கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எண்ணக் கோலங்கள்

Page 1


Page 2

என்னக் கோலங்கள்

Page 3

GTGioTGOOTö GöTGOrië56
66io... 87ibğ5rG8Lum6ño
&
ஒ s ee
d
32/9 ©്b[B Iൺ ബീബ് 24 தமிழ்நாடு இந்தியா

Page 4
Enna - Kola ngal
By
S. Chandrabose
First Edition November 2007
Mithra : 1.52
ISBN 81 - 89748 - 39 - 4
Publication Editor
Espo
Mithro Books are Published by Dr. Pon Anura
Pages : 232
Price : 125.00
Printed & Published by
Mithra Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam Chennai - 600 024. Ph: 2372 3 182, 2473 5314 Email: mithrabooksGgmail.com

துள்ளித்திரிந்த பருவத்திலே என் துடுக்கடக்கி என் கல்விக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து என்னை
மனிதனாக வாழவைத்த என் தாய்
இலட்சுமி சுப்ரமணியம்
elenjirasafeit
அன்புக்கும் அருளுக்கும்
இந்நூல்
aыпахіäвоаъ

Page 5

слеѓлеgeоп
அவ்வப்போது என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள், ஆய்வுகள், குறுநாடகம், சிறுகதை என்பவற்றின் கதம்பமாக இந்நூல் வெளிவருகின்றது. காலத்திற்குக் காலம் தாயகப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், புலம்பெயர்ந்த மண்ணில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்தவற்றுள் தற்சமயம் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு இத்தொகுப்பு வெளியாகின்றது.
தாயகப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழநாடு ஆகிய வற்றிற்கும், யாழ் பாலர் கல்விக் கழகத்தினருக்கும், புலம்பெயர்ந்த மண்ணில் வெளிவரும், விளம்பரம், உதயன், ஒரு பேப்பர், உலகத் தமிழ் ஓசை ஆகிய
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முனைவர் கவிஞர் சேரன் அவர்களுக்கும் நன்றி. இந்நூலை அழகுற அச்சிட்டு வெளியிட்ட மித்ர வெளியீட்டு நிறுவனத்தாருக்கு எமது நன்றி.
எஸ். சந்திரபோஸ்

Page 6
எண்னக்கோலங்கள் ! 14
நாயகம் வரை இருந்து வந்த மரபுமுறையினை இவர்கள் பேணுகின்றார்கள். 'ஊருக்கு உபதேசம், உனக்கல்ல கண்ணே என்பது போல. ஆங்கிலம் அல்லது பிரான்சிய மொழி கனடா வாழ்வின் தேசிய நீரோட்டத்திற்கு இன்றியமையாதது என்பதை இங்கு மறுப்பதற்கில்லை. இதனால் ஆங்கிலமோ, பிரெஞ்சு மொழியோ தமிழர்களின் ‘மூன்றாவது கண்ணாக இருப்பதில் தவறில்லை. ஆனால் எமது நாடும், எமது மொழியும் முதலிரு கண்களாக இருக்கவேண்டும்.
தமிழ்மொழியும், தமிழர்தம் பண்பாடும் புலம்பெயர்ந்த தமிழர்களால் நாளிலும் பொழுதிலும் கடைப்பிடிக்கப் படுதல் வேண்டும்; அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுதல் வேண்டும் என்றெல்லாம் தமிழ்ச் சான் றோரால், தமிழ் அபிமானிகளால், ஆர்வலர்களால், ஆசிரியர் களால், இலக்கிய வித்தகர்களால், ஊடகவியலாளர்களால், தமிழர்களின் தொண்டர்தாபனங்களால் முன்வைக்கப் படுகின்றன. இம்முயற்சிகள் ஒவ்வொரு தமிழரின் இல்லத்தி லிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பிள்ளை காணும் முதல் சமூகமே குடும்பம்தான். பெற்றோர், சகோதரர்கள், உற்றார் உறவினரோடு தமிழ்மொழியில் உரையாடுவது வீட்டிலிருந்தே வலியுறுத்தப்படுதல் வேண்டும். தமிழ்மொழி தெரியாத வேற்றின மொழி மக்களுடன் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் உறவுகொள்வது, உரையாடுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தமிழர்கள், தமிழர்களுடன் தமிழ் தவிர்ந்த மொழிகளில் உரையாடுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும். இதனைக் கூறுவதால் நாம் மொழிவெறியர் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. நமது மொழியினை, நமது பண் பாட்டினை நாம் பேண மறந்தோமாயின் தத்தம் சொந்த இன அடையாளங்களை இழந்து பூஜியங்களாகி விடுவோம்.
எமது சிறார்கள் பன்னாட்டு மொழிகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தமிழர்களின் சிறப்பினை ஏனைய நாட்டு மக்கள் அறியும் வண்ணம் செய்யவேண்டும். அதுபோன்றே பாரதியின் கூற்றுக்கமைய,

15 / சந்திரபோஸ்
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்/
எனவே தமிழ்மொழியும், பண்பாடும் நம்மால் நாளாந்தம் பயிலப்பட வேண்டும்.
பக்தியின் மொழி தமிழ் எனத் தமிழ் ஆய்ந்த சான்றோர் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். தமிழும் சைவமும் என உச்சிமீது வைத்து மெச்சிக் கொண்டாடு கின்றோம். ஆனால் சைவக் கோவில்களில் இன்னமும் ஏன் வழக்கொழிந்த வடமொழி ஆதிக்கம்? தமிழ்மொழியில் பூசை களும், பிரார்த்தனைகளும் முற்று முழுதாக நடைபெற்றால் அவை இறைவனுக்குப் புரியாதா? அல்லது இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரா? அன்றி சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லையா? அப்போ தமிழ்த் தேசியம் எங்கே? இன்னமும் ஆரிய மாயைக்குள் ஆட்படுதல் வேண்டுமோ?
அதுமட்டுமா, தமிழ் மக்களாலும், தமிழ்மொழி பேசும் மக்களாலும் பின்பற்றப்படும் ஏனைய மதங்களில் எல்லாம், யார் வேண்டுமானாலும் அவ்வவ் மதங்களுக்குரிய, மதகுரு வுக்கான கல்வியினைக் கற்று தமிழ் மொழியிலேயே மதகுரு வுக்குரிய கடமைகளைச் செய்கின்றனர். அத்தகையோர் 'மதகுரு' என்ற அந்தஸ்தில் சமூகத்தில் மரியாதை செய்யப் படுகின்றனர். ஆனால் சைவசமயத்தில் மட்டும் ஏன் சாதி முலாம் பூசப்படுகின்றது? இறைவன் சந்நிதியிலிருந்தே சமூக ஏற்றத்தாழ்வு ஆரம்பமாகின்றது என்பதனைத் தமிழீழத் தேசியவாதிகள் அறியமாட்டார்களா? இதனை மாற்ற முன் வரமாட்டார்களா?

Page 7
முனனுரை
edio. ayib,5TGBLunT6x6eför எண்னமும் எழுத்தும்
சந்திரபோஸின்,தாழ்த்தப்பட்டதமிழர்களின் கல்விவளர்ச்சி எனும் நூல் 1989இல் வெளியாகிற்று. இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, கல்விக்கான போராட்டம் பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தியதில் அந்த நூலுக்கு ஒரு பெரும் பங்கு இருந்தது. அந்த நூலை முதலில் படித்தபோது சந்திரபோஸை எனக்குத் தெரியாது. இலங்கையின் இடதுசாரி அரசியலில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பெயர் பெற்றிருந்த எம்.சி. சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் சந்திரபோஸ் என்பதும் நான் அறிந்திராதது. பிற்பாடு, பல சிறப்பான மனிதர்களைச் சந்திக்கவும் நெருங்கிப் பழகவும் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்த புகலிடத் தமிழ்ச் சூழல்தான் சந்திரபோஸையும் எனக்கு நல்ல நண்பராக்கிற்று விட்டுப் பிரிதலை மட்டுமின்றி ஒட்டிப் பழகும் வாய்ப்புக்களையும் அள்ளித் தருவதால் புலம்பெயர்வையும் புகலிடத்தையும் அலைந்துழல்வையும் சாரமற்ற, வெறுமை சூழ்ந்த, 'இருள் தூங்கும் பனிப்பாலையாக ஒதுக்கித் தள்ளிவிட முடிவதில்லை.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகால நட்பு எங்களைக் கருத்தியல் ரீதியாகவும் அறிவுத்தேடல் சார்ந்தும் இணக்கமான பொது வழிப் போக்கர்களாக மாற்றியுள்ளது. இந்த நெடுங்கால நட்பும் பகிர்வும் தந்த பாடங்கள் சிறப்பானதொன்று. நண்பர் சந்திரபோஸ் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் -

'கற்பதற்காகப் போராடு:
போராடுவதற்காகக் கல் என்பதே. கற்றலையும், கற்பித்தலையும் தங்கள் வாழ்வின் உன்னத பணியாகக் கொண்டதாலும், தாழ்த்தப்பட்ட தன் சமூகங்களின் விடுதலைக்கான வழியில் கல்வி என்பது உறுதியான ஒரு போராயுதம் என்பதை உணர்ந்து கொண்டதாலும்தான் வடபுலத்தின் சாதிய எதிர்ப்புப் போராளிகளன இலங்கையன் வே. செல்வரத்தினம், ம. செ. அலெக் ஸாந்தர், சைவப்புலவர் வல்லிபுரம் முருகேசு வாத்தியார், என்.கே. ரகு நாதன், கவிஞர் பசுபதி, அல்வாயூர் மு.செல்லையா, ஆ.ம. செல்லத்துரை, மூ.சி. சீனித்தம்பி, இராஜகோபாலன், இராசலிங்கம், திருமதி யோகராசா நாகரெத்தினம் (நல்லூர், மாசியப்பிட்டி கதிரவேலு, எஸ்.பி. ஜீவானந்தம், தம்பி ஐயா, தெணியான் கே. நடேசு, நவாலி தேவநேசன், மானிப்பாய் வைரமுத்து, எஸ். பத்மநாதன் போன்ற இன்னும் பலர் கல்வியியலிலும் கற்பித்தலிலும் தீவிரமாக இறங்கினார்கள்.
உரிய முறையில் ஆசிரியராக வருகிற வாய்ப்பு தனக்குக் கிடைக்காதபோதும், தமது ங்கள் கல்வியில் C வேண்டும் என்பதற்காக பாடசாலையை உருவாக்கிய வதிரி சூரன் போன்றவர்களின் சாதனையையும் நாம் இணைத்தே பார்க்கவேண்டும். தாழ்த்தப்பட்ட தமிழர்களின் சமூகப் போராட்ட வரலாற்றின் உரிய ஆவணப் பதிவுகளக இலங்கையனின் வாழ்வும் வடுவும் (2005), ஆரனின் சுயசரிதை (2004), சந்திரபோஸ் தொகுத்து வெளியிட்ட எம்.சி. ஒரு விடுதலைப் போராளி (998), கே. பானியல் நினைவு மலர் (2003) போன்றன அண்மையில் வெளியாகியுள்ளன. இதுவரை காலம் இலக்கியப்பதிவுகளாகவும், இலக்கிய வழியாகவுமே கணிசமான அளவுக்குச் சாதிய எதிர்ப்புப் போராட்டமும், வடபுலத்துச் சாதியமும் பதிவு பெற்றிருந்தன. சமூக, வரலாற்று ஆவணங் களும் வெளியாக ஆரம்பித்திருப்பது ஒரு சிறப்பான நிலையாகும். அந்த வகையில் சந்திரபோஸ் அவர்களின் இந்நூலில் இடம்பெறும் பல கட்டுரைகளும், தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களின் கல்வி வளர்ச்சி எனும் நூல் இணைப்பாகக் கிடைப்பதும் எமக்கு முக்கியமான வரலாற்றுத் தரவு களாகும்.

Page 8
'ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான ஆரம்ப காலச் சிறு பொறிகளை எறிந்து பின்னர் அப்போராட்டம் பெருங்காட்டுத் தீயாக மள்வதற்கு வழிகோலியது வடபுலத்துச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் தாம் என்ற வரலாற்றைப் பலர் அறிந்திருப்பதில்லை. தமிழகத்தின் தலித் போராட்ட மரபுக்கும், வரலாற்றுக்கும், ஈழத்தின் பஞ்சமர்களின் போராட்ட மரபுக்கும், வரலாற்றுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. ஈழத்தில் தாழ்த்தப்பட்டோரின் கல்வித்துறையும், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கான போராட்டமும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி யிலேயே ஆரம்பமாகிற்று என்பதே அது. இதனுடைய இன்னொரு சிறப்பம்சமாகத்தான் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் தீவிரமாகவும் சிறப்பாகவும் ஈழத்தில் முனைப்புப் பெற்றது.
இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கிறபொழுது சந்திரபோஸ் அவர்களின் இந்த நூல் தொகை, கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், சிறுகதை, குறுநாடகம், ஆவணம் என ஒரு கதம்பமாக இருப்பது இயல்பே. ஆசானாகவும், ஆய்வாளனாகவும், இலக்கியவாதியாகவும், "அறிவுக்கு முதன்மை கொடுக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் விளங்கவேண்டும்" என்ற விருப்புடைய அறிவுசீவியாகவும் பரிணமித்துள்ள சந்திரபோஸின் பன்முகப்பட்ட வெளிப்பாடுகளை இந்நூல் காட்டுகிறது.
குளிரில் உறைந்தாலும் வாழ்வையும் அறிவுத் தேட்டத்தையும் நேசிக்கிற ஒரு உயர்ந்த மனிதரின் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வெளி வரவேண்டும் என்பது எனது விருப்பம். இலக்கியம் என்பதாக மட்டுமின்றி, தனது கல்வி உலக, மற்றும் போராட்ட அநுபவங்களையும் நினை வெழுதுதல் என்கிற முறையில் அவர் நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
முனைவர் கவிஞர் СЗарөл
T
14.1O.2OO7

தமிழீழத் தேசியமும்
8b6OLs வாழ் தமிழர்களும்.
உலகின் பல நாடுகளிலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
கனடாவிலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள்; கனேடியப்பிரசைகளாக, வதி விட உரிமை பெற்றவர்களாக (Landed Immigrants), அகதிக் கோரிக்கையாளராக, அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மேன்முறையீடு செய்து முடிவுகளுக்காகக் காத்திருப்போராக, எனப் பல்வேறு நிலை களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் எமது தாயகத்தில் தமிழர்கள் தன்மானத்துடனும், சுதந்திரத் துடனும், சமத்துவத்துடனும் வாழும் நிலை ஏற்படல் வேண்டும் என்ற பெரு விருப்புக்

Page 9
எண்ணக்கோலங்கள் 12
கொண்டவர்களே ஆவர். இத்தகையோர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்றது. அப்போராட்டத்தின் ஆதரவாளர்களாகவோ, அல்லது நேரடிப் பங்களிப்பாளர் களாகவோ தம்மை இணைத்துக் கொண்டோர் இங்குள் ளோரில் பத்துவீதமானவர்களாக இருந்திருப்பார்களா என்பது ஐயத்திற்குரியதே! ஆனால் விடிவை நோக்கி நாமெல்லோரும் காத்திருக்கின்றோம். தாய்நாட்டு நிலைமைகளைச் சாதக மாக்கிக்கொண்டு புலம்பெயர்ந்தோர் அநேகர். தமதும் தமது சந்ததிகளின் எதிர்கால நலத்திற்கும், வளத்திற்குமாகப் புலப் பெயர்வு வசதியானது என அவர்கள் நினைத்திருக்கலாம்.
கனேடிய மண்ணில் தமது இருப்பை உறுதி செய்து கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர், தம்மை மிகச் சிறந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட ஆதரவாளர் களாகப் பம்மாத்துக் காட்டுவதனைக் காண்கின்றோம். தமது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள, தமது தொழில் களில் முன்னேற்றமடைய, சமூகத்தில் பிரமுகர்களாகப் பவனி வரத் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட ஆதரவு
முகமூடிகளை’ அணிந்துள்ளவர்களே இவர்கள்.
உண்மையில் விடுதலைப் போராட்டத்தை நேசிப்பவர் களும், அதற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு இருப்பவர்களும் இங்கில்லை என்று நாம் கூற முன்வர வில்லை. அத்தகையோரும் இங்கு இருக்கின்றனர். இதயசுத்தி யுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் இயங்கிக்கொண்டு இருப்பவர்கள் இருக்கின்றனர். இவர்கள் விளம்பரப் பிரியர் களல்லர்! தமது சொந்த நலனுக்காக விடுதலை வேள்வியைக் கருவியாக்குபவர்களல்லர்!
"தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தனித்து சிங்கள பேரினவாத ஆட்சி அதிகாரத்திலிருந்து

13 / சந்திரபோஸ்
தமிழீழம் விடுதலை பெற்றுத் தமிழர்கள் ஆட்சி அதிகாரம் பெறுவதும், சுதந்திர தமிழீழத்தின் பிரசைகள் யாவரும் சகல அடக்கு ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்றுத் தன்மானச் சுதந்திரத்துடனும், சம சந்தர்ப்பத்துடனும் வாழும் வாழ்க்கை முறைக்கான போராட்டமேயாகும்” எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பலமுறை வலியுறுத்தி யுள்ளார். ஆயினும், கனடா வாழ் தமிழ்த் தேசியம் பேசும் தமிழர்களில் பெரும்பான்மையோர் செயற்பாடுகள் இதற்கு முரணாகவே அமைந்துள்ளன.
தமிழீழத் தேசியம் என்பது, பிரதேசவாதத்தைக் கடந்து சாதியத்திற்குச் சாவுமனியடிப்பது, பெண்ணடிமையை நீக்குவது, மூடக் கொள்கைகளுக்கு முடிவு கட்டுவது, தமிழ் மொழிவளத்துக்கும், தமிழர்களின் உயர்ச்சிக்கும் உறுதுணை யாக அமைவது, பண்பாட்டு விருத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அறிவியல் ரீதியில் அஸ்திவாரம் இடுவது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
இவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தமிழீழ விடுதலை பற்றி மேடையில் முழங்குவோரும், ஊடகங்கள் மூலம் 'சொற் சிலம்பம்’ ஆடுவோரும் தத்தமது இருப்புகளை நிலைநிறுத்திக் கொள்வதிலும், வருமான வாய்ப்பினைப் பெருக்கிக் கொள் வதிலுமே குறியாக உள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்குத் தம்மைத் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்வதன் மூலம் தமது ஆதாயங்களைப் பெருக்கிக் கொள்கின்ற வழியினையே நாடி நிற்கின்றனர்.
‘உலகம் முழுவதும் தமிழ் பரப்புவோம்’ என பக்கம் பக்கமாய் எழுதிக்குவிப்பார்கள். மேடையில் உணர்ச்சியாக உரையாற்றுவார்கள். ஆனால் வீட்டு மொழி ஆங்கிலமாக இருக்கும். இது சேர் பொன்னம்பலம் இராமனாதன் காலம் முதல் அமரர்கள் ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வ

Page 10
எண்ணக்கோலங்கள் 1 16
கனடா முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினைக் கொண்ட நாடாகும். இங்கு பண்டங்களின் உற்பத்தியிலும், சந்தைப்படுத்தலிலும் 'நிறைபோட்டி' (Pure Competition) நிலவு கின்றது. ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும், வர்த்தக நிலையமும் தத்தம் பண்டங்களைச் சந்தைப்படுத்த பல்வேறு வியாபார உத்திகளைக் கையாண்டு தமது இலாபத்தை உச்சப்படுத்து கின்றன. இதற்காகக் கையாளும் வியாபார உத்திகளில் விளம்பரமும் ஒன்று. இன்று கனடாவாழ் தமிழர்களிடமும் கோவில் வழிபாடும் வியாபாரமாக மாறிவருவதனைச் சுய சிந்தனை உள்ள எவரும் மறுக்கமாட்டார்கள். கோவில்கள் வர்த்தக நிலையமாகவும், இறைவன் வாங்கத்தக்க பண்ட மாகவும் மாறும் கொடுமையைத் தடுக்க தமிழ்த் தேசிய வாதிகளும், விடுதலை விரும்பிகளும் முன்வரவேண்டும்.
கருத்துச் சுதந்திரத்திற்கு முதன்மை கொடுக்கும் கனடா நாட்டில் இயங்கும் தமிழ் ஊடகங்களும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிப்பது அவற்றினது தார்மீகப் பொறுப்பாகும். மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிப்பதும் அக்கருத்துக்களுக்கு எதிர்வாதம் புரியக் களம் அமைத்துக் கொடுப்பதும் சுதந்திர ஊடகங்களின் பங்கும் பணியுமாகும். ஒரு பத்திரிகை ‘உண்மைக்குப் பக்கச்சார்பு இல்லை’ என்று குறிப்பிடுகிறது. ஆனால் இங்கே உண்மை எது என்பது தானே கேள்வியாகின்றது. விடுதலை வேள்வித்தீயில் குளிர் காய்வது உண்மையா? விடுதலை வேள்வித்தீயில் எம்மை அர்ப்பணிப்பது உண்மையா? சுதந்திரத்திற்காகப் போராடு கின்றோம். ஆனால் கருத்துச் சுதந்திரத்திற்கு இருட்டடிப்புச் செய்கின்றோம் என்ற நிலை வரக்கூடாது. கருத்து வேறு பாடுகள் அறிவீனத்தைக் காட்டுவனவல்ல! அறிவு வளர்ச்சி யினைக் காட்டுவன!
தனையே தமிழ்ச்சான்றோன் திருவள்ளுவரும்,
Աք ளுவரு

17 / சந்திரபோஸ்
"எப்பொருள் யார்ய7ர்வாய்க் கேட்டபினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எனக் கூறியுள்ளார்.
கிரேக்கத்துத் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் அவர்களும்
"அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற வேண்டாம், எவர் சொன்ன சொல்லானாலும் உன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாயாக"
என்று கூறியுள்ளார்.
மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்து, ஒவ்வாக் கருத்தாயின் எதிர்வாதம் செய்யலாம். இதுவே அறிவுடைமையாகும். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று கூறினார் அறிஞர் அண்ணா. தமிழ் ஊடகங்கள் இவற்றை மனங்கொளல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்த் தேசியத்தினை ஆரோக்கியமுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழீழத்தேசியம் பேசுவோரும், விடுதலை விரும்பிகளும் கனேடிய தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய முரண்பாடு களைக் களைய முன்னின்று உழைக்கவேண்டும். நாம் சுதந்திரமும் சுபீட்சமும் பெறவேண்டும்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ்த் தாரகை மந்திரம் நம்மால் நடைமுறைப் படுத்தப்படுதல் வேண்டும்! நம்மிடையே மனிதம் மலரவேண்டும்.

