கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழியும் முஸ்லிம்களும்

Page 1


Page 2

மொழியும்
முஸ்லிம்களும்
单 པའིtEདོ་༦གི་སྡེ་། ༥. ཆུ་་་ ནི་ ཆ་ ༥ ཊ། །g *|*। | 1०८६. T. M. பீர்முகம்மது. அ.கி.
. ܛܪܝܪܬ↓ܗ ܚܕ ܕ݁ܪܳܗ ¬
|||||||||||||||||| ابتلا 默 ".
هداني" 1 واسم "أ" 1،1 م)
في تقع ج " دلهيفي
வெளியிட்டோர்:
1. 6 TLD. ஜே. சங்கம், E369, வெலுவணு விதி,
தெமட்டகொடை, கொழும்பு.

Page 3
முதற்பதிப்பு: 1962 ஜூன்.
உரிமை ஆசிரியருக்கே!
விலே 40 சதம்
அச்சிட்டது
ஆர். ஜே. ஆர். பிரிண்ட்டர்ஸ், 901, கியூ வீதி, கும்பெனித்தெரு-கொழும்பு

வெளியிடுகின்ருேம்.
SLL SeAASe eA SL eeeL LeSLeASASeLeAAMAASS LeeeLeLeS LL ASAS eAeSL eALLLLLLLS
தமிழ் எழுத்தாளர் உலகும், பேச்சு மேடைகளும் உயர்திரு. டி. எம். பீர்முகம்மது அவர்களே அறியாதிருக்க முடியாது. எழி லும் எழுச்சியுமிக்க எழுத்தாளர் மாத்திரமல்ல, சொல்லின் செல் வர், பீரங்கிப் பேச்சாளர் என்றெல்லாம் தமிழ் மக்களால் போற் றிப் பெருமையாகப் பேசப்படும் ஒரு பெரும் பேச்சாளரும் கூட ! சுருக்கமாகக் கூறப்போஒல், ஈழத்தின் மிகச் சிறந்த பேச்சாளரி:ே அவர் (டியெம்பி) மிகவும் முக்கியமானவர் என்று பல பத்திரிகை களும் எழுதியிருக்கின்றன. அத்தகைய சொற்கொண்டல் சொல் லின் செல்வம் டி. எம். பி. அவர்களின் சொற்பொழிவு ஒன்றை, டி. எம். ஜே. சங்கத்தினராகிய (திருப்பாலக்குடி முஸ்லிம் ஜமாத்) நாங்கள் வெளியிடுவதில் பேருவகையும் பெரு மகிழ்ச்சியுமடை கின்ருேம், அதுவும் ஈழத்து முஸ்லிம்களுக்கிடையே, மொழி பற்றி ஒருசில நல்லெண்ணம் தோன்றிவரும் நல்ல சந்தர்ப்பத்தில் தான் இந்த சிந்தனேயைத் தூண்டும் சிறப்பு நூலே வெளியிடுகின் ருேம். தமிழ்மொழி பேசுகின்ற எல்லாமக்களும் இந்நூலே வாங் கிப் படித்து ஆதரவு தரவேண்டுமென அன்பு ட ன் கேட்டுக் கொள்கிருேம்.
இங்ங்னம்,
டி. எம். ஜே. சங்கத்தினர்,
கொழும்பு. தெமட்டகொடை. I - 7 - 19 62.

Page 4
பயனடையுங்கள்!
சென்ற ஆண்டு இறுதியில் (1-12-61) பலாங் கொடை அரசினர் முஸ்லிம் மகா வித்யாலய இலக்கிய வளர்ச்சிக் கழக ஆதரவில் நடைபெற்ற பெரும் கூட்டத் தில் நானுற்றிய சொற்பெருக்கே இச்சிறு நூலாகும். அப்பேரவைக் கூட்டத்திற்கு பலாங்கொடை பெருந்தன வந்தரும் பொதுப்பணிகளில் மிகவும் ஆர்வமிக்க பெருங் தகையாளரும் சமாதான தேவானுமான ஆலி ஜனுப் எம். எல். எம். அபுசானி அவர்கள் தஃலமை தாங்கியிருந்தார் கள். இஸ்லாமிய மாணவ மாணவிகளுடன் ஆசிரியர் களும் ஆசிரிmயகளும் பொதுமக்களும் மண் ட பம் நிறைந்து விற்றிருந்தனர். வித்யாஸ்ய அதிபர் ஜனுப் வாசன் அவர்களும் மாணவ மாணவிகளும் என் மீது காட்டிய அன்பிலும்ஆர்வத்திலும் ஓரளவுக்குசிறப்பாகவே பேசிமுடித்தேன்.
அந்த சொற்பொழிவின் ஒரு பகுதியை எனது அன்புத்தோழர் எஸ். எம். ப்ோசரஸ் அவர்கள் விரகேசரி பில் வெளியிட்டிருந்ததுடன், மீதிப்பகுதியின் குறிப்புகளே பும் கோடுத்துதவிஞர். அவரது பெரும்பனியின் காரண ாகத்தான் இச்சிறுநூல் வெளிவந்திருக்கின்றது எனப் பெருக்கு போடு கூறிக்கொள்கிறேன். அதோடு அன் றைய கூட்டத்தில் நான் கலந்துகொள்ள பெருமுயற்சி செய்து வெற்றிதேடித்தந்த தம்பி ஐ. எம். சலாஹுத்தீன் அவர்களேயும் நான் மறந்துவிந் முடியாது. இந்த சொற் பொழிவுநூல் வடிவில் வெளிவந்தால் பலருக்கும் பயன் ஏற்படுமென வற்புறுத்திய இரத்தினபுரி, அருமை நண் பர் பிலிப் (ஆசிரியர்) அவர்கட்கும், இதை நூல் வடிவில் வெளியிட எல்லா உதவிகளும் செய்து, வெளியிட்டும் உதவிய டி. எம். ஜே. சங்கத்தினருக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
படியுங்கள் : பயனடையுங்கள் !
அன்புள்ள, எட்டிபாந்தோட்டை .
1-7-62. டீயெம்-பீர்முகம்மது

தகுதியும் திறமையும் படைத்த தலைவர் அவர்களே! மதிப்புமிகு மாணவ மாணவிகளே! அன்புசால் நண்பர்களே ! ஆசிரியத் தோழர்களே!
பலாங்கொடை அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் நடைபெறுகின்ற இந்த சிறப்புமிகு கூட்டத்தில் முதல் முதலாகப் பேசுகின்ற வாய்ப்புக்கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகின்றேன். அது வரம் ஒரு கிழமைக்கு முன்பு கல்வியமைச்சர வர்கள் கருத்துப் பரிமாறிய அதேமேடையில் பேசுகின்ற நல்ல வாய்ப்புக்கு உங்களுக்கெல்லாம் நன்றி கூறுகின்றேன். இங்கு வந்ததும் எனது ஆசிரிய நண்பர்களும், இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின ரும் இந்த வித்தியாலயத்தின் அதிபர் ஜனுப் ஹசன் அவர் கஃள சந்திக்க அழைத்துச்சென்றனர். அங்குதான் தலைமை முதலாகக் கண்டேன். தேநீர் அருந்திக்கொண்டு பேகிக் கொண்டிருந்தபோது, அதிபர் அவர்கள் என்னிடம் " என்ன தலப்பில் பேசப்போகின்றீர்கள்." என்று வினவிஞர். அப் பொழுதுதான் என்ன தலைப்பில் பேசுவது என்ற சிந் தனே எனக்கு ஏற்பட்டது. நண்பர்கள் பேசுவதின் தொடரிலேயே நானும் பேசுகின்றேன் என்று சுருக்கமாக பதில் கூறினேன். இப்பொழுது இங்கு பேசிய எனது அருமை நண்பர்களோ, நான் பேசுவதைக் கேட்கத்தான் வந்தோமெனக் கூறி என்னே நடுப்பாதையில் விட்டு விட்டனர். எப்படியோ சில பல குறிப்புகளும் தந்தனர்.

Page 5
மொழியும் முஸ்லிம்களும்
இன்று நாட்டில் தாய்மொழிப்பற்று எல்லா மக்க ளிடையேயும் வளர்ந்து உயர்ந்து வருவது ஒரு நல்ல அறி குறி யா கும் . தாய்மொழிப் பற்றில்லாமலும் தாய்மொழிப் பயிர்ச்சியில்லாமலும் ஒரு வ ன் நாட்டின் மீதோ இனத்தின் மீதோ சமுதாயத்தின் மீதோ அன்பு செலுத்தமுடியாது. ஆகவே ஈழத்து முஸ்லிம்களும் தாய் மொழிமிக்கவர்களாகவும், பற்றுள்ளவர்களாகவுமிருந்து வரு வதிலொன்றும் ஆச்சரியமில்ஃ. முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்தானென்று இங்கு அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவரு வதைப் பார்க்கும்போது உண்மையில் நானெல்லாம் மிகவும் வெட்கப்படுவதுண்டு. தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட பிற சமயத்தவர்கள் இப்படிக் கூறுவதில்ஃ. அது அவர்க எளின் தாய்மொழிதான் என்று முடிவாகிப்போன விஷயம் போலவும், முஸ்லிம்களின் தாய்மொழி விஷயம் விவாதத்தி ஆறும் தர்க்கத்திலும் அகப்பட்டு கடைசியில் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்தான் என்று தீர்மானிக்கப்பட்டது போல வும் இவர்களின் பேச்சுகளிலிருந்து தொனிக்கிறது இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
தமிழகத்தில் நெல்லேயிலிருந்து சென்ஃனவரையிலுள்ள மக்கள் பேசிவருகின்ற தமிழ் வாக்கியங்களேயும், சொற்கஜா யும் நோக்கினுல், மிகவும் வேடிக்கையாகவும் வினுேதமாகவு மிருக்கும். " இழுத்துக்கொண்டு போய்விட்டான்" என்று நெல்லே மாவட்டத்தில் பேசப்படுகின்ற தமிழ் வாக்கியம், * இசுத்துக்கினு பூட்டான். ' என்று சென்னேயில் நெளிந்து
வளைந்து காணப்படுகின்றது. அதுபோலவே இலங்கையில்,
" என்ன சொல்கிருய் மகன், " என்று யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்ற தமிழ் வாக்கியம், கொழும்பு, காவி போன்ற இடங்களில் முஸ்லிம்களால், " என்ன செல்லிய மவன், " என்று பேசப்படுகிறது. நெல்லேத் தமிழும், சென்னைத் தமி மும் பேசும் படங்களிலும் எழுத்தாளர்களின் கனி த கள் , கட்டுரைகளிலும் கூட இடம்பெற்று விட்டன. இந் த நெல்லே சென்னை தமிழ்வார்த்தைகள் எப்படி தமிழ் தானெ னக் கூறப்படுகின்றதோ, அதுபோலவே ஈழத்தில் தெற்கு மேற்கு மத்திய மாகாணங்களில் முஸ்லிம்களால் பேசப்பட்டு
|"ق

