கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதியதோர் உலகம் செய்வோம்

Page 1
சனசக்தித் திட்டத்தின் ெ
 


Page 2

புதியதோர் உலகம் செய்வோம்
இலங்கை வங்கி
தேசத்திற்கு வங்கி

Page 3
இலங்கை வங்கியில் நிதி உதவி பெற்று தமது வாழ்க்கைப் பாதையை செழிப்பாக்கிக்கொண்ட சனசக்தி உதவி பெற்றோர் எழுவர் தொடர்பானது.
இலங்கை வங்கியின் அபிவிருத்தி வங்கி அலுவல்கள் துறையின் சனசக்திப் பிரிவின்
தயாரிப்பு.
செப்டெம்பர் 1992.

எஸ். வி. ஆர். வேதா”கழ் சிரேஷ்ட உதவிச் செயலாளர்
EST TE550
முன்னுரை - 4
1. சைன்ஸ்டன் குடியேற்றத்தில் புதியதோர் வாழ்வு'
எம். ரி. எம். பஹார்தீன், அலவத்துகொடை, அக்குறணை 2. இஹல கொஸ்கம 'பாம்புக்கடி விஷவைத்தியர்' 9
- தயா கமகே 3. "வாழ்க்கை என்னும் புதியதோர் போர்க்களத்தில்
ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் -எம். டபிள்யூ. மர்தேலிஸ் பாஸ் உன்னஹே, பிட்டிப்பனை வடக்கு 14 4. புதியதோர் உரிமை -யுனிட் ட்ரஸ்ட்
பங்குடைமையாளர்’ எம். ஐ. நஜிமுதீன்,
6
வீரச்சோலை, ஹொரவப்பொத்தானை - 18. 5. புது வாழ்வு பெற்ற நகை ஆபரணச் சிற்பி
- பி. ஏ. குணரத்ன -லத்பதுர வதுரலிய 22
6. "கரடுமுரடான வாழ்க்கைப் பாதையை வெற்றிகொள்வதற்கு புதியதோர் பாதணி கே. எம். திசாநாயக்க -முல்லேகம -அம்பத்தன்ன 26
7. சனசக்தியால் கிடைத்த தையல் இயந்திரத்தின் உதவி
யால் புது வாழ்வு காணும் குசுமாவதி, பண்டகிரிய. 29

Page 4
முன்னுரை
1989ல் ஆரம்பிக்கப்பட்ட சனசக்தித் திட்டம், இலங்கை வங்கியின் நடவடிக்கைகளை புதியதொரு துறைக்கு இட்டுச் செல்வதற்கான புதியதோர் நுழைவாயிலை அமைத்துக் கொடுத்தது. இப் புதிய பாரிய கடமையை தனது சிரமேற்கொண்டு தவறுகளை முழுமனதோடு ஏற்று, வந்த சவால்களை எல்லாம் எதிர்நோக்கி வெற்றி கண்டது. திட்டங்களைச் செயற்படுத்தும்பொழுது எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் தடைகளினூடாகப் பெற்ற அனுபவங்களையும் முன்னேறிச் செல்வதற்கு ஏதுவாகப் பெற்றுக் கொண்ட வெற்றிகளையும் எதிர்காலத்துக்காக எழுத்தில் வடித்து வைப்பதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இலங்கை வங்கி கருதுகின்றது.
அநாதரவான நிலையில் எல்லோரினாலும் கைவிடப்பட்டிருந்த ஒரு வகுப்பினர் சுய சக்தியினாலேயே தலைநிமிர்ந்து நிற்பது தொடர்பான இச் சிறு புத்தகம், இவர்களைப் போன்ற மற்றையவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்குமேயானால் இதனை வெளியிடுவதன் மூலம் இலங்கை வங்கி எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறுகின்றது 676Ծrevուհ.
தமது வாழ்வினை உயர்த்துவதற்கென வங்கியால் வழங்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தும் கடமையில் நின்றும் தவறிவிடாத மக்களின் உன்னத மனிதப் பண்பினை இப் புத்தகம்வெளிப்படுத்துகின்றது. எதிர்காலத்தில் ஏனையோரும் இவ்வுதாரணத்தைப் பின்பற்றுவார்கள் என நிச்சயமாக எதிர்பார்க்கின்றோம்.
இலங்கை வங்கியின் ஆதரவுடன் இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வந்த ’தேசத்தின் வங்கியாளர் பஹன் தெம்ப" என்றநிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகளுடன் தொடர்புப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து சனசக்தித் திட்டத்தின் மூலம் தமக்கெனப் புதிய வாழ்வுகளை அமைத்துக் கொண்டோரின் கதைகள் தொகுக்கப்பட்டு இங்கே தரப்பட்டுள்ளன.
4

இவ் உண்மைக் கதைகளை உயிரோட்டமுள்ளதாகவும் செம்மையானதாகவும் பதிந்து வைப்பதற்கு எமக்குதவிய திரு. நோபட் கமகே அவர்களுக்கும் அவற்றை தமிழில் மொழிபெயர்த்துதவிய திருமதி. ஹசஸ்ைமாஸெயின் பாஸில் அவர்களுக்கு எமது நன்றி உரித்தாகின்றது. இம் முயற்சியில் எம்மை ஈடுபடுத்தி உற்சாகமூட்டி பல துறைகளிலும் எமக்குப் போதிய ஆதரவு வழங்கிய இலங்கை வங்கி பொது முகாமையாளர் திருமதி. றோஹினி நாணயக்கார அவர்களின் வழிநடத்துதலை நன்றிப்பெருக்கோடு குறிப்பிடுகின்றோம்.
GéF Golf 1992

Page 5
சைன்ஸ்டன் குடியேற்றத்தில் புதியதோர் வாழ்வு
பஹார்தீன்
நறுமணம் ஆலயங்களிலிருந்து வீசுகின்றது. கடவுள் ஏழை எழியோர் என்ற பாகுபாடின்றி எல்லோரது கீதங்களுக்கும் செவிமடுக்கின்றான். கடவுள் தன்னிடம் துன்பங்களை இறைஞ்சும் வறிய மக்களுக்கு ஆசீர்வாதம் புரிந்தவண்ணமே இருக்கின்றான்.
குறிப்பிட்ட ஒரு நபரை மாத்திரம் கடவுள் ஆசீர்வதிப்பதில்லை. அவனது ஆசீர்வாதம் எல்லோருக்கும் பொதுவானதாகும். அவன் எப்படியோ மக்களுக்கு அருள்புரிந்துவிட்டு வந்த வழியில் அடையாளத்தையேனும் வைக்காது மக்கள் நன்றி தெரிவிப்பதற்கு முன்னர் மறைந்துவிடுகின்றான். எனினும் அக்குறனை உப அரசாங்க அதிபர் பிரிவில் அவவாத்துக்கொடை சைன்ஸ்டன் குடியேற்றத்தில் வசிக்கும் எம். ரி. எம். பஹர்தீன் என்னும் இளைஞனுக்கு கடவுளின் ஆசீவாதம்கிடைத்தது சனசக்தித் திட்டத்தின் மூலமேயாகும். அது அவரது வாழ்வில் பாரிய மாற்றத்திற்கான அடிக்கல்லை நாட்டியது எனலாம்.
கார்முகில் கூட்டங்கள் கதிரவனின் கதிர்களைச் சூழ, குளிர்காற்று வீசும் ஒரு மாலைப்பொழுதினிலே தேயிலைத் தோட்டங்களினூடாக ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்று
 

நாங்கள் திரு. பஹார்தீனைச் சந்தித்தோம். நாங்கள் அவரைச் சந்திக்கும்போது அவர் இன்னும் அறுவருடன் அவருடைய சிறிய வீட்டுக்குள் ஊதுபத்தி தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார். ஒரு யுவதி நூல் சுற்றும் இயந்திரத்தில் நூல்பந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். இன்னுமொரு யுவதி அவர் சுற்றும், நூல் பத்துகளை பெட்டிகளில் அடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பக்கத்தில் கொக்கு அடையாளமிட்ட நூல் பந்து பெட்டி கிள் குவிக்கப்பட்டிருந்தன. இது சின்னஞ்சிறு தொழிற் சாலையாயினும் அதன் உற்பத்தித் திறனுக்கு சான்றுபகரும் விதத்தில் காணப்பட்டது. இன்னும் மூன்று யுவதிகள் வீட்டுக்குள் ஊதுபத்தி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
1989ம் ஆண்டு சனசக்தித் திட்டத்தின் 1வது கட்டத்தின் ப்ோது சனசக்தி உதவி பெற்றவரான திரு. பஹார்தீனுக்கு அப்பொழுது வயது 25. விவாகமாகாத இவருக்கு மூன்று இளம் சகோதரிகள். இவர் இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தந்தை இறந்ததன் பின்னர் பொறுப்புக்கள் யாவும் இவரது தலையில் சுமக்கவேண்டி ஏற்பட்டது.பொறுப்புக்களுக்குப் பயப்படாது துணிச்சலோடு அவற்றுக்கு முகம் கொடுத்தார். மாமனார் ஒருவரிடம் நான்கூலி அடிப்படையில் வேலை செய்தார். மாமனாரிடமிருந்து ஊதுபத்தி தயாரிப்பதற்கும் நூல் பந்துகளைத் தயாரிப்பதற்கும் கற்றுக்கொண்டார். அவர் தனது கைத்தொழிலைப்பற்றி எம்மிடம் கூறுகையில் நான் ஐந்து வருடங்களாக மாமனாரிடம் வேலை செய்தேன். அதன் மூலம் ரூ. 3000/ ஐ சேமித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இக் கால கட்டத்தில் தான் எனக்கு சனசக்தி உதவி கிடைத்தது. அதன் பின்னர் நான் எனக்குத் தெரிந்த கைத்தொழிலை விருத்திசெய்ய எண்ணினேன். இலங்கை வங்கியின் உதவியால் கிடைத்த கடன்களின் மூலம் இவ்விரு கைத்தொழில்களையும் ஆரம்பித்தேன்’ எனக் கூறினார்.
இவர் தனது நிறுவனத்தில் உற்பத்திசெய்யப்படும் நூல் பந்துகளையும் ஊதுபத்திகளையும் அனுராதபுரம், பொலநறுவை, குருநாகல், மாத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றார். அவர் ரூ.10,000/ ஐ மட்டுமே இலங்கை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றிருக்கின்றார்.