Page 11
பாலர் கல்வியும் வில்ஷாை அனுைகுமுறையும்
Dனிதனின் பல்வேறுபட்ட வளர்ச்சிப் பகுதியில் பாலர் பருவம் மிகமிக முக்கிய மானதாகும். வயது வந்த மனிதனுக்கு இருக்கும் நிறைவுகள் அனைத்தும் குழந்தைப் பருவத்திலேயே உண்டானவை தான் என்னும் உண்மையை உணர்ந்த ஆங்கிலநாட்டு அறிஞர் கவிஞர் வில்லியம் Gail '606/figs William Wordsworth) "Child is the father of man” 6T6örgl 2 60J gigs/GiroTITsi. மூளையின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள், பறவைகளும் விலங்கு களும் பிறக்கும்போதே 70 வீதம் மூளை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாகவும், மீதி யுள்ள 30 வீதம் மூளை வளர்ச்சியும் பிறந்த ஆறுமாதங்களுள் முழுமை அடைவ தாகவும், ஆனால் மனிதனைப் பொறுத்த வரை பிறக்கும்போதே 23 வீதம் மூளை வளர்ச்சியுடன் பிறப்பதாகவும், மீதி 70 வீதம் வளர்ச்சி பிறப்பிலிருந்து 6 வயதுக்குள்

19 / சந்திரபோஸ்
ஏற்படுவதாகவும், எஞ்சியுள்ள 7 வீதம் வளர்ச்சி 19-23 வயதுக்குள் ஏற்படுகின்றது என்பதனையும் கண்டறிந்தனர். எனவே, குழந்தைகளின் முன்பள்ளிப் பருவமான 3-6 வயதுக்குட்பட்ட பாலர் கல்வி வளர்ச்சியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன், விஞ்ஞான விதிமுறைகள் பற்றிய அறிவுடன் அம்முறைகளைப் பின் பற்றி பாலர்களுக்குக் கல்வியினை வழங்குவதில் ஆர்வம் காட்டவேண்டும் என்பது இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாலர் கல்வியின் அவசியத்தை இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வியியல் அறிஞர்கள் உணர்ந்திருக்கின்றனர். பாலர் கல்வியின் முக்கியத்துவம் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழங்கும் பழமொழிகள் மூலமும் உணர்த்தப்படுகின்றது. "இளமையில் கல்”, "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” “ஐந்தில் வளை யாதது ஐம்பதில் வளையுமா?” “விளையும் பயிரை முளையிற் தெரியும்", "வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்”, “தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை” ஆகிய தமிழ் மூதுரைகள் எல்லாம் குழந்தைப் பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. தமிழர்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்த, வாழும் நல்லறி ஞர்கள் பாலர் கல்வியின் முக்கியத்துவம் பற்றிக் கூறி யுள்ளனர். மொன்ரசோரி அம்மையார் (Montessory), புரெளபெல் (Proebe), ஜீன் ஜோக்ஸ் ரூசோ (Roussou), ஜோன் டூயி (John Dewy), மகாத்மாகாந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அத்தகையவர்களில் சிலராவர். பாலர் பாட சாலைகளை குழவிப் பூங்கா, மனித மலர்த் தோட்டம் என்றெல்லாம் வருணித்தனர்.
மனிதன் கருவிலிருந்து கல்லறைவரை கற்றுக் கொண்டி ருப்பவனாவான். அப்படிப்பட்ட மனிதனின் கல்வியில் அத்திவாரம் சரியாகவும், பலமாகவும் அமைந்தால்தான் அதன்மீது கட்டப்படும் கட்டடம் பலமுள்ளதாக இருக்கும்

Page 12
எண்னக்கோலங்கள் 20
என்பதனை உணர்ந்து பாலர்களுக்காகவே மேலைநாடுகளில் நேர்சரி (Nursery), மண்டசேரிகள் (Montessory), குழவிப் பூங்கா (Kinder Garten) 6T60TL LJ6U LuftL –5-T606U56r sßt†LDIT600fléSL பட்டன. எனினும், கீழைத்தேசங்களில் முன்பள்ளிப் பருவத் திற்கு ஒரு நிறுவனம் தேவை என்ற நிலை அண்மைக்காலம் வரை உணரப்படாமலே பெரிதும் இருந்தது. அதற்குக் காரணமாக அமைந்தது, சமூக அமைப்பேயாகும். மேற்கு நாடுகளில் ஏற்பட்ட கல்வி மலர்ச்சியும், தேசிய அரசுகளின் உதயமும், புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளும், கைத் தொழிற்புரட்சியும், சமுதாயத்தில் ஆண்-பெண் இருசாரா ருக்கும் சமத்துவமும், சமத்துவமான கல்வி, தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்தியது. ஆணும் பெண்ணும் கல்வி
தொழில் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் காரணத்தால் அவர்களின் குழந்தைகளை நன்கு பராம ரிக்கவும், அவர்களின் வளர்ச்சியில் கல்வி அறிவும் நல்ல முறையில் இணையவும் பாலர் பாடசாலைகள் மேற்குலக நாடுகளில் உருவாகின. கீழைத் தேசங்களில் குழந்தைக் கல்வியின் முக்கியத்துவம் பன்னெடுங்காலமாக உணரப் பட்டிருந்தபோதிலும், நிறுவனரீதியான அமைப்பு அண்மைக் காலங்களில் இங்கும் ஏற்பட்ட சமூக மாற்றங்களுடன்தான் உருவாகியது.
பாலர் பள்ளிகள் 3 வயது முதல் 5 வயது முடியும் வரையுமுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமுள்ள திறந்த வெளி வாழ்க்கையும், சீரான முறையில் அமைந்த செயல் களும், ஒய்வும், தேவையான அன்பினையும் அளிக்கவல்லன. பாலர் பள்ளி ஆசிரியைகள் மேற்கூறிய விடயங்களை எல்லாம் குழந்தையின் வீட்டுப் பழக்கவழக்கங்களை ஒட்டியும், பெற்றோரின் பொருளாதார நிலையினை ஒட்டியும், பயன் தரக்கூடிய முறையில் குழந்தைகளுக்கிடையே ஏற்படுத்த ஆசிரியைகளுக்கு பெற்றோர்களிடம் நெருங்கிய தொடர்பும் சமூக உணர்வும் அவசியமானதாகும்.

21 / சந்திரபோஸ்
பாலர் பள்ளிக்கு முதன்முதலில் வரும் குழந்தைக்குப் பாலர் பாடசாலைச் சூழலும், பள்ளி ஆசிரியையும் அந்நிய மாகத் தோன்றாது வீட்டின் மறுஅமைப்பாகப் பாட சாலையும், அன்னையின் மறுவடிவாக பள்ளி ஆசிரியையும் தென்படவேண்டும். இத்தகைய தன்மைகள் தோன்ற பாலர் பாடசாலை ஆசிரியைக்கு அவர்கள் வாழும் சமுதாயம் பற்றிய அறிவும், பிள்ளைகளின் பெற்றோருடன் நெருங்கிய தொடர்பும் வேண்டும். குழந்தைகளை வசீகரிக்கும் தன்மையும், தமது நன்னடத்தையினால் நற்பண்புகளை பிள்ளைகளுக்கு அளிக்க வல்லவராயும் இருக்கவேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் வீட்டுச்சூழலையும், சமூகச்சூழலையும் நன்கு தெரிந்து புரிந்துகொண்டு அதற்கு முரண்படாத வகையில் ஆசிரியைகள் நடந்துகொள்ளப் பெற்றோர்களுடன் பாலர் பாடசாலை ஆசிரியைகள் பல வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.
1. பாலர்பள்ளி ஆசிரியைகள் தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்துக் கலந்துரையாடல்.
2. பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாட சாலைக்கு வருகை தரச் செய்து அவர்களுடன் உறவு கொள்வது.
3. சமூகப் பொதுநிகழ்ச்சிகள், வைபவங்களில்
ஆசிரியர், பெற்றோர் சந்திப்பும் கலந்துரையாடலும்,
4. பாலர் பள்ளிப் பிள்ளைகளும், ஆசிரியைகளும்
பெற்றோர்களும் உல்லாசப் பயணம் செல்லுதல்.
பாலர் பள்ளி ஆசிரியைகள் தம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று கலந்து பழகுவதனால் ஆசிரியை பிள்ளைகளுக்கு அந்நியமாகத் தென்படமாட்டார். அம்மாவின் நண்பி அல்லது எங்கள் குடும்பத்தில் ஒருவர்

Page 13
எண்னக்கோலங்கள் 22
என்ற உணர்வு ஏற்படுவதனால், பாலர் பள்ளியும், ஆசிரி யையும், பயஉணர்வினை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தாது, அப்பிள்ளைகளின் வளர்ச்சியில் ஓர் சுதந்திரமான முழுமை யான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பிள்ளைகளின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் பிள்ளைகளின் வீட்டில் நடைபெறும் நன்மை, தீமையான நிகழ்ச்சிகளில் ஆசிரியைகள் சென்று கலந்து கொள்வதனால் பெற்றோருக்குப் பாலர் பாடசாலை ஆசிரியை மேல் ஒரு நம்பிக்கையும், பிள்ளைகளுக்கு பாசமும் உருவாகி அவர்களின் கல்விச் செயற்பாட்டை இலகுவாக்கும். இதேபோன்று பாடசாலைகளில் இடம்பெறும் பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டம், பெற்றோர்தினவிழா, கலைவிழா, விளையாட்டுப் போட்டிகள், பொருட்காட்சிகள் என்பவற்றில் எல்லாம் பெற்றோர் கலந்துகொள்வதுடன் இவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்துவதில் ஆசிரியர்களுக்கு ஒத்தாசையாக உதவி நல்கு வதன் மூலம் நல்ல சமூக உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்கும் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதனால் அவர்களது தேவைகளையும் அவர்களது பள்ளி, கல்லூரி நிகழ்ச்சி களையும் தாமாகவே செய்துகொள்ளும் ஆற்றலுடையவர் களாக இருப்பர். ஆனால் பாலர் பள்ளிப் பருவக் குழந்தைகள் தமது தேவைகள் அனைத்தையும் தாமே பூர்த்தி செய்யும் அளவு வளர்ச்சியினைப் பெற்றிருக்கமாட்டார்கள். ஆகவே, அவர்களின் பாடசாலை நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆசிரியர் களுடன் பெற்றோரின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
ஆசிரியர் - பெற்றோர் தொடர்பினால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஆசிரியைகள் அறியவும், பிள்ளை களில் காணப்படும் உடற் குறைபாடுகளை ஆசிரியைகள் அவதானித்து அவற்றிற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துப் பிள்ளைகளின் குறைகளைக் களையவும், பிள்ளைகளுக்கும்,

23 / சந்திரபோஸ்
பெற்றோருக்கும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆலோசனை வழங்கமுடியும். அத்துடன் பெற்றோரிடம் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களது ஆலோசனைகளை ஆசிரியைகளும், ஆசிரியைகளின் ஆலோசனையைப் பெற்றோரும் பெறுவதுடன் பாடசாலையின் தேவைகளில் பலவற்றை இலகுவில் பெற்றோர் தாமாக முன்வந்தே நிறை வேற்ற வாய்ப்பளிக்கும். தமது பிள்ளைகள் கல்வி பெறும் பாடசாலை தமது பாடசாலை என்ற உணர்வு மேலோங்க பெற்றோர் பாலர்பாடசாலையின் தேவைகளைத் தாமே
முன்வந்து நிறைவேற்றுவர்.
சமூக பொது வைபவங்கள், திருவிழாக்கள், சிரமதான வேலைத்திட்டங்கள் போன்றவற்றில் பாலர்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பெற்றோருடன் சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு நல்கும்போதும், பெற்றோருடனும், பிள்ளை களுடனும் சேர்ந்து உல்லாசப் பிரயாணங்களை மேற் கொள்ளும்போதும் பாலர் பள்ளி ஆசிரியர் - பெற்றோர் உறவுகள் வளர்ந்து சிறப்படைவதன் பயனாக சமூகத்தில் பாலர் பள்ளியின் அந்தஸ்தும், தரமும், ஆசிரியரின் தரமும், மதிப்பும் உயர்வடைகின்றது. இவ்வாறு பாலர் பாடசாலை ஆசிரியர் - பெற்றோர் உறவானது பாலர் பாடசாலையில் பயிலும் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அப்பிள்ளைகளின் பெற்றோருக்கும் பல்வேறு வழிகளில் உதவுவதாகவும் உறு துணையாகவும் அமைகின்றது. குழந்தை நலம், ஊர் சுகாதார நலன், பொது விடயம் பற்றிய அறிவு, பெற்றோரிடையே நல்ல பயனுள்ள பொழுதுபோக்கு ஏற்படுத்துதல், சிறு சேமிப்புக்களை ஊக்குவித்தல் போன்றவற்றையும் ஏற்படுத்த உறுதுணை புரிகின்றது. பாலர் பாடசாலையில் கல்வி பெறும் பிள்ளையினைப் பூரணமாக அதன் குணஇயல்புகள், அதன் பின்னணி, சமூகச் சூழல் என்பனவற்றைப் பெற்றோருடன் தொடர்பு கொண்டு ஒரு பாலர் பாடசாலை ஆசிரியை அறிவதன் மூலம் "பாலர் பாடசாலை ஆசிரியையின் கற்பித்தல்

Page 14
6600T600185.55fTeofilab6f 24
பணியில் 50 வீதம் பிள்ளையைப் பூரணமாக அறிந்து கொள்ளுதல் மூலம் சுலபமாகின்றது” என்னும் கூற்று நிரூபண மாகின்றது.
பாலர் பள்ளி ஆசிரியை சமூகத்தில் பல்வேறு தரத் திலுள்ள மக்களையும் பிள்ளைகளின் பெற்றோரையும், பாலர் பள்ளி மூலம் இணைக்கும் ஓர் பாலமாக, சங்கிலித் தொட ராகத் தன்னையறியாமலே பணியாற்றி சமூகத்தில் ஓர் நல்ல உறவுநிலை ஏற்படுத்தக் காரணமாகின்றார். இதற்குக் காரணமாக அமைவது பாலர் பாடசாலை ஆசிரியர் - பெற்றோர் உறவேயாகும்.
ஒரு கல்வி முறையின் வெற்றி பெரும்பாலும் ஆசிரியரின் தன்னியல்பிலேயே தங்கியுள்ளது. நோக்கங்கள் எவ்வளவு தான் சிறப்புடையனவாக இருந்தாலும், நிர்வாகம் எவ்வளவு தான் சீராக இருந்தாலும் ஒரு பிள்ளைக்குக் கிடைக்கக் கூடிய கல்வி விழுமியங்கள் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது. பாலர் பாடசாலை ஆசிரியர் உதாரண சீலராகவும், நல்லொ ழுக்கம், இரக்க மனப்பான்மை, பணி, மானிடநேயம் சார்ந்த கடமை உணர்வு, பொறுப்புக்களை உணர்ந்து ஏற்றுக் கொள்ளல் போன்ற பிற சிறப்பியல்புகளையும் கொண்டிருக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரம்பகாலச் சிற்பியே பாலர் பள்ளி ஆசிரியை. இந்தப் பாரிய பொறுப்பினை உணர்ந்து ஒவ்வொரு பாலர் பள்ளி ஆசிரியையும் பணி யாற்றும்போது நல்லதொரு சமுதாயம் உருவாகும். அன்பு ஓங்கி அறம் தழைக்கும். சமூகத்தை உருவாக்குவதில் தத்தம் பங்களிப்பினை ஒவ்வொரு பாலர் பாடசாலை ஆசிரி யையும் நல்கவேண்டும் என்பதே சமூகமும் கல்வியியல் அறிஞர்களும் அவர்களிடம் எதிர்பார்ப்பதாகும்.

உசாத்துணை நூல்கள்
Principles of Education: W.R.P. Somaratne. B.A (Lond), E.T. Mr.St.
Educational Psychology: Prof. S. Muthulingam.
கல்வித்தத்துவம்: பேராசிரியர் ப. சந்திரசேகரம்.
"குழந்தைகளின் இயல்பும் போதனா முறையும்":
Sri. V. Arunajatai, M.A., L.T.,
பாலர் பள்ளிக் கையேடு: அ. அவையன் ஆ எபிநேஸர், Dr. S. BED.

Page 15
Onணிட தமிeம்ை
Tெல்லா உயிரிகளின் பிறப்பு போன்றே, மானிட உயிரியின் பிறப்பு என்பதும் இயற்கையின் நிகழ்வே. சூழலுக்கு ஏற்ப தம்மை இயல்பாக்கம் செய்துகொள்ளும் உயிரிகள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்ட வையே வாழும் என்னும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு உள்ளாகி உருவாக்கம் பெற்று நாம் வாழும் புவிக் கோளில் வாழும் உயிரிகளில் மனித உயிரியும் ஒன்று. பிறக்கும் குழந்தைகள் மீது வளர வளர இனம், மதம், மொழி, சாதி, நிறம், நாடு, பிரதேசம், வர்க்கம் என்று குத்தப்படும் முத்திரைகள், முகவரிகள் ஏராளம். இம்முத்திரைகளும், முகவரிகளுமே உலகில் மானிட நேயத் திற்கும், உலக சமாதானத்திற்கும் அச் சுறுத்தலாக அமைந்துள்ளன.

27 / சந்திரபோஸ்
மனிதம் என்பது மனிதமனங்களில் உதயமாவது மனிதம் மனச்சாட்சி வயப்பட்டது. அன்புக்கு வணக்கம் செலுத்துவது. அகிம்சைக்கு ஆட்படுவது. ஆனால் அதே மனிதம் இன்னோர் மனிதத்தின் ஆதிக்க சக்தியினால் அழிக்கப்படும்போது அம்மனிதம் தன்னைப் பாதுகாக்கத் தற்காப்புக்காக விழித்துக் கொள்கின்றது.
மனிதனை, மனிதன் என்ற ஒரே காரணத்திற்காக மனிதர்கள் என்று மதிக்கத் தொடங்குகின்றார்களோ அன்று தான் மனிதம் மலரும்; உலக சமாதானம் சாத்தியமாகும்.
மானிடரில், மானிட சமூக மகத்துவத்திற்காக - முன்னேற்றத்திற்காக உழைத்தவர்கள், உழைப்பவர்கள், பல துறை வல்லுநர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. சில சந்தர்ப்பங்களில் சில மனிதர்கள் தமது உள்ளத்தில் உண்மை களைப் புதைத்துவிட்டுக் கூட்டம் போட்டுச் சிலரை முகஸ்துதி செய்வதும் உண்டு. இவர்களின் முகஸ்துதியை அல்லது வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையெனத் தமது உள்ளத்தில் உள்வாங்கிக் கொள்ளும் உளவியல் மயக்கம் கொண்ட மனிதர்களும் நம் மத்தியில் இருக்கின்றார்கள். இத்தகைய உளவியல் ஊஞ்சல் கட்டி ஆட்டும் மயக்கத்தில் மையல் உற்றவர்களைப் பயன்படுத்தித் தமது நோக்கினையும், போக் கினையும் நிறைவு செய்துகொள்ளும் மானிடர்கள் எம் மத்தியில் ஏராளம், தாராளம்.
மட்டுப்படுத்தப்பட்ட ‘வளங்களே’ மானிடர் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணி யாகின்றது. ஆயினும், மட்டுப்படுத்தப்படாத மானிட அறிவுத் திறன் மானிட பிரச்சினைகளை தீர்த்துவைக்கவும் மானிட வாழ்வின் உயர்வுக்கும் உறுதுணையாகின்றது.
மானிடர்களிடையே ஏற்படும் யுத்தம் இயற்கையான தல்ல. புவி நடுக்கம், எரிமலை இயக்கம், சூறாவளி, சுனாமி

Page 16
எண்னக்கோலங்கள் 28
போன்றதல்ல. யுத்தத்திற்கான விதை மனித மனங்களிலேயே விதைக்கப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கான அரண்களும் மனிதமனங்களிலேதான் தோன்றவேண்டும். உளவியலாளர்கள் மானிடரிடம் பல்வேறுவகையான இயல்பூக்கங்கள் உள்ளன எனக் கூறியுள்ளனர். அதில் போர் ஊக்கமும் ஒன்று எனக் கூறியுள்ளனர். இந்தப் போர் ஊக்கம் என்பது யுத்தம் (War) என்ற அர்த்தத்தில் அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் 9|856) lul DIT607 (Subject) Lipaliul DIT607 (Objective) (pp1687 LITG களை - தடைகளை நீக்குவதற்காக மேற்கொள்ளும் போராட்டம் (Strugge) என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதாகும். கற்பதற்காகப் போராடு; போராடுவதற்காகக் கல் என்றால் அதன் அர்த்தம் யுத்தம் என்பதல்ல. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இயற்கையுடன் - சமூகச் சூழ லுடன் போராடியே இன்றைய நிலையை அடைந்துள்ளனர். மனிதரே மனிதரை அழிக்க, அடக்கி ஆள ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்த வைத்த யுத்தங்கள் மனிதகுல வரலாற்றில் இன்றுவரை இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை மனிதகுல நாகரிகத்தை, வளர்ச்சியை நாசமாக்கிய வையே. மானிட தரிசனத்தில் தலைவர்கள் பலர் வாழும் காலத்தில், அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் மகோன்னத புருடர்களாகப் போற்றப்பட்டனர்.
ஈராக்கின் ஈடில்லாத் தலைவனாக மட்டுமன்றி, முழு அரபு உலகின் தன்னிகரற்ற தலைவனாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது போற்றப்பட்ட சதாம் குசேய்ன் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டபின் துரோகி, சர்வாதிகாரி, மனிதகுல விரோதி என்றெல்லாம் தூற்றப்படுகின்றார். இந்நிலை சதாம் குசேய்னுக்கு மட்டுமல்ல ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், இடி அமீன் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல் கின்றது. இதேவேளை, வாழும்போதும், மரணத்தின் பின்னும் போற்றப்படும் ஒருசில தலைவர்களும் மனிதகுலத்தில் இருக்கவே செய்கின்றார்கள்.