மொழியும் முஸ்லிம்களும் 7
வருவதும் தமிழ்தானென்பதை யாரும் எளிதில் மறுத்துவிட முடியாது. ஆகவே இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி பற்றி தகராறுகளோ சந் தே ந ங்க ளோ ஏற்படவேண்டிய நிலேயோ அவசியமோ இல்ஃ.
தமிழ்மொழிக்கும் வளர்ச்சிக்கும் கிருத்தவர்கள் தங்க எளின் சமயத்தின் பேரால் பெருந்தொண்டாற்றியிருக்கின்ற னர். இந்திய துணைக்கண்டத்துக்கு அக்காலத்தில் தங்களின் மதத்தைப் பரப்பவந்த கிருத்தவ பாதிரிகளும் பேராசிரியர்க சூளும் தமிழகத்திற்கும் வந்தனர். தமிழ் மக்களுக்கு மத்தியில் தங்களின் சமயத்தைப் பரப்ப வேண்டுமானுல், தமிழ் மொழி பில் பேசவும், எ மு த வு ம் சுற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணி தமிழ் கற்றுத்தேர்ந்து சமயப் பிரசாரமும் விளம்பர மும் செய்தனர். கிருத்தவ சமயக் குரவர்களான பாதிரிமார் தங்களின் சமயத்தைப் பரப்பவும் வளர்க்கவும்தான் முதலில் தமிழில் தேர்ச்சி பெற்றனர், எனினும் தமிழுக்கும் அளப்பரிய தொண்டு புரிந்து சிறந்து விளங்கிஞர்களென்பதையும் மறந்து விடக்கூடாது. தமிழில் முதன் முதல் உரை நடைகளே அவர்களின் சிறந்த முயற்சியினுல்தான் உருவாகியது. அந்த உரைநடைகளில் துவக்கத்தில் ஒரு சில குழப்பமான நடை கள் பின்பற்றப்பட்டிருந்தாலும், உரை நடைப்பகுதிக்கு துணிந்து தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் அவர்களே தானிருந்தனரென்பதை எவரும் எளிதில் மறுத்துவிட முடி யாது. அதற்கு முன்பு நமது இலக்கண இலக்கியங்களெல் லாம் பாடல்களாகத்தானிருந்து வந்தன. பாட்டாய் பாடி வைத்துத் தொஃலத்துவிட்டனரே பாவிப் புலவர்கள், என்று இன்றுகூட மனம் நொந்துகொள்ளுகின்ற நம்மில் பலரையும் பார்க்கின்ருேம்.
கிருத்தவர்களுக்குப் பிறகுதான் முஸ்லிம்கள் அரபி நாட்டிலிருந்து வியாபாரிகளாக தமிழகத்துக்கு வந்தனர். அவர்களும் தங்கஃனப்பற்றியும் தங்களின் மதத்தின் சிறப்பு பற்றியும் தமிழ் மக்களோடு பேசவும் எழுதவும் முற்படலா யினர். தமிழ் எழுத்துக்களைக் கற்று எழுதுவதற்கு பதிலாக

Page 6
8 மொழியும் முஸ்லிம்களும்
தமிழ் வாக்கியங்களே அரபி எழுத்தில் (லிபி) எழுதிப் படித் துப் பயன் பெறலாமென எண்ணி, அதன்படியே அரபி லிபி யில் பல விஷயங்சனேயும் எழுதிவைத்துக் கொண்டனர். அது தான் இன்று அரபுத் தமிழ் என்று வழங்கப்படுகின்றது. இந்த அரபுத் தமிழுக்கு தனியாக இலக்கண இலக்கிய விதி முறைகள் கிடையாது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாம லிருந்து, அரபி மாத்திரம் கற்றுணர்ந்திருக்கின்ற ஒரு சில ருக்கு மாத்திரம்தான் இது பயன்பட்டு வருகின்றது.
தமிழ் வளர்ச்சிக்கு சைவர்கள், விவைணவர்கள், கிருத்த வர்கள் முதலியோர் பணியாற்றியிருக்கின்ற தொண்டிஃனப் போல முஸ்லிம்களும் பெருந் தொண்டாற்றியிருக்கின்றனர். கற்பனயும், கருத்தாழமும், கவிதா நயமும் எந்த அளவுக்கு கம்பனின் இராமாயண காவியத்தில் இடம்பெற்றிருக்கின் றதோ, அந்த அளவுக்கு உமர் புல்வரின் சீருவெனும் செத் தமிழ்க் காவியத்தில் இடம் பெற்றிருக்கின்றது என்பதை பண்டிதர்களும் புலவர்களும் ஒப்புக்கொண்டே நீரு வர் . காசீம் படைப்போரும், இராசமணிமாஃலயும், சைத்துரன் கிஸ் ஸ்ாவும், நூறு மசலாவும் மிகைப்படுத்திய கற்பனேகளே அதிக மாகக் கொண்டிருந்தாலும் அவைகளும் தமிழ் இலக் கி ய வளர்ச்சிக்குத் துணேபுரிந்திருக்கின்றன என்பதை மறைக்க (Por L'Urr"gif". பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்து ம்றைந்த தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சிபம் சதாவதானி சேகுத்தம்பி பாவலர் அவர்களின் செந்தமிழ்த்தொண்டையும் திறமையையும் தமிழகம் மறக் கவே முடியாது, பட்டினத் தடிகள். தாயுமானுர் போன்ருர் க3ளப்போல, குணங்குடி மஸ்தான் அவர்கள் சிறந்த பாடல் கஃாப்பாடி இன்றும் அவை பலராலும் போற்றப்பட்டு வரு வது நாமனேவருமறிந்த உண்மையேயாகும். ஈழத்திலும் அசஞர் லெப்பை, காசிம் புலவர் போன்ற சிறந்த செந்தமிழ் வித்துவான்கள் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி சிறப்புப் பெற்று உயர்ந்திருக்கின்றனர்.

மொழியும் முஸ்லிம்களும் 9
இந்திய தேசீயப் போராட்ட காலங்களிலும் முஸ்லிம் கவிஞர்களும் தங்களின் களிதா வன்மையாலும் பாடல்களினு லும் பச்சுஃளப் பக்குவப்படுத்துவதிலும் எழுச்சி பெறச்செய் வதிலும் எந்த கவிஞனுக்கும் பிற்பட்டு நின்றுவிடவில்லே. அன்றைய போராட்ட வீரர்களுக்கும் தஃலவர்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் நன்றுக நினேவிலிருக்குமென எண்ணுகின்றேன். "" அல்லாரசூலுல்லா இத்தொல்லேக்ள் அகல்வது எந்நாளோ, இப்பொல்லாத பேய்களெல்லாம் இங்கிலாந்து போவதுபெத் நானோ, "" என்று ஆத்திரமும் ஆவேசமும் கொப்பளிக்க அழகு தமிழில் பாடிய அந்த போர்க்குண கவிஞனே இன்று எண்ணிப்பார்ப்பாரில்லே! தனது இன்ஸ்பெக்டர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு, தேசீயப் போராட்டத்தில் பங்கு பற்றி சிறைசென்று தொல்ஃலகள் அனுபவித்த நேரத்திலும், " கலெக்டரும் கடவுளல்ல, அடிமைப் போலீஸ் கான்ஸ்ட பிள் எமனுமல்ல, " என்று இடிமுழக்கம் செய்து பாடல்கள் இயற்றித் தந்த கம்பம் பீர் முகம்மது பாவலரின் தமிழ் த் தொண்டை தேசீயத் தொண்டை பெருந்தன்மைமிக்க பண்டி தர்களும் புலவர்களும் தஃலவர்களும் கூட மறந்துவிட்டனர் என்பதைப்பார்க்கும்போது வருந்தாது வேத&னப்படாதிருக்க முடியாது.
பிற மதங்களிலுள்ள தமிழறிஞர்கள் மேதைகள் பண்டி தர்கள் ஆகியோர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மதிப்பும் பெருமையும் இஸ்லாமிய கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை; வேண்டுமென்றே அவர்களின் பெயர் கள் பணிகள் திறமைகள் மறைக்கப்படுகின்றன என்று சில பல முக்கிய அறிஞர்கள் கூறுவதை இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையென உறுதிப்படுத்துகின்றன. முஸ்லிம் புலவர்கள் இயற்றிய சில இலக்கியங்கள் பலருக்குத் தெரியாது, சிலருக்குப் புரியாது. இன்னும் .ாலர் அவைகளே விரும்பிப் படிக்கவே எண்ணுவதில்லே. இஸ்லாமிய மத அடிப்படையில் அவைகளி ருந்து கொண்டிருப்பதால் அவைகளே நாங்கள் படிக்கவிரும்பு வதில்லை என்று சிலர் கார ண ம் கூறுவதாக அறிகிறேன். அந்த அடிப்படையில் பார்த்தால், திருக்குறள் நீங்கலாக பிற

