கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் எழுத்தின் தோற்றம்

Page 1


Page 2


Page 3

தமிழ் எழுத்தின் தோற்றம்
(ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு)
கலாங் ப.புஷ்பரட்னம் சிரேஷ்ட விரிவுரையாளர்
வரலாற்றுத் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் 2004.

Page 4
(தவைப்பு
தமிழ் எழுத்தின் தோற்றம் (ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு)
ஆசிரியர் பரமு புஷ்பரட்ணம்(O
பதிப்பு முதற் பதிப்பு 2004, பவானி பதிப்பகம், புத்துார்.
வெளியீடு மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்.
அச்சகம் திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்.
விலை - 200/-
TITLE Origin of Tamil Script (From Ilam to Tamil w Nadu)
AUTHOR O Paramu Pushparatnam
EDITION First Edition: 2004, Bavani Patippaka, Puttur, East, Puttur
PUBLISHED BY District Secretariat, Jaffna
PRINTED AT Tiruvalluvar Press, Nallur, Jaffna.
PRICE RS. 200

அமரர் பவானி பரமு
ண் நினைவுக்கு
f
ஸ்
IIIET
சமர்ப்பணம்
எனது அண்புத் தாயா

Page 5
துணைவேந்தரின் ஆசியுரை
ஒரு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி என்பது அதில் கடமையாற்றும் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கை களோடு அவர்கள் புதியவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றின் முடிவுகளைப் பிறருக்கும் பயன்படக் கூடியதாக வெளியீடு செய்வதிலுமே தங்கியுள்ளன. அவ்வாறான ஒரு இலக்கை நோக்கியதாக கடந்த காலத்தில் எமது பல்கலைக்கழக ஆசியர்கள் பலர் செயற்பட்டு வந்ததை என்னால் காணமுடிகிறது. இன்று அத்தகைய ஒரு பின்புலத்தில் இருந்து வந்த ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள் எழுதியிருக்கும் நூலுக்கு ஆசியுரை வழங்கி வாழத்துவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
இலங்கைத் தமிழருக்கு இந்நாட்டு மண்ணோடொட்டிய 2500 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு எனப் பெருமையாகப் பேசும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆயினும் அதன் உண்மைத் தன்மையைச் சரிவர உறுதிப்படுத்துவதில் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமது பல்கலைக்கழகத்திற்கு உரியதாகும். அதையுணர்ந்துதான் எமது பல்கலைக்கழகம் தொல்லியலைச் சிறப்புப்பாடமாக கற்கும் வாய்ப்பை எமது தமிழ் மாணவர்களுக்கு இவ்வாண்டிலிருந்து முதன் முறையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆயினும் இதன் எதிர்கால வளர்ச்சியானது கடந்த காலத்தில் வெளிவந்த தொல்லியல், வரலாறு சார்ந்த ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப மீளாய்வு செய்து நுாலாக வெளியிடுவதன் மூலம் முழுமை பெறப்போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பிராந்தியங்களில் இருந்து வெளிக்கிளம்பும்

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் அது சாத்தியமாகும். இந்நிலையில் இந்நுாலாசிரியர் கிழக்கிலங்கையில் கந்தளாயிலும், வடஇலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் பல்வேறு சிரமங்கள் மத்தியில் மேற்கொண்ட தொல்லியல் கள ஆய்வின் மூலம் கண்டுபிடித்த சான்றாதாரங்களை அடிப் படையாகக் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் “தமிழ் எழுத்தின் தோற்றம்” பற்றி ஒரு நுாலை எழுதியிருப்பதையிட்டுப் பெரிதும் மகிழ்வடைகிறேன்.
கலாநிதி பரமு புஷ்பரட்ணம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு, தொல்லியல் சார்ந்த ஏழு நூல்களை வெளியிட்டதன் மூலம் கல்வியலாளர் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அவர் தனது தொல்லியற் கண்டுபிடிப் புக்கள் மூலம் இலங்கைத் தமிழரின் தொன்மை பற்றி முன்வைத்த புதிய பல கருத்துக்களை இத்துறையில் புலமையுடைய தமிழ், சிங்கள அறிஞர்களும், பிற நாட்டவரும் ஏற்று தமது ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளதை நான் நன்கு அறிவேன். எனவே இந்த நுாலும் அறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆகவே கலாநிதி புஷ்பரட்ணம் தொடர்ந்தும் தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, மேலும் பல நூல்களை எழுதவேண்டும் என மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
பேராசிரியர் சு.மோகனதாஸ் துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி. 30/06/2004.

Page 6
அரச அதிபரின் வாழ்த்துரை
ஒரு இனத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதில் அந்த இனத்தின் சந்ததியினர் காலத்திற்கு காலம் பயன்படுத்தி வந்த பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு. அத்தகைய பொருட்கள் இன்று உலகின் பல நாடுகளிடையே தேசிய இனத்தின் அடையாளச் சின்னமாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. பல இன, மத, மொழி, பண்பாடுகளைக் கொண்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கும், அவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பிராந்தியங்களுக்கும் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட நீண்டகால வரலாறு உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அந்த வரலாறும், அந்த வரலாற்றை வெளிப்படுத்தும் பண்பாட்டுச் சின்னங்களும் சரிவரக் கண்டு பிடிக்கப்பட்டு, முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பது இன்று முக்கிய குறைபாடாகப் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இலங்கை நிர்வாக மாவட்டத்தில் உயர் அதிகாரிகளாகக் கடமையாற்றிய பலரும் அந்தந்த மாவட்டங்களின் தொல்பொருட்களைக் கண்டுபிடித்துப் பாதுகாப்பதை தமது முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதி வந்ததுடன், அவை பற்றிய செய்திகளையும் ஆண்டு தோறும் அரசாங்க. தொல்லியற் திணைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தொல்லியல் அறிக்கையிலும் குறிப்பிட்டு வந்துள்ளனர். ஆயினும் அந்த தொல்பொருட்களில் பெரும்பாலானவை இன்று அந்தந்த மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்டு அவை அந்த மாவட்டங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படாது, ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பண்பாட்டுச் சின்னங்களாக நகரின் முக்கிய நூதனசாலைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்காலத்தில் வாழும் மக்கள் தமது மாவட்டத்தில் வாழ்ந்து மடிந்த தமது முன்னோரின் தொன்மையான வரலாற்றையும், பண்பாட்டுப் பெருமையையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விடுகிறது
III

ஒரு மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த இடங்களை யும், வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் அந்த மாவட்டச் செயலகத்திற்குரியதாகும். அவற்றை மக்களுக்குப் பயன்படக் கூடியதாக செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு எமது செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரச அதிபரைத் தலைவராகவும், கலாநிதி புஷ்பரட்ணத்தை செயலாளராகவும் கொண்ட தொல்பொருள் பாதுகாப்பு ஆலோசனைச் சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அச்சபையில் தமிழர் பிராந்தியங்களில், சிறப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த வரலாற்று மையங்களை மக்களின் பாவனைக் குரியதாக மாற்றுவது, வரலாற்றுச் சின் னங்களைத் தேடிக்கண்டுபிடித்து குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஆவணப்படுத்துவது, தொல்லியல் ஆய்வை ஊக்கப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன் ஓர் அம்சமாகவே கலாநிதி புஷ்பரட்ணம் எமது செயலகத்தின் நிதி உதவியோடு கந்தளாயிலும், வன்னி பெருநிலப்பரப்பிலும், தற்போது தீவகத்தில் சாட்டி என்ற இடத்திலும் தனது பல்கலைக்கழக தொல்லியல் வரலாற்றுத்துறை மாணவர்களின் ஒத்துழைப்புடன் பல ஆய்வுகளை நடாத்தி அரிய பல தொன்மைச் சான்றுகளைக் கண்டுபிடித்து வருகிறார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழகத்தில் நடந்த இரு கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைப் படித்திருப்பதுடன், தற்போது அவற்றை விரிவான ஒரு நூலாக வெளியிட முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய நிகழ்வாகும். அவரது தொல்லியல் ஆய்வுப் பணி தொடந்து முன்னெடுக்கப்பட்டு அது எமது மக்களின் வரலாற்றுத் தொன்மையையும், பெருமையையும் வெளிப்படுத்த உதவ வேண்டும் என மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாவட்ட செயலகம் செ.பத்மநாதன்
யாழ்ப்பாணம். அரசாங்க அதிபர்.
01.07.2004

Page 7
அறிமுகம்
கடந்த இரு ஆண்டுக்குள் தமிழகத்தில் நடந்த சாசனவியல் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நூலாகும். இங்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் சிறிதாக இருப்பினும், அவற்றிற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய தொல்லியற் சான்றுகள் புதிதாக இருந்ததனால் அவை பற்றிய அறிஞர்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஈழத் தமிழரின் பண்டைய கால எழுத்து, மொழி, வரலாறு பற்றி இதுவரை காலமும் நிலவி வந்த கருத்துக்களை மீளாய்வு செய்யத் துாண்டின. அதன் விளைவாகத் தோன்றியதே இந்நூலாகும். . .
ஒரு இனத்தின் தொன்மையான எழுத்து, மொழி, மதம், கலை, பண்பாடு என்பவற்றை அறிய உதவும் நம்பகத்தன்மையுடைய சான்றாகச் சாசனங்கள் விளங்குகின்றன. ஈழத்தில் கி.பி.13ஆம் நுாற்றாண்டுக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புக்கள் இருந்திருக்க முடியாதென வாதிட்டோர் அதற்குச் சான்றாகத் தமிழ் மொழியில் அமைந்த சாசனங்கள் கிடைக்காததை முக்கிய காரணமாக எடுத்துக் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கந்தளாயிற் கண்டு பிடித்த தமிழ்க் கல்வெட்டும், இவ்வாண்டு பூநகரி வட்டாரத்தில் பெறப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட எழுத்துக்களும் சிங்கள மொழி, சிங்கள எழுத்து தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி பேசிய மக்கள் ஈழத்தில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு உறுதியான சான்றாக உள்ளன.
கந்தளாயில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு கிபி.12ஆம் நூற்றாண்டில் பொலநறுவையில் ஆட்சி புரிந்த கஜபாகு என்ற சிங்கள மன்னனால் வெளியிடப்பட்டதென்ற கருத்தோடு தமிழகத்தில் நடந்த கல்வெட்ட றிஞர் தி.ந.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கூறிய போது அதில் கலந்து கொண்ட பேராசிரியர் சுப்பராயலு உட்பட தமிழக கல்வெட்டறிஞர்கள் பலரும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட V

காலத்தை கருத்தில் எடுத்து இக்கல்வெட்டை கி.பி13ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இன்னொரு மன்னனே வெளியிட்டிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்: இக்கல்வெட்டை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியுள்ள நாம் கல்வெட்டின் சமகால இலங்கை வரலாற்றைக் கருத்தில் எடுத்து பல்றுே சான்றுகளின் அடிப்படையில் இக்கல்வெட்டு கிழக்கிலங்கையில் ஆட்சிபுரிந்த “சோடங்கன்’ என்னும் சிறப்பு பெயர் பெற்ற “குளக்கோட்டன்” என்னும் தமிழ் மன்னனால் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை இந்நுாலில் முன்வைத்துள்ளேன். இக்கருத்தையிட்டு ஈழத்து அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் தோன்றலாம். ஆயினும் இக்கல்வெட்டானது ஈழத்தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்கு மேலும் ஒரு புதிய சான்றாக அமைகின்றதென்பதில் ஐயமில்லை.
தமிழகத்தின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான ஐராவதம் மகாதேவன் தனது நாற்பது ஆண்டு காலக் கட்வெட்டு ஆராய்ச்சியின் பயனாக 2003 ஆம் ஆண்டு பண்டைய தமிழ்க் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பில் மிக விரிவான ஆய்வு நுால் ஒன்றை வெளியிட்டுள்ளார் . இந்நூலில் வடஇலங்கையில் பூநகரியிற் கிடைத்த 2000 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்களின் முக்கியத்துவம் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் இங்கு தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருவதனால் இவ்வட்டாரங்களில் தமிழ்ச் சாசனங்கள் கிடைப்பதில் ஆச்சரியமில்லை எனச் சுட்டிக்காட்டுகிறார். பின்னர் இந்நுால் தொடர்பாகத் தமிழகத்தில் நடாத்தப்பட்ட விமர்சன ஆய்வரங்கில் பங்கெடுத்த நாம் பூநகரியிற் கிடைத்த பிராமி எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு ஈழத்திற்குரிய தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் தமிழகத்தில் இருந்து வரவில்லை. மாறாக ஈழத்தில் இருந்தே தமிழகம் சென்றன என்ற கருத்தை முன்வைத்திருந்தோம். அப்போது கருத்தரங்கில் பங்கெடுத்த பலர் இக்கருத்திற்குச் சார்பாகவும், எதிராகவும் பல கருத்துக்களை முன்வைத்தனர். அதன் காரணமாகவே நாம் முன்வைத்த கருத்தில் உள்ள நியாயத்தன்மை பல்வேறு சான்றாதாரங்களுடன் இந் நுாலில் விரிவாக
விளக்கியுள்ளேன்.
VI

Page 8
இந் நுாலை எழுதுவதற்கு அடிப்படை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான தொல்லியற் சின்னங்கள் எமது தொல்லியல் ஆய்வின் போது கிழக்கிலங்கையில் கந்தளாய் என்ற இடத்திலிருந்தும், வடஇலங்கையில் பூநகரிப் பிராந்தியத்தில் உள்ள பரமன்கிராய், கெளதாரிமுனை, மண்ணித்தலை, கல்முனை போன்ற இடங்களில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இவ்விடங்களில் ஆய்வை மேற்கொள்ளவும், அவற்றை ஒரு நூலாக வெளியிடுவத ற்கும் காரணகர்த்தாவாக இருப்பவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்கள். ஆகவே இந்நுால் வெளிவரும் நிலையில் அவருக்கும், அவருடன் ஒன்றிணைந்து செயற்பட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர். திரு.நா.சிவபாதசுந்தரம் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியிருப்பவர் மதிப்பிற்குரிய எமது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் அவர்கள். நுாலை எழுதும் போது எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கு காரணமாக இருந்தவர் எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் வி.சிவசாமி அவர்கள். நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க உதவியவர் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அவர்கள். குறுகிய காலத்தில் நூலை அச்சுவாகனம் ஏற்றித் தந்தவர்கள் திருவள்ளுவர் அச்சக உத்தியோகத்தர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
வரலாற்றுத்துறை ப.புஷ்பரட்ணம் யாழ் பல்கலைக்கழகம் 05.07.2004

பொருளடக்கம்
ஆசியுரை
வாழ்த்துரை
அறிமுகம்
தமிழ் எழுத்தின் தோற்றம் - ஒரு மீள் வாசிப்பு
இலங்கைத் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியில் அண்மையில் கண்டுபிடித்த கந்தளாய்ச் சாசனம் பெறும் முக்கியத்துவம்
உசாத்துணை நூல்கள்
(})
இது
பக்
III-IV
V-VII .
1-74
75-118
119-126

Page 9
r அண்மைக்காலத்தில் தொல்லியல்
娜 வில்லுபுரம் கந்தரோ3ை bf (600Tb ஆய்வுக்கு உட்பருத்தப்பட்ட
கல்முனை SNஉடுத்துறை இடங்கள்
பூநகரி ஈழஊர்
முல்லைதி
O Σ ܠܝܗܽܣ
ug56ilure
திருகோணமலை (7 அநுராதபுரம் ம் கந்தளாய்
G5ITg)6ision
G6layfairs O. N
சிகிரியாக
அம்பலாம்கெ
. திசமாறக்கம
9 அக்குறிகொட

தமிழ் எழுத்தின் தோற்றம் - ஒரு மீள்வாசிப்பு
அணமையில் சென்னை அறிவியலி ஆய்வு மையத்தாலி திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் 67psilu "Early Tamil Epigraphy - From the Earlist o the Sixth Century A.D." 6Taipraskoi likoforofluik, தமிழக வரலாற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் இருநாள் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கிலி டெலிகி பல்கலைக்கழகப் பேராசிரியர் செம்பகலசஷ்மி, கேரளப்பல்கலைக் கழகப் பேராசிரியர்களான எம்.ஜி. எஸ்.நாராயணன், ராகவவாரியார், நாச்சிமுத்து, ராஜன் குருக்கள், ஹைதராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் வேலுத்கேசவன், பூனான் பல்கலைக்கழகப் பேராசி ரியர் அசோகாசென், பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் விஜயவேணு கோபாலி, தமிழ்ப் பலகலைக்கழகப் பேராசிரியர்களான எ. சப்பராயலு, ரங்கண், இராசு, இராஜன் மற்றும் இந்தியத் தொல்லியல் திணைக்கள இயக்குனர் கலாநிதி தயாளன், கல்வெட்டாய் வாளர்களான கலாநிதி ராஜவேலு, இராசகோபால், சாந்தலிங்கம், வேதாசலம், பூங்குன்றன் போன்ற ஆய்வாளர்கள் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புக்களில் ஆய்வு கட்டுரைகளைப் படித்தனர். இக்கருத்தரங்கிற் இலங்கையில் இருந்து பேராதனைப் பல்கலைக் கழகத் தொல்லியற் பேராசிரியர் சதர்சனி செனிவரட்னாவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து நாமும் அழைக்கப்பட்டிருங்தோம். அதில் 15 "ஐராவதம் மகாதேவன் நோக்கிலி இலங்கை பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள் - ஒரு மீள் வாசிப்பு" என்ற தலைப்பில் ஆற்றிய உரை இந்நூலில் விரிவான ஆய்வுக்கட்டுரையாக வெளிவருகிறது.

Page 10
அண்மைக் காலத்தில் தென்னாசியாவில் வெளிவந்த தொல்லியல் சார்ந்த நூல்களில் அறிஞர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நூலாக திரு.மகாதேவன் எழுதியுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துப் பற்றிய நூல் காணப்படுகிறது. ஆசிரியரின் நாற்பது ஆண்டு கால ஆய்வின் பெறுபேறாக வெளிவந்துள்ள இந்நூலில் தமிழ் எழுத்தின் தோற்றம், வளர்ச்சி, பண்டைய தமிழக வரலாறு பற்றி 750 பக்கங்களில் பல்வேறு விளக்கப்படங்களுடன் விபரிக்கப் பட்டுள்ளது. இந்நூலின் முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை இத்துறையில் புலமையுடைய 16க்கு மேற்பட்ட அறிஞர் களின் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்தும் வெளிவர இருப்ப தாக அறிகிறேன். இவ்வளவு எண்ணிக்கையுடைய விமர்சனங்கள், அதுவும் தொல்லியல் சார்ந்த தென்னாசிய நூல் ஒன்றுக்கு இது வரை வெளிவந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவை: ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப் புலமைக்கும், மேதா விலாசத்திற்கும் அறிஞர்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரமாக நான் பார்க்கிறேன்.
பேராசிரியர் செம்பகலசஷ்மி அவர்கள் "இந்தியாருடே" என்ற சஞ்சிகையில் கூறியிருப்பது போல் இந்நூல் தமிழகக் கல்வெட்டு eija ajTampöksi Lisu GOLDGSasc (Chenpakaluxmi2003:71-6) என்பதில் இருவேறு கருத்திற்கு இடமிருக்கும் என நான் கருதவில்லை. எப்படிப் பண்டைய தமிழ் இலக்கியங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை உவே. சாமிநாதையருக்கு உண்டோ, அதுபோல் பண்டைய தமிழ்க் கல்வெட்டுக்களை ஆய்வுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையை இந்நூலின் மூலம் மகாதேவன் அவர்கள் பெற்றுள்ளார் என்றே கூறலாம். இம்மகத் தான சாதனையைப் படைத்த மகாதேவன் அவர்களை எலும்பைப் பெண்ணாக்கிய ஞானசம்பந்தர் கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
1965இல் புகளுர் பிராமிக் கல்வெட்டைச் சரிவர வாசித்து
சேர மன்னர்களை அடையாளப்படுத்தியதன் மூலம்
இந்நூலாசிரியர் கல்வெட்டியல் ஆய்வுக்கு அறிமுகமானர். 2

1966ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் புகளுர் கல்வெட்டுக்களோடு, தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மேலும் சில கல்வெட்டுக்களைப் படித்து அவற்றின் மொழிக்கும், எழுத்திற்கும் பலரும் ஏற்கக் கூடிய பொருத்தமான புதிய விளக்கத்தை அளித்ததன் மூலம் சிறந்த ஆய்வாளருக்குரிய
அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார் (Mahadevan 1966).
அப்போது மகாதேவனின் இவ்வரிய கண்டுபிடிப்பையிட்டு தமிழக ஆய்வாளர்கள் மத்தியில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தன என்பதை அறியக் கூடிய வயதில் நான் இருக்கவில்லை. ஆனால் இலங்கையில் இருந்து வெளிவரும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களில் இவ்வரிய கண்டுபிடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன், 1968ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த "சிந்தனை" என்ற கலைப்பீடச் சஞ்சிகையிலும் அவர் மிக உயர்வாகப் பாராட்டப் பட்டுள்ளார் என்பதையும் நான் பல்கலைக்கழக மாணவ னாக இருந்த காலத்தில் அறியமுடிந்தது.
தற்போது நாற்பது ஆண்டுகள் கழித்து அவரது நீண்டகால ஆய்வின் பெறுபேறாக வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு தமிழக ஆய்வாளர்களும், வெகுசனத் தொடர்புச் சாதனங்களும் எத்தகைய முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றனவோ அத்தகைய முக்கியத்துவத்தை இலங்கை ஆய்வாளர்களும், வெகுசனத் தொடர்புச் சாதனங்களும் கொடுத்து வருகின்றதைப் பார்க்கிறேன். இப்பெருமைக்குரிய நிகழ்வுகளுக்கு மத்தியில் இன்னொன்றையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த ஆசைப் படுகின்றேன். பொதுவாகத் தமிழுக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் எந்த நாட்டவர் பணி செய்தாலும் அவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களாலும், ஈழத் தமிழர்களாலும் போற்றிப் பாராட்டப்படுவ தென்பது பல ஆண்டு காலமாக இருந்து வரும் பாரம்பரிய நிகழ்வுகளாகும். சில சந்தர்ப்பங்களில் தமிழ் நாட்டவர்களால் மறக்கப்பட்ட தமிழக அறிஞர்கள் சிலரை ஈழத் தமிழர்கள் நினைவு படுத்திய சம்பவங்களும், ஈழத்தவர்களால் மறக்கப்பட்ட ஈழத்து அறிஞர்கள் சிலரைத் தமிழக அறிஞர்கள் போற்றிக் கெளரவித்த
3

Page 11
தற்கும் சான்றுகள் உண்டு. அப்பாரம்பரிய நிகழ்வில் தற்போது போற்றப்படும் அறிஞராக ஐராவதம் மகாதேவன் அவர்கள் காணப்படுகிறார். ஆனால் அவர் ஈழத்தில் உள்ள தமிழர்களால் மட்டுமன்றி சிங்கள அறிஞர்களாலும், ஏனைய நாட்டவராலும் போற்றப்படும் மிக உயர்ந்த புலமையாளர். தற்போதைய ஆய்வுலகில் பண்டைய காலக் கல்வெட்டுக்கள் தொடர்பாக அதிலும் குறிப்பாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் தொடர்பாக மற்றைய அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை விட மகாதேவனின் கருத்தும், முடிவும் என்ன என்பதை அறிந்து அதை இறுதி முடிவாக ஏற்கும் பல அறிஞர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளனர். இங்கிலையில் இலங்கைக்குரிய பண்டைய எழுத்தின் தோற்றம், அதன் காலம், மொழி தொடர்பாக அவர் முன்வைத்துள்ள முடிவுகளை விமர்சிக்கும் போது நான் உணர்ச்சிவசப்பட்டு அவரது மேதாவிலாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது, அறிவு பூர்வமான நிதானத்தைக் கடைப்பிடித்து என்கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைப்பது பொருத்தம் எனக் கருதுகிறேன். அது இலங்கையின் பண்டைய கால வரலாற்றுண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு நான் செய்யக் கூடிய மிகச் சிறிய கடமை யெனக் கருதுகிறேன்.
DI
இந்த இடத்தில் இலங்கைப் பிராமி தொடர்பாக மகாதேவன்
கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்பதற்கு முன்னோடியாக அவர் எழுதியுள்ள நூல் தமிழர் வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும்
பெறப்போகும் முக்கியத்துவம் பற்றிச் சில கருத்துக்களைக்
கூறுவது நான் எடுத்துக் கொண்ட விமர்சனத்திற்கு வலுச்
சேர்ப்பதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தின் பல்வேறு
இடங்களில் இருந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களைப் பலரும்
கண்டுபிடித்து ஆராய்ந்து வந்துள்ளனர்(Buhler 1892, 1894, Dani 4

1963, Govindaraj 1994, Krishnan 1969-70, Nagaswamy 1968, Panneerselvam 1968, Rajavelu1996, Raman 1974, Ramesh 1974, Subramanian 1938, Venkatasami 1981). sQbufìg)uổ அக்கல்வெட்டுக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக யாரும் முழுமையாக ஆராய்ந்து பார்க்க முற்பட வில்லை என்றே கருதுகிறேன். இங்கிலையில் எழுபது வயதைத் தாண்டிய மகாதேவன் ஐயா இருபது வயது இளைஞனாக தமிழக த்தில் உள்ள காடு, மலைகளைக் கடந்து இதுவரை கண்டுபிடிக் கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுக்களையும் நேரில் பார்வையிட்டு, அவற்றைப் படியெடுத்து ஒரு ஆவணமாக இந்நூலில் கொடுத் திருப்பது தமிழ் நாட்டு வரலாற்றாய்வுக்கு அவர் செய்திருக்கும் மிகப் பெரிய பணியாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் பண்டைய தமிழக வரலாறு பற்றி - அதிலும் குறிப்பாகச் சங்க கால வரலாறு பற்றி ஆராய முற்படும் ஒருவர் மகாதேவனின் நூலைப் புறக்கணித்துவிட்டுச் சங்க கால வரலாற்றை முழுமையாக ஆராய முடியாதென்பதை ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.
இந்நூலில் காணக்கூடிய இன்னொரு சிறப்பு தமிழ்ப் பிராமியின் தோற்ற காலத்தை அறிவு பூர்வமாகக் கணிக்க முற்பட்டிருப்பதாகும். இதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுகளின் போது கிடைத்த எழுத்துப் பொறித்த மட்பாண்டங்களையும், அவற்றோடு இணைந்து (ASSociate Findings) கிடைத்த காலக்கணிப்பிற்கு உட்பட்ட தொல்பொருட் சின்னங்களையும், தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியே இலங்கை, தென்கிழக்காசியா போன்ற நாடுகளில் கிடைத்த மட்பாண்ட எழுத்துக்கள், எழுத்துப் பொறித்த நாணயங்கள், முத்திரைகள் என்பவற்றோடு இலக்கியச் சான்றுகளையும் ஒப்பிட்டுக் காலம் கணித்திருப்பதாகும். இவற்றின் ஊடாக தமிழகக் கல்வெட்டுக்களின் தோற்ற காலத்தை கி.மு.2ஆம் நூற்றாண்டெனக் கணித்திருக்கிறார் (Mahadevan 2003). இக்காலக்கணிப்பிற்கு அங்கீகாரம் கொடுப்பது போல் பேராசிரியர் சுப்பராயலு அவர்கள் "அறிவியல் கண்ணோட்டத் துடன் நோக்குபவர்கள் மகாதேவனின் காலக்கணிப்பை
5

Page 12
ஏற்பார்கள்” எனக் கூறியுள்ள கருத்தும் இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது (சுப்பராயலு 2003). இக்காலக் கணிப்பை அப்படியே சரியென ஏற்றுக் கொண்டால் சங்க காலம் பற்றி இதுவரை சிலர் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம். வேறுசிலர் கூறிய கருத்துக்கள் மாற்றப்படலாம். இன்னும் சிலரது கருத்துக்கள் மறுதலிக்கப்படலாம்.
தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுக்கள்
தானங்கள் பற்றியே கூறுகின்றன. ஆயினும் அவற்றால் அறியப் படும் ஒவ்வொரு செய்தியும் அக்கால வரலாறு கூறும் இலக்கியங் களைக் காட்டிலும் பெருமளவுக்கு நம்பகத் தன்மையுடையன. இத்தகைய கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் வழக்கில் இருந்த பண்டைய எழுத்து, மொழி, இலக்கணம், மதம், கலை, சமூகம், பொருளாதாரம், இடப்பெயர்கள் பற்றி மகாதேவன் ஆராய்ந்திருப்பது இந்நூலில் காணக்கூடிய மிக முக்கிய சிறப் பெனக் கருதுகிறேன்.
நூலாசிரியர் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்வதில் பெற்ற நீண்டகால அனுபவம் காரணமாகத் தனது முன்னைய ஆய்வுகளில் கூறப்பட்டுள்ள முடிவுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி அவற்றை இந்நூலில் திருத்திக் கொண்டதோடு, ஏனையோரின் கியாயமான கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவற்றை நூலில் சேர்த்திருப்பது பாராட்டக் கூடிய அம்சமாகும். அவர் மற்றையோரின் கருத்துக்களை ஏற்கும் போது அவர்களின் பட்டம் பதவி, மூப்பு, இளமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காது அவர்களின் நியாயமான கருத்தில் மட்டும் கவனம் செலுத்தி தனது முடிவுகளை மாற்றியிருப்பது நூலாசிரியரது அறிவு நேர்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய சிறப்புக்களை உடைய இந்நூலில் இலங்கைப் பிராமிக் கல் வெட்டுக்கள் பற்றியும், அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் பூநகரி, கந்தரோடை, ஆனைக்கோட்டை போன்ற இடங்களிலும், தென்னிலங்கையில் அநுராதபுரம், அக்குறுகொட போன்ற
6

இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் பற்றியும் ஆராய்ந்திருப்பது ஈழத்து ஆய்வாளர்களுக்கு மனநிறைவைத் தருவதாக உள்ளது. இதை யிட்டு நாம் பெருமைப்பட்டாலும் அச்சான்றாதாரங்களையிட்டு நூலாசிரியர் கொண்டுள்ள சில கருத்துக்களும், முடிவுகளும் இடத்திற்கு இடம் வேறுபட்டதாக இருப்பது இலங்கையின் பண்டைய கால மொழி, எழுத்து என்பன பற்றி அறிய விரும்பும் ஒருவருக்கு முரண்பாடாக அமையப்போகிறது என்பது எனக்குரிய கவலையாகும்.
உதாரணமாகப் பூநகரியிற் கிடைத்த 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களை "வேளான்", "ஈழ" என வாசித்திருக்கும் நூலாசிரியர், அவ்வட்டாரங்களில் பண்டுதொட்டு தமிழர்கள் வாழ்ந்து வருவதால் 'அவ்விடங்களில் எல்லாம் தமிழ் எழுத்துப் பொறித்த மட்பாண்டப் பிராமிச் சாசனங்கள் கிடைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை’ எனக் கூறுகிறார். ஆனால் தென்னிலங்கையில் கிடைத்த இதையொத்த தமிழ்ப் பெயர்கள் கொண்ட நாணயங்கள் பற்றி அவர் கூறும் போது அவற்றைத் இலங்கைத் தமிழர் வெளியிட்ட நாணயங்களா என ஆராய்ந்து பார்க்க முற்படாது அவற்றை தமிழகத்தில் இருந்து வர்த்தக நோக்கோடு தென்னிலங்கையில் வந்து குடியேறிய தமிழ் நாட்டுத் தமிழர்கள் வெளியிட்டிருக்கலாம் என நியாயப்படுத்துகிறார்.
தமிழ் நாட்டில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களை தமிழ்ப் பிராமி என அழைப்பதற்கு அவற்றில் அசோக பிராமி எழுத்தில் காணப்படாத "ற", "ள", "ழ", "ன" போன்ற தமிழ் மொழிக்குரிய எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதையும், கல்வெட்டுக்களில் பிராகிருத மொழிக்குரிய பெயர்ச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கல்வெட்டு மொழி தமிழாக இருப்பதையும் ஆதாரமாகக் காட்டுகிறார் (Mahadeva2003:176). அதேபோல் தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் ஏனைய வட்டாரங்களில் கிடைத்த கல்வெட்டுக்களின் எழுத்தும், மொழியும் ஒன்றாக இருப்பதால் அவற்றை வடபிராமி அல்லது அசோக 7

