கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமுறைக் கதைகள்

Page 1


Page 2

சிவமயழி
க் கதை 笃 ققهاy6 స్థత *్మ
ஞானசுரபி
ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள்
இந்து சமயப் பேரவை ஒன்ராறியோ o56'0'TLTT

Page 3
முதற்பதிப்பு :- ஆவணி 1999
அச்சமைப்பு :- மா. கனகசபாபதி அட்டைப்பட்ம் :- டிஜி கிராபிக்ஸ் அச்சுப்பதிப்பு - விவேகா அச்சகம் பதிப்புரிமை :- இந்து சமயப் பேரவை
ஒன்ராறியோ, கனடா
நூலாசிரியர் அமரர் ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள்
 

திருமுறைக் கதைகள்
பதிப்புரை ஆத்மா அழிவதில்லை ஆத்மஜோதி அணைவதில்லை
சொல்வதை கேட்பவர் செய்ய வைக்கும் திறன் கொண்டவர் சுவாமி ஆத்மஜோதி நா. முத்தையா. அவர் எழுத்துக்களை படிப்பவர். கற்றபின் அவ்வழி நடப்பது அவர்தனித்திறனின் முத்திரையாகும்.
இலகு தமிழில் தொடர்பு கொள்பவர். மக்கள் உள்ளத்தே நெருங்கிப் பழகுபவர். தான் எடுத்துக் கொண்ட விடயத்தை பச்சிளம் பாலகன் தொட்டு குடுகுடு பாட்டிவரை கிரகித்து, செயற்பட வைக்கும் தனித்திறன் கொண்டவர்.
கரடுமுரடான எமது புலன்களின் செயற்பாடுகளை பண்படுத்தி பக்திப்பயிரை வளர்த்துவிட்ட வள்ளல். பக்தியை அன்றாட வாழ்வில் இளையோட வைத்தவர். புலன்களை சில மணிநேரம் அடக்கிவிட்டு பலமணி நேரம் காட்டுமிருகம் போல் ஓடவிடுபவர் அல்ல.
இறைபக்தியை இலகுபடுத்தியவர். இல்லறவாழ்வில், துறவறம் கண்ட அவர் இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் பாலமாக அமைந்தவர். அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் வையத்துவாழ்வாங்கு வாழ வழி அமைத்து தந்துள்ளார்.
அவர் எழுத்துக்கள் பூமகள் மடியில்காணும் இரத்தினகற்கள். வெறும்பாறைகள் பல இருப்பினும் சிறிய இரத்தின கற்களுக்கு விலைமதிப்பு அதிகம். அவருடைய இரத்தினச்சுருக்கமான எழுத்துகளுக்கு தனி ஆற்றல் உண்டு. வலிமை உண்டு. சக்தி பிறக்கும் கனமுண்டு.
அவர் எழுதிய பல நூல்களையும் மற்றும் சில நூல்களையும் இந்து சமயப் பேரவை வெளியிட்டு இருக்கிறது. அவ்வரிசையில் கனடா இந்து சமயப் பேரவை தரிசனம், முத்தானதொண்டர் புதிய சைவவினாவிடை, தங்கம்மா நான்மணிமாலை, அர்ச்சனை மாலை, சிவயோக சுவாமிகளின் அருள்மொழிகள், என்னை எனக் அறிவித்த எங்கள் குருநாதன் என்பன. இவற்றின் சில நூல்கள் எங்கள் பேரவை காப்பாளர் கவிஞர் கந்தவனம் அவர்களாலும் எழுதப்பட்டவை. இவற்றுடன் ஆத்மஜோதி ஐயாவின் உரைகளை "சமய வாழ்க்கை, சைவத்தின் பெருமை” என்னும் தலைப்புக்களில் வெளியிட்டு இருக்கிறோம்.

Page 4
திருமுறைக் கதைகள்
இம்முறை திருமுறைக் கதைகள் எனும் இந்நூலை வெளியிடுகிறோம். இந்நூல் மிகவும் அற்புதமானது. காலம் இடம், வயது, இனமத மொழி கடந்து அனைத்து மக்களாலும் படித்து வாழ்வை வளம்படுத்த வல்லது.
ஆத்மாவிற்கு இனமத பேதம் கிடையாது. தேவர்களுக்கும் இனமதபேதம் கிடையாது. மனித உணர்வுகளுக்கு அடிப்படையாக பொறாமை, பேராசை, குள்ளக்குணம், அகங்காரம் போன்ற குணங்கள் பொதுவானவை.
அவற்றை நாசூக்காக கதைகள் மூலம் உணரவைத்திருக்கிறார். இக்கதைகளை வாசிக்கும்போது ஒவ்வொருவரும் தனக்குத் தான் இவை எழுதப்பட்டவையோ என்ற உணர்வு ஏற்படலாம். அதுதான் தலைசிறந்த எழுத்தாளனுக்கு உரிய தனிச்சிறப்பு.
அவரின் பலகதைகள் அப்பர் சுவாமிகள் கூறியவை. அவருக்கு அப்பர் சுவாமிகள்மேல் கொண்டிருக்கும் அபாரப்பற்று ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. அப்பர் சுவாமிகள் சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு சேவை செய்து, தமிழையும் சைவத்தையும் வளர்த்தார். மதமாற்றப் புயலில் சிக்கி திசை தடுமாறி மீண்டும் சரியான வழிக்கு வந்தவர். அவர் வாழ்ந்த சூழலும் இன்றைய எமது சூழலும் ஒத்திருப்பதாற் போலும் அக்கதைகளை மெருகூட்டி காலத்தின் தேவைகளுடன் இணைத்து எழுதியுள்ளார்.
இந்நூல் நிச்சயம் வெகுவிரைவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. எமது சிறாருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுப்பது அவசியமாக இருக்கிறது.
இவ்வரிய நூலை எமது இந்து சமயப் பேரவை வெளியிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறது.
மேலும் இப் புத்தகத்தை வடிவமைப்புச் செய்து தந்த திரு. மா. கனகசபாபதி அவர்களுக்கும், அழகுற அச்சிட்டு உதவிய சங்கள் அச்சகத்தாருக்கும் இந்து சமயப் பேரவையின் சார்பில் உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
சாமி அப்பாத்துரை தலைவர் இந்து சமயப் பேரவை

திருமுறைக் கதைகள்
சிவகுரீந. குமாரசுவாமிக் குருக்கள் பிரதமகுரு கனடா கந்தசாமி கோவில் அவர்கள் வழங்கிய
ஆசியுரை
பன்னிரு திருமுறைகளும் மக்களின் மனஇருளகற்றி ஆன்ம ஒளிகாட்டும் பன்னிரு ஆதித்தர்களுக்கு ஒப்பானவை. அதனை இயற்றிய இருபத்தேழு அருளாளர்களும் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு ஒப்பானவர்கள். இறை உணர்வையும் வாழும் வழி முறைகளையும் எளிமையான, அதே நேரத்தில் உறுதியான நிலையில் விளங்க வைப்பதற்குத் திருமுறை களுக்கு இணையாக வேதாந்த நூலையும் எடுத்துக்கூற (pq ft gy.
அந்த திருமுறைகளில் 4, 5, 6ம் திருமுறைகளை நமக்கு அருளிச் செய்த திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து சிறு சிறு கதைகளாக்கி, பெரியவர்களும், சிறியவர்களும் அறியும் வண்ணம், தொகுத்துத் தந்துள்ள சிவநெறிச் செல்வர் ஆத்மஜோதி அமரர் திரு. நா. முத்தையா அவர்களின் பணி பாராட்டப்படவேண்டியதொன்று. அவரால் உருவாக்கப்பெற்ற ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையினர் அக்கதைகளைத் தொகுத்து நூல் வடிவாக்கியுள்ளனர்.
சைவப் பேரன்பர்களும், சைவக் குழந்தைகளும் இந்நூலின் பயனைப் பெற்றுத் தங்கள் வாழ்வினைச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இறந்தும் இறவாமல் புகழுடம்புடன் வாழ்கின்ற நூலாசிரியரையும், அவரது நூலை வெளியிடும் நற்பணியை மேற்கொண்டுள்ள பேரவையினரும் பாராட்டுக்குரியவர்கள்.
திருமுறைப்பணி மேலும் மேலும் தொடர நல்லாசிகள்
நல்குகின்றேன்.
வாழ்க! வாழ்க!
III

Page 5
திருமுறைக் கதைகள்
'அருள்மொழி அரசி’ வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் ஜே. பி.
அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
காலம் கடந்து நிற்கும் நமது சமய விழுமியங்கள், தத்துவங்கள் கொள்கை நெறிமுறைகள், கடவுட் கோட்பாடுகள் அனைத்துமே இதிகாசங்கள் மூலமாகவும், புராணங்கள் வாயிலாகவும், கதைகளின் ஊடாகவும் எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டன. வாழ்க்கையாகிய வழுக்கு நிலத்தில் செல்பவனுக்கு இவைகள் ஊன்று கோல்களாகப் பயன்பட்டன.
"இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்" - (பொதுமறை)
அந்த வகையில் சமய குரவர்கள் நால்வரின் வாக்கும், வாழ்வும் மக்களைத் தீயநெறியில் செல்லாது தடுத்து அறநெறிக்கு வழிகாட்டின.
வேதநெறி தழைத்தோங்கவும் சைவம் ஓங்கவும் வழிசமைத்த திருஞானசம்பந்தரின் பாடல் களைத் திருக்கடைக்காப்பென்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் அழைத்த நமது முன்னோர் அப்பர் பெருமானின் பாடல்களை மட்டுமே ‘தேவாரம் என அழைத்து மகிழ்ந்தனர். இன்று பொதுவாக மூவர் முதலிகளின் பாடல்கள் அனைத்தையுமே தேவாரம் என்று குறிப்பிட்டாலும் திருநாவுக்கரசரின் தெய்வப்பாடல்களுக்கே
“தேவாரம்” என்ற பெயர் சிறப்பாகப் பொருந்தும்.
முற்காலத்தில் மக்கள் தங்கள் மன அமைதிக்காகவும், ஆன்ம இலயிற் பிற்காகவும் சிறப்பாகத் தெய்வத் திருமேனிகளை அமைத்துக் கொண்டு வழிபட்டுப் போற்றி வந்தனர். அந்தத் தெய்வத் திருமேனிகளைத் "தேவாரம்’ என்று அழைத்தனர். அப்படிப் போற்றி வழிபட அவர்களுக்கு மனத்தை நெகிழவைக்கும் பாடல்கள் தேவைப்பட்டன. அதற்கு வாகீசப்
IV

திருமுறைக் கதைகள்
பெருமானின் பாடல்களே ஊனை உருக்கி உள்ளொளி பெருக்குவதாக அமைந்தன. "தேவாரத் திருமேனிகளை வழிபட உதவிய பாடல்களையும் ‘தேவாரம்' என்றே அழைத்து மகிழ்ந்தனர்.
வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி மாற்றுச் சமயத்தின் இழிதகைமையையும், சைவசமயத்தின் ஒப்புயர்வற்ற உயர்தன்மையினையும் தனது அனுபவத்தால் உணர்ந்து எண்பத்தோராண்டுகள் வாழ்ந்து தொண்டு நெறியின் மேன்மையினை உலகிற்கு உணர்த்தியவர் திருநாவுக்கரசர். அவரது பாடல்கள் ஒவ்வொன்றுமே அநுபவத்தின் பிழிவு வாழும் முறைகளை விளக்கும் மெய்ஞ்ஞான விளக்கு. இறை தத்துவங்கள் ஊற்றெடுக்கும் தொடுமணற் கேணி.
இந்த அருமையான அற்புதமான தேவாரப் பாடல்களை உள்ளிடு பொருளாகக் கொண்டு 'ஆத்மஜோதியின்’ துணையினால் மக்களின் அறியாமை இருளை அகற்றி அரும் பணியாற்றிய சைவப் பெரியார் அமரர் திரு. நா. முத்தையா அவர்கள் சிறுவர்களின் உள்ளங்களிலும் சென்று தங்கும் வண்ணம் சிறு சிறு கதைகளாக்கித் தந்துள்ளார். அவருக்கே உரித்தான எளிமையான நடை, நகைச்சுவை கலந்த சிந்தனைப் போக்கு, தெளிந்த நோக்கு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று மிக மென்மையாக வலிய கருத்துக்களைப் புகுத்தும் பாங்கு திரு. முத்தையா அவர்களுக்கு கைவந்த கலை. அப்பெரியாருடைய கருத்துக்கள் காலங் கடந்தும் அழியாதவை. அழிக்கமுடியாதவை.
1994ம் ஆண்டு சைவசித்தாந்த மாநாட்டிற்கு கனடாவிற்கு வருகைதந்த சைவத்திருவாளர் திருமிகு நா. முத்தையா அவர்களினால் தொடங்கப்பெற்ற ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை அவர் எழுதிய ‘திருமுறைக் கதைகளை வெளியிட முன்வந்திருப்பது பாராட்டற்குரியது. பேரவையின் பணி குன்றிலிட்ட தீபமென ஒளிர்ந்து மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
வாழ்க நற்றொண்டு

Page 6
திருமுறைக் கதைகள்
அறிமுக உரை
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூலாசிரியராகிய ஆத்மஜோதி முத்தையா அடிகளாரை முதன்முதலாகச் சந்திக்கும் பாக்கியத்தை சிறியேன் அடைந்தேன். அதைத் தொடர்ந்து இப்பெரியாருடன் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டாகியது.
சிவபூமியாகிய இலங்கைத் திருநாட்டின் வரலாற்றுப்புகழ்மிகு ஆலயங்களாகிய திருக்கேதீச்சரம், கோணேஸ்வரம், மாவிட்டபுரம், நகுலேஸ்வரம் 1990ம் ஆண்டு தொடக்கம் பூசைகள் இன்றி பூட்டப்பட்ட பொழுது முத்தையா அடிகளார் அதனை எதிர்த்து உலகம் எங்கும் வாழும் இந்துக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டி ஓர் அறிக்கை தயாரித்து அவ்அறிக்கையை இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வறிக்கை ரிச்மன்ட்ஹில் பிள்ளையார் கோயிலில் ஒதுவாராக இருந்து மறைந்த திரு. மகாதேவன் மூலம் 1992ம் ஆண்டு சிறியேனிடம் கிடைத்தது. அடிகளார் அவர்களே நேராக மேலைநாடுகளுக்கு விஜயம் செய்து குரல் எழுப்ப வேண்டும் என்று நாம் விரும்பி அவர்களை 1994ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டுக்கு அழைத்தோம்.
அடிகளார் சைவசித்தாந்த மாநாட்டின்போது ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் ஆகிய இடங்களில் ஆற்றிய உரைகளில் பல ஆண்டுகளுக்கு முன் கனடாவில் சிவாலயம் இருந்ததாகவும், சிவவழிபாடு இருந்ததாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்று நூல் ஆசிரியர் திரு. கா. அப்பாத்துரை எழுதியுள்ளதாகக் மேற்கோள்காட்டிக் கூறினார். அடிகளார் 1994ம் ஆண்டு ஒரு மாதம் கனடாவில் தங்கியிருந்த காலத்தில் பல சமய நிகழ்வுகளில் கலந்து மக்களுக்கு அறிவுபுகட்டியதுடன் இளந் தலைமுறையினரின் நலனில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அக்காலத்தில் சில நூல்களையும் எழுதியதுடன் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையையும், மொன்றியாலில் ஆத்மஜோதி அந்தர்யோக நிலையத்தையும், ஆத்மஜோதி சிறுவர் பாடசாலையையும் ஆரம்பித்து வைத்தார்கள். அவரது வருகைக்குப் பின் கனடாவில் சைவசமயம் வளர்ச்சியடைந்தது என்பதை ஒருவராலும் மறுக்க (UDLustg).
VI

திருமுறைக் கதைகள்
அடிகளார் திரும்ப 1995ம் ஆண்டு கனடாவுக்கு வருகைதந்து மூன்று மாதங்களிலிருந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தார். பெரியார் சிவபூமியாகிய இலங்கையில் பிறந்து அங்கே சைவத்துக்கும் தமிழுக்கும் சேவையாற்றியதுடன், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கமைய மலைநாட்டிலும், பின்னர் வடமாகாணத்திலும் தொண்டாற்றினார். அவர்கள் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் மகேசன் சேவை செய்து ஈற்றில் கனடா நாட்டில் மொன்றியாலில் முருகன் கோவிலுக்கு அத்திவாரமிட்டு பின்னர் துர்க்கை அம்மனின் குடமுழுக்கு விழாவில் அம்பாளுக்கு எண்ணைக் காப்பு இட்டு இறைவனுடன் இரண்டறக் கலந்தார். தாயகத்தில் பூட்டப்பட்டு பூசைகளின்றி கிடக்கும் ஆலயங்களுக்காக குரல்கொடுக்க வந்த பெரியார் இந்நாட்டில் இரு ஆலயங்களின் முக்கிய வைபவங்களில் கலந்து சிறப் பித் து அம் பாளினி குடமுழுக்கு விழாவினன்றுஇறைவனுடன் இணைந்ததை நோக்கும்பொழுது உண்மையாக கனடாவில் சிவாலயமும் சிவவழிபாடும் இருந்திருக்க வேண்டும் என்றே கொள்ளக்கூடியதாக உள்ளது.
சிறியேனது இல்லத்தில் சிறிது நாட்கள் தங்கி இருந்தபொழுது பல நூல்களை எழுதினார். அவற்றுள் ஒன்றே திருமுறைக் கதைகள்.
திருமுறைகளைப் பாடிய அருளாளர்கள் நடத்திய
அற்புதங்களை வைத்து இளந்தலைமுறையினரும், முதியோரும் திருமுறைகளின் மகத்துவத்தை அறிவதற்காக யாவருக்கும் விளங்கக்கூடிய எளிய நடையில் எழுதியுள்ளார்கள்.
கனடாவில் உள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் திருமுறைகளை நன்றாகப் பயின்ற ஒதுவார்களைக் கொண்டு திருமுறைகளை முறையாக ஒதவேண்டும் என்றும், முக்கியமாக சிறார்களுக்கு தமிழும், சைவமும் கற்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதற்கு வேண்டிய செயற்பாட்டிலும் ஈடுபட்டார். அத்துடன் கனடாவில் திருமுறை விழாவினை பெரிதளவாகவும் சிறப்பாகவும் நடத்த வேண்டும் என்று விரும்பினார்.
முத்தையா அடிகளால் ஸ்தாபிக்கப்பட்டு அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டும் அவர்களின் பெருநோக்கங்களை நிறைவேற்றி வரும் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை அடிகளார் வேண்டியவாறு திருமுறை விழாவை நடத்தி இந்நூலை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் திருமுறைகளை
VII

Page 7
திருமுறைக் கதைகள் ஓதி சிறார்களுக்கும் திருமுறைகளை முறையாகப் பயிற்றுவித்து அடிகளாரின் எண்ணத்தை நிறைவு செய்வோம். திருமுறைகளை யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வந்து திருமுறை விழாவினை விமரிசையாக நடத்த தில்லை நடராஜப் பெருமானையும், பன்னிரு திருமுறைகளைப் பாடிய இருபத்தி ஏழு அருளாளர்களையும் வேண்டுவோம்.
சங்கரப்பிள்ளை திருநடராஜா
உப தலைவர் ஒன்ராறியோ இந்துசமயப் பேரவை தலைவர்
நான்காவது அனைத்துலக சைவசித்தாந்த
மாநாட்டு விழா அமைப்புக்குழு ரொறன்ரோ, மொன்றியால், ஒட்டாவா - கனடா
ஆடி - ஆவணி 1994
VIII

திருமுறைக் கதைகள்
முன்னுரை
1994ஆம் ஆண்டு திருவாளர்கள் வெங்கட்ராமன், நா. சிவலிங்கம், சக்தி, ச. திருநடராசா போன்ற சைவப் பெரியார்களின் முயற்சியுடனும் இரிச்மண்ட் ஹில் பிள்ளையார் ஆலயத்தின் ஆதரவுடனும் கனடாவிலி நான்காவது அனைத்துலக சைவ சித்தாந்த மகாநாடு நடைபெற்றது. கனடாவில் முதன் முதலாக நடைபெற்ற இச் சைவ மகாநாட்டுக்கு எமது தாயகத்திலிருந்து வருகை தந்த பெரியார்களில் ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களும் ஒருவர். மகாநாடு ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இவ்விடங்களிலும் பிற இடங்களிலும் முத்தையா அவர்கள் ஆற்றிய உரைகள் சைவமக்கள் புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் தமது சமயத்தையும் மொழியையும் வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தன. அவை சைவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தின.
அதே ஆண்டு ஈழத்தில் தாம் தோற்றுவித்ததைப் போன்ற இந்து சமயப் பேரவை ஒன்றினை இங்கும் அமைத்தார். 10.07.94ல் இந்து சமயப் பேரவை அவரது சமயப் பணிகளைப் பாராட்டி “ஞானசுரபி' என்னும் பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தது.
இந்து சமயப் பேரவையின் அழைப்பின் பேரில் ஞானசுரபி அவர்கள் மீண்டும் 1995 ஏப்பிரல் மாதத்தில் கனடாவுக்கு வருகை தந்தார்கள். சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுதல், அந்தர்யோக வகுப்புகள் நடத்துதல், வீட்டுப் பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை முதலியவற்றைச் செய்தல் போன்ற பலவிதமான சமயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஞானசுரபி அவர்கள் 08.09.1995 காலை 9 மணிக்கு மொன்றியலில் இறைவனடி எய்த நேர்ந்தது யாம் செய்த தவக் குறைவேயாகும். நாதன் தாள்களை அவர் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் ஸ்காபரோ நகரத்தில் அவர் எழுதிய தரிசனம்’ என்னும் நூலும் அவரைப்பற்றி யான் எழுதிய ‘முத்தான தொண்டர்’ என்ற நூலும் இந்து சமயப் பேரவையினால் வெளியிடப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்
IX

