கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்காப்பியர் காலம்

Page 1
്ട്. T
ി പ്ര

Tuff OD

Page 2

தொல்காப்பியர் காலம்
கவிஞர் : தமிழோவியன், M.A.
விற்பஃன உரிமை !
Lu / if ß äsa) u u dio
59, பிராட்வே சென்னே -1.

Page 3
முதல் பதிப்பு: அக்டோபர் 1983,
உரிமை ஆசிரியருக்கு.
விலை 37 காசுகள்
தமிழருவிப் பதிப்பகம்,
 ெச ன் இன - 1.
பாரி அச்சகம், சென்னே-1.

தொல்காப்பியர் காலம்
- O -
தொல்காப்பியம் தமிழின் தலே மரபாக மட்டுமன்று முழுமரபாகவும் நம் முன்னே நிற்கின்றது. அதைச் சுற்றி வட்டமிடும் கருத்துக்களெல்லாம் திட்டம் இல் லாமல் சட்டம் இல்லாமல் கலந்த மேகம்போல் காட்சி யளிக்கின்றன. உரையாசிரியர் பலரும், நூலாசிரியர் சிலரும் அதன்மேல் வைத்த புகழோ சொல்லித் திர முடியாதது. தொல்காப்பியம் எண்ணுன்கு கலேகளே யும் எடுத்துச் சொல்லும் நூல்போல் மொழிக்கும், இலக்கியத்திற்கும், இலக்கணம் கூறுவதோடன்றி நிலம், சமூகம், மக்கள் வாழ்வு முதலியவற்றை விளக்கிச் சொல்வதும், உடல், உயிர், காதல், காமம் முதலியவற்றை ஆராய்வதும் அதன் சிறப்பை மிகுதிப் படுத்திக் காட்டுகின்றது. தொல்காப்பியர் சுடறும் சுவையும், மெய்ப்பாடும் இலக்கியத்தின் உயிர் போன் றன. அகமும் புறமும் வாழ்க்கையில் கண்டு இலக்கி யத்தில் வடித்த இரு பகுதிகள். தினையும், துறையும் அகத்தையும் புறத்தையும் அனைத்து வந்து வாழ் வோடு பினத்துக் காட்டும் உறுப்புக்கள். உவமை முதலிய அமைப்புகளும் இலக்கியக் கலேத்திறனேக் காட்டுவன. திணைக்கும் துறைக்கும் அடிப்படையான முதல், கரு உரி என்பன வாழ்க்கையினின்றும் நாடகம் பிறந்த கதையையும், இலக்கியம் முளேத்த கதையை பும் காட்டுவன. தொல்காப்பியத்தைக் கரை என்ருல் சங்க இலக்கியத்தைக் குளம் எனலாம். கரையின்றிக் குளம் இல்லை.

Page 4
தொல்காப்பியத்தைக் காணும் பொழுதெல்லாம் நம் கண் முன்னே வந்து நிற்பது எழுத்தும் சொல்லும் அன்று. பரந்து கிடக்கும் பொருளதிகாரம் மட்டுந் தான். பொருளதிகாரக் கோப்பினைத் தொட்டுத் தழுவவரும் எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும், பதினெண் கீழ்க்கணக்கும் தொல்காப்பிய மரபுத் தாயின் வயிற்றில் பிறந்த மகளிர் எனலாம். முருகையும், கலியையும், பரியையும் ஆரும் நூற்ருண்டிற்கு அப்பாற் போட்டாலும், பதினெண் கீழ்க்கணக்கில் பத்துக்கு மேற்பட்டவற்றை எட்டாம் நூற்றண்டிற்கு எடுத்துச் சென்ருலும், தொல்காப்பியம் அத்தனையையும் தன் அகம்புற இலக்கணத்தில் அடக்கிக் கொண்டு ஆட்சி செய்கிறது. -
இதுவுமன்றி காப்பியம் தன் வரையறையாலும், கட்டுக் கோப்பாலும், சொற்பொருள் அமைதியாலும், நயம் நவில் அடையாலும் மொழிக்கும், இலக்கியத் திற்கும் வேண்டிய நுணுக்கங்களே இயைபுறத் தருவ தாலும் தனக்குரிய தன்னிகரில்லாத் தனிப் பெருமை யைப் பெற்று ஓங்கி நிற்கின்றது. இது தொகைநூலா? விரிநூலா? தொகைவிரி நூலா ? என்று வினு எழும் போது நம்முடைய ஆய்வுக் கண்களுக்கு ஒளி கிடைக் * IT Inճն தடுமாறுகின்ருேம்.
இந்தத் தொல்காப்பிய நிலத்திலிருந்து பிறந்து வளர்ந்து செழித்த பயிர்களே அன்ருட வாழ்வாக மலர்ந்து அரிய பெரிய குறிக்கோளேக் கொண்டு இன்பச் சொற்களை நம் நெஞ்சத்தில் பூட்டி இனிய நுண்மையும் திட்பமும் வாய்ந்த மறக்காச் சொல்

