கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழும் அயலும்

Page 1


Page 2

தமிழும் அயலும்
சி. சிவசேகரம்
சவுத்ஏசியன் புக்ஸ்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Thamizhum Ayalum S. Sivasekaram First Published : June 1993 Printed at d Suriya Achagam, Madras. Published in Association with
National Art & Literary Association. by South Asian Books 611, Thayar Sahib II Lane Madras - 600 002. Rs... 22.00
தமிழும் அயதும்
இ. இேைசகரம்
ழுபறபதிப்பு : ஜூன் 1993
அச்சு சூர்யா அச்சகம், சென்னை. வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 6|l, gjiTurti 5 T6'i 2ஆவது சந்து, சென்னை-600 002.
ტენ . 22.00

உள்ளே
பதிப்புரை ஆசிரியர் முன்னுரை தமிழும் அயல் மொழிகளும் தமிழ் மூலம் விஞ்ஞான உயர் கல்வி
சிலபிரச்சினைகள் தமிழிற் கலைச் சொற்கள் கலைச் சொற்களும் மொழிவழக்கும் மொழிபெயர்ப்பின் பிரச்சினைகள் கவிதையிற் பேச்சுவழக்கு
மொழிப் பிரயோகம் தமிழ் மூலமாக தமிழில் அயற்குறியீடுகள் தமிழ்: எண்ணும் எழுத்தும் ஆங்கிலத்தினுாடு அண்டையும் அயலும் தமிழாக்கலும் ஆங்கிலமாகலும் தமிழ் சொற்களில் ஆங்கில மேலாதிக்கம் பிள்ளையார் பிடிக்கப் போய் தமிழ் வழுவும் வழக்கும் எழுத்துப் பிழைகள் சந்திக் குழப்பும் புதிய சமுதாயமும் வார்த்தையமைப்பும் மொழியும் எழுத்தும் தமிழின் சிறப்பெழுத்துக்கள்
15
58
67
78
81 .
89 97
00
103
109
11.3
119
I25
13
135
140
l43
48
165

Page 4

-பதிப்புனர்
மொழிக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு மிகவும் ஆழமானது. சமூகத்தின் மிகப் பலம்வாய்ந்த ஒரு கூறாக வும் கலை, பண்பாடு, வரலாற்று ஊடகமாகவும் மொழி விளங்குகின்றது.
மொழியுணர்வு, மொழிப்பற்று என்பது ஒரு மனித னின் வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத ஒரு ஜீவாதாரத் தொடர்பினைக் கொண்டுள்ளது. வெறித்தன்மை என்பது எதைச் சார்ந்ததாயினும் தீய விளைவையே ஏற்படுத்தும். மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. மொழி வெறியும் தீமையையே தரும். -
சமூக வளர்ச்சி எப்படி பல்வேறு காலகட்டங்களிலும் பரிணாமம் பெற்று மாற்றமடைந்து வளர்ந்து வந்திருக் கிறதோ அதே போலவே மொழியும் நீண்ட வரலாற்றுக் காலகட்டங்களில் சமூக மாற்றம்-சமூகத் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது.
மொழி மாற்றத்திற்கு உட்படக் கூடாது என்று முன்வைக்கப்படும் தூய்மைவாதம் சமூக வரலாற்றுப் போக்கினையும் அதன் தேவைகளையும் புரிய மறுக்கும் அபத்தவாதிகளின் வரட்டு வாதமேயாகும்.
த-1

Page 5
மொழி அதன் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்பது மொழியின் வளர்ச்சிக்கும் அந்த மொழியைப் பேசுகின்ற சமூகத்தின் வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.
இன்று உலகின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களின் தொடர்புகளும் முன்னெப்பொழுதும் இல்லாத வாறு அதிகரித்து வருகின்றது. தமிழர்கள் பல நாடுகளுக் கும் சென்று குடியேறி வாழ்தலுடன் தொடர்பான் சமூக மாற்றங்களைக் கிரகித்து வெளிப்படுத்த வேண்டிய தேவையும் தமிழ்மொழிக்குண்டு.
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப வும் சமூக மாற்றங்களுக்கேற்பவும் ஈடுகொடுத்து மொழி தனது பங்கை ஆற்றுதற்கு சில மாற்றங்களை ஏற்க வேண்டியது மிக அவசியமாகும். சமூக வளர்ச்சியுடன் ஒத்துப் போகாதவிடத்து “சொல்லுந்திறன் தமிழ்மொழிக் இல்லை மெல்லத் தமிழினிச் சாகும்" என்று புரட்சிக்கவி இடித்துரைத்து எச்சரித்தது போல தமிழ் மொழி தனது சமூக ஆற்றலை இழக்க நேரிடும். இந்த அபாயத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் மொழி சமூகத் தேவைக்கேற்ற மாற்றங்களை ஏற்றாக வேண்டும்.
சில எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ் மொழியில் செய்யப்பட்டிருக்கின்ற போதும் இவை இன்றைய சமூகத் தேவைக்குப் போதுமானவையல்ல.
பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்கள் கலை, இலக்கியத் திறனாய்விலும் ஆக்க இலக்கியங்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருபவர். தேசிய கலை இலக்கியப் பேரவை *தேவி எழுந்தாள்", "செப்பனிட்ட படிமங்கள்" ஆகிய இவரது படைப்புக்களை, ஏற்கனவே நூலாக வெளிக் கொணர்ந்தது.

இப்போது எமது வேண்டுதலுக்கிணங்க 'தமிழும் அயலும்’ எனும் இந்நூலை நாம் வெளியிட அனுமதி வழங்கியமைக்கு திரு. சிவசேகரம் அவர்களுக்கு எமது நன்றிகள். மேலும், எம்முடன் இணைந்து தொடர்ந்து உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டுழைக் கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்திற்கும் நண்பர் திரு. எம். பாலாஜி அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்நூல் தமிழ் மொழியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாக அமையும் எனும் நம்பிக்கையுடன் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்ப்பார்க்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை இல; 14,57ஆவது ஒழுங்கை கொழும்பு-06
10-0 1-93

Page 6
ஆசிரியர் முன்னுரை
'தமிழும் அயல் மொழிகளும்" என்ற தலைப்பில் நான்கு சிறு கட்டுரைகளைத் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தில் 1980களின் இடைப் பகுதியில் எழுதினேன். தமிழும் இலக்கியமுந் தொடர்பாகவும் விஞ்ஞானத்திற் தமிழின் பிரயோகமும் பற்றியும் எழுதிய கட்டுரைகளும் அக்கால இடைவெளியில் அச்சஞ்சிகையிற் பிரசுரமாயின. இவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிடும் யோசனையை 1988வாக்கிற் காலஞ்சென்ற நண்பர் கே. ஏ. சுப்பிரமணியம் (மணியம்) என்னிடந் தெரிவித்தார். அக்கட்டுரைகள் தனித்தனியே எழுதப்பட்டதாற் தொகுக்கு முன் சில மாற்றங்களைச் செய்யலாம் என்று கருதி அந்த யோசனையைப் பின்போட்டேன்.
என் தனிப்பட்ட வசதியீனங்கள் காரணமாக நான் நினைத்தபடி திரும்ப எழுதும் செயல் நடைபெறவில்லை, 1991ஆம் 6)(hl– முற்பகுதியிற் கனடாவினின்று வெளிவருந் தாயகம் வார ஏட்டின் ஆசிரியர் கேட்டுக் கொண்ட்தற்கிணங்கி, 1989இல் ஜெர்மனியில் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியிற் பிேசியத்ை அடிப்படையாக வைத்து எழுதிய கட்டுரையை அனுப்பினேன். அக்கட்டுரையும் இலங்கையில் முன்னர் எழுதியவையும் (அனுமதியுடன்)
கனடா தாயகத்தில் மறுபிரசுரமாயின. இவற்றைவிட

எளிமையாயுஞ் சுருக்கமாயுஞ் சிறிது நகைசுவையாகவும் குறுங் கட்டுரைகள் சிலவற்றையும் அவர்கட்காக எழுதினேன். இவை பழைய கட்டுரைகட்கு விளக்கங்கள் போலவும் விடுபட்ட சில பகுதிகளை திரப்புவனவாயும் இருந்தன. இவற்றின் எழுத்து நடை முன்னைய கட்டுரைகளினின்று வேறுபட்டதாக இருப்பதற்கு முக்கிய காரணம் இலகுவான முறையில் விஷயங்கள் கையாளப் பட்டமையே. இவற்றைவிடத் தமிழின் எழுத்து முறை தொடர்பான சில ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக் கிறேன். இவற்றுள் மூன்று ஆங்கிலத்தில் எழுதி ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளியாயின. ஒன்று இன்னும் பிரசுர மாகாமல் உள்ளது. இவற்றைத் தமிழாக்க நேரம் அகப்படாததால் இன்னொரு நேரம் அவைபற்றிக் கவனிக்க எண்ணியுள்ளேன். தமிழ் ஒலியியல் பற்றிச் சொந்தமாக நான் விருத்தி செய்த ஒரு கருத்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வருடாந்த ஏடான இளங்கதிரில் 1992 நடுப்பகுதியிற் பிரசுர மாயிற்று. w
அண்மையிற் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் நண்பர் மணியத்தின் ஆலோசனையைப் புதுப்பித்தனர். இம்முறை க்ைவசம் போதியளவு விஷயங்கள் இருந்தமை யால் மேற்குறிப்பிட்ட தமிழ்க் கட்டுரைகளிற் சிறு திருத்தங்கள் செய்து தொகுப்பாக வெளியிட உடன்பட் டேன். இவை தமிழின் சமகாலப் பிரச்சினை பற்றிப் பயனுள்ள விவாதங்கட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை கட்கும் பங்களிக்குமாயின் அதுவே அவை தரக்கூடிய நற்பயன்.
2
மொழிகள் மாறுகின்றன. வளர்ச்சிப் போக்கில் ஒரு
புறமும் நெருக்கடியின் நிமித்தம் மறுபுறமும் மாற்றங்கள் நேர்கின்றன. வளர்ச்சி தோற்றுவிக்கும் மாற்றங்கள்

Page 7
O
மரபுக்கும் மொழியின் நடைமுறைக்குமிடையிலான முரண்பாடுகளாகப் பரிணமிக்கின்றன. இதன் விளைவான நெருக்கடியின் தீர்வே பாரிய சீர்திருத்தங்களாக அமைகின்றன. எழுத்துச் சீர்திருத்தமும் இலக்கண விதிகளில் ஏற்படும் மாற்றங்களும் பாரிய மாற்றங்கள் எனலாம். இவ்வாறான மாற்றங்கள் கடுமையான கருத்து மோதல்களின் பின்னரே சாத்தியப்படுகின்றன. பல வகைகளில் மொழி மாற்றங்கள் சமுதாய மாற்றங்களை ஒத்த தன்மையின.
தமிழின் இன்றைய நெருக்கடி பன்முகப்பட்டது. சமகாலத்தின் தேவைகள் பல மாற்றங்களைத் தமிழுட் புகுத்தினாலும், நவீன எழுத்துத் தமிழ் என்பது இன்ன மும் அங்கீகாரம் பெற்ற மொழியாகி விடவில்லை. வழக்கொழிந்து போன ஒரு மொழியே இன்னமும் சரியான மொழியாகப் பலராற் கருதப்படுகிறது. தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் பிறழ்வுகளாகக் காட்டப் படுகின்றன. இந்தப் பிறழ்வுகள் இல்லாமல் இன்று இந்த மொழி இயங்க முடியாது என்ற உண்மை வசதியாக மறக்கப்படுகிறது.
தமிழ் அயலிலிருந்து பெற்ற கொடைகளில் அதன் சொல்வளத்தின் ஒரு பெரும் பகுதி முக்கியமானது. முன்னர் பெறப்பட்ட சொல்வளம் பழந்தமிழின் இலக்கண விதிகட்கமையத் தமிழில் இடம்பெற்றது. அண்மைக் காலச் சொல்வளத்தின் தன்மை வேறு. இது தமிழ் ஒலிவளத்தின் விருத்தியை வற்புறுத்துகிறது.
தமிழ் தனக்காக விருத்தி செய்த குறியீடுகளான தமிழ் எண்கள், வருடம், மாதம், திகதி போன்ற சொற்களைக் குறிக்குஞ் சுருக்கங்கள் போன்றன சடங்குத் தன்மையுட னும், பசப்பாகவுமே இன்று பிரயோகிக்கப்படுகின்றன. அதேவேளை ஆங்கில வாயிலாக நம்மை வந்தடைந்த மாத்திரைக் குறிகள் தமிழின் ஒரு பகுதியாகிவிட்டன.

இவற்றின் வருகை தமிழ் மொழியிற் புதிய சாத்தியப்பாடு களை நிறுவியுள்ளது. இவற்றுக்குரிய இலக்கணம் என்று தெளிவாக எதுவுமில்லாவிடினும், நடைமுறை சில பொது வழிகாட்டல்களை நிறுவியுள்ளது.
விஞ்ஞானமும் கணிதமும் தொழில்நுட்பமும் நவீன மருத்துவமும் வாணிபமும் சட்டத்துறையும் தமிழில் விருத்தியடைய வேண்டும் என்பது உணரப்பட்டதன் விளைவாகக் கலைச் சொல்லாக்கமும் புதிதாகப் புனையப் பட்ட வாக்கியப் பிரயோகங்களும் பழந்தமிழின் மரபுக்கு முரணான பல அம்சங்களை மொழியின் ஒரு பகுதியாக்கிவிட்டன.
இவற்றைவிட அந்நிய மோகமும் தமிழுடன் ஆங்கிலத்தை ஒழுங்கற்ற முறையிற் கலந்து பிரயோகிக் கும் பழக்கமும் தமிழிற் புதிய நெருக்கடிகளைத் தோற்று விக்கின்றன. இவ்வாறான பிரயோகங்கள் பெரும்பாலும் மொழி விருத்தியை மனதிற் கொண்டனவல்ல. ஆங்கில மோகங் கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் தனது வர்க்கத் தேவைகளைத் தமிழர் அனைவர்மீதுஞ் சுமத்த முனையும் பாங்கிலேயே ஆக்க இலக்கியங்களிலும் அவைக்காற்றுங் கலைகளிலும் தமிழ்மீது ஆங்கில ஆதிக்கத்தைத் திணிக் கிறது. அதேவேளை தமிழிற் பாரிய எழுத்துச் சீர்திருத் தத்தை நடைமுறைப்படுத்தவும் அயற் சொற்களைத் தமிழ் எவ்வாறு உள்வாங்கக் கூடும் என்பது பற்றி ஆராயவும் அதற்கு அக்கறை இல்லை.
நவீனத்துவம் என்று சிலர் கருதும் குருட்டுத்தனமான அந்நிய மோகமோ நமது மரபு என்று வேறு சிலர் கட்டிக்காக்க முனையும் விறைத்த பார்வையோ தமிழின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியாது, தமிழிலேயே செயற் படும் பெரும்பான்மையான மக்களின் சமுதாய நலனும் அவர்களது மொழித் தேவையும் மரபுக்கும் நவீனத்துவத் துக்குமிடையிலான பாலமமைக்க வல்ல ஒரு தெளிவான பார்வையாலேயே நிறைவு செய்யப்பட முடியும்.

Page 8
12
தமிழ் மொழியிற் பெண்ணடிமைத்தனத்தினதும், சாதியத்தினதும் நிலமான்யச் சமுதாயச் சிந்தனையினதும் சுவடுகள் ஆழப் பதிந்துள்ளன. சமுதாயச் சீர்திருத்தத்தில் அக்கறையுடையோர்; மொழிபற்றி அசட்டையாக இருக்க முடியாது சமுதாயமோ மொழியோ வெறுமனே சட்ட மியற்றி மாற்றக் கூடியனவல்ல. தமிழ்ச் சமுதாயத்தை நவீன சிந்தனையுடனும் பரந்ததும் உலகளாவியதும் மனித சமத்துவத்துடனானதுமான பார்வையுடனும் பரிச்சயப்படுத்துவதன் மூலமே தமிழ்ச் சமுதாயத்தினதும் தமிழ் மொழியினதும் நவீனத்துவம் நடைமுறைச் சாத்தியமாகும்.
தமிழின் பெருமை முத்தழிழ், மூவேந்தர், முச்சங்கம், முன்தோன்றிய மூத்த குடி, போன்ற நெட்டைக் கனவு களுக்குள் இல்லை. “கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவார் வாயில் வழங்கோசை வையம் பெறும்” என்ற கவிதை வரிகள் சுட்டிக்காட்டும் விதமான வழக்கு மொழி யிலும் வாழ்வுடன் அதன் இசைவிலுமே தமிழின் பெருமை இருக்க முடியும். இந்த வாழும் மொழி பிளவு பட்டுள்ளது, இதை ஒருமைப்படுத்தி நெறிப்படுத்தி ஒரு வலிய நவீன மொழியாக்கும் தேவையை வலியுறுத்தவே நான் இக்கட்டுரைகளை எழுத முற்பட்டேன். எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அழுத்தம் அதிகமாக இருப்பதற்கு அது பற்றிய என் ஈடுபாடு ஒரு காரணம், அது தமிழின் முன்னோக்கிய பெருந் தாவுதலுக்கு அவசியமான அதி முக்கிய கருவி என்ற எண்ணம் இன்னொரு காரணம்.
தமிழ்ப் பேச்சு மொழிக்கும் எழுத்துக்கும் பாலம் அமைப்பதும் நவீன எழுத்து மொழிக்கு இலக்கணம் அமைப்பதும் தமிழின் சீரான வளர்ச்சிக்கு அவசியம் - இவைபற்றி நான் விரிவாக இதுவரை எழுதாமை அவற்றை நான் குறைவாக மதிப்பிடுகிறேன் என்று கருத இடமளிக்காது என நம்புகிறேன்.

3.
தமிழ் மொழி பற்றிய விவாதம் நெடுங்க்ாலம் தொடர்வது உறுதி. வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் கைகள் இன்னும் ஒயவில்லை. முன்னோக்கிப் போவதாக எண்ணிக் கண்மூடித்தனமாகச் செயற்படு கிறவர்கட்குங் குறைவில்லை. எது சரி, எது பிழை என்பதற்கு எந்த ஒரு தனி மனிதனிடமும் முழுமையான தீர்வு இல்லை. இறுதி ஆராய்வில் நடைமுறையே சரி பிழைகளைத் தீர்மானிக்கிறது. அதுகூட, எவ்வகையிலும் நிரந்தரமான தீர்வல்ல. எனவே இன்னும் எழுத வேண்டிய தேவை எனக்கும் மொழி பற்றிய அக்கறை யுடைய எவருக்கும் உண்டு.
மொழியியல்பற்றி எனது அறிவு பல்கலைக்கழக விரிவுரைகள் மூலம் பெறப்பட்ட ஒன்றல்ல. என் மனதில் எழுந்த கேள்விகளைப் பகிரங்கமாக எழுப்பி விவாதித்தே அதை விருத்தி செய்தேன். அந்த அறிவு வளர்ச்சியில் பல நீண்ட மாலைப் பொழுதுகளை என்னுடன் செலவிட்ட பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரை sufratr பேராசிரியர் தி. கந்தையாயின் பங்களிப்பு முதன்மையானது. தங்களது தகுதிகளையும் பட்டம் பதவிகளையும் காட்டி மற்றவர்களைத் தட்டியடக்கும் போக்குப் பழைய பண்டிதப் பரம்பரைக்கு மட்டுமே யுரியதல்ல. புதிய பண்டிதர்கள் பல்கலைக்கழகங்களிலும் வெளியிலும் ஏராளமாக உள்ளனர். தவறான கருத்தை யும் சகிப்புத்தன்மையுடன் விமர்சித்து விளக்கும் பண்பு அறிவாற்றலின் அடையாளம். தனது தகுதியைக் கூறி மற்றவரை LDL-ji(glið முயற்சி இயலாமையின் வெளிப்பாடு. என் கருத்திற், தமிழைப் பயன்படுத்தும் எவருக்குமே தமிழின் தேவைகள் பற்றிய கேள்விகளை எழுப்பும் உரிமை உண்டு. அவற்றிற்கான பதில் தேடும் பணி தமிழர் அனைவரையுஞ் சார்ந்தது. தமிழின் பிரச்சினைகளின் தீர்வுக்கு நிபுணத்துவம் மட்டுமே

Page 9
14
போதாது. ஏனெனில் மொழி சமுதாயந் தொடர்பானது, அாசியல் சார்ந்தது. s
இறுதியாக இந்தக் கட்டுரைத் தொகுதியைச் சாத்திய மாக்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும், கனடா தாயகம் வார ஏட்டினருக்கும் அதை வெளியிட முன்வந்த சவுத் ஏசியன் புத்தக வெளியீட்டாளர்கட்கும் என் நன்றி.
சி. சிவசேகரம். லண்டன், டிஸெம்பர் 1992

தமிழும் அயல் மொழிகளும்
நம்மிடையே தமிழின் தூய்மை பற்றிய பிரமைகள் இன்னமும் முற்றாகக் கலையவில்லை. அவை கலைவது தமிழை வைத்து அரசியல் நடத்துவோருக்கு நல்லதல்ல என்பதனாற் தமிழின் தூய்மை, தொன்மை, மேன்மை போன்ற விஷயங்களில் உணர்ச்சிகரமான வாதங்கள் மேலுஞ் சிலகாலம் தொடரும் என்று நாம் எதிர்ப்பார்க்க லாம்.
தமிழின் தூய்மையையும் வரலாற்றையும் பற்றிய பிரமைகள் இல்லாதோர் மத்தியிற் கூட, அயல்மொழி களின் தாக்கம் பற்றிய கண்ணோட்டம் சிலசமயம் மிகவும் பழமை பேணுவதாக இருப்பதைக் காணலாம். தமிழில் அயல்மொழிகளின் பாதிப்பையும் அவற்றைக் கையாள்வதி லான பிரச்சினையையும் பற்றி வேறொரு கட்டுரையில் எழுதலாம் என்று எண்ணுகிறேன். அயல் மொழிகள் பற்றித் தமிழ்ப் பேசுவோர் மத்தியில் நிலவி வந்துள்ள கண்ணோட்டங்கள் சில பற்றி எழுதுவது பின்னர் எழுத வுள்ளதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மொழி என்பது அடிப்படையில் ஒரு கருத்துப்
பரிமாற்றக் கருவியே எனினும், அது வெறுமே ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி என்று கொள்வது மிகவும்

Page 10
UV
இயந்திர ரீதியானதொரு பார்வையாகும். மொழிக்கும் சமுதாயத்துக்கும் உள்ள உறவு அன்றாட வாழ்க்கையை மொழி பிரதிபலிக்கும் அளவுடன் மட்டுமன்றிக் கலாசார, வரலாற்று முக்கியத்துவமும் கொண்டது. தனி மனித மட்டத்திலும் மொழி வகிக்கும் பங்கு முக்கியமானது. மனிதனை அவனது சமுதாயச் சூழலுடனும் அவனது கடந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்பு படுத்தும் ச்ாதனங்களுள் முக்கியமான ஒன்றாகவும் மனிதனது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் பிணைந்து நிற்பதன் மூலம் சமுதாய மனிதனின் ஒரு கூறாகவும் மொழி இயங்குகிறது. எனவே மொழிப்பற்று என்பது இயந்திரரீதியான பொருள் முதல்வாதப்பார்வையிற் தென் படுவது போன்று அர்த்தமற்ற ஒன்றல்ல. மொழியுணர் வின் முக்கியத்துவத்தை அசட்டை செய்யும் வாதங்கள் எவ்வளவு தூரம் அபத்தமானவையோ அவ்வளவு தூரம் ஆபத்தானது அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்து -வது. தமிழ் மொழியுணர்வு வரலாற்றில் எல்லாக் காலங் களிலுமே தீவிரமான முனைப்பையுடையதாக இருந்த தில்லை. இன்று நாம் காணும் வடிவிலான தீவிர தமிழ் மொழி உணர்வு மிக அண்மைக் காலத்தினதே எனலாம். கொலனித்துவ சகாப்தத்தைச் சார்ந்து பல்வேறு சமுதாய
முரண்பாடுகளது கூர்மையடைதல் மொழி அபிமான மாயும் மொழி வெறியாயும் வெளிப்பட்டிருப்பதை நாம் காணமுடியும். மொழியின் தூய்மை தொடர்பான கருத் துக்களும் மொழி அபிமானமும் முற்றாகவே இக்காலத்தின் விளை பொருட்களல்லவெனினும், மொழியுணர்வுக்கு இந்தக் காலகட்டத்தையொட்டி உருவான சமுதாய முக்கியத்துவம் நாம் கருத்திற் கொள்ளத்தக்கது. தேசிய உணர்வு போன்று, மொழியுணர்வும் முற்போக்கான அம்சங்களையும் பிற்போக்கான அம்சங்களையும் தன்ன கத்தேயுடையது. ஆங்கிலக் கொலனித்துவ எதிர்ப்பு முற்போக்கானது என்கிறோம், ஆங்கில இனத்தவர் மீதான வெறுப்பு பிற்போக்கானது என்கிறோம். இதையே மொழி சம்பந்தமாகவும் கூறலாம்.

17
இந்தி மொழி வெறி, சிங்கள மொழி வெறி ஆகியன பிற்போக்கானவையும், எதிர்க்க வேண்டியவையும் என்ப தில் நமக்குக் கொஞ்சமுங்கருத்து வேறுபாடு இருந்த தில்லை. இந்த இனவெறிகளை அடையாளங் காண்பதில் தயக்கங் காட்டாத நாம், சில நேரங்களில், மேற்கூறிய மொழிவெறிகளின் வெளிப்பாட்டை விடக் குரூரமான தமிழ்மொழி வெறி தமிழரிடையே பரப்பப் பட்டதை மறந்து விடுகிறோம். இதைவிடத் தமிழின் தொன்மை பற்றியும், மேன்மை பற்றியும் நம்மிடையே நிலவும் கருத் துக்கள், பிற தென் இந்திய மொழிகள் பற்றிய கீழான எண்ணங்களைப் பிரதிபலிப்பதையும் நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஆங்கிலம் பற்றிய நமது கண் ணோட்டமோ சற்றே வினோதமான ஒன்றாக அமைந் திருக்கிறது. மேற்கொண்டு, தமிழுடனும் தமிழருடனும் தொடர்புடைய மொழிகள் தொடர்பாகத் தமிழரிடையே பரப்பப்பட்டுள்ள சில கருத்துக்களையொட்டிச் சிறிது எழுதவிரும்புகிறேன்.
தமிழ் சமஸ்கிருதத்தினின்று உண்டானது என்ற தவறான கருத்து பலகாலமாக இந்தியாவில் பரப்பப் பட்டமை காரணமாகவே, தமிழ் வேறொரு மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்ததும் சமஸ்கிருதத்தோடு ஒத்த அளவு தொன்மையுடையதுமான மொழி என்பதற்குரிய ஆதாரங்கள் வெளிவந்தபோது, தமிழின் தனித்துவத்தை யும் மேன்மையையும் வலியுறுத்தும் பிரச்சாரம் மிகவும் உக்கிரமடைந்தது.தமிழுக்கும் வடமொழிக்குமிடையிலான வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுவது மட்டுமன்றித் தமிழின் மேன்மையை வலியுறுத்தும் வாதங்கள் எழுந்தன. இவற்றின் பின்னணியிற் பார்ப்பனரல்லாத மேற் சாதி, உயர், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உத்தியோகம், தொழில் போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர்கட்குமிடையிலான முரண்பாடும் பொதிந்து இருந்தது. தமிழின் மேன்மையை வலியுறுத்தும் போக்கிற்

Page 11
18
தமிழில் வழிபாடு, தமிழிசை போன்றனவும் வேத நூல்கள் சாராத தமிழ் அறநூல்கள் பற்றிய புது ஆர்வமும் வளர்ந் தன. இவை தம்முட் பல முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்த போதும், தமிழின் மேன்மையை வலியுறுத் தும் வாதங்களில் தவறான தகவல்கள், திரிக்கப்பட்டுள்ள உண்மைகள், அகநிலை சார்ந்த வாதங்கள் என்பவற்றோடு வடமொழி மீது பகைமையான கண்ணோட்டமும் இணைந்திருந்தது. தமிழில் வடமொழியின் செல்வாக்கு, வெவ்வேறு காலகட்டங்களில், மதம் அரசியல் போன்ற தாக்கங்களால் ஏற்பட்டிருக்கிறது. சில சமயங்களில் வட மொழியின் பாதிப்பு தமிழின் அடிப்படையையே பல வீனப்படுத்துமாறானதாகவும் செயற்கையான திணிப் பாகவும் அமைந்திருக்கிறது. ஆயினும் இவ்வாறான பாதிப்புகளினுாடும் தமிழ் மேலும் வளம் பெற்ற மொழி யாகவே தொடர்ந்துள்ளது, தமிழின் தூய்மை என்பது, வடமொழித் திணிப்பு' இல்லாமற்போயிருப்பினுங்கூட, கற்பனையான ஒன்றே. அயல்மொழிகள் மூலம் புதிய சிந்தனைகளையும் பொருட்களையும் மனிதர்களையும் நாடுகளையும் அறிய வரும்போது அயல்மொழிச் சொற் கள் புகுவதும் மொழியின் தன்மையில் சில மாற்றங்கள் நேர்வதும் தவிர்த்தற்கு அரியது. எனவே தமிழில் மிகை யான வடமொழி ஆதிக்கத்தினை அகற்றுவதும் தமிழை அதன் தொன்மையின் தூய்மைக்கு மீட்பதும் முற்றாகவே வேறுபட்டவை. தமிழின் தொன்மையை வலியுறுத்தி அதுவே உலகின் மூத்தமொழி என்று சிலர் கொண்டாடிய தும் வடமொழியை வழக்கொழிந்தமையால் இழிவானது என்று பழித்ததும் மொழியார்வம் மொழி வெறியின்எல்லையைத் தொடுவதைக் குறித்தது. இதுவே பின்னர் தாவீதடிகள், தேவநேயப்பாவாணர் போன்றோரால் தமிழிலிருந்தே உலகின்பிறமெழிாகள் உருவாயின என்ற வாறான குழப்பமானி வாதங்களாக வளர்ந்தபோது தமிழார்வம் பைத்தியக்காரத்தனத்திடம் தஞ்சமடைந்து விட்டது.

19
மொஹஞ்சதாரோ நாகரிகம் ஆரிய நாகரிகமல்ல என்ற ஒன்றை விட அது எவருடையது என்பது பற்றி இன்னமும் திட்டவட்டமாக எதுவுமே நிறுவப்படவில்லை. இன்று வரை கிடைத்துள்ள தகவல்கள் மேலும் புதிய கேள்விகளை எழுப்புகின்றன இதனால், அந்த நாகரிகம் உறுதியாகத் திராவிட நாகரிகமே தான் எனும் பழைய கருத்துப் பலவீனமடைந்துள்ளது. அது தமிழர் நாகரிகமே என்று தமிழர்கள் மத்தியில் செய்யப்பட்ட மலிவான ஆராய்ச்சிப் பிரசாரங்கள் எல்லாம் அக்காலச் சூழலின் நோய்வாய்ப்பட்ட தன்மையையே உணர்த்துகின்றன. மூன்று சங்கங்கள், தமிழினதும் சங்க இலக்கியத்தினதும் தொன்மை போன்ற கதைகள் ‘கல் தோன்றி மண்தோன் றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி’ என்று மார்தட்டி யவர்கள் பலர் உண்மையாகவே முதற்குரங்கு தமிழ்க் குரங்குதான் என்று மனமார நம்பினார்கள் என்று எண்ண வைக்கின்றன. மறைமலையடிகள், கி. ஆ. பெ. விசுவநாதம் போன்றோர் தமிழின் மேன்மைபற்றிக் கூறிய பல கருத்துக்கள் தமிழர்களது அறியாமையையே அத்தி வாரமாகக் கொண்டிருந்தன. இவ்வாறான குருட்டுத்தன மான மொழிப்பற்று அண்மைய வரலாற்றில் வேறு எந்த மொழி பேசுவோர் மத்தியிலும் வளர்க்கப்பட்டதாக நான் எண்ணவில்லை.
வடமொழிக்கும் தமிழுக்குமிடையிலான உறவு, அதன் முழுமையில், தமிழன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி யுள்ளது. ஜெர்மானிக் மொழியான ஆங்கிலம் லத்தின், கிரேக்க மொழிகளால் எவ்வாறு ஊட்டமடைந்ததோ அவ்வாறே தமிழும் வடமொழியால் ஊட்டம் பெற்றது. தமிழ், வடமொழியினின்று பெற்ற சொற்களாற், தன் அடிப்படைக் குணாம்சங்களை இழந்து விடவில்லை. தனித்தமிழ் வாதம், ஒரு சமுதாய முரண்பாட்டினை ஒரு அர்ததமற்ற மொழிக்கொள்கை மூலம் வெளிப்படுத்த முனைந்தது. சமுதாய முரண்பாடு தன்னை வேறு வகை களிலும் வெளிப்படுத்தி விகாரமடைந்து போன பின்பும்,

Page 12
20
தனித்தமிழ்க் கனவு மட்டும் வந்து போய்க் கொண்டே இருக்கிறது. தனித்தமிழ்வாதம் திராவிட இயக்கத்தோ ரிடையே சமஸ்கிருத எதிர்ப்பாக வெளிப்பட்டதேயன்றி, ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அவர்கள் அதிகம் கவலைப் படவில்லை இதுவே இவர்களது தனித்தமிழ்வாதத்தின் அடிப்படை நோக்கை நமக்கு உணர்த்தப் போதுமானது. தனித்தமிழ்வாதம் தமிழின் எளிமைக்கு ஓரளவு பங்களித் துள்ளது என்பது நாம் மறுக்க முடியாதது. ஆயினும், எளிமையைவிடத் தூய்மையே முக்கிய இலக்கானமையாற், தமிழின் சொல்வளத்தின் பெருக்கத்துக்குத் தடையாகி, சில இடங்களில், எளிமையான சொற்களை அகற்றிச் சிக்கலான 'தனித் தமிழ்ச் சொற்கள் தோன்றவும் அது வழிகோலியுள்ளது. தனித்தமிழியக்கத்தை ஒத்த இயக்கங் கள் பல வேறு மொழிகளிலும் இருந்து வந்துள்ளனவெனி னும், தூயதமிழ் பற்றி நம்மிடையே நிலவிய சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கம், ஒப்பிடுகையில், சற்றே மிகையானது எனலாம். •
திராவிட மொழிகளின் ஒற்றுமையும் அதன் மூலம் தமிழரதும் பிற திராவிடர்களது இன ஐக்கியத்தையும் வலியுறுத்தும் போக்குத் திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆயினும், ஏனைய திராவிட மொழிகளிலும் தமிழிழ் மூத்தது எனும் கருத்தும் தமிழின் தூய்மை பற்றிய பெருமையும் வடமொழி விரோதமும் மற்றைய திராவிட மொழி பேசுவோரது உணர்வுகளை மதிப்பனவாக அமையவில்லை. மற்றைய திராவிட மொழிகளில் வடமொழியின் கலப்பு அதிகமே யெனினும், தென்னிந்தியாவில் வழங்கிய பழைய தமிழ் மொழியும் இன்றைய தமிழும் "ஒரே மொழி’ என்பது முற்றிலுஞ் சரியானதல்ல. சமகாலத் தமிழ்மொழியிற் போதிய புலமையும் இலக்கண அறிவும் உள்ளோராற் சங்க இலக்கியங்களை வாசித்து விளங்கிக்கொள்ள முடிகிறதா? தமிழ் மொழியின் சொல்வளமும், அதைவிடக் குறைந்த அளவில் அதன் அமைப்பும் மாறியுள்ளன. சமகாலத்

21
தமிழ் இழந்த பல பழந்தமிழ்ச் சொற்கள் பிற திராவிட மொழிகளில் வழக்கில் உள்ளன. தமிழின் தொன்மை பற்றிய வாதம் பழைய தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும்
இடையில் உள்ள பெரும் மொழியியல் ஒற்றுமைகளால் நியாயப்படுத்தப்படுகின்றமை பற்றி ஐயமில்லை.
ஆயினும், பழைய தமிழை விட, மலையாளம் சமகாலத்
தமிழ் மொழி பேசுவோர் புரிந்துகொள்ள இலகுவாக
உள்ளமை தமிழின் தொன்மையும் தூய்மையும் பற்றிய
நிதானமான ஒரு கண்ணோட்டத்தை வேண்டி நிற்கிறது.
நாம் இன்று பயன்படுத்தும் தமிழ்மொழி ஒரு பழைய மொழியின் நவீன வடிவம் என்பதும் அதனுடைய
மாற்றம் வரலாற்றுத் தொடர்ச்சியுடையது என்பதும்
பற்றி நமக்குள் அதிக முரண்பாடில்லை. ஆனாற் காலத்
தின் மோதுதலைத் தாங்கி அசையாது நின்ற அற்புதம்
அல்லத் தமிழ்.
சமஸ்கிருதம் தமிழைக் களங்கப்படுத்திய மொழி என்ற வகையிலும் ஏனைய இந்திய மொழிகள் மிகவும் இளைய மொழிகள் எனும் வகையிலும் நம்முட் கருதப்பட்டுள்ளன. இந்தியும். சிங்களமும் இந்தியாவிலும் இலங்கையிலும் அரச நிருவாக மொழிகளாகிய போது தமிழுக்கு ஆபத்து என்று ஒலமிட ஆரம்பித்த தமிழினவாதிகள் சிங்கள மொழியையும் இந்தியையும் இழிவு படுத்திப் பேசியவற் றையும் எழுதியவற்றையும் சிறிது நினைவு கூர்தல் பயனுள்ளது. ‘நண்டெழுத்து வேண்டாம் நமக்கு' என்ற ஈற்றடியுடன் வெண்பாக்களை எழுதுமாறான கவிதை அரங்கு ஒன்று சுதந்திரனிற் சில வாரங்கள் தொடர்ச்சி யாக வந்தது. ‘இந்தி அரக்கி போன்ற கோஷங்கள் தமிழ்நாட்டிற் பரவலாகப் பயன்பட்டன. சிங்கள மொழி வ்ெறியும் இந்தி வெறியும் முறையே, சிங்களம், இந்தி ஆகிய மொழிகள் சகலருக்கும்
கட்டாயமாக் கற்பிக்கப்பட வேண்டும் என்ற விதமாகச்
த-2

Page 13
22
சில மொழி வெறியர்கள் வாயிலாக வெளிப்பட்டது உண்மையே ஆயினும் உண்மையான அரசியற் பிரச்சினை சிங்களத்திணிப்போ இந்தி ஆதிக்கமோ தமிழை அழிக்கும் அபாயம். அல்ல. நானூறு ஆண்டு கட்கு மேலாக இலங்கையியில் தமிழர்கட்கு இருந்து வந்த மொழியுரிமையிலும் அதிகமான அளவு மொழி யுரிமை அண்மைய அரை நூற்றாண்டு காலமாக இருந்துவருகிறது. இலங்கைலும் தமிழகத்திலும் ஆங்கில மொழி மூலம் நிருவாகமும் ஆங்கிலக் கல்வி முறையின் ஆதிக்கமும் நீண்ட காலமாக இருந்தும், இன்றும் ஆங்கிலமே உயர் கல்வியிலும் நிருவாகத்திலும் பெரிதும் ஆதிக்கம் செலுத்தியும், தமிழ் அழிந்து போய்விடவில்லை. தமிழுக்கு திசமான வெளி ஆபத்து உண்டெனின் அது ஆங்கிலமாகவே இருக்கும் என்பது நம் தமிழினவாதி கட்குத் தெரியாததுமல்ல. எனினும் சிங்களம், இந்தி ஆகியன பகை மொழிகளாகவும் இழிவானவையாகவும் சித்தரிக்கப்பட்டவாறு ஆங்கிலம் சித்தரிக்கப்படவில்லை. ஏனெனில் ஆங்கிலம் தமிழ்ப் பிற்போக்குவாதத் தலைமைகள் சார்ந்த வர்க்கங்கட்கு அவசியமானதும், உண்மையிற் தமிழைவிட முக்கியதுமான மொழி. எனவே, இந்த ஆங்கில மோகத்தை மூடிக்கட்ட ஒருபுறம் தனித்தமிழ்வாதம் என்னும் பசப்பும் மறுபுறம் இந்தி, சிங்களம் போன்ற மொழிகள் மீது வெறுப்புணர்வும் பயன்பட்டன.
அயல்மொழிகள் பற்றிய கருத்தோட்டங்களில் வெறுப்புணர்வு வெவ்வேறு வகைகளில் புலப்பட்ட போதும், ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, அதன் நவீனத் துவமும் சர்வதேச முக்கியத்துவமும் அதனைப் புறக் கணிக்க இயலாமற் செய்கின்றன. ஆயினும் ஆங்கிலம், ஒரு பயனுள்ள மொழியாக, உயர்தர வர்க்கத்தினர்க்கு ஒரு மேலதிக வீட்டு மொழியாக" அமைந்ததேயன்றி அது தமிழ் மொழி மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் பற்றிய

23
கண்ணோட்டங்கள் தனித்தமிழ்வாதத்தையே (பகிரங்க மான கொள்கையளவில்) தழுவி நின்றன, எவ்வாறா யினும், தமிழ்த் தலைவர்களது ஆங்கில மோகம் அவர்களையறியாமலேயே தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. இலங்கையில் தமிழினவாதத் தலைமை, உண்மையில், ஆங்கிலமே அரச நிருவாக மொழியாகவும் உயர் கல்வி மொழியாகவும் தொடர்வதையே மிகவும் விரும்பியது.சிங்களம், ஆங்கிலத்துக்கு மாற்றாக அமைவது பற்றிய அச்சமே இவர்களது தமிழ் உணர்வை வெளிக் கொணர்ந்தது. தமிழ் மொழியின் எதிர்காலம் தமிழ் மொழியின் நவீனமயமாதலையும் நவீன தமிழ்ச் சமுதாயத்திற்குத் தமிழ் எவ்வாறு முகங்கொடுக்கும் என்பதையுமே சார்ந்திருக்கிறது. அயல் மொழிகள் மூலம் தமிழுக்கு ஆபத்து உண்டெனின் அது தமிழின் வளப் க்சி மறிக்கப்படுவதன் மூலம் நிகழும் ஆபத்தேயன்றி வேறல்ல. தமிழை இன்று வேறொரு மொழியால் அழிக்கும் வாய்ப்பு உண்டெனின், அம்மொழி பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருக்கும். ஏனெனில், நவீன தமிழ்ச் சமுதாயத்தின் தேவையை நிரப்பத் தமிழுடன் போட்டியிடக் கூடிய மொழி ஆங்கிலமேயன்றி இந்தியோ சிங்களமோ அல்ல. தமிழ் மொழி மூலமான கல்வியின் போதாமை தமிழின் போதாமையாகும் ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்குத் தமிழுக்கும் அயல் மொழிகட்கு மிடையிலான உறவு பற்றிய நமது பார்வை கொஞ்சம் விரிவடைய வேண்டும். தமிழின் குறைபாடுகளையும் வளர்ச்சிக்கு அவசியமான மாற்றங்களையும் அடையாளங் காண்பதும் பேச்சு வழக்கிலுள்ள மொழி காண விழையும் நவீனத்துவத்தை எழுத்து மொழி பெறுவதற்கு நாம் ஆவன செய்வதும் தமிழ் மூலம் நவீன சிந்தனைகளைப் பரவலாக்குவதும், தமிழரது கண்முன் பரந்த உலகத்தைத் திறந்து காட்டுவதும், நாம் மேலும் நீண்ட காலத்திற்குப் பின்போட முடியாதவை. தமிழர்கள் ஆங்கில மொழி யிலும் தம் அண்டை மொழியிலும் தேர்ச்சி பெறுவது

Page 14
24
பயனுள்ளது. பிறமொழிக் கல்வி முலம் தமிழ் அழியும் என்பது நடைமுறை உண்மைக்கு எதிர்மாறானது. பிற இனத்தவர்களது மொழிவெறி புற்றிக் குமுறும் தமிழ்த் தேசியவாதிகள் தமிழர்கட்குள்ளே நீண்ட காலமாக வளர்க்கப்பட்டுள்ள மொழி வெறியையும் நியாய உணர்வோடு பார்க்கப் பழகுவது நல்லது.
'யாதும் ஊரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா"
என்ற வரிகளை எத்தனையோ தடவைகள் தமிழ் இனத் தின் பழம் பெருமையைக் கூறுவோர் வாயாற் கேட்டிருக் கிறேன். இப்போது அதை நினைவூட்டுவது தவறல்ல என்று நினைக்கிறேன்.
2
தமிழும் அயல் மொழிகளும் பற்றிய முதற் கட்டுரை யில் அயல் மொழிகள் பற்றி நம்முள் நிலவும் கருத்துக்கள் சிலவற்றைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழின் தொன்மை யும் தூய்மையும் பற்றி நம்முள் நிலவும் பிரமைகள் சிலவற்றின் அடிப்படையில் நோக்கினால் தமிழர்கள் கவிதை பாடிக்கொண்டிருந்த காலத்தில் மற்ற மனிதர்கள் எல்லாம் உறுமல்கள் மூலமும் சைகைகள் மூலமும் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் எனவும் ஒரு காலத்திற் தமிழ் உலகின் ஒரே மொழியாயிருந்தது எனவும் எண்ணத் தோன்றும். இவ்வாறான ஒரு மொழிவெறி சார்ந்த நிலைப்பாடு மிகப் பெரும்பாலான தமிழர் மத்தியில் நிலவவில்லையென்றாலும், தமிழின் தொன்மை யும் தூய்மையும் பற்றிய வாதங்களின் செல்வாக்குத் தமிழின் வளர்ச்சிக்குப் பொதுவாகவே ஒரு தடைய இருந்துள்ளது. கட்டுரையின் மையமான விஷயத்துக்கு வருமுன், தமிழின் தொன்மைபற்றி வேடிக்கையான @@

25
சிந்தனையைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். தமிழிலிருந்தே பிற உலக மொழிகளின் சொற்களெல்லாம் பிறந்தன என்றவாறான வாதங்களைப் பார்த்தப்போது, தமிழிலிருந்து பிறந்த பிற மொழிச் சொற்கள் யாவும் தமிழுக்கே உரியன என்பதால், பிற மொழிச் சொற்கள் யாவுமே அடிப்படையில் தமிழ்ச் சொற்களாகிவிடுகின் றன. எனவே சகல பிற மொழிச் சொற்களையுமே தடையின்றித் தமிழ்ச் சொற்கள்ாகவே கருதிப் பயன்படுத் தலாம் என்று ஆகிவிடுமல்லவா. தமிழில் கலப்படம் என்ற கருத்தே அர்த்தமற்றுப் போய்விடுமாறான இத்தொன்மை வாதமும் தன்னையறியாமலே அதனுடன் முரண்பட்டு நிற்கும் தூய்மைவாதமும் மொழி வளர்ச்சியின் அடிப்படையையே அறியாமையால் வருவனவேயன்றி வேறல்ல.
தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொற்களும் சொற் றொடர்களும் அவசியம் என்பதைத் தூய்மைவாதிகள் உட்பட யாவருமே இன்று ஏற்றுக்கொள்கிறார்கள். இப்புதிய சொற்களை எவ்வாறு உருவாக்குவது என்ற விஷயத்திலேயே முக்கியமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. என்னளவிற், தமிழில் உள்ள "வேர்களை அடிப்படையாக வைத்து நவீன சமுதாயத் தின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு மொழிக்கான புதிய சொற்களைப் புனையும் கொள்கை, நடைமுறையிற் சாத்தியமல்ல என்பதாலும் மொழியின் வளர்ச்சிக்குப் பாதகமானது என்பதாலும், அடிப் டையிலேயே நிராகரிக்கப்பட வேண்டியதாகிறது. தமிழின் வளர்ச்சி யின் வரலாறும் இக்கொள்கையை மறுக்கிறது. எனவே தமிழிற் புதி!! சொற்களின் வருகை பற்றிய மற்றொரு பழமை பேணும் கொள்கையை மட்டுமே இங்கு பயனுள்ள விவாதத்திற்குத் தகுந்ததாகக் கருதுகிறேன்.
தமிழில் புதிய சொற்கள் அயல்மொழிச் சொற்களைத் தழுவியனவாயிருப்பினும் அவை தமிழின் மரபு தழுவி

Page 15
26
யனவாய் அமைவது அவசியம் எனும் கொள்கையில் *மரபு' பற்றிய வியாக்கியானங்கள் வேறுபடுகின்றன. ஆயினும், முறையான எழுத்து மொழி என்று நிறுவப் பட்ட ஒரு மொழியின் சொல்லமைப்பு விதிகட்கமையவே, புதிய சொற்கள் புனையப்பட வேண்டும் என வலியுறுத்து கின்ற அளவிற் பல வேறான மரபுவாத நிலைப்பாடுகள் ஒற்றுமை உடையன. இந்த முறையான எழுத்துமொழி பற்றிய கருத்துக்களோ பெரிதும் வேறுபடுகின்றன. சிலரது கருத்தில் அது பண்டிதர்கள் அடையாளங் காட்டும் செந்தமிழாகவும் வேறு சிலரது கருத்தில் இன்றைய பாடநூல்களிற் காணக்கூடிய இலகு தமிழாக வும் இன்னுஞ் சிலரது கருத்திற் தரமான நவீன பத்திரிகை களில் காணக்கூடியதும் வடமொழி எழுத்துக்களை உட்படுத்தியதும் அடிப்படையான இலக்கண விதிகளைப் பேணுவதுமான தமிழாகவும் அது அடையாளங் காணப் படலாம். ஆயினும், பேச்சு வழக்கிற் பரவலான புழக்கத்தி லுள்ள பல அயல்மொழிச் சொற்களை (முக்கியமாக ஆங்கில வாயிலாக நம்மை வந்தடைந்தவற்றைத்) தமிழாகக் கருத மறுக்கின்ற அளவில், அவற்றுள் ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. எனவே எந்தவோர் அயல்மொழிச் சொல்லும் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட பின்பே தமிழாகக் கருதப்படும் தகுதி பெறுகிறது
இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவறானதோ அல்லது அப்படியே பிற்போக்கானதோ அல்ல, இந்த அணுகுமுறை, மொழியின் அடிப்படையான ஒழுங்கைப் பேணவும் புதிய சொற்களின் வருகையால் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்ற அளவில் ஒரளவு அவசியமானதாகவும் அமைகிறது. ஆயினும், மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையுஞ் சமகாலத் தேவைகளை யொட்டி மாற்றங்கள் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் ஒதுக்கிவிட்டு, ஏதோ ஒரு காலகட்டத்தில் விறைத்துப் போன ஒரு நிலையில் மொழியை நோக்கும் போது, இந்த அணுகுமுறை மொழி வளர்ச்சிக்குப் பாதகமானதாகிறது.

