கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோணேசர் கல்வெட்டு

Page 1

சார அலுவல்கள்
6.

Page 2


Page 3

கோணேசர் கல்வெட்டு
கவிராஜவரோதயன் இயற்றியது
பதிப்பாசிரியர் ,
பண்டிதர்
இ. வடிவேல்
வெளியீடு :
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,
கொழும்பு - 2.

Page 4
பதிப்புத் தரவுகள்
தூற்பெயர்:- கோணேசர் கல்வெட்டு,
சமய இலக்கியம் سه : 1699
பதிப்பாசிரியர்:- பண்டிதர் இ. வடிவேல்.
வெளியீடு:- இந்துசமயத் திணைக்களம்,
9ம் மாடி,
காப்புறுதி இல்லம், 21, வோக்ஷோல் வீதி,
கொழும்பு-02. அச்சுப்பதிவு:- குமரன் அச்சகம், ”
டாம் வீதி, கொழும்பு. பிரதிகள்:- 1000 உரிமை:- இந்துசமய கலாசார திணைக்களம். விலை:- elj. 601
முதற்பதிப்பு:- வைகாசி - 1993.
Bibliographical Data
Title of the Book : Komesar Kalvettu
Category : Religious Literature. Editing and
Commentary : Panditar Vadive.
Publishers Department of Hindu Religious
and Cultural Affairs 9th Floor, insurance Building, 21, Vauxhall Street.
Colombo-2. Printers . Kumaran Press,
Dam Street, Colombo 12. Copy Right : The Department of Hindu
Religious & Cultural Affairs Number of Copies Printed ; : 000 First Edition : May 1993
Price s RS. 60

உள்ளுறை
வாழ்த்துரை :- மாண்புமிகு பி. பி. தேவராஜ்
இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சர்,
வெளியீட்டுரை:- திரு. கா. தயாபரன்,
செயலாளர், இந்துசமய, 56unta-mgr இராஜாங்க அமைச்சு.
அறிமுகம்:- திரு. க. சண்முகலிங்கம்,
பணிப்பாளர் - இந்துசமயத் திணைக்களம்:
கோணேசர் கல்வெட்டு-சில ஆராய்ச்சிக் குறிப்புகள்,
பேராசிரியர் சி. பத்மநாதன் uáše5uh f-35
பதிப்புரை:- திரு. இ. வடிவேல் Auáš- 36-37
முன்னுரை:- கோணேசர் கல்வெட்டு - ஒரு கண்ணோட்டம்
திரு. இ. வடிவேல் luaiš- 38-46
கோணேசர் கல்வெட்டு tué- 47-81
இடைச்செருகல் r Lidi- 82-94
கோணேசர் கல்வெட்டும் புராணங்களும் பக்- 95-98
கயவாகு ராசன் Lėš- 99-20
உரைநடைப் பகுதி kláš. 102-136

Page 5

வாழ்த்துரை
திருகோணமலை வரலாற்றின் வளமார்ந்த சிறப்புகளை எடுத் துக்கூறும் கோணேசர் கல்வெட்டு எனும் நூல் அரியதொரு பொக்கிஷமாகும்.
திருகோணமலையில், கோட்டம், கோபுரம், மதில், தீர்த்தம், குளம் என்பவற்றை அமைத்த குளக்கோட்டு மன்னனுடைய ஆற்ற லையும், அரும்பணியையும், கீர்த்தியையும் இந்நூல் மிக அழகாக முன்னிறுத்துகின்றது.
நூலின் மூலம், குளக்கோட்டன், தமிழகத்தின் காரைக்கால், மருங்கூர், தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து பல குடிமக்களை அழைத்துவந்தமை, அவர்களை ஆலயத்தின் நிர்மானப்பணிகளுக் கும், நிர்வாகப்பணிகளுக்கும் அமர்த்தியமை அவர்களுக்கு நிலங் களும் மானியங்களும் வழங்கியமை போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.
இம்மன்னன் ஆற்றிய பணிகளுள் கந்தளாய்க் குளத்தைக் கட்டியமை, மெய்சிலிர்க்கச் செய்கின்ற ஒரு சாதனையாகும். இக்குளத்தை ஆதாரமாகக் கொண்டு திருமலைப் பிரதேசத்தின் பசுமையையும், செழுமையையும் கருத்திற்கொண்ட மன்னனின் நல்லெண்னங்கண்டு நாம் பெருமிதமடைகின்றோம்.
இந்த நூல், திருமலை வாழ் தமிழ்மக்களின் பாரம்பரியத் தையும், இந்துசமய கலாசாரத் தொன்மையையும் நிரூபிக்கும் ஒரு சாசனமாகத் திகழ்கிறது. கோணேசர் ஆலயம், கந்தளாய்க் குளம் என்பவை அமையப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பொற் காலத்தின் சரித்திரத்தினை வியந்துபோற்றுகின்றது.


Page 6
பழமை வாய்ந்த இந்த நூலின் ஏட்டுப் பிரதிகளையும், முன்பு அச்சிடப்பட்ட பிரதிகளையும் பாதுகாத்து வைத்திருந்த பண்டிதர் வடிவேல் அவர்கள் பெரும் பாராட்டிற்குரியவர். அவ்வாறே இந்த நூலை வெளியிடவேண்டும் என்பதில் திருமலைவாழ் இந்துமக்கள் காட்டிய ஆர்வமும், திருமலை கட்டிட ஒன்றியத்தவர்களின் பங்க ளிப்பும் மகிழ்ந்து போற்றத்தக்கது.
தமிழர்தம் மாண்பையும், சீர்மையையும் உணர்த்தி நமது உள்ளங்களைப் பெருமிதமடையச் செய்கின்ற இந்த நூலை எமது வெளியீடாகப் பிரசுரித்துதவுவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்து சமய கலாசார பி. பி. தேவராஜ், இராஜாங்க அமைச்சு இந்துசமய கலாசார அலுவல்கள் கொழும்பு-02. இராஜாங்க அமைச்சர்.
- vi -

வெளியீட்டுரை
திருகோணமலையினதும், கோணேசர் ஆலயத்தினதும் வர லாற்றம்சங்களை ஒரளவு விளக்குவதாக அமைந்த சிறப்புமிக்க நூலான கோணேசர் கல்வெட்டு எனும் பழந்தமிழ் நூலினை இந்து சமய கலாசார திணைக்களம் மீள்பிரசுரம் செய்வதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றோம்.
கவிராஜவரோதயர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் வர லாற்றுச் சிறப்பு மிக்கதொன்று. குளக்கோட்டன், கயவாகு ஆகிய மன்னர்களின் அரும் பணிகள் பற்றியும் திருமலையில் வாழ்ந்த இந்து மக்களின் சமூக வாழ்வு, ஆலயப்பணிகளுக்கென தமிழகத் திலிருந்து பல பிரிவினர் அழைக்கப்பட்டுக் குடியேற்றப்பட்டமை பற்றியும் கோணேசர் கல்வெட்டு விளக்கிச் செல்கிறது.
ஒருவகையில், பலநூற்றாண்டுகளுக்கு முன் திருகோணமலைப் பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வுநிலையை ஆதார பூர்வமாக உணர்த்துகின்ற ஒரு அரிய நூலாக இந்நூல் மிளிரு கின்றது.
இந்நூல் இதற்குமுன் 1887, 1916, 1950 ஆகிய ஆண்டுகளில் மூன்று தடவைகள் அச்சுவடிவம் பெற்றபோதும் தமிழ்மக்கள்
அனைவரது கைகளுக்கும் சென்று சேரத்தக்கதான ஒரு நிலை இருக் கவில்லை.
திருகோணமலையைச் சேர்ந்த சைவப்புலவர், பண்டிதர் இ. வடிவேல் அவர்கள், பழைய நூற்பிரதிகளையும், ஏட்டுப்பிரதி களையும், ஆராய்ந்து இதனைப் பதிப்பித்துள்ளார். அவருக்கு தமிழுலகின் நன்றிக்கடன் என்றும் உரியது.
பண்டிதர் வடிவேல் அவர்களின் பேரார்வத்தைப் புரிந்து கொண்டு நாம் இந்நூலை அச்சுவடிவேற்ற முன்வந்த போது,
--- Wii س

Page 7
ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை திருகோணமலை மாவட் டக் கட்டிட ஒன்றியத்தவர்கள் அன்பளிப்புச் செய்து உதவினார் கள். அவர்களுக்கு எமது அமைச்சின் சார்பில் நன்றியைத் தெரி விக்கின்றோம்.
திருமலை வாழ் தமிழர்களின் வாழ்வும் பண்பாடும் பற்றிக் கூறுகின்ற அருந்தமிழ் இலக்கியமான கோணேசர் கல்வெட்டினை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வைக்கின்றோம்.
இந்நூலை தமிழுலகம் ஏற்றிப்போற்றும் என்பது எமது பெரு நம்பிக்கையாகும்.
கா. தயாபரன்
இராஜாங்க செயலாளர், இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு.
- viii ----

அறிமுகம்
இந்து சமயம், இந்துப் பண்பாடு, தமிழ் இலக்கியம், வரலாறு ஆகியவற்றோடு தொடர்புடையதான மூன்று செயற்றிட்டங்கள் எமது திணைக்களத்தினால் 1993ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டன.
6666 or
1. கிடைத்தற்கரியனவாயுள்ள தமிழ் இலக்கிய சமய நூல்களை உரை விளக்கக் குறிப்புகளுடன் யாவருக்கும் பயன் தரும் முறையில் அச்சிட்டு வெளியிடுதல்,
2. இலங்கையின் இந்து ஆலயங்கள் சிலவற்றின் வரலாற்றினை
எழுதுவித்து நூற்தொகுதிகளாகப் பிரசுரித்தல்.
3. 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து தமிழ்ப்பணியும், தேசத் தொண்டும் புரிந்த தமிழ்ப் பெருமக்களின் வாழ்க்கை வர லாற்றினை எழுதுதல்.
இச்செயற்றிட்டங்களுள் முதலாவதாக அமையும் தமிழ் நூற் பதிப்புத் திட்டத்தின் நூல் வரிசையில் "கோணேசர் கல்வெட்டு" வெளிவருகின்றது. இதனைத் தொடர்ந்து, "திருக்கோணேஸ்வரம் என்னும் வரலாற்று நூலும் "தகூதிணகைலாச புராணம்" என்னும் செய்யுள் நூலின் உரையுடன் கூடிய பதிப்பும் இவ்வாண்டு வெளி வரவுள்ளன.
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றினைக் கூறும் நூல்களுள் வையாபாடல், கைலாயமாலை, மட்டக்களப்பு மான்மியம், யாழ்ப் பாண வைபவமாலை ஆகியன பலரதும் கவனத்தைப்பெற்றுள்ளன. "கோணேசர் கல்வெட்டு இவ்விதம் பலராலும் அறியப்பட்டதோர் நூல் அன்று. முற்குறித்த நூல்கள் அண்மைக்காலத்தில் மறுபதிப் புச் செய்யப்பட்டதும், வரலாற்றாசிரியர்களின் ஆய்வுக்கு உட்பட் டதும் அவற்றின் சிறப்பினை அறிந்துகொள்வதற்குத் துணையா யிற்று. உரை, விளக்கக் குறிப்புகள் ஆராய்ச்சி முன்னுரை ஆகிய வற்றுடன் வெளிவரும் கோணேசர் கல்வெட்டின் இப்பதிப்பு தமிழர்
- ix --

Page 8
வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண் டுள்ள யாவராலும் விரும்பி ஏற்கப்படுவதோடு கோணேசர் கல்வெட் டின் மகிமையை தமிழர் மத்தியில் பரப்புவதற்கும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
முடியுடை மன்னர்களின் தீரச் செயல்களும், சமுதாயப் பணி களும், ஆளுமையும் இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றுணர்வின் {Historical Consciousness) பாகமாக அமையாதிருப்பது சுவாரசிய மானதோர் விடயமாகும். உதாரணமாக 13ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நிலைத்திருந்த ஆரிய சக் கரவர்த்திகள் ஆட்சியின் போது பல மன்னர்கள் அரசு செலுத்திய போதும் அவர்கள் பற்றிய நினைவு வரலாற்றுணர்வின் முக்கிய அம்சமாகவில்லை. இப்பின்னணியில் நோக்கும்போது "கோணேசர் கல்வெட்டில், பேசப்படும் குளக்கோட்டு மன்னன் இலங்கைத் தமிழ் மக்களின் நினைவில் நீங்கா இடம் பெற்ற ஒருவனாய் விளங்கும் உண்மை தெற்றெனப் புலப்படும். "முன்னே குளக்கோட்டன் மூட் டும் திருப்பணியை." என்று தொடங்கும் வாசகம் கற்றோர் முதல் பாமரர் வரை யாவரும் அறிந்ததொன்று.
கோணேசர் சுல்வெட்டு செய்யுளாலும், உரைநடையாலும் அமைந்தது. குளக்கோட்டன், கயவாகு மன்னன் ஆகிய இருவரதும் பணிகளை இதன் செய்யுட் பகுதி எடுத்தியம்புகிறது. உரைப்பகுதி திருகோணமலைப் பகுதி வன்னிமைகளின் தோற்றம் பற்றிய அரிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. இது பற்றி இந்நூலில் இடம் பெறும் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என்ற கட்டுரையில் பேரா சிரியர் சி. பத்மநாதன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
**அடங்காப் பற்று என்னும் பகுதியில் இருந்த வன்னியர்களைப் பற்றிய செய்திகள் வையா பாடலில் உள்ளன. மட்டக்களப்புப் பிராந் தியத்தில் அமைந்திருந்த வன்னிமைகளைப் பற்றி மட்டக்களப்பு மான் மியம், நாடுகாடுப் பரவணிக்கல்வெட்டு என்பன மூலம் அறியமுடிகிறது. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் எழுதிய வரலாற்று நூல்களிலும் நிர்வாக அறிக்கைகளிலும் இவை பற்றிக் காணப்படும் குறிப்புக் களும் விபரங்களும் அநேகம். தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதப் பெற்ற நூல்களிலே, வன்னிமை பற்றிய செய்திகள் கோணேசர் கல்வெட்டிலேயே மிகக் கூடுதலாகக் காணப்படுகின் றன. திருகோணமலை, கட்டுக்குளம் ஆகிய பிரிவுகளின் அதிபர் களாக வன்னிபங்கள் நியமிக்கப் பெற்றமை பற்றிக் கோணேசர்
-- Χ --

கல்வெட்டு கூறுகிறது. அதன் உரைப் பகுதியின் பிரிவுகள் பல முழு மையும் வன்னிபங்களைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன". ( 1: 27-28)
வரலாற்று ஆய்விற்கு மட்டுமன்றி நாட்டார் வழக்காற்றியல், மொழியியல் ஆகிய துறை ஆய்வுகளுக்கும் கோணேசர் கல்வெட்டு மிகச் சிறந்தவோர் ஆதார நூலாக அமைந்துள்ளது. 13ஆம் நூற் றாண்டின் பின்னர் தோன்றி வளர்ந்த இலங்கைத் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தினையும் கோணேசர் கல்வெட்டு சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது. இத்தகு சிறப்புக்கள் பொருந்திய இந்நூலைத் தமிழுல குக்கு அளிக்கும் வாய்ப்பினை வழங்கிய பண்டிதர் இ. வடிவேல் பாராட்டிற்குரியவர். கோணேசர் கல்வெட்டு நூலின் பழைய பதிப் புக்களின் பிரதிகளை தேடியபோது, பண்டிதர் இ. வடிவேல் அவர் களின் நினைவு எம் மனத்தில் எழுந்தது. நூற் பிரதிகளைத் தந்து எமது பதிப்பு முயற்சிக்கு உதவ முடியுமா என அவரை வினவி னோம். முன்னைய பதிப்புக்களையும் ஏட்டுப் பிரதிகளையும் ஒப்பு நோக்கி நூலின் பிரதியை அச்சிடுவதற்கு ஏற்றமுறையில் தட்டச்சு செய்து வைத்திருக்கிறேன் என்று அவர் கூறியபோது எமக்கு வியப் பும் மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அவரின் அருமுயற்சியி னால் வெளிவரும் இந்நூலின் அச்சுச் செலவின் பெரும் பகுதியை அவரது மாணாக்கர்களும் நண்பர்களுமாகிய அன்பர்கள் வழங்கி னார்கள். பண்டிதருக்கும் அவரது மாணாக்கர்களுக்கும், நண் பர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேரா சிரியராகிய சி. பத்மநாதன் நீண்ட ஆராய்ச்சி முன்னுரை ஒன்றினை எழுதி வழங்கினார்கள். அவருக்கு எமது நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவிக்கின்றோம். இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இந்நூற்றாண்டில் நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி யோர் மூன்று வகையினராவர். மரபு வழித் தமிழறிஞர் இவர் களுள் ஒரு வகையினர். தமிழறிவோடு ஆங்கில நூலறிவும், நவீன வரலாற்றுநெறிமுறைகள்பற்றிய ஒரளவுபயிற்சியும் பெற்ற தமிழறி ஞர்கள் இன்னொரு சாரார். இவ்விரு சாராருமே இலங்கைத் தமிழ்வர லாற்றியலின் முன்னோடிகளாய் அமைத்தவர்கள். வரலாற்றினை பல்கலைக்கழகங்களில்சிறப்புப் பாடமாகக்கற்று வரலாற்றுஆராய்ச்சி நெறிமுறைகளில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற புலமைசால் வர Gontsib piir Ffurfassair (Academic historians) yp Görip Trib Gau FM sulaartř. இம்மூன்றாம் வகையினரில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே உள்ளனர். அவர்களுள் சி. பத்மநாதனும் ஒருவர். பண்டிதர்
- xi l

Page 9
இ.:படிவேல்’அவ்ர்களின் தமிழ்ப்புலமையும் பேராசிரியர் சி. பத்ம்' நாதன் அவர்களின் வரலாற்றுப் புலமையும் ஒருங்கு சேரும் சிறப்பு மிகு இந்நூல் தமிழியல் ஆய்விற்கு புதிய பரிமாணம் ஒன்றினைச் சேர்த்துள்ளது. இந்துசமய கலாசார அமைச்சின் செயலாளர் கா. தயாபரன் இந்நூலிற்கு ஒர் வெளியீட்டுரை வழங்கிச் சிறப்பித் துள்ளார். இந்நூலின் அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கி உதவி: எமது திணைக்களத்தைச் சேர்ந்த திரு, ம. சண்முகநாதனும் இந் நூலினை அழகுற அச்சிட்டு உதவிய குமரன் அச்சகத்தினரும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டனர். அவர்களுக்கும் எமது நன்றி. திணைக்களத்தின் பணிகள் செவ்வனே நிறைவுற ஆக்கமிகு செயற்றிட்டங்களை உருவாக்கி, உற்சாகத்தினையும் ஆதரவினை யும் வழங்கிவரும் இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
காப்புறுதிக் கூட்டுத்தாபனம், க. சண்முகலிங்கம் 9வது மாடி, பணிப்பாளர், 21. வொக்ஷோல் வீதி, இந்துசமய, கலாசார அலுவல்கள் கொழும்பு-02. திணைக்களம்.
۔۔۔۔۔۔ kii ۔۔۔۔۔

கோணேசர் கல்வெட்டு
சில ஆராய்ச்சிக் குறிப்புகள் 1. இலங்கையில் எழுந்த வரலாறு கூறும் தமிழ் நூல்கள்
வையாபாடல், இராசமுறை, பரராசசேகரன் உலா, கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, கோணேசர் கல்வெட்டு, பெரியவளமைப் பத்ததி, குளக்கோட்ட்ன் கம்பசாத்திரம், மட்டக்களப்பு மான்மியம் என்னும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்பவை இலங்கைத் தமி ழரின் வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய நூல்களாகும். இவை அனைத்தும் பதினாறாம் நூற்றாண்டிற்கும் பத்தொன்பதாவது நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியவை. போர்த்துக் கேயரின் ஆட்சிக்காலத்திலே சாசனங்கள் முதலான தொல்பொருட் சின்னங்கள் பெரும்பான்மையும் அழிந்துவிட்டமையால், வரலாற்று மூலங்கள் என்ற வகையில் இலக்கியங்கள் மிகுந்த முக்கியத்துவத் தைப் பெறுகின்றன.
யாழ்ப்பாண வைபவமாலைக்கு மூலங்களாக அமைந்த இராச முறை, பரராசசேகரனுலா ஆகியனவும் கோணேசர் கல்வெட்டிற்கு ஆதாரமான பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம் என்பனவும் அழிந்தொழிந்துவிட்டன. அவற்றின் அழிவானது, வரலாற்று ஆராய்ச்சியைப் பொறுத்தவரையில் ஈடுசெய்யமுடியாத வொன்றாகும். அவற்றின் அழிவு, பழமையான இலக்கியங்களை யும், ஆவணங்களையும், தொல்பொருட் சின்னங்களையும் தேடி அக்கறையுடன் பாதுகாத்துக் களஞ்சியப்படுத்தக்கூடிய நிறுவனங் களை உருவாக்கவேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகின்றது.
வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு முதலிய எஞ்சியுள்ள நூல்கள் காலா காலம் அச்சிலே பதிப்பிக்கப்பட்டு வெளி யிடப் பெற்றுள்ளன. அவற்றின் பதிப்புக்களிலே பல குறைபாடுகள்
- ! -

Page 10
காணப்படுகின்றபொழுதிலும், அந்நூல்கள் அழிந்தொழியாது பாது தாக்கப்பட்டமைக்கு அவற்றின் பதிப்பாசிரியர்கள் காரணராய் விளங்கினர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்து வரலாறு வெவ்வேறு காலகட்டங்களிலே பலரால் எழுதப்பட்டதனால், வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பான வைபவமாலை போன்ற நூல்கள் பலரதும் கவனத்தைப் பெற்றுள் ளன. யாழ்ப்பாண வரலாற்றை எழுதியவர்களுட் குறிப்பிடத் தக்கவர்களான செ. இராசநாயகம், சா. ஞானப்பிரகாசர் ஆகிய இருவரும் பல வகையான மூலங்களிலிருந்தும் சான்றுகளைத் திரட்டித் தமது நூல்களிலே தொகுத்தளித்துள்ளனர். அவற்றில் மரபுவழியான கதைகள் ஒப்பியல் நோக்கிலே விளக்கப்பட்டபோதும், சில நவபுனைகதைகள் தோன்றி நிலை பெறுவதற்கும் இவர்களின் நூல்கள் ஏதுவாயிருந்துள்ளன. இத்தகையோரின் படைப்புக்களை இருபத்தோராம் நூற்றாண்டிலே விளங்கப்போகும் அறிஞர் சமு தாயம் ஆதாரபூர்வமானவையென்று ஒப்புக்கொள்ளப் போவ தில்லை. f,
w அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளனவான கோணேசர் கல்வெட்டு
முதலிய நூல்கள் இப்போது கிடைத்தற்கு அரியனவாகிவிட்டன. இலங்கையிலுள்ள உயர்சலா பீடங்களைச் சேர்ந்த நூலகங்களிற் கூட அவற்றைக் காணமுடியவில்லை. அதேவேளையில், வெளி நாடுகளில் ஆராய்ச்சி புரிகின்ற பல்துறைசார்ந்த அறிஞர்கள் இத் தகைய நூல்களைத் தேடித் தருமாறு இங்கு வந்து கேட்கின்றார்கள். இத்தகைய நூல்கள் அழிந்து ஒழியாது பாதுகாக்கப்படுவதற்கும், அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வ ை"செய்வதற்கும் அவற்றின் புதிய பதிப்புக்களை வெளியிடுவது வித்தியாவிருத்தியில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரதும் கட மையும் பொறுப்புமாகும். ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமாக அமை கின்ற நூல்களைப் புதிதாகப் பதிப்பித்து வெளியிடுமிடத்து, அறி வியல் நெறி முறைகளுக்கு ஏற்ப விமர்சித்து விளக்கத்தக்க வகை யிலே அவற்றை வெளியிடுவதும் மிக முக்கியமானதாகும்.
இலங்கையிலே, தமிழ் மொழியிலே எழுதப்பெற்றுள்ள வர லாற்றுச் சார்புடைய நூல்களிலே கோணேசர் கல்வெட்டுத் தனித் துவமானது. பல ஆதாரபூர்வமான வரலாற்றுச் செய்திகள் அதிலே அடங்கியுள்ளன. திருகோணமலைப் பிராந்தியத்திலுள்ள சாசன வழக்காறுகளையும் அவற்றின் பொருள் மரபினையும் அடிப்படை யாகக்கொண்டு உருவாகிய ஒரு தொடர்ச்சியான இலக்கிய மர பினைப் பிரதிபலிக்கின்ற நூலாகவே கோணேசர் கல்வெட்டு
-سسه 2 -سس

அமைந்துள்ளது. இதுவரை அதனைப்பற்றி விமர்சித்தவர்களும், கட்டுரைகளை எழுதியவர்களும் பெரும்பான்மையும் மேலோட்ட மாகவே தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர். &
கோணேசர் கல்வெட்டு முதலான நூல்களைப் பற்றிய அறிவியல் சார்ந்த அணுகுமுறையினை வகுத்துக்கொள்வதற்குப் பல்துறை சார்ந்த அறிவும் அனுபவமும் இன்றியமையாதவை. தமிழ் இலக்கியப் பயிற்சியும், வரலாற்றறிவும், வரலாற்றுநெறிப் பயிற்சியும், சாசன வழக்காறுகள் பற்றிய பயிற்சியும், ஆலய வ்ழமைகள் பற்றிய புரிந்துணர்வும் அத்தகைமை பெறுவதற்குரிய அடிப்படைத் தேவைகளாகும். -
2. கல்வெட்டு என்னும் இலக்கிய மரபு
சிலவகையான இலக்கியங்களைக் கல்வெட்டு என்று குறிப்பிடு வது இலங்கையிலே மத்திய காலத்திலிருந்து வருகின்றவொரு வழக்கமாகும். வையாபாடல் என்னும் நூலானது, சில சமயங் களிலே ‘கல்வெட்டும் செய்யேடும்" என்றுஞ் சொல்லப்படும். வரலாற்று அம்சங்கள் பொருந்திய இருநூல்கள் கல்வெட்டு என வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1 அந்தியேட்டிக் கிரியை கள் முடிந்த பின்பு சபையோர் முன்னாக இறந்தவர்களைப் பற்றிப் பாடும் வழக்கம் இலங்கையிலே நெடுங்காலமாக நிலவி வரும் வழ மையாகும். அத்தகைய பாடல்களும் கல்வெட்டு என்று கூறப் படும். கல்வெட்டு என்று இலக்கிய வகைகளைக் குறிப்பிடும் ம்ர பினைப் புரிந்து கொள்வது சாசன வழக்காறுகளைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்குச் சற்றுக் கடினமாகும். ...م
கல்வெட்டு என்ற வகையான இலக்கியங்களைப் பற்றிய விளக் கங்களைத் தமிழிலக்கண நூல்களில் எதிர்பார்க்க முடியாது. சில் வகை இலக்கியங்களைக் கல்வெட்டு என வர்ணிக்கும் மரபு இலங் கையிலே தோன்றுவதற்கு முன்பு, தமிழ் மொழியிலுள்ள பிரதான இலக்கண நூல்கள் தோன்றிவிட்டன. ஆயினும், கல்வெட்டுக்களில் மட்டுமிருந்தனவான மெய்க்கீர்த்தி வடிவங்களைப் பற்றிப் பன்னிரு பாட்டியல் முதலான நூல்கள் வர்ணிக்கின்றமையுங் குறிப்பிடத் தக்கது. முற்காலத்திலே மன்னர்களதும் பிரதானிகளதும் புகழைக்
1. நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டு என வழங்கும் பனுவலொன்று முளது. சி. பத்மநாதன், 'நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டு’’ மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், பதிப்பாசிரியர் F. X, C, நடராசா, மட்டக்களப்பு, 1976, பக்கங்கள் 82-90.
سيسه 3 س۔

Page 11
கூறும் மெய்க்ர்ேத்திகளின் வாச கங் களை ச் சிலாசாசனங்களாக அமைத்தார்கள். சிலாசாசனங்களிலுள்ள மெய்க்கீர்த்திகளை உதார வணமாகக் கொண்டு பெரியோரின் புகழினைக் கூறிய பாடல்களைக் வல்வெட்டு எனக் குறிப்பிடும் வழக்கம் இலங்கைத் தமிழரிடையே தோன்றி நிலை பெற்று வருகிறதென்று கொள்ள முடிகின்றது:
சாசன வாசகங்களை அடிப்படையாகக் கொண்டெழுந்த இலக்கியங்களையும் கல்வெட்டு எனக் குறிப்பிடும் வழக்கம் இலங் கையில் ஏற்பட்டிருந்தமைக்குக் கோணேசர் கல்வெட்டு என்னும் நூல் ஒர் எடுத்துக்காட்டாகும். அதன் முன்னைய பதிப்பொன்றிலே "கோணேசர் கல்வெட்டென வழங்கும் கோணேசர் சாசனம்’ என்று நூலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத் தகுந்தது.2 நூலின் சிறப்புப்பாயிரத்தை அடிப்படையாகக்கொண்டு, "குளக்கோட்டன் சொல்லிய சொற்படி சொல் என்பதனால் முன்னே குளக்கோட்டு மன்னன் கூறியபடியே கூறுவீராக என்று ஒருவர் கேட்க அதன்படி கல்வெட்டுப் பாட்டெனப் பாடினான் கவிராஜ வரோதயன் என்பது இப்பாயிரத்தாற் புலனாகின்றது" எனப் பதிப்பாசிரியர் கூறுகின்றமை சாலவும் பொருத்தமானது. கவிராஜ வரோதயன் நூலினைக் கல்வெட்டு வகைக்குரிய பாட்டாகப் பாடி னான் என்பதனையும், குளக்கோட்டன் சொன்னவை முதலான மரபுகளை ஆதாரமாகக் கொண்டு நூலினை அமைத்தான் என்ப தையும் சிறப்புப்பாயிரம் உணர்த்துகின்றது.
கோணேஸ்வரம் பற்றியவையும் திருகோணமலையிலே காணப் பட்டனவுமான சாசனங்கள் பலவும் கோணேசர் கல்வெட்டுப்பிரதி பலிக்கின்ற இலக்கிய மரபு விருத்திபெறுவதற்கு ஏதுவாக விருந்தன என்று கொள்வதற்குக் கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரி கோணமலைப் புராணம் என்பவற்றிலுள்ள குறிப்புக்கள் ஆதாரமா யுள்ளன. இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்கள் அனைத்திலும் திருகோணமலை மாவட்டத்திலேயே மிகக் கூடுதலான தமிழ்ச்சாச னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முற்காலங்களில் இவற்றைத் தவிர வேறும் பல சாசனங்கள் அங்கு காணப்பட்டமைக்கு இந்நூல்
2. பிரம பூg பண்டிதராசரருளிச் செய்த பூரீ தகதிண கைலாச புரா ணம், கவிராஜரியற்றிய கோணேசர் கல்வெட்டு, பு. பொ. வைத் தியலிங்க தேசிகர் பதிப்பு, பருத்தித்துறை, 1916. இப்பதிப்பிலே கோணேசர் கல்வெட்டின் பெயர் மேல்வருமாறு வர்ணிக்கப்பட் டுள்ளது: " " கோணேசர் கல்வெட்டென வழங்கும் கோணேச சாசனம், கவிராஜரருளிச் செய்தது. ’’
- 4 -

களிலே காணப்படும் குறிப்புகள் ஆதாரமாயுள்ளன. கோணேசர் கல்வெட்டிலே சாசனங்களைப் பற்றி 0ே ல் வரும் குறிப்புக்கள் உள்ளன:
* பாவநாசகச் சுனைக்கு வடபாலாக ஒரு தாங்கியுண்டு; அதிலே ஆறு கோணமான கல்லு நாட்டியிருக்கின்றது; அதிலே தேவநாகரத்தால் எழுதியிருக்கும்.’’ 3
**ஆதியாகிய கோணநாயகர் அறைமுதலிற் பெரிய கணக் கும், வளமைப் பத்ததியும், ஆதியான கல்வெட்டும் அந்தக் காலத்திலே குளக்கோட்டு மகாராசா திட்டம் பண்ணி வைத்த கணக்கும், வட திசையதனில் சோழவள நாடன் திருநெல்வேலிக்கதிபதியான கனகசுந்தரப் பெருமாளிட முண்டு." 4.
1 .இப்போ அதிகமாக நாளொன்றுக்கு ஒரவண அரிசியும், அதற்கடுத்த செலவுக் கட்டளை பண்ணி, நாளொன்றுக்கு மூன்றவண அரிசி நைவேத்தியம் வைத்துப் பூசை நடககும் படி திட்டம் பண்ணி, கனகசுந்தரப்பெருமாள் கணக்கிலும் பதிப்பித்துச் செப்பேடு வரைந்து கொடுத்து, வன்னிபம், இரு பாகை முதன்மை முதலாகச் சகலரையும் அழைப்பித்து, தான் (கயவாகு) கட்டுவித்த வச்சிரமணி மண்டபததினின்று சகலருக்குஞ் சொல்லும் வசனம். 8.
'இவை முதலான கோயிற் காரியங்களுள்ள பத் த தி க் கணக்கும் குளக்கோட்டு மகாராசா வளமைப்பத்ததியும் பெரிய கணக்கும் கல்வெட்டுங் கோயிற்றொழும்புக் கதை வர லாறும் கோயிலுக்கு முன்னிடுங் கட்டுக்குளப்பற்றும் நிலாவெளி நிந்தவூருமகே அந்தக் காலம் அடியேன் குடியிலுள்ள
வர்களுக்குக் கிடைத்திருந்தபடியால்..' 6.
*.அவர்களுடன் அரசன் திரிகயிலைக்கு வந்து நித்திய முஞ் சிவாலயத்திற்றிரு முன்னே நாதகிதம் பாடத் திட் டம் பண்ணிப் பள்ளவெளியில் இரண்டவன விதைப்புத் தரையுங் கொடுத்துக் கொட்டியாபுரத்திற் சமுத்திரக்கரை
;
கோணேசர் கல்வெட்டு (கோ.க.), 1916, பக்கம் 25, கோ. க. ப. 23. . கோ. க. ப. 20, கோ. க. ப. 26.

Page 12
'யருகாக ஒரு கிராமத்தை . சம்பூரென்று பேரிட்டு எந் தக் காலத்துக்கும் உன்குடியின் மனுஷருக்குப் பரவணியா
கத் தந்தோமென்று செப்புக் கம்பைபோட்ட பத்ததியுங் கொடுத்துக் கோயிற்றிருவாசகப் புலவனென்று அரசனுரை
நிறுத்தியது. அரசன் கூட்டிவந்த தெய்வப்புலவன் திருநா மம் சிவசித்திரப் பெருமாள் புலவன்.”* 7.
இங்கு இதுவரை கோணேசர் கல்வெட்டிலிருந்து மேற்கோள்க ளாக எடுத்துக்காட்டிய சாசனங்களைப் பற்றிய பகுதிகளை அவ தானத்துடன் படிக்கும் சித்த சுவாதீனமுடைய எவரும் அவை புனைந்துரைகளன்றி, உண்மைகள் பொதிந்தவை என்பதைப்புரிந்து கொள்வர். பட்டவர்த்தனராகிய வித்தியா தர்சிகளும் இதுவரை இவ்விடயங்களை அவதானித்துச் சொல்லிவைக்காதமை வியப்பிற் கும் விசனத்திற்கும் உரியவொன்றாகும். அதனால், இலங்கை வர லாற்றிலுள்ள ஒரு பிரதான அம்சம் ம  ைற ந் து மருவி விட்ட தன்றோ?
சாசனங்களைப் பற்றிக் கூறும் கோணேசர் கல்வெட்டுப் பகுதிகள் ஆதாரபூர்வமானவை என்பதனைக் கைலாச புராணத்துப் பாடல் கள் மூலம் அறிய முடிகின்றது- அவற்றுட் சில மேல்வருமாறுள்ளன:
1. உற்றவனைப் பெரும்பூத மெதிரிறைஞ்சி யுனைப்பயந்த கொற்றவன் றன்செப்பேடுங் குறியுமிது வெனக்கொடுப்ப வுற்றதன மெடுத்ததனுக் கிருமடங்கே யொளிவிடும்பொன் முற்று திருப் பணிக்களித்தான் றன்கரத்தால் s முடிவேந்தன்."".8 2. எழுந் தானதற்கா மிடநோக்கி
; : * : * , யெறிநீர் நிதிபோய் மலை தாங்குங்
கொழுந்தாம னனேகங் காதவழி
. . ." கோலிப் படிக்கரை திருத்தி விழுந் தாரையினிர் மதகினுக்கு
விடுத்தல் பிடித்த லுறுப்பியற்றிச் செழுந் தாரையினிர்க் குளங்கயிலைச்
சிவனார்க் கெனக்கல் லெழுதிவைத்தான். 9.
7. கோ. க. ப. 37.
தகழின கைலாச புராணம், சிவசிதம்பரஐயரின் பதிப்பு, சென்னை, 1887; திருநகரச் சருக்கம், செய்யுள் 60. w
9. த. கை. பு; திருநகரச் சருக்கம், செய்யுள் 89.
- 6 -

3. என்றுமர னருச்சனைக்கு மிக்கோரென்னா
விப்பதியின்முதன்மை யிருவோர்க்கு மீந்து
வென்றிதரு நமதுலகுக் குரவோராகி
விளங்குமெனக் குருவரிசை மிகவுநல்கிக்
கன்றுலவு வெருகுநதி தருப்பையாறுங்
கரம்பநீர்க் கடலளவுங் கணித்தவெல்லை
துன்று திசை நான்குமரன் றனக்கேயென்னச்
சொல்லுமவன் கல்லெழுதித் துலங்கவைத்தான். 19
4. வைத்தொருவர் புதைத்த நிதிமுழுதுங்
கோணமலையரற்கே யுரிமையிந்த வளநாட்டுள்ள
கத்துகடல் வளமுமலை வளமுமற்றைக்
கரைவளமுங் கழிவளங்கான் வளமுமெல்லாம்
பத்தினி லெட்டுங்கயிலைப் பரற்குமிக்க
பங்கிரண்டு முங்களுக்கே பகுதியா மென்
றெத்திசை யுமபுகழனுரை வேந்தன்
செப்பேடெழுதி யவர்கைக் கொடுத்தானின்பமாக,11
இந்நான்கு செய்யுள்களுள் முதலிரண்டும் குளக்கோட்டனைப் பற்றியவை. ஏனையவை கயவாகுராசனைப் பற்றியவை. கோணே சர் கோயிலுக்குத் தன் தந்தையாகிய வரராமதேவன் கொடுத் திருந்த செப்பேட்டைக் கண்டறிந்த குளக்கோட்டன், அதிலே சொல்லப்பட்டதைக் காட்டிலும் இரு மடங்கு பொன்னைக் கோணேசர் திருப்பணிக்கெனக் கொடுத்தான் என்பதை முதலாஞ் செய்யுளினால் அறிய முடிகின்றது. அத்துடன், குளக்கோட்ட னுக்கு முற்பட்ட காலத்திலே கோயிலுக்கு வழங்கப்பெற்ற தானங் களைப் பற்றிய செப்பேடு ஒன்றிருந்தமை பற்றிய குறிப்பும் நோக்கற்பாலது.
இரண்டாவது செய்யுள் குளக்கோட்டன் குளங்கட்டிய செய்தி யினைக் குறிப்பிடுகின்றது. அது கோணேசர் கல்வெட்டிலும் திரிகோணாசல புராணத்திலும் விரித்துரைக்கப்படுகின்றது. "அநே கம் காதவழி கோலிப் படிக்கரை திருத்தி விழுந்தாரையின் நீர் மதகினுக்கு விடுத்தல் பிடித்தல் உறுப்பியற்றிச் செழுந் தாரையின் நீர்க்குளம் கயிலைச் சிவனார்க்கு எனக் கல் எழுதி வைத்தான் என்னும் பாடற்பகுதியைச் சற்று அவதானமாக ஆராய்கின்ற
10. த. கை. பு: திருநகரச் சருக்கம், செய்யுள் 100. 11. த. கை. பு: திருநகரச் சருக்கம், செய்யுள் 101.
- 7 -

Page 13
பொழுது, அதிலே வர்ணிக்கப்படுவது, புராணமோ, புனைந் துரையோவன்றி, ஆதாரபூர்வமான சென்ற கால நிகழ்ச்சி என்பது தெளிவாகின்றது.
அநேக காத தூரம் வரையான குளக்கரை திருத்தப்பெற்றமை, குளத்திலிருந்து நீர்பாய்ச்சுவதற்குத் தூம்புகளை அமைத்தமை, குளத்தினைக் கோணேஸ்வரத்திற்குத் தேவதானமாகக் கொடுத் தமை, அதனைப்பற்றிய சிலாசாசனமொன்றை நிறுவியமை ஆகிய நான்கும் குளக்கோட்டன் புரிந்த செயல்களென்று சொல்லப்படு கின்றன. குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தினைத் திருத்தி யமைத்தான் என்று கொள்ளத்தக்க வகையில் மட்டுமே கைலாச புராணம் அவனுடைய சாதனையை வர்ணிக்கின்றது. 12 இந்த வகையிலே, அதிலுள்ள செய்திகள், கந்தளாய்க்குளம் பற்றி மகா வம்சம் கூறுவனவற்றோடு முரண்படாதனவாயும், அதிலே இடம் பெறாத செய்திகளைக் கூறுவனவாயும் அமைகின்றன.
குளக்கோட்டன் குளம் பற்றிய செய்திகளைச் சிலாசாசனமாகக் கல்லில் எழுதி வைத்தான் என்ற செய்தி, குளங்களைப் பற்றிச் சிங்கள சாசன வழக்கிலுள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. முதலாம் பராக்கிரமபாகு (1153-1186), நிஸங்கமல்லன் (1187-1196) ஆகிய வேந்தர்கள் குளங்களைப் புதிதாக அமைத்தமைபற்றியும் புன ரமைத்தமை பற்றியும் குறிப்பிடும் சிலாசாசனங்கள் சில உள்ளன.19
12. ** தெரிந்த புகழ்த் திருக்குளமும் வயல்வெளியுந் திருத்தி யரற் கெனவிந்து" எனக் கோணேசர் கல்வெட்டின் நான்காவது பாட் லிற் காணப்படும் மொழித் தொடரும் இக்கருத்தினையே குறிக் கின்றது. ' ن- ' ؟ ܢܝ 13. பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டுப் பகுதிகளிலே பராக் கிரமபாகுவின் சாசனங்கள் காணப்பெற்றன. சமஸ்கிருதத் திலுஞ் சிங்களத்திலும் அமைந்த வாசகங்கள் அவற்றிலே பொறிக் கப் பெற்றிருந்தன. குளக்கட்டின் அகலத்தளவு தூரம் அவற்றிற் கான இடைவெளியாக அமையக்கூடிய வகையில் சிலாசாசனங் கள் நாட்டப்பட்டிருந்ததாக இவற்றால் அறிய முடிகின்றது. கல்மட்டியான வாவியின் அணைக்கட்டிலே நிசங்கமல்லனின் தூண் சாசனம் அமைந்திருந்தது. பாண்டி நாட்டிலே பெற்ற வெற்றியின் நினைவுச் சின்னமாக அங்குள்ள குளம் பாண்டிவிஜய குளம் என்று பெயரிடப் பெற்றமையினை இச்சாசனங் குறிப்பிடு கின்றது. பாண்ட வாவியிலுள்ள தூம்பின் நடுவிலே காணப்படும் சாசனமொன்று நிசங்கமல்லனால அக்குளம் அமைக்கப்பெற்ற தென்று குறிப்பிடுகின்றது. University of Ceylon History of Ceylon, Vol. I, pt 2, 1960, p.p. 512-513, 556.

நிஸங்கமல்லனின் காலத்திலே திருத்தி அமைக்கப்பெற்ற குளங்கள் சிலவற்றை அவனே அமைத்தான் என்றும் அவனுடைய சாசனங்கள் குறிப்பிடுவதும் கவனித்தற்குரியதாகும்.14 இவற்றின் அடிப்படை யிலே நோக்குகின்றபொழுது, குளக்கோட்டன் குளத்தினைத் திருத்தி, அதனைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்த செய்தி களைக் கூறும் வாசகத்தைச் சிலாசாசனமாக நாட்டினான் என்ற புராணச் செய்யுளின் கூற்று முற்றிலும் ஆதாரபூர்வமானது என்று கொள்ளத்தக்கதாகவே காணப்படுகின்றது. கந்தளாய்க்குளம் பற் றிக் கோணேசர் கல்வெட்டுப் பிரதிபலிக்கும் கதையானது, எவ்வாறு சிலாசாசனக் குறிப்புக்களை ஆதாரமாகக்கொண்டு அமைந்திருக்கக் கூடியதோ அவ்வாறே அதிற் கூறப்படும் வேறு பல விடயங்களும் சாசனங்களிலே சொல்லப்பட்டனவற்றை அடிப்படையாகக் கொண் டிருத்தல் வேண்டும்.
3. கோணேசர் கல்வெட்டும் புராணங்களும்
திருகோணமலையிலே ஒரு தனியான இலக்கிய மரபொன்று உருவாகி நிலைபெற்றது என்று முன்பு இவ்வுரையிலே கவனித் தோம். அம்மரபானது கோணேசர் கோயிலை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றவொன்றாகும். கைலாசபுராணம், கோணே சர் கல்வெட்டு, திரிகோணமலைப் புராணம் ஆகிய மூன்றுமே அம் மரபினைப் பிரதிபலிக்கும் பிரதானமான நூல்கள்.19 இவற்றிற் கிடையிலான தொடர்புகள் விரிவானதோர் ஆய்விற்குரிய விடயங் களாகும். இவ்வுரையிலே அவற்றுள் ஒருசில விடயங்களையே தொட்டுச்செல்ல முடியும். " ...
இம்மூன்று நூல்களிலும் கைலாச புராணமே காலத்தால் முற் பட்டது. அது திருக்கோணேஸ்வரம் உன்னதமான நிலையில் அமைந்திருந்த காலத்தில் எழுதப்பட்டது. ஆலயத்தோடு தொடர்
14. பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டிலே அமைந்திருந்த சாசனமொன்று நிசங்க சமுத்திரம் பற்றியும் அதை அவனே அமைத்தானென்றுங் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையிற் பராக்கிரம சமுத்திரம் அவனுடைய காலத்திலே நிசங்கசமுத் திரம் எனப் புனர்நாமம் பெற்றதென்பர். மேலது, பக்கம் 513. 15. பூரீ தகழிண கைலாச புராணம், திரிகோணாசல புராணம் என இந்நாட்களில் வழங்கும் நூல்களுக்கு அவற்றின் ஆசிரியர்கள் குறித்த பெயர்கள் முறையே கைலாச புராணம், திரிகோணமலைப் புராணம் என்பனவாகும். நூல்களின் பெயர்களை அவற்றிலுள்ள வாறு குறிப்பிடுவதே பொருத்தமானதாகும். '
- 9 -

Page 14
புடைய சமகால வழமைகளையும் சென்றகாலச் சிறப்புக்களையும் காட்சியாலும், கேள்வியாலும், ஏடுகள் வாயிலாகவும், பிற ஆவ ணங்கள் மூலமாகவும் அறிந்திருந்த மகாவித்துவான் ஒருவரால் அது பாடப்பெற்றது. காப்பிய அம்சங்களைக்கொண்ட அத்தல புராணம் ஏழு சருக்கங்களையும், அந்தாதித்தொடையிலுள்ள அறுநூற்று முப்பத்திநான்கு விருத்தப்பாக்களையுங் கொண்டுள்ளது. முதலாஞ் சருக்கமும் ஏழாஞ் சருக்கமுந் தவிர்ந்த ஏனைய ஐந்து சருக்கங்களும் சமஸ்கிருத மொழியிலமைந்த மச்சேந்திய புரா ணத்தை ஆதாரமாகக் கொண்டவை.18 கோணேஸ்வரத்து முதன் மையாளர்களாக விளங்கிய மகாபண்டிதர்களால் எழுதப்பெற்றது என்று கொள்ளத்தக்கதான மச்சேந்திய புராணம், தலம் பற்றிய ஒரு மான்மியமாக விளங்கியது என்றுங் கருதமுடிகின்றது. அது மறைந்து ஒழிந்துவிட்டமையால், கைலாச புராணத்தின் மூல மாகவே அதனைப்பற்றி அனுமானித்து அறிந்துகொள்ளலாம். மகாபுராணங்களின் பஞ்ச லக்ஷணங்களுள் ஊழிக்காலம், ஊழியின் பின் படைப்பு என்ற இரண்டினைப் பற்றிய கதைகளைத் திரு மலைத் தலத்தின் மகிமைகளை விளக்குவதற்கு ஏற்ற வகையில், அதன் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணத் தோன்றும்.
கைலாசபுராணத்து ஈழமண்டலச் சருக்கம் முழுமையும் ஆசிரி யரின் அறிவினையுங் கற்பனாசக்தியினையும் ஆதாரமாகக் கொண் ட்து. ஈழநாட்டு மலைவளமும், நில வளமும், நீர்வளமும் சுவை நயத்துடன் வர்ணிக்கப்படுகின்றன. அவ்வர்ணனைகள் தமிழிலக்கிய மரபுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளமையும் கவனித்தற்குரியது.
கோணேஸ்வர வரலாற்றம்சங்களைச் சுவைநயம்படக் கூறும் பகுதி, கைலாசபுராணத்து ஏழாம் சருக்கமான திருநகரச் சருக்கம் என்னும் பகுதியாகும். குளக்கோட்டன், கயவாகு என்னும் , மன்
16. *திருக்கோணேஸ்வரச் சரித்திரத்தினை வடமொழியில் விரிவாகக் கூறிய தெகதிணகைலாச மான்மியம் கோணைநாயகர் கோவிற். பூசகர்களாகிய இருபாகை முதன்மைகளிடம் இருந்து மோசம் போய்விட்டதென்று திருக்கோணாசல வைபவ ஆசிரியர் 1889இலே எழுதிய முகவுரையிலே விசனத்துடன் கூறியிருக்கி றார். ஆயினுழ், தெக்ஷிணகைலாச மான்மியம் பற்றி அகிலேச பிள்ளைக்ஜியுள்ளமை ஏற்புடையதன்று. அம்மான்மியம் இலங் கையின் கேஷத்திரங்கள் ப்லவற்றைப் பற்றிக் கூறுகின்றது. எனி ானும், அது 'கைலுாசபுராணத்துக்கு மூலமாக அமையவில்லை. பொபூலோகசிங்கம் ஃகோணேசர் கல்வெட்டு திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேகழலர்,திருகோணமலை, 1993 ம்லரிற் பக்கங் களின் எண்கள் இலக்க்மிடப்பட்வில்லை.
- - 10 -

னர்கள் கோணேஸ்வரத்தில் ஆற்றிய திருப்பணிகளையும், கோயி லுக்குச் செய்த நிவந்தங்களையும் தானங்களையும், ஆலய ஏற் பாடுகளையும் ஓரளவு விரிவாக இச்சருக்கம் விபரிக்கின்றது. கோயிலைப் பற்றிய சாசனங்கள் முதலான ஆவணங்களை ஆதார மாகக்கொண்டே கைலாசபுராணத்தின் இறுதிச் சருக்கம் எழுதப் பட்டுள்ளது.
கைலாசபுராணம் கோணேசர் கல்வெட்டிற்கு முற்பட்டதென் றும், அதன் மூலங்களுள் ஒன்றாய் விளங்கியதென்றும் கருதுவதற் குச் சில சான்றுகள் உள்ளன. இவ்விரு நூல்களிலுங் காப்புச் செய்யுள் ஒன்றாகவே உள்ளது. அது மேல்வருமாறு உள்ளது
உதய மால்வரை ஒண்கதிரென்ன என் இதய அம்புயத்து என்றும் விளங்கு மத கடாசல வாரண மாமுக முதல் வனைங்கர மூர்த்தி பதாம்புயம்.17
கைலாச புராணத்திற் சொல்லப்பெற்ற விடயங்களின் விளக்க மாகவுந் தொடர்ச்சியாகவுங் கோணேசர் கல்வெட்டு அமைகின்றது. அத்துடன், அப்புராணங் கூறாத பல விடயங்களும் அதிலே காணப் படுகின்றன. கைலாசபுராணத்துக் காப்புச் செய்யுளையே கவிராசவ ரோதயன் கோணேசர் கல்வெட்டின் காப்புச் செய்யுளாக அமைத்துக் கொண்டார். 'சொல்லரிய திரிகயிலைப் பெருமையெல்லாம் தூய புராணக் கதையிற் சொன்னதுண்டு' எனக் கோணேசர் கல்வெட்டின்
17. சிவசிதம்பர ஐயர், பொ. வைத்தியலிங்க தேசிகர் ஆகிய இரு வரின் பதிப்புகளிலும் இதுவே கைலாசபுராணத்தின் காப்புச் செய்யுளாக அமைந்துள்ளது. ஆயினும், வைத்தியலிங்க தேசி கரின் பதிப்பான கோணேசர் கல்வெட்டிற் காப்புச் செய்யுளாக வருவது வேறொரு பாடல், அது மேல்வருவது:
திரு வளர் கோணையின் சீரையோதிட வொரு பொருளென்ன விவ்வுலகம் யாவ்ையுந் தரு மரனருள் புரிசாமி மும்மதம் வரு கரிமுகனடி வழுத்தல் செய்குவ இச்செய்யுளே வையாபாடலின் Լվ செய்யுளாகவும் வருகின்றது. ‘ஒரு நூலின் காப்பு ப்பிழிந் லுக்குக் காப் பாகிவிட்டது போலும் என்பதும் இனைப் பிஜ்றிஇவாரு சிந்தனை. பொ. பூலோகசிங்கர் துல்ஹீெட்டு'; க. செ. நடராஜா, 'திருக்துேரிே வரத்தின் மிகின்ம.கீறும் இரு நூல்கள்','திருக்கோகிேண்ஸ்லூரி ஆல்யகும்பாபிஷேக மலர், 1993. vr ܗܝ
V
- 11 -

Page 15
இரண்டாம் பாடலில் வரும் அடியும், அதன் ஆசிரியர் கைலா? புராணத்தை நன்கு அறிந்திருந்தார் என்பதை உணர்த்துகின்றது.
கைலாசபுராணமும் கோணேசர் கல்வெட்டும் வெவ்வேறு காலங்களுக்குரியவை. இவற்றுள் முன்னையது, கோணேசர்கோயில் சிறப்புற்று விளங்கிய காலத்திலே எழுதப்பெற்றது. எனவே, குளக் கோட்டன், கயவாகுராசன் ஆகியோரைப் பற்றி அதிலே வர்ணிக் கப்பட்ட விபரங்கள் தெளிவானவையாகவும், மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை ஒட்டிச் செல்வனவாகவும் அமைந்தன. கோணேசர் கல்வெட்டிலே அவ்விரு மன்னரைப் பற்றி யுங் கூறப்பெற்ற செய்திகள் ஒரளவு குழம்பிய நிலையிலுள்ளன வாகவே காணப்படுகின்றன.
கோணேசர் கோயில் பற்றிய ஏற்பாடுகளும் சேவைகளும் நிலைகுலைந்திருந்த ஒரு காலத்திலே கோணேசர் கல்வெட்டு உருவாக்கப்பெற்றது என்று கருதலாம். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆலய சேவைகளைப் புதிதாக வரையறை செய்யவேண்டிய ஒரு காலத்திலே அது உருவாக்கப்பெற்றது என்று கொள்ள வேண்டும். திருகோணமலையிலிருந்த கோணேசர் கோயிலைப் போர்த்துக்கேயர் இடித்தழித்த பின்பு, கோயிலிலிருந்த ஆவணங் கள் பல அழிவுற்றன. எஞ்சியுள்ளவற்றை அக்கறையுள்ள சிலர் அங்குமிங்குமாக எடுத்துச் சென்றனர். தம்பலகாமத்திலே கோணேசர் கோயிலைப் புதிதாக அமைத்தபொழுது, பழைய கோயிலுக்குரிய உடைமைகளும் சேவைகளும் புதிய கோயிலுக்கு உரியனவாகின. அவற்றைப் புதிதாக வரையறை செய்யவேண்டிய தேவையின் நிமித்தமாகவே கோணேசர் கல்வெட்டு உருவாக்கப்பட் டிருத்தல் வேண்டும். மேல்வரும் பாடல்கள் இக்கருத்தினை வலியு றுத்துவனவாக அமையலாம்:
சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன்
சொற்படி சொல்லெனவே கல்வெட்டுப் பாட்டென்னப் பாடினன்
பாதிகதைப் பொருளாய் அல்ல்ற்ற கண்டர்தம் பொற்பாதம்
దీప్తి இகல் வெல்லுற்ற சீர்க்கவிராச
வரோதய விற்பனனே, சொல்லரிய திரிக்யிலைப் பெருமையெல்லாம்
யபுராணக் கதையிற் சொன்னதுண்டு *வல்லதொரு வன்னிமையுந் தானத்தாரும் "வரிப்த்துமாமிவர்கள் வந்தவாறும்
سس۔ 12 منھم