தமிழ்ச் சமூகத்தில் Onற்றம்
அறிவுக்கு முதன்மை கொடுக்கும் சமூகமாக இல்லாது உணர்ச்சிகளுக்கு முதன்மையளிக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் தனது கடந்த காலங்களைப் பெரிதும் கழித்து வந்துள்ளது. இந்நிலை மாறவேண்டும்; அறிவுக்கு முதலிடம் தரவேண்டும்.
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்ற வள்ளுவன் வாய்மொழியை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். மெய்ப்பொருள் காண்பது 'அரிதாக’ இல்லாது மெய்ப்பொருள் காண்பது ‘அறிவாக அமையவேண்டும்.

Page 17
எண்னக்கோலங்கள் 3O
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெணல் கேளிரோ?
என பாரதியின் முழக்கத்தை கருத்தில் கொள்ளுவோம்.
தூக்கிய வாளும் தினவெடுத்த தோள்களிலே பூட்டிய ஈட்டியும் மட்டும் போதாது தோழர்களே அறிவென்னும் ஆயுதம் வேண்டும் அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி!
எனக் கிரேக்க தத்துவ பேராசான் சோக்கிரட்டீசின் கருத்தை நமது சிந்தையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
கடந்த பல தசாப்தங்களாக எமது தமிழ்ச்சமூகம் வெற்றுக் கோஷங்களுக்கும் வேடதாரங்களுக்கும் ஆட்பட்டு அல்லலுற்றது. உயர்கல்வி கற்று, பரம்பரை பேணி, பதவிக்கும் பட்டங்களுக்குமாய் பகட்டுக் காட்டிய சுயநலவாதிகளைப் பின்பற்றி தவறான பாதையில் செம்மறியாட்டு மந்தைகளாய் பின்தொடர்ந்து வந்தது. இதன் பலனைத் தமிழ்ச் சமூகம் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை அறுவடை செய்துவருகின்றது. இன்றைய கால கட்டத்தில் புதிய தலைமையின்கீழ் புதிய தலைமுறை புத்தெழுச்சி பெற்று இனவிடுதலைக்கான புதிய பாதையில் நடைபயின்று வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மட்டுமன்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முதியவர்களும் கல்விமான்களும் சமூகசேவகர்களும் ஊடகவியலாளர்களும் பேச்சளவில், எழுத்தளவில் சீர்திருத்தக் கருத்துக் கூறாது, புரட்சி பேசாது

31/ சந்திரபோஸ்
நடைமுறையில் செயலிற்காட்டி இளம் தமிழ்ச் சமுதாயத்தில் ஓர் சிந்தனைப்புரட்சியை மலர வைக்கவேண்டும்.
பழம்பெருமைகள் பேசுவதில் பயன் இல்லை. பழமைகள் எல்லாம் பிற்போக்குமல்ல. புதுமைகள் எல்லாம் முற்போக்கு மல்ல. பழமைகளைப் பின்னோக்கிப் பார்த்து, அவற்றுள் அறிவுக்கும், இக்காலச் சூழ்நிலைக்கும் எமது சமூக முன்னேற்றத்தின் விடிவுக்கும் ஏற்றவற்றைத் தெரிந்து, பயன் படுத்தி, தமிழ்ச்சமூகம் முன்னேறவேண்டிய கடமைப்பாட்டில் இருக்கிறது.
தமிழில் என்ன உண்டு என்று கர்வப்படுவதை விடுத்து, தமிழில் என்ன இல்லை என்பதனை நாம் கணக்குப் பார்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அதுவே தமிழ்ச் சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வதற்கான வழிமுறை Lunt G5b.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்
என்ற பாரதியின் கனவினை நாம் நனவாக்கவேண்டும்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடயங்களைப் பண்பாடு, மரபு என்ற திரைகள் இட்டுத் தமிழ்ச் சமூகத்துக்குத் தேக்க நிலை ஏற்படுத்தாது சீரிய சிந்தனைகளுடன் அறிவு செறிந்த பாதையில் செல்லவேண்டும்.

Page 18
எண்னக்கோலங்கள் 32
கண்மூடிப் பழக்கவழக்க மெல்லாம் மண்மூடிப் போகவேண்டும் என்று
மூன்றாவது மனிதர்களாக நின்று, தமிழ்ச் சமூக மேடையில் முழங்காது, நாமே நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க முன் வரவேண்டும். தமிழ்ச் சமூகம் பக்தி, பக்தி என்று மருள் நீக்கி அருள்பெற இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்ல விடயம். ஆனால் பரமனின் பாதாரவிந்தத்தைப் பற்றிக்கொள்வதற் காகப் பகுத்தறிவு அற்றவகையில் குடங்குடமாக ஆவின் பாலை அபிஷேகம் என்ற பெயரில் சாக்கடையில் ஒடவிடுவது அபத்தம். பாலின்றிப் பசியால் வாடும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் பசியினைப் போக்க அபிஷேகத்திற்கென வாங்கும் பாலிற்காகச் செலவிடும் பணத்தினைப் பயன்படுத்து வதனையே ஆண்டவன் அகமகிழ்வுடன் ஏற்றுக்கொள்வான். அத்துடன் பாலினை வீண்விரயம் செய்யாது உயிரினங்களின் பசியினைப் போக்கப் பயன்படுத்துவதே மானிட தர்மம்.
இன்று உலகெங்கும் மக்களாட்சித் தத்துவம் முன் னெடுத்து முழங்கப்படுகின்றது. ஜனநாயக ஆட்சியென்றும், குடியரசாட்சி என்றும் கூறப்படுகின்றது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என வாய்கிழியப் பேசப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம் ஆளும் அரசின் ஆட்சி ஆட்டங்காணாத வரை, விமர்சிக்கும் வரைதான். அதற்குமேலும் சென்றால் அரசு தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிடும். நடை முறையில் அரசு என்பது அமைக்கப்பட்ட சர்வாதிகாரம் தான். அரசு என்பது ஒர் பலாத்காரக் கருவிதான். அதன் அரசியல் அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
மனிதகுல வரலாறு அன்றிலிருந்து இன்றுவரை இதனையே உணர்த்தி வருகின்றது. யாருடைய துப்பாக்கிகள் முந்திக் கொள்ளுகின்றனவோ, யாருடைய படை அணிகள்

33 / சந்திரபோஸ்
வெற்றிவாகை சூடிக்கொள்கின்றனவோ அவரே அரசுத் தலைவர் ஆகின்றார். இதற்கு சமூகமும், சமயங்களும், தர்மம், நியாயம் என்ற முலாம் பூசி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியாளனை அங்கீகரித்து விடுகின்றது. இதே ஆட்சியாளன் அதிகாரத்தில் இருக்கும்போது துதி பாடும் சமூகம் இவனை வீழ்த்திப் புதிய ஆட்சியாளன் அதிகாரத்திற்கு வரும்போது வீழ்ந்தவனைத் தூற்றுவதும் வென்றவனைப் போற்றுவதும் இயல்பாகி விடுகின்றது. இங்கே தர்மமும், நியாயமும் புதிய தலைவனுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.
இதற்கு மாறாக, அரசியல் விடுதலைக்காக இந்திய தேசப்பிதா மகாத்மாகாந்தியும், தென்ஆப்பிரிக்க முன்னை நாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் அறவழியில் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றதாகக் கூறப்பட்ட போதிலும், அவ்அவ் நாடுகளிலும் தீவிரவாத அணிகளின் ஆயுதப் போராட்டமே இவர்களின் வெற்றிக்குப் பின்னணி உந்துவிசையாக அமைந்தது என்பதனை எவரும் மறுக்க (Լpւգ-Ամո3].
இன்று சில மேற்குலக நாடுகளில் ஆட்சி மாற்றம் அமைதியான ஜனநாயக முறையின் கீழ் மக்களின் வாக்கு வல்லமையினாலேயே மாற்றம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. மேலெழுந்தவாரியாக நோக்கும்பொழுது அக்கூற்று உண்மை போல் தோற்றம் அளிக்கும். ஆனால் நுணுகி நோக்கும்போது இந்த நாடுகளில்கூட ஜனநாயகம் ஆயுத உற்பத்திகளின் மூலம் பெறப்படும் பணநாயகத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் பெறுகின்றது.
உலகத்தில் ஐக்கிய அமெரிக்க அரசா? அல்லது ஐக்கிய அமெரிக்க அரசிற்குள் உலகமா? என்ற ஐயப்பாடு இன்று சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, உலகமயமாக்கல் என்ற மகுடங்களில் உலக மக்களை ம்ெளடீகங்களாக்கி ஐக்கிய அமெரிக்க அரச பயங்கரவாதம்

Page 19
எண்னக்கோலங்கள் 34
முழு உலகுக்குமே அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதனை எமது தமிழ்ச் சமூகம் சபாஷ் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றதா? அல்லது இதற்கு எதிரான போராட் டத்தை ஆதரிக்கப் போகின்றதா? இது சிந்திக்கப்பட வேண் டியதே! சகல சவால்களையும் வெற்றிகரமாகச் சந்தித்து வெற்றிகொண்டு முன்னேறிச் செல்லும் சமூகமாகச் செயல் பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். வெறும் உணர்ச்சி உண்மையைத் திரிக்கும் சாதனமாகவும், உண்மையை மறைக்கும் திரையாகவும் அமைந்துள்ளது. ஆகவே, நாம் பகுத்தறிவின் மூலம் திரையினை விலக்கி உண்மைகளைக் காண்போம்.

புதிய பதியம்
பிறந்த மண்ணில் எம் வாழ்வினைத் தொலைத்துவிட்டு, புகுந்த மண்ணில் எம் வாழ்விற்கான புதுப்பதியம் போட்டுக் கொண்டவர்கள் நாம்.
புலம்பெயர்ந்து, புகுந்த புதுமண்ணில் புதிய பதியம் போட்டுக் கொண்டவர் களில் சிலர் சடைத்துச் செழித்து வளர்ச்சி பெற்றள்ளனர். இது அவர்களின் திறமை. புகுந்த மண்ணின் அகப்புறச் சூழல்களை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப தம்மைத் தயாரித்துக்கொண்டு வளர்ந்த வர்கள் இவர்கள்.
ஒரு விதை தாய்மண்ணில் விதைத்தால் என்ன, புகுந்தமண்ணில் விதைத்தால் என்ன, அந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தான் அதன் வளர்ச்சியும் வீரியமும் இருக்கும். சில வித்துக்கள் புதிய சூழ்

Page 20
எண்ணக்கோலங்கள் | 36
நிலையில் முளைகொள்வதில்லை. தாய்மண்ணில் தழைத் தோங்கிய செடிகளைப் பதியம் போட்டுப் புதுச்சூழலில் வளர்க்க முனைந்தால் அவற்றில் பல தழைப்பதில்லை. புதிய சூழலின் ஒவ்வாத் தன்மை அதன் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது. இதனை எல்லாம் மீறிப் புதிய சூழலிலும் செடி செழித்து வளர்கின்றது என்றால் சூழலைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்கின்றது என்றுதான் அர்த்தம்.
புவியியல் வரலாற்றில் சூழலுக்கு மனிதன் கட்டுப்பட்டு வாழ்கின்றானா?
பற்றி ஏறி வளரும் கொடியொன்றுக்கு, படர்ந்து வளர் வதற்கு பற்றுக்கோடு ஒன்று வேண்டும். பற்றி ஏறுவதற்குத் தாய்மண்ணில் தான் தேடிய கொழுகொம்பு தான் புகுந்த மண்ணிலும் வேண்டும் என்று அங்கலாய்ப்பதில்லை. புகுந்த மண்ணில் எந்தவிதமான பற்றுக்கோடு தனது வளர்ச்சிக்குச் சாதகமாகக் கிடைக்கின்றதோ அதனைப் பற்றி ஏறி வளர்ச்சி பெறுகின்றது. இஃது இயற்கையின் நியதி ஆகின்றது.
புவியியல் வரலாற்றில் சூழலுக்கு மனிதன் கட்டுப்பட்டு வாழ்கின்றானா? அல்லது சூழலைத் தனக்கு கட்டுப்படுத்தி வாழ்கின்றானா என்ற ஆய்வு காலம்காலமாக நடைபெற்று வருகின்றது. சில அமிசங்களில் மனிதன் சூழலுக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட்டும், சில விடயங்களில் சூழலைத் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக்கொண்டும், இன்னும் சில அமிசங்களில் சூழலில் உள்ள வகை வளங்களைக் கொண்டே சூழலை வெற்றிகொண்டும், மனிதன் வாழுகின்ற வாழ்க்கையினைத்தான் வரலாறு எமக்கு உணர்த்தி வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் புகுந்த மண்ணில் குடியேறிய தமிழர்களில் பெரும்பான்மையானோர் ஊடகங்களிலும், மேடைகளிலும் எம்மக்கள் தாய்மொழி, பண்பாட்டு விழுமியங் களைத் தொடர்ந்தும் புகுந்த மண்ணிலும் கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகின்றனர்.

37 / சந்திரபோஸ்
இவ்வாறு எழுத்திலும், பேச்சிலும் முழங்குபவர்களின் இளைய தலைமுறையினர் ஆங்கில மொழி ஆட்சிமொழியாக இருக்கும் நாடுகளில் பெரும்பாலும் அதைக் கடைப்பிடிப்பதாகத் தெரிய வில்லை. ஆங்கிலம் ஆட்சி மொழியாக இல்லாத ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது வீட்டு மொழியாக பெரும்பாலும் தமிழ் வழக்கிலுள்ளது. ஆங்கிலம் ஆட்சிமொழியாக உள்ள நாடுகளில் இளம் தமிழ் தலை முறையினரிடம் தமிழ்மொழி உபயோகம் அருகி வருகின்றது.
நாமும் நமது தமிழர் என்று வாழ்தல் முறையோ?
கனடா நாட்டில் எமக்கு முன்னர் குடியேறிய பல தலைமுறைகளாக வாழும் மக்களான சீனர்கள், இந்தியர்கள் போன்ற சமூகங்களின் இளைய தலைமுறையினர் தமது தாய் மொழியிலேயே தங்களுக்குள் உரையாடுவதனைப் பரவலாகக் காணமுடியும். ஆனால் ஓர் இரு தலைமுறைக்குள்ளேயே நமது இளைய தமிழ் தலைமுறை தமக்குள் தாமே ஆங்கில மொழியிலேயே உரையாடுவதனைப் பெருமளவில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆண்பிள்ளைகளை விடப் பெண் பிள்ளைகளே கூடிய அளவு அன்னை மொழியைப் புறம் தள்ளி, ஆங்கில மொழியில் உரையாடுகின்றனர். இத்தகை யோர் தாய்மொழியில் தமக்கிடையே உரையாடுவதனை விட ஆங்கிலத்தில் உரையாடுவதனை கெளரவமாகக் கருது கின்றனர் போலும்.
எமது சிறார்கள் ஆங்கிலமொழியை மட்டுமன்றிப்
பல்வேறு மொழிகளையும் கற்றுப் பாண்டித்தியம் பெறுதல் தவறல்ல. ஆனால் தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்காது "நாமும் நமது தமிழர் என்று வாழ்தல் முறையோ?” அதே வேளை எந்த ஒரு மொழியையும் வெறுப்பதன் மூலமோ, கற்றுக்கொள்ள மறுப்பதன் மூலமும் ஒருவன் தன் தாய் மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. எத்தனை மொழி களைப் படிக்கின்றோமோ அதன்மூலம் அவ்அவ் மொழிகளி லுள்ள அற்புதமான அறிவுக் கருவூலங்களை அறிந்து கொள் வதுடன் எமது தாய்மொழிக்கும் வளம் சேர்க்கமுடியும்.

Page 21
66oorsooris086T6Oriss6ir 38
எமது தமிழ் இளைஞர்கள் சிலரும், முதியோர் சிலரும் தாம் புகுந்த மண்ணின் மொழியினை நன்கு கற்று பாண்டித் தியம் பெற்று அம்மொழியில் இருக்கக்கூடிய அறிவியல், இலக்கியம், வரலாற்றுச் செய்திகளை எமது தாய்மொழிக்கும், எமது தாய்மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள், தமிழரின் வாழ்வியல் வரலாறு, விடுதலைப் போராட்ட வரலாறுகளை தாம் புலம்பெயர்ந்த மண்ணின் மக்களும் அறியும் வண்ணம் மொழிமாற்றம் செய்து தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் உலகளாவிய முகவரியைத் தேடிக்கொடுக்கின்றார்கள். இதன் மூலம் தமிழர்களின் கலை, இலக்கியங்களையும், நயத்தகு நாகரிகத்தினையும் புகுந்த மண்ணில் புதிதாகப் பதியம் போடு கின்றனர்.
புலம்பெயர்ந்த மண்ணில் இளைய தமிழ்த் தலை முறையினர் தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மூத்த தமிழர்களால் முன்வைக்கப்படுகின்றன.
பண்பாடு என்பது மானிட ஒழுக்கத்திற்கும், மனக் கட்டுப்பாட்டிற்கும் அடிநாதமாக அமைந்தபோதிலும், இப்பண்பாட்டினைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் உறு துணையாக அமைகின்றன. புவியியற் காரணிகளான பிரதேச அமைவிடம், தரைத்தோற்றம், காலநிலை, மண்வளம் என்பன பிரதான காரணிகளாகவும்; அரசியல், பொருளாதாரம், மதக் கொள்கைகள் என்பன துணைக் காரணிகளாகவும் அமைகின்றன. அத்துடன் பண்பாடு நெகிழும் தன்மை யுடையது. சங்கத்தமிழர் பண்பாடு, சங்கம் மருவிய காலத்தில் வேறுபட்டது. பல்லவர் காலத்தில் மாற்றமுற்றது. அந்நியர் களான ஐரோப்பியர் தமிழ் மண்ணைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தபோது பண்பாடு பல மாற்றங்களுக்குட்பட்டது. இன்று இதுதான் தமிழர் பண்பாடு என்று திட்டவட்டமாகக் கூறக் கூடியதாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்.

39 / சந்திரபோஸ்
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பல்லவர் காலத்தில் தமிழும் சைவமும் தமிழர்களின் பண் பாடாகக் கொண்டாடினர். ஆனால் தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் சைவம், கத்தோலிக்கம், புரட்டஸ் தாந்து, இஸ்லாம் எனப் பல சமய வழிபாடுகளில் இன்று ஈடுபடுகின்றார்கள். ஒவ்வொருவரும் தம் மதங்கள் சார்ந்த பண்பாட்டை, வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகின்றனர். கல்வியறிவும், அறிவியற் சிந்தனைகளும், பொருளாதார நிலை களும் புகுந்தமண்ணில் பண்பாட்டிற்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றன.
பகுத்தறிவுக்கொவ்வாத பல விடயங்களைக்கூட தமிழ் மக்கள் பண்பாடாகப் பேணிய வரலாறும் எம்மிடைய உண்டு. சாதி வேறுபாடுகள், பெண்ணடிமை தொன்று தொட்டு இருந்துவருகின்றது என்பதனால் தொடரும் சில மூடப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனைக் காணச் சகிக்காத தமிழ்ப்புலவன் ஒருவன் ‘கண் மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்’ என்று அறம் பாடினான்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல்ல
என்னும் நன்னூல் சூத்திரத்திற்கு அமைய, மானி டத்தின் மகிமைக்கும், மானிடத்தின் உயர்வுக்கும், மானிட நேயத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழர்களின் பண்பாட்டில் உள்ள நல்ல அமிசங்களையும் புகுந்த மண்ணில் பின்பற்றப்படும் நல்ல பண்பாட்டு அமிசங் களையும் ஒன்றிணைத்து புகுந்த மண்ணில் புதிய பதியம் போட்டு வளமுடனும், நலமுடனும் வாழ்வோம்.

