கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மரபு

Page 1


Page 2


Page 3

பொன். முத்துக்குமாரன்
தமிழ் மரபு
தவறுகளின்றித் தமிழை எழுதுவதற்குரிய வழிகாட்டி
விலை: இந்திய ரூபாய் 75/-

Page 4

தமிழ் மரபு
உயர்வகுப்புக்காயமொழிநூல்
9)a): FFS 9/4/451 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வெளிவந்துள்ள இலங்கை வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன்மொழிப் பாடசாலைகளுக்கும், இருபாஷைப் பாடசாலைகளுக்கும் ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(அ)ஆம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப்புத்தகம் க.பொ.த. சாதாரண (உயர்தர) வகுப்புகளில் தமிழ்பாஷை படிப்பிப்பதற்கு ஒரு பாடப்புத்தகமாக 1971ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை உபயோகித்தற்கு வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பம்: ஹே.பெ. வீரசேகர, செயலாளர், பாடநூல் பிரசுர ஆலோசனைச் சபை பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை, மலாய் வீதி, கொழும்பு - 2. 9-0-966
வித்துவான் பொன். முத்துக்குமாரன் பி.ஓ.எல்.
காந்த67ஆம்
68 (834), 96 TotorTFT66), 41,அஞ்சலக வீதி, சென்னை - 600 002 சாவகச்சேரி, தொலைபேசி:8534505 யாழ்ப்பாணம்
LS6ü76UTibu6oub: tamilnool.com LissiT60Ts6): sachi(a)giasmd01.vsnil.net.in.

Page 5
முதல் பதிப்புரை
0 நாவலர் என்ற சிறு நூலை வெளியிட்டு எமது பதிப்பகத்தை ஆரம்பித்தேன். அது மிக நல்ல ஆரம்பம். இன்று நன்னூலுக்கு விளக்கம் வெளியிடுகிற அளவுக்கு "வரதர்வெளியீடு வளர்ந்து விட்டது.
0 நன்னூல் படிக்கிற அளவுக்குக் கூட இன்று நமது மாணவர்கள் இல்லை; அவர்களுடைய இன்றைய தேவைகளெல்லாம் நன்னூலிலும் இல்லை. இந்தக் குறையைப் போக்க ஒரு மொழிநூல் வெளிவரவேண்டு மென்பது எனது நெடுநாளைய விருப்பம். இந்த விருப்பம் எனக்கு மட்டும் உரிமையல்ல; இன்னும் சில நண்பர்கள் இதில் பங்கு கொண்டிரு ந்தார்கள் என்பது பின்னர் தெரிந்தது. நான் விரும்பியதைப் போன்ற சில மொழி நூல்களை நல்ல நூல்களை அவர்கள் வெளியிட்டார்கள். ஆனால் அதற்காக எனது முயற்சியைக் கைவிட நான் விரும்பவில்லை. தமிழுக்கு இன்னும் எவ்வளவோ வரலாம்.
0 இந்நூலை எழுதிய ஆசிரியர் இதை எழுதுவதற்கு எவ்வளவு தகுதி வாய்ந்தவரென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நூலைப் படிக்கும் போதுநீங்களேதெரிந்துகொள்வீர்கள்.
- தி.ச. வரதராசன்
யாழ்ப்பாணம். 12-01-1955
முதற்பதிப்பு: தை,தி.பி.1986(1955) ஏழாம் பதிப்பு: சித்திரை, தி.பி.1998(1967) எட்டாம்பதிப்பு: சித்திரை, தி.பி.2033(2002)
பதிப்புரிமை வரதர்வெளியீடு,
யாழ்ப்பாணம்
விலை இந்திய ரூபா: 75,00
விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம் - புத்தகசாலை, 226, காங்கேயன் துறை வீதி, யாழ்ப்பாணம்,
எட்டாம் பதிப்பாக்கத்தில் உதவியோர்: முத்துக்குமாரன் தயாநிதி சிட்னி, ஆஸ்திரேலியா. முனைவர் நா. சுப்பிரமணியன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். புலவர் வெற்றியழகன், சென்னை. க. சச்சிதானந்தன், மறவன்புலவு, சாவகச்சேரி.
அச்சிடல் தயாரிப்பு: காந்தளகம் 68 (834) அண்ணா சாலை, சென்னை - 600 002.

முகவுரை
இலக்கிய வளமுள்ள மொழிகளுக்கு வரம்பமைந்த இலக்கணமும், அவ்வம் மொழிகளுக்குச் சிறப்பாயமைந்த மரபும் உண்டு. நமது தமிழ்மொழி இலக்கிய வளத்தில் மிகவும் சிறந்தது. இதற்கும் அத்தகைய இலக்கணமும் மரபும் அமைந்துள்ளன. சீர்திருத்தத்திற் குறைந்த பிற மொழிகளில், இவை காலத்துக்குக் காலம் திருத்தமும் மாற்றமும் பெற்று வழங்கிவந்துள்ளன. சங்கமிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயின்று திருத்தத்தின் எல்லையைக் கண்ட தமிழின் மரபு என்றும் திரியாததாய் நின்று நிலவுகின்றது.
ஆங்கிலம், வடமொழி போன்ற பிறமொழிகளின் சேர்க்கையினாலே, காலத்துக்குக் காலம் அம்மொழிச் சொற்கள் பல தமிழிற் கலக்கலாயின. அச்சொற்களைத் தமிழ் மரபு தழுவி வழங்குதலே தக்கதாம். அவ்வாறின்றி வரை துறையில்லாது பலமொழிகளையும் கலந்து வழங்குவது அம்மொழிகள் அனைத்தையுமே இகழுவதாக முடியும். அன்றியும், உள்ளமொழி அழிந்து புதுமொழியொன்று தோன்றுதற்கும் இடமாய் விடும். இம்முறையிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் தோன்றித் தமிழினம் சுருங்க நேர்ந்துவிட்டது.
இனி, பேசுவது போலவே எழுதுதலும் வேண்டுமென்பர் சிலர். அறிஞரவையிற் பேசுவுது போல எழுதல் நன்று. ஒருவரோடொருவர் அளவளாவி உரையாடும்போது பல கொச்சைச் சொற்களும் பிற மொழிச் சொற்களும் கலந்திருக்கும்; ஆதலால் அவ்வாறு எழுதுவது நகை விளைப்பதாகும். பிறமொழியாளரின் பெயர்கள், இடப்பெயர்கள் முதலானவற்றை உள்ளவாறே வழங்குவதே விளங்குதற்கு ஏற்றதாகும். மாணவர்கள் இவற்றைக் கருத்தினிலிருத்தி, நம்மொழியின் பண்பினையும் அதனைக் கையாளும் வகையினையும் அறிந்து பயின்று வல்லுநராதல் வேண்டுமென்ற நோக்கமே இந்நூல் தோன்றக் காரணமாகும்.
கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி எழுத்தாளர் சிலருங்கூட ஒருத்தன், ஒருவள், புலவி, வெய்யில், முயற்சித்தான் இவை போன்ற சொற்பிழைகள் மலிய எழுதுகின்றார்கள். இவை தமிழ் மரபுப்படி முறையே ஒருவன், ஒருத்தி, புலமையள், வெயில், முயன்றான் என்றே

Page 6
எழுதப்படல் வேண்டும். பாவித்த புத்தகம், ஒருசில மனிதர், அருவிவெட்டு, சுடுதண்ணீர் என்ற தொடர்கள் முறையே உபயோகித்த புத்தகம், மனிதர் சிலர், அரிவு வெட்டு, வெந்நீர் என வருதலே மரபாம். கால்க்கட்டு, வாள்ப்போர் தேனீர் என்னும் புணர்ச்சிகள் காற்கட்டு, வாட்போர், தேநீர் என்றிருத்தலே தக்கது. வாழைபழம் தின்றான், மாதுளைப் பழம், அங்கு சென்றான் என்பவற்றினை வாழைப்பழந் தின்றான், மாதுளம் பழம், அங்குச் சென்றான் என எழுதினாலே பொருள் விளக்கம் உண்டாகும். 'சூரியன் உதிக்கும் நேரம் 'உச்சி கொதிக்கும் வெப்பம் 'வகுப்பில் முதலிடம் இவை போன்று பயனில்லாதவற்றையும், 'அவன் ஏன் வந்தானென்று தெரியவில்லை’ என்பது போன்று எழுவாயில்லாதனவற்றையும் வாக்கியங்களாக எழுதும் நவீன எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சிலர், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழிலும் எழுதுகின்றனர். 'எல்லாம் றெடியாயிற்று' 'பிறின்சிபலிடம் போ' 'என்ன நொன்சென்ஸ் பேசுகிறாய்" என்று எழுதுவதைப் பார்க்க எப்படியிருக்கிறது? இத்தகைய கலப்பு மொழி வாக்கியங்களைப் பயிலுவதினாலே ஆங்கிலச் சொல் எது, தமிழ்ச்சொல் எது என்று அறியாது மாணவர் சிலர் இடர்ப்படுகின்றார்கள். இந்நிலையில் அண்டருலகம் என்ற தொடருக்கு 'கீழுலகம்’ என்று பொருள் எழுதும் மாணவரும் இருப்பது வியப்பாகாது. பாஷையைப் பாசையென்றும், உத்தியோகத்தை உஸ்தியோகமென்றும் சர்வசாதாரணமாகப் பலரும் எழுதுகிறார்கள். இவ்விதமாகச் சொல், சொற்றொடர், வாக்கியம் இவற்றின் மரபு வழுவாது மாணவர் எழுதப் பயில எட்டாம், ஒன்பதாம் (J.S.C. Pre-G.C.E) வகுப்புக் களிலும் அவற்றிற்கு மேல் வகுப்புக்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், பயிற்றும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும் வண்ணம் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இந்நூல் எழுந்தது. மாணவர்க்கு எவ்வெப்பகுதிகளில் விசேட பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென்பதை அநுபவ வாயிலாக அறிந்து, அவர்க்குத் துணைபுரியும் நூலாக இதனை அமைப்பதிற் கருத்தூன்றினேன்.
தமிழிலக்கணம் கடல் போலப் பரந்தது. மேல் வகுப்புக்களிற் பயிலும் மாணவர்கள் அவசியமாக அறிந்திருக்கவேண்டிய பகுதிகள் சிலவற்றை மாதிரிக்காகக் குறிப்பிட்டுள்ளேன். சொல், சொற்றொடர் இவற்றை ஓரளவு உணர்த்தியபின், வாக்கிய மரபில் தனி வாக்கியம், கலப்பு வாக்கியம், குறியீடு முதலாயின உணர்த்தப்பட்டன. அடுத்து விளக்கப் பயிற்சிகள், கடிதம், கட்டுரை என்பவற்றுக்குப் பல மாதிரிகளும் குறிப்புக்களும் காட்டப்பட்டன. ஆங்கிலத்தைத் தமிழ்ப்படுத்தும்போது மரபு வழுவாது பெயர்த்தெழுதுவதற்கு உதாரணங்கள், குறிப்புக்கள், பயிற்சிகள் உள்ளன.

விடய அறிவு எவ்வளவு இருப்பினும் தக்க பயிற்சி இல்லையாயின் எதிர்பார்க்கும் அளவு பயன்கிடைப்பதில்லையாதலால், ஆங்காங்கு மாதிரிப் பயிற்சிகள் பல கொடுக்கப்பட்டன.
இந்நூல் இனிது முடிவதற்குப் பல்லாற்றானும் துணைபுரிந்த எனது நண்பர் பண்டிதர் திரு. அ. ஆறுமுகம் அவர்களுக்கு யான் என்றும் செய்
நன்றியறியும் கடப்பாடுடையேன்.
அரியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை யரிதே வெளிறு' திருக்குறள், 508
குணம்நாடிக் குற்றமும் நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் திருக்குறள், 504
சுழிபுரம் - பொன். முத்துக்குமாரன்
Seguiu, 605.

Page 7
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அளித்த அணிந்துரை
'வழக்குக்களா, வழக்குகளா அடிப்பட்ட சான்றோர் வழக்கு?" என்று ஒருவர் ஒரு தினங் கடாயினார். மற்றொருவர் "பொருள்களா, பொருட்களா? - முட்களா, முள்களா? அடிப்பட்ட வழக்கு என்னையோ' என்று வினாயினார். இன்னுஞ் சற்றே இடங் கொடுத்தால், "சுவரா, சிவரா? - திறப்பா, துறப்பா?’ என்று எண்ணிறந்த கேள்விகள் எழலாம். இந்தச் சம்பவம் ஒரு வகுப்பில் நடந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஆசிரியர் கண்மூடி மெளனியாய்ச் சும்மா இருந்தார். இந்தக் கடாக்கள், வினாக்கள், கேள்விகள் ஆகிய இவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வாராதா என்று அவர் சிந்தித்தார். சிந்தனை உலகத்தில் அந்த ஆசிரியர் சமாதிநிலை அடைந்தார். அவருடைய மனசு பழங்காலத்துத் திண்ணைப் பள்ளிகளிற் சஞ்சாரஞ் செய்தது. திண்ணைப் பள்ளிகள் திரைப் படங்கள் போலத் தோன்றி மறைகின்றன.
அந்தப் பள்ளிகளிலே மாணவர்கள் இரு என இருந்து, ஏடு அவிழ் என அவிழ்த்து, நிகண்டு பாடம்பண்ணி ஒப்பிக்கின்றார்கள். நிகண்டு பன்னிரண்டு தொகுதி கொண்டது. முதற் பத்துத் தொகுதி ஒருபொருட்குப் பல பெயர் வருவது. பதினோராந் தொகுதி பல பொருட்கு ஒரு பெயர் வருவது. பன்னிரண்டாந் தொகுதி ஒரு பொருள் இது; இரு பொருள், முப்பொருள் இவை என்றிங்ங்ணம் தொகைப்பொருள் பற்றியது. மூன்று பெரும் பிரிவுகளும் உட் பிரிவுகளுங்கொண்ட ஒரு நூதன அகராதி நிகண்டு. இப்படிப்பட்ட நிகண்டு திண்ணைப் பள்ளியில் தலையிலிருந்து கால்வரை, காலிலிருந்து தலைவரை மனனஞ் செய்யப்படுகிறது. மனனம் பண்ணுதலுக்குப் பாடம் பண்ணுதல் என்பது மற்றொரு பெயர். ஒருவர் ஒன்று பாடம் என்றால், கரைந்த பாடமா? என்று ஆசிரியர் வினவுவார். பாடம் பண்ணுதல் அவ்வளவு தூரம் நடந்தது. இந்த நிகண்டளவிலும் திண்ணைப் பள்ளிகள் அமையவில்லை. நிகண்டுக்கு மேலே திரிபு யமக அந்தாதிகள், சிலேடைகள், மடக்குக்கள், பல்வேறு சொற் சித்திரங்கள் ஆகிய பாடங்கள் நடக்கும். சொற்கள் சொற்றொடர்களின் முட்டறுத்தற்கு இவைகள் கருவிகள். இவற்றுக்கு மேலே நல்ல பாட்டுக்கள், வசனங்கள்

மனனஞ் செய்யப்படும். அப்பால் இலக்கணப் பாடம் இலக்கண வினாவிடையிலிருந்து நடக்கும். நன்னூற் காண்டிகையிலுள்ள வினாக்களுக்கு விடையிறுக்கப்படும்; இறுத்தபின் விடை எழுதப்படும். அவ்வளவிலும் அமையாமற் படித்த இலக்கணங்கள் இலக்கியங்களில் அப்பியாசிக்கவும்படும். இவ்வாறு கருவிநூலுணர்ச்சியைத் திண்ணைப் பள்ளிகள் வருவிக்கும்.
கருவிநூலுணர்ச்சி கைவந்த மாணவர்களின் கைகளிலே, செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத செந்நாளேடு" எத்தனையும் கொடுக்கலாம். அந்த ஏடு, ‘கற்றறிந்தார் ஏத்துங் கலித்தொகை"யும் ஆகலாம். 'கலகமிடு மமண் முருட்டுக்கையர் பொய்யே கட்டி நடத்திய’ சிந்தாமணியுமாகலாம். அவைகளைத் தங்குதடையின்றி அந்த மாணவர்கள் பொருளுணர்ந்து, வாசிக்க வல்லவர்கள் ஆவர்கள். அன்றி எழுத்துப்பிழை, சொற் பிழை, தொடர்ப் பிழை, வாக்கியப் பிழை, பொருட் பிழை, மரபுப் பிழை இன்றி எழுதவும் பேசவும் வல்லவர்களுமாவர்கள்.
இந்த நிலை இந்தச் சினிமா உலகத்திலே, இனியும் வருமா என்று, அந்த மெளனியாய்ச்சும்மா இருந்த ஆசிரியர் பெருமூச்சு விட்டுக் கொண்டு, கண்களை விழித்தார். அவர் எதிரில்,
"தமிழ் மரபு”
என்கின்ற மொழி நூல் காட்சியளித்தது. அந்தப் பழைய மனுஷர் "இன்னுந் தமிழ் மரபா’ என்கின்ற அலகூழிய புத்தியுடன் அந்த நூலை அங்கும் இங்கும் புரட்டிப் பார்த்தார்; மெல்ல மெல்லப் படித்தும் பார்த்தார். படிக்கப் படிக்க அவருடைய அலசுவிய புத்தி குறைந்து போனது; அவருடைய முகம் மலர்ந்தது. ஒரு நல்ல மூச்சு விட்டார்.
தமிழ் மரபு
1சொல் மரபு, Il சொற்றோடர் மரபு, III வாக்கிய மரபு, IV கட்டுரை மரபு என நான்கு அத்தியாயங்கள் கொண்டது. சிறு பிரிவுகள் மிகப் பல நிகண்டினாலும் இலக்கணங்களாலும் மற்றும் கருவி நூல்களாலும் வரக்கடவ பேறுகளை இத்தமிழ் மரபு அகராதிக் கிரமத்தில் ஒருங்கு திரட்டித் தந்திருக்கிறது. அன்றித் தூய சொற்கள் தொடர்கள் பழமொழிகள் உவமைகள் என்றிவைகளையுங் கிரமஞ் செய்திருக்கின்றது. நல்ல கட்டுரைகள் கடிதங்கள் விஞ்ஞாபனங்கள் எழுதுதற்கு வேண்டிய வாய்ப்புக்களை வழங்குகின்றது. வடமொழிகளை உரிய முறையில் தமிழாக்கஞ் செய்திருக்கின்றது. .

Page 8
சில தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போது ஒருசந்தேகம் குடிகொண்டது. தகழியா? தகளியா என்பது அந்தச் சந்தேகம். அந்த இழவு சந்தேகத்த ைஅந்த கூடிணமே, இந்தத் தமிழ் மரபு தீர்த்துவைத்தது. இன்னும் எத்தனையோ வகையான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு எத்தனையோ புத்தகங்கள் தேடியலையாமல் தானே தனித்துநின்று உதவுதற்குத் தமிழ் மரபு ஓர் ஊன்றுகோலாய்
இவ்வாற்றால், தமிழ் மரபு உயர் வகுப்புக்காய மொழிநூல் மாத்திர
மன்று; என் போன்றவர்களுக்கும் உபகாரியானதொரு கைந்நூலுமாம்.
இந்நூலையுதவிய வித்துவான் பொன். முத்துக்குமாரன் B, O, L, தமது உபகார விசேஷத்தினால் உள்ளூர்ப் பழுத்ததொரு பயன் மரம் ஆயினார். தமிழ் உலகு அந்தக் கணிதரும் மரத்தைப் பேணி வளர்த்துப் பயன் செய்வதாக,
ஜய, தை - சி. கணபதிப்பிள்ளை

பொருளடக்கம்
1. சொல் மரபு
பெயர்ச்சொல்
அ)
)
<翠,
ཞི་
( ( ( (FF (2) (DAI) (எ (GJ (8) (ஓ) (?)
உயர்திணை ஆண்பால், பெண்பாற் சொற்கள் அஃறிணைப் பொருள்களில் ஆண், பெண்பாற் சொற்கள் விலங்கின் பிள்ளை மரபுப் பெயர்கள் தாவரங்களின் சினைகள் பற்றிய மரபுப் பெயர்கள் எதிர்ப்பொருள் கொண்ட சொற்கள் எதிர்மறையில் தமிழ்மரபும் வடமொழிமரபும் வடவெழுத்துக்கள் தமிழில் வழங்கும் முறை வட சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் ஆகுபெயர்
அறுவகைப் பெயர்கள் வினையாலணையும் பெயர்
வினைச்சொல்
({9ی) (ஆ) (ତ୍ତ) (FF) (2) (Delt) (எ) (ஏ) (8)
வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
தன்வினை பிறவினைகள் செய்வினையும் செயப்பாட்டுவினையும் பொதுவினைகள்
ஏவலும் வியங்கோளும் மரபு பற்றிய சில வினைச் சொற்கள் பெயராகவும் வினையாகவும் வழங்கும் சொற்கள்
பேதச் சொற்கள்
(9) (ஆ) (g)) (FF) (2) )
லகர ழகர ளகர பேதச் சொற்கள் ரகர றகர பேதச் சொற்கள்
ணகர னகர பேதச் சொற்கள் வல்-மெல்லொற்றுக்களால் பொருள் வேறுபடும் சொற்கள் போலிகள்
பக்கம்
15
17
18
19
19
21
23 23
27
29
30
31.
32
32
34
34
35
35
36
40
42
47
51
53
55

Page 9
II. சொற்றொடர் மரபு
(அ) தொகைச் சொல் வர்க்கம் (ஆ) பல சொற்களுக்கு ஒரு சொற் பிரயோகம் (இ) இணை மொழிகள் (ஈ) தொடர்ச் சொற்கள்
(உ) புணர்ச்சி
(ஊ) உவமைச் சொற்றொடர் (எ) உவமைகள்
(ஏ) பழமொழிகள்
2
5.
III. வாக்கிய மரபு
வாக்கிய அமைப்பு வாக்கிய வகைகள் வாக்கிய மரபுவழாநிலை வாக்கியச் சிறப்பியல்புகள் பிழை திருத்தம் குறியீடுகள்
TV. Es LGB6ody LoJL
விளக்கப்பயிற்சி (Comprehension) கடிதம் எழுதுதல்
கட்டுரைகள் (1) வரலாற்றுக் கட்டுரை (2) வருணனைக் கட்டுரை (3) விளக்கக்கட்டுரை (4) சிந்தனைக் கட்டுரை (5) கற்பனைக் கட்டுரை சுருக்கமெழுதல் செய்யுள் நயம் கூறல்
’மொழிபெயர்ப்பு
56
59
64
68
74
85
89
92
97 1OO
1O6
108
112
117
122
131
144
145
154
166 174
181 186
2O2
216

உடுவில் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதர் சோ. இளமுருகனார் அவர்கள் அளித்த அணிந்துரை
கீழைக் கலைமாணிப் பட்டம் பெற்ற திருவாளர் வித்துவான் பொன். முத்துக்குமாரன் (பி.ஓ.எல்) எழுதிய தமிழ் மரபு என்னும் நூல் எல்லாச் சிறப்பியல்புகளும் நன்கு அமைந்த தொன்றாகும். இலக்கண வரம்பும் மரபும் இதிற் பெரிதும் பேணப்பட்டுள்ளன.
இந்நாளிலே வடமொழிகளைத் தமிழோசைக் கிசையத் திரித்து வழங்கும் முறைமை அழிந்து வருகின்றது. அதனால் தமிழின் ஒலித் தூய்மை அழியும். அழியவே சில்லாண்டில் செந்தமிழ் வழக்குமாறிக் கொடுந் தமிழ் வழக்குத் தலையெடுக்கும். அதனைத் தடுத்துத் தூய செந்தமிழ் மரபினைப் பாதுகாத்தற்கு ஆசிரியர் தொல்காப்பியனாரும் பவணந்தி முனிவரும் அவ்வக்காலங்களிற் சில வரம்புகளை யுண்டாக்கினர். அவற்றைச் சுன்னைக் குமாரசாமிப் புலவர் மிகத்திட்ப நுட்பமாயாராய்ந்து தமிழ்ப் பாதுகாப்புச் செய்தனர். அவருக்குப் பின்னர் தமிழ் மரபு" என்னும் இந்நூலாசிரிய்ரே அவ்வரம்புகளைப் புதுப்பித்துச் செந்தமிழ்ப் பாதுகாப்புச் செய்திருக்கின்றார்.
இந்நாளிற் பாடநூல்கள் எழுதுவோரும், பண்டிதர்களும் தமிழ் மரபினைக் கற்றுக்கொண்டால் செந்தமிழிற் றங்கருத்துக்களை வெளி யிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்வர்.
செவ்வையான உரைநடையெழுதற்கு வேண்டப்படும் விதிகளையும், வழிகளையும் சொற்பயிற்சியையும் தமிழ் மரபு கற்பகம் போல வழங்குகின்றது. பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு (H.S.C) மாணவரும், பொதுக் கல்வித் தேர்வு வகுப்பு (G.C.E) மாணவரும், தமிழ் மரபினைக் கற்பாராயின் நற்பயன் பெறுவர் என்பது புனைவாகாது.
ஆசிரியர், நூலினை அமைத்துக்கொண்ட முறையும் பொருட்கூறுகளை விளக்குந் திறமும் மொழிநூல் எழுதுவோராற் றழுவப்படுந்தகையன.
நவாலி, - சோ. இளமுருகனார் ஐய, தை,

Page 10
". . . . . . இலக்கண மரபு வழிநின்று தற்காலப் படிப்பித்தல் முறைகளுக்கேற்ப இந்நூலை வகுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறோம்,
LL SLLLS SLL L SY LL LLL LLL LLLS SLLL LLLL LLLL LL LL SL LLLL LL நல்ல அம்சங்கள் நிறைந்த இந்நூலை வரவேற்போமாக.
-இலங்கை வானொலி

Gafraion L.
1. (LIII.j (FI6)
பொருளைக் குறிக்கும் சொற்கள் பெயர்ச் சொற்கள். அவை உயர்திணையைக் குறிப்பனவும் அஃறிணையைக் குறிப்பனவும் என இருவகைப்படும்.
ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பலர்பாற் பெயர் ஆகிய மூன்றும் உயர்திணைப் பெயர்களாம்.
ஒன்றன்பாற் பெயர், பலவின்பாற் பெயர் ஆகிய இரண்டும் அஃறிணைப் பெயர்களாம்.
அன், ஆன் முதலிய விகுதிகள் ஆண்பாலைக் குறிக்க வரும். அள், ஆள், இ, ஐ முதலிய விகுதிகள் பெண்பாலைக் குறிக்க வரும்.
அர், ஆர் முதலிய விகுதிகள் பலர்பாலைக் குறிக்க வரும். து விகுதி ஒன்றன் பாலைக் குறிக்க வரும்.
வை, கள் முதலிய விகுதிகள் பலவின்பாலைக் குறிக்க வரும்.
இவற்றுள், ஆண்பால் பெண்பாற் சொற்களுக்கு மாத்திரம் சில உதாரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
(அ) உயர்திணை ஆண்பால் பெண்பாற் சொற்கள்
ஆண்பால் பெண்பால் அடியான் - அடியாள் ஆண்டான் assa ஆண்டாள் இரவலன் இரவலள் இனையன் இனையள்
(இத்தன்மையன்) (இத்தன்மையள்) கையன் - கையள்
பிறன் ar பிறள்
('ன்' விகுதி) ("ஸ்" விகுதி) பெரியன் பெரியள்
மணமகன் area மணமகள்
('ன் விகுதி) ('ஸ் விகுதி)

Page 11
16 தமிழ் மரபு
பெண்பாலில் இகர விகுதி பெறுவன
ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் அரசன் - அரசி குமரன் குமரி அழகன் - அழகி குரவன் குரத்தி இடையன் - இடைச்சி குரு குருத்தினி இயக்கன் - இயக்கி கூனன் கூனி இறைவன் - இறைவி கூத்தன் கூத்தி ஈசுவரன் - ஈசுவரி சீலன் இலி உத்தமன் - உத்தமி தலைவன் தலைவி உபாத்தியாயன் - உபாத்தியாயினி தாசன் தாசி
திருவாளன் திருவாட்டி உழவன் - உழத்தி நடன் நடி எசமானன் - எசமாட்டி நாடகன் நாடகத்தி, நாடகி எயினன் - எயிற்றி நிசாசரன் நிசாசரி ஒருவன் - ஒருத்தி நீலன் நீலி
(ஒருவள் என்பது பிழையானது) பகவன் பகவதி காதலன் - காதலி பாட்டின் பாட்டி காமுகன் - காமுகி பெருமான் பெருமாட்டி காரணன் - காரணி கிழவன் கிழவி, கிழத்தி
பெண்பாலில் ஐகார விகுதி பெறுவன
ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் ஆசிரியன் - ஆசிரியை தமையன் தமக்கை, தவ்வை ஐயன் - ஐயை தனயன் தனயை கநிட்டன் - கநிட்டை நிபுணன் நிபுணை சிவன் - சிவை பிரியன்
ஒத்த பகுதியிற் பிறவாத ஆண்பால் பெண்பாற் சொற்கள்
ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் ஆடுஉ - pos($2 தபுதாரன் விதவை ஆண் - பெண் பாணன் விறலி, மதங்கி, கணவன் - மனைவி (பாடினி தந்தை - தாய்
தமக்கினமில்லாத ஆண்பாற் சொற்கள்
அண்ணல், ஏந்தல், செம்மல், தோன்றல், அமைச்சன், மகிழ்நன், கொழுநன்
இவை போன்றன.

சொல் மரபு 17
தமக்கினமில்லாத பெண்பாற் சொற்கள்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை.
வினாக்கள்
1. பெண்பாலைக் குறிக்கும் விகுதிகள் யாவை? ஒவ்வொன்றுக்கும் இவ்விரண்டு உதாரணம் தருக. 2. பின்வரும் சொற்களின்எதிர்ப்பாற் சொற்கள் யாவை?
தாசி, பாட்டி, பிரியன், மகடூஉ, விதவை. 3.இனமில்லாத ஆண்பாற் சொற்கள் சில தருக. 4.இனமில்லாத பெண்பாற் சொற்கள் சில தருக.
(ஆ) அஃறிணைப் பொருள்களில் ஆண்பால் பெண்பாற் பெயர்கள்
அஃறிணைப் பெயர்களில் ஆண் பெண் பால்களைக் காட்டற்கு விகுதிகள் இல்லை. ஆண் மிருகத்தையும் பெண் மிருகத்தையும் தனித்தனி குறிக்கும் சொற்கள் மாத்திரம் சில உள்ளன. அவை வருமாறு:
ஆண்பாற் பெயர்கள்
கடுவன் என்பது குரங்குக்கும் பூனைக்கும் ஆண்பாற் பெயராம்.
மா என்பது யானை, பன்றி, குதிரை என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
ஒருத்தல் என்பது கரடி, மான், யானை, எருமை, பன்றி, புலி, மரை என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
போத்து என்பது மரை, பசு, புலி, பூனை என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
கலை என்பது முசு மான் என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
களிறு என்பது யானை, சுறவு, பன்றி என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
சே என்பது குதிரை, பெற்றம், புல்வாய் என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
பகடு என்பது எருமை, யானை, பெற்றம் என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
உம்பல் என்பது யானைக்கு ஆண்பாற் பெயராம்.

Page 12
18 தமிழ் மரபு
ஏறு என்பது பசு, எருமை, பன்றி, மான், மரை என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
"ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம்
ஏற்றைக் கிளவி உரியதென்ப" என்பது தொல்காப்பியம். ஓரி என்பது நரி, முசு என்பவற்றுக்கு ஆண்பாற் பெயராம்.
பெண்பாற் பெயர்கள் பிடி என்பது யானை, கவரிமான், ஒட்டகம் என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
பிணை என்பது மான், நாய், பன்றி என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
பெட்டை என்பது ஒட்டகம், கழுதை, குதிரை, சிங்கம், மரை என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
மந்தி என்பது முசு, குரங்கு என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம். பினா என்பது புல்வாய், நாய், பன்றி என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
ஆன் என்பது எருமை, பசு, மரை என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
நாகு என்பது எருமை, பசு என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம். பாட்டி என்பது நரி, பன்றி, நாய் என்பவற்றுக்குப் பெண்பாற் பெயராம்.
(இ) விலங்கின் பிள்ளை மரபுப் பெயர்கள் பறள், குருளை, குட்டி என்னும் பெயர்கள் புலி, முயல், வராகம், நரி, நாய் என்பவற்றுக்குரியன.
மறி என்னும் பெயர் ஆடு, அழுங்கு, மான், குதிரை என்பவற்றுக்குரியது.
கன்று என்னும் பெயர் கடமை, மான், எருது, பெற்றம், ஒட்டகம், யானை, பரி, மரை, முதலை, கவரி என்பவற்றுக்குரியது.
குழவி என்னும் பெயர் கடமை, மான், எருமை, யானை என்பவற்றுக்குரியது.
போதகம் என்னும் பெயர் புலி, சிங்கம், யானை என்பவற்றுக்குரியது. பறள், குட்டி, பிள்ளை என்னும் பெயர்கள் கீரி, பூனை, முயல், அணில் என்பவற்றுக்குரியன.

சொல் மரபு
19
(ஈ) தாவரங்களின் சினைகள் பற்
இலைப் பெயர் :
தென்னை, பனை: ஒலை, சோளம், கரும்பு: தோகை, நெல், புல்: தாள், வாழை, மா; இலை.
பிஞ்சுப் பெயர்:
தென்னை, பனை: குரும்பை, LDT: 6u (6), வாழை; கச்சல்.
குலைப் பெயர்: மா, புளி: கொத்து, முந்திரி, ஈந்து:குலை, நெல், சோளம்: கதிர்.
வினாக்கள்:
றிய மரபுப் பெயர்கள்
வித்துப் பெயர் :
மிளகாய், கத்தரி: விதை, ! நெல், சோளம்: மணி, ஆமணக்கு, வேம்பு : முத்து, பலா, மா. கொட்டை.
உள்ளிட்டுப் பெயர் :
நெல், கரும்பு: அரிசி, அவரை, துவரை: பருப்பு, வாழை, மா. சதை, முருங்கை, கற்றாளை சோறு.
1. ஒருத்தல், கலை, ஏறுஎன்பன எவ்வெவற்றின் ஆண்பாற் பெயர்கள்?
2. ஒட்டகம், குரங்கு, நாய் இவற்றின் பெண்பாற் பெயர்கள் யாவை?
3. கீரி, ஆடு இவற்றின் பிள்ளைப் பெயர்கள் யாவை?
4.தாள், முத்து என்பன எவ்வெவற்றுக்குரியன?
(உ) எதிர்ப்பொருள் கொண்ட சொற்கள்
அகம் - புறம் ஆக்கம் - கேடு
st (pg. ஆக்கல் - அழித்தல் அடித்தல் - அணைத்தல் ஆதி - அந்தம் அணு - ᏌᏝ0 ᎧᏑ0 ᏊᎸᎠ ஆத்திகன் - நாத்திகன் அண்மை - சேய்மை ஆண்டான் - அடியான் அறம் - மறம் ஆலம் - அமிர்தம் அறிவு - அறியாமை இகம் - பரம் அன்பு - வன்பு இகழ்ச்சி - புகழ்ச்சி

Page 13
20
தமிழ் மரபு
இசை இடுதல் இணக்கம் இம்மை இயற்கை இருள் இலாபம் இல்லறம் இளமை இன்சொல் இன்பம் ஈதல் ஈரம் 2) Lusmu við உபசாரம் உயர்ச்சி உருவம் உறக்கம் உறவு of 69 எரிதல் எளிது ஏழை ஏற்றம் ஐயம் ஒருமை ஒற்றுமை
GEs கற்றார்
கனவு காய் காய்தல்
566) கீழ் குணம் குறை குனி குன்று கூடுதல் கொடுத்தல்
o6. ஏற்றல் பிணக்கம்
Logoj60) to செயற்கை ஒளி நட்டம் துறவறம்
முதுமை வன்சொல் துன்பம் ஏற்றல் உலர்வு, வரட்சி அபகாரம் அபசாரம் தாழ்வு
அருவம்
விழிப்பு
s கூடல் அவிதல் அரிது செல்வன் இறக்கம் துணிபு
66) வேற்றுமை தெளிவு கல்லார்
நனவு கனி உவத்தல்
Dog) மேல் குற்றம் நிறை gilisi குழி பிரிதல் வாங்குதல்
சன்மார்க்கம் சீதளம் சீதேவி
s சுருக்கம் சுவர்க்கம் செல்வம் ஞாபகம் தமர் தவப்பொழுது தறுகண்மை தாமதம் திண்மை
திரவபதார்த்தம்
திறத்தல் துரும்பு SIT GULD தூரம் தெளிவு தேவர் தொகை தொடக்கம் தோன்றல் நட்டார் நலிவார் நன்று நாடு
நுணமை பண்டிதர் பருத்தல் பழி பாலர் புண்ணியம் புதிய
புதுமை பூரித்தல் பூரியார் போற்றுதல் மருள் மலர்தல்
துன்மார்க்கம் உஷ்ணம்
மூதேவி
துக்கம் பெருக்கம், விரிவு நரகம்
வறுமை
மறதி
பிறர் அவப்பொழுது செந்தண்மை விரைவு நொய்மை திடபதார்த்தம் அடைத்தல், மூடுதல் துரன
சூக்குமம்
சமீபம் மயக்கம், கலக்கம் நரகர்
aff
முடிவு கெடுதல், மறைதல் பகைவர் மெலிவார்
தீது
காடு
பருமை பாமரர் சிறுத்தல் புகழ் விருத்தர்
gy
பழைய பழமை சுருங்குதல் giftuni தூற்றுதல் தெருள் வாடுதல், குவிதல்

சொல்மரபு 21
மனப்பறை - பிணப்பறை வள்ளல் - உலோபி முதல் - முடிவு வள்ளன்மை - இவறன்மை முன் - பின் வாட்டம் - மலர்ச்சி மூடன் - விவேகி வாழ்வு - தாழ்வு மூப்பு - இளமை விதி - மதி மெய் - பொய் விருப்பு - வெறுப்பு மேடு - பள்ளம் விரைந்தநடை - தணிந்தநடை வரவு - செலவு வீரன் - பேடி, கோழை வலியார் - மெலியார் வெற்றி - தோல்வி வளர்தல் - தேய்தல் வெந்நீர் - தண்ணீர்.
வினாக்கள்
1.அன்பு, இரக்கம், கனவு, தெளிவு முதலியவற்றிற்கு ஏற்ற எதிர்ச்
சொற்கள் எழுதுக. 2. கீறிட்ட இடங்களை நிரப்புக.
(அ) மக்களுக்கு வாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. (ஆ) மேலோர் பிச்சை இடுதற்கு முந்துவர்: பிச்சை
முநதுவா.
(இ) எதிர்மறையில் தமிழ்மரபும் வடமொழி மரபும்
தமிழ்ச் சொற்கள் எதிர்மறை இடைநிலையைப் பின்னாற் பெறும். வடசொற்கள் முன்னாற் பெறும்.
இல், அல், ஆ என்பன தமிழிலுள்ள எதிர்மறை இடைநிலைகள்.
sa
அ, ந, நிர், கு, வி, அவ என்பன வடமொழியிலுள்ள எதிர்மறைப் பொருள்தரும் எழுத்துகள்.
சுத்தன் என்பது ஒரு வடசொல். ஆயினும் அதைத் தமிழ் மரபுப் படி எதிர் மறுக்கின் சுத்தமில்லான் எனவே கூறல் வேண்டும்.
இனி "இல்" என்பது எதிர்மறைப் பொருள் தருவதற்கு உதாரணம் :
அருளிலி (அருள் + இல் + இ), பொருளிலி, குணமிலி. அல்" என்பது எதிர்மறைப் பொருள் தருதல். உ-ம் : செல்வனல்லன், (செல்வன் + அல் + அன்), பெரியனல்லன்.
'ஆ' என்பது எதிர்மறைப் பொருளைத் தருதல். உ-ம்: அறியான் (அறி+ ஆ+ ஆன்).

Page 14
22 தமிழ் மரபு
வடமொழியில் 'அ' என்பது எதிர்மறைப் பொருள் தருதல். உ-ம்:-
கண்டம் - அகண்டம் சுசி - அசுசி
சரம் அசரம் சுரர் அசுரர் சத்தியம் - அசத்தியம் ஞானம் - அஞ்ஞானம் சாதாரணம் - அசாதாரணம் நியாயம் - அநியாயம் சீரணம் - அசீரணம் நீதி - அநீதி சுத்தன் - அசுத்தன் பக்குவம் - அபக்குவம்
'ந' என்பது ‘ந்+அ எனப் பிரிந்து நிற்கும். அவ்விரு எழுத்துகளும் உயிர் முதலாகக் கொண்ட சொல்முன் மேற்காட்டியவாறு பிரிந்து நிற்காது முன்பின்னாக மாறி நிற்கும். அஃதாவது ந+அங்கன் என்பது அந்+அங்கன் = அநங்கன் என்றாற்போல.
இனி 'ந' என்பது எதிர்மறைப் பொருளில் வரச் சில உதாரணங்கள்:-
அந்தம் - அநந்தம் இச்சை - அநிச்சை ஆதரவு - அநாதரவு உத்தமன் - அநுத்தமன் ஆதி - அநாதி உசிதம் - அநுசிதம் ஆயாசம் - அநாயாசம் ஏகம் - அநேகம் அவசியகம்- அநாவசியகம்
நிர்’ என்பது எதிர்மறைப் பொருளைத் தருதல். உ-ம் :-
அஞ்சனம் - நிரஞ்சனம் சிந்தை - நிர்ச்சிந்தை ஆமயம் - நிராமயம் குணன் - நிர்க்குணன் ஆயுதன் - நிராயுதன் மலம் - நிர்மலம்
கதி - நிர்க்கதி w மானுஷ்யம் - நிர்மானுஷ்யம் தாட்சணியம் - நிர்த்தாட்சணியம் மூலம் - நிர்மூலம்
'கு' என்பது எதிர்மறைப் பொருளைத் தருதல். உ-ம்:-
தர்க்கம் - குதர்க்கம் ரூபி - குரூபி யுக்தி - குயுக்தி சீலன் - குசீலன்
"வி" என்பது எதிர்மறைப் பொருளைத் தருதல்; உ-ம்:-
தவை - விதவை மலம் - விமலம் நாயகன் - விநாயகன் தேகம் - விதேகம்
(தனக்கு மேல் ஒரு நாயகனை யோகம் வியோகம்
இல்லாதவன்) நேசம் - விதேசம்

சொல்மரபு 23
டங்கம் - விடங்கம் ரூபம் - விரூபம்
(உளியாற் போளப்படாதது) பக்கம் - விபக்கம் லட்சணம் - விலட்சணம்
அவ' என்பது எதிர்மறைப் பொருளைத் தருதல். உ-ம்:
தந்திரம் - அவதந்திரம் ஆரோகணம் - அவரோகணம் லட்சணம் - அவலட்சணம் நம்பிக்கை - அவநம்பிக்கை மரியாதை - அவமரியாதை
வினாக்கள்
1.தமிழில் எதிர்மறைப் பொருளைத்தரும் இடைநிலைகள் யாவை? 2.நிர்என்பது எதிர்மறைப் பொருளைத்தருதற்கு உதாரணங்காட்டுக.
3.அநாதி, அரூபி, விபக்கம் என்பவற்றில் எதிர்மறைப் பொருளைத்தரும் எழுத்துக்கள் யாவை?
(எ) வடவெழுத்துக்கள் தமிழில் வழங்கும் முறை
தமிழில் இல்லாத ஜ, ஷ, ஸ, ஹ, கூத முதலிய எழுத்துக்கள் தமிழ் மரபுப்படி எழுதும்பொழுது சிற்சில விதிகள் கவனித்தற்குரியன.
ஜ’ சஆகவும், ய ஆகவும் திரியும்.
உ-ம்:- பங்கஜம் - பங்கயம்
ஜாதி - சாதி பிரயோஜனம் - பிரயோசனம்
'ஷ’ சஆகவும், ட ஆகவும் திரியும்.
all-tb:- ஷண்முகம் - சண்முகம் கஷ்டம் - கட்டம்
புஷ்பம் - புட்பம் வருஷம் - வருடம் நஷ்டம் - நட்டம்
"ஸ்" சஆகவும், த ஆகவும் திரியும்.
all-tb:- Gift - F6) அஸ்தம் - அத்தம்
சரஸ்வதி - சரசுவதி புஸ்தகம் - புத்தகம் ஸ்நேகம் - சினேகம் வஸ்திரம் - வத்திரம்

Page 15
24 தமிழ் மரபு
'ஹ' என்பது எந்த உயிர் எழுத்தோடு சேர்ந்து நிற்கின்றதோ அந்த உயிர் எழுத்து நிற்க, தான் கெடும்.
உ-ம்:- ஹிமம் - இமம் ஹோமம் - ஓமம்
ஹரி - அரி
'க்ஷ’ என்பது 'க்க் ஆகவும், "ட்ச ஆகவும் திரியும்.
உ-ம்:- பகூrம் - பக்கம் தீகூைடி - தீக்கை, தீட்சை
இலகஷ்மி - இலக்குமி மாகூரிமை - மாட்சிமை
(இலட்சுமி)
மொழிக்கு முதலில், இடையில், கடையில் வராவென விலக்கிய சில எழுத்துக்கள் வடமொழி முதலிய பிறமொழிகளில் வருகின்றன. அவற்றுள் 'ட, ற என்பன இகரத்தை முன்னிட்டு மொழிக்கண்வரும்.
உ-ம்:- டாம்பிகம் - இடாம்பிகம் றங்கூன் - இறங்கூன்
ர, ல என்பன அ, இ, உ என்னும் இவற்றுள் பொருத்தமான தொன்றை முன்னாக ஏற்றுவரும். .-
உ-ம்:- ரத்நம் - இரத்தினம், அரதனம் லோகம் - உலோகம்
\ ராமன் - இராமன் லவணம் - இலவணம்
ரோமம் - உரோமம் லிகிதன் - இலிகிதன் லண்டன் - இலண்டன்
'க்' என்னும் மெய்யெழுத்து ‘வ்‘ என்னும் மெய்யெழுத்தைச் சேர்ந்து தமிழில் ஒலிக்காது, ஏற்ற உயிரைச் சேர்ந்தே ஒலிக்கும்.
உ-ம்:- பக்வம் - பக்குவம்
இதுபோல, தன்னோடு சேராத மெய்யெழுத்தோடெல்லாம் ஓர் உயிரெழுத்தைச் சார்ந்து நின்றே ஒலிக்கப்பெறும்.
உ-ம்:- அக்நி - அக்கினி விக்னம் - விக்கினம்
சுக்லம் - சுக்கிலம்
'த' என்னும் மெய்யெழுத்தும் தன்னோடு பொருந்தாத மெய்யெழுத்தோடு சேரும் பொழுது பொருத்தமான உயிரெழுத்தை
இடையிற் சேர்த்து ஒலிக்கும்.

சொல்மரபு 25
உ-ம்:- ரத்னம் - இரத்தினம் புத்ரி - புத்திரி
பத்மம் - பதுமம் புத்லி - புத்திலி
ஏனைய சில உதாரணங்கள் வருமாறு:
மர்மம் - மருமம் புண்யம் - புண்ணியம் தர்மம் - தருமம்
தமிழில், சொல்லுக்குக் கடைசியில் வராத எழுத்துக்கள் ஒலிக்க வேண்டிய முறைமை. உ-ம்:- திக் - திக்கு இங்கிலண்ட் - இங்கிலாந்து சத் - சத்து நியூயோர்க் - நியூயோர்க்கு
(ஏ) வடசொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள்
அக்கிராசனர் - தலைவர் இயந்திரம் - பொறி அக்கினி - தீ இயமன் - காலன், கூற்றுவன் அநியாயம் - முறைகேடு இரகசியம் - மறை, அற்றம் அநுவதித்தல் - வழிமொழிதல் இரசிகன் - சுவைஞன் அந்நியதேசம் - பிறநாடு இராசா - வேந்தன், மன்னன் அபராதம் - குற்றம் இலகு - எளிமை அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு இலாபம் - ஊதியம் அர்ச்சனை - வழிபாடு உத்தியோகம் - வினை, தொழில் அற்பம் - சிறுமை உபதேசம் - செவியறிவுறுஉ, அறிவுரை ஆகாயம் - வான், விண் உபாத்தியாயன் - ஆசிரியன் ஆசாரம் - நடத்தை, ஒழுக்கம் உபமானம் - ஒப்புப்பொருள் ஆகாய விமானம் - வானூர்தி, ஐசுவரியம் - செல்வம்
(விண்ணுார்தி கதி - நிலை ஆடம்பரம் - பெருமிதம் கல்யாணம் - திருமணம் ஆத்மா - உயிர் கவி - பா, செய்யுள் ஆபத்து - இடுக்கண் கவிஞன் - பாவலன், புலவன் ஆசனம் - இருக்கை களங்கம் - மறு ஆபரணம் - அணிகலம் காகம் - காக்கை ஆரம்பம் - தொடக்கம், கால்கோள் கிரகம் - கோள் ஆயுதம் - படை கிரமம் - ஒழுங்கு ஆசை - விருப்பம் கிராமச்சங்கம் - ஊர்மன்றம் இகம் - இம்மை கீர்த்தி - மிகுபுகழ் இச்சை - விருப்பம் கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
இந்திரன் - வேந்தன் கோபம் - வெகுளி

Page 16
26 தமிழ் மரபு
சக்தி - ஆற்றல் நாசம் - அழிவு சத்தம் - ஒலி நியாயவாதி - வழக்குரைப்போன்
சத்தியம் - உண்மை சந்திரன் - திங்கள் சந்தோஷம் - மகிழ்ச்சி சந்நியாசி - துறவி சமயம்-நெறி,(சைவசமயம்-சிவநெறி) சமீபம் - அண்மை சம்பவம் - நிகழ்ச்சி சர்வகலாசாலை - பல்கலைக்கழகம் சங்கம் - அவை சாட்சி - கரி சாதம் - சோறு சாமர்த்தியம் - திறமை சினேகம் - நட்பு சிந்தை - எண்ணம் சிரத்தை - ஊற்றம், நாட்டம் சுகம் - நலம் சுத்தம் - தூய்மை சுயதேசம் - தன்னாடு சூரியன் - ஞாயிறு சொப்பனம் - கனவு சோதி - ஒளி ஞானம் - அறிவு தண்டித்தல் - ஒறுத்தல் தத்துவம் - உண்மை தரித்திரம் - வறுமை தர்க்கம் - சொற்போர் (Debate) தவம் - நோன்பு தனாதிகாரி - பொருளாளர் தாகம் - வேட்கை தாசன் - அடியான் தாரம் - மனைவி தானியம் - கூலம் தினம் - நாள் தெய்வம் - கடவுள் தேசம் - நாடு நகரம் - பட்டினம் நட்சத்திரம் - நாள், நாள் மீன்,
(விண்மீன்
நிர்வாகசபை - ஆட்சிக்குழு நித்திரை - உறக்கம் நீதிபதி - முறைவேந்தன் பக்தி - அன்பு பரீட்சை - தேர்வு பத்திரம் - ஆவணம் பத்திரிகை - இதழ் பத்திராதிபர் - இதழாசிரியர் பாகம் - கூறு பாத்திரம் - கலம், தகுதி பிரகாசம் - ஒளி பிரசங்கம் - சொற்பொழிவு பிரமசாரி - மாணி புராணம் - பழமை, பழங்கதை புதினப்பத்திரிகை - செய்தித்தாள் பூசை - வழிபாடு மந்திரி - அமைச்சன் மந்திரம் - மறைமொழி மாதம் - திங்கள் மாமிசம் - ஊன் முகூர்த்தம் - ஒரை
முத்தி - வீடு
மேகம் - முகில் மோட்சம் - வீடு வசனம் - உரை வருஷம் - ஆண்டு வாகனம் - ஊர்தி வாதி - வழக்காளி v வாரம் - ஏழல் (ஏழுநாள் கொண்டது) விசனம் - கவலை
விஞ்ஞானம் - அறிவியல் விசேஷம் - சிறப்பு வித்தியாசம் - வேறுபாடு விமர்சனம் - திறனாய்வு வியாசம் - கட்டுரை வைத்தியர் - மருத்துவர் பூரீமான் - திருவாளர்

சொல்மரபு 27
வினாக்கள்
1. பின்வரும் சொற்களை வடமொழிமரபுப்படி எதிர்மறுத்துக்கூறுக.
சுசி, ஏகம், மூலம், யோகம், பக்கம். 2. பின்வரும் சொற்கள்தமிழ் மரபுப்படி எவ்வாறு எழுதப்படல் வேண்டும்?
அஸ்தம், றங்கூன், பாக்யம், திக். 3. பின்வருவனவற்றுக்கேற்றதமிழ்ச்சொற்கள் எழுதுக.
அநுவதித்தல், பொய்ச்சாட்சி, தானியம், விமரிசனம்,
(ஐ) ஆகுபெயர் (Metonymy)
ஒரு பொருளுக்கு இயல்பாக அமைந்த பெயர் இயற்பெயர் எனப்படும். அவ்வியற்பெயர் தனக்குரிய பொருளைக் குறியாது அப்பொருளோடு சம்பந்தப்பட்ட பிறிதொரு பொருளுக்குப் பெயராக வரின் ஆகுபெயராம். அது, பொருளாகு பெயர் முதலிய பதினாறு வகையினை உடையது.
பொருளாகு பெயர்:- ஒரு முழுப் பொருளின் முதலின் பெயர் அதன் சினையைக் குறிப்பது.
உ-ம்:- தாமரை சூடினாள் 'முல்லை அணிந்தாள்"
இவற்றில் தாமரையும் முல்லையும் முதல்களாகிய கொடிகளைக் குறியாது அம்முதல்களின் சினைகளாகிய பூக்களைக் குறித்தன. இது முதலாகுபெயரெனவும் பெயர் பெறும்.
இடவாகுபெயர்:- இடத்தின் பெயர் இடத்துள்ள பொருளைக் குறிப்பது.
உ-ம்:- நல்லூர் வந்தது" அமெரிக்காவின் கோபம்"
இவற்றில் இடப்பெயர்கள் அவ்விடங்களிலுள்ள மக்களைக் குறித்தன.
காலவாகுபெயர்:- காலத்தின் பெயர் அக்காலத்து நிகழ் பொருளைக் குறிப்பது.
உ-ம்: 'கார் அறுத்தான்' 'ரோகிணி வந்தாள்"
இவற்றில் கார் என்பது கார்காலத்தில் விளையும் நெல்லையும், ரோகிணி என்பது அந்நாளில் பிறந்தாளையும் குறித்து நின்றமை காண்க.

Page 17
28 தமிழ் மரபு
சினையாகு பெயர்:- அவயவத்தின் பெயர் அதனுடைய முதற்பொருளைக் குறிப்பது.
உ-ம்:- "வெற்றிலை நட்டான் ஆறுவிரல் வந்தான்' இவற்றில் வெற்றிலை என்பது வெற்றிலைக் கொடியையும், ஆறுவிரல் என்பது அவற்றை உடையானையும் குறித்து நின்றன.
குணவாகு பெயர்:- நிறம் தன்மை என்னும் பண்புகளின் பெயர் அப்பண்புகளைக் கொண்ட பொருள்களைக் குறிப்பது. உ-ம்:- "மஞ்சள் அரைத்தாள்’ நீலம் வாங்கினாள்' இவற்றில் நிறப்பெயர்கள் முறையே கிழங்கையும் பொடியையும் குறித்தன.
தொழிலாகுபெயர்:- தொழிலின் பெயர் அதனுடைய பொருளைக் குறிப்பது.
உ-ம்:- "பொங்கல் உண்டான்', 'வற்றல் வாங்கினான்’ இவை முறையே பொங்கின சோற்றையும், வற்றிய காயையும் குறித்து நின்றன.
நீட்டலளவை ஆகுபெயர்:- அவ்வளவினையுடைய இடத்தை அல்லது பொருளைக் குறிப்பது.
உ-ம்:- "ஒரு மைல் நடந்தான்', 'இரண்டு யார் வாங்கினேன்" நிறுத்தலளவை ஆகுபெயர்:- அவ்வளவினையுடைய பொருளைக் குறிபது.
உ-ம்:- இரண்டு இறாத்தல் வாங்கினேன்? முகத்தலளவை ஆகுபெயர்:- அவ்வளவினையுடைய பொருளைக் குறிப்பது.
உ-ம்:- "அவன் அளந்த நெல்லில் இரண்டுபடி கூடுதலாக இருக்கிறது" எண்ணலளவை ஆகுபெயர்:- ஒன்று, இரண்டு என்னும் எண்ணுப் பெயர்கள் அவ்வளவினையுடைய பொருளுக்குப் பெயராவது.
உ-ம்:- 'காலால் நடந்தான்"
கருவியாகுபெயர்:- கருவியின் பெயர் அதனாலாகிய காரியத்தைக் குறிப்பது.
உ-ம்:-'திருவாசகம் படித்தான்'

சொல்மரபு 29
காரிய ஆகுபெயர்:- காரியத்தின் பெயர் அக்காரியத்தை அடைவதற்குதவியான காரணத்தைக் குறிப்பது.
உ-ம்:- இந்நூல் இரசாயனம்’ கருத்தா ஆகுபெயர்:- செய்தவனின் பெயர் அவன் செய்த பொருளைக் குறிப்பது.
உ-ம்:- திருவள்ளுவரைப் படித்தான்"
இதில் திருவள்ளுவர் என்பது அவர் செய்த குறளைக் குறித்தது. தானி ஆகுபெயர்:- தானி (இடத்திலுள்ள பொருள்) தானத்தைக் (இடத்தைக்) குறிப்பது.
உ-ம்:- 'விளக்கு முறிந்தது' 'விறகுக்கட்டை அழைத்து வா" இவற்றில் விளக்கு என்பது அஃதிருக்கும் தண்டினையும், விறகுக் கட்டு என்பது அது சுமந்து நின்றானையும் குறித்து நின்றன.
சொல்லாகு பெயர்:- சொல்லின் பெயர், அதனாற் பெறப்படும் பொருளுக்காவது.
உ-ம்:- 'பாட்டுக்கு உரை சொன்னான்"
உரை - சொல். அஃது இங்கே கருத்து அல்லது பொருள் என நின்றது.
உவமையாகுபெயர்:- உவமானம் உவமேயத்தைக் குறிப்பது.
உ-ம்:- "சிங்கம் வந்தான்'
வினாக்கள்
1. ஆகுபெயர் என்றால் என்ன? 2. அது எத்தனை வகைப்படும்? 3.இடவாகுபெயர்க்கும் தானியாகு பெயர்க்கும் உள்ள வேறுபாடு யாது? 4.கருவியாகுபெயர், கருத்தாவாகுபெயர் என்னும் இவற்றுக்கு
உதாரணம் தருக.
(ஒ) அறுவகைப் பெயர்கள்
1. பொருட் பெயர்
உ-ம்:- வேலன், திலகவதி, அந்தணர், புத்தகம், பறவைகள்

Page 18
30 தமிழ் மரபு
2. இடப் பெயர்
உ-ம்:- பொன்னாலை, யாழ்ப்பாணம், இலங்கை, ஆசியா, அகம், புறம், நிலம், விண்.
3. காலப் பெயர்
உ-ம்:- நிமிஷம், நாள், திங்கள், ஆண்டு, புதன்கிழமை, தை, நந்தன, துர்முகி.
4. சினைப் பெயர்
உ-ம்:- இலை, கொம்பு, வேர், கண், விரல், தலை.
5. குணப் பெயர்
உ-ம்: செம்மை, வட்டம், அன்பு, கொடுமை, ஒருமை, இருமை,
புளிப்பு, இனிப்பு, அண்மை, சேய்மை.
6. தொழிற்பெயர்
உ-ம்:- படித்தல், கொலை, வருகை, வாராமை.
மேற்கண்டவற்றுள் பண்புப் பெயரும், தொழிற் பெயரும் தத்தமக்கென விகுதிகளையுடையன. அவை வருமாறு:
பண்புப்பெயர் விகுதிகள்:- மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர்
உ-ம்: நன்மை, தொல்லை, மாட்சி, நண்பு, வடிவு, நன்கு, நன்றி, நன்று, இன்பம், நன்னர்.
தொழிற்பெயர் விகுதிகள்:-தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து.
உ-ம்:- நடத்தல், பாடல், வாட்டம், கொலை, வருகை, பார்வை, போக்கு, நட்பு, செலவு, மறதி, தேர்ச்சி, மறவி, கடவுள் (கடத்தல்), சாக்காடு, கூப்பாடு, தோற்றரவு, வாரானை, வாராமை, வருவது.
(ஒ) வினையாலணையும் பெயர் பெயரது இலக்கணம் வேற்றுமையேற்றல். வினையது இலக்கணம் காலம் காட்டல். இவ்விரு இலக்கணமும் ஒருங்கு உடைய சொல் வினையாலணையும் பெயர் அல்லது வினைப்பெயர் எனப்படும்.
உ-ம்:- எழுவாய் வேற்றுமை: கொன்றான் வந்தான், (கொன்றவன் வந்தான்)
2ஆம் வேற்றுமை: வந்தானைக்கண்டேன். 3ஆம் வேற்றுமை; அவன் படித்தானால் உயர்த்தப்பட்டான்.

சொல்மரபு 31
4ஆம் வேற்றுமை: பாடினானுக்குப் பரிசு கொடு. 3ஆம்வேற்றுமை:உறங்கினானிலும்விழித்திருந்தவன் மேலானவன் 6ஆம் வேற்றுமை: இறந்தானது பொருள்கள் இவை. 7ஆம் வேற்றுமை: தோற்றானிடத்தில் குறை காண்போர் பலர். 8ஆம் வேற்றுமை: கற்றானே! முன் வருக.
2. வினைச் சொல்
பொருளினது புடைபெயர்ச்சியைக் குறிக்கும் சொல் வினை சொல். அது மூவகைப்படும். அவை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாகும்.
(அ) வினைமுற்று
இஃது ஒரு வாக்கியத்தின் பயனிலையாய், திணை, பால் முதலியன காட்டி நிற்பது காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினை முற்று. குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினைமுற்று. இவ்வினை முற்றுக்கள் உடன்பாட்டின் கண்ணும், எதிர்மறையின் கண்ணும் வரும்.
தெரிநிலை வினைமுற்றின்கண் காலத்தைக் காட்டுவன பெரும் பான்மை இடைநிலைகளும் சிறுபான்மை விகுதிகளுமாம். த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள். ஆநின்று, கின்று, கிறு என்பன நிகழ்கால இடைநிலைகள், ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள்.
உ-ம்:- நடந்தான் (நட + த் + த் + ஆன்) இறந்தகாலம்
நடவாநின்றான் (நட + ஆநின்று + ஆன்) நிகழ்காலம் நடப்பான் (நட + ப் + ஆன்) எதிர்காலம்
குறிப்பு வினைமுற்றுக்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் இவற்றினடியாகப் பிறக்கும்.
உ-ம்:- அவன் பொன்னன் (பொன் + அன்) பொருள்
அவன் மலையன் (மலை + அன்) இடம் அவன் தையான் (தை + ஆன்) காலம் அவன் தலையன் (தலை + அன்) சினை அவன் கரியன் (கருமை + அன்) குணம் நடையன்(நடை + அன்) தொழில்

Page 19
32 தமிழ்மரபு
எதிர்மறை வினைமுற்றில் இல், அல், ஆ என்னும் இடைநிலைகள் எதிர்மறைப் பொருளைக் காட்டும்.
உ-ம்:- உண்டானல்லன் (அல்), நடவான் (ஆ), நடந்திலன் (இல்).
(ஆ) பெயரெச்சம்
திணை, பால் முதலியவற்றைக் காட்டாது பொருள் முற்றுப் பெறுதற்குப் பெயர்ச்சொல்லை வேண்டிநிற்பது பெயரெச்சம். முடிக்கும் பெயர்ச்சொற்கள் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவைகளாம்.
தெரிநிலைப் பெயரெச்சத்தில் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் முற்கூறிய இடைநிலைகளும் எதிர்காலத்திற்கு இடைநிலையின்றி 'உம்' என்னும் விகுதியும் வரும்.
உ-ம்:- உண்ட பையன் ra இறந்தகாலம்
உண்கின்ற பையன் - நிகழ்காலம்
உண்ணும் பையன் - எதிர்காலம்
உண்ட பையன் (முடிக்கும் சொல்; செய்பவன்)
ᏧᎦ5ᎧᏓᏪᎥᏝ
உண்ட (முடிக்கும் சொல்: கருவி)
கை, வாய்
உண்ட வீடு (முடிக்கும் சொல்: இடம்)
உண்ட செய்கை (முடிக்கும் சொல்: செயல்)
உண்ட வேளை (முடிக்கும் சொல்: காலம்)
உண்ட உணவு (முடிக்கும் சொல்: செயப்படு பொருள்)
செய்த, செய்கின்ற, செய்யும் என்பன பெயரெச்ச வாய்பாடுகளாம். செய்த என்னும் வாய்பாட்டில் சில உதாரணங்கள்:-
தந்த, வந்த, நடந்த, செத்த செய்கின்ற என்னும் வாய்ப்பாட்டில் சில உதாரணங்கள்:-
தருகின்ற, வருகின்ற, நடக்கின்ற, சாகின்ற செய்யும் என்னும் வாய்பாட்டில் சில உதாரணங்கள்:-
தரும், வரும், நடக்கும், சாகும்.
(இ) வினையெச்சம்
இது திணையும், பாலும் காட்டாது வினைச்சொல்லோரு முடிவது. இறந்த கால வினையெச்ச வாய்பாடுகள்:-
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்பன.

GaffrooLoyl 33
உ-ம்:- உண்டு வந்தான் (செய்து என்னும் வாய்பாட்டில்
வினைமுற்றோடு முடிந்தது)
உண்டு வந்த (செய்து என்னும் வாய்பாட்டில்
பெயரெச்சத்தோடு முடிந்தது)
உண்டு வந்து (செய்து என்னும் வாய்பாட்டில்
வினையெச்சத்தோடு முடிந்தது) உண்ணா (உண்டு) வந்தான்
(செய்யா என்னும் வாய்பாடு)
இவைபோல் ய், இ முதலிய விகுதிபெற்றும் இறந்தகால வினையெச்சங்கள் வருவன உள.
உ-ம்:- ஓடி
)LL வந்தான் (இகர விகுதி பெற்று இறந்தகாலம் காட்டி நின்றதுחנL தேடி
போய் நின்றாள் (ய் என்னும் எழுத்து இறந்தகாலம் காட்டியது) செய என்பது நிகழா நிற்க' என்னும் பொருளில் நிகழ்கால வினையெச்ச வாய்பாடாம். சிறுபான்மை இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்டவும். வரும்.
உ-ம்:- நான் உண்ண அவன் வந்தான் (நிகழ்காலம்)
இவ்வினையெச்சம் இறந்தகாலத்தைக் காட்டும்போது காரணப் பொருளாகவும், எதிர்காலத்தைக் காட்டும்போது காரியப் பொருளாகவும் வரும்.
a -lb.:- மழை பெய்ய நெல் விளைந்தது. (காரணப் பொருள்)
நெல் விளைய மழை பெய்தது. (காரியப் பொருள்)
எதிர்கால வினையெச்ச வாய்பாடுகள்: செயின், செய்தால், செயற்கு, செய்வானேல் முதலியன.
உ-ம்:- உண்ணில் பசிதீரும் (செயின் என்னும் வாய்பாடு)
உண்டால் பசி தீரும் (செய்தால் என்னும் வாய்பாடு) உணற்கு வந்தான் (செயற்கு என்னும் வாய்பாடு) உண்பானேல் பசி தீர்வான் (செய்வானேல்என்னும்வாய்பாடு)
முக்காலங்களிலும் வினையடி விகாரப்படுதலைப் பின்வரும் சில உதாரணங்களிற் காண்க.
காண் - கண்ட, காண்கின்ற காணும் (பெ.எ.)
கண்டு, காண, காணின் (வி.எ.)
F - செத்த, சாகின்ற, சாகும் (பெ.எ.)
செத்து, சாக, சாகின், செத்தால் (வி.எ.)