3
லோவியங்களை நம் கற்பனைக் கண்களுக்குக் கூட்டி வரும் சங்க இலக்கியங்கள் ஆகும். தொல்காப்பிய நிலமில்லாமல் சங்க இலக்கியப் பயிர்கள் செ ழித்திருக்க է Աքե եւ 1 T3յ! -
தொல்காப்பியத்திற்கும், சங்க இலக்கியங்களுக்கும் ஆய்வரசர் 'வையாபுரி பிள்ளை' எழுதிய ஆய்வுக ளெல்லாம் தமிழர் உள்ளத்தில் மருட்சியை உண்டாக்கி புதிராக மலர்கின்றன. அன்ஞரின் முரண்பட்ட பல ஆய்வுகளில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. சிலம்பு 8- ناچی நூற்றுண்டுக்குப் பின் தோன் றியது.
2. தொல்காப்பியர் காலம் கி. பி. 5-ஆம் நூற் ருண்ேடு.
3. தமிழ் இலக்கிய வடிவம் பெற்றது சங்க இலக் கியக் காலத்தில்தான்.
4. சங்க இலக்கியப் புலவர்கள் கி. பி. 23= قلالي நூற்ருண்டுக்குப் பிற்பட்டவர்கள்.
5. தமிழ் ஒழுங்கான அமைப்பாகச் சீர்திருந்தி யது கி. மு. 2-ஆம் நூற்றண்டிற்குப் பிறகுதான்.
6. சங்க இலக்கியமாக இருந்த இயற்றமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் பிரிந்து காவிய மங்கையாகக் கனிந்து, அணிபல பூண்டு வருவது வடமொழி ஆடவன் வந்து அவளே மனந்த பிறகுதான்.
7. சங்க இலக்கியத்தின் மூலம் வடமொழி நாடகமே.

Page 5
4.
8. தமிழ்ச் சொற்கள் பலபல வடமொழி மூலம் கொண்டிருப்பதால் வடமொழிக்கும் தமிழுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை நான் உணர்கிறேன்.
9. கழகம், பழம் போன்ற சொற்களும் கலா, பல போன்ற வடமொழி மூலத்தைக் கொண்டவை.
இன்னுேரன்ன ஆராய்ச்சிகளால் அவர் உள்ளம் வடமொழிப் பாசத்தாலும் தமிழ்மொழிப் பற்றுக் கோடாலும் இணைந்துவர முடியாத ஊசல் குண்டுபோல் இயங்கிக் கிடப்பதைக் கானலாம்.
நாம் இங்குக் காண்பது எம் முறையில் தொல்காப் பியம் சங்க இலக்கியங்களுக்கு மரபு வகுத்துக் கொடுத் தது என்பதே. தொல்காப்பிய மரத்தைச் சுற்றி சங்க இலக்கியக் கொடி பின்னிப் படர்ந்தது. இது இப் போதை ஆய்வு படர்ந்த கொடியில் புகுந்து நுழைந் தது மரம் என்பது அவருடைய ஆராய்ச்சி.
பேராசிரியர் சொல்லும் காரனங்கள் ஆழமான வைதாம். ஆணுல் அதனுல் எழும் ஐயங்களும், விபரி தங்களும் L fLلات ل.
தொல்காப்பியரின் பிறர் புகுந்தியற்ருத் தான்புனை வனப்பை விளக்கும் மெய்ப்பாட்டியலில் உள்ள கருத் துக்கள் நான்காம் நூற்ருண்டில் வாழ்ந்த வாத்ஸா யினுரின் காமசூத்திரத்தை ஒட்டி இருக்கின்றன. அதனுல் தொல்காப்பியம் 5-ஆம் நூற்ருண்டிற்குத் தூக்கிப் போடலாம் என்பது அவர் கருத்து. இந்தக் கருத்தை நாம் ஏற்றுக்கொள்வோமானுல் சங்க இலக் கியத் தமிழருக்குக் காதல் தெரியாது, களவு தெரியாது, தெரியாது, திருமணம் தெரியாது, வாழ்வு

