கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்

Page 1
வித்துவ சிே கணேசையரி பாழ்க்கையும் பணியும்
 

ஸ். சிவலிங்கராஜா

Page 2


Page 3

வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்
எஸ். சிவலிங்கராஜா எம். ஏ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை,

Page 4
முதற் பதிப்பு
Title
Author
First Printin g :
Published by :
Printed at
1989
Life and Works of Vittuva Ciromani Ganesaiyar
(Vittuva Ciromani Ganesaiyarin Valkkaiyum Paniyum)
S. SIVALINGARAJAH, M. A. Senior Lecturer w University of Jaffna
1989
University of Jaffna
Commercial Printters

0.
II.
12.
உள்ளுறை
அணிந்துரை
முன்னுரை
அறிமுகம்
உரையாசிரியர்
இலக்கணப் பேரறிஞர்
கட்டுரையாளர்
பாடபேத ஆய்வாளர்
விவாத அறிஞர்
கவிபாடும் புலமிக்கோன்
போதனுசிரியர்
பன்முகப் பணிகள்
மாணுக்கர் பரம்பரை
உபயோகப்படுத்திய நூல்கள்
கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்
பக்கம்
15.
27
39
48
57
68
78
85
9.
109
O

Page 5

இந்நூல்,
எமது பெற்றேரின் பிறப்பிடமான தெல்லிப்பளை, வருத்தலைவிளானை வதிவிட மாகக் கொண்டிருந்த, வித்துவ சிரோமணி சி. கணேசையர் மீது மதிப்பும் மரியாதை யும் மிக்க எமது அன்புப் பெற்றேர் திரு. சோமநாதர் செல்லப்பா அவர்களதும் திருமதி அன்னம்மா ( தையற்பிள்ளை) செல்லப்பா அவர்களதும் பசுமைகுன்ரு நினைவுகளுக்குச்
சமர்ப்பணம்
கலாநிதி எஸ். சிவலிங்கம் * ஷெவல் ?? வருத்தலைவிளான், தெல்லிப்பளை.

Page 6

அணிந்துரை
மகாவித்துவான் சின்னையர் கணேசையர் (1878 - 1958) இலங்கைத் தமிழ் அறிஞர்களுள் மிகவும் முக்கியமானவர்களுள் ஒருவர். சுன்னகம் குமாரசுவாமிப் புலவர் (1854 - 1922) மறைந்தபோது, நாவலர்மரபு மறைந்து விட்டதாகக் கவலைப் பட்டவர்கள், குமாரசுவாமிப் புலவரின் மாணவராகிய கணே சையரிலே, நாவலர்மரபு தொடர்வதைக்கண்டு நிம்மதியடைந் έ5 σότΓτ.
தமிழ்நாட்டுத் தமிழர் தேசியம் ஆரிய வெறுப்பை முனைப் பாகக் கொண்டு செயற்பட்டதால், அந்தணர் தமிழ்ப் பணி களிலே இயன்ற அளவு பங்களிப்பதாகத் தெரியவரவில்லை. இலங்கைத்தமிழர் தேசியம் ஆறுமுகநாவலர் காலத்திலிருந்து (1822-1879) சைவசமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டதால், ஆரிய வெறுப்பு முனைப்படையவில்லை. சைவ சித்தாந்தி காசிவாசி செந்திநாதையர் (1848-1924) இலக்கணி கணேசையர் முதலானேர் பொதுவாக நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படுகின்றனர்.
தமிழ்த்துறையிலே மூத்த விரிவுரையாளராகப் பணியாற் றும் எமது மாணவர் சிவலிங்கராசா தமது முதுகலைமாணிப் பட்டத்துக்கு குமாரசுவாமிப்புலவர் தமிழ்ப்பணிகள் பற்றி, மறைந்த பேராசிரியர் கலாநிதி சு, வித்தியானந்தன் நெறிப் படுத்தலிலே சிறந்த ஆய்வேடு தயாரித்த அனுபவமுள்ளவர். இலங்கைத் தமிழர் பண்பாடு, இலக்கியம் முதலியன சம்பந்த மாக, தாம் பல்லாண்டுகள் உழைத்து, பிறர் பல ஆய்வேடுகள் தயாரிக்கப் பதினைந்து ஆண்டுகளுக்குமேல் நெறிப்படுத்தி உதவிப் பழுத்த அனுபவம் பெற்ற பேராசிரியர் வித்தியானந்தனி டம் ஆராய்ச்சி மாணவராக இருந்து சிவலிங்கராசா பயன்பெற் றவர். குமாரசுவாமிப்புலவரின் தமிழ்ப்பணிகளை அ ள வீடு செய்து மதிப்பீடுகொண்ட அவரிடம் கணேசையரின் பணிகளை அளவீடுசெய்து மதிப்பிடும்பணி தேடிவந்தடைந்திருக்கிறது.
இலங்கைத் தமிழர் பண்பாடு, இலக்கியம் முதலியனபற்றி, ஆய்வேடுகள் பல எழுதப்பட்டுள்ளபோதிலும், அவற்றுள் மிகச் சிலவே அச்சுவாகனம் ஏறியுள்ளமை வருந்தத்தக்கது. கணேசை யர் பற்றிய இந்நூல் ஆய்வேடு அல்ல. கணேசையரின் பணி கள் யாவற்றையும் நன்கு விளக்கவேண்டுமென்ற நோக்கமு டைய நூலாசிரியர் நூலைப் பத்து இயல்களாக வகுத்துள்ளார். கணேசையரின் பணிகளின் பரப்பினை அளவீடு செய்வதற்கு, இந்தப் பகுப்பு உதவும்.

Page 7
கணேசையர் எதிர்காலத்திலே எதற்காக நினைவுகூரப்படப் போகிருர் என்ற வினு எழுகின்றது. கணேசையர் மறைந்த பின்பு, ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், கணேசையர் நினைவுமலர் (1960) என்ற பெயரில் ஒரு பெரிய நூல்ை வெளியிட்டது. நாம் எழுப்பிய வினவுக்கான விடை அந்த நூலில் இல்லை.
இலக்கியத்துறையிலே, இலங்கை இலக்கிய வரலாற்ருசிரி யராகவும் இலங்கை இலக்கிய உரையாசிரியராகவும், கம்பரா மாயாணபாடாந்தர ஆய்வாளராகவும் இவர் நினைவுகூரப்பட லாம். வேகமாக வளர்ந்துவரும் இலங்கை இலக்கிய வரலாற் றுக்கு, இவருடைய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் ஒரு முன் னேடி முயற்சியாகும். முட்டு அறுத்துக்கற்பதற்கு வில்லங்க மான இலங்கைக் காவியமான இரகுவம்மிசத்துக்கு இ வர் எழுதிய உரை, இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பெருமை போற்றப்பட்டு வரும்வரை பாராட்டப்பட்டுவருமென நம்ப லாம். கம்பராமாயாணத்தை நவீனமுறையிற் பதிப்பிக்க விரும் புவோர், கணேசையர் செந்தமிழ் என்ற சஞ்சிகையிலேதொடர் கட்டுரையாக எழுதிவந்த 'இராமாவதாரப் பாடாந்தரம்" என்பதைக் கருத்திலே கொள்ளவேண்டுமென்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, ' கம்பன்காவியம் " என்ற நூலிலே கூறி யுள்ளார். ۔۔۔۔۔۔۔
கணேசையர் இலக்கணத்துறைக்கு ஆற்றி யு ள்ள பணி இலங்கை அறிஞர் பிறரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது ஈடி ணையற்றதாகத் தோன்றுகிறது. இலங்கை - சிறப்பாக, யாழ்ப் பாணம் - நீண்டகாலமாகச் செந்தமிழைப் போற்றி வந்துள்ளது. நாவலர் நன்னூற் காண்டிகையுரையைத் திருத்திப் பதிப்பித்த தோடு, இலக்கணச் சுருக்கம் என்ற நூலையும் எழுதினர். தொல்காப்பியம் முழுவதையும் முதன்முதலிலே பதிப்பித்த சி. வை. தாமோதரம்பிள்ளை, வீரசோழியம், இலக்கண விளக் கம், களவியலுரை முதலிய இலக்கணநூல்களையும் தேடிப் பதிப் பித்தார். நூல் எழுதுவதிலே அக்கறை காட்டாத இலங்கைத் தமிழ் அறிஞர்களின் இலக்கணப் புலமைபற்றிச் செவிவழியாக
வரும் செய்திகள் பல உள.
கணேசையர் பெருந்தொகையான இலக்கணக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவையாவும் தொகுக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். கணேசையருடைய தொல்காப்பியப் பதிப்புகளுள்ளே அவருடைய எட்டுமுக்கியமான கட்டுரைகள் தொகுக்கப் பட் டுள்ளன. "இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை" என்ற தலைப்பிலே இக்கட்டுரைகள் எம்மால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சிந்தன (1984) இதழிலே ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

கணேசையருடைய இலக்கணத்துறைப் பங்களிப்பு இக் கட்டுரைகளேடு அடங்கிவிடாது, அவருடைய தொல்காப்பியப் பதிப்பிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறது. இவருடைய உரைவிளக்கத்தோடு வெளிவந்த தொல்காப்பியம் எழுத்ததி காரம் நச்சினர்க்கினியம், கணேசையர் பதிப்பு என்றும் வழங் குகிறது. ஈழகேசரிப் பொன்னையா வெளியிட்ட தொல்காப் பியம் சொல்லதிகாரம், பொருளதிகாரம் முதலியன, கணேசை யரின் உரை விளக்கக் குறிப்புகளோடு வெளிவந்ததாகவே கூறப் பட்டுள்ளபோதிலும், இக்காலத்திலே அவை கணேசையர் பதிப்பு என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றன. கணேசையருடைய முழு மையான தொல்காப்பியப் பதிப்பு முயற்சி இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.
கணேசையரின் இலக்கணப்புலமை ஏற்றவகையிலே மதிப் பிடப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட்டால், அவரின்புகழ் உயர லாம்; இலங்கைத் தமிழ் அறிஞர்களின் இலக்கணப் பாரம்பரி யம் தமிழ்கூறும் நல்லுலகிலும் சர்வதேசமட்டத்திலும் அங் கீகாரம் பெறலாம்.
தமிழ்த்துறை ஆ. வேலுப்பிள்ளை 24-11-1989.

Page 8
முன்னுரை
ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றிலே வித்துவசிரோமணி கணேசையர் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உண்டு. இவரின் முக்கியத்துவத்தை முழுமையாக வெளிக்கொணரும் நூல்கள் எவையும் இற்றைவரை வெளிவரவில்லையெனக் கூறப்படும் குற்றம் நியாயமற்றது எனத் தட்டிக்கழிக்க முடியாது. எனினும் அவ்வப் போது ஐயரின் அருமைப்பாட்டை உணர்ந்த சிலர் அவரின் முயற்சி களை வெளிக்கொணர முயன்றிருக்கின்றனர். இந்த வகையிலே ஈழ கேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் 1960 ஆம் ஆண்டு கணேசையர் நினைவுமல்ர் ஒன்றை வெளியிட்டது. கணேசையரை நன்கு அறிமுகஞ் செய்வதாக இம்மலர் அமைந்துள்ளது. ஐயரை இனங்காட்டும் கட்டுரைகள், அவரின் வாழ்க்கையோடு தொடர் புடைய நிகழ்ச்சிகள், படங்கள் முதலியன இம்மலரிலே இடம்பெற் றுள்ளன. எனினும் கணேசையரின் வாழ்க்கையையும் பணியையும் பூரணமாக விளங்கிக்கொள்ள இம்மலர் போதியது எனக் கருதமுடி யாது. கணேசையரை நன்கு விளங்கி, அவரை மதித்து நினைவுமலர் வெளியிட்ட ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்தின் முயற்சி என்றும் பாராட்டிற்குரியது.
வித்துவசிரோமணி கணேசையர் பற்றி வெளிவந்த நூல்களுள் இ. சுந்தரராஜ சர்மா எழுதி வெளியிட்ட ஞானகுரியன் என்னும் நினைவு வெளியீடும் குறிப்பிடத்தக்கது. வித்துவசிரோமணி கணேசை யரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக வெளியிடும் "நினைவு மலராகவே" இந்நூர்ல் அமைந்துள்ளது.
வித்துவசிரோமணி கணேசையரின் வாழ்க்கையையும் பணி யையும் இரத்தினச் சுருக்கமாக எழுதியவர் ஐ ய ரி ன் சிரேஷ்ட மாணவர் இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்களே யெனலாம். மகாஜனக் கல்லூரித் தமிழ்மன்ற வெளியீடான இச் சிறுநூல் கணேசையரைப்பற்றி அறிய ஒரளவுக்கு உதவுகின்றது.
ஓர் ஆசிரியரின் வாழ்க்கையையும் பணியையும் பல்வேறு கோணங்களில் ஆராயும்முறை இப்போது வலுவடைந்து வருகின்றது. ஓர் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றிற்கு ஊடாக வாழ்க்கை நிகழ்ச்சி களையும் ஆராயும் முறை இப்போது முதன்மைபெற்று வருகின்றது. இவ்வாய்வு முறை இலக்கிய வரலாற்ற ய்வாளனுக்கு மிகுந்த பயன ளிக்கக்கூடியது. ஓர் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறும், பணிகளும்

தனித்தனியே ஆராயப்படும்பொழுது பொதுவாக அவ்வாசிரியர் வாழ்ந்தகால இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளைக் கூர்மையாக அறியமுடியும் என நம்பலாம்.
ஈழத்து இலக்கிய வரலாற்றை முழுமையானதாகவும், பூரண மானதாகவும் அறிவதற்குத் தனிப்பட்ட ஆசிரி ய ர் க ளின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களது பணிகளையும் தொகுத்து வைத்தல் என்பதும் மிக முக்கியமானதாகும். பின்வரும் ஆய்வாள னுக்கு இத்தகைய தொகுப்புக்கள் மிகுந்த பயனளிப்பதாக அமை யும். கணேசையரின் வாழ்க்கையும் பணியும் என்ற இந்நூலிற் தேவை கருதி ஆங்காங்கே 19 ஆம் நூற்ருண்டின் சமூகச் சூழலும், கல்விப் பின்னணியும் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வு பத்துப் பகுதிகளாக வகுக்கப்பட்டு வித்துவசிரோமணி கணேசையரின் பன்முகப்பணியையும் அறிமுகஞ் செய்கிறது. காய்தல் உவத்தல் அற்ற விதத்தில் கணேசையரைக் காண முயன்றிருக்கிறேன். ஈழத்தின் இலக்கிய வரலாற்றை ஆராயப்போகும் ஆய்வாளனுக்கு இந்நூல் மிகுந்த பயனளிப்பதாக அமையுமென்று நம்புகிறேன்.
வித்துவசிரோமணி கணேசையரைப் பற்றிய ஆய்வினைச் செய் யும்படி என்னைத் தூண்டி அதற்கேற்ற ஒழுங்குகளையும் செய்து இத் தலைப்பினையும் தந்ததோடு ஈழத்து இலக்கிய வரலாற்றுத்துறையை எனது சிறப்புத்துறையாகக்கருதி அதிலீடுபட்டுழைக்குமாறும் பணித்த பேராசிரியர் அமரர் க. கைலாசபதியை மிகவும் நன்றியறிதலுடன் நினைவுகூருகிறேன்.
இந்நூல் எல்லா வகையிலும் சிறப்புற அமையவேண்டுமென் பதிற் கண்ணுங்கருத்துமாக இருந்து எனக்கு வழிகாட்டியதோடு, கையெழுத்து நிலையிற் படித்துத் திருத்தி ஆக்கபூர்வமான ஆலோசனை களை வழங்கி ஊக்கமளித்த அமரர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி என்றும் உரியதாகும்.
நூலுருவாக்கத்திற்கு முன்னரே இதனைப் படித்துத் திருத்தி யுதவியதோடு, அணிந்துரையும் வழங்கிய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் நன்றியுடையேன்.
இந்நூலை எழுதப் பல வகையிலும் உதவிபுரிந்த, என்றும் என் , மதிப்பிற்குரிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், திருமதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் என் நன்றிகள் உரியதாகும்.
இந்நூல் சிறப்புற அமையப் பலர் உதவிபுரிந்தனர். ப்பாக இந்நூல் சிறபடற @ இலக் கண வித்த க ர் பண்டிதர் இ. நமசிவாயம், பண்டிதர்

Page 9
க. வீரகத்தி, மயிலங்கூடலூர் பி. நடராஜன், மகாவித்துவான் FX C. நடராசா, சிரேஷ்ட உதவிப்பதிவாளர் இ. முருகையன், திரு. வ. கோவிந்தபிள்ளை, படங்கள் பிடித்துதவிய பேபிபோட்டோ உரிமை யாளர் என். இராஜரத்தினம் ‘புளொக்" செய்துதவிய கொழும்பு ஸ்ரூடியோ உரிமையாளர் திரு. குகதாசன், ஆகியோருக்கு என்றும் என் இதயபூர்வமான நன்றிகள்.
வழக்கம்போலவே, எனது கல்விசார் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக அமையும் எனது மனைவி சரஸ்வதிக்கும், குழந்தைகள் சிவதி, ரகுராமனுக்கும் நன்றிகள் உரியன.
கொமேர்ஷல் அச்சக உரிமையாளர், ஊழியர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றிகள் உரியன.
இந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து அதற்குரிய ஆய்வு வேலைச்
செலவுகளையும், இதனை நூலாக வெளியிடவிருக்கும் செலவினையும்
மனமுவந்து ஏற்றுக்கொண்ட வருத்தலைவிளானைச்சேர்ந்த பெருந்தகை டாக்டர் எஸ். சிவலிங்கம் அவர்களுக்கும் நன்றியுடையேன்.
இந்நூலுருவாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் என் இனிய நன்றிகள் என்றும் உரியன.
எஸ். சிவ லிங்கராஜா
தமிழ்த்துறை, யாழ் / பல்கலைக்கழம்.

வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் ஆலயத்தின் இன்றைய தோற்றம்
வருத்தலைவிளானில் அமைந்துள்ள, வித்துவசிரோமணி கணேசையர் நினைவுச் சின்னத்தில் நூலாசிரியர்

Page 10

அறிமுகம்
ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் கல்வி மரபினையும் யாழ்ப் பாண மன்னர்கள் காலத்திலிருந்தே தெளிவாகவும் ஆதாரபூர்வமா கவும் அறியமுடிகின்றது. யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திற் செழிப் புற்றிருந்த கல்வியும் இலக்கியமும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் முதிர்ந்து கனிந்தன எனலாம். ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தங்கள் சகல வல்லமைகளையும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்குக் காட்டக்கூடிய வாய்ப்புக்கள் இக்காலப்பகுதியிலேயே ஏற்பட்டன. தமிழ் நாட்டிற் கும் ஈழத்திற்குமுள்ள தொடர்பு புவியியல் அண்மைத்தன்மையை மாத்திரம் கொண்டிருக்காமல், புலமைத்தன்மையையும் கொண்டி ருந்தமையை ஆய்வாளர்கள் அவதானிப்பர். இலக்கியப் பரம்பலுக் கும் அறிஞர்களின் பரஸ்பர உறவுகளுக்கும் புவியியற்றன்மை சாதக மாக அமைந்தது உண்மையே. ஈழநாட்டிற்கான தனித்துவமான பாரம்பரியத்தை முன்னிறுத்தியவர்களாக ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை. தி. த. கனகசுந்தரம்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை வி. கனகசபைப்பிள்ளை முதலிய அறிஞர்களைச் சுட்டிக்காட்டலாம். இவர்களின் தொடர்ச்சியிலே, இப்பட்டியலிலேதான் வித்துவ சிரோ மணி கணேசையரும் இடம்பெறுகிறர். ஈழநாட்டின் தமிழ்ப்புலமை யையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்திய பலர் இந்தியா சென்று கற்றும், கற்பித்தும் வாழ்ந்தும் வந்தவர்களே “இந்திய வாழ்வு’ ஈழத்துத் தமிழ் அறிஞர் பலரைப் புகழ்க்கொடியில் ஏற்றியது உண் மையே. ஈழநாட்டின் தமிழ்ப்புலமையையும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்திய வித்துவ சிரோமனி கணேசையர் யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாாழ்ந்துகொண்டே தமிழ் கூறும் நல்லுலகெல்லாவற்றையும் தம்பாலீர்த்தவர்.ஐயரவர்கள் குன்ற உழைப்பும் குறையா ஊக்கமும் உடையவர் என்பதை அவர் நண்பர் களும் மாணவர்களும் வியந்து கூறுவர். உழைப்பாலுயர்ந்த ஐயரவர்கள் இந்தியயாத்திரை மேற்கொண்டபோதிலும் அங்கு கற்ற தாகவோ கற்பித்ததாகவோ அறியமுடியவில்லை. ஈழநாட்டின் மரபு வழிக் கல்வியினதும் பாரம்பரிய இலக்கிய வளத்தினதும் பழுத்தபழ மாகவே ஐயர் காணப்படுகிருர், பத்தொன்பதாம் நூற்றண்டில் ஈழத் திற் சிறப்புற நிலவிய ஆங்கிலக் கல்வியை ஐயர் பெற்றமைக்கான சான்றுகள் இல்லை. ஈழத்தின் பாரம்பரியக் கல்வியின் உள்ளுரத்தைப் புலப்படுத்தும் நல்ல உதாரணமாக ஐயர் விளங்குகிருர் .

Page 11
யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ஒன்றன புன்னலைக்கட்டுவ னிலே அந்தணகுலத்தவரான சின்னையருக்கும் சின்னம்மாளுக்கும் 15-4-1878இல் கணேசையர் பிறந்தார். ஈழத்திற் சைவத்தையும் தமிழையும் நிலைநிறுத்தி ஈழ ம் கடந்த புகழுக்குரியவரான ஆறுமுக நாவலர் இறக்கும்பொழுது ஐயர் ஒருவயதுக்குழந்தையாக இருந் தார். ஈழநாட்டில் நாவலர் மர பின் தொடர்ச்சியின் உதயத்தை, ஐயரின் பிறப்பிலே காணமுடிகின்றது. கணேசையரின் குடும்பம் கற்றவர்களையும், ஆசிரியர்களையும் கொண்டிருந்தது. ஐயரின் ஆளு மைக்கான "அடி உரத்தில் கணிசமானளவு குடும்பப்பாதிப்புமிருந்த தென்று கருதலாம்.
கணேசையரின் வாழ்க்கையையும் பணியையும் பூரணமாக அறிய அவர் பெற்ற கல்வி முறையையும் அக்காலச் சமூக அமைப் பையும் அறிவது பயன்தரத்தக்கது. கீழைநாடுகளில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவிய கல்விமுறையே ஈழத்திலும் நிலவிவந்தது. மரபுவழியிலான குருசிஷ்யக் கல்விமுறை ஈழத்திற், குறிப்பாக யாழ்ப் பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நிலவிவந்துள்ளது. சிறப்பாக நல்லூர், தெல்லிப்பளை, சுன்னகம், புலோ லி உடுப்பிட்டி, காரைநகர், வரணி, விளைவேலி, கருணை வாய், வல்லு வெட்டி முதலிய கிராமங்களைச் சுட்டிக்காட்டலாம். இக்கிராமங்க ளிலிருந்து அருத்தொடர்ச்சியுடன் புலமைமரபு அல்லது மரபுவழிப் புலமை இன்றுவரை நின்று நிலைத்து வருவதை அவதானிக்கலாம்.
ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவன ரீதியிலான பாட சாலைகளைச் சுதேசிகள் "வேதப்பள்ளிக்கூடம்", பாதிரிபள்ளிக்கூடம்" முதலிய பெயர்களால் அழைத்தனர் இப்பள்ளிக்கூடங்களுக்குச் செல் லும் மாணவர் மதம் மாறுவதை விரும்பாத மதாபிமானமிக்க சுதே சிகள் தாமும் பாடசாலைகளை நிறுவி நடத்திவந்தனர். வேதப்பள்ளிக் கூடத்துப் பாடத்திட்டத்திற்கும் சுதேசிகள் நிறுவிய சைவவித்தியா சாலைகளின் பாடத்திட்டத்திற்கும் வேறுபாடு காணப்பட்ட போதி லும் கல்வி போதனுமுறை என்பன ஏறத்தாழ ஒரே தன்மையான வையாகவே காணப்பட்டன. புன்னலைக்கட்டுவனிலே கணேசையரின் பெரியதந்தையரான கதிர்காமையர் நிறுவிய சைவப்பாடசாலையிலே ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றர்.
அக்காலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைப் படிப்பு முடிந்ததும் தகப்பனிடமோ, உறவினரிடமோ சென்று பாடங் கேட்பது வழக்கம். குடும்பத்திற் படித்தவர்கள் இருந்த காரணத் தாற் படித்து முன்னேறிய பலரை இக்காலப்பகுதியிலே காணலாம். இந்த வகையில் வாய்ப்பும் வசதியும் படைத்த குடும்பத்துப் பிள்ளை களிற் பலர் புலமை படைத்தவர்களாகவும் திகழக்கூடிய நிலையேற்
2

பட்டது. பாடசாலை முடிந்து பாடங்கேட்கும் மாணவர்கள் பெரும் பாலும் உயர் இலக்கிய இலக்கணங்களுக்கும் புராணபடனத்திற்குமே முதன்மை கொடுத்தனர். தனித்தனி நூல்களாக வருடக்கணக்கிற் பாடங்கேட்பது அக்கால வழக்கம். கணேசையர் பாடசாலை முடிந் ததும் பாடங்கேட்கும் பணியினை மிகுந்த சிரத்தையுடனும் ஆர்வத் துடனும் செய்துவந்தார். ஈழத்தின் மரபுவழிப் புலமையின் நாடி ஒட்டம்’ இவ்வாறன பாடங்கேட்டலினுளிடேதான் ஓடிக்கொண்டிருந் தது கதிர்காமையர் வித்தியாசாலை நிறுவிப் பணிபுரிந்தபோதிலும் பெருமகனன கணேசையருக்கு மாலையிலும் இரவிலும் கரிசனையுடன் பாடங்கற்பித்து வந்தார். கதிர்காமையர் தமிழிலும் வடமொழியிலும் சிறந்த பாண்டித்தியமுடையவர்.
" . . ஊரெழு என்னுமூரிலிருந்த மயில்வாகனப்புலவர் என்பவ ரிடத்திற் சென்று தமிழிலக்கியங்கள் சில கற்றவர். கந்தபுரா ணம், பெரியபுராணம், பாரதம் என்னும் இலக்கியங்களில் அதிக பயிற்சியுடையவர். மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, புலியூரந் தாதி என்பவற்றிலும் மிகப் பயிற்சியுடையவர். சூடாமணி நிகண்டை முதலில் இருந்து முடிவு போக வாய்ப்பாடமாகச் சொல்லவல்லவர். நீர் வேலிச் சங்காபண்டிதரிடத்திலே சென்று தமக்கு நேர்ந்த ஐயங்களைக் கேட்டுத்தெளிந்தவர். ஆறு மு க நாவலரோடும் பரிச்சயமுடையவர். சுன்னகத்து முருகேசபண்டிதர் இவருக்கு நண்பராவர். இணுவில் நடராசையரிடஞ் சித்தாந்த நூல்களைக் கேட்டறிந்தவர் சிவஞானசித்தியாருரைகளுள் ஒன்ரு கிய ஞானப்பிரகாசருரையில் நன்கு பயின்றவர். ஊரெழு சரவண முத்துப்புலவருங் காசிவாசி செந்திநாதையருந் தமதிளமைப் பரு வத்திலே இவரிடம் பாடங்கேட்டவர்களாவர். இவரிடம் யாமும் இளமைப்பராயத்திலே பாடங்கேட்டுள்ளோம். இவர் எமக்குப் பெரியதந்தையாராவர்." 1
மேற்கட்டியவாறு கணேசையர் தமது ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித் திரத்திற் கதிர்காமையரைப் பற்றிக் குறிப்பிடுவர். கதிர்காமையரிடம் பிள்ளைப்பருவத்தில் பாடங்கேட்கும் வாய்ப்பு கணேசையருக்குக் கிடைத்தமை அவரைப் பாடசாலையில் "கெட்டிக்கார மாணவராக் கியது. அத்துடன் கதிர்காமையரின் கல்வி இலக்கிய இரசனை வாஞ் சையையும் ஊட்டியது. படிப்பில் ஆர்வமும் இறைபக்தியும் உள்ள சிறுவனுகக் கணேசையர் திகழ்ந்தார்.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதிகளிலே தமிழ்நாட்டிற் பி ரா ம ண குலத்தினர் பெற்றிருந்த சமூகநிலையையும் வாழ்க்கை முறையையும் ஈழநாட்டுப் பிராமணர்களோடு ஒப்பிட்டு நோக்குவது சற்றுச் சிரமமானது. யாழ்ப்பாணச் சமூக அமைப்பிற் பிராமணர் கள் உயர்வானவர்களாகக் கருதப்படுவது உண்மையேயெனினும்,
3

Page 12
ஆ. இவர்களின் பொருளாதார நிலை உயர்வானதாக இருக்கவில்லை. யாழ்ப் பாணச் சமூகத்தில் நிலமும் சொத்தும் வேளாளர் வசம் இருந்தது போலப் பிராமணர்வசம் இருக்கவில்லை கணேசையர் பிறந்த குடும்பம் பொருளாதார நிலையிற் பின்தங்கியிருந்தது. கணேசையர் பெறும் கல்வி மூலம் உபாத்தியாயர் வேலைபெற்று வேதனம் பெறவேண்டு மெனப் பெற்றேரும் உறவினரும் விரும்பினர். கணேசையரின் குடும்ப நிலை உத்தியோகத்தை "அவாவி’ நின்றது. இதனல், ஐயர் கதிர் காமையரின் வித்தியாசாலையிலே எட்டாம் வகுப்புவரை கற்க நேர்ந் தது. எட்டாம் வகுப்பிலே படித்துக் கொண்டிருக்கும்பொழுதுதான் கணேசையர் "வித்துவ சிரோமணி’ ஆவதற்கான ஆயத்தமணி” அடிக்கப்பட்டதெனலாம்.
அவர் தமது வாழ்க்கையிலேற்பட்ட முக்கியமான திருப்பத்தை 'நான் வித்துவ சிரோமணியின் மாணவனுனமை” என்னும் கட்டுரை யிலே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையின் ஒருபகுதி பின்வருமாறு :
" ...அன்று எங்களுக்குப் பரீட்சை நிகழ்ந்தது. வித்துவ சிரோமணி டொன்னம்பலபிள்ளையவர்கள்தாம்பரீட்சகர். எட்டாம் வகுப்பிற் பிராமணப்பிள்ளைகளும் வேளாளப்பிள்ளைகளுமாகப் பன்னிரண்டு மாணவர்கள் படித்தோம். பரீட்சை ஆரம்பமா யிற்று. கந்தபுராணக் காப்புப் பாட்டாகிய 'திகடசக்கரச் செம் முகமைந்துளான்” என்ற பாட்டை மாணவர் ஒருவர். வாசித் தார். நான் உரைசொல்ல ஆரம்பித்தேன். **விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களையும் செவ்விய ஐந்து முகங்களையுமுடைய சிவ பிரான்’ என்று முதலாமடிக்கு உரை கூறினேன். உடனே வித்துவ சிரோமணியவர்கள் கையமர்த்திவிட்டுப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினர்கள்: "உண்மைப்பொருள், உடைமைப் பொருள் எனப் பொருள்கள் இரண்டு வகைப்படும். உடைமைப் பொருளைக் கூறும் பொழுதுதான் இரண்டாம் வேற்றுமை உருபாகிய 'ஐ' உருபை விரித்துப் பொருள்கூறுதல் வேண்டும். உண்மைப் பொருளைக் கூறுமிடத்து 'ஐ' உருபை விரித்துப் பொருள்கூற அமையாது. சிவபிரானது முகங்களும் கரங்களும் உண்மைப் பொருள்களாதலின் 'ஐ' உருபை விரியாது விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களும் ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபிரான் எனச்கூறல் வேண்டும்?. என விளக்கிஞர். இதைக் கேட்டவுடனே என் மனதிற் பொன்ன்ம்பலபிள்ளையவர்களிடம் ஒருபயமும், அவர் களது இலக்கண அறிவைப் பற்றிய உயர்ந்த எண்ணமும் உண் டாக அவர்களிடத்திலே இலக்கண இலக்கியம் படிக்கவேண்டு மென்னும் அவா உண்டாயிற்று. இதையென் தந்தையாராகிய சின்னையரிடம் கூறினேன். நான் எட்டாம் வகுப்புச் சித்தி யடைந்து மாணுக்க உபாத்தியாயராகப் பயிலவேண்டுமென்பது அவர்களுடைய விருப்பம். ஆனல் ன்ன்மன்மோ இ லக் கண,

இலக்கியங்களைப் பொன்னம்பலபிள்ளை உபாத்தியாரிடம் படிக்க வேண்டுமென எண்ணிற்று." 2
ஐயரவர்களின் நல்வினை" வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளையைக் கதிர்காமையரின் வித்தியாசாலைக்குப் பரீட்சகராக அனுப் பியது. மாணவ ஆசிரியராகும் நெறியை விடுத்து ஐயர் வண்னர் பண்ணையில் வசித்துவந்த தன் மைத்துனராகிய சுந்தர ஐயரிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். சுந்தரையரும் வித்துவசிரோ மணி பொன்னம்பலபிள்ளையும் ஏற்கனவே நண்பர்கள். பொன்னம்பல பிள்ளையின் காவியரசனையிற் சுந்தரையரும் ஈடுபாடுடையவர். கணே சையர் ம்ாணவ ஆசிரியராவதைவிடப் பொன்னையா உபாத்தியாய ரிடம் (பொன்னம்பலபிள்ளையிடம்) கல் வி கற்ப்தைச் சுந்தரையர்' விரும்பினுர். ஒருநாள் கணேசையரைச் சுந்தரையர் பொன்னம்பல (வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை) உபாத் தி யா ய ரிடம் அழைத்துச் சென்றர். இதனைக் கணேசையர் பின்வருமாறு குறிப் பிடுவர் :
*.வண்ணுர்பண்ணைச் சிவன்கோயிலின் வடக்கு வீதியிலே தெற்கு நோக்கி இருந்தது பிச்சுவையர் வீடு, பிச்சு வயைர் வீட்டுத் திண்ணை விசாலமானது. பத்துப் பதினைந்துபேர் இருக்க இடவசதி யுள்ளது. அதிலேதான் பொன்னம்பலபிள்ளையவர்களது படிப்பித் தல் நடைபெற்றது.நானும் மைத்துனர் சுந்தர ஐயர்வர்களும்
வித்துவசிரோ மணியிடம் போனபோது அங்கே இலக்கண பாடம்
நடைபெற்றுக் கொண்டிருந்தது,
வித்துவசிரோமணியவர்கள் இலக்கணச்சுருக்கம் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள். சிறுப்பிட்டியிலிருந்த பொன்னம்பலபிள்ளை யென்பவர் படித்துக் கொண்டிருந்தார். உண்ப' என்ற சொல் லுக்கு இலக்கணம் என்ன? என்று வித்துவசிரோமணியவர்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த சிறுப்பிட்டி பொன்னம்பல பிள்க்ள யைக் கேட்டார். அவரால் விடைசொல்ல முடியவில்லை, அந்தச் சமயத்திலேதான் நானும் என்னுடைய மைத்துனரும் அங்கே போயிருந்தோம். என் மைத்துனர் மூலம் தான் தம்மிடம் படிக்க விரும்பியதை வித்துவசிரோமணியவர்கள் முன்னரேயறிவார்கள். அன்றியும் புன்னுலைக்கட்டுவன் பாடசாலையிலே தாம் என்னைப் பரீட்சித்த ஞாபகமும் இருந்திருத்தல் வேண்டும். ஆகவே, வித்துவசிரோமணியவர்கள் என்னைத் திரும்பிப்பார்த்து நீர் சொல் வீரா? என்று கேட்டார். நான் ஆம் என்னும் குறிப்பிலே தலை யசைத்து “உயர்திணைப் பலர்பால் வினைமுற்ருகவும், அஃறிணைப் பலவின்பால் வினைமுற்ருகவும் வரும்" என்று விடைசொன்னேன்.
5

Page 13
உடனே வித்துவசிரோமணியவர்கள் பொன்னம்பலபிள்ளையின் தலையிலே இரண்டு குட்டுக்கொடுத்தார்கள். . . . .
அவர் படிப்பார், படிக்கட்டும் என்று வித்துவசிரோமணி யவர்கள் என்னுடைய மைத்துனர் சுந்தரஐயரவர்களிடம் கூறி ஞர். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தந்தையாருடைய விருப்பப்படி நான் எட்டாம் வகுப்புப் பரீட்சை சித்தியடைந்த பின் என்னுடைய மைத்துனர் வீட்டில் இருந்து கொண்டு வித்துவ சிரோமணியவர்களிடம் பாடங்கேட்டு வந்தேன், மாணக்கர்கள் தொகை வரவர அதிகமாயிற்று. கரவெட்டி கார்த்திகேயபிள்ளை, கொக்குவில் பண்டிதர் இளையதம்பி முதலியோர் வந்து சேர்ந்த னர். தாவடி சோமஸ்கந்த பண்டிதரும் வந்து கேட்டுக்கெண்டி ருப்பார்.
மாணவர் தொகை வரவர அதிகப்பட்டபடியால் பிச்சுவையர் வீட்டுத்திண்ணைஇடம் போதாமற்போக நாவலர் வித்தியாசாலை எங்கள் படிப்புக்கு இடமாயிற்று'3 கணேசையர் வித்துவசிரோமணியை அணுகிப் பாடங்கேட்ட வர லாறு யாழ்ப்பாணத்தின் மரவுவழிக் கல்வியின வரலாருகக் காண்ப் படுகின்றது. வித்துவசிரோமணியிடம் ஐயர் பெற்ற கல்வி அ வ ரின் புலமைப்பரப்பை ஆழமாக்கியது. வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை நூல்கள் எழுதும் பணியில் பெருமளவு ஈடுபட்டவர் எ ன் று கருதமுடியாது. எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் த லை சிறந்த ஆசிரியராயும் உரைகாரராயும் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தின் இரசனை மரபின் மூலவேர்களில் வித்துவசிரோமணி பொன்னம் பலபிள்ளை முதன்மையானவர் ஆசிரியர்களின் தாக்கம் மாணவர் களுக்கு அவர்களை யறியாமல்ே சென்று விடுவதுண்டு. ஐயரின் ஆளு மையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய ஆசிரியர்கள் இருவர் · ඉෂ வர் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை. மற்றவர் சுன்னகம் குமாரசுவாமிப்புலவர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தின் கல்விமர பினதும் புலமை வளர்ச்சியினதும் இரு கண்கள். இவ்விருகண்களி னதும் ஞானதிருஷ்டியை நன்கு பெற்றவரான கணேசையரின் வாழ்க் கையையும் பணியையும் அறிவதற்குப் பின்னணியாக இவ்விரண்டு ஆசிரியர்களைப்பற்றியும் சுருக்கமாகவேனும் அறியவேண்டிய அவசிய மேற்படுகின்றது. கதிர்காமையர் உழுது பதப்படுத்திய நிலத்தில் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை பயிரேற்றிவைக்க, அதை பாதுகாத்துப் பயன்பெறச் செய்தவர் குமாரசுவாமிப்புலவர். வித்துவ சிரோ மணி பொன்னம்பலபிள்ளையினதும் குமாரசுவாமிப்புலவரின தும் சிறப்பமிசங்கள் பல திரண்டு ஒன்ருக வெளிக்கிளம்பிய உருவமாகக் கணேசையர் காட்சி தருகின்றர்.
நாவலரின் மருகரும் மாணவருமாகிய வித்துவசிரோமணி

பொன்னம்பலபிள்ளை சிறந்த போதனசிரியர், உரையாசிரியர், இர சனையாளர். நாவலரிடம் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற் றவர். நாவலருடன் உடனுறைந்து அவரின் அறிவைப்பெற்ற சிலருள்
முதன்மையானவர். அக்காலத்தில் பொன்னம்பலபிள்ளை ஒரு கல்வி
நிறுவனம்போல விளங்கினர். இவரிடம் பாடங்கேட்டவர்கள் குடா நாடடங்கலும் புகழ்பரப்பிக் கொண்டிருந்தனர். பொன்னம்பலபிள்ளை யின் மாணவன் என்பது "சிறப்புத் தகுதியாகக் கணிக்கப்பட்டது. . அப்பொழுது பிரசித்திபெற்று விளங்கிய கோப்பாய்ச் சபாபதி நாவலர், உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, மகாவித் துவசிரோமணியாய் விளங்கிய பிரமயூரீ சி. கணேசையர் என்ப வர்களை உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் படித்தவர்களென் றிருந்தவர்கள் எவர்களோ அவர் க ள் அ னை வ ரு ம் பொ ன்னம்பலபிள்ளையிடம் பாடங்கேட்டவர்கள்"4
f
மேற்காட்டியவாறு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுவார். கோப்பாய் சபாபதி நாவலர் தமிழ் நாட்டில் ஒப்பாரும் மிக்காருமின்றி மதங்கொண்ட யானைபோல் திரிந்தவர் என்பர். ஈழநாட்டிலும் தமிழ் நாட்டிலும் நன்கு மதிக்கப்பட்டவர். மிகச்சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்த ம. க. வேற்பிள்ளை நாவலருடனும் தொடர்புடையவர். ஈழமண்டலசதகம் பாடி ஈழநாட்டின் சிறப்பைத் தமிழ்நாட்டிற் புலப்படுத்தியவர். இன்னுேரன்ன மாணவர்கள் வரிசையிலேதான் நமது கணேசையரும் இடம்பெறுகிறர்.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை சிறந்த உரையாசிரியர். சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், கந்தபுராணம் சங்க இலக்கியங் கள் முதலியவற்றில் அதிநுட்பமான பயிற்சியும் ஆற்றலும் உடைய
வர். இவரிடம் குடாநாட்டின் பலபாகங்களிலிருந்து ம் மாணவர்கள் வந்து பாடங்கேட்பர். தமிழ்நாட்டிலிருந்து வந்து இவரிடம் பாடங்கேட்டவர்களும் உண்டு இவரிடம் பாடங்கே ட்
போர் இலக்கிய இலக்கணங்களுக்கு உரை விளக்கக் குறிப்புக்களை எழு திப்படிப்பது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உரைநூல்கள் பல வற்றிலும் ஏதோ ஒரு வகையில் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளையின் செல்வாக்குச் சுவறியிருப்பதை அவதா னி க் க முடி யும். வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடம் பாடங்கேட்டவர் களின் பரம்பரையினரிடம் இன்றும் இவ்வுரை விளக்கக் குறிப்புக்க
ளைக் காணலாம். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள் எழுதிய கந்தபுராண தக்ஷகாண்ட உரைக்கு வித்துவசிரோமணி பொன்னம் பலபிள்ளையிடம் படித்தவர்கள் எழுதிவைத்த குறிப்புக்களும் பயன் பட்டதாக அறியமுடிகின்றது. வித்துவசிரோமணியிடம் கம்பராமாய ணம் பாடங்கேட்டு எழுதிவைத்தவர்களின் கொப்பிகள் சில தமக்குக் கிடைத்ததாகவும் தாம் அவற்றைத் தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை யவர்கள் கேட்டுக்கொண்டமைக்கிணங்க இராமாயணப் பதிப்பு
7