Page 6
அவர் தனது குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு வேறு அறுவருக்கும் தொழில் வாய்ப்பளித்துள்ளார். அது மட்டுமன்றி இலங்கை வங்கியின் கடனையும் ஒழுங்காகச் செழுத்தி (LJL = - த்துள்ளார். இக் கடனின் மூலம் திரு. பஹார்தீன் அவர்கள் வெற்றிகரமான சனசக்தி பெறுநராக விளங்குகின்றார். மேலும் வங்கியின் நன்மதிப்பைப் பெற்ற வாடிக்கையாளனாகவும் திகழ்கின்றார். மேலும் அவர் கூறியதாவது "இவ்விரு கைத்தொழில்களையும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கு எனக்கு ரூ. 25,000/ அளவில் தேவை. அதை இலங்கை வங்கியில் விண்ணப்பித்தேன். அக்கடன் கிடைத்ததும் இன்னும் ஆறு பேருக்குத் தொழில் வழங்கலாம்." என மிகவும் உற்சாகத்துடன் கூறினார். மனம் கமழும் புகைப்படலம் போல் எழும் அவரது எதிர்பாசீர்ப்புகளும் எண்ணங்களும் அவரது நோக்கத்தை நிறை வேற்றுவதற்காக அவருக்கு உற்சாகமளிக்கின்றது. ஊதுபத்தி ஆலயங்களில் நறுமணம் வீசச் செய்வது போன்று அவரது எண்னங்களும் சமூகத்தில் உயர்ந்து விளங்குகின்றது. அவரது ஒரே நோக்கம் இன்னும் சிலருக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதே ஆகும். தன்னைப்போன்ற அநாதைகளுக்காகவும் கஷ்டப்பிரதேசமான மலைநாட்டு குடியேற்ற வாசிகளுக்காகவும் அவர் காணும்கனவு மனித குலத்தின் உயர் குணத்தால் நிறைந்து மணம் வீசுகின்றது. அந்த உயர் குணம் திரு. பஹார்தீன் தயாரிக்கும் ஊதுபத்தியை விட மனம் கமிழ்கின்றது.
இலங்கை வங்கியின் உதவியின் மூலம் சுயமுயற்சியில் தலைநிமிர்த்து நிற்கும் திரு. பஹார்தீன் அவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும்வறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். அவரிடமிருந்து கற்கவேண்டிய விடயங்கள் பல. அவற்றுள் மிகவும் முக்கியமான விடயமென்னவென்றால் அவரது உயர் நோக்கமாகும். அதாவது தன்னைப்போல் வாழ்ந்த மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வாழ்வளித்து இயலாதவர்களை இயன்றவர்களாக்கி வாழ்வில் வெற்றிகாணவேண்டும்" என்பதே அவரது ஒரே நோக்கமாகும்,
குறிப்பு: 03. 09. 1992

இஹல கொஸ்கம 'பாம்புக்கடி விஷவைத்தியர்
- தயா கமகே
நான்கு பிள்ளைகளின் தாய் பாம்பு தீண்டி மரணம் . நாகபாம்பின் விஷத்தால் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணத்தைத் தழுவினார் . பாம்பு விஷம் உடம்பில் ஏறியதால் ஐந்து பிள்ளைகளின் தாய் மரணம் . . .
போன்ற தலையங்கங்கள் தினமும் பத்திரிகைகளில் காணக்கூடியதாக உள்ளது. இது எம்மிடையே பாம்புக்கடியின் பயங்கரத் தன்மையை உணர்த்துகின்றது. இருளில் அல்லது புற்தரையில் மறைந்திருந்து தீண்டும் பாம்பு போன்று பாம்பின் பயங்கரம் எமது கிராமப் பகுதிகளை வெகு விரைவில் தனது ஆதிக்கத்தின் கீழ் அடக்கி ஒடுக்கிக் கொண்டுள்ளது. பெரும்பாலும் பாம்பு விஷம் அபாயகரமானதாக இல்லாவிட்டாலும் தேவையான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உள் உறுப்புக்கள் பாதிக்கப்படுதலின் காரணமாக மரண அபாயம் ஏற்படுகின்றது. சில சமூக மீளாய்வாளர்களினதும், மரன பரிசோதகர்களினதும் கருத்துப்படி பாம்புக்கடி காரணமாக ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை கவனமின்மையும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாமையுமே எனக் கூறுகின்றனர். சரியான அனுபவமில்லாத நாட்டு வைத்தியர்களின் அறியாமை காரணமாகவும் சில நோயாளர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர்.

Page 7
பாம்புக்கடி விஷம் அகற்றலை சிலர் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்கின்றனர்.மேலைத்தேச அல்லது கீழைத்தேச வைத்திய முறைகளில் எந்த முறையையாவது கையாண்டு முதன் முதலில் பாம்பு விஷத்தை அகற்றுதல் வேண்டும். இல்லாவிட்டால் விஷமேறி விஷத்தினால் மரணம் ஏற்படும். எங்கள் அறியாமை காரணமாகவும் பாம்பு தீண்டுதலுடன் பின்னிப் பிணைந்துள்ள கதைகள் காரணமாகவும், மிகவும் பெறுமதிவாய்ந்த எத்தனையோ உயிர்கள் எம்மிடமிருந்து பிரிந்து செல்கின்றன. எனவே மிகவும் புத்திசாலித்தனமான செயல் என்னவெனில் பாம்புக்கடி விவு வைத்தியம் பற்றி மக்களின் அறிவை வளர்ப்பதாகும். அதனை பாம்பு விஷம் பற்றி அறிந்த வைத்தியர்களின் மூலமே மேற்கொள்ள முடியும். அத்தகைய சுய விருப்பத்துடன் சமூக முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் உன்னத மக்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான செயலாகும். பிறர் நலம் கருதும் உயர் குணத்தினைக் கொண்ட சனசக்தி உதவி பெறுபவரான கொஸ்கம, அலுபோதகமையைச் சேர்ந்த தயா கமகே என்னும் பாம்பு விவு வைத்தியரை இத்தகையதொரு சூழலில் நாங்கள் சந்தித்தோம். அது மிகவும் முக்கியமான சந்திப்பாகும். ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றிய விசித்திரமான மனிதன் வறியவர்களுக்குரிய சனசக்தி உதவி பெறுநராகியது எவ்வாறு என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
எனினும் எங்களது கேள்வி வைத்தியர் தயா கமகே அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. எங்களது கேள்விக்கு சிரித்த முகத்துடன் இலகுவான பாணியில் அவர் இவ்வாறு விடையளித்தார். "பாம்பு தீண்டலுக்கு பொதுவாக உள்ளாகுவது இயலாத வறிய மக்கள். நான் அவர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை" எனக் கூறினார்.
பல்வேறு வகையான நூற்றுக்கணக்கான பாம்புகளுடன் வாழும் விஷ வைத்தியர் தயா கமகே அவர்கள் எத்தகைய பிரச்சாரமுமின்றி தனது கடமையில் ஈடுட்டிருந்தார்.
வறுமையின் பிடியிலிருந்து மெல்ல மெல்ல அடியெடுத்து நடந்து வரும் வைத்தியர் அன்றுபோல் இன்றும் எழிமையான
10