Page 8
திருமுறைக் கதைகள்
தக்கது.
இங்கு இருந்த காலத்தில் ஞானசுரபி அவர்கள் பல நூல்களையும் எழுதியுள்ளார். எழுதுவதில் அவர் இன்பம் காண்பவர். துர்க்காதேவி, சாயிபாபா சுவாமி சிவானந்தர், யோகி இராம் சுரத்குமார், திருமுறைக் கதைகள், என்னை எனக்கு அறிவித்த எங்கள் குருநாதர் என அவர் எழுதிய நூல்களில் ‘என்னை எனக்கு அறிவித்த எங்கள் குருநாதர் என்னும் யோகர் சுவாமிகள் பற்றிய நூல் இவ்வாண்டு மே மாதம் இந்து சமயப் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பெற்றது.
'திருமுறைக் கதைகள்” என்னும் இந்நூல் திரு. ச. திருநடராசாவின் இல்லத்தில் தங்கியிருந்த காலத்தில் எழுதப் பெற்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆமைக் கதை, நரிக் கதை, சிவராத்திரிக் கதை, என்னிலும் இனியவன் ஒருவன் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே, என்மனத்தே வைத்தேனே, கறையது கண்டங் கொண்டார், கபாலம் சிரித்தது, ஆதியும் ஈறுமானார், தக்கன்தன் வேள்வியைச் சிதைத்தவர், கண் அப்பக் கண்டுகந்தார், சண்டேசுரர், ஆலநீழல் அறம் அருளிச் செய்த அரனார், திருமால் வாமன வடிவம் எடுத்த கதை, கருப்பச் சிலைக் காமனைக் காய்ந்தவர், நரியாரும் பெரியாரும், சிவம் கலந்த சிலந்தி ஆகிய பதினெட்டுக் கதைகள் இதில் அடங்கியுள்ளன.
இவை யாவுமே தெரிந்தெடுக்கப் பெற்ற அப்பர் சுவாமியின் தேவாரங்கள் சிலவற்றின் பொருள்களைச் சுவையான கதைகள் மூலம் விளக்குகின்றன. அவ்விதம் விளக்குகையில் சிவபெருமான் மகிமை, நாயன்மார் மேன்மை, சைவ தத்துவங்கள், வாழ்வியலுக்கான அறிவுரைகள, படிப்பினைகள் என்பனவும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நூல் இளஞ் சமுதாயத்தை இலக்காகக் கொண்டது. அவர்கள் மட்டத்துக்கு இறங்கி அரிய தத்துவங்களை இலகுவான நடையில் சொல்ல முயல்கின்றார் ஞானசுரபி நா. முத்தையா அவர்கள்.
அவர் பெரிய ஆசிரியர். ஆசிரியர் மாணவருக்குக் கதை சொல்வது போன்ற பாணியில் நூல் அமைந்துள்ளது. கதைகளை விரும்பிக் கேட்கும் வயது இளவயது. இளவயது மட்டுந்தானா?
கதை என்றால் யாருக்குத்தான் விருப்பமில்லை. மனித
X

திருமுறைக் கதைகள் குலம் கதையிலே பிறந்து கதையிலே வளர்ந்தது; வளருகின்றது. வாய் மொழியாலும் கவிதையாலும் உரைநடையாலும் நடிப்பாலும் பாட்டாலும் நாம் இன்றும் கதைகளைத்தானே பெரிதும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஏன்? கதைகளில் மக்களுக்கு அவ்வளவு நாட்டம். மக்களின் இந்த இயல்பான நாட்டத்தை வைத்துக்கொண்டு கதைகள் மூலம் பல படிப்பினைகளைச் சொல்லப் படைப்பாளிகன் காலாதி காலமாக முயன்று வந்திருக்கின்றார்கள். கதை சொல்லியே காலத்தைக் கழித்திருக் கின்றார்கள். இன்றும் ‘கதைத்தல்' என்னும் சொற் பிரயோகம் தமிழீழத்தில் இதனையே உணர்த்திக் கொண்டிருக்கின்றது.
முத்தையா அவர்களும் கதை சொல்வதில் வல்லவர். "ஆத்மஜோதி’ப் பத்திரிகையில் அழகான சமயக் கதைகள் பல எழுதியவர். இளைஞர்க்கேற்ற இந்தோனேசியக் கதைகள், தத்துவக் கதைகள், மாணவர்க்கேற்ற மாண்புறு கதைகள் முதலிய கதை நூல்களைப் படைத்தவர். மாணவர்க்கேற்ற மாண்புறு கதைகள் என்னும் நூலில் வரும் கதைகள் சிலவற்றை இந்நூலுக்கும் எழுதியிருக்கின்றார். அதனால் சில கதைகள் அவரது உள்ளத்தில் நன்கு ஊன்றிவிட்டமை புலனாகின்றது.
கனடியச் சைவ இளைஞருக்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்னும் நோக்குடன் இந்த நூலை வெளியிடும் இந்து சமயப் பேரவையினை வாழ்த்துகின்றேன். நூலைக் கொடுத்து உதவிய பேரவையின் உப தலைவர் திரு. ச. திருநடராசா அவர்களைப் பாராட்டுகின்றேன்.
இவ்விதம் நூல்கள் வெளியிட்டும் போட்டிகள் வைத்தும் குருபூசைகள் நடத்தியும் சொற்பொழிவுகள் ஒழுங்கு செய்தும் விழாக்கள் எடுத்தும் ஞானசுரபியும் ஆத்மஜோதியுமான நா. முத்தையாவின் வழியில் சமய அறிவைப் பரப்பி வரும் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின் பணிகள் தொடரவும் சைவம் இந்த மண்ணில் தழைத்து ஓங்கி நீதி நியாய வாழ்க்கை முறையால் அமைதி நிலைபெறவும் எல்லாம் வல்ல சிவபெருமானை இறைஞ்சுகின்றேன்.
வி. கந்தவனம் காப்பாளர் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை
ΧΙ

Page 9
சிவமயம்
திருமுறைக் கதைகள்
1. ஆமைக் கதை
ஒரு பெரிய ஆமை கடலில் வசித்து வந்தது. அது தினந்தோறும் மக்கள் நடமாட்டம் இல்லாதபோது கடற்கரைக்கு வந்து செல்லும் வழக்கம் உடையதாய் இருந்தது. ஒருநாள் மணலில் நீண்டதுாரம் நடந்து சென்றது. கெட்டியான நிலம் வந்தது. அதில் நடக்கும்போது அதற்கு ஒரு சுகம் பேசியது. அதனால் வெகுதூரம் நடந்து விட்டது.
நேரம் போனதே அதற்குத் தெரியவில்லை. எங்கிருந்தோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நாய் கிட்ட வந்துவிட்டது. ஆமை உடனே ஐந்தையும் அடக்கிக் கொண்டது. நாய் சுற்றிச் சுற்றி மோந்து பார்த்தது. அந்த மணம் நாய்க்கு அருவருப்பைக் கொடுத்தது. நாய் குரைத்துக் கொண்டே ஓடிச் சென்றுவிட்டது. வெகுநேரத்தின் பின் ஆமை தலையை நீட்டிப் பார்த்தது. நன்றாக இருட்டிவிட்டது. வந்த வழியையுந் தவறவிட்டுவிட்டது. கால் போனவழியே சென்றது. ஒரு பள்ளம் போல ஏதோ தெரிந்தது. எட்டிப் பார்த்தது. தண்ணிர் போல ஏதோ தெரிந்தது. அதற்குள் ஆமை குதித்துவிட்டது.
அது ஒரு கிணறு. அதற்குள் ஒரு ஆமையும் ஒரு தவளையும் கவலை ஒன்றும் இல்லாமல் சிநேகமாய் வாழ்ந்து வந்தன. கடலாமை குதித்த சத்தம் கிணற்றுக்குள் இருந்த இருவருக்கும் அணுக்குண்டு விழுந்தது போலிருந்தது. கடலாமை உருவத்தில் பெரியது. கிணற்றுள் இருந்த இருவரும் கடலாமையைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.
நீ எங்கிருந்து வருகிறாய் என்று கிணற்றாமை கேட்டது. நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது கடலாமை. கடல் எப்படியிருக்கும்? கடலைப் பற்றி எப்படிச் சொல்வது? அதற்குக் கரையே இல்லை என்றது கடலாமை. நீ ஒரு புழுகன். இந்தக் கிணற்றிலும் பார்க்கப் பெரியது எங்கேயாவது உண்டா? என்று கேட்டது கிணற்றாமை, கடலைப் பற்றி இவர்களுக்கு எப்படி விளங்க வைக்க முடியும் என்று சிந்தித்தது கடலாமை.
1.

திருமுறைக் கதைகள்
இந்த நேரத்திலே தவளை ஒரு துள்ளித் துள்ளிப் பாய்ந்தது. திரும்பிக் கடலாமையைப் பார்த்தது. நான் பாய்ந்தளவு தூரம் உனது கடல் இருக்குமா என்று கேட்டது. இதற்கு மறுமொழி சொன்னால் நான் இங்கிருக்கவே முடியாது என்று கடலாமை எண்ணியது. நீ பாய்ந்தளவு தூரம் இருக்கும் என்று கடலாமை கூறியது.
அவர்கள் இருவருக்கும் பெரிய சந்தோஷம். அப்படி வா வழிக்கு என்றன. நீ இந்தக் கிணற்றின் ஆழத்தைப் பார். இதை ஒரு முறை சுற்றிப் பார் என்றன. கடலாமை தனக்குள்ளே சிரித்துக்கொண்டது.
இந்தக் கதையைக் கூறியவர் அப்பர் சுவாமிகள். ஏன் இந்த உவமைக் கதையைக் கூறினார் என்றொரு கேள்வி? அதற்கும் அவரே பதில் சொல்லுகின்றார்.
உலகில் கடவுள் உண்டு என்பவர்களும் உண்டு. இல்லை என்பவர்களும் உண்டு. உண்டு என்பவர்களை ஆஸ்திகர் என்பார்கள். கடவுள் இல்லை என்பவர்களை நாஸ்திகள் என்பார்கள். நாஸ்திகர் கடவுள் இல்லை என்றே அழுத்தமாகக் கூறுவார்கள். அப்படி ஒருவள் இருந்தால் அவர் ஏன் வெளிப்படாமல் இருக்கிறார்? அவர் ஏன் பயப்பட வேண்டும்? யாராவது பிடித்து அடைத்து விடுவார்களா?
கடவுள் ஒருவர் இல்லை என்று சொல்பவர்களை பாவகாரிகள் என்று சொல்வார்கள். கடவுள் ஒருவர் இல்லை என்றும் அப்படி இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாது என்றும் சொல்வார்கள். எங்கள் ஊனக் கண்ணுக்குத் தெரியாதனவெல்லாம் இல்லை என்று சொல்லலாமா? அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் ஓ பார்த்திருக்கிறோமே என்பார்கள். எப்படிப் பார்த்தீர்கள் என்றால், கண்ணாடியில் பார்த்தோம் என்பார்கள். பின்பக்கத்தைப் பார்த்தீர்களா என்றால் பாபர் சலூனில் பார்த்தோம் என்பார்கள். உங்களைப் பார்த்தீர்களா? உங்கள் உடலைப் பார்த்தீர்களா என்றால் அப்போதான், ஓ நான் வேறா எனது உடல் வேறா என்பார்கள்.
நீ உன்னையே பார்க்கவில்லையே. ஆனபடியால் நீ இல்லை என்று நான் சொன்னால் நீ நம்புவாயா? அது போலவே கடவுள் உனது கண்களுக்குத் தெரியவில்லையே என்பதற்காகக் கடவுளே இல்லை என்று சொன்னால் அது பெரிய பாவமாகும்.
எமது சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவனாயிருக்கிறார்.
2

Page 10
திருமுறைக் கதைகள்
அவருடைய அருளைக் கண்ணாகக் கொண்டு காண்பதேயல்லாமல் வேறு எவ்வகையிலும் காணமுடியாது. அவனை வணங்குவதற்கே அவனருள் வேண்டும். தீவினையாளர்கள் சிவசிவ என்றே கூறமாட்டார்கள். இத்தகையவர்களுக்கு கடவுளைப் பற்றி விளங்க வைக்க முடியாது.
முருகப் பெருமான் தனது விசுவரூபத்தைக் காட்டினார். சூரன் மேலும் கீழும் பார்த்து விழித்தான். முருகன் அவன் நிலையை உணர்ந்தார். விசுவரூபத்தைப் பார்க்கும் ஞானக் கண்ணைச் சூரனுக்குக் கொடுத்தார். அக்கண்ணால் பார்த்து உண்மையை அறிந்தானாயினும் அவனது அகங்காரம் பணிய மறுத்தது. இக்கருத்துக்களை அமைத்தே அப்பர் சுவாமிகள் பின்வரும் தேவாரத்தைப் பாடினார்.
கூவலாமை குரைகட லாமையைக் கூவலொக்குமோ கடல் என்றல்போல் பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.
கிணற்று ஆமை கடலாமையைப் பார்த்து நான் வசிக்கும் கிணற்றுக்கு நீ வசிக்கும் கடல் சரியாகுமோ என்று கேட்டதுபோல் பாவம் செய்தவர்கள், தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானின் பெருமையை அறியமுடியாது என்று சொல்வார்கள்.
2. நரிக் கதை
ஒரு காட்டில் ஒரு வேடன். அவன் பெயர் வனசரன் என்பது. வேட்டை ஆடி அதில் கிடைத்ததை உண்பதுதான் அவனது வாழ்வு. ஒரு முறை மூன்று நாளாக ஒரே பட்டினி. காய்கனி கிழங்குதானும் அகப்படவில்லை. அவரவர் செய்த வினையின் பிரகாரம்தான் அவரவருக்கு உணவு கிடைக்கும். “தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது ஒளவையின் வாக்கு.
"இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்
பலர் நோலாதவர்"
என்பது வள்ளுவர் வாக்கு. உலகத்திலே வறியவர் அதிகமாயிருத்
3

திருமுறைக் கதைகள்
தலுக்கும் செல்வர் மிகக் குறைவுடையவராயிருத்தலுக்கும் காரணம் தவம் செய்தவர்கள் சிறுதொகையினர். தவம் செய்யாதவர்கள் அனேகள் என்பது பொருள். சிவபெருமானைப் போற்றாதவருக்கு இவ்வுலகில் ஒரு அடையாளம் உண்டாம். அதாவது உடுக்கத் துணியும் அற்று ஒரு சோற்றுப் பருக்கை தானும் கிடையாது அலைவார்களாம். இரந்தாலும் ஒரு சோற்றுப் பருக்கைதானும் கிடையாதாம். பிச்சையிலே கிடைப்பதற்கும் முன்பிறப்பில் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்.
வனசரனுக்கு நாலாவது நாள் ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ஒரு கண் குருடான யானை தண்ணிர் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நாணைக் காதளவுக்கும் இழுத்து அம்பைக் குறி வைத்தான். பார்வையுள்ள கண்ணை அந்த அம்பு குருடாக்கியது. யானை உரத்த சத்தமிட்டு நிலத்திலே விழுந்து இறந்தது.
வேடனுடைய வில்லிலிருந்து அம்பு புறப்படும்போது வேடனுடைய காலில் ஏதோ சுரீர் என்றது. வேடன் காலை உதறினான். படம் எடுத்த நாகம் ஒன்று பக்கத்தே சென்று விழுந்தது. வேடன் வில்லால் நாகத்தின் தலையில் ஓரடி ஓங்கி அடித்தான். பாம்பும் அக்கணமே இறந்தது. வேடனும் விடம் தலைக்கேறி இறந்தான். வேடனின் அம்படிபட்டு யானையும் இறந்தது.
மூன்று உயிர்கள் ஒரே நேரத்தில் இறந்ததை பற்றை மறைவில் பதுங்கி இருந்த நரி ஒன்று கண்டது. சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தது.
நரி ஒரு கணக்குப் போட்டது. யானை ஆறுமாதத்திற்குப் போதியது. வேடன் மூன்று நாளைக்கு உணவாவான். பாம்பு இன்றைய உணவுக்குப் போதியது. நரியனார் வாலைக் குழைத்துக் குழைத்து பலமுறை மூன்றையும் சுற்றிச் சுற்றி வந்தார். எதை முதலில் சாப்பிடுவது என்பது தான் நரியின் இப்போதைய பிரச்சினை.
நரி அவசரப்பட்டு உண்ணவும் இல்லை. ஊளையிட்டு மற்றைய நரிகளை அழைக்கவும் விரும்பவில்லை. அவ்வளவையும் தானே முழுதாகத் தின்று தீர்க்க வேண்டும் என்பதுதான் நரியின் பேராசை, ஒரு துண்டு இறைச்சிதானும் வேறு எவரும் சாப்பிடக் கூடாது என்ற லோபத்தன்மை நரிக்கு. மனிதனும் இந்த நரியைப் போலப் பேராசை உள்ளவன்தான். இதனால்தான் ‘எச்சில் கையால் காகம் துரத்தாதவன்’ என்ற பெயரும் மனிதனுக்கு உண்டு.
நரியனார் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். வில்லில்
4.

Page 11
திருமுறைக் கதைகள் பூட்டியிருந்த நாண் நரியனாரின் பார்வையில் விழுந்தது. இந்தவாரைக் கடித்துப் பல்லைத் தீட்டிக் கொண்டால் மற்றைய இறைச்சிகளைச் சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும் என்று நரி நினைத்தது. வாரை நறுக்கென்று கடித்தது. வில்லு நிமிர்ந்து நரியின் தலையில் அடித்தது. நரி தலை கிறுகிறுத்து அந்த இடத்திலேயே இறந்தது.
இரைதேடப் போயிருந்த இந்த நரியின் சோடி நரி தற்செயலாக அவ்விடம் வந்தது. நால்வரையுங் கண்டு கவலை கொண்டது. கவலை எவ்வளவு நேரத்திற்கு? பிறந்தோர் இறப்து உலக நியதி என்று மனதைத் தேற்றிக் கொண்டது.
மனித இறைச்சியைச் சுவை பார்த்து எத்தனை நாளாகிவிட்டது என்று பேராவலோடு வேடனைக் கடித்து உண்ணத் தொடங்கியது. பாம்பின் விடம் ஏறிய வேடனின் உடம்பு பெண் நரிக்கும் எமனாகியது. ஒரே நேரத்தில் ஐந்து உயிர்கள் உயிர் பிரிந்தமை பெரிய நூதனமல்ல. எங்கள் நாட்டிலே பொம்பர் ஒரு குண்டு போட்டு ஐந்து குடும் பங்களையே நாசமாக்கிவிட்டது. இக்கதையைப் புலவர் ஒருவர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
கரியயொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும் இரிதலைப் புற்றி னாகம் இன்றுணும் இரையா மென்று விரிதலை வேடன் பக்க விற்குதை நரம்பைக் கவ்வி நரியனார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே.
மனிதனும் இந்த நரியைப் போல் பேராசைக்காளாகி அதனாலேயே தினமும் இறந்து கொண்டிருக்கிறான். பேராசை பெருந் தரித்திரம் என்று சொல்வார்கள். இங்கே பேராசை பெருமரணத்தையல்லவா விளைவித்துவிட்டது.
நாவுக்கரசரும் இக்கதையைக் கேள்விப்பட்டிருக்கிறார். தான் பாடிய ஆதிபுராதனக் குறுந் தொகையில் "நரிவிருத்த மதாகுவர் நாடரே" என்றொரு வரி குறிப்பிடுகின்றார். அக்கினி வளர்த்துப் பெருந்தொகைப் பணம் செலவு செய்து யாகங்கள் செய்வர். ஆனால் இறைவன் அந்த அக்கினியின் உருவினன் என்பதை உணர்ந்தாரில்லை. பிரம விஷ்ணுக்கள் இருவரும் பிரம்மமாய் நின்ற சோதியைத் தேடித்தேடி அலுத்து முடிவில் உண்மையைத் தெளிந்தனர். நரிக்கு இறுதியைக் கொண்டு வந்தது அதன் பேராசை. பிரம விட்டுணுக்களுக்கு அறியாமையால் இறைவனை அறிய முடியவில்லை. நரிக்கும் பேராசையினால் அறியாமை
5

திருமுறைக் கதைகள் வந்தது. இதனை அப்பர்
எரிபெருக்கு வரவ்வெரி யீசன் உருவருக்க மதாவது ணர்கிலார் அரியயற் கரியானை யயர்த்துப் பொய் நரிவிருத்த மதாகுவர் நாடரே.
என்று அருளியுள்ளார்.
3. சிவராத்திரிக் கதை
பிரமதேவர் தான் படைத்த உலகின் அழகை எங்கும் பார்த்து ரசித்துக் கொண்டு வந்தார். ஓர் இடத்தில் வந்ததும் அப்படியே நின்றுவிட்டார். காரணம் தன்னால் படைக்கப்படாத பொருள் ஒன்றைப் பார்த்துவிட்டார். இவர் பார்த்த பொருள் பாற்கடலில் அறிதுயில் கொண்டிருந்தது. பிரமா காலால் தட்டி எழுப்பினார். நீ யார்? என்னால் படைக்கப்படாத ஒன்றை இன்று தான் பார்த்தேன் என்றார்.
"நீ எப்படி என்னைப் படைத்திருக்க முடியும்? நான் தானே உன்னைப் படைத்தவன்"
"உலகம் முழுவதையும் படைத்தவன் நானிருக்க நீ என்னைப் படைத்தவன் என்று சொல்ல உனக்கு வெட்கமில்லையா?" என்று கூறினார் பிரமதேவர்.
வாய்ச்சண்டை, ஆயுதச் சண்டையாகி முடிவு காணாத சண்டையாகி விட்டது. காலம் நீண்டு கொண்டே போனது. சிவபெருமான் இவர்கள் இருவருக்கும் அறிவுச்சுடர் கொளுத்த விரும்பினார். இருவருக்கும் மத்தியில் சோதியாக நின்றார் சிவபெருமான்.
சோதியைப் பார்த்து இருவரும் நீ யார் என்று கேட்டனர். நான் பிரம்மம் என்றது சுடர். அப்படியானால் எங்கள் இருவரில் யார் பெரியவர் என்று நீ சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.
இந்தச் சோதியின் அடியையோ முடியையோ யார் காண்கின்றனரோ அவர்கள்தான் பெரியவர்கள் என்று பதில்
6