Page 22
ஆழ்கடல் நடுவே அகதிகளாக.
1990ஆம் ஆண்டு, ஆவணி மாதம். எனது குடும்பத்துடன் யாழ் நகரில் கலைப்புலவர் வீதியில் அமைந்திருந்த எமது வீட்டில் வசித்து வந்த காலம் அது.
கலைப்புலவர் வீதி என்பது யாழ். ஸ்ரான்லி வீதியில் ஆரம்பித்து பூரீதர் பட மாளிகைக்கும், புகையிரதப் பாதைக்கும் இடையாகச் சென்று மணிக்கூண்டு வீதியில் முடியும் சிறு வீதி. இவ்வீதியில் யாழ் மத்திய கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் அமரருமான கலைப்புலவர் நவரெத்தினம் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு அமைந்திருந்தமையினால் யாழ். மாநகர சபையினர் இவர் நினைவாக இப்பெயரினைச் சூட்டியிருந்தனர்.
இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் பூரீலங்கா

41/ சந்திரபோஸ்
அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மோதல் வெடித்திருந்தது. விடுதலைப்புலிகள் கோட்டையை முற்றுகையிட்டு இருந்தனர். பலாலி, நாவற்குழி, மண்டைதீவு முகாம்களில் இருந்தும் அரச படைகளின் தரைவழி நகர்வு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கோட்டைக்குள் முடக்கப்பட்ட படையினரும் ஏனைய முகாம்களில் இருந்த அரச படையினரும் யாழ்நகரக் குடியிருப்புகள்மீது எறிகணை களை வீசினர். இடையிடையே அதிகாலை வேளைகளில் வவுனியா விமானப்படைத் தளத்திலிருந்து பறந்துவரும் குண்டு வீச்சு விமானங்கள் தாழப் பறந்து புலிகளின் முகாம்களைத் தகர்ப்பதாகத் தம்பட்டம் அடித்து மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசி மீளும். அடிக்கடி உலங்கு வானூர்திகள் இலக்கின்றி இயந்திரத் துப்பாக்கிகளை வானிலிருந்து இயக்கி வகை தொகையின்றி குண்டு மாரி பொழியும். இவ்வேளையில் மக்கள் சிதறுண்டு ஓடுவதும் பதுங்கு குழிகளையும் பாது காப்பரண்களையும் நாடி ஒடுவதும் ஒளிவதும் நாளாந்த வாழ்க்கையின் ஓர் அமிசமாகி விட்டது. இதற்கு நானும் எனது குடும்பமும் என்ன விதிவிலக்கா? நமக்கும் இதே நிலைதான். தொடர்ச்சியாக அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் சமயங்களில் நான் குடும்பத்துடன் யாழ் புறநகர்ப் பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் இடம்பெயர்வதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாகியது.
இத்தகைய சூழ்நிலையில் பூரீலங்காவில் இடம்பெற்ற 1983 ஆடி அமளியில் இரண்டு உயிர்களையும் உடைமை களையும் இழந்து, பல தலைமுறைகளாக வாழ்ந்த பதுளை நகரை விட்டு இடம்பெயர்ந்து, எனது மாமனாரும் அவரது மூத்தமகன் குடும்பத்தினரும் யாழ் நகரில் எமது அயலில் ஒரு வாடகை வீட்டில் குடியேறி இருந்தனர். மைத்துனர் 1989இல் கனடா சென்றுவிட்டார். அவர் தனது மனைவி யையும் இரண்டு பிள்ளைகளையும் ஸ்பொன்சர் செய்தி ருந்தார். இதனால் மைத்துனரின் குடும்பம் கொழும்பிலுள்ள கனடாத் தூதராலயத்திற்கு நேர்முகப் பரீட்சைக்கு 1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி செல்லவேண்டி யிருந்தது.

Page 23
எண்னக்கோலங்கள் | 42
இந்தக் காலகட்டத்தில் கொழும்புக்கான விமானப் போக்குவரத்தோ, புகையிரதப் போக்குவரத்தோ கிடையாது. யாழ் பேருந்து நிலையமும் புலிகளின் கட்டுப்பாட்டில் முத்திரைச் சந்தைப்பகுதியில் இயங்கிவந்தது. கொழும்பு செல்வோர் விடுதலைப் புலிகளின் அனுமதி பெற்று யாழ்ப் பாணத்திலிருந்து வவுனியா வரை சென்று அங்கிருந்து கொழும்பு செல்லவேண்டிய நிலை காணப்பட்டது. இந்தப் பயணம் மிகவும் பாதுகாப்பற்ற பயணமாகவே இருந்தது. அரச படைகளும் சிங்களக் கொள்ளையர்களும் சிங்களப் பிரதேசங்களில் வைத்து தமிழ்ப்பயணிகளின் உடைமை களையும் உயிரையும் அபகரித்தனர். பெண் பிரயாணிகள் மீது பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டனர் என்பதும் நாளாந்தப் பத்திரிகைச் செய்திகளாயின. இந்த நிலையில் எனது மைத்துனரின் மனைவி தனது பிள்ளைகளுடன் கொழும்பு செல்லப் பயந்தார். ஆயினும், எப்படியும் கொழும்பு சென்று நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் யாழ் நகரில் இருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் அகதிகளாக மீன்பிடி வள்ளங்களில் யாழ் நகரின் பல துறை களிலிருந்தும் இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். அதுபோல் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கொழும்பு சென்று நேர்முகப் பரீட்சைக்கு தோற்றச் செய்யலாம் என அபிப்பிராயப்பட்டார். இக்கடல் வழிப் பயணமும் உத்தரவாதம் அற்றபோதிலும் எனது மைத்துனரின் மனைவியும் இவ்வழியில் செல்வதற்கு உடன்பட்டார்.
இந்த வேளையில் எனது நண்பர் ஒருவரும் யாழ் நவீன சந்தையின் வியாபார ஸ்தாபனம் ஒன்றின் உரிமை யாளர் ஒருவரும் இணைந்து தங்கள் குடும்பங்களைப் பாது காப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு மீன்பிடி இயந்திரப் படகினை வாங்கிப் பயண ஏற்பாட்டினைச் செய்து கொண்டிருந்தனர். இவர்களுடன் தொடர்பு கொண்டதன் பலனாக எனது மாமனாரும், மைத்துனருடைய குடும்பமும் எனது இரு மகன்மாரும் (14, 11 வயது) இன்னமும் சில நண்பர்களின் குடும்பங்களும் இணைந்து மண்கும்பான்

43 / சந்திரபோஸ்
பகுதியிலிருந்து 1990ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18ஆம் திகதி இரவுப் பயணத்தை ஆரம்பித்தனர். இவர்கள் மறுநாள் காலை தமிழ்நாட்டின் தொண்டித்துறையைச் சென்றடைந்த செய்தியை நாங்கள் அறிய 1990 புரட்டாதி மாதம் 18ஆம் திகதி வரை சரியாக ஒரு மாதம் காத்திருந்தோம்.
இந்த ஒருமாத இடைவெளிக்குள் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை நிலைமைகள் யுத்தம் காரணமாக மிக மோசநிலையை அடைந்திருந்தன. யாழ் நகரப்பகுதிகள் சூனியப் பிராந்தியமாக மாறி இருந்தன. நானும் மனைவியும் எனது அன்னையும் இளைய சகோதரி குடும்பமும், நல்லூர் சங்கிலியன் வீதி, கொக்குவில் பொற்பதி வீதி, ஆனைக் கோட்டை என மாறி மாறி இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம்.
இச்சூழ்நிலையில் எனது சகோதரி குடும்பம் அகதியாக இந்தியா சென்றுவிட முடிவு செய்து எங்களையும் அழைத் தனர். எனது மனைவியும் மகன்மாரைப் பார்க்க ஆவலுற் றிருந்தாள். அம்மா எங்கும் வர மறுத்துவிட்டார். எனது இளைய சகோதரனுடன் தான் இருப்பதாகவும் என்னை மனைவியையும் சகோதரி குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு இந்தியா செல்லும்படியும் அறிவுறுத்தினார். நானும் எனது மனைவியும் எனது இளைய சகோதரி, அவரது கணவர், பிள்ளைகள் இருவர் (4 வயது, 8 மாதம்) ஆகியோர் 1990ஆம் ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி இரவு வேலணைத் துறையிலிருந்து மொத்தம் 68 பேருடன் படகு ஒன்றில் இந்தியா நோக்கிப் புறப்பட்டோம்.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர்தான் பிரதம ஒட்டியார். இவர் குடும்பமும் இப்படகில் பயணம் செய்தது. இவருக்கு உதவியாளர்களாக குருநகரைச் சேர்ந்தவர் ஒருவரும் வேலணையைச் சேர்ந்த இன்னொருவரும் இருந் தார்கள்.
நாங்கள் பயணத்தை ஆரம்பித்த நாள் வளர்பிறைக் காலம். புறப்படும்போது வானத்தில் வெளிச்சம் இருந்தது.

Page 24
எண்னக்கோலங்கள் 44
சிறிது நேரப் பயணத்தில் வானம் கும்மிருட்டாகியது. தூரத்தி லிருந்த தீவுகளிலிருந்து மின்மினியாகத் தெரிந்த வெளிச் சத்தைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை. வேகமாக ஒடும் படகில் மோதும் கடலலைகள் வெள்ளித் திவலைகளாக ஜாலம் காட்டின. படகு ஆண்களும், பெண்களும், குழந்தை களுமான அறுபத்தியெட்டுப்பேரைச் சுமந்துகொண்டு ஆழ் கடலில் ஓடிக்கொண்டிருந்தது. சிலமணிநேரப் படகுப் பயணத்திலேயே பலர் களைத்து விட்டனர்;
சிலர் வாந்தியும் எடுத்தனர். சில மணித்துளிகள் செல்ல தொலைவில் ஒரு தீவில் பிரகாசமான வெளிச்சம் தென்பட்டது. அது நயினாதீவு பூரீலங்கா கடற்படை முகாம் என அறிந்தோம். அதே வேளையில் எங்களை இடைமறித்த எம்மவர் படகு ஒன்று மேற்கொண்டு பயணத்தை நாங்கள் தொடர்வது ஆபத்து என்றும், கடற்படையினரின் ரோந்துப் படகுகள் நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் நடமாடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, பக்கத்தில் உள்ள தீவு ஒன்றில் கரை இறங்கி நிலைமைகளை அனுசரித்து பயணத்தைத் தொடர்வதென ஒட்டிகள் தீர்மானித்தனர்.
பக்கத்திலிருந்த பருத்தித்தீவுக்குப் படகினை ஒட்டிச் சென்றனர். நெஞ்சளவு தண்ணிரில் படகுக்கு நங்கூரமிடப் பட்டது. பருத்தித்தீவின் கரை வரை படகினை ஒட்டிச் சென்றால் படகு தரைதட்டிவிடும் என படகோட்டித் தலைவன் கூறியதைக் கேட்டு அனைவரும் நெஞ்சளவு தண்ணிரில் குழந்தை குட்டிகளைத் தோளிலும், தலையிலும் சுமந்தவண்ணம் பருத்தித்தீவினைச் சென்றடைந்தோம்.
அந்தத் தீவில் ஒரு சிறு கிறிஸ்தவ தேவாலயம் அமைந் திருந்தது. அங்கு ஒரு பாதிரியாரும் இரு உதவியாளர்களும் மட்டுமே இருப்பதாக அங்கு சென்றபின் அறிந்தோம். அங்கு சென்ற அத்தனை பேருக்கும் தங்க எதுவித வசதிகளும் இல்லை. பாதிரியார் பக்கத்திலிருக்கும் அனலைதீவுக்குச் சென்றால் அங்கு நாங்கள் அனைவரும் தங்குவதற்கான

45 / சந்திரபோஸ்
வசதிகள் உண்டு எனக் கூறினார். ஓரிரு மணி நேரம் அத்தீவில் இருந்துவிட்டு வீசும் குளிர்காற்றில் நடுங்கிய வண்ணம் மீண்டும் படகில் ஏறி அனலை தீவுக்கரையை சில நிமிடங் களில் அடைந்தோம். அங்கும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிக் கரையை அடைந்தோம். நள்ளிரவாகிவிட்டது, நாங்கள் அனைவரும் இட்ட ஆரவாரத்தில் அனலைதீவு கரையோரத்திலிருந்த குடியிருப்பாளர் சிலர் தமது குடிசை களை விட்டு வெளியே நெருப்புப் பந்தங்கள், "ரோச்லைற்’ சகிதம் வந்து எமது நிலைமைகளைப் புரிந்துகொண்டு தீவின் உட்பகுதியில் அமைந்திருந்த பாடசாலை ஒன்றிற்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர். குழந்தைகள், சிறுவர்கள் களைப்பில் துரங்கிவிட்டனர். பெரியவர்கள் தங்கள் அவலத்தை நினைத்து விடியும்வரை புலம்பிக்கொண்டிருந்தனர்.
மறுநாள் விடியலின்போது பாடசாலைக்கு அக்கம் பக்கம் இருந்த மக்கள் நாங்கள் வந்ததை அறிந்து பல வழி களிலும் உதவ முன்வந்தனர். அவர்கள் தேநீர் தயாரிப்ப தற்கும் சமையலுக்கும் பாத்திரங்களை வழங்கியும் உதவினர். கிராமசேவகர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் எங்கள் பரிதாப நிலை கண்டு பலவழியிலும் பாடசாலையில் ஒரளவு வசதியாகத் தங்குவதற்கு உதவிகளைச் செய்தனர். எங்களிடம் பணமிருந்தமையினால் அங்கிருந்த கூட்டுறவுக் கடையில் சமையல் பொருட்களை வாங்கி எல்லோரும் சேர்ந்து சமைத்து உண்டோம். இருநாள் பொழுது அனலைதீவில் கழிந்தது. இதற்கிடையில் எங்களுக்கு முன் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அனலைதீவைத் தாண்டிச் செல்லும்போது பூரீலங்காக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி மூழ் கடிக்கப்பட்டதாக அறிந்தோம். எங்களையும் மரணபயம் பற்றிக்கொண்டது. அனலைதீவு மக்கள் எமக்கு ஆறுதல் அளித்தனர்.
இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் 7 புரட்டாதி இரவு அனைவரும் அனலைதீவில் இருந்து எமது படகில் ஏறி இந்தியப் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏற்கனவே களைத்

Page 25
எண்ணக்கோலங்கள் 46
திருந்த மக்கள் சிலர் கடல் பயணத்தில் மயக்கநிலை அடைந்தனர். கடல் அலை ஆர்ப்பரித்து எழுந்து படகினைப் பலமாக ஆட்டியது. படகு கடலலைகளுக்கு ஈடுகொடுத்து பாய்ந்து பாய்ந்து சென்றது. ஓங்கி எழும் அலைகள் படகில் இருந்த அனைவரையும் நீராட்டின. படகில் சத்தமும் பிரார்த்தனைகளும் அதிகரித்தன.
மறுநாள் விடியும் வரை படகு ஓடியது. காலைக் கடன் களை படகுக்குள்ளேயே பலர் நிறைவேற்றினர். சூரிய உதயத்தின் பின்னர்தான் நாங்கள் தமிழ்நாட்டின் கோட்டைப் பட்டினத்தைச் சென்றடைந்தோம். அங்கு தமிழகக் காவல் துறையினரும், சுங்கப் பகுதியினர், முதலுதவிச் சிகிச்சைப் பிரிவினர், கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எனப் பலர் நின்றிருந்தனர். அவர்கள் எங்களை கரையிறங்க அனுமதித்து எங்களுக்கு வேண்டிய முதலுதவிகளை அளித்தனர். படகு தமிழக காவல்துறை சுங்கப் பகுதியினரால் கரைக்குக் கொண்டு வரப்பட்டு அதன் இயந்திர சாதனங்கள் கழற்றி எடுக்கப்பட்டன. ஒட்டிகள் மூவரும் பலத்த விசார ணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் எங்களுடன் அகதி களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். எல்லோரும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனங்கோட்டை அகதிமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அங்கு பலவழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டன. இந்த சந்தர்ப்பம் எங்கள் அனைவருக்கும் மறுபிறப்பாக அமைந்தது. ஆதனங் கோட்டையிலிருந்து தொலைபேசி மூலம் மதுரையில் உள்ள எனது மனைவியின் சகோதரி வீட்டுக்குத் தொடர்பு கொண்டபோதுதான் எனது மாமனாரும் மைத்துனர் குடும்பமும் விமானம் மூலம் கொழும்பு சென்றுவிட்ட தாகவும், எங்கள் இரு மகன்மாரும் அவர்கள் வீட்டில் தங்கி இருப்பதனையும் அறிந்து ஆறுதல் அடைந்தோம்.

பாதைகள், LJшаооliladh, பயனுள்ள பாடங்கள்
இ 'மகுடத்தின்’ கீழ் வருபவை ஆலோசனைகளே அன்றி அறிவுரைகள் அல்ல. உங்களின் பொன்னான சிந்தனை களுக்கே இவை அர்ப்பணம்.
இன்றைய காலகட்டத்தில், வீதிப்போக்கு வரத்து வாகனங்களின் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கும், விபத்துகளால் ஏற்படக் கூடிய இழப்புக்களைத் தவிர்ப்பதற்கான பல நவீன பாதுகாப்பு முறைகளும், சட்ட திட்டங்களும் கனடா அரசுகளால் (மாகாண, மத்திய) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஆயினும், நாளாந்தம் பல விபத்துக்களும், பலவகையான இழப்புக் களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் முதல் காரணமாக இருப்பது வாகனம் செலுத்துனர்களின் மனப்பாங்கே ஆகும். ஒவ்வொரு வாகன ஒட்டுனரும் தம்மைத் தவிர, மற்றைய

Page 26
எண்னக்கோலங்கள் | 48
வாகன ஒட்டுனர்கள் அனைவரும் தவறாக வாகனம் ஒட்டு வதாகவே எண்ணிக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஒட்டுனர் களும் தாம் நூற்றுக்கு நூறுவீதம் வாகனம் செலுத்தும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வாகனங்களை ஒட்டுவ தாகவும் கூறிக்கொள்கின்றனர். ஆனால், அதில் உண்மை யில்லை. அனைவரும் நூற்றுக்குநூறு வீதம் சட்டதிட்டங்களை மதித்து வாகனங்களை ஒட்டும்போது எப்படி விபத்துக்கள் ஏற்படமுடியும்? ஒவ்வொருவரும் விடும் தவறுகளே அவர் களையும் ஏனைய பலரையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.
"சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாகனம் ஒட்டுனரோ, அல்லது வாகனத்தில் பயணிப்போர் எவருமோ (குழந்தைகள் உட்பட) வாகனத்தில் பயணம் செய்யும் GurrGiggi g(5á605ülul Ig (Seat-beltsor Safety belts) egy60fligi பயணிக்கவேண்டும் என்ற நிலை எவருக்கும் இருந்ததில்லை” என்று கூறுகின்றார் டக் (f) வுலுவிங் (Doug Fiewelling - President of the Canadian Automobile Association). g607(Tai) gairGpIT சகல வாகனங்களிலும் இருக்கைப்பட்டி பொருத்தப்பட்டிருப்ப துடன், அதனை அணிந்துகொள்வது சட்டரீதியானதும், பாதுகாப்பானதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை அணியத் தவறுவதனால் விபத்துக்கள் நேரிடும் போது பாரதூரமான இழப்புக்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.
தற்பொழுது ஐந்து இறாத்தல் எடையுள்ள குழந்தை யிலிருந்து எண்பது இறாத்தல் எடையுள்ள குழந்தைவரை (Infant / Toddler / Booster) aunts60Tilsafai (Car) SuurteoTub செய்யும்பொழுது குழந்தைகளுக்கான இருக்கைகள் (Childseat) பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. இது பிரயாணத்தின்போது பிள்ளைகள் பாதுகாப்பாக பயணிக்க உதவும். ஆனால் சில பெற்றோர் இத்தகைய இருக்கைகளைப் பயன்படுத்தாது கார்களில் பிள்ளைகளுடன் பயணிக்கும்போது விபத்து ஏற்படுமிடத்து பாரதூரமான இழப்புக்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே, எண்பது இறாத்தல் அல்லது முப்பத்தியாறு கிலோகிராம் எடைக்