Page 7
நிெ|ர் முஸ்லிம்களும்
இலக்கியங்கள&னத்தும் அந்தந்த மத அடிப்படையில்தான் இயற்றப்பட்டிருக்கின்றன; எழுத்திருக்கின்றன எ ன் ப ைத மறுத்துளிடமுடியாது. பெரிய புராணம் சைவமது அடிப்படை பிலும், கம்பராமாயணம் 60 என்னவசமய அடிப்படையிலும், தேம்பாவணி கிருத்தவ சமய அடிப்படையிலும் சீவக சிந்தா பனரி சமண சமய அடிப்படையிலும் மணிமேகலே பெளத்த FI FOI I அடிப்படையிலும் sFojಫಿ இலக்கியங்களே! அந்த காவி யங்களே முஸ்லிம் புலவர்கள் பயின்று உணர்ந்து உயர்ந்திருக் கும்போது, சீருப் புராணம், நூறுமசலா, காசீம் படைப்பு போர், மஸ்தான் பாடல்கள் போன்றவைகளேயும் பிறமத வித்துவான்கள் படித்துனர்ார்ந்து விமர்சனம் செய்வதிலும் பெருமைப்படுத்துவதிலும் ஒன்றும் தவறிருக்க முடியாது என் பதே என்போன்ருர்களிள் எண் 3% மும் விருப்பமுமாகும்.
பிறர் தம்மைப் பெருமைப்படுத்தவில்ஃ, பெயர் விளங் சுச் செய்பவில்லே என்பதற்காக முஸ்லிம்கள் இன்றும் என்றும் தமிழ் மொழிக்கு இழுக்குத்தேடும் நிலேயிலோ இடர் வினே விக்கும் முறையிலோ எந்தவித நடவடிக்கைகளிலும் பணி களிலும் ஈடுபட்ட இல்ஃபி, ஈடுபட ப்போவதுமில்லை. தமிழ் மொழிமீது அவர்கள் காட்டிய அன்பின் மீதும் தொண்டின் மீதும் இன்று பல நல்ல முஸ்லிம் எழுத்தாளர்களேயும் ஆசிரி பர்களேயும் கவிஞர்கஃனயும் தமிழகத்திலும், ஈ முத் தி லு ம் ஆாண்கிருேம். எழுத்திலும் பேச்சிலும் எழுச்சி முரசுகொட்டி வரும் இஸ்லாமிய இளைஞர்களேயும் வாலிபர்களேயும் ஆங் காங்கு சந்திக்கின்ருேம். அரசியல் ஆதிக்கக்காரர்கள் ஆங் காங்கு சில சமயங்க்ளில் மொழிபற்றி குழப்பமான எண்ணங் சுஃ வெளியிட்டு வந்தாலும், முஸ்லிம் எழுத்தாளர்கள் களி ஞர்கள் அமீனவரும் முறைப்படி தங்களின் தமிழ்த் தொண்டி %னயும் பணியினையும செய்துகொண்டேதான் வருகின்றனர். இந்த நிஜலயை இன்றைய இஸ்லாமிய மாணவர்கள் நன்ருய் அறிந்து-புரிந்து-தெரிந்து-தெளிந்து செயலாற்ற முன்வர வேண்டுமென்பதே எனது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.
உலகில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளிருப்பு தாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். இ ன வ க ளில்
 

மொழியும் முஸ்லிம்களும் II
முப்பது மொழிகளில் தான் இலக்கியங்கள் முறைப்படி உரு வாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. எகிப்திய மொழி, சுமேரிய மொழி, லத்தீன் மொழி, சீன மொழி, வடமொழி, தமிழ் மொழி ஆகிய பழமையான மொழிகளில் தமிழ்மொழி பும், சீன மொழியும்தான் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கி ஒரம் அன்றிருந்து இன்றுவ ைகுறையாமல்மறையாமல்வளத்து டன் நிறத்துடன் வளர்ந்து உயர்ந்து வந்திருக்கின்றன.இலக்கி பத்தால் பெருமையும் வளமையும் புகழம் பெற்று காலத் தால் பழமையும் சிறப்பும் பெற்று விளங்கி வரும் தமிழ மொழிதான் ஈழத்திலுள்ள முஸ்லிம்களின் தாய்மொழியும் தனிமொழியுமாகும். பதவிக்காகவோ புகழுக்காகவோ, பட் உத்திற்காகவோ, பெருமைக்காகவோ, வாழ்க்கை வசதிக் தாரே, உலக அறிவு பெறுவதற்காகவோ வாய்ப்பும் வசதியுமிருப்போர் பலமொழிகளேயும் கற் று த் தேர்ந்து உயர்ந்து நிற்பதில் நமக்கொன்றும் கருத்து வேறுபாடு கிடை பாது, ஆனூல் அதற்காக ஒருவன் தனது தாய்மொழியைத் தாழ்த்திவிடவோ, மறந்துவிடவோ, மறைத்துவிடவோ கூடாது. முடியாது என்பதை நினேவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதை இங்கு குறிப்பிட்டுக் கூறவிரும்புகின்றேன்.
இஸ்லாமிய இலக்கியங்கள் உருதுமொழியில் தான் அதிகமிருக்கின்றன. அதற்கடுத்தாப்போல் தமிழ்மொழி பில் தானிருக்கின்றன. பாரசீகப் பெரும் கவிஞன் உமர் கிய்யா மின் பாடல்களிலிருந்து அரபி நாட்டின் பெருங்கதையான அல்பு ஃபலா வலேலா வரை, திருக்குச் ஆனின் திருவசனங்களி லிருந்து தித்திக்கும் இக்பாலின் பாடல்கள் வரை உயர் நீ தி முறையிலேயும் சிறந்த அமைப்பிலேயும் இன்று தமிழில்தான் காணமுடியும். அத்தகைய தமிழ் மொழியைப் பேசிக் கொண்டே தமிழுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லே என்று எந்த முஸ்லிமாவது கூறுவானுகில் ஒன்று அவன் தின் து தாயை மறந்தவனுசு இருக்கவேண்டும், அல்லது பித்தப்பைத் தியம் பிடித்தவனுக இருக்கவேண்டும். சிறப்புமிகு செந்தமிழ்ச் செல்வர்களாக இங்கு மாணவ மாணவிகளிருந்து வருவதுைக் கான சிகவும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகின்றது.

Page 8
மொழியும் முஸ்லிம்களும்
தமிழ் மொழியை நல்ல உச்சரிப்புடன் மாணவ மானr விகிள் பேசவும் எதி ம்ெ பயிலவேண்டுவதுடன், கொஞ்சம் கவனமாகவும் இந்த உச்சரிப்பு முறைகளிலிருந்து வரவேண் டும். ஆசிரியப் பெரியார்களும் இந்து , ச்சரிப்பு விஷயத்தி லும், லகர-ழகர பேதங்கள் போன்ற தமிழின் உயிர்போன்ற எழுத்துக்கரே உபயோகிக்கும் விஷயத்திலும் கொஞ்சம் அக் *'டனும் கவனமுடனும் கற்பி க்க வேண்டுமென்பது எனது பணிவான வேண்டுகோளும் விருப்பமுமாகும், ஆசிரிய ஆசிரியைகளிடம் ஒரு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட் பிருக்கின்றது. நாட்டின் நல்ல குடிமக்களே நீங்கள் வளர்த்து "கீகாத்து வருகின்றீர்கவொன்பதுை மறந்துவிடக்கூடாது. "எழுத்தறிவித்தனன் இறைவணுகும்." என்று ஆண்டவனுக்கு #மமாகக் கூறப்பு ாட்டுவரும். ஆசிரிய நண்பர்கள், தங்கள் கட மையிலும் பொறுப் ணர்ச்சியிலும் மிக மிக கவனத்துடனும் அக்கறையுடனுமிருந்து வரவேண்டும்.
மதிக்தையும் மொழியையும் ஒன்றுக்கி ஆழப்பி குதர்க் சும் செய்து கொள்ளக்கூடாது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலகில் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர். அந்த நாடுகளில் அவர் தாய்மொழி வெவ்வே முகத்தா விருந்து ,ெ ל கண்டிருக் கின்றது. மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமி. நாடுகள&னத் ஆம் ஓர் மறை, ஓரிறை, ஒர்பிறை என்ற இஸ்லாமிய மதத் <!; பின்பற்றிவருகின்ற முஸ்லிம்கள் நிறைந்த நாடுகள்தான். அப்படியிருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அங்கு வெவ்வேறு மொழிகள் தான் பேசப்பட்டு வருகின்றன- அதுபோலவே பாகிஸ்தானில் உருதுமொழி ஆட்சிமொழியாக ஆட்சியின
ரால் அறிவிக்கப்பட்டதும், கிழக்கு பாக்கிஸ்தானிலுள்ள வங்க
மொழிபேசுகின்ற வங்க முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர் : கொள்கை முழக்க குரல் கொடுத்தனர். "வங்கமொழி எங் தள் தங்கமொழி; அது தாழவோ மாள வோ விடமாட் டோம்,' என்று மாணவ மாணவிகள் போர்முழக்கம் செய்த னெர். ஆட்சியினரால் அதட்டவோ, அலட்சியம் செய்யவோ முடியவில்லே. கடைசியில் வங்கமொழியும் பாக்கிஸ்தானின்