நல்லதொரு பூசைவிதி நடக்குமாறும் நடந்ததன்
மேலினி நடக்கும் நடத்தையாவும்
சொல்லெனவே சோதிடத்தின் நிலையேகண்ட
கவிராசன் சொல்லுஞ்சீரே.
"சொல்லுற்ற சீர்க்குளக்கோட்டு மன்னன் சொற்படி சொல் லெனவே' என்ற அடியானது, குளக்கோட்டன் சொல்லியவற் றைச் சொல்வாயாக என்று ஒருவர் பணிக்க, அதற்கிசைந்து ஆசிரியர் கல்வெட்டுப் பாடினார் என்பதைக் குறிக்கின்றது. எனவே இதனைச் செய்யுமாறு யார் பணித்தார், எதற்காகப் பணித்தார் என்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றுள் முதலாவது வினாவிற்கு விளக்கம் அளிக்குமிடத்து நாட்டு வழமைகளையும், நிலைகளையும் அவற்றோடு ஆலயசேவைகளைப் பற்றிய விடயங்களையுங் கருத் திற்கொள்ள வேண்டும். கோணேசர் கோயிலுக்குரிய தேவதா னங்கள் திருகோணமலைப் பிராந்தியத்திலுள்ள நான்குபற்றுக் களிலும் பரந்து காணப்பட்டன. அத்துடன் தலைமுறை தலை முறையாக ஆலய சேவைபுரியும் குடியானவர்களும் அப்பற்றுக்கள் எல்லாவற்றிலும் பரந்திருந்தனர். எனவே, திருகோணமலைப் பிராந்தியம் முழுவதிலும் அதிகாரஞ் செலுத்துகின்ற பிரதேச அரசரால் அல்லது அவர்கள் மீது மேலாதிக்கஞ் செலுத்துகின்ற வேந்தன் ஒருவனால் மட்டுமே ஆலயவேற்பாடுகளை வரையறை செய்தல்கூடும். கோணேசர் கல்வெட்டுக் குறிக்கும் ஆலயவேற்பாடு களின் புனர்நிர்மாணத்திற்கு இத்தகையோரில் யார் பொறுப்பாக இருந்தனர் என்பதை வருங்கால ஆராய்ச்சியாளர் ஒருவேளை முடிவு செய்யக்கூடும்.
இரண்டாம் பாடலிலே 'நல்லதொரு பூசைவிதி நடக்குமாறும் நடந்ததன் மேலினி நடக்கும் நடத்தையாவும் சொல்லெனவே' என வரும் தொடர்கள் சிந்தனைக்குரியவை. ஆலயசேவைகள் ஒரு சமயத்திலே தடைப்பட்டிருந்தமையினையும், அதனால் முன்னைய வழமைகளுக்கு ஏற்ப அவற்றை எதிர்காலத்திலே சீரமைக்க வேண்டியிருந்தமையினையும், அதன் பொருட்டு முற்காலத்து வழமைகளைத் தொகுத்து வரையறைப்படுத்த வேண்டியதன் அவசியமிருந்தமையினையும் இவற்றால் உய்த்துணர முடிகின்றது.
சென்றகாலத்து நிகழ்ச்சிகளையும், சமகால வழமைகளையும் அவற்றுக்கு அடிப்படையாக விருந்த வரலாறுகளையும் தொகுத்துக் கூறும் நூலாகவே கோணேசர் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. குளக்கோட்டன் காலம் முதலாகவுள்ள கோணேசர் கோயிலின்
- 13 -

Page 16
வரலாற்றம்சங்கள் சிலவற்றையும், ஆலய சேவைகள் பற்றிய
விபரங்களையும் அது வர்ணிக்கின்றது. தர்ண்ம், வரிப்பத்து, வன்னி பங்கள் முதலானோர் ஆலயசேவைகளுடன் தொடர்புற்றிருந்த மையாற் சமுதாயப் பிரிவுகள் பற்றியும் அவற்றின் குடியேற்றங்கள் ஏற்பட்டமை பற்றியும் கூறவேண்டிய தேவை அதனை உருவாக் கினோருக்கு ஏற்படலாயிற்று. கைலாசபுராணம் குளக்கோட்டன், கயவாகு மகாராசன் ஆகியோரின் திருப்பணிகளைப் பற்றி மட்டுமே கூறுகின்றது. ஆனால் கோணேசர் கல்வெட்டு திருகோணமல்ைப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த இந்து சமுதாயத்தின் பிரதான பிரிவுகளைப் பற்றியும் வன்னிபங்களின் ஆட்சிபற்றியும், கோணேசர் கோயிலின் பல்வேறு அம்சங்களைப் பற்றியுங் கூறுகின்றது. சாசன வழக்காறுகளையும் பிற ஆவணங்களையும் பின்னணியாகக் கொண்டு சமுதாய வரலாற்றினைக் குறிப்பிடத்தக் களவிலே ஆதார பூர்வமாகக் கூறுகின்ற வேறெந்த நூலும் இலங்கையிலே தமிழ் மொழியில் எழுதப்படவில்லை.
கோணேசர் கல்வெட்டிலே இடம்பெறும் கதைகளை விரிவு படுத்திச் செய்யுள் நடையில் அமைத்துக் கூறும் இலக்கியமே திருகோணமலைப் புராணமாகும். அப்புராணத்திலே, உரிய புராணத்தினுக்குப் பேர் யாதென வினவில். அரிய புகழமைந்த திரிகோணமலைப் புராணமென அறையலாமே" என்று கூறப்படு கின்றமை நோக்கற்பாலது.
திரிகோணமலைப் புராணம் 20 படலங்களையும், 1491 செய்யுள் களையுங் கொண்டு அமைந்துள்ளது.18 அதன் ஆசிரியரின் பெயரும் அது எழுதப்பட்ட காலமும் நிர்ணயிக்கப்படவில்லை. மாசிலாமணி முத்துக்குமாரு என்பவரின் கையெழுத்திலுள்ள திருகோணமலைப் புராணத்து ஏட்டுப்பிரதி ஒன்றைக் கண்டவர்களும் அதனைப் பற்றிக் கேட்டவர்களும் முத்துக்குமாரு என்பவரே நூலின் ஆசிரியர் என்ற கருத்துத் தோன்றி நிலைபெறுவதற்குக் காரணராயிருந் தனர். ஆயினும், இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டவரான வண்ணை மாநகரம் பரத்துவாசி ஆ. சண்முகரத்தினையர் நூலா சிரியரின் பெயர் தெரியவில்லை என்று கூறியுள்ளமையுங் கவனித் தற்குரியது.
கைலாச புராணம் என்ற நிலைமாறி, திரிகோணமலைப் புராணம் என்ற பெயர் தோன்றியமையும் சிந்தனைக்குரியதே. இந்த நிலை
18. திரிகோணாசல புராணம். பதிப்பாசிரியர் ஆ. சண்முகரத்தினையர்
யாழ்ப்பாணம் திருஞானசம்பந்தர் அச்சுக்கூடம், 1909,
- 14 -

மாற்றத்திற்கு இரண்டிற்கும் இடைப்பட்டதான கோணேசர் கல் வெட்டே ஏதுவாக விருந்தது. கோணேசர் கோயிலின் வரலாறு களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய இலக்கிய மரபு ஒன்று திருகோணமலைப் பிராந்திய மக்களின் வரலாறுகளையும் வழமைகமைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபெற்று வளர்ச்சி யுற்றமையினையே திரிகோணமலைப் புராணம் என்னும் பெயர் உணர்த்துகின்றது என்று கருதலாம். .
மச்ச புராணம், கயிலாச புராணம், முற்காலத்தவர்கள் எழுதி வைத்த மரபுகள் முதலியவை இப்புராணத்துக்கு ஆதாரமாயிருந் தன என்பதை மேல்வரும் அதன் பாயிரச் செய்யுள் தெளிவுபடுத்து கின்றது.
மச்சபுராணக் கதையுங் கைலாய
புராணத்தின் வாய்மைதானும் முச்சமம் போற்றிடுமறிஞர் முன்னுரைத்த மரபுகளின் முறையுந் தூக்கி மெச்சிய சீர்தென்கயிலைப் பெரியோர்கள்
கூறென முன்விதியினா ராய்ந்து இச்சகத்திற் கோணவரைப் புராணமெனத்
தமிழ்ப்பாவி னியம்ப லுற்றேன்.
தென் கயிலாயமாகிய.கோணேஸ்வரம். தம்பலகாமத்துக் கோணைநாதர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களின் வரலாற்றம் சங்கள் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தொகுத்து, இலக்கியநயம் பொருந்திய வகையிலே கூறும் சால்புடைய நூலா கவே திரிகோணமலைப் புராணம் காணப்படுகின்றது. அதிலே ஆதார பூர்வமான வரலாற்றுச் செய்திகள் மருவித் தெளிவற்றும், நாட் டார் பாங்கிலுள்ள கதைகள் மேலோங்கியும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
4. நூலின் ஆசிரியரும் அவரின் காலமும்
பாயிரத்திலே, 'சொல்லுற்ற சீர்க்குளக்கோட்டுமன் சொற்படி சொல்லெனவே. கல்வெட்டுப் பாட்டெனப் பாடினான். சீர்க்
கவி ராசவரோதய விற்பன்னனே' என வரும் தொடர்களின்
- 15 -

Page 17
மூலம் ஆசிரியர் இன்னாரென்ப்து நன்கு தெளிவாகின்றது. ஆயினும், கவிராசவரோதய விற்பன்னனே என்னும் வர்ணனை குறித்துச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. கவிராசவரோதய(ன்) என்பது ஒருவனின் இயற்பெயராக அமைந்திருக்க முடியாது. அது பட்டப் பெயரையும் இயற்பெயரையுஞ் சேர்த்துக்கூறும் மொழித் தொடராகவே கொள்ளத்தக்கது. அதனைக் (1) கவி ஆகிய ராச வரோதயன், (2) கவிராசனாகிய வரோதயன் என இருவகையா கப் பிரித்துக்கொள்ளலாம். இராசவரோதயன் என்பது நூலாசிரி யரின் இயற்பெயரெனவும் கவி என்பது அவரின் தகைமையைக் குறிக்கும் சிறப்புப் பெயர் எனவுங்கொள்வதே பொருத்தமானதா கத் தோன்றுகின்றது.
கவி ராசவரோதயன் என்பவராலே கோணேசர் கல்வெட்டுப் பாடப்பெற்றது என்று அதன் பாயிரச் செய்யுள் கூறுகின்ற பொழுதும், நூலாசிரியரைக் கவிராசர் என்று குறிப்பிடுவது ஆராய்ச்சி முறைகள் அறிவியல் நெறிகளுக்கு ஏற்ப விருத்தியாகி யுள்ள இந்நாட்களிலே வழமையாகிவிட்டது. ஈழத்துத் தமிழ்க் கவி தைக் களஞ்சியம் என்னும் நூலில், அதன் பதிப்பாசிரியர் கவிரா சரைப் பற்றி மேல் வருமாறு எழுதுகிறார்:
**இவரது ஊர் திருகோணமலை. இவர் கோணேசர் கல்வெட்டென வழங்குங் கோணேச சாசனத்தைப் பாடி
19. "அப்பதிப்பின்படி இதனை இயற்றியர் கவிராஜராவர்.கவிராஜர் என்பதுபுலவரின் இயற்பெயராக வன்றிச் சிறப்புப் பெயராகவே தோன்றுகின்றது" என ஈழத்துத்தமிழ் இலக்கிய வளர்ச்சி என்ப தன் ஆசிரியர் எழுதுகின்றமை விமர்சனத்திற்குரியது, நூலாசிரி யனைக் கவிராசவரோதயன் என்று குறிப்பிடும் பாயிரச் செய் யுளை மேற்கோளாகக் காட்டிவிட்டு, அதே பக்கத்திலேயே இவர் இவ்வாறு எழுதுகின்றமை கவலைக்குரியதே. பாயிரச் செய்யுளின் கூற்றைத் தள்ளிவிட்டு வைத்தியலிங்க தேசிகரின் கூற்றை ஏற்றுக்கொண்டு ஆராய்ந்து சென்றமையும் விநோதமே. தேசிகரின் கூற்றை ஆராய்வுநோக்கின்றி ஒப்புக்கொண்டமை யால், வையாபாடல், கோணேசர் கல்வெட்டு ஆகிய இரண்டும் ஒரே காப்புச் செய்யுளைக் கொண்டிருப்பதால் இரண்டையும் ஒருவரே-வையாபுரி ஐயரே-இயற்றினார் என்றும், சமஸ்தான வித்துவானாகிய வையாபுரி ஐயர் வையா L1/rL-6ð) GVLi பாடியபொழுது, அவருக்குக் கவிராஜர் என்ற விருது அளிக்கப் பட்டது என்றும் சிந்திக்கும் சங்கடமான நிலைக்கு அவர் செல்ல நேர்ந்துவிட்டது. கா. செ. நடராஜா, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.
i !6 r

யவர். பண்டிதராசர் இயற்றிய "த்க்கிண கைல்ாச புராணத் துக்குச் சிறப்புப் பாயிரம் அளித்தவர் இவரேயா கலின் இருவரும் ஒரே காலத்தவர். சிங்கைச் செகராசசேகரனின் வேண்டுகோட்கிணங்கியே பண்டிதராசர் தக்கிண கைலாச புராணத்தைப் பாடினராகையின் கவிராசர் வாழ்ந்த கால முஞ் செகராசசேகரனின் ஆட்சிக்காலமாகும். 20
இக்கூற்றிலே பல விபரீதங்கள் சங்கமமாகின்றமையால், இதனைச்சற்று இங்கு ஆராய்வது பொருத்தமானது, நூற்பாயிரத் திலே ஆசிரியரின் பெயர் 'கவிராச வரோதயன்' என்று கூறப் பெற்றுள்ளபோதும், நூலிலுள்ள அகச்சான்றினை ஆதாரமாகக் கொள்ளாது எம் பெரு விற்பன்னராயினார் அவர் பெயரைக் கவி JTaffi என்று துணிந்தமை எக்காரணம் பற்றியோ? பொ. வைத் தியலிங்க தேசிகர் முதலாயினோர் இருபதாம் நூற்றாண்டில் ஏற். படுத்திய ஆராய்வு நோக்கற்ற மரபினைப் பின்பற்றியே இவர் இவ்வாறு கூறுகின்றார். இவ்விடயங்களில் நூல்களிலுள்ள அகச் சான்றுகள் பிற்கால மரபுகளோடு ஒவ்வாது மாறுபடுமிடத்து, நூல்களிலுள்ள அகச்சான்றுகளே தக்க ஆதாரங்களாகக் கொள்ளப் பட வேண்டியவை.
"பண்டிதராசர் இயற்றிய தக்கிண கைலாச புராணத் துக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தவர் இவரேயா கலின் இரு வரும் ஒரே காலத்தவர் என்று கூறுவதற்கு ஆதாரம் யாது? கவிராசவரோதயன் கைலாச புராணத்துக்குச் சிறப்புப் பாயிரம் பாடியதாக யார் சொன்னார்கள்? எந்த நூலிலே அவ்வாறு கூறப்பெற்றுள்ளது?
வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பான கைலாச புராணத்திலே
கவிவீரராகவர் இயற்றியது என்று சொல்லப்படும் சிறப்புப்பாயி ரத்தின் பின்னால் மூன்று பாடல்கள் உள்ளன. அவை சிறப்புப் பாயிரம் போல அமையாது இடைச் செருகல்கள் போலவே காணப் படுகின்றன. இவ ற்றை ஏடெழுதியவர்கள் புகுத்தினார்களா ,
தேசிகர் எங்கிருந்தோ அவற்றைக் கண்டுபிடித்துச் சிறப்புப்பாயி
ரத்துக்குப் பின் சேர்த்துக் கொண்டாரா என்ற வினாக்களுக்கு
விட்ை காண்பது சிரமம். கவிராஜர் சொன்ன கவி என்னும் தலைப்
பின் கீழ் அதிலே காணப்படும் செய்யுள் மேல்வருமாறு உள்ளது:
20. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கலாநிதி ஆ. சதாசிவம், சாகித்திய மண்டலம், கொழும்பு, 1966, பக்கம். 33. .
سس- 17 سس- |

Page 18
நடிக்கும் பரத மியலிசை நாடக நாற்கவிதை நொடிக்கு முன்பாடப் ப்ரபந்தங் கணித நன்னூல் சிவநூல் படிக்க நிகழ்த்தப் புராணாகமஞ் சொல் பரம்பரையாய்
வடிக்குந் தமிழ்வல்ல பண்டிதராசன் வரவித்தையே.21
இப்பாடலைக் கவிராசவரோதயன் பாடினான் என்பது ஒரு மரபு மட்டுமே ; அதற்கு உறுதியான ஆதாரமேதுமில்லை. கைலாச புராணத்தைப் பண்டிதராசர் பாடினார் என்ற குறிப்பு எதுவும் இப்பாடலில் இல்லை. கைலாச புராணத்திற் பண்டிதராசர் என்ற பெயர் காணப்படுவதில்லை. சைவராச பண்டிதர் என்னும் ஒருவ ரைப் பற்றியே அந்நூல் குறிப்பிடுகின்றது.22 சைவராச பண்டி தர் என்பவரைப் பண்டிதராசர் என்று வர்ணிக்கும் பாடலைக் கவி ராசவரோதயன் பாடினார் என்ற கருத்தை ஒப்புக்கொள்வோமா யின், அது சைவராச பண்டிதர், கவிராசவரோதயன் ஆகியவிரு வரும் வெவ்வேறு காலத்தவர் என்பதையே உணர்த்தும். சைவ ராச பண்டிதர் என்னும் நாமத்தைப் பண்டிதராசர் என்று மாற்றி யமைத்தவரான கவிராசவரோதயன் சைவராச பண்டிதருக்கு மிகவும் பிற்பட்டவொரு காலத்திற்குரியவராதல் வேண்டும். இரு வரும் ஏககாலத்தவராயின், கவிராசவரோதயன் சைவராச' பண்டிதர் என்னும் (சிறப்புப்) பெயரை உள்ளவாறே கூறியிருப்பர்.
செகராசசேகரனின் வேண்டுகோட்கிணங்கியே பண்டிதராசர் கைலாச புராணத்தைப் பாடினார் என்று கூறுவதற்கு ஆதாரம் எங்குள்ளது? ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலின் தொகுப்பாளர், கைலாச புராணத்துப் பாடல்களை அவதானத் துடன் படிக்காதமையினாலேயே உண்மைகளைத் திரித்தும், பொறுப்
2l. 5. 63) 5. L., L. 8.
22. " " வைப்பான வடகயிலை தென் கயிலை யென்றிரண்டு
வரைக்கு மீசன் செப்பாதி வடமொழியின் புராணநடை
தென்மொழியிற் செப்புகென்றான் இப்பாரிலய னான்குமுகமு மொருமுகமாகி யிசைந்ததன்ன மெய்ப்பான குருசைவராச பண்டிதனெனு நால் வேதநூலோன்' பாயிரம்: செய்யுள் 8. இப்பாடல் ஒரே வடிவத்தில் இரு பதிப்புக்களிலும் உள்ளமை குறிப்பிடற் குரியது. இப்பாடலின்படி, கைலாச புராணத்தை எழுதுமாறு கேட்டவர் சைவராச பண்டிதர்.
پس 18 -سس

பற்ற வ்ன்கயிலும் இவ்வாறு கூறத்துணிந்தனர்.23 கவிராசர் வாழ்ந்த காலமுஞ் செகராசசேகரனின் ஆட்சிக்காலமாகும்" என்று அவர் கூறுவது முற்றிலும் விபரீதமே. செகராசசேகரன் என்பது ய்ாழ்ப்பாணத்து அரசர்கள் சூடிக்கொண்ட மாறிவரும் பட்டப் பெயர்களுள் ஒன்றாகும். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக முறையே பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் பட்டப்பெயர்களைச் சூடினார்கள். செகராசசேகரன் ஒருவனின் காலத்திலே கவிராச வரோதயன் வாழ்ந்தான் என்று கொள்வதற்கான குறிப்பு எதுவும் கோணேசர் கல்வெட்டிலோ வேறெந்த நூலிலோ காணப்பட வில்ல்ை. கோணேசர் கல்வெட்டிலும் அது எப்போது பர்டப் பெற்றது என்று கூறப்படவில்லை. அதிலே செய்யுள் நடையிலும் உரைநடையிலுமுள்ள பகுதிகள் சிலவற்றுக்குக் கைலாசபுராணம் ஆதாரமாய் அமைந்தது என்று கொள்ள முடிவதாலும், சைவராச பண்டிதரின் காலத்துக்கு மிகவும் பிற்பட்டவொரு காலத்தில் அதனாசிரியர் வாழ்ந்தவரென்று கொள்ள முடிவதாலும், கோணே சர் கல்வெட்டு பதினாறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கொள்வது எந்த வகையிலும் பொருந்தாது. ஒல்லாந்தர், ஆங்கி லேயர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் உரைநடைப் பகுதியில் காணப்பெறாதமையினாலும், அன்னோரைப் பற்றிக் கூறும் பாடல் கள் இடைச்செருகல்கள் என்று கொள்வதற்குத் தக்க காரணங்கள் இருப்பதாலும் கோணேசர் கல்வெட்டுப் பதினேழாம் நூற்றாண் டில் எழுதப்பெற்றதென்று கொள்வது பொருத்தமானது. நுணுக்க மான ஆய்வுகளின் பயனாக வருங்காலத்தில் ஒருவேளை இக் கருத் தில் மாற்றம் ஏற்படலாம்.
நூல்களின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியரின் பெயர்களை யும் உள்ளவாறு குறிப்பிடுதல் வேண்டும். இவற்றை மாறுபடக் கூறுவது இங்கு மரபாகிவிட்டது. ஆராய்ச்சி நெறியும், வித்தியா விருத்தியும் பெருமுன்னேற்றம் அடைந்த இருபதாம் நூற்றாண் டிலே, பிறநாட்டு உயர்பீடங்களில் நெறிபயின்ற அறிஞராயுள் ளோரும் ஆராய்வுநோக்கின்றி இவ்விடயங்கள் தொடர்பாக எழுதுவ தும் போதிப்பதும் விநோதமே. பெயர்களை மாறுபடக் கூறுவதனால் நூல்களின் பெறுமதியே குறைகின்றது. நூலொன்றிலே அதன் ஆசிரிய
23. பண்டிதரான அன்னாருக்குப் பாடல்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எவருங்கூறமுடியாது. எனவே, அவர்
அவற்றைப் படித்து ஆராயுஞ் சிரமத்தை மேற்கொள்ளவில்லை என்று துணிதலே பொருத்தமானது. 1

Page 19
ரின் பெயர் ஒருவிதமாகக் கூறப்பட்டிருக்கையில்,அப்பெயரினை வேறு விதமாக எழுதுவதும் சொல்வதும் பொருத்தமற்றதே. கோணேசர் கல்வெட்டினைப் பாடியவர் கவிராசவரோதயன் என்று அந்நூல் கூறுவதால், நூலாக்கியோனின் பெயரைக் கவிராசவரோதயன் என்று சொல்வதே பொருத்தமானது. பண்டிதராசரைப் பற்றி வேறொரு சமயத்திலே ஆராய்வோம். . . . .
5. நூலின் அமைப்பும் பொருள் மரபும்
ஏட்டுப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பெற்ற கோணேசர் கல்வெட்டிலே செய்யுள் நடையிலும் உரைநடையிலும் அமைந்துள்ள இருவேறு பகுதிகளுள்ளன. செய்யுள் நடையிலமைந்த முதலாவது பகுதியிலும் இரு பிரிவுகள் உள்ளன. இவற்றுள் முதலா வது பிரிவு, கோணேஸ்வரம் தொடர்பாகக் குளக்கோட்டன் புரிந்த திருப்பணிகளைக் கூறுவது. இரண்டாவது பிரிவு, அக்கோயிலுக்குக் கயவாகுராசன் செய்த திருப்பணிகளைக் கூறுகின்றது.
உரைநடையிலுள்ள இரண்டாவது பகுதியில், மேல்வரும் 29 தலைப்புக்களின் கீழ் விபரங்கள் அடங்கியுள்ளன: (1) மாணிக் கங்கள் வரவு, (2) வரிப்பத்தார், (3) கலியாணத்துக்குச் செய் தொழும்பு, (4) தீமைக்குச் செய்தொழும்பு, (5) சூகரவேட்டை, (6) குடிமை வரவு, (7) கயவாகுராசன் உபயம், (8) புவனேக கயவாகு, (9) பரராசசேகரன்-செகராசசேகரன் வரவு, (10) ஆரியச். சக்சர வர்த்தி வரவு, (11) திரவிய இருப்பு, (12) சிந்துர இருப்பு, (13) எட்டு இராசாக்கள் கொடுத்த திரவிய இருப்பு, (14) சிங்கா சனத்துக்கரு+ான திரவியம், (15) மகாலிங்க இருப்பு, (16) திருமலை யின் கீழ்ப்புதினம், (17) திருநாள், (18) கழனிமலை, (19) திருக் குளங் கட்டினது, (20) ஆசாரிமார் வரவு, (21) காராளர் வரவு, (22) புலவன் வரவு, (23) வன்னிபம் வரவு, (24) காரைநகரால் வந்த வன்னிபம், (25) சோழநாட்டு வன்னிபம், (26) மருங்கூர் வன்னிபம், (27) கருகுலக்கணக்கு, (28) ஆலாத்திப் பெண்கள், (29) திருச்சூகர வேட்டைத்தூது.
இவற்றுள்ளே திருமலையின் கீழ்ப்புதினம், திருக்குளங்கட் டினது, கழனிமலை, திருச்சூகர வேட்டைத் தூது ஆகிய நான்கு தலைப்புக்களின் கீழே காணப்படும் விபரங்கள் பெரும்பான்மையும் பெளராணிகப் பாணியிலான புனைகதைகளாகும். ஏனைய யாவும் சமுதாய வழமைகளையும் ஆலயந் தொடர்பான ஏற்பாடுகளை விபரிக்கும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட மரபுகளை யும் ஆதாரமாகக் கொண்டவை.
ം 20 -

(1) அரசர்கள் கோணேசர் கோயிலுக்கு வழங்கிய நன்கொடை கள், (2) கோயிற்சேவைகள் பற்றிய ஏற்பாடுகள், (3) கோயிலுக் குரிய உடைமைகள், (4) குடியேற்றம், (5) சமுதாய வழமைகள், (6) வன்னிபங்கள் ஆகிய ஆறு பிரதான விடயங்களைப் பற்றியன வாகவே 23 தலைப்புக்களின் கீழே காணப்படும் விபரங்கள் அமைந் துள்ளன. செய்யுள் நடையிலுள்ள பகுதியிற் சொல்லப்பெற்ற சில அம்சங்களும், அதிலே இடம்பெறாத பல அம்சங்களும் உரை நடையிலுள்ள பகுதியிலே சற்று விரிவாகக் கூறப்பட்டுள்ளமை கவனித்தற்குரியது. அதனால், ஒரு வரலாற்றுமூலம் என்ற வகை யில் உரைநடைப் பகுதியே கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கோணேசர் கல்வெட்டின் இரு பகுதிகளும் ஒரே காலத்த வையா? அவை ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவையா? என்னும் வினாக்களுக்கு விடை காண்பது அவசியமாகின்றது. அதன் பாயிரச் செய்யுள் கூறுவனவற்றை ஆதாரமாகக் கொண்டே இவ்வையப் பாடுகளை ஒரளவுக்குத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். " " . குளக் கோட்டு மன்னன் சொற்படி சொல்லெனவே கல்வெட்டுப் பாட் டென்னப் பாடினன். கவிராசவரோதயனே' என்னும் தொடரின் மூலம், கவிராசவரோதயன் இயற்றிய நூல் செய்யுள் வடிவில் அமைந்ததென்பது பெறப்படுகின்றது. எனவே, உரைநடையில மைந்த பகுதி கவிராசவரோதயனால் இயற்றப்பெறவில்லை என் பதும் உணரப்படுகின்றது. மேலும், "குளக்கோட்டு மன்னன் சொற் படி. பாடினன்" என்ற குறிப்பானது, குளக்கோட்டன் திருப்பணி களைப் பற்றிய பாடற் பகுதியே கவிராசவரோதயன் இயற்றிய பனுவலாகும் என்ற கருத்தும் பொருத்தமானதாகத் தோன்றும்.
கவிராசவரோதயன் பாடிய கல்வெட்டு எவ்வண்ணமாகவும், யாராலும் விரிவுபடுத்தப்பெற்றது என்பது ஆராய்விற்குரியது. காலப்போக்கிலே கயவாகுராசன் பற்றிய அகவற் பாவிலமைந்த பாடலும், இரண்டாம் பகுதியான உரைநடைப் பகுதியும் அதனோடு இணைக்கப்பட்டதும், அது ஒரு தொகுப்பு நூலாகியது. அகவற் பாடலாகவுள்ள பகுதி, உரைநடைப் பகுதி, ஆகியவற்றை ஆக்கி யோரின் பெயர்களையும், இவை அனைத்தையும் ஒன்று சேர்த்துத் தொகுத்தோரின் பெயரினையும் அறியுமாறில்லை. உரைநடைப் பகுதி பாடற்பகுதிகளுக்குக் காலத்தாற் பிற்பட்டதென்று உறுதிப் படுத்துவதற்கும் தக்க காரணங்கள் இல்லை.
ஒரு தொகுப்பு நூலாக அமைந்திருக்கும் கோணேசர் கல் வெட்டிற் காணப்படும் பிரதான விடயங்கள் எல்லாவற்றையும்
- 2 - -

Page 20
விரிவாக விமர்சித்து ஆராயப்புகின், அது பரந்து பெரு நூலாக விரியும். அத்தகைய முயற்சியானது, எட்டு நூற்றாண்டுகளுக்குரிய திருகோணமலைப் பிராந்திய வரலாறு பற்றிய ஆராய்ச்சியாக மலரும். இவ்வுரையிலே, சமயத்துக்கேற்றவாறு, நூலின் பண் பினைப் பிரதிபலிக்கத்தக்க வகையில் சில பிரதான விடயங்களை மட்டுமே தெளிவுபடுத்த முடியும். குளக்கோட்டன், கயவாகுராசன் என்போரைப் பற்றி வேறொரு நூலிலே விரிவாக விளக்க வேண்டும் என்பதால், அவர்களைப் பற்றிய விசாரங்களும் இங்கு தவிர்க்கப் படுகினறன.
6. கோணேசர் கோயிலுக்குரிய உடைமைகள்
திரவிய இருப்பு, சிங்காசனத்துக்கருகான திரவியம் ஆகிய தலைப்புக்களைக் கொண்ட பகுதிகளிலே கோயிலில் வைக்கப்பட்டி ருந்த திரவியங்களும் பிற பொருள்களும் வர்ணிக்கப்படுகின்றன. இவற்றுள் முதலாவது தலைப்பிலுள்ள பிரிவிலே மேல்வரும் பகுதி தாணப்படுகின்றது,
'அப்பொழுது வன்னிபமும் மற்றுமுள்ள யாவரும். பேசிக்கொண்டு இத்திருமலையிற் பெருமைப்பாடும், இத னினுள்ள புதுமைகளும், எங்கோமானாகிய குளக்கோட்டு மகாராஜா நிறுத்திய திட்டங்களுங் கேட்டறிய வேண்டு மென்று செண்பகராயரையும், பெரியபிள்ளை பண்டாரத் தையும், ஐந்து குடிமைகளையும் கூட்டிவிட்டு. நீங்கள். நிலாவெளி என்னும் ஊருக்குப் போய்க் கனகசுந்தரப்பெரு மாளுக்குச் சொல்லும் வசனம்:
* தம்மிடத்திலே மகாபெரும் புதினமான சில பெரு மைகள் கேட்கவேண்டுமென்று பெரியகணக்கும், வளமைப்* பத்ததியும், கல்வெட்டுப் பத்ததியும் எடுப்பித்துக்கொண்டு நாங்கள் வரச்சொன்னோமென்று கூட்டிக்கொண்டு வாருங் கள் என்று சொல்ல, அவர்கள் சென்று கூட்டிவர வன்னி பமும் இருபாகை முதன்மையுந்தவிர மற்றுமுள்ள யாவரும் " எதிர்கொண்டிறைஞ்சி, வன்னிபத்துச் சரியான வரிசை யுடனே இருத்தி, ஆதியாகிய கோணநாயகர் கிருபையை யும், குளக்கோட்டு ராசாவுடைய பெருமையையும் பேசிக் கொண்டிருக்கும் போது தனியுண்ணாப் பூபாலவன்னிப மும், இருபாகை முதன்மையும் கனகசுந்தரப் பெரு மாளைக் கேட்ட வசனம்: . w - −
ബ് 22 -

'வரராமதேவர் முதலிய எட்டு ராசாக்கள், அறை முதலில் வைத்த இருப்பு எம்மாத்திர மென்றும், நகைகள் எம்மாத்திரமென்றும் ஒரு திட்டம் பார்க்க வேண்டுமென்று கேட்ப கனகசுந்தரப் பெருமாள் பத்ததியைப் பார்த்துச் சொல்லியது:
1. வரராமதேவர் அறைமுதலில் வைத்த பொன் 689
களஞ்சு, பொன்னகை 634 களஞ்சு.
2. குளக்கோட்டு மகாராசா அறை முதலில் வைத்த பொன்
8481 களஞ்சு; பொன்னகை 9512 களஞ்சு.
3. கயவாகு மகாராசா அறை முதலில் வைத்த பொன் 1522
களஞ்சு பொன்னகை 249 களஞ்சு.
4. புவனேக கயவாகு அறைமுதலில் வைத்த பொன் 9284
களஞ்சு பொன்னகை 3926 களஞ்சு.
5. நளச்சக்கரவர்த்தி அறைமுதலில் வைத்த பொன் 89211
களஞ்சு பொன்னகை 2948 களஞ்சு.
6. பரராசசேகரன், செகராசசேகரன் அறைமுதலில் இருப்பாக
வைத்த பொன் 729 களஞ்சு பொன்னகை 78 களஞ்சு,
7. ஆரியராசன் அறைமுதலில் இருப்பாக வைத்த பொன்
219 களஞ்சு பொன்னகை 1209 களஞ்சு.
8. நாட்டவர்கள் கோயிற்படியில் வைத்துக் கும்பிட்ட பொன் 219 களஞ்சு. இம்மாத்திரமும் குகைக்குள்ளே பண்டக சாலையிற் பெரிய அறை முதலிருப்பு. . இதற்கு வகை பிற கணக்கிலுண்டு.24 ,
இதிலே கூறப்பெற்ற விடயங்கள் முற்காலத்துச் சரித்திர நிகழ்ச்சி பற்றியனவாகக் காணப்படுகின்றன. ஒரு சமயத்திலே கோயிலின் பரிபாலனத்துக்குப் பொறுப்பாகவிருந்த இருபாகை முதன்மையான தலைமைக் குருக்களும், திருகோணமலை வன்னிப மான தனியுண்ணாப் பூபாலனும் கோயிலில் இருப்பாகவுள்ள பொற்காசு, பொன்னகை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வ தற்கென ஒரு கூட்டம் கூட்டினார்கள். அதற்குக் கனகசுந்தரப் பெருமாளை அழைக்க வேண்டியிருந்தது. பெரிய கணக்கு, வளமைப் பத்ததி, கல்வெட்டுப்பத்ததி ஆகிய ஆவணங்கள் அவரின் பொறுப் பாகவே இருந்தன. எனவே, உரிய மரியாதைகளுடன் அவரை
24 கோ. க. பக்கங்கள் 23-24.
سست۔ 23 سے۔ .

Page 21
அழைத்து வருவதற்காகச் செண்பகராயர், பெரியபிள்ளைப் பண் டாரம் ஆகிய விரு வரையும் ஐந்து குடிமைகளோடும் நிலாவெளிக்கு அனுப்பியிருந்தார்கள்.
கனகசுந்தரப் பெருமாள் கோயிலை அடைந்ததும், அங்கு சமுகமாயிருந்தவர்கள் அவரை வரவழைத்து, வன்னிபத்துக்குச் சமமான வரிசைகளோடு இருத்தினார்கள். அதன் பின்பு வன்னி பமும் இருபாகை முதன்மையும் முற்காலத்து மன்னர்கள் கோயி லுக்குக் கொடுத்த பொற்காசு, பொன்னகை ஆகியன பற்றி விசா ரித்தபோது, கனகசுந்தரப் பெருமாள் அவற்றைப் பற்றிய விபரங் களைப் பத்ததியைப் பார்த்துச் சொன்னார்.
நாட்டவர் முன்னிலையாகக் கோயிற்காரியங்களை விசாரிப்பது வழமை என்பதும், அத்தகைய விசாரணைகளைப் பூபால வன்னி பமும் இருபாகை முதன்மையும் கூட்டாகவே நடத்துவது என்பது வும், நிலாவெளியிலிருந்த கனகசுந்தரப் பெருமாள் என்னும் பட்டத் துக்குரிய குலத்தவர் கோயிற் கணக்குகள் பற்றிய ஆவணங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர் என்பதும், அவர்கள் வன்னிமை என்னும் பட்டத்துக்கும் அதற்குரிய வரிசைகளுக்கும் உரியவரென்பதும் இவ் விபரங்கள் மூலமாக அறியப்படுகின்றது. .
கனகசுந்தரப் பெருமாள் வசமிருந்த வளமைப்பத்த்தி, கல்வெட் டுப்பத்ததி, பெரிய கணக்கு என்பன பற்றிக் கோணேசர் கல்வெட் டிலே பல இடங்களிலே கூறப்படுகின்றது. சமகாலத் தமிழகத்தி லுள்ள பிரதான கோயில்களிற்போலக் கோணேசர் கோயிலிலும் நன்கொடைகள், இருப்புமுதல்கள், வரவு செலவு முதலியவற்றைப் பற்றிய விபரங்களை எழுதி வைப்பதற்கான ஏற்பாடுகள் இருந் தமையினையும் இந்நூலிலுள்ள குறிப்புகளால் அறியமுடிகின்றது. கருகுலக்கண்க்கு என்னும் தலைப்பின் கீழுள்ள பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கணக்கரின் பெயர்கள் காணப்படுகின்றன. மத்திய காலத்துத் தமிழகத்திலே ஊர், பிரமதேயம் நகரம், கோயில் என்பவற்றின் வரவு செலவுக் கணக்குகளை எழுதியவர்கள் கண்க் கன் என்று குறிப்பிடப் பெற்றமையும் இங்கு கவனித்தற்குரியது. பெரிய கணக்கு, வளமைப்பத்ததி, கல்வெட்டுப்பத்ததி என்னும் மூன்று வகையான ஆவணங்களுள் முதலிரண்டும் முறையே உடை மைகள், ஆலய வழமைகள் ஆகியவை பற்றியன என்பது அவற் றின் பெயர்களாற் புலனாகின்றது.
அரசர்கள் .நன்கொடையாக வழங்கிய காசு. ஆபரணம் ஆகியன பற்றிய விபரங்கள் புனைந்துரைகளாகவோ மிகைப்படுத்
- .2d a

தப்பட்டனவாகவோ, காணப்படவில்லை. தமிழ்ச்சானங்களிலே இவ்விடயந் தொடர்பாகக் காணப்படும் விபரங்களை அவை பெரிதும் ஒத்துள்ளன. நன்கொடை வழங்கிய அரசர்களின் பெயர் களைக் குறித்துச் சில ஐயப்பாடுகள் தோன்றுகின்றன. புவனேக கயவாகு, நளச்சக்கரவர்த்தி ஆகியோரை அடையாளங் காண்பது சிரமம். முற்காலத்து ஏடுகளை வாசிக்கின்ற பொழுது ஏற்படும் தடுமாற்றங்களினால் அரசரின் பெயர்கள் சில சந்தர்ப்பங்களிலே மாற்றம் அடைந்திருத்தல் கூடும். நன்கொடைகளை விபரிக்கின்ற சாசனங்களிலுள்ள கிரந்த எழுத்துக்களையும் சமஸ்கிருதப் பகுதி களையும் புரிந்துகொள்ள முடியாமையாலும் சில பெயர்களை மாற் றியும் திரித்தும் எழுதியிருத்தல் கூடும்.
7. திருவாசகப் புலவன்
ஆலயத் தொழும்புகளைக் கிரமமாகப் புரிவதற்கெனக் குளக் கோட்டன் மருங்கூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, காரைக் கால் முதலிய ஊர்களிலிருந்து பல குடிகளை வரவழைத்து, அவர்களுக்கு நிலபுலம் முதலானவற்றைக்கொடுத்து, அவர்கள் தலைமுறை தலை முறையாகச் செய்ய வேண்டிய கடமைகளை வரையறை செய்தான் என்று சொல்லப்படுகின்றது. . . . . . .
திருவாசகப்புலவன் பற்றிய பகுதி, இக்கதைகளின் பொதுப் பண்புகளைப் பிரதிபலிப்பதாய் அமைகின்றது, அது மேல்வருமாறு உள்ளது. - ... ' . . . . "
- - 'செகராசரடிபரவு திருக்குளக்கோட்டு மகாராசன் காஞ்சிபுர சிவாலயத்திற்குச் சென்று சிவதரிசனஞ் செய்து துதிசெய்து நிற்குந் தருணத்தில் தெய்வப்புலவன் சுவாமி திருமுன்னிலையினின்று சிவதோத்திரங்களோதுகின்ற இரா கப்பண்ணையும். ஆசாரவலங்காரத்தையுங் கண்டு தெய்வப் புலவனைப் பார்த்து உன் வங்கிஷத்தில் ஒரு பிள்ளை தர . வேண்டுமென்று கேட்கத் தெய்வப்புலவனும் அரசனுடைய பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணித் தேவரீர் அடி யேனை ஒரு பிள்ளை தரச்சொல்லிக் கேட்டது என்ன காரியத்திற்கென்ன, இலங்காபுரியிலே திரிகயிலை நாதர் திருவாலயத்திற்கு முன்னின்று நாதகிதத்துடன் சிவ தோத்திரமோதுதற்காகவென்று அரசன் சொல்ல, மிகவும் .சந்தோஷப்பட்டுத் தன் குடியில் ஒரு குடித்தனமமைத்துக் கொடுக்க அவர்களுடன் அரசன் திரிகயிலைக்கு வந்து நித்
سے 25 ست

Page 22
தியமுஞ் சிவாலயத்துக்கு முன்னே நாதகிதம் பாடத் திட் டம்பண்ணி பள்ளவெளியில் இரண்டவண விதைப்புத்தரை யுங் கொடுத்துக் கொட்டியாபுரத்திற் சமுத்திரக்கரையாக ஒரு கிராமத்தைச். சம்பூரென்றுபேரிட்டு, எந்தக்காலத்துக் கும் உன் குடியின் மனுஷருக்குப் பரவணியாகத் தந்தோ மென்று செப்புக்கம்பை போட்ட பத்ததியுங் கொடுத்து கோயிற்றிருவாசக புலவனென்று அரசனுரை நிறுத்தியது. அரசன் கூட்டிவந்த தெய்வப்புலவன் திருநாமம் சிவசித்திரப் பெருமாள்" 25.
காஞ்சீபுரத்துக் கோயிலொன்றைச் சேர்ந்த ஒதுவார் குடி களில் ஒன்றினை இலங்கைக்கு வரவழைத்தமை, அக்குடியிலுள்ள ஒருவனை திருக்கோணேஸ்வரத்திலே திருப்பதிகம் பாடுவதற்கு நிய மித்தமை, அவனுக்குத் திருவாசகப் புலவன் என்று பெயர் சாத்தி யமை, பரவணி ஆட்சியாக பள்ளவெளியில் இரண்டவண நில மும் சம்பூரும் மானியமாக வழங்கிச் செப்பேடு கொடுத்தமை ஆகியனவே புலவன் வரவு என்னும் தலைப்பின் கீழுள்ள கல்வெட் டுப் பகுதியின் சாரமாகும்.
இச் செய்திகள் யாவும் கோயில்களினதும் பெளத்த விகாரங் களினதும் வரலாற்றம்சங்களோடு இசைந்தனவாகக் காணப்படு கின்றன. கோணேசர் கல்வெட்டுப் பிரதிபலிக்கும் ஆலயசேவைகள் மானியமுறையினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. மத்திய கால இலங்கையிலுள்ள பெளத்தப் பெரும்பள்ளிகளினதும் கோயில்களினதும் சேவைகளும், தென்னிந்திய ஆலய சேவை களும், இவ்விதமாகவே அமைந்திருந்தன என்பது கவனித்தற்குரிய தாகும். நாட்டியக்காரர், வாத்தியக்காரர், தொழும்பாளர் ஆகிய பல்திறத்தோரும் சந்ததி முறையாகச் சேவைபுரிவதற்கு நியமனம் பெற்றிருந்தனர். அத்தகையோருக்குப் பரவணிச் சீவிதமாக நிலங் கள் கொடுக்கப்படும். தானத்தார், வரிப்பத்தார் ஆகியோருக்கு முறையே திருகோணமலை, பள்ளவெளி ஆகியவிடங்களிலே. நிலங் கள் விடப்பெற்றிருந்ததாகக் கோணேசர் கல்வெட்டுக் குறிப்பிடு கின்றது. . . . . . . . .
தமிழகத்துக் கோயில்களிலே திருப்பதிகங்களை ஒதுவதற்கு
ஒதுவார்களை நியமிப்பது வழமை. அத்தகையோருக்கு வழங்கப் பெற்ற நிலங்களைத் திருப்பதியக் காணி என்றும் திருவாசகக்
25. கோ.க. பக்கம் 37.
ത്ത് 26 -

காணி என்றுஞ் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. 28 தென்னிந்திய வைணவக் கோயில்களிலும் சைவக்கோயில்களிலும் பின்பற்றப் பட்ட வழமைகளின் அடிப்படையில் நோக்குமிடத்து, காஞ்சிபுரத் திலிருந்து வரவழைத்த ஒருவரைக் கோணேசர் கோயிலிலே திருப் பதிகங்களைப் பாடுவதற்கு நியமித்து, அவருக்குத் திருவாசகப் புலவன் என்று பேர்சாத்தி நிலமும் கொடுக்கப்பட்டதென்ற செய்தி, ஆதார பூர்வமானதாகவே காணப்படுகின்றது. அன்னாருக்குச் செப்புக் கம்பை பூட்டிய பத்ததி கொடுக்கப்பெற்றது என்ற குறிப்பு பழைய ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டதாகவே அமைந்திருக்க வேண்டும். திருவாசகப் புலவனுக்குக் கிடைத்த நிலமானியம் தமிழ கத்திலிருந்த திருப்பதியக்காணி, திருவாசகக் காணி என்பவற்றை ஒத்ததாகும். திருவாசகப் புலவனைப் பற்றிய வரலாற்றுச் செய்தி களைக் கோணேசர் கல்வெட்டின் ஆசிரியர்கள் தமது தகைமைக்கு ஏற்ற வண்ணமாக விபரித்துள்ளனர்.
8. வன்னிபங்கள்
இலங்கையின் வரலாற்றில்ே, பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, வன்னிமைகள் என்னும் சிற்றரசுகள் குறிப்பிடத்தக்க முக்கியத் துவத்தைப்பெறு கின்றன. இராசரட்டை, மாயரட்டை, உறுகுணை என்னும் பகுதி களிலே, இரண்டாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் (1236-1271) அதிகாரம் பெற்றிருந்த வன்னிராசர்களைப் பற்றி சூளவம்சம், ராஜாவலிய முதலிய நூல்கள் கூறுகின்றன.27
அடங்காப்பற்று என்னும் பகுதியிலிருந்த வன்னியர்களைப் பற்றிய செய்திகள் வையாபாடலில் உள்ளன. மட்டக்களப்புப் பிராந்தியத்தில் அமைந்திருந்த வன்னிமைகளைப் பற்றி மட்டக் களப்பு மான்மியம், நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டு என்பன மூலம் அறிய முடிகின்றது. 28 போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் எழுதிய
26. தி. வை. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974, பக்கம் , 545. 27. S. Pathmanathan, The Kingdom of Jaffna, Colombo, 1978, p. p. 124-144, S. Pathmanathan, "Feudal Polity in Medieval Ceylon: An Examination of the Chieftaincies of the Vanni' Ceylon Journal of Historical and Social Studies, Vol. II (New Series) No. 2. July Dec. 1972, pp. 118-130.
28. சி. பத்மநாதன், "நாடு காடுப் பரவணிக் கல்வெட்டு" மட்டக் களப்பு மகாநாடு நினைவு மலர், பதிப்பாசிரியர் F. X, C,
நடராசா, மட்டக்களப்பு, 1976, பக்கங்கள் 82-90.
س---- .237 س--

Page 23
வரலாற்று நூல்களிலும் நிர்வாக அறிக்கைகளிலும் இவை பற்றிக் காணப்படும் குறிப்புகளும் விபரங்களும் அநேகம். தமிழ், சிங்களம், பாளி ஆகிய மொழிகளில் எழுதப்பெற்ற நூல்களிலே, வன்னிமை கள் பற்றிய செய்திகள் கோணேசர் கல்வெட்டிலேயே மிகக்கூடுத லாகக் காணப்படுகின்றன.
திருகோணமலை, கட்டுக்குளம் ஆகிய பிரிவுகளின் அதிபர் களாக வன்னிபங்கள் நியமிக்கப் பெற்றமை பற்றிக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. அதன் உரைப்பகுதியின் பிரிவுகள் பல முழுமையும் வன்னிபங்களைப் பற்றியனவாகவே அமைந் துள்ளன. திருகோணமலை வன்னிமையின் உற்பத்திக்குக் குளக் கோட்டனே காரணனாய் விளங்கினான் என்பதை மேல்வரும் பாடல் உணர்த்துகின்றது:
தானம் வரிப்பத்தென்னு மரன்றொழும்பர்க்குள்
ளிகலார் தர்க்கம வந்தால் மானபங்க மடையாம னடுத்தீர்ப்ப
தாரெனவே மதுரையூா போய்த் தான மதிக்குலராமன் தனியுண்ணாப்
பூபாலன் றனைக் கொண்ர்ந்து தேனமர் பூந்தொடை மார்பன் திருக்கோண
நகரரசு செய்யவைத்தான்.29 • - *
இப்பாடல் திருகோணமலை வன்னிமையின் உற்பத்தியினை விளக்குவதாய் அமைகின்றது. திருகோணமலையில் ஆட்சி புரிவதும் நீதிபரிபாலனஞ் செய்வதும் வன்னிபத்தின் பிரதான கடமைகள் என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகின்றது. தனியுண்ணாப் பூபால வன்னிபங்கள் மதுரை நகரிலிருந்து வந்தோரின் மரபினர் என்ற ஐதிகத்தையும் வலியுறுத்துவதாக இப்பாடல் அமைகின்றது. தனியுண்ணாப் பூபாலன் மரபினரின் முன்னோர்கள் குளக்கோட் டனின் காலத்திலே வன்னிபம் என்னும் பதவியைப் பெற்றிருத்தல் கூடும். ஆயினும், குளக்கோட்டு மன்னனின் காலத்தில் வன்னிமை உருவாகியது என்பதும் ஆலய சேவைகளை நடத்துகின்ற சமூகங் களின் மத்தியிலே அமைதியினை நிலைநாட்டுவதற்கென்று வன்னி யர் நியமிக்கப்பெற்றனர் என்பதுவும், ஆராய்ந்து தெளிவுறுத்தற் குரியனவாகும். திருகோணமலை வன்னிபத்தின் பொறுப்புக்களை யும் கடமைகளையும் ஏதுவாகக் கொண்டு, வன்னிமையின் உற் பத்தியினைக் கவிராசவரோதயர் விளக்கியுள்ளார்.
29. கோ. க. செய்யுள் 11.
aus 28 -

நீதிபரிபாலனத்துறையில் வன்னிபத்திற்குரிய அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் மேல்வரும் பாடல் குறிப்பதாயுள்ளது:
சுத்தமிகு வன்னிமை குற்றஞ் செய்தாற் W துலங்கு விலங்கடி யுயிருக்குயிரே வாங்கு நிர்த்தமிடு மடவியர்கள் குற்றஞ் செய்தா -
னிறை புனலி னிறுத்திவைத்துத் தேங்காய்வாங்கு மற்றை மதிநுதல் மடவார் குற்றஞ் செய்தால்
மண்கடக மேற்றி யடிவழக்கு நோக்கி இத்தகைய விராசாங்கஞ் செய் நீயென்றே
இரத்தின மணியாசனத்தி லிருத்திவைத்தான். 39
கொலை புரிவோருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகா ரம் வன்னிபத்துக்கு உரியதாயிருந்தது. பிற குற்றங்களைப் புரிவோரை அவரவர் செய்த பழிகளுக்கேற்ப விலங்கிட்டுக் கசை யடி கொடுப்பது வழமை. கோயிலிலுள்ள நாட்டியப் பெண்கள் குற் றம் புரியுமிடத்து, அவர்களை நிறைந்த நீரில் நிறுத்தி வைத்துத் தண் டிக்கவேண்டும். ஏனைய பெண்கள் குற்றம் புரியும் வேளை களில், மண்கடகத்தைச் சுமக்குமாறு செய்தும், அடித்தும் தண்டிக்க வேண்டும்.
கோணேசர் கோயிலில் ஆராதனைகளையும், ஆலய சேவை களையும் தடையின்றியும் சிறப்பாகவும் செய்விப்பது திருகோண மலை வன்னிபத்திற்குச் சிறப்பாகவுள்ள பொறுப்பாகும். " " மைய னைய கண்டர் திருக்கோணநாதர் மஹாபூசை திருப்பணியும் வழங்கச் செய்யே’’ என்பது வன்னிபத்தை நோக்கிச் சொல்லப் பட்ட நியதி என்று கவிராசவரோதயன் செப்புகின்றமையும் கவனித் தற்குரியது. கோயிற் காரியங்கள் தொடர்பாகத் தானம், வரிப் பத்தார், முதன்மை, நாட்டவர் முதலியோரை அழைத்து, அவர்கள் முன்னிலையிலே சில சமயங்களில் வன்னிபம் விசாரணைகள் நடத் தியமை பற்றிக் கோணேசர் கல்வெட்டின் உரைநடைப் பகுதியிலே சில குறிப்புகள் காணப்படுகின்றன.
திருகோணமலை வன்னிபம் பற்றிக் கோணேசர் கல்வெட்டிலுள்ள சில செய்திகள் கங்குவேலிக் கல்வெட்டின் மூலம் உறுதியாகின்றன. பதினாலாம் நூற்றாண்டிற்குரிய வரிவடிவங்களில் அமைந்த அக் கல்வெட்டின் வாசகம் மேல் வருமாறுள்ளது: V.
30. கோ. க. செய்யுள் 13.
- 29 =