49/ சந்திரபோஸ்
குட்பட்ட பிள்ளைகளுடன் காரில் பயணம் செய்யும்போது (Child - Sea) பிள்ளைகளுக்கான இருக்கைகளைப் பயன் படுத்த வேண்டும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையினைவிட கனடா வீதிகளில் போக்குவரத்துச் செய்யும் வாகனங்களின் தொகை பல்கிப் பெருகிவிட்டது. வாகனங்கள் பெருகிய அளவுக்கு வீதிகளின் அமைப்புக்களில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆகவே, பெருகிவிட்ட வாகனங்’ களுக்கு ஏற்ப வீதிகளில் போதிய இடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, வாகன ஓட்டுனர்கள் இவ்விடயத் தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வாகனங்களை மிக அவதானமாகச் செலுத்துவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்க்கமுடியும்.
வாகனம் செலுத்தும்போது, வாகன ஒட்டுனருக்கு ஏற்படும் கவனக் கலைப்பான்கள் பற்றி ஆராய்ந்த சர்வதேச scissuriisai (The International Conference on Distracted Driving) ‘யூரா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ‘டாக்டர் GL65 6ioGuttiuti (Dr. David Strayer, Psychology Professor at the University of Utah), மது அருந்தியபின்னர் வாகனம் செலுத்து பவர்களைவிட, ‘செல்போனில்’ (Cell phone) உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்துவோருக்கு ஏற்படும் கவனக் கலைப்பினால் நான்கு மடங்கு அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, வாகனங்களைச் செலுத்தும் போது ‘செல்போன்’ பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்களைத் தவிர்த்துத் தங்களையும், ஏனையவர்களையும் காப்பாற்றமுடியும்.
“செல்போன்’ உரையாடல் போன்று, வேறுசில கவனக் கலைப்புகளுக்கும் வாகன ஒட்டுனர்கள் உட்படுகின்றனர்.
1. வாகனத்தைச் செலுத்தும்போது வீதியில் நிகழும்

Page 27
எண்ணக்கோலங்கள் | 50
வேறு நிகழ்ச்சிகள், மக்கள்மீது ஏற்படும் கவன யீர்ப்பு.
2. வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது அதே வாகனத்தில் பயணிக்கும் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம், அல்லது பிள்ளைகளின் குறும்புகள், அழுகைகள்.
3. வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது சடுதியாக வாகனங்களுக்குக் குறுக்கே பறந்துவரும் பறவைகள், வண்டினங்கள் அல்லது ஒடும் சிறு பிராணிகள்.
4. உணவை அல்லது பானங்களை அருந்திய வண்ணம் அவற்றின் சுவையில் லயித்துக் கொண்டு வாகனம் செலுத்துதல்.
5. வாகனத்தில் பொருத்தியுள்ள ரேடியோ அல்லது சிடி (Radoor CD) போன்றவற்றை இயங்க வைப்பதில் கவனத்தைச் செலுத்துதல்.
இவைபோன்ற கவனக் கலைப்பான்களுக்கு ஆட்படாமல் வாகன ஒட்டுனர்கள் வாகனம் செலுத்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவார்களேயானால் வாகன விபத்துக் களையும் அதனால் ஏற்படும் இழப்புக்களையும் பெருமளவு தவிர்க்கமுடியும் என நோத் கரோலினா பல்கலைக்கழகத் தினது நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புப் பற்றிய ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஜேன் ஸ்ரியூஸ் குறிப்பிடு Sailpiti (Dr. Jane Stutto of the Highway Safety Research center at the University of North Carolina).
ஆகவே, வாகன ஒட்டுனர்களே, பாதைகளில் பயணங்கள் செய்யும் நீங்கள் இப்பயனுள்ள பாடங்களை உங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

കക്രി 8Ob
ரெலாறு: கி.பி. 270 பெப்பிரவரி மாதம் 14ம் நாள் கிரேக்க நாட்டின் உரோமா புரியில் 'வலெண்டையின்’ என்ற கிறிஸ் தவப் பாதிரியார், உரோமானிய சக்கர வர்த்தியான இரண்டாம் கிளாடி என்பவன் கட்டளைக்கமைய கல்லால் அடித்து, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை பெற்ற நாளே இன்று உலகெங்கும் கொண் டாடப்படும் காதலர் தினமாகும்.
உலகெங்கும் இன்று இன்பகரமாக இளைஞர்கள் கொண்டாடும் காதலர் தினம் ஒரு துன்பியல் வரலாற்றைப் பின் புலமாகக் கொண்டது. கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சிபுரிந்த ரோமானிய சக்கரவர்த்தி இரண்டாம் கிளாடி இட்ட முட்டாள்தனமான கட்டளைகளால் அவனைவிட்டு பல

Page 28
6T600T600Ti503ssroofrilassir 52
இராணுவ வீரர்கள் விலகத்தொடங்கினர். புதிதாக இராணு வத்தில் சேரவும் மக்கள் யாரும் முன்வரவில்லை. மன்னனின் அமைச்சர்களோ, அவனது பரிவாரங்களோ படைக்கு வீரர்களைச் சேர்த்துக் கொள்ளவோ ஆக்கபூர்வமான யோசனைகளைக் கூறவில்லை. இதனால் ஆத்திரமுற்றி ருந்தான் இரண்டாம் கிளாடி
ஒருநாள் தனது அந்தரங்க நாயகியுடன் மகிழ்வோடு இருந்த நள்ளிரவில் மன்னன் மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது.
"திருமணமானவர்கள் தம் அன்பு மனைவியர்களை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலிகளைவிட்டு வர்முடியாமலும் இருப்பதனாலேயே தனது இராணுவத்தில் வந்து சேரத் தயங்குகின்றார்கள்; இவர்களுக்கெல்லாம் குடும்பவாழ்க்கை என்று ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் வாழ்வை வெறுத்து இராணு வத்தில் வந்து இணைந்துகொள்வார்கள்; போரிலும் மூர்க்கத் தனமாகப் போரிடுவார்கள்; வெற்றிகள் எளிதில் கிட்டும் என்றதொரு முட்டாள்தனமான எண்ணம் தோன்றியது. உடனே நள்ளிரவு என்றும் பாராது தனது அந்தரங்க அமைச்சரை அழைத்து “ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்யக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும். இவ்வரச கட்டளையை மீறுபவர்கள் எவராயினும் கைது செய்யப் பட்டு இருட்டறையில் அடைக்கப்பட்டு பிறிதோர் தினத்தில் கல்லால் அடித்துச் சித்திரவதை செய்து, தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப்படுவார்கள்" என்ற அறிவிப்பை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும்படி பணித்தான். அர்ச கட்டளையை மீறமுடியாத அமைச்சர் அதனை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இரு மனங்கள் இணைவதனை மன்னன்

53 / சந்திரபோஸ்
அறுத்தெறியத் துணிந்தபோது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் உரோமாபுரி சோகக் கண்ணீரில்
மிதந்தது.
இதனை எதிர்த்து கிறிஸ்தவப் பாதிரியார் வலெண் டையின், அரச கட்டளையை மீறி திருமணங்கள் செய்து வைத்தார். இச்செய்தி அரசனுக்கு எட்டவே பாதிரியார் வலெண்டையின் இருட் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவலன் மகளான பார்வையற்ற அஸ்ரோரியஸ்சுக்கும், பாதிரியார் வலெண்டை யினுக்கும் காதல் மலர்ந்தது. இதனை அறிந்த அரசன் அஸ்ரோரியஸ்சை வீட்டுக் காவலில் வைத்தார்.
வலெண்டையின் காதலால் கண்கிடைத்தது போல் மகிழ்ந்த அஸ்ரோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள். ஆனால் வலெண்டையினின் மரணதண்டனை மாற்றம் பெறவில்லை. ஒரு காகித அட்டையில் அஸ்ரோரியஸ்சுக்குப் பாதிரியார் ஒரு கவிதை வரைந்து வைத்துவிட்டு மரண தண்டனையை ஏற்கத் தயாரானார்.
பாதிரியார் வலெண்டையின் கல்லால் அடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட அதே நேரத்தில், அரசரின் அத்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலெண்டையின் வரைந்த கவிதையைத் தாங்கிய காகித அட்டை அஸ்ரோரியஸ்சிடம் வந்து சேர்ந்தது. அக்கவிதையை அவளது தோழிகள் வாசிக்க அஸ்ரோரியஸ் கண்களில் இருந்து கண்ணிர் மழை பொழிந்தது. கவிதை வரிகள் இவை:
வழி இருந்தும் வழியில்லாமல் - மன்னன் பழி தாங்கிப் போகிறேன் விழி இழந்து - பார்க்க

Page 29
எண்னக்கோலங்கள் 54
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உன்னை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காகப்
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு பிறருக்கு
வழியாய் இரு சந்தோச
ஒளி உன் கண்களிலே மின்னும்.
- உன்னுடைய வலெண்டையின்
எனது பார்வையில் காதல் :
நேற்று : காதல் ஓர் இனிமையான கனவு.
இன்று : காதல் ஓர் இன்பமான பொழுது.
நாளை : காதல் ஓர் பசுமையான நினைவு.
கவிதை :
காற்றுப்புகாத இடத்தில் கூட காதல் புகுந்து விடுகின்றது. அதனால் காற்று மண்டலம் கடந்தும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர் விண்வெளிவீரர்கள்!
துணுக்குகள் :
ஒவ்வொரு காதலியும், தனக்காகத் தாஜ்மகால் போல் ஒன்று தன் காதலன் கட்டமாட்டானா என்று நினைப்பாளாம்! ஆனால் காதலனோ தனக்காகக் காதலி எதுவுமே கட்டாமல் இருக்க மாட்டாளா என்று நினைப்பானாம்!

காதலி
காதலன்
கள்ளக்கறுவல்:
மாவெள்ளை :
சேகர்
நண்பன்
சேகர்
55 / சந்திரபோஸ்
நீங்கள் பொல்லாதவர்! இதயமே இல்லாதவர்
ஆமாம். அதைத்தான் நீ திருடிவிட்டாய் கள்ளி!
8 K- 8
நண்பா! ஆண் பெண் இருவரில் அதிக மாகக் காதல் வயப்படுபவர் யார்?
பெண்கள்தான் தங்கள் காதலன்மேல் அதிக மாகக் காதல் வயப்படுவார்கள்! ஆனால் அதிகமாக ஆண்கள் பல பெண்கள் மேல் காதல் வயப்படுவார்கள்!
{} 8 8
நான் என் காதலிக்கு எழுதிய கடிதங்கள் அவளின் அம்மாவின் கையில் கிடைத்து விட்டது.
ஐயையோ! அது பெரிய பிரச்சினையாய் போய் இருக்குமே?
ஆமாம். இப்போ காதலியின் அம்மாவே எனக்குத் தவறாது பதில் எழுதுகின்றார்.

Page 30
eOnenolól eOnemøONò!
பரீலங்காவில் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் முதல், இன்று வரை இலங்கைத்தீவில் சமாதானம் ஏற்பட்டுச் சமத்துவ சுகவாழ்வு ஏற்படுமா? என்ற எண்ணக் கரு, இலங்கைத்தீவில் வாழும் சகல சமூகங்களையும் சேர்ந்த பெரும் பாலானோரின் பெரு விருப்பாகவும் உள்ளது. இலங்கை மக்கள் மட்டுமன்றி அனைத்துலக நாடுகளில் வாழும் உலக சமாதான விரும்பிகளும், அரசுகளும், அரசு சார்பற்ற நலன்புரி அமைப்புக் களும், சமயத் தாபனங்களும் இலங்கையில் இரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்பட வேண்டும் சகல இனமக்களும் சமத்துவ அடிப்படை பில் வாழும் அரசியல் தீர்வு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்; வாழ்த்துகின்றனர்; பிரார்த்திக்கின்றனர்.

57 / சந்திரபோஸ்
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் யுத்தத்திற்கு முடிவு கட்டி நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற சமிக்ஞை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் செய்து சகல இனமக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதானத் தீர்வைக் காண்போம் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் ஐக்கிய தேசிய முன்னணியினர்.
இதேபோன்று தமிழர் ஐக்கிய முன்னணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள்; விடுதலைப்புலிகளிடம் மட்டுமே அரசு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுச் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அம்கங்களை உள்ளடக்கிய பிரசாரத்தை மேற்கொண்டு அமோக வெற்றிபெற்றுள்ளனர்.
தற்பொழுது புதிய அரசு திரு. ரனில் விக்கிரமசிங்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் யாப்புக்கு அமையத் தேர்தலில் இரண்டாவது பெரும் பான்மை ஆசனங்களைப் பெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவியே தொடர்ந்தும் நாட்டின் நிறை வேற்று அதிகாரமுடையவராக இருக்கின்றார். அத்துடன் இவரே முப்படைகளின் தலைவருமாக இருக்கின்றார். திருமதி சந்திரிகா அவர்கள் 2005 வரை ஜனாதிபதி பதவி வகிக்கும் மக்கள் ஆணையை தற்போதுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் பெற்றுள்ளார்.
திருமதி சந்திரிகா குமாரணதுங்கா பண்டாரநாயக்கா அவர்களின், முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் போதும்,

Page 31
எண்னக்கோலங்கள் 58
முதலாவது ஜனாதிபதி தேர்தலின்போதும், இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்போம் என்றும், யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஒரு சமாதான வெண்புறாவாகப் பவனி வந்து மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறினார்.
விடுதலைப்புலிகளுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்குமிடையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்து, குறுகிய காலத்திற்குள் எவ்வித உடன்பாடும் ஏற்படாது பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இதன் பின்னர் சமாதான வெண்புறா சன்னத வல்லூ றானது. "சமாதானத்திற்கான யுத்தம்” என்ற புதிய சித்தாந் தத்தை அம்மையார் முன்வைத்து தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றுகின்றோம் எனக் கூறிக்கொண்டு தமிழ் இனஅழிப்பை பலவழிகளிலும் முன்னெடுத்துச் சென்றார். இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ததுடன், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா அரசு, கனடா போன்ற நாடுகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்க மாகப் பிரகடனம் செய்யச் செய்தார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய வந்த நோர்வே நாட்டு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் அவர்களின் சமாதான முன் னெடுப்பு முயற்சிகளையும் கொச்சைப்படுத்தினார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது “நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு" என்று ஒவ்வோர் ஊரில் ஒவ்வோர் மேடையில், புலிகளுடன் யுத்தம், சமாதானம் என்று மாறி மாறிப் பேசி தானும் குழம்பி, மக்களையும் குழப்பினார்.

59 / சந்திரபோஸ்
நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அவ தானித்த அரசியல் ஆய்வாளர்கள், “இனவாதக் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன; சமாதான விரும்பி களையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்" எனக் குறிப்பிட் டுள்ளனர். இவர்கள் பார்வையில் சிங்கள உறுமையக் கட்சி, பூமிபுத்திரா கட்சி, தனிச்சிங்கள உதிரிக் கட்சிகள் சிலவும், பேரினவாதக் கட்சிகளாகவும் அவை மக்களால் நிராகரிக்கப் பட்டனவாகவும் இவ்வாய்வாளர்கள் கருதுகின்றனர் போலும்,
இலங்கை அரசியல் வரலாற்றில் பேரினவாதம் ஐக்கிய தேசியக் கட்சியாலும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியாலுமே மாறி மாறி முன்மொழியப்பட்டு வந்தது. தனிச்சிங்கள மந்திரி சபை, திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழரது பாரம் பரிய பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களாக்கப்பட்டமை, பிரஜா உரிமைச் சட்டம் மூலம் மலையகத் தமிழர்களை நாடற்ற பிரசைகளாக்கியமை, தனிச்சிங்களச் சட்டம், கட்டாய தாய்மொழிக் கல்வி மூலம் வேலை வாய்ப்பில் பாரபட்சம், தரப்படுத்தல் மூலம் உயர்கல்வி வாய்ப்பினைத் தமிழ் மாணவர் பெறுவதனைக் கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுத்ததுடன், இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் பேரின வாதத்தை முன்வைத்தே ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி தமிழ் இனஅழிப்பினைத் தொடர்ந்து வந்துள்ளனர்.
1970ல் இனப்பிரச்சினைக்கு பிரதேச சுயாட்சி மூலம் தீர்வு காணுவோம் என்ற இடதுசாரிகளுடன் கை கோர்த்து பூரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து இலங்கையைக் குடியரசாக்கி இனப்பிரச்சி னைக்கு முடிவு கட்டுவோம் எனத் தேர்தல் பிரசாரம் முன்வைத்து 2:3 பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறிய இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசியல் சாசனத்தினை மாற்றி அமைத்ததன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு இருந்த அற்பசொற்ப சலுகைகளையும் இல்லாது ஒழித்தனர்.

Page 32
எண்ணக்கோலங்கள் 60
1956ல் தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் உரையாற்றிய கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா (லங்கா சமசமாஜக்கட்சி) அவர்கள் ஒருமொழி ஆட்சி மொழியானால் இலங்கை இரண்டு நாடுகள் ஆகும் அபாயம் உண்டு. ஆகவே இருமொழிக் கொள்கையை (சிங்களம் - தமிழ்) அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 1972ல் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசில் அரசியல் சாசன அமைச்சராகப் பதவி வகித்த கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா அவர்களே புதிய அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதுவித பாதுகாப்பும் இல்லாது செய்துவிட்டார். இக்காலகட்டத் திலேயே தமிழ் மக்களது போராட்டம் சாத்வீக முறையில் இருந்து ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்றது.
1977ல் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி திறந்த பொருளாதாரக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம், வட்ட மேசை மாகாநாடு மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு, இலங்கையை சிங்கப்பூர் போல மாற்றுவோம் என்னும் கோஷங்களை முன்வைத்து 4/5 பெரும்பான்மை ஆசனங் களைப் பெற்று 1972 அரசியல் யாப்பினை மாற்றி நிறை வேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையையும், விகிதா சாரத் தேர்தல் முறைன்யயும் அறிமுகப்படுத்தி, 17 ஆண்டு காலங்கள் ஆட்சி செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்பல. 1977ல் இன ஒழிப்பு முயற்சிகள், 1983 இனப்படுகொலைகள் இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா போரா? சமாதானமா? என்ற சூளுரை, பாதுகாப்புச் செலவீனங்கள் அதிகரிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலநிலைப் பிரகடனம் ஆகியவை மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் இராணுவமயமாயின. விமானக் குண்டு வீச்சு, எறிகணைத் தாக்குதல், ஆயிரமாயிரம் மக்கள் உயிரிழிப்பு, கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிப்பு, கல்வி, கலை, கலாச்சார

61/ சந்திரபோஸ்
அழிப்பு, இடப்பெயர்வுகள், அகதிகளாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புகலிடம் தேடுதல் போன்ற கைங்கரியங்கள்
நிகழ்ந்தன.
இதனைத் தொடர்ந்து தமிழ் இளைஞரது போராட்டம், கெரிலா முறை போராட்ட வடிவம், மரபுமுறை போராகி சிங்கள இராணுவத்தளங்கள் அழிய, இராணுவ வீரர்கள் இராணுவத்திலிருந்து ஓட்டம் பிடிக்க, சிங்களப் பிரதேசங் களும் பாதுகாப்பற்ற பிரதேசங்களாக மாற, சிங்கள மக்களும் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. 1994ல் திருமதி சந்திரிகா குமாரணதுங்கா பண்டாரநாயக்கா மக்களின் நாடித்துடிப்பினை நன்கறிந்து, தந்தை எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா வழியில் 1956ல் 24 மணித்தியா லத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்குவேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்ததுபோல், 1994ல் 24 மணி நேரத்தில் சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வேன்; அதற்கு முட்டுக்கட்டையாக உள்ள யுத்தத்தை முடிவுக்குக் கெண்டு வருவேன் என முழங்கி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அண்மையில் நடந்த தேர்தல் வரை நடந்தவை நாம் அறிந்ததே. தற்பொழுதும் சமாதானம் சமாதானம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்றது. புதிய அரசு பதவி ஏற்றதும் நல்லெண்ணச் சமிக்ஞையாக விடுதலைப் புலிகளும் அரசும் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளமை மக்கள் மனத்தில் ஒரு நம்பிக்கை ஒளியினை ஏற்படுத்துகின்றது.
ஆயினும் சில ஐயப்பாடுகள் கூட எழுகின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலங்கள் கடத்தப்படுமா?
பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், பொது ஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து அரசியல்

Page 33
எண்னக்கோலங்கள் 62
யாப்புச் சீர்திருத்தம் கொண்டு வருவார்களா? மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) கடந்த தேர்தலில் தனக் குள்ள மக்கள் ஆதரவினை அதிகரித்துள்ளது. இக்கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் எதிராக சிங்கள மக்கள் மத்தியில் சமாதான முயற்சிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, குந்தக நிலை ஒன்றினைத் தோற்றுவிக்காதா?
விடுதலைப்புலிகளின் தாரக மந்திரம், "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" இதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தற்கொலைப்படைப் போராளிகளாகவும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் மாவீரர் களாகவும் அர்ப்பணித்துள்ளனர். இன்னமும் பல்லாயிரக் கணக்கான போராளிகள் களத்தில் நிற்கின்றனர். ஆகவே, ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பது தமிழீழத் திற்கு மாற்றீடாக "பிரிந்து போகக்கூடிய சுய நிர்ணய உரிமை யுடைய பாரம்பரிய தாயகம் இணைந்த ஆட்சியினை" சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆட்சியாளர்கள் வழங்க முன்வருவார்களா?
சிறுபான்மை முஸ்லீம்கள் தமக்கென ஒரு பிராந்திய ஆட்சி அலகு ஒப்படைக்கப்படவேண்டும் என்று குறுக்கீடுகள்
செய்வார்களா?
முடிவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம். முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக
அமையவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இனியவர் இலங்கையன்
செல்வா
அபூர்வமாகச் சில நல்லிதயமுள்ள மனிதர்களை நம் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அவ்விதம் நான் சந்தித்த மனிதர்களுள் ஒருவர் இலங்கையன் செல்வரத்தினம் அவர்கள்.
ஆசிரியர் செல்வரத்தினம் அவர்களை எனது சிறுபராயத்திலிருந்தே அறிவேன். எனது தந்தை எம். லி. சுப்பிரமணியம் அவர்களைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது இல்லம் வருவார். ஆயினும் அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பதில்தான் ஏற்பட்டது.
அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு
விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டி ருந்தேன். பெளதிகவியல், இரசாயனவியல்