மொழியும் முஸ்லிம்களும் 3.
ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ள ப்பட்டது. இதிலிருந்து ஒரு நாட்டு மக்களாகவிருந்தாலும் ஒரு மதத்தைச் சார்ந் தோர்களாகவிருந்தாலும் மேற்கு பாக்கிஸ்தானியரும் கிழக்கு பாக்கிஸ்தானியரும் தாய்மொழி விஷயத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றுதான் அறிய முடி கின்றது. ஆகவேதான் மதம்வேறு, மொழிவேறு என்று நான் கூறுகின்றேன்.
மொழி விஷயத்தில் அதுவும் தமிழுக்கு தொண்டு புரிந்த தூயவர்களைப் பெருமைப்படுத்தும் விஷயத்தில் இன் றிருப்பதுபோன்ற வகுப்புவாத நோக்கும் இழிதன்மைகளும் பண்டைய தமிழகத்திலிருந்ததில்லை. வெவ்வேறு மதத்தின ராக வாழ்ந்து வந்தாலும் தமிழ்மொழித்தொண்டு அல்லது திறமை புலமை ஆகியவைகளில் பாகுபாடுகளிருந் ததில்&. சீருப்புராணம் தந்த செத்தமிழ் புலவர் உமர் அவர்கள் " டைய புர இந்து அரசரிடம் தான் சமஸ்தான வி த்துவானுக இருந்தார். மன்னரும் மதவித்தியாசமின்றி உமர் புலவரின் தமிழ் புலமைக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் காட்டி ஆத சித்து வந்தார். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி யின் தமிழ் பற்றையும் கொடைத்தன்மையையும் ஆதரித்துப் பாராட்டிப் போற்றி நின்ருர் பெரும்புலவன் படிக்காசு. இப் படி அன்று அன்பும் அறிவும் திருவும்கொண்டு மதக் கண் னுேட்டங்களின்றி தமிழறிஞர்கள் புலவர்கள் பெருமைப் படுத்தப்பட்டனர் என்பது இன்றைய புலவர் பெருமக்களும் அறிவார்கள். இனிமேலாவது பெருந்தன்மை மிக்க புலவர் கள் பண்டிதர்கள் மதக்கண்ணுேட்டமின்றி தமிழ்க் கண்ணுேட் டத்துடன் எல்லா புலவர்களேயும் மேதைகளேயும் பாராட்டிப் பெருமைப்படுத்துகின்ற நேர்மை எண்ணத்துக்கு முன்வர வேண்டுமெனக் கூறுகின்றேன்.

Page 9
4. மொழியும் முஸ்லிம்களும்
தாய்மொழி விஷபத்தில் தனிபாத அன்பும் தனிப் பற்றுதலும் ஆர்வமும் ஒவ்வொரு விருக்குட்பிருந்து வரவேண் டும். ஆனல் வெறியாக வேற்றுன:பாக உருவெடுக்க விடக்கூடாது. இவைகளே இன்றைய இளேஞர்களும் ம:ை
வர்களும் உண்ர்த்து பணியாற்ற வேண்டும். மாணவர்களும் மாணவிகளும் சோதஃன+ளில் வெற்றியிட்டிக்கொள்வதற்காக மாத்திரம் பாடங்களே படித்துசார்ந்து கொள்ளக் கூடாது. են I / : ழ்க்கையில் வெற்றிபெறவு th, ஒழுக்காக உயர்வ 1ழ்க்கை நடாத்துவதற்குமாகவும், உலக அறின: பேப் பெற்று எவ்வா
I Lj Fort of Fir fi FF f f' -, or += " ۔۔== பக்தரூட: أخلاق التي தானாகவும் ெ "ழவதற்கு மாகவும் கல்விகற்கவேண்டும். மாணவர்களின் பாடப்புத்த ஆங்களும் அவ்வாறே அமையவேண்டும்.
இன்றிருக்கின்ற இந்த ஆட்சியைவிட வருங்காலத்தில் திறமையும பேருமையு மிக்க ஆட்சிதான் நாட்டில் ஏற்ப, முடியும். இதைவிட பிற்போக்கான முதலானித்துவ எண்ண முள்ள ஆட்சி இனிமேல் எந்த க' எனத்தை மு ன் னி ட் டு ம் இந்த நாட்டில் ஏற்படமுடியாது. சிறந்த சமதர்ம அடிப் படையைக்கொண்ட உயர்ந்த ஆட்சி நாட்டில் ஏற்பட்டு, செல்வந்தர்களின் பணங்களேச் சட்டத்தின் மூலம் கட்டுப் படுத்தி அல்லது பங்கிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் காலத் தைநோக்கியே இன்று மக்கள் சென்று கொண்டிருக்கி ன்றனர் ான்பதை பணம் படைத்த முஸ்லிம் செல்வந்தர்கள் உணர்ந்து பார்க்கவேண்டும். விணுக அரசாங்க வருமானவரி போன்ற பல வரிகளுக்கும் அள்ளிக்கொடுத்து அஃலந்து திரிந்து கணக்கு க3ளச் சுமந்துகொண்டிருப்பதைவிட வருங்காலச் சந்ததியின் ரின் நல்வாழ்வுக்காக கல்விக்காக முஸ்லிம் தனவந்தர்கள் தாராளமாக அள்ளிக்கொடுத்து பெருமைதேடிக்கொள்ள
முன்வரவேண்டும்.
 
 
 

5
மொழியும் முஸ்லிம்களும் 1
' உழைப்பானியின் வியர்வை நீர் உவர்வதற்கு முன்
அன்னது டிவியைக் கோடுத்துவிடுவீர்களாக, என்று நபிகள் நாயகி (3: ல்)அவர் சுள் சிறந்த முறையில் கூறிச்சென்ருர்கள். ஆனல் இன்ருே, பலமாதங்களின் சம்பளங்கள் பல தொழிலா ளர்களுக்கு ஏமாற்றப்பட்டு, கடைசியில் தொழிற்சங்கவாதி களின் முய்ற்சியினுள் தொழிற் சமின்னர் முன்னிஃபிலோ தொழிற் கோர்ட்டிலோ வாதாடித்தான் சம்பளங்கஃளப் பெற முடிகின்றது. இந்த நிலை ஏற்படுவது ஏற்படவிடுவது முஸ்லிம் செல்வந் தர்களுக்கே இழுக்கும் வெட்கமுமாகும். பணத்தைப் பதுக்கி வி வந்து ஆஎல்ஆர் சேர்த்துவைத்து அவ ரோ அல்லது அவரது சந்ததியோ அக்கிரக அநீதிகளுக்கும் ஒழுக்கக்கேடான விளையாட்டுகளுக்கும் செலவுசெய்து,"பா ಸೌ. பாதகன், கெட்டவன்' என்ற பெயர்ஃப் பெறுவதைவிட, நல்ல பணிகளுக்காக அந்தப் பணங்களேச் செலவு செய்து "நல்லவர். உயர்ந்தவர்" என்ற சிறப்புப் பெயர்களேயே பெற முயலவே: டும். கல்விக்காக அரும்பாடுபட்டு, பலரது ஏச் சையும் பேச்சையும் கூட பொருட்படுத்தாது தொல்ஃப்களுக் கிடையே தொண்டு பல புரிந்து, அகிலம் புகழும் அலிகர் பல் கஃக் கழகத்தை நிறுவிய சர். செய்யித் அஹமத்கா வின் நேர்வழியை இன்றைய முஸ்லிம் செல்வந்தர்கள் பின்பற்ற வேண்டும்-ஆண்டுதோறும் அவிகரை விட்டு வெளி வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பெரும் அறிஞர்கள் ஆகியோரின் உள்ளங்கள் சர் செய்யித் அஹ்மத் கான் அவர்களே வாழ்த்திக்கொண்டேயிருக்கின்றன என்பதை
எண்ணிப்பார்க்கவேண்டும்.
சர் செய்யித் அவர்கள் துணிந்து பணியாற்றிய காலம் இப்படிப்பட்ட விபரமும் விளக்கமும் புரிந்த காலமல்ல. வெள் ஃயைர்கள் முஸ்லிம் அரசர்களிடமிருந்தே நாட்டை அபகரித் துக்கொண்டனர்; ஆகவே அவர்களின் ஆங்கில மொழ ୩ୟ୍ଯ முஸ்லிம்கள் கற்றுக்கொள்ளக்கூடாது; அது காபிர் பாஷை

Page 10
f மொழியும் முஸ்லிம்களும்
என்றெல்லாம் முல்லாக்களும் மெளலானுக்களும் முழக்கம்மிட்டு வந்தனர். இந்த வார்த்தைகளுக்கு செவிமடுக்காமல் யாரா வது ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயன்றல், அவர்களேயும் ஏசிப் பேசி இழிவு படுத்துவர். இந்த நேரத்தில்தான் இவர் களின் இந்த எக்காளக் குரலே எதிர்த்து நின்றதுடன் மாத்திர மின்றி, ஆயிரக்கணக்கானவர்களே ஆண்டுதோறும் ஆங்கிங் அறிவுள்ளவர்களாக மாற்ற ஒரு பல்கள்ே கழகமும் கான பலரது உதவியையும் ஒத்துழைப்பையும் நாடி வெளிவந்தார் சர். செய்யித் அஹமத் கான் அவர்கள். எதிலும் எதிர்ப்பு, எங்கும் எதிர்ப்பு என்றிருக்கின்ற நிலையிலும், பொதுப் பணியை மக்களின் தொண்டை மிகத்திறம்படவும் துணிவுட ஒனும் அத்தனேக்கும் மேலாகப் பொறுமையுடனும் கல்விக்காக பண வசூலே ஆரம்பித்தார்.
"சீனு சென்ருயினும் கல்வியைத் தேடிக்கற்றுக்கொள் ஞங்கள்", என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுமொழியின் ஆழத்தை நன்குணர்ந்த ச ர் செ ய் யித் அவர்கள் ஒவ்வொரு ரெயில்வே நிலேயங்களிலும் உண்டியல் குலுக்கி பணம் சேர்த்தார். ஒரு சமயம் ஒரு பெரும் முள் விம் பணக்காரரை சந்தித்து பணம் பெற்றுவருவதற்காகச் சென்ருர், ஆங்கிலக் கல்விபயில ஒரு கல்விக்கூடமே காண முன்ந்திருக்கும் சர் செய்யித் அஹமத் கான் மீது அடங்காக் கோபமுடனிருந்துகொண்டிருக்கும் அந்த பணக்கார முஸ்லி மின் வீட்டிற்குச் சென்றதும், அவர் 7 செய்யிதுைப்பார்க்க வே பிரியப்படவில்லே. பிடிவாதமாக உட்கார்ந்துகொண் டிருந்த அஹமத்கானே அடங்கா கோபத்துடன் ஏசிப்பேசிய துடன் நில்லாது, தனதுகாலில் கிடந்த சப்பாத்தையும் சுழற்றி அவர் மீது வீசி எறிந்துவிட்டு ஆத்திரத்துடன் உள்ளே சென்றுவிட்டார். தன்மீது வீசி எறியப்பட்ட செருப்பை மிகவும் பொறுமையுடன் எடுத்துவைத்துக்கொண்டு அந்த இடத்திலேயே புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தார். சிறிதுநேரம் சென்றதும் மீண்டும் அந்த தனவந்தர் வெளியே

