கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவத் திருமுறைகளின் விழுமியம்

Page 1
சைவத்
பேரறிஞர் முருக
(ஆழ்க
இந்து FILII ஒன்ராறியே
 
 

| A களின் விழுமியம்
வே பரமநாதன்
லான்)
ப் பேரவை IT HESTLET

Page 2

சிவமயம்
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பேரறிஞர் முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)
இந்து சமயப் பேரவை ஒன்ராறியோ
556. T

Page 3
நூல்:
ஆசிரியர்
முதற்பதிப்பு:
மொழி:
பக்கங்கள்
எழுத்தமைப்பு: அச்சுப்பதிப்பு
வெளியீடு:
பதிப்புரிமை:
TITLE:
AUTHOR:
FIRSTEDITON:
LANGUAGE:
PAGES:
TYPESETTING:
PRINTERS:
PUBLISHED BY:
COPYRIGHT:
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பேரறிஞர் முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)
நவம்பர் 2000
தமிழ்
59
திரு. மா. கனகசபாபதி
விவேகா அச்சகம்
ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை
ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை
SAVATH THIRUMURAIKALIN
VILUMAM
PERARIGNAR MURUGAVE PARAMANATHAN) (ALKADALAN) "BAARATHI KUDISAI", VALLIPURAM, PULOLY, SRI LANKA
NOVEMBER 2000
TAML
59
M. KANAGASABAPATHY
VIVEKA PRESS
HINDURELIGIOUS SOCIETY OF ONTARIO
HINDURELIGIOUS SOCIETY OF ONTARIO

உள்ளுறை
ஆசியுரை
நூலோலை
பதிப்புரை
மதிப்புரை கோயில்களில் திருமுறை ஒலிக்கட்டும்
1. சைவத் திருமுறைகளின் விழுமியம் 2. பக்தி இலக்கிய வரலாற்றில் திருமுறை 3. தேவாரத் திருமுறைத் தொகுப்பு
4. திருவினுக்கும் திருவான திருமுறை
5. முத்திரைக் கவிதை - பலஸ்ருதி 6. திருவிசைப்பாவில் வரும் முத்திரைப் பாடல் 7. தாயுமானார் வாக்கில் திருமுறைகள்
8. பன்னிரு திருமுறைகள்
9. எனதுரை தனதுரையாக
10. பாவணத் தமிழ்
1.நிறை மொழி
12. நன்றி நவிலல்

Page 4
ஆசியுரை
பிரதிஷ்டா கிரியாமணி, சிவாகமகிரியா மணி, ஜோதிடமாமணி சிவழுறி விஸ்வநாத ரெங்கநாதக்குருக்கள்
எல்லாம் வல்ல கலியுக வரதப் பெருமானின் துணையுடன் "சைவத் திருமுறையின் விழுமியம்” என்னும் நூலை உருவாக்குவதற்கு மிகச் சிரமமான பணியைத் தனது விடாமுயற்சியினாற் குறுகிய காலத்திற் சிறந்த முறையில் வெளியிடுகின்ற இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் பரமநாதன் ஆசிரியர் ஐயா அவர்களை மிகவும் பாராட்டிப் பெரும்மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்நூல் அனைத்து நாடுகளிலும் வாழுகின்ற இந்து மக்களும் சிறார்களும் சமயத்தை மென்மேலும் வளர்க்கும் நோக்குடன் எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையிலே தமிழில் வெளியிடுவதையிட்டு பாராட்டுகின்றேன். இப்படிப்பட்ட சமய நூல்களை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருக்கின்ற கனடா இந்துசமயப் பேரவையினருக்கும் திருவருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
நீண்ட காலமாக திருமுறை முற்றோதல் கனடாக் கந்தசுவாமி ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்குபற்றித் திருமுறை முற்றோதிய அடியார்களின் நிதியுதவியுடன் இந்த நூல், திருமுறை முற்றோதல் பூர்த்தி தினத்தன்று வெளிவருகின்றது. நிதிஉதவி அளித்த அடியார்களுக்கும், திருமுறை முற்றோதலில் பங்குபற்றிய அடியார்களுக்கும் எல்லாம்வல்ல கலியுகவரதப் பெருமானின் அருள்கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். மேலும் இந்தத் திருமுறை முற்றோதியது அனைத்து நாடுகளிலும் எதிர்ஒலித்து அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்றும் நமது நாடும் கபீட்சம் பெறவேண்டும் என்றும் கூறி எனது ஆசியை கூறி கொள்கின்றேன்.
"சர்வே சுகினா பவந்து"

நூலோலை
உயர்தனிச்செம்மொழியான தமிழ் எங்கள் தாய்மொழி. இம்மொழி பேசுவோர் தமிழர். தமிழ்நாட்டிலும் ஈழமணித்திருநாட்டிலும் வதியும் இசுலாமியரின் மொழி ஊடகமும் தமிழே. இம்மொழி, பேச்சிலும் எழுத்திலும் பெரும்பாலும் ஒன்றாய் இருப்பதும் நம்மண்ணிலேதான். சமயம் சார்ந்த நிலையில் தமிழும், சைவமும் நம்கண்கள் என்றவர் நாவலர்பிரான். பக்திமொழி எனப் பாராட்டப்படும் இம்மொழியில் வேறு சமயநூல்களும் உள. நம் இனமுத்திரை தமிழ்தான். பண்பாட்டியல் நிறைந்த பழைய தமிழ் நூல்கள் மனித விழுமியம் நிறைந்தவை. அவை தெரியாமல் பண்பாடு நிலைப்பது எப்படி? எனவே வாழ்வின் உயர்வுக்கு உரம் கொடுக்கும் தமிழ் நூல்களைப் படிப்பதற்கு ஊடகம் தமிழ். நம் உயிர்நாடியான சைவத்திற்குச் சாத்திரம், தோத்திரம் உயிர்ப்பு. இவற்றிற் பன்னிரு திருமுறைகள் நம் வாழ்வோடும் வளத்தேர்டும் இணைந்தவை. இத்திருமுறைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது ஆலயங்களின் கடமையாகும். எனவே சமய மூச்சும், ஆத்மீக வீச்சும் நிலவத் திருமுறைகளைப் பக்திசிரத்தையுடன் ஒதவேண்டும். இந்நிகழ்வின் முன்னோடியாக, கனடா இந்து சமயப் பேரவை, பன்னிருதிருமுறை முற்றோதலை முன்னெடுத்துப் பூர்த்திகண்ட விழாவில் இந்நூலை வெளியிடுகிறது. இப்படி ஒரு நூலை ஆக்கித் தரும்படி கேட்டவர் அன்புள்ள சிவமுத்துலிங்கம் அவர்கள். எல்லாம் வல்ல இறைவனருளால் சான்றாண்மை உள்ளோர் பலர் மத்தியில் இந்நூல் உலாவும் பாக்கியம் பெற்றது. திருவருளும் குருவருளும் இந்நூலை எழுத என்னை வழி நடத்தின. நான், நான் என்று இதை எழுத முடியாது. நான்தான் எழுதினேன் என்றும் கூறக் கூடாது. முனைப்பு மேலோங்கும். எனவே இந்நூல் தினையளவு உணர்வேனும் தமிழர் சமுதாயத்துக்கு ஏற்படுத்தினால் இந்நூற்பயன் கண்டு மகிழலாம். படிப்பவர்கள்தாம் இதன் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள். நன்றி.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் நட்பு - குறள் 783
6-8-2000 ஆழ்கடலான்
560LT முருகவே பரமநாதன்
III

Page 5
பதிப்புரை சாமி அப்பாத்துரை (தலைவர் இந்துசமயப் பேரவை)
"தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்” என்ற குரல் இந்துசமய பேரவை நடத்திய "கனடாவில் சைவம்” எனும் நூல் வெளியீட்டு விழாவின்போது சபையில் இருந்து ஒலித்தது. அந்த விழாவிற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் அக்கேள்வியூடாக மக்கள் நாடித்துடிப்பையும், தமிழ்க்கோசத்தை வைத்து, மக்கள் மத்தியில் நெருங்கிவிட சமயத்தை மையமாகக் கொண்ட குரல்கள் எழுவதினையும் உணர முடிந்தது.
"தமிழுக்கு, ஆலயங்களிற் போதிய இடம் வேண்டும்” என்பது எமது இந்து சமயப்பேரவை நிறுவன கர்த்தா ஞானசுரபி ஆத்மஜோதி முத்தையாவின் உள்ளத்து ஊற்று. அவ்வூற்று வற்றாது தமிழ் வளர எம்பேரவை தமிழ் வளர்த்த நாயன்மாருக்கு விழா எடுப்பதும், தமிழ் சிறாருக்கு தமிழ் உணர்வூட்டும் வகையில் செயற்படுவதும், தாயக மண்ணில் வாடிக்கிடக்கும் தமிழ் சிறாருக்கு உண்டி, உணவு, உறையுள் வழங்கிவரும் சைவச்சிறார் இல்லத்திற்கு இராமர் அணைக்கு கற்போட்ட அணில் போல் உதவுவதும் எம் கடன்பணி செய்து கிடப்பதாகும்.
தமிழில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட திருமுறைகள்
பாடப்பட்டிருந்தன. அவற்றிற் பல மறைந்து போயின. எஞ்சிய திருமுறைகளை ஆலயங்கள் ஊடாக பரப்பிவரும் இவ்வேளை நாம் கவனத்தில் எடுக்க வேண்டியதொன்று.
வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அதில் நாதத்தை காண்கிறோம். நாதம் செவிப்பறையில் சேரும் நொடியில் அதன் ந்ெகிழ்வு ஏற்படுகிறது. அது மூளையுடன் உறவாடுமிடத்து அர்த்தம் புரிகிறது. இந்துசமயத்தில் "ஓம்" எனும் ஒலியின் தனித்துவத்தை, ஈடு இணையற்ற நாதத்தை விஞ்ஞானக் கருவிகள் மூலம் பரீட்சித்து அறிந்து வியந்துபோன ஆராய்ச்சியாளர் பலர் இருக்கிறார்கள்.
சொல்லுக்கு சொல்வேதத்தின் நாதம், பொருள் என்பனவற்றை உணராது மொழிபெயர்த்து அரும்பெரும் பொக்கிசத்தின் தனித்துவத்தைத் தகர்த்துவதைவிடத் தமிழிற் திருமுறைகள், வழிபாட்டு முறைகளை ஆலயங்களில் விரிவாக்கி சைவத்தோடு தமிழை வளர்ப்போம். அதற்கு வேதங்கள் முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை.
IV

அந்த வகையின் முதற்படியாக ஆழ்கடலான் பரமநாதன் ஆசிரியர்
அவர்கள் திருமுறைகள் பற்றி விளக்கமாக விரிவாக, தெளிவாக இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார். அது ஆலயங்களில் தமிழ் தவழ வளர நடந்தோட ஊன்றுகோலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு இறையருள் உண்டு. இந்நூலை சைவத்தமிழ்ச் சோலையில் மலர உழுது, களைபிடுங்கி உரமூட்டியவர்கள் பலர். அவர்கள் வரிசையில் திருமுறை முற்றோதலை முன்னின்று நடத்திய திரு. சிவ முத்துலிங்கம், தவறாது வாரந்தோறும் வந்து திருமுறைகளைப் பக்தியோடு ஒதிய அடியார்கள் இதனை எழுத்தமைப்புச் செய்து தந்த திரு. மா. கனகசபாபதி, அழகுற நூலாக்கிய விவேகா அச்சக அதிபர் திரு. செ. பூரீதரன், இதன் வெளியீட்டுச் செலவுக்கு நிதியுதவி புரிந்த திருமுறை ஓதிய அடியார்கள் ஆகியோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

Page 6
மதிப்புரை கு. வி. மகாலிங்கம் வித்துவான் சைவசித்தாந்த பண்டிதர் சைவப்புலவர்
சைவசமயம் தழைத்தோங்கவும் அருள்நெறி எங்கும் பரவவும் சமயகுரவர், சந்தானகுரவர்கள் பணியாற்றினர். அவர்களின் பாசுரங்கள் அடங்கிய தொகுப்பே திருமுறை.
தேனினும் இனியவர் பாலன நீற்றர்
தீங்கரும்பும் அனையர் தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார்
உச்சிமேல் உறைபவர் ஒன்றலாதுரார் வானகம் இறந்து வையகம் வணங்க
வயங் கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரியை போர்த்த எம்அடிகள்
அச்சிறுப்பாகமது (து) ஆட்சி கொண்டாரே.
என்பது திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் தேவாரம்:
"பக்தி நிறைந்து நினைப்பவர் மனதிலே, அதாவது, தேனை விடஇனிமையுள்ளவரும் பால் போலும் திருநீறு அணிந்தவரும், இனிய கரும்பு போன்றவரும், தமது திருவடியைத் தொழுபவர் உடல் நெகிழ்ந்து உருகும்படி அவர்கட்குச் சிவானந்தத்தைத் தருபவரும் அவர்களுடைய சிரசின் மேலே வீற்றிருப்பவரும், ஒன்றல்லாத பல தலங்களை உடையவரும், ஆகாயத்தையும் கடந்ததாயினும் இவ்வுலகத்தார் வழிபட்டு வணங்கும்படி வெற்றியோடு விளங்குவதொரு திருவடியை)வத்தை உடையவரும் தாருகாவனத்து இருடிகள் தம் அகந்தையால் ஏவிய ஆனையின் உரித்ததோலைப் போர்த்துக் கொண்டவருமான எம்சிவபெருமான் சுவாமிகள் அச்சிறு பாகத்தைத் தாம் ஆளும் இடமாக இருப்பிடமாகக் கொண்டுள்ளனரே" என்பது இதன் பொருள். அதாவது தேனினும் அனையர் இனிய உள்ளத்தையும், இனிய மேனியையும், இனிய சொற்களையும் உடையவர் என்றவாறு.
துன்பம் துயரம் கவியின் கொடுமை வராதபடி வென்று தொலைத்து வாழும் சிற்றம்பலம் (அந்தணர்வாழும் தில்லையிலே)
V

