம் ஏலும் பண்டிதர்க் கேற்ற தொல்வர்கடம் ஒளே யீந்தெங்கு மூரைப் அரக்குமே. 24
「タマ (அ- ரை) ஆயும் - அறிஞர்களால் பல கருத்துக்ளும் கூறப்பட்டு ஆராயப்படுகின்ற, பண்டிதர் - வைத்தியர், வாகடம் - வைத்திய சாத்திரம், புரக்கும் - அரசாளும்.

வேறு
தள்ளப் பாளை பங்குனிமாதந் தயவோடு கள்ளுத் தாரு மென்றிடு வாரும் கருப்பம்நீர் வெள்ளம் வாரு மென்றிடு வாரும் மிகுவின்பம் கொள்ளக் கொள்ள வுள்ள நிறைந்து குதிப்பாரே. 25
(அ-ரை) தாரும்  ைதரும், கருப்பநீர் - பதனீர் (கருப்ப நீரைப் பிழையாக கருப்பணி என்று பலர் கூறுவதுண்டு) குதிப்பாரே - கூத்தாடுவர். y
பிட்டுச் செய்தாள் வேறில தென்றள் பிறழ்கண்ணுள் முட்டுப் பட்டோ மென்செய்வ தென்றன் முனவெல்வோன் கொட்டிச் சென்றள் முக்தங்கள் கூடி யிரவெல்லாம் கட்டிக் கட்டிப்பாளை கண்டிட்டாள் களித்தாளே. 26
(அ + ரை) பிறழ் . புரளுகின்ற, முனை வெல்வோன் - போர்முனையில் வெற்றி யடைகின்ற வீரன், முத்தங்கள் - முத்துக்களைப் போன்ற சண்ணீர், கட்டி - கட்டிப்பிடித் து. (அதிக முட்டுப்பாட்டி லிருந்தவளுக்குச் சடுதியாக பெருஞ் செல்வம் வருவதை யெண்ணி இரவு முழுவதும் நித்திரை வரவில்லை)
கொம்பன் ஞர்கள் கூடினர் சென்றேர் பனைசுற்றிச் செம்பும் பானை செய்குட மான வுடனிற்பார்க் கும்பர்ச் சென்று பெற்றிடு பள்ள ணுதவிட்ட Ꮠ அம்புத் தேனே யன்றெனி ஞகு மமிழ்தம்மே 27
(அ - ரை) கெர்ம்பன்னர்கள் - பூங்கொம்பு போன்ற அழகுடைய பெண்கள், உம்பர் - மேலே, அம்பு - நீர், (உம்பர் என்பதற்கு தெய்வலோகம் என்ற பொருளும் இருப்பதால் தேன் அல்லது அமிர்தம் என்று கூறப்பட்டது)

Page 11
10
கூறிக்கூறிக் குடமுலே யாளோர் குடந்தன் னில் ஏறித்தந்த இன்பத நீர்வேண் டுனர்தேடி மாறிச் சென்றள் வந்தொரு வள்ளல் வடிப்பித்துச் சிறிச் சென்றன் சேமிப்ப தென்கொல் திறமென்றே. 28
(அ + ரை) குடமுலையாள் - குடம்போன்ற முலைகளை உடையவள், மாறிச் சென்ருள் - ஒரேவழியிற் போகாமல் குறுக்கு மறுக்குமாக 8 சென்ருள், வள்ளல் - ஈகைக்குண மதிகமுள்ள ஆடவன், சேமிப்பு - பவுத்திரப்படுத்துவது என்கொல் . என்ன காரணத்தால்.
மாவின் பிஞ்சை மங்கை யொருத்தி பதனீருட் டுவென் றெண்ணித் துண்டுசெய் போது புளிப்பென்றேன் நாவிற் கின்பம் கண்டுபின் நன்றே மிகவென்றன் காவிக் கண்ணுர் ஊடுத லின்றேற் களிப்பென்ஞே. , 29
(அ- ரை) காவீக்கண்ணுர் . நீலோற்பல மலரைப் போன்ற கண்களையுடைய பெண்கள், ஊடுதல் - சிறிது சிறிது கோபித்தல் \ . . . . ܐܶ ܘܢ பிள்ளைச் சொல்லின் பேதை யொருத்தி பெருகன்ப்ோ, டள்ளிக் கூழை யன்பனுக்கீய வதுநன்றென் றுள்ளங் கொண்டா னுண்டில நன்ற யிளையாள்பாற் கள்ளன் பென்று பான யுடைத்துக் கனன்றளே. 30
(அ - ரை) பிள்ளை-கிளிப்பிள்ளை பேதை-பெண், உள்ளங்கொண்டான் - விரும்பினன், உண்டிலன் நன்ருய்நன்ருகக் குடிக்கலில்லை, இளையாள் - இளையமனைவி, கனன் ருளே - நெருப்புப்போன்று அதிகங் கோபங்கொண்டாள் (புருஷன் இளையாளுக்குக் கூடுதலாக கூழ்கொடுகக் விரும்புகிருன் என்று எண்ணி அவளுக்குச் சிறிது கூழ் தானு மில்லாமற் போகட்டுமென்று ப்ானையை உடைத்தாள்)

1.
காய்ச்சல் செய்யோர் காம னுவக்கக் கயற்கண்ணுள் காய்ச்சித் தந்தாள் கூழ்பதனீரிற் கடிதோடிக் கூச்சல் செய்தே கூடுசிறர்கள் குடித்தாராற் பாச்சுமன்பி லின்ப மல்லாது பண்டத்தோ, 31, (அ - ரை) காய்ச்சல் செய் - மனத்தாற் காய்ந்து கொண்டிருந்த, காமன் - மன்மதனப்போல் அழகுட்ைய் வன், கயற்கண்ணுள் - கயல் மீனைப்போன்ற கண்களையு டைய மனைவி, தந்தாள் - வைத்தாள், கடிது . வேக மாக. (அவனுக்குக் கூழ் கிடைக்காவிட்டாலும் தனக் காகத்தான் கூழ் காய்ச்சினுள் என்பதை விளங்கி அவன் மகிழ்சியுற்ருன்.' . . . .
கட்டிக் கென்று கன்னி யொருத்தி பதனீரை இட்டுக் காய்ச்சி, யின்பதங் கண்டாளெறிந்திட்டுத் திட்டித் திட்டித் தெய்வ மிகழ்த்தாள் திருமிக்காள் விட்டுப் பின்யார் மீட்குவர் வாழ்வில் விளையின்பம், 32 (அ- စ့်zo), கீட்டிக்கு பனங்கட்டி செய்வதற்கு, இட்டுபாத்திரத்தில் இட்டு, திருமிக்காள் - மிகுந்த அழகுடைய வள், வாழ்வில் விளையின்பம் - இல்வாழ்க்யிைன் பேருகக் கிடைக்கின்ற உயர்வ்ான இன்பம், (பனங்கட்டிக்குரிய நுட் பமான பதத்தை அவள் கண்டவுடன் கலியாணம் செய் வதற்கும் ஒர்தகைய பருவமாகிய மங்கைப் பருவம் இருக் கிறதே என்றெண்ணி, அதைத் தவறவிட்டுள்ளாள் ஆத லினல் தெய்வத்தைத் திட்டி இகழ்ந்தாள்.
W
முன்றிற்காயுங் கட்டிகள் காத்த முலையூக்கும் அன்றிற் போல்வாளஸ்ளி யொருத்தன் மடிப்பெய்தே சென்ருய் இல்லிற் சேர்க்குதி வாவென் றிடுமெல்லை துன்றக் கண்டங் கன்னே கொய்யாக்காய் சுவைத்தென்றள்,33
(அ - ரை) முன்றில் - முற்றத்தில், அன்றிற் போல் வாள் - சோட்டைப் பிரியாத அன்றிலைப் போன்றவ5,

Page 12
12.
சென்ருய் இல்லிற் சேர்க்குதி வாவென்றிடு மெல்லை . வீட் டில் கொண்டுப்ோய் வைத்திட்டு வாவென்று சொல்லிய நேரத்தில், துன்றக்கண்டு. கிட்டிவரக்கண்டு (மங்கைப்பரு வத்தின் முன்னும் பெண்களுக்குக் காதல் தொடங்கக் கூடும் என்பது. தாயறிந்து விடுவாளென்று பயந்து அவன் மடியிற் கொய்யாக்காய் கொண்டு போகிருளென்று தாய் விளங்கும்படி வைத்தாள்.)
வேறு கள்ளினை மிகவுண்டு காண்பவர் நகைசெய்ய உள்ளறி விலராகி யோடுனர் பாடுனர்கள் தள்ளடு மியல்பார்கள் தஞ்செயல் சிறிதிங்கு கள்ளமில் மனதோடு களறிட முயல்கின்றம் 34
(அ - ரை) தள்ளடு - தள்ளாடு, கள்ளமில் - பாரபட்ச மில்லாத, களறிட - கூறிட
பள்ளர்கள் வினையின்பின் பருகினர் மதுநன்கு தள்ளரும் பறைகொம்பு தங்கைசெய் தாளமொடே கள்ளினி லிணிதொன்று கருதிட விலதென்று துள்ளினர் களியாடித் தோப்புகள் திரிவார்கள். 35
(அ - ரை) வினையின்பின் க வேலை செய்து முடிந்த பின்பு தள்ளரும் பறைகொம்பு தங்கை செய்தா ள மொடே - குற்றமில்லாத பறைமேளத்தை அடித்துக் கொண்டும், கொம்பினை ஊதிக்கொண்டும், தங்கள் கை களாற் தாளமிட்டுக் கொண்டும்,
காலையில் மனையாளைக் கைகொ டறைந்தொருவன் மாலை வரும்பொழுது மதுவுள் மறைந்தனணுய்
நீலம் விழிகளடி நித்திலம் மூரலடி கோல மயிலடிநீ கொஞ்சு கிளியென்றன். 3f