27
ஒரு காலத்திற் தமிழிற் சமஸ்கிருதச் சொற்கள் புகுந்தபோது அவை முற்றாகவே தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவிலேயே தமிழில் இணைந்தன. பிற அயற் கலாச் சாரத் தொடர்புகள் மூலம் தமிழுட் புகுந்த மற்றைய 'அயல்மொழிச் சொற்களுங்கூட இவ்வாறே தமிழிற் புகுந்தன. ஆயினும் பின்னைய காலகட்டம் ஒன்றில் வட இந்தியக் கலாச்சாரத்தின் பெரும் தாக்கத்தின் விளைவுகள் வடமொழிச் சொற்களை அவை நமக்குப் பரிச்சயமான வடிவிலேயே பிரயோகிக்கும் நிலையை உருவாக்கின. இத்தேவையை நிறைவு செய்யக் கிரந்த மழுத்துக்கள் பயன்பட்டன. தமிழுக்குப் பரிச்சயமற்ற ஓசைகளும் ஓசை ஒழுங்குகளும் தமிழுக்குப் புறப்பானவை என்று ஒதுக்கப்பட்டுப் பழைய தமிழ் அரிச்சுவடியின் அடிப்படையிலேயே தமிழ் எழுதப்படுவது உகந்தது என்று ஏற்கப்பட்ட பின்பும்கூட ஷ, ஸ், ஜ, ஹ ஆகியனவும் க்ஷ என்பதைக் குறிக்கும் கூட்டெழுத்தும் பூரீ என்ற கூட்டெழுத்தும் , தமிழ் எழுத்துக்களுடன் சிலசமயம் பிரயோகிக்கப்படும் எழுத்துக்களாக எஞ்சின. இன்று இவற்றை எழுத்துத் தமிழினின்று அகற்றுவது நடைமுறை யில் அசாத்தியமாகிவிட்டது.
இந்த எழுத்துக்களின் பயன்பாட்டினால் தமிழின் தூய்மை கெட்டுவிட்டது என்று அழுவோரது. எண்ணிக்கை நாளாந்தம் குறைந்து வருகிறது என்பதே இவ்வெழுத்துக்கள் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், பல அயல்மொழிச் சொற்களை, அவை பேச்சு மொழியில் பரிச்சயமானவாறு, முடிந்தவரை சரியாக உச்சரிக்கக் கூடியவாறு எழுத இந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன. (உதாரணமாக: ரஷ்யா, ஸ்பெயின், ஹங்கேரி, ஜெர்மனி, புஸ்வாணம், கோஷம், ஹலோ, அல்ஹாஜ்) எழுத்தில் இவற்றின் பிரயோகம் தமிழ்ப் பேச்சிற் புழங்கும் சில அயல்மொழிச் சொற்களின் வடிவங்கள் எவ்வளவுதூரம்

Page 16
28
நிலைநாட்டப்பட்டுவிட்டது என்பதையும் அவற்றை எழுத்திலும் சரிவரக் குறிக்கும் தேவை எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆயினுந், தமிழ்ப் பேச்சுவழக்கில் உள்ள சகல அயல் மொழிச் சொற்களையும் தமிழ் எழுத்தில் சரிவர எழுத இயலாது என நாம் அறிவோம். இப்பிரச்சினைக்கு எவ்வாறு முகங்கொடுப்பது ன்ன்ற கேள்விக்குத் தரப்படும் விடைகளிற், பழமை பேணல் வாதத்தின் தீவிரத்தை வெவ்வேறு அளவுகளில் நாம் அடையாளங் காண (ւՔւգսկմ).
தமிழ்ப் பேச்சு வழக்கு சில அயல்மொழிச் சொற் பிரயோகங்களைத் தன்னுடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டுள்ளமை இன்று நிலைநாட்டப்பட்டுவிட்டது. புழக்கத்தில் உள்ள எழுத்து முறையால், இலக்கண விதிகட்குச் சிறிதும் உட்படாமலுங் கூட, இச்சொற் களைச் சரியாகக் குறிப்பிடுவது இயலாது போய்விட்டது. இந்நிலையிற், பேச்சுவழக்குப் பல வேறு புதிய ஓசை களைத் தனித்தனியான ஒலியன்களாக அடையாளங்காணு கின்றதெனின், அந்த ஓசைகள் ஒவ்வொன்றும் தனித்தனி எழுத்துக்களாற் குறிக்கப்பட வேண்டியமை மறுக்க முடியாதது. F எனும் ஆங்கில எழுத்துக்குரிய ஓசைக்கு ‘ஃப என்று T.D வேறுபாட்டைக் காட்ட 'ர' எனும் எழுத்தைப் பயன்படுத்துவதும் பிரச்சினைக்கு நேரடியாக முகங்கொடுக்கவும் மனமின்றி அதை மறுக்கவும் துணிவின்றி மேற்கொள்ளும் நடவடிக்கைகளே. இவ்வா றான தீர்வுகள் மேலும் புதிய பிரச்சினைகளையே உருவாக்குகின்றன. தமிழ் எழுத்தில் ஏற்கெனவே உள்ள குறியீடுகளை மட்டுமே பயன்படுத்திப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சி தமிழ் எழுத்துக்கள் எனப்படுபவை மட்டுமே தமிழுக்கு உரியன எனுங் கருத்தையும் அவை தமிழுக்கு என்றுமே ~ உரியனவாயிருந்தன என்ற மயக்கத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நாம் இன்று பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் நீண்ட கால வரலாற்றுப்

29
போக்கில் மாற்றமடைந்து அச்சியந்திரத்தின் வருகை மூலமே உறுதியானதொரு 'நிரந்தர' வடிவை அடைந்தன என்பது நாம் நினைவுகூறவேண்டியது; இன்று ஷ, ஜ, ஹ, ல என்பவற்றின் அந்தஸ்தும் ஃப' வின் பரவலான பிரயோகமும், புதிய எழுத்துக்களின் அவசியத்தையும் ஃ என்ற எழுத்து இன்று எவ்வாறு பயனற்றுப் போய் விட்டது என்பதையுமே குறிக்கின்றன. Tயைக் குறிக்க (ஈழத்தில்) 'ர' வின் பிரயோகம், T - D வேறுபாடு ர - ற வேறுபாட்டின் அளவுக்கு (அல்லது அதனின் மேலாக) உயர்ந்து நிற்கிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. புதிய எழுத்துக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள்விக்கு என் பதில், அவை ஷ, ஜ, ஸ, ஆகியன போன்று தனி எழுத்து அந்தஸ்துடையனவாக இருப்பது நல்லது என்பதே. தமிழ் எழுத்துக்களை மட்டுமே பர்வித்துக்கொண்டு புதிய ஓசைகளைக் குறிக்கும் வடிவங் களைச் சிருஷ்டிக்கும் முயற்சி மேலும் குழப்பமான விளைவுகட்கே இடமளிக்கும்.
புதிய எழுத்துக்களின் தேவை பற்றிய கருத்தில், அவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கங்களைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. புதிய ஒசைகளைக் குறிக்கும் எழுத்துக்கள் அவசியமில்லை என்பதைக் கூறும் சில வாதங்களை அவதானித்தால் இது விளங்கும்.
“பிற மொழி பேசுவோர் தமிழ்ச் சொற்களைச் சரியாகவே உச்சரிக்கிறார்களா? ர - ற, ன - ண, ல - ள-ழ பேதங்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லையே! ல - ர பேதமே கூடச் சீன ஜப்பானிய மொழிகளில் இல்லையே! தமிழ் மட்டும் ஏன் மற்ற மொழிகளின் ஒசைகளைச் சரியாக ஒலிக்க வேண்டும்”
இவ்வாறான வாதங்களிற் சில தவறான ஊகங்கள் உள்ளன. ஏனெனில் தமிழிற் பிறமொழிகளில் உள்ள் சகல

Page 17
30
ஓசைகளையும் புகுத்தும் தேவையை யாருமே வலியுறுத்த வில்லை. அது மட்டுமன்றி, அது சாத்தியமான விஷயமு மல்ல. உலகில் எந்த ஒரு மொழியுமே மனிதனுடைய குரல் உறுப்புக்கள் எழுப்பும் சகல ஓசைகளையும் குறிக்க வல்லதல்ல. அவ்வாறு குறிப்பது மொழியின் தேவையோ நோக்கமோ அல்ல. அதே சமயம், பிற மொழிகளுள் காலப்போக்கில் புதிய ஓசைகளே புகவில்லை என்பது ஒரு தவறான கருத்து. இந்தியில் F,Z ஆகிய ஒசைகளைக் குறிக்கும் வண்ணம் இரண்டு எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிங்களத்தில் F ஐக் குறிக்கப் புதிய எழுத்து ஒன்றுக்கு இரண்டு வடிவங்கள் பரவலான புழக்கத்தில் உள்ளன. ஆங்கிலம் அதன் வினோதமான உச்சரிப்பு விதிகள் காரணமாக அதனுட் புகும் சில அயல் மொழிச் சொற்களை அவற்றின் மூலத்தில் உள்ளவர்று (அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், ஆங்கிலேயர் பரவலாக உச்சரிக்கும் முறையில்) ஏற்றுள்ளது. உதாரண மாக இன்றைய ஆங்கிலத்தில் உள்ள கணிசமான பிரெஞ்சு மொழிச் சொற்கள் (ஆங்கிலேயர் உச்சரிக்கக் கூடியவா றான வகையில்) பிரெஞ்சு ஓசைகளைக் கொண்டே உச்சரிக்கப்படுகின்றன. அந்நியப் பிரமுகர்கள், ஊர்கள் போன்றவற்றைக் குறிக்கும் சொற்களை முடியுமான வரை "சரியாகவே உச்சரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அவ்வாறானால், ஆங்கிலம், மடுவுக்கும் 'மாடு”வுக்கும் ஏன் வேறுபாடு காட்டுவதில்லை, மரத்தமிழனுக்கும் மறத்தமிழனுக்கும் ஏன் வேறுபாடு காட்ட முனைவ தில்லை என்றவாறான கேள்விகள் எழலாம். இதற்கு ஒரே ஒரு பதில்தான் உள்ளது. ஆங்கிலேயர்கட்கு மரத் தமிழனுக்கும் மறத்தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய அக்கறை காட்ட வேண்டிய நிர்ப்பந்தமில்லை. நம்முடைய நிலையோ வேறு: நாம் தேடும் தீர்வு, நம்முடைய சூழலுக்கு "நமது மொழி எவ்வாறு முகங் கொடுக்க முடியும் என்ற கேள்வியின் அடிப்படையில் அமையலாமே ஒழிய மற்றவர்களது மொழிகளுடனான அந்தஸ்துப் பிரச்சினையின் அடிப்படையிலல்ல.

31
தமிழ் மொழியில் அயல் மொழிச் சொற்கள் புகுந்த வரலாற்றுச் சூழலும் அச்சொற்கள் தமிழில் வகிக்கும் பங்கும் நாம் அடிப்படையாகக் கருத்திற் கொள்ள வேண்டியவை. (தமிழில் புகுந்துள்ள ஆங்கிலச் சொற் களோ அல்லது தமிழர் அறிந்த ஆங்கிலப் பேர்களோ "ஆங்கில மொழியில் உச்சரிக்கப்பட வேண்டிய விதமாகவே தமிழில் உச்சரிக்கப்படுவதில்லை. ஆங்கில சொற்களிற் பெருவாரியானவை பூரண ஒருமையுடைய உச்சரிப்பு முறையில் ஆங்கிலேயராலே கூட உச்சரிக்கப்படு வதில்லை. பேச்சுத் தமிழிற் சகல அயல்மொழிச் சொற் களுமே, தமிழராற் தமக்கு வேறுபடுத்திக் காட்டக் கூடியதும் வேறுபாடு காணக் கூடியனவுமான ஓசைகள் மூலமே பேச்சில் வழங்குகின்றன.) தமிழிற் புகுந்து நிலைத்துவிட்ட அயல் மொழிச் சொற்கள் காலத்தின் தேவை கருதியே பெரிதும் புகுந்தன. அவற்றைத் 'தமிழ்ப்படுத்துவது, முன்னொரு காலத்திற் சாத்தியமாக இருந்தது போல இப்போது ஏன் சாத்தியமாக இல்லை என்பது ஒரு பயனுள்ள கேள்வி. இக் கேள்விக்கான முழுமையான விடையை இங்கே தருவது இயலாது. ஆயினும் முன்னைய சூழ்நிலைகளில் வந்த அயல்மொழிச் சொற்களின் தொகையும் அவற்றைத் தமிழ்ப் படுத்தல் மூலம் உருவாகக் கூடிய சிக்கல்களின் தன்மையும் இன்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் (சிறியன) ஹரி என்பது அரி என்று தமிழ்ப்படும் போது, அரி என்ற சொல் வரும் சூழ்நிலைகள் அது விஷ்ணு என்று தீர்மானிப்பதால் அரி என்பதன் பிற பொருட்கள் அங்கு கொள்ளப் படுவதில்லை. மறுபுறம் இதுவே கவிதையில் சிலேடைக்கு இடமளித்து ஒரு பலவீனத்தைப் பலமாக மாற்றி விடுகிறது. பார்த்தாற் புதிதாக வந்த அயல்மொழிச் சொற்களின் தமிழ்ப்படுத்தல் சில பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், அவை மொழியின் பயன்பாட்டின் வரம்புகளுள் நெருக்கடியொன்றைத் தோற்றுவிக்க வில்லை. எனவே தமிழாற் தன் மரபுக்குட்பட்ட

Page 18
32
ஒலிகளதும் ஒலிச்சேர்கைகளதும் வரையறைகட்குள் தொடர்ந்தும் இயங்க முடிந்தது.
நவீன சூழலோ மிகவும் வேறுபட்டது. நவீன தொடர்புச் சாதனங்களின் வருகையும் அயல்.மொழிகளு டன் பெரிதளவு பரிச்சயமும் வகித்த பங்கு பெரியது. அது மட்டுமன்றி, அவை தம்முடன் கொண்டுவந்த புதிய சிந்தனைகளும் புதிய பண்டங்களின் பேர்களும் மூன்று நான்கு நூற்றாண்டுகளாகத் தேக்கமடைந்திருந்த ஒரு சமுதாயத்தின் மீதும் அதன் மொழியின் மீதும் ஏற்படுத் திய பாதிப்பு மிகவும் பெரியது. பண்டங்களுக்குத் தமிழிற் பேரிட முயல்வதற்கு முன்னமே அவற்றின் ஆங்கிலப் பேர் கள் பெருமளவுக்கும் அவற்றின் மூல வடிவத்திலோ அல்லது கணிசமான சிதைவுடனே தமிழ்ப் பேசும் சீமுதாயத்தில் பரவிவிட்டன. இதற்கான உதாரணங் களைத் தேடவேண்டுமானால் நா மொவ்வொருவரும் அன்றாடப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் . ஆங்கிலச் சொற்களின் தொகையை மதிப்பிட்டாற் போதும். வானொலி விளம்பரங்கள், திரைப்படம், பத்திரிகை. விளம்பரங்கள் ஆகியன சிலசமயம் ஏன் தமிழ்ச் சொற். களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களையே பயன் படுத்து கின்றன என்று சிந்தித்தல் பயனுள்ளது. என்னளவில் இந்த நூற்றாண்டிற் தமிழிற் புகுந்த அயல்மொழிச் சொற்களில் ஒரு கணிசமான பகுதி, தமிழ்ப்படுத்தப்படாத வடிவிலேயே தொடர்ந்தும் பேச்சுத் தமிழில் பயன்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்னுமொரு பகுதி, அவற்றைத் தமிழ்ப்படுத்துதல் அவற்றை அதிகம் ஒசைச் சிதைவின்றி உச்சரிக்க அனுமதிக்கும் என்பதால் அல்லது அவ்வாறான தமிழ்ப்படுத்தலால் புதிய சிக்கல்கள் தோன்ற இடமிராது என்பதால், தமிழ்ப்படுத்தப்பட்டு நாளைடைவிற் தமிழே போன்று அமையும் என்று எண்ண லாம். எவ்வாறாயினும் இவை அனைத்துமே தமிழினின்று நீக்கக்கூடாத (நீக்க இயலாத) விதமாக தமிழிற் ஒரு

33
பகுதியாகிவிட்டன. எனவே இவற்றுடன் தொடர்புடைய புதிய ஓசைகள் யாவுமே நவீன தமிழின் புதிய ஒசைக ளாகக் கருதப்படவேண்டுமேயொழிய, அவற்றின் மூல மொழிகளது ஓசைகளாக அல்ல. நாம் நினைவிலிருந்த அவசியமான விஷயங்கள் மேலும் இரண்டு உள்ளன. தரப் பட்ட மொழியொன்றைப் பேசுவோரால் இன்னொரு மொழியிலுள்ள சொல் பயன்படுத்தப்படும்போது அது அவர்கட்குப் பரிச்சயமான ஒலி எழும்பும் முறையிலேயே ஒலிக்கப்படுகிறது. எனவே தமிழர்கள் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களின் ஒசைகள், முக்கியமாக உயிர் எழுத்துக்கட் குரியனவும் ஒரு சில மெய்யெழுத்துக்கட் குரியனவும், ஆங்கிலத்தைத் தாய் மொழியாய்க் கொண்ட எந்தப் பிரிவினரதும் பாவனையிலுள்ள ஓசைகளிலும் பெரிதும் வேறுபட்டவையே. எனவே நம்முன்னுள்ள பிரச்சினை, ஆங்கில மற்றும் அயல்மொழிச் சொற்களைச் சரியாக உச்சரிப்பது தொடர்பானது அல்ல. மற்றது, ஆங்கில அறிவு இல்லாத தமிழர்கள் கூட, அன்றாடப் பாவனையில் உள்ள பல பொருட்களையும் பேர்களை அவற்றுக்குரிய தமிழுக்கு பரிச்சயமில்லாத ஒசைகளை அண்ணளவாகவேனும், பயன்படுத்தியே குறிப்பிடுகின் றனா.
இது எவ்வாறாயிருப்பினும் மனிதர்களதும் ஊர்கள தும் பேர்களை தம்மிழிற் குறிப்பிடும் பிரச்சினையை யொட்டியே தமிழில் பேச்சுக்கும் எழுத்துக்குமிடையில் ஒசைகளைக் குறிக்கும் விஷயத்திலான முரண்பாடு பற்றிய கவனம் பெரிதும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரண மாகவே, பல சமயங்களில் ‘ஆங்கிலேயர் (ட்)டிருவல்லுவர் என்று உச்சரிக்கும்போது நாம் மட்டும் ஷேக்ஸ்பியரென்று சரியாக உச்சரிக்க அவசியம் என்ன?’ என்றவிதமான வாதங்களை நாம் சந்திக்கநேருகிறது இது பிரச்சினையின் முக்கியமான அம்சம் அல்லவெனினும், இங்கு கூட, தமிழ்ப் பேசும் சமுதாயத்திற்குள்ளேயே புழக்கத்தில் உள்ள சில பேர்களைத் தமிழில் சரியாக எழுத முடியாது என்பது

Page 19
34
கவனிக்கத்தக்கது. ஒரு சில இடங்களிற், கிரந்த எழுத்துக் கள். நான்கும் துணைக்கு வந்தலும் மற்ற இடங்களிற் பிரச்சினைகள் தீர்ந்ததாக இல்லை. B-P, T-D, K-G வேறுபாடுகள் Z, F ஒலிகள் போன்றன, தமிழர்களின் பேர்களின் ஆங்கில வடிவங்களில் கவனமாக வலியுறுத்தப் படுகின்றன; பேச்சிற் கவனமாக வேறுபடுத்தப்படுகின் றன; ஆனாற் தமிழ் எழுத்தில் காட்ட இயலாதுபோய்விடு கின்றன. எனவே அந்நியர்களுக்கு நாம் தாழ்மையுடன் செலுத்தும் மரியாதைக்காக அன்றி நம் சமுதாயத்தின் சக மனிதர்களது பேர்களைச் சரியாகவே உச்சரிக்கின்றோம் என்று உத்தரவாதப்படுத்தவே தமிழ் எழுத்திற் சீர்திருத் தம் முக்கியமாக அவசியமாகிறது.
ஜப்பானியர்கள் ல, ள என்னும் ஒலிகளை அறியார், ர-ற, ன-ண வேறுபாடுகளை அறியார் என்பது உண்மை. ஆனால் ஜப்பானியப் களது பேச்சின் பிரதான ஒசை வேறுபாடுகளை அவர்களது எழுத்துமுறை தெளிவாக எடுத்துக்காட்ட வல்லதா என்பதுதான் பிரச்சினையேயன்றி ஜப்பானிய மொழியில் எத்தனை தமிழ் ஒசைகளைக் குறிக்க முடியும் என்பதல்ல. ஜப்பானிய மொழியிலோ, ஆங்கிலத்திலோ: சீன மொழி யிலோ, ரஷ்ய மொழியிலோ உள்ள ஒசைகளை எல்லாம். தமிழிற் சேர்க்க வேண்டுமோ என்ற விவாதத்துக்கே இங்கு இடமில்லை. சமகாலத் தமிழ்ப் பேச்சில் பேசுவோர் தெளிவாக வேறுபடுத்தி இனங்க்ானும் ஒசைகளை அதாவது ஒன்றணிடத்தில் இன்னொன்றை இட்டால் அர்த்தமே மாறக்கூடியளவு முக்கியமான வேறுபாடு காட்டும் ஒசைகளைத் தெளிவாக எழுத்திற் குறிக்கக் கூடுமாயிருக்க வேண்டும், இதுவே சமகாலத் தமிழின் பிரச்சினை. இந்த அடிப்படையிலே பிரச் சினையை அணுகினாற் புதிதாகப் புகுத்த வேண்டிய எழுத்துக்களின் தொகை அதிகமல்ல என்பதை உணர லாம். அவற்றின் வடிவம்பற்றிய முடிவின் விவரங்கள் முக்கியமானவையல்ல. அவை தமிழுக்கு அவசியம்

35
என்பதை நாம் உணர்ந்து செயற்பட்டாற் பயனுள்ள ஒரு. தீர்வைக் காண்பது சிரமமில்லை.
செந்தமிழுக்கு , , ; ; !? போன்ற மாத்திரைக் குறிகள் அவசியமில்லை. ஆனால் இன்று இவையின்றித் தமிழ் எழுத முடியாத நிலைமை வந்துவிட்டது. தமிழ் எண்களை இன்று பஞ்சாங்கத்திற்கூடச் சில சமயம் பார்க்க முடியாது. கணிதக் குறியீடுகள், ரசாயனச் சூத்திரங்கள் போன்றவற்றில் ஐரோப்பிய மொழி இலக்கண முறையும் எழுத்துக்களுமே இன்று தமிழிலும் பயன்படுகின்றன. இவற்றுக்குத் தமிழ் மாற்று எதுவுமே கிடையாது. இவற்றையெல்லாம் நாம் பெரிதுபடுத்துவதில்லை. பேச்சு மொழியின் யதார்த்தத்தை எழுத்து மொழித் திறனுடன் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறும்போது மட்டும் நமது தமிழுணர்வு கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது என்றால் எங்கேயோ ஏதோ பெரிய கோளாறு இருக்க வேண்டும்.
எளிய பழந்தமிழின் அழகையோ வலிமையையோ நாம் குறைவாக மதிப்பிடுவதற்கில்லை. முடிந்த வரைக்கும் தமிழின் எளிய சொற்கள் பயன்படுத்தப்படுவதும் மரபோ டொட்டிய ஒலியுன்டயவாறு புதிய சொற்கள் எளிமை யாக அமைக்கப்படுவதும், வசதிக்கேற்ப, அயல்மொழிச் சொற்கள் இயல்பான ஓசையுடையதும் முரண்பாடு களைத் தோற்றுவிக்காததுமான முறையில் தமிழ்ப்படுத் தப்படுவதும் பயனுள்ளது. ஆயினும் தமிழ் மொழியின் வளர்ச்சியின் சில உண்மைகளை நாம் மறந்துவிட முடியாது. பேச்சு மொழி பிரதிபலிக்கும் உண்மைகளை அடையாளங் கண்டு அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூல்மே எழுத்துக்கும் பேச்சுக்குமிடையிலான இன்றைய அகழியை நிரப்பமுடியும், யதார்த்தத்தைப் புறக்கணித்தல் அதனை அகற்றிவிடாது. மாறாக அதற்கு இடமளிப்பதன் மூலமும் மொழியிற் அவசியமான மாற்றங்களை

Page 20
36
முறையாக மேற்கொள்வதன் மூலமுமே தமிழின் துரித மான வளர்ச்சியையும் அது அழகான நவீன மொழியாக இன்றைய உலகின் முன்வரிசை மொழிகட்கு ஈடாக உயர்வதையும் உறுதிப்படுத்த முடியும்
5.
முன்னய கட்டுரைகளிற் தமிழ்ப் பேசுவோரிடையே அயல்மொழிகள் பற்றி நிலவிவந்துள்ள கருத்துக்கள் பற்றி யும் அயல்மொழிகள் தமிழ்மீது செலுத்திய தாக்கம் பற்றி யும் தமிழ்மொழியின் பிரச்சினைகட்கு முகங்கொடுப்பதில் அயல்மொழிகள் பற்றி நம்மிடையே நிலவும் பார்வைகள் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றியும் பொதுவாக சில குறிப்புக்களை எழுதியிருந்தேன். இக்கட்டுரையில் தமிழின் எழுத்து முறையின் குறைபாடுகட்கு முகங்கொடுப்பதில் அயல்மொழிகள் பற்றிய பார்வைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களைப் பற்றிக் கவனிப்போம்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கருத்துக்கள் நீண்ட காலமாகவே வலியுறித்தப்பட்டு வந்துள்ளன. ஆயினும் அவை வலியுறுத்தப்பட்ட நோக்கங்களும் அவற்றுக்காகக் கூறப்பட்ட காரணங்களும் சீர்திருத் தத்தைத்தைத் தட்டிக்கழிப்பதற்கும் வசதிகளை எற்படுத் திக் கொடுத்தன. அதுமட்டுமல்லாமல் கடந்த 20-30 வருடங்களில் கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம். சட்டம், நவீன வர்த்தகம், வாணிபம் போன்று பல்வேறு துறைகளிலும், பெரும்பாலுந் தமிழே பேசுவோரின் ஈடு பாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, தமிழை நவீனமாக்கு வதற்கான அவசியத்தை மிகவும் உயர்த்தியுள்ளது. இவற்றைவிட, அயல்நாடுகளுடனும் அயற்கலாச்சாரங் களுடமான பரிச்சயத்தின் விளைவுகள் பலவகைகளிலும் நம் வாழ்க்கை முறையையும் நம்மொழியையும் பாதித் துள்ளன. இவற்றுக்கு முகங்கொடுப்பதிற் தமிழ்மொழிகுக்

37
உள்ள பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் போக்கும் அரைகுறையான தீர்வுகளைத் தேடும் மனப்பான்மையும் நீண்டகாலமாகவே மேலோங்கியிருந்துள்ளன. இன்றுங் கூட, எந்தவொரு சீர்திருத்தமும் தமிழின் போதாமையைச் சுட்டிக்காட்டுமாறு அமைவதையோ பிறமொழிகளிட மிருந்து தமிழ் கடன் பெறும் முறையில் அமைவதையோ தாங்க இயலாத ஒரு மனப்பான்மையைப் பாரிய சீர்திருத் தங்கள் பற்றிய விவாதங்களில் அவதானிக்கலாம்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற் பலவேறு அம்சங்கள் உள்ளன. ஒன்று அடிப்படையான எழுத்து வடிவம் தொடர்பானது. தமிழ் எழுத்து வடிவங்கள் பிராமி எழுத்து முறையினின்று படிப்படியான மாற்றங்கள் மூலம் வளர்ந்தே இன்றைய அச்சு வடிவத்திற்கு வந்துள்ளன இவ்வளர்ச்சி அடிப்படையில் ஒரு பரிணாம வளர்ச்சி முறையில் அமைந்ததே எனினும், அங்கு கூடச் சில மாற்றங்கள் உணர்வுபூர்வமாகத் தேவை கருதிப் புகுத்தப் பட்டுள்ளன. எழுதுங் கருவிகளில் ஏற்படும் மாற்றங்கள், சில எழுத்து வடிவங்களில் மாற்றங்களை அவசியமாக்கின. அச்சு இயந்திரத்தின் வருகையே தமிழ் எழுத்துக்கள் ஒருமைப்பட்ட நிலையான, தராதரமான வடிவத்தை, அடைவதைச் சாத்தியமாக்கியது என்றால் மிகையாகாது. எழுத்துக்களின் உருவ மாறுதல்கள் ஒருபுறமிருக்கத், தமிழில் எகர-ஏகார, ஒகர-ஓகார வித்தியாசங்களைக் காட்டுமாறு இரட்டைக்கொம்பும் ()ே மெய்யெழுத்துக் களைக் குறிக்கப் புள்ளியும் சில நூற்றாண்டுகள் முன்னமே புகுத்தப்பட்டன. (இவற்றைப் புகுத்திய பெருமை வீரமா முனிவர் என்கிற ஐரோப்பிய பாதிரியாருக்கு உரியது என்பதிற் கூட இன்று சர்ச்சை எழுந்துள்ளது. தமிழிற் புள்ளி முன்பு இருந்து பின்பு இல்லாது போயிற்று என்ற வாதம் உண்மையானதே. ஆயினும், அதை மறுபடி புகுத் தும் அவசியம் ஏற்பட்டமைக்கு முகங்கெடுக்கச் சிலர்
த-3

Page 21
38
தயங்குவதும் தமிழின் 'தன்னிறைவு, பற்றிய ஒரு பிரமை சார்ந்ததே.)
தமிழ் எழுத்துக்களின் அடிப்படையான வடிவங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு, அவ்வடிவங்களில் மாற்றங்கள் செய்யும் அவசியம், ஒருபுறம், அச்சுத் தொழிலுடன் தொடர்புடையோரால் உணரப்பட்டது. மறுபுறம், தமிழ் எழுத்து வடிங்களில் உள்ள ஒரு சீரின்மை பற்றிய பிரச்சினை ஈ.வே, ராமசாமிநாயக்கராற் பிரசித்தம் பெற்றது. ஆயினும் தீர்வுகட்கான தேடல் ‘தமிழ் எழுத்து வடிவங்களின், எல்லைகளைத் தாண்டிப் போவது விரும்பப்படவில்லை. பழைய சுதேசமித்திரன் அல்லது "தினமணி கதிர் சஞ்சிகைகளில் கி,கீ, போன்று இகர, ஈகர வரிசை எழுத்துக்களில் ‘விசிறிகளை அவை சார்ந்த மெய்யெழுத்துக்களினின்று விலக்கி அச்சிடும் முயற்சி சில ஆண்டுகள் தொடர்ந்து வந்தது என நினைவு. இது அச்சுக் கோப்பதை எளிதாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப் பட்டது. இதன் எளிமையும் சிக்கனமும், எழுத்துவடிவங் களில் ஏற்பட்ட சிறு மாற்றத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளச் செய்யத் தவறிவிட்டன. (கடந்த 10-20 ஆண்டு களுள் மலையாள மொழியில் உகர, ஊகார வரிசை எழுத் துக்களை ஒரு சீராக்கவும் அச்சு முறையை எளிமைப்படுத் தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிபெற்றமை நம் நினைவிலிருத்தத்தக்கது.) தமிழ் எழுத்துச் சீர்திருத்தத் முன்னோடியாக விளங்கிய திராவிடர் இயக்கம், தன் சீர்திருத்த முயற்சிகளை ஆ,ஓ,ஓ,ஐ வரிசைகட்கு மட்டுப் வரையறைப்படுத்திக் கொண்டது. ஆ-வரிசையில் எல்லா எழுத்துக்களும் கா.ணா என்றவாறும், ஒ ஓ, வரிசையில் முறையே கொ. னொ. கோ.னோ என்றவாறும், ஐ வரிசையில் கை.னை என்றவாறும் எழுதப்படவும், ஆஅா என்றவாறு எழுதப்படவும் வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதைவிட, ஐ, ஒள வரிசை எழுத்துக் கள் முடிந்தவரை அய், அவ் என்றவாறு எழுதப்பட

39
வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. (ஈ.வே. ரா, அய்யா என்று 'கழகத் தொண்டர்களால் அழைக்கப் பட்டதும் ஒளவை அவ்வையானதும் திராவிடக் கழகத் தின் செல்வாக்குக்குட்பட்ட வட்டாரங்களுள் முடங்கிவிட் டது.) 1970களின் நடுப்பகுதியில் அ.இ.அ.தி மு.க, ஆட்சி வந்து ஈ.வே. ரா. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தக்கனவை நனவாக்கியபோது, தமிழின் எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினை வேறொரு பரிமாணத்தை எட்டிவிட்டது. அதற்குப் போவதற்கு முன்பு, இந்தப் பகுத்தறிவுப் பாசறையினர் தொடத்தவறிய ஒர் அம்சத்தையும் நாம் கவனிப்பது பொருத்தமானது,
தமிழ் எழுத்துக்களில் ஒருசீரின்மை முக்கிய பிரச்சினை யாக இருப்பது உண்மையில் உகர, ஊகார வரிசைகளி லேயே கு, சு, து, கூ, டூ, சூ, தூ ஆகிய எழுத்துக்களைக் கவனித்தால் உ, ஊ வரிசைகளை உருவாக்க முறையே மூன்று அல்லது நான்கு வேறுபட்ட குறிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். இங்கே உள்ள பிரச்சினை சிறிது சிக்கலானது. தமிழில் உகர வரிசையிற் பயன்படும் மூன்று அடிப்படையான குறிகளில் எந்த ஒன்றையுமோ, இரண்டையுமோ மட்டுமே முழு எழுத்துக்கட்கும் பயன் படுத்துவது சாத்தியம் இல்லை. குறிகளின் வடிவங்களை ஏற்றுக்கொண்டால், மூன்றுமே அவசியமாகின்றன. எனவே உகர, ஊகார வரிசைகளை ஒருமைப்படுத்துவதா னாற் தமிழ் எழுத்துவடிவங்கட்குப் புறம்பான குறிகள் அவசியமாகின்றன. இவை புதிதாகப் புனையப்படுவதால் குழப்பம் நேரிடும் என்ற நியாயமான (ஆனால் நிரந்தர மாகவே ஏற்றுக்கொள்ள அவசியமற்ற) வாதம் எழலாம். ஆனாற் தமிழில் ஏற்கெனவே புகுந்துவிட்ட வட எழுத்துக் களுடன் பயன்படும் குறிகளான ", 9 ஆகியன (ஸ" ஸகு போன்று) எழுதப்படிக்கத் தெரிந்த பெரும்பாலான தமிழர் கட்கு மிகவும் பரிச்சயமானவை. இவற்றைச் சகல தமிழ் மெய் எழுத்துக்களுடனும் பயன்படுத்துவதில் ஒருவிதமான

Page 22
40
சிக்கலும் ஏற்பட இடமில்லை. இவ்வாறான கருத்துக்கள் 1974 அளவில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இவற்றை முன்வைத்தோரிற் சிலர் தமிழில் அச்சு, தட்டெழுத்துப் பிரச்சினைகளைத்தீர்க்கும் நோக்குடனேயே இவற்றை வலியுறுத்தினர். இதே தீர்வைச் சிறிது பொதுமைப்படுத்தி னால் முழு உயிரெழுத்து வரிசையும் அ, அா.அெள என்ற விதமாக அமைக்கப்படலாம் என்ற கருத்து ஒரு சந்தர்ப் பத்தில் மட்டுமே முன்வைக்கப்பட்டது. இவ்வாறான சீர்திருத்தம் குறுகிய காலத்திற் சில பிரச்சினைகளை உருவாக்குமேயெனினும் சிறிது நீண்டகாலத்திற் தமிழ் எழுத்து வடிவங்களில் ஒரு சீரான தன்மையையும் அச்சுத் துறையில் சிக்கனத்தையும் வினைத் திறமையையும் கொண்டு வருவதோடு தமிழ் எழுத்துக்களைப் பயில எளியனவாக்கவும் உதவும் என்பது என் எண்ணம். ஆயினும், நம்மிடையே கவனமாகப் பேணிவரப்படும் மனத்தடைகள், மலையாள மொழியில் மேற்கொள்ளப் பட்டவாறான சீர்திருத்தத்தைத் தமிழில் செய்வதற்கு, மேலும் நீண்டகாலத்துக்கு இடையூறாகவே இருக்கக் கூடும்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினை ஒருபுற மிருக்க, தமிழில் எழுதுவது தொடர்பாகவும் அச்சு/தட் டச்சு முறைகள் தொடர்பாகவும் உள்ள நடைமுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகள் தேடுவதில் உள்ள அக்கறை. யின்மை, தமிழின் ‘தன்னிறைவு பற்றிய சுயதிருப்தி யுடைய போக்குகளால், மேலும் தொடரவே செய்கிறது. தமிழை நவீனமாக்கல் என்பது இவ்வாறான சுயதிருப்தி, அயல்மொழிகள் பற்றிய மனத்தடைகள், புதிய தீர்வு களைத் தேடவும் முழுமையாக ஆராயவும் தயக்கம் போன்ற எதிர்ப்புக்களைத் சமாளிக்காமல் சாத்திய
மாகாது.
அடுத்ததாகத் தமிழில் புதிய எழுத்துகட்கான தேவை பற்றிக் கவனிப்போம். தமிழுக்குப் புதிய எழுத்துக்கள்

41
அவசியமா என்று வரையறுக்கப்பட்டவிதமாகப் பிரச் சினையை அணுகுவதைவிடத் தமிழ் "எழுத்துமுறை சமகாலத் தமிழின் பிரச்சினை சட்கு முகங்கொடுக்கப் போதுமானதா? இல்லையெனின் தமிழின் தேவைகட்குத் தக்க தீர்வுகள் எவை? அவற்றின் நிறைகுறைகளென்ன?” என்றவாறு பிரச்சினையை அணுகுவது பயனுள்ளது.
முதலாவதாக, நவீன சூழலில் அயல்மொழிக் கலாச்சாரத் தாக்கங்கட்கு முகங்கொடுக்கும் தேவை தென் ஆசிய மொழிகள் பலவற்றுக்கும் உரியது என்றாலும் தமிழின் பிரச்சினைகள் மற்றைய மொழி களின் பிரச்சினைகளை விடச் சில வகைகளில் மிகவும் பெரியது என்பதை நினைவிலிருத்துவது பயனுள்ளது. இதன் விவரங்கட்குப் பின்னர் வருவோம்.
இரண்டாவதாகத், தமிழில் உள்ள பிரச்சினை அயல் மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதிலும் அயல் மொழிப் பெயர்களைச் சரியாகத் தமிழில் உச்சரிப்பதினை ஒட்டியும் ஏற்பட்டது அல்ல தமிழ் மொழி (பேச்சு மொழியிற் பெரும் அளவிலும் எழுத்திற் சிறு அளவிலும்) இன்று பல அயல்மொழிச் சொற்களைத் தன் மரபுக்கு முரணான முறையிற் தன்னுள் வாங்கிக்கொண்டு விட்டது. எனவே தமிழில் முன்பு ஒரே ஒவியனின் மாற்றொலிகளாக இருந்த ஒலிகள், இன்று, தனி ஒலியன் களாக உயர்ந்துவிட்டன (க என்ற ஒலியன் மரபின்படி காகங்கள் என்ற சொல்லில் K, h, g என்ற மூன்று ஒலிகட் கும் நெருங்கிய பெறுமானத்தைக் கொள்கிறது. மரபின் படி, இந்த ஒலிகள் ‘க ஒரு சொல்லில் அமையும் இடத் திற்கு ஏற்ப நிருணயிக்கப்படுகின்றன. நவீன பேச்சுத் தமிழிற் புகுந்துள்ள சில சொற்கள் இம்மூன்று ஒலிகளது அந்தஸ்தையும் தனித்தனி ஒலியன்கட்குரியதாக உயர்த்தி விட்ட காரணத்தாற், க என்ற எழுத்து அந்த வேறுபாடு களைக் குறிக்கப் போதாததாகிவிட்டது.) இவற்றைவிட,

Page 23
42
மரபுத் தமிழுக்கு முற்றிலும் அந்நியமான ஒலிகள் (F, Z ஷ போன்று) தமிழின் ஒரு பகுதி ஆகிவிட்டன. மரபுவழி உயிர் ஒலியன்கள் பன்னிரண்டுக்கும் மேலாகத் தமிழில் மேலும் சில புகுந்துள்ளன. இவை பற்றியும் பின்னர்
கவனிப்போம்.
மூன்றாவதாக, வேறுமொழிகள் தம் பிரச்சினை களைத் தீர்ப்பதற்குக் கையாண்ட முறைகளை நாம் வழிகாட்டல்களாகக் கருதலாமே ஒழிய அங்கு கையாளப் பட்ட தீர்வுகளை அப்படியே தமிழுக்கும் பிரயோகிப்பது அவசியமும் இல்லை; அது சாத்தியமும் இல்லை. அதே சமயம், தமிழின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தேடும் தீர்வு தமிழுக்கும் அதன் மரபுக்கும் உள்ளேயே அமைய வேண்டும் என்ற விதமாக வரையறுக் காமற், சமுதாய நடைமுறைக்கு உரிய மதிப்புக் கொடுப்பது விரும்பத்தக்கது.
இறுதியாகத் தீர்வு எனும்போது, முற்றிலும் திருப்தி கரமான ஒரு தீர்வு சாத்தியமில்லை என்பது கவனிக்கத் தக்கது. சிறு சீர்திருத்தங்களும் சில்லரை மாற்றங்களும் குறுகிய காலத்திற் சில பிரச்சினைகளைத் தவிர்க்க மிகவும் பயனுள்ளன. பாரியமாற்றங்கள், நீண்டகாலக் கண்ணோட்டத்தில், எவ்வளவு சிறந்தனவாயினும், குறுகிய காலத்திற் சில நெருக்கடிகட்கு வழிகோலுவன. எனவே தீர்வுகள் குறுகியகாலப் பிரச்சினைகளையும் நீண்டகாலத் தேவைகளையும் கணிப்பில் கொண்டிருப்பது விரும்பத்தக்கது. ஒன்றுக்கு மேற்பட்ட, பெரிதும் முரணான தோற்றமுடைய தீர்வுகள் சாத்தியமாகலாம் அவை சிலசமயம் ஒப்பிடத்தக்க அளவு நன்மையுடையன வாகவும் அமையலாம். தீர்வுகளைத் தேடும்போது பயன்படுத்தும் வழிகாட்டல்களும், விதிகளும் விறைப் பற்ற தன்மையினவாயும் திறந்த மனத்துடன் தேடுதற்குத் தடையாக இல்லாதவாறும் அமைவது நல்லது.