விரும்பி எழுந்தருளிய கலைகள் நிரம்பாத வெள்ளிய பிறைச்சந்திரனைச் சூடிய முதற்பொருளாகிய சிவபெருமானுடைய திருவடிகளே எமக்குப் புகலாகப் பற்றி உறுதியாக வாழ்வார்களை அப் பாவங்கள் தொடரமாட்டா “கற்றாங் கெரிஓம்பிக் கலியை வாராமே. பற்றா நிற்றாரைப் பற்றா பாவமே” என்று சம்பந்தர் தேவாரம், கலிபுருடன் தீமை தீரவே பாடியருளியது.
"முத்தரி மார்க் கத் தை தெரிந்து கொள்ளாத அறிவில்லாதவர்களோடு சேர்ந்து, அவர்களுடைய வழியில் முயல்கின்ற எமக்குப் பக்திமார்க்கத்தை உபதேசித்து, அடிக்கடி ஆலயங்களில் திருமுறைகள்(திருவாசகம்) ஒதிவாருங்கள்” என்று ஆன்மீகச் செல்வர் ஞானசுரபி அமரர் ஆத்மஜோதி நா. முத்தையா ஐயா சுவாமிகள் தமிழ்கூறும் நல்உலகெங்கும் மக்களை வேண்டியவர். இதை வாரிசுகள் இங்கே செயலில் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. பழைய, புதிய வினைகள் ஒடிப்போகும் வண்ணம் மனத்தின் கண் உள்ள மலங்களைப் போக்கி, சிவரூபமாகிய சிவனை ஒதும்படி அருளியவர்களே அருளாளர்கள்.
அவர்களின் திருமுறைகளைப் பாடிப்பரவி நாடுவிட்டு நாடுவந்து கனடா நாட்டில் நற்கதி பெற்ற ஆத்மஜோதி ஐயா அவர்களுக்கு நல்லதோர் ஆச்சிரமம் காணவேண்டும்.
தமிழ் எங்கள் உயிர் என்றும் தமிழ் போனால் எம்மினமே போகும் என்றும் கூறி வருந்தியபடி ஆத்மசாந்தி பெற்றார்.
கனடா கந்தசாமி கோயிலில் இந்து சமயப்பேரவை அன்பர்கள் கடந்த ஆறு மாதங்கள் ஒவ்வொரு வார முடிவிலும் திருமுறைகளை ஓதி வந்தார்கள். அதன் நிறைவைக் கொண்டாடுமுகமாக ஆழ்கடலான் திருமுறைகளின் பெருமை, அவற்றை ஒதுவதால் உண்டாகும் நன்மைகள் என்பவற்றை விளக்கி நூல் ஒன்றைச் செய்துள்ளார்கள். கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது. அது போல் இந்நூல் அளவால் சிறிது எனினும் ஆழத்தால் பெரியது.
அன்பர்கள் படித்துத் திருமுறைகளின் பெருமையை உலகெலாம் பரப்புவார்களாக.
VII

Page 7
கோயில்களில் திருமுறைகள் ஒலிக்கட்டும்
கலாநிதி இ. பாலசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைகட்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்
தமிழரது வழிபாட்டு முறைகளில் ஆடலும் பாடலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லவர் காலத்திலே சம்பந்தரும் அப்பர் சுவாமிகளும் சமய மறுமலர்ச்சி இயக்கத்தைத் தீவிரமாக நடாத்திக் கொண்டிருந்தபோது, அவர்களது திருமுறைப்பாடல்கள் பக்தி இயக்கத்துக்கு உத்வேகம் அளித்தன. கோயில்களிலெல்லாம் தேவாரப் பண்ணிசை ஒலித்த வண்ணமிருந்தது. அதனால் சைவமும் தமிழும் பெரு வளர்ச்சி யடைந்தன. அவற்றினுடாகத் தமிழர் பண்பாடும் புதுப் பரிமாணம் பெற்றது.
புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலே வாழும் சைவத் தமிழ் மக்கள் தம் மதம் பேணும் நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கோயில்கள் நிறுவியுள்ளனர். சமய வளர்ச்சிக் கழகங்கள் அமைத்துள்ளனர். சமய விழாக்கள், கோயில் திரு விழாக்கள், விரதங்கள் என்பன சிறப்புற நடாத்தப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் மத விழுமியங்களின் வெளிப்பாடுகளாகும்.
கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் படித்துப் பயனுறத் தக்கது. பொருளுணர்ந்தே எதனையும் சொல்ல வேண்டும். மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்திலே,
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து."
என்று பாடியதன் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் உட்பொருளை உணர்ந்து கொண்டால் கோயில்களில்
மட்டுமன்றி, தமிழிசைக் கச்சேரிகளிலும் வேற்று மொழிகளுக்கு இடமிருக்க வாய்ப்பில்லையன்றோ?
முருக. வே. பரமநாதன் அவர்கள் எதனையும் எப்போதும் பொருளுணர்ந்து ஒதுபவர். எழுதுபவர். அவர் சைவமும் வைணவமம்
VIII

இரண்டறக் கலந்த ஒரு வடிவத்தினர். அவர் எழுதியுள்ள சைவத் திருமுறைகளின் விழுமியம் என்ற இந் நூலிலே தேவார முதலிகள் மூவரது பாடற் சிறப்புக்களும் மற்றும் ஏனைய திருமுறைகளின் பொருட் சிறப்பும் மிகச் சுருக்கமான முறையிலே விளக்கப்ட்டுள்ளன. திருமுறை என்றால் என்ன என்பதற்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் படித்துப் பயன்பெறத் தக்கதாகும். கோயில்களிலே திருமுறைகள் ஒதப்படவேண்டிய முறைகளும் அதன் பயன்பாடும் நன்கு விபரிக்கப்பட்டுள்ளன. கனடாக் கந்தசுவாமி கோயில் அறங்காவல் சபை உறுப்பினன் என்ற வகையில், இக் கோயிலில் இடம்பெற்ற திருமுறை முற்றோதல் பற்றி முழுமையாக அறியவும், இந் நிகழ்ச்சியில் பங்குபற்றவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கனடாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் திருமுறை முற்றோதல் இடம்பெற வேண்டும். கூட்டு வழிபாட்டின் மூலம் கூடிய அமைதியையும் ஆனந்தத்தையும் பெறலாம் என்பதே நாயன்மார்கள் காட்டிய வழிபாட்டு முறையாகும்.
சைவத் தமிழ் அன்பர்களின் இல்லத்தில் இருக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந் நூல் ஆசிரியர் பற்பல பனுவல்கள் தந்த நல்லாசான் ஆவார். அமைதியாக வாழும் அறிவுஜோதி அவர். அவர் இன்னும் பல நூல்களைப் புலம் பெயர்ந்து வாழும் சைவ மக்களுக்கு அளித்தல் வேண்டும்.
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம் பேரறி வாளன் திரு. (குறள். 215)
IX

Page 8

சைவத் திருமுறைகளின் விழுமியம்
SD திருச்சிற்றம்பலம்
சைவத் திருமுறைகளின் விழுமியம்
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிரமாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்பந்தன்னுரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தலெளிதாமே
- ஞானசம்பந்தர் திருமுறை 1:1-11
திருமுறைகளின் காத்திரம்
சைவம் சார்ந்த பண்பாட்டியலின் முக்கிய அங்கமாய் விளங்குவன தோத்திரமும் சாத்திரங்களுமாம். இவை இறைநூல்கள் என அழைக்கப்படும். இவற்றைப் பொருள்நூல், புகழ்நூல் எனப் பிரித்துப் பேசுவர் பெரியோர். புகழ்நூலே தோத்திரம், பொருள்நூலே சாத்திரம். சாத்திரம் - மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரம் பன்னிருதிருமுறைகள். மெய்கண்ட சாத்திரங்கள் தமிழ் ஆகமம் என்று அழைக்கப்படுகிறது. திருமுறைகள், தமிழ்வேதம் எனப்படும். வேதம், சிவாகமம் சைவத்தின் ஆதி நூல்கள். சைவசமயிகள் எங்கு வாழ்ந்தாலும், எக்காலத்தில் வசித்தாலும் எல்லாரும் இவற்றைப் படித்து அறிய வேண்டியன மட்டுமன்றி, தம்மை அவற்றின் பாதையிலே வழிநடத்தவும் வேண்டும். பண்பாட்டியலின் தனித்துவம் பேணும் ஆலயங்கள் வெறும்வழிபாட்டு நிலையங்களாயும் மடியை நிரப்பும் உண்டியல்களாகவும் மட்டும் அமையாமல் , சைவ சமயத்தைப் பேணி வளர்க்கும் கலைக்கூடங்களாயும் அமைய வேண்டும். இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற பெருமன்னர்கள் பலர் ஆலயங்களில் சாத்திரங்களும், சைவத்திருமுறைகளும் விளங்க ஆவன செய்தனர். இவையே தமிழகத்துத் திருக்கோயில் வழிபாட்டுக்குத் தலைசிறந்தவை. ஆகமம் ஆவியின் நிறைவு. இவ்வழிபாட்டுமுறை, மரபு, தமிழ்நாட்டில் இருந்து இலங்கை, இந்தோனேசியா, சீயம், (தாய்லாந்து) காளகம் (பர்மா) போன்ற நாடுகட்கும் பரவின. ஈழமக்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் சைவம் நிலைபெறத் தோத்திரம், சாத்திரம் போன்ற செவிநுகர் கீர்த்திக் கனிகள் கோயில்களில் ஒதப்பட வேண்டும். தேரும் திருவிழாவும் எவ்வளவு முக்கியமோ, அதனினும் ஆயிரம் மடங்கு திருமுறைகள்
1

Page 9
சைவத் திருமுறைகளின் விழுமியம்
ஒதல் இன்றியமையாதது ஆகும். பஞ்சபுராணம் படிக்காத ஆலயங்கள் தெய்வீகம் பேணாத சினகரங்களே. மனித உய்வீகம் இறைவழிபாட்டாலே தான் வரும் என்பதை ஒவ்வொரு சைவசமயிகளும் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
முழுமுதற் பொருளான சிவபெருமானே முதற்கடவுள் என்பதை உணர்த்தும் இப்பக்திப் பனுவல்களும், மெய்ஞ்ஞான ஏடுகளும் தந்தவர்கள் மறைஞானிகள், அருளாளர்கள். இப்புனித பொக்கிஷங்களை, கருவூலங்களை ஆளுடை அரசர் "சொல்லும் பொருளெலாமானார் தாமே, தோத்திரமும், சாத்திரமும் ஆனார்தாமே" என்று குறிப்பிடுகின்றார். மேலும் "வானவன் காண் வானவர்க்கும் மேலானான்காண், வடமொழியுந் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்” (திருமுறை 6:871) என அழகொழுகப் பாடியுள்ளார். இன்னோர் பாசுரத்தில் இறைவனை ஆரியனாகவும், தமிழனாகவும் காட்டுகின்றார்.
"மூரி முழங்கொலிநீரானாண் கண்டாய்
முழுத்தழல்போல் மேனிமுதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கின்பம் விளைப்பாண் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணாமலையுறையெம் அண்ணல் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே"
- திருமுறை 6:23.5
பிறதெய்வத்தை மறந்தும் தீண்டாத ஆன்மாக்கள், முழுமுதற் கடவுள் சிவபிரானே எனத்துணிந்து வழிபட்டனர். தாம்பெற்ற அனுபூதியும் இன்பமும் இவ்வையகத்தாரும் பெறவேண்டும் என்னும் ஞானஅருட்குறிப்பினால், எல்லாரும் உய்திபெறவேண்டும் என்னும் கருத்தை அகத்து நிறுத்திப் பாடியருளிய பாமாலைகளைப் பன்னிருதிருமுறைகளாகவும், தத்துவங்களைப் பதின்நான்கு (பதினான்கு) சாத்திரங்களாகவும் வகுத்துத் தொகுத்தனர்.
இப்பன்னிரு திருமுறைகளில் ஒன்பது (தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு) தோத்திரமாகவும், பத்தாந்திருமுறை (திருமந்திரம்) சாத்திரமாகவும், பதினோராந் திருமுறை பல அருளாளர்களின் வாக்கினின்றும் எழுந்த
2

சைவத் திருமுறைகளின் விழுமியம் பிரபந்தங்களின் தொகுப்பாகவும், பன்னிரண்டாந் திருமுறை புராணமாகவும் (பெரியபுராணம் - அல்லது திருத்தொண்டர்புராணம்) அமைந்துள்ளன. இவை சைவசமயிகளின் சரஸ்வதி பண்டாரம் எனலாம். பண்டாரம் - -கருவூலம். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்பன பஞ்சபுராணமாக ஆலயங்களில் ஒதப்படும். இது நீண்டகாலவழக்காறாகும். பஞ்சபுராணம் ஓதியபின் திருக்கோவையார் ஒதும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்நடைமுறையில் இருந்ததாக, சுவாமிநாத பண்டிதரின் வரலாற்றுநூல் குறிப்பிடுகின்றது. இன்று அவ்வழக்கம் இல்லை. எனினும் இலங்கையிற் திருப்புகழ் பாடும் வழக்கம் உண்டு. திருப்புகழ் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அருணகிரிநாதராற் பாடப்பட்டது. தமிழகத்தில் திருப்புகழ் சொல்லும் மரபு இல்லை.
நமது நாட்டில் அமைந்த பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரத்தில் சிவன் சந்நிதியிற் பஞ்சபுராணம் ஒதுவர். முருகன் சந்நிதியில் திருப்புகழ் இசைப்பர். எனவே ஒவ்வொரு சைவசமயத்தவரும் குறைந்தது பஞ்சபுராணம் ஒதும் அளவுக்குத் தம்மைத் தயார் பண்ணிக் கொள்வது சாலச்சிறப்பாகும். இவையோதும்போது பிழையின்றியும், கூட்டாமலும், குறைக்காமலும், திருத்தாமலும், மாற்றாமலும் இசையோடு ஒதுதல்வேண்டும். இதற்காகவே ஓதுவார் மூர்த்திகளைத் தமிழ்நாட்டில், ஆலயங்கள் தோறும் நியமித்துள்ளனர். தேவாரம் திருவாசகங்களை இனம்கண்டு பாடவேண்டும். இதிற்கண்ணும் கருத்துமாய் இருத்தல் மிகமிகமுக்கியமாகும். பூசைசெய்பவர்களும் திருமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றைப் பேண வேண்டுமன்றோ. இறையருளாற்பாடி இறைவனாலே எழுதப்பெற்ற திருவாசகத்தை இப்படியும் மாற்றுகிறார்கள் சிலர். மன்னிக்கமுடியாத சிவத்துரோகமாக இதைநாவலர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு மாற்றிய பாடல் வருமாறு
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ் சுடர்க்குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மண்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறையுறை சிவனே
3

Page 10
சைவத் திருமுறைகளின் விழுமியம் இறைவனே! நீஎண் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை எண்ணிரக் கேனே.
- திருமுறை 8: 22.5
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ் சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய ஆனைமுகனே சிறைபெறா நீர்போல் சிந்தை வாய்ப் பாயும்
உமாமகேஸ்வரரின் மூத்த புதல்வனே இறைவனே! நீஎண் உடலிடங் கொண்டாய்
என்தாய் காட்டி வைத்த சித்தவிநாயகரே!
திருமுறைகளைத் திருத்த நாம் யார்? முடிந்தவரை திருமுறைகளைப் பண்ணோடு பக்திபூர்வமாய்ப் பாடுதல் யாவர்க்கும் நன்மை தரும், பயன்தரும். இவைகள் சிவனடியார்களால், இறைமயமாய் நின்று அவன் உரையே தம்முரையாகப் பாடப்பட்ட தேம்பாவணிகளாம். தேவ ஆரமுமாம்.(தேம்பாவணி - வாடாத மாலை) இச்சிறப்பைத் தாயுமானவர் வாக்காற் காணலாம்.
பண்மாலைத் திரள்இருக்கத் தமைஉணர்ந்தோர் பாமாலைக் கேநீதான் பக்ஷம்என்று நண்மாலை யாஎடுத்துச் சொன்னார் நல்லோர்
நலம்அறிந்து கல்லாதநானும் சொன்னேன் சொண்மாலை மாலையாக் கண்ணிர் சோரத்
தொண்டனேன் எந்நாளும் துதித்துநிற்பேன், எண்மாலை அறிந்து, இங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பிரானே!
- 16. பன்மாலை 1 (பன்மாலைத் திரள் இருக்கப் - பூமாலைகள் பல இருக்கச்செய்து, பகூடிம் - விருப்பம், நன்மாலை - சிறந்தபாமாலை, என் மாலை அறிந்து - என்விருப்பத்தை உணர்ந்து.)