Page 13
பிராமி எனக் குறிப்பிடுகிறார் (Mahadeva 2003:175). இந்த விளக்கம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் தமிழகத்தை அடுத்து தமிழகப் பிராமிக்கே உரிய சிறப்பெழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் இலங்கைப் பிராமியில் உண்டு என்பதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டும் மகாதேவன் அவர்கள் அதன் சிறப்பைக் கருத்தில் எடுக்காது பொதுப்பட இலங்கைப் பிராமி எழுத்தைச் சிங்கள பிராமி எனவும், அதன் மொழியை சிகர்களப் பிராகிருதம் எனவும் அழைத்துக் கொள்வது அவரது நடுநிலையான விளக்கத்திற்கு முரண்பாடாக 96r6Tg (Mahadeva 2003:177).
அதேவேளை தமிழக அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட மட்பாண்டங்களில் காணப்படும் பிராமி எழுத்தையும், அதில் வரும் பெயர்களையும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் எழுத்துகளுடனும், பெயர்களுடனும் ஒப்பிட்டு அவற்றின் எழுத்திற்குச் சிங்களப் பிராமி எனவும், மொழிக்கு சிங்களப் பிராகிருதம் எனவும் பெயரிட்டழைக்கும் இந்நூலாசிரியர் அதே பெயர்கள், எழுத்துக்கள் தமிழகக் கல்வெட்டுக்களில் வரும் போது மட்டும் அவற்றைச் சிங்களப் பிராமி என்றோ அல்லது அதன் மொழியைத் தமிழ் மயப்படுத்தப்பட்ட சிங்கள பிராகிருதம் என்றோ அழைக்காது, தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதம் என அழைத்திருப்பது முதற்கூறிய கருத்திற்கு முற்றிலும் முரண்பாடாகத் (3grrgigalpg|(Mahadeva 2003:315-375). பல்வேறு சான்றா தாரங்களைப் பயன்படுத்தித் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக் களின் தோற்ற காலத்தை கி.மு.2ஆம் நூற்றாண்டென வலியுறுதித்தியுள்ள ஆசிரியர் இலங்கைப் பிராமி கல்வெட்டுக் களின் தோற்ற காலத்தை கி.மு.3ஆம் நூற்றாண்டென எடுத்துக் கொள்வதற்கு இலங்கையில் சில ஆதாரங்கள் இருப்பதால் தமிழகத்தையும் அதன் சமகாலமாக எடுக்கலாம் என்ற முடிவுக்கு திடீர் என வருவது(Mahadeva 2003:94) எதையும் தமிழகத்தில் இருந்து தான் இலங்கை பார்க்க வேண்டும், இலங்கையில் இருந்து தமிழகம் பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்ற பாரம்பரிய நம்பிக்கையில் இருந்து இந்நூலாசிரியரும் விலகவில்லை என எண்ணத்துரண்டுகிறது.
8

III
ஆகவே இந்த இடத்தில் இலங்கைப் பிராமி பற்றி மகாதேவனின் கருத்துக்களில் உள்ள முரண்பட்ட கருத்துக்கள் பற்றிக் கூறுவத ற்கு முன்னால் இந்நூல் வெளிவரும் காலப்பகுதியில் நாம் வட இலங்கையில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் போது கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங் கள் என்பனவற்றின் முக்கியத்துவம் பற்றி கூறுவது பொருத்த மாக இருக்கும் எனக் கருதுகிறேன். அவை மகாதேவன் அவர் களது நூலில் இலங்கைப் பிராமி பற்றி முன்வைக்கப் பட்டுள்ள கருத்துக்களில் எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களின் நியாயத் தன்மையை இங்கு கூடியுள்ள கல்வெட்டாய்வாளர்கள் புரிந்து கொள்ளவும், இந்நூலாசிரியர் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் ஆய்வுகளில் இலங்கைப் பிராமி பற்றிய தனது கருத்து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவும் உதவலாம் எனவும் நம்புகிறேன்.
1989-94 காலப்பகுதியில் பூநகரியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஒரிரு பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் காலத்தை கி.மு. 2-1 ஆம் நூற்றாண்டெனக் கணித்திருக்கும் மகாதேவன் அவர்கள் அவற்றின் எழுத்து, மொழி தமிழ் எனக் குறிப்பிட்டுள்ளார் (Mahadeva 2003:48), இங்நிலையில் கடந்த ஆண்டு இப்பிராந்தியத்தில் உள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, கல்முனை போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போது முன்னரைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையுடைய எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் கிடைத்துள்ளன. ஒரிரு எழுத்துக் களைக் கொண்ட இம்மட்பாண்ட ஒடுகளில் உள்ள பெரும்பாலான எழுத்துக்கள் விளிம்பை ஒட்டி அதன் வெளிப்புறத்திலும், உட்புறத் திலும் எழுதப்பட்டுக் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்துக்கள் காணப்படுவதுடன், ஏனைய எழுத்து வடிவங்களும் தமிழகத்தில் உள்ள கொடுமணல், அரிக்கமேடு, மாளிகைமேடு, அழகன்குளம், பூம்புகார், காவேரிப் பூம்பட்டினம், வல்லம் போன்ற இடங்களில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட எழுத்துக்களை ஒத்தனவாக உள்ளன. இச்சாசனங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதைத் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் "அன்" என்ற விகுதியுடன் முடியும் சில பெயர்களைக் கொண்டு உறுதிப்படுத்த
முடிகிறது. 9

Page 14
பூநகரியில் கிடைத்த பிராமிய எழுத்து பொறித்த மட்பாண்ட ஒடுகள்
 


Page 15
-—
| ,
 

| || | .
*

Page 16
இவ்வாறான தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் அண்மைக் காலத்தில் கந்தரோடை, அநுராதபுரம் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது (கிருஷ்ணராஜா 1998, Coningham 1996:73-97).
கந்தரேடையில் கிடைத்த மட்பாண்ட எழுத்து
தமிழ்ப் பிராமி எழுத்தின் பயன்பாடு சமகாலத்தில் வெளியிடப்பட்ட
நாணயங்களிலும் இருந்துள்ளன என்பதற்கு தென்னிலங்கையில்
அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த உதிரண், தஜபியன்,
மகாசாத்அனி, கபதிகஜபஅண், திஸபுரசடனாகராசன் போன்ற 14
 
 
 

பெயர்கள் பொறித்த நாணயங்களும், வடஇலங்கையில் உடுத்துறை, கந்தரோடை போன்ற இடங்களில் கிடைத்த நாகபூமி, உதிபன் அல்லது உதயன் போன்ற பெயர்கள் பொறித்த நாணயங்களும் சான்றாக உள்ளன(Bopearachchi 1999, Pushparatnam 2002).
) ।
உதிரன் திஷபுரசடனநாகராசன்
தென்னிலங்கையில் கிடைத்த 2300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் நானயங்கள்
மகாதேவன் தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களின் தோற்ற காலத்தை சங்க காலப் பாண்டியர் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட "பெருவழுதி" என்ற பெயர் பொறித்த நாணயங்களின் சமகாலம் எனக் குறிப்பிடுகிறார் (Mahadeva 2000:147-6). இக்காலக் கணிப்பு தமிழகத்தின் சமகாலத்திலேயே இலங்கை யிலும் தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் வெளியிடும் மரபு இருந்ததற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். ஆயினும் மகாதேவன் அவர்கள் இங்காணயங்களை இலங்கைத் தமிழர்கள் வெளியிடாது, தமிழகத்தில் இருந்து வர்த்தக நோக்கோடு தென்னிலங்கையில் குடியேறிய தமிழ் நாட்டுத் தமிழர்கள் வெளியிட்டவை எனக் குறிப்பிடுகிறார். ஆனால் இங்ங்ாணயங் களின் வடிவமைப்பு, அவற்றில் இடம்பெற்றுள்ள சின்னங்கள்,
15

Page 17
குறியீடுகள் என்பன சமகாலத் தமிழக நாணய மரபில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இலங்கை நாணய மரபை அப்படியே ஒத்துள்ளன. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்களில் அவற்றை வெளியிட்ட வம்சங்களின் குலச் சின்னத்தைப் பொறிப்பது முக்கிய அம்சமாக இருந்துள்ளது. ஆனால் அச்சின்னங்கள் எதையும் இங்ங்ாணயங்களில் காண முடியவில்லை. சங்க காலத் தமிழகத்தில் வெளியிட்ட நாணயங்கள் வர்த்தகத் தொடர்பால் இலங்கை வந்ததற்குப் பல நாணயங்கள் சான்றாகக் கிடைத்துள்ளன. ஆனால் தென்னிலங்கையில் கிடைத்த நாணயவகை எதுவும் தமிழகத்தில் இதுவரை கிடைக்க வில்லை. மேலும் இங்நாணயங்களில் வரும் பெயர்கள் சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை விட சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழர்களைக் குறிக்கும் பெயர்களை ஒத்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இந்த வேறுபாடுகளுக்கு அப்பால் இங்ாகாணயங்கள் இலங்கையில் வடிவமைக்கப்பட்டதென்பதற்கு அவற்றை வடிவமைக்கப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்கள் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கிடைத்திருப்பது இங்நாணயங்கள் இலங்கையில் இலங்கைத் தமிழரால் வெளியிடப்பட்டதென்பதற்குச் JFTaipr5 šolsološpji (Pushparatnam:2002 33-69).
ஆகவே தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் இலங்கையில் கிடைத்திருப்பதை ஆதாரமாகக் கொண்டு மூன்று வகையான முடிவுகளுக்கு வருவது பொருத்த மாகத் தெரிகிறது. 1) பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அதன் மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தது போல் இலங்கையிலும் இருந்துள்ளது. ஆயினும் சமகாலத்தில் மக்களது பேச்சு மொழியாக தமிழும் இருந்துள்ள தற்கு இம்மட்பாண்ட எழுத்துக்கள், நாணயங்கள் சான்றாக உள்ளன. 2) தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் இதுவரை தென்னிங்தியாவில் சிறப்பாகத் தமிழகத்திலும், இலங்கையிலும் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வொற்றுமைகள் பண்டுதொட்டு இலங்கைக்கும், தமிழகத்
| 6

திற்கும் இருந்து வந்த பண்பாட்டு ஒற்றுமை இரு நாடுகளிலும் பெளத்த, சமண மதங்கள் பரவிய பின்னரும் தொடர்ந்ததற்குச் சான்றாக உள்ளன. 3) ஆதிகாலம் தொட்டு நாணயங்கள் இனக்குழுத் தலைவர்கள், வணிகர்கள், குறுநிலமன்னர்கள் போன்றோரால் வெளியிடப்பட்டதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. தென்னிலங்கையிற் கிடைத்த நாணயம் ஒன்றிலி "திஸபுரசடனாகராசன்" என்ற பெயர் காணப்படுகிறது (Pushparatnam2002:58). இவ்வாதாரம் கி.மு.2ஆம் நூற்றாண்டி லேயே தென்னிலங்கையில் குறுநில மன்னனின் ஆட்சி இருந்தத ற்குச் சான்றாகும். இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இக்காலப்பகுதியில் 32 தமிழ் மன்னர்களின் ஆட்சி தென்னிலங்கை யில் இருந்ததாக மகாவம்சம் கூறுவதும் இவ்விடத்தில் நினைவு &#n-Jğjäsasg (Mahavamsa 25:75).
உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் நாகபூமி என்ற பெயர் காணப்படுகிறது (Pushparatnam2002:10-1). இப்பெயர் பண்டைய காலத்தில் வடஇலங்கையின் இன்னொரு பெயர் என்பதற்குப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனத்திலும் சான்றுகள் காணப்படுகின்றன (Paranavithana 1983:79-80, Puthukottai Inscriptions. 239,no366). இவற்றின் அடிப்படையில் இங்காணயம் நாகநாட்டை ஆண்ட சிற்றரசனால் வெளியிடப்பட்டதென்ற முடிவுக்கு வரமுடிகிறது.
உடுத்துறையில் கிடைத்த நாணயம்
17

Page 18
கந்தரோடையில் கிடைத்த நாணயம்
மேற்கூறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏறத்தாழ தமிழகத்தில் சமகாலத்தில் இருந்து இலங்கையிலும் தமிழ் மொழியின் பயன்பாடும், அரச உருவாக்கமும் ஏற்பட்டன எனக் கூறமுடியும். இப்பின்னணியில் இலங்கைப் பிராமி எழுத்து பற்றி மகாதேவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஆராய்வது பொருத்தம் எனக் கருதுகிறேன்.
IᎳ
இலங்கையிலும், தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்து வடஇந்தியாவில் இருந்து பரவிய வடபிராமி அல்லது அசோக பிராமி எனக் கூறும் இந்நூலாசிரியர் தமிழகத்திற்கு அது சமண மதத்துடனும், இலங்கைக்கு பெளத்த மதத்துடனும் பரவியதாகக் கூறுகிறார்(Mahadeva 2003:93-6). இங்கே வேறுபட்ட இரு மதங்களால் ஒரே கால கட்டத்தில் இரு நாடுகளிலும் ஒரேவகை யான எழுத்து அறிமுகமாகியதென்பதற்கு அவர் எடுத்துக் காட்டும் சான்றுகள் பொருத்தப்பாடானவையாகத் தெரிய வில்லை. ஏனெனில் தமிழகத்திற்கு சமண மதம் பரவியதைத் தொடர்ந்து அம்மதம் இலங்கையிலும் கி.மு.4ஆம் நூற்றாண்டிலிருந்து பரவிய தற்குப் பாளி இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு தமிழ் நாட்டு வணிகரும், படையெடுப்பாளரும் காரணம் எனக் கூறும் இலங்கையின் முதல் வரலாற்றிலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் கி.மு.1 ஆம் நூற்றாண்டில் வட்டகாமினி
18
 

என்ற மன்னன் "கிரி" என்ற தமிழ்ப் படையெடுப்பாளன் வாழ்ந்த சமணப் பள்ளியை இடித்தே அவ்விடத்தில் அபயகிரி என்ற பெளத்த விகாரையைக் கட்டினான் எனக் கூறுகிறது (Mahavamsa 33:43-4). இத்தனைக்கு இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் சமண மதம் பற்றிய சான்றுகள் இருப்பதாக இந்நூலாசிரியரோ அல்லது ஏனைய ஆய்வாளர்களோ எடுத்துக்காட்ட முற்பட வில்லை. ஆனால் தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பிராமிக் கல்வெட்டுக்களும் சமண மதத்துடன் தொடர்புடையவை என்பதற்கு இந்நூலாசிரியர் அக்கல்வெட்டுக்களில் வரும் கணிய, நந்த, ஆசிரிய, ஊபாசன், அமணன் போன்ற பெயர்களை மட்டும் முக்கிய சான்றாக எடுத்துக் காட்டியுள்ளார்(Mahadeva2003:129-4). ஆனால் இப்பெயர்களைச் சமண மதத்திற்கு மட்டுமன்றி பெளத்த, ஆஜிவிக போன்ற மதங்களுக்கும் பொதுவானவை என எடுத்துக் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது. இப் பெயர்களை சமண மதத்திற்கு மட்டும் உரியதென இந்நூலாசிரியர் கொண்டால் ஏன் தமிழகத்தைக் காட்டிலும் இப்பெயர்கள் பலவற்றைக் கொண்ட இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களைக் கவனத்தில் எடுக்கத் தவறினார் என்பது தெரியவில்லை (Paramavithana 1970:nos925, 530, 534,997,78). அவர் கூறுவது போல் இப்பெயர்கள் சமண மதத்தை மட்டும் குறிப்பதாக ஏற்றுக் கொண்டால் அப்பெயர்களை உடைய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களையும் அவர் சமண மதம் சார்ந்தவை எனக் கொள்வாரா என்ற கேள்வி எழுகின்றது?
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இலங்கைக்கும், தமிழகத்திற்கும் வடஇந்தியாவில் இருந்து பிராமி எழுத்து அறிமுகமாகியதாகக் கூறும் இந்நூலாசிரியர் பின்னர் தமிழக, ஆந்திரச் செல்வாக்கால் இலங்கைப் பிராமி வளர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் (Mahadeva 2003:177). இங்கே ஆந்திர, தமிழகச் செல்வாக்கால் இலங்கை யில் இருந்த தமிழ், சிங்கள எழுத்துக்கள் வளர்ச்சியடைந்தன எனக் கூறுவதில் ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிராமி எழுத்தும் தமிழகச் செல்வாக்கிற்கு உட்பட்டே வளர்ந்ததென ஆசிரியர் கூறும் போது அதற்குப் பொருத்தமான சான்றாதாரங்கள் அவர்
9

Page 19
போது அதை ஒருபக்கச் செல்வாக்காக மட்டும் எடுத்துக் கொள்வதும் பொருத்தமாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில்
மட்டும் கூறும் போது, இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பெளத்த மதத்தையே எடுத்துக் கூறுகின்றன. தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் 25 வீதமான பெயர்ச் சொற்கள் பிராகிருதமாக இருப்பினும் அதன் கல்வெட்டு மொழியாகத் தமிழே காணப்படு கிறது. ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் 50 வீதமான பெயர்ச் சொற்கள் தமிழக அல்லது பிராகிருத மயப் படுத்தப்பட்ட தமிழாக இருப்பினும் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதமே காணப்படுகிறது. இங்கே இரு நாட்டுக் கல்வெட்டுக் களினது மொழியும், மதமும் வேறுபட்டதாகவே உள்ளன.
இந்த வேறுபாடுகளுக்கு மத்தியிலும் இரு நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைத் தன்மை காணப்படுவதைக் கொண்டு ஆசிரியர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்பது தெரிகிறது. அதற்குச் சார்பாக இரு நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களுக்கும் இடையே காணப்பரும் பின்வரும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டலாம். 1) அசோக பிராமிக் கல்வெட்டுக்கள் மக்களுக்குப் பெளத்த தர்மத்தைப் போதிக்கும் நோக்கில் பாறைகளிலும், கற்றுண்களிலும் பல வரிகளில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை, தமிழகப் பிராமிக்கல்வெட்டுக்கள் இப்பெளத்த தருமத்தைக் கூறாது ஓரிரு வரிகளில் பெளத்த, சமணத் துறவிகளுக்கு சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரும் தானமாகக் கொடுத்த குகை, கற்படுக்கை, நிலம், குளம், கால்வாய் என்பன பற்றியே கூறுகின்றன. 2) இரு நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களின் தோற்ற அமைப்பும், வரிவடிவங்களின் வடிவமைப்பும் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவை எனக் கருதும் அளவுக்கு ஒற்றுமை உடையனவாகவும் காணப்படுகின்றன. 3) இரு நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் அசோக பிராமியில் கானப்படும் "அ", "உ", "க", "ச", "வ", "ப" போன்ற எழுத்துக்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்
2O

இலங்கைப் பிராமி தமிழகப் பிராமி
அசோக பிராமி)

Page 20

அவற்றின் வடிவமைப்பு அசோக பிராமியில் இருந்து வேறுபட்டு தமிழகத்திற்கும், இலங்கைக்கும் பொதுவானதாகக் காணப் படுகிறது (பெர்னாண்டோ 1969:21-8). 4). ஆகாரம், இ, ஈகாரம், ஊ, ஊ காரம் என்பவற்றைக் குறிப்பதற்கு இடப்படும் கோடு அசோக பிராமியில் பெரும்பாலும் எழுத்தின் மேற்பக்க நுனியில் இடப்படுவது வழக்கமாகும். ஆனால் தமிழக, இலங்கைப் பிராமி எழுத்தில் இக்கோடு சற்று கீழ் நோக்கி இடப்பட்டிருப்பதைக் ATSTGGCGTA).Th.
5) அசோக பிராமியில் கூட்டெழுத்து முக்கிய அம்சமாகக் காணப்படுகிறது. ஆனால் தமிழக, இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இவ்வெழுத்துக் காணப்படவில்லை. 6) அசோக பிராமியில் பயன்படுத்தப்பட்ட "ம"() என்ற எழுத்து முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் இரு நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (ப) தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள "ள", "ழ", "ற", "ன" போன்ற எழுத்துக்கள் தமிழகத்தை அடுத்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இவ்வொற்றுமைகள் ஒரே காலத்தில் இரு நாடுகளிலும் தொடர்பு அற்ற நிலையில் நிகழ்ந்தன எனக் கூறமுடியாது. அவ்வாறு கூறக் கூடிய அளவிற்கு இரு நாட்டுக் கல்வெட்டு மொழியும், அவை கூறும் மதமும் ஒன்றாக இருக்கவுமில்லை. இதனால் ஒரு பிராந்தி யத்தில் வழக்கில் இருந்த எழுத்து மரபே இன்னொரு நாட்டில் செல்வாக்குச் செலுத்தியதெனக் கூறலாம். ஆனால் எந்த நாட்டி லிருந்து எந்த நாட்டிற்குப் பரவியதென்பதே இங்கு எழும் முக்கிய கேள்வியாகும். மகாதேவன் கூறுவது போல் தமிழ் நாட்டுச் செல்வாக்கால்தான் இலங்கைப் பிராமியில் இந்த மாற்றம் ஏற்பட்ட தென்ற கருத்தை அப்படியே ஏற்கும் போது சில ஐயப்பாடுகள் எழுகின்றன.
அசோகன் காலப் பிராமிக் கல்வெட்டுக்களில் 40 வகையான எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்ட போது, தமிழகப் பிராமிக்
23

Page 21
கல்வெட்டுக்களில் 26 வகையான எழுத்தும், இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் 37 வகையான எழுத்தும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
F. g.: 1. . . . . . . . リー . :ת : # fi**5 י. דל ב *E .
அசோக பிராமி எழுத்து
24
 

w, Lu d
+ 4۔ --۔ س+ *
WM O CO DO J
لا لH لF لH ل| ل! را لا
+ + + --
כ, כי כ, ל, כ, ל, 5, כ, ל, כי כי כל ל
u lu Hu Hu l
--
C
O OG O DO DO O
--
д л л л л л л л ЛЛ Л/ /N /Ү“N” /N "
A d
als
ја لا H ل لP1B L
ta
«hገed 轟 C Cha
tha qfia
마n크
ba O O bha
D→ー D70A对) D-gー「D-○心女 D-37 -O心LB D-g〜D-O女
けしAJ-OK V DOー山)ー「D-CA-tーもに yo-)ー「D-OK b DJー「g-CA しんし Hー)〜〜DーCKド 口Dーu〜「DIOK U-*} 「10心 U-B〜 OK
8. لہ
rl huruf UFO UFF- Ur (fr:*U*U
5- ताजा Sa
ha
a
25
இலங்கைப் பிராமி எழுத்து

Page 22

இங்கே அசோக பிராமியிலும், இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக் களிலும் பயன்படுத்தப்பட்ட எல்லா எழுத்தும் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிகிறது. மகாதேவன் கூறுவது போல் அசோக பிராமியில் இருந்தே தமிழ கப் பிராமி தோன்றியதென்ற கருத்தை ஏற்றால் தமிழகத்தின் தொடக்க காலக் கல்வெட்டுக்களிலாவது அசோக பிராமிக்குரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பயன் படுத்தியதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை; அல்லது அசோக பிராமி தமிழகத்திற்கு அறிமுகமாவதற்கு முன்னரே தமிழகத்திற்கென எழுத்து மரபு தோன்றியிருந்து அவ்வெழுத்திற்குப் பழக்கப்பட்ட மக்கள் தமது மொழிக்கு ஏற்ப அசோக பிராமிக்குரிய சில எழுத்துக்களை ஏற்றும், ஏனைய எழுத்துக்களைப் புறக்கணித்திருக்கவும் வேண்டும். அத்தகைய ஒரு கருத்தை மகாதேவன் அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிய வில்லை. அவ்வாறு கூறுவதற்கும் ஆதாரம் இருப்பதாகவும் தெரிய வில்லை.
ஆயினும் மகாதேவன் தான் எடுத்துக்கொண்ட முடிவை நியாயப்படுத்த கல்வெட்டுக்களில் காணப்படாத அசோக பிராமிக்குரிய எழுத்துக்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கிடைத்த மட்பாண்டங்களில் இருப்பதாக கூறுகிறார். ஆனால் இந்த ஆதாரமும் பொருத்தப்பாடானதாகத் தெரியவில்லை. ஏனெனில் எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் (ஆங்திரம்) - குறிப்பாகத் தமிழகத்தில் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. தமிழகத்தைக் காட்டிலும் வடஇந்தியாவில் அதிக எண்ணிக்கையான அகழ்வாய்வு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உண்மையில் வடஇந்தியாவில் மட்பாண்டங்களில் பிராமி எழுத்துப் பொறிக்கும் மரபு இருந்திருக்கு மானால் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு அகழ்வாய்விலாவது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு கிடைக்காத நிலையில் எப்படித் தமிழக த்தில் கிடைத்த மட்பாண்ட எழுத்துக்களை வடஇந்தியாவில் இருந்து அசோக பிராமி எழுத்து தமிழகத்திற்கு வந்தது என்பதற்கு דל"

Page 23
ஆதாரமாகக் காட்ட முடியும். அவ்வாறு வலிந்து காட்டினாலும் அசோக பிராமிக்குரிய எல்லா எழுத்தும் தமிழகத்தில் கிடைத்த மட்பாண்டங்களில் இருப்பதாக ஆசிரியரால் ஆதாரம் காட்டமுடியவில்லை.
இந்த மட்பாண்ட எழுத்துக்களை வடஇந்தியாவில் இருந்து வந்த அசோக பிராமிக்குரிய எழுத்தாக ஆதாரம் காட்டும் போது இன்னொரு முக்கிய சந்தேகம் எழுகின்றது. தமிழகத்தில் கிடைத்த பெரும்பாலான மட்பாண்டங்களில் அசோக பிராமியுடன், தமிழக த்திலும், இலங்கையிலும் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்கேயுரிய தமிழ்ப் பிராமி எழுத்தும், இரு நாட்டிற்கும் பொதுவான எழுத்து வடிவமும் சேர்ந்தே காணப்படுகின்றன.
தமிழக மட்பாண்டங்களில் அசோக பிராமியுடன் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள்
28
 

இவற்றை வடஇந்தியாவில் இருந்து அசோக பிராமி தமிழகத்தி ற்குப் பரவியதற்குச் சான்றாகக் கொண்டால் எப்படி அசோக பிராமியில் பயன்படுத்தாத தமிழ் மொழிக்குரிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதில் கலந்திருக்க முடியும். ஆகவே தமிழகத்தில் கிடைத்த எழுத்துப் பொறித்த மட்பாண்டங்களை ஆதாரம் காட்டி அவற்றை வடபிராமி அல்லது அசோக பிராமி எழுத்து வடஇந்தியா வில் இருந்து தமிழகத்திற்கு அறிமுகமாகியதற்குச் சான்றாதாரமாக ஆசிரியர் காட்ட முற்படுவது பொருத்தமான விளக்கமாகத் தோன்ற Clasůsona).
இங்ங்லையில் தமிழக, இலங்கைப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்க ளிடையே காணப்படும் ஒற்றுமைகளையையும், தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படாத வடபிராமி எழுத்து இலங் கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் நோக்கும் போது இலங்கைப் பிராமி எழுத்தில் தமிழகச் செல்வாக்கு ஏற்பட்ட தென்பதைவிட தமிழகத்திற்குரிய பிராமி எழுத்து இலங்கையில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுவதே பொருத்த மாகத் தெரிகிறது.
மட்பாண்டங்களில் பிராமி எழுத்துப் பொறிக்கும் மரபு என்பது இலங்கைக்கும், தமிழகத்திற்கும் உரிய தனிச் சிறப்பாகும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் போது கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்களில் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருப்பது போல் தமிழ்ப் பிராமி எழுத்தோடு அசோக பிராமிக்குரிய எழுத்து தனித்தும், கலந்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உண்டு. இதற்கு அநுராதபுரம், பூநகரி, கந்தரோடை போன்ற இடங்களில் கிடைத்த மட்பாண்ட எழுத்துக்கள் சிறந்த சான்றுகளாகும் (புஷ்பரட்ணம் 1993:43). இதனால் தமிழகத்தில் மட்பாண்டங்களில் பெறப்பட்ட அசோக பிராமி எழுத்தை வடஇந்தியத் தொடர்பால் வந்ததென்பதை விட இலங்கையில் இருந்து சென்றவை என எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும். மகாதேவன் கூட தனது முன்னைய ஆய்வுகளின் போது தமிழகத்தில் அழகன்குளம், 29

Page 24
அரிக்கமேடு, கொடுமணல், வல்லம் போன்ற இடங்களில் கிடைத்த அசோக பிராமி எழுத்தையும், அவற்றில் வரும் சொற்களையும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு அவற்றை இலங்கையில் இருந்து வங்த சிங்களப் பிராமி என்றே அழைத்துள்ளதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் (Mahadevan1994:1-19). ஆனால் இந்நூலில் மட்டும் அவற்றைத் தமிழகத்திற்குரிய பிராமி எழுத்து வடஇந்தியத் தொடர்பால் தோன்றியதென்பதற்கு ஆதாரமாகக் காட்ட முற்பட்டிருப்பது அவரது நியாயமான முன்னைய முடிவுக்கு முரண்பாடாக உள்ளது. ஆயினும் அவர் மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட எங்த எழுத்துக்களை, எந்தப் பெயர்களை அசோக பிராமி எழுத்து வடஇந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமானது என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறாரோ அவை சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை பின்வரும் பிராமிக் கல்வெட்டுக்களுக்குரிய புகைப்படங்கள் மூலம் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
இதற்கு மேலும் சார்பாக மூன்று வகையான ஆதாரங்களைக் காட்டமுடியும். (1.) முன்னர் குறிப்பிட்டது போல் வடஇந்தியாவில் இதுவரை எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் இலங்கையில் பல இடங்களில் இவ்வகையான எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. (2.) தமிழக மட்பாண்டங்களில் பொறிக்கப் "பட்ட எழுத்துக்கள் சில அசோக பிராமியாக இருப்பினும் அதன் எழுத்துவடிவம் வடஇந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத் தில் இருந்து வேறுபட்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட அசோக பிராமி எழுத்து வடிவத்தை அப்படியே ஒத்துக் காணப்படுகின்றது. (3. மட்பாண்டங்கள் பலவற்றில் அசோக பிராமி எழுத்துடன் தமிழ் பிராமி எழுத்தும் கலந்து காணப்படுகின்றது (Subbarayalu 1991). இந்த மட்பாண்ட எழுத்துக்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருந்தால் அவற்றில் எப்படி வடபிராமியில் இல்லாத தமிழ் மொழிக்குரிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இடம்பெற்றிருக்க முடியும்?
3O

பிராகிருத மொழி பெயர்கள்
தமிழக மட்பாண்டங்களில்

Page 25
தமிழகத்திற்குரிய பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்து சென்றதென்பதற்கு இன்னுமொரு சான்றை ஆதாரமாகக் களட்டலாம். பொதுவாக இரு நாடுகளிலும் அசோக பிராவிக்குரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் வடிவமைப்பு பெரும்பாலும் தமிழகத்திற்கு வடக்கே புழக்கத்தில் இருந்த வடபிராமி எழுத்தைவிடச் சற்று வேறுபட்டதாகவே காணப்படு கின்றன. ஆயினும் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது போல் அசோக பிராமிக்குரிய எல்லா எழுத்துக்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் பயன்படுத்தப்படாத அசோக பிராமிக்குரிய எழுத்துக் கள் பல இலங்கையில் தமிழ்ப் பிராமி எழுத்து வடிவத்திற்கு ஒத்த கிலையில் மாற்றமடைந்து காணப்படுகின்றன. இங்கே தமிழக த்தில் புழக்கத்தில் இருந்த எழுத்து மரபே இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியதென்ற மகாதேவனின் கருத்தை ஏற்றால் மிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் e O. O. 5 அசோக பிராமி எழுத்துக்கள் இலங்கையில் தமிழ்ப் பிராமி எழுத்து மரபை ஒத்த கிலையில் வளர்ந்ததென்ற கேள்வி எழுகின் றது. மாறாக அவ்வெழுத்துக்கள் இலங்கையில் இருந்து சென்றிருக்கலாம் எனக் கூறுவதற்கு இலங்கைப் பிராமிக் ம்வெட்டுக்க ம், மட்பாண்டங் O in s55 scret எழுத்துக்களை ஆதாரமாகக் காட்டமுடியும்.
தமிழகத்திற்குரிய பிராமி எழுத்து வடஇந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அவை தமிழகத்திற்கு வடக்கே
வந்திருக்க வேண்டும். சமண மதத்துடன் அசோக பிராமி எழுத்து தமிழகத்திற்கு வந்ததாகக் கூறும் மகாதேவன் அம்மதம் கள்காடகத் தில் இருந்தே தமிழகத்திற்குப் பரவியதாக மேலும் கூறுகிறார் (Mahadevan2003:127-8). அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வு களில் இருந்து தமிழகத்திற்குப் பிராமி எழுத்து அறிமுகமாவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழக நாகரிகம் பெருங்கற் காலப் பண்பாட்டுடன் தோன்றியதற்குரிய சான்றுகள் பல இடங் களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் க.இராஜன் 32

அவர்கள் தனது தொல்லியல் மேலாய்வு மூலம் தமிழகத்தில் ஏறத்தாழ 100க்கு மேற்பட்ட நாகரிக மையங்களை அடையாளம் கண்டுள்ளர். அவற்றுள் கணிசமான நாகரிக மையங்கள் தமிழகத் தின் வடபகுதியிலும், மேற்குப் பகுதியிலும் காணப்படுகின்றன (Rajan 1997). இச்சான்றாதாரங்கள் இங்காகரிக மையங்களில் வாழ்ந்த மக்கள் புதிய பண்பாட்டைத் தோற்றுவிக்கவும், பிற இடங்களில் இருந்து பரவும், புதிய பண்பாட்டை ஏற்கவும், அவற்றைத் தமது பண்பாட்டுக்கு ஏற்ற முறையில் மாற்றி வாழவும் தயாராக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன.
தமிழக நாகரிக உருவாக்கத்திற்கு உரோம நாட்டுடன் ஏற்பட்ட வணிகத் தொடர்பை ஒரு சான்றாகக் காட்டும் தமிழக ஆய்வாளர் கள் உரோமர் வெளியிட்ட தொடக்க கால நாணயங்கள் தமிழகத் தின் மேற்குப் பகுதியிலும், காலத்தால் பிந்திய நாணயங்கள் தமிழகத்தின் கிழக்குப் பகுதியிலும் புழக்கத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதற்கு உரோமரின் ஆரம்பகாலத் தொடர்பு முதலில் தமிழகத்தின் மேற்கில் ஏற்பட்டு காலம் தாழ்த்தி கிழக்கிற்கு வந்ததே காரணம் என விளக்கம் கூறுகின்றனர் (Rajan 1994). இந்த விளக்கத்தைப் பொருத்தம் எனக் கொண்டால் அதாவது அசோக பிராமி எழுத்து வடஇந்தியாவில் இருந்து கர்நாடகம் அல்லது ஆந்திர மாநிலம் ஊடாகத் தமிழகத்திற்குப் பரவியிருந்தால் அவற்றின் தொடக்ககாலக் கல்வெட்டுக்கள் இம்மா நிலங்களுக்கு அண்மையாக உள்ள தமிழக நாகரிக மையங்களை அண்டிய இடங்களிலேயே முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு. ஆனால் மகாதேவன் அவர்கள் இதுவரை கிடைத்த தொன்மையான அனைத்துப் பிராமிக் கல்வெட்டுகளும் தமிழகத்தில் பாண்டிநாட்டில் உள்ள மாங்குளம், மேட்டுப்பட்டி, புளியங்குளம், விக்கிரமங்கலம், கருங்காலக்குடி, கீழைவளவு, சித்தன்னைவாசல் போன்ற இடங்களிலேயே கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஒரிரு கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற்கு வெளியே ஜம்பை, சேரநாட்டில் (தற்போதைய கேரளம்) உள்ள எடக்கல் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் காலம் பாண்டிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின்
33 .