Page 34
எண்னக்கோலங்கள் 64
பாடங்களை ஆசிரியரிடம் கேட்டுப் படிப்பதற்காக இலக்கம் 17 பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்று வந்த பொழுதுதான் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்படத் தொடங்கியது. அவ்வாறு ஏற்பட்ட வாய்ப்பு இன்றுவரை தொடர்கின்றது.
ஆசிரியரின் வீட்டிற்கு நான் படிக்கச் சென்ற பொழு திலும் சரி, எனது தாய், சகோதரர்களுடன் நல்லூர் முருகன் கோவில் திருவிழாவுக்குச் சென்று வரும் பொழுதிலும் சரி ஆசிரியரின் மனைவி திருமதி நல்லம்மா செல்வரத்தினம் அவர்கள் தம் வீட்டிற்கு எம்மை அழைத்து அன்புடன் நன்கு உபசரிப்பார். நல்லூர் திருவிழாக் காலங்களில் ஆசிரியர் இல்லம் அன்னசாலையாகக் காட்சி தரும்.
ஆசிரியர் ஒரு பகுத்தறிவாளன். விஞ்ஞானத்தைப் பட்டப் படிப்புவரை நுணுகி ஆராய்ந்து கற்றுக் கொண்டமை யினாலும், பொதுவுடைமைச் சித்தாந்தங்கள், ஈவே. ராமசாமி பெரியாரின் திராவிடக் கழகக் கொள்கைகளினாலும் ஈர்க்கப் பட்டமையினால் அன்றிலிருந்து இன்றுவரை பகுத்தறிவாள னாகவும் அறிவியற் சிந்தனையாளனாகவும் வாழ்ந்து வருகின்றார்.
இவர் சிந்தனைச் சுதந்திரத்திலும், செயற்பாட்டுச் சுதந்திரத்திலும் பற்றுறுதி கொண்டவர். இதனால் மாற்றுக் கருத்துடையவர்களையும் மதித்து நடக்கும் மனப்பாங்கு கொண்டவர். "உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று கூறுவோர் உறவு கலவாமை நன்று" என்னும் கொள்கைப் பிடிப்பாளர். இதனால் நல்ல நண்பர்கள் குழாம் இவரை எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்.
ஆசிரியர் தமது தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ் விலும் பல போராட்டங்களுக்கு முகம் கொடுத்தவர். “கற்பதற் காகப் போராடு, போராடுவதற்காகக் கல்!” என்ற வாசகத்

65 / சந்திரபோஸ்
திற்கு அமைய கல்வி கற்பதற்காகப் பல போராட்டங்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டவர். திண்ணைப் பள்ளியில் ஆரம்பித்த இவரது கல்விப் பயணம் வறுமை நிலையிலும், வாய்ப்புக்கள் அற்ற நிலையிலும், இவரின் திறமை காரண மாகப் புலமைப் பரிசில் பெற்று லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். இவர் உயர்கல்வி கற்ற காலம் கல்விக்கு மதமாற்றம் பேரம் பேசப்பட்ட காலம். இவர் மதமாற்றத் திற்குச் சோரம் போய்விடவில்லை. தமது கொள்கையில் உறுதியாக இருந்து தமது திறமையினால் கிறிஸ்தவக் கல்லூரியில் கற்றுப் பட்டதாரியானார்.
இவரது ஆசிரியர் சேவைக்கான பயணங்கூட கத்தோலிக்க பாடசாலையான யாழ் சென் பற்றிக்ஸ் பாட சாலையில் ஆரம்பமானது. பாடசாலைகளை அரசு பொறுப் பேற்ற காலத்தில் இராமகிருஷ்ண மிசனறிப் பாடசாலையான வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். உயர் வகுப்புக்களில் விஞ்ஞானக் கல்வியை மாணவர்களுக்குக் கற்பித்தார்.
அறிவியலுடன், சமூகவியல், ஒழுக்கவியல் என்பனவும் மாணவர்கள் மனம்கொள்ளும் வகையில் இவரால் புகட்டப் பட்டன. இதனால் ஆசிரியரின் ஆளுமை மாணவர்களின் மனங்களில் பதியம்போடப்பட்டது. இவரிடம் கல்வி கற்றுப் பின்னர் ஆசிரியர் சேவைகளில் ஈடுபட்ட சில மாணவர் களிடம் ஆசிரியர் செல்வரத்தினம் அவர்களின் பண்புகளின் பாதிப்பைக் காணமுடிந்தது.
வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது, கல்விஅமைச்சின் கீழ் இயங்கிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையத்திற்கு பாடநூல் ஆக்கக் குழுவுக்குத் தெரிவாகிக் கொழும்பு சென்றார்.

Page 35
எண்னக்கோலங்கள் 66
கல்வி கற்பதற்காகத் தமது வாழ்வில் போராடி உயர் கல்வியைப் பெற்று ஆசிரியர் ஆகிய காலத்தில், தாயகத்தில் தமிழர்களிடம் காணப்படும் சாதீய அடக்குமுறைகளுக் கெதிரான போராட்டத்தில் தான் பெற்ற கல்வியை உரிய முறையில் பயன்படுத்தினார். அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் சபையில் இணைந்து, அதன் இணைக்காரியதரிசி, நிர்வாகக் காரியதரிசி என்னும் செயற்குழு உறுப்பினர் பதவிகளைப் பெற்று சாதீய அடக்குமுறைக்கு எதிரான பல போராட்டங்களில் முன்னணிப் போராளிகளில் ஒருவராக விளங்கினார்.
பொது இடங்களில் சமத்துவம், கோவில்களில் வழி பாட்டுச் சுதந்திரம், கல்வி வாய்ப்பற்றிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பு, அரச உதவியுடன் மிகப் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளை நிறுவியமை, நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுத்தமை, பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்த மக்களுக்கு மாற்றுத் தொழில்கள் பெற்றுக் கொடுத்தமை போன்ற பல செயற்பாடுகளைத் தான் சார்ந்த சமூகத்தாபனம் மூலம் போராடிப் பெற்றுக் கொடுத்த முன்னோடிகளில் ஆசிரியர் செல்வரத்தினம் அவர்களும் ஒருவர்.
சகல தமிழ்மக்களும் தமக்கிடையே சுதந்திரமானவர் களாகவும், சமத்துவமானவர்களாகவும், சகோதரத்துவம் உடையவர்களாகவும் வாழவேண்டும் என்ற விருப்புடைய மானிட நேயமுள்ள மனிதர் இவர்.
தாயகத்தின் கல்வி அமைச்சில் பாடத்திட்ட நூலாக்கக் குழுவில் பணியாற்றிய பின்னர் விஞ்ஞானப் பாடத்திற்கான வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று மன்னார் பிரதேசத்தில் கடமையாற்றினார்.

67 / சந்திரபோஸ்
1980ல் இலங்கை அரசின் மொழிக் கொள்கையின் கீழ் ஓய்வுபெற்று நைஜீரியா சென்று ஆறு ஆண்டுகள் ஆசிரிய
ராகக் கடமையாற்றினார்.
பின்னர் கனடா வந்து, 1987ல் 'ஒன்ராரியோ ஆசிரியர் சான்றிதழ் பரீட்சையில் சித்தி எய்தி புலம்பெயர்ந்த எம் தமிழ்ச் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் பணியில் மிகுந்த கரிசனையுடன் ஈடுபட்டு சகலரின் கெளரவத்திற்கும், கணிப்புக்கும் ஆளானார்.
ஆசிரியப்பணி, சமூகசேவைப் பணிகளுடன் ‘இலங் கையன்’ என்ற பெயரில் இவரின் இலக்கியப் பணியும் இலங்கையிலிருந்து கனடா வரை தொடர்கின்றது.
வாழ்வில் பவளவிழாக் கண்டு, திருமணவாழ்வில் பொன்விழாக் கண்டு, இன்று விழாக் காணும் இனியவர் இலங்கையன் செல்வா அவர்களை வாழ்த்தி வணங்கு கின்றேன்.

Page 36
கல்விச் சிகரம்
"ஒழுக்கம் இல்லாத கல்வி சிரசற்ற உடல் போன்றது."
- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுப தாம் ஆண்டு. அப்பொழுது யாழ் மத்திய கல்லூரியில் எனது மைத்துனர் மகா தேவாவும் நானும் கல்வி பயின்ற காலம். நாங்கள் இருவரும் கல்வியில் சராசரி மாணவர்களே. நான் விளையாட்டுத் துறையிலும், மைத்துனர் அழகியல் துறை யிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் களாக இருந்தோம். கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் எமது அடைவு ஒரிரு பத்துக்களையே தொட்டு நின்றது. இதனை அவதானித்த எம்மிருவரின் பெற்றோர் களும் அப்பாடங்களை எமக்குத் தனிப் பட்ட முறையில் கற்றுத் தருவதற்கு ஒரு ஆசிரியரின் உதவியை நாடியுள்ளதாகத்

69 / abibu(3UTaio
தெரிவித்தனர். அந்த ஆசிரியரின் பெயர் திரு ம. செல்வ ராசா அலெக்ஸ்சாந்தர். அவர் ஆசீர்வாதப்பர் வீதியிலுள்ள பத்தாம் இலக்க இல்லத்தில் வசிப்பதாகவும் கூறினர். நாங்கள் இருவரும் அவரிடம் பாடசாலை நாள்களில் மாலை நேரங் களிலும், சனி ஞாயிறு தினங்களில் காலை வேளையிலும் அவர் வீட்டுக்குச் சென்று பயில்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவுங் கூறினர்.
இந்த ஏற்பாட்டிற்கமைய ஒரு சனிக்கிழமை காலை நாங்கள் சைக்கிளில் ஆசிரியர் அலெக்ஸ்சாந்தர் வீட்டைச் சென்றடைந்தோம். யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் அமைந் திருந்த ஆசீர்வாதப்பர் தேவாலயத்தை அடுத்துச் செல்லும் ஆசீர்வாதப்பர் வீதியில் ஆசிரியர் வசித்த வீடு அமைந்திருந்தது.
ஆசிரியர் குடியிருந்த வீடு ஒரு சிறிய மண் வீடு. கூரை ஒலையால் வேயப்பட்டிருந்தது. அதில் ஒரு சிறு விறாந்தை அதில் ஒரு மேசையும் வாங்கும், ஒரு சிறு கரும்பலகையும் இருந்தன. சமையல் அறையாக ஒரு சிறு குடிலும், படுக்கை அறையாக இன்னுமோர் குடிலும் அவ்வளவில் அமைக்கப் பட்டிருந்தன. இவ்வீடு ஆசிரியரின் தாய்மாமனாரான ஆயுள் வேத வைத்தியர் ச. சின்னப்பு அவர்களின் வீடாகும். அவர் ஒரு பிரமச்சாரி அன்னாரது வீட்டிலேதான் ஆசிரியர் அலெக்ஸ்சாந்தர் தமது மனைவி, தாயார், மூன்று சகோதரி களுடன் வசித்து வந்தார். ஆசிரியரின் தந்தையும் சகோதரர் சிங்கராசாவும், யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள, ஆசிரியரால் 'அக்கம்மா’ என்றழைக்கப்படும் தந்தையின் பேர்த்தி வீட்டில் வசித்துவந்தனர். ஆயினும் தினசரி ஆசிரியர் வசித்த வீட்டிற்கு அவர்கள் வந்து செல்வார்கள்.
முதன்முதல் ஆசிரியர் திரு. அலெக்ஸ்சாந்தர் அவர் களை நாங்கள் அன்றுதான் சந்தித்தோம், நாங்கள் இருவரும் எதிர்பார்த்ததுபோல வயது முதிர்ந்த கண்டிப்பும் கடுகடுப்பும் உள்ள ஆசிரியர் ஒருவரை அங்கு காணமுடியவில்லை. சிரித்த

Page 37
எண்ணக்கோலங்கள் 7o
முகத்துடனும், வாஞ்சையுடனும் *வாருங்கள் தம்பிமார்’ என்று அன்புடன் எம்மை அழைத்த ஒரு அழகிய வாலிப னையே அங்கு கண்டோம். முதலாவது சந்திப்பிலேயே அவர்பால் எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன. அன்று தொடங்கிய எங்கள் உறவு இன்றும் தொடர்கின்றது.
ஆசிரியர் அவர்கள் தனது கல்வியை யாழ் சம்பத் தரிசியார் கல்லூரியில் பெற்றிருந்தார். ஆங்கில எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியெய்தி டி5.5ம் ஆண்டுகளில் கொழும்புத் துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுப் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகத் தனது கல்வி யுலக வாழ்வை ஆரம்பித்தார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஆசிரியர் குடும்பம் இருந்தபொழுதிலும் ஆசிரியருக்குக் கல்விமேல் இருந்த ஆர்வம், உறவினர் சிலரின் உதவிகள், அவரது ஆசிரியர்கள் ஒலர் அவருக்கு அளித்த ஊக்கம் என்பன அவரை ஒரு ஆசிரியர் என்ற நிலைக்கு முதலில் உயர்த்தின.
கல்விப் பணியில் ஆரம்ப நிலையில் இருந்த காலத்தி லிருந்தே ஆசிரியரின் கல்விச் சிந்தனைகள் ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கியதாகவே இருந்தன. தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி சமூகத்திலுள்ள அனைவரும் நல்ல கல்வியறிவு பெற்று உயர்வடைய வேண்டும் என்ற நல்ல உள்ளமும் எண்ணமும் அவரிடம் இருந்தன. அக்காலத்தில் மிகக் குறைந்த ஆசிரியர் சம்பளம், பெரிய குடும்பச் சுமை, காதல் திருமணம், சமூகப் பிரச்சினைகள் இத்தனைக்கும் மத்தியிலும் ஆசிரியர் அவர்கள் பல மாணவர்களுக்கு இலவச மாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்த அதிசயம் எம்மை இன்றுவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. அவரிடங் கல்வி கற்றவர்கள் இன்று தாயகத்திலும், பிற

71/ சநதரபோஸ்
நாடுகளிலும் மிக உயர்ந்த நிலைகளில் இருக்கின்றனர்; இன்றும் ஆசிரியரிடம் அன்பும், மதிப்பும், மரியாதையும் கொண்டவர் களாக விளங்குகின்றனர்.
'கற்க மறந்தவன் கற்பிக்க மறுத்தவன் ஆவான்', ‘எரியும் தீபத்தைக் கொண்டுதான் எரியாத விளக்குகளையும் ஏற்றி வைக்கமுடியும்’ என்ற கல்வித் தத்துவங்களை உள் வாங்கிக்கொண்ட எமது ஆசான் வாழ்நாள் முழுவதும் கல்விகற்க வேண்டும் என்ற கொள்கையில் திடசங்கற்பம் பூண்டு தமது தொடர்கல்வியைத் தொடர்ந்தார்.
தனது கல்விப் பணியுடன் தனது கல்வியினையும் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் குறைவான குடும்ப வருமானத்தில் கட்டுக்கடங்காச் செலவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. சகோதரிகளின் திருமணம், தமது குழந்தைச் செல்வங்களின் பிறப்புக்கள், தாய் தந்தையரின் சுகவீனங்கள், மரணங்கள் போன்ற நன்மை தீமைகள் அவரது தொடர் கல்விக்குப் பல தடங்கல்களை ஏற்படுத்தின. பிரச்சினைகள் பல அவரது கல்வி உயர்வினைத் தாமதிக்க வைத்தனவே தவிர முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
இத்தகைய தடைக்கற்களையெல்லாம் ஆசிரியர் இலகுவில் தாண்டி கல்வியில் உயர்நிலை அடைவதற்கு உறுதுணையாக அமைந்தவர் அவரது அன்பு மனைவியே ஆவார். குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் குறைநிலை, இத்தனை விடயங்களையும் மிகச் சிக்கனமாகவும், சிறப் புடனும் செய்து முடித்ததுடன் ஆசிரியர் கல்வியில் மேன் மேலும் உயர்நிலையடைய அன்றிலிருந்து இன்றுவரை சிறந்த மதியூகியாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர் அவரது அன்புத் துணைவியாரே ஆவார். அதற்காக திருமதி மேரி மெற்றில்டா அலெக்ஸ்சாந்தர் அவர்கள் என்றென்றும் கெளரவிக்கப்பட வேண்டியவராவார்.

Page 38
எண்னக்கோலங்கள் 72
1969ல் நான் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை வளாகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். இந்த வேளையில் எனது ஆசிரியர் அலெக்ஸ்சாந்தர் அவர்கள் B.A. பொருளாதார பாடத்தைக் கற்றுக்கொள்ள எனது உதவியை நாடினார். அறிவு யாரிடம் இருந்தாலும் அதனைத் தேடிப் பெறல் வேண்டும் என்ற பெருந்தன்மையான மனப் போக்குக் கொண்ட எனது ஆசிரியரது அன்பிற்கும் பண் பிற்கும் அடிபணிந்து அவருக்கும், அவருடன் சேர்ந்து B.A. பரீட்சைக்கு பொருளாதார பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்த திரு - திருமதி நல்லையா தம்பதிகளுக்கும் பொருளாதாரப் பாடத்தில் எழுந்த சந்தேகங்களைப் போக்கினேன். திரு. நல்லையா அவர்கள் யாழ் பிராந்திய கல்வி அதிகாரி யாகவும், திருமதி நல்லையா அவர்கள் யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) ஆசிரியராகவும் விளங்கியவர்கள். இவர்கள் மூவரும் என்னை ஒரு இளையவன் என்றோ, தம் மாணவர் என்றோ எண்ணாது என்னிடம் பாடம் கேட்டுக்கொண்ட உயரிய பண்பு என்னைப் பிரமிக்கச் செய்தது. ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற வாக்கு இங்கு மெய்யானது.
1971ல் B.A பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் 1974-76ல் பண்டிதர் பரீட்சையிலும் தேறி "பண்டிதர்’ பட்டத் தினையும் பெற்றுக்கொண்டார். 1973ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் பதவி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்ப மான விரிவுரையாளர் சேவை உலா, அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை எனப் பவனி வந்தது; பல நூற்றுக்கணக்கான நல்லாசிரியர்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்தது.
பல்வேறு பயிற்சிக் கலாசாலைகளில் விரிவுரையாள ராகச் சேவையாற்றிய காலகட்டங்களில் ஐக்கிய நாடுகளின்

73 / சந்திரபோஸ்
கல்வி விஞ்ஞான பண்பாட்டு அமையத்தால் (UNESCO) நடத்தப்பெற்ற பல்வேறு கல்விசார் கருத்தரங்குகளில் ஆர்வ முடன் பங்குபற்றிப் பல அரிய கருத்துக்களைக் கற்றல், கற்பித்தல், மாணவரின் ஆளுமை உருவாக்கம், தலைமைத் துவம், கல்வி முகாமைத்துவம் சம்பந்தமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் பல பயன்தரும் ஆய்வுக் கட்டுரை களையும் சமர்ப்பித்துள்ளார்.
1979-8ம் ஆண்டுகளில் தொலைக்கல்வித் திணைக்களம் நடத்திய பட்டப்பின்படிப்பு பாடநெறியை மேற்கொண்டு கல்வி டிப்ளோமா பட்டத்தை விசேட சித்தியில் பெற்றுக் கொண்டார். கற்பித்தல் பற்றிய பயிற்சியை ஆசிரியர்கள் பலரும் இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டும் பெற்று ஓய்வு பெறும்வரை திருப்தியாகப் பணியாற்றியோர் மத்தியில் இரண்டுமுறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளிலும், தொலைக்கல்வி மூலம் இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆசிரியர் பயிற்சியும் பெற்ற பெருமை ஆசிரியர் திரு அலெக்ஸ்சாந்தர் அவர்களையே சாரும்.
இத்தகைய கல்வித் திறமையும் தகுதியும் பெற்ற எமது ஆசான் தாயகத்தில் வெளியான பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் கல்வி சம்பந்தமாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை கல்வியியலில் அறியாமையை அகற்றும் ஒளடதமாகும்.
1983ம் ஆண்டில் திரு அலெக்ஸ்சாந்தர் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சிரேஷ்ட விரிவுரை யாளராக இருந்தமையினால் பிரதிக் கல்விப் பணியாளர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார். இக்காலப் பகுதியில் தொலைக் கல்விப் பணிமனை தொலைக் கல்வி மூலம் ஆசிரியர் பயிற்சிக்காக பல்வேறு நூல்களை (Modules) எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த ஏற்பாட்டில், தமிழ்மொழி கற்பித்தல் நூல்களை எழுதும் குழுவின்