43
ஆயினுந் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி உடன்பாடான கருத்துடையோர் மத்தியிற்கூட மேற்கூறிய விஷயங்களிற் தெளிவீனங்களும் தமிழுட் புகுந்துவிட்ட அயல்மொழிச் சொற்களைத் தமிழ் சொற் களாகக் கருதுவதிற் தயக்கமும், தமிழின் பிரச்சினையை அயல்மொழிச் சொற்களின் பிரச்சினையாகக் கருதும் போக்குங் காணப்படுகின்றன.
தமிழிற் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற் புகுந்த அயல்மொழிச் சொற்கள் பெரும்பர்லும் ஆங்கில வாயிலாகவே வந்தவை. இவை இலங்கையிலும் தென் இந்தியாவிலும் இருந்த கற்றோர் பேசும் ஆங்கில வடிவிற் பேச்சுத் தமிழில் நிலையான இடம்பெறத் தொடங்கின. முன்னைய காலங்களில் போன்று ‘தமிழ்ப்படுத்தும்" போக்கு (ஆசுப்பத்திரி, விசுக்கோத்து, பிரக்கிராசி போத்தல் போன்று) மந்தமடைந்து, முன்பு தமிழ்ப்படுத் தப்பட்ட சில சொற்கள்கூட, இன்று நமக்குப் பரிச்சய மான ஆங்கில உச்சரிப்பிலேயே பயிலப்படுகின்றன. புதிய சொற்களை எழுத்திற் பயன்படுத்தும்போது, முக்கியமாக ஆக்க இலக்கியத்தில், ஆங்கில எழுத்து வடிவிலே சொற்கள் எழுதப்படுவதை இன்று அதிகமாகக் காண லாம். இவை யாவும், தமிழில் இப்புதிய சொற்கள் பெற்றுள்ள நிரந்தரமான இடத்தையும், அதன் விளைவாகத் தமிழிற் புதிய ஒலியன்கள் புகுந்ததோடு, பழைய ஒலியன்கட்கு இருந்த மாற்றொலிகள், ஒலியன் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டமையையும் உணர்த்துவன. எனினும், ஆக்க இலக்கியம் நீங்கலாக, மற்றைய எழுத்து முயற்சிகளில் (தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான கடிதங் கண்ள விலக்கின்) அயல்மொழியினின்று புகுந்த சொற்கள் முடிந்தவரை தவிர்க்கப்படுகின்றன. அயல்மொழிச் சொற் களின் இடத்திற் பரிச்சயமற்ற தமிழ்க் கலைச்சொற் களோ அல்லது அண்ணளவான மாற்றுத் தமிழ்ச் சொற்களோ பயன்படுத்தப்படுகின்றன. அவை தவறாக

Page 24
44
விளங்கிக் கொள்ளப்படும் அபாயம் உண்டென்று கருதப் படும் இடத்தில் அடைப்புகட்குள் (ஆங்கில) மூலச் சொற்கள் தரப்படுகின்றன. இவை யாவுமே தமிழின் பேச்சுக்கும் எழுத்துக்குமுள்ள இடைவெளியை மேலும் விரிக்கின்றன என்பதையும் இதன் விளைவுகள் தமிழின் வளர்ச்சிக்குப் பாதகமாக அமையலாம் என்பதையும் நாம் கவனிப்பதாகத் தெரியவில்லை. நம்மளவிற், தமிழுட் புகுந்துவிட்ட அயல்மொழிச் சொற்களை மரபுத் தமிழாக்கும் விதிகள் இன்றைய சூழலில் மிகவும் போதாதவை என்று நடைமுறையில் ஏற்றுக் கொண்டா யிற்று. இன்றைய எழுத்து முறையின் வரையறைகட்குள் அவற்றுக்குப் புதிய மாற்றுவிதிகள் எதுவும் பொருத்த மாக அமைக்க இயலாது என்றுங் காணுகிறோம். எனவே தமிழிற் பாரிய எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது மட்டுமே ஓர் உரிய மாற்றுவழியாகிவிடுகிறது. அது சாத்தியமில்லாது போகுமிடத்து அயல்மொழியிலிருந்து வந்து தமிழ் எழுத்திற் சரிவரக் குறிக்க இயலாதுள்ள சொற்களை அந்நியமாகவே கருதும் நிர்ப்பந்தம்எழுத்துத் தமிழுக்கு ஏற்படுகிறது.
பிற தென்னாசிய மொழிகளில், ஆங்கிலவாயிலாக வந்த சொற்களைத் தம்வசமாக்குவதில் பிரச்சினை இல்லாமல் போனதில்லை. ஆயினும் தமிழின் பிரச்சினை அவற்றின் பிரச்சினைகளை விடச் சில வழிகளிற் பெரியது; இந்தியாவின் சகல பெரு மொழிகட்கும் சமஸ்கிருதத்திற் குரிய எழுத்து முறையை ஒட்டியே எழுத்து முறை அமைந்து உள்ளது. எனவே, அவற்றில் k-g, c (ச)- ர் (ஜ), t-d, p-b போன்ற ஒலிப்பிலா ஒலிகட்கும், ஒலிப்பு ஒலிகட்கும் வேறுபாடுகளைத் தனித்தனி எழுத்துக்கள் மூலம் காட்டமுடிகிறது. மரபுத் தமிழுக்கு இத்தேவை இருக்கவில்லை. சமகாலத் தமிழ்ப் பேச்சுக்கு இது அவசியமாகிவிட்டது. எனவே மரபுத் தமிழுக்குப் போதிய தாக இருந்த எழுத்துமுறை, சமகாலத் தமிழுக்குப் போதாததாகிவிட்டது. பிற தென்னாசிய மொழிகளிற்

45
புதிதாகப் புகுந்த ஒலிகளான f, 2 ஆகியன இரண்டுமிே ஒலியன் அந்தஸ்தைப் பெற்றன . இவற்றுள் f முன்ன:ேயே உருது மொழிக்குப் பரிச்சயமாக இருந்தது. இந்தியில் ப ஸ ஆகிய எழுத்துக்களில் மாற்றங்கள் செய்து இந்தி ஒலியன்கள் குறிக்கிறார்கள். சிங்களத்தில் z ஒசையின் முக்கியத்துவம் போதாமையால் அதன் ஒலியன் அந்தஸ்த்து இன்னும் முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. ஆனால் f ஐக் குறிக்க முதலில் 'ப' வுக்குரிய எழுத்துடன் f எனும் ஆங்கில எழுத்து பிரயோகிக்கப்பட்டு இன்று 3 ஐச் சரித்து எழுதினாற் போல் ஓர் எழுத்து அதன் இடத்தைப் பெற்றுவிட்டது. பெருவாரியான திென் ஆசிய மொழிகளில் நவீன மெய் ஒலியன்களைக் குறிக்க அதிகபட்சம் இரண்டு புதிய எழுத்துக்களே அவசிய மாகின. அவைகூடப் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவாறு பெருவாரியான அளவிற் சொற்களில் தோன்றுவதில்லை என்பதாற் புதிய எழுத்துக்களைப் புகுத்தாமலே அயல்மொழிச் சொற்களைத் தம்வசமாக்கு வது எளிதாயிற்று. தமிழில் இவ்வாறு புகுந்த ஒலியன் களின் மொத்தத் தொகை மரபுத் தமிழினதிலும் 10 அதிகம். கிரந்த எழுத்துக்களான ஸ ஷ, ஜ, ஹ உள்ளமை யால் 6 புதிய எழுத்துக்கள் அவசியமாகின்றன. முக்கிய மான பிரச்சினை யாதெனில், தமிழ் வல்லின மெய் எழுத்துக்களான க, ச, ட, த, ப ஆகியன முன்பு குறித்த 12 ஒலிகள் இன்று கிட்டத்தட்ட தனித்தனி ஒலியன் களாகிவிட்டன. எனவே எந்தச் சீர்திருத்தமும் இச்சிக்க லுக்கு முகங்கொடுத்தே தீரவேண்டியுள்ளது. பிற தென் ஆசிய மொழிகளில் அயல்மொழிச் சொற்களைக் குறிக்கும் பிரச்சினை தமிழின் பிரச்சினையைவிட இந்தவகையில் ள்ளியதாகிவிட்டதால் அவர்கள் செய்யாததை நாம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியே அர்த்தமற்றதாகி விடுகிறது.
ஆங்கிலவாயிலாக 3 சோடி (குறில், நெடில்) உயிர்' ஒலியன்கள் பேச்சுத் தமிழில் இன்று இடம்பெற்று

Page 25
  

Page 26
48
உகந்தனவா அல்லது புதிய எழுத்துக்கள் உகந்தனவா என்பதற்கு உரிய விடை, புதிய எழுத்துக்களைப் புகுத்து வதாற் குறுகிய காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் அவற்றின் நீண்டகால நன்மைகளைவிடப் பாரியவையா என்பதிற் தங்கியுள்ளது. ஒலி அடையாளங்கள் சிக்கல்களே அற்றவை அல்ல. அவை எழுதவும் வாசிக்கவும் சிரமங் களை ஏற்படுத்துவன என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். மேலும் கிரந்த எழுத்துக்களைப் புகுத்தலாம் என்ற கருத்து உகந்ததல்ல என்பதற்கான வாதங்களே பிறமொழி எழுத்துக்களைப் புகுத்துவது பற்றியும் செல்லும் என்று சிலர் எண்ணுகிறார்கள். தமிழுக்கும் கிரந்த எழுத்துகட்கும் உள்ள உறவைத் தமிழுக்கும் தமிழர்கட்கும் பரிச்சயமான அயல்மொழி எழுத்துக்கட் கும் உள்ள உறவுடன் ஒப்பிட முடியாது. குறிப்பாக , ஆங்கில எழுத்துக்கள் இன்று எழுதப் படிக்கத் தெரிந்த தமிழர் பெரும்பாலோருக்குப் பரிச்சயமானவை. 1970 களில் F என்ற எழுத்தை f ஒலியைக் குறிக்க தென்னிந்திய சஞ்சிகைகள் சில பயன்படுத்தின. இதனால் எதுவிதமான குழப்பமும் ஏற்படவில்லை. 1974இல் நான் ஆங்கில (ரோமன்) எழுத்துக்கள் சிலவற்றைப் பயன்படுத்தி அயல் மொழிப் பெயர்களைக் குறிக்கும் முறை ஒன்றை முன் வைத்தபோது அதன் பிரயோகம் எந்தவிதமான குழப்பத்தையோ சிரமத்தையோ ஏற்படுத்தியதாக யாருமே எதிர்வாதங்களை முன் வைக்கவில்லை. எதிரான கருத்துக்கள் யாவுமே அயல்மொழி எழுத்துக்களைக் கடன் வாங்குவதற்கும் அயல்மொழி ஒலிகளை நாம் தமிழில் குறிக்க வேண்டிய தேவைக்கும் எதிரான குரல் களாகவே இருந்தன. புதிய (ரோமன்) எழுத்துக்களை விளங்கிக் கொள்வதற்கு எந்தவிதமான விளக்கக் குறிப்பு களின் உதவியும் இல்லாமலே எதுவித சிரமமுமின்றி அயல்மொழிச் சொற்களைத் திருப்திகரமாக, கட்டு ரையைப் படித்த எல்லோராலும், உச்சரிக்க முடிந்தது. எனவே கிரந்த எழுத்துகட்கு எதிரான வாதங்களை

49
ரோமன் எழுத்துகட்கு எதிராகவும் பாவிப்பது தவறாகி விடுகிறது. அதே சமயம், வேறு ஒருவரால் முன்வைக்கப் பட்ட ஒலி அடையாளங்களை விளக்கக் குறிப்புகளின் உதவியின்றி யாராலும் சரியாகப் பயன்படுத்த இயல வில்லை. •
தமிழில் சில புதிய எழுத்துக்களைப் புகுத்து தென் மூலம் புதிய சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நானும் பேராசிரியர் தி. கந்தையாவும் சேர்ந்து எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந் தோம். ஆயினும், இவ்வாறான பிரச்சினைகள், ஒலி அடையாளங்களால் முற்றாகவே தவிர்க்கக் கூடியன அல்ல. அடையாளங்கள் இவற்றுக்கும் மேலாகப் பிற பெரிய பிரச்சினைகளையும் உருவாக்குவன என்றும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். தமிழின் பிரச்சினைக்குத் தீர்வு ரோமன் எழுத்துக்களைக் கடன் வாங்குவது மட்டுமே என்பது என் நிலைப்பாடல்ல. ஆயினும் அது சாத்தியமான ஒரு தீர்வு என்பது என் உறுதியான அபிப்பிராயம். முற்றிலும் புதிய எழுத்துக்களை உருவாக்குவதைவிடப், பயனுள்ள முறையில் அயல்மொழி எழுத்துக்களை இரவல் வாங்குவது பொருந்தும் என்பதும் என் அபிப்பிராயம். புதிதாய் நிர்மாணிக்கப்படும் எழுத்துக்களோ ஒலி அடையாளங்களோ எவ்விதமான தமிழ் எழுத்துச் சேர்க்கைகளோ கொண்டு தமிழ் எழுத் தின் தமிழ்த் தன்மையைப் பேணும் முயற்சிகள் அர்த்த மற்ற சடங்குத் தன்மையுடையன.
என்னுடைய கருத்தில், நீண்டகாலக் கண்ணோட்டத் தில் தென்னாசிய மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு எழுத்துமுறை வகுக்கப்படுவது மிகவும் பயனுள்ளது. ரோமன் எழுத்துக்களோ வேறெந்த ஐரோப்பிய எழுத்து முறையோ தனியே இத்தேவையை நிறைவு செய்ய முடியாது. ஆயினும் ரோமன் எழுத்துக்களின் அடிப்படை யான எளிமை காரணமாக, அவை தென்னாசியப்

Page 27
50
பொது எழுத்து முறைக்குக் கணிசமான அளவில் உதவ இயலுமாயிருக்கும். இது ஒரு நீண்ட காலத் தீர்வு எனவே உடனடியான பிரச்சினைக்குரிய தீர்வு பற்றிக் கவனம் செலுத்துவது அதிகம் பயனுள்ளது என்று நினைக்கிறேன்.
அயல்மொழிகள் பற்றி நம்மிடையே நிலவும் அச்சங் கட்கும் பகைமைக்கும் மேலும் இடங்கொடுக்குமாறான முறையிலோ அவற்றின் பிரதிநிதிகள் எழுப்பும் எதிர்ப்பு களை நேரடியாகவே எதிர்க்கத் தயங்கி மாற்று வழி களிலோ தீர்வுகளைத் தேடுவதன் மூலம் நாம் தமிழின் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் அவசியத்தினின்று தப்பி யோடவே முயல்வோமாவோம்.
பிறமொழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய சீர்திருத்தங்கள் பற்றி நம்மிடையே உள்ள அறியா மையைத் தளமாக்கிக் கொண்டு தமிழின் பிரச்சினைகளுக் கான தீர்லை ஒத்திப்போடுவதற்கான முயற்சிகள் பற்றி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
4
தமிழிற் சீர்திருத்தங்களை வரவேற்போரிற் பலர் அவற்றை அரைமனதுடனே வரவேற்கிறார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இதற்கான காரணங்கள் தமிழ் மொழி பற்றிய சில தவறான கருத்துக்களுடன் தொடர்புடையன என்று சந்தேகிக்கிறேன். தமிழை நவீனமயமாக்கல் அதன் தூய்மையையும் தனித்துவத்தை யும் சிதைத்துவிடும் என்ற கருத்து நவீனமயமாதலை எதிர்ப்போரை மட்டுமன்றி ஆதரிப்போரையும் பாதித் திருக்கிறது என்பது முற்றிலும் நியாயமற்றதல்ல. செந்தமிழ், கன்னித்தமிழ் என்றவிதமான கருத்துக்கள் மொழி வளர்ச்சியின் வரலாற்று விதிகளை அலட்சியம் செய்வன. இக்கருத்துக்கள் சார்ந்த மனோபாவமே தமிழ்

51
எழுத்து முறையின் தனித் தமிழ்த்தன்மை பற்றிய பிரமை யையும் தமிழின் குறைபாடுகளைக் கூட அதன் சிறப்புக் களாகக் காணும் குருட்டுத் தனத்தையும் தாங்கி நிற்கிறது.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் அவசியமா என்ற கேள்வி எழும்போது அதைத் தட்டிக் கழிப்பதற்குக் காட்டப்படும் நியாயங்கள் தமிழுக்கு அவசியமான மாற்றங்களை ஒத்த மாற்றங்கள் பிறமொழிகளில் மேற் கொள்ளப்படவில்லை என்ற பாங்கிலேயே அமைகின்றன. இவ்வாறான வாதங்கள் சரியானவையும் அல்ல, நேர்மை யானவையும் அல்ல. தமிழுக்கு அவசியமான எழுத்துச் சீர் திருத்தம் பலவேறு தேவைகளைத் தழுவியது. அதை மேற் கொள்வதன் அவசியம் தமிழின் தேவை பற்றியதே அல்லாமல் பிற மொழிகளின் தேவைகள் பற்றியது அல்ல என்பதை முதலில் நாம் உணரவேண்டும். பிறமொழி களின் அனுபவங்களை நாம் பயன்படுத்துவது தமிழின் பிரச்சினைகட்கு நாம் காணும் தீர்வுகளைச் சிறப்பிக்க உதவும்.
தமிழிற் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள் பல அயல் மொழி மூலத்தை நெருங்கிய வடிவிலேயே இன்று புழக்கத் தில் உள்ளன. அவற்றுட் பலவற்றுக்கு மரபுவழியிலான தமிழர்க் கலையோ அல்லது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் செய்தது போன்று தமிழில் எழுதக்கூடிய விதமான வடிவங்களையோ (குசினி, கக்கூசு, கோடு, ஆசுப்பத்திரி ஆகியன போன்று) வழங்க இயலாது. ஏனெனில் பேச்சுத் தமிழ் சில புதிய ஒலிகளையும் ஒலி வேறுபாடுகளையும் தன்னுள் ஒரு பகுதியாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினை பிறமொழிகட்கு இல்லையா, ஏன் தமிழில் மாத்திரம் இவ்வாறான பிரச்சினைக்கு எழுத்துச் சீர்திருத்தம் அவசியம் என்ற வாதம் மிகவும் நைந்துபோன ஒன்று. தமிழில் மெய்யெழுத்துக்கள் தொடர்பான பிரச்சினை போன்று பிற இந்திய மொழிகளில் இல்லை என்று முன்பு

Page 28
52
சுட்டிக்காட்டியிருந்தேன். உயியெழுத்துக்களைப் பொறுத் தவரை பிரச்சினை அவ்வளவு உக்கிரமான ஒன்றல்லவா யிலும் ஒரு முழுமையான சீர்திருத்தம், முடிந்தவரை சமகாலக் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்திக்கும்படி அமைவது பயனுள்ளது. அதுமட்டுமன்றி, அது எதிர் காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகட்கும் முகங் கொடுக்கு மாறான முறையில் அமைவது சிறப்பாயிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
தமிழுக்குப் பாரிய எழுத்துச் சீர்திருத்தம் அவசிய மில்லை என்று வாதிப்போர் சிலர் அடிக்கடி காட்டும் உதாரணம் யப்பானிய மொழி, யப்பானிய எழுத்தில் ர மட்டுமே உள்ளது. லlளlழ எதுவுமே கிடையாது. ர/ல வேறுபாட்டை அவர்கள் கவனிப்பதில்லை. "பாலகுரு'வை அவர்கள் 'பாரகுரு" என்றே எழுதி வாசிப்பார்கள் இங்கே நாம் கவனிக்கத் தவறுவது ஏதென்றால், யப்பானியப் பேச்சு மொழி ர/ல வேறுபாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதே. என்று யப்பானியப் பேச்சு மொழியில் அந்த வேறுபாடு முக்கியத்துவம் பெற்று இரண்டு ஒலிகளும் வேறுபடுத்தப்படுவது அவசியம் என நடைமுறையில் எப்போது நிறுவப்படுகிறதோ அப்போது அவர்கள் "ல"வை எழுத்தில் குறிப்பது பற்றிச் சிந்திப்பார் கள். அதுவரை அவர்கட்கு அந்தப் பிரச்சினை இல்லை. நம் நிலையோ வேறு. நம் பேச்சு மொழியை எழுத்திற் சரிவரக் காட்ட இயலாத நிலை வர வர மோசமாகி வருகிறது. பேச்சு மொழியை ஏதோ உண்மையான தமிழ்" இல்லாத ஒன்றாகப் பாவனை செய்கிறோமே ஒழிய, பரிகாரம் தேட முயல்வதாக இல்லை.
சீர்திருத்தம் என்பது புதிய எழுத்துக்களைப் புகுத்து வது மட்டுமல்ல, அவசியமற்ற எழுத்துக்களை அகற்று வதும் ஆகும். இன்றைய தமிழில் பேச்சிலும் எழுத்திலும் ந-ன வேறுபாடு முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இரண்டு எழுத்துக்களில் ஒன்றை ("ன"வை) மட்டுமே

53
வைத்துக் கொண்டாற் போதும் என்ற நிலை வந்து விட்டது. எழுத்துக்கள் வழக்கொழிந்து போவது ஒன்றும் புதிய விஷயமல்ல. சிங்களத்தில் இன்று சில எழுத்து வடிவங்களை வெகு சிலரே அறிவார்கள். அவை பல சமயம் அரிச்சுவடியில் கூடக் காட்டப்படுவதில்லை.
தமிழ் எழுத்து வடிவங்கள் தமிழர் கண்டுபிடித்தவை" அல்ல. இவை பிராமி எழுத்து வடிவங்களைத் தழுவி உருவானவை. காலப்போக்கில் எழுதும் உபகரணங்களின் தன்மையும் மொழியின் சமுதாயத் தேவைகளும் அவற்றில் படிப்படியான சிறு மாற்றங்களையோ அல்லது கணிச மான மாற்றங்களையோ புகுத்தின. பிராமி எழுத்து முறை இந்தியாவுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட எழுத்துமுறையைத் தழுவி உருவானது என்ற கருத்துக்கும் ஆதாரங்கள் பல உள்ளன. இந்த இடத்தில் நமக்கு இவ்வரலாற்று நுணுக்கங்களைவிடத் தமிழ் எழுத்துமுறை நீண்டகால வளர்ச்சியையும் மாற்றத்தையும் தன்னகத்தே உடையது என்ற உண்மையே முக்கியமானது.
உலகின் எழுத்து முறைகளை எடுத்துக் கொண்டால், அவை சித்திர எழுத்து முறையிற் தொடங்கி இன்று வழக்கில் உள்ள மூன்று முக்கிய எழுத்து வகைகளிற் வந்து முடிந்துள்ளன. ஒன்று ஐரோப்பிய மொழிகளின் எழுத்து வழக்கிலுள்ள முறைகளான ரோமன் எழுத்துமுறை (ஆங்கிலத்தில் பயன்படுவது), சிரிலிக் எழுத்துமுறை (ரஷ்ய மொழியில் பயன்படுவது), கிரேக்க எழுத்துமுறை ஆகியன வும் அரபு, ஹீப்று எழுத்து முறைகளையும் உள்ளடக் குவது. இங்கு உயிர், மெய் ஒலியன்கட்குத் தனித்தனி எழுத்துக்கள் உள்ளன.
இரண்டாவது அசை எழுத்து வகை எனலாம். அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தும் உருது மொழிபோக,
●ー4

Page 29
54
இந்திய மொழிகள் யாவும் இவ்வாறான, எழுத்து வகைகளையே பயன்படுத்துவன. இதில் உயிர், மெய், ஒலியன்கட்குத் தனி எழுத்துக்கள் போக உயிர்மெய் எழுத்துக்கள் தனித்தனி வடிவங்களால் குறிக்கப்படு கின்றன. இதைவிடச் சில மொழிகளிற் கூட்டெழுத்துக் களும் உள்ளன. (தமிழிற் கூட நாம் பூஜீ, க்ஷ ஆகியவற் றுக்குக் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம்). இந்தியாவில் வளர்ந்த இம்முறை பரவி தாய், காம்போஜ மொழிகளில் இன்றும் வழக்கில் உள்ளது. வியற்னாமிய, இந்தோனீசிய மொழிகளில் இருந்து வந்த மரபுவழி எழுத்து வடிவங்கள் இன்று இல்லை. மாறாக ரோமன் எழுத்து முறையைத் தழுவியே நவீன எழுத்து முறைகள் அமைந்துள்ளன. மூன்றாவதாகச் சித்திர எழுத்துமுறை சீன, கொரிய, யப்பானிய மொழிகளில் இன்னும் பயன்படு கிறது. யப்பானிய மொழிக்கு மரபுவழிச் சீன எழுத்து முறையும், எளிமைப்படுத்தப்பட்ட ஒரு யப்பானிய மரபு வழி எழுத்து முறையும் அதைவிட அண்மையிற் வகுக்கப் பட்ட நவீன எழுத்து முறை (லத்தின் எழுத்து முறையை ஒத்தது) ஒன்றும் உள்ளன. யப்பானிய பேச்சொலிகளின் தன்மையும், யப்பானிய மொழியிற். பேச்சு மொழியில் உள்ள பரவலான ஒருமையும் நவீன எழுத்துமுறையைப் பரவலாக்குவதற்கு மிகவும் உதவியாக உள்ளன. கொரிய மொழியும் இந்திய எழுத்துமுறையை ஒத்த எழுத்துமுறை ஒன்றை இன்று பயன்படுத்துகிறது. சீன மொழியின் பிரச்சினைய்ோ வேறு. சீன மொழியை ஒருமைப்படுத்து வது அதன் எழுத்து முறையே. ஆனால் சீன மொழிக்கு நான்கு முக்கியமான பேச்சுமுறைகளும் பலவேறு பிராந் திய வேறுபாடுகளும் உள்ளன. எழுத்தில் உள்ள ஏதாவது
விளங்கிக் கொள்வதிற் சிரமம் இல்லை. ஆனால் அதைச் ஒனாவின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர் வாசிப்பதை இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர் விளங்கிக் கொள்ள இயலாது. காரணம் ஏதெனில், எழுத்துக்கள் சித்திரமுறை

55
யில் உள்ளதால், எழுத்தில், அவை குறிக்கும் பொருள் எங்கும் ஒன்றே ஆயினும், ஒவ்வொரு சித்திரத்திற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறு ஒசை வடிவம் உள்ளது. எனவே யப்பானிற் போன்று, சீனாவிற் புதிய எழுத்துமுறை உடனடியாகப் புகுத்தப்பட்டாற், சீன மொழி பல கிளைமொழிகளாகப் பிளவு படும். இதனாற் தான் சீன மொழிக்கு ஒரே பொதுப்பேச்சு மொழியாக மன்டரின் பேச்சு முறையை நிறுவும் முயற்சி முதலிற் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்டரின் பேச்சு பரவலாக் கப்பட்ட பின்பே 1950களிற் முன்வைக்கப்பட்ட (ரோமன் எழுத்து முறையை ஒத்த) புதிய எழுத்து முறை பரவலாக் கப்படும். சீன அரிச்சுவடியில் இன்றும் 10,000 க்கு மேற் பட்ட தனித்தனி எழுத்துக்கள்" உள்ளன. இவற்றைக கற்பதில் உள்ள சிரமம் போக, அச்சிடுவதில் உள்ள பிரச்சினைகள் சீனாவின் நவீனமயமாதலுக்குப் பாத8 மாகவே உள்ளன.
சீன, வியற்னாமிய மொழிகளில் உயிர்-மெய் வேறு பாடுகளைவிட தொனி வேறுபாடுகளும் முக்கியமானவை. எனவே வியற்னாமிய மொழியிற் லத்தின் எழுத்துக் களுடன் தொனி லேறுபாடுகளைக் காட்டும் குறிகளும் பாவிக்கப்படுகின்றன. இவை பிரெஞ்சுச் செல்வாக்கினாற் புகுத்தப்பட்டவை. இவற்றில் உள்ள இடர்பாடுகளைப் பற்றி இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. ஆயினும் நான் வலியுறுத்த விரும்புவது யாதெனிற் தமிழை ஒத்தளவு பழைய (அல்லது தமிழினிலும் அதிகம் பழைய) எழுத்து வடிவங்களை உடைய மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தங்கள் அந்தந்த மொழிகளின் தேவைகளை ஒட்டி ம்ேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதே.
இந்திய மொழிகளிற் வழக்கில் உள்ள அசை எழுத்து முறை நூற்றுக்கணக்கான அச்சு வரிவடிவங்களை அவசிய மாக்கியுள்ளது. அச்சிடுதல், தட்டெழுத்து போன்ற துறைகளில் இவை ஏற்படுத்தும் சிரமங்கள் கணிச

Page 30
56
மானவை. இதைவிட, இந்திய மொழிகள் கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் தனித்தனி எழுத்துமுறைகளை உடையன. ஐரோப்பாவில் இன்று கிரேக்கமொழி போக மற்றவை எல்லாமே அடிப்படையில் இரண்டே எழுத்து முறை களைப் பயன்படுத்துகின்றன. இது பிறமொழிகளைக் கற்பதிலும் அச்சு வசதிகளைப் பயன்படுத்துவதிலும் பலவாறான வகதிச்ளை அளிக்கிறது. முழு இந்தியாவுக் கும் (ஏன், தென்ஆசியாவுக்குமே) பயன்படக்கூடிய ஓர் எழுத்து முறையை வகுப்பது சாத்தியம். லத்தீன் முறை போன்ற ஒன்றை 30க்கு மேற்படாத வரிவடிவங்களைக் கொண்டு அமைக்க இயலும். இது தென் ஆசிய மக்களிடையே நல்லுறவுகளை விருத்திசெய்ய மிகவும் உதவும் என்பது என் எண்ணம். ஆயினும் இது நம் உடனடியான சமுதாயச் சூழலிற் சாத்தியமான ஒன்றல்ல. அடிப்படையான சமுதாய மாற்றம் ஒன்றன் தொடர்ச்சியாக இவ்வாறான எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படுவது மிகவும் சாத்தியம் என்று கருதுகிறேன்.
புதிய எழுத்து முறை புகுத்தப்படுவதை எதிர்ப்போர் அதன் விளைவாகக் கல்வி அறிவு குறைந்தோர் பாதிக்கப் படுவர் என்று வாதிப்பது வழமையாகிவிட்டது. உண்மை யில் அந்த வாதம் அவ்வளவு பலமானதல்ல. புதிய எழுத்து முறை எதுவுமே ஒரே நாளிற் பழைய எழுத்துமுறையைத் தூக்கி எறியப்போவதில்லை. நீண்ட காலத்துக்கு இரண்டு எழுத்து முறைகளையும் ஒரு மொழி பயன்படுத் தும் தேவை இருக்கும் (யூகோஸ்லாவியாவின் அரசரும் மொழியாக இருந்த ஸேபோ-தறோவற் மொழி, ரோமன் எழுத்திலும் சிரிலிக் எழுத்திலும் எழுதப்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறு வகையின. ஆயினும் நான் கூறமுனைவது ஏதெனில் ஒரு மொழிக்கு இரண்டு எழுத்து முறைகள் ஏக காலத்தில் இருக்க இயலும் என்பதையே )
தமிழுக்கு ரோமன் எழுத்துக்களே உகந்தவை என்பதோ அல்லது உள்ளபடியே அவை திருப்திகர மானவை என்பதோ என் வாதமல்ல. ஆயினும் தமிழர்

57
கட்கும் பிற தென் ஆசிய மக்களுக்கும் பரிச்சயமான எழுத்துக்கள் என்ற வகையிற் தென் ஆசிய மொழிகட்கு ஒரு பொது எழுத்துமுறை வகுக்கப்படுமாயின் ரோமன் எழுத்துக்களால் அதற்கு நல்லதொரு பங்களிக்க இயலும் என்றே நினைக்கிறேன்.
இது தமிழின் உடனடியான பிரச்சினை அல்ல என்றாலும், தமிழின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போர், ஒரு புறம் தமிழின் உடனடியான பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதில் இன்றைய எழுத்து முறைக்குச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திப்பதுடன், மறுபுறம் நீண்டகாலக் கண்ணோட்டத்திற் தமிழின் எதிர்காலத்தைப் பிற இந்திய மொழிகளுடைய எதிர் காலத்துடன் இணைத்து நோக்க முற்படுவதும் பயனுள்ளது.
தமிழுக்கு நவீன எழுத்துமுறை ஒன்று வரும்வரை தமிழின் தேவைகள் காத்திருக்க அவசியமில்லை. இன்றைய எழுத்து முறையுடன் இசைவான முறையிற் புதிய வரிவடிவங்களைப் புகுத்துவதைஇனியும் பின்போட இயலாதது. தட்டெழுத்து, அச்சு முறைகளை மேலும் எளிமைப்படுத்துமாறான வகையில் எழுத்துக்களை ஒரு சீராக்குவதும் கவனிப்புக்கு உரியது. இதைவிடத், தமிழிற் தொடுத்தெழுதுவதற்கான ஒரு முறை வகுக்கப்படுவது பற்றியும் நாம் கவனம் செலுத்தலாம்.
நவீன பேச்சுத் தமிழ் இலக்கணம், பேச்சுத் தமிழை ஒழுங்குபடுத்தப்பட்ட நவீன எழுத்துத் தமிழுடன் இணைத்தற், தொழில்நுட்பத்திற்கான தமிழ், மொழி பெயர்ப்புப் பிரச்சினைகள் போன்று பல வேறு முக்கிய மான பிரச்சினைகள் நீண்டகாலமாகப் போதிய கவனம் பெறாமல் இருந்து வருகின்றன. இத்துறைகளிலும் பிற நவீன மொழிகளின் அனுபவங்களினின்று நாம் சிறிது கற்க இயலுமாயின் அது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரும் பங்களிக்கும்.

Page 31
தமிழ் மூலம் விஞ்ஞான உயர்கல்வி : சில பிரச்சினைகள்
பல சமயங்களிற் நியாயமான கேள்விகளும் ஐயங் களும் கருத்து முரண்பாடுகளும் எழுப்பப்படும்போது அவை பகைமையான நோக்கம் காரணமாக எழுப்பப்படு வதாகக் கருதப்படுகின்றன. விமர்சனங்களும் மாற்றுக் கண்ணோட்டங்களின் காரணங்களை விளங்கவும் விளக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் மாற்றுக் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆதாரமாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையின் நோக்கம் தமிழிற் விஞ்ஞான உயர்கல்வி தேவையா இல்லையா என்ற கேள்வியையோ, சாத்தியமா இல்லையா என்ற கேள்வியையோ பற்றியது அல்ல. இவ்விஷயத்தில் என் நிலைப்பாடு தாய்மொழி மூலமான கல்வியின் சாத்தியப் பாட்டையும் அவசியத்தையும் வலியுறுத்தும் ஒன்று என்பதை மீண்டும் வலியுறுத்தித் தமிழ்மூலம் விஞ்ஞான உயர் கல்வி பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஏன் நிறைவேற வில்லை என்பதையும் சம்பந்தப்பட்ட சில அடிப்படை யான பிரச்சினைகளையும் சிறிது அவதானிக்கலாப் என எண்ணுகிறேன். தீர்வுகள், இறுதி ஆராய்விற், நடை முறை சார்ந்தன என்பதாற் சில கருத்துக்களை மிகவும் மேலோட்டமாகவே வைப்பதுடன் நிறுத்திக்கொள்
விஞ்ஞானம் சமுதாய நடைமுறை சார்ந்தது. மொழி யும் அவ்வாறே. ஒரு மொழிமூலம் ஒரு விஞ்ஞானத் துறை யில் அறிவைப் பெறவும் வளர்க்கவும் முடியுமா என்பது

59
அந்த மொழிக்கும் அதன் மூலம் உணரவும் உணர்த்தவும் முயலும் விஷயங்கட்குமான தொடர்பைப் பொறுத்தது. ஒரு சமுதாயத் தேவையை நிறைவேற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது மொழி மாறவும் மாற்றத்தின் மூலம் வளரவும் இயல்கிறது. இம்மாற்றம் மறுக்கப்படும்போது வளர்ச்சி மறுக்கப்படுகிறது எனவே அச்சமுதாயத் தேவையை நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் மறுக்கப்படு கின்றன; மொழி சமுதாய வளர்ச்சிக்குத் தடையாகிறது; எனவே அது ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவாகிறது.
தமிழின் தொன்மை அதன் பெருமைகளுள் ஒன்று அதன் அடிப்படையான அமைப்பு மாறாமல் அது நீண்ட காலம் நிலைத்திருப்பது அதன் பெருமையே. எனினும், அது தமிழில் ஏற்பட்ட சகல மாற்றங்களையும் மூடி மறைக்கவும் அடையாளங் காணப்பட்ட சகல மாற்றங் களையும் மொழியின்மீது திணிக்கப்பட் - மாசுகள் என்று (பாசாங்காகவேனும்) ஒதுக்க உதவும் ஓர் ஆயுதமாகும் போது, அதுவே தமிழ்மொழியைப் பலவீனப்படுத்தவும் நாளடைவில் இறந்த மொழியாக்கவும் காரணமாகி விடு கிறது. தமிழ்மூலம் ஆற்ற முடியாததெதுவும் தமிழனுக்கு அவசியமில்லை என்ற விதமான தனித்தமிழ் வாதங்கள் இன்று எடுபடுதில்லை. தமிழனுக்கு நவீன சமுதாயம் தேவை, தொழில் முறை தேவை, மருத்துவம் தேவை, விஞ்ஞான அறிவு தேவை. எனவே தமிழ் இத்தேவைகட்கு எவ்வாறு ஈடுகொடுக்கும் என்பதே நம்முன்னுள்ளகேளவி தமிழிற் விஞ்ஞான உயர் கல்வியின் வளர்ச்சியின் மந்த மான போக்கிற்குத் தமிழிற் விஞ்ஞானப்போதனை பற்றிய மொழிக் கொள்கையின் பங்கு முக்கியமானது என்பது என் கருத்து. ஆயினும் இக்கொள்கை சாத்தியமாக, நமது சமுதாயச் சூழலே காரணமாக நின்றது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி பற்றிய தவறான அணுகுமுறையின் விளைவுகள் முற்றாக உணரப் படவில்லையெனினும், உணர்த்த இயலாதவையோ திருத்த முடியாதவையோ அல்ல. அந்தத்

Page 32
60
தவறான அணுகுமுறையைச் சாத்தியமாக்கும் சூழல் அதிலும் அதிகளவு முக்கியமானது என்பதை மனத்திற் கொண்டு தமிழ்மூலம் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சியை யொட்டி வளர்ந்த பிரச்சினைகளைக் கவனிப்போம்.
தாய்மொழி மூலம் நவீன கல்விபற்றி இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி கொலனித் துவ விரோதப் போராட்டத்தின் வளர்ச்சியோடு ஒட்டியது. ஆயினும் தேசிய விடுதலைப் போராட்டங் களின் வளர்ச்சியையும் வெற்றிகளையும் அடுத்தே தாய்மொழி மூலம் நவீன கல்வி முக்கியத்துவம் பெற்றது. தேசிய சுதந்திரத்தின் பின்பே, தாய்மொழி மூலம் விஞ்ஞானத் துறையிற் கல்வி பயிற்றுவது நடைமுறையிற் முக்கியத்துவம் பெற்றது. விஞ்ஞானத்தைத் தமிழ்மூலம் கற்பிக்கவும் தமிழிற் விஞ்ஞானக் கருத்துக்களைப் பரப்பவு மான முயற்சிகள் தேசிய சுதந்திரத்திற்கும் முற்பட்ட நாட்களிலேயே ஆரம்பித்தமையும், அத்தேவை அதற்கு முன்னமே வலியுறுத்தப்பட்டமையும் ஒரு சமுதாயத் தேவை சரியாக அடையாளங் காணப்பட்டதையே குறிக் கின்றன. தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் வலி யுறுத்தப்பட்ட சூழலிற், தாய்மொழி மூலம் கற்பிப்பதன் அவசியம் பற்றிய உற்சாகத்துக்கு ஈடான அளவிற் தாய் மொழியின் சமகால நிலைக்கும் அது முகங்கொடுக்க முனையும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடை வெளியை நிரப்பும் முயற்சி அமையவில்லை.
தமிழ் என்பது பல நூற்றாண்டுகள் முன்பு இலக்கண நூல்கள் வரையறுத்த ஒரு விறைப்பான மொழிவடிவம் எனும் கண்ணோட்டமும் தமிழின் வளர்ச்சியை அதன் தூய்மையின் பேராற் பழமை பேணும் போக்கின் வரையறைகட்குள் சாதிக்க முனையும் குறுகிய பார்வை யும் தமிழ்க் கல்வித்துறையிற் செலுத்திய ஆதிக்கம் தற்செயலானதல்ல. தமிழிற் கலைச்சொற்களைப் புனை வதிற் 'தனித்தமிழ் வாதம், கணிசமான காலத்திற்குச்

6.
செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னைய காலங்களிலும் தீவிர மரபுவாதிகளது பிடிமுற்றாக நீங்கியது என்று éfin. DClpt qulfT5!. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் விஞ்ஞானத் துறையிற் கலைச்சொல்லாக்கம் சுயாதீனமாக நடந்ததாற், மொழி பற்றிய அணுகுமுறையிலிருந்த வேறுபாடுகள், விஞ்ஞானத் தமிழ்ப் பிரயோகங்கள் அன்றாட மொழி வழக்கினின்று பிரிந்த ஒரு மொழிக் குழாமாக அன்றி, இரண்டு மொழிக் குழாங்களாகப் பிரியும் அபாயம் இன்னும் தொடர்கிறது. விஞ்ஞானக் கல்விக்குரிய மொழிப் பிரயோகம் ஒரு புதிய சமஸ்கிருத மாக (வடமொழி என்ற கருத்திலன்றிப், புனையப்பட்ட செயற்கைமொழி என்ற பொருளில்) உருவாகியதிற் கலைச் சொற் பிரயோகத்தில் தனித்தமிழ் வாதத்தின் பங்கு பெரிதும் முக்கியமானது. எனினும், முழுப் பழியும் அங்கேயே சுமத்தப்படற் தகாது.
நமது சமுதாயத்திற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்
நுட்பமும் அயல் மொழி பேசுவோர் வாயிலாகவே வந்தன. அவற்றின் பாவனை இன்னுங் கூட ஆங்கிலம் பேசுவோர் ஆதிக்கத்திலேயே உள்ளது என்பதால், அவை ஆங்கில மொழி மூலமே நடைமுறையிற் செயற்படுத்தப் படுகின்றன தமிழிற் கற்கப்படும் விஞ்ஞானத் தொழிற் நுட்பக் கலைச்சொற்கள் பரீட்சையில் தேறவும் பல்கலைக் கழகம் புகவும் கல்வி புகட்டவுமே முக்கியமாகப் பயன்படு கின்றன. விஞ்ஞான, தொழிற் நுட்ப நடைமுறை தமிழ் மூலம் நிகழும் சில சூழ்நிலைகளில், அதிகாரபூர்வமான கலைச்சொற்களின் பிரயோகம், பெருமளவுக்கு ஆங்கிலச் சொற்களதும் வேறு அன்றாட வழக்கிலுள்ள சொற்கள தும் பிரயோகத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிடுகிறது.
தமிழ் மூலம் அடிப்படையான விஞ்ஞானக் கல்வி கற்போரும் தொழிற் நடைமுறை தொடர்பான நிலை களை அனுசரித்து காலக்கிரமத்தில் ஆங்கிலத்திற்கு மாறு வதை நாம் காணலாம். தமிழிற் புத்தகங்கள் போதாமை,

Page 33
62
தமிழ் நாட்டுத் தமிழ் நூல்கட்கும், இலங்கை நூல்களுக்கு மிடையிலான கலைச்சொல் வேறுபாடுகள், தமிழில் உயர் கல்வியும் ஆராய்ச்சியும் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள், சர்வதேச அரங்கிற் விஞ்ஞானத் துறை களின் அதிதுரிதமான வளர்ச்சி ஆகியன, தமிழ் பேசும் விஞ்ஞானிகளை ஆங்கிலத்திலேயே தம் விஞ்ஞான நடை முறைகளை வைத்திருக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன
தமிழ்மூலம் விஞ்ஞான கல்வி நடைமுறையிற் பலவீன மான துறைகளை, நடைமுறை சாராத ஒரு கிளை மொழி மூலம் கற்பிக்கும் நிலையிலேயே உள்ளது. தமிழ் மூலம் விஞ்ஞான கல்வி வலிமை பெற்று வாழ்வதற்கு விஞ்ஞான நடைமுறை பரவலானது வலிவு பெறுவதும் அவசியம். நமது பின்தங்கிய சமுதாயச் சூழல் தமிழ் மூலம் விஞ்ஞான உயர்கல்வி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லலாம். ஆயினும் நாம் அவதானிக்க வேண்டிய உண்மை யாதெனின், நம் சமுதாயச் சூழலின், பின்தங்கிய நிலையினின்று விடுபடுவ தும் விஞ்ஞான - தொழில் நுட்பக் கல்வியினதும் நடை முறைகளினதும் பரவலாக்கலும் வேறுபடுத்த முடியா தவை. சமுதாயத்தின் நவீனமயமாக்கலின்றி மொழியின் நவீனமயமாதற் சாத்தியமில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. அவ்வாறாயின், தமிழ் மூலம் உயர் விஞ்ஞானக் கல்விக்கான முயற்சிகளும், விஞ்ஞானத்தைப் பரவலாக்க லும் புதிய கலைச்செர்ல்லாக்கமும் பயனற்றவையாகி விடுகின்றனவா? இல்லை. ஆயினும் தரப்பட்ட சமகால சமுதாயச் சூழலிலும் உலக நிலையிலும், தமிழை விஞ்ஞானத் துறையில் ஆங்கிலம் போன்ற உலக மொழி யன் தரத்துக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள் பெரும் பயனளிக்கப்போவதில்லை. தமிழில் உயர் விஞ்ஞானக் கல்வி பற்றிய முயற்சிகள் சில அடிப்படையான எளிய பிரச்சினைகள் பற்றிக் கூடிய அவதானம் செலுத்துவது பெருந்தொகையான புதிய கலைச் சொற்களின் புனைவை விட அதிகம் பயனுள்ளது. தமிழரிடையே விஞ்ஞானத்தின தும் விஞ்ஞான முறையினதும் பரவலாக்கலும், தமிழ்ப்

63
பேசும் சமுதாயத்தின் பன்முக நவீனமயமாதலும் தமிழின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாதவை.
தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி தொடர்பான கடந்த -கால அணுகுமுறையில் உள்ள சில போக்குகளுடன் என் கருத்து முரண்பாடுகளைக் கூறல்ாமென நினைக்கிறேன். அயல் மொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்துவதிற் சொற் கூறுகளை இயன்றவரை, கருத்தின் அடிப்படையிற் மொழி மாற்றம் செய்வது எப்போதுமே நல்ல பயனை அளிப்பதில்லை. பல சமயங்களில் அயல்மொழிச் சொற் களை அப்படியே அல்லது வேறு சிக்கல்கள் ஏற்படா வண்ணம் தமிழ்ப்படுத்துவது பயனுள்ளது. (இது தமிழின் சொல்வளத்துக்கு ஊட்டம் அளிக்கும் எனினும், குருட்டுத் தனமாகப் பின்பற்றக்கூடிய ஒரு முறை அல்ல.)
அன்றாட மொழி வழக்கில் உள்ள அயல்மொழிச் சொற்கள் மட்டுமன்றிக் கொச்சை என்று கருதப்படும் பல பதங்களும் தமிழின் புதிய சொல்வளத்தின் ஒரு பகுதியாகு வதற்குக் கருதப்பட வேண்டும். பல சமயங்களில் ஒத்த, ஆனால் நுண்ணிய வேறுபாடுடைய, பொருட்களைக் குறிக்க இவ்வாறான புதிய சொற்கள் உதவக்கூடும். அன்றாட வழக்கில் ஏறத்தாழ ஒன்றையே குறிப்பினும் விஞ்ஞானப் பயன்பாட்டிற் நுண்ணிய (ஆனாற் புறக்கணிக்க முடியாத) வேறுபாடுகளை இவ்வாறான சொற்கள் தெளிவாக உணர்த்த உதவலாம்.
அயல்மொழிகளது கலைச் சொல்லாக்க அனுபவம் கணிப்பில் எடுக்கப்பட வேண்டும். விஞ்ஞானத் துறைகள் பலவற்றில் இன்று முக்கியமான கலைச் சொற்கள் சர்வதேச அடிப்படையில் அமைகின்றன. இவற்றை விஞ்ஞானத்திற் பயன்படும் தமிழினின்று விலக்குவது அசாத்தியம். இவற்றைத் தமிழ்ப்படுத்தும் போது தமிழில் ஓசை வேறுபாடுகள் தொடர்பான பிரச்சினை எழுகிறது. தமிழிங் k-g, t-d போன்ற ஒசை வேறுபாடுகளை எழுத்திற்

Page 34
64
தெளிவாகக் காட்டவேண்டிய தேவையை மேலும் நீண்ட காலத்திற்குத் தட்டிக்கழிக்க இயலாது. விஞ்ஞானத்திற் பயன்படும் சர்வதேசச் சொற்களைக் கையாளும் பிரச்சினைக்குத் தமிழிற் பாரிய சீர்திருத்தம் அவசியமாக லாம்.
அயல்மொழிச் சொற்கள், (விஞ்ஞானத்திற் பயன் படும்) தமிழிற் புகுவது பற்றிய ஆட்சேபனைகளிற் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று; இவ்வாறான சொற் களின் பெருந்தொகையிலான வருகை தமிழில் அயல் மொழிச் சொற்களைப் பெரும்பான்மையினவாக்கித் தமிழின் தன்மையே சிதைந்துவிடும் என்பது. இது மிகவும் தவறான ஒரு வாதம். தமிழில் ஏற்கெனவே உள்ள பல அயல்மொழிச் சொற்கள் தமிழினின்று வேறுபடுத்த முடியாதளவு தமிழில் ஒரு பகுதியாகிவிட்டன. புதியவை யும் காலப்போக்கில் தமிழாகிவிடுவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. அதைவிட முக்கியமாக, விஞ்ஞானத். துறையிற் பயன்படும் சொற்கள் தொகையில் அதிகமா யினும் மொத்த நாளாந்தப் பிரயோகத்தில் மிகவும் குறைவானவை. இவற்றுட் பெருவாரியானவை மிகக் குறைவாகவே பயன்படுவன. குறிப்பிட்ட விசேடமான துறைகளிற் மிகச் சிலராற் விசேடமான சூழ்நிலைகளிற். பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் பல உள்ளன. இவை மொழியின் விளிம்பிற் நின்று இயங்கும் சொற்கள். சமுதாய வளர்ச்சிப் போக்கிற், சில சமயம், இவை மூலவடிவிலோ அல்லது சுருக்கப்பட்ட வடிவிலோ மொழியுட் புகமுடியும் எனவே சர்வதேசச் சொற்களைத் தமிழில் அப்படியே புகுத்துவதும் அயல் மொழிச் சொற் களை ஏற்றவாறு தமிழிற் புகுத்துவதும் மொழியில் உடனடியான விகாரம் எதையுமே ஆக்கப்போவது இல்லை. இச்சொற்களின் நிராகரிப்பு, தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வியை மேலும் சிரமமாக்குவதன் மூலம் தமிழிற் கற்ற விஞ்ஞானிகளைத் தொடர்ந்தும் தமிழிற். செயற்பட முடியாது ஆங்கிலம் போன்ற மொழியை

65
நோக்கி உந்துவது நிச்சயம். ஏற்கெனவே, விஞ்ஞானி கட்கு ஆங்கில மொழியிற் செயற்படுவதன் கவர்ச்சி அதிக மாக உள்ளது என்பதும் கவனத்திற்குரியது.
தமிழ் வசன அமைப்பும் விஞ்ஞானம், கணிதம் ஆகிய துறைகளில் உள்ள குறியீட்டு முறைகளும் முற்றாக உடன்பாடானவை அல்ல. ஆயினும் அவற்றை நாம் தயக்கமின்றிப் பயன்படுத்துகிறோம். அதே சமயம் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளினதும், தொழில் நுட்பம், வணிகம் போன்ற துறைகளினதும் தேவைகளை யொட்டி, மொழியிற் முறையான, திட்டமிட்ட மாற்றங் களைப் புகுத்துவது பற்றிச் சிந்திக்க மறுக்கிறோம். ஆங்கிலத்தின் மீது சமுதாயத்தின் நவீனமடைதற் பல மாற்றங்களைத் திணித்தது. அதன் விளைவாக ஆங்கில மொழி வளரவும் வலிமை பெறவும் முடியுமாயிற்று. தமிழில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படாமைக்கு ஒரு காரணம் தமிழ் பேசும் சமுதாயங்களில் ஏற்பட்ட நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, வணிகத் தாக்கங்கள் அயல் ஆதிக்கத்தாலேயே புகுந்தமை எனலாம்.
கலைச்சொற்களின் பிரச்சினையிற், விசேடமான சொற்களைவிடப் பரவலான உபயோகத்தில் உள்ள சொற்கள் முக்கியமானவை. விஞ்ஞானம் அளவையியலின தும் (logic) மெய்யியலினதும் (philosophy) ஆதாரமின்றி வளரமுடியாது. எனவே, அளவையியலிலும் மெய்யிய லிலும் பரவலாகப் பயன்படும் கருதுகோள்களைக் (concepts) குறிக்கும் சொற்கள் மிகவும் தெளிவாகவும் முரண்பாடின்றியும் நிர்ணயிக்கப்படுவதும், அவை பிற அறிவியற் துறைகளிலும் உடன்பாடான முறையிற்
சொல்லாக்கத்திற், முக்கியமாகப் பரவலாகப் பயன்படும் சொற்களின் விடயத்தில், அளவையியல், மெய்யியற் ஆகிய துறைகள் மையமானவையாகக் கருதப்பட்டு

Page 35
66
அவற்றுடன் உடன்பாடான முறையிலும் துறைக்குத் துறை முரண்பாடற்ற முறையிலும் புதிய கலைச் சொற். கள் புனையப்படுவது விரும்பத்தக்கது. ܚ
சொற்களின் எளிமை, பேச்சு வழக்குடன் பொருந்தும் தன்மை, இலகுவிற் பொருளை உணர்த்தக்கூடிய தன்மை ஆகியன பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்களின் விடயத்தில் வலியுறுத்தப்படும் அதே சமயம், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பயன்படும் சொற்கள் (குறிப்பாகப் பரவலான பயன்பாட்டுக்குரியன) முடிந்த வரை ஒத்து அமைவதும் மிகவும் அவசியம்.
இவையெல்லாம் மொழி நிர்மாணம் தொடர்பான விஷயங்களாயினும், தமிழ் பேசும் சமுதாயத்தின் நடை முறை, விஞ்ஞானத்துடன் பரிச்சயமில்லாமல் இருக்கும் வரை, புதிய கலைச்சொற்கள் எல்லாம் வாழும் மொழிக்கு அந்நியமானவையாகத் தொடர்வது தவிர்க்க இயலாதது. தொழிலுக்கான விஞ்ஞானக் கல்வியும் விஞ்ஞானத் தகவல்களும் மட்டுமன்றி, விஞ்ஞானரீதியான சிந்தனை யும் அணுகுமுறையும் பரவலாக்கப்படுவதும் சமுதாயத் தின் நவீனமயமாதலும் பொருளாதார வளர்ச்சியும் தமிழின் நவீனமயமாதலுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமை யாதன. “பஞ்ச பூதச் செயல்களின் நுட்பம். சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு உண்டு”. கைகால்கள் கட்டிப் போடப்பட்ட பழமைவாதத் தமிழ் மொழிக்கு அல்லகட்டவிழ்ந்த, சுதந்திரமான ஜீவனுள்ள தமிழ் மொழிக்கு நிச்சயமாக உண்டு.