13
(அ - ரை) அறைந்த - பலமாக அடித்த மாலைவரும் பொழுது - மாலையில் வீட்டுக்குத் திரும்பிவரும்பொழுது, மதுவுள் மறைந்தனனய் - கள்ளை அதிகம் உண்டதனல் தன்னியல்பு அற்றவணுகி, நீலம்விளிகள் - உன்னுடைய கண்கள் நீலோற்பல மலரைப்போன்றவை, நித்திலம் மூரல் - உன்னுடைய பற்கள் முத்துக்களைப் போன்றவை.
ஊறிடு களையுண்டோ ரோங்கிடு மகிழ்ச்சியினன் கூறிடு மனைவிக்குங் குழப்தைக ஞக்குந்தான் பேறிது வுணுமென்றே பெய்துக ளிந்தனஞல் தேறிடி லன்பாலே தீமையு முளதன்றே. 37
(அ = ரை) ஊறிடு - பாளையில் இருந்து ஊறுகின்ற களை - கள்ளை ஓங்கிடு - பெரிதான பெய்து - வார்த்து தேறி டில் - ஆராய்ந்து தெளியுமிடத்து
உந்ற யொருட்செல்வன் உண்டு, களித்தொருநாள் சுற்றிய தோழர்களின் சூழ்ச்சி யறிந்திலஞய் முற்று மவற்குரிய முதுசொமு மேனையவும் விற்று வறியவனுய் வீடு திரும்பினனே. 38
(அ - ரை) உற்றபொருள் - கிடைத்த பொருள் உண்டு - கள்ளை உண்டு, சூழ்ச்சி - ஆலோசித்து முடிவு செய்த கெடுதி, அவற்குரிய - அவனுடைய முதுசொம் - தாய் தகப்பன் வழியாக வந்த சொத்துக்கள்
கொண்டல் வணத்தினுெரு குறைவில் விறற்குரியன் உண்டனன் மதுவந்தில் ஒப்பில் மனையாளைக் கண்டதுங் கண்ணேயென் சிதை யெனக்கழற ஒண்டொடி காலோச்சி உதைந்தவட் போவென்றள் 39
(அ - ரை) கொண்டல் வணத்தின் - கருமேக நிறத் தையுடைய விறற்குரியன. வீரன், வந்தில் - வீட்டிற்கு

Page 13
14
வந்து, கண்ணேவியன்சீதை யெனக் கழற.சீதையைப் ப்ோன்ற அழகுடைய என்கண்மணியே யென்றுகூற, ஒண் ட்ொடி காலோச்சியுதைந்தவட் வட்போவுென்ருள்-ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த மனைவி அவனை உதைத்து, (சீதை என்ற பெயருடைய வேறு ஓர் மனைவி அவனுக்கு இருப்ப்தாக எண்ணி) அவளிட்ம் போவென்ருள்
சந்திர வதனத்தோர் தையலுக் கின்னுெருத்நி உந்தன் பெருங்கற்பை யுரைப்பதிெனின்கணவன் சிந்தை மய்க்கியிடுந் தேறலை யுண்பனென வெந்தென ளுண்கிலளாய் வீரற்றிருத்தினளே." l, 40
ية اك
(அ - ரை) சந்திரவதனத்து - பூரண சந்திரனை ஒத்த முகத்தினை உடைய, தேறலை - கள்ளை, வெந்தனள் - அதி கம் மனம் நொந்தவளாகி உண்கிலளாய் - சாப்பிடுதலேக் கைவிட்டு, வீரற்றிருத்தினளே - வீரனுகிய அவளுடிைய
கணவனை கள்ளுண்ணுவண்ணம் திருத்தினுள்.
மாலை யளிக்குங்கள் மாந்தி யெல்லாமிழந்து ༡༩ தாலி யறுத்தனனுேர் தையலுக் குய்யவந்தோன் வேலை விளிக்குண்டயாள் வீட்டை யகன்றனளாய்'
ஆலயஞ் சென்றரனுக் கடிமை புகுந்தனளே. 41
(அ - ரை) மாலை மயக்கத்தை, மாந்தி - அதிகமாக குடித்து, வேலைவிளிக்குடையாள் - வேல்போன்ற விளிகளை உடையவள், அரன் - சிவன், ALLL S SS S SSAAAL SSAASS SS SS
கள்ளினை யுண்டகமக் கார ஞெருத்தனுடன் பள்ள - னெனச்சில சொல் - பண்டறியான் - பகரத்
தெள்ளறி வுற்றவனுந் திருந்தின னுலகத்துக் கொள்குங் குணத்தாலே குலங்கள் வகுப்பாமே. 42
(gy -- GoogT) பண்டறியான் - முன்பு அவனை அறியாத வன் பகர - சொல்ல.

15 வேறு
பங்குனியில் வந்திடுநற் பாளைகள் பருத்தோர் திங்களக லெல்கையினிற் றினகரன் வெதுப்பிற் கிங்குதரு கின்றனனெ னின்மருந்து மக்காள் நுங்கிலென வன்னைபன நுவன்றருள் சுரக்கும் 43
(அ - ரை) ஓர் திங்களக லெல்கையினில் - ஒரு மாதம் சென்ற பின்பு, தினகரன் - சூரியன் வெதுப் பிற்கு - கடுஞ்சூட்டிற்கு இன்மருந்து - இனிய மருந்தை, நுவன்று கூறி.
எல்லிவர முன்னேரெழல் யாவருக்கும் நன்றயச் சொல்லுமொழி யுண்டெனினும் சோம்புசிறு வர்க்கு நல்லவழி காட்டுவள்கொல் நல்குமல்நுங் கன்னை செல்வழிகள் கொல்லைவயின் சிறுபுறவ மெங்கும் 44
(அ - ரை) எல்லி - சூரியன், காட்டுவள் கொல் - காட் டுவதத்காக இருக்கலாம், நல்குமல்நுங்கு - இரவில் நுங்கை விழ வைக்கும். வயின் - இடத்து, சிறுபுறவம் - சிறிய பனங்காடு,
தந்தைவர நுங்குகட கந்தலை சுமந்தே மைந்தர்விரைந் தோடியவன் கால்கள்மறித் தீர்த்தல் முந்தவுயிர் தந்தவிவன் முழுமனங்கொடேத்திற் பிந்தவு மளிக்குமெனப் பேணினர்கள் மானும், 45
(அ - ரை) கால்கள் மறித்தீர்த்தல் - மகிழ்ச்சியிஞல்
கால்களைக் கட்டிப்பிடித்து இழுத்தல், முந்தவுயிர்தந்த - ஏற் கனவே எங்களுடைய உயிரை எங்களுக்குத் தந்த, ஏத் தில் - வணங்கினல், பிந்தவுமளிக்குமென பேணினர்கள் மானும் - திரும்பவும் எங்களுக்கு உயிர்தருவான் என்று நினைத்ததைப் போன்றதர்கும் (சிறுபிள்ளைகளுக்கு நுங்கு உயிருக்குச் சமானமென்பதாம்)

Page 14
16
காணியில ளாகிடினுங் காணுகம லங்கள் நாணியிடு மேழைநல்கில் நாணியிடு மென்றே ஏணிமிசை யேணினுெடு மேறியறு நுங்கைப் பேணியிலன் சென்றனனுட் பேணியடை வள்ளல் 46
காணு கமலங்கள் நாணியிடும் - அவளை (תפיס6 - וגeg) காண்கின்ற செந்தாமரை மலர்கள் அவளுடைய முகத்தின் அழகுக்கு தோற்றமையால் வெட்கப்படுகின்ற, நல்கில் நாணியிடுமென்றே - தான் கொடுத்தால் அவள் தான் வறியவள் என்று எண்ணி வெட்கப்படுவாள் என்று கருதி மிசை - மேல், பேணியிலன் சென்றனன் - தான் முழுமை யும் எடுக்காது சில நுங்குகளை கவலையீனமாக விட்டவன் போல அவள் பின்னர் எடுக்கட்டுமென்று விட்டுச் சென் முன், உட்ப்ேணியடை-மனத்தினுள்ள்ே அவளைக் காத லித்துப் பின்பு கலியாணம் செய்துகொண்ட .ே
முற்றுசுவை நுங்கதனை மொய்குழி லொருத்தி பெற்றுளள் தனக்குமெனப் பேசினள் பொய்யிய் மற்புயனு முண்டுபினம் மங்கைவிர கோர்ந்தே" பற்றகலத் துற்றதுயில் பஞ்சமளி யீந்தான். 47
4۔
(அ- ரை) முற்றுசுவை - சுவை முற்றிய, மொய்குழல் - வண்டுகள் மொய்க்கின்ற கூந்தல், மற்புயன் - மல்யுத்தத் தில் வெற்றியடைகின்ற தோள்களையுடையவனகிய அவளு g கணவன், விரகு - கள்ளம், பற்ற கலத்துற்ற துயில் - அன்பினை உடையவனது நெஞ்சின்மீது உறங்கு கின்ற துயிலை, பஞ்சமளி - பஞ்சுமெத்தைக் கட்டில் N
தக்கபரு வத்துளது தண்மையுள வண்மை மிக்குளதி தைப்பருகில் மெய்த்தசுவை யென்றே புக்குபனை யெக்குலையும் புத்துயிர்கொள் காமத் திக்கலைவர் ப்ோலவணில் தேர்ந்து நுங் கரிக்கும், 48