சைவத் திருமுறைகளின் விழுமியம் பக்தி இலக்கிய வரலாற்றில் திருமுறை
வானத்தான் என்பாரும் எண்கமற்றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாம்எண்க - ஞானத்தான் முன்னஞ்சத்தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தான் என்பன் யாண்.
- BIT60)855.T6) booLDuurst
இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலத்தைப் பக்தி இலக்கிய காலம் என்பர். இது வளர்ந்து சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் மேன்மை கண்டது. எனினும் காலத்தால் முந்திய காரைக்காலம்மையாரே பக்தி இலக்கியத்தின் ஆதிகருத்தா எனலாம். இவரது பாவியம் (பாடல்கள்) மிகமிக உயர்ந்தவை. விழுமியம் நிறைந்தவை. அவரது நான்கு பிரபந்தங்களும் பதினோராந் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. தேவாரம் முதலியவற்றைத் திருவாரூர் அபயகுலசேகர மன்னன் வேண்டுகோளின்படி திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாருடைய மாணாக்கராகிய நம்பியாண்டார் நம்பி சிதம்பரத்திலே எடுத்துத் தேவாரத்தை ஏழு திருமுறைகளாக வகுத்தார். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரது தேவாரம் மூன்று திருமுறையாகவும், திருநாவுக் கரசுநாயனாரது நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்திநாயனாரது ஏழாந்திருமுறையாகவும் வகுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டன. இவ்வேழும் அடங்கிய திருமுறை "அடங்கன்முறை” எனப்படும். அடங்கன் முறையிலே நிறைந்த ஈடுபாடுள்ளவர்கள் தென்தமிழ்நாட்டில் இருந்தார்கள். அவர்களை "அடங்கன்முறை அய்யா” என்று சொல்வர். வேதாரண்யம் அருணாசல தேசிகர், வைத்தியலிங்க தேசிகர், குரங்காடுதுறை சுப்ரமணிய தேசிகள் போன்றோர் பிரபல்யமான அடங்கன்முறை அய்யாமார்.
மூவாயிரந்தமிழ் எனப்படுவது திருமந்திரம். இதை அருளியவர் திருமூலர்.
மூவரால் அருளிச்செய்யப்பட்ட தமிழ்வேதமாகிய தேவாரம் ஒருலட்சத்து இரண்டாயிரந் திருப்பதிகங்கள் கொண்டது. அவைகளுள் எழுநூற்றுத் தொண்ணுற்றேழு திருப்பதிகங்களே எஞ்சி நின்றன. இவைகள் ஏழு திருமுறைகள் கொண்டவை. திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந்திருமுறை.
5

Page 11
சைவத் திருமுறைகளின் விழுமியம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன ஒன்பதாந் திருமுறை. திருமந்திரம் பத்தாவது திருமுறை. இது சாத்திரம் எனப்படும். திருவாசகம் தோத்திரம் எனப்படும். பதினோராந்திருமுறையில் பன்னிரு அருளாளர்கள் பாடிய 41 பிரபந்தங்கள் உள்ளன. பன்னிரண்டாம் திருமுறை தொண்டர்சீர் பரவும் பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) ஆகும்.
சைவர் சிவசம்பந்தம் உடையவர்கள். சிவசம்பந்தம் இல்லாதவர்கள் அசைவர். சிவபெருமானை முழுமுதற்பொருளாக வழிபடும் சைவ சமயத்தவர் ஒவ்வொருவரும் நாள்தோறும் தேவாரதிருவாசகத்தைப் பாராயணம் செய்தல் அவசியம். காலைக்கடனை நிறைவேற்றிக்கொண்டு, அமைதியாக ஓரிடத்தில் புற்பாய், பலகை, மான்தோல் போன்ற ஆசனங்களில் உட்கார்ந்திருந்து, பக்தி சிரத்தையுடன் பாராயணம் பண்ண வேண்டும். இது ஆன்ம ஈடேற்றத்தைக் கொடுக்கும் என்பது அருளாளர் எண்ணம். இல்லறத்தை மேற்கொள்வோருக்கு இது சிறந்த சாதனையும் இறைவழிபாடுமாகும். இறையோடு இயைந்த இன்பம், இன்பத்தோடு இயைந்த வாழ்வு மானுடர் ஆகப்பிறந்தோர்க்கு என்றே சிறப்பாய் அமைந்தது. காரணம், ஆன்மாவின் சிந்தனாசக்தி அனுபவங்களைப் பெறும் பிறவி இதுதான். எனவேதான் தாயுமானார் "எண்ணரிய பிறவிதனில் மானிடப்பிறவிதான் யாதினும் அரிது அரிது காண், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? ஏதுவருமோ? அறிகிலேன்" என ஏங்குகின்றார். பாரதியார் கூறும் "உண்டு, உறங்கி இடர்செய்து செத்திடும் கலகமானிடப் பூச்சிகளாய்” மாறக் கூடாது, நாம். வாழவும் கூடாது. இம்மண்ணார்ந்த பிறவி விண்ணார்ந்த வாழ்வுக்கும் ஊன்றுகோலாகும். சாட்டையிற் பம்பரசாலம் போல் ஆட்டுவான் இறையென அறிந்து, தேட்ட மொன்றற அருட்செயலில் நின்றால் வீட்டறம் (இல்லறம்) துறவறம் இரண்டும் மேன்மையாம். எனவே துறவிகளுக்கும் இப்பிரார்த்தனை உய்தி அளிக்கும்.
“பிரார்த்தனை எப்படிப்பட்டது? கிணற்றை நிரப்புவதற்காக யாராவது அதற்குள்ளே தண்ணீரை ஊற்றுவார்களா? கிணற்றின் ஆழத்தில் உள்ள ஊற்றில் இருந்து நீர் நிரம்புகிறது. பிரார்த்தனையும் அப்படியே உள் ளத்தின் ஆழத்தில் ஊற்றெடுப்பது. வாய்ச்சொற்களாற் பூர்த்தியாவது அன்று. பிறர்பாடிய துதிகளை உள்ளம் நெகிழாமல் திருப்பிச் சொல்வது, ஒருவாளியால் கிணற்றில் இருந்து எடுத்தநீரை, இன்னொருவாளியால், அதற்குள்ளேயே மறுபடியும் கொட்டுவதுபோலும்.” - (யோகிராம் சுரத்குமார் என்னும் நூலில்)

சைவத் திருமுறைகளின் விழுமியம்
தேவாரத்திருமுறைத் தொகுப்பு
தேவாரப் பதிகங்களை வகுத்துத் தொகுத்து நூலாக்கம் செய்வதற்கு மூன்று முறைகள் அனுசரிக்கப்படும். திருமுறைப் பதிகங்களைப் பண்ணமைப்புக்கு அமையத் திரட்டி ஒன்றுமுதல் ஏழு திருமுறையாக அடைவு செய்து பதிப்பது ஒருமுறை. இதைப் பண்முறை எனக் கூறுவர். திருத்தலங்களை வரிசைப்படுத்தி, கோயில் (சிதம்பரம்) திருப்பதிகங்களை முதலாகக் கொண்டு, மூவர் பாடல்களையும் திரட்டி அடைவு செய்யும் முறை இரண்டாவதாகும். இதை அடங்கல் (அடங்கன்) முறை என்பர். மூவரில், ஒவ்வொருவர் பதிகங்களையும், தனித்தனியாக அமைத்துத் தலங்கள் வாரியாகக் கோவை செய்து, தொகுத்து அடைவு செய்யும்முறை மூன்றாவதாகும். இதுதலழுறை எனப்படும்.
பன்னிரு திருமுறைகளையும் குறிப்பிட்ட நல்ல சுபவேளையில் துவங்கி முழுவதையும் படித்துப் பூர்த்தி செய்யும் ஒழுங்கு சில ஆலயங்களிலும், ஆதீனங்களிலும், தனிப்பட்ட சைவப் பெரியார்களின் இல்லங்களிலும், சமயஞ் சார்ந்த சங்கங்களிலும் நடைமுறையில் P 600 (6. இச்சூழ்நிலை எல்லார்க்கும் இசையும் வகையில் ஆலயங்கள் இதை மேற்கொள்ள வேண்டும். சைவ சமயம் அருகின் சமய ஆலயங்களும் அருகலாம். வெளிநாடுகளில் சினகரங்கள் திறக்குமளவுக்குச் சைவம் பேணுதல் இல்லை. வேற்று மதத்தில் நம்மவர் சேர நாம் காரணிகளாயமைவதும், ஆலயங்களின் அக்கறையற்ற போக்கேயாம்.
வெளிநாடுகளிற் கனடாவிலேதான் கூடிய வீதமான சைவசமயிகள் வாழ்கின்றனர். கோயில்தான் சமயமன்று. மக்களுக்காகவே மகேசன். அவனுறையும் ஆலயங்களும் மக்கள் சேவையை முன்னெடுத்துச் செல்லல் வேண்டும். ஆக, திருமுறைகள் ஆலயங்களிலே முக்கிய இடம் வகிக்க வேண்டும். மனிதகுலம் உலகியலிலே வாழ்வது ஒன்று, ஆத்மீகப் பாதையில் வாழ்வது இன்னொன்று. உலகநடையில் உணவு, உடை, வீடு என்பதற்கு அப்பாலே தன்னைப் பெருக்கிப் பற்றாக்குறையில் உழல்வதும் ஒருநிலை. ஆத்மீகம், சமயத்துவம் என்றால் பெரிய தத்துவங்களை வேதாந்த சித்தாந்தங்களைப் படிக்க வேண்டும் என்பதல்ல. படித்திருப்பது பக்குவமான நிலையை அளிக்கும்.

Page 12
சைவத் திருமுறைகளின் விழுமியம்
எல்லாரிடத்தும் அன்புடன் வாழ்தல், சகலரையும் ஒன்றாக நேசித்தல், சகல உயிர்கள் இடத்தும் அன்பு பாராட்டல், பிறருக்குத் தீமை செய்யாதிருத்தல், சகலருடனும் இணங்கி வாழ்தல், பிறருக்கு உதவிசெய்தல், சேவையாற்றல், நீதி, நேர்மை, நியாயம், தர்மத்துக்குக் கட்டுப்படுதல், நடுவுநிலைமை பேணுதல், தன்னுயிராய் மன்னுயிரை நினைத்தல், பிறரிற் கரிசனை கொள்ளல், வீழ்ந்தாரைத் தூக்கிவிடல், சஹற்ருதயத்தோடு சமாதானம் பேணல், மானிட நேயம் பூத்தல் என்பனவே ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய சமய நீதியாகும். சைவநீதி வழுவாமற் கோயில்களும் தனிநிறுவனங்களும் சமுதாயமும் வாழ வேண்டும்.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென்று உணர்
- நல்வழி 40

சைவத் திருமுறைகளின் விழுமியம் திருவினுக்கும் திருவான திருமுறை
வேதம் - மறை. உபநிடதம் - மறைமுடிபு. ஆகமம் - முறை. திரு + முறை = திருமுறை. திரு + மறை = திருமறை. மறை - வேதம். முறை தமிழ் வேதம். திருவென்ற சொல்லும் முறை யென்ற பதமும் சேரத் திருமுறை என்றாயிற்று. பன்னிரு திருமுறைகளைக் குறிக்கும் தொடர் இது. திரு என்பதும் வெவ்வேறு பொருள் படவரும். முறையென்பதற்கும் வெவ்வேறு பொருள் உண்டு. எனினும் திருமுறை தரும் பொருள் ஒன்றே. அப்பர் அடிகளின் திருவருட்பாடல் ஒன்றைக் கவனிப்போம்.
சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மையுளதே அவனுமோ ரையமுண்ணியதளாடை யாவ
ததன்மேலோ ராடலரவம் கவணளவுள்ள வுள்கு கரிகாடு கோயில்
கலனாவ தோடு கருதில் அவனது பெற்றி கண்டு மவனிர்மை கண்டு
மகனேர்வர் தேவ ரவரே.
- திருமுறை 4:8.1
உலகில் + திருநின்ற + செம்மை + உளதே. உலகிற் றிருநின்ற செம்மையுளதே எனப் புணர்ந்து வரும். இப்பாடலில் அமைந்துள்ள திருநின்ற செம்மை என்பதற்கு முத்திதரும் செம்பொருள் எனக் கருத்துத் தந்துள்ளனர். செம்பொருள் பற்றியோர் திருக்குறள் வள்ளுவர் வாக்காக மெய்யுணர்தல் அதிகாரத்தில் வருகிறது.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப் பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு.
- திருக்குறள் 358
திரு என்ற பதம் வள்ளுவரோடும் நூலான குறளோடும் சேர்ந்து பொருளை (பொருண்மையை) சிறப்பிக்கக் காணலாம். தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னை ஒன்றுங் கலத்தல் இன்மையால் தூயதாய்த், தானெல்லாவற்றையுங் கலந்து

Page 13
சைவத் திருமுறைகளின் விழுமியம்
நிற்கின்ற முதற் பொருள், விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருள் என்றார் எனப் பரிமேலழகர் விளக்கம் தந்துள்ளார். எனவே இறைவனே செம்பொருள். இத்திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வரும் திரு நின்ற செம்மையை முதலாக வைத்து - சுந்தரர் திருநாவுக்கரசரை அறிமுகம் செய்கிறார், தனது திருத்தொண்டத்தொகையில் இப்படி:
திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட திருநாவுக் கரையன்ற னடியார்க்குமடியேன்
- திருமுறை 7: 39.4
இதேபோன்று முறை என்ற வார்த்தையும் பெரியபுராணத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.
முறையால் வரு மதுரத்துடன் மொழி இந்தளமுதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழமையினால் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம் நிகரில்லான்.
தோடுடைய செவியன் என்னும் பதிகப் பண் இந்தளம் என்பதும், அதன் மதுரம் முறையால் வரும் மதுரம் நிறைந்தது என்பதும் வெளிப்படை முறை ஒழுங்கான இசைநாதம் என்று பொருள் கொள்ளலாம். சம்பந்தரும் தேனொடுபால் முறையாலே உணத்தருவேன் எனக் கிளிக்குக் கூறுகிறார். எனவே அளவாக என்றுதான் கருத்து. தேனும் கூடாமல் பாலும் அதிகப்படாமல் அளவாகக் கலந்த கலவை யென்றுதான் குறிப்பிடுகிறார். கறிக்கு உப்புப்போல எனவும் கொள்ளலாம். உறவுமுறைகளையும் இச்சொல் குறிப்பதுண்டு.
இனித்திரு என்பது பற்றிச் சிறிது சிந்திப்போம். திரு என்பது தெய்வத்தன்மை என்ற பொருளைத்தரும். முறை நூல் என்று பொருள்படும். எனவே தெய்வத்தன்மையே நிறைந்த பாடல்களைத் திருமுறை என்பர் என வித்துவான் பட்டுச் சாமி ஒதுவார் உரைகண்டுள்ளார். திரு என்பது கண்டோரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு எனப் பேராசிரியர் உரை கண்டுள்ளார். இது என் சொல்லியவாறோ எனின் யாவனொருவன்,
10