Page 26
காலத்தை விட மூன்று நூற்றாண்டுகள் பிந்தியவையாகும் (Mahadevan 2003:97). இத்தனைக்கும் தமிழகத்திற்குச் சமண மதம் பரவக்காரணமாக இருந்த கர்நாடகத்தில் தமிழகத்தைப் போன்ற ஒரு பிராமிக் கல்வெட்டுத்தானும் கிடைக்கவில்லை. ஆந்திராவில் அசோக பிராமியுடன் அப்பிராந்தியத்திற்கே உரிய தனித்துவமான பிராமி எழுத்துக்களுடன் கூடிய பிராகிருத மொழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அப் பிராந்திய எழுத்துக்களுடன் தமிழ்ப் பிராமிக்குரிய தொடர்பு கி. பி.1ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஏற்பட்டதாக மகாதேவன் assoofsg|Gifestiff (Mahadevan 2003:94). girlssoo)lics 6T'Luq QL இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு பிராமி எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டதெனக் கூறமுடியும்?.
V
தமிழகத்தைப் போல் ஆந்திர நாட்டுச் செல்வாக்கும் இலங்கைப் பிராமி எழுத்தில் ஏற்பட்டதென மகாதேவன் கூறும் கருத்து இவ்விடத்தில் நோக்கத்தக்கது. தமிழகத்துடன் ஒப்பிடுகையில் ஆந்திர நாட்டுச் செல்வாக்கு இலங்கைப் பிராமியில் ஏற்பட்டி ருக்கும் எனக் கூற அதிக வாய்ப்புக்கள் இருந்தன. இதற்கு இருநாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களும் பெளத்த மதம் பற்றிக் கூறுவதுடன், அது பற்றிய செய்திகளும் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டிருந்தன. மகத அரசைத் தொடர்ந்து கிமு.2ஆம் நூற்றாண்டில் இருந்து பெளத்த மதத்தை அதிலும் குறிப்பாக மகாயான பெளத்தத்தை கட்டிக் காத்ததுடன், அதைப் பிற நாடு களுக்குப் பரப்பிய பெருமையும் ஆந்திர மன்னர்களுக்கு உரியது. பெளத்த மதம் தொடர்பான பிராமிக் கல்வெட்டுக்கள் பல அங்கு கண்டு பிடிக்கப்பட்டாலும் அவற்றுள் பல அசோக பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவதால் அவை பட்டிப் புரோலு பிராமி என்றே அழைக்கப்படுகின்றது (Mahadevan 2003:94). இக்காலத்தில் இலங்கையில் இருந்த பெளத்த துறவிகள் ஆந்திரா சென்று பெளத்தக் கல்வியை மேற்கொண்டத ற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவ்வாறு
34 −

செல்லும் பெளத்த துறவிகளுக்காக பட்டிபுரோலு என்ற இடத்தில் "சிகள" என்ற பெயரில் பெளத்த விகாரை கட்டியது பற்றி அங்கு கிடைத்த கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக் கூறுகிறது. மேலும் இலங்கைக்குரிய தொடக்ககாலப் புத்தர், போதிசத்துவர் சிலைகளும், புத்தரது ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஆந்திராவில் வடிவமைக்கப்பட்டு அங்கிருந்தே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன(Wijesekara1962). இதற்கு கந்தரோடை, வல்லிபுரம், அநுராதபுரம், மதவாச்சி, குச்சவெளி போன்ற இடங்களில் கிடைத்த பெளத்த கலைவடிவங்கள் சிறந்த சான்றுகளாகும். இவ்வாறான தொடர்புகள் ஆந்திராவுடன் இலங்கைக்கு இருந்த போதும் இதுவரை இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 1500க்கு மேற் பட்ட கல்வெட்டுக்களில் ஒரு கல்வெட்டில் கூடப் பட்டிப்புரோலு. பிராமி எழுத்தின் செல்வாக்குக் காணப்படவில்லை.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இலங்கைக்கும், தமிழகத்திற்கும் ஏறத்தாழ சம காலத்தில் அசோக பிராமி பரவியதெனவும், பின்னர் தமிழக, ஆந்திரச் செல்வாக்கால் இலங்கைப் பிராமி வளர்ந்ததெனவும் மகாதேவன் கூறும் கருத்து இலங்கையின் காலத்தால் முந்திய பிராமிக் கல்வெட்டுக்களுக்குப் பொருத்தமாக இல்லை என்றே கூறலாம். மாறாகத் தமிழகத்தின் தொடக்ககாலக் கல்வெட்டுக்கள் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள பாண்டி நாட்டில் கிடைத் திருப்பதையும், இக்கல்வெட்டுக்கள் பலவகையில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களுடன் ஒற்றுமைப்பட்டிருப்பதையும் கொண்டு தமிழகத்திற்குரிய பிராமி எழுத்து முதலில் இலங்கையில் இருந்தே சென்றது எனக்கூறுவது பொருத்தமாகத் தெரிகிறது. இவற்றைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதில் இரு நாட்டு வணிகர்களும், பெளத்த துறவிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். அவ்வாறு அறிமுகப்படுத்தக் கூடிய நெருங்கிய உறவு இரு நாடுகளுக்கும் பெளத்த மதம் பரவ முன்னரே இருந்ததற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.
35

Page 27
VI
தமிழகத்திற்குரிய ஆரம்ப எழுத்து வடிவம் இலங்கையில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கருத்திற்கு நாம் வரும்போது தமிழகத்திற்கு முன்னோடியாகவே இலங்கையில் எழுத்திருந்ததா என்ற கேள்வி எழுகின்றது. மகாதேவன் அவர்கள் தமிழகத்தில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் சிலவற்றின் காலத்தை கி.மு.3ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அல்லது கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகக் கொண்டாலும் கல் வெட்டுக்களின் காலத்தை கி.மு.2ஆம் நூற்றாண்டு என்றே கணித் துள்ளார். ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பதற்கு அக் கல்வெட்டுக் கள் சிலவற்றில் கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய அரச வம்சத்து மன்னர்கள் சிலரைப்பற்றிக் கூறப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறார். அதேவேளை மட்பாண்ட எழுத்துக்கள் இக்காலத்திற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பதற்கு அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்ட எழுத்துக்கள் ஆதாரமாக உள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பெருங்கற்கால பண்பாட்டிற் குரிய சான்றுகளுடன் எழுத்துப் பொறித்த மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் வடபிராமி எழுத்துக்களுடன் தமிழ்ப்பிராமி எழுத்தும் பயன்படுத்தப் பட்டுள்ளமை கண்டறியப் பட்டிருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இவ்வெழுத்துப் பொறித்த மட்பாண்ட ஒடுகள் விஞ்ஞான பூர்வமான பல்வேறு காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு இவற்றின் தோற்ற காலத்தை அசோக பூரீவர்த்தனா, காமினி சேனநாயக்கா, செனிவரட்னா போன்ற ஆய்வார்கள் கி.மு. 600-500 எனவும் (Sampath 1999), தெரனியகலா (Deraniyagala 1969:48-169) &$.qp. 700-600 6TGorayib, 9icolai, கொட்றிங்ரன் (Deraniyagala 1999) போன்றோர் கி.மு.500-400 எனவும் பலவாறு கணித்துள்ளனர். இக்காலக் கணிப்பையிட்டு இந்தியக் கல்வெட்டு ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துக் களும், ஐயங்களும் எழுந்துள்ளன. ஒரு பிரிவினர் இக்காலக் 36

கணிப்புத் தவறென நிராகரிக்கும் போது, இன்னொரு பிரிவின ரான ரமேஸ், சம்பத் போன்ற முன்னாள் இந்திய தொல்லியற்றுறை இயக்குனர்கள் இலங்கைப் பிராமி எழுத்தின் தோற்ற காலத்தை கி.மு.700-600 எனக் கணிப்பிட்டிருப்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பினும் அவை அசோக பிராமிக்கு முன்னர் அதாவது கி.மு. 500-400 அளவில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தோடு உடன்படுகின்றனர். விஞ்ஞான பூர்வமான காலக் கணிப்பில் இம்மட் பாண்ட எழுத்துக்களின் காலம் வேறுபட்டதாக இருப்பது அதற் குரிய காலம் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆயினும் இம்மட்பாண்ட எழுத்துக்களுடன் இணைந்து காணப்பட்ட மற்றைய பொருட்களுக்கு (ASSociate Findings) கொடுக்கப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும்போது கலாநிதி ரமேஸ், சம்பத் போன்ற அறிஞர்கள் கூறும் கருத்தையும் முற்றாக நிராகரிக்க முடியாதிருக்கிறது. இக்காலக் கணிப்பைச் சரியென எடுத்துக் கொண்டால் இதுவரை தமிழகத்தில் கிடைத்த பிராமி எழுத்தைவிட இலங்கைப் பிராமி எழுத்து தொன்மையானதெனக் கொள்ளலாம்.
இந்த இடத்தில் தமிழ்ப் பிராமிக்குரிய "ள", "ழ", "ற", "ன" ஆகிய பிராமி எழுத்துக்களின் தோற்றம் தொடர்பாக மகாதேவன் முன்வைத்துள்ள கருத்துக்களும், விளக்கமும் நோக்கத்தக்கன. இவ்வெழுத்துக்கள் பற்றி ஆராய்ந்த தமிழகக் கல்வெட்டாய்வாளர் களில் சிலர் அசோக பிராமிக்கு முன்னரே தமிழகத்தில் தமிழ்ப் பிராமி எழுத்து தோன்றிவிட்டதாகவும், அவ்வெழுத்தைப் பின் பற்றியே வடஇந்தியாவில் அதன் மொழிக்கு ஏற்ப புதிய எழுத்துக் கள் தோன்றின எனவும் கூறுகின்றனர் (இராஜவேலு 2000). இன்னும் சிலர் அசோக பிராமியும், தமிழ் பிராமியும் பொது மூலத்தில் இருந்து சமகாலத்தில் தோன்றியதாக வாதிடுகின்றனர் (Dani 1963). ஆனால் தமிழகத்திற்கு உரிய எழுத்து வடஇந்தியா வில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட வடபிராமி அல்லது அசோக பிராமி எனக் கூறும் மகாதேவன் அவர்கள் அவ்வெழுத்துக்கள் சிலவற்றில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலமே தமிழகப் பிராமிக்குரிய எழுத்துக்கள் தோன்றின எனக் கூறுகிறார்.
37

Page 28
இதற்குச் சான்றாக அசோக பிராமிக்குரிய "ல" ())என்ற எழுத்தில் இருந்து தமிழுக்குரிய "ள" () என்ற எழுத்தும், "ட" (c) என்ற எழுத்தில் இருந்து தமிழுக்குரிய "ழ" (பி) என்ற எழுத்தும், "ட" ) என்ற எழுத்தில் இருந்து தமிழுக்குரிய "ற" ()என்ற எழுத்தும், "ந" () என்ற எழுத்தில் இருந்து தமிழுக்குரிய "ன" () என்ற எழுத்தும் தோன்றியதாக எடுத்துக் ¿ETLGálpTñ(Mahadevan 2003:218).
『
« r ? ? ? :P
ρ {^ (Jר Jר hר וJר Jר י י " C G G 9 S
. L -9 —fh –_O
r1
丐
الجد தமிழ் பிராமிய எழுத்து
இங்கே அசோக பிராமிக்கு முன்னர் தமிழகத்தில் எழுத்து தோன்றிவிட்டதென்ற கருத்தும், இருவகை ள்முத்தும் சமகாலத்தில் தோன்றின என்ற கருத்தும் மேலும் விரிவாக ஆராயத்தக்கன. ஆனால் மகாதேவன் கூறுவது போல் அசோக பிராமியில் உள்ள எழுத்துக்களில் ஏற்படுத்திய மாற்றத்தால் தான் தமிழுக்குரிய பிராமி தோன்றியதென்ற கருத்தை அப்படியே ஏற்கும் போது சில ஐயங்கள் எமக்கு எழுகின்றன. அவர் எந்தக் கல்வெட்டைத் தமிழகத்தின் தொன்மையான பிராமிக் கல்வெட்டாக எடுத்துக் காட்டுகிறாரோ அக்கல்வெட்டுக்களில் எல்லாம் அசோக பிராமியுடன், தமிழ்ப் பிராமிக்குரிய எழுத்தும் சேர்ந்து காணப்படுகின்றன.
38


Page 29
ஒரு நாட்டில் வாழும் மக்கள் புதிதாக ஒரு எழுத்தை எழுதப் பழகும் போது அவ்வெழுத்திற்குப் பழக்கப்பட்டதன் பின்னரே அதில் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். பண்டைய தமிழ் எழுத்துக களின் வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் சிறிய மாற்றம் அல்லது வளர்ச்சி ஏற்பட ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு க்கு மேல் எடுத்ததை அவதானிக்கலாம். இதைப் பல கல்வெட்பாய் வாளர்கள் தமது ஆய்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்காலம் மத்தியகாலம் ஆதிகாலம் 仔 g, if F. T .1 ר
Η Ι ή I 3 1 3 ) L | IF J. J. d d d (55 巴 5 ö h Th L- L - - C. C 3. ωo) (η ο Υ I தி あ あ b ゆ h\ TE "h h - - لـLJ U U U U LD UO VID Vzð til ピサ LLI U (LJ LJ (U U
IJ J T 6) n) U \ ) U J 5) 9) J U 2) CS ό
Կ? Փ Ք Ф 器 |器冯曾器 歇 D 少 少 タ 。 있 னெ 63T (6) rn — rn - f
தமிழ் எழுத்தின் வளர்ச்சி
4()

ஆனால் தமிழகத்தில் ஒரே காலத்திற்குரிய தொன்மையான கல் வெட்டுக்களில் அசோக பிராமியும், தமிழ்ப் பிராமியும் சேர்ந்து காணப்படுவதால் இங்கு அசோக பிராமி அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதில் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்தி தமிழ்ப் பிராமி எழுத்தைத் தோற்று வித்தனர் எனக் கூறுவது எழுத்தின் வளர்ச்சி பற்றிய வரலாற்று உண்மைக்கு முற்றிலும் முரணாக உள்ளது. சிலவேளை கற்களில் அசோக பிராமியை எழுதுவதற்கு முன்னர் அவ்வெழுத்தைத் தமிழ் நாட்டு மக்கள் மட்பாண்டங்கள், உலோகப் பொருட்களில் எழுதுவ தற்கு பழக்கப்பட்டிருக்கலாம் என வாதிட இடமுண்டு. ஆனால் கற்களில் எழுத்துக்கு முன்னரே தொன்மையான அசோக பிராமி தமிழகத்தில் இருந்ததாக மகாதேவன் கருதவில்லை. அவ்வாறு கூறக்கூடிய சான்றுகளும் இதுவரை தமிழகத்தில் கிடைத்திருப்ப தாகவும் தெரியவில்லை. இங்கிலையில் தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தப்பட்ட அசோக பிராமியில் இருந்தே தமிழுக்குரிய எழுத்துக் "கள் தமிழ் நாட்டுக்குள் தோன்றியதெனக் கூறுவது பொருத்தமான
கருத்தாகத் தெரியவில்லை.
இதேவேளை தமிழுக்குரிய பிராமி எழுத்துக்கள் அசோக பிராமிக்குரிய எழுத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் தோன்றிய தென்பதற்கு மகாதேவன் காட்டும் விளக்கம் எல்லாத் தமிழ் எழுத்துக்களுக்கும் பொருத்தமாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள "ழ" (9)என்ற எழுத்தின் தோற்றம் அசோக பிராமிக்குரிய "ட"(da) "ட" (dha) என்ற எழுத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் வந்ததென்பதற்குக் கொடுக்கும் விளக்கம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அதில் முதலாவது "ட" (da)என்ற எழுத்தின் கோடு மேலிருந்து கீழ்நோக்கிச் சென்று பின்னர் இடப்பக்கம் திரும்பி மீண்டும் அது கீழ் நோக்கிச் செல்கிறது (). "ட" (dha) என்ற மற்ற எழுத்தும் இதேவடிவத்தில் அமைந்திருந்தாலும் அதன் கீழ்நோக்கிய கோட்டின் நுனியில் சிறிய வட்டம் அமைந்து காணப்படுவது சிறிய வேறுபாடாகும் (). இத்தனைக்கும் இவ்வகை எழுத்துக்கள் எவையும் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. ஆனால் மகாதேவன்
4.

Page 30
அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்ட ஒட்டில் இவ்வெழுத்திருப் பதைச் சுட்டிக்காட்டி அது தமிழகத்தில் "ழ" என்ற எழுத்து தோன்றுவதற்கு முன்னோடி வடிவமாக இருந்துள்ளது என நியாயப் பருத்த முற்பட்டுள்ளார் (Mahadevan 2003:189–90).
அரிக்கமோடு மட்பாண்டத்தில் வரும் "பூ"
ஆனால் அசோக பிராமில் இவ்வெழுத்தின் மத்தியில் உள்ள கோடு வழக்கமாக இடப்பக்கம் நோக்கியே அமைந்து காணப் படுகிறது ). அரிக்கமேட்டுப் பானை ஒட்டில் கிடைத்த எழுத்தில் அதன் கோடு வலப்பக்கம் நோக்கி அமைந்துள்ளது (). அசோக பிராமியில் இந்த வடிவத்தில் "ட" என்ற எழுத்துப் பயன்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. அரிக்கமேட்டுப் பானை ஒட்டில் இவ்வெழுத்து மாறி எழுதப்பட்டுள்ளதை மகாதேவன் தனித்துவ மான எழுத்து வடிவமாக எடுத்துள்ளார். ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இதேவடிவத்தில் அமைந்த எழுத்து இருபதுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது (Paranavithana 1970:nos.586, 582, 98, 215, 356, 402, 480, 621, 670, 811, 864,998, 1215).
இதனால் அரிக்கமேட்டுப் பானை ஒட்டில் காணப்பட்ட எழுத்தை இலங்கைக்குரிய தனித்துவமான எழுத்து வடிவமாகவும், அது இங்கிருந்தே தமிழகத்திற்குச் சென்றதெனவும் கூறமுடியும். இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் வரும் இவ்வெழுத்தை
பேராசிரியர் பரணவிதான அசோக பிராமிக்குரிய "ட" என்ற
42
 

எழுத்தாகக் கொண்டே வாசித்துள்ளார். ஆனால் பெரும்பாலான கல்வெட்டுக்களில் இவ்வெழுத்து தமிட, சுட, சோட என வாசிக்கப் பட்ட பெயர்களில் காணப்படுவதால் இவ்வெழுத்தை "ட" எனக் கொள்ளாது "ழ" எனக் கொள்ளலாம். அவ்வாறு கொண்டால் இப்பெயர்களைத் தமிழில் தமிழ், சோழ என வாசிக்க முடியும். இதற்கு மாறாக மகாதேவன் கருதுவது போல் இதை "ழ" என்ற எழுத்திற்கு முன்னோடி வடிவமாக இருந்த அசோக பிராமியெனக் கொண்டால் இதிலிருந்து தமிழுக்குரிய "ழ" எழுத்து தோன்றிய தென்பதை விட இலங்கைக்குரிய எழுத்துவடிவத்தில் இருந்தே தோன்றியதெனக் கூறுவது பொருத்தமாகும். ஏனெனில் அவர்
காட்டும் அசோக பிராமிக் குரிய "ட" என்ற எழுத்து வடிவம் "ழ" என்ற எழுத்து வடிவமாக மாறுவதைவிட இலங்கைக்கு உரிய எழுத்து வடிவம் "ழ"வாக மாறுவது நடைமுறைச் சாத்தியமாகும். இதை தமிழ் எழுத்தின் வளர்ச்சியை அறிந்த அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது என் நம்பிக்கையாகும்.
தமிழ் பிராமிக்குரிய இன்னொரு எழுத்துவடிவமான 'ற' () (ra) என்ற எழுத்து அசோக பிராமிக்குரிய "ட"(ta ) என்ற எழுத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தோன்றியதென்பது மகாதேவனின் இன்னொரு விளக்கமாகும். இவ்வெழுத்து அரைவட்டவடிவில் வலப்பக்கம் நோக்கி அமைங்து காணப்படுகிறது( ). இவ்வெழுத்தும் தமிழ்ப் பிராமிக்கு முன்னர் தமிழகத்தில் பயன் படுத்தப்பட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. மாறாக தமிழுக்குரிய "ற" என்ற எழுத்துடன் சேர்ந்தே கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட் டுள்ளதைக் காணமுடிகிறது. இதனால் தமிழ் நாட்டு மக்கள் அசோக பிராமிக்கு முன்னரே "ற" என்ற ஒலிப் பெறுமானத்தைக் கொடுக்கும் எழுத்து வடிவத்தை அறிந்திருந்தனர் எனக் கூறலாம். இலங்கையைப் பொறுத்தவரை நூற்றுக்கு மேற்பட்ட கல்வெட்டில் அசோக பிராமிக்குரிய "ட" என்ற எழுத்து வடிவம் காணப்படுகிறது. ஆனால் அதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால்தான் "ற" என்ற எழுத்து தோன்றியதெனக் கூறுவதற்கு
43

Page 31
"ழ" என்ற எழுத்தின் வளர்ச்சி
இலங்கை
r rr + = 9 نه لم ت% f 9 مسلم لیا ۱۹ ملا
p
ulv et ዬሉካW;
d'ar
dነቲህl p
Hካለህት M p
ہالمے
?せN W
KMWv V le *** بیٹک
VP 'p مہاں لارا ناJ?

"ற" என்ற எழுத்தின் வளர்ச்சி
e £{ y~) *UT Ưt UF →< v<<( | } 历환
-------
ーr しー くつ〜 (—~~人之
" لأن النقل

Page 32
= 州 此 (f | لا ظپ)x| to Ը I VN è | 9  િ | 0 | حل هلنا

"ள" என்ற எழுத்தின் வளர்ச்சி
இலங்கை
தமிழ் நாடு
AJ „Jh
47

Page 33
எங்த ஆதாரமும் காணப்படவில்லை. மாறாக அசோக
பிராமிக்குரிய "ற" என்ற எழுத்துடன் "ர"(1 (ra) என்ற எழுத்து வடிவத்தை ஒத்த நிலையில் "ற" என்ற எழுத்து தோன்றியதாகக் காணப்படுகிறது. பொதுவாக தமிழ் எழுத்தின் வளர்ச்சி, மாற்றம் என்பது அவ்வெழுத்தின் வடிவம், எழுத்தின் போக்கு என்பதற்கு ஏற்பவே மாற்றம் பெற்று வளர்ந்ததைக் காணமுடிகிறது. இங்கே அசோக பிராமிக்குரிய எழுத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தமிழுக்கு உரிய "ற" என்ற எழுத்து தோன்றியதென்பதை விடத் தமிழ்ப் பிராமிக்கும், அசோக பிராமிக்கும் பொதுவாக இருந்த "ர" என்ற எழுத்தை அடியொற்றித் தோன்றியிருக்கலாம் அல்லது "ர" என்ற எழுத்தின் சமகாலத்திலேயே "ற" என்ற எழுத்தும் தோன்றியிருக்கலாம். ஆகவே இதுவும் இலங்கையில் இருந்த தமிழ்ப் பிராமியின் தனித்துவமான வடிவம் எனக் கூறலாம்.
தமிழ்ப் பிராமிக்குரிய "ள", "ன" ஆகிய இரு எழுத்துக்களும் தமிழகத்தைப் போல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் ஒரே வடிவத்தில் அமைங்துள்ளன. இவ்வெழுத்துக்கள் மகாதேவன் கூறுவது போல் அசோக பிராமிக்குரிய "ல", "ந" போன்ற எழுத்துக்களில் ஏற்படுத்தப்பட்ட சிறிய மாற்றத்தால் தோன்றியதா அல்லது அசோக பிராமிக்கு முன்னரே புழக்கத்தில் இருந்ததா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் தமிழகத்தில் இதுவரை கிடைத்தவற்றை விட இலங்கையில் இவ்வெழுத்துக் களின் காலம் தொன்மையானதெனக் கருத இடமுண்டு. அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக் கள் தமிழகத்தை விடத் தொன்மையானவையாகக் கருதப்படுகின் றன. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை இதுரை வெளியிடப் பாவிட்டாலும் ஆய்வில் பங்கெடுத்த சிலர் எழுதிய கட்டுரைகளில் இருந்து அங்கு தமிழ்ப்பிராமிக்குரிய மேற்கூறப்பட்ட எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது (Coningham 1996:73-97). இச்சான்றாதாரங்கள் தொன்மையான தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இலங்கையில் தோன்றி வளர்ந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
48

இலங்கையில் கிடைத்த தென்மையான கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமியின் செல்வாக்கு
| , -

Page 34
இலங்கையின் தென்மையான கல்வெட்டுக்களில் வரும் தமிழ் எழுத்து
 

இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழக தொல்லியற் பேராசிரியராக இருந்த கே.வி. இராமன் அவர்கள் தமிழகத்திற்குரிய பிராமி எழுத்து இலங்கையில் இருந்தும் சென்றிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார் (இராமன் 1960:167-9). அப்போது ஆய்வாளர்கள் இவரின் கருத்தை அதிகம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஆனால் அண்மைக் காலத் தொல்லியற் கண்டு பிடிப்புக் களால் இக்கருத்து மீண்டும் ஆய்வாளர்கள் மத்தியில் புனர் ஜென்மம் எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆயினும் இவர்கள் அனை வரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி யிலும், அசோக பிராமியிலும் எழுதப்பட்டவை என்ற முடிவுடன் இக்கருத்தை முன்வைத்துள்ளனர். ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் அசோகபிராமி மட்டுமன்றி, தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் பயன்பாட்டில் இருந்ததற்குப் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம் 2002).
ஒரு காலத்தில் பேராசிரியர் பரணவிதான போன்ற ஆய்வாளர் களின் கருத்தோடு உடன்பாடு கொண்டிருந்த இந்நூலாசிரியர் மகாதேவன் கூட இப்புதிய கண்டுபிடிப்புக்களுக்கு தனது நூலில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதுடன், தானும் சில தமிழ்ப் பிராமி எழுத்துக்களை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் கண்டு பிடித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் (Mahadeva 2003: 191). இலங்கைப் பிராமியின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த ஈழத்து ஆய்வாளர்களான சத்தங்கல கருணாரத்தினா (Karanaratne 1962), Quï6OT.Tf535T (Pernandoo 1969), syfu அபயசிங்கா (Ariya Apayasinhe 1965) போன்றோர் தமிழகத்தை ஒத்த எழுத்து வடிவங்கள் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவை அசோக பிராமிக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து பரவிய திராவிட எழுத்து எனவும், காலப் போக்கில் அவை அசோக பிராமியின் செல்வாக்கால் படிப்படியாக வீழ்ச்சியடைந்தன எனவும் விளக்கம் கூறுகின்றனர். இதற்கு இலங்கைப் பிராமி எழுத்து தமிழகத்தைவிடக் காலத்தால் பிற்பட்டது என்ற கருத்து இவர்களிடம் இருந்ததே காரணமாகும்.
51

Page 35
ஆகவே இலங்கையில் இருந்து தமிழகத்திற்குப் பிராமி எழுத்து சென்றிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டால் கூடவே தமிழ்ப் பிராமி எழுத்தும் இலங்கையில் இருந்தே தமிழகத்திற்கு அறிமுகட் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். இதற்குச் சார்பாக மேலும் சில ஆதாரங்களை இவ்விடத்தில் முன்வைக்க விரும்புகிறேன். -
இலங்கையில் வெசகிரி, அநுராதபுரம், மிகிந்தலை பெரியபுளியங்
எழுத்தமைதி கொண்டும், காலத்தை வரையறுக்கக் கூடிய சில மன்னர்களின் பெயர்கள் அக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருப் பதைக் கொண்டும் அவற்றின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்போடு மகாதேவன் அவர் களும் உடன்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இக்கல்வெட்டுக் களில் அசோக பிராமி எழுத்துக்கள் மட்டுமன்றித் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ்ப் பிராமிக்குரிய எழுத்து வடிவங்களும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். மகாதேவன் கருதுவது போல் தமிழ்ப் பிராமி எழுத்து தமிழகத்தில் தோன்றி அங்கிருந்தே இலங்கைக்கு வந்ததெனக் கொண்டால் எப்படி கி.மு.2ஆம் நூற்றாண்டில் தமிழகப் பிராமிக் கல்வெட்டில் பயன்படுத்தத் தொடங்கிய தமிழ்ப் பிராமி எழுத்து அக்காலத்திற்கு முந்திய இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டிருக்க முடியும்?.
சமண மதம் பற்றிக் கூறும் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. பெளத்த மதம் பற்றிக் கூறும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. இக்காலத்தில் பிராகிருத மொழி இலங்கையில் மட்டுமல்ல பெளத்த மதம் நிலவிய எல்லா நாடு களிலும் அம்மதத்திற்குரிய மொழியாகவும், அவற்றின் கல்வெட்டு மொழியாகவும் இருந்துள்ளது. இதற்கு உதாரணமாக மெளரிய அரசிற்குப்பின்னர் பெளத்த மதம் வளர்ந்த ஆந்திரா மாநிலத்தைக் குறிப்பிடலாம். இங்கு தெலுங்கு மொழி சமகாலத்தில் புழக்கத்தில் இருந்தும் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட அனைத்துப் பிராமிக் கலவெட்டுகளும் பிராகிருத மொழியிலேயே எழுதப் q2

பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்த வரை பிராகிருத மொழியை எழுதுவதற்கு ஏற்ற அனைத்து அசோக பிராமி எழுத்தும் பயன் பாட்டில் இருந்துள்ளன. இங்கிலையில் பெளத்த மதத்தைப் பின் பற்றிய இலங்கை மக்கள் தமிழகத்தில் இருந்து தமிழ்ப் பிராமி எழுத்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அவ்வெழுத்தைப் புதிதாகக் கற்று அவ்வெழுத்தில் பிராகிருத மொழியை எழுத வேண்டிய தேவை இருந்திருக்கும் எனக் கூறமுடியாது. அப்படியி ருந்தும் பல கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், தமிழ்ப் பிராமி எழுத்தும் கலந்து காணப்படுகின்றன. இதற்குப் பெளத்தமதத் துடன் பிராகிருத மொழியும், அசோக பிராமி எழுத்தும் அறிமுக மாவதற்கு முன்னரே இங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் பிராமி எழுத்தையும் அறிந்திருந்ததே காரணம் எனக் கூறமுடி யும். இதனால் அம்மொழிக்கும், எழுத்திற்கும் பழக்கப்பட்டிருந்த மக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அசோக பிராமியை எழுதிய போது அதில் தமக்குப் பழக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்தையும் கலந்து எழுதியுள்ளனர் எனக் கருதலாம்.
பொதுவாக குறிப்பிட்ட ஒரு மொழியில் எழுதப் பழக்கப்பட்ட மக்கள் இன்னொரு புதிய மொழியை, புதிய எழுத்தை எழுதப் பழகும் போது தொடக்க காலத்தில் தமக்குப் பழக்கப்பட்ட எழுத்தையும், மொழியையும் அவற்றில் கலந்து எழுத முற்படுவது பெரும்பாலும் நடைமுறையில் காணக்கூடிய பொதுவான உண்மை யாகும். இலங்கையில் கிடைத்த கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கும் - கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 1284 பிராமிக் கல் வெட்டுக்களை ஒன்று சேர்த்துப் பார்த்தால் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ் மொழிப் பெயர்களும், தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதப் பெயர்களும் பெரும்பாலும் தொன்மையான பிராமிக் கல்வெட்டுக்களில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக் கலாம். அதேவேளை பிற்பட்டகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் அவை படிப்படியாக மறைந்து அதற்குப் பதிலாக அசோக பிராமி எழுத்தும், பிராகிருதப் பெயர்களும் இடம்பெற்றுள்ளதைக் காண லாம். இதிலிருந்து பெளத்த மதத்துடன் அசோக பிராமி எழுத்தும், பிராகிருத மொழியும் அறிமுகமாவதற்கு முன்னர் இலங்கையில்
53