7
W,
(அ - ரை) தண்மை -மென்மை, வண்மை - அழகு, புத்துயிர்கொள்காம - ஒவ்வொரு முறையும் அதற்குமுன் இன்பமனுபவிக்காம்ல் புதிதாக அனுபவிப்பதுபோன்ற உணர்ச்சியைக் கொடுக்கின்ற க்ாம, திக் கலைவர் - (தெய் வத்தைச் சிந்திக்காது) இத்துறையில் தங்கள் பொழுதை வீணிற் போக்குபவர்களாகிய காமுகர்கள்
வேறு ஏந்தியெங்கையில் மோந்துமென்றசை
இருதயத்தொ டனைக்குநம் மாந்துபால்முலை மன்னுடன்னகை
வடிவுமென்னடை மழலையர் வாய்ந்தவிந்நலந் தேய்ந்துபின்னுெரு
வடிவுகொண்டருள் மலர்தல்போற் சேர்ந்த நுங்குகள் முற்றித்தீஞ்சுவை
ஆரந்தநற்பழ மாயவே. - 49
(அ - ரை) மோந்து - முத்தமிட்டு, மழலையர் - மழ லைச் சொற்களைப் பேசுகின்ற குழந்தைகள், வாய்ந்தவிந் நலம் - பொருந்திய இச்சிறப்புக்கள் தேய்ந்து - சிறிதுசிறி தாக அற்றுப்போய், பின்னெரு வடிவு கொண்டருள் மலர் தல் போற் - பின்பு வேருெரு வடிவுகொண்டு வாலிப வடிவு கொண்டு), அருள் மலர்தல் போல் - (மங்கையருக்கு அருள் கொடுக்குந்தன்மை விளங்குவதுபோல்)
ஆடியோடுமே ஆவணிபுரட்
டாதிஆகிய மாதங்கள் கூடலெங்கணும் தாலமீபழம்
குறைவிலாது கிடைத்தலால் வீடுறைந்திடு கன்னியரவை
காவல்செய்திடு வினைகொடே நாடியேபகல் வாழுவார் கொட்டில்
நன்கமைத்த விதண்களில் 50
(அ - ரை) கூடல் - மரங்கள் நெருங்கி உள்ள இடம் வினை - வேலை, இதண் - அட்டாளை, தாலமீ - பனைகொடுக் கின்ற

Page 15
18
பாடலும்பல வாடலும்பரந்
தோடலும்மொளித் துறைதலும் தேடலும்கிலர் கூடலும்மிறை
யூடலும்மலர் மாலைகள் சூடலும்மடி நாடலும்பொடி
போடலும்துடி போலிடை வாடலும்மதி கோடலும்பனை
வரிசைக்காடுகள் மலியுமே. 51
(அ- ரை) இறை - சிறிது, அடிநாடலும் - பாதத்தை வணங்குதலும், துடி - உடுக்கை, மதிகோடலும் - சந்தி ரனை ஒத்தமுகம் கோணுதலும்.
இருசிலம்பொலி கரமெனும்படி
ஏங்கவந்துகில் தாங்கிநின்
றருநடம்பயி லணிமயில்தனே
யண்மையுள்ளவொர் புதர்மறைந்
தொருவன்கண்டன லுணர்வழிந்தன
ணுேடிமுன்னெதி ருற்றபின்
வெருவுமென்னவன் விலகினன்மயில்
உருவிலன்னென வுன்னினுள் 52
(அ - ரை) கரம் - தாளம், ஏங்க - சப்திக்க, அந் துகில் - அழகிய சேலை, தாங்கி - தரித்து, பயில் - செய் கின்ற, அணிமயில்தனை - அழகிய மயில் போன்ற மங் கையை புதர்மறைந்து - பற்றையுள் மறைந்து, வெரு வும் - பயப்படுவாள், உருவிலன் - மன்மதன், உன்னி ஞள் - நினைத்தாள். (ஒப்பற்ற அழகை உடையவனுக இருந்தமையாலும் தோற்றி மறைந்தமையாலும் மன்மத னென எண்ணினுள்)
மின்னலின்கொடி துன்னவங்கொரு
வேழமொத்திடு காளைகண் டின்னலந்தரு பொன்னிமண்மிசை
எய்தவென்னவென் செய்தவம்

19
முன்னெதிர்ந்திவள் தன்னையன்பொடு
முடிநிலம்பட வடிதொழிற் பன்னரும்பெற லென்னதென்றுபோய்ப்
பணியநின்றிலள் பதறினன். 53 (அ- ரை) மின்னலின் - கொடி-மின்ன ற்கொடி போன்ற அழகினை உன்ட்யவள். துன்ன - நெருங்கிவர, வேழம் - யானை, கர்ளை - வாலிபன், இன்னலம்தரு- இவ்வ ளவு பேரழகையுடைய, பொன்னி - இலட்சுமி, செய்த வம் - யான் முன்பு செய்த தவம், முன்னெதிர்ந்து - இவள் முன்னேபோய், முடிநிலம்படவடிதொழில் - என்னுடைய தலையானது நிலத்தில் முட்டும்படி நான் அவளுடைய பாதத்தை வணங்கினல், பன்னரும் - நினைக்கமுடியாத பெறல் - வரம், என்னது - எனக் குத்த ருவா ள் பணிய - வணங்கும்பொழுது, நின்றிலள் - மறைந்தொளித் தாள்,ப தறினன் - ஆகையினல் அவன் நடுக்கமெய்தினன் (பேரழகினலே இலட்சுமியென்று எண்ணியவன் அவள்ே மறைந்தமையால் உண்மையாக அவள் தெய்வம் தானென நினைத்துப் பயத்தினல் நடுக்கமெய்தினுன்)
வேள்சரங்களுக் கஞ்சுவேலனும்
வேயையொத்துள தோளியும் ஆள்செலாதிருள் சூழ்புதர்தனி லாடிஅன்பினைச் சூடையில் நீள்தடியொன்றைத் தச்ள்தடிந்திட
நினைத்தங்கேசூமொர் காளைக்குக் கோளராவவண் கூடல்கண்டனெ
னென்றுகூறுமொர் தோழியே. 54
(அ - ரை) வேள்சரங்களுக்கஞ்சுவேலன் - மன்மதனு டைய பாணங்களுக்கு அஞ்சுகின்ற, முருகக் கடவுளையொத்த அழகினையுடைய ஒர் வாலிபன், வேயையொத்துள தோளி - மூங்கிலையொத்த தோர்களையுடைய ஒர் இளம பெண், ஆள்செலாதிருள்குள்புதர்தனில் - ஒருவரும் செல்ல முடியாததும் இருள் அதிகமாகவுள்ளதுமான பற்றையுள், தாள் தடிந்திட - அடியோடு வெட்டுவதற்கு, ஏகும் - செல் கின்ற, கோளரா - கோபங்கொண்டு படமெடுத்து நிற்கும் பாம்பு, அவண் - அங்கே, கூறும் - சொல்லினள்.

Page 16
20
தூர வந்திடொர் மாரன் கைக்குழல்
தொனிக்கத்துப் பிதழ் தந்தவொர் காரணிந் தவள் கைசெயும் பணி .ெ
காட்டித் தோழியர்க் கொல்லையில்ல) நீரிதைச் செயும் சிரினே டென்று
நீங்கினள் கடி தேகினள் வாரலிங்கு நீ ரென்று கைமறி ܫ
வடலி கூடுமொர் புறவினுள். 55
(அ - ரை) மாரன் - மன்மதன், துப்பிதள் தந்த - பவ ளம்போன்ற வாயையுடைய, கார் அணிந்தவள் - மேகம்போன்ற கூந்தலை உடையவள், ஒல்லையில் கெதி யாக, கடிதேகினன் - விரைந்து சென்ருள், வாரலிங்கு நீரென்று - இவ்விடத்தே நீங்கள் வரவேண்டாமென்று, கைமறி - கைகளை விரித்துக்காட்டி மறித்துக்கொண்டிருக் கின்ற, புறவினுள் - வடலிக்காட்டினுள்.
வேறு
விழுவன பழங்க ளெங்கும் விரைவொடு சுமப்ப ரெங்கும் ஒழுகிடு தேன தெங்கு முண்டொலி வண்ட தெங்கும் பழுதறச் சுடுதலெங்கும் பனுக்குதல் காடி யெங்கும் பிழிவது களியை யெங்கும் பெருவெயிற் பரவ லெங்கும். 56
(அ - ரை) ஒழுகிடுதேன் - பனம்பழங்களிலிருந்து ஒழு குகின்ற தேன், ஒலிவண்டு - ரீங்காரமிடுகின்ற வண்டு. கறுப்பியின் பழமென் பாரும் தோரச்சி கனியென் பாரும் ) உறுப்பில திதுவென்பாரு முயர்சுவை யதுவென் பாரும் s د ، வெறுப்பிலா தின்னம் வேண்டும் வேண்டுமென் றுரைக்கின்ற *அறுக்குதிர் பணுட்டை நீரென்றம்ந்து சொல்வாருமாதோ (ரும்
(அ - ரை) கறுப்பி, தோரைச்சி - கொடுக்கும் கணி களின் நிறத்தைக்கொண்டு பனைகளுக்கு உண்பவர்கள் இட்