சைவத் திருமுறைகளின் விழுமியம்
யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு, அப்பொருள்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு, அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல் அதனிற் சிறந்த உருவும், நலனும், ஒளியும் எவ்வகையானும், பிறிதொன்றற்கு இல்லாமையால், திருவென்றது அழகிற்கே பெயராயிற்று. அங்ங்ணமாயின் இது செய்யுளினொழிய, வழக்கினும் வருவதுண்டோவெனின் உண்டு. கோயிலைத் திருக்கோயில் என்றும், அலகைத் திருஅலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி வந்தன அல்ல. அது கண்டவன் உடைய விருப்பத்தானே எழுந்தது. ஆதலானுந் திரு வென்பது அழகென்றே அறிக எனப் பேராசிரியர் விளக்கம் செய்கின்றார்.
திரு என்பதற்குத் தெய்வத்தன்மை என்ற பொருள் அதே அளவில் முதன்மை பெற்று நிற்கின்றது. திரு என்ற அடைபெற்று நிற்கும் நூல்கள் தெய்வத் தொடர்பு உடையனவாயே காணப்படும். திருமந்திரம், திருப்புகழ், திருநாலாயிரம், திருவாய்மொழி, பெரியதிருமொழி, பெரியாழ்வார் திருமொழி, பெருமாள்திருமொழி, திருமாலை, திருஅந்தாதி, திருநூற்றந்தாதி, திருக்கோவையார் திருஇசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம், திருவருப்பா என்ற பிரயோகம் கவனத்துக்குரியது. மேலும் திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநாவலூரர், திருவாதவூரர், திருவள்ளுவர் இப்படிப்பல தொடர்களைத்தமிழிலே காண்கிறோம். சைவசமயம் சார்ந்த திருப்பணி, திருக்கோயில் திருவிழா, திருஅமுது, திருப்பள்ளிஎழுச்சி, திருவுபூஞ்சல், திருவருள், திருத்தொண்டு என்பனவும் கவனித்தற்குரியன. திருநெறிய தமிழ் (சம்பந்தர்) திருவினார், திரு நெறி, திருவாளர் (சேக்கிழார்) சிவமே பெறுந்திரு (மாணிக்கவாசகர்) திருவுக்கும் திருவானதிரு (இறைவன் என்ற பொருளில் உமறுப்புலவர்) எனவரும் பிரயோகங்கள் தெய்வத் தொடர்புடையனவே.
வைணவ சமய வழக்காற்றில் திரு தனிமதிப்பானது. நாலாயிரத் திவ் வியப் பிரபந்த இயற்பா ஆயிரத்துக்கு உரையெழுதும் போது பூரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காசாரிய சுவாமிகள் திருவென்னும் பல பொருள் ஒரு சொல் வடமொழியில், ஹரீ என்பது போலத் தமிழிலே மேன்மையுடைய எப்பொருளுக்கும் விசேஷண பதமாகி, அவற்றிற்கு முன்னே மகிமைப் பொருளைக் காட்டிவரும் என்கிறார். சடகோபர் அந்தாதியில் வரும் ஒரு பாடலின் விளக்கத்தையும் இங்கே காண்போம்.
11

Page 14
சைவத் திருமுறைகளின் விழுமியம்
சேராதன உளவோ திருசேர்ந்
தார்க்கு வேதஞ் செப்பும் பேராயிரம் திணிபெரும் புயமாயிரம்
நறைபெய்துளவத் தாராயிரம் பொன்முடி ஆயிரம்
குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆரா அமுதக் கவியோ ராயிரம் அவ்வரி யினுக்கே.
- - கம்பர்
திரு - திருமகள், இலக்குமி, நறை - தேன. நறவம் - தேன். துவளம் - துளசி. தார் - மாலை. சடகோபன் - நம்மாழ்வார். குருகூர் - நம்மாழ்வர் அவதாரம் செய்த இடம். ஆரா அமுதக்க - 1000 திருவாய்மொழி. A.
இவ்வாறு வரும் திருவோடு சேர்ந்த முறை வரும் பிரயோகம் பற்றிய பிரயோகங்களை இனி அவதானிப்போம். முதற்கண் திருக்குறள் வழி முறைதரும் பொருள் அமைவுகள் வருமாறு:
வள்ளுவர் வாய்மொழியில் அமைந்துள்ள நான்கு குறட்பாக்களில் முறை என்ற பிரயோகம் வரக்காணலாம். முறைகோடி, முறைசெய்து, முறைப்பட, முறை, முறைதப்ப எனவரும் தொடர் களோடு தொடர்புடையன மட்டும் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.
1. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
- குறள் 388 பொருள்: தான் முறைசெய்தும் பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், பிறப்பால் மகனே ஆயினும், செயலால் மக்கட்குக் கடவுளென்று வேறுவைக்கப்படும். Al
முறை: அறநூலும் நீதிநூலுஞ் சொல்லும் நெறி - பரிமேலழகர். எனவே நீதி நெறி யென்று பொருள் கொள்ளலாம்.
2. இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னன் கோற் கீழ்ப் படின்.
- குறள் 558
12

சைவத் திருமுறைகளின் விழுமியம்
பொருள்: முறை செய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ்வாழின், யாவர்க்கும் பொருளின் திண்மையினும் உடைமை இன்னாது. முறை - நீதி முறையெனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல் கவித்தொகை
நீதி சமன் செய்து சீர்தூக்கும் கோல் (தராசு) போல் ஒருபக்கம் கோடாது. கோடாது - வளையாது. அதனாற்றான் நியாயவாதிகள் தராசைச் சின்னமாக்கி விளம்பரம் செய்கிறார்கள் போலும்?
3. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.
- குறள் 640
பொருள்: செய்யப்படும் வினைகளை முன் அடைவு பட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்,
முடித்தற்கேற்ற கூறுபாடில்லாதவர். முறை - ஒழுங்கு, திட்டம்,
எண்ணித்துணிதல், நிரற்படுத்தல், திட்டமிடல்.
4. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்.
- குறள் 559 பொருள்: மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. முறைகோடுதல் - செங்கோல் வளைதல்
கோன்நிலை திரிந் திடிற் கோள்நிலை திரியும் கோள்நிலை திரியின் மாரிவளம் கூரும்
- மணிமேகலை
இவை நான்கு பாட்டாலும் முறைவழி கொஞ்சம் புரிந்தோம். திருமந்திரம் முறைபற்றி என்ன பொருள் தருகின்றதென்பதை இனிக்காண்போம்.
முறைமுறையாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே.
- திருமந்திரம் 728
13

Page 15
சைவத் திருமுறைகளின் விழுமியம் இறை - கொஞ்சம். மறை-மறைந்து. பறை அறையாது - வெளிப்படுத்தாது. இப்பாடற்பொருள்:
உடலோடு கூடிநெடுநாள் இருக்க முயல்வார் முறைமுறையாக உயிர்ப்பு அடக்குவதில் பழகுதல் வேண்டும். அங்ங்ணம் முயலாவிட்டால், உலகக்கணக்கின்படி வாழ்நாள் முடிவில் ஒருசிறிதும் கூடுதலாக இருக்க முடியாது. இம்மறைப்பொருளைப் பறை போல வெளிப் படுத் தாது பணிவுடன் பயின்று வாழ்நாளைப்பெருக்குக.
உயிர்ப்படக்குதல் - வாசியைக்கட்டுதல் (நாடிசுத்தி) இங்கேமுறை - ஒழுங்கு.
ஞானசம்பந்தர் தேவாரத்தில் நால்வருக்கு அறம் உரைத்த கதை பேசப்படுகிறது. அறம் முறையென்ற கருத்தை முன்வைக்கிறார் சீகாழிப்பிள்ளை.
முறைத்திற முறப்பொருள் தெரிந்துமுனிவர்க்கருளியாலநிழல்வாய் மறைத்திறமறத்தொகுதி கண்டுசமயங்களைவ குத்தவனிடம் துறைத்துறைமி குத்தருவி தூமலர்சு மந்துவரை யுந்திமதகைக் குறைத்தறையிடக்களிபுரிந்திடறு சாரல்மலி கோகரணமே.
- திருமுறை 3:79.3
முறையார்ந்த மும்மதிலும் பொடியாக (6361 அடங்கன்முறை) என்னும் திருத்தாண்டகத்தில் வரும் முறை - முறைப்படி, ஒழுங்காக அமைந்த மதில் எனப் பொருள்படக் காணலாம்.
பசுகரணம் முற்றிலும் நீங்கிப் பதிகரணம் உற்றதுாய உள்ளம் உடைய மெய்யடியார்களால் சிவபெருமான்மீது கொண்ட ஆராக்காதலினால் (பக்தியினால்) உள்ளங் கசிந்துருகிப் பாடப்பெற்ற தோத்திரங்களான தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களின் தொகுதியே பன்னிருதிருமுறைகளாம். முன்னர் திருஞானசம்பந்தர் பாடியருளியவற்றிற்குத் திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடியருளியவற்றிற்குத் தேவாரம” என்றும், சுந்தரர் பாடியருளியவற்றிற்குத் திருப்பாட்டு என்றும் பெயர் வழங்கியதாகத் திருமுறை வரலாறு கூறுகிறது. பின்னர் மூவர் பாடலுக்கும் தேவாரம் என்றே பெயர் வழங்கலாயிற்று. திருமுறை: திரு - தெய்வத்தன்மை, முறை - நூல். அதாவது

சைவத் திருமுறைகளின் விழுமியம்
கடவுளின் வடிவு, தன்மை, அவர் வீற்றிருக்கும் இடம், வழிபடும்முறை, வழிபட்டோர் வரலாறு, பயன் முதலியவற்றை முறைப்படுத்திக்கூறும் அருள்நூல் திருமுறையாகும்.
திருவிசைப்பா திருப்பல்லாண்டு பக்கம் 6 திருப்பனந்தாள் காசிமட வெளியீடு. 1994
திருமுறைகள் அமைப்பு
தேவாரம் - ஏழுதிருமுறை - எழுநிலைமாடம் (இராசகோபுரம்) திருவாசகம் - கோவை - கூத்தப்பிரான் எழுந்தருளும் முகமண்டலம் (LD35/TLD60öTLULD) திருவிசைப்பா - இடைநாழிகை, அந்தராளம் திருமந்திரம் - திருவுண்ணாழிகை (கருவறை, கருப்பக்கிருகம் - மூலட்டானம்) பதினோராந்திருமுறை; பரிவாரநிலை (திருச்சுற்றுலாவீதி) பன்னிரண்டாம் திருமுறை - திருமதில் தேவாரம் கருவறையின் மேல் நிற்கும் கோபுரம் என்பர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார்.
மதம் - "இப்போது நாம் அந்த வார்த்தையைப் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில், ஒரு விளம்பரப் பொருளாகிவிட்டது. தனிப்பட்டோரின் சொந்த நலனுக்கு உள்ளாகி விட்டது. நிறையச் சொத்துக்கள் அதற்கு ஏற்பட்டுவிட்டன. படிப்படியான தலைமை வரிசைகளும் வேலைக் கடமை ஒழுங்கு முறைகளும் கொண்ட ஆன்மிக நெறி ஆகிவிட்டது. மதம் என்பது நம்பிக்கையும் வறட்டுக்கொள்கையும், வழிபாட்டுமுறையும் கொண்டு, இன்றைய நடைமுறை வாழ்வினின்றும், முழுதும் விலகிப் போன ஒன்றாகிவிட்டது”.
- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
தோடுடைய செவியன் என்று தொடங்கி உலகெலாம் என நிறைவாகும் பன்னிருதிருமுறை அமைப்பு: ஒம் என்ற பிரணவத்தின் உட்பொருள் ஓம் ஆகவே அமைந்துள்ளமை கவனித்தற்குரியது.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடியூசி யென்னுள்ளங் கவர்கள்வண்
1乐

Page 16
சைவத் திருமுறைகளின் விழுமியம்
எடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே.
- முதற்திருமுறை. முதற்பாடல்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம்
- பன்னிரண்டாம் திருமுறை இறுதிப்பாடல்
திருவாசகம் நமச்சிவாய என ஆரம்பமாகித் திருக்கோவையாரில் ஊதியம் எனப் பூர்த்தியாகிறது. எனவே ஐந்தெழுத்து மந்திரமே நலந்தருமென்பது இதன் பொருளாம. ஊதியம் - பயன்.
ஈத லிசைபாட வாழ்தல் அதுவல்ல ஊதிய மில்லை உயிர்க்கு
- திருக்குறள் 234 அதுவல்லதுாதியமில்லை = அது + அல்லது + ஊதியம் + இல்லை இசை - புகழ். ஊதியம் - இலாபம்.
16