Page 14
முயற்சிக்கு உதவும்பொருட்டுக் கொடுத்துவிட்டதாகவும் பண்டித மணியவர்கள் இந்நூலாசிரியரிடம் தெரிவித்தார். . இவ்வாறு வித்துவசிரோமணியின் நுட்பமான உரைகாணும் மரபு ஈழம் கடந்து தமிழ் நாட்டிலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை நூலாக்கற் பணியிலே தமது முழுக்கவனத்தையும் செலுத்தவில்லை. இரசனையே இலக்கியத் தின் உயிர் என்ற வகையில் இலக்கிய இரசனையை வெளிப்படுத்தப் புராணபடனத்தைச் சாதனமாகக் கொண்டவர். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய புராண பிரசங்கிகளில் வித்துவசிரோமணியின் "அருட்பார்வை சிற்சில சந்தர்ப்பங்களிலே வெளிப்பட்டதுமுண்டு. வித்துவசிரோமணியின் மாணவர்கள் வகுப் பில் மாத்திரமன்றிப் புராணபடனம் நடக்கும் இடங்களுக்கும் சென்று குறிப்பெடுப்பது வழக்கம். ஒருமுறை கூறிய உரையைப் பொன்னம்பலபிள்ளை மறுமுறை திருப்பிக் கூறமாட்டார் என்ற கருத்து அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களிடையே நிலவியது. எங் கெங்கு புராணபடனம் நடக்குமோ அங்கங்கெல்லாம் இவரது மாண வர்கள் குறிப்புக் கொப்பிகளுடன் சென்றுவிடுவார்கள். இக்குறிப்புக் கொப்பிகள் காலங்கடந்து உரைநூல்களாக உருமாறியதும் உண்டு என்பர்.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையின் தாக்கம் கணிச மானளவு கணேசையரிடம் காணப்பட்டது. ஆசிரியப்பணியில் ஐயர் ஈடுபட்டிருந்த காலத்தில் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை யின் “பாணி" யைப் பின்பற்றினரென்றும் அறிய முடிகின்றது இலக் கியங்களிற் சில சுவையான பகுதிகளை விளங்கவைக்கும்போது “வித்துவசிரோமணி இப்படித்தான் கூறுவார்’ என்று ஐயர் குறிப் பிடுவாராம். இரசனையை ஊட்டுவதில் வித்துவசிரோ மணி பெற்ற வெற்றியை ஐயர் பெற்ருர் என்று கூறமுடியாது. எனினும், வித்துவ சிரோமணியின் செல்வாக்கு ஐயரிடம் இலக்கிய இரசனை விஷ யத்தில் காணப்பட்டது. இதனைப் பண்டிதமணியின் பின்வரும் கூற்று நிறுவும்: * . . . . வித்துவசிரோம்ணி பொன்னம்பலபிள்ளை நடமாடும் சர்வ
கலாசாலையாய் விளங்கினர். தெருக்கள், தெருத்திண்ணைகள் குளக்கட்டுக்கள், மரநிழல்கள் பொன்னம்பலபிள்ளை பாடஞ் சொல்லும் இடங்கள். பொன்னம்பலபிள்ளை அழகுகள், நவரசங் கள், சொட்டச் சொட்டப் பாட்டுக்களுக்கு உரை விரித்தற் கென்றே பிறந்தவர்'5 வறுத்தலைவிளான் மருதடி விநாயகராலயத்தைச் சூழவுள்ள மரங்களுக்குக் கீழ் இருந்தே கணேசையரும் மாணவர்களுக்குக் கற் பிப்பார். வழியிலும் தெருவிலும் ஏதாவது சந்தேகமெனின் மாண வர்கள் கேட்டுக்கொள்ளலாம். கேட்கும் மாணவர்களுக்கு மிகவும்
8

ஆறுதலாக விளக்கமளிப்பாராம். அல்லது பார்த்துச் சொல்லுகிறேன் என்பாராம் மாணவன் மறந்தாலும் தாம் பார்த்ததைத் தேடி அந்த மாணவனுக்கு விளங்கவைப்பாராம். (தகவல்: இலக்கண வித்தகர் பண்டிதர் இ . நமசிவாயம்) வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை யின் தாக்கம் கணேசையரிற் சிறப்பாகப் படிந்திருந்தது எனக்கருத லாம்.
சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் மாணவகைச் செல்லுகிருர் . ஐயரின் அறிவுத்தாகம் புலவர் என்ற சுனையிலே அடங்குகிறது. வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை 1887 இல் இறந்தார். புலவர் இக்காலத்தில் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினர். மாலையில் வீட்டிலும் போதித்தார். ஐயர் புலவரிடம் வந்து தொல்காப்பியம், இரகுவமிசம், இராமாய ணம், தணிகைப் புராணம் முதலிய நூல்களைச் சிறப்பாகக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றனர்,
கணேசையரின் வாழ்வின் இரண்டாவது முக்கியமான அம்சமாகக் கொள்ளக்கூடியது குமாரசுவாமிப் புலவரிடம் மாணவ கிையமையே. யாழ்ப்பாணத்தின் மரபுவழித் தமிழ்க்கல்வியினதும் வட மொழிக் கல்வியினதும் வாரிசாகத் திகழ்ந்தவர் சுன்னகம் குமார சுவாமிப்புலவர். இவர் கசடறக் கற்றவர். அதற்குத்தக ஒழுகியவர், அறிவு, அடக்கம், எளிமை புலமை என்பன புலவரை அழகுபடுத்தின. அரியவும் பெரியவுமான ஆராய்ச்சிகளைச் செய்து தமிழ்கூறும் நல்லுல கெங்கும் நன்கு அறியப்பட்டவர் கண்டனம் வரைவதில் வல்லவர். போலிப் புலவர் புரைபட எழுதிய நூலுரைப் பிளை களை நொடிப் பொழுதிற் காணக்கூடியவர். இத்தகைய பல சிறப்பம்சங்கள் பொருந் திய புலவரிடம் ஐயர் மாணவனுகச் சேர்ந்ததும் ஐயரின் போக்கிலும் நோக்கிலும் மாற்றங்கள் பல தென்படத் தொடங்கின.
பாரம்பரிய ஓடைக்குள் ஒழுங்காக ஓடிவந்த ஐயரின் அறிவுப்
பாய்ச்சலுக்குத் தடைபோட்டு, ‘மடை'மாற்றிப் பாயவைத்தவர் சுன்னகம் குமாரசுவாமிப்புலவரவர்களே. புலவரவர்களின் தொடர்பு ஐயரை இலக்கிய இலக்கண ஆராய்ச்சிக்குத் திசைதிருப்பியது. ஐயரின் ஆளுமையில் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையேற்படுத்திய தாக்கத்திலும் பன்மடங்கு தாக்கத்தினை குமாரசுவாமிப் புலவர் ஏற் படுத்தியிருக்கிருர், புலவரின் அம்சங்களையும் தன்னுட்பேணித் தமக்கு அவரையே ஆதார சுருதியாகக் கருதித் "தாம் அவராக" வாழ்ந் தார் என்று கருதலாம்.
**ஆறுமுக நாவலனும் ஆற்றுதமிழ்ச் சைவநெறி
வீறுகொள வைத்தான் வியனுலகில் -, ஏறுபுகழ்
சுன்னேக் குமாரசுவாமி தருசுகுணன்
புன்னைக் கணேசன் புகல்.

Page 15

ஐயர் தவவாழ்வை மேற்கொண்டிருந்தபோதும் மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டே இருந்தனர். அ ரிய பெரிய நூல்களை யெல்லாம் தம்மிடம் வந்து கேட்கும் மாணவர்களுக்கு மறுக்காது வழங்கும் பெருமனதை அவரது மாணவர்கள் நன்றியுணர்வுடன் பாராட்டுவர்.
மரபுவழிக் கல்வியின் முக்கிய அம்சங்களுள் ஒன்று குருதட்சணை யாகும். ஆரம்பகாலத்தில் உவாநாட்களில் மாணவர்கள் தம் ஆசிரி யர்களுக்குப் பொருட்களைத் தட்சணையாக வழங்குவர். இப்பண்பு நாளடைவில் காணிக்கை. கையுறை, குருவணக்கம், சமர்ப்பணம் என்று வளர்ந்து வந்துள்ளது. மரபுவழிக் கல்வியிலிருந்து ஊற்றெடுத் துப் பேராருகப் பிரவகித்தோடிய பிரமயூரீ கணேசையர் தமது குர வர்களுக்குப் பல்வேறிடங்களில் வணக்கஞ் செலுத்தியுள்ளார்: இக்குரு வணக்கச் செய்யுளினுரடு ஐயரின் நன்றியுணர்வும் ஆசான்களின் அள விலா ஆற்றலுடைமையும் புலப்படுகின்றன.
'ஆறு முகப்பெரு நாவலன் றனக்கு நன்மரு மகனு யின்புறத் தோன்றி தொல்காப் பியமும் தொகைநூ லாதியும் பல்காப் பியமும் பயின்று மேம்படீஇ வித்துவ சிரோமணி யாகி விளங்கிய பொன்னம் பலப்பெயர் மன்னுசெம் மற்கு மாரிய மொடுதமிழ்ச் சீரிய மொழிகளிற் பேரியற் கலையும் பிறவுநன் குணருபு பலநூ லியற்றி யிலகுபுக முறீஇய சுன்னைக் குமார சுவாமிப் புலவளும் வித்துவ மணிக்கும் விருப்பொடு மெமக்கினி தருந்தமி ழுணர்த்திப் பொருந்து மறிவளித்த விறஞ்செய லதன் பொருட் டீண்டுபெருந் துதிதனை அன்பொடுஞ் செய்திங் கின்புறு குவனே” 7
இணுவிலில் வசித்த அம்பிகைபாகர் என்னும் ஆசிரியரிடமும் கணேசையர் பாடங்கேட்டார் என அறியமுடிகின்றது. அவரிடம் பாடங்கேட்டமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்தில,
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியிலிருந்து இரு பதாம் நூற்றண்டின் நடுப்பகுதிவரை வாழ்ந்த கணேசையரின் வாழ் வும் பணியும் இக்காலகட்டத்தின் கல்வி. இலக்கியப் புலமை வரலா ருக அமைகின்றது. ஐ ய ரி ன் பன்முகப்பட்ட பணிகளுக்கும் ஆளு மைக்குமான அத்திவாரம் ஐயர் பெற்ற கல்வியும் அவரடைந்த ஆசிரியர்களுமேயெனலாம்.

Page 16
தமிழின் பல்வேறு துறைகளிலும் தமது ஆற்றலையும், ஆளுமை யையும் ஆழமாகப் பதித்தவர் கணேசையர். தமது வாழ்நாளை அரிய தமிழ் நூல்களைக் கற்பதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் மகிழ்ச்சிகரமாகப் போக்கியவர். தமது பன்முகப்பட்ட பணியினலே தமிழ்கூறும் நல்லுலகத்தையே தன்பாலீர்த்தவர். ஈழ
வுக்கூர்மையை. பாரம்பரிய உள்ளுரத்தை நிலைநிறுத்திய அறிஞர்கள் வரிசையில் கணேசையருக்கு நிலையானதோர் இடமுண்டு
கணேசையரின் பணியினை, ஆளுமையைப் பலவாறு பகுத்தா ராயலாம் வசதி கருதி ஐயரை உரையாசிரியர், இலக்கண வித்தகர், கட்டுரையாளர், பாடபேத ஆய்வாளர், விவாத அறிஞர், கவிஞர் , போதனுசிரியர் என்னும் தலைப்புகளில் அணுகியிருக்கிறேன். ஐயரது பன்முகப்பணிகள் எனவும் ஒரு பகுப்புப் பகுத்திருக்கிறேன். இப்பகுப் பினுள் ஈழநாட்டுத் தமிழ்ப் புல வர் சரிதம், குமாரசுவாமிப் புல வர் சரித்திரம் முதலிய நூல்களைப் பற்றிய ஆய்வு முயற்சிகளையும் புராணபடனத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன் இறுதியியலாக மாண வர் பரம்பரை எனும் இயல் இடம்பெறுகின்றது. லாழையடி வாழை யாக வளரும் புலமை மரபு ஐயருக்கூடாக இன்றுவரை நின்று நிலைக் கின்றமை மாணவர் பரம்பரைக்கு ஊடர்கவே எனலாம்.
12

இயல் - 1
டிக் குறிப்புகள் 9ی "
1. கணேசையர், சி. ஈழநாட்டுப் புலவர் சரிதம்,
ஈழகேசரி பொன்னையா வெளியீடு, குரும்பசிட்டி, 1939, பக்கம் 103.
2. தமிழ் மலர் 8. அரசாங்க வெளியீடு, கொழும்பு. 1969.
பக்கம் 205.
3. மேற்படி நூல், பக்கம் 206.
4. கணபதிப்பின்கா, பண்டிதமணி, fi, இலக்கிய வழி
5.
6, அம்பலவாணபிள்ளே, (95. “ஐயரும் புலவரும்’
கணேசையர் நினைவு மலர்.
1960. Ludiosò 3 1 - 32.
7. மேற்படி மலர், பக்கம் 90.

Page 17
இயல்: இரண்டு
உரையாசிரியர்

உரையாசிரியர்
கணேசையரின் வாழ்க்கையையும் பணியையும் கூர்ந்து நோக் கும் பொழுது அவரின் உரைமுயற்சிகள் சிறப்பானவையாகவும் தனித் துவமுடையவையாகவும் காணப்படுகின்றன. ஐயர் பாரம்பரிய மரபு வழி உரையாசிரியராகக் காணப்படுகின்ற அதேவேளையில் இருபதாம் நூற்றண்டுக்குரிய எளிய, உரைநடையைக் கையாண்டவராகவும் காணப்படுகின்றர். இதனல் ஐயரை “இருவகை உரையாசிரியர் என்று அழைக்கலாம். ஐயர் பெற்ற கல்வி, முன்னைய உரைநடைக் கும் ஐயர் வாழ்ந்தகாலம் பின்னைய உரைநடைக்கும் பின்னணிக ளாக அமைந்தன. ஐ ய ரி ன் உரைநடையில் ‘சென்ற காலத்தின் பழுதிலாச் சிறப்பையும் நிகழ்காலத்தின் திறனையும்" காணலாம்"
ஈழநாட்டின் உரையாசிரியப் பாரம்பரியம் நீண்ட தொடர்ச்சி யுடையது. சிவஞானசித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை தோன்று வதற்கு முன்னரே பாரம்பரியமான உரைமரபொன்று ஈ ழ த் தி ல் நின்று நிலவியுள்ளது. இப்பாரம்பரியம் நாவலருக்கூடாகவே முதன் முதலாகச் சிறப்பாக வெளிக்கிளம்புகிறது. தமிழின் உரையும் உரை நடையும் வலுவும் வனப்பும் பெறத்தொடங்கியது ஆறுமுகநாவலரு டனேயென்று துணிந்து கூறலாம். கணேசையர் முதலிய பின்வந்த உரையாசிரியர்கள் பலருக்கு நாவலர் முன்னேடியாகவும் வழிகாட்டி யாகவும் திகழ்ந்தார். செழிப்பும் இறுக்கமும் கொண்ட உரைநடையை நாவலர் கையாண்டதனுலேயே அவர் "வசனநடை கைவந்த வல்லா ளர்" என அழைக்கப்பட்டார். நாவலரைத் தமிழியல் ஆய்வாளர் கள் ஒருமுகமாக ப் பாராட்டுவது அவரது வசனநடை வல்லமை பற் றியே. பெரியபுராண வசனம் முதல் பாலாடங்கள் வரை நாவலரின் மொழியாளுமைத் திறனையும், வசனநடை வேறுபாட்டையும் தெளி வாகக் காட்டிநிற்கின்றன.
நாவலரின் நேரடித் தொடர்புடைய வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையும் குமாரசுவாமிப் புலவரும் ஐயருக்கு ஆபிரி யர்களாக வாய்த்தமை நா வ ல ர் மர பின் அருத்தொடர்ச்சியை

Page 18
ஐயருக்கூடாகத் தரிசிக்க வாய்ப்பாகின்றது. பொன்னம்பலபிள்ளையின்
உரை முயற்சிகளை நூலாகவும் கட்டுரைகளாகவும் கடிதங்களாகவும் ஆராய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. ஆசிரியர்களின் நடையின் தாக்கம் மாணவர்களிடம் அவர்களை அறியாமலே சுவறுவது தவிர்க்க முடி யாதது. நாவலரதும் அவர் மரபினதும் உரையாசிரியப் பாரம்பரியம் கணேசையருக்கூடர்கத் தெளிவாகத் தெரிகின்றது.
கணேசையர் புராணபிரசங்கம் நிகழ்த்தியது உண்மையெனி னும் அவ்வுரை மரபில் அவர்பெற்ற இடத்தை இன்னுெரு இடத்தில் ஆராய்வோம். உரையாசிரியர் என்ற வகையுள் கணேசையரின் திற மையையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாக இரகுவமிச உரை, மகாபாரதம் சூது சருக்க உரை, ஒருதுறைக் கோவை உரை, அகநாநூறு முதல்நூறு செய்யுள்களுக்கான உரை முதலியவை அமை கின்றன.
W அகநாநூறு முதல் நூறு செய்யுள்களும் உரையுடன் ஈழகேசரி யில் 1956 ஆம், 57 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அவை இன்னும் நூலுருப் பெறவில்லை. அகநாநூறு
ஐயரின் உரைத்திறனை வெளியுலகுக்குக் காட்டப் பெரிதும் உதவக் கூடியது. சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபடும் தமிழ்நாட்டுப் பேரறிஞர் கள் பலருக்கு ஐயர் அகநாநூறுக்கு உரையெழுதியமை தெரியாமற் போனமைக்கு அது நூலுருப் பெருமையும் ஒரு காரணமாகலாம்.
ஐயர் உரையெழுதிய நூல்களின் முகவுரையிலே மிகுந்த தன் னடக்கத்துடன் அவ்வுரை மரபினைப்பற்றிய விபரங்களைக் குறிப்பிட் டுள்ளார். ஒப்பிட்டு ஆராய்வதிலும் ஆழமாகப் படித்தலிலும் படிப் பித்தலிலும் ஐயருக்கிருந்த ஆர்வத்தினை இவரது முகவுரைகள் தெளி வுறுத்துகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் “காலாதிகாலாமாக’ வழங்கிவந்த உரைமரபினையே ஐயர் சற்று மெருகுடன் கையாண் டார் என்று சொல்லலாம். இரகுவமிச முகவுரையில் ஐயர் பின்வரு மாறு குறிப்பிடுவர்:
** இத்தகைமையான நூற்கு ஒருரை இருப்பின் எவர்களும் இலகுவில் விளங்கிக் கொள்வார்களென்று க ரு தி பூரீ ல பூரீ ஆறுமுகநாவலரவர்கள் மருகரும் மாணக்கரும் வித்துவ சிரோ மணியுமாகிய பூgரீமத் ந, ச. பொன்னம்பலபிள்ளையிடத்தும் கன் ஞகம் வித்துவான் பூரிமத் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடத் தும் கேட்டறிந்தவாறே யான் இதற்கோருரையெழுதி வெளிப் படுத்தலாயினேன். இவ்வுரை முன்னுாற் கருத்தோடு மாறுபடா வண்ணம் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. முதனூற் சுலோகங் களும் இடையிடையே காட்டப்பட்டிருக்கின்றன. "
6

ஐயரின் உரைமுயற்சியின் ஊற்றுக்கால் எங்கிருக்கிறது என் பதை இம்முகவுரை காட்டுகின்றது ந. ச. பொன்னம்பலபிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர் போன்ருேர் இரகுவமிசத்தை நீண்டகால மாகக் கற்பித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இரகுவமிசம் யாழ்ப் பாணத்தின் தேசிய இலக்கியமாகக் கருதப்பட்டுள்ளது. யாழ்ப்பா ணத்திற் கந்தபுராணத்திற்கு அடுத்தபடியாக இரகுவமிசமே செல் வாக்குப் பெற்று விளங்கியது. யாழ்ப்பாணத்திற் படித்தவர்கள் என் றிருந்தவர்களிற் பெரும்பாலானேர் இரகுவமிசத்தை முறையாகப் பாடங் கேட்டவர்களாகவே காணப்படுகின்றனர் யாழ்ப்பாணத்தின் பெரும் புலவரான அரசகேசரியால் மொழிபெயர்த்தியற்றப் பெற்ற மையால், இதற்கு எழுந்தகாலம் தொடக்கம் அரச ஆதரவும் அங்கீ காரமும் கிடைத்திருக்கவேண்டும். அத்துடன் பாரதக் கண்ணனின் பற்றும் கண்ணனவதாரம் எனக்கருதப்படும் இராமனின் பூர்வீகம் பற்றிய கதையும் இராமாயணத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இரகுவமிசத்தை ஈழநாட்டுத் தமிழறிஞர்க% க் கொள்ள வைத்திருக்க லாம். இத்தன்மைகளால் இரகுவமிசம் ஈழத்து இலக்கியப் பரப்பில் நீண்டகாலமாகச் செல்வாக்குடன் திகழ்ந்து வந்துள்ளது.
பண்டைய உரையாசிரிய மரபிலேயே கணேசையரின் உரை மரபும் அமைந்திருக்கிறது. பொருள்விளக்கம், இலக்கணக் குறிப்பு, கொண்டுகூட்டு, நயப்பாடு முதலியவற்றை உணர்த்தும் வகையில் இவ ரின் உரைமுயற்சிகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இரகு வமிச உரை, மகாபாரதம் சூதுபோர்ச் சருக்க உரை, ஆகிய இரு நூல் களின் உரையும் ஏறத்தாழ ஒரேமாதிரியாகவே அமைந்திருக்கின்றன, ஒருதுறைக் கோவையுரையும் அகநானூறு முதல் நூறு மான உரையும் முன்னைய உரைகளை விட விரிவாகவும் நுட்பமாகவும் அமைந்திருக்கின்றன. எனினும் பொதுவாக உரைகூறும் "பாணி" ஒரேதன்மையானதாகவே காணப்படுகின்றது. குவாரசுவாமிப் புல வரின் உரைத்திறனையே இவர் உள்வாங்கியுள்ளார் என்பது இவரது உரைமுயற்சிகளிற் பலவிடங்களிலே துல்லியமாகத் தெரிகிறது. புல வர் உயிருடன் இருக்கும்வரை தமது சந்தேகங்களை அவரிடம் சென்று கலந்துரையாடித் தீர்ப்பதை ஐயர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஐயர் இரகுவமிசத்திற்கு எழுதிய உரை குமாரசுவாமிப் புலவரின் மேற்பார்வையுடனும் திருத்தத்துடனுமே வெளிவந்தது என்பதை ஐயர் நூலின் முகவுரையிலேசுட்டிக்காட்டியுள்ளார்.
ஐயரின் உரைச்சிறப்பினை, உரைகாணும் பாங்கினை அறிய வகை மாதிரிக்கு இரண்டொரு இடங்களைச் சுட்டிக்காட்டலாம்.
செம்மலை வணங்கியுயர் தேனுவை வணங்கா மைமலை பெருந்துயர் மறுக்க மொடு மாரு விம்மலி ைெடுந்துணை யொடுந்துணிவின் மீண்டாள் கைமலை பிரிந்திடு கவின்கொள் பிடியன்னுள்
17

Page 19
இ-ஸ்: செம்மலை வணங்கி - நாயகனுகிய திலீபனை வணங்கி, உயர் தேனுவை வணங்கா - (அதன் பின்னர்) உயர்ந்த தேனு வையும் வணங்கி, மைமலை பெருந்துயர் மறுக்கமொடும் - மயக் கம் பொருந்திய பெரிய துன்பத்தாலாய அழற்சியோடும் - மாரு விம்மலினேடும் . நீங்காத மனப்பொருமலோடும், துணையோடும் - விரைவோடும், துணிவின் (பயன்படும் என்பதனல்ே ) துணி வோடு, கைமலை பிரிந்திடு கவின் கொள்பிடி அன்னுள் மீண்டாள். களிற்றைப் பிரிந்த அழகினைக் கொண்ட பிடியையொத்தவ ளாய்த் திரும்பினுள். எ - று. வணங்கா; மீண்டாள் என இயைக்க வணங்கா என்பது செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம். துயர், பிரிவாலாய துயர்
விம்மலும் அதுபற்றி வந்தது. கற்புடை மகளிற்குக் கொழுநனிற் *சிறந்த தெய்வமின்முதலின் முன்நாயகனை வணங்கினுள் என்க.
பிறரும். 2
இரகுவமிசத்தில் தேனுவந்தனப் படலத்திலே இப்பாடல் இடம் பெறுகின்றது. பொருள்விளக்கம் செய்தபின் இலக்கணக் குறிப்பினைச் சுட்டிப் பின் நயம்பட உரை விளக்கம் செய்வதை இப்பாடலின் உரையிலே காணலாம். `வேண்டிய இடத்திலே பொருத்தமான மேற்கோள் காட்டுவதும் பண்டைய உரையாசிரியர் மரபு. இம்மேற் கோள் காட்டும் பண்பினுலன்ருே பாண்டிக்கோவை முதலிய இலக் கியங்கள் நம் கைக்குக் கிட்டியது. சுதக்கிணையின் பெருமையைப் பாடலினுாடு காட்டிய ஐயர் அவளின் கற் பின் சிறப்புக்காட்டப் பொருத்தமான மேற்கோளைக் கையாளுகிருர், உரையாசிரியருக்கு இருக்கவேண்டிய பன்னுாற்பயிற்சி, இலக்கணத்தெளிவு முதலிய ன கணேசையரிடம் சிறப்பாகக் காணப்பட்டமையை இவ்வுரைப் பகுதியி னுாடு தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.
ஐயர் உரையெழுதிய நூல்களுள் மகாபாரதம் சூதுபோர்ச் சருக் கமும் விதந்து குறிப்பிடத்தக்கது. ஈழநாட்டுக் கல்விப் பாரம்பரியத் தில் இரகுவமிசம் போலவே பாரதமும் படிப்பிக்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தின் பல்வேறு சருக்கங்களுக்கும் வெவ்வேறு காலங்களில் உரைகள் தோன்றியமை பாரதம் ஈழநாட்டிற் பெற்ற முக்கியத்துவத் தைப் புலப்படுத்தப் போதுமானது. மகாபாரதத்தின் சுவையான பகுதிகளுள் சூதுபோர்ச் சருக்கமும் ஒன்று. இச்சருக்கத்துக்குப் பலர் உரையெழுதியிருக்கிருர்கள். வகைமாதிரிக்குப் பின்வரும் பாடலுக்கு ஐயர் எழுதிய உரையைச் சுட்டிக்காட்டலாம்.
அரசவையி லெனையேற்றி யஞ்சாமல் றுகிறீண்டி யளகந்திண்டி
விரைசையெளி யினம்படிதார் வேந்தரெதிர் தகாதெனவே
விளம்புவோரைப்
| 8

பொருசமரின் முடிதுவித்துப் புலானுறு வெங்குருதி பொழியவெற்றி முரசறையும் பொழுதல்லால் விரித்தகுழலினி யெடுத்து முடியே
னென்றள்.
இ - ள்: அரசவையில் எனையேற்றி - இராசசபையில் என்னைக் கொடுவந்து, அஞ்சாமல் அளகந்தீண்டி, துகில் தீண்டி - அச்சமின் றிக் கூந்தலைப் பிடித்தும் ஆடையைப் பிடித்தும், அளியினம் படி விரை செய்தார் 'வேந்தர் எதிர் - வண்டுக்கூட்டங்க்ள் த ங் கிய பரிமளங்கமழும் பூமாலையைப் புனைந்த மன்னற்கு முன்பாக, தகா தனவே விளம்புவோரை இழிய சொற்களைச் சொல்லுகின்ற வர்க%ள, பொருசமரில் முடிதுணித்து - மோதுபோரில் சிரசுகளை வெட்டி, புலால்நாறும் வெண்குருதி பொழிய - முடைமணங் கமழு கின்ற வெய்ய இரத்தம் பாய்ந்துகொண்டிருப்ப, வெற்றி முரச றையும் பொழுதுஅல்லால் - சயபேரிகையடித்து முழங்கு ங் காலத்து முடிப்பதன்றி, விரித்தகுழல் முடியேனென்ருள்-அவிழ்ந்த கூந்தலை இனி எடுத்து முடிக்கமாட்டேனென்றும் பிரதிக்கினை செய் தாள் (திரெளபதி) எ. நு.
செய்யுளாதலின் அளகந்தீண்டி, துகிறீண்டி என முறையிற் கூருது தடுமாறக்கூறினர். தலைதடுமாற்றந்தந்து புணர்தல் என் னுந் தந்திரவுத்தியனென்க. அளகந்திண்டித் துகிறீண்டித் தகா தன விளம்பிய துச்சாதனனையும் தகாதன விளம்பிய கன்னன், துரியோதனன் என்னுமிவர்களையும் குறித்தற்கு விளம்புவோரை யென்று பன்மை கூறியதென்றறிக. வெற்றிமுரசு - முரசின் வகை மூன்றினுள் ஒன்று. (மற்றவை கொடை முரசம், மங்கல முரசம்) செய்யுளாதலின் "துகில் தீண்டியளகந்தீண்டி’ என முறைபிறழக் கூறினுர், 3
கற்றற்கு விருப்புடைய மாணவர்க்கும் கவிதையில் விருப்பு டைய ஆர்வலர்க்கும் பயன்படக்கூடியதாக இந்த உரை அமைகின் றது. தமிழிலக்கியப் பரப்பில் சூதுபோர்ச் சருக்கத்தை மையமாக வைத்து எழுந்த காவியங்களும் நாடகங்களும் பல. பா ர தி யின் பாஞ்சாலி சபதத்தின் “ஆதிமூலமும்’ இச்சூதுபோர்ச் சருக்கமே. சூதுபோர்ச் சருக்கத்திற் பாஞ்சாலி பெறும் முக்கியத்துவத்தை மாத் திரமன்றிக் கதைப்புணப்பையும் தாங்கி நிற்பது மேற்காட்டிய செய் யுள், இச்செய்யுளுக்கு ஐயர் செய்யும் உரை விளக்கம் சிறப்பாக அமைந் துள்ளது. 'தகாதனவே விளம்புவோரை' என்ற தொடருக்கு ஐயர் கூறும் பொருள் விளக்கம் நயம் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. *தகாதன விளம்பிய துச்சாதனனையும், தகாதன விளம்பிய கன்னன் துரியோதனன் என்னுமிவர்களையும் குறித்தற்கு விளம்புவோரை யென்று பன் மை கூறிய த ஹி க" என்று ஐயர் குறிப்பிடுவது
19

Page 20
பொன்னம்பலபிள்ளையின் 'நயம்படவுரைக்கும்" பாரம்பரியத்தை நினை வூட்டுகின்றது. அளகந்தீண்டியபின் துகில்தீண்டுவதே இயல்பு. இயல்பு மாறி துகில் தீண்டியளகந் தீண்டியென அமைந்தமைக்கு யாப்பு நோக் கிய மாற்றமேயெனக் கூறும் ஐயர் 'புலவர் சொல் புரைபடா” எனுங்கருத்தைக் கொண்டிருக்கிருர் போ லத் தோன்றுகின்றது. "தலைதடுமாறல் என்னுந் தந்திரவுத்தி” என அம்மாற்றத்திற்குப் பிரமாணம் கூறிப் புலவர் கூற்றினை அரண் செய்கின்றர். தான் ஏற் றுக்கொண்ட கருத்தைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறும் ஆற் றல் வாய்ந்தவராகப் புலவர் காணப்படுகின்றர். மகாபாரதம் சூது போர்ச் சருக்க உரையும் இரகுவமிச உரையும் ஐயர் பொன்னம்பலபிள்ளை யின் உரைமரபில் வந்தவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஐயரைச் சிறந்த உரையாசிரியராகக் காண்பதற்கும் அவரின் இலக்கண இலக்கிய நுட்பங்களை அறிவதற்கும் அகநானூறு முதல் நூறு செய்யுள்களின் உரை விளக்கம் உதவுகின்றது. ஐயரைப் பண் டைய உரையாசிரியர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் அகநா னுாற்று உரைகள் உதவுகின்றன. இரகுவமிசம், சூதுபோர்ச் சருக்கம் என்பவற்றினுரைகளிற் காணுத இறுக்கத்தையும் செறிவையும் அக நானுரற்று உரைகளிலே காணலாம்.
அகநானூற்று உரை சிறப்புற அமைந்தமைக்கு இரண்டு கார ணங்களைக் கூறலாம். ஒன்று, ஐயர் புலவரிடம் பெற்ற பயிற்சியும் புலவரை நிகர்த்த அவரது பாணியும். இரண்டாவது ஐயர் தொல் காப்பியம் பொருளதிகாரம் முழுவதையும் ஆராய்ந்து விளக்கக் குறிப்புக்களுடன் எழுதிய பின்பே அகநானூற்றுக்கு உரையெழுதியமை. ஐயருக்குப் பொருளிலக்கணத்திலிருந்த புலமை முதிர்ச்சி" அகநா னுாற்று உரையிலே பளிச்சிடுகின்றது. அகநானூறு ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் நடத்தும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாட நூலாகவும் இருந்தது, ஐயரைப் பல மாணவர்கள் அணுகி அகநா னுாறு பாடங்கேட்டனர். இலங்கை முழுவதிலுமிருந்து பரீட்சைக்குத் தோற்றும் பண்டித மாணவர்களுக்குப் பயன்படும் பொருட்டு அக நானூறு முதல்நூறு செய்யுள்களுக்குமான உரையை ஐயர் ஈழகேசரிப் பத்திரிகையிலே தொடர்ந்து எழுதினர். அக்காலத்தில் ஈழகேசரிப் பத்திரிகைக்கும் கணேசையருக்கும் நெருக்கமான உறவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அகநானூற்றுப் பாடல்கள் மிக நீண்டவையாக இருப்பதால் ஒருபாடல் முழுவதையும் சுட்டி அதற்கான உரையையும் காட்டுவது கடினமானது. எனினும் ஐயரைப் பண்டைய உரையாசிரியர் வரிசை யில் வைத்துப் பார்க்க உதவும் பொருட்டு ஒரு பாடலின் ஒரு பகுதி யையும் அதன் உரையையும் பதச்சோருக இங்கே காட்டலாம்.
20

இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமு மறுவின் றெய்துப செறுநரும் விழையுஞ் செயிர்நீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்ந்தனந் தோழி நிரைதார் மார்ப ஞெருநா ளொருத்தியொடு வதுவை யயர்தல் வேண்டிப் புதுவதி னியன்ற வணிய னித்தெரு விறப்போன்
- மருதம் 86. இ-ள்: தோழி - தோழியே, செறுநரும் விழையுஞ் செயிர்நீர் காட்சி - பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய, சிறுவர் பயந்த செம்மலோர் - புதல் வரைப் பெற்ற பெருமையிற் சிறந் தோர், இம்மை உலகத்து இசையொடும் விளங்கி - இவ்வுலகத்தே புகழொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுவின்றி எய்துப - மறுமையில் (மறுபிறப்பில்) அடையும் உலகவாழ்வினையும் குற்ற மின்றி அடைவர் என்று, பல்லோ கூறிய பழமொழிகளெல்லாம், வாயேஆதல் வாய்த்தனம் - உண்ம்ையே ஆதலையாம் இப்போது கண்கூடாகக் காணப்பெற்ருேம். நிரைதார் மார்பன் - மலர் வரிசையாலாய மாலையையணிந்த நந்தலவன். நெருநல் - நேற் றைத்தினம், ஒருத்தியொடு வதுவையயர்தல் வேண்டி - ஒருத் தியை மணஞ்செய்தலை விரும்பிப் புதுவதின் இயன்ற அணியன் - புதிதாகச் செய்த அணியனய் (ஒப்புடையவனப்) இத்தெரு இறப் போன் - இத்தெருவைக்கடந்து செல்வோன்’4. a
அகநானூற்றுச் செய்யுளுக்கு ஐயர் மிக அருமையான உரையை எழுதியுள்ளார். பதவுரை, இலக்கணக் குறிப்பு, மேற்கோள் விளக் கம் முதலிய வகையில் இவ்வுரைப்பகுதி அமைகின்றது. வித்தையில் விருப்புடைய மாணவர் பொருட்டுக் கருத்துத் தெளிவுக்காக அடைப் புக் குறிக்குள் விளக்கங்கள் தந்தமை ஐயர் கையாண்ட சிறப்பான வழியாகும். நீண்டகால ஆசிரிய அனுப்வம் ஐயருக்கு இவ்வுரை யெழுதும்பொழுது உதவியிருக்கிறது என்பது புலனுகின்றது. ஐயரின் பெரும்பாலான பணிகளை ஆராயும்பொழுது இவர் தமிழ் மாணவர் களைப் பெருமளவு மனங்கொண்டிருக்கிருர் என்பது தெளிவாகின்றது.
அகநானூற்றின் உரை ஈழகேசரியில் தொடர்ந்து வெளிவரும் போது அக்காலத் தமிழ் மாணவர்கள் பலரும் தமிழறிஞர்களும் ஐயரின் உரைக்காகவே ஈழகேசரியைப் படிக்க விரும்பினர் என்பர். கணேசையர் ஈழகேசரியில் அவ்வப்போது பல கட்டுரைகளும் செய்யுள் களும் எழுதி யுள்ளார். எனினும், ஈழகேசரிக்கூடாக ஐயர் செய்த பெரும்பணி அகநானூற்றுக்கு உரை விளக்கம் எழுதியமையே என்று துணிந்து கூறலாம், *
21

Page 21
ஐயரின் சங்க இலக்கிய ஆளுமை பல்வேறு கட்டுரைகளிலும் புலப்படுகின்றபோதிலும் அகநானூற்று உரை மூலமே தெளிவாக வெளியுலகிற்குத் தெரியவந்தது. சங்க இலக்கியங்களுக்கு உரையெழு திய பிற்காலத்தோருள் ஐயருக்கும் மதிப்பார்ந்த இடம் கிடைக்க வேண்டுமெனின் அக்நானூறு முதல்நூறு செய்யுளுக்குமான உரை விளக்கம் நூலுருப் பெறவேண்டியது அவசியமாகும்.
பண்டைய உரையாசிரிய மரபில் ஐயரைச் சேர்த்து மதிக் கின்ற அதேவேளையிலே, தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஐயரின் பங்கு எத்தகையது என்று ஆராய்வதும் பய்னுடையது se-60optu urt சிரிய மரபில் ஈழநாட்டில் வாழ்ந்தவர்கள் பலர் கடினமான பல நூல் களுக்கு உரைகண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். கணேசையரின் மொழியாளுகைத் திறனைச், சொல்லாட்சியை அவருடைய உரை நூல் களிலே காண்பதைவிட அவர் வசனநடையிலே எழுதிய குமாரசுவாமிப் புலவர் சரிதம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், குசேலா சரிதம் முதலிய நூல்களிலே கண்டு தெளியலாம்.
தமிழ் உரைநடைக்கு நீண்டகால வரலாறு உண்டு எனினும்
களும் பெற்றுத்திகழத்தொடங்கியது. அச்சியந்திரமும் ஆங்கிலக் கல்வி யும் வசன்நடையினை வாழ்த்தி வரவேற்றன. ஆங்கிலக் கல்வியைப் பெருத பண்டைய இலக்கண இலக்கியங்களிலே ஊறித்திளைத்த ஐயர் காலத்திற்கேற்ற மொழிநடையையும் கையாண்டமை பாராட்டிற் குரியது. ஐயரைப் போன்றவர்கள் இறுக்கம், தூய்மை என்ற பேரிற் கடும் புணர்ச்சியில் இறங்கி வாசகனைத் திணறடித்துக்கொண்டிருக்க ஐயர் குசேலர் சரிதம் என்னும் நூலைப் 'பள்ளிப் பிள்ளைகளுக்காக” எழுதியிருக்கிருர், குசேலர் சரிதத்தில் ஐயரின் மொழிநடையில் நளி னமும், எளிமையும் காணப்படுகின்றது. V
ஐயரின் குசேலர் சரிதம் குழந்தை இலக்கியமாக அமையாவிடி னும் சிறுவர்கள் விரும்பி வாசிக்கக்கூடிய குட்டிக்கதை நூல்போல அமைந்துள்ளது. ஆர்வத்தைத் தூண்டும் அத்தியாயப் பகுப்புகளைக் கொண்டுள்ளது. சிறுவர்கள் குசேலரின் கதையை அறிவதே நோக்க மாகக்கொண்டு இந்நூல் அமைக்கப்பட்டபோதிலும் உபதேசப்பாங்கே மேலோங்கிக் காணப்படுகின்றது. பதினெட்டுத் தலைப்புகளாக வகுக் கப்பட்டு இச்சரிதம் எழுதப்பட்டுள்ளது. பொதுவான அறநீதிக்கருத் துக்களே இப்பதினெட்டுப் பகுப்புக்களுள்ளும் விரவியுள்ளன. குழந் தைகள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியதான உபதேசங்களை ஐயர் இச்சரிதத்தினூடு விளங்கவைத்துள்னார். ஏறத்தாழ இச்சரிதம் "நீதிக்கதைகள்' 'போலவே காணப்படுகின்றது. உதாரணமாகக் கீழ் வரும் பகுதியைச் சுட்டிக்காட்டலாம்.
22

"சுசீலையின் வார்த்தையைக் கேட்ட முனிவர் அவளை நோக்கிச் சொல்லுகின்றனர்: சுசீலா 1 யான் சொல்வதைக் கேள்; உன் புதல்வர்க்கு உணவில்லையென்று வருந்தல் வேண்டாம். எல்லா வுயிர்களுக்கும் உணவு அளிப்பவர் கடவுள் ஒருவரே. கல்லுள் இருக்கும் தேரைக்கு உணவு அளிப்பவரும் அவரே. கருப்பைக் குள் இருக்கும் முட்டைக்கும் உணவு அளிப்பவரும் அவரே. ஆத லால் உன் புதல்வர்க்கும் உணவை அளிப்பர். நிறைந்த உணவும், குறைந்த உணவும் பெறுவது அவரவர் விதிவழியேயாம். ஆதலால் உன் புதல்வர்க்கும், ஆயுளுள்ள வரையும் விதியின் வழியே உணவு கிடைக்கும் இது உண்மை."5
சிறுவர்களுக்கு ஊழின் வலியை உணர்த்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, உலகநீதி முதலியவற்றைச் செய்யுள் வடிவிலே படித்து வளர்ந்த சிறுவர்க ளுக்கு இவ்வுரைநடைப் பகுதி உகந்ததாகவே அமையும். ஐயரின் இலக்கியக் கொள்கையும் இச்சிறுவர்களுக்கான உரைநடை நூல் மூலம் தெரியவருகின்றது. குசேலர் சரிதத்தினைப் பதினெட்டு உப பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு உப பிரிவுக்கும் பொருத்தமான தலையங்கங்கள் இட்டுள்ளார். பசிக்கொடுமை, ஊரும் பொருளும், தோணியேறித் துவாரகை சேறல் முதலிய தலைப்புக்கள் நவீன ஆக்க இலக்கிய கர்த்தா ஒருவன் கையாளும் அத்தியாயப் பகுப்புப்போல அமைந்துள்ளது. குசேலர் சரிதத்தில் ஐயர் கையாளும் உரை நடைவகை ஏறத்தாழக் குமாரசுவாமிப் புலவர் எழுதிய கண்ணகி கதையை ஒத்ததாகவே அமைந்துள்ளது.
ஐயர் எழுதிய உரைநடை நூல்கள் ஒவ்வொன்றிலும் "நடை" வேறுபாட்டினைக் காணலாம். இந்நூல்கள் எழுந்த நோக்கமும் இந் நடை" வேறுபாட்டிற்கு ஒரு காரணமாகலாம். எடுத்துக்கொண்ட பொருளைத் திறம்படப் புலப்படுத்தும் வகையிற் சொற்களைக் கையாண் டும் உரைநடையைச் சிறப்புற அமைத்துள்ளார்.
ஐயர் எழுதிய முகவுரைகளின் நடை நூல்களின் நடையை விடச் சற்று வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான முகவுரைகளின் வாக்கியங்கள் நீளமானவையாகவும் தொடர்புடைய
தைக்கண் விருப்புடைய பாலகர் பொருட்டுக் குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரத்தை எழுதியமை போன்று ஐயரும் 'ஒரி ரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ளவரும் ஈழநாட்டின் புலமைப் பாரம்பரியத்தை அறியவேண்டுமென எண்ணி, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதத்தை எழுதினர் என்று கருதலாம். இச்சரிதம் நூலு ருப் பெறமுன்னர் பலவகையான வாசகர்களும் வாசிக்கக் கூடியதா கப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நூலின் "நடை"
忍3