Page 12
திருமுறைக் கதைகள்
இறுத்தது சோதிப்பிரம்மம்.
உடனே பிரம்மா அன்னப் பறவையாகி சோதியின் முடியைத் தேடிப் புறப்பட்டார். திருமால் பன்றியுருக் கொண்டு அடியைத் தேடிப் புறப்பட்டார். திருமால் அயர்ச்சி கொண்டு தன்னால் சோதியின் அடியைக் காண முடியாது என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்.
பிரம்மா சோதியின் முடியைத் தேடிப் பறந்து கொண்டே சென்றது. நன்றாய்க் களைத்து விட்டது. தோல்வியை ஒப்புக்கொள்ள அகங்காரம் விடவில்லை. நீரில் ஆழ்ந்து கொண்டு செல்பவனுக்கு துரும்பும் தூணாய்த் தெரியுமாம். அதுபோல தோல்வியைத் தழுவுகின்ற அன்னப்பறவைக்கு ஓர் ஆதாரம் தென்பட்டது. அன்னம் ஒரு தாழம்பூவைக் கண்டது. அன்னம்: நீ எங்கிருந்து வருகிறாய்? தாழம்பூ: நான் சிவனுடைய முடியில் இருந்து வருகிறேன். அன்னம்: சிவனுடைய முடி எவ்வளவு தூரத்தில் உள்ளது? தாழம்பூ: நான் எத்தனையோ யுகங்களாக விழுந்து கொண்டிருக்கிறேன். இன்னும் விழுந்த பாடில்லையே. அன்னத்திற்கு தன்னம்பிக்கையில் ஈடாட்டம் வந்துவிட்டது. குறுக்கு மூளை வேலை செய்தது. அன்னம்: தாழம்பூவே எனக்கொரு உதவி செய்வாயா? தாழம்பூ என்ன உதவி? அன்னம்: அது ஒரு சிறு உதவி தான் தாழம்பூ: அது என்ன என்பதைச் சொல்லுங்களேன். அன்னம்: ஒரு சிறு பொய் தாழம்பூ: எதற்காகப் பொய்? அன்னம: நானோ சிவனின் முடியைத் தேடிச் செல்கின்றேன். நீயோ முடியிலிருந்து வருகின்றாய். நானும் முடியைக் கண்டேன். முடியிலிருந்து உன்னோடுதான் வருகின்றேன் என்று சொல்வது தான் அந்த உதவி. இது ஒருவருக்கும் பாதகம் இல்லாத பொய்தானே.
பொய் சொல்வதற்குத் தயங்கிய தாழம்பூ அன்னத்தின் பேச்சில் மயங்கி பொய் பேசச் சம்மதித்துவிட்டது.
தாழம்பூ பொய் பேசினபடியால் அப்பூவைச் சிவனுடைய அர்ச்சனைக்கு எடுப்பதில்லை. திருமாலுக்கு உலகமெல்லாம் கோயில். இந்தியாவில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் மேலான கோயில்கள் இருக்கின்றன. பிரம்மதேவருக்கு ஒரு கோயில்தானும் இல்லை. இதனால்தான் சத்தியமே கடவுள் என்பார்கள்.
7

திருமுறைக் கதைகள் உள்ளத்தின் இயல்பு உண்மை. மெய்யின் இயல்பு மெய்ம்மை. வாயின் இயல்பு வாய்மை.
அப்பர் சுவாமிகள் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையில் பிரம விஷ்ணுக்கள் அடிமுடிதேடிய செய்தியையே அடிப்படையாக வைத்து ஒரு பதிகமே செய்துள்ளார். அதில் கடைசிப்பாடல் பின்வருமாறு:
செங்க ணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்துங் காண்கிலார் இங்குற்றே னென்றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
சிவன் இலிங்கத்தே தோன்றிய தினம்தான் சிவராத்திரி என்று சொல்லப்படுகின்றது.
சிவராத்திரி என்ற சொல், சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகையான பொருளைத் தரும். சிவமான ராத்திரி என்பதே இவைகளில் மிகப் பொருத்தமானது.
மாசிமாத கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றினார். இந்த நேரம் இரவு பன்னிரண்டு மணிதொடங்கி ஒன்றரை மணிவரையுள்ள காலமாகும். இக்காலம் இலிங்கோற்பவகாலம் என்று அழைக்கப்படும். ஆதலால் இப் பொழுதும் அந்த இரவில் உலகிலுள்ள எல்லா இலிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார்.
அன்று சிவபூசை எல்லோருக்கும் விருப்பத்தைக் கொடுக்கக்கூடியது. அன்று காலை குளித்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவநாமத்தை ஜபிக்க வேண்டும்.
கருணை வடிவான தேவி நமக்காகச் சிவபூசை செய்த நாள் சிவராத்திரியாகும். "சிவம்” என்ற சொல்லுக்கே துன்பத்தைத் துடைக்க வல்லது என்று அர்த்தம்.
ஒரு சமயம் உமாதேவி விளையாட்டாக சிவபெருமானுடைய கண்களை அவருக்குப் பின்புறம் வந்து பொத்தி விடுகிறாள். எங்கும் பேரிருள் பரவுகிறது. இந்நிலையில் தேவர்கள் சிவபூசை செய்த இரவே சிவராத்திரி என்றும் கூறப்படுகின்றது.
பிரமாவும் விஷ்ணுவும் தோல்வியுற்று தம்செருக்கெல்லாம் ஒழிந்து சிவனைச் சரண்புகுந்து வழிபட்டு உய்வு தேடினர். ஆதலினால்
8

Page 13
திருமுறைக் கதைகள்
திருவண்ணாமலையில் சிவராத்திரி வழிபாடும் சிறப்புறுவதாயிற்று.
அந்தக்காலத்தில் சைவர் மாத்திரம் அன்றி சிவலிங்கத்தை எல்லோருமே வழிபட்டனர். அதில் சிவம் இருக்கிறது. விஷ்ணு இருக்கிறார். பிரம்மன் இருக்கிறார். எல்லாக் கடவுளையும் ஒன்று சேர்த்தே லிங்கம் விளங்குகிறது. தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்குமான இடமே லிங்கம் எனப்படும். லிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படுகிறது. ஆவுடையார் சக்திருபம். பாணம் சிவரூபம். பீடம் கிரியா சக்தி வடிவம். பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம். நடுப்பாகம் விஷ்ணுரூபம். இதைத்தான் திருமூலர்
மலர்ந்த அயன் மாலுருத்திரன் மகேசன் பலந்தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரு சக்தி சிவன் வடிவாகிய பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே
என்று அருளியுள்ளார்.
4. என்னிலும் இனியவன் ஒருவன்
ஒரு குழந்தையைப் பார்த்து உனக்கு இனியவர் யார் என்றால் தட்டுத் தடக்கு இல்லாமல் அம்மா என்கிறது. இன்னோர் குழந்தை அப்பா என்கிறது. விபரம் தெரிந்த குழந்தை அம்மாவும் அப்பாவும் என்கிறது. வேலைக்காரியால் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தை அந்த வேலைக்காரியே தனக்கு இனியவள் என்கிறது. காதலன் காதலியை இனியவள் என்று குறிப்பிடுகின்றான். காதலியோ காதலனைக் குறிப்பிடுகின்றாள். குடிகாரன் குடிபோதையை இனிமையானது எனக் குறிப்பிடுவான்.
ஒரு சீடன் தனது குருவைக் குறிப்பிடுவான். இன்னுஞ் சிலர் தமது சிநேகிதரைக் குறிப்பிடுவர். ஆண்டவனுக்கு இனியவர்கள் அடியவர்கள். அடியவர்களுக்கு இனியவரான அப்பர் சுவாமிகளை ஒர் அன்பர் உங்களுக்கு இனியவர் யார் என்று கேட்டார். அப்பர் உடனே "என்னிலாரும் எனக்கியார் இல்லை" என்றார். ஒவ்வோருயிருக்கும் தன்னுயிர் மேலேதான் நீங்காப் பற்று இருக்கும். இது பற்றிய ஆராய்ச்சி ஒன்று ஜேர்மன் தேசத்திலே
9

திருமுறைக் கதைகள்
நடைபெற்றது. ஒர் ஆராய்ச்சிச் சாலை. எட்டு அடி உயரமும் ஐந்து அடி சுற்றளவும் கொண்ட ஒரு கண்ணாடிச்சாடி. சாடியின் அடிப் பக்கத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு அவைமுலம் தண்ணிர் நிரம்பிக் கொண்டே இருக்கிறது.
சாடியினுள் ஒரு குரங்கும் குட்டியும் விடப்பெற்றன. குட்டி தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தது. தண்ணிர் ஏறிக்கொண்டே வந்தது. குட்டியின் மூக்கைத் தண்ணிர் எட்டிவிட்டது. மூச்சுத் திணறியது. குட்டிபடும் அவஸ்தையைக் கண்ட தாய்க் குரங்கு குட்டியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது. தண்ணிர் ஏறிக்கொண்டே இருக்கிறது. தாய்க் குரங்கின் மூக்கு வரை தண்ணிர் வந்துவிட்டது. மூக்கினுள் தண்ணிர் சிறிதளவு சென்றுவிட்டது. மூக்கைச் சீறியது. மூச்சுத் திணறியது. தன்னுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதை தாய்க்குரங்கு உணர்ந்தது. இதற்குமேல் அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தாய்படும் அவஸ்தையைக் கண்ணுற்ற குட்டி கத்தியது. தாய்மை பறந்துவிட்டது. குட்டியை கையால் தூக்கி தண்ணிருள் அமிழ்த்தி அதன்மேலே தாய்க் குரங்கு ஏறி நின்று கொண்டது. எந்த உயிருக்கும் தன்னுயிருக்கே முதலிடம். தன்னுயிருக்கு ஆபத்து வரும்வரை தாய்மை வேலை செய்தது. தன்னுயிருக்கே ஆபத்து என்பதை உணர்ந்தவுடன் தாய்மை கொலை செய்யப்பட்டுவிட்டது. இதனால்தான் அப்பர் சுவாமிகள் “என்னிலாரும் எண்கினியாரில்லை” என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார்.
என்னைவிட எனக்கு இனிமையானவர் மானிடரில் எவரும் இல்லை. ஆனால் என்னையும் விட இனியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் யாரெனில் உன் உடம்புக்குள்ளே ஆவி (மூச்சு) ஆகி வெளியிலே வந்தும் உள்ளே போயும் எனக்குள் அந்தர் யாமியாய் நிற்கும் திரு இன்னம்பர்ப் பெருமானேயாவான். திரு என்று கடவுளுக்கும் ஒரு பெயருண்டு. திருமுறை என்றால் கடவுளைப் பற்றிச் சொல்லப்படும் நூல் என்பது பொருள். முறை என்று நூலுக்கும் பெயர். சாதாரண பருத்தியினால் அல்லது சணலினால் செய்யப்படுவதும் நூல்தான். இந்த நூல் மரத்திலுள்ள கோணலைப் போக்க உதவுகிறது. புத்தகத்திற்கும் நூல் என்று பெயர். புத்தகமாகிய நூல் மனத்திலுள்ள கோணலைப் போக்கவல்லது. திரு என்ற சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பது நச்சினார்க்கினியருடைய உரையாகும். திருவைத் தியானிப்பவன் திரு ஆகின்றான்.
பிறரிடத்து ஒருவன் பிரியம் செய்வதெல்லாம் தனது
10

Page 14
திருமுறைக் கதைகள்
சந்தோஷத்துக்காகவேயாம். ஒருவன் தனக்குத்தானே அன்பு செய்கிறவனாயின், தீங்கு செய்யுங்காரியங்களின் பக்கத்தில் கொஞ்சங்கூட நெருங்கப்படாது. தன் மேலுள்ள இனிமையினால் தான் பிறரிடம் பிரியமாய் இருக்கிறானாதலின் தன்னிலும் இனிய பிறர் ஒருவர்க்கு இல்லை.
என்னிடத்துக் கொள்ளும் பிரியத்திலும் மிக்கப் பிரியம் என்னிடம் கொண்டு எனது நன்மையையே (நான் அறியாதபோதும்) கோரி முயன்று வருதலின் ஈசன் என்னைக் காட்டிலும் எனக்குப் பிரியமானவன் என்னை அறியாமையால் யான் கெடுக்க நினைத்தாலும் அதற்கு இடம்கொடாதவன் ஈசன்.
உயிர்தருபவனாய், உயிர்க்குயிராயப் இருப்பவனாயப் என்னுள்ளேயே இருந்து என்னைக் காப்பவன் யாரோ அவனே இன்னம்பர் ஈசன். பக்தனுக்கு உள்ளும் புறமும் காட்சி தந்து நம்மைப் பக்குவப்படுத்துகிறவன் எவனோ, அவன் இன்னம் பரீசன் ஆகிறான். என்னிலும் இனியான் ஒருவன். என்னிலும் இனி யான் ஒருவனைப் பற்றி அப்பர் கூறும் தேவாரத்தினைப் பார்ப்போம்:
என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்இனி யான்ஒரு வன்உளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசன்.
5. தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
கலைமகள் பெயருக்கேற்பக் கல்வியிற் சிறந்தவள். அழகில் இலக்குமியை ஒத்தவள். இப்பெண்ணைத் திருமணஞ் செய்யப் பலர் காத்திருந்தனர். ஆனால் திடீரென உதயபுரத்திலிருந்து ஐவர் பெண் கேட்டு வந்தனர். கலைமகளின் சம்மதம் விசாரிக்கப்படாமலேயே கலைமகளின் தந்தை திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்துவிட்டார். தனது அந்தஸ்துக்கு ஏற்ற இடமாய் அமைந்தபடியினாலே சம்மதம் கொடுத்தார்.
மாப்பிள்ளையும் பெண்ணைப் பார்க்கவில்லை. பெண்ணும் மாப்பிள்ளையைப் பார்க்கவில்லை. இருவரும் ஒத்தமனத்தினர். பெற்றார் விரும்பிச் செய்யும் திருமணத்தைச் செய்வதே தமது
11

திருமுறைக் கதைகள்
கடமை என இருவரும் எண்ணிக்கொண்டனர்.
கலைமகளுக்கு ஒரு தோழி உதயபுரத்திலிருந்தாள். அவளுக்கு அவசரக் கடிதம் எழுதினாள். தோழியும் உடனே வந்து சேர்ந்து விட்டாள். உதயபுரத்திலிருந்து வந்த திருமணப் பேச்சைப் பற்றிக் கலைமகள் கூறினாள். தோழி அந்தக் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். அந்தக் குடும்பத்தில் பெண் கொடுக்கப் பலர் முன்வந்தனர். அந்தக் குடும்பத்தில் மாப்பிள்ளை எடுக்க உங்கள் குடும்பம் தவம் செய்த குடும்பமாயிருக்க வேண்டும். மாப்பிள்ளையின் பெயர் கண்ணன். கண்ணனைக் கல்யாணம் செய்யப் பல பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவருக்கும் கண்ணன் அகப்படவில்லை. கலைமகளே! நீ தவம் செய்த பெண். ஆனபடியினால் கண்ணன் உனக்கு அகப்பட்டான்.
கண்ணனோ எந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்தறியான். நல்ல ஒழுக்கமானவன். நல்ல படிப்பாளி. நல்ல உழைப்பாளி தாய் தந்தையர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான். இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு தாய் தந்தையர் என்ன தவஞ் செய்தனரோ என்று ஊரார் பேசிக் கொண்டனர்.
பெரியபுராணம் பாடுகிறாயே! அவர் எப்படியிருப்பார் என்று இன்னும் சொல்லவில்லையே. கண்ணனைப் போன்ற நிறந்தான். அனால் நல்ல அழகன். எந்த நேரமுஞ் சிரித்த முகம்; மலர்ந்த முகம். தோழியின் வருணனையில் கலைமகளின் உள்ளத்திலே ஒரு கண்ணன் உருவாகிவிட்டான். புல்லாங்குழல் ஊதுகிற கண்ணன் படத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதே படம் கலைமகளின் உள்ளத்தில் பேரொளியாகப் பதிந்துவிட்டது.
மாப்பிள்ளை உங்கள் ஊர் என்று சொன்னார்களே! அது உண்மைதானோ? உதயபுரமேதான். உதயபுரம் என்ற பெயரும் கண்ணன் என்ற பெயரும் மனதில் பதிவு பெற்றுவிட்டன. கலைமகள், “கண்ணா கண்ணா! கமலக் கண்ணா! உதயபுரிக் கண்ணா! ஊரெல்லாம் பேசுங் கண்ணா!" என்று மனம் மாத்திரம் பாடவில்லை, நாவும் அசையத் தொடங்கிவிட்டது. சொண்டும் பேசத் தொடங்கிவிட்டது. வீட்டில் கண்ணன் படத்தைப் பார்த்துவிட்டால் பொழுது போவதே தெரியாமல் படத்தின் முன்னாலேயே நின்று விடுவாள்.
"கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம்"
12

Page 15
திருமுறைக் கதைகள் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறந் தோன்றுதடா”
என்று பாடுவாள். ஆட்டுக்குட்டியைத் தூக்கி முத்தம் கொடுப்பாள். அங்ங்ணம் கொடுக்கும்போது என்னடா கண்ணா என்று அன்பொழுகக் கூறுவாள். இப்பொழுது கலைமகளுக்கு கண்ணன் பைத்தியம் பிடித்துவிட்டது.
என்னமாதிரி அமைதியாக இருந்த பிள்ளை உதயபுரியார் பெண் கேட்டு வந்ததன் பின் முற்றாக மாறிவிட்டாளே. உள்ளும் புறமும் கண்ணன் என்ற பெயரே ஆட்கொண்டுவிட்டது. கண்ணன் பைத்திய மாகவே மாறிவிட்டான். ஒரு நாளைக்கு ஆயிரந் தடவையாவது அம்மா, அம்மா என்று கூறுகின்றவள், அம்மா என்ற சொல்லையே மறந்து விட்டாளே. அப்பா என்று அழைத்தால் அந்தச் சொல்லிலிருந்து தேன் சொட்டுமே. இவையெல்லாம் இப்போ எங்கே தான் போய்விட்டன. எல்லாவற்றையும் கண்ணனே விழுங்கிவிட்டான் போலும்.
தோழியர் வந்து விளையாட்டிற்கு அழைத்தால் விளையாடப்போக மாட்டாள். தான் கண்ணனோடு விளையாட வேண்டும் என்று வீட்டினுள்ளே போய்விடுவாள். தனக்கு ஒரு உடம்பு இருக்கிறதே அதைப் பேண வேண்டும் என்பதையே மறந்து விட்டாள்.
‘என்னை எனக் கறிவித்தவன் எங்கள் குருநாதன்,
தன்னையறிந்தவன் தலைவனை அறிவான்’ என்பன பெரியோர் வாக்குகள்.
தலைமகள், மனிதனாகப் பிறந்த ஒருவன் அடைய வேண்டிய இடமாகிய தலைவன் திருவடியை அடைந்து இரண்டற்ற நிலையை அதாவது அத்துவித நிலையை அடைந்துவிடடாள். தாள் + தலை = தாடலை. இரு சொற்கள் சேர்ந்தபோது பிரிப்பின்றி ஒன்றாகக் காண்பது போல இறைவனின் தாளும் உமாவின் தலையும் ஒன்று சேர்ந்துவிட்டன. ஆற்று நீரும் கடல் நீரும் கலந்துவிட்டால் ஆற்று நீர் கடல் நீராவது போல ஜீவாத்மா பரமாத்வாவுடன் சேர்ந்தபின் அத்துவித முத்தி எனப்படும். ஜீவாத்மா ஜீவனுக்குரிய எல்லா நிலைகளையும் இழந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை. இதனை அப்பர் சுவாமிகள் எவ்வாறு சொல்லுகிறார் என்பதை உற்றுநோக்குங்கள்.
13

திருமுறைக் கதைகள்
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
6. என் மனத்தே வைத்தேனே
சிவபெருமானுடைய பல பெருமைகளை நினைவுகூர்ந்த அப்பர் சுவாமிகள் இப்படிப்பட்ட பெருமானை என்மனத்திலே வைத்தேனே என்று பாடுகின்றார். சிவனிடத்திலே என்ன பெருமையைக் கண்டுவிட்டார்?
ஒருமுறை நாரகாவனத்து ரிஷிகள் தமது தபோசக்தியை நினைந்து செருக்குக் கொண்டார்கள். அவர்களுடைய அகங்காரம் அவர்களையே அழித்து விடும்; உலகத்திற்கும் அதனால் கேடு உண்டாகும் என்பதை எம்பெருமான் உணர்ந்தார். அவர்கள் புலனடக்கம் இல்லாது வாழ்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார் எம்பெருமான்.
முனிவர்களுக்கு முன்னால் அழகிய மோகினி உருக்கொண்டு சென்றார். தவத்திலே ஈடுபட்டிருந்த அத்தனை முனிவர்களும் மோகினியின் அழகில் ஈடுபட்டு மோகினியின் பின்னே எழுந்து சென்றார்கள். முனி பத்தினிகளின் முன்னே அழகிய புருஷோத்தமனாகச் சென்றார். அப்புருஷோத்தமனின் அழகில் ஈடுபட்ட முனி பத்தினிகள் அத்தனைபேரும் அப்புருஷோத்தமனின் பின்னால் நடந்து சென்றார்கள். புருஷோத்தமனும் மோகினியும் மறைந்துவிட்டனர். முனிவர்களும் முனிபத்தினிகளும் தமது செயலுக்காக நாண் அழிந்து வெட்கப்பட்டார்கள். இது சிவனுடைய செயல்தான் என்பதை உணர்ந்து சிவனுக்கு மாறாக ஒரு பெரு யாகம் செய்தார்கள்.
யாகத்திலே பெரிய யானை ஒன்று தோன்றியது. அதனை
14