தமிழிற் கலைச் சொற்கள்
"இன்றைய உலகில் இலக்கியம்' எனும் நூலில் முருகையன் சமகாலத் தமிழின் சில பிரச்சினைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அந்நிய மோகம், முக்கியமாக ஆங்கில மோகம், தமிழ் ஆக்க இலக்கியத் துறைக்கு ஏற்படுத்தியுள்ள தீய விளைவுகளைப் பற்றியும் தமிழ்க் கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளக் கூட ஆங்கிலத்தின் துணையை நாடும் வருந்தத்தக்க நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இதற்குரிய சில காரணங் கள், நீண்டகால அந்நிய ஆட்சியுடனும் நவீன விஞ்ஞானம், தொழிற்நுட்பம், பொழுதுபோக்கு போன்ற துறைகளில் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்துடனும் தொடர் புடையன. தமிழர், தமிழ் மொழியின் குறைபாடுகளையும் தேவைகளையும் அடையாளங்கண்டு ஆவன செய்யத் தவறியமை அனைத்திலும் முக்கியமான காரணமாகும். தமிழ்ச் சமுதாயத்தில் ஆதிக்கஞ் செலுத்தும் வர்க்கங் களைப் பொறுத்தவரை, தமிழின் வளர்ச்சி முக்கியமான ஒன்றல்ல. நமது பின்தங்கிய தொழிற் விருத்தியும் சமுதாய அமைப்பும் அந்த வர்க்கங்களின் நலனைப் பேண இடையூறாக இல்லை. நமது தேசிய உணர்வின் விருத்தி முழுமையற்ற ஒன்றாகவும் இன்னமும் அயலார் நிழலிலேயே வளர ஆசையுறும் ஒன்றாகவுமே தொடர்ந்து வருகிறது. அந்நியர் ஆட்சி போனபின்பும் நம் அந்நிய மோகம் போகவில்லை. நம் மொழி உணர்வும் இன உணர் வும் அந்நிய ஆதிக்கத்தினின்று விடுபடத் திணறும் சகோதர இனங்கட்கு எதிரான பகைமையை வெளிப்படுத் தும் அளவுக்கு மேலை முதலாளித்துவ நாடுகளின்

Page 36
68
கலாச்சாரச் சீரழிவின் தாக்கத்தினின்று விடுபடுவது பற்றி அக்கறையுடையன வல்ல.
இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய விடுதலை இயக்கத்தின் போது பல தேசிய இனங்களதும் மொழி உணர்வு விழிப்படைந்தது. அதன் விளைவாகத் தாய்மொழிப் பிரயோகம் விரிவடைந்தது. அந்த விரிவு தொடர்வதற்குத் துணையாகத் துணைக்கண். மொழி களை நவீன மொழிகளாக விஞ்ஞானம், கலை, தொழிற், நுட்பம், மருத்துவம், சட்டம், அரசியல் ஆகிய சகல துறை களிலும் சமகால அறிவை வழங்கவல்ல கருவிகளாக, விருத்தி செய்யும் ஆர்வம் காணப்பட்டது, ஆயினும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல இடர்பாடு களின் விளைவாக, மொழி விருத்தி அரைகுறையான நிலையிற் தேக்கமடைந்துள்ளது. இதற்கான காரணங்க ளுள் முக்கியமான ஒன்று உயர்கல்வி பற்றிய நமது பார்வை எனலாம். கல்வியின் இலக்கு உத்தியோகம் எனுமளவுக்கு கல்வி உத்தியோக வாய்ப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகவே கருதப்பட்டு வந்துள்ளது. சாாத ரண மக்களிடையே கல்வியைப் பரவலாக்குவதற்கான முயற்சி மிகவும் குறுகலான இலக்குகளையே கொண் டிருந்தது. விரிவான வலிய சமுதாய அத்திவாரம் இல்லாம லேயே தமிழிலும் பிற இந்தியத் துணைக்கண்ட மொழி கள் பலவற்றிலும் தாய்மொழி மூலம் உயர்கல்வி முயற்சி கள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, ஆங்கிலத்துடன் பரிச்சயமுள்ளவர்கட்கு மட்டுமே கிட்டிய மேற்படிப்பு, தொழில், உத்தியோக வாய்ப்புகள், சட்டம், விஞ்ஞானம், மருத்துவம், சட்டக்கலை எந்திரவியல் போன்ற துறைகள் ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடரத் துணை நின்றன. தாய்மொழியிற் நூல்கள் போதாமை, ஆசிரியர்கள் போதாமை, கலைச் சொற்கட்குத் தட்டுப்பாடு என்றவா றான வாதங்கள் தாய்மொழிக் கல்விக்குத் தடையாக எழுந்தன. அவற்றுக்கு முகங்கொடுக்கும் முயற்சியிற் சிலர் முழுமனதுடனும் உற்சாகத்துடனும் பங்கு பற்றியதோடு”

69
அம்முயற்சிக்கு அரசாங்க ஆதரவு இருந்துங்கூடத தாய்மொழி மூலம் உயர் கல்விப் போதனை முயற்சி கலைப்பாடங்களில் மட்டுமே ஓரளவு முன்சென்றது விஞ்ஞானத் தொழில்நுட்பச் சார்புடைய துறைகளில் ஆங்கிலமே தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனாவிலும், ஜப்பானிலும் எவ்வாறு தாய்மொழி மூலம் உயர்கல்வி நடைபெறுகிறது என்று நாம் வியக்கி றோம். அந்தச் சமுதாயங்களில் ஐரோப்பிய மொழிகளின தும், கலாச்சாரத்தினதும் செல்வாக்குப் புகுந்த சூழ்நிலை நம்முடையதினின்றும் வேறுபட்டது. அங்கு, முழுநாடும் நேரடியான கொலனி ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை; அயல்மொழி படித்த ஒரு நடுத்தர வர்க்கத்தினர் மூலம் அரச நிர்வாகம் நடைபெறவில்லை; அயல்மொழிக் கல்வி மூலமே ஒருவன் சமுதாயத்தில் மேம்பட முடியும் என்ற நிலைமை இருக்கவில்லை. அதனால் அயல்மொழி களதுங் கலாச்சாரங்களதுந் தாக்கத்தினின்றும் அந்தச் சமுதாயங்கள் காவலிடப்பட்டிருந்தன என்று நாம் கருது வதற்கில்லை; அயல் நாடுகளிலிந்து பெளத்தம் முதல் இஸ்லாம் வரையிலான பல மதங்களும், விஞ்ஞானமும் மருத்துவமும் தொழில்நுட்பமும், நவீன சிந்தனை மரபுக ளும் அச்சமுதாயங்களுட் புகுந்துள்ளன. ஆயினும், அயல் ஆதிக்கம் இல்லாமலேயே அவை உள்வாங்கப்பட்டமை யாற், காலப்போக்கில், எளிதாகவே அவர்களது கலாச் சார மரபுடன் ஒன்றிவிடவும் புதிய சமுதாயத்தை உருவாக்குவிதற்குப் பங்களிக்கவும் அவற்றுக்கு இயலுமா கியது. எந்த ஒர் அயற் தாக்கமும் புதிய முரண்பாடுகளை விளைவிக்குமெனினும் அயற் தாக்கம் ஏற்படும் சூழ்நிலையே விளைவுகளின் தன்மையை நிர்ணயிக்கிறது. நமது சமுதாயச் சூழலில் மொழியின் பயன்பாடு வீட்டுக்கு ஒன்று, கோயிலுக்கு ஒன்று, வியாபாரத்துக்கு ஒன்று, விஞ்ஞானத்துக்கு ஒன்று என்ற விதமாகக் கூறுபோடப்
高ー5

Page 37
70
பட்டுள்ளது. நாம் இதனின்றும் விடுபடும் வரை நமது மொழி வளர்ச்சி மிகவும் வரையறைக்குட்பட்டேயிருக் கும். எனவே நம் மொழி வளர்ச்சிக்கான போராட்டம் பரந்துபட்ட ஒரு சமுதாயப் போராட்டத்துடன் நெருங்கிப் பிணைந்துள்ளது; தாய்மொழியையே முற்றி லும் சார்ந்து நிற்கும் பரந்துபட்ட வெகுஜனங்களின் அரசியல் ஆதிக்கத்தின் கீழேயே தமிழின் முழுமையான முன்னோக்கிய பாய்ச்சல் நடைபெறமுடியும்.
தமிழின் விருத்தி, காலத்தால் மாறாத ஒரு தமிழ்த் தன்மையையோ அயல்மொழிக் கலப்போ பாதிப்போ இல்லாமையையோ சார்ந்திருக்க முடியாது. தமிழர் மட்டுமே வாழும் ஓர் உலகில் நாம் இல்லை; தமிழருக்கு வேண்டிய அனைத்தையும் தமிழ்ப் பேசும் மாநில எல்லைகட்குள்ளேயே பெறவும் இயலாது. எனவே தமிழின் விருத்திபற்றிய நமது பார்வை, அந்நிய மோகத்தை நிராகரிப்பது போன்று அந்நிய விரோதத்தை யும் நிராகரித்துச் சர்வதேச மானுட சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் கலாச்சார, சமுதாய விருத்தியைச் சார்ந்து நிற்க வேண்டும். எந்த அயல்மொழியோ, கலாச்சாரமோ நமது மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் வளமூட்ட முடியுமாயின், அதன் பங்களிப்பு வரவேற்கத்தக்கதே. ஆயினுங் குருட்டுத்தன
! DNT, கைக்கெட்டிய சகலவற்றையும் கொண்டுவந்து கொட்டிக்குவிப்பது வளர்ச்சியாகிவிடாது. நமது சமுதாயத்தின் சமகாலத் தேவைகளையும் அதன் எதிர் ᏯᎭ,ᎱᎢ 6Ꮒ) வளத்திற்கு அவசியமான பணிகளையும்
அடையாளங் கண்டு நமது மரபுவழிச் செல்வங்களையும் நம்வசமுள்ள வளங்களையும் அயல் மரபுகளினின்று பெறக்கூடியவற்றுடன் இணைத்துச் செயற்படுத்துவ தெவ்வாறென்ற தெளிவான பார்வையை நாம் விருத்தி செய்ய வேண்டும். கடந்த காலத்தில், மொழி வளர்ச்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல நல்ல முயற்சிகள்

71.
எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமைக்கு நம் சமுதாயச் சூழலே முக்கிய காரணம் எனினும், அந்த முயற்சிகள் ஒரு முழுமையான சமுதாயப் பார்வையுடன் இணைந்திராமை யும் முக்கியமானதே.
தனித்தமிழ் இயக்கம், தமிழை அவசியமற்ற வடமொழிக் கலப்பினின்றுந் தூய்மைப்படுத்தி எளிமை யாக்கும் நோக்கில் முற்போக்கான ஒரு பணியை ஆற்றியது. ஆயினும், தமிழின் சொல் வளத்தைத் 'தனித் தமிழ் எனக்கருதப்படும் சொற்களின் எல்லைக்குள் வரையறுக்கும் அதன் இலக்குப் பிற்போக்கானது. சமூக வியல், மெய்யியல், விஞ்ஞான, மருத்துவ, தொழில் நுட்பக் கலைச் சொற்களைப் புதிதாகப் புனையும் முயற்சிகள் ஆங்கிலத்தில் உள்ள சொற்களுக்கு ஈடான தமிழ்ப்பதங்களை வழங்கும் முயற்சிகளாகவே இருந்தமை நமது சமுதாயச் சூழலிற் தவிர்க்க அரியதே. கலைச் சொற்களை வகுத்துச் சில பாடநூல்களைப் பிரசுரித்தல் மூலந் தமிழிற் புதிய அறிவுத் துறைகள் நிலைபெறச் செய்யலாம் என்று சிலர் மனதார எதிர்பார்த்திருக்கலாம். ஆயினும் தமது சமுதாய நடைமுறைக்கு வெளியே விருத்தியடைந்த கல்வித் துறைகளை நமது மொழியில் நிறுவும் முயற்சிக்கு ஆதாரமாக ஒரு சமுதாய அடிப்படை இல்லாத சூழ்நிலையிற், பலரது நல்ல முயற்சிகளும் மணலில் விதைத்த நெல்மணிகள் போலாகின. தமிழில் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் பல நல்ல பணிகள் உத்தியோகத்துக்காகவே கல்வி என்ற சமுதாய இலக்கின் முன்பு விழுந்துவிட்டன. நமது விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஒரு வெகுஜன அடிப்படை இல்லாத வரை, தமிழுக்குப் புதிய அறிவுத்துறைகள் தமிழர் நடுவே ஒரு சிறுபான்மைப் போக்காகவே இருக்க முடியும், அவற்றிற் தேறுவோரது வர்க்க இயல்பும் கல்வித் தேவைகளும் தொழில்களின் தன்மையும் அவர்களை ஆங்கிலத்தை நோக்கியே உந்தும் நிலையிற் தமிழ் மூலம், வழங்கப்படும் புதிய அறிவு

Page 38
72
தமிழின் விருத்திக்கு மேலும் உதவ இயலாது போய் விடுகிறது. இத்தகைய சூழலிற் தமிழிற் கலைச்சொல் லாக்கம் நடைமுறைத் தமிழினின்றும் பிரிந்தே நிற்கிறது. இது மட்டுமன்றி, உதிரியாக விஞ்ஞானத் தகவல்களை வழங்குகிற பத்திரிகை எழுத்தாளர்கள் தங்கள் மனதிற்குப் பட்ட விதமாகக் கலைச் சொற்களைப் புதிய அர்த்தத்தில் பிரயோகிக்கவும் சில சொற்களை முற்றாகவே துஷ்பிர யோகம் செய்யவும் நேருகிறது. (சில சமயங்களில் தகவல் கள் கூடத் தவறாகவே அமைந்து விடுகின்றன என்பதும் கவலைக்குரியது).
தமிழிற் கலைச் சொற்களை உருவாக்கலில் மட்டுமன்றிப் பரவலாக்குவதிலும் நடைமுறைக்குகந்த ஒரு பொதுக்கொள்கையை வகுக்கவும் ஆக்கபூர்வமான முறையிற் கடைப்பிடிக்கவும் முடியுமாயின் அக்கொள்கை தமிழில் குறுகிய காலத் தேவைகட்காகப் புதிய அறிவுத் துறைகளை விருத்தி செய்ய உதவியாக இருப்பதோடு, நீண்டகால நோக்கிலும் பயனுள்ளதாக இருக்கும்.
கலைச் சொல்லாக்கம் தொடர்பாக இலங்கையிற் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள் பொதுவாக வரவேற்கத்தக்கனவே. ஆயினும், அவை நடைமுறையைக் கணிப்பிலெடுக்கத் தவறும்போது நல்ல விளைவுகளைத் தரத் தவறுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கத்தில் ஆங்கிலப் பதங்களை நேரடியாக மொழிபெயர்க்கும் போக்கே முதன்மை பெறுகிறது. வெகு காலம் முன்னர் Water - fat எனும் பதத்தைநீர் வீழ்ச்சி என மொழி பெயர்த்து அருவி எனும் அழகிய சொல்லை மறக்கடித்தோம். (இன்று அருவி எனுஞ்சொல், ஒடை எனும் கருத்துப்பட, stream எனும் ஆங்கிலச் சொல்லைக் குறிக்க எந்திரவியலிற் பயன்படுகிறது.) பெரும்பாலான விஞ்ஞான - தொழில்நுட்பக் கலைச் சொற்கள் புதிதாகப் புனையப்பட வேண்டியுள்ளன. எனவே நேரடியான மொழிபெயர்ப்பு பெரிதும் தவிர்க்க

73
முடியாததே. ஆயினும், மொழிபெயர்ப்பு அபத்தமான விளைவுகளைத் தராமற் காக்கும் தேவையும் நமக் குள்ளது.
வெப்பவியக்கவிசையியல் (Thermodynamics) என்பது போன்ற நீண்டபதங்கள் அதிகம் இல்லையாயினும் இவ்வாறான மொழிபெயர்ப்பு அவசியமற்றது. வெப்ப வியக்கவியல் என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல வெனினும், முன்னையதிலும் திருப்திகரமானது. கலைச் சொற்களில் எளிமை விரும்பத்தக்க ஒரு பண்பு. எளிமை யான சொல்லாக்கம் எப்போதுமே சாத்தியமில்லையா யினும் புதிய சொற்களை அமைக்கையிற் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய இரு பண்புகள் எளிமையும் தெளிவும் எனலாம்.
ஒரு காலத்தில் Engineering என்ற சொல்லுக்குத் தமிழிற் பொறியியல் என்ற சொல்லே வழங்கியது. ஆங்கில மூலத்தைவிட அத்தமிழ்ச் சொல் பலவகையிலும் சிறப்பானது. எனினும், பொறி என்ற சொல் Machineஐயும் குறிப்பதாற் பொறியியலின் இடத்தில் எந்திரவியல் எனுஞ் சொல் புகுத்தப்பட்டது. (இது அவசியமற்றது என்பது என் எண்ணம்.) இத்தகைய சொல்லாக்கம் ஆங்கிலப்பதங்களை நேரடியாகத் தமிழ்ப் படுத்தும் நோக்கஞ் சார்ந்தது என்பது தெளிவு. மரபுத் தமிழுக்கும் , பழந் தமிழ்ச் சமுதாயத்துக்கும் முற்றிலும் அந்நியமான துறைகளிற் சிக்கலதிகமின்றி இக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாம். மொழிபெயர்த்தல் அசாத்தியமான இடங்களில் மூலச் சொல்லைத் “தமிழ்ப் படுத்தி உபயோகிக்கும் கொள்கை வரவேற்கத்தக்கதே யெனினும், சமகால மொழி நடைமுறை பற்றியும் சிறுபான்மைப் போக்காகவேனும் கடைப்பிடிக்கப்படும் * மரபுபற்றியும் கவனங்காட்டப்படுவது அவசியம்.
கியர், கிளச்சு, தைனமோ, இலத்திரன் போன்ற தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள் மாற்றுச் சொற்களின்றி யும் எஞ்சின், சிலின்டர் போன்றன எந்திரம், உருளை

Page 39
74
ஆகிய மாற்றுச் சொற்களுடனும் கலைச் சொற்களாக ஏற்கப்பட்டமை சரியானதே. மறுபுறம் கரி, கந்தகம்
போன்ற நல்ல தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாகக் காபன், சல்பர் போன்ற சொற்கள் புகுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இச்சொற்கள் கலைச் சொல்லாக்கத்திற் சில பிரச்சினைகளைத் தீர்க்கலா மெனினும் தமிழ் வரிவடிவத்தில், அதிருப்திகரமான முறையில், ஆங்கில மொழி வழக்கிலுள்ள பேர்களை எழுதும் முயற்சிக்கே உதவுகின்றன. அயல்மொழிப் பேர்களை வடஎழுத்துக்களின் உதவியின்றி முடிந்தவரை மரபுசார்ந்த முறையிற் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதன் பிரச்சினைகளை நாம் நன்கு அறிவோம். பாரிய எழுத்துச் சீர் திருத்தத்திற்கு முகங்கொடுக்க மனமின்றியும், அயல் மொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தட்டிக்கழித்தும் செயற்பட்டதன் விளை வாக தமிழாகவுமின்றி ஆங்கிலமாகவுமின்றிக் கருத்துத் தெளிவற்ற கலைச் சொற்கள் பல ஏற்கெனவே உருவாகி யுள்ளன.
அயல்மொழிச் சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்தும் முயற்சியில் வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தக் கையாளப்பட்ட பழைய விதிகள் நம் சமகாலப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கப்போதா, என்பதைப் பேச்சுத் தமிழ் நடைமுறை வலியுறுத்தி வருகிறது. இப்பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு காணாமை கலைச் சொல்லாக்கத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.
அயல்மொழிச் சொற்கள் தமிழிற் புகுப் சூழ்நிலைகள் வேறுபடுகின்றன. சிலரது ஆங்கிலமோகம் காரண மாகவோ தம் பிறமொழி அறிவை மற்றவர் அறியச் செய்யும் தேவை கருதியோ தமிழுடன் கலந்து பயன்படுத் தப்படும் சொற்கள் பெரும்பாலும் மொழிக்கு அயலானவையாகவே நிற்கின்றன. மறுபுறம் , தகுந்த தமிழ்ச்சொல் இல்லாமையாலோ புனையப்பட்ட தமிழ்ச்

75
சொல் பரவலாக ஏற்கப்படாமையாலோ நிலைபெறும் அயல்மொழிச் சொற்கள் தம் மூலவடிவிலோ தமிழ்ப்படுத் தப்பட்ட வடிவிலோ நிரந்தரமான இடத்தைப் பெற்று விடுகின்றன. அதே வேளை, வழக்கில் உள்ள பல நல்ல தமிழ்ச் சொற்கள் இழக்கப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. நம்மிடையே தமிழ்ச் சொற்களைச் செம்மை யாகவும் தெளிவாகவும் பயன்படுத்தும் வழக்கம் குறை வாக இருப்பது தமிழ்மொழிப் பிரயோகத்தைப் பலவீனப் படுத்துகிறது என்பதும் நம் கவனத்துக்குரியது. ஆங்கிலத் தில் எழுதும் போதும் பேசும்போதும் கவனமாகச் சொற் களைத் தெரிந்தெடுக்கப் பழகியவர்கள் பலர், தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் சொற்களின் தெறிவு பற்றி அசட்டையாக இருக்கிறார்கள். அச்சுப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் வாக்கிய அமைப்பில் உள்ள தவறுகளும் கையெழுத்துப் பிரதி நிலைமுதல் இறுதி அச்சு வடிவுவரையிலான பல்வேறு கட்டங்களிலும் கவனிக்கப் படாது தப்பிவிடுகின்றன; வாசகர் மத்தியிற் கூட அவை பற்றி அதிகம் கவலை காட்டப்படுவதில்லை. இம் மனப்பான்மை மாறவேண்டும். கலைச் சொற்களை அமைப்பதில் எளிமையும், தெளிவும் முக்கியமானவை யெனினும் நடைமுறையே அதிமுக்கியமானது என்பதை நாம் மறக்கலாகாது. கலைச் சொற்கள் அவை குறிக்கும் கருத்தையோ பொருளையோ உணர்த்தவல்லவையாய் அமைவது கற்போருக்கு வசதியானது என்ற கருத்து வரவேற்கத்தக்கதெனினும் அதையே கலைச் சொல்லாக் கத்தின் அடிப்படை விதியாக்கவியலாது. நவீன உலகிற் பெருகிவரும் பல்வகையான கண்டுபிடிப்புக்கட்கும் தகுந்த காரணப் பேர்களை வழங்க இயலாததால் பல சமயங் களிற் பொருட்களின் பேர்கள் அவற்றின் இயல்பையோ செயற்பாட்டையோ நேரடியாகவும் தெளிவாகவும் உணர்த்துவதில்லை விஞ்ஞான, தொழில்நுட்ப வழக்கில் இடுகுறியாக வழங்கப்படும் பேர்கள் உட்படச் சகல கலைச் சொற்களும் பொதுவாகவே, அவற்றின் பாவனை

Page 40
76
யின் போக்கில், நடைமுறைக்குச் சார்பாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. தமிழிற் கலைச் சொல்லாக்கமும் இந்த உண்மையைக் கணிப்பில் எடுப்பது நல்லது. எந்த வொரு புதிய பொருளுக்கும் சமுதாய வழக்கிற் பரவலாக எற்கப்பட்ட ஒரு பேர் நிலைபெறுமாயின் அதையே அப்பொருளைக் குறிக்கும் கலைச் சொல்லாக ஏற்பது பெரிதும் உகந்தது. அவ்வாறான ஒரு சொல்லின் பிரயோகத்தாற் பாரிய இடர்ப்பாடுகளோ,தெளிவீனமோ ஏற்படுமெனின் அதை உரியவாறு மாற்றியமைப்பதும் அல்லாத பட்சத்தில் மாற்றுச் சொற்களைத் தேடுவதுந் தகும். தமிழர் வாழும் வெவ்வேறு நாடுகட்கும் பிரதேசங் கட்குமிடையே மொழிப் பிரயோகத்தில் ஒற்றுமையைப் பேணுமாறு கலைச் சொற்களை அமைப்பதன் அவசியம் பலரால் வலியுறுத்தப்பட்டுள்ள போதும், மொழி வழக்குப் பற்றிய குறுகிய பார்வையும் பிராந்திய அரசியற் பிணக்குகளும் அதற்கான ஒத்துழைப்பை மறித்து வருகின்றன.
கலைச் சொல்லாக்கம் எனும் போது தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் அயலான கல்வித்துறைகளை மட்டுமே நாம் கருத்திற் கொள்கிறோம். நமது மரபு சார்ந்த அறிவியற்துறைகளை விருத்தி செய்வது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். நம் சொல் வளத்தைப் பேணிப் பரவலாக்கவும் நம் மொழியின் வளமையைப் புதுப்புதுத் துறைகட்கு விரிக்கவும் நம் மரபை நாம் பயன்படுத்த முடியும், தென் ஆசியக் கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்றின் சாதனைகளை ஐரோப்பியர் சீரணித்து நமக்குத் திரும்ப வழங்க வேண்டிய நிலைக்கு நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டுள்ளோம். நமது மரபுடன் நவீன விஞ்ஞானப் பார்வையை இணைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
கலைச் சொற்கள் எவ்வளவு எளிமையானவையாக இருப்பினும், பரந்தளவில் மக்களைச் சென்றடையும்

77
வரை அவை மொழியின் ஒரு கூறாக முடியாது. கலைச் சொற்கள் சமுதாய நடைமுறையூடே மொழியில் வேரூன்றுகின்றன. அவற்றின் செம்மையான பாவனை பரவலாக்கப்படுவதன் மூலமே, மொழி நவீன அறிவுத் துறைகளை ஆராய்ந்து விளக்கும் வலிமையைப் பெறுகிறது. எனவே கலைச் சொல்லாக்கத்தின் இலக்கு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழிற் புதிய தகவல்களை வழங்க முற்படுவோர் விஞ்ஞானக் கருத்துக்களைப் பொறுப்புணர்ச்சியுடனுங் கவனத்துடன் முன்வைப்பதும் கலைச் சொற்களைச் செம்மையாகவும் தெளிவாகவும் பயன்படுத்துவதும் மிகவும் விரும்பத் தக்கன.

Page 41
கலைச் சொற்களும் மொழிவழக்கும்
விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், பொரு ளாதாரம், வாணிபம் போன்ற துறைகளில் அன்றாடம் பெருகி வரும் சொற்களின் தொகை தமிழில் அத்துறை களை விருத்தி செய்ய விரும்புவோருக்குச் சவாலாகவே உள்ளன. தமிழிற் கலைச் சொல்லாக்கம் பற்றிய ஒரு பொதுவான கொள்கை தமிழ் வழங்கும் நாடுகளில் முக்கியமானவற்றிடையே இன்னமும் உருவாகவில்லை. அவ்வாறு ஒன்று உருவானாலுங்கூடக் கலைச் சொல்லாக் கத்திற்கும் அயலிலிருந்து ஊடுருவுஞ் சொற்பெருக்கத்துக் குமிடையிலான முரண்பாடு எளிதாகத் தீரப்போவ தில்லை:
வானொலி, தொலைக்காட்சி, பேருந்து, கோப்பு போன்ற அழகிய எளிய சொற்களாற் கடந்த பல தசாப்தங்களாக ரேடியோ, ரி.வி, பஸ், பைல் போன்ற பிரயோகங்களைப் பெயர்க்க முடியவில்லை. இந்த நிலையிற் சமுதாயத்தின் மிகச் சிறுபான்மையினர் மட்டுமே தமது பாடநூல்களிற் பார்த்துப் பின் மறக்கக் கூடிய கலைச் சொற்கள் எவ்வாறு பல வழிகளிலும் நம்மை வந்து அடையும். அயற்சொற்களின் இடத்தைப் பிடிக்க முடியும் என்பது ஒரு நியாயமான ஓர் ஐயமே.
தமிழிற் கலைச் சொற்கள் பற்றி முன்பு எழுதிய கட்டுரை ஒன்றில் கலைச் சொற்கள் தமிழ்ச் சொல் வளத்தின் ஒரு பகுதியாகாததற்கு நமது சமுதாயத்தில்

79
விஞ்ஞான, தொழில்நுட்ப நடைமுறை பரவலாகாதது ஒரு முக்கிய காரணம் என்ற் கருத்தை வெளிப்படுத்தி யிருந்தேன். எனவே தமிழிற் கலைச் சொல்லாக்கத்தால்
என்ன பயன் விளைகிறது என்ற கேள்வி எழுகிறது.
தமிழிற் கலைச் சொல்லாக்கத்தின் நோக்கம் அயற் சொற்களுக்கு மாற்றுச் சொற்களை வழங்குவது மட்டுமே எனின் கலைச் சொல்லாக்கம் பயனற்ற ஒரு முயற்சி என்பதில் நியாயமிருக்கலாம். கலைச் சொற்கள் ஒரு விஞ்ஞான அல்லது தொழில்நுட்பக் கருதுகோளையோ விளக்கும் பதமாக அமையுமிடத்து அதற்கு மேலதிகமான ஒரு பயன்பாடு உண்டாகிறது. வழக்கு மொழியிற் கலைச் சொற்கள் உலவாத நிலையிலும் அவை தமிழறிவு மட்டுமே உடைய ஒருவருக்கு மேலதிகமான விளக்கம் தரும் ஒரு வசதியாகின்றன. அந்தளவில், அடிப்படையான கருதுகோள்களைக் குறிக்கும் சகல சொற்களுக்கும், தெளிவான நல்ல தமிழ்க் கலைச் சொற்கள் புனையப் படுவது அவசியமே.
புனையப்படும் கலைச் சொற்கள் மட்டுமே பிரயோ கிக்கப்பட வேண்டும் எனும் வாதம் நியாயமானதல்ல. பேச்சு மொழி மூலம் புகும் அயற்சொற்கள் வெவ்வேறு வகைகளிலும் வெவ்வேறு அளவுகளிலும் தமிழ்ப்படுத்தப் படுகின்றன. தமிழர் அச்சொற்களை எவ்வாறு பிரயோ கிக்கிறார்களோ அவ்வாறு அவை நிலைபெற்றுவிடு கின்றன. இவற்றை நவீன தமிழ் மொழியின் கூறுகளாகக் கருதுவதில் ஒரு தவறுமில்லை. இவற்றை ஒருமைப்படுத்தி ஒழுங்கு செய்வதன் மூலம் தமிழின் சொல்வளத்தை நாம் பெருக்குகிறோம். சில சமயங்களிற் பேச்சு வழக்கில் உள்ள ஒர் அயற்சொல்லோ, அதன் திரிபுபட்ட வடிவமோ கலைச் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்லாக அமைய லாம். அல்லது இரண்டுமே நுண்ணிய வேறுபாடுடைய, ஒத்த கருத்துடைய பதங்களாக செயற்படலாம்.

Page 42
80
அயலில் இருந்து வரும் சொற்கள் மட்டுமே எந்த மொழியினதும் அடிப்படையான தன்மையை மாற்றிவிட முடியாது. அவ்வாறு சாத்தியமாயின் மலையாளம் ஓர் ஆரிய மொழி போல மாறியிருக்க வேண்டும். தமிழிற் கூட வடமொழிப் பாதிப்பு மிகப் பெரியது. அப்பாதிப்புத் தமிழின் அடிப்படையான தன்மையை மாற்றிவிட வில்லை. (மாற்றக்கூடிய அபாயம் என்பது என் நிலைப்பா டல்ல). அயற்சொற்களை உள்வாங்குவதும் அவசியமான அயற்பண்புகளை உள்வாங்குவதும் மொழியின் தோற் றத்தை மாற்றுவது உண்மை. வளர்ச்சி என்பதே மாற்றத் தின் பாற்பட்ட ஒன்று. தமிழைத் தனிமைப்படுத்த வந்தவர்கள் இதுவரை காலமும் சாதித்தது என்ன? அயல் ஊடுருவல் ஒழுங்கற்ற முறையில் நிகழ்ந்ததன் விளைவாக தமிழில் நவீனமடைதலை நெறிப்படுத்தல் மேலும் சிரமமாகியுள்ளது. இந்த வகையில் நாம் சிங்களம், மலையாளம் போன்ற மொழிகளில் இருந்து நிறையக் கற்க வேண்டியுள்ளது.

மொழிபெயர்ப்பின் பிரச்சினைகள்
ஒரு மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பை யும் இன்னுமொரு மொழிப்படுத்துவது சிரமமான காரியம். நல்ல மொழிபெயர்ப்புக்கு மூலத்தின் மொழியி அலும், மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் நல்ல புலமை யினது அவசியம் பற்றி நம்முட் கருத்துவேறுபாடு இராது. ஆயினும் மொழிபெயர்ப்பின் பிரச்சினைகள் மொழிப் புலமை மூலம் மட்டுமே தீர்க்கப்படக் கூடியனவல்ல. சில பிரச்சினைகள், தரப்பட்ட இரண்டு மொழிகளதும் சமுதாயத்தன்மைகளால் ஆளப்படுவன என்பதாற் சில சூழல்களில் அவை மொழிபெயர்ப்பை ஏறத்தாழ அசாத் தியமான ஒன்றாகவே செய்துவிட முடியும். சில சமயங் களில் ஒரு வார்த்தைப் பிரயோகம் அது பயன்படுத்தப் படும் சூழலையொட்டிய அர்த்தத்தையுடையதாயும், அச்சூழலுக்குப் புறம்பாக அது பொருளற்ற ஒன்றாகியும் போய்விடமுடியும் என்பதால் நல்ல மொழிபெயர்ப்பு, வெறும் மொழிப்புலமை மூலம் சாதிக்கமுடியாததாகி விடுகிறது. ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் போது மொழி அறிவுக்கும் மேலாக அப்படைப்பு உருவான சமுதாயச் சூழல் பற்றிய அறிவும் படைப்பாளியின் சமுதாயக் கண்ணோட்டமும் பற்றிய அறிவும் அவசிய மாகின்றன. இவ்வளவும் படைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள அவசியமானவை. மொழிபெயர்ப்பில் ஏற்படும் அடுத்த பிரச்சினை நாம் சரியாகவே புரிந்து கொண்டதை இன்னொரு மொழியில் எடுத்துரைக்க முடியுமா என்பது.

Page 43
82
மொழியின் சமுதாயச் சார்பான பண்பையும் காலத்தை யொட்டியே வளரும் அதன் தன்மையையும் உணர்ந்து கொண்டால் சில கருத்துக்களை, ஒரு மொழியில் மாற்றங் களைப் புகுத்தாமற். சரியாக எடுத்துரைப்பது சாத்திய நில்லாமற் போவதை உணரலாம். மொழி என்பது அதன் பவனையாளர்களைச் சார்ந்த ஒன்று. மொழி பாவனை யாளர்கட்கு அப்பாற்படும் போது இயக்கமற்று விடுகிறது. பாவனையாளர்களுக்குப் பரிச்சயமற்ற, அவர் களாற் தெரிந்துகொள்ள முடியாத யாவுமே பாவனை பாளர்களது மொழிக்கு வெளியே நின்றுவிடுகின்றன. பாவனையாளர்கள் அறியக்கூடிய ஒன்றை மொழிக்குள் கொண்டுவரப் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின் றன. வழக்கில் உள்ள சொற்களில் நெருங்கிய பொரு சொல்லை (அல்லது சொற்றொடரை) உபயோ للاسIJ560)L@) கித்தல், சமகால மொழி வழக்கில் உள்ள (அல்லது மொழி யில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஆனால் வழக்கொழிந்து போன) சொற்களின் அடிப்படையில் புதிய சொற்களை ஆக்கல், பிறமொழிச் சொல்லைத் தமிழ்ப்படுத்தல், பிறமொழிச் சொல்லை அது பரிச்சய மாணவாறே பயன்படுத்தல் போன்றன மொழிபெயர்ப் பாளர்கள் மட்டுமன்றி, மொழியை உபயோகிக்கும் மற்ற வர்களும் அறிந்த உத்திகளே. இவை ஒவ்வொன்றிலும் பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் மொழிபெயர்ப்பு சாத்தியப்பட இவ்வாறான ஒரு செயற்பாடு அவசிய7
மாகிறது.
ஒரு சொல்லைப் புதிதாகப் புனைந்தோ புகுத்தியோ ஆயிற்று என்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடுவதில்லை. சொல் குறிக்க எண்ணியதைக் குறிப்பதாக வாசக னால் புரிந்துகொள்ளப்படுகிறதோ என்பது நிச்சய மற்றது. எழுதியவர் குறித்து கருத்த வாசகனுக்குப் பரிச்சயமான ஒன்றாக இல்லாத வரையில், அண்ணள வான எதையோ சுட்டிக்காட்டுவதற்கு அப்பாற் புதிய?

83.
வார்த்தை எதையுமே செய்வதில்லை. சில சமயம் இது குருடனுக்கு பால் காட்டியமாதிரியும் தோன்றலாம். ஆயினும் இவ்வாறான சுட்டுதல் இல்லாமல், எந்தவொரு மொழி மூலமும் புரிதல் என்பது சாத்தியமில்லாமற் போகலாம். புகுத்தப்பட்ட சொல் குறிக்கும் மூலக் கருத்து, அதனுடன் பரிச்சயமானோரின் தொடர்பு, அச்சொல் குறிக்கும் கருத்தில் அதன் தொடர்ச்சியான பிரயோகம் என்பன அச்சொல்லுக்குக் காலப்போக்கில் அதன் பொருளையும் பயன்பாட்டையும் நிறுவுகின்றன? ஆயினும் மூலத்தில் அது குறிக்க எண்ணியதும் இறுதியில் அது குறிப்பதும் மிகவும் வேறுபட்ட விஷயங்களாகிவிட வும் இடமுண்டு. (இது வேறு பிரச்சினை.)
சில சூழ்நிலைகளில் மூல மொழியில் நுண்ணிய வேறுபாடுகளைக் காட்டுமாறு பல சொற்கள் (தோற்றத் தில் நெருங்கிய பொருளுடையனவாகவோ ஒன்றையே குறிப்பனவாகவோ) இருக்கலாம். சொல்லை உபயோகித்த வர் அந்தநுண்ணிய வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டே அச்சொல்லைத் தெரிந்தெடுத்திருக்கலாம். மாறாக, அச் சொல்லின் ஒசை அல்லது வேறு பயனுள்ள இயல்பு கருதி அதைத் தெரிந்தெடுத்திருக்க முடியும். இவ்வாறான ஒத்த பொருளுடைய பல சொற்கள் ஒவ்வொன்றுக்குமுரிய தனித்தனியான சொற்கள் இன்னொரு மொழியில் இருக்க அவசியமில்லை. இத்தகைய சொல்வளம் சமுதாயச் சூழல் தொடர்பானது என்பதால் வெவ்வேறான சொற்களின் அவசியம் சமுதாய ரீதியாக எற்றுக்கொள்ளப்படும் வரை (அதாவது அவை குறிக்கும் நுண்ணிய வேறுபாடுகளை அடையாளங் காண்பதன் அவசியம் உணரப்படும் வரை,) இவற்றுடன் தொடர்பான மொழிபெயர்ப்புப் பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். மொழி மாற்றம் சமுதாய மாற்றத்தையொட்டி ஏற்படுவதால், ஒரு கால கட்டத்திற் காணாதிருந்த நுண்ணிய வேறுபாடுகள் பின்னொரு காலகட்டத்திற் காணப்படவும் வலியுறுத்தப்

Page 44
84
படவும் இடமுண்டு. அவ்வாறே ஒரு காலகட்டத்தில் வலி யுறுத்தப்பட்ட நுண்ணிய வேறுபாடான பிரயோகங்கள் பின்னொரு காலகட்டத்திற் புறக்கணிக்கப்படவும் கூடும்.
எனவே, மொழிபெயர்ப்பின் பிரச்சினை பொருத்த மான வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்துப் போடுவ துடன் தீர்ந்துவிடுவதில்லை. மூலத்தினின்று மொழி பெயர்க்கப்படும் கருத்துக்கள் மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் அம்மொழி வழங்கும் சமுதாயத்திற்கும் பரிச்சசயமானவையா, உடனடியான சூழலில் பரிச்சய மாக்கப்படக் கூடியனவா என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றின் தீர்வு மொழிபெயர்ப்பாளனுடைய பணியை, ஒரு மொழியிலுள்ள வாக்கியங்கட்கு மாற்று வாக்கியங் கள் தேடுகிற ஒன்றாக மட்டுமன்றிப் பரிச்சமற்ற புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பரிச்சயப்படுத்துகிற ஒன்றாக விரிவுபடுத்துகின்றன. புதிய சொற்கள் சொற் பிரயோகங்கள் என்பனவற்றைப் புகுத்தும் தேவைகள், மொழி பெயர்ப்பாளனை, மற்ற மொழி பெயர்ப்பாளர் கள், வாசகர்கள் ஆகியோருடனான தொடர்பு மூலம் மொழியின் மாற்றத்திலும் வளர்ச்சியிலும் பங்க ளிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன.
சொற்களின் தெரிவுபற்றிய பிரச்சினை தீர்ந்தவுடன், குறைந்தபட்சம் விஞ்ஞானம், மெய்யியல், சட்டம் போன்ற அறிவுத்துறைகளில் மொழி பெயர்ப்புப் பிரச்சினை தீர்ந்துவிடுகின்றது என்ற கருத்துக் கற்றோர் மத்தியிலும் பரவலாக இருந்து வந்துள்ளது. பாட நூல் மொழி பெயர்ப்புக்களில் கலைச்சொற்களை உருவாக்கு வதில் காட்டப்பட்ட ஆர்வம் மொழி பெயர்ப்பின் பிற அம்சங்களில் காட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலப் பதங்களுக்குரிய தமிழ்ப்பதங்கள் வழங்கப் படுவது முக்கியமான பணியே. எனினும் அந்தப் பதங்கள் குறிக்கும் கருத்து சரியாக தமிழில் விளங்கிக் கொள்ளப்

85
படுகின்றமை பிரயோகம் சார்ந்த ஒன்று என்பது முக்கிய மானது. சமுதாய வழக்கிற்குப் புறம்பான புதிய சிந்தனை களைப் பரிச்சயப்படுத்தப் புதிய சொற்களைப் புகுத்து வதும் அவற்றைப் பாடநூல்களில் புகுத்துவதும் மட்டுமே போதாது. அந்தந்தத் துறைகள் சார்ந்த சிந்தனை முறை களும் மரபுகளும் கூடவே பரிச்சயமாவது அவசிய மாகிறது. அல்லாத பட்சத்திற் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலச் சொற்களுக்குரிய தற்காலிகமான பிரதியீடுகளாக மட்டுமே இருந்து விடுகின்றன. முக்கியமான சிந்தனைகளும் ஆக்கங் களும் மூல மொழியான ஆங்கிலத்திலேயே நிகழுமாறு நேர்வதுடன், தனியே தமிழிற் செயற்படுமாறு வரைய றைப்பட்டவர்கள் பின்தங்கும் நிர்ப்பந்தமும் ஏற்படு கிறது. விஞ்ஞானம் மற்றும் அறிவியற் துறைகளில் ஆங்கில மொழி பேசுவோரிடை ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி தமிழிற் செயற் படுவோரிடை (தமிழ் சமுதாயத் தில்) இல்லாமை இப் பிரச்சினையை உக்கிரப்படுத்துகிறது. எனினுந் தமிழ் மொழியிற் கலைச்சொல்லாக்கத்திற் சிறிது விறைப்பற்ற கொள்கையும் பேச்சு வழக்கு மொழியினது தேவைகளையும் தன்மையையும் அனுசரித்துச் செயற்படும் போக்கும் தமிழிற் புதிய சிந்தனைகள் பரவுவதற்கு உதவி யாக இருந்திருக்கும் சொற்களின் தெரிவு என்பது ஒரு திட்டவட்டமான தீர்மானம் அல்லது சட்டமியற்றல் மூலம் எக்காலத்துக்குமாகச் செய்யப்படும் ஒன்றல்ல. ஒரே ஆங்கிலப்பதத்தைக் குறிக்கும் பல சொற்களுக்கிடையி னின்று தெரிவுசெய்யப்பட்டு நிலைத்துப் பயன்படும் சொல் பலவேறு சூழ்நிலைகளால் நிர்ணயமாகிறது. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் என்ற சொற்கட்குப் பல்வேறு தமிழ்ப் பிரதியீடுகளையும் புறக்கணித்து ஆங்கில வார்த்தைகளைத் தழுவிய சொற்களே வழக்கில் மிஞ்சின; கொம்ரேட் என்ற சொல்லுக்குத் தோழர் என்ற சொல்லே ஆங்கில மூலத்தைத் தழுவிய சொற்களை மீறி நிலைத் துள்ளது.
த-6

Page 45
86
நவீன மெய்யியல் தமிழுக்குப் புதியது. எனவேதான் தமிழ் எழுத்தில் நவீன சிந்தனைகளைப் படைப்பது எளிதாக இருக்கவில்லை. ஆங்கில மூலத்தில் மிகவும் இலகுவாக அமைகிற வாக்கியங்கள் தமிழ் வடிவத்தில் மிகவும் விறைப்பாகவும் செயற்கையாகவும் அமைவதை நாம் அவதானித்திருக்கலாம். மொழி பெயர்ப்பில் உள்ள பிரச்சினை, மாற்று வார்த்தைகள் காண்பது தொடர் பானது மட்டுமல்ல, வாக்கிய அமைப்புத் தொடர்பான தும் கூட என்பதை இதனால் உணரலாம்.இதைவிடச், சில சமயங்களிற் கருத்துக்களை முன்வைப்பதில் ஆங்கில மொழி வழக்கிற்குப் பரிச்சயமான முறை தமிழுக்கு. முற்றிலும் அந்நியமான ஒன்றாக அமைவதும், நவீன சமுதாய வளர்ச்சியையொட்டி ஆங்கில மொழியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மாற்றங்களையொத்த மாற்றங்கள் தமிழில் ஏற்படாமையும் மொழி பெயர்ப்புக் களைச் சிக்கலானவையாக்குகின்றன. இப்பிரச்சினை களின் தீர்வு தமிழ்ப்பேசும் சமுதாயம் நவீன சிந்தனை யுடன் பெரிதும் பரிச்சயமாகி அச்சிந்தனைகள் இலகுவான அன்றாட மொழி வழக்கில் பரிமாறப்படக் கூடிய சூழ்நிலையிலேயே சாத்தியமாகும். அதாவது; அப் பிரச்சினைகளின் தீர்வு சமுதாய வளர்ச்சியுடனொட்டிய மொழி வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. * சுருங்கக் கூறின், ஒரு சமுதாயத்தின் நடைமுறையுடன் தொடர்பற்ற ஒரு அயலான கருத்தை அச்சமுதாய நடைமுறைக்குரிய மொழியிற் குறிப்பது சிக்கலான தாகவே இருக்கும்.
நவீன மேற்கத்திய சிந்தனைகளைத் தமிழிற் தருவதன் முக்கிய பிரச்சினை, தமிழ் மொழியின் அடிப்படையான பலவீனம் ஏதேனும் தொடர்பானதல்ல, சமுதாய ரீதியான பலவீனம் தெர்டர்பானதே. சமுதாயத் தில் புதிய சிந்தனைக்கான தேவையும் தேடலும் பரவ லாகும் பொழுது மொழியும் அதற்கேற்பத் தன்னை வளர்த்துக் கொள்ளவே செய்யும்.