Page 20
34 தமிழ் மரபு
தா - தந்த, தருகின்ற, தரும் (பெ.எ.)
தந்து, தர, தரின் (வி.எ.) வா - வந்த, வருகின்ற, வரும் (பெ.எ.)
வந்து, வர, வரின் (வி.எ.)
(ஈ) தன்வினை பிறவினைகள்
தான் செய்வது தன்வினை. பிறனை ஏவிச் செய்விப்பது பிறவினை. தன் வினை பிறவினையாங்கால் வி. பி. கு, சு, டு, து, பு, று முதலிய விகுதிகளுள் ஒன்றையோ பலவற்றையோ ஏற்று வரும். சிறுபான்மையாக மேற்காட்டிய விகுதிகளை ஏலாது மெல்லெழுத்து வல்லெழுத்தாகியும், நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வன்றொடர்க் குற்றியலுகரங்களாகியும்
6) IOLD.
a -lb.: செய்தான் - செய்வித்தான் உண்டான் - உண்பித்தான்
போதல் - போக்குதல்
பாய்தல் - பாய்ச்சுதல் உருளுதல் - உருட்டுதல்
நடத்தல் - நடத்துதல்
எழுதல் - எழுப்புதல்
துயிலல் - துயிற்றுதல்
மெல்லெழுத்து வல்லெழுத்தாகிப் பிறவினைப் பொருள் தருதல். உ-ம்: திருந்துதல் - திருத்துதல் அருநதுதல - அருததுதல கூம்புதல் - கூப்புதல்
நெடிற்றொடரும் உயிர்த் தொடரும் வன்றொடராகிப்
பிறவினைப்பொருள் தருதல்.
உ-ம்: ஓடுதல் - ஒட்டுதல் ஆறுதல் - ஆற்றுதல் பெருகுதல் - பெருக்குதல் உருகுதல் - உருக்குதல்
(உ) செய்வினையும் செயப்பாட்டு வினையும் (Active and Passive) கருத்தா அல்லது செய்பவன் எழுவாயாக அமைந்த வாக்கியம் செய்வினை வாக்கியம். செய்யப்படுபொருள் எழுவாயாக அமைந்த வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியம். செயப்படுபொருள் குன்றிய

சொல்மரபு 35
வினைகள் செயப்பாட்டு வினைகளாகா. செயப்படுபொருள் குன்றாத வினைகள் 'படு' என்னும் விகுதி பெற்றுச் செயப்பாட்டு வினைகளாகும்.
உ-ம்:- செய்தல் - செயப்படுதல்
உண்ணல் - உண்ணப்படுதல் படித்தல் - படிக்கப்படுதல்
வினாக்கள்
1. தெரிநிலைவினை என்றால் என்ன? 2.குறிப்புவினை எவ்வெவற்றினடியாகப் பிறக்கும்? 3. பெயரெச்சங்கள் எவ்வெப் பெயர்களைக் கொண்டு முடியும்? 4. எதிர்கால வினையெச்சவாய்பாடுகள் சில கூறுக. 5. செயவென்னெச்சம் எவ்வெப் பொருளில் இறந்தகால
எதிர்காலங்களைக்காட்டும்? 6. பிறவினை விகுதிகள் யாவை? 7. செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் உள்ள வேறுபாட்டைக்
கூறுக.
(ஊ) பொதுவினைகள்
வேறு, இல்லை, உண்டு என்பன எல்லாப் பெயர்களுக்கும் பொதுவான முற்றுகளாம். உண்ட, நடந்த என்பன பெயரெச்சமாகவும் அஃறிணைப் பன்மை இறந்தகால வினைமுற்றாகவும் வரும்.
செய்யும், உண்ணும் என்பன போன்ற சொற்கள் எதிர்காலப் பெயரெச்சமாகவும் எதிர்கால முற்றாகவும் வரும். முற்றாக வரும் போது அவன், அவள், அது, அவை என்னும் எழுவாய்களை ஏற்கும் பொது வினைமுற்றாம்.
உண்பான், செய்வான் என்பன உயர்திணை ஆண்பாற் படர்க்கை எதிர்கால வினைமுற்றாகவும் எதிர்கால வினையெச்சமாகவும் வரும்.
(ஏ) ஏவலும் வியங்கோளும்
ஏவல்:- முன்னிலை ஒன்றிற்கே உரியதாய் ஒருமையில் விகுதி
பெறாதும் பன்மையில் மின், உம், இர், ஈர் முதலிய விகுதி பெற்றும் வரும்.

Page 21
36
தமிழ் மரபு
உ-ம்:- (ஒருமை) (ஒருமை) வம்மின் (பன்மை) மின் விகுதி வாரும் (பன்மை) உம் விகுதி வருதிர் (பன்மை) இர் விகுதி 611ffffff (பன்மை) ஈர் விகுதி
வியங்கோள்:- இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாய்
வரும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக் கோடல் என்னும் பொருள்களை இஃது உடையது.
உ-ம்: வாழ்க, வாழிய, வாழியர் (வாழ்த்துதல்) அழிக, ஒழிக, தாழ்க (வைதல்) கூறுக, எழுதுக, செய்க (விதித்தல் - கட்டளையிடுதல்) அருளுக, காக்க, இரங்குக (வேண்டிக் கோடல்)
வினாக்கள்
1. வினைச்சொற்களிற் பொதுவானவை சில கூறுக. 2.பன்மை ஏவல் விகுதிகள் யாவை?
3.வியங்கோள்வினைமுற்று எவ்வெப் பெயர்களை எழுவாயாக ஏற்கும்? 4.வியங்கோள்வினைமுற்று எவ்வெப் பொருளில் வரும்? 5. ஏவலுக்கும் வியங்கோளுக்குமுள்ள வேறுபாடுகள் சில கூறுக.
(ஏ) மரபு பற்றிய சில வினைச் சொற்கள்
சில வினைகள்
1.
அடிவினைகள்:
அடிக்கீழ்ப்படுதல் - ஆணைக்குள்ளாதல் அடிநகர்தல் - இடம்விட்டுப் பெயர்தல் அடிப்படுதல் - கீழ்ப்படிதல், பழமையாக வருதல் அடிபிடித்தல் - அடிச்சுவடுபற்றிப் பேசுதல், துப்பறிதல் அடிபிழைத்தல் - நெறிதவறி நடத்தல் அடிபிறக்கிடுதல் - பின்வாங்குதல், தோற்றோடுதல் அடியிடுதல் - தொடங்குதல் அடியொற்றுதல் - பின்பற்றுதல் அடிவிளக்குதல் - பாதங்கழுவியுபசரித்தல்

சொல்மரபு 37
d.
கண்வினைகள்:
கண்கலத்தல் - ஒருவரையொருவர் பார்த்தல், எதிர்ப்படுதல் கண்கனலுதல் - கோபத்தால் கண் சிவத்தல் கண்காட்டி விடுத்தல் - கண்சாடையால் ஏவிவிடுதல் கண்கெடச் செய்தல் - அறிந்திருந்து தீமைசெய்தல் கண் சாத்துதல் - கண்கொண்டு பார்த்தல் கண் சுருட்டுதல் - அழகினால் வசீகரித்தல், தூக்கமயக்கமாதல் கண்டுகழித்தல் - வெறுப்புண்டாகும் வரை நுகர்ந்து விலக்குதல் கண்ணளித்தல் - பதவுரை கூறுதல் கண்ணறுதல் - அன்பு குறைதல் கண்ணாற் சுடுதல் - கண்ணேறுபடப் பார்த்தல் கண்ணிற்றல் - எதிர் நிற்றல்
(கண்ணின்றுகண்ணறச் சொல்லிலும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் - திருக்குறள், 184) கண்ணுக்குக் கண்ணாதல் - மிக அருமையான உறவாதல் ಇಂತ್ಲಿಲ್ಲகேல் } -திருட்டி பரிகாரம் செய்தல் கண்ணெறிதல் - கடைக்கண்ணாற் பார்த்தல் கண்ணோடுதல் - இரங்குதல் கண்திறத்தல் - அறிவுண்டாகுதல், கல்விகற்பித்தல் கண்படுதல் - தூங்குதல், திருஷ்டிபடுதல் கண்புதைத்தல் - அறிவு கெடுதல் கண் மலர்தல் - விழித்தல் கண்முகிழ்த்தல் - கண்மூடுதல், தூங்குதல் கண் வளர்தல் - தூங்குதல் கண்வாங்குதல் - கண்ணைக் கவர்தல் கண்விடுதல் - துளையுண்டாதல் கண்விரும்புதல் - காதலர் ஒருவரை ஒருவர் விரைந்து காண
விரும்புதல் கழுத்துவினைகள்: கழுத்திற் கட்டுதல் - வலிந்து பொறுப்பாளியாக்குதல் கழுத்துக் கொடுத்தல் - தம்வருத்தம் பாராமற் பிறர் காரியத்தை ஏற்று
நிற்றல், வாழ்க்கைப்படுதல் கழுத்தை முறித்தல் - வருத்துதல்
காது வினைகள்:
காதிலடிபடுதல் - ஒரு செய்தி அடிக்கடி கேட்டல்
காதுகுத்துதல் - வஞ்சித்தல்
காதைக் கடித்தல் - காதோரமாக முகத்தை வைத்து மறை
பொருள் சொல்லுதல், கோள் சொல்லுதல்

Page 22
38
தமிழ் மரபு
6.
கால்வினைகள்:
கால் கிளர்தல்- ஓடுதல், படையெடுத்துச் செல்லுதல் கால் கெஞ்சுதல் - கால் ஓய்ந்து நடக்கமுடியாதிருத்தல் கால் கொள்ளுதல் - விழாவிற்குத் தொடக்கம் செய்தல் கால் சாய்தல் - கெடுதல், அழிதல் கால் பின்னுதல் - நோயினாற் கால்கள் ஒன்றுக்கொன்று குறுக்காதல் காலாடுதல் - முயற்சியாற் செல்வஞ் சிறந்திருத்தல் காலாறுதல் - நடை ஓய்ந்து இளைப்பாறுதல் காலூன்றுதல் - பந்தற்கால் நடுதல், மழைக்கால் இறங்குதல் காலைச் சுற்றுதல் - தொடர்ந்து பற்றுதல் காலோடுதல் - ஒரு காரியத்தில் முயற்சியுண்டாதல்
கைவினைகள்:
கைகலத்தல் - தழுவுதல், கூடுதல், சண்டையிடுதல் கைகவித்தல் - கைச்சாடையால் அடக்குதல், அபயமளித்தல் கைகாட்டுதல் - திறமை காட்டுதல் கைகொடுத்தல் - துன்பத்தில் உதவி செய்தல் கை கோத்தல் - நட்புச் செய்தல் கை சோர்தல் - கைவிட்டுப் போதல், வறுமையடைதல் கை தலைவைத்தல் - பெருந்துயரடைதல் கை தளர்தல் - வறுமையடைதல் கை தாங்குதல் - கேடடையாமற் காத்தல் கை திருந்துதல் - கையெழுத்து, வினைத்திறமை முதலியன திருந்துதல் கை தீண்டுதல் - தீய நோக்கத்தோடு தொடுதல் கை துடைத்தல் - விட்டு நீங்குதல் கை தூக்கி விடுதல் - வறுமையில் அல்லது துன்பத்திற் காத்தல் கை நிமிர்தல் - வளர்ந்து பருவமடைதல் கை நீட்டுதல் - அடித்தல், இரத்தல், கொடுத்தல், திருடுதல் கை நாட்டுதல் - கையெழுத்திடுதல் கை நெகிழ்தல் - கை தவறவிடுதல் கை நொடித்தல் - செல்வநிலை கெடுதல் கைப்பிடித்தல் - மணஞ் செய்தல் கைப்பிடியாய்ப் பிடித்தல் - கையும் களவுமாய்ப்பிடித்தல்,
நேரிற் கையாற் பிடித்தல் கை பூசுதல் - உண்ட கையைக் கழுவுதல் கைம் மறித்தல் - கையாற்றடுத்தல் கைம் மிகுதல் - அளவு கடத்தல் கைம் முகிழ்தல் - கைகூப்புதல் கைம் மாறுதல் - ஒருவர் கையினின்று மற்றொருவர் கைக்குப் போதல்

சொல்மரபு 39
கையடைத்தல் - பிறர் கையில் ஒப்புவித்தல் கையமர்த்தல் - கையிற் சைகை காட்டி அமைதியாய் இருக்கச் செய்தல் கையறுதல் - ஒன்றும் செய்ய முடியாமல் வருந்துதல் கையைக் கட்டுதல் - ஒன்றும் செய்ய விடாமல் தடுத்தல் கையைக் கடித்தல் - நட்டமாதல் கை வருதல் - ஒன்றைச் செய்யக் கையெழுகை, தேர்ச்சி பெறுதல் கை விதிர்த்தல் - மறுப்பு, அச்சம் முதலியவற்றைக் குறித்துக்
கையசைத்தல் கை விரித்தல் - இன்மை குறித்தல், கொடை மறுத்தல்
செவிவினைகள்:
செவிசாய்த்தல் - இணங்கிக் கேட்டல் செவி தின்னுதல் - மறைபொருளாக ஒதுதல் செவிப்படுதல் - கேட்கப்படுதல் செவிமடுத்தல் - கேட்டல் செவியறிவுறுத்தல் - நல்லறிவு புகட்டுதல்
தலைவினைகள்: தலை காட்டுதல் - தன்னைக் காட்டுதல், பலருமறிய வெளிவருதல்,
நன்னிலமைக்குவரத்தொடங்குதல் தலைக்கூடுதல் - ஒன்றுசேர்தல், நிறைவேறுதல் தலை தடுமாறுதல் - கலக்கமடைதல், சீர்குலைதல் தலைப்படுதல் - கூடுதல் தலை மயங்குதல் - கலந்திருத்தல் தலையளி செய்தல் - முகமலர்ந்து இன்சொற் சொல்லுதல் தலையால் நடத்தல் - செருக்கி முறைமாறி நடத்தல் தலைவிரித்தாடுதல் - அடங்காமை தலையைத் தடவுதல் - வஞ்சித்தல், ஏமாற்றிப் பொருள் பெறுதல்.
முக வினைகள்:
முகங் காட்டுதல் - காட்சி கொடுத்தல் முகஞ் செய்தல் - நோக்குதல், தோன்றுதல் முகந் தருதல் - பட்சம் காட்டுதல் முகந் திருத்துதல் - வாட்டம் திருத்துதல் முகம் புகுதல் - அருளுக்காக எதிர் சென்று நிற்றல் முகமறுத்தல் - கண்ணோட்டமின்றிப் பேசுதல் முகமாதல் - உடன்படுதல் முகமறிதல் - இன்னாரென அடையாளம் தெரிதல் முகமறித்தல் - கண்ணோட்டம் கெடுதல், வெறுப்படைதல்

Page 23
40
தமிழ் மரபு
வினாக்கள்
1.அடியொற்றுதல், கண்ணோடுதல், கால் கொள்ளுதல், கையறுதல் என்பவற்றின்மரபுப் பொருள்விளங்க வாக்கியங்கள் அமைக்குக.
2.கைவருதல், செவிமடுத்தல், தலையளி செய்தல் என்பவற்றின்
பொருளை எழுதுக.
3. வஞ்சித்தல், உறங்குதல் என்பவற்றுக்குரிய சினை வினைகள் யாவை?
(ஐ) பெயராகவும் வினையாகவும் வழங்கும் சொற்கள்
சொல்
அகல்
9L4
96). அணி
அனை அமர்
அLைD அரி
அரை
அலை
இசை
இரை 9 (5)
26)
2D -60).J
pis ஊழ்
ஊறு எட்டு
பெயர்
விளக்குத்தகழி பாதம் வெற்றிலை ஆபரணம் மெத்தை GLinii மூங்கில் சிங்கம், விஷ்ணு இடைப்பாகம்
56LGROGOGR) தேவருணவு அருள், அன்பு புற்று, தயிர் ஒரு பிராணி அடிமை, வளர்ந்த ஆள் நதி, வழி புகழ், சங்கீதம் இடி, மா
உணவு நட்சத்திரம்
ஆடை சொற்பொருள் கம்மானுலை நாடு பழவினை துன்பம் ஓரிலக்கம்
வினை
அகல், நீங்கு
அடி
GFfi
அலங்கரி
Ֆ(Աք6ւ! பொருந்து அடங்கு
அரி
அரை
960)G)
அவி
கொடு
தீண்டு
9lᎶᏡᏪ* அரசுசெய் இளைப்பாறு உடன்படு, பொருந்து இடித்தலைச் செய் ஒலிசெய்
தரி
சிதை கூறு, மருந்துரை வருந்து ஊர்ந்து செல் முதிர், மலர்
岳贝 அகப்படு, தாவு

சொல்மரபு
41
சொல்
எண் எரி
6T(Լք ஏறு ஒன்று
ஒடு é5Lq?-
Ꭿ5ᎶᏈᎠᏌ
ᏧᏏᎶᏍᏈᎠᎶᏄᎧ
காது காய் கால்
குடி குலை குன்று கூடு
கூறு கேள் छ)ि சிலம்பு சூடு செய் செல் சொல் சோதி
தறி
தடி தட்டு தாளி திரி தீட்டு
gll. தூக்கு தேர்
தை தோல்
பெயர்
இலக்கம் நெருப்பு
துரண இடபம், ஆண் சிங்கம் ஒரு பொருள் பிரகாசம் மண்டை ஒடு, கூரை ஒடு காவல், கூர்மை ஒரம் ஆண் மான் செவி
காய்
ஓர் உறுப்பு குடும்பம் (பழக்) குலை
Dog) (பறவைக்) கூடு பகுதி
சுற்றம் வளையல் சிலம்பு, மலை வெப்பம்
வயல் கறையான் சொல், நெல் பிரகாசம் (யானை கட்டும்) தறி தண்டு
g5L-L-LD
Lđ6ổ} &ổT (விளக்குத்) திரி அழுக்கு
முரசு
Luntu "G8)
இரதம் (தை) மாசம் (உடலின்) தோல்
வினை
நினை எரிதலைச் செய் எழும்பு
ஏறு
சேர் மறைந்திரு ஒடு நீக்கு, கடித்திடு கரைத்தலைச் செய் ዚ ፃff] கொல், கூறுசெய் கோபி, உவர் கக்கு, தோற்றுவி பருகு கட்டவிழ் கெடு, தேய் Geri
சொல் கேட்பாயாக சாய்
ஒலி
அணி
செய்
חנGL
கூறு தேர்வுசெய் துண்டுசெய் குறைத்திடு அடி தாளிதம் செய் சுற்றித் திரி எழுது, வரை Ֆlւգ
தூக்கு தெரி, தெளி
தை தோற்றுப்போ

Page 24
42 தமிழ் மரபு
சொல் பெயர் வினை
நடு நடுப்பகுதி நாட்டு நாடு தேசம் அணுகு நிரை பசுக்கூட்டம் ஒழுங்காக்கு நுங்கு பனையினிளங்காய் விழுங்கு நூல் புத்தகம் நூற்றலைச் செய் நேர் ஒப்பு உடன்படு நொடி விடுகதை சொல்லு பதி தலைவன், ஊர் இருத்து பாவி பாவம் செய்தவன் பாவனை செய் பினை பெண்மான் கட்டு புடை பக்கம் அடி பொறி (ஐம்)பொறி, கருவி பொறித்தலைச் செய் மதி சந்திரன், புத்தி மதித்தலைச் செய் LD fTg)} கோல், விளக்குமாறு வேறுபடு நீங்கு (pl. Sffl Lib முடிவுசெய் மெழுகு மெழுகு மெழுகிடு வடி கூர்மை வடித்தலைச் செய் வாசி குதிரை படி விரை E6 விரைந்து செல் வீடு இல்லம் விட்டு நீங்கு வேள் முருகன், மன்மதன் விரும்பு, மணம் செய்,
யாகஞ்செய் go கூர்மை ஏசு, வைத்திடு
பேதச் சொற்கள்
லகர ழகர ளகரங்கள்
இவ்வெழுத்துக்கள் ஒலியிலும் பொருளிலும் வேறுபாடுடையன. இவற்றைத் திருத்தமாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் எழுதும்பொழுதும் பிழைபட எழுதுவர், அரசன் நாட்டை அளித்தான் என்பதற்குப் பதிலாக அரசன் நாட்டை அழித்தான் என்று எழுதின் பொருள் முற்றும் மாறுபடுகின்றது. பின் வரும் சொற்களையும் அவற்றின் பிரயோகங்களையும் அவதானிக்குக.
அலை: காட்டில் வழிதெரியாது அலைந்தேன்
அழை: துன்பம் நேர்ந்தபோதெல்லாம் என் நண்பன் என்னை அழைத்து
யோசனை கேட்பான்.
அளை: சிறுவர்கள் சோற்றை அளைந்து சிந்துவார்கள்.

சொல்மரபு 43
தலை:
தளை
மாட்டின் தலையில் கொம்பு உண்டு.
ஆடு தழை தின்னும். பால் கறக்கும்பொழுது சிலர் மாட்டின் பின் காலில் தளையிடுவர்.
லகர ழகர ளகர பேதச் சொற்கள்
அலகு - அளவு, கதிர், கூர்மை
அழகு - கவின், சிறப்பு
அளகு - அன்னப்பேடை, பெண் மயில், பெண்கோழி அலம் - கலப்பை, சஞ்சலம், அலமரல் அழம் - பிணம்
அளம் - உப்பளம், கூர்மை, களர் நிலம் s:9)GVg)) - அலரென்னேவல், கதறு
அளறு - காவிக்கல், நரகம், சேறு
அலி - ஆண்பெண்ணல்லாதது, நெருப்பு அழி - கெடு, குலை
அளி - கொடு, அருள், வண்டு
அலை - திரி, வருந்து, கடலலை
அழை - கூப்பிடு, வரவழை
அளை - கல, தயிர், புற்று
ஆலல் - ஆடல், ஒலித்தல் ஆழல் - அமிழ்ந்துதல்
ஆளல் - ஆட்சிசெய்தல்
ஆலி - களி, ஒலி, ஆலங்கட்டி, மழைத்துளி ஆழி - கடல், மோதிரம், சக்கரம்
ஆளி - ஆளுபவன், சிங்கம், யாளி இலை - தழை
இழை - செய், ஆபரணம், நூல்
இளை - மெலி, தளர், காவற்காடு
இலி - இல்லாதவன்
இழி - இழிவுபடுத்து, நிந்தி, இறங்கு
இளி - இகழ்ந்து சிரி, இசைவகையில் ஒன்று உலவு - உலாவல்
உழவு - வேளாண்மை உளவு - ஒற்று, இரகசியத்தால் அறிந்த செய்தி உழி - இடம், பக்கம்
உளி - இடம், ஒரு கருவி
2 ᎧᏛᎠᎧᏂᎧ - அலை, நீரலை, கொல்லன் உலை உழை - பிரயாசப்படு, இடம், மான்,
இசைவகையினொன்று 6) - வருத்து, குதிரையின் பிடரிமயிர், அழுகை

Page 25
44
தமிழ் மரபு
go
கழை
Sag
காலம் காழம் காளம்
காலி
காழி காளி
சூலை சூளை
சத்தம் செய், சத்தம்
முடித்துவிடு, தவிர் மறை, பிரகாசி, வெளிச்சம், விளக்கு குழப்பம், சண்டை சபை கல்வி பயிலிடம் பெருச்சாளி, நெற்கதிர் பெருக்கு, பொலி, அம்பு, ஒருபா, கலியுகம் இன்புறு வெற்றிகொள், உவகை, களிமண், உண்ணும்களி நிலைகுலை, ஒட்டு, நீக்கு, ஆண்மான், கலைஞானம், சந்திரகலை கரும்பு, மூங்கில் இளைப்புறு, அகற்று, அயர்வு, புல் சமயம், பொழுது
உறுதி
கருமை, மேகம், நஞ்சு பசு, காலையுடையது
சீகாழி, உறுதி
பத்திரகாளி
Lub
துண்டுசெய், சீலை, எழுதுபடம், (பொன்) முடிப்பு
கிள்ளை
விலங்கின் காற்குளம்பு கலங்கு, நிலைகுலை, உண்ணும் குழம்பு குழியாக்கு, பள்ளம், ஒருநில அளவு, வயிறு நீராடு, முத்துக்குளி ஒளி, நிறம், உவமை செவிகொடு, வினாவு, உறவு, அன்பு, நண்பன் உல்லாச வீற்றிருப்பு, கொலுமண்டபம் தழை, பலங்கொள், கொழுப்பு, கலப்பைக்கொழு கருத்து விளக்கும் சொற்றொடர், கருத்து கம்பு, அம்பு, எழுதுகோல்
செழிப்பான
கிரகம், கோட்சொல் தோண்டு, கருக்கொள், கருப்பம் சுற்று, ஆராய், சூழ்ச்சி ஆணை, சபதம், தீவர்த்தி ஒரு வகை நோய்
சுண்ணாம்புச் சூளை

சொல்மரபு 45
சோழன் சோளன்
தலை தழை தளை தாலி தாளி தால் தாழ்
தாள்
தூழி
துலை துழை துளை தெழி தெளி தோழன் தோளன் நாழி நாளி நுழை நுளை Լմ էք (95 பளகு
LUQU?
Lu G5 பீழை பீளை
ԼlԼՔ (5 புளகு Ա6ծեք பூளை பொலிதல் பொளிதல் பொழிதல் (Մ)ւp 65/ முளவு (ԼՔԼՔ ո: முளா
சோழ தேயத்தவன் சோளத் தானியம் சிரசு, தலைமை, இடம் செழி, இலை, தளிர் கட்டு, அடக்கு, கால்விலங்கு, சிறை மங்கலநாண் தாளிதம் செய், ஒரு கொடி தாலாட்டு, நா தாழு, பணி, பொழுதுதாழ், தாழக்கோல், மதகடைக்கும் பலகை பாதம், நெற்றாள் வெட்டுப் பள்ளம் ஒழுகு, தெறி, திவலை, பெண்ணாமை ஒப்பு, தராசு, இறைதுலை துழாவு துவாரமிடு,துவாரம், குழல் அதட்டு, துவை, முழக்கம் துரவு, வடி, ஆராய், ஒளி, தெளிவு நணபன
தோளையுடையவன் நாழிகை, ஒருபடி
கள, நாய புகு, நுண்மை, குகை, துவாரம் குருடு, வலைச்சாதி
பயில்
குற்றம்
முற்று
L U TULD
துன்பம், பீடை
கண்ணழுக்கு
மலையெருக்கு புளகம் (மயிர்சிலிர்த்தல்) துவாரம் இலவம்பஞ்சு, ஒரு செடி மிகுதல்
துளை செய்தல்
சொரிதல்
முரசு
முட்பன்றி
மேளம்
முள்ளங்கி

Page 26
46
தமிழ் மரபு
விழா விளா விழி விளி விழை
விளை
குகை முளைதோன்று, பயிர் முளை, தறி, மூங்கில் egyéb L 1601 1 காதறை, விளிம்பற்றது அகப்பை தலையின் உள்ளுறுப்பு கூடு, நெருப்புப் பற்று முகிழ் கடினமாய் வாங்கு, வலிமை மிகுந்தவடி, துடைத்தெடு, நெறி, மரவு, மகன் காறறு வாழ்க அம்பு, மாதர், காதணி வாழை மரம் ஒரு வகை மீன் விலாப்பக்கம் திருவிழா விளாமரம் பார், கண் அழை, அழைப்பு, ஓசை விரும்பு உண்டாகு, தானியம், முற்று
பயிற்சி
1. பின்வருவனவற்றை வாக்கியங்களில் அமைக்குக.
உளி, உழி, இளை, இழை, குளி, குழி, வாளி, வாழி, குளவி, குழவி.
2. பின்வருவனவற்றைப் பெயராகவும் வினையாகவும் உபயோகிக்குக.
அளி, கழி, இழை, ஆள், ஒளி, தொழு.
3. பின்வருவனவற்றிலுள்ளழகர, ளகரப்பிழைகளைத்திருத்துக.
(அ) அவனது கட்டுரையில் பல பிளைகள் உள்ளன.
(ஆ) நேரு அவர்கள் சிறுவர்களுக்குப் பல பரிசுகளை அழித்தார்கள். (இ) இவ்பொழுது நாமே நம்மை ஆழுகிறோம். (ஈ) வெள்ளிக்கிளமை எங்களுக்கு விடுமுறை.
ரகர றகரங்கள்
றகரம் வல்லினத்தைச் சேர்ந்தது; ரகரம் இடையினத்தைச் சேர்ந்தது. இரண்டினதும் ஒலி வேறுபாட்டையும் பொருள் வேறுபாட்டையும் அறியாதவர் பேச்சிலும் எழுத்திலும் பிழைவிடுவர். உதாரணமாக, மரம் என்பதற்குப் பதிலாக மறம் என்று எழுதின் எவ்வளவு விபரீதமாய் முடியும்.

சொல்மரபு 47
அரி:
i stíl:
LOGODI:
மறை:
தச்சன் மரத்தை அரிந்தான். மாணவன் பாட்டின் பொருள் அறிந்தான். இராமன் ஏழையின் துயர்கண்டு பரிந்து பொருள் கொடுத்தான். திருடன் வழிமறித்து எனது பொருளைப் பறித்தான். காட்டில் மரைகள் வாழுகின்றன. திருக்குள் தமிழ் மறை எனப்படும்.
ரகர றகர பேதச் சொற்கள்
அரம் - அராவும் கருவி அறம் - புண்ணியம் அரவு - பாம்பு, ஒலி அறவு - ஒடிவு, அறுபட்டவிடம் அரன் - சிவன் அறன் - அறக்கடவுள், அறம் அரி - அறு, திருமால், சிங்கம், வண்டு அறி - உணர் ←9ሃGUj - அணு, உருவமற்றது, அட்டை அறு - வெட்டு அருகு - பக்கம், அணை, சுருங்கு SPIDI (35 - அறுகம்புல், சிங்கம் அரும்பு - மொட்டு, முளை அறும்பு - கொடுமை, பஞ்சகாலம் அரை - பாதி, தேய் அறை - மோது, வகுத்த இடம் 马贝 - நிறைய, நுகர ஆற - ஆறுதலடைய இர - யாசி, இரா இற - grfT இரங்கல் - உருகல் இறங்கல் - கீழ்வரல் இரவி - சூரியன், எருக்கு இறவி - சாதல் இரவை - அணு, அற்பம் இறவை - ஒளி, இறைகூடை இரா - இரவு, இருத்தலைச் செய்யா இறா - இறால் மீன் ヘー இரு - பெரிய, இரண்டு, கரிய இறு - ஒடி, இழி, தங்கு
இரும்பு - கரும்பொன்

Page 27
48
5udlp udvL
இறும்பு இரை இறை உரப்பு உறப்பு உரல் உறல்
உரவு
Զ-Ա96ռ! 2 fl உறி உரிஞ்சு உறிஞ்சு உரு
உறு உறுக்கல் Զ-(5(ԼՔ Զ-Ա)/(Մ)
உரை
உறை உரு
ஊறு 6 Iri)
ஏரல் ஏறல் ஒரு
ஒறு
கர
கற கரடு கறடு கரி கறி
கரு
கறு
ᎯᏏ6Ꮘ0Ꭰr
கறை
6)fl
இளமரக்காடு, அதிசயம் இருப்பு, உணவு, ஒலி ஊற்று, அணு, அரசன், கடவுள், திறை அதட்டு, திண்மை
செறி குத்தும் உரல், திட்டை உறுதல், கிட்டல் அறிவு, வலிமை சுற்றம், சேர்க்கை கழற்று, அரைப்படி பொருள் வைக்கும் உறி தேய், உராய்
உள்ளிழு
கோபி வடிவம் மிகுதி, மிக்க, பொருந்து அதட்டல்
இடி
மேக முழக்கு
தேய், சொல் இரு, கவசம், பிரை அச்சம் தொடை சுர, இடையூறு, தழும்பு எரியென்னேவல், தீ வீசு, அழி
கிளிஞ்சல்
ஏறுதல் ஒன்று என்பதன் திரிபு, ஆறு தண்டி, அடக்கு ஒளித்துவை, திருடு பாலகற, கவா கற்பரடு, சருக்கரை, சிறு குன்று தாழ்தரமான முத்துவகை கருகு, அடுப்புக்கரி, யானை, சாட்சி கடி, மிளகு
சினை, கரிய கோபி, கருமையாகு தேய், அரை, எல்லை விஷம், உரல், கறுப்பு மலை, பன்றி

சொல்மரபு 49
கிறி குரவன் குறவன் (ტ([b குறு குரை குறை
கூரி
கூற
Son GOD
கூறை சூரை சூறை செரு செறு G)gFTf சொறி தரி
தறி தாரு தாறு திரை திறை
துறை தெரி தெறி தெரு தெறு தேருதல் தேறுதல்
நரை
நறை நிரை நிறை நெரி நெறி ԼlՄLDւկ பறம்பு
பொய், வஞ்சம்
ஆசான்
குறச்சாதியான் குரவன், வியாழன் குறுகு, குற்று ஒலி, குளம்பு குறைவு, குற்றம்
மிக
சொல்ல வீட்டின் மேற்புறம்
சீலை
ஒரு செடி, கள் கொள்ளை, சுழல் காற்று சண்டை கொல்லு, வெறு, வயல் உதிர், தினவு சொறியென்னேவல், சொறி சிரங்கு அணி, தங்கு வெட்டு, கட்டுத்தறி
மரம் அங்குசம், வாழைக்குலை திரையென்னேவல், அலை கப்பம் அதிகாரி, மேன்மகன் வழி, இறங்குதுறை தோன்று, ஆராய் தெறியென்னேவல்
வழி
அழி
ஆய்தல், யோசித்தல் தெளிதல், நிச்சயித்தல் வெண்மை கள், குற்றம், வாசனை ஒழுங்காக்கு, ஒழுங்கு, பசுக்கூட்டம் நிரம்பு, நிரப்பு, உறுதிப்பாடு, எடை நெருக்கு, புரி
சுழி, வழி மட்டப்படுத்தும் பலகை பாரியின் மலை

Page 28
50
தமிழ் மரபு
LI TGO)6)
பறவை பரி பறி
Lintag
பாறை
பிரை பிறை புரம் புறம் பொரி பொறி மரம் மறம் மரி மறி LD (gj5
LDg)
D60) py
மறை முரி முறி 6AlՄt lt-! வறப்பு விரகு விறகு விரல் விறல்
கடல், பரப்பு, சுந்தரர் மனைவி புள் பரிவுசெய், குதிரை, அன்பு பறியென்னேவல், பெய்யும் கூடை இருப்புலக்கை, கடப்பாரை கற்பாறை உறை மோர் இளமதி நகரம், உடல், வீடு இடம், முதுகு, பின்பக்கம் பொரியென்னேவல், நெற்பொரி தீப்பொறி, இலக்குமி, பொறியென்னேவல் விருகூடிம் வீரம்
&ዎ*በr பெண் ஆடு, பெண்மான், மறியென்னேவல்
666 மறுவென்னேவல், குற்றம், மற்ற மானினம் ஒளி, வேதம் ஒடி திரை, தளிர் வரம்பு வறுமை, வறுத்தல் உபாயம், புத்தி எரிகட்டை கைவிரல், கால்விரல் பெருமை, வீரம்
பயிற்சி
1.பின்வருவனவற்றை வாக்கியங்களில் உபயோகிக்க.
கரி, கறி, பரவை, பறவை, இர, இற, கரை, கறை, விரகு, விறகு, இரை,
இறை.
2. பின்வருவனவற்றைப் பெயராகவும் வினையாகவும் வாக்கியங்களில்
அமைக்குக.
அரி, தறி, முறி, பரி, மாறு.
3. பின்வரும் வாக்கியங்களைத்திருத்திஅமைக்குக.
கடக்கரையில் நின்ற கப்பலிலிருந்து சில மாலுமிகள் இரங்கினார்கள். கற்றவறை எல்லோரும் மதிப்பர்.

சொல்மரபு 51
னகர னகரச் சொற்கள்
ணகர னகரங்கள் முறையே டகர றகரங்கட்கு இனவெழுத்துக்கள்: ஆகவே ணகரத்திற்குப் பதிலாகவோ அன்றி ணகரத்தோடு சேர்த்தோ னகரத்தை எழுதல் பிழை. மண் என்பதற்குப் பதில் மன் என்று எழுதுதலும், மண்ணுதல் என்பதற்குப் பதில் மன்னுதல் என்று எழுதுதலும் தவறானவையாகும்.
கணி; வானூல் வல்லார் கிரகணத்தை முன்னரே கணித்துக் கூறுவர். கனி: கனிந்த பேச்சுடையவர்களை யாவரும் விரும்புவர். ஆனை: குடிகள் அரசன் ஆணைக்கு அடங்கி நடத்தல் வேண்டும். ஆனை ஆனையைக் கட்டிப் (நெற்) போரடித்தார்கள் நம் முன்னோர். திணை ஆறறிவுடைய மக்களை உயர்திணையில் அடக்குவர். தினை வினை விதைத்தவன் வினையறுப்பான். தினை விதைத்தவன்
தினையறுப்பான்.
னகர னகர பேதச் சொற்கள் அணல் - மேல்வாய்ப்புறம், அலைதாடி அனல் - நெருப்பு அணையார் - பகைவர் அனையார் - ஒத்தவர்
அண்மை - சமீபம் அன்மை - அல்லாமை
அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணம் - மேல்வாய், உண்ணாக்கு ஆணம் - குழம்பு, அன்பு
ஆனம் - மரக்கலம், தெப்பம் ஆணி - இரும்பாணி, உரையாணி ஆணி - ஆனிமாதம், உத்திராடம் ஆணை - கட்டளை, சபதம்
ஆனை - Liggs
ஆண் - ஆண்மகன், ஆண்மை ஆன் - { ! á፡
இணி - தளை, அணி, எல்லை இனி - இப்பால், பின்னால் இணை - ஒத்திரு, கூட்டு, இரண்டு, துணை இனை - வருந்து, வருத்து, இத்தனை உண்ணல் - சாப்பிடுதல் உன்னல் - நினைத்தல்
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்

Page 29
52
தமிழ் மரபு
எட்டுப்பேர்
என்று சொல்வர்
வளைவு
தினை
சூடு
Lugb Gold
கூட்டம்
பருமை, பெருமை
மதி, எண்ணு, கணிப்போன்
பழு, இளகு, பழம்
அம்பு, திரட்சி
ஒலி, நெருங்கு
பொருள், கொள்ளுத்தானியம்
காடு, இசைப்பாட்டு
பார்த்தல்
கடற்கரைச் சோலை
சிறுவட்டில்
துன்பம், கீழ்மை
கணி, குணமுடையது
6.16ð)GIf
ஆற்று, அவி
தனித்த
நிலம், குலம், ஒழுக்கம்
சிறுதானியவகை, சிறுமை
கூறுபடுத்து, தெளி, ஆடை
துன்பம், அச்சம், புலவி, நீட்டம்
ஆதரவு, இரண்டு
விரைவு
அணிமையான இடம்
மிகுதி
சினேகம்
நன்மை
அணுகுதல்
நறுக்குதல், நல்ல நெற்றியையுடையவள்
வெட்கம்
கஸ்தூரி, முழுகுதல்
வணங்கு, கட்டளையிடு, பாம்பு, ஆபரணம்
வருந்து, நடுங்கு, பெய்யும் பணி, துக்கம்
அம்பு
பருகுவன

சொல்மரபு 53
புணை
புனை மனம் மனம்
LO 6ð) 6ððI -
Ꮏ ᏝoᎧᏡᎠ ᎧᏈᏤ மாணவர் - மானவர் -
வெப்பம்
அலங்கரி
கலியாணம், வாசனை
உள்ளம்
பலகை, மழுங்கல்
வீடு
கற்போர்
படைவீரர், மானமுடையோர், மனிதர்
பயிற்சி
1.கண்ணி, கன்னி, மணை, மனை, பணை, பனை, உண்ணுதல்,
உன்னுதல் இவற்றை வாக்கியங்களில் அமைக்குக.
2. பின்வருவனவற்றிலுள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
(அ) அவன் எண்ணை வரச்சொண்ணான்.
(ஆ) கண்னால் கான்பதெல்லாம் பொய்யா?
(இ) பாரத பூமியைப் புன்னிய பூமி என்பர்.
3.பின்வருவனவற்றைப் பெயராகவும் வினையாகவும் பிரயோகிக்க:
இணை, கணி, பணி, நனை, முனி.
வல்லொற்று மெல்லொற்றுக்களால் பொருள் வேறுபடும் சொற்கள்
வினைச் சொல்லின் பகுதி ஒன்றேயாயினும் அது அடுத்துவரும் வல்லொற்று மெல்லொற்றுக்களால் பொருள் வேறுபடும். அப்பொருள் வேறுபாடு இருவகை. முற்றாக வேறுபடுதல், தன்வினை, பிறவினைகளாக வேறுபடுதல் என்பன அவை.
உதாரணமாக விளிந்தான் என்பது கெட்டான், செத்தான் எனப் பொருள் தரும். விளித்தான் என்பது அழைத்தான் எனப் பொருள்படும். அணைத்தான் என்பது தான் (ஒன்றைச்) சேர்த்தான் எனவும் அணைந்தான் என்பது தான் பிறிதொன்றைச் சேர்ந்தான் எனவும் பொருள் தரும்.
அரிந்தான் - அரித்தான் திரிந்தான் - திரித்தான் பரிந்தான் - பரித்தான் கடிந்தான் - கடித்தான் படிந்தான் - படித்தான்
முற்றும் வேறுபடுவன
துணிந்தான் - துணித்தான் வரிந்தான் - வரித்தான் களைந்தான் -களைத்தான் அடைந்தான் - அடைத்தான்

Page 30
54 தமிழ் மரபு
நகரமும் னகரமும்
மாணவர் சிலர் இவ்விரு எழுத்துக்களின் வேறுபாடறியாது பிழைபட எழுதுவர். கூறினான் என்பதைக் கூறிநான் என்றும் இந்நாடு என்பதை இன்னாடு என்றும் எழுதுகிறார்கள். இங்கே ஒரு விதியை மாணவர்கள் வைத்துக் கொள்ளல் வேண்டும். நகரம் (ந்) உயிர்மெய்யாகச் சொல்லின் இடையே வருதல் தமிழில் மிக அரிது. புணர் மொழியிடத்தும், ஆரியம் தமிழாக மாறிய வடமொழியிடத்தும் வரும்.
உ-ம் இந்நாடு (இ + நாடு எனப் புணர்ந்த மொழி)
அநங்கன் (வடமொழி)
பகுபத இலக்கணம் படிக்காதவர் இம்மரபை நினைவு கூர்ந்தாவது சொன்நார்இயற்றிநார் என்பன போன்ற பிழைகளை நீக்கக்கடவர்.
நந்நாடு என்பதற்கும் நன்னாடு என்பதற்கும் பொருள் வேறுபாடு
உண்டு. முன்னது நமது நாடு என்றும், பின்னது நல்லநாடு என்றும் பொருள்படும். இவைபோன்ற சில உதாரணங்களைக் கீழே தருகின்றோம்.
முந்நூறு - மூன்று நூறு முன்னூறு - முன்னைய நூறு, முன்னைய ஊறு இந்நிலை - இந்த நிலை இன்னிலை - இல்லறநிலை, இல்லாதநிலை, இனியநிலை அந்நாரை - அந்த நாரை அன்னாரை - அப்படிப்பட்டவரை இந்நுரை - இந்த நுரை இன்னுரை - இனிய உரை
பயிற்சி
1. பின்வருவனவற்றைப் பிழைநீக்கி எழுதுக.
வறியவர்களை நம்முந்நோர்கள் அன்போடுகாப்பாற்றினார்கள். இன்னாளில் அப்பண்புமிகக் குறைந்துவிட்டது.
2. பின்வரும் சொற்களைப் பிரித்து அவற்றின் பொருளை எழுதுக.
முன்னுரை, முந்துரை, உன்னாடு, உந்நாடு
3.இன்னாய், இந்நாய், முன்னிலை, முன்நிலை இவற்றை அமைத்து
வாக்கியங்கள்எழுதுக.

சொல்மரபு 55
போலிகள்
சொல்லில் ஒரெழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதன் பொருளைத் தருதலும் உண்டு.
மூன்றெழுத்தாலாகி, பகாப்பதமாயுள்ள சில மகரவீற்றுச் சொற்கள் னகரவீற்றுச் சொற்களாக நிற்றலும் ஆகும்.
மரம், குளம், அகம், நிலம் என்பன முறையே மரன், குளன், அகன், நிலன் என நிற்கும்.
வேறு சில சொற்கள்
சாம்பல் - சாம்பர் பந்தல் - பந்தர் வண்டு - வண்டர் சுரும்பு * சுரும்பர் குடல் - குடர் கோவில் - கோயில்
சதை - தசை பவழம் - பவளம் நேயம் - நேசம் இல்முன் - முன்றில்
நகர்ப்புறம் - புறநகர் பொதுவில் - பொதியில் மயல் - மையல் LDG55 - மைஞ்சு

Page 31
56 தமிழ் மரபு
சொற்றொடர்மரபு
1. தொகைச் சொல் வர்க்கம்
l ஒருவன்- கடவுள்
இருமுதுகுரவர்-தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்மை, மறுமை இருசுடர்- சந்திரன், சூரியன் இருவகை அறம் - இல்லறம், துறவறம் இருவினை - நல்வினை, தீவினை இருதிணை - உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை
3
முப்பழம் - மா, பலா, வாழைப் பழங்கள் முக்கரணம் - மனம், வாக்கு, காயம் முத்தொழில்-ஆக்கல், அளித்தல், அழித்தல் முத்தி - காருகபத்தியம், ஆகவனியம், தட்சிணாக்கினி முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் முக்குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் முக்கடுகு-சுக்கு, மிளகு, திற்பலி மூவேந்தர் - சேர, சோழ, பாண்டியர்
4
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நால்வர் - அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நால் முனிவர் - சனகர், சனந்தனர், சனாதரர், சனற்குமாரர் நான்கு உபாயம் - சாம, பேத, தான, தண்டம் நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - பெண் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி - ஆண் நாற்பாதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம் நாற்பயன்- அறம், பொருள், இன்பம், வீடு
நாற்குணம் -

சொற்றொடர்மரபு 57
நாற்படை - தேர், யானை, குதிரை, காலாள் நாற்கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் நால்வகை உண்டி-உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன நால்வகைப் பொன் - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்
5
ஐங்கனை - மாம்பூ, அசோகம்பூ, குவளைப்பூ, முல்லைப்பூ, தாமரைப்பூ ஐங்குரவர்- அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐம்பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பூதம் - நிலம், நீர், தீ, வளி, வான் ஐம்பெருங் குழு - அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர்,
ஏவலர் ஐம்பெரும் பாதகம் - கொலை, களவு, கள், பொய், குருநிந்தை ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஐம்பெருங்காப்பியம் - சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,
வளையாபதி, குண்டலகேசி ஐவகையமுதம் - முப்பழம், தேன், சர்க்கரை என்பன கலந்த அபிடேக
திரவியம் ஐந்தங்கம் - திதி, வாரம், நாள், யோகம், கரணம் ஐவகையிசைக் கருவி-தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி,
மிடற்றுக் கருவி, நரம்புக் கருவி பஞ்சகவ்வியம் - கோசலம், கோமயம், பால், தயிர், நெய் ஐவகை வேள்வி- தெய்வம், பிரமம், பூதம், தென்புலத்தார், விருந்தினர் ஐம்பால் - மூடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள் (கூந்தல்) ஐவகைச் சுத்தி - பூதசுத்தி, ஆன்மசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி,
இலிங்க சுத்தி
6
ஆறங்கம் - சிகூைடி, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம்,
சோதிடம்
ஆறுசுவை - கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆறுவகைச்சமயம் - சைவம், வைணவம், சாக்தம், செளரம்,
காணாபத்தியம், கெளமாரம்
7
எழுபருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம் பெண்.

Page 32
58 தமிழ் மரபு
எழுபிறப்பு - தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன,
தாவரம் எழுமுனிவர்-அத்திரி, ஆங்கிரசன், கெளதமன், சமதக்கினி, பரத்துவாசர்,
வசிட்டன், விசுவாமித்திரன். ஏழு கன்னியர் - அபிராமி, இந்திராணி, கெளமாரி, காளி, நாராயணி,
மகேஸ்வரி, வராகி.
எட்டுத்திக்குப் பாலகர்-இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன்,
வாயு, குபேரன், ஈசானன். எட்டுச் சித்தி-அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாமியம்,
ஈசத்துவம், வசித்துவம். எட்டு மங்கலம்-இணைக்கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி,
நிறைகுடம், முரசு, விளக்கு. எண்வகையோகாங்கம் - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. சிவனின் எண்குணங்கள் - தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே உணர்தல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களி னிங்குதல், பேரருள் உடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை. எண்வகைச் செல்வம் - அடிமை, அரசாங்கம், சுற்றம், பொன், புதல்வர், இரத்தினம், வாகனம்.
9
நவதானியம்-உழுந்து, எள், கடலை, கொள்ளு, சாமை, தினை, துவரை,
நெல், பயறு. தவரசம் - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,
வெகுளி, உவகை, சாந்தம். நவரத்தினம் - மரகதம், பவளம், நீலம், வச்சிரம், பதுமராகம், முத்து,
கோமேதகம், புருடராகம், வைடுரியம்.
O
பத்தழகு (நூலுக்குரியன)- சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஒசையுடைமை, ஆழமுடைமை, முறையின் வைப்பு, உலகமலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல். பத்துக்குற்றம் - குன்றக்கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல்,
மாறுகொளக் கூறல், வழுஉச் சொற் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்றுபயனின்மை.

சொற்றொடர் மரபு 59
திருமாலின் பத்து அவதாரம் - மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன்,
பரசுராமன், இராமன், கிருஷ்ணன், பலதேவன், கல்கி, பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். பதினெண்கீழ்க் கணக்கு - நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா
நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழியைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.
பயிற்சி 1. முக்குற்றம், நாற்கவி, ஐம்பொன் இவற்றை விவரித்தெழுதுக. 2. பின்வருவன எவ்வெவ் வருக்கத்தைச்சார்ந்தவை?
சாத்துவிகம், லகிமா, தாரணை, குன்றக்கூறல்.
2. பல சொற்களுக்கு ஒருசொற் பிரயோகம்
அரசர் அல்லது பெருஞ் செல்வர் மனைகளில் பெண்கள் இருப்பதற்கென்றே அமைந்த தனி இடம் அந்தப்புரம்.
வெளிப்படையில் புகழ்ச்சியும் மறைபொருளிற் பழிப்பும் பொருந்தப் பேசும் பேச்சு அங்கதம் (Satire).
ஒரேசமயத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றலுடையவன் அட்டாவதானி.
ஒரே சமயத்தில் பதினாறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றலுடையவன் சோடசாவதானி.
ஒரே சமயத்தில் நூறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றலுடையவன் சதாவதானி.
ஆணுமற்றது பெண்ணுமற்றது அலி.
கடவுள் உண்டு என்ற கொள்கையையுடையவன் ஆத்திகன்.
வேறொருவரது சகாயமில்லாமற் பகைவரை வெல்லும் பலமுள்ளவன் அசகாய சூரன்.
அரசனானவன் ஒருவனது சேவகம், செளகரியம் முதலியவைகளை வியந்து கொண்டாடி, அவனுக்குக் கிராமம் முதலியவற்றைக் கொடுத்தற்குச் சாதனமாக எழுதிக் கொடுக்கும் பத்திரம் அருள்புரி பத்திரம்.

Page 33
SO தமிழ் மரபு
உப்பின்றிச் சமைத்த பச்சரிசிச் சோறு அவிசு. தான் கூறுகின்றவற்றையுணரும் அறிவில்லாதார் மாட்டுத் தான் அறியாமைப்பட்டிருப்பது அறிவுமடம்.
தருமமாய்ப் பசு முதலியன சொறிந்துகொள்ள நீர்க்கரையில் நாட்டியிருக்கும் கல் ஆதீண்டு குற்றி (ஆவுரோஞ்சிக்கல்)
அசத்தார்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்கும் சாலை ஆதுலர் சாலை.
பலர் நடுவே சொல்லத் தகாத வார்த்தையை மறைத்துச் சொல்லுதல் இடக்கரடக்கல்.
களவுப் புணர்ச்சியில் இராக்காலம் சந்திக்க நியமிக்கும் இடம் இரவுக்குறி.
பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்துகொள்ளும் மணம் இராக்கதம்.
பெற்றோரறியாமல் தலைவி, தலைவனுடன் செல்லல் உடன்போக்கு. நூலில் சொல்லியது கொண்டு சொல்லாததையும் ஒப்புமைபற்றி யறியும் உய்த்துணர்வு உரையனுமானம்.
சார்வாகன் கொள்கையின்படி உலக இன்பமே பேரின்பமென்றும், கடவுள் இம்மை மறுமைகள் இல்லையென்றும் கூறுபவன் உலகாயதன்.
நோயாளிக்குப் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்பவன் உழைச்செல்வான்.
வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த பூமி எட்டிப் புரவு. வாங்கிய அளவே திருப்பிக் கொடுப்பது குறிஎதிர்ப்பு. இளைத்த காலத்தில் உதவுவதற்காக வைக்கப்படும் சேமப் பொருள் எய்ப்பில் வைப்பு.
தனக்கே சொந்தமாக முழுப் பொருளையும் அநுபவித்தல் ஏகபோகம் (Monopoly).
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை ஏதுநிகழ்ச்சி.
அநுபவத்தோடு கூடாத கல்வி அறிவு ஏட்டுச் சுரைக்காய். சொத்தை அநுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம் ஒற்றி. (நாடகம் போன்ற) ஒரு நிகழ்ச்சியைப் பலருமறிய நிகழ்த்துமுன் பரிசோதித்துப் பார்த்தல் ஒத்திகை.
பாதுகாக்குமாறு ஒருவரை மற்றொருவரிடம் சேர்த்தல் ஒம்படை. இளம்பயிருக்கு நீர்ப்பாய்ச்சுதல் கண்கழுவுதல்.

சொற்றொடர்மரபு 61
அறிந்தும் அறியார் போன்று இருத்தல் கண்சாடை. எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல் காட்டி மறைத்தல்.
சபையோரைத் தேர்ந்தெடுக்கக் குடத்திலிடும் சீட்டு குடவோலை. ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை அதற்குரிய சொல்லாற் குறியாது வேறு சொல்லாற் குறிப்பது குழுஉக்குறி.
வைத்தியனின்றித் தாமே செய்து கொடுப்பது கைம்மருந்து. அரசனாற் செய்யப்படும் முறையினது கோடுதற்றன்மை கொடுங்கோன்மை.
வழிப்போக்கர் முதலாயினார்க்கு அளிக்கப்படும் உணவுப்பொருள் சதாவிருத்தி.
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து குணங்களும் நிரம்பியிருத்தல் சால்பு.
கட்டுக்கடங்காத இளைஞன் சிறுபட்டி. இம்மையிலே முத்தராயினோர் சீவன்முத்தர். நிலத்துள் கற்களில் மறைவாக அமைத்த வழி சுருங்கை, ஒன்றைச் சுட்டிப் சபதஞ் சொன்ன வார்த்தை சூளுரை. அரசனது நீதிவழுவாத ஆளுகை செங்கோன்மை. உற்ற காலத்துதவும்படி துணையாகக்கொள்ளும் வில் சேமவில். ஒருவர் இருந்து வாழும் காலம் தலைமுறை. இறைவனை ஆண்டானாகவும், தன்னை அடியானாகவும் கருதி வழிபடும் மார்க்கம் தாசமார்க்கம்.
சிற்றரசர், பேரரசருக்குக் கொடுக்கும் காணிக்கை திறை. மேல்வரக் கடவதனை உணரும் அறிவுடையவன் தீர்க்கதரிசி. நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றினால் ஏற்படும் மரணம் துர்மரணம்.
போர்க்களத்தில் படை அணிவகுப்பில் முதல் வரிசையில் நிற்பது தூசிப்படை.
இருபத்தாறு முதல் முப்பத்தொரு வயதுப்பெண் தெரிவை. தெய்வம் ஆவேசித்து நின்று ஆடுபவன் தேவராளன். தெய்வம் ஆவேசித்து நின்று ஆடுபவள் தேவராட்டி. இருவர் தமக்கிடையே ஒரு தொடர்பும் இல்லையென்பதை எழுத்தில் உறுதிப்படுத்தும் பத்திரம் தொடராமுறி.
பிறரறியாமல் துணைசெய்பவர் தோன்றாத் துணை. இறந்த வீரரின் பெயரையும் புகழையும் பொறித்து நடும் கல் நடுகல்.

Page 34
62 தமிழ்மரபு
காலை நேரத்தில் கூடும் சந்தை நாளங்காடி. மாலை நேரத்தில் கூடும் சந்தை அல்லங்காடி. அரசன் காலைநேரத்தில் (முற்பகலில்) தன் மந்திரி பிரதானிகளோடு கூடியிருக்கும் வீற்றிருப்பு நாளோலக்கம்.
நிலாவின்பம் துய்ப்பதற்கு அமைந்த திறந்த மேன்மாடம் நிலாமுற்றம். வாழ்த்தினும் வையினும் அவ்வப் பயனைத் தரும் சொல் நிறை மொழி.
திருநாளில் மங்களமாக ஆடும் என்ணெய் முழுக்கு நெய்யாடல். கோபத்தாற் புருவத்தை வளைத்தல் நெறித்தல். ஆயுள் முழுதும் பிரம்மச்சரியம் காப்போன் நைட்டிகன். களவுப் புணர்ச்சியிற் பகற்காலம் சந்திக்க நியமிக்கும் இடம் பகற் குறி. பொருள்முதலியன குறித்துக் கணவன் பிரிந்த காலத்தில் பிரிவாற்றாமை காரணமாக மனைவியிடத்து உண்டாகும் நிறவேறுபாடு பசப்பு.
ஆன்மாக்களைக் குறித்துச் செய்யும் புண்ணியும் பசுபுண்ணியம். ஒன்றைப்போல் மற்றொன்று செய்தல் படிஎடுத்தல் (Copying). தாமரையுருவாய்க் கிடக்கும் பொன்பதுமநிதி. பகைமேற் சென்ற அரசன் படையோடு தங்கும் இடம் பாடிவிடு. சிரார்த்த முதலிய தென்புலத்தோர் கடன் பிதிர்க்கடன். நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம் புறஞ்சேரி. முன் அனுபவத்தை அறியும் அறிவு பூருவஞானம். மலமாயா கன்மங்களால் கட்டுண்ட ஆன்மாக்கள் பெத்தர். நாற்பது வயதுப் பெண் பேரிளம்பெண். ஒன்றுபோலொன்றிருத்தல் போலி. புராணப் பிரசங்கம் பண்ணுவோன் பெளராணிகன். பதின்மூன்று வயதுப் பெண் மங்கை. விவாகத்திற்கு வரவழைக்கும் பத்திரிகை மணவோலை. மணஞ்செய்து நெடுங்காலமாகியும் மகப்பேறில்லாதிருப்பவள் மலடி, மரணத்தின் பின்வரும் நிலைமை மறுமை. குட்டி எவ்வளவுக்குத் தாய்க்குரங்கைப் பற்றுகிறதோ அவ்வளவிற்குத் தாய்க் குரங்கும் குட்டியைப் பாதுகாக்கும் அன்புத் தொடர்பு மர்க்கடசம்பந்தம்.
இறந்தோர்க்கு மாசந்தோறும் செய்யும் ஒரு கடன் மாசியம்.

சொற்றொடர்மரபு 63
தாய்ப் பூனையின் பிடியினின்றும் குட்டி வழுவினும் அத்தாய் விடாது அதனைப் பற்றி அணைப்பதாய அன்புத் தொடர்பு மார்ச்சார சம்பந்தம். (உ-ம்) சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்தாட்கொண்டமை.
அரசர்கள் சன்மானத்தால் விட்ட நிலம் மானியம். நகை, அழுகை முதலியனவாக மனத்து நிகழும் சுவைகள் புறத்தார்க்குப் புலனாகும் வண்ணம் முகத்திலும் பிற அவயவத்திலும் தோன்றுதல் மெய்ப்பாடு.
உயிர்துறக்கும் துணிவுடன் வடதிசையை நோக்கி ஊணின்றி இருத்தல் வடக்கிருத்தல்.
அரச மகளிர்க்கு அல்லது அவரனைய செல்வ மகளிர்க்கு அலங்காரஞ் செய்யும் பெண் வண்ணமகள்.
சிந்தைக்கும் செவிக்கும் இனிமை பயக்கும் சொற்களால் உண்மைக் கருத்துக்கள் பலவற்றை அமைத்து வாழ்த்துதல் வாயுறை வாழ்த்து.
வேறொன்றிற்கில்லா அழகுடன் இருத்தல் வீற்றிருத்தல். புதிதாகச் செய்த தேர், வண்டி, கப்பல் இவற்றை முதன்முதலாக ஒட்டிப்பார்ப்பது வெள்ளோட்டம்.
இருபத்தைந்தாவது ஆண்டில் செய்யப்படும் கொண்டாட்டம் வெள்ளிவிழா.
ஐம்பதாவது ஆண்டில் செய்யப்படும் கொண்டாட்டம் பொன் விழா.
அறுபதாவது ஆண்டில் செய்யப்படும் கொண்டாட்டம் வைர விழா.
LughaA 1.பின்வரும் சொற்களை விளக்கி எழுதுக.
குழுஉக்குறி, சூளுரை, படிஎடுத்தல், 2. பின்வருவனவற்றை ஒரு சொல்லாற்குறிப்பிடுக.
(1) பாதுகாக்குமாறு ஒருவரைமற்றொருவரிடம் சேர்த்தல். (2) வழிப்போக்கர்முதலாயினோர்க்குஅளிக்கப்படும் உணவுப்
பொருள். (3) சிந்தைக்கும், செவிக்கும் இனிய சொற்களால் உண்மைப்
பொருளைண்டுத்துக் கூறிவாழ்த்துதல்.

Page 35
64 தமிழ் மரபு
3. (S60)6OOGLDI-55i (Words in Pairs)
அக்கம் பக்கம் பார்த்துப் பேசு அகடவிகடமாய்ப் பேசுகிறான் அங்கிங்கெனாதபடி? 'அஞ்சிலே பிஞ்சிலே அறியவேண்டும் 'அடிப்பும் அணைப்பும் அடுப்பும் துடுப்புமாய் இருக்கிறாள்' (சமைத்துக்
கொண்டிருக்கிறாள்)
'அண்டத்திலும் பிண்டத்திலும்" அண்டை யயலார்’ அந்தியிலும் சந்தியிலும்’ அயர்த்தது மறந்தது' 'அருவுரு வாகிய இறைவன் 'அருமை பெருமை தெரியாதவன் அரை குறையாக' 'அல்லல் தொல்லை" அறியாதவன் அல்லும் பகலும் பாடுபட்டான் அலைத்துக் குலைத்துக் கெடுக்காதே 'அழிந்தொழிந்து அழுங்கிப் புழுங்கி" (பொறாமை மிகுந்து) அழுத்தந் திருத்தமாய்ப் பேசினான் "அழுகையும் தொழுகையுமாக அற்றார்க்கும் அலந்தார்க்கும் அன்னமும் சொன்னமும் கொடுத்து ஆதரித்தான் ஆசையும் பாசமும்’ 'ஆடிப்பாடி'க் களித்தார்கள் 'ஆடையணிகளுடன் 'ஆதியும் அந்தமுமில்லாத ஆய்ந்தோய்ந்து பார்க்கவேண்டும் ஆர அமர யோசித்து ஒரு கருமத்தைச் செய்க ஆறித் தேறி இகபர சுகங்கள் இடக்கு முடக்கு 'இளைத்துக் களைத்து வந்து சேர்ந்தான் 'இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள்மூட்டினாள் இன்னார் இனியார்’ என்று அவன் பார்ப்பதில்லை "ஈகை இரக்கம் உள்ளவராக இருக்க வேண்டும் 'ஈடும் எடுப்பும் (ஒப்பும் உயர்வும்) இல்லாதவன் 'ஈயெறும்பு மொய்க்காமல் பார்த்துக்கொள் 'உண்டியும் உறையுளும் உதவினான்

சொற்றொடர்மரபு 65
'உருட்டும் புரட்டும் 'உருண்டு திரண்ட முகமுள்ளான் 'உருவும் திருவும் ஒத்த காவலர் "உற்றார் உறவினர்
'ஊடியும் கூடியும்" 'ஊரும் பேரும் விசாரித்து வந்தான் 'ஊண் உறக்கம்" இன்றி உழைத்தான் 'எலும்பும் தோலுமாக மெலிந்து போனான் 'எய்வதும் எறிவதுமாகப் போர் செய்தார்கள் "ஏங்கித் தேங்கித் தவிக்கிறான் "ஏட்டிக்குப் போட்டியாய் நடக்கிறான் 'ஏமஞ் சாமம்" பாராமல் திரிகிறான் 'ஏழை எளியவர்களுக்கு இரங்கல் வேண்டும் 'ஏற்றத் தாழ்வு'
'ஏற இறங்க”ப் பார்த்தான்' 'ஒட்டி உலர்ந்த வயிற்றோடு காணப்பட்டான் 'ஓட்டமும் நடையுமாய்'
ஒட்டை உடைசல்'
'ஒடியாடி’
'ஓய்வு ஒழிவு' 'கங்கு கரையின்றி வெள்ளம் ஒடுகின்றது 'கடா விடை’ (வினாவும் விடையும்) 'கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தல்கூடாது 'கண்ணிரும் கம்பலையும்" 'கண்ணும் கருத்து'மாய் வளர்த்தாள் கரடு முரடான பாதை 'கருமமும் தருமமும் அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும் 'கரைதுறை தெரியாதபடி ஆறு பெருகிய்து கல்வி கேள்விகளில் மிக்கான் 'கல்லும் கரடும்: 'கள்ளம் கபடம் இல்லாதவன் 'கற்பும் பொற்பும் மிக்கவள் 'கற்றோர்க்கும் மற்றோர்க்கும்’
'கன்று காலி"
'கனவோ நனவோ? அறியேன் 'காடும் மேடும் கடந்து சென்றேன் காய்ந்து கருகி
'கார சார'மில்லாத
"கிட்டத்தட்ட
'கிண்டிக் கிளறி?

