கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உனக்கொன்றுரைப்பேன்

Page 1
லினு
历 伦 の
疑 རྩི་
灰
 

(சிவப்பிரகாசர்

Page 2


Page 3

உனக்கொன்றுரைப்பேன்
- கடிதங்கள் -
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
வெளியீடு: பாரதி பதிப்பகம், 430,காங்கேசந்துறை வீதி, uIII girl IIT600TLh, முநீலங்கா

Page 4
நூல் * உனக்கொண்றுரைப்பேன்
ஆசிரியர் ; திருமதியோகேஸ்வரி சிவப்பிரகாசம்
2 ήσσοι0 ஆசிரியருக்கு
வெளியீடு பாரதி பதிப்பகம், யாழ்ப்பாணம்.
430, காங்கேசந்துறை வீதி, Injintai.
முதற்பதிப்பு : 2009 மாசி
அச்சுப்பதிப்பு : பாரதி பதிப்பகம்
பக்கங்கள் IV + 94
விலை ரூபா 190 00

என்னுரை
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த "நமது ஈழநாடு" பத்திரிகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "சிநே கிதியே" என்னும் பெண்களுக்கான பகுதிவெளியாகி யது. அப்பகுதியில் "அன்புள்ள சிந்திக்கு" என்னும் தலைப்பில் எனது சில எண்ணங்களைக் கடிதமாக எழுதி வந்தேன். 2002ஆம் ஆண்டில் இத் தொடரினைச் சில வாரங்கள் எழுதினேன்.
பெண்களைச் சிந்திக்க வைக்கவேண்டுமென எண்ணி அதை எழுதியதால் நான் கடிதம் எழுதுவது "சிந்தி" என்னும் பெயர் கொண்டவளுக்கு என்பதாக வும் "நீ சிந்தி" எனக் கூறுவதாகவும் அமையும் வகை யில் "சிந்தி" என அக்கடிதங்களை ஆரம்பித்து எழுதி னேன். கடிதத்தின் இறுதியில் எனது பெயரின் முத லெழுத்துகளான யோ.சி. என்பதை எழுதுபவரின் கையொப்பமாக இட்டு எழுதிவந்தேன். எனது வேறு சில ஆக்கங்களுக்கும் யோ.சி. என்ற பெயரை நான் உபயோகித்துள்ளேன்.
அக்கடிதங்களில் சிலவற்றை மாற்றியமைத்தும் சில கடிதங்களை எழுதிச் சேர்த்தும் "உனக்கொன்று ரைப்பேன்" என்னும் இந்தச் சிறிய நூலை வெளியிடு கிறேன்.
iii

Page 5
சிறிய தீப்பெட்டியைக் கொண்டு செல்வது போல் இந்நூலையும் கையிலோ மனதிலோ கொண்டு செல்லலாம் என்பது என் எண்ணம். அதனுள்ளிருக்கும் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தீக்குச்சியாக அமைய வேண்டும். அதிலிருந்து பிறக்கும் சுடர் பெருநெருப் பாகி, பாரதி சொன்னானே "வெந்து தணிந்தது காடு" என்று, அதுபோல் எதையும் பற்றியெரியச் செய்ய வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு தீபத் தில் ஏற்றப்பட்ட அழகிய சுடராக ஒளிபரப்பி இருள கற்ற வேண்டுமென்பதே என் ஆவல்.
இந்நூல் பெண்களுக்கு மட்டுமெனக் கருதி விடாதீர்கள். கையில் கிடைப்பவர் சிறிது நேரத்தைச் செலவிட்டாற் போதும், முழுமையாக வாசித்து விட லாம். என் மனதிற்பட்டதைத் தொட்டுக் காட்டியிருக்கி றேன். விரித்து விவாதிக்கவில்லை. "வாசித்து விட்டு சிறிது சிந்தியுங்கள்" என்பது எனது அன்பு கலந்த வேண்டுகோள்.
என்னையும் சிறிது சிந்திக்க வைத்து, எழுதச் செய்து, வெளியிட்ட "நமது ஈழநாடு" சார்ந்தோருக்கும் பதிப்புரையும் தந்து, நூலைவெளியிடும் திரு. இ. சங்கர் அவர்களுக்கும், பாரதி பதிப்பகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. திரு. சங்கர் அவர்கள் எனது சிறு வயது தொடங்கியே என் எழுத்தை வளர்த்தவர் என்ப தையும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.
“Dyü”
6öllinilli ólgösöÖ, கோப்பாய் - சூரீலங்கா யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
iv

O1
அன்புநிறை சிந்திக்கு
நீண்ட காலத்தின் பின் திடீரென நீ எழுதிய கடிதம் கிடைத்தபோது, உன்னை நேரே சந்தித்த சந்தோஷம் மனதினுள் பொங்கியது. என் எண்ணப் போக்குகளைப் புரிந்துகொள்ளக்கூடிய சிந்தியுடன் கடித மூலமாவது தொடர்புகொள்ள மீண்டும் சந்தர்ப் பம் கிடைத்துள்ளதே.
நான் எனது கருத்துகளைக் கூறத்தொடங்கு முன்னரே அவற்றைத் தவறாக எண்ணும் மனப்போக்கு உள்ள ஒருவரிடம் அதைக் கூறத்தொடங்கினால் எப்படியிருக்கும்? நம்முள் தோன்றும் கருத்து முரண் பாடுகளுக்குக்கூட முக்கிய காரணம், கூறும் விடயத் தைக் கேட்காது கேட்கு முன்பே ஒரு முடிவுக்கு வருவ தாகும்.
ஒருவர் ஒரு விடயத்தைக் கூறினால் அவர் கூறும்வரை பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டு, அதைச் சரியாகவும் தெளிவாகவும் விளங்கிக்கொண்டு, அது பற்றிச் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
01

Page 6
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
அவர் கூறுவதிலும் தவறிருக்கலாம். நாம் நினைப்ப
திலும் தவறிருக்கலாம். எது சரி? எது தவறு? என முடிவுக்கு வர மற்றவர்கள் கூறுவதைக் கேட்க வேண் டும். அவர் கூறுவது தவறாகத்தானிருக்கும் என முதலி லேயே நாம் முடிவெடுத்துவிட்டால் அவர்கள் சொல் வதைக் காது கேட்டாற்கூட நாம் அதைக் கிரகிக்க மாட்டோம்.
உதாரணமாக பெண்ணியம் பற்றி ஒருவர் கூற முற்பட்டால் அது ஆண்களுக்கெதிரானதாகத்தான் இருக்கும் என முடிவுகட்டி அவர் கூறுவதைக் கருத் திலெடுக்காது உதாசீனப்படுத்தினால் அக்கருத்து சரியா தவறா என்றே தெரியாது போய்விடும்.
ஒரு கருத்துக் கூறப்படும் போது அதை அவ தானித்து, அதன்பின் தனது கருத்தைக் கூறுவதே முறை. அது எதிர்க்கருத்தாகவும் இருக்கலாம். அப்படி எதிர்க்கருத்துக்கூறப்பட்டால் முன்னையவரும் அதைக் கேட்டு அதற்கான பதிலைக் கூறவேண்டும். இத்தகைய கருத்து மோதல்கள் நிச்சயமாக யாரோ ஒரு சாரா ருக்கு தெளிவு பிறக்க வழிவகுக்கும்.
ஆனால் இன்று எதிர்க்கருத்துடையவராக ஒரு வர் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டாலே அவரை மெளனிக்கச் செய்துவிடவேண்டும் என்பதி லேயே எல்லோரும் குறியாக இருக்கின்றார்கள்.
இத்தகைய காலச் சூழலில் ஒத்த கருத்துடைய உனக்கு என் எண்ணங்களை எழுதச் சந்தர்ப்பம் 02

உனக்கொன்றுரைப்பேன்
வாய்த்துள்ளது. இது எனக்குப் பெரு மகிழ்வைத் தரு கின்றது.
என் கருத்துக்கள் எல்லாவற்றையும் அப்படியே நீ ஏற்றுக்கொள்வாய் என நான் எண்ணவில்லை. அந்தக் காலத்திலேயே "நீ ஒரு மிதவாதி" என்று என்னை விமர்சித்து வேகங்காட்டியவள் நீ காலவோட் டத்தில் மேலும் தீவிரமடைந்திருக்கவுங்கூடும்.
உண்மைதான் எமது சூழல், நம்முடன் அதிகம் பழகுவோர், ஊடகங்கள், நம் வாசிப்பு என்று பலவும் எம் சிந்தனைகளையும் கருத்துக்களையும் மாற்றமுற வைக்கின்றன.
இதை எழுதும்போது இராசமலரைச் சந்தித்தது எனக்கு நினைவிற்கு வருகிறது.
உனக்கு இராசமலரை நினைவிருக்கிறதா? எங்களிருவருடனும் எட்டாம் வகுப்புமுதல் சேர்ந்து கல்வி கற்றவள். எங்கள் கலை இலக்கிய கழகச் செயலாளராக இருந்தவள். விவாதம், கருத்தரங்கு போன்ற எல்லாவற்றிலுமே பங்குகொள்வாள். மூன்று மாதங்களுக்கு முன் அவளைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக உரையாடினோம்.
ஆண்டாண்டு காலமாக எதையெதையோ பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். நாம் மாறிவிட்டோம். முன்னேறிவிட்டோம். என்று கூறிக் கொள்கிறோம். ஆனால் ஆழவேரூன்றிய நச்சுக்களை களை வேரனுக்க முடியாமலே காலம் போய்க் கொண்டுதானிருக்கிறது.
03

Page 7
GuIITC3a56io6)nf fishnirageSIT fih
புரையோடிப் போனசீதனக்கொடுமை, பாலியல் வல்லுறவுப் பாதிப்பு இப்படிப் பலவற்றைக் கூறலாம். இவற்றால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுந்தான்.
உதாரணத்திற்கு சீதனம் என்பதை எடுத்துக் கொள்வோம். மூன்று தங்கைகளுக்கு ஒரே ஓர் அண்ண னாக ஒரு நடுத்தரக் குடும்பத்திலே பிறந்தவன் படும் பாடு சொல்லி மாளாது. தன்னை ஒறுத்து, வாழ்க்கை யிலே எதுவும் அனுபவிக்காது, உழைத்து உழைத்து, முழுவதையும் தங்கைகளுக்குச் சீதனமாகக் கொடுத்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதில் நன்கொடை வாங்கி, மூன்றாவது தங்கைக்கு சீதனம் கொடுத்து விட்டு, திருமணம் செய்துகொண்ட பின் பத்தாம் மாதமே ஒரு பெண்மகவு பிறந்தால் அவனது வாழ்க்கை எப்படியிருக்கும்?
பாலியல் வல்லுறவை எடுத்துக்கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனாகவோ கணவ னாகவோ இருப்பவன் வேண்டுமானால் அவளை உதறி எறிந்துவிட்டு விலகிவிடலாம். தந்தையாகவோ சகோதரனாகவோ இருந்தால் அவன் அப்படி நடந்து கொள்ள முடியுமா? அவனுக்கு அதனால் வேதனை தானே?
எனவே சிந்திக்கவேண்டியதும் சீர்திருந்த வேண்டியதும்அனைவருந்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
04

உனக்கொன்றுரைப்பேன்
இராசமலரும் நானும் நீயும் நமக்குள் புலம் புவதனாலோ நான்கைந்து பேருக்கு மட்டும் நம் கருத்தைக் கூறுவதனாலோ பயனேற்படாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நான்கு பேருக்குப் பதிலாக நானூறு பேருக்காவது எமது கருத்துக்களைக் கூற வேண்டும். அதில் நாற்பது பேராவது அவற்றைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பிப்பார்களல்லவா? அவர்களுடாக அவை மேலும் பரவுமல்லவா?
நாம் தமக்கெதிராகப் போர்க்கொடி தூக்குகி றோமென்று ஆண்களும், தேவையற்ற விடயங்களை அல்லது திருத்தமுடியாத விடயங்களை அல்லது நாம் கற்பனை செய்யும் விடயங்களைப் பற்றிக் கதைக் கிறோமென்று பெண்களும் நினைக்காமல், கேட்டு, சிந்தித்து, கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றால் நம் சமுதாயம் நலம் பெறும்.
எதற்கும் நம் முயற்சியைத் தொடர்வோம்.
c26ă/t că, G?m. 9s
05

Page 8
OO
சிந்தி,
எனது கடிதங்களை நீ தொடர்ந்தும் எதிர்பார்ப் பதாக எழுதியிருந்த பதில் எனக்கு உற்சாகமூட்டு வதாக அமைந்திருந்தது.
முன்னைய கடிதத்தில் நான் எழுதிய ஒன்றைப் பற்றி நீ விளக்கங்கேட்டிருந்தாய். "நாம் கற்பனை செய் கின்ற விடயங்களைப் பற்றிக் கதைக்கிறோம்." என்று பெண்கள் நினைக்கக்கூடாதென நான் எழுதியிருந் தேன். எதனைக் கருதி அப்படி எழுதினேன்? என்று கேட்டிருந்தாய். விளக்கங்கொடுக்கு முன் ஒரு சம்பவத் தைக் கூறுவது நல்லதெனக் கருதுகிறேன்.
சென்ற மாதம் ஒரு பல்கலைக்கழக மாணவி யைக் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவள் ஒரு விடயத்தைச் கூறினாள். பெண்கள் உயர் பதவி வகிப்பது குறைவாக இருப்பதன் காரணம் பற்றி தான் ஆய்வு செய்வதற்காக சில பெண்களை அணுகிய போது "அப்படிப் பிரச்சினை எதுவுமில்லை. நீங்கள் தான் இப்படி ஒவ்வொன்றைத் தோற்றுவிக்கிறீர்கள்" என அவர்கள் குறை கூறினார்களாம்.
06

உனக்கொன்றுரைப்பேன்
முற்காலம் போலன்றி இன்று பெண்கள் கல்வி கற்கிறார்கள் உயர்கல்வி பெறுகிறார்கள். அலுவலகங் களில் பணியாற்றுகிறார்கள். வாகனங்கள் ஒட்டுகிறார் கள். அவர்கள் முன்னேறி விட்டார்கள். இதுதான் பல ரது கருத்து. அப்படியிருந்தும் பெண்களுக்குக் குறை இருக்கிறது என்று கூறுவது மாபெருந் தவறு என அவர்கள் நினைக்கிறார்கள். இப்பொழுதும் பெண்கள் பாதிக்கப்படுவதாக எண்ணுவது ஒரு கற்பனை என அவர்கள் கருதுகிறார்கள். ஒரு மகளிர் தினத்தன்று நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள் ஆகி விட் டோம் என்று ஒரு பெண் பேசியதை நான் கேட்டேன்.
உண்மைதான். இன்று இந்த மாற்றங்கள் ஏற்பட்டு விட்டனதான். ஆனால் இவையெல்லாம் எப் படி ஏற்பட்டன?
பாரதி பாடிய கும்மிப்பாட்டும் பலரும் பெண் விடுதலைக்காகக் கொடுத்த குரல்களும் சமுதாயத்தை மாற்றிவிட்டனவா? அந்தக் குரல்களுக்கு செவி சாய்த் தோரும் அவற்றால் விழிப்புணர்வு பெற்றோரும் இருக் கிறார்கள்தான். ஆனால் சமுதாய மாற்றத்திற்கு அவை தான் காரணமென என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அப்படியிருந்தால் அதே குரல்கள் இந்தச் சீதனத்தையும் ஒழித்திருக்கலாமே.
இன்று ஒரு பெண்ணை வைத்திய நிபுணராகப்
பயிற்றலாம். அதன்பின்னர் அதேபோலப் பயின்ற ஓர்
ஆணை மணம்புரிய அவள் எத்தனை இலட்சங்களைக்
கொடுக்கவேண்டும் தெரியுமா?
7)( ܗܝ

Page 9
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
எதற்குப் பணம்? என்று கேட்டால் அவனைப் படிப்பிக்கச் செலவு செய்த பணத்தை மீளவும் பெறுகிறோம் என்கிறார்கள். பெண்ணைப் படிப்பிக்கச் செலவு செய்வதில்லையா? ஆண்களுக்குத் தொழில் ரீதியாக விலை கூடுகிறது. அதாவது சீதனம் கூடு கிறது. பெண்களும் தொழில்புரிந்து ஊதியம் பெறு கிறார்கள்தானே. கூடிய சம்பளம் பெறும் பெண்களை சீதனமின்றி மணஞ்செய்யலாமே, அப்படிக் கூட எண் னிப் பார்ப்போரில்லையே. அதனாலேதான் விழிப் புணர்வு மட்டும் இன்றைய மாற்றத்திற்குக் காரண மல்ல என நான் கருதுகின்றேன்.
அந்தக்காலத்திலேகூட, பெண்கள் எல்லோரும் வீட்டுகளிலிருந்து வீட்டுவேலைகளை மட்டும் செய் தார்கள் என்று கூற முடியாது. ஏழைப்பெண்கள் பணத் தேவைக்காக வீட்டு வேலைகளுடன் கூலி வேலை களுக்கும் சென்று வந்தார்கள். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் பெண்கள் பெரும்பங்காற்றியது அனைவ ருக்குந் தெரிந்ததே. தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் வேலை செய்த பெண்க ளின் குழந்தைகளைக் கவனிக்க பிள்ளை மடுவங்கள் கூட உருவாக்கப்பட்டிருந்தன. அப்படி வேலைசெய்த பெண்களுக்கும் ஆண்களை விடக் கூலி குறைவாகக் கொடுக்கப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டப்பட வேண் டிய ஒன்று.
நடுத்தர வர்க்கப் பெண்களும் வீட்டிலே ஆடு, மாடு, கோழி வளர்த்தும் வீட்டுத்தோட்டம் செய்தும் வருமானமீட்டினார்கள். ஆனால் வீட்டிற்குள்ளிருந்தா லும் வெளியே போய் வேலைசெய்தாலும் அவளு டைய கல்வியறிவு வளர்வது தடுக்கப்பட்டது.
08

உனக்கொன்றுரைப்பேன் இத்தடையைத் தாண்டி கல்விகற்ற ஒரு சிலர் கூடிய வருவாயுள்ள தொழில்களைச் செய்தபோது பணத்தேவை அல்லது பணஆசை பெண்களையும் கல்வி பயில அனுமதித்து, அத்தகைய பணிகளில் ஈடு பட விடவேண்டும் என்ற எண்ணத்தை மற்றவர்களி டமும் ஏற்படுத்தியது.
அது விழிப்புணர்வினால் ஏற்பட்டதாக இருந் தால் இப்படிப் பணியாற்றும் பெண்கள் வீட்டிலும் வெளி யிலும் பணியகத்திலும் சுமைகள், அழுத்தங்கள், தடை கள், அனுபவங்கள் என்பவற்றைப் பெற நேரிட்டிருக் காது. இவற்றைப் பற்றி நர்ன் எழுத ஆரம்பித்தால் நீ கேட்ட கேள்விக்குப் பதில் கூறாது எங்கோ போய் விடுவேன்.
தேவையின் அழுத்தம் எமது கட்டுப்பாடுக ளைத் தகர்க்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தை உனக்குக் கூறலாம். முன்பு பெண்கள் சைக்கிளில் செல்வது மாபெரும் தவறு என்பது போலப் பார்ப் பார்கள். பெண்கள் உயர் கல்விகற்கவும் தொழில் புரி யவும் ஆரம்பிக்க இது படிப்படியாக மாற்றமடைந் திருக்குமென்பது உண்மைதான். ஆனால் எமது பகுதி யில் போரின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற் பட்டு, வாகனங்கள் ஓடுவதற்கு உதிரிப்பாகங்களும் எரிபொருளும் இல்லாத நிலையில சிறுமிகள் முதல் நடுத்தர வயது கடத்த பெண்கள் வரை ஈருளியில் செல்ல ஆரம்பித்தது நாம் கண்கூடாகக் கண்ட ஒன்று.
இது விழிப்புணர்வினால் ஏற்பட்டதல்ல. ஒரு தேவையின் காரணமாக ஏற்பட்ட மாற்றம்.
கல்வி கற்க அனுமதித்தார்கள். தொழில்புரிய அனுப்பினார்கள். வாகனம் ஒட்டவும் பார்த்திருந் தாாகள.
09