Page 22
வேறுபாட்டிற்கு முக்கிய காரணம் இது பத்திரிகையில் வெளிவந்த மையே. இந்நூலை ஐயர் சாதாரண வாசகனையும் மனங்கொண்டே எழுதினர் என்பது அதன் முகவுரைப் பகுதியாலே தெளிவாகின்றது.
4'இச்சரிதங்களிலுள்ள வாக்கியங்களுள் வருந் தொடர் மொழி களுட் பெரும்பாலன படிப்போர் எளிதுணரற் பொருட்டுச் சந்தி நோக்காது பிரித்தெழுதப்பட்டும் புலவர்களுடைய இயற்பெயர் களுட் சில இலக்கண விதிநோக்காது வழங்கி வந்தபடியே எழு தப்பட்டும் உள்ளன."6 . s
என ஐயர் குறிப்பிடுவர். தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் ஆராய்ந்தறிந்த ஐயர் 'படிப்போர் எளிதுணரற் பொருட்டு" வாச கனை மனங்கொண்டு உரைநடையமைத்தமை பாராட்டற்குரியது. ஈழநாட்டுப் புலவர்களை அறிமுகஞ்செய்த மகத்தான பணியினுாடு இவரின் மொழிநடைபற்றிய உணர்வினையும் தரிசிக்க முடிகின்றது.
மொழியைப் பொருள், இடம் அறிந்து கையாளுவதில் ஐயர் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கின்ருர். விவரணத் தன்மை, உணர்வுபூர்வம். எடுத்துரைப்பாங்கு முதலிய அமிசங்களை இவரது உரைநடை கொண்டிருப்பதை அவதானிக்கலாம். வகைமாதிரிக்குக் கீழ்வரும் பகுதியைச் சுட்டிக் காட்டலாம்.
'. . . . .இன்னும் இவர் முருகேச பண்டிதரிடத்தன்றி அளவை யம்பதிக்கண் வசித்த கனகசபைப் புலவரிடத்துஞ் சிற்சில இலக் கண நூலைக்கற்றனரென்றும் இவர் படிக்க அடைந்த பிரயாசம் மிக அதிகமென்றும், அக்காலத்திலே தமது தேகாரோக்கியத் தையும் அதிகஞ் சிந்திக்கமாட்ட்ாரென்றும் எவரிடத்து அரிதான நூல்களிருக்கின்றனவோ அவரிடம் வருத்தம் பாராது சென்று அந்நூல்களை வாங்கிப் படிக்க முயலுவரென்றும் அவ்வாறே மானிப்பாயில் வசித்த ஒருவரிடம் சென்று அரிதான நன்னூ லுரையொன்று வாங்கிப் படித்தனரென்றும் அறிந்தோர் சிலர் கூறுவர்."7 . .
இவ்வாறு குமாரசுவாமிப் புலவரைப்பற்றி ஐயர் குறிப்பிடுவர். இந்நடையிற் பெரும்பாலும் பிறர் கூற்றுத்தன்மை காணப்படுகின் றது. இவ்வாறு இடத்திற்கேற்ற வகையில் ஐயரின் நடை வேறுபடு வதைப் பலவிடங்களிலும் அவதானிக்கலாம். குமாரசுவமிட புலவ ரின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் படித்தநிய வேண்டும் எனும் ஆர்வமுடைமை இவ்வுரை நடையமைப்பினுாடு தெளிவாகின்றது. குமாரசுவாமிப் புலவரும் எழுதும்பொழுது கடுமையான புணர்ச்சி களைக் கையாண்டபோதிலும், அவையிலே பேசும்பொழுதும் புராண படனஞ் செய்யும்பொழுதும் பொதுமக்களுக்கு விளங்கக்கூடிய மொழி நடையையே கையாளவேண்டுமென்னும் கொள்கையுடையவராக
24

இருந்தாரென்று ஐயர் அவர் சரிதத்திலே குறிப்பிட்டுள்ளார் புலவ ரின் பயிற்சி ஐயரிற் பலவிடங்களிலே தெளிவாகத் தெரிகின்றது.
ஐயரின் மொழிநடையின் முக்கியமான ஓர் அமிசத்தை அவர் எழுதிய கண்டனங்களிலும் கலந்துகொண்ட விவாதங்களிலும் அவ தானிக்கலாம். “கண்டனநடை' என ஒரு நடையை ஐயர் கையாண் டார் எனக்கருதலாம். ஐயரின் கண்டனத்திறன் பற்றிக் குறிப்பிடு மிடத்தில் இதற்கான உதாரணத்தைக் கண்டுகொள்ளலாம்.
ஐயர் தாம் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ற நடையைக் கையாண்ட அதேவேளையிற் பண்டைய உரையாசிரியர்கள் கையாண்ட நடை யையும் கையாண்டுள்ளார். ஐயரின் உரைநடை ஆற்றலை அவரது நூல்கள், கட்டுரைகள் கண்டனங்கள் முதலிய பல்வேறு இடங்களி லும் தரிசிக்கலாம்.
25

Page 23
இயல் - 2
6.
அடிக் குறிப்புக்கள்
கணேசையர், சி., முகவுரை, இரகுவமிசம் மூலமும் கணேசையர் இயற்றிய புத்துரையும், சோதிடப்பிரகாச யந்திரசாலே - கொக்குவில், ஆனந்த தை மீ”
மேற்படி நூல், பக்கம் சு உரு
கணேசையர், சி. மகாபாரதம் சூதுபோர்ச் சுருக்கம் கணேசையர் உரை, 1939. is 1 76.
ஈழகேசரி - 07-08- 1955,
கணேசையர், சி, குசேலர் சரிதம், திருமகள், வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்-1967
பன்னிரண்டாம் பதிப்பு - பக்கம் 10, 1 1.
கணேசையர், சி , ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் ஈழகேசரி நா. பொன்னையா பதிப்பு-1939 முகவுரை பக்.
கணேசையர், சி, குமாரசுவாமிப் புலவர் சரிதம், கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திரசாலை 4 1925

upsäTg
இலக்கணப் பேரறிஞர்
Rழ நாட்டின் இலக்கண மரபு வைரம்பாய்ந்தது. ஆறுமுகநாவலர் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், வ, குமாரசுவாமிப் புலவர், சுன்னுகம் பூ முருகேச பண்டிதர், முதலியோர் இலக்கணத்துறையிற் கொடிகட்டிப் பறந்தவர்கள். இவர் கள் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்று நுண்மாண்துழை புலமுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களின் இலக்கண முயற்சி களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைவது கணேசையரின் தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்புகளே. நவீன மொழியியற் கோட் பாடுகள் தமிழிற் காலடி வைக்கத் தொடங்குவதற்கு முன்னரே ஈழத்தவர்களின் இலக்கண முயற்சிகளில் மொழியியற் பார்வை முளை விடத் தொடங்கி விட்டதெனலாம். ஈழத்தின் மரபுவழித் தமிழ்ப் புலமையின் இறுக்கம், பலம் முதலியன இவ்விலக்கண முயற்சிகளிலே துல்லியமாகத் தெரிந்தது என்று துணிந்து கூறலாம்.
முதன்முதல் வழிசமைத்தவர் தமிழ்தந்த சி. வை. தாமோதரம்பிள்ளையே என்பர். பிள்ளையவர்கள் ஈழநாட்டிலே பெற்ற இலக்கணக் கல்வியே அவருக்குத் தொல்காப்பியத்தின் பண்பையும் பயனையும் உணர்த்தியது.
“என் சிறுபிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்குந் தேடியும் அகப்பட வில்லை. ஒட்டித்தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றே தெரிய வரும்.” !
மேற்காட்டியவாறு சி. வை. தாமோதரம்பிள்ளை குறிப்பிடுவர். இவ்வாறு சி. வை. தாமோதரம்பிள்ளை குறிப்பிடுவதிலிருந்து ஈழநாட் டின் கல்விமரபின் உள்ளுரத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்: கணேசையர் தொல்காப்பியத்தினுள் துணிந்து பிரவேசிக்க அவர் பெற்ற கல்வியே காரணமாக அமைந்துள்ளது. ஐயரின் தொல்காப் பியப் பதிப்புக்கள் (எழுத்ததிகாரம் - 1937. சொல்லதிகாரம் 1938

Page 24
பொருளதிகாரம் இரண்டாம் பகுதி 1943 பொருளதிகாரம் முதற் பகுதி 1948) வெளிவந்ததும் ஈழநாட்டின் புகழும், ஐயரின் திறமும் தமிழ்நாடு எங்கணும் பரவி வியாபித்தன. தொல்காப்யியக் கடல் என்றும் ஈழத்தின் இலக்கண ஞாயிறு என்றும் ஐயர் பலவாருகப் புகழ்ந்துரைக்கப்பட்டார். ஐயரின் இலக்கணப் புலமையின் ஊற்றுக் களாக அமைந்தவர்கள் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்*ளயும் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவருமே எனலாம். தொல்காப்பியப் பதிப்புக்களின் முகவுரையில் ஐயர் இதனைக் குறிப்பிட்டிருக்கிருர், உதாரணமாகக் கீழ்வரும் பகுதியைச் சுட்டிக்காட்டலாம்.
“இவ்விளக்கவுரைக் குறிப்புக்கள் யாம்படிக்கும் காலத்தில் எமது ஆசிரியர்களாகிய வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை,
சுன்னகம் அ குமாரசுவாமிப் புலவர் என்பவர்களிடங் கேட்டுத் குறித்தனவும் யாம்படிப்பிக்கும் காலத்தில் பலமுறையாராய்ந்து குறித்து வைத்தனவுமாகும்.' *
படித்தலிலும் படிப்பித்தலிலுமே தம் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர் ஐயர். ஐயரிடம் சிலகாலம் படித்தவரான ஈழகேசரி நா. பொன்னையா அவர்களே ஐயரை நன்கு பயன்படுத் தியராவர். மொழியியலிலாயினும் இலக்கியத்திலாயினும் மிகச்சிறந்த புலமை பெற்ற பலர் கற்பித்தல் அனுபவமுடையவர்களே கற்பதை விடக் கற்பிக்கும் பொழுதுதான் சிக்கல், சிரமம், சந்தேகம் முதலி யன தோன்றும் ஐயர் கற்ற அளவோடு கற்பித்த அனுபவமும் இணைந்தே தொல்காப்பியப் பதிப்புக்கள் வெளிவந்தன. கற்பிக்கும் பொழுது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் குறித்துவைத்து மீண்டும் மீண்டும் சிந்திக்கும் வழக்கமுடையவர் ஐபர். இவ்வழக்கம் ஐயருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது என்பதை அவரது உரை விளக் கக் குறிப்புக்கள் காட்டிநிற்கின்றன ஐயர் ஐந்திலக்கணத்திலும் ஆற் றலுடையவர் எனினும் சொல்லிலக்கணத்திலே சிறப்பாற்றலும், ஈடு பாடும் பெற்றிருக்கிறர் என்று கருதமுடியும்.
* தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகள் உளவா யினும் அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத் தெரிந்துணர்த்தினலும் தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையுடைமையாலும் ஆசிரியர் சூத்திரப்போக்கினையும் வட மொழி தென்மொழி என்னும் இருமொழி வழக்கினையும் நன்கு ணர்ந்து தென்மொழி வழக்கோடு மாறுபடா வண்ணம் 6). - மொழி வழக்கினையும் கொண்டு பொருளுரைத்தலினலும் தலை சிறந்து விளங்குவது சேனவரையருரையே. பிறருரைகளிலும் சிற்சில நயங்கள் காணப்படினும் இதுவே பற்பல நய்ம் படைத் துள்ளது. ஆதலாற்ருன் அக்காலந்தொட்டு இதனைப் பல ரு ம்

போற்றிப் படித்துவந்தனர். யாம் நல்லூர் வித்துவசிரோமணி பூரீமான் ந. ச. பொன்னம்பலபிள்ளையவர்களிடம் பாடங்கேட்ட காலத்தில் இதன் கண்ணேயே எமக்கு அதிகம் உள்ளஞ் சென் றது.”*
என ஐயர் குறிப்பிடுவர்.
ஐ ய ரின் மனேநிலையை இ க் கூ ற் றி லி ரு ந்து நன்கு அறியலாம். எழுத்தும் சொல்லும் நன்கு ஆராய்ந்து உரை விளக்கக் குறிப்பு வெளியிட்ட பின்னரே ஐயர் பொருளிலக்கணத் திற் கவனஞ் செலுத்தியிருக்கிருர், பொதுவாக ஐந்திலக்கணத்திலும் ஈடுபாடும் ஆற்றலும் பெற்றிருந்தாரேனும் சொல்லிலக்கணத்தையே தமது சிறப்புத் துறையாக ஐயர் கருதியிருக்கிருர் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஐயரின் ஆசிரியர்களுள் ஒருவரான குமாரசுவாமிப் புலவரும் சொல்லிலக்கணத்திற் சிறப்புத்தேர்ச்சியுடையவர் இத்தேர்ச் சியை அவரின் இலக்கணச் சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் ஆகிய நூல்கள் தெளிவாகக் காட்டும் இலக்கணத் துறையில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவர் ஐயர், பண்டைய உரையாசிரியர் களைத் துறைபோகக் கற்று அவற்றின் மெலிவு நலிவுகளையும் உடன் பாடு முரண்பாடுகளையும் ஐயர் நன்கு அறிந்திருந்தார். உரையாசிரி யர்களின் முரண்பாடுகளை மாத்திரமன்றி உடன்பாடுகளையும் சுட்டி உரை விளக்கம் செய்தமை ஐயரின் ‘புலமை நேர்மை"யைத் தெளி வாக்குகின்றது. வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழி வழக் குகளையும் நன்குணர்ந்து தமிழிலக்கண வழக்கினை முதன்மைப்படுத் தியமை இவரது உரைவிளக்கக் குறிப்பின் சிறப்பமிசங்களுள் குறிப் பிடக்கூடியது.
U657 65) Lu உரையாசிரிகளுள்ளே ஏற்படும் கருத்து வேறுபாட் டினை அல்லது மயக்கத்தினைச் சுட்டிக்காட்டி அக்கருத்து வேறுபாட் டிற்குரிய காரணங்தையும் அறிந்து, பாடாந்தரம் பற்றியும் சிந்தித்து ஐயர் உரை விளக்கக் குறிப்பு எழுதினர். பலகாலமாகத் திரும்பத் திரும்பத் தொல்காப்பியத்தைக் கற்பித்து வந்தமை ஐயருக்கு அதிலே சிறப்புத் தேர்ச்சி ஏற்படக் காரணமாகியது. இதனை ஐயர்,
*பல்லாண்டாகப் பண்டித வகுப்பு மாணவர்களுக்கு யாம் படிப் பித்த அனுபவத்தினலே அறிந்து வைத்திருந்த சில திருத்தங் களையும் கீழ்க்குறிப்பிற் காண்பித்துள்ளோம்.” " என்றும்,
'' . . . . . பிரம்மபூரீ தி. சதாசிவ ஐயரவர்களால் சுன்னகத்திலே ஸ்தாபிக்கப்பட்ட பிராசீன பாடசாலையிலே பண்டித வகுப்பு
மாணவர்களுக்குப் பதினைந்து வருடகாலம் படிப்பித்து வந்துள் ளோம். படிப்பிக்கும் போதே பலர்க்கும் பயனகுமென்று கருதி
29

Page 25
இவ்வுரை விளக்கக் குறிப்புகளை ஆராய்து எழுதிவைத்தோம்.
எழுதுங் காலத்து நேர்ந்த சில சந்தேகங்களை சுன்னுகம் பூரீமா ந்
அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் கேட்டறிந்துள்ளோம்.”* என்றும் குறிப்பிடுவர்.
படித்தும் படிப்பித்தும் ஏற்பட்ட அனுபவத்தோடு நல்லாசிரி யரை அணுகிச் சந்தேக விபரீதங்களைக் கேட்டறிதலில் ஐயர் ஆர்வ முடையவராகவே இருந்தார் என்பதை அ வ ர து உரைவிளக்கக் குறிப்பு முகவுரைகள் காட்டிநிற்கும். இலக்கணஞ் சம்பந்தமாக ஐயருக்கும் அவர்காலத் தமிழறிஞர்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சை களும் ஐயரின் இலக்கண வித்தகத்தினை விளக்கி நிற்கும். அவை “விவாத அறிஞர் கணேசையர்" எனும் இயலிலே குறிப்பிடப்பட்டுள் ளன. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து ‘நன்முடிவு காண் பதற்கு ஐயருக்கிருந்த வடமொழிப் புலமையும் ஒரு காரணமாகும். அக்காலத் தமிழறிஞர்களிலே பலர் வடமொழியையும் தமிழையும் சமதையாகக் கற்றிருந்தமை அவர்களின் அறிவுநிலைப்பாட்டிற்குத் தகுந்த காரணமாகும்.
தொல்காப்பியக் கடலுள் துணிந்திறங்கி நல்முத்துக்கள் கொணர்ந்தவர் ஐயர். புலப்படாமல் இருந்தவற்றைப் புலப்படுத்தி யதோடு மங்கி மழுங்கி மயங்கி இருந்த பகுதிகளையும் பட்டைதீட்டிப் புலப்படுத்தியவர் ஐயர். வகைமாதிரிக்கு ஐயரின் உரை விளக்கக் குறிப்புக்களிலிருந்து சிலபகுதிகளைச் சுட்டிக்காட்டலாம்.
குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே (தொல்: எழு. 34)
“உரையசைக் கிளவி என்பதற்குத் தான்கூறும் பொருளைக்கோ டற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல் என்றும் அது கேள் என்றும் நச்சினுர்க்கினியர் கூறுகின்ருர், அசைத்தல் எதிர்முகமாக் கல். அங்கனமாயின் சென்மியா என்புழிச் செல் என்பதற்குஅது பொருந்தாமல் வருகின்றது. ஆதலின் உரையசைக் கிளவி என்ப தற்கு சொல்லாகிய மியா என்று உரையாசிரியர் கொள்ளும் பொருளே பொருத்தமாகின்றது. நன்னூலாரும் இவ்வாறே கொள்வர். உரையசை - கட்டுரைக்கண் அசைநிலையாய் வருவது. கட்டுரை வாக்கியம், ஆங்க உரையசையென்பர் பின்னும், அச் சூத்திரத்திலே உரை என்பதற்கு நச்சினர்க்கினியர் கட்டுரை என்பர், ஆண்டு என்றது நூன்மரபை.”*

இவ்வாறு ஐயர் நச்சினர்க்கினியரின் உரை பொருந்தாமையை யும் சுட்டி, உரையாசிரியரின் உரையையும் அதன் பொருத்தப்பாட் டினையும் விளக்கி, ஒப்பீட்டு அடிப்படையில் நன்நூலாரையுங் காட் டித் தன் கருத்தை நிறுவியுள்ளார் இவ்வாருன பல இடங்களை ஐயரின் தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்பிலே சுட்டிக்காட்ட லாம். ஐயரின் இலக்கண விளக்க உரைகள் இலக்கிய நயம் பொருந் தியவையாய் அமைவது அவரின் இலக்கண வித்தகத்தையே புலப் படுத்துகின்றது.
ஐயரின் இலக்கணப் புலமையின் சிகரம்போல விளங்குவது சொல்லிலக்கண உரை விளக்கமேயாகும். அவர் சொல்லதிகார நூற் பாக்களுக்கு நீண்ட உரைவிளக்கக் குறிப்புக்கள் எழுதியுள்ளார். சொல்லதிகாரம் கிளவியாக்கம் நான்காம் நூற்பாவுக்கு ஐயர் எழுதிய உரை விளக்கம் படித்து இன்புறத்தக்கது. ஐயரின் ஆழ்ந்தகன்ற இலக் கனப் புலமையையும் ஒப்பிலக்கண உரை மரபினையும் இலக்கிய ஆளுமையையும் தற்றுணியையும் பின்வரும் குத் தி ர உரையினூடு காணலாம்
பெண்மை சுட்டிய வுயர்தினை மருங்கி ஞண்மை திரிந்த பெயர்நிலக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென அறியுமந் தந்தமக் கிலவே யுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
(தொல் - சொல். கிளவியாக்கம், 4
ஆடுஉவறிசொல் முதலாயினவற்றிற்குரிய எழுத்தே தம்வினைக் கீருக இசைத்தலாவது, ஆடுஉ வறிசொன் முதலியவற்றிற்குரிய னகர முதலிய வொற்றுக்களே தம்வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பாலுணர்த்தத் தாமும் அவ்வப்பாலை உணர்த்தல். உதாரணமாக, பேடி வந்தாள் என்புழி மகடு வறிசொல்லென் றுணர்த்துவதற்குரிய ளகாரவொற்றே தனக்கு முடிக்குஞ் சொல் லாயமைந்த வந்தாளென்னும் வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பெண்பாலையுணர்த்தத் பேடியாகியதானும் அப்பெண் பாலையே உணர்த்தல் காண்க. இவ்வாறே தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தாரெனத் தெய்வம் என்பதும் வந் தான் முதலிய வினைகளைப் பெற்றுப் பாலுந்திணையும் உணரநிற் றல் காண்க. வந்தான் முதலிய வினைகளைப் பெறுங்கால் தெய் வம் தன்னிறு திரிந்து நிற்குமென்க.
பேடர் என்ற உதாரணம் மயிலைநாதர் உரையைப் படித்தோர் சேர்த்திருக்க வேண்டும். அல்லது பேடிமார் என்ற உதாரணத்
31

Page 26
தையே பிரதிஎழுதுவோர் சில எழுத்தழிந்தமையிற் பேடர் என்று எழுதியிருத்தல் வேண்டும். அன்றி, பேடர் வந்தார் என்பதையும் பெண் பாற்பன்மைக்கு உதாரணமாகச் சேனவரையர் காட்டியிருப்பரேல் அதனை ஒழித்து “பேடியர், பேடிமார், பேடிகள் என்பனவும் அடங் குதற்குப் பேடியென்னும் பெயர் நிலைக்கிளவியென்னது பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவியென்ருர்' என்று கூறி யிருக்கமாட்டார். ஆதலின் அஃது அவர்காட்டிய உதாரண மன்று.
உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெய்ர்நிலைக் கிளவி யெனின் அலிப்பெயர் மேலுஞ்செல்லும் அப்பெயர் மேற்செல்லாது நீக்குதற்குப் “பெண்மை சுட்டிய' எ ன் று ம் உயர்திணை மருங்கிற் பெண்மைசுட்டிய பெயர் நிலைக்கிளவியெனின் பெண் பாற்பெயர் மேலுஞ் செல்லும். அவற்றின் மேற் செல்லாமணிக்குதற்கு "ஆண்மை திரிந்த" என்றுங் கூறினர். இதனுல் அதிவியாத்திக் குற்றம் நீக்கிய வாறு.
அலிப் பெயரினீக்குதற்குப் பெண்மை சுட்டிய என்று கூறியத ஞலும், “ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி ஆண்மையறி சொற்கா கிடனின்றே" என்னும் க உ ம் சூத்திர உரையுள் ஆண்மையறி சொற்காகிடன் என்ற விலக்கு. ஆண்மையறி சொல்லோடு புணர்தல் எய்திநின்ற பேடிக்கல்லது ஏலாமையின் அலிமேற் செல்லாதென்க; என்றதனலும் ஆண்மை திரிந்து பேடியும் அலியும் ஆகுமென்பது சேனவரையர் கருத்தாதல் பெறப்படும்
பெண்மை சுட்டாப்பேடு என்பதற்கு ஆண்மை சுட்டிய பேடு என்றுகொண்டு, பேடு என்பது பேடியைக் குறித்ததென்று சிலரும் அவியைக் குறித்ததென்று சிலரும் கொள்வர். இளம்பூரணர் பேடியை யாதல், அலியையாதல் பேடு என்னும் சொல்லால் வழங்காமையி ஞற் பேடு என்னும் சொல்லைக் கருதியே செனவரையர் பெண்மை சுட்டாப்பேடு என்பதும் ஒழிக்கப்பட்டது என்று கூறியிருத்தல் வேண்டு மென்பது எமது கருத்து, பேடு என்னுஞ்சொல் பேடுவந்தாள் என முடியாமையின் அவ்வாறு கூறினரெனலாம். அலியேயன்றிப் பே டு என்பது உம் பெண்மை சுட்டாமையின் ஒழிக்கப்பட்டது என்பது கருத்து. உம்மை இறந்தது தழீஇயது.
மயிலைநாதரும் இலக்கண விளக்க நூலாரும் பெண்மை திரிந்த தற்கு உதாரணமாகப் பேடன் வந்தான், பேடர் வந்தார், பேடன் மார் வந்தார் என உதாரணங் காட்டுவர். ஆயின் இவ்வுதார ணங்களை இளம்பூரணர் முதலியோர் எடுத்தாளாமையின் அவ் வழக்குப் பொருந்தாதெனவும் பெண்மை திரிந்தது அலியெனவும் சிவஞானமுனிவர் கூறுவர். .
ஆண்மை திரிதலாவது
o g a a . O - e s s e .
இன்னதென்பதை “ஆண்மை திரிந்த
32

பெண் மைக் கோலத்துக் காமனுடிய பேடியாடலும்’ (சில - கட எரு. ст.) என்பதனுரைக்கண் அடியார்க்கு நல்லாரும் “ஆண், மைத்தன்மையிற்றிரிதாலாவது, விகாரமும்,வீரியமும் நுகரும் பெற் றியும், பத்தியும் பிறவுமின்ருதல், ஆண்மை திரிந்த என்றதனல் தாடியும், பெண்மைக் கோலத்தென்பதஞல் முலை முதலிய பெண் ணுறுப்புப் பலவும் உடையது ஆண்பேடு எனக்கொள்க’ என்று கூறுவர். ஆண்பேடு என்றது ஆண்மை திரிந்த பேடியை
தெய்வச்சிலையார் “பேடியாவது பெண் பிறப்பிற்ருேன்றி, பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவ"தென்று கூறுவர். இது பெண்மை திரிந்த பேடியாகும். இவர் பேடியும் அலியும் ஒன்றென்பர். அது பொருந்தாது, பேடிவேறு, அலி வேறு என்க', 7 ܟ இவ்வாறு அச்சூத்திர உரையமைகின்றது.
இவ்வுரை விளக்கக் குறிப்பு ஐயரின் இலக்கண மேதாவிலாசத் தைக் காட்டப் போதுமானது. தாம் எடுத்துக்கொண்ட பொருளை அறுதியிட்டு முடிவுசெய்ய இவர் காட்டும் மேற்கோள்கள் சுவைத்து இன்புறற்பாலன. நீதிபதி ஒருவரின் தொகுப்புரைபோல இ வ ரின் இலக்கண விளக்கக் குறிப்புரை அமைந்திருக்கிறது. இவரின் ஆழ்ந் தகன்ற மொழிப்புலமையையும் இலக்கிய ஆளுமையையும் இவரின் உரைவிளக்கக் குறிப்புக்கள் அனைத்திலும் காணலாம். தொல்காப்பிய ரிலிருந்து சிவஞானமுனிவர் வரை வளர்ந்துவந்த இலக்கண முரண் பாடுகளை இவரது உரைவிளக்கக் குறிப்புக்களினுாடு காணலாம். ஐயரின் உரைவிளக்கக் குறிப்புக்கள் "மொழித்திறத்தின் முட்டறுப் பன” மாத்திரமன்றி, தமிழிலக்கண வரலாற்றையும் ஆராய உதவு கின்றன. எழுத்திலும் சொல்லிலும் போலவே ஐயர் பொருளிலக் கணத்திலும் பல நுண்மையான விளக்கங்களைக் காட்டியுள்ளார்.
“எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருள்திகாரத் தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்" என்று இறையஞர் களவியல் உரை செப்பும். ஐயர்எழுத்திலும் சொல்லிலும் பெற்றிருந்த புலமை போலவே பொரு ளிலும் பெற்றிருந்தார் என்பதை அவரது பொருளதிகார உரை விளக்கக் குறிப்பு உணத்தும். பொருளதிகாரத்தைப் பூரணமாக விளங்கிக்கொள்ள சங்க இலக்கியங்களைத் துறை போகக் கற்கவேண் டும். சங்க இலக்கியங்களைத் தெளிவுறக்கற்ற ஒருவராற்ருன் பொரு ளதிகாரத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். ஐயர், இரண் டிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஐயரின் பணிக்குப் படித்தலும் படிப்பித்தலுமே அத்திவார மாக அம்ைந்தன எனலாம்;
3.3

Page 27
ஐயர் வடமொழிப் புலமை பெற்றிருந்தும் பொருளதிகார ஆராய்ச்சிக்கு அவருக்கு வடமொழிப் புலவர் இராமசாமி சர்மா மிகுந்த சிரத்தையுடன் உதவியிருக்கிருர். ஐயர் ஆய்ந்து அறிந்து சந்தேகமானவற்றைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள் ளும் “பக்குவம்” படைத்தவர் என்பதை தொல்காப்பியப் பதிப்புக் களின் முன்னுரைகள் காட்டும்.
மிக நுணுக்கமான இலக்கண விட்யங்களைப் பற்றியெல்லாம் ஐயர் செந்தமிழ் முதலிய சஞ்சிகைகளிலே பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். இலக்கணக் கட்டுரைகள் அடக்கமும் இறுக்கமும் பொருந் தியவை. கட்டுரையாளர் எனும் இயலிலே புலவரின் கட்டுரைத் திறன் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம் ஐயர் சில ஆராய்ச்சி என்னும் தலைப்பில் இலக்கண விடயமாகச் செந்தமிழிலே பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளும் ஐயரின் இலக்கணப் புலமையைத் தமிழ்கூறும் நல்லுலகுக்குப் புலப்படுத்தின. எழுத்து. சொல், பொருள் எனும் மூன்று துறைகளிலும் சிறு சிறு குறிப்புக்களை எழுதி யுள்ளார். உதாரணமாக,
*நச்சினர்க்கினியர் தொல்காப்பிய நூன்மரபு மு த ந் சூத்திர வுரையின்கண் திரிந்ததன் திரிபு பிறிதென்பதற்கு உதாரணமா கக் காட்டிய "மகர விறுதி" ‘னகார விறுதி" என்னுஞ் சூத்திரங் களுள் னகார விறுதி என்பது பொருத்தமில்லாததாகக் காணப் டுகின்றது. திரிந்ததன் றிசிபு பிறிதென்முலாவது:- ஒரீறு இன் னுேரீருகத் (பிறிதீருக) திரிந்து நின்று புணர்ச்சி பெறுமென்றல் இதனை நன்னூலார் விதியீறென்பர். இதற்கு நச்சினர்க்கினியர் காட்டிய உதாரணச் சூத்திரங்களுள் "மகர விறுதி" என்னுஞ் சூத் திரம் பொருந்துகின்றது எங்ங்னமெனில் - மகர வீறுகெட்டு அகர வீருகிய பிறிதீ , ய் நின்று யுணர்ச்சி பெறுதலின் னகார விறுதி யென்பது பொருத்தமில்லை. னகரம் றகரமாய்த் திரிவதன்றிப் பிறிதீருய் நின்று புணர்ச்சி பெருமையானும் றகரம் ஈற்றெழுத் தன்யானும் என்பது குறிப்பிடத்தக்கது’ 8
இத்தன்மைத்தான பல அரிய இலக்கணக் குறுப்புக்களைச் செந் தமிழில் ஐயர் எழுதியுள்ளார். ஐயரின் புகழுக்கு இவ்விலக்கணக் குறிப் புக்களும் காரணங்களாயின. தமிழ்நாட்டில் ஐயர் மதிக்கப்பட்ட மைக்கும் பாராட்டப்பட்டமைக்கும் அவரின் இலக்கண முயற்சிகளே காரணமாக அமைந்தன என்பதை நிறுவச் சிறுசம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்லாம் :
1947 ஆம் ஆண்டு சிந்தாந்தச் செம்மல் எனப் போற்றப்பட்ட புங்குடுதீவு வைத்தியர் கணபதிப்பிள்ளை யுடன் ஐயர் சிதம்பரம் சென்ருர். அப்போது வைத்த்தியர் கணபதிப்பிள்ளையின் மகன்
34

சிவராமலிங்கம் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவனுக இருந்தார். ஐயர் பல்கலைக்கழகத்தின் நூல்நிலையத் தில் மணக்குடவர் உரையைத் தான் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாராம். மாணவரான சிவராமலிங்கம் அப்ப்ோதைய நூலகரான நரசிம்மராவைச் சந்தித்து யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிருர் பல்கலைக்கழக நூல்நிலையத்தில் மணக் குடவர் உர்ையை ஒருமுறை பார்க்கவேண்டுமென்று அவாவுறு கிருர் அவரைக் அழைத்து வரட்டுமா என்று கேட்டாராம். முத
லில் மறுத்த நரசிம்மராவ் யாழ்ப்பாணம் கணேசையர்தான் ஆள் என்பதை அறிந்ததும் மிகவும் ஆர்வத்துட்ன் அவர் இலக் கணத்திலே பெரும் புலியாயிற்றே, அவருக்கு நிச்சயம் நாம் உதவிசெய்யத்தான் வேண்டும். நாளைக்கு அ வ  ைர அழைத்து வாருங்கள் என்ரு ராம்.
மறுநாள் கணேசையரைக் கண்டதும் நூலகர் நரசிம்மராவ் வண்ங்கி உபசரித்து 'உங்கள் இலக்கண அறிவைப்பற்றி இங்கே பலரும் பேசிக்கொள்கிருர்கள்” எனக்கூறி ஐயருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாராம். ஐயர் இரண்டு மூன்று நாட்கள் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை மூன்று மணிவரை அண்ணு மலைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலே கழித்தாராம் மதிய உணவுக்கும் செல்லாமல் காலை முதல் மாலைவரை (கோப்பி மட் டும் அருந்திவிட்டு) தமிளிலக்கண ஆய்வினுள் ஐயர் முழ்கி இருந் தார்" இவ்வாறு சிவராமலிங்கம் ஆசிரியர் இந்நூலாசிரியரிடம் கூறினர்.
ஐயர் இலக்கணத்தினுள் இறங்கிவிட்டால் அவருக்குப் பசி, தூக்கம் என்பன தெரிவதில்லை. தமிழ்நாடு சென்றவிடத்திலும் ஐயர் கற்றலிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்திருக்கிருர் என்ப்தை மேற் காட்டிய நிகழ்வு நிறுவும்.
ஈழநாட்டையும், ஈழநாட்டுத் தமிழறிஞர்களையும் அங்கீகரிக்க மறுத்த பல தமிழ்நாட்டறிஞர்கள் கணேசையருக்கு முன் சிரம் தாழ்த் தியுள்ளனர். "தாங்கள் அவ்வப்போது எழுதிவந்த இலக்கணக் கட் டுரைகளையும் தங்கள் பதிப்புகளிற் சேர்த்திருத்தல் தமிழாராய்ச்சி யாளருக்குப் பெரிதும் உபகாரப்படுவதாகும்."? எ ன் று பதிப்புத் துறையில் துறைபோன உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.
*. . இவரது எழுத்ததிகாரச் சொல்லதிகாரப் பதிப்புக்கள் வெளிவந்த பின்னரே தமிழ்நாட்டறிஞர்கள் ஐயரவர்களின் அறி வின் பெருமையையும், ஆற்றலையும் உள்ளவாறுணர்ந்து மதிக் கலாயினர்"
மேற்காட்டியவாறு சுன்னகம் குமாரசாமிப் புலவரின் மகன் அம் பலவாணபிள்ளை குறிப்பிடுவர்? புலவருக்குத் தமிழ்நாட்டில் பெரும்
3 5

Page 28
புகழ் ஏற்படுத்தியது. தொல்காப்பியப் பதிப்புக்களேயாகும். ஈழநாட் டில் இலக்கண வித்தகராகத் திகழ்ந்த ஐயர் தமிழ்நாட்டிலும் இலக் கண வித்தகராகவே மதிக்கப்பட்டார். செந்தமிழ் என்னும் சஞ்சிகை ஐயரின் இலக்கணக் கட்டுரைகளை விரும்பியேற்றுப் பிரசுரித்தது.
ஐயரின் தமிழ்ப் பணிகளிலே தலையாயது உரை விளக்கப் பதிப் புக்களேயாகும். இக்கருத்தினை ஐயரின் மாணவர் பண்டிதர் இ. நமசிவாயமும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
"...தொல்காப்பியமென்னும் இலக்கண நூல், அது தமிழர்
களின் நாகரிக பழக்க வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறு துணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பலநூற்ருண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றண்டுகள் கழிந்துவிட் டன. ஏட்டுவடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக்காலம் பெயர்த்தெழுதப் படாமையாலும் விளங்குதற் கரியனவாயிருந் தமையாலும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்கு பெரி துந் துன்பந் தந்தன அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயரவர்களுக்குப் பெரு விருப்பமுண்டாயிற்று அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்த்திரும்ப மாணவர் களுக்குக் கற்பித்து வந்ததினுல் ஐயர் அவர்களுக்கு அவ்விருப் பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ்சிரம்ம் ஏற்படவில்லை தொல்காப்பியமாகிய பெருங்கடலில் புகுவேர்க்கு ஐயரவர்களின் குறிப்புக்கள் மரக்கலம்போல உதவுவன. ஐயரவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதக்தக்கது இத்தொண்டே யாகும்" 1 . ... .. `
பண்டிதர் இ. நமசிவாயம் ஐயரின் தலைசிறந்த மாணவர் களுள் தலையாயவர். ஐயருடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவர். 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விலே இவருக்கு இலக்கண வித்தகர் என்னும் கெளரவப் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் பண்டிதர் இ. நமசிவாயத்திற்கு ஊடா கக் கணேசையருக்கு வழங்கப்பட்டது என்றே கருதவேண்டும்.
தொல்காப்பியப் பெருங்கடலில் இறங்கி ஐயர் நீச்சலடித்த மைக்கு அவர் பெற்ற கல்வியே முக்கிய காரணம் என முன்னர் பார்த்தோம். இக்கருத்தினை அரண் செய்வதுபோலப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்களின் கூற்று அமைந்திருக்கின்றது. பண்டித மணியும் ஐயரும் மிக நெருக்கமான உறவுடையவர்களாக இருந்த தினர். ஐயரின் தொல்காப்பியப் பதிப்பு முயற்சிகளுக்குப் பண்டிதமணி தோள்கொடுத்து உதவியுள்ளார். ஐயர் தமது உரைவிளக்கக் குறிப் பின் முன்னுரையிலே பல விடங்களிற் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளைக்கு நன்றி கூறியுள்ளார்.
36

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஈழகேசரிப் பொன்னையா வைப் பற்றிப் “பயன்படு முறையில் உபகரித்தவர்' என எழுதும் பொழுது பின்வருமாறு குறிப்பிடுவர் :
'தொல்காப்பியம் என்பது பெருங்கடல், அதில் நீந்திக்கரை சேர்வது மிகக்கடினம். அதற்கு ஆழ்ந்தகன்றபடிப்பு வேண்டும். முறையாக ஆசிரியரை அடுத்து நுணுக்கமாகப் பயிலல்வேண்டும். அப்படி வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையவர்களிடமும் குமாரசுவாமிப்புலவர் அவர்களிடமும் படித்த மகாவித்துவான் பிரமயூரீ கணேசையரவர்கள் இருந்தார்கள் . . . . .
கணேசையரது உரைவிளக்கக் குறிப்பு வெளிவந்து அவரது புகழைஉச்சநிலையில் வைத்தது" 12
தமது வாழ்நாளிற் பெரும்பகுதியைத் தொல்காப்பிய ஆய்வி லேயே செலவிட்டு ஈழநாட்டில் தமிழ்ப்புலமைக்கும் கல்விப் பாரம் பரியத்திற்கும் பெருமைதேடித் தந்தவர் இலக்கணப் பேரறிஞர் பிரமயூரீ சி. கணேசையரேயாவர்.