Page 16
திருமுறைக் கதைகள்
சிவபெருமான் மீது ஏவினார்கள். பெருமான் அதனை அடக்கி அதன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டார். இச்செய்தியை "அடுத்தானை உரித்தானை" என்று குறிப்பிடுகிறார் அப்பர் சுவாமிகள்
பஞ்சபாண்டவர்கள் துரியோதனனுடைய சூழ்ச்சியினால் நாடு நகரம் இழந்து காட்டிற்குச் சென்றார்கள். யுத்தம் நடந்து முடிந்தால்தான் துரியோதனன் வழிக்கு வருவான் என்பது கண்ணன் முதலான பெரியேர்களுடைய எண்ணம். வியாசர் பஞ்சபாண்டவர் களைப் பார்க்க வந்தால் உங்களுடைய வீரம் தர்மத்துடன் தெய்வபலமும் சேர்ந்தால்தான் யுத்தத்தை வெல்ல முடியும். ஆதலால் அர்ச்சுனன் சிவபெருமானைக் குறித்து தவஞ் செய்து பாசுபதாஸ்திரம் பெற வேண்டும் என்று வியாசர் கூறியதோடு சிவபெருமானைக் குறித்து தவஞ் செய்யும் வகையை விவரித்து அர்ச்சுனனுக்கு மந்திரோபதேசமுஞ் செய்தார்.
அர்ச்சுனன் இமயமலை அடிவாரஞ் சென்று பஞ்சாக்கினி மத்தியில் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவஞ் செய்தான். மூகன் என்ற அசுரன் பன்றியுருக் கொண்டு அர்ச்சுனனைக் கொல்வதற்கு வந்தான். அதேநேரத்தில் சிவபெருமானும் வேடுவ உருவங் கொண்டு பன்றியைக் கொல்வதற்காக வந்தார். அர்ச்சுனன் எதிரே வந்த பன்றியைக் கண்டு குறி வைத்தான். சிவனாகிய வேடரும் அதேநேரத்தில் குறிவைத்தார். இருவரது அம்புகளும் ஒரே நேரத்தில் பாய்ந்து பன்றி மாண்டது.
சிவனாகிய வேடர் அர்ச்சுனனுக்கு அருகில் சென்று நான் எய்த பன்றிக்கு நீ . ஏன் எய்தாய் என்று வலியச் சண்டைக்கு இழுத்தார். அர்ச்சுனன் உனக்குப் பன்றிதானே தேவை. அதை எடுத்துக் கொண்டு செல் என்று கூறினான். பிறர் எய்த பன்றியை நான் எடுப்பதில்லை என்று சிவவேடர் கூறினார். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றிக் கைச்சண்டையாக மாறியது. சிவவேடர் அர்ச்சுனனைத் தூக்கி ஆகாயத்திலே எறிந்தார். கோபங் கொண்ட அர்ச்சுனன் சிவவேடருடைய தலையிலே வில்லால் அடித்தான். அந்த அடி உலகிலுள்ள உயிர்கள் மீதெல்லாம் விழுந்தது. இறைவரது காட்சியும் கிடைத்தது பாசுபதாஸ்திரமும் கிடைத்தது. “அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை” என்பது அப்பர் வாக்கு. தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி என்ற முப்புரத்தசுரர்களும் இரும்பு, வெள்ளி, செம்பு ஆகியவற்றினாலே ஆகாயத்திலே கோட்டை கட்டிக் கொண்டு தேவர்களுக்குத் துன்பம்
1S

திருமுறைக் கதைகள்
விளைவித்தனர். துன்பம் தாங்கமாட்டாத தேவர்கள், முனிவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். தேவர்களுடைய முறையீட்டுக்கு இரங்கிய பெருமான் முப்புரத்தசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். பூமியைத் தேராகவும் சூரியசந்திரர்களை சில்லுகளாகவும் கொண்டு பிரமதேவர் தேர்ச்சாரதியாக இருந்து தேரைச் செலுத்தினார். மகாமேருமலையை வில்லாகவும் மகாவிஷ்ணுவை அம்பாகவும் கொண்டனர். அம்பாக இருந்த மகாவிஷ்ணுவுக்கு தன்னை இல்லாமல் முப்புரங்களை அழிக்க முடியவில்லையே என்று மனதில் நினைத்தார். இந்த நினைவை உணர்ந்த சிவபெருமான் ஒரு புன்முறுவல் புரிந்தார். அப்புன்முறுவலிலேயே முப்புரங்களும் எரிந்து சாம்பராயின. இதனை அப்பரடிகள் "குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரிய" என்று குறிப்பிடுகின்றார்.
குபேரனிடம் இருந்த புட்பக விமானத்தை இராவணன் அடித்துப் பறித்துத் தனதாக்கிக் கொண்டான். இராவணன் புட்பக விமானத் திலேயே எங்கும் பறந்து திரிந்தான். ஒருமுறை கைலாயமலைக்கு மேலால் பறந்து வந்தான். மலைக்கு நேராக வந்ததும் விமானம் நின்றுவிட்டது. கோபஞ் கொண்ட இராவணன் கயிலாய மலையையே தூக்கி எறிய முனைந்தான். இருபது தோள்களால் மலையை அசைத்தான். உமாதேவியார் அஞ்சி நடுங்கியபோது பெருமானார் தமது கால் பெருவிரலை மலையிலே ஊன்றினார். இராவணன் மலைக்குள் அகப்பட்டு வருந்தினான். அவ்வழியே வந்த வாகீச முனிவர் இராவணன் வருந்துவதைக் கண்டு இறைவன் சாமவேத கானப்பிரியன, ஆதலினால் சிவனைப் பாடு என்றார். உடனே இராவணன் கை எலும்பை முறித்து நரம்புகளைக் கொண்டு யாழ் தயாரித்து சாமவேத கானம் பாடினான். இராவணனுடைய பாடலுக்கிரங்கிய எம்பெருமான் இராவணனுக்கு உயிர்ப்பிச்சை அளித்ததோடு வீரவாளும் நல்கினார். இதனை அப்பரடிகள் "சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை" என்று குறிப்பிடுகின்றார். இப்பொழுது தேவாரம் முழுவதையும் பார்ப்போம்.
அடுத்தானை யுரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை யென்மனத்தே வைத்தேனே.
16

Page 17
திருமுறைக் கதைகள்
7. கறையது கண்டங் கொண்டார்
கறை என்றால் கருமை என்பது பொருள். சிவபெருமான்
கண்டத்திலே கறையுடையவர். அதனால் நீலகண்டன் என்னும் பெயரையும் பெற்றவர்.
தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருமுறை திருமாலிடம் சென்றார்கள். அசுரர்கள் கையோங்கியுள்ளது. அவர்களை வெல்வதற்கேற்ற வழிகூறுமாறு கேட்டார்கள். திருப்பாற்கடலைக் கடைந்து மறுபடியும் அமிர்தம் உண்டால்தான் தேவர்கள் பலமடைவார்கள் என்று கூறினார். திருப்பாற்கடலைத் தேவர்களால் மாத்திரம் கடையமுடியாது. அதற்கு அசுரர்களுடைய துணையும் வேண்டும் என்று கூறினார்.
தேவர்கள் அசுரர்களிடம் அமிர்தம் கடையும் விடயத்தைக் கூறி தமக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். கிடைக்கும் அமிர்தத்தைப் பாதி பாதியாகப் பங்கிட்டுக் கொள்வது என்ற ஒப்பந்தமும் பேசப்பட்டது. மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டார்கள். அசுரர் பாம்பின் தலைப்பகுதியிலும் தேவர் வால் பகுதியிலும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையைத் தாங்குவதற்கு ஆதாரம் ஏதும் இல்லாமல் மலைசரிந்தது. மகாவிஷ்ணு ஆமையுருக் கொண்டு கடலின் அடியிலே சென்று மந்தரமலையைத் தாங்கிக் கொண்டார். மலைநிமிர்ந்து நின்றது. இருப்குதியாரும் வேகமாகக் கடைந்தார்கள். பாம்பு வேதனை தாங்கமாட்டாது விஷத்தைக் கக்கியது. அது ஆலகாலவிஷம். விஷம் எல்லோரையுந் துரத்தியது.
விஷத்திற்குப் பயந்து தேவரும் அசுரரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினார்கள். விஷமும் விடாது துரத்தியது. கடைசியாக எல்லாரும் சிவபிரானிடம் சென்று அபயம் அபயம் என்று முறையிட்டார்கள். அவர்கள் படும் துயரைக் கண்ணுற்ற கண்ணுதல் ப்ெருமான் பக்கத்தே விபூதி மடல் ஏந்தி நின்ற சுந்தரரை அந்த ஆலகால விஷத்தைப் பிடித்து வா என்றார். சுந்தரர் எம்பெருமானைத் தியானித்தவராய் அமிர்தத்தைக் கையால் அள்ளுவதுபோல விஷத்தினைக் கையால் பிடித்து வந்தார். பெருமான் அதனைக் கையால் வாங்கித் தானே உண்டருளினார்.
17

திருமுறைக் கதைகள்
இதனைக் கண்ணுற்ற உமாதேவியார் ஓடோடி வந்து நஞ்சு உள்ளே போகாதவாறு தடுப்பதற்காகக் கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டார்.
விடம் கீழே இறங்கவில்லை. கண்டத்திலேயே தங்கிவிட்டது. அதனால் சிவபெருமான் நீலகண்டன் என்ற பெயரைப் பெற்றார். அவருடைய நீலகண்டம் அவருடைய தியாகத்தை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இதனை அப்பரடிகள் கறையது கண்டங் கொண்டார்’ என்கின்றார்.
சிவபெருமான் கையிலே வேதத்தை வைத்திருக்கின்றார். வேதமோதி வெண்ணுால் பூண்டு' என்றும் குறிப்பிடுவர். நாம் எல்லாம் அவரைப் பார்த்துத் தினமும் வேதம் ஓத வேண்டும் என்பதற்காகவே அவர் வேதத்தைக் கையில் ஏற்றியுள்ளார். இதனை அப்பர் ‘மறையதுபாடி' என்று குறிப்பிடுகின்றார்.
சிவபெருமான் கையிலே கபாலம் ஏந்தியுள்ளார். அது பிரமனுடைய மணி டையோடு. அதுதான் சிவனுடைய பிட்சாபாத்திரம்.
பிரமதேவருக்கு முன்பு ஐந்து திருமுகங்கள் இருந்தன. பிரமதேவர் தலை எண்ணிப் பார்த்தார். சிவனுக்கும் ஐந்து தலை எனக்கும் ஐந்து தலை. என்னிலும் பார்க்க சிவபெருமான் எதனால் சிறந்தவர்? அவருக்கேன் முதல் இடம்? சிவபெருமான் வைரவப் பெருமானைத் தோற்றுவித்தருளினார். பிரமதேவருடைய தலைகளில் ஒன்றைக் கொய்தார் வைரவப் பெருமான். அந்தக் கபாலம் கையுடன் ஒட்டிக் கொண்டது. இப்பொழுது பிரமதேவர் நான் முகனாகி விட்டார். கையோடொட்டிய கபாலம் கையை விட்டு நீங்க வேண்டுமானால் கபாலம் நிறைய வேண்டும். எதனால் கபாலத்தை நிரப்புவது? ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள ஆணவத் தைப் பிச்சையிட்டால் கபாலம் நிறையும். எல்லா இடங்களிலும் திரிந்து ஆணவத்தைப் பிட்சை ஏற்றும் கபாலம் நிரம்பவில்லை. கடைசியாக மகாவிஷ்ணு இட்ட பிச்சையினாலேதான் கபாலம் நிரம்பியது. இதனை அப்பரடிகள் பிட்சைக் கென்றகந்திரிந்து வாழ்வார்’ என்று குறிப்பிடுகின்றார். இப்பொழுது பாடல் முழுவதையும் பார்ப்போம்:
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார் பிறையது சடைமுடிமேற் பெய்வளையாட னோரும் கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகள்தன் னுள்ளார் இறையவர் பாடலாட லிலங்கு மேற்றளிய னாரே.
18

Page 18
திருமுறைக் கதைகள் شــــــــــ--
8. iš
சிவபெருமானுடைய கையில் கபாலம் ஒனறிருப்பதை நாம் எல்லாரும் அறிவோம். அது எந்த நேரமும் சிரித்த வண்ணமாகவே இருக்குமாம். காரணம் இன்றிச் சிரிப்பு வராதாம். காரணம் இன்றி சிரிப்பு நிகழ்ந்தால் அதனால் ஆபத்தும் நேர்ந்து விடுவதுண்டு. அதுவும் பெண்கள் சிரித்தால் ஆபத்து பெரிதாக வந்து சேர்ந்து விடும். புகையிலை விரித்தால் போச்சு, பெண்கள் சிரித்தால் போச்சு' என்பது நாடோடிப் பழமொழி.
பஞ்சபாண்டவர் பளிங்குமண்டபம் கட்டினர். அதில் குடிபுகுவிழா கோலாகலமாகக் கொண்டாடினர். பளிங்கு என்றால் கண்ணாடி அம்மண்டபம் முழுவதுமே கண்ணாடியாலானது. தூண் நிற்கிறது என்று நடந்தால் அந்த இடத்திலே தூண் நில்லாது. இல்லை என்று கடந்தால் நாமாகப்போய் தூணில் மோதிக் கொள்வோம். தருமரும் திரெளபதியும் மேல்மாடியிலிருந்து கீழே வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கீழே உள்ள நிலம் பச்சைக் கண்ணாடியால் அமைந்தது. பார்வைக்குத் தண்ணிர் நிரம்பிய குளம் போல இருக்கும். துரியோதனன் தூரத்தே வரும்போதே உடை தண்ணிரில் நனைந்துவிடும் என்று உடையைச் சுருக்கிக் கொண்டே மெதுமையாகக் காலை வைத்தான்.
இதனைக் கண்ணுற்றாள் திரெளபதி. துரியோதனன் ஏமாந்து விட்டான் என்பதைக் கண்ணுற்ற திரெளபதி பெரிதாகச் சிரித்து விட்டாள். தன்னை ஏளனம் பண்ணிய சிரிப்பாக துரியோதனன் கருதிக் கொண்டான். திரெளபதியைப் பழிக்குப்பழி வாங்க அவளுடைய துகிலுரிதலுக்குக் காரணமாக இருந்தது இந்தச் சிரிப்புத்தான். பெண்கள் சிரித்தால் போச்சு என்பது எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது.
சிவபெருமானுடைய கையிலுள்ள கபாலம் சிரித்ததற்குக் காரணத்தைப் பார்ப்போம். கபாலத்தின் தோற்றமே எந்த நேரமும் சிரிப்பது போன்றதுதான். கபாலத்தின் பல்லு வெளியே தெரிவது சிரிப்பது போன்றதொரு தோற்றம். எந்த நேரமும் காரணமின்றி சிரிப்பவர்களைப் பார்த்து ‘பல்லைக் காட்டாதே’ என்று கண்டிப்பதுண்டு.
19
 

திருமுறைக் கதைகள்
சிவபெருமானுடைய உடலிலே பாம்பு இருக்கிறது. உமாதேவியார் இறைவனுடைய உடம்பில் பாதியாக இருக்கிறார். சடையிலே கங்கையும் இருக்கிறது. பிறையும் இருக்கிறது.
நாங்கள் கடவுள் சந்நிதியில்தான் வாழுகிறோம். அப்படி வாழ்ந்தும் கடவுளை அடிக்கடி மறந்து விடுகிறோம். மேலே கூறிய பொருட்கள் இறைவனுடன் கூடஇருந்தும் தாம் இறைவனுடன் கூட இருப்பதை மறந்து விடுகின்றன.
ஒருநாள் இறைவரது திருமேனியில் கிடந்த பாம்பு அசைந்தது. அது அசைந்ததைப் பார்த்து உமாதேவியார் பாம்புக்குப் பயந்து கலங்கினார். உமாதேவியாருடைய பயத்தினால் உடல் நடுங்கியதைப் பாம்பு பார்த்தது. உமாதேவியாரை மயில் என்று நினைத்த பாம்பு இது மயிலாயிருக்குமோ என்று ஐயுற்றதாம். பாம்பின் அசைவைக் கண்ட பிறைச்சந்திரனும் ஏங்கியது. மயிலுக்கும் பாம்புக்கும் பகை. மயில் பாம்பைக் கண்டால் கொன்றுவிடும். ஆதலால் உமாதேவியாரை மயில் என்று கண்ட பாம்பு அம்மயிலாகிய உமாதேவியாரைப் பார்த்ததும் பயந்தது.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அமிர்தம் திரண்டு வந்தது. அமிர்தத்தை எப்படியும் முழுமையாகத் தேவரே சாப்பிட்டுவிடவேணி டுமென்று விரும்பினார்கள். கண்ணனிடம் இச்செய்தியைக் கூறினார்கள். கண்ணன் மோகினி உருவம் எடுத்துக் கொண்டார். இரு பகுதியாரையும் கண்ணன் பார்த்தார். திருப்பாற்கடலிலிருந்து இருபொருட்கள் தோன்றின. ஒன்று மோகினி, அடுத்தது அமிர்தம். யார் யாருக்கு ஏதேது வேண்டுமோ அதுவதனை அவரவரே பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
அசுரபுத்தி மோகினியை நாடியது. ஒரு மோகினியை அத்தனை பேரும் எப்படி அனுபவிக்க முடியும்? அசுரர்கள் மோகினி தனக்குத்தனக்கு என்று தனித்தனியே அனுபவிக்க விரும்பினார்கள். அசுரர்கள் தமக்குள் தாமே சண்டையிட்டுக் கொண்டு இருவரைத் தவிர மற்றையோர் அத்தனை பேரும் இறந்தொழிந்தார்கள்.
தேவர்கள் தமது தேவகுணம் மேலிட அமிர்தத்தை நாடினார்கள். கிருஷ்ணபரமாத்மா தேவரை வரிசையாக இருத்தி அமிர்தத்தைப் பங்கீடு செய்து கொண்டிருந்தார். உயிர் தப்பிய இரு அசுரர்களும் தேவர் கூட்டத்துடனேயே சேர்ந்து கொண்டு அமிர்தம் உண்ண விரும்பினார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலே இரு அசுரர்களும் இருந்து கொண்டார்கள்.
20

Page 19
திருமுறைக் கதைகள்
அமிர்தம் படைக்கப்பட்டதும் தேவர்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கிற மந்திரத்தைச் சொன்னார்கள். அசுரர்களுக்கு இப்பழக்கம் இல்லையே. தேவர்கள் தண்ணிரை எடுத்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும்போது அசுரர் இருவரும் மேலுங் கீழுமாக பார்த்து விழித்தார்கள். சூரியனும் சந்திரனும் இவர்களிருவரும் சாப்பிடும் விதத்தில் அசுரர்கள் என்று கண்டு கொண்டார்கள். கிருஷ்ணருக்கு கண்ணைக் காட்டினார்கள். கண்ணன் அமிர்தம் பங்கீடு செய்த சட்டுவத்தால் இருவரது தலைகளையும் கொய்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட அமிர்தம் தொண்டை அளவில் தான் சென்றது. அமிர்தம் சாப்பிட்ட தலைகள் இரண்டும் மேல் எழுந்து ராகுவும் கேதுவுமாக மாறி அடிக்கடி சூரியனையும் சந்திரனையும் மறைத்துக் கொண்டிருந்தன. பிறைச்சந்திரனுக்கு அப்பாம்பைக் கண்ட உடனே பழைய நினைவு தலை எடுத்து நின்றது. ஆகவே பிறையும் பயந்துவிட்டது.
இத்தனைபேரும் தாம் இறைவன் சந்நிதியில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டனர். நாம் எப்பொழுதும் இறைவன் சந்நிதியிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனை மறக்கும்போதுதான் அச்சம் உண்டாகிறது. காமம், கோபம், மோகம், லோபம், மதம், மார்ச்சரியம் ஆகிய தீய குணங்கள் எல்லாம் தலைஎடுத்து விடுகின்றன. இப்போது அப்பரின் தேவாரத்தைப் பார்ப்போம்:
கிடந்தபாம் பருகேகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. இவர்கள் எல்லோரும் தாம் இருக்கும் இடத்தை மறந்து பயப்படுகிறார்களே என்றுதான் வெண்டலை சிரித்தது. வெண்டலை எப்போதும் பல்லைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. அப்பர் சுவாமிகள் தன்னுடைய குறிப்பை இவற்றிலேற்றிச் சொன்னபடியால் அது தற்குறிப்பேற்ற அணியாகிறது.
21