ஆக்க இலக்கியங்களில் மொழிபெயர்ப்பின் பிரச்சினை வேறொருவகையில் சிக்கலானதாகிறது. சொற்களுக்கும் சொற் பிரயோகத்துக்கும் உள்ள சமுதாய முக்கியத்துவம் ஆக்க இலக்கியங்களில் முதன்மை பெறு கின்றது. சொற்களும் சொற்றொடர்களும் அகராதி அர்த்தத்திற்கும் புறம்பான முறையில், விஷேடமான அர்த்தங்களுடன் பாவிக்கப்படுவதை நாம் அறிவோம். இவ்வாறான வழக்குகள் பிரதேச, சமுதாயத் தொடர் பான மாறுபாடுகட்குட்படுவதையும் குறிப்பிடவேண்டும். பழமொழிகள், உவமைகள் என்பன ஒரு குறிப்பிட்ட மொழிவழக்கிற் கொண்டுள்ள வலிமையை மொழி பெயர்ப்பில் இழந்துவிடுகின்றன; சில சூழ்நிலைகளில் மாற்று வாக்கியங்களும். சொற்றொடர்களும் பயன்படக் கூடுமாயினும் மொழிபெயர்ப்புப் பிரச்சினையை முற்றாகத்தீர்ப்பது எப்போதுமே சாத்தியமல்ல. வட்டார வழக்குச் சொற்பிரயோகங்கள் மொழிபெயர்ப்புகளில் வலுவிழந்து விடுகின்றன. அங்கதம், நையாண்டி போன் றன சிலேடையான சொற் பிரயோகங்களுடன் சேர்ந்து வரும்போது மொழிபெயர்ப்பு மேலும் சிரமமாகின்றது.
இலக்கியப் படைப்புக்களை அவற்றின் உடனடியான சமுதாயச் சூழலுக்கு வெளியே (கால அளவிலும், ஸ்தல அளவிலும்) வைத்து நோக்கும்போது படைப்பாளியை யும், சமுதாயத்தையும் அவர்கட்கிடையிலான உறவையும் முற்றாகப்புரிந்து கொள்வது எளிதல்ல. ஒரு மொழியி லேயே ஒருவரது படைப்பு அவரது காலத்துக்கும் சூழலுக் கும் அந்நியமான ஒருவராற் தவறாகவே விளங்கிக் கொள்ளப்படுவதை உணர்த்த பண்டைய தமிழ் இலக்கி யங்களை வியாக்கியானஞ் செய்வதில் உள்ள முரண்பாடு களே போதுமானவை. சமகால இலக்கியங்களிலேயே இவ்வாறான பிரச்சினை உள்ளபோது, சூழலுக்குப் புறம் பான, காலத்தால் வேறுபட்ட படைப்புக்களில் இவை வியப்புக்குரியனவல்ல.

Page 46
88
ஒரு படைப்பின் சூழல் பற்றிய சரியான அறிவு இருந்தாலும், மொழிபெயர்ப்பாளர் அதைச் சரியாக உணர்த்த்ாத பட்சத்தில் ஒரு மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகர் அதைத்தன் சூழலினதும் அனுபவங் களினதும் அடிப்படைலேயே வியாக்கியானம் செய்யவும், அதை தவறாகவே புரிந்து கொள்ளவும் மிகுந்த இடமுண்டு. எனவே பல சமயங்களில் அடிக்குறிப்புக் களும் விளக்கங்களும் மிகவும் அவசியமாகின்றன.
ஒரு படைப்பின் சமுதாயச்சூழல், அதன் சமுதாய நிலைப்பாடு, அதன் கலாச்சாரப் பின்னணி போன்றவை மொழிபெயர்க்கப்படும் மொழியைப் பேசும் சமுதாயத் தினது அல்லது சமுதாயப் பிரிவினது அநுபவங்களுடன் பொதுவான பண்புகளை உடையதாக உள்ளபோது மொழிபெயர்ப்பின் காரணமான இழப்புக்களும் விகாரங் களும் குறைக்கப்படலாமாயினும் முற்றாகத் தவிர்க்கப் படமுடியுமோ என்பது நிச்சயமற்றது. ஆயினும் ஒரு மொழியினதும் அது சார்ந்த கலாச்சாரத்தினதும் சமுதாயத்தினதும் விருத்தியில் மொழிபெயர்ப்புக்களது முக்கியத்துவம் புறக்கணிக்கத்தக்கதல்ல.
மொழிபெயர்ப்புக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப் பதன்மூலம் மட்டுமன்றி தம் பிரச்சினைகள் காரணமாக வும் மொழிவளர்ச்சிக்குப் பங்களிக்கின்றன. அதே போன்று ஒரு மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்ப்பின் குறைபாடு காரணமாக மூலத்தின் சில அம்சங்களை இழப்துவிடுகிறபோதும் தன் திறமை மூலம் அந்த இழப்பைக், கலையாற்றலூடு, ஒரு பகுதியேனும், ஈடு செய்யமுடியும். ஆயினும் மொழிபெயர்ப்பாளர்கள், முக்கியமாக ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பின் சிக்கல்களை மனதிற்கொண்டு செயற் படுவது பயனுள்ளது.

கவிதையிற் பேச்சு வழக்கு மொழிப் பிரயோகம்
டேச்சுவழக்கு மொழிப் பிரயோகம் தொடர்பாக, வெகுகாலம் முன்னர் ஒரு தடவை எழுதியபோது, பேச், வழக்கை எழுத்து முற்றாகப் பிரதிபலிக்க இயலாது எனக் குறிப்பிட்டேன். பேச்சு வழக்கை அப்பட்டமாகப் பிரதி செய்வதன் மூலமே "மண்வாசனை" யை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடன் எனது முரண்பாட்டையும் குறிப்பிட்டேன். மொழியியல் ஆய்வுகட்கும் ஒரு வட்டார வழக்கின் தனித்துவமான மொழியியல் அம்சங்களை அல்லது ஒட்டுமொத்தமான தனித்தன்மையை வலியுறுத் தும் நோக்கிலும் அல்லாமற் பிரதேச வழக்கில் இலக்கியத் தைப் படைப்போர் அதை ஒரு துணைமொழியிற் படைக் கிறார்கள் என்பதனால் அவர்களது படைப்பு அந்தத் துணைமொழி பேசும் வட்டத்துக்குள் அடைபட்டு விடுகின் றது என்பது ஒரு முக்கியமான கண்ணோட்டமாகும். இதை விடப், பிரதேச வாரியான (அல்லது சமுதாயப் பிரி வின் அடிப்படையிலான) பேச்சுவழக்குகட்கிடையிலான பெருத்த வேறுபாட்டைப் போலன்றி, எழுத்து மொழி , வழக்குக், குறைவான வேற்றுமைகளையே காட்டுகிறது. (புதிதாகப் புனையப்படும் சொற்றொடர்கள், அயல் மொழிச் சொற்களைத் தழுவிய பதங்கள் போன்றவற்றை ஒதுக்கினால் எழுத்து மொழியானது வேறுபாடுகள் அற்றது என்று நான் வாதிக்க முனையவில்லை.) விறைப் பான வழக்கொழிந்த மரபுசார்ந்த மொழி நடையையும் கொச்சைத்தனமானதும் பிழைகள் மலிந்ததுமான நடை யையும் தவிர்த்துப் பார்த்தால் இலகு தமிழில் எழுதும்

Page 47
90
பயிற்சி பெற்ற ஒருவரது எழுத்தைச் சராசரியான தமிழ் மொழியறிவுடைய இன்னொருவர் விளங்கிக்கொள்வது அவ்வளவு சிரமமானது அல்ல. பிரதேச வாரியான வேறுபாடுகள் சொற்பிரயோகத்தில் தலைகாட்டுவது உண்மையே எனினும் எழுத்து மொழி வழக்குகளிடையே கூடுதலான ஒற்றுமை இருக்கிறது என்பது நாம் எளிதில் உணரக்கூடிய ஒன்று.
அன்றாடப் பேச்சுவழக்கு எழுத்திற் பிரயோகிக்கப் படுவது பற்றிய விவாதம் மிகவும் பழையது. பேச்சு வழக்குத்தன்னை இலக்கியத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக நிலைநாட்டிக் கொண்டுள்ளது. பிரச்சினை யானது பேச்சு வழக்கின் பிரயோகம் சரியா பிழையா என்ற விளிம்பை எப்போதோ கடந்தாயிற்று. ஆயினும் எந்த அளவுக்கு, எவ்வாறு என்ற வினாவானது, எழுத்தின் நோக்கம், அதன் வலிமை ஆகியன தொடர்பான அம்சங் களில் தொடர்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் திட்ட வட்டமான விறைப்பான தீர்வுகள் தருவது, (என்னளவிற்) சாத்தியமில்லை என்றே தெரிகிறது. எனினும், சில விஷயங்களையிட்டு என் கருத்துக்களை முன்வைப்பது, இவ்விஷயத்தில் மேலும் ஆழமான சிந்தனைக்கும் எழுத் தில் பேச்சு மொழியின் பிரயோகத்தை எவ்வாறு அதிக விளை பயனுடன் நடைமுறைப் படுத்தலாம் என்பது தொடர்பாகப் பயனுள்ள வாதப் பிரதிவாதங்களைக் கிளப்புதற்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன். (விளைபயன் என்பது எழுதுபவரது நோக்கத்தின் சார்பாகவே கருதப்படுகிறது.)
நாடகம், சினிமா போன்றவற்றில் நேரடியான உரையாடல்களின் பங்கு, தவிர்க்க முடியாமலே, பேச்சு மொழியை வலியுறுத்திற்று. மரபுசார்ந்த செந்தமிழ் அல்லாமல் அதினும் எளிமையான இலகு தமிழும், பேச்சு மொழிக்கு (அதன் கொச்சைத் தனத்துக்கும் கூட)விட்டுக் கொடுக்க நேர்ந்தது. இன்று சராசரியாகப் பார்த்தால்

91
நாடகங்கள சனிமாக்கள் போன்றவற்றில் மரபுசார்ந்த மொழி வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் பாதிப்பு உடனடியாகவே எழுத்தையும் தொற்றிக்கொள்கிறது. உரையாடல்களிலும் ஆசிரியர் தன் நேர்முக அனுபவமாக உரையாடும் பாங்கில் எழுதும் இடங்களிலும் பேச்சு வழக்கோடு தழுவிய மொழி நடையையும் அவ்வாறில்லாத படர்க்கை யான விவரணங்களில் மரபுசார்ந்த எழுத்து மொழியோடு ஒட்டிய நடையையும் பரவலாகக் காணலாம். பேச்சு வழக்கு மொழியை இழிசினர் வழக்கு என்று நிராகரிக்க முனைந்தவர்கள் கூட அதை என்றைக்குமே எழுத்திற் தவிர்க்க முடியும் என்று முழு மனதுடன் நம்பினார்களோ என்று நிச்சயமில்லை. என்னளவில் இழிசினர் வழக்கு" என்ற பதமே குறிப்பது போல ஒரு வர்க்க சார்பான நோக்கமே இந்தவிதமான "மொழித் தூய்மையை” வலியுறுத்தி நின்றது. இழிசினர் வழக்கு என்ற பதம், கலை மகள், ஆனந்த விகடன், கல்கி போன்ற சஞ்சிகைகளில் வந்த பிராமணர் தமிழைக் குறிப்பிடப் பயன்பட்டதாக நினைவில்லை. இந்தத் தமிழ்க் காவலர்களது வீடுகட்கு வாரந்தோறும் மாதந்தோறும் அந்தப் பத்திரிகைகள் வரத் தவறவுமில்லை.
எவ்வாறாயினும் இன்று சிறுகதை, நாவல், நாடகம் போன்றன சமகாலச் சமுதாயத்தின் நேரடியான சித்தரிப்புக்களாக அமையுஞ் சந்தர்ப்பங்களில் உரை யாடல்களின் பதிவு அன்றாடப் பேச்சு வழக்கை ஒட்டிய அல்லது அதன் சற்றே மெருகிடப்பட்ட வடிவமாகவே அமைந்துவிடுகிறது. மரபுசார்ந்த எழுத்து மொழிப் பிரயோகம் உரையாடல்களிற் குறிப்பான தேவைகளை யொட்டியே இன்று பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையாகாது. பேச்சுமொழிப் பிரயோகத்திற்கு எதிரான தளைகள் இருந்த காலத்தில் அதனை மீறி எழுதுவதில் இடர்ப்பாடுகளும் இருந்தன. அவை மீறப்பட்ட பிறகும் அவற்றை மீறுவது அவசியம் என்று காட்டப்பட்ட

Page 48
92
பிறகும் பிரச்சினை பேச்சு மொழியை எவ்விதம் கையாள் வது என்னும் திசையிற் திரும்பியது. ஆக்க இலக்கிய வடிவங்களில் பேச்சு மொழியின் பாவனை நியாயப்படுத் தப்பட்ட போதும் சில துறைகளில் பேச்சு மொழியைப் பயன்படுத்துவது மிகவும் வரையறைக்குட்பட்டே இருக்கிறது மரபோடொட்டிய இசைப்பாடல்களில் பேச்சு மொழிப் பிரயோகம் வரையறைப்பட்டிருக்கிறதும் சினிமாப் பாட்டுக்களிற் பேச்சுத் தமிழ் (கொச்சை உட்பட) பரவலாக இடம்பெறுவதும் நம்மை வியக்க வைப்பதில்லை. ஆயினும் நாட்டார் பாடல்கள் போன்று பேச்சு மொழியை அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இசைப் பாடல்கவிதை மரபு இருந்தும், கவிதையின் இலக்கணப் பிடிகள் புதுக்கவிதையின் தோற்றத்தை யொட்டித் தளர்ந்துபோன பின்பும், புதுக் கவிதை உட்படக் கவிதைகளின் சொல்லமைப்பு, உரைநடை ஆக்க இலக்கியங்களுடன் ஒப்பிடுகையில், மரபு தழுவியே அமைந்திருக்கிறது எனலாம். இதற்கான காரணம் இயலாமையோ அல்லது மரபின் பிடிப்போ என்று என்னாற் கருத இயலவில்லை. A
பேச்சு மொழியைக் கவிதையிற் பயன்படுத்துவதை ஒரு “சாதனை' என்ற விதமாக அண்மையில் மஹாகவி பற்றிய விமர்சனம் ஒன்றில் ஒருவர் எழுதியிருந்தார். என்னளவிற் பேச்சுமொழியிற் கவிதை எழுதுவதிற் “சாதனை’ எதுவும் இல்லை. (இது மஹாகவி பற்றிய குறைவான மதிப்பீடு அல்ல) நம்மிடையே, எழுதப் படிக்க நன்கு தெரிந்தவர்கட்கு, எழுத்து மொழியோடு ஒப்பிடத் தக்களவு பேச்சு மொழியிற் பரிச்சயம் உண்டு. எனவே, குறைவான பாவனைப் பரிச்சயமுடைய எழுத்து மொழிநடையில் ஒருவர் கவிதை புனைய முடியுமாயின், அதையே பேச்சு மொழியிற் செய்வது சிரமமில்லை. பிரச்சினை வேறெங்கேயோ இருக்கிறது என்றே நினைக் கிறேன்: கவிதைக்கான மொழிப் பிரயோகம் உணர்வு

93
பூர்வமாகவே தெரிந்தெடுக்கப்படுகிறது. பேச்சுமொழியைக் கவிதையில் பயன்படுத்தும் போது அது ஒரு தேவை கருதியே அங்கு பயன்படுகிறது என்றே நான் நம்புகிறேன்.
கவிதையில் வரும் வாக்கிய அமைப்புக்கள் உரைநடை யினின்று வேறுபட்டவை. ஒரு கருத்தை வசனமாகக் கூறும்போது போலன்றி, கவிதையிற் கூறும்போது, அங்கே ஒசை நயம் மட்டுமின்றி இறுக்கமான வார்த்தை அமைப்பு, கருத்துச் செறிவு, அழுத்தம் போன்ற பல தேவைகள் உள்ளன. எழுத்துமொழியில் வரும் வசனத்தி னின்றும் மாறுபடுதல் கவித்துவத்தின் தேவையையொட் டியது. பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாக்கிய அமைப்பை (ஓரளவு பரிச்சயமானவாறு அல்லது எளிதாக உணரக்கூடியவாறு) குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் மாற்றியமைக்கும்போதும், கவிதை மரபு கவிஞனின் துணைக்கு வருகிறது. பேச்சுமொழி கவிதையில் பிரயோக மாகும் இடங்களில் அடிப்படையான மொழி வழக்காக (நாட்டார் பாடல்களிற் போன்று) அமையாதபோது, பேச்சுமொழி ஒரு பிறழ்வாகவே அமைகிறது. எனவே மேற்கொண்டு அதிலும் மாற்றங்களை அமைக்கும் போது, பேச்சுமொழியைப் புகுத்திய நோக்கமே சில சமயம் சிதறிவிடலாம். அதாவது, கவிதை அடிப்படையில் எழுத்து மொழியிலேயே படைக்கப்படுகிறது. பேச்சு மொழிப் பிரயோகம் கவிதையின் தேவையை ஒட்டிய மாற்றமாக இயங்குமளவுக்கு அதுவே கவிதையின் மொழியாகவில்லை. எனவே பேச்சுமொழியின் பிரயோகத் தின் வெற்றி, தோல்விகள் அதன் பாவனை கவித்துவத் துக்கோ அல்லது அதன் பிரயோகம் உணர்த்த முயன்ற பண்பிற்கோ எவ்வளவு உதவியது என்பதையே சார்ந் துள்ளது. பேச்சுமொழி ஒரு உத்தி என்ற முறையிற் செயற்படும் போது ஒரு உத்தியின் பயன்பாடு மட்டுமே: சாதனையாகிவிடாது. அதன் விளைபொருளே முக்கியத் துவம் பெறுகிறது.

Page 49
94
1. ‘இனிய நீர்ப் பெருக்கினை
இன் கனி வளத்தினை' 2. முப்பது கோடி முகமுடையாள்' 3. "நாட்டையெல்லாந் தொலைத்தாய்; அண்ணே
நாங்கள் பொறுத்திருந்தோம்" 4. "நெஞ்சு பொறுக்குதில்லையே' 5. மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே - எங்கள்
வாள் வலியும் தோள்வலியும் போச்சே' 6. சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது"
இந்த இடங்களில் வருவன வெவ்வேறு வகை மொழிப் பிரயோகங்கள், ஒவ்வொன்றும் கவிதைக்குரிய ஒவ்வொரு சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பன. "அண்ணே" "நெஞ்சு பொறுக்குதில்லையே' என்பவற்றில் மரபுசார்ந்த பிரயோ கம் தளர்கிறது என்றால் 'தின்னலாச்சே'யும் 'போச்சே' யும் பேச்சு வழக்கைத் தழுவி நிற்கின்றன; ‘சாதிகள் சேருது' எந்தத் தமிழ்ப் பண்டிதரையும் கதிரையிலிருந்து உருட்டிவிட்டிருக்கும். ஆனால் மறவன் பாட்டோ' குடுகுடுப்பைக்காரன் பாட்டோ முற்றாகவே மறவர் அல்லது குறவர்களது பேச்சைப் பிரதிபலிக்கின்றனவா? இல்லை. பேச்சு மொழியை நோக்கிய ஒரு சிறு பெயர்ச்சி யால் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது.இதை விட அதிகமான 'பேச்சு மொழிப் பிரயோகம் எந்தளவு பயனை அளித்திருக்குமோ தெரியாது. (கவிதை ஒரு வேளை முற்றாகவே வேறு விதமாக அமைந்திருக்கலாம். அது வேறு விஷயம்.) பாரதி பயன்படுத்தியவை சந்தமும் வழக்கு மொழியின் ஓரிரு அம்சங்களுமே. அதன் மூலம், ஒரு சூழலை அவரால் உருவாக்க முடிந்தது. பாரதியின் நோக்கம் குடுகுடுப்பைக்காரனையோ மறவனையோ ஒரு சமுதாயச் சித்தரிப்பாய் காட்டுவதல்ல. ஒரு சமுதாயச் சூழலை ஒரு குடுகுடுப்பைக்காரன் மூலமும் ஒரு மறவன் மூலமும் உணர்த்துவதே.

95
‘இனிய நீர்ப் பெருக்கினை" என்பது, எழுத்து மொழி உரைநடை வழக்கில் கூட ஓரளவு செயற்கைத் தன்மை யுடையது. ஒரு பழைய மொழி நடைக்கு உரியது. ஆயினும் பாரத மாதா வுக்கான அஞ்சலியாக வரும்போது பொருந்துகிறது. கூறப்படும் பொருளுக்கும் கவிஞனுக்கு முள்ள உறவுக்கு ஏற்ப மொழிநடை தெரிந்தெடுக்கப்படு கிறது. இந்த உறவு நிரந்தரமான ஒன்றல்ல. கவிதை குறிக்கும் சூழலையும் ஒட்டிய ஒன்று. ஆக்க இலக்கிய மாகப் பேச்சு மொழியின் வெற்றிகரமான பிரயோகம் அதன் சாராம்சம் எவ்வளவு திறமையுடன் கிரக்கிக்கப் பட்டுப் பிரயோகிக்கப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதே யொழிய அது எவ்வளவு தூரம் அப்பட்டமான அன்றாட மொழி வழக்கைக் குறிக்கிறது என்பதில் அல்ல.
கவிதை நாடகங்கள் போன்றவற்றில் அன்றடாப் பேச்சு மொழி சந்த வலிமையோடு இணைவதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே பேச்சு மொழியைப் புகுத்துவது மட்டுமே சாதனையாகிவிடாது. அதன் முக்கிய பரிமாணம், அதாவது அது புகுத்தப்பட்ட தன் நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது, கணிப்பில் எடுக்கப்படவேண்டும்.
பல ஆங்கிலச் சொற்கள் மட்டுமன்றி ஆங்கிலச் சொற் றொடர்களும் கூட இன்று தமிழில் ஒரு பகுதியாகி விட்டன என்ற கருத்தை நான் நெடுநாட்களாக வலியுறுத்தியுள்ளேன். ஆயினும் எழுத்தில் இயன்றவரை எளிய தமிழ்ச் சொற்கள் மூலமே கருத்துக்களைக் கூறுவதை விரும்புகிறேன். தமிழின் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் அயல்மொழிச் சொற்களும் சொற் றொடர்களும், பிறபண்புகளும் என்பதால் அவை யதார்த்த பூர்வமாக உள்ளமை ஏற்கப்பட வேண்டும், அதற்கேற்பத் தமிழ் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது ஒரு விஷயம். ஆனாற் தமிழின் வலிமை அதன் மிக எளிய சொற்களிலேயே தங்கியுள்ளது என்பது நாம்

Page 50
மறக்கக்கூடாதது. பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களை வைத்துக் கவிதை வடிப்பது ஒன்றும் சாதனை அல்ல. ஆனால் அவற்றைவிட வேறு சொற்கள் உதவாத, சூழ்நிலைகள் உள்ளன. அவற்றைச் சரியாக அடையாளங் காணும் போது முறையான அயல்மொழி வார்த்தைப் பிரயோகம் தன் முழுவலிமையையும் வழங்குகிறது.
கவிதையில் பேச்சுமொழிப் பிரயோகமும் பேச்சு மொழியிற் கவிதை எழுதுவதும் சற்றே வேறுபட்ட விஷயங்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

தமிழ் மூலமாக
எல்லா உலக மொழிகளும் தமிழிலிருந்தே வந்தன என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். பூமி தட்டை யானது என்று நம்புகிறவர்களது சங்கமும் இன்னும் இருக்கிறது. தமிழிலிருந்தே சகல உலக மொழிகளும் சொற்களைப் பெற்றன என்ற நிருபிக்கும் மகாநிபுணர் கள் பலர் தமிழ் நாட்டில் உள்ளனர். எனது நண்பரும் சிறந்த சிந்தனையாளருமான எஸ். வி. காசிநாதன் அவர் கள் 1980களின் முற்பகுதியில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டுக்காகத் தமிழ்நாட்டுக்குப் போன போது அத்தகைய நிபுணர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரது விளக்கங்கள் நண்பரை அசரவைத்தன. அத்தகைய விளக்கங்களில் மாதிரிக்கு ஒரு மாணிக்கம்.
“Salt என்ற ஆங்கிலச் சொல் எப்படித் தமிழிலிருந்து வந்திருக்க முடியும்? என்பது எனது நண்பரின் கேள்வி. அதற்கு வந்த பதில்: Salt என்றால் என்ன? உப்பு. உப்பு எங்கேயிருந்து வருகிறது? கடலிலிருந்து, கடலில் என்ன இருக்கிறது? அலை, அலை. சலை, சல், சால், சால்ற்!
இந்த மாதிரியான ஆராய்வுத்திறமையுடன் அவரால் உலக மொழிகள் மட்டுமல்ல. இந்த உலகத்துக்கு அப்பால் எங்கோ ஒரு நட்சத்திர மண்டலத்தில் ஒரு கிரகத்தில் மனிதர் போல ஒரு உயிரினம் ஏதாவது மொழி பேசினாற் கூட, அதுவும் தமிழிலிருந்தே வந்தது என்று நிருபித்து விட முடியும். பேய், பிசாசுசள் இல்லையென்று மாந்திரி கரிடம் ஒருவர் நிருபிக்க இயலுமானலும், இந்த

Page 51
98
வகையான மொழி ஆய்வாளர்களை எவராலும் அசைக்க முடியாது. அவர்களது ஆராய்ச்சிக்குரிய விதிகளை அவர்களே வகுத்து, அவர்களது வசதிக்கேற்ப மாற்றியும் திரித்தும் புனைந்து கொள்வார்கள். அவர்களது வாதங்’ களுக்கு எதிரான அனைத்துமே தமிழின் எதிரிகளது பொய்ப்பிரசாரம். இந்த மனோபாவம் நம்மில் எல்லாரிட மும் நமது தமிழ் நிபுணரிடமுள்ள அளவுக்கு இல்லை என்றாலும் பலரிடம் வேறுபடும் அளவுகளில் உண்டு.
சிலர் தமிழை ஆரியர் இழித்துப் பேசி வந்துள்ளமை யாற் பதிலுக்குத் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டதும் மேம்பட்டதும் என்று வாதிக்கும் ஆவலால் உண்மையான தகவல்களையும் தவறான தகவல்களையும் குழப்பிக் கொள்கிறார்கள். அவர்களது அகநிலைச்சார்பு நின்று நிதானித்து விஷயங்களைப் பரிசீலனை செய்ய அனுமதிப்
பதில்லை. தங்களது வாதங்களுக்கு உடன்பாடற்ற எல்லாவற்றையும் நம்மையறியாமலே ஒதுக்கி விடுகிறார் கள். உடன்பாடான எதையும் விசாரணையின்றி
ஏற்கிறார்கள். தமிழின் தொன்மை பற்றிய பிரமைகளை நாமே நமக்கு ஊட்டிக்கொள்கிறோம். தமிழின் மேன்மை பற்றிய நமது அகச்சார்பு தமிழின் குறைபாடுகளை நாம் கணமுடியாதவாறு நம் கண்களை மறைக்கிறது. தமிழ் என்றால் என்னவென்ற தெளிவின்றி மொழியின் (லோட்டமான அம்சங்களை மொழியின் அடிப்படை  ைதன்மையுடன் குழப்பிக் கொள்கிறோம். மேற் குறிப்பிட்ட தமிழின் தொன்மை பற்றிய வாதத்தின் தர்க்க ரீதியான முடிவு என்ன என்று கவனிப்போம்.
உலக மொழிகள் எல்லாமே தமிழிலிருந்தே தமது சொல்வளத்தைப் பெற்றன என்றால் உலக மொழிகளில் வழக்கிலுள்ள சொற்கள் எல்லாமே தமிழிலிருந்து வந்தவையாகி விடுகின்றன. தமிழில் உள்ள சொற்களும் காலப் போக்கில் மாறியும் திரிந்தும் பயன்படுகின்றன. எனவே அயல்மொழிச் சொற்களும்; தமிழ் சொற்களும்

99
ஒரே அளவில் தமிழுக்குறியனவாகின்றன. ஆகவே தமிழ்அயல் என்ற வேறுபாடு முக்கியத்துவமற்றது. அப்படியா னால் உண்மையில் அயற்சொற்களை தமிழிற் சேர்ப்பது தமிழைத் தூய்மையற்றதாக்கும் செயலாகாது. தமிழி லிருந்து பிறர் பெற்றதை நரம் திரும்பவும் தமிழுக்கே உரியதாக்குகிறோம் என்றே கருத முடியும். தமிழே அனைத்து மொழிச் சொற்களதும் தோற்றுவாய் என்ப தால் உலக மொழிகள் அனைத்துமே தமிழ் சொற்களை" உடையனவாகின்றன. எனவே உலக மொழிகள் எல்லாமே கிட்டத்தட்டத் தமிழாகிவிடுகின்றன. தமிழின் ஒரு வடிவத்துக்கும் இன்னொரு வடிவத்துக்குமிடையே நாம் ஏன் பேதம் பாராட்ட வேண்டும்? ஆகவே தயக்க மின்றிச் சகல அயற்சொற்களை நாம் தமிழில் உலவ விடலாம் என்றாகிறது எவரும் இப்படிச் சொல்வதைத் தூய்மைவாதிகளாற் பொறுக்க முடியாது. இவ்வாறு தமிழின் தொன்மைவாதிகள் தூய்மைவாதிகளுடன் இயல்பாகவே முரண்பாடு உடையோராகின்றனர்.
தமிழின் தொன்மையால் தமிழருக்கு வரட்டுப் பெருமையைவிட ஒரு பயனுமில்லை. தமிழின் தூய்மை யால் தமிழின் விருத்திக்கு ஒரு பலனுமில்லை. தமிழின் வளர்ச்சிக்கு அவசியமானது என்ன? தமிழ் மொழியின் சாராம்சம் என்ன? தமிழரின் தேவையைத் தமிழ் எவ்வாறு நிறைவு செய்ய முடியும்? நவீன உலகிற் தமிழின் பயன்பாடு எவ்வாறு அமைய முடியும்? தமிழின் எதிர்கால முனைப்பு என்ன? இந்தியத் துணைக்கண்ட மொழி விருத்தியுடன் தமிழ் எவ்வாறு உறவு கொள்ள வேண்டும்? இவை தமிழின் எதிர்காலம் பற்றிய முக்கியமான கேள்விகள். இவற்றுக்குப் பதில் தேடாமல் தாத்தாவின் யானை பற்றி எவ்வளவு காலம் பேசிக் கொண்டு தமிழைச் சாகவிட முடியும்?

Page 52
தமிழில் அயற் குறியீடுகள்
இன்று தமிழிற் பயன்படும் எண்கள் அயலிலிருந்து வந்தவை என்று அறிவோம். மாத்திரைக் குறிகள் (அரைத்தரிப்பு, முழுத்தரிப்பு, வினாக்குறி, ஆச்சரியக்குறி, மேற்கோற் குறிகள் ஆகியன) மரபுத் தமிழில் இல்லாதன. இன்று அவையின்றி தமிழிற் சரிவர எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றின் அயற் தன்மையைப் பற்றித் தனித்தமிழ்வாதிகளும் மரபின் காவலர்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. தமிழின் ஒலியியற் பிரச்சினையைத் தீர்க்க மேலதிக எழுத்துக்கள் தேவை என்றால் மட்டும் இவர்களுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வரும். மரபுத் தமிழால் இயலாதது எதுவு மில்லை என்று போர்க்கொடி தூக்குவார்கள்.
தமிழில் விஞ்ஞானக் கலைச் சொற்களை புனைவதிற் பல பிரச்சினைகள் இருந்தன. இரசாயன மூலகங்களை குறிக்கத் தமிழில் இருந்த சொற்கள் தமிழருக்குப் புதியன வான உலோகங்களைக் குறிக்கப் போதாமையால் அவற்றின் ஆங்கிலச் சொற்களையே (சோடியம், மங்கனீசு, குறோமியம், சிலிக்கன் என்றவாறு) தமிழ்ப் படுத்திக் கொண்டோம். இரும்பு, செம்பு, நாகம், கரி, கந்தகம் போன்ற சொற்கள் மூலகங்களைக் குறிக்க பொருத்தமானதாக இருந்த போதும் கூட்டுப் பொருட் களைக் குறிக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை மனதிற் கொண்டு அயம், கொப்பர், சிங்கு, காபன், சல்பர் என்றவாறு கலைச் சொற்கள் இலங்கையில் புனையப்பட்டன. இவை மேலதிகமான சொற்களாக , (தமிழ் வழக்கில் இருந்து வந்து சொற்களுக்குச் சமனாகவும் அவசியமான போது பிரதியீடுகளாகவும்)

10 լ
அமைந்தமை தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தின் சில சிக்கல்களைத் தீர்க்க உதவியது. இவற்றாற் பிற சிக்கல்கள் எழாமலில்லை. ஆயினும் சிக்கல்களே இல்லாத தீர்வுகள் எளிதானவையும் அல்ல. எப்போதும் சாத்தியமானவை யும் அல்ல. இதனைக் கூடச், சிறிது சிரமத்துடன், தமிழின் தூய்மைவாதிகளால் ஜீரணிக்க முடியும். இந்த மூலகங்கள தும் அவற்றின் கூட்டுப் பொருட்களினதும் விஞ்ஞானக் குறியீடுகள் ரோமன் எழுத்துக்களிலேயே சர்வதேசரீதி யாக ஏற்கப்பட்டுள்ளன. சீனாவும் ரஷ்யாவும் ஜப்பானும்
அவற்றை ஏற்றுள்ளன. இந்திய மொழிகளிலும் ரசாயனக் குறியீடுகள் ரோமன் எழுத்து வடிவிலேயே ஏற்கப்பட் டுள்ளன. அளவுகளைக் குறிக்கும் அலகுகளும் (m, kg, kw. போன்று) ரோமன் அல்லது கிரேக்க எழுத்துக்களிலேயே பயன்படுகின்றன இவற்றுக்குரிய தமிழ்ப் பிரதியீடுகள் அசாத்தியம் என நான் கருதவில்லை. ஆயினும் தமிழ்க் குறியீடுகள் பயன்படுமாயின் அதன் விளைவு தமிழரதும் தமிழினதும் நலன் பேணுவதாக இராது என்பது உறுதி. இதுபற்றி மரபுவாதிகளின் எண்ணம் என்னவோ தெரியாது.
எண் கணிதத்திலும் கேத்திர கணிதத்திலும் நாம் *" குறிப்பிட்ட எண் x எண்க' அல்லது 'முக்கோணம் abcயின் புயங்கள்' போன்ற சொற்றொடர்களைக் காணுகிறோம். அந்தளவுக்கு ரோமன் எழுத்துக்கள் தமிழில் உயர் கல்விக்கு அத்தியாவசியமானவையாகி விட்டன. இவற்றைவிட முக்கியமாகத் தமிழிற் பிரதி யிடவே முடியாத முறையில் ஆங்கில ஊடுருவல் கணிதச் சமன்பாடுகளிலும் விஞ்ஞானச் சூத்திரங்களிலும் நிகழ்ந் துள்ளது. இது, தமிழில் 'முக்கோணம் கசட' பற்றியும் ‘ல என்ற எண்' பற்றியும் பேசியும் செம்பைச் செ என்ற எழுத்தாற் குறித்தும் அகற்ற இயலாத ஒரு அடிப்படை யான அயற்தன்மையாகும்.
gー7

Page 53
ԼՍ 2
8-1=7 என்ற சமன்பாடு C+O2–> CO26T6öt sp (j5ä5jGulb தமிழ் இலக்கணத்துக்கு முரணான அமைப்புகளாகும். சமன் அடையாளமும் அம்புக் குறியும் வினைச் சொற்கள் (அல்லது சொற்றொடர்கள்) இங்கு பயன்படும் சகல அடையாளங்களும் இலக்கணfதியான கூறுகள், எனவே எளிய சமன்பாடுகளையுஞ் சூத்திரங்களையும் ஆங்கில வசனங்களாகவே நாம் வாசிக்க முடியும். தமிழில் இவற்றை எழுதுவதானால், 'எட்டினின்று ஒன்றைக் கழித்து வருவது ஏழுக்குச் சமம்'; 'கரியுந் தீயகமுஞ் சேர்ந்தாற் கரியிருதீயதை கிடைக்கும்" என்ற விதமாக வரவேண்டும். கழித்தல், கூட்டல், சமன், அம்புக்குறி அடையாளங்கள் தமிழ் வசனத்தில் வரும் இடங்கள் சமன்பாட்டிலும் சூத்திரத்திலும் வரும் இடங்களல்ல. 8, 1-7- என்றும் C, O---CO2-> GT Gör gnydd, அல்லது தமிழுக்கு மேலும் விசுவாசமாக, அ, க-எ-என்றும் கா, ஒஉ+, காஒஉ-> என்றும் எழுதித்தூய தமிழைக் காப்பாற்ற எவரும் முனையவில்லை.
கணித, விஞ்ஞானக் குறியீடுகளின் இலக்கணம் தமிழிலக்கணத்தினின்று வேறுபட்ட ஒன்று. அதைத் தமிழ் மூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் நூல்களில் தாராள மாக உலாவவிடுகிறோம். அது பற்றிய கவலை ஏதும் நமது மரபின் மாவீரர்களுக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. Shakespeare ஐ மட்டும் ஷேக்ஸ்பியர் என்று எழுதினால், இல்லை. செகப்பிரியர் என்றுதான் எழுத G36AJ Gðist Gud GT Gö7 g (LPU Gð7 GGJ ITř 95 Gir. Dudly Stamp. King. George. Oedipus என்ற பேர்கள் எல்லாம் இடட்டிலி தாம்பு, யோச்சு மன்னர், இடிப்பசு என்றுதான் தமிழில் வந்தாக வேண்டும். இது அவர்கள் தமிழராய் பிறக்காத பாவம், தமிழினத்தின் தலைவிதி. R

தமிழ் : எண்ணும் எழுத்தும்
தமிழுக்குரிய எழுத்துமுறையோடு ஒட்டிய எண் வடிவங்களும் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. இப்போது தமிழ் எண் வடிவங்களை பஞ்சாங்கத்திற் கூடப் பார்ப்பது அபூர்வம். முழு எண்கட்கு உரிய அடையாளங்களை விடப் பின்னங்களுக்கும் குறியீடுகள் இருந்தன. ஒன்றே முக்காற் தையன்னா (கழுதை) என்றும் ஏழைந்து மையன்னா (எருமை) என்றும் சிலேடையாகக் கிண்டல்கள் இப்போது கேட்கக் கிடைப்பதில்லை. ஒளவையார் கம்பரை எட்டே கால் லட்சணமே (அவலட்சணமே) என்று அழைத்துப் Urqu வெண்பாவைச் சிலருக்கு நினைவிருக்கலாம். இதையெல் லாம் ஆதாரமாக வைத்துத் தமிழர் தமக்கான ஒரு எண் வடிவ முறையை வகுத்தனர் என்று சொல்லலாம். அதையே நீடித்து இம்முறை தமிழர் சுயமாகவே அயற் துணையின்றி, உருவாக்கிய ஒன்று என்று வாதிக்க முனைவோமாயின், கல்தோன்றி மண் தோன்றாக் காலத் தின் கதைகளிற் தடுமாறி விழுந்து விடுவோம்.
பரதமும் தமிழரின் கண்டுபிடிப்பு, கருநாடக இசை யும் அவர்களது சிருஷ்டி, சைவமும் அவர்களின் சிந்தனை யில் உருவானது முதலாவது, இலக்கண நூலுரம் அவர் களதே என்றவாறான சாதனைப் பட்டியலை எல்லை யின்றி விரித்தும் தமிழினின்றே உலக மொழிகள் அனைத் தும் பிறந்தன என்று வாதிட்டும், தமிழர் சிலர் தம்மை யும் பிறரையும் அணாப்பிக் கொள்கின்றனர். தமிழரது

Page 54
104
மொழி, சமயங்கள், கலைவடிவங்கள் அனைத்திலும் தமிழரது வாழ்க்கை முறையின் முத்திரை குத்தப்பட்டே உள்ளது. தமிழர் அவை ஒவ்வொன்றுக்குஞ் சிறந்த பங்களித்துள்ளனர். தமிழர் மட்டுமன்றிப் பிற தேசிய இனத்தவரும் இந்தியத் துணைச்கண்டத்தின் கலாசாரத் துக்கும் சிந்தனை முறைக்கும் அறிவும் கலையும் சார்ந்த ஒவ்வொரு துறைக்கும் பங்களித்துள்ளனர்.
தமிழரது பண்பாட்டில் உளள கலை வடிவங்கள் தமிழரது எழுத்து முறை, தமிழ் மொழி வழக்கிலுள்ள சொற்கள் எல்லாமே தமிழராற் தான் தோற்றுவிக்கப் பட்டன என்று நாம் நம்மையே நம்ப வைக்கும் நிர்ப்பந் தம் என்ன? மூடக் குரங்கு என்றாலும் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்று நம்மையே நாம் திருப்தி செய்ய வேண்டுகிறோமா? தமிழரது பங்களிப்பின் முக்கியத்துவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் தமது மொழிக்கும் கலைவடிவங்களுக்கும் அறிவுத்துறைகளுக்கும் சமுதாய முறைக்கும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்துக்கும் எவ்வாறு செழுமையூட்டினரென்பது தான். ஏதாவது ஒன்று முதலாவது என்பது நிச்சயமானதாக இருந்தாலும் அதை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பதே நமக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் முக்கியமானது. நம்முடைய நிகழ்காலப் பங்களிப்பின் போதாமையை மூடி மறைக் கவும் நமது கடந்த காலத்தின் செழுமையை எதிர்காலத் துக்குப் பயனுள்ளவாறு எப்படிப் பயன்படுத்துவது என்ற குழப்பத்தினின்று தப்பியோட வும் நமக்குத் தமிழினதும் தமிழரதும் தொன்மை பயன்படுகிறது. நமது தொன்மையை நிலைநாட்ட மற்ற எல்லாச் சமூகத் தினரதுந் தொன்மையை நாம் மறுக்க முற்படுகிறோம். இதன் விளைவாகவே தமிழிலிருந்துதான் மற்ற எல்லாமே வளர்ந்தது என்று மார்தட்டும் போக்கு எழுகிறது.
தமிழுக்குப் பெருமை சேர்க்காத எந்தக் கருத்தையுங் காணாதே, கேளாதே, சொல்லாதே என்பதுதான்

205
சிலரது தமிழபிமானத்தின் அடையாளம். இந்தத தவளைகளைக் கிணற்றுக்கு வெளியே தூக்கிப் போட்டாற் கூடக்கண்ணை மூடிக்கொண்டு கிணற்றின் எல்லையற்ற தன்மை பற்றிக் கொட கொடப்பன. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு விரிந்த உலகம் பற்றி அறியும் நிர்ப்பந்தத்தை இந்த நூற்றாண்டு நம்மீது திணித்துள்ளது. அதற்குரிய விரிந்த பார்வையுடன் தமிழ் எண்களதும் எழுத்துக்களதும் தோற்றத்தையும் விருத்தி யையும் பார்ப்போம்.
தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றிச் சமகால வழக்கில் உள்ள சகல இந்திய துணைக்கண்ட மொழிகளின் எழுத்துக்களும் (அரபு, ரோமன் எழுத்துமுறை சார்ந்தன நீங்கலாக) ஒரே தோற்றுவாயை உடையன. பிராமி என்று அழைக்கப்படும் எழுத்து முறை இந்தியாவிற்கு வெளியி லிருந்து வந்த ஒரு எழுத்துமுறையை அன்றைய இந்திய மொழிகளின் தேவைகளுக்கு அமைய மாற்றியமைத்ததன் மூலம் உருவானது. இவ்வெழுத்து முறை தமிழுக்குப் பாவிக்கப்பட்ட போது தமிழர் பயன்படுத்திய எழுதுகருவி களுக்கு ஏற்ப அந்த எழுத்து வடிவம் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது. கருவிகளைவிட, அழகியற் கோட்பாடுகளும் எழுத்து வடிவங்களின் உருவாக்கத்திற்கு பங்களித்தன. குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருடங் களாக வேறுபட்ட திசைகளில் வளர்ந்த போதும் இந்திய எழுத்து முறைகளும் அவற்றினின்று கிளைத்த பிற தென்கிழக்கு ஆசிய எழுத்து முறைகளும் (பழைய ஜாவா, தாய், காம்போஜ மற்றும் பிறமொழிகளுக்குரியவை) அடிப்படையான ஒற்றுமைகளை இன்னமும் காட்டு கின்றன. இந்திய எழுத்துமுறைகள் அனைத்தும் அவை உருவாகி நிலை பெற்ற ஒரு யுகத்தின் அறிவுபூர்வமான, சிக்கனமும் அழகியலும் இணையப் பெற்ற ஆக்கங்கள் சில எழுத்து வடிவங்கள் கால நகர்வில் மாற்றத்துக் குள்ளாயின. தமிழ் எழுத்துக்கள் இவற்றில் முக்கியமாகக்

Page 55
106
குறிப்பிடத்தக்கன. இன்றுள்ள எழுத்து வடிவங்கள் அச்சு யந்திரத்தின் வருகைக்குப் பின்னரே நிலையாகின. இவற்றுக்கு முந்தியவை எழுதும் உபகரணங்களுக்கு ஏற்ப மட்டுமல்லாது காலத்துடனும் வேறுபட்டே வந்தன. ஆயிரம் வருடங்கள் பழைய கல்வெட்டுக் களையோ, ஒலைச் சுவடிகளையோ நாம் எல்லாரும் வாசித்து அறிய முடியாது. அதினும் பழைய மூல எழுத்து வடிவங்கள் நிபுணர்களால் மட்டுமே வாசிக்கக் கூடியன.
Ο உண்மை மேற்கூறியவாறிருக்கத், தமிழ் இலக்கங் களின்றே அரபு இலக்கங்கள் தோன்றின் என்று நம்மிடையே சிலர் பேசியும் எழுதியும் வருகின்றன்ர். தமிழ் இலக்க முறை அச்சிற் சில காலம் முன்பு காணப் பட்டவாறே எப்போதும் இருந்தது என்ற மயக்கமும் அந்த இலக்கங்களுக்கும் எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைக்கு தர்க்கரீதியான நியாயம் உண்டென்ற பிரமையும் இவர்களில் ஒரு பகுதியினரிடம் உண்டு.
தமிழிலக்கமான க(1) கணபதியைக் குறிக்கிறது என்போர் கணபதி ஆரியரது தெய்வம் என்பதை நினைவு கூர்வது பயனுள்ளது. அது கடவுளைக் குறிப்பது என்போர் தமிழிற் கடவுள் என்ற சொல்லைவிட இறை என்ற சொல்லே பழமை வாயந்தது என்பதை மனதில் கொண்டாற்க என்ற குறியீட்டின் தோற்றுவாய் அதுவாகி இராது என உணரலாம். இது போன்றே உ(2) உமையைக் குறிப்பது என்போர், அச்சொல் ஆரியக் கடவுளின் பேரே என உணர வேண்டும். அது உயிரினைக் குறிப்பது என்போர் மற்ற எண்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். 3ஐயும் 4ஐயும் குறிப்பவை ங் வையும் ச வையும் ஒத்தனவே ஒழிய அதே எழுத்துக்கள் அல்ல, 5க்குரிய ரு உருத்திரனைக் குறிப்பது என்போர் அதுவும் ஆரியக் கடவுள் என்பதை உணர வேண்டும். 6க்குரிய குறியீடு சு வை ஒத்தது. ஆனால் அதுவேயல்ல.

107
அது சு பிரமணியனைக் குறிக்கிறது என்றால், அதுவும் ஆரியப் பேரே, எ ஏழைக் குறிப்பது, அ எட்டைக் குறிப்பது, அட்டம் என்பது எட்டைக் குறிக்கும் வடசொல்லான அஷ்டத்தின் தமிழாக்கம். ஒன்பதுக்கு உரிய வடிவத்துக்கு நெருக்கமானது கூ, பத்துக 0 எனவோ ய எனவோ உணர வேண்டும். எனவே மேற் குறிப்பிட்ட விதமான கொச்சையான விளக்கங்கள்
எல்லாம் தம்முள்ளேயே எளிதாக முரண்படுகின்றன.
தமிழ் எண்களின் வரலாற்றை ஆராய்வோர், அவையும் இன்று அராபியராலும் வட இந்தியராலும் பயன்படுத்தப்பட்டு வரும் இலக்கங்களும் அவற்றினின்று விருத்தி பெற்று உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள அரபு எண்களும் (1,2,3.) ஒரே தோற்றுவாயை உடையன எனக் காண முடியும். இவை அனைத்துமே யாகக் குண்டங்களுக்கு அடையாளமிடப் பாவித்த குறிகளின்று விருத்தி பெற்றவை என்பது ஒரு வலுவான ஆதாரமுள்ள கருத்து.
சில தமிழ் எழுத்துக்களுக்கும் அரபு எண்களுக்கும் இடையில் அற்புதமான ஒற்றுமை உண்டு. (உ:2,ங் 3.5ா:7) இது ஒரு பொதுவான தோற்றுவாய் காரணமானது எனினும் நீண்ட கால வரலாற்று விருத்தியையும் மீறி வடிவ ஒற்றுமை காணப்படுவது வியக்கத்தக்கதே.
ஆரியர் அல்லது பிற அயலவர் உதவியின்றித் தமிழர் எண்ணையும் எழுத்தையும் உருவாக்கியிருக்க முடியாது என்று யாரும் வாதிப்பதற்கில்லை. நம்மிடம் உள்ள வற்றின் தோற்றுவாய் அயற் கலாச்சாரத்துக்குரியது என்பதால் நம் பழமையின் சிறப்பு மங்கிவிடாது. அயலிலிருந்து பெற்ற எண், எழுத்து வடிவங்களைத் தமது மொழியின் தேவைக்கேற்ப நம் முன்னோர்

Page 56
108
அமைத்தனர். அது அவர்களது பங்களிப்பு. இன்று உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர் விட்டுச் சென்ற வற்றை அவர்கள் வழிவந்தவர்கள் ஒரு நீண்ட காலமாக விருத்தி செய்யத் தவறிவிட்டனர். அது முற்றிலும் அவர்களது குற்றமுமல்ல. தவற்றை நாம் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதை நாம் அலட்சியம் செய்வோமாயின் நாம் தமிழுக்கு தீங்கு செய்வோ ராவோம்.