Page 29
இயல் - 3
1 0.
ll.
12.
8
அடிக் குறிப்புக்கள்
தாமோதரம்பிள்ளை. 明。 வை, “கலித்தொகைப் பதிப் பின் முகவுரை" தாமோதரம், பக். 45.
கணேசையர், சி., தொல் - எழுத்ததிகாரம், உரை விளக்கக் குறிப்பின் முகவுரை. 1937.
மேற்படி ஆசிரியர் - சொல்லதிகாரம் உரைவிளக்கக் குறிப்பின் முகவுரை 1938. மேற்படி ஆசிரியர் - பொருளதிகாரம் பின்னுன்கியல் உரைவிளக்கக்குறிப்பின் முகவுரை.
மேற்படி ஆசிரியர் சொல்லதிகாரம் உரைவிளக்கக் குறிப்பின் முகவுரை
மேற்படி ஆசிரியர் - எழுத்ததிகாரம். மொழிமரபு Lu &š. 6 6 , 6 7.
மேற்டி ஆசிரியர் - சொல்லதிகாரம் கிளவியாக்கம் நான் காம் சூத்திர உரைவிளக்கக் குறிப்பு. மேற்படி ஆசிரியர் - செத்தமிழ் தொகு 25 (1926-27) நடராஜன். க. கி - 'கணேசையர்’ கணேசையர் நினைவு மலர், பக். 20,
அம்பலவாணபிள்ளை. கு - “ஐயரும் புலவரும்” கணேசையர் நினைவுமலர், பக். 39
நமசிவாயம், பண்டிதர் இ., வித்துவ சிரோமணி மறைத்திரு கணேசையர், தமிழ் மன்றம், மகாஜனக்
கல்லூரி, தெல்லிப்பளை, 1977
செந்திநாதன், கனக, ஈழம்தந்த கேசரி, ஈழகேசரி பொன்னையா நினைவு Oெரியீட்டு மன்றம், 1968, பக் 63

இயல்: நான்கு
கட்டுரையாளர்
சிறந்த உரைநடையாசிரியராயும் இலக்கணப்பேரறிஞர்ாயும் திகழ்ந்த கணேசையர் பல்வேறு தலைப்புகளில் அக்காலப் பத்திரிகை களிலே கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரும்பாலும் செந்தமிழிலும் ஈழகேசரியிலுமே இவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவ்வப்போது வெளிவந்த சிறப்புமலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பெற் றுள்ளன. ܡ
இவர் எழுதிய கட்டுரைகளை இரண்டு வகையுள் அடக்கலாம். அவை இலக்கணம் சம்பந்தமானவையும் இலக்கியம் சம்பந்தமான வையுமேயாகும். பொதுவான சில தலைப்புகளிலும் ஐயர் கட்டுரை கள் எழுதியுள்ளார். அவையும் ஏதோ ஒகுவகையில் இலக்கிய இலக் கண சம்பந்தமுடையவையாகவே காணப்படுகின்றன.
* வன்னநடை வசனநடை” எனப் பயிற்றி வைத்த நாவலர் மரபு ஐயரின் கட்டுரை நடையிலே தெளிவாகின்றது. விஷயத்திற் கேற்றவகையில் "நடை" அமைகின்றது. ஐயரின் ‘கட்டுரைநடை தனித்துவம் வாய்ந்தது. இலக்கியக் கட்டுரையின் அமைப்புக்கு மிடையே மிகுந்த வேறுபாடுண்டு ஐயர் உணர்வு பூர்வமாகவே கட்டுரைப் பொருளையும் நடையையும் தீர்மானித்திருக்கின்றனர். தொகுத்தல், வகுத்தல், விரித்தல் முதலிய தன்மைகளை இவரது கட்டுரைகளின் அமைப்பிலே கவனிக்கலாம். சிலகட்டுரைகளை வாசகனை முன்னிலையாக்கி உரையாடுவது போலவும் ஐயர் எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது. எடுத்துக்கொண்ட பொருளைத் தருக்கபூர்வமாக நிலைநிறுத்தும் பண்பினையும் ஐயரின் கட்டுரைகளிலே காணலாம். விஷயங்களை ஒவ்வொன்ருக வகுத்து விளக்கிப் பின் தொகுத்துக் கூறி மு டிப்பது பொதுவாக ஐயரின் கட்டுரைகளின் பொதுப் பண்பாகும், -
செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி முதலிய பத்திரிகைகளில் ஐயர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். ஈழகேசரி ஆண்டுமடல் களில் முதலாவது கட்டுரையாக ஐயரின் கட்டுரையே (பெரும்பாலும் அவரின் படத்துடன்) இடம்பெற்றுள்ளது. நுட்பமான விடயங்களைக் கூர்ந்துநோக்கித் தொலைக்கண்ணுடியிற் காட்டுவது போல ஐயர் விஷயங்களை விளக்குவார். ஐயரின் கட்டுரைகளுக்கு அக்காலத் தமிழ் அறிஞர்கள் மிகுந்த மதிப்பளித்துள்ளனர். பத்திரிகையாசிரியர்கள் ஐயரைத் தத்தமது பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்பும்படி அடிக்கடி கேட்டிருக்கின்றனர்.
39

Page 30
மதுரைத் தமிழ்ச்சங்கம். đêị6ởTumử#55 $pulff, 30-5ーI 906。
தாங்கள் 'தொனி" என்னும் அரியவிஷயம் அனுப்பிய பின்பு வேறு விஷயம் அனுப்பாமைக்குப் பலர் (அவாவுடன்) வருந்து கிழுர்கள். தயைசெய்து இராமாவதாரச் செய்யுட் பாடா ந் தரத்தில் தொடர்ச்சியை அனுப்பியவரின் உபகாரமா மென் பதை நாம் சொல்லல் மிகை. தாங்கள் நீண்ட நாளாகக் கடிதமெழுதாதிருப்பதையிட்டுக் கவல்கிறேன். தங்கள் அன் பான கடிதத்தை எதிர்நோக்கியுள்ளேன்.
இங்ங்ணம் அண்டன் (ஒப்பம்) மு. இராகவையங்கார்
இவ்வாறு மதுரைத் தமிழ்ச்சங்கக் கடிதம் அமைந்துள்ளது.1
செந்தமிழ்ப் பத்திராதிபராக இருந்த மு, இராகவையங்கார் ஐயருக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கட்டுரைகள் அனுப்பும்படி கேட் டுள்ளார் மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்களுள் ஒருவராக ஐயரும் மதிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழில் அக்காலத்தில் ஈழநாட்டவர் பலர் சிறப்பான கட்டுரைகள் எழுதி யுள்ளனர். அவர்களுள் சுன்னகம் குமாரசுவாமிப்புலவர், நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, கணேசையர் முதலானவர்கள் விதந்து குறிப்பிடக்கூடியவர்கள்.
மு. இராகவையங்கார் மேற்காட்டிய கடிதத்தை எழுதும் பொழுது ஐயருக்கு வயது இருபத்தெட்டு. இளமையிலேயே அதிநுட் பமான கருத்துக்களைக் கண்டு அவற்றைக் சுட்டுரையாக வரைவதில் ஐயர் ஈடுபட்டிருந்தார். இலக்கண இலக்கிய ஆராச்சிகளினுாடு இவர் பெறும் அனுபவங்களை அவ்வப்போது குறித்துவைக்கும் பழக்கமுடை யவர். அக்குறிப்புகள் பின்னர் நீண்ட கட்டுரைகளாக சில ஆராய்ச் சிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தெட்டு வயதிலேயே நுணுக்க மான ஆராய்ச்சியிலீடுபடத் தொடங்கிய ஐயரின் அறிவு முதிர்ச்சி எழுபத்தெட்டு வயதில் எவ்வாறு வளர்ந்திருக்கும் எ ன் று கூற வேண்டியதில்லை.
ஆரம்பகாலத்தில் ஐயர் எழுதிய கட்டுரைக்கும் பின்பு எழு திய கட்டுரைக்குமுள்ள வேறுபாடு ஐயரின் அறிவு முதிர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஐயரின் கண்டனக் கட்டுரைகளிலும் இப்பண்பினைப் பரக்கக் காணலாம். இவை கண்டனகாரர் எனும் இயலிலே ஆராயப்படும். ஐயர் செந்தமிழிலே கட்டுரைகள் எழுதிய காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த தமிழறிஞர்களும் அதிற் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரும் ஐயரும் ஏககாலத்தில் ஒரே இதழ்களில் கட்டுரைகள் எழு தியுள்ளனர். ஆசிரிய மாணவர் உறவும் புலமையும் சமமாக ஈழ நாட்டில் வளர்ந்து வந்தமையை இது காட்டிநிற்கின்றது எனலாம்.
40

அடிக்கடி "சில ஆராய்ச்சி’ எனும் தலைப்பில் ஐயர் இலக்கண இலக்கிய விடயங்கள் பற்றிச் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதி வெளி யிட்டுள்ளார்கள். செறிவும் இறுக்கமும் கொண்ட சிறுசிறு கட்டுரை களாக இ  ைவ காணப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு விடயத்தினை எடுத்து அதிலுள்ள சிக்கல்களை அல்லது மயக்கங்களைத் தெளிவுபடுத் துதலே ஐயரின் நோக்கமாக இருந்தது. அறிவுலகத்திற்குத் தமது பங்களிப்பினை ஆற்றுவதில் ஐயர் உற்சாகத்துடனேயே தொழிற்பட் டார். ஐயர் இலக்கணத்தை அணுகும் நுட்ப அறிவினைத் தொல்காப் பிய உரை விளக்கக் குறிப்புக்களிலே காணுவதற்கு முன்னரே தமிழ் கூறும் நல்லுலகு செந்தமிழ் வாயிலாக்க் கண்டுகொண்டது. ஐயரின் இலக்கணக் கட்டுரைகளிலே சில தொல்காப்பியப் பதிப்புக்களில் அனு பந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐயர் கற்கும்பொழுதும் கற்பிக்கும்பொழுதும் ஏற்படுகின்ற சந் தேகங்களை வைத்துக்கொண்டு அவற்றைக் குறித்துப் பின் ஆராய்ந்து தனித்தனிக் கட்டுரைகளாக எழுதியுள்ளார். சிக்கலான விஷயங்களை விடுவிப்பனவாகவே ஐயரின் பல இலக்கணக் கட்டுரைகள் அமைகின் றன. இலக்கணமும் கணிதமும் ஒரேதன்மையானவையென்று சிலர் கூறுவதுண்டு. சரியானதைச் சரியானபடி தொடருவதும் வேண்டா தவை சம்பந்தமில்லாதவை இடம்பெருமல் பார்த்துக்கொள்வதும் என்ற வகையிலே இலக்கணமும் கணிதமும் ஒன்றுதான். செந்தமிழ்ப் பத்திரிகையில் ஐயர் எழுதிய இலக்கணக் கட்டுரைகள் சில கணிதம் போல அமைந்துள்ளன. விடுபடாத பு தி ருக்கு விடையளிப்பது போலவே பல கட்டுரைகள் அமைந்துள்ளன. சில ஆராய்ச்சி" எனுத் தலைப்பில் ஐயர் எழுதிய பல இலக்கணக் கட்டுரைகளிலே பல செந் தமிழ்ப் பத்திரிகையின் ஒரு பக்கத்தினுள் அடங்கிவிடுகின்றன. கட் டுரையென்பது பக்க அளவைக்கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை யென்பதை ஐயர் நன்கு அறிந்திருந்தார். எடுத்துக்கொண்ட விஷ யத்தைத் தெளிவுபடுத்தி முடிவுகூறுவது அல்லது முடிவுக்கு வழிகாட் டுவது அல்லது முடிவை எதிர்பார்ப்பது என்பதே ஐயரின் கட்டுரை களினூடு காணக்கூடியது. எனவே ஐயரின் ‘சில ஆராய்ச்சி’ எனும் கட்டுரைகளைக் குறிப்பு" அல்லது சிறுகுறிப்பு என்பது சாலாது. கட்டு ரைக்குரிய தன்மை, பொருள், பெறுமதி என்பனவும் எடுப்பு, தொடுப்பு முடிப்பு எனும் அம்சங்களும் ஐயரின் கட்டுரைகளிலே காணப்படுகின் றன. “சில ஆராய்ச்சி’ எனுந்தலைப்பில் இலக்கண ஆய்வுச் சிறுகட்டு ' ரைகளைத் தவிர நீண்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் ஐயர் எதியுள் ளார். ஐயரின் வடமொழிப்புலமையும் தருக்க நூலறிவும் இக்கட்டு ரைகளுக்கு வலுவையும் வனப்பையுந் தருகின்றன. தொல்காப்பியம் நன்னூல். வீரசோழியம், இலக்கணவிளக்கம் முதலிய நூல்களை ஒப் பீட்டு அடிப்படையில் அணுகி மொழியின் வளர்ச்சிக் கட்டங்களைக் கோடிட்டுக்காட்டும் வகையிலும் இவரது கட்டுரைகள் அமைந்துள்
4

Page 31
ளன. இ வ ரின் இலக்கணக் கட்டுரைகளைத் தொகுத்து நோக்கும் பொழுது அவை சொல்லிலக்கணத்தையும் பொருளிலக்கணத்தையும் சிறப்பாக ஆராய்வனவாகவே காணப்படுகின்றன. எழுத்திலக்கணம் பற்றிய ஆய்வினை ஐயர் விரும்பியதாகத் தெரியவில்லை. குமார சுவாமிப்புலவரும் எழுத்திலக்கணம் பற்றிய ஆய்வை அதிகம் மேற் கொள்ள வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
பொருளிலக்கணம் சார்ந்த பல கட்டுரைகளை ஐயர் எழுதியுள் ளார். தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனுர் களவியல், நம்பி அகப்பொருள் முதலிய பல பொருளிலக்கண நூல்களை ஆதாரங்காட்டி இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன ‘செந்தமிழில் இயற்கை நவிற் சியும் செயற்கைப்புனைவும்" என ஐயர் எழுதிய கட்டுரை ஐயரின் பொருள் நூலுணர்ச்சியை மாத்திரமன்றி அவர் கொண்டிருந்த இலக் கியக் கொள்கையையும் வெளிப்படுத்துகின்றது.
"புலவர்கள் தாம்பாடும் பாட்டுக்களில் ஒரு பொருளை அமைத்து உணர்த்துங்கால் அதனியல்பை எடுத்தோதியும் உணர்த்துவர். உவமை முதலிய அலங்காரங்களால் அழகுபடுத்தியும் உணர்த்து வர் அவ்வாறு உணர்த்துவனவற்றுள் முன்னையது இயற்கை நவிற்சி யெனவும் பின்னையது செயற்கைப்புனைவு எனவும்படும்.
அவ்விரண்டனுள்ளும் இயற்கை நவிற்சியே பெரிதும் அமை யச் செய்யுள் செய்தனர் சங்கச்சான்றேர்கள். செயற்கைப் புனைவே பெரிதும் அமையச்செய்யுள் செய்தனர். பிற்காலத்துப் புலவர்கள். இவ்விருபகுதியார் செய்தவற்றுள்ளும் முற்காலத் தார் செய்தவற்றையே பெரிதும் போற்றுவர். ஒரு பகுதியார் பிற்காலத்தவர் செய்தவற்றையே பெரிதும் போற்றுவர். . செயற்கைப் புனைவிற்கு எத்துணை நுண்ணுணர்வு வேண்டுமோ அத் துணை நுண்ணுணர்வு இயற்கை நவிற்சிக்கு வேண்டுமாதலின் இரண்டும் ஒப்பச் சிறந்தன என்பதே எமது கருத்தாகும். அவ் வாறு ஒப்பச்சிறந்தது என்பதை இங்கே சில செய்யுள்களில் வைத்து விளக்கிக் ஆாட்டுதும்" 2 f
மேலே காட்டிய பகுதி ஐயரின் கட்டுரை வன்மைக்கு எடுத்துக் காட்டாக அமைவதோடு ஐயரை மதிப்பீடு செய்யவும் உதவுகின்றது. ஐயர் இலக்கியங்களிற் காலத்தால் முந்தியதோ பிந்தியதோ சிறப் பானது என்ற கருத்தை ஏற்காது அவற்றின் பொருள், அமைப்பு, இரசனை, பயன்பாடு முதலிய முக்கிய அம்சங்களுக்கே முதன் மை கொடுத்துள்ளார். பெரும்பாலும் சங்க இலக்கியங்களை ஐயர் தெளி வாகக் கற்றிருக்கிருர், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்சியின் பொருட்டோ என்னவோ ஐயருக்குச் சங்க இலக்கியங்களிலே நல்ல பரிச்சயம் இருந்திருக்கின்றது, ஐயரின் கட்டுரைகள் பலவற்றிலே
42

சங்க இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையிற் சம்பந்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சிறுபொழுதாராய்ச்சி, மதுரைக்காஞ்சியிற் கூறிய யாமப்பிரிவு, மெய்ப்பாடு, சிறு பொழுது முதலிய கட்டுரைகளிலே ஐய ரின் சங்க இலக்கிய ஆளுமை தெளிவாகத் தெரிகின்றது.
ஐயரின் இலக்கியக் கட்டுரைகளில் ‘இலக்கிய நயப்பாடே பெரு மளவு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் இரசனைப் பாரம்பரி யத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகவே ஐயர் காணப்படுகின்ருர், வித் துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலப்பிள்ளையின் இரசனைமரபு ஈழ மெங்கும் வேர்விட்டுக் கிளைபரப்ப உதவியவர்களில் ஐயருக்குக் கணிச மான பங்குண்டு பெரும்பாலும் கவிதை நயத்தைப் புராணபடனத் திலும் வகுப்பிலுமே வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை யாற் காட்டமுடிந்தது. டத்திரிகைகள், அச்சியந்திர வசதிகள் இருந் தும் பொன்னம்பலப்பிள்ளை அதிகம் தமது ஆற்றலை எழுத்திலே வடிக்க வில்லையென்று அறியமுடியவில்லை. ஆல்ை ஐயர் இரசனை மரபிலே புராணபடனத்திலும் வ ப்பிலும் பெருத வெற்றியைக் கட்டுரை களிலே பெற்றுள்ளார். என்று துணிந்துகூறலாம். இரசனைக் கட்டு ரைகள் ஐயரின் திறனையும் அவரது ஆசிரியர்களின் திறனையும் ஈழ நாட்டின் இலக்கிய நெறியையும் வெளியுலகுக்குக் காட்டின.
கவிதையாயினுஞ்சரி, செய்யுளாயினுஞ்சரி கொண்டுகூட்டி, அதன் பொருள், சொற்கள், யாப்பு, அரிை. இலக்கணக் குறிப்பு முத லியவற்றை விரித்து நயங்காணும் பண்பினை ஐயரின் கட்டுரைகளிலே காணலாம். கவிதைநயத்தைக் காட்ட இலக்கணக் குறிப்பினையும் பயன்படுத்துவது ஈழத்தின் இரசனை மரபின் முக்கிய பண்புகளில் ஒன்ருகும். நயத்தை வெளிப்படுத்திப் புலவனின் ஆற்றலை, ஆளு மையை, சிறப்பினை நிறுவ ஒப்பீட்டு முறையினையும் ஐயர் கையாண் டுள்ளார். தான் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்புக்குரிய இலக் கியத்தில் மாத்திரமன்றி முந்திய, பிந்திய காலங்களிலும் ஒரேதன் மைத்தாள செய்யுள்கள் இடம்பெறின் அவற்றையுஞ் சுட்டிக்காட்டி வடமொழியில் அத்தன்மைத்தானவை இடம்பெறின் அவற்றையும் சுட்டிக்காட்டி, இரண்டினதும் பொதுத்தன்மையைக் குறிப்பிட்டுத் தாம் எடுத்த விஷயத்தை வலியுறுத்தி விளக்குவதில் ஐயர் பெரு வெற்றி பெற்றுள்ளார். இத்தன்மையை அவரது இலக்கிய கட்டு ரைகள் பலவற்றிலும் பரவலாகக் காணலாம்.
**கம்பனும் உவமலங்காரமும்', 'கவியின்பம்', 'கந்தபுராண அருஞ்செய்யுள் விளக்கம்', 'சீவகசிந்தாமணி உரைநயம்”, “திருக் குறள் பரிமேலழகர் உரைவிளக்கம்" "பெரியபுராண முதற் செய்யுளுரை’ முதலியபல இலக்கியக் கட்டுரைகளை ஐயர் எழுதியுள்ளார். கவியின்பம் என்ற தலைப்பிலே செந்தமிழில் ஐயர் தொடர்ச்சியாக எழுதியுள்ளார்.
4ö

Page 32
கவிதையை எவ்வாறு சுவைக்கவேண்டும், சுவையான கவிதைக்குரிய அம்சங்கள் யாவை என்பன பற்றியெல்லாம் இக்கட்டுரையிலே ஐயர் தெளிவாக விளக்கியுள்ளார். திருமுருகாற்றுப்படை, கம்பராமாயணம் , புறநானூறு, நற்றிணை, மகாபாரதம் முதலிய பல நூல்களிலிருந்து கவிதைகளையெடுத்து அவற்றின் நயங்களை விளக்கிக் கவியின்பம் எனும் கட்டுரையை எழுதியுள்ளார்.
ஈழம்வளர்த்த இரசனைமரபினை ஐயர் சிறப்பாகப் பேணியுள் ளார். வித்துவ சிரோமணியிடமும், குமாரசுவாமிப்புலவரிடமும் தாம் பெற்றவற்றையும் தாமாகச் சிந்தித்துக் கண்டவற்றையும் இரசித்த வற்றையும் இணைத்துப் புதிய போக்கான இலக்கியக் கட்டுரைகளை ஐயர் எழுதியுள்ளார். "ஐயரின் இ லக் கி ய ரசனைக் கட்டுரையின் அமைப்பினை அறிய வகைமாதிரிக்கு ஒரு சிறுபகுதியை இங்கே காட்டு ģD.
*கவியின்பமாவது கவியிலுள்ள சொல்லும் பொருளும் கார ணமாகத் தோன்றும் இன்பம். கவி-செய்யுள்; அவ்வின்பத் தைத் தரவல்லன செஞ்சொற்களாலாய கவிகளேயாம். அது பற்றியே கம்பரும் 'செஞ்சொற் கவியின்பம்’ என்ருர், செஞ் சொல்லானது வழு வி ல் சொல், இன்பந்தரும் பொருள மைந்த சொல். கருதிய பொருளை விளக்குஞ்சொல். ஆழ்ந்த பொருளையுடைத்தாய சொல். செவிக்கின்பம் புய க் கும் சொல் ஆகிய இவைகளேயாம். வழுவில் சொல் இலக்கண வரம்புடைய சொல்
இனிச் சொல் என்பதற்கு செவ்விய சொற்களாலாய தொடர்கள் எனப் பொருள்கொண்டு கவிக்கு அடையாக் கிப் பத்தழகும் பயக்கும் கவியெனினுமாம். 'செஞ்சொற் கவியெனத் தான் சுருங்கச் சொன்னதைக் கம்பர்’ செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ் வியக்கவி’ என விளங்கவைப்பர். இங்ங்னம் கூறலிவரியல்பு, கவிகளிலே சொல்லின்பமும் பொருளின்பமுமாகிய இரண் டும் தனித்தனியும் ஒருங்கும் அமைந்துகிடக்கும். ஒருங்கு அமைந்ததே மிக இன்பந்தரும் கவியாம்” 3
ஐயரின் இரசனை மரபு பண்டைய உரையாசிரியர்களின் இரச னைப் பாரம்பரியத்தைப் பேணுகின்றவகையில் அமைவது உண்மை யேயெனினும் நவீன விமர்சகத்தன்மையை முற்ருகப் புறக்கணிக்கின் றது என்று கருதமுடியாது. இவரின் இரசனைக் கட்டுரைகளில் சங்க இலக்கியப் பாடல்கள் சீவகசிந்தாமணி, கம்பராமாயண்ம், இரகுவமி சம், கந்தபுராணம் முதலியனவே மேற்கோள்களாகக் காட்டப்பட் டுள்ளன. Φ
44

ஐயரின் மேற்கோள்களை அவதானிக்கும்பொழுது ஈழநாட்டில் பாரம்பரியமாகப் போதிக்கப்பட்டுவந்த இலக்கியங்களே பெருமளவு இடம்பெறுகின்றன. இவை யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியத் தின் உள்ளுரத்தையே புலப்படுத்துகின்றன. ஐயர் காலத்தில் எழுந்த கட்டுரைகளிலும் உரைநூல்களிலும் எதோ ஒரு வகையில் சீவகசிந் தாமணியும் கந்தபுராணமும் கம்பராமாயணமும் திருக்குறளும் தம் செல்வாக்கை ஆழமாகப் பதித்துள்ளமையை அவதானிக்கமுடியும். செந்தமிழ் முதலிய சஞ்சிகைகளில் வெளி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நோக்கினல் எண்ணிக்கையளவில் மேற்காட்டிய மேற் கோள் நூல்கள் பற்றியனவே அதிகமாகக் காணப்படுகின்றன.
ஐயர் இலக்கிய இலக்கணக் கட்டுரைகளை எழுதியதோடமை யாது பொதுவான சில தலைப்புக்களிலும் கட்டுரைகள் எழுதியுள் ளார். செந்தமிழிற் சிலவும் ஈழகேசரியிற் பலவுமாக இவரது பொது வான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இப்பொதுவான கட்டுரை களும் பழந்தமிழ் இலக்கிய, புராண உதாரணங்கனைச் சு. டி அற நெறி போதிப்பனவாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கட்டு ரைகளிலே திருக்குறள் உதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளது. ‘முன் 2னத் தமிழ்நாட்டுப் பெண்களின் கற்புநிலை" 'வசிட்டரும் வள்ளுவரும் கூறிய அரசியல்" முதலிய கட்டுரைகளை உதாரணமாகச் சுட்டிக் காட்டலாம்.
ஐயர் சமயம்சார்ந்த சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முற்றுமுழுக்கச் சமயம் என்றில்லாமற் பொதுவான கட்டுரைகளில் சமயம் பற்றியும் சைவசித்தாந்தம் பற்றியும் ஐயர் பல குறிப்புக் களைத் தந்திருக்கிருர். உதாரணமாகக் கீழ்வரும் பகுதியைச் சுட்டிக் காட்டலாம். as
* வாராக்காலத்து வினைச்சொற்கிளவி - யிறப்பினு நிகழ் வினுஞ் சிற்ப்பத்தோன்று - மியற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை" என்பதோத்தா கலின், இங்ங்னமே சிவஞானபோதச் சிற்றுரை காரரும் 'ஏகமாய் நின்றே யிணையடிகளொன்று ணரப் போகமாய்த்தான் விளைந்த பொற்பினன்’ என்ப திலே தெளிவுபற்றி விளைந்த என இறந்தகாலத்தாற் கூறி னர் எனக் கூறுதல் காண்க . . . இடைவிடாது நினையாதொழியின் பாசஞானம் வந்து பற்று மென்க”4
இவ்வாறு திருக்குறள் பசிமேலழகருரை விளக்கம் என்னும் கட்டு ரையிற் குறிப்பிட்டுள்ளார். ஐயர் இணு வி ல் நடராசையரிடம் சைவசித்தாந்த சாத்திரங்களைப் பாடங்கேட்டமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தமிழிலக்கண இலக்கியத்திலே ஆற்றலுடையவர்கள் சைவசித்தாந்தப் பயிற்சியுடையவர்களாயும் இருந்தமை குறிப்பிடத்
45

Page 33
தக்கது. அப்பயிற்சி தமிழறிஞர்களுக்கு இருக்கவேண்டுமென அக்கால அறிவுலகமும் எதிர்பார்த்தது.
இவரின் கட்டுரைகளை இலக்கண சம்பந்தமானவை, இலக்கிய சம்பந்தமானவை, பொதுவானவை எனப் பகுத்துப்பார்ப்பது மிகவும் சிரமமானது. பொதுவான கட்டுரைகளில் ஒழுக்கம் சார்ந்த அறிவு ரைப்பாங்கே மேலோங்கிக் காணப்படுகின்றது. அறிவுரைகளுக்கு ஆதாரமாக ஐயர் கொள்ளுவது புராண இதிகாசங்களையே. சமூ கத்தை நன்னெறிப்படுத்த வேண்டுமென்ற பாங்கிலும் ஐயரின் சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஐயரின் இலக்கண இலக்கியக் கட்டு ரைகள், சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைகளாக, ஆராய்ச்சிக்கு வழிகாட் டுவனவாக அமைந்துள்ளன. இவரின் சில கட்டுரைகள் விவரணப் பாங்கிலும் அமைந்துள்ளன. நீண்டகால முயற்சியும் அனுபவமும் ஆய்ந்தறியும் அவாவும் முன்னைய அறிஞர்களின் சிந்தனைத்தேக்கமும் ஐயரின் கட்டுரைகளிலே சுவறியிருக்கின்றன. அவை காலவரன் முறையிலே தொகுக்கப்பட்டு நூலுருவாவது அவசியமாகும்.
ஐயரின் கட்டுரை முயற்சிகளிற் குறிப்பிடத்தக்கவையாக பாட பேதஞ்சார்ந்தவைகளும் கண்டனஞ்சார்ந்தவைகளும் அமைகின்றன. இவை முறையே பதிப்பு முயற்சியும் பாடபேத ஆராய்வும் என்னும் இயலிலும், கண்டனக்காரர் என்னும் இயலிலும் விளக்கப்பட்டுள்ளன.
4 aj

இயல் - 4
அடிக் குறிப்புக்கள்
W
1. நடராஜன், க. கி. * மகா வித்துவான் மறைத்திரு சி. கணேசைய ரவ ர்கள்” கணேசையர் நினைவு மலர் 1960. Léš. 1 0
2. செந்தமிழ் 38 ஆந் தொகுதி-பக் 305 (1940 - 41) 3. செந்தமிழ், 26 ஆந் தொகுதி - பக். 121, (1927 - 28)
4. செந்தமிழ், 7ஆந் தொகுதி 'திருக்குறள் பரிமேழகர்
உரை விளக்கம்’, 1908. பக்.
47

Page 34
இயல் - ஐந்து
பாடபேத ஆய்வாளர்
தமிழிற் பதிப்பு முயற்சிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பாடபேத ஆராய்வு பற்றிய உணர்வு வேர் விட்டிருந்தது. பழந்தமிழி லக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள் பாட பேதங்கள் பற்றி அறிந்திருந்தனர் என்பதற்கு அவர்களின் உரைகளே உரைகல்லாகும். அச்சியந்திரத்தின் வருகையும் அதனேடொட்டிய சமூக, பொருளாதார மாற்றங்களும் தமிழிலக்கிய உலகில் மகத்தான மாற்றங்களைக் கொண்டுவந்தன. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தல் ஒரு புதிய துறையாகப், பெரும்பணியாகப் பத்தொன்பதாம் நூற் முண்டிலே உருவாகியது. பதிப்புத்துறையிலீடுபட்டவர்கள் பாடபேத ஆய்வாளராக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கணேசையர் பதிப்பாசிரியராகவும் பாடபேத ஆய்வாளராகவும் காணப்படுகிருர்,
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலில் முன்னின்றுழைத்தவர்க ளுள் முதன்மையானவர்கள் ஈழநாட்டவர்களே. ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் முத லிய அறிஞர்கள் பதிப்புத்துறையிலே ஈடுபட்டுழைத்தவர்களாவர். சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்புத்துறையில் தம் "கைவண்ணத் தைக் காட்டியவர். ஈழநாட்டின் கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமும் நாவலர், சி. வை தாமோதரம்பிள்ளை போன்றேரின் பதிப்பு முயற்சிகளுக்கு ஊன்றுகோலாக அமைந்திருந்தன. பதிப்பாசிரியரின் திறனைச் சி. வை. தாமோதரம்பிள்ளையின் பின்வரும் கூற்றுத் தெளிவு படுத்தும்.
**இலக்கணக்கொத்துடையார் நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனசிரியரென இன்னுமொன்று கூட்டி இவர் தொழில் முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக்கடியதென்றும் அவர் அறிவுமுழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்கிறேன்" 1
பதிப்பு முயற்சியின் அருமைப்பாட்டினையும் முக்கியத்துவத்தி னையும் மேற்காட்டிய சி. வை. தாமோதரம்பிள்ளையின் குறிப்பு விளக்கிநிற்கும். நாவலர், சி வை. தாமோதரம்பிள்ளை முதலியோரின் பாரம்பரியத்தைப் பலவகையிலும் பேணிய ஐயரின் பணிகளுள் பதிப் பும் பாடபேத ஆராய்வும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்
48

தது. உரைவிளக்கக் குறிப்புக்களுடன் ஐயர் தொல்காப்பியத்தைப் பதிப்பித்தமை ஐயரைச் சிறந்த பதிப்பாசிரியராக்கியது, ஈழகேசரி நா. பொன்னேயா அவர்களின் தமிழபிமானம் கணேசையர் பதிப்புக் கள் வெளி வ ர உறுதுணையாகியது. கணேசையர் பதிப்பு’ என்ற தொடர் குறியீடாகத் தொல்காப்பியத்திற்கு ஒரு பெயராக மாண வர்களிடையே வழங்கிவந்துள்ளது.
தமிழிற் பாடபேத ஆராய்வு என்னும் தொடர் இன்று மூல பாடத் திறஞய்வு (Textual Criticism) என்று அழைக்கப்படுகின்றது. உரையாசிரியர்கள் மூலபாடத் திறனுய்வையே பாடாந்தரங்காணல்" என அழைத்தனர், கணேசையரும் உரையாசிரியர் வழிநின்று பெரும் பாாலும் "பாடாந்தரம்" என்ற் தொடரையே கையாளுவர்.
ஐயர் பாடாந்தரம் எனும் தொடரைக் கையாண்டபோதிலும் நவீன மூலபாடத்திறனுய்வாளனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாட பேத ஆராய்வினைப்பற்றிய அறிவினைப் பெற்றிருந்தார். நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை மரபுகளும் ஐயரின் ஆழ்ந்தகன்ற புல மையும் அனுபவமும் இவ்வறிவுக்கான காரணமாகலாம். இன்று மூல பாடத் திறனுய்வாளர்கள் வழுக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன? அவை ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? என்று விபரமாகக் குறிப் பிடுகின்றனர். ஏடெழுதுவோராலும் உரையெழுதுவோராலும் பிர சங்கம் புரிவோராலும் பாடபேதங்கள் பெருமளவு புகுந்துள்ளன என்று குறிப்பிடுவர். ஐயர் பாடபேதங்கள் பற்றியும் வழுக்கள் பற் றியும் நன்கு அறிந்திருந்தார். ஐயரது தொல்காப்பியப் பதிப்புக்கள் மூலபாடத்திறனய்வுக்குட்பட்டே பதிப்பிக்கப் பட்டுள்ளன. ஐயர் *செந்தமிழிற் “சேணுவரையருரைப்பதிப்பும் பிழைதிருத்தமும்" என்னும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர். அக்கட்டுரை ஒரு பாடபேத ஆய் வாளன் தனது பதிப்பு நூலுக்கு எழுதும் முகவுரைபோலவே அமைந் துள்ளது. அக்கட்டுரையின் ஒரு பகுதி, V
*சஏட்டுப் பிரதிகளிலுள்ள பழைய நூல்களை அச்சிற்பதிக்குங் கால் இவற்றினுருவங்களை உண்மையாக அறிந்து திருத்த முறப்பதித்தல் மிக அரிதாகும். ஏனெனில் பிரதி எழுதுவோ ரானும் சிதன் முதவியவற்ருலும் அவற்றினுருவங்கள் வேறு பட்டுஞ் சிதைந்துமிருத்தலின் ஒரு பிரதியைப் பார்த்து மற் ருெரு பிரதி எழுதுவோர் அவதானமின்றியெழுதுவதாலும் உண்மையுணராது திருத்திவிடுவதாலும் பல பிழைகள் நேரு கின்றன. பொருளுணராதோர் எழுதுவதாலும் பல பிழை யாகின்றன. இங்ங்ணம் நேருகின்ற பிழை களை உண்மை யறிந்து திருத்தல் மிகவுங் கஷ்டமாகும். அப்பிழைகளை யோகி ருந்து சிந்தித்தாலும் காண்டல் அரிதாகும்." 2 இவ்வாறு அமைந்துள்ளது.
49

Page 35
ஐயரின் தொல்காப்பியப் பதிப்புக்கள் தமிழ்கூறும் நல்லுலகாற் போற்றப்பட்டமைக்குப் பல காரணங்கள் உண்டு. உரைகளுக்கு விளக்கம் எழுதியதோடமையாது பாடபேதங்களையும் அவர் குறிப் பிட்டிருந்தார். செறிவும் இறுக்கமும் கொண்ட உரைகளை நெகிழ்ச்சி யாக்கி விளக்கிப் பதிப்பித்தமை கணேசையரின் பதிப்பின் சிறப்ப மிசங்களில் ஒன்ருகும். பதிப்பாசிரியன் தனது பணியையும் நோக்கத் தையும் சிரமத்தையும் சிலாகித்து பதிப்புரையொன்று எழுதுவது வழக்கம். தமிழ் நூற் பதிப்புத்துறையிலே இம்மரபினைப் புகுத்தியவர் சி. வை. தாமோதரம்பிள்ளையே. சி. வை. தாமோதரம்பிள்ள்ை எழு திய நீண்ட பதிப்புரைகள் தமிழில் மூலபாட்டத்திறனுய்வாளன் ஒரு வனின் முறையியலை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன? கணேசையரும் சி. வை. தாமோதரம்பிள்ளையைப் பின்பற்றியோ என்னவோ தொல்காப்பியப் பதிப்புக்களுக்கு நீண்ட முன்னுரைகள் எழுதியுள்ளார். இம்முன்னுரைகள் ஐயரின் "ஏடுதேடுபடலமாக' அமையாது முறையான பதிப்பாசிரியனுெருவன் எழுதும் மூலபாடத் திறனய்வு முறைகளை விளக்குவதாகவும் அமைந்துள்ளன.
ஐயர் உரைவிளக்கம் எழுதிய தொல்காப்பியப் பதிப்புக்களின் முன்னுரையை நோக்கும்பொழுது அவர் பாடபேத ஆராய்வில் எவ் வளவு கவனஞ் செலுத்தினர் என்பது புலனுகும்.
*"...அவர்கள் அனுப்பிய பிரதிகளோடு அச்சுப்பிரதி களை ஒப்புநோக்கியபோது அப்பிரதிகளிற் சில திருத்தங்கள் கிடைத்தன. அவற்றினுமணமமையாது, மதுரைத் தமிழ்ச்சங் கத்துப் புத்தகசாலையிலே பழைய நல்ல பிரதிகள் இருக்கு மெனக்கருதி அங்கு சென்று வித்துவமணியாய் விளங்கும் செந்தமிழ்ப் பத்திராதிபர் பூரீமத் இராமானுஜ ஐயங்காரி டம் உசாவினுேம். 3
இவ்வாறு ஐயர் குறிப்பிடுவர்.
இக்கூற்று ஐயர் பதிப்புத்துறையில் ஈடுபடும்பொழுது பாட பேத ஆய்வு முயற்சியில் ஈடுபட்ட வரலாருக அமைகின்றது. இவ் வாருன கூற்றுக்களைச் சி. வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமி நாதையர் முதலியோரது பதிப்புரைகளிலும் காணலாம்.
ஆளுமையுள்ள பதிப்பாசிரியன் ஒருவன் அனுபவத்தில் சிறந்த மூலபாடத் திறனய்வாளனுக மாறுவதும் உண்டு. ஆனல் மூலபாடத் திறனய்வில் ஒழுங்கான முறையில் ஈடுபட ஆற்றல், அறிவு, நேர்மை, துணிவு முதலியன வேண்டும். நிரம்பிய புலமையுள்ள ஒருவனின் குன்ரு உழைப்பினலேயே அவன் சிறந்த மூலபாடத்திறனய்வாளனுக முடியும், பதிப்பாசிரியனெருவனின் முதல் வேலை ஏடுகளைத் தொகுத்
50

தல் பின், தொகுத்த ஏடுகளை ஆராய்ந்து இயன்றவரை கால ஒழுங் கில் வகைப்படுத்தல், வகைப்படுத்தியபின் ஒப்புநோக்கிப் பாடபேதங் களைக் குறித்துக்கொண்டு மூலபாடத்தைக் காணும் முயற்சியிலீடுபட வேண்டும். இதுவே மூலபாட ஆய்வாளனின் படிமுறையான தொழிற் பாடாகும். தொல்காப்பியப் பதிப்பினில் இறங்கிய ஐயர் மேற்காட் டிய முறையை அனுசரித்துள்ளமையைக் காணமுடிகின்றது. ஐயரின் படிப்பித்தல் அனுபவமும் பதிப்பு முயற்சியின்போது பாடபேதங் காணலுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. இதன.
' - - - ஏட்டுப்பிரதிகள் யாவும் பெரும்பாலும் அச்சுப்பிரதி களோடு ஒத்திருந்தமையானே பின் ஏட்டுப் பிரதிகள் தேடு வதை யாம் ஒழித்துக் கிடைத்த திருத்தங்களோடும் இப் பதிப் பை ப் பதிப்பித்தோம். ஏட்டுப்பிரதிகளை நோக்கித் திருத்திய திருத்தங்களை விட பல்லாண்டாகப் பண்டித வகுப்பு மாணவர்களுக்கு படிப்பித்த அனுபவத்தினலே அறிந்துவைத் திருந்த சில திருத்தங்களையும் கீழ்க்குறிப்பிற் காண்பித்துள் ளோம். அவை பின்னுளில் எட்டுப்பிரதிகளை நோ க் கி த் திருத்தஞ் செய்பவர்களுக்கு உபயோகமாகுமென்று எண்ணு கின்ருேம். அவற்றுட் பொருத்துவன கொள்க . . பேராசிரியர் எழுதிய உரைதானென்று கூறமுடியாமல் அத் துணைப் பிறழ்ச்சியடைந்திருக்கும் இவ்வுரையை நாம் பூரண மாகத் திருத்தி விட்டோமென்று கூறுவது எமக்கே பெரும் அவமானமாகும்." 4 .
கணேசையரின் இக்கூற்று மூலம் அறிந்துகொள்ளலாம்.
முலபாடம் காண்பதிலுள்ள கடினத்தையும் உண்மையான பதிப்பாசிரியனுக்கு இருக்கவேண்டிய நேர்மையையும் ஐயரின் கூற் றுக்கள் காட்டிநிற்கின்றன. தான் சரியெனக்கண்ட்தைக் குறித்துக் கொண்டதோடு இனிவரும் ஆய்வாளனுக்கும் "வழி விட்டுக்கொடுத் துள்ளமை ஐயரின் அறிவுலக நேர்மையையே காட்டுகின்றது.
தொல்காப்பியம் பொருளதிகாரம் பின்னன்கியல்களுக்கும் பேரா சிரியரின் உரையையும் உரை விளக்கக் குறிப்பையும் பதிப்பித்த ஐயர் பிழைதிருத்தம் என்னும் பகுதிக்குக் கீழே “சில பாடபேதக்கருத்து என்று குறிப்பிட்டுச் சில பாடபேதங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். உதாரணமாகக் கீழ்வரும் பகுதியைச் சுட்டிக்காட்டலாம்
பக் - வரி − ங்க - உ - நிதிமேனின்றமரம் - சி. வை. கனக.பதிப்.
நிதிமேனின்றமனம் - ச. பவா நதிமேனின்றமரம் என்றுமிருந்திருக்கலாம்.
5 !