Page 24
மல்ை(யில்) வன்னியனாரும் ஏழுரில் அட்ப்பர்க்ளுங் கூடி, தம்பிரானார் கோணைநாதனுக்கு கங்குவேலியில் வெ(ளி) யும் புல்நடப்(பு)ம் ஆக விட்டோம். யிதுக்கு யாதொருவன் ஆகிலும் ஆகுதம் நினைத்தவர்கள் கெங்கைக் கரையிலே காராம்பசுவைக்கொன்ற பாவம் கொள்ளக் கடவர் ஆகவும், யிப்படிக்கு யிரண்டு முதலிமை, தானம், வரிப்பற்றும்.31
இச்சாசனம் மூன்று வசனங்களைக் கொண்டுள்ளது; முதலாவது வசனம் கங்குவேலியிலுள்ள வெளியொன்றினையும் புல்வரியினை யும் மலை வன்னியனாரும் ஏழுர்களின் அடப்பர்களும் கோணை நாதர் கோயிலுக்குத் தானம் செய்தமையினைக் கூறுகின்றது. அரசன் எவனைப்பற்றியும் சாசனங் குறிப்பிடாதமையால், மலை வன்னியனார் இச்சாசனம் எழுதப்பெற்ற காலத்திலே சுதந்திர மாகவே ஆட்சி புரிந்தான் என்பதை ஊகித்துணர முடிகின்றது. வேறெந்த வன்னிபமும் மலையில் வன்னியனார் என்று வர்ணிக்கப் பட முடியாதமையினால், மலையில் வன்னியனார் திருகோணமலை வன்னிபமாதல் வேண்டும். மேலும், இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திற் கோட்டியாரம்பத்திலுள்ள கங்குவேலி என்னுங் கிராம மும் திருகோணமலை வன்னிபத்தின் அதிகாரத்தின் கீழிருந்தது. என்பதும் அறியப்படுகின்றது. கரையோரக் கிராமங்களின் தலை வர்களை அடப்பர் என்று வர்ணிப்பது வழமை. இச்சாசனங் குறிப்பிடும் ஏழுர்களும் கோட்டியாரம்பத்தைச் சேர்ந்த கிராமங் களாதல் வேண்டும். ... . .
சாசனத்தின் இறுதி வசனமானது. முதலமை, தானம், வரிப் பற்று ஆகியோரைக் குறிப்பிடுகின்றது. இலங்கையிலுள்ள சாசனங் களில் இது ஒன்று மட்டுமே இம்மூன்று குழுவினரையுங் குறிப்பிடு கின்றது. இம்மூன்று வகையோரும் கோணேசர் கோயிலோடு தொடர்புடையவர்கள் என்று நூல்கள் கூறுவதாலும், வேறெந்த வொரு கோயிலுடனும் இம்மூன்று வகையினரும் சம்பந்தப்பட்டிருந் தமைக்கு எதுவிதமான ஆதாரங்களுங் கிடைக்காதமையாலும், கங்கு வேலிக் கல்வெட்டுக் குறிப்பிடும் முதலிமை, தானம், வரிப்பற்று ஆகி. யோர் திருக்கோணேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவா கின்றது. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைக் கோயிலின் சார்பிலே பொறுப்பேற்றுக்கொள்வோர் என்ற வகையில் இவர்
31. 'ஈழ நாட்டுத் தமிழ்ச் சாசன ங் ஸ் 3. கிழ 8 6  ை ச் சாசன கள்’’, சிந்தனை, மலர் 2: இதழ் 1, பதிப்பாசிரியர் கா. இந்திர பாலா, பேராதனை, 1966, பக்கம் 40.
سسه 30 سمسس

கிளைச் சாசனங் குறிப்பிடுகின்றது. "யிரண்டு முதலிம்ை" என்ற சாசனத்தொடரானது இருபாகை முதன்மை, ஒருபாகை முதன்மை என்று கோணேசர் கல்வெட்டு வர்ணிக்கும் பிராமணக் குரவரிரு வரையுமே குறிப்பிடுவதாய் அமைகின்றது. தானத்தார், வரிப்பத் தார் என்போர் பற்றி நூல்கள் கூறு வனவும் கங்குவேலிச் சாசனத் தால் ஒருவாறு உறுதியாகின்றன.
திருகோணமலை வன்னிபங்கள் பூபாலக்கட்டு என்னுமிடத்தி லுள்ள மாளிகையிலே வாழ்ந்தனர் என்பதைக் கோணேசர் கல் வெட்டால் அறியமுடிகின்றது. தனியுண்ணாப்பூபால வன்னிபங்கள் 32 பேரின் பட்டியலொன்றும் இந்நூலிலுள்ளது. -
வன்னிபம் வரவு, காரைநகரால் வந்த வன்னிபம், சோழநாட்டு வன்னிபம், மருங்கூர் வன்னிபம் என்று உரைநடைப் பிரிவில் வரும் நான்கு தலைப்புக்களின் கீழும் உள்ளவை பெயர்ப்பட்டியல்களே. திருகோணமலைப் பிராந்தியத்திலுள்ள நான்கு வன்னிமைப் பிரிவு களுக்கு தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர்ப்பட்டியல்களாகவே இவை கொள்ளத்தக் கவை.32 மருங்கூர் வன்னிபம், சோழநாட்டு வன்னிபம், காரை நகரால் வந்த வன்னிபம் என்ற தலைப்புகளின் கீழே முறையே 37, 31, 42 என்ற எண்ணிக்கையிலுள்ளவர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. திருகோணமலை வன்னிபங்களுக்குத் தனியுண்ணாப் பூபாலன் என்பது குலப் பெயராக விளங்கியது போல, சிங்கன், குமாரசிங்கன் என்பன முறையே சோழநாட்டு வன்னிபம், மருங் கூர் வன்னிபம் ஆகிய வம்சங்களுக்குரியவர்களின் குலப்பெயர்களாக விளங்கின. இந்நான்கு வம்சங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே வன்னிமைப் பிரிவில் வரிசைக் கிரமமாக ஆட்சி புரிந்தவர்கள் என்று கொள்ளும்விதமாகக் கூறியுள்ளதன் மூலம், வன்னியர் வம்சங்களைப் பொறுத்தவரையிற் கோணேசர் க்ல்வெட்டு ஒரு தடுமாற்றத்தை ஏற்
32. கனகசுந்தரப் பெருமாளை ஒரு சந்தர்ப்பத்திலே ‘சோழவள நாடன் திருநெல்வேலிக்கதிபதியான கனகசுந்தரப் பெருமாள்" என்று கோணேசர் கல்வெட்டு வர்ணிக்கின்றது. ஆகையாற் சோழநாட்டால் வந்த வன்னிபத்தின் வம்சத்தவரான சிங்க வன்னிபங்கள் கட்டுக்குளப்பற்றைச் சேர்ந்தவர்கள் என்பது உணரப்படுகின்றது. கோணேசர் கல்வெட்டுக் குறிப்பிடும் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களும் வெவ்வேறான நான்கு நிலப்பிரிவுகளில் அதிகாரஞ் செலுத்தியவர்கள் என்ற கருத்தும் இதனால் வலியுறுத்தப்படுகின்றது.
33. ஏடுகளைப் பார்த்து எழுதியவர்கள் வரலாற்றுச் செய்திகளைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால் இத்தடுமாற்றத்தை ஏற்ப டுத்தியிருத்தலுங் கூடும். - ‹ጸሖ `
- 3 l -

Page 25
கட்டுக்குளம் பற்றும் " ஒரு வின்னிமையாக அமைந்திருந்தது. என்பது உரைநடைப்பகுதியிலுள்ள பிரிவொன்றினாலே அறியப் படுகின்றது. குளக்கோட்டன் திருநெல்வேலியிலுள்ள காராளனொரு வனை அழைத்து வந்து, அவனுக்கு "இலங்காபுரியிற் கட்டுக்குளப் பற்றடங்கலு மூராட்சியுங் கொடுத்து, நிலாவெளி நிந்தவூராகக் கொடுத்து. வன்னிபத்துச் சரியான வரிசைமானியமுங்கொடுத்து இனி எந்தக்காலமும் இச் சிவாலயத்தில் நடக்கப்பட்ட காரியங் கள் உன் வம்சத்தவர்கள் எழுதி வரவேண்டியது" எனவும், "சற் புத்திரனாகிப் பொறுதிவிசாரமுள்ள மருமக்களிடமிருந்து வரவேண். டியது' என்றும் திட்டம் பண்ணினான் என்று சொல்லப்படுகின் றது 34 - -
கனகசுந்தரப்பெருமாள் என்னும் பட்டமும், ஆலயத்தில் முன் னிடும் கோயிற் கணக்குகளைப் பற்றிய பொறுப்பும் கட்டுக்குளம் பற்று வன்னிபத்தின் உரிமைகளாய் இருந்தன என்பது கோணேசர் கல்வெட்டிலுள்ள மேல்வரும் பகுதியினால் அறியப்படுகின்றது.
* 'இவை முதலான கோயிற் காரியங்களுள்ள பத்ததிக் கணக் கும் குளக்கோட்டு மகாராசா வளமைப் பத்ததியும் பெரிய கணத் கும் கல்வெட்டுக் கோயிற்றொழும்புக் கதைவரலாறும் கோயிலுக்கு முன்னிடும் கட்டுக்குளப்பற்றும் நிலா வெளி நிந்தவூருமாக அந்தக் காலம் அடியேன் குடியிலுள்ளவர்களுக்குக் கிடைத்தபடியால். அந்தக்காலம் முன்னோர்களெழுதி வைத்த பத்ததிப்படிக்குச் சொன்னதென்று கனகசுந்தரப்பெருமாள் சொன்ன வசனம், 35
கட்டுக்குளம்பற்று வன்னியர் காராளர் குலத்தவர். கல்வெட் டிற் காராளரைப் பற்றியுள்ள மேல் வரும் வர்ணனை மெய்க்கீர்த்தி வடிவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
* வடக்குநாடன் திருநெல்வேலிக்கதிபதி செங்குவ ளைத்தாரான் செந்நென்முடியினன் அரசரோடெதிர்த்து வாதுவென்றவன் ஏருடன் மேழி யிலங்கும் பதாகையன் அன்னக்கொடியும் ஆவின் பெருக்கமும் செந்நெற்குவியலுந் திரவியக்குப்பையும் நவமணிக்குவியலும் நாடொறுமிருக்க மூவருக்கெளியான் மூவரைக் காப்பவன் அன்னவன்மேன்மை அளவிடற்கரிதாம். 38
34. கோ. க. பக்கம் 38.
35. கோ. க. பக்கம் 26,
36. இம்மெய்க் கீர்த்தி வடிவம் "காராளர் வரவு' என்னும் பிரிவின்
ஆரம்பத்திலுள்ளது. கோ. க. பக்கம் 36.
---- 3 - را بر

வன்னியர் குலமொன்றின் சிறப்பினை மெய்க்கீர்த்தி வடிவில மைத்துக் கூறும் இது போன்ற வர்ணனை எதுவும் வேறெந்த நூலி லுங் காணப்படவில்லை. கட்டுக்குளப்பற்று வன்னிபங்களைப் பொறுத்தவரையிற் பரம்பரை உரிமைகள் மருமக்கள் தாய முறை யில் உள்ளவை என்று கூறப்பட்டுள்ளமையும் ஆதாரபூர்வமானது; அவதானிக்கப்பட வேண்டியது.
கோட்டியாரம்பற்றிலே பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டு களில் ஆட்சி புரிந்த வன்னிபங்களைப்பற்றிப் பல்வேறு மூலங்களி லிருந்து அறிய முடிகின்றது. வெருகற் சித்திரவேலாயுத சுவாமி கோயிலிலுள்ள சாசனமொன்று கயில வன்னியனார் என்னுமொரு வரைக் குறிப்பிடுகின்றது. இச்சாசனத்திலே காலம் பற்றிய குறிப் பெதுவும் இடம் பெறவில்லை. எனினும், அதிலுள்ள எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பின் அடிப்படையிற் சாசனம் பதினாறாம் நூற் றாண்டிலே எழுதப்பெற்றதென்று கருதலாம். அச்சாசனம் மேல்வரு மாறுள்ளது:
"பூரீ சுப்ரமண்ய நம. தெற்குமதில் கயில வன்னிய னார் உபயம்; (ம) திமராசா மகன் பழையிற் சிதம்பரப் பிள்ளை. மேற்குப் பிறமதில் மட்டக்கழப்பூரவர். நிகொம் புக்கரையூரவர், வடபுறம் செட்டியன் உபையம்.’’ 37.
சித்திரவேலாயுத சுவாமி கோயிற்றிருப்பணிகள் நடைபெற்ற பொழுது, அதன் தெற்கு மதில் கயிலாய வன்னியனார் என்பவரி னால் கட்டப்பெற்றது என்பதை இச்சாசனம் வாயிலாக அறிய முடிகின்றது. கயிலாய வன்னிபம் என வழங்கிய மூவரைப்பற்றிக் கோணேசர் கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. காரைநக ரால் வந்த வன்னிபங்களைப் பற்றிய பட்டியலிற் காணப்படும் பெயர்களில் நான்காவதாக வரும் பெயர் கயிலாய வன்னிபம் என்பதாகும். சோழநாட்டு வன்னிபங்களின் வம்சத்திலுள்ளவர் களிற் பதின்மூன்றாவது பெயராக வருவது கயிலாயசிங்க வன்னிபம். மருங்கூர் மரபிலுள்ள வன்னிபங்களின் பெயர்களிற் பதினான்கா வது இடத்திலுள்ளது, கயிலாய குமாரசிங்க வன்னிபம் என்பதா கும். வெருகற் கல்வெட்டுக் குறிப்பிடும் கயிலாய வன்னியனார் இம்மூவருள் ஒருவனென்றும் அவனுடைய ஆட்சி கோட்டியாரம் பற்றில் அமைந்திருந்ததென்றுங் கொள்ளலாம்.
37. Ceylon Tamil Inscriptions, pt, I Ed. A. Velupillai, Peradeniya, 1971, pp 9-10. من :
യ 33 -

Page 26
பதினேழாம் நூற்றாண்டிற் போர்த்துக்கேயராலும் ஒல்லாந்த ராலும் எழுதப்பட்ட நூல்களிலே, இலங்கையிலுள்ள இராச்சியங் கள், சிற்றரசுகள் என்பவற்றுட் திருகோணமலை, கோட்டியாரம் என்பனவும் குறிப்பிடப்படுகின்றன. பதினாறாம் நூற்றாண்டின் முடிவிலே கோட்டியாரம்பற்று வன்னிமையிற் கண்டியரசர்களின் மேலாதிக்கம் ஏற்பட்டிருந்தது. கண்டியில் அரசுரிமை குறித்து ஜயவீரபண்டாரனுக்கும் விமலதர்மனுக்குமிடையிற் போர் ஏற்பட்ட பொழுது, ஜயவீரனுக்கு ஆதரவாகக் கோட்டியாரம்பற்று வன்னிபம் 7,980 போர் வீரர்களையும், 600 கூலியாட்களையும், 1000 பொதி மாடுகளையும், 30 போர் யானைகளையும், 25 அலியன் யானை களையும் அனுப்பியிருந்தான் என்று சொல்லப்படுகின்றது. 38.
கண்டியரசன் கி. பி. 1611ஆம் ஆண்டிலே போர்த்துக்கேயருக்கு எதிரான போராயத்தங்களை மேற்கொண்டபொழுது, அதனை யுற்று இராசப் பிரதானிகள் சபையின் கூட்டமொன்றைக் கூட் டினான். அதிலே கோட்டியாரம் பற்று அதிபனாகிய "இடலி" பழுகாமத்துச் செல்லபண்டாரம், மட்டக்களப்புக் குமாரபண்டாரம், போரதீவுச் கதிபனாகிய சண்முக சங்கரி முதலான வன்னிபங்களும் பிரசன்னமாயிருந்தனர்.39 அடுத்த வருஷமாகிய 1612இல் கோட்டி யாரத்து வன்னியன் கண்டி அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி ஏற் படுத்துவதற்கான சூழ்ச்சியிற் பங்குகொண்டிருந்தான் என்று அவன் மீது குற்றச்சாட்டு ஏற்பட்டது. 40 அதனாற் கண்டிக்குச் சென்று அரசனிடம் சமுகமளிக்குமாறு அவனுக்கு அரச கட்டளை கிடைத்தது. இடலி நோய்வாய்ப்பட்டிருந்ததாலே தன்னை அழைத்த மைக்கான காரணங்களை அறிவதற்குத் தன்மருமகனை இராசதானிக்கு அனுப்பி வைத்தான். 41 கோட்டியாரத்து வன்னிபம் அரசனுடைய விசுவாசத்தை மீண்டும் பெற்றுக் கொண்டான். .
1613ஆம் ஆண்டிலே அரசன் நோயுற்றிருந்து தான் இறக்க நேரி டும் என்ற எண்ணத்தினாலே, தனது வாரிசாக இளவரசனை நியமிப்
38. A True and Exact Description of the Great Island of Ceylon by Phillipus Baldaeus trans, into English by Pieter Brohier, The Ceylon. Historical Journal, Vol. VIII July 1858 to April 1959, Nos. 1-4, p. 16.
39. மேலது, பக்கம் 55. 40. மேலது, பக்கம் 60. 41. மேலது, பக்கம் 62.
سی۔سی۔ 34 بہتی۔

பதற்கும் அரச பரிபாலனத்தை நடாத்துவதற்கு ஒரு குழுவினை நியமிப்பதற்கும் இராசப்பிரதானிகள் சபையினைக் கூட்டினான். அச்சபையின் முடிபுகளைத் தெரிவிப்பதற்கென இளவரசனை அழைத்து வரும் பொறுப்பினைக் கோட்டியாரத்து வன்னிபத்திடம் அரசன் ஒப்படைத்தான்.?
இரண்டாம் இராஜசிங்கனின் காலத்தில் இளஞ்சிங்கம் என்பவன் கோட்டியாரம்பற்று வன்னிபமாக விளங்கினான் என்பதை வீரக் கோன் முதலியார் பாடிய சித்திர வேலாயுதர் காதல்மூலம் அறிய முடிகின்றது. இப்பனுவலில் மேல்வரும் பாடல்களுள்ளன :
துன்னு மிருமரபுந் துய்ய விளஞ் சிங்கமெனும் வன்னிமைபொற் பாதம் வணங்கையினி சொல்லாதை வன்னிமை தேசத்தார் மகாநாடு தான்கூடி மின்னு மெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையிலே கோதில் புகழ்சேர் வீரக்கோன்முதலி தானியற்றுங் காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லா தை.*
இளஞ்சிங்க வன்னிபத்தின் தலைமையிலே, சித்திரவேலாயுத சுவாமி கோயில் மண்டபத்திலே, தேசத்தவர் கூடியிருந்த மகாநாட் டிலே, வீரக்கோன் முதலி பாடிய பிரபந்தம் அரங்கேற்றங் கண் டது என்பது இவற்றாலே தெளிவாகின்றது.
சி. பத்மநாதன்,
பேராசிரியர்.
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
42. மேலது, பக்கம் 68. 43. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், பக்கம். 105.

Page 27
பதிப்புரை
திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றம்சங்களையும், திருகோண மலை வன்னிமைகளின் வரலாறு பற்றிய சில செய்திகளையும், சமுதாய வழமைகளையும் ஒருங்கு சேர்த்து, இணைத்துக் கூறும் அரிய நூல், கோணேசர் கல்வெட்டு. இலங்கை வரலாற்றின் பிர தானமான அத்தியாயம் ஒன்று இதிலே பொதிந்து கிடக்கின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும், வரலாற்று ஆராய்ச்சிய ளர லும், சமூகவியலாளராலும், சமயநெறியாளர்களா அலும் ஆராய்ந்து துலக்கப்பட வேண்டிய பல விடயங்கள் இந்நூலி லுள்ளன. இலங்கையிலே தமிழுரைநடை வளர்ந்தவாற்றைப் பிரதிபலிக்கும் பிரதான நூல்களுள் இதுவுமொன்றாகும். இதிலே காணப்படும் உரைநடையானது, யாழ்ப்பாண வைபவமாலை, தேச வழமை, மட்டக்களப்பு மான்மியம் ஆகியவற்றின் உரைநடைப் பாங்கிலிருந்து சிறிது வேறுபட்டதாகும். அவற்றிற் போலக் கோணேசர் கல்வெட்டிலும் வடமொழிச் சொற்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நூலின் உரைநடைப் பகுதியிலுள்ள வச னங்கள் பெரும்பான்மையும் மிக நீளமானவையாக அமைந்துள் ளன. அத்துடன், அவை இறுக்கமான இலக்கண விதிகளுக்கு ஏற் பவும் அமையவில்லை. சில பகுதிகளிலே வசனங்கள் நாட்டார் வழக்கில் அமைந்துள்ளன; வேறு சில பகுதிகளிலே அவை செவ் விய செந்தமிழ் வழக்கினை ஒட்டியனவாகக் காணப்படுகின்றன.
கோணேசர் கல்வெட்டு இதுவரை மூவராற் பதிப்பிக்கப்பெற் றுள்ளது. முதன்முதலாக இந்நூலை வல்வை க. சின்னத்தம் பிப் பிள்ளை 1887 ஆம் ஆண்டிலே அச்சிட்டு வெளியிட்டார். பின்பு யாழ்ப்பாணத்துப் புலோலி கிழக்கிற் பிறந்தவரும், மட்டக் களப்புக் காரைதீவில் வாழ்ந்தவருமான பொ. வைத்தியலிங்க தேசிகர் 1918 ஆம் ஆண்டிலே கோணேசர் கல்வெட்டைத் தகதிண கைலாச புராணத்துடன் சேர்த்து வெளியிட்டார். திரு கோணமலை வே. அகிலேசபிள்ளையின் மகனாகிய அ. அளகைக் கோன் திருகோணமலை வைபவம் என்ற நூலின் இணைப்பாகக் கோணேசர் கல்வெட்டை 1950 இலே வெளியிட்டார். இதுவரை
- 6 ജ

வந்த வெளியீடுகளிலே பாடற்பகுதிக்கு உரை எழுதப்படவில்லை. கோணேசர் கல்வெட்டு மூன்று முறையாக வெளியிடப்பெற்ற பொழுதிலும், அதன் பிரதிகள் கிடைத்தற்கு அரிதாகிவிட்டன.
பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவும் வெளியிடப்பெற்ற நூற் பிரதிகளையும் ஏட்டுப்பிரதிகளையும் ஒப் பிட்டுப் பரிசோதித்ததின் பயனாகவும் இப்பதிப்பினைத் தயாரிக்க முடிந்தது. இந் நூலைப் படிப்பவர்கள் எல்லோரும் அதிலே சொல்லப்பட்ட விடயங்களை எளிதிற் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தினால் பாடற்பகுதிக்கு உரையும் எழுதப் பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பெற்ற கோணேசர் கல்வெட்டுப் பிரதி களிலே சில வேறுபாடுகள் உள்ளன. சின்னத்தம்பிப் பிள்ளையின் பதிப்பிலே (1887) 55 பாடல்களுள்ளன. வைத்தியலிங்க தேசிகர் (1916), அளகைக்கோன் ஆகியோரின் பதிப்புக்களிலே முறையே 58, 60 என்ற கணக்கிற் பாடல்கள் காணப்படுகினறன. இவற்றை ஆராய்ந்த பொழுது, இடைச்செருகலாக அமைந்த பாடல்கள் எவை என்று அடையாளங்காண முடிந்தது. அத்தகைய செய்யுள் களுக்கான உரைகளும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நூலை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்து வெளியீடாக வெளியிடுவதற்குப் பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களுககும், அத் திணைக்களத்துப் பொறுப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர் களுக்கும், நூல் வெளியீட்டுக்குத் தேவையான முதலின் ஒரு பகுதி யைக் கொடுத்து உதவிய "திருகோணமலை மாவட்டக் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒன்றியத்தவர்களுக்கும்' எனது பாராட்டுக்கள் உரித்தானவை. கோணேசப்பெருமான் கிருபையினால் கோணேசர் கல்வெட்டின் நான்காவது பதிப்பு வெளிவருவது கண்டு அகமகிழ் வடைவோமாக.
இ. வடிவேல்.
* பாக்கியபதி”*
15, வித்தியாலயம் ஒழுங்கை, திருகோணமலை.
--- 37 سس

Page 28
முன்னுரை
கோணேசர் கல்வெட்டு - ஒரு கண்ணோட்டம்
முன்னை முழுமுதலே மூஷிக வாகனனே என்னைப் பணிகொண்ட ஏரம்பா - தன்னிகரில் கோணேசர் கல்வெட்டுக் கூறுபெருஞ் சத்தியத்தைக் காணவருள் தந்தென்னைக் கா.
கோணேசர் கல்வெட்டு எனப்படும் கோணேசர் சாசனம் குளக் கோட்டு மன்னன் கோணேஸ்வரத்தில் நிறைவேற்றிய திருப்பணி களையும், அம்மன்னன் திட்டம் பண்ணிய நியமங்களையும், தீர்க்க தரிசனங்களையும் உள்ளடக்கியது. இதனைக் கவிராஜவரோதயர் என்பவர் பாடியருளினார்.
குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலைப்பற்றியும், அதனை நிர்வாகம் செய்யும் சட்டதிட்டங்களைப் பற்றியும் விரி வாகக் கூறியுள்ள விஷயங்கள் செப்பேட்டுப் பெரியவளமைப் பத் ததியில் பொறித்துவைக்கப்பட்டிருந்தன. அந்தப் பத்ததியிலுள்ள விஷயங்களைத் தொகுத்தும் விரித்தும் கவிராஜவரோதயர் பாடி யுள்ள பாடல்களும் உரைநடைப்பகுதிகளுமே கோணேசர் கல் வெட்டாகும். இந்த ஏட்டுப்பிரதி காலத்திற்குக்காலம் பிரதி செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாது காக்கப்பட்ட பிரதிகள் திருகோணமலையில் கட்டுக்குளப்பற்று. கொட்டியாபுரப்பற்று, தம்பலகாமப்பற்று என்னும் பகுதிகளில் நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். அத்தகைய பிரதிகளில் இரண்டு என்னிடமும் இருக்கின்றன. கோணேசர் கோவிலின் மகிமையை அறிந்த அறிஞர் பெருமக்கள் இத்தகைய பிரதிகளை ஈழநாட்டின் பல பாகங்களுக்கும் பண்டைக்காலத்தில் எடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.
கவிராஜவரோதயர் வாழ்ந்த காலம் சரியாக அறியப்படாமை
யினால் கோணேசர் கல்வெட்டின் மூலப்பிரதி தோன்றிய காலத்தை யும் சரியாகக் கணிக்க முடியாவிடினும், அப்பிரதி எவ்வாறு அமைந்
ബ 38 -

திருந்ததென்பதனை அறிவதற்குக் கோணேசர் கல்வெட்டின் சிறப் புப் பாயிரத்தில் ஒரு கண்ணோட்டம் செலுத்துவது இன்றியமை யாததாகும். M
சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொற்படி சொல் லெனவே கல்வெட்டுப் பாட்டென்னப் பாடினன் பாதி கதைப் பொரு ளப்
அல்லுற்ற கண்டர்தம் பொற்பாத நெஞ்சி லழுத்தி யிகல் வெல்லுற்ற சீர்க் கவிராச வரோதய விற்பனனே."
* குளக்கோட்டு மன்னன் சொல்லிய சொற்படி சொல்" என் பதினால் முன்னே குளக்கோட்டு மன்னன் கூறியபடியே கூறுவீராக என ஒருவர் கேட்க அதன்படி கல்வெட்டுப் பாட்டெனப் பாடி னான் கவிராஜவரோதயன் என்பது இப்பாயிரத்த ற் புலனாகின் றது. " " பாதி கதைப்பொருளாய்ப் பாடினன "" என பதினால் கோணேஸ்வரத்தை நிர்வாகம் செய்யும் சட்டதிட்டங்களுடன. குளக்கோட்டுயன்னன் செய்த திருப்பணி வரலாற்றுக் கதைகளை யும் சேர்த்துக் கவிராஜவரோதயர் பாடினார் என்பது கல்வெட்டின் அகச்சான்றுகளாலும் அறியக்கிடக்கின்றது.
செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிலுள்ள சில விஷயங்கள் பாடலாகவும், சில விஷயங்கள் வசனமாகவும் ஆக்கப்பெற்றுக் கோணேசர் கல்வெட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. கோணேசர் கல்வெட்டில் காணப்படும் ‘‘அகவல்' கூறும் சம்பவங்கள் சிறப் பாகக் கயவாகு மன்னனுக்கும் கோணேஸ்வரததிற்குமுள்ள தொடர்புகள் பற்றிக் கூறுகின்றன. திரிகோணாசலபுராணததில் கூறப்படும் கயவாகு மன்னனின் வரலாறுகளையே இந்த அகவலும் கூறுவதால் இதனைக் கவிராஜவரோதயர் பாடினார் எனக் கொள்ள முடியவில்லை. தற்போது கிடைக்கும் கல்வெட்டுக்களில் இடைச் செருகல் பாடல்கள் காணப்படுகின்றன. அவைகளைப்போலவே இதுவும் இடைச்செருகலாகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்க லாம். எடுத்துக்காட்டாக இரண்டு பாடல்களைத் தருகின்றேன்.
**கரிபரி வையஞ் சேனை கடலெனச் சூழ மன்னன்
வருதலை அறிந்து வேத மறையவ ரெல்லாங் கண்டு வெருவியங் கெமக்குத் தீது விளைவதென்னோ வென்றஞ்சி குரைகடல் தன்னிலோடிக் குதித்தன ராவி யீந்தார்.'
(திரிகோணாசலபுராணம் - கயவாகுப்படலம் -25)
مسسه 39ة حسب

Page 29
"எழுகிரண திரிகயிலைப் பெருமான் பூச்ை இப்படியே
முறைதவறி நடக்குங்காலை பழுதில் திகழ் கயவாகு வருவனன்னாட் பாசுபதர்
இறப்பர் பழமறையோர் சேர்வர் பொழுதுகுலக் கயவாகு ராசராசன் பூசைவிதிக்கே
கனக நாடுமீந்து தொழுதுநின்றே ஆலயத்திற் தொழும்பு திட்டஞ்சொல்லி
யவனனுராச புரியிற் சேர்வான்.""
(கோணேசர் கல்வெட்டு - 44ஆம் பாட்டு)
இவை முறையே திரிகோணாசலபுராணத்திலும், கோணேசர் கல்வெட்டிலும் கயவாகு மன்னனுடைய வரலாற்றோடு சம்பந்தப் பட்ட பாடல்கள்,
இனிக் கோணேசர் கல்வெட்டில் காணப்படும் அகவலில் கயவாகு மன்னனைப் பற்றிக் குறிப்பிடும் சில பகுதிகளைத் தருகின்றேன்.
*" காலமதறிந்து சோதிட ருரைக்க
காலமே கயவாகு ராசனும் வரவக் கால மதனிற் பாசுபத ரிறக்க காலையிற் பூசை கலக்கமதாக
படவர வசைக்கும் பரமர் கோணேசர்க்கு அடன்மிகு பூசைக் காடகம் போதா தரமுறும் நாடுந் தான் போதாதென திடமொடு கொடுக்கச் சிந்தையுள் நினைந்து வரவுறு வடக்கு வரு கரம்பகமாம் திறமுற மேற்குச் சிறந்த முனிச்சரம் தரைபுகழ் தெற்குச் சங்க மக் கண்டி உரமிகு கிழக்கு உகந்த வங்காளம் ஏற்றுகைக் கோணை இறைவனுக் காமென’’
(கோ - கல்வெட்டு - அகவல்) மேலே கூறப்பட்ட இந்த எடுத்துக்காட்டுக்களை ஒப்பிட்டு நோக்கும்போது திரிகோணாசல புராணத்திற் கூறப்படும் சம்பவங் களைக் கருவாகக்கொண்டு இந்த அகவல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டாகின்றது.
கோணேஸ்வரத்தின் நிர்வாகச் சட்டதிட்டங்களடங்கிய செப் பேட்டுப் பெரியவளமைப் பத்ததியில் குளக்கோட்டு மன்னன் கூறி
- 40 -

யிருந்த சம்பவங்களைக் கருவாக அமைத்துக்கொண்டுதான் கவி ராஜவரோதயர் கோணேசர் கல்வெட்டைப் பாடினாரென்பது முன்னே கூறப்பட்ட பாயிரச் செய்தியோடு பொருந்தி வருவதைக்
காண்க.
மனுநீதிகண்ட சோழன் மரபில் வந்த வரராமதேவனுடைய மகன் குளக்கோட்டு மன்னன் திருகோணமலையிலுள்ள கோணேஸ் வரத்தில் திருப்பணிகள் செய்ததாக 'திருமருவு மனுநீதி கண்ட சோழன்" என்று தொடங்கும் கோணேசர் கல்வெட்டின் முதலா வது பாடல்மூலம் அறியக்கிடக்கின்றது.
திருக்கோணேஸ்வரத்திற் திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன் அவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகளும், ஆலய நிர்வாகமும் ஒழுங்குமுறை தவறாது நடைபெறுவதற்காகச் சட்ட திட்டங்களை உண்டாக்கி அதனைச் செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியில் எழுதுவித்தான். இந்தச் செப்பேட்டுச் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணி வர லாறுகளையும், ஆலய நிர்வாகச் சட்டதிட்டங்களையும் உள்ளடக் கிய கோணேசர் கல்வெட்டைக் கவிராஜவரோதயர் பாடியுள்ளார். குளக்கோட்டு மன்னனுடைய வேண்டுகோட்படி இதனைப் பாடினா முல்லர். செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியென ஒன்று இருந்த தென்பதனைத் திரிகோணாசல புராணப் பாடல்களிலிருந்து அறியக் கூடியதாயிருக்கின்றது.
காராளர் குலதிலகனென உலகெலாங் களிக்கும் கருணைமிக்க ஏராளனாம் கனகசுந்தரப் பெருமானென் றிலங்கச் சூட்டி நீராள வாவிசெறி நெடிய கட்டுக் குளத்துரு நிலையாயீந்து சீராளனாம் பெரிய குளக்கோட்டனவற்கின்ன செப்பலுற்றான்." r (தி. பு: - நியமப்படலம் - 24)
"எங்கள் பிரான் தனக்கு விழா முதன்மையுட னடத்துவித்த
லினிமையோடும் துங்கமுறு காப்பணிதல் முன்னிடு பலதொழும்புந் தொடர்பினாடிப் ܐ
பங்கமறச் செய்வித்த லுனக்குரிய தெனப் பகர்ந்து பலரும் S. போற்ற அங்கவன் கை செப்பேட்டுப் பெருவளமைப் பத்ததியு
மன்பினிந்தே" (தி. பு. - நியமப்படலம் - 25)

Page 30
*கோணமலை மீதுறையும் சிவபெருமான் திருமுன்னர்
குறிப்பினோடும் பாணிதரு கீர்த்தனங்கள் திருமுறை #ள் பண்பினோடும்
பாடென்றோதிக் காணிய செப்பேட்டினொரு பிரதியையு மாங்கவன்றன்
கைனிந்து மாணுறு சீர்பெறு கொட்டியாபுரத்திற் குடியாக மருவச்
செய்தே."
(தி. பு. - நியமப்படலம் - 29)
குளக்கோட்டு மன்னன் கட்டுக்குளப்பற்றில் கனகசுந்தரப் பெருமாளை நிர்வாகப் பொறுப்பதிகாரியாக நியமித்து, அவர் கோணேசர் கோவிலில் செய்யவேண்டிய திருத்தொழும்புகள் எவை யெவையென்று நியமம் செய்து செப்பேட்டுப் பெருவளமைப் பத்ததி யும் கொடுத்தான். அதுபோல கோணேசப் பெருமானுக்குத் திரு முறையோதும் பாடல்தொழும்பு செய்வதற்கு காஞ்சீபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட புலவனைக் கொட்டியாபுரப் பற்றிலுள்ள சம்பூரில் இருக்கச்செய்த குளக்கோட்டு மன்னன், அவர்கள் செய்யும் தொழும்புகளைக் கூறும் செப்பேட்டுப் பிரதியையும் கொடுத்தா னென மேற்கூறிய பாடல்களிலிருந்து அறியக்கூடியதாயிருக்கின்றது.
குளக்கோட்டு மன்னன் கோவில் திருப்பணிகளை நிறைவேற் றிய பின் அக்கோவில்களைப் பராமரிப்பதற்காக 2700 அவணம் நெல்விதைப்புத் தரையை உண்டாக்கியதையும், அவற்றுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அல்லைக்குளம், வெண்டரசன் குளம், கந்தளாய்க் குளம் என்பனவற்றைக் கட்டுவித்ததையும், விளைநிலங்களிற் குடி யிருத்துவதற்காக மருங்கூர், காரைக்கால், திருநெல்வேலி, மதுரை, காஞ்சிபுரம் முதலிய இடங்களிலிருந்து குடிமக்களை அழைத்து வந்து குடியமர்த்தி அவர்களுக்கு மானியங்கள் வழங்கியதையும், கொட்டியாபுரப்பற்று, கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று என்பவைகளிற் குடியமர்த்தப்பட்ட குடிமக்களின் கடமைகளும், உரிமைகளும் எவையென்பதையும், அவர்களின் தொழும்புகளை யும் கோணேசர் கோவிலைப் பயபக்தியுடன் பரிபாலிக்க வேண் டிய முறைகளையும், மக்களின் வாழ்வு தாழ்வுகளுக்குச் செய்ய வேண்டிய சமூகப்பணிகளையும் கோணேசர் கல்வெட்டுக் கூறு கின்றது.
கோணேஸ்வரத்தின் பராமரிப்புக்காக உண்டாக்கப்பட்ட நில புலங்கள், கிராமங்கள், அங்கங்கே குடியமர்த்தப்பட்ட மக்களின் கடமைகள், கோவிற் தொழும்புகளுக்காக அவர்களுக்கு வழங்கப்
- 3 -

பட்ட மானியங்கள் கோவிலுக்குரிய திரவியங்கள். தானியங்கள். எண்ணெய் வகைகள், களஞ்சியப் பொருட்கள் முதலிய சேமிப்புகள் என்பனவற்றைச் செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிற் குளக் கோட்டு மன்னனால் திட்டம்பண்ணியுள்ளபடி செயற்படுத்தும் பணிகளைக் கனகசுந்தரப் பெருமாள் என்பவர் செய்துவந்துள்ளார்.
சோழ நாட்டிலுள்ள கோவில்களிற் பணியாற்றுபவர்களுக்கு அரசாங்க நன்கொடையாக மன்னர்கள் நிலங்களை வழங்கிவந் திருக்கிறார்கள். கோவிலில் நடன மாடும் நடன மாதர்களுக்கு தலா ஒருவேலி நிலமும், பாடகர்களுக்கு ஒன்றரை வேலி நிலமும், நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு ஒன்றரைவேலி நிலமும், மேளம் வாசிப்பவர்களுக்கு ஒருவேலி நிலமும், சங்கு ஊதுபவர்களுக்கு ஒரு வேலி நிலமும், குடை தாங்குவோருக்கு இரண்டுவேலி நிலமும், விளக்குத் தூக்குவோருக்கு ஒருவேலி நிலமும், கணக்காளருக்கு இரண்டுவேலி நிலமும் இவ்வாறு பலதரப்பட்ட தொழும்பாளர் களுக்கும் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. குளக்கோட்டு மன்னனும் சோழநாட்டு முறையைப் பின்பற்றித் திருக்கோணேஸ்வரத்தில் தொழும்பாளர்களுக்கு நிலங்களை வழங்கி யிருந்தான். கோணேசர் கோவில் போர்த்துக்கீசரால் அழிக்கப் பட்டபின் தம்பலகாமத்தில் இந்த மானியமுறை கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்ப மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வந் திருப்பதைக் காணக்கூடியதாயிருக்கின்றது. கட்டுக்குளப்பற்று, கொட்டியாபுரப்பற்று, தம்பலகாமப்பற்று ஆகியவற்றில் குடியமர்த் தப்பட்ட குடிமக்களில் ஒருசாரார் கோவிற் தொழும்பாளர்களாக வும், மற்றொரு சாரார் குடிமக்களின் தொழும்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். இத்தகைய தொழும்பாளர்களுக்கு மானிய மாக வழங்கப்பட்ட வயல் நிலங்களை அவர்கள் பரம்பரை பரம் பரையாக ஆண்டு அநுபவித்து வருகின்றார்கள்.
போர்த்துக்கீசரால் கோணேசர் கோவில் அழிக்கப்படும் ஆபத் துச்சூழ்ந்தபோது கோவிலில் இருந்த விக்கிரகங்களைக் குருமாரும், தொழும்பாளர்களும் எடுத்துச்சென்று குளங்களிலும், நிலத்தினடி யிலும் மறைத்து வைத்தார்கள். சில விக்கிரகங்களைத் தம்பல தாமத்தில் வைத்து வழிபட்டு வந்தபடியால் அங்கு வாழ்ந்த தொழும்பாளர்கள் கோவிற் தொழும்புகளையும், குடிமக்களின் தொழும்புகளையும் முன்போலவே செய்துவந்தார்கள். இதனால் அங்கிருந்த வயல்நிலங்களை அத்தொழும்பாளர்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகின்றார்கள். கோணேசர் கோவி லைப் போர்த்துக்கீசர் அழித்தபின் கட்டுக்குளப்பற்று, கொட்டியா
-س- 43 --

Page 31
புரிப்பற்று என்னும் இடங்களில் வாழ்ந்த தொழும்பாளர்கள் கோணேசர் கோவில் தொழும்பு செய்யும் வாய்ப்பை இழந்த படியால் அவர்களுடைய மானிய உரிமை காலக்கிரமத்தில் மறைந்து விட்டதென்பதை நாம் மறந்துவிடலாகாது.
கட்டுக்குளப்பற்றிலுள்ள குச்சவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேலுப்பிள்ளை என்பவர் தம்பலகாமம் கோணேசர் கோவிலில் உரிமைப்பிரகாரம் காப்புக்கட்டியாராகக் கடமையாற்றி வந்தார். தம்பலகாமம் கோணேசர் கோவிலில் மகோற்சவம் ஆரம்பிக்கும்போது கல்வெட்டிற் கூறியுள்ளபடியே ஆலய நிர்வாகி கள் அவரை உரிய சிறப்பு ஆசார வரிசைகளுடன் வரவேற்று விழாவை நடத்திவந்தார்கள். இதற்காக இவருக்கு ஆறு சூட்டு வயல் மானியமாக வழங்கப்பட்டிருந்தது. சில காலங்களின் பின்னர் இவர் தம்பலகாமத்திற் தானத்தார் பகுதியில் கல்யாணம் செய்து கொண்டதால் அவரைக் கெளரவிக்கும் கோவில் ஆசார வரிசை களைச் செய்வதை நிறுத்திவிட்டார்கள். இவருடைய பரம்பரை யினர்தான் இப்போது காப்புக்கட்டியாராகத் தொழும்பு செய்து வருகிறார்கள். இவ்வாறே கொட்டியாபுரப் பற்றிலுள்ள கிளிவெட்டி, சம்பூர் பகுதியிலிருந்து புலவன் தொழும்பு செய்யும் உரிமைக்காரர் தம்பலகாமம் கோணேசர் கோவிலுக்கு வந்து பாடும் தொழும்பு செய்து வந்தார்கள். இதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்ட தாக அறியக்கிடக்கின்றது. கட்டுக்குளப்பற்றில் நிலாவெளியில் வசிக்கும் காப்புக்கட்டியார் பரம்பரையைச் சேர்ந்த திரு. கயிலாய பிள்ளை கெஜரெட்டினம் என்பவரிடமிருந்து மேற்கூறிய தகவல் களைப் பெற்றுக்கொண்டேன்.
கோணேசர் கல்வெட்டின்படி தம்பலகாம்ம் கோணேசர் கோவி லில் அனுசரிக்கப்பட்டுவந்த தொழும்புகள் சிலவற்றைக் காண் போம். அடப்பன் தொழும்பு, புலவன் தொழும்பு, வைராவியார் தொழும்பு, மாலைகட்டித் தொழும்பு, இராசமேளம் அடிக்கும் தொழும்பு, பண்டாரியார் தொழும்பு, பண்டார வண்ணான் தொழும்பு, மண்ணுடையான் தொழும்பு (குயவன்தொழும்பு), நாவிதன் தொழும்பு, மூப்பன் தொழும்பு, ஆசாரியார் தொழும்பு, குடும்பன் தொழும்பு (மரமேறும் தொழில்) எனப் பல்வேறு தொழும்புகள் அங்கு காணப்படுகின்றன, இந்தத் தொழும்பாளர் களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் முறையே எலியடப்பன் வயல், புலவன் வயல், வைராவியார் கீத்து, மாலைகட்டிக்கீத்து, மேள காரன் கீத்து, பண்டாரி கீத்து, பெரியவண்ணான் வயல், குயவன் கீத்து, அம்பட்டன் வெட்டுக்காடு, தம்பட்டகாரன் கீத்து, தட்டான் கீத்து, பள்ளன் வயல் என்னும் பெயர்களில் இன்றும் இருந்துவரு
۔= 44 سسسه

கின்றன. மேற்கூறிவ வயல்களின் பதிவேடுகள் அரசாங்கப் பணி மனையில் (கச்சேரி) இருப்பதை இன்றுங் காணக்கூடியதாயிருக் கின்றது. இவைகளை அவ்வத் தொழும்பாளர்கள் அனுபவித்து வருகிறார்கள். திருக்கோணமலைக் கோணேசர் கோவிலுக்குக் குளக்கோட்டு மன்னன் ஏற்படுத்திய தொழும்பாளர்களுக்கு வழங் கப்பட்ட இந்த வயல் நிலங்கள் கோணேசர் கல்வெட்டில் கூறப் படும் தொழும்புமுறைக்குப் பிரத்தியட்ச சான்றுகளாக விளங்கு கின்றன. A.
குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரத்தில் பூசை வழிபாடு களைச் செய்வதற்குப் பாசுபதர்களைக் குருமாராக நியமித்திருந் தான். அவர்கள் கயவாகு மன்னன் காலம்வரை கடமையாற்றி வந்தனரென்றும் கோணேசர் கல்வெட்டும் திரிகோணாசல புராண மும் கூறுகின்றன. 'பழுதில் திகழ் கயவாகு வருவனன்னாட் பாசுபதர் இறப்பர் பழமறையோர் சேர்வர்' என்று கோணேசர் கல்வெட்டில் காணப்படுகின்றது. இதுபற்றிய விளக்கம் பின்னே கூறப்பட்டிருக்கின்றது.
குளக்கோட்டு மன்னன் பெருந்தொகையான மக்களைச் சோழ நாட்டிலிருந்து அழைத்துவந்து திருகோணமலையிலே குடியேற்றி னானெனவும், வயல்களையும், குளங்களையும் அமைத்து விவசா யத்தை விருத்திசெய்தான் எனவும், திருகோணமலையின் ஆட்சியை நடத்த வன்னிபம் என்ற குறுநில மன்னர் ஆட்சியை ஏற்படுத்தினான் எனவும் அறியப்படுகின்றது. சுருக்கமாகக் கூறுவ தானால் சோழப் பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில் குளக்கோட்டு மன்னன் சோழலங்கேஸ்வரன் என்ற விருதுடன் திருகோணமலையி லிருந்து ஆட்சிசெய்தவனாவான்.
குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வர மாநிலத்தின் ஆட் சியை மதுரைமா நகரிலிருந்து அலீழத்துவரப்பட்ட தனியுண் ணாப் பூபாலவன்னிமை பரம்பரையிடமும், காரைக்காலிலிருந்து அழைத்துவரப்பட்ட செகராசநாத வன்னிமைப் பரம்பரையிடமும் சோழநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட காராளசிங்க வன்னி மைப் பரம்பரையிடமும், மருங்கூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நடராச குமாரசிங்க வன்னிமைப் பரம்பரையிடமும் ஒப்படைத்து மனுநீதி தவறாமல் ஆண்டு பராபரித்துவர ஏற்பாடு செய்திருந் தார். கோணேசர் கல்வெட்டை எழுதுவதற்கு ஆதாரமாயிருந்த தெனக் கருதப்படும் செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியில் இவ்வரலாற்றின் விரிவான விளக்கம் இருந்ததாக அறியக்கிடக் கின்றது. இந்த வன்னிமைகள் கிழக்குமாகாணத்தில் திருக்கோவில்
- 45 re

Page 32
வரையும் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். சிவகூேடித்திரமாகிய திருகோணமலையில் தனித்துவமான ஆன்மீக ராச்சியமொன்று நடைபெற்று வந்ததென்பது புலனாகின்றது. திருகோணமலைக்கு வடக்கே பரழ்ப்பாண ராச்சியமும், முல்லைத்தீவில் வன்னியராட் சியும், அனுராதபுரம், கண்டி, பொலனறுவை முதலிய இடங்களில் சிங்கள மன்னர்களுடைய ஆட்சியும் நடைபெற்ற காலங்களிலும், திருகோணமலையானது, குளக்கோட்டு மன்னனுடைய திட்டப்படி தனித்துவமான ஆட்சிப் பிரதேசமாக இருந்துவந்தது. இதன் தெய்வீகச் சிறப்பை நோக்கியே கயவாகு மன்னனும் திருக்கோ ணேஸ்வரத்தை ஆதரித்து மானியங்களும் வழங்கியிருக்கின்றான் என்பதைக் கோணேசர் கல்வெட்டிலுள்ள அகவல் கூறுவதை முன் னரே குறிப்பிட்டுள்ளேன்.
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலை மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களிற் பிராமணர்கள் கந்தளாய் என இன்று வழங்கிவரும் சதுர்வேதி மங்கலம் என்னும் கிராமத்தில் குடியமர்த் தப்பட்டார்கள். 12ஆம் நூற்றாண்டுவரையும் கந்தளாய் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் விளக்கமுற்றிருந்ததாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழமோட்டைக் கற்சாசனம்மூலம் அறியக் கிடக்கின்றது.
குளக்கோட்டு மன்னனின் இம்மா பெரும் திட்டத்தை நடை முறைப்படுத்தும் கனகசுந்தரப் பெருமாள், தனியுண்ணாப் பூபால வன்னிமை முதலானவர்களின் பொறுப்பதிகாரங்களையும், இத்திட் டத்தை நடைமுறைப்படுத்துவதில் தவறுகள் நேர்ந்தால் வரும் விளைவுகளையும் மற்றும்பல விடயங்களையும் கோணேசர் கல்வெட் டுக் கூறுகின்றது.
இ. வடிவேல்,
பதிப்பாசிரியர்.