Page 39
எண்னக்கோலங்கள் | 74
தலைவராக 1984ம் ஆண்டில் ஆசிரியர் அலெக்ஸ்சாந்தர் நியமனம் பெற்றார். இக்குழுவில் அவரது தலைமையில் கலாநிதி சொக்கன், வித்துவான் சி. குமாரசுவாமி, முல்லை மணி, கலாநிதி துரைராசா, வை. கா. சிவப்பிரகாசம் (அதிபர், ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, சி. நடேசன், எஸ். சோதிப் பெருமாள், முருகு இரத்தினம் போன்ற தமிழ் அறிஞர்கள் பலரும் பணிபுரிந்தனர். தமிழ்மொழி சம்பந்தமாக இந்த அறிஞர்கள் இருபத்தொரு நூல்களை ஆக்கித் தமிழ்க் கல்வி உலகிற்குத் தந்துள்ளனர்.
1983ல் இருந்தே முழுநேர ஆசிரியர் பயிற்சிக் கலா சாலை விரிவுரையாளராக இருந்துகொண்டே, பகுதி நேர தொலைக்கல்வி பயிற்சி நெறி விரிவுரையாளராகப் பணி யாற்றிய ஆசிரியர் 1987ல் முழுநேர தொலைக்கல்விப் பணிப் பாளராக யாழ் குடாநாடு எங்கும் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் ஆசிரியர் பயிற்சி விரிவுரைகள் மட்டு மன்றி, ஆசிரிய ஆலோசகராக, பரீட்சையாளராக, பல்வேறு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தித் தமிழ் ஆசிரிய சமூகம் கற்றல், கற்பித்தலில் தமது அறிவினை அபிவிருத்தி செய்து தொழில்சார் திறன்களை விருத்தி யடையச் செய்ய வழிகாட்டினார்.
ஆசிரியர் அவர்கள் கல்வி உளவியலிலும் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த விரிவுரைகள் ஆற்றி வந்துள்ளார். 1973- 75களில் பூரீலங்கா அரசினால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய கல்வித் திட்டத்தினை நடைமுறைப் படுத்துதல் பற்றிய பல்வேறு கருத்தரங்குகளை பாடசாலை அதிபர்களுக்காக, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையில் நடத்திப் பாராட்டுக்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் முன்பள்ளிக் கல்விபற்றிய பல்வேறு கருத்தரங்கு களை யாழ்ப்பாணம் 'பாலர் கல்விக்கழகத்தின்’ ஏற்பாட் டினால் நடத்தி, முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோ ருக்கும் முன்பள்ளியின் முக்கியத்துவத்தையும், முன்பள்ளிச்

75 / சந்திரபோஸ்
சிறாரின் உளவியலையும், கற்பிக்கும் முறைகளையும் தெளிவு
படுத்தினார். எந்தவித வருமானக் கொடுப்பனவுகளையும்
எதிர்பாராது, சேவை அடிப்படையில் யாழ் குடாநாட்டின் பல்வேறு இடங்களுக்கும், தனது சொந்தச் செலவிலேயே
பிரயாணம் செய்து, தமிழர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு
அளப்பரிய சேவைகள் ஆற்றிவந்தார்.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தென்னிதின் ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து
என்ற நாலடியார் வாக்குக்கு அமையத் தன் வாழ் நாளிற் கற்க வேண்டியவற்றைத் தெரிந்து தொடர் கல்வியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். 1982-1983ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுமாணி (M.A) பட்டப் படிப்பை மேற்கொண்டு பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சையில் சித்தி எய்தினார். அன்றைய நாட்டுச் சூழ்நிலை காரணமாக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க முடியாது போய்விட்டதனால் முதுமாணிப் பட்டம் பெறும் சந்தர்ப்பம் துரதிர்ஷ்டவசமாகக் கைநழுவி விட்டது. ஆசிரியர் தொடர்ந்தும் கற்றுக்கொண்டும், கல்வியியல் சம்பந்தமாகப் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் கல்வியியல் பற்றிய பல்வேறு கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பயங்கர போர்ச்சூழலினால் தொடர்ந்தும் அங்கு வசிக்கமுடியாத நிலைமை தோன்றவே, 1993ல் குடும்பத்தவருடன் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி 1993ல் கனடாவில்
குடியேறினார்.

Page 40
எண்னக்கோலங்கள் 76
கனடா வந்த ஆசிரியர் இங்கும் வழமைபோலத் தனது கல்விப்பணியைத் தொடர்ந்தார். 1993 டிசெம்பரில் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1994 தொடக்கம் ரொறன்ரோ நோத்யோக் கத்தோலிக்க கல்விச் சபைகளில் நிரந்தர ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆறாந் தரத்திலிருந்து 13ந் தரம் (O.S.C) வரை தமிழ் மொழி கற்பித்தார். 1995ல் ஒன்ராறியோ ஆசிரியர் சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.
கனடாவில் கல்வி பயிற்றியதுடன், ஆசிரியரிடம் புதைந்துகிடந்த ‘கவித்துவம் வெளிவரத் தொடங்கியது. கனடாவில் வெளியாகும் பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் அவரது கவிதைகள், வெண்பாக்கள் வெளி வரத் தொடங்கின. அத்துடன் கல்வியியல் சம்பந்தமான பல்வேறு கட்டுரைகளும் ஆழ்ந்த புலமையுடன் வெளிவந்தன; இன்னும் வெளிவருகின்றன.
உடல்நலக் குறைவினால் 2002ல் அவர் கல்விச் சேவை யிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் இன்னமும் கல்வி கற்றல், கற்பித்தல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இன்று உலகப் பல்கலைக்கழக அமைப்பு கலாநிதிப் பட்டத்தை அவருக்கு வழங்கிக் கெளரவித்துள்ளது. இது வெறும் கெளரவப்பட்டமல்ல, ஆசிரியர் ஆற்றிய அரிய பல கல்விப்பணிகளின் அறுவடையாகும்.
மிகச் சாதாரண நிலையில் இருந்து தனது விடா முயற்சியாலும், தொடர் கல்வியாலும் கல்விச் சிகரத்தைத் தொட்டு நிற்கும் எமது ஆசான் கலாநிதி ம. செல்வராசா அலெக்ஸ்சாந்தர் அவர்கள் ஒரு சாதனையாளர். சிறந்த கல்விச் சிந்தனையாளர்.
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாம்

77 / சந்திரபோஸ்
என்ற பாரதியின் வார்த்தைக்கு அமைய அகத்தின் அழகு முகத்தில் தெரியும் வண்ணம் எப்பொழுதும் சிரித்த முகத் துடன் விளங்கும் ஆசான் அவர்கள் கல்வியழகால் அழகு பெற்றவர்.
‘புண்ணியவானுக்குத்தான் பிள்ளைகள் வாய்க்கும்’ என்ற பழமொழி எமது தாயகத்தில் பயிலப்பட்டு வருகின்றது. நிச்சயமாக கலாநிதி அலெக்ஸ்சாந்தர் அவர்கள் தனது தன்னலமற்ற சேவைகளினால் பல ஆயிரம் மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்துவைத்த காரணத்தால் புண்ணிய வான் ஆவார். இன்று அவரது பிள்ளைகள் கல்வியிலும், உயர்பண்புகளிலும் உயர்ந்து விளங்குகின்றனர். கலாநிதி அலெக்ஸ்சாந்தர் அவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட தியாக சீலர் ஆவார். அன்னார் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு இனிதே வளமுடன் வாழ்ந்து கல்விப் பணியாற்ற வேண்டும் என்பதே எமது தணியாத தாகமாகும்.

Page 41
கலாநிதி
க. கைலாசபதியின் கல்விச் ികൃതമാക്
திமிழ் கலை, இலக்கிய ஆய்வறிவியல் துறையில் புதிய பரிமாணத்தையும், புதிய சிந்தனைப் போக்கையும் புகுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி ஆவார். வரலாற்று உணர்வுடனும், இயக்கவியல் அடிப்படையிலும் சமூகப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட வேண்டும் என்னும் கருத்தில் உறுதியுடையவராக இருந்தார்.
அவர் தழுவி நின்ற தத்துவக் கோட் பாடு, கொள்கை இலட்சியம் மனிதகுல விடுதலையை மையமாகக் கொண்டது. அவற்றின் அடிப்படைகளை ஆழமாகப் பற்றிக் கொண்டதனால் தனது பங்களிப் பிற்கான சமுதாயப் பார்வையினை மிகவும் தெளிவாக்கிக் கொண்டார். அத்தகைய ஒரு நிலைப்பாட்டின் மூலமே தமிழ் இலக்கியத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை அவரால் உருவாக்க முடிந்தது.

79 / சந்திரபோஸ்
தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கல்வி, கலை, வரலாறு, அரசியல் போன்ற துறைகளில் தமது ஆளுமை முத்திரையைப் பதித்துள்ளார். தமிழ் இலக்கியம் பற்றி ஆராயும் பொழுது இலக்கியப் படைப்பாளியின் வாழ்க்கை வரலாறு, இலக்கியம் எழுந்த கால சமூக வரலாறு, இலக்கியத்தின் சமூகவியல், இலக்கியத் திறனாய்வு என்பவற்றின் அடிப் படையில் தன் ஆய்வுகளை மேற்கொண்டதாக இவர் கூறு கின்றார்! ஏனெனில் இலக்கியத்தின் குறிக்கோள் காலத்திற்குக் காலம் வேறுபடுவதே காரணமாகும்.
இலக்கியத்தைப் போலவே கல்வி குறித்தும் காலத்திற்குக் காலம் குறிக்கோள் வேறுபடுதலை நாம் அவதானிக்கலாம். ஒரு காலத்தில் கல்வியின் பயன் வீடுபேற்றினை அடைவதே எனக் கருதப்பட்டது. இக்காலத்திலோ, சமுதாய முன்னேற்றத் திற்கும், மேம்பாட்டிற்கும் பயன்படு கருவியாகக் கல்வி அமைதல் வேண்டும் என்னும் கோட்பாடு மேலோங்கிக் காணப்படுகின்றது. இத்தகைய கருத்து மாற்றம் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தையே உணர்த்துகின்றது.* என்று கல்வியின் குறிக்கோள் காலத்துக்குக் காலம் வேறு படுவதனைக் கோடிட்டுக் காட்டும் இவர், மேலும், ‘இலக் கியத்தை உள்ளடக்கும் கல்வியை எடுத்துக் கொண்டால் அதனது பண்பு, பணி ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்கள் காலத்திற்குக் காலம் மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கின் றோம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடியியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்திற்குக் காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டோவில் இருந்து பியாஜே வரை கல்வியைப் பற்றி எழுதியோர் தத்தம் காலச் சூழ்நிலை களால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு கோணங்களிலிருந்து கல்விக்கு வரைவிலக்கணமும், விளக்கமும் கூறி இருக்கின் றனர்? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Page 42
எண்னக்கோலங்கள் 8O
கல்வி ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். மனிதன் கருவறையில் இருந்து கல்லறை வரை கற்றுக்கொண்டே இருக்கின்றான். எவன் ஒருவன் கற்க மறுக்கின்றானோ அவனால் உலகிற்கு எதனையும் கற்றுக் கொடுக்கமுடியாது என்பது கல்வி சம்பந்தமான சான்றோர் சிந்தனை. இச்சிந்த னையை உள்வாங்கிக் கொண்ட கைலாசபதி அவர்கள் அதற்கே உதாரணமாக வாழ்ந்தார். கலாநிதிப் பட்டம் பெற்றதன் பின்பும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றார். எதனையும் சீர்தூக்கச் சிந்தித்தார். ஆய்வுகளை மேற்கொண்டார். புதிய புதிய கருத்துக்களை முன்வைத்தார். பத்திரிகை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், பேரா சிரியராகவும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பல பதவிகளை அணி செய்து கல்விப்பணி ஆற்றினார்.
யாழ்ப்பாணம் இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த கைலாசபதி அவர்கள், இவரின் மூதாதையரின் கல்விப் புலமையினையும், இலக்கிய ஈடுபாட்டினையும், சமூக சேவை யினையும் முதுசமாகப் பெற்றவர். இவரது தாய் வழிப் பாட்டனாரான தம்பு நாகமுத்து என்பவர் சிறந்த கல்வி மானாகவும், நாவலாசிரியராகவும், இலட்சியப் பற்றுடன் வாழ்ந்த பள்ளி ஆசிரியராகவும் சமூக சேவையாளராகவும் திகழ்ந்தார்.
நீலகண்டன்’, ‘சித்தகுமாரன்’ ஆகிய இரு நாவல் களையும், “சிறிய வினோதக் கதைகள்’ என்னும் நூலையும், அம்பலவாணபிள்ளை என்பவருடன் இணைந்து ‘இலகு சாதகம்’ என்னும் சோதிட சாத்திர நூலையும், தம்பு நாக முத்து அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்நூல்களை வெளியிட்டமையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க, யாழ்ப் பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தைத் தாபித்தமையால் அவர் ஈட்டிய புகழ் அதிகமாகும்:

அன்ன சத்திரமாயிரம் வைத்தல் ஆலயம் பதின7யிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ண்திம்கோடி ஆங்கே7ர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கமைய கைலாசபதி அவர்களின் பாட்டனார் கல்விப் பணியாற்றினார்.
மனிதகுல வரலாறு போராட்டங்கள் நிறைந்த தொன்றாகும். போராட்டங்கள் மூலம் புதிய சமுதாயங்கள் மலர்ந்தன. பழைய சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு கல்விச் சிந்தனைகள் எவ்வளவுக்கு எவ்வளவு பயன்பட்டதோ அவ்வளவுக்கு அவ்வளவு புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பு வதற்கும் பயன்பட்டன. இதனைப்பற்றிக் குறிப்பிடும் இடத்தில் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பழைய நில மானிய சமுதாயத்தின் தேய்வு, புதிய வர்க்கங்களின் எழுச்சி, அச்சியந் திரத்தின் வருகை, குறிப்பிடத்தக்க அளவிற் பரவலான கல்வி, மரபு, சம்பிரதாயம் என்பவற்றில் நம்பிக்கைக் குறைவு, பிறப் பாலன்றிச் செய்தொழிலால் ஒருவர்க்கு மதிப்பு, உழைப்பின் மகத்துவம் முதலிய நவீன சமுதாயத்தின் சில பண்புகளாம். இவை அடிப்படையான சமூகவியல் மாற்றங்கள் என்பதை நாம் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். புதிய கல்வி முறைகள் இம்மாற்றங்களை உறுதிப்படுத்தி வந்திருக்கின்றன. இம்மாற்றங்களின் தவிர்க்க இயலாத எதிரொலியும், பிரதி பலிப்பும் கலை, இலக்கியங்களில் மாத்திரமன்றி மனித சிந்தனைத் துறைகள் அனைத்திலும் தோன்றும் என்பதில் தடை இல்லை?
நமது முன்னோர்கள் கலை இலக்கியங்களை விவரிக் கையில் அவற்றின் இலட்சியப் பண்புகளாகச் சத்தியம், சிவம், சுந்தரம் என்பவற்றைக் கூறினர். உண்மை, நன்மை, அழகு என்பனவே இம்மூன்றுமாம். இவை இன்றும் போற்றக்

Page 43
எண்னக்கோலங்கள் 82
கூடியன என்பதில் ஐயமில்லை. இவற்றின் முழு அர்த்தத் தையும் விளங்கிக்கொண்டு நவீன அறிவுலகின் பெறுபேறுகள் அனைத்தையும் பயன்படுத்தி மனித வாழ்க்கைக்குப் பொலிவும் பூரணத்துவமும் அளிப்பதே உயர்ந்த இலட்சியமாகும் எனக் கைலாசபதி அவர்கள் குறிப்பிடும் கருத்து கிரேக்க அறிஞர் சோகிரட்டீஸ் முதல் எமது நாட்டுக் கல்வியியல் பேராசிரியர் சந்திரசேகரம் வரை முன்வைத்த கல்விச் சிந்தனையோடு ஒப்புநோக்கத் தக்கதாகும்.
சிந்திக்கத் துவங்கிய கால முதலாய் புனிதமான அல்லது சமய சம்பந்தமான விஷயங்களைப் பற்றி மனிதர் சிந்தித்து வந்திருக்கின்றனர். எனினும், புனிதமானவற்றைப் பற்றி மனிதன் ஏன் சிந்திக்கிறான் என்பதைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கியது பெரும்பாலும் சமீப காலத்திலேயேயாகும் என ரொபர்ட் பெல்லா என்ற அமெரிக்க சமூகவியலாளர் கூறி யுள்ளதற்கேற்ப அண்மைக் காலத்தில் உலகின் பல பகுதி களிலே கல்வியின் சமூகவியல் புதியதொரு ஆய்வுக் கூறாக மலர்ச்சி பெற்றுள்ளது.
கல்வியின் சமூகவியல் பற்றி பேராசிரியர் கைலாசபதி வருமாறு குறிப்பிடுகின்றார்:
“கல்விக் கோட்பாடுகளும் திட்டங்களும் கல்வி யாளரின் இலட்சியங்களால் மட்டும் உருப்பெற்று இயல்வன அல்ல. ஒரு சமுதாயத்தில் உள்ள சம்பிர தாயங்கள், வரலாற்று மரபுகள், குடும்ப அமைப்பு முறைகள், தொழில் முறைகள், அரசியல் அமைப்பு, பொருளாதார மாற்றம் போன்றவையெல்லாம் கல்வியைப் பாதிக்கின்றன. இவற்றை ஆராய்வதே கல்வியின் சமூகவியலாகும்."
சமூகவியல் மனித ஒழுகலாறு அசம்பந்தமானது. தனி மனிதனையும் மனித சமுதாயத்தையும் ஆராய்வதையே

83 / சந்திரபோஸ்
ஆய்வுக்கு உட்படும் விடயங்களும் அரசியல் சம்பந்த முடையனவாகத் தோன்றும் என்பதனை மறுப்பதற்கில்லை என்றும், கலை, இலக்கியம், கல்வி, விஞ்ஞானம் முதலியன தூய நிலையில், அரசியல் கலப்பின்றி இருத்தல் வேண்டும் என்ற வாதம் அப்பழுக்கற்ற அரசியல் வாதமாகும் என்றும் குறிப்பிடுகின்றார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக மாற்றத்தைத் தூண்டி துரிதப் படுத்தக்கூடிய மனித சக்திகளை மழுங்கடிப்பதே இவ் வாதத்தின் அடிப்படையாகும். இவர்கள் கல்வியின் வடிவத்தில் மேலெழுந்தவாரியான அமிசங்களில், சிற்சில மாற்றங்களைக் காலத்திற்குக் காலம் அனுமதிப்பர். ஆனால் மனிதசமுதாயத்தின் மாற்றத்திற்கு இவை கருவியாக இருக்க வேண்டும் என்பதனை அனுமதிக்க மாட்டார்கள். எனவே இவர்கள் கல்வியின் சமூகவியலை ஊக்கப்படுத்துவதில்லை.
இன்று நமது நாட்டுக் கல்வியுலகிற்கு மிக மிக இன்றிய மையாதது கல்வியின் சமூகவியல் பற்றிய உணர்வும் அதன் வளர்ச்சியும் என்ற கல்விச் சிந்தனையை முன்வைத்து, இதில் கவனம் செலுத்துவது ஆசிரியர்களின் கடமை என கைலாசபதி அவர்கள் வலியுறுத்துகின்றார்.
இலங்கையின் வடபகுதிக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகப் பல்வேறு அரசியல், கல்வி, சமூகத்தாபனங்களால் முன்வைக்கப்பட்ட ஒரு விடயமாகும். இத்தாபனங்களும், அவற்றின் தலைவர் களும் பெயரளவில் ஒரு பல்கலைக்கழகத்தை வேண்டி நின்ற போதிலும், கலாநிதி க. கைலாசபதி அவர்கள் ஒரு முழுமை யான பல்கலைக்கழகம் வடபகுதியில் உருவாகவேண்டும் என்ற சிறந்த எண்ணக்கருவை, கல்விச்சிந்தனையை முன் வைத்தார்.
இச்சிந்தனை தொடர்பாக 1974ஆம் ஆண்டு ஆனி மாத கலை இலக்கிய வெளியீடான 'தாயகம்’ என்னும் சமூக