每、
தெரியாது என்று ஆவதுடன், புலவர்களுக்கோ இந்த மய்ப்பாடுகளெல்லாம் உணர்ந்து பாடத் தெரியாதோ
ன்ற கேள்வியும் கிளம்புகிறது.
தலைவிமாட்டு நிகழும் மெய்ப்பாடுகளெல்லாம் விளங்க சங்கப் புலவர் இன் கவிதை பற்பல எழுதி மக்கு அழியாச் செல்வங்களாக விளங்கச் செய்தனர்.
"பெரும்புகழுக் குற்றநின் பிறைநுதல் பொறிவிப்ர்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென" னவரும் அகநானூற்றுப் பாட்டில் பொறிநுதல் பர்த்தல் எனும் மெய்ப்பாடும்,
**அகமலி மபுவகையளாகி முகனிகுத்து
ஒய்யென இறைஞ்சி யோனோ"
ஆறும் நெடுந்தொகைப் பாட்டில் சிதைவு பிறர்க் ன்மை எனும் மெய்ப்பாடும்,
"சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் தெற்றென இlஇயரோ ஐய மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் னெயிறே" க் குறுந்தொகை வரிகளில் நகுநய மறைத்தல் என் ம் மெய்ப்பாடும் வருதலேக் கானலாம்.
உலகில் ம னி த வாழ்விற்கு அடிப்படையான உண ர்ச்சி, கலே, இலக்கியம், பண்பு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் காணலாம். இந்த ஒற்றுமையைக் கண்டு ஒரு நாட்டினர் மற்ருெரு நாட்டினரைப் பார்த்து 'காபி' அடித்தனர் என்ருே, ஒரு மொழியிலுள்ள நூல் வேருெரு மொழியி லுள்ள நூலைத் தழுவியது என்ருே கூறுவோமானுல்

Page 6
ஷேக்ஸ்பியரைப் பார்த்து புறநானூற்று ஆசிரியர் உலகத்தை நாடக மேடையாகவும், அதில் வாழ்ந்து ஒடும் மக்களைக் கூத்தராகவும் உவமித்து எழுதிஞர் என்றும் கூறிவிடலாம். எனவே ஒப்புமை ஆராய்ச்சி பால் காலத்தை வரையறுப்பது தப்புக் கணக்காக
முடியும்.
நெருங்கிப் பினேந்த தொடர்பினுல் வடமொழியி லுள்ள பரத நாட்டிய சாஸ்திரம், காமசூத்திரம் போன்ற நூல்களை மொழிபெயர்த்து எழுதிய மொழி பெயர்ப்பு ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார் என்ற கருத்துப்படி வைத்துக் கொண்டு ஆராயும்போது பல சிக்கல்கள் விளேவதைக் காணலாம்.
'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும் என்மனுர் புலவர்"
எனக் கூறுவதால் தொல்காப்பியர் சங்க இலக்கியப் பாடல்களான அகவற் பாக்களே ஏன் பாடலுக்கு ஏற்ற வையாகக் கொள்ளவில்லே என வினு ஏற்படுகிறது. சங்க இலக்கியங்கள் அவருக்குக் கிடைக்காமல் போய் விட்டனவா? இல்லையே! அவைகளில் சில 3; 4-ஆம் நூற்றண்டிலேயே தொகுக்கப்பட்டன என ஆய்வு ஆசிரியர் எழுதுகிருரே? கிடைத்தாலும் சங்க இலக் கியப் பாடல்கள் குப்பையென ஒதுக்கிவிட்டு இனியாகி லும் கலியும், பரிபாடலும் எழுதுங்கள் என ஆசிரியர் கருத்துப்படி 7-ஆம் நூற்ருண்டுக் கலியும், பரிபாடலும் தோன்ற சூத்திரம் வகுத்தாாா தொல்காப்பியர்?