ഉണ്ട് ھgهد« கோணேசர் கல்லுெட்டு
கர்ப்பு
உதய மால்வரை ஒனகதிதென்ன”என் இதய அம்புயத்து என்றும் விளங்கு மத கடாசல வாரண மாமுக முதல்வனைங்கர மூர்த்தி பதாம்புயம்.
பொழிப்புரை - ஞானமதத்தைச் சொரியும் ஆனைமுகத்தையுடைய முழுமுதற் கடவுளாகிய ஐங்கர மூர்த்தியின் தாமரை மலர்போன்ற பாதங்கள், உதயகிரியில் உதித்து எழுந்து வருகின்ற சூரியனைப் போல என்னுடைய இதயமாகிய தாமரையில் எக்காலத்தும் எப் போதும் பிரகாசித்திருப்பதாக.
வாரணம் - யானை . கதிர் - சூரியன். அம்புயம் - தாமரை.
மத கடாசலம் என்பது யானையிடமிருந்து ஒழுகும் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என்பன. இப்பாடல் யானைமுகக் கட வுளுடைய ஞானமதத்தைக் குறிக்கின்றது. அதாவது யானைமுக வன் ஞானத்தை அருளுபவன் என்பது பொருள்.
சிறப்புப் பாயிரம்
சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொற்படி
சொல்லெனவே கல்வெட்டுப் பாட்டென்னப் பாடினன் பாதி கதைப்
பொருளாய் அல்லுற்ற கண்டர்தம் பொற்பாதம் நெஞ்சினழுத்தி இகல் வெல்லுற்ற சீர்க் கவிராச வரோதய விற்பனனே.
எல்லோராலும் புகழ்ந் பேசப்படுகின்ற கீர்த்தியையுடைய குளக்கோட்டு மன்னன் முற்காலத்தில் சொல்லிவைத்த விஷயங்

Page 33
களைத் தவறு ஏதுமின்றி அப்படியே சொல்வீராக என்று கேட்கப் பட்டதனால், நஞ்சுண்ட கண்டத்தையுடைய சிவபெருமானது அழகிய திருப்பாதங்களை நெஞ்சில் அழுத்தமாக வைத்துக்கொண்டு பயபக்தியோடு காமக் குரோதாதிகளற்றவரும், பஞ்சபுலன்களை வென்று தன்வய்மாக்கிய மன. ஒடுக்கமுடையவருமாகிய சிறப்பு மிக்க கவிராசவரோதயன், குளக்கோட்டு மன்னன் செய்த திருப் பணிகளையும் அம்மன்னன் "செயற்படுத்திய கோணேசர் ஆலயப் ப்ரிபாலனச் சட்டதிட்டங்கன்னயும் கோணேசர் கல்வெட்டு எனப் lunt L-rail. பாடியரு ளினோர்.
அல் - இருள். இருண்ட நிறத்தையுடய நஞ்சைக் குறிக்கும்.
குளக்கோட்டு மன்ன்ன் திருக்கோணேஸ்வரத்தில் செய்த திருப்பணிகளும் ஆலய நிர்வாக வரலாறுகளும், ஏனையவும் செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியில் எழுதிவைக்கப்பட்டிருந் தன. அதிலுள்ளவற்றையே கவிராசவரோதயர் G35rrC36sorgfri: கல்வெட்டு எனப்பாடியருளினார். செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிலுள்ள எல்லா விஷயங்களையும் கவிராசவரோதயர் பாட்டாகப் பாடினார் என்று சொல்வதற்கில்லை. கோணேசர் ஆலய நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக தமிழ் நாட்டிலிருந்து குடிமக்களை அழைத்துக்கொண்டு வந்து திரு கோணமலை மாவட்டத்தில் குடியமர்த்தியதையும், அந்தக் குடி மக்களை நீதிதவறாமல் ஆட்சி செய்வதற்கு குறுநில மன்னர் களைப்போல வன்னிமைகளை அமர்த்தியதையும், குடிமக்களின் கடமைகளையும் கடமைகளிற் தவறு ஏற்படாமல் கவனிக்கவும், ஆலய நிதிப்பொறுப்புக்களைக் கவனமாகப் பரிபாலனம் செய்யப் பொறுப்பதிகாரிகளை அமர்த்தியது போன்ற ஏனைய காரியங் களின் விபரங்களையும் கவிராசவரோதயர் செப்பேட்டிலுள்ளபடியே கோணேசர் கல்வெட்டில் சொல்லிவைத்துள்ளார்.
கோணேசர் கோவில் நிர்வாகச் சட்டதிட்டங்களுடன், கு ள க் கோட்டு மன்னனால் குடியமர்த்தப்பட்ட குடிமக்களின் சமுதாய வாழ்க்கை நேர்சீராக நடைபெற்றுவருவதற்குரிய குடியியல் சட்டங் களையும் மன்னன் உண்டாக்கிச் செப்பேட்டில் எழுதிவைத்திருந் தான். இவைகள் விதிகளும், உபவிதிகளுமாக எழுதிவைக்கப்பட்டிருந் தன. இந்த உபவிதிகள் கவிராசருடைய கல்வெட்டில் பாடலாக வரவில்லை. அவைகள் வசனமாகவே கோணேசர் கல்வெட்டில் இருந்துவருகின்றன. அப்படியே அவைகள் இந்த நூலிலும் சேர்க் கப்பட்டிருக்கின்றன.
གསུམ- 48 -༤༤

நூல்
1. திருமருவு மனுநீதி கண்ட சோழன் செகமகிழ வரு
ராமதேவன் தருமருவு திரிகயிலைப் பெருமை கேட்டுத் தானுமவன்
வந்ததுவும் அவன்சேய் பின்பு மருமருவும் ஆலயம் கோபுரங்களோடு மணிமதில்சூழ்
மண்டபமும் மலிநீர்வாவி கருமருவு முகினிர்சேர் திருக்குளஞ்செய் கருமமுமோர்
கல்வெட்டாய்களறுவாமே.
கோணேசர் கல்வெட்டுப் பாடல்களில் கூறப்போவதைக் கவி ராசவரோதயர் இந்த முதற்பாடலில் தொகுத்துச் சுட்டிக் காட்டு கின்றார்.
பொ.பு. - சிறப்புமிகுந்த மனுதர்மமாக, அதாவது மனுநீதியா கக் கைக்கொண்டு ஆட்சி நடத்திவந்த மனுநீதிகண்ட சோழனு டைய பரம்பரையில் உலகம் போற்றும்படியாகத் தோன்றிய வர ராமதேவன் என்னும் மன்னனானவன் சோலைகள் சூழ்ந்த திரி கயிலை எனப்படும் திருக்கோணேஸ்வரத்தின் பெருமைகளைக் கேள் விப்பட்டு இந்தத் தலத்துக்கு வந்ததையும், இத்தலம் சிலத்தல மாயிருப்பதையறிந்து இறைவனை வணங்கி இத்தலத்தில் திருப் பணிகள் செய்யும் ஆர்வத்தோடு சோழநாட்டுக்கு மீண்டதையும் அதன்பின்னர் அவனுடைய மகனாகிய ராசசிருங்க மகாராசன் எனப் படும் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரத்துக்கு வந்து சிறப்புவாய்ந்த ஆலயங்களும், அவைகளுக்கு அழகுவ ய்ந்த கோபு ரங்களும் அழகிய மதில்கள் சூழ்ந்த மண்டபங்களும், நீர்நிறைந்த சுனையும் , (பாவநாசச்சுனை) கருக்கொண்ட முகில்களிலிருந்து பொழியும் நீர் சேர்ந்துள்ள குளங்களும் (அல்லைக்குளம், வெண்ட ரசன்குளம், கந்தளாய்க்குளம்) அமைத்த திருப்பணிகளைக் கல்வெட் டாகச் சொல்கின்றோம்.
ܐ
தரு - மரம். இங்கே சோலைகளைக் குறிக்கின்றது.
"செகமகிழ வருராமதேவன்" என்பதை செகமகிழ - வரு - ராம தேவன் எனப் பிரித்து மனுநீதிகண்ட சோழ மன்னனுடைய பரம் பரையில் தோன்றிய 'ராமதேவன்' எனப் பொருள்கொள்வது பொருத்தமுடையதாயிருந்தபோதிலும் இம் மன்னனுடைய பெயரை "வரராமதேவன்’ என்றே திரிகோணாசல புராணம் கூறுகின்றது. அப்புராணத்தில் "வரராமதேவர் வருபடலம்' என்று ஒரு படல

Page 34
மும் இருக்கின்றது. அப்படலத்தின் ஏழாவது பாட்டில் மன்னனு டைய பெயர் வரராமதேவன் என்று வருவதைக் காண்க.
"மகந்தனில் பெரிய விரத நன்னெறியில் வண்மையில்
வாய்மையில் மிக்கோன் தகுந் துணையென வந்தடைந்தவர் தன்னைத் தாயெனத் தண்ணளி சுரப்போன் அகந்தையில் அறிவு பொறை நிறைநீதி அறநெறி
அன்பினின் மிகுந்தோன் திகந்தமெட் டோங்கு புகழ் வரராமதேவனென்று
உளனொரு வேந்தன்."" arresörugg 9 tu unrusio. w
மனுச்சோழன் சோழ பரம்பரையில் முதல்வனாகக் கணிக்கப் பட்டுவந்துள்ளான். தர்ம சாஸ்திரத்தை எழுதி அதன்படி நீதிபரிபால னம் செய்தவன். இதனால் அந்த தர்மசாஸ்திரம், மனுதர்ம சாஸ் திரம் எனப்பட்டது. மன்னனும் மனுநீதி கண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இம்மன்னனுடைய பரம் பரையில் வந்தவன் குளக்கோட்டு மன்னன்.
2. சொல்லரிய திரிகயிலைப் பெருமையெல்லாம்
தூயபுராணக்கதையிற் சொன்னதுண்டு வல்லதொரு வன்னிமையுந் தானத்தாரும்
வரிப்பத்துமாமிவர்கள் வந்தவாறும்
நல்லதொரு பூசைவிதி நடக்குமாறும் நடந்ததன்மே
லினிநடக்கும் நடத்தையாவும் சொல்லெனவே சோதிடத்தின் நிலையேகண்ட கவிராசன் வருகாலஞ்சொல்லும் சீரே.
சொல்லுவதற்கு அரியதாகிய திரிகயிலை என்று போற்றப்படும் திருக்கோணேஸ்வரத்தின் (திருகோணமலை) உயர்வு சிறப்புக்களெல் லாம் திரிகோணாசல புராணம், தெட்சண கயிலாய புராணம், திருக்கரசைப் புராணம், மச்சேந்திய புராணம், செவ்வந்திப் புரா ணம் என்னும் நூல்களில் கூறப்பட்டுள்ளன. ஆகவே அதனை விடுத்து கோணேஸ்வரத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட வன்னிமைகள் பற்றியும், தொழும்பு செய்வதற்காக வந்த தானத்தார், வரிப் பத்தார் என்டவர்களைப் பற்றியும், கோணேசப் பெருமானுடைய பூசைகளும் அவை நடைபெற்றுவந்த விதிமுறைகள்பற்றியும், கூறுவீ

ராக என்று வேண்டப்பட்டபோது, சோதிட சாஸ்திரத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், முக்காலங்களையும் உணர வல்லவருமாகிய கவிராசவரோதயர் என்பவர் சிறப்பாகச் சொல்லத் தொடங்கினார்.
திருக்கயிலாய மலையை உத்தரகயிலை என்றும், திருக்கோ ணேஸ்வரத்தைத் தெட்சண கயிலை என்றும் கூறுவர். ஆதலால் இத்தலத்திற்குப் பாடப்பெற்ற புராணமொன்று " "தெட்சண கயி லாய புராணம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று. திருகோணேஸ் வரம் அமைந்துள்ள குன்று முக்கோண வடிவத்திலிருப்பதாலும், மூன்று மலைகள் இணைந்துள்ள பிரதேசமாகத் திருகோணமலை அமைந்திருப்பதாலும், இத்தலத்துக்குப் பாடப்பெற்ற மற்றொரு புராணம் 'திரிகோணாசல புராணம்' எனப் பெயர் பெறுவதா யிற்று.
திரி - மூன்று. திரிகயிலை - மூன்று கயிலை எனப் பொருள் கொண்டு பூரீகாளத்திமலை, திருச்சிராமலை, திருகோணமலை ஆகிய மூன்றையும் தெட்சண கயிலாயமென்று செவ்வந்திப் புராணம் கூறும் அகச்சான்றைப் பின்வரும் பாடலில் காண்க.
முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியாய் மொழிவர் பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்னதற் பின்னர் வீழ்ந்தது கோணமா அசலம் இன்ன மூன்றையும் தெட்சண கயிலையென் றிசைப்பர்.
எனவே தெட்சணகயிலாயம் எனப்படும் திருக்கோணமலையும் திரி கயிலைகளில் ஒன்றென்று பேசப்படுவதாயிற்று. அன்றியும் திரிகோ ணாசலபுராணம் திருமலைச் சருக்கம் 67, 69, 93 ஆம் பாடல்களிலும் திருக்கரசைப்புராணம், தெரிசனா முத்திச் சருக்கம் 12 ஆம் பாடலி லும், கங்கைச் சருக்கம் 23 ஆம் பாடலிலும் தெட்சண கயிலையாகிய கோணேஸ்வரத்தின் பெருமைகள் பேசப்படுகின்றன.
கவிராசவரோதயர் சோதிடசாஸ்திரத்தில் மேதையாக விளங்கி யவர். முக்காலங்களையும் உணரவல்ல ஞானம் அவரிடமிருந்தது. அவர் பாடிய பாடல்களில் தீர்க்கதரிசனக் கூற்றுக்களாயமைந்த கூற்றுக்களைக் காணக்கூடியதாயிருக்கின்றது.இவற்றைக் கோணேசர் கல்வெட்டு 42, 43ஆம் பாடல்களிற் காண்க.
سے 514 سست۔

Page 35
3. சீரிலங்கு சோழவளநாடு தீன்னில் ஒருநாளைக் கிரண்டவணச் செம்பூச் சம்பா ஏரிலங்கும் அரிசிவர அதற்குத் தக்க கறியமுதுபல செலவும்
ஈந்திதற்குப் பாரிலங்கு பூசைதனை நடத்தும் எம்மிற் பின்பதனை
இனிதாசப் பகிர்வர் ஆரென்று ஏரிலங்கு குளக்கோடன் எனுமிராசன் நாற்கால்
மண்டபத்திருந்தே எண்ணினானால்.
செல்வச் சிறப்புக்களையுடைய சோழநாட்டிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டவணம் செம்பூச் சம்பா எனப்படும் சிறப்புமிக்க அரிசி கோணேஸ்வரத்திற்கு வந்துகொண்டிருந்தது. அதனை அமு தாக்கி அதற்குத்தக்க கறியமுதும் பாகம் பண்ணத்தேவைப்படும் பல செலவுகளையும் குளக்கோட்டு மன்னன் கொடுத்துவந்தான். இவ் வாறு கோணேஸ்வரத்தில் இந்தப் பூசைகளை நடத்திவரும் எமக்குப் பின்னர் இந்தப் பூசைகளுக்குத் தேவையான அரிசி முதலிய திரவியங் களை யார் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று கீர்த்திபொருந்திய குளக் கோட்டு மன்னன் ஆலயத்திலுள்ள நாற்கால் மண்டபத்திலிருந்து சிந் திக்கத் தொடங்கினான்.
கோவிற் திருப்பணிகளை நிறைவேற்றிய குளக்கோட்டு மன்னன்
கோவிலைப் பராமரிப்பதற்கு நிரந்தரமான வருவாய்கள் வரக்கூடிய
வழிவகைகளைச் சிந்தித்தான். குளங்களைக்கட்டி, வயல் வெளிகளை
உண்டாக்கி உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிட்டான். உற்பத்தி களை விருத்தி செய்வதற்கு மக்களைக் குடியமர்த் தவும், அவர் களைப் பரிபாலிக்கவும், உற்பத்திகளை ஆலயத்துக்கும், மக்களுக்கும்
பகிர்ந்தளிக்கவும் பொறுப்பதிகாரிகளை ஏற்படுத்தவும் எண்ணமிட் டான். இப்படியான ஏற்பாடுகளைச் செய்து ஆலயத்துக்கு நிரந்தர வருவாய் வரும் வரையும் கோவில் பூசைகளுக்குத் தேவையான அரிசி முதலிய திரவியங்களைக் குளக்கோட்டு மன்னன் சோழநாடிேலிருந்து தருவித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
வேறு
4. திருந்து திரி கயிலை வெற்பிற் சிவாலயமும் கோபுரமும்
சிறக்க நாட்டிப் பரிந்துலகோர் பவமறுக்கும் பாவநாசச் சுனையும்
பரிவாய்ச் செய்து தெரிந்த புகழ்த் திருக்குளமும் வயல்வெளியும் திருத்தி
அரர்க்கென்ன ஈந்து பரிந்தவரன் தொழும்புசெய்ய ஆள் வேண்டுமென நடந்தான் ரிதிவேந்தன்.
سے۔ 52 ستہ

திரிசுயிலையென்று போற் ற ப் படும் திருக்கோணமலையில் கோணேசப் பெருமானுக்குச் சிவாலயத்தையும், கோபுரத்தையும் சிறப்பாக அமைத்து உலக மக்களுடைய பாவங்களை அழிக்க வல்ல பாவநாசச் சுனையையும் மக்கள்மீது கொண்ட அன்பினாலும், இறைவன் மீதுள்ள பக்தியினாலும் குளக்கோட்டு மன்னன் செய்து நிறைவேற்றினான். ஆற்றுநீரும், வேற்றுநீரும், ஊற்றுநீரும் தங்கி நிறைந்திருக்கத்தக்க குளங்களையும், காடுகளைத் திருத்தி வயல் வெளிகளையும் அமைத்து, இவையனைத்தும் இறைவனாகிய கோணேசப் பெருமானுக்கென்றே அர்ப்பணம் செய்தான். கருணா மூர்த்தியாகிய கோணேசப் பெருமானுக்குத் தொழும்பு செய்வதற்கு மக்கள் வேண்டுமே என்று சிந்தித்த சூரியகுலத் துதித்த குளக்கோட்டு மன்னன் மேற்கொள்ளவேண்டிய காரியங்களைச் செய்ய முற்பட் L. Got.
**சிவாலயமும் கோபுரமும் சிறக்கத் திருந்த நாட்டி" என்றத னால் குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரத்திலிருந்த கோவிலுக்குப் புனருத்தாரணத் திருப்பணிகள் செய்தான் என்பதும், இத்திருப்பணி கள் செய்வதற்கு முன்பே இங்கு கோவில் இருந்தது என்பதும் புலனா கின்றது.
திரிகோணாசல புராணம், திருப்பணிசெய்படலம் 6 ஆம் 7ஆம் பாடல்களில் வரராமதேவன் இத்தலத்திற்கு வந்து திருப்பணிகள் செய்வதற்காக மலையிலுள்ள கூவலொன்றில் திரவியங்களை வைத்துச் சென்ற வரலாறு பேசப்படுகின்றது. இதனால் வரராம தேவன் வருவதற்கு முன்னரே கோணேஸ்வரத்தில் ஆலயங்களிருந் தமை புலனாகின்றது. "அரசன் தொழும்பு செய் ஆள்வேண்டுமென நடந்தான்' என்பதனால் கோணமலை நாதருக்குத் தொழும்பு செய்யக் குடிமக்களை அழைத்து வருவதற்காகச் சோழநாட்டுக்குச் சென்றான் என்பது புலனாகின்றது.
வேறு
5. பரிதிகுலத் துதித்த குளக்கோட்டு ராசன் பங்குனி உத்திரம்
பதினைந்தாம் தேதி தன்னில் வரிசையுடன் சென்று மருங்கூரிலேகி வளவரின் நல்லோரை
மரக்கலத்தில் ஏற்றி
அரிய திரி கோணமலை நாதற்கென்றே அன்னகரில் ஐயாறு
குடியும் ஏற்றி உரிமையிது உங்கள் பரவணியாம் என்றே உரைசெய்தான் ,சதுர்வேத ஞானமூர்த்தி ٬ م. "
- 53 -

Page 36
நான்கு வேதங்களையும் கற்று ஞானவடிவாய் விளங்கும் சூரிய குலத் தோன்றலாகிய குளக்கோட்டு மன்னன், பங்குனி உத்திர நன் நாளில் பதினைந்தாம் தேதியன்று மன்னர்களுக்குரிய சகல சீர்வரிசை திரளுடன் சோழ நாட்டுக்குச் சென்றான். அங்கு மருங்கூருக்குப் போய் சோழமக்களில் நல்லொழுக்கமும், சீலமும், ஆசாரமும் நிறைந்த நன் மக்கள் பலரை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு வந்தான். அரிதிலும் அரிய சிவச்சுேஷத்திரமாக விளங்கும் திருக்கோணேஸ்வரத்தில் எழுந் தருளியுள்ள கோணேசப்பெருமானுக்குச் சிவத்தொழும்புகள் செய்வ தற்கென்றே மருங்கூரிலிருந்து முப்பது குடிமக்களை ஏற்றிக்கொண்டு வந்து இத்தொழும்புகள் உங்கள் பரம்பரைத் தொழும்பாதலால் இங் கும் அவைகளை உரிமையோடு செய்யுங்கள் என்று கூறினான் குளக் கோட்டு மன்னன்.
ஒவ்வொரு ஆண்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும். ஆனால் அது பதினைந்தாம் தேதியில்தான் வருமென்று கூற முடியாது. கவிராசவரோதயர் மிகச்சிறந்த சோதிட விற்பன்னர். அவர் கல்வெட்டுப் பாடும்போது காலத்தைக் கணித்துப் பாடியிருக்க லாம். செப்பேட்டிலும் இவ்விஷயம் இருந்திருக்கலாம்.
உரிமையிது உங்கள் பரவணியாமென்றே உரைசெய்தான்' என்பதனால் மருங்கூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் பரம்பரை யாகச் சிவத்தொழும்புகள் செய்யும் குடியிலிருந்தே அழைத்து வரப் பட்டார்கள் என்பதும் அந்தப் பரவணியைக் கோணேஸ்வரத்திலும் உரிமையோடு செய்யும்படி மன்னன் வேண்டிக்கொண்டான் என்பதும்
தெரிகின்றது.
6. இத்தலத்தில் அரன் கயிலை ஆலயத்தில் இயன்ற அறைதனில் முதல் இருப்பு நாட்டி நித்தம்வரும் வரவாகும் பொருள்களோடு நிதம் பூசைச்
செலவெழுதநியமஞ்செய்து அத்தர் முன்னர் ஆலாத்தி நடனமிடல் பன்றிகுற்றல்
அதிகப்பட்ட அரனுக்கீதல் இத்தனையும் தானத்தார் செய்வீரென்ன எழுகுடிக்கு
இராயபட்டம் ஈந்தான் வேந்தன்.
தெட்சணகயிலாயமெனப் போற்றப்படுகின்ற சிவச்கேடித்திர மாகிய இந்தத் திரிகயிலையில் கோணேசப்பெருமானுக்கு அமைந் துள்ள திருக்கோவிலின் திருவறைகளில் (களஞ்சியங்கள்) ஆலயங்க ளுக்குத் தேவையான திரவியங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன (முன்னிருப்பு). அவற்றுடன் தினமும்வரும் பொருட்களின் வரவுகளை
- 54 -

யும், தினமும் பூசைக்குச் செலவாகும் பொருட்களையும் விபரமாக எழுதிக் கணக்கிட்டு வைக்கும்படி குளக்கோட்டு மன்னன் கருகுலக் கணக்கரை நியமனம் செய்திருந்தான். அத்துடன் இறைவன் திரு வுலா வரும்போது தானத்தார் குடியைச் சேர்ந்த பெண்கள் ஆலாத்தி எடுக்கவேண்டுமென்றும், இன்னின்ன குடியைச் சேர்ந்தவர்கள் நடன மாடவும், பன்றி குத்தவும், அரனுக்குப் பட்டாடை இடவேண்டுமென் றும் திட்டம்பண்ணி மருங்கூரிலிருந்து அழைத்துவரப்பட்ட முப்பது குடிகளில் ஏழு குடிகளுக்கு இராயர் என்ற உயர்ந்த பட்டத்தையும் கொடுத்தான்.
குறிப்பு: தானத்தார், வரிப்பத்தார். கருகுலக்கணக்கர், இரு பாகை முதன்மை, வன்னிமை, ஆலாத்திப் பெண்கள், புலவன் முத லியவர்களின் கடமைகள் (தொழும்புகள்) எவையென்பதைக் கல் வெட்டுப் பாடல்களின் முடிவிலுள்ள வசனப் பகுதியிற் காண்க.
7. வேந்தனின்னும் அரன் தொழும்புக்கு ஆட்போதாதென
நினைந்து மீண்டே காரை வாய்ந்த வளநாடு சென்று வரிப்பிடித்தான் மூவேழு
குடி வாழ்வோரை
சேர்ந்து இடபமாதமதில் ஈரைந்தாம் தேதி திங்கள் சிறந்த
(34 mg ஏய்ந்த கன்னி முகூர்த்தமதில் அரன் தொழும்பு
செயவிடுத்தான் இராசராசன்.
குளக்கோட்டு மன்னனானவன் மருங்கூரிலிருந்து அழைத்துவரப் பட்ட குடிமக்களாகிய தானத் தாருக்குரிய ஆலயப் பணிகளை (தொழும்புகள்) நியமம் செய்த பின்னர், ஆலயத் தொழும்புகளுக்கு ஆட்கள் டோதாதென நினைத்தான். இதனால் மேலும் தொழும்பா ளர்களை அழைத்துவருவதற்காக மீண்டும் இந்தியாவிலுள்ள சகல வளங்களும் நிறைந்த காரைக்கால் எனப்படும் நாட்டின் கண்ணே பரம்பரையாக ஆலயத் தொழும்பு செய்துவரும் நற்குடிகளிலிருந்து வரிப்பத்தார் எனப்படும் இருபத்தொரு குடிகளைச் சேர்ந்த மக்களை அழைத்துவந்தான். இவர்களைக் கோணமாமலையில் எழுந்தருளி யுள்ள கோணேசப் பெருமானுக்குத் தொழும்புகள் செய்வதற்காக வைகாசி மாதம் பத்தாந் திகதி பூர்வபட்சத்தில் சுவாதி நட்சத் திரமும் கன்னி முகூர்த்தமும் பொருந்திய நன்னாளில் நியமித் தான் குளக்கோட்டு மன்னன்.
இடபமாதம் - வைகாசி மாதம். சோதி - சுவாதிநட்சத்திரம். காரை - காரைக்கால்.
س- 5- حس

Page 37
8. சன்னிதியில் நீவிர் செய்யும் தொழும்பு உமக்கு
நாமு ரைக்கத் தான் நீர் கேளும் நன்ன யஞ்சேர் பட்டாடை கொய்தலொடு பத்திர
புஷ்பமெடுத்தல் தூர்த்தல் மின்னுநிறை விளக்கேற்றல் தளிசை தட்டு
முட்டிவைகள் விளக்கல் நித்தம் உன்னதமாய் நெல்லதனைக் குத்தல்
ஆமயந்தெளித்தல் விறகு சேர்த்தல்.
காரைக்காலில் இருந்து அழைத்துவரப்பட்ட வரிப்பத்தார் எனப்படும் குடிமக்கள் செய்யவேண்டிய தொழும்புகள் எவையெவை என்பதைச் சொல்கின்றேன் கேளுங்கள். கோணேசப் பெருமானு டைய சன்னிதியில் சிறப்புவாய்ந்த நல்ல பட்டு வஸ்திரங்களைக் கொய்து பிடித்தல், பத்திரம் புஷ்பங்கள் எடுத்தல், தூய்மையாக அவைகளை நிறைத்து வைத்தல், பிரகாசிக்கும்படி நிறைவாக விளக் கேற்றுதல், தளிசை தட்டுமுட்டுச் சாமான்களைப் பூசி விளக்குதல், தினமும் நெல்லுக்குத்திச் சிறப்பாக அரிசி சேர்த்தல், சாணி தெளித்தல், விறகு சேர்த்தல் என்பனவும்.
ஆமயம் - சாணி
9. செய்ய நடனஸ்திரிக்கு முட்டுவகை கொட்டலொடு
சிறக்கப் பாடல் ஐயமற நற்பலிக்குப் பாவாடை இடுவதுவும் அதுவேயன்றித் துய்ய சுண்ணம் கொடியேற்றல் இறக்கலோடு
சுமத்தலும் சாந்தரைத் தேய்தல் மெய்யெனவே ஆலயத்துட் பணிகளைத் துப்புரவாக
s விளங்கச் செய்வீர்.
இறைவனுடைய சன்னிதியிலே சிறப்பாக நடனமாடும் பெண்க ளுடைய நடனத்திற்கு இசைக்கருவிகளை வாசித்தல், சிறப்பாக ஏற்றவகையில் பாடுதல், சுற்றுப்பலிக்குப் பாவாடையிடுதல் அதுவுமின்றித் திருப் பொற்சுண்ணமிடித்தல், கொடி ஏற்றுதல், இறக்குதல் முதலிய கருமங்களில் கொடியைத் தூக்கிச் செல்லுதல், சந்தனம் அரைத்துக் கொடுத்தல் முதலிய ஆலயப்பணிகளை மனத் தூய்மையோடு சுத்தமாகச் செய்வீர்களாக என்று குளக்கோட்டு மன்னன் கூறி வரிப்பத்தார் எனப்படும் குடிமக்களிலிருந்து தொழும் பாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமித்தான்.
நற்பலி-நவசந்திகளில் நடைபெறும் பலிகள்.
مسے 56 سـ

10. நீர்பாயும் பள்ளவெளி நெல்விளையும் தரை
அவர்க்கு நிசமாய் ஈந்து பார்க்கரிய ஐங்குடிக்குப் பண்டாரத்தார்
எனவே பவுஸ"ம் ஈந்து வார்குலவு களபமுலைப் பிடிநடையைக் கோணமலை
நாதன் தாளை நேர்த்தியதாய் வழிபடல் செய் குளக்கோடன்
இதயமதில் நெறியில் ஒர்ந்தான்.
காரைக்காலிலிருந்து அழைத்துவரப்பட்ட வரிப்பத்தார் என்னும் குடிமக்கள் திருக்கோணேஸ்வரத்தில் செய்யும் தொழும்புகளுக்காக நீர்ப்பாய்ச்சலுள்ள பள்ளவெளி எனப்படும் நெல்விளையும் வயல் களை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்தான் குளக்கோட்டு மன்னன். அன்றியும் இந்த வரிப்பத்தாரில் சிறந்த ஐந்து குடிகளுக் குப் பண்டாரத்தார் என்ற கெளரவப் பட்டத்தையும் வழங்கி னான். இதன் பின்னர் கச்சணிந்த, சந்தனக்களபம் பூசப்பெற்ற ஸ்தனங்களையுடைய பிடியன்ன நடையாளாகிய மாதுமையம்பா ளையும் கோணேசப் பெருமானையும் பாதங்களில் வீழ்ந்து பயபக் தியுடன் வழிபாடுசெய்த குளக்கோட்டு மன்னன் ஆலயத்தைப் பரிபாலிக்கும்படியாக நியமனம் செய்யப்பட்ட தானத்தார், வரிப் பத்தார் என்பவர்களின் எதிர்காலம்பற்றிச் சிந்தித்தான்.
பவுஷ" - கெளரவம் வார் - கச்சு. களபம் - சந்தனக்குழம்பு.
11. தானம் வரிப்பத்தென்னும் அரன் தொழும்பார்க்குள்
இகலார் தர்க்கம் வந்தால் மானபங்கமடையாமல் நடுத்தீர்ப்பதார் எனவே
மதுரையூர் சென்று ஆண்மதிக் குலராமன் தனியுண்ணாப் பூபாலன் தனைக்
கொணர்ந்து தேனமர்பூந் தொடை மார்பன் திருக்கோணை நகரரசு
செய்ய வைத்தான்.
இறைவனுக்குத் தொண்டு செய்யும் (தொழும்பு) தானத்தார், வரிப்பத்தார் என்பவர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டுத் தர்க்க வாதம் செய்ய நேர்ந்து, அதனால் அவர்கள் மானபங்கமடையாமல் இருப்பதற்கு அவர்களுடைய பிணக்கைத் தீர்த்துவைப்பது யார் என்று குளக்கோட்டு மன்னன் சிந்தித்தான். இதனால் மன்னன் மதுரைக்குச் சென்று சந்திர வம்சத்திலே தோன்றிய ராமனை
57 سس

Page 38
ஒத்த சீலம் நிறைந்தவனாகிய தனியுண்ணாப் பூபாலன் என்பவரை அழைத்து வந்து, தேன் நிறைந்த மலர்களாலான மாலையணிந்த குளக்கோட்டுமன்னன் திருக்கோணமலை நகரத்தை அரசாட்சி செய்யும்படியாக நியமனம் செய்தான்.
மதிக்குலம் - சந்திரவம்சம். தொடை - பூமாலை. இகல் - பகை.
12. வைத்தபுகழ் வன்னிமையே நீதிசொல்வேன் மகத்தான பாசுபத மறையோர் தங்கள் சித்தமது நேராக நீதி சொல்வாய் சிவபூசை
முதலொழுக்கந் தவறினாலும் குற்றமென்றே எண்ணி மிகக் கோபங்கொண்டால்
கோணமலை நாதரிடம் சொல்வார் சொன்னால் சுற்றுமே பிரமகத்தி வங்கிஷ முற்றும் தொகையாக மற்ற வற்குச் சொல்வேம் குற்றம். பாரம்பரியமாகப் புகழ்பெற்றுள்ள வன்னிமையே! நீதியைப் பரி பாலிக்கும் நெறியைக் கூறுகின்றேன் கேளுங்கள். கீர்த்திபொருந் திய பாசுபத நெறியில் வாழும் அந்தணர்களுடைய மனம் நோகா மலிருக்கும்படியாக நீதியைச் சொல்வாயாக. அவர்கள் செய்யும் சிவ பூசைகளிலும், ஒழுக்கத்திலும் தவறு செய்தாலும் அதனைக் குற்றமென்று எண்ணி மிகவும் கோபமடைந்தால் அவர்கள் இத னைக் கோணைநாதரிடம் சொல்வார்கள். அவர்கள் மனம்நொந்து கோணேசப் பெருமானிடம் சொன்னால் அதனால் பிரமகத்தி தோஷம் உனது வம்சம் முழுவதையும் சுற்றிப் பற்றும். ஆதலால் மற்றவர்கள் செய்யும் குற்றங்களுக்குச் செய்ய வேண்டிய நீதிநெறி முறைகளைச் சொல்கின்றேன் கேட்பாயாக என்று குளக்கோட்டு மன்னன் கூறினான்.
பாசுபதமறையோர் - வீரசைவப் பிராமணர், பிரமகத்தி - பிரா மனதோஷம்.
13. சுத்தமிகு வன்னிமையே குற்றஞ்செய்தால் துலங்கு
விலங்கடி உயிருக்குயிரே வாங்கு நிர்த்தமிடு மடவியர்கள் குற்றஞ்செய்தால் நிறைபுனலில் நிறுத்திவைத்துத் தேங்காய் வாங்கு மற்றை மதிநுதல் மடவார் குற்றஞ் செய்தால்
மண் கடகம் ஏற்றியடி வழக்கு நோக்கி இத்தகைய இராசாங்கம் செய்நீ என்றே இரத்னமணி
ஆசனத்தில் இருத்திவைத்தான்
- 58 -

தூயஒழுக்கம் நிறைந்த வன்னிமையே! ஆலயத் தொழும்புகள் செய்பவர்கள் அவரவர்களுக்குரிய வழமைப்பிரகாரம் தொழும்பு களைச் செய்கின்றார்களா என்பதைப் பார்த்து அவர்கள் குற்றஞ் செய்தால் விலங்கிட்டுக் கசையடி கொடு. உயிர் பறிக்கப்படும் குற்றம் செய்தால் மரணதண்டனை கொடு. நடனமாடும் பெண் கள் குற்றம் செய்தால் நிறைந்த நீரினுள்ளே நிற்கவைத்துத் தேங் காய் வாங்கு. ஏனைய குலமாதர்கள் குற்றம் செய்தால் தலை யிலே மண் கடகத்தை ஏற்றி வைத்து அவர்கள் செய்த குற்றத் திற்கேற்ப கசையடி கொடு. இப்படியான நீதிபரிபாலனத்தைச் செய்வாயாக என்று கூறி வன்னிமையைக் குளக்கோட்டு மன்னன்
இரத்தினமணி இழைத்த ஆசனத்தில் இருத்திவைத்தான்.
நீதிபரிபாலனம் செய்யும் வன்னிமையே குற்றஞ்செய்தால் அவ ரும் தண்டனைக்குரியவரென்பது பாட்டின் முதலாமடியில் மறை பொருளாய் வைக்கப்பட்டிருக்கின்றது. தேங்காய் வாங்குதல் என் பது பண்டைக்காலத்தில் இருந்துவந்த தண்டனைகளில் ஒன்று போலும். தேங்காயை இருகைகளிலும் ஏந்தி உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிறை நீரில் நிற்கும் தண்டனையாயிருக்கலாம்.
நிர்த்தம் - நடனம். புனல் - நீர். மதிநுதல் - பிறைபோன்ற நெற்றி. வழக்கு நோக்கி என்பது வழமை பார்த்து என இப்பாட லில் பாடபேதம் காணப்படுகின்றது.
14. வையமகிழ் வன்னிமையே இன்னும் கேளாய் மனுநீதி
தவறாதே கோபம் பாவம் ஐயமற உன்தாரம் தாரமாகும் அயலவர்கள் தாரமெலாம் தாயராகும் மெய்யை எடு பொய்யை விடு வன்மம் வேண்டாம் வறுமை யுள்ளோர்க்கு உதவிசெய்வாய் இகல் பண்ணாதே.
மையனைய கண்டர் திருக்கோணைநாதர் மகாபூசைத்
திருப்பணியும் வழங்கச் செய்யே.
பூமியிலுள்ளோரால் புகழ்ந்து போற்றப்படும் வன்னிமையே! இன்னும் சொல்கின்றேன் கேட்பாயாக. மனுதர்மப்படி நீதியைப் பரிபாலனம் செய்வாயாக. தவறுசெய்யாதே. கோபம் பாவத்தைத் தரும். உனது மனைவியே உனக்கு மனைவியாகும். அயலவர் களின் மனைவியர் உனது தாயராவர். இதில் சந்தேகம் வேண் டாம். சத்தியத்தை ஏற்றுக்கொள். பொய்யை விட்டுவிடு. வன் மம் செய்யாதே. வறியவர்களுக்கு உதவி செய்வாயாக. பகை
سس 59 -سسسس

Page 39
பாராட்டாதே. நஞ்சுண்டு இருண்ட கண்டத்தையுடைப திருக் கோணை நாயகரது பூசைகளில் தவறு ஏற்படாமல் சிறப்பாய் நடைபெற்றுவரச் செய்வாயாக.
வையம் - பூமி. தாரம் - மனைவி. வன்மம் - பகை.
15. வைத்த கட்டுக்குளத்தூரார் அரன்தொழும்பு செய்ய
இந்து வெளியூர் மேலோர் அத்தர் முன்னர்க் காப்பணிதல் முன்னிடு விழா நடத்தல் அவணமாறு
சுத்தநெல்லு ஆங்கு ஒப்புவித்தல் அடையாயம் தீர்வை
கடல் வரத்தும் கோணை அத்தனுக்கு இத்தனையுமென அருள்புரிந்தான் அரசர்முடி அழுந்து தாளான்.
கட்டுக்குளப்பற்று என்று வகுக்கப்பட்ட பிரிவில் உள்ளவர் கள் கோணேசப் பெருமானுடைய தொழும்புகள் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் நிலாவெளியூரில் வாழ்ந்த மேன்மைக்குரியவர்களிற் பெரியவர்கள் இறைவனுடைய சன்னிதி யில் முன்னின்று காப்பணிந்து திருவிழாக்களை நடத்துதல், ஆறு அவணம் சுத்தமான நெல்லை ஆலயத்தில் ஒப்படைத்தல், பால், தயிர், நெய் கொடுத்தல், சுங்கத்தீர்வை, கடற் பிரயோசனத்தின் லாபங்கள் என்பனவற்றைக் கோணை ஈசனுக்குக் கொடுத்துவருதல் வேண்டுமென அரசர்களால் வனங்கப்படும் தாள்களையுடைய குளக்கோட்டு மன்னன் கூறினான்.
இந்துவெளி - நிலாவெளி. ஆயம் - வரி, அடை - ஒருவகை வரி கடல்வரத்து-சுங்கத்தீர்வை,
16. தானதிக திருமலைக்கு நாற்காத வழிதிருத்தித் தானும்
கோனை மானபரற்கென அளித்தேன் கொட்டியாபுரப் பதியோர்
மகிழ்ந்தே செய்தல் ஆனதுவர்க் காயினுடன் வெள்ளிலையும் அருங்க தலிக்
கனியும் சாந்தும் ஊனமறு பால் தயிர் நெய் அரிசி ஒரு நூறு அவணம்
. உகந்தே ஈதல்,
- 60 -

கொட்டியாபுரப் பற்றில் நான்கு காத வழி தூரத்திற்கு உற் பத்தி விளைவு களு க்காகக் காடுகளைத் திருத்தி விளைநிலங் களை உண்டாக்கிக் கோணேசப் பெருமானுக்கென மேலதிகமாகக் கொடுத்தேன். அந்தக் கொட்டியாபுரப் பற்றில் வாழ்பவர்கள் மகிழ்ந்து செய்ய வேண்டியது யாதெனில் கோணேசர் கோவிலுக்கு பாக்கும், வெற்றிலையும், வாழைப்பழமும், சந்தனமும், குற்றமற்ற பால், தயிர். நெய்யும் நூறு அவணம் அரிசியும் கொடுத்துவர வேண் டும்.
துவர்க்காய் - பாக்கு. வெள்ளிலை - வெற்றிலை, கதலிக்கனி - வாழைப்பழம். காதம் - நான்கு கூப்பிடுதூரம்.
17. ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்
சேதமற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணெயுறத்
திருந்த ஆட்டி
ஒதரிய கெவுளிமுனை மீகாமனிடத்தில் வரவு
வந்தே கோணை
நீதமுறு கருகுல நற்கணக்கிலுள்ளபடி கிணற்றில்
நிறைவாய் ஊற்றல். முன்கூறிய பாடலிற் சொல்லப்பட்ட பொருட்களைக் கொடுப்ப தோடு ஆமணக்கு, இலுப்பை, புன்னைப் பருப்புக்களை இறை யாத்தீவில் உள்ளவர்களிடம் ஒப்புவிக்க வேண்டும். அ வை களை அவர்கள் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் வகைகளைத் தனித்தனியே எடுத்துச்சென்று சொல்லுதற் கரிய கெவுளிமுனையிலுள்ள (சம்பூருக் கருகில்) ஒடக்காரரிடம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவை களை ஒடங்களில் ஏற்றி வந்து கோணேஸ்வரத்தில் நீதியாகப் பதிவு செய்யப்படும் கருகுலக் கணக்கிற் பதிவு செய்து ஒவ்வொருவகை எண்ணெயையும் அவைகளைச் சேமித்து வைப்பதற்குரிய தனித் தனிக் கிணறுகளில் ஊற்றிவைக்க வேண்டுமென்று குளக்கோட்டு
மன்னன் கூறினான்.
ஏரண்டம் - ஆமணக்கு. மீகாமன் - மாலுமி (ஓடக்காரன்) இறை யாத்தீவு, கெவுளிமுனை என்பன கொட்டியாபுரப் பற்றிலுள்ள
இடங்கள்.
- 61 -

Page 40
குறிப்பு:- இப்பாடலில் வரும் 'கருகுலக்கணக்கிலுள்ளபடி" என்ற வாசகம் "கருகுலக் கணக்கனுள்ளபடி" என்று ஏட்டுப்பிரதியிற் காணப்படுகின்றது. இதுவே சரியானதெனத் தோன்றுகின்றது. ஏனெனில் எண்ணெய் வகைகள் வந்துசேர்வதற்கு முன்னர் கணக்கிற் பதிவுசெய்வது சாத்தியமில்லை. ஆதலால் கருகுலக் கணக்கன் வந்து சேர்ந்த எண்ணெய் வகைகள் எவ்வளவென்றறிந்து அவற்றை உள்ளபடி பதிந்து கிணற்றில் ஊற்றி வைப்பதுதான் சாத்திய மாதலால் "கருகுலக் கணக்கன்" என்றிருப்பதுதான் பொருத்தமான தாகும்.
18. வாசலுக்குத் தென்கிழக்கே எண்ணெய் நெய்க்குக் கிணறு ஏழு வரைந்து கட்டி மாசகலத் துலாப்போட்டு வாளியிட்டு மதில் கட்டிக்
கதவுமிட்டு ஏசகல எண்ணெய் அதிகாரமென நிலைமையும் வைத்து
இதயம் கூர்ந்து ஒசைதிகழ் எண்ணெய் நெய்கள் ஒருகாலும் குறையாத
ஊற்றும் கண்டான்
கோணேசர் கோவில் வாசலுக்குத் தென்கிழக்குப் பக்கமாக எண்ணெய்வகைகளையும், நெய்யையும் சேமித்து வைப்பதற்கு ஏழு கிணறுகளைக் கட்டி அவைகளுக்குக் குற்றமற்ற துலாக்கள் போட்டு வாளியுமிட்டுக் கிணறுகளைப் பாதுகாக்கச் சுற்றுமதில்களும் கட்டி கதவுகளுமிட்டான். எண்ணெய், நெய்யை ஏற்கவும் கொடுக்கவும் எண்ணெயதிகாரம் எனப் பொறுப்பதிகாரிகளையும் நியமித்து, எண்ணெய் நெய்கள் எக்காலத்திலும் குறையாமலிருக்கச் செய்தான் குளக்கோட்டு மன்னன்.
எண்ணெயதிகாரம் - பதவிப்பெயர். ஊற்று - குறையாதி ருப்பது. "எண்ணெய் நிற்கும் கிணறேழு" என்று ஏட்டுப்பிரதி யில் காணப்படுகின்றது.
19. ஊற்றிருந்து தாது கு க் கும் தாதகித் தாரணி மார்பன் உகந்தே கோண நாற்றிசைக்கும் திட்டமிட்டு நவரத்ன மணியணையில்
அன்பாய் வந்து வீற்றிருந்து பாசுபதர் வருக யாம் திருக்குளமும்
விளங்கச் செய்ய ஏற்றுகைக்கும் கோணமலை இறையிடம் போய்
விடைவாங்கி இவண்சொல் என்றான்.
سیسہ 62 سس۔

தேனூறிப் பூந்தாதுக்களை உதிர்க்கின்ற ஆத்திமலர் மாலை யணிந்த அழகிய மார் பி னை யு டை ய குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரத்தின் நான்கு திக்குகளுக்கும் ஏற்ற திருப்பணிகளைத் திட்டமிட்டுச் செய்தபின் நவரத்தினமிழைத்துச் செய்யப்பெற்ற ஆசனத்தில் அன்போடு வந்திருந்து பாசுபதக் குருமாரை வரும்படி யாக அழைத்தான். கோணமலை நாதருக்குத் திருக்குளம் கட்ட விருப்பம் கொண்டுள்ளேன். இதனை நந்திக்கொடியுடைய எம் பெருமான் கோணமலை நாதரிடம் போய் விண்ணப்பம் செய்து திருவுளச் சம்மதத்தைப் பெற்று இங்கு வந்து சொல்வீர்களாக எனப் பணிவன்புடன் கேட்டான்.
தாதகி - ஆத்தி.
20. சொல்ல வந்த பாசுபதர் திரிகயிலைப் பரமனடி தொழுது எங்கோமான் நல்ல திருக்குளம் இயற்ற விடை வாங்கி வாருமென்றான் நாத என்ன எல்லையிலா நீர்தாங்கி நீடூழி நெல்விளையும்
என்னச் சொல்ல மல்லணையும் திரள் தோளான் குளக்கோடற்கு
உரைக்க அவன் மகிழ்வு பூத்தான்.
கோணமலை நாதருடைய திருவுளச் சம்மதத்தை அறிந்து வரும்படி குளக்கோட்டு மன்னன் சொல்ல அதனைக் கேட்டு இறை வனுடைய சன்னிதானத்துக்கு வந்த பாசுபதர்கள் தெட்சணகயி லாயமாகிய திருக்கோணமலைப் பரமேஸ்வரனுடைய திருவடிகளைத் தொழுது, எங்களரசனாகிய குளக்கோட்டு மன்னன் திருக்குளம் அமைக்கத் தங்களுடைய திருவுளக் குறிப்பை அறிந்துவருமாறு கூறினான் என்றார்கள். அளவற்ற நீரைத் தாங்கும் குளம் அமைந்து நீடூழிகாலம் நெல்விளையுமென்று இறைவன் அருள்புரிந்தார். அத னைப் பாசுபதர்கள் வந்து கூறினார்கள். அதைக்கேட்டு வலிமை பொருந்திய திரண்ட தோள்களையுடைய குளக்கோட்டு மன்னன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
மல் - வலிமை
21. தானதிக கணபதியே கோணவெற்பிற் சங்கரனே
சண்முகனே சங்கமாலே
நானுமொரு திருக்குளமொன்று இயற்றுதற்கு நலமாக
உங்களருள் நடக்கச் செய்வீர் வானவரே என வணங்கி விடையும் பெற்று மவுனமுடன் இரத்தின மண்டபத்தினின்று தேன்மருவும் தொடைமார்பன்சேனைசூழத் திருக்குளத்தின் திசை நோக்கித் திருந்தச் சென்றான்.
-- 63 . س- 4

Page 41
ஞான மதம் சொரியும் ஞானவிநாயகனே, கோணமாமலையிற் கோயில் கொண்டருளியுள்ள சிவபெருமானே, ஆறுமுகப் பெரு மானே, பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைத் திருக்கரத்திலேந்திய திருமாலே, திருக்குளமொன்றைக் கட்டுவதற்கு நான் விரும்பியுள் ளேன். அத்திருப்பணி சிறப்பாக நடைபெறுவதற்கு நீங்கள் அருள் பாலிப்பீர்களாக என்று இறைவனை வணங்கி வி டை பெற் று க் கொண்டு இரத்தினமணி மண்டபத்தினின்றும் தேன்சொரியும் மலர் களாலான மாலையணிந்த மார்பினையுடைய குளக்கோட்டு மன் னன் சேனைகள் சூழ்ந்துவரத் திருக்குளம் அமைக்கும் திசைநோக் கிச் சென்றான்.
தானம் - யானையின் மதம். தொடை - மாலை
வேறு
22. திருந்து கலிபிறந்து ஐந்நூற்று ஒருபதுடன் இரண்டாண்டு சென்ற பின்னர் புரிந்த இடபமாதமதில் ஈரைந்தாந்தேதி திங்கள் புணர்ந்த நாளில் தெரிந்தபுகழ் ஆலயமாம் சினகரமும் கோபுரமும்
தேரூர் வீதி பரிந்து ரத்ன மணிமதிலும் பாவநாசச் சுனையும்
பகுத் தான் மேலோன்.
சிறந்து விளங்கும் கலியுகம் பிறந்து ஐநூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றபின்பு வைகாசிமாதம் பத்தாம் திகதி பூரணை யாகிய நன்னாளில் திருக்கோணேஸ்வரத்தில் சிறப்புமிக்க ஆலய மாகிய இறைவன் உறையும் கோவிலும், அக்கோவில்களுக்குக் கோபு ரங்களும் தேரோடும் வீதியும் அழகிய மதில்களும், பாவநாசச் சுனையும் மேன்மைபொருந்திய குளக்கோட்டு மன்னனுடைய திருப் பணிகளாக நிறைவேறின.
ஐநூற்று - ஒருபதுடன் - இரண்டு - ஐநூற்றுப் பன் னி ரண்டு. இடப மாதம் - வைகாசிமாதம். திங்கள் - பெளர்ணமி. சினகரம் - தேவர்கோயில்.
குறிப்பு:- கி. பி. 1916ஆம் ஆண்டில் திரு. பொ. வைத்திலிங்க தேசிகர் அவர்கள் பதிப்பித்த கோணேசர் கல்வெட்டில் இப்பாடலின் கீழ்க் குறிப்பாக இத்திருப்பணி சுமார் 45 சகாப்தங்களுக்கு முன் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார். கலியப்பதம் இற்றைக்கு 5090
- 64 -

ஆண்டுகள். இதில் 512 வருட்ங்க்ள்ைக் கழிக்க"வருவது 4478 வருடங் கள். 45 சகாப்தங்கள் 4500 வருடங்கள். எனவே சுமார் 4500 வரு டங்களுக்குமுன் குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவில் திருப் பணிகள் செய்தான் என்பது பெறப்படுகின்றது. ܐ
23. மேலான திருக்குளமும் இதற்கடுத்த நாலாண்டில் விளங்கச் - ""; } } } . செய்து
சேல்பாயும் மாவலிநீர் வரவழைத்துத் திசைபரவும்
/・ t சிறப்பும் கண்டு நீலான நீர் மிகுதிவர வெருவி மதகு திறப்பது
யாரென்று
பாலாழி தனிற் துயிலும் பச்சைமுகில் தனை நினைத்தான். . . . . பரிதி வேந்தன்
சூரிய குலத்தவனாகிய குளக்கோட்டு மன்னன் சிறப்புவாய்ந்த திருக்குளத்தை (கந்தளாய்க்குளம்) கோணேசர் கோவில் திருப்பணி களை நிறைவேற்றி நாலு வருடங்கள் சென்றபின் யாவரும் அறி யும் படியாகக் கட்டி முடித்தான். அந்தத் திருக்குளத்திற்கு மீன் கள் பாய்ந்து குதிக்கின்ற மாவலி கங்கை நீரைக் கொண்டு வந்து சேர்த்துப் பல திசைகளுக்கும் அந்நீர் பரவிச் செல்கின்ற சிறப்பை պւb கண்டான். நீரானது மிகுதியாக வந்துநிறைந்து நீலவண்ணத் தோடு பெருகுவதைக் கண்டு அஞ்சி நீர் வெளியேறுவதற்காக மத கைத் திறப்பது யாரென்று கலங்கிப் பச்சைமா மலைபோன்ற திரு மேனியையுடைய திருமாலை நினைத்தான்குளக்கோட்டு மன்னன்.
குறிப்பு:- குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலுக்காக அமைத்த குளம், திருக்குளம் என்ற பெயருடையதாயிருந்தது. இதற்க யலிலேதான் பிராமணக் குடியிருப்பாகிய சதுர்வேதி மங் கலம் என்ற கிராமமும் இருந்தது. கயவாகு மன்னனுடைய அகங் காரத்தை அழிக்கத்திருவுளங் கொண்ட கோணேசப்பெருமான் இத் திருக்குளத்தருகில் வைத்து கயவாகு மன்னனுடைய கண்களில் ஒன்றுக்கு ஒளிகொடுத்தருளினார். கண்தழைத்த 'இடமாதலால் அது பிற்காலத்தில் கண் - தழை, கந்தளாய் எனப் பெயர் பெற்ற தென்று திரிகோணாசல புராணம் கூறுகின்றது.
சேல் - மீன். நீல் - நீலம், மதகு - நீர்பாயும் கதவு.
سسے 65، مسس

Page 42
24. வேந்தன் உளந்தணில் நினைக்கப் பாந்தளிடைத்துயில்
மாயன்விழித்துப் பார்தத்ே
ஏந்திலங்காபுரி நகரில் திருக்குளத்துக்கு எமை நினைத்தா இ
இறைவனென்று
காந்தள் மலர்ப் பதம் சிவப்ப கடுகென அங்கு அரிவரலும்
காலில் வீழ்ந்து பூந்திரு சேர் மணிமார்பா மதகிணடை திறப்பது நின்
புகழ்ச்சி என்றான்.
குளக்கோட்டு மன்னன் திருமாலை மனத்திலே நினைத்தமாத் திரத்தில் ஆதிசேடன்மீது அறிதுயில் கொள்ளும் பூரீநாராயணமூர்த்தி ஞானக் கண்களைத் திறந்து பார்த்துக் கீர்த்தி பொருந்திய இலங்கா புரியில் திருக்குளத்திற்கு வரும்படி மன்னவன் என்னை நினத்தா னென்று செங் காந்தள் மலர்போன்ற மிருதுவான திருவடிகள் சிவக் கும் வண்ணம் விரைவாகத் திருமால் வந்தருளினார். அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய மன்னவன், அழகிய மகாலட் சுமி அமர்ந்தருளும் மார்பையுடைய திருமாலே! திருக்குளத்தின் மதகினுடைய சத வைத் திறப்பது உங்களுடைய பெருங் கருணை யாகுமென்று வேண்டி நின்றான்.
குறிப்பு:- திருமால் காக்கும் கடவுள் ஆதலால் குளத்தில் நிறைந்துள்ள நீர் மிகுதியால் குளக்கட்டு உடைந்து போகாமல் காத்தரு ரும்படி மன்னன் வேண்டினான். திருமாலின் அருளி னால் அக்காரியம் நிறைவேறியதை, திருமால் தானே வந்துசெய்த தாகப் பாடப்பட்டுள்ளது.
பாந்தள் - பாம்பு. அரி - திருமால். திரு - இலக்குமி. நடை கதவு.
5ே. என்றருள மாலவனும் இறையவனுக்கு அஞ்சலென்றே
இலங்கைத் தீவில் மன்றல் கமழ் செஞ்சடையான் கோணலிங்கர் திருக்குளம் நீ வருந்திச் செய்தாய் நன்று கமலத்தயன் ஆதிய அமரர் அடையாத நன்மை
பெற்றாய் வன்திறல்சேர் அரசே என்று அரி விசயமுடன் மதகு
- திறந்தான் மாதோ.
குளக்கோட்டு மன்னன் வேண்டிக்கொண்ட பிரகாரம் திருமா லானவர், மன்னவனை அஞ்சவேண்டாமென்று அபயங்கூறி, இலங்
سست 66 سے ۔

கைத் தீவின் கண்ணே, வாசனை வீசுகின்ற சிவந்த சடையையுடைய கோணலிங்கப் பெருமானுக்கு நீ மிகவும் சிரமப்பட்டுத் திருக்குளம் இயற்றினாய். மிகவும் நல்ல காரியத்தை நிறைவேற்றியுள்ளாய். தாமரைமலரில் இருக்கின்ற பிரமன் முதலிய தேவர்களாலும் அடையமுடியாத நன்மைகளைப் பெற்றுள்ளாய். வலிமை யும், கீர்த்தியுமுடைய மன்னவனே! அஞ்சவேண்டாம் என்று கூறிய திரு மாலானவர் வெற்றியுடன் மதகு திறந்தருளினார்.
மன்றல் -வாசனை. கமலத்தயன்- பிரம்மா. செயம் - வெற்றி. - འ་ . . བ་" " ་ குறிப்பு:- திரு. பொ. வைத்திலிங்க தேசிகர், திரு. அ. அளகைக் கோன் என்பவர்கள், பதிப்பித்த கல்வெட்டில் 'அரி உருவ முடன் மதகு திறந்தான்" என்று காணப்படுகின்றது. அரி - தவளை எனப் பொருள் கொண்டு தவளை உருவில் சென்று திருமால் மதகு திறந்ததாக வலிந்து பொருள் கொண்டுள்ளார்கள். மூலப் பிரதியில், "அரி விசயமுடன்" என்றிருக்கின்றது. அதுவே பொருத்தமானது.
26. மாலோன் மாமதகினடை திறப்ப ஐந்து கரத்தோனை வலமாய் நித்தம் பால்போலத் திரைகொளித்துப் பழனமெங்கும்
பரவிநிற்கும் பான்மை கண்டு
ஆலாலம் உண்டவற்கும் அம்பிகைக்குமாம் எனவே
அகம் பூரித்து சேல்பாயும் திருக்குளம் நின்கிருபையினால் தினம் நடக்கும் செய்கை கண்டேன்.
திருமாலானவர் திருக்குளத்து மதகின் கதவைத் திறக்க, வேக மாகப் பாய்ந்து செல்லும் திருக்குளத்து நீரானது குளக்கட்டின் அருகேயிருந்த ஐங்கரனாகிய குளக்கட்டுப்பிள்ளையார் எழுந்தருளி யிருந்த கோவிலை வலமாகச் சுற்றிப் பாய்ந்து பரவியது. பரல் போலத் திரைகளை வீசி வயல்களெங்கும் பரவிநிற்கின்ற நீர்வளத் தைக்கண்டு, இத்திருக்குளமானது ஆலகால விஷத்தையுண்டு ஆன் மாக்களுக்கு அருள் புரிந்த கோணேசப் பெருமானுக்கும், அம்பிகை யாகிய மாதுமையாளுக்கும் சமர்ப்பணமாகுக என்று மனம்பூரிப் படைந்தான் குளக்கோட்டு மன்னன். மீன்கள் பாய்கின்ற நீர் நிறைந்த திருக்குளமானது இறைவா உனது கருணையினால் தின மும் பயன்படுவதாகிய சிறப்பைக் கண்டேன் என்றான் மன்னன்,
பழனம் - வயல். சேல் - மீன். . .
- 67 -

Page 43
27. கண்டருளும் மாலவனே. திருக்குளம் நின் காவலெனக்
j5rhG3uunt 6ör GF nr 6ãivenurrsår எண்தலங்கள் புகழ்ந்தருளும் இபமுகனும் எழில்முனியும்
இறைவரேழும் மண்டுதிறல் மங்கலரும் புத்தியரும் வதனரொடு வீரனையன் அண்டர் புகழ் வயிரவரும் இலங்கை சந்தி காவலனும்
அண்ணமாரும்,
திருக்குளத்தின் சிறப்புக் கண்ட குளக்கோட்டு மன்னன் மகா விஷ்ணு மூர்த்தியே! இந்தத் திருக்குளமானது உங்கள் திருவருளால் என்றென்றும் காப்பாற்றப்பட்டு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இதனைக் கேட்ட நீல வண்ணனாகிய திருமால் சொல் கின்றார். அட்ட வீரட்டங்களாகப் போற்றப்படும் தலங்களாலும், எட்டுத்திக்குகளிலுமுள்ளோராலும் புகழ்ந்து போற்றப்படும் பிள்ளை யாரும், காளமாமுனியும், அண்ணமார், வதனமார், ஐயனார், சந்திகாவலர்3ளும், மங்கலரும், பூதங்களும் வயிரவரும், இந்தத் திருக்குளக்கட்டில் காவலாயிருப்பார்கள்.
கரியோன் - திருமால். இபமுகன் - யானைமுகமுடைய பிள்ளை JimTrio.
28. எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச்சுற்றாம்
மரத்தை இனதாவெட்டி தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழமுன்னம்
தரணி மீதில் ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு
அருளையுற்ற வீரன் அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலா சோதயன் படையும்
அரசர்மாரும்.
ாட்டுத் திக்குகளிலும் மண்ணை வெட்டி ஏழரைச்சுற்றுள்ள மராமரத்தை வெட்டிக் காலினால் எற்றித் தட்டி வீழ்த்துவதற்கு மூன்னர் இப்பூமியில் ஒரு திருக்குளத்தைக் கட்டி அதில் நீரையும் நிறைவாகப் பெற்ற வீரனே! எட்டுத்திக்குகளிலுமுள்ள எல்லோரா லும் புகழ்ந்து பேசப்படும் நீலாசோதையன் படைகளும், அரசர் களும் இக்குளக்கட்டில் காவலாயிருப்பார்கள்.
கறிப்பு:- ஏழரைச்சுற்றுள்ள பாரிய மரத்தை வெட்டிக் காலால் எற்றி வீழ்த்தியதுபோல மிகப்பெரிய திருக்குளத்தை விரைவாகவும், திறமையாகவும் செய்து நிறைவேற்றிய நீலாசோதையனுடைய
- 68 -