Page 10
Gun(356moud folluriyesireFin
ஆனால் சீதனம் ஒழிய விடவில்லை. அது பணங் கிடைக்கும் விடயமாயிற்றே. எனவே அதை மாற்ற அவர்கள் விடவில்லை. இத்தகைய பல பிரச்சினைகள் உள்ளன. அவை இன்னும் அற்றுப்போய் விடவில்லை.
இப்பொழுது எஞ்சி எம்முன் நிற்கும் பல பிரச்சி னைகள் ஆழமாக வேரூன்றியவை. இலகுவில் அழிக்க முடியாதவை. புராணங்களிலே அழிக்க முடியாத அரக் கர்களைச் சித்திரிப்பார்களே. அத்தகையவை. அரக் கனை வாளால் வெட்டியதும் அவனிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஓர் அரக்கனாக உருப் பெறுமாம். அதைப்போல சீதனத்தை ஒழிக்க முயல மணமகனுக்கு திருமணச் செலவுக்கு நன்கொடை, அவரது தந்தை மகனை வளர்த்துப் படிக்க வைத் ததற்கு நன்கொடை, தங்கையின் சீதனத்திற்கு நன் கொடை என்று பெருகிக் கொண்டு போவதையே நாம் காண்கிறோம்.
இவற்றை அழிக்கவேண்டிய பொறுப்பு எமக் கிருக்கிறது. ஆனால் அப்படி எதுவுமேயில்லை என்ற மாயையில் நாம் வாழ்ந்து கொண்டு, மற்றவர்கள் அப் படிப் பிரச்சினைகள் இருப்பதாகத் தவறாகக் கருதுகி றார்கள் என்று சொல்வதை முதலிலே மாற்றவேண்டும். எங்களது பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை எப்படி வேரறுப்பதென்பதைத் திட்டமிட்டு, அதன்படி செயற்பட வேண்டும். இதற்கு முதற்படியாக எங்களது மனங்களைப் பக்குவப்படுத்த வேண்டும்.
நான் உனக்குக் கடிதமாக எதையும் எழுதலாம். ஆனால், செயற்படுத்தும்போது அது மிகமிகக் கடின மாகஇருக்கும். சிந்தி, இவற்றைச் செயற்படுத்த மனோ பலமும் மனப்பக்குவமும் தேவை.
★
அன்புடன்,
10

O3
சிந்தி,
சென்ற கடிதத்தின் இறுதிப்பகுதி பற்றி உனது கடிதத்திலே விமர்சித்திருந்தாய். எனது மனம் பலவீனப் பட்டுவிட்டதோ? எனச் சந்தேகப்படுவதாக நீ எழுதி யிருந்ததைப் பார்த்ததும் நான் என்னை ஒரு முறை மீள் பரிசீலனை செய்ய நேர்ந்தது.
இராசமலரைச் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அவளுடன் உரையாடிய பின் நான் நீண்ட நேரம் சிந்தித்தது என்னவோ உண்மைதான். அந்த உரையாடலின் சிலபகுதிகள் தான் சென்ற கடிதத்தில் என்னை அப்படி எழுதவைத்திருக்க வேண் டும். விடயத்தைக் கூறிவிடுகிறேனே.
இராசமலரைப் பற்றி உனக்குத் தெரியுந்தானே. அவள் தனது கருத்துக்களைத் தன் பிள்ளைகளின் மனங்களிலும் பதியவைத்திருப்பாள் என்பது எனது நம்பிக்கை. ஆனால் அவள் கூறிய விடயம் என்னை அதிரவைத்தது.
விவாத அரங்குகளில் சீதனங்கேட்பது அம்மா மார்தான். அதற்கு ஆசைப்படுவது பெண்கள்தான்

Page 11
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
என்று விவாதிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் மட்டுந்தான் கோடரிக்காம்புகள் என்று நாம் ćonfl0 (ЦрLQuЈПgil.
தங்கைக்குத் திருமணம் புரிவதற்காக பெற் றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு சீதனம் தேடிக் கொடுக்கும் போது "எனக்குத் தந்த சீதனம் குறைவு. தங்கைக்குக் கொடுக்கின்ற அளவு சீதனம் எனக்கும் தரவேண்டும்" என்று பொறுத்த நேரத்திலே போர்க் கொடி தூக்கும் அக்காமாரையும் கண்டிருக்கிறோம்.
"எம்மைப் பெற்று வளர்க்க எம் பெற்றோர் எவ் வளவு பாடுபட்டிருப்பார்கள் எவ்வளவு செலவு செய்தி ருப்பார்கள் இனிமேல் அவர்கள் எந்தக் கஷ்டமும் படாமல் நாங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று எண்ணி பெற்றோருக்குப் பணி செய்யவேண்டிய வர்கள் இப்படிக் கேட்பது முறையா?
ஓரிரு வாரங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு அண்ம்ையிலுள்ள வீட்டில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடவேண்டும். இவர்கள் ஐம்பது வயதைத் தாண்டிய தம்பதியினர். அடிக்கடி இவர்களிடையே ஒரு சண்டை நடக்கும். இவர்கள் ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறார்கள்.
"உன்னுடைய அப்பா ஒரு வீடு சீதனம்
தரேல்லை. உன்னுடைய தங்கச்சிக்கு மாத்திரம் வீடு
கொடுத்திருக்கிறார்"எனகணவன் ஆரம்பித்து சண்டை
நீளும். ஓரிரு வாரங்களுக்கு முன் இப்படி நடந்து 2

உனக்கொன்றுரைப்பேன் அன்று இருவரும் சாப்பிடக்கூட இல்லை. மறுநாட் காலை மனைவி தன்னுடைய தாயின் வீட்டிற்குச் சென்றார்.
போரின் மிகுதிஅங்கே தொடர்ந்ததாம். தனக்கு வீடு தரவில்லை என்று குமுறியிருக்கிறார். பாவம் அந்தத்தாய் எத்தனையோ வகையில் மகளுக்காகப் பரிந்து பாசங்காட்டுபவர். எவ்வளவு வேதனைப்பட்டி ருப்பார்
இதுவரை தாமே உழைத்து ஒரு வீடுகட்ட இவர்களால் இயலவில்லை. பெற்றோர் ஒவ்வொரு பெண்ணுக்கும் வீடு கட்டித் தரவேண்டுமென எதிர் பார்க்கிறார்கள். கணவன் கதைத்தால் மனைவிக் காவது புத்தி வேண்டாமா?
இனி இராசமலர் கூறியதை எழுதுகிறேன். இராசமலரின் மகள் மூன்று பெண்பிள்ளைகளை இராச மலர் பெற்றது தவறென்று கூறுகிறாளாம். 'ஒரு பெண் ணுக்குக்கூட சீதனம் கொடுக்க இயலாதவர்கள், பெண்களைப் பெறும்போது சிந்தித்திருக்கவேண்டும்' என்கிறாளாம். மூன்று பெண்களையும் சிறப்பாக வளர்த்து, உயர் கல்வி அளித்து, மூவரும் தாமே உழைத்து வாழக் கூடிய அளவிற்கு வேலையும் தேடிக் கொடுத்த பின் அவள் இப்படிக் கூறினால் பெண் பிறந்ததும் அந்த மகளைக் கொல்லச் சொல்கிறாளா? அல்லது கருவிலேயே கலைத்திருக்க வேண்டுமென் கிறாளா? அல்லது பெற்றோர் எங்காவது போய்க் கொள்ளையடித்திருக்க வேண்டுமென்கிறாளா?
13

Page 12
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
இன்னும் நாம் மாறவில்லை என்ற உண்மை எனது மனதைச் சுட்டது. அன்று முதல் எனக்கொரு சந்தேகம். இராசமலரின் மகள் ஏன் அப்படிப் பேசினாள்? வேறு யாராவது கூறியிருக்கலாம். ஆனால் இராசமலரின் மகளே இப்படிக்கேட்க என்ன காரணம்?
எங்கள் பாடசாலை அதிபர் ஒரு கதையை அடிக்கடி கூறுவார். உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு பிள்ளைக்கு பத்து அப்பிள் பழங்கள் கிடைத்தன. அதில் ஒன்று அழுகிய பழம். 'அழுகிய பழம் மற்றவற் றோடு இருந்தால் அவையும் அழுகிவிடும்' என அவளின் அம்மா கூறினார். அந்தப் பிள்ளை வேறு விதமாகச் சிந்தித்தாள். அழுகியதுஒன்று. அழுகாதவை ஒன்பது. ஒரு பழம் எப்படி ஒன்பதையும் அழுகச் செய்யும்? ஒன்பது பழங்களும் சேர்ந்து அந்த ஒன்றை நல்லதாக மாற்றலாமே என எண்ணி எல்லாவற்றையும் ஒரே பெட்டிக்குள் வைத்தாள். அம்மா கூறியது போல் எல்லாப் பழங்களும் அழுகிவிட்டன.
தீய குணமுள்ள ஒருவரின் சகவாசம் நல்ல வர்கள் பலரைக்கெடுத்துவிடும் என்பதை விளக்கவே அவர் இக்கதையைக் கூறுவார்.
அது மட்டுமல்ல நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம், தீயவை இலகுவில் பற்றிக் கொள்ளும். உதாரணமாக அதிகாலையில் எழுவது கடினம். விடிந்த பின்பும் உறங்குவது சுகமாக இருக் கும். இனிப்பு உண்பது, பொய் கூறுவது என பல உதாரணங்களைக் கூறலாம்.
14

உனக்கொன்றுரைப்பேன் சிறுவயது முதல் மீண்டும் மீண்டும் கூறி, பல வழிவகைகளைப் பயன்படுத்தி நாம் பதியவைத்த கருத்துக்கள்கூட இடைநடுவில் நழுவி ஓடிவிடுவதற்கு இதுதான் காரணம்.
சமவயதினர் கருத்துப் பரிமாறும்போதோ, பணி யகத்தில் உடன் பணியாற்றுவோருடன் உரையாடும் போதோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் மனத் தாக்கத்தினாலோ சிந்தனை தடம் புரண்டு கருத்து மாறுபடுகிறது.
எனவே எழுதுவதனாலும் பேசுவதனாலும் இக் கருத்துகளை பெண்களிடையேகூட இலகுவில் பரவச் செய்யலாமென்று எண்ணிவிடக்கூடாது.
ஒவ்வொன்றையும் செயற்படுத்த முனையும் போது எதிர்நீச்சலடிக்க நேரும். நீரோட்டத்திற்கு எதி ராக நீச்சலடிக்கும்வேளையில் முதலையும் சுறாவும் கூட தாக்கவரலாம். இந்த எதிர்நீச்சலுக்கு மனோபலம் தேவை. தாக்குப்பிடிக்க மனப்பக்குவமும் தேவை.
இக்காரணங்களாலேயே அப்படி எழுதினேன். அப்படி எழுதியது சரிதானே?
★
அன்புடன்,
GJAS
5

Page 13
O4.
சிந்தி,
உனது கடிதம் பொறிகக்கும் புயலாக வந்து கிடைத்தது. உன் உணர்ச்சிகள் எனக்குப் புரிந்தாலும் உன் கருத்துக்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லையென்பதை எழுதித்தானாக வேண்டும்.
எம்மை ஒரு வீட்டினுள் சிறை வைத்து, கதவுகள் ஜன்னல்கள் எல்லாவற்றையுமே பூட்டி விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து நாம் வெளியேற முயலவேண்டும். சிறை வாழ்க்கை நாம் வாழக்கூடாது. அதற்காக வீட்டிலேயே வாழக்கூடாது என்று தீர்மானித்து விடக்கூடாது. வீட்டில் சுதந்திரமாக, காற்றோட்டமாக ஜன்னல்களைத் திறந்து வைத்து வேண்டியபோது வெளியே போய்வந்து வாழவேண்டும்.
வீடே வேண்டாமென்ற ஹிப்பிகள் போல வீதிகளிலும், வெளிகளிலும் வாழப்புறப்பட்டவர்கள் நிம்மதிஇழந்து, நாகரிகம் பிறழ்ந்து அலைகின்றார்கள். எனவே அவர்களின் பாதையை நாம் பின்பற்றுவது பைத்தியக்காரத்தனம்.
16

உனக்கொன்றுரைப்பேன்
தாய், தந்தை, பிள்ளைகள், சகோதரர்கள், கணவன், மனைவி என்ற உறவுப் பந்தங்களையும் அவை குடியிருக்கும் இல்லத்தையும் இல்லாமலாக்கு வது நம் நோக்கமல்ல, இந்த அன்பும் பாசமும் அற்றுப் போனால் மனிதன் மனிதத் தன்மையை இழந்து விடுவான்.
இந்தப் பாச பந்தங்களை நாம் எம்மைப் பிணைத்திருக்கும் கட்டுக்கள் என்று கருதவில்லை. கருதக்கூடாது.
நாம் கூறமுனைவது என்னவென்றால் விட்டுக் கொடுப்பவள் எப்போதும் பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஆணும் விட்டுக்கொடுக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் விருப்பமின்றியே வல்லு றவுக்கு உட்படுத்தப்படும் போதும் பேசப்படும் கற்புநெறி மிகவும் அபத்தமானது. கொடுரமான பாலி யல் வல்லுறவுக்கு ஒரு பெண் ஆளாக்கப்பட்டால் அதை வைத்தே அப் பெண்ணின் எதிர்கால வாழ்வை சிதைத்துவிட ஏன் எத்தனிக்கிறார்கள்?
இவ்வாறெல்லாம் நாம் சற்றே தெளிவுறச் சொன்னால் குடும்பம் என்ற அமைப்பையே தேவையற் றதாகக் கருதுகிறோமென்று சொல்பவர்கள், வேண்டு மென்றே குற்றங்கூற முனைபவர்கள்.
குடும்பத்தில் பிரச்சினை வந்தால் அதைச் சமாளித்துப் பொறுத்துப் போகும் தன்மை ஆணுக்கும் வேண்டும். பெண்ணுக்கும் வேண்டும்.
17

Page 14
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
பொறுத்துப் போகக்கூடிய விடயங்களிலெல் லாம் தூக்கியெறிந்துவிட்டு, போர்க்கொடி தூக்கு வதை ஆணும் செய்யக்கூடாது. பெண்ணும் செய்யக் கூடாது.
அதேவேளை எல்லை மீறிய துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு பொறுமையின் இலக்கணமாக வாழவேண்டுமென்று பெண்ணுக்கு மட்டும் போதித்து, அவளை வேதனைச் சுமைதாங் கியாக்கக்கூடாது. அந்த நிலையில் அவள் நிமிர்ந்து நின்று நியாயங் கேட்டால் மாபெருந் தவறென்று ஏன் கருதுகிறார்கள்? அத்தகைய வேளைகளில் நாம் பொங்கியயெழத்தான் வேண்டும்.
அன்பு நிறைந்த மனத்தோடும் புரிந்துணர் வோடும் இருப்பவர்களுக்கு இவையெல்லாம் இயல் பாக செயற்படுத்தக்கூடியவையே. அதை விட்டு பொறாமையோ, எதிர்ப்பு மனப்பான்மையோ, பெண் கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற மரபு வழிக்குப் பழக்கப்பட்ட மனோபாவமோ உள்ளவர்கள் தான் நாம் கூறுவதைப் புரிந்துகொள்ள மறுப்பார்கள்.
பாசபந்தங்கள் நிறைந்த அன்புமயமான குடும்ப வாழ்க்கை வாழும் எமது மரபை நாம் பேண வேண்டுமென்பதில் யாருக்கும் எந்த முரண்பாடு மிருக்கக்கூடாது. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
Gen.
18

05
சிந்தி,
சிந்திக்க வைக்கும் உனது மடல் கிடைக்கப் பெற்றேன். நமது கலாசாரம், குடும்ப அமைப்பு ஆகிய வற்றினின்று பிறழாது நாம் இருந்து கொண்டே நாம் பல கட்டுக்களை அறுத்தெறிய வேண்டிய அவசி
யத்தை வலியுறுத்தியிருந்தாய்'உண்மை அந்த அவசி யத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
கட்டுகளை அறுத் தெறியவலிமையையும் நமக் குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். எமது சில பல வீனங்களை முதலிலே வேரறுக்க முற்பட வேண்டும்.
சில பெண்கள் சேர்ந்தால் நகைகளைப் பற்றி யும், உடைகளைப் பற்றியும் அதிகமாகக் கதைப்ப வர்கள் ' என்றொரு அபிப்பிராயம் நிலவுகிறது. இதை முழுமையாக மறுக்க முடியாதென்றே எனக்கும் தோன் றுகிறது.
சிந்தி,ஏன் அப்படி? பெண்கள் வகைவகையாக அணிகலன்களையும் விதம்விதமான உடைகளையும் அணிவதுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். 19

Page 15
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
அழகுபடுத்தும் ஆசை மனிதர் அனைவருக்கும் இருக்கிறது. விதம்விதமான மோதிரங்கள், கைச்சங் கிலி, கழுத்தில் சங்கிலி என்பனவற்றை ஆண்களும் அணிகிறார்கள். ஆனால் அதிகமாக பல அணிகலன் களை அணியும் பழக்கத்தைப் பெண்களிடையே ஏற் படுத்துவதாலேயே இந்த ஈடுபாடு பெண்களுக்கு அதிக மேற்பட்டுவிட்டது. குழந்தைப்பருவம் முதலே பெண் குழந்தைக்கு இந்த நாட்டம் ஏற்படுத்தப்படுத் தப்படுகின்றது
சிந்தி, வீட்டிலுள்ள அணிகலன்களை பெண் குழந்தைக்குத்தான் அணிவித்து அழகு பார்க்கிறார் கள். தம்மிடமுள்ள நகைகள் பெண்குழந்தைக்கு உரியது என்ற எண்ணம் அவர்களின் மனங்களிலே அந்தக் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுகிறது. இதனாலேயே வளர்ந்ததும் அவர்களது நாட்டம் இவ் வாறு அமைகிறது. எனவே எமது பெண்குழந்தைகளை வளர்க்கும்போது இந்த நகை ஆசையை ஊட்டாமல் நாம் வளர்க்க வேண்டும்.
நான் முன்னைய கடிதமொன்றில் ஒரு விட யத்தை வலியுறுத்தியுள்ளேன். நாம் குழந்தைகளை வளர்க்கும்போது கவனத்துடன் வளர்த்தாலும் சூழ் நிலை, நட்பு போன்றவை வளர்ந்தபின் அவர்களை மாற்றிவிடுவதைக் காண்கிறோம். நகை, உடை, ஆடம் பர வாழ்க்கை என்பவற்றில் அவர்கள் வளர்ந்த பின்பும் சூழ்நிலையால் ஈடுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
20