Page 36
66
தமிழ் மரபு
"கீரியும் பாம்பும் போல் "கீழும் மேலுமாக குண்டும் குழியுமாய் இருக்கிறது குணங்குற்றம்" குணங் குறிகள்'
'குப்பை கூழம்'
'கும்பிட்டுக் கூத்தாடி "குலம் கோத்திரம்" விசாரித்துப் பெண் கொடுத்தாள் 'குறுக்கும் நெடுக்கும்
"கூட்டம் நாட்டம்" 'கூட்டிக் குறைத்துப் பேசாதே "கூடிக் குலாவித் திரிகின்றனர் "கேள்வி முறை இல்லையா? "கேளுங் கிளையும் கெட்டார்க்கு இல்லை ‘கையும் களவுமாகப் பிடிபட்டான் 'கையும் மெய்யுமாய்' "கொக்குக் குருவி கூட இல்லை "கொஞ்சிக் குலாவி மகிழ்கின்றனர் 'கொடி வழியில் மணஞ்செய்தல் வேண்டும் 'கொடுக்கல் வாங்கல்’ நிரம்ப இருக்கிறது 'கொப்பும் குழையுமாய்" 'கோயில் குளம்"
"சட்ட திட்டம்"
'சண்டை சச்சரவு"
'சந்து பொந்து" ‘சாகப் பிழைக்க’க் கிடக்கிறான் "சீராட்டிப் பாராட்டி"
"சீரும் சிறப்பும்"
'சீவிச் சிங்காரித்து"
'சீறிச் சினந்து"
'சுற்றிச் சுருட்டி"
'சுற்று முற்றும்" 'சொற்போருக்கோ மற்போருக்கோ’ அழைக்கிறீர் தட்டுத் தடங்கல்" தடுத்து மடுத்து'ச் சொல்வாரில்லை தடை விடை’
'தப்பித் தவறி
தாயும் சேயும்"
துண்டுந் துணியும்"
துணிமணி

சொற்றொடர்மரபு 67
துள்ளித் துடித்து'
'தொகுத்தும் வகுத்தும்"
"தோட்டந்துரவு'
நயத்தாலும் பயத்தாலும்"
நரை திரை’
நல்லது பொல்லாதது" நலிந்தும் வலிந்தும்" நாளும் கிழமையும் பார்த்து ஒரு கருமத்தைச் செய் 'நிலம் புலம்’ எல்லாம் அவனுக்குண்டு 'நீட்டி நிமிர்ந்து கிடந்தான் நீக்குப் போக்கு இல்லை 'நேரும் கூருமாய்'
'பங்கு பாகம் 'பட்டது கெட்டது எல்லாம் சொன்னான் 'பட்டம் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை 'பயிர் பச்சை'
'பல்கிப் பெருகி" 'பழக்க வழக்கங்கள்’ நன்றாக இல்லை "பழி பாவங்கட்கு அஞ்சாதவன் "பற்றிப் படர்ந்து"
'பாட்டும் படிப்பும்' 'பாயும் படுக்கையுமாகக் கிடக்கிறான் 'பாலும் தேனும் பாயும் நாடு 'பாலும் பழமும்’ 'பின்னிப் பிணைந்து கிடக்கின்றன "புல் பூண்டு
பூவும் பிஞ்சுமாய்'
'பெண்டு பிள்ளைகள்'
"பேரும் புகழும்"
'பொய்யும் புளுகும்’
'போக்குப் புகல்"
'போற்றிப் புகழ்ந்து"
மட்டு மரியாதை" "மந்திர தந்திரங்கள் வல்லவன் 'மருந்து மாய"மெல்லாம் அவனுக்குத் தெரியாது 'மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் 'மழை தண்ணீர் கிடையாத இடம் 'மறைக்கவோ மறுக்கவோ முடியாது 'மாசு மறு அற்றவன் 'மாடு கன்று வைத்திருக்க வேண்டும்

Page 37
68
தமிழ் மரபு
‘மானம் ஈனம் பார்க்காதவன் 'மினுக்கித் தளுக்கித் திரிகிறாள் முட்டி மோதித் திறந்து பார் முற்ற முடிய
'மூச்சுப் பேச்சு' இல்லை 'மூலை முடக்கு
"மூட்டை முடிச்சு
'வந்தனை வழிபாடு 'வழிதுறை தெரியவில்லை 'வழி வகை அறிந்து செய்தல் வேண்டும் 'வற்றி வரண்டு?
'வாட்டி வதைத்து"
'வாடி வதங்கி" "வாய்க்கால் வரம்பு தெரியாமல் வெள்ளம் பரவியது 'வாரி வகிர்ந்து முடிக்க வேண்டும் ‘வாழ்விலும் தாழ்விலும் "வானகமும் வையகமும்" 'விட்டகுறை தொட்டகுறை 'விண்ணும் மண்ணும்" 'விதி விலக்கு அறிந்து நடத்தல் வேண்டும் ‘விருந்தாள் வேற்றாள்' 'விருப்பு வெறுப்பு" ‘வெட்கி விறைத்துப்போனாள்' ‘வெட்டும் குத்தும்’
"வேரும் தூரும்
4. தொடர்ச் சொற்கள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியுமாக அஞ்சா நெஞ்சும் எஞ்சாத் தீரமும் அடியற்ற மரம்போல் படிமிசை வீழ்ந்து அடுப்பங்கரையில் ஆம்பி பூப்ப அணிவன அணிந்து புனைவன புனைந்து அமிழ்தினுமினிய தமிழ்மொழி பயின்று அவலை நினைத்து உரலை இடித்து அருமையும் பெருமையும் அறியாதுழன்று அருள்நெறி போற்றாது மருள்வழியேற்று அழகிற்கு அழகு செய்தவாறு அளந்து கொடுக்காது அள்ளிக் கொடுத்து அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்டு அன்ன நடையில் ஒரு சின்னநடை பயிலும்

சொற்றொடர்மரபு 69
ஆக்கி அழித்து அளித்துப் புரக்கும் ஆசை காட்டி மோசம் செய்து ஆகாயத் தாமரையும் ஆமைமயிர்க் கம்பளமும் ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையதுகொண்டு மெய்யது பொத்திக் காலதுகொண்டு மேலது தழி இ ஆண்டிலும் அறிவிலும் அநுபவத்திலும் முதிர்ந்த ஆணடிமுதல அரசனவரை ஆண்டில் சிறியராய் அறிவில் பெரியராய் ஆபத்து வேளையில் அருமருந்தென்ன ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணாக ஆலமுண்ட நீலகண்டன் ஆளுக்கேற்ற வேடமும் காலத்திற்கேற்ற கோலமும் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகாலாய் இகமும் பரமும் இன்பம் நிறைந்து இங்கிதமறிந்து ஏவிய முடித்து இச்சகம் பேசி இரந்து பொருள் பெற்று இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க இடம் பொருள் ஏவல் எல்லாம் அமைந்து இட்டது சட்டமாய் வைத்தது வரிசையாய் இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்
அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் இயன்றவரை முயன்று இருதோணியிற் கால்வைத்து இருவினையொப்பு மலபரிபாகம் இலவுகாத்த கிளிபோல் ஆகி இலைமறை காய்போல் மறைந்து கிடந்த இறுதி வரினும் உறுதி கூறி இன்னோரன்ன உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை உச்சிமேற் புலவர்கொள் நச்சும் புலவனாய் உடல் பொருள் ஆவி மூன்றும் ஒப்புவித்து உண்ட வீட்டிற்கு இரண்டகஞ் செய்யாமல் உண்டியும் உடையும் உறையுளும் உதவி உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து உப்புக்கும் உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து உருவும் திருவும் கருவில் அமைந்து உலகமெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு உவர்க்கடலன்ன செல்வர் உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய

Page 38
70
தமிழ் மரபு
உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணி உள்ளும் புறமும் ஒத்து உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசாமல் உற்றுநோக்கி ஊகித்தறிந்து உற்றார் உவப்ப மற்றோர் மகிழ ஊக்கி ஊக்கி உள்ளம் தழைத்து ஊணுறக்கம் ஒழிந்து ஊதியமின்றி வீதியிலலைந்து நெற்றி வியர்வை நிலத்தில் வீழ நோயும் நொடியும் பாயும் படுக்கையுமாய் ஊரார் உடைமைக்குப் பேராசை கொண்டு ஊரார் பகைக்கும் தீராப்பழிக்கும் ஆளாகி ஊருக்குழைத்து ஊதாரியாய்ப் பிழைத்து ஊழையும் உப்பக்கம் கண்டு எங்களிலென் ஞாயிறு எமக்கென்றிருந்து எச்சிற்கையால் காக்கை கலைக்காத எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்டு எட்டாததை நினைந்து கொட்டாவி விட்டு எடுத்த காரியத்தில் இடையீடு படாமல் எடுப்பார் கைப்பிள்ளையாய் எட்டும் இரண்டும் அறியாத எண்ணத் தொலையாது ஏட்டில் அடங்காது எந்நாட்டவர்க்கும் தந்நாட்டவனாய் எழுமையும் வழுவாத உழுவலன்பு ஏசற்றிருந்தே வேசற்று ஏதென்றிரங்காமல் தீதென்று பாராமல் ஏராளமாயும் தாராளமாயும் ஏவிய பணிகள் யாவையும் முடித்து ஏழாம் நரகிற்கும் கீழாம் நரகம் ஏழை எளியவர் வாயிலடித்து ஏனோதானோ என்றிருக்காமல் ஒக்கலும் உறவும் தொக்கிருந்துதவ ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமாய் ஒரு பக்கம் பாலும் மறுபக்கம் நீருமாய் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் ஒல்லும் வகையால் ஒவாது முயன்று ஒன்றுக்கும் பற்றாத நாயேன் ஓங்கலென நின்று உயர்ந்தோர் தொழ விளங்கி ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்

சொற்றொடர்மரபு 71
ஒலுடன் ஆடிப் பாலுடன் பருகி கடல்மடை திறந்தெனக் கவிகள் பொழிந்து கடைந்தெடுத்த கழிபெரு மடையன் கடன் வாங்கி உடன்வாங்கி உடலைத் தேற்றி கண்கண்ட தெய்வம் கண்கவர் வனப்பும் கவின்பெறு தோற்றமும் கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் கண்ணாற் கண்டதைக் கையாற் செய்து கண்ணிர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப கண்ணுக்குக் கண்ணாகப் போற்றி கண்ணைப் பறிக்கும் கட்டழகுடைய கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக கண் மூடித்தனமாய்க் காலங்கழித்து கயல்விழியும் குயில்மொழியும் கரும்பிருக்க இரும்புதின்று களைத்து கருவிலே திருவுடைய கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்து கழுத்தில் பொன்னகையும் முகத்தில் புன்னகையுமாக கற்றோர்க்குத் தாம்வரம்பாகிய தலைமையராய் கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி காடிடையிட்டும் நாடிடையிட்டும் காடு வாவென வீடு போவென காலால் இட்டதைக் கையாற் செய்து காற்றினும் கடுகிச் சென்று காலனும் அஞ்சுங் கடுங்கண் மறவர் குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியின்றி குமரிமுதல் இமயம் வரை குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கை குற்றத்தைத் தள்ளிக் குணத்தைக் கொண்டு குறுகுறு நடந்து குதலை மொழிந்து கூடிக் குலாவி ஆடிக் களித்து கூடை நிறைந்த நெல்லும் வீடு நிறைந்த பொன்னும் கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும் கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றல் கைகட்டி வாய்புதைத்து கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் கைம்மாறு கருதாமல் கொடாக் கண்டனுக்கு விடாக்கண்டனாய் கோடியாரைத் தாழ்த்தி அடியாரை வாழ்த்தி

Page 39
72
தமிழ் மரபு
கோடானுகோடி சூரியப்பிரகாசம் கோடியும் தேடிக் குடியும் இருத்தி சட்டங்கள் கற்றும் பட்டங்கள் பெற்றும் சல்லாபஞ் செய்தே உல்லாசமெய்தி சாதுரியமாயும் மாதுரியமாயும் பேசி சாதனையாலும் போதனையாலும் சாதகமாகவும் பாதகமாகவும் சாடிக்கேற்ற மூடிபோல் அமைந்து சாபமும் பாவமும் எய்தி சிந்தையும் மொழியும் செல்லாத நிலையில் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்து சின்னாட்பல்பிணிச் சிற்றறிவுடைய சுவைபல செறிந்து நவைஇலதாகி சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகி செய்வன செய்து தவிர்வன தவிர்ந்து செற்றமும் சினமும் அற்றநன் மனமும் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் சொன்னயமும் பொருணயமும் சோற்றுச் செலவும் பாருக்குப் பாரமுமாய் தஞ்சம் புகுந்தவர்க்கு அஞ்சேல் என்று தட்டுக்கெட்டுத் தடுமாறி தட்டுத்தடையின்றித் தாராளமாய்ப் பேசவல்ல தலைகால் தெரியாது தடுமாறித்தத்தளித்து தளர்நடை நடந்து மழலை மொழிந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தன்னுயிர்போல் மன்னுயிர் மதித்து தான்றோன்றித் தலைவர்கள் துரும்பைத் தூணாக்கி துள்ளித் திரிகின்ற காலத்திலே துடுக்கடக்கி தூங்காதுழைத்துச் சுகம் பெற்று தூய்மை பேணி வாய்மை பூண்டு தெற்கு வடக்குத் தெரியாத சிறுவன் தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டுபாடும் வளமரக்கா தேனினுமினிய தீஞ்சொல் பயின்று தொடக்க நடுவிறுதிகள் தோன்றத் தெரிந்து தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று தோன்றாத் துணையாய்
நடையுடை பாவனை
நரைதிரை மூப்பு நல்லதைக் கொள்ளலும் அல்லதைத் தள்ளலும்

சொற்றொடர்மரபு 73
நாத்திகம்பேசி நாத்தழும்பேறி நாடவைத்துக் கேடுசெய்து நாடியைப் பிடித்து நல்லதைச் சொல்லி நாத்தளர்ந்து வாய்குளறி
நா நயமும் நாணயமும் நாயொன்று சொல்லப் பேயொன்று பேச நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு வேடமும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நீறுமேற் பூத்த நெருப்பு நுணங்கு மொழிப் புலவர்க்கு வணங்குமொழி விடுத்து நுனிப்புல் மேய்ச்சலாய்
நூலறிவும் நுண்மதியும் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி பட்டபாடும் கெட்டகேடும் பட்டிமாடுபோற் கட்டுக்காவலின்றி படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்டு பருந்துங் கிளியும் பாங்காய் வாழ பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாடி பார்த்த கண்ணும் பூத்துப்போய் பாலும் தேனும் பாயும் நாடாய் பாலைவனம் சோலைவனமாகி பிறப்புப் பணி மூப்புச் சாக்காடு புலனைந்தும் பொறிகலங்கி புலியும் மானும் ஒருதுறையுண்ண புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை பூதலமும் மீதலமும் போற்ற பூமியும் பொருளும் பூவையரும் என்னும் மூவகை யாசையும் பொல்லாரை நீக்கி நல்லாரைக் காத்து பொன்னொரு தட்டிலும் பூவொரு தட்டிலும் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி மயிலாடக் குயில் பாட மனமொழி மெய்கள் ஒருவழி நிற்ப முன்னுயிர்க்கிரங்கித் தன்னுயிர் கொடுத்து மனம்போன போக்கெல்லாம் போய் மாடமாளிகை கூடகோபுரம் மானங்கெட்டு மரியாதை விட்டு முன்னுக்குப் பின் முரணாக மேலெழுந்த வாரியாகப் படித்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிசசுபvபோட்டு யாரென்ற போதெல்லாம் தானென்று அருள்தந்து

Page 40
74 தமிழ் மரபு
வடமொழி தென்மொழி நிலைகண்டுணர்ந்த வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும்படி வழிமேல் விழிவைத்து நின்று வாய்க்கெட்டினதும் கைக்கெட்டாமல் வாழ்நாளை வீழ்நாளாக்கி வாழையடி வாழையாக வானுறவோங்கி வளம்பெற வளர்த்து விண்ணோர் புகழ மண்ணோர் மகிழ விதித்தன செய்து விலக்கியன ஒழித்து விலாவறச் சிரித்து
விலாப் புடைக்க உண்டு வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் உணர வெறுவாய் மென்று வேளைக்கொரு பேச்சும் வேலைக்கொரு சாட்டும்
5. 600idd
சொற்கள் ஒன்றோடொன்று சேரும்போது இயல்பாவனவும் விகாரம் அடைவனவும் என இருவகையாம். இயல்புக்கு உதாரணம்: பனை + வேர் = பனைவேர்
பனை + கண்டேன் = பனை கண்டேன்
விகாரம் மூன்று வகைப்படும். அவை தோன்றல், திரிதல், கெடுதல் என்பன.
வாழைப் + பழம் = வாழைப்பழம். - 'ப்' தோன்றுதல் மரம் + குறைத்தான் = மரங்குறைத்தான். -"ம் 'ங்' ஆகத்திரிந்தது. மரம் + வேர்= மரவேர். 'ம்' கெட்டது இவற்றுள் இயல்பாக வேண்டிய சொற்றொடர் விகாரம் பெறினும் விகாரம் பெறவேண்டியது இயல்பாகினும் அவை தமிழ் கற்றவர்க்கு மிக நகை விளைவிப்பனவாகும்.
'வாழை பழம்' என்றும், 'வந்துப் போனான்’ என்றும் கூறினால் எப்படியிருக்கும்? ஆகவே, தமிழ் கற்கப் புகுவோர் புணர்ச்சி விதிகளை மிகக் கூர்ந்து கவனிப்பாராக.
மேற்கண்ட இயல்பும் விகாரமும், சேரும் சொற்களின் ஈற்றெழுத்து முதலெழுத்துக்கள் காரணமாகவும் அல்வழி வேற்றுமைப் பொருள் காரணமாகவும் ஏற்படும். ஒன்றோடொன்று சேராத எழுத்துக்கள் பின்
வருவன:
உயிர் எழுத்தோடு உயிர் எழுத்துச் சேராது. இடையில் உடம்படு மெய் பெற்றுச் சேரும். அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் எழுத்துகளின் பின் 'வ்' என்னும் உடம்படு மெய் வந்து பின்வரும் உயிரைச் சேர்க்கும்.

சொற்றொடர் மரபு 75
உ-ம்:- பல + இலை = பல + ஷ் + இலை. பலவிலை
பலா + இலை = பலாவிலை வடு + அழகு = வடுவழகு நொ + அழகா = நொவ்வழகா கோ + இல் = கோவில் கெள + அழகு = கெளவழகு
இ, ஈ, ஐ என்னும் எழுத்துக்களின் பின் ‘ய்‘ என்னும் உடம்படு மெய் வரும்.
உ-ம்:- மணி + அழகு = மணி + ய் + அழகு. மணியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது மலை + அழகு = மலையழகு
பெயர்ச் சொல் ஏகாரத்தின் முன் வகரமும், இடைச் சொல் ஏகாரத்தின் முன்
யகரமும் வரும்.
உ-ம்:- சே + உழுதது = சேவுழுதது
அவன்ே + அழகன் = அவனேயழகன்
மெய்யெழுத்துகளில் ஒன்றோடொன்று சேருவனவும் சேராதனவும் பின்வருமாறு: ட், ற் முன் க, ச, ப அல்லாதன சேரா.
உ-ம்:- கட்கம், கட்சி, திட்பம், கற்சிறார், கற்ப
ண ன முன் அவற்றின் இன எழுத்துக்களும் க, ச, ஞ, ப, ம, யவும் வரும்.
ஏனைய வாரா.
உ-ம்:- வெண்கலம், வெண்சோறு, வெண்ஞமலி, வெண்பல்,
வெண்மலர், மண்யாது, மண்வலிது, வெண்டலை, புன்கண், புன்செய், புன்ஞமலி, புன்பயிர், பொன்யாது, பொன்வலிது, புன்றலை.
ம முன் ப, ய, வ மயங்கும்.
உ-ம்:- மரம் பெரிது, மரம் யாது, மரம் வலிது
ல, ள முன் க, ச, ப, வ, ய சேரும்.
உ-ம்:- வேல் கடிது, வாள் கடிது,
சிறிது, தீது, பெரிது, வலிது, யாது இவற்றையும் கூட்டுக.
வ முன் யகரம் சேரும்.
உ-ம் :- தெவ் யாது
மேற்கூறிய எழுத்துக்கள் தம்மோடு சேராத எழுத்துக்களோடு கூடின்

Page 41
76 தமிழ் மரபு
விகாரமடையும்.
மண் + தீது = மண்டீது பொன் + தீது = பொன்றீது மரம் + குறிது = மரங்குறிது மரம் + தீது = மரந்தீது மரம் + சிறிது = மரஞ்சிறிது வேல் + தீது = வேறீது
о -tb: -
இவற்றை இக்காலத்தார் புணர்த்தியெழுதாது மண்தீது பொன்தீது எனவும் அவன்தான், போனால்தான் எனவும் எழுதுவர்.
வேற்றுமை அல்வழிப் பொருள்களிற் சேர்வன அவ்வப்பொருள் களுக்கேற்ப இயல்பாயும் அல்லது விகாரம் பெற்றும் சேர்ந்து நிற்கும். வேற்றுமைகள் பின்வருமாறு:
இரண்டாம் வேற்றுமை உ-ம்: பொன்னைக் கொடுத்தான்
பொன் கொடுத்தான் மூன்றாம் வேற்றுமை உ-ம்: கல்லால் எறிந்தான்
கல் எறிந்தான் நான்காம் வேற்றுமை உ-ம்: சாத்தனுக்கு மகன்
சாத்தன் மகன் ஐந்தாம் வேற்றுமை உ-ம்: மலையின் வீழ் அருவி
மலை வீழ் அருவி ஆறாம் வேற்றுமை உ-ம்: யானையினது காது
யானைக் காது ஏழாம் வேற்றுமை உ-ம்: மலையின்கண் நெல்
மலை நெல் அல்வழி பின்வருமாறு: வினைத் தொகை உ-ம்: ஊறுகாய் பண்புத் தொகை உ-ம்: கருங்குதிரை உவமைத் தொகை உ-ம்: மதிமுகம் உம்மைத் தொகை உ-ம்: இராப்பகல் அன்மொழித் தொகை உ-ம்: 'பூங்குழல் வந்தாள் எழுவாய்த் தொடர் உ-ம்: கந்தன் வந்தான் விளித் தொடர் உ-ம்: கந்தா வா தெரிநிலை வினைமுற்று உ-ம்: வந்தான் கந்தன் குறிப்பு வினைமுற்று உ-ம்: பெரியன் கந்தன் பெயரெச்சத் தொடர் உ-ம்: வந்த கந்தன்

சொற்றொடர் மரபு 77
வினையெச்சத் தொடர் உ-ம்: வந்து போனான் இடைச்சொற்றொடர் உ-ம்; மற்றொன்று உரிச்சொற்றொடர் உ-ம்: நணி பேதை அடுக்குத்தொடர் உ-ம்: பாம்பு பாம்பு
இவ்வல்வழி வேற்றுமைப் பொருள்களிற் சில சொற்களுக்கே புணர்ச்சிவிதி இங்கே கூறப்படும். ஏனையவற்றை நன்னூல் முதலிய இலக்கண நூல்களிற் காண்க.
உயர்திணைப் பெயர்களின் முன்னாக வல்லெழுத்து முதன்மொழிகள் வந்தால், பெரும்பாலும் இயல்பாகும்; சிறுபான்மைச் சொற்கள் விகாரப்படும்.
உ-ம்:- நம்பி + பெரியன் = நம்பி பெரியன் (இயல்பு)
மங்கை + சிறியள் = மங்கை சிறியள் (இயல்பு) அவன் + பெரியன் - அவன் பெரியன் (இயல்பு) கபிலன் + பரணன் = கபிலபரணர் (விகாரம்) அரசன் + வள்ளல் = அரச வள்ளல் (விகாரம்) வேளாளன் + பிள்ளை - வேளாண் பிள்ளை (விகாரம்) செட்டி + தெரு - செட்டித்தெரு (விகாரம்)
சுட்டு வினாமுன் நாற்கணமும் புணர்தல் அ, இ, உ என்ற சுட்டெழுத்துக்களின் முன்னும் 'எ' என்ற வினா எழுத்தின் முன்னும் உயிரும் இடையினமும் வந்தால் வகரம் மிகும். வல்லினமும் மெல்லினமும் வந்தால் அவ்வெழுத்துக்களே மிகும்.
உ-ம்:- அ + அரசன் = அவ்வரசன் இ + அரசன் = இவ்வரசன் உ + அரசன் = உவ்வரசன் உயிர்வர "வி" மிக்கது எ + அரசன் - எவ்வரசன்
அ + யானை = அவ்யானை இ + யானை = இவ்யானை, இடையெழுத்து உ + யானை = உவ்யானை, வர 'வ்' மிக்கது எ + யானை = எவ்யானை
அ + கோயில் = அக்கோயில் வல்லினமும் மெல்லினமும் அ + நன்றி = அந்நன்றி வர அவ்வவ் வெழுத்தே மிக்கது
ஆகவே, இவ்நாடு, இய்யானை என்று எழுதல் பிழை.

Page 42
78 தமிழ் மரபு
அகரவீறு பெயரெச்சம், வினைமுற்று, ஆறாம் வேற்றுமை உருபு, அஃறிணைப் பன்மைப் பெயர் ஆகியவற்றின் முன் வல்லெழுத்து இயல்பாகும்.
உ-ம்:- உண்ட + குதிரை = உண்ட குதிரை
உண்டன + குதிரை = உண்டன குதிரை பல + கைகள் = பல கைகள்
பல, சில என்னும் சொற்கள் தமக்கும் முன்னும் பிறவற்றின் முன்னும் பின்வருமாறு புணரும்.
உ-ம்:- பல + பல = பலபல, பலப்பல, பற்பல
சில + சில = சிலசில, சிலச்சில, சிற்சில பல + கலை = பலகலை, பல்கல்ை சில + நாள் = சிலநாள், சின்னாள்
ஆகாரவிறு ஆ, மா என்னும் சொற்களின் முன்னும் வினைமுற்று முன்னும் வல்லெழுத்து இயல்பாகும்.
உ-ம் :- ஆ + குறிது = ஆகுறிது
மா + குறிது = மாகுறிது உண்ணா + குதிரைகள் = உண்ணாகுதிரைகள்
இகர ஐகார ஈறுகள் எழுவாய்த் தொடர் உம்மைத் தொகைகளில் இயல்பாயும்; பண்புத் தொகை, உவமைத் தொகை, வினையெச்சம் இவற்றில் மிகுந்தும்; சில எழுவாய்த் தொடரில் விகற்பமாயும் வருமெழுத்துச் சேரும். உ-ம்:-
எழுவாய்த் தொடர் : பருத்தி + குறிது = பருத்தி குறிது
யானை + கரிது = யானை கரிது
உம்மைத் தொகை: பரணி + கார்த்திகை - பரணி கார்த்திகை
யானை + குதிரை = யானை குதிரை பண்புத் தொகை: மாசி + திங்கள் மாசித் திங்கள்
சாரை + பாம்பு : சாரைப் பாம்பு வினையெச்சம்: ஒடி + போனான் = ஒடிப் போனான் உவமைத் தொகை: காவி + கண் = காவிக்கண்
பனை + கை = பனைக்கை
எழுவாய்த் தொடர்: கிளி + குறிது = கிளிக்குறிது, கிளிகுறிது
தினை + குறிது = தினைக்குறிது, தினைகுறிது

சொற்றொடர்மரபு 79
உகரவீறு
மூன்றாம் வேற்றுமை உருபு. ஆறாம் வேற்றுமை உருபு, எண்ணுப் பெயர், வினைத்தொகை, சுட்டுப்பெயர் ஆகிய இவற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாம்.
உ-ம்:- சாத்தனொடு கொண்டான்
சாத்தனது கை
ஒரு கை அடு களிறு அது குறிது
குற்றியலுகர வீறு வன்றொடர் அல்லாதவைகள் அல்வழியில் இயல்பாய் முடியும்.
2-lb.:-
எழுவாய்: நாகு + கடிது - நாகு கடிது
எஃகு + கடிது = எஃது கடிது வரகு + சிறிது - வரகு சிறிது குரங்கு + பெரிது = குரங்கு பெரிது தெள்கு + கொடிது = தெள்கு கொடிது
வினை எச்சம்: பொருது + சென்றான் = பொருது சென்றான்
வந்து + போனான் = வந்து போனான் எய்து + கொன்றான் = எய்து கொன்றான்
வினைத் தொகை: ஏகு + கால் = ஏகுகால்
அஃகு + பிணி = அஃகுபிணி பெருகு + தனம் = பெருகுதனம் ஓங்கு + குலம் = ஒங்கு குலம் எய்து + பொருள் = எய்து பொருள்
இடைச் சொற்கள்: அன்று + கண்டான் = அன்று கண்டான். சில இடைச்சொற்களின் முன் வல்லினம் மிகும்,
உ-ம்:- அங்கு + கண்டான் = அங்குக்கண்டான்
யாண்டு + சென்றான் = யாண்டுச் சென்றான்
இடைத்தொடர், ஆய்தத் தொடர், நெடிற்றொடர், உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன்வேற்றுமையிலும் வல்லினம் மிகாது.
al-b: தெள்கு + கால் = தெள்கு கால்

Page 43
80 தமிழ் மரபு
எஃகு + கடுமை = எஃகு கடுமை நாகு + கால் = நாகுகால் வரகு + கதிர் = வரகு கதிர்
சில நெடிற்றொடர், உயிர்த் தொடர்கள் வேற்றுமையில் வன்றொடர்க ளாகி வல்லினம் மிக்கு முடியும்.
உ-ம்:- ஆடு + கால் = ஆட்டுக்கால்
முருடு + கால் = முருட்டுக்கால் முயிறு + கால் = முயிற்றுக்கால்
சிறுபான்மை வேற்றுமையில் மேற்கூறிய விதி பெறாமலும் அல்வழியில் மேற்கூறிய விதி பெற்றும் முடியும்.
உ-ம்:-
வேற்றுமை நாடு + கிழவோன் = நாடு கிழவோன்
காடு + அகம் = காடகம்
அல்வழி காடு + அரண் = காட்டரண்
வரடு + ஆடு = வரட்டாடு குருடு + கோழி = குருட்டுக்கோழி
மென்றொடர்க் குற்றியலுகரங்களிற் சில வன்றொடர்க் குற்றிய லுகரங்களாகும்; பல ஆகா.
sp --Lb:- வன்றொடர் ஆவன மருந்து + பை - மருத்துப்பை
கரும்பு + வில் = கருப்புவில்
வன்றொடர் ஆகாதன வண்டு + கால் = வண்டுக்கால்
பந்து + திரட்சி = பந்துத் திரட்சி சில மென்றொடர்கள் 'ஐ' என்ற எழுத்தைப் பெற்று, வல்லெழுத்து மிக்கு முடியும்.
உ-ம்:- பண்டு + காலம் : பண்டைக்காலம்
இன்று + வரை = இற்றைவரை ஆண்டு + திவசம் = ஆட்டைத் திவசம் அன்று + கூலி = அற்றைக்கூலி
சில ஐகார வீறுகள்
சில ஐகாரவீற்றுச் சொற்கள் ஈற்று ஐகாரம் கெட்டு, அம் என்ற சாரிை பெற்று முடியும்.
உ-ம்:- வழுதுணை + காய் = வழுதுண் + அம் + காய் = வழுதுணங்காய்

சொற்றொடர்மரபு 81
தாழை + பூ = தாழ் + அம் + பூ = தாழம்பூ
சில, ஐ கெடாது சாரியை பெற்று முடியும்.
ol-b:- புன்னை + காணல் = புன்னையங்காணல்
முல்லை + தார் = முல்லையந்தார்
மெய்யீற்றுச் சொற்கள் தனிக் குற்றெழுத்தோடுள்ள மெய் உயிர் வந்தால் இரட்டும். p-lib:- மண் + அரிது = மண் + ண் + அரிது = மண்ணரிது
பொன் + அரிது = பொன்னரிது
மெய்யெழுத்தின் பின் யகர முதன் மொழி வந்தால் இடையில் இகரம் சேரும்.
உ-ம்:- வேள் + யாவன் = வேளியாவன்
மண் + யாது = மண்ணியாது
ணகர னகரவீறுகள் ண ன வீற்றுச் சொற்கள் வேற்றுமையில் ட, ற வீற்றுச் சொற்களாம். அல்வழியில் இயல்பாகும். உ-ம்:- வேற்றுமை சிறுகண் + களிறு = சிறுகட்களிறு
{ பொன் + தகடு = பொற்றகடு அல்வழி மண் + கடிது = மண்கடிது
பொன் + கடிது = பொன்கடிது
தனிக்குற்றெழுத்தோடு சேராத ண, ன க்கள் நகர முதன் மொழியோடு சேரும்போது கெடும்.
உ-ம்:- தூண் + நன்று = தூண் + ணன்று = தூணன்று
பசுமண் + நன்று = பசுமண் + ணன்று = பசுமணன்று
தேனென்ற சொல் இயல்பாதலும், ஈறுகெட்டு வல்லெழுத்து மிகுதலும், மெல்லெழுத்து மிகுதலுமாம். உ-ம்:- வேற்றுமை: தேன் + குடம் = தேன்குடம், தேக்குடம், தேங்குடம் அல்வழி: தேன் + குழம்பு = தேன்குழம்பு, தேக்குழம்பு, தேங்குழம்பு
மகரவீறு
வேற்றுமையிலும், அல்வழியில் பண்புத் தொகை, உவுமைத்

Page 44
82 தமிழ் மரபு
தொகைகளிலும் மகரவீற்றுச் சொற்கள், உயிரும் இடையினமும் வல்லினமும் வந்தால் ஈற்று மகரம் கெட்டுப் புணரும். இருவழியிலும் மெல்லினம் வந்தாலும் கெடும்.
ap - uib: -
மரம் + வேர் = மரவேர் மரம் + கோடு = மரக்கோடு
மரம் + அடி = மர + அடி = மரவடி
வேற்றுமை {
வட்டம் + கல் = வட்டக்கல் பண்புத் தொகை வட்டம் + ஆழி = வட்டவாழி
வட்டம் + வடிவம் = வட்டவடிவம்
பவளம் + இதழ் = பவளவிதழ் உவமைத் தொகை பவளம் + வாய் = பவள வாய்
கமலம் + கண் = கமலக்கண்
வேற்றுமை மரம் + நார் = மரநார் (மகரம் கெட்டது)
அல்வழி மரம் + நீண்டது = மரநீண்டது (மகரம் கெட்டது)
பண்புத் தொகை, உவமைத் தொகையல்லா ஏனைய தொடர்களில், மகரமெய் வல்லினம் வரக்கெடாது, இனமெல்லெழுத்தாகத் திரியும். வினையாலணையும் பெயரிறுதி மகரமும் தனிக்குறிலைச் சார்ந்த மகரமும் வேற்றுமையிலும் வல்லினம் வரக்கெடாது, இனவெழுத்தாகத் திரியும்.
p-b:- நாம் + கடியம் = நாங்கடியம் நிலம் + தீ= நிலந்தீ உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு உண்டனம் + சிறியேம் = உண்டனஞ் சிறியேம் சிறியேம் + கை = சிறியேங்கை
நம் + கை = நங்கை
வேற்றுமையில் மகர மெய்கெட்டு வல்லெழுத்து மிகுதலும் மெல்லெழுத்து மிகுதலும் ஆகும்.
உ-ம்:- குளம் + கரை = குளக்கரை, குளங்கரை
U, J, gp PFUN எழுவாய்த் தொடர் உம்மைத்தொகை வினைத் தொகைகளில் ய, ர, ழ ஈற்றின் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். பண்புத் தொகை உவமைத் தொகைகளில் வல்லெழுத்து மிகும் ரகர வீற்று வினை எச்சத்தின்

சொற்றொடர் மரபு 83
முன் வல்லினம் இயலாம். உ-ம் :-
எழுவாய் {
உம்மைத் தொகை {
வினைத்தொகை {
வினையெச்சம்
பண்புத் தொகை {
உவமைத் தொகை {
வினையெச்சம்
வேய் + குறிது = வேய்குறிது வேர் + சிறிது - வேர்சிறிது யாழ் + பெரிது - யாழ்பெரிது
பேய் + பூதம் = பேய்பூதம் நீர் + கனல் = நீர்கனல் இகழ் + புகழ் = இகழ்புகழ்
செய் + கடன் = செய்கடன் தேர் + பொருள் = தேர்பொருள் வீழ் + புனல் = வீழ்புனல்
உண்ணியர் + போவான் = உண்ணியர் போவான்
மெய் + கீர்த்தி = மெய்க் கீர்த்தி கார் + பருவம் = கார்ப்பருவம் பூழ் + பறவை = பூழ்ப்பறவை
வேய் + த்ோள் = வேய்த் தோள் கார் + குழல் = கார்க்குழல் காழ் + படிவம் = காழ்ப்படிவம்
போய் + கொண்டான் = போய்க் கொண்டான்
வேற்றுமையில் வல்லின மிகுதலும் மெல்லின மிகுதலும் ஆகும்.
p.- ub: -
நாய் + கால் = நாய்க்கால் தேர் + சில் = தேர்ச்சில் பூழ் + செவி = பூழ்ச்செவி வேய் + குழல் = வேய்ங்குழல்
லகர ளகர வீறு
லகர ளகரங்கள் வேற்றுமையில் றகர டகரங்கள் ஆகும். அல்வழியில் இயில்பாகியும் திரிந்தும் வரும். மெல்லெழுத்துகளின் முன் னகர ணகரங்களாகத் திரியும். உ-ம்:-
வேற்றுமை { கல் + குகை = கற்குகை
முள் + குகை = முட்குகை
அல்வழி கல் + குறிது = கல்குறிது, கற்குறிது (றகரமாகத்திரிந்தது)
முள் + குறிது = முள்குறிது, முட்குறிது (டகரமாகத் திரிந்தது)

Page 45
84 தமிழ் மரபு
வேற்றுமை கல் + மாட்சி = கன்மாட்சி (ணகரமாகத் திரிந்தது)
முள் + மாட்சி - முண்மாட்சி (ணகரமாகத் திரிந்தது)
குற்றெழுத்தோடு சேராத லகர, ளகரங்கள் வல்லினம் வந்தால் எழுவாய்த் தொடர், உம்மைத் தொகை, விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், வினைத்தொகை ஆகியவற்றில் இயல்பாம். பண்புத் தொகை, உவமைத்தொகை, வினை எச்சம் ஆகியவற்றில் திரியும். உ-ம்:-
எழுவாய் { கால் + கடிது = கால்கடிது
மரங்கள் + கடியன = மரங்கள் கடியன
உம்மைத் தொகை கால் + கை = கால்கை
{ பொருள்+ புகழ் = பொருள்புகழ் விவித் தொடர் { தோன்றல் + கூறாய் = தோன்றல் கூறாய்
மக்காள் + சொல்லீர் = மக்காள் சொல்லீர்
வினைமுற்று உண்பல் + சிறியேன் = உண்பல் சிறியேன்
கேள் + சாத்தா = கேள் சாத்தா
வினைத்தொகை { கால் + சுடர் = கால்சுடர்
அருள் + குரு - அருள்குரு பண்புத் தொகை { வேல் + படை = வேற்படை வாள் + படை = வாட்படை
உவமைத் தொகை வேல் + கண் = வேற்கண் வாள் + கண் = வாட்கண்
வினையெச்சம் வந்தால் + கொள்ளும் = வந்தாற்கொள்ளும்
வருமொழித்தகர நகரத்திரிபுகள்
னகர லகரங்களின் முன் தகர நகரங்கள் வந்தால் றகர னகரங்களாகவும், ணகர ளகரங்களின் முன் தகர நகரங்கள் வந்தால் டகர ணகரங்கள் ஆகவும் திரியும்.
உ-ம்:- பொன் + தீது = பொன்றீது
கல் + தீது = கற்றீது பொன் + நன்று = பொன்னன்று கல் + நன்று = கன்னன்று மண் + தீது = மண்டீது மண் + நன்று = மண்ணன்று முள் + நன்று = முண்ணன்று

சொற்றொடர் மரபு 85
பொற்றீமை, கற்றீமை, பொன்னன்மை, கன்னன்மை என்பனவும், மட்டீமை, முட்டீமை, மண்ணன்மை, முண்ணன்மை என்பனவும் அவ்வாறு திரிந்து வந்தனவே.
பயிற்சி
1. பின்வருவனவற்றைத்திருத்தி எழுதுக.
இவ்நிலம், சுகயினம், பால்க்கடல், பாற்க்கடல், அங்குசென்றான், வரகுக்கதிர், தைதிங்கள்
2. உடம்படு மெய்கள் யாவை? எவ்வெவ்வெழுத்துகளின் முன்
எவ்வெவ்வுடம்படுமெய் வரும்?
3. பின்வருவனவற்றைப்புணர்த்திஎழுதுக.
ஆடு + குட்டி தேன் + குடம்; வேல் + படை கல் + நன்று.
4. ய, ர, ழ ஈறுகள் பண்புத் தொகை உவமைத் தொகையில் எவ்வாறு
முடியும்? உதாரணம் தருக. 5. குற்றெழுத்தோடு சேராத லகரளகரங்கள் வல்லெழுத்தின்முன்
எவ்வாறு புணர்ந்து முடியும்?
6. மகர ஈற்றுச் சொற்கள் ஈறுகெட்டு இயல்பாய் நிற்பது எப்பொழுதென்றும், ஈறுகெட்டு வல்லெழுத்தேனும் மெல்லெழுத்தேனும் மிகுதல் எவ்விடத்தென்றும் கூறுக.
6. PD 6D I GOLDj GJF GOTTLİ
அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல அக்கினியிற்பட்ட மெழுகுபோல அங்கணத்துள் உக்க அமிழ்தம்போல அச்சில்லா வண்டிபோல அடுத்தது காட்டும் பளிங்குபோல அடியற்ற மரம்போல அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டினாற்போல அடைகாக்கும் கோழிபோல அத்தி பூத்தாற்போல அம்பட்டன் குப்பையைக் கிளறினால் ஆவதுபோல அம்மி துணையாக ஆற்றில் இறங்கியதுபோல அரிசி கிள்ளிய காகம்போல அழகுக்கு அழகு செய்வதுபோல

Page 46
86
தமிழ் மரபு
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல அனலிடைப்பட்ட மெழுகுபோல அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையும் கெட்ட காகம்போல ஆடி ஓய்ந்த பம்பரம்போல ஆகாயத்திற் கோட்டை கட்டுவதுபோல ஆண்டிகள் கூடி மடம் கட்டியமை போல ஆந்தை விழிப்பது போல ஆப்பிழுத்த குரங்கின் நிலைபோல ஆலையில் அகப்பட்ட கரும்புபோல ஆறிடு மேடும் மடுவும்போல ஆனைவாயிற் புக்க கரும்புபோல ஆற்றங்கரை மரம்போல ஆற்றிற் கரைத்த புளிபோல ஆனைகட்டச் சங்கிலி தான் கொடுத்தவாறுபோல ஆனை தன் தலையில் மண்வாரி இட்டதுபோல இடியொலிகேட்ட நாகம்போல இழிந்தவை விரும்பும் ஈயைப்போல இலவு காத்த கிளிபோல இருதலைக் கொள்ளியுள் எறும்புபோல இலைமறை காய்போல உட்சுவரிருக்கப் புறச்சுவர் கோலஞ் செய்வதுபோல உருத்திராக்கப் பூனைபோல உலக்கை தேய்ந்து உளிப்பிடியானமை போல உறியில் வெண்ணெய் இருக்கஊரெல்லாம் நெய்க்கலைதல்போல ஊமைகண்ட கனவுபோல ஊருணி நீர் நிறைந்தமை போல
ஊழித் தீப்போல
எட்டி பழுத்தாற்போல எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல எரிகிற புண்ணில் ஈட்டி பாய்ந்தாற்போல எய்தவனிருக்க அம்பை நோவதுபோல ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாமைபோல ஏவற்பேய் கூரையைப் பிடுங்கியதுபோல ஏழைசொல் அம்பலம் ஏறாமைபோல ஏறாமடைக்கு நீர்ப்பாய்ச்சினாற்போல ஏறவிட்டு ஏணியை எடுத்தாற்போல ஒரு நாட்கூத்துக்குத் தன்மீசையைச் சிரைத்தாற்போல
ஒளியைக் கண்ட இருள்போல
ஒருயிரும் ஈருடலும்போல

சொற்றொடர்மரபு 87
ஒடும் புளியம்பழமும் போல ஒர் ஆவானது இரண்டு கன்றுக்கிரங்குவது போல ஒட்டைக் குடத்துக்கு வார்த்தநீர் போல கடலைக் கையால் நீந்திக் கடக்க முயன்றாற் போல கடற்கரை மணலைக் கணக்கிட முயன்றாற் போல கடன்பட்டார் நெஞ்சம்போல கட்டுக்கடங்காக் காளைபோல கண்ணாடி வீட்டிலிருப்பவன் கல்வீட்டில் கல்லெறிந்தாற்போல கண்ணிலான் பெற்று இழந்தாற்போல கருடனைக் கண்ட பாம்புபோல கரும்பு தின்னக்கைக்கூலி கேட்டாற்போல கலங்கரை விளக்கம்போல கல்லின்மேல் எழுதிய எழுத்துப்போல கல்லின்மேலிட்ட கலம்போல கல்லில் நார் உரிப்பதுபோல கரடி பிறை கண்டதுபோல கரைகாணாக் கப்பல்போல கமரில் ஊற்றிய பால்போல கனியிருக்கக் காய் கவர்ந்தாற்போல கன்றைப் பிரிந்து கதறும் பசுப்போல காகம் உறவுகலந்துண்பதுபோல காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல காட்டில் எறித்த நிலவுபோல காந்தம் இரும்பை இழுப்பதுபோல காய்த்த மரத்தில் கல்லெறி விழுவதுபோல காலத்திற் பெய்த மழைபோல காலுக்கிடவேண்டியதைத் தலைக்கிட்டாற்போல காற்றுடன் சேர்ந்த நெருப்புப்போல கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதுபோல கிளியை வளர்த்துப் பூனைவாயில் கொடுத்தல்போல கீரியும் பாம்பும்போல குங்குமஞ் சுமந்த கழுதைபோல குடத்துள் வைத்த விளக்குப்போல குடியிருந்த வீட்டில் கொள்ளி சொருகினாற்போல குரங்கின் கைப் பூமாலைபோல குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் காம்புபோல குழந்தையையும் கிள்ளித் தொட்டிலையும்ஆநிழ்ன்தீபோல குளிக்கப்போய்ச் சேறு பூசியதுபேருநிசி حمت

Page 47
88
தமிழ்மரபு
குன்று முட்டிய குருவிபோல குன்றின் மேலிட்ட தீபம்போல கூலிக்கு மாரடிப்பதுபோல கொல்லர் தெருவிலே ஊசி விற்றல்போல கொழுகொம்பற்ற கொடிபோல சந்திரனில்லா வானம்போல சமன்செய்து சீர்தூக்கும் தராசுபோல சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்தாற்போல சாடிக்கு மூடி வாய்த்தாற்போல சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல சுடச்சுட ஒளிரும் பொன்போல சூரியன்முன் மின்மினி போல சூரியனைக் கண்ட இருள்போல செவிடன் காதிற் சங்கு ஊதியதுபோல சேற்றில் மலர்ந்த செந்தாமரைபோல தங்கக் கம்பிபோல தரித்திரனுக்குப் புதையல் அகப்பட்டதுபோல தாமரையிலையில் நீர்போல தானே வரும் சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளியது போல திங்களைக் கண்டு பொங்கும் கடல்போல திரிசங்கு சுவர்க்கம்போல தீட்டிய மரத்தில் கூர்மை பார்ப்பதுபோல துரும்பு பெருத்துத் தூணானது போல தூண்டு சுடர்போல தூண்டிலில் அகப்பட்ட மீன்போல தேடிய பூண்டு காலிலே சிக்கியதுபோல தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல தோளில் இருந்து செவியைக் கடிப்பதுபோல நடுவூரில் நல்லமரம் பழுத்தமைபோல நவில்தொறும் நூனயம்போல நகமும் சதையும்போல நல்ல மரத்தில் புல்லுருவிபோல நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல நரிவால்கொண்டு கடல் ஆழம் பார்த்தல்போல நாய்வாலைச் சீர்படுத்த முயன்றவாறுபோல நாய்க்குத் தவிசிட்டதுபோல நீர்மேல் எழுத்துப்போல
நீர்க் குமிழிபோல நீறுமேற் பூத்த நெருப்புப்போல

சொற்றொடர்மரபு 89
நெருப்பில் விழுந்த நண்டு தணலைக் கவ்வுவது போல பசுமரத்தாணிபோல பசுத்தோல் போர்த்திய புலிபோல பருத்தி புடவையாய்க் காய்த்ததுபோல பாலுந் தேனும் கலந்தாற்போல பாம்புக்குப் பால் வார்த்தாற்போல பாவிடை ஆடு குழல்போல பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தமைபோல புதையல் காத்த பூதம்போல பூவோடு சேர்ந்த நாரும் புனிதர் முடியேறுவதுபோல பெட்டிப் பாம்புபோல
பேய்க்கு வேப்பிலைபோல பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டதுபோல போன சுரத்தைப் புளிவிட்டழைத்தது போல மதில்மேற் பூனைபோல மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல மீகாமன் இல்லாத மரக்கலம் போல மொட்டைத் தலைச்சியைக் கூந்தலழகி என்றாற்போல வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற்போல வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் இழந்தமைபோல விளக்கொடு விளையாடும் விட்டில்போல வெங்கலக் கடையில் யானைபுகுந்ததுபோல வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்தது போல வேலி பயிரை மேய்ந்தாற்போல வைக்கோல் போரில் நாய்போல
7. உவமைகள்
அமிர்தம்போலும் அடிசில் அன்னம்போலும் நடை அன்னைபோலும் ஆதரவு அரம்போலும் கூர்மை ஆனைபோலத் தீமையை மறவாமை ஆற்றொழுக்குப் போலும் உரைநடை இடியேறுபோலும் முழக்கம் இரத்தினச் சுருக்கம்போன்ற பேச்சு இராசோபசாரம் போன்ற உபசாரம் இருள்போலும் கருமை

Page 48
90
தமிழ் மரபு
உடும்புபோலப் பிடித்தது விடாமை உவர்க்கடலனைய செல்வன் (ஈயாதவன்) எட்பூப் போலும் மூக்கு ஏறுபோன்ற நடை கங்கைபோலும் புனிதம் கடல்போன்ற கல்வி (பரந்த கல்வி) கடல்போல் முழங்குதல் (இரைதல்) கமலம்போலும் கை-முகம்-கண் கயல்போலும் கண் கற்றாபோலக் கதறலும் பதறலும் கன்றுபோலத்துள்ளும் காந்தள் போலும் கைவிரல் காகம் போலும் கருமை கிளிபோலும் மொழி குடத்துள் விளக்குப்போலும் அடக்கமான புகழ் குதிரைபோலத் தாவுதல் குமிழ்போலும் நாசி குயில்போலும் குரல் குரங்குபோலும் மனம் குவளைபோலும் விழி சிங்கம்போலக் கர்ச்சித்தல் சூறாவளிபோலும் வேகம் தராசுபோலும் நடுவுநிலைமை தாமரைபோலும் பாதம், முகம் திங்கள்போலும் வதனம் தினைபோலும் சிறுமை தீப்போலும் வெம்மை, கொடுமை துரும்புபோலும் மெலிவு துடிபோலும் இடை தூண்போலும் தோள் தென்றல்போலும் மொழி நரிபோலும் தந்திரம் நாய்போலும் நன்றி மறவாமை நீர்க்குமிழிபோலும் நிலையாமை நெருப்புப்போலும் கோபம் பஞ்சுபோலும் நரை பசுப்போலும் சாந்தம் பருந்தும் நிழலும்போலப் பிரியாமை

சொற்றொடர்மரபு 91
பவளம்போலும் உதடு பளிங்குபோன்ற நெஞ்சு பறையடித்தாற் போலப் பலருமறியச் செய்தல் பனைபோலும் நெடுமை பாம்புபோலச் சீறுதல் பால்போலும் வெண்மை பாலும் நீரும்போலும் ஒற்றுமை பிடிபோலும் நடை பிள்ளைபோலும் கள்ளமில் சிந்தை பிறைபோலும் நுதல் பூனைபோலப் பதுங்குதல் மயில்போலும் சாயல் மலைபோலுந் தோள் மலைபோலும் அசையாமை மல்லிகைப் பூப்போலும் சோறு மழைபோலும் கொடை மான்போலும் மருண்ட நோக்கு மின்னல்போலும் இடை மீன்போலப் பிறவுதல் முத்துப்போலும் பல் முல்லைப் பூப்போலும் பல் முசுப்போல முள்காந்திருத்தல் (உட்கார்ந்திருத்தல்) வலம்புரி முத்துப்போலும் குலம்புரி பிறப்பு வடுவகிர்போலும் கண் வாயுபோலும் வேகம் வாள்போலும் கண் வில்போலும் வளைவு விஷவேகம் போலும் விலையேற்றம் வேல்போலும் கண்
பயிற்சி 1.கண், மூக்கு, தோள் இவற்றிற்குரிய உவமைகள் யாவை? 2.மிக்கவேகம், மெல்லிய நடை, அவலக்குரல், தூய்மை இவற்றை
உவமைகளால் விளக்குக. 3. கீறிட்ட இடங்களை நிரப்புக.
கற்றாபோல தராசு போலும்
போலும் மென்மை

Page 49
92
தமிழ் மரபு
பழமொழிகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை அசைந்து தின்கின்றது யானை, அசையாமல் தின்கின்றது வீடு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய் அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா? அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு அடாது செய்தவன் படாதுபடுவான் அடிசெய்கிறது அண்ணன் தம்பி செய்யார் அடிநாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமிர்தமும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அடியாதமாடு படியாது அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால்
அண்டைவீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம் அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது அப்பன் அருமை மாண்டால் தெரியும் அப்பியாச வித்தைக்கு அழிவில்லை அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும் அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது அரைக்காசுக்குக் கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது அரைக் காசுக்குக் குதிரையும் வேண்டும்
ஆறுகடக்கப் பாயவும் வேண்டும் அலை எப்போது ஒழியும், தலை எப்போது முழுகுவது? அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம் அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது அவளுக்கிவள் உண்பாள் அவள்பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை அழகிருந்தென்ன அதிட்டம் இருக்க வேண்டும் அழச்சொல்லுவார் தமர்; சிரிக்கச் சொல்லுவார் பிறர் அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன
கழுதை மேய்ந்தாலென்ன அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்

சொற்றொடர்மரபு 93
அழகேசன் ஆனாலும் அளவறிந்து செலவு செய்ய வேண்டும் அளக்கிற நாழி அகவிலை யறியுமா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அறப் படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்
கொள்ளவும் மாட்டான் அறிந்தறிந்து செய்யும் பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும் அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும்
அடியிலிறங்கித்தான் காசு வாங்க வேண்டும் அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும் அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும் அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும் ஆசை இருக்கிறது அரசன்ஆக; அதிட்டம் இருக்கிறது கழுதை மேய்க்க ஆசை வெட்கம் அறியாது ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம் ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்;
பாடிக்கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் ஆடிக் காற்றிலே அம்மி பறக்கும்போது
இலவம்பஞ்சுக்கு எங்கே கதி ஆடு கொழுக்கிறது இடையனுக்கு லாபம் ஆரால் கேடு வாயால் கேடு ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இருக்கவேண்டும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச்சர்க்கரை ஆழமறியாமல் காலை விடாதே ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆறு கடக்கிறவரை அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீயார் நான் யார் ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் ஆனைக்கும் அடிசறுக்கும் ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே இஞ்சி லாபம் மஞ்சளிலே இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியிலிருந்தாலென்ன
கடைப்பந்தியிலிருந்தாலென்ன இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்

Page 50
94
தமிழ் மரபு
இரவற் சீலையை நம்பி இடுப்பிற் கந்தையை எறியாதே இராச மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான் இருந்தால் மூதேவி நடந்தால் சீதேவி இல்லாது பிறவாது அள்ளாது குறையாது இழவுக்கு வந்தவள் தாலியறுப்பாளா? இறுகினால் களி இளகினால் கூழ் ஈட்டி எட்டியமட்டும் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும் உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும் உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது உப்பிட்டவரை உள்ளளவும் நினை உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமோ? உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை உழுகிற மாடானால் உள்ளூரில் விலையாகாதா? ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ஊர்வாயை மூட உலை மூடியில்லை எண்ணெய் முந்துமோ திரி முந்துமோ? எதிர்த்தவன் ஏழையென்றால் கோபம் சண்டாளன் எரிகிறது விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் எளியாரை வலியார் கேட்டால் வலியாரைத் தெய்வம் கேட்கும் எறும்பு ஊரக் கல்லும் தேயும் ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான்முறை கொண்டாடும் ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்,
இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம் ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா? ஒதியமரம் தூணாமோ? ஒட்டாங் கிளிஞ்சில் காசாமோ? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமோ? கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடவுளை நம்பினோர் கைவிடப்படார் கடனில்லாத கஞ்சி கால்வயிறு போதும் கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குநீர் குடித்தால் தீருமா? கண்கெட்ட பின்னா சூரிய வணக்கம்? கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா? கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

சொற்றொடர்மரபு 95
கனவிலே கண்ட பணம் செலவிற்கு உதவுமா? காப்புச் சொல்லும் கைமெலிவை காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் குயவனுக்கு ஆறுமாதம், தடியடிகாரனுக்கு அரை நாழி குந்தித் தின்றால் குன்றும் மாளும் கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளையில் தெரியும் கொல்லன் தெருவில் ஊசிவிலை போகுமா? கோழி மிதித்துக் குஞ்சு முடமாகுமா? சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் சிறிய பாம்பானாலும் பெரியதடி கொண்டடி சுட்டசட்டி அறியுமோ அப்பத்தின் சுவையை சுவர் இருந்தாலன்றோ சித்திரம் எழுதலாம் சூடுகண்ட பூனை அடுப்பங்கரை சேராது செருப்புக்காகக் காலைத் தறிப்பதா? சேற்றில் புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும் தங்கையின் பிள்ளைதன்பிள்ளையானால் தவத்துக்குப் போவானேன் தம்பியுடையான் சண்டைக்கஞ்சான் தன்வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா? தாலியறுத்தவளுக்கு மருத்துவிச்சித் தயவு ஏன்? திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை துணைபோனாலும் பிணை போகாதே தென்றல் முற்றிப் பெருங்காற்றாகும் தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனைக் கொட்டும் தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும் நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும் நாய்விற்ற காசு குரைக்குமா? நித்தம்போனால் முத்தம் சலிக்கும் நீர் உள்ளமட்டும் மீன்குஞ்சு துள்ளும் நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும் பழகப் பழகப் பாலும் புளிக்கும் பானையில் உண்டானால் அகப்பையில் வரும் புலிபதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம் பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு பொன்னின் குடத்துக்குப் பொட்டிட வேண்டுமா? போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

Page 51
தமிழ் மரபு
மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம்
அடங்கினாற் போதும் மாமியார் உடைத்தால் மண்கலம்;
மருமகள் உடைத்தால் பொன்கலம் முதலியார் இடம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு முள்ளின் மேல் சீலை போட்டால்
மெள்ள மெள்ள வாங்க வேண்டும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் மேழி பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் யதார்த்தவாதி வெகுசன விரோதி வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும் வெள்ளைக்கில்லைக் கள்ளச் சிந்தை வெறுங்கை முழம் போடுமா? வேண்டாப் பெண்டிர் கைபட்டாற் குற்றம் கால்பட்டாற் குற்றம் வேலைக்கள்ளிக்குப் பிள்ளைப்பராக்கு
பயிற்சி 1. கீறிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை வைத்து நிரப்புக.
(9) கடனில்லாத கஞ்சி போதும் (ஆ) சமுத்திரம் முழங்கால் (g)) தின்றால் குன்றும் மாலும் 2. பின்வரும் பொருள்தரும் பழமொழிகள் எவை?
(9) எவருடைய உதவியுமில்லாதவனுக்கு இறைவன்துணை புரிவார்
(ஆ) ஒன்றின் இயல்பை அறியாது அதிற் பிரவேசியாதே. (இ) இளமையிலே பழகிய பழக்கம் இறுதிவரை இருக்கும்.

97
வாக்கியமரபு
1. வாக்கிய அமைப்பு
சொற்கள் பலவும் சேர்ந்திருப்பது மாத்திரம் வாக்கிய இலக்கணமாகாது. அவைகள் பொருளமைதி உடையனவாயிருத்தல் வேண்டும். உதாரணமாக;-
மரத்தை வீழ்த்தினான் வெட்டி கந்தன்
இத்தொடரில் வினைமுற்று, பெயர், வினையெச்சம், இரண்டாம் வேற்றுமையேற்ற சொல் ஆகிய பலசொற்கள் உள்ளன. ஒழுங்காக அமையாமையால் கருத்துத் தெளிவாக விளங்கவில்லை. இச்சொற்களையே 'கந்தன் மரத்தை வெட்டி வீழ்த்தினான்’ என ஒழுங்காக எழுதின், பொருள் விளக்கமும் வாக்கிய அமைப்பும் உண்டாகின்றன.
சில வாக்கியங்கள் ஒருவாறு பொருளைத் தந்தும் பூரணமாகாத நிலையில் இருக்கின்றன. வாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் பிரதான உறுப்புக்களாம். எழுவாய் வெளிப்படையாகவேனும், குறிப்பாகவேனும் இல்லாத வாக்கியம் பூரணவாக்கியமாகவோ, சிறந்த வாக்கியமாகவோ கருதப்படமாட்டாது. உ-ம்:- 1. அவனுக்குக் கவலைமேல் கவலையாக வந்து கொண்டிருந்தது. 2. அவன் ஏன் சித்தியெய்தவில்லை என்று எனக்குத் தோன்றவில்லை.
இவ்வாக்கியங்கள் எழுவாய் என்னும் உறுப்பு இல்லாமல் வந்தமையால் பிழைபட்ட வாக்கியங்களாயின. 'அவனுக்குக் கவலை மேலும் மேலும் வந்து கொண்டிருந்தது' எனவும் 'அவன் ஏன் சித்தியெய்தவில்லை என்பது எனக்குத் தோன்றவில்லை" எனவும் எழுதுதலே தக்கதாம்.
ஆகவே ஒழுங்குபட எழுதலும் எழுவாய் பயனிலை முதலிய வாக்கிய உறுப்புக்களைக் கவனித்தலும் அவசியமாகும்
(அ) ஒழுங்குபட எழுதல்
ஒரு வாக்கியத்தில் எழுவாய் முன்னும், பயனிலை இறுதியிலும்
இருத்தல் வேண்டும். இம்முறை மாறிவருதல் இன்றியமையாத சில சந்தர்ப்பங்களிற் காணப்படும். எழுவாய் அடைமொழி எழுவாய்க்கு

Page 52
98 தமிழ் மரபு
முன்னும், பயனிலை அடைமொழி பயனிலைக்கு முன்னும் இருத்தல் வேண்டும். உ-ம்:-
புதிய நீர்ப்பெருக்கு விரைந்து பரவியது இதில், 'புதிய' என்பது எழுவாய் அடைமொழி. 'நீர்ப் பெருக்கு" எழுவாய் 'விரைந்து பயனிலை அடைமொழி. 'பரவியது' பயனிலை.
பயிற்சி பின்வரும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், எழுவாய் அடைமொழி, பயனிலை, பயனிலை அடைமொழி ஆகியவற்றைப் பிரித்துக் காட்டுக.
1. கல்வியிற் பெரிய கம்பர்கர்வம் அற்றவர். 2.உலகம் போற்றும் காந்தி அடிகள் விடுதலைக்காகப்பாடுபட்டார். 3. எழுத வாசிக்கத் தெரியாத செல்வர்களும் முற்காலத்தில் இருந்தார்கள். 4.அதிகாரியைப் பிடித்த பயம் வேலைக்காரனையும் கலக்கிவிட்டது.
5. குளத்தில் உள்ள மீன்கடலில் உள்ள மீனுக்குப்புத்தி சொல்லிற்று.
(ஆ) எழுவாய் பயனிலைகள்
ஒவ்வொரு வாக்கியமும் எழுவாய், பயனிலைகளை உடைத்தாய் இருத்தல் வேண்டும். எழுவாய் வெளிப்படையாயும், வெளிப்படாமலும் இருக்கும். உ-ம்:-
கண்ணன் குழல் ஊதினான் இதில் எழுவாய் வெளிப்படையாய் வந்தது.
யாத்திரை செய்துவந்தேன்; சோறு தாருங்கள். இங்கே யான், நீங்கள் என்னும் எழுவாய்கள் வெளிப்படாது நின்று கருத்தைத்தந்தன.
எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண் முதலியவற்றால் ஒன்றற் கொன்று பொருத்தமுற அமைதல் வேண்டும். அன்றேல் வழுவாம். உ-ம்: இராமன் வந்தான் - திணை
அவன் பாடினான் - பால் நாம் விளையாடினோம் - எண் இங்ங்னமன்றி,
இராமன் வந்ததது அவன் பாடினாள் நாம் விளையாடினேன் என வரின் வழுவாம்.

வாக்கிய மரபு 99
மரம், குதிரை முதலிய பால் காட்டும் விகுதி பெறாத அஃறிணைப்
பெயர்ச் சொற்கள் ஒருமை வினையோடும் பன்மை வினையோடும் முடியும். பெரும்பான்மையும் செய்யுளிலே பன்மை முடிவு பெறும் வழக்குக் காணப்படும்.
உ-ம்:- மரம் வளர்ந்தது
மரம் வளர்ந்தன
குதிரை மேய்ந்தது
குதிரை மேய்ந்தன
(இ) சொல் முடிபுகளறிதல்
ஒரு வாக்கியத்திலுள்ள எழுவாய் பயனிலைகளையறிதலேயன்றி ஏனைய சொற்களின் முடிபுகளையறிதலும் இன்றியமையாதது. நீண்ட வாக்கியங்கள் எழுதும்போது சொன்முடிவு நோக்காராயின் மாணவர் பெரிதும் பிழைபடுவர். பெயரெச்ச வினையெச்சங்களின் முடிவும், வேற்றுமையுருபுகளின் முடிவும், இடைச் சொற்களின் முடியும் அறிதல் வேண்டும். உ-ம்:-
'பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வரும் துன்பத்தைப் போலக் கொண்டு பேணும் இரக்கமுடைமையே அறிவினாலாம் பெரும் பிரயோசனம்" பிற - இடைச்சொல். உயிர்களுக்கு என்னும் பெயரை விசேடித்தது. உயிர்களுக்கு - உருபேற்ற சொல், வரும் என்னும் பெயரெச்சத்தோடு
முடிந்தது. வரும் - பெயரெச்சம். துன்பத்தை என்னும் சொல்லோடு முடிந்தது. துன்பத்தை - உருபேற்ற சொல். கொண்டு என்னும் வினையெச்சத் தோடு
முடிந்தது. தமக்கு - உருபேற்ற சொல். வரும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. வரும் - பெயரெச்சம். துன்பத்தை என்னும் சொல்லோடு முடிந்தது. துன்பத்தை - உருபேற்ற சொல். கொண்டு என்னும் வினையெச்சத் தோடு
முடிந்தது. போல - உவமை உருபிடைச் சொல். கொண்டு என்னும் வினையெச்சத்
தோடு முடிந்தது. கொண்டு - வினையெச்சம். பேணும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. பேணும் - பெயரெச்சம். இரக்கமுடைமையே என்னும் எழுவாயோடு
முடிந்தது. இரக்கமுடைமையே - எழுவாய். பெரும் பிரயோசனம் என்னும்
பயனிலையோடு முடிந்தது.

Page 53
100 தமிழ்மரபு
அறிவினால் - உருபேற்ற சொல். ஆகும் என்ற பெயரெச்சத்தோடு முடிந்தது. ஆகும் - பெயரெச்சம். பெரும் பிரயோசனம் என்னும் பெயரோடு
முடிந்தது. பெரும் பிரயோசனம் - பெயர்ச் சொல். பயனிலையாக வாக்கியத்தை
முடித்து நின்றது. இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்திலும் உள்ள சொற்களொவ் வொன்றின் முடிவையும் அறிவதனாலேதான் பிழையற எழுதும் திறமை ஏற்படும்.
பயிற்சி பின்வரும் வாக்கியங்களிலுள்ள சொற்கள் ஒவ்வொன்றினதும் முடிக்கும் சொற்களை எழுதுக.
1. முதியோர் சொல்லை மதியாது நடப்பது இப்போது சில
இளைஞர்களிடையே நாகரீகமான செயலாகக் கருதப்படுகிறது. 2. மனைவியையும் மக்களையும் ஆதரிக்கமுடியாதவனும் தனக்கு
விருப்பமில்லாதிருந்தும் பிறரின் திருப்திக்காக மணம் புரிந்து கொள்கிறவனும் படித்த படிப்பு பயனற்றது. 3. குடும்ப வருவாயை அதிகப்படுத்தும் பொருட்டு, ஒழிவு
நேரங்களில் மனைவியும் தொழிலில் ஈடுபடுவது நல்லது. 4. கோபத்தை வெல்லுவதற்குச்சங்கீதம் எனக்கு உதவியாய்
இருக்கிறது. 5. பிற மதங்களையும் மதத்தினரையும் மதித்துச் சகிப்புத்
தன்மையோடு வாழப் பழகிக்கொண்டோமானால், இயற்கைக்கு மாறான இந்த நச்சுநிலைதானாகவே மறைந்துவிடும். 6. நிலையான எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதற்கு, நமது
நெஞ்சத்தில் அஞ்சாமை வேரூன்றி நிற்க வேண்டும்.
2. வாக்கிய வகைகள்
வாக்கியங்கள் தனிவாக்கியம், கலப்பு வாக்கியம் 66 இருவகைப்படும்.
(அ) தனி வாக்கியங்கள்
ஒருவினையுடைய வாக்கியம், பல வினைகளையுடைய வாக்கியம் எனத் தனி வாக்கியம் இரண்டு வகைப்படும்.

வாக்கிய மரபு 101
ஒரு வினையுடைய வாக்கியங்கள்
ஒரு வினையுடைய வாக்கியங்கள் ஒரு ஒரு வினை நிகழ்ச்சியை மாத்திரம் கூறும். d-b:- கந்தன் பாடம் படித்தான்
அரசன் குடிகளைக் காத்தான்
அன்றியும் இவன் இன்னான் 'இது இன்னது" எனவும் குறித்து நிற்கும்.
உ-ம்: இராமன் சிறந்த வீரன்
பசு ஒரு சாதுவான மிருகம்
அன்றியும், வினாவைப் பயனிலையாகவும் கொண்டு முடியும்.
ol-b: அவர் யார்?
இச்சொற்குப் பொருள் யாது?
பல வினையுடைய வாக்கியங்கள்
இவை ஒரு கருத்தாவை (எழுவாயை)யும், அதன் பல்வேறு வினைகளையும் கொண்டு ஒரு பயனிலையோடு முடியும். ஒரு எழுவாய்க்குப் பல வினைமுற்றுக்கள் வருமானால், வினைமுற்றுக்களை யெல்லாம் எச்சமாக்கி, ஒரு பயனிலை மாத்திரம் வரத்தக்கதாக வாக்கியத்தை அமைக்க வேண்டும். ol-b: கபிலர், பாரியைப் புகழ்ந்து பல பாட்டுக்கள் பாடினார்
கபிலர் பல பரிசுகள் பெற்றார் கபிலர் மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் சென்றார் இங்கே 'கபிலர் என்ற எழுவாய் மூன்று பயனிலைகளை உடையதாய் மீட்டும் மீட்டும் வந்துள்ளது. வினை நிகழ்ச்சியையே குறிப்பது நோக்கமானால் ஒரே எழுவாய் மீட்டும் வருதல் அழகன்று; பின் வருமாறு எழுதலே சிறந்தது.
கபிலர், பாரியைப் புகழ்ந்து, பல பாட்டுக்கள் பாடி, பல பரிசுகள் பெற்று, மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் சென்றார்.
இதில் பாடினார், பெற்றார் என்னும் முற்றுக்கள் பாடி பெற்று என எச்சமாகத் திரிக்கப்பட்டன.
இங்கே அவதானிக்கப்பட வேண்டியதொன்று உண்டு. கேட்போர் கருத்துக் கருத்தாவிலும் கருத்தாவின் பல்வேறு செயல்களிலும் ஊன்றிப் பதிந்து, சிறந்த எண்ணம் உண்டாக வேண்டும் என்னும் கருத்துளதேல், முதலிற் காட்டியவாறு எழுதலே நன்று. அன்றேல், ஒர் எழுவாயும் ஒரு பயனிலையும் உடைய வாக்கியமாக எழுதுக.

Page 54
102 தமிழ் மரபு
பலவினை வாக்கியங்களை ஒருவினை வாக்கியமாக அமைக்கும்பொழுது கவனிக்கவேண்டிய விதிகள் சில உள.
வினைமுற்றுக்களை எச்சமாக்கல் எண்ணும்மையைச் சேர்த்தல் வேற்றுமை உருபுகளைச் சேர்த்தல் அடைமொழியாக்கல்
:
முற்றுக்களை எச்சமாக்கல்:
பல வினைகளினது நிகழ்ச்சியைக் குறிக்குமிடத்து முற்றுக்கள் எச்சமாக்கி முடிக்கப்படும்.
உ-ம்:- இராமன் கடலில் அணை செய்தான்;
இலங்கை புக்கான், இராவணனை அழித்தான்.
எழுதும் முறை: இராமன் கடலில் அணைசெய்து இலங்கை புக்கு
இராவணனை அழித்தான்.
எண்ணும்மையைச் சேர்த்தல்:
பல எழுவாய்கள் ஒருவினை நிகழ்ச்சியை யுடையனவாயின்
அவைகளைத் தனித்தனி வாக்கியமாக எழுதாது எண்ணும்மை சேர்த்து ஒரு வாக்கியமாக எழுதல் தக்கது.
உ-ம்: இராமன் பாட்டுப் பாடினான்.
வேலன் பாட்டுப் பாடினான் நாகன் பாட்டுப் பாடினான்.
எழுதும் முறை: இராமனும் வேலனும் நாகனும் பாட்டுப் பாடினார்கள்.
ஓர் எழுவாய்க்குப் பல வினைமுற்றுக்கள் வருமானால் அவ்வினை முற்றுக்களை எச்சமாக்கி எண்ணும்மை கொடுத்து இறுதியில் ஒரு பொதுவினையால் முடிக்குக.
2-lb.:- இராமன் சுவையான உணவுகளை உண்டான்.
அவன் சிறிது நேரம் இன்னிசைப் பாட்டுப் பாடினான். அவன் தன் தோழரோடு சதுரங்கம் ஆடினான்.
எழுதும் முறை: இராமன் சுவையான உணவுகளை உண்டும், சிறிது நேரம் இன்னிசைப் பாட்டுக்களைப் பாடியும், தன் தோழரோடு சதுரங்கம் ஆடியும் மகிழ்ச்சியோடு காலங் கழித்தான்.