இல்லையே! பரிபாடலில் தோன்றும் இலக்கிய மரபு தொல்காப்பியத்தை அடியோடு ஒதுக்கி தனிவழி வகுத் துச் செல்லுவதைக் காண்கிருேம். தொல்காப்பியப் பொருட்பால் மரபுகள் சங்க இலக்கியத்துடன் ஒத்து வருவதை உரையாசிரியர் பலராலும் காட்டும் சான்ருல் உணருவதால் சங்க இலக்கியத்திற்கே சொந்த இலக் கனம் தொல்காப்பியம் என்பதை உணரலாம். சங்க இலக்கியத்து ஓங்கி நிற்கும் அகவற்பாக்களைப் பாடல் சான்ற புலனெறி வழக்கத்திற்கு உரியதாக்காமல் கலி யையும் பரிபாடலையும் ஆக்கியது எதனுலோ என்ருல் அவ்விருவகை பாடல்களும் அவர் காலத்துக்கு முன்பே இருந்தன என்பதைக் குறிக்கத்தான். இதனை "எத் துணையோ பரிபாடலும்' எனும் இறையனூர் கனவியல் உரை; நம்பத்தக்கது அன்று எனக் கூறுவர். ஆணுல் உட்பொருளே மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதுடன், இலக்கிய ஆராய்ச் சியின் மூலமாகவும் ஓசைமிக்க வடிவக் கட்டுப்பாடு குறைந்த இசைப்பாடல்களும், வரிப்பாடல்களும் இலக். கியத்தின் முதல் தோற்றமாய் இருந்ததென அறிகி ருேம். மேலும் "என்மனுர் புலவர்' என்று இச்சூத் திரம் சொல்வதால் இது தொல்காப்பியருக்கு முன் னைக்கு முன்னேப் பழம் புலவர் சொன்ன கருத்தாகும்; அல்லது ஒ த் த காலத்தவராகவும் இருக்கலாம் ஏனெனில் தொகுப்பு ஆசிரியராகவும் தொல்காப்பியர் இருப்பதால்,
இனி, தொல்காப்பியர் தம்நூலில் குறிக்கும் பழைய நூல்களாகப் பலவற்றைக் கூறுகிருர்,
அவைகளுள் காப்பியங்களுள் சில,

Page 7
8.
1. தொன்மை யென்னும் வனப்பமைந்த உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுட்களாகிய காப்பியங் கள்.
2. தோலென்னும் வனப்பமைந்த காப்பிங்கள்.
3. புதிய கதையை அமைத்து இயற்றும் புதுக் காப்பியங்கள்.
4. ஞனநமன பரலவழள என்ற மெய்களால் இற்ற செய்யுட்களேயுடைய காப்பியங்கள்.
5. சேரி மொழியாற் புலனென்னும் வனப்பு
அமைந்த நாடகக் காப்பியங்கள்.
உரைநடையுள் சில,
" பாட்டிடை வைத்த குறிப்பினுறும்
பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்மர பில்லாப் போய்ம் மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப."
இவற்றேடு இறையனூர் களவியல் உரை கூறும் இடைச் சங்க 'பரிபாடலும்' முது நாரை, முது குருகு, களரியா விரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலேயகவல், பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்களும் தெளிவில்லா ஓர் இலக் கியக் காலத்தை மங்கல் கண்ணுடி காட்டும் காட்சி போல் நமக்குக் காட்டுகிறது. அக்காலம் ஒரு காலம் என்று சொல்வதை விடப் பல வகையான இலக்கியக் காலம் எனலாம். தொல்காப்பியருக்கு முன்பு உரை
நடைக்காலம், இசைப்பாட்டுக் காலம், நாடகக் காலம்,