ஆங்கிலத்தினூடு அண்டையும் அயலும்
முக்கிய இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் தனித், தனி எழுத்து முறைகளையுடையன எனலாம். உருது தவிர்ந்த வட இந்திய எழுத்துமுறைகள் தேவநாகரியை மிகவும் நெருங்கியவை. வங்காள எழுத்து வடிவங்கள் குறிப்பிடத்தக்க வித்தியாசமுடையன எனலாம். தென் ரிைந்திய மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் ஒற்றுமை யுடையன. ஆயினும். பொதுவாகக் கூறின், ஒரு மொழி பேசுபவர் இன்னொரு மொழியைக் கற்க அதன் எழுத்து வடிவங்களையும் புதிதாக அறிய வேண்டியுள்ளது. இந் திய எழுத்து வடிவங்களின் சிக்கலான உருவ அமைப்பு அவற்றை எழுதி வாசிப்பதனை சிரமமாக்குகிறது. இத்த னைக்கும், தென்ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய மொழிகளின் ஓசைகள் மிகுந்த ஒற்றுமையுடையன. சமஸ்கிருதத்தின் செல்வாக்கு இந்திய துணைக்கண்ட மொழிகளின் சொல்வளத்தில் பொதுவான ஒருபகுதியை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பிரதான மொழியினது எழுத்து முறையும் மற்ற மொழி பேசு வோரிடமிருந்து தனக்குரிய மொழியைத் தனிமைப் படுத்துகிறது. இச்சூழலில் ஆங்கிலம் பொதுமொழியாக அமைவது மேலும் வசதியாகிறது.
ஐரோப்பாவிலோ ரோமன், ஸிரிலிக் எழுத்துமுறை கள் பெருவாரியான மொழிகளை எழுதப் பயன்படுகின் றன. இஸ்லாமியத் துருக்கி அரபு எழுத்து முறையைக்

Page 57
1 10
கைவிட்டு விட்டது. ஜோர்ஜியா தனது தனித்துவமான எழுத்துமுறையைப் பேணுகிறது. அல்பானியா ரோமன் எழுத்துமுறைக்கு மாறிவிட்டது, கிரேக்க எழுத்துமுறை கிரேக்கர்கள் ரஷ்ய மொழிக்கு வழங்கிய ஸிரிலிக் முறைக்கு மிக நெருக்கமானது, ரோமன் எழுத்துக்களை உச்சரிக்கும் முறை மொழிக்கு மொழி வேறுபட்டாலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களின் செல்வாக் குக்குட்பட்ட சகல நாடுகளிலும் ரோமன் எழுத்து முறையை அறிந்த ஒருவர், ஒரு வீதியின் பேர்ப்பலகை யையோ முகவரியையோ வாசித்துப் பிழையாக உச்ச ரித்தாலும் சரியாக அடையாளம் காணவேனும் இயலு மாகிறது. பொதுவான எழுத்து வடிவம் அயல்மொழி களைக் கற்பதை ஓரளவு எளிதாக்குகிறது.
இந்தியாவில் ஆங்கிலம் இந்தியாவுக்கு வெளியில் உள்ள உலகத்துக்கு ஒரு யன்னலாக மட்டுமல்லாது இந் தியாவுக்கு உள்ளே எழும்பியுள்ள சுவர்களிலும் யன்ன லாகி விட்டது. ஆங்கிலத்தினுாடாகவே பல பரிமாற் றங்கள் நடக்கின்றன. ஆங்கில வாயிலாகவே ஒரு மொழி பேசுவோர் இன்னொரு மொழிப் பெயர்களை அறிய நேருகிறது. தன்னளவில் இது ஏதோ சாபக் கேடானது என்று நான் வாதிக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் குறைபாடுகள் காரணமாக ஒரு பேர் ஆங்கிலத்தினூடு வரும்போது அதன் மூல உச்சரிப்பு முற்றிலும் திரிந்து போகிறது. இது ஆங்கில மொழி யில் ஒன்றுக்கு மேற்பட்ட உச்சரிப்பு விதிகள் ஒரே சமயத்தில் செயற்படுவதன் விளைவு. ஆங்கிலச் சொற் களின் தோற்றுவாய், நிறுவப்பட்ட வழக்கு என்பன உச்சரிப்பை நிர்ணயிக்கின்றன. மெய்யெழுத்துக்கஸ் சில (உதாரணமாக C,Ch-க், ச், ஸ்: H-ஹ்ஓசையில்லாமல்) வேறுபட்ட முறைகளில் ஒலிக்கப்படலாம். உயிரெழுத் துக்களின் பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது. p 5 stu 600TLDITs, cut, put, cute, rude, curd at air sp. Gast is

111
*களில் u ஐந்து "வேறுவிதமாக உச்சரிக்கப்படக் காண லாம். ஆங்கிலத்தில் இந்திய மொழிகளில் உள்ளது போன்ற தெளிவான குறில் நெடில் வேறுபாடுஇல்லை. அத்துடன் ஜேர்மன், டச்சு மொழிகளிற் போல் O=g. OO=ஒ என்று வருவதில்லை. O-ஒ எனவும் OO=ஊ என வுமே பொதுவாக வருகிறது. இதன் விளைவாக ஒரு இந்தியப் பெயரை ஒருவர் ஆங்கிலத்தில் எழுதப் பயன் படுத்தும் விதியை அதை வாசிப்பவர் பயன்படுத்தத் தவறும் போது பேர் வேறு விதமாகவே வருகிறது. கொலனிகளில் இருந்த ஊர்ப் பேர்களை எல்லாம் கைக்கு வந்தபடி எழுதி வாய்க்கு வந்தபடி உச்சரிப்பது அன்றைய கொலனி எஜமானர்களுக்கு பிரச்சினையாயி ருக்கவில்லை. ஆனால் அவர்களது மொழியின் உச்ச ரிப்பு விதிகளை அவர்கள் காட்டிய விதமாகவே நாம் விளங்கிக் கொண்டு ரோமன் எழுத்து முறையின் பலத்தை ஒரு பலவீனமாக்கிக் கொண்டோம். இதன் விளைவுகளைக் கீழ் வரும் உதாரணங்களில் காணலாம்: மூலப் பேர் எவ்வாறு ஆங்கிலமாகிப் பிறரால் உச்சரிக் கப்படுகிறது என்பதற்கு சில மாதிரிகள் இவை. குண வர்த்தன -Gunawardane குணவர்த்தனே ஸேனநாயக்கSenanayake ஸெனநாயக்கி G3, Tam du Colomboகொலம்போ ஸத்யஜித் ராய்-Satyajit Ray-ஸத்யஜித் ரே ராஜரத்தின-Rajaratna ராஜரட்ன தீக்ஷித்-Dixit-டிச்லிற் இப்பிரச்சினை மேலும் உக்கிரமடைவதற்கு T-D, K-G, P-B போன்ற வேறுபாடுகள் தமிழ் எழுத்து முறை யில் இல்லாமை காரணமானமை பற்றி மீண்டும் விளக்க அவசியமில்லை
இச்சிக்கல்களை நாம் ஒரளவுக்கேனுந் தவிர்க்க முடி யும். இந்தியப் பேர்களை ஆங்கிலத்தில் எழுதும் முறை யில் உள்ள அனாவசிய வேறுபாடுகளை நம்மால் நீக்க முடியும் அல்லது, அதைவிட இன்னொரு படி மேற் சென்று இந்தியத் துணைக்கண்ட மொழிகளை ரோமன்!

Page 58
l Ꮧ2
ஸிரிலிக் எழுத்துக்களில் எழுதுவதற்கான ஒரு பொது வான விதிமுறையை வகுக்க முடியும். இம் முறை (பேர் களை எழுதுவதற்குரிய ஒரு பொது எழுத்து முறையாக மட்டுமே) முழுத் தென்னாசியாவிலும் பயன்படுமா யின் தென்னாசியத் தேசிய இன உறவுகளிற் கூடிய நெருக்கத்துக்கு இடமுண்டாகும். நமது பிரதேசத்தின் குறுகிய தேசிய இனவாத அரசியலின் பின்னணியில் இது நடைமுறைக்குவர நெடுங்காலம் எடுக்கும். ஆயி னும் இதுபற்றி நாம் இன்று சிந்திக்கத் தொடங்குவதிற். தவறில்லை என்று நினைக்கிறேன்.

தமிழாக்கலும் ஆங்கிலமாகலும்
1. ஒரு ஆங்கிலச் சொல்லையோ வேறு அயல்மொழிச் சொல்லையோ தமிழாக்குவதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன என்று முன்பு குறிப்பிட்டேன். தமிழுக்கு முற்றிலும் அயலான ஒரு கருதுகோளோ (concept) பெயரோ தமிழுள் அதன் மூல வடிவிலோ அல்லது தமிழில் எழுத வசதியான வடிவிலோ வரலாம். சொற்களையும் சொற்றொடர்களையும் தமிழ்படுத்தும் முயற்சியில் அவற்றைக் கூறுகூறாகத் தமிழாக்கும் போது மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். Blue film, yellow journal, Cold War என்பன இவ்வாறு தமிழ்ப்படுத்தப்பட்டு நீலப்படம், மஞ்சட் பத்திரிகை, குளிர் யுத்தம் (பனிப் போர்) என்று வருவதை அறிவோம். இச்சொற்களது அர்த்தங்களை ஆங்கிலச் சொற்களை அறியாதவர்கள் ஊகித்து அறிய இயலாது. அவற்றின் அயற்தன்மை சொற்களின் மாற்றீட்டினால் ஒழிந்து போகவில்லை. மாறாக ஓங்கியுள்ளது. நீலப்படம் என்றால் ஒருவர் அது கறுப்பு வெள்ளையாக இல்லாமல் நீலமாக இருக்கும் என ஊகித்து ஏதோ வழியில் உண்மையை உணரலாம், மஞ்சள் தமிழரால் நல்ல விஷயங்களுடன் தொடர்புபடுத் தப்படும் ஒரு நிறம். மஞ்சட்பத்திரிகை கல்யாண அழைப் பாக இருக்கலாம் என்றே முதலில் மனதிற்படும். குளிர் யுத்தம் என்பது துருவப் பிரதேசத்தில் நடக்கிற யுத்தமாக வும் இருக்கலாம். கெடுபிடி யுத்தம் என்ற பொருத்தமான சொற்றொடர் பல ஆண்டுகளுக்கு முன் பாவிக்கப்பட்டு

Page 59
114
இன்று மறக்கப்பட்டுவிட்டது. ஆபாசப்படம் அல்லது விரஸப் படம் என்பது படம் எத்தகையது என்பதைத்
தெளிவாக்குகிறது. அவதூற்றுப் பத்திரிகை என்பது
மஞ்சட் பத்திரிகையைவிட நியாயமான பிரயோகம்.
தெளிவானதும் குழப்பங்களுக்கு இடம் அளிக்காததும் பாவிக்க எளியதுமான ஒரு சொல்லை நம்மால் உருவாக்க. முடியாவிட்டால் மூலச் சொல்லையே எடுத்தாள்வது
தமிழை வளம்படுத்தும். (துவிச்சக்கரவண்டியையும்
ஈருருளியையும்விடச் சைக்கிள் அல்லது சயிக்கிள் தமிழில்: அழகாக ஓடுகிறது)
மேற்கூறியவை போன்ற உதாரணங்கள் இன்றைய ஐரோப்பிய அமெரிக்க, அவுஸ்திரேலிய தொடர்புகளாற். பெருகி வருகின்றன. இவற்றிற் கணிசமானவை, தமிழில் சொற்களைப் புனைவோர், ஆங்கில மூலத்தின் தோற்றப்பாட்டுக்கு அப்பால் எதையும் ஆராயத் தவறுவதன் விளைவாகவே உருவாகின்றன. விஞ்ஞான, மருத்துவ, தொழில்நுட்பத் துறைகளிற் கலைச்சொற் களைப் புனைவோரும் மேற்கூறிய விதமான சொல்லாக் கத்தில் இறங்கும் அபாயம் உண்டு. தமிழ்ப் பேசும் மக்கள் பெருவாரியாக வாழும் நாடுகளில் உள்ள நவீன சிந்தனையுடைய தமிழ் அறிஞர்கள் இவ்விஷயத்திற் கூடிய அக்கறை காட்டுவது பயனுள்ளது.
2. தமிழரசன் லண்டன் தமிழ்ச் செல்வி ஸிட்னி ஆகியோரின் தகப்பனாரும் பாண்டியன் மதுரையின் பாட்டனாரும் காலமானார்' என்பதையொத்த அறிவிப்பு களை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ஆங்கில அறிவிப்புகளை அடியொற்றி அமையும் இத்தகைய அறிவிப்புகளும் விளம்பரங்களும் சொல்லமைப்பில் மிகுந்த ஆங்கிலத் தன்மையுடையன. லண்டனைச் சேர்ந்த அல்லது லண்டனில் வாழும் என்று சொல்வதாயின் ஒரு சொல் அதிகம். எனவே லண்டன் என்று மட்டுமே

115
சொல்வது நியாயம். லண்டன் என்ற சொல் ஏன் பேரின் பின்னால் வர வேண்டும்? நம் பேர்களில் ஊர்ப் பேரை
முதலிலேயே நாம் சொல்கிறோம் அதே விதியைக்
கடைப்பிடித்தால் மதுரையின் பாட்டனார் மரணிக்கும்
அபத்தத்துக்கு இடமிராது.
3. பேர்ப் பிரச்சினையும் ஆங்கிலத்திலிருந்து வந்து தமிழரைப் பாதித்துள்ளது. N. S கிருஷ்ணன் என்ற பேர், நாகர்கோவில் (ஊரைச் சேர்ந்த) சுடலைமுத்து (என்பவரது மகன்) கிருஷ்ணன் என்பதைக் குறித்தது. தமிழ் மரபிற் பேர்கள் அமைந்த முறைக்கும் பொருத்த மான முறையில் முதலெழுத்துக்கள் வருகின்றன. கந்தனுடைய மனைவி தேவானை க. தேவானை என்றும் கோவலன் மகள் மணிமேகலை கோ. மணிமேகலை என்றும் பேரை எழுதுவது முழுப் பேரும் ஆளை அடையாளம் காட்டும் வகையினிலே முதல் எழுத்துக்களை வைக்கின்றது இப்போதைய மேல்நாட்டு மரபு, குடும்பப் பேர்களை வைத்து நபர்களை அடையாளம் காட்டுகிறது. சிலரது பேர்களில், சாதிப் பேர் முழுப்பேரின் இறுதியில் வருவது போல, அவர்களுக்கு குடும்பப் பேர் இறுதியில் வரும். மேரி கியுரி என்பது கியுரி குடும்பத்தவரான மேரியைக் குறிக்கும். வ. வே. சுப்ரமணிய ஐயரும், ஈ. வே. ராமசாமிநாயக்கரும் வ. வே. சு. ஐயர் என்றும் ஈ. வே. ரா நாயக்கர் என்றும் அறியப்பட்டதும், பேர்கள் எழுதப்பட்ட முறைக்கு உடன்பாடானவை. நாம் புதிதாக வரித்துக் கொண்ட குடும்பப் பேர் முறை வித்தியாசமான ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டு என்பவரின் மகன் அர்ஜுனன் ப. அர்ஜூன னாகவும் அவரது மகன் அபிமன்யு அ. அபிமன்யுவாகவும் அறியப்பட்ட சூழல் மீது அயற் கலாச்சாரத் தாக்கம், அபிமன்யுவைத் தன் மகள் பரீக்ஷித்தின் பேரை அ பரீக்ஷித் என்று வைக்காமல் ப. அபிமன்யு என்று வைக்கத் தூண்டுகிறது. இங்கே அபிமன்யு குடும்பப்

Page 60
16
பேராகிவிட்டது. அ. அபிமன்யுவின் பேரன் பேரும் இனி அபிமன்யுதான். ஆனாற் ப. அபிமன்யு என்ற பேர் தரும் அர்த்தம் என்ன? பரீக்ஷித் எனும் அபிமன்யு குடும்பத் தவன், சுப்ரமண்யம் என்ற ஐயர், ராமசாமி என்ற தாயக்கர் என்ற வகையில் அபிமன்யு ஒரு வம்சப் பேராகி விடுகிறது. இன்று மேலைநாடுகளில் குடியேறிய பெரும்பான்மையோர் தமது குடும்பத்து ஆண்களின் பேர்களை வம்சப் பேர்களாக வைக்க வேண்டி ஏற்பட் டுள்ளது. அந்நிய மோகம் இலங்கையிலும் தமிழகத் திலும் இத்தகைய போக்கை ஊக்குவிக்கிறது. எனவே, விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில வாயிலாக வந்த ஒரு பேர் சூட்டும் மரபு தமிழரிடையே பரவி வருகிறது.
4. கடிதங்களுக்கு முகவரி எழுதும் போதும் திகதி எழுதும் போதும் நாம் கடைப்பிடிக்கும் முறை என்ன? பேர், வீட்டு எண், வீதி, ஊர், மாநிலம், நாடு என்ற வரிசையில் ஆங்கில மொழி வழக்கில் ஒருவர் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறாரோ அதே வரிசையில் அவர்கள் எழுதுகிறார்கள். அதையே அடியொற்றி நாம் எழுதுகிறோம். நமது மொழி வழக்கிற்கு உரிய முறைப்படி நாடு, மாநிலம், ஊர், வீதி, வீட்டு எண், பேர் என்ற வரிசையில் விலாசம் அமையும். இந்தியா(வின்) தமிழ்நாடு மாநிலத்தின்) மதுரை மாவட்ட(த்தில் உள்ள) மதுரை (மாநகரின்) பெருந்தெரு (ஆம் இலக்கத்தில்) வாழும் பாண்டியன் என்பது ஆங்கில முறைக்கு நேரெதிரானது. இத்தகைய வரிசை முறை ரஷ்யாவில் (முற்றாக இல்லாவிடினும்) அடிப்படையிற் பேணப்படுவ தாகக் கடித உறைகளில் கண்டுள்ளேன். தபாற் சேவை ஆங்கிலேயரூடு நம்மை வந்தடைந்தது. எனவே கடிதம் தொடர்பான பல விஷயங்கள் ஆங்கில வழக்கினின்று நேரடியாகவே நம்மால் எடுத்தாளப்படுகின்றன.
திகதி எழுதும் போது நமது முறைப்படி இன்ன வருடத்து இன்ன மாதத்து இன்ன திகதி என்றே வரும்.

117
இதையே நீடித்து நேரத்தையும் மணி நிமிடமாகச் சொல்லலாம். 1992.06.01, 18.30 மணி என்றால் அது
தெளிவாக இறங்குவரிசையில் நேரத்தை அடையாளம்
காட்டுகிறது. இலங்கையில் அதிகாரபூர்வமான தேதியிடும் முறையும் இதுவே சர்வதேச தராதரங்களும் இதனையே
விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கின்றன. ஆங்கில மொழி
வழக்கிற் திகதி சொல்லும் முறை ஏறுவரிசையிலும்
நேரம் சொல்லும் முறை இறங்கு வரிசையிலும் உள்ளது.
நாம் கடைப்பிடிக்கும் முறை, அரச நிர்ப்பந்தம் இல்லாத
விடத்து ஆங்கில முறை சார்ந்ததே.
5. தமிழ்ப் பஞ்சாங்க மரபில் வருடம் சாலிவாஹன ஆண்டாகவும் அறுபது வருடச் சுற்றில் வருடத்துக்கு ஒரு பேராகவும் அடையாளம் காணப்படுகிறது. நமது வருடங்களின் பேர்கள் வடமொழிப் பேர்களே. நமது மாதங்களின் பேர்கள் பெரும் பகுதியும் வடமொழியி னின்று பெறப்பட்டவையே. நாட் பேர்களிற் புதனும் சனியும் வடமொழிச் சார்புடையன எனலாம். எவரதோ தமிழ்ப் பற்றுக் காரணமாக நாம் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்றாலும் சமுதாய நடைமுறை, ஆங்கில முறைமையையே அன்றாட வழக்காக நிறுவிவிட்டது. கிழமை நாட்களில் உலகு பரவிய பொதுமை உள்ளதாற், தமிழ்ப் பேர்களை உள்ளபடி பேணுவது சாத்தியமாகியது. தமிழ் மாதங்கள் ஆங்கில மாதங்களினின்று இரண்டு வாரங்களால் வேறுபடுவதால் தமிழ் மாதங்களின் பேரைப் பேணுவது ஒரு சடங்காகவே உள்ளது. சைவ சமயம் மற்றும் சம்பிரதாயமான விஷயங்களில் மட்டுமே தமிழ் மாதங்கள் பயன்படுகின்றன. ஜனவரியை ஆங்கிலத்துக்குத் தை, ஏப்ரலை ஆங்கிலத்துக்குச் சித்திரை என்றும் குறிப்பிடும் வழக்கம் ஒன்று இருந்தது. அதன் விளைவான குழப்பங் கள் இல்லாது போகுமாறு இப்போது ஆங்கில மாதப்
8-س-g5

Page 61
118
பேர்கள் வேறுபடும் முறைகளில் தமிழ்ப்படுத்தப்பட்டு
(ஜனவரி, சனவரி) உபயோகிக்கப்படுகின்றன. இது
மிகவும் நல்லது. ஜனவரியை நாம் தை என்று அழைத்தால்
தை என்பதன் கருத்தைப் பிழைப்படுத்துகிறோம். தை
குறிப்பிடுங் கால இடைவெளியும் ஜனவரி குறிப்பிடும்.
கால இடைவெளியும் வெவ்வேறு என்பதைச் சமகால வழக்கு அங்கீகரிக்கிறது. இவ்வாறான தெளிவு ஆங்கிலப் பதங்களுக்குத் தமிழில் உள்ள பதங்களை பிரதியிடும் போதும் இருப்பது நல்லது. ஓர் ஆங்கிலச் சொல்லுக் குரிய தமிழ்ச் சொல் இல்லையாயின் அதற்கு நெருக்கமான தமிழ்ச் சொல்லொன்றை இடும் போது அத்தமிழ்ச் சொல்லின் வழமையான பொருள் வழக்கொழிந்து போகும் அபாயம் பற்றி நாம் கவனங்காட்ட வேண்டும். அத்தகைய அபாயம் உண்டென்றால் அயற்சொல்லை உள்வாங்குவது தமிழ்ச் சொல்லின் தமிழ்த் தன்மையைப் பேண உதவும்.

தமிழ்ச் சொற்களில் ஆங்கில மேலாதிக்கம்
தமிழ்ப் புத்திஜீவிகள் பலர், தமது ஆங்கிலப் புலமைக் கேற்பவும் சில சமயம் அதை மீறியும் தமிழில் ஆங்கிலச் சொற்களை நடமாடவிடுவது வழக்கம். சில சொற்கள் அவற்றுக்கீடான தமிழ்ச் சொற்கள் இதுவரை புனையப் படாமையால் வழக்கிற்கு வருகின்றன. வேறு சில வற்றுக்குப் புனையப்பட்ட தமிழ்ச்சொற்கள் பரவலான பாவனையில் இல்லாமை காரணமாக அல்லது அவை பற்றிய நிச்சயமின்மை காரணமாக ஆங்கிலச் சொற்கள் பயன்படுகின்றன. தமிழிலேயே தெளிவாகக் கருத்தைக் கூறக் கூடிய நிலையிருந்தும் ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கும் பழக்கம் ஈழத்தமிழர் மத்தியில் உள்ளதைவிட தமிழ் நாட்டினர் மத்தியில் அதிகம்.
அந்நிய மோகமும் தமது மொழி பற்றிய தாழ்வு மனப்பான்மையும் மட்டுமே இவ்வாறான அயற்சொற் பாவனைக்குக் காரணங்களல்ல. தமிழ் மூலம் நவீன சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய இயலாத ஒரு நிலைக்கு, மொழி பற்றிய பழமை பேணற் கொள்கையும் ஒரு முக்கிய காரணம். மரபுத்தமிழின் அழகு, தொன்மை, சிறப்பியல்புகள் பற்றி அயல்நாட்டுக் கல்விமான்கள் சொல்வதைக் கேட்டுப் புல்லரித்துப் போகும் புலவர்களும் பண்டிதர்களும் அந்த அயல்நாட்டினர் தமிழை ஒர் இறந்த மொழியின் நிலையில், அதன் பழைய இலக்கியத் தின் செழுமையின் அடிப்படையில் வைத்தே ரசிப்பதையும்

Page 62
120
தமிழ்ச் சமுதாயத்தின் தேவைகளுக்கு அந்த மொழி ஈடு கொடுக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமையை யும் கணக்கில் எடுப்பதில்லை. தமிழைவிடக் காலத்தாற் பிற்பட்ட இலக்கிய வளர்ச்சியையுடைய மொழிகள் தமது தனித்துவத்தையும் நவீனத்துவத்தையும் ஒரே சமயத்திற் பேணுவது போற் தமிழும் செய்ய முடியாத வாறு, தமிழ் மொழியின் காவலர்களாகத் தம்மைப் பிரகடனம் செய்தவர்கள், தமிழுக்கும் உலகத்துக்கு மிடையே சுவரெழுப்பிப் பிரிக்க முயல்கிறார்கள். நவீன தமிழ்ச் சமுதாயங்களுக்குத் தேவையான பொருட் களையுங் கருத்துக்களையுங் குறிக்குஞ் சொற்களை எவ்வாறு அயலிலிருந்து பெறுவது என்பது பற்றிய விவாதங்கள் போதிய பயனுள்ள விளைவுகளைத் தரத் தவறிவிட்டன. இதன் விளைவாக ஆங்கிலச் சொற்களின் ஆதிக்கம் ஒழுங்கற்ற முறையிற் பெருகி வருகிறது. தமிழில் மட்டுமே இந்தப் பிரச்சினை உண்டென்று நான் கூறவில்லை. பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்ய, ஜப்பானிய மொழிகளிற் கூட, ஆங்கில மொழி பேசுவோரின் உலக ஆதிக்கம் தனது முத்திரையைப் பதித்துவிட்டது. ஆயினும் இம்மொழிகளில் ஆங்கிலச் சொல் நுழைவை எவ்வாறு தம் மொழிகளின் இயல்புக்கேற்பத் திருத்தி யமைக்க முடியும் என்பதிற் கவனங் காட்டப்படுகிறது. நாமோ, இச்சொற்கள் இல்லாதன என்ற பாங்கில் தீக்கோழிகள் தலையை மணலுக்குட் புதைப்பது போல இருக்கிறோம்.
தமிழ்ச் சொற்களில் ஆங்கில மேலாதிக்கம், ஆங்கில வழியிற் தமிழ்ப் பேச்சிற்கு வந்துள்ள புதிய சொற்களின் மூலம் தன்னை வெளிக்காட்டுவதாகச் சிலர் எண்ணலாம். இது உண்மையில் ஆபத்தற்ற அயற்சொல் வருகை. இவ்வாறு வரும் சொற்கள் மூன்று விதமாக தமிழாக லாம். காலக்கிரமத்தில் நல்ல தமிழ்ச் சொல்லொன்றாற் பிரதியீடு செய்யப்படுவது விரும்பத்தக்கது. கணிசமான

12
சொற்தொகைக்கு இது நடைமுறையில் சாத்தியப்படா தாயினும் பாராளுமன்றம், வானொலி, எண்கணிதம் போன்ற சொற்கள் போன்று தமிழில் ஏற்கப்பட்ட சொற்களாக இப்பிரதியீடுகள் நிலைக்கலாம். வேறு பலவற்றின் உச்சரிப்பைத் தமிழுக்கு ஏற்ற விதமாக மாற்றியமைத்துத் தமிழாக்கிவிடலாம். வடமொழியி னின்றும் அரபு, உருது, போர்த்துக்கேய, டச்சு மொழி களினின்றும் கடந்த காலத்தில் உள்வாங்கித் தமிழ்த் தன்மை பெற்ற சொற்கள் தமிழில் அனேகம். சோதி, வீதுரோடு போன்ற சொற்களில் அயற்சொற்களைத் தமிழாக்க உபயோகிக்கப்படும் விதிகள் திருப்தியான விளைவுகளைத் தந்தன. அயற் சொற்கள் தமிழிற் புகும் வேகம் இன்று அதிகம். தமிழருக்கு அயல்மொழி ஓசை களுடனான பரிச்சயமும் அதிகம். தமிழ் எழுத்துக்களா ற் பிரித்தறிய முடியாதவிதமான வேறுபட்ட அயற் சொற் கள் மிகுதியாக வந்துள்ள சூழ்நிலையில், அவை, மூலச் சொற்கள் பேச்சுத் தமிழை வந்தடைந்த விதமாகவே, தொடர்ந்தும் பேச்சில் வழங்குகின்றன. (Boot, file, horn) gear, zip போற் பல) இவற்றை எழுத்துமுறை எவ்வாறு உள்வாங்கும் என்பது விரைவிற் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. இவை தமிழில் வழங்குஞ் சொற்களை இல்லாதொழிக்கும் அபாயம் இல்லை. ஏனெனில் இவை தமிழுக்குப் புதியவையே ஒழியப் பிரதியீடுகளல்ல.
செய்தி, தகவல், துப்புரவு போன்ற சொற்களுக்கு news, information, clean 663 D ai).5LDT55itti 5U 5ui6ù போது தமிழ்ச் சொல் வளத்துக்கு ஊறு செய்கிறோம். தமிழுக்குப் புதுச் சொற்களை வரவழைக்கும் தேவையும் தமிழில் உள்ள எளிய அழகிய சொற்களுக்குப் பிரதியீடு செய்வதும் வெவ்வேறு முனைப்புகளையுடையன வழக்கில் இருக்கிற சொற்களைச் சரிவரப் பயன்படுத் தாமல் விடுவதற்கு அறியாமையைவிட அந்நிய மோகமே முக்கியமான காரணமாகவுள்ளது. இது ஒரு பாரிய அரசியற் பிரச்சினையுமாகும்.

Page 63
22
அயற் சொற்களைக் குறிக்குங் கருத்துக்களைத் தமிழிற் தெரிவிக்க நாம் புதிய சொற்களைப் புனைகி றோம். அல்லது அயற் சொல்லுக்கு நெருங்கிய கருத்துள்ள தமிழ்ச் சொல் ஒன்றைப் பிரதியிடுகிறோம். சில வேளை புதிய சொல்லாக்கம் மரபில் இருந்த ஒரு சொல்லை இழப்பதற்குக் காரணமாகலாம். Water-fal என்ற சொல்லுக்குரிய பழந்தமிழ்ச் சொல் அருவி. இதை அறியாமல் நீர் வீழ்ச்சி என்ற அப்பட்டமான மொழி பெயர்ப்பு இந்த நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது. இதைவிட மோசமாக, Stream என்ற சொல்லை ஓடை என்ற சொல்லாற் குறிப்பதற்கு மாறாக, இலங்கைத் தமிழ்க் கலைச் சொல் ஆக்கக் குழுவினர் அருவி என்ற சொல்லை உபயோகித்தனர். இவ்வாறான குழப்பங்களின் விளைவுகளை எளிதாகத் தீர்க்க முடியாதவாறு, நீண்ட காலமாக இச்சொற்கள் பாவனையில் வந்துவிட்டன. தவறாக புகுந்து விட்ட சொற்பிரயோகம் நிலைப்பது மிகவும் சாத்தியம்.
சில அயற் சொற்கள் மூல மொழியின் idiom எனப் படும் நடைமுறை வழக்குக்குரியன. அவற்றைத் தமிழாக் கும் போது அவற்றின் பொருளைப் பேணுவதிற் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாகக், கருங்காலி என்னும் சொல், (black leg என்பதன் மொழிபெயர்ப்பு) தமிழில் பரந்தளவிற் பாவிக்கப்பட்டதால் அது எதைக் குறிக்கிறது என்று அறிவோம் கருங்காலி மரத்துக்கும் துரோகத்துக் கும் என்ன தொடர்பு என்று ய்ாராலும் ஊகிக்க முடியாது. தந்தக் கோபுரம் (Ivory Tower) என்ற சொற்றொடர் தமிழில் அண்மையில் வழக்கில் வந்துள்ள ஒன்று. ஆங்கில மூலத்தின் பொருள் தெரியாத எவரும் இது எதைக் குறிக்கிறது என்று அறிய முடியாது. இவ்வாறான ஆங்கில ஊடுருவல் தமிழ்ச் சொல் வளத்துக்கு எந்தளவு நன்மை தருகிறதோ தெரியாது. இவையெல்லாம் யாந்திரிகமான தமிழ்ப்படுத்தலின்

123
விளைவுகள். இவற்றுட் சில காலப்போக்கிற் தமிழில் நிலைக்கும். மற்றவை அயற் தன்மையுடனேயே பரவ லான மொழி வழக்கின் விளிம்பில் நின்று காலத்தால் அழியக் கூடும். இவ்வாறான சொற்பிரயோகங்கள் தமிழ் மொழி வழக்கில் உள்ள நல்ல சொற்களையும் சொற்றொடர்களையும் வளர்த்துப் பரவலாக்குவதற்குத் தடையாகவே உள்ளன. ۔۔۔۔
வேறுபட்ட மொழிகளைப் பேசும் கலாச்சார ஒற்றுமையுள்ள இரு சமுதாயங்களிடையே மொழிப் பிரயோகத்தில் ஒற்றுமை உண்டு. பண்டங்களின் பேர்களை விட முக்கியமாக உணர்வுகள் கொள்கைகள் போன்றவற்றைக் குறிக்கும் சொற்களைக் கருத்துக் குழப்பமின்றி மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தினின்று தமிழுக்கு ஒரு விஷயம் மொழிபெயர்க்கப்படும் போது ஆங்கிலச் சொல்லுக்கு நெருங்கிய கருத்துள்ள தமிழ்ச் சொல்லை நாம் பாவிக்கிறோம். இவ்வாறு, பாவிக்கப் படும் சொல் இரண்டு மொழி வழக்குகளுக்கும் விசுவாச மாக இருக்க இயலாது. ஆங்கிலப் புலமை மிகுந்த ஒருவர் ஆங்கில மொழி வழக்கிற்கேற்ப தமிழ்ச் சொல்லின் கருத்தை உணர்வார். அச்சொல்லை இன்னோர் இடத்திற் காணும்போது அவர் அதைத்தான் முன் அடையாளம் கண்ட ஆங்கிலச் சொல்லுடனேயே சேர்த்துக் கருத இடமுண்டு. ஆங்கில அறிவு இல்லாத ஒருவரோ தனது மொழி வழக்குக்குரிய விதமாகவே அதை எப்போதும் விளங்கிக் கொள்வார். உதாரணமாக bachelor என்பதை நாம் பிரமச்சாரி என்று தமிழ்ப்படுத்துகிறோம். ஆங்கிலத் தில் உள்ள சொல் திருமணமாகாதவர் என்பதை மட்டுமே சொல்கிறது. தமிழ்ச் சொல் அதற்கு மேலாகப் பாலுறவு கொள்ளாதவர் அல்லது பெண்களை ம்னதாலும் தீண்டாதவர் என்ற கருத்தைத் தருகிறது.
முதலாளித்துவ கலாச்சாரம் பழைய நிலவுடைமைக் கலாச்சாரத்தின் பிடிப்பைத் தளர்த்தி வருகிறது

Page 64
124,
ஆங்கில மொழி ஆதிக்கம் முதலாளித்துவ முறையுடன் இணைந்து நமது சமுதாயத்தைப் பற்றுகிறது. மரபுத் தமிழ் நிலமான்ய சமுதாய சிந்தனையில் நின்று விடுபட மறுப்பதால் நவீன சிந்தனைக்குரிய புதிய ஆங்கில அர்த்தம் பழைய தமிழ் அர்த்தத்தின் இடத்தைப் பிடித்து விடுகிறது இது நவீன தமிழ்ச் சொல்லாக்கத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்சினை. அயற்சொற்களைத் தவிர்க்கும் முயற்சியில் நம் மொழியின் தன்மையை நாம் பலவீனப்படுத்தி மாற்றும் சாத்தியப்பாடு உள்ளது என்பதை மரபுவாதிகள் உணர்வது நல்லது.

பிள்ளையார் பிடிக்கப் போய்
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு சொல் வழங்கப்படும்போது மூலத்தின் உச்சரிப்பை அப்படியே பேணுவது எப்போதுஞ் சாத்தியமில்லை. உயிரோசைகளில் மொழிகட்கிடையிலான வேறுபாடு அதிகம். சில மெய்யோசைகளும் சில உயிரோசைகளும் இரண்டு. மொழிகட்கும் பொதுவாக இல்லாது போனால் ஒசைகட்டு மாற்றீடு செய்ய நேரிடும். இந்தியத் துணைக்கண்ட மொழிகளிடையே இத்தகைய வேறுபாடு கள் குறைவு தமிழில் மட்டுஞ் சில மெய் ஒசைகளைக் குறிக்கத் தனித்தனி எழுத்துக்கள் இல்லை என்பதைத் தவிர்த்தால், ஸமஸ்கிருத மொழியிலிருந்து எந்த இந்தியத் துணைக்கண்ட மொழிக்கும் ஒரு சொல் வழங்கப்படும்போது உச்சரிப்பில் அதிகம் பிறழ்வுக்கு இடமில்லை. (வங்க மொழியில் 'வ என்ற ஓசை இல்லாமை, அம்மொழியில், 'அ' என்ற உயிரின் உச்சரிப்பில் உள்ள வேறுபாடு போன்ற சில விலக்குகட்கு
இடம் உண்டு).
மரபுத் தமிழுக்கு அயற்சொற்கள் வரும்போது அவற் றைத் தமிழாக்குவதற்குத் தெளிவான விதிகள் உள்ளன. ட், ற், ர், ல், ழ், ள் என்ற மெய்கள் சொல்லின் முதல் எழுத்தில் வர முடியாது. எனவே அ அல்லது இ அல்லது உ முன்னால் இடப்படும். எந்த வல்லினத் தனி மெய்யும் சொல்லின் முடிவில் வர முடியாது. எனவே 'றேக்' என்ற சொல் தமிழ்ப்படுத்தப்படுமாயின் "இறேக்கு’ என வர வேண்டும். இது மரபுத் தமிழ் இயங்கிய சமுதாயச்

Page 65
五26
சூழலிற் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை. ஹ, ஸ், ஷ, ஜ என்ற எழுத்துக்கள் அனுமதிக்கப்படுமுன், அவற்றுக் குரிய பிரதியீடுகள் ஹரி, மஹான், விஸ்வம், ரிஷி, ஷங்கர், ஜானகி, லக்ஷ்மணன் என்ற பேர்களை அரி, மகான், விசுவம், இருடி, சங்கர், சானகி, இலக்குமணன் என்று மாற்றின. இவற்றைவிடத் தமிழில் அடுத்தடுத்துத் தனி மெய்கள் வருவது பற்றிய கட்டுப்பாடுகளும் இருந்தன. இதன் விளைவாக அஷ்ட, அக்னி, ஸூர்யன், கர்மம் என்ற சொற்கள் அட்ட, அக்கினி, சூரியன், கருமம் அல்லது கன்மம் என்று மாறின. இதன் விளைவாகத் தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் வழங்கும் நிலை பெருகியது. இதனால் அன்றைய தமிழ் மொழி
அதிகம் பாதிப்படையவில்லை. ஒரு சொல்லின் பொருள்
அது வரும் இடத்திற்கமைய விளங்கிக் கொள்ளப்பட்டது.
இவ்வாறான விதிகளைத் தமிழ் எழுத்துமுறை இன்று தவிர்த்து வருகிறது. தீவிர மரபுவாதிகள் மட்டுமே
இவ்விதிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்
களாற் தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் இன்றைய தமிழின் தேவைகட்கு முகங்கொடுக்க மறுக்கின்றனர். அதேவேளை அயற்சொற்களைத் தமிழ் எழுத்து இன்று உள்வாங்கிக்
கொள்ளும் முறை பல புதிய சிக்கல்களை உருவாக்கி
யுள்ளது. இவற்றில் ஒரு பகுதி தமிழ் இலக்கண விதிகள் தொடர்பானவை. இவை ஸ, ஷ,ஜ,ஹ என்ற எழுத்துக் களைக் கையாள்வதற்கான விதிகள் மரபில் இல்லாமை யாலும் இன்றைய நடைமுறை மரபுத் தமிழ் அனுமதிக் காத எழுத்துக்கள் சொற்களின் முதலிலும் முடிவிலும் வருவதால் ஏற்படுவன. ஏழை + சனம் = ஏழைச்சனம் என வருவது போல ஏழை + ஜனம் = ஏழைஜ்ஜனம் என எழுத முடியுமா? அல்லது ஏழைஜனம் என்று எழுதுவதா? *ஏழை ஜனத்துக்கு வேண்டாம்" என எழுதினால் 'ஜனத்துக்கு ஏழையை வேண்டாம்" என்று கருதுவது

127
சரியா? அல்லது 'எழையான சனத்துக்கு எதையோ வேண்டாம்' என்று கருதுவது சரியா? இந்த மாதிரி இடங்களிற், தமிழுக்கு ஆங்கிலத்தின் வழியாக வந்த அரைத்தரிப்பு (,) உதவுகிறது.
'ஏழை, ஜனத்துக்கு வேண்டாம்' என்பது ஜனத்துக்கு ஏழையை வேண்டாம் என்று தெளிவாகக் கூறுகிறது. மற்றதை மற்றவிதமாக நாம் விளங்கிக் கொள்ள முடியும், "மலையாள மாட் என்ற கடையில் ஒரு பொருளை வாங்கியவர் மலையாள மாட்டில் அதைப் பெற்றார் என்று எழுதும் போது ஒரு சிக்கல் ஏற்படு கிறது. இதை மலையாள மாட்-இல் என்று பிரித்து எழுதி நாம் அதைத் தவிர்த்தாலும் ஒரு தெளிவான வழிகாட்டல் இல்லாது போனால் மேலுங் குழப்பங்கட்கே இடமுண்டு. புதிய சொல்லமைப்புக்களையொட்டிப் புதிய இலக்கண விதிகள் தேவைப்படுகின்றன. இந்த விஷயம் இலக்கணத் துறையில் உள்ளோரது கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறேன். −
இந்தப் பிரச்சினை ஒருபுறமிருக்கத், தமிழில் எழுத்துக் கள் போதாமையை நிவர்த்தி செய்யக் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் தமிழின் தமிழ்த் தன்மையைப் பேணப்போய்ச் சில தமிழ் எழுத்துக்களின் ஒசைகளைக் குழப்பத்துக்கு உள்ளாக்கி விட்டன. F என்னும் எழுத்தின் ஓசையைக் குறிக்க ஃப என்ற தொடரின் உபயோகமும் T எனும் எழுத்தின் ஓசையைக் குறிக்க ஈழததில் ர எனும் எழுத்தின் உபயோகமும் ரஷ்ய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் உள்ள Zh (S க்கு sh போல Zக்கு zh என்று கருதுக) ஓசையைக் குறிக்கத் தமிழ்நாட்டில் ழ என்ற எழுத்தின் உபயோகமுமே இப்பிரச்சினைகளை எழுப்புகின்றன.
தமிழில் ஃ என்ற எழுத்து முக்கியமாக அஃது, இஃது, எஃது, அஃறினை போன்ற சில சொற்களில்

Page 66
128
மட்டுமே இன்று பயன்படுகிறது. இவற்றில் அஃதுவும் இஃதுவும் குறைந்து வரும் பயன்பாட்டை உடையன.
எஃகு என்ற சொல்லைவிட உருக்கு என்ற சொல் கூடுதலாகப் பயன்படுகிறது என்றே நினைக்கிறேன்.
என் அபிமானத்துக்குரிய கவிஞர் M.A. நுஃமான் ஹ்" என்ற எழுத்தைத் தவிர்த்துத் தன் பேரில் ஃ என்ற எழுத்தைப் பேணி வருகிறார். எனவே அவரது கவிதை
கள் வாழும் வரை ஃ வாழும் என்பது உறுதி.
F க்கும் 'ப்'இற்கும் ஒலியியல் உறவு இல்லை. F என்பது 'வ்'இன் ஒலியுடன் உறவுடையது. (K க்கு G யும், T க்கு D யும் போல V க்கு F) ஃ என்ற எழுத்தைந் ப-வுக்கு முன் இட்டால் அது எவ்வாறு F ஆகும் என்பதற்கு ஒரு தர்க்கரீதியான நியாயமும் இல்லை. ஃ என்ற எழுத்தைத் 'க'வுக்கு முன் இட்டால் அது ஏன் G ஆகக்கூடாது? த வுக்கு முன் இட்டால் அது ஏன் DH ஆகக்கூடாது? அப்போது அஃது=adhu என்றும் எஃகு= egu என்றும் நாம் கொள்ளலாமா? F க்குரிய ஒரு புதிய வடிவத்தைத் தர இயலாமலும் இரவல் வாங்க மனமில்லா மலும் ஃப என்ற தொடரைப் பாவித்துத் தமிழ்த் தன்மையைப் பேணினோம். இதன் மூலம் இரண்டு எழுத்துக்களதும் ஒலிகளின் தன்மை பற்றிய இலக்கண விதிகளை மீறியுள்ளோம் என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. எனினும் ஃ இன்று அதிகம் பாவனையிலில்லாத. தால் இது ஒரு பாரிய சிக்கலை உருவாக்கவில்லை.
'ர'வை TPக்குப் பிரதியிடுவது சில பெரிய பிரச்சினை களை உருவாக்குகிறது. T க்கும் 'ர' வுக்கும் ஒருவித ஒலி உறவும் இல்லை. உண்மையில் T க்கு நெருக்கமானது ற் (ற அல்ல). ஈழத்தில் ticket ரிக்கற் ஆகிறது. தமிழ் நாட்டில் அது டிக்கட் ஆகிறது. ரூபா என்று ஈழத்தவர் ஒருவர் எழுதின், அதை நாம் tupaa என்று கொள்வதா, ruupaa என்று கொள்வதா? ரூட் என்பது toot என்ற

129
சொல்லா அல்லது root என்ற சொல்லா? (இங்கே, nootஐ றுாட் என எழுதுவதாக ஒருவர் வாதிக்கலாம். ஆனால் வாசிப்பவகுக்குக் குழப்பம் இருப்பது உண்மை). ரொரான்ரோ என்ற சொல் எந்த ஊரைக் குறிக்கிறது என்று ஊகித்தறியச் சிறிது நேரம் எடுக்கும். அது ரொறான்ரோ என்று எழுதப்பட வேண்டுமா? அல்லாத 6ửìL-3, g5! , 6ẹ(I96uả , Roramro, Totanto, Rotanto, Roranto என்று எட்டு வேறுவிதமாக ஊகித்து ஒரு வேளை சரியான முடிவை (Toronto) அடையலாம். ரகரத்தின் ஓசையை ட் என்ற ஒசைக்குச் சமன்படுத்திய மேதை யாரோ தெரியாது. இங்கும் T என்ற எழுத்திற்குத் தமிழ் மாற்றீடு அயலிலிருந்து வரக்கூடாது என்ற ஆர்வம் தமிழின் ஒலிப்பு முறைக்குக் கேடு செய்துள்ளது
Jean-Panl Sartre Lßg5íT GOT LusëĝSg5mt GT 5 Lf6f6ầv gp -- zh என்ற பயன்பாட்டுக்குக் காரணமோ தெரியாது. அதற்குமுன், திராவிட முன்னேற்றக் கழகத்தினர், ழகரத்தை ஆங்கிலத்திற் சரிவர எழுதாவிட்டால் (நியாயமாகவே) தி. மு. கலகம் என்று தங்கள் பேர் வாசிக்கப்படும் என்று கருதி Kazhagam என்று எழுதினார் கள், zh க்கு ஆங்கிலத்தில் உள்ள உச்சரிப்புக்கும் ழகரத்துக் கும் ஒரு தொடர்புமில்லை. ழகரம் மலையாளம் தவிர்ந்த பிற இந்திய மொழிகளில் இல்லாத ஒரு ஓசை என்பதையும் அயலார் காதுக்கு zh ழகரம் போலவே கேட்கக்கூடும் என்பதையுங் கருதி இவ்வாறு செய்தார்களோ தெரியாது? ழகரம் தமிழின் பெருமைக்குரிய சிறப்பெழுத்து என்கிறவர்கள், தமிழின் தமிழ்த் தன்மை பேண வேண்டி, ஓர் அயல் எழுத்தைப் புகுத்த விரும்பாமல் ழகரத்தின் ஓசையையும் குழப்பத்துக்குள்ளாக்கியுள்ளனர். ஆனா லும், ழான்-பால் சார்த்ர் என்று கவனமாக எழுதுவோர் ஏன் bourgeois ஐ பூழுவா என்று எழுதாமல் பூர் ஷ"வா என எழுதுகிறார்கள்?