பேராற்றலை விஷ்ணுமூர்த்தி பாராட்டியமை இப்பாடலிற் கூறப்பட் டிருக்கின்றது. நீலாசோதையனும் படைகளும் ஆடகசவுந்தரியின் வர லாற்றிற் பூதங்கள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.
29. மாருதநீர் முன்னோடி மாபூதர் பப்பரரும் மற்றுளோரும்
நீர்தாங்குந் திருக்குளத்துக் கட்டுவெளி நில்லுமென
நிறுத்தி வைத்து பார்தாங்கு பத்தினியைக் கன்னியரைக் காளிதன்னைப்
பரிவினோடு கார்தாங்கு திருக்குளக்கட்டினை அகலாதிருத்திரென்றான் கமலக் கண்ணன்.
மருதநிலத்தைச் செழிக்கச் செய்யும் திருக்குளத்திலுள்ள நீர் நிலைக்கு முன்னாகப் பஞ்சபூதங்கள் பற்பலரும் மறறுமுள்ளேயரும் நீரைத்தாங்கிக்கொண்டிருக்கும் திருக்குளக்கட்டிலே காவலாக நிற் பீர்களாக என்று நிறுத்தி வைத்து, பூமியைத் தனது சக்தியால் பரிபாலிக்கும் பத்தினித் தெய்வங்களையும், க ன் னி மா ரையும், காளியையும், மழைநீர் தங்கி நிற்கும் திருக்குளக்கட்டினைக் காவல் செய்து அகலாமல் அவ்விடத்தே நிற்கும்படி கமலக்கண்ணனாகிய திருமால் பரிவோடு கூறியருளினான்.
மருதம் - மாருதம் எனச் செய்யுள் நயங்கருதி முதல்நீண்டது. பப்பரர் - பற்பலர் என்பதன் திரிபுப்போலி, கார் - மழை.
30. நன்னயஞ்சேர் பாகிலையும் பாலடிசில் திருவிளக்கு நல்லதும் சொன்னபடியே தருவார் குறைந்தாலும் திருவுளத்தில் (ằớm tỉ 6ì! (ằ6u6ỗăIt-frt6 மன்னுபச்சைப் பட்டு வயல் மழையுதவும் சிவப்பு மகா வெயிலே காட்டும் و : إف.
இன்னலின்றி இரும் இருபத்தெண்ணுாழி சென்றபின்
யாம் வருவோமிங்கன்.
காவற் தெய்வங்களைத் திருக்குளக்கட்டிலே நிறுத்திவைத்த திருமால் அவர்களை நோக்கி, ஒரு வருடம் பாற்பொங்கலும், ஒரு வருடம் பழம், பாக்கு, வெற்றிலை முதலியவைகளால் மடையு மிட்டுத் திருவிளக்கும், நல்ல தூபமுமிட்டு மாறி மாறி வருடாவரு டம் பூசைப்பலி தருவார்கள். இப்பூசைக்குச் சொன்னபடி திரவி யங்கள் குறைந்தாலும் திருவுளத்தால் ஏற்றுக்கொண்டு காவல் செய் யுங்கள். சோர்வடையவேண்டாம், பச்சைப்பட்டுக் கட்டிப் பூசை மடையிட்டால் வயலில் நல்ல மழைபெய்யும். சிவப்புப் பட்டுக்கட்
ഞ 69 -

Page 44
டிப் பூசைசெய்தால் மிகுந்த வெயிலெறிக்கும். துன்பமின்றிச் சோர் வடையாமல் திருக்குளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இரு பத்தெண்ணுாழி சென்ற பின்னர் யாம் இங்கு வந்து உங்கள் குறை களைத் தீர்ப்போம் என்று கூறினார் திருமால்.
. . . பாகிலை - வெற்றிலை. பாலடிசில் - பாற்பொங்கல்.
31. என்றவனுக்கு அரியுரைப்ப இறையவன் அங்கு அரியடியை
இறைஞ்சியேத்த மன்றன்மலர் முகமலர்ந்து முகமனும் அங்கு இறைக்கருளி - • மாலுமே க அன்றிறையும் மங்கலர்க்கு நூற்றுடனே அறுபது மாமேதி கட்டித்
துன்று திருப் பாலடிசில் திருவிளக்குப் பாகிலையும்
துலங்கச் செய்தான்.
திருமாலானவர் திருக்குளக்கட்டில் காவல் செய்யும் தெய்வங் களுக்குச் செய்யவேண்டிய வேள்வி, மடை முதலிய பூசைகள்பற்றிக் குளக்கோட்டு மன்னனுக்குக் கூறியருளினார். மன்னவனும் அவ் விடத்திலே திருமாலின் திருவடிகளைப் போற்றி வணங்கினான். திருமால் மலர்ந்தமுகத்துடன் மன்னவனுக்கு ஆசிகூறிச் சென்ற ருளினார். திருமால் கூறியபடி குளக்கோட்டு மன்னன் நூற்றியறு பது எருமைகள் கட்டி அவற்றிலிருந்துத் பாலெடுத்துத்தேவதைகளுக் குப் பாற்பொங்கலும், பழம், பாக்கு, வெற்றிலை மடையும் திரு விளக்கும் வைத்து வருடாவருடம் வேள்விகளைச் சிறப்பாகச் செய்து வ்ந்தான். - . . . .
குறிப்பு: திருமால்கூறியபடி குளக்கட்டிற் காவல்புரிகின்ற தேவதை கிளுக்குப் பாற்பொங்கல்,மடைமுதலிய வேள்விகளைக் குளக்கோட்டு மன்னனால் திட்டம்ப்ண்ணப்பட்ட ஒரு பத்ததியின்படி தற்காலத் திலுள்ளவர்களும் செய்து வருகின்றார்கள். மழையோ, வெயிலோ தேவைப்படும் காலங்களிற் பட்டு நேர்கடன் செய்கின்ற வழக்கம் இப்போதும் இருந்து வருகின்றது. தம்பலகாமம், கொட்டியாபுரம் கிட்டுக்குள்ப்பற்றில் உள்ளவர்கள் கோணேஸ்வரத்திற்கு வந்து பட். டுக்கட்டி நேர்கடன் செய்து செல்வார்கள். முற்காலத்தில் அனு ப்வமுள்ள முதியவர்கள் முறைப்படி நேர்த்திவைத்து வேள்விசெய்து: எண்ணியபடி எண்ணிய பலனைப் பெற்று வந்தார்கள். தெய்வ நீம்பிக்கையற்ற சிலர் பிற்காலத்தில் இதனைக் கைவிட்டதால் அனர்த்தங்களும் நேர்ந்துள்ளன. தெய்வ அவிசுவாசத்தால் இயற்கை யின் சீற்றத்துக்குள்ளாகித் திருக்குளமாகிய கந்தளாய்க்குளம்
“ سے ۔79 -۔

1985ஆம் ஆண்டு உடைப்பெடுத்து ஊருமழிந்து உயிர்களும் பொருள் களும் அழிந்தன. அங்கிருந்த கட்டளைப் பிள்ளையார் கோவிலும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயிற்று. ஆனால் பிள்ளையாருடைய திருவுருவம் சிதைவேதுமின்றிக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
32. செய்யு நிதம் விளைவதற்குத் திருக்குளத்தின்
நீர்தாங்கி சிறக்கக் கட்டி ஐயமறக் காவனிற்கும் அனைவருக்கும்
மனமகிழ அன்பாய் என்றும் துய்யவொரு வருஷ மடை ஒரு வருஷம்
பாலடிசில் துலங்கச் செய்தே வையமது உள்ளளவும் கோணலிங்கர் -
கிருபையினால் வழங்கச் செய்தான்.
வயல்களெல்லாம் எக்காலத்திலும் நன்றாக விளைவதற்குத் திருக்குளத்தின் நீர்த்தாங்கியாகிய மதகுக் கதவைச் சிறப்பாகக் கட்டி குளக்கட்டைக் காவல்செய்கின்ற அனைத்துத் தெய்வங்க ளுக்கும் சந்தேகமின்றி மனமகிழ்ச்சியோடு எக்காலத்திலும் ஒரு வருஷம் மடையும், ஒருவருஷம் பாற்பொங்கல் வேள்வியும் சிறப்பாகச் செய்து உலகமுள்ளளவும் கோணலிங்கப் பெருமானு டைய கருணையினாலே இக்காரியம் இடையீடில்லாமல் நிகழ்ந்து வரச் செய்தான் குளக்கோட்டு மன்னன். VK.
செய் - வயல். வையம் - உலகம்.
33. தானிரண்டாயிரத்தெழுநூறு அவன விதைப்புத்
い தறையைத் தான்செய்வித்து தேனிருக்கு மலர்க்காடு வெகுவாகத் ܖ
திருத்துமெனத் திட்டம் பண்ணிக் கூனிருக்கு மதிநுதலாள் பிடிநடையம்பிகை
சரண் அங்கு உளத்துள் வைத்து மானிருக்கும் கரத்தானை வலமாய் வந்து
அடிபணிந்தான் மன்னர் மன்னன்.
இரண்டாயிரத்து எழுநூறு அவணம் நெல்லை விதைப்ப தற்குத் தேவையான விளைநிலத்தை உண்டாக்குவதற்காகத் தேன்சொரியும் மலர்கள் நிறைந்த காடுகளை வெட்டித்திருத் தும்படி திட்டமிட்டுச் செய்வித்த குளக்கோட்டு மன்னன் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையுடையவளும் பெண்யானைபோன்ற
- 71 -

Page 45
நடையை உடையவளுமாகிய மாதுமையம்பாளுடைய பாதங்களை மனத்துள்வைத்து மான்மறியைத் திருக்கரத்திலேந்திய கோணலிங் கரை வலம்வந்து திருவடிகளைத் தொழுது வணங்கினான்.
- - - - . . . . . கூனிருக்குமதி - வளைந்த சந்திரன் (பிறைச்சந்திரன்)
34. மன்னவனும் அனைவரையும் வருகவென
நாற்கால் மண்டபத்திற் கூட்டி
நன்னயஞ்சேர் அவர் எவர்க்கு நன்முகமன்
எடுத்துரைத்து நாதன் கோணை
மன்னவன்தன் அருளாலே திருக்குளமும்
வயல்வெளி செய்ததுவும் சொல்ல இன்னலின்றி அரகர சங்கர சிவ என்று இறையடியை
இறைஞ்சினாரால்.
திருக்கோணேஸ்வரரை வணங்கிய குளக்கோட்டு மன்னன் அங் குள்ள நாற்கால் மண்டபத்துக்கு பாசுபதர் முதலாகத் தொழும் பாளர்கள் அனைவரையும் வரும்படி அழைத்துச் சிறப்புமிக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரியமுறைப்படி மரியாதையோடு முகமன்கூறி, ஒப்பற்ற தலைவராகிய கோணேசப் பெருமானுடைய திருவருளினாலே திருக்குளமும், வயல்வெளிகளையும் உண்டாக்கி ய்தைக் கூறினான். இதனைக்கேட்ட அவர்கள் அனைவரும் மகிழ்ந்து அரகரா, சங்கரா, சிவா என்று துதித்து இறைவனுடைய திருவடிக்ளை வணங்கினார்கள். Y− .. '−
35. இறைஞ்சுகின்ற அனைவரையும் இருகையால்
உறத் தழுவி எங்கோன் சொல்லும் மறஞ்சிறிதும் செய்யாமல் அறம் பெரிது ヘ . . . . . . புரிவதற்கு மனத்தினோங்கும் கறங்குதிரைக் கடல்புடைசூழ் உலகமெலாந் ' .' தனிபுரந்தும் காண்பதென்னோ ܃ ܃ ܃ ܃ ܐܶ܂ -.: ܗܝܼ." . . . . " `
திறங்கொளுeர்க் கோணலிங்கர் திருப்பணியும் ே
. . 。、 பூசைகளும் செய்யவேண்டும்.
- திருக்குளமும், வயல்வெளிகளும் உண்டுபண்ணப்பட்ட மாபெரும் கைங்கரியத்தை நினைத்து மகிழ்ந்து, இறைவனை வணங்கிய அனைவரையும் இரண்டு கைகளாலும் தழுவிய எமது அரசனாகிய குளக்கோட்டு மன்னன் சொல்கின்றான். சிறிதளவேனும் அதர்மத் தைச் செய்யாமல் பெரிதும் அறம் செய்வதற்கே மனத்தில் எண்ணம் கொண்டுள்ளேன். சப்திக்கின்ற அலைகளையுடைய கடலால் சூழப் பட்ட உலகமெல்லாவற்றையும் கட்டியாண்டாலும் காணும் பயன்
a- 72 -

தானென்ன? திருவருட் சிறப்புமிக்க கோணலிங்கப் பெருமானு டைய திருப்பணிகளும், பூசைகளும் சீருடனும் சிறப்புடனும் செய்ய வேண்டுமென்பதே எனது விருப்பம். அதனை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதனைக் கூறுகின்றேன் கேளுங்கள் என்றான்.
கறங்குதல் - சப்தித்தல்.
36. செய்ய திருவாலயத்தில் பதினோராயிரம் விளக்குச்
A சிறக்க வையும் மையனையகண்டர் திருவுட்பணிக்கு ஆணெய்
விளக்காயிரங்கள் வையும் செய்ய சந்தம் புனுகு பன்னீர்தணிற் கரைத்துத் m ' ' தெளித்து எங்கும் சிறப்புச் செய்யும்
துய்ய கந்தப் புகைக்குடங்கள் இடையிடை
வாசனை கமழத் துலங்க வையும்"
புனித சிவத்தலமாகிய கோணேஸ்வரத்திலுள்ள கோவில்களில் பதினோராயிரம் விளக்குகளில் தேங்காயெண்ணெய், இலுப் பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், நெய் முதலிய பலவகை எண் ணெய்கள் விட்டு ஒளியேற்றி வையுங்கள். நஞ்சுண்டதனால் இருண்ட நிறம்போன்ற கண்டத்தையுடையவராகிய கோணேசப் பெருமானுடைய கோயிலின் உட்பூசைப்பணிகளுக்கு பசுநெய் விடப் பட்டு ஆயிரம் விளக்குகள் ஏற்றி வையுங்கள். சிறந்த சந்தனத் தைப் புனுகுடன் சேர்த்துப் பன்னீரில் கரைத்து ஆலயத்தில் தெளித்து நறுமணம் கமழச் செய்யுங்கள். தூய்மையான வாசனை உண்டாகும்படி தூபத்திரவியங்களிட்ட (சாம்பிராணி, குங்குலியம் என்பன) புகைக்குடங்களை. இடை இடையே வைத்து ஆலயத்திற்கு வாசனையூட்டுங்கள். . . . . . . . . . . . . .
மையனைய - கருமை நிறம் போன்ற ஆன்நெய் - பசுநெய், சந்தம் - சந்தனம். கந்தம் - வாசனை.
37. ஐங்கரற்கு வெள்ளியினால் அறுதளிசை அறுமுகவற்கு
い と " . . . . . . . . . . '' . . இரட்டி பொன்னால்
தங்கம்தால் அரற்கு அறுபதுடன் நாலுதளிசை
மற்றைச் சார்தேவர்க்குத் துங்கமிகும் ஐம்பொன்னால் நூற்றிருபத்தெண்
. தளிசை சொன்னோமின்னும் இங்கதிக பிடியமுதுக்கு இசைந்த கிண்ணம் . . .
முன்னூறும் இயற்றிவையும்.
-ܝܢ ܕܦܶ7 ܚܝ

Page 46
ஐந்து கரங்களையுடைய பிள்ளையாருக்கு வெள்ளியினால் செய் யப்பட்ட ஆறு தளிசைகளிலும், ஆறுமுகங்களையுடைய முருகனுக் குப் பொன்னாற் செய்யப்பட்ட பன்னிரண்டு தளிசைகளிலும், இறைவனாகிய கோணேசப் பெருமானுக்குத் தங்கத்தினாற் செய் யப்பட்ட அறுபத்தினாலு தளிசைகளிலும், ஏனைய பரிவாரமூர்த்தி களுக்குச் சுத்தமான ஐம்பொன்னாற் செய்யப்பட்ட நூற்றியிருபத் தெட்டுத் தளிசைகளிலும், நைவேத்தியம் (அமுது) வைக்கப்பட வேண்டும். அவற்றுடன் மேலதிகமாக முன்னூறு கிண்ணங்களில் பிடியமுதும் தயாரித்து நித்திய நைமித்திய பூசைகளுக்கு நிவேதிக்க வேண்டும்.
38. மையனைய கண்டருக்குத் துய்ய சம்பா அரிசிவகை
κ. * வகுத்தெடுத்தே
ஐயமற அமுது செய்தே அலங்காரத் தளிசை
அழகா வைத்து
துய்யதிருக் கறியமுது சுரபியின் பாற்குழம்பினொடு
துகள் தீர் தூய வெய்ய திருப் பணிகாரம் பலபல வாசனை
கமழ விளங்க வையே.
கருமைநிறத்தை ஒத்த கண்டத்தையுடைய இறைவனாகிய கோணேசப் பெருமானுக்குச் சுத்தமான சம்பாஅரிசி வகைகளைத் தெரிந்தெடுத்து அமுதுசமைத்து அலங்காரத் தளிசைகளில் அழ காக வைத்து அத்துடன் பரிசுத்தமான கறியமுதும், பசுவின் பாலிலே தயாரித்த பாற்குழம்பும் பலபல வாசனைகமழும் குற்ற மற்ற தூய பலகார வகைகளும் விளங்கும்படியாகப் பூசைக்கு நைவேத்தியங்களை வையுங்கள்.
" சுரபி - பசு
வேறு 39. வையமகிழ் கற்கண்டு சீனி வெல்லம் வடிவாஞ்சர்க்கரை
கிழங்குவதைத் தேன் நெல்லி துய்யகனி வருக்கமெல்லாம் அங்கண் வைத்துச்
சுத்தமுள்ள புத்துருக்கு நெய்யுமூற்றி ஐயமற முன்வைத்தே இளநீர்வைத்து ஆங்கு அழகான
பத்திரமும் தூபம் வைத்து மெய்ய திருப்பூசை உமக்காகுமென்று விளங்குமகா
மண்டபத்தின் மீண்டும் செய்யும்.
است . به 7 ست

உலகத்தவர்கள் மகிழ்ந்து விரும்பும் கற்கண்டு, சீனி, வெல் லம், அழகான சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, வதையிற் பிழிந்தெ டுத்த தேன், நெல்லி முதலிய தூய பழவர்க்கங்கள் என்பனவற்றை நைவேத்தியமாக வைத்து சுத்தமான உருக்கிய பசுநெய்யைத் திரு வமு தில் ஊற்றி ஒரு குறையுமின்றி வைத்து அவற்றுடன் இள நீரும், தூப தீபங்களும் பத்திரபுஷ்பங்களும் வைத்து என்றும் அழி வில்லாத மெய்ப்பொருளே! உனது திருப்பூசைக்கு இவைகளை நிவேதனம் செய்கின்றோமென மகாமண்டபத்துள் வையுங்கள்.
40. செய்யமகா மண்டபத்தின் நாப்பண் அங்ங்ண் சிறந்த
× ... ஒருமுழ அகல நீளமாகத் துய்யசம்பா அடிசிலது சொரிந்து தட்டித் துகளில்
ஒன்பான் மூன்றுபிடி சுற்றில் வைத்து வெய்ய திருக்கறியமுது பணிகாரம் பால் வேண்டிய
சர்க்கரை கனிதேன் வெகுவாய் நெய்யும் பெய்து உவந்து திரிநிறுத்தி மகிழ்வாய் நீயும்
பெட்புடனே பாகிலை தூபம் பெருகச்செய்யே.
அர்த்தமண்டபத்தை அடுத்துள்ளதாகிய மண்டபத்தில் இறைவனுக்கு முன்னே நிவேதித்த நைவேத்தியங்களோடு மீண்டும் மகா மண்டபத்தின் நடுவிலே ஒருமுழ அகலம் ஒருமுழ நீளத்தில் சுத்தமான சம்பா அரிசிச் சாதத்தை சொரிந்து நாற்புறமும் தட்டி அதனைச்சுற்றி இருபத்தேழு பிடிசாதம் வைத்துக் கறியமுதும், பலகாரங்களும், பாலும், சர்க்கரையும், பழவகைகளும், தேனும், சாதத்தில் நிறைய நெய்யும் விட்டு அதில் திரியும் நிறுத்தி பய பக்தியோடும், மகிழ்ச்சியோடும் வெற்றிலை பாக்குப் பழம் வைத்து தூபமிட்டுத் தீபமேற்றி வையுங்கள். & .
நாப்பண் - நடுவில். அடிசில் - சாதம். ஒன்பான்மூன்று - இருபத் தேழு
வேறு
41. எப்போதும் முப்போதும் இப்படித் தென்கோணமலை
S S S S S S S S இறைவன் பூசை தப்பாமல் நீவிர்செய் தந்திர மந்திரம் கிரியை தானாசாரம் இப்படிச்செய் இது தவறின் இடரினுலைந்து எளியவரை
இறைஞ்சச் செய்யும் • יה மெய்ப்புடன் இவ்வெல்லையுள்ளோர் செய்தொழும்பு
தவறின் இடர்மூழ்கி வீழ்வார்.
ܡܚ= 75 - ܚܝܝ

Page 47
தெட்சணகயிலாயமாகிய கோணமலை இறைவனாம் கோணேசப் பெருமானுக்குச் செய்யப்படும் மூன்றுவேளைப் பூசைகளையும் எந் தக் காலத்திலும், எப்போதும் இப்படியே நைவேத்தியப் பிரசாதங் கள் வைத்துச் செய்து வருவீர்களாக. தப்பாமல் நீங்கள் செய் கின்ற தந்திர மந்திரக் கிரியைகளில் ஆசாரக்குறைவு ஏற்படாமல் செய்துவாருங்கள். இப்படிச்செய்வதில் தவறு ஏற்படுமானால் துன்பத் திலே உலைந்து தாழ்ந்தகுணமுடைய எளியவர்களுக்குத் துதிகூறி இர ந்துநிற்கச்செய்யும். கோணேஸ்வரத்துக்குரிய எல்லையுள் வாழ்பவர் கள் செய்கின்ற தொழும்புகளிலே தவறு செய்வார்களானால் சத் தியமாகத் துன்பத்தில் மூழ்கி வீழ்ச்சியடைவார்கள்.
முப்போது - மூன்றுவேளை. மெய்ப்பு - சத்தியம்,
வேறு
42 வாரிவளம் சூழிலங்கை வேந்தராரும் மகாகோணநாதருக்கு வளவர் வேந்தன் பாரிலங்கு பூசைவிதிக்கு ஈந்த சொர்ணம் பலவரவும்
எடுத்தழிவு பண்ணும்பேர்கள் கூரியதோர் குட்டமுதல் வியாதிக்காளாய்க்
கூட்டுபெருநாட்டவர்கள் ஈட்டும் செம்பொன் நேரிலிகள் கொள்ளை கொண்டு சூறையாடி
நீசருமிப்பதியாள்வர் நியமந்தானே.
கடல்படு திரவியங்கள் நிறைந்த சமுத்திரத்தாற் குழப்பட்ட இலங்கை மன்னர்கள் யாரேனும் சோழ வம்சத்தவராகிய குளக் கோட்டு மன்னன் கோணேசப் பெருமானுடைய பூசைகள் விதி முறைப்படி நடத்துவதற்காக வழங்கிய பொன்களையும் (பணம்) நெல், பால், தயிர், நெய் முதலிய பல்வேறு திரவியங்களையும் எடுத்துத் தாமனுபவித்து அழிவு செய்வார்களானால் கொடிய குட்டநோய் முதலிய நோய்களுக்காளாவார்கள். இந்த நாட்டில் அவர்கள் தேடிய பெரிய செல்வமெல்லாம் நேர்மையற்றவர்களா அலும் கள்வராலும் குறையாடப்படும். கயவர்களும் இப்பதியை ஆள்வது நிச்சயம்.
வாரி - சமுத்திரம், சொர்ணம் - பொன், நேரிலிகள் - நேர்மை பற்றவர்கள். நீசர் - கயவர்.
குறிப்பு ~ இலங்கை வேந்தர் ஆரேனும் கோணேசர் கோவிலுக் குரிய சிவச்சொத்தை அபகரித்து அனுபவிப்பார்களானாற் கொடிய நோய்களுக்காளாகித் தேடிய செல்வத்தையும் இழப்பரென்று கூறப்
سست 746 عیس۔

'படுவதால் கோவிலை 'பரிபாலிக்க குளக்கோட்டு மன்னன் ஏற்படுத் திய வன்னிமைகளும், பாசுபதர்களும், தொழும்பாளர்களும், இத்த கைய துன்பத்துக்காளாவர் என்பதும், பிற்காலத்தில் ஆலயத்தின் திர வியங்களைக் கொள்ளை கொள்ளும் மிலேச்சர்களும், நிர்வாகிகளும்
இந்தச் சாபத்துக்காளாவர் என்பதும் பெறப்படுகின்றது.
43. தானதிக அமைச்சருடன் அரசர் தாமும்
தக்கபிரதானியொடு தருமம் செய்வோர் ஆனவிதி முறைதவறா மறையோர் தாமும் அகலாத
கற்புடைய அரிவைமாரும்
ஈனரொடு மூடர் மொழி தன்னைக்கேட்டே இவர்கள் புரி
நெறிமுறையை இகழுமன்னாள் மானபரன் ஆலயத்துப் பூசைதானும் மகிழ்ச்சிமங்க
இகழ்ச்சியுமங்கு எழும்புந்தானே.
அமைச்சர்களும், அரசர்களும், பிரதானிகளும் தருமங்கள் செய்யும் அறவோரும், வைதீக நெறிமுறை தவறாத அந்தணர் களும், கற்புநெறி வழுவாத பெண்களும், தத்தமது ஆசாரங்களுக் குரிய நெறியில் நின்று கோணேசர் கோவிலில் குளக்கோட்டு மன் னன் திட்டம்பண்ணிய பிரகாரம் பூசை முதலியன நடத்தி வரும் இவர்கள், மூடர்களும், ஈனர்களும் அறியாமையினாற் கூறும் வார்த்தைகளைக் கேட்டு அதனை நம்பி முன்னைய நெறிமுறை களை இகழுகின்ற காலத்திற் பராபரனாகிய கோணேசப் பெருமா னுடைய கோவிற் பூசைகளில் தெய்வீக சம்பத்தாகிய மகிழ்ச்சி குன்றி அங்கு இகழ்ச்சியும் உண்டாகும். : - →
44. மாறாத புனல்பாயும் திருக்குளமும் வயல்வெளியும்
t வருந்திச் செய்தே வீறாக என்மரபோற்கு ஈயாமல் கோணமலை
விமலர்க்கு ஈந்தேன் பேறான பெரியோரே இதற் கழிவு நினைத்தவர்கள்
பெட்பு நீங்கி நீறாகப்போவர் இது நிச்சயம் நிச்சயம் கோணை
குறைவுபடாமல் நீர்பாய்கின்ற திருக்குளமும், விளைநிலங் களாகிய வயல்வெளிகளையும் மிகவும் சிரமப்பட்டுச் செய்து அவை களை அகங்காரங்கொண்டு என்குலத்தில் வருகின்ற பிற்சந்ததி யினர்க்கு உரிமையாக்காமல் அடக்கத்தோடும் பயபக்தியோடும் திருகோணமலை நாயகராகிய கோணேசப் பெருமானுக்கு அர்ப்

Page 48
பணித்துவிட்டேன் சகல செல்வங்களையுமுடைய பெரியோர்களே! இந்தத் திருக்குளத்துக்கு அழிவையும், வயல்வெளிகளைத் தாங்களே சுவீகரித்துக்கொள்ளும் பேராசையினால் கோணேஸ்வரத்துக்குச் சேரவேண்டிய விளைவுகளுக்கு அழிவையும் செய்ய நினைப்பவர்கள் தங்களது பெருமைகளெல்லாம் இழந்து சாம்பராகப்போவது நிச் சயம்; நிச்சயம். இது கோணமலையிற் கோயில்கொண்டுள்ள நிர் மலராகிய கோணேசப் பெருமானுடைய ஆணையாகும்.
புனல் - நீர். வீறாக - அகங்காரமாக. பேறு ஈ செல்வம். பெட்பு - பெருமை. நீறு - சாம்பல்.
45. ஆணையிது தொழும்புசெய்வோர் அவரவருக்கமைத்த
பணி அவரெஞ்ஞான்றும் கோணமலை நாதர் பணி செய்வாரேற் குறைய கன்று
W குணமாய் வாழ்வார் நாணமுற்றுச் சொன்னமெத்திக் கூலியரை ஏவியதை
நடத்துவாரேல் ஆணையினால் ஆக்கமும் சந்ததியுமற்று ஆங்கு அல்ல
லுற்றே அலைவரன்றே.
கோணலிங்கப் பெருமானுடைய ஆணையிதுவென்று குளக் கோட்டு மன்னன் வாயிலாக மீண்டும் கூறப்படும் ஆணையிது வாகும். அதாவது கோணேசர் கோவிலுக்குத் தொழும்புகள் செய் பவர்கள் அவரவர்களுக்கு நியமம் பண்ணப்பட்ட தொழும்புகளை அவரவர்கள் கோணலிங்கப் பெருமானுக்குச் செய்துவருவார்களா னால் குறைகளொன்றுமின்றி நிறைவாக வாழ்வார்கள். அத் தொழும்புகளைச் செய்வது தங்களது கெளரவத்துக்குக் குறை வென்று நினைத்து நாணப்பட்டாலும் அல்லது தங்களுடைய செல்வ மிகுதியினாலே செருக்கடைந்து கூலிக்கு ஆட்களை அமர்த்திச் செய்வித்தாலும் கோணலிங்கருடைய சாபத்தினால் செல்வத்தையும் இழந்து சந்ததியுமில்லாமல் துன்பப்பட்டு அலை வார்கள்.
ஆணை - சாபம். சொன்னம், சொர்ணம் என்பதன் திரிபுச் சொல் - பொன். ஆக்கம் - செல்வம்.
46. அன்ன அரன் பூசைவிதி அபிஷேகம் விழாமுதல்
அழகாகச் செய்தால் மின்னு நிறை விளக்கேற்றிக் கிராமதேவதை பூசை
விளங்கச் செய்தால்
سه 78 سست .

இன்னலின்றி மாக்களெல்லாம் மிகுநிதி சந்ததிகளுடன்
இனிது வாழ்வார்
சொன்ன இந்த முறை தவறில் விளைவழிந்து
துன்பமுற்றுச் சோருமாக்கள்.
தொழும்புகள் திட்டம்பண்ணப்பட்ட பிரகாரம் இறைவனு டைய பூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள் முதலியவற்றை ஆகம விதிப்படி சிறப்பாகச் செய்தால், முன்கூறியபடி சகல அலங்கார விளக்குகளும் உரிய எண்ணெய், நெய் வகைகளிட்டு ஏற்றப்பட்டுக் கிராமதேவதை பூசைகளையும் (திக்குப்பாலகர் பூசை, திருக் குளக்கட்டுக் காவற்தேவதைகள் பூசை) விளங்கும்படியாகச் செய் தால் மக்களெல்லாரும் துன்பமின்றிப் பெருஞ்செல்வத்துடனும் சந்ததிகளுடனும் இன்பமாக வாழ்வார்கள். குளக்கோட்டு மன்னன் கூறிய முறைப்படி செய்யாமல் தவறுசெய்தால் விளைவு குன்றித் துன்பப்பட்டு மக்கள் சோர்வடைவார்கள்.
அன்ன - அந்தப்பிரகாரம், அரன் - இறைவன். இருநிதி - பெருஞ் செல்வம். மின்னுநிறைவிளக்கு - ஒளிவீசுகின்ற தீபம்.
47. மாதயவாம் வன்னிமையே தானம்
வரிப்பத்தவரே மற்றுளோரே
ஆதரவாய் ஆலயமும் மணிமதிலும். கோபுரமும்
அழகுவாய்ந்த
சேதமிலாப் பூங்காவும் தினநடத்திக்
கொள்ளுமெனத் திட்டஞ்செய்து
காதலுடன் திரிகயிலைப் பெருமைதனைக்
s கண்டு இதயம் கருணைபூத்தான்.
இரக்கம் மிகவுடைய வன்னிமையே! தானத்தாரே! வரிப்பத் தாரே! மற்றுமுள்ள பெரியோர்களே! கோணேசப்பெருமானுடைய திருவருளின் ஆதரவால் திருப்பணிகள் செய்யப்பெற்ற ஆலயத்தை யும், அழகிய மதில்களையும், திருக்கோபுரங்களையும், அழகு நிரம்பிய பழுதில்லாத நந்தவனத்தையும் தினமும் கவனமாகப் பராமரித்து வருவீர்களாக என்று திட்டம்பண்ணிப் பேரன்புடன் திரிகயிலை எனப் போற்றப்படும் கோணேஸ்வரத்தின் சிறப்புக்களை யும் பெருமைகளையும் கண்குளிரக் கண்டு இதயத்திலே கருணை பொங்க வாழ்ந்தான் குளக்கோட்டு மன்னன். V,
حس. ؟7 سم

Page 49
வ்ேறு 48. தானதிக பாவநாசந்தன்னில் மூழ்கிச் . ܫ
சரீரசுத்திபண்ணித் தர்ப்பணமும் செய்தே ஆனதிரு மணிநீறு தரித்துக்கொண்டே
அதிகபட்டாடையுடுத்து ஆங்கு அலர்பூ-ஏந்தி மானபரன் ஆலயத்தை வலமாய்வந்து வருபாதம்,
கழுவியுட்போய் வணங்கக்கண்டார் போனவரசன் திரும்பிவாராத் தன்மை .
போய்ப்பாரும் பாசுபதர் புகுந்தேயென்றார். குளக்கோட்டு மன்னனானவன் சிறப்புமிக்க பாவநாசத்தீர்த் தத்திலே நீராடிச் சரீரசுத்திபண்ணித் தேவப் பிரீதிசெய்து தெய்வீக அழகு விளங்கும் திருநீறணிந்து மேலான பட்டுவஸ்திரம் தரித்து நறுமணங்கமழும் அன்றலர்ந்த பூக்களைக் கைகளிலேந்திப் பராபர னாகிய கோணேசப் பெருமானுடைய கோவிலை 'வலம்வந்து கோவில் வாயிலிலே தனது பாதங்களைக் கழுவிச் சுத்தஞ்செய்து கோபுரவாயிலைக் கடந்து உள்ளேபோய்க் கோணலிங்கப்பெரு மானை வணங்கினான். வணங்குவதற்கு உள்ளேபோன மன்னவன் திரும்பிவராத தன்மையைக் கண்டவர்கள், உள்ளேபோய்ப் பார்த்து வாருங்களென்று பாசுபதர்களை வேண்டினார்கள். ...
தர்ப்பணம் - மந்திரத்துடன் தேவராதியோருக்கு நீரை இறைத்தல்.
49. என்றுசொலப் பாசுபதர் எங்கும்பார்த்து ஆங்கு
இரத்தினமணிவாயிலினின் றெட்டிப்பார்த்தார் பொன் தயங்கு பதத்தருகோர் சிவக்கொழுந்து
. புஷ்ப்பித்தே அலர்ந்துநிற்கும் புதுமைகண்டு மன்றன்மலரோன் முதலா அமரர்க்கெட்டா
வண்பதவி கிடைத்ததுவோ அரசர்கோவே
என்றவர்கள் வெளியில் வந்தே எவர்க்குங்கூற
இருகண்ணீர் மழைபொழிந்தார் இருந்தோரெல்லாம்:
உள்ளேபோய்ப் பார்த்துவாருங்களென்று அங்கிருந்தோரெல் லாம் சொல்ல, பாசுபதர்கள் கோவிலினுள்ளே சென்று எங்கும் பார்த்தார்கள். பின்னர் இரத்தினமணிகள் இழைத்துச் செய்யப் பெற்ற கருவறையின் வாசலிலே நின்று எட்டிப்பார்த்தார்கள். கோணேசப்பெருமானுடைய பொன்மயமான திருப்பாதங்களுக் கருகே சிவப் பிரகாசம் நிறைந்த புஷ்ப்பமொன்று மலர்ந்து விளங்

கும் அற்புதத்தைக் கண்டு ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்து வாசனை வீசுகின்ற தாமரைமலரில் இருக்கின்ற பிரம்மா முதலிய தேவர்களுக்கும் கிடைத் தற்கரியதான விதேகமுத்தி கிடைத்த துவோ அரசர்பெருமானே என்று மகிழ்ச்சியோடு வெளியே வந்து எல்லோருக்கும் கூறினார்கள். அதனைக்கேட்டு அங்கிருந்தோரெல் லாம் இரு கண்களினாலும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். .
மலரோன் - பிரம்மா. வண்பதவி- விதேகமுத்தி: சாயுட்சபதவி.
50. எல்லார்க்கும் பெரியவனே எளியார்க்கும் w எளியவனே எங்கள் கோவே
மல்லாருந் திண்புயனே திரிகயிலைத்
தொழும்புசெய்து மவுணத்தோடே அல்லாருங் கண்டர்பதம் அடைந்தனையோ
எனவாழ்த்தி அன்பினோடு எல்லாரும் அரன்தொழும்பு நடத்திமிக
அகமகிழ்வுற்று இருந்தாரன்றே.
திருக்கோணேஸ்வரத்தில் திருப்பணிகளைச் செய்து அதனால் கோணேசப்பெருமானுடைய திருவடிப்பேறு பெற்று எல்லாராலும் போற்றப்படும் பெரியவனே! பக்தியும், பணிவும் நிறைந்து எளிய வர்களுக்கெல்லாம் எளியவனாயிருப்பவனே! எங்கள் அரசர் பெரு மானே! வலிமைபொருந்திய திண்ணிய தோள்களையுடையவனே! தெட்சணகயிலாயமாகிய திரிகயிலையிலே திருப்பணிகள் செய்து இருண்ட கண்டத்தையுடைய இறைவனது பாதாரவிந்தங்களிலே அமைதியாகச் சரணடைந்தனையோ என்று குளக்கோட்டு மன் னனை அன்பினோடு வாழ்த்தி அனைவரும் கோணேசப்பெருமா னுக்குத் தொழும்புகள் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள்.
மல் - வலிமை. அல் - இருள்.
கவிராசர் இயற்றிய கல்வெட்டுப் பாடல்கள் முற்றிற்று,
س- 81 ، جسسه

Page 50
இடைச் செருகல்
இடைச்செருகல் என்பதை வெள்ளோலை, வெள்ளேடு என்றும் கூறுவர். நூல் நுதலியபொருளுக்கு மாறுபடாமலும், நூலில் அமைந்துள்ள பாக்களின் யாப்பமைதிக்கு மாறுபடாமலும், நூலிற் கூறப்படும் சம்பவங்களுக்கு இசைவாக மூலநூலிற் கூறப்பட்ட கதைத் தொடர்புகளுக்கு முறிவேற்படாமலும் புதிய சம்பவங்கள் அமைந்த பாடல்களை எழுதி மூலநூலின் இடையிற் செருகுவதால் இடைச்செருகல் எனப்பட்டது. ஏட்டில் எழுதப்பட்ட பழங்கால நூல்களைப் பிரதிசெய்பவர்கள் புதியனவற்றைப் புகுத்திச் சேர்ப் பதுமுண்டு. அவைகளையும் இடைச்செருகல் என்பர்.
ஏட்டில் எழுதுபவர்கள் புலமை மிக்கவர்களாயும் இருப்பர். திருகோணமலை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இத்தகைய ஆற்றல்மிக்க பெரியவர்கள் இலைமறை காயாக வாழ்ந்துவந்திருக் கிறார்கள்.
கோணேசர் கல்வெட்டு எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பழம் பெரும் வரலாறுகளையுடையது. அதனைப் படித்து அனுபவித்த பெரியார்கள் தங்சள் மனத்திலெழுந்த கருத்துக்களையும், கதை களையும் தமது அறிவாற்றலாற் புதிய பாடல்களாகப் புனைந்து மூலஏட்டில் சேர்த் திருக்கிறார்கள். அப்பாடல்களில் தீர்க்கதரிசனச் செய்திகளும், புராணக்கதைகளும் காணப்படுகின்றன.
கவிராசவரோதயரின் கல்வெட்டில் இடைச்செருகல் --
குளக்கோட்டு மன்னனுடைய செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிற் சொல்லப்படாததும், கோணேஸ்வரத்தில் நிகழ்ந்த பிற் கால நிகழ்ச்சிகளாகவுமுள்ள விஷயங்கள் கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டில் இடைச்செருகல்களாகக் காணப்படுகின் றன. அவற்றை இனிக் காண்போம்.
கவிராசர் இயற்றிய கோணேசர் கல்வெட்டின் மூன்று பதிப் புக்கள் உண்டென்றும், அவைகள் பதிப்பிக்கப்பட்ட காலத்தையும், பதிப்பாசிரியர்கள் யாவர் என்பதனையும் முன்பே கூறியுள்ளோம்.
முதற் பதிப்பாசிரியராகிய வல்வை, திரு. க. சின்னத்தம்பிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பில் காணப்படும் 1 தொடக்கம் 43 ஆம் பாடல் வரையுமுள்ள 43 பாடல்களும், 49 தொடக்கம் 55 ஆம் பாடல் வரையுமுள்ள 7 பாடல்களும் ஆக மொத்தம்
-82 m

50 பாடல்கள் குளக்கோட்டு மன்னன் சொல்லிய சொற்படி சொல் லப்பட்டுள்ளதும், கவிராசர் இயற்றியதுமாகிய பாடல்களாகும். இடையிற் காணப்படும் 44, 48, 46, 47, 48 ஆம் பாடல்கள் இடைச்செருகல் என்ற வகையில் இனங்கண்டு கொள்ளக்கூடியதா, யிருக்கின்றன.
இரண்டாம் பதிப்பாசிரியராகிய, யாழ்ப்பாணம், புலோலி கிழக்கு திரு. பொ. வைர் இலிங்,தேசிகர் அவர்கள் பதிப்பில் மேலும் மூன்று பாடல்கள் இ. டச்செருகல்களாகக் காணப்படுகின், றன. அதாவது, திரு. சு. சின்னத்தம்பிப்பிள்ளை அவர்களுடைய பதிப்பிலுள்ள 5 பாடல்களுடன், இப்பதிப்பிலுள்ள 3 பாடல்களும் ஆக மொத்தம் 8 பாடல்கள் இடைச்செருகல் ' என்ற வகையில் இனங்கண்டுகொள்ளக் கூடியதாயிருக்கின்றன. திருகோணமலை வே. அகிலேசபிள்ளை அவர்களாலே தொகுக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாசிரியர் அ. அளகைக்கோன் அவர்களுடைய பதிப்பில். மேலும் இரண்டு பாடல்கள் இடைச்செருகல்களாகக் காணப்படு கின்றன. அதாவது இரண்டாவது பதிப்பாசிரியருடைய பதிப்பிற் காணப்படும் 8 இடைச்செருகல் பாடல்களுடன் இப்பதிப்பிலுள்ள இரண்டு பாடல்களுமாக மொத்தம் 10 பாடல்கள் இடைச்செருகல் என்ற வகையில் இனங்கண்டு கொள்ளக்கூடியதாயிருக்கின்றன.
இடைச்செருகல் நிகழ்ந்ததன் காரணம்
கோணேசர் கல்வெட்டின் பாயிரச்செய்யுள் கூறும் அகச்சான் றின்படி கவிராசவரோதயர் 50 பாடல்களால் கோணேசர் கல்’ வெட்டைப் பாடி நிறைவு செய்துள்ளார். அதாவது, குளக்கோட்டு: மன்னன் செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிற் சொல்லியுள்ள படி பாதி கதைப்பொருளாய்க் கோணேசர் கல்வெட்டை ஐம்பது பாடல்களால் நிறைவுசெய்துள்ளார். "பாதி கதைப்பொருளாய்' என்பதிற் குளக்கோட்டுமன்னன் கோணேஸ்வரத்திலே கோயில் திருப்* பணிகள் நிறைவேற்றியதும், திருக்குளம் அமைத்ததும், மக்களைத் திருகோணமலை மாவட்டத்தில் குடியமர்த்தியதும், ஆலயத்தில் விழாக்களெடுத்ததுமாகியவைகளைக் கூறியுள்ளார். மறுபாதியிற் கோணேஸ்வரத்தின் நிர்வாகச் சட்ட திட்டங்களையும், குடிமக் களை நிர்வகிக்கும் முறைகளையும் கூறியுள்ளார். இவ்வளவுடன் கவிராசவரோதயரின் கவிப்பணி நிறைவேறுகின்றது.
கவிராசவரோதயர் சிறந்த சோதிடமேதை. தனது அறிவாற்
றலாற் கோணேஸ்வரத்தின் எதிர்கால நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார். அவர் பாடிய கோணேசர் கல்:
- 83് ഞ

Page 51
வெட்டின் 42, 43 ஆம் பாடல்களிற் காணப்படும் தீர்க்கதரிசனக் குறிப்புக்கள் இடைச்செருகற் பாடல்களைப் புகுத்துவதற்குத் தோற்றுவாயாக அமைந்துவிட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத் தித் திரிசோணாசலபுராணம், தெட்சணகயிலாய புராணம் என் பனவற்றிற் கூறப்படும் சம்பவங்கள் சிலவற்றைக் கருவாகக்கொண்டு இடைச்செருகற் பாடல்கள் கல்வெட்டில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
குளக்கோட்டு மன்னனுடைய திட்டப்படி வன்னிமை ஆட்சி நடைபெற்றுவந்த கட்டுக்குளப்பற்று, கொட்டியாபுரப்பற்று தம் பல காமப்பற்று என்னும் இடங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் குல தெய்வமாகிய கோணேசப் பெருமானுக்குத் திரிகரண சுத்தியோடு தொழும்புகள் செய்துகொண்டு வாழ்ந்த சூழ்நிலையிலேதான் கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் கோணேசர் கோவிலை இடித்தழித் துத் திரவியங்களைச் சூறையாடினார்கள். பக்திவயப்பட்ட மக்கள் ஆலயத்திலிருந்த சில விக்கிரகங்களை எடுத்துச்சென்று களனி மலை யில் வைத்து வழிபட்டு வந்தார்கள். காலச்சக்கரம் சுழன்றோடியது. பல்ல னடுகளுக்குப் பின் தம்பலகாமத்திற் கோவில் கட்டப்பட்டு இந்த விக்கிரகங்கள் அந்த ஆலயத்திற் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. மக்கள் கோணேசரை ஆதிகோண நாயகர் என்றே வழிபட்டுவந்தார்கள். ஆதியிலிருந்த கோணேஸ்வ ரத்தை நினைந்தே யாவும் அங்கு நடைபெற்றுவந்தன. குடிமக்கள் குளக்கோட்டு மன்னனுடைய செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததிப் படியே தொழும்புகளை அங்கு செய்து ஆலயத்தை நடத்திவந்தார் கள். இந்த ஆலயம் தோன்றி வளர்ந்த காலசட்டத்திற் போர்த் து கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என்பவர்களின் ஆட்சியும், கண்டியை இராசதானியாகக் கொண்ட இராஜசிங்க மன்னரும், ஆட்சியதிகாரம் குறைந்த குறுநில மன்னர்கள் போன்ற வன்னி மைகளும், ஈழத்தில் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய ஆளுமைகள் ஆதியாகிய கோணேசர் கோவிலோடும் தொடர்புபட் டிருந்தது. இதனால் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட கோணேஸ் வரந்தான் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் என்ற தூயசிந்தனை யோடு புராண வரலாறுகளையும், தீர்க்கதரிசனங்களையுஞ் சேர்த்து இடைச்செருகற் பாடல்களை எழுதிக் கோணேசர் கல்வெட்டிற் சேர்த்திருக்கிறார்கள் எனக்கொள்ளலாம். ஆனால் இப்பாடல்கள் தள்ளத்தக்கவையல்ல, கொள்ளத்தக்கவை என்பதனால் எல்லாப் பாடல்களுக்கும் பொழிப்புரை எழுதிச் சேர்த்துள்ளேன்.
கி. பி. 1887 ஆம் ஆண்டுக்கு முன் பிரதிசெய்யப்பட்ட கோணே சர் கல்வெட்டின் ஏட்டுப்பிரதியொன்று என்னிடமிருக்கின்றது. பிரதி
- 84 -

செய்தவர் பெயர் தெரியவில்லை. கொட்டியாபுரப்பற்றிலுள்ள மரு தடிச்சேனையில் வசித்த வயிரமுத்து - வீரகத்தி என்பவர் 1914 ஆம் ஆண்டு ஆடி மாதம் 24 ஆம் திகதி பிரதிசெய்து முடித்த கோணே சர் கல்வெட்டின் ஏட்டுப்பிரதியும் என்னிடமிருக்கின்றது. இந்த இரண்டு ஏட்டுப்பிரதிகளிலும் கோணேசர் கல்வெட்டு 55 பாடல் களுடன் முற்றுப்பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து அகவல் ஒன்றும் காணப்படுகின்றது. இந்த அகவலும் பிற்சேர்க்கையாய மைந்த இடைச்செருகல்தான். எனவே இடைச்செருகலெனக் கரு தப்படும் பாடல்களையும், அகவலையும் இனிக் காண்போம்.
வல்வை க. சின்னத்தம்பிப்பிள்ளையின் பதிப்பிற் காணப்படும் இடைச்செருகல்
இவர் பதிப்பித்த கோணேசர் கல்வெட்டுத்தான் மிகப்பழமை யானது. கி.பி. 1887 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம் ஐப்பசி மாதம் பதிப்பித்திருக்கிறார். ஏட்டுப்பிரதிகளில் உள்ளபடி 55 பாடல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 44, 45, 46, 47, 48 ஆம் பாடல்கள் இடைச்செருகற் பாடல்களாக இனங்காணககூடியதாக இருக்கின்றன. இப்பாடல்கள் தள்ளத்தக்கவையல்ல, கொள்ளத் தக்கவையென்று முன்னரே கூறியுள்ளேன். ஆதலால் இப்பாடல் களுக்கும் பொழிப்புரையை எழுதியுள்ளேன்.
குளக்கோட்டு மன்னன் செய்த கோவிற் திருப்பணிகளை கவி ராசவரோதயர் முன்னரே கல்வெட்டில் கூறியிருக்கவும், மீண்டும் 47, 48 ஆம் பாடல்களில் கோவில் திருப்பணிகள் பற்றிப் பாடப் பட்டிருக்கின்றது. "நீதியுடன் இப்படி நீர் தவறில்லாமல் நிச்சய மாய் நடத்துமென்றான் நிருபர் கோமான்' என்று குளக்கோட்டு மன்னன் கூறுவது போலப் பாடப்பட்டிருக்கின்றது.
44, 45, 46 ஆம் பாடல்களில் கயவாகு மன்னன் வருகை பற் றியும், வடுகர் ஆட்சி பற்றியும், பின்னர் போர்த்துக்கீசர், ஒல்லாந் தர், பிரித்தானியர் வருகை பற்றியும் பேசப்படுகின்றது. குளக் கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த காலப்பகுதியையும், இப் பாடல்களிற் கூறப்படும் சம்பவங்கள் நிகழ்ந்த காலப்பகுதியையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது இப்பாடல்கள் ஆதியாகிய கோணேசர் கோவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட பின்னர் ஆதிகோணநாய கருக்குத் தம்பலகாமத்திற் கோவில் கட்டியபின் எழுந்த பாடல் களாக இருக்கவேண்டும். இதனைச் சற்று விளக்கமாகப் பின்னே கூறுகின்றேன்.
- ܪ̈8 ܫ“

Page 52
1. எழுகிரணத் திரிகயிலைப் பெருமான்பூசை இப்படியே
முறைதவறி நடக்குங்காலைப் பழுதில் திகழ் கயவாகு வருவன் அன்னாள் பாசுபதர்
இறப்பர்பழ மறையோர் சேர்வர் பொழுதுகுலக் கயவாகு ராசராசன் பூசைவிதிக்கே கணக
நாடுமீந்து தொழுதுநின்றே ஆலயத்திற் தொழும்பு திட்டஞ் சொல்லி
அவன் அனுராசபுரியிற் சேர்வான். (Lur G - 44)
ஒளிக்கிரணங்களை வீசியெழுகின்ற சூரியனுடைய கதிர்கள் படி கின்ற திரிகயிலையெனப்படும் கோணமாமலையிற் கோயில்கொண் டருளும் கோணேசப் பெருமானுடைய பூசையானது மூடர்களாலும் 'ஈனர்களாலும் விதிமுறை தவறி நடைபெறும் காலத்திற் குற்ற மற்ற புகழ்ச்சியுடைய கயவாகுமன்னன் அனுராசபுரத்திலிருந்து கோணேஸ்வரத்திற்கு வருவான். அந்நாளில் பாசுபதமறையோர் கடலிற் குதித்து இறப்பார்கள். பழமையான நான்கு வேதங்களை யுங்கற்ற வேதியர்கள் அங்கு வருவார்கள். சூரியகுலத்தவனாகிய கயவாகுமன்னன் கோணேசர் கோவிற் பூசைகள் விதிமுறை வழுவா மல் முன்போல் நடைபெறுவதற்கு மிகுதியான பொன்னையும் மானியமாக நிலங்களையும் வழங்கிக் கோணேசப்பெருமானை வழிபட்டு ஆலயத்துக்குரிய தொழும்பாளர்கள் முன்போலக் கோவிற் தொழும்புகளைக் குறைவின்றிச் செய்வதற்குத் திட்டம் பண்ணி அனுராசபுரத்திற்குச் செல்வான்.
கனகம் - பொன். பொழுதுகுலம் - சூரியகுலம்.
2. போனபின்னர் வடுகரரசாள்வார் கோணைத்திருநகரமதனை
வெகுகாலம் பின்னர் மாந்தளிர் போன்மேனியுடைப் பறங்கி வந்து ۔
"மாகோணைப் பதியழிக்க வருமந்நாளில் ஏய்ந்ததென்பாற் கழனிமலையென்று ஒன்றுண்டாங்கு
ஈசனுக்கு மாலயமங்கு இயற்றப் பின்னர் கோந்தறைசேர் உலாந்தேசு பிடிக்குமந்நாள் குலவுசிங்க
இரவிகுலம் குறைந்து போமே. (பாடல் - 45)
-سری 86 حبس

கயவாகுமன்னன் போனபின்னர் குளக்கோட்டு மன்னன் திட் டம் பண்ணிய பிரகாரம் கோவிற் தொழும்புகள் குறை வின் றி நடந்துவருங் காலத்தில் சிறப்புமிக்க கோணமாமலையை வன்னி பங்கள் குறுநில மன்னர்கள் போல ஆண்டு வந்தார்கள். நீண்ட காலம் இவ்வாறு ஆட்சி நடைபெற்று வரும்போது மாந்தளிர் போன்ற வெண்மை கலந்த சிவப்பு நிறமுடைய பறங்கியர்கள் பெருமைபொருந்திய கோணையம்பதியை அழிவுசெய்ய வருவார் *கள். அந்நாளிற் கோணேஸ்வரத்திற்குத் தெற்குத்திசையிலுள்ள கழனிமலையிற் கோணேசர் கோவிற் சுவாமியை (விக்கிரகத்தை) எடுத்துச் சென்று அங்கே சுவாமிக்குக் கோவிலொன்று அமைக்கப் படும். அதன் பின்னர் பறங்கியர் வம்சத்தைச் சேர்ந்த ஒல்லாந்தர் திருகோணமலையைப் பிடிப்பார்கள். அக்காலந்தொடக்கம் திரு கோணமலையை ஆண்ட சூரியவம்ச பரம்பரையில் வந்த குறுநில மன்னர்கள் (வன்னிபங்கள்) ஆட்சி குறைந்து மறைந்து போய்விடும்.
* 3. போனபின்னர் இங்கிலிசர் இலங்கையாள்வார் புகழாரும்
கோணவரை நாதர் பூசைக்கு ஆனவிதி தவறாமல் நடக்கும் பின்னால் அணிசேருமாலயமும் மழையும் பெய்யும் தானமதில் நெல்விளைவு மிகவுமுண்டாம் சனங்களுக்குத்
துன்பமில்லை இனபமாகும் மானமுடன் பின்னிகழ்ச்சியாவும் கற்றோர் மதித்தபடி
உரைத்திட்டேன் நியமந்தானே. (பாடல் - 46)
பறங்கியர்களாகிய போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் திரு கோணமலையை ஆண்ட பின்னர் ஆங்கிலேயர் இலங்கையை ஆள் வார்கள். புகழ்மிக்க திரிகோணமலைநாதராகிய கோணேசப் பெருமானுக்கு அந்நாளில் ஆகமவிதி தவறாமற் பூசைகள் நடை பெற்றுவரும். அதன் பின்னர் அழகு பொருந்திய ஆலயமும் அமை யும். கோணேஸ்வரத்தின் தெய்வீகம் பயபக்தியோடு பேணப்படுவ தால் உரிய காலங்களில் மழையும் பெய்து நெல் முதலியன நன்றாக விளையும். சனங்களும் துன்பமின்றி இன்பமாய் வாழ்வார்கள். கற்றறிந்த சான்றோர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவாறு பின்னே நடக்கப்போகின்றதாகிய நிகழ்ச்சிகளையெல்லாம் தீர்க்கதரிசன மாக நியமப்படி கூறியிருக்கின்றேன்.
سے 87 بسی۔