காவியக் காலம் எனப் பல காலப்பிரிவுகள் இருந்திருத் தல் வேண்டும். இல்ஃலயேல் 'முந்து நூல் கண்டு' என்று அவர் குறிப்பிடும் நூல்கள் எப்போது தோன்றி இருந்திருத்தல் வேண்டும் என்று விளங்காமல் போகிறது.
தொல்காப்பியத்தை கி.பி. 5-ஆம் நூற்ருண்டென்று தமிழில் இலக்கியம் தோன்றியது கிறிஸ்த்துவப் பிறப் பில் என்று புதிய ஆராய்ச்சி செய்தால், சங்க கால இலக்கியங்களோடு, நாடகக் காவியங்களும் உரை நடைகளும் தோன்றி இருக்கலாம் என்று சொன்னுல் எட்டுத்தொகை போன்றவைகளேக் கூட்டித் தந்த தொகுத்தோரும், தொகுப்பித்தோரும் காவியங்களே யும், இசை நாடக நூல்களேயும் வெறுமென விட்டு விட்டுப் போயிருப்பார் என்று கூறிவிட முடியாது.
அடுத்ததாக மொழி வளர்ச்சியை உற்று நோக் குங்கால் சங்க இலக்கியங்களேத் தொல்காப்பியர் காலத் திற்கு மிகப் பின்னே கொண்டு வர வேண்டும்.
'உச்ச காரம் இருமொழிக் குறித்தே' என்பதற்கு உசு முசு என்பதையே தொல்காப்பியர் எண்ணியதாக இளம்பூரணர் தம் ஞானதிருஷ்டியால் அறிந்து கூறு கிருர், உரை தவருயினும், சரியாயினும் அவர் சொன் னது இரண்டே வார்த்தை! ஆஞல் சங்க இலக்கியத் தில் காசு, வீசு, ஏசு, மாசு போன்ற சொற்கள் பெருகி வருவதைக் கானலாம். அவ்வாறே சகர முதன் மொழிக் கிளவிகள் சங்க காலத்தில் சரளமாக வரத் தொடங்குகின்றன.

Page 8
()
இதுவுமன்றி மற்ருெரு விந்தை என்ன வென்ருல் தொல்காப்பியர் "எவன்', 'எவற்றை" என்ற விகுப் பெயர்களேச் சொல்லாமலே ஒடி விட்டார். சங்க இலக் கியத்தில் "எவன்' என்ற வார்த்தைகளுக்குக் குறை கிடையாது. இப்படி இருக்க பேராசிரியர் வழக்கறிஞர் அவர்கள் தொல்காப்பியர் சங்க இலக்கியத்திற்குப் பின் வந்தவர் என்று புள்ளி வைத்தால் காப்பியர் இலக் கனத்தை அரையும் குறையுமாக அள்ளித் தெளித் தவர், ஆணவமாகப் பற்பல புளுகுகளைப் பச்சையாகச் சொன்னவர் என்று கொள்ளல் வேண்டும். இங்கு தான் வையாபுரியார் ஆராய்ச்சி பயனற்றுப் போவதை அறியலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தொல்காப் பியர் 3-ஆம் நூற்ருண்டிலோ, 4, 5-ஆம் நூற்ருண் டிலோ வாழ்ந்தவரல்லர் என்பதற்கு ஒரே ஒரு சிறந்த சான்று அவர் களப்பிரரையும் பல்லவரையும் தமிழ் நாட்டை ஆண்டதாகக் கூறவில்லை. கூருமல் விட் டொழிவது குற்றமன்று என ஆய்வாளர் கூறி விட லாம். ஆஞல் வாலாற்றுக்கு மாருக,
**பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேரெல்லே அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனுர் புலவர்" என்பதில் 'வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் நாற்பேரெல்லே' என்று குறிப்பதனுல் மூவரசர் முடி

11
யுடன் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர் அவர் என்று அறியலாம்.
சிங்க இலக்கியங்களில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு வடசொல் காணப்படுகின்றன; தொல்காப்பியத் தில் இதை விட மிகுதியான வட சொற்கள் வந்திருக். கின்றன என்று தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக் குத் தள்ளச்சொல்லலாம். ஆணுல் வடமொழியும் அதன் சிதைவான பிராகிருதமும் சேர்ந்தே 100-க்கு 4 விழுக் காடு எனத் தொல்காப்பியத்தில் வந்துள்ளன. இலக் கனங்களில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக வரல் இயல்பே. அப்படி வந்திருக்கும் சொற்களான உத்தி, கரனம், பிண்டம், பண்ணத்தி, மாத்திரை, வடிவம் தெய்வம், சூத்திரம், காண்டிகை போன்ற சொற்கள் இலக்கியத்தில் வர வேண்டும் என்னும் கடப்பாடில்லே. எனவே இக் காரணத்தைக் கொண்டு தொல்காப்பியத் தைப் பின்னுக்குத் தள்ளி வரல் ஒவ்வாது.
அடுத்ததாக தொல்காப்பியத்தைச் சங்க இலக் கியத்திற்குப் பின்னே கொண்டு வருவோர் தரும் சான்று சங்க இலக்கியம் மதத்தொடர்பும், சாதித் தொடர்பும் அற்றதாயிருக்க, தொல்காப்பியம் மதத் தொடர்பாய்ச் சாதிகளையும் கற்பிக்கின்ற தென்பதாம். இது பொருந்தாக் கூற்று என்பதைச் சங்க இலக் கியத் தொடர்கள் பற்பல சாதிகளேயும், மதங்களேயும் விழாக்களேயும் குறிப்பதிலிருந்து உணரலாம்.
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறு மகள்"
இந்த நற்றினைவரி பரிபாடலில் குறிக்கும் தைந்நீரா