உனக்கொன்றுரைப்பேன்
சாதாரண மனிதர்களுக்கேயுரிய அலங்காரப் பிரியத்தை விட, அதிகமான அலங்கார மோகம் பெண் களுக்குக் கிடையாது என்ற ஒரு நிலையை நாம் ஏற் படுத்தியாக வேண்டும். இது மிகச் சுலபமான ஒன் றென்றே நான் கருதுகிறேன்.
இயல்பாக எந்தப் பெண்ணுக்கும் அலங்கார மோகம் கிடையாது. அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே உண்டு.
ஆடை அணிகளை விற்பனை செய்வோரின் விளம்பரம், திரைப்படம் போன்றவை பெண்களை நகைகளின் சுமைதாங்கியாகக் காட்ட, அதன் ஈர்ப் பினால் ஏற்பட்ட மோகமே இது. எளிமையான அலங் காரமே நவநாகரிகம் என்ற நிலையை உருவாக் கிவிட்டால் இந்தநிலை இலகுவாக மாறிவிடும். அதிக மாக நகைகளை அடுக்கி, பளபளக்கும் உடையில் வருபவர்கள் முற்போக்கு சிந்தனையற்றவர்கள். செம் மறியாட்டுமந்தை போன்றவர்கள் என்ற கருத்து ஏற் படுத்தப்பட வேண்டும்.
பெண்கள் சேர்ந்தால் அரசியல் பொது விடயங் கள், தமது தொழில் சார்ந்த விடயங்களை அலசி ஆராயும் நிலை ஏற்பட வேண்டும்.
சிந்தி, உன் சிந்தனைகளையும் சேர்த்து நாம் செயற்பட ஆரம்பிக்கலாம்.
★
அன்புடன், ઉ/1.9

Page 16
O6
சிந்தி,
உனது ஆக்கபூர்வமான ஆலோசனைகளுடன் வந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
பெண்களின் ஆடை அணிகலன் மோகம் ஏற் படுத்தும் பிரச்சினைகளை விளக்கி, அவற்றைப் பெண் கள் உணரச் செய்யவேண்டுமென்று எழுதியிருந்தாய். உண்மைதான்.
குழந்தைகளுக்கு அணிகலன்களை அணிவத னால், அவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதுடன் கள்வர் அந்த ஆபரணங்களைத் திருட முனைந்தால் குழந்தை யையே இழக்க நேரலாம் என்று கூறியிருந்தாய்.
பொன் நகைகளை அணிவது பெரியவர்களுக் கும் இத்தகைய திருடர் பயத்தையும் ஆபத்தையும்
ஏற்படுத்துகிறது. இவற்றைப் பாதுகாப்பது அடுத்த பிரச்சினை.
அது மட்டுமா? இந்த ஆபரணம் வாங்கும் பிரச் சினை, வீடுகளில் எவ்வளவு வேதனைகள் நிறைந்த
22

உனக்கொன்றுரைப்பேன்
கதைகளை உருவாக்கியுள்ளது தெரியுமா? இதனால் வேதனை, நிம்மதியின்மை, ஏன் பெரும் புயல் சூறா வளியுங்கூட வீட்டில் ஏற்படுவது அனைவரும் அறிந் தது தான்.
ஆபரணங்களை இரவல் வாங்குவதும் இரவல் கொடுப்பதும் அதைவிடப் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உனக்கு ஒரு கதை கூறவேண்டும். என் அம்மா எனக்கு இரண்டு சங்கிலிகள் தந்தார். என் அக்காவுக் கும் அப்படியே. என் அக்கா ஒரு புது வேலைப்பாட்டு டன் நகையைக் கண்டால் உடனே அது போன்ற ஒன்று செய்து அணிந்து அழகு பார்க்கும் ரகம். சென்ற வாரம் கழுத்தில் அழகிய கல்பதித்த சிறு சங்கிலியுடன் வந்தாள். விசாரித்தபோது ஒரு விடயம் தெரியவந்தது.
அவளுடைய இரண்டு சங்கிலிகளையும் மாற்றி, மாற்றி புதிய ஆபரணமாகச் செய்துகொண்டு வந்த தால், இந்த பதினைந்து வருடங்களின்பின் கழுத்திலி ருக்கும் சங்கிலிதான் எஞ்சியுள்ளதாம். அடுத்த தடவை மாற்றினால் ஒரு மோதிரந்தான் மிஞ்சும் என நினைக் கிறேன். ஒரு ஆபரணத்தை மற்றொன்றாக மாற்றும் போது சேதாரம், கூலி என்று செலவு ஏற்பட அதன் நிறை குறைந்துகொண்டே போகும். கல் பதித்து ஆபரணம் செய்தால் கல்லுக்கு விலையோடு கல்லின் நிறைக்கு பொன்னின் விலையும் கொடுக்க வேண்டும். அதை மாற்றும்போது கல்லின்நிறையை நீக்கி மிகுதிப் பொன் தான் கணக்கெடுக்கப்படும். இதையெல்லாம்
23

Page 17
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
புரிந்து கொண்டிருந்தால் அக்காவின் இந்த மோகம் குறைந்திருக்கும்.
ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது பட்டாடை பொன்னாபரணங்களெல்லாம் இல் லாது போய் நின்றால் ஒரு மாதிரி இருக்குமென்று எழுதியிருந்தாய். காந்திஜியின் மனோதிடம் இருந்தால் மட்டுமே நூற்புடவையுடன் அங்குபோய் நிற்கலாம். ஆனால் ஓரிரு ஆபரணங்களை அளவாக அணிந்து செல்வது பெரிய வேறுபாடாக இருக்காது. அதுமட்டு மல்ல. அதேபோல எல்லோரும் வரும் நிலையை நம்மி டையே ஏற்படுத்த நாம் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
இதில் முக்கியமாக இறைவழிபாடுநடை பெறும் இடங்களுக்கு மிக எளிமையாகச் செல்லும் நிலை ஏற் படுத்தப்பட வேண்டும். துவைத்த தூய ஆடைக்குப் பதிலாக பட்டாடைகள் ஏன் அணிகிறோம்? ஆண்டவன் முன்நின்று அவன் தரிசனத்தில் நிம்மதி தேட பட்டா டையும் ஆபரணங்களும் தேவையற்றவை. முதலில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முயல வேண்டும்.
மற்றவர்களைக் கவர்வதற்கோ, காட்சிப் பொரு ளாக இருக்கவோ எமது அந்தஸ்தையோ, செல்வச் செழிப்பையோ பிரசித்தப்படுத்தவோ கோவிலுக்குச் செல்வதில்லையென்பதைப் புரிந்துகொண்டு அங்கு எளிமையாகச் செல்வதென ஒரு தீர்மானத்தை நாமெ டுக்க வேண்டும்.
女
c26ăy-că,
24

O7
சிந்தி.
உனது கடிதம் கிடைத்தது. உனது எதிர்வீட்டு அக்காவும் அவரது தோழியரும் எனது கடிதத்தைக் கடுமையாக விமர்சித்ததாக எழுதியிருந்தாய். அழகாக அலங்கரிக்கும் கலையை தேவையற்றதென நான் கூறுவது தவறு என அவர்கள் கூறுகிறார்களென உன் கடிதம் தெரிவித்தது.
எனது கருத்து உனக்குப் புரிந்திருக்க வேண் டுமே. தித்திப்புக்கூட அதிகமானால் திகட்டும். அது போன்றே அளவிற்கதிகமாக அணிகலன்கள் அணிவ தும் அமையுமென்று, விளக்கம் கொடுத்து அவர்களை அதைஒப்புக் கொள்ளச்செய்திருக்கவேண்டும்.அதிலே தான் வெற்றி தங்கியிருக்கிறது.
அவர்களுக்கு மற்றுமொரு ஆலோசனையை யும் கூறுவது முக்கியம். இப்படிக் கூடியிருந்து கதைப் பதைக் குறைத்து அழகியல் கலைகளான ஆடை தயாரித்தல், அழகுப் பொருட்கள் தயாரித்தல், பூந் தோட்டம், காய்கறித்தோட்டம் என்பன அமைத்தல் என்று பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்க நாம் பழக வேண்டுமென்று கூறு.
25

Page 18
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
பெண்களோ ஆண்களோ கூடியிருந்து தேவை யற்ற விடயங்களைப் பேசி நேரத்தை வீணாக்குவதால் நேரம் வீணே விரயமாவதுடன், எத்தனையோ பிரச்சி னைகள் உருவாகுவதை நாம் கண்கூடாகக் காண்கி றோம். மேலும் கூடியிருந்து ஒவ்வொரு வீட்டு விடயங் களையும் அலசி ஆராய்ந்து உண்மையற்ற வதந்திக ளைப் பரப்பி, புறங்கூறி, மற்றவர்களை வேதனைப் படுத்தி, பகையையும் பிரச்சினைகளையும் சண்டைக ளையுங்கூட உருவாக்கி விடுகின்றனர்.
சிந்தி, இப்படிப்பட்ட உரையாடல்கள் அவசியந் தானா? சமைப்பது, சாப்பிடுவது தவிர்ந்த எந்த வேலை யுமே இல்லாது உண்பது, உறங்குவது போக ஏனைய நேரங்களில் ஊர் வம்புதேடி அலையும் பலரை நாம் பார்க்கிறோம்.
நாட்டைச் சீரழிப்பவர்களுள் இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள், தாம் பயனுள்ளவர் களாக இன்று முதல் மாறுவதென்று சபதமெடுத்துக் கொள்ளவேண்டும். பயன் நல்கும் பணிகள் பல வுண்டே. அவற்றுள் ஏதாவது ஒன்றிரண்டையாவது செய்யலாமே.
இடையிடையே நாம் சந்திக்கவேண்டும், பேச வேண்டுந்தான். அப்படி அளவளாவும்போதும் ஊர்வம்பு பேசுவதைத் தவிர்க்கவேண்டும். நல்லதை மட்டும்பேசி, அல்லதை விட்டுவிட வேண்டும்.
சநதிக்க வேண்டிய ஆக்கபூர்வமான எத்த னையோவிடயங்கள் உண்டே. ஒரே துறையைச் சேர்ந்த
26

உனக்கொன்றுரைப்பேன் வர்கள் சந்தித்தால் துறை சார்ந்த விடங்களை அலசி ஆராயலாம். நூல்களைப் பற்றி விமர்சிக்கலாம். கலை நிகழ்வுகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி உரையாடலாம்.
எமது உறவினர் நண்பர்கள் பற்றி உரை யாடவே கூடாதென்று நான் கூறவரவில்லை. தேவை யற்றவற்றை , பலரும் பேசுவதால் மனம் வேதனைப் படக் கூடியவற்றை தவிர்க்க வேண்டும்.
அப்படி யாராவது பேச முற்பட்டாலும் முற் போக்கான கருத்துக்களைக் கூறி சூழ இருப்பவர்களின் சிந்தனையையே மாற்றலாம். உதாரணமாக தெரிந்த வருக்கு நடந்தபாலியல் வல்லுறவு பற்றி பேச நேரிடும் போது, அதனால் பாதிக்கப்பட்டது ஒரு விபத்து. குற்ற வாளி தண்டிக்கப்பட வேண்டும். காறி உமிழ வேண் டியது அவன் மீதெயன்றி அவள் மீதல்ல என்பதை வலி யுறுத்தலாம்.
மல்லிகையும் மருக்கொழுந்தும் இருந்து சென்ற இடத்தை நறுமணங்கமழச் செய்வது போல நாம் சில நிமிடங்களிருந்து பேசிச் செல்லுமிடமும் இருக்க வேண்டும். முன் வீட்டுக்கூட்டம் இப்போது எப்படி யென்று எழுது.
அன்புடன், ઉદn.9
27

Page 19
O8
சிந்தி,
உனது கடிதம் இம்முறை என்னை மிகமிக மகிழ வைத்தது. உனது முன் வீட்டில் கூடும் தோழியர் என்னை நோக்கித் தொடுத்த கேள்வி அவர்கள் நல்ல வகையில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டுகிறது.
"வீணே பேசிப் பொழுதைப் போக்கும் நேரத் தில் அழகியல் துறைகளில் மட்டும்தான் ஈடுபட வேண்டுமா? ஏன் வேறு துறைகளில் ஈடுபடக்கூடாதா?" என்று அவர்கள் கேட்பதாக எழுதியிருந்தாய். அழ கியலை நான் வெறுப்பதாக அவர்கள் கருதியதும், அது குறித்து எழுத வந்த வேளையில் இப்படி அழகி யற் கலைகளில் ஈடுபடலாமென எழுதி விட்டேன். தவறுதான். புதிய பாதை போட நினைத்துக் கொண் டிருக்கையில் பழக்க தோஷத்தால் பழைய பாதையில் கால்கள் தாமே போய்விடுவதுண்டு.
சகல துறைகளிலும் பெண்கள் ஈடுபட முன்வர
வேண்டுமென்பதுதான் எனது ஆசை. அவரவர்களுக்கு
எந்தத் துறையில் நாட்டமிருக்கிறதோ அதில் அவர்கள் 28

உனக்கொன்றுரைபபேன ஈடுபடலாம். மரவேலை, இரும்பு வேலை, சைக்கிள் திருத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூட உலகில் இருக்கிறார்கள்.
நாம் அப்படி ஈடுபடாதிருப்பதற்குக் காரணம் வழமையைப் பின்பற்றி அனைவரும் போகும் பாதையி லேயே நாமும் போகும் பழக்கந்தான். அதை மாற்றி வெவ்வேறு தொழில்களை நாம் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு செய்யும் பெண்களும் அதை வெளிப் படையாகச் செய்வதில்லை. கணவன் அல்லது தந்தை ஒரு தொழில் செய்யும்போது, அவர் ஏதோ காரணத் தால் அதைச் செய்ய முடியாத வேளையில் தாமே அதைச் செய்யும் பெண்கள், ஒன்று அதைத் தொடர்ந்து செய்து தேர்ச்சி பெறுவதில்லை. அடுத்து அதை வெளிப்படையாகச் செய்யத் தயங்குகிறார்கள். அப் படிச் செய்தாலும் அந்தத் திறமை வெளிப்படுவ தில்லை.
எனக்குத் தெரிந்த பெண், கணவன் வைத்திருக் கும் மில்லொன்றை மிகச் சிறந்த முறையில் நடத்தி வருகிறார். வீட்டிலிருந்தவாறே அருகிலுள்ள மில்லை அவர் நிர்வகிக்கும் திறனைப் பார்த்துப் பலரும் வியந் துள்ளனர். ஆனால், நிறுவனத்தின் புகழ் முழுவதும் கணவனுக்கே.
நிறுவனம் தொடர்பான ஒரு கூட்டம் நடை பெற்றால் அதில் பங்குகொள்ள அவர் தயங்குவார். ஆனால் அதில் கலந்துகொள்ளும் கணவனுக்கு வேண்டிய குறிப்புகள் ஆலோசனைகள் எல்லாம் வழங்குவது மனைவியே.
29

Page 20
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
இத்தகைய தயக்கம் எம்மிடம் இயல்பாக உள்ளதல்ல. அது எமக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. அதனை நாம் ஒழித்தேயாக வேண்டும்.
நமக்கு ஒரு தொழிலில் ஈடுபாடு இருக்குமா னால், அதைத் திறம்படச் செய்ய தயக்கமெதுவுமின்றி அதில் ஈடுபடவேண்டும். எமது திறமை முழுவதையும் வெளிப்படுத்தி வெற்றிக்கொடி நாட்டவேண்டும்.
'பெண் பிள்ளை செய்தால் அவ்வளவு நன்றாக இருக்காது' என அறிவுரை கூற அநேக பேர் வரு வார்கள். நடந்த பாதையிலேயே நடக்க வேண்டு மென்று ஒரு விதியுமில்லையே. வழிகாட்டியாக மாறி பலரை நமது பாதையில் நடைபோட வைக்கலாமே.
தயங்கித் தயங்கி பிறர் தயவில் வாழ்ந்தது போதும். நல்லதை நேர்மையாகச் செய்ய எந்தத் தயக்கமும் தேவையில்லை. உன் தோழிகள் என் னென்ன தொழில்களைத் தெரிவுசெய்யப் போகி றார்கள் என்பதை எழுது.
மீண்டும் சந்திப்போம்.
cØMaryLør GJAS

O9
சிந்தி,
உன் ஊரவளான அமலா பற்றி ஊருக்குள் பரப்பப்பட்டுள்ளவதந்தி பற்றிஎழுதி,குமுறியிருந்தாய்.
இளம்வயதிலேயே தனது திறமையினால் மேல திகாரிகளின் பாராட்டுக்களையும் நல்லபிப்பிராயத் தையும் பெற்று பதவி உயர்ச்சியுடன் அமலா ஓர் அதி காரியாகப் பணியாற்றுவதாகவும், ஆனால் அவளை மேலதிகாரிகளுடன் இணைத்து வதந்திகளைப் பரப்பி அவளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதாகவும் எழுதி யிருந்தாய்.
இது ஒன்றும் புதிய விடயமல்லவே. காலங்கால மாக நடந்துவருவதுதான்.
உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் சண்டை செய்பவர்கள் உடலின் முக்கியமான பகுதிகளைத் தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்வதுபோல், மனத்தையும் சில முக்கிய விடயங்கள் மூலம் தாக்கி ஒருவரைப் பலவீனமடையச் செய்யலாம்.
3.

Page 21
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
இந்த யுக்தியைப் பிரயோகித்து மனதைப் பல வீனமடையச் செய்வதன் மூலம் எதிரியை வெற்றி கொள்ளும் திறமைசாலிகள் பலரிருக்கிறார்கள்.
இத்தகையவர்கள் நமது சமூகத்தில் பிரயோ கிக்கும் ஏவுகணைகளில் ஒன்று. இப்படி ஓர் ஆணும் பெண்ணும் முறைகேடான உறவு வைத்திருக்கிறார்க ளென்றொரு வதந்தியைப் பரப்புவதாகும்.
இது ஆணுக்கும் நடக்கிறது. பெண்ணுக்கும் நடக்கிறது. ஆணுடைய பிரபல்யம், புகழ் இவற்றைக் குறைக்கவும் இந்த வதந்தி பரப்பும் முறையைப் பயன் படுத்துகிறார்கள். ஆண்களை இது பாதிக்காதென முற்றுமுழுவதுமாகக் கூறிவிட முடியாது. எமது சமுகத் தில் உயர் அந்தஸ்து, புகழ் உடையவர்கள் தவறான நடத்தை கொண்டவர்களென அறியும்போது, வெளிப் படையாகக் காட்டிக்கொள்ளாதவிடத்தும் அவர்களது மதிப்பு குறைவது உண்மையே.
ஆனால் ஆணைவிடப் பெண்ணே பெரிதும் பாதிக்கப்படுகிறார். அதிலும் ஓர் ஆணைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டுமென்பதற்காக, ஒரு முலை யில் இருக்கும் பெண்ணுடன் இணைத்து வதந்தி பரப் பப்படும்போது அவள் படும் வேதனை மிகுந்த பரி தாபத்திற்குரியது.
இவ்வாறு தனது மேலதிகாரியுடன் இணைத்துப் பேசப்பட்ட பெண்ணொருத்தி, தன் வேதனைகளை என்னிடம் கூறிக் கண்ணிர்விட்ட சம்பவம் என் மனதில் ஆழப்பதிந்துள்ளது.பாவம்' எந்தத் தவறுமே செய்யாத அவள் சிலரது சதியால் தேவையில்லாது பாதிக்கப் பட்டிருந்தாள்.