குணங்களையே உடையவர். நடு இரவில் தன்னைத் தேடி வருபவர்களுடன் முடியாது எனக் கூறாது இன்னுமொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகச் செல்வதற்கு அவர் நித்தமும் ஆயத்தமாக இருந்தார். அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,
*நான் காலி, உலுவிட்டிகே என்னும் கிராமத்தில் பிறந்தேன். எனது தந்தை ஒரு தச்சுத்தொழிலாளி. நான் உயர்தரம் வரை கல்வி கற்றேன். எனினும் எனக்கு ஒரு தொழிலும் கிடைக்கவில்லை. அதனால் சில இடங்களில் சிறு சிறு தொழில்களைச் செய்தேன். கூட்டுறவுச் சங்கத்தில் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் காலியிலிருந்து வெளியேறி கடுவளை, நவகமுவவில் இருக்கும் எனது மாமனாரின் கமத் தொழிலுக்கு உதவினேன். அவருக்கு உதவும் காலகட்டத்தில் தான் விஷ வைத்தியம் கற்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவற்றை நான் சுயமுயற்சியில் கற்றேன். விஷ வைத்தியம் பற்றி எழுதியுள்ள புத்தகங்களைப் படித்தேன். பரீட்சைக்குத் தோற்றி விஷ வைத்தியராகப் பதிவானேன்” எனக் கூறினார்.
சுய முயற்சியில் கல்விகற்ற திரு. தயா கமகே அவர்கள் ஒரு பாரம்பரிய வைத்தியர் மட்டுமல்ல. மேற்கத்திய மருத்துவ விஞ்ஞானத்தில் விஷம் அகற்றல் முறைகளையும் கையாண்டு வைத்தியம் செய்கின்றார். வாழ்வில் எதிர்பார்ப்புக்களை இழந்த மக்களுக்கு வாழ்வை ஒளிமயமாக்கிக்கொள்வதற்காக இந்த விஷ வைத்தியரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் பல. பெற்றோரை இழந்து, உயர்தரச் சான்றிதழையும் வைத்துக்கொண்டு தொழிலாளியாக நாட்கூலிக்கு வேலைசெய்து, வாழ்வின் எதிர்பார்ப்புக்களை இடர்களுக்கு மத்தியில் அழித்தொழிவதற்கு இடமளிக்காது அதனை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் திகழ்ந்தார். அவரது வைத்தியத்தைப் பற்றிக் கூறுகையில் அவர் நான் என்றுமே பணத்துக்காக வைத்தியம் செய்யவில்லை. சேவை நோக்கத்துடனேயே வைத்தியம் செய்கின்றேன். அதனால் எனக்கு எல்லோரும் உதவுகின்றார்கள். எனது வீட்டைக் கட்டுவதற்கும் எனக்கு உதவியது அயலவர்களும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்களும் தான்." எனக் கூறினார். சனசக்தி உதவி பெற்றதன் பின்னர் திரு. தயா கமகே அவர்களின் வைத்தியத்துறை

Page 8
ஒழுங்குடையதாகவும், பரந்த நிலையிலும் புத்துயிரளிக்கப்பட்டது. சனசக்தியின் வழிகாட்டலினூடாக சமூகமளித்த இலங்கை வங்கி இந்த விஷ வைத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க உறன்வல்லை வங்கிக் கிளையின் மூலம் ரூ. 10,000/- ஐ கடனாகப் பெற்றுக் கொடுத்தது. இதுவரை காலமும் சிகிச்சைகளுக்கு மாத்திரம் வரையறை செய்யப்பட்டிருந்த விஷ வைத்தியம் அதிலிருந்து விலகி இத்துறையில் மக்களின் அறிவை வளர்க்கும் பணியிலும் -9յaյh FG)ւսւ`ւոh.
பெற்ற கடனை முழுமையாக செலவளித்து விஷ வைத்தியம் தொடர்பான சிகிச்சை முறைகளை அச்சிட்டு நூல்களாகவும் கையேடுகளாகவும் துண்டுப் பிரசுரங்களாகவும் வெளியிட்டார். மிகவும் பாதுகாப்பான முறையில் தரமான மருந்துகளை தயாரித்து குறைந்த செலவில் கூடிய பயனைப் பெறுவதற்கு மக்களுக்கு வழிவகுத்தார்.
மக்கள் கூடியிருக்கும் இடங்களிலும், வாராந்தம் நகரங்களில் நடைபெறும் சந்தைகளிலும் அவை பற்றி விளம்பரம் செய்தார். அவை பாம்பு பற்றி மனிதர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயத்தை அகற்றுவதற்கும் பாம்புகளைப்பற்றிய அறிவை வளர்ப்பதற்கும் சந்தர்ப்பம் அளிக்கின்றது. அதேபோல் ஆபத்து ஏற்படும்போது வைத்தியரிடம் செல்ல முன்னர் மேற்கொள்ளப்படும் முதலுதவிகளின்போது தேவைப்படும் மருந்து வகைகளையும் வழங்கினார். இலாபமீட்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளாத இச் சேவையை திரு. தயா கமகே அவர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக மக்கள் சுய விருப்பத்துடன் அங்கத்துவம் வகித்து நிதி உதவிகளைச் செய்கின்றனர். பொது மக்களின் பங்களிப்பினால் தற்போது பெருந்தொகையான பன. த்தைச் சேமிக்கக்கூடியதாக உள்ளது. இன்று இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் இவர் மேற்கொண்டுள்ள விளம்பரங்களின் காரணமாக கிடைக்கும் பொது மக்களின் பங்களிப்பு அவரின் இந்த சேவைக்கு நிதி வசதியளித்த இலங்கை வங்கியின் கடன் பாரத்தைக் குறைப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதன் மூலம் அவர் வங்கியின் நம்பிக்கை மிக்க வாடிக்கையாளனாகவும் காணப்படுகின்றார்.
12

இந்த நடவடிக்கைகளின் காரணமாக பாம்பு தீண்டியதால் மரணத்தைத் தழுவ வேண்டி ஏற்பட்ட ஜீவராசிகளின் உயிரைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள முடியும். தம்மைப்போன்று நல்ல மனமுடைய பாம்பு விஷம் பற்றி நன்கு அறிந்த வறிய மனிதன் தம்முடன் இருக்கின்றான் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். இவ் விஷ வைத்தியருக்கு உதவிய இலங்கை வங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி வாழ வழி வகுத்ததென நன்றிப் பெருக்குடன் ஞாபகமூட்டுகின்றனர். கடன் போன்ற வர்த்தகத் துறை கூட வைத்தியம் போன்ற உன்னத சேவையைப் பாதிக்காது கடைப்பிடிப்பதற்கு உதவுகின்றது என்பதற்கு இந்தக் கதை தகுந்த உதாரணமாகும்.
குறிப்பு: - 09.09.1992
13

Page 9
வாழ்க்கை என்னும் புதியதோர் போர்க்களத்தில் ஒரு ஒய்வுபெற்ற இராணுவ வீரர்"
எம். டபிள்யூ. மர்தேவிஸ் பாஸ் உன்னஉேற,
பிட்டிப்பனை வடக்கு
புத்தம் கொடூரமானது, அது எங்களில் ஆயிரக்கினக்கானோரின் பெறுமதிமிக்க உயிர்களையும் உடைமைகளையும் இழக்கச் செய்ய வழிவகுக்கின்றது.
அண்மைக்கால வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் முதன் முதலாக எமது நாடு யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. கொழும்பு நகரில் குண்டுகள் விழுந்ததும் யுத்த அபாய ஒலி நாடெங்கும் கேட்கக்கூடியதாக இருந்தது. நேச நாட்டுப் படைக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கட்டளையிடப்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திரும்பி வந்தனர். சிலர் எங்குள்ளனர் என்றுகூட அறியமுடியவில்லை. யுத்த களத்திலிருந்து பார்க்கும்போது எங்களது வீடு, வளவு சொத்து எங்கேயென்றுகூட அறியாது தடுமாறினோம்.
14
 

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் வீடு வந்து சேர்ந்த ஹோமாகிமை, கபடாவத்தை, பிட்டிப்பனை வடக்கைச் சேர்ந்த எம். டபிள்யூ மர்தேலிஸ் என்னும் இராணுவ வீரரின் இளமைக்காவ இராணுவ அனுபவத்தைப் பற்றி தற்பொழுது தனது அறுபத்தைந்தாவது வயதில் கூறும்போது அன்றைய யுத்தம் இன்று எங்களுக்கு ஒரு பழைய கட்டுக்கதை போன்றேதோன்றியது.
இவர் இளம் வயதில் கட்டழகுடனும், கம்பீரத் தோற்றத்துடனும் விளங்கினார். எனவே இராணுவத்தில் சேர்ந்தார். தற்பொழுது அறுபத்தைத்து வயது என்பதை மதிக்கமுடியாத தோற்றத்திலுள்ள இந்த இராணுவ வீரரின் கதைக்கு செவிமடுப்போம். யுத்த காலத்தில் தீ அணைத்து வெற்றிண்ட இந்த இராணுவ வீரரின் வாழ்வெனும் போராட்டத்தில் மூழ்கித் தத்தளிக்க நேர்ந்தது ஏன் என்பதைப் பார்ப்போம். யுத்தத்தின் பின்னர் தனது வாழ்க்கையைப் பற்றி திரு. மர்தேவிஸ் கூரு
கையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்டது எங்களைப் போன்ற சிறிய நாடுகளில் வாழ்ந்த வறியவர்கள். நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு நிலவியது. தொழில்கள் இருக்கவில்லை. வீடு திரும்பும்போது எனது கையில் சிறிது பனம் இருந்தது. அவற்றை வீட்டுச் செலவுக்காகக் கொடுத்தேன். அப்பணம் முடிந்ததும் வாழ்க்கைச் செலவுக்காக கஷ்டப்பட்டேன்’ எனக் கூறினார்.
அதன் பின்னர் மரீதேவிஸ் உன்னஹேறயுக்கு நிரந்தரமான தொழில் இருக்கவில்லை, என்றாவது ஒருநாள் வாகனம் செலுத்திக் கிடைக்கும் சொற்பப் பணத்தில் வாழ்க்கை நடத்தினார். இவ்வாறு வாழ்க்கை நடத்தும்போதுதான் திரு. மதேவிஸ் அவர்கள் துவிச்சக்கர வண்டியில் மோதி தலையில் காயம் ஏற்பட்டு மூன்று மாதமளவில் சுய நினைவின்றி ஓரிடமாக வாழ்ந்தார். காலம் மிகவும் கொடூரமாக அவரை ஏளனம் செய்தது. ஒரு குழந்தைக்குத் தந்தையான இவர் வயிற்றுப் பிழைப்புக்காக கராஜ்களிலும், பல்வேறு முதலாளிமார்களிடத்திலும் வேலை செய்தார். கராஜில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு கிறீல் வேலையைக்