Page 36
தமிழ் மொழிக்குரிய எழுத்து தோன்றியுள்ளமை தெரிகிறது. இதை மேலும் உறுதிப்படுத்துவதாக அண்மைக் காலத்தில் பெறப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் விளங்குகின்றன. ஆகவே மகாதேவன் கூறுவது போல் தமிழ்ப் பிராமி எழுத்து தமிழகத்தில் தோன்றி அது இலங்கைக்கும் பரவியதாக கூறுவது இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத் சி தாகத் தெரியவில்லை.
இவ்வாறான ஒரு கருத்தை நான் தமிழகக் கருத்தரங் கொன்றில் முன்னர் கூறிய போது இலங்கையில் தமிழ்ப் பிராமி எழுத்து தோன்றியிருந்தால் ஏன் தமிழகத்தில் இருப்பது போன்ற தமிழ் மொழியில் எழுதப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் அங்கு காணப்பட \ \ல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்வி இவ்விடத் திலும் இடம்பெற வாய்ப்புண்டு. அது நியாயமான கேள்வி என்ப தையும் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறான கேள்வியைக் காரணம்
யில் தமிழர்கள் வாழவில்லை எனச் சமாதானம் கூறிய சம்பவங் களும் உண்டு. இன்றும் அவ்வாறான ஆய்வாளர்கள் சிலர் இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ளனர் என்பதையும் நான் மறுக்கவில்லை.
இ*த இடத்தில் எனது பேராசிரியர் சுப்பராயலு அவர்கள் 'ஒரு மொழிக்குரிய கல்வெட்டின் தோற்றப்பாடு என்பது அதற்குரிய மக்கள் தமது மொழியை எழுதத் தெரிங்ததாலி மட்டும் ஏற்படுவதில்லை; மாறாக அது எழுதவேண்டிய தேவை இருப்ப தனால் மட்டும் தோன்றுகிறது எனக் கூறிய விளக்கம் என் கினைவுக்கு வருகிறது. இந்த விளக்கம் குறிப்பிட்ட காலத்திற் குரிய குறிப்பிட்ட ஒரு மொழிக்குரிய கல்வெட்டுக்கள் காணப்பட வில்லை என்பதை ஆதாரம் காட்டி அந்த இடத்தில் அம்மொழிக் குரிய மக்கள் வாழவில்லை என்றோ அல்லது குறிப்பிட்ட ஒரு மொழிக்குரிய மக்கள் வாழ்ந்திருந்தால் அந்த இடங்களில் எல்லாம் அம்மக்கள் பேசிய மொழிக்குரிய கல்வெட்டுக்கள் இருந்திருக்க வேண்டும் என்றோ கூற முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 54

ஏனெனில் உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் எல்லா மொழிக்கும் எழுத்துக்கள் தோன்றியிருந்தன எனக் கூறமுடியாது. அதேபோல் இன்று நிலைத்துள்ள எல்லா மொழிகளுக்கும் கால ரீதியாக கல்வெட்டுக்கள் இருந்துள்ளன என்றும் வாதிட முடியாது.
இலங்கையைப் பொறுத்த வரை தொடக்க காலக் கல்வெட்டுக்கள் பிராகிரு மொழியில் எழுதப்பட்ட காலத்திலும், அதற்கு முன்னரும் தமிழ் மொழியை, தமிழ்ப் பிராமி எழுத்தை அறிந்திருந்தனர் என்ப தைப் பிரமிக்கல்வெட்டுக்கள் மட்டுமன்றி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்களும், சமகால நாணயங்களும் உறுதிப்படுத்து கின்றன. இதில் மட்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத் தப்பட்டதற்கு அவை அக்கால மக்களது அன்றாடப் பாவனைப் பொருளாகவும், உள்நாட்டு, வெளிகாட்டு வர்த்தகத்தின் கொள் கலன்களாகவும் இருந்ததால் அவற்றைப் பயன்படுத்திய மக்கள் தமது பெயரையும், ஊரையும் அதில் எழுதவேண்டிய தேவை இருந்தது. நாணயங்களில் எழுத்துப் பொறிக்கப்பட்டதற்கு நாணயங்களை வெளியிட்ட தமிழ் சிற்றரசர்கள் தமது பெயரையும், இடத்தையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருந்தமை முக்கிய காரணமாகும். ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக் களில் தமிழ்ப் பிராமி, தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றிருந்தாலும் பெளத்த மதத்திற்குரிய மொழியாக பிராகிருதம் இருந்ததால் அம்மொழியையே மக்கள் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இது இலங்கையில் மட்டுமல்ல பெளத்த மதம் பரவிய
எல்லா நாடுகளிலும் காணக்கூடிய பொதுவான அம்சமாகும்.
இலங்கைக்குப் பெளத்த மதத்துடன் பிராகிருத மொழி பரவிய காலகட்டத்தில்தான் தமிழகத்திற்குச் சமண மதத்துடன் இம்மொழி பரவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் 25 வீதமான பெயர்ச் சொற்கள் பிராகிருதமாக இருந்த போதும் அதன் கல்வெட்டு மொழியாக தமிழே காணப் படுகிறது (சுப்பரயலு 2003). ஆனால் இலங்கைப் பிராமிக் கல் வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலக்கல்வெட்டுக்களில் 50 வீதமான பெயர்ச் சொற் 55

Page 37
கள் தமிழாக இருந்த போதும் அதன் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம் காணப்படுகிறது. சமகாலத்தில் தமிழ் நாட்டிற்குப் பிராகிருத மொழி பரவியிருந்தும் அதன் கல்வெட்டு மொழி தமிழாக இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழ் எழுத்து தொன்மை யானதாக இருந்தும் அம்மொழியில் கல்வெட்டுக்கள் எழுதப்பட வில்லை என்ற இன்னொரு கேள்வியும் இடம்பெற வாய்ப்புண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். 1) பிராகிருத மொழி பரவக் காரணமாக இருந்தால் மதங்கள் இரு நாடுகளுக்கும் வேறுபட்டவை. 2) இலங்கையில் வாழ்ந்த எல்லா மக்களும் பெளத்த மதத்தை ஏற்றுக் கொண்டதற்குச் சான்றுகள் இல்லை. மாறாக இக்காலத்தில் பெளத்த மதத்திற்கு முன்பிருந்த புராண வழிபாட்டு மரபு தொடர்ந்தும் மக்களால் பின்பற்றப்பட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. 3). இக்காலத் தில் பிராகிருதம் வட இந்தியாவின் பேச்சு மொழியாகவும், கல்வெட்டு மொழியாகவும் இருந்த போதும் அம்மொழி எல்லா வட்டாரங்களிலும் ஒரே இறுக்கத் தன்மை கொண்டதாக இருக்கவில்லை. மகாதேவன் அவர்கள் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியின் தாக்கம் அதிகம் இடம் பெறாததற்கு இலங்கைக்குப் பரவிய கிழக்கிந்தியப் பிராகிருத மொழியின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படவில்லை எனக் கூறிய கருத்து இவ்விடத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது. இக்கருத்தில் உள்ள பொருத்தப்பாட்டை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளர் (சுப்பராயலு 2003). ஆகவே இந்த வேறுபாடும் தமிழ் நாட்டைப் போல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழில் எழுதப் படாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இங்கிலையில் தமிழ் மொழியில் அமைந்த பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கவில்லை என்பதை மட்டும் ஒரு காரணமாக வைத்து அவற்றின் தொன்மையை மறுக்க முற்படுவது பொருத்த மான நியாயமாகத் தெரியவில்லை. அதைப் பொருத்த மான கருத்தாகக் கொள்வது குறிப்பிட்ட மொழிபேசிய மக்களின் தொன்மை வரலாற்றை மறைப்பதாகும். அதை வலுவான கருத்தாக கொண்டால் தமிழகத்தில் பாண்டி நாட்டில் மட்டும் தமிழ் மொழியில்
56

அமைந்த தொன்மையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்
பதை காரணம் காட்டி இக்கல்வெட்டுக்கள் காணப்படாத சேர, சோழ நாடுகளில் தமிழ் எழுத்தின் பயன்பாடு சமகாலத்தில்
இல்லை என்ற முடிவுக்கு வரமுடியுமா? அதிலும் பாண்டி நாட்டில்
கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் சமண மதத்திற்கு அளித்த
தானம் பற்றியே கூறுவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் இம்மதத்தின் முக்கியத்துவத்தைச் சமகால இலக்கியங்
கள் எடுத்துக் கூறவில்லை. மாறாக அவை அக்காலத்தில்
ஆட்சியில் இருந்த சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், இனக்
குழுத் தலைவர்கள் ஆட்சி பற்றியும், அவர்களிடையே நடந்த
போர்கள், நிர்வாக முறைகள் பற்றியும் அவர்கள் புலவர்களுக்கும்,
ஏனையோருக்கும் கொடுத்த தானங்கள் பற்றியுமே கூறுகின்றன.
ஆனால் இவை பற்றிச் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்கள்
எதுவுமே கூறவில்லை. இவ்வாறான வரலாற்றுச் சம்பவங்கள் பிற்காலத்தில் எழுந்த தமிழ்க் கல்வெட்டுக்களில் கூறப்பட்டி
ருப்பதை ஆதாரம் காட்டி பிராமிக் கல்வெட்டுக்கள் புழக்கத்தில்
இருந்த காலத்தில் இவ்வரலாற்றுச் சம்பவங்கள் நிகழவில்லை
என்ற முடிவுக்கு வரமுடியுமா?.
பிராமிக் கல்வெட்டுக்கள் புழக்கத்தில் இருந்த காலத்தில் தமிழ் நாட்டவர் இலங்கை வந்ததற்கும், இலங்கை நாட்டவர் தமிழகம் சென்றதற்கும் பல சான்றுகள் காணப்படுகின்றன. இலங்கையில் அநுராதபுரம், பெரியபுளியங்குளம், குடுவில் போன்ற இடங்களில் கிடைத்த கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டுக் கள் தமிழ் நாட்டு வணிகர்கள் பெளத்த துறவிகளுக்கு அளித்த BrTGOTaras5Giữ Lugbläs Sin-géŝGörgp6OT (Paranavithana 1970:nos 94, 356, 357). அதேபோல் தமிழகம் சென்ற ஈழநாட்டவர் அங்கு வாழ்ந்த சமணத் துறவிகளுக்கு தானம் அளித்தது பற்றி திருப்பரங்குன்றம் பேன்ற இடங்களில் கிடைத்த பிராமிக் கல் வெட்டுக்கள் கூறுகின்றன (Mahadena2003:393). இக்காலத்தில் தமிழ் நாட்டில் உள்ள பிராமிக் கல்வெட்டு மொழியாகத் தமிழும், இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதமும் இருந்த போதும் இலங்கை வந்த தமிழ் நாட்டவர் தம்நாட்டுக்குரிய
57

Page 38
மொழியில் கல்வெட்டுக்களை எழுதாது இலங்கைக்குரிய பிராகிருத மொழியிலேயே எழுதியுள்ளனர். அதேபோல் தமிழ் நாடு சென்ற ஈழ நாட்டவரும் அங்காட்டுக்குரிய கல்வெட்டு மொழி யான தமிழிலேயே கல்வெட்டுக்களை எழுதியுள்ளனர். இந்த வேறுபாடு கல்வெட்டுக்கள் எழுத வேண்டிய தேவையின் நிமித்தம் தோன்றியதே தவிர, குறிப்பிட்ட மொழியில் கல்வெட்டுக்களை எழுதத் தெரிந்ததினால் மட்டும் தோன்றவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாக அமைகிறது.
ஆவே குறிப்பிட்ட ஒரு மொழி, எழுத்து என்பவற்றின் தொன்மையை அவ்வக்காலகட்டத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் பயன் பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது. மாறாக அவற்றின் பயன்பாடு என்ன தேவைக்காக எவற்றில் எழுதப்படுகிறதோ அவற்றையும் ஆதாரமாகக் கொண்டு அவற்றின் தொன்மையைத் தீர்மானிக்கலாம். இப்பின்னணியில் நோக்கும் போது இதுவரை இலங்கையில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக் களிலும், மட்பாண்டங்களிலும் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தைக் காட்டிலும் தொன்மையானவை என எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதால் தமிழகத்திற்குரிய எழுத்து க்கள் முதலில் இலங்கையில் இருந்தே தமிழகம் சென்றதெனக் கூறுவது பொருத்தமாகும்.
இந்த இடத்தில் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைக்குரிய பண்பாடு பண்டு தொட்டு தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டு வளர்ந்ததற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு. அதிலும் பெளத்த மதத்திற்கு முந்திய 3G) misoa5uisir S600röfbestG) (Mesolithic Culture), Glucosiasi) காலப் (Megalithic Culture) பண்பாடுகளும், அவற்றிற்குரிய மக்க
ளும் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்திருக்கலாம் என்பதற்குரிய சான்றாதாரங்கள் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் பண்பாட்டு அம்சங்கள் அப்படியே தென்னிந்தியாவை ஒத்த நிலையில் இலங்கையில் வளர்ந்ததெனக் கூறமுடியாது. இதற்கு உதாரண
58

மாகப் பெருங்கற்கால மட்பாண்டங்களில் பெறப்பட்ட குறியீடுகள், சின்னங்களைக் குறிப்பிடலாம்.
அவற்றுள் குறியீடுகள் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னர் ஏதோ ஒரு செய்தியை மக்களிடையே பரிமாறிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டவை என்பது ஆய்வாளர் பலரின் கருத்தாகும். இதற்கு தமிழகத்தில் வல்லம் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது பெறப்பட்ட சான்றுகள் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இங்கு பிராமி எழுத்துப் பொறித்த கலாசாரப்படைக்குக் கீழே பரவலாகப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் பிராமி எழுத்து தோன்றியதன் பின்னர் உள்ள கலாசாரப்படையில் படிப்படியாகக் குறைவடைந்து சென்றதை அவதானிக்க முடிகிறது, இதிலிருந்து இக்குறியீடுகள் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னர் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கும் கோக்கில் பெருங் கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவங்துள்ளது (Subbarayalu1984:9-98). இது போன்ற குறியீடுகள் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மட்பாண்டங்களில் காணப்பட்டாலும் எல்லாக் குறியீடுகளும் தென்னிந்தியாவை ஒத்தவை எனக் கூறமுடியாது. மாறாக சில தனித்துவமான குறியீடுகள் இலங்கையிலேயே தோன்றி வளர்ங்துள்ளன. அத்துடன் தமிழகத்தில் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில சின்னங்களின் வடிவமைப்பு இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றி வளர்ந்துள்ளதைக் காணலாம்.
இங்கே குறியீடுகளைப் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை எழுத்து வடிவமாகக் கொண்டால் அவற்றில் கூட சில தனித்துவமான வடிவங்கள் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் தோன்றி வளர்ந்து ள்ளமை தெரிகிறது. இந்த உதாரணங்கள் இலங்கையிலேயே தமிழ்ப் பிராமி எழுத்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்த உதவுகின்றது எனலாம்.
59

Page 39
இலங்கைக்குரிய தனித்துவமான குறியீடுகன்
தமிழ்நாடு
இலங்கை
「.
冯冯T米量
*பெருங்கற்கால மட்பாண்டத்தில் *பிராமிக் கல்வெட்டில் +நாணயத்தில்
60
 

WII
இலங்கைப் பிராமிக்கல்வெட்டுக்கள் தொடர்பாக மகாதேவன் கூறியுள்ள கருத்துக்களில் பலரின் கவனத்திற்கு உள்ளாகியிருப் பது இலங்கைப் பிராமி எழுத்தைச் சிங்களப் பிராமி எனவும், அதன் மொழியைச் சிங்கள பிராகிருதம் எனவும் அவர் அழைத்தி ருப்பதாகும் (Veluppilai2004:133-150). இவ்வாறு அழைப்பதற்கு பின்வருவனவற்றை அவர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக் களுக்குரிய சிறப்பான அம்சங்களாகக் கொண்டிருந்தமையே காரணமாகும். 1. அசாக பிராமியில் பயன்படுத்தப்பட்ட "ஜ "(j) என்ற எழுத்திற்குப் பதிலாக இலங்கைப் பிராமியில் "ஜ."dh) என்ற எழுத்துப்பயன்படுத்தப்பட்டுள்ளமை. 2. பிற்காலச் சிங்கள எழுத்தில் புள்ளியிடும் மரபு இல்லாதிருப்பது போல் பிராமிக் கல்வெட்டுக்களிலும் அவ்வழக்கம் இல்லாதிருந்தமை 3. சிங்கள மொழி உருவாக்கத்திற்குப் பிராமிக் கல்வெட்டு மொழியான பிராகிருதம் முன்னோடியாக இருந்துள்ளமை என்பன முக்கிய LOTGOTIGOau (Malhadewan 2003 : 177).
இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் பெளத்த மதம் பரவிய எல்லா நாடுகளிலும் கி.பி.5ஆம் நூற்றாண்டுவரை அசோக பிராமி அல்லது வடபிராமியில் அமைந்த பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் கூட விதிவிலக்கல்ல. ஆயினும் இக்கல்வெட்டுக்களும், அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையும், அவற்றின் வடிவமைப்புக்களும் எல்லா நாடுகளிலும் ஒரே தன்மை கொண்டிருந்ததாகக் கூற முடியாது. அவை அவ்வவ் நாடுகளின் பெளதிகச் சூழல், மொழி வழக்கு, பண்பாடு என்பவற்றிற்கு ஏற்பச் சில மாறுதல்களையும், தனித்துவத்தையும் பெற்று வளர்ந்துள்ளதைக் காண முடிகிறது. இந்த மாற்றம் இலங்கையில் மட்டுமன்றி அசோக பிராமி அறிமுகப் படுத்தப்பட்ட பல நாடுகளிலும் காணக் கூடிய பொதுவான அம்ச மாகும். மொழியைப் பொறுத்தவரை பெளத்த மதத்துடன் பிராகிருத மொழி பரவுவதற்கு முன்னரே பல நாடுகளில் அங்காடுகளுக்குரிய
61

Page 40
சுதேச மொழிகளும் இருந்துள்ளன. இதனால் அம்மொழிகளுக்குப் பழக்கப்பட்ட மக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிராகிருத மொழியில் கல்வெட்டுக்களை எழுதும் போது அதில் சுதேச மொழியின் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க இயலாது. இது இலங்கையிலும் ஏற்பட்டிருக்கும் என்பது சந்தேகமில்லை.
ஆகவே இவற்றின் அடிப்படையில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களின் மொழியில், எழுத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற த்தை, தனித்துவத்தை ஆதாரமாகக் கொண்டு அதன் எழுத்திற்கு சிங்களப் பிராமி எனவும், மொழிக்கு சிங்களப் பிராகிருதம் எனவும் மகாதேவன் பெயரிட்டுள்ளதைப் பொருத்தமான கருத்தாக நியாயப் படுத்த முடியாது. ஏனெனில் தமிழகத்தில் பயன் படுத்தப்பட்ட பிராமி எழுத்தைத் தமிழ்ப் பிராமி என அழைப்பதற்கு அக்கல் வெட்டுக்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டதுடன், அவற்றில் அசோக பிராமியில் பயன்படுத்தப் படாத தமிழ் மொழிக்கேயுரிய தனித்துவமான பிராமி எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் சிங்கள எழுத்தும், மொழியும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோற்றம் பெற்றன. இதன் தோற்றத்திற்கு பிராமி எழுத்தில் கால ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரு முன்னோடியாக இருந்தது எனலாம். இது சிங்கள எழுத்தி ற்கு மட்டுமல்ல தென்னாசியாவில் தோன்றிய எல்லா எழுத்துக் களுக்கும் பொருங்தும். அப்படியிருந்தாலும் பிராமிக்குரிய அனைத்து எழுத்தும் வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் சிங்கள எழுத்தாக மாறியதாகக் கூறமுடியாது. அதேபோல் சிங்கள எழுத் தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து எழுத்து வடிவங்களுக்கு பிராமி எழுத்து முன்னோடியாக இருங்ததாகவும் கூறமுடியாது (Karunaratne 1982:1-124). அதேவேளை இலங்கைப் பிராமி எழுத்து பிற்காலத்தில் சிங்கள எழுத்தாக மாற்றமடைய ஆந்திர எழுத்தின் செல்வாக்கும், கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பல்லவக் கிரந்த எழுத்தின் செல்வாக்குமே காரணம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இங்கிலையில் தென்னாசியாவில் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த அனைத்து எழுத்திற்கும் தாய் எழுத்தாக இருந்த பிராமியை அசோக பிராமி, வடபிராமி அல்லது தமிழ்ப் பிராமி என அழைக்கும் மகாதேவன் 62

இலங்கைப் பிராமியை மட்டும் ஏன் சிங்களப் பிராமி என அழைக் கிறார் என்பது புரியவில்லை. இதற்கு இலங்கைப் பிராமிக்குரிய ஒரிரு எழுத்துகளில் காணக்கூடிய தனித்துவத்தை அவர் ஆதார மாக எடுத்துக் கொண்டால் ஏன் இலங்கைப் பிராமியைக் காட்டி லும் பல தனித்துவமான எழுத்து வடிவங்களைக் கொண்ட பட்டிப்பு ரோலு பிராமியை அவர் தெலுங்குப் பிராமி என அழைக்கத் தவறினார் என்பது விளங்கவில்லை.
பிற்காலத்தில் தோன்றிய சிங்கள மொழியை தமிழ் மொழியின் பிள்ளை என்றே மொழியியலாளர் அழைத்துள்ளார் (குணவர்த்தனா 1985:48). ஆயினும் அம்மொழியின் சொற்செறிவு பெருமளவுக்கு வடமொழி சார்ந்ததென்பதில் சந்தேகமில்லை. இதற்கு இலங்கை யின் தொடக்க காலப் பிராமிக் கல்வெட்டுகளின் மொழியாகப் பிராகிருதம் இருந்தமையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் பிராகிருதம் இக்காலத்தில் இலங்கையில் மட்டுமன்றிப் பெளத்த மதம் பரவிய எல்லா நாடுகளிலும் கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இதற்குத் தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. இதனால் இம்மொழியின் தாக்கம் அவ்வவ் நாடுகளில் இருந்த மொழிகளில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்பதில் சந்தேக மில்லை. அதேபோல் அங்காடுகளில் வழக்கிலிருந்த மொழியின் செல்வாக்கும் பிராகிருத மொழியில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. மொழியியல் அறிஞர்கள் தமிழில் இருந்து பிராகிருதம் பல சொற் களைக் கடன் வாங்கியது போல், தமிழும் பல சொற்களைப் பிராகிருதத்தில் இருந்து கடன் வாங்கியிருப்பதற்கு ஆதாரம் காட்டுகின்றனர் (செளந்தர பாண்டியன் 1997:50-1). இதற்கு உதாரணமாக இலங்கையில் உள்ள சில இடப் பெயர்களை எடுத்துக்காட்டலாம். இன்று தமிழ் இடப்பெயராக உள்ள "புரம்" (சுழிபுரம், அரசபுரம், வல்லிபுரம்), "கமம்" (சுண்ணாகம், மல்லாகம், பன்னாகம்), "காமம்" (பனங்காமம், கொடிகாமம், வலிகாகம்) எனப் பின்னொட்டுப் பெயராக முடியும் இடப்பெயர்கள் சிங்கள இடப்பெயர்களில் "புர", "கம", "காம" என முடிவதைக் காணலாம். இவ்வொற்று மையை ஆதாரமாகக் காட்டி இவை சிங்கள மொழியில் இருந்து பிற்காலத்தில் தமிழ் கடன் வாங்கிய பெயர்
63

Page 41
களக அல்லது முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களில் பிற்காலத்தில் தமிழர்கள் வந்து குடியேறியதால் ஏற்பட்டதென ஆய்வாளர்கள் நியாயப்படுத்துகின்றனர் (Kannankara 1980).
ஆனால் இப்பெயர்களின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை இடப் பெயராக பிராகிருத மொழியில் இருந்ததற்குப் பிராமிக் கல்வெட்டுக்களில் சான்றுகள் காணப்படுகின்றன(Paramavithana 1970CXXV-cxvi, 1983:112-3). இப்பெயர்கள் இலங்கையில் மட்டு மன்றி சமகாலத்தில் தென்னிந்திய இடப்பெயர்களாக இருந்ததற்கு கல்வெட்டுக்களில் சான்றுகள் உள்ளன. உதாரணமாக இன்று ஆந்திர நாட்டு இடப்பெயர்களாக இருக்கும் "நந்திக்காமம்" புட்டுகமம், புரமு போன்ற இடப்பெயர்களின் வரலாற்றைப் பின் நோக்கிப் பார்த்தால் அவற்றின் தோற்ற காலம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் இடப்பெயர்களின் சமகாலமாக இருப்பதைக் &SITSIOOTQomb (Ramacha ndramurthy 1985: 245). Ja58au îUTé6535 மொழியின் தாக்கம் என்பது இடத்திற்கு இடம் கூடிக் குறைந்து காணப்பட்டாலும் அது பயன்படுத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் பிற்காலத்தில் தோன்றிய மொழிகளில் செல்வாக்குச் செலுத்தி யிருப்பதைக் காணமுடிகிறது. இது இலங்கையில் தோன்றி வளர்ந்த தமிழ், சிங்கள மொழிக்கும் பொருந்தும். இந்நிலையில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பிராகிருதத்தை மட்டும் ஏன் மகாதேவன் தனித்து சிங்களப் பிராகிருதம் என அழைக்க வேண்டும் என்பது புரியவில்லை.
இந்த இடத்தில் பிற்காலத்தில் தோன்றிய சிங்கள மொழியையும், சிங்கள எழுத்தையும் தொடக்க காலப் பிராமிக் கல்வெட்டுக் களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதில் அக்கறை காட்டிய மகாதேவன் இலங்கையில் அசோக பிராமி எழுத்து பயன்படத் தொடங்கிய காலத்திலேயே அவற்றில் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ் மொழியும் செல்வாக்குச் செலுத்தியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் எடுக்காதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. தமிழ் நாட்டுப் பிராமியை அசோக பிராமியில் இருந்து வேறுபடுத்தி
64

அதைத் தமிழ்ப் பிராமி என அழைப்பதற்கு மகாதேவன் அதன் கல்வெட்டு மொழி தமிழாக இருப்பதுடன், அவற்றில் தமிழ் மொழிக்கே சிறப்பான "ள""ழ", "ற", "ன" போன்ற எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காரணமாகக் காட்டுகிறார். ஆனால் அதே தமிழ் எழுத்துக்கள் தமிழகத்தை அடுத்து சமகாலத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை ஏன் கருத்தில் எடுக்கவில்லை என்பது புரியவில்லை. ;
இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம்
இருந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள 50வீதமான பெயர்ச் சொற்கள்
தமிழாக அல்லது பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழாகக் காணப்
படுகின்றன. இந்த அளவிற்கு தென்னாசியாவின் ஏனைய
வட்டாரங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் பிராகிருதத்
திற்கு மாற்றீடான சுதேச மொழிப் பெயர்கள் இடம்பெற்றதற்குச்
சான்றுகள் காணப்படவில்லை. ஆந்திராவில் சுதேச மொழி
புழக்கத்தில் இருந்தபோதும் அங்கு கி.பி.5ஆம் நூற்றாண்டு
வரை பயன்படுத்தப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களில் மிக அரிதா
கவே சுதேச மொழிப் பெயர்களின் செல்வாக்கு ஏற்பட்டதாக eiuQJTGITňresGir 3Fq&š 35mTIGDéßl6õrgp6OTT (Somasekhara Sarma 1974:1-3). ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை அதில் தனிநபர், பட்டம், பதவி, உறவுமுறை, இடப்பெயர் போன்ற பெயர்ச் சொற்கள் தமிழ் மொழியில் காணப் படுவதுடன் பல பிராகிருதச் சொற்களும் தமிழ் மயப்படுத்தப்பட்டுக் smooTuGslsi p6OT (Veluppilai 1980, Sitrampalam 1994, Ragupathy 1991, Laâu Uni",600Tib 2002).
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களின் மொழியை ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதானா கூட அவற்றில் தமிழ்ப் பெயர்களுடன், பிராகிருதப் பெயர்களும் தமிழ்மயப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி அதற்கு அக்கல்வெட்டுக்களை எழுதியவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்ததே காரணம் என விளக்கம் īpašpri (Paranavithana 1983). 2GS)o š60a gearg இருக்கும் போது எப்படி 700 ஆண்டுகளின் பின்னர் தோன்றிய 65

Page 42
:::-
R
■
இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் பெயர்கள் சில
66
 

சிங்கள எழுத்துடனும், மொழியுடனும் இலங்கைப் பிராமிக் கல் வெட்டுக்களைத் தொடர்புபடுத்தி அதற்குச் சிங்கள பிராமி, சிங்களப் பிராகிருதம் எனப் பெயரிட முடியும்?. ஆகவே இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களைச் சிங்களப் பிராமி என அழைப்பதைவிட அதை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் அல்லது தமிழ், பிராகிருத மொழிக் கல்வெட்டுக்கள் என அழைப் பதே அறிவியல் நோக்கில் ஏற்கக் கூடிய பொருத்தமான விளக்க மாகும். இது இலங்கையின் பூர்வீக மக்களது பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது மேலும் தெளிவு பெறும்.
W III
தென்னாசியாவில் பண்டு தொட்டு பல இன, மத, மொழி, பண்பாடு உடைய மக்கள் வாழ்ந்த நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். இங்கு கி.மு.3ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் இருந்து பொளத்த மதமும், அவற்றுடன் பாளி, பிராகிருத மொழியும் அறிமுகப்படுத்தப்பட்டு காலப் போக்கில் புதிய பண்பாடு தோற்றம் பெறுவதற்கு முன்னர், இலங்கையில் நிலவிய பண்பாடும், அதற் குரிய மக்களும் பெரும்பாலும் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் என்ப தற்கு நம்பகத்தன்மையுடைய பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளன. இதுவரை கிடைத்துள்ள தொல்லியற் சான்றுகளின் அடிப் படையில் இற்றைக்கு 28000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை யில் வாழ்ந்தவர்கள் நுண்கற்காலப் பண்பாட்டிற்குரிய (Mesolithic Culture) ஆதி ஒஸ்ரலோயிட் இன மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மலைநாடு தொட்டு தாழ்நிலப்பகுதி வரை வாழ்ந்ததற்குரிய பல்வேறு வகையான தொல்லியற் சான்று கள் மாதோட்டம், பூநகரி, மாங்குளம், இரத்தினபுரி, பலாங்கொடை, கித்துள்கொட, குருவித்த போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப் LIl GeiraTST (Allchin 1968, Deraniyagala 1972:48-162, 1984 1058, Carswel 1984:1-84, Ragupathy 1987:181). GEUffSeir GSITeÖeð யல், மானிடவியல், மொழியியல் அடிப்படையில் தமிழ்நாடு தேரி-க்கம்
67 این اصی ،It )": "
(الباؤنڈلی' ========ی

Page 43
மணற் குன்றுப் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு காணப்படுவதால் இலங்கைக் குரிய இப்பண்பாட்டு மக்கள் தமிழகத்தில் இருந்தே புலம்பெயர்ந்தி ருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது (Ragupathy 1987). இன்று இலங்கை மக்களிடையே பேச்சு வழக்கில் உள்ள 200க்கு மேற்பட்ட சொற்கள் இம்மக்களால் பயன்படுத்தப்பட்டவை என்பதை மொழியியலாளர் அடையாளம் கண்டுள்ளனர்.
நுண்கற்காலப் பண்பாட்டுக்குரிய மக்களைத் தொடர்ந்து கி.மு. 800இல் இருந்து தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாடும், அப்பண்பாட்டுக்குரிய திராவிட மக்களும் இலங்கைக்கு புலம்பெயர்க் திருக்கலாம் என்பதை பொம்பரிப்பு, அநுராதபுரம், கந்தரோடை, ஆனைக்கோட்டை, பூநகரி, மாதோட்டம், கிளிவெட்டி, லங்காத் துறை, கேகாலை போன்ற இடங்களில் கிடைத்த சான்றுகள் 2 gığlıÜLIG6ğğlélsip6OT (Begley 1973:190-6, Deraniyagala 1972:48-162, 1984: 105-8, Carswell 1984: 1-84, Seneviratne 1984:237-301, Ragupathy 1987: 181, Sitrampalam 1990: 1-8, புஷ்பரட்ணம் 1993). இப்பண்பாட்டு மக்கள் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என்பதை மானிடவியல், மொழியியல் சான்றுகளும், இருபிராந்திய மக்கள் பயன்படுத்திய ஈமச்சின்னங்கள், மட்பாண்டங்கள், கலை வடிவங்கள், இரும்புக்கருவிகள் மற்றும் நாளாந்தம் பயன்படுத்திய பல்வேறுவகையான பொருட்களிடையே காணப்படுகின்ற நெருங்கிய ஒற்றுமையும் உறுதிப்படுத்துகின்றன. அதிலும் மாதோட்டத்திற்கு எதிரேயுள்ள அரிக்கமேடும், பொம்பரிப்புக்கு நேரெதிரேயுள்ள ஆதிச்சநல்லுாரும் இப்பண்பாட்டில் ஒரே பிராந்தியம் எனக்கருதும் அளவிற்கு நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது (Sirampalam 1994). இப்பண்பாடு பற்றிய சான்றுகள் இலங்கையில் பரவலாகக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை காலமும் நிலவி வந்த இலங்கையின் நாகரிகமும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடஇந்தியாவில் இருந்து கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட 68