21
டுள்ள பெயர்கள் உறுப்பிலது - அழகு குறைந்தது. மாதோ -அசைநிலை. iஅறுத்திடு பஞட்டுத் துண்டை அணிபெற மீடிக்கின் றரும் பொறுக்கியிட் டழகினுேடு கூடையிற் பொதிகின் ருரும் சிறுச்சிறு துண்டஞ் செய்து பாணியிற் சேமிப் பாரும் 58 முறித்தெளின் நெய்யிற் றெட்டு முறையோடுண் பாருமன்குே.
(அ- ரை) அணிபெற - அ ழ கா க, எளின் நெய் - (நல்ல) எண்ணெய், மன்னே - அசைநிலை. i : ; :م பனரி நீரிலிட்டுப் பந்தரின் கீழேதங்கிப் பினைந்தன ரெதிருந்தார் பெற்றிடு காதல் முற்றிக் கனிந்தவர் முத்தமென்னுங் கசிந்திடு தேனை யுண்டார் நினைந்தில னிரவியென்னே நெறிவிரைந்தேக லுற்றன். 59
ரை) பெற்றிடுகாதல் முற்றிக்கனிந்தவர் - காத س إف). லித்துக் கலியாணம் செய்தவர், முத்தம் எனும் கசிந்திடு தேனை "முத்தமாகிய காதற் பழம் பழுத்துக் கசிந்த தேனை, நினைந்திலனிரவியென்னே - சூரியன் இவர்களி டத்தே அநுதாபம் காட்டாமல் விட்டது என்ன கொடுமை, நெறிவிரைந்தே கலுற்ருன்- தன்னுடைய பாதையிலே விரைவாகச் சென்றுகொண்டிருந்தான் (இவர்கள் பிணைந்து முடிய வெய்யில் போய்விட்டது) . . . . . t
கயல்தரு கண்ணுளோர்பெண் கடகத்திற் கணியை யிட்டே யயலுறை காடிபெய்தா ளன்பொடு பினையும் போழ்தில் வெயில்வந்த கணவன் நீழல்கண்டனன் வெகுண்டான் நோக்கி வயல்வந்த மீன்களிங்கே வந்ததென் களியு ளென்றன். 60
- )یےN -லர) கயல்தரு கண்ணுள் - கயல்மீனப்போன்ற கண்களையுடைய, வெயில்வந்தக்ணவன்- வெயிலுக்குள்ளாக வந்த அவளுடைய கணவன். நீழல் கண்டனன் - அவளு

Page 17
22 டைய நிழலைக் களியினுள்ளே கண்டவனுகி. வெகுண்டான் நோக்கி - கோபத்தோடு அவளைப்பார்த்து, வயல்வந்த மீன்கள் - வயல்களிடத்தே வெள்ளத்தினுட் தொற்றிய கயல்மீன்கள், இங்கே வந்ததென் களியுளென்ருன்இங்கே பிணையப்படும் களியினுள்ளே எப்படி வந்தன என்று கேட்டான். (வெவிலில் வந்தவனதலினல் அவிஞ்ன்பிய முகத்தின் விம்பத்தில் கண்களுடைய விம்பம் மாத்திரம் தான் அவனுக்கு தோற்றியது)
ஒப்பிலா துயரு நாட்டை யுவந்து காத்திட்ட மன்னன் கப்பமென் றிந்த நூறு கனியுல்ொன் றுண்டான் பின்னும் சப்புவள்ர்சி நாணித் தரநகை கண்ணேயுன் வார்ச் செப்பிதே யென்றன் கேட்டுச் சிறினள் சிரித்தாளன்றே, 61
ஒப்யிலாதுயருநாட்டை - தனக்கு இணை (תו (60 - e9) யில்லாது மென்மேலும் உயர்ந்துகொண்டிருக்கின்ற நாடா கிய யாழ்ப்பாணத்தை, கப்பம் - சிறியமன்னர்கள் பெரிய மன்னர்க்கு வருடம்தோறும் கொடுக்கும் திறை, உண்டான் பின்பும் சப்புவன் - பனம்பழத்திலுள்ள களி முழுவதையும் உண்டு முடித்தபின்பும் சக்கையை ஆசையினல் சப்பினுன். அரசி நாணித் தரநகை - இதைக் கண்ட அரசியானவள் நாணங்கொண்டு சிரித்தபொழுது, உன்வார்ச் செப்பிதே என்ருன் - உன்னுடைய சட்டைக்குளிருக்கும் தனமேஆகும் இது என்ருன், சீற்ணள் - கோயித்தாள் (தன்னுடைய தனத்தைப் பணம்வித்துக் கொப்பிட்டானே என்று)
(களியில்லாத பொழுதும் சக்கையைச் சப்பினணுதலி ஞல் தன்னுடைய யெளவனப் பருவம்போய் மூதிர்வெய் துகிற காலத்திலும் தன்னை மறக்கமாட்டானென றெண் ணிச்சிரித்தாள்), ஒப்பிலாதுயரு நாட்டை என்பது யாழ்ப் பாணத்துக்கு நூலாசிரியர் கொடுக்கும் வாழ்த்து.

23
தூரத்து வினைப்போஞ் செம்மல் துணைமுலை
யணைவான் வேண்டிக் காரிற்கு முன்னம் வந்தான் கண்டிடு
நண்பர்க் கெல்லாம் சாருதற் கேது வாசை தரும்பனங்
கணியே யென்றன் கூரயிற் கண்ணுட் கின்பம்
கொளுத்திற்றேர் மதிக்கி தம்ம. 62
(அ - ரை) தூரத்து வினை போஞ் செம்மல் - தூரதே சத்திற்கு தன் தொழில் காரணமாக சென்றிருந்த (சமீ பத்தில் மணம் செய்துகொண்ட) மதிப்புக் குரியவனுகிய வாலிபன், காரிற்கு - மழைக் காலத்துக்கு சாருதற் கேது - (வழக்கம்போல வருவதற்கு முன்னம்) திரும்பி வந்ததற்குக் காரணம், கூடையிற் கண்ணுட்கு - கூரிய வேலையொத்த கண் களையுடைய அவனுடைய மனைவிக்கு, இன்பம் கொளுத்திற்றேர் மதிக்கீது - இப்படி அவன் சொல்லியமை ஒரு மாத காலமாக அவளுக்கு அளவில் லாத இன்பத்தைக் கொடுத்தது. (நீ பனங்கனியிலுள்ள ஆசையிஞலேயே முந்திவந்தாயல் லாது என்மீதுள்ள அசை யினுலல்ல என்று ஊடி ஊடி அளவில்லாத இன்பத்தைப் பெற்ருள்.)
இனித்திடு பணிகா ரத்தை யேந்திழை மார்கள் கூடிக் கணித்தரு களியிற் செய்தார் கங்குலே யாய போதும் பொனிற் பெருஞ் சிறுவ ரெல்லாம் புடையிருந் தேக கில்லார் நினைப்பிலே யிருக்க வின்பம் நேடுதல் யாண்டு மென்னே. 63
(அ-ரை) ஏந்திழை மார்கள் - ஆபரணங்களை அணிந்த பெண்கள், கணித்தரு - கனி தரு, கங்குல் - இரவு, பொனிற் பெரும் - பொன்னிலும் பார்க்க அருமையான, புடை இருந்தேக கில்லார் - பக்கத்தைவிட்டு நீங்கா திருந் தார்கள், நேடுதல் - தேடுதல், யாண்டும் - எவ்வெவ் விடத்தும்,

Page 18
24
தூங்கின னெழுந்தோர் பாலன் சுவைப்பணி கார முண்டே பாங்கினிற் படுத்தான் காலை பதைத்தெழுந் தோடி யன்னே ஏங்குள தென்பங் கீயென் றிருகரத் திடித்து நின்றன் ஆங்கயர் பெற்றி யோர்க்கோ ரருள்செயிற் பயனுமுண்டோ. 64
(அ-ரை) ஏங்குளதென் பங்கீ - எங்குள்ளது என்னு டைய பங்கு அதைக்கொடு, ஆங்கயர் பெற்றியோர்க்கு - உடனே மறந்துவிடுகின்ற தன்மை யுடையவர்களுக்கு, அருள் செயில் - உபகாரம் செய்தால், பயனுமுண்டோ - பயனில்லை.
நாடினன் நலமென் றுண்டு நாரத்தை யொருத்தன் வீசித் தேடினன் திளைத்துக் கொண்டான்றிம்பனங் கனியில் வையத் தாடையிற் பொடியிற் பூணிலவையவத் தன்பு வைத்துக் கூடினர் வெறுத்தார் போலக் குணமிலாப் பரத்தை மாதர். 65
(அ-ரை) நாரத்தை - நாரத்தம் பழமாகிய கசப்புப் பழத்தை, திளைத்துக் கொண்டான் - மிகுந்த ஆசை யோடு நன்ருக உண்டான், வையத்து - உலகத்திலே, பரத்தை மாதர் - விலைமாதர்.
வீட்டினுக் கன்போ டேகும் வியன்றரு காளை யின்பாற் சூட்டின விளமென் ருேகை தோமிலாக் காதல் தந்தை கேட்கவும் நல்ல தீயாள் கிளர்சுவைக் கணிக்குக் காடி போட்டனள் வைத்தாள் வாரான் பூவினிற் சோர்ந்தா ளன்றே,
(அ-ரை) வியன்றரு - வியக்கக்கூடிய அழகையுடைய, தோகை - மயிலைப்போன்றவள், நல்ல தீயாள் - நல்ல பனங்கனியைக் கொடுக்காதவளாகி, தோம் - குற்றம் கிளர் சுவைக் கணிக்கு - மேன்மேலும் சுவை எழுந்துகொண் டிருக்கிற பனங்கணிக்கு, வாரான் - அவன் வராததா , பூவினிற் சோர்ந்தாளன்றே - மலரைப்போல வாடினள்