திருமுறைக் கதைகள்
9. ஆதியும் ஈறுமானார்
உலகத்தில் முதன்முதல் தோன்றிய பொருள் இறைவன். ஈறாக உள்ளவரும் அவரே. முன்னிலும் முன்னவனும் பின்னிலும் பின்னவனும் என்பதே மணிவாசகர் கருத்து.
"முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என்று பேசுவார் மணிவாசகர்.
பிருகுமுனிவர் என்றொருவர் இருந்தார். அவர் சிவனைத் தவிர வேறுயாரையும் வணங்காதவர். ஒருமுறை அர்த்தநாரீஸ்வராக விளங்கும் எம்பெருமானை வலம்வந்தார். இடப்பாகமாயிருக்கும் சக்தியை வணங்க மறுத்தார். இருவருக்குமிடையில் வண்டுருக் கொண்டு துளைத்தார். தேவி கவலை கொண்டாள். இறைவரிடம் முறையிட்டாள். தேவி தான் கொடுத்த சக்தியைத் திரும்பவும் பெற்றுக் கொண்டாள். முனிவரால் நடக்க முடியவில்லை. பெருமான் ஊன்றுகோல் அருளினார். அதனைப் பெற்று நடந்தார் முனிவர்.
தேவி இறைவனைப் பிரியாதிருத்தற்கு கேதாரநாதனைக் குறித்து தவம் செய்தாள். தேவியின் தவத்திற்கு இரங்கிய பெருமான் என்றும் இறைவனைப் பிரியாதிருக்கும் நிலையை அருளினார். தேவியின் வழியைப் பின்பற்றியே கணவனை என்றும் விட்டுப் பிரியாதிருக்கும் நிலையைப் பெறுவதற்காகப் பெண்கள் கெளரி நோன்பு நோற்றனர். கெளரி நோன்பு நோற்று எத்தனையோ தாய்மார் பிரிந்திருந்த கணவரைச் சேர்ந்திருக்கின்றனர்.
இமயமலையிலே திருக்கேதாரம் என்னும் தலம் உண்டு. இது ஒரு சிவத்தலம். பாண்டவர்கள் பூசித்த தலம். அங்குள்ள சிவலிங்கம் இரண்டு பேர் நின்றாலும் கட்டிப்பிடிக்க முடியாத பருமனுடையது. பாண்டவர்கள் இவ்வழியாகத்தான் கைலாயம் சென்றார்கள் என்பது ஐதீகம். திருக்கேதாரநாதரைப் பற்றி ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். சம்பந்தருடைய தேவாரப் பதிகங்கள் கேதாரமே என்று முடிவுபெறும். சுந்தரருடைய பாடல்கள் 'திருக்கேதார மெனிரே என்று முடிவுறும் . இங்குதான் சிவபெருமானைக் குறித்து உமாதேவியார் தவமிருந்தார் என்பது வரலாறு.
நீதி என்று கடவுளுக்கு ஒரு பெயருண்டு. மணிவாசகள்
22

Page 20
திருமுறைக் கதைகள்
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழல் பனைமுலை மடந்தை பாதியே பால்கொள் வெண்ணிற்றாய் பங்கயத்து அரனுமாலறியா நீதியே"
என்று குறிப்பிடுகின்றார்.
நீதியால் வாழமாட்டேன் நித்தலுந் தூயேனல்லேன் ஒதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்
என்பது அப்பர் வாக்கு.
சிலர் தாம் சொல்லுவதை உறுதிப்படுத்துவதற்காக "கடவுள் மேலாணை’ என்று கடவுளை முன்வைத்தே சத்தியஞ் செய்வதுண்டு. நெஞ்சம் எப்பொழுதும் அலைந்து திரிவது. அலைந்து திரியும்போது அதற்கு மனம் என்றுபெயர். அலைந்து திரியும் மனம் சிறிது நேரம் ஒடுங்கி நிற்குமானால் அப்போது புத்தி என்று பெயர் பெறுகிறது. ஒடுங்கிய புத்தியில் இறைநினைவு இடைவிடாது உண்டாகுமானால் அதற்கு சித்தம் என்று பெயர். இதனைத் தாயுமானவர் ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான பரதெய்வமே' என்கின்றார்.
இன்னுஞ் சிலர் ‘உன்னாணை’ என்று சத்தியஞ் செய்வதுண்டு. இங்கே உன் என்றதற்குப் பகுதி 'நீ என்பது. நீ என்பதும் கடவுளைக் குறிப்பதாகும். நான் என்ற அகங்காரம் நீ என்று ஆகும்போது ஒருவன் தன்னை அறிந்தவனாகிறான். தன்னை அறிந்தவன் தலைவனை அறிந்தவனாகின்றான என்ற வாக்கியமும் இதனை முன்னிட்டே எழுந்தது.
புண்டரீகன் என்பவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை.
பெற்றார் செல்லம் கொடுத்தபடியினால் தீயகுணங்கள் அத்தனைக்கும் அடிமையானான். அழகிய மனைவி இருந்தும் தாசியின் வீடே கதி என்று வாழ்ந்தான். கையிலுள்ள பணமும் வற்ற வாலிபமிடுக்கும் வற்றியது.
மகனுடைய தீய குணங்களைக் கண்ணுற்ற பெற்றார் மகனோடு வாழ்வதில் பயன் ஏதுமில்லை என்று கருதி காசி யாத்திரை புறப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற மகனும் மனைவியுடன் காசி யாத்திரை புறப்பட்டான். மகனும் மனைவியும் குதிரையில் ஏறிச் சென்றனர். வழியில் மாமன் மாமி நடந்து செல்வதை மனைவி கணவனுக்குக் கூறினாள். கணவனோ அந்தக் கிழங்கள் எக்கேடு கெட்டாயினும் போகட்டும். நீ பேசாமல் வா என்று தடுத்தான்.
23

திருமுறைக் கதைகள்
புண்டரீகன் வழியைத் தவறவிட்டுவிட்டான். அவர்கள் சென்ற வழி ஒரு சத்திரத்தைச் சென்றடைந்தது. சத்திரத்தில் வெளிவிறாந்தையில் உலாவிக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு முனிவருடைய ஆச்சிரமம் இருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் அவலட்சணமான முகங்களையுடைய மூன்று பெண்கள் அந்த ஆச்சிரமத்துள் புகுவதைக் கண்ணாரக் கண்டான்.
நேரம் இருட்டி விட்டது. இந்த நேரத்தில் இப்பெண்களுக்கு ஆச்சிரமத்தில் என்ன வேலை என்று சிந்தித்தான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினான். இரவு முழுவதும் கண்ணோடு கண் மூடவில்லை. அதிகாலை நான்கு மணியிருக்கும். அவலட்சணமான முகத்துடன் புகுந்த பெண்கள் மூவரும் அதிசெளந்தரிய தேவதைகளாக வெளியே செல்வதைக் கண்டான். அக்கணமே அவர்களை நோக்கி ஓடினான். அவர்கள் மூவர் முன்னாலும் சாஷடாங்கமாக விழுந்து வணங்கினான். நீங்கள் யார் அம்மா. உங்களுக்கு இங்கு என்ன வேலை. நீங்கள் வரும்போது அவலட்சண முகத்துடன் வந்தீர்களே. இப்பொழுது அதிசெளந்தரிய தேவதைகளாக மாறிவிட்டீர்கள். உங்களைப் பலமுறை வணங்குகிறேன். எனது சந்தேகங்களைப் போக்கியருள வேண்டும் என்று இரந்து நின்றான்.
மூவரும் தமக்குள் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களுக்குள் பெரியவளாக இருந்தவள் வாய் திறந்து பேசினாள். எனது பெயர் கங்கை. அடுத்தவள் யமுனை, அதற்கடுத்தவள் சரஸ்வதி. தினமும் ஆயிரக்கணக்கானோர் எங்களிடத்தே வந்து ஸ்நானம் செய்கின்றார்கள். அவர்களுடைய பாவங்களையெல்லாம் நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம். அந்தப் பாவங்களால் கோர உருவங்களைப் பெறுகிறோம். தினமும் நாம் ஏற்றுக் கொண்ட பாவங்களை இம்முனிவரது ஆச்சிரமத்தில் வந்து சேவை செய்வதால் அன்றே அவற்றைக் கழுவிக் கொள்கின்றோம்.
இம்முனிவர் யார்? இவர் செய்த விசேட தவம் யாது என்று புண்டரீகன் வினவினான். இம்முனிவரது பெயர் குக்குட முனிவர். அப்படி ஒன்றும் விசேட தவம் செய்தாரில்லை. ஆனால் தன்னைப் பெற்றதாய் தந்தையரையே தெய்வமாகக் கொண்டு அவர்களது சேவையே தனது வாழ்வின் குறிக்கோள் எனக் கொண்டு வாழ்ந்தவர். அதனாலேயே இவ்வளவு தபோவலிமையைப் பெற்றார் என்று மூவரும் கூறினர்.
அம்மையிர் எனது கண்களைத் திறந்து விட்டீர்கள். உங்களுக்கு
24

Page 21
திருமுறைக் கதைகள்
நன்றி என்று கூறி சத்திரத்திற்கு ஓட்டமாக ஓடிச் சென்றான். மனைவியிடம் உற்றதையெல்லாம் உரைத்தான். இருவரும் பெற்றாரைத் தேடிச் சென்றனர். வழியில் வந்து கொண்டிருந்த பெற்றாரைக் குதிரையில் ஏற்றித் தாம் நடந்து சென்றனர். அன்று தொடக்கம் தாய் தந்தையரையே தெய்வமாகப் போற்றினர் இருவரும். தாய் தந்தையருடைய சேவையில் கண்ணனையே மறந்து விட்டான் புண்டரீகன்.
புண்டரீகனுடைய சேவையைப் பார்க்க கண்ணனே நேரில் வந்து விட்டான். பெற்றார் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகன் தன்னைத் தேடி வந்த கண்ணனையே கவனிக்கவில்லை. கண்ணன் குரல் கொடுத்தான். புண்டரீகன் சொன்னான். நீ மாத்திரம் தெய்வம் அல்ல. இரு தெய்வங்களுக்குப் பூசை செய்து கொண்டிருக்கிறேன். அது முடியும்வரை இந்தச் செங்கல்லின் மீது நில்லும் என்று ஒரு செங்கல்லைத் தள்ளிவிட்டான். கண்ணன் புன்முறுவலுடன் செங்கல்லின் மீது ஏறி நின்று கொண்டான்.
பெற்றாருடைய பூசை முடிந்ததும் கண்ணனைப் பார்க்க வந்தான் புண்டரீகன். புண்டரீகனுடைய பக்தியை மெச்சிய கண்ணன் என்னவரம் வேண்டும் என்றான். கண்ணா அடியேனுக்கு அருள் செய்த இந்த இடத்திலேயே நீ அர்ச்சாவதாரமாய் விளங்க வேண்டும் என்றான். காலகதியில் அது பண்டரீபுரம் என வழங்கலாயிற்று.
இக்கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கிய அப்பர் பின்வரும் தேவாரத்தைப் பாடுகின்றார்:
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப் பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை சோதியாய்ச் சுடர்விளக்காய்ச் சுண்ண வெண்ணிறு நாடி ஆதியும் ஈறுமானார் அதிகை வீரட்ட னாரே.
10. தக்கன்தன் வேள்வியைச் சிதைத்தவர்
பிரமதேவருடைய திருக்குமாரன் தட்சாபதி. தக்கன் தவத்தில் சிறந்து தலையாய வரங்கள் பல பெற்றவன். தான் சிவபெரு மானிலும் பெரியவனாக விளங்க வேண்டும். தன்னை எல்லோரும் வீழ்ந்து வணங்க வேண்டும். தனக்கே முதல் மரியாதை இருக்க
2S

திருமுறைக் கதைகள்
வேண்டும் எனப் பெரிதும் விரும்பினான்.
உமாதேவியார் தமக்கு மகளாக வர வேண்டுமெனக் கடுந்தவஞ் செய்தான். பெருமான் அப்பேற்றையுங் கொடுத்தார். உமாதேவியார் சிவனை அடையக் கடுந் தபசு செய்தாள். தேவியின் தவத்திற்கிரங்கிய சிவபெருமான் அவரது தவத்தைப் பரிசோதித்துத் திருமணம் செய்து கொண்டு திருக்கயிலை சென்றுவிட்டார். தக்கனை அறியாமலே திருமணம் நிகழ்ந்துவிட்டது. இது தக்கனுக்கு மனத்தாபத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் மகளும் மருமகனும் தனக்குப் பெரும் மரியாதை செய்வார்கள் என்ற கருத்தில் திருக்கயிலை சென்றார் தக்கப் பிரஜாபதி. திருநந்திதேவர் தக்கனை உள்ளே நுழைவதற்கே மறுத்துவிட்டார். தக்கனுடைய மன எண்ணத்தைப் புரிந்து கொண்டவரான படியால் தக்கனை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. & அதாவது, தக்கன் சென்றதும் மகளும் மருமகனும் எழுந்து வந்து வணங்க வேண்டும். தான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அப்படி நடந்தால் தக்கன்தான் முழுமுதற் கடவுள். இந்த எண்ணத்தை அடிமனதிலே வைத்துக் கொண்டே தக்கன் உமாதேவியரைத் தனது மகளாக வருமாறு கேட்டான். எல்லாம் அறிந்த எம்பெருமான் இவற்றையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டே அவன் கேட்டதையெல்லாம் கொடுத்தார்.
ஒருமுறை பிரமதேவர் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். சிவபெருமானிடம் சென்று யாகத்தில் வந்து அவிப்பாகம் பெற வேண்டுமென்று அழைத்தார். அதற்குச் சிவபெருமான் நான் வரமுடியாது’ எனக்காக நந்தி வருவார் எனக் கூறினார்.
வேள்வி ஆரம்பமானது. தேவர்கள் எல்லோரும் வந்தனர். அவரவர் தகுதிக்கேற்ப ஆசனங்களிடப் பெற்றன. தக்கனும் தனது கூட்டத்தினருடன் வந்தான். அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவன் இருந்தான். கடைசியாக நந்திதேவர் வந்தார். சிவனுடைய இடத்தில் நந்திதேவர் அமர்ந்தார். நந்திதேவருக்கு எல்லாரும் எழுந்து மரியாதை செய்தார்கள்.
தக்கன் இதனை ஆட்சேபித்தான். நேரிலே வராத சிவனுக்கு மரியாதை செய்யக் கூடாது. சுடலையாடிக்கு பிச்சை ஏற்பவர்க்கு இங்கு என்ன வேலை என்று சிவனை நிந்தித்தான் தக்கன். கோபம் அடைந்த நந்திதேவர் சாபம் இட்டார். சிவனை நிந்தித்த இடத்தில் யாகம் நடைபெற்றால் அவர்களது தலை இற்று விழும்.
26

Page 22
திருமுறைக் கதைகள்
அதனால் யாகம் அத்துடன் நிறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் பின் நீண்ட காலமாக யாகம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு முறை தக்கன் தேவர்களைப் பார்த்து ஏன் இப்பொழுது யாகம் செய்யப்படுவதில்லை என்று கேட்டான். தேவர்கள் நந்தி தேவருடைய சாபத்திற்குப் பயந்து எவரும் யாகம் செய்யவில்லை என்று கூறினர்.
உடனே தக்கன் தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும் அது செவ்வனே நிறைவேறினால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றிச் செய்யலாம் என்றும் கூறி யாகம் செய்யத் தலைப்பட்டான். சிவபெருமானுக்கு அவிப்பாகம் கொடுக்கப் போவதில்லை என்றும் கூறினான். சிவபெருமானைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்பு அனுப்பாவிடினும் தந்தையாருடைய யாகத்திற்குத்தான் செல்வேன் என்று உமாதேவியார் யாகத்திற்குச் சென்று மானபங்கம் அடைந்து வந்தார். தக்கன் சிவநிந்தனை செய்தபடியினால் வீரபத்திரரால் யாகம் அழிக்கப்பட்டது. அந்த யாகத்திற்கு உடந்தையாக இருந்த தேவர்கள் அத்தனைபேரும் தகுந்த தண்டனை அடைந்தனர். தக்கனுடைய தலை அறுபட்டு யாக குண்டலத்தில் விழுந்து எரிந்தது. பின்பு ஆட்டுத் தலை ஒன்று வைத்துப் பொருத்தப்பட்டது. சிவனை நினையாது சிவநிந்தனை செய்து வாழ்ந்த தக்கனைப் போன்று நாமும் சிவனை நினையாது வாழ்ந்தால் நமக்கும் அந்த நிலையே ஏற்படும். எமது கடைசியான படுக்கை சுடலையில் விறகின் மேல் படுக்கும் படுக்கையாகும். இதனை அப்பர் முருட்டு மெத்தை என்கின்றார். முருடு என்றால் விறகு. அதாவது சுடுகாட்டு விறகின்மேல் படுக்கு முன்பு இறைவனை நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள் என்பது பொருள். பஞ்சப் புலன்களின் வழியிலே செல்லாமல் இறைவன் வழியிலே நடவுங்கள் என்று அப்பர் கூறுகின்றார். இப்போது தேவாரத்தைப் பார்ப்போம்:
முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம் அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீள் முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.
27

திருமுறைக் கதைகள்
11. கருப்புச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
மனோவதி நகரத்திற்கு வந்தார் பிரமதேவர். பதுமயிடத்தில் அமர்ந்தார். தனது தம்பி மன்மதனை நினைந்தார். மன்மதன் ஓடோடியும் வந்தார். மன்மதன் என்றால் மனத்தினின்று தோன்றியவன் என்பது பொருள். s தம்பி! தேவர்கள் துயர் போக்க நீ விரைந்து சென்று சிவபெருமானுடைய மோனத் தவத்தை நீங்கச் செய். அண்ணா! உனது தம்பி அழிந்தே போகட்டும் என்று நினைக்கிறாயா? உலகில் எத்தனையோ முனிவர்களுடைய தவத்தையே நிலைகுலையச் செய்தவன். ஆனால் சிவபெருமானிடம் அது நடக்குமா? முப்புரங்களைத் தன்குறிப்பால் அழித்தவர். கண்ணைத் திறந்தால் நான் எதிர் நிற்க முடியுமா?
தம்பி! நீ சொல்வதெல்லாம் சரிதான். சிவபெருமானின் மோனத் தவத்தைக் கலைப்பதால் தேவர்கள் எல்லோருடைய துன்பமும் நீங்குமானால் உன்னை அழித்தாயினும் நீ அதையும் செய்து தான் ஆக வேண்டும்.
அண்ணலே! எவ்வளவு கொடியோரானாலும் நம்மிடம் வந்துவிட்டால் உய்யும் வழியைச் சொல்லுவது பெரியோர்க்கழகு. ஆனால் அறிவிற் சிறந்த தங்களை நாடிவந்த என்னிடம் தங்களுக்குச் சிறிதும் கருணை இல்லையா? பங்காளியாகிய என்னைத் திரும்பிவராதபடி அனுப்பிவிட்டு நீங்களே தேவ லோகத்தைச் சமமாக ஆளலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறீர்களா? என்ன! நான் உலகத்தையெல்லாம் மயக்குவேன். என்னைப் பெற்ற தந்தை நாராயணரையும் பிருந்தையிடம் மையல் கொள்ள மயக்கியிருக்கிறேன். திலோத்தமையைக் கண்டு விரும்பும்படி உங்களையே மயக்கியிருக்கிறேன். இந்திரனை மயக்கி அகலிகை மீது ஆசை கொள்ளச் செய்தேன். அருணன் பெண்வடிவம் எடுத்தபோது சூரியனை அந்தப் பெண்மீது ஆசை கொள்ளச்செய்தேன். சந்திரனை தாரையின் பால் காதல் கொள்ளச் செய்து புதன் என்ற புதல்வன் தோன்றச் செய்தேன். பல முனிவர் களின் தவவலிமையை இமைப்பொழுதில் மயக்கி என்வசப் படுத்தினேன்.
"என் கணைக்குத் தப்பியவர்கள் மூவுலகிலும் யாரும் இல்லைத்தான். ஆனாலும் துறவிகளின் தலைவனான

Page 23
திருமுறைக் கதைகள்
சிவபெருமானை எனது கணையால் மயக்க முடியாது. ஏன் முடியாது தெரியுமா? சிவபெருமானின் கையில் நெருப்பு. சிரித்துப் புரமெரித்த அவரது வாயில் நெருப்பு. கண்ணிலும் அக்கினி. ‘அவரது திருமேனி அக்கினி வடிவம். தழலே உருவான சங்கரனை எதிர்த்து உயிருடன் திரும்ப முடியாது. அண்ணா, இந்தக் கரும்பு வில் சிவன் தந்தது. புஷ்பபாணம் அவன் தந்தது. தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதா? ஆகவே, இந்தக் காரியத்தில் மட்டும் ஏவாதீர்கள்” என்று பலவாறாகக் கூறினான் மன்மதன்.
மன்மதனின் நிலை கண்ட பிரமன் சிறிது வருந்தினான். தம்பி! நீ சொன்னவையெல்லாம் உண்மை தான். சிவபெருமானை வெல்ல எவராலும் முடியாது. எனினும் அவரது நல்லருளால் என் காரியம் இனிது முடியும். நீ இப்போது எம்பெருமானை மயக்கச் செய்வதும் அவன் செயலே.
தருக்குற்றுத் தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளுகின்ற தேவருக்கு முன்னே சிவபெருமான் ஒரு யட்ச வடிவங் கொண்டு நின்று, ஒரு துரும்பை வைத்தருளினார். அதனை, வாயு வருணன், இந்திரன் முதலிய அனைவராலும் அசைக்க முடியவில்லை. அதனால் அவன் அருளின்றி துரும்பும் அசையாது. எல்லாம் அவன் செயலே என்பதைக் காட்டியருளினார். ஆதலால் நம்மால் ஒன்று நிகழும் என்று எண்ணுவது நாணத்துக்கு இடமாகும்.
அருவாகவும் உருவாகவும் நின்ற சிவபெருமான் பாவையை ஆட்டுவதுபோல் எல்லா உயிர்களையும் உலகங்களையும் ஆட்டுவிக்கிறான். அப்பரமனுடைய அருளின்றி நம்மால் ஒன்றும் ஆகாது. மன்மதனே! இதனை இன்னும் நீ ஆராயவில்லையா?
எந்த வகையினாலும் ஒருவன் ஒருவர்க்கு ஒரு உதவியைத் தன்னால் முடிந்ததனைத் தானே புரிதல் உத்தமம். சொன்ன பிறகு புரிதல் மத்திமம். சொல்லியும் பன்முறை மறுத்து தாமதித்துப் புரிதல் அதமம்.
மன்மதா! தேவர்களின் நன்மைக்காகத்தான் உன்னைப் போகச் சொல்கிறேன். நீ போய்ச் சிவபெருமானால் உயிரிழந்தால் அது தேவருக்காகச் செய்த பெரிய தியாகம் அல்லவா? துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவர்கள், உதவி செய் என்று வந்தால், அவர்களின் துயரைப் போக்காமல் தன்னுயிர் பெரிது என்று எண்ணியிருப்பது தருமமாகுமா? விருத்திராசுரனை வதைக்கும் பொருட்டு, ததீசி முனிவர் தம் முதுகெலும்பைத் தந்து உயிரிழந்த செய்தியை நீ கேட்டதில்லையா? பாற்கடலில் வடமுகாக்கினி போன்ற விஷம்
29