Page 9
|
டஃலக் குறிப்பது காண்க. இது திருப்பாவையில் குறிக்
கப்படும் மார்கழி நீராடலாக வளர்ந்தது.
மாயோஃனயும், சேயோஃனயும், வேந்தனேயும் வரு
னஃனயும் குறிப்பது மட்டுமல்ல,
"கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
உடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
என்று இன்னும் மூன்று கடவுஃளக் கற்பிக்கின்றது
காப்பியம்.
'பாடி மிழ் பரப்பகத்து அரவனே பசைஇய" 'வாடுகொள் நேமியாற் பரவுதும்"
என்ற முல்லைக் கலியுள்ளும்,
'நனந்தலே புலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாநாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல்"
என முல்ஃப்ப் பாட்டில் திருமாலேயும்,
"படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேல்" என அகப்பாட்டு முருகனையும்,
"வையைப் புதுப்புனலாடத் தவிர்ந்தம்ை
தெய்வத்திற் தேற்றித் தெளிக்கு”
எனும் கலியுள் இந்திரனையும்,
"சினேச் சுறவின் கோடு நட்டு
மனேச் சேர்த்திய வல்லணங்கினுன்"
என்பதில் வருணஃனயும் காண்கின்ருேம்.
لی

13
இதோடு மட்டுமன்றி சிறு தெய்வ வழிபாடு Fங்கப் பாக்களிலெல்லாம் பொறித்து வைக்கப்பட் டிருக்கின்றன.
*விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்கு
கடனும் பூணும் கைந்நூல் யாவார்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி" ான்று கொற்றவை வழிபாட்டைக் கோலமிட்டுக் காட்டு ன்ெருர் குறுந்தொகைப் புலவர் கொற்றணுர். ஆகுறல் தால்காப்பியர் கொற்றவை பாலேக்குத் தெய்வமென ாய் திறவாது போய்விட்டார். மேலும் சங்கப் பாக் ளில் ஆரர மகளிரையும், அயிரையையும், கூளியையும் ாளியையும் காண்கின்ருேம்.
'திருவீழ் மார்பன் தென்னவன் மறவன்"
ன லசுஷ்மியும் வருகிருள் நெடுந்தொகைப் பாட் ஞள். கெளசிகளுர், கெளதமனுர், உருத்திரனுர், ாதேவனுர் போன்ற சங்கப்புலவர் பெயர்கள் வைதீக மன. பெளத்தச் செல்வாக்கை கி. பி. முதற் நூற் "ண்டிற்கே எடுத்துச் செல்கின்றது. இதனுல் மதச் சல்வாக்கு மக்களிடையே சங்க காலத்தில் உண்டு; தற்கு முன்பும் உண்டு கி. மு. 700 முதல் தொடங்கி ன்று வரலாறு வாயிலாக உனர் கிருேம்.
தொல்காப்பியர் நாட்டில் வழங்கும் சாதியைக் றிப்பதால் அவர் சாதியில்லாச் சமூகமாகிய சங்கச் முகத்திற்குப் பிற்பட்டவர் என்று கூறும் நிறைவில்லா ராய்ச்சியை நோக்க வேண்டும் சாதி சங்க காலத்தி