25
எண்ணெயைப் பகுட்டி லிட்டா விடித்துரல் வெளியிறக்கி யுண்ணிகழுயிரன் ஞன்முன் ஒப்பிலாள் வைத்த போதவ் வண்ணலோர் துண்டை யந்தவாயிழை வாயிற் பெய்தான் உண்ணவொண்ணுளின் வாயில் வாய்வைத்தோர் பாகம் பெற் (ருன். 67
(அ-ரை) உண்ணிக முயிரன்னன் முன் . அவளின் உள் ளேயிருக்கின்றதாகிய உயிரைப்போன்ற அவளுடைய கண வன் முன்னே, அண்ணல் - பெருமைக்குரியவன், ஆயிழை வாயிற் பெய்தான் . தெரிந் தெடுக்கப்பட்ட ஆபரணங் களை அணிந்த அவனுடைய மனைவியின் வாயில் இட் டான். உண்ணவொண்ணுளின் வாயில் . அதை உண்ணுது வைத்திருந்த அவளின் வாயில் - வாய் வைத்தோர்பாகம் பெற்றன் - தன்னுடைய வாயைவைத்தோர் பகுதியைப் பெற்றன்.
{அருஞ்சுவைப் பண்டமாதலால் தன்னுடைய மனைவிக் குக் கொடுத்துத்தான், தான் உண்ணவேண்டுமென் றெண் ணினன். அவளோ கணவனுண்டபின்பு தான் உண்ண வேண்டுமென்று உண்ணுமல் வாயில் வைத்திருந்தாள்.)
வேறு
காலையில் நாளுமே பாணியிற் பேணிய கோலநற் பணுட்டினை யுண்டவோர் கோமகன்
மாலையைக் கரலயாய்த் துயிலிளுல் மயங்கிநற்
பாலவி பிட்டேறிந் தடித்தனன் பணிமகள் 68
(அ-ரை) கோல - அழகான, கோமகன் - இராச குமாரன், மயங்கி - பிழையாக எண்ணி, நற்பாலவிபிட்டு - நல்ல பாற்பிட்டை, அடித்தனன் பணிமகள் . வேலைக் காரியை அடித்தான். (இந்தக்கோமகன் காலையில் பாணிப் பனட்டும் மாலையில் நற்பாலவி பிட்டும் வழக்கமாக உண்டு வந்தவனுவன்)

Page 19
26
வந்தநல் விருந்தினர்க் கீந்திட மாண்பகுட் டிந்துசேர் முகத்தின ரெடுக்கமுன் பானையால் வெந்துகோ வெய்தியே வெட்டினன் பானைகள் அந்தமில் சவைப்பளுட் டவனிக்கு மாயதே. 69
(அ - ரை) மாண் பணுட்டு - பெருமை மிகுந்த பளுட் டாகிய பாணிப்பனட்டு, இந்துசேர் முகத்தினர் . சந்திர வதனத்தை யுடைய பணிப்பெண்கள், வெந்துகோ - அர சன் கோபித்து, வெட்டினன் பானைகள் - பாணிப்பனட்டு இருந்த பானைகளை வாளினுல் வெட்டினன். (நல்ல விருத் தினராகையால் சுணக்கம் இருக்சப்படாதென்று) அந்த மில் சுவைப்பணுட்டு - அளவில்லாத சுவையையுடைய பாணிப்பனுட்டு, அவனிக்கு மாயதே - பூமிக்கும் ஓர் பகுதி கிடைத்தது.
வேறு
சாந்துணை யுதவுவோருஞ் சற்றதிற் றவறுங்காலை வாய்ந்துபெற் றுண்ணுநீரார் வைதிடல் கண்டி ரென்னில் மாந்தளிர் மேனியார்கள் மலிபழங் குறைதல் கண்டே ஏந்திடு மிதண்கள் நீத்தா ரென்றிடில் வியப்பு முண்டோ. 70
(அ - ரை) சாந்துணே யுதவுவோர் - தங்களுடைய சீரிய க்ாலம் முழுவதும் கொடுப்பவர்கள், சற்றதிற் றவறுங் காலை - சிறிது அப்படிக் கொடுப்பதில் தவறிஞல், நீரார் - தன்மையை உடையவர்கள், வைதிடல் - திட்டுதல், மாந்தளிர் மேனியார்கள் - பன காத்துக்கொண்டிருந்த மாந்தளிா போன்ற மேனியையுடைய பெண்கள், மலி பழம் - தொகையினிற் கிடைத்த பழம், ஏந்திடு மிதண் கள் . அவாகள் இருந்துவந்த அட்டாளை கள்) நீத்தார் - கைவிட்டுச் சென்ழுர்,

27
செல்லும் போதோர் சேயிழை நண்ணும் மல்லன் கேட்க மங்கையி தென்னைக் கொல்லும் மென்று கூறினள் தோழிக் கல்லைப்பாடி யன்னவன் சென்றன். 71
(அ - ரை) செல்லும் போதோர் சேயிழை - பனைத் தோப்பைவிட்டு வீடுதிரும்புகிற பொழுது செம்மையான ஆபரண்ங்களை அணிந்த ஒர் மங்கைப்பெண் நண்ணும் - அவளைக்கிட்டி வந்துகொண்டிருந்த மல்லன் கேட்க (அவளு டைய காதலனுகிய மல்வீரனுடைய காதுகளிற் கேட் கக் கூடியதாக), இது என்னைக் கொல்லும் - இந்தப்பிரி வானது என்னைக் கொல்லும், என்று கூறினள் தோழிக்கு அல்லைப்பாடி அன்னவன் சென்றன் - இதைக்கேட்ட அவ ளுடைய காதலன் இரவைப்பற்றி பாட்டுப் பாடிச்சென் முன், (அவன் இரவைப்பற்றிப் பாடியது, தான் இரவில் சென்று அவளைச் சந்திப்பானென்று விளங்குவதற்காக)
கண்டில் லேனேற் காயுமு யிரென் றண்டர் போற்றே ரண்ணலு ரைக்கக் கொண்டற் குழலி கூரிருள் யாமத் தண்டும் வைக்கற் போரய லென்றள். 72
(அ-ரை) கண்டில் லேனேற் காயுமுயிர் - உன்னைக்காணு விட்டால் என்னுடைய உயிர் நீங்கிவிடும், அண்டர் போற் ருேரண்ணல் . தேவர்களாலும் வணங்கப்படுகின்றவன் என்று சொல்லத்தக்க ஓர் பெருமையிற் சிறந்தோன், கொண்டற் குழலி - மழைமேகத்தைப் போன்ற இருண்ட கூந்தலை உடைய அவன் காதலி, கூரிருள் யாமத்து - கடும் இருட்டுள்ள சாமத்திலே, அண்டும் . வருவீர், வைக் கற்போரயல் . வைக்கற்போரின் பக்கமாக.

Page 20
28
வேறு
மண்ணே வெட்டின ருயர்த்தி நற்பாத்திகள் வகுத்தே எண்ணி லாப்பனம் வித்துகள் சுமந்தன ரிட்டு வண்ணத் தோடவை யடுக்கிட வானிடை யூர்வோர் கண்ணுற் றேடுவர் காற்றின்முன் வெடியெனக் கலங்கி 73
(அ - ரைச் வண்ணத்தோடு - அழகாக, வானிடையூர் வோர் - வானத்தினுரடாகச் செல்பவர், கண்ணுற்று-கண்டு, காற்றின்முன் - காற்றினை வெல்லும் வேகத்தில், வெடி (யெனக் கலங்கி - பனம் வித்துக்க ளெல்லாவற்றையும் தங் களைச்சுட நிலத்திலிருப்பவர்கள் தயாரிக்கும் குண்டுவெடி களெனப் பீதிகொண்டு.
வரிசை நின்றிடு வித்துகள் மண்ணினுள் முளையைத் திருகிநீட்டிடு திறத்தினை மண்மக ளுணர்ந்து பொருத வந்தனர் வீரர்க ளென்றெணிப் புலம்ப விரியும் வான்வெடி தந்தகொல் மேகத்தி னிடியே. 74
(அ-ரை) திறத்தினை - தன்மையை, மண் மகள் - பூமா தேவி, பெர்ருத வந்தனர் வீரர்களென் றெண்ணிப் புலம்ப - தன்னேடு போர் செய்யப் படைவீரர் வந்துள்ளார்களென் றெண்ணி அலற, விரியும் வான் - விரிவான ஆகாயம், வெடிதந்த கொல் மேகத்தி னிடியே - வெடிவைத்ததுபோ லும் மேகத்தினிடத்தே இடி தோற்றுவது (பஞ்சபூதங்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்யுந் தன்மையில்)
பொறுத்த பேர்களுக் குண்டுல கத்தினிற் போற்றும் வெறுக்கை யென்கினும் வீகிலமென்றிடல் வீணென் ருெறுத்து வையத்தை யின்பங்க ளுண்குவர் போலப் பொறுக்கிச் சிற்சில ருண்டனர் முளைகளைப் பூரான். 75

29.
(அ - ரை) வெறுக்கை - செல்வம், வீகிலம் - நாங்கள் இறக்கமாட்டோம், ஒறுத்து வையத்தை - உலகத்தவர் களுக்குக் கெடுதியை விளைவித்து, உண்டனர் பூரான்பூரானவெட்டி உண்டனர்.
திளைக்கு மன்பினன் தேமொழித் திருவினை யொப்பாள் பிளேப்பெ ருததன் மனைவிக்குக் கொடுத்திடல் பேணி முளைத்த வித்தினைக் கொணர்ந்தனன் முன்னரில் நீட்ட வளைக்கை சோர்ந்ததை வாங்கினள் பாத்தியுட் பதித்தாள். 76
(அ-ரை) திளைக்கு மன்பினன் . கடுமையான அன்டை யுடையவன், தேமொழி - இனிமையான வசனங்களைப் பேசுபவள் திருவினை இலட்சுமியை. பிளைப்பெருத பிள் ளைப்பேறற்ற, பேணி - எண்ணி, கொணர்ந்தனன் . பாத் தியிலிருந்து இழுத்துக்கோண்டு வந்தான், வளைக் கை - வளையல்களை அணிந்த அவனுடைய மனைவி, சோர்ந்து - துக்கமடைந்து (பிள்ளைப் பெருதவளாதலால் பணம் வித்து முளையையும் பிள்ளைபோலப் பாவித்தாள்)
வேறு
மூவிரு மதியா மெல்கை முளையெலாங் கிழங்கதாக ஆவலுற் றிருந்தார் கூடியமரருக் கவியை யீந்து பூவினவெட்டித் தோண்டிப்புதைபொருள் பொறுக்கி யார்த்தல் கோவினி லுறைந்தார் கொற்றங் கொண்டுள நீர்மைத்தாமால்
(அ -ரை மூவிரு மதியா மெல் கை - ஆறுமாதங்கள் சென்றதும் அமரருக் கவியையீந்து - தேவர்களுக்குப் பொங்கிப் படைத்துப் பூசித்து, பூவினை : பூமியை, புதை பொருட் பொறுக்கி யார்த்தல் - புதைந்திருந்த கிழங்கு களைப் பொறுக்கி (அவைகள் மிகவும் பொலிந்திருப்பதால்