சைவத் திருமுறைகளின் 6فالكوك
முத்திரைக்கவிதை - பலஸ்ருதி
"பொதுவாகத் தேவாரப் பாடல்களும், சிறப்பாகத் திருஞானசம்பந்தர் பாடல்களாகிய முதல் மூன்று திருமுறைகளும் இறைவன் புகழ்பாடும் வெறும் இசைப்பாடல்கள் மட்டும் அல்ல என்பதை முதலிற் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் புகழ்பாடும் பாடல்கள் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் வள்ளலார், பாரதியார்வரை தொடர்கின்றன. ஆனால் அடங்கன் முறை என்று சொல்லப்படும் ஏழு திருமுறைகளும் மேலே குறிப்பிட்ட தெய்வம் பற்றிய பாடல்களில் இருந்து முற்றிலும் வேறானவை ஒருபுறம் இருக்க, சொல் ஆட்சியில் இப்பாடல்களில் ஒரு புதுமை காணப்படுகிறது. இரண்டு, அல்லது மூன்றாம் அடியிற் காணப்படும் சொற்களைச் சந்திசிர் என்று பிரிக்காமல் அப்படியே படித்தால் புதுமையான ஒருவகை ஓசை தோன்றிக் காணலாம். இப்படிப் படிக்கும் முறையில், விளப்பமாகப் படித்தாலும், இடைநிலையாகப் படித்தாலும், துரிதமாகப் படித்தாலும், இச்சொற்கள் சேர்ந்து இசைக்கும்பொழுது ஒருவகையான ஓசை தோன்றுவதைக் காணமுடியும். இதனையே மந்திரங்கள் என்று கூறினர்.
- பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
மிகப் பழைய காலத்தில் இருந்து இன்ன நூலைப் படிப்பதால்,
இன்ன இன்ன பலன் உண்டு, நன்மை உண்டு என நூல் முடிவில் நூலாசிரியர் கூறுவது ஒரு மரபு. மரபு - காலாகாலி) மாகக் கைக்கொள்ளும் ஒழுங்கு. இந்த வழியில் இதிகாசங்கள், புராணங்கள், தோத்திரங்கள், இதோபதேசங்கள் இன்றும் அதைக் கைக்கொள்ளக்காணலாம். கிருதிகள் பாடிய தியாகரா 23 சுவாமிகளும், கீர்த்தனை தந்த கோபாலகிருஷ்ணபாரதியாரும், பக்திப்பாடல்கள் இசைத்த சங்கரதாஸ் சுவாமிகளும் தம்பெயர்களைப் பாடல்தோறும் பதிக்கத் தவறவில்லை. இந்த இலக்கிய மரபு (பாரம்பரியம்) நமது மண்ணிலும் தமிழக மண்ணிலும் நடைமுறைப்படுத்தக் காணலாம். அருணகிரியாரின் கந்தர் அலங்காரமும் வரதராசபண்டிதர் பாடியபிள்ளையார் கதையம் இதற்குச் சாட்சியாய் உள்ளன.
17

Page 17
சைவத் திருமுறைகளின் விழுமியம்
சலங்காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு
it; - அஞ்சார் துலங்காநரகக்குழி அணுகார் துட்டநோய் அணுகார் கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நல்நூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
- கந்தர் அலங்காரம்
வெள்ளை எருது ஏறும் விரிசடையோன் பெற்று எடுத்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகிருந்து கேட்போர்க்கும் வாராது கேடு.
- பிள்ளையார் கதை
நூற்பயன் கூறும் பாடல்கள் இவை. இந்த அமைப்பு தோத்திரப்பாடல்களிலும் எடுத்து ஆளப்பட்டதை, தேவாரம், திருவிசைப்பா போன்ற சைவத் திருமுறைகளிலும், ஆழ்வார் பாசுரங்களான நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திலும் காணலாம். இவை பதிகங்களாகப் பத்துக்களாக வகுக்கப்பட்டுள்ளன.
சைவ சமயம் சிவனோடு தொடர்புடையது. வைணவம் விஷ்ணுவோடு தொடர்புடையது. உண்மையான சைவன் பிறதெய்வம் தொழான். வைணவனும் திருமாலையே தொழுவான். இன்றைய சைவர்கள் நெறி தவறிவிட்டமை வருத்தத்துக்கு உரியது. தேவாரத் திருமுறைத் தொடரில் பாடல்கள் பத்துக் கொண்டது ஒரு பதிகம் எனப்படும். சில பதிகங்களில் பதினொருபாடல்களும், இன்னும் சில பன்னிரு பாடல்களும் கொண்டவையாயும் அமைந்துள்ளன. வைணவ சம்பிரதாயம் இதற்குச் சற்று வித்தியாசம் ஆனது. திருநாலாயிரம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் எனப் பெயர்கொண்ட, பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் (பாடல்கள்) பத்து என்பது பதிக எண்ணைக் குறியாது. 10 திருவாய்மொழி, 10 திருமொழி என்பன கொண்ட 10 பதிகத்தை உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொன்றிலும் (10 பதிகம் இருக்கும்) பத்துப் பிரிவு இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 10 அல்லது 11, அல்லது 12 பாசுரங்கள் வரும். எனவே சைவ, வைணவ இலக்கியத்தில் அமைந்த இறுதிப் பாடல்தான் முத்திரைக் கவிதை, பலஸ்ருதி என்று பெயர் பெறும். நூற் பயன்போல பதிகப்பலன், பிரயோசனம் கூறுவன இவை. இதிலும் ஓர் சிறப்பு அம்சம் என்ன என்றால் பாடியவரின்
18

சைவத் திருமுறைகளின் விழுமியம்
பெயர், படிப்பதால் வரும் நன்மை கூறப்படும். இப்படிக் கூறுகையில் இப்பாசுரங்களைத் தமிழ் என்று சிறப்புக் கொடுத்துப் பாடுவதைக் காணலாம். தமிழ் செய்தல் - அன்பு செய்தல். உதாரணமாகச் சில:
அடிகளாலவாய்ப் படிகொள் சம்பந்தன் முடிவி லின்தமிழ் செடிகள் நீக்குமே
- ஞானசம்பந்தர்
LLLLLLLLL 0LLLLLSLS LLLLCLLL0 SLLL CLLLLLL SLLSLCLS LLLSL LLLL. திருநாவலூ ரரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப் பாரும் விசும்புந் தொழப்பர மன்னடி கூடுவரே
- சுந்தரர்
அப்பர் அடிகளின் தேவாரத்தில் பதிகப்பயன்கூறும் முத்திரைக் கவிதை காணப்படவில்லை.
தேனார் பொழில் சூழ்தில்லை
மல்கு சிற்றம் பலத்தானைத் தூநான் மறையான் அமுத
வாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும்
பாடப் பாவ நாசமே.
திருவிசைப்பா - திருவாலி அமுதனார்
வீர்அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்தசொல்
ஓர் அணி ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
- பெரியாழ்வார்
LCL0LGSC LCL0C CCCC C CCC CCCCCC LLL0LLLLL0LLLLLLLL L0LLLL LLL GLLLGLLLLLLLL அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் - ஆண்டாள்
19

Page 18
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பட்டர்பிரான், விட்டுசித்தன் (விஷ்ணுசித்தன்) - பெரியாழ்வார், ஆண்டாளின் தந்தை, கோதை - ஆண்டாள்
கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன பன்னிய நூற் தமிழ்வல்லார் பாங்காயபக்தர்களே.
- குலசேகரப்பெருமாள் அன்பாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதிவைகுந்தம் காண்மினே.
- மதுரகவி ஆழ்வார் காவளம்பாடி மேய கண்ணனைக் கவியன் சொன்ன பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசர் ஆகிக் கோஇள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.
கலியன் - குலசேகரர்.
- குலசேகரப்பெருமாள்
வண் களகம் நிலவு எறிக்கும் வயல்மங்கை நகராளன் பண்கள் அகம் பயின்ற சீர்பாடல் இவை பத்தும் வல்லார் விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வரே
- திருமங்கை மன்னன்
LSL LSL LSL LL LS LS LS S SL S LSS LSL LSL L0 LSL 0 L LL LS LS SSSL LSS LSL LSL S குரு கூர்ச்சடகோபன் பண்ணார் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார் மண்ணாண்டு மணம்கமழ் வர்மல் லிகையே
- சடகோபர் - நம்மாழ்வார்
இம்முத்திரைக்கவி பற்றிப் பேராசிரியர் பேசும் கருத்தையும் இங்கு கவனிப்போம்:
"வைணவப்பெருமக்கள் இந்தப் பதினோராம் பாடலை பவஸ்ருதி' என்று கூறுவர். ஸ்ருதி என்றால் வேதவாக்கியம் என்று பொருள்படும். வேதம் எப்படி மாறாததோ அதுபோல் இந்தப் பத்துப் பாடல்களும் தவறாமல் பயன்தரும் என்ற கருத்தில், பலனைச் சொல்கின்ற ஸ்ருதிவாக்கியம் என்ற பொருளில் பதினோராவது பாடலைப் பலஸ்ருதி என்று கூறினர். ஞானசம்பந்தர், நம்மாழ்வார் ஆகியோர் பாடல்களில் பத்துப் பாடல்களை அடுத்தவரும் பதினோராவது பாடல் மேலே உள்ள பத்துப் பாடல்களையும் படிப்பவர் இன்ன பயனைப் பெறுவார்கள் என்று சொல்வதாகும். பலனைச் சொல்கின்ற ஸ்ருதி
20

சைவத் திருமுறைகளின் விழுமியம்
வாக்கியம் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை
இப்பொழுது நாம் அறிய முடிகின்றது."
- அடங்கன் முறையில் - அசஞானசம்பந்தன்
பதிகத்தின் இறுதிப்பாவியம் (பாடல்) பல சங்கதிகளை உள்ளடக்கி நிற்கிறது. பாடியவர் யார், அவரின் வெவ்வேறு திருநாமங்கள் என்ன, எந்தத் திருப்பதியைப் பற்றியது இப்பதிகம், தமிழ் என்று பாடுவது எதை, பாடியவரின் கருத்து (கருதுகோள்) என்ன - உள்ளடக்கம் என்ன, ஏணிப்படிப் பாடினார், பாடினவர் வாழ்ந்தகாலச் சமய, சமுதாயநிலை என்ன - படிப்பவர் பெறும் பயன் என்ன என்ற சிந்தனைகளை எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வரலாறு கூறும் பகுதியாகவும் அப்பாட்டு அமையக் காணலாம். ஒரு உண்மை! நாதமுனி குடந்தை போனார் கும்பிட அங்கே வந்த பக்தர் ஒரு திருவாய் மொழிப் பதிகம் பாடினார். அப்பாசுரத்தின் இறுதியில் "குழலின் மலியச் சொன்ன ஒராயிரத்துளிப் பத்தும் மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே” எனவருவதைக் கேட்ட (நாதமுனி) வர் நம்மாழ்வார்க்குச் சடகோபர் என்றோர் திருநாமம் உண்டு என்பதைக் கண்டார். அவர்பாடிய திருவாய் மொழி 1000 பாசுரங்களைக் கொண்டது, அது அந்தாதி என்பதையும் அறிந்து ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்) சென்று நாலாயிரம் பாசுரங்களையும் பெற்று உலகுக்கு அளிக்க, இந்த முத்திரைக் கவியே கைகொடுத்தது. அபயகுல சேகரன் திருமுறைகளைத் தேடி எடுக்கவும் இதுவே காரணம் 6T606) Tib.
இத்தொடரில் திருமுறைகளில் வரும் முத்திரைக் கவிதைகள்
பற்றிச் சிந்திப்போம். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும், சுந்தரமூர்த்திசுவாமிகளும் பதிகந்தோறும் முத்திரைக் கவிதை தந்துள்ளனர். அப்பாடல்களிலே இப்பதிகங்களை ஒதுவோர் பெறும் பயனை எடுத்துக் கூறியுள்ளனர். அவை வருமாறு:-
புற்றில் வாழுமர வம்மரையார்த்தவன் மேவும் புகலூரைக் கற்று நல்லவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை பற்றி யென்றும் மிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து குற்றமின்றிக்குறை பாடொழியாப்புகழோங்கிப் பொலிவாரே.
- திருமுறை 1:2.11
21

Page 19
சைவத் திருமுறைகளின் விழுமியம்
கண்டல்கள் மிண்டிய கானற் காழிக் கவுணியன்
ஞானசம்பந்தன் சொன்ன கொண்டினி தாவிசை பாடியாடக் கூடும்
பருடை யார்கள் வானே.
- திருமுறை 1:8.11
செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேற் சிதையா தன செல்வன் ஞானசம்பந்தன் செந்தமிழ் செல்வ மாமிவை செப்பவே.
- திருமுறை: 1:135.11
கந்தமார் பொழில் காழிஞானசம் பந்தன் சேர்கருவூருளானிலை எந்தையைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
- திருமுறை 2:28.11
ஏடமர் பொழிலணி யின்னம்ப ரீசனை நாடமர் ஞானசம்பந்தன் நாடமர் ஞானசம்பந்தண் நற்றமிழ் பாடவல் லார்பழி யிலரே.
- திருமுறை 3:95.11
ஒவணமேல் எருதொன்றேறும் ஒணகாந்தன்றளியுளர்தாம் ஆவணஞ்செய்தாளுங்கொண்டு அரைதுகிலோடு பட்டுவீக்கிக் கோவணமேற் கொண்டவேடங் கோவையாகஆரூரன்சொன்ன பாவணத்தமிழ் பத்தும் வல்லார் பறையும்தாஞ் செய்த பாவந்தானே.
- திருமுறை 7.5.10
கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார் பொழில் வண்டு) யாழ்செயுங் கேதீச்சரத்தானை மறையார்புக மூரன்னடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ் சொலக் கூடா கொடுவினையே.
- திருமுறை 7:80.10
22

சைவத் திருமுறைகளின் விழுமியம் ஊழிதோறுாழிமுற்றும் உயர்பொன் நொடித் தான்மலையைச் சூழிசை யின் கரும்பின் சுவைநாவலூரன் சொன்ன ஏழிசை இன்தமிழால் இசைத்தேத்திய பத்தினையும் ஆழிகடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே.
- திருமுறை 7:100. 10
ஆளுடைபிள்ளையும் (ஞானசம்பந்தர்), ஆளுடைநம்பியும் (சுந்தரர்) அருளிய பாடல்களின் இறுதிப்பதிகத் திருப்பாடல் பதிகத்தின் பயன்கூறும் வகை சிரத்தையோடு சிந்திக்க வைக்கிறது. இப்பதிகங்களைப் படித்துப் பாராயணஞ் செய்வோர்க்கு இடர் கெடும், பிறவிநீங்கும், சிவலோகம் கிடைக்கும். சிவகெதி பெறுவர், இல்லைப்பாவம், பேரின்பம் உண்டு. சிந்தையிற் துயராவ தீர்வர், வானோர் உலகில் மகிழ்வர், தீப்பிணியாயினதிரும். நன்னெறி கிடைக்கும். இல்லை அல்லல், வாழ்வு வளம்பெறும் வறுமை நீங்கும், தடுமாற்றம் வராது, நரை, மூப்பு, பிணியற்று நாதன் சேவடி நண்ணுவர், புகழெய்துவர், தொழத் தொழக் கெடும் வினை என்று கூறப்படும் ஆப்தவாக்கியங்களை உள்ளத்திற் கொண்டால் நமக்கு விடுதலை கிட்டும் என்பதாம். இஃதே போல் அப்பர் பெருமான் முத்திரைக் கவி செய்யாவிடினும் பதிகங்களில் இதனால் ஏற்படும் நன்மைகளை விதைத்துப் பாடியுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் செத்த போது செறியார் பிறிவதே நித்த நீலக் குடியரனைந்தினை சித்த மாகிற் சிவகதி சேர்வரே
- திருமுறை 5:72.1
சுனையுள் நீல மலரன கண்டத்தன் புனையும் பொன்னிறக் கொண்றை புரிசடைக் கனையும் பைங்கழலான்கரக் கோயிலை நினையுமுள்ளத்தவர்வினை நீங்குமே.
w - திருமுறை 5:19.5
கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றியிரும்தவஞ்செய்யிலென்
23