ஆரியர் குடியேற்றத்துடன் (விஜயன் தலைமையில் எற்பட்ட குடியேற்றம்) தோன்றியது என்ற பாரம்பரிய கருத்து நிராகரிக் கப்பட்டு, தமிழ் மக்களைப் போல் சிங்கள மக்களும் இலங்கையில் நிலவிய நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் வழிவந்தவர்கள் என்ற வலுவான கருத்து நிலை தோன்றியுள்ளது.
தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தான் வளமான சங்க இலக்கியமும், எழுத்தின் பயன்பாடும் (கி. மு.3ஆம் நூற்றாண்டளவில்) தோன்றியதென்பது ஆய்வாளர்களின் முடிவாகும். இதற்குச் சான்றாக சங்க இலக்கியத்தில் கூறப் பட்டுள்ள பெருங்கற்கால ஈமச் சின்ன முறைகளை எடுத்துக் கூறுகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரை தமிழகத்திற்கு முன்பின்னாகப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்கள் தமிழ் எழுத்தை அறிந்திருந்தனர் என்பதை அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான பண்பாட்டுச் சூழல் நிலவிய கால கட்டத்தில்தான் பெளத்த மதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினரே பின்பற்றினர் என்பதை இம்மதம் பற்றிக் கூறும் பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுக்கள் இப்பண்பாட்டு மையங்களில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு உறுதிப்படுத்த முடிகிறது. அதில் தமிழ் மொழி பேசிய மக்களும் உள்ளடங்குவர் என்பதைப் பிராக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக் களும், தமிழ்ப் பெயர்களும் எடுத்துக் காட்டுகின்றன.
பெளத்த மதத்தின் அறிமுகம் இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாகக் கருதப் படுகிறது. அதற்கு அம்மதத்துடன் புத்துக்கம் பெற்றுவந்த வட பிராமி எழுத்து, பாளி, பிராகிருத மொழிகள், பெளத்த மதம் சார்ந்த கட்டிட, சிற்பக் கலைகள் என்பன முக்கிய காரணங் களாகும். அவற்றுள் பெளத்த மதத்திற்குரிய பாளி, பிராகிருத மொழிகள் இங்கு பெளத்த மதத்தைப் பின்பற்றிய மக்கள் பேசிய 69

Page 44
தமிழ், எலு போன்ற திராவிட மொழிகளுடன் கலந்ததன் விளைவே பிற்காலத்தில் சிங்களம் என்ற மொழி தோன்றுவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த மாற்றம் சங்க காலத் தமிழகத்தில் தமிழ் மொழி பேசிய சேர நாட்டில் வடமொழித் தாக்கம் ஏற்பட்டு பிற்காலத்தில் மலையாளம் என்ற மொழி தோன்றியதற்கு ஒப்பானது.
ஆகவே ஒரு நாட்டின் அல்லது ஒரு வட்டாரத்தின் தொன்மையான கல்வெட்டுக்களை ஆதாரமாக வைத்து அந்த நாட்டின் மொழி, எழுத்துப் பற்றிய வரலாற்றைப் பிற்காலத்தில் வழக்கில் உள்ள மொழி, எழுத்து என்பவற்றுடன் தொடர்புபடுத்தி ஆராயும் போது அந்த மொழிக்கும், எழுத்திற்கும் உரிய மக்களின் வரலாற்றுப் பின் புலத்தையும் கருத்தில் எடுப்பது அவசியமாகிறது. ஆனால் இலங்கையில் சிங்கள மொழி தோன்றுவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பிராமிக் கல்வெட்டுக்களிலேயே காணப்படுகின்றன. அதை இந்நூலாசிரியரே தனது நூலில் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார். அப்படியிருந்தும் அவர் தமிழ் மக்களைக் கருத்தில் கொள்ளாது தற்காலத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் பெரும் பான்மையாக இருப்பதாலோ என்னவோ இலங்கையின் தொன்மை யான பிராமிக் கல்வெட்டுக்களைச் சிங்களப் பிராமி எனவும், அதன் மொழியைச் சிங்களப் பிராகிருதம் எனவும் அழைத்திருப்பது அவர் இலங்கையின் பூர்வீக மக்கள் பற்றிய 2500 ஆண்டு காலப் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையில் இருந்து விடுபட வில்லை என்பதையே காட்டுவதாக உள்ளது. இதற்குச் சார்பாக அவரது நூலில் செல்வாக்குச் செலுத்தியுள்ள சில கருத்துக்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம் எனக் கருதுகிறேன்.
இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்கள மக்கள் என்பதையும்,
அவர்கள் வடஇந்தியாவில் இருந்து குடியேறிய ஆரியர்களின்
வழித்தோன்றல்கள் (விஜயன் வழிவந்த) என்பதையும், தமிழர்கள்
பிற்காலத்தில் தமிழகத்தில் இருந்து படையெடுப்பாளர்கள், 70

வர்த்தகர் என வந்துபோன அன்னியர் என்பதையும் தொல்லியல் ஆய்வுகள் ஊடாக நெறிப்படுத்த முற்பட்ட பெருமை பேராசிரியர் பரணவிதானாவுக்கு உண்டு. அவர் வடஇந்தியக் குடியேற்றத்தின் தொடர்ச்சிதான் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல் வெட்டுக்கள் எனக் கூறி அதன் எழுத்தை அசோக பிராமி என வும், அதன் மொழியைப் பழைய சிங்களம் எனவும் குறிப்பிட்டு அக்கல்வெட்டுக்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங் கெல்லாம் முன்பொரு காலத்தில் சிங்கள மக்களே வாழ்ந்தனர் 6TSOT r$luJITuJ'ILGö556OTï (Paranavithana 1970:Xvi).
இவரின் சமகாலத்தில் இக்கல்வெட்டுக்கள் பற்றிப் பிறர் விரிவாக ஆராய்ந்து பார்க்க முற்படாததால் பரணவிதானாவின் சம காலத்தில் லாழ்ந்த ஆய்வாளர்கள் பலரும் இவரின் கருத்தோடு உடன்பாடு கொண்டிருந்தனர். ஆனால் அண்மைக் காலத் தொல் லியல் கண்டுபிடிப்புக்கள் வடஇந்தியக் குடியேற்றம் நிகழ்ந்ததென்ற பாரம்பரிய கருத்துக்கு மாறாக, தென்னிந்தியாவில் இருந்து திராவிட மக்களது குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதுடன், தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே இலங்கையிலும் தமிழ் மொழிபேசும் மக்களின் குடியிருப்புக்கள் இருந்தன என்பதையும் ஆதாரபூர்வமாகக் கோடிட்டுக்காட்டியுள்ளன. இதனால் முன்பொரு காலத்தில் பரணவிதானாவின் கருத்துடன் உடன்பாடு கொண் டிருந்த ஆய்வாளர்கள் கூட ஈழத் தமிழரது தொன்மைளான வரலாறு பற்றிய தமது ஆரம்பகாலக் கருததுக்களை மாற்றிச் சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னரே, தமிழ் மொழி பேசிய மக்களுக்கு இங்காட்டு மண்ணோடு ஒட்டிய பாரம்பரிய வரலாறு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு ஒரு முக்கிய சான்
றாகவே இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ்
மொழிப் பெயர்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகின்றனர்( இந்திரபாலா
1999).
இந்நிலையில் பேராசிரியர் பரணவிதானாவின் சமகாலத்திலேயே
இலங்கை, தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராயத்
தொடங்கிய மகாதேவன் அவர்கள் தனது அண்மைக்கால ஆய்வு 71

Page 45
கள் மூலம் பரணவிதானாவின் கல்வெட்டு வாசிப்பில் உள்ள பல தவறுகளை சுட்டிக்காட்டி, மேலும் சில தமிழ் பிராமி எழுத்துக்களை
அடையாளம் கண்டிருப்பதாக இந்நூலில் கூறியுள்ளமை இலங்கைத் தமிழரின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளன (Mahadeva2003:189-6). இருப்பினும் அவர் பிற்காலத்தில் தோன் றிவளர்ந்த சிங்கள எழுத்து, மொழியுடன் பிராமிக் கல்வெட்டு எழுத்து, மொழிக்குரிய தொடர்பை ஆராய்வதில் காட்டிய அக்கறையை இங்கு வாழ்ந்த தமிழர் பக்கத்தில் இருந்து பார்க்கத் தவறியமை அவரும் பரணவிதானா போன்ற ஆய்வாளர்களின் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையில் இருந்து விடுபடவில்லை என்பதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதற்கு சான்றாக தென்னிலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துக்களும் அமைந்துள்ளன.
தென்னிந்தியாவில் சங்க காலத்தில் வெளியிடப்பட்ட பிராமி எழுத் துப் பொறித்த நாணயங்களை ஆராய்ந்தவர்களுள் மகாதேவனும் ஒருவராவர். அவர் எழுத்துப் பொறித்த நாணயங்கள் மட்டுமன்றி, எழுத்துப் பொறிப்பற்ற நாணயங்களைக் கூட அவற்றில் பொறிக்கப் பட்டுள்ள அரச இலட்சனைகள், சின்னங்கள், குறியீடுகள், அவற்றின் வவமைப்பு என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு அங்காணயங்கள் சங்க காலத்தில் எந்த அரச வம்சத்தால் வெளியிடப்பட்டவை என் பதை அடையாளப் படுத்திய பெருமைக்குரியவர். ஆனால் தென் னிலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த தமிழ் நாணயங்களை ஆராந்த போது மட்டும் மேற்கூறப்பட்ட அம்சங்கள் எதையும் கருத்தில் எடுக்காது அவற்றைப் பொதுப்பட தமிழ் நாட்டி லிருந்து தென்னிலங்கையில் வந்து குடியேறிய தமிழ் நாட்டு வர்த்தகர்களல் வெளியிடப்பட்டவை என அடையாளப்படுத் துகிறார் (Mahadeva 2000:147-6). ஆனால் இந்நாணயங்கள் இலங்கைத் தமிழரால் வெளியிடப்பட்டவை என்பதற்குப் பொருத்தமான பல சான்றுகள் காணப்படுகின்றன (Pushparatnam 2002:33-69). அப்படியிருந்தும் மகாதேவன் இவற்றைத் தமிழ் நாட்டுத் தமிழருடன் தொடர்புபடுத்தியமை பண்டைய காலத்தில் 72

இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வர்த்தக நோக்கோடு தமிழகத் தில் இருந்து அவ்வப்போது வந்து போன தமிழர்கள் என்ற பாரம் பரிய நம்பிக்கையில் இருந்து அவரும் விடுபடவில்லை என்பதையே நினைவூட்டுவதாக உள்ளது.
தமிழகத்திற்கு அண்மையில் இலங்கை அமைந்திருப்பதனால் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாடு அவ்வப்போது இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. இது பண் டைய காலம் தொட்டு ஒரு பக்க உறவாக இல்லாது இருபக்க உறவாக இருந்துவந்ததென்பதை அண்மைக் காலத்தில் தமிழகத் தில் உள்ள கொடுமணல், அழகன் குளம், காவேரிப் பூம்பட்டினம் போன்ற இடங்களில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண் டங்கள் மூலம் தெரியவந்துள்ளது (Rajan 1994:82). ஆயினும் பண்டைய காலத்தில் இலங்கையில் இருந்து எதுவும் தமிழகத் திற்குச் செல்ல வில்லை; மாறாகத் தமிழகத்தில் இருந்தே வந்தன என்ற பாரம்பரியக் கருத்துண்டு. இக்கருத்து இலங்கைக்கென்று தனித்துவமான பண்பாடு எதுவும் பண்டைய காலத்தில் தோன் றியிருக்க முடியாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
அக்கருத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே மகாதேவன் அவர்களின் அணுகுமுறையும் சில இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பிராமி எழுத்து தோன்றிய காலத்தைப் பல்வேறு ஆதாரங்களுடன் கி.மு.2ஆம் நூற்றாண்டென வரையறுத்த இந்நூலாசிரியர் இலங்கையில் அதன் தோற்ற காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருப்பதற்குச் சில ஆதாரங்கள் காணப் படுவதால் தமிழகத்தையும் அதன் சமகாலமாக எடுக்கலாம் எனத் திடீர் எனத் தடுமாறுவது தமிழகத்திற்கு முன்னோடியாக எதுவும் இலங்கையில் தோன்றியிருக்க முடியாதென்பதைக் காட்டுகிறது. அதேபோல் தமிழகப் பிராமி எழுத்து அசோக பிராமியில் இருந்து தோன்றியிருக்கலாம் என்பதற்குத் தமிழகத்திற்கு வடக்கே கிடைத்த ஒரிரு கல்வெட்டுக்களை மட்டும் ஆதாரமாகக் காட்டியுள்ள மகாதேவன் தமிழகத்திற்குத் தெற்கே மிக அண்மையில் உள்ள இலங்கையில் 1000 மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட் 73

Page 46
டிருந்தும் அங்கிருந்து பிராமி எழுத்து தமிழகத்திற்கு வந்திருக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்க முற்படவில்லை. இவ்வணுகுமுறை கூட இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு எதுவும் பண்டைய காலத்தில் பரவியிருக்க முடியாது என்ற பாரம்பரிய கருத்தில் அவருக்குள்ள அசையாத நம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது. ஆகவே தனது வாழ்க்கையில் நாற்பது ஆண்டு காலத்தை கல்வெட்டு ஆய்வுக்காக அர்ப்பணித்து அதன் மூலம் பண்டைய தமிழக வரலாற்றிற்கு புது வெளிச்சமூட்டியுள்ள மகாதேவன் ஐயா இலங்கைப் பிராமி பற்றி ஆராயும் போது வெறுமனே கல்வெட்டுக் களை மட்டும் கருத்தில் கொள்ளது அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வரலாறு தொடர்பாக அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியற் சான்றுகளையும் கருத்தில் எடுப்பது அவசியமாகும். அவ்வாறான ஒரு பின்னணியில் அவர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் புகைபடர்ந்த நிலையில் காணப்படும் இலங்கைத் தமிழரின் பண்டைய கால வரலாற்றிற்கு புது வெளிச்சமேற்படுத்திய பெருமை அவரையும் சாரும்.
74.

இலங்கைத் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியில் அண்மையில் கண்டுபிடித்த கந்தளாய்ச் சாசனம் பெறும் முக்கியத்துவம்
இவ்வாய்வுக்கட்டுரை தமிழ் நாடு தொல்லியற் கழகத்தால் 19.07.2003 அன்று தொல்லியற் பேராசிரியர் எ.சுப்பராயலு தலைமையில் வேலுாரில் நடாத்தப்பட்ட கல்வெட்டறிஞர் அமரர் தி.ந.சுப்பிரமணியம் அவர்களின் நான் காவது அறக்கட்டளைச் சொற்பொழிவின் போது ஆற்றப்பட்ட உரையின் விரிந்த வடிவமாகும்.
இன்றைய அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தமிழகத்தின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவராக இருந்த அமரர் தி.ந.சுப்பிரமணியம் அவர்களின் பெயரில் நிகழ்த்துவதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வாய்ப்பை எனக்களித்த தமிழகத் தொல்லியற் கழக அங்கத்தவர்களுக்கும், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் முதற்கண் என் நன்றிகள்.
தமிழகத்தின் பண்டைய கால வரலாற்றை மீள் கட்டமைப்பதில் கடந்த நூற்றாண்டில் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயுள்ள பல அறிஞர்கள் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இத்தொடரில் வெ.சாமிநாதசர்மா, பொ.திரிகூடசுந்தரம்பிள்ளை, ச.கு.கணபதி ஐயர், மயிலை சீனிவேங்கடசாமி, தி.வீரபத்திரமுதலியார், ஐராவதம் மகாதேவன், கலாநிதி. இரா. நாகசாமி, இரா.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். கலைக்கோவன் முதலியோரைக் குறிப்பிடலாம். அவர்க ளுள் தமிழகக் கல்வெட்டாராய்ச்சியில் தனக்கென முத்திரை பதித்த வர்களுள் அமரர் தி.க. சுப்பிரமணியம் அவர்களுக்கு தனியிடம் உண்டு.
19.4.1904 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒடையூரில்
பிறந்த இவர் தனது கல்வியை இன்டர்மீடியட்டுடன் முடித்துக்
கொண்டாலும் தனது வாழ்க்கையின் நான்கு சகாப்த காலத்தைக் 75

Page 47
கல்வெட்டு ஆராய்ச்சிக்காகத் தவம் புரிந்தவர் என்ற பெருமைக் குரியவர். மாணவ பருவத்தில் இருந்து கல்வெட்டாய்வில் ஆர்வம் கொண்ட அமரர் அதற்காக அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த பல ஆய்வாளருடன் தொடர்பையும், உறவையும் ஏற்படுத்திக் கொண்டார். அவர்களுள் புதுச்சேரி பிரேஞ்சுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த து.வோ. துய்ப்ரேய் (Jouveau-Dubreuil) அவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவும், தொடர்பும் அதன் மூலம் அவர் பெற்ற தூண்டுதலும் அவரைக் கல்வெட்டுத்துறை யிலும், வரலாற்றாய்விலும் முழு ஈடுபாடு கொள்வதற்கு வழிவகுத் தது. 1969 இல் தமிழக வரலாற்றுக் கழக வெளியீடாக அவர் பதிப்பித்த "பல்லவ செப்பேடுகள் முப்பது" என்ற நூலும், அதைத் தொடர்ந்து பல்லவக் கட்டிடக் கலை, பல்லவக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வில் அவர் காட்டிய ஆர்வமும் அத்துறையில் தமிழக ஆய்வாளர்களை மட்டுமன்றி, பிற நாட்டவரையும் ஆர்வம் கொள்ளச் செய்தது.
படிப்பை முடித்த கையோடு சில நிறுவனங்களில் எழுது வினை யராகக் கடமையாற்றிய அமரர் சிறிது காலம் தினசரிப் பத்திரிகை யில் பணியாற்றிய போது "வரலாற்று நவீனம்" என்ற தொடரில் அரிய பல வரலாற்றுத் தகவல்களை எழுதி வெளியிட்டார். பின்னர் அப்பணியில் இருந்து விலகி தென்னிந்திய ஒலைச்சுவடி நிலையத் தையும், தென்னிந்தியக் கோயிற் சாசனங்களைப் பதிப்பிக்கும் பொறுப்பையும் ஏற்றார். இத்துறையில் இருபைத்தைந்து ஆண்டு காலம் பல்வேறு நோய்கொடிகளுக்கு மத்தியில் அயராது உழைத்த அமரர் "தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள்" என்னும் மாபெரும் ஆராய்ச்சி நூலில் 1299 கல்வெட்டுக்களை மூன்று பாகங்களாக பதிப்பித்தமையே அவரைத் தமிழ் ஆராய்ச்சியின் உச்ச நிலைக்கு உயர்த்தியது எனக் கூறலாம்.
பத்து ஆண்டுகள் பல்லவ வரலாறு பற்றியும், தென்கிழக்காசியா வுடன் தமிழக மன்னர்களுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் ஆராய்ந்து அவை பற்றி ஆங்கிலத்தில் தொடராக வெளியிட்ட Pallavas of Kanchi in South East Asia, Pandyas in South East Asia, Cholas in South East Asia, Cheras in South East Asia,
76

Srivijaya or Srivishaya, Tamil Nadu-Twelve and Eighteen 6TGörgp நூல்கள் தமிழக வரலாற்றாய்வில் அமரருக்கிருந்த ஈடுபாட்டையும், ஆழ்ந்த புலமையையும் வெளிப்படுத்த உதவின. தமிழக வரலாற்றை ஆராயும் நோக்கோடு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் "தமிழக வரலாற்றுக் கழகத்தை" முதலில் தொடக்கி வைத்த பெருமை அமரருக்கே உரியது.
கல்வெட்டாராய்ச்சியில் ஈடுபாடுடைய கே.ஜி.கிருஷ்ணன், கலாநிதி என். வேங்கடராமையா, பேராசிரியர். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, கே.ஆர்.ழரீகிவாசன், கே.வி.செளந்தரராஜன், டி.வி.மஹாலிங்கம், கே.கே.பிள்ளை, ஐராவதம் மகாதேவன், கலாநிதி.நாகசாமி ஆகியோருடன் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்திய அமரர் சில காலம் உ.வே. சாமிநாதையருடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் எனத் தெரிகிறது. இதனால் அவர் கல்வெட்டு, வர லாறு பற்றிய ஆராய்ச்சியில் மட்டுமன்றி ஆக்க இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வழியேற்பட்டது. இதை அவர் தமிழில் எழுதி வெளியிட்ட பதினெட்டு நூல்களும், நூற்றுக் கணக் கான சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகளும், கதைகளும், குறிப்புக் களும் தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அமரருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஏ.வி. பெர்ணல் என்ற மேற்கு நாட்டவரும், து.அ. கோபிநாதராவ் என்ற தென்னிங் தியரும் தென்னக வரிவடிவம் பற்றி ஆங்கிலத்தில் இரு நூல் களை எழுதியுள்ளனர். ஆயினும் அமரரால் 1938இல் எழுதி வெளியிடப்பட்ட "பண்டைய தமிழ் எழுத்துக்கள்" என்னும் தமிழ் நூல் முன்னையவர்களின் நூல்களைக் காட்டிலும் பல காரணங்க ளுக்காக விதந்து குறிப்பிடத்தக்கது. இன்றும் தமிழகத்தில் தொல் வரிவடிவம் பற்றி ஆராய முற்படும் ஒருவருக்கு அமரரின் நூலே அரிச்சுவடாக இருப்பது அதற்குரிய காரணங்களில் ஒன்றெனக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு அந்நூலின் மூலம் அவர் தமிழியல் உலகைத் தமக்கு கடமைப்படுத்தி விட்டார் என்றே கூறவேண்டும்.
1930ஆம் ஆண்டளவில் தமிழகக் கல்வெட்டுக்கள் பற்றி எழுதத் தொடங்கிய அமரர் தனது அறுபத் தெட்டாவது வயதில் (30.1.

Page 48
1972) அகால மரணத்தை தழுவும்வரை தன் ஆராய்ச்சியிலும், எழுத்திலும் அக்கால ஆய்வாளர்களை ஆட்டிப்படைத்த மனக்கிலே சங்களுக்கும், துவேசங்களுக்கும் அப்பாற்பட்டவராக கின்று தனது பணியைத் திறம்பட நடாத்திய பெருமைக்குரியவர். அத்தகைய பெருமகனாரை நினைவுபடுத்தித் தமிழகத்தின் இன்றைய முதன்மைக் கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேன் அவர்கள் ஏற்படுத்தியுள்ள அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்துவது எனக்குப் பெருமையளிக்கிறது.
இவ்வறக்கட்டளைச் சொற்பொழிவுக்குக் கந்தளாயில் கண்டு பிடித்த தமிழ் கல்வெட்டைக் கருப்பொருளாக எடுத்தமைக்கு இரு காரணங்கள் உண்டு. அமரர் தி.ந.சுப்பிரமணியம் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கல்வெட்டு ஆய்வுக்கு அர்பணித்த ஒருவர். அவரின் அறக்கட்டச் சொற்பொழிவில் கல்வெட்டைத் தவிர இன் னொரு விடயம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இன்னொரு காரணம் கனவிலும், நினைவிலும் கல்வெட்டுக்களைத் தரிசிப்பதில் ஆத்ம திருப்தி காணும் எனது பேராசிரியர் சுப்பராயலு அவர்களி டம் கலாநிதிப்பட்ட ஆய்வை முடித்து எனது காட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது எதிர்காலத்தில் உமது நாட்டிலுள்ள கல்வெட் டுக்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என வழியனுப்பி வைத்தார். அதில் தீவிர அக்கறை காட்டுவ தற்குரிய சாதகமான சூழ்நிலை எமது நாட்டில் இதுவரை தோன் றாவிட்டாலும் பேராசிரியரின் கட்டளையை மறக்கவில்லை என்பதற்கு சாட்சியாகவே எம்மால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை இவ்வறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு ஆதாரமாக எடுத்துள் ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அறிமுகம்
இந்தியாவைப் போல் இலங்கையிலும் கி.மு.3ஆம் நூற்றாண்டி
லிருந்து கல், பொன், செம்பு, மட்பாண்டம் போன்ற பொருட்களில்
சாசனங்கள் பொறிக்கும் மரபு தோற்றம் பெற்றதற்குப் பல சான்று
கள் காணப்படுகின்றன. அவற்றுள் 2000 மேற்பட்ட பிராமிச்
சாசனங்கள் கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாக 78

சாசனங்கள் கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாக e9H6OLULUTGITb 5TGOOTILJ’GB6rGTGOT (Paranavithana 1970. 1983). இவ்வளவு எண்ணிக்கை உடைய சாசனங்கள் இலங்கையைத் தவிர தென்னாசியாவின் ஏனைய வட்டாரங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இச்சாசனங்கள் தமிழகம் தவிர சமகாலத் தென்னாசியச் சாசனங்களைப் போல் பிராகிருத மொழியில் எழுதப்பட்டாலும், அவற்றுள் பல சாசனங்களில் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ்ப் பெயர்களும் காணப்படுகின்றன. இவை தமிழகத்தைப் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பண்டு தொட்டு இலங்கையில் வாழ்ந்ததற்குச் சான்றாக அமைகின்றன. ஆயினும் தமிழகத்தைப் போல் முற்று முழுதாக தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு பிராமிச் கற்சாசனம்தானும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
இப்பிராமிச் சாசனங்களைத் தொடர்ந்து கி.பி.8-9ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதக் கூடிய தமிழ், சிங்கள, சமஸ்கிருதச் சாசனங்கள் சில இலங்கையில் கிடைத்துள்ளன. ஆயினும் அவற்றின் எண்ணிக்கை மற்றைய காலப்பகுதிக்குரிய சாசனங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும். கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ், சிங்கள மன்னர்களின் ஆட்சி மாறி மாறி இலங்கையில் ஏற்பட்டாதாலும், தமிழகத் தொடர்பும், செல்வாக்கும் முன்னரைக் காட்டிலும் அதிகரித்ததாலும் தமிழ்ச் சாசனங்கள் வகையிலும், தொகையிலும் அதிகரித்துக் காணப்படுகிறன. கி.பி.16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து செல்கின்றன.
தமிழ்ச் சாசன ஆராய்ச்சி
இலங்கையில் இதுவரை 200க்கு உட்பட்ட தமிழ்ச் சாசனங்களே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சமகாலத்
தமிழகத்தோடு ஒப்பிடுகையில் மிக அரிது என்றே குறிப்பிடலாம்.
இதனால் பண்டைய தமிழக வரலாறு பற்றிய ஆய்வில் சாசனங்கள்
பெற்று வருவது போன்ற முக்கியத்துவத்தை இலங்கைத் தமிழர் 79

Page 49
வரலாறு பற்றிய ஆய்வில் இதுவரை பெறத்தவறிவிட்டன என்ரே கூறலாம். இதற்கு தமிழத்தோடு ஒப்பிட்டு இலங்கையில் தமிழ்ச் சாசனங்கள் அதிகம் வெளியிடப்படவில்லை என்ற கருத்தை ஆய்வாளர்கள் சிலர் முன்வைத்துள்ளனர். தமிழகத்தோடு ஒப்பிடுகையில் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் சாசனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதில் ஐயமிலை. ஆயினும் பண்டைய நாளில் தமிழர்கள் வாழ்ந்த பல இடங்கள் இன்று மக்கள் கடமாற்றமற்ற காடுகளாகவும், பயன்படுத்த முடியாத நிலங்களாகவும் உள்ளன. பிரித்தானியர் ஆட்சியில் இவ்விடங்களில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள், பண்டைய கால நீர்ப்பான முறை பற்றி ஆராய்ந்த பொறியியலாளர்கள் தமது கடமையின் போது பல கல்வெட்டுக்களை, விக்கிரகங்களை, நாணயங்களைக் கண்டு பிடித்ததாகத் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர் (Parkar 1909, Lewis 1917). ஆயினும் அந்த இடங்கள் பிற்காலத்தில் அரச மட்டத்திலோ அல்லது தனிப்பட்டவர்களாலோ ஆய்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவில்லை. அந்த இடங்களில் எல்லாம் திட்டமிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் பல தமிழ்ச் சாசனங்களைக் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டு வருகிறது.
ஒப்பீட்டடிப்படையில் இலங்கையில் கிடைத்த தமிழ்ச் சாசனங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவை பற்றிய ஆய்வு தமிழகத்திற்கு சமனான காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பதினாறாம் நூற்றாண்டி லிருந்து இலங்கை ஐரோப்பியர் ஆட்சிக்கு உட்பட்ட போது அவர்கள் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் இலங்கையில் இருந்த பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் பக்தி இயக்கத்தைத் தலமை ஏற்று நடாத்திய நாயன்மாரால் போற்றிப்பாடப்பட்ட கிழக்கிலங்கையில் இருந்த திருக்கோணேஸ்வரமும் ஒன்றாகும். கடலினுள் மூழ்குண்டிருக்கும் அவ்வாலயத்தின் கட்டிடச் சிதைவு களைப் பின்னர் ஆராய்ந்த போது அவற்றினுள் சில தமிழ்க்
80

கல்வெட்டுக்களும் காணப்பட்டன. அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய தளபதி கொன்ஸ்ரான் தீஸா ரெகாரங்சே (Contantine De Saa Nornce) e9laias LoäsGTg 9 56(3uJTG அச்சாசனங்களை ஒரளவிற்கு மொழிபெயர்த்து ஒல்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இம்முயற்சியே இலங்கைத் தமிழ்ச்சான ஆரய்ச்சியின் தொடக்க காலம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் அறிவியல் ரீதியான ஆய்வு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குறிப்பாக 1875ஆம் ஆண்டின் பின்னரே ஏற்பட்டதெனக் கூறலாம். இக்காலப் பகுதியில் இருந்து சிங்களச் சாசனங்களை ஆராய்ந்தறிவதில் அக்கறை காட்டிய பலரும் அவற்றோடு தமிழ்ச் சாசனங்களை ஆராய்வதிலும் அக்கறை காட்டினர். அவர்களுள் பிளாண்ட், வவூல், கியூச் கெவில், பெல், கிருஷ்ணசாஸ்திரி, கொட்றிங்ரன், முதலியார் இராசநாயகம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களுள் இலங்கைத் தொல்லியற் திணைக்களப் பணிப்பாளராக இருந்த எச்.சி.பி. பெல்லின் (H.C.PBel) முயற்சி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அவர் தென்னிந்தியச் சாசனவியலாளரான கிருஷ்ணசாஸ்த்திரி யுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பின் காரணமாக அவர் உதவியால் இலங்கையில் கிடைத்த தமிழ்ச் சாசனங்களும் வாசித்தறியப்பட வாய்பேற்பட்டது. குறிப்பாக 1911-12 காலப்பகுதில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நாற்பத்தெட்டு தமிழ்ச் சாசனங்கள் பற்றி இலங்கைத் தொல்லியற் திணைக்கள ஆய்வு அறிக்கையில் வெளிவருவதற்கு பெல்லின் இக்கூட்டு முயற்சி ஒரு முக்கிய காரணமாக இருந்தது (பத்மநாதன் 197172:14). அத்துடன் அவற்றில் பதினெட்டுச் சாசனங்கள் பற்றி கிருஷ்ணசாஸ்திரி தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் என்ற TGSyib JesứğģošBITňr (Krishna sastri vol.IV.nos 1398-1415)/
இலங்கைத் தமிழ்ச் சாசனங்களை அறிவியல் பூர்வமாக இலங்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ஆராய முற்பட்டவராகப் பேராசிரியர் பரணவிதானா குறிப்பிடப்படுகிறார். ஏராளமான சிங்களச் சாசனங்களைப் பதிப்பித்த அவர் தமிழ்ச் சாசனங் களையும் பதிப்பிக்க முற்பதன் மூலம் தமிழ்ச் சாசன

Page 50
ஆராய்ச்சியின் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. 1960 களில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை மூன்று தமிழ்ச் சாசனங்களைப் பதிப்பித்ததன் மூலம் இத்துறையில் பிரவேசித்தார். இவரின் பணிகள் இத்துடன் நின்றுவிட்டாலும் பிற்காலத்தில் பலரும் இத்துறையில் ஆர்வம் காட்டுவதற்கு இவரது முயற்சி ஒரு காரணம் என்ற வகையில் இலங்கைத் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியில் அவருக்கு தனியிடம் உண்டு.
1970களின் பின்னர் பேராதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு, தமிழ்த் துறைகளில் கடமையாற்றிய பேராசிரியர்களான இந்திரபாலா, வேலுப்பிள்ளை, பத்மநாதன், கலாநிதி குணசிங்கம் போன்றவர்கள் இலங்கைத் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் கூறலாம். இக்காலத்தில் இருந்தே இச்சாசனங்களை அடிப்படையாகக் கொண்ட விரிவான தனி நூல்களும் (Veluppillai, 1971 1980, குணசிங்கம் 1973), கட்டுரைகளும் (இந்திரபாலா 1968-69, பத்மநாதன் 1971-72) வெளிவந்ததைக் காணமுடிகிறது. இவர்களில் சிலருக்கு புதிய தமிழ்ச் சாசனங்களைக் கண்டுபிடித்த பெருமை இல்லாவிட்டாலும், பிறர் கண்டுபிடித்த சாசனங்களை சரியாக வாசித்து இலங்கை வரலாற்றுப் பின்புலத்தில் அச்சாசனங்களுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர்கள் என்ற பெருமையுண்டு. இருப்பினும் 1997களின் பின்னர் தமிழ்ச் சாசனவியலில் புலமையுடை பேராசிரியர்களான தமிழகத்தை சேர்ந்த சுப்பராயலு, சண்முகம், யப்பான் நாட்டைச் சேர்ந்த கரோசிமா, இலங்கையைச் சேர்ந்த பத்மநாதன் போன்றோர் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய சில தமிழ்ச் சாசனங்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன், முன்னைய காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப்பட்ட சில தமிழ்ச் சாசனங்களின் காலம், கருத்து, வாசிப்பு, விளக்கம் என்பன மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துச் சூழல் உருவாகி யுள்ளது. . .
82