வாக்கிய மரபு 103
வேற்றுமைஉருபுகளைச் சேர்த்தல்: 1. இந்திரன் அகலிகையைக் காமுற்றான். அவன் கெளதமராற் சபிக்கப்பட்டான்.
எழுதும் முறை: இந்திரன் அகலிகையைக் காமுற்றதனால் கெளதமராற்
சபிக்கப்பட்டான்.
2. நான், இளமையில் கல்வியை அசட்டை செய்தேன்.
இப்பொழுது பிறரின் இகழ்ச்சியை அடைகிறேன்.
எழுதும் முறை: நான் இளமையில் கல்வியை அசட்டை செய்தமையால்
இப்பொழுது பிறரின் இகழ்ச்சியை அடைகிறேன்.
அடைமொழியாக்கல் அல்லது பெயரெச்சமாக்கல்ரு
1. கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
அவர் சடையப்பர் மனையில் வளர்ந்தார். அவர் தமிழ்நாடெங்கும் சிறப்புற்றார்.
எழுதும் முறை: தேரழுந்தூரில் பிறந்து சடையப்பர் மனையில் வளர்ந்த கம்பர் தமிழ்நாடெங்கும் சிறப்புற்றார்.
2. கபிலர், பாரியின் சிறந்த நண்பர்.
அவர் சுவையுள்ள பல பாடல்களைப்பாடினார்.
எழுதும் முறை பாரியின் சிறந்த நண்பரான கபிலர், சுவையுள்ள பல
பாடல்களைப் பாடினார்.
(ஆ) கலப்பு வாக்கியம்
கலப்பு வாக்கியத்தில் பிரதான வாக்கியம் ஒன்றும் உபவாக்கியம் ஒன்றும் இருக்கும்.
உ-ம்:- கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என
ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்கள்.
இதில், 'ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்கள்’ என்பது பிரதான வாக்கியம். கம்பர் வாழ்ந்தவர் என்பது உபவாக்கியம். s
இந்த உப வாக்கியங்கள் எழுவாயாகவும், செயப்படுபொருளாகவும், பயனிலை அடைமொழியாகவும் வரும்.

Page 55
104 தமிழ் மரபு
எழுவாயாக வருதல்:
திருக்குறள் ஒரு மொழிபெயர்ப்பு நூல்" என்பது பிழைபட்ட கொள்கை. இதில், திருக்குறள் - நூல்" என்ற உப வாக்கியம் எழுவாயாக வந்தது.
செயப்படுபொருளாக வருதல்:
தமிழ், திராவிடம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை இன்றும் சிலர் ஆதரிக்கிறார்கள்.
பயனிலை அடைமொழியாக வருதல்:
தான் முதன் மந்திரி ஆகவேண்டும் எனக் கனகன் ஆசைப்பட்டான்.
பயிற்சி 1. பின்வரும் வாக்கியங்களிலுள்ள எழுவாய் பயனிலைகளை எடுத்துக்
காட்டுக.
(அ) எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. (ஆ) தமிழ் மிகவும் பழமையான நூல். (இ) எல்லோரும் விரைந்து வாருங்கள். 2. பின்வரும் வாக்கியங்களிலுள்ள சொன் முடிபுகளை எழுதுக.
(அ) நாடிழந்த நளன் நடுக்காட்டில் தன் மனைவியை விட்டுப்பிரிந்தான். (ஆ) காவியங்களின் தோற்றத்தை நோக்குவோர் சிலப்பதிகாரம் ஒரு
புதிய போக்கையுடையது என்பதை ஒருமுகமாக ஆதரிப்பர். 3. பின்வரும் வாக்கியங்களில் ஒருவினையுடையவை இவையெனவும்
பலவினையுடையவை இவையெனவும் எழுதுக.
(ஆ) பழையகாலத்து மன்னர் தம் குடிகளைத் தம் உயிர் எனவே
மதித்தனர். (ஆ) மேல் நாட்டார் கடல் கடந்து பலநாடுகளுக்கும் சென்று தம் மொழியைப் புகுத்தியும், தம் மதத்தைப் பரப்பியும் தம் பொருள்களைப் பெருக்கியும் முன்னேறி விட்டனர். (இ) இல்வாழ்வார் விருந்தோம்புதலைத் தன் கடமைகளுள் ஒன்றாகக்
கருதவேண்டும். (ஈ) ஆறில்லாத ஊர் அழகில்லாதது. 4. பின்வரும் கலப்பு வாக்கியங்களில் உள்ள பிரதான வாக்கியத்தையும்
உபவாக்கியத்தையும் எடுத்தெழுதுக.
(அ) வேலன் சிறந்த செல்வன் என்பதை யான் அறியேன்.

வாக்கிய மரபு 105.
(ஆ) ஆயிரம் ஆண்டுகளுக்கொருமுறைதான் மகாகவிகள் தோற்று
வார்கள் எனச் சிலர் கூறுகிறார்கள். (இ) இந்தியாவின் கலாச்சாரம் உலகில் மிகப் பழமையானது என்பது
மறுக்க முடியாத உண்மை.
(இ) தன்கூற்றும் பிறர்கூற்றும்
ஒருவர் கூறிய ஒரு செய்தியை அவர் கூறியவாறே கூறுவது தன்கூற்று எனவும் நேர்கூற்று எனவும் கூறப்படும். அதனையே பொருள் திரியாது சொற்களை மாத்திரம் இடம், காலம் முதலியவற்றுக் கேற்பத் திரித்துக் கூறுவது பிறர் கூற்று எனவும் அயற் கூற்று எனவும் அழைக்கப்படும். தன்
கூற்றைப் பிறர் கூற்றாகக் கூறுமிடத்துக் கவனிக்க வேண்டிய சில சொற்றிரிபுகள் பின்வருமாறு:-
தன் கூற்று பிறர் கூற்று நான் தான் நாம் தாம் pÈ நான் (இடம் நோக்கி அவன் எனவும் வரும்) இது அது இங்கு அங்கு இப்பொழுது அப்பொழுது நாளைக்கு மறுநாள் நேற்று முதல்நாள் இன்று அன்று இப்படி அப்படி G போ, செல்
உ-ம்:-
தன் கூற்று:- ஆசிரியர், 'நீ ஏன் நேற்றுக் கோயிலுக்கு வரவில்லை" எனக்
.கேட்டார் ܫ- ܚ பிறர் கூற்று:- ஆசிரியர், நான் ஏன் முதல்நாட் கோயிலுக்குப்
போகவில்லை எனக் கேட்டார். தன் கூற்று:- 'நான் கோவலனைத் தண்டித்தது நீதியே என்று
பாண்டியன் கூறினான். பிறர் கூற்று:- தான் கோவலனைத் தண்டித்தது நீதியே எனப் பாண்டியன்
கூறினான். தன் கூற்று:- இங்கு நாங்கள் வந்தது பெருந் தவறு என்று அவர்கள்
கூறினர். பிறர் கூற்று:- அங்குத் தாங்கள் சென்றது பெருந் தவறு என்று அவர்கள்
கூறினர்.

Page 56
106 தமிழ்மரபு
பிறர் கூற்றைத் தன் கூற்றாக மாற்றல்
dro
பிறர் கூற்று:- வாயில் காவலன் கண்ணகியை அவள் அங்கு வரக்
காரணம் யாது எனக் கேட்டான்.
தன் கூற்று:- 'நீ இங்கு வரக் காரணம் யாது’ என வாயில்காவலன்
கண்ணகியைக் கேட்டான்.
பிறர் கூற்று:- தன்னால் அக்கருமம் செய்ய முடியாது எனக் கூலியாளன்
கூறினான்.
தன் கூற்று:- ‘என்னால் இக்கருமம் செய்யமுடியாது’ எனக் கூலியாளன்
கூறினான்.
பயிற்சி 1. பின்வரும்தன்கூற்றுவாக்கியங்களைப் பிறர்கூற்றுவாக்கியங்களாக
மாற்றுக.
(அ) தீயவர்களோடு பழகாதே என நான் அன்று உனக்குக்
கூறவில்லையா? என ஆசிரியர் ஒரு மாணவனைக் கேட்டார். (ஆ) இன்னும் நீஎன்னுடன் வாதிக்கத் துணிகிறாயா எனக் கண்ணன்
என்னைக் கேட்டான். .א
(இ) நீநாளை என்னுடன் வரல்வேண்டும்” என ஆடியபாதன்
இளங்கோவுக்குக் கூறினான். (ஈ) "என்ன பரிதாபம் இது" என்றான் அரசன். 2. பின்வரும் வாக்கியங்களைத்தன்கூற்றாக மாற்றி அமைக்குக.
(அ) அவனோடுதாங்கள்ஐந்து சகோதரர்கள்ஆனார்கள் என்று
இராமன் குகனுக்குக் கூறினான். (ஆ) கனகன் அருணனைப்பார்த்து, அவன்முருகனின் சொல்லையும்
கேட்பானோ என விசாரித்தான்.
(இ) இராவணனை இராமன் அன்று போய் மறுநாள் போர்க்கோலங்
கொண்டு வருமாறு ஏவினான்.
(ஈ) அது பெரிய அற்புதமான செயலென வேலன் வியந்தான்.
3. வாக்கிய மரபுவழா நிலை
ஒரு செய்தியைச் சொல்லும்பொழுது, முன்னோர் மரபை அல்லது அம்மொழிமரபை அறிந்தே சொல்லல் வேண்டும். நாம் பேசும் பொழுதும் எழுதும்பொழுதும் இலக்கண வழுக்களைதல் போல, LDUL I வழுக்களைதலும் இன்றியமையாதது.

வாக்கிய மரபு 107
சில உதாரணங்கள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. அவை போல ஏனையவற்றையும் அறிந்து திருந்துக.
p-lb.:-
1. பள்ளிக்கூடத் திறப்பு விழாவிற்கு நாலைந்து மனிதரே வந்திருந்தார்கள்.
“நாலைந்து பேரே" என்று திருத்த வேண்டும். 2. பறவைகளும் மிருகங்களும் சனங்களும் பகலில் உணவு தேடி இரவில்
ஒடுங்குதல் பெரும்பான்மையான இயல்பு.
"சனங்களும்’ என்பதை மனிதர்களும் என்று எழுதலே மரபு. மற்றப் பிராணிகளோடு சேர்த்துக் கூறும்போது, 'மனிதர் என்றும், மனிதரைத் தனித்துப் பேசும்போதுமக்கள் (அல்லது) சனங்கள் என்றும் கூறுக. 3. காந்தியடிகள் சில வருடங்களுக்கு முன்செத்தார்.
செத்தார் என்னாது, பூதஉடலை நீத்தார் அல்லது 'மண்ணுலகை நீத்தார் அல்லது 'விண்ணுலகெய்தினார் எனலே தக்கது. எங்கள் வீட்டுக்கோழி நேற்றுப்பூதஉடலை நீத்தது. இறந்தது" அல்லது 'மாண்டது’அல்லது "செத்தது’ எனலே தக்கது. சாதல் எல்லா உயிர்க்கும் பொதுவாயினும் உயர்வுநோக்கி மக்களின் மரணத்தைச் சிறந்த சொல்லாலும், ஏனைய தாழ்ந்த உயிர்களின் மரணத்தைப் பொதுச் சொல்லாலும் கூறுக. 4. அரசர் அவ்வேழையைப் பார்த்து "உனக்கு யாது வேண்டும்? என்று
கேட்டார்.
கேட்டார் என்று கூறாது, கேட்டருளினார் எனல் சிறந்தது. தெய்வம், அரசன், பெரியோர் இவர்கள் அருள் காரணமாகச் செய்யும் செயல்களை அருளலாகச் சொல்லிலும் அமைத்தல் வேண்டும். பேசுதல் - பேசியருளுதல், தருதல் - தந்தருளுதல் 5. வாசவன் இன்று என்விட்டில் சோறு தின்றான்.
சோறு தின்றான் என்னாது, உணவருந்தினான் என்க. ஐந்தறிவுயிர் முதலானவற்றின் உண்டற்றொழிலைத் தின்னலாகக் கூறலாம். மக்கள் உண்டார்கள் - உணவருந்தினார்கள் - அயின்றார்கள் - மிசைந்தார்கள் என்க. மேலும் வெற்றிலை, பாக்கு, கறி, கரும்பு முதலியனவே தின்னுதற் தொழிற்குரியன. 6. மாலி என்பவரால் இப்படம் கீறப்பட்டது.
கீறப்பட்டது என்னாது வரையப்பட்டது என்க. கீறுதல் என்பது சிறுவர், அறியாதவர் ஆகியவரது செயலைக் குறிக்கும். கற்றோர் கலைஞர்

Page 57
108 தமிழ் மரபு
முதலியோரது ஓவியச்செயலை வரைதல் என்றும் தீட்டுதல் என்றும் கூறுக. 7. அவன் தோடிராகத்தில் அப்பாட்டைப்படித்தான்.
படித்தான் என்னாது பாடினான் என்க. 8. அரசன்ஏழைக்குப் பொன்கொடுத்தருளினான்.
கொடுத்தருளினான் என்னாது ஈந்தருளினான் என்க. ஈதல் தன்னிலும் தாழ்ந்தவனிடத்தும், தருதல் தனக்குச் சமமானவனிடத்தும், கொடுத்தல் தன்னில் உயர்ந்தவனிடத்தும் செய்யும் செயல்கள்.
எனவே சோழன் பாண்டியனுக்குப் பொன் தந்தான்; சோழன் சிவாலயப் பணிக்குப் பொன் கொடுத்தான்; சோழன் ஏழைக்குப் பொன் ஈந்தருளினான் - என்னும் இவை இக்காலத்து மாறியும் வழங்குகின்றன. 9. சாணக்கியன் உணவருந்தி எச்சில் கழுவினான். தருமன்விழித்தெழுந்ததும் பீளைகழுவினான்.
இங்கே எச்சில் கழுவுதல், பீளை கழுவுதல் என்பன இடக்கர்ச் சொற்கள். இவை முறையே வாய் பூசினான் என்றும் கண் கழுவினான் என்றும் எழுதப்படல் வேண்டும்.
4. வாக்கியச் சிறப்பியல்புகள்
1. எளிய சொற்களை ஆளுதல்:
எண்ணுவதுபோலவே எழுதல் வேண்டும் என்பது அறிஞர் பலர் கருத்து. திரிசொற்களையும் அருஞ்சொற்களையும் ஆளுதல் வாசிப்போரது கருத்தைக் குழப்பும். ஆகவே இயன்றவரை எளிய சொற்களால் எழுதுக. a -lb.:- அன்னோன் ஈண்டு இறுத்திருக்குபு
பிற்றை ஞான்று ஏகினன். இது திரிசொற்கள் பல அடங்கிய ஒரு வாக்கியம்; எண்ணத்தைத் திரித்து அமைத்த நடை. இதை எழுதும் முறை வருமாறு:
அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் சென்றான். 2. உவமைகளையாளுதல்:
நாம் ஒரு பொருளைப் பிறர்க்குக் கூறுமிடத்து, அதனை நன்கு விளங்கவேண்டுமாயின் நன்கு தெரிந்த ஒர் உவமானத்தைச் சொல்லி விளக்குகிறோம். அதுபோலவே, எழுத்திலும் கருத்தை நன்கு புலப்படுத்த உவமைகளை எடுத்தாளுகிறோம்.

வாக்கிய மரபு 109
உ-ம்: இராமனைப் பிரிந்த நகரமக்கள் கன்றை இழந்த பசுப்போலக்
கலங்கினார்கள்.
3. உருவகங் கூறல்
இதற்குக் கற்பனைத் திறம் வேண்டும். சொல்லும் செய்தியை அழகிய உருவத்தில் அமைக்கவேண்டும். வாக்கியம் கருத்தை வெளியிடுதலே தனித்த நோக்கமாக இருக்கக்கூடாது. சிந்தனைத் திறனையும் வளர்க்க வேண்டும்.
'காந்தியடிகள் மறைந்தார். மக்களனைவரும் கவலைப்பட்டார்கள்’ இது பொதுநடை
'காந்தியென்னும் தீபம் அணைந்தது. மக்கள் உள்ளத் துயரை நீக்கி வந்த மணிவிளக்கு மறைந்தது. துன்ப இருள் நீக்கமற நிறைந்து விட்டது."
இது உருவகம். வேண்டுமிடங்களில் இவ்வாறு உருவகம் செய்து எழுதினால் வாக்கியங்கள் படிக்குந்தோறும் சுவைமிகக் கொடுக்கும். கட்டுரை வளம்பெறும். 4. வெவ்வேறு வினைகளைத் தொடுத்தல்
ஒரு சொல் மீட்டும் மீட்டும் வருதல் (இன்றியமையாத இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) படிப்போர்க்குக் களைப்பைத் தரும். மேலும் எழுதுவோரது சொற்பஞ்சத்தையும் அது குறிப்பாற் புலப்படுத்தும். "வினைச்சொல்லே வாக்கியத்தின் உயிர்' என்பர் விவேகானந்தர். மரபுபற்றிய வினைகளை இடமறிந்து கையாளுதலும், பலவேறு வினைகளையும் சாதுரியமாக அமைத்தலும் ஒரு பந்தியில் ஒரு வினையை மீட்டும் பிரயோகியாமையும் கட்டுரையாளர் கவனிக்கத் தக்கன. உ-ம்:- அ) இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பலர் துப்பாக்கிக் கிலக்காகி மறைந்தனர்; பலர் உண்ணாதிருந்து உயிர் வழங்கினர்; பலர் சிறை சென்று திரும்பாது அமரவாழ்வெய்தினர். ஆ) அயோத்தியை விட அடர்ந்த காடே சீதைக்கு மிக உவப்பாயிருந்தது. கிளியோடும் பூவையோடும் பேசி மகிழ்வாள்; மெல்லென ஒடும் ஆற்று நீரில் விளையாடி ஆனந்தமடைவாள்; கனியும் பூவும் கொய்து களிப்பாள்; மானோடும் மயிலோடும் குலாவி மனம் பூரிப்பாள்; அசைந்து வரும் தென்றலிலே உலாவி இன்பங் குழைவாள். சிறிய வாக்கியங்களையே பெரும்பான்மையும் அமைத்தல்
நாம் பெரிய வாக்கியங்களைத்தான் எழுத விரும்புவோம். ஆனால் வினை முடிபுகள பிழையில்லாமல் அமைதல அரிது. நல்லகல்வித்தீர்தி உடையவர்களே பெரிய வாக்கியங்களைப் பின்ழபற்ழுெதி (Մ)ւգԱվLD

Page 58
110 தமிழ் மரபு
எல்லோர்க்கும் எளியதும் இனியதுமாயது சிறிய வாக்கியமே. ஆயினும் வலிந்து எல்லாவற்றையும் சிறிய வாக்கியமாக அமைத்தலும் அழகன்று. ஆகவே பொருளின் தொடர்பு அறிந்து சிறிய வாக்கியங்களை அமைக்குக.
உ-ம்:-
"காவிரிப்பூம் பட்டினத்தை விட்டுநீங்கிக் கண்ணகியோடு காட்டுவழி சென்ற கோவலன் வழியிடை நேரும் துன்பங்களைக் கண்டு கண்ணகி மனம் சலிப்புறாவண்ணம் அவளைப் பல உபாயங்களாலும் மகிழ்வித்து மதுரையை அடைந்து, மாதரி மனையை அணுகி அவளிடம் தன் மனைவியை ஒப்படைத்து மனைவியின் காற்சிலம்பொன்றை வாங்கி மதுரை மாநகரூடு செல்பவனாய், வழியில் தான் கண்ட பொற்கொல்லனிடம் சிலம்பைக் காட்ட, அரசியின் சிலம்பைத் திருடிய பிழைப்பினின்றும் தவறுதற்கோர் உபாயந் தேடும் அப்பொற்கொல்லன் தனக்கு நல்வழி பிறந்ததென்று உண் மகிழ்ந்து அவனிடமிருந்து சிலம்பை வாங்கிக் கொண்டு அவனுக்கு ஓரிடத்தைக் காட்ட அவன் அங்கு இருந்தானாக, பொற்கொல்லனும் மிக மகிழ்ச்சியோடு அரசன் சபையை அடைந்தான்."
இஃது ஒரு வாக்கியம். ஓர் எழுவாயும் ஒரு பயனிலையும் உடையது. பல வினையெச்சங்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கருத்தும் நன்கு விளங்குகின்றது. ஆயினும் கற்பதற்கும் கற்றபின் மீட்டு உரைப்பதற்கும் சற்றுக் கடினமாக இது தோன்றுகின்றது. சிந்தனை வலிவு உள்ளவர்க்கன்றி ஏனை இளஞ் சிறுவர்க்கு இது கடினமான பகுதியாகும். இதை எழுதும் முறை பின்வருமாறு:-
கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு நீங்கினார்கள். அவ்விருவரும் காட்டுவழியே செல்லும்போது, வழியில் நேரும் துன்பங்களைக் கண்ணகி கண்டு சலிப்புறாவண்ணம் கோவலன் பல உபாயங்களாலும் அவளை மகிழ்வித்தான். இருவரும் இறுதியாக மதுரையை அடைந்தார்கள். கோவலன் கண்ணகியை மாதரியிடம் ஒப்படைத்து விட்டு, கண்ணகியின் காற்சிலம்பொன்றை வாங்கிக்கொண்டு மதுரை மாநகரூடு சென்றான்; ஒரு பொற் கொல்லனை வழியிடைக் கண்டான். அப்பொற்கொல்லனோ அரசன் மனைச் சிலம்பு திருடியவன்; அப் பிழைப்பில் நின்றும் தவற வழி தேடுபவன். அவனிடம் தன் சிலம்பைக் கோவலன் காட்டினான். தனக்கு நல்லகாலம் வந்தது எனப் பொற்கொல்லன் உண் மகிழ்ந்தான். சிலம்பைப் பெற்றுக்கொண்டு கோவலனை ஓரிடத்தில் இருத்திவிட்டு, அவன் அரண்மனையை யடைந்தான்.

வாக்கிய மரபு 111
பிறமொழிச்சொற்கள்கலவாமை:
இன்றியமையாத இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் பிற மொழிச் சொற்களைக் கலத்தல் தக்கதன்று. பிறமொழி கலந்த நடை மணிப்பிரவாள நடை எனப்படும்.
ol-b:-
நான் இன்று லீவு பெற்றுக்கொண்டு, சந்தோஷமாகப் பொழுது போக்குவதற்காகச் சங்கீதக் கச்சேரிக்குப் போனேன்.
இதில் லீவு என்னும் ஆங்கிலச் சொல்லும் சந்தோஷம், சங்கீதக் கச்சேரி என்ற பிறமொழிச் சொற்களும் விரவியுள்ளன.
எழுதும் முறை: நான் இன்று ஈவு பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்குவதற்காக இசை விருந்துக்குப் போனேன்.
உணர்ச்சியூட்டல்: ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடும்பொழுது, அந்நிகழ்ச்சி எவ்வுணர்ச்சி கலந்ததோ அதனை வாக்கியம் பிரதிபலிக்க வேண்டும். உணர்ச்சிகள் மெய்ப்பாடுகள் எனவும் சொல்லப்படும். அவை பின் வருமாறு:
சிரிப்பு, அழுகை, பழிப்பு, வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி,
665.
இவற்றுள் ஒன்றற்கு உதாரணம் கீழே தரப்படுகின்றது. வீர (பெருமித) உணர்ச்சியைக் கொடுக்கும் வாக்கியம்.
என் அருமைத் தமிழர்களே, உணர்ந்து பாருங்கள்; உங்கள் முன்னோர் வாழ்வையும், உங்கள் தாழ்வையும் உன்னிப் பாருங்கள்; தமிழன்னையின் நிலையைச் சற்று நினைவு கூருங்கள். நிமிர்ந்த நோக்கு இல்லாத நேயரே, நிதானியுங்கள். காவலன் வாயிற் கடைசென்று கணவனின் புகழைக் காத்தவள் எங்கள் கண்ணகியாம் அன்னை. பால்மணம் மாறாத பாலகனைப் படையோடு களத்துக்கனுப்பியவள் எங்கள் மற்றொரு தாய். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயவேண்டுமே! அந்தத் தாய்மரபு எங்கே? வாழையடி வாழையாக வந்த வீரத்திற்கு வழியடைக்குங்கல்லை யார் வைத்தார்கள்? சிந்தியுங்கள். தாய்மொழி சந்தியில் நின்று தடுமாற, தனயர் தாளிட்டுக்கொண்டு வீட்டிற் கிடப்பதா? இது முறையா இது தகுமா? எழுங்கள்; உணர்ச்சியோடு எழுங்கள்; கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழன்னையைக் காப்போம் என உறுதி செய்யுங்கள். அன்றுதான் தமிழ் தழைக்கும். தமிழினம் தலையெடுக்கும்.

Page 59
112
தமிழ் மரபு
பிழை
அருகாமையில்
அவர்தான் இளனி ஈககு எண்ணை எலிமிச்சை ஏப்பை கத்திரிக்கோல் கிராணம் குடும்பி கைமாறு சவுக்காரம் சம்பாரித்தல் சிலவு gigui சீயாக்காய் சுடுதண்ணீர் சுகபீனம் சேதி தலகணி தவக்கை தாவாரம் திருவுதல் தீவட்டி தீவாளி
ğ56öDL துறப்பு தேள்வை நாத்தம்
55II) நிறப்பு நெத்தி நேத்து நொங்கு
5. பிழை திருத்தம்
பெயர்ச் சொற்களிற் சில
திருத்தம் அருகில் அவர்தாம் இளநீர் ஈர்க்கு எண்ணெய் எலுமிச்சை அகப்பை கத்தரிக்கோல் கிரகணம் குடுமி கைமமாறு சவர்க்காரம் சம்பாதித்தல் செலவு
சுவர் சிகைக்காய் (சீயக்காய்) சுடுநீர், வெந்நீர் சுகவீனம் செய்தி
தலையணை
தவளை தாழ்வாரம் துருவுதல் தீவர்த்தி தீபாவளி தொடை திறப்பு தேவை நாற்றம்
நானுறு நிரப்பு நெற்றி நேற்று நுங்கு

வாக்கிய மரபு 113
பண்டகசாலை பயத்தங்காய் பராயம் பரியாரி பறண் பாவக்காய் பிடவை பிசுக்கு
பிலா பிராந்து பீத்தல் புடலங்காய்
ւյւ 606): புட்டு
புளுககை பொக்களம் பொக்குள், தொப்புள் மறவணை மாதாளை மானம்பு மொட்டாக்கு வெத்திலை வெய்யில் வைக்கல் வேர்வை
பண்டசாலை பயற்றங்காய் பிராயம் பரிகாரி பரண் பாகற்காய்
புடைவை பீர்க்கு
Lj (6) ff
பருந்து பீற்றல் புடோலங்காய்
புடைவை பிட்டு பிழுக்கை கொப்புளம் கொப்பூழ் மணவறை மாதுளை மாநோன்பு முக்காடு வெற்றிலை வெயில் வைக்கோல் வியர்வை
(ஆ) சில வினைகளின் திருத்தமான பிரயோகம்
பாவித்தல் - பாவனை செய்தல், எண்ணுதல்.
உ-ம்:- பிற பெண்களைத் தாய்மாராகப் பாவித்து அன்பு செய்தல்
வேண்டும்.
அவன் புத்தகத்தைப் பாவிக்கத் தெரியாதவன் என்பது தவறு. அவன் புத்தகத்தை உபயோகிக்கத் தெரியாதவன் என்பதே தக்கது.
வேண்டுதல் - வேண்டிக் கேட்டல், விரும்புதல்
உ-ம்:- தனக்கு நீதி வழங்கவேண்டுமென்று அரசனை வேண்டினான். - வேண்டிக் கேட்டான். 'வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்' என்பது - விரும்பியவற்றை விரும்பியபடி பெறுதல் எனப்
பொருள் பட்டது.

Page 60
114 தமிழ் மரபு
துறத்தல் - நீக்கல் அல்லது ஆசையை விடுதல் உ-ம்:- புத்தர் தமது அன்புமிக்க மனைவியையும் அருமை மிக்க பிள்ளையையும் துறந்து சென்றார். பெட்டியைத் துறத்தல் என்பது பிழை. பெட்டியைத் திறத்தல் என்பதே சரி. நீந்துதல் - நீத்திக் கடத்தல் உ-ம்:- அவன் குளத்தில் நீந்தி விளையாடினான். குளத்தில் நீங்கி விளையாடினான் என்பது பிழை. நீங்குதல் - விலகுதல் அல்லது பிரிதல். மேய்தல் - உண்ணுதல் (விலங்கின் தொழில்) உ-ம்:- மாடு புல்லை மேய்ந்தது. அவன் வீட்டை வேய்ந்தான் - ஒலை
முதலியவற்றால் மூடுதல். குலைத்தல் - சிதைத்தல் உ-ம்:- முடித்த கூந்தலைக் குலைத்தான். நாய் குலைத்தது என்பது தவறு.
நாய் குரைத்தது என்று எழுதுக. மிஞ்சுதல் - மிஞ்சிப் போதல் அல்லது எஞ்சி நிற்றல் உ-ம்:- மிஞ்சிய உணவை நாய் உண்டுவிட்டது. அவன் இப்பொழுது மிஞ்சிவிட்டான் என்பது தவறு. அவன் இப்பொழுது விஞ்சி விட்டான். விஞ்சுதல் - மேம்பட்டு நிற்றல். கைப்பற்றுதல் - அகப்படுதல் அல்லது பிடித்தல் உ-ம்:- அசோகன் பல நாடுகளைக் கைப்பற்றினான். அவன் நான் கூறிய உபாயங்களைக் கைப்பற்றவில்லை" என்பது பிழை. உபாயங்களைக் கைக்கொள்ளவில்லை. கைக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளுதல், பேணிக்கொள்ளுதல். தின்னுதல் - கறித்து அல்லது மென்று தின்னுதல் உ-ம்:- கறி தின்றான்; வெற்றிலை தின்றான். 'சோறு தின்றான்' என்பது
பிழை. சோறு உண்டான் என்பதே சரியானது. ஏற்றுதல் - உயர்த்தி வைத்தல். உ-ம்:- வண்டியிற் பாரத்தை ஏத்தினான் என்பது தவறு. ஏத்தினான்
என்பது துதித்தான் எனப்பொருள்படும்.
பிழை திருத்தம் சூடுமிரித்தல் சூடுமிதித்தல் உரஞ்சுதல் உரிஞ்சுதல் உரோஞ்சுதல்
(வெயிலில்) உணர்த்துதல் உலர்த்துதல்

வாக்கிய மரபு
115
O.
II.
12.
13.
la.
15.
-
மினைக்கெடுதல்
சமயல்
ஆராச்சி
அருவிவெட்டு
கார்த்தல்
கோர்த்தல்
(இ) சில எடுத்துக்
பிழை அவன் அங்கு சென்றான். நாவலர்தான் தமிளில் வசன நடையை வளர்த்தார்.
கம்பர் தன் காலத்தில் மிகப் 3. பெருமையோடு வாழ்ந்தார். நீங்கள் எல்லாரும் இவ்வூரவர் 4. தானா?
நாம் எல்லாரும். 5. இது ஒரு அழகான பறவை. 6. அவர் இடைவிடாது 7. முயற்சித்தார். சொற்றொடர்கள் கோர்வையாக 8. அமையவில்லை. இராமன் பிரேரித்ததை நான் 9. அனுமதித்தேன். எனது கிரகப் பிரவேசத்திற்குப் 10. பெரியோர்கள் பலர் வந்திருந்தார்கள். ஒரு சில பறவைகள் இரவில் ll. உணவு தேடுகின்றன. எங்களூரில் மூன்று பண்டக 12. சாலைகள் உள்ளது. விரைவில் வெளிக்கிடு. 13. பெண்கள் மொட்டாக்கிட்டுச் l4. செல்லும் வழக்கம் இன்றும் சில நாடுகளிற் காணப்படுகிறது அவன் கத்தியைப் பாவிக்கத் 5.
தெரியாதவன்
வினைகெடுதல் சமையல் ஆராய்ச்சி அரிவுவெட்டு காத்தல் கோத்தல் காட்டுக்கள்
திருத்தம் அவன் அங்குச் சென்றான். நாவலர்தாம் தமிழில் வசன நடையை வளர்த்தார். கம்பர் தம் காலத்தில் மிகப் பெருமையோடு வாழ்ந்தார். நீங்கள் எல்லிரும் இவ்வூரவர் தாமா? நாம் எல்லோமும். இஃதோர் அழகான பறவை. அவர் இடைவிடாது முயன்றார். சொற்றொடர்கள் கோவையாக அமையவில்லை. இராமன் பிரேரித்ததை நான் அனுவதித்தேன். எனது கிருகப்பிரவேசத்திற்குப் பெரியோர்கள் பலர் வந்திருந்தார்கள். சில பறவைகள் இரவில் உணவு தேடுகின்றன. எங்களூரில் மூன்று பண்ட சாலைகள் உள்ளன. விரைவில் புறப்படு. பெண்கள் முக்காடிட்டுச் செல்லும் வழக்கம் இன்றும் சில நாடுகளிற் காணப்படுகிறது அவன் கத்தியைக் கையாளத் (உபயோகிக்கத்) தெரியாதவன்

Page 61
116
தமிழ் மரபு
16. பரதன் அன்பு இராமனது 16. பரதன் அன்பு இராமனது
அன்பை மிஞ்சிவிட்டது. அன்பை விஞ்சிவிட்டது. 17. நேற்று என் தந்தையாரின் 17. நேற்று என் தந்தையாரின்
சிரார்த்தம் நடந்தது. சிராத்தம் நடந்தது. 18. தண்டனையடைந்த பிறகும் 18. தண்டனையடைந்த பின்பும்
பலர் குற்றம் செய்கிறார்கள். பலர் குற்றம் செய்கிறார்கள். 19. தருமன் கதைப் புத்தகங்கள் 19. தருமன் கதைப் புத்தகங்கள்
வேண்டினான். வாங்கினான். 20. தந்தையார் உனக்கு எனன 20. தந்தையார் உனக்கு என்ன
முதிசம் கொடுத்தார்? முதுசொம் கொடுத்தார் 21. கந்தனும் நாய்க்குட்டியும் 21. கந்தன் நாய்க் குட்டியோடு
வழியில் நின்றார்கள். வழியில் நின்றான். 22. இந்நூல்கள் உபயோகமில் 22. இந்நூல்கள் உபயோகமில்லா
லாததென்று கூறமுடியாது. தன என்று கூறல் முடியாது.
பயிற்சி
திருத்தி எழுதுக:- 1. நான் என்ரை வீட்டைப் பனையோலையால் மேய்ந்தேன். 2. அவன் இப்ப மெத்தக்கெட்டுப்போனான். 3. சில பணக்காரர்படித்தவர்களாகவும் இருக்கினம். 4. நாளை என்ன நடக்கும் என்று ஆருக்கும் நிச்சயமாகத் தெரியாது. 5. ஞானிக்கு வீடு செல்வம் ஒன்று தேள்வையில்லை. 6. அரசன்தன் மந்திரியில் ஐமிச்சப்பட்டார். 7. இன்று நடந்த நாடகம் நல்லாய் இருந்தது. 8. அவன்தன்னுடயை புத்தகங்கள் பழுதாய் இருந்ததென்று
10.
11.
12.
13.
14.
15.
16.
வருத்தப்பட்டான். படக்காசுதியை அடிக்கடி பார்ப்பது கண்ணுக்குக் கெடுதலைத்தரும். முயற்சியுடையவர்கள் இகழ்ச்சியடைய மாட்டினம். ஒளவை சிறுவர்க்கெனப் பல பாட்டுகள் பாடினா. அவன் வெற்றியடைவானென எனக்குத் தோன்றயில்லை. வெய்யிலில் நீண்டநேரம் நின்றதால் எனக்குச் சுகமீனம் ஏற்பட்டுவிட்டது.
திருடனைக்கண்டு நாய் குலைத்தது. அவனுடயை குடும்பி குலைந்து விட்டது. யானைக்குட்டி பார்ப்பதற்கு அழகாய்யிருக்கும்.

வாக்கிய மரபு 117
17. சிறுவர்கள் நீங்கப்பழகாமையால் நீர்நிலைகளில் விழுந்து
மரணமடைகிறார்கள். 18. மண்ணெண்ணை விளக்கு வரவர அருகி வருகின்றது. 19. தந்தையார் என்னைப்பள்ளிக்கூடம் போகாவண்ணம்தடக்கிவிட்டார். 20. சிதம்பரம் சிறந்த தலம் என்றுகருதி அங்கு பலபேர் செல்கிறார்கள். 21. ஆராச்சி இல்லாத படிப்பு அதிக பயனைத் தராது. 22. எங்கள் வாத்தியார்மிகத்திறமையாகக் கற்பிக்கிறார். 23. நூல்ப்பிடவையை விடபட்டுப்பிடவை அதிக விலையுள்ளது. 24. தீபாளியிலன்றுதான்நான்பிடவைகள் வேண்டினேன். 25. முன்னூறு ரூபா தேழ்வைப்பட்டதனால் நான் எனது பிரயாணத்தை
நிறுத்திவிட்டேன். 26. வெய்யில் வெக்கை அதிகரிப்பதனால் பலர்
நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். 27. என்கட்டுரையில் எழுத்துப்பிளைகள் அதிகமாக ஏற்படுகின்றது. 28. வைக்கல்பட்டறையில் நெருப்புப் பிடித்துவிட்டது. 29. நாமெல்லாரும் இவ்நாட்டு மன்னர். 30. குளிர்காலத்தில் சுடுதண்ணீர்பாவிப்பது நல்லது. 31. தலகணிக்கு இலவம்பஞ்சு இடுதலே சிறந்தது. 32. ஒவ்வொரு பெண்களும் கல்வியறிவுடையவர்களாக இருக்க வேணும். 33. இந்நாட்களில் வேலையில்லாதோர்பலர். 34. சரவணன் காலாகாலத்தில் உணவு கொள்வதில்லை. 35. வரவுக்கு மிஞ்சிய செலவினால் அவன் வறியவனானான். 36. கருப்புச் சேலைகளை சிலர் விரும்பியுடுக்கிறார்கள். 37. கத்தரிக்காய், பாவக்காய், விற்கிற விலை யானைவிலைகுதிரை
விலையாகிவிட்டது. 38. சூடுமிரிக்கிறமாடு வைக்கல் தின்னாமல் விடுமா? 39. தேர்த்திருவிழாவிலன்று பலர்பிரதட்டை செய்கிறார்கள். w
40. கூத்துக்காறன்கிழக்கைப்பார்ப்பான்; கூலிக்காரன்மேற்கைப்பார்ப்பான்.
குறியீடுகள்
வாக்கியங்களில் பொருள் நன்கு விளங்கவேண்டுமாயின் குறியீடு களை இடமறிந்து இடவேண்டும். பின்வருவன பிரதான குறியீடுகளாம்.

Page 62
118 தமிழ் மரபு
முற்றுப்புள்ளி உறுப்பிசைக் குறி அல்லது காற்புள்ளி தொடரிசைக் குறி அல்லது அரைப்புள்ளி விளக்கிசைக் குறி அல்லது முக்காற் புள்ளி :- வியப்புக் குறி அல்லது விளிப்பிசைக்குறி ! வினாவிசைக் குறி p மேற்கோட் குறி அல்லது அனுவாதக் குறி "........... y இரட்டை இடைக்கோட்டுக் குறி . ー。。。。ー தனி இடைக்கோட்டுக் குறி −− அடைப்புக் குறி (....... )
I
0.
முற்றுப்புள்ளி: இது வாக்கிய முடிவிலும், சொற்களைச் சுருக்கி எழுதிய
எழுத்துக்களின் பின்னும் வரும். ol-lb.:-
1. இராமன் காட்டுக்குச் சென்றான். அவன் செல்லும் இடமெல்லாம்
சிறப்புப் பெற்றான். 2. யா. ஆ. தி. பா. சங்கம் - யாழ்ப்பாணம் ஆரிய திராவிட
பாஷாபிவிருத்திச்சங்கம். 3. ப. மெ. உ. பாடசாலை - பண்ணாகம் மெய்கண்டான் உயர்தர
LITTLEFG)G)
உறுப்பிசைக் குறி: தொடர்புடைய பல பொருள்களைப் பிரித்தற்கும் ஒரு (plg. arou WS) எச்சங்களைப் பிரித்தற்கும் விளியேற்ற சொல்லைத் தனித்துக்காட்டற்கும்" தன்கூற்று வாக்கியத்தை ஏனைய வாக்கியத்தினின்றும் பிரித்துக்காட்டற்கும் உதவும்.

வாக்கிய மரபு 119
தொடரிசைக் குறி தொடர்ந்துநிற்கும் சிறுவாக்கியங்களைப் பிரித்துக்
காட்டற்கு உதவும். ol-b:- 1. இராமன் சென்றான்; வில்லை எடுத்தான்; ஒடித்தான்.
2. சோலையிற் புகுந்தவருட் சிலர் மலர் பறித்தார்கள்; சிலர் குயிலோடு மாறு கூவினார்கள்; சிலர்மயிலோடு மாறாடினார்கள்.
விளக்கிசைக் குறி: இது பெரும்பாலும் ஒரு கோட்டுடன் இணைந்து வரும். அப்படி வரும்பொழுது தன்கூற்று வாக்கியத்தைப் பிரித்துக் காட்டும். d-lb.:- தந்தையார் கூறியன பின்வருமாறு:-நீபொய் சொல்லக்கூடாது. நீ
கள்ளுண்ணக்கூடாது.
வினாவிசைக் குறி: இது வினாவாக்கியத்தின் பின்வரும்.
உ-ம்:- சாத்தன்வந்தானா?
இராமன்மக்கள் யாவர்?
விளிப்புக் குறி : வியப்பு, விளி, பரிதாபம் முதலியன குறித்து
வருவது. ol-b:- (அ) எனது நண்பன் பதினெட்டு வயதிலேயே பட்டதாரியாகி
விட்டான்! (ஆ) இமயமலையின் முடியையும் எட்டிப்பிடித்துவிட்டார்கள்! (இ) மகனே நீ! நன்று வாழி (ஈ) தந்தையை இழந்ததுமன்றித்தன்னிரு கண்களையுமே இழந்துவிட்ட பாவி இவன்! மேற்கோட் குறி: பிறர் கூறிய சொற்றொடர்களை அவர் கூறியவாறே
குறிக்குமிடத்து இது பயன்படுத்தப்படும். உ-ம்:- “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என ஒளவையார் கூறியதை ஆய்க."
இரட்டை இடைக்கோட்டுக் குறி. சொற்றொடர்களிடையே தொடர்பில்லா தனவாயினும் கேட்போர்க்குப் பொருள் விளக்கம் ஏற்படும் பொருட்டு அல்லது வேறுகாரணங் குறித்துச் சில சொற்கள் சேர்க்குமிடத்து இஃது உபயோகப்படும். உ-ம்:- (அ) எனக்கு வழியில் ஏற்பட்ட கஷ்டங்களால் - நான் அவற்றை வெளியாகச் சொல்ல விரும்பவில்லை - நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.

Page 63
120 தமிழ் மரபு
(ஆ) படித்த மக்கள்-எல்லோரையும் நான்குறிப்பிடவில்லை -தாம்
எல்லாம் அறிந்தவர்களென்று தருக்குக் கொள்ளுகிறார்கள். (இ) காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் - ஒத்துழை
யாமை இயக்கத்தில் - பலர் ஈடுபட்டனர். (ஈ) சுவையுள்ள சிற்றுண்டியாயினும் அது நறு நெய்யால் - நல்
லாவின் நெய்யால் - செய்ததோ என்று நாம் பார்ப்போம். தனி இடைக்கோட்டுக் குறி: விரித்துக்கூறும் பலவற்றை இறுதியில் தொகுத்துக் கூறும் வழியும், ஒரு வினை கொடுத்து முடிக்கும் வழியும் கையாளப்படும். உ-ம்:- 1.மா, பலா, வாழை-இவைகள் எல்லாம் சிறந்த மரங்கள்.
2.கழல், வாகை, துழனி-பொருள்கூறுக. அடைப்புக் குறி: பொருள் விளக்கத்துக்காக ஒன்றை இடையிற் கூறுமிடத்து
இஃது உபயோகிக்கப்படும். ol-lb.:- 1.தலைவனும், தலைவியும் ஊடியிருக்கும் பொழுது அவர்களின்
ஊடலைத் (பிணக்கைத்) தீர்க்கத் தோழிமுயல்வாள்.
2.வேங்கை (மரம்)யின் அருகே நின்ற வேடனைக் கண்டேன்.
பயிற்சி
கீழ்க்காணும் வாக்கியங்களில் ஏற்ற நிறுத்தக் குறிகளை இடுக.
1. ஆஆ.இவளைப்போற் பாவியை எங்கும் கண்டதில்லை
2. சச்சந்தன் மந்திரி தன்னை எதிர்ப்பதைக் கண்டு தன் மனைவியை எந்திர விமானத்திலேற்றி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டுப் போர்க்குரிய ஆயத்தங்கள் எல்லாம் செய்யத் தொடங்கினான்
3. கண்ணகி புலவரைப் பார்த்து என்பக்கம் சிறிதும் நோக்காது மன்னன்
வெறுத்திருக்கக் காரணம் அறியேன் என்றாள்
4. இந்நாட்டில் வயதுவந்தவர்கள் அனைவரும் குருடர்முடவர் தாமும்
தேர்தலில் வாக்களிக்கத்தகுதியுடையவர்களே
5. ஒட்டக்கூத்தன்பாட்டுக்கு இரட்டைத்தாள் என்பதன்கருத்து யாது
6. தமிழ் மூன்று பிரிவுகளையுடையது அவை இயல் இசை நாடகம்
என்பன
7. சில நாட்களாயின பின் வாதிலே அக்கினியில் வேவாத

வாக்கிய மரபு 121
திருப்பதிகத்தையுடைய கடவுளை வணங்க விரும்பி திருக்கொள்ளம் பூதூரை திருநள்ளாற்றை யடைந்து சுவாமி தரிசனஞ் செய்து பாடகமெல்லடி என்னும் வினாவுரைப் பதிகம் பாடித்திருஞானசம்பந்தர்சிலநாள் அங்கெழுந்தருளியிருந்தார்
8. தசரதன் முனிவனை நோக்கி கைகேயியைச் சுட்டிக் காட்டி இவளை வெறுத்துவிட்டேன் இனி இவள் என் மனைவியில்லை; பரதனை மகனாகக் கருதேன் அவன் என் ஈமக்கடன் இயற்றுதற் குரியவனாகான் என்றான்
9. பார் சூரியனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவதுபோலத் தோற்றுகிறது.ஆஹா என்னவர்ணங்கள் எத்தனைவித வடிவங்கள் எத்தனையாயிர விதமான கலப்புக்கள் அக்கினிக்குழம்பு தங்கம் காய்ச்சிவிட்ட ஓடைகள் எரிகின்றதங்கத்தீவுகள்.
10. புத்தர்பெருமான்அன்பு வாழ்க்கையிலிருந்துஅருள் வாழ்க்கைக்குத் தாவிய பெரியார் அவர் அவ்வாறு தாவுவதற்கு முன் எவ்வளவு போராடினார் தாவிச் சென்ற அன்றிரவு காதலியின் அன்பு முகத்தையும் குழந்தையின் இன்ப முகத்தையும் உறங்கும் நிலையிற் கண்டு கண்டு அவர் எவ்வளவு உருகினார் எவ்வளவு கலங்கினார்

Page 64
122 தமிழ் மரபு
5* GB6oor LnNL
1. விளக்கப் Luunj)P (Comprehension)
கீழ்க் காணும் பந்திகளை வாசித்து அவற்றின் கீழுள்ள கேள்விகளுக்கு விடை தருக.
1. தமிழ் மிகப் பழமையானதொரு மொழி. தமிழ் பேசும் மக்கள் தமிழர் ஆவர். தமிழர் தமது மொழியை மிக அருமையாகப் போற்றி வளர்த்தனர். தமிழை அரசர் ஆதரித்தனர். வள்ளல்கள் வழிவழியாகப் புரந்தனர். தமிழரசர்களில் பாண்டிய சோழ சேரர்களே பழமையானவர். இம்மூவருள்ளும் பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தார்கள். முதன் முதலாகத் தோன்றிய சங்கம் தலைச்சங்கம் எனப்படும். இச்சங்கம் இப்பொழுது கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலால் மூடப்பட்டுக் கிடக்கும் குமரிகண்டத்திலிருந்த தென்மதுரை என்னும் நகரில் தோற்றுவிக்கப்பட்டது. தலைச்சங்கத் தலைவர் சிவபெருமானும், முருகவேளும், அகத்தியனாரும் என்பர். இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பதாண்டு நடைபெற்றது. கடல்கோளால் இது முடிவடைந்தது. இடைச்சங்கம் கபாடபுரத்தில் தோன்றியது. தலைமைப் புலவர் அகத்தியனார் என்ப. இச்சங்கம் மூவாயிரத்தெழுநூறாண்டு நடைபெற்றது. இதுவும் கடலால் அழிய, இப்பொழுதுள்ள மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் நக்கீரர் தலைமைப் புலவராக இருந்தனர். இஃது ஆயிரத்து எண்ணுரற்றைம்பதாண்டு நடைபெற்றது. இவ்வாறு பல்லாயிரவாண்டாகத் தமிழானது சங்கப் புலவர்களால் அமிழ்தம்போலப் பாதுகாக்கப்பட்டு வரலாயிற்று. ஒளவையார் 'சங்கத் தமிழ்’ என்றதும் இக்கருத்துப் பற்றியேயாம்.
(அ) தமிழரசர்களில் பழமையானவர்யார்? (ஆ) தமிழர்சங்கம் எத்தனை? (இ) தலைச் சங்கம் எத்தனை ஆண்டு இருந்தது? (ஈ) இடைச்சங்கத்துத்தலைமைப்புலவர்யார்? (உ) சங்கத்தமிழ் என்பதன் பொருளை விளக்குக. (ஊ) மேற்கண்ட பந்தியிலிருந்து பின்வருவனவற்றுக்கு ஒவ்வோர்
உதாரணம் தருக:- பெயரெச்சம், வினையெச்சம், மூன்றாம் வேற்றுமை, பண்புத் தொகை. (எ) பின்வரும் சொற்களின் கருத்தமைந்த வேறு சொற்கள்

கட்டுரை மரபு 123
இவ்விரண்டு எழுதுக. சங்கம், புரத்தல், மன்னர்.
2. கல்வி எல்லோர்க்கும் இன்றியமையாதது. பண்டைக்காலத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் கற்று வல்லவர்களாயும் அறிஞர்களால் மதிக்கப்பட்டவர்களாயும் இருந்தனர். தன் கடமையை உணரவும் தன்னை மேனிலைப்படுத்தவும் ஆணுக்குக் கல்வியானது எத்துணை உதவியாயுள்ளதோ பெண்ணுக்கும் அத்துணை உதவியாயுள்ளது. "கோசல நாட்டுப் பெண்கள் கல்வியும் செல்வமும் உடைய வராயிருந்தமையால் வீடுகள் தோறும் விருந்தும் ஈகையும் சிறந்து விளங்கின’ எனக் கம்பர் கூறுகின்றார். ஆனால் இக்காட்சி தமிழ்நாட்டில் நிலைத்திருக்கவில்லை. பெண்கள் அடிமைகள் என்றும், இல்லில் அடங்கியிருப்பவர்கள் என்றும் கருதுங் காலம் வந்துவிட்டது. பெண்ணுக்குக் கல்வி தவிர்க்கப்பட்டது. அஃது ஆண்களுடைய பிறப்புரிமையாகிவிட்டது. பெண்கள் கணவனுக்கு மந்திரிபோல இருக்க வேண்டும் என்றார்களே, பெண்கள் இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என விதித்தார்களே, பெண்களே கணவனுடைய புகழை உயர்த்துபவர்கள் எனவும் புனைந்தார்களே, ஆனால் அவர்களே அறிவைத் தடைப்படுத்தியும் விட்டார்கள் அறிவு வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விட்டார்கள் அறிவில்லா நங்கை ஆண்மகனுக்குப் புத்திகூற அறியாள் என அறிந்தாரில்லை கல்லாத மங்கை கடமையை நன்கு உணராள் என உணர்ந்தாரல்லர் அம்மட்டோ கணவனிறந்த பின்பு கையற்றுக் கலங்கும் காரிகை கல்வியறிவில்லாதவளாய் எவ்வாறு தன் வாழ்க்கையை நடத்துவாள் எனவும் ஒர்ந்திலர்.
(அ) கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வாறு உதவி செய்யும்? (ஆ) கற்ற பெண்களின் செயல்களாகக் கம்பர்கூறுவன யாவை? (இ) பிற்காலத்தில் பெண்கள் கல்லாமைக்குரிய காரணங்கள் என்ன? (ஈ) குடும்பப் பெண்களுடைய கடமைகள் யாவை? (உ) பின்வருவனவற்றுக்கு இவ்விரண்டு உதாரணங்கள் மேற்கண்ட
பந்தியிலிருந்துதருக;- இடைச்சொல், இறந்தகால வினையெச்சம், ஏழாம் வேற்றுமை, எதிர்மறை வினைமுற்று. (ஊ) பின்வரும் சொற்களுக்குப் பொருள் எழுதுக:- எத்துணை, விருந்து, கையற்று, ஒர்ந்திலர்.
3. இந்தியாவிலே பாடலிபுரம் என்று ஒரு நகரம் உண்டு. அங்கே ஒர் ஏழை இருந்தான். அவனுக்குத் தாய் தந்தையர் யாரும் இல்லை. இளம்

Page 65
124 தமிழ் மரபு
வயதிலேயே திருந்தி நல்வழிப்படுத்துவாரற்று அவன் எல்லா விதமான தீய செயல்களையும் கற்றுக்கொண்டான். ஊரவர்கள் அவனைக் கண்டால் வெறுத்து ஒதுங்கி நடந்தனர். ஒரு நாள் ஒரு துறவி அவனைக் கண்டு இரக்கமுடையவராய் அவனுக்கு நற்புத்தி கூற எண்ணினார். துறவி அவனை நோக்கி, "நீ செய்யும் பாவங்களில் ஒன்றையாவது விட்டுவிடக்கூடாதா?" என்றார். அவனும் அவர் அன்புக் கேள்விக்கு இசைந்து, 'யான் எதனை விடவேண்டும்?' என்றான். முனிவர், "நீ இன்று முதல் பொய் சொல்லக்கூடாது' என்று கூறினார். அவனும் அவராணைக்கடங்கி அன்று முதல், ஏனைய பாவங்களைச் செய்தானாயினும் பொய் பேசுதலைக் கைவிட்டான். ஒரு நாள் இரவு அவன் அந்நகரத்து அரண்மனையில் திருடச் சென்றான். மாறுவேடத்தில் நகர் பரிசோதனைக்குப் புறப்பட்ட அந்நகரத்தரசன் அத்திருடனைக் கண்டு, 'நீ யார்? இங்கு எதற்கு வந்தாய்?" என்றான். அத்திருடன் 'யான் இவ்வரண்மனையில் திருட வந்தேன்’ என உண்மையையே கூறினான். அதைக் கேட்டு வியப்படைந்த அரசன், மேலும் அவன் இயல்பை அறிய விரும்புவானாய், "நானும் திருடத்தான் வந்தேன்; அரண்மனைத் திறவு கோல்கள் என்னிடமுள்ளன; நீ அவற்றைக் கொண்டு சென்று திருடி வந்து எனக்குப்பாதிகொடு' என்றான். அவ்வாறு திறவு கோல்களைப் பெற்றுச் சென்று அத்திருடனும் ஆபரணப் பேழையைத் திறந்து கொண்டு இரத்தினங்களை எடுத்துக் கொண்டுவந்து, 'அங்கே மூன்று இரத்தினங்கள் உள்ளன. எனக்கொன்றும் உனக்கொன்றும் ஆக இரண்டை எடுத்து வந்தேன்; ஒன்று அங்கே உள்ளது; இதோ உன் பங்கைப் பெற்றுக்கொள்’ என்று ஓர் இரத்தினத்தை அரசனிடம் கொடுத்தான். அரசன் திருடனுடைய ஊரையும் பேரையும் கேட்டறிந்து கொண்டு அரண்மனை புக்கான். மறுநாள் அரண்மனையில் களவு நிகழ்ந்த செய்தி பரவி அரசனுக்கும் அறிவிக்கப்பட்டது. யாதும் அறியாதவன் போல அரசனும் தன் மந்திரியை அழைத்து, எவை எவை களவு போயின என்று அறிந்து வருமாறு அனுப்பினான். மந்திரியும் உள்ளே சென்று களவு போகாத இரத்தினத்தைத் தான் மறைத்து வைத்துக்கொண்டு, “எல்லா இரத்தினங்களும் களவு போயின’ என்றான். உடனே அரசன் திருடனை அழைப்பித்து முதலிரவு நடந்தவற்றை அவன் மூலம் எல்லாருமறியச் செய்தான். மந்திரி திருட்டுக் குற்றத்திற்காகச் சிறை சென்றான். திருடன் உண்மை கூறியபடியால் மதிக்கப்பட்டான்.
(அ) ஏழையை ஏன் ஊரவர்கள் வெறுத்தார்கள்? (ஆ) துறவி ஏழைக்குக் கூறிய புத்திமதி என்ன? (இ) திருடன் என்று அறிந்ததும் அரசன் அவனிடம் கூறியன யாவை?
(ஈ) திருடன் மூன்று ரத்தினங்களில் இரண்டை மாத்திரம் எடுத்த
காரணமென்ன?

கட்டுரை மரபு 125
(உ) மந்திரி சிறைசெல்லக் காரணமென்ன?
(ஊ) பின்வரும் சொற்களின் கருத்தமைந்த வேறு சொற்கள்
இவ்விரண்டு எழுதுக:- துறவி, ஆணை, இசைந்து, ஆபரணம். பின்வருவனவற்றுக்கு உதாரணம் எழுதுக:- நான்காம் வேற்றுமை, வினையெச்சம், காரணப் பெயர், தன்மையொருமை வினைமுற்று.
4. முயற்சியுடையவரே முன்னேறுவர். முயற்சியுடையவரே புகழ் பெறுவர்; மதிப்புறுவர்; மகிழ்ச்சியுறுவர். ஒரு கருமத்தைச் செய்யத் தொடங்கின் இடைவிடாது முயலுங்கள். இடையிடையே தோன்றும் இன்னல்களைக் கண்டு மருளாதீர்கள். மருண்டவர் தோற்றவரே. கூற்றுடன்று மேல்வரினும் ஏறுநின்று கருமத்தை ஆற்றுங்கள். "ஞாயிறு எங்கு எழிலென்’ என எண்ணிய கருமத்திற் கண்ணாயிருங்கள். சிறியர் நகை மொழிக்குச் செவி சாய்க்காதிருங்கள். துணைவர் பகையானமைக்குத் துன்புறாதீர்கள். வெற்றி கையில் உற்றபோது வேந்தரும் நும்மை விருந்துக்கழைப்பர். நம் முன்னோர் எவ்வாறு கல்வியில், வீரத்தில், கடமையில் சிறப்புற்றார்? இன்று மேனாட்டார் வானாட்டார்போல மதிப்படைந்தமை எதனால்? சிந்தியுங்கள். கட்டை வண்டியிற் செய்த பயணம் காற்று வேகத்தில் நாற்றிசையும் செல்கிறது! பாலைவனத்தைச் சோலைவனமாக்கவும், இருந்த இடத்திலிருந்து பெருந்தொலைவிலுள்ள பேச்சைக் கேட்கவும் இன்றைய மனிதனால் முடியும் இந்த ஆற்றல் யாரால் வந்தது? எதனாற் கிடைத்தது? சோம்பியிருந்து தூங்கி மடியாமல் முழு மனிதனாக முயலுங்கள்; விடாது முயலுங்கள். அன்று, தவத்தால் அளவில். ஆற்றலடைந்தனர் நம் முன்னோர். இன்று, நுட்பமதியோடு கூடிய திட்ப முயற்சியால் தேவரினும் யாவரினும் மேலாயினர் மேனாட்டார். மனிதனுக்குள்ள மாண்பு மிக்கச் சக்தியுள்ளது. அதை வெளிப்படுத்த வேண்டும். முயற்சியின் வழிப்படுத்தவேண்டும்.
(அ) முயற்சியுடையவர் எவ்வெவற்றை அடைவர்? (ஆ) எவ்வாறு முயன்றால் வெற்றி கிடைக்கும்? (இ) விடாமுயற்சியாற் கிடைத்த அரிய பேறுகள் மூன்று கூறுக? (ஈ) மேனாட்டவர் இன்று பலராலும் புகழப்படக் காரணமென்ன? (உ) பின்வரும் சொற்களின்கருத்துக்களை எழுதுக.
இன்னல், செவிசாய்த்தல், ஏற்று நிற்றல், மதி.

Page 66
126 Slisp udvL
(ஊ) பின்வருவனவற்றுக்கு இலக்கணங்கூறுக. மருளற்க, தூங்கி, மொழிக்கு, யாவரினும்.
5. இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பலர். அவர்களுட் சிலர் உயிருள்ளளவும் பெருமையோடிருந்தனர். மற்றும் சிலர், இறந்த பின்பும் புகழப்பட்டனர். ஒருவர் இருவர் மாத்திரம் இந்தியா உள்ளளவும் போற்றத் தகுந்த பொன்றாக் கீர்த்திபெற்றனர். அசோகச் சக்கரவர்த்தி அத்தகைய அரும்புகழ் படைத்தவர். அவர் தம் ஆட்சிக்காலத்து முற்பகுதியில் சிங்க ஏறு போன்ற வீறுபெற்றிருந்தார். எதிர்த்தவர் எல்லோரும் ஈற்றில் அவரது அடி பணிந்தனர். அவரது இராச்சியம் நாளுக்கு நாள் வளர்ந்தது. தெற்கே கலிங்கம் வரையிலும் வடக்கே இமயம் வரையும் யாரும் காணாத பேரரசு கண்டார். தன்னொப்பாரில்லாத தனிவேந்தர் என, புறநாட்டவரும் பிறநாட்டவரும் திறைபல கொடுத்து உறவு பூண்டனர். தமது ஆட்சியின் பிற்பகுதியில் அம் மறமன்னர் அறமன்னர் ஆனார். புத்தர் போதித்த அருணெறியை நானிலமெங்கும் பரப்ப ஆசைகொண்டார். செஞ்ஞாயிற்றின் ஒளி செல்லாத இடம் இல்லை அல்லவா? அசோக மன்னரது அருள் நெறி நாற்றிசையும் சென்றது. மனித குலத்தை நேசிப்பது மாத்திரம் உண்மை அருள் வழியாகாது; மனிதனின் அன்பு விலங்கினிடத்தும் பறவையினிடத்தும் செல்ல வேண்டும் என்பதே அசோகர் ஆசை. மக்களைக் காக்க வழியமைத்ததோடு மிருகங்களைப் பேணவும் அவற்றின் துயர் தீர்க்கவும் அம்மன்னர் பாடுபட்டார். மிருக வைத்திய சாலைகள் பல ஏற்படுத்தப்பட்டன. அசோகச் சக்கரவர்த்தி மக்களுக்கு மாத்திரம் மன்னரல்லர்; எல்லா உயிர்களுக்கும் அன்னைபோல் விளங்கினார்.
(அ) சிங்க ஏறு, செஞ்ஞாயிறு, அன்னை என்பன அசோகச்
சக்கரவர்த்தியை எவ்வாறு ஒப்பன?
(ஆ) அசோகரது ஆட்சியின் முற்பகுதி எவ்வாறிருந்தது?
(இ) அசோகர் எந்தச் சமய நெறியைப் பரப்பினார்?
(ஈ) அசோகர் ஏனைய அரசர்கள் செய்யாத எந்த அரிய செயல்களைச்
செய்தார்?
(உ) பின்வருவனவற்றுக்கு உதாரணம்தருக;-
வினையாலணையும் பெயர், மூன்றாம் வேற்றுமை, செயப்பாட்டுவினை, பிறவினை.
(ஊ) பின்வருவனவற்றின் பொருளமைந்த வேறு சொற்கள் எழுதுக:-
பொன்றாத, சமயம், விறு,திறை.

கட்டுரை மரபு 127
6. அப்பொழுதுதான் பனிக்காலம் முடிவடைந்தது. பனியின் கொடுமையால் வாடிய மக்கள் வேனிலின் வரவை எதிர்பார்த்தனர். சோலையெங்கணும் வசந்தனை வரவேற்பனபோல மரங்களும் கொடிகளும் வண்ண மலர்களைக் கொத்துக் கொத்தாகத் தாங்கி நின்றன. தடாகத்திலுள்ள தாமரையும் அல்லியும் மலர்முகம் காட்டி மகிழ் சிறந்தன. முல்லையும் மல்லிகையும் பல்லைக்காட்டி மெல்ல மருட்டுவன போன்றன. தேமாவும் வாழையும் தீம்பழங்களைப் பரிசிலாக ஏந்தி நின்றன. தென்றற் செல்வன் மன்னர் மகளிரைப்போல் மெல்ல நடந்தான். அதைக்கண்ட அன்னங்கள் ஆனந்தங் கொண்டனபோல் அணிநடை பயின்றன. வெண்கதிர்ச்செல்வன் தெள்ளிய பால் நிலவை அள்ளி வீசினான். காதற்செல்வர் காலம் இது என இருவர் இருவராய்க் கைபிரியாது உலவினர். மாநிலமெங்கும் கழிபேருவகையோடு உளமிக்கூர, வசந்தன் என்னும் மணம் புணர் வேந்தனது ஆட்சிக்காலம் தொடங்கியது.
(அ) வேனிற்காலத்து நிகழும் இயற்கை மாறுதல்களைச் சுருக்கி
எழுதுக. (ஆ) மேற்கண்ட பந்தியில் எவ்வெவற்றுக்கு எவை எவை
உவமையாகக் கூறப்பட்டுள்ளன? (இ) உருவகம், உவமைத் தொகை இவற்றுக்கு உதாரணம் எழுதுக. (ஈ) மோனை எதுகைகளை உதாரணம் காட்டி விளக்குக.
(உ) வேனிற்காலம் இன்பம் பயப்பது என்பதை விளக்குக.
7. கணவனையிழந்த துயரம் கரைகாணாதவளாய்க் கண்ணகி கொலைக் களத்தையடைந்தாள். கோவலன் மேனி இரத்த வெள்ளத்திற் கிடப்பதைக் கண்டாள்; தழுவினாள்; அழுதாள். குற்றம் சிறிதும் இல்லாத தன் கணவனைக் கொன்ற அரசனைக் காணச் சென்றாள். நீதி கேட்பேன்’ என்று நெறிதவறிய மன்னன் வாயிலை அடைந்தாள். வாயிற் காவலன் அவளுருவைக் கண்டு அஞ்சினன். 'காளியே வந்தனள்" எனக் கலங்கினன். அவனை விளித்து, "கணவனை யிழந்தவள் கடையகத்தாள் என அரசனுக் கறிவிப்பாய்’ எனக் கூறினள். காவலன் கடிது சென்று மன்னவர்க்குத் தெரிவித்தான். மன்னன் அவளை அழைத்துவர ஆணையிட்டான். விரித்த கூந்தலும் புழுதி படிந்த மேனியும் உடையவளாய் வந்த கண்ணகியைப் பார்த்து 'நீ யார்?' என்றான் மன்னன். தன்னுரரின் பெருமையைக் கூறினாள்; தன்னாட்டு மன்னரின் பெருமையைக் கூறினாள் கண்ணகி. அங்குச் செல்லக் காரணம் கேட்டான் அரசன். நெறியறியாது கொலைகுறித்த மன்னன் குற்றத்தை எடுத்துக் காட்டினாள் கண்ணகி. கள்வனைக் கொன்றது முறையாம் எனக் காவலன் செப்பினன். கணவன் குற்றமற்றவன் எனக் காட்டத் தெய்வக் கற்பினள் சிலம்பை உடைத்தாள். மன்னவன் கண்

Page 67
128 தமிழ் மரபு
திறந்தது. குற்றத்தை உணர்ந்தான்; ஏங்கினான்; புலம்பினான்; கழுவாய்தேட வழி வேறின்றித் தன்னுயிர் விட்டுத் தளர்ந்தகோலைச் செங்கோலாக்கினன்.
(அ) கணவன் இறந்த செய்தி கேட்ட கண்ணகி முதலில் என்ன
செய்தாள்? (ஆ) அரசனிடம் சென்றபோது அவள் கோலம் எப்படி இருந்தது? (இ) அக்காலத்தரசர்கள் இயல்பை எடுத்துக்காட்டுக. (ஈ) பாண்டியன் எப்படிப்பட்டவன் என்று கருதுகிறீர்? (உ) பின்வருவனவற்றுக்கு உதாரணம் கூறுக.
எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம், ஆகுபெயர், குற்றியலுகரம். (ஊ) பின்வரும் சொற்களைப் பிரித்து பகுபதஉறுப்புக்களை
எடுத்தெழுதுக. செப்பினன், விளித்து, விட்டு, கேட்பேன்.
8. தமிழர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினர். அரசர்களதும் படைகளினதும் வீரப்பண்பை விரித்துக் கூறும் செய்யுள்கள் அக்காலத்தில் பல எழுந்தன. அத்தகைய பாடல்களைப் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களிற் பரக்கக் காணலாம். அக்காலத்து அரசர்கள் மண்ணை விரும்பியோ, மாபெரும் அரசை விரும்பியோ போர் தொடங்கினார் அல்லர். மாற்றார் தம்மை மதிக்கவில்லையென்னும் மானம் குறித்தே அடுபோர் தொடுத்தனர். முகத்திலும் மார்பிலும் உண்டாகும் புண்களையும் வடுக்களையும் உயிரினும் மேலாக மதித்தனர். முதுகிற் புண்பட்ட வீரனை அயலார், பகைவர் மாத்திரமன்றி இல்லாளும் ஈன்ற தாயும் வெறுத்தனர். போர்க்களத்தில் வந்தெதிர்ப்பட்டார் எல்லார்மீதும் அம்பினை எய்தல் அக்கால யுத்த தருமமன்று. மயிர் குலைந்தோன், அடி பிறக்கிட்டோன், ஒத்த படையெடாதோன், இளையோன், முதியோன், முதுகு காட்டுவோன் ஆகியவரை எந்த வீரனும் எதிர்த்துப் போர்செய்யான். ஒரு வீரனது கண்களுக்கு நேராக வேலை ஒச்சும்போது அவன் கண்கள் இமைக்குமானால் அவனை அஞ்சியவனென்றும், பேடியென்றும் அக்கால வீரர் எண்ணுவர். வீரக்குடியிற் பிறந்தவர்கள் நோய்வாய்ப்பட்டு இல்லில் இருந்து இறப்பரேல் அவரை யாரும் போற்றார். போர்க்களத்தில் உடலெங்கும் எள்ளிருக்க இடமின்றிப் புண்பட்டு அருந்துயரில் ஆவிபிரிவரேல் அவர்க்கு நடுகல்நட்டு அவர் நாளையும் கொண்டாடுவர். வீரமே அவர்தம் வாழ்வின் இலட்சியம் வீரமே மரணத்தின் ஊதியம்.