Page 10
14
லேயே இருந்தது. அதை எடுத்து விரித்து, மாஃ. யாகத் தொடுக்க வில்லே சங்கப் புலவர். காதல் யும், கற்பையும், வாழ்வையும், இயற்கை வளத்தையும் உள்ளத்தால் அள்ளிப் பருகிய புலவர்கள் மதத்தையும் சாதியையும் எண்ணிக்கொண்டிருக்க நேரமில்லை; பாட வும் பாட்டில் இடமும் இல்லை.
வடபுல வருணுஸ்ரமத்தை வரவழைத்துக் கொண்ட வர் தொல்காப்பியர் அல்லர். ஆணுல் வடபுலச் சாதியை யும் தென்புலத் தொழில் பிரிவையும் கூட்டிக் குழம்பாக்கித் தருகிறது தொல்காப்பியம்.
"நூலே கரகம் முக்கோல் மனேயே ஆயுங் காலே அந்தணர்க் குரிய" இது வடநாட்டுப் பார்ப்பனர் தென்னுட்டில் வந்து வாழ்ந்து வந்ததைக் காட்டுவது. இந்த வடபுலத்தார் செல்வாக்கைத் தொல்காப்பியம் மட்டுமன்றி குறுந் தொகையும்,
'பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கி னன்னுர் கஃாந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ வண்டிப் பார்ப்பன மகனே" என்று அன்னுேரின் உருவத்தைக் கண்முன் கூட்டித் தருகிறது.
**வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" -என்று ஆரிய வைசிகனுக்குத் தென்னுட்டில் அமைந்த தொழிலை விளம்பரம் படுத்துவது இந்தச் சூத்திரம். பிராமனன், கூடித்திரியன், வணிகன், சூத்திரன்-இது

15
வடபுலப் பிரிவு. வேந்தன், அந்தணன், வேளாளன் இது தமிழ்ப் பிரிவு.
"வேளாண் மாந்தர்க் குழதூ னல்லது"
இந்தத் தமிழ் வேளாளரை சூத்திரரோடு முடிபோட்டுக் நாட்டுவது பின்பு வந்த பண்பு.
"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே"
ான்பதற்கு "மேற்குலத் தாராகிய அந்தனர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த 5ரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய 5ாலமும் உண்டு என்றவாறு'-இது இளம் பூரணுச் டரை. இங்குத் தொல்காப்பியர் சாதியின் உயர்வு தாழ்வு 1ற்பிக்கவில்லே என்று கூறி விடமுடியாது. உயர்வு தாழ்வு மனப்பான்மை மனிதன் நாகரிகம் தொடங்கிய அன்றே முளேத்து விட்டது. எனவே சாதிக்கு ஒரு திே வகுத்த மனுவிற்குப் பின்னர் காப்பியர் என்று தை அளந்துவிட முடியாது. இங்குத் தொல்காப்பியர் க்கட் பிரிவில் ஏற்பட்டு வளர்ந்த பண்பாட்டு வளர்ச்சி "யக் காட்டுகின் ருர் என்று கொள்ளலாம்.
** அடியோர் பாங்கினும் வினவல் பாங்கினும்."
இங்குக் குறிப்பிடும் குற்றேவல் செய்வோர் சூத்திரர் புல்லர். சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இளே ரும், தேர் ஒட்டிகளுமாவர். இவ்வாறே பாணர், 'றலி போன்றேர் இழிந்த சாதியாக எண்ணப்பட்டு |ன்று பணிச்சவர் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்ட ர். சாவுக்குச் சங்கு ஊதுபவன் இன்று பணிச்சவன்.

Page 11
16
இது போன்ற காரணங்களால் தொல்காப்பியர் பிற் பட்டவர் என்று கூறி அளந்து விடுவது ஏற்புடைத் தன்று.
தொல்காப்பியர் எடுத்துக் காட்டும் மோத்தை, அப்பர் போன்ற ஆண்பாற் பெயர்களையும், மூடு, கடமை, பாட்டி, போன்ற பெண்பாற் பெயர்களேயும் சங்க இலக்கியத்தில் தேடிப் பிடிக்க முடியாது.
'மூங்கா வெருகெலி மூவரி யணிலோடு ஆங்கவை நான்கும் குட்டிக் குரிய" **பறழெனப் படினும் உறழாண் டில்லே" **கவரியும் கராமு நிகரவற்றுள்ளே” **கடமையும் மரையும் முதனிலே பொன்றும்" *குரங்கு முசுவும் ஊகமு மூன்றும் நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய" **மூடுங் கடமையும் யாடல பெரு" **பாட்டி யென்பது பன்றியு நாயும்" **நரியபு மற்றே நாடினர் கொளினே" **குரங்கு முசுவும் ஊகமு மந்தி" இந்த நூற்பாக்களெல்லாம் சங்க இலக்கியத்திடம்
செல்லுபடியாகாது. அதாவது அங்கே இவற்றிற்கு உதாரணமில்லை. இதுவும் தொல்காப்பியத்தின் பழமை யைக் காட்டுகின்றது.
தொல்காப்பியர் வகுத்துக் காட்டாத துறைகள் சில சங்க இலக்கியங்களில் எடுத்துப் பாடப்படுகின்றன