Page 10
கற்றுக்கொண்டார். கத்தி மண்வெட்டி போன்றவற்றை உற்பத்திசெய்யத் தொடங்கினார். எனினும் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்ததாகவே இருந்தது. கிடைக்கும் வருமானத்தால் அன்றாடச் செலவுகளை மேற்கொள்ள முடியவில்லை. இத்தகைய வறுமையில் இருக்கும்பொழுதுதான் ஹோமாகம உப அரசாங்க அதிபர் பிரிவில் பிட்டிப்பனை என்னும் கிராமத்திற்கு சனசக்தித் திட்டத்தின் 2 வது கட்டத்தில் சனசக்தி உதவி வழங்கப்பட்டது.
மிகவும் வறுமையில் வாழ்ந்த திரு. மர்தேலிஸ் பாஸ் உன்னஹேயுக்கு சனசக்தி உதவி வழங்க தகைமையாக இருந்தது வறுமைநிலை மட்டுமே ஆகும். சனசக்தி உதவி வழங்கல் பணியில் இலங்கை வங்கி ஈடுபட்டபோது திரு. மர்தேலிஸ் உன்னஹே அவர்களைச் சந்தித்தனர். வெல்டிங் வேலை பற்றிய அறிவும், அனுபவமும் மர்தேலிஸ் பாஸ் உன்னஉேறயுக்கு உண்டு என்பதை அறிந்த இலங்கை வங்கி அவரின் வேண்டுகோளை ஏற்று ஹோமாகமை இலங்கை வங்கிக் கிளையில் ரூ. 15,000A கடன் வழங்கியது.
இக் கடனைப் பெற்றபோது திரு. மர்தேலிஸ் பாஸ் உன்னஹே அவர்கள் அளவிலா மகிழ்ச்சியடைந்தார். விலைமதிக்கமுடியாத சொத்தென அதனைக் கருதினார். அவர் அக்கடனைக் கொண்டு தனது கைத்தொழிலை ஆரம்பிப்பதற்குத் தேவையான வெல்டிங் பிளான்டையும் தேவையான பொருட்களையும் வாங்கினார். கொடகமை என்னும் கிராமத்தில் ஹைலெவல் வீதியில் தனது மருமகன் ஐந்து வருட காலங்களுக்கு குத்தகைக்கெடுத்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வேலைத்தளத்தை ஆரம்பித்தார்.
மடிக்கும் இரும்புக் கதவுகளை தயாரிப்பதில் விசேட அறிவு பெற்றுள்ள திரு. மர்தேலிஸ் பாஸ் உன்னஹே அவர்கள் தற்பொழுது பழைய இராணுவ வீரன் அல்ல. இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது கெய்ரோ நகரில் பின்தங்கிய இராணுவ வீரனாக விளங்கிய இவர் தற்பொழுது வாழ்வெனும் யுத்த களத்தில் முன்னணி வீரனாகக் காணப்படுகின்றார். இலங்கை - ங்கியின் ஹோமாகமை கிளை வழங்கிய ரூ. 15,000A கடன்
16

தொகை இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரனின் வாழ்வில் புதிய எதிர்பார்ப்பு களுக்கு அடிக்கல் நாட்டியது. தனது இளம் மகளுடனும்வலது கைபோல் உதவும் மருமகனுடனும் சேர்ந்து புதிய துறையில் தனது நோக்கங்களை நிறைவேற்ற எண்ணியுள்ளார். இவருக்கு வயது அறுபத்தைந்து ஆயினும் தோற்றத்தில் இளம் வயதுடையவராகத் தோற்றமளிக்கின்றார். தேகாரோக்கியத்துடனும் திடசங்கற்பத்துடனும் திகழும் இவருக்கு வங்கி கடன் வழங்கத் தயங்குவதில்லை. காரணம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடியவர் என்ற நம்பிக்கையை வங்கிக்கு நிரூபித்திருக்கின்றார்.
திரு. மாதேலிஸ் உன்னஹே அவர்கள் இதுவரை காலமும் மற்றவர்களின் வீடுகளுக்கு கதவுகளையும் யன்னல்களையும் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள இவர், இலங்கை வங்கியின் உதவியைக் கொண்டு இன்னும் ஒரு புதிய துறைக்கு அடிக்கல் வைக்க உள்ளார். தான் பெற்ற கடனை கூடிய விரைவில் திருப்பிச் செலுத்திவிட்டு வங்கியின் உதவியோடு பாரிய அளவில் உற்பத்தி நடவடிக்கைகளை விருத்திசெய்ய எண்ணியுள்ளார். நன்றி மறவாத உயர்குணத்தைக் கொண்டுள்ள இவ்வீரனிடமிருந்து நாங்கள் விடைபெறும்போது அவர் கூறிய வார்த்தைகள் எங்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவே அமைந்தது. நாங்கள் விடைபெறும்போது அவர் எங்களிடம் கூறியதாவது வங்கியிலிருந்து கடன் பெற்றாலும் அது கடன் தான். அவற்றை நாங்கள் காலம் தாழ்த்தாது செலுத்திவிட வேண்டும்" எனக் கூறினார்.
&ք9ւնւյ: 08. 09. 1992
17

Page 11
புதியதோர் உரிமை - யுனிட் ட்ரஸ்ட் பங்குடைமையாளர்'
- எம்.ஐ. நஜிமுதீன், வீரச்சோலை, ஹொரவப்பொத்தானை
பிறந்த ஊரையும் உறவினர்களையும் விட்டுப் பிரிந்து மனம்போன போக்கிலேயே ஒருவர் அலைந்து திரிவாராயின் அவருக்கு சனி பகவானின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதியோர் கூறுவர். சனி பகவான் யாராயினும் அவரின் நோக்கம் எதுவா யினும் இவ்வாறு நடமாடும் திடசங்கற்பம் கொண்ட ஒரு சிலர் சனிபகவானும் நினைக்காத இடத்திலேயே தங்கிவிடுகின்றனர்.
இத்தகைய ஒரு நபரை உங்களுக்கு அறிமுகம்செய்ய விரும்புகின்றோம். அவரைச் சந்திப்பதாயின் நீங்களும் எங்களோடு ஹொரவப்பொத்தானையிலிருந்து 14 மைல் தூரத்தில் அமைந்துள்ள காட்டு மிருகங்கள் நடமாடும் பயங்கர வீதியினூடாக வீரச்சோலை என்னும் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இக் கிராமத்தைச் சுற்றி வீரமரங்கள் நிறைந்து இருப்பதனால் இக் கிராமம் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. வீரச்சோலையில் வாழும் மக்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம்களாவர். சிங்களவர்களும் ஒரு சிலர் வாழ்கின்றனர். கிராமவாசிகள் பெரும்பாலும் சிங்களமொழியையே பேசுகின்றனர்.
8
 