Page 21
30
ஆரவாரம் செய்தல்), கோவினி லுறைந்தார் - அரசர்கள், கொற்றங் கொண்டுள நீர்மைத் தாமால் - வெற்றியடை கின்ற காலங்களில் ஆரவாரித்தலை ஒத்தது.
காத்திர முடையார் வெட்டிக் கவிழ்த்திட மண்ணை வாரிப் பாத்திரங் கிழங்கை யிட்டுப் பாவையர் சுமக்கும் போழ்திற் பூத்துள வதனம் "ப்ரித்துப் பூரண மடைந்த திங்கள் பேர்த்தெழுங் காலை யொல்கிற் பேணுவர் நாணம் மார்கொல்.
(அரை) காத்திர முடையார் . சக்தியுடையவர், பாவை யர் சுமக்கும் போழ்தில் - சித்திரப்பாவை போன்றஅழகிய பெண்க்ள் (கிழங்கினுடைய பொலிவைக்கண்டு பெரும மகிழ்ச்சியடைந்து) சுமந்துகொண்டு ப்ோகும்போது, பூத் துள வதனம் பார்த்து . பொலிவடைந்துள்ள அவர்களு டைய முகங்களைப் பார்த்து, பூரணமடைந்த திங்கள் - பூரண சந்திரஞனது, பேர்த் தெழும் காலை யொல்கில் - திரும்பவும் எழும்பொழுது சுருங்குமாகில், பேணுவர் நாணமார் கொல் . எவருக்குத்தான் வெட்கத்தைச் சகிக்க முடியும். பூரணசந்திரன் பெண்களின் முகத்தைப்பார்த் துத் தன்னிற்பார்க்க அவர்களுடைய முகம் சிறப்புடைய தாக இருக்கக் கண்டு அடுத்தநாள் எழும்பொழுது வெட் கத்தாற் சுருங்கிற்றென்க.
வேறு
ஒடியற் கிளிக்கு முயிர்வாட் டொருத்தி குடியென் மனதிற் கொண்டாய் கோவே அடியாள் துயர மறியா யறியாய் மடிவே னய வசையுண் டென்ருள் 79
(அ-ரை) ஓடியற் கிளிக்கு முயிர்வாட் டொருத்தி - ஒடி யலுக்குக் கிழங்கைக் கிழிப்பவளாகிய, (காதலில் முன்பு ஈடுபட்டுப் பின்பு பிரிந்திருக்கும் துயரத்தால்), அவளு டைய உயிர் போகக்கூடிய நிலையில் இருக்கின்ற ஒருத்தி குடியென் மனத்திற் கொண்டசப் கோவே - என் மனதிற்

31.
குடிகொண்டிருப்பவளுகிய அரசனைப் போன்றவனே, அடி யாள் துயரமறியா யறியாய் - உன்னுடை ய அடியர்ளா கிய யான் (உன்னைப் பிரிந்திருப்பதால்) எய்து கின்ற துய ரத்தை நீ அறியமாட்டாய். மடிவேனைய - ஐயனே யான் துயரத்தால் இறந்துவிடுவேன். அப்படி இறந்தேனனல் உனக்கு வசை உண்டாகும்.
உற்ருள் பசலை ஒருத்தி கிளியே முற்றுஞ் சுவைகொள் மொட்டுப் பூரான் பெற்றுண் பாயென் நிலைமை பேசிற் பற்றி உள்ளம் படர்ந்தார்க் கென்ருள். 80
(அ - ரை) உற்ருள் பசலை ஒருத்தி - காதலனை நீண்ட காலம் பிரிந்திருந்ததனுல் உண்டாகிய கவலையில் பசலை என்கின்ற ஒரு பொன்னிறம், மேனியில் எய்தியுள்ளவ ளாசிய ஓர் பெண், பற்றி உள்ளம் படர்ந்தார்க்கு - என்னுடைய உள்ளத்தைப பிடித்துக்கொண்டு போனவ ராகிய காதலருக்கு, என்நிலைமைபேசில் - என்னுடைய பசலை நிலைமையாகிய இறக்கும் தறுவாயான நிலைமையை எடுத்துக்கூறுவாயாகில், பெற்றுண்பாய் - நான் தருவேன் உனக்கு உண்பதற்கு.
வேறு
தேங்கனித் துருவலோடு தீஞ்சுவைப் பனையின் கட்டி பூங்கைய விடித்தாள் சுட்டபனங் கிழங்கோடு போற்றி ஈங்கிதை யுண்மி னெரண்ரு ளெழுவன தோழா னுண்டே பாங்கியே பாரில்வந்த பயணிதெற் காகுமென்றன் S.
(அ-ர்ை) தேங்கனி - தேங்காய், பூங்கையள் - மலர் போன்ற கையையுடைய மனைவியானவள், போற்றி -- கணவனைத் தொழுது எழுவன தோழான் - தூணை நிகர்த்த தோள்களையுடைய கணவன், பாங்கியே - என் றும் பக்கத்தில் இருப்பவளாகிய மனைவியே, பாரில் வந்த பயனிது எற்கு ஆகுமென்ருன் - நான் உலகத்திலே பிறந்ததனல் எய்திய பயன் இதுவே ஆகும் என்ருன்.

Page 22
3.
அறுத்துநல் லவிகி ழங்கை
யளவினிற் பெய்தே யுப்பை உறைப்பொடு தெங்கின் கனியை
ஒருங்குசேர்த் திடித்தாள் கொழுநற் சிறப்பின பூழிய வுண்டான்
தெவிட்டிலாச் சுவையைக் கண்டே வெறுக்கிலா துண்ய னிவை
மூன்றுவே ளையுமிஃ தென்றன். 82.
அ - ரை] கொழுநற் - கணவனுக்கு, சிறப்பினள் - அழகுவாய்ந்த மனைவி. தெவிட்டிலா - எவ்வளவு உண்டா லும் ஆசை குறையாத, ஈவை - கொடுப்பாயாக.
வேறு
பூட்டி யிருப்பதும் புழுக்கொடியல்
போகவர வுணல் புழுக்கொடியல் வாட்டு பசிக்குணல் மாணுெடியல்
மங்கையர் காளையர்க் கூட்டொடியல் நாட்டுப் புகழ்தனே நாட்டொடியல்
நற்சுவை வாயினிற் கீயொடியல் கேட்டுக்கேட் டெங்கணும் வழங்கொடியல்
கிளத்த கிலாப்புகழ்ப் புழுக்கொடிால், 8.
(அ - ரை மாணுெடியல் - பெருமை மிகுந்த புழுக் கொடியல், மங்கையர் காளையர்க்கு ஊட்டு - காதல் மங் கையர் காதலர்களுக்கு உண்ணும்படி கொடுக்கிற, நாட் டுப் புகழ்தனை நாட்டு - யாழ்ப்பாணமாகிய எங்களுடைய நாட்டின் புகழை வெளிநாட்டவருக்கு நாட்டுகின்ற, நற் சுவை வாயினிற் - எந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் னும் நல்ல சுவையை வாயினிற்கு கொடுக்க உண்ணப்படு கிற. கிளத்தகிலா - சொல்ல முடியாத,

இனிப்புட னுஜ்ாபதும் புழுக்கொடியல் இட்டுறைப் புண்பதும் புழுக்கொடியல் தனித்திட வுண்பதும் புழுக்கொடியல் சப்பலுந் தேங்கனி யோடொடியல் முனைப்பல புண்ணியம் செய்தவைகள் முற்றி விளைந்தமு தாகியெங்கும் நினைத்த வுடன்வரு முணவொடியல் நீள் புகழ் யாழ்ப்பாணம் நிறைந்துளதால், 84
அ - ரை) முனைப்பல புண்ணியம் செய்தவைகள் - நாங்கள் முந்திய பிறவிகளிலே செய்த புண்ணியமெல்லாம், முற்றிவிளைந்த முதாகியெங்கும் - முற்றி விளைந்து எங்க ளுடைய நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் தேவாமிர்த மாகி,
மதிப்பைத் தருவதும் புழுக்கொடியல் மற்றைநாட் டோர்களும் Roகிழொடியல் புதுப்பலங் கொடுப்பதும் புழுக்கொடியல் போக்கும் பிணிகளைப் புழுக்கொடியல் கதித்தழ குடையது புழுக்கொடியல் கண்டநா வூறிடும் புழுக்கொடியல் நிதிக்குவை யெங்கட்குப் புழுக்கொடியல் 85 நேரிதற் கெங்கணும் பாரிலில்லை,
அ - ரை) மற்றைய நாட்டோர்களும் மகிழ் - மற் றைய தேசத்தவர்களும் எங்களிடமிருந்து விலைக்குப் பெற் றுண்டு மகிழுகின்ற, புதுப்பலம் கொடுப்பதும் - பலங் குறைந்தவர்கள் உண்டால் புதிய உயர்ந்த பலத்தைக் கொடுப்பதும்; கதித்தழகு - அதிகமான அழகை, நிதிக் குவை - பெருத்த செல்வம்,