கட்டுரை மரபு 129
(அ) மேற்கண்ட பகுதிக்கு ஏற்ற தலையங்கமிடுக. (ஆ) வீரப்பண்பை மிகுத்துக் கூறும் நூல்கள் யாவை? (இ) தமிழ் வேந்தரின் தனிப் பண்பு யாது? (ஈ) அக்காலப் போர்முறைப்படி எவ்வெவரோடு
போர்செய்தலாகாது? (உ) எங்கெங்கே புண்படுதலையும் எங்கே புண்படாமையையும்
பழந்தமிழ் வீரர் விரும்புவர்? (ஊ) பின்வரும் சொற்களின் பொருளமைந்த வேறு சொற்கள்
எழுதுக. வீரம், வீடு, முதுகு காட்டல், பகைவர். (எ) பின்வரும் சொற்களுக்கு எதிர்ச்சொற்கள் எழுதுக.
விரித்தல், தருமம், பேடி, மதித்தல்.
9. மக்கள் தீயன செய்யாமைக்கு மூன்று காரணங்கள் உள. முதலாவது வாய்ப்பு இன்மை. இரண்டாவது அச்சம். மூன்றாவது அவை தகாதன என்ற உணர்ச்சி. ஒருவன் களவு செய்தலிலேயே எந்நாளும் ஈடுபடுகிறான். பின் சிலநாள் வசதியின்மையால் களவு செய்யாதிருப்பனேல் நல்லவன் என்ற பெயரைப் பெற்றுவிடுகிறான். மற்றொருவன் களவு செய்தான்; அதனால் தண்டனையுமடைந்தான். அன்று முதல் அவன் அதனைவிட்டு நல்லவன் ஆகிறான். அவனும் தண்டனைக்குப் பதில் சன்மானம் பெறுவனேல் அக்களவை மேலும் மேலும் செய்வன். ஆகவே அவனை நல்லவனாக்கியது அச்சம். வேறொருவன் களவு செய்தல் தவறானது, தீயது என வெறுத்து விலக்கியொழிகிறான். அதனாலே அவன் நல்லவன் ஆகிறான். அவனுக்குக் களவு செய்யும்படி எத்துணை உபகாரம் செய்யினும் அதனை ஒருபோதும் செய்யத் துணியான். ஆகவே அவன் என்றும் நல்லவன் என்ற பெயரோடு இருக்கிறான். இதுபோலவே அறத்தைச் செய்தலினும் பலர் பயன் குறித்தும் சிலர் நல்லது என்ற ஒரே காரணம் குறித்தும் ஈடுபடுகின்றனர். பயன் குறித்துச் செய்பவரினும் நல்லது என்ற ஒரே காரணத்திற்காகச் செய்பவர் என்றும் மிக்க பெயரும் புகழும் பெறுவர். பண்டைக் காலத்து வள்ளல்களிற் பலர் அவ்வாறு நல்லாற்றினின்றவரே. ஆய் என்ற மன்னன் அவ்வாறு பயன் கருதாது அறம் செய்தானென்று ஒரு பழைய செய்யுள் கூறும். வள்ளுவரும் மாரியின் உதவியை வாயாரப் புகழ்கின்றார். உதவிகளில் எல்லாம் மேலானது பயன் கருதாத உதவியேயாகும்.
(அ) இதற்கேற்ற தலையங்கம் கொடுக்க,
(ஆ) எக்காலத்தும் நல்லவனாக இருப்பவன்யார்?
(இ) பெரும்பான்மையோர் எவ்வெவ் காரணங்குறித்துத் தீமை
செய்யாதொழிகின்றனர்?

Page 68
130 தமிழ் மரபு
(ஈ) பண்டைக்காலத்துவள்ளல்களிடத்துக்காணப்பட்ட உயரிய
பண்பு யாது?
(உ) மாரியின் உதவி" என்பதனை விளக்குக.
(ஊ) பின்வருவனவற்றிற்கு இணையான சொற்கள் கூறுக.
வாய்ப்பு, வள்ளல், சன்மானம், பயன்.
10. தமிழிலக்கிய வரலாற்றில் கம்பர் வாழ்ந்த காலம் தனிச்சிறப்புடையது. அக்காலத்தில் வாழ்ந்த அரசர்கள் மாத்திரமன்றி, நாட்டு மக்களும் கவியின்பத்தில் நாட்டம் வைத்தனர். பொருளுடையவரெல்லாம் புலவர்களைக்கொண்டு தம்மைப் புனைந்து பாடச் செய்தனர். இவ்வாறு நாடெங்கும் செய்யுளின் சுவை நுகர்ச்சியின் ஈடுபடுதற்குக் காரணமாயிருந்தவரில் கம்பரும் ஒருவராவர். கம்பர் வாழ்ந்த நாட்டிலே அவரது கவிச் சுவையில் ஆர்வம் மிக்க கணிகையொருத்தியும் வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் சிலம்பி. செல்வமகளான அச்சீரிய நங்கை கம்பரிடம் ஒரு பாடல் கேட்க ஆசைப்பட்டாள். ஒருநாள் கம்பரே அவள் வீட்டுக்கு வந்துவிட்டார். சிலம்பி தன் விருப்பத்தை தெரிவித்தாள். புலவரோ, ஒரு பாட்டுப் பாட ஓரிலக்கம் பொன் கேட்டார். சிலம்பியின் உள்ளம் தயங்கியது. அவளிடம் இருந்த பொன் அரை இலக்கம் தான். அதைக் கொடுத்தால் அரைப்பாட்டுத்தான் பெறமுடியும் என்று கலங்கினாள். நாளடைவில் அழிந்து போவதாய அரை இலக்கத்தை வைத்திருப்பதா, அன்றி என்றும் நிலைத்த கம்பன் கவியைப் பெறுவதா என்ற எண்ணப் பூசலில் சிறிது தடுமாறினாள். கம்பன் கவியை - அவன் இன்பத் தமிழை அவளுக்குக் கைவிட மனம் வரவில்லை. உள்ள பொன் முழுவதையும் அள்ளிக் கொடுத்தாள். கம்பன் கன்னித்தமிழ் பின்வருமாறு கவியுருவாயிற்று.
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
பொன்னின் அளவாகவே புலவர் பாடிவிட்டு விடைபெற்றார். சிலம்பி தனது அரைப் பாட்டை அழகிய சுவரில் பொறித்தாள். பாட்டை முடிப்பதற்கு வேறு பாவலர் வருவாரா என்று பலநாளாக வழிபார்த்தாள். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அவ்வைக் கிழவி வந்து சேர்ந்தாள். கூழுக்குப் பாடும் அவ்வையைக்கண்டு ஏழைச் சிலம்பி இதயம் பூரித்தாள். அவ்வையின் பசிதீர அன்னம் கொடுத்துத் தன் மனைச்சுவரில் எழுதிய கவிக் குறையைக் காட்டினாள். அவ்வையாரும் அழகாகக் கவியை முடித்தார்.

கடடுரை மரபு 131
அம்பொற் சிலம்பி அரவிந்தமே மலராம் செம்பொற் சிலம்பே சிலம்பு.
தன் பெயரைக் கவியில் கண்டதும் அத்தையல் ஆனந்தக் கூத்தாடினாள்.
(அ) மேற்கண்ட பந்திக்கேற்ற தலையங்கம் இடுக.
(ஆ) மற்றைய புலவர்களைவிடக்கம்பர் எவ்வாறு சிறந்தவர்?
(இ) கம்பர், அவ்வையார் ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என நீர்
கருதுகிறீர்?
(ஈ) சிலம்பியின் கலக்கம் என்ன?
(உ) பின்வரும் சொற்களின் கருத்தமைந்த வேறு சொற்கள் எழுதுக.
கவி, கன்னித்தமிழ், பூசல், பூரித்தல்.
(ஊ) பின்வருவனவற்றிற்கு மேற்கண்ட பந்தியிலிருந்து உதாரணம்
தருக.
குறிப்புவினை எச்சம், முற்றும்மை, பண்புத் தொகை, ஏழாம்
வேற்றுமை.
2. கடிதம் எழுதல்
கடிதம் எழுதல் என்பது ஒரு கலை. அது மேனாட்டு மொழிகளில் - வளம் பெற்றுள்ளது. ஒருவர் ஒரு காலத்து எழுதிய கடிதங்கள் பிற்காலத்தில் இலக்கியங்களாகப் போற்றத் தகு சிறப்பும் பெறும். மேனாட்டார், கற்று வல்ல பெரியார்கள் எழுதிய கடிதங்களை அவ்வாறு நூலாக வெளியிட்டுப் போற்றுகின்றனர். தமிழறிஞர்கள் பண்டைக்காலத்து எதனையும் செய்யுள் நடையிலேயே வெளியிட்டனர். கடிதங்களிலும் செய்யுள் நடையில் இயன்றனவே இன்று அகப்படுகின்றன.
இக்காலத்து அறிஞர்கள் கடிதம் எழுதும்பொழுது கையாளும் முறைகளும் மாணவர்க்குப் பெரிதும் பயன்படும். ஒரு கடிதமானது செய்தியை மாத்திரம் கூறுவதோடமையாது எழுதியவரின் அறிவுத் திறன், பண்பாடு முதலியவற்றையும் எடுத்துக்காட்டும்.
கடிதங்கள் பல பிரிவுடையன. அவற்றின் தனிப் பண்புகள் பிற்கூறப்படும். இங்கே பொதுப் பண்புகள் தரப்பட்டுள்ளன. l. g568 all (Heading)
2. கொளு 3. 6î6î (Greeting or Salutation)

Page 69
132 தமிழ் LoUL
Gstig (Communication or Message) உறவுத் தொடர் மொழி கையெழுத்து அல்லது கைந்நாட்டு (p56 (Address on the Envelope)
:
1. தலைப்பு: ஒவ்வொரு கடிதத்திலும் அஃது எழுதப்பட்ட இடமும் காலமும் (திகதி) குறித்தல் வேண்டும். அவை கடிதத்தின் முற்பக்கத்தில் வலப்புற ஒரத்தில் அமைந்திருக்க வேண்டும். உ-ம்:
33, நாவலர் தெரு, யாழ்ப்பாணம். 30-06-67
தமிழ்த் தேதியும் குறிக்கலாம். உ-ம்:-
ஜய, கார்த்திகை ஏழு
விண்ணப்பங்களிலும் முறையீடுகளிலும் நற்சான்றிதழ்களிலும் கடிதத்தின் இடப்புறக்கீழ் ஒரத்தில் காலமும் இடமும் குறிக்கப்படும்.
நீர்வேலி 5-2-67
2. கொளு; இது செய்தி தொடங்குமுன், ‘இன்னாருக்கு இன்னார் அல்லது 'இன்னார் இன்னாருக்கு என எழுதப்பெறும்.
உ-ம்:- (அ) கனம் விவசாய மந்திரி அவர்கட்கு, யாழ்ப்பாண விவசாயிகள் எழுதுவது (முறையிடுவது, விண்ணப்பித்துக் கொள்வது, தெரிவிப்பது) (ஆ) நகராட்சி மன்றத் தலைவராகிய யான், நகர மக்களுக்கு விடுக்கும்
செய்தி. (இ) தவப்புதல்வன் இராகவனுக்கு அன்புள்ள அன்னை எழுதுவது.
உறவாடற் கடிதங்களிலும் வணிகக் கடிதங்களிலும் கடிதம் விடுப்போரைக் குறியாது, விடுக்கப் பெறுவோரை மாத்திரம் குறிக்கவேண்டும்.
உ-ம்:- (அ) அருமைத் தம்பிக்கு எழுதுவது: (ஆ) அன்புள்ள நண்பன் ஆறுமுகனுக்கு எழுதுவது:- (இ) திருவாளர் சுந்தரபாண்டியர் அவர்கட்கு:-

கட்டுரை மரபு 133
3. விவி: உறவினர்க்கு எழுதும்பொழுது முறைப்பெயரே விளிக்கப் பெறும். உயர்ந்தோரைப் பன்மைப் பெயரால் விளிக்குக. ol-lb.:-
தந்தையீர், அன்னையீர், மாமனார் அவர்களே, தமையனார் அவர்களே,
இவற்றோடு அடைமொழி சேர்ப்பதும் நன்று. ο -ιο: -
அன்புடைத் தந்தையார் அவர்களே, அருமைத் தாயாரே, தன்னில் இளையோரை அடைமொழி கொடுத்தும் கொடாமலும் ஒருமையிற் குறிக்குக. உ-ம்:-
தம்பி, தங்காய் அருமைத் தம்பி, பெறற்கரும் தங்கையே, நண்பரை விளிக்கும் முறை வருமாறு:-
நண்பரீர், நண்ப, அன்பரீர், அன்ப, அருமை நண்பரீர், அருமை நண்ப, அன்புள்ள இராகவ,
பெரியோரை விளிக்கும் முறை பின்வருமாறு:- ஐய, ஐயா, ஐயன்மீர், அன்பிற்குரிய ஐயா, கனம்பொருந்திய ஐயா, குறிப்பு: பெரியோர்க்கும் முறையினரின் மூத்தோர்க்கும் விளியின் கீழ்
"வணக்கம் பல’ என எழுதுக. 4. செய்தி: உறவினர்க்கும் நண்பர்க்கும் பழகிய பெரியோர்க்கும் விளிக்குக் கீழ் (உடல்) நலன் கூறுக. உ-ம்:-
(அ) அன்புள்ளதந்தையீர்,
வணக்கம் பல, நலம் நலமறிய அவா. (ஆ) அருமை நண்பா,
நலம். செய்திகள் பொருள் அமைப்புக்கேற்பப் பந்தியாகவும் ஒழுங்காகவும் எழுதப்படல் வேண்டும். எளிய சொற்களால் அமைக்க வேண்டும். கவர்படு பொருளில் (இருபொருள்பட) எழுதக்கூடாது.
5. உறவுத் தொடர் மொழி : இது கடிதம் எழுதுவோர்க்கும் பெறுவோர்க்கும் உள்ள தொடர்பைக் காட்டும். இது கடிதத்திறுதியில் வலப்புறத்தில் எழுதப்படும். p - uíb: -
தங்கள் அன்புள்ள தம்பி, தங்கள் அருமை மகன், தங்கள் அன்பும் பணிவும் மிக்க மகன்,

Page 70
134 தமிழ் மரபு
நண்பர்களிடத்தும் பெரியோர்களிடத்தும் தமக்குள்ள விருப்பத்தைத் தெரிவிப்பதாயும் எழுதப்படும். ol-Lib:
தங்கள் வரவைப் பெரிதும் விரும்பும், தங்கள் மறுமொழியை வழிநோக்கும், தங்கள் நன்றியை மறவாத, அலுவலில் (உத்தியோகத்தில்) தலைவராயிருப்பவர்க்குப் பின்வரு மாறு எழுதப்படும்.
தங்கள் உண்மையுள்ள, தங்கள் உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள, 6. கையெழுத்து அல்லது கைந்தாட்டு: உறவுத் தொடர் மொழிக்குக் கீழாக எழுதியவர் பெயர் இடப்படல் வேண்டும். தன்பெயரோடு தன் தந்தையின் பெயரின் முதலெழுத்தையும் முன்னாகச் சேர்த்து எழுத வேண்டும். தந்தைக்கெழுதும்பொழுது தன் பெயரை மாத்திரம் குறிக் கலாம். பழக்கமில்லாதவர்க்கு எழுதும்பொழுது கைந்நாட்டுத் தெளிவாக இருக்க வேண்டும்.
7. முகவரி: இது கடிதவுறையின் அல்லது மடித்த கடிதத்தின் பின்பக்கத்தில் எழுதப்படுவது. முகவரியின் ஒவ்வொரு வரியும் உறையின் இடது பக்கத்திலிருந்து சற்று வலந்தள்ளி எழுதப்படல் வேண்டும்.
முதல் வரியில் முறையாக அடைமொழி, பெயர் பட்டம் என்பன. இரண்டாவது வரியில் தொழில்; மூன்றாவது வரியில் தொழில் செய்யும் கட்டடம்; நான்காவது வரியில் அஞ்சலகம் (Post ofice) அல்லது, இரண்டாவது வரியில் வீட்டிலக்கமும் தெருப்பெயரும், மூன்றாவது வரியில் ஊர்ப்பெயர் அல்லது அஞ்சலகம்.
ol-lb.:-
அஞ்சல்
தலை
திரு. க. நச்சினார்க்கினியர் அவர்கள், M. A., M. O, L, பேராசிரியர், இலங்கைப் பல்கலைக் கழகம், கொழும்பு.

கட்டுரை மரபு 135
அஞ்சல்
தலை
திரு. ஆ. மாணிக்கவாசகர் அவர்கள்,
26, இராமநாதன் தெரு, மாவிட்டபுரம்.
கடிதங்கள் இரண்டு வகைப்படும். அவை உறவாடற் கடிதங்கள், தொழிற்முறைக்கடிதங்கள் எனப்படும்.
1. opal TL-gi) islgril 356in (Letters to Relatives)
(அ) உறவுக் கடிதம்
(கல்லூரியில் தங்கியிருக்கும் மாணவன் தன் பெற்றோருக்கு எழுதுவது)
இளங்கோ விடுதி, மன்னர் கல்லூரி, கொழும்பு. 30-6-67 என்அன்பு மிக்க தாய் தந்தையீர்,
வணக்கம், யான் இறைவன் அருளால் நலம். தங்களனைவர் நலத்தையும் அறிய அவா.
யான் பாடங்களை ஒழுங்காகப் படித்து வருகிறேன். தேவையற்ற முறையில் பொருளைச் செலவு செய்யாது அறிவோடு நடந்து வருகிறேன். தேர்வு நெருங்கியது. ஊக்கமாக உழைத்துச் சிறந்த முறையில் வெற்றி பெறுவேன் என்னும் நம்பிக்கை உடையேன்.
என் தம்பி நெடுஞ்செழியன் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்கிறானா?
பதில் எழுதுங்கள், வணக்கம்.
தங்கள், அன்பும் பணிவும் மிக்க மகன், செந்தில்நாதன்

Page 71
136 தமிழ் மரபு
பயிற்சி கீழ்க் குறிப்பிட்டவாறு கடிதம் வரைக:
1. ஒரு மாணவன் சுற்றுப் பிரயாணத்தின்போது தான் செய்ததையும் மேலும் செய்யவிருக்கும் பிரயாணத்தையும் பற்றித் தன் பெற்றோர்க்கு எழுதுவது. 2. தூரதேசத்தில் கற்கும் மாணவன் விடுமுறைக் காலத்தைக் கழிக்கத்
தன்னூர்க்கு வருவதாகப் பெற்றோர்க்கு எழுதுவது. 3. ஒரு தந்தை மகனுக்குச்சில அறிவுரைகள் கூறுவதாக எழுதுவது. 4. உடல்நலமற்றிருக்கும் மகன் கல்லூரி விடுதியிலிருந்து தன்தந்தைக்கு
எழுதுவது. 5. தன் வீட்டில் நேர்ந்த தீவிபத்துக் குறித்து ஒருவன்தூரநாட்டிலிருக்கும்
தன்தம்பிக்கு எழுதுவது. 6. தான் விளையாட்டுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற மகிழ்ச்சியை ஒரு
மாணவன்தன் பெற்றோர்க்குத் தெரிவிப்பது. 7. பருவப் (Tem) பரீட்சையில் நன்கு எழுதாத மாணவனுக்குஅவன்தந்தை
எழுதுவது.
(g) 5"Läs sląsid (Friendly Letters)
ஒருவன் தனது கல்வித் தேர்ச்சியைக் குறித்துத் தன் நண்பனுக்கு எழுதுவது:
15, கோயில் வீதி, வண்ணார்பண்ணை.
19-7-67
உழுவலன்ப, நலம்; நலமறிய அவா.
யான் ஜீ.சி.ஈ. தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன். செய்தியை அறிந்ததும் முதலில் உனக்குத்தான் தெரிவிக்கின்றேன். என்னுடைய நல்வாழ்வில் நீ மிகவும் ஆவல் உடையாய். எனது தேர்ச்சி குறித்து என்னைவிட நீயே அதிக மகிழ்ச்சியடைவாய் என்பது எனக்கு நன்கு தெரிந்ததே.
யான் இனி யாது செய்யலாம்? பெற்றோர் அதிக பொருள் வசதியுள்ளவரல்லர். அவர்களை எனது மேற்படிப்புக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டல் நல்லதன்று. ஏதாவது ஒரு வேலையில் முதலிற் சேரவேண்டும். தொழிலைச் செய்துகொண்டும் படிக்கலாம் அல்லவா? மேனாடுகளில் எத்தனையோ பேர் ஆலைகளில் வேலை பார்த்துக்

கட்டுரை மரபு 137
கொண்டே தேர்வுகளுக்கும் படிக்கிறார்கள் என்பதை நீயும் அறிந்திருப்பாய் இப்பொழுது யான் கற்ற கல்வி ஒரளவு போதுமானது. இனி, தொழில்தான் வேண்டுவது. உன்னுடைய கருத்து என்ன?
உன்னுடைய குடும்ப நலன்கள் குறித்தும் எழுதுக.
உன் அருமை நண்பன்,
ப. தமிழரசன்
பயிற்சி கீழ்க் குறித்த பொருள்பற்றி ஒருவன் தன் நண்பனுக்கு எழுதுவதாகக் கடிதம் எழுதுக.
புதிதாகத்தான் சேர்ந்த கல்லூரியின் சிறப்புக்கள். தான்சுவைத்தநூல்கள் சிலவற்றைத் தெரிவித்தல். விளையாட்டுப் போட்டியில் தனக்குக் கிடைத்த வெற்றி. தனது சுற்றுப் பிரயாணம்.
தனது கிராமத்திற் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் 6. தன்னூரில் நடந்த தேர்தல் (Election)
(இ) அழைப்பிதழ் (Invitation)
திருமணத்திருமுகம்
அன்புடையீர்,
நிகழும் பிலவங்க ஆண்டு சித்திரைத் திங்கள் 24ஆம் நாள் (7-5-67) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி 26 நிமிஷத்துக்கு மேல் வரும் நல் ஒரையில்,
நல்லூர் திரு. க. மாணிக்கம் அவர்களின் என் புதல்வி
புதல்வன் திருவளர் செல்வன் திருவளர் செல்வி
மாசிலாமணிக்கும் பொற்செல்விக்கும்
திருமணம் நடாத்தப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், அவ்வமயம் தாங்களும் தங்கள் சுற்றம் சூழச் சமூகந்தந்து, திருமண விழாவைச் சிறப்பித்து, மணமக்களை வாழ்த்தியருளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
பொன்னாலை தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்
1-5-67 த. முருகையா

Page 72
138 தமிழ்மரபு
ஒருவன் தன் தம்பி திருமணத்திற்கு விடுக்கும் அழைப்பு
திருமண அழைப்பு
ஐயன்மீர், அம்மையீர்,
இறைவன் திருவருளை முன்னிட்டு, நிகழும் பிலவங்க ஆண்டு ஆணித் திங்கள் எட்டாம் நாள் (22-6-67) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வரும் கும்ப ஒரையில்,
என்தம்பி, திருநிறை செல்வன் இளங்கோவுக்கும் திருநெல்வேலி அரசர் கல்லூர் அதிபர், திரு. வெ. அருட்பிரகாசரின் தவச்செல்வி, திருநிறை செல்வி மங்கையர்க்கரசிக்கும்
பெரியோர் உறுதிசெய்தபடி திருமணம் நிகழப்போவதால், தாங்கள் தங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து திருமணத்தைச் சிறப்பிப்பதுடன் மணமக்களையும் வாழ்த்தியருளமாறு வேண்டுகின்றேன்.
மாறன்பாடி, தங்கள் அன்புள்ள
பிலவங்க - ஆணி, 2 சி. ஆடியபாதன்
குடிபுகல் விழா அழைப்பு
அன்ப,
காரை நகரில், கிழக்கு மேற்காகச் செல்லும் பெரிய வீதியில், புதிதாகக் கட்டிய எனது மனையில், நிகழும் பிலவங்க ஆண்டு வைகாசித் திங்கள் 18ஆம் நாள் (1-6-67) வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையுமுள்ள நல்வேளையில், யான்குடிபுக இருப்பதால், அந்நிகழ்ச்சியில் தாங்களும் கலந்து மகிழ்விக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகின்றேன். காரைநகர், தங்கள் அன்புள்ள 2O-5-67 சி. ஆடியபாதன்
பயிற்சி கீழ்க்குறித்தவாறு அழைப்பிதழ்கள் எழுதுக.
1. மணஞ்செய்த நண்பர் ஒருவரை உபசரித்து வாழ்த்துரை வழங்கற்கு
அனைவரையும் அழைத்தல். 2. கட்டடத்திறப்பு விழாவற்கு அழைப்பு விடுத்தல். 3. ஆசிரியர் ஒருவர்க்குப் பிரியாவிடைக் கூட்டம் நடத்தற்கு அழைப்பு
விடுத்தல்.

கட்டுரை மரபு 139
(FF) Quiroë55jés slq35th (Benedictory Letters) ஒருவன் தன் நண்பனது பிறந்த நாளன்று அவனை வாழ்த்தி எழுதுவது:
145, 1ஆம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம். 29-6-67
அன்ப,
நாளை உனது பிறந்தநாளென அறிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன். ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்வின் கூறு எனலாம். வயது ஆவது எனக்குத் தெரிவதில்லை. சென்ற காலமும் மீளமாட்டாது. ஆகவே நாம் நாளிலும் பொழுதிலும் உண்மைக்காகவும் உயர்வுக்காகவும் உழைக்கவேண்டும். உன் வாழ்வும் அவ்வாறே உயர்க. வாழ்வு உயர்ந்து பல்லாண்டு வாழ்க. உடல் வயது கூடினாலும் உனது உள்ளம் இளமை மணம் வீசுவதாக, இதனுடன் யான் அனுப்பும் நூல்களை உன் பிறந்தநாட் பரிசாக ஏற்றுக்கொள்க.
நண்பன், ப. பொய்யாமொழி
மணமக்கள் வாழ்த்து
புதுமணம் பூண்ட திருநிறை செல்வீர், அன்பொடு கலந்து நும்மணம் வாழி, வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்கும் உங்கள் இருவீர் அன்பும் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி இன்பக்கனிகள் உதவுவதாக.
வள்ளுவர் கூறிய இல்லறத்திற்கு எடுத்துக்காட்டாக நல்லறம் பெருக்குவீராக.
பேறுபலவும் சிறந்து பெரும்புகழ் நிறைந்து பல்லாண்டு வாழ்க.
சுழிபுரம், அன்பன் 22-6-67 ஆ. அறிவுடைநம்பி
பயிற்சி கீழ்க் குறித்தவாறு வாழ்த்துக்கடிதம் வரைக. 1. தேர்தலில் வெற்றிபெற்ற தம்பியை வாழ்த்தி எழுதுவது. 2. திருமணம் பூண்ட நண்பனை வாழ்த்தி எழுதுவது.

Page 73
140 தமிழ் மரபு
3. அயல்நாட்டுக்கு உயர்படிப்புக்காகச் செல்கின்ற நண்பனைவாழ்த்துவது.
2. தொழில்முறைக் கடிதங்கள்
(9) 996)ip Singh (Official Letters)
ஒரு வியாபார நிலையத் தலைவர் தங் கிளை நிலையப் பணியாளர்க்கு எழுதுவது:-
தமிழில்லம், திருக்கோணமலை. 4-1-56 அன்பு முருகவேள்,
நமது நிலையத்திலிருந்து அண்மையில் அனுப்பிய பொருள் அனைத்தும் ஒரு திங்களில் விற்று ஒழியுமா? அவ்விடத்தில் இவ்விதமான பொருள்கள் அதிகம் தேவைப்படுமே. விலையாகாவிட்டால் விரைவிற் கையிருப்பைத் தெரிவிக்கவும்.
இ. செல்வநாயகம் பயிற்சி 1. எழுதுவினைஞர்(Clerk) ஒருவர்தம் தொழில் நிலையை உயர்த்துமாறு
தமது தலைமையதிகாரியை வேண்டுதல். 2. உங்கள் பாடசாலை மாணவர்சங்கத்தாரது ஒரு
கொண்டாட்டத்திற்குத்தலைமைவகிக்க இசையுமாறு ஒரு பெரியார்க்கு விண்ணப்பித்தல். 3. உங்கள் ஊரிலுள்ள ஒழுங்கை ஒன்றைத் திருத்துமாறு ஊர்மன்றத்
தலைவரை வேண்டுதல்.
(9) 6JGoofsis estigslis (Business Letters)
ஒருவர் சில புத்தகங்கள் தமக்கனுப்புமாறு ஒரு புத்தக விற்பனையாளருக்கு எழுதல்:-
'வாகீசர் இல்லம்" வட்டுக்கோட்டை. 22-12-66 ஆனந்தா புத்தகசாலை அதிபர் அவர்கட்கு,
ஐயா,
தாங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள கீழ்க்காணும் புத்தகங்களை மேற்குறித்த முகவரிக்கு கட்டிப்பேற்றஞ்சலில் (V. P. P) அனுப்புக.

கட்டுரை மரபு 141
ஒரு முறையில் பல நூல்களைப் பெறுவோர்க்கு எவ்வளவு கழிவு கொடுக்கப்படும் என்பதையும் தெரிவிக்குக.
1. தமிழ் மரபு (வரதர் வெளியீடு) - படி ஒன்று 2. விவேகப் பரீட்சை டிெ --- படி மூன்று 3. சைவசமய பாடத்திரட்டு டிெ படி இரண்டு
இங்ங்னம், தங்களுண்மையுள்ள,
சி. மயில்வாகனம்
பயிற்சி 1. ஒருவர்ஒருகூட்டுறவுவிற்பனைச்செயலாளருக்கு, சிலபுத்தகங்களைத்
தவணைக் கட்டணஏற்பாட்டில் அனுப்புமாறு வரைவது.
2. சென்னையிலுள்ள ஒரு புத்தக விற்பனையாளர்க்குத்தக்க கழிவு கொடுப்பதாக, ஒருவர்தம்மிடமுள்ளபல புத்தகங்களை விலைக்கு வாங்குமாறு எழுதல்.
(3) 666ors00T'ud, slugslis (Letters of Application)
(ஒரு வேலை பெறும்பொருட்டு விண்ணப்பித்தல்)
இதில் கவனிக்கத்தக்கன பின்வருமாறு:-
1. தேவையெனவிளம்பரம் செய்த செய்தித்தாளைக் குறிப்பிடல்.
2. தனது வயது, கல்வி, அனுபவம் ஆகியவற்றைக் குறித்தல்,
3. நற்சான்றிதழ் உடனனுப்புதலைக் குறிப்பிடல்.
(கணக்கர் வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்தல்)
திருவாலங்காடு 5-6-67
இலங்கை வங்கி அதிபர் அவர்கட்கு,
ஐயா,
வணக்கம், தாங்கள் நேற்றைத் தினகரன் செய்தித் தாளில் ஒரு கணக்கர்
தேவை என விளம்பரப்படுத்தியதைப் பார்த்தேன்.
யான், ஆங்கில எஸ். எஸ். ஸி. தேர்வில் திறமையுடன் சித்தியெய்தி
யுள்ளேன். எனது வயது பத்தொன்பது. தட்டச்சு (Typewriting) பயின்றுள்ளேன்.
இதனுடன் எங்கள் கல்லூரி முதல்வரின் நற்சான்றிதழும் அனுப்புகிறேன்.

Page 74
142 தமிழ் மரபு
தாங்கள் எனக்கு அவ்வேலையை அளித்தால் நான் அதை ஊக்கமாகவும் திறமையாகவுஞ் செய்வேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்ங்னம், தங்கள் உண்மையுள்ள மு. மாசிலாமணி
பயிற்சி கீழ்க் குறிப்பிட்டவாறு விண்ணப்பக் கடிதம் எழுதுக.
1. ஆங்கிலமும் கணிதமும் தேர்ந்த ஒரு கணக்கர் தேவைப்பட்டதாக நீர் ஒரு நண்பர் மூலம் அறிந்ததைக் குறித்து யாழ்ப்பாணம் ஆனந்தா புத்தகசாலை அதிபருக்கு ஒரு விண்ணப்பம் வரைக. 2. செய்தித்தாளில் நீர்படித்த விளம்பரத்தைக்குறித்து மருத்துவநிலைய அதிகாரிக்கு, உம்மை ஒரு மருந்து கலப்போராக அமர்த்தும்படி விண்ணப்பக்கடிதம் வரைக. 3. அஞ்சலகத் தலைவர்க்கு, உமக்கு ஒரு வேலை தரும்படி கடிதம்
எழுதுக.
(FF) Fr625 5q5th (Leave Letters)
ஒரு மாணவன் தனக்கு நோய் ஈவு அளிக்குமாறு கல்லூரி முதல்வருக்கு எழுதல்:
'வேளகம்" பேராதனை வீதி,
கனடி, 2-6-67
அன்புசால் ஐயா,
வணக்கம். யான் இன்று சுர நோய்வாய்ப்பட்டிருப்பதனால் இன்றுமுதல் மூன்று நாளைக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன்.
தங்கள், கீழ்ப்படிதலுள்ள மாணவன்,
வி. இளம்பூரணன்
பயிற்சி கீழ்க் குறித்தவாறு விடுமுறைக்கடிதம் வரைக.
1. உமது தமையனாரின்திருமணங்குறித்து ஒருநாள்விடுமுறை வேண்டுதல்.

கட்டுரை மரபு 143
2. தாயாரின் உடல் நலக் குறைவு காரணமாக ஒரு நாள் விடுமுறை
வேண்டுதல்.
3. உமது பெற்றோருடன் யாத்திரை செய்வது குறித்து ஒருகிழமை ஈவு
வேண்டல்,
(e) GeisssTestasib (Lettersto the Newspapers)
யாழ்ப்பாணத் துறைமுகங்களிலொன்று இந்தியப் போக்குவரத்துக்கு உதவத் தக்கதாக அமைக்கவேண்டுமென்று செய்தித்தாள் ஆசிரியருக்கு எழுதுவது.
"புதினம்' ஆசிரியர் அவர்கட்கு,
ஐயா,
இலங்கையும் இந்தியாவும் நெடுங்கால உறவுடையன. அவ்வுறவைப் பலப்படுத்துதற்கு யாழ்ப்பாணத் துறைமுகங்கள் பெரிதும் உதவியாய் இருந்தன. புத்தசமயத்தை இலங்கைக்குக் கொண்டு வந்த பெரியாரும் யாழ்ப்பாணத்து வடதுறையில் இறங்கியே வந்து சேர்ந்தார் எனக் கூறுவர். அத்தகைய முதன்மை பெற்ற துறைகள் இன்று மூடப்பட்டுக் கிடக்கின்றன.
பன்னெடுங்காலமாக யாழ்ப்பாண மக்கள் வடதுறைகளின் வழியாகவே இந்தியாவுக்குச் சென்று வந்தனர். இப்பொழுது யாழ்ப்பாண மக்கள் இந்தியா செல்ல வேண்டுமேல் தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் அருகிருக்கும் இடத்துக்கு மதவாச்சி மன்னார் வழியாகச் செல்லவேண்டியவராகின்றனர். இதனால் வீண்செலவும் நிறைந்த இன்னல்களும் ஏற்படுகின்றன.
யாழ்பாண மக்கள் தம் வாழ்க்கைத் தொழிலாக உழவையே செய்கின்றனர். அவர்கள் எல்லோரும் உழவுத் தொழிலில் ஈடுபட நிலம் போதாது. ஆகவே பலர் வேறு தொழிலை நாடுகின்றனர். வேலை பெறுவோர் சிலர்; வேலையற்றோர் பலர். யாழ்ப்பாணத் துறைகளிலொன்று திறக்கப்படுமேல் அவ்வழியாக வாணிகம் பெருகும். நம் நாட்டு மக்களும் தொழில் உடையவராவர். தொழிலும் பொருளாதாரமும் சிறக்க நாட்டு நிலை மக்கள் நிலை ஆகியவை உயரும்.
ஆகையால், அயல்நாட்டில் உறவையும் தொடர்பையும் வளர்த்தற்கும், பொருளாதார நிலையை உயர்த்தற்கும் யாழ்ப்பாணத் துறைகளிலொன்று உடனே திறக்கப்படல் வேண்டும்.
காலையடி, ஆலங்காடன் பண்டத்தரிப்பு. 19-11-64

Page 75
144 தமிழ் மரபு
பயிற்சி பின்வருமாறு செய்தித்தாளாசிரியருக்குக்கடிதம் வரைக.
1. உமது ஊரில் ஒரு பெண்பாடசாலையை அமைத்தல்
இன்றியமையாதது என்பது பற்றி எழுதல். 2. நீர்பார்த்த ஒரு விளையாட்டுப் போட்டியைப் பற்றி எழுதல். 3. உமது ஊரில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட நஷ்டத்தற்கு
நிவாரண நிதி வேண்டி எழுதல். 4. உமது ஊருக்கும் அண்மையிலுள்ள பெரிய நகருக்குமிடையில்
போக்கு வரவு வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென எழுதல். 5. நீர் வசிக்கும் பகுதியில் சில நாட்களாகத் திருடர்நடமாட்டம்
அதிகரித்திருப்பது பற்றி எழுதல். 6. நீர் வசிக்கும் பகுதியில் உள்ள சுகாதாரக் குறைவுகள் பற்றி எழுதல்.
3. கட்டுரைகள்
ஒரு பொருள்பற்றி மனத்திலே எண்ணிய எண்ணங்களை ஒழுங்கு பட அமைத்த உரைப்பகுதியே கட்டுரை எனப்படும். ஒரு பொருள் பற்றி நாம் சிந்திக்குமிடத்து ஒழுங்குபடச் சிந்திக்க வேண்டும். முன்னே எண்ணுவதொன்றைப் பின்னே எண்ணுவதும் பின்னே கருதுவதொன்றை முன்னே கருதுதலும் தவறாம். சிலர் சிந்தனை செய்து முடிவு செய்து கொள்ளாது ஒன்றை எழுதப் புகுகின்றனர். அவ்வாறெழுதத் தொடங்குவோர் மேற்சொன்ன தவறுக்குள்ளாவர். ‘எழுதுமுன் யோசி" கற்றோரிடை வழங்கும் ஓர் அரிய முதுமொழி. எத்துணைக் கற்றோராயினும் எண்ணாமல் எழுதியதினும் எண்ணி எழுதியதிலேயே சிறப்புப்பெறுவர்.
எண்ணுங்கால் கூறுசெய்து எண்ணவேண்டும். ஒன்றைப் பொதுப்படச் சிந்தியாது பலவேறு நிலைகளில் வைத்துச் சிந்திப்பது இலகுவானதும் அழகானதுமாம். அவ்வாறு சிந்தித்து எழுதிய கட்டுரை ஒழுங்கு, தெளிவு விளக்கம் முதலியபண்புகள் உடையதாகவும் இருக்கும். கூறுசெய்து எண்ணியவற்றைக் கட்டுரையிலும் தனித்தனியாக அமைக்க வேண்டும். அவ்வாறு கட்டுரையில் அமைந்திருக்கும் தனிக்கூறுகள் பந்திகள் அல்லது பாகிகள் எனப்படும்.
பந்திகள், வரிகளின் தொடக்கத்திலில்லாமல் சற்று வலந்தள்ளித் தொடங்கவேண்டும். ஒரு பந்தியில் கூறிய கருத்தை அடுத்த பந்தியிலும்

கட்டுரை மரபு 145
விவரிக்கக் கூடாது. ஆனால் ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் அமைத்தல் வேண்டும். பந்தியும் பலவரிகள் அல்லது வாக்கியங்கள் உடையதாகவே இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. கருத்துக்கள் இரண்டு வரிகளில் முடிவுற்றால், அவ்வளவில் அதை நிறுத்தி, அடுத்த பந்தியில் மற்றக் கருத்துக்களைக் கூறவேண்டும்.
இவ்விலக்கணங்கள் எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவற்றோடு சிறப்பிலக்கணங்களையும் கவனிக்குக. கட்டுரை எழுதப்பயிலுமுன் பிறர் கட்டுரையை விளங்கும் ஆற்றலை வளர்த்தல் வேண்டும். பல கட்டுரைகளைப் படித்து அவற்றில் பொருட்டொடர்பு எவ்வாறு கோவைபட அமைந்திருக்கின்றதென்பதைப் பல்காலும் அவதானித்துக் கட்டுரை எழுதும் ஆற்றலைப் பெறுக.
1. வரலாற்றுக் கட்டுரை
வரலாறுகளை இரு பிரிவில் அடக்கலாம். தன் வரலாறு எழுதல் இலகுவானதன்று. வாழ்க்கையில் நேர்ந்த சுவையான பல நிகழ்ச்சிகளையும் எடுத்து, படிப்போர் உள்ளத்தில் பதிந்து இன்பந்தரத்தக்கதான கட்டுரை அமைத்தல் மிக்க திறமையுடையவர்க்கே சாலும். உண்மை நிகழ்ச்சிகளிலுள்ள மாறுபட்ட பல பண்புகளைக் கண்டு சுவைக்கும் ஆற்றலுடையாரும் திறம்படி எழுதற்குரியராவர்.
தன் வரலாறு உயர்திணையைப் (மக்களை) பற்றியதாயின் நினைவாற்றல் ஒன்றே போதும். பிறப்பு, இளமை, வாழ்வின் உயர்வு தாழ்வுகள் முடிவு என்னும் உறுப்புக்களைக் கொண்டு தன் வரலாற்றை அமைக்கலாம். அஃறிணைப் பொருள்களைப் பற்றியதாயின் சிந்தனைத் திறன் இன்றியமையாதது. (அஃறிணை) ஒரு பொருளைப்பற்றித் தன் வரலாறு எழுதும்பொழுது உயர்திணையைப் போன்ற பாவனை உணர்ச்சி முதலில் வேண்டப்படுவதாகும். தோற்றமும் அடுத்து நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகளும் முடிவுமாக அதனை அமைக்க வேண்டும். முடிவு என்றது இறப்பு அல்லது (அதனது) அழிவு அன்று; பொருள் தன் வரலாற்றைச் சொல்லும்பொழுது எந்நிலையில் உள்ளதோ அதனையே கூறி முடிப்பதாக அமையும் முடிவுரையாகும். அஃறிணைப் பொருள்களைப்பற்றியேனும் தன் வரலாறு கூறுமிடத்து நான், யான், நாம், யாம், நாங்கள் என்னும் தன்மைச் சொற்களாலேயே கட்டுரை அமைக்க வேண்டும்.
உயிரில் பொருள்களாயின் அவற்றின் தோற்றமும், அவற்றின் பிறநாட்டுச் செலவு, அவற்றின் உபயோகம், வரலாறு சொல்லும் போது அவற்றின் நிலையெனப் பல கூறுகள் செய்து அவற்றின் தன் வரலாறு எழுதத் தொடங்குக.

Page 76
146 தமிழ் மரபு
தன் வரலாறு:
(அ) ஒரு பசுவின் தன் வரலாறு
இப்பொழுது என்னைப் பார்ப்பவர்கள் என்மீது இரக்கம் காட்டுவார்கள். எனது வாழ்க்கை வரலாற்றை அறிய ஆசைப்படுவார்கள். இவ்வளவு காலத்தில் எத்தனை இன்ப துன்பங்கள் சென்ற வாழ்வை நினைக்கும்போதே என்மனம் பல்வேறு உணர்ச்சிகளை அடைகிறது.
எனது தாய் கோயம்புத்தூரைச் சேர்ந்தவள். எனது இனத்தவர்கள் எல்லோரையும் விட அவள் உயரமாயும் அழகாயும் இருப்பாள். அவள் ஒரு முதலியார் வீட்டில் வளர்ந்தாள். முதலியாரும் அவர் மனைவியும் தங்கள் பிள்ளைபோல என் அன்னையைப் பேணி வந்தார்கள். நான் பிறந்ததும் அவர்கள் மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்லமுடியாது சிறுவரும் பெரியவர்களும் என்னைத் தூக்குவார்கள்; அணைப்பார்கள். அவ்வாறு கண்மணிபோல் என்னைக் காத்து வந்தார்கள்.
பிறந்து இரண்டு மூன்று நாள் ஆனதும் நான் ஓடி உலாவத் தொடங்கினேன். 'இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்லுவார்களே. அதுபோல எனக்கு அந்த நாட்களில் "பயம் என்று ஒரு பொருள் இருந்ததாகத் தெரியவில்லை ஒரு சிறு ஒலி கேட்டதுதான் தாமதம் என். கால்கள் நிலத்தில் நில்லா; முதலியாரது வீட்டைச் சுற்றி ஒரு நொடிக்குள் வந்துவிடுவேன். அந்த இளமைத் துடிப்பு, இப்பொழுது, நினைத்தாலும் வியப்பை அளிக்கிறது! அந்த நாட்களில் நான் சுதந்திரமாகவும் வாழ்ந்தேன். பசித்த நேரம் பால் சுவைப்பேன்; பொழுது போக்காக அங்குமிங்கும் போய் இரண்டொரு புற்கடிப்பேன்; ஒடிக் களைப்படைந்தால் உறங்குவேன். நான் என் அன்னை முன் இல்லாத சமயம் அவளின் கதறலையும் பதறலையும் பார்க்கவேண்டும்! எவ்வளவு அன்பு அவள் என்னை நினைத்துப் பதறுதற்கும், எனது ஒட்ட ஆட்டங்களுக்கும் முடிவு காலம் வந்தது. நான் பிறந்து பதினைந்து அல்லது இருபதுநாள் ஆனதும் என்னைக் கட்டிவைக்கத் தொடங்கிவிட்டார்கள். மிருக வாழ்வை அப்பொழுதுதான் ஆரம்பித்தேன். எனக்குக் கிட்ட உள்ள உணவை உண்டு என்னைப் பிணிதத்த கட்டையருகில் உறங்குவேன். சிறிது நேரம் எனது கட்டை அவிழ்த்து விடுவர். சற்று மகிழ்ச்சி அடைவேன். என்னை மறுபடியும் கட்டுதற்கு இழுத்துச் செல்வர். என் கால்கள் என்ன பாடுபடும்!
யான் பாலை மறக்குங் காலம் வந்தது. புல்லே எனது பிரதான உணவாயிற்று. இடையிடையே வேறுபல சுவையான உணவையும் தருவர். என் உடல் வளர்ச்சியடைந்தது. பார்ப்பதற்கு அழகாயும் வழவழப்பாயும்

கட்டுரை மரபு 147
இருந்தது. தாயாம் பருவம் அடைந்தேன். என்னை ஒருவர் - பெரிய செல்வர் - பார்த்ததும் வாங்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். என் எசமானருக்கு என்னை விற்றுவிட எண்ணமில்லை. நண்பர் என்ற காரணத்தால் அவருக்கு என்னைக் கொடுக்க ஒருவாறு இசைந்தார்.
என்தாயைப் பிரியும் கவலை என்னை வருத்தியது. என்ன செய்யலாம்? புதிய எசமானர் பின் சென்றேன். என் போன்றவர்கள் பலர் ஓரிடத்தில் நின்றார்கள். அவர்களுக்கெல்லாம் புதிய எசமானர் நல்ல தொழுவம் கட்டியிருந்தார். நானும் அங்கேதான் குடிபுகுந்தேன். தொடக்கத்தில் என்னை என் இனத்தார்கள் மிகக் கோபமாகப் பார்த்தார்கள், முட்டினார்கள், இடித்தார்கள், கலைத்தார்கள். புதிய இடம் எனக்குத் துன்பமாகவே இருந்தது. பழகப் பழக எல்லோரும் அணைத்தனர்; பிரிந்தால் வருந்தினர். எசமானர் என் பக்கம் வருவது அருமை. வேலையாளே உணவு தருவான்; நீராட்டுவான்; வெளியே மேயவிடுவான். எல்லாம் இருந்தும் எனது பழைய எசமானர் வீட்டு வாழ்க்கைக்கு எதுவும் நிகராகாது. தாயைப் பிரிந்திருந்த யான் இப்பொழுது ஒரு கன்றுக்குத் தாயாகி விட்டேன். என் கன்றுதான் எனக்கு உயிர். உணவில்லாமல் இருந்தாலும் என் கன்றைக் காணாமல் வாழமாட்டேன். என்னிடத்தில் என் எசமானர்க்கு ஒரு தனியான விருப்பம். மற்றவர்களை விட நான் அதிக பால் கொடுப்பேன்; சாந்தமாகவும் இருப்பேன். என் குணத்தையும், சிறப்பையும் கருதி அவர் எனக்கு விசேஷ உணவுகள் அளிப்பார். தாமே நேரில் எல்லாவற்றையும் கவனிப்பார். காமதேனு என்றே என்னை அழைத்தனர். என் இன்ப வாழ்வு அதிகம் நிலைக்கவில்லை. வாழ்வுச் சக்கரம் சுழலத் தொடங்கியது. இன்ப வாழ்வு மாறுங்காலம் வந்தது. என் எசமானர் திடுமென இறந்துவிட்டார். அவரது குடும்பம் சீர் குலைந்தது. என் இனத்தவர்கள் எல்லோரும் விலைப்பட்டார்கள். யான் ஒருத்தியே தனித்தேன். நாளாக ஆக என் வீட்டுக்காரர்கள் என்னைக் கவனிப்பதையே குறைத்துக் கொண்டனர். சில நாட்களில் இரண்டுவேளை மாத்திரமே உணவு கிடைக்கும். சில நாட்களில் நீர் கிடைப்பதும் அரிது. இப்படிச் சில ஆண்டுகள் நகர்ந்தன. நானும் மூன்று நான்கு கன்றுகளுக்குத் தாயாகிவிட்டேன். தலைவன் இல்லாத என் வீட்டுக்காரர்களும் கடன்காரர்களாகிவிட்டார்கள். ஒரு நாள் கடன்காரன் ஒருவன் வந்தான். தன் பணத்தைத் தரும்படி கேட்டான். அவர்கள் தவணை கூறியும் கேளானாய் என்னை அவிழ்த்துச் சென்றுவிட்டான்.
கொடுப்போரும் வாங்குவோரும் என்மீது குறையாத பிரியம் வைத்தகாலம் போய்விட்டது. இப்பொழுது நான் கடனுக்காகச் சென்றேன். நான் சென்ற இடமோ மிகக் கீழானது. பன்றிக்கும் நல்ல இடம் அமைப்பார்கள்; நான் கட்டப்பட்ட இடமோ கல்லும், கரடும், மேடும்,

Page 77
148 தமிழ் மரபு
பள்ளமும் நிறைந்தது. இந்த இடத்தில் எனக்குக் கிடைக்கும் உணவோ மிக விசித்திரமானது. கடன்பட்ட எசமானர் மீது வைத்த கோபத்தையெல்லாம் என்னிடத்திற் காட்டினார்கள். உலகத்தில் உணவுப்பங்கீடு எற்படுமுன்பே என் எசமானர் எனக்கு அளந்து போடத் தொடங்கிவிட்டார். உணவு குறைந்ததால் பால் குறைந்தது. அதனால் தாங்கமுடியாத அடி கிடைத்தது. அதைத் தொடர்ந்து பட்டினி. என்னுடம்பில் மறைந்திருந்த எலும்புகளெல்லாம் கண்ணுக்குப் புலப்பட்டன. என்நிலை வரவர மோசமானது. எசமானருக்கு ஒரு யோசனை பிறந்தது. என்னை வளர்ப்புக்கு விடலாமென எண்ணினார். அவ்வாறே விட்டுவிட்டார்.
நான் அவ்விடத்தில் பலருடன் மேயச் செல்வேன். எல்லோரும் திரும்பும்போது நானும் அவர்களோடு வீடு செல்வேன். முதுமையாலும் வறுமையாலும் இளைத்த யான் வீடு சேர மாலைக் காலம் போய் இருட்டு நிறைந்துவிடும். என்னை வளர்ப்பதற்கு ஒப்புக்கொண்டவரும் என்னில் நம்பிக்கையை விட்டுவிட்டார். யான் இப்போது யாரும் கைவிடத்தக்க பொருளாகிவிட்டேன். шптөйт இருப்பதால் மகிழ்வாருமில்லை; இறப்பதால் வருந்துவாருமில்லை. நல்ல காலத்தில் எல்லோரும் அன்பு செய்வர். அல்லாத காலத்தில் பிரியமானவரும் வெறுப்பர். உலகத்தவரின் அன்பு வியாபாரப் பொருள்தானே! இந்த உலகம் உடலையும் பொருளையும் தானே நேசிக்கிறது. ஆனால், என் உயிரையும் உள்ளத்தையும் பார்த்து அன்பு காட்டுவாரை எங்கும் காணேனே!
ஆ. பழந்துணி
நான் முதலில் புண்ணிய பாரத பூமியில், ஒரு பருத்திச் செடியில் பஞ்சாய் இருந்தேன். காற்றின் மோதுதலால் நான் திசைகெட்டுப் போய்விடாமல் ஒருவர் என்னை எடுத்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்தார். காற்றிலும் மழையிலும் வெயிலிலும் நான்பட்ட கஷ்டத்தை பார்த்து, என்மீது அவர் இரக்கங்கொண்டாரெனவே நினைத்தேன். ஆறுதல் கிடைத்ததென ஒரு பெருமூச்சு விட்டேன். அடுத்த நாள் நான் கட்டிய மனக்கோட்டைக்கு அழிவுகாலம் வந்தது. பலர் என்னை அடித்தனர். எனது மெல்லிய உடல் மேலும் நைந்து துன்பமுறப் புடைத்தனர். என்னுடனிருந்த வித்தினை வெளியே எடுத்தனர். என்னை அழகான திரிகள்போல ஆக்கிவிட்டார்கள்.
வெட்ட வெளியிலே உல்லாசமாக இருந்த என்னைப் பெட்டியிற் பூட்டினார்கள். பின்பும் விட்டார்களா? என்னை யந்திரத்திற் கொடுத்து நூலாக்கினார்கள். யான் நூல் வடிவமானதும் சுற்றியெடுத்தார்கள்,

கட்டுரை மரபு 149
வேறோர் இடத்திற்கனுப்பினார்கள். யானும் துன்பம் தொலைந்தது என்று பூரிப்படைந்தேன். எனது புதிய எசமானரும் கருணையுடையவர்போற் காணப்பட்டார். என் உடலை நல்ல நிறமூட்டிப் பன்மடங்கு கவர்ச்சியான தாக்கினார். என்னைப்போன்ற பலர் என்னுடன் இருந்தார்கள். அவர்களும் யானும் இன்பமாகக் காலத்தைக் கழித்தோம்.
பல நாள்கள் சென்றன. ஒருவர் என்னை விலைக்கு வாங்கிச் சென்றார். அவர் என்னைக் கொண்டு சென்ற இடம் ஒரு வீடுபோற் காணப்படவில்லை. பரந்த மண்டபம் அது. இரும்பினாற் செய்யப்பட்ட பல பொருள்கள் அங்கே காணப்பட்டன. அந்த இடம் மிக விசாலமாக இருந்தது. என்போன்ற பலர் இரும்பினாற் செய்த அப்பொருள்களில் அகப்பட்டிருந்தார்கள். அவர்கள் என்ன பிழை செய்து இவ்வாறு தண்டனை அடைந்தார்களோ என எண்ணினேன். 'யான் மிக அழகுள்ளவன், என்னை இப்படியெல்லாம் துன்பப்படுத்த மாட்டார்கள்’ எனப் பெருமை கொண்டேன். ஆனால் என்ன நிகழ்ந்தது. என்னையும் ஒரு எந்திரத்தி லிட்டார்கள். என்பக்கத்திலுள்ளவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்; ஆறுதலும் அடைந்தார்கள். யான் தலையாரி வீட்டில் ஒளித்த திருடன் போல விழித்தேன். 'என்ன ஆகுமோ?’ என்று ஏங்கினேன். உரலில் அகப்பட்டது உலக்கைக்குத்தப்புமா? எந்திரத்தில் அகப்பட்ட யான் பல இன்னல்களுக்கு ஆளானேன். வேலை முடிந்ததும் யான் எந்திரத்திலிருந்து விடுதலை யடைந்தேன். என்னுடைய பெயரும் மாறிவிட்டது. யான் எந்திரத்திற் புகமுன் என்னை நூலென்று அழைத்தார்கள். எந்திரத்திலிருந்து திரும்பியதும் சீலை என்று அழைக்கலாயினர். பல துண்டுகளாகத் துணிக்கப்பட்டேனாதலின் துணி என்றும், கிழக்கப்பட்டேன் ஆதலில் கிழி என்றும், யான் உடுப்பதற்கு ஏற்ற பொருள் ஆதலின் உடை என்றும் பல பெயர்களைப் பெற்றேன். பாடுபட்டால் அன்றோ பட்டங்கள் கிடைக்கும்? என்னை அழகாக மடித்து வைத்தார்கள்; அதனால் மடி என்றும் அழைக்கப்பட்டேன்.
աnaծr இதுவரை அடைந்த இன்னல்களையெல்லாம் எண்ணிக்கொண்டும் இனிமேல் என்ன வருமோ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஓர் அறையில் படுத்திருந்தேன். பல மாதங்கள் கடந்தன. ஒருநாள் பிரபு ஒருவர் வந்தார். எனது முதலாளியுடன் ஏதோ பேசினார். மறுகணம் என்னைச் சேர்ந்த பலரும் யானும் அப்பிரபுவினுடைய வண்டியில் ஏற்றப்பட்டோம். நாங்கள் போய்ச் சேர்ந்த இடத்திலும் எங்களைப் போன்ற பல்லாயிரவர் கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பல்வேறு நிறத்தினர். பல்வேறு இடத்தினர். மாநாடு நடக்கப் போகின்றதோ என எண்ணினேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. நாம்

Page 78
150 தமிழ் மரபு
எல்லோரும் வேற்று நாட்டுக்கு அனுப்பப்படப்போகிறோமென்பதைப் பின்புதான் அறிந்தேன். சிலநாள் கழிந்தபின், நாங்கள் கப்பலில் ஏறினோம். கடற்பிரயாணம் மிக உல்லாசமாய் இருந்தது. இறுதியாகக் கப்பல் கரையை அடைந்தது. எங்களுக்காகப் புகைவண்டி காத்திருந்தது. சிலமணி நேரத்துள் புகை வண்டி எங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டது. புகைவண்டிப் பிரயாணம் ஒரு நாளுக்குமேல் நீடிக்கவில்லை. எங்களை வியாபாரியார் ஒருவர் வரவேற்றார். நாங்கள் அவருடைய பெரிய மலைபோன்ற மாளிகையில் இடம்பெற்றோம். பருமரத்தைப் பற்றிய பல்லியும் பாழ்போகாதல்லவா? எங்களுடைய இருக்கையும், உறவும் எல்லாமும் மிக வாய்ப்பாக அமைந்திருந்தன. ஆனாலும் எங்கள் காலம் விடுமா?
ஒருவர் எங்கள் மாளிகைக்கு வந்தார். அவர் கண்கள் பல பொருள்களிலும் சென்றன. கடைசியாக என்னையே எடுத்துக்கொண்டார். எனக்குரிய விலையைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு என்னை எடுத்துச் சென்றார். அவருடைய மனைவியும், பெண் மகளிரும் ஆவலோடென்னை எடுத்தார்கள்; அணைத்தார்கள்; 'எனக்கு எனக்கு’ என்று என்னைப் பிடித்து இழுத்து உயிரையே மாய்த்து விடுவார்கள் போற் காணப்பட்டார்கள். தொடக்கத்தில் எனக்கு மிக மதிப்புக் கிடைத்தது. விசேட காலங்களுக்கே என்னை உபயோகித்தார்கள். நாளாக ஆக ஆறிய கஞ்சி பழங் கஞ்சி என்பதுபோல என் புதுமை, அழகு, பெருமை எல்லாம் போய்விட்டன. நாள்தோறும் அவர்கள் கையில் அடிபட்டேன். சலவைத் தொழிலாளி என்னைப் படுத்தியதும் பெரும்பாடு. வாரம் ஒரு முறை அவன் வீட்டுக்கு விஜயம் செய்வேன். எல்லோரும் என்னை அடித்து என் உடம்பு நைந்து விட்டது. அப்பொழுதும் விட்டார்களா? என்னில் ஒரு பக்கத்தைக் கிழித்து விளக்குத் துடைக்கவும், திரி திரிக்கவும், பாத்திரம் பிடிக்கவும், இன்னும் பல கருமங்களுக்கு உபயோகப்படுத்துகிறார்கள். யான் இப்பொழுது அழகுக்குரிய பொருளல்லேன்; அழுக்கை நீக்கும் பொருளாகி அழுக்குமயமாக இருக்கிறேன். என்னாடு எங்கே? யான் இதுவரை அடைந்த இன்னல்கள் எத்தனை? பெற்ற இன்பம் எத்துணை? ஆ! யான்பட்டதுன்பம் யார் இவ்வுலகில் அடைந்தார்!
பிறர் வரலாறு:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
"பாட்டுக் கொருபுலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா’

கட்டுரை மரபு 151
என்று பட்டணம் போய் அங்கே பாரதி பாடலைப் பண்ணோடு பாடக் கேட்டுத் தன் கிராமத்துக்குத் திரும்பிய பட்டிக்காட்டான் ஒருவன், தன் கூட்டாளிகளைச் சூழவிருத்தி ஒரு பிரசங்கம் செய்கிறான். தனது பிரசங்கத்திலே சுப்பிரமணிய பாரதியார் பாடல்களின் அருமை பெருமைகளையெல்லாம் அள்ளிச் சொரிந்து கேட்போருக்குப் பாரதியாரிடம் அபிமானமும் பெருமதிப்பும் ஏற்படுமாறு செய்து விடுகின்றான். பாரதியார் வாழ்ந்த காலத்தில் தக்க ஆதரவின்றிப் பஞ்சத்தில் உழன்று பட்டினியால் இறந்தார் என்று கூறுகிறார்கள். அவ்வாறு ஆதரவற்றுத் தவித்த அவரே, தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரதநாட்டு மக்களுக்குச்சுதந்திர தாகத்தையுண்டாக்கி அவர்கள் ஆவேசங்கொண்டு தேச விடுதலைப் போரில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகஞ் செய்யுமாறு தூண்டியவர். அவருடைய பாடல்கள் மாணிக்கங்கள் போல விலை மதித்தற்கரியவை. நாட்டு மொழியையும் இனிமை சொட்டுமாறு பாட்டிலமைத்தவர் என்று பட்டிக்காட்டான் கூற்றாகக் கூறித் தமிழ் மக்களின் இதயங்களில் உணர்ச்சியையூட்டி, "பாரதி மகாகவி, தேசியகவி’ என்றெல்லாம் பொது மக்களனைவரும் பாராட்டும்படி செய்தவர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களாவர். அந்த எழுச்சியிலேயே நாடெங்கும் பாரதி திருநாள் கொண்டாடப்படலாயிற்று. எட்டயபுரத்திலே பாரதி மணிமண்டபம் கட்டிப் பெருவிழா நடைபெற்றது. "கற்றோனருமை கற்றோனே அறிய முடியும்." தமிழ் மக்களுள்ளத்தில் பாரதியார்பால் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்திய கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் வரலாற்றைச் சுருக்கமாகக் கீழே தருகின்றோம்.
தென்னிந்தியாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தேரூர் என்பது இவரது ஊர். தந்தையார் பெயர் சிவதாணுப்பிள்ளை. தாயார் ஆதிலட்சுமி அம்மையார் ஆவர். இவ்விருவரின் பரம்பரையும் வழிவழி புலமை வாய்க்கப்பெற்று வந்தனவே. விநாயகம்பிள்ளை அவர்கள் ஆயிரத்து எண்ணுற்றெழுபத்தாறாம் ஆண்டு ஆடி மாதத்தில் உதித்தார். பெற்றோருக்கு இவரொருவரே ஆண் குழந்தையானமையின் மிகவும் செல்வமாக வளர்க்கப்பட்டார். இவர் தேரூரில் தமது ஆரம்பத் தமிழ்க் கல்வியை முடித்து, கோட்டாறு ஆங்கிலக் கல்லூரியிற் சேர்ந்து பயின்றார். ஆங்கிலத்தில் ஒரளவு தேர்ந்தபின் திருவனந்தபுரம் ஆசிரிய பயிற்சிக் கழகத்திற் படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.
கல்வி பயிலுங் காலத்திலேயே தேசிக விநாயகம்பிள்ளையவர்களிடம் கவிபாடும் புலமையும் அமைவதாயிற்று. திருவாவடுதுறைச் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ்க் கல்வியை முறையாகப் பயின்று பெரும்புலமை

Page 79
152 56 LOUL
யடைந்தார். பிள்ளையவர்கள் பொழுது போக்காகப் பல கவிதைகள் பாடினார்கள். தமது இருபதாம் ஆண்டிலே தேரூரிற் கோயில் கொண்ட அழகம்மை பேரிற் பதிகமொன்று பாடினார்கள். மிகவும் இனிய பொருள் செறிந்த அப்பாடல்கள் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பக்திப் பெருக்கைத் தருவனவாம்.
பிள்ளையவர்களுக்கு இருபத்தைந்தாம் ஆண்டிலே திருமணம் நிகழ்ந்தது. இவருக்கு மனைவியராக வாய்த்த குணவதி புத்தேரியூரிற் பிறந்த உமையம்மை என்பவராவர். அந்த ஆண்டிலேயே பிள்ளையவர்கள் ஆசிரியத் தொழிலில் அமர்ந்தார்கள். அவர் தமது முப்பது வருட சேவைக்காலத்தின் பிற்பகுதியிற் பல ஆண்டுகள் திருவனந்தபுரம் மகாராஜா மகளிர் கல்லூரியிற் கற்பித்து இளைப்பாறுவாராயினர்.
பிள்ளையவர்கள் ஆசிரியராக வேலைசெய்த காலங்களில் ஆற்றொழுக்குப் போன்று கவிதைகள் பல பாடினார்கள். குயில், தேவி, ஆண்டான் கவிராயன், யதார்த்தவாதி முதலான புனைபெயர்களோடு பல பாடல்களைப் பத்திரிகைகளில் வெளிப்படுத்தினார்கள். இப்பாடல்கள் பலவும் திரட்டப்பட்டு "மலரும் மாலையும்" என்ற கவிதைத் தொகுதி வெளிவரலாயிற்று. இவரது பாடல்கள் பால்மணம் மாறாத பாலர்களின் குதலை வாய்க்கு மிகவும் ஏற்றவை. 'பாட்டியின் வீட்டுப் பழம்பானை", "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு', 'எனது சுக துக்கங்கள்’ என எண்ணிறந்த சிறார்க்கேற்ற பாடல்கள் உள்ளன. புத்த பகவானுடைய சரித்திர்த்தை ஆசிய ஜோதி" என்னும் சிறு காவியமாகப் புனைந்துள்ளார். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்' என்பதும் அவர்களாற் பாடப்பட்ட கவிதை நூலே. இயற்கையின்பத்தில் ஈடுபட்டுக் கவிமழை பொழிந்த உணர்ச்சிமிக்க கவிஞராகமட்டுமன்றி, பிள்ளையவர்கள் சிறந்த அறிஞராகவும் விளங்கினர் என்பதை அவரெழுதிய 'காந்தளூர்ச் சாலை" என்ற நூலும், நாஞ்சில் நாட்டு மக்கள் வரலாறு என்ற அவரது ஆங்கிலக் கட்டுரையும் தெளிவாகப் புலப்படுத்துவனவாம்.
பிள்ளையவர்களின் தமிழ், நமது மூதாதையரின் பண்பாட்டிலும் மரபிலும் ஊறித் தோய்ந்து, இனிமை சொட்டுவது; கல்லார்க்கும், கற்றார்க்கும், நகர மக்களுக்கும், நாட்டுப் புறத்து மக்களுக்கும் ஒரு பெற்றித்தாய் இனிக்கும் தமிழ் உண்மையான தமிழ் மரபுணர்ச்சி வேண்டுமாயின் இவரது பாடல்களைக் கற்க வேண்டும். மிகப்பழமையான சங்கத் தமிழின் இனிமையைக் காணவேண்டுமாயின் பிள்ளையவர்களின் கவிதைகளை மீண்டும் மீண்டும் கற்க வேண்டும்.