உனக்கொன்றுரைப்பேன் தனது திறமையால் முன்னேறும் பெண்ணின் முன்னேற்றத்தைச் சகிக்காதவர்களும் இப்படிச் செய் கிறார்கள். இதைத் தாங்கிக்கொண்டு முன்னேறும் மன உறுதி அவளுக்கு இருந்தேயாகவேண்டும். இதனால் தளர்ச்சியடையக் கூடாது.
பொய் வதந்திகள் பொய்யானவை என மற்றவர் களுக்குப் புரியவைக்கவும் முயலவேண்டும்.
எமது சமூகமும் இப்படிப்பட்ட வதந்திகளுக்குக் காதுகொடுத்து அதைப் பெரிதுபடுத்தி அலசி ஆராயும் போக்கை மாற்றவேண்டும். உண்மையல்லாத, யாரோ சொல்லும் ஒரு கதையைப் பெரிதுபடுத்துவதனால் என்ன பயன்?மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில் நேரம் போக்கும் நிலை மாறவேண்டும். அதிலும் ஒருவரைப் பற்றி நல்லதைப் பேசலாம். கூடாததைப் பேசுவ தில்லை என்று ஒவ்வொருவரும் தீர்மானம் எடுக்க வேண்டும். வதந்தி பரப்பும் ஒருவரைக் கண்டால் இந்த அறிவுரையை அவருக்குக் கூறு.
அமலாவை அணுகி, அவளுககு மனத் தைரி யம் ஊட்டவேண்டிய பொறுப்பு உன்னுடையது. இத் தகைய குருவிச்சை அவளது மனதைப் பாதிக்கக் கூடாது. நான் நேர்மையானவள், திறமையானவள், என்னால் எதிர்நீச்சல் போட முடியும்' என்ற உறுதியை
அவளது மனம் பெறவேண்டும்.
அன்புடன், G.M.S.

Page 22
1.O
சிந்தி,
உனது கடிதம் கிடைத்தது. நீ அமலாவைச் சந்தித்தது பற்றியும் ஆனால் நீ எதிர்பார்த்தவாறு அவளது மனம் இலகுவில் மாறவில்லையென்றும் எழுதி யிருந்தாய். உனதுமுயற்சி வெற்றி பெறவில்லை யெனக் கவலைப்பட்டிருந்தாய்.
சொற்களால் மலினப்படுவதையே பாரதூர மாகக் கருதும் பண்பாட்டுச் சூழலில் நாம் வளர்ந்து விட்டோம். அப்படிப்பட்ட பெண்கள் பொய் வதந்தி களைக் கூட இலகுவாக எடுத்துக்கொள்ள மாட் டார்கள்.
எமது பண்பாடு போற்றப்பட வேண்டிய ஒன்று. ஆனால் பொய்மைக்கும் பயந்தொதுங்கும் மனப் பாங்கு தேவையற்றதென்பதை நாம் உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் குழுந்தைகள் ஓரளவு வளர்ந்த தும் பாடசாலைக்குக் கூடச் செல்வது தவறென்ற எண்ணம் எம் மத்தியில் இருந்தது.
இன்று பல்கலைக்கழகம் வரை சென்று பட்டங் கள் பெற்று பெண்கள் பல பதவிகளும் வகிக்கிறார்கள். 34

உனக்கொன்றுரைப்பேன் இது பெண்களின் பண்பையோ எமது பண்பாட் டையோ குறைத்துவிட்டதென்றோ, கெடுத்துவிட்ட தென்றோ கூறமுடியாது.
ஒருவர் முன்னேறும் போது, ஊக்கமளிப்பவர்கள் பத்துப் பேரென்றால் அதைக் கெடுக்க முயல்பவர்கள் தொண்ணுாறு பேராக இருக்கிறார்கள். இப்படிக் கெடுப் பவர்கள் பல்வேறு வகைகளில் தடையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
வதந்தி பரப்புவதுமுதலாக அவர்கள் ஏற்படுத் தும் தடைகளனைத்தையும் தூசாக மதித்து, கவனத் திலெடுக்காது எதிர்நீச்சல் போடும் திறமை எமக்கு வேண்டும். முக்கியமாகப் பெண்களுக்கு வேண்டும்.
கல்லெறியும் பொல்லடியுமில்லாது போனாலும் சொல்லடிபடாது எவருமிருக்க முடியாது. அவற்றை எதிர்கொண்டு, சமாளித்து, ஜீரணித்துக்கொண்டு முன் னேற வேண்டும்.
இப்படி எழுதும் எனக்குக் கூட சில சமயங்களில் இதைச் செயற்படுத்தும் மனத்தைரியம் குறைந்து போகலாம். சொல்வது சுலபம். செயற்படுத்துவது கடினம்.
இத்தகைய நேரங்களிலேதான் உதவும் உறவுகள் தேவைப்படுகின்றன. அத்தகைய உறவுக ளாக நாம் செயற்பட முன்வரவேண்டும். அமலாவுக்கு அத்தகைய உறவாக நீ இருக்க வேண்டும் என்ப தையே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
35

Page 23
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
நீ முயன்றால் படிப்படியாக அவளை ஊக்க மும், உற்சாகமும் மிகுந்த அதிகாரியாக மாற்றலாம்.
இதை எழுதும்போது எனக்கு மற்றுமோர் எண்ணமும் தோன்றுகிறது. பெண்களது முன்னேற்றத் திற்குத் தேவையானவை பல உள்ளன. சிலருக்கு தொழிற் பயிற்சி தேவைப்படுகிறது. தொழில பயின்ற வருக்கு நிதிவளம் தேவைப்படுகிறது. பலவகை ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இப்படி தேவை
LLIT66)6) 16).
இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் உறவுகளும் எல்லா ஊர்களிலுமே தேவைப் படுகிறார்கள்.
எனவே, ஊர்தோறும் செயற்றிறன்மிக்க, உத
வும் மனப்பாங்கு கொண்டோரிணைந்து அமைப்புக்
களை உருவாக்கி பெண்களின் முன்னேற்றத்திற்கும்
அதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவலாம்
என்பது எனது அபிப்பிராயம்.
இது பற்றிச் சிந்தித்து, செயற்படுத்த உன் கருத்துக்களைத் தெரிவிப்பாயென எதிர்பார்க்கிறேன்.
责
ceilai,
G.M.S.
36

11
சிந்தி,
எனது சென்ற கடிதத்திற்குப் பதிலாக நீண்ட கடிதமொன்று எழுதியிருந்தாய்.
உனது முன்வீட்டுத் தோழியர் கூடி கிராம மகளிர் அபிவிருத்தி நிலையம் ஒன்றை உருவாக்கிச் செயற்படுத்தும் விதத்தை நீ விபரித்திருந்தாய். ஊர்ப் புதினம் பேசியோர் இப்படி மாறிவிட்டார்களா?
பார்த்தாயா, எவ்வளவு திறமைகள் இவ்வளவு காலமும் வீணடிக்கப்பட்டிருந்தன என்பது புரிகிறதா?
மூன்று தையல் இயந்திரங்களை வங்கிக்கடன் மூலம் கொள்வனவு செய்து, ஏழு பேர் சேர்ந்து உடைகள் தயாரித்து விற்று, கடனை மீளச் செலுத்தி வருவதுடன், ஏழு பேரின் வங்கிக்கணக்கிலும் கணிச மான தொகையைச் சேமித்திருப்பதாக எழுதியி ருந்தாய்.
இந்தத் தையல் நிலையத்தை மேலும் அபிவி ருத்தி செய்யலாம். நவீன இயந்திரங்களை வாங்கி உபயோகிக்கலாம். இதனால் உற்பத்தியை அதிகரிக் கலாம்.

Page 24
இதேபோன்று வெவ்வேறு கைத்தொழில்க ளுக்கு உற்பத்தி நிலையங்களை நிறுவிப் பயிற்சிகள் அளித்து, நவீன வசதிகளைச் செய்து, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது சந்தைப் படுத்தும் போதுதான். எனவே சந்தைப்படுத்துவதற் கும் இந்நிலையங்களில் சிலரை நியமிக்கலாம். சந் தைப்படுத்துவதும் ஒரு கலைதான். அதற்கான நுணுக் கங்களையும் பயிலவேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் திறமை சாலிகளாக இருப்பார்கள். அவர்களைத் தேர்ந் தெடுத்து அந்தந்தத் துறைகளில் ஈடுபடுத்தி, ஊக்கு வித்துப் பயன்பெற வைப்பதற்கு ஏற்ற திறமையுடை வர்கள், தலைமைத்துவம் ஏற்று நடத்தினால் நிச்சய மாக நாமும் முன்னேற வழிபிறக்கும்.
நாம் ஆரம்பிக்கும் சங்கங்கள் அனைத்தும் நீ குறிப்பிட்டது போன்று திட்டமிட்டுச் செயற்படுபவை யாக அமையவேண்டும். பெயருக்காகவும் புகழுக்கா கவும் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்பச் சலசலப்புடன் அடங் கிப் போய்விடும் சங்கங்கள்தான் அநேகம். இடைக் கிடையே தமது இருப்பை வெளிப்படுத்த ஒரு கூட்டம் வைத்து விழா எடுத்து ஓய்ந்துவிடுவார்கள்.
அப்படியில்லாமால் ஒழுங்காகக் குறிக்கோள் களுடன் அவை செயற்பட வேண்டும். அர்ப்பணிப் புடன் அவற்றை முன்னேற்ற அங்கத்தவர்கள் முன்வர வேண்டும்.

உனக்கொன்றுரைப்பேன் ஒன்று கூடி ஆலோசித்து புதிய புதிய திட்டங் களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவற்றை முன் னெடுத்துச் செல்லும்போது எதிர்ப்படும் பிரச்சினை களை ஆராய்ந்து, தீர்த்து வைத்து, வெற்றி இலக்கை நோக்கி நடைபோடவேண்டும்.
உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ் வொரு துறையிலுமே புதுமுறைகள் புகுத்தப்பட்டு பின்பற்றப்படுகின்றன. நாம் ஆரம்பித்துச் செயற்படுத் தும் துறைகளிலும் அவற்றைப் பின்பற்ற வழிகோல வேண்டும் நவீன சாதனங்களைப் பயன்படுத்தவும், புதிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அதில் ஈடுபடுவோருக்குப் பயிற்சிகள் வழங்கவேண்டும்.
நம்மிடம் செயற்றிறன் நிறையவே உண்டு. அதனை வெளிக்கொணர்வதென ஒவ்வொருவரும்
உறுதியெடுப்போம்.
c26ă/t că,

Page 25
19).
சிந்தி,
மலரவிருக்கும் புத்தாண்டு எமது செயற்றி றனை வளர்த்து நம்மை முன்னேற்றும் ஆண்டாக விளங்கவேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்போம்.
உங்கள் கிராம மகளிர் அபிவிருத்தி நிலையத் தலைவி சுகுமாரியின் கணவர், அவளது செயல்கள் காரணமாக அதிருப்தியடைந்திருப்பதாகப் பலரும் பேசிக்கொள்வதாக எழுதியிருந்தாய். சுகுமாரி வீட்டில் அவரது வேலைகளைக் கவனிப்பதில்லையென்றும், உணவு வேளையில் அருகிலிருந்து பரிமாறுவதுகூட இல்லையென்றும், அவர் கவலைப்படுவதாக உனக்கு யார் கூறினார்கள்?
முதலில் உனக்கு இதைக் கூறியவரிடம் அவருக்கு யார் கூறியது என விசாரித்து, அதை முதன் முதலிலே கூறியவரைக் கண்டுபிடித்தாயானால் நீ திறமைசாலிதான். கண்டுபிடித்தால் சிலசமயம் சுகு மாரியின் கணவர் அப்படியேதும் கூறாமலேயே அக் கதை உருவாகியுள்ளதென நீ கண்டுபிடிக்கவும் நேர
6) TEO.
40

Porö6leHirsörlympÜGIhr
சுகுமாரியின் வீட்டிற்குச் சென்று நேரிலேயே அவருடன் உரையாடினால், அவர் சுகுமாரிக்கு மிகவும் உதவிபுரிந்து ஊக்கமளிப்பவராக இருப்பதைக் கூட நீ கான நேரலாம்.
யாராவது வேடிக்கையாகக் கூறியதும் இப்படிக் கதையாகி இருக்கலாம். அல்லது சுகுமாரியினதோ, சங்கத்தினதோ முன்னேற்றத்தைத் தடைசெய்யவும் இவ்வதந்தி பரப்பப்பட்டிருக்கலாம்.
ஒரு வீட்டில் மனைவி செய்யவேண்டிய வேலை களென்று சிலவற்றை வகுத்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். ஆம் அது கற்பனைதான். அவர்கள் கூறும் அத்தனை குணாம்சங் களும் பொருந்திய பெண்ணை நேரில் சந்திக்க முடி யாது. கதைகளிலும், காவியங்களிலும், நாடகங்களி லும், சினிமாவிலுமே காணலாம்.
இத்தகைய அசாதாரணமானவர்களாக அனைத் துப் பெண்களும் இருக்க வேண்டுமென்று கூறிக் கொள்கிறார்கள். இது சாத்தியமா?
இதே கற்பனையில் வரும் ஆண்கள்கூட மிகச் சிறந்தவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படித் தாமும் வாழவேண்டுமென ஆண்கள் நினைப்ப தில்லை. ஆனால் பெண்கள் மட்டும் பொறுமையின் இலக்கணமாக தியாகத்தின் சின்னமாக எப்படி யெல்லாமோ இருக்க வேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்.
41

Page 26
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
பொறுமை, திறமை, புரிந்துணர்வு ஆகிய எல்லா நற்பண்புகளும் நமக்கு இருக்க வேண்டியது அவசியமே. நமக்கு என்றால் ஆண்கஞ்க்கும் பெண்க ளுக்கும் என்று தான் கூறவருகிறேன்.
ஆண் தேசசேவை செய்தால் மனைவி ஒத்து ழைத்துக்க வேண்டும். பெண் கிராமத்திற்குச் சேவை செய்தால் கணவன் ஒத்துழைக்க வேண்டும்.
சுகுமாரியின் கணவரைச்சந்திக்க முயற்சிசெய். அவர் உண்மையாகவே மனைவி தனக்கு மட்டும் சேவகியாக இருக்க வேண்டுமென்று கருதுபவராக இருந்தால், அவரோடு உரையாடி மனதை மாற்ற முயற்சிசெய். என்ன நடந்ததென்று அறிய உன் அடுத்த கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
★
அன்புடன், G.M.S.
42

15
சிந்தி,
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வந்த உன் கடி தம் மகிழ வைத்தது. புதிய ஆண்டில் செயற்படுத்து வதற்காகப் பல திட்டங்களை உங்கள் கிராம மகளிர் முன்னேற்ற நிலையம் செயற்படுத்தவுள்ளதாக எழுதி யிருந்தாய். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த் துக்கள்.
ஆனால், நிலையத் தலைவி சுகுமாரியின் கணவரைச் சந்தித்து உரையாடியதில் எந்தப் பயனும் கிடைக்கவில்லையெனக் கவலைப்பட்டிருந்தாய்.
சுகுமாரியின் கணவர் இப்படி இருப்பாரென்று நீமட்டுமல்ல நானும் எதிர்பார்க்கவில்லைத்தான்.
பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுவது கற் பனையென்றும், குடும்புப் பொறுப்பை ஏற்று அதனை நிர்வகிப்பது அவர்களது கடமையென்றும் கருத்துக் கூறிய அவர், உனது விளக்கங்களைச் செவிமடுக்க விரும்பாது எதிர்வாதம் செய்தாரென்றும் எழுதியிருந் g5/Tuj.
43

Page 27
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
எதிரேயிருப்பவன் எதிரியென்று ஒருவன் கருத ஆரம்பித்தால் அவன் அமிர்தத்தைக் கொடுத்தாலும் அதனையும் விஷமாகத்தான் கருதுவான்.
இதேபோன்றுதான் பெண் கூறுவதை அவர் தவறான கருத்தென்றே கருதுவார். எனவே ஓர் ஆண் இக்கருத்துக்களை விளக்கிக் கூறினால் அவர் ஏற்றுக் கொள்ளக்கூடும்.
முதலிலே நாம் பெண்களின் நலனிலும் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட ஆண்களை ஒன்று சேர்த்து பயிற்சியளித்து இத்தகைய தவறான கருத்துக் கொண்டோரை அணுகி, அவர்களது கருத்துக்களை மாற்ற முற்பட வேண்டும்.
இது முக்கியமான, ஒரு திட்டமிட்டுச் செயற் படுத்தப் படவேண்டிய ஒன்றாகும். இன்று பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப் பவர்கள் இவர்கள். ஆகவே இவர்களது மன மாற்றத் திலே எமது முன்னேற்றம் தங்கியுள்ளது.
சிந்தி, உண்மையிலேயே சுகுமரி திறமையா னவளே. இல்லாவிட்டால் வீட்டிலேயே இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது சமூகசேவையில் ஈடுபட்டி ருக்க முடியுமா? அவளுக்கு எனது மனமார்ந்த வாழ்த் துக்களைத் தெரிவி.
இதேபோன்ற மனத்திடம் எம் ஒவ்வொருவ ருக்கும் ஏற்படவேண்டும். விதியே என்று தளர்ந்து போகாது, சமாளித்து முன்னேற உறுதியெடுக்க வேண்டும்.
★ ക്രീLങ്ങ്,
44

14
சிந்தி,
உனது கவலைதோய்ந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். உனது தோழியின் மகளின் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு உனக்கு மட்டுமல்ல எனக்கும் வேதனையைத் தந்தது.
தாய்மை என்பது மகத்தானது, எதிர்காலச் சந் ததியை உருவாக்கும் மகத்தான பேறு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், அதுவே இயற்கை எமக் குச் செய்த சதி என நாம் வேதனைப்பட வைப்பது மனிதன்தான். மனிதனல்ல, மனித உருவில் உலவும் மிருகங்கள் தான்.
கருத்தரிக்காது போவதற்கு ஆண்கள்கூட காரணமாயிருக்கலாம் என்பது புரிந்தவர்கள் கூட பெண்களைத்தான் குறைகூறி வேதனைப்படுத்து கிறார்கள்.
அதேவேளை, உன் தோழியின் மகளைப் போல் திருமணமாகாமலேயே தாய்மையடையும் பெண்கள் படும் வேதனை சொல்லில் வடிக்க முடி யாததாகும்
45