திருமுறைக் கதைகள்
வந்தபோது நம்மையெல்லாம் காப்பாற்றுதற்காக நாராயணர் அந்த விஷத்தின் எதிரில் கணப்பொழுது நின்று தமது வெண்மையான திருமேனியைக் கருமையாக்கிக் கொண்டதை நீ அறிந்ததில்லையா? சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வருந்திக் கொண்டிருக் கிறோம். இத்துயரைப் போக்கக் குமரக்கடவுள் தோன்றுவார் என்று சிவபெருமான் கூறியிருக்கிறார். குமரக்கடவுள் அவதாரத்திற்காக நீ பஞ்சபாணங்களுடன் சிவபெருமானிடம் போகத்தான் வேண்டும்"என்று பிரமன் மீண்டும் மீண்டும் தூண்டிக் கூறினார்.
மன்மதன் மீண்டும் மீண்டும் மறுத்தான். பிரம்மனுக்கு ஆத்திரம் வந்தது. "மன்மதா நான் சொன்னபடி செய்தால் உயிர் பிழைப்பாய். செய்கிறாயா? சாபம் தரட்டுமா? "உனக்கு எது வேண்டும் சொல்” என்றார்.
மன்மதன் சிந்திததான். பிரம்மனால் அழிவதைவிடச் சிவபெருமானால் அழிந்தாலே உய்வதற்கு மார்க்கம் உண்டு என்ற முடிவுக்கு வந்தான்.
“நல்லது அண்ணா! போய்வருகிறேன். இல்லை.போகிறேன். ஆனால் திரும்பி வரமாட்டேன்” என்று கூறிப் புறப்பட்டான்.
மன்மதன் தன் அரண்மனைக்குச் சென்றான். நன்றாக அலங்காரஞ் செய்து கொண்டான். கரும்பும் அரும்பும் சுரும்புமே அவனது ஆயுதங்கள். தாழம்பூ அவனுக்கு உடை வாள் - புஷ்பங்களில் தேன் உண்டு. புஷ்பங் கட்டுகிறவர்களின் கையில் அந்தத் தேன்பட்டுப் பட்டு நைப்பு ஏற்படும். அந்த நைப்புத் தன்மையை மாற்றச் சாம்பலைத் தொட்டுக் கொள்வார்கள். தாழம்பூவில் ஒருவிதமான மகரந்தச் சாம்பல் இருக்கிறது. அதனால்தான் புஷ்பபாணங்களை விடுகிற மன்மதன் அதனை உடைவாளாக வைத்திருக்கிறான். இந்த ஆயுதங்கள் அகிலாண்டம் முழுவதையும் அடிமைப்படுத்தக் கூடியவை. அவனுக்குக் குடை சந்திரன். சமுத்திரம் நல்ல முழவு தேர் தென்றல். அந்தப் பரிவாரங்களுடன் புறப்பட்டான் மன்மதன்.
அவன் தேவர்களை மயக்கும்போது புஷ்பவில்லில் புஷ்பபாணம் விடுப்பான். மனிதர்களை மயக்கும்போது கரும்புவில்லில் புஷபபாணம் விடுப்பான். அசுரர்களிடம் போகும்போது இரும்புவில்லில் புஷ்பபாணம் விடுப்பான். மன்மதன் புறப்படுவதை ரதி பார்த்தாள். "சுவாமி எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள். 'சிவசிவ நீயும் அபசகுனத்தை உண்டாக்கினாயா? என் அண்ணாவின் பிடிவாதமான உத்தரவுப்படி சிவபெருமான் மீது
30

Page 24
திருமுறைக் கதைகள்
போருக்குப் புறப்படுகிறேன்” என்று மன்மதன் கூறினான். ரதி துணுக்குற்றாள். "சுவாமி சிவபெருமான் மீது போருக்குப் போய் திரும்பி வந்தவர் உண்டா”? தாங்கள் தனித்துப் போக வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன்" என்று புறப்பட்டாள் ரதி.
ரதியும் மன்மதனும் தங்கள் பரிவாரங்களுடன் கயிலை மலைக்குச் சென்றனர். கயிலையைக் கண்டதும் மன்மதன் தேரை விட்டிறங்கினான். தன்னுடன் வந்த பரிவாரங்களை அங்கேயே விட்டுவிட்டு ரதிதேவியை அழைத்துக்கொண்டு வில்லும் அம்புமாய் கயிலைமலைமீது ஏறினான். கரும்புவில்லை வளைத் து மலர்க்கணையைப் பூட்டி அங்கிருந்த பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் விடுத்துக் காம இச்சை உண்டாக்க நினைத்தான். கீழக்கோபுர வாயிலில் இருந்த நந்தியெம்பெருமான் மன்மதனின் எண்ணத்தை அறிந்து ஆத்திரங் கொண்டார். உம்.ம். என்று சினந்து ஊங்காரம் செய்தார். அந்த ஒலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள்மீது விலங்குகள் மீதும் செல்லாமல் ஆகாயத்திலேயே நின்றுவிட்டன. நந்திதேவர் முன் சென்று அவரது காலில் மன்மதன் விழுந்தான்.
காவல்காரரிடமே காதல் தெய்வத்தின் காரியம் இயலவில்லை என்றால் எஜமானனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மன்மதன் "நடுங்கியவாறு நந்தியெம்பெருமானே தேவர்களின் துயர்துடைக்கும் பொருட்டு பிரம்மதேவர் உத்தரவுப்படி சிவபெருமானிடம் வந்திருக்கிறேன்” என்றான். அப்படியானால் மேலக்கோபுர வாயில் வழியாகப் போ” என்றார் நந்தி.
மன்மதன் நந்திதேவரை வணங்கிவிடைபெற்றுக்கொண்டு மேலக்கோபுர வாயிலின் உள்ளே, தூங்குகிற புலியை எழுப்பும் மானைப்போல் சிவபெருமானிடம் சென்றான். நீறுபூத்த நெருப்புப் போல் இருக்கும் இறைவன் தென்திசை நோக்கி மோனத்திருக் கோணத்தில் அமர்ந்திருந்ததைக் கண்ட மன்மதன் நடுங்கினான். அவன் உடல் எல்லாம் வியர்த்தது. கையில் வைத்திருந்த வில் அம்புகளுடன் களைத்துக் கீழே விழுந்தான். ரதிதேவி மன்மதனைத்தன் கரத்தால் தாங்கி ஆறுதல் கூறித் தேற்றினாள். மன்மதன் களைப்பு நீங்கி எழுந்தான். ஈசனைக் கண்டவுடனேயே உயிரை இழந்தவன் போலாகிவிட்டேனே! இன்னுஞ் சிறிது நேரத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் வெந்து அழியப் போகிறேன். உரலில் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்குப் பயந்தால் முடியுமா? விதியை யாராலும் வெல்ல
31

திருமுறைக் கதைகள்
முடியாது. இறைவன் திருவுள்ளம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்” என்று மன்மதன் தனது வில்லை வளைத்து நாணேற்றிக் கண்ணுதற் கடவுளை அணுகிறான்.
சிவபெருமான் மீது குறி வைத்து ஐந்து மலர்க்கணைகளை விடுத்தான் மன்மதன். அந்தக் கணைகள் எம்பெருமான் மீதுபட்டதும் நெற்றிக் கண்ணைச் சிறிதே திறந்து பார்த்தார்.
அவ்வளவுதான் வெல்ல வந்தவன் வெந்து போனான். பெருமானின் பார்வையிலிருந்து எழுந்த தீ மன்மதனின் உடலை எரித்தது. அதனால் உண்டாகிய புகை கயிலைமலை முழுவதையும் சூழ்ந்தது. மன்மதன் சாம்பலாகி விட்டான்.
ரதிதேவி துயர்க்கடலில் ஆழ்ந்தாள். அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் ஆறுபோல் ஓடிற்று. அவள் உடல் வியர்த்தது. ஆவி ஒடுங்கியது, “பிராணபதி, பிராணபதி” என்று கதறிக் கீழே விழுந்தாள். இதனை அப்பர் சுவாமிகள்
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு திருப்பனாகில் எனக்கிட ரில்லையே
என்று கூறியருளினார்.
12. சண்டேசுரர்
சோழநாட்டிலே மண்ணியாற்றங்கரையிலே முருகப்பெருமான் எழுந்தருளிய சிறப்புடையது திருச்சேய்ஞலூர். இந்த ஊரில் அந்தணர்கள் குடும்பம் நெருங்கி இருந்தது. அவர்களுள் செல்வம் மிகுந்தவன் எச்சதத்தன். அவனுடைய அன்பு மனைவி பவித்திரை என்னும் பெயருடையவள். இருவரதும் இல்லறச் சிறப்பினால் விசாரசருமர் என்பவர் பிறந்தார்.
விசாரசருமர் கலைபயில் தெளிவும் கட்டுரைவன்மையும் உடைய வராய் விளங்கினார். அவருடைய நுண்ணுணர்வும் கலையும் அரனார் மலரவும் பற்றிலேயே சூழ்ந்தன. முக் கண்ணர்
32

Page 25
திருமுறைக் கதைகள்
திருவடியன்யிலே முழுகித் திளைத்துக் களித்து நின்றார் அந்தக் கலைவாணர்.
ஒருநாள் அவர் தெருவழியே போகும்போது கன்றையீன்ற பசுவொன்று மேய்ப்போனைக் கொம்பால் முட்டிய காட்சியைக் கண்டார். மேய்ப்போன் அதனைத் தடி கொண்டு தாக்கினான். இதனைக் கண்ட அவர் உள்ளம் திடுக்கிட்டது. சினத்துடன் அவனைத் தடுத்தார்.
“பசுக்கள் எல்லா உயிர்களையும் விட மேம்பட்டவை. அவற்றின் பால் இறைவர் திருமுடியிலே ஆட்டப் பயன் பெறும் . அதனிடமிருந்தே திருநீறு செய்வதற்கேற்ற சாணங்கிடைக்கிறது. அரனார் ஊர்வதும் ஆனேறுதான். மற்றும் இது மக்களுக்கு தன் பாலை ஊட்டும் பண்பை மறந்தார் உளரோ? இனி நீ இதனை மேய்க்க வேண்டாம். யானே மேய்ப்பேன்" என்றார்.
இடையன் இவர் மொழிக்கு மாற்றங் கூற அஞ்சி நீங்கிவிட்டான். அன்று முதல் இவரே குழந்தையைக் காக்கும் அன்னையைப் போலக் கோகிலங்களைக் காக்கத் தொடங்கினார். கோலுங் கயிறுங் கொண்டார். அவற்றைப் புல்லுள்ள புலங்களில் மேய்ப்பார். பால் சுரக்கும் நேரத்தில் அவற்றின் வீட்டிலே கொண்டு விடுவார். மண்ணியாற்றங்கரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் மேய்த்து இருட்டுமுன் சமிதையும் விறகும் தலைமேற் சுமந்து கொண்டு அவற்றை ஒட்டி வருவார். இவ்வாறு நாட்கள் பல கடந்தன. பசுநிரைகள் பாலை மிகவும் அதிகமாகக் கொடுத்தன. வளமும் அடைந்தன. எல்லோரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் கன்றை மறந்தாலும் விசாரசருமரை மறப்பதில்லை. பசுக்கள் அவரருகிற் சென்று பால் பொழியத் தொடங்கின. இவற்றின் அன்பினாலுருகிற அந்தணச் சிறுவர் அப்பாலை வீணாக்காமல் அரனார் வழிபாட்டுக்குப் பயன்படுத்த நினைத்தார். மண்ணியாற்றின் ஒரு மணல் மேட்டிலே ஆத்தி மரத்தின் நிழலிலே, மணலால் லிங்கம் ஒன்றை அமைத்தார். பிறகு மணலிலேயே மதிலும் கோபுரமும் சுற்றுக்கோயிலும் அமைத்தார். அத்திமலர், நல்லதளிர்களை அர்ச்சனைக்காகச் சேர்த்தார்.
புதிய குடங்களை எடுத்து வந்து, பசுக்களினருகிலே சென்று, பசுவொன்றுக்கு ஒரு காம்பாகத் தொட்டுக் குடத்துள் நிறைத்தார். பசுக்கள் இவர் தொடுமுன் பால்சுரந்து மகிழ்வுடன் அளித்தன. அப்பாற் குடங்களைக் கொண்டு வந்து வைத்தார். பழம் பிறப்புணர்ச்சி தூண்ட, உடல் புழகமெழப் பாற்குடங்களை எடுத்து,
33

திருமுறைக் கதைகள்
அன்பினைக் கலந்து இறைவரை ஆட்டினார். இவ்வாறு பல நாட்கள் நடைபெற்றன. ஆனிரைகள் இங்கு நண்பகலிலே இறைவர் வழிபாட்டுக்குப் பாலளித்தாலும் சிறிதும் குறைவின்றி முன்போலவே வீட்டிற்கும் பாலளித்து வந்தன.
இந்த வழிபாட்டின் நிலையை அறியாத அறிவிலி ஒருவன் அவ்வூர் அந்தணர்களுக்கு அறிவித்தான். அந்தணர்கள் எச்சதத்தனை வரவழைத்தனர். அவனும் வந்தான்.
"எச்சதத்தரே! இடையன் அறிவில்லாதவன் என்று கூறி, உங்கள் மகன் சிறுபையன் தான் பசுக்கூட்டத்தை மேய்க்கத் தொடங்கினான். பசுக்களும் நன்றாக மேய்ந்து பால் கொடுத்து வருகின்றன. இஃது உண்மையே எனினும் அவன் செய்யும் திருவிளையாடலை என் என்பது?”
“என்ன செய்துவிட்டான்? கூறுங்கள் கண்டிக்கிறேன். உங்களுக்குச் செய்யும் பிழை எனக்குந்தானே!"
“பசுக்களின் பால் ஆகுதிக்குப் பயன்படும் என்று அறிவீர்கள்! அப்பாலையெல்லாம் மணலிலே கறந்துாற்றுகிறான்.
“என்ன? என்ன?” எச்சதத்தன் நடுங்கினான். "மண்ணியாற்றங்கரையிலே மணலில் இலிங்கம் பிடித்துவைத்து கறந்துாற்றுகிறான்."
அந்தணர்கள் உள்ளம் அக்கினிபோல் கொதித்தது. எச்சதத்தன் வணங்கி, "இதுவரையில் எனக்கிது தெரியாது. ஆகையாற் பெருமணஞ்செய்து பொறுக்க வேண்டும். இனிமேல் நிகழ்ந்தால் என்பிழையாகும்” என்று வேண்டிக் கொண்டான்.
மாலையில் ஆநிரையுடன் பிள்ளையார் வந்தார். அவரிடம் ஏதும் பேசாமல் இருந்தான். மறுநாள் காலையிலே மைந்தர் சென்றபின் தொடர்ந்தான்.
நடுப்பகல் வந்தது. ஆநிரைகள் மண்ணியாற்றங்கரையிலே அடைந்தன. எச்சதத்தன் பிள்ளையாருக்குத் தெரியாமல் ஒரு குரா மரத்திலேறி மறைந்து கொண்டான். பிள்ளையார் ஆற்றிலே முழுகினார். மணற்கோயிலாக்கி மணலில் லிங்கம் செய்து வைத்தார். மலர் கொய்து வந்தார். குடங்களிலே பால் கறந்தார். மற்றும் வேண்டியவற்றையுங் கொண்டு வந்து வைத்துக் கொண்டு வழிபடத்தொடங்கினார்.
ஐம்புலன்களும் ஒன்றி அன்பின் வழியிலே உள்ளம் ததும்பி நின்றது. அன்பு மேன்மேலும் பெருகியது. குடத்திலிருந்து பால்
34

Page 26
திருமுறைக் கதைகள்
வழிகிறதோ, உள்ளத்திலிருந்து அன்பு வழிகிறதோ என எவரும் அறிய முடியாது. சுற்றிலுமிருந்த பொருள்கள் அவர் கண்களுக்கு மறைந்தன. இறைவர் வழிபாட்டிலேயே நிலைத்து நின்றது. அவர் பார்வையில் உலகப் பொருள்கள் மறைந்தன. உண்மைப் பொருள் மட்டும் தெரிந்தது! தம்மையே அறியார் எனலாம்.
எச்சதத்தன் இவ்வழிபாட்டைக் கண்டான். அவனுந் தன்னை மறந்தான. அவன் அகக்கண் மூடியிருந்தது. சினம் ஒன்றே உள்ளத்தை இடங்கொண்டெழுந்தது. குராவிலிருந்து குதித்தான். பிள்ளையாரிடம் ஓடினான். கையிலிருந்த பிரம்பினாலே மைந்தன் முதுகிலே அடித்தான். வைதான். ஆனால் அடியும் வசைமொழியும் அவருடைய உள்ளத்தைச் சிறிதும் தொடவில்லை. எனவே என்ன நடக்கிறதென்பதையே அறியாதவரானார். பெற்ற தந்தையும் பிள்ளையார் செயலின் பெருமையை அப்போதும் அறியனானான். அவன் சினம் மேலும் வளர்ந்தது. அந்தோ இழிசெயலாலே கடமையுணர்விலே நின்ற அவன் காலாலே திருமஞ்சனக்குடப்பாலை இடறினான். தாம் அமைத்துக் கொண்டிருக்கும் வழிபாட்டுப் பொருள்களிலேயே கருத்துான்றி யிருந்த அவருக்கும் பாற்குடத்திற்கேதோ இடையூறு நேர்வது போலப் புலப்பட்டது. பக்கத்திற் கையை வைத்தார். கோல் மழுவாகக் கிடைத்தது. அதையெடுத்தெறிந்தார். சிவத்துரோகம் செய்தவனது இரு தாள்களையும் வெட்டி வீழ்த்தியது. எச்சதத்தன் வீழ்ந்தான். அந்த நிலையையும் அறியாத விசாரசருமர் இடையூறு நீங்கியது என்ற அவ்வளவே கருத்திற் புலப்பட மேலும் வழிபாட்டிலே ஈடுபட்டார்.
அப்போது வானவெளியிலே பேரொளி ஒன்று தோன்றியது.
அதன் நடுவே விடைமேல் எம்பிராட்டியுடன் எம்மிறைவர் எழுந்தருளினார். கண்டார் அந்தணச் சிறுவர். கைகுவித்து விழுந்து வணங்கினார். இறைவர் அவரைக் கைகொடுத்தெடுத்தணைத்து உச்சிமோந்து மகிழ்ந்தார்.
"உன் தந்தையை எமக்காக வீழ்த்திவிட்டாய்! இன்று முதல் நாமே உனக்குத் தந்தை"
இறைவர் அருளிலே முழுகி அணைப்பிலே பயின்ற பிள்ளையார் திருமெய் சிவமயமாய்ப் பேரின்ப ஒளியாய் விளங்கியது. "நம் தொண்டர் தலைவன் நீ.
"நாம் சூடுவனவும் உடுப்பனவும் உண்டகலமும் உனக்கினி
உரியவை யாகும்படி சண்டீசப் பதம் அளித்தோம்" என இறைவர் திருவாய் மலர்ந்தருளினார்.
35

திருமுறைக் கதைகள்
தம் திருமுடியிலிருந்த கொன்றைமாலையை எடுத்துப் பிள்ளையார்க்குத் தம் திருக்கையாலே சூட்டினார் இறைவர். உலகெங்கும் ஒரே ஆரவாரம் ஒரேமலர் மழை! ஒரே களியாட்டம்! சண்டீசர் வாழ்க! சண்டீசர் வாழ்க! என்று எங்கும் பரவிய இனிமையான ஒலி
இதனை அப்பரடிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன் ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தானு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
13. ஆலநீழல் அறமருளிச் செய்த அரனார்
பிரம்ம தேவருக்கு சனகர், சனந்தனர், சநாதனர், சனற்குமாரர் என்று நான்கு புத்திரர்கள். சனகாதி முனிவர்கள் என்று இவர்களைச் சிறப்பித்துச் சொல்வதுண்டு. பிரமபுத்திரர் நால்வரும் வேதங்களைக் கற்றுக் கரைகண்டவர்கள். எனினும் இவர்கள் விரும்பிய சாந்தியைக் கல்வியினால் அடைய முடியவில்லை. பல இடங்களுக்குச் சென்றார்கள். எங்கும் மன அமைதி கிடைக்கவில்லை கடைசியாகக் கயிலைமலையை அடைந்தார்கள். முதல் வாயிலை அடைந்ததும், நந்தி எம்பெருமானை வணங்கி, அவர் அநுமதியுடன் சிவசந்நிதியுட் சென்றனர். பிரம்மன் முதலியோர் காணாத ஞானநாயகரை சனகாதியர் நால்வருங் கண்டனர்.
மிகவும் பெரிய ஒருவரிடம் எதையாவது சொல்வதற்கென்று போவோம். ஆனால் அந்தப் பெரியவரைக் கண்டதும், எதைச் சொல்லப் போனோமோ, அதைச் சொல்லமுடியாமல் மொழிதடு மாறும் . முதன்முதல் ஒருவர் தனது ஞானகுருவைச் சந்திக்கும்போதும் இத்தகையதொரு நிலை ஏற்படுகிறது. இதை கொண்டேதான், இவர்தான் எனது குருவாக உள்ளவர் என்பதைச் சிஷயன் உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றான்.
பரமேசுவரரைக் கண்டதும் சனகாதிமுனிவர்களுக்கு மொழிகுழறியதாம். மயிர்க்கூச்சம் ஏற்பட்டதாம். தாரைதாரையாகக்
36