Page 36
ங்க - கள - அடுத்தமார்பு - சி.வை, ச. பா, கனக.பதிப்பு வடுத்தமார்பு என்றுமிருந்திருக்கலாம். இளம் பூரணருரையுதாரணம் நோக்கியுண்ர்க”5
தனியே எட்டுப்பிரதிகளில் மாத்திரமன்றி அச்சுநூல்களிலும் பாடபேதங்கள் நிகழும் என்பதற்கு ஐயரின் மேற்காட்டிய எடுத்துக் காட்டு நல்ல உதாரணமாகும். எட்டுப் பிரதிகளிலே தாம்கண்ட வேறுபாடுகளை நூலுக்குள்ளேயே ஆங்காங்கு குறிப்பிட்டுத் தமது கருந்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நூலாசிரியராயும் உரையாசிரியராயும் போதனசிரியராயும் திகழ்ந்த ஐயர் சிறந்த பதிப்பாசிரியராயும் விளங்கினர். தொல் காப்பியம் கணேசையர் பதிப்பு வெற்றிபெற்றதும் தமிழ்கூறும் நல்லு லகு ஐயரைநோக்கி வந்தது. வறுத்தலை விளா னி ல் இருந்து கொண்டே தமிழ்கூறும் நல்லுலகத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை ஐயரையேசாரும்.
ஐயரின் தொல்காப்பியப் பதிப்புக்கள் இலக்கண மாணவனுக்கு மாத்திரமன்றி மூலபாடத்திறனுய்வாளனுக்கும் நிரம்யபிய பயனளிப் பவை. மூலபாடத்தை நோக்கி ஐயர் செய்த 'யாத்திரை காரண காரியத் தொடர்புடையது. ஆழ்ந்தகன்ற புலமையும் இடைவிடாத உழைப்பும் தருக்க ரீதியான சிந்தனையும் ஐயரிடம் குடிகொண்டிருந் தன. ஐயர் பதிப்பித்த நூல்களின் முக வுரைகளை நுணுக் கமாக அராயும்பொழுது ஐயரிடம் வித்துவச்செருக்கு இருந்ததில்லை யென்பது புலணுகின்றது. தமது முடிவுகளை ‘முடிந்தமுடிவு’ என்று அறுதியிட்டுக் கூறும் வழக்கம். ஐயரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனல், வலிந்து சாடும் வாதத்திற்கு விட்டுக்கொடுத்ததாகவும் ஐயரி டம் வரலாறில்லை. அடக்கம், பணிவு, பொறுமை முதலியவற்றைக் கடைப்பிடித்தொழுகிய ஐயர் இறுதிக்காலத்தில் நிறைவுடையதுறவு” வாழ்வினை மேற்கொண்டமையும் மனங்கொள்ளத்தக்கது. ‘நிறை குடம் தளம்பாது’ என்ற நிலையிலேயே ஐயரின் புலமைவாழ்க்கை அமைந்திருந்தது.
தொல்காப்பியம் உரை விளக்கக் குறிப்புக்கள் 'கணேசையர் பதிப்பு’ என்ற பெயரிலேயே தமிழ்கூறும் நல்லுலகில் பயின்றுவந்தது. ஈழகேசரி ந. பொன்னையா பதிப்பாசிரியர் எனக்கருதப்பட்ட போதி லும் உண்மையில் அவர் வெளியீட்டாளராகவே இருந்தார். க்ணே சையரை நன்கு பயன்படுத்தியது மூலம் இருவரும் நன்மைபெற்ற னர். பொன்னையா, கணேசையர் உறவுபற்றிப் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையவர்கள் தமக்கேயுரிய தனித்துவத்துடன் குறிப்பிட்டுள் ளார்கள், ! w r
2

'கணேசையர் - பொன்னையா இவர்களது சேர்க்கை அபூர்வ மான சேர்க்கையாகும். கங்கையும் யமுனையும் சேர்ந்தது போலாகும். இந்தச் சேர்க்கை இருவருக்குமே நல்லதாயிற்று. கணேசையரது உரைவிளக்கக் குறிப்பு வெளிவந்தது அவரது புகழை உச்சநிலையில் வைத்தது. திரு. பொன்னையா அவர் களும் அருமையான தமிழ்த் தொண்டு செய்து நிலைபெற்ற புகழை எய்தினர்" 6
கணேசையருக்குப் பலவழிகளிலும் துணையாக இருந்தவர் ஈழ கேசரி நா. பொன்னையா என்பதை உலகறியும். கணேசையரின் புல மையை வெளிக்கொணர்ந்தவர்களில் பொன்னையா முதன்மையான வர். பொன்னையாவும் ஐயரும் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர்; இடையிடையே "ஊடல் உண்டானது என்றும் அறியமுடிகின்றது. திரு. பொன்னையா தமிழபிமானம் நிறைந்த வெளியீட்டாளராக விளங்கினர். இவரின் தமிழபிமானமே தொல்காப்பிய வெளியீட் டிற்கு மூலகாரணமாகும்.
"திரு. நா. பொன்னையா அவர் க ள் வித்துவசிரோமணி கணேசையர் அவர்களிடம் சிலகாலம் படித்தவர். அவரது குசேலர் சரிதத்தை 1931 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளி யிட்டவர். தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புக்களை வெளி யிட்டுத் தமிழுலகுக்கு உபகரித்தவர்.கணேசையர் அவர்களது ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தை (1939 இல்) அச்சிட் டவர். இவை எல்லாவற்றையும் விட ஐயரவர்களது அறுப தாம் ஆண்டுப் பூர்த்திவிழாவை (சஷ்டியப்த பூர்த்திவிழா.) ஈழம் முன்னெப்பொழுதும் கண்டிராதவகையில் நடாத்தி முடித்த பெருமை இருக்கிறதே, அது திரு. பொன்னையா அவர்களது தனிப்பெருஞ் சாதனையாகும்.” 7
இவ்வாறு கனக. செந்திநாதன் குறிப்பிடுவர். இக்கூற்றிலி ருந்து பொன்னையா சிறந்த வெளியீட்டாளராக மாத்திரமன்றி ஐய ரின் மாணவனகவும் அன்பனகவும் திகழ்ந்தார் என்று அறியமுடிகின் றது. ஐயரின் புகழுக்குரிய நிலைக்களன்களில் ஈழகேசரி பொன்னையா முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்.
ஐயரின் மூலபாடத்திறனய்வு முயற்சியில் முக்கியமாகக் குறிப். பிடக்கூடியது செந்தமிழில் ஐயர் எழுதிய பாடாந்தரங்கள் பற்றிய கட்டுரைகளாகும். மிக இளம்வயதிலேயே பாடாந்தரம் பற்றி ஐயர் சிந்தித்தார் என்பதை இவரது கட்டுரைகள் காட்டுகின்றன. குறிப் பாக ‘இராமாவதாரச் செய்யுட்பாடாந்தரம்” என்னுந் தலைப்பிலே செந்தமிழில் எழுதிய கட்டுரைகள் ஐயரின் மூலபாடத்திறனய்வு முயற்சிகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. இப்பாடபேதக் கட்டு
53

Page 37
ரைக்கு அக்காலத் தமிழறிஞர்களிடையே மிகுந்த செல்வாக்குக் காணப்பட்டது. செந்தமிழ்ப்பத்திராதிபர் ‘இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம்" என்னும் கட்டுரையை அனுப்பும்படி பல கடிதங்கள் எழுதி யுள்ளார்.
செந்தமிழிலே தொடர்ச்சியாக நீண்டகாலம் 'இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம்" என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. இரா மாயணப் பாடல்களிற் பாடபேத ஆய்வுக்குரியதைத் தெரிந்து மிக வும் விளக்கமாக ஐயர் ஆராய்ந்துள்ளார். காரணகாரியத் தொடர் போடு ஒப்பீட்டு அடிப்படையிலே சரியான பாடத்தைக்காட்ட முயன்றிருக்கிருர் வகைமாதிரிக்குப் பின்வரும் பகுதியைச் சுட்டிக் காட்டலாம். e
"புயலுள மின்னுள பொருவின் மீனுள
இயன்மணி யினமுள சுடரிரண்டுள மயன்முதற் றிருத்திய மணி செய் மண்டபம்
அயன்முதற் றிருததிய வண்ட மொத்ததே”
இச்செய்யுளில் “சுடரிரண்டுள” என்னும் பாடத்தை "சுடர்க ளின்றுள்" எனப்பாடங்கொள்வாரும் உளர். "சுடரிரண்டுள' என்னும் பாட்டம் பொருத்தமும் சிறப்பு மின் ருயி ன ன் ருே? “சுடர்களின் றுள' என்னும்பாடம் கொள்ளத்தக்கது. இச்செய்யுள் சிலேடை யுவமையாதலின் அதற்கேற்பப் பொருள்கொள்ளுமிடத்து ‘சுடரிரண் டுள’ எனும்பாடமே சிறந்து காட்டலின் அது வே பொருத்தமும் சிறப்புமுடைத்தாம். "சுடரிரண்டுள' என்னும் பாடம் சிலேடையுவ மைக்கேற்பப் பொருள்கொள்ளுமிடத்து மண்டபத்தின் கண் தசரதன், சனகன் என்னுஞ் சுடர்களிரண்டுள்ளன என்றும்; அண்டத்தின்கண் ஞாயிறுந் திங்களுமாகிய சுடர்களிரண்டுள்ள எ ன் றும் பொருள் கொள்க. சுடரிரண்டுள என்பதற்கு உவமையாகப் பொருள் கூறலும் பொருந்தும். தசரதன், சனகன் என்னும் இருவரையும் ஞாயிறுந் திங்களுமாக உருவகித்தது எதுபற்றியெனின் பேரரசனகிய தசரதன் தானே விளங்கும் பேரொளியாகிய ஞாயிறுபோலத்தானே விளங்கும் பேரொளியுடையனயும், சிற்றரசனகிய சனகன் தானே விளங்கமாட் டாது, தசரதனன் விளங்குஞ் சிற்ருெளியுடையோனயுமிருத்தல் பற் றியேயாம். தசரதனன் விளங்குஞ சிற்ருெளியுடையோனென்பது அவ் வொளியை அவன் உவந்துழிப் பெறுதலும், காய்ந்துழி இழத்தலும் நோக்கி, பேரொளியும் சிற்ருெளியுமுடைமை பற்றியே ஆசிரியர் இவ் வாறு கூறினரென்பது. அவரே எதிர்கோட்படலத்தில்,
“..... கவனமாக் கடலுஞ்சூழ
சந்திரனிரவிதன்னச் சார்வதோர் தன்மை தோன்ற இந்திரத்திருவன்றன்னை யெதிர்கொள்வான்
எழுந்துவந்தான்" என்று கூறியதனலும் உணரப்படும்.
54

. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்னே தேகவியோக மடைந்தவரும் கம்பர் போக்கும் வாக்குமுணர்ந்து பொருளுரைத்த லில் வல்லவரும் நமதாசிரியருமாகிய வித்துவசிரோமணி ந. ச. பொன் னம்பலப்பிள்ளையவர்கள் கருத்துமிதுவே.
கம்பர் ஞாயிறையும் திங்களையும் தசரதனுக்கும் சனகனுக்கும் உவமையாகச் சுட்டியதுபோலவே திருத்தக்கதேவரும், சீவகனுக்கும் கட்டியக்காரனுக்கும் உவமையுணர்த்தி.
இனிக்கம்பர் கூறியவாறே கச்சியப்பரும் கூறுவர். (சூரனும் முசுகுந்தனும்)"8 .
மேற்காட்டியவாறு பாடபேத ஆராய்விலீடுபட்டிருந்த ஐயர் தாம் எடுத்துக்காட்டும் மூலபாடத்தினைத் தக்க உதாரணங்களோடும் ஆதாரங்களோடும் விளக்கியுள்ளார். நூலுக்கு உள்ளேயிருந்து ஆதா ரங்காட்டுவதோடமையாது அத்தொடர் அதேகருத்திற் பயிலப்பட்ட, வேறு இலக்கிய உதாரணங்களையும் சுட்டி விளக்குவது ஐயரின் தனிச் சிறப்பினையே காட்டிநிற்கிறது.கம்பராமாயணத்தில் ஒப்பாரும் மிக்காரு மற்ற புலமைபடைத்தவரும், ஈழத்தின் இரசனை மரபின் "நாடி ஒட்ட மாக" அமைந்தவருமான ந. ச. பொன்னம்பலபிள்ளையின் கருத்தினை யும் சுட்டி, மேலும் தம்கருத்தை நிறுவமுயல்வது ஐயரின் ஆளுமை யோடு குருபக்தியையும் காட்டுகின்றது. , −
தமிழிலக்கியப் பரப்பிலே பதிப்பு முயற்சிகளுக்கும் பாடபேத. ஆய்வுக்கும் வழிகாட்டியவர்களான சி. வை. தாமோதரம் பிள்ளை. ஆறு முகநாவலர் முதலிய தமிறிஞர்கள் வரிசையிலே ஐயரும் சேர்ந்துநின்று ஈழத்தின் பெருமையைத் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரப்பினர். தொல்காப்பியப் பதிப்புக்களும், பாடபேத ஆய்வுக் கட்டுரைகளும் ஐயரைத் தமிழியல் ஆய்வு வலயத்தினுள் வைத்து ஆராய உதவுகின் றன.
5 o

Page 38
இயல் - 5
56
அடிக் குறிப்புக்கள்
தாமோதரம், “கலித்தொகைப் பதிப்புரை” யாழ்ப்பா ணம், கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக்கழகம், uurtji' ur60OTub, ... 1971. Lu&5. 61.
செந்தமிழ் 30 ஆந் தொகுதி, "சேனுவரையருரைப்பதிப் பும் பிழைதிருத்தமும்’ 1931 - 32, பக். 167 -
கணேசையர், சி., தொல். பொருளதிகாரம் உரை விளக்கக் குறிப்பு “முன்னுரை', 1943.
மேற்படி நூல்,
மேற்படி நூல்,
செந்திநாதன், கனக, ஈழம் தந்த கேசரி, ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், 1968. பக். 63 - 64.
மேற்படி நூல், பக். 64.
செந்தமிழ் தொகுதி 22, "இராமாவதாரச் செய் யு ட் பண்டாந்தரம்”, 1923 - 24, பக். 131 - 138.

இயல் - ஆறு
விவாத அறிஞர்
தமிழிலக்கியப் பரப்பிற் காலத்திற்குக்காலம் சர்ச்சைகள் நடை பெற்றுள்ளன. நக்கீரர் காலந்தொடக்கம் நாவலர் காலம்வரை நடை பெற்ற சர்ச்சைகளுக்கெனத் தனியானதோர் வரலாறு உண்டு. தமி ழிலே தோன்றிய சர்ச்சைகளிற் பெரும்பாலானவை சமயம் சார்ந்த வையாகக் காணப்பட்டபோதும் இலக்கிய, இலக்கணஞ் சார்ந்தவை யும் கணிசமான அளவு இடம்பெற்றுள்ளன. 19ஆம், நூற்ருண்டுத் தமிழறிஞர்களின் விவர்தங்கள் பெரும்பாலும் பத்திரிகைகள் வாயி லாக நிகழ்ந்தமையால் அவை மிகுந்த பிரபல்யம் பெற்றன. பெரும் பாலும் ஈழநாட்டுத் தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டறிஞர்களுக்கும் பலமான, காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அக்காலத் தில் வெளிவந்த " செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி கலாவல்லி, ஞான சித்தி, ஈழகேசரி, சுதேசநாட்டியம் முதலிய பத்திரிகைகளிலே பல தமி ழறிஞர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கன் நடத்தியுள்ள னர். இத்தகைய விவாதங்கள் பலவற்றிலே ஐயரும் கலந்து கொண் Gair Gottfrif.
ஐயர் கலந்துகொண்ட விவாதங்களை இரண்டுவகையாகப் பகுத் துப்பார்க்கலாம். ஒன்று தமக்குச் சந்தேகமாக இருந்தவற்றை விவா தத்திற்கென விட்டு ஒரு நல்ல முடிவைக்காண விரும்புதல், நல்ல, சரியான முடிவு வரும் வரை இவ்விவாதம் நீண்டுகொண்டேயிருக்கும் மற்றென்று தமிழறிஞர்களிற் சிலர் தம் மனம்போன போக்கிலே தவருன கருத்துக்களை முன்வைத்தலைக் கண்டிப்பது. ஐயர் தவறுகள், பிழைகளைக் கண்டால் சுட்டிக்காட்டும் வழக்கமுடையவர். குமார சுவாமிப்புலவரிடம் படித்தமையால் தம் குருவைப்போலவே பிழை விடுபவர்களைக் கண்டிக்கும் குணம் இவரிடமும் காணப்பட்டுள்ளது. இவர் கலந்துகொண்ட விவாதங்களைத் தமிழறிஞர்கள் மிக உன்னிப் புடன் கவனித்து வந்துள்ளனர். என்பதை அக்காலப் பத்திரிகைகளில் வெளியாகிய கடிதங்களினுாடு அவதானிக்கலாம்.
* சி. வை. தாமோதரம்பிள்ளை, நாவலர் முதலியோர் காலத் திலே தமிழ்நாட்டறிஞர்களுக்கும் ஈழ த் துத் தமிழறிஞர்களுக்கு மிடையே நிலவிவந்த முரண்பாட்டின் தொடர்ச்சியையே ஐயரின் விவாதங்களினூடும் காணமுடிகின்றது. காலத்திற்குக்காலம் ஈழத்துத் தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களுக்கும் நடந்த வித்
57

Page 39
துவ மோதல்களும் விவாதங்கள் என்ற பெயருடனேயே அழைக்கப்
பட்டன. ஈழநாட்டிலிருந்துந்து தலைசிறந்த கண்டனகாரர்களாக ஆறு முகநாவலர், முருகேசபண்டிதர், குமாரசுவாமிப்புலவர் முதலிய்ோர் கருதப்பட்டனர். இவர் க ளின் வரிசையிலேதான் கணேசையரும் இடம்பெறுகின்றர். குமாரசுவாமிப்புலவர் ஈழநாட்டின் தமிழ்க்கல்வி யின் சிறப்பையும் புலமை 'மிடுக்கையும் தாம் கலந்துகொண்ட விவா தங்களினூடு நிறுவியவர். புலவரின் சீவகசிந்தாமணிப்பிழைகள், திரா விடப்பிரகாசிகைப்பிழைகள் முதலிய கண்டனங்களுக்குத் தமிழ்நாடே தலைசாய்த்தது. புலவரின் மாணவரான ஐயர் தாம் எழுதிய கண் டனங்களைக் குமாரசுவாமிப்புலவருக்குக் காட்டி அவர் அபிப்பிராயம் பெற்றபின்னரே வெளியிட்டுள்ளார். ஐயரின் கண்டனங்களிலே குமாரசுவாமிப்புலவரின் ‘சாயல்", "பாணி அமைந்திருப்பதை அவ தானிக்கலாம்.
பத்திரிகைகளைக் களமாகக் கொண்டு விவாதங்கள் நடை பெற்றதாலே தமிழ்மொழியில் ஆற்றலும் ஆளுமையுமில்லாத “கற்றுக் குட்டிகள்" சிலரும் இவ்விவாதங்களிலே கலந்துகொண்டனர். பெயர்ப் பிரபலியமும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளுமே இக் கற்றுக்குட்டிகள்' விவாதங்களிலே கலந்துகொள்ளக் காரணமாகும். இத்தகையவர்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றேர் பனுவல்களிற் பிழை காணப்புகு "வதை ஐயர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. விவாதங்களிற் கலந்து கொள்வோரின் தகுதி கண்டு "பொருதுவதில் ஐயர் சிறப்பிடம் பெற் ருர். சொந்தப்பெயரில் எழுதாது வேறுபெயர்களிலே கரந்துறைந்து எழுதுபவர்களை ஐயர் சற்றுக் கடுமையாகவே சந்திப்பர்.
சுன்னுகம் குமாரசுவாமிப்புலவரை முன்நிலையாக்கிச் சாவகச் சேரிப்புலவர் என்ற பெயரில் தட்சணுமூர்த்தி என்பவர் எழுதிய கண்டனத்திற்கு எதிராகக் கணேசையர் 1909 ஜனவரி 27ஆம் திகதி ஞானசித்திப் பத்திரிகையிலே பின்வரும் பதிலை எழுதினர்.
'ச்ாவகச்சேரிப் புலவர்களுக்கு.
ஞானசித்திப் பத்திரிகையிலே சுன் ன கம் பூரீமத் அ. குமாரசுவாமிப்பிள்ளையவர்களை முன்னிலையாக்கி வாத வூரர் புராணத்திலே ஒருவர் சில வினக்கள் வினவுகின்றனர். அவர் கைச்சாத்து "தக்கணமூர்த்தி மீசாலை" என்பது. அவர் எழுதிய பிழைகளுட் சிலவற்றை உங்களுக்குக் காட்டுகிறேன்.
புலவர்களே தக்கிணமூர்த்தி என்பதா? தக்கணு மூர்த்தி என்பதா? வழாநிலையாது? தக்கனமூர்த்தி என்னும்
5 S

வழக்கும் உளதா? “திருவாதவூரர் புராணம் என்பதனை "திருவாதவூரடிகள் புராணம்" என்ருரே. இதுவும் பொருந் துமா? புர்ாணகாரர் கருத்தும் திருவாதவூரர் புராணம் என் பது. திருவாதவூரர் என்னும் திருநாமம் புனைந்தவர்கள் என் பதணுற் பெறப்படவில்லையா? உயர்த்துங்கால் திரு என்னும் விஷேடணம் ஒருகாற்சேர்க்கப்படுதலன்றிப் பெயர் வேறு படுதலும் முறையாகுமா? திருவாதவூரடிகள் புராணம் என் றது மரபுவழுவன்ருே?
புலவர்களே முரண் ஆசங்கை என்பவற்றின் பொருள் களையும் அவை தம்முள் இயைந்து ஒன்ருகாமையும் வினக்க ளோடு செறியாமையும் நோக்காது அவைகளைப் பொது மொழியாகக் கொள்ளுதல் பொருந்துமா? இதுவும் மரபு வழுவன்ருே அன்ருயிற் பொருள்கூறி முடிக்கக்கடவ்ர்.
புலவர்களே!
பிழையுறப்பாடிய கவியைத் திருத்துதல் என்றும், பிழையுற எழுதிய கவியைத் திருத்துதல் என்றும், திருத்து தல் இருவகையென்று வரையறுத்துச் , சொல்லி இவ்விரு வகையுள்ளே புலவர் மூலபாடத்தைத் திருத்தியது எவ்வகை என்கிருர். இது வினவழுவன்ருே. .
SL L L LS LLS LLL L LLL 00LLL L LL LLL LLL L LLL L LL LLL LLL LLL 0LLLLLL SSSS LLL LL 0LSLL L LLLLLLLL0 0LL LLLLLL · o so o w • 9 sa no o ooo wu t u wou " ·
புலவர்களே!
ஏமாற்ற, ஆமா என்பன முதலிய பலபிழைச் சொற் கள் எழுதுகிருர். பிழையல்லன என்பராயின் வழக்குக்காட் டுக. “கரலிகிதவழு’ பிட்டு அல்லது குட்டு முதலியனவாக வரும் சொற்முெடர்வழுக்களோ பல. அவையெல்லாம் நாட் டப்புகின் விரியும் என்று இவ்வள்வில் முடித்தேன். W
இவ்வளவு பிழை எழுதினவர் உரையில் வினவத் தொடங்கினராயின் வின எப்படி முடியும். உணரவல்லீர் என்பது பற்றியே உங்களை முன்னிலையாக்கினேன்.”
இங்ஙனம்
கணேசையர் 1
5
9

Page 40
இவ்வாறு இக்கண்டனம் அமையும்.
ஐயர் புலவரின் திறமையிலே தம்பிக்கையும் மதிப்பும் உடை யவர். “பெரியோரைக்கனம் பண்ணல் வேண்டும்” என்னும் கொள் கையுடையவர். நிறைகுடமாக விளங்கிய புல வரில் பிழைகாண முயன்றமை ஐயருக்கு ஆத்திரமளித்துள்ளது. தம்மாசான் தாக்கப் படுவதைப் பொறுக்காத மனநிலை"யை இக்கண்டனம் காட்டி நிற் கின்றது. -
ஐயர், கண்டனமெழுதியவரை வன்மையாகத் தாக்கி மட்டந் தட்டி எழுதிய கண்டனத்திற்கு உதாரணமாக மேற்காட்டிய கண் டனப்பகுதியைச் சுட்டிக்காட்டலாம். ஐயர் விஷயத்திற்குள் இறங் காது கண்டனம் எழுதியவரின் தகுதிப்பாட்டை விமர்சிப்பதனூடு அவரின் கண்டனத்தை மதிப்பீடு செய்வதும் உண்டு. அடிக்கடி புல வர்களே என்று விழித்துக் கூறியதோடு “உணரவல்லீர் என்பது பற் றியே உங்களை முன்னிலையாக்கினேன்” எனக் குறிப்பிடுவதும் ஐயரின் கண்டனத்தின் ஒரு “பாணி"யாகக் கொள்ளத்தக்கது. இத்தகைய அம்சத்தைப் பல கண்டனங்களிலே காணலாம். நாகரிகமாகக் கண் டனமெழுதுபவர்களுக்கு நல்லபடி பதிலெழுதுவதும் அநாகரிகமாக எழுதுபவர்களை நையாண்டியாகத் தாக்குவதும் ஐயரின் சுபாவம். ஐயரின் கண்டனங்களிலே இலேசான நகைச்சுவையும் காணப்படும் அரசன் சண்முகனரை விவாதத்தில் விளிக்கும்பொழுது “பிள்ளையே’ என விழித்தமையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
ஐயர் கலந்துகொண்ட விவாதங்களில் மிகவும் முக்கியம் வாய்ந் தது அரசன் சண்முகனுரோடு நடத்திய விவாதமாகும். அக்காலத் திலே தமிழிலக்கண இலக்கியங்களிற் சண்டமாருதமாகத் திகழ்ந்த வர் அரசன் சண்முகனர். கூர்மையான விவேகம் படைத்தவர். ஐய ருக்கும் அரசன் சண்முகனருக்கும் நடைபெற்ற விவாதத்தைத் தமிழ் கூறும் நல்லுலகு மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது. தமிழ்கூறும் நல்லுலகெங்கும் ஐயரின் புகழ் இவ்விவாதத்தின் பின் பன்மடங்காகி யது. தமிழ்நாட்டு அறிஞர்களாலேயே விவாத அறிஞர் கணேசையர் எனப் பாராட்டப்பட்டார்.
கணேசையரின் சிரேஷ்ட மாணவர்களில் ஒருவரும் யாழ்ப்பா ணப் பல்கலைக்கழகத்தினுல் இலக்கண வித்தகர் எனப்பட்டம் வழங் கிக் கெளரவிக்கப்பட்டவருமான பண்டிதர் இ. நமசிவாயம் இவ் விவாதம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவர்
60

'... e. அக்காலத்தில் அதிதீவிர விவேகமும் நுண்மாண் நுழை புலமும் பெற்று பண்டைய நூலாசிரியர், உரையாசிரியர் களின் கருத்துக்களை மறுத்து, தம்மை மறுப்பார் கருத்துக் களையெல்லாம் வலிகெடுத்து, நவீன உரை கூறு ம் திறம் படைத்து, தொல்காப்பியத்தின் பாயிரத்திற்கும், முதற் குத் திரத்திற்கும் சண்முகவிருத்தி என்னும் பெயரில் புத்துரை கண்ட சோழவந்தான் வித்துவான் அரசன் சண்முகளுருக் கும் ஐயரவர்களுக்கும் ஆகுபெயரும் அன்மொழித் தொகை யும் என்ற விடயத்தில் கருத்துவேறுபாடுதோன்றிற்று. அர சன் சண்முகனர் ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் வேறு என்றும் ஐயரவர்கள் அவையிரண்டும் ஒன்றென் றும் வாதிட்டனர். அவர்களது வாதங்கள் செந்தமிழ்ப் பத் திரிகையில் தொடர்ந்து பிரசுரமாயின. அவை பேரறிஞர் களின் கருத்தைக் கவர்ந்தன. ஈற்றில் ஐ ய ர வுர் க ளின் கருத்தே தக்கதென்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அவ்வாதமுடிவு ஐயரவர்களுக்கு மிகுந்த புகழைத் தேடிக்கொடுத்தது." 2 ό
ஆகுபெயர் அன்மொழித்தொகை விவாதம் ஐயருக்குப் புக ழைத்தந்தது மாத்திரமன்றி ஈழநாட்டின் இலக்கணப் பாரம்பரியத் தின் வலுவையும் வெளிக்காட்டிநின்றது. ஐயரின் நுண்மாணுழை புலம் இவ்வாதத்தினுாடு தெளிவாகப் புலனுகின்றது. இவ்விவாதம் பற்றிப் பண்டிதர் க. வீரகத்தி குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது.
*உண்டான காலம்முதல் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்த
ஆகுபெயர், அன்மொழி, போலி, சந்தியக்கரம், அளபெடை முதலிய பிரச்சினைகட் ஆம் முடிவ்ான தீர்வுகண்டு அவற்றை
யெல்லாம் செந்தமிழ் முதலான பத்திரிகைகளில் ஈழ ம்
வெளிப்படுத்தியுள்ளது “ 3 " ; , , .
இவ்வாறு ஈழநாடு பெருமைப்படும் அளவுக்கு இலக்கணப் பணி யாற்றியவர்களுள் ஐயர் முதன்மையானவர். இலக்கணங்களில் விடு படாதிருந்த புதிர்களை விடுவித்து முடிவுக்குக் கொண்டுவர ஐயர் கலந்துகொண்ட விவாதங்கள் பெருமளவு உதவின.
ஐயர் புனைபெயர்களிலும் சில விவாதங்களிலே கலந்துகொண் டூள்ளார். ஒரே காலத்தில் ஒரே பத்திரிகையில் பல விவாதங்களிற் கலந்துகொள்வதற்கு வசதியாகவே ஐயர் புனைபெயர்களைக் கையாண் டிருக்கிருர் போலும். ஐயர் கையாண்ட புனைபெயர்களுள் "புன்னை மாநகரவாசி" என்பதும் ஒன்று. வித்துவான் அரசன் சண்முகனருடன் நடத்திய சில விவாதங்களிலேயே ஐயர் இப்புனைபெயரைக் கையாண் டுள்ளார். தாம் பிறந்த கிராமத்திலுள்ள பற்றினை, இவரது புனை பெயர் காட்டுகின்றது. ‘சாவகச்சேரிப் புலவர்களுக்கு" என விளித்
6

Page 41
துக் கண்டனமெழுதிய அதே ஞானசித்தியில் "புன்னமாநகரவாசி" என்ற பெயரில் அரசன் சண்முகனருக்கு எதிராகக் கண்டனமொன்றை எழுதியுள்ளார்.
令岳。
f 2
வித்துவான் பூரீமத் சண்முகம்பிள்ளையவர்களுக்கு.
19769r%n Guu!
ஞானசித்தி (19) ஆம் இலக்கத்தில் நீவிர் பிரகடனஞ் செய்த நீரகபாத நூற்றந்தாதியும் பிறவும் கண்டோம். அரசஞ் சண்முகம் என்புழிச் சந்தியும் பொருளும் யாவை?
கருப்பொருளாவது யாது?
உரையாவது யாது? இவற்றின் இலக்கணங்கூறும் நூல்கள் யாவை?
அம்பாலிகை என்னுஞ் செய்யுளிலே செயப்படுபொருளும் சொல்லப்பட்டிருக்கிறதா? செயப்படுபொருள் சொல்லப்ப டாமல் இருக்கும்பொழுது இ த னை த் தற்சிறப்புப்பாயிர மென்று சொல்வதெப்படி? தற்சிறப்புப்பாயிரம் என்பதன் மேல் முதலாவது பாட்டு என்பது எப்பொருள் குறித்து நிற்கிறது? தற்சிறப்புப்பாயிரத்திற் பலபாட்டுக்களும் வருமா?
*இதற்குக் கருப்பொருட்பாயிரமுரைத்துக் கருப்பொருளு
ரைக்கற்பாற்று” என்னும் பயனிலைக்கு எழுவாய் யாது? அவ்
வெழுவாயிடத்திலே உரைத்தற்குரிமையும் உண்டா? உரைத்
தது என்னும் எச்சம் எவ்வினையோடு முடிகிறது?
கருப் பொருட்பாயிரமாவது யாது?
நாற்கவிராச நம்பி நூலன்றி உரையும் தாம் செய்தாரென் பதற்குப் பிரமாணம் யாது?. உரை வகையாவது யாது? நீர் இங்கே கூறிய உரை வகைக்
குப் பிரமாணம் யாது?
குழு உப் பொருள் வகையாவது யாது? நூலிலே தோன்றும் குழு உப் பொருட்கள் தொனியாவதன்றி உரை வகையிலும் G3FC Lomt?
நீர் எழுதும் உரைக்கிரமத்திற்குப் பிரமாணம் யாது?
புன்னமாநகரவாசி 4

ஐயரின் கண்டனங்கள் செறிவும் இறுக்கமும் கொண்டவை: தனித்தனியான வினக்களாக அமைபவை; தருக்க ரீதியானவை. ஐய ரின் நுணுக்கமான அறிவினை இவ்வினுக்களினூடே காணலாம். அக் காலத்தில் வெளிவந்த ஞானசித்திப் பத்திரிகையில் இவ்வாறன பல விவாதங்களிலே ஐயர் கலந்துகொண்டமையை அவதானிக்கலாம். இலக்கிய இலக்கண சம்பந்தமான சர்ச்சைகளிலே ஐயர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். சமயச் சார்புள்ள சர்ச்சைகளில் ஐயர் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. சர்ச்சைகளினூடு ச ரி யான முடிவு வெளிவரும் என்ற நன்னுேக்கமே ஐயரிடம் காணப்பட்டது. இந்நன்னேக்கமே ஆர்வத்துடன் ஐயர் சர்ச்சைகளிற் கலந்துகொள் ளக் காரணமாயிற்று:
ஐயர் காலத்தில் பிரசித்திபெற்று விளங்கிய தமிழறிஞர்களுள் م பி. எஸ். சுப்பிரமணியசாஸ்திரி அவர்களும் ஒருவர். இவர் செந்த மிழில் எழுதிய தொல்காப்பியச் சொல்லதிகாரக்குறிப்பு என்னும் கட்டுரையில் வரும் "பிறிதுபிறிதேற்றலும் உருபுதொகவருதலும்” என்ற குத்திரத்திற்குக் குறிப்பிட்ட உரையை ஐயர் பலமாகக் கண் டித்தார்.
இலக்கண நூல்கள் பலவற்றிலிருந்து மேற்கோள்காட்டியும் உரையாசிரியர்களின் உரையை நுட்பமாக விளக்கியும் ஐயர் இவ் விவாதத்தை நடத்தினர். அத்துடன் ஐயர் பெற்றிருந்த வடமொழிப் புலமையும் இவ்விவாதங்களிலே வெற்றிபெற உதவியாக அமைந்தது. வடமொழி இலக்கண அமைதிகளையும் தமிழ்மொழி இ லக் கண அமைதிகளையும் ஒப்பிட்டு, முரண்பாடுகளை அல்லது உடன்பாடுகளைச் சுட்டித் தம் விவாதத்திற்குச் சாதகமாக்கிக்கொள்வது ஐயரின் இரு மொழிப் புலமையையும் புலப்படுத்துவன. ஐயரின் விவாதங்கள் பல வற்றின் பின்னணியில் குமாரசுவாமிப்புலவர் இருந்தார் என்பதும் மனங்கொள்ளத்தக்கது. வரன்முறையாக விளக்கி, பின் மறுத்து, பின்பு தொகுத்துக்கூறும் பண்பினை ஐயரின் கண்டனங்களிலே காண லாம். தொகுத்துக் கூறும்பொழுது தாம் எண்ணிய கருத்தை இலகு வாகப் புலப்படுத்த முடியும் என்று ஐயர் நம்பினர்.
பி. எஸ். சுப்பிரமணியசாஸ்திரிகளுக்கு எழுதிய மறுப்பில் வரன் முறையாக விளக்கிக்கூறிப் பின் தொகுத்து மறுப்பதனை அவதானிக் கலாம். ஐயரின் மறுப்புரையின் ஒருபகுதி கீழ்வருமாறு அமைகிறது:
“இதுகாறும் கூறியவற்றற் போந்தபொருள் யாவையோ வெனின் ஆரும் வேற்றுமை அது உருபு ஒருமைப் பொருட ரும் என ஆசிரியர் ஒதலின் அது பெயர்சார்ந்தே ஒருமைப் பொருடரும் என்பதும், தருங்கால்சாத்தனது என்பது சாத் தனுடையது எனப்பொருள் தந்தே ஒருமையுணர்த்துமென்
63

Page 42
பதூ உம், சாத்தனுடைய எனப்பொருடரின் ஒருமையுணர்த் தாதென்பதுர உம், சாத்தனுடையது என்பதற்குச் சாத்த னுடைய பொருள்என்பதே பொருள் என்பதுரஉம், சாத்த னது ஆடைஎன்புழிச் சாத்தனது என்பதற்குமதுவே பொருள் என்பதுரகடம், அதுபோலவே சாத்தனதனை என்புழியும் சாத் தனுடையபொருள் என்பதே பொருள் என்பதுர உம்,
பொருள் அதுவாதலாற்ருன் உரையாசிரியர்கள் மூவரும் *பிறிது பிறிதேற்றலும்' என்பதற்கு ஆறனுருபு பிறிதுரு பேற்றலும் எனப்பொருள் கூறினர்களென்பது உம் அதனல் அவருரைக்கண் யாதுந்தடையில்லை யென்பதுTஉம் பிறவு மென்க* 5
தம்கருத்துக்கு அழுத்தமளிக்கும்பொருட்டு ஐயர் மேற்காட்டிய வாறு தமது கண்டனங்களைத் தொகுத்துக்கூறி முடிப்பது வழக்கம். தாம் சார்ந்திருக்கும் கட்சிக்காக வாதாடும் சட்டநூலறிஞன் பல வாறு முற்றீர்ப்புக்களை மேற்கோள்காட்டித் தொகுப்புரை நிகழ்தது வதுபோலவே ஐயரின் கண்டனங்களின் தொகுப்புரைகளும் அமை யும். நாவலர், குமாரசுவாமிப்புலவர் முதலியோர்களின் கண்டனங் களிலும் இத்தகைய தன்மையைக்காணலாம். ஈழநாட்டின் கண்டன மரபினை அடையாளங்காண இத்தகைய பண்புகளே உதவுகின்றன.
பல இலக்கண சம்பந்தமான சர்ச்சைகளின் தோற்றத்திற்குக் 'கால்கோளாகக்" கணேசையர் அமைவதையும் அவதானிக்க முடி கின்றது. “சில ஆராய்ச்சி' என்றும், "ஐயவின’ என்றும் அவர் கிளப் பும் விவாதங்கள் மிகவும் ஆழமானவை. அறிஞர்களின் கருத்தைத் தொகுத்துப்பெற்றே தம் சந்தேகங்களை நீக்குவதற்கும் சர்ச்சைகளை ஒரு ஊடகமாக ஐயர் கருதியிருக்கிருர்,
தொல்காப்பியச் சொல்லதிகாரத்துத் தமக்கு நேர்ந்த பல சந் தேகங்களைச் சர்ச்சையாக்குகிருர். உதாரணமாகத் தொல் - சொல் விளிமரபு 14 ஆம் சூத்திர உரையுள் காணும் முரண்பாட்டைத் தீர்ப் பதற்காகச் செந்தமிழில் பின்வருமாறு எழுதுகின்ருர்,
*விளிமரபு க ச ம் சூத்திர உரையுள் சேனவரையர் ஆனிற் றளபெடைப் பெயர்க்கு உழாஅன், கிழாஅன் என உதார ணம் காட்டியுள்ளார். அங்ங்ணம் ஆணிற்றுக்கு அவற்றை உதாரணமாகக் காட்டிய அவரே "ஆவோவாகும் பெயரு மாருளவே ஆயிடனறிதல் செய்யுளுள்ளே” என்னுஞ் சூத் திரவுரையுள் “உழாஅன் கிழாஅன் என்பனவோ வெனின் அவை அன்னீற்றுப்பெயர் ஒருமொழிப் புணர்ச்சியான் அவ் வாறு நின்றனவென்பது, ஆனி ரு ய வ N உழவோன், கிழ வோன் எனத்திரியுமாறறிக'; எனக் கூறியுள்ளார். இச்சூத்
64

திரவுரைகள் ஒன்றற்கொன்று முரணுகக் காணப்படுகின் O Gor. - - - - - ~~~~ • • • • • • இதனை யான் துணிந்து கூறவில்லை. வேறு கருத்து உண்டாயின் அறிஞர்கள் விளக்குவார்கள் எனக்கரு தியே இங்கு எழுதலாயினேன். இதனையும், மேலதையும் ஏட்டுப் பிரதி வைத்திருப்போர் ஆராய்ந்து இச்செந்தமிழ் வழியாக வெளிப்படுத்தின் அது தமிழ் கற்போர்க்குச் செய்த பேருபகாரமாகுமென்று எண்ணுகின்றேன்.” 6
இவ்வாறு பல விஷயங்களைச் செந்தமிழ் முதலிய சஞ்சிகை களிலே வெளிப்படுத்திச் சில விவாதங்களையும் தோற்றுவித்துள்ளார். அக்காலத்திற் பிரபல்யம்பெற்று விளங்கிய பல தமிழ் அறிஞர்கள் சர்ச்சைகளைத் தோற்றுவிப்பதிலும், சர்ச்சைகளிலே ஆர்வத்துடன் பங்குபற்றுவதிலும் மகிழ்வு கண்டுள்ளனர். இம்மகிழ்வு பத்திரிகைக ளின் விநியோக விஸ்தரிப்புக்கு உதவியாக அ  ைம ந் த து என்று துணிந்துகூறலாம். இதனலே பத்திரிகைகளும் வாத விஷயங்களுக்கு ஊக்கமளித்தே வந்துள்ளன.
சிறந்த தமிழ் அறிஞரான ஐயர் தமது கருத்துக்களுக்கு வலு வளிக்கும் நோக்கத்துடன் சங்கப் பாடல்கள் பலவற்றிலிருந்து உதா ரணங்களைக்காட்டியுள்ளார். “சிறுபொழுது’ என்னுந்தலைப்பிலே நடை பெற்ற சர்ச்சையில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி ஐயர் தமது கருத்தை நிறுவுவது அவரின் பரந்த இலக்கிய ஆளுமையையே சுட் டிக்காட்டுகின்றது.
ஐயர் கலந்துகொண்ட விவாதங்கள் பலவாயினும் ஐயருக்குப் பெருமதிப்பையேற்படுத்தியது அரசன் சண்முகனருடன் நடந்த விவா தமேயாகும். மிக இளம்வயதிலேயே இலக்கிய இலக்கண ஆராய்ச்சி யிலீடுபட்ட ஐயர் வயதுமுதிர "இலக்கணத்தவமுனியாக" மாறிவிட் டார். இதனுல் இவர் கலந்துகொண்ட விவாதங்களில் இவரைப் “புறங்காணச்செய்ய அக்காலத் தமிழறிஞர்களால் முடியவில்லை. இத னைப் பேராசிரியர் சு வித்தியானந்தனின் பின்வரும் கூற்று மூலம் அறியலாம்.
'கணேசையர் தமது இருபத்தைந்தாவது வயதிலேயே அரிய இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதத்தொடங் கினர். இவை செந்தமிழ்ச்சஞ்சிகையில் வெளிவந்தன. அக் காலத்தில் இவருக்கும் அரசன் சண்முகளுருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தொல்காப்பியப் பாயிரம் முதற் சூத்திரம் ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனர் சண்முக விருத்தி என்னும் பெயரில் எழுதிய விருத்தியுரையில் ஆகு
65

Page 43
பெயர்வேறு, அன்மொழித்தொகை வேறு என்று நிறுவிய கொள்கையை எதிர்த்து அவை ஒன்றேயெனத் தாம் செந் தமிழில் எழு திய கட்டுரையிற் கணேசையர் நிறுவினர். வேறு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் செந்தமிழில் எழு தினர்.” 7 W
ஈழநாட்டு இலக்கண முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட வந்த பேராசிரியர் வித்தியானந்தன் ஐயரைப்பற்றி மேற்காட்டியவாறு குறிப்பிடுவர். ஈழநாட்டின் இலக்கணப் பாரம்பரியத்தின் வலுவை யும் வனப்பையும் தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்புகளுக்கு அடுத்த படியாக அரசன் சண்முகனருடன் நடத்திய விவாதமே வெளிப் படுத்துகிறது எனலாம். இலக்கிய இலக்கண ஆராய்ச்சியிலீடுபட்டு உழைத்த ஐயரை அவர்காலத் தமிழறிஞர்கள் பலர் விவாத அறிஞர் என்றே அழைத்தனர். கணேசையரை நேரிலே அறியாத தமிழ்நாட்ட றிஞர் பலர் அவரது வித்துவச் சிறப்பினை, மேன்மையை, ஆற்றலை விவாதங்களுக்கூடாகவே அறிந்தனர்.
ஐயர் கலந்து கொண்ட விவாதங்களிற் பெரும்பாலானவை இலக்கணம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. இலக்கியம் சார்ந்த சில விவாதங்கள் கூடப் பெருமளவு பொருளிலக்கணத்தை மையமாக வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஐயர் கலந்து கொண்ட விவாதங்களைத் தொகுத்துநோக்கும் பொழுது, தாம் மறுக்க எடுத்த விடயத்தை ஆணித்தரமாகத் தருக்கரீதியாக மறுப்பதும் ஒன் றன் பின் ஒன்றகச், சிறு சிறு வினக்களாக வினவுவதும் வடமொழி யறிவினைப் பயன்படுத்துதலும் மேற்கோள்கள்காட்டித் தம் கருத்தை வலியுறுத்துவதும் இறுதியிற் சாராம்சத்தைத் தொகுத்துரைத்தலும் பொதுப்பண்புகளாக அமைவதை அவதானிக்கலாம். இத்தகைய பண் புகளே ஐயரைச் சிறந்த "விவாத அறிஞர்’ என மதிக்கவைத்தன
மிக அண்மைக்காலத்தில் வாழ்ந்த ஜயர், கலந்துகொண்ட விவாதங்களிற்ப்ல அக்காலத்தில் வெளிவந்த சிறு சிறு சஞ்சிகைகளிற் பிரசுரமாயுள்ளன. அவற்றைப் பற்றிய பூரண விவரங்களை அறிய முடியவில்லை. அவை தொகுத்துப் பாதுகாக்கப்படவேண்டியவை.
66

இயல் - 6
அடிக் குறிப்புக்கள்
1. கணேசையர் சி , ஞானசித்தி, 1909, ஜனவரி
2. நமசிவாயம், வித்துவசிரோமணி மறைத்திரு கணேசையர் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரித் தமிழ்மன்ற வெளியீடு 1977. Lud. 7.
3. வீரகத்தி, க., “ஈழத்து இலக்கண முயற்சிகள்" நான் காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவு மலர், ஜனவரி, 1974, பக். 100.
4. புன்னை மாநகரவாசி, ஞானசித்தி, 1909, ஜனவரி.
5. செந்தமிழ் 27 ஆந் தொகுதி. பக். 5 - 10.
6. செந்தமிழ், 33 ஆந் தொகுதி. பக். 105
7. வித்தியானந்தன், சு. "ஈழமும் தமிழ் இலக்கணமும்’ தமிழியற் சிந்தனை, முத் தமிழ் வெளியீட்டுக்கழகம்,
யாழ்ப்பாணம், 1979. பக். 26.
,67