Page 28
Gu IIIGö6so6)Im ö16)IIIrnyöIIöflD
மனமொப்பாமலே வல்லுறவுக்குட்படுத்தப் படும் பெண்கள் கருத்தரிக்கும்போது அச்சம்பவம் மறக்கவோ, மறைக்கவோ முடியாததாகி விடுகிறது.
விபத்திலே காலோ, கையோ முறிந்து பின் சுகப்படுவதைச் சாதரன்கேக் கருதும் நாம் இதனைப் பாரதூரமாகக் கருதுகின்றோம்.
அதேவேளை, வயது வேறுபாடின்றி பெண் என்ற உருவில் குழந்தையைக் கண்டாலும் கிழவி யைக் கண்டாலும் மிருகமாக மாறிவிடும் ஆண்கள், இன்று சமூகத்தில் மலிந்து வருகிறார்கள்.
பாதிக்கப்படும் பெண்ணைத் துாற்றும் அள விற்கு, இவர்கள் சமூகத்தால் தூற்றப்படுவதில்லை. இப்படிப்பட்ட மிருகங்களை இனங்கண்டு சமுதாயமே அவர்களைப் புறக்கணிக்கும் நிலையொன்றை உரு வாக்க நாம்தான் முன் வரவேண்டும்.
இப்படிப்பட்ட விடயங்கள் வெளிவந்தால் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், அதை வெளியிடுவது உனக்குத்தான் ஆபத்து என்ப தைக் கூறியே ஆண் தப்பிவிடுகிறான்.
அந்தச் சம்பவத்தை மறைப்பதாகக் கூறி, பெண்ணும் அவளைச் சார்ந்தவர்களும் ஆணின் சுயரூபத்தை வெளியிடாது விட்டாலும், விடயம் வதந் தியாகி அப்பெண் பாதிக்கப்பட - ஆண்தான் தப்பிக் கொள்கின்றானென்பதைப் பெண்ணைச் சார்ந்தோர் சிந்திக்க வேண்டும்.
46

உனக்கொன்றுரைப்பேன்
ஒரு விஷ ஜந்து, இல்லையில்லை. வெறி நாய் இனங்காணப்பட்டுக் கொல்லப்படாவிட்டால் ஏற்படும் நிலைதான், சமூகத்திற்கு இவ்விடயத்திலும் ஏற்படும்.
இப்படிப்பட்டோரை இனங்கண்டு பகிஷ்கரிப் பது ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை இப்படி முன்னின்று செயற்பட்டுத் துணிந்து போராடுவோர் எம்மிடையே இல்லை.
உதவிகளும் சேவைகளும் செய்யப்படு கின்றனவேயொழிய, இத்தகைய எழுச்சி கொண்டு இயங்கும் துணிவுள்ளோர் இருப்பதாகத் தெரிய வில்லை.
சாதாரணமானவர்களால் இத்தகைய செயற் பாடுகளை முன்னெடுத்து வெற்றிபெற முடியாது.
ஆகவே, இதனைச் சாதிக்கக்கூடிய துணிவு
கொண்டவர்களைத் திரட்டி நடவடிக்கை எடுக்கா
விட்டால் மனித வடிவில் நடமாடும் இத்தகைய வெறி நாய்கள் பெருகிவிடும்.
★
ഫ്രിഗ്ഗLജ്,
47 r----

Page 29
15
சிந்தி,
உன் தோழியின் மகளின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமலே நான் கடிதம் எழுதியிருப்ப தாகக் குற்றஞ்சாட்டிக் கடிதம் எழுதியிருந்தாய்.
உனது விளக்கம் கிடைத்த பின்னர்தான் அவ ளது பிரச்சினை வேறுவகையில் உருவாகியிருப்பது எனக்குப் புரிந்தது.
காதலன் என்று நம்பிய ஒருவன் அவளை ஏமாற்றியுள்ளான். இந்த வகையில் ஏமாற்றப்பட்டு கருவுற்ற பின், கைவிடப்பட்டு கலங்கி நிற்கும் பெண் களும் சமுதாயத்தில் தாழ்வாகக் கருதப்படும் நிலையே காணப்படுகிறது.
ஆயிரம் ஆயிரம் கதைகளை அறிந்திருந்தும் இத்தகைய நிலைக்காளாவதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். நல்லவனோ கெட்டவனோ அவனுடன் வரம்பு மீறிப் பழகுவது கூடாது. இளமையின் உணர்ச் சிகளைக் கட்டுப்படுத்தும் மன உறுதி ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும்.
48

உனக்கொன்றுரைப்பேன்
பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இந்த மனக்கட்டுப்பாடு தேவை. இதற்கான அறிவுரைகள் சிறு வயது முதல் வழங்கப்பட வேண்டும். நல்ல தொரு சமுதாயத்தை உருவாக்க நாம் திட்டமிட்டு, செயற்பட வேண்டும்.
இப்படி ஏமாற்றி விட்டு நல்ல பிள்ளை வேட மிடும் ஆண்கள் இனங்காணப்பட்டு, அவர்கள் இவ் வாறு நடந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து மேற் கொண்டு செய்ய வேண்டியவற்றைச் செய்ய சில பெரியோர்கள் முன் வந்தால் பல சோக வரலாறுகள் தோன்றாது தவிர்க்கமுடியும்.
உதாரணமாக, உன் தோழியின் மகளிடம் அவளை ஏமாற்றியவன் யாரென்று அறிய நீ முயற்சி செய்து, அவன் ஏமாற்றும் நோக்கமின்றிப் பழகிய வனாக இருந்தால் அவர்களது காதலுக்கு வந்த இடையூறைத் தவிர்க்க முயலலாம். நீ அப்படி முயற்சி செய்து பார்த்தாயா? முயற்சி செய். பெரும்பாலும் உனக்கு வெற்றி கிட்டும்.
காதலித்து உடலின்பம் அனுபவித்து விட்டு, கைவிட்டு விடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்ட இளைஞர்கள் எங்காவது ஒருவர்தானிருப்பார்கள். அப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்றுபேரை ஏமாற்றியதும் இனங்காணப்பட்டு விடுவார்கள்.
ஏனையோர் திருமணம் செய்ய முடியாது
போவதற்கு ஏதோ ஒரு வலுவான காரணமிருக்கும்.
பெரும்பாலும் இளைஞனின் பெற்றோர்கள் இப்
-49

Page 30
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
பெண்ணை திருமணம் செய்ய விரும்பாது போதல், தனது சகோதரியின் திருமணத்தின் பொருட்டு வேறு ஒரு பெண்ணைத் மணம் முடிக்குமாறு இளைஞன் வற்புறுத்தப்படல் என்பன போன்ற காரணங்களும் இருக்கலாம்.
இவற்றைக்கண்டுபிடித்தால் அந்தப் பிரச்சினை யைத் தீர்த்து அவர்களை இணைத்து வைக்கலாம். இவை இலகுவாகத் தீர்க்கப்படக் கூடியதாக இருக் காது. ஒருவரோ பலரோ சில விடயங்களுக்காக முரண்டு பிடிக்கக்கூடும். இலகுவாக விட்டுக் கொடுக் கும் இயல்பு எல்லோரிடமும் இருக்காது.
இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற் றோரோ, உறவினரோ நேரடியாக ஆணின் பெற்றோ ரிடம் செல்லும்போது பிரச்சினை தீர்க்க முடியாததாகி விடும். எனவே பொறுமையும் பரோபகார சிந்தனையு முள்ள மூன்றாமவர் ஒருவர் பிரச்சினையைத் தீர்க்க முற்பட வேண்டும்.
பெண் தாய்மையடைந்து விட்டாள் என்று அறிந்ததும் அந்தப் பெண்ணை தன் மகன் ஏற்றுக் கொள்ளவேண்டும் எனக் கருதும் பெற்றோரும் உண்டு. அதற்கும் இரங்காது தவறு பெண்ணுடையது என்று வாதாடுவோரும் உண்டு. இவர்களைச் சமாளித்து வெற்றி காண்பதில் அப்பெண்ணினதும் ஒரு குழந் தையினதும் எதிர்காலம் தங்கியுள்ளது.
நீயும் உங்கள் கிராம மகளிர் அபிவிருத்தி நிலைய உறுப்பினரும் முயன்று உன் தோழியின் மகளின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள்.
அன்புடன்
Gn.9
50

16
சிந்தி,
நீ உனது தோழியின் மகளுக்கு மணம்முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகள் பற்றி எழுதிய கடிதம் கிடைத்தது. உங்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். காதலன் மனம் முடிக்க மறுத்து, உன் முயற்சி வெற்றிபெறாவிட்டால் என்ன செய்வது? என்று வினா எழுப்பி வேதனைப்பட்டிருந்தாய்.
ஒன்றுமறியாத பிஞ்சுமகவொன்று வேதனைச்
சேற்றுள் அழுந்தப்போவதாக நீ எழுதியது முற்றிலும் 2 600ió0DLD.
இத்தகைய குழந்தைகளின் பிறப்பு நதிமூலம், ரிஷிமூலம் போன்று அறியப்படாது போகவேண்டும். தவறின் குழந்தையை அவப்பெயர் நிழல்போலத் தொடரும்.
ஒரு குழந்தைக்குத் தாய், தந்தையர் இல்லாது போக ஆயிரம் காரணங்கள் உண்டு. அத்தகைய ஏதோ ஒரு காரணத்தால் பெற்றோரை இழந்த குழந் தைகளோடு இக்குழந்தைகளும் கலந்து வளர வேண்டும்.
51

Page 31
(5ul IITV556 U6) IIIl 6 II IIIayetsieru
இந்தக் குழந்தைகளை வளர்ப்போரும் இவர் களைத் தத்தெடுத்து வளர்ப்போரும் இவர்களது பிறப்பைப் பற்றி அறிய வாய்ப்பிருக்கக்கூடாது.
எனவே, தொண்டு மனப்பான்மை கொண் டோர் இணைந்து இதனை ஒரு தொண்டாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
இதுமிக அவதானமாகக் கையாளப்பட வேண் டிய ஒன்றாகும். மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விடயம் தத்தமது சொந்த அறிவைப் பயன்படுத்தி உடனுக்குடன் நிலைமைக்கேற்றவாறு செயற்படக்கூடியவர்களால் கையாளப்படவேண்டிய ஒன்றாகும். ஒரு சிறு சொல்கூட மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
குழந்தையின் உண்மையான தாயின் மனம் மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும். தாய்மை மகிழ்வோடு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இவளைப் பொறுத்தவரை வேறுபட்ட ஒரு மனநிலையில் இருப்பாள். அவளின் மனம் இப்படித் தான் இருக்குமென்று கூறமுடியாது. வெறுப்போ, வேதனையோ, ஏக்கமோ எதுவாகவுமிருக்கலாம்.
அவளின் மனநிலை அறிந்து பக்குவமாகப் பழகி அவளது குழந்தையின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்க வேண்டும்.
குழந்தை தன்னுடையது என்று வளர்க்க விரும்பும் தாயுமிருக்கலாம். அவள் இந்த சமுதாயத் தில் தானும் பிள்ளையும் போடவேண்டிய எதிர்நீச் 52

உனக்கொன்றுரைப்பேன் சலைப் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். அவள் கைவிட்டவனுடன் சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் வரலாம், வராமலும் போகலாம். எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனோதிடம் அவளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
குழந்தை ஒருசுமை என்று கருதி அஞ்சினால், அவளிடமிருந்து குழந்தையைப் பிரித்து வேறு பெற் றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு மேற்குறித்தவாறு அவதானமாகக் கையாளப்பட வேண்டும்.
சிந்தி, ஒரு குழந்தை உருவாக ஆணுந்தான் காரணமாக இருக்கின்றான். ஆனால், பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அவனுக்கு ஏற்படுவதில்லை. தவறு எங்கிருக்கிறது? சிந்தி, சீற்றம் வருகிறதல்லவா?
★
c2ăz/ză, ઉદn.9
53

Page 32
17
சிந்தி,
உனது சென்ற கடிதத்தில் எமது தோழி நேசமலரின் மகள் ஜேர்மனி சென்றுவிட்டாளா? என விசாரித்திருந்தாய்,
சுமார் ஒரு வருடம் எட்டுமாதங்களின் பின் அவள் ஜேர்மனிக்குச் சென்று சேர்ந்துவிட்டாள். நேச மலர் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமாக அலைந்த அலைச்சலுக்கும் அவளது மனநிம்மதியின் மைக்கும் முடிவுவந்துவிட்டதாக நான் நினைத்தது தவ றாகப் போய்விட்டது.
மகள் சென்றதும் மருமகனுடன் சேர்ந்து ஆனந்த வாழ்க்கை நடத்துவதாகச் செய்தி வருமென நேசமலர் ஆவலோடு எதிர்பார்த்தாள். ஆனால், போய் மூன்று, நான்கு மாதங்களில் மகளின் கண்ணீர்க் கதை தான் வரத்தொடங்கியது.
நேசமலர் தேர்ந்தெடுத்த மருமகன் சிவராமனை
உனக்கும் தெரிந்திருக்கும்.பத்து, பதினைந்து வருடங் களுக்கு முன் அவன் பாடசாலை முடியும் நேரங்களில்
54

உனக்கொன்றுரைப்பேன் மாணவிகளின் வரவை எதிர்பார்த்து வீதியில் தவமிருப் பான். அவர்களைக் கண்டதும் தன்னை ஹிரோவாகக் கருதிக்கொண்டு அவன் பேசும் பேச்சுக்களும் கிண்டல் களும் சகிக்க முடியாதவையாக இருக்கும்.
சாதாரண தரத்திலே கூடச் சித்தியடைய முடியாத அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட் டார்கள்.
நேசமலர் இவனைத் தேர்ந்தெடுத்தபோதே நான் பழையவற்றை நினைவூட்டினேன். அவளும் மாப்பிள்ளை தேடுவதற்குப் படும்பாட்டையும் சீதனத் தின் உச்சநிலையையும் சுட்டிக்காட்டி அவனை மருமகனாக்கத் தீர்மானித்தாள்.
வெளிநாட்டுக்கு, அதுவும் மேலைத்தேசத்திற்கு நம்மவர்களைத் திருத்தும் திறமை இருப்பதாகக் கரு துவது தவறென்பது எம்மில் எவருக்குமே புரிவதில் லையே.
அங்கிருப்பவர்கள் அத்தேச கலாசாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இங்கேயே பண்பு தவறி நடப்போர் அதற்கு அங்கீகாரம் பெற அக் கலா, சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.
நமது மறக்கும் தன்மையும் வெளிநாட்டிலிருப்
போரின் மறைக்கும் திறமையும் நேசமலர் போன்றோர்
வேதனைகளை விலைக்கு வாங்கவைத்துவிடுகின்றன.
ஆம், சிவராமன் இங்கு எப்படியிருந்தானென்பதை
55

Page 33
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
நாம் மறந்து விட்டோம். அங்கிருப்போர் தாங்கள் ஓகோ என்று வாழ்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
சில நவீன வசதிகள் அங்கிருக்கலாம் மறுக்க வில்லை.ஆனால் நமது மண்ணின் மகிழ்வான வாழ்வும் சிறந்த கலாசாரமும் அங்கு கிடைக்காதென்பது எமக் குப் புரிவதில்லையே.
இங்கேயே ஒரு மேலைத்தேசத்தவனைக் கண் டால் காலில் விழவேண்டுமென்னும் அடிமை மனப் பான்மை எமக்கிருக்கிறது. அங்கு போனதும் காந்திஜி யாக மாறிவிடுவோமா என்ன?
சிவராமன் இரண்டு விவாகரத்துக்களின் பின் திருமணம் செய்துகொண்ட நேசமலரின் மகளையும் விவாகாரத்துச் செய்ய முடிவுசெய்து விட்டானாம். இது வரை கூட, போதையில் வாழும் அவனுடன் பெரும் வேதனையுடன் அவள் காலங்கழித்திருக்கிறாள்.
திருமணச் சந்தையில் மாப்பிள்ளை விலை உயர்வு என்பதற்காக இப்படி ஒரு திருமணம் செய்து வேதனைப்பட்டு மீண்டும் தனியாக வாழ ஆரம்பிப் பதில் என்ன பயன்?
சிந்தி, இது நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.
56

18
சிந்தி,
நேற்று வீதியிலே எனது கணவருடன் மோட் டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன். கண்மண் தெரியாமல் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த பையனொருவன் திடீரென வாகனத்தைத் திருப்பி வந்த பாதை வழியே செல்ல ஆரம்பித்தான். அவன் வீதியின் குறுக்கே திடீரென திரும்பியதனால் எனது கணவர் தடுமாற நேர்ந்துவிட்டது
அடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் சைக் கிளில் அருகருகாகச் சென்றுகொண்டிருந்தனர் அதைக் கண்டதுமே அவர் இந்தப் பெண் பிள்ளை களே இப்படித்தான். அவர்களுக்குக் கதைதான் முக்கி யம்" என்று ஏதேதோ கூறிக்கொண்டு இருக்கும் போதே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பையனின் தோளில் கைவைத்தவாறே சைக்கிளில் வந்தவன் முந்திக் கொண்டு சென்றான். அதைப் பார்த்துக் கொண்டே பெண்கள் சைக்கிள் ஓடுவது பற்றியே எனது கணவர் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்தார்.
57

Page 34
G3ug ITG3a56iub6Qrf afñ6Ir3ngTasmTaFrb
சிந்தி, ஏன் இப்படி? இத்தகைய தவறுகள்கூட பெண்கள் செய்தால் பெருந் தவறாகக் கருதப்பட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதைவிடப் பெரிய தவறை ஆண்கள் செய்தால் அது சிறு தவறு போல் தென்படுகிறது.
இதன் காரணம் எங்கள் அடிமனங்களில் இவை யெல்லாம் பெண்கள் செய்யக்கூடாதவை என்று ஒரு நீண்ட பட்டியல் பதிந்து கிடக்கிறது. அவற்றில் எதைச் செய்தாலும் ஒரு பெருந்தவறு செய்யப்பட்டதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
வீதியோரத்தில் பெண்பிள்ளைகள் கலகலப் பாக சிரித்து உரையாடிக்கொண்டு சென்றால் போதும் அதற்கே பெரிய தவறொன்று செய்யப்பட்டுவிட்டது போன்று குறைகூறத் தொடங்கி விடுவார்கள்.
எனது தாயார் ஏதோ நோயுற்று இருந்தவேளை, அவரை செருப்புப் போட்டு வீட்டினுள் உலாவுமாறு வைத்தியர் ஆலோசனை கூறியிருந்தார். அதனால் வீட்டிற்குள்ளும் ஒரு செருப்பை அம்மா உபயோகித் தார். இச்செருப்புக்கள் - வீட்டிற்குள் மட்டும் உப யோகிக்கப்பட்ட போதிலும் எனது பாட்டியால் அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் வருவோர் போவோரிடமெல்லாம் இதைப் பற்றியே குறை கூறிக் கொண்டு இருந்தது எனக்கு நினைவுக்கு வருகின்றது.
அப்படித்தான் பெண்கள் செய்யும் பலவற்றை இவர்கள் செய்யத்தகாததாகக் கருதுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
58