இக் கிராமத்தைச் சூழ சிங்களக் கிராமங்கள் அமைந்திருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். வாகொல்லாகடை வாக ல்கடை, இஹலதிவுல்வாவி, பகவதிவுல்வாவி, கபுகொல்லாவை, துணுவத்தேகம, தாமரவாவி, பத்தேவை, ஆனஷ்வந்தராவை என்பன சூழ உள்ள வனக்கிராமங்களாகும். வீரச்சோலைக்கு அண்மித்த கிராமம் கபுகொல்லாவை ஆகும். வீரச்சோலையில் ஒரு முஸ்லிம் பள்ளியும் பாடசாலையும் இருக்கின்றது. இக் கிராமத்தில் அநேகமான வீடுகள் வைக்கோவினால் வேயப்பட்டிருக்கின்றது. அவற்றுக்கிடையில் ஒரேயொரு வீடு ஓட்டினால் வேயப்பட்டிருந்தது. அந்த வீட்டின் பிரதம குடியிருப்பாளர் எம். ஐ. நஜிமுதீன் அல்லது முஹமது இஸ்மாயில் நஜிமுதீன் ஆவர். முப்பத்தெட்டு வயதுடைய இவர் எங்களிடம் இவ்வாறு கூறினார். "எனது நளர் குருநாகல் படுவஸ்துவர என்னும் கிராமம். எனது தந்தை சிங்கள மருந்துப்பொருள் வியாபாரம் செய்தார். எங்களுக்கு ஒரு கடை இருந்தது. எனது குடும்பத்தில் சகோதரர்கள் ஏழுபேர். தந்தையின் உதவிக்கு நான் கடையில் வேலை செய்தேன். தந்தையின் மரணத்தின் பின் கடை நட்டத்தினால் மூடப்பட்டது. எனக்கு செய்வதற்கு வேறு எத்தொழிலும் இருக்கவில்லை. எனது மாமனார் ஒருவர் கபுகொல்லாவுக்கு அண்மித்த காட்டில் சேனைப்பயிர் செய்வதாகக் கேள்விப்பட்டேன். முன்னர் ஒருபோதும் நான் அங்கு போனதில்லை. ஒருநாள் எவருக்கும் தெரியாது மாமனாரிடம் வந்து சேர்ந்து அவருக்கு சேனைப்பயிர் செய்ய உதவி செய்தேன். சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டிருக்கும்போது காட்டில் வளரும் தேங்காய்ப் பூ செடிகளை ஒருவரும் பிரயோசனப்படுத்தாது கவனிப்பாரற்று இருப்பதைக் கண்டேன். ஏற்கனவே நான் மருந்துக்கடையில் வேலை செய்தமையால் இச் செடியின் பெறுமதியை அறிந்து வைத்திருந்தேன். சேனைப் பயிர் செய்யும்போது இச் செடிகளைப் பிடுங்கி, உலரவைத்து கிராமத்துக்குச் செல்லும்போது கொண்டு சென்று கிரிஉல்லை, நாரம்மலை போன்ற பிரதேசங்களிலுள்ள மருந்துக்கடைகளுக்கு விற்றேன். அதனின்றும் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தேங்காய் எண்ணெய் வாங்கி கபுகொல்லாவைக் கிராமத்தில் விற்றேன். ஆரம்பத்தில் பிரயாணச் செலவை ஈடுசெய்வதற்காக இதனை மேற்கொண்டேன். பின்னர் அதனை எனது நிரந்தர வருமானமாக்கிக்கொண்டேன். பின்பு நான்
19

Page 12
சேனைப் பயிர்ச்செய்கையைக் கைவிட்டு மருந்து வகைகளைத் தேடிச் சேகரிப்பதில் ஈடுபட்டேன். தேன், தேன் மெழுகு, நில வேப்பம், குங்குலியம், இலுப்பெண்ணெய், கோரக்கிழங்கு போன்ற மருந்து வகைகளைச் சேகரித்தேன். அதன் பின்னர் கிராமத்தினரும் எனக்கு மருந்து வகைகளைத் தேடித் தரும் முயற்சியில் ஈடுபட்டனர். நான் அவற்றை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினேன். இவ்வாறு பணியில் ஈடுபட்டிருக்கும்போதுதான் எனக்கு சனசக்தி உதவி கிடைத்தது.
பழைமை வாய்ந்த படுவஸ்நுவர இராஜதானியிலிருந்து வன்னிக்காட்டுக்கு வந்து உறுதியான பொருளாதாரத்துக்கு அடிக்கல் நாட்டி, பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய திரு. நஜிமுதீனின் கதை நாங்கள் படித்த ரொபின்சன் குறுநூசோ, சின்பேங் போன்றோரின் கதை போலாகும். இவரிடம் உழைப்பாற்றல், வீரம், திடநம்பிக்கை காணப்பட்டாலும் அதனைச் செயற்படுத்துவதற்கான நிதி உதவி இலங்கை வங்கியின் ஹொரவப்பொத்தானைக் கிளையே வழங்கியது. சனசக்தி வழங்க வீரச்சோலை கிராமத்துக்கு வந்த இலங்கை வங்கி அதிகாரிகள் இவரின் தைரியத்தைக் கண்டு, மருந்துவகைகளை களஞ்சியப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் ரூ. 10,000/ம் பின்பு மேலும் 20,000/ம் மேலதிகக் கடனாக வழங்கியது. இப்பொழுது திரு. நஜிமுதீன் அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான அரிதான மருந்து வகைகளைக் களஞ்சியப்படுத்தி வைக்கும் களஞ்சியசாலைக்கு உரிமையாளராக விளங்குகின்றார்.
நஜிமுதீனும் அவரது சகாக்களும் வன்னிப் பிரதேசத்தின் வனப்பகுதியில் சேகரித்த மருந்து வகைகள், கசாயம், பத்து, லேகியம், அரிஷ்டை, எண்ணெய் என்ற பெயர்களில் புறக்கோட்டை கபஸ் லேனில் விநியோகிக்கப்படுகின்றன. கொமும்பு 7ல் வாழும் வயோதிப சீமாட்டியின் வாத நோய்க்குத் தடவும் எண்ணெய்யில் கூட நஜிமுதீன் போன்றவர்களின் முயற்சி கலந்துள்ளது. பம்பலப்பிட்டி பிரதேசத்தில் சிங்கள வைத்தியர் நியமிக்கும் மருந்துப் பட்டியலில் உள்ள அரிதான மருந்துகள்கூட வீரச்சோலை போன்ற கிராமங்களில் வசிக்கும் நஜிமுதீன் போன்றவர்களின் மருந்துக் களஞ்சியங்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கலாம்.
20

இன்று திரு. நஜிமுதீன் வெற்றியுடன் வாழ்ந்தாலும் அவர் வறிய சனசக்தி பெறுநராக இருந்துதான் இந் நிலைக்கு வந்தார் என்பதை மறந்துவிடவில்லை. நாங்களும் மறக்கவில்லை. திடசங்கற்பமும் வீரமும் இருப்பின் எவரும் நஜிமுதீன் சென்ற வழியில் செல்லலாம். இதற்கு திரு. நஜிமுதீன் அவர்கள் எடுத்துக்காட்டாகவும் சான்றாரவும் விளங்குகின்றார். இன்று திரு. நஜிமுதீன் அவர்கள் பெரிய வியாபாரியாக விளங்கினாலும், நகரப் புறங்களில் நாங்கள் சந்திக்கும் ஒரு சில முதலாளிமார்களிடம் காணப்படாத மனிதாபிமானத்தை இவரிடம் காணக்கூடியதாக உள்ளது. இது அவரது உன்னத மனிதப் பண்பை எடுத்துக்காட்டுகின்றது. மருந்து வகைகளைக் கொள்வனவு செய்யும்போது இவர் சனசக்தி பெறுநர்களுக்கு முக்கிய இடமளிக்கின்றார். ஒய்வு தினங்களில் காட்டுக்குச் சென்று தானே மருந்து வகைகளைச் சேகரிக்கின்றார். • ટ્રા
சூரியன் அஸ்தமிக்கும் மாலைப் பொழுதிலே, வீரச் சோலையில் தலைநிமிர்ந்து நிற்கும் திரு. நஜிமுதீனிடமிருந்து விடைபெறும்போது நீண்டகாலமாகத் தொடர்பு வைத்திருந்து பிரிந்து செல்ல இயலாத ஒரு நண்பனைப் பிரியவேண்டியுள்ளதே என்ற உணர்வுகளை எங்களுக்கு ஏற்படுத்தியது. அந்தளவுக்கு இந்த உன்னத மனிதன் எம்மனைவரையும் அவரின் நன்றியுடைமையால் கவர்ந்திருந்தார். வெற்றிப் பெருக்கினால் இலங்கை வங்கியில் யுனிட் ட்ரஸ்ட் பங்குடைமையாளராக விளங்கும் திரு. நஜிமுதீன் அவர்கள் மனிதாபிமானப் பண்புகளை உயர்வாக மதிப்பவர். அவரைப் பற்றி இச் சிறு குறிப்பை எழுதிக்கொண்டு விடைபெற்றபொழுது கண்ணிர் நிறைந்த கண்களோடு தளர்ந்த குரலில் அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் எமது உள்ளத்திலேயே எதிர்ஒலிக்கின்றது.
-- " நான் மிகவும் கஷ்டப்பட்டு முயற்சிசெய்து இந் நிலைமைக்கு வந்தேன். எனது முயற்சிப் பாதைக்கு உதவியது இல
ங்கை வங்கி ஆகும். எனது உயிருள்ளவரை நான் இலங்க வங்கிக்கு கடமைப்பட்டுள்ள்ேன்” எனக் கூறினார்.
&Ա5ւնւյ: 08. 07. 1987
21