மொழியும் முஸ்லிம்களும் 7
வந்தார். அப்பொழுதும் தன் வீட்டில் அந்த மனிதர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் ஆத்திரத்துடன் பேசி விட்டைவிட்டு வெளியேறும்படி கூறினூர், மிகவும் சாந்தமுட னும் அடக்கமுடனும் சர் செய்யித் அவர்கள், "தயவுசெய்து அந்த மற்ற சப்பாத்தையும் தந்துவிடுங்கள்," என்று கூறிஞர். உடனே அந்த ஒற்றைச் செருப்பையும் கா லா ல் உதைத்து வீசி விட்டுப் போய்விட்டார் செல்வச்சீமான் இரு சப்பாத்து களேயும் கொண்டுபோய், நல்ல விலேக்கு விற்று தமது கல்வி நிதியில் சேர்த்துக்கொண்டார் சாந்தமிகு சர் செய்யித் அவர் கள். இது அந்த கண்ணியப் பெரியார் கல்விக்காக காட்டிய பொறுமைக்கும் பொறுப்புக்குமோர் எடுத்துக்காட்டாகும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சர் செய்யித் அஹமத்கான் அவர்கள் ஒரு துனே நீதிபதி (சப் ஜட்ஜ்) யாவார். ஆணுல் அவரது புதல்வர் ஜஸ் டிஸ் மஹ்மூத், ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் (ஹைக்கோர்ட் ஜட்ஜ், ஒரு சமயம் சர் செய்யித் அவர்கள் கல்கத்தாவிலி ருந்து டெல்லிக்கு கோச்சியில் முதல் வகுப்பில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார், அவ்வமயம் இரு வெள்ளேக்காரர் கள் அதே முதல் வகுப்பு வண்டியில் ஏறி உள்ளே வந்ததும், சர் செய்யித் அவர்கள் புன்னகையுடன் அவர்களே நோக்கி தமக்கெதிரிலுள்ள ஆசனத்திலமரும்படி கூறிவிட்டு, நீங்கள் யார் ? எங்கே செல்கிறீர்கள் ? என மெதுவாக வினவிஞர். நாங்கள் ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ; டெல்லிக்குப் போகி ருேம் என்று கொஞ்சம் முறுக்காகவே இருவரும் பதிலளித்து விட்டு, "நீங்கள் யார்? எங்கே செல்கிறீர்கள் ?" என்று வெள்ளேயரிருவரும் திருப்பிக்கேட்டனர். சிரித்துக்கொண்டே " நானும் டெல்லிதான் செல்கிறேன்; நான் ஒரு ஹைக் கோர்ட் ஜட்ஜுக்கு அப்பன்," என்று சர் செய்யித் அஹமத் கான் அவர்கள் பதில் கூறிஞர். கிழவனுர் நம்மிடம் கிண்டல் செய்கிருரென வெள்ளேயர்கள் எண்ணிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டனர். பரந்த வெள்ளே தாடி, திறந்த உள்ளம்,

Page 11
18 மொழியும் முஸ்லிம்களும்
晶、
சிறந்த எண்ணம்; அதோடு தோற்றத்தில் ஒரு நின ற ந் த முஸ்லிமாகவும் காட்சியளித்தார். இந்த தோற்றமும் அவ ரது அந்த பதிலும் வெள்ளேயர்களின் எண்னத்தில் துவேஷத் திேயும் அரு இருப்பையுமே உண்டுடன் னானே. ஒரு இந்தி வின், அதிலும் ஒரு முஸ்லிம் நம்முடன் சமமாக முதல் வகுப்பில் பிர யாணம் செய்துகொண்டிருப்பதா? என்ற கேள்வி அவர்களே
மேலும் வெறுப்புணர்ச்சியைத்தான் துண்ட உ த விற் று. பகல் ( லொஹர் ) தொழுகையை முடித்துக்கொண்டதும் கொஞ்சம் படித்துக்கொண்டிருந்தபடியே சர் செய்யித் அவர் கிள் துரங்கிவிட்டார். இதைத்தெரிந்துகொண்ட வெள்ளே பர் அவரது சப்பாத்துக்களேத் துரக்ரி வெளியே எறிந்துவிட்டனர் ரெயில் யாருக்காகவும் எதற்காகவும் கவஃப்படாமல் வேக மாகச் சென்றுகொண்டிருந்தது. அவர் தொழுகைக்காக திடீ ரென விழித்துக்கொண்ட சர் செய்யித் அவர்கள், காவில் சப் ாத்துகள் அகப்படாததால் இருக்கையை விட்.ெழுந்து அங்குமிங்கும் தேடிப்பார்த்தார். காணவில்: வெள்ளேயர் கிளின் முகத்தோற்றத்திலிருந்து, இவர்கள்தான் ஏதோ செய் திருக்கின்றனர் என்ற முடிவுடன் ஒன்றும் பேசாமல் தொழு கிேவிட முடித்துவிட்டு தமதிருக்கையில் த ட் 3, 7 ந் து Ča. Tzia LT ř.
சிறிது நேரம் சென்றதும் வெள்ளேயர்களிருவரு நன்: தாக்கத்திலாழ்ந்திருந்தனர். சர் சேப்பித் அவர்கள் சுற்று முற்றும் நோக்கும்போது, அங்கு அவர்களில் ஒருவருடைய " கோட்டு, " சட்டைப்பை கடிகாரம் ஆங்கிலீ இவைகளுடன் தொங்கிக்கொண்டு கிடந்தது தெரிந்தது. உடனே அந்த கோட்டைத் தூக்கி அப்படியே வெளியே வீசியெறிந்துவிட்டு, அகராதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். கே" க்க வேக மாகச் சென்றுகொண்டிருந்தது. கண் விழித்துக்கொண்ட வெள்ஃளயர்கள், கோட் டக் காணுது ஆங்: மிங்கும் தேடினர் கடைசியில் கோபக்குறிபுடன் பக்கத்திலிருந்த சேப்பித் அவர் களேக் கேட்டனர். அவரும் மிகவும் அஷ்ரபதியுடன்,
 

மொழியும் முஸ்லிம்களும்
"முன்னுல் சென்ற செருப்புகளே அழைத்துவர பின் ஞ ல் சென்ற கோட் போயிருக்கிறது,' என்ருர், ஆத்திரமடைந்த வெள்ளேயர்கள், ஏசிப்பேசி முடித்துவிட்டு கடைசியில் டெல் விக்கு வாரும் பார்த்துக்கொள்கிறுேம் என்று முடித்துவிட்ட வார். ஆமாம், டெல்லிக்குச் சென்று பார்த்துவிடவேண்டியது தான் என்று சர் செய்யிதும் அமைதியுடன் கூறிவிட்டு பேசா திருந்துகொண்டார். டெல்லி புகைவண்டி நிலேயமும் வந்து சேர்ந்தது. அவசர அவசராக தங்களின் பெட்டிகஃனத் துரக் கிக் கொண்டு, புகைவண்டி நிலேய அதிகாரிகளிடம் புகார் செய்வதற்காக வெள்ஃாயர்களிருவரும் வண்டியைவிட்டிறங் ரிச் சென்றனர். அங்கு ஜஸ்டிஸ் மஹ்மூத் அவர்கள் ஒவ் வொரு வண்டியைபும் கூர்ந்து நோக்கிக்கொண்டு வருவதை யறிந்த வெள்ஃன்பர்கள், ' நிறவோ மிஸ்டர் ரஹ்மூத், " என்று கூறிக்கொண்டே மதிப்பமூதின் கையைப் பிடித்துக் குலுக் கிளர், மஹ்மூதும் புன்சிரிப்புடன் அவர் களிடம், எனது தத் இதயார் வருகின்ருர்கள், கொஞ்சம் நில்லுங்கள் என்று கூறி விட்டு ஓடிவந்த அார் செப்பித் அவர்களின் பெட்டி படுக்கை க3ள வாங்கிக்கொண்டுவந்து, அந்த வெள்ளேயர்களுக்கு தனது தந்தையை அறிமுகப்படுத்தினூர், சர் செய்யித் சிரித் துக் கொண்டே, ஏற்கனவே நாங்கள் அறிமுகமாகித்தானிருக்கின் ருேமென மகனிடம் கூறினுர். வெள்ளேயர்கள் வெட்கத் துடன், 'உங்களே சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவருக நடந்துவிட்டோம் - மன்னித்துக்கொள்ளுங்கள்." என்று சர் செய்யித் அஹமத் கானிடம் கூறி வி ர் - சர் செய்யித் அவர்களும் சிரித்துக்கொண்டே "முட்டாள்களேச் சந்திப் புது இது முதல் தடவையல்ல," என்று சுருக்கமாக அவர் களுக்கு சுருக்கென்று தைக்கும்படி கூறினூர், விஷயங்களே கேட்டறிந்துகொண்ட ஜஸ்டிஸ் மஹ்மூத் புகைவண்டி நியே ஒகாரிகளிடம் விஷயங்களே எடுத்துக்கூறி, அந்த செருப்பு க%ளயும், கோட்டையும் எடுத்துவரும்படி ஏற்பாடு செய்தார். சர் செப்பித் அவர்கள் கூறியபடி, முன்னுல் சென்ற செருப்பு களே பின்னூல் சென்ற கோட் அழைத்துவந்துவிட்டது !