Page 23
34
வேறு
சீவல்கள் சிவலாய்ச் செய்புழுக் கொடியலைப் பாவையர் பாணிதோய்த் துப்பகல் வெய்யிலிட் டாவலோ டுண்பதுற்கரியநல் விருந்தினர்க்
கீவதுண் டெங்க மணநிகழ் பந்தருள். 86
அரியநல் விருந்தினர் - கலியாண வீட்டுக்கு ("ש6b-{9.)
வருகின்ற அருமைக்குரிய விருந்தாளிகள், ஈவதுண்டெங் கணும் மணநிகழ் பந்தருள் - யாழ்ப்பாணத்தில் எல்லா விடங்களிலும் கல்யாணப் பந்தருள் கொடுப்பார்கள்.
கடிமணம் முடிதரக் காரிகை யொரித்திதன் விடையனுன் செவியினுள் விளம்பினள் கோவிலுக் கடிதொழற் கெழுமுன ரறிகிலா தெவருமே வடலியைக் கும்பிடல் மறக்கலா காதென. 87
(அ-ரை) கடிமணம் முடிதர - கல்யாணப் பந்தருள் கிரியைக்ளெல்லாம் முடிந்ததும், காரிகை யொருத்தி - கட்டழகியாகிய கலியாணப்பெண், விடையனன் செவியி னுள் - விடைபோன்ற அவளுடைய கணவனுடைய செவி யினுள், விளம்பிநீள் - இரகசியமாகக் கூறினள், அடி தொழ வெழுமுனர் -கோவிலுக்கு தெய்வத்தின் பாதத் தை தொழப் போவதற்கு முன்பு, அறிகிலா தெவருமே -ஒருவருக்கும் தெரியாமல், வடலியைக் கும்பிடல் மறக் கலாக தென - தங்களைப் பொருத்தி வைத்த தாகிய" வடலிய்ை வணங்குவதை மறக்கக் கூடா தென்று. ..
வேறு
வரிசிலைக் கரமுடை மதனிக ரொருமகன் திருநிகர் வனிதையைத் தெரிகிலன் வரைகுவன் கருநிறப் பிடியினைக் கமழ்தர வொடியலில் அரிசியை வெலவிவு ளடுவள்பிட் டெனவுமே. 88

35
(அ-ரை) வரிசிலைக்கரமுடை - வரியப்பட்ட வில்லை கையிலே உடைய, மதன் - மன்மதன், ஒருமகன் - ஓர் ஆடவன். திருநிகர் வனிதையை - இலக்குமியை ஒத்த அழ குடைய ஒர் பெண்ணை, தெரிகிலன் - கலியாணம் செய்ய தெரிந்து கொள்ளாது, கருநிறப் பிடியினை வரைகுவன் - கரியநிறமுடைய பெண்யானையை ஒத்த ஒர் மங்கையைக் கலியாணம் செய்துகொண்டான், ஒடியலில் அரிசியை வெலவிவன் அடுவள் பிட்டெனவுமே - இவள் ஒடியல்மா வில் அரிசிமாவிற் செய்யும் பிட்டிற்பார்க்க சுவைமிக்கச் செய்வாளென்று.
கூத்தியிற் சென்றதாய்க் கொழுனனைக் கேட்டவோர் பூத்திகழ் சென்னியள் போயதே யொடியலென் ருத்திரத் தோடுசென் றய்ந்தனள் கூடைவாய் வாய்த்தகூ டையினடி வந்தவா யறிகிலசள். 89
(அ-ரை) கூத்தியில் - கூத்தியுடைய வீட்டிற்கு கேட்ட - யாரோ செல்லக்கேட்ட, பூத்திகழ் சென்னியள் - தாம ரைமலரை யொத்த முகத்தினையுடையவளாகிய மனைவி, போயதே யொடிய லென்று - கணவன் கூத்திக்குக் கொடுக்க ஒடியலைக் கொண்டுபோய் விட்டானென்றெண்ணி, ஆய்ந் தனள் கூடைவாய் - அவள் அடையாளமாகப் பொத்தி வைத்திருந்த, கூடையின் வாயை ஆராய்ந்தாள், கூடையி னடி.வந்த வாயறிகிலாள் - கூடையின் அடியில் கணவன் ஒரு புதிய வாயை வைத்து ஓடியலை இழுத் தெடுத்துக் கொண்டுபோய்விட்டானென்பது அவளுக்குத் தெரியவில்லை
கொடியதோர் பிணியினன் பண்டிதர்க் கும்பிட ஒடியலிற் செய்தசு ழரைமதி யுண்டபின் கடிதினில் வருவையோர் கலவைதந் திடவெனும் இடைகுண மடைகுவ னெறிந்தனன் பண்டிதன்
(அ- ரை) பண்டிதர்க்கும்பிட - வைத்தியரை வணங்கித் தனக்கு வையித்தியம் செய்ய வேண்டு மென்று கேட்க,

Page 24
36
அரைமதி - அரைமாதம், கடிதினில் - காலம் தாழ்த்தர்து, ஓர் கலவை தந்திட வெனும் - ஒருமருந்தைக் கொடுப்ப தற்கு என்ருர், இடைகுணமடைகுவன் எறிந்தனன் பண்டி தன் - சொல்லப்பட்ட காலத்துக்குள் நோய் மாறிய அவன் வைத்தியரை பொருட்படுத்தாது கைவிட்டான்
வேறு ஏலவோர் கவியி சைக்கக் கம்பயிஞரம் பொனேற்றன் தாலமீ யொடியற் கூழே யெளவைதந் திடுமி னென்றள் சாலவும் நல்ல கூழின் தன்மையா ரியம்பற் Tr ஞாலமே விண்ணின் மேலாம் நவையில் கூழ் ந ண்டால் 91
(அ - ரை) ஏல - பொருத்தமாக, இசைக்க - பாடுதற்கு ஏற்ருன் - தனக்குரிய கட்டண மாதப் பெற்றுக் கொண் டான், தந்திடு மினென்ருள் - த்னக்கு கட்டண மாகக் சொடுக்கும்படி கேட்டாள், தன்மை யாரியம்பற்பர்லார் - மேம்பாட்டை ஒருவருக்கும் சொல்ல முடியாது, நவையில் கூழ் நாளு"முண்ட்ால்-குற்றமற்ற (மிகவுயர்ந்த சுவையு டைய) ஒடியற் கூழை ஒவ் வொரு நாளுமுண்ணும் பாக் கியம் கிடைத்தால் (அவருக்கு) ஞாலமே விண்ணின் மே லாம் - தெய்வ லோகத்திற் பார்க்க பூவுலகமே சிறந்ததர்
கும்
பழையசா தத்தி னுேடு பனேதரு மொடியற் பிட்டைக் குழைதரச் செய்து கோவின் பாற்றயிர் நன்கு பெய்தாள் மழைபொரு கண்ணி பின்னும் மரவள்ரிைக் கறியுமிட்டாள் கொழுநனு முண்டு நைந்தான் கொடுக்கில ரரற்கி தென்றே. 92
(அ - ரை) குழைதரச் செய்து - ஒன்ருகக் குழைத்து,கோ வின் பாற்றயிர் நன்கு பெய்தாள் - பசுப் பாற் றயிரை அதனுள் நன்முக இட்டாள், மரவள்ளிக் கறி - பழைய மரவள்ளிக் கிழங்குக் கறி, நைந்தான் - சிணுங்கி அழு தான், கொடுக்கி லரற்கிதென்றே" - அளவிறந்த இந்த டிவையுள்ள உணவை சிவனுக்கு ஒருவரும் படைக்கிருர் 8 வில்லையே யென்று (பக்திமானகிய அவன் அழுதான்

37
வேறு
ஆனையன் ஞனவற் கிளையவோர் பயலின ஏனடா வைதனை என்றடித் திடுதலும் ஈனமுற் றவனெழப் போரினி லோடியே ஊனமெய் தாதுணி லொடியலென் றலறிஞன். 93
(அ-ரை) ஆனையன்னன் - ஆணைபோன்ற பலத்தையுடை யவன், அவற்கிளைய வோர் பயலினை - அவனிலும் வயது குறைந்த ஒர் பையனை, ஈனமுற்றவ னெழப் போரினில் - மதிப்பை இழந்தவனகிய பையன் அவனேடு போர் செய் யத்தொடங்க, ஒடியே - ஆனபோன்ற பல முடையவன் பயந்து ஓடிப்போய், ஊன மெய்தாதுணிலொடிய லென் றலறினன் - நானும் ஒடியல் சாப்பிட்டிருப் பேணுகில் எனக்கு அவமானம் வந்திருக்காது என்று சத்தமிட்டு அழுதான். சிறியவனுயினும் ஒடிய னுண்டதால் சிங்கம் பேர்ன்ற பலத்தை உடையவனுயிருந்தான் (பருத்த யானை போன்ற பலத்தை யுடையவன் அவனுக்குத் தோற்க வேண்டியவனுன்)
வேறு மாற்றவோர் சிற்ற நோயை மானில
மெங்குஞ் சென்றே தோற்றன ஞெருவன் வந்து தொகைப்
பணம் கோடுத்துக் காரம் ஏற்றன னுண்டு பெற்றன் குணமிரு
வாரத் தென்றல் நோற்றவர் நாட்டிற் கன்றி நூதனத்
தால முண்டோ 94.
(அ-ரை) மாற்ற வோர் சீற்றநோயை - ஒரு மிகக் கொடிய நோயை வைத்தியம் செய்வித்து மாற்றுவதற்கு, மானில மெங்கும் சென்றே - உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களுக்கும் சென்று, தோற்றன னொருவன் வந்து - மாற்றுவிக்கமுடியாது தோற்றவனகிய ஒருவன் இந்த நாட் டிற்குத் திரும்பிவந்து, தொகைப் பணம் கொடுத்துக் கா ரம் ஏற்றனன் - பெருந் தொகைப் பணம் கொடுத்து