Page 13
니 வாழ்வு பெற்ற நகை ஆபரணச் சிற்பி"
- பி. ஏ. குணரத்ன - லத்பதுர வதுரலிய
நகை அணிதல் மனித வரலாற்றிலே பண்டைய காலத்தொ-ட்டு இருந்து வந்துள்ளது. பண்டைய மனிதன் மிருகத்தின் எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பாதுகாப்புக்கு ஆTர= ணமாயிருக்கின்றதென அன்று கருதினான். காலங்கள் உருண்டோட ஆபரண அலங்காரங்கள் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாயின. தங்கம், வெள்ளி, முத்து, மானிைக்கம் என்பவற்றைத் தாண்டிவந்த ஆபரணக் கலை இன்று செயற்கை பிளாஸ்டிக் யுகம் வரை துரித வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இன்று அது மீண்டும் வெள்ளி தங்கம் யுகம் நோக்கி திரும்பிக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்விதமாக மேலைத்தேச அலங்காரங்கள் மீள்பயணம் செய்வதற்கு மனிதன் பிறக்கும் போதே மனிதனுடன் பிறந்த ஆக்கங்களின் வடிவு, குனங்கள் போன்ற எண்ண அலைகள் காரணமாக இருக்கலாம். அது எவ்வாறாயினும் எல்லா ஆக்கங்களின் பின்னணியிலும் நாம் கேட்கவிரும்பாத சோகக் கதை ஒன்று மறைந்திருக்கின்றது. எல்லா ஆக்கங்களினுள்ளும் ஒரு அப்பாவி, ஏழை சிற்பியினுடைய கண்ணிக் கதை ஆக்கத்தினுள் வடி வமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். நாங்கள் அவரைப் பொருட்படுத்தாதபோது தான் இது ஒரு சோகக் கதையாக அமைகின்றது.
22
 

அகாழும்பு தமிழ்ச் சங்கச்
IL Dé95 i Wo
பாரிஸ் நகரத்தினே"இரவு களியாட்ட அரங்கிலே நடனமாடும் நடிகையின் காதுகள் அலங்களிக்கப்பட்டிருப்பது சனசக்தி உதவி பெறுநர்களின் கைவண்னத்தினால் என்று கூறினால் நீங்கள் வியப்படையலாம். பெண்களை அலங்களிக்க நகை உற்பத்தி செய்யும் சிற்பிகளுள் பதுரலிய வக்பந்துர மாரகஹதெனியாவில் வாழும் பெலதகம் ஆச்சாரிகே குனரத்ன என்பவரும் ஒருவராவார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இந்த ஏழைச் சிற்பி பகல் விழித்திருந்து கண் இமைக்காது தயாரித்த இவரின் வியக்கத்தக்க படைப்புக்கள் இச் சந்தர்ப்பத்திலும் கூட கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பலிலேற்றப்பட்டு, அறிமுகமில்லாத துறைமுகமொன்றில் கரையிறங்கி, உலகின் எங்கேயோ ஒரு நங்கையின் உடலழகைக் கூட்டுவதற்கு அவங்களித்துக்கொண்டிருக்கும் என்பது திண்ணம். எனினும் எமது சிற்பிகள் இத் தொழிலைச் செய்து பெறும் வருமானம் அன்றாட உணவு வேளைக்கும் போதாது. எட்டுப்பேர் கொண்ட குடும்பத்தில் இளையவராகப் பிறந்த இவர் தனது தந்தையிடம் இத்தொழிலைக் கற்றார். பின்னர் தனது அண்ணனிடமும், பண்டாரகமையில் வியாபாரத் தளமொன்றிலும் வேலை செய்து தனது ஆற்றல்களை பன்மடங்காக்கிக் கொண்டார். அவர் தன்னைப்பற்றிக் கூறுகையில்,
நான் பண்டாரகமை வியாபார நிறுவனத்தில் ஐந்து வருடங்கள் வேலை செய்தேன். எனக்கு அங்கு நல்ல பயிற்சி கிடைத்தது. அதன் பின்னர் ஒரு நண்பனுடன் சேர்ந்து எனது வீட்டிலேயே இத் தொழிலை ஆரம்பித்தேன்’ எனக் கூறினார்.
சிறு வயது முதல் பொன்னோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தாலும் அவரது வாழ்வில் பொன்மயமான காலம் ஒருபோதும் ஏற்படவில்லை. எட்டு வருட காலமாகத் தனது முயற்சியை வெளிநாட்டுச் சந்தைக்கு நகிைகள் வழங்கும் ஒரு ஏற்றுமதியாளனின் தேவைகளைப் பூர்த்திசெய்வற்காக தியாகம் செய்த அவருக்கு அதன்மூலம் எத்தகைய முன்னேற்றத்தையும் எட்டவில்லை. கப்பலிலேற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிய பொருட்களால் இவருக்கு எத்தகைய நன்மையும் ஏற்பட வில்லை. பொன்மயமான தற்கால வாழ்வைப்பற்றிக் கூறும்பொது அவர்,
2

Page 14
"சனசக்தி உதவி வழங்கல் திட்டத்தின் கீழ் இலங்கை வங்கியிடமிருந்து கடன் பெற்றதன் பின்பு தான் எனக்கு இன்றைய நிலைமைக்கு வரமுடியுமாக இருந்தது. தற்பொழுது நான் அறுவரை வேலைக்கு அமர்த்தியுள்ளேன். இந்த வியாபார முயற்சியின் மூலம் ரூ. 15,000A க்கும் இடைப்பட்ட வருமானத்தைப் பெறுகின்றேன். எனது நிரந்தர ஊழியரொருவர் மாதத்துக்கு ரூ. 7000A அளவில் சம்பளம் பெறுகின்றார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சுமார் ரூ. 3000A அளவில் சம்பாதிக்கின்றார்" என்றார்.
இத்தகைய ஆற்றலைக்கொண்ட இவர் எவ்வாறு சனசக்தி
பெறுநராக விளங்கினார் என்ற கேள்வி உங்கள் உள்ளங்களில் எழக்கூடும். உங்களது சந்தேகத்தை அகற்றுவதற்கு பதிலளிக்கின்றோம். ஆரம்பத்தில் பிறரின் தேவைகளுக்காக தனக்கு வழங்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டே இவர் ஆக்கங்களைச் செய்தார். அப் பொருட்களுக்குக் கூலியாக இவருக்கு சம்பளம் மாத்திரமே கிடைத்தது. முதலாளிமார்கள் எல்லோரும் திறமைமிக்க ஆக்கச்சிற்பிகள் அல்லர். எதிர்பாராத விதமாக அவ்வாறு அமைந்து விட்டாலும் அங்கு ஆக்கபூர்வமான படைப்புகள் உருவாக்கப்படுவதில்லை. அவர், நீண்ட நாட்களாக எனக்கென்றொரு தொழிலை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆசையுடன் இருந்தேன். எனினும் எங்களுக்கு யார் கடன் தருவார்கள்” என வினாவினார். அவருக்குக் கடன் வழங்குவதற்கு யார் பின்வாங்கினாலும் இலங்கை வங்கி பின்வாங்க வில்லை. ஆரம்பத்தில் ரூ. 10,000A கடன் வழங்கி இந்த தங்க ஆபரணச் சிற்பிக்கு ஊக்கமளித்த இலங்கை வங்கியின் அகலவத்தைக் கிளை, இவரின் தொழிலை வெற்றிகரமாகச் செய்வதற்குத் தேவையான வழிநடத்தலையும் தயங்காது வழங்கியது. இவரின் வேண்டு கோளுக்கிணங்க மிண்டும் ரூ. 15,000A மேலதிகக் கடனையும் வழங்கியது. தற் காலத்தை பி.ஏ. குணரத்னவுக்கு பொன்மயமான காலமெனக் கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் அவரது முயற்சியின் பெறுபேறுகளைப் பெறும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டிருப்பதனாலாகும். அண்மைக்காலத்தில் இன்னும் சிலருக்கு தொழில் வாய்ப்பு வழங்க எண்ணியுள்ளார். இவரது தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்த பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கின்றது.
24

இலங்கை வங்கியின் உதவி உபகாரத்தினால் உறுதியான அடித்தளத்திலேயே நிமிர்ந்து நிற்கும் இவருக்கு தனது அபிலாஷைகளை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்ள முடியு மானதாக அமையும். அன்றைய தினத்தில் சிறு வயதில் தான் எண்ணியிருந்த பொன்வளம் இருப்பின் வாழ்வில் சுபீட்சத்தைக் காணலாம் என்னும் கருத்தை மாற்றி இலங்கை வங்கியின் உதவி ஒத்தாசை இருப்பின் வாழ்வில் சுபீட்சத்தைக் காணலாம் என்ற கருத்தைக் குடிகொள்ளச் செய்தார். இலங்கை வங்கியின் உதவியுடன் சுபீட்சத்தை நோக்கிச் செல்லாம் என்பதற்கு பி. ஏ. குணரத்ன அவர்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
(5sistill: 26. 08. 1992
25