T
லவர்களால் 1 அதனுள் ஒன்று வினைமுற்றி மீளும் ஃலவன் கண்டோர்பால் கூற்று நிகழ்த்தல். தொல் ாப்பியத்தை விட்டு விலகி நின்று புதிய வழிவகுத்த ாட்டு ஒன்று முருகாற்றுப்படை, இதுபோன்ற துண்டுச் செய்திகளால் தொல்காப்பியத்தைச் சங்கத் நிற்கு முற்பட்டது என்று கூறினுல் வரும் எதம் என்றும் இல்லை.
இப்படி இல்லாமல் தொல்காப்பியர் கி. பி. 5-ஆம் ாற்குண்டில் இருந்தாரென ஒரு ஆய்வு கூறுமானுல் /ந்த ஆய்வு,
1. அகச் சான்றைப் புறக்கணிக்கின்றது. 2. மொழி வளர்ச்சியை உற்று நோக்காதது. 3. இலக்கியத் திறனுய்வை எண்ணிப் பார்க் Tதது.
4. வரலாற்றுக் கால நிலையை மறந்தது. 5. அண்மைக் காலத்தில் இருந்த உரைகளின் றிப்பை நம்பாதது; அதன் உட்கோஃளக் காண யலாதது.
6. ஒப்புமை ஆராய்ச்சியால் தவறுவது. 7. உரையாசிரியர்களின் ஒருமைப்பட்ட போக் கத் தட்டிக் கழிப்பது.
ஆகிய பல குற்றங்களுக்கு இலக்காவதைக் காண " | fj :
எனவே தொல்காப்பிய மரபுத் தாயின் வயிற்றில் ரந்த மகளிரென சங்க இலக்கியங்கள் நம் உள்ளத் b ஆடுகின்றன.
2

Page 12
8
'அறநி?லஇய அகனட்டிற்
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி யாறு போலப் பரந்தொழுகி யேறு பொரச் சேருகித் தேரோடத் துகள் கெழுமி நீருடிய களிறுபோல் வெண் கோயின் மாசூட்டும்"
என்று வரும் பட்டினப்பாலேக் காட்சிகளும்,
"அலேநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டம்ை கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும் நெடுங்கால் புன்னே நித்திலம் வைப்பவும் கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் பாடல் சான்ற நெய்தல் நெடுவழி”
என வரும் சிறுபானுற்றுப்படையின் நெஞ்சில் சிதை யாப் படங்களும்,
'முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற
நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னுளும்' என்று காண்போர் நெஞ்சுறையும் காதலரைக் காட்டும் சொற் சித்திரங்களும்,
*தையால் நன்றென்று அவனுக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின் வாயாச்செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல் மெய்யறியா ஏற்றெழுவே னுயின் மற்டுெய்யென ஒண்குழாய் செல்கெனக் கூறி விடும்பண்பின் அங்கண் உடையன் அவன்"

19
என்று தலேவி ஒருத்தியின் அறக்கழிவுடைய செயலும் பொருட்பயன் நோக்கும் அவள் உள்ளத்து உணர்ச்சி பும் காட்டும் ஒப்பற்ற உயிர்ப் படமும் தொல்காப்பிய மேடையில் ஆடும், ஓடும் நடிக்கும் நாடகங்கள்.
தொல்காப்பிய மேடையில் தோன்றும் நாடகம் அவர் கொடுத்த திரையில் காணும் சித்திரம், அவர் கண்ட நிலத்தில் விளேந்த பயிர், அவர் வகுத்த பாதை யில் செல்லும் தேர், அவர் கட்டிய கூட்டில் பொழியும் தேன்-அதுதான் சங்க இலக்கியம். சங்க இலக்கியம் வாழ்வதால் தொல்காப்பியம் வாழ்கிறது. தொல்காப் பியம் வாழ்வதால் சங்கப் பாடல் தங்கம்போல் மின்னு கிறது. ஆம் தொல்காப்பியப் பொற்பேழையில் இருக் கும் சங்க இலக்கிய வைரம் உலகம் எங்கும் மின்னுெளி வீசுகின்றது.

Page 13


Page 14