Page 12
{I} மொழியும் முஸ்லிம்களும்
இன்னுெரு சமயம் இந்தியத் துணேக்கண்டத்தின் கவர் னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவுமிருந்த லார்டு கர்சான் என்பவர், இஸ்லாமியத்தைப் பற்றியும், நபிகள் நாயகத்தைப் பற்றியும் தப்பும் தவறும் நின ற ந் த கட்டுரை யொன்று வரைந்து வெளியிட்டிருந்தார். அந்த கட்டுரையைக்கண்டு முஸ்லிம்கள் மனம் புழுங்கினர்; ஆணுல் யாரும் அதற்கு மறுப்பு எழுதவோ பேசவோ முன்வரவில்லே. சர் செய்யித் அவர்கள் இந்த நிலையுணர்ந்தார். தான் ஒரு சப் ஜட்ஜ் உத்தியோகம் வெள்ளேயராட்சியில் செய்துவருகின்ருேமென் பதையும் கிறந்து லார்டு கர்சானின் கட்டுரைக்கு ஒரு சிறந்த தர்க்க ரீதியான சிறு மறுப்பு நூலொன்று எழுதி, இந்தியாவி லுள்ள எல்லா அச்சகங்களுக்கும் சென்று அந்த நூலே அச் சியற்றித்தரும்படி கூறிஞர். நாட்டின் அதிபதியான ஒரு வைஸ்ராயின் கப்டுரையை எதிர்த்து வெளியிடும் நூலே நாங் கள் அச்சேற்றித்தரமாட்டோமென எல்லா அச்சகத்தினரும் கூறிவிட்டனர். சர் செய்யித் அவர்களுக்கு இந்த நடவடிக் கை மேலும் ஆர்வத்தைத்தான் தூண்டிற்று. எ ல் வளவு செலவு செய்தாயினும் எந்த நாடு சென்ருயினும் நூஃ வெளி யிட்டே தீருவது என்ற முடிவுடன், லார்டுகர்சானின் தாயக மான இங்கிலாந்துக்கே சென்று அந்த மறுப்பு நூலே அச்சிட் டுக்கொண்டு வந்து இந்திய நாடெங்கிலும் விநியோகம் செய் தார். லார்டுகர்சானே ஒரு சமயம் சரி செய்யித் அஹமத் கானின் இந்த துணிச்சலேயும் தர்க்கவாதத்தையும் மெச்சி ஞரென்ருல் அவரது தீரச்செயல் எவ்வளவு சிறப்புடையதாக யிருந்தது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இத் தகைய துணிவும் சாந்தமும் அதே நேரத்தில் எண்ணியதை முடிக்கும் இனிய கொள்கைப் பிடிப்பும், பொதுத்தொண்டும் கல்விப் பணியும் கொண்ட சர் செய்யித் அஹமத்காஃன முஸ் லிம் செல்வந்தர்களும், பெரியார்களும், வாலிபர்களும் பின் பற்றவேண்டும்.

மொழியும் முஸ்லிம்களும்
"சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும், சொன்ன படி நடப்பவர்கள் மிகவும் சொற்பம், எல்ஃவயின்றி நீதிகளே எழுதுவார்கள், எழுதியது பிறருக்கே தமக்கென்றெண்ணுர்," இப்படி தேசீயக்கவி நாமக்கல்லார் கூறுகின்றர். ஆகவே தர்மத்தைப்பற்றியும் தியாகத்தைப்பற்றியும் நபிகள் நாயகத் தின் சிறந்த கோட்பாடுகள் பற்றியும் நாட்கணக்கில் பேச வாம்; புத்தகம் புத்தகமாக எழுதலாம். ஆணுல் அவற்றில் ஒரு சிறிதாவது செயவில் நடைமுறையில் செய்துகாட்டுவது தான் பெருஞ்சிறப்பும் உயர்வுமாகும். இரண்டாயிரம் டன் வார்த்தையைவிட இரண்டவுன்ஸ் செய்கை மேலானது, என்று காப்தே ஆஜம் ஜின்னு கூறிஞர். ஆகையால் எல்லா ரும் செயல்படவேண்டும், பணிபுரிய வேண்டும், வேலைசெய்ய
வேண்டும், உழைக்கவேண்டும்.
ஒழுக்கத்தோடும் பிறரைமதிக்கும் பெருந்தன்மையோ டும் மாணவர்கள் இளேஞர்கள் நடந்துகொள்ளவேண்டும். ஒழுக்கிக்கேடு மனிதனேத் தாழ்த்திக் காட்டிவிடுமே தவிர உயர்த்திக் காட்ட உதவாது. ஜார்வன, பறப்பன நடப்பன இவைகள் எல்லாவற்றிலும், மனிதன் (இன்ஸான்) உயர்ந்த வன் என்றுதான் குர்ஆன் கூறுகின்றது. உளநூல் வல்லார் களும் மனிதன் பகுத்தறிவு என்ற ஆருவது அறிவைப்பெற்ற வன்; ஆகவே மனிதன் உயர்ந்தவன் என்றுதான் கூறுகின்ற னர். அத்தகைய சிறப்புக்குரிய மனிதன் ஒழுக்கம் தவறியவ ஞக இருக்கக்கூடாது. இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே வள்ளுவப்பெருந்தகை தமது ஒப்பற்ற திருக் குறளின் மூலம், "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்,' என்று கூறினூர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த ஒழுக்கத்திற்கும் பிறரை மதிக்கும் பெருந்தன்மைக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தார்களென்

Page 13
2. மொழியும் முஸ்லிம்களும்
பதை இஸ்லாமிய இளைஞர்கள், குறிப்பாக மாணவ firrigour of யர் அறிந்துகொள்ளவேண்டுமெனக் கூறுகின்றேன்.
அலி (ரவி) அவர்களைப்பற்றி நீங்களறிந்திருப்பிர்க ளென நம்புகிறேன். நபிகள் பெருமானுரின் திருமகளாரைத் திருமண முடித்த தீரர். ஷேரே ஹ"தா, அலி புவி என்றெல் லாம் சிறப்பித்துக்கூறப்படுகின்ற சிறந்த வீரர். ' அத்தகைய செம்மல் ஒருநாள் அதிகாலே (சுபுஹ") தொழுகைக்காக தமது உடைவிட்டு பள்ளிவாசல் நோக்கிப் புறப்பட்டார்கள். அவ் வமயம் அந்த குறுகிய விதி வழியே ஒரு கிருத்தவப் பெரிபார் தள்ளாடிய நடையில் சென்றுகொண்டிருந்தார். அதிகாலே
கிருத்தவ மாதா கோவில்களிலும் மணி முழங்கு ம் பிரார்த்தஃனகள் நடைேெறும். அந்த தள்ளாக வயதிலும் அந்த கிருத்தவ பெருங்கிழவனுர் மிகவும் மெதுவாக நடந்து தமது பிரார்த்தனேக்காகச் சென்றுகொண்டிருந்ததை கவ எரித்த அலி (ரவி) அவர்கள். தாங்களும் அடிமேல் அடிவைத்து அந்த பெரிய மனிதருக்கு பின்னுலேயே சென்றுகொண்டிருந் தார்கள். அந்த பெருங்கிழவரை அலட்சியப்படுத்துவது
" போல அவரைக் கடந்து செல்ல அலி (ரலி) அவர்கட்கு விருப்
பதில்&ல, ஆகவே மெதுவாகவே தி" மு ம் சென்றுகொண் டிருந்தார்கள். இதற்குள் சுபுஹ" (அதிகாலே) தொழுகையை முடித்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்க (தோழர்க)ளோடு பள்ளிவாசவில் உட்கார்ந்து உரை நிகழ்த்த ஆரம்பிக்குமுன், ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களே ஏன் இன்று தொழுகை நேரத்தில் காணவில்லே என்று வினவிக்கோன் டிருக்கும்போது, அலி (ரலி) அவர்கள் அவசர அவசரமாக ஒலு (கால் கை சுத்தி) செய்துவிட்டு பள்ளிவாசலுக்குள் நுழைவதைப்பார்த்து அங்கிருந்தவர்கள், " அதோ அலி, " என்றனர். நபிகள் நாயகம் (வில்) அவர்களும் புன்முறுவலு டன் கவனித்துக்கொண்டார்கள். தொழுகையை முடித்துக்

மொழியும் முஸ்லிம்களும் 23
கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, உங்க எளின் இமாமத்து (பின் நின்றுதொழுதல்) இன்று எனக்குக் கிடைக்காமல் போனதற்காக வருந்துகின்றேன் என்று கூறி தாம் இன்று காலதாமதமாக தொழுகைக்கு வந்த காரணத் தையும் அலி (ரவி) அவர்கள் விளக்கிக் கூறினூர்கள். அமைதி யுடன் கேட்டுக்கொண்டிருந்த நபிகள்கோள் (ஸல்) அவர்கள் அலியே! நீங்கள் இன்று ஒரு புனிதமான காரியத்தை செய் திருக்கின்றீர்கள். இப்படிப்பட்ட ஒழுக்கமும் அடக்கமும் தொழுகையைவிட மேலானது," என்று பெருமிதத்துடன் கூறிஞர்கள். இதிலிருந்து பிறரை மதிப்பதற்கும் அடக்கமாக ஒழுக்கமாக நடப்பதற்கும் நபிகள் பெருமானுர் (ஸல்) அவர் "கள் எவ்வளவு உயர்ந்த இடமளித்துள்ளார்களென்பதை எனது அன்புக்குரிய மாணவர் களும் இளேஞர்களும் கவனிக்க வேண்டுமெனக் கூறுகின்றேன். பர்லான (கட்டாயம்) தொழு கையை விட, பணிவான நடத்திை ஒழுக்கம் உயர்த்தது முன் பது நாயகத்திருமேனி (ஸல்) அவர்களின் கருத்து என்பதை இவண் கூர்ந்து கவனிக்க வேண்டுகின்றேன்.
எனது அருமை நண்பர் பிலிப் அவர்கள், சினிமா பற் நிய பல விஷயங்களே மாணவ மாணவிகள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று கூறினூர், இந்த அவரது எண் னத்தை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கின்றேன். இலங்கை வானுெவியில் இசைத்தட்டுகள் வேண்டுமெனக் கேட்கு ம் பெயர் பட்டியஃலயும், தினசரி, வாரப்பதிப்பு போன்ற பத்தி ரிகைகளில் அதிகமாக சினிமா நடிகர் நடிகையர் பற்றிய கேள் விகள் கேட்போர் பட்டியஃபும் அன்புகூர்ந்து என்கிருமே முஸ்லிம்கள் கவனித்துப்பார்த்தால் அறுபது சத விகிதம் முஸ் லிம் (பெண்களும்) பெயர்களாகத்தானிருக்கும். கொழும் பில் புத்தக வியாபாரி ஒரு முஸ்லிம் நண்பரே கூறிஞர், குர் ஆன் மொழிபெயர்ப்பைவிட கொக்கோக நூல் அதிகமாக விற்பனையாகியிருக்கின்றது என்று! இதிலிருந்து இன்றைய முஸ்லிம் இளேஞர்கள் வாலிபர்களின் எண் ண ங் கள் எந்த