Page 53
4. தானதிக வாரி அம்பொற்கரையிற் கல்லால் சதுரம்வெட்டிக்
கோயில் கட்டிக் குளமுங்கட்டி
மானபரன் ஆலயத்துச் சோலை தோப்பு மண்டப நீராவி
மணிமதிலுங் கட்டி
ஆன திருப்பணி ஆறுபத்துநாலாம் ஆலயமும் சுற்றி மிக
அழகாய்க் கட்டித் தானதிக அரனருளால் பூசையாதி தவறாமல்
நடத்தினமித் தரணிமீதே" (urt-6) - 47)
மிகுந்த தெய்வீகச் சிறப்பு நிறைந்து தெட்சணகயிலாயமென்று போற்றப்படுகின்றதும், அழகிய கடற்கரையாற் சூழப்பெற்றது மாகிய தலத்திலே சதுரமான கற்பாறையிலே கோயிலும் குளமும் கட்டியும் பரமேஸ்வரனாகிய கோணேசருடைய ஆலயத்திற் சோலை களும், பூந்தோப்புக்களும், மண்டபங்களும், மண்டபத்திற்கு நீரா விப் பத்திகளும், அழகிய மதில்களும் கட்டி மேலான திருப்பணி களுடன், நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் , மாணிக்கவாச கருக்குமாக அறுபத்துநால்வருக்கும் ஆலயப் பிரகாரத்தைச் சுற்றிக் கோயில் கட்டிக் கோணேசப்பெருமானுடைய அருளினாலே பூசை முதலான விழாக்களெல்லாம் இத்தலத்திலே நடத்தி வந்தோம்.
வாரி - கடல். நீராவி - நீராவிப்பத்தி (ஆலயத்தினுள்ளே காற் றுச் சுழன்று ஓடச் செய்யும் ஓர் அமைப்பு) - '
5. மீதெழுந்து நாற்றிசையும் மதிலுங்கட்டி வெளிக்கதவிரண்டு
மிட்டுப் பூட்டும் போட்டாங்கு .' "۔
ஆதிபரனாலயம் பொன்னாலே வேய்ந்து ஆங்கு
அவிர்கிரணத் தேர்மூன்று மழகாச் செய்தே பாதிமதி தரித்தபரனருளினாலே பங்குனி உத்திரத்திருநாட்
பவிசுங் கண்டோம் நீதியுடன் இப்படி நீர் தவறில்லாமல் நிச்சயமாய் .
நடத்துமென்றான் நிருபர்கோமான்,
ஆலயங்களைச்சுற்றி நான்கு திக்குகளிலும் மிக உயரமான மதில் கட்டி அதற்கு வெளிக்கதவுகள் இரண்டுமிட்டு அவற்றுக்குப் பூட்டும் போட்டு அங்கு ஆதியாகிய கோணேசப் பெருமானு டைய ஆலயத்தைப் பொன்னால் வேய்ந்தும், அவ்வாலயத்திற்கு ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற மூன்று தேர்களை அழகாக அமைத் தும், பிறைச்சந்திரனைச் சடாபாரத்தில் தரித்த கோணேசப் பெரு
سسے 88 سس۔

மானுடைய அருளினாலே பங்குனி உத்திரத் திருநாளில் தேர்த் திருவிழாவும் நடத்தி மேன்மைபெறு சிறப்பும் கண்டோம். நீங் களும் இவ்வாறு நீதிநெறி தவறாமல் நிச்சயமாக நடத்தி வாருங் கள் என்றான் அரசர்களுக்கெல்லாம் மேலான குளக்கோட்டு மன் ags.
பொ. வைத்திலிங்கதேசிகர் பதிப்பித்த கோணேசர் கல்வெட்டிற் காணப்படும் இடைச்செருகற் பாடல்கள்
1. போனபின்னர் இலங்கைமுற்றும் வடுகராள்வார்
புகழிலங்கை தணிபுரக்கும் உலாந்தா மன்னன்
தானிலங்கும் அரசினுக்குத் தடையென்றெண்ணித்
தரியலனைக் கடலிடையே தள்ளிவிட்டுத்
தேனமரும் அலங்கல்புனை வடுகன்தானும்
செப்பியமாற்று அரசுமகிழ் கொண்டகோணை
மானபரன் அகமகிழ்பொற் கோயிலுக்குள்
மாதனத்து மீது வைத்து வணங்குவாரால்.
(5. Glal. Litl6 46)
பொ. ரை. - சிங்கஇரவிகுலம் குறைந்துபோன பின்னர் இலங்கை முழுவதையும் வடுகர் ஆட்சி செய்வார்கள். புகழ்பெற்ற இலங்கை ன்யத் தானே ஆள விரும்பிய ஒ ல் லா ந் த மன்னன் தனது அரசாங்கத்தைச் சிறப்பாக நடாத்துவதற்கு, வடுகமன்னன் தடை யாயிருக்கின்றான் என எண்ணி அவனைக் கடலிலே தள்ளிவிட் டான். தேன்சொரியும் மலர்களையுடைய மாலையணிந்த வடுக மன்னன் மாற்றானாகிய ஒல்லாந்தமன்னன் விரும்பிய கோணை 'யம்பதியிலிருந்த இறைவனைப் புதிதாக அமைக்கப்பட்ட கோவி
லுக்குள் வைத்துப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தான்.
.. குறிப்பு: தம்பலகாமத்தில் கட்டப்பட்ட கோவிலிற் கோணே சப் பெருமானுடைய திருவுருவத்தை வைத்து வழிபட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இப்பாடல் எழுதப்பட்டிருக்கின்றது.
தேசிகருடைய பதிப்பிற் காணப்படும் இப்பாடலுக்கு முன்னுள்ள பாடலைத் தருகின்றேன். s' - -
-سس 89 سس

Page 54
"சேர்ந்தபின்னர் மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலம் செய்யுமன்னாள்
மாந்தளிர் போல் மேனியுடைப் பறங்கிவந்து
மகாகோணைப் பதியழிக்க வருமன்னாளில்
ஏய்ந்ததென்பாற் களனிமலை என்றொன்று உண்டு ஆங்கு
ஈசனுக்கும் ஆலயமங்கு இயற்றிப் பின்னர்
கோந்தறைசேர் ஒல்லாந்தர் இடிக்குமன்னாள்
குலவுசிங்க இரவிகுலம் குறைந்துபோமே.
"சிங்கஇரவிகுலம்' என்பதுபற்றி வைத்திலிங்கதேசிகர் அவர்கள் சரித்திர வரலாறு ஒன்றைத் தனது நூலில் அடிக்குறிப்பாகத் தந் துள்ளார்.
"கி. மு. 544 இல் இலங்கைக்கு வந்த விஜயராசன் வம்சத்தி லுள்ள உக்கிரசிங்கராசனுக்கும், திசையுக்கிரசிங்க சோழன் புத்திரி மாருதப்புரவீகவல்லிக்கும் புத்திரனான 'வாலசிங்கன்' இவன் முடி சூடிய பின் செயதுங்க வரராசசிங்கன் எனப்பட்டப் பெயர் பெற்றான். என்னை?
**மிக்க சீர் இலங்கைநாட்டின் விரிகதிர்ப் பரிதியோச்சி
உக்கிரசேன சிங்கன் உதவிய சிறுவனென்னும் மைக்கடுங் களிற்றுத் தானை வரராசசிங்க மன்னன் புக்கு மாற்றலர்கள் போற்றப் பொருவிலா அரசு செய்தான்."
என்று திரிகோணாசலபுராணம் கூறுமாற்றாணுமென்க. இந்த அரசனே தம்பலகாமக் கோவிற் திருப்பணி செய்வித்தவன். இவன் காலம் 9ஆம் நூற்றாண்டுபோலும்" என்பது அந்தக் குறிப்பு.
இக்குறிப்பின் பிரகாரம் சிங்கஇரவிகுல மன்னர்களின் ஆட்சி குறைந்துபோன பின் தொடர்ந்து வடுகமன்னர்கள் ஆட்சிசெய் திருக்கலாமெனக்கொள்ள இடமுண்டாகின்றது. குளக்கோட்டுமன் னன் அமைத்த ஆட்சிமுறை பற்றிக் கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்டிருக்கின்றது. தென்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 'வன்னிமைகள் கட்டுக்குளப்பற்று, கொட்டியாபுரப்பற்று, தம்பல ‘காமப்பற்றுக்களில் குறுநில மன்னர்கள் போலிருந்து ஆட்சி நடத்தி வந்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆட்சி தொடர்ந்து பல்லாண்டு களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் கயவாகுமன் னன் திருக்கோணேஸ்வரத்திற்கு வந்ததாகவும், குளக்கோட்டு மன்னன் ஏற்படுத்திய ஆட்சிமுறையைத் தொடர்ந்து நடத்தப்

புத்தூக்கமளித்ததாகவும், மானியங்கள் வழங்கியதாகவும், கோணேசர் கல்வெட்டிற் காணப்படும் அகவலிற் கூறப்பட்டிருக் கின்றது.
2. வணங்கும் அரன் பூசை முன்போல் நடக்குங்காலம்
மகாஇலங்கைப் பதியாள வருமாம் சிங்கன்
இணங்குமணி ரத்தினத்தால் பொன்னால் முத்தால்
ஈசனுக்கும் ஆலயமங்கு இயற்றுங்காலம்
சுணங்கலில்லை மானுடர்க்குத் துக்கமில்லை
சோம்பலில்லை நிதம்போக சுகமேவாழ்வார்
மணங்கமழும் திரிகயிலைப் பெருமான்பாதம்
மனத்திருத்தி அருத்தியொடும் வாழுமாக்கள்.
(es. Goa. LITL-6). 47)
பொ.ரை. இறைவனாகிய கோணேசப் பெருமானுடைய பூசை கள் முன்போல வடுகமன்னராற் சிறப்பாக நடைபெற்றுவருங் காலத்தில் இலங்காபுரியை ஆள்வதற்குச் சிங்க இரவிகுலமன்னன் * வருவான். அவன் சிறந்த மணிகளாலும், இரத்தினத்தாலும், முத்தாலும் ஈசனுக்குக் கோவில் கட்டுங்காலத்தில் மக்கள் சோம்ப லில்லாமலும், துக்கமில்லாமலும், குறைவின்றிச் சுகபோகத்தோடு "வாழ்வார்கள். தெய்வமணங்கமழும் திருக்கோணமலையில் எழுந்த ருளியிருந்த இறைவனுடைய திருவடிகளை மனத்தில் வைத்துத் திருப்தியாக மக்கள் வாழ்வார்கள்.
இப்பாடலில், சிங்க இரவிகுல மன்னன் வருகையும், அவன் 'இறைவனுக்கு ஆலயம் அமைத்த சம்பவமும், நாட்டின் நிறைவும், மக்களுடைய திருப்தியும், சுகபோக வாழ்வும் பற்றிப் பேசப்படு கின்றது.
குளக்கோட்டு மன்னன் கட்டிய கோணேசர் கோவில் வரலாறு கள் கல்வெட்டில் இருக்க, சிங்கஇரவிகுலமன்னன் கோவில் கட்டிய கதையும் இப்பாடலிற் கூறப்படுவதாற் கோணேசர் கல்வெட்டிற் கூறப்பட்டுள்ள கதைத் தொடர்புகளுக்கு இச்சம்பவம் முரண்பட்டு நிற்கின்றது. எனவே தம்பலகாமத்திற் கட்டப்பட்ட கோவில் வர லாற்றை இக்கல்வெட்டிற் சேர்க்கவிரும்பிய ஒருவரால் இப்பாடல் பாடப்பட்டிருக்கலாம். எனவே இதுவும் இடைச்செருகற் பாடலா யிருக்கலாம். இப்பாடலுக்கு அடுத்துவரும் பாடலைப் பார்ப்போம்:
سے 91 سے

Page 55
சி. மாதமதின் மும்மாரிபெய்ப்பச் செந்நெல் வளர
எழிற்சைவநெறி மனுநூலோங்க ஒதரிய முற்கதையும் சொன்னோம்
பின்னருற்று வருங் கதையனைத்தும் உரைவழாமல் ஆதரவாய் அறுபத்துநாலாமாண்டில் அடைவுடைய
சோதிடர்கள் எழுதிவைத்த நீதிமொழிப்படி சொல்வோம் கோணைநாதர்
நித்தியமாம் அருள்சுருங்குநியமம் போமே.
பொ. ரை. இரண்டாவது பாட்டின் இறுதியடிகளிற் கூறப் பட்டுள்ள பிரகாரம் திரிகயிலைப் பெருமான் பாதத்தை மனத்தி லிருத்தி அருத்தியொடு மக்கள் வாழ்ந்துவருவதால் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும். செந்நெல் விளைவு அதிகரிக்கும். சைவசமய நெறியும், மனுதர்மநீதியும் ஓங்கும். சொல்லுதற்கு அரிதான கோணேஸ்வரத்தின் முன் கதைகளும் கூறினோம். பின்னே நடக்கப் போகும் கதைகளெல்லாவற்றையும் பிழையில்லாமல் கூறினோம். மதிநுட்பம் மிக்க சோதிடர்கள் கணித்து எழுதிவைத்துள்ளதையும் சொல்கின்றோம். அதாவது அறுபத்து நாலாமாண்டில் கோணேசப் பெருமானுடைய நித்தியமான அருள் ஒடுங்கியிருந்தநிலை ஒழிந்து அருள்பெருகும். V
கோணேசர் கல்வெட்டிற் கூறப்பட்டுள்ள குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளைக் கூறும் கதைகளையும், பின்னே நடைபெற்ற சம்பவங்களையும் நன்கு அறிந்திருந்த ஒருவர் அக் காலத்தில் வாழ்ந்த மதிநுட்பம்மிக்க சோதிடர்கள் கணித்துவைத் திருந்த தீர்க்கதரிசனச் செய்தியொன்றை இப்பாடலிற் சேர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அறுபத்துநாலாமாண்டிற் கோணை நாதருடைய அருள் பெருகும் என்பதுதான் அச்செய்தி. இது ஆச் சரியந்தரவல்ல அற்புதமான செய்திதான்.
1624ஆம் ஆண்டு போர்த்துக்கீசராற் கோணேசர் கோவில்
இடித்து அழிக்கப்பட்டபின், 1963ஆம் ஆண்டுதான் கோணேசப்
பெருமானுக்குப் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு முதற் கும்பாபிஷே கம் நடைபெற்றது. இந்த இடைக்காலத்திற் கோணேசப்பெரு மானுக்குக் கோவிலில்லாதிருந்தபோதிலும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திற் கோணேசர்மலையில் மானதழசை நடைபெற்றுவந்தது. மானதமாக நடைபெற்றுவந்த பூசை தொடர்ந்து இப்போதும் மலையில் நடைபெற்றுவருகின்றது. ஆகமசாஸ்திரவிதிகளை அனு கரித்து இப்பூசையைச் செய்துவந்தபோதிலும் மானதழசை என்றே
- 92 -

கோள்ளவேண்டும். இந்தவகையானபூசை நடைபெறுதென்று திரு. பொ. வைத்திலிங்கதேசிகர் பதிப்பித்த கோணேசர் கல்வெட் டில் 49 வது பாட்டில் "கோணவரைநாதர்பூசை மானதமாம் விதி முறையே நடக்கும்" என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க. அன்றி யும், 1916 ஆம் ஆண்டு பதிப்பித்த கோணேசர் கல்வெட்டில் 1964ஆம் ஆண்டு "கோணைநாதர் Blä8)u Lחמrub அருள் சுருங்கு நியமம்போமே" என்று கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனமானது சிந், தனைக்குப் பெருவிருந்தாய் இருக்கின்றது. கோணேசர் கல்வெட் டிற் குளக்கோட்டுமன்னன் பல தீர்க்கதரிசனங்களைக் கூறியுள்ளார். அதுபோல இதுவும் ஒரு தீர்க்கதரிசனமாய் அமைந்திருக்கின்றது. 1963ஆம் ஆண்டுதான் கோணேசருக்குப் புனராவர்த்தன கும்பாபி ஷேகம் நிறைவேறி நித்தியமாம் அருள் பெருகத் தொடங்கியது. கோணேசர் கல்வெட்டைப் பிரதிசெய்தவர்கள் மதிநுட்பம்மிக்க சோதிடர்களாயும் இருந்திருப்பார்கள். யாருடைய ஞானத்தில் வெளிப்பட்ட தீர்க்கதரிசனமாயிருந்தாலும் அது நிகழ்ந்துவிட்டது. இச்சம்பவத்தைப் பாட்டினுட் புகுத்தி ஏட்டினுட் செருகியிருக் கலாம். எனவே இதனையும் இடைச்செருகல் எனக்கொள்ளலாம்.
5. சின்னத்தம்பிப்பிள்ளை அவர்களுடைய பதிப்பிலும், வைத் திலிங்க தேசிகர் அவர்களுடைய பதிப்பிலும் காணப்படும் இடைச் செருகற் பாடல்களுடன் மேலும் இரண்டு பாடல்கள் திருக்கோண மலையைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. அ. அளகைக்கோன் அவர்கள் பதிப்பித்த கோணேசர் கல்வெட்டிற் காணப்படுகின்றன. அவற்றை இனிக்காண்போம்.
திருகோணமலை அ. அளகைக்கோன் பதிப்பித்த கோணேசர் கல்வெட்டில் அமைந்துள்ள இடைச்செருகற் பாடல்கள்
1. சீர்மேவு கயிலைமலை தன்னில் வாழும்
சேடனுடன் பிரசண்ட வாயுதானும் ஏர்மேவும் எதிரிடை வந்துற்றபோது
எழுச்சிகண்டு சேடனுடன் இனிதாய்த்தானே கூர்மேவு கொடுமுடியைப் பிடுங்கி வாயு
கோணேசம லையென்று குறித்தபோது தார்மேவும் ஈஸ்வரனும் மகிழ்ந்தந்நாளில்
சாற்றுவான் உமையவட்குத்தனித்துத் தானே.
(ւյու-6ն - 59):
سس۔ 93 سے

Page 56
பொ'ட்ர்ை, "சிறப்புமிகுந்த "கயிலாபமலையில் வாழ்கின்ற*ஆதி சேடனுக்கும், வலிமைகொண்ட வாயுபகவானுக்குமிடையே பகைமை, ஏற்பட்டபோது தம்முள் யார் பெரியவர் என்பதைக் காண்பதற்: க்ாக எழுந்த போட்டியிற் கயிலாயக் கொடுமுடியொன்றை வாயு தேவன் பிடுங்கி வீசி இது கோணேசமலையென்று கூறியபோது ஆத்திமலர் மாலையணிந்த ஆதிக் கடவுளாகிய இறைவனும் மகிழ்ந்து அம்மலையிலமர்ந்து அதன் வரலாற்றை உமாதேவியாருக்குக் கூறியருளினார்.
2. தானாக மூன்றுகமுஞ் சென்றபின்பு தனிமைபெறு கலியுகத்தின் சரிதஞ் சொல்வேம் சேணாடர் புகழ்ந்திடவே பறங்கிவந்து
சிவசமயந் தனைமாற்றித் தீங்குசெய்வான் கோனான ராசசிங்கம் வந்துதோன்றிக்
குவலயத்தோர் புகழ்ந்திடவே ஈழநாட்டில் தானாகவரசுசெய்யும் பறங்கிதன்னைத்தடிந்தாள்வான்
தாரணியோர் தழைக்கத்தானே.
(பாடல் - 60)
பொ - ரை. கிரேத, திரேத, துவாபரம் என்னும் மூன்று யுகங் களும் கழிந்த பின்னர் வருகின்றதாகிய கலியுகத்தின் வரலாற்றைச் சொல்வேன். தூரத்து நாட்டிலுள்ளவர்கள் புகழும்படியாகப் பறங்கி என்று சொல்லப்படுகின்ற ஒரு சாதியார் வந்து சைவசமயத்தை அழிக்க நினைத்துத் தீயகாரியங்களைச் செய்வார்கள். அக்காலம், அரசனா கிய ராசசிங்கனென்பவன் வந்து உலகத்திலுள்ளவர்கள் புகழும்படி யாக ஈழநாட்டிலிருந்து அரசுசெலுத்தும் பறங்கியரைத் தண்டித்து மக்கள் மகிழும்படியாக நாட்டை ஆண்டு அரசாட்சி செய்வான்.
இந்த இரண்டு பாட்டுக்களும் கோணேசர் கல்வெட்டின் முடிவிற் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளை இடைச்செருகல் என்று கூறுதல் பொருத்தமாகும். இப்பாடல்கள் கூறும் சம்பவங்களுக்கும், கோணே சர் கல்வெட்டுப் பாடல்கள் கூறும் சம்பவங்களுக்கும் சம்பந்தமேது மில்லை. இராசசிங்க மன்னனைப் பற்றியும், பறங்கியர் வருகைபற்றி யும் கூறப்படும் விஷயங்கள் இப்பாடல்களிற் காணப்படுவதால் இதனைக் கல்வெட்டின் இறுதியிற் சேர்த்திருக்கிறார்கள் போலும். இவைகள் இடைச்செருகலாகவோ, கடைச்செருகலாகவோ செருகப் பட்டிருக்கின்றன.
.سسسس 94,.س--

கோணேசர் கல்வெட்டும் புராணங்களும்
கோணேசர் கல்வெட்டிற் சில பாடல்கள் இடைச்செருகலா யிருக்கலாமென ஊகிக்க இடமுண்டாவதுபோலக் கல்வெட்டிற் காணப்படும் அகவலும் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட இடைச் செருகலெனக் கொள்வதே சாலப் பொருத்தமானதாகும்.
செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததியிற் குளக்கோட்டு மன்னனாற் சொல்லிவைக்கப்பட்டிருந்ததைக் கவிராசவரோதயர் கல்வெட்டிற் பாடிவைத்தார். கல்வெட்டின் பாயிரச் செய்யுள் இதனை அறுதியிட்டுக் கூறுகின்றது. கோணேசர் கல்வெட்டிலுள்ள அகவலிற் கயவாகுமன்னனைப் பற்றியும், அவன் கோணேஸ்வரத் திற்கு வழங்கிய மானியங்கள் பற்றியும், கோவிற் தொழும்பா ளர்கள் பற்றியும் கோவிற் பூசைக்கு ஏற்படுத்தப்பட்ட குருமார் கள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகவலைக் கவிராச வரோதயர் இயற்றினாரென்று கூறுவது பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றது. A
திருக்கோணேஸ்வரத்தின் மாண்பினைக் கூறுகின்ற புரா ணங்களான பிரம்மபூரீ பண்டிதராசர் அருளிச்செய்த தெட்சணகயி லாய புராணத்திலும், திருகோணமலை, பூg, மா. முத்துக்குமாரப் பிள்ளை அவர்கள் இயற்றிய திரிகோணாசல புராணத்திலும் கயவாகு மன்னனைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. அம்மன்ன னுக்கும் கோணேஸ்வரத்திற்குமுள்ள தொடர்பு பற்றிப் புராணங் கள் கூறுவதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகின்றது.
சரித்திர வரலாற்றின்படி கி. பி. 171-193 வரை ஒரு கயவாகு மன்னனும், கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மற்று மொரு கயவாகு மன்னனும் இலங்கையில் அரசாட்சி செய்திருக் கிறார்கள். இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அனுராசபுரத் திலிருந்து அரசாண்ட கயவாகுமன்னன் சைவசமயத்தை ஆதரிப்ப வனாயிருந்தபோதிலும் பெளத்த சமயத்தைச் சார்ந்தவன். பெளத்த பிக்குகளின் தூண்டுதலால் அகங்காரங் கொண்டு
س- 95 سسس "

Page 57
கோணேஸ்வரத்திலுள்ள கோயிலை அழிக்க வந்தான். கோணேசப் பெருமானின் அருட்சோதனைக்கு ஆளாகிக் கண்பார்வையை இழந் தான். வரும்வழியில் கோணேசரின் அருளினாலே ஒரு கண்ணின் பார்வையைப் பெற்றான். குளக்கோட்டு மன்னன் கட்டிய திருக் குளம் இருந்த இடத்திற்கு அயலிலே வரும்போது ஒரு கண் ஒளி பெற்றது. இதனால் அந்த இடம் கண் தளைத்த இடமாதலால் கண்தளை (கந்தளை) எனப் பெயர் பெற்றது. இந்த அற்புத நிகழ்ச் சியின் பின் கோணேசப் பெருமான் மீது பக்தியும், நம்பிக்கையும் கொண்டு கோணேசர் கோவிலுக்கு விரைந்து வந்தான். தூரத்தில் வரும் போதே கோணேசர் கோவில் கோபுரத்தைக்கண்டு தரிசித்த போது மற்றைக் கண்ணும் ஒளிபெற்றது. அந்த இடமும் கந்தளை (சின்னக்கந்தளை) எனப் பெயர் பெற்றது. வேற்று மதத்தவன் கோவிலை அழிக்க வருகின்றானென அறிந்து கோவிலிற் பூசை செய்த பாசுபதர்கள் கடலிற் குதித்து இறந்து விட்டார்கள். கோவி லிற் பூசைகள் நடைபெறவில்லை. பூசை தடைப்பட்டதற்குத் தான்தானே காரணம் என்பதை உணர்ந்த கயவாகு மன்னன் பெரி தும் வருந்தினான். இறைவனுடைய திருவருளாற் கடலில் இரண்டு அந்தணர்கள் வந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களைப் பணி வோடு வரவேற்றுக் கோவிற் பூசைகளைச் செய்வித்து விழாக்களை நடத்தி, மானியங்களும் வழங்கி அனுராசபுரத்திற்கு மீண்டான் என்பன புராணங்கள் கூறும் வரலாறுகள். இந்தச் சம்பவங்களைக் கூறும் தெட்சணகயிலாயபுராணப் பாடல்கள் சிலவற்றை எடுத்துக் காட்டாக இங்கே தருகின்றேன்.
1. நோக்கியதன் கண்டளைத்த காரணத்தால்
நுவல்பெயரும் கண்டழையென் றதற்கு நாட்டி
ஆக்கினன் இத்திருக்குளமும் நகரும் நாடும்
அரனார்க்குக் குளக்கோடன் அவன் முன்செய்த
பாக்கிய நன்றென மன்னன் உவந்தான் அந்தப்
பாசுபதர் பவுத் தரைக் கொல்பயத்தால், ஆவி
நீக்கியெழிற் திரிகோணைப் பெருமான் மேனி
நிருமலத்தின் ஒருமைபெறு நெறியிற் சூழ்ந்தார்.
(திருநகரச்சருக்கம் - 93)
இப்பாடலிற் கயவாகு மன்னனின் கண் தழைத்ததும், குளக் கோட்டுமன்னன் திருக்குளம் அமைத்ததும், பெளத்தராற் பாசுபதர் கள் கடலில் குதித்து இறந்ததும் பேசப்படுகின்றது.
حسیس 96 سے

2. கண்ணிரண்டும் ஒருபரம ஞானக்கண்ணும்
கயபாகு பெற்று உபய கரங்கள் கூப்பி எண்ணிரண்டு கலை மேலும் இரண்டாயொன்றாய்
இருந்த பராபரப்பொருளை இறைஞ்சியேத்தி அண்ணல் அருச்சனைக்கு எவரென்று அயருங்காலத்து
அலைகடலைக் கடந்திருவர் அந்தணாளர் நண்ணினரென்றனர் அவரைக் கொணர்மினென்றான் நாதனருச் சனைக்கு இவரே நல்லோரென்றான்.
(திருநகரச்சருக்கம் - 95)
இப்பாடலிற் கயவாகு மன்னன் கண்பெற்றதும், கோணேசப் பெருமானை மன்னன் வழிபட்டதும், அந்தணர்கள் கடலில் வந்த தும், அவர்களைப் பூசைக்கு நியமித்ததும் பேசப்படுகின்றது.
3. என்றும் அரன் அருச்சனைக்கு மிக்கோர் நீரென்று
எழிற்பதியின் முதன்மை இருவர்க்கும் ஈந்து
வென்றிதரும் நமதுகுலக் குரவோராகி
விளங்குமெனக் குருவரிசை மிகவுநல்கி
கன்றுலவு வெருகல்நதி தருப்பையாறு
கரம்பகரீர்க் கடலளவும் கணித்தவெல்லை
துன்றுதிசை நான்குமரன் தனக்கே யென்னச்
சொல்வியவன் கல்லெழுதித் துலங்கவைத்தான்.
(திருநகரச்சருக்கம் 96)
முதன்மை இருவர் - வேதநாயக முதன்மை, சைவநாயக முதன்மை.
இப்பாடலில் அந்தணர் இருவரைப் பூசைக்கு நியமித்ததை யும், வடக்கே கரம்பகம் தெற்கே வெருகல்நதி, மேற்கே தருப்பை யாறு, கிழக்கே கடல் ஆகியவற்றை எல்லையாகக்கொண்ட நிலத்தை மானியமாக வழங்கிக் கல்லெழுதி வைத்ததும், இரண்டு அந்தணர் களும் வேதநாயக முதன்மைக் குருக்கள், சைவநாயக முதன் மைக் குருக்கள் என்று நியமிக்கப்பட்டதும் பேசப்படுகின்றது.
4. வைத்தொருவர் புதைத்தநிதி முழுதுங்கோண
மலையரற்கே உரிமையிந்த வளநாட்டுள்ள கத்துகடல் வளமு மலைவளமு மற்றைக்
கரைவளமும் கழிவளங் கான் வளமுமெல்லாம் பத்திலெட்டுங் கயிலைப் பரற்கு மிக்க
பங்கிரண்டும் உங்களுக்குப் பகுதியாமென எத்திசையும் புகழ் அனுராச வேந்தன்
எழுதிய செப்பேடு அவர்க்கு ஈந்து இன்பமாக
(தெ-க-பு. திருநகரச்சருக்கம் - 97)

Page 58
இப்பாடலிற் கோணமலைந்ாதருக்குரிய வைப்பு நிதியோடு கய வாகுமன்னன் வழங்கிய மானிய நிலத்திலிருந்து வரும் சகல வருமா னங்களிற் பத்தில் எட்டுப்பங்கைக் கோணேசருக்குக் கொடுத்து மிகுதி இரண்டுபங்கை அந்தணர்களுக்காமெனச் செப்பேட்டில் எழுதி வைத்த சம்பவம் பேசப்படுகின்றது.
மேலே கூறப்பட்டுள்ள பாடல்களாற் குளக்கோட்டு மன்னன் காலம் தொடக்கம் கோணேசர் கோவிலிற் பாசுபதர்கள் எனப்படு கின்ற அந்தணர்கள் பூசை செய்து வந்தார்கள் என்பதும், கயவாகு மன்னன் காலந் தொடக்கம் வேதநாயக முதன்மை, சைவநாயக முதன்மை என்னுங் குருமார் பூசை செய்து வந்தார்கள் என்பதும் அறியக்கிடக்கின்றது.
கோணேஸ்வரத்திற்குக் குளக்கோட்டு மன்னன் வழங்கிய மாணி யங்களும், கயவாகு மன்னனும், பிறரும் வழங்கிய மானியங்களும் புராணங்களிலும், கோணேசர் கல்வெட்டிலும் கூறப்பட்டிருக்கின் றன. அன்றியும் கோவிற் தொழும்பாளர்கள் பற்றியும், அவர்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் பற்றியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் பற்றியும் புராணங்களும் கோணேசர் கல்வெட்டும் கூறுகின்றன.
கோணேசர் கல்வெட்டிலும், புராணங்களிலும் கூறப்படும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு உண்மை வெளிச் சத்துக்கு வருகின்றது. அதாவது புராணங்களிற் கூறப்பட்டுள்ள கயவாகு மன்னனுடைய வரலாறுகளைக் கவிராசர் இயற்றிய கல் வெட்டில் இடைச்செருகலாகவும், அகவல் என்ற உருவில் பிற்சேர்க் கையாகவும் சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.

கயவாகு ராசன் அகவல்
காலமதறிந்து சோதிடர் உரைக்கக் காலமே கயவாகு ராசனும் வரவக் கால மதனிற் பாசுபதர் இறக்கக் காலையிற் பூசைக் காளிலை யாக மன்னவ னன்ன வன்னிமை தன்னையும் தன்ம முடைய தானம் வரிப்பத்தையும் நன்மையுடைய அந்நாட்டவர் யாரையும் இன்னரன் பூசை இயற்றா தென்னெனத் தேசுபூத் திலங்குந் திருமுடி அரசே பாசுபதர்கள் பரிவுற்று இறந்தார், மாசிலாக் கோண மலைப்பரன் பூசை ஆசிலா தின்றே ஆகுமின் நேரம் கடிகை ஏழாகியும் கடல்புடை சூழ்ந்த படிமிகை யில்லைப் பார்த்திபா என்ன நெடிதுயிர்த் தயர்ந்து நிமலகோ வென்று படிமிசைச் சாய்ந்தான் பார்த்திபன் சாயுமுன் கடல்மிசை மறையோர் கமண்டலம் புத்தகந் திடமொடு கொண்டிவண் சேர்கின் றாரென அடலுடை அரசனும் அகமிக மகிழ்ந்து திடமுடன் அரன்றிருச் சேவடி வணங்கி மன்னனும் அந்த மலைக்கீ பூழிறங்கி முன்வந்தவர்க்கு முதன்மை கைகொடுத்தும் பின்வந்தவரைப் பெருமா ளனைத்து அன்னரிருவரையும் முன்னே விட்டு அரசனும் பிறகே அன்பொடு வந்து உரகவா பரண ணொளிதிகழ் பூசை திரமொடு செய்யெனச் சீருட னுரைக்கக் கருகுலக் கணக்கனும் கனசெல வுண்டே இன்றேழ் கடிகைமட் டெம்பிரான் பூசை நின்றே போனதா நிருப மேற் செலவிதென ஒன்றே யாயிரத் தொரு நூறு பொன்கொடுத்து
سیسہ۔ 99 مجمہ۔

Page 59
அன்றே பூசனை ஆற்ற விடுத்தான் தேனமர் தொடையான் திருமிகு வன்னிமை தானம் வரிப்பத்துத் தானென் பவரையும் ஆனதோர் தன்னாட் டணுகிய பேரையும் மானமா வரசன் வருகென வழைத்துப் படவர வசைக்கும் பரமர் கோணேசர்க்கு அடன்மிகு பூசைக் காடகம் போதா தரமுறு நாடுந் தான்போதா தெனத் திடமொடு கொடுக்கச் சிந்தையுள் நினைந்து வரவுறு வடக்கு வருகரம் பகமாந் திரமுறு மேற்குச் சிறந்த முனிச்சரம் தரைபுகழ் தெற்குச் சங்கமக் கண்டி உரமிகு கிழக்கு உகந்த வங்காளம் ஏற்றுகை கோணை யிறைவனுக்காமென நாற்றிசைச் சூலமு நாலுகல் நாட்டி கூற்றினை உதைத் த கோமான் பூசனைக்கு ஏற்றிடு வீரென்று யார்க்கு முரைத்து இலைகாய் கணிபூ இரணியம் நெல்முதல் விலைபெறு சரக்கின் மிகுந்த வாதாயம் பலபொரு ளெதுவும் பத்தினுக் கொன்று நிலைபெறக் கோணை நிமலர்க் களிப்பீர் வாய்மையா யிப்படி வழங்குவீராகில் தீமை வராது இருநிதி சேரும் தாமே யிதற்குத் தவறிழைப்பார்கள் ஆமையாய்ப் பிறந்தே அலைகுவர் தாமே பத்துப் பங்காக்கிப் பாங்குட னெட்டும் அத்தர் அறைமுத லாகிய இருப்பாம் மற்றிரு பங்கு மறையோர்க் காகும் சத்த வாரிதிசூழ் தம்பைமா நகரில் அற்புத முடனே முப்ப தவணம் நெற்பயிர் விளையும் நிலமு மளித்து அற்புதமாக அரன் திருப்பூசை நட்புட னென்றும் நடத்துவீரென்றான் நாட்டியக் கயிலை நற்றொழும் பினுக்கு மூட்டிய தலைமை முப்பத் திரண்டினர்க்கும் ஈட்டிய நிலம் புலம் யார்க்கு மளித்து வாட்டமில்லாமல் மகிழ்ந்து செயுநிதம் என்றவர்க் குரைத்தே யெழிற் கயவாகு மன்றல் சேர் தாதகி மாலை மார்பினனும்
ܚ ܲ100܃ -ܝ

கொன்றையஞ் சடைமுடிக் குரிசிலை வணங்க அன்றவர்க் கருள்செய வரசனு மகிழ்ந்து ஆடக மதனால் கேடகம் சமைத்துத் தேடரும் பங்குனித் திருநாட் கண்டு தோடலர் மார்பன் தொகுதிகள் நிறுத்தி நாடதற் கேக நயந்தெழுந் தனனே இன்புறும் இருசீர்ப் பாகையின் முதன்மை முன்புநின் றெமது மொழியது கேளும் நன்மை தீமை நமக்கு வந்தக்கால் அன்புடன் செய்வதா ரெனக் கேட்டார் சற்புத்திரனே தனியுண்ணாப் பொருளே அற்புதமாக அவர்க்குரை யென்ன நட்புடனெழும்பி நரபதி தனது பொற்பத மதனைப் போற்றி நின்றுரைப்பான் எங்கணா யகனே எழில் திகழரசே தங்கக் கட்டிபோற் றாமொரு வசனம் துங்கத் துடனே சொல்வதுண்டானால் மங்கா தம்மொழி மாறாது நடப்போம் என்ற பொழுதில் இராய பண்டாரமே இன்றவர் கேள்விக்கு இனிதா வுரையென தன்றென அவரும் தரபதி தனது புண்டரிகப் பதம் பொற்பொடு பணிந்து அரசர்க் கரசே யகமிக மகிழ்த்து திரமுற வோர்மொழி செப்புவீராகில் சிரமிசைக் கொண்டு சீருடன் யாங்கள் விரைவுடன் செய்வோ மெனவிளம் பினரே இன்பமொடரச ஏழிராயரைப் பார்த்து உங்குடிக் கோரோர் மகவழை யென்ன அன்புடனவரவ ரகமகிழ் மகவை பொன்மணியதனாற் புகழ வலங்கரித்து அட்டதிக்கும் புகழ் அரசன்முன் விடவே மட்டவிழ் பூங்குழல் மாணிக்க மெழுவர் இட்ட ரத்தினமணி யிலங்கு மாலாத்தி கட்டழகா மிவர்க் காமென விடுத்தான்.
அகவல் முற்றிற்று.
- 101

Page 60
பகுதி 2 - உரைநடைப்பகுதி மாணிக்கம் வரவு
தானத்தார் பகுதி மாணிக்கங்கள் திருநாமம்
அனுராசபுரியிற் கயவாகுமகராசன் கோணேசர் கோவிலுக்கு
மிருபாகை முதன்மைக்கு மெந்தக்காலத்துக்குஞ் செய்
தொழும்பு திட்டம் பண்ணியவகை
இது அரசனுரையறியவும்
இராயர் பெயரும் மாணிக்கங்கள் பெயரும்
புவிபுகழ் பொ ன் ன வ ரா ய ன் கொடுத்தது நாகரத்தின மாணிக்கம். தம்பிரானேற்றுக் கொண்டது.
செகமது புகழுஞ் சிதம்பரராயன் கொடுத்தது நவரத்தின மாணிக்கம். இராசர் ஏற்றுக்கொண்டது.
கருணைங்கடலான் காளிங்கராயன் கொடுத்தது கனகரத் தின மாணிக்கம். வன்னிமையேற்றுக் கொண்டது.
மதப்புலியென்னும் மகாகொம்பராயன் கொடுத்தது மரக தரத்தின மாணிக்கம். காராளரேற்றுக்கொண்டது.
சித்தசணிகர்க்குந் தென்னவராயன் கொடுத்தது. வயிரரத் தின மாணிக்கம். மீகாமனேற்றுக்கொண்டது.
திருவுறைமார்பன் செம்பகராயன் கொடுத்தது பளிங்குரத்
ன மாணிக்கம். கம்மாளரேற்றுக்கொண்டது.
இந்த மாணிக்கங்களை யேற்றுக் கொண்டபேர்கள் தங்கள்
தங்கள் மாணிக்கங்களுக்கு ஆடையாபரணமுடைக்கிசைந்த பட்டு வகை குடிநிலம் விளை புலம் மாடுகன்று ஆளடிமை கொடுத்து அரன்றொழும்பு செய்ய விடுவது.
எந்தெந்தக்காலத்தும் அந்தந்த வம்சத்து மனிதர் இப் படி ச்
செலவு கொடுத்து நடத்த வேண்டியது. இப்படிச் செலவு கொடுத்து
- 102 -

நடத்தாதவர்கள் வறுமையினாலும் நோயினாலும் இராசநெருக் கத்தினாலும் திரவியமழிந்து வம்சமற்று நரகத்துக்கு மேதுவார்க ளென்று அரசனாற் கூறப்பட்டது.
வரிப்பத்தார்
வரிப்பத்தாரில் அஞ்சு பண்டாரத்தார் திருநாமம்
கதிர்மணிமார்பன் கனகசபைப் பண்டாரம். கல்வரைப்புயனாங் கயிலாய பண்டாரம். அன்னசத்திரனாம் அப்பு:யாபதிப்பண்டாரம். சித்திரமொழியான் தி ரு வ டி பண் டா ரம். பெருநிதிக் குவையான் பெரிய பிள்ளைப்பண்டாரம். இவர்கள் வரிப்பத்தாரில் அஞ்சுபண்டாரத்தார்.
:
கலியாணத்துக்குச் செய்தொழும்பு முதன்மைமாருக்குட் கலியாணம் வந்தால் தானம், வரிப்பத்தார் செய்தொழும்பு
வரிப்பத்தாரிற் பெரிய பிள்ளைப்பண்டாரத்தார் கிளையில் மணி தர்கள் செய்தொழும்புகளாவன, வளவு வேலி கட்டல், வீடுவேய் தல் தெருச்சுற்றுச் செதுக்கல், தூர்த்தல், பந்தல் விதானஞ் செய் த ல், அடுப்பு வெட்டல், சந்தனமிடல் ஆகிய இவையாம்.
திருவடிப்பண்டாரத்தார் கிளையில் மனிதர்கள் செய்தொழும்பு சினாவன:-
நெற்குத்தல், சாடி கிடாரம் முதலிய சர்வ பாத்திரங்களும் விளக்கல், உதகமெடுத்தல், மெழுகல், தீற்றல், கல்லைக்கு இலையிடு தல் இவைகளேயாம்.
அம்புயாபதிப்பண்டாரத்தார் கிளையில் மனிதர் செய்தொழும்பு களாவன: விளக்கேற்றல், அரசாணியலங்கரித்தல், பூரண கும்பம் நிறுத்தல், தெற்குவித்தல், பலகைபோடல், பாய்விரித்தல், பூமாலை தொடுத்தல், பஞ்சணைவிதானம் பண்ணல் இவைகளேயாம்.
மேலே சொல்லப்பட்ட மூன்று கிளையில் மனிதருங்கூடிச் செய் புஞ் செய்தொழும்புகளாவன:-
* அமுது கறி ச மை த் தல், மீட்டல், ஆற்றல், பகிர்தல் அவை யாகும். r ro , - જે .
-س * 1693 حسسه

Page 61
வரிப்பத் தாரிற் பெரியபிள்ளைப் பண்டாரத்தார் கிளையில் மனிதர் தட்டும் வெற்றிலை பாக்குமெடுத்துவரத் தானத்தாரிற் செம்பவகராயன் கிளையில் மனிதர் நாட்டவர்களுக்கு வளமைப் பாடாக வெற்றிலை பாக்கு வைத்துக் கலியாணமின்னநாளிலின்ன நேரமென்று திட்டஞ்சொல்லி வருகிறது.
கனகசபை பண்டாரத்தார் கிளையில் மனிதர் முதன்மைக்குச் சொன்ன விதி தவறாமல் நீராட்டி மணக்கோலமாயலங்காரஞ் செய்வது.
பொன்னவராயன் கிளையில் மனிதர் தம் பிரான் மாணிக்க முதன்மை நாயகிக்கு விதிமுறை தவறாமல் மஞ்சனிராட்டி யலங் காரஞ்செய்வது.
வரிப்பத்தாரிற் பெரியபிள்ளைப் பண்டாரம், திருவடிப்பண்டா ரம், அப்பு:யாபதிப் பண்டாரம் இவர்கள் கிளையில் மனிதர் கோணே சர் கோயிலில் தங்கக்குடைகளும், பொன்னின் குடைகளும் முத் துக்குடைகளும், உருத்திராட்சக் குடைகளும், தங்கப்பூ மேற்கட் டியும், இரத்தினப்பிடிச்சாமரையும், தங்கத்திலிரத்தினம் பதித்த ஆலவட்டத்தாலும் மற்றுங் கோணேசருக்கு வளமையாகச் செய்யப் படும் சேவனை பாவனைகளுமாகிய இவற்றுடனே நாயகியையும் முதன்மைநாயகனையும் கூ ட் டி வர த், தன்வரிசையலங்கிருதத் துடனே தம்பிரான் மாணிக்கம் முதன்மைநாயகிக்குப் பக்கமாய் வருவது. வந்து மணப்பந்தரின் வாயிலிலே நிற்கக் கனகசபை பண் டாரத்தார் கிளையில் மனிதரிலொருவர் முன்னே வர, முதன்மை, பன்னிரண்டு முளப்பட்டுக்கொடுக்க, மொட்டாக்கிட்டுக் காலுக்கு நீர் வார்க்கிறது. பாதம் விளக்க முதன்மைநாயகி கற்கட்டுக்கணை யாழி கொடுப்பது. மணப்பந்தரின் கீழே நாயகனும் நாயகியும் பலகையின் மீதே நிற்கத் தம்பிரான் மாணிக்கம் முன்னேவரப் பதி னாறு முழப்பட்டு முதன்மை கொடுக்க மொட்டாக்கிடுவது.
இராசமாணிக்கத்துக்கு முதன்மைநாயகி பதினாறு முழு வெள் ளைப் பட்டுக்கொடுக்க வாங்கி மொட்டாக்கிடுவது.
முற்பாதைக்குத் தம்பிரான் மாணிக்கம் முன்னே நிற்பது, இராச மாணிக்கம் பின்னே நிற்கிறது. பிற்பாதைக்கு இராசமாணிக்கம் முன்னே நிற்கிறது. தம்பிரான்மாணிக்கம் பின்னே நிற்கிறது. இப்படி நிற்கக் கனகசபைப்பண்டாரத்தார் கிளையில் மனிதர் கண்ணுாறா லாத்தி திட்டம் பண்ணிக் கொடுக்க, இரண்டு மாணிக்க மும் ஆலாத்தியெடுத்துக் கண்ணுறு கழிக்கக் கனகசபைப் பண்டாரத் தார் கிளையில் மனிதர் ஆலாத்தித் தட்டு வாங்குவது
- 104 me

அக்கிணி சாட்சியாகத் திருமங்கலியந் தரித்து, அரசாணிவல மாக வந்து, அம்மி மிதித்து, அருந்ததிகாண்பித்து, ம ன வ றை க் கட்டிலிலே நாயகனும் நாயகியுமிருக்கத் தம்பிரான் மாணிக்கமுங் கனகசபை பண்டாரத்தார் கிளையிலொரு பெண்பிள்ளையுமாகிய இருவரும் கீழே தங்கள் வரிசைப் பிரதாபமுடனேயிருக்க வேண்டி tJS •
அது நிற்க, பட்டணநகரிற் பிரதானிமாரும் நாட்டுச் சனங்களும் அக்கலியாண சபைக்கு வருதலைக்கண்டு தானம் வரிப்பத்தாரெதிர் கொண்டு போய், நன்முகமன் வார்த்தை சொல்லிக் கூட்டிவந்து பந்தரின் கீழே நிற்க, வரிப்பத்தார் பாயெடுத்துக் கொடுக்கத் தானத் தார்வாங்கி அவரவர் நெறி மு  ைற மை த வறா மல், அந்தந்தத் தொகுதியாயிருத்த வேண்டியது. வரிப்பத்தா ரி லை யெடுத் து க் கொடுக் கத் தானத்தாரந்தவரன் முறையாகக் கல்லைக்கிலை கொடுக்க வேண்டியது. வரிப்பத்தார் தண்ணிர்ச் செம்பெடுத்துக் கொடுக்கத் தானத்தார் கல்லைக்குத் தண்ணிர் தெளித்துவருகிறது. வரிப்பத்தார் அமுதுகறியெடுத்துக் கொடுக்கத் தானத்தார் அந்தந் தப் பகுதியறிந்து பகிரவேண்டியது. சகலரும் அறுசுவையோடு போசனம்பண்ணிய பின் வரிப்பத்தாரில் முன்னிலை கொடுத்த குடி யில் மனிதர் கல்லையெடுத்துப் போடவேண்டியது. வரிப்பத்தார் குடங்களிலே தண்ணிர் கொண்டு வந்து வைக்கத் தானத்தார் செம்புகளிலே வார்த்துக் கொடுக்கச் சகலரும் கைவாய் கழுவிப் பெருங்கூட்டமாயிருக்க, வரிப்பத்தார் தட்டங்களிலே பாக்கு வெற் றிலை கொண்டுவரத் தானத்தார் வாங்கி அவரவர் பகுதியறிந்து, வரன்முறையாக வெற்றிலை பாக்குப் பகிரவேண்டியது. வரிப்பத் தார் பல பல வாசனை கமழக் கிண்ணங்களிலே சந்தனங் கொண்டு வந்து கொடுக்கத் தானத்தார் வாங்கி உத்தள வலங்கிருகமாகப் பூசவேண்டியது.
அதன் பின்பு, அவரவர் மிகுந்த உவகையுடனே எழும்பத்தானம் வரிப்பத்தார் அவர்களை முன்னேவிட்டுக் கூட்டிப்போய் வாயிலின் புறத்தே நின்று இருகடலொருகடலானாற்போல இருதிறத்தாரும் தன்முகமனான வலங்கிருதவனங்களும் பேசி ஒருவரையொருவர் தழு விக் கொண்டு மிகுந்த உவகையுடனே அவர்கள் தத்திமிடங்களுக் குச் சென்ற பின்னர், தானம் வரிப்பத்தார் சதலுரும் இருபந்தியாக விருந்து போசனமருந்திப் புளகத்துடனேதந்தங்கல்லையைத் தாமே யெடுத்தெறிந்து கைவாய் நீர் கொண்டுகிழுவிப் பாக்கிலையருந் திப் பன்னீர் சந்தனம் வா சனை தமம் மதிழ்லுபீன் பூசி இன் பஞ்செருக்க யாவருமிருக்கிறவேளையில் ஜீதகீழையீெழும்பி வர
is
چ 105*-سے

Page 62
வேண்டியது. வருவதுகண்டு அனைவோருமெழும்பிப் பாதத்தில் நமஸ்காரணம் பண்ணவேண்டியது.
அப்போது முதன்மையிருகையேந்தி இரு கண்முகிழ்ந்து உங்கள் நமஸ்காரம் கோணநாயகருக்குப் பொறுதியென்று சொல்லவேண்டி
4/57.
அப்போது தங்கப்பிரகாசமான சிங்காரமேடையில் முதன் மையையிருக்கப் பண்ணி நீங்களெல்லீரும் நிற்குந்தருணத்தில், தரா தலம் புகழுந் தனியுண்ணாப்பூபாலவன்னிபந் தனது வரிசைப் பிர தாப அலங்கிருதத்துடனே வரவேண்டியது. வருகிறவேளை நீங் களனைவருமெதிர் கொண்டிறைஞ்சி மணப்பந்தரின் கீழே மணித் தவிசிலிருத்த வேண்டியது. அந்த வேளையில் வன்னிபமும் இரு பாதை முதன்மையும் அகமிகமகிழ்ந்து அவரவர் குடி க் கி சைந்த தலைமையும் வரிசைமாணிபமுங்கொடுத்து அவரவர் பூணத்தக்க ஆடையாபரணமுங் கொடுத்துப் பொன்னவராயன் குடிக்குக் கரு குலக்கணக்குங் காலிங்காகாளிங்கராயன் குடிக்கு நெல்லுப் பண்டக சாலை நிலைமையுங் கொடுத்து, கெங்கராயன் குடிக்கு எண்ணைக் கிணற்றுக்கதிகாரமுங் கொடுத்துக் கொம்பராயன் குடிக்கு அரிசிப் பண்டகசாலை நிலைமையுங் கொடுத்து, சிதம்பரராயன், தென்னவ ராயன், செண்பகராயன், கனகசபைப்பண்டாரம், கயிலாய பண் டாரம் இவர்களைந்து பேருக்கும் பெரியபண்டகசாலையில் ஆபர ‘ணாதி நவமணிக்குவைகளிலிருக்கும் பொக்கிஷ வீட்டுக்குப் பெரிய நிலைமையுங் கற்பித்து, இவையெல்லாங் கருகுலக்கணக்கிலும் பதிப் பித்து, அன்று நிதானம் பண்ணி அன்றுகிடைத்தபடியே எந்தக் காலத்துக்கும் அவரவர் குடிக்கு நடக்க வேண்டியது; இது நிச்சய மென்று அரசனுரை நிறுத்தியது.
இப்படிச் செய் தொழும்பிலேதும் மாறாட்டமிருக்குமானாற் கனகசுந்தரப் பெ ரு மானிட த் தில் மகாபெரியவளமைப்பத்தியிற் கேட்டறிந்து கொள்ளவேண்டியது.
தீமைக்குச் செய்தொழும்பு முறை
முதன்மைமாருக்குள் தீமைவந்தாற் செய்தொழும்புகளாவன:- வரிப்பத்தார் நாலு காலிலே பந்தரிடுவது, இரண்டு தவிலும் இரண்டு தம்பட்டமும் ஒற்றைக் குழலும் பறையர் சேவிப்பது. அவரவர் செய்தொழும்பு முன்செய்தது போலப் பார்த்துச் செய்யவேண்டி யது. முதன்மை ஆறுமுளப்பட்டுக் கொடுக்க வரிப்பத்தார் வாங்கி மொட்டாக்கிட்டுப் பந்தரின் கீழிருந்து நெல்லுப் பொரிப்பது.
--س۔ 106 سے

தானத்தார் நெற்பொரி சிலையிலே வாங்கி பந்து கட்டுகிறது, கட் டிலங்கரிக்கிறது, பாவாடை கட்டுகிறது. வரிப்பத்தார் தேர்கட்டுகி றது. தானத்தார் பிரேதம் வெளியிலெடுத்துவாறது, உதகமெடுக் கிறது. வரிப்பத்தார் நீராட்டுகிறது. இருதிறத்தாருங் கட்டிலிற் பிரேதமேற்றுகிறது, வாசனை பூசுகிறது. தானத்தார் முற்பந்தி மாரடிக்கிறது. வரிப்பத்தார் பிற்பந்திமாரடிக்கிறது, பிரேதமெடுக் கிறது. காராளர் தேரெடுக்கிறது. தானத்தார் பாடையெடுக்கி றது. வரிப்பத்தார் கட்டையடுக்குகிறது, கட்டையிலே பிரேதந் திட்டம் பண்ணுகிறது. காராளரும் இருதிறத்தாருங்கூடி உதக மெடுத்துவருகிறது. வரிப்பத்தார் கொள்ளிவைத்துக் குடமுடைக்கி றது. தானத்தார் மூன்றாநாட்காடாற்றத் தண்ணிர் அள்ளியூற்று கிறது. மேடை போடுகிறது வரிப்பத்தார் பந்தல்போடுகிறது.இள நீர் வைக்கிறது, நவதானியந்தெளிக்கிறது. அணரி கலனனைத்துந் தானத்தாருக்குரியது. வஸ்திரமனைத்தும் வரிப்பத்தாருக்குரியது. இத்தொழும்புகள் எந்தக்காலமும் நடந்துவரும் படி அரசன்கட்டளை
யாதாமொருவரிந்தக் கட்டளைக்கு மாறுபட்டால் தொண் ணுாற்றாறு மயிற்பீலி கட்டிய கட்டால் மூன்றடியுமடித்து மூன்று திருநீற்றுப்பழமுங் குற்றம் வாங்குகிறதென்று கயவாகு மகாராசன் சொல்லச் சர்வமான பேருஞ் சரீரம் நடுங்கி அஞ்சிப் பயந்து ஒடுங்கி நின்று தேவரீர் அடியேங்களுக்கு இப்படிக்கொத்த அதிக வாக்கினை கட்டளை பண்ணினால் அடியேங்கள் தாங்கமாட்டோம், எங்களுக் கிப்படி அதிக ஆக்கினைக் கட்டளை பண்ண வேண்டி யதில் லை, தேவரீரென்ன கட்டளை சொன்னாலும் அந்தப்படி நடப்போ மென்றும் எந்தக்காலத்தும் அரசருரை தவறோமென்றும் அரசன் முன் விசுவாசஞ்சொன்னார்களென்றவாறு,
இந்தத் தொழும்பு முதன்மைமாருக்கு வம்சமிகுந்திருக்குதென்று எல்லாருக்குஞ் செய்ய வேண்டியதில்லை. கோயில் முதன்மைப்பட் டத்துக்கு வருகிறவருக்கும் முதன்மைநாயகிக்குஞ் செய்ய வேண்டிய தென்று அரசனுரை நிறுத்தியது.இன்னுமரசன் சொன்னகட்டளை:- எந்தக் காலத்துக்கும் இருபாகை முதன்மை மனுஷர்கள் ஒருபாதைக் கொருபாதை கொள்வன கொடுப்பண்பண்ணி இருபாகையுமொன் றாய் நடக்கப்படாது, தானம் வரிப்பத்தாருமப்படியே ஒருவருக் கொருவர் கொண்டு கொடுத்து ஒருவம்சமாகப்படாது. எந்தக் காலமும் முதன்மைக்கு முதன்மை எதிரிக்குடியாகவும் தானம்வரிப் பத்துமப்படியே எதிரிக்குடியாகவுமிருக்க வேண்டியது.இந்தத் தேவ வாக்குத் தவறியொன்றுபட்டு நடப்பவர்களுக்கு இராசவில்லங்கத் தாலும், நோயாலும், வறுமையாலும், சந்ததியற்றுநரகத்துக்கு மேது ”
سے : 107 سس۔