Page 20
சைவத் திருமுறைகளின் விழுமியம்
ஊனை உண்ட லொழிந்து வான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
- திருமுறை 5:99.6
வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் கண்டனைக்கலந்தார்தமக் கண்பனைக் கொண்ட லம்பொழிற் கோளிலிமேவிய அண்டனைத் தொழு வார்க்கல்ல லில்லையே.
- திருமுறை 5:56.3
சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் அந்தி வான் நிறத் தானணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னானடி வந்திப் பாரவர் வானுல காள்வரே.
- திருமுறை 5:97.1 எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம் எந்தை யெம்பிரா னென்றிறைஞ்சித் தொழு தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார் எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே.
- திருமுறை 5:96.10
கடைசித் தொடர்கள் நாவேந்தரின் பாவடிகள். இவை இறைவனை ஏத்துவதால் நாம் அடையும் பிரயோசனங்களை நமக்கு இடித்துச் சொல்லுகின்றன. அப்பர் பெருமானைப் போல, வாதவூரரும் (மாணிக்கவாசகர்) முத்திரைச் செய்யுள் பதிகந்தோறும் பாடவில்லை. ஆயினும் சிவபுராணத்தில் “சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின், பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்” என்று அருளியுள்ளார்.
24

சைவத் திருமுறைகளின் விழுமியம்
திருவிசைப்பாவில் வரும் முத்திரைப் பாடல்
ஒன்பதாம் திருமுறையில் வரும் திருவிசைப்பாவின் சில ஆசிரியர்கள் அதை இசைப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறியுள்ளனர். சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்பவர்கள் இவ்வரிசையில் வருகின்றனர். அவற்றின் இறுதி அடிகளை மட்டும் இப்பந்தியில் தருகிறோம். வாசகர்கள் கவனிக்கவும்.
திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுமா மனமே! - சேந்தனார்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதமூ றியதமிழ் மாலை ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்
இருள் கிழித்(து) எழுந்தசிந் தையரே.
- கருவூர்த்தேவர்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
- பூந்துருத்தி நம்பி
ஆரா இன்சொற் கண்ட ராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார் பேராவுலகிற் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.
- கண்டராதித்தர்
தேவர் தாந்தொழ ஆடியதில்லைக்
கூத்தனைத் திரு வாலி சொல்லியவை மேவ வல்லவர்கள்
விடையானடி மேவுவரே. - திருவாலியமுதனார்
25

Page 21
சைவத் திருமுறைகளின் விழுமியம்
வாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே.
- மேலவர் வண்புரு டோத்தமன் கண்டுரைத்த வாசக மலர்கள் கொண் டேத்தவல்லார் மலைமகள் கணவனை அணைவர்தாமே.
- புருடோத்தமநம்பி
ஏயு மாறெழிற் சேதிபர் கோன் தில்லை நாய னாரை நயந்துரை செய்தன தூய வாறுரைப் பார்துறக் கத்திடை ஆய இன்பம் எய்தி இருப்பரே.
- சேதிராயர்
காரைக்காலம்மையாரின் பாசுரங்களிலும் பதிகப் பயன் உண்டு. படித்து அனுபவிக்கவும்
வழிவழிவந்த இம்மரபு சென்ற நூற்றாண்டில் நமது தாயகத்தில் வாழ்ந்த மகாயோகசுவாமிகளையும் விடவில்லை. அவர் தந்த நற்சிந்தனையில் ஒன்பது இடங்களில் அவர் நாமம் வரக் காணலாம்.
செல்வ சிவயோக நாதன்
சுவாமி யோக நாதன்
யோக சுவாமி
புண்ணிய யோகர்
யோக நாதன
சுவாமி
அப்புசுவாமி
செல்லப்பன் மாணாக்கன் திருவாளன்
நல்லூரில் "தேசிகன் தாசன் என்பவை அவை.
கெளரிம னோகரி ஆனந்தாச்சி
கமல ஆச்சி செல்லாச்சி ஐவரும் உவந்து சேவடி கும்பிடு முத்தமன்
26

சைவத் திருமுறைகளின் விழுமியம்
தவத்தைச் செய்திடத் தந்திடுமருளே.
- நற்சிந்தனை பக்கம் 15
சிவனையே பாடிய தேவார திருவாசகத்தில் முருகன், விநாயகர் வருகிறார்கள். எப்படி? திருவாசக ஆசிரியர் வேலன் தாதை, குமரன் தாதையெனச் சிவனைப் பேசுகிறார். தேவாரத்தில் 47 இடங்களில் முருகன் தாதை சிவன் என்ற குறிப்பும் 10 இடங்களில் விநாயகன் தந்தை சிவனென்றும் அமைந்துள்ளன. ஒன்பதாம் திருமுறையில் திருவிடைகழி முருகன்மேல் திருவிசைப்பா பாடப்பட்டுள்ளது. பதினோராந் திருமுறையில் முதல் எட்டுத் திருமுறைகளிலும், பத்து பன்னிரண்டாவது திருமுறைகளிலும் கணபதியும் முருகனும் இறைவனோடு சார்த்தியே புகழப்பட்டுள்ளனர். ஒன்பதாம் திருமுறையில் திருவிடைகழித் திருவிசைப்பாவில் மட்டும் முருகப்பெருமான் தனித்துப் போற்றப்பட்டுள்ளார். பதினோராந் திருமுறையில் கணபதி, முருகன் ஆகிய இருவருக்கும் தனித்தனி பிரபந்தங்கள் உள்ளன.
பண் ஆறும் இசையி னொடு பாடிப், படித்து அருள்
பான்மை நெறி நின்று, தவறாப்
பக்குவ விசேஷராய் நெக்கு நெக்கு உருகிப்,
பணிந்து எழுந்து, இருகை கூப்பிக்
கண்ஆறு கரைபுரள நின்றஅன் பரைஎலாம்
கைவிடாக் காட்சி உறவே
கருதருய சிற்சபையில் ஆனநத நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே!
தாயுமானவர் - கருணாகரக் கடவுள் 2
27

Page 22
சைவத் திருமுறைகளின் விழுமியம்
தாயுமானார்வாக்கில் திருமுறைகள்
அன்றுமுதல் இன்றுவரை ஜனன கோடி
அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்ததுஅல்லால் இன்றைவரை முத்தியின்றே, எடுத்த தேகம்
எப்போதோ தெரியாதே, இப்போ தேதான் துன்றுமணக் கவலைகெடப் புலைநா யேனைத்
தொழும்பு கொளச் சீகாழித்துரையே, தூது சென்றிடவே பொருளைவைத்த நாவலோய் நம்
சிவன் அப்பா என்ற அருள் செல்வத்தேவே!
யாதனை - துன்பம். துன்று - அதிகரித்த, தொழும்புகொள் ஆட்கொள்ள.
தேவர் தொழும் வாதவூர்த் தேவே எண்பேன்,
திருமூலத் தேவே, இச்சகத் தோர்முத்திக்கு ஆவல் உறச் சிவஎண்வாக்குடனேவந்த
அரசே, சும்மா இருந்துஉன் அருளைச் சாரப் பூஉலகில் வளர்அருணகிரியே, மற்றைப்
புண்ணியர்காள், ஒஎன்பேண் புரைஒன்று இல்லா ஒவியம்போல் அசவு அறவும் தானே நிற்பேன்
ஒதரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே
வெம்பந்தம் தீர்த்து உலகுஆள் வேந்தன் திருஞான சம்பந்தனை அருளால் சாருநாள் எந்நாளோ
ஏரின் சிவபோகம் இங்குஇவற்கே என்னஉழ வாரம்கொள் செங்கையர்தாள் வாரம் வைப்பது எந்நாளோ
பித்தர் இறைஎன்று அறிந்து பேதைபால் தூது அனுப்பு வித்த தமிழ்ச் சமர்த்தர் மெய்புகழ்வது எந்நாளோ
போதஷ்பூர் நாடு அறியப் புத்தர்தமை வாதில் வென்ற வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ
28

சைவத் திருமுறைகளின் விழுமியம் சக்கரவர்த்தி தவராஜ யோகி எனும் மிக்கதிரு மூலன் அருள் மேவுநாள் எந்நாளோ
எண்ணரிய சித்தர் இமையோர் முதல்ஆன பண்ணவர்கள் பக்தர் அருள்பாலிப்பது எந்நாளோ
இருநிலனாய்த் தீயாகி என்ற திருப்பாட்டின் பெருநிலையைக் கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ
அற்றவர்கட்கு அற்றசிவன் ஆம்என்ற அத்வைத முற்றுமொழி கண்டு அருளில் மூழ்குநாள் எந்நாளோ
தான் என்னை முன்படைத்தான் என்ற தகஉரையை நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ
என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின் நன்னெறியைக் கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ
ஆருடனே சேரும் அறிவு என்ற அவ் உரையைத் தேரும்படிக்கு அருள்தான் சேருநாள் எந்நாளோ
உன்னில் உன்னும் என்ற உறுதிமொழியால் என்இதயம் தன்னில் உன்னிநன்னெறியைச் சாருநாள் எந்நாளோ
நினைவு அறவே தான்நினைந்தேன் என்ற நிலைநாடி அனைத்தும் ஆம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ
சென்று சென்றே அணுவாய்த் தேய்ந்து ஒன்று ஆகி நின்றுவிடும் என்ற நெறி நிற்குநாள் எந்நாளோ
ஆதிஅந்தம் இல்லா அரியபரஞ் சோதிஎன்ற நீதிமொழி கண்டுஅதுவாய் நிற்குநாள் எந்நாளோ
பிறிது ஒன்றில் ஆசைஇன்றிப் பெற்றிருந்தேன் என்ற நெறி உடையான் சொல்லில்நிலை நிற்குநாள் எந்நாளோ
திரை அற்றநீர்போல் தெளிய எனத்தேர்ந்த உரை பற்றி உற்று அங்கு ஒடுங்குநாள் எந்நாளோ
- தாயுமானவர் பாடல்
29

Page 23
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பன்னிருதிருமுறைகள்
முதலாந் திருமுறை: 136 பதிகங்கள், 1469. பாடல்கள் -
திருஞானசம்பந்தர் இரண்டாந் திருமுறை; 122 பதிகங்கள், 1331 பாடல்கள் -
W திருஞானசம்பந்தர் மூன்றாந் திருமுறை: 126 பதிகங்கள், 1358 பாடல்கள் -
திருஞானசம்பந்தர் நான்காம் திருமுறை: 113 பதிகங்கள், 1070 பாடல்கள் -
திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை: 100 பதிகங்களி, 1015 பாடல்கள் -
திருநாவுக்கரசர் ஆறாந் திருமுறை: 99 பதிகங்கள, 981 பாடல்கள் -
திருநாவுக்கரசர் ஏழாந் திருமுறை: 100 பதிகங்கள், 1026 பாடல்கள் -
சுந்தரமூர்த்தி
பதிகங்கள் மொத்தம் - 796 பாடல்கள் மொத்தம் 8250
எட்டாந் திருமுறை - திருவாசகம் 658, பதிகம் 51 -
மாணிக்கவாசகர் திருக்கோவையார் 400 பாடல்கள் சிலநூல்களில் திருவாசகம் 656 பாடல்கள்
SD 6. திருக்கோவையாருக்கு திருச்சிற்றம்பலக்கோவை என்றும் பெயர்
ஒன்பதாந் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
இத்திருமுறையில் 29 பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது 301 பாடல்களே கிடைத்துள்ளன.
பாடியோர்: ஒன்பதாந் திருமுறையானது திருமாளிகைத்தேவர்,
சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார்,
30

சைவத் திருமுறைகளின் விழுமியம்
புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச்செய்யப்பட்டவை ஆகும்.
சேந்தனார் திருவிசைப்பா திருப்பல்லாண்டு இரண்டும் பாடியுள்ளார். இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 திருப்பதிகங்கள் கோயில் என்னும் தில்லைப்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைகழி, திருக்களந்தை, ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டுர், மணியம்பலம், திருமுகத்தலை திரைலோக்கியசுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசஇராசேச்சரம், திருவிடை மருதூர், திருவாரூர் ஆகிய பதின்மூன்று
தலங்கட்கும் தலத்துக்கொரு பதிகமாக அமைந்துள்ளன.
பத்தாந் திருமுறை: பாடல் 3000 - திருமூலநாயனார்
பதினோராந் திருமுறை: பாடியவர்கள பன்னிருவர் (12)
பாடியநூல்கள் 41
1. திருவாலவாயுடையார் 1. திருமுகப்பாசுரம்
2. காரைக்காலம்மையார் 2. திருவாலங்காட்டு
மூத்ததிருப்பதிகம்
3. மூத்ததிருப்பதிகம் 4. திருவிரட்டை மணிமாலை
5. அற்புதத் திருவந்தாதி
3. ஐயடிகள் காடவர்கோன் 6. கூேடித்திரத் திருவெண்பா
நாயனார் 4. சேரமான்பெருமாள் 7. பொன்வண்ணத் தந்தாதி
நாயனார் 8. திருவாரூர் மும்மணிக்கோவை
9. திருக்கைலாய ஞானஉலா
5. நக்கீர தேவநாயனார் 10. கைலைபாதிகாளத்திபாதி
அந்தாதி 11. திருவீங்கோய்மலை எழுபது
31

Page 24
சைவத் திருமுறைகளின் விழுமியம்
6. கல்லாடதேவ
நாயனார் 7. கபிலதேவநாயனார்
8. பரணதேவநாயனார்
9. இளம்பெருமான்
அடிகள் 10.அதிராவடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12 திருவலஞ்சுழி
மும்மணிக்கோவை 13. திருவெழு கூற்றிருக்கை 14. பெருந்தேவ பாணி 15. கோபப்பிரசாதம் 16. கார்எட்டு 17. போற்றித்திருக்கலிவெண்பா 18. திருமுருகாற்றுப்படை 19. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
20. திருக்கண்ணப்பதேவர் திருமறம்
21. மூத்தநாயனார்
திருவிரட்டைமணிமாலை
22. சிவபெருமான் திருவிரட்டை
மணிமாலை 23. சிவபெருமான் திருவந்தாதி
24. சிவபெருமான் திருஅந்தாதி
25.சிவபெருமான் திருமும்மணிக்கோவை
26. மூத்தபிள்ளையார்
திருமும்மணிக்கோவை
27. கோயில்நான்மணிமாலை 28. திருக்கழுமல மும்மணிக்கோவை 29. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30. திருவேகம்பமுடையார் திருவந்தாதி 31. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
12. நம்பியாண்டார் நம்பி 32. திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை
மணிமாலை 33.கோயில் திருப்பண்ணியார் விருத்தம் 34. திருத்தொண்டர் திருவந்தாதி 35. ஆளுடைபிள்ளையார் திருவந்தாதி
32

பன்னிரண்டாந் திருமுறை:
36.
37.
38.
39.
சைவத் திருமுறைகளின் விழுமியம் ஆளுடைபிள்ளையார் திருச்சண்பைவிருத்தம் ஆளுடை பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடை பிள்ளையார் திருத்தொகை 41.
திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை பெரியபுராணம் 4286 திருப்பாடல்கள், சுருக்கம் 13 - சேக்கிழார் பெருமான்
33