Page 14
24 மொழியும் முஸ்லிம்களும்
கோணத்தில் திருப்பிவிடப்பட்டிருக்கின்றது என்பதை சிந்தி யுங்கள். இப்படிப்பட்ட கேடுகெட்ட போக்குகள் மாற்றப் பட சிறந்த நூல்களேப் படிப்பதுடன் சிறந்த சொற்பொழிவு களேயும் கேட்க வேண்டும். என் போன்றவர்கள் மாணவ மாணவிகளுக்கு மத்தியில் சொற்பொழிவாற்றினுல், அவர்கள் கெட்டுப்போய் விடுவார்களென்ற பிற்போக்குவாதிகளின் எண்ணங்களை பொப்பிக்க வேண்டும்.
நமது பண்பாடும் பாரம்பரியமும் மிக மிகச் சிறந்தது. அதுவும் தமிழ்மொழி பேசுகின்றவர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தோர்களாயினும், அவர்கள் தெற்கித்திய (தென்னுட்டு) பண்பாட்டையொட்டியே நிற்பவர்களாவர். மேற்கத்திய அதாவது ஐரோப்பிய பண்பாட்டிற்கும் நமக்கும் ஒத் து வராது என்பதை நாம் உணர வேண்டும். ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் முதலிடம் கொடுப்பவர்கள் நாம். இங்கு மேலே நாட்டு நிகழ்ச்சியொன்றை உங்களுக்கு நினைப்பூட்ட ஆசைப்படுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் ஒரு சினிமாத்தியேட்டரில் பட ம் ஒடிக்கொண்டிருக்கும்போது, வெளியே ஒருவன் நின்றுகொண்டு பெரும் அமளி செய்து கொண்டு நின்றன். தியேட்டர் நிர்வாகி சென்று அவனே விசா ரிக்கும் போது, "எனது மனேவி இன்னுெரு ஆடவனுேடு படம் பார்க்க வந்திருக்கிருள், அவளே வெளியே அனுப்பவேண்டும் இல்லாவிடில் இந்த இடத்தை விட்டுச் செல்லமாட்டேன்." என்று முழங்கினுன். அந்த முரடனே சமாதானப்படுத்த முடி யாமல் போகவே தியேட்டர் நிர்வாகி உடனே ஒரு அறிக்கை (சிலேட்) எழுதி திரையில் காட்ட ஏற்பாடு செய்தார். அந்த சிலேடில், "அன்னிய ஆடவருடன் படம் பார்க்க வந்திருப் போர் தயவு செய்து வெளியேறுங்கள்,' என்று மாத்திரம் தான் குறிப்பிட்டிருந்தது. அறிவிப்பை படித்து முடித்த மறு கணமே தியேட்டரிலிருந்து கொண்டிருந்த எல்லாருமே வெளி யேறி விட்டனர். அன்று படம்பார்க்க வந்திருந்த எல்லாப் பெண்களுமே அன்னிய ஆடவருடன் தான் வந்திருந்தனர்.

மொழியும் முள்ளிர்களும் 25
ஆகவே எல்லாரும் வெளியேறிவிட்டனர். இதுதான் மேற் சித்திய நாகரீகம் ! எந்த பெண் ஜிம் எந்த ஆடவனும் மறை முகமாக மாத்திரமல்ல பகிரங்கமாகவும் எங்கும் செல்லலாம் அங்கு! ஆனல் இங்கு மறைமுகமாகக் கூட அப்படியெல்லாம் நடந்துகொள்வதை சமுதாயம் அனுமதிக்காதது மாத்திர மல்ல. அது ஒரு இழி செயலென்றும் கீருதப்படும். ஆகவே பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் நாம் ஒரு சிறப்பும் செழிப் பும் கொண்டவர்கள் என்பனத யாரும் மறந்துவிட க்கூடாது.
அரபி மொழி முஸ்லிம்களின் தாய்மொழி என்று ஒரு சிலர் கூறி தங்களேத் தாங்களே குழப்பிக்கொள்கின்றனர். மதத்தின் பேரால் நடைபெறும் ஆச்சார அனுஷ்டானங்க இருக்கும் குறிப்பாக பிரார்த்தனேகளுக்குமே அரபி மொழியை முஸ்லிம்கள் உபயோ கிக்கின்றனர் என்பதை இங்கு பறந்து விடக்கூடாது. நபிகள் நீ ய 4 ம் (ஸல்) அவர்கள் 140) ஆண்டுகளுக்கு முன்னரே, சகோதரத்துவ சமத்துவ ஆடிப் படையில் இந்த மொழிப் பிரச்&னக்கு தீர்வுகண்டிருக்கின்ரூரி கள் என்பதை இவண் எண்ணிப்பார் க்க வேண்டும். எந்த நாட்டு முஸ்லிமும் எந்த நாட்டு முஸ்லிமுக்கும் முகமன் சுறி அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம். அங்கு மொழிப்பிரச்சீன Tழாது. எத்தி நாட்டுப் பள்ளிவாசலிலும் எந்த தTட்டு முஸ்லிமும் ஒன்ருக நின்று பிரார்த்த&ன நடாத்த முடியும். அங்கும் மொழிப் பிரச்னை எழாது. ஆண்டுக்கொருமுறை அகில உலகெங்கிலுமுள்ள பத்து விட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடி ஒரே இடத்தை (கஃபத்துல்லாவை "ற்றி நின்று மக்கா நகரில் ஹஜீஜ"த்தொழுகையை நீடாத்து கின்றனர். இங்கிலாந்து முஸ்லிம் இந்தோநேrய முஸ்லிம், இந்திய முஸ்லிம், இலங்கை முஸ்லிம், ஈரான் முஸ்லிம், இராக் முஸ்லிம், எகிப்து முஸ்லிம், எமன் முஸ்லிம், சீன முஸ்லிம், சிங் கீப்பூர் முஸ்லிம், சிரியா முஸ்லிம், செக்கோஸ்லேவுகிய பு:ள்
விம், பர்மா முஸ்லிம், பாக்கிஸ்தான் முஸ்லிம், பாட்டியால

Page 15
மொழியும் முஸ்லிம்களும்
முஸ்லிம், ரஷ்ய முஸ்லிம், ஜப்பான் முஸ்லிம் இப் படி பல தரத்தினர் பல நிறத்தினர், பல திறத்தினர் கூடி பிரார்த் த&ன நடாத்தும் அந்த மக்கா நகரில் மொழிப்பிரச்ஃனயோ தகராறுகளோ ஏற்பட்டிருக்குமானுல், அங்கு இன்று இத்தனே லட்சம் முஸ்லிம்களும் ஒன்று க சகோதரர்களாகப் பழக பிரார்த்திக்கமுடியாது. ஹே ஹ"தா என்றுெரு சுட்டமும் ஹே பஹவான் என்றுெரு கூட்டமும், ஓ காட் (God) என் ருெரு கூட்டமும், ஏ ஆண்டவனே என்ருெரு கூட்டமும், இப் படி அவரவர் தாய்மொழியில் ஒரு இடத்தில் ஒன்றுகூடிப் பிரார்த்தனே நடாத்தவாரம்பித்தால் க  ைட சி யில் அது பிரார்த்தனே இடமாகவே காட்சியளிக்காது" இதையுணர்ந்து தான் அன்றே நபிகள் நாயகம் (ஸல்) உலக முஸ்லிம்களுக் கிடையில் சகோதர பாசமும் கூட்டுறவும், ஆண்டவன் சன் னெதியிலும், அவர்கள் ஒருவரோடொருவர் பழகுவதிலும் அன்பும் பண்பும் ஏற்படவும் மதமொழியாக அரபி மொழி யையே வைத்துக்கொள்ளவேண்டுமெனக் கட்டஃாயிட்டார் கள். இந்த உயர்ந்த எண்ணத்தில் அமைக்கப்பட்ட அரபி மொழியை இங்கு நமது மொழித் தகராறுகளிலும் சம்பந்தப் படுத்தக் கூடாதென்பதே எனதெண்ணம். அரபி நாட்டவ ரின் தாய்மொழியாகவும் (இஸ்ரவேல் மக்களாகிய எஹ"தி யர்களின் தாய்மொழியும் அரபிதான்) உலக முஸ்லிம்களின் மதமொழியாகவுமிருந்துவரும் அரபி மொழிக்கு எந்தவகை யில் மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருகின்ருேமோ அந்த மதிப்பையும் மரியாதையையும் குறைத்துக்கொள்ள வேண்டு மென்பதல்ல எனது எண்ணம். தாய்மொழிப் பிரச்ஃனயில் அந்த சர்வதேச சகோதரத்துவ மொழியையும் கொண்டுவந்து நம்மை நாமே குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு தெளிவாகக் கூறுகின்றேன். "ஆண்டவனே நம்புங்கள், ஆணுல் உங்களின் ஒட்டகைகளேக் கட்டிவையுங்
"" என்று நபிகள் நாயகம் (எல்) அவர்கள் அழகாகவும்
கள், ஆழ்ந்த கருத்துடனும் கூறிப்போந்தார்கள். ஆண்டவனே