Page 67
30
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் தமிழின் பிரச்சினை கட்கான தீர்வைத் திறந்த மனத்துடன் நோக்காது தமிழின் தூய்மையும் தனித்துவமும் பேணப்பட வேண்டும் என்ற அகச்சார்புடன் பழமை பேணியும் புதியன புகுவதை வரவேற்கும் நோக்கிற் புதிய பிரயோகங்களைப் புகுத்தியும் மேற்கொண்ட குருட்டுத்தனமான நடவடிக்கை. களின் விளைவுகள். இந்த விதமான தீர்வுகள் அரைக் கிணறு தாண்டுகிற முயற்சிகளாகவே அமைந்துவிடு கின்றன. தமிழுக்கு F.T, zh தேவை என்றால், ஜ, ஸ, ஷ, ஹ போல, அவற்றுக்குரிய அடையாளங்களை வகுக்கலாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பாங்கில் மொழியின் பிரச்சினைகளை நாம் தீர்ப்பது: கஷ்டம்.

தமிழ் : வழுவும் வழக்கும்
தமிழ் மொழியிற் சொற்பிழை, வாக்கியப் பிழை, கருத்துப் பிழை பற்றிய கண்டிப்பான நிலைப்பாடுகள் பல காலமாக இருந்து வந்தன. கற்றோர் மட்டுமே (அதாவது மரபு மொழியிற் புலமையுடையோர் மட் டுமே) நூல்களையும் இலக்கியப் படைப்புகளையும் எழுதி வழங்கத் தகுதியுடையோராகக் கருதப்பட்ட யுகத்தில் அவை சாத்தியமாகின. அந்த யுகத்தில் மொழியின் ஒவ்வோர் அம்சமும் மிகவும் தெளிவான இறுக்கமான விதிகளால் ஆளப்பட்டது, நமது மொழியுங் கலாச்சார மும் கலைகளும் நலிவுக்குட்பட்ட காலத்திற் கூட மொழித் துறையில் மிகுந்த கண்டிப்புக் காட்டப்பட் . {6 سL
தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு சமுதாயச் சூழல்கள் காரணமானவை. வடமொழியின் செல்வாக்குச் சங்க காலத்தின் பிற்பகுதியில் நிச்சய மாகக் காணக்கூடியதாக உள்ளது. சங்கம் மருவிய காலத்து நூல்களில் அதினும் அதிகமாகவே உள்ளது. தமிழில் இலக்கண நூல் வகுத்த முயற்சியும் வடமொழி யில் இலக்கண நூலான பாணினியம் அமைந்ததற்குப் பிற்பட்டதே. பிராமணரது சமயம் தமிழர் நாட்டில் வேரூன்றியதை அடுத்து வடமொழியின் செல்வாக்கு அதிகரித்தது. சமணமும் பெளத்தமும் வடக்கினின்று வந்தபோது தம்முடன் புதிய சிந்தனைகளையும் சொற் களையும் கொண்டு வந்தன. வெளிவெளியாகவே பெளத்த மதச் சார்புள்ள காவியமான மணிமேகலையும்

Page 68
132
சமணச் சார்புள்ள சிலப்பதிகாரமும் சமணச் சிந்த னைக்கு நெருக்கமான திருக்குறளும் தமிழுக்கு பெருமை சேர்த்தவை. தமிழ் இலக்கியத்திற்கு முடிசூட்டிய கம்ப ராமாயணமும் ஆரிய சமயச் சிந்தனை சார்ந்தது. தேவார திருவாசகங்களும் வைணவத் திருப்பாடல்களும் ஆரியரது சமயத்துக்கும் மெய்யியலுக்கும் மிகவும் கடமைப்பட்டவை. கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிற்காலத் திற் தமிழுக்கு வளமூட்டின.
மேற்கூறிய அயல் உள்வாங்கல்கள் எல்லாம் தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை மட்டுமன்றி மொழியின் சொல்வளத்தையும் பெருக்கின. இச்சூழலில் தமிழ் மொழி தனது தனித்துவத்தையும் தூய்மையையும் பேணி யது என்ற கருத்து முற்றிலுஞ் சரியில்லை எனினும் ஒரளவு நியாயமானது. ஆயினும் தமிழ்மொழி அயல் மொழித் தாக்கத்துக்கு அன்று எவ்வாறு முகம் கொடுத் தது? தமிழ் மற்ற எல்லா வாழும் மொழிகளையும்போல அயற் சிந்தனைகளையும் சொற்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டது. அயற் சொற்களையும், சிந்தனை களையும், தமிழிற் கூறுவதற்கான வழிகளைக் காட்டும் இலக்கண விதிகள் இருந்தன. இவ்விதி கள் நீண்ட காலமாகவே தமிழின் தேவைகளைக் குறை யில்லாது பேணின. காலப் போக்கிற் சொற்பிரயோகம் விரிவடைந்து அயலிலிருந்து வந்த சொற்கள் பெருகின. தமிழரது மொழிவழக்கிற் காலத்துடனும் தேவையுட னும் ஒட்டிய மாற்றங்கள் நேர்ந்தன. இவை தமிழ் மொழி வழக்கின் ஒவ்வோர் அம்சத்தையும் தொட்டன. மொழியின் ஸ்திரத் தன்மைக்கும் மாற்றங்களுக்குமிடை யிலான முரண்பாட்டின் விருத்தியே மொழி வளர்ச்சி யின் பாதையைத் தீர்மானித்தது.
இலக்கண விதிகள் என்பன மொழியை விளங்கிக்
கொள்ளவும் சரிவரப் பயன்படுத்தவும் உதவும் வழிகாட் டிகள். இதே வேளை மொழிப்பிரயோகத்தைக் கட்டுப்

133
படுத்தும் முனைப்பும் உடையன. இலக்கணம் மொழி யின் விளக்கமாகவும் வரையறையாகவும் ஏக காலத்தில் அமைகிறது. இலக்கண விதிகளை எக்காலத்துக்கும் மாறாதவையாகப் பார்க்கிறவர்கள் மொழியில் மாற் றத்தை மறிப்பவர்களாகிறார்கள். இலக்கண விதிகள் பற்றிய கணிப்பின்றிச் செயற்படுவோர் தெளிவீனத்துக் கும் குழப்பத்திற்கும் வித்திடுகிறார்கள். இலக்கண விதி களைப் பொதுவாக அனுசரித்தும் அவசியமானபோது மீறியும் புதிய விதிகளைப் புகுத்தியுமே மொழியால் வளர முடிகிறது.
எப்போதும் விதிகளின் மீறல் முதலிற் பிழையென்று தான் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மீறல் அவசிய மானது என்றோ பயனுள்ளது என்றோ பரவலான அளவில் ஏற்கவும் பயன்படுத்தவும் கூடியது என்றோ உணரப்படும் போது மொழியறிஞர்களால் ஏற்கப்படு கிறது. மொழியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விவா தங்கள் அம்மாற்றங்கள் பரவலாக ஏற்கப்பட்டவுடன் நின்றுவிடுவதில்லை. தம் மொழியை அதனுடைய பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்போர் பல சமுதாயங்களிலும் உள்ளனர். குருட் டுத்தனமாக மாற்றங்களை வலியுறுத்துவோரும் எங்கும் உள்ளனர். ஒரு இலக்கண நூலாசிரியனின் பணி வெறு மனே மொழிவழக்கின் விவர்ணமாக மட்டுமல்லாது மொழியின் செல்நெறி பற்றியதாகவும் உள்ளது. சம காலப் பேச்சு தமிழுக்கும் இலக்கண விதிகளுக்கு அமைந்த பேச்சுத் தமிழுக்கும் உள்ள இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. தமிழ் இலக்கண நூலா சிரியர்கள் பேச்சு மொழியின் சாராம்சத்தை அறிந்து அதில் உள்ள பிரதேச வேறுபாடுகளையும் பிழையான பிரயோகங்களையும் அடையாளங் கண்டு பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பாலம் அமைக்க
高ー9

Page 69
134
வேண்டும். இதன் மூலமே தமிழ் எழுத்து மொழியை வலிய நவீன மொழியாக விருத்திபெற முடியும்.
ஏற்கப்பட்ட மொழி வழக்கென ஒன்று இருந்தால் அதற்கும் ஒருவர் பேசும் அல்லது எழுதும் மொழிக்கும் வித்தியாசங்கள் இருக்கும் இவ்வாறான ஒரு வித்தியா சத்தை வழுவென்று சிலர் கருதலாம். அது குறிப்பிட்ட ஒரு பகுதியினருடைய மொழி வழக்கென்று வேறு சிலர் கருதலாம் பொதுவாக வழு அறியாமையின் விளை வானது: சொற்பிழை, எழுத்துப் பிழை, வாக்கிய அமைப்பிற் பிழை, கருத்துப் பிழை போன்று பலவா றான பிழைகள் இருக்கலாம். பிழையாகவோ, பிறழ் வாகவோ தொடங்கி ஒரு பிரதேசத்திற்கோ, ஒரு சமு தாயப் பிரிவிற்கோ ஒரு அறிவுத்துறைக்கோ தொழிற் துறைக்கோ உரியனவாக அமைகிற பிரயோகங்களை வழுவென்று ஒதுக்கிவிட முடியாது. இவை "புதியன புகுதல் காலவகையினது' என்ற இலக்கணக் கோட்பாட் டுக்குட்பட்டவை. குழு வழக்குகளாக உள்ள இவ்வா றான மொழிப் பிரயோகங்கள் சில சமயம் குறிப்பிட்ட காலவரையறைக்குரியனவாக இருக்கலாம். சில சமயம் இவை காலத்தாலும் பயன்பாட்டாலும் விரிவடைந்து பரவலாகவும் இடமுண்டு.
தமிழ் மொழியிற் பல மாற்றங்கள் நேர்ந்துள்ளன. சொல்வளம், இலக்கண விதிகள், எழுத்து முறை போன்று பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங் கள் ஒரு காலத்திற் பிழையாகவோ அல்லது தமிழுக்குப் புறம்பானவையாகவோ காணப்பட்டன. இவ்வழுக்கள் இன்று வழக்காகி விட்டன. எல்லா வழுக்குகளும் வழக் காகும் என்று யாரும் சொல்ல முடியாது என்றாலும் மொழி வளர்ச்சி சரி பிழைகள் பற்றிய நிரந்தரமான கோட்பாடுகளின் அடிப்படையில் நிகழ்வதில்லை.

எழுத்துப் பிழைகள்
தமிழில் எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் ரகரறகர, லகர-ளகர, னகர-ணகர வேறுபாடுகள் தொடர் பானவை, உலக மொழிகளிற் தமிழும் மலையாளமுமே இத்தகைய ஒலி வேறுபாடுகளை அதிகளவிற் பேணுவன. ற்-ட், ர-ற, ல்-ள். ள்-ண் வேறுபாடுகள் நாக்குமேல் முரசைத் தொடும்போது எழும் ஒலிக்கும், பின்னோக்கி வளைந்து அண்ணத்தை தொடுவதற்கும் இடையி லானவை. இத்தகைய ஒர் ஒற்றுமை யகர-ழகரங்களிடை யில் உண்டு என்பது என் ஊகம். (இக்கட்டுரையில் அது பற்றி விரிவாக எழுத அவசியம் இல்லை. அது பற்றி வேறிடத்தில் எழுதியிருக்கிறேன். யகரமும் ழகரமும் தமிழ் நாட்டில் குழப்பிக் கொள்ளப்படுவதை மட்டும் இங்கு நினைவூட்டுவது போதுமானது)
சிறுவயதிலிருந்தே முறையாகத் தமிழ்க் கல்வி பெறுவோர் இந்த ஒலி வேறுபாடுகளை எளிதாக இனம் காணுகின்றனர். ற், ர், ல், ன், ய் என்பவற்றின் முன்வரும் உயிரோசை ட், ற,ள்,ண்,ழ் என்பனவற்றின் முன் வருவன வற்றினின்று வேறுபட்டவை, (உதாரணமாக, அற்றுஅட்டு, அரன்-அறன், அல்லி-அள்ளி, அன்னே-அண்ணே, அயற்சி-அழற்சி) பிற இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் உயிரோசைகள் இவ்வாறு வேறுபடுவது குறைவு. சிங்களவர் தமிழ்ப் பேசும் போது அதை நமக்கு அடையாளம் காட்டும் ஒரு அம்சம் அவர்கள் ஒவ்வொரு உயிரோசையையும் எல்லாவிடத்தும் ஒரே மாதிரி ஒலிப் பதாகும். ஐரோப்பிய மொழிகளில் ஆரம்பக் கல்வி

Page 70
136
பயின்ற குழந்தைகள் தமிழை உச்சரிக்கும்போது தமிழின் உயிரோசைகளின் வேறுபட்ட ஒலிப்பு அவர்கட்கு ஒரு பிரச்சினையாகிறது. இதனாலேயே லகர-ளகரங்களதும் பிற இணைகளதும் வேறுபாடு அவர்கட்கு லாயில் வருவது சிரமமாகிறது.
மேற்கூறிய மெய்யெழுத்து இணைகளின் வேறு பாட்டைச் சரியாகக் கவனியாதுவிட்டாற், பல இடங் களில் கருத்து வேறுபாடு அல்லது கருத்தற்ற சொல் இடம் பெற ஏதுவாகலாம். (உதாரணமாக வலி-வழி-வளி, வரிவறி(?), கனி-கணி) சில இடங்களில் இத்தகைய வேறுபாடு கள் பிரச்சினையை ஏற்படுத்துவதில்லை. (உதாரணமாக, கருப்பு-கறுப்பு,மஞ்சல்- மஞ்சள் இவ்வாறான சொற்களில் ஏதோ ஒன்று மட்டுமே ஒரு காலத்தில் ஏற்புடையதாகவும் மற்றது வழுவாகவும் இருந்து காலப்போக்கில் இரண்டுமே வழக்காகி இருக்கலாம்)
இவற்றைவிடப், பேச்சுத்தமிழில் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் சொற்கள் வெவ்வேறு விதமாகவும் எழுத்து முறை கருதுவதினின்று வேறுபட்டும் உச்சரிக்கப்படுவதாற் கழப்பங்கள் உண்டாகின்றன. உதாரணமாக, ர்க்க, ட்க, ற்க என்பன க்க எனப் பேச்சில் வருவது வழமை. (பாக்க, ஆக்கள், நிக்க என்றவாறு) இத்தகைய மாறுபட்ட உச்சரிப்பு,ள் தமிழில் ஏராளமாக உள்ளன. இவை ஒலிக்கச் சிரமமான கூட்டு மெய்யொலிகளுக்கு எளிமை யான ஒலிக்கூட்டுக்களாற் பிரதியிடுவதன் விளைவுகள். சில இடங்களில் அதிக உறவற்ற ஒலிகளும் பிரதியிடப் படலாம் (உதாரணமாக தாழ்ந்து - தாண்டு, ஐந்துஅஞ்சு) அயலிலிருந்து பெறப்பட்ட சொற்கள் பல, தெளிவான உச்சரிப்பு வழிகாட்டல் இல்லாமையாற், பல வேறு விதமான உச்சரிக்கப்படவும் நேர்ந்துள்ளது. உதாரணமாக, KerOSene oil, கிருஷ்ணாயில் என்று தமிழகத்தில் உச்சரிக்கப்படுகிறது.

13፳
சொல்லாக்கம் தொடர்பான பிரச்சினைகளும் எழுத்து வேறுபாட்டுக்குக் காரணமாகி உள்ளன. (உதாரணமாக, கோவில்-கோயில், கட்டடம்-கட்டிடம்) ஊர்ப்பேர்களில் இவ்வாறன பிரச்சினைகள் அதிகம். (உதாரணமாக, மட்டக்களப்பு - மட்டக்கிளப்பு, திருகோணமலை - திரிகோணமலை - திருக்கோணமலை). அயலிலிருந்து இலக்கண விதிகட்கமையத் தமிழ்ப்படுத்தப் பட்ட சொற்களிலும் இவ்வாறான வேறுபாடுகளைக் காணலாம். (உதாரணமாக, இருதயம்- இதயம், விஷயம். விடயம்). அயற்சொற்களைத் தமிழாக்குவதற்கான திட்டவட்டமான விதிகளை வகுப்பதில் உள்ள சிரமங்கள் இன்று தமிழிற் புதிதாக புகுந்து சொற்களைக் கையாளுவதில் வேறுபாடுகளைப் புகுத்தியுள்ளன. அயற் சொற்கள் பிரதேசத்திற்குப் பிரதேசம் மட்டுமன்றிச் சமுதாய அமைப்பின் வெவ்வேறு தளங்களிலும் வேறுபட்ட முறையில் உச்சரிக்கப்படுவது மரபு சொற் களில் உள்ளதை விடப் பெரியளவிற் கருத்து வேறுபாடு களுக்கு இடமளிக்கிறது. (ஹால்-ஹோ, சர் - சார் - சேர், போற் பல உதாரணங்களைக் காட்டலாம்.) மேற் கூறியவை அபிப்பிராய பேதம் என்ற எல்லைக்குள் இயங்குவன. இவற்றை விடச், சொற்களின் மூலம் மறக்கப்பட்டு அதன் விளைவாகச் சிக்கலான புதிய சொற்கள் உருவாகுவதும் உண்டு. முயல் என்ற வினையில் இருந்து முயற்சி என்ற பெயர் வந்தது. முயல் என்ற வினை ஏனோ வழக்கிற் குறைந்து முயற்சி என்ற பெயரி லிருந்து முயற்சித்தல் என்ற புதிய சொல் உருவாகி விட்டது. கற்பித்த, கற்றுக் கொடுத்த என்று வழங்குவதும் இவ்வாறே எனலாம்.
சொற்களின் உச்சரிப்பில் ஏற்படும் மாறுபாடுகள் சொற்களை எளிமைப்படுத்தும் முனைப்புடன் மட்டு மன்றிச் சிக்கலாக்கும் முறையிலும் நேரலாம். மாற்றங்கள் தர்க்க ரீதியான சரிபிழைகளின் அடிப்படையிலேயே

Page 71
138
எப்போதும் நிகழ்வதில்லை. பெருவாரியான மாற்று எழுத்தமைப்புகள் பேச்சுமொழியில் உள்ள உச்சரிப்பு வேறுபாடுகளாலும் இடையே அறியாமையாலும் தவறுகளாலும் ஏற்பட்டுச் சூழ்நிலைகள் ஆதரவாக இருக்கும்போது நிலை பெற்று விடுகின்றன. மொழி மாற்றமும் இவ்வகையிற் சமுதாய மாற்றம் போன்றே செயற்படுகிறது. எவ்வாறாயினும் ஒரு மொழி யில் வேறுபட்ட உச்சரிப்பு முறைகளும் சொற்களின் எழுத்துக் கூட்டலின் பாரிய வேறுபாடுகளும் இருப்பது அதன் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கலாம். இப்பிரச்சினை, சில நூற்றாண்டுகள் முன்வரை ஆங்கில மொழியில் இருந்தது. அதன் தீர்வு, உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலமே சாத்தியமா கிற்று. தமிழில் உள்ள பிரச்சினை பன்முகப்பட்டது. எழுத்து மொழி, ஆக்க இலக்கியங்களில், முக்கியமாகச் சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவற்றில், மட்டுமே பேச்சுமொழியுடன் இணக்கம் தேடுகிறது. பிரதேசரீதியி லான வேறுபாடுகள் பேச்சு மொழிக்கும் நவீனத்துவ மான ஒரு எழுத்து மொழிக்கும் உறவை நிறுவுவதில் முக்கியமான பிரச்சினைகளுள் அடங்கும். இவற்றைவிட முக்கியமாகத் தமிழரது மொழி அறிவு மிகவும் கீழான நிலையிலேயே உள்ளது. இலக்கணக் கல்வி ஒருபுறம் பத்தாம்பசலித்தனமானதாக இருந்து வந்துள்ளது. இலக்கணத்தை எளிமைப்படுத்திப் பரவலாக்கும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறபோதிலும் கல்வி அறிவு தமிழர் மத்தியில் இன்னும் வளராத பட்சத்தில், பேச்சு மொழி அதனுடன் சேர்ந்து வரும் கொச்சை, வழுக்கள் அயற்சொற்கள் அனைத்தையும் பிரதேசத்துக்கு பிரதேசப் வேறுபட்ட முறையில் பேணுவது இயல்பானதே ஜனரஞ்சகம் என்ற பெயரில் எழுத்துப் பிழைகள் மலிந்: மட்டரகமான பத்திரிகைகள் பெருமளவில் உலாவுவது மொழியின் சீரான வளர்ச்சிக்கு குந்தகமானது.

139
வழுக்கள் விஷயத்தில் மிகையான கண்டிப்பு நடைமுறைச் சாத்தியமானதல்ல. ஒரு தவறான பிரயோகம் வழக்கில் நிலைபெற்ற பின் அதைத் திருத்த முயல்வதைவிட அதனாலே ஏதாவது சிக்கல்கள் ஏற்படு மாயின் அதைக் கையாள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அல்லாத பட்சத்தில் அப்பிழையை அலட்சியம் செய்வது நடைமுறைக்கு இசைவானது.
அதே வேளை, சொற்பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் குருட்டுத்தனமாக ஊக்குவிப்பது மொழி யின் செம்மையான பிரயோகத்திற்குப் பாதகமானது.
மொழியின் சிறப்பான அம்சங்களைப் பேன விரும்புவோர் அம்மொழி பேசுபவரின் கல்வி அறிவும் வாழ்க்கைத் தரமும் கீழான முறையில் இருக்கையில், தமது இலட்சியத்தைப் பேண முடியாது. மொழியில் வளமும் அதைப் பயன்படுத்தும் சமுதாயத்தின் நலமும் பிரிக்கக் கூடியன அல்ல.

Page 72
சந்திக் குழப்பும்
தமிழ் சொற்களில் நாம் காணும் பிழைகளிற் சந்தி தொடர்பானவை முக்கியமானவை. தமிழ்ச் சொற்கள் ஒட்டியிணையும் (agglutinating) இயல்புடையவை. ஐரோப்பிய மொழிகளில் ஜேர்மன் மொழியில் இவ் வியல்பைக் காணலாம்) இந்த இயல்பு சொல்லாக்கத்திற் புணர்ச்சி விதிகளாலும் வாக்கியங்களில் சந்தி விதிகளா லும் அடையாளம் காணப்படுகிறது.
ஒட்டியிணையும் இயல்பு காரணமாக தமிழில் நீண்ட சொற்களை புனைய இயலுமாகிறது. கலைசொல்லாக் கத்தில் இது சில இடங்களில் பயனுள்ள ஒன்றாக இருந்தாலும் நீண்ட சொற்கள் எப்போதுமே விரும்பத்தக்கனவோ என்பது கேள்விக்குரியதே. மரபுத் தமிழில் (Մ)(Ա) வாக்கியங்களை ஒட்டியிணையும் பாங்கில் எழுதுவது வழக்கமாக இருத்துள்ளது. இதன் விளைவாக இலக்கியப் பாங்கான சிலே டைகள் சாத்தியமானபோதும், கருத்துத் தெளிவீனம் இல்லாதவிடத்து, விளங்கிக் கொள்வதிற் சிரமம் உண் டாக வழியேற்றப்பட்டது அயற்சொற்களின் வருகை (பேச்சுமொழிக்கு மட்டுமே உரிய சொற்களை கணிப்பிற் கொள்ளாது விடினும்) இவ்வாறான இடர்ப்பாடுகளை மேலும் அதிகமாக்கியுள்ளது.
இன்று ‘முட்டாட்டாமரையிற்றுஞ்சுமரிக் கணமார்ப் பம் புலர்ந்தது காலைப்பொழுது என எழுதுவோரனே கரில்லை.
முள்த்தாள்த் (முட்தாட்) தாமரையிற்துஞ்சும் அரிக் கணம் ஆர்ப்பப் புலர்ந்தது காலை பொழுது" என்று சிறிது தெளிவாக எழுதலாம்

141
"முள்தாள் தாமரையில் துஞ்சும் அரி கணம் ஆர்ப்ப புலர்ந்தது காலை பொழுது" என்ற விதமாகச் சிலர் எழுதுவதுண்டு. இது சில கருத்துக் குழப்பங்களுக்கு இட மளிக்கும் என்பதை நான் விவரிக்க அவசியமில்லை.
தமிழின் சந்தி விதிகள் அடுத்துவரும் சொற்கள் இரண்டினிடையில் உள்ள உறவை உணர்த்தவும். வாசிக் கும் போது சொற்கள் ஒலிக்கப்படும் முறையை விளக்க வும் பயன்படுவன. எனவே, தமிழ்ச் சொற்களினதும் மொழியினதும் அடிப்படையான தன்மையை நிராகரிக் காது சந்தி, புணர்ச்சி விதிகளை முற்றாக அலட்சியம் செய்தல் இயலாது." அதே வேளை தெளிவு கருதி, இவ் விதிகளைத் தளர்த்துதல் சாத்தியமானதும் பயனுள்ளது LDπΘ5ίο.
சந்தி விதிகள் சிலரால் ஏன் அலட்சியம் செய்யப்படு கின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. விதிகள் பற்றிய நிச்சயமின்மை ஒரு காரணம். மூடநம் பிக்கை கூட ஒரு காரணம். (கல்யாண பரிசு என்ற திரைப்படத் தலைப்பில் 'ப்' விடுபட்டது எட்டு எழுத் துக்கள் வருவது துரதிஷ்டம் என்பதினாலேயே என்று அறிகிறேன். இப்போது இவ்வாறான மீறல்கள் அதிகம்) வேண்டுமென்றே எழுத்தின் சந்தி விதிகளை மீறுவோரும் உள்ளனர். எவ்வாறாயினுஞ் சந்தி விதிகள் சரிவரப் பேணப்படாதபோது, கருத்திலும் வாக்கியத்தின் ஒலிப் பிலும் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு. ஒலிப்பில் ஏற்படும் பிரச்சினை தமிழிற் சொற்களை இணைத்து
家
குறிப்பு: கிளி பாட்டுக் கேட்டது. கிளிப்பாட்டுக் கேட்டது; சென்னை பட்டணம். சென்னைப்பட்டணம் போன்றவை சத்திகளின் அவசியத்தை உணர்த்தும் உதா ரணங்கள். வான்கோழி நடனந் தெரிந்தது. மதுரை மாந கர் ஆகிய உதாரணங்களிற் சிலேடை தவிர்க்கவியலா தது.

Page 73
142 வாசிப்பது இயல்பு என்பதால் ஏற்படுவது. சந்தி விதி களைச் சரிவர அனுசரிக்க எழுதியதைத் தொடராக வாசித்து வழமையான பேச்சுடன் ஒப்பிடுவது உதவியா யிருக்கும்.
நேற்று போனவன், பாடி கேட்டது, கூடிசென்றது, மெல்ல தொட்டது, போன்றவற்றின், ஒலிப்பை நேற்றுப்
போனவன், பாடிக் கேட்டது, கூடிச் சென்றது, மெல்லத் தொட்டது என்பவற்றின் ஒலிப்புடன் ஒப்பி பிடாற் தமிழ்ப் பேச்சுக்கு உடன்பாடானவற்றை அடை
யாளம் காண்பது எளிது.
சந்தி விதிகள் பற்றிய அறியாமை, சந்தி ஏற்படக் கூடாத இடத்து ஏற்படுத்தவும் இடமளிக்கலாம். தமிழ கத்து எழுத்துக்களில் இதை நாம் காண முடியும். நல்லப் பையன், விழுந்துக் கிடந்தது, முன்றேக்கால் போன்ற பிரயோகங்கள் தவறை விளக்கப் போதுமானவை.
சந்தி விதிகள் தமிழ் ஒலியலின் ஒரு பகுதி. அயற் சொற்கள் மரபுத் தமிழுக்கு அயலான முறையில் ஒலிக் கப்படுஞ் சூழ்நிலைகளைத் தவிர்த்தாற், தமிழில் அவற். றைப் பேணுவது பற்றிய தெளிவான வழிகாட்டல்கள் உள்ளன.
மொழியின் எந்த விதியையும் போன்று சந்திபற்றிய விதிகளும் விறைப்பான முறையில் பயன்படுவது மொழிக்கு நல்லதல்ல. அதே வேளை, அறியாமையும் கவனயீனமுமே மீறல்களுக்குக் காரணமாயின் அதுவும் வரவேற்கத்தக்கதல்ல. சொற்தெளிவும் கருத்துத் தெளி வுங் கருதி ஒரு விதி மீறப்படுவதோ, தளர்த்தப்படுவதோ முன்னைய இரண்டு விதமான நிலைமைகளிலும் வேறு பட்டது. அது மொழி நடைமுறையுடன் இணைந்து உணர்வுபூர்வமாகச் செய்யப்படும்போது, மொழி வளர்ச் சிக்கு பங்களிக்கிறது.

புதிய சமுதாயமும் வார்த்தையமைப்பும்
எந்தவொரு மொழியாலும் அதன் சமூதாயச் சூழலின் மாற்றங்கட்கு ஈடுகொடுக்க இயலாது போக அவசியமில்லை. ஏனெனிற் புதிய சமுதாயமும் அதனுடன் தொடர்பான புதிய சிந்தனைகளும் சமுதாயத்தின் உறுப்பினர்களாலேயே உருவாகின்றன. தேவைகளை யொட்டி மொழியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை புதிய சொற்களதும் புதிய ஒலிகளும் எழுத்துக்களதும் வருகையை மட்டுமல்லாது வாக்கிய அமைப்பு, சொல்லாக்க விதிகள் போன்று பல அம்சங்களையும் உள்ளடக்குவன. இவ்வாறான மாற்றங்கள் அவசியமான போது அவற்றை மறுக்கும் முயற்சிகளே மொழியின் இயலாமைக்குக் காரணமாகின்றன.
தமிழின் குறைபாடுகட்கு இரண்டு முக்கிய காரணங் கிளைக் குறிப்பிடலாம். ஒேன்று மரபு பேணல் என்ற பேரில் மொழி விருத்திக்கு விதிக்கப்பட்ட தடைகள் சம்பந்தப்பட்டது. இவைபற்றி முன்னர் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். மற்றது நவீனத்துவத்துடன் பரிச்சய முற்றோர் தேடிய மாற்று வழியாக ஆங்கிலம் அமைந்தமை எனலாம். தமிழிலே ஒரு புதிய சிந்தனையைக் கூற ஆங்கிலச் சொற்களை நாடுவது பல வேறு விதங்களில் நிகழ்கிறது. அது வசதியாக இல்லாது போயின் ஆங்கிலத்தினூடே செயற்படுவது நமது படித்த உயர் நடுத்தர வகுப்பினரது பழக்கம். தம்முள்ளிருந்த தமிழ்ப்பற்று நமது உடனடி அயலுடனான போட்டா போட்டியிலும் பழமை பேணலிலும் புலனாகிய அளவுக்கு

Page 74
144
ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கவும் ஆங்கில ஊடுருவலின் விளைவுகள் தமிழை வலுவீனப்படுத்தாது தடுக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளாகப் பரிணமிக்கவில்லை.
தமிழர் மத்தியில் வணிகத் துறை வேரூன்றிய போது பற்று, வரவு, மேற்படி போன்ற சொற்களைக் குறிக்கக் குறுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் பயன்பட்டுள்ளன. இவ்வாறான முறைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. பிள்ளையார் சுழி (ஒம் என்பதைக் குறிக்கும் சுருக் செழுத்து வடிவம்) தவிர ஏதும் இன்று அச்சில் இருப்பதா கத்தெரியவில்லை. தமிழர் மத்தியிற் கடந்த நூற்றாண்டில் எழுச்சி பெற்ற புதிய அதிகார வர்க்கமும் அதனுடன் கைகோத்து நின்ற நவீன அறிவியலாளர் (புத்திஜீவி) பரம்பரையும் ஆங்கிலத்துடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கம் தமிழ் நவீனத்துவத்துக்கு முகங்கொடுப்பதற்கு அதிகம் உதவவில்லை.
கோவலனும் கூட்டாளிகளும் உருவாக்கிய வியாபார நிறுவனம், கோவலன் அன் கோ என்றே தமிழில் அறியப் படுகிறது, சிங்களத்தில் அது கோவலன் ஸஹ ஸ்மாகம என்று வருகிறது. தமிழில் & (and) என்பதைக் குறிக்க வசதியான சொல் இல்லை. கம்பனி (Co) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் ஒன்று இன்னும் நிலைபெறவில்லை. என்னளவில், கம்பனி என்ற சொல் தமிழுக்கு இசைவான ஒரு நல்ல வார்த்தைதான். ஆயினும் தமிழ் காக்கும் பரம்பரை இத்துறையில் எவ்வளவு கவனங்காட்டத் தவறிவிட்டது என்பதே நம் கவனத்துக் குரியது.
தமிழ்ச் சொற்களின் ஒட்டி இணையுந் தன்மை ஆவணங்களையும் படிவங்களையும் அமைப்பதில் இடர்ப்பாடுகளைப் புகுத்துகிறது. இவை தீர்க்க முடியாத சிக்கல்களல்ல. ஆயினும் தமிழ் இலக்கண விதிகள் தளர்த்தப்படுவது எளிமையான தீர்வுகட்கு வழிவகுக்கும்

145
கந்தனும் வள்ளியும் சூசையுடனும் மரியாளுடனும் ரஸ்ஸூலையும் பாத்தும்மாவையும் காணச் சென்றனர்" என்ற வாக்கியத்தை நாம் ஒரு படிவத்தில் அமைக்க முற்பட்டால் “- உம் - உம் -உடனும் - உடனும்ஐயும் - ஐயும் காணச் சென்றனர்" என்று அமைத்துப், பேர்களை உரிய இடத்தில் மட்டுமே நிரப்பிக் கொள்ள லாம். கந்தன் மட்டும் சூசையுடன் ரஸ்ஸீலிடம் போயிருந்தால் இப் படிவத்தில் மாற்றங்கள் அவசிய மாகும். "உடனும்" என்ற இடத்தில் "உடன்”, “ஐயும்” என்ற இடத்தில் "ஐ" “சென்றனர்" என்ற இடத்திற் "சென்றான்" என்பன வர வேண்டும். (வள்ளி போயிருந் தாள் “சென்றாள்" என்று வர வேண்டும்). இதற்கும் மேலாகக் கந்தன் உம், சூசை உடனும், ரஸூல் ஐயும் என்ற அமைப்புக்கள் மரபுத் தமிழுக்கு உடன்படாதவை. எனவே அவற்றை வெட்டித் திருத்த வேண்டி வரும்.
எண் (ஒருமை-பன்மை), பால் (ஆண்-பெண்) திணை (உயர்திணை, அஃறிணை), எட்டு வேற்றுமைகள், காலம், இடம் என்பன சொற்களில் ஏற்படுத்தும் மாற்றங் கள் தமிழிற் படிவங்களை அமைப்பதிற்; பிரச்சினைகளைப் புகுத்துகின்றன. எனினும் நவீனத்துவம் நமக்கு வழங்கிய அரைத் தரிப்பின் உதவியுடன், முற்கூறிய வாக்கியத்தை
"(கந்தன், வள்ளி) என்பார் (சூசை, மரியாள்) என்பாருடன் (ரஸ்இல், பாத்துமா) என்பாரைக் காணச் சென்றனர்” என்று நம்மாலை அமைக்க முடியும்.
இதைவிட, “(கந்தன், வள்ளி) ஆகிய நான் (நாம்)" என்றவாறான சொல் அமைப்புக்கள் மூலமும் நாம் தீர்வுகளைக் காண்கிறோம். ஆயினும் இதற்கு மொழியின் எளிமையை விலையாகக் கொடுக்க நேர்கிறது.
நமது சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நமது மொழியிலுந் தம்மைத் தெளிவாக அடையாளங் காட்டுகின்றன. நீ, நீர், நீவீர், நீங்கள், தாம், தாங்கள் என்றவாறான முன்னிலைப் பேர் வடிவங்களும் வருகிறான்,

Page 75
146
{வருகிறாள்), வருகிறார், வருகிறார்கள் என்றவாறான படர்க்கை வினைச்சொற்களும் நமது சமத்துவமற்ற சமுதாயத்தைப் பிரதிபலிப்பன. ஆங்கிலம் இன்று முன்னிலைக்கு you என்ற ஒரே சொல்லை உபயோகிக் கிறது. சிங்களமும் மலையாளமும் எண், பால், திணை வேறுபாடற்ற வினைச்சொல் வடிவங்களை விருத்தி செய்துள்ளன . சிங்களத்தின் பேச்சுமொழியில், நான், fổ, அவர்கள் எல்லாருமே ஆவா (வந்தார்கள்) எனவா (வருகிறார்கள்) என்ட (வாருங்கள்) தான். கடந்த இரு தஸாப்தங்களிற் சிங்களம் பேச்சுமொழியிலிருந்த இந்த அமைப்பைப் Luqu’ùLL-LLUT 35 எழுத்திலும் அங்கீகரித்து விட்டது. தமிழிற் பேச்சு மொழி கூட இது பற்றி
இன்னமும் கவனங்காட்டவில்லை.
தமிழ் வசன அமைப்பில் நவீனத்துவஞ் சார்ந்த இன்னொரு பெரிய பிரச்சினை உள்ளது. கந்தனும் மாடும் ஒன்றாக வந்த தகவலைத் தமிழில் எழுதுவதாயின், *கந்தன் மாட்டுடன் வந்தான்” அல்லது மாடு கந்தனுடன் வந்தது", அல்லது “கந்தன் வந்தான். மாடும் வந்தது. 6r6ös p! 6T(LPö வேண்டும். கந்தனும் மாடும் வந்தார்கள் என்றோ கந்தனும் மாடும் வந்தன என்றோ தமிழில் எழுதமுடியாது திணை வேறுபாடு எண் வேறுபாட் டுக்கும் மேலாக நிற்பதால் உயர்திணையாகிய மனிதன் அஃறிணையான ஒரு விலங்குடனோ சடப்பொரு ளுடனோ சேர்த்துக் கருதப்பட இயலாது போகிறான். முன் கூறிய விதமாகத் திணை, எண், பால் வேறுபாடற்ற ஒரு வினைச் சொல்லாக்க முறை இவ்வாறான சிக்கல்கட் கும் தீர்வு வழங்கும்.
ஆங்கிலத்திற் தன்மை, முன்னிலை, படர்க்கை தொடர்பான நிகழ்கால, இறந்த கால வசனங்களில் வினைச் சொல் தொடர்பான பிரச்சினை எழுகிறது. ஆனாலும் I am, you (we they) are he (she it) is என்ற

47
வேறுபாட்டைக் கையாள்வதற்கான தெளிவான விதிகள் a gir GT607, she or they were... a Talajib they are she was...
எ6 ஷம் (இறுதியாக வரும் பேர்ச் சொல்லுக்கு ஏற்றபடி)
இறந்த கால வினைச் சொல் அமையும். தமிழில், "நேற்று அவனோ அவளோ வந்தாள்." என்போமா, “வந்தான்" என்போமா? “இங்கே மாடோ மனிதனோ இருக்கிறது" என்போமா? “இருக்கிறான்" என்போமா? இவ்வாறான பிரச்சினைகள் தமிழிழ் அயற் சொற்களின் வருகையை
விட அடிப்படையானவை. இவற்றுக்கான தீர்வுகள்
தமிழில் நவீன சிந்தனைகளை வெளிப்படுத்துவதை இலகுவாக்குவன.
இவை போன்று நாம் அன்றாடம் முகங்கொடுக்கும் ஏராளமான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் தமிழ் மூலம் எவ்வாறு செயற்பட முடியும் என்ற கேள்வியை எழுப்ப எவரும் மொழியியல் அறிஞராகவோ தமிழ்ப் பண்டித
ராகவோ இருக்க அவசியமில்லை. இக் கேள்விகள் பகிரங்க
மாக எழுதப்பட்டு தீர்வுகளும் தைரியமாக முன் வைக்கப் பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இதன் மூலமே நமது மொழின் முன்னோக்கிய ஒரு பெருந் தாவுதலுக்கு வழியேற்படும்.
/

Page 76
மொழியும் எழுத்தும்
தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நெடுங்காலமாக நடந்து வருகின்றன. தமிழ்ச் சமுதாயத்துடன் தொடர்புடைய பலவேறு விஷயங்களிற் போன்று, தமிழ் மொழி தொடர்பான விவாதத்திலும், சமுதாய நடைமுறை, பிரச்சினைக்குப் புறம்பான ஒன்றாகவே சிலராற் கருதப்படுவதைக் காணலாம். வரலாற்றையும், வறட்டு நம்பிக்கைகளையும் பிரித்துப் பார்க்க இயலாமை தமிழ்ச் சமுதாயத்துக்கே உரிய ஒன்றல்லவெனினும், தமிழ் மக்கள் தமிழ் மொழி யின் வரலாற்று விருத்தியைச் சரிவர விளங்கிக் கொள்ள இயலாதவாறு தமிழ்மொழி பற்றிய பல தவறான கருத்துக்கள் பேணப் படுகின்றன, எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய விவாதம் திசைதிரும்பி, அடிப்படையான பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுவதற்கு மொழி பற்றிய தவறான கருத்துக்கள் காரணமாக உள்ளமை யால், அக்கருத்துக்களைத் திருத்துவதும் மொழிக்கும் எழுத்து முறைக்குமிடையிலான உறவை விளங்கிக் கொள்வதும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய விவாதத்தைச் செவ்வனே நெறிப்படுத்த உதவுவன. இக்கட்டுரை இந்த நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது.
வாழும் மொழியெதுவுமே மாறாத் தன்மையினதல்ல, தமிழ் இவ்விதிக்கு விலக்கானதல்ல, மாற்றம் வளர்சிக்கு உத்தரவாதமல்லவாயினும் வளர்ச்சியின் அறிகுறிகளிற்

149
தவிர்க்கவியலாதது, மாற்றம் ஒயும் போது வேளிர்ச்சி ஒய்கிறது. வளர்ச்சியின் ஒய்வு மரணத்துக்கு வழிகோலு கிறது மிகவும் விருத்தியடைந்த கமஸ்கிருதமும் லத்தின் மொழியும் சமுதாய வழக்கையொட்டி மாறவும் வளரவும் இயலாத நிலையிலேயே சிறுபாண்மை வழக்காதி இறுதி யில் இறந்த மொழிகளாயின. அம்மொழிக்ளினின்று கிளைத்த மொழிகள் அம்மொழிகளின் சில கூறுகளைப் பேணிப் பிறவற்றை நிராகரித்துப் புதிய அம்சங்களை விருத்தி செய்து வளர்ச்சி பெற்றன. இக்கிளை மொழி கள் மட்டுமன்றிப் பிற மொழிகளும் வழக்கொழிந்த மொழியினின்று ஊட்டம் பெற்றன. பழமையும் சொல் வளமும் சிறப்பான இலக்கணமும் மட்டுமே ஒரு மொழியை வழக்கிற் பேணப் போதியனவல்ல என்பதே வரலாறு தரும் பாடம்.
தமிழ், வழக்கொழிந்து போகாத பழம்பெருமொழி என அறியுமளவுக்கு, அப் பெருமை தமிழுக்கு மட்டுமே அல்ல என்பதைப் பற்றி நாம் அறியோம். கிரேக்க, சீன மொழிகள் புராதனமானவை. அவை, தமிழ் போன்று, தொடரான மாற்றங்கட்குட்பட்டதன் மூலமே நிலைத்து நீடித்தன. இன்று வழங்கும் கிரேக்க மொழி புராதன கிரேக்க மொழியினின்று வேறுபட்டது என்பதைக் கிரேக்கர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். சீன மொழியின் வரலாற்றுத் தொடர்ச்சி பிரதானமாக அதன் எழுத்து முறை சார்ந்தது. அதில் முன்னமே ஏற்பட்டுள்ள மாற்றங்களை மட்டுமன்றி நவீனமாக்கலையொட்டி ஏற்பட வேண்டிய மாற்றங்களையும் அவசியமானவை என்றே சீனச் சமுதாயம் கருதுகிறது. தமிழர் மத்தியில், தமிழ் மொழி தன் ஆதி வடிவிலேயே நிலைத்து நீடித்து வருகிறது என்ற கருத்து வளர்க்கப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கண நூலுஞ் சொல்வளமும் எழுத்து வடிவ மும் காலத்துடன் மாறி வந்துள்ளன என்ற வரலாற்று
gーl0

Page 77
50
உண்மையை மிக எளிதாக அலட்சியம் செய்துவிட முடியாது. இன்று எழுத்து வழக்கிற்கு ஏற்றதாகப் பழமை பேணுவோர் கருதும் தமிழ் மொழியானது, நிலைத்திருக்கும் தமிழ் இலக்கியங்களில் மிகப் பழமையன வான சங்க இலக்கியங்களின் தமிழ் மொழியினின்று மிகவும் வேறுபட்டது. சங்கத் தமிழை மட்டுமே அறிந்த ஒருவர் சமகாலத் தமிழை விளங்கிக் கொள்ளவியலாது. அவ்வாறே சமகாலத் தமிழைப் பயின்ற ஒருவர் சங்கத் தமிழ் இலக்கியங்களை மற்றோர் துணையின்றி வாசித்து விளங்க இயலாது. தமிழ் எழுத்து வடிவங்களும் எழுத்து முறையும், இலக்கண விதிகளும், சொல்வளமும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குட் கண்ட மாற்றங்களை அனுமதித்து அக்கால எல்லைக்குப் பின்னர் வந்த எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மறுப்போர், அக்கால ல்லையுடன் தமிழின் விருத்தியை நிறுத்துவதற்கே முனைகின்றனர். சமுதாய மாற்றம் போன்று, மொழியி ல் மாற்றங்களும் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்பணிந்து நிற்பதில்லை. சமுதாயத் தேவை சட்ட விதிகளை மீறி மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கிறது. சீர்திருத்தங் கள் எனப்படுவன இம்மாற்றங்களைச் சம்பிரதாய பூர்வமாக அனுமதிக்கும் செயல்களேயன்றி வேறல்ல.
தமிழ் மொழி எழுத்து வடிவத்துடனேயே தோன் றியது என்ற கருத்துச் சிலரிடம் உள்ளது. தமிழ் எழுத்து முறையை உருவாக்கிய முழுப் பெருமையும் தமிழருக்கே உரியது என்ற கருத்தும் மிகப் பரவலாகத் தமிழர் மத்தியில் நிலவுகிறது. இவற்றுக்கான வரலாற்ற ஆதாரங் கள் மிகப் பலவீனமானவை. மானுட மொழிகள் ஒலியை
தாரமாகக் கொண்டே தோன்றி வளர்ந்தன. பேச்சு மொழியின் மூலம் மானுட அறிவைப் பேணிப் பாதுகாக்க நினைவாற்றலையே சார்ந்திருக்க வேண்டியிருந்தமை ல் மொழியின் விருத்தி வரையறைக்குட்பட்டிருந்தது. மொழி வளர்ச்சியின் அடுத்த பெருந் தாவல் எழுத்து

151
முறையின் வருகையையொட்டி நிகழ்ந்தது. உலகின் எழுத்து முறைகள் யாவுஞ் சித்திர முறையினின்றே தோன்றின. சித்திர எழுத்துக்கள் குறியீடுகளாக விருத்தி யடைந்தன. ஓசைகளைக் குறிக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையின் வருகையே நவீன எழுத்து முறைகளின் தோற்றத்திற்கு வித்திட்டது. சித்திர வகையிலான குறியீடுகளைக் கொண்ட எழுத்து முறையின் அதியுயர்ந்த நிலையைச் சீன மொழியிற் காணலாம். ஆயினும், ஒவ்வொரு சொல்லும் ஒரு தனிக் குறியீட்டாற் காட்டப்பட வேண்டிய அவசியம் அந்த எழுத்து முறையை மிகவுஞ் சிக்கலான ஒன்றாக்கிவிட்டது. மறுபுறம், ஒலிகளைக் குறிக்கும் எழுத்து முறை அதன் 6Taifao D காரணமாகப் பரவலான பயன்பாட்டுக்கு உளளானது.
இந்திய மொழிகளிற் பயன்படும் எழுத்து வடிவங் களின் தோற்றுவாயான பிராமி எழுத்துக்கள் இந்தியா வுக்கு வெளியிலிருந்து வந்த ஒரு எழுத்து முறையினின்று வகுக்கப்பட்டவையே. இந்தியாவில் உருவான எழுத்து முறை உயிர், மெய் ஒலியன்களை வெவ்வேறாகக் குறிக்கும் ஒரு முறையினின்று விலகி உயிர்மெய் ஒலியன் களைத் தனித்தனி எழுத்துக்களாகக் குறிக்க அமைந்த ஒரு சிறப்பான முறை எனலாம். மெய்யெழுத்திற்குச் சேர்க்கப்படும் ஒரு அடையாளத்தின் மூலம் அதை உயிர் மெய் எழுத்தாக மாற்றும் எழுத்து முறை. கையெழுத்தையே சார்ந்திருந்த ஒரு யுகத்தில் மிகுந்த சிக்கனத்தை வழங்கியது. அடுத்து வரும் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்துக்களை ஈற்றில் வரும் உயிருடன் சேர்த்து அமையும் அசையை ஒற்றை எழுத்தாக எழுதும் முறை சமஸ்கிருதத்தை எழுதும் தேவநாகரி முறையில் வகுக்கப்பட்டது. பிராமி எழுத்தை ஒட்டி உருவான தமிழ் எழுத்து முறை காலத்தாற் பிற்பட்டதென்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. வட மொழிகளில் எ-ஏ, ஓ-ஓ

Page 78
夏52
வேறுபாடுகள் இல்லாமையால் அவற்றை எழுத்தில் வேறுபடுத்திக் காட்ட வகை இல்லை. தமிழில் இவ்வேறுபாடுகள் இருந்த போதும் எ-ஏ, ஓ,ஒ வேறுபாடு களைக் காட்டும் கொம்புக் குறிகள் (-ெ)ே சில நூற்றாண்டுகள் முன்னரே புகுத்தப்பட்டன. அதற்கு முன்னர் ஒற்றைக் கொம்பு ()ெ மட்டுமே பயன்படுத்தப் பட்டது. இந்த முக்கியச் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர் என அறியப்படும் ஐரோப்பியரான பெஸ்கி பாதிரியார் என்பது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்தாகும். தமிழில் மெய்யெழுத்தைக் குறிக்கும் புள்ளி ஒலைச் சுவடிகளில் எழுதும் பிரச்சினையால் நீண்டகால மாக வழக்கொழிந்து மீண்டதும் ஏறத்தாழ இக்கால்த் திலேயே எனக் கருதப்படுகிறது.
வட இந்திய எழுத்து முறைகள் தேவநாகரி எழுத்து முறைக்கு மிகவும் நெருக்கமானவை. தென்னிந்திய எழுத்து முறைகள் ஒலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு வேகமாக எழுத உகந்தவை. இந்த எழுத்து வடிவங்கள் நீண்ட வரலாற்று வளர்ச்சியின் விளைவாக உருவானவை. அச்சியந்திரத்தின் வருகையையடுத்தே இந்த எழுத்து வடிவங்கள் நிலையான வடிவம் பெற்றன. இன்று புழக்கத்திலிருக்கும் எழுத்துக்கட்டும் ஐந்தாறு நூற்றாண்டுகள் முன்னர் இருந்த எழுத்துக்கட்குமிடை யில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. எவ்வாறாயினும் இந்திய எழுத்து முறைகள் அனைத்தும், உருதுமொழியை எழுதப் பயன்படும் அரபு எழுத்து வகையைத் தவிர்த் தால், ஒரே அடிப்படையில் அமைந்தவையே, இந்திய எழுத்து முறையையொட்டி வகுக்கப்பட்ட எழுத்து முறைகள் அண்மைக்காலம் வரை இந்தோனீசியாவிற் புழக்கத்திலிருந்தன. லாஒ, காம்போஜ, பர்மிய எழுத்து முறைகள் இந்திய எழுத்து வகையினவே. தென் ஆசிய, தென் கிழக்காசிய மொழிகளனைத்திற்கும் பொதுவான ஒரே எழுத்து முறையை வகுப்பது சிரமமானதல்ல.