Page 44
இயல் - எழு
கவிபாடும் புலமிக்கோன்
*காசிபகோத் திரமுடையோன் புன்னேநகர்ச் சின்னையர்
காதன் மைந்தன் தேசிகன்வித் துவசூடா மணிபொன்னம் பலப்பெயர்கொள்
செம்மல் பாங்கே பேசரிய விலக்கியமு மிலக்கணமும் பிறநூலும்
பெரிது கற்றேன் பூசுரர்கோன் கணேசனெனும் பெயருடையோன் கவிபாடும்
புலமிக்கோனே" 1
இவ்வாறு சுன் ன கம் குமாரசுவாமிப்புலவர் கணேசையர் எழுதிய இரகுவம்சப்புத்துரை நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரத்திற் பாடியுள்ளார். கணேசையரை நன்கு அறிந்தவரும் அவரது ஆசிரியரு மான குமாரசுவாமிப்புலவர் ‘கவிபாடும் புலமிக்கோன்’ என்று குறிப் பிட்டது விதந்துரையாகாது. ஐயர் செய்யுள் செய்வதில் வல்லவ ரென்பதை அவரியற்றிய செய்யுள்கள் மூலம் அறியலாம்.
ஐயர் காலத்தில் செய்யுள் செய்யும் திறன்படைத்தவர்களே தமிழறிஞர்கள் என்று கருதப்பட்டனர். எவ்வளவு இலக்கண இலக்தி யங்கள் கற்றிருந்தாலும் செய்யுள்செய்ய முடியாதவர்களைத் தமி ழறிஞர் என அங்கீகரிக்க ஐயர் வாழ்ந்தகாலச் சமூகம் தயாராக இருக்கவில்லை. பாரம்பரியக் கல்வி மரபில் யாப்பிலக்கணம் வரன் முறையாகப் போதிக்கப்பட்டமைக்குச் செய்யுள்செய்யும் சமூக அந்த காரத் தேவையே முக்கிய காரணமாகும். படித்தவர்கள் செய்யுள் செய்யக்கூடியவர்களாக இருத்தல் சமூகக் கடப்பாடாயிற்று.
ஐந்திலக்கணமும் நன்கு அறிந்தவரான ஐயருக்குச் செய்யுள் செய்வதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. வரன்முறையான இலக்கி யப்படிப்பும், இயல்பான இரசனை உணர்வும் உள்ள ஒருவருக்கு யாப் பும் தெரிந்துவிட்டால் செய்யுளியற்றல் தானகவே வரும். ஐயர் இத் தன்மையரே. s
ஐயர் இயற்றிய செய்யுள்களுட் பெரும்பாலான சமயச்சார்புடை யவையே. அவ்வப்போது சாற்றுகவிகளும் சரமகவிகளும் தனிப்
68

பாடல்களும் பாடியுள்ளார். இவரின் இறுதிக்காலம் "தவ வாழ்வை யொட்டியதாக அமைந்தமையால் இவரின் பாடல்களிலே தெய்வீகத் தன்மையையே 'பரக்கக்காணமுடிகின்றது. வெண்பா, விருத்தம், அக வல், கட்டளைக்கவித்துறை முதலிய பல்வேறு யாப்பு வடிவங்களையும் ஐயர் கையாண்டுள்ளார். ஐயரின் "யாப்பறிபுலமை இவரின் செய் யுள்களினூடு புலப்படுகின்றது.
திருச்செல்வச் சந்நிதி நான்மணிமாலை, புன்னை மும்மணிமாலை, வருத்தலைவிளான் மருதடி விநாயகர் பிரபந்தம், வருத்தலைவிளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல், மேலைக்கரம் பொன் சண் முகநாதன் திருவிரட்டை மணிமாலை முதலியன ஐயரின் செய்யுள் நூல்கள். தனிப்பாடல்கள் பல ஆண்டு மலர்களிலும் நினைவுமலர் களிலும் நூல்களிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஐயரின் கவித்துவ ஆற்றலைக் காட்டுவனவாக இவை அமைகின்றன. ஐயர் செய்யுள்பற்றிக் கொண்டிருந்த கருத்தை அவரது கட்டுரையொன்று காட்டிநிற்கும்.
*நோக்கு - இது செய்யுட்குறுப்பாகத் தொல்காப்பிய ஞர் கூறிய முப்பத்திநான்குறுப்பினுள் ஒன்ருகும். கவியியற்று வோர்க்குப் பயன்படும்பொருட்டு இங்கே விளக்கி எழுதப் பட்டுள்ளது.
நோக்கென்பது. மாத்திரை முதலிய உறுப்புக்களை யெல்லாம் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். எனவே, கேட்டோர் மீளவுந்தன்னை நோக்கிப்பயன் கொள்ளுமாறு, மாத்திரை முதலிய உறுப்புக்களை யெல்லாம் இன்பம்பயக்கு மாறு செவ்விதாக அமைத்துச் செய்வதே, செய்யுள் என்ற படி. இங்ங்னங் கூறியதனல்,
ஒருகவி ஒரு செய்யுளை இயற்றுங்கால் அச்செய்யுளுறுப் புக்களும் அதன் சொற்பொருள்களும் நோக்குப்படச் செய்ய வேண்டும் என்பதாம். சொல்லும் பொருளும் நோக்குப்படச் செய்வது தன்னுற் கருதிவைக்கப்பட்ட பொருளுக்கு உபகாரப் படுத்தற் பொருட்டென்க. இங்ங்னஞ் செய்யப்பட்ட செய் யுளே சுருங்கச்சொல்லல் முதலிய பத்தழகும் அமைந்தன வாகும்." 2
என்றிவ்வாறு ஐயர் குறிப்பிடுவதிலிருந்து இவர் செய்யுள் பற் றிக்கொண்டிருந்த கருத்தினையறியலாம். ஐயரின் செய்யுட்களிற் சுருங் கச்சொல்லல் முதலிய பத்தழகும் விரவிக்கிடப்பதை அவதானிக்க српLћ . .
சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்கனவான ஐ ய ரின் செய்யுள்களிற் பலவகையான அணிகளும் மிளிரக்காணலாம். சங்கச்
69

Page 45
செய்யுள்களில் ஐயருக்கு இருந்த ஆட்சியையும் விருப்பினையும் அவ ரது செய்யுள்களிற் சில காட்டிநிற்கும். கடுமையான புணர்ச்சியும், செறிவான சொற்பிரயோகமும் ஐயரின் செய்யுள்கள் சிலவற்றை இறுக்கமானவையாகக் காட்டின.
தாளினிற் பெரும்பொரு ளுழந்துமிக வீட்டித் தாமுமுண் ணுது பிறர்க்குமீயாது கன்றுமுண் ணுது கலத்தினும் படாது நல்லான் றிம்பா னிலத்துக் காங்குப பயனின்றிக் கழிய வைத்தங் கிழக்கும் மாந்தர்தம் கறிவினை மறந்தும் பெற அது நின்றமர்க் களித்துந் நினதுபணிக் குதவியும் நன்றுபுரிந் துய்யு நல்லுணர் வதனை என்றனக் கருளிய இறைவறின் பதங்கள் கூடும் பரிசின் வீடும் பெற்றே
இன்புறு மாறிங் கன்புட னருளுவை மருதின்மூ லத்து மருவும் ஆனை மாமுகத் தைந்துகரத் தோனே 3
இவ்வாறன அகவற்பாக்கள் பலவற்றை ஐயர் எழுதியுள்ளார்: சங்க இலக்கியங்களுக்குச் செல்வாக்கு அதிகரித்திருந்தமையும் சங்கச் செய்யுள்களிலிருந்த ஈடுபாடும் ஐயர் காலத்துத் தமிழறிஞர் பலரின் செய்யுள்களினூடு புலனுகின்றன, தா மும் சங்கச் செய்யுள்களின் *சாய"லைத் தழுவிச் செய்யுள் செய்யவேண்டுமென்ற அவாவுக்குள் ளானர்கள் தமிழ்க் கவிதையின் போக்கு இருகிளைப்பட்டதாக வளரத் தொடங்கிய காலகட்டத்திலேகூட ஐயர் முதலிய பலர் புதுமைப் பக்கம் சாராது கற்றவர்க்காகவே கவிதைகள் புனைந்தனர். ஈழநாட் டில் நவநீதகிருஷ்ணபாரதியார், ஐயர் வித்தகம் கந்தையா முதலி யோர் சங்கச் செய்யுள்களின் சாம்லைத்தழுவியே தாமும் எழுதினர். மருதடிவிநாயகர் இருபா விருபஃது பற்றி வித்துவான் க. சி. நட ராஜன் பின்வருமாறு குறிப்பிடுவர். W
"மருதடிவிநாயகர் இருபா இருபஃது - இதில்வரும் அகவற் பாக்கள் சங்கச் செய்யுள்கள் போன்ற இறுக்கமும் பொரு ளாழமும், ஒசைநயமும், தன்மை நவிற்சியணியும் பொருந் தியவை’ 4
70

ஐயரின் செய்யுள்களைத் தொகுத்து நோக்கும்பொழுது இவர் மரபுவழித் தமிழ்ப்புலவராகவே காணப்படுகின்றர். இறைவன்மீது இவர் பல வகையான செய்யுள்கள் செய்துள்ளார். இவரின் செய் யுள்களிற் பல, செறிவும் இறுக்கமும் கொண்டபோதும் சிற்சில இடங் களில் எளிமையும் காணப்படுகின்றது. எளிதிற் பொருளுணரமுடி யாத செய்யுள்களை எழுதும் ஐயரே இவற்றையும் பாடினரா? என்று எண்ணவைக்கும் வகையிலும் இவரது பாடல்கள் சில அமைந்துள்
6TGT.
மருதடி மூலத் தெழுந்த வைங்கரனே மாபெருங் கடவுளே யென்றும் கருதிநின் னடிகள் பேணுறு மடியார் கருமங்கள் முற்றுறச் செய்வோய் பொருதுமா முகனைக் கொன்றிடுவிமலா புவனங்கள் முதற்பணி தேவே வருதரு தையிற் பூசநா ளிதனின்
மகிழ்ந் தெமக் கருள்புரி யாயே
வாழ்ந்திட வேண்டின் வருத்தலை மாநகர் வந்திடுவீர் தாழ்ந்திடு வீர்மரு தீசன் பதங்க டமையன்புடன் சூழ்ந்திடுந் தீவினை போக்கி யருள்வன் ருெலைவில்வளம் ஆழ்ந்திடு துன்ப மகன்றிடு நும்மை யகலிடத்தே 5
இப்பாடல்களிலே தேவாரங்களின் தன்மையைக் காணமுடிகின் நிறது. பலவகையான பக்திப்பாடல்களை ஐயர் பாடியபோதும் தமது வழிபடு கடவுளாகிய வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் மீது பாடி யவை பெரிதும் பக்திச்சுவை நிரம்பியவையாகக் காணப்படுகின்றன. ஐயர் விநாயகரை வழிபடும்பொழுது உடனுக்குடன் புதுவதாகச் செய்யுள்கள் செய்து வழிபடுவது வழக்கமாம். 6 இவ்வாறு அ வ ர் பாடிப்பரவிய செய்யுள்களே பின்பு எழுதித் தொகுக்கப்பட்ட மருதடி விநாயகர் பிரபந்தமாகும்.
ஐயர்பாடிய செய்யுள்களுள் வருத்தலை விளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது. சிலப் பதிகாரக் கண்ணகியைத் தெய்வமாக ஏற்கமறுத்துச் செட்டிச்சி" என இகழப்பட்ட நாவலர் மரபுவழிப் புலமையிலிருந்து ஊற்றெடுத்த ஐயர் கண்ணகை அம்மனுக்கு ஊஞ்சல்பாடியது, ஐயரின் யாழ்ப் பாண வழிபாட்டு மரபின் பற்றுறுதியினையே காட்டுகின்றது. இவ்
7 I

Page 46
ஆஞ்சல் சிலப்பதிகாரக்கதை நிகழ்ச்சிகளைத் தொகுத்துக்கூறி *கண்ண கியே யாடீரூஞ்சல்*, ‘கற்புடைத்தேவீ ஆடீரூஞ்சல்” என நிறைவு பெறுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊஞ்சல்பாடாத புலவர்களும், ஊஞ்சல் பாடப்படாத கோயில்களும் இல்லையெனலாம். புலோலிப் பசுபதீஸ்வரர் ஊஞ்சல் ஆறுமுகநாவலராலே பாடப்பட்டது என்பதும் குறிப்பிட்த்தக்கது.
ஐயரின் பக்திவாழ்வுக்கும் செய்யுளாக்குந் திறனுக்கும் நெருங் கிய உறவுண்டு. பண்டிதர் இ. நமசிவாயம் இக்கருத்துக்குச் சான் ருகச் சிறு சம்பவமொன்றினைச் சுட்டிக்காட்டுவர். ஐயரின் மாணவர் கள் பலரும் இச் சம்பவத்தைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.
“மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர் கள் ஞாபகார்த்தமாக ஒரு காணிவாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூபமெனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாதனம் பண்ணி இருக்கிருர்கள். அவ்வாலயத்திற்கு முன்னே பலபேர் பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூருமையால் அப்பணியைக் கைவிட்டி ருந்தனர். ஐயரவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பதடி வரை அகழப்பட்டும் நீரூறிற்றிலது. ஐயரவர்கள்;
*"ஆட்டாதே எங்கள் அரணுர் திருமகனே கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை - நாட்டுடிவாய் மாமருதி லீசா மதமா முகத்தோனே காமுறுவேற் குள்ளம் கனிந்து” என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பித் தம்பணியைத் தொடர்ந்து செய்து நீரூறக்கண்டு மகிழ்ந்தனர். 7
இவ்வாறு பண்டிதர் இ. நமசிவாயம் குறிப்பிடுவர். இக்குறிப் பிலிருந்து ஐயரவர்களின் பக்திப்பெருக்கும் செய்யுள் செய்யும் திற னும் புலனுகின்றன. ஐயரின் பல பாடல்களின் வரலாற்றுப்பின்னணி "நாயன்மார்பாணி"யினதாகக் காணப்படுகின்றது. மரபுவழிப் புலமை யாளனகத் திகழ்ந்த ஐயர் அவ்வப்போது பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார் அப்பாடல்களிலும் பெரும்பாலானவை பக்திசார்ந் தனவாகவே காணப்படுகின்றன.
72

அக்காலத் தமிழறிஞர்களின் சமூகப் பயன்பாடுகளுள் வாழ்த்துப் பாக்கள், இரங்கற்பாக்கள் முதலியன எழுதுதலும் ஒன்ருகக் கரு தப்பட்டது. தன்னுணர்ச்சிப்பாடல்களாக எழுந்த இரங்கிப்பாடும் பண்பு நாளடைவில் ‘சரமகவியாக" மாற்றம்பெற்றது. சரமகவியைக் “கல்வெட்டு" என்றும் அழைப்பர். ஐயர் சரமகவிபாடுதலைத் தொழி லாகக் கொள்ளாதவர். ‘தக்க மனுஷர்கள்" சிலருக்கு ஐயர் ‘இரங் கிப்பாடல்" எனும் சரமகவி பாடியிருக்கிருர், ஐயர் சரமகவி பாடிய வர்களுட் பெரும்பாலானவர்கள் ஐயரின் ஆசிரியர், நண்பர், மாண வர் முதலியோரே யாவர். தமது ஆசிரிய ரா ன சுன்னகம் குமார சுவாமிப்புலவர் இறந்தபோது மனமுருகிச் சில கவிகள் பாடினர்.
பெருந்தனு விட்டுக் குமாரசுவாமிப் பெருமன் சென்ற தருந்தமிழ் கற்பவ ராற்றுந் தவக்குறை வோவலதெம் பருந்தமிழ் நாட்டின் தவக்குறை வோதமிழ்ப் பாவைசெய்த விருந்தவப் பேற்றின் குறைவோ வெதுவென் றியம்புவமே. 8
இக்கட்டளைக் கலித்துறை ஐயரின் ‘இரங்கிப்பாடற்பண்புக்கு உதாரணமாகக் கொள்ளக்கூடியது. இவ்வாறே ஐயர் சுவாமி விபுலா னந்தர் முதலிய தமிழறிஞர்கள் இறந்தபோது சோக்ந்ததும்பும் செய் யுள்கள் பல செய்துள்ளார். அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரின் இரங்கற்பாடல்கள் பல வெளிவாகியுள்ளன. ஐயர் எழுதிய இரங்கற்பாடல்களிலே சுவாமி விபுலானந்தர் மீது பாடியபாடல்கள் மிகவும் சிறப்பானவை. 1948 ஆம் ஆண்டு வெளி யான ஈழமணி என்னும் சஞ்சிகையிலே இவ்விரங்கற்பாடல் வெளி வந்துள்ளது.
*சிவஞெளிபா தத்தினெழுஞ் செழுமணியே பொதிவ
ளருமிசைநூல் செய்த தவவடிவே யுயரண்ணு மலைநகரின் மிளிர்விளக்கே
தவத்தோர்மேவு முவமையிலா விமயவிசை நாட்டுபுகழ்க் கலையரசே யுனதாம்
யாழ்நூல் புவனமெலாந் தொழுமரனைக் கேட்பிக்க வெள்ளிமலை புக்காய் கொல்லோ." 9
விபுலானந்தரின் விழுமிய சிறப்பினைச் செப்பியாத்த இப்பாடல் ஐயரின் பாடல்களுள் வித ந்து குறிப்பிடக்கூடியது பாரம்பரியப் புலமையாளன் ஒருவன் செய்யுள் செய்யும் பாணியே ஐயர் பாணியு மாகும். தெய்வத்துதிப் பாடல்களோடு, ‘இரங்கிப்பாடல்களும் பாடிய
73

Page 47
ஐயர் நியாயமான அளவு சிறப்புப்பாயிரங்களும் வாழ்த்துப்பாடல் களும் பாடியுள்ளார். பத்திரிகை வாழ்த்து, திருமணவாழ்த்து நண் பர்களுக்கு வாழ்த்து முதலிய பலவகையிலும் ஐயர் செய்யுள் செய் திருக்கிருர், அக்காலத்தில் ஐயரிடம் பலர் வாழ்த்துக்கவி, சாற்றுகவி பாடு விக்க முயன்றும் அவர் மறுத்துவிட்டார் என்று அறிய முடிகின் நிறது. நன்கு தெரிந்து பழகியவர்களுக்கே ஐயர் வாழ்த்துப்பாடல்கள் வழங்கினர். துறவுவாழ்வு வாழ்ந்து, விநாயகப்பெருமானின் திருவருள் பெற்றிருந்த கணேசையர் வாழ்த்தினல் அவ்வாழ்த்து மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைவதை நடைமுறையிற்கண்ட பலர் ஐயரிடம் வந்து வாழ்த்துப்பாடல்கள் பாடித்தருமாறு கேட்பார்களாம். மறுக்க முடியாத நண்பரோ, மாணவரோ எனின் எழுதிக் கொடுப்பாராம்.
ஈழகேசரி பொன்னையாவின் மகளின் திருமணத்திற்கு ஐயர் பாடிய மணவாழ்த்துப் பின் ன ர் ஈழகேசரியிற் பிரசுரமாகியது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் ஈழகேசரி பொன்னையாவின் புத்திரிக்குத் திருமண வாழ்த்துப் பாடி யுள்ளனர். இவ்வாழ்த்துப்பாடல்கள் யாவும் ஈழகேசரியிற் பிரசுர மாகியுள்ளன.
ஈழகேசரி பொன்னை யாவும் ஐயரும் மிகவும் நெருக்கமானவர் கள். ஐயரின் மாணவன் பொன்னையா. ஐயரின் புகழுக்குக் காரண மாயமைந்தவர்களிற் பொன்னையா மிகவும் முக்கியமானவர். இருவருக்குமிருந்த உறவு நிலை பற்றி முன்னர் பார்த்தோம். பொன்னையாவுக்குச் சமாதான நீதிபதிப்பட்டம் கிடைத்தபோது கணேசையர் வாழ்த்துப் பாடல்செய்தார். மனமுவந்து வாழ்த்திய அப்பாடல் ஐயரின் வாழ்த்துப்பாடல்களுள் விதந்து குறிப்பிடக்கூடி
(1 gil. •
"கல்விபயில் சாலைகட்குக் கனகமெலாங்
கைகவியா தள்ளி யிவேன் பல்விதமா மேழைகட்கு மிகவுதவிக்
கல்விதனைப் பயிலச் செய்வோன் நல்விதத்துப் புலவர்கட்குப் பரிசில்பல
நயந்தளித்து நண்பு கொள்வோன் செல்வமதைப் பெற்றபயன் ஈத்துவக்கு
மின்பமெனத் தெளிந்து நின்றேன்” 10
இப்பாடலினூடு பொன்ஜணயாவின் பெருமையும் ஐயரின் புலமையும் தெரிகின்றன.
74

ஐயரின் பாடல்களிற் பண்டைய நீதிநூல்களிற் காணப்படும் அறநீதிக்கருத்துக்கள் விரவிக் காணப்படுகின்றன. பழந்தமிழ்க் கவி ஞர்கள் கையாண்ட பொருள் அமைப்பினையும் யாப்பு வடிவத்தையும் சொற்களையும் உவமைகளையும் அணிகளையுமே ஐயர் கையாண்டுள் ளார். ஐயர் காலத்துத் தமிழ் அறிஞர்கள் யாவரும் ஐயரைப் போலவே செய்யுள் செய்தனர். பல்வேறு துறைகளிலும் வாழ்க்கை முறையிலும் பழமையின் சுவடுகளையே அனுசரித்த ஐயர் தம்காலத் திலெழுந்த புதிய நவகவிதைப் பாரம்பரியத்தினுட் காலடிவைக் காமை ஆச்சரியந்தருவதாக இல்லை.
ஈழநாட்டின் கவிதைப்பரப்பிலே ஐயரின் சமகாலத்தவரான் பாவலர் துரையப்பாபிள்ளையின் கவிதைகள் சமகால ஓட்டத்திலி ருந்து விடுபட்டுப் புது ஒட்டம்" ஒடுபவை. துரையப்பாபிள்ளை பாவல ராகத் தனியே கவிஞராக ஆராயப்படுபவர். ஐ ய  ைர அவ்வாறு ஆராயமுடியாது. பாவலர் ஆங்கிலங் கற்றவர். இந்தியாவில் வாழ்ந் தவர். பாரதி ஓட்டத்துடன் ஒத்து ஓடியவர். ஐயரின் கவிதைகளை நோக்கும்போது 'எளியபதங்கள் எளியநடை” என்ற பேரலைக்குள் அவை அகப்படுவனவாகத் தெரியவில்லை. ஈழத்துக்கவிதை வர லாற்றின் பொதுவான ஒட்டம் திசைதிரும்பிய காலப்பகுதியிலே ஐயர் வாழ்ந்தபோதும் இத்திசைதிருப்பத்தை ஐயர் அங்கீகரித்ததா கத் தெரியவில்லை. மரபுவழித் தமிழறிஞராயும், இலக்கண வித்தக ராகவும், ஆராய்ச்சியாளருமாக வாழ்ந்த ஐயர் இப்புதுமைப் போக் கினல் எடுபடவில்லை. பாடசாலைப் பிள்ளைகளுக்கான குழந்தைக்கவிதை களும் இவர்காலப் பகுதியிலே ஈழநாட்டிற் பெருமளவு வெளிவந் தன. சோமசுந்தரப்புலவர் முதலியோர் “பிள்ளைப்பாட்டுக்கள்’ பாடிக் குவித்த வேளையில் ஐயர் பிள்ளைப்பாட்டின் பக்கம் திரும்பவுமில்லை. உரைநடையை நெகிழ்ச்சியடையச்செய்து குசேலர் சரித்திரம் முதலிய நூல்களையெழுதிய ஐயர் செய்யுள் விஷயத்திற் செறிவும் இறுக்க முமே தேவையெனக் கருதியிருக்கிருர். செய்யுள் உயர்ந்தோர் மேற்றே" என்பது ஐ ய ரி ன் கருத்துப்போலும், இலக்கியங்களிலே கவிதை, கற்றவர்களுக்குரியது எ ன் னு ம் கருத்தினை வலியுறுத்தும் வகையிற் சில கட்டுரைகளையும் ஐயர் எழுதியுள்ளார். இதனுலே தான் ஐயரைக் காலம் அறியாத கவிஞர்" எனச் சிலர் கருதினர். குழந்தைக் கவிதைகள் வெளியிடுவோர் ஐயரை 'அணுகிச் சில குழந் தைக் கவிதைகள் பாடித்தரும்படி கேட்டும் ஐயர் மறுத்துவிட்டார் என்று அறியமுடிகின்றது. (தகவல் - பண்டிதர் முருகேசன்) ஐயர் இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்தே இம்மறுப்புக்குக் காரண மாகும.
நவீன தமிழ்க்கவிதை வரலாற்றில் ஈழநாட்டிற்குத் தனியான தோர் இடமுண்டு. இவ்வரலாறு உருவாகும் காலகட்டத்திலே ஐயரும் வாழ்ந்தார். “சொல் புதிது பொருள் புதிது" என்ற கவிதையணி
75

Page 48
யைப் புறங்கூருது தனித்துவத்துடன் பழமையின் உள்ளுரத்தோடு விதையாத்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை, நவநீத கிருஷ்ணபாரதி uti முதலியோரின் வகையையே ஐயரும் சேருகிருர், ஐயர் கவி தைத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார் எனக்கொள்ளமுடியாது. எனினும் ஈழநாட்டின் கவிதைப் பாரம்பரியத்தின் ஒருகிளையை ஐயர் தெளிவாகப் பிரதிபலித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மரபுவழித் தமிழ்ப்புலமையைப் பேணிப் பாதுகாத்து நிலைநிறுத்துவதிலேயே ஐயர் முழுக்கவனத்தையும் செலுத் தினர். இதனலே மரபுவழித் தமிழ்ப் புலவனகவே ஐயர் மதிப்பிடப் படுகிருர், நாவலர் மரபின் பிரதிநிதிகளுட், சிறப்பானவர்களுள் ஒருவ ராகத் திகழ்ந்த சுன்னகம் குமாரசுவாமிப்புலவர் கவித்துவம் நிரம் டியவர்; ஐயரின் ஆசிரியர். கவிதையை நன்கு அறிந்தவரான புலவர் ஐயரைக் கவிபாடும் புலமிக்கோன்' எனக் குறிப்பிட்டது பொருத் தம் நோக்கியேயெனலாம்.
ஐயர் கவிதைகள் யாத்ததைவிடக் கவிதையை இனங்கண்டு இரசிப்பவராகத் திகழ்ந்தார் என்பதை எவரும் மறுக்கவியலாது. சங்க இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்து அவர் எழுதிய கட்டுரைகளும், இராமாவதாரச் செய்யுள் பாடாந்தரம் என்னும் கட்டுரையும் ஐயர் கவிதையை நன்கு இரசிப்பவராகவும், கவிதையின் உயிர்நாடியை உணர்பவராகவும் திகழ்ந்தார் என்பதை நிறுவுகின்றன. தொல்காப் பியப் பொருளதிகாரத்திற்கு ஐயர் எழுதிய உரைவிளக்கக் குறிப்பிற் காணப்படும் உதாரணச் செய்யுள்களும் அவற்றின் பொருளும் ஐயரின் கவிதாரசனையைத் தெளிவாகக்காட்டுகின்றன.
76

இயல் - 7
10,
அடிக் குறிப்புக்கள்
இரகுவமிசப்புத்துரை, சிறப்புப்பாயிரம்.
கணேசையர், சி., 'நோக்கு' ஈழகேசரி ஆண்டுமடல்,
1937. Luis. 1.
கணேசையர். சி., வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் இருபாவிருபஃது. ம ஈதடிவிநாயகர் பிரபந்தம், 1926. குணரத்தினம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. பக். 4.
நடராஜன், க. கி, **வித்துவசிரோமணி கணேசையர்" கணேசையர் நினைவுமலர், 1960. பக். 25.
கணேசையர், சி., வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் இருபாவிருபஃது, மருதடி விநாயகர் பிரபந்தம், 1956, குணரத்தினம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. பக், 11,13
தகவல்: பண்டிதர், இலக்கண வித்தகர், இ. நமசிவாயம்.
நமசிவாயம். இ, வித்துவசிரோமணி மறைத்திரு கணே
சையர். பக். 6.
கணேசையர், சி., குமாரசுவாமிப்புலவர் சரித்திரம்,
. Ld. I 08
ஈழமணி, தை, மாசி, 1948, பக். l3.
செந்திநாதன், 560 g . . ஈழம் தந்த கேசரி, பக். 123.
77

Page 49
இயல் - எட்டு
போதனுசிரியர்
கணேசையர் தம்காலத்தில் ஒப் பாரும் மிக்காரும் அற்ற போதனசிரியராகத் திகழ்ந்தார். நல்லாசிரியருக்குரிய பண்புகள் யாவும் இவரிடம் நிரம்பிக் காணப்பட்டன. தாம் தம் ஆசிரியர்க ளிடம் பெற்றதை அறிந்ததை அவர்களைப் போலவே கற்பித்து வந் தார். ஏறத்தாழ இருபத்தோராம் வயதிலே தொடங்கிய இவரது ஆசிரியப்பணி இறக்கும்வரை தொடர்ந்து நடந்தது.
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடமும் குமாரசுவாமிப் புலவரிடமும் கல்விகற்றுக் கொண்டிருக்கும்பொழுதே அவ்வப் போது மாணவர்களுக்குப் பாட ஞ சொல் லி க் கொடுத்துவந்தார். குமாரசுவாமிப்புலவருக்கு உடனலவீன சந்தர்ப்பங்களிலே தம்மிடம் வரும் மாணவர்களுக்கு ஐயரையே கற்பிக்கும்படி கூறுவார். ஐயரும் அவ்வாறே கற்பித்து வந்தார்.
அக்காலத்தில் அ ர சி னர் பாடசாலைகளிலே கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரிய தராதரப்பத்திரத்தையும் ஐயர் பெற்றிருந்தார். ஐயரின் ஆசிரியப்பணி முதன்முதலாக வண்ணுர்பண்ணையிலேயே ஆரம்பமாகியது. அக்காலததில் வண்ணுர்பண்ணை கற்றலுக்கும் கற் பித்தலுக்கும் வாய்ப்பான ஒரு பகுதியாகக் காணப்பட்டது. வண்ணுர் பண்ணையிலே திரு வேலுப்பிள்ளையென்பவரால் நிறுவப்பட்ட விவே கானந்த வித்தியாசாலையிலே முதன்முதலில் ஐயர் ஆசிரியரானுர்,
சிறிதுகாலம் விவேகானந்த வித்தியாசாலையிற் கற்பித்த ஐயர் பின்னர் நாவலர் காவியபாடசாலையிலும் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார். காவியபாடசாலையிலிருந்து ஐயர் விலகியமைக்கான கார ணத்தை அறியமுடியவில்லை. காவியபாடசாலையிலிருந்து நீங்கி ப் புன்னலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலும் ஆசிரியராகக் கடமையாற்றினர். ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் ஆசி ரியப்பணி பூர்த்தியாகும் நேரத்திலே தமது மாமஞராகிய யோகவன சாஸ்திரிகளின் ஒரே புதல்வியாகிய அன்னலக்குமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின் தமது மாமன ராலே தையிட்டி என்னுமிடத்தில் நிறுவப்பட்ட சைவப்பள்ளிக்கூடத் தில் ஆசிரியராகக் கடமையாற்றினர். பாடசாலைக் கடமையொழிந்த
78

போதெல்லாம் ஐயர் கற்றலிலேயே தமது பொழுதைக்கழிப்பர். மாலை வேளைகளில் வீட்டுக்குவரும் பெரியவர்களுக்குப் புராணபடனம் பயிற் றுதல் முதலிய பணிகளிலும் ஐயர் ஈடுபட்டிருந்தனர்.
தையிட்டியிலிருந்து மணிபல்லவம் என அழைக்கப்படும் நயின தீவிலே நிறுவப்பட்ட சைவப்பர்டசாலைக்கு ஐயர் ஆசிரியராக ச் சென்ருர், பரபரப்புக்கள் அதிகமின்றி மனேரம்மியமான சூழலாய மைந்த நயினுதீவு ஐயருக்குக் கற்பதற்கும் சிந்திப்பதற்கும் எழுது தற்கும் வாய்ப்பாக அமைந்தது, நயினதிவில் ஐயர் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கடமையாற்றிஞர். இக்காலப்பகுதியில் ஏராளமான கட்டு ரைகளையும் உரைக்குறிப்புக்களையும் எழுதினர். இவரின் மாணவர் பரம்பரையொன்று இன்றும் நயின தீவில் நின்றுநிலவுகின்றது. நயின தீவு நாகபூஷணியம்மையைத் தினமும் சென்று வழிபடும் வழக்க முடையவர். யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மற்றைய தீவுகளிலும் பார்க்க நயினுதீவு கல்வியிற் சிறந்து காணப்படுவதற்கு நாகபூஷணி அம்மையே காரணம் என்று ஐயர் குறிப்பிடுவர். ஐயரின் வாழ்க்கை யில் நயினுதிவிற் கடமையாற்றிய ஏழு ஆண்டுகள் மிகவும் சிறப்பாக அமைந்தவையாகும்.
“வித்துவசிரோமணி கணேசையரவர்கள் தலைமையாசிரிய ராக அமர்ந்து கல்விபோதிக்கும் பேறு ம் அக்காலத்திலே நயினை மக்களுக்குக் கிட்டியது. ஐயரவர்கள் இங்கு கடமை யாற்றியபோது இரகுவமிசத்திற்கு உரைக்குறிப்புக்கள் எழு திக்கொண்டிருந்தார். அவர்கள் எழுதிய உரைக்குறிப்புக்கள் சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையில் வெளிவந்துகொண் டிருந்தன.”
மேற்காட்டியவாறு வித்துவான் சி. குமாரசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 1 நிறுவன ரீதியிலமைந்த பாடசாலைகளிலே ஐயர், ஆசிரியராகக் கடமையாற்றிய போதும் மரபுரீதியான கல்வி போதன முறையையே கையாண்டுள்ளார். மாணவரின் அறிவுநிலை வேறுபாட் டிற்கு அமையத்தம் போதனுமுறையை ஐயர் மாற்றிக்கொள்ளுவார் என்று அவரிடம் கற்ற மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நயினுதீவிலே ஐயர் தலைமையாசிரியராகக் கடமையாற்றிய போதுதான் ஐயரின் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையும் அமைந் தது. யாழ்ப்பாணத்தின் மரபுவழிக்கல்வியும், இலக்கிய வளமும் தனித் தன்மையுடையவை என்பதை நிறுவ இக் கா லத் தமிழறிஞர்கள் முயன்றுகொண்டிருந்தனர். ஈழநாடு எந்தவகையிலும் தமிழ்நாட்டிற் குக் குறைந்ததல்ல என்றகுரலே ஆறுமுகநாவலரின் "நல்லறிவுச்சுடர் கொளுத்தல்’ மூலம் கேட்கிருேம். இக்குரலின் எதிரொலி காலத்திற்
79

Page 50
குக்காலம் ஒலித்துக்கொண்டே வந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத் தினர் நடத்திய பண்டிதபரீட்சைகளுக்கு நம்மவர் தோற்றுவதிலும் சித்திபெறுவதிலும் சில இடர்ப்பாடுகள் நிலவின. இவ்விடர்ப்பாடு களை மனங்கொண்டோ என்னவோ 1921 ஆம் ஆண்டில் யாழ்ப்பா ணத்தில் ஆசிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்தை நிறுவ முன்னின்றுழைத்தவர்களில் முதன்மையானவர் முகாந்திரம் தி. சதாசிவ ஐயர். இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் நிரம்பிய புலமையுடையவர். கணேசையரின் நண்பர். கல்விப்பகுதியில் கடமையாற்றியதாலே நல்லாசிரியர்களை இனங்காணக்கூடிய வாய்ப்பும் வசதியும் பெற்றவர்.
ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் நடாத்தும் பரீட்சை களுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்ய ஒரு கல்விக்கழகம் இல்லாத குறையை அவதானித்த சதாசிவஐயர் 1921 ஆம் ஆண்டு சுன்னகத் திலே பிராசீன பாடசாலை என்னும் பெயரோடு உயர்கல்விக் கழக மொன்றை நிறுவி நடத்தினர்கள். பண்டித, பாலபண்டித, பிரவேச பண்டித வகுப்புக்கள் இப்பாடசாலையிலே நடத்தப்பட்டன. இப்பாட சாலைக்குத் தகுதிவாய்ந்த ஒரு தலைமைத் தமிழாசிரியர்ை நியமிக்க விரும்பிய சதாசிவஐயர் கணேசையரைத் தலைமையாசிரியராக அம ரும்படி கேட்டுக்கொண்டார். நயினுதீவிலே தமது பாரியாருடன் அமைதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்ந்த ஐயர் யாழ்ப்பாணத் திலே தமிழை உயர்கல்வியாகக் கற்கும் மாணவர்களுக்கு உத வ வேண்டுமென்னும் நன்னேக்கத்துடன் பிராசீனபாடசாலைக்குத் தலை மைத் தமிழாசிரியராக வந்துசேர்ந்தார். ஐயரின் வாழ்க்கைப் பணி கள் வைரம் பாய்ந்தவையாக அமைய இப்பிராசீனபாடசாலைப் பணி நல்லதொரு களமாக அமைந்தது. 1950 ஆம் ஆண்டு ஆரிய திரா விட பாஷாவிருத்திச் சங்கம் வெள்ளிவிழாக் கொண்டாடி ஒரு மல ரையும் வெளியிட்டது. இம்மலரிற் சங்கத்தின் நோக்கம் அதன் சாதனைகள் பற்றிய குறிப்பொன்றைத் திரு. அ. சரவணமுத்து எழுதியுள்ளார். அக்குறிப்பிற் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உ - "சங்கப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குப் படிப்பதற்காகப் பிராசீன பாடசாலையென்னும் பெயருடன் சுன்னகத்தில் ஒரு பாடசாலை நடத்தப்பட்டது. இப்பாடசாலைக்கு அரசி னர் நன்கொடையளித்தமையை மனமுவந்து தெரிவிக்கின் ருேம்.”
மாணவர்களின் தொகை காலத்திற்குக்காலம் குறைந்தமை யால் இப்பாடசாலை நடைபெறமுடியாத நிலைமைக்கு வந்தது தமிழர் செய்த் தவக்குறைவே. இப்பாடசாலையில் ஆசிரியர்
80

களாக இருந்தவர்களுள் புன்னலைக்கட்டுவன் வித்துவான் சி கணேசையர் அவர்களையும் வேத விசாரதர் பூரீ சிதம்பர சாஸ்திரிகளையும் பாராட்ட இச்சங்கம் என்றும் கடமைப்பட்
டது” 2
பிராசீன பாடசாலையில் உயர் இலக்கண இலக்கியங்களைப் பெரும்பாலும் கணேசையர் அவர்களே கற்பித்தார்கள். வடமொழி யைச் சிதம்பர சாஸ்திரிகள் கற்பித்தார்கள், ஐயரின் ஆய்வுப்பணிக்கு இப்பாடசாலையில் வகித்த ஆசிரியர் பதவி பெருமளவு உதவியது. சிதம்பரசாஸ்திரிகள் போன்ற வடமொழி விற்பன்னர்களின் தொடர்பு ஐயரின் ஆய்வுப்பணிக்கு மேலும் உதவியது. கற்கும்பொழுது ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதற்காக மேலும் மேலும் தான்கற்ற வரலாற்றை ஐயர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். நன்கு ஆயத்தம் செய்து குறிப்புக்கள் எழுதியே ஐயர் கற்பித்துள்ளார். அக் குறிப்புக்களே பின்னர் நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்தன என நம்ப
፯) [T ዚዐ.
6 f : ... அன்பர்களின் முயற்சிகளிற் பிரதானமாக முன்நிற் பன வித் து வான் பூரீ சி. கணேசையரின் தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புக்களாகும். வரன்முறையான கல்வியும் மதிநுட்ப நூலோடுடைய பேராற்றலும் வாய்ந்த ஐயரவர் கள் தமிழ்கற்க விழைந்து தொல்காப்பியக் கடலுட் புகுந்து திணறுவார்க்கெல்லாம் புணையாக இப்பணியைச் செய்தது தமிழர்தம் தவப்பயனே" 3 -,
பிராசீன பாடசாலைப்பணியும் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாவிருத்திச்சங்க உறவும் ஐயரின் பணிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை மேற்காட்டிய கூற்று நிறுவும். 1921 ஆம் ஆண்டு தொடக்கம் 1932 ஆம் ஆண்டுவரை இவர் பிராசீன பாட சாலைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஐயர் மிகச்சிறந்த போதஞசிரியராக இருந்தார் என்பதை அவரிடம் பாடங் கேட்ட மாணவர்கள் பலர் விதந்து குறிப்பிட்டுள்ளனர். பண்டிதர் இ. நமசிவாயம், பண்டித வித்துவான் க. கி. நடராஜன் முதலிய மாணவர்கள் அவ்வப்போது எழுதியவற்றை உதாரணமாகச் சுட்டிக் காட்டலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று பண்டிதர்களாக விளங்குபவர்களிற் பலர் கணேசையரிடம் பாடங்கேட்டவர்களே. த்ொடர்ச்சியாகப் படிக்க முடியாதவர்களும் அவ்வப்போது சந்தேக விபரீதங்களைக் கேட்டுத் தெளிவதுண்டு. யாழ்ப்பாணக் குடாநாட் டின் தமிழ்க்கல்வியின் செழுமையிலும் வளத்திலும் ஐயரின் பங்களிப் புக் குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. ஐயர் போதனுசிரிய
8.1

Page 51
ாாகத் திகழ்ந்தமையினலே தான் a ற ந் ஆராய்ச்சியாளனுகவும் விளங்கமுடிந்தது எனலாம். -
பிராசீன பாடசாலையிலே ஐயர் ஆசிரியராக இருந்தபோது அவரை அணுகிப் பாடங்கேட்டவர்களுள் முதன்மையானவரான வித்துவான் க. கி நடராஜன், ஐயர் பிராசீன பாடசாலையைவிட்டு நீங்கிய பின்னும் அவரிடம் வீட்டிற்சென்று பாடங்கேட்டவர். ஐயரின் ஆசிரியப் பணியின் சிறப்பினை அவர் அனுபவவாயிலாக உணர்ந்தவர். அவர் ஐயரின் பணிபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவர்.
*ஐயர் பிராசீன பாடசாலையில் ஆசிரியராக இருந்தகாலத் திலேயே தொல்காப்பியத்தைக் கற்பிக்கவும் அதனைத் தமது நுண்மதிகொண்டு துருவித்துருவி ஆராய்ந்து சிறந்த ஆராய்ச் சிக் கட்டுரை எழுதவும் அவர்களுக்கு பெருவாய்ப்புக் கிடைத் தது. மாணவர்கள் ஐயங்களைக்கேட்டால் அதற்கு அப்போ தைக்கு ஏதாவது சொல்லி மழுப்பிவிடும் வழக்கம் மகா வித்துவான் கணேசையர்களிடம் மருந்துக்கும் கிடையாது. உடனேயே அவ்வையத்தைத் தீர்த்துவிடுவார்கள். உடனே தீர்க்க முடியாமற் சிறிது சிந்தித்தாவது, ஆராய்ந்தாவது சொல்லவேண்டியிருந்தால் 'பா ர் த் து ச் சொல்லுகிறேன்" என்பார்கள். கேட்ட மாணவன் அதை மறந்தாலும் அவர்கள் அதை மறக்கமாட்டார்கள். ஆராய்ந்து கண்டதும், அம் மாணவனைத் தேடிச்சென்று அதைத் தெரிவிக்க அவர்கள் தவறவே மாட்டார்கள், இஃது அவர்களிடம் மாணவனுக இருந்து யான் நேரில் அறிந்ததொன் ருகும். இந்த இயல்பே ஐயரவர்கள் தொல்காப்பியத்திற்கு மிகத்தெளிவான உரை விளக்கக் குறிப்பு எழுதுவதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்று கூறின் அது மிகையாகாது. தம்முடைய ஆசிரியர்களிடம் நேரிற் கற்றதினும் பார் க் க அவர்கள் தாமாகவே முயன்று ஆராய்ந்து கண்டமுடிபுகளே பலவாம். கற்கண்டை மென்று சுவைத்துக்கொண்டே சிறிதுநேரம் சிப்திப்பார்கள். உடனே பதிலைத்தெரிந்து கொள்வார்கள். *அஃது இதுகாணும்” என்று மலர்ந்த முகத்தோடு விளக்கு வார்கள் . . . . பாடஞ்சொல்லும்போது கற்கண்டை வாயிற்போட்டுக் கொள்ளுவார்கள்"
இக்குறிப்பிலிருந்து கணேசையரின் ஆற்றலை மட்டுமன்றி அவர் கற்பிக்கும் விதத்தினையும் திறனையும் கண்டுகொள்ளலாம். உண்மை யான நல்லாசிரிய இலக்கணங்கள் பொருந்தியவராகவே ஐயர் காண்ப் படுகின்றர். . .
82