Page 15
கரடுமுரடான வாழ்க்கைப் பாதையை வெற்றிகொள்வதற்கு புதியதோர் பாதணி
ஒரு சோடி பாதணியை இழந்த ஒரு மனிதன் வாழ்வில் விரக்தி கண்டவனைப் போல் அழுது புலம்பியவாறு தெருவில் நடந்துசென்றான். தனது பாதங்களில் கற்கள் தட்டுப்படும் "ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனது புலம்பலும் அழுகையும் அதிகரித்தது. ஒரு சோடி பாதணிக்கு வசதியில்லாத தான் வாழ்ந்து பயனில்லை எனத் தன்னைத் தானே வினவிக்கொண்டான். இரு கால்களையும் இழந்த ஒரு மனிதனின் அமைதியான வாழ்வைக் கண்டதும் அவனது அழுகையும் புலம்பலும் நின்றுவிட்டது.
சிலர் சில விடயங்களுக்கெல்லாம் கவலையடைகின்றனர். வாழ்வையே வெறுக்கின்றனர் அல்லது வறுமையும் எளிமையும் தமது தலையெழுத்து எனக் கூறி விரக்தியுடன் வாழ்கின்றனர். அவ்வாறு வாழும் வாழ்க்கை அவர்களுக்கோ ஏனையோருக்கோ எத்தகைய நன்மையையும் ஏற்படுத்துவதில்லை. வாழ்வில் தோல்வியுற்றவர்களாக இருக்கும் மக்களின் வாழ்வைப் பற்றி சிந்தித்து மீண்டுமொருமுறை நம்பிக்கை வைக்கும்படி
26
 
 

அழைப்பு விடுக்கும் விதத்தில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் உதவியுடன் குடும்பப் பொறுப்பை ஏற்ற வீரமிக்க இந்த இளைஞனைப்பற்றி இங்கு குறிப்பிடுகின்றோம்.
இவர் உறரிஸ்பத்துவ பூஜாபிட்டி உப அரசாங்க அதிபர் பிரிவில் அபதென்ன முல்லேகம என்னும் இடத்தைச் சேர்ந்த கே. எம். திசாநாயக்க என்பவராவார். இவர் வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதணி உற்பத்தியாளர். பூஜாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் 18 ம் வகுப்பு வரை கல்வி கற்ற திரு. திசநாயக்க அவர்கள் தனது மைத்துனருடன் சேர்ந்து பாதணி உற்பத்தியில் ஈடுபட்டார். 1983 ல் பாடசாலையிலிருந்து விலகிய இவர் 1991 வரை மற்றவர்களின் பாதங்களை அலங்கரிக்கும் பாதணி உற்பத்தியிலேயே வாழ்வைக் கழித்தார். பாதணி உற்பத்தியிலேயே நிபுணத்துவ ஆற்றலைப் பெற்றிருந்த இவருக்கு இதுவரை தனக்கென ஒரு சுய தொழிலை ஆரம்பிப்பதற்கு போதிய வசதி இருக்கவில்லை.
5 ஏப்பிரல் 1991 ல் சனசக்தி உதவி பெற்றதும் திசாநாயக்காவின் வாழ்வில் ஒரு சக்திவாய்ந்த திருப்புமுனை ஏற்பட்டது. தன்னைப்பற்றி திரு. திசாநாயக்க குறிப்பிடுகையில் சனசக்தி உதவி கிடைத்ததன் பின்னர் எனக்கு கட்டுகஸ்தோட்டை இலங்கை வங்கிக் கிளை ரூ. 15,000/- கடனை வழங்கியது. அக் கடன் கிடைத்ததன் பின்னர் தான் தனக்கென்று ஒரு சுய தொழிலை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப் பணத்தைக் கொண்டு நான் பாதணி உற்பத்திக்குத் தேவ்ையான சகல பொருட் களையும் வாங்கினேன். இப்பொழுது நான் ஒரு நாளைக்கு 10 - 15 சோடி பாதணிகளை உற்பத்தி செய்கின்றேன் எனக் கூறினார்.
திரு. திசாநாயக்கா அவர்கள் தான் உற்பத்திசெய்யும் பாதணிகளை சந்தைப் படுத்தும் நடவடிக்கைகளையும் தானே மேற்கொள்கின்றார். நாரம்மலை, குளியாப்பிட்டி, அளவ்வை, கலேவளை ஆகிய தாரப் பிரதேசங்களில் நடைபெறும் வாராந்த சந்தைகளில் திரு. திசாநாயக்காவின் உற்பத்திகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. எதிர் காலத்தில் தனது உற்பத்தியை பரந்த அளவில் அபிவிருத்தி செய்து வேலைவைய்ப்புக்களை ஏற்படுத்தி
27

Page 16
தன்னைப்போன்றே இன்னும் ஒரு சிலருக்குத் தொழில் வழங்க வேண்டும் என்பதே அவரது நாட்டமாகும். தனது நோக்கம் பற்றி அவர் குறிப்பிடுகையில்,
"இக்கிராமத்தில் சனசக்தி பெறுநர்களில் சிலர் வேலை கற்றுக்கொள்ள விருப்பத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்குப் பயிற்சியளித்து தொழில்வாய்ப்புக் பெற்றுக் கொடுக்கவேண்டுமென்பதே எனது நோக்கம். சந்தைப்படுத்தலைப்பற்றி எத்தகைய கவலையும் இல்லை. எனது உற்பத்திகளுக்கு கடைகளிலும் நல்ல கிராக்கி உண்டு. எனக் கூறினார். எம்மில் பெரும்பாலானோர் தமது பாதங்களுக்கு தவறான பாதணிகளை அணிந்து மிகவும் கஷ்டத்துடன் நடமாடுவதை நாம் கண்டிருக்கின்றோம். கேள்விப் பட்டிருக்கின்றோம் அத்தகைய நடமாட்டங்களின்போது வெற்றி காண்பது அரிதாகும். தனது பாதங்களுக்கு ஒத்துவராத பாதணிைகளை அணிந்து கவனமாக நடமாடாவிட்டால் விளைவு விபரீதமானதாகும். எனவே நாம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் அவதானத்திற்குரியதாகும்.
இதற்கு திரு. திசாநாயக்க அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அவர் தனது பாதங்களுக்கு உகந்த பாதணிகளை அணிந்து நிமிர்ந்து நடமாடுகின்றார். சின்டரெல்லாவின் கானாமற்போன பாதணியைப் போல் திசாநாயக்கா அணிந்துள்ள பாதணி திசாநாயக்காவுக்கு வெற்றிவாகை குடியுள்ளது. அவர் அதனூடாக நீண்ட பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஆயிரக்கணக்கான அடிகளை நடக்க இருக்கும் அவர் தனது நீண்ட பயனத்தின்போது முதலாவதாக அடியெடுத்து வைப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கியது யாரென்பதை நன்றிப் பெருக்குடன் ஞாபகமூட்டினார். தற்பொழுது அவர் மாதாந்தம் ரூ. 2000/- தொடக்கம் ரு. 3000/ - வரையான தேறிய இலாபத்தைப் பெறுகின்றார்.
குறிப்பு : 02, 09. 1992
28

சனசக்தியால் கிடைத்த தையல் இயந்திரத்தின் உதவியால் புது வாழ்வு
கானும் குசுமாவதி, பண்தகிரிய
எதிர்பாராத விதமாக மனைவி தன் கணவனை இழக்க நேரிட்டால் அல்லது கணவன் மனைவியையும் பிள்ளைகளையும் நடுத்தெருவில் விட்டுப் பிரிந்து சென்றால் துணையை இழந்த பெண் யாருடைய உதவியை நாடுவது? அவரால் இரு வழிகளைக் கையாள முடியும், அதில் முதலாவது அவரின் பெற்றோரின் அல்லது கருணையுள்ளம் கொண்ட சகோதரனின் அல்லது சகோதரியின் உதவியை நாடுவது. இல்லாவிட்டால் சுய தொழில் மூலம் தனது வாழ்கைக்குத் தேவையான வருவாயைத் த்ேடிக் கொள்வதாகும்,
எவ்வாறாயினும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தேனும் தனதும் பிள்ளைகளினதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சுய முயற்சியில் வாழும் இப் பெண் ஏனையோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள்.
இவர்களைப்போன்ற பெண்களையே முயற்சியுள்ள மாதர் என அழைப்பர். இலங்கை வங்கி சுற்றுலாவில் குறிப்பெடு
29