உனக்கொன்றுரைப்பேன்
பெண்களும் மனிதர்களே, மனிதர்களுக்குரிய உரிமைகளெல்லாம் அவர்களுக்குண்டு.
கண்தெரியாதவனைப் பார்க்க வைக்கவும், காலிழந்தவனை நடக்க வைக்கவும் இவ்வாறே பல் வேறு உறுப்புக்களை இழந்தவர்களுக்கும் அந்தக் குறையில்லாது செய்ய நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப் புக்கள் மூலம் முயலும் இக்காலத்தில் பெண்கள் செய்யக்கூடியவற்றை செய்யக்கூடாதென்று தடுத்து வைப்பது எவ்வளவு தவறானது?
"நாம் எதையும் தடுக்கவில்லையே" எனக் கூறிக் கொண்டாலும் செய்வது தவறு எனக் கூறுவதும், ஏளனஞ் செய்வதும் கூட இன்றும் அந்தப் பழைய எண் ணங்களின் பிடியிலிருந்து நாம் விடுபடவில்லையென் பதையே காட்டுகிறது.
வழிவழி வந்த வழமைகளை மாற்றி புதிய தொரு பழக்கத்தைக் கடைப்பிடிப்பது கஷ்டமான ஒன்றுதான். அதற்காகப் புதுமைகளைக் கடைப்பிடிக்க அடியோடு மறுக்கமுடியுமா என்ன?
நம்முன் நிற்கும் பாரிய பிரச்சினை இந்த மனமாற்றம்தான். இதனை ஏற்படுத்த நாமனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும். பலவகையான திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமே இதனை ஏற்படுத் தலாம்.
★
cetă/tă, GMS

Page 35
19
சிந்தி,
நேற்று சசிகலா எங்கள் வீட்டிற்கு வந்திருந தாள்.அவளுடன் உரையாடிய விடயம் பற்றி உனக்கு எழுதவேண்டும் என்று கருதியதால் இக் கடிதத்தை எழுதுகிறேன்.
சசிகலாவின் மகள் கராத்தே பழக விரும்பு கிறாளாம். அதற்கு அவளுடைய தந்தை அதாவது சசிகலாவின் கணவன் சம்மதிக்கவில்லையாம். தந் தைக்கும் மகளுக்குமிடையே முரண்பாடு தீர்ந்த பாடில்லையென அவள் கவலைப்பட்டாள்.
ஏன் அவர் காராத்தே பழக அநுமதிக்கவில் லையென விசாரித்தேன், "சற்று வாயாடியான பெண்" என்று பெயரெடுத்தாலே அந்தப் பெண்ணைத் திரு மணம் முடிக்க ஆண்பிள்ளைகள் மறுத்துவிடுகிறார் கள், 'கராத்தே பழகிய பெண்" என்றால் யாருமே மணஞ் செய்யமாட்டார்கள், ஆகையால் பழக வேண் டிாம்" என்பது அவரது விளக்கம்.
"இளம் பெண்கள் தனியாகப் போகும் போதும் தொல்லை தருகிறார்கள், ஜனநெரிச்ல்ல்ே போகும்
60 ܢ

உனக்கொன்றுரைப்பேன் போதும் படும்பாடுகள் சொல்ல முடியாதவை" என மகள் தன் அநுபவங்களைக் கூறுகிறாளாம்.
அந்தப் பிள்ளை கூறுவது முற்றிலும் உண்மை. இதுவும் ஒரு வகைப்பாலியல் துன்புறுத்தலே. இதற் குச் சட்டரீதியான தண்டனைகள் உள்ளன. எமது துணிச்சலின்மையால் அவை ஏடுகளில் உறங்கு கின்றன.
ஒரு பெண் இத்துன்புறுத்தல்களை வெளியே கூறினால் குற்றஞ் செய்தவனைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, அப்பெண்ணுக்கு இப்படி நடந்ததாம் என ஊர் வம்பு பேசத்தான் ஆரம்பிப்பார்கள், "இவன் இப்படி நடந்தானாம். ஒழுக்கங்கெட்டவனாக இருக் கிறானே" என குற்றஞ் செய்தவனைப் பற்றிக் கதைப் பதுகூடக் குறைவு. சட்டத்தில் எங்கு ஒட்டையிருக்கிற தெனக் கண்டுபிடித்து அவன் நழுவிவிடவுங்கூடும். இதனால் சகித்துக் கொண்டும் தவிர்த்துக் கொண்டும் பெண்கள் செல்வது வழமையாகிவிட்டது. பெரியவர் களாவது இவற்றைக் கண்டிக்க முற்படவேண்டும்.
பெரியவர்கள் கண்டிக்க வேண்டுமென்று கூறும்போது இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இளம் வயதினர் தான் என்று கூறிவிடமுடியாது. நடுத்தர வயதைத் தாண்டிய பலரும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
மற்றொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. சிற்றுார்தி ஒன்றிலே பயணஞ்செய்து கொண்டிருந் தேன். முன்னே நின்றுகொண்டிருந்த இளைஞன் எனக்
61

Page 36
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
குப் பின்புறமாக இருந்த யாரையோ அடிக்கடி பார்த் துக்கொண்டேயிருந்தான். அவனது பார்வை சாதாரண மாக இருக்கவில்லை. அதில் ஒரு தாபம் தெரிவதாக எனக்குத் தோன்றியது.
யாரைப் பார்க்கிறானென்று பார்ப்போமே என எண்ணி பின்னே திரும்பினேன். ஓர் இளம் பெண், அப்படியும் கூறமுடிடியாது சிறுமி போன்றுதான் அவ ளது தோற்றமிருந்தது. செயலோ..? அருகிலிருந்த பையனின் கையை மடிமீது வைத்து வருடிவருடி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், இப்போது அந்த இளைஞ னின் பார்வையிலிருந்தது கோபமா அல்லது தாபமா என நான் சந்தேகப்பட்டேன். அந்தக்காட்சி ஒருவனின் மனதைப் பொறுத்து எதையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
இதை ஏன் கூறுகின்றேனென்றால் பெண்களின் குறைகளும் இந்தக் குற்றங்களுக்குக் காரணமாகின் றன. பெண்களின் உடையலங்காரம், இத்தகைய செயல்கள் போன்றனவும் இக் குற்றங்களுக்குக் கார ணமாகின்றன என்பதை அவர்கள் உணரவேண்டும். அவற்றைத் தவிர்க்கவேண்டும்.
சசிகலாவின் மகள் "தற்பாதுகாப்புக்காகத் தான் கராத்தே பயில விரும்புகிறேன். கராத்தே பயின்றிருக்கிறேன் என்று தெரிந்தாலே பின்பு அதிகம் வாலாட்ட மாட்டார்கள். நானென்ன கணவனுடன் சண்டை பிடிக்கவா இதைப் பயிலப்போகின்றேன்?" என்று விவாதிக்கின்றாளாம்.
ஆண்கள் வலிமையானவர்கள் என்பது எமது கருத்து. ஆனால் எல்லா ஆண்களாலும் மனைவி 62

உனக்கொன்றுரைப்பேன் யையோ மகளையோ பிரச்சினைகளின் போது காப் பாற்ற முடியுமென்று கூறமுடியாது. இப்படியான சமுதாயத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள விரும்புவது தவறல்லவே.
யாரும் துணைக்கு இல்லாது தனியாக இருக்க வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் பெண் களுக்கு ஏற்படுகின்றன. தன்னால் தன் மனைவி யையோ மகளையோ காப்பாற்ற முடியும் என்று கருது வோரின் உறவுகளுக்குக் கூட அவர்கள் அருகிலில் லாத போது தற்பாதுகாப்புக்கலை பயன்படும்.
இன்று முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் வாசலில் நின்றால் அருகே போய் விபரங் கேட்கவே பயப்பட வேண்டியுள்ளது. திருடர்கள் பெருவிட் டார்கள். திருடுவதற்காக கொலையும் செய்கிறார்கள்.
இக்காலத்தில் ஆண், பெண் இருபாலாருமே தற்பாதுகாப்பிற்கான கலையொன்றைப் பயிலுவது அவசியம். பெண்களும் இதைப் பயிலுவதில் தவ றில்லையென்றே நான் கருதுகிறேன்.
ஒரு காலத்திலே உயர்கல்வி கற்ற பெண்ணை, உயர்பதவி வகிக்கும் பெண்ணை, வெளிநாடு சென்று வந்த பெண்ணை மணஞ்செய்யத் தயங்குவார்கள் என்று கூறி பெண்களின் முன்னேற்றம் தடுக்கப் பட்டது. இவை திருமணத்திற்கு இடையூறுகளல்ல. இன்று குடும்பம் நடத்த இருவர் சம்பாதிக்க வேண்டிய நிலையேற்றப்பட்டுள்ளதால் படித்து, பதவி வகிக்கும் பெண்தான் வேண்டும் என்று தேடித் திருமணம் செய் கிறார்கள். எனவே கராத்தே பயில்வது திருமணத்
63

Page 37
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் திற்கு தடையாக அமையாது என நான் விளக்க மளித்தேன்.
நாம் உரையாடியவற்றை அதுவரை மெளன மாக அவதானித்துக் கொண்டிருந்து விட்டு சசிகலா வின் மகள் என்ன கூறினாள் தெரியுமா?
"அப்பாவிடம் மில்லியன் கணக்கில் சீதனமிருந்
தால் இதைப் பற்றியும் சரி எதைப் பற்றியும் சரி எந்தப்
பிரச்சினையும் வராது. அப்படியில்லாததாலேதான் அவர் இவ்வளவு யோசிக்கின்றார்" என்றாள்.
★
அன்புடன்,

Ο Ο
சிந்தி,
உனது தோழி சங்கீதா முச்சக்கரவண்டி ஒட் டும் தொழிலைச் செய்ய விரும்புவதாக எழுதியி ருந்தாய். இதில் ஏதும் பிரச்சினை இருப்பதாக எனக் குத் தோன்றவில்லை.
சங்கீதாவின் அண்ணன் முச்சக்கரவண்டி ஒட்டும் தொழில் செய்து வந்தபொழுது இவளும் அதை ஒட்ட பயிற்சி பெற்றுவிட்டாள். ஒட்ட மட்டுமென்ன? அண்ண னோடு ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறாளே? திறமைசாலியாகவும் ஈடுபாடுள்ளவளாகவும் இருந் திருந்தால் அந்தத் தொழில் பற்றிய பல்வேறு விடயங் களையும் அவதானித்தும் கேட்டும் அறிந்து வைத் திருப்பாள். அதாவது ஓரளவு தொழிற்பயிற்சியும் பெற் றிருப்பாள்.
இப்போது அண்ணன் வெளிநாடு செல்லப் போகிறான். வீட்டில் இத்தொழிலைத் தொடர வேறு ஆண்கள் இல்லை. அண்ணன் சம்பாதித்து அனுப்பும் வரை பணத்தேவையும் இருக்கிறது. வண்டியை விற்று வாழ்க்கையை நடத்துவோம் என்று எண்ணாமல் அதை ஒட்டி வருமானம் பெற எண்ணுகிறாளே! அவளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
65

Page 38
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
இந்த சமுதாய அமைப்பில் எப்படி ஒரு பெண் முச்சக்கர வண்டி ஒட்டுவது? என எல்லோரும் அபிப் பிராயம் கூறுகிறார்களா? எல்லாத் தொழில்களுக்குமே இப்படித்தான் கூறினார்கள். அந்த அபிப்பிராயங்களை ஒரு காதால் கேட்டு மறு காதால் விடச்சொல். இன்று இங்கே பெண்கள் இதில் ஈடுபடவில்லை . அதுதான் இப்படிக் கூறுகிறார்கள்.
அவள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர லாம். எனவே தற்காப்பு பயிற்சி பெறுவது நல்லது என நீ கூறியதாகவும் எழுதியிருக்கிறாய். முச்சக் கரவண்டி ஒட்டுவது பெண் என்றால் எவ்வளவோ பிரச்சினை களை சமூகத்தில் எதிர்நோக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் நேரம், செல்ல வேண்டிய தூரங்கள், மக்களின் அணுகுமுறை, குடும்பப்பொறுப்பு, அதை விட இன்றுள்ள வீதித்தடை பரிசோதனைகள் என ஏரா ளம் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும் என்றும் எழுதியுள்ளாய்.
உண்மைதான். இவ்வளவையும் கடந்து உனது
தோழி, தனது அண்ணனின் முச்சக்கரவண்டி மூலம் தொழிலாற்ற நினைக்கிறாள் என்ால் அவள் வெற்றிப் படிகளை நோக்கிச் செல்கின்றாள் என்பதுதான் பொருள்.
இன்று பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போர்க்களத்திலே நின்று போரிடுகின்றனர். காவல் துறையில் பணிபுரிகின்றனர். இவ்வாறு பல துறை களிலும் திறமையுடன் பணியாற்றுகின்றனர். எனவே
66

உனக்கொன்றுரைப்பேன்
எம்மால் எதையும் செய்யமுடியும். அதற்கான துணிச்சலுடன் திறமையும் எம்மிடமிருக்கின்றன. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முச்சக்கரவண்டி ஒட்டு வது மட்டுமல்ல இது போன்ற நாம் கால் பதிக்காத பல துறைகளிலும் எம்மால் ஈடுபடமுடியும்.
இன்று யாழ்ப்பாணம் உள்ள சூழ்நிலை ஏற்ற தாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தாய். விதிக்கு வீதி நின்று பெண்களைக் கேலி செய்வதையே தொழிலாகக் கொண்டோரும் மதுபானம் அருந்திவிட்டு தரக் குறை வாக நடப்போரும் இருக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தி இந்நிலையை மாற்றினால் பெண்கள் துணிந்து எந்தவேலையையும் எவ்வேளையிலும் செய்யமுடியும். அப்படியொரு காலம் வரும் என எதிர் பார்ப்போம்.
அலை ஒயும் போது தலைமுழுகக் காத்திருப் பது' என ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல் அந் தக்காலம் வரும்வரை நாம் காத்திருக்கத் தேவை யில்லை என்றே நான் நினைக்கிறேன். முக்கியமாக உன் தோழிக்கு இப்போது குடும்பம் நடத்த சம்பாத் தியம் தேவை. அவள் இப்போதே தொழிலைத் தொடங்கியாக வேண்டும். அவளைக் காத்திருக்கச் சொல்லலாமா?
இதுவரை எல்லோரும் எதைச் செய்தார்களோ
அதே போன்றே நானும் செய்யவேண்டும் என்று எண்
ணுவதனாலேயே பல முட்டுக்கட்டைகள் இருப்பதாகத்
தோன்றுகிறது. அவள் முதன் முதலாகத் தொழிலைத்
67

Page 39
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
தொடங்கப் போகிறாள். அவள் போகப்போவது புதிய பாதை. அவள் நடப்பதனாலேதான் பலரும் அவளைப் பின்தொடர, அதன் மூலம் அந்தப்பாதை உருவாகப் போகிறது. நடைபாதையொன்றை முதலில் உருவாக் குபவள் வேகமாகச் செல்லமுடியாது. செல்லத் தேவையுமில்லை. நிதானமாக அடியெடுத்து வைப்பது தான் வழமை. அதுதான் நல்லதுங்கூட.
தன் புத்திக்கூர்மையை, சகதொழிலாளரின் உதவியை குடும்பத்தினரின் ஆலோசனையை, அவள் பயன்படுத்தலாம். ஏற்கனவே அண்ணனை வாடிக்கை யாக அழைத்தவர்கள்தான் அவளை அழைக்கப் போகி றார்கள். அவள் இருப்பது கிராமச் சூழலிலே தானே. நகரத்தில் போய் நின்றால் முன்பின் அறியாதவர்கள் வருவார்கள். இங்கு உறவும் அயலுமாகத்தானே இருக்கும். இப்படி கிராமத்தில் முச்சக்கரவண்டி வைத் திருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இருவர் ஒரே நேரத்தில் வண்டி தேவையென வந்தால் தனது உறவினராகவோ நண்பனாகவோவிருக்கும் மற்றொரு முச்சக்கரவண்டி ஒட்டுபவரை அவ்விருவரில் ஒருவ ருக்கு ஒழுங்கு செய்கிறார்கள். அவர்களிடையே அப் படியொரு பரஸ்பர புரிந்துணர்வு இருக்கும். சங்கீதா வும் அப்படியொருவரின் உதவியைப் பெறக்கூடிய தாகவே இருக்குமெனக் கருதுகிறேன். ஏற்கனவே அவளின் அண்ணனுக்கு உதவியவர்கள் இருப்பார்கள். சிக்கலான பிரயாணமாக இருக்கலாமென அவள் சந்தேகித்தால் அவரிடம் அப்பிரயாண வாய்ப்பைக் கொடுத்துவிடலாம். இப்படிப் பல வழிகள் உள்ளன. செயற்படும்போது அவற்றை நாமே கண்டுபிடிக்கலாம்.
68

உனக்கொன்றுரைப்பேன் தற்காப்புப் பயிற்சிபெற விரும்பினால் பெற
லாம். ஆனால் பயிற்சிபெற்றுத்தான் அவள் தொழிலை
ஆரம்பிக்கவேண்டுமென்று எண்ணக்கூடாது.
வீதியில் வரும் பிரச்சினைகள் ஈருருளி உந்து ருளி, ஆகியவற்றில் செல்லும் பெண்களுக்கும் ஏற்படு கின்றனதானே. அவர்கள் அவற்றை எதிர்கொள்கிறார் களல்லவா?
பலவற்றையும் கூறி சங்கீதாவைத் தடுத்து விடாதீர்கள். பெண்கள் விண்வெளியில் வலம் வரு கிறார்கள். நாங்கள் தான் எதையெதையோ எண்ணிப் பயப்படுகிறோம். சங்கீதாவிற்கு மட்டுமல்ல இப்படி புதிய துறைகளில் காலடிவைக்க எண்ணும் எல்லோ ருக்குமே ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்.
எமது கால்களில் நாம் நிற்கும்போது தான் சமூ கம் எங்களை மதிக்கும். நாம் விரும்பும் தொழிலொன் றைச் செய்யும்போதுதான் எம்மால் முன்னேற முடியும்.
உனது தோழி அந்தவகையில் சரியான முடி வைத்தான் எடுத்திருக்கின்றாள்.
★
ജ്ജ്/Lജ്,
G.S.
69

Page 40
  

Page 41
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
நேரத்தைத் தொலைக்காட்சி விழுங்கி விடுகிறதே. குடும்பத்தினருடன் குதுாகலமாக உரையாடக்கூட நேர மில்லாது செய்துவிடுகிறது. விருந்தினரைக்கூட உப சரிக்க மறந்துவிடுகிறோம்.
இதனாலேற்படும் விளைவுகள் பாரதூரமாக விருக்கும் என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும். நமது நேரத்தைச் சரிவர ஒதுக்கி அதன்படி வேலை செய்வதில் வாழ்க்கையின் வெற்றியே தங்கியிருக் கிறது. எமது வீட்டு வேலைகள், பணியகவேலைகள், என்பவற்றோடு குடும்பத்தினருடன் மனம்விட்டு உரை யாடுவது, அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்காக நேரத்தைச் செலவிடுவது, எமது மனதிற்கு மகிழ்ச்சிதரும் விடயத்திலீடுபடுவது என்பன போன்ற எல்லாவற்றிற்கும் நேரத்தை ஒதுக்கவேண்டும். நேர முகாமைத்துவம் முக்கியமான ஒன்று.
அதை விட்டுவிட்டு தொலைக்காட்சியிலோ பக்கத்து வீடுகளுக்குச் சென்று அரட்டையடிப்பதிலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுவது வாழ்க்கைக்கு ஆரோக்கிய LDIT60ig566).
ஒரு குழந்தை வளர்க்கப்படும் முறையால் அதன் குணநலன் உருவாகிறதல்லவா? அது நெருங் கிப் பழகுபவரது பண்புகள் அதிலே படிகின்றனவல் லவா? அதேபோன்று திரையில் வரும் பாத்திரங்களும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் தம் பால் ஈர்ந்து அவர்களது மனங்களைப் பாதிக்கின்றன.
572