குளக்கோட்டனும் - கந்தளச் சாசனமும்
இடைக்கால இலங்கைத் தமிழர் வரலாற்றிலும், தமிழ்ப் பிராந்திய வரலாற்றிலும் கவர்ச்சி மிக்க ஒரு பாத்திரமாக குளக்கோட்ட மன்னனது வரலாறு காணப்படுகிறது. இதற்கு கோணேசர் கல்வெட்டு, தசுஷ்ணகைலாசபுராணம், கைலாயமாலை, யாழ்ப்பான வைபவமாலை, வையாபாடல், மட்டக்களப்புமான்மியம் போன்ற இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். ஆயினும் இவன் யார்?, எப்போது ஆட்சி புரிந்தான்?, எங்கே ஆட்சி புரிந்தான்?, இவனது பூர்வீகம் எது? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் இற்றவரை வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் தெளிவற்றதாகவே இருங்து வருகின்றன. இங் நிலையில் அணி மையில் கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ்ச் சாசனம் ஒன்று இக்கேள்விகள் சிலவற்றிற்கு விடைகூற முற்படுவதாக அமைந்திருக்கிறது.
வரலாற்றாய்வில் நம்பகத் தன்மையுடைய மூலாதாரங்களில் சாசனங்களுக்கு முக்கிய பங்குண்டு. இவை இலக்கியங்களைப் போல் தொடர்ச்சியான வரலாற்றைக் கூறாவிட்டாலும் அவை கூறும் வரலாற்றுச் செய்திகள் சம்பவங்கள் நடந்த காலத்திலேயே பதியப்பட்டததனால் அச்சம்பவங்கள் பெரும்பாலும் நம்பகத் தன்மையுடையதாக உள்ளன. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் ஆதிகால, இடைக்கால வரலாறு விரிவாக ஆராயப்பட்டு வருவதற்கு அங்கு கிடைத்துள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சாசனங்களே முக்கிய காரணமாகும். ஆயினும் தமிழகத் தோடு ஒப்பிடுகையில் ஈழத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் சாசனங்கள் இதுவரை அதிக முக்கியத்துவம் பெற்றதாகத் தெரியவில்லை. இதற்கு ஈழத்தில் கிடைத்த தமிழ்ச் சாசனங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டடிப் படையில் மிக அரிதாக இருப்பதே காரணமாகும். இதுவரை 200க்கும் குறைவான சாசனங்களே ஈழத்தில் கிடைத்துள்ளன.
83

Page 51
இருந்தாலும் அவை புகைபடர்ந்த நிலையில் உள்ள ஈழத் தமிழரின் இடைக்கால வரலாற்றுக்கு ஏதோ ஒரு வகையில் நம்பகத் தன்மையுடைய் புதிய வரலாற்றுச் செய்திகளைத் தருபவையாகவே உள்ளன. இதற்கு அண்மையில் கந்தளாயில் கிடைத்த சாசனமும் விதிவிலக்கல்ல. V−
ஈழத்தில் இதுவரை கிடைத்த சாசனங்களுள் எண்ணிக்கையில் அதிகமானவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவையாகும். அவற்றுள் கந்தளாய் வட்டாரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு தமிழ்ச் சாசனங்கள் சிறப் பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் ஒன்று சோழர் காலத்திற்கு உரியது. அது சமகாலத் தமிழகச் சாசன மரபை ஒத்த நிலையில் தமிழிலும், கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளது. இரண்டு பாகங் களைக் கொண்ட இக்கல்வெட்டின் மேற்பாகம் தெளிவாக வாசிக் கப்பட்ட அளவிற்கு அதன் கீழ்ப்பாகம் இதுவரை வாசிக்கப் படவில்லை. கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சாசனத்தின் திகதி "கோழரீ சங்கவர்மரான உடையார் சோழ இலங்கேஸ்வரத் தேவருடைய பத்தாவது ஆட்சியாண்டு" என்று குறிப்பிடப் பட்டுள்ளதால் இந்த இலங்கேஸ்வரன் யார் என்பதும், அவனுக்கு எப்போது முடிதட்டு விழா நடந்தது என்பது பற்றியும் அறியமுடிய வில்லை. ஆனால் சோழரின் நேரடி ஆட்சி கி.பி. 993-1070 இடைப்பட்ட காலத்தில் நடந்ததால் அக்காலத்தில் சோழப் பிரதிகியாக அவன் இலங்கையில் ஆட்சி செய்திருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது (இந்திரபாலா 1974). இச்சாசன த்தில் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரைப் பெற்ற கந்தளாயில் இயங்கிய பிரமதேயத்துச் சபையாரின் நிர்வாக நடவடிக்கை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (பத்மநாதன் 2003:24). இச்சோழ இலங்கேஸ்வரன் ஆட்சி பற்றிய இன்னொரு சாசனம் இதே மாவட்டத்தில் உள்ள மானாங்கேணி என்ற இடத்தில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கிடைத்த இரண்டாவது தமிழ் சாசனம் முதலாம் விஜயபாகுவின் (1070-1110) 42வது ஆட்சியாண்டில் பொறிக்கப் 84

பட்டது. இச்சாசனத்தில் நங்கைசானி என்னும் விதவைப் பிராமணப் பெண் தனது கணவனின் புண்ணியத்திற்காக இங்குள்ள கோவிலுக்குத் தானம் வழங்கியதையும், அதை நிறை வேற்றி வைக்கும் பொறுப்பை வலங்கை வேளைக்காரப் படையிடம் ஒப்படைத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது (பத்மநாதன் 2003:28).
ஏனைய இரு தமிழ்ச் சாசனங்களும் பொலநறுவையில் ஆட்சிபுரிந்த கஜபாகு மன்னனின் காலத்திற்கு உரியது. அவற்றில் ஒரு சாசனம் கந்தளாய்ப் பிரமதேயம் கஜபாகுவின் ஆதரவைப் பெற்றதற்குச் சான்றாக அமைகிறது. அச்சாசனத்தில் வரும் "லங்கேஸ்வரன் கஜபாகுதேவர் கந்தளாய் பிரமதேயம் பிடி நடந்த பூமி இடையர்கல்லில் ஊரார் திக்கு நாட்டின கல்" என்ற செய்தி காணப்படுகிறது. இதில் இருந்து கந்தளாய்ப் பிரமதேயம் சார்ந்த நிலப்பகுதிக்கு பிரமதேயத்தரால் (ஊரார்) எல்லைக் கல் நாட்டப் பட்ட செய்தியை அறிய முடிகிறது. இங்கிலையில் மேலும் ஒரு சாசனம் அண்மையில் கந்தளாயிற் கிடைத்திருப்பது அப்பிரதேச த்தினதும், அங்கிருந்த பிரதேயத்தினதும், அவற்றோடு தொடர் புடைய மன்னர்களினதும் வரலாறு பற்றிய ஆய்வுக்கு மேலும் ஒரு முக்கிய சான்றாக அமைகின்றதென்பதில் ஐயமில்லை.
கடந்த ஆண்டு திருகோணமலையில் நடந்த கருத்தரங்கொன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது அப்பிரதேசத்து வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர அக்க றையுள்ள டாக்டர் தருமராஜா, திரு.மயூரன், திரு.வேலவன் போன்ற நண்பர்கள் அம்மாவட்டத்தில் உள்ள திரியாய், மூதுார், ஈச்சலம் பத்தை, நிலாவெளி போன்ற இடங்களில் இது வரை வாசிக் கப்டாத சில தமிழ்க் கல்வெட்டுக்களைத் தாம் அடையாளம் கண்டி ருப்பதாகக் கூறி அவ்விடங்களுக்கு வருமாறு என்னை அழைத் திருந்தனர். ஆனால் எதிபாராத அந்த அழைப்பை அன்றே நிறைவு செய்ய வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் அதேயாண்டின் இறுதிப் பகுதியில் ஆய்வு நோக்கோடு அங்கு சென்ற போது மேற் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு சில தடைகள் இருந்ததால் முன்னர் தமிழ்ச் சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்ட கந்தளாய் 85

Page 52
என்ற இடத்திற்கு மட்டுமே செல்ல முடிந்தது. கந்தளாய் முற்றிலும் ஒரு தமிழ்க்கிராமம் என்ற நம்பிக்கையோடு சென்ற எனக்கு கடந்த சில ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட பல மாறுதல்கள் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. ஆயினும் தமிழ் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்ததில் ஒரு வித மனத்திருப்தி ஏற்பட்டது.
நாம் கந்தளாய்ப் பேராற்றை அடுத்துள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்ற போது பல வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுப் பெறுமதிமிக்க தமிழ்ச் சாசனங்கள் கவனிப்பாரற்ற நிலையில் அங்குள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் கற்களோடு கற்களாகக் குவிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதற் கான காரணம் பற்றி அவ்வாலயத்தை தற்போது பராமரித்து வரும் திரு. ரவீந்திரகுமாரிடம் கேட்ட போது தனது மூதாதையினர் புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ் இவ்விடத்தில் வீடுகள் கட்டு வதற்காக அத்திவாரம் வெட்டும் போது மண்ணுக்குள் புதையுண்டி ருந்த பல வகைப்பட்ட தெய்வச் சிலைகள், சிற்பங்கள், அலங்காரத் கட்டிடத்துாண்கள், கல்வெட்டுக்கள் கண்டு பிடித்த தாகவும், அவற்றுள் சிவலிங்கம், ஆவுடை தவிர்ந்த மற்றைய கலைப் பொருட்கள் பெரும்பாலும் உடைந்தும், சிதைவடைந்தும் காணப்பட்டதால் அவற்றை அம்மரத்திற்கு கீழ் கற்களோடு கற்களாகப் போட்டதாகக் கூறினார். அப்போது ஒரு முதியவர் குறுக்கிட்டு இவ்வாறான சிலைகள், தூண்கள் ஒரு இடத்தில் மட்டுமல்ல இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவற்றையும் இம்மரத்தின் கீழ் ஒன்றாகக் குவித்து வைத்திருப்பதாகக் கூறினார். அவரின் கூற்றில் உண்மை உண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கற்குவியலில் உடைந்த நிலையில் விநாயகர், அம்மன், துர்க்கை, ஆவுடை, சிவலிங்கம் போன்ற சிலைகளும், கலை வேலைப்பாடுடன் கூடிய ஆலயத் துாண்களும் காணப்பட்டன.
86

கந்தளாயில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் கல்வெட்டுக்கள் விக்கிரகங்கள்

Page 53
|-配|×!:.km. |-
*們Nossae ( ): (...)' .|- 聚能萧樽|-*s.s |-
『シ
o |-|(
 
 


Page 54
அங்கு கிடைத்த தமிழ்ச் சாசனங்கள் பற்றி அம்முதியவரிடம் கேட்ட போது அவையும் இந்த இடங்களில் இருந்துதான் கிடைத் தவை. நாங்கள் சொல்லித்தான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பலரும் வந்து அவற்றை ஆராய்ந்தனர். ஆராய்ந்தவர்கள் இங்கு 1000 வருடங்களுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் இருந்திருக்கிறது. அதை திரும்பக் கட்டித்தருவதற்கு ஆவன செய்வோம். அதுவரை இங்கிருக்கும் கல்வெட்டுக்களை உடைக்காது பாதுகாருங்கள் என்று கூறிவிட்டுப் போனார்கள். ஆனால் இதுவரை அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு யாரும் எந்த முயற்ச்சியும் எடுக்க வில்லை. அதனால் தான் அக்கல்வெட்டுக்களையும் கற்களோடு சேர்த்து ஒன்றாகக் குவித்துள்ளோம் என ஆதங்கத்தோடு கூறினார்.
ஆனால் நாம் பார்த்த போது காலத்திற்கு காலம் குவிக்கப்பட்ட கற்குவியலுக்குள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ச் சானசங்கள் வெளியே தெரியுமாறு காணப்பட்டதால் மேலும் கல்வெட்டுக்கள் அக்குவியலுக்குள் இருக்கலாம் என்ற நப்பாசையை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் முன்னர் கண்டுபிடித்து வாசிக்கப்பட்ட கல்வெட்டுக்களை தனியொரு இடத்தில் எடுத்து வைத்துவிட்டு ஏனைய கற்களை ஒவ்வொன்றாகத் துப்பரவு செய்து பார்த்தோம். அப்போது எழுத்துப் பொறிப்பதற்காக நன்கு பொழியப்பட்ட கல்லின் உடைந்த பாகம் ஒன்று கிடைத்தது. இது புதிய கல்வெட்டுக்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியது. தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த போது கற்குவியலுக்கு அடியில் மண்ணுக்குள் புதையுண்டு உடைந்த நிலையில் மேலும் பல கற்றுண்கள் காணப்பட்டன. இதனால் அலவாங்கு, பிக்கான் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தியே அவற்றை வெளியே எடுக்க நேரிட்டது. அப்போது தான் எம்முடன் வந்த மயூரன் என்ற இளைஞர் "யு" வடிவில் அமைந்த கல்லொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டார். அதை மிகுந்த ஆர்வத்துடன் வெளியே எடுத்து துப்பரவு செய்து பார்த்த போது 90

அக்கல்வெட்டை ஆய்வாளர்கள் எவரும் முன்னர் கண்டு கொள்ள வில்லை என்பது தெரியவந்தது. இது கண்டுபிடிக்கப்பட்ட நேரம் மாலையானதால் அக்கல்வெட்டை அந்த இடத்தில் வைத்து வாசிப்பதற்கோ அல்லது படியெடுப்பதற்கோ நேரம் போதாது இருந்தது. அதனால் பல கோணங்களில் அக்கல் வெட்டைப் படமெடுத்து அப்படத்தின் பிரதியை வைத்தே பின்னர் அது வாசிக்கப்பட்டது.
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் வடிவமைப்பு பரவளவில் அமைந்துள்ளது. இந்த வடிவமைப்பில் வேறு எந்தக் கல்வெட்டும் இதுவரை இலங்கையில் கிடைக்கவில்லை. இது தென்னிந்தியாவில் வணிககணங்களால் வெளியிடப்பட்ட கல் வெட்டுக்களின் வடிவமைப்பை ஒத்ததெனக் எனக்கூறும் தென்னாசியாவின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் சுப்பராயலு அவர்கள் அவ்வடிவமைப்பிலான கல்வெட்டை இலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்கள் பின்பற்றி யிருப்பது ஒரு மாறுபட்ட அம்சம் எனக் குறிப்பிட்டார். ஐந்தடி நீளமும், இரண்டடி அகலமும் கொண்ட இச்சாசனம் இரண்டாக உடைந்துள்ள போதும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மேற்பாகம் முழுமையானதாகவும், அதில் உள்ள எழுத்துக்கள் தெளிவானதா கவும் காணப்படுகின்றன. அதனால் அச்சாசனத்தை சரிவர வாசிப்பதில் அதிக பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. தமிழையும், ஆங்காங்கே கிரந்த எழுத்துக்களையும் கொண்ட இச்சாசனம் எட்டு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இச்சாசனத்தில் இருந்து "ஜயபாகு" என்ற பெயரில் உள்ள மன்னனது 35வது ஆட்சியாண்டில் விஜயராஜசதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட கந்தளாயில் உள்ள விஜயராஜேஸ்வரம் என்ற ஆலயத்திற்கு அமுது படைப்பதற்காகப் பத்துக் காசுகள் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியை அறியமுடிந்துள்ளது (புஷ்பரட்ணம் 6.01.2003).
91

Page 55
அண்மையில் கந்தளாயில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் சாசனம்
இச்சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி தமிழ்ச் சானசவியல் ஆய்வில் புலமையும், ஆர்வமும் உடைய எமது பேராசிரியர் பத்மநாதன் அவர்களுக்கு பின்னர் தெரியப்படுத்தியிருந்தேன். அதன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் நாம் ஏற்கனவே வாசித்து பிரசுரித்திருந்த அச்சாசனத்தை சில திருத்தங்களுடன் பின்வருமாறு வாசித்துள்ளார் (பத்மநாதன் 18. 01.2003). அதன் வாசகம் வருமாறு.
92
 

1) ஸ்வஸ்தி பூரீ கோ அபய 2) சலாமேக பர்ம்மரான சக்ர 3) வத்தி பூரீ ஜயபாகு தேவற்கு யா 4) ண்டு 35ஆவது கந்தளாயாங் விஜ 5) ய ராஜ சதுர்வ்வேதி மங்கலத்து பூரீ கை 6) லாசமான விஜயராஜேஸ்வர முட 7) யார்க்குத் திருப்பள்ளியெழுச்சி மத்ய 8) போங்கம் அமுதுக்கு காசு இட்டார் பத்து
சோழ மரபை ஒத்த நிலையில் எழுதப்பட்டுள்ள இச்சாசனத்தில் ஜயபாகு மன்னனன் "கோ" என்றும் "சக்கரவர்த்தி" என்றும் வருணிக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பான அம்சமாகும். அதேபோல் இச்சாசனத்தில் வரும் "திருப்பள்ளியெழுச்சி", "திருப்போனகம்" போன்ற சொற்கள் ஈழத்து தமிழ்ச் சாசன வளர்ச்சியில் ஒரு புதிய அம்சத்தை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இலங்கையில் கிடைத்த வேறு எந்த தமிழ்க் கல்வெட்டுக்களிலும் இச்சொற்கள் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை (பத்மநாதன் 18.01.2000).
இச்சாசனத்தில் வரும் "கந்தளாயாங் விஜயராஜ சதுர்வேதி மங்கலம்", "ழரீகைலாசமான விஜயராஜேஸ்வரம்" போன்ற சொற் தொடர்களின் வரலாற்று முக்கியத்துவத்தை பொலநறுவையில் ஆட்சி புரிந்த சோழ, சிங்கள மன்னர்கள் இந்து மதத்திற்கு ஆற்றிய பணிகளின் பின்னணியில் வைத்துப் பார்ப்பது பெருத்தமாகும்.
i'w
சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் (கி.பி. 993
1070) இது வரைகாலமும் பெளத்த மதம் பெற்ற முக்கியத்தை
இப்போது இந்து மதம் பெற்றது. இதனால் தமிழக கலைமரபை
ஒட்டிப் பல இந்துக் கோவில்கள் ஈழத்தில் கட்டப்பட்டதுடன்
அவை சோழ மன்னர்களின் பட்டப் பெயராலும், விருதுப் பெயராலும் 93

Page 56
அழைக்கப்பட்டன. இதற்கு திருகோணமலையில் குறிப்பாக கந்தளாயில் கட்டப்பட்ட ஆலயங்களும் விதிவிலக்கல்ல. சோழர் ஆட்சி கி.பி.1070 இல் முடிவடைங்ததைத் தொடர்ந்து பொலநறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டாலும் அவர்களில் பலர் இந்து மதத்தை ஆதரித்தற்கும், அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த சில ஆலயங்களைத் தமது பெயரில் அமைத்து அவற்றிற்கு நிலத்தையும், பணத்தையும் மானியமாக வழங்கி அவை பற்றிய சாசனங்களைத் தமிழ் மொழியில் பொறிப்பித்ததற்கும் சான்றுகள் உண்டு. அவ்வாறு செய்த மன்னர்களுள் முதலாம் விஜயபாகு, விக்கிரமபாகு, அவன் மகனாகிய இரண்டாம் கஜபாகு போன்ற மன்னர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களுள் விக்கிரமபாகு தாய்வழியால் கலிங்க வம்சத்தை சேர்ந்தவன். அவன் சைவ சமயச் சார்புடையவனாக இருந்து பெளத்த மதத்திற்கு எதிராக நடந்து கொண்ட சம்பவங்கள் பற்றிச் தளவம்சம் கூறுகிறது. இங்கிலை அவனது மகனான இரண்டாம் கஜபாகு காலத்திலும் காணப்பட்டது. பொலநறுவையை ஆண்ட மன்னர்களுள் கஜபாகு காலத்திலேயே அதிக தமிழ்க் கல்வெட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில பெளத்த மதம் தொடர்பானவை. மற்றையவை சைவ சமயச் சார்புடையன. இவனது ஆட்சியில் இந்துப் பண்பாடு பொலநறுவையில் மேலோங்கியிருங்ததை அவன் காலக் கல்வெட்டுப் பொறிப்புக்களில் வரும் "லங்கேஸ்வரதேவர்", "தேவர்", "பார்வத்பதி யாசீர் வீரமகாவிஸ்ணு", "நாராயணனை யொத்த மன்னன்" என்ற சொற்றொடர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவன் தனது ஆட்சியில் இந்து மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமை தான் பெளத்த மதத்தை முதன்மைப்படுத்தும் தளவம்சத்தில் அவனது வரலாறு முதன்மைப்படுத்திக் கூறப்படாததற்கு முக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
94

மேற்கூறப்பட்ட சான்றுகளின் பின்னனியில் கந்தளாய் சாசனத்தில் வரும் "கந்தளாயாக விஜயராஜ சதுர்வேதி மங்கலம்" என்ற தொடரை நோக்கும் போது அதன் வரலாற்றுத் தொடர்ச்சியும், அதன் முக்கியத்துவமும் தெளிவாகும். நான்கு வேதங்களிலும் வல்லவர்களான பிராமணர்களுக்கு மன்னர்களால் வழங்கப்பட்ட ஊர்கள் பொதுவாக பிரமதேயம் என அழைக்கப்பட்டது. இது சோழர் காலம் முதலாகப் பிரமதேயங்கள் என அழைக்கப்படுவது வழக்காக இருந்தது.
கங் தளாயில் கிடைத்த காலத்தால் முங் திய சோழ இலங்கேஸ்வரனது சாசனத்தில் கங்தளாயில் பிராமணர் குடியிருப்புக்கள் இருந்தது பற்றியும், அது இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது பற்றியும் அச்சாசனம் கூறுகிறது (பத்மநாதன் 2003:24). அத்துடன் கந்தளாயில் இருந்த "இராஜராஜ சதுர்வேதி மங்கலத்துச் சபையார்" தமது எல்லைக்கு உட்பட்ட நிலப்பகுதியில் நிர்வாக ஆதிக்கம் பெற்றிருந்ததையும், கந்தளாய் நீர்பாசன வசதியுள்ள வயல் நிலங்களைக் கொண்டிருந்ததையும், அவற்றோடு தொடர்புடைய வாய்க்கால்கள் "விக்கிரமசோழ வாய்க்கால்", "வாசுதேவவாய்கால்" என அழைக்கப்பட்டதையும் அச்சாசனத்தில் இருந்து மேலும் அறிய முடிகிறது (பத்மநாதன் 2003:27). ஆனால் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த "ராஜராஜ சதுர் வேதி மங்கலம்" என்ற இப்பெயர் சோழருக்குப் பின்னர் பொலநறுவையில் ஆட்சி புரிந்த முதலாம் விஜயபாகு காலத்தில் "விஜயராஜ சதுர்வேதி மங்கலம" எனப் பெயர் மாற்றம் பெற்றதை கங்தளாயில் கிடைத்த விஜயபாகுவின் தமிழ்க் கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது (Paramavithana 1943:193-196). விஜயபாகுவிற்குப் பின்னர் பொலநறுவையில் ஆட்சி புரிங் த கஜபாகு மன்னனும் இப்பெயரையே தொடர்ந்தும் பயன்படுத்தியதற்கு கந்தளாயில் கிடைத்த இவன் ஆட்சிக்காலச் சாசனங்களில் சான்றுகள் காணப்படுகின்றன (Veluppillai 1972: 37-38). தமிழ் சாசனங்களில் பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் சிங்களக் கல்வெட்டுக்களில் 95

Page 57
"சதுர்வேதி பிரம்மபுரம்" என அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு கந்தளாயில் கிடைத்த நிசங்கமல்லன் ஆட்சிக் காலத்திற்குரிய (கி.பி.1187-1196) சிங்களச் சாசனம் சிறந்த சான்றாகும் (Veluppillai 1972:37-38). அச்சாசனம் நிசங்கமல்லன் சதுர்வேதி பிரமபுரத்திற்குச் சென்ற போது அங்குள்ள பார்வதி சத்திரம் என்னும் தானசாலையில் நடைபெற்ற தானதருமங்களை நேரில் பார்வையிட்டான் எனக் கூறுகிறது. இவற்றில் இருங்து நிசங்கமல்லன் ஆட்சியிலும் கந்தளாயில் இருந்த பிரமதேயம் அவனது ஆதரவையும் பெற்றுள்ளமை தெரிகிறது. இதற்கு ஜயபாகு மன்னனது ஆட்சிக்காலமும் விதிவிலக்கல்ல என்பதையே கந்தளாயில் எமக்கு கிடைத்த சாசனமும் உறுதிப்படுத்துகிறது.
ஜயபாகு காலத்திற்குரிய சாசனத்தில் வரும் இன்னொரு சொற்தொடரான "ழரீ கைலாசமான விஜயராஜேஸ்வர முடையார்க்குத் திருப்பள்ளியெழுச்சி மத்யபோககம் அமுதுக்கு காசு இட்டார் பத்து" என்பதன் வரலாற்று முக்கியத்துவமும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. இத்தொடரில் இருந்து ஜயபாகு காலத்தில் இங்கு ஒரு ஆலயம் இருந்ததென்பதும், அவ்வால யத்தில் நடைபெறும் நிகழ்வொன்றிற்காக ஜயபாகு மன்னன் பத்துக் காசைத் தானமாகக் கொடுத்தான் என்பதும் புரிகிறது. இங்கு சோழர் காலத்திற்கு முன்பிருந்தே தென்கைலாசம் என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஆலயம் இருந்துள்ளது என்பதற்கு தொடர்ச்சியான சான்றுகள் காணப்படுகிறன. சோழலங் கேஸ்வரன் காலச் சாசனத்தில் வரும் "நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில் மானி" என்னும் தொடர் இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் ஆலயம் இருந்தற்குச் சான்றாக அமைகிறது. சோழரின் பின் இவ்வாலயம் முதலாம் விஜயபாகுவின் ஆதரவைப் பெற்றபோது அவன் பெயரால் அதற்கு "விஜயராஸ்ேவரம்" என்ற இன்னொரு பெயரும் ஏற்பட்டது. அவனது 42ஆம் ஆண்டுக்குரிய (கி.பி.1199) பாலமோட்டைச் சாசனத்தில் இப்பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன் நங்கைசானி என்னும் விதவைப் பிராமணப் பெண் அவ்வாலயத்திற்கு வழங்கிய தானம் பற்றியும் குறிப்பிடுகிறது. அதில் ஏழு தேவரடியார்களை 96

ஆலயத்தில் வைத்து உபசாரஞ் செய்வதற்காக 35 காசும் 9 கழங்சு பொன்னும் கொடுத்து அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை வேளைக்காரப் படையிடம் ஒப்படைத்ததாக கூறுப்படும் செய்தி முக்கியமாகும் (பத்மநாதன் 2003:26).
இவ்வாலயம் விஜயபாகுவின் பின்னரும் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றதற்குப் பாளி இலக்கியத்திலும், கல்வெட்டுக்களிலும் சான்றுகள் காணப்படுகின்றன. துளவம்சம் என்ற பாளி நூல் பொலநறுவையில் ஆட்சி புரிந்த கஜயபாகு (கி.பி.1132-1153) மன்னன் தனது இறுதிக் காலத்தில் கந்தளாயில் அரண்மனை ஒன்றை அமைத்து அங்கேயே வாழ்ந்தான் எனக் கூறுகிறது. "ழரீதசுடிணகைலாச புராணம்", "கோணேசர்கல்வெட்டு", "திருக்கோணசலபுராணம்" போன்ற வரலாற்று ஆவணங்கள் இவ்வட்டாரத்தில் இருந்த சிவன் ஆலயத்திற்கு இம்மன்னன் ஆற்றிய பணிகள், நன்கொடைகள் என்பன பற்றி விரிவாகக் கூறுகின்றன. கோகர்ணத்திலே ஆராதனைகள் தடைப்பட்டிருந்த காலத்திலே அந்தணர்களை வரவழைத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி அர்ச்சகராக நியமித்தமை, கோயிற் கணக்கில் ஆயிரம் பொன் இருப்பு வைத்தமை, அடை, ஆயம், தீர்வை முதலான அரசருக்குரியவற்றை ஆலயத்திற்கு மானியமாகக் கொடுத்தமை முதலிய விடயங்கள் கஜபாகு மன்னனின் திருப்பணிகளாக கேணேஸ்வரர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன (வடிவேலு 1993 ; 99-109). கந்தளாயில் கிடைத்த சிங்களக் கல்வெட்டு ஒன்று பொலநறுவையில் ஆட்சி புரிந்த நிசங்கமல்லன் (1187-96) இங்குள்ள ஆலயத்தில் நடந்த நடன நிகழ்ச்சியையும், சங்கீதக் கச்சேரியையும் கண்டு களித்தான் எனக் கூறகிறது (Veluppillai 197237-38).
மேற்கூறப்பட்ட வரலாற்று ஆதாரங்களை பொதுப்பட ஒப்பிட்டு
நோக்கும் போது பண்டு தொட்டு தமிழர் வரலாற்றோடு
தொடர்புடைய கந்தளாய்ப் பிரதேசம் சோழர் ஆட்சிக்காலத்தில்
இருந்து இரண்டுவகையில் சிறப்புப் பெற்றதெனக் கூறலாம். 1.
இலங்கையில் சோழரின் நேரடி ஆட்சி ஏற்பட்ட போது அவர்கள்
பின்பற்றிய நிர்வாக அமைப்புக்குள் கந்தளாய் "இராஜேந்திர வள 97

Page 58
"காடு" என்ற நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அதில் பிராமணர் வாழ்ந்த பகுதியே இராஜராஜ சதுர்வேதி மங்கலம் அல்லது பிரமதேயம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுவே பொலநறுவை காலத்தில் இலங்கையில் அமைந்திருந்த பரமதேயங்களில் தலைசிறங்தது என்பது பேராசிரியர் பத்மநாதனின் கருத்தாகும் (பத்மநாதன் 2003:27). இது சமகால தமிழகத்துப் பிரமதேயங்களைப் போல் சுயாட்சி அமைப்பாக விளங்கியது. அப்பிரமதேயம் சிங்கள மன்னர்களின் ஆட்சியிலும் நிலைத்திருந்ததுடன் அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. 2. கி.பி.4ஆம் நூற்றாண்டில் மகாசேன மன்னன் காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டுடன் தொடர்புடைய கந்தளாயில் சோழர் காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்த ஆலயம் புதிப்பிக்கப்பட்டிருக்கலாம். சோழர் காலத்தில் சிறப்பு பெற்ற இவ்வாலயம் சோழருக்கு பின்பாகவும் தொடர்ந்து சிறப்பு பெற்றதுடன் அது பொலநறுவையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இவ்வாறு இரண்டு வகையில் சிறப்பு பெற்ற கந்தளாய்ப் பிரதேசம் ஜயபாகு மன்னன் காலத்திலும் சிறப்புடன் விளங்கியதையே அண்மையில் எமக்கு கிடைத்த சாசனமும் உறுதிப்படுத்துகிறது. ஆயினும் இச்சானத்தில் குறிப்பிடப்படும் ஜயபாகு மன்னன் யார்? எப்போது ஆட்சி புரிந்தான்? எங்கே ஆட்சி புரிந்தான்? என்பதே இப்போது எழுப்படும் முக்கிய கேள்விகளாகும்.
V
இச்சாசனம் ஜயபாகுதேவரின் பட்டாபிஷேகம் முடிந்த 35வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. முதலாம் விஜயபாகுவுக்குப் பின்னர் அவனது தம்பியான ஜயபாகு கி.பி. 1111 இல் பொலநறுவையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதாக தளவம்சம் கூறுகிறது. விஜயபாகுவின் ஆட்சி (கி.பி.1171-1110) கி.பி. 1110 ஆண்டுடன் முடிவடைந்ததால் இச்சாசனம் பொறிக் கப்பட்ட காலம் கி.பி.1145 ஆண்டு என்பது தெரிகிறது. ஆனால் பொலநறுவையில் ஆட்சி புரிந்த மன்னர்களின் வரலாற்றைக் 98