Page 27
திருமுறைக் கதைகள்
கண்ணிர் விட்டார்களாம். அனலிடைப்பட்ட மெழுகுபோல் அவர்கள் உள்ளம் குழைந்து விட்டதாம். சரீரம் துள்ளுகிறதாம். ஹரஹர என்று எம்பெருமானைத் "தொழுவானோர்க்கரிய மருந்தே போற்றி. ஏனோர்க்கெளிய இறைவா போற்றி” என்று துதித்தனர்.
சுவாமிக்குக் கருணை பிறந்தது. “குழந்தைகளே வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றுமோகனக் குரலில் கேட்டார். "பெருமானே கார்த்திகை மாதம், பிரயாணிகள் கப்பலில் செல்கிறார்கள். அமாவாசையும் நிகழ்கிறது. நடுநிசி, புயல் வீசத் தொடங்குகிறது. அப்போது கப்பலில் உள்ளவர்கள் எப்படித் தவிப்பரோ, அப்படி அமைதியின்றித் தவிக்கிறது எங்கள் மனம். “அருட்பெருங்கடலே! வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள் எல்லாவற்றையும் நாங்கள் படிக்கப் படிக்க எங்களுக்கு அதிகமாகச் சந்தேகம் எழுகின்றதேயன்றிச் சாந்தி கிடைக்கவில்லை. எங்கள் மயக்கத்தைப் போக்கி மனம் அமைதியடையும் வழிகாட்ட வேண்டும்" என்று பிரம்மபுத்திரர் நால்வரும் தொழுது வேண்டினர். பரமேஸ்வரர் புன்சிரிப்புச் சிரித்தார். நந்தியெம் பெருமானை அழைத்து, "யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.
சனகாதி முனிவர்கட்குச் சிவாகமங்களின் நுட்பங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்ற முப்பதங்களையும் கூறினார் சுவாமி. "ஐயனே! எங்கள் மனம் ஒடுங்க ஞானபாதம் போதிக்க வேண்டும்” என்று சனகாதி முனிவர்கள் வேண்டினர். "குழந்தைகளே! அதை வாக்கினால் போதிக்க முடியாது. இப்படிச் சும்மா இருப்பதே அதுவாகும்" என்று தம் திருமார்பில் திருவிரலால் அமைத்த சின்முத்திரையைத் தாங்கி யோகத்தில் அமர்ந்து மெளனநிலையைக் காட்டியருளினார் தட்சிணாமூர்த்தி.
நான்கு விரல்கள் ஒரு பக்கமும் கட்டைவிரல் மட்டும் தனித்து ஒரு புறமும் நிற்கின்றது. சில்லறைகளுடன் சேராமல் ஒதுங்கிக் கொள்ளும் அந்த விரல்தான் பதி. ஒள்முகி உடனாகி, வேறாகி நிற்பவர் இறைவர். ஆள்காட்டி விரல் ஆன்மா. நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றும் முறையே ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைக் குறிக்கும். இம்மலங்களினின்று உயிர் நீங்கி, பசுவாகிய ஆன்மா பதியுடன் ஒன்றுபட வேண்டும். இதைச் சுட்டிக்காட்டுவது சின்முத்திரை. அது சிவனும் சீவனும் ஒன்றுபட்ட இடம்.
சின்முத்திரை தாங்கி நீலகண்டன், ஆலமரத்தடியில் அமர்ந்தார்.
37

திருமுறைக் கதைகள்
அங்கு ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. எப்போதும் குருநாதர் வயதானவராக இருப்பார். இங்கோ குருநாதர் இளமை உள்ளவர். சீடர்களான சனகாதி முனிவர்கள் வயதானவர்கள். குருவின் வியாக்கியானமெல்லாம் மொழி ஒழிந்த மோனத்திலேயே நடந்தது இன்னோர் ஆச்சரியம்.
"சிவஞானமானது நூல் அறிவினால் கிடைப்பதன்று. அனுபவ அறிவால் மட்டுமே கிடைப்பது” என்று சின்முத்திரை உணர்த்தியது. அதனை உள்ளத்தில் பதித்துக் கொண்ட சனகாதி முனிவர்கள் ஒடுங்கிச் சித்திரப் பதுமைபோல் செயலற்றுச் சிவஞானத்தில் இருந்தனர். ஞானநிலையைக் காட்ட சிவபெருமான் மோனநிலையில் இருந்த ஒரு கணப்பொழுதில் பிரமன் முதலான தேவர்களுக் கெல்லாம் அநேக யுகங்கள் ஓடின.
சிவமூர்த்தியின் தவநிலையால் விண்ணில் அமரர்களும்
மண்ணில் மனிதர்களும் காமஇச்சை அறவே நீங்கி முற்றுந் துறந்த முனிவர்போல் இருந்தனர். சிருஷ்டி நடைபெறவில்லை. இதனை அப்பர் சுவாமிகள்
துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்
தூமதியும் பாம்பு முடையார் போலும் மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும் அறங்காட்டி அந்தணர் ஆல நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள் புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
என்று கூறுகின்றார்.
14. திருமால் வாமன வடிவம் எடுத்த கதை
பிரகலாதனின் மகன் விரோசனன். விரோசனனின் மகன் பலிச்சக்கரவர்த்தியாவான். பலிமுற்பிறவியில் சிவன்கோயில் எலியாக வாழ்ந்தான். அப்பொழுது கோயில் விளக்கு அணையாமல்
38

Page 28
திருமுறைக் கதைகள் திரியைத் தூண்டிக் கொண்டிருந்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் "மறுபிறப்பில் மூவுலகையும் ஆள்வாய்” என்று எலிக்கு வரம் அருளினார்.
அத்தகைய பலிச்சக்கரவர்த்தி மூவுலகையும் ஆளவிரும்பினான். எனவே எதிர்க்க முடியாத காரணத்தால் வானவரும் பிறரும் ஓடி ஒளிந்தனர். அதனால் மூவுலகையும் எளிதாகக் கைப்பற்றிப் பலிச்சக்கரவர்த்தி அரசாண்டான்.
வானவர்களின் தாயான அதிதி என்பவள் தன்மக்கள் பயந்து ஒடிய நிலைகண்டு வருந்தினாள். தன் கணவர் கச்சியப்ப முனிவரிடம் சென்று முறையிட்டாள்.
கச்சியப்ப முனிவர், தம்மால் ஒன்றும் செய்ய முடியாது. "திருமாலை வழிபட்டால் அவர் உனக்கு அருள்புரிவார். நோன்பிருந்து வழிபாடு செய்” என்று வழி கூறினார்.
அதிதி திருமாலை நோக்கி நோன்பு இருந்தாள். நோன்பின் முடிவில் திருமால் காட்சி கொடுத்தார். "உன்துன்பத்தை நான் அறிவேன். பலிச் சக்கரவர்த்தி சிவபெருமான் வரம்பெற்ற காரணத்தால் மூவுலகையும் ஆளுகின்றான். அவனுக்கு ஆணவம் தோன்றும்பொழுது, நான் அவன் ஆணவத்தை அடக்குவேன். அப்பொழுது உன் மைந்தர்களுக்கு அருள் செய்கின்றேன்” என்றும் "அதற்காக உன் வயிற்றில் பிறப்பேன்" என்றும் திருமால் கூறினார். பிறகு திருமால் அதிதியின் வயிற்றில் மகனாக வந்து பிறந்தான். அவர் மூன்று அடி உயரத்திற்கு மேல் வளரவில்லை. குட்டை வடிவமாக இருந்ததனால்தான் வாமன வடிவம் என்றனர். வாமன வடிவம் எடுத்த திருமால் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். மூவுலக ஆட்சி நிலைக்கும் பொருட்டுப் பலிச்சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தான். அப்பொழுது அவனுக்கு ஆணவம் தோன்றியது. "யார் எதைக் கேட்டாலும் கொடுப்பேன்" என்று கூறிக் கொடுத்தும் வந்தான்.
வாமன வடிவம் எடுத்த திருமால், பலிச்சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க இதுவே தக்க சமயம் என்று கருதினார். உடனே பலிச்சக்கரவர்த்தியின் யாகசாலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வாமனர் வரவைக் கண்ட பலிச்சக்கரவர்த்தியும் மற்றவரும் வணங்கி வரவேற்று உபசரித்தனர். ஆசனம் அளித்து அமரச் செய்தனர். அப்பொழுது பலிச்சக்கரவர்த்தி வாமணரைப் பார்த்துப் பணிவுடன் "தங்களுக்கு என்ன வேண்டும்? கூறுங்கள் தருகிறேன்"
39

திருமுறைக் கதைகள்
என்று கூறினான்.
உடனே வாமனர் "யான் பிரமச்சாரி. எனவே யான் வாழ்வதற்கு மூன்றடி இடம் தந்தால் போதும்” என்று கூறினார். பலிச்சக்கரவர்த்தி அங்ங்னமே தருவதாக ஒப்புக்கொண்டான்.
அப்பொழுது குலகுருவாகிய சுக்கிரர், பலிச்சக்கரவர்த்தியைத் தனியாக அழைத்தார். "வாமனவடிவில் வந்திருப்பது திருமால். உன்னை அழித்துத் தேவர்களுக்கு நன்மை செய்ய வந்துள்ளார். எனவே நீ மூன்றடி இடம்தானம் கொடுக்காதே" என்று கூறினார். “யான் சொன்ன சொல் தவறமாட்டேன். திருமாலுக்குத் தானம் கொடுத்தால் அஃது எனக்குப் பெருமையாகும். மேலும் என்குலம் மேன்மை அடையும்" என்றான் பலிச்சக்கரவர்த்தி.
பலிச்சக்கரவர்த்தி தன் மனைவியைக் கெண்டியில் நீர் கொண்டுவரச் சொன்னான். நீரை வார்த்துத் தானம் கொடுக்கத் தொடங்கினான். அப்பொழுது சுக்கிரர் வண்டுருவில் கெண்டியின் மூக்கை அடைத்துக் கொண்டார். அதனை உணர்ந்த வாமனர் தர்ப்பைப் புல்லை எடுத்து கெண்டியின் மூக்கில் குத்தினார். அது வண்டு உருவில் இருந்த சுக்கிரர் கண்ணைக் குத்தியது. உடனே அலறிக் கொண்டு அவர் வெளியே வந்தார். பிறகு பலிச்சக்கரவர்த்தி நீர்வார்த்துத் தானம் கொடுத்தான்.
வாமனர் தானம் பெற்ற பிறகு தம் குட்டை வடிவம் மாறி நெட்டை வடிவம் ஆனார். ஒரடியால் பூமியை அளந்தார். மறு அடியால் ஆகாயத்தை அளந்தார். "இன்னும் ஓர் அடிக்கு இடம் எங்கே?” என்று பலிச்சக்கரவர்த்தியைக் கேட்டார்.
அதனைக் கண்ட பலிச்சக்கரவர்த்தி ஆணவம் அடங்கினான். கைகூப்பி வணங்கினான். “தலைவரே! நான் வாக்குத் தவறமாட்டேன். இதோ என்னுடைய தலை இருக்கிறது. மூன்றாவது அடியை என் தலையிலே வைத்து அளக்க வேண்டுகிறேன். அதனால் யான் பெருமை அடைவேன்" என்று கூறித் தலைவணங்கி உட்கார்ந்தான்.
பலிச்சக்கரவர்த்தியே வாக்கைக் காப்பாற்றும் நீ வானவருக்கும் கிட்டாத பதவியை அடைவாய். அடுத்த யுகத்தில் இந்திர பதவியையும் அடைவாய். அதுவரை பாதாளத்தை ஆண்டு வருக. நீ எப்பொழுதும் என்னைப் பார்த்த வண்ணமாக இருப்பாய். அதனால் உனக்கு ஒரு தீங்கும் வராது" என்று கூறி மூன்றாவது அடியை அவன் தலைமீது வைத்தார். உடனே பலிச்சக்கரவர்த்தி பாதாளத்தை அடைந்தான். இதனை அப்பர் சுவாமிகள்,
40

Page 29
திருமுறைக் கதைகள்
விண்ணினை விரும்ப வைத்தார்
வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார்
பக்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட
மாலினுக்கருளும் வைத்தா கண்ணினை நெற்றி வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே
என்று அருளுகின்றார்.
15 கண்ணப்பக் கண்டுகந்தார்
திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடு வளம் பெருகிய பொத்தப்பிநாடு. அதன் தலைநகர் உடுப்பூர். அங்கு வாழ்வோர் வேடர்கள். இவ்வேடர்கள் அச்சமும் அருளும் அறியாதவர்கள். கள்ளும் வெந்த ஊனும் உண்பவர்கள். இவர்களுடைய தலைவன் பெயர் நாகன். மனைவி பெயர் தத்தை.
இவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. இக்குறை தீர முருகனை வேண்டினர். முருகன் அருளால் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். குழந்தை வளர்ந்து புலிக்குட்டிகளுடனும் சிங்கக் குட்டிகளுடனும் விளையாடியது. குழந்தைப் பருவம் நீங்கி வில் முதலான படைக்கலை பயிலும் பருவம் வந்தது. ஒரு நல்ல நாளில் முதியோர் வந்து திண்ணனாருக்கு விற்பயிற்சியை ஆரம்பித்து வைத்தனர்.
அவருக்குப் பதினாறாண்டுகள் நிரம்பின. நாகன் முதுமையினால் வேட்டைக்குத் தலைமை தாங்குவதைத் திண்ணனாருக்கு அளித்தான். நாகன் தேவராட்டியை அழைத்து வனதேவதை களுக்குப் பூசை நடத்துமாறு கூறினான். திண்ணனார் வேட்டைக் கோலம் பூண்டார். தந்தையை வணங்கி முதற் சுரிகையையும் உடைதோலையும் பெற்றுக்கொண்டார். வேட்டைக் கோலங்கொண்ட திண்ணனார் வில்லை வலம் வந்து வணங்கி இருதாள் மடித்துத்
41

திருமுறைக் கதைகள் தொழுது கையில் எடுத்தார். வேடர்கள் வந்து கடல்போலச் சூழ்ந்தனர். வில்லேந்திய மேகம் போல வேடர் சூழ வேட்டைக்குப் புறப்பட்டார்.
வேடர்கள் மிருகங்களை வதைக்கத் தொடங்கினர். அப்போது யானைகளும் அஞ்சும்படி காட்டுப்பன்றி ஒன்று மேகம் போன்ற தோற்றமும் இடிபோன்ற உறுமலும் கனல் பிதிருங் கண்களுங் கொண்டு வலைகளை அறுத்துக் கொண்டு ஓடியது. வேடர்கள் அதைப் பின்பற்ற முடியாமல் திகைத்தனர். அதுகண்ட திண்ணனார் அம்பேந்திய வில்லுடன் பின்தொடர்ந்தார். அவரைப் பிரியாத நாணன், காடன் என்னும் வேடர்களும் பின்னோடினர். இவர்கள் விடும் அம்புகளையும் நாய்களையும் ஏமாற்றிவிட்டு அப்பன்றி காற்றெனக் கடிது ஓடியது. அது களைத் து ஒரு மலையடிவாரத்தில் நின்றது. திண்ணனார் சுரிகையை உருவிக் குத்திக் கொன்றார்.
நாணனும் காடனும் அவரைப் பார்த்து "நீண்ட தூரம் ஓடிவந்ததனாற் களைத்தோம். பசியும் வந்தது. இந்தப் பன்றியை நெருப்பிற் காய்ச்சித் தின்று தண்ணிர் குடித்துச் செல்வோம்” என்று கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு இணங்கினார்.
"தண்ணீர் எங்கே?" "இதோ இந்தப் பெரிய தேக்கமரத்தைக் கடந்து சென்றால் அந்தக் குன்றுக்கருகில் பொன் முகலி என்னும் ஆறு ஓடுகிறது. நல்ல குளிர்ந்த தண்ணிர்.” இது நாணன் விடை.
திண்ணனார் மகிழ்ந்தார். "நல்லது இதை எடுத்துக் கொண்டு வாருங்கள். அங்கே செல்வோம்” என்றார்.
"பார்ப்போம் வா, நல்ல காட்சி! இந்த மலையிலே குடுமித்தேவர் இருப்பார். கும்பிடலாம்."
"என்னவருமோ? இம்மலையைப் பார்த்துக்கொண்டு செல்லச் செல்ல என்மேலுள்ள பாரங் கழிகிறதே! ஆசைமேலும் மேலும் பொங்குகிறது. உள்ளத்திலும் வேறோர் ஆசைவிழுகின்றது! குடுமித் தேவர் எங்கே எங்கேயிருக்கிறார்? உம். போ! போ!!”
திண்ணனார் விரைந்து சென்றார். அவர்களும் பின்னே ஓடினர். பொன் முகலியை அடைந்தனர். அந்த ஆற்றின் அலைகளால் முத்தும், அகிற்கட்டையும், சந்தனக்கட்டையும் ஒதுக்கப் பெற்றிருக்கும் ஒரு பொழிலிலே பன்றியை வைத்து நின்றார்கள். “காடா நீ தீயை உண்டாக்கி இதனைக் காய்ச்சு! இம்மலையை
42

Page 30
திருமுறைக் கதைகள்
நாங்களிருவரும் சென்று பார்த்து விட்டு வருகிறோம்" என்று திண்ணனார் நாணனுடன் சென்றார். நதியைக் கடந்து கரைகடந்த மகிழ்ச்சியுடன் மலைச்சாரலை அடைந்தனர்.
குடுமித் தேவரைக் காணுமுன்னே அவரது திருவருள் நோக்கம் பெற்றார். பிறப்பின் பழவினைத் தொடர்பை அகன்றார். எம்பெருமானைத் தழுவினார். முத்தமிட்டார். நீண்ட நேரம் பெருமூச்சு விட்டுநின்றார். சுவாமி இக்கொடிய மிருகங்கள் மத்தியிலே தனியாக இருக்கிறாரே என்று பச்சாதாபப்பட்டார். இந்தப் பச்சிலையும் பூவுங் கொண்டு நீரும் வார்த்து இப்படிச் செய்தவர் யாரோ? என்று வியந்தார்.
நாணன் சொன்னான் "நான் அறிவேன். உன்தந்தையோடு ஒருநாள் வேட்டையாடும்போது வந்திருக்கிறேன். ஒரு பார்ப்பனர் இவ்வாறு செய்வதைப் பார்த்தேன்."
"இவர் தனியாயிருக்கிறாரே! இறைச்சியும் இவருக்குக் கொடுப்பவரில்லை. இவரைப் பிரியவும் முடியாது! இறைச்சியும் கொண்டு வரவேண்டும் என்செய்வேன்?"
இறைவரை விட்டுச் செல்வார்! திரும்புவார்! தழுவுவார்! அன்புடன் நோக்கிநிற்பார். தாங்கள் பசியுடன் இருப்பதைப் பொறுக்கவும் முடியவும் இல்லை என்று கூறி அரிதிற் பிரிந்தார். அவருக்கு எல்லாவாயிலும் அடைத்து விட்டன. இறையன்பு மாத்திரம் அவரைத் தன்வசப்படுத்திக் கொண்டது. பொன் முகலியைக் கடந்து பன்றியைவிட்டு வந்த மரநிழலை அடைந்தார். காடன் எதிரே வந்தான். தொழுதான்.
"தீக்கடைந்து வைத்தேன். பன்றியை உங்கள் அடையாளத்தின் படி பார்த்துக் கொள்ளலாம். நாம் திரும்பிச் செல்ல வேண்டாமா?" திண்ணனார் ஒன்றும் பேசவில்லை. அங்கு நடந்தவை யாவற்றையும் நாணன் கூறினான். திண்ணனார் அவர்கள் முகத்தைக் கூடப் பார்க்காமலே இறைச்சியைப் பதப்படுத்தினார். தாமே ருசிபார்த்து வேண்டாதவற்றைக் கழித்தார். இவரது தெய்வப் பைத்தியத்தைக் கண்ணுற்ற இருவரும் அவ்விடத்தை விட்டகன்றனர். இவர் தொன்னையிலே இறைச்சியை நிரப்பினார். வாயிலே நீர்ை நிரப்பிக் கொண்டார். ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் தொன்னையை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று குடுமித் தேவரை அடைந்தார்.
அரனார் மேலிருக்கும் மலரைச் செருப்பணிந்த காலால் அகற்றினார். வாயிலிருந்த நீரை - அன்பை - உமிழ்ந்தார். தம்
43