உனக்கொன்றுரைப்பேன்
நல்லவை பதிந்தால் நல்லது. அல்லவை பதிந்தால் வேண்டத்தகாத பாதிப்புக்களல்லவா ஏற்படுகின்றன.
பெண்கள்தான் பெரும்பாலும் பார்ப்பதாக எண்ணுவதாலோ என்னவோ பெரும்பாலான தொலைக் காட்சித் தொடர்கள் கதையை அவர்களைச் சுற்றியே பின்னுகின்றன. அதுவும் வருடக்கணக்கில் நாடோறும் காட்சிதருகின்றன. இதனால் அந்தப் பாத்திரங்கள் பார்ப்பவரின் மனங்களை மிகவும் பாதிக்கின்றன. இது பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாக இருக்கும் ஒன்றாக அமைந்தால் அது எதிர்காலச் சமுகத்தையே தடுமாறச் செய்துவிடும். இந்தத் தொடர் களிலே பெரும்பாலானவை அப்படித்தானிருக்கின்றன. உதாரணமாக ஓர்ஆண் இரண்டு பெண்களை மணந்து கொள்வது பெரும்பாலான தொடர்களில் வருகிறது. எமது இன்றைய சமூகத்தில் எங்கோ ஒருவர் தான் அப்படியிருக்கிறார். இதைப் பார்க்கும் நாளைய சமூகம் மாறிவிட்டால்.
எனவே இரண்டு விடயங்கள் நடைபெற வேண் டும். ஒன்று இக்கதைகள் மாற்றப்படவேண்டும். முன் னேற்றமான கருத்துகள் கொண்டவையாக அவை இருக்கவேண்டும்.அத்துடன் இத்தொடர்கள் தொலைக் காட்சியையே ஆக்கிரமிக்கக் கூடாது. விளம்பரதாரர் ஓர் இசை நிகழ்ச்சியையோ, அறிவியல் நிகழ்ச்சி யையோ, இலக்கியந் தொடர்பான நிகழ்ச்சியையோ கூட அளிக்கலாமே. இது எமது நாட்டுக் கலைஞர்க ளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்க
73

Page 42
GuIII(356io6 is fashmirinyesirefith
ளையும் ஊக்குவிக்குமே. எத்தனையோ இளம் திறமை சாலிகளை முன்னேற்ற உதவுமே.
இரண்டாவது நாம் நம்மைக் கட்டுப்படுத்தி, இந்நிகழ்ச்சிகளினுள்ளே மூழ்காமல், தெரிந்தெடுத்த நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பது. இது ஒன்றும் கடினமல்ல. ஒரு நிகழ்ச்சியை இரண்டு மூன்று முறை தொடர்ந்து பார்த்துவர அது எத்தகையது என எம்மால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்.தொடர் நாடகமாக விருந்தால் அடுத்த நிகழ்ச்சியை எதிர்பார்க்கத் துரண் டும் வகையில் நிகழ்ச்சி முடிவுறும், அந்த முடிவு அந்த நாடகத்தைத் தொடர்ந்து பார்க்குமாறு எம்மை ஈர்க் கும். அதற்குள்ளே சிக்காது நாம் பயன்பெறக்கூடிய தரமான நிகழ்ச்சியா என்பதை எமக்குள்ளேயே ஆய்வு செய்து அதனைப் பார்க்க வேண்டும் என்பதை எல் லோருமே கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் எமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மறுசீரமைக்கப்படவேண்டுமென்பதை சம்பந்தப்பட்ட வர்கள் கவனத்திலெடுக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.
★
அன்புடன், GJA.9
74

29).
சிந்தி,
நேற்று நிரஞ்சனா வீட்டிற்கு வந்திருந்தாள். தன் கவலைகளை என்னிடம் கொட்டித் தீர்ப்பதற்காக வந்ததாகக் கூறி அழுது தீர்த்தாள். அவளது விட்டிற்குச் சென்று நிலைமையைச் சீர்செய்ய முயலவேண்டுமென தீர்மானித்திருக்கிறேன்.
அவளுடைய மாமியார் அவளிடம் எதற்கும் குறைகண்டு குற்றஞ் சொல்கிறாளாம். நிரஞ்சனாவின் கணவனின் நிலை மேலும் மோசமாகவிருக்குமென்று ஊகித்தேன். மொத்தத்தில் அவளுடைய வீடு நிம் மதியையிழந்து கிடக்கிறது. என்ன காரணம் என்று சிந்தித்தபோது உனக்குக் கடிதம் எழுதும் எண்ணமும் உதித்தது.
'என்னுடையது' என்ற பற்றும், 'என் உறவு'
என்னும் பாசமும் எம்மை மிகவும் பாதிப்பவை. இல்
லையா? "என்னுடைய மகள்', எனது சகோதரி என்ற
பாசம் அவர்களது நிறைகளை அதிகமாகவும் குறைக
ளைக் குறைவாகவும் எமக்குக் காட்டுகின்றன. எமது
75

Page 43
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
உறவுகள் செய்யும் பிழைகளை இந்தப் பாசம் எமது கண்களுக்குத் தெரியாமல் செய்துவிடுகிறது.
அதிலும் வேடிக்கையென்னவென்றால் மற்ற வர்களுடன் ஒப்பிடும்போது சகோதரர்களின் பிள் ளைகள் சிறப்பாகத் தெரிவார்கள். ஆனால் அவர்க ளைத் தனது பிள்ளைகளுடன் ஒப்புநோக்க நேரிடின் தன் பிள்ளைகளே விசேடமாகத் தோற்றுவார்கள்.
மனிதனுக்கு இயல்பாகவுள்ள இந்தக் குணத் தினாலே பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. உலகில் தலைகாட்டியவை, நாடுகளில் நிகழ்ந்தவை என்ப வற்றை விட்டுவிட்டு எங்கள் வீடுகளில் நடப்பவற்றைப் பார்த்தால் அவற்றுள் ஒன்று தனதுதுணைவன் அல்லது துணைவியின் உறவுகளை நேசிக்கும் வேறுபாட்டால் வரும் பிரச்சினையாகும். இதனால் ஒன்றல்ல பல பிரச்சினைகள் தலைதுாக்குகின்றன என்றே கூற வேண்டும்.
தனது தாய், தந்தை, சகோதரர்கள், ஏனைய உறவினர்களில் காட்டும் அதே அன்பை, தனது கணவன். அல்லது மனைவியின் தாய், தந்தை,சகோத ரர்கள் அவரது உறவினர்களில் காட்டமுடியாது.
இல்லை. நான் அப்படிப்பட்டவர்களல்ல' என நீ கூட நினைக்கலாம். ஆனால் அதை மூன்றாமவர் அவ தானித்துக் கூறவேண்டும். நேற்று முதல் நான் பலவற்றையும் சிந்தித்து, சுயபரிசீலனையில் ஈடுபட்டு, மனதில் தோன்றியவற்றைத்தான் இங்கு எழுதுகிறேன். தவறானால் அடுத்த கடிதத்தில் சுட்டிக்காட்டு.
76

உனக்கொன்றுரைப்பேன் நான் இதை எழுதுவது நான் தவறு செய்ய வில்லை' என நீ நினைப்பதற்காகவோ வாதாடுவதற் காகவோ அல்ல. நானும் தவறுசெய்து கொண்டிருக் கின்றேனோ?" என்று சிந்திக்க வைப்பதற்காகவே. எனவே நாம் காட்டும் அன்பைப் பற்றி நமக்குள்ளேயே சிறிது ஆராய்வது நல்லது.
மாமி, மருமகள் பிரச்சினை, நாத்தனார் சண்டை எல்லாம் ஏற்பட இதுவும் ஓர் அடிப்படைக் காரணம். தலைமுறை இடைவெளி, மாறுபட்ட வெவ்வேறு விட யங்களில் ஈடுபடாமல் மருமகள் செய்வது பற்றிய எண் னங்களில் மட்டுமோ, மாமியார் செய்யும் காரியங்கள் குறித்த நினைவுகளுடன் மட்டுமோ இருப்பது போன்ற வேறு காரணங்களும் இதற்கு உள்ளன.
அதாவது வெளியே வேறு தொழில்களில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தால் குறைகள் காண நேரமிருக்காது. ஆனால் இத்தகைய இடங்களில் வேலைச்சுமை பகிரப்படாவிட்டால் மன அழுத்தத்தின் காரணமாக கோபம், வெறுப்பு என்பன தோன்றவுமிட மிருக்கிறது.
மாமி தன் மருமகளை மகள் போன்று கருத வேண்டும். அவள் மறு மகள். மருமகள் மாமியைத் தாயாக நினைக்க வேண்டும். புதிய உறவுகள் பழ கும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. வீட்டிற்கு வீடு பழக்கவழக்கங்கள் வேறுபடும். அதே வீட்டில் வளர்ந்த பெண்போல மற்றவளால் நடந்துகொள்ள முடியாது. குணநலன்களை எடுத்த எடுப்பில் புரிந்து கொள்ள வியலாது. படிப்படியாகத்தான் புரிந்துகொள்ள முடி யும். விருப்பு வெறுப்புகளும் அப்படியே.
77

Page 44
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
நாம் நினைப்பதைப் போலத்தான் மற்றவர்கள் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. தலை முறை இடைவெளி இருக்கும். பழமையை மதிக்கவும் புதுமையை விரும்பவும் மனங்களைப் பக்குவப்படுத் திக் கொள்ளவேண்டும்.
இதுவரை நடந்துவந்த வீட்டு நடைமுறைகள் மாறலாம். அதற்கு விட்டுக்கொடுத்து நடக்கவேண்டும். சிந்தித்துப் பார்த்து நல்லவற்றை ஏற்கவேண்டும். வேறொன்றுதான் நல்லதென்றால் ஆறஅமர அது பற்றி உரையாடி மாற்ற முயலலாம்.
ஒரு பிள்ளை தவறு செய்யும்போது தாய் அடித் தால் அதைப் பிள்ளை பெரிதுபடுத்துவதில்லை. சிற்றன்னை அடித்தால் 'அம்மா என்றால் இப்படி அடித் திருக்கமாட்டாள். என்று பிள்ளை நினைத்துக் கோப மடையும். மற்றவர்களும் சிற்றன்னை அப்பிள்ளை யைக் கொடுமைப்படுத்துவதாகச் சொல்வார்கள். தாயி ருந்திருந்தால் அந்தப் பிழைக்கு அவ்வாறுதான் அடித் திருப்பாள். ஆனால் அப்படி எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
இதே போன்ற மனநிலையிலேதான் மாமியார் செய்வதை மருமகளும் மருமகள் செய்வதை மாமி யாரும் பார்க்கின்றனர்.
நாம் நினைப்பது சரியென்று நமக்குத் தோன் றும். நமது செயல்களும் நினைவுகளும் சரிதானா என மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறு எம்மிலும் இருக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் எமது குடும்பத்தில் உருவாகும் பல பிரச்சினைகளை யும் தகராறுகளையும் தவிர்க்கலாம். முக்கியமாக நமது நிம்மதி நிலைத்திருக்கும்.
78

உனக்கொன்றுரைப்பேன் மற்றவர்களுடைய எண்ணங்களிலும் செயல்க ளிலும் பல நல்ல தன்மைகளிருக்கும். அவற்றை நாம் பின்பற்றினால் நமக்கு நன்மை தானே. பத்திரிகை களில் வருவதையும் தோழிகள் சொல்வதையும் செயற்படுத்த எண்ணும் நாம் தம் வீட்டினர் சொல்வதை ஏற்கக் கூடாதா? அவர்களில் குறைகளையும் தவறுக ளையும் மட்டுமே காண்பது சரியா? ஒருவரிடம் நல்ல தும் தீயதும் கலந்து தானே இருக்கும்? எனவே எங்க ளில் தீயதுமிருக்கும். மற்றவரில் நல்லதுமிருக்கும்.
எங்கள் அம்மாவோ அல்லது மகளோ செய்த தவறுகளை நாம் எப்படிப் பொறுத்துக் கொண்டோ மென்று நினைவிற்குக் கொண்டு வரவேண்டும். அவற்றை நாம் எப்போதோ மறந்துமிருப்போம். இவர் கள் செய்வதை மட்டும் ஏன் பொறுக்க முடியாது? ஏன் நினைத்து நினைத்து வேதனைப்படவேண்டும்?
மனிதர்கள் எல்லோரும் தவறு செய்பவர்களே. இதேபோன்ற தவறை நாமும் செய்திருப்போம். ஒருவர் மீது கோபம் ஏற்படும் போதோ, அவர் செய்தது தவறு என்று எண்ணும்போதோ எமக்குள்ளேயே ஓர் ஆய்வு செய்யவேண்டும். "பாரபட்சமற்ற பாசத்தைக் காட்ட நாம் படிப்படியாகப் பழகவேண்டும். இது கைவர சற்று முயற்சி தேவை.
இவற்றையெல்லாம் நிரஞ்சனாவிற்கும் மாமிக் கும் புரியவைக்க வேண்டும். பிரசங்கம் செய்து வெற்றி பெற முடியாது. உணரவைக்க வேறு வழிதேடுகிறேன்.
★ அன்புடன், G.M.S.
79

Page 45
Ο3
சிந்தி,
எனது கடிதத்தைப் பார்த்த உன் தோழிகள் எமது பிரதேசத்தில் பெண்கள் கணவனின் வீட்டிற்குப் போய் கூட்டுக் குடும்பமாக வாழ்வது குறைவென்று கூறியதாக நீ எழுதியிருந்தாய்.
இருப்பினும் இங்கும் இந்தப் பிரச்சினை உள் ளதை மறுக்க முடியாது, கணவனுடைய உறவுகளு டன் சேர்ந்து வாழும் பெண்கள் பலர் இங்கும் உள் ளனர். அத்துடன் நான் குறித்திருந்த உறவு முறை களை மாற்றியமைத்தும் அக்கடிதத்தை வாசிக் கலாமே. மாமி மருமகன், மாமா மருமகன் என்றும் அந்த உறவுமுறைகளை மாற்றிப் பார்க்கலாம்.
அங்கே மாமியார் மருமகள் கொண்டுவந்த சீர் போதாதென்றால் இங்கே மருமகன் மாமாவோ மாமியோ செய்த சீர்வரிசை போதாதென்பார்.
உனது கடிதத்தைப் பார்த்ததும் நான் கேட்ட
சொற்பொழிவொன்று நினைவிற்கு வருகிறது. பேச்
சாளர் யாழ்ப்பாணத்திலே பெண்ணுக்குச் சீதனமாக 80

உனக்கொன்றுரைப்பேன்
வீடு கொடுப்பதால் அவள் பெற்றோருடன் அதே சூழலிலே வாழ்கின்றாள். அதனால் அவளுக்குப் பிரச்சினைகள் இல்லையென்று கூறினார்.
அப்படியென்று கூறிவிடமுடியாது. பிரச்சினை மேற்சொன்னது போன்று மாறுபடும், பெற்றோருக்கும் கணவனுக்குமிடையே அகப்பட்டு அல்லற்படுவது துன் பமில்லையா? பெண்ணையும் பொருளையும் மற்றொரு வனுக்குக் கொடுத்தாலும் அவற்றை விற்றுவிட்ட உணர்வு பெற்றோருக்கு ஏற்படாது. அவர்களுக்கு பெண்ணிலும் பாசமிருக்கும். பொருளிலும் பற்றிருக் கும். மருமகனோ அவை தனக்குரியதென நினைப் பான் இதனாலும் பிரச்சினைகள் ஏற்படும். மாமன், மாமி அந்த வீட்டிலிருக்கக்கூடாதென துரத்தி விடு பவர்கள் பலரிருக்கிறார்களே. அப்போது பெண்ணின் மனம் எவ்வளவு வேதனையுறும்.
எந்த வீட்டிலிருந்தாலும் சீதனம் போதாதென்ற பிரச்சினை இருக்கவே செய்யும். விடுமட்டுமல்ல ஏனைய வசதிகளும் பாலியல் சமத்துவமின்மையால் அவள் பாதிக்கப்படுவதை மாற்றாது.
அதே பேச்சாளர் மற்றொன்றையும் கூறினார், பெண்கள் செய்யும் உணவு தயாரித்தல், உடை துவைத்தல் முதலான வேலைகளுக்கு உபயோகிக்க நல்ல உபகரணங்கள் இல்லாதிருப்பது அவள் அச் செயல்களை கஷ்டமின்றி சிறப்பாகச் செய்யமுடியா மற் செய்துவிடுகின்றது. இதனால் கணவன் கோப முறுகிறான். உதாரணமாக உணவுப்பொருட்களை
8

Page 46
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
வெட்டுவதற்கு கூரான கத்தியின்மை, விறகு அடுப்பு, அதற்கும் எரிக்கவியலாத பச்சை விறகு, இவை போன்றவற்றால் மனைவி குறித்த நேரத்திற்கு சுவை யான உணவைத் தயாரிக்க முடியாது போவதால் கணவன், மனைவியிடையே சண்டை நடப்பதாக அவர் கூறினார்.
இப்படி ஒரு பெண் கஷ்டப்படுவதைக் கண்டும் புரிந்துணர்வின்றி கணவன் கோபப்படுவதே தவறு. அதைவிட இப்படி அவன் கோபப்பட என்ன காரணம்? எல்லாவசதிகளுடனும் வாழ்க்கை நடத்தும் பெண் னின் மேலும் தேவையற்று கணவன் கோபப்படு கிறான். இவற்றிற்குக் காரணம் மனதில் ஆழப்பதிந்து கிடக்கும் எண்ணங்க்ள்தான். பெண் இப்படித்தான் இருக்கவேண்டும். இவற்றைச் செய்யக்கூடாது, இவை யெல்லாம் அவளது கடமைகள், எனப் பட்டியலிட்டு மனதில் பதித்துவைத்திருக்கிறோம். அதிலிருந்து விடு பட முடியாததாலேதான் பெண் பாதிக்கப்படுகிறாள்.
பெண்ணைப் பணியகத்தில் பணிசெய்ய அனு மதித்தவர்கள், வீட்டுவேலைகளையும் அவள்தான் செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஒரு பெண் ணுக்கு உதவியாக வீட்டுவேலைகளைச் செய்யும் கணவனையோ, மகனையோ, சகோதரனையோ நண் பர்கள் கேலிசெய்கிறார்கள். இந்தநிலை முன்னரை விட மாறியிருந்தாலும் இருபது சதவீதங்கூட மாறவில் லையென்றே நினைக்கிறேன்.
1)