பிராசீன பாடசாலையைவிட்டு ஐயர் நீங்கியதும் நூல்கள் எழுது வதிலும் தனிப்பட்ட முறையிலே மாணவர்களுக்குப் பாடஞ்சொல்லு வதிலும் கடவுளை வழிபடுவதிலும் காலத்தைக கழித்தார். குடாநாட் டின் பல பாகங்களிலுமிருந்து மாணவர்கள் சென்று இவரிடம் பாடங் கேட்டு வந்தனர். வேதனம் பெருமலே ஐயர் மாணவர்களுக்கு உயர் இலக்கண இலக்கியங்களைப் போதித்து வந்த னர். அவ்வப்போது மாணவர்கள் ஐயரவர்களுக்கு அன்பளிப்புக்கள் செய்வதுண்டு.
தனிப்பட்டமுறையில் வகுப்புக்கள் நடாத்தும்பொழுது பண் டைய குரு, சிஷ்யக் கல்விமுறையையே முற்றுமுழுக்க அனுசரித்து வந்தார். மாணவர்களும் ஐயரும் நிலத்திலே சம்மாணம்கொட்டி இருந்தபடியே தான் வகுப்புக்கள் நடைபெற்றன. மருதடிவிநாயகரால யத்தைச் சூழவுள்ள மரநிழல்களிலேயே ஐயரின் வகுப்புக்கள் நடை பெற்றன பாடங்கேட்கும்போது மாணவர்கள் அசட்டையாகவோ, சோம்பலாகவோ இருந்தால் ஐயருக்கு அறவே பிடிக்காது. மாணவர் கள் உற்சாகமாக துல்லாதிருப்பதை ஐயர் அவதானித்தால் கடுமை யாகக் கண்டிப்பதோடு வகுப்டையும் நிறுத்திவிடுவார். ‘எறும்பு கடித் தாலும் ஆடாமல் அசையாமல் இருந்தே அவரிடம் பாடங்கேட் டோம்" என்று பண்டிதர் இ. நமசிவாயம் குறிப்பிட்டார்.
உண்மையாக உழைக் ம் ஓர் ஆசிரியன் மாணவர்களின் நடத் தையிற் கண்ணுங்கருத்துமாக இருக்கவேண்டும் என்பதற்கு ஐயர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார். அடிக்கடி வகுப்பிலே தமது ஆசிரி யர்களான வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையைப் பற்றியும், சுன்னகம் குமாரசுவாமிப்புலவரைப் பற்றியும் குறிப்பிடுவார். ஆசிரிய, மாணவ இலக்கணங்களையும் அடிக்கடி போதிப்பார்.
ஐயர் எ வ் வ ள வு கண்டிப்புடன் மாணவர்களுடன் நடந்து கொண்டாரோ அவ்வளவுக்கு வகுப்பு முடிந்ததும் 'அன்பாகவும். நண்பன் போலவும் பழகினர். புன்னுலைக்கட்டுவனிலிருந்து வருத்தலை விளானுக்கு நடந்துசெல்லும்பொழுது வழியிலேகாணும் மாணவர்களை மறித்து நீண்டநேரம் கதைப்பார். சந்தேகமான விஷயங்களைப்பற்றி ஏதாவது கேட்டால் அதே இடத்தில் நீண்டநேரம் நின்றநிலையிலேயே விளங்கப்படுத்துவார். ஐயரின் போதனுசிரியப்பணி பெரும்பாலும் குமாரசுவாமிப்புலவரின் பாணியைத் தழுவியதாகவே காணப்படுகின் றது. தன்னுசான மாணவன் பின்பற்றுதல் தவிர்க்கமுடியாதது.
மகா வித்துவான் கணேசையர் மிகச்சிறந்த போதனுசிரியராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தின் குரு சிஷ்யப் பரம்பரை இடைவழியில் அறுந்துபோகாது காத்தபெருமை ஐயரையும் சாரும். ஆறுமுகநாவலர் தொடங்கிப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை நின்றுநிலைக்கும் ஆசிரிய மாணவர் பரம்பரையிலே கணேசையருக்கும் தனித்துவமான தோர் இடமுண்டு.
83

Page 52
இயல் ... 8
அடிக் குறிப்புக்கள்
as
1. குமாரசுவாமி, வித்துவான், சி., “எமது கல்வி வளர்ச்சி
கோமுகி, மணிபல்லவமன்றம், நயினுதீவு, 1972. பக். 53.
2. சரவணமுத்து, அ, "ஆண்டறிக்கை” யா, ஆ. தி.
"பாஷா விருத்திச்சங்க வெள்ளிவிழா மலர், 1950,
3. மேற்படி மலரும் ஆசிரியரும்,
4. நடராஜன், க. கி, கணேசையர் நினைவுமலர் 1960.
பக். 7, 8.
84

இயல் - ஒன்பது
பன்முகப்பணிகள்
தமிழ்ப்புலவர் வரலாறு
ஈழத்தின் இலக்கிய வரலாறு பூதன்தேவனரிலிருந்து தொடங்கு கின்றது என்பர். யாழ்ப்பாண மன்னர்கள் காலம்வரை ஈழநாட்டின் இலக்கிய வரலாற்றை ஆராய்வதற்குச் சாதகமான தகவல்கள் பெரு மளவு கிடைக்கவில்லையென்பதை ஆய்வுலகம் நன்கு அறியும். தமிழ் நாட்டைத் தாய்நாடாகவும் ஈழநாட்டைச் சேய்நாடாகவும் வழங்கும் வழக்காறும் உண்டு. ஈழநாட்டிற்கெனச் சில தனித்துவமான பண்புகள் காணப்பட்டபோதும் அவை ஆறுமுகநாவலர் க்ாலம்வரை தமிழ். நாட்டாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று கூறமுடியாது. 19ஆம் நூற்றண்டிலே பிரவகித்தெழுந்த ஈழத்து இலக்கிய முயற்சிகளுக் கான ஆணிவேர் எங்கிருக்கிறது என்பதை ஆராயத் தமிழறிஞர்களிற் சிலர் முயன்றுகொண்டிருந்தனர். இம்முயற்சி ஈழநாட்டின் தனித்துவ மான தமிழ்ப்புலமை மரபுகளை இனங்காட்டுவதாகவும் அமைந்தது. இந்த வகையிலே ஐயரவர்கள் ஆற்றிய பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழநாடும் தமிழும் என்ற தலைப்பிலே ஐயர் தொடர்ந்து வித்தகம் பத்திரிகையிலே கட்டுரைகள் எழுதினர். அக்கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்னும் பெயரோடு நூலுருவில் வெளிவந்தது. இந்நூல் ஈழநாட்டின் இலக் கிய வரலாற்றை ஆராயப்புகும் ஆய்வாளனுக்கு வழிகாட்டியாக அமைகின்றது எனலாம்.
ஈழத்தின் இலக்கிய வரலாற்றைக் கர்ணபரம்பரைக் கதைகளி னுாடாகவும் புராண இதிகாசங்களின் உதவியுடனும் புலப்படுத்து கின்ற அதேவேளையில் ஐயர்.நவீன ஆய்வுநோக்கிலும் ஈழத்தின் இலக்கிய வரலாற்றை நிறுவமுயன்றிருக்கிருர். ஐயர் பெற்ற கல்விப் பின்னணியில் இவ்வாறு சிந்தித்தது பாராட்டிற்குரியது. ஈழநாட்டின் தொன்மையையும் சிறப்பையும் சங்க இலக்கியங்களின் ஆதாரத்தோடு குறிப்பிட்ட ஐயர் நவீன மொழியியல் நோக்கிற் கால ஆராய்ச்சி செய்யவும் விரும்பியிருக்கிருர்,இவ்விருப்பம் பின்னர் என்ன காரணத் தினுல் நிறைவேறமற்போனது என்பது பற்றி அறியமுடியவில்லை.
“எவ்வாறயினும் இதன் வட, கீழ்ப்பாகங்கள் செந்தமிழ் நாடென்பது அங்கு வழங்குஞ் செந்தமிழ்ச் சொற்களாலறி
85

Page 53
யப்படும். சங்க காலத்துப் பழந்தமிழ்ச் சொற்கள் அங்கங்கே இன்றும் இதன் பெருவழக்காய் இதன் வடபாகங்களிலும் கீழ்ப்பாகங்களிலும் வழங்குகின்றன. அ  ைவ பின் சமயம் வாய்த்துழிக் காட்டப்படும்" 1
--- y; எனக் கணேசையர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடுவதிலிருந்து இ லக் கி ய வரலாற்ருய் வாளன் ஒருவன் கையாளும் மொழியியல் நோக்கை. ஐயர் நன்கு அறிந்திருந்தார் என்று எண்ணமுடிகிறது. கணேசையரின் பணிகளிற் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இவ்வீழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் பற்றிய வரலாற்று நூலுக்கு உண்டு. பலவகையான தகவல்களையும் சேகரித்து அதிலே தான் உண்மையெனக் கண்டவற்றையே இந்நூலிற் சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிருர், தகவல்கள் பெறுவதிலேற்பட்ட இடர்ப்பாட்டையும் நம்பகமற்ற செய்திகள் நிலவுவதையும் அனுப வாயிலாகக் கண்டு முகவுரையிலே குறித்திருக்கிருர்.
ஈழநாட்டின் பெருமையையும் தனித்துவத்தையும் வெளியுல குக்குக் காட்டவேண்டிய அத்தியாவசிய தேவை நாவலர்காலத்தி லேயே ஆரம்பித்துவிட்டது. இத்தேவையின் முதற்குரல் ‘நல்லறிவுச் சுடர் கொளுத்தலாக ஒலித்தது. தொடர்ந்து ஈழநாட்ட்ையும் குறிப் s யாழ்ப்பாணத்தையும் 'அயலவர்கள் அறிந்துகொள்ளும் வகை யிலே பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துகொண்டிருந்தன. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் ச ரி த த் தி ன் வருகைக்கு இதுவுமொரு காரணமாகலாம். . . "
“இவ்வீழநாட்டின் பெ ரு மை க் குக் காரணர்களாயிருந்த தமிழ்ப்புலவர்களின் சரிதத்தையும் ஒருவாறு ஆராய்ந்து அவரிருந்த காலமுறைப்படி இங்கே தருதும்" 2
என்ற ஐயரின் கூற்று இக்கருத்தை அரண்செய்கின்றது.
ஈழநாட்டின் பெருமையை நிலைநாட்டிய பல தமிழறிஞர்களின் வாழ்க்கைவரலாறு, பணி, சிறப்பமிசங்கள் முதலியன இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. எமது பாரம்பரியத்திலே நாள் நட்சத்திரக்கணிப்பீடுகளும் சாதிசமய ஆசார இறுக்கங்களும் கடுமை யாக கடைப்பிடிக்கப்பட்டமையால் மிக அண்மைக்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் பணி, பெயர் ஜனனமரணக் கணிப்பு முதலியவை களிலே பல தவறுகள் ஏற்பட்டுள்ளன. இத்தவறுகளை அறிந்த ஐயர் மிகுந்த அவதானத்துடன் இவ்வாராய்ச்சியைச் செய்துள்ளார். புகழ் பெற்று விளங்கிய புலவர்களின் குடும்பத்தினரை உசாவியும் அவர்க ளின் படைப்புக்களை ஆராய்ந்தும். தம்மாணவர் துணையோடு இந்நூலை ஆக்கியுள்ளார். சில முக்கிய புலவர்களின் வரலாற்றை அவரவர்
86

குடும்ப அங்கத்தவர்களை அல்லது வழித்தோன்றல்களைக் கொண்டு எழுதுவித்துத் தாம் சரியென நம்பியதையே ஏற்றுள்ளார். இவ் விபரங்களை நூலின் முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார்.
ஐயரின் பார்வையின் விரிவினை இந்நூலின் மற்ருெரு அம்சத் திலும் காணமுடிகின்றது. மரபுரீதியாக வரன்முறையாகக் கல்வி பெருமலே கவிபாடுந்திறம்படைத்த புலவர்களையும் அனுபந்தமாக இந்நூலிலே சேர்ந்துள்ளார். ஆங்கில இலக்கிய ஆய்வுப்பயிற்சியற்ற மரபுவழித் தமிழறிஞர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டமை போற்றுதற் குரியது. கவிபாடுந்திறன் அமையாதும் இலக்கியவிலக்கணங்களிலே தேர்ச்சிபெற்ற அறிஞர்களையும் இச்சரிதத்திற் சேர்த்திருக்கிருர், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் ஐயரின் அகலமான பார்வைக்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளக்கூடியது.
கற்றவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மாத்திரமன்றி ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ளவர்களுக்காகவும் ஐயர் இச்சரிதத்தை எழுதினர் என்பதை அதன் உரைநடை காட்டுகின்றது. ஈழநாட்டுத் தமிழ்ப்புலமைப் பாரம்பரியத்தைச் சாதாரண மக்களும் அறிய வேண்டுமெனும் ஆவல் ஐயரிடம் இருந்தமை அதன் முகவுரையாலே தெளிவாகின்றது. முகவுரையில் ` y.
*இச்சரிதங்களிலுள்ள வாக்கியங்களுள் வருந்தொடர்மொழி களுட் பெரும்பாலன படிப்போர் எளிதுணரற்பொருட்டுச் சந்திநோக்காது பிரித்தெழுதப்பட்டும் புலவர்களுடைய இயற் பெயர்களுட் சில இலக்கண விதிநோக்காது வழங்கிவந்த படியே எழுதப்பட்டும் உள்ளன” 3
ஐயர் இவ்வா று கு றிப்பிடுவர்.
இக்கூற்று "தொல்காப்பியக்கடல்கடந்த அறிஞரொருவராற் கூறப்பட்டமை ஆச்சரியத்திற்குரியதே. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தை எழுதும்பொழுது தமக்கேற்பட்ட சிக்கலான அனுபவங் களை ஐயர் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். ஐயர் காலத்திலே பல புலவர் சரிதை நூல்கள் வெளிவந்திருந்தன. அவை முழுக்க முழுக்க நம்பகத்தன்மை பொருந்தியதாக இருக்கவில்லையென்பதை ஐயர் அறிந்திருந்தார். பொதுவாகப் புலவர்களைப் பற்றிப் பேசப்படும் புனைந்துரைகளை ஐயர் அங்கீகரிக்க வில்லை இதனை, ஐயர் பின்வருமாறு தெளிவுபடுத்துவர். w r . . . .
“இச்சரிதங்களுள் நீண்டகாலத்துக்கு முன்னும் அதன் பிற் காலத்தும் இறந்தவர்களுடைய சரிதங்களேயன்றி. சமீப காலத்திலே இறந்தவர்களுடைய சரிதங்களைத் தாமும் பெற்
87

Page 54
றுக்கொள்ளுதல் மிக அருமையாய் இருந்தது. அவர் க ள் காலத்தைப்பெறுதல் அதனினுமரிதாயிருந்தது. புலவர்களு டைய சரிதங்களை அவர் க ள் சுற்றமித்திரர் வாயிலாகவே பெறுதல் அரிதாயிருந்ததெனின், ஏனையோர் வாயிலாகப் பெறுதலைப்பற்றி யாம் இங்கே எடுத்துக்கூறின் மிகையாகும் . . . . . . . . . . . . . . . . . . a so *..................... இற்றைக்குச் சில மாசங்களின் முன் இறந்த புலவரொருவருடைய பிறந்த ஆண்டை அறி தற்கு யாம் பெரிது முயற்சித்தும் பெற்றிலேமெனின் அதற்கு முன் இறந்தவர்களுடைய காலங்களைச் சரியாக அறிவதெப் படி என்பதை அறிஞர்கள் சிந்திப்பார்களாக”4
இக்கூற்று இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவமே. வித்துவசிரோமணி கணே சையரின் வாழ்க்கையையும் பணியையும் ஆராயப்புகுந்த ‘அடியேனுக் கும்" இவ்வ ைபவமேயேற்பட்டது.கணேசைரின் தாயின் பெயரை அறி வதில் எனக்கேற்பட்ட இடர்ப்பாட்டினைத் தீர்க்க ஐயரின் நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தபோது அவர்கள் ‘யாமறியேம்” எனக் கைவிரித்தனர். கீழைத்தேயக், குறிப்பாகத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராயப்புகும் ஆய்வாளர்களுக்கு இவ்விதமான பல இடர்ப்பாடுகள் ஏற்படுவதுண்டு ஐயர் குறிப்பிடுவதுபோன்று’*சமீபத்திலே இறந்த வர்களுடைய சரிதங்களைப் பெறுதலே கடினமாயிருந்தமைக்கு” எமது வரலாற்றுப் பேண் முறையின்மையே கீாரணமாகும். 6r Log F LD u tr சார ஒழுக்கங்கள் காலமுரண்பாட்டுக்கும் அழிவுக்கும் வழிவகுக்கின்றன எனலாம். இறந்தவரின் அந்தியக் கிரியையின்போது (அந்தியேட்டி) அவரின் சாதக ஒலையைக் கடலிற்போடும் வழக்கம் யாழ்ப்பாணத்து இந்துக்களிடையே இன்றும் காணப்படுகின்றது. பிறப்புப்பற்றியறிய உதவும் ஒரே ஒரு சான்ருன சாதகக் குறிப்'பையும் கடல்கொள்ளு மெனின் பிறந்த ஆண்டைச் சரியாகக் கணக்கிடுவது இயலாதகாரி யமே.
இவ்வாருன இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் இயன்றவரை ஐயர் காலவரையறையில் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிருர், புலவர்களின் பெயர்களையும் சமகாலத்தவர்களைம் மாணவர்களையும் வாழ்ந்த, வதிந்த ஊர்களையும் ஐயர் தேடித்தொகுத்தமை பின்வரும் ஆய்வாளர்களுக்குப் பெருவாய்ப்பாக அமைந்த து. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்பார்ப்பதுபோலப் புலவர்களின் படைப்புக் களிலிருந்து வகைமாதிரிக்குச் சில உதாரணங்களும் ஐயர் காட்டிச் செல்லுகின்றர். இத்தகைய பண்பினைப் பாவலர் சரித்திரதீபகத்திலுங் காணலாம். இப்பண்பு புலவர்களைப் பற்றிய வரன்முறையான ஆய்வுக் கும் அக்கால இலக்கியப் பண்பினை அறிவதற்கும் உதவக் கூடியது.
88

ஈழநாட்டுப் புலவர்களின் பணியையும் வாழ்வினையும் கூடிய வரை விரிவாக விளக்கிய ஐயர் அப்புலவர்கள் இறந்தபோது அப் புலவரின் நண்பர்கள், சமகாலப்புலவர்கள் பாடிய இரங்கற்பாக்களிற் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். புலவரின் பெருமையை மாத்திரம் அறிய இவ்விரங்கற்பாக்கள் குறிப்பிடப்பட்டவையல்ல. புலவர் மீது அன்புகொண்ட மற்றைய புலவரின் ஆற்றலையும் ஆளுமையையும் அறிய இவ்விரங்கற்பாக்கள் உதவுகின்றன புலவர் ஒருவர் பிறந்த ஆண்டைப் பெறத் தவறியபோதும் இறந்த ஆண்டைப் பெறச் சில இரங்கற்பாக்கள் உதவுகின்றன. ஈழநாட்டு இலக்கிய வரலாற்ருய் வாளனுக்கு இவ்விரங்கிப் பாடலெனும் ‘சரமகவிப் பாரம்பரியம் மிகவும் உதவியானது. சரமகவிகளிலே "திதிநிர்ணய வெண்பா' ஒன்று இடமபெறுவது வழக்கம். இத்திதி வெண்பாவில் இற ந் த ஆண்டு மாதம், திதி முதலியன குறிப்பிடப்படுவது வழக்கம். இறந்த ஆண்டையும் சமகாலப் புலவர்களையும் மாணவர்களையும் வைத்துக் கொண்டு ஓரளவுக்குப் பிறந்த ஆண் டை ஊகிக்கலாம். பெரும் 'பாலான புலவர்களின் இறந்த ஆண்டைச் சரியாகக்குறிப்பிட்ட
ஐயருக்கு உதவியது இச்சரமகவிப் பாரம்பரியமேயாகும்.
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரைப்பற்றி ஐயர் குறிப்பிட்டமையை வகைமாதிரிக்குச் சுட்டிக் காட்டலாம். சிவசம்புப் புலவரின் தாய், தந்தையர், ஊர், கற்ற ஆசிரியர்கள், கற்பித்த மாணவர்கள், புலவரின் நூலிலிருந்து சிற்சில பாடல்கள் என்பவற்றை வரன்முறையாகக் குறிப்பிட்டு இறுதிப்பகுதி யிற் பின்வருமாறு குறிப்பிடுவர்.
“இவர் (சிவசம்புப்புலவர்) ஆறுமுகநாவலரவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவர்மீது பா டி ய கவிகளுள் ஒன்றையும் ஈண்டுத்தருதும். 'ஆரூர னில்லை புகலிபர் கோனில்லை யப்பனில்லை சீரூரு மாணிக்க வாசக னரில்லே திசையளந்த பேரூரு மாறு முகநா வலனில்லை பின்னிங்கியார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கு நீர்மையரே
இக்கவியைப் untışlu இப்புலவரைப் புகழ்ந்து சி.வை. தாமோ தரம்பிள்ளையவர்கள் புகழ்ந்து பா டி ய ஒரு கவியையும் ஈண்டுக்காட்டுதும்.
ஆரூர னில்லையென் காரிகை யாலிவ் வவனிதொழப் பேரூரு மாறு முகநா வலர் பெரு மான்பெருமை சீரூரு மாறு தெரிந்தாய் சிவசம்பு தேசிகநிற் காரூரி னேரின்றன் ருேநின் சொல் வன்மை யறிந்தனனே
89

Page 55
இத்தகைய புலவர் பெருந்தகை சாலிவாகன சகாப்தம் க அங்க (1831) க்குச் சமமான சாதாரண வருஷம் புரட் டாதி மாதம் க நும் திகதி இவ்வுலக வாழ்வைத்துறந்தார்.
வெண்பா
சாதா ரணவனிதை” சாந்தன்றேய் பிற்பக்க மீதாரும் பன்மூன்றின் மேதினிவிட் - டாதார மன்னு சிவசம்பு மாபுலவன் சங்கரனுர் துன்னுலகுற் றுற்றன் சுகம்.
என்னும் வெண்பாவாலறிக” 5
இவ்வாறு ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் வரலாற்றில் முதன்மை பெறும் புலவர்களுள் ஒருவரான உடுப்பிட்டி சிவசம்புப்புலவரைப் பற்றி ஐயர் குறிப்பிடுவர். இளையதலைமுறை ஆய்வாளருக்குப் பெரிதும் பயன்படத்தக்க தகவல்கள் இவ்வாறே இடம்பெற்றுள்ளன. இந்தத் தகவலினூடு சிவசம்புப்புலவரின் "க வித் திறனை மாத்திரமன்றிச் ஒ. வை தாமோதரம்பிள்ளையின் கவித்துவத்தினையும் அறியமுடிகின் றது சிவசம்புப்புலவரின் வரலாற்றை அவரின் மாணவர் கருணைவாய் செவ்வந்திநாத தேசிகரினூடு ஐயர் தெளிவாக அறிந்தார் என்று அறியமுடிகின்றது.
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தில் இடம்பெறும் அனேக மான புலவர்களின் வரலாறும் சிவசம்புப்புலவரின் வரலாறுபோலவே அமைந்துள்ளது. குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தம் முடைய மாணவர்களை ஐயர் இவ்வாய்வின்போது நன்கு பயன்படுத்தி . யுள்ளார். சங்கிலிக்கோவைபோல் ஒரு புலவருடைய வரலாற்றில் இன்னெரு புலவரின் வரலாறும் ஏதோ ஒருவகையிலே தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். ஐயரின் ஆய்வுத்திறன் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்திற் பெருவெற்றி பெற்றுள்ள மையை நன்கு அவதானிக்க முடியும்.
இன்றைய ஈழத்து இலக்கிய ஆய்வாளர்கள் யாவரும், ஐயருக்கு ஏதோ ஒருவகையிலே கடமைப்பட்டவர்களே எனலாம்,
90

வாழ்க்கை வரலாறு
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்தை எழுதிய ஐயர் தமது ஆசி ரியரான சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவரின் வாழ்க்கை வரலாற் றையும் ஒரு தனி நூலாக எழுதிஞர்.
ஐயரின் பன்முகப்பட்ட பணி களு ள் குமாரசுவாமிப்புலவரின் சரித்திரமும் விதந்தோதக்கூடியது. மேன்மைமிக்க புல வர் க ளி ன் வரலாறு தனியாகவும் விரிவாகவும் எழுதப்படும் வழக்கம் தமிழ் மொழியில் அருந்தலாக இருந்த காலத்திலே ஐயர் குமாரசுவாமிப் புலவர் சரித்திரத்தை எழுதினர். இந் நூ லை அக்காலத்திலெழுந்த வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது : மிகச்சிறப்பானதாகவே காணப்படுகின்றது. ஐயர் குமாரசுவாமிப் புலவரிடம் பாடங்கேட்டவர். நீண்டகாலம் புலவருடன் பழகியவர். புலவரின் நன்மதிப்புக்குரிய முதன் மாணவர்களுள் ஒருவர். ஐயரும் புலவரும் இணைந்து பல பணிகளையாற்றியுள்ளனர். புலவர் இறந்து மூன்று ஆண்டுகளுள் குமாரசுவாமிப்புலவர் சரித்திரம் என்னும் நூல் எழுதி வெளியிடப்பட்டது ஈழத்திலே தமிழ்ப்புலவர் ஒருவர் இறந்து சிறிது காலத்திற்குள் வெளிவந்த வாழ்க்கை வரலாற்று நூல் குமார சுவாமிப்புலவர் சரித்திரமேயாகும். இந்நூலின் நம்பகத்தன்மைக்கு இதுவுமொரு காரணமாகும் குமாரசுவாமிப்புலவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல விடயங்கள் ஆதாரபூர்வமாக இந்நூலிலே குறிப் பிடப்பட்டுள்ளன. புலவர் தமக்கு வந்த கடிதங்களை , தமது கட்டுரை கள் வெளிவந்த சஞ்சிகைகளை, பத்திரிகைகளைத் தொகுத்துப் பாது காத்துவந்தார். ஐய்ர், புலவர் சரித்திரத்தை எழுதும்பொழுது இக் குறிப்புக்களைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். குமாரசுவாமிப்புலவரின் பிள்ளைகள் கற்றவர்களாக இருந்தமையாலே இப்பேண்முறை பின்னும் தொடர்ந்து வந்துள்ளது.
குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்திற்கு நாவலரின் பெருமகனும், புலவரை நன்கு அறிந்தவருமான த கைலாசபிள்ளை சிறந்த முகவுரை எழுதியுள்ளார். இம்முகவுரை வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தேவையையும் முக்கியத்துவத்தினையும் உணர்த்துகின்றது. அம்முக வுரையின் ஒருபகுதி கீழே தரப்படுகின்றது. V
"யாழ்ப்பாணத்திலும் பிறவிடங்களிலும் இருந்துபோன எத்தனையோ தமிழ்ப் புலவர்களுடைய சரித்திரங்கள் அவை களை எழுதுகின்றவர்கள் இல்லாமையினுல் நமக்கு எட்டாமற்
போயின. சிறிது மின்னிக்கொண்டிருக்கும் அவர்களுடைய சிற்சில கதைகளையும், சிற்சில பாட்டுக்களையும் கே ட் கும் போது எவ்வளவோ ஆனந்தம் உண்டாகின்றது. யாழ்ப்பா ணத்திலே அரசகேசரி முதல் ந. ச. பொன்னம்பலபிள்ளை ஈருரக இருந்த புலவர்களுடைய முழுச்சரிதங்களை யாரறி auntsi”” 6 .
91

Page 56
இவ் வாறு திரு. கைலாசபிள்ளை ஆதங்கப்படுவது நியாய மானதே. குமாரசுவாமிப்புலவர் தாமெழுதிய தமிழ்ப்புலவர் சரித் நிரத்திற் பிரசித்திபெற்ற சில ஈழநாட்டுத் தமிழறிஞர்களையும் குறிப்பிட்டுள்ளார். தமது மதிப்புக்குரிய ஈழநாட்டுப் புலவர்கள் பலரைப்பற்றிச் செந்தமிழிலே சில கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையும் ஈழமண்டலப் புலவர்கள் என்று செந் த்மிழிலே எழுதியுள்ளார். பின்னர் இது சிறு நூலாகவும் வெளிவந் தது. எனினும், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர்களின் வரலாறு தெளி வாகவும் விரிவாகவும் எழுதப்பட்டது ஐயரவர்களாலேயேயாகும்.
- குமாரசுவாமிப்புலவர் சரித்திரம் 19ஆம் நூற்றண்டின் பிற் பகுதியினதும் இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியினதும் ஈழத்து இலக்கிய வரலாருக அமைகின்றது எனலாம். வெறுமனே புலவரின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் ஐயர் எழுதினரல்லர். புலவரின் பணி அவரியற்றிய நூல்களிலேயே பெருமளவு தங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தஐயர் புலவரவர்களின் நூல்களையும், நூல்களின் பொருள்மர பினையும் நூல்கள் வெளிவந்த ஆண்டி% யும் குறிப்பிட்டுள்ளார். புலவரின் பணிகளை நுண்ணுய்வு செய்வோருக்கு ஐயரின் விளக்கம் பேருதவிபுரிகின்றது. புலவரின் புதல்வர் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை எழுதிய குமாரசுவாமிப்புலவர் வரலாறு என்னும் நூலுக்கும் ஐயரின் நூலே அடிச்சட்டகம்போல அமைந்துள்ளது. புலவரின் சில சிறு நூல்களை இன்று எவ்வாறு தேடினும் பெறமுடியாமல் இருக்கின்றது. "தேடுதல்’ முயற்சிக்குரிய தகவல்களைக் குமாரசுவாமிப்புலவர் சரித் திரம் காட்டிநிற்கின்றது. பின்வரும் ஆராய்ச்சியாளருக்கு உதவும் பொருட்டு ஐயர் இவ்வாறன தகவல்களைத் தொகுத்தெழுதியமை பாராட்டிற்குரியது.
குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்தின் மற்ருெரு சிறப்பு: புலவர் பாடிய் சில கடினமான பாடல்களைக் குறிப்பிட்டு அப்பாடல்களுக்குப் பொருள்விளக்கம் செய்தமையாகும். புலவரின் மாணுக்கர் ஒருவ ராலேதான் அவரின் உள்ளக்கிடக்கையையறிய முடியுமென்பதற்கு இப்பொருள் விளக்கம் சான்ருக அமைகின்றது. குமாரசுவாமிப்புலவர் சரித்திரம் சாதாரணமான வாசகனை நோக்கியும் செல்லவேண்டும் என்பதில் ஐயர் கவனமாக இருந்தார் என்பதை இப்பொருள் விளக்கக் குறிப்புக்கள் காட்டிநிற்கும்.
குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்தில் ஐயரின் இன்னெரு சிறப் பும் காணப்படுகின்றது. புலவரின் மாணவர் பரம்பரையையும் ஐயர் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். வாழையடி வாழையாக வரும் ஈழ நாட்டின் தமிழ்ப்புலமை வரலாற்றை இம்மாணவர் பரம்பரையினூடு சிறப்பாகக் காணலாம். காவிய பாடசாலையிலே புலவரிடம் படித்த
92

மாணவர்களின் விபரத்தைத் தனியாகவும் வீ ட் டி லே புலவரிடம்
பாடங்கேட்டவர்களின் விபரத்தைத் தனியாகவும் ஐய்ர் குறிப்பிட்
டமை அக்காலக் கல்விமரபினையும், போதனமுறைகளையும் அறிய உதவுகின்றது.
புலவரின் மாணவர்களுள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை இன்றும் நம்முடன் வாழ்கின்றர். * நாவலர் மரபின் "கடைசிக் கொழுந்தாக" மிளிரும் பண்டிதமணி இலக்கிய கலாநிதியாகிப் பெரும் புகழ்பெற்றுள்ளார். இவர் பெற்ற புகழ் யாவும் புலவரின் "அறுவடை யேயாகும் புலவர் இறக்கும்பொழுது அவருடனிருந்து ‘மூலமந்திரம்" ஒதும் பேறும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையாகிய நன்மானுக் கருக்கே கிட்டியது. பண்டிதமணி புலவரின் முழுமையான ஆசீர் வாதத்திற்குமுரியவரானர் என்பதைக் குமாரசுவாமிப்புலவர் சரித்திரம் காட்டுகின்றது.
குமாரசுவாமிப்புலவரிடம் ஏறத்தாழ இருபது வருடங்கள் ஐயர் பாடங்கேட்டுள்ளார். புலவரின் வாழ்க்கையிலே ஐயர் பழகிய இருபது வருடங்களும்தான் அறிவுலகத் தொடர்புகள் வலுத்திருந்த காலப் பகுதியுமாகும். ஐயர் தாம்கண்டவற்றையும் கே ட் ட வற் றை யும் தொகுத்தே குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்தை எழுதியுள்ளார்.
“இச்சரிதத் தலைவரிடம் யீங்கற்கத் தொடங்கிய நாட் டொடங்கி நிகழ்ந்த இவர்சரிதம் பெரும்பாலும் எமக்கே தெரிந்தனவாம். தெரியாதனவற்றை இச்சரிதத் தலைவரு டைய புதல்வர்களாகிய பூரீமத் அம்பலவாணபிள்ளை, பூரீமத் முத்துக்குமாரசுவாமிபிப்பிள்ளை என்னுமிருவரையுங் கேட்ட றிந்தோம். கற்கப்புகுந்த நாளுக்கு முன் நிகழ்ந்த சரிதங்களை இவர் நண்பர் பூரீமத் வைத்தியநாதபிள்ளையிடங் கேட்டறிந் தோம்' 7 - . . ッ \* -- ۔
என ஐயர் குறிப்பிடுவர்.
ஐயர் தாம் அறிந்தவற்றை மாத்திரமன்றி தகுந்த ஆதாரங்க ளுடன் உசாவியறிந்தவற்றையும் சேர்த்து இச்சரிதத்தை எழுதியுள் ள்ார். சிறப்பு வாய்ந்த வரலாற்று நூலாக இது அமைய ஐயர் மேற் கொண்ட ஆய்வுகளே பெருமளவு உதவியுள்ளன. குமாரசுவாமிப் புலவர் பற்றிய ஆய்வுக்கு ஐயரின் சரிதம் பேருதவிபுரிகின்றது. ஈழ நாட்டிலெழுந்த வாழ்க்கை வரலாற்று நூல்களுள் ஐயரின் குமார சுவாமிப்புலவர் சரித்திரத்திற்குத் தனியானதோர் இடமுண்டு.
* பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை உயிருடன் இருக்கும் காலத்திலேயே இவ்வாய்வு செய்யப்பட்டது.
93

Page 57
புராணபடனம்
ஐயரின் பன்முகப்பணிகளிலே விதந்து குறிப்பிடக்கூடிய மற் ருெருபணி புராணபடனமாகும் அக்காலத்திலே தமிழறிஞர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள் புராணப்படிப்பிலும் சிறந்து விளங்கினர். வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை ஒப்பாரும் மிக்காருமற்ற புராணப் பிரசங்கியாவார். ஐயர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளையிடம் பாடங்கேட்பது மட்டுமன்றிப் பொன்னம்பலபிள்ளை புராணபடனம் நிகழ்த்துமிடங்களுக்கெல்லாம் சென்று கேட்டுக் குறிப் பெழுதியவர்.
*"கோவில்களிலும் மடங்களிலும் வீடுகளிலும் கந்தபுராணம்? பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், கம்பராமாயணம் முதலிய்வற்றைப் படித்துப் பொருள் சொன்னவர் பொருள் சொல்லுங்கால் கேட்டவர்கள் “யாழிசையோ பாரதிதன் னிசையோ' என்று அயிர்க்குமாறு தமக்கு இயற்கையாய மைந்த இனியமிடற்ருேசையோடும் சொல்லின்பமும், பொரு ளின்பமுந் தோன்றச்சொல்வர்” 8
வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையைப் பற்றி ஐயர் மேற் கண்டவாறு குறிப்பிடுவர். இக்குறிப்பிலிருந்து ஐயருக்குப் புராண படனத்தின் மீதிருந்த ஆவல் புலப்படுகின்றது
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல் வேறு பகுதிகளிலுமுள்ள ஆலயங்களிலே நடைபெறும் புராணபடிப்பின்போது நடைபெறும் *விஷேட” படிப்புக்களிலே ஐயரும் கலந்துகொள்வார் மிகச்சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்த ஐயர் குரல்வளம் மிக்கவராக இருக்க வில்லையென்று கூறப்படுகின்றது. புராணப்படிப்புக்குரிய விஷேடதிறன் களிற் குரல்வளமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இயல்பாகவே குரல்வளமற்ற பலர் சிறந்த உரையாசிரியர்களாக இருந்தும் புராண படனத்துறையிற் புகழ்பெற்றதாகத் தெரியவில்லை. ஐயரும் குரல்வள மின்மையாலோ என்னவோ புராணபடனத்துறையிலே பெருமளவு ஈடுபாடு கொள்ளவில்லை,
எழுத்துவாசனையற்ற மக்கள் புராணபடனத்தின் மூலமாகவே புராண இதிகாசக் கதைகளையும் கருத்துக்களையும் அறிந்திருந்தனர். புராணபடனம் பொதுசனத் தேவைகளை மனங்கொண்டே நடத்தப் பட்டது. "எளியபதம், எளியநடை, பொதுசனங்கள் விரும்புகின்ற மெட்டு" என்பன புராணபடனத்திற்கு இன்றியமையாதவை. இக் கருத்தை நாவலர், குமாரசுவாமிப்புலவர் முதலியோரும் வலியுறுத்தி
94

யுள்ளனர். ஐயரும் இக்கருத்தினை அங்கீகரித்துள்ளார். தாம் எழுதிய குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்திலே புலவரின் புராணபடனம் பற்றிய கருத்துக்கு அழுத்தங் கொடுத்துள்ளார்.
ஐயர் நிகழ்த்திய புராணபடனங்கள் இலகுவான நடையிலேயே அமைந்திருக்கும் என ஊகிக்கலாம், இனிமையான குரல்வளம் வாய்க் கப்பெருதபோதும் புராணபடனத்தை இனிமையாக நிகழ்த்துபவர் களை ஐயர் மனந்திறந்து பாராட்டியுள்ளார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரத்திலே தும்பளை முத்துக்குமாரசுவாமிக் குருக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவர்.
". . . . . . . . . . . . . . . ஆலய மடலாயங்களிற் புராணபடனம் நடக்குங் காலங்களிலே விஷேட படிப்புக்குப் பற்பல ஊரிலுள்ளோர் இவரை அழைத்துச்செல்வர். இவர் பொருள் சொல்லுங் காற் சபையிலிருந்து கேட்போர் இன்புறும்படி விரிவாகவும் தெளிவாகவும் சொல்வர். புராணபடன காலத்தே யாமும் விஷேடபடிப்புக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை மயிலிட்டி யிலுள்ள கோயிலொன்றில் வள்ளியம்மை திருமணப்படிப் புக்கு யாஞ்சென்றிருந்தபோது இவரும் அங்கே அழைக்கப் பட்டு வந்திருந்தார். அப்பொழுது இவர் சொல்லிய பொருள் அழகையுஞ் சொல்லழகையும் யாம் நேரே பார்த்து மகிழ்ந் துள்ளோம்" 9
இக்குறிப்பிலிருந்து குடாநாட்டின் பலபகுதிகளிலுமுள்ள ஆல யங்களிலே புராணபடனம் நடைபெறுங்காலங்களிற் சிற்சில ஆலயங் களுக்கு ஐயரும் சென்றுள்ளார் என்று அறியமுடிகின்றது.
ஐயர் தமது இறுதிக்காலங்களைக் கடவுள் வழிபாட்டிலேயே பெரிதும் கழித்தார். ஆலயவழிபாட்டோடு ஆலயத் திருப்பணிகளி லும் ஈடுபட்டார். தமது பொருட்களிற் பெரும்பகுதியைத் திருப்பணி வேலைகளுக்காகவே செலவு செய்துள்ளார். இளமையிலிருந்தே இவ ரிடம் காணப்பட்ட இறையன்பு வயது முதிரமுதிர மேலும் மேலும் அதிகரித்தது. இதஞல் இவர் இறுதிக்காலங்களிலே தமிழாராய்ச்சி யிலீடுபடுவதிலும் பார்க்க இறைவழிபாட்டிலேயே இன்பங்கண்டார்: வழிபாட்டின் பொருட்டுக் கீரிமலையிலும் சிலகாலம் தங்கியிருந்தார். பொதுமக்கள் தொடர்பு
பண்டிதராயும் வித்துவான யும் மகாவித்துவாஞயும் வித்துவ சிரோமணியாயும் உயர்ந்து விளங்கிய கணேசையர் பொதுமக்க ளுடன் மிக நெரு க் க மா ன தொடர்பினையும் கொண்டிருந்தார் இவரது அறிவாற்றலையறியாத பாமர மக்கள் கூட ஐயரிடம் மதிப் பும் பக்தியும் கொண்டிருந்தனர். ஒரு சமூகத்தில் ஆசிரியர் ஒருவர்
95

Page 58
பெறும் மகத்தான பெருமையை ஐயர் பெற்றிருந்தார். ஐயர் வாழ்ந்த கிராமத்திற் பலர் படித்தீவர்களாக விளங்கியபோதும் கிராமமக்க ளாலே பெரிதும் மதிக்கப்பட்டவர் கணேசையரே யாவர். ஐ ய ர் பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்பாடுடையவராகவே இருந்தார். மருதடிநாயகராலயச் சூழலில் ஐயரைக்காணச் சாதாரண மக்களும் வந்து செல்வர். பெரும்பாலான கிராமத்தவர்கள் ஐய  ைர ஒரு உசாத்திரியார்’ என்றும் 'சந்நியாசி" என்றுமே கருதினர் என அறிய முடிகின்றது. இதனைப் பின்வரும் பகுதி தெளிவுபடுத்தும்.
*". . . சாதாரண ஒரு அந்தணர்போலவே பொது மக்களோடு ஐயர் பழகிவந்தார். நல்லநாள் அறிதல், மழை வருதல் வராமையறிதல், வீடு, கிணறு முதலியவைகளுக்கு நிலம்வகுத்தல், நினைத்தகாரியம் கேட்டல், ஐயந்தீர்த்தல் என்பவற்றுக்காக ஐயரவர்களோடு பொதுமக்கள் பெரிதும் பழகிவந்தனர்" 10
இவ்வாறு ஐயர் பொதுமக்கள் பயன்பாடுடைய அந்தணு ளன கவும் திகழ்ந்தார். 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதிவரை கிராம மக்கள் ஆசிரியரிடம் மேற்காட்டிய தேவைகளையும் எதிர்பார்த்திருந் தனர். மரபுவழிக்கல்வியின் 'பழுத்த பழமான ஐயர் பண்டைய ஆசி ரிய மரபினைப்பெரிதும் பேணியவராகவே காணப்படுகின்ருர்,
தமிழியல் ஆய்வுத்துறை முன்னேடிகளில் ஒருவராகத் திகழும் ஐயர் சைவத் தொண்டுகளிலும் சிறந்து விளங்கினர். "கூடும் அன்பி னில் கும்பிடலே’ என்ற திவ்விய கருத்தோடு தம் வாழ்வின் இறுதிப் பகுதிகளிலே பயணம் செய்த ஐயர் ஆலயத் திருப்பணி வேலைகளி லும் உற்சாகமாக ஈடுபட்டுழைத்தார் என்று சிவபூg குமாரசுவாமிக் குருக்கள் குறிப்பிடுவர்.
'விநாயக தொண்டராகிய இவர் புன்னே ஆயக்கடவைச் சித்திவிநாயகப் பெருமானுடைய ஆலயத் திருப்பணிகளுக் குத் தமது பெரும்பொருளை அர்ப்பணஞ் செய்து கும்பாபி ஷேகமும் செய்வித்தவர். இங்கே தமது தந்தையார் விரும் பியபடி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய உற்சவ மூர்த்திப் பிரதிஷ்டையுஞ் செய்வித்தவர் . . . . .
தமது அறுபதாமாண்டு விழாவில் இவர் தமக்கு அளிக் கப்பட்ட பொற்கிழிகொண்டு விநாயகப்பெருமானுக்குப் பொற்கிரீடமும் உபவிதமும் செய்வித்துச் சாத்தி மகிழ்ந்த வர். இன்னும் அன்பர்களின் உதவிகொண்டு அவ்வாலயத்திற் பல திருப்பணிகள் புரிவித்திருக்கின்ருர்,” 11
96

தமக்கெனப் “ப்ொருள்பண்டம் எதனையும் சேர்த்து வைக்காத் ஐயர் உபரியாகக் கிடைத்த பொருள்களைத் தெய்வத்திருப்பணிக்கே செலவு செய்துள்ளார்.
மனைவியார் இறந்தபின் அகத்துறவு மேற்கொண்டொழுகத் தொடங்கிய ஐயர் தமிழ்மேலுள்ள பற்றினைத் துறந்தாரல்லர். வாழ்க் கையின் இறுதிப் பகுதிகளில் கற்றலையும் கற்பித்தலையும் விடக் கடவுள் வழிபாடே உயர்ந்தது என்றுகருதி முழுநேர வழிபாட்டாளரானர்.
உலகப்பற்றுக்கள் யாவற்றையும் துறந்து இறைவழிபாட்டிவீடு பட்ட ஐயர் தமது மனைவியார் மூலம் தமக்குச் சேர்ந்த காணிகள் பலவற்றையும் மனைவியின் உறவினர் சிலருக்கும் தருமசாதனத்திற்கு மாக எழுதிவைத்தனர்.
97

Page 59
இயல் - 9
3.
10.
1.
98
அடிக் குறிப்புக்கள்
கணேசையர், சி., ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், ஈழகேசரி நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப் பட்டது 1939, பக். 1, 2.
மேற்படி நூல், 2.
மேற்படி நூல், *"முகவுரை’
. மேற்படி நூல்,
மேற்படி நூல், பக். 110
கணேசையர், சி., குமாரசுவாமிப்புலவர் சரித் தி ரம் "முகவுரை” கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திர «rтаv, 1925.
மேற்படி நூல், 'வரலாறு’ பக் 8.
கணேசையர், சி., ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், Luš. 71.
மேற்படி நூல், பக். 192.
நமசிவாயம், இ. மறைத்திரு கணேசையர், மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை, 1977. பக். 11.
குமாரசுவாமிக்குருக்கள், சிவரீ," கணேசையரின் சைவத் தொண்டுகள்’ கணேசையர் நினைவுமலர், 1960. பக். 50.