Page 25
38.
கல்லக்காரத்தை விலைக்குப் ப்ெற்று, உண்டுபெற்றன்குணம் இருவாரத் தென்றல் - மருந்தாக உட்கொண்டு இரண்டு வாரங்களுள் வருத்தம் மாறப்பெற்ருனுகில், நோற்றவர் நாட்டிற்கன்றி - தவம்செய்தவர்களாகிய எம் நாட்டின ருக்கு அல்லது, நூதனத்தாலமுண்டோ - பல நூதனக் குணங்களேயுடைய பனைமரமானது இருக்கமுடியுமா.
கத்தரிக் காயை வெட்டிக் கலந்துமே ஒடியல்சூழவுள் உத்தமப் பிட்டுச் செய்தே உகுத்து நல்லெண்ணே ய்ஃதுட்
புத்திரணுெருவற் கீந்தாள் போற்றுதாய் நாளு முண்டான் சத்துரு நாட்டிற் கெய்தத் தமியணுய் வாயில் காத்தான் 95
(அ-ரை ) போற்றுதாய் எல்லோருடைய புகழுக்கு முரியவளாகிய தாய், நாஞ்முண்டான் - ஒவ்வொருநாளு முண்டான், சத்துரு நாட்டிற் கெய்த - தன்னுடைய நாட் டிற்கு பகையரசன் படையெடுத்துவர, தமியணுய் வாயில் காத்தான் - வேருெருவருடைய உதவியுமில்லாமல் தனி யணுய் நின்று பகையரசனுடைய படையினரை தடுத்து நாட்டைக் காத்தான்,
வேறு வெட்டுங் கட்டும் வீடு பெருக்கு மெரிமூட்டும் இட்டம் மோடே நீரு மிறைக்கு மெருப்போடும் வட்டஞ் செல்லும் மாடுழப் பின்னே யரிக்கும்மாக் கிட்டும் பனைநல் லேவலணுசக் கிளரும்மே 96
(அ-ரை) வெட்டும் - கருக்குமட்டையாகி வெட்டும் கட்டும் - நார்க்கயிருகிக் கட்டும், வீடுபெருக்கும் - ஈர்க் குப் பிடியாகி வீட்டைக் கூட்டும், எரிமூட்டும் - பன்னுடை யாகி நெருப்பு மூட்டும், நீருமிறைக்கும் - பீலிப்பட்டை யாகி நீரை இறைக்கும், எருப்போடும் - நார்க்கடக மாகி எருப்போடும், வட்டஞ்செல்லும் மாடுழப்பின்னே - கலப்பையின் மரம் பனையாக இருத்தலால் உழும்பொழுது மாட்டின்பின் வட்டமர்கச் செல்லும் மாடுழப் பின்னே

39
-கலப்பையின் மரம் ப்னையாக இருத்தலால் உழும்பொழுது மாட்டின்பின் வட்டமாகச் செல்லும், அரிக்கும்மா - அரிப்பெட்டியாய் மா அரிக்கும், கிட்டும் - எமக்குக் Sillவுள்ளதாகிய, நல் லேவலனக கிளருமே - நல்ல வேலைக் காரணுக விளங்கு கின்றது.
கொடுக்குங் கொள்ளுங் கூல மளக்கும் கணக்கென்றும் எடுக்கும் மேறி வண்டியிற் றுரப் 5шпеthe தொடுக்கும் மீகைத் தொல்புகழ்ச் செல்வ வணிகர்ப்போல் நடிக்கும் மம்ம நற்பனை நல்லோர் நாட்டின்கண். 97
(அ-ரை) கொடுக்குங் கொள்ளுங் - பெட்டியாக அமைந்து கொடுக்கும் வாங்கும், கூலமளக்கும் - கொத்தாக அமைந்து தானியங்களை அளக்கும், கணக்கென்றும் எடுக் கும் - கணக் கோலையாக, கணக்கை எப்பொழுதும் வைக் கும். ஏறிவண்டியிற்றுாரப் பிரயாணம் தெர்டுக்கும் - வண். டியின் மேல் துலாவாகவும் நுகமாகவும் கிருதிகளாகவும். அமைந்து பிரயாணம் செய்யும், ஈகைத் தொல்புகழ் வ ணிகர்ப்போல் - கொடுப்பதில் பழைய காலங்களிலிருந்து, புகழைப் பெற்று வருகின்ற செட்டி மக்களைப்போல், நல் லோர் நாட்டின்கண் - உலகத்து மக்களோடு (ஒத்துப்பார்த் தால்) நல்லவரென்று சொல்லக் கூடியவர்களுடைய நாடாகிய (யாழ்ப்பாணத்தின்கண்)
குனியா தென்றுங் கூரிய வாளே யுடை கொள்ளும் அனேவோ ருக்கும் சட்ட மளிக்கு மடிநின்றர் தினுமா றியுந் தெவ்வர் படைக்கு வலிகாட்டும் பனேநா டாளும் கோவெனக் கூறும் பான்மைத்தே 98
(அ-ரை) குனியா தென்றும் - பனை வளையமாட்டாது? கூரிய வாளையுடை கொள்ளும் - கூரிய வாளாகிய கருக் கைப் பூண்டிருக்கிறது, அனைவோருக்கும் சட்டமளிக்கும் - தேசத்துள்ள எல்லோருககம் அரசனுடைய சட்டத்தை

Page 26
40
தன்னுடைய ஒலையில் எழுத வைத்துக் கொடுக்கும், அடி நின்ருர் - அதன் கீழே நிற்பல *களுக்கு, தினுமாறியும் - பனம்பழம் நுங்கு ஆகியவற் ைஉண்பதற்கு கொடுக்கும் தெவ்வர் படைக்கு வலிகாட்டுL) - பகைவராகிய கிருமிக் கூட்டங்களுக்கு தன்னைத்தாக்கவிடாதுபலத்தைக்காட்டும்.
நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்கட்கும்
சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியும்மே. 99
(அ-ரை) நீற்றைப்பூசும் - பனையின் மேற்பகுதி விபூதி
யைப் போன்ற சாம்பல்நிறத்தை உடையதாக இருக்கிறது, வானம் பரவும் . ஆகாயத்தை நோக்கிக் கரங்களை உயர்த் திக் கும்பிடுவது போல் நிற்கிறது, நிறையும் நூல் ஏற்றுக் கொள்ளும் - தச்சர் பனையை வெட்டிச் சீவும்பொழுது அ டையாளக் குறிக்கு இடுகின்ற நூலை, ஏற்றுக் கொள்கிறது, யாண்டுமுவக்கும் - எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கும், எவர்கட்கும் சாற்றும் ஞானந்தந்திடும் - எல்லோருக்கும் உயர்வாகக் கூறப்படுகின்ற ஞானத்தை நூல்களூடாகத்த ருகின்றது, அன்பிற்றலை நிற்கும் - மக்களுக்கு (எல்லாப் பொருள்களையும் கொடுத்து) அன்பிலே முதலிடத்தைப் பெற்று நிற்கிறது, போற்றந்தணர்கள் - மக்களால் வணங் கப்படுகின்ற வர்களாகிய (உண்மையான பெருமைக்குரிய) அந்தணர்கள்,
வேறு
வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே ஆண்டுபல் லாயி ரம்முன் னறிவுடை யெமது முன்ளுேறர் காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றர் நீண்டதா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர் 100
(அ-ரை) வேண்டிய யாவுமீயும் - மக்களுக்கு வேண் டிய எல்லாவற்றையும் கொடுக்கின்ற, வியன்றரு மியல்பு கண்டே - வியக்கக் கூடிய தன்மை யுடைமையைக் கண்டு

41
ஆண்டு பல்லாயிரம் முன் - பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னர், அறிவுடை யெமது முன்னேரி - எமது முேைனுரா கிய அறிவில் மிகுந்தவர்கள், காண்டரு தாலந்தன்னை - காண்பதற்குஅரியதாகிய (வேறு தேசங்களில் இல்லா மையால்) பனையினை, கற்பகத்தாரு வென்முரி - கேட்ப தெல்லாவற்றையும் கொடுக்கின்ற தன்மை யுடைமையால் கற்பகத்தாரு வென்றுகூறியுள்ளனர். ஓம்பி இஃதை- இந்தப் பனையை வளர்த்துக்காப்பர்ற்றி, நீவிரின்புற்று - பனைதரும் பொருள்களை யெல்லாம் நீவிர் அனுபவித்து இன்ப மெய்தி நீண்டநாள் - கூடிய காலத்திற்கு (பனை பலத்தையும் சுக த்தையும் கொடுப்பதால்) வாழ்வீர் - உலகத்தில் வாழ்வி ராக! (இஃது நூலாசிரியர் மக்களுக்குக் கொடுக்கும் வா ழ்த்து)
முற்றிற்று

Page 27


Page 28
கிடைக்கும் இடம்:
※
烹烹※※※※※※凝湾亲亲亲
சிறி லங்கா 234 கே. ே
LILI fr ujit Li L
التي يسطيسية
சுப்பிரமணிய
235. கே. ே
யாம்ப்
※烹※漳悠翰烹※※※※※潮

புத்தகசாலை க. எஸ் வீதி,
ாணம்
suam
ம் புத்தகசாலை
ཡིག་ཚང་།
க. எஸ் வீதி,
II - 630T D.
سمسیل‘‘ 岑紧※※※※※※※※※*