மொழியும் முஸ்லிம்களும் 27
நம்பிச் செய்கின்ற காரியங்களில் திடமனதுடன் செய்யுங்கள். அதற்காக ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, ஒட் டகைகளேக் கட்டிவைக்காமல் வெளியில் மேயவிட்டிருந்தால் அது நிச்சயம் பறிபோய்விடத்தான் செய்யும், ஆகவே ஆண்ட வனுக்குச் செய்யவேண்டிய பக்தியையும், ஒட்டகைக்குச் செய்யவேண்டிய பாதுகாப்பையும் அந்தந்த வேண்களில் செய்துகொள்ளவேண்டுமே தவிர, இரண்டையும் ஒன்ருக்கிக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அதுபோலவே மத மொழியை பும் தாய் மொழியையும் ஒன்றுக்கிக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று மீண்டும் நினேவுபடுத்துகின்றேன்.
சாகிராக் கல்லூரி பற்றிய பிரச்சின இன்று நாடெங்கி லும் நாள்தோறும் பேசப்பட்டுவருகின்றது. அது பற்றி நானும் எனது எண்ணத்தைக் கூறலாமென நினேக்கின்றேன். இந்த நாட்டிலுள்ள சினிமாக்கொட்டகைகளிலிருந்து செல் வந்தர்கள் கூடிநடத்தும் பெரும் கம்பெனிகள் வரை அரசாங் கமே எடுத்து நடத்தவேண்டுமென்ற கொள்கையை ஆதரிப்ப வன் நான். பள்ளிக்கூட விஷயத்திலும் நகரப்பள்ளிக்கூடங் கள் மாத்திரமின்றி தோட்டப் பள்ளிக்கூடங்களேயும் அரசாங் கம் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தவேண்டுமென்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். அந்த அடிப்படையில் சாகி ராக் கல்லூரியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதை மனப் பூர்வமாக முழுக்க முழுக்க ஆதரிக்கின்றேனென்பதை முதலி லேயே கூறிவிடுகின்றேன். ஆணுல் முஸ்லிம்களில் ஒரு பகுதி பினர், அவர்கள் அரசியல் வாதிகளோ அல்லது செல்வந்தர் களோ யாரோ ஒரு கூட்டம் இந்த நடவடிக்கையை ஆதரிக்க வில்லே, இதை அரசாங்கம் அவசரமின்றி ஆத்திரமின்றி சிந் திக்கவேண்டும். ஈழநாடெங்கிலும் பல ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான அறிவுத்திறமைசாலிகளே, அதுவும் ஒரு சிறந்த சி. சி. எஸ். அறிஞர் அளிஸ் அவர்கள் அதிபராக யிருந்து உற்பத்திசெய்து கொடுத்திருக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த இஸ்லாமியக் கல்லூரி விஷயத்
_ܨܒ”

Page 16
மொழியும் முஸ்லிம்களும்
தில் ஆத்திரப்பட்டு ஆவேசத்திற்கிலக்காகி இரு தரப்பினரும் சொற்போர் நடத்துவது அவ்வளவு சிறப்பல்ல; விரும்பத் தக்கதுமல்ல.
முஸ்விம்களில் ஒரு பகுதியினர் ஆட்சேபக்குரல் கொடுத்துவருவதை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட முடி பாது, கூடாது. உண்மையாகவே அவர்கள் அரசாங்க நட வடிக்கைகளில் சந்தேகமும் பயமும் கொள்கின்றனரென்றல் அதைப்போக்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமை தானென்பதை தட்டிக்கழித்துவிடமுடியாது. ஈ ழ த் தி ன் எழில் மிகுந்த கல்லூரிய கவும் பல்கஃக் கழகமாகவும் சாகி ரா விளங்கவேண்டுமேன இஸ்லாமிய மக்கள் விரும்புவது இயற்கை, நியாமும் கூட. அரசாங்கத்தின் சென்றகால இக் கால நடவடிக்கைகளினூல், தங்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவதும் நியாயமே. இர ண் டு மைல் சுற்றளவுக்குள் வாழும் மான் வர்களே அந்தந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கலாமென அறிவிப்பதும், பிறகு அந்தப் பகுதியினருக்குத் தான் முதலிடம் கொடுக்கவேண்டுமென திருத்தம் தெரிவிப் பதுமான அரசாங்கத்தின் போக்குபற்றி மக்கள் புரியமுடியா மலிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லே. பர்மாவில் சென்ற சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகள் முஸ்லிம் களுக்கு மேலும் சில பல எண்ணங்களேத் தூண்டியிருப்பதில் ஆச்சரியமில்லை. கல்வியமைச்சர் ஒகு முஸ்லிம் தானே என்று சமாதானம் கூறிக்கொள்வதிலும் பிரயோசனமில்ல. கல்வி யமைச்சர் சிறந்த அறிஞர் நல்ல குணசாவி, ஆணுல் எது வும் அவர் நிஃனத்தபடி செய்துவிடமுடியாது. எல்லா அமைச் சர்க3ளயும் கலந்து கூட்டுப் பொறுப்பிலேயே காரியங்களே நடாத்தவ்ேண்டும். பச்சையாக சொல்லப்போனுல் பிற அமைச்சர்களின் எண்ணங்களுக்கிடையில் தான் தமது கருத் தைக்கொண்டு செல்ல வேண்டும். ஆகையால் இன்றிருக்

மொழியும் முஸ்லிம்களும் 9.
கின்ற நிஃபில் முஸ்லிம்கள் பலரது மனதில் ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் பயமும் நீக்கப்படவேண்டும். இது ஆட்சியினர் கையில்தானிருக்கின்றது. ஏழைமக்களுக்காக பல நல்ல காரி யம் கல்வியமைச்சர வர்கள் செய்து:ருகின்ரூரென்பதை நானு ரொர்வேன்; எனினும் இந்த பொறுப்புள்ள பெரிய காரியத் தில் திறந்த மனதுடனும் சிறந்த திட்டத்துடனும் கல்வி பமைச்சரும் அவரைச் சேர்ந்தோர்களும், ஜனுட் அ மீ ரு ம் அவரைச்சேர்ந்தோர்களும் ஒன்று கூடிப்பேசி சமாதான முறையில் பிரச்ஃகான யத் தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் சவால் விட்டுப் பேசிக்கொண்டிருப்பது விருமபத்தக்கதல்ல. சவால்கள் பல சமயங்களில் பிரச்ஃன களே மேலும் சிக்கலாக்கியிருக்கின்றதே தவிர சமாதானத் நிற்கு உதவியதில்&ல. ஆகவே சவால்களே இருதரப்பினரும் நிறுத்திக்கொண்டு சமாதான அடிப்படையின் முஸ்லிம்களின் சந்தேகத்தையும் பய பீதியையும் போக்க ச ட் ட ரீதியான உத்தரவாதத்துடன் அ ர சா சங் சு 1ம் நடவடிக்கையெடுத்து வெற்றிகாண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். ஆப் பொழுதுதான் சாகிரா, ஈழத்தின் எழில் மிகுந்த இஸ்லாமி பப் பல்கலேக் கழகமாக உயரும், திகழும்.
நாட்டில் பெளத்த, சிங்கள கலாச்சாரங்களேயும் பண் பாட்டையும் வளர்க்கவும் உயர்த்தவுமாக பல்கலைக் கழகங்க விருந்து கொண்டிருப்பதுபோல, த மிழ் பண்பாட்டுடன் இந்து சமய அடிப்படையில் பல்கஃக் கழகம் வேண்டுமென படி பெரிய மனிதர்கள் முயற்சிசெய்து (হয়! லெழுப்பிவருவதை நாடறியும், நாமும் அறிவோம். அதுபோல, முஸ்லிம்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவைகளுக்கேற்ப தமிழ் உருது அரபு ஆகிய மொழிகளுடன் ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக் கின்ற அளவுக்கு ஒரு இஸ்லாமியப் பல்கஃக் கழகம் வேண்டு மென முஸ்லிம்கள் விரும்பினுல், நிச்சயம் அது வெற்றிபெறு மென்பதே எண்தெண்னம். எப்படியிருப்பினும் மொழி விஷ பத்தில், அதுவும் தமிழ் மொழி விஷயத்தில் இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த குெப்பினருக்கும் பின் தங்கிநின்றுவிடக் கூடாதென்பதே எனது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Page 17
மொழியும் முஸ்லிம்களும்
இவ்வளவு நேரம் பொறுமையுடனும் அமைதியுடனும் எனது சொற்பொழிசவை செவிமடுத்துக்கொண்டிருந்த உங்க ளணேவருக்கும், இந்த சிறந்த ஏற்பாட்டை திறம்பட செய்து முடித்த இலக்கிய வளர்ச்சிக் கழகத்தினருக்கும், இக்கூட்டத் திற்கு கலேமை தாங்கி வெற்றி தேடித்தந்த இப்பகுதி பெருத் திகையாளர் ஜனுப் அபுசாவி அவர்கட்கும், எனது அருமை நண்பர்கள் சலாஹ"தீன், லாசரஸ் போன்ருர்களுக்கும், அதி பர் ஜனுப் ஹசன் அவர்கட்கும் எனது அன்பையும் நன்றியை யும் கூறிமுடித்துக்கொள்கிறேன்.
X
YYYyry
*#*#*#**
WWWFwyr
VWV Y'VOV
இந் நூல் கிடைக்குமிடம்.
* டியெம்பி, ?
252. டாம் வீதி - கொழும்பு 12.
ఓAA
iPSAA
AAA
Afshikawak,
akraA.


Page 18

ஆர். ஜே. ஆர். பிரிண்டர்ஸ் 901, கியூ வீதி, கொழும்பு 2.