கட்டுரை மரபு 53
செந்தமிழ்ச் செல்வராகிய பிள்ளையவர்களின் பாடல்களில் கற்றார்க்கும் பொதுமக்களுக்கும் ஈடுபாடு பெரிதும் உண்டானதும் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதாம் ஆண்டிலே அவருக்குக் 'கவிமணி" என்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டினர். அறிஞர்கள் பலர் கூட்டங்கள் மன்றங்களுக்குக் கவிமணி அவர்களை அழைத்துத் தமது சபைகளைச் சிறப்பித்தனர். கவிமணி அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்தார் செட்டி நாட்டரசர் முதலானவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர்.
கவிமணியவர்கள்பால் பிறர்க்குதவும் பண்பும், அடுத்தோரை ஆதரிக்கும் அன்புள்ளமும் அமைந்திருந்தன. குழந்தையுள்ளம் படைத்து விரிந்த மனப்பான்மையும் பெற்ற கவிமணியவர்கள் உயர்ந்த ஒழுக்க சீலராகவும் வாழ்ந்தார். ஆதனால் எல்லாருடைய உள்ளமுங் கவர்ந்து ஏறுபோற் பீடுநடையுற்று விளங்கினார்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த கவிஞர்கள் பெரியோர்களை அவர்கள் காலத்திலே ஆதரிக்காது அவம் செய்த தமிழ்நாடு, கவிமணியவர்களைக் கெளரவித்து ஆதரவு செய்ததன் மூலம் தனது பழிச்சொல்லை ஒழிக்கப் பெற்றது.
நமது கவிமணியவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து ஜய ஆண்டு புரட்டாசி மாதத்தில் அமரவாழ்வெய்தினார். அது கேட்டுத் தமிழறிஞர் கலங்கினர். தமிழன்னை தன்னருமருந்தன்ன திருமைந்தனை இழந்து தவித்தாள். நாடெங்கிலும் அனுதாபக் கூட்டங்கள் நடத்தினார்கள். கவிமணியவர்களின் பூதவுடம்பு பொன்றியதேனும் அவரது கவிதைகளின் வடிவமான புகழுடம்பு என்றும் நின்று தமிழுள்ளளவும் தமிழருள்ள மட்டும் நிலைத்து வாழும் என்பதற்கையமில்லை.
பயிற்சி
பின்வரும் குறிப்புக்களைக் கொண்டுதன் வரலாறு வரைக: 1. குதிரை:- (1) காட்டில் வளர்தல் (2) பிடிக்கப்பட்டுப் பயிற்சி பெறல் (3) ஒருவர் விலைக்கு வாங்கிச் சவாரி செய்தல் (4) வேறொருவர் அதனை வண்டியிழுக்க உபயோகப்படுத்தல் (5) முதுமையில் உபயோக மற்றுப்போதல். 2. காசு:- (1) உலோகசாலையில் உருக்கப்படுதல் (2) தங்கசாலையில் முத்திரையிடப்படுதல் (3) அரசியல் நிதியறைக்கு அனுப்பப்படுதல் (4) வங்கி(Bank)க்குப்போதல் (5) கடைக்காரனிடம் போதல் (6) பலரிடமும் மாறிமாறிப் போதல் (7) தேய்ந்து மதிப்பற்றுப் போதல்.

Page 80
154 தமிழ்மரபு
3. தேனி:- (1) தோற்றம் (2) கூடு கட்டலும் தேன் சேர்த்தலும் (3) தேனீயின் பல்வேறு பிரிவுகளும், அதன் தொழில்களும் (4) அதன் வாழ்வில் ஏற்படும் இன்னல்களும் இன்பமும், 4. யானை:- (1) காட்டில் வளர்தல் (2) பிடிக்கப்படுதல் (3) பயிற்றப்படுதல் (4) பாரமிழுத்தல், ஊர்வலங்களிலும் விழாக்களிலும் உபயோகப்படுதல் (5) முதுமை, 5. பானை:- (1) களிமண் வெட்டியெடுக்கப்படுதல் (2) குயவனால் பானை வடிவமாகச் செய்யப்படுதல் (3) கடையில் விற்கப்படுதல் (4) வீட்டில் உபயோகப்படுதல் (5) உடைந்த நிலை. 6. நாற்காலி:- (1) நிழல்தரு மரமாக இருத்தல் (2) தச்சனால் வெட்டித் துண்டாக்கப்படல் (3) நாற்காலியானபின் ஒருவர் விலைக்கு வாங்கல் (4) பலர்க்கும் இருக்கையாக உபயோகப்படல் (5) நாளானபின் ஏற்படும் சிதைவுகள். 7. மழைநீர்:-(1) சூரிய வெப்பத்தால் நீராவியாதல் (2) வானத்தில் முகிலாகத் திரிதல் (3) குளிர்ந்தநிலையில் நீராக வீழ்தல் (4) மலையில் விழுந்ததுளிகள் ஆறாகச் செல்லுதல்; குளத்திலும், கிணற்றிலும் வீழ்ந்தவை மக்களுக்குப் பலவகையிலும் பயன்படல். 8. ஆறு:- (1) மலையில் உற்பத்தியாதல் (2) பல கிளை அருவிகளும் ஒடைகளும் சேர்ந்து பேராறாதல் (3) வயல்களையும், குளங்களையும் நிரப்பி வளம்படுத்தல் (4) கிராமங்கள், நகரங்கள், காடுகள் என்பனவற்றுக்கூடாகச் செல்லுதல் (5)கடலிற்கலத்தல்.
பயிற்சி 1. பின்வருவனவற்றின்தன் வரலாறு எழுதுக.
ஒட்டகம், கிளி, மீன், வானவூர்தி, காகம், ஆடு, பேனா, மோதிரம், விளக்குமாறு, செருப்பு, புகைவண்டி, கைக்கடிகாரம்.
(ஆ) வருணனைக் கட்டுரை
ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியை வருணித்துரைப்பது வருணனைக் கட்டுரை எனப்படும். நம் வாழ்க்கை முழுவதும் நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. அவற்றை நாம் பிறர்க்கெடுத்துச் சொல்லும்பொழுது கேட்போர் மனத்தில் அவற்றை நேரிற் கண்டதுபோன்ற உணர்ச்சி உண்டாக வேண்டும். அதற்கு இன்றியமையாது வேண்டிய பண்புகள் இரண்டு. ஒன்று கூர்ந்து நோக்குமாற்றல்; மற்றொன்று, சொல்லுந்திறன். நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குவோர் காட்சியின்பத்தைச் சுவைக்கும் திறனும் உடையவராவர். சுவை அநுபவமே சொற்றிறனை வளர்ப்பது.

கட்டுரை மரபு 155
சில நிகழ்ச்சிகள் அநுபவத்திற் காணாதவைகளாகவும் இருப்பதுண்டு. அப்படிப்பட்டவற்றை வருணிக்குமிடத்துக் கற்பனைத் திறனும் கேள்விச் செல்வமும் ஆகிய இரண்டுமே துணை செய்யும்.
வருணனைக் கட்டுரை எழுதும்பொழுது நேரே பார்ப்பதாகப் பாவனை செய்தல் சிந்தனையை எளிதாக்கும்.
தேர்த் திருவிழாக் காட்சி
கருத்துக்கள்:- (1) தோற்றுவாய் (2) மக்கள் விழாவுக்குச் செல்லுங் காட்சி (3) கோயிற் காட்சி (4) தேர்த் திருவிழா (5) முடிவுரை.
ஊரை அழகு செய்வது கோயில். 'திருக்கோயில் இல்லாத திருவிலூரும்’ என்ற பெரியார் வாக்கும், 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழியும் இதனை வலியுறுத்தும். கோயிலுக்குச் சிறப்பைத் தருவது திருவிழா. எல்லாக் கோயில்களிலும் ஆண்டுக்கொருமுறை திருவிழா நடைபெறுகின்றது. அத்திருவிழாவில் பெருவிழாவாக விளங்குவது தேர்த் திருவிழாவாகும். தேர்த்திருவிழா எல்லாக் கோயில்களிலும் இறுதி விழாவிற்கு முதல் விழாவாக அல்லது அதற்கு இரண்டொரு விழா முந்தியதாக நடைபெறும்.
நம்நாட்டிலே மணமக்கள் ஊர்வலம் வருவதைப் பார்க்க ஆண்களும் பெண்களும் எத்துணை ஆவலோடு முந்துகிறார்கள் நாட்டின் தலைவர் அல்லது அரசர் பவனி வருவதைக் கண்டுகளிக்க விரும்பாதவர் இல்லையல்லவா? அரசர்க்கும் அரசரானவரும், எல்லா உயிர்களையும் படைத்துக் காப்பவரும் ஆன இறைவன் நாம் எல்லோரும் வாழ வீதி வலம் வருகிறாரென்றால் அக்காட்சியை அநுபவிக்க யார்தாம் விழையார்? ஏனைய திருவிழாக்களுக்குச் செல்லாதவரும் தேர்த்திருவிழாவிலன்று அதிகாலையில் எழுந்துவிடுவர்! அன்று காலையில் சிறுவர்களது உள்ளக் கிளர்ச்சி உச்சநிலையிலிருக்கும் பெரியரும் சிறியரும், ஏழைகளும் செல்வரும் நீராடி, தூய ஆடை உடுத்து, உள்ளும் புறமும் தெய்வமணம் கமழக் கோயிலுக்குப் புறப்படுவர். பால், பழம், இளநீர் முதலியனவற்றுள் ஒன்றேனுமின்றி ஒருவரும் செல்லார். இவை எல்லாம் இல்லாதவரும் உள்ளன்பொன்றாவது உடையராய் இருப்பர். இவ்வாறு பலரும் தெருவிலே திரண்டு திரண்டு செல்லுங்காட்சி பார்ப்போர் நெஞ்சிலும் பத்தியை உண்டாக்கும். பல சிற்றருவிகள் ஒரு பெரிய ஆற்றில் கலப்பதுபோலப் பல வழியிலும் சென்ற பக்தர்கள் ஒரு பெருந் தெருவிலே கூடுவர். வழியிலே காணும் ஆட்டக் காவடியும், பாட்டுக் காவடியும், திரண்ட சனங்களின் செலவைத் தடுத்து இன்பமூட்டும். செல்லும் வழியில், சிலர் பத்தி மேலிட்டவராய் அரகர வென்றும், 'அரோகரா’ என்றும் முழக்கும் அன்பொலி பத்தர் கூட்டத்தை ஆலயம் நோக்கி விரையச்

Page 81
156 5LSlip LDUL
செய்யும். கோயில் முழவொலியும், அங்குக் கூடியுள்ள சன சமுத்திரத்தின் பெருமுழக்கமும் அன்பர்களுக்குக் கோயில் அண்மையிலுள்ளது என்பதைக் குறிப்பாலுணர்த்தும். பல தெருக்களிலிருந்து வரும் சனக் கூட்டம் கோயிலில் நிறைந்துள்ள பெருந்திரளுடன் கூடுதல், பல ஆறுகள் சேர்ந்து சமுத்திரத்தில் ஒன்றிக் கலப்பதை நினைவூட்டும்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் வருபவர்களையெல்லாம் கைகாட்டி 'வருக, வருக’ என அழைப்பதுபோல, தேரின் மீது கட்டிய கொடிகள் அன்பரைக் காணுந்தோறும் நல்வரவு கூறாநிற்கும். வீதியின் இருமருங்கும் அமைந்த வியாபாரக் கொட்டில்கள் இளஞ் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். கோயிலுட் புகுவோர் கூட்டமும், மீள்வோர் ஈட்டமும், பொருள்கள் வாங்குவோர் ஒலியும் விற்போர் ஓசையும், பாடுவோர் இசையும், தமரைத் தேடுவோர் விசையும் எத்துணை எத்துணை இறைவன் எழுந்தருளுந் தேர்கள் அடிமுதல் முடிவரை அலங்கரிக்கப்பட்டுக் கம்பீரமாக நிற்குங் காட்சி என்னே! சற்றுத் திரும்பிக் கோயிலைப் பார்த்தால், வாயில்களில் குலையும் இலையும் மலிந்த வாழையும், கமுகின் ஒலையும், வனப்புடன் விளங்கும் தோரண வரிசையும், மாலைத் தொகுதியும் எங்கும் நிறைந்து கிடக்கும். கோயிலினுள்ளே சென்றவர்களில், இறைவனை வணங்குவோர் சிலர்; வலம் வருவோர் சிலர்; பாடுவோர் சிலர்; அன்பினால் ஆடுவோர் சிலர்; இவரன்றி ஊர்ச் செய்திகளைப் பேசுவோரும் சிலராவர்.
தேரிலன்று, சுவாமியைச் சிறந்த முறையில் அலங்கரித்து ஆராதனை செய்வார்கள். உரிய காலத்தில் சுவாமி தேருக்கு வரும். சுவாமி உள்வீதி வலம் வரும்போதும், தேரில் எழுந்தருளி வெளிவீதி வரும்போதும் சுவாமிக்குப் பின்னாகப் பாடிச் செல்வோரும், அங்கப் பிரதட்சிணம் செய்து வருவோரும் பலராவர். சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் ஆராதனை முடித்துத் தேரை இழுக்கத் தொடங்குவர். ஆண்களும் பெண்களும், பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி அன்பாகிய கயிற்றைப் பிடித்திழுக்க இறைவனும் அன்பர் வழிச் செல்வன். தேர் ஊர்ந்தூர்ந்து வரும்போது வீதியில் ஆங்காங்கு வழிபாடுகள் நடைபெறும். மலைபோல அசைந்து வரும் தேரை, இழுத்து மகிழ்வோர் சிலர்; பார்த்து மகிழ்வோர் சிலர். சுவாமியைத் தேரில் வைத்துச் செய்யும் வழிபாடுகளைப் போலவே அவரைத் தேரிலிருந்து இறக்கிச் செல்லும்போதும் ஆங்காங்கு விசேட பூசைகள் செய்யப்படும். அடியார்களின் அன்பு மலர்களை ஏற்றுக்கொண்டு இறைவன் கோயிலுட் புகுவன்.
தேர் இருப்பிடத்துக்கு வந்தது அன்பர் கூட்டம் வீட்டுக்கு மீளத் தலைப்படும். யாண்டும் ஒரு பரபரப்பு ஏற்படும். வீட்டுக்குப் போக விரைவார். விபூதி முதலியன பெறுதற்கு விழைவார், பல்வகைப்

கட்டுரை மரபு 157
பொருட்களையும் வாங்க ஓடுவார், கூடுவார் ஆகியோர் தம் தொகை மெல்லமெல்லக் குறைந்துபோகும். வீடு திரும்பும்பொழுது ஒவ் வொருவரும் ஏதாகிலும் கொண்டு செல்வர். ஆனால் கோயிலுக்குப் போகும் போதுள்ள உவகையும் உள்ளக் கிளர்ச்சியும் வீட்டுக்கு மீளும்போது காணப்படுவதில்லை. எல்லோரும் தேர்த்திருவிழாவில் தாம் தாம் கண்டகாட்சிகளை வியந்தும் நயந்தும் பேசி உடற்களைப்பையும் உள்ளச்சோர்வையும் நீக்குவர். உண்மையன்பர்களுக்கு இறைவனது தரிசனமும் தேர்க்காட்சியும் ஒவ்வொருநாளும் நினைவில் நின்று இன்பமூட்டும். பொருள்கள் வாங்கினோர் அப்பொருள்கள் மூலம் தேர்த் திருவிழாவை நினைவு கூர்வர். சிறுவர்கள் தாம் பெற்ற விளையாட்டுப் பொருள்கள் சிதைந்ததும் அடுத்த, தேர்த்திருவிழாவை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பர்.
மாலைக் காட்சி
செயற்கையிலுள்ள அழகை நயப்போரிலும் இயற்கையில் விளங்கும் எழிலைச் சுவைப்போர் மிகச் சிலராவர். இயற்கை நமது வாழ்க்கையோடு இயைந்திருப்பதனால் அதன் கவின் நமக்குப் புலனாவதில்லை. அதனைப் பிரித்துவைத்து, அதில் உள்ள அற்புதங்களைக் கூர்ந்து நோக்கும் ஆற்றல் புலவர்க்கே உண்டு. புலவர்கள் பாடும் காவியங்களிலும், கலைஞர்கள் தீட்டும் ஒவியங்களிலும் சாதாரண மக்கள் இயற்கையின் படப்பிடிப்பை ஒரளவு காண்கிறார்கள். மாலைக் காட்சியைச் செய்யுளிற் கேட்பதிலும் சித்திரத்திற் காண்பதிலும் ஒருவன் தானே நேரிற் பார்த்தநுபவித்தல் மிக்க இன்பந் தருவதாம்.
மாலைவேளை எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவது. ஆனால் துணையிழந்தோர்க்கு மாத்திரம் துன்பம் விளைவிப்பது. உழைத்தோர்க்கு ஓய்வு கொடுப்பது. உறங்கி ஒடுங்கி இருந்தவர்க்கு ஊக்கமளிப்பது. அவ்வேளையிற் காட்சிக்கின்னாத கதிரவனும் காட்சிக்கினியவனாகின்றான். ஒளிநிறைந்திருந்த வானம் இருளின் சாயலை அண்முகிறது. வெண்மை நிலவிய பூமியில் தண்மை மெல்லெனப் பரவுகிறது.
ஏரிகளும் குளங்களும் கதிரவன் மறைவால் முகம் வாடியன போல, அங்குள்ள தாமரைகள் குவிந்து தலைதாழ்ந்தன. மாற்றார் தாழ்வுகண்டு சிலர் மகிழ்வதுபோலக் குவியும் கமலங்களின் நிலைகண்டு குவளைகள் எல்லாம் கூட்டமாக விரிந்து சிறந்தன. வண்டுகள் பழைய மலர்களை விட்டு நீங்கிப் புதிய பூக்களை நாடின. உறுமீன் வருமளவும் ஒற்றைக்காலூன்றி நின்று தவங் கிடந்த நெடுங் கொக்குகள் தத்தம் கூடுநோக்கிக் கூடிப்பறந்தன. ஆற்றங்கரைகளிலும் மற்றும் நீர்த்துறைகளிலும் அந்தணர்கள் அந்திக்கால

Page 82
158 தமிழ் மரபு
வழிபாடுகளை ஆற்றினர்.
மாலை நேரத்திற் கடற்கரையில் உலாவச் செல்வோர் பலர். அவர் நாட்டிற் காணமுடியாத பல காட்சிகளைக் கடற்கரையிற் காணமுடியும். நாட்டில் இருப்பவர் அந்திவானத்தழகை நன்கு அநுபவிக்க மாட்டார்கள். விரிந்த கடலின் பரப்பிலே மாலை செய்யும் இந்திரசாலங்கள் பலப்பல. ஞாயிறு படுமுன் வானத்தின் தோற்றமும், கடலின் வண்ணமும் பார்ப்போர் கண்களை ஈர்த்து நிற்கும். மஞ்சள் வானம் செக்கர் வானமாக மாறும்போது அதிற்காணும் அழகு என்னே ஓடுகின்ற முகில்களும் அசைவற்ற மேகங்களும் செக்கர் நிறம் படிதலால் யானையைப் போலவும், தேரைப் போலவும், மலையைப் போலவும், மலைப்பாம்பைப் போலவும், ஒவ்வோர் உருவாய் மாறிமாறிக் காட்சியளிக்கும் கருநிறமாக முன்னே காட்சியளித்த கடல், மின்னொளி பரப்பும் பொன்னின் தகடு புனைந்த தரைபோலப் பொலியும். விண்மிசை வெண்ணிறமாக விளங்கிய ஆதவன் அடிவானை அணுக அணுகச் செஞ்ஞாயிறு என்னும் பேருக்கிசையத் திகழ்வான். பகல் முழுவதும் வானவீதியைக்கடந்த வருத்தம் நீங்கக் குளிப்பான்போல, அச்சூரியன் அலைகடற் பரப்பில் மெல்ல மெல்ல அமிழ்வான்.
பொழுது மறைதலும், இருள் கவிந்து மூடத் தலைப்படுகிறது. அரசன் இல்லாத நாட்டில், தலைவர் பலர் தலைதூக்குவது போலச் சூரியன் மறைந்த வானத்தில் சுடர்விட்டுக்கொண்டு பல விண்மீன்கள் தோன்றுகின்றன. அவற்றுக்கெல்லாம் தலைவன் தானே என்பான் போல, தண்கதிர்த் திங்கட் செல்வன் வெண்ணிலாப் பரப்புவான்.
இருள் பரவுதலறிந்து, சிறுவர் விளையாட்டிடத்தை விட்டு நீங்குவர், ஆநிரைகள் மேய்ந்தொழிந்து கன்றை நினைந்து வீடு திரும்பும், தொழிலாளிகள் உழைப்பு முடிந்த உவகையோடு தத்தம் மனைபுகுவர். மனைகள் எங்கும் சுடர் விளக்குகள் ஒளிரா நிற்கும். ஆலயமெல்லாம் மணியொலி ஆர்க்கும்; அரங்குகள் எங்கும் முழவொலி முழங்கும்; மாணவர் தங்கள் பாடம் போற்றுவர். மங்கையர் தத்தம் மனைக்கடன் முடிக்குவர்.
எல்லா உயிர்களுக்கும் இன்பம் அளித்த எழின்மாலை, காவியப் புலவர்களின் கற்பனையைத் தூண்டிவிடுகிறது. தத்துவ ஞானிகளின் சிந்தனையில் தன் அற்புதம் நிறைந்த தோற்ற மறைவுகளைக் காட்டி உவகை ஊட்டுகிறது. இத்தகைய இன்பமாலை இறுதியில் இரவுக்கிடங்கொடுத்து இயற்கையோடு இரண்டறக் கலந்து விடுகிறது.

கட்டுரை மரபு 159
நான் செய்த ஒரு மலைநாட்டுப் பிரயாணம்
"இலங்கைத் தீவின் அழகு எமது இதயத்தைக் கனிவித்தது. அழகும் வளமுமமைந்து, இந்துமாக்கடலின் கண் ஒரு முத்துப்போலவும், பசும் பொற்குன்று போலவும் ஒளிரும் உங்கள் நாட்டைச் சுற்றிப்பார்த்து நாம் அடைந்த மகிழ்ச்சி எம் உள்ளத்தைவிட்டு எஞ்ஞான்றும் நீங்காது' என்றும், இன்னும் பலவாறாகவும், இந்நாட்டைச் சுற்றிப்பார்த்த வேற்றுநாட்டவர் பலரும் கூறவும், தங்கள் நூல்களில் எழுதவும் பல முறைகளில் நாம் கேட்டும் படித்தும் உள்ளோம். பாற்கடலிலுள்ள மீன்கள் இனிய பாலைப் பருகாது வேறு உணவுகளைத் தேடுவதுபோல, நாமும் எங்கள் நாட்டின் அழகையும் வளத்தையும் கண்டு மகிழ்ந்து வாழ அறியாது சாதி சமயச் சழக்குகளில் மூழ்கிக் கிடக்கின்றோம். இந்தச் சிந்தனையின் பேறாக வானம் பார்க்கும் யாழ்ப்பாணத்தை விட்டு மழைவளங் கொழிக்கும் வளமார்ந்த மலைநாட்டுப் பக்கங்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்ய நான் விரும்பினேன்.
முன்னரே திட்டமிட்டபடி சென்ற பங்குனிமாத விடுமுறைக் காலத்தில் ஒரு நாள் நண்பர்கள் ஐவரும் நானுமாக யாழ்ப்பாணத்திற் புகைவண்டியேறினோம். பொல்காவலையில் இறங்கிப் பின் கண்டிக்குச் செல்லும் வண்டியிலேறினோம். வழி நெடுகிலும் அழகிய ஆறுகள், நீர்தேங்கி நிற்கும் குளங்கள், பசுமையான சோலைகள், வளம் மிக்க விளைநிலங்கள், தேயிலை, றப்பர்த் தோட்டங்கள் பலவற்றையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். குன்றுகளிலிருந்து அருவிகுதிக்கும் காட்சி உள்ளத்தைக் குதிகொள்ளச் செய்தது. அப்போது பகற் காலமானதினால் மலைப்பிரதேசங்களில் வண்டி செல்லும்போது வளைந்து வளைந்து சென்றதையும், அப்பகுதிகளிலுள்ள பள்ளத்தாக்குக்களில் பயன்படும் மரங்கள் செடிகள் பலவும் நிறைந்து பொலிந்து இயற்கையழகு பெற்று விளங்குவதையுங் கண்டேன். மக்கள் வாழும் குடிசைகளையும் மாளிகைகளையும் பார்த்தேன். தேயிலைத் தோட்டங்களில் மலைநாட்டுத் தமிழ்ப் பெண்கள் கொழுந்து கொய்வதையுங் கண்டேன். பலா, மா, வாழைகள் நிறைந்து அவற்றின்கீழ்க் க்னிகள் உதிர்ந்து கிடந்த காட்சி என்னுள்ளத்திற் சிந்தனையைக் கிளறியது.
"காய்மாண்ட தெங்கின் பழம்விழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே'
என்று திருத்தக்கதேவர் பாடியது புனைந்துரையாகாது. மெய்யுரையே யாமென்றும் அஃது எங்கள் நாட்டுக்கும் பொருந்துமென்றும் தெளிந்தேன்.

Page 83
160 தமிழ் மரபு
கண்டியிலிருந்து அட்டனுக்கும் அங்கிருந்து மஸ்கெலியாவுக்கும் போனோம். இடையே மலைகளை ஊடறுத்து வகுத்த பாதையில் புகைவண்டி சென்றபோது வியப்புத் தருவதாய் இருந்தது. மஸ்கெலியா என்ற இடத்தை நாம் அடைந்தபோது இரவு எட்டுமணியாயிற்று. பால்போல நிலவு பொழியும் அந்த வேளையிலே சிவனொளிபாத மலையை நோக்கி நாம் நடந்தோம். எங்களுக்கு முன்னாகக் கூட்டம் கூட்டமாகச் சிங்களச் சகோதரர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். வழியினிருமருங்கும் அடர்ந்த காடு சூழ்ந்து, ஊடே சீதளகங்கை என்னும் பேராறும் வேறு சிற்றாறுகளும் அருவிகளும் ஒடிக்கொண்டிருந்தன. யானைகளின் பிளிற்றொலியும் ஏனைய காட்டு மிருகங்களின் ஒலியுந் தொலைவிலிருந்து வந்து அச்சத்தை உண்டாக்கினவேனும் மக்கள் திரண்டு பரந்து சென்றபடியால் நாம் கலக்கமின்றி மகிழ்ச்சியோடு நடந்து சென்றோம். மலையடிவாரத்தில் சில மைல்தூரம் சமதரையில் நடந்து சென்ற நாம், சாய்வான பகுதியில் படிக்கட்டுக்களின் வழியாக மேலே எட்டி ஏறி நடந்தோம். செங்குத்தான மலைப்பகுதியை அடைவதற்கு வளைந்து வளைந்து செல்லும் பாதை வழியே நடந்தோம். சில இடங்களில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஏறினோம். தங்கள் நேர்த்திக் கடன்களைப் பூர்த்தி செய்வதற்கும் புத்தரின் பாத பங்கயங்களை வழிபடுவதற்குமாகச் சிங்கள மக்கள் நோயாளிகளைத் தாங்கிச் செல்வோரும் ஆவேசங்கொண்டு போவோருமாகிச் "சாது சாது சாது' என்று கோஷம் செய்து கொண்டு ஏறினார்கள். மக்கள் வழிநடை வருத்தம் நீங்கி ஆறிச் செல்வதற்கு இடையிடையே மடங்கள், சிற்றுண்டிச் சாலைகள் இருந்தன. மலையுச்சியை நாம் அடைவதற்குச் சிறிது தூரத்துக்கு இப்பால் மக்கள் தங்கள் செருப்பு, சப்பாத்து முதலான காலுறைகளைக் கழற்றிவிட்டு மேலே சென்றார்கள். மலையுச்சியில் முடிபோல ஒரு கோபுரம் வகுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோபுரம் மிகவும் சிறியது. ஏறக்குறைய நூற்றைம்பது பேரைக் கொள்ளக்கூடியது. இரண்டு திருவடிச் சுவடுகள் அங்கேயுள்ளன. அவற்றைச் சைவமக்கள் சிவபெருமானுடையவை யென்றும், கிறீஸ்தவர்களும் முஸ்லீம்களும் "ஆதாம்’ என்ற ஆதிபிதாவின் பாதங்கள் என்றும், புத்தர்கள் புத்தபெருமானுடையவை யென்றும் நம்பிப் போற்றி வழிபடுகின்றார்கள். எல்லாச் சமயிகளாலும் ஒத்து வழிபடப் பெறும் இடம் இதுவாகும்.
இந்த இடத்தை அடைந்தவுடனே மக்கள் பக்தி பரவசராகிச் 'சாது சாது’ என்று ஆரவாரம் செய்து பாடினார்கள்; ஆடினார்கள். நாங்களும்'அரோகரா’ சொல்லி வழிபட்டோம். என்னையறியாமலே எனக்கு அப்போது ஒரு மனத் தெளிவும் பத்தியுறுதியும் ஏற்பட்டன. அழகிய விதானத்தின் கீழமைந்த பாதபங்கயங்களின் மேல் வெண்துகில் பரப்பிப் புத்தசமயத்தவர் தமது காணிக்கைப் பொருள்களை வைத்து மெழுகுவர்த்தி

கட்டுரை மரபு 161
கொளுத்திச் செபஞ்செய்து வழிபட்டார்கள். நாங்களும் கர்ப்பூரம் கொளுத்திச் சிவபுராணம் பாடினோம்.
அவ்விடத்தில் குளிர் கடுமையாகத் தாக்கியது. சிறிது நேரத்தால், கீழ்த்திசையில் ஓர் ஒளி தோன்றியது. ஏழுநிறக்கதிர்களும் எங்கும் பரவத் தொடங்கின. பணிபடிந்த குன்றின் பலவிடங்களிலும் பரந்த கதிர்கள் பொன்னும் வெள்ளியும் உருக்கி வார்த்ததைப்போல் மலையை அழகு செய்தன. சூரியன் கிளம்பிக்குதித்து அசைந்து எழுந்தது போன்ற காட்சியை நாம் கண்ணாரக் கண்டோம். இயற்கைத் தேவதை அளிக்கும் இன்பக் காட்சிகளுள் இது மிகவும் சிறந்த தொன்றாகும். ஒரு புலவனாக இருந்தால் நான் இப்போது கண்ட காட்சியைப் புனைந்து எத்தனையோ கவிதைகளைப் பாடி யான்பெற்ற இன்பத்தைப் பிறரும் நுகரும் பெற்றியைச் செய்திருப்பேன்.
பின் சிறிது நேரத்தால் நாம் மலையுச்சியினின்றும் கீழிறங்கினோம். இரவு வேளையில் மாலை நேரம் ஏறியபோது தெரிந்ததிலும் பார்க்கப் பகலில் இறங்கியபோது யாவும் தெளிவாகத் தெரிந்தன. மலையடி வாரத்தை யடைந்து காலையுணவருந்தியபின் மோட்டார் வண்டியிலேறி அட்டனுக்குப் போய், பின்னர் பல்வேறு இடங்களையும் கண்டு மகிழ்ந்து சில தினங்களால் நண்பர்களும் நானும் வீடு வந்து சேர்ந்தோம்.
இந்தச் சுற்றுப்பிரயாணத்தினால் நானடைந்த நலன்கள் பல. எனது உள்ளத்தில் அமைதி சிறிதுண்டானது. பல மக்களையுங் கண்டு பழகியறியும் வாய்ப்பு ஏற்பட்டது. இலங்கை வளத்தையும் மலைச் சுகத்தையும் பிறர்க்கு உரைத்து மகி ஏழவும் முடிந்தது.
பயிற்சி
பின்வரும் சட்டகங்களைக் கொண்டு கட்டுரை அமைக்குக.
1. மழை நாள்
தோற்றுவாய்:- 2. மழைக் குறிகள்:- (அ) கருமுகில்களின் வரவு (ஆ) வானம்பாடிகள் பறத்தல் (இ) மேகங்கள் மின்னி முழங்குதல் (ஈ) வழிப்போக்கர் விரைவு (உ) மனையிருப்போர் வெளியில் உலரவைத்த பொருள்களை உள்ளே வைத்தல் (ஊ) எறும்புகள் முட்டைகொண்டு திடரேறுதல்.

Page 84
162
தமிழ் மரபு
மழை பொழிதல்:- (அ) சிறிது தூற்றல் பெருமழையாதல் (ஆ) மழைத் தாரையின் தோற்றம் (இ) சிறியவும் பெரியவுமாய குமிழிகள் பல தோன்றி மறைதல் (ஈ) வெள்ளம் பரந்து ஓடுதல் (உ) தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடும் வெள்ளம் சிற்றாறுகள் போலக் காணுதல். மழை ஒழிதல்:- (அ) மக்கள் வெளி வரல் (ஆ) வெள்ளத்திற் சிறுவர் விளையாடல் (இ) உழவர் வயலைநோக்கி ஏகல் (ஈ) வெள்ளம் வற்றிய தரையில் தம்பலப் பூச்சிகள் உலாவுதல் (உ) புல்பூண்டுகள் மரஞ்செடிகள் ஆகியவற்றின் பசுமையான தோற்றம். முடிவுரை:- (அ) மழையின் நன்மையும் தீமையும் (ஆ) மழைக்கால இன்ப அநுபவங்கள்.
2. புகைவண்டிப் பிரயாணம்
தோற்றுவாய்:- (அ) பிரயாணங்களின் அவசியம் (ஆ) அவற்றின் வகையும் புகைவண்டிப் பிரயாணமும்.
புகைவண்டி நிலையக்காட்சி:- (அ) புகைவண்டி நிலைய அமைப்பு (ஆ) அங்குள்ள பலவித அலுவல்கள் (இ) மக்கள் பலர் கூடியிருத்தல் (ஈ) மகிழ்வோர், கவல்வோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், சிறுவர், பெரியோர் ஆகிய பல்வேறு திறத்தாரது காட்சி (உ) புகை வண்டி வருதலும், அப்பொழுது காணும் காட்சியும். புகைவண்டியிற் செலவு:- (அ) புறப்படும் காட்சி (ஆ) வழியிற் காணும் காட்சி : 1. மனையிடங்கள், பாழிடங்கள், 2. மேடு பள்ளம், 3. பாலைவனம் சோலைவனம், 4. நாகரிகமான இடங்கள் அநாகரிகமான இடங்கள் (இ) பிரயாணிகளின் புதுநட்பும் பொழுதுபோக்கும் (ஈ) பிரயாணிகளிற் பிரிவோரும் இடையிற் சேர்வோரும் (உ) ஒருவர் மற்றொருவரிடத்துக் காணும் சில சிறந்த பண்புகள். பிரயாண முடிவு:- (அ) புகைவண்டி முடிவு நிலையத்தை அடைதல் (ஆ) பிரயாணிகள் இறங்குதல் (இ) பல்வேறு சாதனங்கள் மூலம் தத்தம் இடம் செல்லல். முடிவுரை:- (அ) பிரயாணத்தில் ஏற்பட்ட புதிய அநுபவங்கள் (ஆ) அறிவின் வளர்ச்சி.
3. தீவிபத்து
தோற்றுவாய்:- (அ) தீ மக்களுக்கின்றியமையாததொன்று (ஆ) நல்ல பண்பும் தீய பண்பும் அமைந்தது (இ) மக்களைவிட ஆற்றல் மிக்கது.

கட்டுரை மரபு 163
ஒரு நிகழ்ச்சி:- (அ) திடீரென ஓரிடத்திலிருந்து பெருங்குரல் கேட்டல் (ஆ) தத்தம் தொழிலை விட்டுவிட்டுப் பலரும் அத்திசை நோக்கி ஏகல் (இ) முன்னே பெரும் புகையும், அணுக அணுகப் பெரும் நெருப்பும் புலப்படுதல் (ஈ) பெருநெருப்பை அணைக்கப் பலரும் முற்படுதல் (உ) சிலர்தம் வீரச் செயல்கள் (ஊ) நெருப்பின் வாயிலிருந்து பொருள்களை மீட்டல் (எ) நெருப்பை அணைத்தல். மக்கள் பிரிவு:- (அ) எரிந்த மனையின் தோற்றம் (ஆ) மனைக்குரியாரின் கையறுநிலை (இ) மீளும் மக்களின் மனநிலை (ஈ) வாழ்வின் வீழ்ச்சியும் பரிவுணர்ச்சியும்.
முடிவுரை,
4. தைப்பொங்கல்
தோற்றுவாய்:- )قیe( கொண்டாட்டங்கள் வாழ்க்கையின் அங்கமாயுள்ளனவென்பது (ஆ) தைப்பொங்கல் தமிழ் மக்களுடைய தொன்று தொட்ட சிறந்த கொண்டாட்டம் என்பது. தைப்பொங்கல் வரலாறு:- (அ) சூரியன் வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் காலம் (ஆ) மழையும் குளிரும் நீங்கும் காலம் (இ) உழவர்கள் விளைவின் பயனை அடையும் காலம் (ஈ) விளைவிற்கு மழைதந்த வெய்யோனை வழிபாடு செய்யும் காலம் (உ) எல்லா உயிர்களும் உணவுச் செல்வம் குறைவின்றிப் பெறும் காலம் (ஊ) தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது. பொங்கல் நிகழ்ச்சி:- (அ) காலையில் மக்கள் அனைவரும் தாமும் தூயராய் மனையிடத்தையும் தூயதாக்கல் (ஆ) அலங்கரித்த முற்றத்தில் பொங்குதல் (இ) பொங்கலோ பொங்கலென்று ஒலித்தல் (ஈ) சிறுவர்கள் வெடி சுடுதல் (உ) பொங்கிய சாதத்தைச் சூரியனுக்குப் படைத்தல் (ஊ) கோயில் செல்லுதல் (எ) மனைபுக்கு உற்றாருடன் உணவருந்தி மகிழ்தல். மாட்டுப்பொங்கல்:- (அ) அடுத்தநாளன்று மாட்டை நீராட்டிக் குங்குமமிடுதல் (ஆ) மாடு கட்டும் இடத்தைத் தூயதாக்கிப் பொங்குதல் (இ) மாட்டின் கழுத்தில் மாலையிட்டு, தெய்வமாகப் போற்றுதல் (ஈ) காளை மாடுகளை வண்டிற் பூட்டி வீதியிற் சவாரி செய்தல்.
முடிவுரை:- மக்களனைவரதும் இன்ப அநுபவங்கள்
5. விமானப் பிரயாணம்
தோற்றுவாய்:- (அ) விஞ்ஞானத்தால் ஏற்பட்ட நன்மைகள் (ஆ) பிரயாண சாதனங்களிலேற்பட்ட வளர்ச்சியும் வான ஊர்தியும்

Page 85
164
தமிழ் மரபு
விமான நிலையம்:- (அ) நிலைய அமைப்பு (ஆ) அங்கு நிகழும் அலுவல்கள் (இ) விமானப் புறத் தோற்றம்.
விமானச் செலவு- (அ) பிரயாணிகள் விமானத்திற்குச் செல்லல் (ஆ) விமானத்தின் உட்தோற்றம் (இருக்கைகள் முந்நிரையாகக் கிடத்தல், விமானத்தின் முன்பக்கத்தில் வலவர்கள் இருத்தல், பிற்பக்கத்தில் விமானத் தாதி இருத்தல், குளிர்காற்று வரத்தக்க புழைகள் மேற்பக்கத்தில் அமைந்திருத்தல் முதலியன) (இ) விமான இயக்கம் (ஈ) படிப்படியாக மேலெழுதல் (உ) மிக உயரப்பறக்கும்போது கீழே காணும் காட்சிகள் (பெரு மரங்கள் சிறு செடிகளாகவும் மாளிகைகளும் உயர்ந்த ஒட்டு வீடுகளும் சிறு விளையாட்டுப் பொருள்களாகவும், ஆறுகள் வாய்க்கால் போலவும், கடல் நீலத் தரை போலவும், முகில்கள் பூமியின்மேற் பரப்பிய பஞ்சின்தொகுதிபோலவும் காணப்படுதல்) (ஊ) பிரயாணங்களிற் பலதரத்தினரதும் உணர்ச்சிகள்.
பயணமுடிவு:- (அ) விமானம் படிப்படியாகக் கீழிறங்குதல் (ஆ) பிரயாணிகள் விமான நிலையும் சேரல் (இ) வீடு திரும்புதல்.
(playGidy.
6. தேர்தற் காட்சி
தோற்றுவாய்:- (அ) தேர்தல் என்பதன் விளக்கம் (ஆ) தேர்தல் வகைகள்.
தேர்தல் முன் நிகழ்ச்சிகள்:- (அ) அபேட்சகர்களும் பிரசாரமும் (ஆ) பொதுமக்கள் ஊக்கம் (இ) தேர்தல் நடக்கும் ஊரின் அல்லது நகரத்தின் தோற்றம்.
தேர்தல் நிகழ்ச்சி:- (அ) தேர்தல்நாட் புலரிக்காலம் (ஆ) தேர்தல்நாள் இட அமைப்புத் தோற்றம் (இ) தேர்தலுக்காகச் செல்லும் மக்களினதும் வாகனங்களினதும் ஆரவாரம் (ஈ) கொடிகளினதும் துண்டுப் பிரசுரங்களினதும் தொகுதி (உ) அபேட்சகர்களின் கொட்டில்களில் ஏற்படும் பரபரப்பு (ஊ) வாக்காளர் அணி அணியாகச் செல்லுதல் (எ) வாக்கெடுப்பு முடிவு (ஏ) தெரிவு செய்யப்பட்டவரை மக்கள் பாராட்டுதல்.
முடிவுரை:- (அ) தேர்தல் முடிந்த பின் ஊரில் அமைதி (ஆ) பொதுமக்களிடை ஏற்படும் பலவித உணர்ச்சிகள் (இ) தேர்தல் முறையால் ஏற்பட்ட நன்மைகள்.
7. கடற்காட்சி
தோற்றுவாய்:- )بيك( கடற்கரை சுகத்திற்கேற்றதென்பது (ஆ)

கட்டுரை மரபு 165
கடற்கரையில் பல்வேறு காட்சி இன்பங்கள் உண்டு என்பது.
கடற்கரை- (அ) மணலின் வரி அழகு (ஆ) அதில் காணும் பல்வேறு கடல்படு பொருள்களும் நண்டு முதலான சிற்றுயிர்களும் (இ) தாவரங்கள் (புன்னை, தாழை, நெய்தல் முதலியன) (ஈ) அலைமோதும் காட்சி (உ) கடலில் நீராடுவோர் தோற்றம் (ஊ) கரையில் உலாவுவோர் காட்சி (எ) சிறுவர் களிப்பு.
கடற்காட்சி:- (அ) அலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் வருதல் (ஆ) தோணிகளினதும் கப்பல்களினதும் தோற்றம் (இ) கடலில் உல்லாசப்படகோட்டுவோரதும் மீன் பிடிப்போரதும் காட்சி.
சந்திர சூரியர் தோற்றம்:- (அ) உதய அத்தமனக்காட்சிகள் (ஆ) அப்பொழுது கடல்நிறத் தோற்றம் (இ) வானத்தின் வனப்பு
முடிவுரை:- இயற்கையளித்த இன்பம்.
8. பொருட்காட்சி
தோற்றுவாய்:- பொருட்காட்சி வைத்தலின் நோக்கம் (கலையை வளர்த்தல், பொருள் திரட்டல், பொழுது போக்கு).
பொருட்காட்சியமைப்பு:- (அ) பல இடங்களிலும் செய்யப்பட்ட நுண்கலைப் பொருள்களைக் காட்சிக்கு வைத்தல் (ஆ) வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு இடமாயிருத்தல் (இ) இன்பப் பொழுதுபோக்குக்குரிய சாதனங்கள் அமைத்தல் (ஈ) கண்கவர் பொருள்களை வைத்தல் (உ) அதிர்ஷ்டப் பொருள் வருவாய்களை ஏற்படுத்தல். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி:- (அ) பொருட்காட்சிக்குப் புறப்படுதல் (ஆ) பொருட்காட்சி மைதானத்தில் வெளித்தோற்றம் (இ) உள்ளே ஒளிரும் பல வர்ண விளக்குகளின் தொகுதியும் காட்சிப் பொருள்களும் (ஈ) செல்வோர் கூட்டமும் மீளுவோர் ஈட்டமும் (உ) கண்ணையும் கருத்தையும் கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள்.
முடிவுரை:- (அ) சிறிது நேரத்திற்குள் அடைந்த பேரின்பம் (ஆ) தொழிலாளரது மதிவன்மையும், கைவன்மையும் பற்றிய பெருமித நினைவுகள்.
9. அரிவு வெட்டு
தோற்றுவாய்:- (அ) உழவன் விளைவுப் பயன் கொள்ளும் மகிழ்ச்சி (ஆ) பணியாளர் கருவியொடு வயல் புகுதல்.

Page 86
166
தமிழ் மரபு
அரிவு வெட்டல்:- (அ) வயற்காட்சி (நெற்கதிர்கள் முற்றித்தலை வணங்கி நிற்றல், பதர்கள் நிமிர்ந்து நிற்றல், தெய்வம் வாழ்த்திப் பணியாளர் அரிவு வெட்டத் தொடங்கல்) (ஆ) அவர்கள் அணியாக இருந்து நெல்லரியும் காட்சி (இ) அரிவோர் பாட்டொலி (ஈ) வயற்கிழவர் வயலோரத்தில் குடைநிழற்கீழ் நிற்கும் காட்சி (உ) அரிவோர் விரைந்து விரைந்து அரிந்த நெல்லை அடுக்கி வைத்தல். நெல்லடித்தல்:- அடுக்கிய நெல்லைப் பெண்கள் கொணர்ந்து கொடுக்க ஆட்கள் அடித்தல் (ஆ) அடித்த நெற்றாளைப் போராய்க் குவித்தல் (இ) விழுந்த மணிகளைக் காற்றிலே தூற்றல் (ஈ) தெய்வம் வாழ்த்தி நெல்லை அளந்து கட்டுதல் (உ) பணியாளர் மகிழக் கூலிபெறுதல். மீளல்:- (அ) அளந்து கட்டிய நென்மூட்டைகளை வண்டியில் ஏற்றல் (ஆ) உழவன் தன் விளைவை வீடு சேர்த்தல் (இ) உழவன் மனைவியும் மக்களும் மகிழ்தல்.
10. பிரதமர் வருகை
தோற்றுவார் - (அ) வரவேற்பின் பொது அமைதிகள் (ஆ) பெரியோர்களை வரவேற்பதில் பொதுமக்களுக்குள்ள உற்சாகம். வரவேற்பு ஒழுங்குகள்:- (அ) பிரதமர் வருகையின் அறிவிப்பு (ஆ) மாகாணத் தலைவர் முதல் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் வரை உள்ள எல்லாத் தலைவர்களும் பிரதமர் வருகையில் ஆர்வம் காட்டல் (இ) தொழிலாளர்களும் கடை முதலாளிகளும் ஊக்கம் காட்டல் (ஈ) நகர் அணி செய்தல், தெருவை அலங்கரித்தல். பிரதமர் வருகை:- (அ) புகைவண்டி நிலையத்தில் அல்லது விமான நிலையத்தில் அவரை மாலையிட்டு வரவேற்றல் (ஆ) ஊர்வலமாக அழைத்து வருதல் (இ) பெருமண்டபத்தில் கூடி வாழ்த்துரை வழங்கல் (ஈ) நாட்டின் பலபாகங்களிலும் அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்புச் செய்தல் (உ) நடனமும் இசை விருந்தும் நடாத்துதல் (ஊ) புதிய கட்டடங்கள் திறப்பித்தல் (எ) வாழ்த்துரை கூறி வழியனுப்புதல். முடிவுரை:- (அ) பொதுமக்களின் நாட்டுப் பற்று (ஆ) தலைவரிடத்துக் காட்டிய அன்பு (இ) ஒற்றுமை.
பயிற்சி பின்வருவனவற்றைப் பற்றி வருணைனைக் கட்டுரை வரைக.
l. நிலாக்காட்சி 2. விளையாட்டுப் போட்டி 3. திருமணக்காட்சி 4. கடற் பிரயாணம்
5. சூரியோதயம் 6. தீபாவளி

கட்டுரை மரபு 167
7. மலைக்காட்சி 8. ւյաeծ 9. நீர்பார்த்ததிரைப்படம் 10. குத்துச்சண்டை 11. துறைமுகக்காட்சி 12. நீர்பார்த்ததிருவிழா 13. நீர்பார்த்த நாடகம் 14. படகோட்டல் 15. நீர்வீழ்ச்சி 16. தேசத்தலைவரின்
அந்திமயாத்திரை 17. புதுக்குடிபுகுதல் 18. உதைபந்தாட்டம் 19. மாட்டுச்சவாரி 20. நீர் செய்த சுற்றுப் பிரயாணம்
3. விளக்கக் கட்டுரை
ஒரு பொருளைப் பல்லாற்றானும் விளக்கிக் கூறுதல் விளக்கக் கட்டுரை எனப்படும். கண்ணாடி தன் எதிரிலுள்ள பொருளை நன்கு விளக்கிக் காட்டல்போல, கட்டுரையும் எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவுபெற விளக்கல் வேண்டும். பொருளின் பல்வேறு அம்சங்களும் கட்டுரையில் இடம்பெற்று நன்கு விவரிக்கப்படல் வேண்டும்.
இக்கட்டுரைப் பகுதியில், கலைபயில் கழகங்களும் ஸ்தாபனங்களும், தொழின்முறைகளும் அறிவியற் பொருள்களும், இலக்கிய விஷயங்களும் எடுத்து விளக்கப்படலாம்.
நூல் நிலையம்
மக்களுக்கு உணவு இன்றியமையாதது போலக் கல்வியும் இன்றியமையாததே. உணவு உடலை வளர்ப்பது. கல்வி அறிவை வளர்ப்பது. உணவுக்குரிய பொருள்கள் குறைவில்லாதிருக்க நமது அரசாங்கம் பல முயற்சிகள் செய்கின்றது. நாகரிகம் மிக்க நாடுகளில் உணவு விருத்தி செய்வது போல, கல்வி வளர்ச்சி பேணுதலிலும் பல முயற்சிகள் நடத்தப்படுகின்றன. ஊருக்கொரு பள்ளிக்கூடம் நிறுவுகிறார்கள். ஆங்காங்கு நூல் நிலையங்களையும் அமைக்கிறார்கள். பள்ளிப் படிப்புக்கு அங்கமாகப் பல நூற்படிப்புப் பயன்படுகிறது. பள்ளிப் படிப்பிற் குறிப்பிட்ட சில நூல்களே இடம்பெறுகின்றன. அவற்றை மாத்திரம் கற்று ஒரு மாணவன் வல்லவன் ஆகமாட்டான். பாடநூல்களோடு அவற்றுக்குத் துணையான பிறநூல்களையும் கற்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பரந்த அறிவு உண்டாகவேண்டும். பரந்த அறிவைத் தருவது நூல்நிலையப் படிப்பே.
நம் நாட்டில், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலுமே நூல் நிலையங்களைக் காண்கிறோம். அந்நிலையங்கள் கல்வித்துறை

Page 87
168 தமிழ் மரபு
அதிகாரிகளின் திட்டத்திற்கியைய அமைந்தனவாகும். மாணவர்கள் பல பிறநூல்களையும் கற்க வாய்ப்பளிப்பதற்காக அவை ஏற்படுத்தப்பட்டன. அந்த நோக்கத்தை மாணவர் பலர் அறிவதில்லை. தக்க முறையில் நூல் நிலையத்தைப் பயன்படுத்துவதுமில்லை. பாடப் பகுதிகளை மாத்திரம் படித்தால் அதுவே போதுமானது என அமைகின்றனர். அதனால் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறும் காலத்தில் தேர்வுக்குப் படித்தவை தவிர ஏனையவற்றில் சிறிதும் தெரியாதவராய் வாழ்க்கையைத் தொடருகின்றனர். நூலளவேயாகுமாம் நுண்ணறிவு என்பதையறியாது தேர்வில் வெற்றி பெறுதலையே கல்வியின் முழு நோக்கமாகக் கொண்ட மாணவர் பட்டங்கள் பல பெற்றாராயினும் கல்வியின் பயனை அடையாதவரேயாவர்.
சிலர் பள்ளிப்படிப்போடு கல்வி முடிகிறதென எண்ணுகின்றனர். 'கல்வி கரையில; கற்பவர் நாள் சில” என்பது பெரியோர் வாக்கு. அறிவினால் மற்றைய உயிர்களை விட மேலானவனாகக் கருதப்படும் மனிதன், என்றும் தன்னறிவை வளர்க்கும் வாய்ப்புடையவனாய் இருக்கிறான். 'கல்லார் கழிப்பர் தலையாயர்’ என்ற நாலடியார் கூற்றிற்கியைய நம்முன்னோர்கள் சாந்துணையும் கல்வியை வளர்த்தார்கள். இன்றும் மேனாட்டவர் பலர் கல்வியிலேயே காலத்தைக் கழிக்கிறார்களே! மேனாடுகளில் ஊருக்கு ஊர் நகருக்கு நகர் நூல்நிலைய. ளை நிறுவி அவற்றால் எத்தனையோ பேர் பயனடைகின்றார்கள். வாழ்க்கையில் ஈடுபட்டோர் பலர், வாய்ப்பு நேர்ந்தபோதெல்லாம் நூல்நிலையம் செல்கின்றனர். பகல் முழுவதும் தொழில் செய்து களைத்தோரும் இரவிற் பல நூல்களையும் படித்துத் தம் வாழ்வை உயர்த்துகின்றனர். நம் நாட்டிற் காண்பதென்ன? சில ஊர்களில் மாத்திரம் நூல் நிலையங்கள் உள்ளன. அவைதாமும் பெயரளவிலேயே உள்ளன. சில பத்திரிகைகளும் சில நூல்களும் அங்கே காணப்படும். அந்நிலையங்களை வாசகசாலைகள் என அழைத்தலே பொருந்தும். அங்கே படித்துப் பயன்பெறுவோர் சிலர்; பேசிப் பொழுது போக்குவோர் பலர். நூல்களைத் திரட்டவோ பாதுகாக்கவோ, அவற்றைப் பயன்படுத்தவோ யாரும் அறியார். பிறநாட்டார் - சிறப்பாக மேனாட்டார் நூல்நிலையங்களின் பயனை நன்கு அறிந்தவர். நூல்நிலையங்களைப் பயன்படுத்துவோர் பலராதலாலும் அவரும் பல திறத்தராதலாலும், அவ்வெல்லோருக்கும் ஏற்ற பல புது வழிகளால் நூல்நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். சில ஊர்களில் வீடுவீடாகச் சென்று நூல்களைக் கொடுத்து வாங்குகின்றனர். மக்களுக்குத் தேவையான நூல்களைக் கொடுத்து வாங்குகின்றனர். மக்களுக்குத் தேவையான நூல்களை வண்டிகளில் ஏற்றி இருநாளுக்கொருமுறையாக அல்லது வாரத்துக்கு ஒரு முறையாக ஊர் சுற்றுவர். இவ்வித 'ஊரும் நூல்நிலையங்களால் முதியோரும் உடல் தளர்ந்தோரும் பெரிதும் பயன் அடைவர்.

கட்டுரை மரபு 169
நடுத்தர வகுப்பினர்க்கும் கீழ்த்தர வகுப்பினர்க்கும் பொது நிலையங்கள் இன்றியமையாதனவே. பெருஞ் செல்வர்கள் தம்வீட்டிலேயே நூல்நிலையம் அமைத்துக் கொள்ளமுடியும். உணவறை படுக்கையறை முதலியன எல்லார் மனையிலும் இருத்தல்போலக் கற்ற செல்வர் மனைகளில் நூல்நிலையமும் தனியிடம் பெற்றிருக்கும். அஃது அவர் பின்னோர்களுக்கெல்லாம் பெருமையையும், கல்வியில் நாட்டத்தையும், ஊட்டா நிற்கும். எல்லோர் இல்லிலும் நூல் நிலையும் இருப்பது நல்லதாகும். சிறிய அளவிலாயினும் இருப்பின், அஃது இல்லிருப்போரது அவப்பொழுதைத் தவப்பொழுதாக்கும். அரசிப் பொரியோடு திருவாரூரும் என்றபடி பொழுது போவதோடு அறிவும் பெருகும். அறிவு நிறைந்த பெற்றோர்கள் தம் சிறுவரும் நுண்மதி உடையராய் இருக்கக் காண்பர்.
கால்கள் நான்கும் நேராக அமைந்தாற்றான் நாற்காலி நேராக நிற்கும். கல்விக்குத் துணையான நூல்நிலையங்களும் யாண்டும் செவ்விதின் அமைந்து உயர்ந்தாற்றான் மக்களினம் மாட்சிமிக்கதாரும். கல்லூரிகளிலும், நகரங்களிலும், ஊர்களிலும், ஒவ்வோர் இல்லத்திலும் நூல்நிலையம் விளங்கவேண்டும். இவ்வித விளக்கம் உள்ள நாடுதான் அறிவிலும் பண்பாட்டிலும் மேம்பட்டநாடு என்று அழைக்கப்படும்.
நெசவுத் தொழில்
'ஆடையற்றவன் அரை மனிதன்' என்பது ஒரு பழமொழி. மனிதனை முழு மனிதனாக்குவது ஆடையே அஃது அவனது மானத்தைக் காத்து மதிப்பைக் கொடுப்பதோடு சுகவாழ்வையும் உதவுகிறது. மானத்தைக் காக்கத் தோன்றிய ஆடை நாளாக நாளாக மனிதனின் தகுதியை அளப்பதற்குரிய கருவியாகவும் சில இடங்களில் மாறிவிட்டது. ஒருவன் அணியும் ஆடையைக்கொண்டு அவன் செல்வன் என்றும் வறியவன் என்றும், பெருமித எண்ணம் உடையவன் என்றும், எளிய வாழ்வு வாழ்பவன் என்றும், தூயன் என்றும், தீயன் என்றும் ஒருவாறு அறிய முடியும். முன்னே பொன்னில் மக்கள் வைத்த பற்று இப்பொழுது புதிய உடைகளில் ஊன்றிவிட்டது. உடையின் அமைப்பைக் கொண்டு ஒருவரது தொழிலையும் நாகரிகத்தையும் ஊகித்தறிகிறார்கள். இத்துணைப் பெருமையுடைய பொருளைத் தரும் தொழில் யாது? அத்தொழில் மக்களினத்துக்கு எத்துணை இன்றியமையாததாக அமைகிறது.
உலகத்திலுள்ள இன்றைய முற்போக்கான நாடுகளிலுள்ள மக்கள் மரவுரிதரித்த காலத்தில் - மிகப் பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் நெசவுத் தொழிலைச் செய்யத் திறன் பெற்றுவிட்டார்கள். வாழ்க்கையின்

Page 88
170 தமிழ் மரபு
துணைக்கருவியாக மாத்திரமன்றி, அத்தொழில் சிறந்த கலையாகவும் போற்றப்பட்டு வந்தது. "பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் பலதிறத்த ஆடைகளை நெய்தனர் நம் தமிழ் மக்கள். பாலாவியன்ன மிக நுண்ணிய தூசு பல செய்தனர் நம் முன்னோர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டுக்கு வந்துபோன பிறநாட்டு யாத்திரிகர்கள் பலர் நம் முன்னோரின் நெய்தற்றிறனை வியந்து பாராட்டியுள்ளார்கள். பாரத நாட்டு மக்கள் செய்த 'மஸ்லின்’ என்னும் ஒருவகைத் துணி இன்றைய கலைஞர் யாரும் கண்டறியாத தொழில்நுட்பம் வாய்ந்ததென்பர். அத்தகைய சிறப்பேற்படக் காரணம், நம்நாடு பண்டுதொட்டே நெய்தற்றொழிலைப் பேணி வளர்த்து வந்தமையேயாகும்.
நெசவுத் தொழில் சிறந்த தொழிலாகக் கருதப்படுகிறது. எவ்வுயிர்க்கும் தீங்கு பயிலாத தொழில் இதுவே. "செய்யுந் தொழிலெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கிற் பின் நெய்யும் தொழிற்கு நிகராகா' என்று வள்ளுவர் பெருமான் பாடியதாக ஒரு செய்யுள் உண்டு. திருக்குறள் இயற்றிய அத் தெய்வப் புலவர் செய்த தொழில் நெசவுத் தொழிலே யென்பர். இடைக்காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தரும் செங்குந்தர் குலத்தவரே. நெய்தற்றொழில் பண்டைக் காலத்துச் சிறந்த நுண்வினைச் செல்வரைத் தந்ததுமன்றிப் புலவர் பெருமக்களையும் தோற்றுவித்துள்ளது.
பிறநாட்டவர் ஆட்சி ஏற்படுமுன் தமிழ்நாடெங்கணும் இராட்டைகள் ஒலித்தன. பெரும்பான்மையான மக்கள் பருத்தி விளைவித்தும், நூல் நூற்றும், ஆடை நெய்தும் வாழ்க்கையை இன்பமாகக் கழித்தனர். தமிழ்நாட்டுத் துணிகள் தமிழ் நாட்டின் மானத்தைக் காத்தன; பொருளாதாரத்தை உயர்த்தின. வேலையில்லாத் தொல்லையை யாரும் அக்காலத்தில் கண்டுகேட்டு அறியார். ஆண்டுகள் பல கழிய, அண்டி வந்தவர் ஆட்சிப்பீடத்திலேற, நெய்வோர் கைகள் சோர்ந்தன. வேற்று நாட்டுத் துணியில் விருப்பம் மிக்கது. நாட்டுத் துணியில் நாட்டம் அற்றது. நெய்வோர் தாழ்த்தப்பட்டனர். அதனால் அவர் வேறு தொழிலைத் தஞ்சம் தேடினர். ஒரு காலத்து உயர்வாகக் கருதப்பட்டது, பிற்காலத்தில் உதறி ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டது. தொழில்நுட்பம் ஒழிந்தது; தொழிலற்றோர் நிறைந்தனர். பொருளாதாரம் தாழ்ந்தது; வாழ்க்கைத்தரம் வீழ்ந்தது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாயிருப்பது குடிசைக் கைத்தொழிலே. முன்னோர்கள் நெய்தலைத் தங்கள் குடும்பத் தொழிலாகச் செய்தனர். குடும்பத்திலுள்ள பெரியாரும் சிறியாரும், ஆண்களும் பெண்களும் தொழிலில் ஈடுபட்டனர். ஆலைகள் என்பன அக்காலத்தில் இல்லையென்றே கூறலாம். குடிசைத் தொழில் இந்நாளில்

கட்டுரை மரபு 171
ஆலைத்தொழிலாக மாறிவிட்டது. குடிசைத் தொழிலாகிய நெய்தலை இன்று வாழவைத்தவர் காந்தியடிகளே. இன்று நாடெங்கும் நெய்தலைப் போற்றுகின்றனர். நெய்தற்றொழில் உண்மையாகவே போற்றப்படு மானால், அஃது ஒவ்வொரு குடிசையிலும் வளரும்; ஒவ்வொரு ஏழைக்கும் வாழ்வு கொடுக்கும். உழவு பெருகுவதனால் உணவு நிறைதல்போல, நெய்தல் குடிசைத் தொழிலாக நிலைக்குமானால் மக்கள் சுதந்திர வாழ்வு கிடைக்கும். பிறநாட்டை எதிர்நோக்கும் தாழ்வு தொலையும், சுதந்திரக் கணவு கண்ட பாரதியாரும் "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று பாடினார். உழவோடு நெசவு முதலிய தொழிலுக்கு முதன்மை கொடுத்து வணக்கம் செலுத்தினார்.
கட்டுரைச் சட்டகங்கள்
1. வானொலி
1. தோற்றுவாய்:- (அ) விஞ்ஞானத்தின் விளைவுகளில் ஒன்று (ஆ)
கண்டறிந்தவர் (மார்க்கோனி) (இ) அதன் அமைப்பும் செயலும். 2. செய்திகளைப் பரப்புதல்:- (அ) நம்நாட்டில் அரசினர் பொறுப்பில் இருத்தல் (ஆ) உள்நாட்டுச் செய்தி பிறநாட்டுச் செய்திகளைப் பரப்புதல் (இ) பிறநாடுகளில் தனிப்பட்ட குழுவினரால் நடத்தப்பட்டு அவரது பிரசாரச் செய்திகளைப் பரப்புதல் (ஈ) செய்திகளை உடனுக்குடன் அறிவதனால் ஏற்படும் நன்மைகள். 3. பொது நன்மைகள்:- (அ) இசையை வளர்த்தற்கான ஏற்பாடுகள் (ஆ) நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகள் (பேச்சு, கிராம நிகழ்ச்சி முதலியன) (இ) மாணவர்க்கான பகுதி (பாட சம்பந்தமான பேச்சுக்கள், மாணவர் நிகழ்ச்சிகள்) (ஈ) இலக்கியச் சேவை (கவியரங்கு, இலக்கியப் பேச்சு) 4. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்:- (அ) இசையை வளர்த்தற்கான
ஏற்பாடுகள் (ஆ) நாடகங்கள் 5. வியாபாரப் பிரசாரம்:- வியாார சம்பந்தமான பல்வேறு பிரசாரங்கள் 6. முடிவுரை:- (மேற்கூறிய அம்சங்களோடு மக்களின் அன்றாட
வாழ்க்கையில் வானொலி ஒன்றிவிட்டதென்பது)
2. ஊர்மன்றம் (கிராமசபை)
1. தோற்றுவாய்:- பண்டைக்காலத்துப் பஞ்சாயத்து (ஆ) இக்கால
மக்களாட்சி.