Page 25
சைவத் திருமுறைகளின் விழுமியம்
எனதுரை தனதுரையாக
திருமுறைகளைத் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணமென நான்காகப் பிரித்துள்ளனர். தோத்திரங்களில் சாத்திரமும் கலந்திருக்கும். சாத்திரம் சிவ தோத்திரம் கலந்தும் காணப்படும். உதாரணமாகத் திருவாசகத்தை, திருமந்திரத்தைக் கூறலாம். இசை, புகழ், தோத்திரம், கீர்த்தனை பெரும்பாலும் ஒரே பொருளையே ஒத்துநிற்கின்றன. புகழ் இசையெனத் திருக்குறள் பேசினும், இறைவன் பெரும்புகழ் பேசுவோர் இருள்சேர் இருவினையும் சேரார் என்னும் பொருள்தரும் குறளைக் கடவுள் வாழ்த்திலேயே பாடியுள்ளார் திருவள்ளுவர்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
- திருக்குறள் 5
இருவினை - நல்வினை தீவினை. இரண்டும் விலங்குதான். ஒன்று பொற் காப்பு மற்றது இரும்புக் காப்பு.
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றிவரும்
நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா. இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினார் இடத்து. இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள்சேராவாகலின், அவை முற்றறிவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர்புகழெனப்பட்டது.
புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லல். எனவே இறைவன்புகழ் பேசுவன புகழ்நூல்கள். முருகன் புகழ்பேசியவர் அருணகிரியார். சுந்தரர் பாடலொன்றில் இறைவன் புகழ்பாடுவோர் நிலை பேசப்படுகிறது.
தேடியவானோர் சேர்திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்.
மூவர் தேவாரம் 7923
ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப்பெருமாளும் இறை புகழ்பாடும்
34

சைவத் திருமுறைகளின் விழுமியம்
திறம்பற்றி ஓர்பாசுரம் தந்துள்ளார்.
தூராத மனக்காதல் தொண்டர்தங்கள்
குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும்பாடி"
- திருநாலாயிர திவ்வியப் பிரபந்தம் 655
இந்தப் பொருள்சேர் புகழ்தான் கீர்த்தி. இதை நம்மாழ்வார் கீர்த்திக்கனி என்பர்.
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று
- திருநாலாயிரம் 2979 இப்பாவியம் (கவிதை) செவிநுகர் கனி என்பது கம்பன் கூற்று. புகழ், கீர்த்தி இரண்டும் இப்போ ஒருபொருள் உடையனவே. கடந்த நூற்றாண்டில் எழுந்த கீாத்தனைகள் (பாபநாசம் சிவன் - கோபாலகிருஷ்ண பாரதியார், கவிமணி, சுத்தானந்த பாரதியார்) இறைவன் புகழ்பாடிய ஒருவகைப் பக்தி இலக்கியங்கள். இவைக்கு இசையமைப்போர் வாக்கேயக்காரர் எனப்படுவர். இராக, தாளக்கட்டுடன் பக்கவாத்தியசகிதம், சங்கீத மேதைகளாற் பாடப்படுவன கீர்த்தனைகள். அளவிலாச்சீருடைய இறைவனைப் பாடிய அருளாளர்கள் தந்தவையே தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்யப் பிரபந்தம் என்பன. இவற்றை அருளிச்செயல் என வைணவம் அழைக்கும். இவை இறைகலந்த பாடல்கள். ஆக சாமானியர் பாடியவை வெறும் பாடல்கள். அவற்றைப் படிப்போர் வெறும் வாய்ப்பாடு போலத்தான் படிப்பர். இதைவள்ளலார்
நடராஜர் பாட்டே நறும் பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு சிதம்பர பாட்டே திருப்பாட்டு ஜீவர்கள் பாட்டெல்லாம் மருட்பாட்டு அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு
என்று கூறுகின்றார். அருளாளர்களான ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லியவை இறை ஆணையால் வந்தவையே என்பதை அவர்களே கூறும்
35

Page 26
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பாடல்களாற் காணலாம் . 'திரு இலம்பயங்கோட்டுர்’ திருப்பதிகத்தில் 'எனதுரை தனதுரையாக’ எனப் பிள்ளையார் கூறியதைச் சைவசமயிகள் கூர்ந்து நோக்க வேண்டும்.
நீருளாண் தீயுளானந்தரத்துள்ளன்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும் ஊருளானெனதுரை தனதுரையாக
ஒற்றைவெள்ளேறுகந் தேறிய வொருவன் பாருளர் பாடலொ டாடலறாத
பணிமுரன் றஞ்சிறை வணிடினம் பாடும் ஏருளர் பைம்பொழிலிலம் பையங் கோட்டூர்
இருக்கை யாப்பேணியெண்ணெழில் கொள்வதியல்பே.
- மூவர்தமிழ் 826
இப்பதிகம் 11 பாடல்கள் கொண்டது. பத்துபட்பாடல்களிலும் 'எனதுரை தனதுரையாக’ என்று இது இறைவனது உரையேயென அழுத்தம் கொடுக்கிறார் திருஞானசம்பந்தர். முத்திரைக்கவி தராத திருநாவுக்கரசரும் தான் பாடியதாகக் கூறாமல் இறைவனே தன்னைப் பாடுவித்தான் எனப் பிறவினையாகக் கூறுகின்றார்.
கந்தமலர்க் கொண்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சராசரநற்றாயனை நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென் சிந்தைமயக் கறுத்ததிரு அருளி னானைச்
செங்காட்டங்குடியதனிற் கண்டேன் நானே
- அப்பர் 6:84.4
ኢዖ' இப்பாதையிலேத்ான் சுந்தரரும் சந்திக்கிறார். பித்தா என அடியெடுத்துக் கொடுத்த இறைவன். "அர்ச்சனை பாட்டேயாதலின் சொற்றமிழ் பாடுக” என்று பணித்தருளிய செய்தி பெரியபுராணத்தில் வருகிறது.
மற்றுநீ வன்மைபேசி வன்றொண்டன் என்னும்நாமம்
பெற்றனை, நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின்மிக்க
36

சைவத் திருமுறைகளின் விழுமியம் அர்ச்சனை பாட்டே ஆகும், ஆதலால் மணிமேல் நம்மைச்
சொற்றமிழ்பாடு" கென்றார் தூமறை பாடும்வாயார்.
- தடுத்தாட்கொண்ட புராணம் 70
தேவாரம் அருளிய மூவர் முதலிகளின் அருள்வாக்கெல்லாம் இறைவாக்கென்பதாற்றான் தேவாரம் திருவருளைப் பாடியது என்பர். குருவருளைப் பாடிய திருவாசக ஆசிரியர் பதிகமுத்திரை பதிக்காவிடினும் இறைவனே தன்னைப் பாடுவித்தான் எனப் பேசும் பாடல்மூலம் தன் நிலைப்பாட்டை எடுத்துப் பேசுகிறார் இத் திருவாசகத்தில்,
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்றுாதாய் கோத்தும்பி.
- திருக்கோத்தும்பி 12
இதுவரை நால்வர் வாக்கும் நம்பெருமான் திருவாக்கே என்பதைக்
கண்டோம் பன்னிரண்டாந் திருமுறையான பெரியபுராணம் உலகெலாம். என அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது இறைவனால்தான் என்பதும்
உள்ளம் கொள்ளத்தக்கது. நம்மாழ்வாரின் அருளிச் செயலான
திருவாய் மொழிகூட திருமாலின் கூற்றேயென்று பேசும் நான்கு
பாசுரங்கள் வருமாறு,
என்றைக்கும் என்னையுய்யக்கொண்டு போகிய, அண்றைக்கண் றென்னைத்தன் னாக்கியென்னால் தன்னை, இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய் நின்றவெண் சோதியை, எண்சொல்லி நிற்பனோ?
- திருவாய் மொழி 7; 9.1
சீர்கண்டு கொண்டு திருந்துநல் லண்கவி, நேர்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில், ஏர்விலா என்னைத்தன் னாக்கி யென்னால்தன்னை, பார்பரவு இன்கவி பாடும் பரமரே.
- மேலது. 7; 9.5
37

Page 27
சைவத் திருமுறைகளின் விழுமியம் திறத்துக்கே துப்புர வாம்திரு மாவின்சீர், இறப்பெதிர் காலும் பருகிலும் ஆர்வனோ மறப்பிலா வென்னைத்தன்னாக்கியென்னால்தன்னை,
உறப்பல இண்கவி சொன்ன வுதவிக்கே?
- மேலது 9
நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த, எண்ணா தனகள் எண்ணும் நன்
முனிவரின்பம் தலைசிறப்ப, பண்ணார் பாடல் இண்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி, தென்னா வென்னும் என்னம்மான்
திருமா விருஞ்சோலையானே.
- மேலது 10: 7.5
நம்மாழ்வார் பாடிய நான்கு பிரபந்தங்களை நால்வேதமாகவும், திருமங்கையாழ்வார் பாடிய 6 பிரபந்தங்களை 6 அங்கமாகவும் பேசுவது வைணவமரபாகும். இறைவனையே நால்வேதம் ஆறங்கமாயினான்காண் என அப்பர் போற்றுகின்றார்.
முறை - ஆகமம். மறை - வேதம். மறைமுடிபு - உபநிடதம். அர்ச்சனை - பூசை. ஆரியன் - ஆசான். ஆரியம் ஆசானாற் செய்யப்பட்டது. சி . சிறப்பு, வா - வனப்பு, ய - யாப்பு, ந - நடப்பு. ம - மறைப்பு, இது சிவாயநம என்பதன் உட்பொருளாம்.
38

சைவத் திருமுறைகளின் விழுமியம்
பாவணத்தமிழ்
கண்ணுதற் பெருங் கடவுளும்
கழக மோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த
இப்பசுந் தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழிபோல் எணர்ணிடப்படக் கிடந்ததா
எண்ணவும் படுமோ?
- பரஞ்சோதிமுனிவர்
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே வளர்ந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே வளர்ந்த பாவை
மருங்கிலே வளருகின்றாள்.
- வில்லிபுத்தூரர்
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே
- பொன்வண்ணத்தந்தாதி -1
வண்ண வண்ணங்களைக் கம்பகாவியத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் நிறையக் காணலாம். கவிதை வடிவமே பல வண்ணங்களைக் கொண்டன. வண்ணக்களஞ்சிப் புலவர்,
39

Page 28
சைவத் திருமுறைகளின் விழுமியம் வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் புகழ்பூத்தவர்கள். பஞ்சாமிர்தவண்ணம் பாடியவர் பாம்பன்சுவாமிகள். உடற்கூற்று வண்ணம் தந்தவர்கள் பட்டினத்தார், தாயுமானவர். வண்ணங்கள் வேற்றுமைப்பட்டாலும் மனிதசாதியின் எண்ணங்கள், செயல்கள் வேற்றுமைப்படுமோ? இந்த வண்ணம், இடைகுறைந்து, வணம் ஆயிற்று. அதுவே வணம் என்ற பிரயோகம். வண்ணம், வணமான வரலாறு இதுதான். இத்துடன் பாசேர, பாவவணம் ஆயிற்று. இன்னும் தமிழ்சேர பாவணத்தமிழ் ஆயிற்று. இதை முக்கனி என்பதா முத்தமிழ் என்பதா? முத்தமிழ் விரகர், தமிழ்விரகர் ஞானசம்பந்தர், பொன்மாலைமார் பன்புகழ்க் காழிச்சம்பந்தன் நன்மாலை ஞானத்தமிழ் பாவேந்தர், நாவேந்தர், தாண்டகவேந்தர் தந்தது ஒண்தமிழ். மணிமொழியார் தந்தார் தண்பாண்டித் தமிழ். வண்டமிழ் நாவலன் தமிழ் மாருதம் எனச் சேக்கிழார் போற்றும் சுந்தரர் தந்தது பாவணத்தமிழ். அவருக்கு அவரேசாட்சி.
ஒவணமேல் எருதொன்றேறும் ஒணகாந்தன்றளியுளர்தாம் ஆவணஞ்செய்தாளுங்கொண்டு அரைதுகிலோடு பட்டுவீக்கிக் கோவணமேற்கொண்டவேடங் கோவையாகஆரூரன்சொன்ன பாவணத்தமிழ் பத்தும்வல்லார் பறையும் தாஞ்செய்த பாவந்தானே.
- திருமுறை 7: 5, 10
பத்து என்பது பதிகப்பாடல்களையே குறிக்கும். பறையும் பறந்துபோம், விட்டு நீங்கும். சுந்தரர் 100 பதிகங்களில் 1026 பாவணத் தமிழ் தந்துள்ளார். அவைகளிற் சிவபாவணத் தமிழ்த்திறம் பகர்வன வருமாறு:
* வளர்நாவலர் கோன் நம்பியூரன் சொன்ன
சந்தம்மிகு தண்டமிழ் மாலைகள் கொண்டு அடிவீழ வல்லார்க்குமாற்றிலரே
* ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து
அழகாய் உரைப்பார்களும் கேட்பவரும் சீர்தரு தேவர் கணங்களோடும் இணங்கிச் சிவலோகத்து எய்துவரே
* நாவலர் கோன் ஆரூரன்நாவின் நயந்து உரைசெய்
பண்பயிலும் பத்துமிவை
40

சைவத் திருமுறைகளின் விழுமியம்
* அணிநாவலூரன் சொன்ன சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார் வினையாயினபோய்ப் பேராவிண்ணுலகம் பெறுவர் பிழைப் பொன்றிலரே
* உரிமையால் உரைசெய்த ஒண்தமிழ்கள் * செஞ்சொல்தமிழ் மாலைகள் பத்தும் * ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார்கள் அமர்
உலகாள்வரே இவ்வணம் பாடிய நம்பி சம்பந்தரை நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் எனப் போற்றி, நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன் என்கிறார்.
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்
தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை யெண்கணம் இறைஞ்சுங் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே.
- திருமுறை 7:62.8
பாவணமாயும், தமிழ்வணமாயும் ஒளிரும் நம்பியாரூரரைச் சேக்கிழார் பாடும்வணம் இனிக்காண்பாம். வணம் - வண்ணம் ஆனது என்பதை முன்பு கண்டோம்.
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பணிந்தார்.
தடுத்தாட் கொண்ட புராணம் 107
தேனார்க்கும் மலர்ச் சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால் ஆனாப்பே ரன்புமிக அடிபணிந்து தமிழ்பாடி
- மேலது 115
வண்டமிழ் நாவலர் பெருமான் சைவவிடங்கின் அணிபுனைந்து
- மேலது 130
41