உனக்கொன்றுரைப்பேன் "நான் ஆண். எனக்குமுன்னுரிமை தரவேண்டும். என்னுடைய எண்ணங்களே வீட்டில் நிறை வேற்றப் படவேண்டும். என்னுடைய அனுமதியுடனேயே எதுவும் செய்யவேண்டும்." என்ற எண்ணம் எல்லா ஆண்க ளிடமும் இன்றுமிருக்கிறது.
ஒருபெண் சம்பாதிக்கிறாளென்று வைத்துக் கொள்வோம், அவளது பெற்றோரை கணவனுக்குக் கண்ணிலேயே காட்டக்கூடாது. இந்த நிலையில் தன் னைப் பெற்று, வளர்த்து,படிக்கவைத்து,தொழில்தேடித் தந்த பெற்றோருக்கு அப்பெண் ஒரு சிறு பொருளை வாங்கிக் கொடுத்தாலும் பெரிய பிரச்சினைக்கு உள் ளாகிறாள்,
ஓர் ஆண் தன் பெற்றோரை மனைவி வெறுத் தாலும் அவர்களுக்கு உதவுகிறான். அவ்வப்போது அவள் கோவிக்கவும் கொதிக்கவுஞ் செய்வாள்.ஆனால் அவன் "நான் செய்வதை இவள் கேட்க முடியாது" என்ற தோரணையில் நடந்துகொள்வான். இந்த வேறு பாட்டைத்தான் நான் மாற்றவேண்டு மென்கிறேன்.
இது வளரும், வாழும் சூழலால் மனதில் பதி வாகிறது. மாற்றம் அங்கு நிகழவேண்டும். ஆனால் குழந்தையை வளர்க்கும் எங்களிடமே ஆண் இப்படி வளரவேண்டும். பெண் இப்படி வளரவேண்டும் என்ற மனப்பதிவு இருப்பதால் குழந்தைகளை அப்படி வளர்க்கிறோம். சிறுமி யொருத்தி மரத்தில் ஏறினால் "நீ பெண்பிள்ளை. மரத்தில் ஏறக்கூடாது" என்கி றோம்.விளையாட்டுக்களையே வேறுபடுத்திக் கொடுக் கிறோம். பெண் குழந்தைக்கு அணிகலன்களை வித
83

Page 47
vuuuluvuvuVul vuuluyuuluu
விதமாகச் செய்து போடுகிறோம். "என் பெண்ணுக்குத் தான் இந்த நகைகளெல்லாம் தருவேன்" என ஆசை பூட்டுகிறோம்.
இவையெல்லாம் மாற்றப்படவேண்டும். அந்த மாற்றம் ஏற்படும்போதுதான் இந்தப் பாகுபாடும் ஒழியும்.
மகளிர் முன்னேற்றம் என்று ஒரு சாதாரண கூட்டம் நடக்கும் போதுகூட அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்று பெண்களே பேசு கிறார்கள் பெரியவர்களும் பேசுகிறார்கள். ஏன் எம் மால் எமது நிலையைப் புரிந்துகொள்ள முடிய வில்லை? இது எனது மிகப்பெரிய மனக்குறை.
வீட்டிலே அப்பா கூறியபடி நடந்து, கணவனின் கருத்துக்களுக்கு விட்டுக்கொடுத்து, பழக்கப்பட்ட இயல்பு தொழில்புரியும் இடத்திலே தலைநீட்டி நிற் கிறதே. வருகிற வேலைகளைச் செய்து முடித்து விட் டுப் போகும் பணியகத்தில் தொழில் செய்தால் பர வாயில்லை. மற்றவர்களுடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய தொழில்கள் பல இருக்கின்றனவே. அவற் றில் நாம் ஈடுபடும் போது பெண்ணாக வளர்க்கப் பட்டவளால் எதிர்நீச்சல் போடுவது கடினம். உள்ளே ஊறிவிட்ட இயல்பு எம்மை வலையாகச் சுற்றி மேலெழும்ப விடாது தடுக்கும்.
"பெண்களால் இயலாது இயலாது" எனக்கூறி பின் தள்ளவும் சிலர் இருப்பார்கள். அந்த முட்டுக் கட்டைகளும் ஒரு புறம் முடக்கும்.
84

உனக்கொன்றுரைப்பேன்
"இந்த வீட்டுவேலைகளெல்லாம் நீதானே பார்க்கவேண்டும்" என்ற மனப்பாங்கு மறுபுறம் தலை நிமிர்வதைத் தடுக்கும். ஓர் ஆண் தன் பணியில் முன்னேற வேண்டியவற்றைச் செய்யும் போது, அது கல்வியாக இருக்கலாம், சில செயற்பாடுகளாக இருக் கலாம், அதில் முழுமையாக ஈடுபடுவதற்குத் தேவை யான அளவு உதவி, ஒத்தாசைகளும் ஊக்கமும் வீட்டிலே கிடைக்கும். பெண்ணென்றால் அப்படி எதிர் பார்க்க முடியாது. அவள் தனது கடமைகள் என விதிக் கப்பட்டவற்றையும் நிறைவேற்றி அத்துடன் தான் தொழில் முன்னேற்றத்தையும் கவனிக்க வேண்டும்.
சிலர் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். அவர் கள் முன்னேறியும் உள்ளனர். திருமணமாகாத பெண் கள் அதிகமாக முன்னேறுவதற்கு இதுவும் ஒரு காரணம். முன்பு நல்ல பதவிகளிலிருந்த பலர் திரு மணமாகாதவர்கள் என்பது எனது கணிப்பீடு. இப் போது அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது. எனினும் உயர்கல்வி, திருமணமாகும் வரையான தொழில் முன்னேற்றம் என்பவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திருமணத்தின் பின் அவளது வளர்ச்சி தடைப் படவே செய்கிறது.
இதை முதலிலே மனதளவில் ஒப்புக்கொள்ள
வேண்டும். நமது மனபபதிவுகள் மாறினால் எதிர்கால சந்ததியை மாற்றலாம்.
★
அன்புடன்
G.M.S.
85

Page 48
94.
சிந்தி,
கூட்டங்களில் பேச்சாளர் பேசியவை பற்றி நானெழுத உனது கடிதமும் அவை பற்றியே அமைந்துவிட்டது. பேசுபவர்களின் பேச்சு எம்மைச் சிந்திக்க வைக்கும் வகையில் அமையவேண்டுமென்று கூறி உன்னைச் சிந்திக்க வைத்தவர்கள் பற்றியும் எழுதியிருந்தாய்.
அதை வாசித்ததும் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் பேச்சொன்று எனது நினைவிற்கு வந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் சீமாட்டி லீலாவதி இராமநாதனின் நினைவுப்பேருரையொன்றை 2002இல் அவர் நிகழ்த்தினார்.
இன்று பெண்கள் திறமையைப் புகழவும், பண்டைக்காலம் முதல் பெண்கள் முதன்மைப் படுத்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கவும் பலரும் எடுத்துக்காட்டுவது ஒளவையாரையும் காரைக்காலம் மையாரையுமே.
ஒளவையார் திருமணம் செய்ய விரும்பாது விநாயகரின் அருளால் வயோதிப உருப் பெற்றதாக
86

உனக்கொன்றுரைப்பேன் ஒரு கதை புனிதவதியார் இறையருளால் பேயுருப் பெற்றவர் என்பது மற்றொரு கதை.
பெண்களின் திறமையைப் பேச ஓரிருவர் தானிருக்கிறார்களா? இவர்கள் மட்டுந்தான் இருந்தார் 56nn? இவர்களைவிட வேறெவரும் இல்லையா? பெண்கள் கற்று புலமைபெறும் நிலையிருந்தால் ஏன் பலர் இவர்களைப்போல் பாடல்கள் பாடவில்லை? அப்படிப் பாடப்பட்ட இலக்கியங்கள் அழிக்கப்பட்டு விட்டனவா? இப்படியெல்லாம் நான் சிந்தித்திருக்கி றேன். இவை பற்றிய ஆய்வுகள் இருக்கக்கூடும். நான் வாசிக்க என் கைக்குக் கிட்டவில்லை.
சித்திரலேகா அவர்கள் அன்று பேசியது என்னை மேலும் சிந்திக்க வைத்துவிட்டது.
ஒரு சாதாரண பெண், புலவராகவோ ஆன்மீக வாதியாகவோ துறவியாகவோ இருந்தாள் என்ற வரலாறு இருப்பதையே பிற்காலத்தவர் விரும்ப வில்லை. அதனாலேயே ஒளவையை ஒரு வயோதிபப் பெண்ணாக உருவகித்துவிட்டனர். புனிதவதியாருக்கு பேயுரு கொடுத்துவிட்டனர். என அவர் கூறியது சரிதான் என எனக்கும் தோன்றியது.
ஒளவை இயற்றியதாக சங்கப் பாடல்களும்
உள்ளன. ஒரே பெயருடைய வெவ்வேறு புலவர்களும்
இருந்திருக்கலாம் என்ற ஆய்வுகளும் உள்ளன.
சங்ககாலத்தில் வேறு பெண் புலவர்களும் இருந்திருக்
கின்றனர். இவர்கள் பற்றியோ ஒளவையின் சங்கப்
87

Page 49
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
பாடல்கள் பற்றியோ பெரிதாக எடுத்துப் பேசப்படு வதில்லை. எம்மால் புகழப்படும் பழங்காலத்திலிருந்த ஒளவை இறைவனால் அருளப்பட்ட வயோதிப உரு வோடு வாழந்தவள் என்பதுதான் எமக்குத் தெரிந்த கதை. உருவும் திறமையும் கணபதியால் அருளப் பட்டவை என எம்மை எண்ண வைத்துவிட்டார்கள்.
இந்த அறிவும், புலமையும், ஆளுமையும் கொண்ட ஒளவை சிறுமியாக இருந்தபோது எவ்வளவு சுட்டியாக இருந்திருப்பாள்? இளமைப் பருவத்தை அவள் கடந்திருக்கமாட்டாளா? அவளுடைய பாடல் களிலே வாழ்க்கை அனுபவம் பொதிந்து கிடக்கிறதே. அகநானூற்றுப் பாடல்கள் எழுதிய - காதல் பற்றிப் பேசிய அந்த இளம் ஒளவை மறைக்கப்பட்டு விட் டாளா? இது பெண்கள் முன்னேறவிடாது தடுப்பதற் கான ஒரு சதியோ? அல்லது அவர்களது திறமை மீது ஏற்பட்ட பொறாமை காரணமோ?
ஒளவையையும் புனிதவதியாரையும் முன்னு தாரணங்களாகக் கொண்டு முன்னேறும் எண்ணம் பெண்களுக்கு ஏற்படாதுபோகச் செய்யும் வகையில் அவர்களைப் பற்றிய கதைகள் அமைந்துவிட்டன. முதுமை வரமுன் பெண்கள் தம் திறமையை மன்னரின் அவையிலும் மற்றும் முக்கிய இடங்களிலும் வெளிப் படுத்தவியலாது" என்ற எண்ணத்தையும் கல்வியால் வந்த அறிவல்ல அது. இறையருளால் வந்த புலமை. எமக்கும் இறைவன் வந்து அருள் செய்தால்தான் இத் தகைய திறமை சித்திக்கும்' என்ற மனப்பதிவையும் இக் கதைகள் ஏற்படுத்துகின்றன.
88

உனக்கொன்றுரைப்பேன்
ஒளவை சாதாரண குடிசையிலிருந்து மன்னரின் மாளிகை வரை சுற்றி வருகிறாள். அரசசபையிலும், யுத்தம் ஆரம்பமாகும் நிலையிலும் சாதுரியமாகப் பேசி நீதிநெறியை எடுத்துக்சுறி அவர்கள் தன் கருத்தைக் கேட்டு நடக்கச் செய்திருக்கிறாள். அவளு டைய ஆக்கங்களுள் பொதிந்துள்ளவை பொக்கிஷங் களல்லவா?
அவளது கருத்துக்களைக் கேட்டு அதன்படி ஒழுகி உலகமே முன்னேறுகிறது. அவளை முன்னு தாரணமாக்கி முன்னேறும் பேற்றினை பிற்காலப் பெண்கள் இழந்தது எவ்வளவு துரதிர்ஷ்டம்? அவரு டைய பேச்சு என்னை இவ்வாறெல்லாம் சிந்திக்கச் செய்தது.
cexøyu-øst, ઉદn.9
89

Page 50
25
சிந்தி
ஒரு திருமணம் நிச்சயிக்கப்படும்போது திரு மணம் புரிந்துகொள்ளும் பெண்ணும் ஆணும் மனப் பொருத்தமுடையவர்களா? என்பதையே கவனிக்க வேண்டும். அதைவிடுத்து நாம் வேறு எத்தனையோ பொருத்தங்களைப் பார்க்கின்றோம். அதில் முக்கிய மானது சீதனம்.
இந்த மாப்பிள்ளை விலையேற்றம் காரணமாக
வெளிநாட்டிலிருக்கும் ஆண்களை மருமக்களாகத் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பல காரணங்கள், அவர்கள் வெளிநாட்டில் எப்படியிருந்தாலும் குணத்தையோ உத்தியோகத் தையோ கவனிக்காது அவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்புக் கொடுக்கப்படுகின்றது.
அடுத்தது நமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அவர்களைப் பணக்காரராகக் கருதவைக்கிறது.
இந்தக் கண்மூடித்தனமான திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் பற்றிய கதைகள் உண்மைக் கதை களாக வெளிவருவதில்லை.
90

உனக்கொன்றுரைப்பேன் முன்பு ஒரு கடிதத்தில் நேசமலரின் மகளின்
கணணிர்க் கதையை எழுதியிருந்தேன். நேற்று மற்று
மொரு கதையைக் கேட்க நேர்ந்தது.
பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த நாட்டில் - ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, தனது வேலைக்காரி போல் நடத்துவோர் பற்றிக் கேள்விப்பட் டிருக்கிறோம். பெற்றோருக்கு ஒரு வேலைக்காரியாக இருப்பதற்குகாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்ப வர்களுமிருக்கிறார்களோ என சந்தேகிக்க வைக்கிறது இக்கதை.
வெளிநாட்டிலுள்ள மகனுக்கு நிச்சயித்த பெண்ணை பெற்றோர் தமது வீட்டிற்கு அழைத்துக் கொள்கிறார்கள். இடைக்கிடையே வரும் தொலை பேசி உரையாடல்களுடன் வெளிநாட்டு வாழ்வு பற்றிய கற்பனைகளுடனும் அந்த வீட்டில் கூலியில்லாத வேலைக்காரியாக அந்தப்பெண் வருடக்கணக்கில் இருக்கிறாள்.
அவர்கள் வீட்டில் மிகப்பக்குவமாக நடக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு. சற்றுக் கருத்து முரண்பட்டாலும் அவளுடைய எதிர்கால இன்ப வாழ்வு பாழாகி விடுமோன்ைற பயத்துடன் வாழ வேண்டும்.
இப்படி அவள் மிகுந்த கவனத்துடன் வாழ்ந் தும், அவளது குணநலன்பற்றி மாமன் மாமிக்கு திருப்திஏற்படாமல் சுமார்இருபத்திரண்டு மாதங்களின் பின் அவள்பிறந்த விட்டிற்கே திரும்ப நேர்ந்துவிட்டது. 91

Page 51
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
தொலைதுாரத்திலிருந்து தொலைபேசியில் மட் டும் பேசி, தாயின் சொல்லைக் கேட்டோ வேறு கார னத்தாலோ அவளது இதயத்தைத் துகளாக்கி யவன், அவள் வேறு திருமணமும் செய்யமுடியாத நிலையை உருவாக்கிவிட்டான்.
நேற்று நான் சந்தித்த சுதந்திரா தன் தோழி யின் இந்தக் கதையைக் கூறிவிட்டு தனக்கும் அப்படி ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் இரு தினங்களின் பின்னர் மாமியாரின் வீட்டிற்குப் போக வேண்டு மென்றும் கூறினாள்.
உன் கதையும் தோழியின் கதையாகாதா? என்றேன்.
இல்லை. சற்று வித்தியாசமானதாகப் போகி றது- என்றாள்.
"என்ன வித்தியாசம்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். எனது வருங்காலக் கணவரை ஒரு வைத் திய பரிசோதனை அறிக்கையைப் பெற்று எனக்கு அனுப்புமாறு நான் கடிதமெழுதி நான்கைந்து நாட் களாகிவிட்டன. எயிட்ஸ் பரிசோதனைக்கு - என்றாள்.
சுதந்திரா போன்ற பெண்கள் நம்மிடையே அநேகர் தோன்ற வேண்டுமென இறைவனைப் பிரார்த் தித்துக் கொண்டேன்.
நீ மகளிர் மேம்பாடு பற்றிய கருத்தரங்கொன் றில் பங்குகொள்ளவும் அதைத் தொடர்ந்து சில நாடு
92

உனக்கொன்றுரைப்பேன் களில் மகளிர் முன்னேற்றம் பற்றி தெரிந்துகொள்ள வும், பங்குனி இரண்டாந்திகதி புறப்படப் போவதாக எழுதியிருந்தாய். மிக்க மிகழ்ச்சி.
இதன் பின்னர் நீ திரும்பி வந்ததும் எம் நாட்டு மகளிர் பல வகைகளிலும் முன்னேற்றங் காண வழி காட்டுவாய் என எதிர்பார்க்கிறேன்.
கருத்தரங்குகளில் பங்குகொள்வதும், ஆய்வு கள் செய்வதும் எந்தப் பயனுமற்றுப் போவதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் காணுகிறோம். இவை சமுதா யத்திற்கு உண்மையான பயனைத் தரவேண்டும்.
மார்ச் எட்டாந் திகதி சர்வதேச மகளிர் தினம் என்பதால் இப்பொழுதே பல ஆரவாரங்கள் தொடங்கி விட்டன. வருடா வருடம் இத்தினம் பல இடங்களில், பல்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. அத னால் பயன் கிட்டியதா? என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.பல இடங்களிலும் வருடம் ஒருமுறை கூட்டம் நடத்துவதுடன் மகளிர் முன்னேற்றம் முடிவு கண்டு விடுகிறது.
உனது பயணம் அப்படி முடிந்துவிடக்கூடாது.
காலங் காலமாக ஒரே விடயத்தைப் பற்றி பேசு வதும். எழுதுவதுமாக இருக்கிறோம். அதன் பய. னாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனதான். ஆனால் போதியளவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.
உதாரணமாக இந்தச் சீதனம் பற்றி எவ்வளவு பேசுகின்றோம். பயனென்ன கண்டோம்? சில விடயங் களில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளனதான்.
93

Page 52
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
முன்னர் பெண்கள் எட்டியும் பார்க்காத துறை களில் இன்று ஒரு சிலர் கால்பதித்திருக்கிறார்கள். ஓரிருவர் சில துறைகளில் முத்திரையும் பதித்திருக் கிறார்கள்.
அதற்காக மகிழ்ந்தாலும், இத்துடன் திருப்திப்பட முடியாத நிலையே காணப்படுகிறது. போதிய ஊக்கு விப்பும், பெண்கள் அத்துறைகளில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காணலாமென்பதற்குரிய ஆலோசனைகளை வழங் கலும் இத்துறைகளில் பெண்கள் அதிகளவு ஈடுபடச் செய்யும்.
இவ்வளவு காலமும் உன்னுடன் கொண்டிருந்த கடிதத்தொடர்பு பெரும் உற்சாகமளிப்பதாக இருந் தது. நீ வெளிநாடு செல்வதால் இந்தக் கடிதத் தொடர்பை நிறுத்த வேண்டியேற்பட்டுவிட்டது. நீ திரும்பியதும் மீண்டும் எழுதுவாயென எதிர்பார்க் கிறேன்.
★
ഫ്രീyLജ്,
94


Page 53


Page 54
貓 編
uијg ugljujЈЕћ, 430 காங்கேசந்துறை E
 

ប័ណ្ណឹ, Umuទេញយំ, 021 222 3081