Page 89
172
SSDL
1O.
அமைப்பு முறை:- (அ) வாக்காளர் (நாட்டுப் பிரஜை, 18 வயதுக்கு மேற்பட்டவர், தொடர்பான குடியிருப்பு) (ஆ) தெரியப்படுபவர் (200 ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துடையவர், எழுத்துஞானமுடையவர்) (இ) தெரிவு செய்தல் (ஈ) தலைவர் தெரிவு (பிரதிநிதிகளால் தெரியப்படல்) (உ) ஆட்சிக்காலம் (மூன்று வருடங்கட்கொரு முறை, தேவைநேரில் இடையில் வேண்டியவரைத் தெரிதல்) வருவாயும் கடமைகளும்:- (அ) நிலவரி, விற்பனை வரி, வாகன வரி முதலிய வரிப் பணத்தைப் பொது மக்களுக்குப் பயன்படுமுறையில் செலவு செய்தல் (ஆ) முடிக்குரிய நிலங்களைக் காத்தல் (இ) சுகாதாரத்தைப் பேணல் (ஈ) சமூக நன்மைகளைச் செய்தல். முடிவுரை:- (அ) மக்கள் தங்களைத் தாங்களே ஆளுதலால் நன்மை (ஆ) சுதந்திர வாழ்வு.
3. உழவுத் தொழில் 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' "மேழிச் செல்வம் கோழைபடாது' "சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை" 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுண்டு பின் செல்பவர் 'ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு 'அகல உழுதலிலும் ஆழ உழுதல் நன்று' 'தொடிப் புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்' 'ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு' 'வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்'
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

கட்டுரை மரபு 173
4. சனசமூக நிலையம் தோற்றுவாய்:- (அ) கூட்டுவாழ்க்கை மக்களுக்கு இயல்பானதும் இன்பந் தருவதும் (ஆ) தனிவாழ்வு சிறைவாசம் போன்றதென்பது (இ) ஒன்றைத் தனித்துச் செய்வதிலும் பலர் சேர்ந்து செய்வது இலகுவானது (ஈ) கூட்டுவாழ்க்கைக்கு ஒற்றுமை அவசியமென்பது. செயல்கள்:- இன உணர்ச்சியை வளர்த்தல் (ஆ) மொழிப்பற்றினையூட்டல் (இ) வாழ்க்கை வசதிகளைப் பெருக்குதல் (ஈ) அறிவு வளர்ச்சிக்காவன செய்தல் (நூல் நிலையம், வாசக சாலை, பேச்சுப் போட்டி, திரைப்படக்காட்சி, அறிவுரை விருந்து முதலியன) (உ) உடல் வளர்ச்சி (விளையாட்டுப் போட்டி, யோகப்பயிற்சி முதலியன). அரசாங்கத் தொடர்பு:- (அ) அரசாங்கத்தின் பண உதவி (ஆ) குறைகளை அரசாங்கத்துக்கு முறையிட்டு நிறைவு செய்தல். முடிவுரை:- (அ) விரிந்த மனப்பான்மை (ஆ) தன்னலம் குறையப் பொதுநலம் பெருகுதல் (இ) பண்பட்ட இன்பவாழ்வு வாழுதல்
5. திருக்குறள் ஒரு வாழ்க்கைப்பொதுநூல்
தோற்றுவாய்:- திருக்குறளின் அமைப்பு முறை (பால்கள், இயல்புகள் முதலியன) தனிப்பட்ட மனிதனைப் பற்றியது:- (அ) அன்பு வளர்ச்சி (ஆ) கணவன் அன்பும் மனைவியின் காதலும் (இ) அறிவு (ஈ) பிறர்நலம் பேணும் உள்ளம்.
குடும்பத்தைப் பற்றியது:- (அ) விருந்தோம்பல் (ஆ) குற்றங்களின் நீங்குதல் (இ) நற்செய்கை (ஈகை முதலியன) (ஈ) தனக்கென வாழாமை. அரசாங்கத்தைப்பற்றியது:- (அ) அரசன் இயல்பு (ஆ) அங்கங்களின் இயல்பு (இ) நாட்டின் இயல்பு (ஈ) உயர்ந்த வாழ்வு. சமயத்தைப் பற்றியன:- (அ) கடவுள் இயல்பு (ஆ) கடவுளை அடைவோர் இயல்பு.
முடிவுரை.
Lupa விளக்கக்கட்டுரைஎழுதுக.
1. இலங்கைப் பாராளுமன்றம் 2. உமது கிராமச்சந்தை 3. தபால் நிலையம் 4. நகரசபை
5. வாசகசாலை 6. முதியோர்கல்வித்தாபனம்

Page 90
174 தமிழ் மரபு
7. பல்கலைக் கழகம் 8. ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் 9. யோகப் பயிற்சி 10. மீன்பிடித் தொழில்
4. சிந்தனைக் கட்டுரை
இஃது ஒரு பொருளைப்பற்றி நாம் சிந்தித்து முடிவு செய்வதைப் பற்றிக் கூறுவது. நாம் ஒரு நீதியைப் பற்றியோ பண்பைப் பற்றியோ எண்ணும்பொழுது அதன் நன்மை தீமைகளையும் காரண காரியங்களையும் ஆராய்கின்றோம். இவ்வாறு எழுதல் சிந்தனைக் கட்டுரையின் அங்கமாம். இக்கட்டுரைப் பகுதியில் எடுத்துக் கொண்ட பொருளின் பல்வேறு அங்கங்களையும் விளக்குதற்குக் கதைகளும், நிகழ்ச்சிகளும் எடுத்தாளப் படலாம். ஒழுக்கம், பண்பாடு, நீதி, சமயம், அரசியல், தத்துவ ஆராய்ச்சி முதலியன இப்பகுதியில் விரித்தெழுதத்தக்கன.
தந்தை தாய் பேண்
நமக்கு என்றும் இனியவர் தாய் தந்தையரே. அவர்களை விடச் சிறந்தவர் நமக்கு யாரும் இல்லை. ஆசிரியரும், தெய்வமும் அரசனும் அவர்களுக்குப் பின்னவரே. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றும் தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை என்றும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை யென்றும் முன்னோர் கூறிய முதுமொழிகள் இவ்வுண்மையைப் புலப்படுத்தும். பெற்றோர்கள் நமக்குச் செய்யும் உதவியும், அவர்கள் காட்டும் அன்பும் நம்மால் இவ்வளவென்று கூறமுடியாதன.
நம்மைப் பெறவேண்டுமென்று நம் பெற்றோர் பல விரதங்களை மேற்கொண்டார்கள் பல யாத்திரைகள் செய்தார்கள்; அல்லும் பகலும் இறைவனை நினைந்து தவங்கிடந்தார்கள். பெறுமுன் அவர்களுக்கிருந்த ஆசை எத்தனை பெற்றபின் அருமையாகவும் பெருமையாகவும் போற்றினார்கள். நம்மீது ஈ, கொசு, எறும்பு மொய்க்காமல் காத்தார்கள். வேளையறிந்தும் விருப்பம் தெரிந்தும் நமக்கு வேண்டிய உணவுகளைத் தந்தார்கள். நமக்கு நோய் ஏற்பட்டால் அவர்கள் அடைந்த அல்லலும் கவலையும் அளவிடத் தக்கனவல்ல. நாம் பருவமானதும் நம்மைப் பள்ளிக்கனுப்பினார்கள். நாம் கற்று வல்லவர்களாவோம் என்றும் உயர்ந்த பதவிகளை அடைவோம் என்றும் நம் நலவாழ்வையே எண்ணி இன்பங் கொண்டார்கள். தம்முடைய பசியையும் தேவைகளையும் பொருட்படுத்தாது நம்மிலே கண்ணாயிருந்து காத்தார்கள். அவர்கள் அன்பும் தியாக சிந்தையும் எத்துணை எத்துணை

கட்டுரை மரபு 175
வாழ்நாள் முழுவதும் நமக்காகவே பாடுபட்ட நம் அருமைப் பெற்றோர்கள் நாம் கண்கண்ட தெய்வமாகவன்றோ போற்றவேண்டும். அவர் சொல்லுக்கடங்கி நடக்க வேண்டும். அவர்க்கு வேண்டுவனவற்றைக் குறிப்பாலறிந்து செய்ய வேண்டும். 'ஏவாமக்கள் மூவாமருந்து' என்றபடி அவர் ஏவாமலே நாம் எல்லாம் செய்தல் வேண்டும். நமது பணிவையும் அன்பையும் கண்டு அவர்கள் மனமகிழும்படி நாம் நடக்கவேண்டும். பிற்காலத்தில் தமக்கென ஒன்றும் குறியாது நம்மையே தம் பெருஞ் செல்வமாகப் பாதுகாத்த நம் தாய் தந்தையரை நாம் எக்காலத்தும் பேணவேண்டும். முதுமை வந்து உடல் தளர்ந்த காலத்தில் அவர்கள் தேவையை அவரிருக்குமிடத்தே உதவி, அவர் உடலும் உள்ளமும் நோவாமல் காக்கவேண்டும்.
சிலர் தம் முதிய பெற்றோர்களை விட்டுவிட்டுத் தாம் தம் மனைவி மக்களோடு தனியாக வாழ்கின்றனர். பிள்ளைகளை அருகில் வைத்திருக்கப் பெறாத பெற்றோர் மற்றவர் கையை எதிர்பார்த்து மனம் வாடுவர். பல இன்னல்களையும் இன்னாதவற்றையும் பொறுத்துத் தம்மை வளர்த்த பெற்றோர் முதுமையடைந்ததும் அவரைப் பாதுகாத்தலும், கூட வைத்திருத்தலும், இளம் புதல்வர் சிலர்க்குப்பெரிதும் துன்பமாகத் தோன்றுகின்றன. மேலும் அவ்வறிவில்லாத இளையார் மனங் கோணாதும் வாய் காவாதும் ஏகவுங் கண்டிக்கவும் தலைப்படுகின்றனர். பாடுபட்டு வளர்த்த பெற்றோர்களது அன்பும் நன்றியும் அரும்பண்பும் மறந்து அவரைப் பகைவரைப் போலக் கருதி நிந்தித்தல் எத்துணைக் கொடுமை! கொடுமை!! 'தாய் தெருவில் பிச்சைக்கலைகிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்' என்பது போல, சிலர்தம் முதிய தாய் தந்தையரை அலைய விட்டுவிட்டுத் தாம் புண்ணிய தலங்களுக்குப் போய்த் தான தருமங்களைச் செய்ய விரும்புகின்றனர். தாய் தந்தையரினும் மிக்க தெய்வம் இல்லை என்பதும், தாய் தந்தையரைப் பேணுதலில் மிக்க தவம் இல்லை என்பதும் அவர் அறியார்போலும்.
முற்காலத்திலும் இக்காலத்திலும் தாய் தந்தையரை மதித்து நடந்த பெரியோர் பலருடைய சரித்திரங்களைக் கேட்கிறோம். இராமன் தன் தந்தையின் சொல்லைச் சிரமேற்கொண்டு நாட்டை வெறுத்துக் காட்டை விரும்பினான். பீஷ்மன் தன் தந்தையின் கருத்திற்கியையத் தன் இன்ப வாழ்வை உதவி அழியாப் புகழ் கொண்டான். காந்தியடிகள் தாயின் சொல்லைக் காத்து நடந்து வாழ்நாள் முழுவதும் ஒழுக்க சீலராய் 'மகாத்மா” ஆனார். தவத்தோர் பலர் உலகவாழ்வைத் துறந்தும் தாய் தந்தையரை மறந்திலராய் அவர்க்குச் செய்யும் கடமைகளைச் செவ்விதின் ஆற்றியுள்ளார்கள். நூல்கள் எல்லாம் தாய் தந்தையரைப் போற்றுதலையே

Page 91
176 தமிழ் மரபு
பெருந் தவமாகவும், உயரிய கடமையாகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. பாவங்களில் மிக்கது நன்றி மறத்தல். தாய் தந்தையர் செய்த நன்றியை மறத்தல் மிகப் பெரும் பாவமாகும்.
சமயக் கல்வி
கல்வி நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. கல்வியினால் நம் அறிவு வளர்கிறது. கல்வியால் நாம் தொழில் பெறுகிறோம். கற்றவர்களை உலகம் மதிக்கிறது. எல்லாவற்றிலும் மேலாகக் கல்வி நமக்குக் கடவுள் உண்மையை அறிவுறுத்தி, நாம் கடவுளை அடையத் துணை செய்கிறது. கடவுளை வணங்கத் துணை செய்யாத கல்வி சிறந்த கல்வியாகாது. "கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்பர் திருவள்ளுவர். கல்வியின் மூலம் கடவுளின் குண விசேடங்களையும், அவரை அன்பு செய்யும் முறைகளையும், அவரை அடைந்தோர் வரலாறுகளையும் அறிகிறோம். அவ்வாறு அறிவதனால் நமக்கும் கடவுளிடத்தில் அன்பு உண்டாகின்றது. அவ்வன்பு கடவுட் பணியில் நம்மை ஈடுபடுத்துகின்றது. கடவுட்கொள்கை இல்லாதவர்கள், கல்வியினால் கடவுள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். கடவுட் கொள்கையுள்ளவர்கள், கல்வியினால் சமய வாழ்வில் ஊக்கம் அடைகின்றார்கள்.
கல்வியைப் போலவே, கடவுட் கொள்கையைப் பெறுதற்கும் இளமைப் பருவமே ஏற்ற காலமாகும். இளமையிற் பழகிய பழக்கங்கள் எக்காலத்தும் நிலைத்து நிற்கும். "தொட்டிலிற் பூண்ட குணம் சுடுகாடு மட்டும்' ஆதலினால், நமது பழக்க வழக்கங்களைச் சிறுவயதிலேயே திருந்தியனவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் கடவுள் தொண்டையும் இளமையிலேயே போதித்தால், அஃது ஒருவரது வாழ்க்கை முழுவதும் கலந்து நிற்கும். வாழைப் பழத்தில் இலகுவாக ஊசி ஏற்றுதல் போலச் சிறுவர் மனத்திலும் கடவுள் நம்பிக்கை நன்கு பதியும். அவ்வாறே நற்பழக்கங்களையும் இளமையிலே பழகிக் கொள்ளுதல் எளிதான காரியமாகும். இளமையிற் கற்றுக்கொள்ளாது வயது வந்தபின் நற்பழக்கங்களை மேற்கொள்ளலாமெனல் பொருந்தாது.
இன்று தலைவர்களென்றும் மகாத்மாக்கள் என்றும் நாம் போற்றுகின்றவர்கள், தம் இளமைப்பருவத்திலேயே பெருமைக்குரிய நற்பண்புகளையும் கல்வியையும் பெற்றிருந்தார்கள் என அறிகிறோம். சுவாமி விவேகானந்தர் இளம் பிராயத்திலேயே மன அடக்கத்தைக் கற்றுக்கொண்டார். தனியிடத்தில் இருந்து நீண்டநேரமாகத் தியானம் செய்யும் பழக்கத்தை அவர் இளமை முதலே மேற்கொண்டார் என

கட்டுரை மரபு 177
அறிகிறோம். மன அடக்கப் பயிற்சியின் பயனாகக் கல்லூரியிலுள்ள உயர்ந்த கல்வியும் அவர்க்கு மிக இலகுவாய் இருந்தது. நம் காலத்தில் வாழ்ந்த காந்தியடிகளை நோக்குவோம். அவர் இறக்கும் வரையும் கடவுளை அன்பு செய்தார். அவரது வாழ்நாளில் பிரார்த்தனை செய்யாத நாளே இல்லை. அவ்வித சிறந்த பண்பு அவர் எப்பொழுது பெற்றார்? எவ்வாறு கற்றார்? அவர் மண் விளையாடி மகிழும் நாட்களில் இராமநாமத்தின் பெருமையை அறிந்தார். கள்ளங்கபடமற்ற அவரது வெள்ளை உள்ளத்தில் வித்திய வித்து நாடோறும் வளர்ந்து அவர் வாழ்வோடு மலர்ந்து பெரும்பயன் தருவதாயிற்று. இவர்களைப் போலவே உலகில் பல பெரியார்கள் தம் இளமைப் பருவத்தில் அறிந்தும் அறியாமலும் கற்றுக்கொண்ட நற்பண்புகளே அவர்களைப் பிற்காலத்து உயர்த்தி வைத்தன.
சமயக்கல்வி கடவுளுணர்ச்சியை வளர்த்தலோடு நல்வாழ்வு வாழவும் துணைசெய்கிறது. சமய வாழ்வு வாழ்வதனால் இரு நன்மைகள் உள்ளன. ஒன்று தன்னைப் பற்றியது. மற்றது பிறரை அல்லது சமூகத்தைப் பற்றியது. சமயக் கல்வி ஒருவனைத் தூயவனாக்கி நற்கதியடையச் செய்கிறது. தூயவனாவதனால் அவன் தீயசெயல்களை விட்டு விடுகிறான். கொலை, களவு, பொய் முதலியனவாகத் தனக்கும் பிறருக்கும் தீமை பயக்கும் செயல்களை அவன் வெறுக்கிறான். இவ்வாறு சமயக்கல்வி ஒவ்வொருவ்னையும் தூயவனாக்கி உயர்ந்த சமூக வாழ்வமைக்க உதவுகிறது. ஒவ்வொருவனும் கடவுளை நேசிப்பது போலவே பிற உயிர்களையும் நேசிப்பான். சமயக் கல்வியினால் தன்னலத்தை விடப் பிறர் நலத்தைப் பேணும் பெரும்பண்பு மக்களிடை வளரும். தியாக சிந்தை எல்லோருக்குமுண்டாகும். இவ்வித உயர்குணங்களைப் பெருக்கிச் சிறந்த வாழ்வுக்கு மக்களை அழைத்துச் செல்வது சமயக் கல்வியேயாகும்.
தீய செயல்களைத் தடுத்து ஒழித்தல் சட்டங்களால் இயலாததென்றே கூறலாம். சட்டங்கள் பல இருந்தும் மக்கள் மேலும் மேலும் குற்றங்கள் செய்வதிலிருந்து இது புலப்படும். மேலும் சட்டங்கள் மக்களிடத்துள்ள எல்லாக் குற்றங்களையும் களைவனவல்ல. சமயக் கல்வியோவெனில் நினைத்தல், சொல்லுதல், செய்தல் ஆகிய மூன்று வழியாலும் குற்றம் செய்யாமல் ஒருவனைத் தடுக்கிறது. சிறுவர் முறையாகச் சமயக்கல்வி யூட்டப்படுவரானால் அவர் வளர்ந்த காலத்தும் அவரது கல்வியறிவும் பழக்கமும் அவரைக் குற்றம் செய்தலினின்றும் தவிர்க்கும். குற்றம் செய்ய முற்படினும் அவரது மனச்சாட்சியும் தெய்வக் கொள்கையும் அம்முனைப்பை அவர் நினைவிலேயே தடுத்துவிடும். சட்டத்துக் கஞ்சுதலை விடுத்து அவர் தெய்வத்திற்கே முதலில் அஞ்சுவர். சமயக் கல்வியில்லாத நாட்டில் மக்களைத் தீமை செய்யாதவாறு தடுப்பது

Page 92
178 தமிழ் மரபு
சட்டமொன்றே; மக்கள் குற்றத்திற்கேற்ப அந்நாட்டில் சட்டமும் பலவாக இருக்கும். தீமைபலவும் மிகுதலினால் அந்நாடு துன்பமும் பயமும் நிறைந்த வாழ்வையன்றி இன்பமும் உயர்வும் மலிந்த இலட்சிய வாழ்வையறியாது.
ஆகவே, சமயக் கல்வி மக்களுக்கு இன்றியமையாதது; மக்களை உயர்த்துவது; மக்களை அமர வாழ்வு வாழச் செய்வது. மக்கள் எல்லோரும் தம் உடலை வளர்க்க உணவு, தேடுகின்றனர். அறிவை வளர்ப்பதற்கு முற்போக்கான நாடுகளில் எல்லாம் LGoR) வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதுபோலவே, உயிர் வளர்ச்சியடைவதற்கும் உயர்ந்து வாழ்வு காணுதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் சமயக்கல்வி இடம் பெற வேண்டும். அது பள்ளிப் படிப்பில் ஒரு பாடமாய்ப் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாய்க் கலந்து சமூகத்தின் இன்ப சாதனையாக மிளிர வேண்டும்.
கட்டுரைச் சட்டகங்கள்
1. இக்காலக் கல்வி முறை 1. தோற்றுவாய்:- (அ) கல்வியின் அவசியம் (ஆ) கல்வியின் பயன். 2. இக்காலக் கல்வி முறையின் அமைப்பு:- (அ) ஆரம்பக் கல்வி (ஆ) உயர்தரக் கல்வி (இ) மாணவர்களின் அறிவு: (பாடங்களை மாத்திரம் படித்தல் சில பாடங்களில் வல்லவராதல்). 3. குறைபாடு:- (அ) உத்தியோக நாட்டம் (ஆ) வேலையில்லாமை (இ)
தொழில் தெரியாமை. 4. திருந்திய கல்வி:- (அ) தொழிற் கல்வியும் அறிவுக் கல்வியும் (ஒருவேளை தொழில், ஒருவேளை பாடங்கள் படித்தல்) (ஆ) ஒவ்வொருவரும் தாமே தொழில் செய்ய வல்லவராதல் (இ) நாட்டு மூலப்பொருள்களைப் பயன்படுத்தும் வகையில் தொழிற்கல்வி பயிறல். 5. முடிவுரை:- (அ) நாட்டில் தொழிற் பெருக்கம் (ஆ) பொருளாதாரப்
பெருக்கம்.
2. விடாமுயற்சி 1. தோற்றுவாய்:- (அ) உழைப்பின் பெருமை (உழைப்பினால்தான் வாழ்வும்
புகழும் உண்டு என்பது). எவ்வாறு முயறல்:- விடாது முயறல்
3. முயற்சி தடைப்படுதற்குரிய காரணங்கள்:- (அ) எண்ணித் தொடங்காமை (ஆ) ஊக்கமின்மை (இ) இடம் பொருள் ஏவல் இவற்றின் குறைபாடு (ஈ)

கட்டுரை மரபு 179
துன்பம் அல்லது தோல்விகண்டு மனஞ் சோர்தல். விடாது முயன்றோர்:- (அ) பண்டைக்காலத்து வாழ்ந்த பகீரதன் போன்றோர் (ஆ) இக்கால விஞ்ஞானிகள் தோமஸ் ஆல்வா எடிசன், நோபெல், மார்க்கோனி போன்றோர்.
முடிவுரை. சில மேற்கோட் செய்யுள்கள்:
1. "தெய்வத் தாலாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்' 2. 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாதுஞற்றுபவர்' 3. 'முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்' 4. 'உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப் பான்முளையே தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே சாலும் கரி'
5. 'எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்' 6. "மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்.'
7. 'இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்பதில்'
3. தாய்மொழிப்பற்று
தோற்றுவாய்:- (அ) தாய்மொழி ஒருவரோடு உடன் பிறந்ததென்பது (ஆ) ஒருவன் தாய்மொழியில் சிந்தித்தலே இலகு என்பது. தாய்மொழியைப் பேணுதல்:- (அ) அரசாங்க மொழியாக்கல் (ஆ) போதனா மொழியாக்கல் (இ) பல புது நூல்களை இயற்றல் (ஈ) பிறமொழியிலுள்ள நூல்களை மொழி பெயர்த்தல். பேணாமையால் ஏற்படும் விளைவு:- (அ) பிறமொழி பேணுதலால் பிறர்க்கு இலகுவில் அடிமையாதல் (இத்தாலி இங்கிலாந்தை அடிமையாக்குதற்காகத் தனது மொழியாகிய இலத்தீன் மொழியைப் புகுத்தியது; பிரித்தானியர் கீழ்நாடுகளை அடிமையாக்கத் தமது ஆங்கில

Page 93
180
தமிழ் மரபு
மொழியைக் கற்கும்படி கட்டாயப்படுத்தினர்). (ஆ) மக்கள் பிற நாட்டுக் கலாச்சாரத்தை மதித்தும் தமது பண்பாட்டை வெறுத்தும் நடத்தல் (இ) மக்கள் வேற்றுமொழி நூல்கள் வளரக் காரணமாதலும், தம்மொழியும் இலக்கியமும் தழைத்தோங்க உழைக்காமையும். முடிவுரை:- மொழிப்பற்று இனப்பற்றென்பதும், மொழி வளர்ச்சி இன வளர்ச்சி என்பதும்.
4. வாய்மை தோற்றுவாய்:- (அ) அறங்களில் ஒன்று என்பது (ஆ) எச்சமயத்தோரும் போற்றுவதென்பது. வாய்மையாவது யாது? (அ) பொதுக்கருத்து (ஆ) வள்ளுவர் கருத்து. வாய்மையின் பெருமை:- (அ) அகத்தைத் தூய்மை செய்வது (ஆ) இம்மையில் புகழைத் தருவது (இ) மறுமையில் இன்பந் தருவது. பொய்யின் இழிவு- நன்மை பயவாமை (ஆ) பழியும் பாவமும் தருதல் உதாரணங்கள்:- (அ) அரிச்சந்திரன் வரலாறு (ஆ) காந்தியடிகளின் வாழ்க்கை.
(Մ)նգG|60|y.
5. பண்பாடு
தோற்றுவாய்:- (அ) பண்பாடு உயர்வுக்கறிகுறி என்பது (திருந்திய நிலம்போல) (ஆ) பண்பாடு உயர் குணங்கள் பலவற்றால் நிரம்பப் பெறுவதென்பது. அன்புடைமை:- (அ) தன்னைச் சேர்ந்தவர்களிடத்து அன்பு செய்தல் (ஆ) பிற உயிர்களிடத்தும் அன்பு செய்தல் (இ) அத்தகைய அன்பு வளர்வதற்கான செயல்களைச் செய்தல். தீயனகடிதல்:- (அ) காரணமுள்ள வழியும் தீமை செய்யாமை (ஆ) தீமை செய்தார்க்கும் நன்மை செய்தல் (இ) மனம் வாக்குக்காயங்களால் தீமை ஏற்படாதவாறு தன்னைப் பாதுகாத்து நடத்தல். தியாகமுடைமை:- (அ) உயிர்களின் நன்மையை விரும்புதல் (ஆ) நன்மை செய்தல் (இ) நன்மையுண்டாம் வண்ணம் தன் உடல் பொருள் உயிரை ஈயச்சித்தமாயிருத்தல். குறிப்பறிந்து நடத்தல்:- (அ) பிறர் விரும்பியவற்றைக் குறிப்பறிந்து செய்தல் (ஆ) அதனால் தனக்கேற்படும் துன்பத்தைப் பொருட்படுத்தாமை,

கட்டுரை மரபு 181
6. முடிவுரை - (அ) பண்பாடுடையோர் மக்களில் உயர்ந்தோராகப் போற்றப்படுவர் என்பது (ஆ) அவர்கள் மண்ணாட்டைப் பொன்னாடாக்குவோர் என்பது.
பயிற்சி கட்டுரை எழுதுக:
1. மதுவிலக்கு 10. நம்நாடும் இலவசக் கல்வியும்
கிராம முன்னேற்றம் 11. இணக்கமறிந்திணங்கு ஒற்றுமையின்உயர்வு 12. கற்றதின் பயன்கடவுளை
வணங்கல் 4. தமிழர் பண்பாடு 13. இல்லறமே நல்லறம் 5. நூல் நிலையம் 14. வியாதிதீர்த்தல் 6. பலி நிறுத்தம் 15. ஏவா மக்கள் மூவா மருந்து 7. சுகவாழ்வு 16. சுத்தம் சுகம் தரும் 8. ஐயமிட்டுண் 17. அன்னை மொழியைப்
பொன்னெனப் போற்று 9. மூடக்கொள்கைகள் 18. அடக்கமுடைமை
5. கற்பனைக் கட்டுரை
பொருள் இல்லாதவன் உள்ளவன் போலவும் வாய்ப்பில்லாதவன் வாய்ப்புள்ளவன் போலவுங் கற்பித்துக் கொண்டு எழுதுதல் இக்கட்டுரையின் அங்கமாம். இஃது எழுதுவோரது பல்வேறு எண்ணங்களுக்கேற்ப விரிந்து செல்லும்.
மக்கள் ஒவ்வொருவரும் தமக்கில்லாத நிலைமையை நினைந்து நினைந்து மனக்கோட்டை கட்டுவது இயல்பே. அந்நினைந்த வற்றையெல்லாம் உயர்ந்த முறையில் அமைத்துப் படிப்போர் மகிழும்வகை எழுதல் மிக்க இன்பம் பயக்கும்.
நான் கல்வியமைச்சர் ஆனால்.
யான் இக்காலக் கல்வியமைப்பிற்கேற்பக் கல்வி பெறுகிறேன். இந்நாட்டிலுள்ள எல்லாச் சிறுவரும் என்னைப்போலவே கல்வி கற்கின்றார்கள். இலவசக் கல்வியாலும் கட்டாயக் கல்வியாலும் எல்லோரும் எழுத வாசிக்கத் தெரிந்தவராகிறார்கள். இலக்கியம், பாஷை, கணிதம், சரித்திரம், விஞ்ஞானம் முதலிய பல பாடங்கள் எல்லாப் பள்ளிக்

Page 94
182 தமிழ் மரபு
கூடங்களிலும் போதிக்கப்படுகின்றன. எல்லோரும் எல்லா விஷயங்களிலும் ஒரளவு தேர்ச்சியடைகிறார்கள். ஆகவே இக்கல்வி முறையைப் பலரும் மெச்சுவர். ஆனால் அவர்கள் இதிலுள்ள குறைகளைக் காண்பதில்லை. இக்கால மாணவர்கள் அரசாங்கத்திலுள்ள கணக்கர் தொழிலுக்கும், மருத்துவர், பொறியியல் முதலிய பிற தொழில்களுக்கும் பயிற்றப்படுகிறார்களேயன்றி, கல்வியினாலாம் உண்மைப் பயனை அடைவதில்லை. பள்ளிப்படிப்பை முடித்ததும் தாமாக ஒரு தொழிலைச் செய்யமாட்டார். அவர் கற்ற நூற்கல்விதானும் ஆடுமேய்ந்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பலவற்றிலும் கற்ற அற்பக் கல்வியே யன்றி ஒன்றிலேனும் முற்றத்துறை போகிய கல்வியன்று. மேலும் இக்காலக் கல்வி முறையானது, கிராமங்களிலுள்ள படித்தவர்களை நகர்களை நோக்கிப் படையெடுக்கத் தூண்டுகின்றது. ஊரிலே கற்ற கல்வி அவ்வூரிலேயே பெரும்பான்மையும் பயன்படுவதில்லை. இத்தகைய கல்விமுறை எற்றுக்கு?
நான் கல்வியமைச்சர் ஆகியக்கால் இக்கல்வித் திட்டத்தையே முற்றும் மாற்றியமைப்பேன். கல்வி கற்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் தொழிற்கல்வியும் நூற்கல்வியும் போதிக்க வழிசெய்வேன். மாணவர்களுடைய நாட்டத்திற்கேற்ப ஒவ்வொரு தொழிலில் அவர் வல்லவராக வாய்ப்பளிப்பேன். பிறநாட்டுச் சரித்திரங்களுக்குப் பதிலாக நம்நாட்டு வரலாறுகளையும் பெருமைகளையும் மாணவர் கற்பர். அதனால் மாணவர்களுக்குத் தம் நாட்டறிவும் அபிமானமும் வளரும். நாட்டின் கடந்த கால வாழ்வு தாழ்வுகளைச் சிந்தனைசெய்து அதன் வருங்கால வளர்ச்சிக்காகப் பாடுபடுவர். தம் நாட்டிலக்கியங்களைப் படித்து அதன் பண்பாட்டை அறிந்து போற்றுவர். இவ்வித நூற்கல்வி ஒரு வேளையும், தொழிற்கல்வி மறுவேளையும் எல்லாக் கல்லூரிகளிலும் போதிக்கப்படும். குடிசைக் கைத்தொழில்களும் பிறவும் தொழிற் கல்வியில் இடம்பெறும். ஒவ்வொரு மாணவனும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறும்போது தொழிலறிவும் நூலறிவும் உடையவனாய் இருப்பான்.
நம் நாடு ஒரு விவசாய நாடு. நம் நாட்டுமக்களின் தொழில் உழவே. நம் பள்ளிக்கூடங்களில் போதிக்கும் கல்வி நாட்டின் பிரதான தொழிலாகிய உழவுக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும். உத்தியோகத்தில் மோகங் கொண்ட இளைஞர் உழவுத் தொழிலை வெறுக்கின்றனர். அதனால் வேலை இல்லாதோரும் நூற்கல்வித் தேர்ச்சியில்லாதாருமே உழவுத் தொழிலைத் தஞ்சம் புகவேண்டியவராகின்றனர். இவ்வித பிற்போக்கான நிலையை எனது கல்வித் திட்டம் நீக்கும். நாகரிக நாடுகளிலுள்ளவர்களைப்போல நம்நாட்டு இளைஞர்களும் உழவுத் தொழிலை விருத்தி செய்யவும் அதில்

கட்டுரை மரபு 183
பல்வேறு புதிய முறைகளைக் கையாளவும் கற்பார்கள். குறைந்த படிப்புடையோரும் பட்டதாரிகளும் தத்தம் கல்வியறிவைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வர். அதனால் நாட்டுப் பொருளாதாரம் உயரும். வேலையற்றோரைக் கவனிக்கும் இலாகாவும் வேலையற்று நாளடைவில் இல்லாதொழியும்.
எனது கல்வித் திட்டத்தின் மூலம் படித்தவர்கள் எல்லோரும் தத்தம் ஊர்களிலேயே தம் கல்வியைப் பயன்படுத்துவர். மருத்துவர்களின் சேவையும் புலவர்களின் அறிவும் கலைஞர்களின் தொண்டும் தொழில் வல்லாளர்களின் திறனும் அவரவர் ஊர்களில் பயன்பட்டு ஒவ்வோர் ஊரும் மற்ற ஊர்களைப் பார்த்துப் போட்டியிட்டு முன்னேறும். ஒவ்வோர் ஊரிலும் வல்லவர்களும் அறிஞர்களும் இருப்பார்கள். ஒவ்வோர் ஊரும் தன் சிறந்த பண்புகளையும் கலைகளையும் வளர்க்கும். அதனால் இது பிற்போக்கான கிராமம், இது முற்போக்கான கிராமம் என்ற பாகுபாடு நீங்கி, நாடெங்கும் முன்னேற்றம் உண்டாகும். எனது கல்வித் திட்டம் அறிஞர்களையும் கலைஞர்களையும் கைவினைஞர்களையும் ஒரிடத்திலேயே - நகரத்திலேயே - சேர்த்துக் குவிக்காது; ஓரிடத்தை மாத்திரம் நாகரிகத்திலும் பொருளாதாரத்திலும் உயர்ந்ததாக அமைக்காது. நாட்டின் வளர்ச்சிக்கேற்ற முறையில் கல்வியூட்டி ஒவ்வொருவரையும் தொழிலிலும் நூலிலும் திறமையுடையராக்கி, அவர் கற்ற தொழிலும் அறிவும் அவரவர் நாட்டுக்கே பயன்படச் செய்தலால் என் கல்வித் திட்டத்தின் நோக்கம் இன்றைய நாட்டு நிலைக்கு ஏற்றதென்பது புலப்படும்.
ஒருபிச்சைகாரனின் பகற் கனவு
ஒருநாள் நடுப்பகல், கொளுத்தும் வெயிலில் ஒரு பிச்சைக்காரன் நொண்டி நொண்டி இரந்து திரிந்தான். ஒரு பெரிய மாடி வீட்டின் முன் போய், "அம்மா, பசிக்குதே; தாயே பசிக்குதே' என்று இரக்கம் தரும் குரலில் விளித்தான். அந்த வீட்டு முற்றத்திலே மங்கையொருத்தி இரண்டு சடைநாய்களுக்கு விஸ்கோத்து, அப்பம், பொரியல் என்பன போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். பிச்சைக்காரன் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'அம்மா, பசி தாங்க முடியவில்லை. பழைய உணவு ஏதும் இருந்தாலும் தாருங்கள், நீங்கள் மகாராசியாய் இருப்பீர்கள்’ என்று கூறினான். அப்போது அந்தப் பெண், "அடே இங்கே நில்லாதே, நின்று சத்தமிட்டால்.உஸ்’ என்று நாய்களை ஏவினாள். பிச்சைக்காரன் நடுங்கி, 'அம்மா, பிச்சை வேண்டாம்; நாயைப் பிடியுங்கள்’ என்று அலறினான். பின் அவ்விடம் விட்டு நீங்கிச் சென்றவன், பசிக்களையினால் பக்கத்திலுள்ள ஒரு மடத்திற் படுத்துக் கண்ணயர்ந்தான்.

Page 95
184 தமிழ்மரபு
'கார்த்திகேயர் நரேந்திரன் நீதானா? உனக்குக் குதிரை பந்தயச் சங்கத்திலிருந்து வந்த கடிதம் இது" என்று கூறித் தபாற்காரன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். கடிதத்தைத் திறந்தான்பிச்சைக்காரன். ஓரிலக்கத்து எண்பத்தையாயிரம் ரூபா அதிட்டப் பணமாக வந்திருப்பதைக் கண்டான். இந்தச் செய்தி பத்திரிகைகளிலும் பிரசுரமானது. நரேந்திரன் அப்பணத்தைப் பெற்றான். முதலில் மின்சார சிகிச்சை மூலம் பாரிசவாத நோயைக் குணப்படுத்தினான். முன்னர்க் கடன்காரர் பறித்த தன்னுடைமைகள் அனைத்தையும் மீட்டான். அழகும் இளமையும் தவழும் நரேந்திரனுக்குப் பெண்கொடுக்கப் பலர் போட்டியிட்டு முன்வந்தனர். தன் விருப்பப்படி ஒரழகிய குணவதியை நரேந்திரன் மணந்தான். மங்கல மனைக்கு நன்கலமாகிய மக்கட்பேறும் வாய்த்து மதிப்புடன் வாழ்ந்த நரேந்திரன் புலவர் பாடும் திறமும் பெற்றான். பசித்து வந்தோர் முகம் வாடாது அகங் குளிர விருந்தளித்தான். நாட்டின் பலபாகங்களிலும் உள்ள பிச்சைக்காரர் பலரும் நரேந்திரன் வீட்டில் உணவருந்தி மகிழ்வாராயினர்.
நரேந்திரன் இல்லம் பிச்சைக்காரர்களின் சொந்த வீடுபோலானது. ஒரு நாள் பலவிடங்களிலுமுள்ள பிச்சைக்காரர்களை அழைத்துச் சபை கூட்டி, நரேந்திரன் பின்வருமாறு பேசினான்.
"அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே நும் அனைவருக்கும் எனது தாழ்மையான வணக்கம். நாமும் மற்றவர்களைப்போல வாழப் பிறந்தவர்களே. மேலைத் தேசங்களில் நமது நிலையை எய்திய மக்களை அரசாங்கம் உணவு உடையுதவி ஆதரிக்கின்றது. முதியோர் விடுதிகள், வேலைசெய்யச் சக்தியற்றோர் உறைவிடங்கள் பல அத்தேசங்களில் உள்ளன. உறுப்புக் குறைபாடுடையவர்களும் இயன்ற தொழில் செய்வதற்குப் பயிற்றப்படுகிறார்கள். அத்தகைய வாய்ப்புக்கள் நமது நாட்டில் நமக்கு ஏன் அளிக்கப்படலாகாது?’
இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்குப் பெரிய பணக்காரரும் ஊரிலுள்ள பலதரப்பட்ட மக்களும் சூழ்ந்திருந்தார்கள். முன்னே நரேந்திரனைத் துரத்தியவர்கள், அவமதித்தவர்கள் அவனில்லஞ் சென்று பலபல உதவிகள் பெற்றனர். அவர்களனைவரையும் பார்த்து நரேந்திரன் கூறினான், "பெரியோர்களே! ஆதரவற்ற காரணங்களினாலே நாங்கள் பசிக்கொடுமை தாங்கமாட்டாது உங்கள் மாளிகைகளுக்கு அடிக்கடி வருவோம். வறிய மக்கள் பலரும் நமது நிலைமைக்கு இரங்கி அன்புகாட்டி இயன்ற உதவிபுரிந்தனர். "பாம்பின் காலைப் பாம்பன்றோ அறியும். பணக்காரர் எல்லோரையும் குறிப்பிடவில்லை - புதுப் பணம் படைத்தவர்கள் தலைக் கிறுக்கினால் நாய்களைப் போலவேனும் நம்மை மதிக்கவில்லை.

கட்டுரை மரபு 185
இங்கிலீசுத் தூஷணங்களாலே வசைமாரி பொழிவார்கள் பலர். எங்கள் பிச்சைப் பாத்திரத்தில் கல், உமி, வாழைப்பழத் தோல் இட்ட மகானுபாவர்களும் சிலர் இருக்கிறார்கள். பெரியோர்களே வேண்டு மென்று நான் குறைகூறுகிறேன் அல்லன். நீங்கள் அநுபவிக்கும் செல்வம் பிறக்கும்பொழுது கொண்டுவந்ததில்லை. இறக்கும்போது கொண்டு போகப்போவதும் இல்லை. இஃது எம்பெருமான் தந்ததென்று கருதி இல்லோருக்கும் எல்லோருக்கும் மனங்குளிரக் கொடுங்கள். எல்லோரும் வாழவேண்டும்; இன்பம் எங்கும் சூழவேண்டும் என்ற நல்லெண்ணம் உங்கள் உள்ளத்தில் நிலைப்பதாக, செல்வமும் வறுமையும் நிலைநில்லாது மாறி மாறி வரும். குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர் நடைமெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர். குன்றத்தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர். செல்வம் பெற்றதன் பயன் இல்லார்க்கு உதவுதலேயாகும். போனது போகட்டும்; இனியாவது பகுத்துண்டு பல்லுயிர்களையும் ஓம்பி நன்றாக வாழ அம்மையப்பர் உமக்கு அருள்புரிவாராக" என்று கூறிய நரேந்திரன் பிச்சைகாரரைப் பார்த்துத் தொடர்ந்து கூறுவானாயினான்.
"மக்களனைவருக்கும் உணவும் உடையும் பிறவுமெல்லாம் ஒரே அளவினவே. அவ்வாறிருக்கச் சிலர் செல்வக்கடலில் திளைத்துச் செருக்கி, உண்ணும் உணவு சமிக்கப்பெறாது புளியேப்பம் விடுகிறார்கள். பலர் வறுமையென்னும் அல்லற் கடலில் துடித்துத் துடித்துக் கொதிக்கிறார்கள். மக்களனைவருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை. அடிமையென்றும் ஆண்டியென்றும் இகழும் நிலையிலுள்ள சமூக அமைப்பை மாற்றுவோம். தனியொருவனுக் குணவில்லையெனில் சகத்தினை அழிப்போம். மக்கள் சிலர் இரந்துண்டும் உயிர் வாழவேண்டும் என்ற கொள்கையோடு இறைவன் அவர்களைப் படைத்தானாயின் அவ்விறைவனே கெட்டொழிந்து போகக் கடவன். நண்பர்களே! நமது குறைகளை அரசாங்கத்துக்கு முறையிடுவோம். எங்கள் சமூகத்தின் சார்பாகப் பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதியையாவது நியமிக்க வேண்டுமென்று பிரதம மந்திரியை வற்புறுத்துவோம். நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று முழங்குங்கள்’ என்று கூறிக் கைகளை ஒன்றோடொன்று புடைத்து 'ஜே.ஜே’ என்று உரக்கக் கூவினான்.
அப்போது மடத்திற் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் சிரித்துச் சத்தமிட்டெழுப்பியபோதுதான் அந்தப் பிச்சைக்காரன் மடத்தின் தாழ்வாரத்தில் அந்த வெயில் கொளுத்தும் உச்சி வேளையிற் கிடப்பதையும் தான் கண்டது கனவென்பதையும் உணர்ந்தான்.

Page 96
186 தமிழ் மரபு
பயிற்சி பின்வருவனவற்றைப் பற்றிக்கற்பனைக்கட்டுரை வரைக. 1. இன்று ஹிற்லர்இருந்திருந்தால். so-ooooooo........' 2. "எனக்கு ஒர்இலட்சரூபாகிடைத்தால். LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL p 3. இலங்கையின்வடபாகத்திற்கு மகாவலிகங்கை
திருப்பப்பட்டால். 4. 'எனக்குக் கூடுவிட்டுக்கூடுபாயும்ஆற்றல் இருந்தால். oooooo...'
"மலாகிாவை ஆங்கிலேயர்திரும்பவும் கைப்பற்றாதிருந்தால். 6. இலங்கை இன்று டச்சுக்காரர்ஆட்சியில் இருந்தால்.
இலங்கையின் அரசமொழிசிங்களமேயானால். Op. p 8. 'எனக்கு விமானம் ஓட்டத் தெரிந்திருந்தால். p 9. நான்பாராளுமன்றப்பிரதிநிதியாகத் தெரிவு
செய்யப்பட்டால். 9
10. நான்ஒரு பெரிய விஞ்ஞானியானால். O OG O O OG O GO O O O O O 11. 'பாரதியார்இன்றிருந்தால். 12. "காந்தியடிகள்இலங்கையில் பிறந்திருந்தால். d) { { O 0 0 0 0 0 0 13. நான் இந்நாட்டின் பிரதம மந்திரியானால். p 14. நான்ஒர்ஆசிரியரானால். y 15. நான்திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டால். 920 POP, POOOOp هه• • * 16. “9. tới. 2000......................
17. நான் ஒரு கவிஞனானால். a
4. சுருக்கமெழுதல்
ஒரு விரிந்த கட்டுரையையோ பரந்த பேச்சையோ சுருக்கி வரையப் பழகுதல் எல்லோர்க்கும் இன்றியமையாதது. சுருக்கம் எழுதுவோர் தெளிவாகவும் தொடர்பாகவும் நிறைவாகவும் கருத்துக்களைத் தொகுக்கக் கற்றுக் கொள்ளல் வேண்டும்.
எழுதத் தொடங்குமுன் கொடுக்கப்பட்ட பகுதியை நன்கு பல முறை வாசிக்கவேண்டும். விளக்கம் தெளிவாக ஏற்பட்டபின் அப்பகுதியிலுள்ள பிரதான கருத்துக்களைக் குறித்துக் கொள்ளவேண்டும். வேண்டாத பகுதிகளையும், விரித்து விளக்கிக் கூறும் பகுதிகளையும் விலக்கி விடல்

கட்டுரை மரபு 187
வேண்டும். பழமொழிகள், உவமைகள், மேற்கோட் செய்யுள்கள், உதாரணங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளக்கூடாது. கட்டுரைப்பகுதி தன்மை முன்னிலை வாக்கியங்களில் அமைந்திருந்தால் நாம் அவற்றை அவ்வாறே சுருக்கத்திலும் கொடுக்காமல், படர்க்கை வாக்கியமாக எழுதல் வேண்டும். பலபந்திகளாக அமைந்தவற்றை ஒரு பந்தியிற் சுருக்கிக் கூறல் வேண்டும். சுருக்கத்தின் அளவு கொடுக்கப்பட்ட உரைப்பகுதியில் மூன்றில் ஒன்றாக அல்லது கேட்கப்பட்ட அளவாக அமையவேண்டும்.
சுருக்கம் எழுதத் தொடங்குமுன் கருத்துக்களை வரைவு செய்து கொள்ளவேண்டும். கட்டுரைப் பந்தியில் உள்ள சொற்களைப் பிரயோகிக்காமல் தமது சொந்த நடையில் எழுதல் வேண்டும். முதலிலிருந்து முடிவுவரை கருத்தொழுங்கும், தெளிவும், நிறைவும் அமைந்திருக்கின்றனவா என்பதைப் பன்முறையும் வாசித்துத் தெரிந்து கொள்ளல் வேண்டும். நிழற்படத்திற் பெரிய அமைப்பிற்கும் சிறிய அமைப்பிற்கும் உள்ள தொடர்புபோல உரைப்பகுதிக்கும் சுருக்கத்திற்குமுள்ள தொடர்பு விளங்கவேண்டும். சுருக்கத்தின் பொருளமைதி ஒன்று குறையின் அது குன்றக் கூறலாயும், விரிந்திருப்பின்
மிகைபடலாயும் குற்றப்படும். சுருக்கம் திட்பமும் நுட்பமும் செறிந்திலங்கவேண்டும்.
எடுத்துக்காட்டு:
ஆலய வழிபாட்டின் வளர்ச்சி
எளிய வாழ்க்கையினர் மரத்து நிழல்களிற் கூடி இறைவனை வழிபட்டனர். ஆதிமுறை அதுவேயாம் என்பதற்குச் சான்றாக ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு மரம் சிறந்ததாகப் பேசப்படுகிறது. திருநெல்வேலியில் மூங்கில் வனமும், மதுரையில் கடம்பவனமும், சிதம்பரத்தில் தில்லைவனமும், மயிலையில் புன்னைவனமும் ஆதியில் வழிபடும் இடங்களாயிருந்தன. முதலில் கல்நாட்டி அதில் தெய்வங்களையும் வீரர்களையும் வழிபடுதல் வழக்கமாய் இருந்தது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய சங்க நூல்களில் கல் நடுதலும் அதை வழிபடுதலும் திருவிழாக் கொண்டாடுதலும் குறிப்பிடப்பட்டன. அத்தகைய வழிபாடு பாலஸ்தீன், கிரீஸ் முதலிய நாடுகளிலும் ஏற்பட்டிருந்தது. பைபிளில் யாக்கோபு என்பவன் காட்டு வழியிற் செல்லும்போது தான் தெய்வக்கனவு கண்ட இடத்தில் ஒரு கல்லை நட்டு அதற்குக் கடவுள் வீடு என்று பேர் கொடுத்து அதன் மீது எண்ணெய் சொரிந்தானென்று கூறப்பட்டுள்ளது. தெய்வக் கல்லின்மீது வெயில் மழை படாதபடி கொட்டகைள் போட்டு, வழிபடுவோருக்கும் சுற்றி வருதற்கு

Page 97
188 5L6 LDUL
இடம் அமைத்தபோது மலையாளத்து அம்பலம் போன்ற கோயில்கள் அமைந்திருக்க வேண்டும். தில்லையிலுள்ள கனகசபையில் அத்தகைய கோயில் அமைப்பே காணப்படும். அம்பலம், மன்றம் என்ற சொற்கள் பலர் கூடுமிடத்தைக் குறிப்பன. ஆதியில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் மலையாளத்திற்போலத் தனித்தனி கோயில்கள் இருந்தனவாகத் தெரிகிறது. கட்டட அமைப்பு முறைகளை மக்கள் விருத்தி செய்தபோது பல சிறு கோயில்கள் அடங்கிய பெருங்கோயில்கள் கட்டும் வழக்கம் ஏற்பட்டது. கற்சிற்பம் விருத்தியடைந்தபோது ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனி வடிவங்கள் செவ்வையாக அமைக்கப்பட்டன.
--திருகா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள்
ஆலய வழிபாட்டின் வளர்ச்சி
ஆதியில் மரநிழல்களே வழிபாடு செய்யும் இடங்களாய் இருந்தன. இன்று உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம் சிறந்ததெனக் கூறுதற்குக் காரணம் இதுவே. மரநிழல்களில் கற்களை நாட்டி வழிபடும் வழக்கம் பின் ஏற்படலாயிற்று. வழிபாட்டிற்குரிய கற்களில் வெயில் மழைபடாவண்ணம் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. கொட்டகையின் உள்ளிடம் பலரும் கூடத்தக்கபரப்புடையதாய் இருந்தது. கொட்டகைகள் மாறி ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனி கோயில்கள் எழுந்தன. தனிக்கோயில் பலவற்றையடக்கி, இக்காலத்துள்ளனபோன்ற பெரிய கோயில்கள் பின்தோன்றின.
சுருக்கமெழுதுமுன் உரைப்பகுதியின் பிரதான குறிப்புக்களைத் தொகுக்கப் பயிலுக. அதற்குத் துணையாகச் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன.
1.
இனி, நிலத்தைப் பண்படுத்தி விளைத்த பயிரைப் பாதுகாக்கும் மக்களின் முயற்சி இல்லையானால், உணவுப் பொருளைத் தரும் மரஞ்செடி கொடிகளும் பயிர்களுந் தாமாகவே வளர்ந்து நிலையாகப் பயன்தரமாட்டா. இதனாலன்றோ நாகரிகமும் மக்கட்டொகுதியும் மிகுந்த இக்காலத்திலும்கூட எத்தனையோ ஆயிரங்காத இடங்கள் வெட்ட வெளியாய்ப் பயிர்ப்பச்சைகளின்றி வெறுமையாய்க் கிடக்கின்றன. அங்ங்னமாயின் அகல நீளத்தில் மிகப்பெரிய பெரிய மரக்காடுகள் மக்கள் முயற்சியின்றி யாங்ங்னம் உண்டாயினவென்றாம், மரமடர்ந்த காடுகள் பெரும்பாலும் மலைகளிலும் மலைசூழ்ந்த இடங்களிலும் பெரும்

கட்டுரை மரபு 189
பள்ளத்தாக்குகளிலுமே உண்டாகின்றன. அஃது எந்த ஏதுவினாலென்று ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள், மலைசூழ்ந்த இடங்கள் கொடுங் காற்றுக்கும் கடும் பனிக்குஞ் சூடு வெயிலுக்குந்தப்பிக் கதகதப்பாய்ப் பயிர் வளர்ச்சிக்கும் இசைந்தனவாய் இருத்தலின் அவை அவ்விடங்களிற் செழுமையாக வளர்கின்றவென்று முடிவு கூறுகின்றார்கள். பெரும் பள்ளத்தாக்கான இடங்களும் அங்ங்னமே பெருங்காற்று முதலியனவற்றைத் தடுத்து உள்ளே சிறிது அழன்றிருத்தலின் அவையுங் காடுகள் உண்டாவதற்கு ஏற்றனவாய் இருக்கின்றன. மற்று மலையடுத்திராத வெட்ட வெளியான நிலங்களோ காற்று வெயில் முதலியன கடுமையாய்ப் படுவதற்கு இடமாயிருத்தலால், அங்கே மக்களுடைய முயற்சியின்றிப் பயிர்கள் தாமாகவே விளையமாட்டா. மக்களோ மண்வெட்டி கலப்பை கடப்பாரை முதலான கருவிகொண்டு மண்ணை ஆழமாகக் கிளறி அதனைக் கீழ் மேலாகப்புரட்டிக் காயவைத்து உரம் ஏற்றிச் சூழமதில் எடுத்தேனும், வேலி கட்டியேனும், வரப்பு உயர்த்தியேனும் பணி, காற்று, விலங்கினங்களை இயன்றவரையிற் றடைசெய்து கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வருதலின் உணவுப் பயிர்கள் செவ்வையாக வளர்ந்து ஏராளமான பயனைத் தருகின்றன. எனவே உணவுப் பொருள்களை நிரம்பப் பெற்று எல்லாரும் இனிது வாழ்வதற்கு உழவுத் தொழிலும் அதனைச் செவ்வையாகச் செய்வோர் தொகையும் மிகுதியாக வேண்டப்படுமென்பதுதானே பெறப்படும்.
- மறைமலையடிகள்
சுருக்கக் குறிப்புகள் 1. மக்களின் முயற்சியில்லையானால் தாவரங்கள் வளர்தலும் பயன்
தருதலும் சாலா. 2. மக்கள் முயற்சியில்லாத மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இயற்கையின் பாதுகாப்பு இருப்பதனால் தாவரங்கள் வளர்ந்து பயன் தருகின்றன. 3. பரந்த வெளியிடங்களில் மக்களின் முயற்சி பெரிதும் வேண்டப்
படுகிறது. 4. எவ்வளவுக்கெவ்வளவு உழவோர் தொகையதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவுமுட்டுப்பாடில்லாத இன்ப வாழ்வு பெருகும்.
2 ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய சாதனம் பலாத்காரமாகும். ஆரிய நாகரிகமே வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வர்ணப் பிரிவினை, நாகரிகமென்னும் உச்சிக்கு ஜனங்களை அழைத்துச் செல்லும்

Page 98
190 தமிழ் மரபு
படிக்கட்டாகும். ஒருவனுடைய கல்வியும், அறிவுப் பயிற்சியும் அதிகமாக ஆக, அவன் அந்தப் படிக்கட்டின் மூலமாய் மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான். ஐரோப்பிய நாகரிகத்தில் பலசாலிகளுக்கே வெற்றி, பலவீனர்கள் அழிந்துபோக வேண்டியதுதான். ஆனால் பாரத தேசத்திலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டதாகும்.
சாதி என்பது நல்ல ஏற்பாடுதான். ஆனால் உண்மையில் சாதி என்றால் என்னவென்று இலட்சத்தில் ஒருவர்கூட அறிந்துகொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத தேசமே இல்லை. இந்தியாவில் நாம் சாதி என்னும் கீழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல்நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்தத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில், பிராமணன் மக்கட் குலத்தின் இலக்கியமானவன். ஒவ்வொருவனையும் பிராமணனாக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய சரித்திரத்தைப் படித்தால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதைக் காண்பீர்கள். பல வகுப்புக்கள் கைதுக்கி விடப்பட்டிருக்கின்றன. மற்றும்பல வகுப்புக்களும் மேலே வந்து முடிவில் எல்லாரும் பிராமணர்கள் ஆவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின் நோக்கம். யாரையும் கீழே கொண்டுவராமல் எல்லாரையும் நாம் மேலே தூக்கிவிட வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். ஏனெனில் உயர்குலத்தவரின் கடமை தங்கள் தனி உயர்வுக்குத் தாங்களே குழிதோண்டிக் கொள்ளுதல்; அதாவது மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த்துதலேயாகும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ அவ்வளவுக்கு நன்மை.
-சுவாமி விவேகானந்தர்
சுருக்கக் குறிப்புக்கள் 1. சாதிக்கட்டுப்பாடு மக்களை உயர்த்துவது. 2. ஐரோப்பாவில் உள்ளதைப்போலன்றி பாரத தேசத்தில் சமூக விதி
பலவீனர்களைப் பாதுகாப்பது. 3. சாதியேற்பாட்டினால் ஒவ்வொரு கீழ்சாதியாலும் மேல்சாதி ஆகமுடியும். 4. மேல் வகுப்பார் கீழ் வகுப்பாரைக் கைதுக்கி விடுதலைக் கடமையாக
உடையர்.
5. இவ்வித கடமை உணர்ச்சியால் மக்களிடையே சமத்துவ உணர்ச்சி
விரைவில் ஏற்படும்.

கட்டுரை மரபு 191
3
இவ்வுலகம் தொழில், பிரிவினை என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. ஒருவரிடமே எல்லாப் பொருள்களும் இருக்கும் என்று எண்ணுதல் வீணாகும். எனினும் நாம் எவ்வளவு குழந்தைப் புத்தியுள்ளவர்களாயிருக்கிறோம்? குழந்தை தன் அறியாமையால் இப்புவியில் விரும்பத்தக்க பொருள் தன்னிடம் உள்ள பொம்மை ஒன்றே எனக் கருதுகிறது. அவ்வாறே இவ்வுலக அதிகாரம் மிகப்படைத்த ஒரு தேசத்தார் அவ்வதிகாரம் ஒன்றே விரும்பத்தக்க பொருளென்றும் முன்னேற்றம் நாகரிகம் என்பவை எல்லாம் அதுதானென்றும் கருதுகிறார்கள். அவ்வதிகாரம் பெறாத, அதில் பற்றுமில்லாத வேறுசாதியார் இருப்பின் அவர்கள் உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவர்களென்றும், அவர்களுடைய வாணாள் வீண் என்றும் எண்ணுகிறார்கள்! இதற்கு மாறாக வேறொரு சாதியார் வெறும் உலகாயத நாகரிகம் அணுவளவும் பயனற்றதென்று எண்ணுதல் கூடும். ஒருவன் இவ்வையத்தினுள் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாயினும், பாரமார்த்திகச் செல்வம் மட்டும் பெறாதவனாயின், அவன் பாக்கியம் பெறாதவனே என்னும் வாக்கியம் கீழ் நாட்டில் எழுந்தது. இது கீழ்நாட்டு இயற்கை; முன்னது மேல்நாட்டு இயற்கை. இவ்விரண்டுக்கும் தனித்தனியே மேன்மையும், மகிமையும் உண்டு. இவ்விரண்டு இலட்சியங்களையும் கலந்து சமரசப் படுத்தலே தற்போது செய்யவேண்டிய காரியமாகும். மேனாட்டுப் புலனுலகம் எத்துணையளவு உண்மையோ அத்துணையளவு கீழ்நாட்டுக்கு ஆத்ம உலகம் உண்மையாகும். கீழ்நாட்டானைப் பகற்கனவு காண்பவனென்று மேனாட்டான் எண்ணுகிறான். அவ்வாறே மேனாட் டானைக் கனவு காண்பவனென்றும் இன்றிருந்து நாளை அழியக் கூடிய விளையாட்டுக் கருவிகளைச் சாசுவதமெனக் கருதி விளையாடுபவனென்றும் கீழ்நாட்டான் நினைக்கின்றான். இன்றோ நாளையோ விட்டுப் போகவேண்டிய ஒருபிடி மண்ணுக்காக வயதுவந்த ஸ்திரீ-புருஷர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்களே என்றெண்ணி அவன் நகையாடுகிறான். இவ்விருவரும் ஒருவரையொருவர் கனவு காண்பவரென்று கருதுகிறார்கள். ஆனால் மக்கட் குலத்தின் முன்னேற்றத்துக்கு மேனாட்டு இலட்சியத்தைப் போல் கீழ்நாட்டு இலட்சியமும் அவசியமேயாகும். கீழ்நாட்டு இலட்சியமே அதிக அவசியமானதென்றும் நான் கருதுகிறேன்.
-சுவாமி விவேகானந்தர்
சுருக்கக் குறிப்புக்கள்
1. மேனாட்டார் உலக அதிகாரத்தையே பெரிதாக மதிக்கின்றனர்.
அஃதில்லாரைவாழ்வில்லார்எனக்கருதுவர்.

Page 99
192 தமிழ்மரபு
2. கீழ்நாட்டார்தெய்வானுபாவத்தையே மேலாக மதிப்பர். 3. உலக வாழ்வில் இரண்டும் இன்றியமையாதனவே. 4. கீழ் நாட்டிலட்சியம் மிகமிக அவசியமானது.
4.
எனவே, தமிழ் மாணவர்கள், இன்றியமையாத நூல்களை ஐயம் திரிபுகளின்றித் திருத்தமாகவும் அழுத்தமாகவும் கற்றல் வேண்டும். ஆசிரியர் மாணவர்கள் மனத்தில் அறிவைப் புகுத்திட முடியாது. பிற்காலத்து எப்பொருளையும் எளிதில் கற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு அறிவைப் பண்படுத்தி வளர்த்துக்கொள்வதிலேயே மாணவர் தம் இளமையைக் கழிக்குமாறு செய்தல் வேண்டும். அவர்கள் இலக்கியம், இலக்கணம் முதலிய கலைகளைக் கற்கும்போது, அவ்வக் கருத்துக்கள் அவற்றைப்பற்றி முன்னுணர்ந்துள்ள கருத்துக்களோடு சேர்ந்து ஒற்றுமைப்பட்டு அவ்வக் கலைகளைப் பற்றிய அறிவு வளர்ச்சியுறுகிறது. பலதுளி பெருவெள்ளம் ஆவதுபோல் சிறிது சிறிதாக அறிந்து கொள்ளப்பெறும் கருத்துக்கள் ஒன்றுசேர்ந்தே நிரம்பிய அறிவாகிறது. பழைய கருத்துக்களும் புதிய கருத்துக்களும் ஒன்றுபட்டுத் திருத்தமாகத் தொடர்புறுதலையே அறிவின் வளர்ச்சி பொறுத்திருக்கிறது. ஆதலால் அறிவின் வளர்ச்சிக்கென அமைக்கப்படும் பாடங்கள் பொருள்கள் முதலியவை மாணவர்களின் முன்னறிவோடு ஒன்றுபட வேண்டும். அன்றியும் கற்பிக்கப்படுபவை படிப்படியாகவும் விளக்கமாகவும் அமையவேண்டும். முன் கருத்துக்கள் விளக்கமாக இல்லாதவிடத்து, அவை பின்வருபவற்றோடு நன்கு ஒற்றுமையுறா. இங்ங்ணம் ஒற்றுமையுறாத பொருள்களில் மாணவர்க்குத் கவர்ச்சியிராது. கவர்ச்சியில்லையாயின் உள்ளம் பொருளில் பதியாது. மற்றும் அறிவு வளர்ச்சிக்கு நினைவு ஆற்றல் இன்றியமையாதது. ஆதலின் கற்பிக்கும் பொருள்கள் மறவாமல் இருத்தற்குரிய விதிகளைக் கையாளவேண்டும். கற்கும் பொருள்களில் ஊக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் தன் முயற்சியும் உண்டாகுமாறு மிகுதியாக முயன்று வேலை செய்யும்படி தூண்ட வேண்டும். பொருள்களை அவரவர் நிலைக்கு ஏற்றவாறு நன்கு சிந்திக்கும்படியும், அவற்றுள் ஒற்றுமை வேற்றுமை கண்டு தீர்மானிக்கும்படியும் மாணவரை ஏவி, ஆசிரியர் ஒரு வழிகாட்டியாய் மட்டும் நின்று உதவிபுரிய வேண்டும். காலச் சுருக்கம் கருதி ஆசிரியரே எல்லாவற்றையும் கூறிவிடுதல் கூடாது. தன் முயற்சியின்றிக் கற்பிக்கப்படும் மாணவனுக்கும், உடல் உழைப்பின்றி ஊட்டி வளர்க்கப்படும் ஒருவனுக்கும் வேற்றுமையில்லை. இளமையிலேயே அறிவினால் விளையும் நற்பயன்களை மாணவர் நன்குணருமாறு செய்துவிட்டால், பயன் காணப்படும் பொருள்களில்

கட்டுரை மரபு 193
அவாவும் முயற்சியும் தோன்றிக் காரியவெற்றியாதல் இயல்பன்றோ? இங்ங்னம் மாணவனது அறிவு வளர்ச்சிக்கு உரியன என்று காணக்கிடக்கும் பற்பல முறைகளையும் தமிழாசிரியர்களும் மேற்கொள்ளலாம்.
-திருச. ஆறுமுகமுதலியார்
சுருக்கக் குறிப்புக்கள்
1. மாணவர்கள் தாமாகவே தம் அறிவை வளர்க்க ஆசிரியர் துணை செய்ய
வேண்டும்.
முன் கற்றவற்றிற்கும் பின் கற்றவற்றிற்கும் தொடர்பு செய்தல். கற்பிப்பவற்றைப் படிப்படியாகவும் விளக்கமாகவும் அமைத்தல். நினைவு ஆற்றலை வளர்த்தல். பெற்ற அறிவின் பயனை அனுபவத்திற்காணவைத்தல்.
பயிற்சி 1. பின்வரும் பந்திகளை வாசித்து ஏற்ற தலையங்கம் இடுக. 2. மூன்றில் ஒன்றாகச்சுருக்குக.
1.
மனிதன் அகங்காரத்தினின்றும் நீங்கித் தாழ்ந்து விளங்கினால் உயர்வடைவான். ஆதலின் தல சம்பந்தமான வரலாறுகளில் இந்த நோக்கம் t கைகூடுவதற்குரிய செய்திகள் சிறப்பாகச் சொல்லப் பெற்றன. அறிவாலும், ஆற்றலாலும், செல்வத்தாலும் சிறப்பெய்தினவர்களும் கடவுளை வணங்காமல் அகங்கரித்து அழிந்த வரலாறுகளைப் பல புராணங்கள் கூறுகின்றன. சிறிதும் அறிவில்லாதனவேனும் ஈ எறும்பு முதலியனசுடப் பூர்வ புண்ணிய வசத்தால் இறைவனிடத்து அன்பு பூண்டமையின் அவனருள் பெற்றுச் சிறப்பெய்தின என்று ஈங்கோய்மலை, திருவெறும்பீச்சுரம் முதலிய தலங்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அவ்வரலாறுகளை விளக்குஞ் சின்னங்களும் உள்ளன. இறைவன் திருமுன்னர் அன்பு ஒன்றுதான் மதிக்கப்பெறும் என்பதும், மற்றவையெல்லாம் அங்கே வருவதற்குரியன அல்ல என்பதும் இந்த வரலாறுகளால் தெளிவுறுத்தப்பெறும். இவ்வரலாறுகளைப் பலமுறை படித்து உணர்பவர்கள், இவற்றின் நினைவால் தல வழிபாடு செய்யுமளவேனும் தம் அகங்காரம் மறைந்து நிற்கப் பெறுவர். ஆலய்த்தளவில் உண்டான அந்த நிலை வரவர விரிவு பெறும். உலகம்

Page 100
194 தமிழ் மரபு
முழுவதும் இறைவன் சந்நிதியே என்றும் வரும்போது எப்போதும் அகங்காரம் அடங்கிநிற்கும் நிலை உண்டாகும். இத்தகைய அகண்ட உணர்ச்சிக்குரிய பழக்கம் ஆலய வழிபாட்டிலிருந்து தொடங்குகின்றது. அது முதிர முதிர அவர்கள் ஞானம்பெறுவர்.
-டாக்டர்திருஉ.வே.சாமிநாதையர்
2
மாடுகளைக் கொண்டு எண்ணெய் ஆட்டலாம். ፴፰6) !6õ)@a) இறைக்கலாம். ஆனால், அடிமைகள் ஏராளமாக இருக்கும்பொழுது மாடுகள் எதற்கு? இந்தக் கொடுமைகளை இழைத்தாலும் அவர்களைத் திருத்தும் நோக்கம் இருக்குமானால் பாதகமில்லை. ஆனால் அந்த நோக்கம் மட்டும் கிடையாதென்பது மட்டுமன்று, கைதிகளை எந்த விதத்திலும் திருத்தமுடியாது என்பதே சகல சிறை அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள கொள்கையாகும். கைதிகளுடைய ஆன்மாவை விழிக்கச் செய்யவோ அல்லது அவர்களுடைய உயர்ந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தவோ எவ்வித முயற்சியும் செய்யப்படுவதில்லை. கைதிகளுக்கு ஆன்மாவோ உயர்ந்த உணர்ச்சிகளோ உண்டு என்று யாரும் நம்புவதாகத் தெரியவில்லை. எவ்வளவு குறைவாக உணவு கொடுக்கலாமோ அவ்வளவு குறைவாகக் கொடுத்து எவ்வளவு அதிகமாக வேலை வாங்கலாமோ அவ்வளவு அதிகமாக வாங்கும் சிறைச்சாலையை, அதனாலேதான் அடிமைகளை வைத்து வேலைவாங்கும் ஒரு யந்திரசாலை என்று கூறுகிறேன். அடிமைகளைச் சொந்தமாக வாங்காமல் குறிப்பிட்ட காலத்துக்கு வாடகைக்கே பிடிக்கிறார்கள். அதனாலே தான் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் சிந்திப்பதில்லை. முதலாளியினுடைய க்ஷேமத்துக்கு வேண்டிய அளவு ஆரோக்கியமும் ஒழுக்கமும் இருந்தால் போதும் என்றே எண்ணுகிறார்கள். தவறுகள் செய்தால் தண்டிக்கிறார்களேயன்றித் திருத்துவதில்லை. திருத்தும் வேலை கஷ்டமானது. சீக்கிரமாகவும் பயன் தராது. ஆகவே கைதிகள் அடிமைகளாகவும், அதிகாரிகள் அடிமைகளை வேலை வாங்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் எப்படி அவர்கள் சீர்திருத்தம் அடைய முடியும்?
-திரு. சக்கரவர்த்திஇராஜகோபாலாச்சாரியார்
3
பழமையுலகத்தில் ஒளவையாருக்குத் தனிப்பெருமையுண்டு. "ஒளவை வாக்குத் தெய்வ வாக்கு’ என்று கருதப்பட்டது. ஆதலால் அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்.