Page 29
சைவத் திருமுறைகளின் விழுமியம்
மறம்பயின்ற தெங்கோ தமிழ்மாருதம்
- மேலது 167 பன்னுதமிழ்த் தொடை மாலை சாத்தி
- மேலது 182 பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் திருவாக்கான தேவாரம் பற்றி இப்படிப் பேசப்படுகிறது. தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால் உரைத்த தமிழ்மாலைகள் சாத்தும் உணர்வுபெற உணர்ந்துரைப்பார்
- திருநாவுக்கரசுவாமிகள் புராணம் 69
மேவுற்ற இவ்வேலையில் நீடியசீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்ற செந்தமிழின் சொல்வளப்பதிகத்தொடை
பாடியபான்மையினால் நாவுக்கரசென்றுவ கேழினும் நின்நாமம் நயப்புறமன்னுக என் றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா னிடையே ஒருவாய்மை
எழுந்ததுவே - மேலது 74 (நாவுக்கரசர் என்ற பெயர் வந்ததே பதிகம் பாடியதால்.)
தண்டமிழ் மாலைகள் பாடித்தம்பெருமான் சரணாகக் கொண்ட கருத்தினால்
- மேலது 117 பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார்
- மேலது 140
வண்தமிழால் எழுதுமறைமொழிந்தபிரான் திருப்புகலிமருங்கு சார்ந்தார் - மேலது 180 தமிழ்மொழி மாலைகள் சாத்துவார்
- மேலது 193
தமிழ்வேந்தர் மருவாரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்தடைந்தார் - மேலது 331
இவ்வாறு பெருமை மிகு நாவேந்தர் தமிழோடிசை பாடல் மறந்தறியேன், பண்ணின் இசையாய் நின்றாய் போற்றி எனத்
42

சைவத் திருமுறைகளின் விழுமியம்
தமிழ் செய்துள்ளார். தமிழ் செய்தல் அன்பு செய்தல் என்று பொருள். இதைத் திருமந்திர வாக்கால் அறியலாம்.
பின்னைநின் றென்னே பிறவிபெறுவது முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர் என்னைநன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே t திருமுறை 10 நம்பிரான்மூலர் 152 தமிழ் விரகர் எனப்படும் திருஞானசம்பந்தர் பற்றிய சில செய்திகளை இனிக்காண்பாம்:
தண்டமிழ் மாலையிற் பாடி
- திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் 291
செந்தமிழ் ஞானசம்பந்தர் - மேலது 268
தூக்கின் தமிழ்மாலைபாடித் தொழுதங் குறைகின்றநாளில்
- மேலது 275 சிந்தை இன்புறப்பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம் - மேலது 372 உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி - மேலது 361 சுருதி முறைவழுவாமற் தொடுத்த பாடல் - மேலது 1010 பாவலர் செந்தமிழ் பாடிப் பன்முறையும் பணிந்தார்
- மேலது 1118
தமிழ் என்னும் பிரயோகம் மொழிக்குமட்டுமல்ல, இசைமாலைக்கு, பாமாலைக்கு, பாட்டின் சிறப்புக் கெல்லாம் பாவிக்கப்பட்டமையைத் திருமுறைகளைப் படித்து அறியலாம். முதலாந் திருமுறையின் முதலாவது பதிகத்திலேயே திருநெறிய தமிழ் என்ற தமிழாளியார், ஆறாந்திருமுறையின் ஈற்றடியிலும் தமிழ் பற்றிப் பேசுவதினின்று பாவணத்தமிழின் சிறப்பு மேன்மையானது என்பது வெளிப்படையன்றோ.
ஆறும் மதியும் பொதிவேணியனூரா மாறில் பெருஞ்செல்வம்மலி விடைவாயை நாறும் பொழிற்காழியர் ஞான சம்பந்தன் கூறுந் தமிழ்வல்லவர்குற்றமற்றோரே.
திருவிடைவாய் 11
43

Page 30
சைவத் திருமுறைகளின் விழுமியம்
நிறை மொழி
மறையாகவும் முறையாகவும் மந்திரமாகவும் மிளிரும் திருமுறைச் சிறப்புகள் இங்கே எடுத்துக்கூற முயன்ற முயற்சிகள் நிறைவுறாமை தொனிக்கலாம். எனினும் மக்கள் மத்தியில் திருமுறையின் தாற்பரியம், உண்மை, காத்திரம் கோவை செய்யப்பட்டுப்பல தரவுகளால், அகப்புறச் சான்றுகளால் எடுத்துரைக்கப்பட்டன. நாய்வால் கொண்டு கடலாழம் காணமுடியாதவாறு என் சிற்றறிவு கொண்டு திருமுறைப் பெருமையை அளப்பதெங்ங்ணம். வேலவா வடிவேலவா என்னும் முருக இலக்கியம் படைப்போர்க்கு கால்கோளாயமைவது போன்று, இச்சிறு நூலும் கனடா வாழ் சைவச் சான்றோர்க்கும், அறங்காக்கும் ஆலயத்தார்க்கும் வருங்காலத்திற் பாரிய ஆராய்வு நூலை அமைக்க அடித்தளமாயும் ஆதாரசுருதியாயும் அமையுமென்பதைக் கூறிஅமைகின்றேன்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழிதானே மந்திரம் என்ப
- தொல்பொருள் 490 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டிவிடும்
- குறள் 28 நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல் - பயனான் உணர்த்துதல் என்பர் பரிமேலழகர்
கற்றதனால் ஆயபய னென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மேலது 2 வாலறிவன் - முனைவன், சிவன்
திருச்சிற்றம்பலம் விக்ரம ஆடி 22.
6-8-2000
44

சைவத் திருமுறைகளின் விழுமியம்
நன்றி நவிலல்
உலகில் வாழும் ஜீவன்கள் யாவும் பரம்பொருளின் அவையம். இறைவனின் சிருஷ்டிகளில் மானிடப்பிறப்பு மேலானது. மானிடப்பிறப்பெடுத்த மானிடர்களாகிய நாங்கள் யாவரும் இறைவனை நோக்கி யாத்திரை செய்யும் திருவடி யாத்திரிகர்கள். இறைவனை நோக்கி மானிடர்களாகிய நாம் சரணமடைவதற்குத் திருமுறைப் பாராயணம் கண் கண்ட மருந்து, திருமுறை பாராயணத்தின் மூலம் ஒதுபவர்களும், கேட்பவர்களும், திருமுறை ஒதும் சக்தியினால் ஏற்படும் பயன்களினால் எமது மக்களும், எமது சமுதாயமும், எமது நாடும் உலகமும் பயன் அடைய வேண்டுமென்ற பெருநோக்கத்துடன் திருமுறை முற்றோதல் ஒன்ராறியோ இந்துசமயப்பேரவையினரால் ஆரம்பிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் வருங்கால சந்ததியினரிடையே திருமுறை ஓதிய அருளாளர்களின் பெருமையையும், திருமுறைகளின் சிறப்பையும் நிலைநாட்ட வேண்டுமென்பதும் இந்நூலின் நோக்கமாகும். மேலும் எமது மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்ச்சியையும், பக்தியையும், சைவசமயத்தின் மேன்மையையும் விளங்கச் செய்ய வேண்டுமென்பதும் எங்கள் நோக்கங்களில் ஒன்றாகும்.
திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசையைத் தொடர்ந்து ஒதத் தொடங்கிய திருமுறை முற்றோதல் கடந்த ஆறுமாதகாலமாக வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், இறுதிப்பகுதியில் சனி, ஞாயிறு இருநாட்களும் அடியார்களினால் மிகவும் பக்தி சிரத்தையுடன் கனடாக் கந்தசாமி கோயிலில் ஒதப்பட்டது. அருளாளர்களினால் பாடப்பட்ட திருமுறைகள், தமிழ் வேதம், தமிழ் மந்திரங்கள் ஆகும். உலோகத் திருமேனிகளும், கருங்கல்லு விக்கிரங்களும் மந்திரங்களால் உருவேற்றிய பின்னரன்றோ தெய்வீக சாந்நித்தியத்தை பெறுகின்றன. ஆனால் தமிழ் மந்திரங்களான தேவாரங்களோ இயல்பிலே இறைசக்தி வாய்ந்தனவாக விளங்குகின்றன.
இறைவனாலே இயற்றப்பட்ட வேதங்களை உச்சரிக்கும்பொழுது மெய்சிலிர்ப்பதில்லை. கண்ணிர் வருவதில்லை. ஆனால் எல்லாம்வல்ல இறைவனின் அருளாளர்களினால் இயற்றப்பட்ட திருமுறைகளைப் படிக்கும்பொழுதும், கேட்கும்பொழுதும் மெய்சிலிர்கின்றது. உள்ளம்பதைபதைக்கின்றது. கண்ணிர்
45

Page 31
சைவத் திருமுறைகளின் விழுமியம்
பெருக்கெடுத்து ஓடுகின்றது. என ஒரு மகான் எங்கேயோ கூறியதை நான் படித்த ஞாபகமிருக்கின்றது. இச்சம்பவத்தின் உண்மைப்பொருளை அடியேன், திருமுறை முற்றோதிய அடியார்களுக்கு மத்தியிற் கண்ணுற்றேன். திருமுறை முற்றோதிய பல அடியார்கள் உள்ளம் பதைபதைத்து மெய்மறந்து கண்ணிர் சிந்தியதை மேற்படி நிகழ்ச்சியில் நேராகக்காணக்கூடியதாக இருந்தது. திருமுறை முற்றோதல் ஒதிய அடியார்களுக்கு மத்தியில் உள்ள பக்தியும், அவர்களுக்கு இறைவன் மேல் உள்ள அன்பும், விசுவாசமுமே அடியேனைப் பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியை ஊக்கத்துடன் நடாத்துவதற்கு உறுதுணை செய்தது என்றால் அது மிகையாகாது.
புலம்பெயர்ந்த எமது மக்கள் கூடுதலாக வாழும் கனடாவில் சைவமும், தமிழும் இறைபக்தியும் தழைக்க வேண்டுமென்பதற்காக, இந்துசமயப்பேரவையின் ஆதரவில் நடத்தப்பட்ட திருமுறை முற்றோதலில் பங்குபற்றிய அடியார்களுக்கு எல்லாம் வல்ல சிவபெருமானின் அருட்கடாட்சமும், கலியுக வரதனாம் முருகப்ருெமானின் அருட்பார்வையும், திருமுறைகளைப் பாடிய அருளாளர்களின் அநுக்கிரகமும், ஒன்ராறியோ இந்துசமயப் பேரவையை அமைத்து, என்போன்றவர்களை இறைபணி செய்வதற்குத் தயார் படுத்தி தன் அருட்சக்தியை ஊட்டிய ஆத்மீகவள்ளல் ஞானசுரபி ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளின் ஆசீர்வாதமும் கிடைப்பதாக,
கடந்த ஆறுமாத காலமாக, திருமுறை படித்த அடியார்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து தந்த கனடாக் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகளுக்கும், முகாமையாளர் களுக்கும், குறுகிய காலத்தில் இந்நூலை எழுதித் தந்த என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பேரறிஞர் முருகவே பரமநாதன் ஐயா அவர்களுக்கும் திருமுறை முற்றோதலை மெருகூட்டி பலசிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஒதிய அடியார்களுக்கும், இந்நூலை வெளியிடுவதற்குப் பணஉதவி செய்த திருமறிை முற்றோதிய 'அடியார்களுக்கும் வேறுபல உதவிகளைச் செய்தபக்தர்களுக்கும் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அத்துடன் இந்நூலை நல்லமுறையில் வடிவமைப்புச் செய்து தந்த திரு. மா. கனகசபாபதி அவர்களுக்கும், பல சிரமங்களுக்கு
46

சைவத் திருமுறைகளின் விழுமியம்
மத்தியிலும் தன்சிரமங்களைப் பாராமல் அச்சிட்ட விவேகா அச்சக உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஈற்றில் இப்பாராயண நிகழ்வின்போது ஒத்துழைப்பு நல் கிய அர்ச்சகர்களுக்கும் சிறப்பாக வாரந்தோறும் திருமுறைப்பூசையிற் தன்பங்களிப்புச் செய்த சிவபூரீ வி. ரெங்கநாதக்குருக்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக.
சிவ முத்துலிங்கம் திருமுறை முற்றோதல் ஒருங்கிணைப்பாளர் உபசெயலாளர் இந்துசமயப்பேரவை
இந்து சமயப் பேரவையின் வெளியீடுகள்
தரிசனம் -ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் அர்ச்சனை மாலை -ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் என்னை எனக்கறிவித்த எங்கள் குருநாதர் - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் திருமுறைக் கதைகள் - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் முத்தான தொண்டர் - கவிஞர் வி. கந்தவனம்
புதிய சைவ வினாவிடை முதற் புத்தகம்
-கவிஞர் வி. கந்தவனம் சிவயோக சுவாமிகளின் அருள்மொழிகள் தங்கம்மா நான்மணிமாலை - கவிஞர் வி. கந்தவனம் பன்னிருமாத நினைவுகள் - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்
கனடாவில் சைவ சமயம் - கவிஞர் வி. கந்தவனம் ஈழத்துச் சித்தர் குடைச்சுவாமிகள் ஆழ்கடலான் முருகவே பரமநாதன்
ஒலியிழை நாடாக்கள் சமயவாழ்க்கை - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் சைவத்தின் பெருமை
47

Page 32
சைவத் திருமுறைகளின் விழுமியம்
திருமுறை ஓதிய அடியார்களில் இந்நூலுக்கு நிதி உதவியோர் விபரம்
திரு. வ. சிவசாமி திரு. பொ. தம்பித்துரை திரு. பொ. பாலசிங்கம் திரு. சி. நாராயணசுவாமி திரு. கு.வி. மகாலிங்கம் திரு. வே. பரமநாதன் திரு. சிவ. முத்துலிங்கம் திரு. K.S. ஆறுமுகம் திரு. சு. சிவபரமானந்தன் திரு. வீ. சண்முகம் திருமதி இராசையா தங்கரத்தினம் திருமதி சுப்பிரமணியம் இராசம்மா திருமதி பூரீ ரங்கநாயகி சபாரத்தினம் திருமதி இராசமலர் முத்தையா திருமதி சு. மீனாம்பிகை திருமதி சி. செல்லமுத்து திருமதி லக்சுமி கிருஷ்ணபிள்ளை திருமதி ஞானசக்தி பூரீதரன் திருமதி இ. இராஜேஸ்வரி திருமதி ப. சற்குணதேவி திருமதி இராசமலர் சின்னராசா திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம் திருமதி தெய்வநாயகி நேந்திரராஜா திருமதி அ. அன்னபூரணம் திருமதி ஆலாலசுந்தரம் திருமதி தியாகராசா தவமணி திருமதி கார்த்திகேசு அன்னபூரணம் திருமதி சாம்பசிவம் தவனேஸ்வரி திருமதி ஐயாத்துரை திருமதி புனிதவதி சிவா திரு. க. வித்தியானந்தம் திருமதி. ஜே. கமலாம்பிகை மொத்தமாகச் சேர்ந்த தொகை 745.00 டொலர்கள்
48


Page 33

III |