காலவரிசையில் வைத்து நோக்கும் போது இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலமான கி.பி. 1145 ஆண்டில் ஜயபாகு என்ற மன்னன் ஆட்சியில் இருந்ததற்கு எந்தச் சான்றும் காணப் படவில்லை. மாறாக இவ்வாண்டில் கஜபாகு மன்னனே பொலநறுவையில் இருந்து ஆட்சி புரிந்துள்ளான். சாசனம் பொறிக் கப்பட்ட காலம் கி.பி. 1145 ஆம் ஆண்டு எனக் கொண்டால் அது கஜபாகுவின் (கி.பி.1132-1153) 12வது ஆட்சி ஆண்டைக் குறிக்கும். இதனால் சாசனத்தில் குறிப்பிடப்படும் 35 வது ஆட்சியாண்டுக்குரிய ஜயபாகு மன்னன் யார் என்பது முக்கிய கேள்வியாகும்.
பேராசிரியர் பத்மநாதன் அவர்களது கருத்தப்படி இச்சாசனத்தில் ஜெயபாகு மன்னனது ஆட்சியாண்டு 35 எனக் கூறப்பட்டிருப்பதால் இச்சாசனம் கி.பி.1145 ஆண்டில் வெளியிடப்பட்டிருக்க வேண்டு மெனவும், இக்காலத்தில் கஜபாகு என்பவனே பொலநறுவை மன்னனாக இருந்துள்ளதால் இச்சாசனத்தை ஜயபாகு மன்னது ஆட்சியாண்டாகக் கொண்டு கஜபாகு மன்னனே வெளியிட் டுள்ளான் எனக் கூறுவது பொருத்தம் எனக் கூறுகிறார். இதற்கு அவர் காட்டும் காரணங்கள் முதலாம் விஜயபாகுவுக்குப் பின்னர் பாரம்பரிய சிங்கள அரசுரிமைக் கோட்பாட்டை நிலைநிறுத்த விரும்பிய பெளத்த குருமாரும், அரச பிரதிநிதிகளும் ஒன்று கூடி விஜயபாகுவின் தம்பியான ஜயபாகுவை பொலநறுவை மன்னனாக கி.பி.1111இல் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தினர். ஆனால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விஜயபாகுவின் இன்னொரு சகோதரனான விக்கிரமபாகுவும், அதற்குப் பின்னர் அவனின் மகன் கஜபாகுவும் ஜெயபாகுவிடம் இருந்து ஒரு வருடத்திற்குள் பொலநறுவை அரசைக் கைப்பற்றி நீண்ட காலம் ஆட்சி புரிந்தனர். அவர்களுள் கஜபாகு மட்டும் 21 வருடங்களுக்கு (கி.பி.1132-1153) மேல் ஆட்சி புரிந்துள்ளான். இவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்தாலும், இவர்கள் இருவரும் முறைப்படி பட்டாபிசுேடிகம் செய்து கொள்ளத்தவறியதால் தாம் வெளியிட்ட கல்வெட்டுக்களில் தம் ஆட்சியாண்டுக்குப் பதிலாக தமக்கு முன்னர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக ஆட்சியில் இருந்த 99

Page 59
விஜயபாகுவின் தம்பியான ஜயபாகுவின் ஆட்சியாண்டையே பயன் படுத்தியிருக்கவேண்டும். அதையே கந்தளாய்ச் சாசனமும் உறுதிப் படுத்துகிறது.
அத்துடன் கஜபாகுவும், அவனின் தந்தையான விக்கிரமபாகுவும் தாய் வழியில் கலிங்கவம்சத் தொடர்புடையவர்கள். அதனால் அவர்களின் ஆட்சியில் பெளத்த மதத்துடன் சைவ மதமும் வளர்ச்சியடைந்தன. இதைத் தமிழ் இலக்கியங்கள் மட்டுமன்றிச் சமகாலப் பாளி இலக்கியங்களும் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய வரலாற்றுச் சம்பவத்தை மேலும் உறுதிப்படுத்தும் சான்றாகவே இச்சாசனத்தில் வரும் விஜயராஜேஸ்வர ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட தானம் பற்றிய செய்தி அமைகிறது என்பது பேராசிரியரின் இன்னொரு கருத்தாகும்.
சோழர் ஆட்சியின் விளைவுகளும், கலிங்க வம்சத் தொடர்பகளும் இலங்கை அரசியலில் பல மாறுதல்களை ஏற்படுத்திய அதே வேளை, அவர்களின் செல்வாக்கு இலங்கையில் சைவசமயம் வளர்வதற்கு மேலும் ஒரு காரணம் என்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலகட்டத்தில் கந்தளாய் உட்பட திருகோணமலைப் பிராந்தியமும் விஜயபாகு, விக்கிரமபாகு, கஜபாகு போன்ற சிங்கள மன்னர்களின் ஆதரவைப் பெற்றதற்குப் பல சான்றுகள் உண்டு. அதிலும் கஜபாகு மன்னனின் ஆட்சியில் கந்தளாய் உட்பட திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்கள் அவனின் ஆதரவைப் பெற்றிருக்கலாம் என்பதற்கு தளவம்சம், கோணேசர்கல்வெட்டு, பூறிதக்சுஷ்ணகைலாசபுராணம் போன்ற நூல்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு கந்தளாயில் கிடைத்த ஜயபாகு என்னும் பெயர் கொண்ட சாசனத்தை கஜபாகுவால் வெளியிடப்பட்ட தென்ற முடிவுக்கு வருவதில் சில ஐயப்படுகள் எழுகின்றன.
அவற்றுள் ஜெயபாகுவின் 35வது ஆட்சியாண்டைப் பேராசிரியர்
கஜபாகுவின் ஆட்சிக்குரிய காலமாக எடுத்திருப்பதை ஒரு ஊக
மாகக் கொள்ளலாமே தவிர அதையே இறுதி முடிவாகக் கொள்ள 100

முடியாதிருக்கிறது. அவ்வாறு கஜபாகு பயன்படுத்திக் கொண்டதற்கு இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுக்களிலோ உறுதியான ஆதாரம் இதுவரை காணப்படவில்லை. அதேவேளை கந்தளாயில் கிடைத்த ஏனைய கல்வெட்டுக்களில் தன் பெயரைப் பொறிப்பித்த கஜபாகு இக்கல்வெட்டில் மட்டும் ஏன் தன் பெயரைப் பொறிப்பிக்கத் தவறினான் எனபதற்கும் சரியான விளக்கத்தைக் கொடுக்க முடியவில்லை.
இவ்விரு ஐயப்பாடுகளுக்கு அப்பால் எழுப்பப்படும் இன்னொரு
முக்கிய கேள்வி இக்கல்வெட்டின் காலத்தை கஜபாகுவின்
சமகாலமாகக் கொள்ளமுடியுமா என்பது பற்றியதாகும். இதுபற்றி
தென்னாசியாவின் தலை சிறந்த கல்வெட்டறிஞர்களில் ஒருவரான
பேராசிரியர் சுப்பராயலு அவர்களிடம் இக்கல்வெட்டுக்குரிய
புகைப்படப் பிரதியைக் கொடுத்து அவரின் கருத்தைக் கேட்ட
போது அவர் இக்கல்வெட்டில் உள்ள தமிழ் மற்றும் கிரந்த
வரிவடிவங்களின் எழுத்தமைதியைச் சமகால தமிழக, இலங்கைக்
கல்வெட்டு எழுத்துக்களுடன் ஒப்பீட்டு இதன் காலம் கஜபாகுவின்
ஆட்சிக் காலத்தை (கி.பி.1132-1153) விட ஏறத்தாள நுாறு ஆண்டுகளுக்குப் பிங்தியதாக அதாவது கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார். இவரின்
காலக்கணிப்பையே தமிழகத்தின் முக்கிய கல்வெட்டாய்
வாளர்களான கலாநிதி சு. இராசகோபால், கலாநிதி. ச. சாந்தலிங்கம், கலாநிதி. க.இராசவேலு போன்றவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் மேற்கூறப்பட்ட சாசனத்தில் குறிப்பிடப்படும் ஜெயபாகு மன்னன் தொடர்பாகப் பேராசிரியர் பத்மநாதன் கூறும் விளக்கத்தை சமகால இலங்கையின் வரலாற்றுப் பின்னணியில் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.
இலங்கையின் இடைக்கால வரலாற்றில் ஜயபாகு என்ற பெயரில் சில ஆட்சியாளர்கள் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. கி.பி. 1114-1116 காலப்பகுயில் முதலாம் விஜயபாகுவின் இளைய சகோதரனான ஜயபாகு உபராஜனாகவும், பின்னர் அரசனாகவும்

Page 60
பொலநறுவையில் ஆட்சி புரிந்துள்ளான் (CVLIX:1-2).ஆயினும் இவன் ஆட்சி குறுகிய காலமாக இருந்ததுடன் இவனது ஆட்சிக் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருப்பதால் இவனை மேற்கூறப்பட்ட சாசனத்தில் வரும் ஜயபாகுவுடன் தொடர்பு படுத்துவது பொருத்தமாக இல்லை. கி.பி.1272 இல் தம்பதேனி யாவில் ஆட்சி புரிந்த இரண்டாம் பராக்கிரமபாகுவின் ஐந்து புதல்வர்களில் ஒருவனாக ஜயபாகு என்பவன் குறிப்பிப் பிடப்படுகிறான் (LXXXVII:16-17). ஆனால் இவன் ஆட்சியாளனாக இருந்ததற்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இதனால் இவனை மேற்கூறப்பட்ட சாசனத்தில் வரும் ஜயபாகுவுடன் எந்த வகையிலும் தொடர்புபடுத்த முடியாது. கி.பி.1467-1469 காலப்பகுதியில் கோட்டை அரசில் ஜயபாகு என்ற பெயரில் ஒரு மன்னன் ஆட்சி புரிந்துள்ளான் (CVVCI:12) ஆனால் இவனின் ஆட்சிக்காலம் மேற்கூறப்பட்ட சாசனத்தின் காலத்தைவிட 300 ஆண்டுகள் பிந்தியதாக இருப்பதால் இவனையும் சாசனத்தில் வரும் ஜயபாகுவுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது. ஆனால் மேற்கூறப்பட்ட மூன்று சிங்கள அரச பரம்பரையைச் சேராத தமிழ் மன்னன் ஒருவன் ஜயபாகு என்ற பெயரில் பொலநறுவையில் ஆட்சி புரிந்ததற்கு துளவம்சம், ராஜாவலி, பூஜாவலி போன்ற பாளி, சிங்கள இலக்கியத்தில் GFITGörgesGr 9 GošGD (LXXX: 75, LXXXIII:26-27, Puja:113-114). இவன் ஆட்சிக்காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டின் முதல் அரை நுாற்றாண்டு என்பதற்கு சான்றுகள் இருப்பதால் இவனை மேற்கூறப்பட்ட கந்தளாய்ச் சாசனத்தில் வரும் ஜயபாகு மன்னனுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது பல நிலையிலும் பொருத்தமாக உள்ளது.
கி.பி.1215இல் கலிங்கமாகன் இலங்கை மீது படையெடுத்து
பொலநறுவையைக் கைப்பற்றிய போது அவனுக்குத் துணையாக
இருந்த முக்கிய உயராஜாக்களில் ஒருவனாக ஜயபாகு குறிப்பிடப்
படுகிறான். இவனைத் தமிழ் மன்னன் எனக் கூறும் துளவம்சம்,
பூஜாவலி போன்ற நூல்கள் இவன் கலிங்கமாகனுடன் இணைந்து 102

பொலநறுவையில் ஆட்சி செய்தான் எனவும், சிங்கள மக்களுக் குரிய பெளத்த விகாரைகளை அழித்தான் எனவும் குறிப்பிடு SpGp6oT(LXXX:75, LXXXIII :26-27, Puja:113-114). a5aSmárias மாகன் ஆட்சி பற்றிப் பாளி இலக்கியங்கள் கூறுகையில் அவன் ஆட்சியில் பெளத்த வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்குச் சொந்தமான வீடுகள், கிலங்கள் அவனது படைவீரர் களின் இருப்பிடங்களாக மாற்றப்பட்டன எனக் கூறுகின்றன. அவ்வாறு அவன் நடந்து கொண்டமைக்கு அவனது படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ் மன்னனான ஜயபாகு பக்க பலமாக இருந்ததோடு, கலிங்கமாகன் படை வீரர்களில் பலரும் தமிழராக இருந்தமையும் முக்கிய காரணமாக இருக்கலாம். இதற்குச் சான்றாக இவனது படைப்பலம் பற்றிக் கூறும் தளவம்சத்தில் எட்டு இடங்களில் இவனது படையில் இருந்த வீரர்களை தமிழர் கள் எனவும், மூன்று இடங்களில் கேரளர் எனவும், ஒரு இடத்தில் தமிழர், கேரளர் எனவும் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டலாம் (C.V.80:61, 70, 76, 81:13, 14.82: 6, 26, 83:12, 14.20, 24.87: 25). இதனால் கலிங்கமாகன் சில இடங்களில் ஜயபாகுவைப் போல் தமிழ் அரசன் எனவும், திராவிட ராஜா எனவும் அழைக் கப்படுகிறான் (CV83:15). இக்கூற்று கலிங்கமாகன் எந்த நாட்டவனாக, எந்த அரச வம்சததைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனது நீண்டகால ஆட்சி இலங்கையில் நிலைத்திருப்பதற்கு ஜயபாகு போன்ற தமிழ் மன்னர்களின் ஆதரவும், தமிழ்ப் படை வீரர்களின் பங்களிப்புமே காரணம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
இவ்விரு மன்னர்களினதும் நடவடிக்கைகள்தான் சிங்கள மக்கள் தமது பாரம்பரிய அரச தலைநகராக இருந்த பொலநறுவையைக் கைவிட்டு தெற்கு நோக்கி நகரவும், தமிழர்கள் வடக்கேயிருந்த தமது அரசைப் பலப்படுத்தவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. கலிங்கமாகனின் நீண்ட கால ஆட்சிக்கும், வெற்றிகளுக்கும் அவனுடன் ஒன்று சேர்ந்திருந்த ஜயபாகு என்ற தமிழ் மன்னன் ஒரு முக்கிய காரணம் என்பதைப் பாளி, சிங்கள இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆயினும் கலிங்கமாகன் இலங்கை மீது
- 103

Page 61
படையெடுத்த போது அவனுடன் ஜயபாகுவும் சேர்ந்து இலங்கை வந்ததற்கு எந்தச் சான்றுகளும் காணப்படவில்லை. அப்படியானால் இந்த ஜயபாகு என்ற தமிழ் மன்னன் யார்?, எங்கிருந்து வந்தான்? எங்கே ஆட்சி புரிந்தான்? எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அறியவேண்டியுள்ளது. அதன் மூலம் இந்த ஜயபாகுவுக்கும் கந்தளாய்ச் சாசனத்தில் குறிப்பிடப்படும் ஜயபாகு மன்னனுக்கும் இடையிலான தொடர்ட துலக்கம் பெறவாய்ப்புண்டு.
ஜயபாகுவின் தனித்துவமான ஆளுமை பற்றி லியனகமே என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகையில் இவன் பொது எதிரியான பராக்கிரமபாகு போன்ற சிங்கள மன்னர்ளைத் தோற்கடிக்க கலிங்கமாகனுடன் ஒன்று சேர்ந்து செயற்பட்டாலும் இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆட்சி புரிந்த சுதந்தர மன்னர்காக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகிறார் (Liyanagamage 1968:110). GasTrusir (Ceylon Antiquary and Literary Register X:47), நிக்லஷ்ெ (Ray 1960:619, Note:16) போன்ற ஆய்வாளர்கள் ஜயபாகுவை சோழ வம்சத்தோடு தொடர்புபடுத்தி, இவன் கலிங்கமாகன் படையெடுப்புக்கு முன்னரே இலங்கையின் ஒரு பகுதியில் ஆட்சி புரிந்த மன்னனாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இங்கு நன்கு ஆராயத்தக்கது. 24000 படைவீரர்களுடன் இலங்கை மீது படையெடுத்த கலிங்கமாகன் படை பின்னர் 44000 படைவீரர்களாக அதிகரித்ததாகவும், அப்போது அவனுக்கு துணையாக இருந்த ஜயபாகு படையில் 40000 படைவீரர்கள் இருந்தாகவும் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன (Puja:116). இவ்வெண்ணிக்கைகள் பாளி இலக்கியங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பினும் இராணு வரீதியில் ஜயபாகு கலிங்கமாகனுக்குச் சமமான நிலையில் இருந்து ள்ளான் என்பதையே இது காட்டுகிறது. உண்மையில் ஜயபாகு மன்னன் கலிங்கமாகனுடன் சேர்ந்து அல்லது கலிங்கமாகனுக்குப் பின்னர் இலங்கை வந்திருந்தால் அவனால் இந்தளவுக்கு
104

படைப்பலத்தைப் பெருக்கியிருக்க முடியாது. இதனால் ஜயபாகுவை கலிங்கமாகனுக்கு முன்னர் இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களில் ஒருவன் எனக் கூறுவது பொருத்தமாக உள்ளது. அவ்வாறான துழல் அக்காலகட்டத்தில் இருந்ததைச் சமகாலச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
கலிங்கமாகன் 1215இல் இலங்கை மீது படையெடுக்க முன்னரே பல படையெடுப்புக்கள் பொலநறுவை அரசுக்கு எதிராக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மேற் கொள்ளப்பட்ட தாகப் பாளி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதில் உள்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்களுக்கு சோழர் ஆட்சியின் பின்னர் வடஇலங்கையில் (அன்றைய வடஇலங்கையில் திருகோணமலையும் உட்படுகிறது) தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்தமை முக்கிய காரணமாக இருக்கலாம். இதற்குச் சான்றாக நிசங்கமல்லன் ஆட்சிக்காலத்திலிருந்து (கி. பி.1187-1196) வெளியிட்ட சிங்களக் கல்வெட்டுக்களில் சான்றுகள் காணப்படுகின்றன. அவன் வெளியிட்ட மினிப்பே கல்வெட்டில் பெளத்த மதத்திற்குச் சொந்தமான இந்நாட்டைப் பரிபாலிக்க பெளத்தர் அல்லாதவர்களைத் தெரியக்கூடாது எனவும், இவர்களுடன் சேர்ந்து அழிவினை ஏற்படுத்துவோர் துரோகிகள் எனவும் கூறுகின்றது. அதேபோல் 1211 ஆம் ஆண்டுக்குரிய இன்னொரு சிங்களக் கல்வெட்டு தமிழர் படையெடுப்பால் சிங்கள மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை எச்சரிக்கையுடன் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இச்சான்றுகள் கலிங்கமாகனுக்கு முன்னரே தமிழரால் பொலநறுவை அரசுக்கு ஆபத்து ஏற்பட இருந்ததையும், அதை ஏற்படுத்தக் கூடிய அரசு பொலநறுவைக்கு வடக்கிலும் இருந்திருக்கலாம் என்பதையும் மறைமுகமாகச் சுட்டுகின்றன. அவ்வாறான அரசை ஏற்படுத்தியிருந்த தமிழ் மன்னர்களில் ஒருவ னாக ஜயபாகு இருந்திருக்கலாம். அதனால்தான் கலிங்கமாகன் இலங்கைமீது படையெடுத்த போது பலமான நிலையில் இருந்த ஜயபாகுவையும் தன்னுடன் இணைத்து பொலநறுவையில் ஆட்சி செய்ய நேரிட்டது எனலாம் (C.V.LXXX:75, Puja:13-114).
105

Page 62
ஜயபாகு மன்னனை சோழருடன் தொடர்புபடுத்துவதற்கு சமகாலப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் சோழப் படைவீரர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பது ஒரு காரண மாக இருக்கலாம். இதனால் ஜயபாகுவை கலிங்கமாகன் இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பின்பாகத் தமிழகத்தில் இருந்து படையெடுத்து வந்தவன் எனக் கருதுவது பொருத்தமாகத் தெரியில்லை. ஏனெனில் இக்காலம் தமிழகத்தில் சோழ அரசு வீழ்ச்சியடைந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்ற ஒரு காலமாகும். இக்காலத்தில் சோழ நாட்டிலிருந்து பெரும் படைவீரர்களுடன் ஜயபாகு இலங்கைக்கு வந்திருப்பான் எனக் கூறக்கூடிய அளவுக்கு சோழ அரசு பலமான நிலையில் இருக்கவில்லை. ஆனால் சோழரது 77 (கி.பி 993-1077) ஆண்டு கால நேரடி ஆட்சியில் படைவீரர்களாக, நிர்வாகிகளாக, வணிகர்களாக, கலைஞர்களாக இலங்கையில் வந்து குடியேறி யோர் சோழர் ஆட்சி வீழ்ச்சி கண்டதும் மீண்டும் தமிழகம் திரும்பிச் சென்றதற்குச் சான்றுகள் காணப்படவில்லை. இதனால்தான் வடக்கு இலங்கையில் தமிழரின் சனத்தொகை இக்காலத்தில் அதிகரிந்திருந்ததெனப் பேராசிரியார் அரசரட்ணம் கூறுகிறார். அவ்வாறு குடியேறிய சோழ நாட்டவர் இங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களுடன் இணைந்தோ அல்லது தனித்தோ அரசமைத்து பொலநறுவை அரசுக்கு எதிராகப் படையெடுத்தி ருக்கலாம். அவ்வாறு அரசமைத்த மன்னர்களில் ஒருவனாக ஜயபாகு இருந்திருக்கலாம்.
இந்த இடத்தில் ஜயபாகுவை சோழருடன் தொடர்புபடுத்தும் போது இன்னொரு கருத்தையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. சோழருக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து படையெடுத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டு சிங்கள மன்னர்களை வெற்றி கொண்டதற்குப் பாளி இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன (CVXXXXIV: 84-85). இதற்கு இனம், மொழி பண்பாடு என்பன இரு நாட்ட வருக்கும் பொதுவாக இருந்தமை காரணமாக இருக்கலாம்.
இப்பண்பாட்டு இணைப்பால் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களும் தம்மைச் சோழர் என அழைத்துக் கொள்வதைப் பெருமையாகக்
106

கருதி இருக்கலாம். இதற்கு உதாரணமாக கொங்கு நாட்டுத் தமிழர்களை இவ்விடத்தில் குறிப்பிடலாம். கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை தனி அரசாக இருந்த கொங்கு நாட்டு மக்கள் தம்மை கொங்கு நாட்டு மக்கள் எனவும், தம்மை ஆட்சி செய்த மன்னர்களை கொங்கு தேச இராஜாக்கள், கொங்கு நாட்டு வம்சத்தவர் என்று பெருமையாக அழைத்துக் கொண்டனர். ஆனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து அங்கு சோழர், பாண்டியர் ஆட்சி ஏற்பட்டதும் இங்கிலை மாறி அந்த மக்களும், மன்னர்களும் தம்மை கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் என அழைத்துக் கொண்டதைக் காணமுடிகிறது. இந்த மாற்றம் இலங்கைத் தமிழரிடையேயும் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிலவற்றில் ஈழச்சோழர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இது தமிழகத்தில் வாழ்ந்த சோழரில் இருந்து ஈழத்தில் வாழ்ந்த சோழரை வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தி இருக்க வேண்டும் எனத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசு கூறுகிறார்"). இதனால் சோழர் பற்றி ஈழத்து வரலாற்று மூலங்களில் வரும் குறிப்புக்கள் தமிழகத்தில் இருங்து அவ்வப்போது வந்துபோன சோழரை மட்டும் குறிக்காது, இங்கு வாழ்ந்த சோழரையும் குறித்திருக்கலாம். இது ஜயபாகு மன்னனுக்கும் பொருந்தலாம்.
ஜயபாகுவின் நடவடிக்கைகள் கலிங்கமாகன் ஆட்சியோடு இணைத்துப் பாளி இலக்கியங்களில் பேசப்பட்டாலும் கலிங்கமாகன் ஆட்சி பற்றிப் பேசும் எல்லா இலக்கியங்களிலும் ஜயபாகு பற்றிப் பேசப்படவில்லை(Liyanaganage 1967:110). அதேவேளை ஜயபாகு மன்னன் பற்றிப் பேசும் சூளவம்சம், பூஜவலி போன்ற நூல்களில் கூட கலிங்கமாகன் ஆட்சி பற்றி விரிவாகக் கூறுவது போல் ஜயபாகு மன்னன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தான், எங்கே ஆட்சி புரிந்தான், எக்காலம் வரை கலிங்கமாகனுடன் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்தான் போன்ற விபரங்களைத் தெளிவாகக் கூறவில்லை. இருப்பினும் இருவரும் ஒன்று சேர்ந்து பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு
107

Page 63
ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் ஆதிக்கம் பொலநறுவை யைக் காட்டிலும் வடஇலங்கையிலும், கிழக்கிலங்கையிலும் மேலோங்கியிருந்ததை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக துளவம்சம் என்ற நூல் இவர்களின் ஆட்சிக்குரிய கோட்டைகள், படைத்தளங்கள் அமைந்திருந்த இடங்களாக வடகிழக்கு மாகாணங்களில் உள்ள கொட்டியாரம் (கொட்டசாரா), கந்தளாய் (கந்தகலக), பதவியா(பதி), மாதோட்டம் (மகாதீர்த்த), குருந்தி, புலச்சேரி, மன்னார், ஊர்காவற் துறை, வலிகாமம் போன்ற இடங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கந்தளாய், பதவியா, கொட்டியாரம், கந்தளாய் போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தமை தெளிவாகத் தெரிகிறது. இவ்விடங்கள் கலிங்கமாகனுக்குப் பின்னர் வடஇலங்கையில் அரசமைத்த சந்திரபானு மன்னன் ஆட்சியிலும் முக்கியத்துவம் பெற்றதைச் சமகாலப் பாளி இலக்கியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இதற்கு மேலும் சான்றாக தமிழகத்தில் குடுமியாமலை என்ற இடத்தில் உள்ள கி.பி. 1262 ஆம் ஆண்டுக்குரிய பாண்டியக் கல்வெட்டில் வரும் செய்தியை எடுத்துக் காட்டலாம். இக்கல்வெட்டில் வடஇலங்கையில் ஆட்சி புரிந்த சாகவ மன்னனை அடிபணியச் செய்வதற்காக சிங்கள அமைச்சர் ஒருவர் பாண்டிய மன்னனிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு உடன்பட்ட பாண்டிய மன்னன தனது படையை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும், அப்படை வீரர்கள் நாகநாடு என அழைக்கப்பட்ட வடஇலங்கை மீது படையெடுத்து சாவக மன்னனிடம் திறைகொடுக்குமாறு கேட்ட போது அதைக் கொடுப்பதற்கு அவன் மறுத்ததால் அவனைக் கொன்று தம்மிடம் அடிபணிந்த சாகவனின் மைந்தனை ஆட்சியில் அமர்த்தி, சாவக மன்னனின் கொடி பறந்து கொண்டிருந்த கோணாமலையிலும், திரிகூடகிரியிலும் பாண்டியர் தமது அரச இலச்சனையான இரட்டைக் கயலைப் பொறித்ததாகவும் கூறுகிறது(Puthukkoddai Inscriptions. 239, no:366). இதையுறுதிப்படுத்தும் வகையில் பாண்டியரது இரட்டைக்கயல் பொறித்த கல்வெட்டு ஒன்று 108

திருகோணமலைக் கோட்டையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது (பத்மநாதன் 2000). இக்கல்வெட்டிலிருந்து கலிங்கமாகன், ஜயபாகு மன்னர்களது ஆட்சிக்குப் பின்னர் வடஇலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்களின் அரச தலைநகரங் கள் கந்தளாய் உள்ளிட்ட திருகோணமலைப் பிராந்தியத்திலும் இருந்துள்ளமை தெரிகிறது.
ஆகவே மேற்கூறப்பட்ட சான்றாதாரங்கள் சோழர் ஆட்சிக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தில் நல்லுாரைத் தலைநகராகக் கொண்ட அரசு தோன்றும் வரை திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கந்தளாய் என்ற இடம் ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றதற்கு சான்றாக உள்ளன. கலிங்கமாகனுடன் இணைந்து பொலநறுவையில் ஆட்சி புரிந்த ஜயபாகு மன்னனும் கந்தளாயுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதைப் பாளி இலக்கியங்கள் துசகமாகத் தெரிவிக்கின்றன. அதேவேளை கந்தளாயில் கிடைத்த கல்வெட்டிலும் ஜயபாகு என்ற மன்னன் செய்த பணிகள் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலமும் பொலநறுவையில் ஆட்சி புரிந்த ஜயபாகுவின் காலமும் ஏறத்தாழ சமகாலமாக இருப்பதால் இச்சாசனத்தை பொலநறுவையில் ஆட்சி செய்த ஜயபாகு என்ற தமிழ் மன்னனே வெளியிட்டான் எனக் கூறுவதே பொருத்தமாகத் தெரிகிறது. இதிலிருந்து ஜயபாகு காலத்திலும் கந்தளாய் சிறப்புப் பெற்றிருந்ததென்ற முடிவுக்கு வரமுடிகிறது
இங்த இடத்தில் திருகோணமலைக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டில் வரும் சோடங்கனுக்கும், ஜயபாகு மன்னனுக்கும் இடையிலான தொடர்பு பற்றி வரலாற்றாசிரியர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் ஆராய்வது பொருத்தமாகும். இக்கல்வெட்டு சோடங்க(ன்) என்னும் பெயரை உடைய மன்னன் ஒருவன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக திருகோணமலையில் உள்ள ஆலயத்திற்கு தானம் செய்தான் என்பதைக் கூறும் நோக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. பெருமளவுக்கு சிதைவடைந்த நிலையில் காணப்படும் இக்கல்வெட்டில் வரும் சோடங்களின் காலத்தைப் 109

Page 64
பேராசிரியர் பரணவிதானா கி.பி.1223 ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளார் (Paramavithana 1955:170-173). ஆனால் பேராசிரியர் பத்மநாதன் இதன் காலத்தை 1262 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்டதெனக் கணித்து (பத்மநாதன் 2000:197-216) கல்வெட்டில் கூறப்பட்டுள்ள சோடங்கன் கிழக்கிலங்கை வரலாற்றில் பெரிதும் போற்றப்பட்ட குளக்கோட்ட மன்னனின் இன்னொரு பெயர் எனக் குறிப்பிடுகின்றார். இதற்குச் சான்றாக குளக்கோட்ட மன்னனின் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பூரீதழ்ெணகைலாச புராணப்பாயிரச் செய்யுளில் வரும் "குளக் கோட்டனென்னும் சோழங்கனை நம்சிங்தையில் வைப்போம்" என்னும் சொற் தொடரை ஆதாரம் காட்டுகிறார். இதில் இருந்து குளக்கோட்ட மன்னனுக்கு சோடங்கன் என்னும் இயற்பெயரும் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
இதேவேளை நிக்லஜ்ெ என்ற வரலாற்றாசிரியர் இச்சாசனத்தின் காலமும், பொலநறுவையில் கலிங்கமாகனுடன் இணைந்து ஆட்சி செய்த ஜயபாகுவின் காலமும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதால் சாசனத்தில் குறிப்பிடப்படும் சோடங்கன் மேற்கூறப்பட்ட ஜயபாகு மன்னனாக இருக்கலாம் எனக் கூறுகிறார் (Liyanagamage1968 108-109). முன்பு நிக்லஷ்சின் கருத்தைப் பொருத்தம் என் கூறிய பேராசிரியர் பத்மநாதன் இவனே குளக்கோட்ட மன்னன் எனவும் S9|GOLULUTGITIČNIGDoğSúlovigrTử (Pathmanathan 1978: 141). GOTTGö அண்மையில் இச்சாசனத்தை மீள்வாசிப்புக்கு உட்படுத்திய அவர் அதில் குறிப்பிடப்படும் சோடங்கனை முதலாம் புவனேகபாகு காலத்தில் படையெடுத்து வந்த பாண்டியப் பிரதானியான சோடங்கதேவன் எனவும், அவனே மேற்குறிப்பிட்ட சாசனத்தில் வரும் சோடங்கனும், குளக்கோட்ட மன்னனாகவும் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர் காட்டும் ஆதாரம் 1. பெயரடிப்படையில் சாசனத்தில் வரும் சோடங்கதேவ என்ற பெயரும் புவனேகபாகு காலத்தில் படையெடுத்துவங்த சோடங்கதேவா என்ற பெயரும் ஒன்றாக இருப்பது. 2. தளவம்சம் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த புவனேகபாகு என்ற மன்னன் இச்சோடங்கனைத் தோற்கடித்ததாகக் கூறினாலும்
110

அவனின் ஆட்சி திருகோணமலையில் ஏற்பட்டதற்குச் சான்றுகள் இல்லாதிருப்பதால் அதைப்பயன்படுத்தி இச்சோடங்கன் தனது ஆட்சியை திருகோணமலையில் ஏற்படுத்தியிருக்கலாம். 3. சாசனத்தில் சோடங்கன் இலங்கையில் ஏதோ வெற்றி அடைந்ததைக் கூறுகிறது. அந்த வெற்றி பாண்டியர் சார்பாக படையெடுத்த சோடங்க தேவனுக்கு உரியதாக இருக்கலாம்.
ஆனால் பேராசிரியரின் இக்கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதில் சில பிரச்சனைகள் உண்டு. அதில் பொலநறுவையில் ஆட்சியாளராவும், இளவரசராகவும் இருந்தவர்கள் சோடங்க என அழைக்கும் தளவம்சம் பண்டியப் பிரதானியின் பெயரை மட்டும் திருகோணமலை கோட்டைச் சாசனத்தில் வருவது போல் சோடங்கதேவ என அழைப்பதில் காணப்படும் பெயர் ஒற்றுமையை ஒரு ஆதாரமாகக் காட்டுவதை பொருத்தமான விளக்கமாக ஏற்கமுடியாதுள்ளது. ஏனெனில் தளவம்சத்தில் சோடங்க என வரும் ஏனைய பொலநறுவை மன்னர்களின் பெயர்கள் அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் "சோடங்கதேவ" என்றே எழுதப்பட்டுள்ளதை இவ்விடத்தில் ait istéiseismi" Leomh (Codrigton 1924: 69).
பாண்டியப் பிரதானி சோடங்கனின் படையெடுப்பை புவனேகபாகு முறியடித்தான் எனச் சூளவம்சம் கூறுகிறது. புவனேகபாகுவின் ஆட்சிக்காலம் கி.பி.1273-1284 இடைப்பட்டது. ஆனால் இக்காலத்திற்கு முன்னரே வடகிழக்கு இலங்கையில் கலிங்க மாகன், ஜயபாகுவின் ஆதிக்கமும், அதை தொடர்ந்து சாகவன் ஆட்சியும் இருந்தற்கு உறுதியான ஆதாரங்கள் உண்டு. அதிலும் சாகவனின் அரசு நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கலாம் என்பதை அவன் பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்திருப்பதைக் கொண்டு உறுதிப்படுத்த முடிகிறது (Pushparatnam 2003). இவனைப் பாண்டியர் அடிபணியச் செய்து இவனின் மைந்தனிடம் ஆட்சி ஒப்படைத்ததாகப் பாண்டியரின் 1262ஆம் ஆண்டுக்குரிய குடுமியமலைச் சாசனம் கூறுகிறது. இவனின் ஆட்சி பற்றிச் தளவம்சமும் கூறுகிறது. ஆனால் புவனேகபாகுவால் தோற்கடிக்
111