Page 63
வார்கள். மேற்சொன்ன கட்டளைக்கு மாறாய் நடப்பதையறிந் துந் திருத்தம் பண்ணாத இராசாக்களும் இது காரியமிராசாக்கள றியவுரையாத காரியகாரர்களும் மேல்சொல்லியபடியே நரகத்துக்கு ஏதுவார்கள்.
சூகரவேட்டை திருச்சூகரவேட்டையாட அரசனிட்டகட்டளை
தம்பிரான் மாணிக்கம் தன்னுடைய வரிசைப்பிரதாபமுடன் வந்து அலங்கிருதப்பூம்பந்தரின் கீழே நின்று பீ தாம் பரப் பட்டு முடுத்து, முத்துக்குச் சுத்தலைப்பாவுங்கட்டி, தங்க வீட்டியும் பட் டாடை சுற்றித் தன்றோளிலே வைத்துக்கொண்டு, ஆதியாகிய கோணேநாயகரையுமெழுந்தருளப்பண்ணி முன்னே போகப் பின்னே நடந்து திருச்சூகரம் நிற்குமிடத்துக்குப் போய், அவ்விடத்திலே ஆதியாகிய கோணநாயகர் அனேகதிருவிளையாடல்கள் செய்தரு ளிய பின்னர்த் திருச்சூகரவேட்டையாடுகிறதற்குத் தம்பிரான் மாணிக்கம் சூகரத்துக்கெதிரேவர, இருபாகை முதன்மையுமீட்டி யெடுத்துக் கொடுக்க, கனகசபைப்பண்டாரத்தார் ஈட்டி தொட்டுக் கொடுக்க, தம்பிரான் மாணிக்கம் பன்றிகுற்றுகிறது. அதன்பின்பு இராசமாணிக்கம் தனது அலங்கிருத வாட்சியத்தோடே கொண்டு போய் விழா மண்டபத்தில் ஒப்புவிக்கிறது. வணிகரையடிக்கிறது வன்னிபமாணிக்கமும் செட்டிகள் மாணிக்கமும் வரிப்பத்தாரிற் பெரிய பிள்ளைப்பண்டாரத்தார் கிளையில் மனுஷரும் மஞ்சள ரைத்துக் கரைத்துக் கிடாரங்களில் வைத்த கா ரா ள மாணி க் கம் அள்ளி வன்னிபத்துக்கும் இருபாகை முதன்மைக்கும் இராய ருக்கும் பண்டாரத்தாருக்கும் மற்றும் போதுமான மனுஷருக்கும் உள்மண்டபத்தினின்றும் மஞ்சனிரூற்றிவிடுவது. மீகாமன் மாணிக்க மும் கம்மாளர்மாணிக்கமும் சகலருக்கும் மஞ்சனிரூற்றிவருவது. இது தேவியுடைய கட்டளைப்படிக்கு வெள்ளியங்கயிலாயத்தில் தேவஸ்திரிகள் மஞ்சள் நீரும் வாசனைகளும் அள்ளியெறிந்தி விளையாடின முறைமை. இந்த மஞ்சள் நீரிலொருதிவலையாகு தல் சரீரத்திற்படாத பேருக்குத் திருவிழா சேவித்த பலனும் தீர்த்த மாடினபலனுங் கிடையாதென்று ஆதியாகிய பரமேஸ்வரி திருவாய் மலர்ந்தருளியவாறு, இந்த வசனங்கள் கருகுலக்கணக்கன் பத்ததியிலும் புலவன்பத்ததியிலும் கனகசுந்தரப்பெருமாள் பெரியவளமைப்பத்ததியிலு
முண்டு.
۔ س 168 سسے

குடிமை வரவு
இரவிகுலமதனில் வருகயவாகு மகாராசன் சோழவளநாட்டாலழைப்பித்தது:- கொல்லன், குயவன், நாவிதன், ஏகாலி, வள்ளுவன் இவர்களிலைந்தைந்துகுடி. இவர்களுக்குக் குடிநிலம் விளைபுலம் முதலான சருவகாரியமுங் கொடுத்துக் கோணேசர் கோயிற் குடிமை யென்று திட்டம்பண்ணி அவரவர்க்கடுத்த வஸ்திரபூஷணங்களுங் கொடுத்து அரசனுரைத்த கட்டளை:- வன்னிபம், இருபாதை முதன்மை, தானம், வரிப்பத்து இவர்கள் சொன்ன கட்டளைப்படி நீங்கள் நடக்கவேண்டியது. இந்தக் குடிமைகள் சோழநாட்டிற் காராளர் குடிமையானதினால் நீங்கள் சகலரும் மானமாய் வைத்து நடத்தவேண்டியது. இது கனகசுந்தரப் பெருமாள் பத்ததியிற் பதிப்தித்த முறையாக நடக்கவேண்டியது.
கயவாகுராசன் உபயம்
திருமருவு கயவாகு மகராசனும், தனதுபடைமனுஷம், மாவெலி கங்கையருகாக வெகுவிசாலமான வெளியுந்திருத்தி, அதற்கடுத்த அணைகளுங்கட்டுவித்து, அதன்மேல் பால் வெகுகுளங்களுங் கட்டு வித்து ஆயிரத்து முன்னூற்றைம்பதவண நெல்விதைப்புத்தரையுந் திட்டம்பண்ணிப் பத்துக்கொன்று அடையுமெடுப்பித்து, அதற்கருகாகத் தென்னை பன்னிராயிரம், புன்னை பன்னிராயிரம், இலுப்பை பன்னிராயிரம், பூகம் பன்னிராயிரம், ஏரண்டம் பன்னிராயிரம், பசுவினம் பன்னீராயிரம், மேதியினம் பன்னிராயிரமும், பலபல விதமான புட்பவனச் சோலைகளுஞ் செய்வித்து, ஆதியாகிய கோணநாயகரே இகபர மிரண்டுமறியாமல் நரசென்மமாகப் பிறந்த அடியேன் எனது சிற்றறிவினாற்றேவரீருடைய தமனியவாலயத்தை அழித்து வேரங்கட்டுவேனென்று சொன்ன பிழையைப் பொறுத்துக்கொள்ள வேணுமென்று விழுந்து நமஸ்காரம் பண்ணி இதுவெல்லாங் கோணேசர்க்கென்று தாரைவார்த்துக்கொடுத்துக் குளக்கோட்டு மகாராசா ஒருநாளைக்கிரண்டவண அரிசி பூசைக்குத் திட்டம்பண்ணினது. இப்போது அதிகமாக நாளொன்றுக்கு ஒரவன அரிசியும் அதற்கடுத்த செலவுங் கட்டளைப்பண்ணி ஒருநாளைக்கு மூன்றவண அரிசி பூசை நடக்கும்படி திட்டம்பண்ணிக் கனகசுந்தரப் பெருமாள் கணக்கிலும் பதிப்பித்துச் செப்பேடுவரைந்து கொடுத்து வன்னிபம் இருபாகை முதன்மை முதலாகச் சகலரையுமழைப்பித்துத் தான் கட்டுவித்த வச்சிரமணிமண்டபத்தினின்று சகலருக்குஞ் சொல்லும் வசனம்- ஆதியாகிய கோணநாயகருடைய கிருபை அரியயன் முதலான எவருக்கும் அளவிடற்கரிதாயிருக்கும்
حسسه 109 -سسه

Page 64
மூர்த்தியைத் தரிசனை பண்ணிக்கிருபை பெறத் தக்க இராசாக்கள் மிகுதியுண்டு. அவருள் சில ராசாக்களுடைய கதை சொல்லுகின் றேன் கேட்பீர்களாக,
புவனேககயவாகு
எங்கள் குலத்துப் புவனேககயவாகு மகாராசனென்னுமரசன் முனிச்சரப்பதியில் ஆலயமும் திட்டம்பண்ணித் திருக்கோணேசர் சிவாலயமுமுண்டுபண்ணி அனவரதகாலமும் பூசைநடப்பித்து வருகிற நாளையில், திரிகயிலைநாதர் பெருமை கேட்டுவந்து பாவநாசச் சுனையிற் தீர்த்தமும்படிந்து சிவாலயத்தைப் பிரதட்சணம்பண்ணிக் கோணநாயகர் திருப்பாததரிசனமுங்கண்டு, தங்கக்கட்டியாற் றுலாவாரமுமேற்றி மாணிக்கம் பதித்த பூரண சந்திரபதக்கமுஞ் ாத்துவித்து ஆயிரத்தொண்ணுாறு பொன்கொடுத்து அபிஷேகமும் பண்ணுவித்துச் சிறிது திரவியமும் அறைமுதலிலிருப்பாக வைத்து இருபாகை முதன்மைக்குங் கோயிற் றொழும்பு செய்பவர்களுக்கும் மனப்பூரணமாக வெகுநகைகளுங் கொடுத்துக் கருகுலக்கணக்கிலும் பதிப்பித்துத் தென்னை,புன்னை, மா, இலுப்பை, பூகம ஆயிரமாயிரம் நிரைத்த பூங்காவனங்களுமுண்டுபண்ணிக் கோணநாயகருக்குத் திட்டம்பண்ணிக் கொடுத்துப்போட்டுத் தன் நகரத்துக்குப் போய் நெடுநாள் இராச்சியம்பண்ணி இருக்கிற நாளையில் ஆதியாகிய கோணநாயகரருளினால் மனுனேககயவாகுவென்றொரு மகவு கிடைத்தது. அந்தப் பிள்ளையிருக்கப் புவனேககயவாகு சிவபதஞ் சேர்வான்.
பரராசசேகரன் செகராசசேகரன் வரவு
பரராசசேகரன், செகராசசேகரன் என்றிருவர் திரிகயிலைக்கு வடமேல்பாலில் இராச்சியம் பண்ணியிருப்பார்கள். அவர்கள் திரிகயிலைப் பெருமைகேட்டுவந்து பாவநாசதீர்த்தமும் படிந்து இரவிகுலதிலகராகிய தேவராசகுளக்கோட்டுமகராசனுக்கு இத்தனை யைசுவரியங்களைக் கொடுத்துத் தடுத்தடிமை கொண்ட ஆதியாகிய கோணேநாயகரேயென்று விழுந்தழுது நமஸ்காரமூம் பண்ணி அறு பத்துநாலு சிவாலயமுந்தரிசனைபண்ணி எழுபட்டுமுத்து மாலையும் வயிரரத்தினம் பதித்த தங்கப் பதக்கமுஞ் சாத்துவித்து முத்துக்குடை பவளக்குடை கொடுத்து வெகுதிரவியமும் அறைமுதலிருப்பாக வைத்துக் கருகுலக்கணக்கிலும் பதிப்பித்து நாட்டில் நூல் வாங்கிக் கோயிலுக்கொப்புவிக்கிறதற்கு ஒரு இறை கடமையில்லாத திரியா பூரும் அதற்கு ஏழுகுளமும் ஏழுவெளியுங்கொடுத்து எந்தக்காலத்
- 110 1

துக்குந் திரிக்கு நூல் வாங்கிக்கொடுக்கச்சொல்லித் திட்டமும்பண்ணி, ஆதியாகிய கோணைநாயகர் பாதாரவிந்தந்துதிசெய்து விடையும் பெற்றுத் தங்கள் நகரஞ்சென்று வெகுநாளிராச்சிய பரிபாலனம் பண்ணிச் சிவபதஞ்சேருவார்கள்,
ஆரியச் சக்கரவர்த்தி வரவு
ஆரியகுலராசன், பரராசசேகரன் செகராசசேகரனிவர்களாண்ட நாட்டை இராச்சியம் பண்ணிவருகிறநாளையிலே திரிகயிலைநாதர் பெருமைகேட்டு வந்து, பாவநாசச்சுனையிற் தீர்த்தமும் படிந்து ஆலய மடங்கலும் பிரதட்சணஞ்செய்து திருமுன்னே வந்து அலரிகுலதிலக ராகிய குளக்கோட்டு மகாராசனைத் தடுத்தடிமை கொண்ட சிறீகமலாபதமிதுவோ வென்று விழுந்து நமஸ்காரம்பண்ணி எழும் பிக்கனகவாபரணமும், நவரத்னமாலையுஞ்சாத்தித் தங்கக்குடை பொன்குடையுங் கொடுத்து, வெகுதிரவியமும் அறைமுதலில் இருப் பாக வைத்துக் கருகுலக்கணக்கிலும் பதிப்பித்துக் கோனைநாயகரி டம் விடையும் பெற்றுத்தன் நகரத்துக்குப் போவான். அந்த நாளில் இந்தவிடத்திற் பறங்கிக்கலாபம் வரும். அறிந்து முன் சொன்னபடி நடத்திக் கொள்க.
கயவாகுராசன் ஆதியாகிய பரமேஸ்வரனுடைய திருமேனியிற் றொட்டுப் பூசை பண்ணும் இருபாகை முதன்மையுங் கனகமாம ணித்தவிசின்மீதிருத்தித்தான் பணியநின்று சொல்லும் வசனம்:- இரவிகுலமதனில் வரும் அரசருக்கென்றும் இராசகுருராசரெனவு மருளி, முன்வந்த முதன்மைக்குத் திரிகயிலைவரு கனக குருராஜ சைவ நாயக முதன்மை என்றும், பின்வந்த முதன்மைக்கு விரிகிர ணத்திரிகயிலைவரு கணககுருராஜ வேதநாயகமுதன்மையென்றும் இருபேருக்கும் பட்டமுங்கட்டிச் சகலமானபேருக்குங் கயவாகு மகாராசாச் செல்லும் வசனம் :-
தேவ ராசராசராகிய திருக்குளக்கோட்டுமனுவேந்தர் இந்தத் திரிகோணாசலத்தின்மீதே கோணநாயகருக்கு அதிகமான சிவாலயங் களும் எந்நாளும் மாறா மடைபாயும் திருக்குளமும், வயல் வெளி யும், திரவியக்குகைகளுந் திட்டம்பண்ணி, உங்கள் பரவணியென்று அந்தந்தக்காலந்தந்தப்படிக்கு எந்தக்காலமும், இந்தத்திருப்பணி, திருக்குளம், செந்நெல்விளைவயல், பூங்காவனம், மாடகூடம், மண் டபம், படிகள், திரவியக்குகைகள் சிதைவுபடாமற் பராமரித்துக் கோணநாயகருக்குத் திருப்பூசை அபிஷேகம், கிராமதேவதைபூசை, சிவாலய அலங்காரம் திருக்குளத்திற்பூசைவிதி, இவைமுதலாகச் சிவாலயத்துட்பணிவிடை, அவரவர் செய்தொழும்பு, இன்று செய்தது
سس 111 س- ۶۰،

Page 65
போல அணவரதகாலமுஞ்செய்யவ்ேண்டியது, அவர்வர்களுக்கு அன்று அரசன் கட்டளைபண்ணியபடி புரோசனமெடுத்துக்கொள்ளவேண்டி யது. சிவதிரவியத்திலேதாகிலுங் கவர்ந்தெடுத்தபேர்கள் நோயி னாலும் வறுமையினாலும் வாடிச் சந்ததியற்று நரகத்துக்குமேது வார்கள். இது அறிந்து சகலமானபேரும் நடக்கவேண்டியதென்று சொல்லி எல்லாருக்கும் அமுதமானவார்த்தையும் அவரவர்களுக்குச் சொல்லி வெகுதிரவியங்களுமறைமுதலிலொப்பித்துக் கருகுலக்கணக் கிலும் பதிப்பித்து, திருக்குளமும் சிவாலயமும் உங்களுக்குப்பார மென்று யாவர்க்குமுகமனருளி, இருபாகைமுதன்மை யிருபதம் வணங்கி, இறைபதமுள்ளத்துள் வைத்து, எழில்குலவமனுராசபுரி நகரடைந்தனனிரவிகுல கயவாகுவே. கயவாகுமகாராசவுந் தனது நகரஞ்சென்று கோணைநாயகர்பொற்பாதமிருதய கமலத்துள் வைத்து அனவரதகாலமுஞ் சிவபூசைசெய்து வெகுகாலம் இராச்சிய பரிபாலனஞ் செய்து தேவானுகூல போகபோக்கியங்களுங்கிடைத்துச் சிவபதஞ்சேர்ந்தானென்றவாறு.
இந்தராசாக்கள் கொடுத்த திரவியங் கருகுலக்கணக்கிலெழுதி யது, ஆகவிட்டபெருங்கணக்கு கனகசுந்தரப்பெருமாள் மகாபெருங் கணக்கிலுண்டு. இது நிசமநியவும்.
திரவிய இருப்பு
ஒருகாலத்தில் சோழவளநாடன் தனியுண்ணாப் பூபாலவன்னி பமும், இருபாகைமுதன்மையும், ஏழு இராயரும், அஞ்சுபண்டா ரத்தாரும், முப்பத்திரண்டு தலைமைக்காரரும், மற்றுமுள்ளயாவ ரும் மரகதப்பலகை பரவிய வசந்தமண்டபத்திற் கூடியிருந்து அவர் களுள் வன்னிபம் கருகுலக் கணக்கனைப் பார்த்துச்சொல்லியது:- காற்றையுங் கடலையுங் கனலையும் முகிலையுங் கூற்றையுங் கொடுமிருகசாதிகளையுங் கோதையர் மனதையும் அளவிட்டாலும் உன்னுடைய இருதயம் அளவிடுதற்கரிதென்று இனியவார்த்தை பேசி புன்முறுவல்கொள்ள கருகுலக் கணக்கனு மெழும்பி நமஸ்காரம் பண்ணித் தேவரீர் அடியேன்பேரில் எத்தனை யபிமானம் வைப் பீர்களோ அத்தனை புத்தியும் விசாரமுமுண்டென்று சொல்லவே வன்னிபமுஞ் சந்தோஷமுற்று கருகுலக்கணக்கனைக் கேட்டவச GSTLD : -
வரராமதேவர் முதலான எட்டு இராசர்களும் அறைமுதலில்
வைத்த பொன் எம்மாத்திரமென்று கணக்கிட்டுத் திட்டஞ் சொல் லுதியென்னக் கருகுலக்கணக்கன் சொன்னவசனம்:-
-, - 112 m

ஆதியாகிய. கோணைநாயகர் அறைமுதலிற் பெரியகணக்கும், வளமைப்பத்ததியும், ஆதியான கல்வெட்டும், அந்தக்காலத்திலேயே குளக்கோட்டு மகாராசாத்திட்டம் பண்ணிவைத்த கணக்கும், வட திசையதணிற் சோழவளநாடன் திருநெல்வேலிக் கதிபதியான கண்க சுந்தரப் பெருமாளிடத்திலுண்டு. எங்கள் கையிற் கணக்கு வரவும் செலவும் இவற்றின் கணக்குக்கண்டு வருஷ மொருக்காற் சகலரு மிருந்து கணக்குப்பார்த்துக் கனகசுந்தரப் பெருமாள் பெரியகணக்கிற் பதித்துவருவது. இப்படியான பெருங்கணக்கு அவரிடத்திலேயன்றி எங்களிடத்திலில்லையென்று அக்கருகுலக்கணக்கன் சொல்ல, அப் பொழுது வன்னிபமும் மற்றுமுள்ளயாவரும் பேசிக்கொண்டு இத்திரு மலையின் பெருமைப்பாடும் இதனிலுள்ள புதுமைகளும் எங்கோ மானாகிய குளக்கோட்டு மகாராசா நிறுத்திய திட்டங்களுங் கேட் டறியவேண்டுமென்று செண்பகராயரையும், பெரியபிள்ளைப் பண் டாரத்தாரையும், ஐந்து குடிமையையுங் கூட்டிவிட்டு நீங்கள் நிலா வெளியென்னுமூருக்குப் போய்க் கனகசுந்தரப் பெருமாளுக்குச் சொல்லும் வசனம்:
தம்மிடத்திலே மகாபெரும் புதினமான சில பெருமைகள் கேட்க வேண்டுமென்று பெரிய கணக்கும் வளமைப்பத்ததியும், கல்வெட்டுப் பத்ததியுமெடுப்பித்துக்கொண்டு நாங்கள் வரச் சொன்னோமென்று கூட்டிக்கொண்டு வாருங்களென்று சொல்ல அவர்கள் சென்று கூட்டிவர வன்னிபமும் முதன்மையுந் தவிர மற்றுமுள்ள யாவரு மெதிர்கொண்டிறைஞ்சி வன்னிபத்துக்குச் சரியான வரிசையுடனே இருத்தி ஆதியாகிய கோணைநாயகர் கிருபையையும் குளக்கோட்டு மகாராசாவுடைய பெருமையையும் பேசிக் கொண்டிருக்கும்போது தனியுண்ணாப் பூபாலவன்னிபமும் இருபாகை முதன்மையுங் கனகசுந்தரப்பெருமாளைக் கேட்டவசனம்:-
வரராமதேவர் முதலான எட்டு இராசாக்கள் அறைமுதலில் வைத்த இருப்பு எம்மாத்திரம் என்றும் நகைகள் எம்மாத்திரமென் றும் ஒருதிட்டம் பார்க்க வேண்டுமென்று கேட்க கனகசுந்தரப் பெருமாள் சந்தோஷமுற்றுப் பெரியபத்ததி பார்த்துச் சொல்லியது:-
வரராமதேவர் அறைமுதலில் வைத்த பொன் களஞ்சு 8ே9 களஞ்சு பொன்னகை களஞ்சு 634 களஞ்சு, குளக்கோட்டு மகா ராசா அறைமுதலில் வைத்த பொன் களஞ்சு 8481 களஞ்சு. பொன்னகை களஞ்சு 9512 களஞ்சு. கயவாகுமகாராசா அறை முதலில் வைத்த பொன் களஞ்சு பொன்னகை களஞ்சு 249. புவ னேககயவாகு அறைமுதலில் வைத்த பொன் களஞ்சு 9284, பொன்
سے 113 --سس۔ سی۔۔

Page 66
னகை எனஞ்சு 3926. நளச்சக்கரவர்த்தி அறைமுதலில் வைத்த nெள் காஞ்சு 89211. பொன்னகை களஞ்சு 2948. பரராசசேக ான் செகராசசேகரன் இவர்கள் அறைமுதலில் வைத்த பொன் களஞ்சு 729. பொன்னகை களஞ்சு 781. ஆரியராசன் அறைமுத லில் வைத்த பொன் களஞ்சு 219. பொன்னகை களஞ்சு 120. நாட்டவர்கள் கோயிற்படியில் வைத்துக் கும்பிட்ட பொன் களஞ் சு 219. இம்மாத்திரமுங்குகைக்குள்ளே பண்டகசாலையிற் பெரிய அறைமுதலிலிருப்பு. இதற்கு வகை பிறகணக்கிலுண்டு.
நித்தியபூசைச் செலவிற்குக் கொடுக்கும்படி வெளியிற் பெரிய அறையிலிருக்கிற பொன் 489 களஞ்சு. இதுவன்றிக் கனவகுப்புத் திரவியம் வேறேயுண்டு. கோயிற்றிரவியம் திருமலையினுச்சியனின்று பார்க்க நாலுயுறத்துந் தெரியும். அந்தத்திரவிய மிருக்குமிடம் மீத்தளம், நாகம், வெண்கல், வள்ளக்கல மலைகளிலுண்டு. வள்ள மலைக்குச் சொர்ண வைரவர் முதலான எட்டிலட்சம் வைரவர் களும் உதிரமாகாளியுங் காவல். வெள்ளைக்கல் மலைக்கு ஆப தோத்தாரண வைரவர் முதலான இரண்டு இலட்சம் வைரவர் களும், இரத்தசாமுண்டியுங்காவல். நாகமலைக்கு அகோர வைரவர் முதலான மூன்றிலட்சம் வைரவர்களும் துற்காதேவியும் வக்கமாதேவி யுங் காவல். மத்தளமலைக்கு சொர்ண கணபதியும், ஆதிபத்திர காளியும், ஏகாந்த கன்னியரும், ஒரு கோடி சத்திகளும் கடலரசு நாயகியும், கடலரசனும், ஒன்பது லட்சம் வைரவருங்காவல். வள்ளம லையில் ஐம்பதிலக்கங் களஞ்சு பொன் திரவியமுண்டு. வெண்கல்லில் 74 இலக்கங் களஞ்சு பொன் திரவியமுண்டு. நாகத்தில் 88 இலக் கங் களஞ்சுப்பொன் திரவியமுண்டு. மத்தளத்தில் இலக்கத் தைம் மபதினாயிரங் களஞ்சுப் பொன் திரவியமுண்டு. இவையெல்லாம் மதுரைக் களஞ்சுக் கணக்காகவிருக்கும். வள்ளமலையிற்றேவதை யனைத்தும் பத்திரகாளியிலடக்கம். வெள்ளைக்கல் மலையிற்றே வதையனைத்தும் ஆபதோத்தாரணவயிரவரிலடக்கம். நாகமலையிற் றேவதையனைத்தும் சொர்ணகணபதியிலடக்கம். மத்தளமலையிற் றேவதையனைத்தும் இடபதேவரிலடக்கம். கா வ ற் றே வ தைகள் அதிகமாயிருப்பினும் ஒரு பூசையிலடங்கும்.
திருக்குளத்திற் கட்டுவழியே ஏழிடத்திற்றிரவியமுண்டு. அவற்
றில் ஒன்றரை இலக்கங்களஞ்சுப்பொன் திரவியமுண்டு, இது மாகாண வைரவரிலடக்கம்,
- 114 -

சிந்துர விருப்பு
பாவநாசச்சுனைக்கு வடபாலாக ஒரு தாங்கியுண்டு. அதிலே ஆறு கோணமுள்ள கல்லுநாட்டியிருக்கின்றது. அதிலே தேவநாகரத்தா லெழுதியிருக்கும். அதன் கீழே ஒரு சிந்தூரக்கிடாரம் புதைக் கப் பட்டுள்ளது. 12 களஞ்சு இரும்பு ஒரு குகையிலிட்டு உருக்கி அதிலே ஒரு பணவிடை சிந்தூரமிட ஏழுமாற்றுப் பசும்பொன்னாம். இதன் கணக்கையு மறிந்து கொள்ளவேண்டியது.
எட்டிராசாக்கள் கொடுத்த திரவிய இருப்பு
முன் சொன்ன எட்டரசர் 8ளுங் கொடுத்த திரவியமும் நரையு மிருக்குமிடம் ஆலயத்தின் கிழக்கு வாயிலில் ஏழு கற்படிக்குக் கீழே தெற்குப்புறமாக ஒரு முக்கோணக் கல்லுச் சாத்திக் கட்டப்பட்டுள் ளது. அதன் மீது ஒருமுக்கோணக் கற்கதவுண்டு, அதனைத்திறந்து உள்ளே போக முப்பத்தாறுமுழத் தாழ்வுக்கப்பால் ஒரு பண்ட ; சாலை உண்டு. அதற்குள் எட்டிர சாக்களுங் கொடுத்த திரவியம் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது, அதற்குக்காவல் இரணவீரபத் திரனும் ஐந்தலைநாகமும். திரவியக் குகையிற் கிட்ட வைரவர் காவல். இது மூத்தநாயனாரிலடக்கம்.
வடக்கு வாயிலிலே ஒன்பது கற்படிக்குக் கீழே நாற்சதுரக்கத வுண்டு, அதனைத் திறந்துள்ளேபோக மேற்குப்புறமாக அறு 'கோணக் கல்லுக் கட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் முப்பத்தாறு முழத் தாழ்வுக்கப்பால் ஒரு பண்டகசாலையுண்டு, அதனுள் எட்டிரா சாக்களுங் கொடுத்த நகைகளுண்டு, அதற்கு நாலு முகப் பத்திர 'காளியும் ஐயனுங்காவல். நகைக்கு கைக்கு நாலுயுறத்தும் நாலு வைரவர் காவல். கனகக்கு சைக்கு நாலு புறத்தும் நாலுவைரவர் காவல். இவை எல்லாம் ஆபதோத்தாரண வைர வரிடம் அடக்கம்.
சிங்காசனத்துக்கருகான திரவியம்
கெர்ப்பக்கிருக சிங்காசனத்துக்கு வடபாலாக முக்கோணமான கல்லொன்றுபாவுகல்லோடே பரவியிருக்கும். அந்தக்கல்லையுயர்த்திப் போட அதிலொரு வாசலுண்டு. அதற்குள்ளே பந்தமும் கொண் போக, அறுபத்துநான்கு முழு நீளத்துக்குமிகுந்த "நெருக்கிமான், ஒரு தெருவிருக்கும். அதற்கப்பாலே மிகுந்த விதநலமான ஒரு மண்டபமுள்ளது, அதனுள் சாத்துப்படிக்கான *நவரத்தினங்கள் பதித்த திருவாபரணங்களும், தங்கக்குடிை*ழேன்குடிே, முத்துக் குடை பவளக்குடை வெள்ளிக்குெை"தீங்க லவட்டம், $್ಲೆ?
س؟115 ۔ .

Page 67
arran) ntill-lb., வெள்ளியாலவட்டம் இவை முதலான பல திரவிய முண்டு. பொற்சரிகைப் பீதாம்பரங்களும் பட்டாடைகளுமுண்டு. இவை திருவிழாக்காலத்திலெடுக்க வேண்டியது. எடுக்கும் போது விக்னேசுர பூசைபண்ணி எடுப்பது.
இதுவன்றி சிங்காசனத்துக்குத் தெற்குப்புறமாக அறுகோணக் கல்லுப் பாவுகல்லோடே பரவியிருக்கும், அதையுயர்த்தி வைத்து விட்டுப் பார்க்க ஒரு வாயில் தோன்றும், அந்த வழியே பந்தமுங் கொண்டுபோக நாற்பது முழத்துக்கப்பால், ஆறுமுழ அகலத்திற் பாதாளமூடுருவ ஒரு கிணறுண்டு. அதற்குப்பலகைபோட்டு அப் பாற்செல்ல, நூற்றிருபது முழத்துக்கப்பால் ஒரு விசாலமானதப னிய மண்டபமுண்டு, அதில் நூறிலக்கங் களஞ்சுபொன் திரவிய முண்டு. அது நான்கு பிரிவாகவிருக்கும். முதற்பிரிவில் இருபத்தைந் திலக்கங்களஞ்சுண்டு. இந்தப் பொன் ஒரு காலம் பூசைக்குத் திரவி யங் குறைந்தால் விக்னேசரனுக்கும் சொர்ண வைரவனுக்கும் பூசை பண்ணி மன்றாட்டஞ் செய்து கிருபைபெற்று எடுக்கவேண்டியது.
அவையன்றி குளக்கோட்டு மகாராசாப் பதினாறு சிறங்கை கொண்ட நாழியாலே ஒருநாளைக்கு இரண்டவண அரிசி பூசை குத் திட்டம் பண்ணினது. அதன் பின்னர் கயவாகு மகாராசன் ஒரவண அரிசிதானுந்திட்டம் பண்ணியது, ஆக ஒரு நாளைக்கு மூன்ற வண அரிசியும் மூன்று காலப் பூசைக்கு இருகாலப் பூசைபணிகார நைவேத்தியம் இப்படி ஐந்து காலப் பூசைக்கு வரவுஞ்செலவுங் கண்டுகழித்து, நாளொன்றுக்குப் பதினாறரைப்பொன் மிச்சங்கண்டு செலவு கொடுக்கும் பொக்கிஷ வீட்டில், இருப்பாகவிருந்துவருவ தென்று கருகுலக்கணக்கிலுமிருக்கின்றது, இவை முதலானகோயிற் காரியங்களுன்ன பத்ததிக் கணக்கும், குளக்கோட்டு மகாராசா வளமைப்பத்ததியும், பெரிய கணக்கும் கல்வெட்டுங் கோயிற்றொ ழும்புக் கதை வரலாறும், கோயிலுக்கு முன்னிடுங் கட்டுக்குளப்பற்றும், நிலாவெளி நிந்த வூருமாக அந்தக்காலம் அடியேன் குடியிலுள்ளவர் களுக்குக் கிடைத்திருந்தபடியால், இந்தத் திருமலையினிடமாகச் சிவாலய முண்டு பண்ணியதும், மகாபெருந் திரவிய இருப்பும், தானம் வரிப்பத்தார், வன்னிபம் இருபாகைமுதன்மை இவர்கள் வந்தவரலா றும், அவரவர்களுக்கு நடக்கும் வரிசைமானியங்களும், அவரவர் புரோசனங்களுஞ்செய்தொழும்புகளும், அரசர்பிரான் கட்டளைப்படி அந்தக்காலம் முன்னோர்களெழுதிவைத்த பத்ததிப்படிக்குச் சொன்னதென்று கனகசுந்தரப்பெருமாள் சொன்னவசனம்:
س- 116' -س

அப்போது சகலரும் சந்தோஷப்பட்டு அதிகமுகமனான வார்த் தைகள் சொன்னார்கள். தருமநெறி தவறாத தனியுண்ணாப்பூபால வன்னிபமும் இருபாகைமுதன்மையும் கனகசுந்தரப்பெருமாளைப் பார்த்துத் தெட்சண திரிகயிலாய சிவாலயத்தினிற் குளக்கோட்டு மகாராசா ஆதியாகிய மகாலிங்க தாபனம்பண்ணியிருக்கிறது எவ்விடயமாகவிருக்குமென்னக் கனகசுந்தரப்பெருமாள் பெரியபத் ததிப்படிக்குப்பார்த்துச் சொன்னவசனம்.
மகாலிங்க இருப்பு
சதுரமான முழங்கொண்ட கோலால் நாற்பத்தெட்டுக்கோல் தாழவெட்ட அங்கு மூன்று கங்கையும் வந்து சந்தித்த கழிமுனை உண்டு. அவ்விடமாக ஆதியிற்பார் நிறுத்திய பான்மையதுபோல எட்டுமலையும் எட்டுமாநாகமும் எட்டு மதகரியும் எட்டுச் சத்தியும் சூழவரநாட்டி, நடுவே மகாமேருவுக்குச் சரியான சிங்காசனஞ் செய்து, அந்த ஆசனத்தைச் சுற்றிவர அட்டபாலகரைத் தாபனம் பண்ணி, வாயிலுக்கு துவாரபாலகரை நிறுத்தி, மற்றும் மூன்று வாயிலுக்கும் பத்திரகாளி, வீரபத்திரன், வயிரவன் இவர்களை நிறுத்தித் திரிகோணலிங்கரையும் வாமபாகமாகத் தேவியையும் ஆசனத்திருத்தி எந்தக்காலத்துக்குங் கண்டப்பிரமாணமட்டிற் சலம் ஏறாமலுங்குறையாமலுந் திட்டம் பண்ணித்தங்கத்தாலே திரிகோண மாமதிலுங்கட்டித் தங்கத்திரிகோணக் கதவும் போட்டு, அதற்குள்ளே கண்ணாடி, தங்க ஆலவட்டம், விசிறி, குடை, இலை முதலான சோடச வுபசாரமெல்லாந்திட்டம் பண்ணிவைத்து, கோடி கோடி ஊழிகாலம் வந்தாலும் அழியாத மாணிக்கத்தூண்டாமணி விளக்கும் இருபக்கமும் நிறுத்தி, அதற்குமேல் முன்கூறியகோலால் எட்டுகோல் உயரத்தில் பொன்னினாலே சிகரங்செய்து, சிகரத்துச்சியிலே ஒரு பூகம்பழமளவிற் றுவாரம்விட்டு, அதற்குபதினொரு கோலுக்கு மேலே செப்புப்பலகை பரவி அதிலே நாப்பணாக ஒரு பூகம்பழ மளவிற்றுவாரமிட்டு, அதற்கு ஆறு கோலுக்கு மேலே சாதிக்கருங் கல்லுப் பலகைபரவி, அதிலே நாப்பணாக அப்படித் துவாரம்விட்டு, அதற்கு ஆறுகோலுக்குமேலே அழகினாலே மலையுச்சியறத்திட்டம் பண்ணி, அதிலே கனகரத்தின சிங்காசனத்திட்டம் பண்ணி, அந்தச் சிங்காசனத்திலும் நாப்பாணக அப்படித் துவாரம்விட்டு, அதற்குேேமலே பரமேசுரனும் பரமேசுவரியும் இருக்கும் தங்கப் பீடிகையில் நாப்பணாக அப்படித்துவாரம்விட்டுத் திருகோண நாதருக்கு எங்கோமான் குளக்கோட்டு மகாராசாச்சிவாலயமுண்டு பண்ணுவித்ததும், மூலவிக்கிரகம் இருக்குந்தன்மையும் இப்படியென்று பத்ததிப்படிசொன்னேன் என்று சொல்ல யாவரும் அதிக சந்தோஷப்
ー117ー

Page 68
பட்டுக் குளக்கோட்டுராசன்ை நரசன்மமென்று சொன்னாலும் தோஷம் வரும், அன்றியும் அவர் செய்த தருமத்தை அழிக்க நினைத் தாலும் அழித்தாலும் அவர்களும் அவர் வம்சத்தாரும் அதே கோடி காலம் நரகத்திற்கிடந்து வருந்துவார்களென்று சொன்னது மெய்வசனமென்று கூறிக் கனகசுந்தரப் பெருமாளுக்கு அனேகமுகமன்சொல்லிப் பின்னர் இந்தத்திரிகயிலாயசிலம்பினுட் பதினமானவை சளைத் தம்மிடத்திற் கேட்கவேண்டுமென்றும் தம்மை" அழைப்பித்ததென்றுஞ்சொல்லி இருந்தார்களென்றவாறு.
திருமலையின் கீழ்ப்புதினம்
செகமது கிழ மானுநீதிநடத்துந் தனியுண்ணாப்பூபால வன்னி பமும் இருபாகைமுதன்மையும் மற்றுமுள்ள யாவரும் ஒருநாட் பளிங்கு மண்டபத்திலிருந்து சருணைவாரிதியாங் கன க சுந் த ர ப் பெருமாளைப்பார்த்து வன்னிபங் கேட்டவசனமாவது:- இந்தத் திருமலையின் கீழே சிவாலயமுஞ் சிவகங்கையும் உளவென்றும் இன்னு திகமான புதுமைகளுள வென்றுஞ் சொல்லுகிறார்கள். நீர் கேள்விப்பட்டவற்றைச் சொல்லுமென்று கேட்கக் கனகசுந்தரப் பெருமாள் சொன்ன வசனம். ܫ
நீங்கள் கேட்ட புதுமைகள் நான் கண்ணாலே கண்டதல்ல: கயவாகுமகாராசாவுக்குச் சைவநாயகக்குருக்கள் இத்திருமலையின் கீழேயுள்ள புதினங்கள் சிலவற்றைச் சொன்னார். அவை மிகுந்த விசேஷமாதலால் எமது முன்னோர்கள் பெரியவளமைப் பத்ததியி லெழுதி வைத்த துண்டு. அதனைச் சொல்லுகின்றேனென்று சொல்லும் வசனம் : t , , ) w *
தி டுகோணமலையில் எண்பத்துநான்கு சதுரத்தானமுண்டு, அத்தானங்களில் இருடிகளிருந்து அனவரதகாலமுஞ் சிவபூசை செய்வார்கள். இவை ய | றி ஏழு குகைகளுமுண்டு, அவற்றிற் சத்த ரிஷி ள் பூசைபண்ணு பார்கள். இன்னும் அறுபத்துநான்கு குகை யுண்டு, அவற்றிற் றேவர் சள் பூசை பண்ணுவார்கள். திருமலையின் இழே மிசவிசா லான வெளியும், பென்மயமான பூமியுமுண்டு. அவ்வெளியின்டுைவே ஒருநாற்கான் மண்டபமுண்டு. அந்தநாலு காலிலும் ந லு சதவும் நாலு வழியுமுண்டு. அவை அயோத்தியா புரி, பிரமபதம் நாகலோ கப , தேவபதம் இவற்றிற்குச் செல்லத் தக்க வழி ளாயிருக்கும், அப் பொன் மயமானநிலத்திலே சந்தனம் குங்குமம் அகில், தேவதாரு, மந்தாரம் , பாரிசாதம், சல்வியகரணி, சந்தான சரணி, மிரு தசஞ்சீவி இப்படியான மேலான மரங்களுண்டு. அவற்றினடுவே ஆகாசகங்கையிருக்கும், அதற்குமேல்பால் இரத்தின
- 118 -

மணியாலயமும் நவரத்தின சிங்காசனமுமுண்டு. அதிலே ஆதியாகிய பரமசிவனும் பரமேசுவரியும் வாசமாயிருப்பார்கள். அதற்குமேல் பால் தங்கக்காசுக்குவியலொருபக்கம்; தங்க அரிசிக் குவியலொரு பக்கம்; நாகரத்தினக் குவியலொருபக்கம் ; நவரத்தினக்குவியலொரு பக்கம்; பொற்பாளக்குவியலொருபக்கம்; இப்படியிருக்கும். அதிலே தேவர்களும் இருவிகளும், தும்புரு நாரதரும், கின்னரர் கிம்புருடர் கந்தருவர்களும், சந்திரசூரியரும், இந்திரன்முதலான அட்டபால கர்களும், இந்திராணி முதலான தேவஸ்திரிகளுந் திருப்பாற்கடல் முதலான சத்தவாரிதிகளும், மகாமேருமுதலாகிய கிரிகளும், கற்பக தரு முதலிய தருக்களும் விஷ்ணுமுதலாகிய தெய்வங்களும் சூழ் ஆகாசநதிவருங் காசியிற்றிர்த்தமும், காவேரி நீரும், அதிகமான பாவத்தையழிக்கின்ற மகாவலி கங்கை நீரும் அனுதினமும் அரனிரு பதம் விளக்கி ஆற்றிற்பாயும். அதுவன்றி முன்சொன்ன தேவாதி களனைவரும் அவ்விடம்விட்டுப் புறத்துமிருப்பார்களென்று குருக்கள் சொல்லி, செந்தாமரைப்பூ, வெண்டாமரைப்பூ, விபூதி, சந்தனம், தீர்த்தம், அடைகாய் இவையெல்லாங்கொண்டுவந்து கயவாகு மகாராசனுக்குக் கொடுக்க, அவ்வரசன் மிகுந்த சந்தோஷ முற்று நாம் அந்தத் தரிசனை காணப்போகக்கூடாதோவென்று கேட்கக் குருக்கள் சொன்னவசனம்.
இப்பொழுது அவ்விடத்திற் பங்குனி உத்தரத்திருநாள் நடக் கின்றது. அன்றியும் அரனருளில்லாமற் போதல் கூடாது. ஏனென் றால் முதலாம் வாயிலில் ஓரிலக்கம் வைரவர் காவல், இரண் டாம் வாயிலில் பத்திரகாளியுங் கன்னிமாரும் ஐயனாருங் காவல் : மூன்றாம் வாயிலிலே துர்க்கையுஞ் சாமுண்டியுங் காவல், நான்காம் வாயிலிலே எட்டிலட்சம்-நாகராசர்கள் காவல்; ஐந்தாம் வாயிலிலே ஆபதோத்தாரண வைரவரும் ஆதிவீரபத்திரருங் காவல்; ஆறாம் வாயிலிலே அகோர வைரவர் முதலான ஆறிலக்கம் வைரவர்காவல்; ஏழாம் வாயிலிலே நாலுமுகப்பத்திரகாளியும் ஒன்பதிலக்கங் கன்னி மாரும் கங்காள வைரவருங் காவல் ஒன்பதாம் வாயிலிலே அனேக பூதத் தலைவர்கள் காவல், பத்தாம் வாயிலிலே சுப்பிரமணியரும் நவவீரருங்காவல். ஆலயத்தினெட்டுத்திக்கிலும் திக்குபாலர்களும் அட்டசத்திகளுங்காவல், ஆனபடியால் அவ்விடஞ் செல்லுதல் அரி தாயிருக்குமென்று சொல்ல, அரியணையிலிருக்கும் அரசனும் இப் புதுமைகளெல்லாங் கேட்டுச் சரீரம்வெயர்த்துப் புளகங்கொண்டு, கண்களிலிருந்து ஆநந்தபாஷ் பஞ்சொரிய, அயர்ந்து யோகநித்திரை யாயினான். அப்பொழுது, அவன் முன்கேட்டவைகள் யாவற்றை யுங்கண்டு, சிவதரிசனமுஞ் செய்து ஆனந்தங் கொண்டிருக்கிற வேளையிற் கிழக்குவாயிலிலே மிகுந்த ஆரம்பங்கேட்டது. அது
ー 119ー

Page 69
ஏதென்றுபார்க்க, அதிலே ஒரு தங்க உப்பரிகையின் கீழுள்ள தமனி யப்பூம்பந்தரின் கீழே, நவரத்தினசிங்காசனத்திலே, இரத்தினமுடி தரித்த ஒரு கோடி தேவராசர்கள் பணிசெய்யத் தேவஸ்திரிகள் திருநடனஞ்செய்ய, இருபுறமும் வெண்சாமரம் வீச, தங்கக்குடை, பொன்குடை, பொற்கொடி, பொன்னாலவட்டம் இவை நிழற்ற இந்திரன் முதலிய தேவத்தலைவர்கள் பணிந்து பணி கேட்கத், தேவர்கள் பூமழைபொழியக் குளக்கோட்டுமகாராசன் சிங்காரக் கொலுவிருத்தலையுந்தரிசித்த பின்னர் யோகத்துயில் நீங்கிக்கண் விழித்துக் குருக்கள் சொன்ன புதுமைகளிலும் பதின் மடங்கு புதுமை கண்டேனென்று இருதயமகிழ்ந்து, குருக்களையும் நமஸ்காரம் பண்ணி முகமன் கூறி அனுப்பினான் அக்கயவாகுமகாராசன் என்று, நமது முன்னோர்கள் அக்காலத்தெழுதிவைத்த பெரியவளமைப்பத் ததியிலுள்ளபடியே அடியேனும் சொன்னேனென்று கனகசுந்தரப் பெருமாள் சொல்ல யாவருங்கேட்டு மனமகிழ்ந்து முறைப்படியே கோயிற்றொழும்புகள் செய்து நல்லபவிஷ"ம் பாக்கியமும் பெற் றிருந்தார்கள்.
திருநாள்
திருமருவு தெட்சண திரிகயிலாய கோணைநாயகருக்குப் பங்குனி யுத்தரத் திருநாட் பத்ததியாகச்சொல்லியிருக்க, ஆணியுத்தரத்திரு நாள் நடக்குந்தன்மையாதென்று வன்னிபமும் இருபாகை முதன் மையும் மற்றுமுள்ள யாவரும் கனக சுந்தரப்பெருமாளைக் கேட்கப் பத்ததிப்படி அவர் சொன்னவசனம்:-
ஒரு காலததில் வன்னிபமும் இருபாகைமுதன்மையும் கொம்புச் சந்திமண்டிபத்தில் வந்திருக்கும்போது வன்னிபத்துக்கும் இருபாகை முதன்மைக்கும சற்றுமனவிரோதமுண்டாகிப் பங்குனியுத்தரத்திரு நாள் நடத்திக்கொள்ள முடியாமல் விட்டுவிட்டார்கள். பின்னர் வைகாசிமாதம் பின் பதினைந்தில் யாவருங் கிழக்கு வாயிலிற் றபனியமண்டபத்தில் வந்து வன்னிபத்தையும் இருபாகை முதன் மையையும் அழைப்பித்து அவரவர் ஆசனத்திலிருக்கச் செய்து யாவரும் நமஸ்காரம் பண்ணிச் சித்திரவித்தார கவிப்புலவனும் கனகசுந்தரப் பெருமாளுஞ் சொன்னவசனம்:
தேவரீர்களுடைய திருமுகம்பார்த்து அடியேங்கள் ஒருவிண் ணப்பஞ் சொல்லுகிறதற்கு மிகுந்தபயமாயிருக்கு தென்று நமஸ் காரம் பண்ண அப்பொழுது வன்னிபம் அவர்கள் முகத்தைப் பார்த்துச் சிறிது புன்முறுவல் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது' அவர்கள் சொன்ன வசனம். விசாலம் பொருந்திய கடல்கள் கல்ங்கு"
- 130 -

வதுண்டானால் அந்தக் கடல் தானே தெளிவதன்றி உலகக் காராம் தெளிவிக்கமுடியாது, அதுபோலத் தேவரீர்களும் சிந்தையு டனரியு மென்று சொல்ல, வன்னிபமும் இருபாசைமுதன்மையும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவிக்கொண்டு சந்தோசமான பின்பு இரு பாகை முதன்மையைப்பார்த்து விதிமுறையாகச்சொன்ன பங்குனி யுத்தரத்திற்குக் கொடியை ஏற்றிக்கொள்ளமுடியாமற் போய்விட் டது. இனிமேல் எந்தமாதம் நல்லதென்று கேட்கச் சோதிவிதான நிலையறியும் அதிகசித்திரவித்தாரப் புலவன் சொன்னவசனம். பங்குனி உத்தமம்; ஆனி மத்திமம்; ஆடி அதமம்; ஆவணி அத மத்திலதமம்; மற்றும் மாதங்கள் நினைக்கவும்படாது. இனி ஆணி யுத்தரங்கொள்ளலாம். அது தப்பில் அந்தவருஷம் விழாநடத்தா மல்விட்டு மற்றவருஷம் பங்குனியிலும் ஆனியிலும் இரண்டுமுறை விழா நடத்தவேண்டும்.
இந்த இரண்டுமாதமுமல்லாமல் மறுமாதங்களிற் கொடியேற் றித் திருநாள் நடத்தினால் இராசாக்களுக்கும் ஊராட்சிக்காரர்களுக் கும் குருக்கள்மாருககும் சனங்களுக்குமாகாது. திருவகலும் விளைவு குன்றும்; மழைவளஞ்சிறுக்கும்; நிசசோரர்டயமுண்டு. ஆதலால் ஆணியுத்தரத்திற்கண்ணிமுகூர்ததமாகக் கொடியேற்ற நல்லது. குற்ற மில்லையென்று புலவன் சொல்லக் கனகசுந்தரப்பெருமாள் சொன்ன வசனம். குறித்த பங்குனி மாதவிழாத் தப்பிப்போனபடியால் கோயிற் பிராயச்சித்தம் பண்ணிக் கொடியேற்றவேண்டுமென்ன வன்னிபம் அதற்குச் செலவென்னவேண்டுமென்று கேட்கச் செலவு கணக்குக் கருகுலக்கணக்கிலுண்டென்ன, அப்பொழுது கருகுலக் கணக்கன் சொன்னது. ஆயிரத்தெழுநூறுபொன் மேற்செலவுக்கு வேண்டுமென்ன அந்தப்படி வன்னிபம் செலவு கொடுத்துப் பிரா யச்சித்தம்பண்ணிக் கொடியேற்றி விழாநடத்தினது. ஆதித்தன் அஸ்தமனமானபின் முற்சாமம் பூசையலங்காரம் ஆடல்பாடல் செய்யவேண்டியது. நடுக்கூறிரண்டு சாமமும் வீதியிலே விழா நடத்தவேண்டியது. நாலாஞ்சாமந்திருச்சயனம். அவ்வேளையில் ஆடல்பாடல்களிற் சிறிதுமாகாது. அப்படிநடத்தினால் ஊருக்குங் குருக்கள்மாருக்குமாகாது. அதுவன்றிக் காலைவிழாவும் ஆதபனைக் கண்டு இரண்டரை நாழிகைக்குள் விழா நடத்தி அலங்காரநைவேத் தியம் முடிக்கவேண்டியது. ஆதியாகிய கோணைநாயகரைக் கால விழாவுக்கு எழுந்தருளப் பண்ணச் சமயம் இல்லாதிருந்தால் அத் திரதேவரை எழுந்தருளப்பண்ணி அலங்காரநைவேத்தியம் செய்யலா மென்று அந் நாளிற் குருக்கள்மாருந் தெய்வப்புலவனும் விதி முறையைச் சொன்னபடியால் (எமது முன்னோர்கள் வளமைப்
۔ ۔ سی۔ 121 سے

Page 70
பத்ததியில் எழுதிவைத்தார்களென்று வன்னிபம் முதலியயாவருக் குங் கனகசுந்தரப் பெருமாள் வளமைப்பத்ததியின்படி சொன்ன daw 47 Owaith.
கழனிமலை
மருமருவு குவளையணிதருநிகர் கரத்தினான் தனியுண்ணாப் பூபால வன்னிபமும் இருபாகை முதன்மையும் மற்றுஞ் சகலமான பேரும் வச்சிரமணிபரவும் மகாமண்டபத்தில் வந்திருந்து கருணை வாரிதியாங் கனகசுந்தரப் பெருமாளைப் பார்த்து வன்னிபஞ் சொன்னவசனம்:- இந்த இலங்காபுரியிற் பெரிதாகிய பல பருவதங் களுங் கற்குகைகளும் விசாலமான நிலவறைகளும் இப்படிக்கொத்த அரணாகியவிடங்களிருத்த ஒரு காலங்கலாபம் வருமென்றும் அந்த வேளை கழனி மலைக்குத் திரிகயிலாய நாதரை எழுந்தருளப் பண்ணி அவ்விடத்திற் சிவாலயமுண்டுபோயிருங்களென்றுஞ் சொன்ன தென்ன விகாரமென்று தெரியவில்லை. அதனை எங்களுக்குச் சொல்லவேண்டுமென்று கேட்கக் கனகசுந்தரப்பெருமாள் சொன்ன வசனம். > ,
வெள்ளியங்கயிலாயத்தில் ஆதியாகிய பரமேசுவரனுக்கும் பர மேசுவரிக்கும் திருக்கலியாணமென்று உலகமும் அதில் வாழுஞ் சகல சீவராசிகளும் போன தருணத்தில் அகத்திய இருஷியும் வெள் ளியங்கயிலைக்கு முக்காதவழியிற் கழனிமா மலையென்றொரு மலை உண்டு. அதிலே முனிவனும் வரத் தேவர் கூட்டமும் விட்டுணு முதலியோருங் கயிலையின் நிற்க வடப்ால்தாழ்ந்து தென்பாலுயர சகலரும் நடுக்கமுற்றுச் சிவசிவவென்றார்கள். அப்பொழுது பரம சிவன் விட்டுணுவைப்பார்த்து யாதுபுதினமென்ன, சுவாமி தென் பாலிலிருக்குங் குறுமுனி இவ்விடம் மலருவதற்குக் கழனிமலையில் வந்தார். ஆனபடியால் வடபால் தாழ்ந்து தென்பாலுயர்ந்த” தென்று சொல்ல, சகலரையும் அவ்விடம் நிற்கப்பண்ணி தாம் ” அகத்தியரிடத்து வந்து, நாமிந்த மணக்கோலத்தோடு வந்து உமக் குத் தரிசன்ம் தருவோம், "நீ இலங்காபுரியிற் சமனையங்கிரியால் வரும் மாவலிகங்கையிற் கரசையங்கரையில் அருகாய் எம்மை நினைத்துத் தியானித்திருக்க வேண்டியதென்று திருவாய்மலர்ந் தருளிப் பரமசிவமுங் கயிலையங்கிரிக்கெழுந்தருள, அகத்தியரும் மக்ாகிலேசமுற்றுத் திரும்பிவரும் வழியில் வெகுவெகு புதினமும் நடப்பித்து இலங்காபுரியில் திரிகயிலாயமாகிய கோணை மலைக்கு முக்காதவழியிலிருக்கும். கழனிமலையில் வந்திருந்து சிவ பூசையும் பண்ணித் திரிகோனமலையையுந் தரிசனம் பண்ணிப்போக வேண்டு
--۔ -- . 22 . -۔