இயல் - பத்து
மாணுக்கர் பரம்பரை
நீண்டகாலம் ஆசிரியராகப் பணி புரி ந் த கணேசையருக்கு இலங்கை முழுவதும் மாணவர்கள் உள்ளனர். ஐயர் பாடசாலைகளிலே ஆசிரியராகக் கடமையாற்றியபோது ஆரம்பவகுப்பு மாணுக்கர்கள் முதல் உயர்வகுப்பு மாணுக்கர்கள் வரை கற்பித்து வந்தார். நயின தீவில் இவர் ஆசிரியராகக் கடமையாற்றியபோது இவரிடம் கற்ற சிலர் இ ன் று வயோதிபர்களாக வாழ்கின்றனர். மாணக்கர்கள் கற்பதைவிட அடக்கம், பணிவு சீலம் முதலிய நற்குணங்களுடைய வராக இருப்பதையே ஐயர் பெரிதும் விரும்பியுள்ளார். கற்றதன்படி மாணுக்கர்கள் ஒழுகவேண்டுமென்பதே ஐயரின் விருப்பமுமாகும்.
பிரா சீன பாடசாலைக்கு இவர் தலைமைத் தமிழாசிரியராக வந்ததன் பின்னரே உயர்வகுப்பு மாணுக்கர்களுக்கு முழுநேரமும் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குடாநாட்டில் இன்றும் பண்டிதர் களென்றும் தமிழறிஞர் என்றும் கருதப்படும் பலர் ஏதோ ஒருவகை யில் ஐயரை அணுகியவர்களாகவே காணப்படுகின்றனர். ஐயரின் மாணுக்கர்கள் அறிவுத்துறையிலே சிறந்து விளங்கியதுபோலவே அடக்கம் ஒழுக்கம் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். இதனைப் பண்டிதர் இ. நமசிவாயம் பின்வருமாறு குறிப்பிடுவர்.
“இந்நாளிற் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்களாக விளங்குபவரிற்பலர் ஐயரவர்களிடத்திற் பாடங்கேட்டவர் களேயாவர். ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் பேராசிரியர்களும், மாணுக்கர்களும் ஏனைய கல்வி மான்களும் இடையிடை ஐயரவர்களைச் சந்தித்துத் தமக் கேற்பட்ட ஐயங்களைப் போக்கிக்கொண்டதுண்டு. நாள் தோறும் மாலை வேளையில் மருதடி விநாயகராலயச் சூழலில் உள்ள ஆலமர நிழலில் இரு ந்து மாணுக்கர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். மாணுக்கர் சித்திரப்பாவையின் அத்தக அடங்கி இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர். ஐயரவர்கள்’ 1 -
இவ்வாறு ஐயரின் நன்மாளுக்கருள் ஒருவராய பண் டி த ர் இ. நமசிவாயம் குறிப்பிடுவர். பாரம்பரியக் கல்விமுறையில் நம்பிக்கை யுடைய ஐயர் அம்மரபினையே இறுதிவரை பேண்வந்தார். ஐயரின்
99

Page 60
மாளுக்கர் பரம்பரையினரே மிக அண்மைக்காலம்வரை யாழ்ப்பா ணத்தின் தமிழிலக்கண இலக்கியப் பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டு வந்தனர்.
ஐயரிடம் நீண்டகாலமாகக் கல்விகற்றுப் பண்டித பரீட்சை களிலும் தேறி ஆசிரியர்களாகக் கடமையாற்றியவர்கள் பலராவர். இவர்களின் பெயர், விலாசம், விபரம் முதலியவற்றைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. பண்டிதர் இ. நமசிவாயம், பண்டித வித்துவான் க. கி. நடராஜன் பண்டிதர் ச. பொன்னுத்துரை, பண்டிதர் இளமுருகனுர், பண்டிதர் ஆர். கே. முருகேசன், பண்டிதர் செவ்வந்தி நாததேசிகர் முதலியோர் ஐயரிடம் நீண்டகாலம் கல்விகற்றவர்களா வர். ஐயரின் மாணுக்கர்களிடம் அவர் போதித்த அடக்கம் காணப் பட்டதாலோ எ ன் ன வோ இவர்களின் விபரங்களைப் பெறுவதும் கடினமாகவே இருக்கிறது.
ஐயரின் மாணுக்கர்களில் இ ன் றும் பேருடனும் புகழுடனும் வாழ்பவர் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்கள். இவர் பல்வேறு பத்தி ரிகைகளிலும் பல்வேறு தலைப்புக்களில் இலக்கண இலக்கியக் கட்டு ரைகள் எழுதியுள்ளார். மகா வித்துவான் கணேசையர் தமது ஆசிரிய ரான குமாரசுவாமிப்புலவரின் வரலாற்றை விரிவாக எழுதினர். பண்டிதர் இ. நமசிவாயமும் கணேசையரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறுநூலாக எழுதியுள்ளார். கணேசையர் எழுதிய குமாரசுவாமிப் புலவர் சரித்திரம் விளக்கமும் நிறைந்த தகவல்களும் கொண்டது. பண்டிதர் இ. நமசிவாயமவர்கள் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரித் தமிழ்மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்கி இச்சிறு நூலை எழுதியுள் ளார் மாணுக்கரொருவரின் சிறிய கையுறையாக இதனைக்கொள்ள லாம். இன்றைய மரபுவழித் தமிழறிஞர்களுள் பலராலும் மதிக்கப் படுபவராக வாழும் மிகச்சிலருள் பண்டிதர் இ. நமசிவாயமும் ஒருவர். தொடர்ச்சியாக ஐயரிடம் பர்டங்கேட்ட பண்டிதர் இ. நமசிவாயம் பின்னர் ஐயர் நடத்திய வகுப்புக்களிற் கற்பித்துமிருக்கிருர். ஐயரின், மேற்பார்வையில் அவரின் ஆசீர்வாதத்துடன் பண்டித வகுப்பு மாணுக் கர்களுக்குத் தான் தமிழிலக்கணங்கற்பித்தமை தாம்பெற்ற பெரும் பேறுகளுள் ஒன்று எனக் கருதிவருகிருர்,
தமது ‘எச்சங்களாக மாணுக்கர்களையே ஐயர் கருதினர்டு 1980 ஆம் ஆண் டு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் நடத்திய பட்ட மளிப்பு வைபவத்தின்போது பண்டிதர் இ. நமசிவாயத்திற்கு “இலக் கண வித்தகர்' என்னும் கெளரவப்பட்டம் வழங்கப்பட்டது. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்திடமிருந்து முதன்முதலிலே கெளரவப்பட்டம் பெற்ற மரபுவழித் தமிழறிஞர் பண்டிதர் இ. நமசிவாயமவர்களே
1 00

யாவர். இப்பட்டம் மகாவித்துவான் கணேசையரின் மகத்தான ஆசி ரியப் பணிக்கு வழங்கப்பட்ட பெருங் கெளரவமாகக் கருதப்படுகின் ADgil.
“. இக்காலகட்டத்தில் ஐயரவர்களிடம் கற்று வல்ல வர்களான மாணுக்கர்கள் தொகை எண்ணரியது இம்மானக் கர்களுள் அவரது அணுக்கத் தொண்டராய் இருந்து நெடுங் காலம் பயின்று. இலக்கணத்துறையில் ஐயரின் வாரிசு என்னும் பெருமைபெற்றவர் மயிலிட்டி தெற்கைச் சார்ந்த பண்டிதர் இ. நமசிவாயமவர்கள். பண்டிதர் அவர்களுக்கு யாழ்ப்பா
ணப் பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கண வித்தகர்ப்பட்டமே ஐயரவர்கள் தமது மாணுக்கர்களுக்கு வரையாது வழங்கிய கல்விக்கொடைக்குச் சான்ருகும். ஐயரவர்களின் கல்வித் தொண்டின் சிறப்புக்கு அவரது மானுக்கர் பெற்ற பட்டமே உரைகல்லாகும்’ 2
இவ்வாறு மயிலங்கூடலூர் பி. நடராசன் குறிப்பிடுவர். இக் கால அறிஞர்கள் ஐயரைப் பண்டிதர் நமசிவாயத்தினுாடு தரிசிக்க லாம். இன்றும் பண்டிதர் இ. நமசிவாயம் தமது பேருக்கும் புகழுக் கும் 'ஆதிமூலமாயமைந்த குருவுக்கு வணக்கஞ் செலுததியே வாழ்ந்து வருகிருர் என்பதை இவரது ‘எங்குருவின் இணையடிகள் ஏத்திவாழ் வாம்' என்னும் செய்யுள்கள் சுட்டி நிற்கின்றன.
பண்டிதர் க. கி. நடராஜனும் ஐயரின் மாணக்கர்களுட் சிறப் பாகக் குறிப்பிடக்கூடியவர். இவர் ஐயரிடம் வண்ணுர்பண்ணையிலும் பின் வருத்தலைவிளானிலும் பலகாலம் படித்தவர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச்சங்கப் பண்டிதரான இவர் பின்னர் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான், B : O. L. என்னும் பட்டங்களையும் பெற்றவர். ஐயரைப்போலவே அடக்கமும் எளிமை யும் உடையவர். ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன் றம் 1960 ஆம் ஆண் டு வெளியிட்ட கணேசையர் நினைவுமலரில் ஐயரின் வாழ்க்கையையும் பணியையும் பற்றிச் சிறப்பான கட்டுரை யொன்று எழுதியுள்ளார். ஐயரின் வாழ்க்கையையும் பணியையும் பெருநூலாக எழுத இவர் முயற்சி மேற்கொண்டாரென்றும் அறிய முடிகின்றது. ஆனல் இவரின் முயற்சி நிறைவேறியதாகத் தெரிய வில்லை. ஐயரின் அபிமானத்திற்குரிய மாணுக்கரான க. கி. நடராஜன் ஐயரவர்களுக்கு 'உசாத்துணைவராகவும் இருந்தார் என்று கூறப்படு கின்றது.
101

Page 61
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வராகிய இளமுருகனுரும் இவரது அபிமானத்திற்குரிய மாணுக்கர்களிலே ஒருவ ராவர் இளமுருகனர் கணேசையரிடம் தொல்காப்பியத்தை வரன் முறையாகக்கற்றுள்ளார். தனித்தமிழிலக்கியத்திலே தீவிர ஈடுபாடு கொண்ட இளமுருகனர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் கணேசையரின் எண்பதாம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத்திற் கெனப் பாடாண்டிணையும் வெள்ளணி வாழ்த் தி ய ல், துறையுங் கொண்ட வெள்ளணிமங்கலம் ஒன்றுயாத்தனர். இவ்வெள்ளணி மங் கலம் கணேசையர் நினைவுமலரில் வெளியிடப்பட்டுள்ளது.
செந்தமிழ் வளர்க்குஞ் சிந்தனை யறது பல்லா யிரர்க்குப் பசுந்தமி ழுணர்த்திச் செல்லா நல்லிசைச் சீரொடு கலந்தனை” 3
என்று இளமுருகனர் வெள்ளணி மங்கலத்தில் அவரின் கல்விப்பணி யைக் குறிப்பிடுவர்.
ஏழாலையைச் சேர்ந்த பண்டிதர் ச. பொன்னுத்துரையும் ஐயரி டம் பல ஆண்டுகள் பாடங்கேட்டவர் யாழ்ப்பாணம் ஆரிய திரா விட பாஷா விருத்திச் சங்கத்தினதும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினதும் பண்டிதப் பரீட்சைகளிலே சித்தியெய்தியவர் ஆசிரியராகப் பணி யாற்றிய இவர் இலக்கண இலக்கியக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். இலக்கண நூல்களை மாணுக்கர் காமுறும் வகையில் கற்பிக்க வல்லவர். இவர் வாக்குச்சாதுரியம் உடையவர் என்றுங் கூறப்படுகின்றது.
ஐயரின் அபிமானத்திற்குரிய மாணக்கர்களுள் கரணவாய்ப் பண்டிதர் செவ்வந்திநாததேசிகரும் ஒருவர். இவர் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தினதும், மது  ைரத் தமிழ்ச் சங்கத்தினதும் பண்டிதராவர். சிறந்த விவேகியான இவர் மிக இளம்வயதிலேயே இறந்துவிட்டார். இவர் இறந்தபோது ஐயர் மனமிரங்கிப் பாடல் களும் பாடியுள்ளார். இவரைப்பற்றி ஐயர் தாம் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்திலே பின்வருமாறு குறிப்பிடுவர்.
"... இவரும் இவர் தமையனரும் என்னிடத்தே தமி ழும் வேத விசாரதர் பிரமயூரீ சிதம்பரசாஸ்திரிகளிடத்திற் சமஸ்கிருதமும் முறையாகக்கற்றுப் பிரவேச, பாலபண்டித, பண்டித பரீட்சைகளிற் சித்தியெய்தினர்கள். . . என்னிடஞ் சில சித்தாந்த நூல்களும் கேட்டறிந்தவர் ..தமிழ்மொழியாராய்ச்சி என ஒரு நூலும் உரை நடையிலியற்றினர். இளமைதொடங்கி அதி ஞாபகசக்தியும்
02

விவேகமும் வாய்ந்தவர். இத்தகைய இவர் ஈசுரவருடம் ஆவணிமாதம் க எ ந் திகதி புதன்கிழமை இரவு தமது முப் பத்தோராம் வயசின் தொடக்கத்திலே தேகவியோகமடைந் தார். இவர் நீண்ட ஆயுளுக்கு இருக்கப்பெறின் தமிழ்த் தொண்டு செய்த புலவர்களுள் இவரும் ஒருவரர்வர் என்ப திற் சந்தேகமேயில்லை’ 4
இவ்வாறு ஐயர் குறிப்பிடுவதிலிருந்து செவ்வந்திநாததேசிக ரின் புலமையை நாம் ஊகித்துக்கொள்ளலாம். செவ்வந்திநாததேசிக கர் கரணவாய் சைவக்குருமார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையாரும், சிறிய தந்தையாரும் உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரி டம் பாடங்கேட்டுத் தமிழ் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். கரணவாய் சைவக் குருமார்களுக்கும் வேதாரணியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. கரணவாய்ச் சைவக் குருமார் தமிழ்ப் புலமையிலும் சைவாசாரத்திலும் சிறந்து விளங்குபவர்கள். கரண வாயைச் சேர்ந்த சைவக்குருமார் பலர் ஐயரிடம் பாடங்கேட்டுள்ள
6. It w
பல பாடநூல்களை எழுதிய பண்டிதர் வ. நடராஜனும் கணேசைய ரிடம் பாடங்கேட்டவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் தூண்டு தலினலே இவர் ஐயரை அடைந்து பாடங்கேட்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதரானர் என்று கூறப்படுகின்றது. இவரின் உரைநடை நூல்களைக் கூர் ந்து நோக்கினுற் கணேசையரின் உரைநடையின் சாயல் படிந்திருப்பதை அவதானிக்கலாம். இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதில் இவர் வல்லவர்.
ஐயரின் மாணுக்கர்களுள் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவர். ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாவர். திரு. பொன்னையா அவர் களை ஐயரின் மாணுக்கர் எனப் பலருக்குத் தெரியாது. நண்பர்கள் என்றே பல ரு ம் கருதிவந்தனர். ஒரு மாணுக்கன் ஆசிரியருக்குச் செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் பூரணமாகச் செய்தவர் நா. பொன்னையா அவர்களே. ஆசிரியரும் மாணுக்கர்களும் நண்பர்கள் போலப் பழகியும் வாழலாம் என்பதற்கு ஐயரவர்களும் பொன்னை யாவும் வாழ்ந்த வாழ்க்கையை உதாரணமாகக் காட்டலாம். ஐயர வர்களின் புகழுக்குப் பொன்னையாவும், பொன்னையாவின் புகழுக்கு ஐயரும் காரணர்களாக இருந்தனர்.
‘தமிழ்படிக்க ஆசைகொண்ட பொன்னையா அவர்கள் புன்னலைக்கட்டுவன் வித்துவசிரோமணி பிரமயூரீ கணேசைய ரவர்களிடமே பிரவேச பண்டிதர் பரீட்சைக்குப் படித்தார். அவர் தம்மிடம் படித்த வரலாற்றைப் பிரமயூரீ கணேசையர் அவர்களே ஒரு கட்டுரையிற் பின்வருமாறு எழுதியுள்ளார்;
103

Page 62
'பொன்னையா அவர்களது சனனவூராகிய குரும்பசிட்டியில் உள்ள தமிழ் வித்திய்ாசாலையிலே (மகாதேவ) அதற்கு அக் காலத்தே தலைமையாசிரியராயிருந்த பூரீமாந் பொ. பரமா னந்தர் அவர்களது விருப்பப்படி சென்று மாணக்கர்கள் சிலருக்குப் பிரவேச பண்டித பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்பித்து வந்தேன். அப்பொழுது பொன்னையா அவர்களும் வந்து அவர்களுடன் சேர்ந்து என்னிடங் கற்றுவந்தார்கள். அப்பொழுதுதான் நான் அவர்களை அறிந்துள்ளேன்.
திரு. டொன்னையா அவர் கள் வித்துவசிரோமணி கணேசையரிடம் படித்து ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தாரின் " பிரவேச பண்டிதபாரீட்சையிற் சித்தியெய்தி ஞர்” 5
இவ்வாறு ஈழம்தந்த கேசகி என்னும் நூலிலே கனக செந்தி நாதன் குறிப்பிட்டுள்ளார். பெரும் பிரபுவாக விளங்கிய ஈழகேசரி பொன்னையா அவர்கள் ஐயருக்கு அவ்வப்போது நடைபெற்ற விழாக் களுக்கெல்லாம் மூலகாரணராகவும் இருந்தார். ஐயரின் ஆக்கப்பணி களுக்கு ஈழகேசரியைக்களமாக அமைத்துக் கொ டு த்த வரும் பொன்னையா அவர்களே. இதனலேதான் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையவர்கள் கணேசையர் பொன்னையா உறவு *கங்கையும் யமு யும் சங்கமமானது' போன்றது என்று குறிப்பிட்டார்.
ஈழத்தின் பலபாகங்களிலும் ஐயருக்கு மாணக்கர்கள் இருந் தனர். ஐயர் மாணுக்கர்களிடம் ‘பதிலுபகாரம்’ எதிர்பார்க்கும் பழக்க மில்லாதவர். மாணக்கராய் இருந்து கற்காவிடினும் பல தமிழறிஞர் கள் ஐயரவர்களை அணுகி அடிக்கடி உரையாடுவதும், தமக்கேற்பட்ட சந்தேகங்களை உசாவுவதும் வழக்கம்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வித்துவான் பொன், முத்துக் குமாரன், பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை. திரு. ச. அம்பிகை பாகன், பேராசிரியர் வி. செல்வநாயகம், பேராசிரியர் சு. வித்தி யானந்தன், கலைப்புலவர் நவரத்தினம், குல சபாநாதன், க. சி. குல ரத்தினம் முதலிய ஈழநாட்டுத் தமிழறிஞர் பலரும் ஐயரை அடிக்கடி சந்தித்து அளவளாவினர் என அறியமுடிகின்றது.
ஐயரின் தொல்காப்பியப்பதிப்பின் முகவுரையிலே தமக்குப் பல் வேறு வகையிலும் உதவிபுரிந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைக்கு ஐயர் நன்றி தெரிவித்துள்ளார். வித்துவசிரோமணி கணேசையரைத் தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு வரும் தமிழ்ப் பேரறிஞர்களும் அவர் இருக்குமிடந்தேடிச் சந்தித்து உரையாடுவது வழக்கம் ரா. பி. சேதுப்பிள்ளை, தெ. பொ. மீனுட்சிசுந்தரனர். குன்றக்குடி அடிக ளார் முதலியோர் ஐயரின் ஆச்சிரமத்திற்குச் சென்று உரையாடினர்.
04

ஐயரவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த குல சபாநாதன் வித்துவசிரோமணி சி. க னே சை ய ரை ப் பற்றிய நூலொன்றை எழுதத்தொடங்கினுர் என்றும் கூறப்படுகின்றது. ஏணுே அந்தநூல் வெளிவரவில்லையென்பதை அறியமுடியாதிருக்கின்றது. 1961 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தமிழ்நாட்டிலிருந்து வெளியான சரஸ்வதி என்னும் பத்திரிகையிற் குல சபாநாதனவர்களை அறிமுகப் படுத்திக் கனக செந்திநாதன் எழுதும் பொழுது இத்தகவலைக் குறிப் பிட்டுள்ளார்.
*. . . சமீபத்திற் காலஞ்சென்ற வித்துவசிரோமணி கணேசையரவர்களைப் பற்றிய வி ரி வா ன நூலொன்றை அன்பரவர்கள் எழுதிக் கொண்டிருக்கிருர்கள் என்பதைக் கேட்டு ஈழத்து எழுத்தாளர் பெருமைப்படலாம்” 6
குல. சபாநாதன் எழுதி வெளியிட்ட நூல்வரிசைப் பட்டிய லிலே கணேசையரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஈழநாட்டினதும் தமிழ்நாட்டினதும் பேரறிஞர்கள் பலர் ஐய ருடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தனர் என்பதை ஐயருக்கு நடந்த மணிவிழாவும், வித்துவசிரோமணி பட்டமளிப்பு விழாவும் நிறுவிக் கொண்டிருக்கும்.
ஈழநாட்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுக்கு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மதிப்பும் டிரியாதையும் கிடைத்தமை குறைவென லாம். மிகச்சிலருக்கே அவர்கள் வாழும்போதே போற்றப்படும் பாக் கியம் கிடைத்தது. இந்த வகையிலே ஐயர் கொடுத்துவைத்தவராகவே காணப்படுகின்ருர், யாழ்ப்பாண மக்கள் திறமான புலமையாளர்களைக் கெளரவிக்கத் தவறுவதில்லையென்ற உண்மையை ஐயரவர்களுக்கு நடத்திய விழாக்கள் உணர்த்தும். -
ஐயரின் மாணுக்கர்களும் நண்பர்களும் அவரது தகுதிநோக்கி மகாவித்துவான் எனும் பட்டத்தைத் தாமாகவே சூட்டி அழைத்தும் வந்தனர். மகாவித்துவான் கணேசையருக்கு 1952 ஆம் ஆண் டு யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் "வித்துவ சிரோமணி’ என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இச்சங் கத்தால் முதன்முதலாக இத்தகைய பட்டம் பெற்றவர் கணேசைய ரேயாவர். இப்பட்டமளிப்புவிழாவில் நவநீதகிருஷ்ண பாரதியாருக் குப் "புலவர்மணி’ என்னும் பட்டமும், மட்டுநகர் ஏ. பெரிய தம்பிப் பிள்ளை, ந. சுப்பையாபிள்ளை ஆகியோருக்குப் பண்டிதமணி" என்னும் பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
105

Page 63
1938 ஆம் ஆண்டு (8.10.38) ஐயருக்குச் சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. ஐயரின் மாணுக்கர்களும் நண்பர்களும் அபி ாகனிஞம் சேர்ந்து எடுத்த இவ்விழாவில் ஐயருக்குப் பொற்கிழி வழங்கிக் கெளரவித்தார்கள். யாழ்ப்பாணத்தில் முன் எஞ்ஞான்றும் நிகழாதவகையில் நிகழ்ந்த விழா என்று அறிஞர்கள் குறிப்பிடுவர்.
*. உயர் திரு. விபுலாநந்த அடிகள், வண. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள், மறைத்திரு. வை. இராமசாமி சர்மா அவர்கள், பண்டிதர் ம வே. மகாலிங்கசிவமவர்கள் ஆகியோரால் ஐயரவர்களுடைய கல்வித்திறனையும் ஆராய்ச்சி வன்மையையும் ஏனைய குணநலன்களையும் பற்றிச் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. மகா வித் து வான் அவர்களுக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் வெண் பொற் காசுகளைக் கொண்ட ஒரு பொற்கிளி தலைவரவர்களால் வழங் கப்பட்டது. இவ்விழா கண்கொள்ளாக் காட்சியாக இருந்
தது. இதனை இத்துணைச் சிறப்பாக நடத்துவதற்குக் காரண ராயிருந்தவர்களுள் ஈழகேசரிப் பத்திராதிபர் திரு. நா. பொன்னையா அவர்கள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை யவர்கள், கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள், திரு.ச. அம்பிகைபாகன் அவிர்கள் ஆகியவர்கள் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவர்களாவர்" 7
எனக் க. கி. நடராஜன் குறிப்பிடுவர்.
இவ்வாறு மேன்மைப்படுத்தப்பட்ட ஐயரவர்களுக்கு 1951ஆம் ஆண்டு மற்ருெரு கெளரவம் நடைபெற்றது. சென்னைத் தமிழ் வளர்ச் சிக் கழகத்தார் தமது நான்காவது ஆண்டுவிழாவை யாழ்ப்பாணத் தில் நடத்தினர். (29, 30, 1 = 4 - 1951 ) இவ்விழாவிலே தமிழ் நாட்டுப் பேரறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். உலகப்பற் றைத் துறந்து வருத்தலைவிளான் மருதடி விநாயகராலாயத்தில் அல் லும் பகலும் இறைவழிபாட்டிலீடுபட்டிருந்த ஐயரை விழாக்குழு வினர் அழைத்துப் பொன்னடை போர்த்திக் கெளரவித்தனர். இதனை,
*". மருதடி விநாயகப் பெருமானேடு ஏகாந்தமாக வீற்றிருக்கும் இன்பப்பேற்றை விரும்பி இருந்த ஐயரவர்களை வலிந்து கொணர்ந்து உலகப்புகழ்படைத்த ஆராய்ச்சி வல் லுனரான டாக் டர். கே. எஸ். கிருஷ்ணன் அவர்களைக் கொண்டு அவர்களுக்குப் பொன்னுடைபோர்த்துக் கெளர வித்தமை சாலவும் சாமர்த்தியமான செயலாகும்” 8
வித்துவான் க. கி. நடராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
05

உலக ஆசாபாசங்களைக் கடந்து மருதடி விநாயகரோடு உற வாடுதலே உண்மையான இன்பமாகக் கொண்டு ஐயர் வாழ்ந்துவந் தார். தமது இறுதிக்காலத்திற் கற்றலிலும் கற்பித்தலிலுங்கூட ஊக் கம் குன்றியவராகக் காணப்பட்டார். முழுநேரமும் இறைநினைவிலும் வழிபாட்டிலுமே கழிந்தது. உலகப்பற்றுக்களோடு சொத்துக்களையும் உதறித்தள்ளினர்.
மருதடி விநாயகராலயத்திற்கு அருகாமையில் ஒர் ஆச்சிரமம் அமைத்து அமைதியான துறவுவாழ்வை ஐயர் மேற்கொண்டார் மருதடி விநாயகராலயச் சூழல் தெய்வீகச் சாயலுடன் திகழுகின்றது. அத்தெய்வீகச் சூழலிலேயே தமது ஆச்சிரமத்திலே எண்பத்தோரா வது வயதில் ஐயர் இறைவன் திருவடி நீழலையடைந்தார்.
'ஈழத்தின், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மரபுவழித் தமிழ்ப் புலமையின் ‘பெருமரமாகத் திகழ்ந்த ஐயரவர்களின் பீடும் புகழும் என்றும் நின்று நிலைக் 3 ம், வாழையடிவாழையாக அழுத்தொடர்ச்சி யுடன் வளரும் மாணுக்கர் பரம்பரையினுாடு அவரின் பணி துல்லிய மாக இழையோடிக் கொண்டிருக்கும். தொல்காப்பியம் உள்ளவரை ஐயரின் பணியின் பெருமை துலங்கும்.
நாவலர், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவர்,அம்பலவாண நாவலர்,நா.கதிரைவேற்பிள்ளை முதலிய ஈழநாட்டின் தமிழ்ப்புலமைத் தூண்களுள் வித்துவசிரோமணி கணேசையரும் ஒருவராக நின்றுநிலைக்கிறர். -
107

Page 64
இயல் - 10
08
அடிக் குறிப்புக்கள்
நமசிவாயம், பண்டிதர், இ. வித்துவசிரோமணி மறைத் திரு கணேசையர், தமிழ்மன்றம், மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை, 1977 பக். 11 - 12.
நடராஜன். பி. தமிழியற் கட்டுரைகள், சுப்பிரமணியம்
புத்தகசாலை, 1982, பக். 135.
இளமுருகனுர், சோ., கணேசையர் நினைவுமலர் - 1960, பக். 333.
கணேசையர், சி. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக். 197 - 198.
செந்திநாதன், கனக, ஈழம்தந்த கேசரி, பக். 32, 33.
மேற்படி ஆசிரியர், சரஸ்வதி, 'ஈழத்து எழுத்தாளர் sssr ” ”, 1961.
நடராஜன், க. கி, கணேசையர் நினைவுமலர், பக். 23,
நடராஜன், க. கி. கணேசையர் நினைவுமலர். பக். 24.

உபயோகப்படுத்திய நூல்கள்
கணேசையர் நினைவுமலர், ஈழகேசரிப் பொன்னையா
நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1960.
வித்துவசிரோமணி மறைத்திரு சி. கணேசையர், பண்
டிதர் இ. நமசிவாயம், தமிழ் மன்றம் கல்வித்துறைச்
செய்திட்டக் குழு, மகாஜனக்கல்லூரி,தெல்லிப்பழை 1977
ஈழம்தந்த கேசரி, கனக. செந்திநாதன். ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1968.
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், மறைத்திரு. சி. கணேசையர், ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர் களால் வெளியிடப்பட்டது. 1939.
. மகாவித்துவான் அரசகேசரி இயற்றி இரகுவம்மிச மூல
மும் புன்னுலைக்கட்டுவன் சி. கணேசையர் இயற்றிய புத்து ரையும், சோதிடப்பிரகாசியந்திரசாலை, கொக்குவில் 1915 குமாரசுவாமிப்புலவர் சரித்திரம், புன்னுலைக்கட்டுவன் சி. கணேசையரவர்கள், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1925.
வருத்தலைவிளான் மருதடி விநாயகர் பிரபந்தம், வித்துவ
சிரோமணி, பிரமயூரீ சி. கணேசையர், பூரீமத் த. குண
ரத்தினம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. 1956.
வருத்தலைவிளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல், வித்துவசிரோமணி சி. கணேசையர், பூரீமான் செல்வத்துரை அவர்களின் குடும்பத்தினரால் பதிப்பிக் கப்பட்டது. 1975.
தமிழியற் கட்டுரைகள் எஸ். சிவலிங்கராஜா, மயிலங்
கூடல் பி. நடராசன்’ (தொகுப்பாசிரியர்கள்) பூரீ சுப்பிர
மணிய புத்தகசாலை, யாழ்ப்பாணம். 1982.
109

Page 65
செந்தமிழ் தொகுதி ஆண்டு
岑 1903 - 1904 3 1904 - 1905 4. 1905 - 1906
5 1906 - 1907
6 907 - 1908
8 1909 - 1910
10 丑9罩3 20 1921 - 1922
2, 1922 - 1993 22 1923 - 1924
25 1926 - 1927
26 1927 - 1928
1 10
கணேசையர்
இராமாவதார அருஞ்செய்யுள் விளக்கம்
எழுதிய கட்டுரைகளின் விபரம்
தலைப்பு பக்கம்
430
8 44
44
204 .திருக்குறள் பரிமேழகர் உரைவிளக்கம் 605 பெரியபுராண முதற் செய்யுளுரை 454 இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம்67,168
இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம் இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம் இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம் இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம்
இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம் 133 இந்திய அரசர் போர் வீரம் 566 இரு கண்ணுெருமணி 3ዷ7 திணைமயக்கம் 15 திருக்குறள் பரிமேழகர் உரைவிளக்கம் 329 பொருள் கோடல் 267 இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரம் 65 சாவாவுடம்பு 12,131 கவித்தன்மை 273 குமாரசுவாமிப் புலவர் 53 யாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம் 330 வடசொல் 277 வடமொழி முதுமொழியன்ருே 488 உடம்படு மெய் 81,83 வசிட்டரும் வள்ளுவரும் கூறிய
அரசியல் 131, 138 அந்தணர் நூல் , 61 ஆறனுருபு பிறிதுருபேற்றல் 265 முன்னைத் தமிழ்நாட்டுப் பெண்களின்
கற்புநிலை 113, 167 சில ஆராய்ச்சி . 747 அளபெடை 276 கவியின்பம் 121, 231, 353, 523 சிறுபொழுது - 57 தொகை நிலை

27
28
29
30
33
ふ;5
38
42
43 44
45
46
48
1928 - 1929
1929 - 1930
1930 - 1931
1931 - 1939 1935 - 1936 1937 - 1938
卫940·卫94夏
1944- 1945
945 - 1946
1946 - 1947
1947 - 1948
948 - 1950
1951 - 1952
ஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி 386 கவியின்பம் 66 தொல்காப்பியச் சூத்திரப்பொருள்
ஆராய்ச்சி 233 பிறிது பிறிதேற்றல் 51 இருபெயரொட்டுப் பெயரும்
அன்மொழித் தொகையும் 532 தமிழ்மொழி வளர்ச்சி 18 பரிசோதனைத் தொடர் 486 சிறு பொழுதாரய்ச்சி 3.. 6
மதுரைக் காஞ்சியுட் கூறிய
யாமப் பிரிவு 375 சேனவரையப் பதிப்பும் பிழைதிருத்தமும் 117 சில ஆராய்ச்சி 105 சீவகசிந்தாமணி உரைநயம் 167 இயற்கை நவிற்சியும் செயற்கைப்
புணர்ச்சியும் 305 383
கம்பனும் உவமவலங்காரமும் பிழையும் திருத்தமும் 573 மெய்ப்பாடு 459 தமிழ்நாட்டு மணம் 67 பொருட்புடை பெயர்ச்சி 117 அநுதாபக் குறிப்பு 144 இரங்கற்பா 17釜 இல்லறக் கிழத்தி மாண்புகள் 82 செந்தமிழ் 53. தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள் 1 இராமாவதாரமும் கலித்தொகையும் 13. கம்பரும் அவலச்சுவையும் 141 நீர் விளையாட்டு 87 கவிச்சக்கரவர்த்தி கம்பனே 86 உலகியலும் இலக்கியமும் 2 பெண்களுக்கு பெருந்தகைமை கற்பே 126 தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி 73 இராமாவதாரத்திற் கவிநயம் 0 1
1 11

Page 66
11.
12?。
13.
14.
கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்
ஈழகேசரி
ஈழகேசரி 10 - 07 - 1932 யாழ்ப்பாணத்து மகாவித்வான் அரச கேசரி.
ஈழகேசரி 13 - 07 - 1932 - கபிலர். ஈழகேசரி - ஆ. மலர் - 1935 - பரிபாடற்சிறப்பு ஈழகேசரி - ஆ; மலர் - 1936 - ஐந்திணை ஆராய்ச்சி ஈழகேசரி - ஆ. மலர் - 1937 - நோக்கு
ஈழகேசரி 一、 மலர் - 1938 - இளங்கோவடிக்ளும் கம்பரும்
ஈழகேசரி - 23 - 02 - 47 - தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள்.
ஈழகேசரி - 01 - 06 - 47 - செந்தமிழ், ஈழகேசரி - 07-09 - 47 - இல்லக்கிழத்தியின் மாண்புகள். ஈழகேசரி - 08 - 05 - 49 - நீர் விளையாட்டு. ஈழகேசரி - 18 - 12 - 49 - தொல்பொருள் உவமவியல் - சில விளக்கக் குறிப்புக்கள்.
ஈழகேசரி - 05- 11 - 50 - தேவி மானபூசை அந்தாதி ஈழகேசரி - 13 - 05 - 51 - தமிழ்விழா வாழ்த்து (செய்யுள்) 04 - 07 - 54 தொடக்கம் 05 - 01 - 58 வரையுள்ள ஈழகேசரி
யில் அகநானூறு 100 செய்யுட்கட்கு உரை.
I5.
6.
7.
112
ஈழகேசரி - 07 - 10 - 56 - சிவசங்கரமகான் வாழ்த்துப்பா ஈழகேசரி - வெள்ளிவிழா மலர் 1956 - தமிழ்நாட்டு மணம் ஈழகேசரி - 01 - 06 - 57 - செந்தமிழ்


Page 67


Page 68
இந் நூலாசிரியர்
SLLLLLLS SSS
தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை உரியவகையில் ஆய்வுசெய்து வெளிக்கொணரும் முயற்சிகளில் இலங்கைப் பல்கலைச் கழக ங் களின் தமிழ்த்துறைகள் ஆற்றிவந்துள்ள பணி காத்திர மானது. ே ராசிரியர்கள் விபுலா நந்த அடிகள் க. கணபதிப்பிள்ளே முதலியோர் இட்டுச்சென்ற செப்ட மான அடித்தளத்தில் கீ ட ந் தீ நாற்பதாண்டுகட்கு மேலாக இந்த ஆய்வு வரலாறு தொடர்கின்றது இந்த வரலாற்றினே நமது சமகா முதல்வரிசை ஆய்வாளர்களுள் சிவலிங்கராஜா எம். ஏ. அவர்கள்
கிழக்குக் கரவெட்டியைப் பிற ஞர்களான கந்தமுருகேசனுர், பன் பாடம்சுேட்டவர் யாழ்ப்பாணப் பு பேராசிரியர்கள் சு. வித்தியானந், அ. சண்முகதாஸ் முதலியோரி இவற்ருல் மரபறி புலமை, நவீன அறிவு வளமும் இஃணந்த ஆளுன பல்கலேக்கழகத்தின் முதலாவது மு என்ற சிறப்பும் மேற்படி பல்கலே யாளராகப் பணியேற்ற முதல்வரி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக யாளராகப் பணிபுரியும் சிவலிங்க தொடர்பாகச் சிறப்புக் கவனம் ரைகள் 1982 இனப்பதிப்பாசி பரியமும் இலக்கிய வளமும் (1984), வரலாற்றுச் சுருக்கம் (1985) ஆகி சுவாமிப்புலவர் தொடர்பாக மு: பித்த ஆய்வேடும் அவரது இந்: நிற்பன. இப்பொழுது வித்துவசி. பாக வெளிவரும் இந்நூலும் இல் ஒரு சான்று கும்.

லத்தில் முன்னெடுத்துச் செல்லும் ஒருவர் திரு. சிதம்பரப்பிள்ளே
ப்பிடமாகக் கொண்ட இவர் தமிழறி எடிதர் க வீரகத்தி முதலியோரிடம் பல்கலேக்கழகத்தின் தமிழ்த்துறையில் தன், க கைலாசபதி, கா. சிவத்தம்பி டம் ஆய்வுப் பயிற்சி பெற்றவர்.
ஆய்வுநோக்கு ஆகிய இருவகை ம எய்தப்பெற்றவர். யாழ்ப்பாணப் தல்தரத் தமிழ்ச்சிறப்புப் பட்டதாரி க்கழகத்திற் பயின்று தமிழ் விரிவுரை என்ற சிறப்பும் இவருக்கு உரியன.
ாத்தின் தமிழ் முதுநிலை விரிவுரை ராஜா அவர்கள் ஈழத்துத் தமிழியல் செலுத்திவருபவர். தமிழியற் கட்டு ரியர்) வடமராட்சியின் கல்விப்பாரம் சி.வை. தாமோதரம்பிள்ளே வாழ்க்கை ய நூல்களும் சுன்னுகம் அ. குமார துகலைப்பட்டத்திற்கு அவர் சமர்ப் தச் சிறப்பு ஈடுபாட்டை உணர்த்தி ரோமணி சி. கணேசையர் தொடர் வரது இந்த ஈடுபாட்டுக்கு மேலும்
கலாநிதி நா. சுப்பிரமணியன் முதுநிஃ விரிவுரையாளர் தமிழ்த்துறை பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்