Page 65
கப்பட்ட பாண்டியப் பிரதானியான சோடங்கதேவ(ன்) புவனேகபாகுவின் ஆதிக்கம் பரவாதிருங்த வடகிழக்கு இலங்கையில் அரசமைத்தது பற்றி தளவம்சத்திலோ அல்லது பாண்டியரது சாசனத்திலோ எந்தச் சான்றும் காணப்படவில்லை. எனவே சோடங்கதேவ(ன்) அரசமைத்திருக்கலாம் என்ற பேராசிரியர் பத்மநாதனின் கருத்தை ஒரு ஊகமாகக் கொள்ளலாமே தவிர உறுதியான முடிவாக எடுப்பதற்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை.
பேராசிரியர் பத்மநாதன் சேடங்கனைப் பாண்டியப்பிரதானியாகக்
கொள்வதன் மூலம் குளக்கோட்டனைப் பாண்டிய வம்சத்து
மன்னாகக் காட்ட முற்பட்டுள்ளார். இதற்குச் சான்றாக
குளக்கோட்டன் ஏற்படுத்தியிருந்த வன்னியர் குடியேற்றத்தைப்
பாண்டி நாட்டுடன் தொடர்புபடுத்துகிறார். (பத்மநாதன் 2000:
212). இக்கூற்று குளக்கோட்டனுக்கும், சோழ வம்சத்திற்க்கும்
இடையிலான உறவு பற்றிப் பேராசிரியர் உட்படப் பலரும்
இதுவரை காட்டி வந்த ஆதாரங்களுக்கும், பாரம்பாரிய வரலாற்று ஜதீக மரபிற்கும் முற்றிலும் முரணான கருத்தாக அமைகிறது (பத்மநாதன் 2000:96). அதிலும் குளக்கோட்டனைப் பாண்டியருடன்
தொடர்புபடுத்துவதற்கு பாண்டி நாட்டிலிருந்து வன்னியரைக்
குடியேற்றியதைச் சான்றாகக் காட்டும் போது, அதே
குளக்கோட்டன் சோழ நாட்டிலிருந்தும் வன்னியரைக் குடியேற்றி ருக்கலாம் என்பதற்குரிய சான்றுகளையும் கருத்தில்
கொள்ளவேண்டியுள்ளது.
ஆகவே இதுவரை காட்டப்பட்ட சான்றாதாரங்களில் இருந்து ஜயபாகுவுக்கு சோடங்கதேவ(ன்) என்ற பெயர் இருந்ததற்கு நேரடியான சான்று இல்லாவிட்டாலும் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது கலிங்கமானனுடன் இணைந்து பொலநறுவையில் ஆட்சிபுரிந்த ஜயபாகுவையும், கந்தளாய்ச் சாசனத்தில் வரும் ஜயபாகுவையும், தசஷணகைலாச புராணத்தில் வரும் குளக்கோடகர் கனென்னும் சோடங்கனையும், திருகோணமலைச் சாசனத்தில் வரும் சோடங்கனையும் ஒருவராக எடுத்துக் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது. அதற்குச் சார்பாகச் சில சான்றுகளை எடுத்துக்காட்டலாம்.
112

1. சோழர் ஆட்சிக் காலம் தொட்டு பிராமண குடியிருப்புடன்
தொர்புடைய கந்தளாயில் இருந்த சதுர்வேதிமங்ககல சபையார்
அங்கு நீர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கும், அங்கிருந்த
ஆலயத்திற்கு காலத்திற்கு காலம் ஆட்சி புரந்த மன்னர்கள்
ஆதரவு கொடுத்ததற்கும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன.
அந்த ஆதரவு ஜயபாகு காலத்திலும் தொடர்ந்ததை கந்தளாயில்
கிடைத்த சாசனம் உறுதிப்படுத்துகிறது. அதேபோல் குளக்கோடனெனும் சோடங்கன் கந்தளாய்க்கு ஆற்றிய பணிகள்
பற்றி ழரீதசஷ்ண கைலாசபுராம் பின்வருமாறு கூறுகிறது. "அநேக
காத தூரம் வரையான குளக்கரை திருத்தப்பெற்றமை, குளத்தில்
இருந்து நீரினைப் பாய்ச்சுதவதற்கும், நீரோட்டத்தினைக்
கட்டுப்படுத்துவதற்கு தேவையான தூம்பு, தத்திரம் முதலியவற்றை
அமைத்தமை, குளத்தினை கோயிலுக்கு தேவதானமாக
வழங்கியமை, அத்தானத்தைச் சிலோகம் செய்தமை" இவை சோழா ஆட்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குளக்கோட்டன்
என்னும் சோடங்க மன்னன் காலத்திலும் தொடங்ததை
நினைவுபடுத்துவதாக உள்ளது.
2. பொலநறுவையில் ஆட்சி புரிங் த கலிங்கமாகனை கலிங்கநாட்டவன், கலிங்க வம்சத்தவன், மாகன், விஜயபாகு எனப் பல பெயரில் அழைக்கும் பாளி இலக்கியங்கள் ஜயபாகுவை சிங்கள மன்னனுக்குரிய பெயர் கொண்டு அழைத்தாலும் அவனை எல்லா இடத்திலும் தமிழ் மன்னன் என்றே சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் குளக்கோட்டன் வரலாறு கூறும் இலக்கியர்கள் பலவற்றில் அவன் சோழ வம்சத்து வழிவந்த தமிழ் மன்னன் என்றே வருணிக்கப்பட்டுள்ளான்.
3. திருகோணமலையில் கிடைத்த சமஸ்கிருதக் கல்வெட்டில் வரும் சோடங்கனைக் குளக்கோட்டன் எனக் கொள்ளும் போது சோடங்கனின் காலமும், பொலநறுவையில் கலிங்கமாகனுடன் இணைந்து ஆட்சி புரிந்த ஜயபாகுவின் காலமும் ஏறத்தாழ சமகாலமாக உள்ளது. இவர்களின் மேலாதிக்கம் திருகோணமலைப் பிராங்தியத்தில் உள்ள கங்தளாய்,
கொட்டியாரம், பதவியா, கோகர்ணம் போன்ற இடங்களை மையமாகக் கொணிடு நடைபெற்றதென்பதைப் பாளி இலக்கியங்கள் உறுதிப்படுத்கின்றன. இங்கே குளக்கோட்டன் ஜயபாகுவில் இருந்து வேறான மன்னன் எனக் கொண்டால் எப்படி
113

Page 66
ஒரே காலத்தில் ஒரு இடத்தில் ஆட்சி புரிந்த இரு மன்னர்களில் ஒரு மன்னனைப் புகழ்ந்தும், இன்னொரு மன்னனைப் பற்றிப் பேசாமலும் விடப்பட்டிருக்க முடியும், அதேவேளை திருகோண மலையுடன் கலிங்கமாகன், ஜயபாகுவிற்குள்ள தொடர்பைக் கூறிய பாளி இலக்கியங்கள் ஏன் சமகாலத்தில் திருகோணமலையில் ஆட்சிபுரிந்த குளக்கோட்ட மன்னன் பற்றிக் கூறத்தறின என்ற கேள்வி இடம்பெற வாய்ப்புண்டு. இதற்கெல்லாம் குளக்கோட்டனும், ஜயபாகுவும் ஒரு மன்னனுக்குரிய பெயராக இருந்தமைதான் காரணமாக இருக்க வேண்டும்.
4. ஜயபாகுவை சோழ வம்சத்துடன் தொடர்புடைய தமிழ் மன்ன னாகக் கூறும் மரபு பாளி இலக்கியங்களில் காணப் படுகிறது. அதே போல் குளக்கோட்டனும் சோழ வம்சத்து மன்னனாகக் கூறும் மரபு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. பற்றிப் பேராசிரியர் பத்மநாதன் கூறும் கருத்து (2000:98-99) இவ்விடத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது,
"அந்த மரபு நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. அது இலக்கிய மரபு, நாட்டார்வழக்கு ஆகிய இரண்டிற்கும் பொதுவானது. பெளராணிக அம்சங்கள் கலந்துள்ளன என்ற காரணத்தால் அது முற்றிலும் ஆதாரமற்றவை என ஒதுக்கி விடமுடியாது. குளக் கோட்டன் சோழவம்சத்தவன் அல்லன் என்றவொரு கருத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அதனைப் புறக்கணிக்க முடியும். இதுவரை மாற்றுக் கருத்து வைப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கான மரபுவழிச் செய்தி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, குளக்கோட்டன் செம்பியர் குலத்தவன் என்ற கருத்து ஒப்புக் கொள்ளக்கூடிய தாகவே காணப்படுகிறது. இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சி யின் பின்னணியில் இந்த விடையத்தை நோக்குவது அவசிய மாகிறது."
5. பொலநறுவையில் ஜயபாகுவுடன் இணைந்து ஆட்சிபுரிந்த கலிங்கமாகன் மட்டக்களப்பில் ஆற்றிய பணிகள் குறிப்பாக வன்னியரைக் குடியேற்றியமையும், திருகோணமலையில் குளக்கோட்டன் ஏற்படுத்திய வன்னியர் குடியேற்றமும் ஒரே காலகட்டத்தில் இரு மன்னர்கள் ஆற்றிய பணிகளை நினைவுபடுத்துகின்றன. 114

6. திருகோணமலைச் சாசனத்தில் சோடங்கன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக தானம் கொடுத்ததைப் பேராசிரியர் பத்மநாதனி பவனேகபாகுவால் தோற்கடிக் கப்பட்ட பாண்டியப்பிரதானி சோடங்கன் புவனேகபாகுவின் ஆதிக்கம் பரவாதிருந்த திருமலையில் அடைந்த வெற்றிக்காகச் செய் திருக்கலாம் எனக் கருதுகிறார் (பத்மநாதன் 2000:211). ஆனால் சாசனத்தில் சோடங்கதேவன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காகவே தானம் கொடுத்தான் என்ற செய்தி காணப்படுகிறது. இக்காலத்தில் தென்னிலங்கையில் புவனேகபாகுவின் ஆட்சியும், வடஇலங்கையில் சாகவன் ஆட்சியும் இருக்கும் போது சோடங்கன் வெற்றியை எப்படி இலங்கை வெற்றியாக எடுக்க முடியும். இக்காலத்தில் திருகோணமலை கோகர்ணம், கோணமலை, திரிகூடகிரி எனவும், திருகோணமலை உள்ளிட்ட வடஇலங்கை நாகநாடு எனவும் அழைக்கப்பட்டதற்குப் பாண்டியக் கல்வெட்டுக்களிலேயே சான்றுகள் காணப் *IGDéfisửgp6oT(Puthukkoddai Inscriptions.239:no.366). 91 Lugui ருக்கும் போது பாண்டியப் பிரதானியான சோடங்கனே திருகோண மலையை வெற்றி கொண்டிருந்ததால் எப்படி அந்த வெற்றியை இலங்கை வெற்றியாகக் கொண்டாடியிருக்க முடியும்?. சாசனத்தில் அது மிகைப்படுத்திக் கூறப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் இந்த வெற்றியை ஏன் சமகால இலங்கை, தமிழக வரலாற்று மூலங்கள் கூறவில்லை என்பதும் புரியவில்லை. ஆனால் இந்த வெற்றியை ஜயபாகுவுக்கு உரியதாகக் கொள்ளும் போது சாசனத்தில் வரும் சோடங்களின் இலங்கை வெற்றி என்பது பொருத்தமாகவே உள்ளது. ஏனெனில் இவன் கலிங்கமாகனுடன் இணைந்து இலங்கையை வெற்றி கொண்டு பொலநறுவையில் இருந்து ஆட்சி புரிந்தவன். இவன் பின்னர் கலிங்கமாகனை விட்டு விலகி திருகோணமலையில் அரசமைத்த காலத்தில் முன்னர் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இங்கிருந்த கோவிலுக்குத் தானம் கொடுத்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு
குளக்கோட்டனும், ஜயபாகுவும் ஒருவர் எனக் கொள்வது
பொருந்தமாகத் தெரிகிறது. அப்படியானால் கிழக்கிலங்கையில்
குளக்கோட்டன் என்று அழைக்கப்பட்டவன் ஏன் பொலநறுவையில் 115

Page 67
ஆட்சி செய்த போது ஜயபாகு என்று அழைக்கப்பட்டான் என்ற கேள்வி எழ வாய்ப்புண்டு. இதற்குச் சில காரணங்கள் இருக்கலாம். 1. கலிங்கமாகன் இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்னரே வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களது ஆட்சி ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. அவ்வாறு ஆட்சி செய்த பிரதேசத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்ந்ததால் அவர்களை ஆண்ட மன்னர்கள் தமிழ்ப் பெயர்களால் அழைக்கப் பட்டிருக்க இடமுண்டு. அவ்வாறு ஆண்ட மன்னர்களில் ஜயபாகு ஒருவனாகக் கொள்ளும் போது அவன் குளக்கோட்டன் அல்லது வேறு தமிழ்ப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர் அவன் கலிங்கமாகனுடன் இணைந்து பொலநறுவையில் ஆட்சி செய்த போது அங்கு தமிழரைக் காட்டிலும் சிங்கள மக்களே அதிகமாக இருந்துள்ளார்கள். அதனால் சிங்கள மக்களைத் திருப்திபடுத்த கலிங்கமாகன் விஜயபாகு என்ற சிங்கள மன்னர்களுக்குரிய பெயரைப் பயன்படுத்தியது போல் இவனும் ஜயபாகு என்ற சிங்கள மன்னர்களுக்குரிய பெயரைப் பயன்படுத்திருக்கலாம்.
2. கலிங்கமாகனுடன் இணைந்து ஆட்சி புரிந்த ஜயபாகுவின் பிற்கால வரலாறு பாளி இலக்கியங்களில் மறக்கப்பட்டுள்ளது. இதற்கு கலிங்கமாகனுக்கு சமமான நிலையில் படைப்பலத்தைக் கொண்டிருந்த ஜயபாகு கி.பி.13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்கள மக்கள் தமது பாரம்பரிய இராசதானியான பொலநறு வையை விட்டு தெற்கு நோக்கி நகர்ந்த போது ஜயபாகு கலிங்கமாகனில் இருந்து பிரிந்து தனது அரசியல் மையத்தை மீண்டும் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த பிராந்தியத்திற்கு மாற்றி யிருக்கலாம். இவன் கலிங்கமாகனுடன் சேர்ந்து ஆட்சி செய்த காலத்தில் அவர்களது கோட்டைகள், இராணுவமையங்கள் கொட்டியாரம், கோகர்ணம், பதவியா, கங்தளாய் போன்ற இடங்களில் இருந்ததாகப் பாளி இலக்கியங்கள் கூறுவதையும், இவன் பெயர் பொறித்த சாசனம் கந்தளாயில் கண்டுபிடிக்கப் பட்டதையும் கொண்டு இவனின் அரச மையம் திருகோணமலை மாவட்டத்தில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இக்காலத்தில் கிழக்கிலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்ததால் அம்மக்களை ஆட்சி செய்த ஜயபாகு தன் பெயரை சோழங்கன் அல்லது குளக்கோட்டன் என மாற்றியிருக்கலாம்.
. 116

அதில் குளக்கோட்டன், சோடங்கன் ஆகிய பெயர்கள் ஜயபாகுவைக் குறித்ததெனக் கொள்ளும் போது அவற்றுள் குளக்கோட்டன் என்ற பெயர் ஜயபாகு ஆட்சி செய்த காலத் தில் புழக்கத்தில் இருங் திருக்கும் எனக் கருதுவது பொருத்தப்பாடாகக் தோன்றவில்லை. ஏனெனில் இவ்வாறான பெயர் கி.பி.15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ பயன்பாட்டில் இருந்ததற்கு இதுவரை உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஈழத்தில் திருகோணமலையில் ஆட்சிபுரிந்த மன்னருக்குரிய ஒரு பெயராக இது இலக்கியங்களில் கூறப்பட்டாலும் இவ்விலக்கியங்கள் எல்லாம் கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியவை யாகும். இவற்றில் காலத்தால் முந்திய வரலாற்றுச் செய்திகளோடு பிற்கால வரலாற்றுச் செய்திகளும் கலந்துள்ளன. இதனால் முற்கால வரலாற்றுச் சம்பவங்கள் இவற்றில் மறக்கப்படவும், மாற்றமடையவம், புதிய விளக்கம் பெறவும் அதிக வாய்ப்பிருந்திருக்கும். அதில் சோடங்கன் என்னும் இயற்பெயர் பெற்ற மன்னன் குளம், கோயில் என்பவற்றிற்கு ஆற்றிய பணிகள் காரணமாக பிற்காலத்தில் அவன் குளக்கோட்டன் என்னும் சிறப்பு பெயரைப் பெற்றபோது அவனது இயற்பெயரான "சோடங்கன்" என்ற பெயர் இவ்விலக்கியங்களில் மறக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஜயபாகு ஆட்சி செய்த காலத்தில் சோடங்கன், சோடங்கதேவர், சோடங்கதேவன் என்னும் பெயர் ஈழத்திலும், தமிழகத்திலும் பயன்பாட்டில் இருந்ததற்கு உறுதியான சான்றுகள் உண்டு. பொலநறுவையில் ஆட்சி புரிந்த இரு கலிங்க வம்சத்தவர் சோடங்க என்ற பெயரில் இருந்தது பற்றிச் சூளவம்சம் கூறுகிறது. தமிழகத்தில் சோழர், பாண்டியர் ஆட்சியில் சோடங்கதேவர், சோடங்கதேவன் போன்ற பெயர்கள் அரசவம்ச்தோடு தொடர்புடைய பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சாசனங்கள் கூறுகின்றன (பத்மநாதன் 2000:197-216). அதில் தேவர், தேவன் என்பது அரசகுமாரர்களுக்குரிய அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கந்தளாயில் கிடைத்த சாசனத்தில் கூட ஜயபாகு மன்னன் ஜயபாகுதேவர் என்றே அழைக்கப் பட்டுள்ளதை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
117

Page 68
இப்பின்னணியில் வைத்து தளவம்சத்தில் தமிழ் மன்னனாகக் கூறப்படும் ஜயபாகுவை நோக்கும் போது திருகோணமலையில் அவன் சோடங்கதேவன் என்ற இயற்பெயருடனேயே ஆட்சி செய்தாள் எனக் கூறுவது பொருத்தமாக உள்ளது. இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக திருகோணமலைக் கோட்டையில் கிடைத்த சமஸ்கிருதச் சாசனத்தில் வரும் "சோடங்கதேவன்)" என்ற பெயரையும், கந்தளாய்ச் சாசனத்தில் வரும் "ஜயபாகுதேவ(ர்)" என்ற பெயரையும் எடுத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் இப்பெயர்கள் மறக்கப்பட்டு குளக்கோட்டன் என்ற சிறப்பு பெயர் நிலைத்திருந்தாலும் தசுஷ்ணகைலாச புராணத்தில் வரும் "குளக்கோட்டனெனும் சோழங்கனை நம்சிங்தையில் வைப்போம்" என்ற செய்யுள் தொடர் அப்பெயரை நினைவுபடுத்தி நிற்பதை புறக்கணித்துவிட முடியாது.
ஆனால் ஈழத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் நாம் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை தமிழ்நாட்டவரது வரலாற்றோடும், சிங்கள மக்களுக்குரிய வரலாற்றோடும் அழுத்தி அடையாளம் காணும் மரபில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடவில்லை. அங்கிலையில் இருந்து விடுபட்டு கிடைத்த சான்றுகளையும், எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் சான்றுகளையும் நடுநிலையோடு ஆராந்து பார்க்கும் போது ஏற்கனவே கந்தளாயில் கிடைத்த சோழ இலங்கேஸ்வரன் பற்றிய சாசனமும், பொலநறுவையில் கிடைத்த ஜயபாகு மன்னன் பற்றிய தமிழ்ச் சாசனமும் ஈழத் தமிழரின் பண்டைய கால வரலாற்றிற்குப் புதுவெளிச்சமூட்டலாம். இந்த உண்மையை அண்மையில் தென்னிந்தியச் சாசனவியல் அறிஞர் பேராசிரியர் சுப்பராயலும், ஈழத்துச் சாசனவியலாளர் பேராசிரியர் பத்மநாதனும் இணைந்து இலங்கையில் கிடைத்த சாசனங்கள் சிலவற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியதன் பின்னர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து உணர்ந்து கொள்ளலாம் (Noboru Karashima 2002).
அடிக்குறிட் 1. இக்கல்வெட்டு ஆதாரம் பற்றி பேராசிரியர் இராசு அவர்கள் 21.7.2000 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த 11வது தமிழகத் தொல்லியற் கருத்தரங்கில் கூறியது.
118

உசாத்துணை நூல்கள்
இந்திரபாலா, கா."கந்தளாயில் கண்டுபிடிக்கப்பட்ட சோழ இலங்கேஸ்வரன் காலக் கல்வெட்டு" பாவலர் துரையப்பா நூற்றாண்டு மலர், தெல்லிப்பளை, 1974:1-9.
இந்திரபாலா, கா., 1999, இரண்டாம் பதிப்பு), இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை, குமரன்பப்பிளிகேசன், சென்னை.
இராசகோபால், சு. 1991, "இலங்கை, தமிழக பிராமி எழுத்துக்கள்- ஓர் ஒப்பாய்வு", தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த சாசனவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.
இராசவேலு, சு., 1995, "நெகனூர்ப்பட்டி தமிழ் பிராமிக்
கல்வெட்டு, சித்தன்னவாசல் களஆய்வு", ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 67-12.
இராமன், கே.வி., தொல்லியல் ஆய்வுகள், சேகர் பதிப்பகம், சென்னை.
இராஜவேலு, சு. 1999, "தமிழ்ப்பிராமி எழுத்தின் தோற்றம்", தொல்லியல் நோக்கில் தமிழகம், (ப.ஆ) கு.தமோதரன், தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
கிருஷ்ணராசா, செ. 1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம்.
குணசிங்கம், செ., 1973, கோணேஸ்வரம், பேராதனை.
சுப்பராயலு, எ. 2003, ஐராவதம் நூல் பற்றிய விமர்சனம், ஆவணம், தமிழ் நாடு தொல்லியற் கழக வெளியீடு, இதழ் 14, சூலை 2003.
119

Page 69
சீதாராமன், ஆறுமுக, 1994, தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள், தொகுதி-1. தனலல் மி
பதிப்பகம், தஞ்சாவூர்.
செளந்தரபாண்டியன், சு. 1997, பாளி மொழி பெற்ற தமிழ்ச் சொற்கள் கல்வெட்டு, தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, 50-51.
தங்கேஸ்வரி, க. 1993, குளக்கோட்டன் தரிசனம், மட்டக்களப்பு.
தங்கேஸ்வரி, க. 1995, மாகோன் வரலாறு, ஆரையம்பதி. பத்மநாதன், செ. தினக்குரல் பத்திரிகை 18.1. 2003.
பத்மநாதன், செ. 2003, "கந்தளாய்ப் பிரமதேயம்" சிறப்பு மலர், இரண்டாவது உலக இந்து மகாநாடு, கொழும்பு: 22-29.
பத்மநாதன், செ.2000, இலங்கையில் இந்துக் கலாசாரம், கொழும்பு.
பத்மநாதன், செ. 1971-1972, "தமிழ்ச் சாசனங்களும் ஈழ வரலாற்றாராச்சியும்", இளந்தென்றல், கொழும்பு :13-36.
புஷ்பரட்ணம், ப. "கந்தளாயில் 1000 வருடங்களுக்கு முற்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு" ஈழநாடு வாரஇதழ், 6.1. 2003.
புஷ்பரட்ணம், ப, "கந்தளாயில் அரிய தமிழ்க் கல்வெட்டு" விரகேசரி வாரஇதழ், 19.1. 2003,
புஷ்பரட்ணம், ப, 2001, பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடு.
புஷ்பரட்ணம், ப. 1993, பூநகளி-தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு யாழ்ப்பாணம்.
120

புஷ்பரட்ணம், ப. 1998, பூநகரியில் கிடைத்த ஆரிய சங்ககால நாணயங்கள், ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 9:114-119.
புஷ்பரட்ணம், ப. 1999, தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி, நாவாவின் ஆராய்ச்சி, ஜூலை 49. 55-70,
புஷ்பரட்ணம், ப, 2000அ, இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் மருமகனைக் குறிக்கும் உறவுப் பெயர்கள்- கல்வெட்டு மொழி பற்றிய ஒரு பார்வை, பதினோராவது தமிழகத் தொல்லியல் கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. புஷ்பரட்ணம், ப, 2000, தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
பெர்னான்டோ, ஈ.பி., 1969, "சிங்கள நெடுங்கணக்கின் தொடக்க
நிலை" இலங்கையிற் கல்வி நூற்றாண்டு மலர், பகுதி1, கொழும்பு. வடிவேல், இ. 1993, (ப.ஆ.) கோணேசர் கல்வெட்டு, கொழும்பு.
Begley, Vimala., 1973, Proto historic Material from Sri Lanka Ceylon) and Indian Contacts in Ecological Background of South Asian Prehistory, E.dll, Kennedy, A.R. and Possehl, L., South Asian Occasional Papers and Thesis, South Asian Program, Cornell University: 190-196.
Begley, Vimala., 1996, The Ancient Port of Arikamedu, (New Excavation and Researches 1989-1992, De Ecole Francaise D'extreme -Orient, Pondicherry, 1. Co-Cooperation in Sri Lanka
Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhuna an Ancient Civilization Revisited, Nugakoda.
Carswell, John. and Martha, Prickett., 1984, "Mantai 1980: A
Preliminary Investigation in Ancient Ceylon, Journal of the
Archaeological Survey Department of Sri Lanka,5:3-68.
121

Page 70
Champakaluxmi, R., 2003, “A Magnum Opus on Tamill-Brahmi Inscriptions', in Frontline, Indian National Magazine, July,4:71-75.
Champakalakshmi R, 2003, “A Magnum Opus on Tamill-Brahmi Inscriptions' Fronline, July 4.
Conningham,R.A.E., 1999, Passage to India-Anuradhapura and the Early Use of the Brahmi Script in Cambridge Archaeological journal, 6 (1:73-97.
Codrington, H.W., 1924, Ceylon Coins and Currency, Colombo. Culavamsa, 1973, (ed), Geiger,W., Colombo.
Deraniyagala,S.V., 1969, “The Citadel of Anurathapura in 1969: Excavatiojin Gedige area' in Ancient Ceylon, Colombo:48-169.
Dani, D.H., 1963 Ceylon in Indian Palaeography, Oxford.
Fernando,P.E.E., 1949, Paleographical Development of the Brahmi Script in Ceylon from 3rd Century B.C. to 7th Century A.D. in University of Ceylon Review, Colombo.III:282-301.
Indrapala, K, 1971, Ephigraphica Tamilica, Jaffana Archaeological Society, Jaffna.
Indrapala, K., 1969, Early Tamil Settlements in Ceylon in Jour nal of Royal Asiatic Society of Ceylon Branch.XIII:43-61.
ش” Liyanagamage, A. 1968, The Decline of Polanarawa and The Ris of Dambadeniya, Colombo.
Kannangara, K. T., 1984, Jaffna and the Sinhala Heritage
Colombo.
122

Karunaratne, S.M., 1960, Brahmi Inscriptions of Ceylon in Unpublished Ph.D Thesis, University of Cambridge, Cambridge.
Krishnamurthy, R., 1997, Sangam Age Tamil Coins, Garnet Publications, Madras.
Mahadevan, I., 1966, Corpus of the Tamil-Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology Government of Tamil Nadu, Madras.
Mahadevan, I., 1994a, Old Sinhalese Inscriptions from Indian Ports: New Evidence for Ancient India- Sri Lanka Contacts, Paper Presented at the Post-Graduate Institute of Archaeology, Colombo,:1-19.
Mahadevan, I., 1996 Pottery Inscriptions in Brahmi and Tamil Brahmi in The Ancient Port of Arikamedu,(e.d) Begley, Vimala., New Excavation and Researches 1989-1992), De Ecole Francaise D'extreme -Orient, Pondicherry, 1. Co-Cooperation in Sri
Lanka:287-315.
Mahadevan,I., 2000, Ancient Tamil Coins From Sri Lanka, To be published in the Journal of the Institute of Asian Studies, Madras.
Mahadevan.I., 2003, Early Tamil Epigraphy : From the Earlist Time to the Sizth Century A.D." Harvad University, U.S.A.
Mahavamsa, 1950, (e.d)Geiger.W., The Ceylon Government In formation Department, Colombo.
Mahadevan, I., 1966, Corpus of the Tamil-Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology Government of Tamil Nadu, Madras.
123

Page 71
Noboru Karashima., 2002..., (ed)Ancient and Medieval Commecial Activities in the Indian Ocean. Testimony of Inscriptios and Ceramic-Sherds, Report of the Taisho University Research Project 1997-2000.
Panneerselvam.R. 1969, Further Light on the Bilingual Coin of the SATAVAHANA in Indo Dravidian Journal, 11(4):281-288.
Paranavitana, S., 1970, Inscription of Ceylon. Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo,I.
Paranavitana, S., 1983, Inscription of Ceylon. Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa,II1).
Paranavitana,S.” The Tamil Slab-Inscription from Pulmoddai' EZ. 2: 191-195.
Paranavithana, S. 1955,'Fragmentary Sanskrit Inscripyion from Trincomalee” EZ Volume 4: 170-173.
Pathmanathan, S., 1974, Chola Rule in Sri Lanka (993-1070), Fourth International Semenar Tamil Studies, Jaffna, :19-35.
Pathmanathan, S. 1978, The Kindom of Jaffna, Colombo. Pushparatnam, P., 2002., Ancient Coins of Sri Lankan Tamil Rulers. Chennai.
Pushparatnam, P. 2002, Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Pathippakam, Chennai.
Pushparatnam, P. 2002, “Naka Dynastry as Gleaned from the Archaeological Evidences in Sri Lanka' in Proceedings of Jaffna
Science Association, Jaffna.
124

Pushparatnam, P. 2002. Tamil Place Name as Gleand from the Brahmi Inscriptions, Prof. Y.Subbarayalu Felicitation Volume, Chennai.
Ray, H.C. 1960, (e.d) History of Ceylon, Volume I, Part II, Colombo.
Rajan, K., 1994, Archaeology of Tamil Nadu:(Kongu Country,) Book India Publishing Co.Delhi.
Rajan, K., 2000, Mani, Kacu and Kanam- A Explanation S.S.I.C., X:114-118.
Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna: An Archaeologival Survey, Mrs.Thillimalar Ragupathy, Madras.
Ragupathy, p., 1991, The Language of the Early Brahmi Inscription in Sri Lanka, (Unpublished)
Ramachandramurthy, S.S., 1985, A Study of the Telungu Place Names, Agamkala Prakasan, Delhi.
Ramesh, K.V. 1990, “India and Sri Lanka Epigraphy- A Comparative Study” in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka,5:237-307. s
Sampath, M.D. 1999, “Sri Lankan and Tamil Brahmi Script — A Comparative Study' Narasimhamoorthy Felicitatino Volume, Chennai.:87-95.
Seneviratne, S., 1984, The Archaeology of the Megalithic-Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka,5:237-307.
125

Page 72
Seneviratne, S., 1985, The Baratas: A Case of Community Integration in Early Historic Sri Lanka in Festschrift 1985 James Thevathasan Ratnam, E.d), Amerasinghe, A.R.B., Colombo:49-56.
Sitrampalam, S.K., 1980, The Megalithic Culture of Sri Lanka in Unpublished Ph.D. Thesis Deccan College, University of Poona, Poona.
Sitrampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka: An Interdisciplinary Perspective in Journal of the Institute of Asian Studies, VIII [1]: 1-8.
Sitrampalam, S.K., 1993, The Parumakas of the Sri Lankan Brahmi Inscriptions in Kalvettu Tamil Nadu Archaeological Department, 29:19-28.
Sivasamy, V., 1985, Some Aspects of Early South Asian Epigraphy, Thirunelvely.
Subbarayalu, Y., 1991, odumanal, Excavation 1985-1990 (unpublished Interim Report),Tamil University, Thanjavur.
Subbarayalu, Y., Brahini Graffiti on Potshes From Kodumanal Excavation (unpublished article).
Veluppillai, A., 1980, Tamil Influence in Ancient Sri Lanka with Special Reference to Early Brahmi Inscriptions in Journal of Tamil Studies, 17:6-19. . . .
Subramaniam, T.N., 1957, South Indian Temple Inscriptions, Madras.
Veluppilai, A., 1971, Ceylon Tamil Inscriptions, Pt.I and III, Peredeniya.
126


Page 73


Page 74

. 5