கட்டுரை மரபு 195
ஒரு நாள் ஒளவையார் ஒரு சிற்றுாரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து 'அம்மையே, உமது வாக்கால் எம்மையும் பாடுக” என்று வேண்டி நின்றார்கள்.
அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஒளவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகுதூரம், போர்க்களத்தின் அருகே அவர் போனதில்லை. ஈரமும் இரக்கமும் அவர் மனத்தை எட்டிப் பார்த்ததில்லை. அத்தகைய பதடிகள் பாட்டுப்பெற ஆசைப்பட்டது கண்டு ஒளவையார் உள்ளத்துக் குள்ளே நகைத்தார். அருகே நின்ற இருவரையும் குறுநகையுடன் நோக்கிச் செல்வச் சேய்களே! என்பாட்டு வேண்டும் என்று கேட்கிறீர்களே! உம்மை நான் எப்படிப் பாடுவேன்? போர்க்களத்தை நீங்கள் கண்ணாற் கண்டதுண்டா? வறுமை வாய்ப்பட்ட அறிஞர் வாய் விட்டுரைப்பதைச் செவியால் கேட்டதுண்டா? எவரேனும் உம்மால் எள்ளளவும் நன்மை இதுவரை பெற்றதுண்டா? எட்டாத மரத்தில் எட்டிக்காய் பழுத்தாற் போன்றது உம்மிடம் உள்ள செல்வம் என்று வசைபாடி அவ்விடம் விட்டுச் சென்றார். செல்வர் இருவரும் தருக்கிழந்து தாழ்வுற்றார்.
- பேராசிரியர் திரு. ரா. பி. சேதுப்பிள்ளை
4.
கைபுனைந் தியற்றா இயற்கை அழகில் கருத்தைப் பதிய வைத்துள்ள ஒருவன், அதனோடு புணருந்தோறும் அவனுள்ளத்துள் சொலற்கரிய இன்பங் கிளர்ந்தெழும். அவ்வின்பத்தைப் பின் வந்தார் பேரின்பமெனவும் சிற்றின்பமெனவும் பிரித்துக் கூறினார். பண்டை நாளில் இன்பம் இன்பமாகவே பிரிவின்றிக் கிடந்தது. மக்கள் வாழ்வு செயற்கையில் வீழ்ந்தநாள் தொட்டு இன்பம் பேரின்பமெனவும் சிற்றின்பமெனவும் பிரிந்ததுபோலும். பண்டைத் தமிழ் நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றைமட்டும் அறிவுறுத்தலை இன்றுங் காணலாம். மக்கள் செயற்கை வாழ்வில் தலைப்பட்ட நாள்தொட்டு வீட்டின்பம் என ஒரு தனியின்பம் வகுக்கப்பட்டது போலும் முன்னை நாளில் நான்காவதாகிய
வீட்டின்பமெனும் பேரின்பம் மூன்றாவதாகிய இன்பத்தில் அடங்கியிருந்தது. ஆதலால் இயற்கையழகில் தோயும் ஒருவனது உள்ளம் நுகரும் இன்பம் சிற்றின்பமாமோ பேரின்பமாமோ என்று
ஆராயவேண்டியதில்லை. அதை முன்னைய முறைப்படி இன்பமென்று மொழியலாம், பின்னைய வழக்குப்படி பேரின்பமெனச் சொல்லலாம். அவ்வின்பத்துக்கு ஒப்பாகவாதல் உயர்வாகவாதல் வேறோரின்பமுளதோ? அவ்வின்பத்தையன்றோ வன்றொண்டர் நுகர்ந்தார் மாணிக்கவாசகர் பருகினார். سب--
-திருவி. கலியாணசுந்தரனார்

Page 101
196 தமிழ் மரபு
5
மறவினை நிகழ்த்தி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, அதன் பயனாகத் துன்பத்தில் இடர்படுதலினின்றும் விடுதலையடைய விரும்பாத மக்களில்லை. ஆனால் விருப்பத்தை வினையிலாற்றி முடிவுகாண மக்கள் பெரிதும் முயல்கிறார்களில்லை. துன்பம் மிக மிக, மக்கள் முயற்சியில் தலைப்படுவார்கள். "அந்தோ! அறியாமையால் இவ்வினை புரிந்தோம்; அதன் பயனாக இத்துன்பம் நிகழ்ந்தது; நாம் ஏன் மறவினை நிகழ்த்தல் வேண்டும்? ஏன் இயற்கைக்கு மாறுபட்டு நடத்தல் வேண்டும்?' என்று கடந்த நிகழ்ச்சிகள் மீது மக்கட்குக் கழிவிரக்கந் தோன்றும். இத்தோற்றுவாயே விடுதலைக்குத் திறவு தேடுவதாகும். முன்னே நிகழ்த்திய பிழை குறித்து வருந்த வருந்த மகனுக்கு அழுகை பெருகும். உண்மையாக வருந்தி அழும் ஒருவன் மீண்டும் பழம் பிழையைப் புதுக்க எண்ணுவனோ? மகனது உண்மை அழுகையைக் கண்டு, அன்னையினுஞ் சிறந்த ஆண்டவன் வாளா கிடப்பனோ? ஆண்டவன் திருவருள், மகன் துன்பந் தீர்க்கும் மருந்தாகும். துன்பத்தில் வீழ்ந்து இடர்ப்பட்ட மகன் ஆண்டவன் திருவருளை எப்படிப் பற்றிக்கொள்வான் என்று சொல்லவேண்டுவதில்லை. கடலில் அமிழும் ஒருவனுக்குத் தோணி கிட்டினால், அவன் எத்தகைய மகிழ்வெய்துவன்? அதனிலும் பன்மடங்கு மகிழ்ச்சி, பிறவிக்கடலில் அமிழும் மகனுக்குத் திருவருள் தெப்பம் கிடைக்கும்போது உண்டாகுமன்றோ? பின்னை, மகன் அப்பனைப் பிடித்து இன்பக்கரை நண்ணுவன். ஆதலால் தாங்கள் நிகழ்த்திய பிழையைப் பொறுத்தருளுமாறும், இனிக்குற்றம் தங்கள்பால் நிகழாதவாறு தங்களைக் காத்துக்கொள்ளும் ஆற்றல் தங்கட்கு அருளுமாறும் மக்கள் அருட்கடவுளை நோக்கி, வருந்தி வருந்திக் கசிந்து கசிந்துருகிக் கண்ணிர் விட்டழும் அழுகை, அவர்கட்கு உய்யுநெறி காட்டுமென்க. இத்திருவருள் நெறியை உலகுக்கு அறிவுறுத்திய கிறிஸ்து, மாணிக்கவாசகனார் முதலிய பெரியோர்களை ஈண்டு வணங்குகிறேன்.
-திரு. வி. கலியாணசுந்தரனார்
6
மனிதனுக்கு உணவும் வேண்டும் அதை வைத்துண்ணப் பாத்திரங்களும் வேண்டுமென்பதை நான் நன்றாக அறிவேன். ஆனால் ஆகாரமே குறையுமிடத்தில் பாத்திரம் வாங்குவதிலே அதிக பணம் செலவிடக்கூடாது. பாரததேச முழுமைக்கும் அறிவாகிய உணவு இனாமாகக் கொடுக்கும் அன்ன சத்திரங்கள் ஸ்தாபனமான பிறகு அதனை வைத்துண்ண நாம் தங்கத் தாம்பாளம் வேண்டுமென்று பிரார்த்தனை பண்ணலாம். நாம் ஏழ்மைக்கிரைப்பட்டு நிற்கையிலே, கல்விக்குரிய

கட்டுரை மரபு 197
உபகராங்களை அதிக செலவுக்கு இடமாக்குதல், ஒருவன் தன் பணம் முழுவதையும் கொடுத்துப் பணப்பையை விலைக்கு வாங்கும் மடமை போலாகும். முற்றத்திற் பாய்களை விரித்து நம்முடைய ஜனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நமது பெருஞ் செல்வர் வீட்டுக்கு விருந்துகளுக்குக்கூட வாழையிலை போதும். நாம் முடிவணங்கும் நமது தேசத்து மகான்களிலே பலர் குடிசைகளிற் பிறந்து வளர்ந்தோர். ஆதலால், லசுஷ்மியிடம் வாங்கின இரவற்கோலங்களால் சரஸ்வதி கோயிலை அலங்காரம் செய்தாலொழிய நிறைவுண்டாகாதென்ற கொள்கையை நமது நாட்டில் யாரும் ஏர்றுக்கொள்ளமாட்டார்கள்.
--திரு. பெ. தூரன்
7
நோக்கமும் கொள்கையும் மக்கள் வாழ்க்கைக்காக - மக்களுக்காக ஏற்பட்டவைகளே. மதமும் மொழியும் அப்படியே மக்களின் நன்மைக்காக ஏற்பட்டவைகளே. ஆனால், இன்று இந்தியா முழுவதும் நான் காணும் காட்சி மதத்துக்காக, மொழிக்காக, நோக்கத்துக்காக, கொள்கைக்காக என்று இப்படிப்பட்ட காரணங்களுக்காக, மக்கள் சாகின்றார்கள்; வதைக்கின்றார்கள்; அஞ்சுகின்றார்கள்; அலைகின்றார்கள்; ஒருவரை ஒருவர் பகைக்கின்றார்கள். பட்டுப்பூச்சி தானே நூல் உண்டாக்கித் தன்னையே சுற்றிக்கொண்டு தானே ஏற்படுத்திய அந்த வலைக்குள் தானே கிடந்து வருந்துகின்றதல்லவா? மனிதனும் அப்படியே தன் மூளையைக் கொண்டு தானே ஏற்படுத்திக் கொள்கின்ற கொள்கை வலைக்குள் தானே அகப்பட்டு அழிகின்றான். இன்று உலகத்தில் மக்கள் படும் தொல்லைக்குக் காரணம் என்ன? பூனைகளோ அல்லது புலிகளோ மாநாடு கூடி மக்களைக் கெடுக்க செய்த சூழ்ச்சியா இது? அல்லது கழுகுகளும் புழுக்களும் பிணங்கள் போதாத குறையையுணர்ந்து பிணங்களைப் பெருக்குவதற்காக ஏற்படுத்திய போர்களா இக்காலத்துப் போர்கள்? எந்த விலங்கும் எந்தப் பறவையும் எத்தகைய சூழ்ச்சியும் செய்து மனிதனைக் கெடுக்க முயலவில்லை. மனிதன் மூளையில் தோன்றிய சில தவறான எண்ணங்களுக்கு மனிதன் அடிமையாகி அழிந்துபோகிறான். வாழ்வுக்காகக் கண்டான் கொள்கைகளை. நாளடைவில் கொள்கைகளுக்காக வாழ்வைப் பலிகொடுக்கிறான். அரசியல் கொள்கை வலுக்கின்றது. மதம் ஆகின்றது; எதிர்க்கட்சிகளை வளர்க்கின்றது; எதிர்பாராத போர்களை உண்டாக்குகின்றது; ஒன்றும் அறியாத பாமர மக்கள் படமுடியாத துன்பங்களைப் பட்டு வருந்துகிறார்கள். உயர்ந்த நோக்கந்தான். ஆனால், ஓயாத தொல்லையாக மூள்கின்றது. காரணம் இல்லாமல் ஏழைமக்கள் துன்பங்களுக்கு ஆஜ:இதழ்ச்சங்

Page 102
198 தமிழ்மரபு
உலகத் தலைவர்கள் நெஞ்சம் கலங்குகின்றார்கள். மெல்ல மெல்ல உண்மையை உணர்த்தி உதவ முயல்கின்றார்கள். கொள்கையை விட உயர்ந்த நோக்கத்தை விடப் பொதுமக்களின் உயிர் வாழ்க்கை விலையுயர்ந்தது என்பதைத் தெளியச் செய்கின்றார்கள்.
-டாக்டர்திரு. மு.வரதராசனார்
8
புறநானூறு என்பது சங்கப் புலவர்களால் அருளிச் செய்யப்பட்ட எட்டுத் தொகையுள் ஒன்று. பாரதம்பாடிய பெருந்தேவனார் முதல் கோவூர் கிழார் இறுதியாக உள்ள புலவர் பலராற் பாடப்பெற்ற நானூறு அகவற்பாக்களை உடையது. இதிலுள்ள பாக்கள் எல்லாம் தமிழுக்கே உரிய அகம், புறம் என்னும் பொருளிலக்கண வகையில் புறப் பொருளிலக்கணத்தில் திணை துறைகளுக்கு இலக்கியமாக உள்ளவை. இந்நூற் செய்யுட்களிலிருந்து பழைய நாளில் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சிய முடியுடைத் தமிழ் வேந்தராகிய சேர சோழ பாண்டியர்களில் பலருடைய வரலாறுகளையும் அறிந்து கொள்ளலாகும். மற்றும் அரசரொழுக்கம், ஒற்றுமை, அன்பு, அருள், துறவு, வாய்மை, தவம், கற்பு முதலிய எண்ணிறந்த அறங்களும், பண்புகளும் இவற்றிடை நன்கு விளங்கிக் கிடக்கின்றன. தமிழரின் வரலாறுகளையும், பழம் பெருமைகளையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ளுதற்குச் சிறந்த கருவியாகவுள்ள நூல்கள் எல்லாவற்றிலும் இது முதன்மையானது. இதனைப் பாடிய புலவர்களில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், எயினர், பொற்கொல்லர், நாகர், கூத்தர், பாணர் முதலிய பல வகுப்பினரும் இருக்கின்றனர்; பாடிய பெண்பாலாரும் பலராவர். தமிழ் மக்கள் இதனைப் படித்தலால், உயர்ந்த எண்ணங்களும் ஊக்கமும் உடையவர்களாவார்கள் என்பதில் ஐயமில்லை. முதற்கண் இதிலுள்ள அரசாங்க ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் பகுதிகளை எடுத்துக்காட்டுதும்; அரசர்பால் அமைந்துள்ள ஒழுக்கங்களைப் புலவர்கள் எடுத்துரைப்பனவும், அரசர்க்கு அவர்கள் அறிவுறுத்துவனவும், அரசர்கள் தாங்களே கூறுவனவும் ஆகிய மூன்று வகையால் அரசாட்சி முறைகள் புலப்படுகின்றன.
-பேராசிரியர்திரு.ந.மு. வேங்கடசாமிநாட்டார்
9
நம்முடைய தேசத்தாருள்ளே கடன்படும் வழக்கம் மிகப் பெரிது. கடன்படாதவர் நூற்றுவருள்ளே ஒருவர் கிடைப்பதும் மிக அரிது. அநேகர், சுபாசுப கருமங்களிலே பிறர் செலவு செய்வதைப் பார்த்து, தாங்களும்

கட்டுரை மரபு 199
அப்படியே செலவு செய்யாதொழிந்தால் தங்களுக்கு அவமானமாகும் என்று எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு, அகப்படுமட்டும் கடன்பட்டுச் செலவு செய்கின்றார்கள். கடன்பட்டு வட்டி வளர்ந்தபின் முன்னுள்ளதும் இழந்து பசிநோயால் வருந்துதலும் கடனைத் தீர்க்க இயலாது தனிகர் குடியைக் கெடுத்தலும் அவமானமல்லவாம்; வரவுக்கேற்ப மட்டாகச் செலவு செய்து முட்டின்றி வாழ்தல் அவமானமாம். ஐயையோ! இவர்கள் அறியாமை இருந்தபடி என்னை நம்முடைய தேசத்தார்கள் சுபாசுப கருமங்களிலே செலவிடும் பொருள் பெரும்பாலும் யாவரிடத்தே சேர்கின்றது? தொழில் செய்து ஜீவனஞ் செய்யச் சக்தியுடையவர்களாய் இருந்தும்அது செய்யாத சோம்பேறிகளிடத்தன்றோ? யாசித்துப் பொருள் சம்பாதிக்கும் இச்சோம்பேறிகளுள்ளே அநேகர் உண்டுடுத்து எஞ்சிய பொருள் கொண்டு ஆபரணம் செய்வித்து, வீடுகட்டுவித்து, விளை நிலம் தோட்டம் முதலியவை வாங்கி, நூற்றுக்கு இரண்டு மூன்று வீதம் வட்டிக்குக் கொடுத்துக் கொண்டு செல்வர்களாய் இருக்கின்றார்களே. தொழில் செய்து வருந்திச் சம்பாதிப்பவர்களுள்ளே, அநேகர் சுபாசுப கருமங்களிலே இவர்களிடத்திலே கடன்பட்டு, இவர்களுக்கே இறைத்துவிட்டு, வட்டி வளர்ந்தபின், இவர்கள் தங்கள் வீட்டு வாயிலில் வந்து சிறிதும் கண்ணோட்டமின்றித் தங்கள் வாயில் வந்தபடி பேச, அவமானமடைந்து, தங்கள் தாவர சங்கமப்பொருளை விற்றுக் கொடுத்துவிட்டு அன்னத்திற்கு அலைகின்றார்களே.
-யூரீலயூரீஆறுமுகநாவலர்
1 O
பழவினையாலும் காரணங்களினாலும், வியாதி உண்டாகும்போது, அவ்வியாதி நீக்கத்தின் பொருட்டுச் செய்யத்தகுவது இது, செய்யத்தகாதது இது என்று அறிந்து கொள்வது யாவருக்கும் ஆவசியகம். வியாதி உண்டாகுங் காலங்களிலே, நோயாளி தன்மனமும் சரீரமுமாகிய இரண்டும் ஒருங்கு ஆறியிருக்கும் பொருட்டு, சரீர முயற்சிகளையும் விட்டுவிட வேண்டும். நோயாளி, கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்தவனாயும் ஈசுர பத்தியும் குரு பத்தியும் அடியார் பத்தியும் உடையவனாயும், வைத்திய சாத்திரங்களைச் சந்தேக விபரீதமறக் குருமுகமாகக் கற்றறிந்தவனாயும், மிகுந்த புத்தி நுட்பமுடையவனாயும், ஒளஷதங்களைக் கைபாகஞ் செய்பாகந் தவறாமற் செய்து முடித்தலிலும் பல வியாதிகளைத் தீர்த்தலிலும் அதிசமர்த்தனாயும் உள்ள வைத்தியனைக் கொண்டு வைத்தியஞ் செய்வித்தல் வேண்டும். நோயாளி, தான் இராஜாவேயாயினும், வைத்தியனிடத்து மெய்யன்பு வைத்து அவனை உபசாரத்துடன் அழைப்பித்து ஆசனத்திருத்தி, தனது நோய்நிலையை

Page 103
200 தமிழ் மரபு
உள்ளபடி அறிவித்து, ஒளஷதத்துக்கு வேண்டுந் திரவியங்களைக் கொடுத்து, அவன் கொடுக்கும் ஒளஷதத்தை இரண்டு கையினாலும் வாங்கிக்கொண்டும், சிரத்தையோடும் உண்ணல் வேண்டும். ஒளஷதத்தினால் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும். வைத்தியனால் விதிக்கப்பட்ட பத்தியங்களைக் கொள்ளல் வேண்டும்; விலக்கப்பட்ட அபத்தியங்களை முழுதுந் தள்ளல் வேண்டும். கண்ட கண்ட, ஒளஷதங்களை உண்ணலாகாது. ஒளஷதம் உண்டலினாலே தனக்கு உண்டாகும் குணாகுணங்களை வைத்தியனுக்கு உண்மையாகச் சொல்லவேண்டும். பூர்வ கர்மத்தினால் வியாதி சம்பவித்தபோது, அந்தக் கர்மத்தை விதிப்படி அன்போடு செய்யப்படும் பதிபுண்ணியத்தினாலே நிவர்த்தி செய்து கொள்ளல் வேண்டும்.
-பூரிலயூரீஆறுமுகநாவலர்
11
தெய்வம், குரு, அரசன் என்னும் இவர் முன்செல்வோர், அவர்களுடைய அருளை விரும்பித் தம்மால் இயன்றது ஒன்றைக் கொண்டு போய்க் கொடுத்துக் காண்பது வழக்கம். ஆகையால் கண்ணபிரான் முன்செல்லும்போது யானும் கையுறை கொண்டுபோதல் வேண்டும். மிகுந்த வறுமையுள்ளோர் செல்வ்ர்முன் போனால் மதிக்கப்படமாட்டார்கள். குற்றம் சுமத்தி அவமானஞ் செய்வார்கள். மானமுள்ளோர் அவ்வவமானத்தால் உயிர் விடவும் நினைப்பர். ஆகையால் செல்வர்பால் வறியோர் போவது நன்றென்று நினையாதே; வறியாரைப் பூமியில் எவரும் இகழ்வர் என்று பெரியோர் கூறுவது உண்மை. வறியாரை மனைவியும் வெறுப்பாள்; தாய் தந்தையரும் வெறுப்பார்; சுற்றமும் வெறுக்கும் என்றால் பிறர் வெறுப்பர் என்பது சொல்லவும் வேண்டுமா? இவ்வாறு இவன் சொல்வது என்னை என்று மனத்தில் எண்ணாதே. மனுஷர் தன்மை இது என்று சொன்னேனன்றிப் பரம்பொருளும் வேதத்தலைவருமாகிய கண்ணபிரான்பாற் போவது தகுதி அன்றென்று மறுத்தேன் அல்லேன். கண்ணபிரான்பால் கையுறை இல்லாமல் யான் எப்படிப் போவேன். கடவுளுக்கு யான் மலைத்துணையாகக் கொடுக்கவேண்டியதில்லை. பெண்கள் சந்திரனுக்குத் தாம் உடுத்த வஸ்திரத்தில் ஒரிழையைப் பறித்து இட்டு வணங்கி, வேண்டியதைப் பெறுதல்போல, நானும் கண்ணபிரானாகிய கடவுளுக்குக் கொடுக்கும்படி யாதாயினும் ஒரு கையுறை கொண்டு போதல் வேண்டுமென்பர். இப்படிச் சொல்லிய நாயகனுடைய வார்த்தையைக் கேட்டு மகிழ்ந்து சுசீலையானவள், அன்று முதல் தான் உண்ணாமல் இருந்துகொண்டு, நாயகன் அரிதாகத் தேடித் தரும் தானியத்தில் தனக்குரிய பாகத்தை வேறாக எடுத்துச் சேர்த்து வைத்து வந்தாள். பின் போதிய

கட்டுரை LDUL 201
தானியஞ் சேர்ந்தவுடன் அவற்றை எடுத்து நீரில் நனையவைத்து வறுத்துக் குற்றி, அவலாக்கி முனிவருடைய கந்தைத் துணி ஒன்றில் முடிந்து, முனிவர் முன்னிலையிற் கொண்டுபோய் வைத்து வணங்கி, "என் அருமை நாதரே! இனிக் கண்ணபிரான்பாற் போய் வருக" என்றாள். முனிவரும் வழி விசாரித்துக் கண்ணபிரான்பாற் செல்வாராயினர்.
- மகாவித்துவான்திரு. சி. கணேசையர்
12
சூசையப்பரின் வரலாற்றுடன் வேறு செய்திகள் இணைக்கப்பெறும் முறை குறிக்கற்பாலது. எடுத்துக்காட்டாக வளன் எனும் சூசை யூதேயாவின் அரசகுலத்தில் பிறந்தவர். அவ்வரசகுலம் தாவீது அரசனைக் குலத் தலைவனாகக் கொண்டது. எனவே சூசையின் குலத்தைப் பற்றிக் கூறும் புலவர் தாவீதின் அருஞ் செயல்களையும் வரைகின்றார். இவ்வாறு விவிலிய நூலிலிருந்து நூற்றைம்பது பகுதிகள் இக்காப்பியத்தில் இடம் பெறலாயின. மேலும், கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றுக் குறிப்புகளை எதிர்கால முன்வாக்குப்போல் நூலாசிரியர் கூறலானார். யேசுநாதர் தம் தாய் தந்தையரோடு வாழும்பொழுது தம் இல்லத்தைப் பிற்காலத்தில் வானோர் இத்தாலி நாட்டுக்கு எடுத்துச் செல்வரென்றும், ஆங்கு லொறெத்தோ நகரில் எந்நாளும் பெருஞ்செல்வமாய்க் காப்பாற்றப்படுமென்றும் கூறும் இடம் சிறப்புடையது. தேம்பாவணி கிறீஸ்தவ நீதிநூலாகவும் விளங்குகின்றது. இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லற துறவறங்களின் முதன்மை, தொழிலின் மாண்பு, வறுமையின் சிறப்பு, கற்பின் தலைமை, கடவுளின் இலக்கணம், வானோரின் உயர்வு, நரகரின் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் அருமை, காமத்தின் தீமை, காதலின் பெருமை இவையாவும் வெகு புலமையுடன் உருவாக்கிக் காட்டப்பெற்றுள்ளன. மேலும் கத்தோலிக்கர் சிறப்பாகப் போற்றும் உண்மைகள் அனைத்தையும் காப்பியத்தில் விளக்குகின்றார். ஞானஸ்நானம் முதலிய அருள் அளிக்கும் வாயில்களாகிய தேவதிரவிய அனுமானங்களைப் பற்றியும் கத்தோலிக்க மறைக்கு மனம் மாற்றுவதற்கு ஒருவன் கூறக்கூடியவற்றைக் கதைமயமாகவும், தத்துவ மயமாகவும் கூறியுள்ளார். சுருங்கச் சொல்லின் இக்காப்பியம் அவர் போதித்து வந்த திருமறையின் கோட்பாடுகளும், நீதிகளும் வழிபாட்டு முறைகளும், அடங்கிய பெருங் களஞ்சியம்.
-டாக்டர்தனிநாயக அடிகள்

Page 104
202 தமிழ் மரபு
5. செய்யுள் நலம் கடிறல்
ஒசையின் வழிச்செல்வது பாட்டு. பா என்பதற்குப் பரந்து பட்ட ஓசை எனப் பொருள் கூறுவர் அறிஞர். செய்யுள் என்றால் பலவகை இலக்கணங்களும் அமையச் செய்யப்பட்டது என்பது பொருள். இதனால் செய்யுளானது வசனத்திலிருந்து எவ்வகையில் வேறுபட்டதென்ப அறியலாம்.
மேல்நாட்டறிஞர் செய்யுளின் தோற்றத்தை ஆராய்ந்தபொழுது உணர்ச்சியிலிருந்தே செய்யுள் தோன்றுகிறதெனக் கண்டனர். படிப்போரை உணர்ச்சிவசப்படுத்தாதவற்றைச் செய்யுளென அவர் குறிப்பதில்லை. சிறந்த செய்யுள் என்பது கற்ற மாத்திரத்தே ஒருவர்க்கு உணர்ச்சியூட்டவேண்டும்.
வடமொழியாளர் சிறந்த கவிக்குக் கூறிய இலக்கணங்கள் மூன்று. இலளிதம், மாதுரியம், காம்பீரியம் எனபன அவை. இவற்றைத் தமிழில் முறையே எளிமை, இனிமை, ஆயம் என்பர். பொருள் இலகுவாய் அறியத்தக்கதாய் இருத்தலும், இனிய சொற்களால் தொடுக்கப் பெறுதலும், நுழைந்து நோக்குவோருக்கு நுட்பமான பொருள் உடைமையும் செய்யுளில் அமையும் சிறப்புக்களாம்.
தமிழில் செய்யுள் இலக்கணம் மிக விரிவாக அமைந்துளது. செய்யுளில் இன்பம் பயப்பன இரண்டு என்பர் தமிழ் வல்லார். "சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்’ என அணியிலக்கண நூல் கூறுகின்றது. செய்யுளில் சொற்சுவை பார்ப்பார் ஒரு பிரிவினர். பொருட்சுவை தேர்வார் மற்றொரு பிரிவினர். சொற்சுவையானது சொற்கள் நயம்பட அமைந்து சுவை பயப்பது. மோனை, எதுகை, சிலேடை, யமகம், நீரோட்டம், சொற்பின் வருநிலை முதலியன சொற்சுவை தருவன. பொருட்சுவை உவமை, உருவகம், வேற்றுப்பொருள் வைப்பு, தற்குறிப்பேற்றம், ஒட்டு, பரியாயம், பழிப்பதுபோலப் புகழ்தல், புகழ்வதுபோலப் பழித்தல் முதலிய அணிகளாலும், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை முதலிய மெய்ப்பாடுகளாலும் இன்பமூட்டுவது. கம்பர் சிறந்த செய்யுளைப்பற்றிக் கூறும் பாடல் பின்வருமாறு:
புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் `கவியெனக் கிடந்தகோதா வரியினை வீரர் கண்டார்.

கட்டுரை மரபு 203
ஒரு செய்யுளின் நயம் அதனைப் படிப்போரது கல்வியறிவின் அளவாக இருக்கும். ஒருவர்க்குத் தோன்றும் நயம் மற்றொருவர்க்குத் தோன்றாது. ஒருவர்க்குப் பேரின்பந் தருவது மற்றொருவருக்கு அத்துணை இன்பம் பயவாது. பல செய்யுள்களையும் பல்காலும் பயின்றவரே செய்யுளின் திறமறிந்து சுவைக்க வல்லுநராவர். செய்யுள் கற்கப் புகுவோர்க்கு முதலில் சுவைப்பதும் எளிதில் அறியக்கூடியதுமாவது சொற்சுவைதான்.
உதாரணமாக,
"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியளாகி அஞ்சொலிள மஞ்ஞையெனஅன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.'
நவஞ்செயத் தகயவிந் நளின நாட்டத்தான் தவஞ்செயத் தவஞ்செய்த, தவமென் என்கின்றாள்"
"ஆயமா நாகர்தா ழாழியா னேயலால்
காயமா னாயினான் யாவனே காவலா நேயமா னேர்த்தியா னிருதமா ரீசனார் மாயமா னாயினான் மாயமா னாயினான்’
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக் கெல்லாம் உய்வண்ண மன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேயுன் கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்’
"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பெய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான்' என வரும் பாடல்களைப் படிக்கும் இளைஞர் பொருட் சுவையினும் சொல்லின்பத்தையே முதலில் நுகர்வர். ஒசையின்பம் எளிதாதலின் சிறுவர் அதனையே பெரிதும் விரும்புவர்.
சில பாடல்களில் உள்ள உண்மைப் பொருளைவிட, படிக்கும் போது காணும் தொனிப்பொருள் மிகச்சுவை தருவதாகும்.
d-tb:-
"வெள்ளரிக் காயா விரும்பு மவரைக்காயா உள்ள மிளகாயா ஒருபேச் சுரைக்காயா'

Page 105
204 தமிழ் மரபு
உண்மைப் பொருள்: வெள் அரிக்கு ஆயா - விரும்பும் அவரைக்காயா (த) உள்ளம் இளகாயா, ஒருபேச்சு உரைக்காயா, என அமைந்துள்ளது.
இதில் வெள்ளரிக்காய் முதலிய காய்களின் பெயர்கள் தொனித்து நிற்றல் காண்க.
"கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேலனைக் கன்னிப்பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே"
இதில் கருமான், செம்மான், கைக்கோளன் முதலிய தொழிலாளர் பெயர்களைக் காண்க.
பொருட்சுவை அநுபவித்தற்குச் செவிக் கூர்மையோடு அறிவு நுட்பமும் வேண்டும். பொருட்சுவையின் குறுகிய மெய்ப்பாடுகள் மிக்க இன்பம் பயப்பன.
உதாரணமாக
"பொன்னின்று கஞலும் தெய்வப் பூணிகர் பொருப்புத் தோளர் மின்னின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர் என்னென்றார்க் கென்னென் னென்றார் எய்தியதறிந்திலாதார் முன்னின்றார் முதுகு தீயப் பின்னின்றார் முடுகுகின்றார்’
இதில், 'ஆளைக்கண்டு மயங்காதே ஊதுகாமாலை" என்பது போல வீரத் தோற்றத்தையுடைய தேவர்கள் அநுமனது அட்டகாசத்தைக் கண்டு, முன்னின்றார் முதுகுதீயப் பின்னின்றார் முடுகிச் செல்லுங் காட்சி சிரிப்பை விளைக்கின்றது.
"கலையினாற்றிங்கலென்ன வளர்கின்ற காலத் தேயுன்
சிலையினாலரியை வெல்லக் காண்பதோர்தவமுஞ் செய்தேன் தலையிலா வாக்கை காண எத்தவஞ் செய்தேன் அந்தோ நிலையிலா வாழ்வையின்னும் நினைவனோ நினைவி லாதேன்’
இதில் மண்டோதரி இந்திரசித்தை இழந்து நிற்கும் நிலை படிப்போர் நெஞ்சை உருக்கும் தன்மையது.
"கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் பிச்சமுங் கவிகையும் பெய்யு மின்னிழல் நிச்சய மன்றெனின் நெடிது நாளுண்ட எச்சிலை நுகருவ தின்பமாகுமா."

கட்டுரை மரபு 205
இதில், தசரதர் பல்லாண்டு அரசாண்டு முதுமை வந்தபின்பும் துறவாமையை நினைந்து தம் அரச இன்பத்தை இழித்துக்கூறும் இளிவரற்
65)66 as
'வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில் குயிற்றிய விழியினர் கொடிய நோக்கினர் எயிற்றுனுக் கிடையிடை யானை யாளிபோய் துயிற்கொள்வெம் பிலமெனத் தொட்ட வாயினர்'
இதிற் கூறப்பட்ட அரக்கியர் தோற்றம் மருட்கை (வியப்பு)ச் சுவையைத் தருகின்றது.
'நின்றானெதிர் யாவரும் நெஞ்சு நடுங்கியஞ்சத்
தன்றோள் வலியாற் றகை மால்வரை சாலும் வாலி குன்றுாடு வந்துற்றனன் கோளவுணன் குறித்த வன்றுாணிடைத் தோன்றிய மாநரசிங்க மென்ன’
இதில் வாலியின் போர்க்கோலம் படிப்போர்க்கு அச்சச்சுவையைக் கொடுக்கிறது.
'அல்லன் மாக்க ளிலங்கைய தாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவுமென் சொல்லி னாற்சுடு வேனது தூயவன் வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்"
இதில் சீதை தன் கற்பின் றிண்மையால் யாவும் சுடவல்லாள் எனல் வீரச் சுவையைக் குறிக்கின்றது.
"புவிப்பாவை பரங்கெடப் போரில் வந்தாரை யெல்லாம்
அவிப்பானும் அவித்தவ ராக்கையை யண்ட முற்றக் குவிப்பானும் எனக்கொரு கோவினைக் கொற்ற மெளலி கவிப்பானும் நின்றேன் இதுகாக்குநர் காக்க வென்றான்'
இதில் இலக்குமணனது கோபம் அவன் சொற்களில் புலனாகின்றது. "பொன்னே தேனே பூமகளேகா ணெனை யென்னாத்
தன்னேரில்லாளங்கொரு தையல் தழைமூழ்க இன்னே ஒன்னைக் காணுதி நீயென்றிகலித்தன் நன்னிலக்கண் கையின் மறைந்து நகுவாளும்'
இதில் பெண்கள், ஒளித்து விளையாடும் காட்சி உவகைச் சுவையூட்டுகின்றது.

Page 106
2O6 தமிழ் மரபு
பொருட்சுவையை நோக்கும்பொழுது நாம் ஓர் உண்மையை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கல்லாதவர் ஒன்றை எவ்வாறு கூறுவர் என்றும் புலவர் அல்லது நுண்மதியுடையவர் அதனையே எவ்வாறு கூறுகின்றார் என்றும் கவனித்தல் வேண்டும். கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் கருத்தளவில் ஒற்றுமையுண்டே. சொல்லும் திறமும் முறையும் கற்றோர் பேச்சில் மிக மிக இன்பம் பயக்கும். உதாரணம் பின்வருமாறு
"பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனு மல்லன்
மாரியும் உண்டீண்டு உலகு புரப்பதுவே." இது கபிலர் பாரியைப் புகழ்ந்து பாடிய பாட்டு.
பாரியினுடைய அவையில் புலவர் பலர் கூடியிருக்கிறார்கள். எல்லாரும் பாரியினுடைய கொடையையும், வீரத்தையும் பற்றித் தத்தம் கற்பனைக் கெட்டியவரையில் புனைந்து பாடிப் Lחנfh60שה மகிழ்விக்கிறார்கள். ஒருவர் பாரியை மேகத்திற்கு ஒப்பிடுகிறார். மற்றொருவர் பாரியைவிடச் சிறந்தவள்ளல் இல்லை என்கிறார். வேறொருவர் பாரிக்கு நிகர் பாரிதான் என்று முடிக்கிறார். புலவர்களின் தலைவரும் பாரியின் உயிர் நண்பருமாகிய கபிலர் எல்லார் புனைந்துரைகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய இதயத்திலும் பாட்டுப்பாட வேண்டுமென்ற உணர்ச்சி எழுகிறது. அப்பொழுதுதான் மேற்கண்ட பாட்டைப் பாடுகிறார்.
மற்றவருடைய பாட்டில் உள்ளது போன்ற மோனை, எதுகை எதுவும் இப்பாட்டில் இல்லை. மற்றவர்களுடைய பாடலைவிட இஃது அளவில் மிகச் சிறியதாகவும் அமைந்திருக்கிறது. பொதுநோக்காகப் பார்க்கும்போது பாரியைப் புகழவில்லை; பாரியையும், பாரியைப் பாடுவோரையும் சற்று இகழ்வது போலக் காணப்படுகின்றது. ஒரு பெரும்புலவர் இப்படிப் பாடுவாரா? அதைக்கேட்டு, பாரிதான் எவ்வாறு மிக்க மகிழ்ச்சியடைந்தான்? இந்தக்கேள்வி எழுவதிற் பிழையில்லை.
மற்றவர்கள் பாரியை மாரியிலும் பெரியவன் என்று வெளிப்படையாகக் கூறினார்கள். கபிலர் அப்பொருளைக் குறிப்பாற் பெறவைத்து அதன்மூலம் வேறொரு பொருளையும் விளங்கச் செய்தார். பாரியை எல்லாரும் புகழ்கின்றார்கள். "பாரி பாரி' என்ரு பாடுகின்றார்கள். பாரி ஒருவன்தான் உலகைப் பாதுகாக்கின்றான்? மாரியுமன்றோ உலகு புரப்பது! அங்ங்னமாயின் யாரும் மாரியை ஏன் பாடவில்லை? பாரியை மாரி என்று முன்னெழுத்தை மாத்திரம்

கட்டுரை மரபு 207
மாற்றிப்பாடுவதில் என்ன சிரமம்? ஆம், காரணமில்லாமல் புலவர் விடமாட்டார். மாரியைப் பாடாமைக்கும் பாரியைப் பாடுதற்கும் தக்க காரணம் உண்டு. பாரி கொடுத்துக் கெடுப்பவனல்லன். மாரி கொடுத்தும் கெடுக்கும். பாரி எல்லாக் காலத்தும் கொடுப்பான். மாரி பருவத்தேதான் கொடுக்கும். இல்லை; சிலசமயம் பருவத்திலும் பொய்த்துவிடும். ஆகவே பாரி மாரியைவிட எத்துணைப் பெரியவன்! பாரி ஒருவனையே புலவர் பாடுவதற்குக் காரணம் இருக்கின்றதல்லவா?
இப்பாடல் மேற்கண்டவாறு நுழைந்து துருவி நோக்குவார்க்கு அரும் பொருள்தரும் சுரங்கமாக அமைந்து விளங்குகிறது.
கதைத் தொடர்போடு கூடிய கவிகள் தனிச் சிறப்புடையன. அவை பொருட்சுவையோடு சந்தர்ப்பத்தையும் நம் மனக் கண்முன் நன்கு பதிய வைப்பன. அத்தகைய பாடல் ஒன்று வருமாறு.
தசரதன் கைகேயியை வேண்டல்
“கண்ணே வேண்டு மெனினும் ஈயக்கடவேனென்
உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன் மானே பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறவென்றான்."
பரதன் மண்ணாளுவதாகிய ஒரு வரத்தை மாத்திரம் கேட்கும் படி கைகேயிடம் வேண்டுகிறான்.
அவ்வரத்துக்காக அவன் தன் கண்ணையும் கண்ணிலும் சிறந்த உயிரையும் கொடுப்பேன் என்று கூறுவது அவனது மெலிந்த நிலையை விளக்கி நிற்கின்றது. ‘ஈவேன்’ என்றும் தருவேன் என்றும் கூறாது, 'ஈயக் கடமைப்பட்டுள்ளேன்’ என்றும் என்னுயிர் உன்னுடையதன்றோ என்றும் கூறுதல் அவன் எத்துணைத் தாழ்ந்து நின்று மன்றாடுகிறான் என்பதைக் காட்டுகின்றது. ஒரு பொருளுக்காக - தன் மகனைக் காட்டிற்கு அனுப்பும் வரம் ஒன்றிற்காக - அவன் இரண்டு பெரிய பொருள்களைக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறான் என்பதைப் பார்க்கும்போது அவனது சோகக் காட்சியும், புத்திர வாஞ்சையும் யாரையும் உருக்குவனவாயிருக்கின்றன. அவன் கைகேயியைப் பார்த்துப் "பெண்ணே " எனவும் 'வண்மைக் கேகயன் மானே’ எனவும் அருமைச் சொற்களால் அழைக்கின்றான். அப்பொழுதாவது அவள் சற்று மனம் கசிவாள் என்று ஆவலோடு அவள் முகத்தைப் பார்க்கிறான். அவள் பிடிவாதமாய் நிற்பதைக் கண்டு 'மண்ணே கொள் என்று" சொல்கிறான்; அடுத்ததைச் சொல்ல அவன் நாவெழவில்லை 'நீ மற்றைய தொன்றும் மற" என்கின்றான். இராமன் காட்டுக்குப் போதலை நாவினாற் கூடச் சொல்லமுடியாத பாவித் தசரதன் நிலை படிப்போர் மனக்கண்முன் நன்கு தோன்றுகின்றது.

Page 107
208 தமிழ் மரபு
இங்கே தசரதன் தன் மனைவியைப் பார்த்து, 'என் ஆருயிரே" என்றோ, 'என் அருமைத் தேவி' என்றோ அழைக்காது, பெண்ணே, எனத் தனித்த பொதுச் சொல்லால் அழைப்பது கவனிக்கத்தக்கது. தசரதன் ஆண்மைகுன்றி, மெலிந்து நலிந்து நின்று அவளை வேண்டுகின்றான். தன் சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும் கூடக் கைகேயிக்கு உரிமையாகக் கொடுக்க முன்வருகின்றான். அத்தகைய இரங்கத்தக்க நிலையைப் பார்த்து மனம் கசியாமல் எவரும் இருக்கமாட்டார். அதிலும் மெல்லிய மனம் படைத்த பெண்கள் அவன் நிலையை நேரிற் பார்ப்பரேல் அவன் வேண்டுகைக்கு முன்பே அகங் கனிந்து அனைத்தையும் ஈவர். ஆனால் பெண்குலத்திற் பிறந்த கைகேயி சற்றும் இரங்காதிருப்பதைப்பார்த்து அவளை இரங்கும்படி அன்போடு கேட்பவன் போலப் 'பெண்ணே என்கிறான். தசரதனது மனைவி என்ற காரணத்துக்காக இல்லாவிட்டாலும் பெண் என்ற பேர் படைத்ததற்காகவாவது அவள் இரக்கம் காட்டவேண்டும் என்பான்போல அவ்வாறு விளிக்கின்றான். அதற்கும் அவள் அருள் காட்டவில்லை. அவளது மரபோ கொடைக்கும் அருட்குணத்துக்கும் புகழ்பெற்றது. அவள் தந்தையோ ‘வள்ளல் கேகயன்’ என அழைக்கப்படுவன். அவனது மகளாகப் பிறந்த கைகேயி அவனது புகழ்க் குணங்களை இல்லாத வளாயிருத்தல் பொருந்தாதது. அஃது அவளுக்கு மாத்திரமன்றி அவளது தந்தைக்கும் முன்னோர்க்கும் வசை தருவது. ஆகவே கைகேயி தன் மரபின் பெருமையைக் காக்கும் முறையிலாவது இரக்கமுடையளாதல் வேண்டும் என்று அவளை மேலும் தூண்டுவான்போல 'வண்மைக் கேகயன் மானே’ என்கிறான். இவ்வளவு தூரம் அவன் மன்றாடக் காரணமென்ன? தசரதன் தனது உயிரினும் மேலான பொருளுக்காகப் போராடுகிறான் என்பதே.
கம்பர் தசரதனை எவ்வாறு நினைந்து இப்பாடலைப் பாடினாரோ அவ்வாறே படிப்போர் நெஞ்சிலும் அம்மன்னன் காட்சியளிக்கத்தக்கதாகப் பாடல் அமைந்துள்ளது. சொற்கள் தசரதனது துன்ப நிலையை நன்கு புலப்படுத்துகின்றன. அவைகள் அவனது நிலையை எடுத்து விளக்குவதோடமையாது நாமும் அவனோடு கலந்து நின்று சுவைக்கும்படி தூண்டுகின்றன.
செய்யுள்களில் சுவைபயக்கும் அணிகளுட் சில
1. தன்மையணி:- ஒரு பொருளின் இயல்பைப் புனைந்தோ வியந்தோ கூறாது உள்ளவாறே அழகு பெறக் கூறுதல்.
உ-ம்:-
'படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

கட்டுரை மரபு 209
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டும் கெளவியுந்துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழுநாளே” இதில், மதலைச் சிறாரது இயல் கூறப்பட்டுள்ளது. 2. உவமையணி:- ஒரு பொருளைக் கூறுமிடத்து அதனோடு ஒத்த பொருளைச் சொல்லி விளக்குதல். - :b-- و
"புகழ்புரிந்தில்லிலோர்க் கில்லை யிகழ்வார் முன்
ஏறுபோற் பீடு நடை."
இதில், கம்பீரமான நடை என்பதற்குப் பதிலாகச் சிங்க (ஏறு) நடைபோன்ற நடையென உவமை கூறப்பட்டது.
3. உருவக அணி:- - உவமானத்தையும் உவமேயத்தையும் ஒற்றுமைப்படுத்திக் கூறுதல்.
உ-ம்:-
'பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தார்’ இதில் பிறவி கடலாக உருவகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே முகமதி, பாத தாமரை என்பனவும் உருவகங்களாம். (இவற்றை) மதிமுகம் எனவும், தாமரைப்பாதம் எனவும் கூறின் உவமைத் தொகைகள் ஆகும்.
4. வேற்றுப்பொருள் வைப்பு:- ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியைக் கூறிவிட்டு அதிற்காணும் உண்மையை உலகோரறிந்த தொடரால் இறுதியில் கூறி அதனை முடித்தல். உ-ம்:-
"இறந்தானல்லன் அரசன் இறவா தொழிவானல்லன்
மறந்தானுணர் வென்றுன்னா வன்கேகயர் கோன்மங்கை துறந்தாள் துயரந்தன்னைத் துறவாதொழி வாளிவளே பிறந்தார் பெருந்தன்மை பிறரால் அறிதற்கெளிதோ' இதில், முன்னொரு காலத்துத் தசரதன் மாட்டு ஒத்த அன்பு வைத்தவரான கோசலையும் கைகேயியும் இப்பொழுது வேறு வேறுணர்ச்சியுடையராய் இருத்தலைப் பார்த்துப் 'பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கெளிதோ’ என்னும் வேற்றுப் பொருள் வைத்து முற்கூறியது விளக்கப்பட்டது.

Page 108
210 தமிழ் மரபு
5. ஒட்டு அல்லது பிறிது நவிற்சியணி:- ஒரு நீதியை அல்லது நிகழ்ச்சியைக் கூறுகையில் அதற்குச் சம்பந்தமில்லாத சொற்களால் வேறொன்று விளக்குவது போல் கூறி உண்மையை அறியவைத்தல். ol-lb.:-
"இளைதாக முண்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து’
திருவள்ளுவர், அரசன் தன் பகைவரை எவ்வாறு வெல்ல வேண்டும் எனக் கூறுபவர் முள்ளுமரத்தின் செய்தியைக் கூறுகின்றார். இதிலிருந்து, பகைவரையும் அவர் மெலியராயபோது வெல்வதன்றி வலியராயபோது வெல்லல் இயலாது என்பது பெறப்பட்டது.
6. தற்குறிப்பேற்றம்:- ஒரு பொருளின் இயல்பான செயலில் புலவர் தம் காரணத்தை அல்லது குறிப்பை ஏற்றிச் சொல்லல். உ-ம்:-
"மையறு மலரின் நீங்கி யான்செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாளென்று செழுமணிக் கொடிக ளென்னும் கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை ஒல்லைவா வென்றழைப்பது போன்ற தம்மா’
இதில், கொடிகள் காற்றில் அசைந்தாடலைக் கம்பர்தம் கருத்தை ஏற்றி அவை இராமனை ஆவலோடு அழைப்பனவாகக் கூறுகின்றார்.
7. வஞ்சப் புகழ்ச்சி:- வெளிப்படையில் புகழ்வது போலவும் குறிப்பில் பழிப்பது போலவும் கூறல். உ-ம்:-
"தேவ ரனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்'
இதில், கயவர் (கீழ் மக்கள்) தேவர் போல எல்லாம் செய்ய வல்லவர் என்பது புகழ்ச்சியாகவும், அவர் பழி பாவங்களுக்கஞ்சார் என்பது குறிப்பாற் பெறுதலின் பழிப்பாகவும் அமைந்துள்ளன.
8. உயர்வு நவிற்சி:- ஒன்றன் இயல்பை எல்லை கடந்து கூறுதல். 2-lb.:-
'இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுறும்
அம்மென்றால் ஆயிரமும் ஆகாதோ - சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாகிற்
பெருங்காள மேகம் பிளாய்"

கட்டுரை மரபு 211
இதில், விரைவிற் பல பாட்டுப் பாடுந் திறமை மிக உயர்த்திக் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி பின்வரும் பாடல்களுக்கு நயம் எழுதுக.
1
படித்தறியா மிகரழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில் துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித் தொளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக்கட்டி எடுத்தெறிய வேணுமிந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென்றார்த்து அடித்துரைத்து ஆவேசம் கொள்வா னென்றால்
அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்.
2
அமுத மூறும் அன்பு கொண்டு அரசு செய்தநாட்டிலே அடிமை யென்று பிறர்ந கைக்க முடிவ ணங்கி நிற்பதோ! இமயம் தொட்டுக் குமரி மட்டும் இசைபரந்த மக்கள் நாம் இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்ற யாவும் செய்குவோம்.
11 குஞ்சைக் காக்கும் கோழி போலக் குடியைக் காத்த மன்னர்கள்
கோல் நடத்த அச்சமின்றி மேல்நினைப்புக் கொண்டு நாம் பஞ்ச பூத தத்து வங்கள் பக்தி யோடு முத்தியைப் பார்சி றக்கச் சொன்ன நாமும் சீர்குறைந்து போவதோ,
III உலகி லெங்கும் இணையி லாத உண்மை பாடும் புலவர்கள் உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி உயரச் செய்யும் நாவலர் கலக மற்றுக் களிசிறக்கக் கவிதை சொன்ன நாட்டிலே கைகு வித்துப் பொய்கள் பாடிக் காலந் தள்ளல் ஆகுமோ.
-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
3
உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்

Page 109
212
தமிழ்மரபு
II
II
IV
I
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
4 இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! -இனி
ஏதுசெய்வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்! மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவுங் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிIசை யோங்கும். என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ சென்றிடு வீரெட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
-சுப்பிரமணிய பாரதியார்
5
வன்ன மயில்கள் நடனமாட வண்டு கீதம் பாடவே மலர்கள் குறிய முறுவல்புரிய வந்து பந்தடித்துமே மன்னர்மன்னன் வாழ்கவென்று வந்துபந் தடித்துமே மதலை மாலை மார்பனூழி வாழியென் றடித்துமே. மன்னிவந்து வந்துபந்துயர்ந் திழிந்து கைப்பட வலமுமிடமு மாறியோடி வரிகொள்பந் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்கவென்று வந்து பந்தடித்துமே மதலை மாலை மார்பனூழி வாழியென் றடித்துமே.
6
காதலனைப் பிரிந்தவளின் மனம்போல வொன்று
கவிபாடிப் பரிசுபெற்றான் மனம்போல வொன்று

கட்டுரை மரபு 213
III
தீதுபழி கேட்டவன்தன் மனம்போல வொன்று
செய்தபிழைக் கழுங்குமவன் மனம்போல வொன்று நீதிபெறா வேழைதுயர் மனம்போல வொன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம்போல வொன்று காதுமழுக் காறுடையான் மனம்போல வொன்று
கனலேறு மெழுநீர்களுண்டுகன்னி யாயில். துன்பிற் சுடர்முத்தந் தூக்கலாற் றொண்டு செய்யும் அன்பி லிரவு மலர்தலால் - நண்பகேள் விண்ணுக்கும் விண்ணவர்க்கும் மொக்குமென வேறுரைப்பேன் கண்ணுக்கும் வேண்டுங் கவி. மானன்று வேலன்று வாளன்று கோலன்று மீனன் றெனவுரைத்தல் விட்டுரைப்பேன்-ஊனொன்று நன்மைக் கலர்ந்து நலிவிற்குக் கூம்பியிடர்ப் புன்மைக்கு முத்துதிர்க்கும் பூ
- சோமசுந்தரப் புலவர் இராமாயணம்
8 சூர்ப்பனகை இராமன் முன்பு வருதல்
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம ணுங்க செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.
9
கோசல நாட்டு வருணனை
பெருந்தடங்கண் பிறைநுதலார்க் கெலாம் பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையே
10 இலக்குமணன் கைகேயியின் செயலைக் கடிந்துகூறல் சிங்கக் குருளைக்கிடு தீஞ்சுவையூனை நாயின் வெங்கட் கடுங்குட்டியை யூட்ட விரும்பினாளே நங்கைக் கறிவின் திறம் நன்றிது நன்றிதெனாக் கங்கைக் கிறைவன் கடகக்கை புடைத்து நக்கடு

Page 110
214
5thy LovL+
11
அநுமன் சீதையைக் கண்ட செய்தியை இராமனுக்குக் கூறல்
I
விற்பெருந் தடந்தோள்வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன் இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும் கற்பெனப்படுவதொன்றும் களிநடம் புரியக் கண்டேன். உன்பெருந் தேவியென்னும் உரிமைக்கும் உன்னைப்பெற்ற மன்பெரு மருகியென்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் தன்பெருந்தனயனெனும் தகைமைக்குந் தலைமை சான்றால் என்பெருந் தெய்வமையா இன்னமும் கேட்டி யென்பான்.
பாரதம்
12 போர்க்களத்தில் கன்னன் கண்ணனுக்குக் கூறல் ஆவியோ நிலையிற் கலங்கிய தியாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும் பக்குவம் தன்னில் வந்திலையால் ஒவிலா தியான்செய் புண்ணியமனைத்தும்
உதவினேன் கொள்கநீ உனக்குப் பூவில்வா ழயனும் நிகரலனென்றால்
புண்ணியம் இதனின்வேறுளதோ,
3 அருச்சுனன் கிராதர் தலைவனுக்குக் கூறியது எனக்க ருந்தவ முயற லால்உதிர்
சருக லால்உண வில்லை யால் உனக்கு முன்படை வேடருக்கும்நல்
உண்டி யாமிது கொண்டு போ வனக்குறும்பொறை நாட உன்படை வலிமை கொண்டு வழக்க றச் சினக்கில் வெங்கணை விடுவன் யானுயர்
திசைதொறும்தலை சிந்த வே.
14
மாலை வருணனை வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப் பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான் செவ்வாய் விரிகதிரோன் வெற்பு.

கட்டுரை மரபு 215
I மல்லிகையே வெண்சங்கா வண்டுத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை யந்திப் பொழுது.
15 கோழி கூவல் தையல் துயர்க்குத்தரியாது தம் சிறகாம் கையான் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்.
- புகழேந்திப் புலவர் 18 ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமஷ்வா(று) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து.
-ஒளவையார் 17 எந்தை நல்கூர்ந்தான் இரப்பவர்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கணி.
18
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇ குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக்கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தள் றொண்ணுதல் முகனே.
--குறுந்தொகை 19 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்
20 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார்.

Page 111
216
தமிழ் மரபு
21 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்
22 யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்.
-திருவள்ளுவர்
23 நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நீயுநின் மனைவியும் தென்திசைக் குமரியாடி வடதிசைக் கேகுவி ராயின் எம்மூர்ச் சத்தி முற்ற வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடுபார்த் திருக்கும் எம்மனை வியைக்கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழிஇப் பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனமெனுமே.
--சத்திமுற்றப்புலவர் 24 உலோபிகளை நடுவிரற் கொப்பிட்டுச் சொன்னது சுண்ணாம்பு தீட்டநல் லாள்காட்ட
மோதிரம் சூட்டமலர்க் கண்ணாரைக் கூட்ட விரல்நான் கிருக்கக்
கதிர்க்கம் பிபோல் எண்ணா நடுவிரற் கேதாம் உலோபருக்
கேது கண்டாய் கண்ணார் நுதலண்ணல் சேய்வணிகா
செந்தில் காத்தவனே.
-பலபட்டடைச்சொக்கநாதப் புலவர்

கட்டுரை மரபு 217
25 நாய்க்கும் தேங்காய்க்கும் சிலேடை ஒடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே தீங்கான தில்லாத் திருமலைராயன்வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு.
26 மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல்மட வார்கணம் சூழும் அஞ்ச ரோருகப் பள்ளியில் வான்சிறை
அன்ன வண்ணக் குழாம்விளையாடும் துஞ்சும் மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்க ளோடிப் பலாக்கனி கீறி இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய்விழும்
ஈழமண்டல நாடெங்கள் நாடே.
6. மொழி பெயர்ப்பு
ஒரு மொழியிலுள்ள கருத்தை மற்றொரு மொழியில் அமைத்துக் கூறுதல் இலகுவானதன்று. உதாரணமாக ஆங்கிலத்திலுள்ள ஒரு கருத்தை நாம் தமிழில் கூறவேண்டுமானால், கருத்து விளக்கம் மாத்திரமன்றி இருமொழிகளின் மரபை அறிதலும் இன்றியமையாதது.
மொழிபெயர்ப்புப் பயிலுவோர் பின் வருவனவற்றைக் கவனித்தல் வேண்டும். முதலாவது, பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களையறிதல். இரண்டாவது, பிறமொழியில் அமைந்த சொற்றொடரை அல்லது வாக்கியத்தை அதில் அமைந்தவாறே தமிழில் மொழிபெயர்க்காது தமிழ் மரபுக்கேற்பக் கூறுதல். ‚፡
பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொல்லறிதல்
பொதுப் பெயர்ச் சொற்களினதும், வினைச் சொற்களினதும் கருத்தை அகராதியின் துணையால் யாவரும் அறியமுடியும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருள்களின் சிறப்புப் பெயர்களையும், இக்கால மக்களின் வாழ்க்கையில் நவமாகக் கலந்துள்ள நிகழ்ச்சிகளையும் தமிழில் கூறுமிடத்து, கற்றோர் மரபறிந்து ஏற்ற தமிழ்ச்சொற்களைக் கையாளவேண்டும். உதாரணமாக Radio என்பதை 'வானொலி என்றும் Electricity என்பதை 'மின்சாரம்" என்றும் மொழிபெயர்த்தல் நன்று. Election

Page 112
218 தமிழ் மரபு
என்பதை 'தேர்தல்" என்றும், Voting என்பதை 'வாக்களிப்பு" என்றும் கூறுதல் நன்று. மக்களினதும் இடங்களினதும் சிறப்புப் பெயர்களை இயன்றவரை தமிழிலும் அவ்வாறே எழுதலே முறை. அவற்றைப் பெரிதும் திரித்தெழுதின், அஃது அப்பெயர்களிற் பழக்கமுடையோரையும் மயங்கவைக்கும்.
பிறமொழிச்சொற்றொடர்களையும்வாக்கியங்களையும்தமிழிற்கூறல்
பிறமொழிகளில் உள்ள சொற்றொடரை அவ்வாறே தமிழில் பெயர்த்துக் கூறல் பெரிதும் நகைவிளைக்கும். சொற்றொடரிலுள்ள கருத்தை, தமிழிலுள்ள எந்தச் சொற்றொடரால் கூறினால் பொருந்தும் என்பதைச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக Through thick and thin என்பதை 'வாழ்விலும் தாழ்விலும்' என்றும், Hand and Gove என்பதை
நகமும் சதையும்போல’ என்றும் எழுதல் வேண்டும்.
வாக்கியங்களை மொழி பெயர்க்கும்போது தமிழ் முறைகளைக் கையாளவேண்டும். எழுவாய் பயனிலைகளின் நிலைகளையும் கலப்பு வாக்கியங்களின் அமைதியையும் கவனித்தல் வேண்டும். வியப்புப் பொருள் தருவனவற்றையும் இரங்கற்பொருள் தருவனவற்றையும் தமிழ் மரபறிந்து கூறவேண்டும். செயப்பாட்டுவினை வாக்கியங்களை இயன்றவரை செய்வினை வாக்கியமாக எழுதல் சுவை பயப்பதாம். உதாரணமாகThis is a book என்பதை 'இது ஒரு புத்தகம்' என்றும், He confessed that he was guilty 6TGăTu6mg5 'g5m Gör (gjöp6nusTGíî 6 TGötu Gangs egy 66ör ஒப்புக்கொண்டான்' என்றும், Alast I am undone என்பதை நான் கெட்டேனந்தோ' என்றும், He was made king by them என்பதை 'அவர்கள் அவனை அரசனாக்கினார் என்றும் எழுதலே நன்று. மேலும், வாக்கியங்களில் உள்ள அடைமொழிகளையும், எச்சங்களையும் அவ்வவற்றுக்குரிய இடமறிந்து அமைத்தல் வேண்டும்.
og TUGOOTLDITS, The man who is perpetually hesitating which of the two things he will do first will do neither 676öTu63)ğ5 'göGö1ğı g)J6ös765) 35(15D5ü5676ö எதனை முதலில் செய்வதென்று எந்நேரமும் தயங்குபவன் ஒன்றையும் செய்யமாட்டான்' என மொழிபெயர்க்கவேண்டும்.
இவ்வாறு தமிழுக்குரிய பல இலக்கணங்களும் அமைய மொழிபெயர்க்கின் அது தனி அழகு பெற்று விளங்கும். தமிழில் சிந்தித்துத் தமிழ் வடிவம் பெற்ற ஒரு தனிக் கலையாக மிளிரும்.
The human race is spread all over the world, from the polar regions to the tropics. The people of which it is made up, eat different kinds of food partly according to the climate in which they live, and partly according to the kind of food which their country produces. Thus in India the people live

கடடுரை மரபு 219
cheifly on different kinds of grain, or eggs, milk or sometimes fish and meat. In Europe the people eat more flesh and less grain. In the Arctic regions where no grain and fruits are produced the Eskimo and other races live almost entirely on flesh, especially fat.
துருவப் பகுதியிலிருந்து பூமத்தியபாகம் வரை உலகின் எல்லாப் பாகமும் மக்கள் இனம் பரவியுள்ளது. அவ்வப் பிரதேசங்களில் வதியும் மக்கள் தங்கள் நாட்டுச் சுவாத்தியத்திற்கேற்பவும் தங்கள் நாட்டு விளைபொருளுக்கேற்பவும் வெவ்வேறு உணவுகளை உண்கிறார்கள். இவ்வாறு இந்திய மக்கள் பலவகையான தானியங்களையும் முட்டைகளையும் பாலையுமே பிரதானமாக உண்டு சீவிக்கிறார்கள். அன்றியும் சிலவேளைகளில் அவர்கள் மீனையும், மாமிசத்தையும் உணவாகக் கொள்வதும் உண்டு. ஐரோப்பியர் கூடிய அளவு மாமிசத்தையும், குறைந்த அளவு தானியத்தையும் உட்கொள்ளுகின்றனர். தானியங்களோ பழங்களோ உண்டாகாத வடதுருவப் பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோ சாதியாரும் மற்றச் சாதியாரும் முற்றும் மாமிசத்தையே அதிலும் சிறப்பாகக் கொழுப்புப் பொருளையே உண்டு வாழ்பவராவர்.
சில ஆங்கிலச் சொற்றொடர்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்றொடர்கள்
Bag and baggage - epla8)L (plgdidi soir. Carry coal to Newcastle - கொல்லன் தெருவில் ஊசி விற்றல். A dog in the manger - வைக்கோற் போரில் கட்டிய நாய். To throw dust in the eyes - 56.6760 flai LD6760600135/7656). To fan the fame - எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றல். To play second fiddle – 576mlb Gun (656). To look a gift horse in the mouth -g, natub Gasni Giggs Lost' gait பல்லைப் பிடித்துப் பார்த்தல். Harp on the same string - Gu Lucijaoianu Gu Lun (6g,6i. 9. To make hay while the Sun shines - simpg|Giron Gun Gig
தூற்றிக்கொள்ளல். 10. A Herculean task – L13д3L togшž567шћ. 11. To Out-Herod Herod – uLog9.jG uudaörGLum GV g)(Bég6ö. 12. To drawin one's horms - வாலைச் சுருட்டிக் கொண்டிருத்தல். 13. Kill two birds with Qne stone – 9st6) 6)LuftflGuITG) SG6)TeB(5b. 14. To lock the stable door after the steed is stolen - saiaros' L Spg5
சூரிய நமஸ்காரம் செய்தல். 15. To make a mountain of a mole hill-gi(Dibao) Lugg,7608Tsidi5th GuJigsail.
8.

Page 113
220
தமிழ் மரபு
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
To nip in the bud - (p68)6Tu5Gay Saivaia'G56). To turn up one's nose - (p56, 36.55ai. To cast pearls before Swine — 5JJIš66ăTGM35Ú LDTGM av. To plough the sand- Gypg) disaopgiggi). On the horns of a dilemma - g5(5LD&Iis giggi). Between Scylla and Charybdis-g)(Dig.60 audi கொள்ளியினுள்ளெறும்பொத்திருத்தல். To sit on the fence - LDSairGupp g60607Guirgi) goggai). To be at sixes and sevens - அல்லோலகல்லோலப்பட்டுக்கிடத்தல்; குழம்பிக் கிடத்தல். Born with silver spoon in the mouth - 50,6576i gobago) Lu. An empty vessel makes the most Sound - 560 pg5LubgsGTublungi. To set Thames on fire - Gun Golgangs 65aijans 61606tgiggi), LD600760) audi கயிறாகத் திரித்தல்.
A wild goose chase — 5nTuiù Gaum Goo Gav s66)liigëg5Gio. Much cry and fittewool-மலையைக் கல்லி எலியைப் பிடித்தல். A Wolf in Sheep's clothing - LusigGsnigi Gurtigg, LaS). A noisy dog is not fit for hunting- (560 Jai S.p. p5 ITtil sigdisings. A lame man is a hero before the Cripple - 26T60LDiG59 Gmplaustuair சண்டப் பிரசண்டன். Live Content; You will be a king - Guigj Gudairp LD607GLD Guitairostitu மருந்து.
TRANSLATE INTO TAMIL
The blood of human beings and animals contains a certain amount of iron which is necessary to health. They obtain it from green vegetables which absorbit from the earth. When people have too little iron in their blood they have to take it in the form of medicine. So when we say that a man has a constitution of iron it is true in two ways he has much iron in his system, and his muscles are very strong and hard.
The father of Sir Jagadish Chandra Bose was a magistrate and one day he sent a decoit to prison for a number of years. When the man came out of prison he went to the magistrate and said, "How shall earn my living? No one will give work to a man who has been in prison." But the magistrate knew that the man had been good when he was in prison. So he determined to give him a trial. He said, "I will

கட்டுரை மரபு 221
give you work to do in my house. And you can take my little boy to school every morning and bring him home every afternoon."
There was a certain farmer who wished to have a picture of his dead father as memorial. So he went to a famous painter and said, "Will you kindly paint a portrait of my father?"
The painter said, "I have neverseen your father, so how can paint his picture?"
The farmer said, "You can't see him for he is dead and buried. But I will describe him for you."
So the painter wrote down the description and did his best to make a picture from it. When he had finished it he invited the farmerto go and see it. As soon as the farmer saw the protrait he said, "My goodness. How my father has changed since his death!"
Did you ever hear the story of Newton and his little dog Diamond? One day, when he was fifty years old and had been hard at work for more than twenty years studying the theory of light, he went out of his chamberleaving his dog asleep before the fire. On the table lay a heap of manuscript papers containing all the discoveries which Newton had made during those twenty years. When his master was gone, up rose little Diamond jumped upon the table, and overthrew the lighted candle. The papers immediately caughtfire.
Once upon a time there lived a king who had a favourite jester in his court. The jester was an amusing fellow and the king allowed him a great deal of liberty, taking all his pranks and often impertinent sayings as great jokes. The jester findinghimself such a royal favourite, became a perfect nuisance in the Court, playing practical jokes On the great lords, and not showing respect even to the great officials. But none of the courtiers dared complain against him, because the king was so fond of him. At last however, the jester went too far, and in some way grossly offended the king himself, who was So furiously angry that he condemned the jester to death. The jester fell on his knees and pleaded for his life. But the king refused to alter his sentence, at last he yielded so far as to grant the Culprit the privilege of choosing by what kind of death he should die.

Page 114
222
தமிழ் மரபு
it would be impossible for us to continue living in the world if each of us knew exactly what fate had in store for him. So God in his mercy conceals the future from all his creatures, and reveals only the present. He hides from the animals what men knew and he hides from men what the angels knew. For example if a lamb had reasons like man it could not gambol happily knowing it was destined to be killed for human food. But being quite ignorant of its fate it is happy to the last minute of its short life contentedly grazing in the flowery meadow and even in its innocence licks the hand of the butcher who is about to slaughter it.
It is very easy to acquire bad habits such as eating too many Sweets or too much food or drinking too much fluid of any kind or smoking. The more we do a thing the more wetend to like doing it; and if we do not continue to do it we feel unhappy. This is called the force of habit and the force of habit should be fought against.
Things which may be very good when only done from time to time tend to become very harmful when done too often and too much. This applies even to such good things as work or rest. Some people form a bad habit of working too much and others of idling too much. The wise man always remembers that this is true about himself, and checks any bad habit.
Alcohol is taken in almost all cold climates, and to a very much less extent in hot ones. Thus, it is taken by people who live in Himalaya Mountains but not nearly so much by those who live in the plains of India. Alcohol is not necessary in any way to anybody. Millions of people are beginning to do without it entirely and recently the United . States of America has passed laws which forbid its manufacture or sale throughtout the length and breadth of their vast country. In India it not required by the people at all, and should be avoided by them altogether.
The effect produced on the mind by travelling depends entirely on the mind of the traveller and on the way in which he conducts himself. The chief idea of one very common type of traveller is to see as many objects of interest as he possibly can. If he can only say after his return home that he has seen such and such a temple, Castle, picture gallery or museum he is perfectly satisfied. Therefore when he arrives at a famous city, he rushes through it so that he may get over

கட்டுரை மரபு 223
10.
11.
12,
as quickly as possible the task of seeing its principal sights, enter them by name in his notebook as visited or in his own phraseology, 'done' and then hurry on to another city which he treats in the same unceremonious way.
it was chiefly the young men of Athens who gathered round Socrates, who was for them a centre of intellectual activity and a fountain of inspiration. It was this fact which afterwards formed the basis of charge that he "corrupted the youth". He was a man of the noblest character and of the simplest life. Accepting no fees he acquired no wealth. Poor, caring nothing for worldly goods, wholly independent of the Ordinary needs and desires of men, he devoted himself exclusively to the acquisition of that which, in his eyes alone had value, Wisdom and virtue. He was endowed with the utmost powers of physical endurance and moral strength.
A certain great king went to huntinaforest and there he happened to meet a sage. He had a little conversation with him to accept a present from him. "No" said the sage"I am perfectly satisfied with my condition, these trees give me enough fruit to eat, these beautiful pure streams supply me with all the water. I wander and sleep in these caves. What do I care for your present though you be an emperor"? The emperor said, "Just to purify me and to gratify me take Some presents, and come with me to the city." At last the sage consented to go with the emperor and he was taken into the emperor's palace, where there were gold, jewellery, marble and most wonderful things.
Once upon a time there was a poor old fisherman, who because of his age and poverty could scarcely make enough to keep his wife and three children. He went every day before day-break to fish, and each day he threw his nets four times and no more.
One morning he started by moonlight and reached the shore before the sky was grey. At the first cast, as he was drawing his nets in he felt something very heavy. "Hallo!" said he "I'm in for luck this morning that fels like a pretty big fish." But when he drew the nets nearer, he saw that, instead of a big fish as he thought, he had only caught the CarCase of an ass. - Arabian Nights

Page 115
224
தமிழ் மரபு
13.
14.
15.
know it is argued that the soul has nothing to do with what one eats or drinks as the soul neither eats nor drinks, that it is not what you put inside from without, but what you express outwardly from within that matters. There is no doubt Some force in this. But rather than examine this reasoning, I shall content myself with nearly declaring my firm conviction, that for the seeker who would live in fear of God and who would see him face to face, restraint in diet both as to quantity and quality is as essential as restraint in thought and speech.
This was my first visit to Patna. I had no friend or acquaintance with whom could think of putting up. I had an idea that Rajkumar Shukla, simple agriculturist as he was must have some influence in Patna. had come to know him a little more on the journey, and on reaching Patna, I had no illusions left concerning him. He was perfectly innocent of everything. The vakils-that he had taken to be his friends were really nothing of the sort. Poor Rajkumar was more or less a menial to them. Between such agriculturistclients and their vakils, there is a gulf as wide as the Ganges in flood. - Gandhi
As a general rule in this world, the wife knows the husband far better than the husband ever knows the wife, but extremely modern men in their subtlety of nature are altogether beyond the range of those unsophisticated instincts which womankind has acquired through ages. These men are a new race, and have become as mysterious as women themselves. Ordinary men can be divided roughtly into three main classes; some of them are barbarians, some are fools, and some are blind, but these modernmen do not fit into any of them.
- Tagore


Page 116


Page 117