153
ஆயினும், எழுத்துச் சீர்திருத்தத்தின் உடனடியான தேவையோ இலக்கோ இதுவல்ல.
சிலர் தமிழ் மொழியின் தூய்மையையும் தனித்துவத் தையும் குழப்பிக் கொள்கிறார்கள். தூய மொழி என்று இவர்கள் கருதும் மொழி (அதாவது அயற் சொற்களின் கலப்பற்ற அயல்மொழிப் பாதிப்பற்ற மானுட மொழி) எதுவுமே இன்று வழக்கில் இல்லை. அயற் சொற்களின் வருகையோ அயல்மொழிப் பண்புகளின் தாக்கமோ ஒரு மொழியின் அடிப்பட்ையான தன்மையை மாற்ற அவ சியமில்லை. ஒரு மொழி அயற் பண்புகளை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறது என்பதையொட்டியே அதன் தனித்துவம் பேணப்படுகிறது. அயற் சொற்களும் அயல் மொழிப் பண்புகளும் ஒரு மொழியுட் புகுவதற்கான விதிகளை மொழி வழக்கே ஏற்படுத்திக் கொள்கிறது. அவ்விதிகள் விறைப்பானவையாயும் நடைமுறைக்கு இசையாதவையாயும் புதிய தேவைகட்கு முகங்கொடுக் கப் போதாதவையாயும் அமையும்போது ஏற்படும் நெருக்கடி புதிய விதிகளின் வருகைக்கு வழி ஏற்படுத்து கின்றது. அவ்வாறு ஏற்படாத விடத்துப் பழைய விதி கள் கண்டபடி மீறப்படவும் மொழிக் குழப்பம் ஏற்பட வும் நேரிடுகிறது.
தமிழில் வடமொழியின் செல்வாக்கைச் சங்க இலக் கிய காலத்திலேயே காணலாம். ஆரியவேத அடிப்படை யில் இந்து மதம் விரிவும் விருத்தியும் அடைந்ததை யொட்டித் தமிழிற் சமஸ்கிருதத்தின் பாதிப்பு ஏற்பட் டது. சமண, பெளத்த மதங்களின் வருகை வடமொழி களின் பாதிப்பை மேலும் பலப்படுத்தியது. வைணவ மதத்தினது வருகையும் அதைவிட முக்கியமாக வைண வப் பெருங் காவியங்களான மகாபாரதத்தினதும், ராமா யணத்தினதும் பாதிப்பும் தமிழில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கை உச்ச நிலைக்குக் கொண்டுவந்தன. தமிழர்

Page 79
154
பேரரசான சோழப் பேரரசின் உன்னத நிலையில் சமஸ் கிருதத்தின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. வடமொழிச் சொற்களைச் சரிவர எழுதும் தேவையின் நிமித்தம் கிரந்த எழுத்துமுறை வகுக்கப்பட்டது. இந்த எழுத்து முறையைத் தழுவியே மலையாள எழுத்துக்களும் இன்றைய சிங்கள எழுத்துக்களும் அமைந்துள்ளன.
வல்லின ஒசைகளில் க, ச, ட, த, ப என்ற ஒவ்வொன் றுக்கும் சமஸ்கிருதம் வேறுபட்ட ஒசைப் பெறுமானங் களுடைய நான்கு தனி எழுத்துக்களை அனுமதிக்கிறது. உண்மையிற், சமகால இந்தியப் பேச்சு மொழி வழக் கில் இவற்றில் இரண்டுக்குத் தனி எழுத்துக்கள் அவசிய மில்லை; ஆயினுந் தமிழ் தவிர்ந்த சகல துணைக்கண்ட மொழிகளும் சமஸ்கிருத எழுத்து முறையை ஒட்டி நான்கு தனி எழுத்துக்களைப் பேணுகின்றன. தமிழோ, முக்கியமான ஓசை வேறுபாடுகளைக் காட்டும் அவ சியத்தையே புறக்கணித்துவிட்டது. எவ்வாறாயினும், ச வினின்று வேறுபடுத்திக் காணுமாறு ஜவும், ஹ, ஸ,ஷ, எனும் எழுத்துக்களும் கிரந்தத்தினின்று தமிழுட் புகுந் துள்ளன். பூரீ. (க்ஷ என்பதற்குரிய கூட்டெழுத்தான) கூடி என்பனவும் வழக்கிலுள்ளன. சமஸ்கிருதக் கூட் டெழுத்துக்களை அமைக்கும் முறையையொட்டி மலை யாளத்திலும், சிங்களத்திலும் வகுக்கப்பட்ட கூட் டெழுத்துக்களையொத்த எழுத்துக்கள் தமிழிலும் ஒரு காலத்தில் வழங்கின. ச்-ஜ் வேறுபாட்டைக் குறிக்குமுக மாக ச வுடன் ஜ அனுமதிக்கப்பட்டது போன்று, க, ட, த, ப ஆகியவற்றுக்கும் ஒவ்வோரு மேலதிகக் கிரந்த எழுத்து அனுமதிக்கப்பட்டிருப்பின் சமகாலத் தமிழின் பிரச்சினையின் ஒரு பெரும் பகுதி திருப்திகர மாகத் தீர்க்கப்பட்டிருக்கும். நான்கு கிரந்த மெய் வடிவங்களை அனுமதித்து அவசியமான இன்னொரு நான்கைப் புறக்கணித்தமை அப்புதுமையாக்கம் எவ்வ ளவு முழுமையற்றது என்பதையே காட்டுறது, இது

I55
இவ்வாறு இருந்தபோதுஞ் சமகாலத் தமிழ், உட்புகுந்த நான்கு கிரந்த மெய்யெழுத்துக்களையும் அவசியமாகக் கருதுகின்றமை இந்த ஒசை வேறுபாடுகளின் அந்தஸ்து எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்பதையே உணர்த்து கிறது.
ஆரிய மொழி எதிலும் ள, ற, ழ, எனும் மெய் யோசைகள் இல்லை. ஆயினும் முகலாயர் வருகையைத் தொடர்ந்து எப் (F) சற் (Z) எனும் ஆங்கில எழுத் துக்கட்குரிய ஒலிகளை இந்தியில் குறிக்குமுகமாகத் தேவ நாகரி எழுத்திற் சிறு மாற்றம் செய்யப்பட்டது. சிங்களம் ற, ழ தவிர்ந்த சகலதமிழ் ஒலிகளையும் சமஸ்கிருத ஒலி களையும் (அண்மைதொட்டு) எப் எனும் ஓசையையும் குறிக்குமளவுக்கு விரிவான எழுத்துமுறையைக் கொண்டுள் ளது. அதுமட்டுமன்றிச் சிங்களம் தனக்கேயுரிய இரு உயி ரோசைகளையும் உடையது. ஒரு மொழியின் ஒலி வளம் அதன் எழுத்துமுறை எத்தனை வகையான ஒலிகளைக் குறிக்கவல்லது என்பதால் நிர்ணயமாவதில்லை. ஒரு மொழியின் பேச்சு முறையைத் தெளிவாகவும் ஐயத்துக்கிட மின்றியும் அதன் எழுத்துமுறை பிரதிபலிக்க வல்லதா என்பதே அம்மொழியின் எழுத்து முறையின் தகுதியை நிர்ணயிக்கிறது. இதைக் கருத்திற் கொண்டே மொழி களிற் புதிய எழுத்துக்களும் ஒசைகளை குறிக்கும் கூட் டெழுத்து முறைகளும் ஒலியடையாளங்களும் புகுத்தப் படுகின்றன. தமிழ் நீண்ட காலமாக அலட்சியஞ் செய்த ஒரு பிரச்சினையை மேலும் புறக்கணிக்க இயலாது போனமை தமிழினின்று மலையாளம் கிளைத்து எழவும் வடமொழியினின்று பெற்ற ஒலிவளத்தை உள்வாங்கி அதற்கேற்ற எழுத்து முறையை வகுக்கவும் ஒரு முக்கிய ஏதுவாயிற்று, இன்றும் இந்திய மொழிகளிடையே எழுத் துச் சீர் திருத்தத்தில் மலையாள மொழி முன்னோடியாக விளங்குகிறது. " .س
தமிழில் வடமொழியின் ஆதிக்கம் வெவ்வேறு வடி வங்களிற் பல்வேறு காலங்களிற் தலைதுாக்கியுள்ளது.

Page 80
156
நல்ல தமிழ்ச் சொற்களுக்கும் வடமொழி மாற்றுச் சொற்களைப் பிரதியிடும் போக்கு அண்மைவரை காணப்பட்டது. இத் தவறான போக்கை எதிர்த்தே தமி ழின் தனித்துவமும் அதைவிட முக்கியமாக தமிழின் எளிமையும் பேணப்பட்டன. அதே வேளை தமிழி னின்று வடமொழிச் சொற்களை அறவே நீக்கும் ஒரு போக்கும் இருந்துள்ளது. இதன் தோல்வி தமிழின் விருத் தியின் விளைவானதே. தமிழின் தனித்துவம், தமிழையும் தமிழனையும் புற உலகினின்று மாசு' படராதபடி பேணுவதால் நிலைப்பதல்ல. இத்தகைய போக்கு தமிழி னதும் தமிழரதும் துரிதமான நலிவுக்கே வழி வகுத்திருக் கும். இன்றைய தமிழின் சொல்வளம், அன்று சமஸ்கிரு தம் முதலாக போர்த்துக்கேய, அரபு, டச்சு, உருது ஆகிய மொழிகள் உட்பட இன்று ஆங்கிலம் வரை பல அயல் மொழிகளினின்று ஊட்டம் பெற்றுள்ளது. எழுத்தை விடப் பேச்சு மொழியில் அயற் சொற்கள் அதிகமாகவே வழக்கிலுள்ளமை இயல்பானது. இன்றைய சான்றோர் வழக்கென்று சிலர் கருதக்கூடிய மேடைப் பேச்சுக்கும் எழுத்து மொழிக்குரிய மொழிவழக்கிலும் அயற்சொற் கள் பெரிய அளவிற் காணப்படுகின்றன. இவை ஏதோ ஒரு வகையிற் தமிழாக்கப்பட்ட அயற் சொல் வடிவங்க ளேயாயினும், இவற்றுட் கணிசமான தொகையின ஏற் படுத்தும் சிக்கல்களும் தெளிவீனங்களும் அயற்சொற் களைத் தமிழ்ப்படுத்துவதற்குரிய பழைய தழுவல் விதி கள் புதிய சூழலுக்கு முகங்கொடுக்கப் போதாதவை என் பதை உணர்த்துகின்றன இதன் விளைவாகவே, பழந் தமிழ் எழுத்து இலக்கண விதிகளை மீறி. ர, ல, ட ஆகிய மெய்கள் சொற்களின் முதலிலும் வல்லின மெய்கள் மன தர் பெயர்களைக் குறிக்கும் சொற்களின் ஈற்றிலும் முள் னர் அனுமதிக்கப்படாத மெய்த் தொடர்கள் (ருத்ர-த்ர் கர்ண-ர்ண், பாக்ய-க்ய்) போன்றவை சொல் நடுவிலு பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக இலக்கண நூலறிவின்மை காரணமாகவன்றி விருப்பங்காரணமா

157
வும் தேவை கருதியுமே செய்யப்படுவன. ஏற்கனவே தமிழ் எழுத்து முறைத்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு கிரந்த மெய்களின் உபயோகத்தின் மேலாக, எப் எனும் ஓசையைக் குறிக்கும் ஃப எனுங் குறியீட்டின் வருகை தமிழின் புதிய ஓசைகளின் நிலையான இடத் தையே சுட்டிக் காட்டுகிறது. அது மட்டுமின்றி கப எனும் தொடரில் பகரமும் ஆய்த எழுத்தும் தம் ஒசையை இழந்து ஒரு வேற்றோசையைக் குறிக்கப் பயன் படுவது ஆய்த எழுத்தின் குறைந்துவரும் பயன் பாட்டைக் காட்டுகிறதா என்பதும் நம் கவனத்துக்குரி யது. ழகரமும், ரகரமும் இவ்வாறே சில அயல் மொழி ஒசைகளைக் குறிக்கச் சிலராற் பயன்படுத்தப்படுவதும் நம் கவனத்துக்குரியது,
தமிழில் எழுத்து வடிவங்களிலும் எழுத்து விதிகளி லும் மட்டுமன்றிச் சொல்லிலக்கண விதிகளிலும், நடை முறை மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. உதாரணமாகச் சந்தி விதிகள் தெளிவும் எளிமையுங் கருதிப்பல இடங்" களிற் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழ் இலக்கண விதி கள் எல்லாமே தொல்காப்பியக் காலத்தினின்று மாறா மல் நிலைக்கவில்லை. மாற்றம் மட்டுமே கால விதியாக, அன்று முதல் இன்றுவரை நீடித்து வந்துள்ளது. மேனாட் டார் செல்வாக்கின் விளைவாகப் புகுந்த மாத்திரைக் குறிகள் இன்று தமிழில் ஒரு பகுதியாகி விட்டன. அவற் றைத் தவிர்ப்பின் தெளிவீனம் விளையும் என்பதை யாவ ரும் அறிவோம். இவ்வாறான மாற்றங்கள் யாவும் மரபு பேணும் மொழி விற்பன்னர்களது ஆணைகளையும் ஆட்சேபணைகளையும் மீறியே நிகழ்ந்துள்ளன. சமுதாய மொழிவழக்கு மக்களுக்குரியது. அது சமுதாய நடை முறை சார்ந்து மொழி வழக்கு சமுதாய நடை முறையினின்றே விதிகளைப் புனைந்தும் புதுப்பித்தும் நீக்கியும் நிறுவியும் செயற்படுகிறது, வழுவென்று தீர்க் கப்பட்ட ஒரு பிரயோகம், இப்போக்கில் வழக்காகிய

Page 81
I58
பின்பு அரைமனதாகக் கொச்சை என்றோ வட்டார வழக்கென்றோ ஏற்கப்பட்டதன் பின், பழைய வழுவே புதிய விதியாக அமையவுங் கூடும் விதியாக இருந்த ஒன்று நடைமுறை மதியாத காரணத்தால் விலக்காகி ஒழியவுங் கூடும். பழையன கழிதலும் புதியன புகுத லும் கால வகையினவாவது சமுதாய நடைமுறை என்ற கருவியின் மூலமே. இது மொழி விருத்தியின் இயங்கியற் தன்மைக்குரியது.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வரலாற்றுத் தொடர்ச்சி யுள்ள ஒன்று, அயலினின்று வந்த எழுத்து வடிவங்கள் தென்னிந்தியப் பிராமி வடிவமாகவும் அதன் பின் பலவேறு கட்டங்களுடு விருத்தியடைந்து அச்செழுத்து வந்த பின்பு இன்றைய வடிவை அடையும் வரை ஏற்பட்ட ஒவ்வொரு முக்கிய எழுத்து வடிவ மாற்றமும் எழுதுங் கருவிகள், எழுத்து முறையின் தேவைகள் போன்ற பலவேறு காரணிகளால் உந்தப்பட்டு உணர்வுபூர்வமாகச் செய்யப்பட்டதே. அச்சியந்திரத்தின் வருகையின் பின் நிலை பெற்ற எழுத்து வடிவங்களை நிரந்தரமானவை யெனவும் மாற்றத்திற்கு அப்பாற்பட்டவை எனவுஞ் சிலர் வாதிப்பது நகைப்புக்குரியது. அதே சமயம் மாற்றங்களை முன் வைப்போர் வெறுமனே புதுமை கருதி முன் வைப்பது எவ்வகையிலும் முற்போக்கான காரியமாகாது. மாற்றத்துக்கான கருத்துக்கள் சமகால சமுதாயத்தின் தேவைகட்கு மொழி எவ்வாறு முகங் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்வைக்கப் படும் போது ஆக்கமான விளைவைத் தருகின்றன.
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கான இரண்டு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று - எழுத்து வடிவங்களின் சீரின்மையைத் திருத்தும் நோக்குடன் ஈ. வே. ராமசாமி நாயக்கர் முன்வைத்த யோசனை, மற்றது அயல் மொழிப்

129
பேர்களைத் தமிழிற் சரிவர எழுதவும் தமிழர் அயல் மொழிகளை எளிதாகக் கற்கவும் உதவுமாறான எழுததுச் சீர்திருத்தம் பற்றிய மகாகவி சுப்பிரமணியபாரதியின் யோசனை. ஈ. வே. ராவின் யோசனைகள் தமிழில் அச்சு முறையில் சிக்கனத்துக்கும் வேகமான செயற்பாட்டுக்கும் வழிகாட்டுவன. தமிழ் எழுத வாசிக்க கற்போருக்குச் சிரமத்தைக் குறைப்பன. ஈ வே. ரா. சொல்லி அரை நூற்றாண்டின் பின்பு அவரது சிஷ்ய பரம்பரையினர் அந்தச் சீர்திருத்தத்தில் ஒரு பகுதியை (அ, ஐ, ஒ, ஓ உயிர் மெய் வரிசையை ஒருசீராக்கும் பணியைத் தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். ஆயினும் ஈ. வே. ராவின் யோசனையின் தர்க்கரீதியான முடிபாக, உ , ஊ வரிசையை ஒருசீராக்கவும் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய்கட்கு உடன்பாடான முறையில் அ, அா. அெ. என்றவாறு சீரமைக்கவும் தயங்குகிறார்கள். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் தமிழ் எழுத்து முறையின் இன்றைய பிரச்சினையின் விளிம்பைக் கூடத் தொடவில்லை.
பாரதியிடம் தீர்க்க தரிசனம் இருந்தது. தமிழ் எழுத்து முறையின் போதாமைக்கான தீர்வு, எழுத்து முறையில் சில அடிப்படையான மாற்றங்களைப் புகுத்து வதே என்று அவர் கண்டார். பாரதியின் யோசனைகள் அவர் கருதிய வடிவிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது இங்கு முக்கியமல்ல. அயல் மொழிச் சொற்களைத் தமிழில் எழுத இயலாமை பாரதியின் காலத்தில் இருந்ததைவிட இன்று பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. அயல் மொழிப் பேர்களைத் தமிழில் எழுதுவதற்காக மட்டுமே தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம் என்ற வாதம் பலபானதல்ல. அத்தேவையை ஒலியடையாளங்களின் துணையுடன் நிறைவேற்றுவது சாத்தியம். உலகின் சகல மொழிகளிலும் உள்ள ஒலிகளை யும் தமிழ் எழுத்துக்கள் மூலம் குறிக்க வேண்டிய தேவை

Page 82
l60
தமிழருக்கு இல்லை. அதற்கான சர்வதேச ஒலி அடையாள முறை ஒன்று ஏற்கனவே உள்ளது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சமகாலத் தமிழில் உள்ள சொற். களை எல்லாம் தமிழில் எழுதவல்ல ஒரு எழுத்து முறையை வகுப்பது பற்றியதேயொழிய அயல் மொழிகள் பற்றியதல்ல. இங்கேதான் அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. தமிழ்ச் சொற்கள் எவை? சமகாலத் தமிழ் என்பது என்ன? தமிழ் மொழியின் பயன்பாடு என்ன? இவ்வாறான கேள்விகள் இறுதி ஆராய்வில் அரசியற் கேள்விகளாகவே அமைகின்றன. அந்நிய மோகத்துக்கும் அந்நிய விரோதத்துக்கும் சமுதாய அரசியலில் உள்ள முக்கியத்துவம் கலாச்சாரத்திலும் மொழி விருத்தியிலும். இருக்கிறது. பழமைக்கும் புதுமைக்குமிடையிலான முரண்பாடு ஒவ்வொரு சமுதாயத் துறையிலும் போன்று மொழி விருத்தியிலும் காணப்படுகிறது. மொழி விருத்தி பற்றிய முற்போக்கான நிலைப்பாடு சமகால நடைமுறை யின் யதார்த்தத்தைக் கணிப்பிலெடுப்பதுடன் பழமையின் நல்ல அம்சங்களைப் பேணி எதிர்காலம் பற்றிய தெளிவான முன்னோக்கிய பார்வையுடையதாக இருக்க வேண்டும். சமுதாய நடைமுறையூடன்றி மரபோ மாற்றமோ தம்மளவிலேயே தம்மை நியாயப்படுத்த வியலாது.
தமிழ் மொழிக் கல்வியில் ஆதிக்கஞ் செலுத்திய பத்தாம்பசலித்தனமான போக்கு எழுத்து மொழியின் தேக்கநிலைக்குக் காரணமாயிற்று. பேச்சு மொழியோ நவீன தொடர்புச் சாதனங்களின் விருத்தியையொட்டி விரிவாக வேறு திசையில் வளரலாயிற்று. இழிசினர் வழக்கு, கொச்சைத் தமிழ் என்று மரபுவாதிகளாற் புறக்கணிக்கப்பட்ட வாழும் மொழிவழக்கு நாடகம், சினிமா, அரசியல் மேடை, ஆக்க இலக்கியம் போன்ற துறைகளிற் தன் செல்வாக்கை விஸ்தரித்த பின்னரும் மரபுவாதிகள் அதைக் கணிப்பிலெடுக்கத் தவறுவது;

6
இறந்து போனவொரு யுகத்தினின்று வெளிவர மறுக்கும் ஒரு போக்கேயாகும். அதே சமயம் 'சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை' என்றவாறு ஆங்கில மோகத்தில் மூழ்கியுள்ள நடுத்தர வர்க்கமொன்றன் மொழி வழக்கை நவீன தமிழ் மொழிவழக்காகக் காட்டும் ஒரு பாவனை வியாபார எழுத்தாளர்களால் ஊக்குவிக்கப்படுகிறது, இந்த ஆங்கில மோகம் போலிப் புத்திஜீவி. வட்டாரங்கள் மத்தியிலும் பெருமளவிற் காணப்படுகிறது ஆங்கிலச் சொற்களைத் தமிழ் வசனங்களில் அமைப்பதும் ஆங்கில வசனங்களைத் தமிழ் வசனங்களிடையே திணிப்பதும் தமிழை நவீன மயமாக்கிட விட மாட்-ா அதே சமயம், சமுதாய விருத்தியை ஒட்டித் தமிழிற் புகுந்துள்ள புதிய சொல்வளத்தை நாம் நிராகரிக்க முடியாது. நாளாந்தம் வந்து குவியும் புதிய பண்டங்களையும், கருதுகோள் களையும் குறிக்கத் தகுந்த மரபுவழிச் சொற்கள் இல்லாமையால், ஆங்கிலச் சொற்கள் அவற்றின் மூலவடிலோ வேறுபடும் அளவுகளில் தமிழ்ப்படுத்த்தப் பட்டோ தமிழ்ப் பேச்சு வழக்கிற் பரவலாகி நிலையான இடம் பெற்றுவிட்டன. இவற்றை நீக்குவதோ மரபின் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வருவதோ சாத்தியமற்ற அளவுக்குப் பேச்சுமொழி விருத்தியடைந்து விட்டது. இச்சொற்களைச் சரிவர எழுதும் திறமை தமிழ் எழுத்து முறைக்கு இல்லை. இது முக்கியமான ஒரு பிரச்சினை பேச்சுத் தமிழில் நிலையான இடம் பெற்று விட்ட சொல்வளத்தின் ஒரு பகுதியைத் தமிழல்ல என்று புறக்கணிக்கும் சிலர் கண்களை மூடிக்கொள்வதால் உண்மை பொய்யாகிப் போய் விடாது. பேச்சு மொழி எனும் நிசமான நிலைமைக்கு எழுத்து எவ்வாறு முகங் கொடுக்க முடியும் என்பதே நம் முன்னுள்ள கேள்வி.
தமிழில் அயல் மொழிச் சொற்கள் புகுந்த புதிய சூழ்நிலை தமிழ்ப் பேசும் மக்களின் பேர்களையும் பாதித் துள்ளது. சூசை, யக்கோபு, கிருட்டினன், உசேன் என்ற தமிழ்ப்படுத்தல்களைவிட ஜோசப், ஜேக்கப், கிருஷ்ணன்,

Page 83
162
ஹ"ஸேன் போன்ற மூலத்துக்கு நெருங்கிய வடிவங்களும் இன்னும் தமிழர் மத்தியில் பரவலாக வழங்குகின்றன. டட்லி ஸ்டாம்ப் என்பவரை இடட்டிலி தாம்பு என்று அழைத்தது போல ஷெரிப் டீனைச் செரிப்புத் தீனாக்க முடியாது. ஒரு தமிழரை அவர் விரும்பும் விதமாகவே தமிழ்ச்சமுதாயம் அழைக்கிறது; ஆனால் அவரது பேரைத் தமிழிற் சரிவர எழுத இயலாது என்றாற் பிழை யாருடையது? w '
பேச்சுத் தமிழ், வட்டார வழக்கு வேறுபாடுகளாலும் ழுவோ வழக்கோ என்ற ஐயப்பாட்டுக்குரிய சொற் பிரயேகங்களாலும் இடர்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாகப் பேச்சுத் தமிழ்மொழியின் சொல்வளமும் வலிமையும் முழுமையாகப் பயன்படாது போய் விடுகின்றன. இந்த நவீன மொழியை அடையாளங்கண்டு ஒருமைப்படுத்தும் பணிமிகப் பெரியது எனினும் அவசிய மானதும் சாத்தியமானதுமாகும். மரபுத் தமிழின் அடிப்படையில் மரபின் விறைப்பான விதிகளைச் சற்றே தளர்த்தி மரபு மொழியை விரிவுபடுத்தி நவீனத் தமிழ் மொழியை மரபின் தொடர்ச்சியாக விருத்தி செய்யுந் தெரிவு நமக்கு முன்னுள்ளது. மாறாக மரபு கூறும் ஒரு மொழியை மட்டுமே அனுமதித்து நவீன மொழியைப் பிறழ்வாகக் கருதி ஒதுக்கவும் இயலும். இதன் வினை வாகத் தமிழ் நவீன சமுதாயத் தேவைகட்கு முகங் கொடுக்கப் போதாத ஒரு மூல எழுத்து மொழியாகவும் அதனின்று நாளாந்தம் கிளைத்து வேறுபட்டுப் பிரியும் பல மொழிகளாகவும் பிளவுபட்டுப் பலவீனமடைவதாகலாம். அல்லாத பட்சத்திற், தமிழ்ச் சமுதாய மாற்றங்களின் விளைவாகப் பேச்சுத் தமிழ் மொழியின் அடிப்படையில் ஒரு புதிய வலிய தமிழ் மொழி உருவாகவும் நேரலாம். இந்தோனீசியா விடுதலையை அடுத்து முழு இந்தோனீசி யாவுக்குமான ஒரு தேசிய மொழியை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இம்மொழி பஸார் மலாய், அதாவது

63
அங்காடி மலாம் மொழி, எனப்படும் பேச்சு மொழி வழக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டமை இங்கு. குறிப்பிடத்தக்கது.) சமகாலத் தமிழ்மொழி ஒரு வலிய நவீன மொழியாக விருத்தியடைவதைத் தடுக்கும் முயற்சி கள் தமிழின் சிதைவுக்கும் அதன் இடத்தில் ஆங்கிலத்தின் எழுச்சிக்குமே வழி கோலுவன. Y.
வழக்கிலுள்ள தமிழ் எழுத்துமுறை தமிழ் மொழி யின்ரின்று பிரிக்க முடியாத ஒரு கூறெனக் கருது (δολμπή மொழிக்கும் எழுத்துக்குமுள்ள உறவைச் சரிவர விளங்கிக் கொள்ளாதவர்களே, தமிழைப் பிற எழுத்து முறைகளால் எழுத முடியாது என்ற வாதம் மிகவும் கொச்சையானது. ஒவ்வொரு மொழியும் ஏதாவது ஒரு எழுத்து முறையைத் தன் தேவைக்கு ஏற்ப ஏற்றும், அவசியமாயின், மாற்றியமைத்தும் பயன்படுத்துகிறது. தமிழை ரோமன் எழுத்து முறையிலோ, கிரேக்க, சிரிலிக் எழுத்து முறைகளிலோ தேவநாகரியிலோ எழுதுவதாயின் மேலதிகமாகச் சில எழுத்துக்களே சேர்க்கப்பட வேண்டும். இது எந்த ஒரு மொழிக்காகவும் வகுக்கப்பட்ட ஒரு எழுத்து முறையை இன்னொரு மொழிக் குடும்பத்துக்குரிய மொழிக்குப் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினையே. ஸ்லாவிக் மொழிகள் கத்தோலிக்க மத ஆதிக்கம் மிகுந்த நாடுகளில் ரோமன் எழுத்திலும் மற்றைய நாடுகளில் சிரிலிக் எழுத்திலும் எழுதப்படுகின்றன. ஜெர்மன் மொழி தன் மரபுசார்ந்த எழுத்து வடிவங்களை விடுத்து ரோமன் எழுத்து வடிவங்களை அண்மையிலேயே ஏற்றுக் கொண்டது. அரபு எழுத்து முறையைப் பயன்படுத்திய மொழிகள் பல ரோமன் எழுத்து முறைக்கு மாறியுள்ளன. இவ்வாறான மாற்றங்களால் இம்மொழிகளின் தனித் துவம் எவ்வகையிலும் அழிந்துவிடவில்லை. நவீனத்துவத் தின் தேவைகளே இம்மாற்றங்களை அவசியமாக்கின.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய விவாதம், அது எந்த மொழி பற்றிய விவாதம் என்ற கேள்விக்கும்

Page 84
164
எந்த நோக்கத்துக்காக அந்த மொழியும் எழுத்து முறையும் பயன்படவுள்ளன என்ற கேள்விக்கும் பதில் கண்ட பின்னரே, ஆக்கபூர்வமான திசையிற் தொடர முடியும். இவ்விவாதம் எக்கேடுகெட்டாலும் மொழி யானது சமுதாய மாற்றம் போன்று சமுதாய நடைமுறையையொட்டித் தன் பாதையை அமைத்துக் கொள்கிறது. மொழியையும் சமுதாய விருத்தியையும் முன்னேற்றப் பாதையில் நெறிப்படுத்தும் தகுதியும் தீர்க்கமான பார்வையும் நம் மத்தியில் எழுச்சியும் விருத்தியும் பெறும் என்பது என் நம்பிக்கை.

தமிழின் சிறப்பெழுத்துக்கள்
1. 1. தமிழுக்கேயுரியனவாகக் கருதப்படும் ஒலிகள் பற்றிய தெளிவீனங்கள் தமிழர் மத்தியிலும் தமிழறிந்தோர் மத்தியிலு! நிலவுகின்றன. தமிழ் ஒலியியலில் மேலெழுந்தவாரியாகத் தென்படும் சில முரண்பாடுகள் தமிழின் எளிமை பற்றிய கருத்துக்கட்கு ஊறானவை. இவை பற்றிய கருத்துகள் சிலவற்றை இங்கு நான் முன்வைக் கும் நோக்கம், அவை அம்முரண்பாடுகளைத் தெளிவுபடுத்தும் விவாதங்கட்கு வழிகோலக் கூடும் என்பதே. தமிழிற் புலமையுடையோர் அவற்றை மேலும் ஆழமாகப் பரிசீலிப்பார்
96.
. 2. தமிழின் வல்லின மெய் ஒலியன்களில் முதல் ஐந்துக்கு (க, ச, ட, த, ப,) ஒலிப்புடை, ஒலிப் பிலா ஒசைப் பெறுமானங்கள் உள்ளன. (K-g, ch-j, t-d, th - dh, p - b.) LDT LIš 35 Lóp இந்த ஒலி வேறுபாடுகளைத் தனித்தனி எழுத்துக் களால் அடையாளங்கான மறுக்கிறது. இவ் வகையிற் தமிழ் பிற உலக மொழிகளினின்று வேறுபட்டுள்ளது. சமகாலத் தமிழ்ப் பேச்சு இவ் ஒலி வேறுபாடுகளைத் தனி ஒலியன்களாக அடையாளங்காண முற்படுகிறதாயினும், எழுத்துமுறை இந்த உண்மையைப் புறக்கணிக் கின்றமை, அதன் குறைபாடாகவே பலராலும்
AエーII

Page 85
66
உணரப்படுகிறது. முற்கூறிய அவசியமான வேறுபாடுகளைப் பேண மறுக்கும் தமிழ் 37ழுத்து முறையும் மரபு மொழி வழக்கும் தமிழுக்கேயுரிய சில ஒலியன்களைப் பேணுகின் றன. தமிழின் சிறப்பெழுத்துக்களான ந(ன வினி ன்று பிறிதாக.) ற, ள, ழ- வரிசை உயிர் மெய்க ளும் தனி மெய்களும் ஆய்தமும் (ஃ) சில பிரச்சினைகளை எழுப்புவன.
ஆய்தம் தமிழின் சார்பெழுத்துக்களில் ஒன்றா கவே கருதப்பட்டதாகவும் பிற எழுத்துக்கட்கு வடிவங்கள் அமைந்த பின்னரே அதற்குரிய எழுத்து வடிவம் அமைக்கப்பட்டது எனவும் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. அதன் தோற்று வாய் பற்றி நிச்சயமாக எதுவும் கூற இயலா துள்ளது. தமிழில் இவ்வெழுத்தின் உரிய பாவனை குறைவானது மட்டுமன்றி அருகியும் வருகிறது. (இன்று எஃகு, அஃறிணை போன்ற சில சொற்களே ஆய்தத்தை அவசியமாக்குவன அஃதுவும் இஃதுவும் பெரும்பாலும் வழக்கொழிந் துள்ளன.) ஆய்தம் மொழியியல் விதிப்படி ஒரு மெய்யெழுத்து. தமிழில் இதற்குரிய உயிர்மெய் கள் இல்லை. சமகாலத் தமிழில் இதன தகுதி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இன்னொரு மெய்யெழுத்தின் ஒலிப்பெறுமானத்தை மாற்றும் ஒரு குறியீடுடாக இவ்வெழுத்துத் தாழ்ந்து விட்டது. (ஃப்=fஎன்றவாறு)
ந் என்ற எழுத்துக்குரிய ஒலி அதன் உயிர் மெய் வடிவங்களிற் பெறப்படுவதில்லை. இம்மெய் யெழுத்து த, ந எனும் உயிர் மெய் வரிசைகளின் முன்னால் மட்டுமே வருகிறது. த் எனும் எழுத் கக்குரிய மூக்கொலியே ந் எனும் எழுத்தாற்

2
67
குறிக்கப்படுவது. அந்த ஒலி, ந-வரிசை உயிர் மெய்களில் இல்லாது போய், த் எனும் ஒலியு டன் உறவு இல்லாத ன் எனும் மூக்கொலியின் பெறுமாத்தையே கொள்கிறது. ந், ன் எனும் ஒலிகட்கிடையிலான வேறுபாடு சிறியது என்ப தால், முன்னைய ஒலி, அது அவசியம் பேணப் பட வேண்டிய இடங்களில் அன்றிப் பிற இடங்களிற் பின்னையதுடன் குழப்பப்பட்டு விட்டது எனக் கருத இட 1 எண்டு. எவ்வாறாயி னும் இன்று. தமிழ் எழுத்டுலக்கண விதிகளே ந- உயிர்மெய்வரிசையை நியாயப்படுத்துகின் றன.
ற் எனும் மெய்க்குரிய ஒலியும் அதன் உயிர் மெய் வடிவங்கட்குரிய மெய் ஒலியும் புற்றிலும் வேறு பட்டவை. ஒலியியல் விதிப்படி, ற் வல்லின ஒலி (க், ச், ட், த், ப் போல் ஒரு வெடிப் பொலி) ற வரிசை உயிர்மெய்களின் ஒலி .ன் இடையினத் துக்குரியன. (ர், ல், ள் என்பனவற்றுடன் உறவுள்ள ஒரு தொடரொலி), இவ்வாறாயின், ஒரே எழுத்து, உறவேயற்ற இரண்டு வேறு ஒலி களைக் குறிக்கக் காரணமென்ன? இக்கேள்விக் குரிய விடை, தமிழ் எழுத்துக்களின் தோற்று வாயில் இருக்கக் கூடும்.
தமிழ் எழுத்துக்கள் வடமொழியை எழுதப் பயன்
பட்ட பிராமி எழுத்துக்களினின்று வந்தவை. தமிழ் ஒலியன்கட்குச் சமமான ஒலியையுடைய எழுத்துக்களினின்று தமிழ் எழுத்து வடிவங்கள் பெறப்பட்டன. தமிழில் மேலதிகமாக இருந்த ஒலியன்கட்கு அவற்றுக்கு நெருக்கமான ஒலியை யுடைய எழுத்துக்களை மாற்றி எழுத்து வடிவங் கள் அமைக்கப்பட்டன. (ற, ள என்பவற்றின்

Page 86
168
மூல வடிவங்கள் ர, ல என்பவற்றின் மூலவடிவங் களினின்று வந்தன.) வடமொழியில் எ, ஒ என்ற உயிர்கள் இல்லை. எனவே பழைய தமிழிலும் எ - ஏ ,ஒ - ஒவேறுபாடுகளை எழுத்தில் காட்டும் வசதி இருக்கவில்லை. தமிழ் மொழியின் அடிப் படையில் தமிழ் எழுத்து முறை தோன்றாததால், இக்குறைபாடுகள் ஏற்பட்டன என்றே தெரி கிறது. ற் என்ற மெய்யெழுத்தின் ஒசை, ண் எனும் மெல்லின ஒலியுடன் உறவுடையது என்பதைத் தமிழ் நெடுங்கணக்கு சரியாகவே அடையாளங் காட்டுகிறது. ற், ன், ல் என்பனவற்றினிடை யிலான எழுத்திலக்கண உறவு (நல் - நன் - நற்) ட் ண், ள் என்பவற்றை ஒத்தது. (உள் - உண்உட்). ல் - ள், ன் - ண், ற் - ட் என்பன இணை கள் நாவை முன்னோக்கி மேல் முரசைத் தொடு மாறு வைத்தால் ல், ன், ற் பிறக்கின்றன. நா பின் னோக்கி மடியும்போது ஸ், ண், ட் பிறக்கின்றன. எனவே ர வுடன் உறவுடைய ற எனும் ஓசை எவ்வாறு ஒரு வல்லின உயிர் மெய்யாகலாம்? இரண்டு தனித்தனியான தமிழ் மெய்களை ஒரே அடையாளத்தாற் குறித்ததன் விளைவாக இவ்வாறு ஏற்பட்டதா? ஒரே அடையாளத்தைப் பாவித்துங் குழப்பம் ஏற்படாமையால் அதுவே இரண்டு ஒலிகட்கும் பொருந்தியது என்பதற்கு இன்னொரு உதாரண மும் தமிழில் உண்டு. கெள வில் வரும் ள, ஒரு உயிர் ஒசை அடையாளம். அது ஒள வரிசையில் வரும்போது ள என்ற ஒசையைப் பெறாத விதமாக ‘எள' என்ற ஒலித்தொடர் மரபுத் தமிழிற் தவிர்க்கப்பட்டுள்ளது. (ள என்ற உயிர் அடையாளத்தின் தோற்றுவாய் +ொ என்று அறியக் கிடைத்துள்ளது).

69
4. 4. றகரம் சொற்களின் முதலில் வராமையால் அதற் குரிய மெய்யொலி (ற் அல்ல) சந்திகளில் அமையும் தேவை ஏற்பட மரபில் இடமில்லை. (இ+ காகம், இக்காகம் போன்று இ+ற. என்று வராது.) இந்த ஒசை தமிழிற் தனிமெய்யாக வருவதில்லை. மரபில் ‘ர்ர" எனும் விதமான தொடர் சாத்தியமில்லை. எனவே, இந்த ஒசைக் கான மெய்யெழுத்து அவசியமில்லாது போயி ருக்கலாம். -
4. 5. ற்ற என்ற தொடர், இலங்கையிலும் தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் ற்ற் அ, என்றவாறு ஒலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டிற் பரவலாக ற் ர் அ என்ற ஒலிப்பைக் கேட்கலாம். ன்ற எனுந் தொடர், ன்ற்ற, ன்ற, ன்ற்ர, ன்ர என்றவாறாக உச்சரிக்கப்படுவதுண்டு. ற வின் பொதுவான ஒலிப்பு ர வினதை ஒத்த உரசொலியாகவும் ற் அல்லது ன் என்ற எழுத்துக்களையடுத்து ற் என்ற பெறுமானத்தைப் பெறக்கூடுமாகவும் உள்ளது. மரபுத் தமிழில் ற் எனும் மெய்யும் றகர வரிசை உயிர் மெய்களும் வரும் விதம் குழப் பத்துக்கு இடமளிக்கவில்லை என்பது தெளிவு.
4. 6. எக்காரணங் கொண்டோ, ற - என்ற உறவற்ற இரண்டு ஒசைகட்கும் தமிழ்ச் சொல் இலக்கண விதிகள் உறவுகற்பிக்கின்றன. (தேடல்-தேட்டம், சேரல் - சேர்ந்து. கூறல்-கூற்று). இதுவும் பொது வான எழுத்து அமைந்த்தன் விளைவோ தெரிய வில்லை. இது பற்றி மேலும் ஆராய்வுக்கு இடமுண்டு. 5. 1. ளகர-ழகர மெய்கள் காதிற்கு ஒத்தவையாகப் புலப்படுவதால், அவை பேச்சிலும் எழுத்திலும் குழப்பப்படுவதுண்டு. ல-ள, ள -ழ குழப்பங்கள்

Page 87
I-70
வழமையானவை. ஆனால் ழகரத்துக்கும், ளகரத் துக்கும் ஒலியியல் உறவு உண்டா?
ல் - ள், ன் - ண், ற் - ட் இணைகள் எனவும் அவற்றிடையில் உள்ள உறவு பற்றியுங் குறிப் பிட்டேன். ழ் எனும் மெய் ல், ள் என்பவற்றி னின்று தனித்து நிற்கிறது என்பதைக் கீழ்வரும் மெய் மயக்கங்கள் காட்டுகின்றன.
க - வாழ்க செய்க கொள்க செல்க த - வீழ்து செய்து கொள்தல் செல்தல் ப - வாழ்பவர் செய்பவர் கொள்பவர் செல்பவர் ம - கீழ்மை சேய்மை கொள்மின் செய்மின் வ - வாழ்வு தேய்வு கொள்வர் செல்வர் க் - வாழ்க்கை வாய்க்க
க் - வீழ்ச்சி தேய்ச்சல் த் - வாழ்த்தி தேய்த்து ப் - முகிழ்ப்ப தேய்ப்ப ங் - பாழ்ங்கிணறு வேய்ங்குழல் ந் - வாழ்ந்து தேய்ந்து ழ கரத்துக்கும் யகரத்துக்கும் பொதுவானவை சில லகர, ளகரங்கட்குச் சாத்தியமில்லை. அதே வேளை ல், ள், ழ் என்பவற்றுக்குத் தன்னிலை மெய்மயக்கமுண்டு. ழகர மெய்க்கு இல்லை. (செய்ய, கொள்ள, செல்ல). அவ்வாறே, யகரத் துக்கு அனுமதிக்கப்படும் மெய் மயக்கமான ய் ஞ் (மெய்ஞ்ஞானம்) ழகரத்துக்கு இல்லை என்பதை விட, யகரம் போன்று ழகரம் சொல்லின் முதலில் வரமாட்டாது என்பதையும் மறுத்தற்கில்லை.
யகரத்துக்கும் ழகரத்துக்கும் இருக்கக் கூடிய ஒற்றுமையைப் பின்வருமாறு பரீட்சிப்போம்.

17 :
ல வை ஒலிப்பது போல வாயை வைத்து நாவை மட்டும் பின்னோக்கி மடித்தால் ள பிறக்கிறது. இவ்வாறே ர - ற, ன - ண, ற் - ட் என்ற ஒலி களின் உறவையும் நாம் அறியலாம்.
யவை ஒலிப்பது போல் வாயை வைத்து நாவைப் பின்னோக்கி மடிப்பின் பிறக்கும் ஒலி என்ன? ழகரம் போல ஒலி எழவில்லையா?
6.1. இனித் தமிழ் மொழியின் மெய்யெழுத்துக்களை மீண்டும் கவனிப்போம். தமிழ் நெடுங்கணக்கில் முதல் ஐந்து வல்லின மெய்களும் வடமொழியில் வரும் வரிசையில் வருகின்றன. (க், ச், ட், த், ப்). ட் இற்கும் த் இற்கும் இடைப்பட்ட ஒசைக்குரிய ற், அதன் இணையான ன் உடன் மெய் வரிசை யின் முடிவில் வருகிறது. தமிழ் நெடுங்கணக்கில், க், ங், ச், ந், ட், ண், ற், ன், த், ந், ப், ம், என ஏன் வரவில்லை? தமிழ் எழுத்து அமைப்பின் தோற்றுவாய் வடமொழிக்குரியது என்பது é95mTU GOTLDT ? அல்லது ற எனும் மெய்வடிவம், ஒரு இடையின மெய்க்கும் உரியது என்பது காரணமா?
6. 2. ய், ர், ல், வ், ழ், ள், ற (ற் அல்ல) என்ற இடையின வரிசையில் முதல் மூன்றும் நாவை முன்னோக்கி வைத்துப் பெறப்படுவன. இறுதி மூன்றும் நாவை மடித்துப் பெறப்படுவன. எனவே ர-ற, ல-ள, ய-ழ என்பன இணைகளாகக் கருதப்படலாமா? வகரத்துக்கு இவ்வாறான ஒரு Gafn Lq. சாத்தியமில்லை. இடையினமான ஆய்தமும் அத்தகையதே.
6, 3. தமிழ் ஒலியியலின் சிறப்பம்சம் நாவின் பின் மடிப்பால் வேறுபடும் ஒலிகளை அது தனி

Page 88
172
ஒலியன்களால் அடையாளங்காட்டுவது என லாம். இதன் விளைவான இணைகளில் ல் - ள், ன் - ண், ற் - ட், ர் - ற என்பனவற்றுடன் ய் - ழ் என்பதையும் சேர்த்துக் கருதல் இந்தச் சிறப்பை முழுமைப்படுத்துகிறது என நினைக்கிறேன். ஆயினும் வடமொழியில் உள்ள இடையின இணையான ஸ் - ஷ் தமிழில் இல்லாமைக்கு விளக்கந் தேவைப்படுகிறது.
7. 1, மேற்கூறிய கருக்துக்கள் மரபுத் தமிழின் ஒலியியலும் எழுத்திலக்கணமும் பற்றிய விரிவான ஆய்வுகள் மூலம் வலியுறுத்தப்படவோ மறுக்கப் படவோ கூடும். ஆயினும் நான் எழுப்பியவை நியாயமான கேள்விகள் என்றே நம்புகிறேன்.
குறிப்பு:- ழகரம் இலங்கையில் ள்கரத்துடன் குழப்பப் பட்டாலும், தமிழகத்தில் யகரத்துடன் குழப்பப் படுவது கவனத்துக்குரியது: கெயவி (கிழவி), கொயந்தே (குழந்தை), வாயப்பயம் (வாழைப் பழம்), இது ழ - ய உறவின் சாத்தியப்பாட்டை ஆதரித்தாலும் வலுவான ஆதாரமாகாது).


Page 89