Page 17
த்தலின்போது: லெனாட் வுல்ப் என்பவர் எழுதிய பத்தேகம என்னும் நாவலுக்கு பின்னணிக் கிராமமாக அமைந்த கிராமத்துக்கு சுமார் நான்கு அல்லது ஐந்து மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள உறம்பாந்தோட்டை மாவட்டத்தில் மெதகிரிய என்னும் கிராமத்தில் வெஹெரகொடை என்னும் ஊரில் வசிக்கும் ஜூவா உறன்னதிகே அல்லது ஜே.எச். குசுமாவதி என்னும் மாதைப்பற்றி விசேடமாக குறிப்பிடுவதற்கு காரணமாய் அமைந்தது; அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளே என்றால் அது மிகையாகாது.
நாற்பதாவது வயதில் நான்கு பிள்ளைகளுடன் விதவையாகிய இம் மாது வாழ்நாள் முழுவதும் கண்ணிர் வடித்தவளாய் வறுமைப்பிடியில் சிக்குண்டு காட்சியளித்தாள். நீண்டகால வரட்சியால் வரண்டுபோன பக்கத்திலுள்ள வெஹெரகொடை வாவியைப்போல் அவரின் வாழ்வு எதிர்பார்ப்புக்களால் வெறிச்சோடிக் காணப்பட்டது. கண்ணிர் நிறைந்த விழிகளுடன் அவள் தனது வாழ்வைப் பற்றி,
"எனது கணவன் ஒரு பஸ் சாரதி, 1980ல் அவர் மாரடைப்பினால் காலமானார். அதன் பின்னர் நானும் பிள்ளைகளும் தனிமையானோம். எங்களுக்கு வாழ்வதற்கு வழி ஏதும் இருக்கவில்லை. நான் கூலி வேலை செய்தேன். எனக்குத் தையல் வேலையும் தெரியும். கூலி வேலை செய்துவிட்டு வந்து மாலையில் தங்கையின் தையல் இயந்திரத்தில் ஆடைகளைத் தைத்து சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தேன். நேரம் கிடைட் க்கும்போது தோட்டத்தில் பயறு, அவரை போன்ற தானியங்களை பயிரிட்டேன்.
வரண்ட வலையத்தில் இலை உதிர்ந்து செழிப்பின்றிக் காட்சியளிக்கும் மரமொன்றைப் போல் அவரது உடலும் மெலிந்து காணப்பட்டது. குரலிலும் சோகம் தொனித்தது. விழிகளிலிருந்து பெருக்கெடுத்த கண்ணி கன்னத்தினூடாக வழிந்து மண்தரையிலும் அழுக்காடையிலும் வீழ்ந்தபோது, குடிசை வீட்டில் தொங்கவிட்டிருந்த கலெண்டரில் தோன்றிய நடிகை எங்களைப் பார்த்து சிரித்தவண்ணம் காாட்சியளித்தாள். குசுமாவதி என்னும் விதவையின் கண்ணிலிருந்து வடிந்த நீர்த்துளிகள் அவள் உடுத்தியிருந்த உடையை நனையவைத்தது.
30

இந்த ஏழை விதவை தன்னை விட்டுப் பிரிந்த அன்புக் கணவனை எண்ணிக் கண்ணிர் வடிக்கிறாள். அவள் வடிக்கும் கண்ணிருக்குக் காரணம், இறந்த காலத்தை ஞாபக மூட்டிய நாம் தானா என எங்கள் உள்ளங்களிலும் சோகம் குடிகொள்ளச் செய்தது. அவர் தனது வாழ்வைப் பற்றி ஒரு தையல் இயந்திரம் இருப்பின் இத்துன்பங்களிலிருந்து கரை சேரலாம் என்று எண்ணினேன். எனினும் ஒரு கஷ்டத்தின்போதாவது எவர் எங்களுக்குக் கடன்தருவார்கள். என வினவினார். மேலும் அவர்.
"எங்களது கிராமத்துக்கு சனசக்தி உதவி வழங்கியதன் பின்னர் வங்கியில் வேலை செய்யும் துரைமார் வந்து கூறினார்கள் எங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்வதற்கு உதவி செய்வதாக. அவர்கள் அவ்வாறு கூறியதும் எனக்கு ஞாபகம் வந்தது தையல் இயந்திரத்தைப் பற்றித்தான். எனது தேவையைப்பற்றி நான் அவர்களிடம் கூறினேன். உறம்பாந்தோட்டை இலங்கை வங்கி பெரிய துரை எனக்கு வங்கிக்கு வரும்படி கூறி ஐயாயிரம் ரூபா கடன் வழங்கினார். அப் பணத்தால் வாங்கிய தையல் இயந்திரத்தின் உதவியால் தான் இன்று நாங்கள் உயிர் வாழ்கின்றோம். இந்தக் கடனை நான் ஒழுங்காகச் செலுத்தியதால் எனது வேண்டுகோளுக்கிணங்கி மேலும் ரூ. 16,000/- வை வங்கி கடனாக வழங்கியது. அதன் மூலம் சிறிது அதிகமாக புடவைகளையும் தேவையான பொருட்களையும் வாங்கக்கூடியதாக இருந்தது. எனவே எனது வருமானமும் அதிகரிக்கத்தொடங்கியது. கடன், தவணைகளையும் ஒழுங்காகச் செலுத்தினேன். என்னைச்சுற்றி சந்தையில் சன நடமாட்டம் அதிகரிக்கும்போது எனது உள்ளம் மகிழ்ச்சியால் பூரிக்கின்றது. காரணம் நான் தைத்த உடைகளை கூடுதலாக விற்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்பினாலாகும்" எனக் கூறினார்.
இவ்வாறு தையல் வேலையில் ஈடுபட்டிருக்கும் நான் வங்கிக்குச் சென்றால் 'எனது தையல் வேலைகளைப்பற்றி வங்கி உத்தியோகத்தர்கள் நிதமும் விசாரிப்பார்கள். சிறிய குடிசையில் தையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது எனது பிள்ளைகளும் நண்பர்களும் குடியிருக்கும் வீட்டைச் சிறிது ஒழுங்காகக் கட்டிக்கொண்டால் நல்லது தானே என்ற எண்ணத்தை என்
31

Page 18
மனதுள் புகுத்தினர், எனவே இதைப் பற்றி யோசித்தேன். தையல் வேலையின் மூலம் சேமித்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு சிறிய வீட்டுக்கு அத்திவாரம் போட்டேன். சுவர் எழுப்புவதற்காக செங்கற்கலையும் சேகரித்துக்கொண்டேன். ஒரு சிறிய வீட்டைக் கட்டுவதற்கு தற்பொழுது நான் முயற்சி செய்கின்றேன் எனக் கூறினார்.
திருமதி குசுமாவதியின் வதனம் மகிழ்ச்சிப் புன்னகையில் மலர்ந்தது. அவள் எதிர் காலத்தைப்பற்றிய எதிர்பார்ப்புகளுடன் திகழ்ந்தாள். தையல் இயந்திரத்துக்கு உரிமையாளரான பின்னர் வாழ்வில் வெற்றிகாண்பது கடினமான வேலையல்ல என்பதை அவள் உணர்ந்து மகிழ்ந்தாள். ஐந்து பேரின் வாழ்க்கைப் பாரத்தை சுமந்த இவருக்கு தற்பொழுது குடும்பப் பொறுப்பு பெரும் சுமையாக விளங்கவில்லை. ஒரு தையல் இயந்திரத்தை வழங்கி அநாதைக் குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி ஒளிவீச வழிவகுத்தது இலங்கை வங்கியே என நன்றிப்பெருக்குடன் கூறினார். எங்களில் பெரும்பாலானோருக்கு தையல் இயந்திரம் வீட்டுப் பண்டமாக விளங்கினாலும் திருமதி குசுமாவதிக்கு அது பெரும் செல்வமாகவே விளங்கியது. அவர்களது வாழ்க்கைச் சுட்டெண் சுழலுவது தையல் இயந்திரத்தின் சுழற்சிக்கு ஏற்பவே ஆகும். இவர்களுக்கு மீண்டும் எவருடைய உதவியையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. சுய முயற்சியும் இலங்கை வங்கியின் உதவி ஒத்தாசையும் சேர்ந்து கட்டியெழுப்பிய பாதுகாப்பு வலயம் அவர்களைச் சுற்றி வளைத்து பாதுகாப்பளிக்கின்றது.
ஒரு சமயம் நெருங்கிய உறவினரைப்போலவும் குடும்ப நண்பனைப் போலவும், மூத்த சகோதரனைப் போலவும் இன்ப
துன்பங்களின்போது இலங்கை வங்கி முன்வந்து உதவும் என அவர் அசையா நம்பிக்கை வைத்திருக்கின்றார்.
குறிப்பு: 28.08.1992
32


Page 19
இலங்கை வங்கிக் கிளைகள்
உள்ளத்தில் தாங்கிய நல் வ ஆற்றல் மிகு மக்களுக்கு வகு கைகொடுப்போம் நிமிர்ந்து நீ
வெர் FAPT gFäkg அபிவிருத்தி வங்கி இலங்ை
5
...¬ ¬s தலைமை அலு
இல. 4 இலங்கை கொழு ܕ: தொலைபே
ܩܡ
SUMATH EXOK I
 

உதவும் ஒளிக் நி த்து வாழ
ற்க சனசக்தி
ሐlû6 :lմ հlifla
கதிர்கள் நோக்கங்கள் வழிகள் பெறுநர்கள்
அலுவல்கள் பிரிவு
க வங்கி
தாம்
பலகக் கட்டிடம்
வங்கி மாவத்தை
ம்பு - 1ஃ
if — 445807
NTING (PWT) LIMITED