திருமுறைக் கதைகள்
திருமுடிமேல் வைத்த மலரை இறைவர் முடிமேல் வைத்தார். கையில் வைத்திருந்த தொன்னையை எதிரே வைத்தார். இவை நல்ல இறைச்சிகள் உண்ணுக” என்றார்.
மாலையும் ஆயிற்று. இரவு வந்தது. இரவிலே விலங்குகள் வருமென்றஞ்சிய திண்ணனார் கையிலே வில்லுந் தாங்கி கரியமலை எனக் காளத்தியப்பர் அருகிலே விலகாமல் நின்றார். இருள் புலர்ந்தது. பறவைகளின் ஒலி கேட்டது. உறங்காமலே காத்து நின்ற வீரர் "அரனார்க்கு அமுதாக்க இறைச்சியைக் கொண்டுவருவேன்” என முடிவு செய்து வேட்டையாடப் புறப்பட்டார். சிவகோசரியார் வழக்கம்போல பூசை செய்ய வந்தார். இறைச்சியும் எலும்பும் சிந்தியிருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அந்த இடத்தைத் துப்புரவு செய்து பூசை செய்தார். வேட்டையாடிய திண்ணனார் நல்ல இறைச்சிகளைத் தெரிவு செய்து தேனிற் தோய்த்துக் கொண்டு வந்து பெருமானுக்கு ஊட்டினார். இவ்வாறு ஐந்து நாட்கள் கழிந்தன. ஆறாவதுநாள் வைகறையில் வழிபட வந்த மறையவர் கண்ணிர் வாரக் கைகுவித்து நின்று "இவ்வாறு ஊனையும் என்பையுஞ் சிந்தி அசுத்தப்படுத்துவோரை யான் அறியேன். இதைத் தடுக்க வேண்டும்” என்று வேண்டினார். பெருமான் அன்றிரவு சிவகோசரியாரின் கனவிலே தோன்றி “நீ வழிபட்டுச் சென்ற பின் வந்து வழிபடும் வேடனை வேடன் என்று எண்ணாதே? அவனுடைய உருவம் நம்மிடம் வைத்த அன்பின் உருவம்! அவன் அறிவு நம்மை அறியும் அறிவு! அவனுடைய செயல் நமக்கினிய செயல். அவன் செயலை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். ஒளித்திருந்து காண்பாயாக!” என்று அருளினார்
அடுத்தநாள்க காலை திண்ணனார் இறைச்சியுடன் வந்தார். பெருமானின் வலக்கண்ணில் உதிரம் பெருகுவதைக் கண்டார். துடிதுடித்தார். மூலிகைச் சாறு தேடிவந்து பிழிந்தார். இரத்தம் நிற்கவில்லை. ஊனுக்கு ஊன் என்பதை உணர்ந்தார். தனது கண்ணை இடந்து அப்பினார். உதிரம் நின்றது. ஆனந்தக் கூத்து ஆடினார். சிறிது நேரத்தில் அடுத்த கண்ணிலிருந்தும் உதிரம் வழிந்தது. அடுத்த கண்ணையும் இடந்து அப்ப கண்ணிலே அம்பை ஊன்றினார். எம் பெருமான் இதற்கு மேலும் சோதிக்க விரும்பவில்லை. "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப! என்று கூறி கையைப் பிடித்தார்.
இறைவர் இடக்கண்ணின் இரத்தமும் நின்றது. கண்ணப்பரின் வலக்கண்ணும் ஒளிபெற்றது! கண்ணப்பர் கையைப் பற்றிய
44

Page 31
திருமுறைக் கதைகள்
காளத்தியப்பர் என் வலப்பக்கத்திலே எப்போதும் நிற்க” என்று அருளினார். இதனை அப்பர் சுவாமிகள்,
விண்ணப்ப விச்சாநார் களேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணுமாகிப் பண்ணப்பன் பக்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்
கழிப்பாலை மேய கபா லப்பனார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதுநாமே
என்று அருளிச் செய்துள்ளார்.
16. கணம்புல்லன் கருத்துகந்தார்
வடவெள்ளாற்றின் தென்கரையில் இருக்கு வேளுர் என்று ஒரு தலம் உண்டு. சோலையில் உள்ள பலாப் பழங்கள் வெடித்து அதனின்றும் வழியும் தேன் பாய்ந்து வயல்விளையும். அவ்வூரிலே தலைவராயப் வாழ்ந்தார் கணம் புல்லநாயனார். நிறைந்த செல்வமுடையாராய் நற்குணசீலராய் அவர் விளங்கினார். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என்று விரும்பி அன்பு செய்வார். திருக்கோயிலின் உள்ளே ஒளியுற விளக்கெரித்தலே நன்று என்றுணர்ந்து, திருக்கோயிலில் திருவிளக்கிட்டு நாவார நம்பனைப் பாடும் அன்பு செய்வார்.
இறைவன் அவரைச் சோதித்துப் புடமிட விரும்பினான் போலும். அவருக்கு வறுமை வந்து எய்தியது. அருணகிரியார் "மிடியென்றொரு பாவி” எனக் வறுமையைக் கூறுவார். கணம் புல்லநாயனார் தேவாதி தேவராய அம்பலவாணர் எழுந்தருளியுள்ள தில்லையம்பதி சென்றார். ஆடலரசை அன்புடன் பலகாலும் பணிந்து தில்லையிலேயே தங்கியிருந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்றுத் திருப்புலிச்சரம் என்ற கோயிலில்
45

திருமுறைக் கதைகள்
விளக்கெரித்து வந்தார்.
விற்பதற்கு வேறொரு பொருளும் இல்லாதொழிந்தது. அயலாரிடம்போய் இரப்பதற்கு அஞ்சினார். உடல் உழைப்பினால் அரிந்த கணம்புல்லைக் கொண்டுவந்து விற்று அப்பொருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு புரிந்தார். ஆகையாற் கணம்புல்லர் என்று பெயரும் பெற்றார்.
இவ்வாறு தொண்டு புரியும் நாளில் அரிந்து கொண்டு வரும் கணம்புல் எங்கும் விலையாகாமல் இடர்ப்பட்டார். அதனால் அவர் அப்புல்லையே திரித்து விளக்காக எரித்தார். இவ்வாறு தொடர்ந்து செய்தபோது அப்புல்லுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கணம்புல்ல நாயனார் அன்புருகும் சிந்தையுடன் என்புருக அவ்விளக்கில் தலையை வைத்து எரித்தார். உடனே சிவபெருமான் திருவருள் புரிந்து அவருக்குச் சிவலோகம் போவதற்கு அருள் புரிந்தார். கணம் புல் ல நாயனார் திருக்கயிலையில் இறைவரை அடைந்தார். இதனை அப்பர் சுவாமிகள்,
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப்படு கின்ற பேதை மீர்கள் நிணம்புல்கு சூலத்தார் நீலகண்டர்
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார் கழிப்பாலை மேய கபா லப்பனார் மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே
என்று அருளிச் செய்தார்.
17. நரியாரும் பெரியாரும்
ஒரு நரி, அது பல நாள் பட்டினி. பல இடங்களில் உணவுக்காக அலைந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பெரியதொரு இறைச்சித்துண்டம் கிடைத்தது. அதை வாயிலே கெளவிக்கொண்டு நரி தன் இருப்பிடம் நோக்கி விரைந்தது.
46

Page 32
திருமுறைக் கதைகள்
வழியிலே நீர் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாய்க்கால். அதைக் கடந்து செல்லுகையில், மீன்கள் தண்ணில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி மிளிர்ந்தன
நல்ல வரிகளையுடைய வரால் மீன்கள் நீலநிறமாய்ப் பளபளவென்று மின்னின. தண்ணிர் வேகமாய்ச் சுருட்டி இழுத்தது. நரிக்கு நிலைக்க முடியாத ஆழம். ஆயினும் அது நீந்திக் கொண்டே சென்றது. வரால் மீன்கள் அதன் வாலிலும் காலிலும் பட்டு துடித்துத் துள்ளின. நீரை அடித்துத் தள்ளின. மீனைக் கண்டதும் நரிக்கு வாயிலே நீர் ஊறியது.
மீன்சுவையோ தேன்சுவையோ அல்லவா? அதோ ஒரு வரால் நீரை எதிர்த்து எவ்வளவு ஒய்யாரமாய் நிற்கிறது. ஒரே பாய்ச்சல், வாயைத் திறந்து கொண்டு நரி பாய்ந்தது. மீன் நழுவிவிட்டது. வாயிலிருந்து வழுகிவிழுந்த இறைச்சிக் கண்டமும் நீரிலே முழுகிவிட்டது. ஏமாந்து போன நரி வெறும் வாயைக் குதட்டிப் பற்களை மென்றது. மீன்மீதிருந்த ஆசை தன்வாயிலிருந்த இறைச்சித் துண்டையும் மறக்கச் செய்தது. மீனைக் கண்டதும் ஊனை மறந்தது. பேராசையே பெருநட்டமானது.
வாய்க்கு எட்டினது வயிற்றுக்கு எட்டவில்லை. இந்த நரிக்கு ஏன் இவ்வளவு அறிவு இல்லாமற் போய்விட்டது? என்று நாம் நரியைப் பார்த்துச் சிரிக்கிறோம். ஆனால் நம்முடைய அறிவுதான் எந்த நிலையிலிருக்கிறது?
பெறுதற்கரிய மனிதப் பிறவியை எடுத்தோம். அதன் குறிக்கோளைத் தெரிந்து கொள்ளாது கெடுத்தோம். சிவஞானம் பெறுதற்கேற்ற வாய்ப்புகளுடன் பிறந்தோம். அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்த மறந்தோம். சிவகதி அடைவதற்கானவற்றை முயலாமல் அவகதி அடைதற்கான அல்லல்களையெல்லாம் விரும்பித் தேடிக் கொண்டோம்.
பரம சுகமாவது பொறுப்பரிய துயரமாய் அழுத்தக் கண்டோம். மனதைச் செம்மைப்படுத்தி அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய யானைகளை அடக்கும் வலியை இழந்தோம். அவற்றின் கால்களில் நாம் கட்டுண்டு. அவை நாலாபக்கமும் இழுக்க நாம் நடுவிற் கிடந்து நலிவுறுகிறோம். அருளிற் திளைக்கப் பிறந்த நாம் மருளிற் புதைந்து மதிகுலைகிறோம். இவ்வுலக வாழ்க்கையே நீரோடை. இவ்வுலகிடை நிலைத்திராத சிற்றின்பங்களே வரால் மீன்கள். உயிர்தான் நரி. நல்லறிவைக் கொண்டு பேரின்பம் பெறுவதற்கேதுவாகிய இப்பிறவியே
47

திருமுறைக் கதைகள்
இறைச்சித்துண்டு. இந்த முறையே பார்க்கும்பொழுது, நாம் நரியை விடவும் மிகமிகக் கேடுகெட்ட நிலையில் அல்லவா இருக்கிறோம்? நரியைப் பார்த்துச் சிரித்தோமே! இப்பொழுது நம்மையே பார்த்து அழுகிறோம் அல்லவா!
நமது சிந்தையிலே எழுகின்ற மயக்கத்தை அறுப்பதற்குச்
சிவபெருமான் திருவருள் வேண்டும். அவனுக்கு நாம் அன்பு செலுத்தி அவன் அருள் பெற்று ஞானம் அடைவதை விட்டு உலக காரியங்களிலே நமது புத்தியைச் செலுத்திக் காலத்தைக் கழிக்கிறோம். கால பாசத்திற்காளாகிக் கழிகிறோம். உறுதியளிக்கும் பொருள்களை இறுகத் தழுவித் திகைக்கிறோம். நல்லறிவையும் கழுவிக் கரைக்கிறோம். உலக பாசம் என்னும் வரால் மீன்கள் நம்மைச் சுற்றி வளைத்து மயக்கி மருட்டி மறைந்து விடுகின்றன. காலம் என்னும் நீரோடை, இறைச்சி என்னும் நமது மானிடப் பிறப்பினால் வந்த காயத்தை நம்மைவிட்டுக் கழற்றி இழுத்துக் கழிந்து விடுகின்றது. ‘வாய்ந்தது நந்தமக்கிதோர் பிறவி! மதித்திடுமின்!” என்ற அறிவுரையை நாம் மதியாது வாழ்ந்ததால் மயங்கித் தவிக்கிறோம்.
வரால் மீனுக்கு ஆசைவையாது நரி ஒடையைக் கடந்திருந்தால், இறைச்சியைக் கொண்டு தன் பசியை ஆற்றியிருக்கும். அதுபோல் உலக மயக்கத்திலே நமது மனதைச் சிக்கவிடாது சிவன் திருவருளே வேண்டிச் செம்மையுள் நிற்போமாகில், நமது ஆன்ம வேட்கையாகிய பசி தீர்ந்து, என்றும் அழியாத வீட்டின்ப வாழ்வினை நாம் எளிதில் அடையலாம். இல்லாவிடில் பூத்தாரும் பொய்கையிதுவேயெனக் கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதையராகிப் பேதுறுவது திண்ணம். இதை, இந்த நரியின் கதை காட்டுகிறது. பேதை நரியே ஒரு மேதைக் குருவாகி நமக்கு நல்ல பாடம் கற்பிக்கிறது. இதை அப்பர் அடிகள் சுட்டிக் காட்டுகிறார்:
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார் வரிவரா லுகளும் தெண்ணிர்க் கழனிசூழ் பழன வேலி அரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிகை வீரட்ட னாரே.
48

Page 33
திருமுறைக் கதைகள்
18. சிவம் கலந்த சிலந்தி
புறாவின் பொருட்டுத் துலை புகுந்து தியாகம் புரிந்த சிபியின் வழிவந்த சோழர்களுக்கு உரிமையாகிய சோழவளநாட்டிலே, காவிரி நதிக்கரையிலே சந்திர தீர்த்தத்தின் அருகில் ஒரு சோலை உண்டு. அப்பூங்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் விளங்கும் சிவலிங்கத்தை ஒரு வெள்ளானை தவ உணர்வுடன் தும்பிக் கையில் தண்ணிர் முகந்து ஆட்டிப் பூங்கொத்துக்களை எடுத்துச் சாத்தி வணங்கி வழிபாடு செய்யும், அதனால் அது திருஆனைக்கா என்று பெயர் பெற்றது.
அங்கு அறிவுடைய ஒரு சிலந்தி மரத்தின் சருகு இறைவன் மீது உதிரா வண்ணம் அன்புடன் தன் வாய்நூலால் பந்தரிட்டது. இறைவன் மீது இவ்வாறு வாய்நூலால் பந்தரிடுவது அநுசிதம் என்று கருதிய யானை அதனை அழித்துவிட்டு வழக்கம்போல் பூசித்துவிட்டுச் சென்றது. சிலந்தி மிகவும் அன்புடன் மீண்டும் பந்தரிட்டது. மறுநாள் மறுபடியும் யானை அழித்தது.
இவ்வண்ணம் பலமுறை நிகழ்ந்தது. இது கண்ட சிலந்தி சினமுற்றது. "இறைவனுடைய திருப்பந்தரை அழித்துச் சிவப்பணிக்கு இடர்புரியும் இந்த யானையைக் கொல்ல வேண்டும்" என்று கருதியது. நூலால் பந்தரிட்டு அதில் ஒருபுறம் மறைந் திருந்தது. பூசிக்க வந்த யானை அதை அழிக்கும்போது சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தது. அதன் விஷவேகத்தாலும் கடியினால் ஏற்பட்ட வேதனையினாலும் துன்புற்ற யானை மண்மிசை வீழ்ந்து புரண்டது. தும்பிக்கையைப் பலமுறை பூமியில் மோதியது. அதனால் தும்பிக்கையுள் சிக்கிய சிலந்தி மாண்டது. சிலந்தி விஷத்தால் யானையும் மாண்டது.
இறைவன் அருட்காட்சி தந்து யானைக்கும் சிலந்திக்கும் திருவருள் புரிந்தார். யானை சிவபதம் உற்றது. இறைவனுக்குப் பந்தரிடும் பணியில் அதிவிருப்பமுடைய சிலந்தி சோழர் குலத்தில் மன்னனாகப் பிறந்து மேலும் கோயிற் பணி புரியுமாறு இறைவன் திருவருள் புரிந்தனர்.
திருக்கயிலையில் சில கணத்தவருள் மாலியவான், புட்பதந்தன் என்ற இருவர் தமக்குள் சிவத்தொண்டில் தாம்தாமே சிறந்தவர் என்று கருதி மாறுபட்டனர். ஒருவரையொருவர் அது காரணமாகச் சினந்து மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தான்.
49

திருமுறைக் கதைகள்
புட்பதந்தன் மாலியாவனைச் சிலந்தியாகுமாறு சபித்தான். இருவரும் இறைவன் ஆணையின்படி இத்திருத்தலத்திலே யானையும் சிலந்தியுமாகப் பிறந்து சிவபிரானுடைய திருத்தொண்டிலேயே ஈடுபட்டுப் பழம்பிறப்பின் பகை காரணமாக இப்பிறப்பிலும் மாறுபட்டுப் பகைத்து மாண்டு, முடிவில் வீடு பேறு பெற்றனர். முதலில் யானையைக் கொல்லச் சிலந்தியே முயன்றதனால், அதற்கு மீண்டும் ஒரு பிறப்பு வந்தது. அப்பிறப்பும் மேலானதாக எய்தியது.
வாய்நூலால் பந்தரிட்ட புண்ணியத்திற்கு மன்னனாகப் பிறந்து உலகம் முழுவதும் காக்கும் பேறு சிலந்திக்கு உண்டாகியது என்றால் ஆலயப் பணியின் பெருமையை இதனால் நன்கு உணர்ந்து கொள்ளலாம். நூலால் பந்தரிட சிவபுண்ணியம் அரச பதவியைத் தருமாயின், கல்லால் ஆலயம் எழுப்பிய தருமசீலர்களுக்கு எத்துணைப் பெரிய பதவி கிடைக்கும்.?
சுபதேவன் என்ற சோழ மன்னன் கமலவதி என்ற மனைவியுடன் சோழநாட்டை அரசு புரிந்தான். அவன் மகப்பேறு இன்மை குறித்து வருந்தினான். தில்லையம்பதி சென்று அம்பலவாணரை வேண்டித் தவம் புரிந்தான். சிவபெருமான் திருவருள் செய்தபடி சிலந்தி வந்து கமலவதியின் வயிற்றில் கருவடைந்தது.
கரு வளர்ந்து குழந்தை உதிக்கும் பருவம் வந்தது. சோதிட வல்லுநர் "இன்னும் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை உதிக்குமாயின் இம்மூவுலகும் ஆளக்கூடியதாக இக் குழந்தை இருக்கும் என்று கூறினர். அது கேட்ட அரச மாதேவி மகன் ஒரு நாழிகை கழித்து பிறப்பதற்கு வழி யாது என்று சிந்தித்தாள். தன் தோழிகளுடன் ஆய்ந்தாள். கால் மேலாகவும், தலை கீழாகவும் தன்னை அமைக்குமாறு கூறினாள். அவ்வண்ணமே அவளைத் தலை கீழாகத் தூக்கிக் கட்டினார்கள். காலம் உணர்ந்தார் கூறிய நேரம் வந்தவுடன் கட்டினை நீக்கி மகவைப் பெற்றெடுத்தாள். இதனால் குழந்தை கண் சிவந்து பிறந்தது.
தாய், "என் மகன் செங்கணான்” என்று கூறித் தன்குழந்தையை அணைத்தாள். ஆவிபிரிந்தாள். தன் உயிர்க்கு இறுதி பயக்கும் என்று தெரிந்து, மகன் சிறப்பை முன்னிட்டு அளக்கமுடியாத வேதனையைத் தாங்கிப் பிள்ளையைப் பெற்று உயிர் துறந்தாள் என்னில், தாயன்பு எத்தனை உயர்ந்தது?
தாயைப் பிரிந்த சேயைச் சுபதேவன் இனிது வளர்த்தான். கோச்செங்கண்ணர் வேதாகமங்களையும் வில்வித்தைகளையும்
50

Page 34
திருமுறைக் கதைகள்
கற்றுணர்ந்தார். உரியகாலத்தில் மகனுக்கு மகுடம் புனைந்து சுபதேவன் கானகம் புகுந்து தவம் செய்து சிவபதம் அடைந்தான். கோச்செங்கட்சோழர் உலகத்தை ஒரு நெறி நிறுத்தி
அரசாள்வாராயினார். அவர் முற்பிறப்பின் உணர்வு பெற்றார். சிவபெருமானுக்குக் காதலோடு ஆலயம் பல கட்ட எண்ணினார். திருவானைக்காவில் தாம் முதலில் அருள்பெற்ற காரணத்தால் அங்கு வெண்ணாவலடியில் வாழும் செழுநீர்த் திரளாகிய சிவமூர்த்திக்கு அழகிய ஆலயம் கட்டி முடித்தார். முற்பிறப்பில் ஆனை செய்த இடரை நினைந்து ஆனை நுழையாதபடி வாயில் வைத்து அமைத்தார். ஐந்து பூதத்தலங்களில் ஒன்றாகிய இந்த சேத்திரம் கருவறைச் சிறுவாயிலுடன் அமைந்துள்ளது இன்றும் காணப்பெறும்.
மந்திரிகளை ஏவிச் சோழநாட்டில் ஆங்காங்கு சிவாலயங்கள் பல புதுக்கினார். அக்கோயில் தோறும் அமுது படைக்கும் திருவிழாக் களுக்கு நிபந்தங்களும் அமைத் தார். கோச்செங்கட்சோழர் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களும், திருமாலுக்கு மூன்று கோயில்களும் எழுப்பியதாகத் தெரிகிறது. கோச் செங்கட் சோழர் முடிவில் திருத்தில்லை சென்று அம்பலத்தாடும் ஆடலரசனை ஆறுகாலங்களிலும் வழிபட்டு மகிழ்ந்தார். அங்கு இறைவனைப் பூசிக்கும் அந்தணர்களுக்கும் மாளிகைகள் பல புதுக்கித் தந்தார்.
இவருடைய பெருமையை அடியில் வரும் அப்பர் பெருமான் தேவாரம் நன்கு விளக்குகிறது.
சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்த போதே கோச்செங்கணானுமாகக் கலந்தநீர் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீர்ட்ட னாரே.
S1


Page 35
இந்து சமயப் டே
தரிசனம்
அர்ச்சனை மாலை என்னை எனக்கறிவித்த எங்கள் குருநாதர் திருமுறைக்கதைகள் முத்தான தொண்டர் புதிய சைவ வினாவிடை தங்கம்மா நான்மணிமாலை சிவயோக சுவாமிகளின் அருள்ெ
ஒலியிழைநாடாக்கள் சமயவாழ்க்கை சைவத்தின் பெருமை

ரவை வெளியீடுகள்
- ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்
- ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் - ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் - கவிஞர் வி. கந்தவனம் - கவிஞர் வி. கந்தவனம் . கவிஞர் வி. கந்தவனம்
மாழிகள்
- ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்