மென்று நினைத்து வடகயிலையென்றுந் தென் கயிலையென்றும் வேறில்லாமற் சமனாயிருக்கும். ஆதலாலவ்விடத்திலும் இப்பொழுது திருக்கலியாணமிருக்கும் நாம் போகலாகாதென்று நினைத்துக் கரகையம்பதியிற்போய் சிவலிங்கதாபனஞ்செய்து பூசைபண்ணிக் கொண்டிருக்கிறவேளையில் ஆதியாகிய பரமசிவம் ரிஷபாரூடராய்த் தேவியோடுகூட மணக்கோலத்தோடு பிரத்தியக்ஷமாய்க் காட்சி கொடுத்தார். அகத்தியரும் கண்டு தரிசித்து மிகுந்த வாழ்வைப் பெற்றார். இப்படி அகத்தியர்வந்து சிவபூசைபண்ணினபடியால் இந்தக் கழனிமலைக்குத் திரிகோணை கண்டவரையென்று திருநாம மானது. அதற்குமேல்பால் கற்சிரியென்றொரு மலையுண்டு. அதிற் கல்லுமாளிகையும் சுற்றுமதிலும் அதற்கருகாவெகு மலைச்சாரல் களுங் கூட்டங்கூட்டமாயுண்டு. ம லை ய ரு வி மாறா ம ல் மடை” கொண்டு பாய்ந்து நிற்கும். வடகயிலைக்கு முக்காதமாய் அங்கே யொரு கழனிமலையிருப்பதினாலும் இங்கும் அகத்தியமாமுனிபூசை பண்ணினதாலும் இந்தத்திரிகயிலைக்கு முக்காதமிருப்பதினாலும் இந்தக் கழனிமலையும் அதிகமாகிய தலமென்று திருவுளம்பற்றின தென்றும் பத்ததியின்படி கனகசுந்தரப்பெருமாள் சொல்லச்சகல ருங்கேட்டு அகமிகமகிழ்ந்து அரன்தொழும்பு செய்திருந்தார்கள்.
திருக்குளங் கட்டினது
திருமருவு திரிகயிலைமாநகரில் மனுநீதி நடத்தி வரும் தனி யுண்ணாப் பூபால வன்னிபமும் இருபாகை முதன்மையும் மற்றுஞ் சகலரும் மரகதெசப்பலகை பரவும் வசந்த மண்டபத்திற் கூடியிருந்து கனகசுந்தரப்பெருமாளைப்பார்த்து வன்னிபங்கேட்டவசனம். எங்கோ எங்கோமானாகிய குளக்கோட்டு மகாராசாச் சோழநாட் டால் வருகையிற் பூதப்பட்ைகொண்டுவரவுமில்லை. பூதங்களாற் றிருக்குளங்கட்டினதென்றும் இலங்காபுரியில் மும்முலைத்தாடகை ராச்சியம்பண்ணியிருந்ததென்றும் சொல்லுகிறார்கள். அதனை எங் களுக்குத் தெரியச் சொல்ல வேண்டுமென்னச் சந்தோஷப்பட்டுக் கனகசுந்தரப்பெருமாள் சொன்ன வசனம்:- வடகரையிற் கலிங்கமா நகரென்றொரு நாடு. அதற்கு இருபத்தொருகாதவழிக்கப்பால் வடபாலாக அசோககிரியென்றொரு பட்டணம், அந்தப்பட்டணத்தை இராச்சியஞ்செய்வது அசோகசுந்தரனென்னுமிராசா, அவன் தேவி மனோன்மணிசுந்தரி இந்த ராசாவுக்கு மனோன்மணி சுந்தரி பெற்றபிள்ளை வார்ந்து கட்டின சிகையும் எயிறுகுறையாத லெட் சணமும் அழகுசவுந்தரியமான தனபாரமும் அலங்கிருதமான வசன முமாகப் பிறந்த பிள்ளையைக் கண்டு இராசாவுக்குச் சொல்ல, அரச னும் விசாரப்பட்டுச் சோதிடரைக் கேட்க, அவர்கள் இந்தப்பிள்ளை

Page 71
பட்டனத்திலேயிருந்தால் பட்டணத்துக்க்ாகாது, மறுராச்சியத்திற் குடைய பிள்ளையென்று சொன்னார்கள். அப்பொழுது அரசனும் அந்தப் பிள்ளையைப் பேழையிலடைத்துப் பெருஞ்சமுத்திரத்தில் விட்டான். i.
அந்தப்பேழை இலங்காபுரியிற் கடற்கரையில்அடைந்தது.அதைக் கண்டவர்கள் இலங்காபுரியை அரசாட்சிபண்ணும் மனுநேய கயவாகுராசனுக்குச் சொன்னார்கள். அப்பொழுது ராசனும் பிர தானிமாரும் வந்து பேழையையெடுத்துத் திறந்து பார்க்கச் செந் தாமரைப் பூவிலிருக்கும் திருமகளென அழகுசவுந்தரியத்துடனிருக் கும் பெண்பிள்ளையைக் கண்டு என்பிள்ளை என்று அரசனெடுத் துப் பிள்ளையை முத்தமிட அப்பொழுது பிள்ளை சிரித்தது. சிரித்த விடத்துக்குப் பாலநகையூர் என்று பேராயிற்று. பின் அந்தப் பிள்ளை யைப் பல்லக்கில் வைத்துக்கொண்டு உண்ணாசகிரியென்னுமர மனையிலிருந்து இராச்சியம் பண்ணி வருகிறநாளில் மனுநேயகய வாகுராசனுந் தேகவீயோகமானார். அதன் பின்னர் அந்தப்பெண் இலங்கைபபட்டணத்தை ராச்சியம்பண்ணி வருகிறநாளையில் குளக் கோட்டு மகாராசா திரிகயிலாயச்சிலம்பில் சிவா ல யங் கட்டுகிற செய்திகேட்டுத்தனது அறுபத்துநாலு மந்திரிகளை அழைத்து முதல் மந்திரிக்கு ராசகுமாரத்தி சொன்ன வசனம் :-
வடகரையிலிருந்தொரு சைவன் ஒடத்திலேறிவந்து கிழக்குக் கரையிலொரு மலையின் மேலே ஒரு ஆலயங்கட்டுகிறதென்று செய்தி கேட்டேன். நீபோய் அந்த ஆலயத்தையுமிடித்துக் கடலிலே தள்ளி விட்டு, அவர்களையுமோடத்தில்ேற்றி அனுப்பிப்போட்டு வாவென்று சொல்ல, மந்திரியும் அரசர்கட்கரசியே அந்தப்படி செய்துவருகி றேனென்று நமஸ்காரம்பண்ணி விடையும் பெற்றுக்கொண்டு பதினா யிரம் பேர்சூழ்ந்துவர மத கரியின்மேற்கொண்டு மந்திரி வருகையில் திரிகயிலைக்கு நாற்காதவழியென்னத் திரிகயிலைச் சிலம்பின் மீது ஆலயங்களிலுங் கோபுரங்களிலும் மாடகூடமண்டபங்களிலுமுள்ள தங்கரத்தினமுடிகளின் பளபளப்பும் பிரகாசசாந்தியும் ஆகாசமள வில் பலவிதமான சுடர்விட்டெறித்தலைக்கண்டு, இந்தச் சொர்ண மயமான ஆலயஞ்செய்விக்கிறது தேவலோகத்தரசர்களோ நாக லோகத்தரசர்களோ பூலோகத்தரசர்களோ கண்டு கேட்டறிய வேண்டுமென்று மதகரியைவிட்டிறங்கி வருகையிலே வாயில்காப்ப வர்கள் மந்திரிவருகிற உதாரத்தையும் படையலங்காரத்தையுங்கண்டு அரசனுக்கு உரைசெய்ய அவர்களை அழையென்னக் காவலாளர் வழி விட மந்திரியும்வந்து இரத்தினசிங்காசனத்திலிருக்குந் தெய்வீகமான குளக்கேர்ட்டுமகாராசனை வணங்கி எழும்பிநிற்க அரசனுந்தன்னு
- 124 :-

குடய மந்திரியைப்ப்ார்த்து மந்திரியென்ன தம்பிரிானே தம்பிரானே முடிந்திருக்குதென்றான். வந்தமந்திரியும் இது யாதோவென்று அச்ச முற்றான். அப்பொழுது மந்திரியும் வந்த மந்திரியையும் அவனுடன் கூட வந்த யாவரையும் அழைத்துக் கொண்டு போய்ப் பளிங்குமண்ட பத்திருத்தி அறுசுவையுடன் போசனம் பண்ணுவித்து சந்தோஷ மாயரசன்முன் கொண்டு வந்து விட்டான். அதன்பின் அரசர்பிரா னாகிய குளக்கோட்டுராசனும் அம்மந்திரியைப்பார்த்து முகமன் பேசி வந்த காரியமென்னவென்று கேட்க, அவன் அரசனை நமஸ்காரம் பண்ணிச் சொல்லும் வசனம்:-
இந்த இலங்காபுரியை ஆண்டிருந்த புவனேயகயவாகுசுதரான மனுநேயகயவாகுவின் மகள் ஆடக சவுந்தரி இப்போது அரசுசெய் கிறது. அவ்வரசி தேவரீர் திரிகயிலாயமலையிற் சிவாலயமுண்டு பண்ணுகிற செய்திகேட்டு அடியேனையழைத்துச் சொன்னவசனம். தேவரீருடைய சிறீகமலபாத தரிசனை கண்டு இவ்விடத்து ஏதொரு காரியம்முட்டாயின் எங்களாலியன்ற காரியத்திற்குக் கேட்டுவரச் சொல்லி அடியேனுக்குக் கட்டளை கிடைத்தபடியாலிவ்விடம் வந்தே னென்று சொல்ல, அரசனும் அகமகிழ்ந்து உங்கள் இராசாத்தி உனக்குச்சொன்ன வசனம் நான் சொல்லக்கேள். வடகரையிலி ருந்து ஒரு சைவன் வந்து மலையின் மேலாலயங்கட்டுகின்றான். அதையிடித்துக்கடலிற்றள்ளி அவர்களையும் ஒடத்திலேற்றியனுப்பி விட்டு உன்னைவரச் சொன்னதல்லவாவென்றரசனுரைக்க மந்திரி யும் நடுங்கி மெய்வசனமென்று சொல்லிநிற்க அரசனும் மந்திரியை யஞ்சலென்று சொல்லி அதிவிசித்திரமதியூகமந்திரி நீயென்று சந் தோஷப்பட்டுச் சொன்ன வசனம், இந்த இலங்காபுரியையாளுங் குமாரத்தி எமதுவம்சத்தாள் எம்மையறியாமற் சொன்னதற்காக * நீயச்சப்படவேண்டாமென்று பின்னர் அம்மந்திரியை யரசன்கேட்ட வசனம், இச்சிவாலய பூசை விதிமுறையாக நடக்கவேண்டுமென்று வெகு குளங்கள் கட்டுவித்தேன். ஒன்றும் எனக்குத்திருப்தியாயி ருக்கவில்லை. வருஷம் பன்னிரண்டு மாதமும் மாறாமடைபாய ஒரு குளங்கட்டுதற்கு எவ்விடம் நல்லதென்று கேட்க அம்மந்திரி சொல்லுவான். அறுபத்துநாலு குளமும் வயலும் இரண்டுமலைக்கு மேல்பாலாயுண்டு. அந்த இருமலையையும் பொருத்திக்கA ஒரு பெருங்குளமாகும். அதற்குவெளிவயல் ':ತ್ತಿಣಿ: 岛点
g)
வெகுவிசாலமுள்ள இடமென்று மந்திரி ல, ஆப்பரிப்பாரம்ான கட்டுக்கட்டிப் స్క్రి தந்திரிசொல்லுவரின். அடியேனினைத்தபடி தேவரீர் ಆಟ್ಲಿ? ால் ஒன்பது நாளைக்குள் இந்த மகாபெருங்குளமுங்கட்டுவீத்து இயல்வெளியுந்தி த்தி முடிக்க
லாமென்ன அரசர்பிரானும் குந்தி" சந்நோகப் மந்திரியே
− 125\. س- .

Page 72
'நீ மன்த்தில் நினைத்தபடி முடிப்பேன், குளங்கட்டுவிப்பாயென மந்திரியும் விடைபெற்றுச் செல்லும் வேளையில் அரசனுந் தானணிந்த விலைமதிப்பில்லாத மாணிக்க மாலையையுங் கணை யாழியையுங் கொடுத்து மணவார்த்தைப்பாடுஞ் சொல்லியனுப்ப மந்திரியும் போய் இராசகுமாரத்தியைக்கண்டு வணங்கி மாலையை யுங் கணையாழியையுங் கொடுத்துக் குளக்கோட்டு ராசனுடைய பெருமையையும் பராக்கிரமத்தையுஞ் சொல்லிக் - குளங்கட்டுகிற செய்தியையுஞ் சொல்லக் குமாரத்தி சொன்னவசனம். பூதப்படை யைக்கொண்டுபோய்ச் சீக்கரங்கடலும் மலையும் போலக்குளங்கட்டி முடித்து, வயல்வெளியுந்திருத்தி, இரவிகுலதிலகரான இராசாவை யுங்கூட்டிக்கொண்டு வருவாய் என்ன மந் தி ரி சொல்லு வான். பெ ரு ம் பூ த ங் க ளை க் கூட்டிக்கொண்டு போய்ச் செய்விக்க வேலை போதாது. குறட்பூதமாறையும்ஒரு பூதராசாவையும் கூட்டிப் போகிறேனென்று சொல்லி நாளொன்றுக்கு இரு பத் தோர வண அரிசியும் வேண்டிய மற்றுஞ் செலவு முதய காலத்தில் வந்து சேரும்படி திட்டம்பண்ணிப் பூதங்களுடன் மந்திரி சென்று அரசனை வணங்க அவ்வரசனும் அம்மந்திரியும் வந்துநின்று அனேகங்காதவழி கோலிக் கற்கரை திருத்தித் தன்னுாற்றுக்காணப் பெரிய மண்டபப்படியுங் கட்டுவித்து அம்மண்டபப்படியில் நின்று மதகுக்குச் செப்புப்பீலியும் வைத்து இடைபிங்கலை சுழிமுனை நின்றுலாவு கபாலகுத்திரமாக மதகும் அதற்கமையக் கிணறும் உடல்குளமும் சிரசு மையக் கிணறும் மையக்கிணற்றில் பிடித்தலும் நாசிவிடுத்தலுமாய் மையக்கிணற்றில் நாப்பண் ஓங்காரச்சுழி ஒரு போதும் மாறாமதகும் திட்டமிட்டு மதகுதெரியாமற் சிகரகுப் பாயம் போட்டு மதகுபார்த்துவர ஞானசூத்திர வாயிலும் விட்டுப் பூட்டுத்திறப்புந்திட்டம் பண்ணிமுடித்து இருமலையையும் பொருத்தி மகாபெரும்பருவதம் போலக் கட்டுங்கட்டி அனவரத காலமும் அலைதாங்கி நிற்க மகாபெருங்கல்லுகளும் பரவி ஐந்து நாளில் திருக்குளத்துப்பணி முடிந்து ஆறாம் ஏழாம் நாளில் திருக்குளக் கட்டினடிவாரத்தினின்று மலை திடர் மரம்வெட்டி சமுத்திரக் கரையளவும் மகாபெரும் வயல்வெளியுந் திருத்தி மாறாமடை பாயும் மதகில் நீர்பாய ஆறும் வெட்டி முடித்து எட்டாம் நாள் திருக்குளத்தினின்று இருபத்தெட்டுக் காதவழிக்கு திடர்மரம் வெட்டி மாபெருங்கங்கைபோலாறும் வெட்டிக் கொண்டுபோய்ச் சமனவரையருவிவரு மாவலிகங்கைக்குக் குறுக்கே மறித்துக்கட்டித் திருக்குளத்துக்குக் "கங்கை நீர் கொண்டுவந்தபொழுது விடிந்து இருபத்துநாலு நாழிகையானது. பொழுது அத்தமயனமாகும் ஆறு நாழிகைக்குள்ளே மதகு நீர் கொட்டியாபுரக் கரைக்குப் பாயஆறும் வெட்டிமுடித்து ஒன்பதாம் நாள் பதினைந்து நாழிகைக்குள்ளாக
f
- 126 -

அஞ்சு ஆறுதலாகிய வான்களும் வெட்டித்திட்டம்பண்ணிக்கொண்டு பூதங்களையும் அவைகளிருக்குமிடத்துக்கு அனுப்பிவிட்டார்.
அதன் பின்னர் இராசராசனான குளக்கோட்டு ராசனும் தனது சதுரங்கசேனையும் மந்திரியுமாக உண்ணாசகிரியென்னும் பட்ட ணத்துக்கு வந்து ஆடகசவுந்தரியென்னும் இராசகுமாரியை விவா கம் முடித்துக்கொண்டு சில நாளங்கிருந்து இராசாத்தியுடன் திருக்குளம்பார்க்கவந்து பார்த்தபோது, வடபுறத்தில் ஒரு பணியி ருக்கக்கண்டு அவ்வரசி தன்னோடுவந்த ஸ்திரி சனங்களைப்பார்த்து இந்தப்பணிவைக் கட்டுங்களென்ன அச்சொல் முடியமுன் ஆளுக் கொரு கல்லாய்வைத்துக் கட்டிமுடித்தார்கள். அவ்விடத்திற்குப் பெண்டுகள் கட்டு என்று பெயரானது. அதன்பின் அரசனும் அரசியும்வந்து திரிகோணநாயகரையுந்தரிசனை செய்து சொக்கட் டான் மாதிரியான ரத்தின மணிமண்டபமும் பளிங்கினாலொற்றைக் கால் மண்டபமும் சமைப்பித்துத் தரிசனை செய்துவருகிற நாளில் கோணநாயகர் கிருபையால் குமாரத்தி வயிற்றிற் சிங்ககுமார னென்னுமொரு பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளையுடன் இரா சாவும் குமாரத்தியும் உண்ணாசகிரி பட்டணம் போய்ச் சிலநாளி ருந்து இராசகுமாரத்தி தேகவியோகமான பின்பு குமாரனை அந்தப்பட்டணத்தை அரசாள வைத்து மந்திரிக்கும் முகமனான வார்த்தை சொல்லிச் சிங்ககுமாரனுக்கு மந்திரியாகத் திட்டம் பண்ணி வைத்து பின் எங்கோமானாகிய அரசனும் தனதுபடை யலங்காரத்தோடு திரிகயிலைக்குவந்து தரிசனைசெய்து கொண்டி ருந்தார். முன்முலைத்தாடகையென்று சொல்வது பிறக்கமுன் தன பாரமிருந்ததனால் முன்முலையாடக சவுந்தரியென்று பெயரா யிற்று. இதுவரலாறுகள் வளமைப்பத்ததியின்படி கனகசுந்தரப் பெருமாள்சொல்ல வன்னிபமும் முதன்மையும் மற்றுஞ் சகலருங் கேட்டுச் சந்தோஷப்பட்டுப் பெருமாளுக்கு அபையகோன் முதலி யாரென்றுபட்டமுங்கட்டி வன்னிபந்தங்கத்தால் மூன்றுபட்டுமாலை யொன்று கழுத்திற்போட்டுக் கற்கட்டு முன்கைவளையும் போட்டுப் பொன்னரைஞாணுங்கொடுத்துப் பொன்னாவெழுத்தாணிசூரியுங் கொடுத்துப் பத்ததிக்குப் பொன்னின் கம்பையும் போட்டு மகிழச் செய்தார்.
அதன்பின் முதன்மையும் அவருக்குப் பொற்சரிகை முத்துக்குச் சுத் தலைப்பாகையும் பொன்னெழுத்துப்பட்டாடை வகையும் தங்கக் குவளை கட்டின உருத்திராக்க மாலையுங் கொடுத்தார். ஏழு ராயர்களும் ஏழுவயல் கொடுத்தார்கள். அஞ்சுபண்டாரத்தாரும் அஞ்சுவயல்கொடுத்தார்கள். இப்படியே கொடுத்தபின் அபைய
i 127 -

Page 73
'கோன்முதலியாரை அனைவரும் பார்த்து எங்கோமானாகிய ராசா வின் கட்டளைப்படி அந்தக்காலம் முதலிதுவரைக்கும் உங்கள் குடிக்குளிந்தபத்ததியுங் கல்வெட்டும் இருந்து வருகிறபடியினால்
இந்தச் சிவாலயத்துக்கும் இருபாகை முதன்மையவர்களுக்கும்
செய்தொழும்புகளுளொரு காலந்தடுமாற்றவந்தால் எக்காலத்துக்கும் உமது வம்சத்தார் ஒழுங்கு பண்ணவேண்டியதென்று சொல்லி அனைவருஞ் சந்தோஷப்பட்டு அரன் தொழும்பு செய்து மகிழ்ந்திருந் தார்கள். திருக்குளத்தின் மதகின் திறப்பு எயினர் குலத்துள்ள வனவீரசூரிய உடையார் கையிலிருக்கவேண்டியது.
ஆசாரிமார் வரவு
சோழவழநாட்டில் மாந்தையம்பதியார், அக்கசாலைத் தலை வர்மார் இவர்களைக் குளக்கோட்டுமகாராசா அழைப்பித்துத் திரி கயிலாயச்சிலம்பிலிந்த ஆலயங்களும் மதில்களும் பாவநாசச்சுனையும் "படிக்கட்டும் மற்றுஞ் சகல திருப்பணியும் திருக்குளத்து மதகும் விதிமுறையாகச் செய்த ஆசாரிமார் திருநாமம்: உலககுருவாசாரி, சித்திரகுருவாசாரி, வேதகுருவாசாரி, அட்டசனாகுருவாசாரி, வாமதேவகுருவாசாரி இவர்களைந்து பேரும் மனதில் நினைத்தபடி கையினாற்செய்யப்பட்ட விசித்திரகுருவாசாரிமார். இவர்களுக்கு அஞ்சவண விரைப்புத்தறையுங்கொடுத்துக் கோயிற்றிருப்பணிக்கு முன்னீடுங் கொடுத்து அரசன் சொன்ன வசனம்:- எக்காலமும் கோயிற்றொழும்புகள் நீங்கள் செய்யவேண்டியபடி செய்திருக்க வேண்டுமென்று கோயிலுக்குள் இவர்களுக்கு ஒரு தலைமையுங் கற்பித்தபடியறிக.
காராளர் வரவு
வடக்குநாடன் திருநெல்வேலிக்க திபதி செங்குவளைத் தாரான், செந்நென் முடியினன், அரசரோடெதிர்த்து வாதுவென்றவன் ஏரு டன்மேழி யிலங்கும் பதாகையன், அன்னக் கொடையும் ஆவின் பெருக்கமும் செந்நெற்குவியலுந்திரவியக்குப்பையும் நவமணிக்குவை யும் நாடொறுமிருந்த மூவருக்கெளியான், மூவரைக்காப்பவன் அன்னவன்மேன்மை யளவிடற்கரிதாம். மனுநீதி தவறாத குளக் கோடன் திருநேல்வேலிச் சிவாலயத்து நிற்குந்தருணத்திற் சீராள னானகாராளப் பெருமான் திருவர நெறி யாலயத்தில் அரன்றிரு முன்னே காப்புத்தரித்துக் கடவுளின் வாமத்திற் பயபத்தியாகச் பரிவுடன் வருகிற அலங்காரங்கண்டு அதிக சந்தோஷமுற்றுச் சீராள னென்னச் சிவபதந்துதிக்குங் காராளனென்னுங் கருணையங்கடலே
سست 128 سس۔

உம்மை நானொருவசனங் கேட்க வென நினைத்திருக்கிறே னென்னக் காராளனுமரசனை வணங்கி யடியேனைப்போலனேக கோடி சனங்களை இரட்சிக்குந் தம்பிரானே அடியேனைக் டேட்க வேண்டுமென்ற வசனமேதோவென்ன அரசனுத் திரி கயிலை நாதர் பெருமைப்பாடுகளைச் சொல்லி உம்முடைய குடியிலொருமகவை எமக்கு அன்பாக அகமகிழ்ந்து தரவேண்டும். அந்தச் சிவாலயத்துக் குத் திருக்காப்புத் தரிக்கவுந் திரவியப்பத்ததி வைத்திருக்கவும் அந் தச் சிவாலயத்துக்கு முன்னிட்டுக்காகவும் அப்பிள்ளை வேண்டிய தென்று சொல்லக் காராளனுமிகமகிழ்ந்து தன் வம்சத்தில் ஒருகுடி யான மனுஷரைக்கொடுக்கக் கூட்டிவந்து இலங் காபுரியிற் கட்டுக் குளப்பற்றடங்கலு மூராட்சியுங் கொடுத்து, நிலாவெளி நிந்தவூராகக் கொடுத்து வளமையாகிய பெரியபத்ததி கல்வெட்டுக்கணக்கு இவை யெல்லாங் கொடுத்து, வன்னிபத்துக்குச் சரியான வரிசைமாணியமுங் கொடுத்து, இனி எந்தக்காலமும் இச்சிவாலயத்தில் நடக்கப்பட்ட காரியங்கள் உன் வம்சத்தவர்களெழுதிவர வேண்டியது. இந்தப்பத் ததியுமுங்கள்வசமிருந்து ஒருவர் வசமுங் கொடுக்கப்படாது. சற்புத் திரனாகிப் பொறுதிவிசாரமுள்ள மருமக்களிடமிருந்து வரவேண் டியதென்று திட்டம்பண்ணி எக்காலமுங் கோயிற்றொழும்பு செய்ய அரசன் திட்டம்பண்ணினது. அரசன் கூட்டிவந்த காராளர் திருநாமம் சுவர்ணாபுதாரபிள்ளை அறிக.
புலவ ன் வரவு
செகராசரடி பரவு திருக்குளக்கோட்டு மகாராசன் காஞ்சிபுர சிவாலயத்துக்குச் சென்று சிவதரிசனை செய்து துதிசெய்து நிற்குந் தருணத்தில் தெய்வப்புலவன் சுவாமி திருமுன்னிலையினின்று சிவ தோத்திரங்களோதுகின்ற இராசப்பண்ணையும் ஆசாரவலங்காரத் தையுங்கண்டு தெய்வப்புலவனைப் பார்த்து உன்வங்கிஷத்தில் ஒரு பிள்ளை தரவேண்டுமென்று கேட்கத் தெய்வப்புலவனும் அரசனு டைய பாதத்தில் விழுந்து நமஸ்காரம்பண்ணித் தேவரீர் அடி யேனை ஒரு பிள்ளை தரச்சொல்லிக்கேட்டது என்ன காரியத்திற் கென்ன இலங்காபுரியிலே திரி கயிலைநாதர் திருவாலயத்திற்றிரு முன்னின்று நாதகிதத்துடன் சிவதோத்திர மோதுதற்காசவென்று அரசன்சொல்ல, மிகவும் சந்தோஷப்பட்டுத் தன் குடியில் ஒரு குடித் தனமழைத்துக் கொடுக்க, அவர்களுடன் அரசன் திரிகயிலைக்கு வந்து நித்தியமும் சிவாலயத்திற்றிருமுன்னே நாதகிதம் பாடத் திட்டம் பண்ணிப் பள்ளவெளியில் இரண்டவண விதைப்புத் தரையுங் கொடுத்துக் கொட்டியாபுரத்தில் சமுத்திரக்கரையருகாக ஒரு கிரா மத்தை நல்லதே என்று கேட்கப் புலவனும் பார்த்து நல்லவூர்
= 29 -

Page 74
அடியூேலுத்தச் சம்பூரணழென்ன. அரசனும், ழகிழ்த்துஅந்தவூகுக்குச் சிம்பூரென்று பேரிட்டு எந்தக்க்ரலுத்துக்கும், உன்குடியின், டினுஷகுக் குப் பரவணியாகத் தந்தோழென்று செப்புக்கம்பை, போட்ட பூத்ததி புங்கொடுத்துக் கோயிற்றிருவாசகப் புலவுனென்று அரசனுரை நிறுத்தியது. அரசன் கூட்டிலுந்த, தெய்வ புலுவூன்றிருநாமம் சிலதித் திரப் பெருமாள் புலவன்.
ஆன்னியும் , வரவு
செங்கமல மலர்,மாதுதங்குபுயசெயுரரசசேகரர். களடிபரவுகே கன் தினகரன் குலம்தனில் வருகுளக்கோட்டுடின் கென்றுமாழுதுரைபணு கித் திகழ்ம்திக் குலராமன்,தனியூண்ணாப்பூபாலவன்னிடம் முதலாக எத்தனைவன்னிபம் இத்தலத்துக்கு அரசுரிமை புண்ணினதென்று க்னக்சுந்தரப் பெருமாளைக் கேட்க அவர் சொன்னவசனம்:- ஆதி யாக முன் மதுரை மாநகரால் வந்த வுன்னிபம்:திருமலைநாடன் தன்ரியுண்ணாப்பூபாலன் சுந்தரநாத தனியுண்ணாப்பூபாலன், அரசு நிலைதவறாத் தனியுண்ணாப்பூபாலன், தன்தாரதார பிறர் புத் திரத்னியுண்ணாப் பூபாலன், மனுநீதிதவறாத தனியுண்ணாப்பூபா "லன், மண்டலநாயக தனியுண்ணாப் பூபாலன், பசுபதி தனியுண்ணாப் பூபாலன், இலங்கைகாவல தனியுண்ணாப்பூபாலன், குணதுங்கராம தனியுண்ணாப் பூபாலன், அமராபதி தனியுண்ணாப்பூபாலன், சந்திர தேசதனியுண்ணாப்பூபாலன், புவனேயகாவல தனியுண்ணாப்பூபாலன், குறும்பர்கள்கோன் தனியுண்ணாப் பூபாலன், மாற்றலர் பெருமான் தனியுண்ணாப்பூபாலன், செகதுங்கபோச தனியுண்ணாப் பூபாலன் *யிலரிய நேச தனியுண்ணாப் பூபாலன், வெற்றி நாயக தனியுண் ‘னாப் பூபாலன், தன்னாண்மை குன்றாத் தனியுண்ணாப்பூபாலன், “பொன்னவராய தனியுண்ணாப் பூபாலன், உத்தமமொழியான் தனி யுண்ணாப் பூபர்லன், செல்வநாயக தனியுண்ணாப்பூபாலன், வெற்றி நீர்யக தனியுண்ணாப் பூபாலன், மருதநாயக தனியுண்ணாப்பூபா லன். முருகநாய்க் தனியுண்ணாப்பூபாலன், சுப்பிரகாய தனியுண் *னாப்பூபாலன், நல்லநாயக தனியுண்னாப்பூபாலன், வல்லிகாவல தீனியுண்ணாப்பூப்ாலன், பிள்ளைநாயக தனியுண்ணாப்பூபாலன், ப்ெரியகர்வல தனியுண்ணாப்பூபாலன், சிதம்பரநாயக தனியுண் ணாப்பூபாலன், பரமநாயக தனியுண்ணாப்பூபாலன், கதிரைநாயக தீனியுண்ண்ாப்பூபாலன், சேதுகாவல தனியுண்ணுாப்பூபாலன். இவ் வன்னிப்த்தின் நாளையிலே சந்திரகுலத்து வன்னிபம் காலற்றுப் போனது." இரண்டிராயரும் இரண்டு பண்டாரத்தாரும் காரைமா ந்கரத்துக்குப் போய் மேலான வம்சப்பிரதாபமுள்ள கங்காகுலரதிப
சில் ஒரு ஆண்பிள்ளையும், மதுரை நதரில் முன்வன்னிபக்குடியில்
ー139 ー

ஒருபெண்ணும் கூட்டிவந்து நல்லதினத்தில் விவாக முடித்துத் திரி கயிண்லமாநகரில் “முன்வன்னிடமிருந்த பூபால கட்டரண்மனையிற் றபணியீ'வாசனத்திருத்தி முதன்மைதவிர மற்றையாவரும் நழஸ், காரம்பண்ணி எங்களுக்ரு அரசுரிம்ை பண்ணுவீரென்று “சொல்லி அரண்றொழும்பு செய்திருந்தர்ர்கள்."
காரைநகர்ால் வந்த வன்னிபத்தின் திருநாம்ம் செகர்ர்சநர்த்
வன்னிப்iம், குருநாத்ரர்ம வன்னிப்ம், உலகள்ண்ட் வன்னிப்பம், கயிலாய வன்னிசம், கனகர்ாசவன்னிபீம்; பட்ைகாத்தவன்னிப்பம், எதிரிகளேறு. வன்னிபம், கணபதிரர்ச வின்னிப்ப்ம், நயத்தருராம் வன்னிப்பம், தரும் நெறியான் வன்னிபம், படைவீரங்க ண்ட் வன்னிபம், மதுரவாசக
வன்னிபம், தியாகராச வன்னிபீம், கரன்சக்ர்வ்ல வன்னிபம் அன்ன
சத்திர வன்னிபம், வரையாதளிக்கும் வன்னிபம், கதிரைமாமலை
வன்னிபe, 'ஏகாந்தவ்ன்னிபம், ஏரம்பவன்னிப்ம், நல்ன்லுயினார்
வன்னிபம், சொக்கன்ாய்க வன்னிபம், சுந்தரனாத வன்னிபம், பாற்
கரர்வன்னிபம், வீரராமவன்னிபம், குணதுங்கர்ாம வன்னிபம், நாக்
மாமணி வன்னிபம், கயிலாயநாயக வ்ன்னிடம், புவிராமவன்னிடம்,
சோமிநாயக வன்னிபம், உலகநாயகவன்னிபம், சூரியநாயகவன்னி
பம், நந்திதர்ய்க வன்னிபம், இலட்சுமிநாயக வன்னிபம், சந்திர தேன் வன்னிபம், இலட்சுமிநாயக வன்னிபம், சந்திரதேவ வன்னி if Lh, பெற்றித்ஈயக வன்னிபம், உலகந்ாயகவன்னிபம், வயிரவந்ாய்க
வன்னிபம், அரசுகாவலவன்னிபம், திரும்ல்ைப் பெருமாள் வன்னி பம்,-சிதம்பீரநாதர் வன்னிடம், புட்பநாயகவன்னிபம், இவர் நான்ன யிற்கோலற்றுங்போயிற்று; இதற்குப் பின் முன்ச்ொன்னராயரும் பண்டர்ரமும் சோழநாட்டுக்குப் போய்க் காராளிரிலொரு ஆண் பிள்ண்ள கொண்டுவந்து முன்பர்வணியீர்ன் பெண்ணுக்கு விவாக) முடித்தும் பூபாலகட்டிலிருத்திச் 'ச் கலருஞ் சொற்கிேட்டு அரன்" தொழும்பு-செய்துவந்த்ார்கள்.
சோழநாட்டு வன்னியம் ” சோழ்நாட்டால் முன்வந்த்வன்னிபம், காராளசிங்கவன்னிப்ப்ம், நந்திச்சிங்கவன்னிபம், மதராசசிங்கவன்னிபம், திருமலைராயசிங்க வன்னிப்ம், இராமசிங்கவன்னிப்ம், இலட்சுமணசிங்க வன்னிபம், சந்திரகிங்கவன்னிபம், அட்ைக்கலங்காத்தசிங்க வன்னிபம், கங்கை காவலசிங்கவ்ன்னிபம், மருதநாய்க்சிங்கவன்னிபம், கனகநாயுக்சிங்க, வன்களின்பே இலங்கைர்வ்ல "சிங்கவ்ன்ஸ்ரிப்ம், க்யிலிாய்சிங்க்வின்ன்
"تن 13T --

Page 75
பம், குமாரவேல்சிங்கவன்னிபம், திருவம்பலசிங்க வன்னிபம், பரமா னந்தசிங்க வன்னிபம், அம்புயபதிசிங்க வன்னிபம், சிவஞானமுத்துச் சிங்கவன்ன பம். சித்தநாயகசிங்கவன்னிபம், நாகமாமணிச் சிங்கவன் ணிபம், சிதம்பரநாயக சிங்க வன்னிபம், நல்லநாயக சிங்க வன்னிபம், அருணநாயகசிங்க வன்னிபம், வீரசுந்தரசிங்க வன்னிபம், சொக்க நாயகசிங்கவன்னிபம், தருமநாயகசிங்கவன்னிபம், அத்திநாயகசிங்க வன்னிபம், மூத்தநாயகசிங்க வன்னிபம், பசுபதிநாயகசிங்க வன்னிபம், இராசரத்தினசிங்க வன்னிபம், எதிர்வீரசிங்கவன்னிபம், இவரோடு காலற்றுப்போனபடியால் முன்போல் இருகுடியில் மனுஷரும் மருங் கூரிற் சென்று காராளவம்சத்தில் ஒரு ஆண்பிள்ளை கொண்டு வந்து இவ்விடமிருந்து வன்னிப்பெண்ணுக்கு விவாகஞ் செய்து வைத்து வளமைபோல் அரன்றொழும்பு செய்திருந்தார்கள்.
மருங்கூர் வன்னிபம்
மருங்கூரால் முன்வந்தது நடராசகுமாரசிங்கவன்னிபம், வெற்றிக்குமாரசிங்கவன னிபம, இராமநாதக்குமாரசிங்கவன்னிபம், இலடசுமணநாதக்குமாரசிங்கவன்னிபம,நல்லநாயககுமாரசிங்க வன் னிபம், சிங்கவனணிபம், தில்லைநாதக்குமாரசிங்கவன்னிபம், எல்லைக் கய வலகுமாரசிங்க வனனிபம், சாரங்கநாயககுமாரசிங்கவன்னிபம், கங்கைகவலகுமாரசிங்கவன்னிபம்,இலங்கைகாவலகுமாரசிங்கவன்னி பம், தனிமைநாயககுமாரசிங்கவன்னிபம், சந்திரராயகுமாரசிங்க வன்னிபம், கயிலாயகுமார சிங்க வன்னிபம், சந்திரராயகுமாரசிங்க வன் ணிபம,கயிலாயகுமரசிங்கவணையம் இரகுநாதகுமாரசிங்கவனணிபம, சுப்பிரகாசகுமாரசிங்கவனணிபம், தனமநாயககுமாரசிங்கவன்னிபம், வேதாையககுமாரசிங்க வன்னிபம், கொற்றவராசகுமாரசிங்கவன்னி பம், தண்டுவாாமிண்டககுமாரசிங்கவன்னிபம், எதிரிநாயகக்குமார சிங்கவனணிபம, கோமளராகவகுமாரசிங்க வன்னிபம், திருமலைராய குமாரசிங்கவனனிபம், அடைக்கலங்காத தகுமாரசிங்கவன்னிபம்,படை வீரகண்டகுமாரசிங்கவன்னிபம், அம்புயா பதிக்குமாரசிங்கவன்னிபம், சரவணகுமாரசிங்கவன்னிபம, சேதுநாதகுமாரசிங்கவன்னிபம், சித் திரமொழிக்குமாரசிங்கவன்னிபம், மனுநேயநாயக குமாரசிங்கவன்னி பம், ஆரியநேயகுமாரசிங்கவன்னிபம, சித்திரமொழிக்குமாரசிங்க வன்னிபம், சுந்தரநாயகுமாரசிங்கவன்னிபம், திருவுறைநாடன் குமாரசிங்கவன்னபம், குணரத்தினக்குமாரசிங்கவன்னிபம். இவர் நாளையிற் காலற்றுப்போனது. அதன்பின் பரவணியான வன்னிபப் பெண் இருபத்திநாலுவருஷம் வன்னிபம் நடப்பித்துவந்தது. அந் நாளில் ஆரியராசா த திரி கயிலைக்கு வந்து தெரிசனஞ் செய்து தன்னுாருக்குப்போனவர். அதற்கு எழுபத்தைந்து வருஷத்துக்குப்பின் பறங்கிக்கலாபம் வந்தது. அப்போது இந்த வன்னிபப் பெண்ணின்
a 32 -

குடியுங்காலற்றுப்போனது. அதன்பின்னரும் வன்னிபத்தின்வரலாறு கனகசுந்தரப் பெருமான் கிளையோர்பத்ததியிலும் கருகுலக்கணக் கிலும் புலவன் பத்ததியிலும் எழுதிவரவேண்டியது.
கருகுலக்கணக்கு
இரவிகுலக்குளக்கோட்டுராசன் மருங்கூராற்கொண்டுவந்த தானத்தாரில் மேலான குடியில் மனிதருக்குக் கருகுலக்கணக்குப் பரவணியாகக்கொடுத்தது. அந்தக்கணக்கப் பிள்ளைகளின் திரு நாமம்:- ராமகிட்டிணக்கருகுலக்கணக்கன், முத்துக்கிட்டிணன், முத்துலிங்கன், பாலகிட்டிணன், தாமோதரன், இரங்கப்பராயன், வினைதீர்த்தான், சிவனார்முத்து, கனகவேலாயுதன், கோதண்ட ராமன், வைத்தியநாதன், கடமலைநாதன், வைத்தியநாதன், கயிலாயநாதன், கனகசுந்தரன், கோணாமலை சிதம்பரமூர்த்தி, ஆரியன் விசுவநாதன், அருணாசலன் வெற்றிவேலாயுதன், திருவம் பலம் ஆடியபாதன், விநாயகமூர்த்தி கதிரைமலை, சிவஞான மூர்த்தி. இக்கருகுலக்கணக்கன் நாளையில் வன்னிபமும் இருபாகை முதன்மையும் மற்றுஞ்சகலருமாகக் கருகுலக்கணக்கனுக்கு முதலிப் பட்டங்கட்டினார்கள். அதன்பின் இருந்த கணக்கர்களின் திருநாமம் கயிலாய நாயகமுதலி, கனகநாயகமுதலி, குமாரவேல்முதலி, கதிரைமலைமுதலி, அம்பிகைபாகமுதலி, சுந்தரநாதமுதலி, இராமநாதமுதலி, வீரபத்திரமுதலி. தெய்வ நாயக முதலி, சுந்தரநாதமுதலி, திருவுடைமுதலி, கோணமாமலை முதலி, அரியபிறவிக்கயிலாயமுதலி, சோமலிங்கக்கயிலாயமுதலி, சுப்பிரமணியக்கயிலாயமுதலி, தாமோதரக்கயிலாயமுதலி, அரிய புத்திரக்கயிலாயமுதலி, அமராவதிக்கயிலாயமுதலி, சிற்றம்பலக் கயிலாயமுதலி, நாகமணிக்கயிலாயமுதலி, மாணிக்கக்கயிலாயமுதலி, விசுவநாதக்கயிலாயமுதலி, சிவந்தநாதக்கயிலாயமுதலி, ஞான முத்துக்கயிலாயமுதலி, இலட்சுமணக்கயிலாயமுதலி, உமைநாயகக் கயிலாயமுதலி, பங்கயபாதக்கயிலாயமுதலி, பரமானந்தக்கயிலாய முதலி, ஆடியபாதக்கயிலாயமுதலி, நாகமணிக்கயிலாயமுதலி, நல்லதம்பிக்கயிலாயமுதலி, பொன்னம்பலக்கயிலாயமுதலி, வயித் தியநாயகக்கயிலாயமுதலி, சிவஞானமூர்த்திக்கயிலாயமுதலி, சிவப் பிரகாசக்கயிலாயமுதலி, வசந்தராசக்கயிலாயமுதலி, வேலாயுதக் கயிலாயமுதலி, பரசுராமக்கயிலாயமுதலி, பாவநாசக்கயிலாய முதலி, சதாசிவப்பெருமாள்கயிலாயமுதலி, ஆபதோத்தாரணகயி லாயமுதலி, இரகுநாதக்கயிலாயமுதலி, குருநாதக்கயிலாயமுதலி, பரசுராமக்கயிலாயமுதலி, மணிசேகரக்கயிலாயமுதலி, வயிரவநா தக்கயிலாயமுதலி, அறுமாமுகக்கயிலாயமுதலி, கனகராயக்கயிலாய
سسسس 133 مسه

Page 76
முதலி, உலகநாதக்கயிலாயமுதலி, வெற்றிநாயகக்கயிலாயமுதலி, செல்லநர்யக்க்கயிலாயமுதலி, நல்லபெருமாள்கயிலாயமுதலி, திரு
கோணமலைக்கயிலாயமுதலி, ஆண்டியப்பக்கயிலாயமுதலி, தாண்டவமூர்த்திக்கயிலாயமுதலி, குணத்துங்கராயக்கயிலாயமுதலி, நந்திநாதக்கயிலாயமுதலி, அடைக்கலங்காத்தகயிலாயமுதலி, வெற்றிக்குமாரகயிலாயமுதலி, சேதுகாவலக்கயிலாயமுதலி,
கங்கைகாவலக்கயிலாயமுதலி, திருவம்பலக்கயிலாயமுதலி, திருவடி
காத்தகயிலாயமுதலி, திருமலைநாயக்ககயிலாயமுதலி, பரசுராமக் கயிலாயமுதலி, கந்தப்பகயிலாயமுதலி, கதிரவேற்கயிலர்யமுதலி,
செண்பகநாதக்கயிலாயமுதலி, பாலகப்பெருமான்கயிலாயமுதலி,
மாணிக்கப்பெருமான்கயிலாயமுதலி, பிள்ளைநாயகக்கயிலாயமுதலி,
சித்தநாதக்கயிலாயமுதலி, சிங்க நா த க்க யி லாய மு த வி
மூத்தயினாக்கயிலாயமுதலி, அமுதநாயகக்கயிலாயமுதலி, பிறை
சூடிக் கயிலாயமுதலி, வினைதீர்த்தகயிலாயமுதலி, மயிலேறிமுதலி, மாசிலாமணிக்கயிலாயமுதலி, இவர் நாளிற் பறங்கிக்கலாபம்வந்து தாமரைக்கட்டில் மூன்றுவருஷம் பூசைநடந்தது. அதன்பின் அக்க
லாபம் மிகுந்தபடியால் முன்சொன்னவிடங்களிலே ' தட்டுமுட்டுக்
களையொடுங்கவைத்துவிட்டுக் கழனிமலைச்சாரலுக்கு உடையவரை, யும்ெமுந்த்ருளப் பண்ணிக்கொண்டு போனது. அதன்பின் கருகுலக் கணக்கு எழுதியவர்களுடைய நாமம் :- பொற்கொன்றைக்கருகுலக் கணக்கன், திருமுடிக் கணக்கன், திருமலைக்கணக்கன், செகநாதக் கணக்கன், சிவஞானக்கணக்கன், நீலிக்கணக்கன், இனிவருங்கனக்
கர்மாரை எழுதிவரவுேண்டியது வரிப்புத்தார்பகுதி, தானத்தா ரெழுதவேண்டியதல்ல,எதிர்க்குடியுரனபடியாற். புலவன்த்ததிழி லெழுதும்பூழ் அரசன், க்ற்பித்தவசனம்.
திருகயிலைநாயகரை திருக்குளக்கட்டில் மூன்று வருஷம்:பூசை செய்த நாளில் இரண்டு ஆலாத்திப் பெண்கள் இல்லுரது போன படிய்ால் வன்னிடமும் இருபாகைமுதன்ழையும் கனகசுந்தரப்பெரு மாள்ைப்பார்த்து. இச்சிவாலயத்துக்கு எத்தனைபேர் ஆலாத்தித் பெண்களென்று கேட்க, ஏழுபேரென்று சொன்னார். அவ்வார்த் தையை வன்னிபங்கேட்டுக் கருகுலக் கணக்கனைப்பார்த்து ஏழு ஆலாத்தியுந் திட்டம்பண்ணென்று சொல்ல அப்படித் திட்டம் பண்ணினது.அப்பொழுதிருந்து சிவனார் கருகுலக்கணக்கன் முன் பாக ஏழு ஆல்ாத்திப்பெண்களையுங் குடிபிரித்தது. செம்பித்துரை மகள் அன்னம்மை: அவள்மகள் மருதாத்தை சிதம்பரத்துரை மகள் கோணாத்தை அவள்மகள் கயிலம்மை; பாலகத்துரைமகள் prទា அவள்மகள் செம்பரத்தை தீர்த்தன்மகள்:புவனபிள்ளை
அவள்மக்ஸ்ஆம்ைபூர்த்தை.இவனார்கணக்கன், 40கள்.டாலாத்தை
܊ ܬܵܐ ܕ݁ܝܵܐ܆ ܐܲ ܗܵܵ
- 134 - ,

அவ்ஸ் ஆகன்ஸ் ேேகாண்ர்திக்த: கரக் கைத்துர்ைம்கள் வேதம்மை, அவள்மகள் வள்ளியம்மை; கருக்குநாயகம்பிள்ளை மகs திருவுடையாள்: "அவள்ம்கள் - சுந்தரியார்; இப்படி "ஏழு ஆலாத்திப்பெண்களையும் திட்ட்ம்பண்ணிக் க்ருகுல்க்கணக்கன் கூற வன்னிபமுதலிய சகலரும் பார்த்து எப்பொழுதும் இப்படி நடக்க்வேண்டுமென்றும் இனிமேலும் வருங் கணக்கர்மாரும் இவர்கள் குடியிற்கால்ற்றுப்போன்ால் அவரவர்கள் தேடிய கர்ணி உடைமை வாவுங்கொடுத்து ஃஅந்த வங்கிஷத்திற்றிட்டம்ப்ண்ணி ஆலர்த்தி நடப்பிக்க வேண்டியது. இப்படி நடப்பியாதிருந்தால் அரசருக்கும் சிவாலயத்தை நடப்பிப்பவருக்கும் ஊருக்குமர்காது. தானம் வரிப் :த்து ஸ்திரிக்குடியாயிருந்து அரன்றொழும்பு செய்யவேண்டியது. முதன்மைமாருமப்படியே நடக்கவேண்டியது. இப்படியே வன்னிப மூதிலியா வருந் திட்டம்பண்ணி 'தத்தம்க்குரிய அரன்றொழும்புகள் செய்திருந்தார்கள் என்றவாறு.
திருச்சூக்ரவேட்டைத்துர்து
திரிகயிலாயபருவததே சரும் முப்புரமெரியெழ விழித்தயுதாரண ரும் ஆயிரகோடி அண்டங்களிலுள்ள ஆன்மவர்க்கம் அனைத்தினுக் கும் உயிருக்குயிராயிருக்கும் பராபரனும் செகம்புகழ் குளக்கோட்டு மகாராசனடிபரவு மாதியானவரும் ஆகிய கோணைநாயகர் திருச் சூகரவேட்டைத் திருவிளையாடல் முடிந்துவந்து, இந்திரராசனு டைய இரத்தினமணி மண்டபத்தில் மந்திரத்தவிசினிடைவந்து தின்று, மாளிகைக்கு எழுந்தருளுதற்குப் பிடியன்ன மென்னடையா கிய தேவியைக்கேட்டுவரச்சொல்லி உத்தரவானது. எரிமனிகுலவும் இமையோற்பருவதக் கனகமாமணிப்பந்தரினின்று திருமண்ஞசெய்து வாமபாகம் மகிழ்ந்தெனக்கருளிய மெஞ்ஞான நாயகனாகிய பரா பரன் திருச்சூகரத்திருவேட்டைக்கு எழுந்தருளினால் திருச்சூகரத் திருவிளையாடலொழிந்து வரும்போது மாளிகைக்கு வரவேண்டி யது. அதுவல்லாமல் இந்திரராசன் மந்திரசிங்காசனத்திருந்த என்னிடந் தேவதூதனுப்பின்படியால் ஏதோ ஒரு களவு நடந்திருக்கின்றது. அதைத் தீர்க்கவிசாரித்தல்லாமல் மாளிகைக்கு வர வேண்டியதில்லையென்று இமாசல்புத்திரியாகிய பரமேசுவரி யால் உத்தரவானது. ஆயிரகோடியண்டங்களிலுள்ள ஆன்மவர்க்க மனைத்தினுக்கும் படி அளக்கும் உலகநாயகியாகிய பார்வதி திரு மண்ட்பத்திற் சயனம்பண்ணும் வேளையில் முப்பது முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரமிருஷிகளும் அட்டவசுக்களும் கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்தியாதரர்களும் சுந்தரமூர்த்தியு மாகவந்து நிற்கத் திருச்சூகரவேட்டைக்கெழுந்தருள வேணுமென்று அரியிரமாதிமுதலான் யாவரும் மன்றாட்டம்பண்ணி நின்றபடியால் அங்விடம் போய்த்திருச்சூகரத்திருவிளையாடல் பண்ணிவந்த தேயல்லாமல் அவ்விடத்தில் யாதொரு ஆடல்பாடல் திவிதலிலா வினோதங்களர்ண் கர்ரியங்களொன்றும் நடப்பிக்கவில்லையென்று இமாசலபுத்திரியாகிய பார்வதிக்கு விண்ணப்பஞ் சொல்லும்படி காளகண்டதாரியாகிய பரமேசுவரனால் உத்தரவானது.
- 135 -

Page 77
அமிர்தசிதள சந்திரசேகர "அதலவிதல நிதல சுதல தலாதல ரசாதல மகாதல பாதாலமாகிய சத்தபா தல மூடுருவப்பிளந்த அரியும் பிரமருந்தேடியுங் காணுதற்கரியதாகிய பரமேசுவரன் மோக விகாரங்கொண்டு ஒருகாலத்தில் குருகுலசம்பந்த பரதவர் கோமான் பதியரசன் திருமகளாகிய திரைசேர்மடைந்தயை விவாகம்பண்ண நினைந்து மகாபெருமையாக மாறாட்டமான வார்த்தைகளைப் பேசி கயிலாய பதியரசனென்று திருநாமமுஞ் சொல்லி வேதவலையினால் மகரமும் பிடித்துக்கரையேற்றித் திரைசேர்ம டந்தையைத் திருமணம் புணர்ந்த தெட்சணதிரிகயிலாய பருவதவாச நேசராகிய கோணைநாயகர் மறுவசனம் என்னிடம் பேசவேண்டியதில்லையென்று இமாசலபுத்திரியான பரமேஸ்வரியால் உத்தரவானது. வெண்கிரண சுந்தர சந்திரோதய வதனாலிங்கிர்த உலோகநாயகியென்று பெருமைப்பாடாயிருக்கின்றது. தங்கள் தமையனார் தேவகி வயிற்றிற் பிறந்து இடைய சேரியில் நந்த கோபாலனிடம் வளர்ந்து வெண்ணைதிருடியும் உரலோடே கட்டுப் பட்டுந் தாப்புக்கயிற்றாலே அடிபட்டுந் தன்மனைவியிருக்கப் பதினா றாயிரங் கோபிகாத்திரிகளுடன் அனேக லீலாவிநோதங்கன்ௗப் புரிந்தும் இழுக்கடையவில்லையோ, தேவி ஒரு காலத்தில் தன் பிதாவாகிய தக்கனுடைய வேள்விக்குப் போகவேண்டுமென்று கேட்கக் கேட்டை நட்சத்திரமுஞ் சனிக்கிழமையுங் கிழக்கேசூலமும் போகலாகாதென்னக் கேளாமற் போய்த் தன்சரீரமுமிழந்து இமயோற்பருவதத்தில் மலையரசனுக்குப் பிள்ளையாகப் பிறந்து வளர்ந்து தவம் பண்ணின பின்னர் யான்போய்த் திருக்கல்யாணஞ் செய்து வாமபாகங் கொடுத்தருளியதை மறந்தது போலிருக்கின்றது என்று காளகண்ட தாரியான பரமசிவனாலே உத்தரவானது. பகர் கிரண மணிச்சுடிகை யூராவுடன் அவிர்கதிர்ப் பொற்கொன்றைக் காடலர்ந்த திருச்செஞ்சடையுடைய எமது நாயகராகிய பரம சிவனை நாமின்றைக்கு மற்றொன்று நினைத்து விருதாவானது சுவாமியிற் பிழையில்லை, சுவாமிக்கு உண்டில்லாதவைகளைச் சொல்லிச் சுந்தரமூர்த்தியும் வேறுசிலரும் வந்து ஆபரணாதிகளை யும் கொடிகுடைசாமர முதலானவைகளையும் கொண்டு கோயில் விசாரணைப் பிரதானிமார்களையும் ஆலாத்திப் பெண்களையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த ஆலாத்திப் பெண் களை இவ்விடத் தனுப்பினால் நாம் அவர்களைச் சில செய்திகள் கேட்டுக்கொண்டு சுவாமியைச் சிறிதுத் தடைதாமதமில்லாமல் விழா மண்டபத்துக்கு அழைத்துக் கொள்வோம் என்று இமாசல புத்திரியாகிய பரமேசுவரியாலுத்தரவானது. அப்படியே ஆலாத்திப் பெண்களை அனுப்பி ஊடரீர்த்து விழா மண்டபத்திற் பரமேசு வரன் பரமேசுவரியைக் கூடியருளினார் என்றவாறு. ". .
முற்றிற்று.
مسجنه 136 . سم .


Page 78


Page 79