Page 44
6T6coTeoOTi(35mGorribeit 84
வியல் சஞ்சிகையின் கட்டுரை முக்கிய குறிக்கோளாய்க் கொண்டுள்ளது. இதன்படி கல்வியின் சமூகவியல் கல்வியோடு தொடர்புடைய சகல மக்களையும் தனது ஆய்வுக்குரிய பொருளாகக் கொள்கிறது. கல்வியின் நோக்கம், உள்ளடக்கம், ஆசிரிய பயிற்சி, மாணாக்கரின் வளர்ச்சிப் படிகள் என்பன கல்வியின் சில அமிசங்களே. இவற்றைத் தீர்மானிப்பதும், நடைமுறைப்படுத்துவதும், மதிப்பிடுவதும் மனிதர்களே. ஆகவே, கல்வியின் சமூகவியல், கல்வியின் தொடர்புடைய அனைவரையும் ஆராய முற்படுகிறது. உதாரணமாக நமது சமுதாயத்திலே கல்வித்துறையில் செல்வாக்குடன் விளங்குபவர்களின் சமூக அந்தஸ்து எத்தகையது? அவர்களின் வர்க்கச் சார்புகள் எவை? அவற்றின் விளைவுகளினால் அவர்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்கும், ஏனைய வர்க்கத்திற்கும் உண்டாகும் சாதக பாதகங்கள் யாவை? இவை முக்கியமான வினாக்களாம். குறிப்பிட்ட ஒரு கல்வித்திட்டம் சமுதாயத்தின் விழுமியங்களையும், நிறுவனங்களையும் கட்டிக்காக்க வழிகாட்டுகிறதா அன்றி சமுதாய மாற்றத்திற்கும் புனருத்தராணத்துக்கும் நெறி புகட்டு கிறதா? இதுவும் அடிப்படையான ஒரு கேள்வி. சுதந்திரம் என்ற பெயரில் மனிதனை மனிதன் அடக்கி ஆளவும் சுரண்டவும் அமைந்த சமுதாய அமைப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி இருக்கிறதா? இல்லையா? இவையே கல்வியின் சமூகவியல் தனது ஆய்வுக்குத் திறவுகோலாய்ப் பயன்படும் வினாக்கள்?
நமது கல்வியாளர்கள் இத்தகைய வினாக்களை இன்னமும் எழுப்பவில்லை என்று தனது கட்டுரையில் வருத்தப்பட்டுக் கொண்டார். இன்று அவரது மனக்குறையைக் களைவதுபோல் நமது கல்வியாளர்கள் பலர் கல்வியின் சமூக வியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கல்வியின் சமூகவியல் பற்றிக் குறிப்பிடும் பொழுது, இப்பரப்பில் எழுப்பப்படும் வினாக்களும், சஞ்சிகையில் ‘பரமன்’ என்னும் புனைபெயரில் ‘வடக்கில்

35 / சந்திரபோஸ்
ஒரு பல்கலைக்கழகம்’ என்னும் தலைப்பில் தமது பல்கலைக் கழகம் பற்றிய கல்விச் சிந்தனையை கட்டுரையாக வெளி யிட்டார். இக்கட்டுரை 1984ஆம் ஆண்டு பெப்ருவரி-மார்ச் 'தாயகம்’ இதழில் அவரது சொந்தப் பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இவர் ‘வடக்கில் ஒரு பல்கலைக்கழகம்’ என்ற கட்டுரையை முதலில் வெளியிட்ட காலத்தில் இலங் கையில் ஐந்து பல்கலைக்கழக வளாகங்கள் இருந்தன. அவை பேராதனை, கொழும்பு, வித்தியாலங்கார, வித்தியோதய, கட்டுப்பத்த வளாகங்களாகும்.
மேற்கூறிய ஐந்து வளாகங்களிலும் கற்பிக்கப்படுவன வற்றைத் தொகுத்துப் பார்த்தால் பொதுவாகக் கலை, விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்புகளும், அதேசமயம் ஒவ்வொரு வளாகத்திற்கும் சிறப்பாகச் சில பாடநெறிகளும் நடத்தப் படுவதை நாம் காண்கிறோம் எனக் குறிப்பிட்ட பேராசிரியர் அவர்கள், வடக்கில் அமையும் பல்கலைக்கழக வளாகம் பொதுவான கலை, விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்புகளுடன் வடக்கேயுள்ள வளங்கள் தொடர்பான அளவீடு, பயன்பாடு, பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய முழுமை பெற்ற பல்கலைக்கழகமாக அமையவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நான்குபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. இது ஆழமற்ற கண்ட மேடையினையும், கடலடித்தள மேடைகளையும் கொண்டு காணப்படுவதனால் மீன்வளம் நிறைந்த கடல் பகுதிகளைக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால் மீன்வளத்தை எவ்வளவுக்கு நம் நாடு பயன்படுத்து கின்றது என்பது கேள்விக்கான விடயமாகும். அதேவேளை வடபகுதியில், விசேடமாக யாழ்குடா நாட்டுக் கடலில் வாழும் மீன் இனங்களைப் பற்றியும், உயிரினங்கள் பற்றியும் ஆராய்வதற்கும், கடற்தொழில் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் யாழ்ப்பாணத்தில் அமையும் பல்கலைக் கழக வளாகம் தனது பங்களிப்பினை நல்கமுடியும்.

Page 45
எண்னக்கோலங்கள் 86
யாழ் குடா நாடு நன்னீர்ப் பிரச்சினை உள்ள பகுதி. அதேவேளை உவர்நீர்நிலைகளை நிறையக் கொண்ட பகுதி. இவ்வுவர் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகள் எவ்வித உற்பத்திக்கும் பயன்படுத்தப்படாத நிலங்களாகக் காணப் படுகின்றன. இவற்றைப் பயன்படும் நிலங்களாக மாற்று வதற்குரிய ஆராய்ச்சிகள் அவசியம். நன்னீர் நிலைகளைப் பெருக்குவதும், உற்பத்திக்குப் பயன்படாது இருக்கும் உவர் நிலங்களைப் பொருத்தமான உற்பத்தி நிலங்களாக மாற்று வதற்குமான ஆராய்ச்சிக் கல்வியினை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்படுத்துவது முற்றிலும் சாத்தியமானது எனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஏனைய பகுதிகளைவிட, காலநிலை, பாறை அமைப்பு, மண்வளம், அடித்தள நன்னீர் போன்ற காரணிகளால் வடபகுதி விவசாய நடவடிக்கைகள் வித்தி யாசமானதாகும். எனவே, அத்தகைய விவசாய முறைகள் சம்பந்தமான ஆராய்ச்சிகளையும், விவசாய விருத்திகளை மேற்கொண்டு உருவாக்கவும் யாழ் பல்கலைக்கழக வளாகம் பயன்படவேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு சிறு கைத் தொழில்கள் சம்பந்தமான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. எனவே இத்தேவைகள் அடிப்படையில் வடபகுதிக்கு ஒரு பல்கலைக்கழகம் அமையுமானால் அது நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் எனத் தமது கட்டு ரையில் வலியுறுத்தியுள்ளார். எனவே, கல்வியானது நாட்டின் இயற்கை வளங்களுடனும், மக்களின் தேவைகளுடனும் நெருங்கிய தொடர்புகொண்டு அவற்றின் விருத்தியில் பங்கு பற்றிப் பணியாற்ற வேண்டும் என்ற காத்திரமான கல்விச் சிந்தனைகளை பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கொண் டிருந்தார்.

சான்றாதாரம்
ஈழத்து இலக்கிய முன்னோடிகள், கலாநிதி க. கைலாசபதி, முகவுரை - ப. 10, மக்கள் வெளியீடு, 1986, சென்னை. இலக்கியமும் திறனாய்வும் - க. கைலாசபதி, முன்னுரை ப. vi, சென்னை புக் ஹவுஸ் - மூன்றாம் பதிப்பு - 1981. ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - க. கைலாசபதி, ப. 48, மக்கள் வெளியீடு - 1986 சென்னை.
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - க. கைலாசபதி, ப. 89, மக்கள் வெளியீடு, 1986 சென்னை.
இலக்கியமும் திறனாய்வும் - க. கைலாசபதி, ப. 114, சென்னை புக் ஹவுஸ் - மூன்றாம் பதிப்பு, 1981. இலக்கியமும் திறனாய்வும் - க. கைலாசபதி, ப. 119, சென்னை புக் ஹவுஸ், மூன்றாம் பதிப்பு, 1981. கலாவதி, . "கல்வியின் சமூகவியல்" (கட்டுரை) பேராசிரியர் க. கைலாசபதி, ப. 15, பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி வெளியீடு.

Page 46
உளவியல் உபாசகர்
1978-1979 கல்வியாண்டு. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் டிப்ளோமா பட்டப் பின்படிப்பு கற்கை Coppégigs (Postgraduate Diploma in Education) தெரிவாகியிருந்த காலம். அக்காலத்தில் தான் பேராசிரியர் எஸ். முத்துலிங்கம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
கல்வி உளவியல், கல்விப் புள்ளிவிபர வியல் ஆகிய பாடங்களில் பேராசிரியர் அவர்கள் எங்களுக்கு விரிவுரையாற்றி னார். கல்வி உளவியலில் அவரது ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறனும் எம்மை அதிசயிக்கச் செய்தது. கல்வி உளவியல், கல்விப் புள்ளிவிபர இயல் சம்பந்தமாக ஆங்கிலத்தில் நூல்களை எழுதி வெளி யிட்டார். பின்னர் அந்நூல்கள் தமிழிலும், சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டன.

89 / சந்திரபோஸ்
கல்வியியல் டிப்ளோமா பாடநெறி ஏற்கனவே பட்ட தாரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தோரின் ஊதிய உயர்வுக்கும், பதவிஉயர்வுக்குமான ஒரு தடை தாண்டிப் பரீட்சையாகும். ஆகவே இப்பாடநெறிக்குத் தெரிவானோர் பெரும்பாலும் முப்பது வயதினைத் தாண்டிய முதிர்ச்சியாளர்களாகவே இருந்தனர். பேராசிரியர் முதல் நாள் தமது விரிவுரையில் இதனைக் குறிப்பிட்டு, ‘ஏற்கனவே நீங்கள் அனைவரும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் ஈடுபட்டு, மாணவர் களுடன் பழகி அவர்களது உளவியலை நன்கு அறிந்து அனுபவங்கள் பலவற்றுடன் இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே, எங்களிடம் நீங்கள் புதிதாகக் கற்றுக்கொள்ள என்ன இருக் கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களிடம் கற்றுக்கொள்ள எங்களுக்கு நிறைய விடயங்கள் இருக்கும் என நான் நம்புகின்றேன்’ என்று கூறி அவரது உளவியல் சிந்தனைத் தூண்டிலில் எம்மைச் சிக்கவைத்தார்.
பேராசிரியரின் விரிவுரைகள் கலகலப்பாக இருக்கும். நகைச்சுவையாகச் சில கதைகளைக்கூறி உளவியல் கருத்துக் களை எமது மனதில் பதியவும், அவற்றைப் பற்றி எம்மைச் சிந்திக்கவும் செய்தார். அவர் கூறும் நகைச்சுவையில் வகுப்பு கலகலப்படையும்போது எங்களை ஒன்றும் அறியாத அப்பாவி போல் பார்க்கும் அவர் பார்வை வகுப்பை மேலும் கலகலப் படையச் செய்யும். இக்கற்கை நெறிக்குத் தெரிவான ஆசிரியர் களில் பெரும்பாலானோர் குடும்பக்காரர்கள். இவர்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் முதலிய இடங்களிலிருந்து கொழும்பு வந்து வாரநாட்களில் வகுப்புக்களுக்குச் சமூகம் கொடுத்துவிட்டு வாரஇறுதியில் தங்கள் தங்கள் ஊருக்குச் சென்றுவருபவர்கள். இவர்களது சிரமங்களை நன்கு அறிந்த பேராசிரியர் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒரு நெகிழ்ச்சிப் போக்குடைய வகுப்புக்குரிய நேர சூசியைத் தயாரித்துத் தந்திருந்தார். மற்றவர்களுடைய பிரச்சினையைப் புரிந்து கொண்டு, மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்த மனிதாபிமானி. பேராசிரியர் முத்துலிங்கம் அவர்கள் கல்வித்துறையில் மட்டு மன்றி கர்னாடக இசைத்துறையிலும் புலமை பெற்றவராகத்

Page 47
எண்னக்கோலங்கள் 90
திகழ்ந்தார். அவரது இசைக் கச்சேரிகள் இலங்கை வானொலி யிலும் பலமுறை ஒலிபரப்பாகி உள்ளன. எங்களது கற்கை நெறி முடிவுற்றபோது எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் போது பேராசிரியரின் இசைக் கச்சேரியினை நேரில் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றோம்.
1980ல் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் நடை பெற்ற பாரதி விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றியதுடன், பாரதியின் பாடல்கள் சிலவற்றை பண்ணோடு பாடி சபையினரைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
கல்வி உளவியலை தம் உளமார ஆராதித்தவர் பேராசிரியர் முத்துலிங்கம் அவர்கள். கல்வி உளவியலை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை மட்டும் கொண்டு எம்நாட்டு மாணவர்களின் கல்வி உளவியலை ஆராய்ந்து அளவிடுவதோடு நில்லாது, எமது நாட்டின் சமூக அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டுக் கோலங்களின் அடிப்படையில் உருவாகும் மனித விழுமியங்களின் அடிப் படையில் நமது மாணவர்களின் நடத்தைகளை ஆராய்ந்து கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள் முன்வரவேண்டும் என்று தமது கருத் தினை முன்வைத்தார்.
இன்று பேராசிரியரின் மாணவர்கள் பலர், பேராசிரியர் களாக, கல்வித்துறையின் கலாநிதிகளாக, சிறந்த விரிவுரை யாளர்களாக, நல்லாசிரியர்களாக, உளவியல் துறையில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுபவர்களாக தாய் நாட்டிலும், கனடாவிலும், புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
பேராசிரியர் ச. முத்துலிங்கம் அவர்கள் அண்மையில் அமரராகிவிட்டார். ஆயினும் அன்னார் கல்வி உலகிற்குச் செய்த சேவைகள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத் திருக்கும்.

பதுளை பாரதி கல்லுரியும் ജjnOenഠിub
Dகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த ஆண் டினைத் தமிழ் கூறும் நல்லுலகம்
கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அம்மகாகவியின்
வீடுகள் தோறும் கலையின் விளக்கம் வீதிகள் தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளவூர்கள் நகர்களெங்கும் பலபல பள்ளி.
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்; பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்.
இவ்

Page 48
எண்ணக்கோலங்கள் 92
என்ற வாக்குகளுக்கு அமைவாக பாரதியின் பெயரில் பதுளை மாநகரில், பசறை செல்லும் பிரதான சாலையில், இரண்டாம் கட்டையடியில் ‘பாரதி பாடசாலை 1957ம் ஆண்டு திரு. கருப்பையாபிள்ளை இராமசாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு பாடசாலையாகப் பொறுப்பேற்கும் வரை பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபராக இருந்து வழிநடத்தி வந்தார். இதனால் கருப்பையா பிள்ளை இராமசாமி அவர்கள் பாரதி இராமசாமி என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
இராமசாமி அவர்கள் 1932ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில், புதுப் பட்டி கிராமத்தில் கருப்பையாபிள்ளை, தையிலம்மை தம்பதி களின் புத்திரனாகப் பிறந்தார்.
இவர் பிறந்த காலத்தில் இவரது சிறிய தந்தையான அருணாசலம்பிள்ளை அவர்கள் பதுளையில் புடவை, நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்துவந்தார். 1938ம் ஆண்டு இராமசாமி ஆறு வயதுப் பையனாக இருந்த காலத்தில் அருணாசலம் பிள்ளை அவர்களால் தமிழகத்தி லிருந்து பதுளைக்கு அழைத்து வரப்பட்டு பதுளை தர்ம தூத்தா கல்லூரியில் ஆரம்பவகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இப்பாடசாலையில் தமிழ், சிங்கள மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்றனர். தமிழ் மாணவர் களையே பெரும்பான்மையாகக் கொண்டு இப்பாடசாலை விளங்கியது. இப்பாடசாலைக்கு அக்காலத்தில் R H. குண வர்த்தனா என்னும் பெயருடைய அதிபர், மாணவரிடத்து அன்புடனும், கண்டிப்புடனும் கல்லூரியை நெறிப்படுத்தி வந்தார். இக்கல்லூரியிலேயே இராமசாமி அவர்கள் 1951ம் ஆண்டுவரை கல்வி பயின்று S.S.C. பரீட்சையில் சித்தி எய்தினார்.

93/ சந்திரபோஸ்
மேற்படிப்பைத் தொடருவதற்காக இந்தியா சென்ற போதிலும் கல்லூரி அனுமதிக்கான முடிவு திகதி முடிவுற்ற மையினால் மீண்டும் இலங்கை திரும்பினார். தொடர்ந்து படிக்கும் ஆர்வம் இருந்தபோதிலும், தொழில் ஒன்றில் ஈடுபட வைக்கவேண்டும் என்று இவரது சிறிய தந்தையார் விரும் பியமையால் 1956ம் ஆண்டு கொழும்பு பிரதான வீதியில் அமைந்திருந்த "அம்பிகா ரெக்ரைல்" என்னும் புடவைக் கடையில் தொழில் பயிலுனராகச் சேர்க்கப்பட்டார். ஆயினும் வியாபாரத்தில் பெரிதும் ஆர்வம் அற்றவராகவும் நிறைய வாசிக்கும் ஆர்வமுடையவராகவும், ஈ. வே. ரா. பெரியார், அறிஞர் அண்ணா போன்றோரின் பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவராகவே வளர்ந்தார். இதனால் சமூக முன்னேற்றம், கல்விச் செயற்பாடுகள், கலை வளர்ச்சி போன்ற துறைகளில் நாட்டம் கொண்டார். இதனால் கொழும்பு வேலையைத் துறந்து மீண்டும் பதுளைக்கு வந்தார். பதுளையில் அக்காலத்தில் இயங்கிய சமூக சேவைத்தாபனங்களுடனும், சமூகசேவையாளர்களுடனும், தம்மோடொத்த சிந்தனை உடைய நண்பர்களுடனும் இணைந்து செயலாற்றினார்.
இக்காலத்தில் பதுளை கதிரவேலாயுத சுவாமி கோவிலுக் குரிய நிலங்கள் பதுளை சுற்றுவட்டாரத்தில் இருந்தன. இவற்றில் ஒரு நிலம் பதுளை - பசறை வீதியில் இரண்டாம் கட்டையடியில் இருந்தது. இந்நிலத்தில் “மாணிக்க வினாயகர்’ கோவில் ஒரு பகுதியிலும், கோவிலுக்கான மடம் மறுபகுதி யிலும் இருந்தது. இக்கோவில்களுக்கான அறங்காவலர் சபையின் தலைவரும், புரவலருமான K.S. இரத்தினசாமி (உரிமையாளர் பதுளை மொடேன் தியேட்டர்), திரு. பெரிய சாமிப்பிள்ளை (பராமரிப்பாளர்) ஆகியோரின் அனுசரணை யுடனும், சமூக ஈடுபாடு கொண்ட நண்பர்களான பெரி. கந்தசாமி (ஆசிரியர்), J. சற்குருநாதன் (பதுளை அச்சக உரிமை யாளர்), A, மூர்த்தி (வர்த்தகர், மாநகரசபை உறுப்பினர்), S.கந்தையா (உரிமையாளர் பதுளை மொடேன் பிரிண்டேஸ்),

Page 49
எண்னக்கோலங்கள் 94
V நடன சபாபதி, V. சந்திரசேகரன். ஆகியோருடைய ஒத்து ழைப்பினாலும், கோவில் மடமாக இருந்த கட்டிடம் 1957ம் ஆண்டு பாரதி ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாரதி முழங்கினான். கோவில் மடத்தையே திரு. இராம சாமி அவர்கள் பள்ளித்தலமாக்கி மகிழ்ந்தார். கோவில் மடம் பாடசாலையாகியபோதிலும், கோவில் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகின்றது.
பாடசாலைக்கு வேண்டிய தளபாட வசதிகளை K S. இரத்தினசாமி அவர்களும், சில நண்பர்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாபனத்தினரும் மனமுவந்து கொடுத்தனர். சுப்பிரமணியபாரதியார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டிலேயே அவரது பெயரால் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்படாத காலத்திலேயே மகாகவி பாரதியின் பெயரால் பாரதி கல்லூரியை நிறுவிய பெருமை திரு இராம சாமியையே சேரும்.
பாரதி பாடசாலை ஆரம்பித்த காலத்தில் திரு. இராம சாமியுடன் வேறு இரண்டு ஆசிரியர்களும் தன்னார்வத் தொண்டர்களாக எதுவித கொடுப்பனவுகளுமின்றிக் கடமை யாற்றினர். பாடசாலை ஆரம்பமான தினத்தில் ஐந்து ஆறு பிள்ளைகள் மட்டுமே வந்தனர்.
அரசாங்க பாடசாலையில் பின்பற்றப்பட்ட பாடத் திட்டமே இப்பாடசாலையில் பின்பற்றப்பட்டது. அத்துடன் திருக்குறள், பாரதி பாடல்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப் பட்டன. சிறிது சிறிதாக பாடசாலையில் மாணவர் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. 1958ம் ஆண்டிலிருந்தே இப்பாட சாலையை அரசாங்க பாடசாலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் 1974ல்தான் இப்பாட சாலையை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.

95 / சந்திரபோஸ்
இதற்கிடையில் திரு. பாரதி இராமசாமி அவர்களின் அருமுயற்சியினால் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த மலையகத் தமிழ் மாணவர்கள் முதன்முறையாக இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகும் வாய்ப்பு ஏற்பட்டது. 1960ம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கு. வன்னியசிங்கம் அவர்கள், இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி முன்னேற்றம் இலங்கைத் தமிழர்களுடன் இணைந்த வளர்ச்சியாக ஏற்படவேண்டும் என்ற வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தார். இதன் பலனாக மலையகத் தமிழ் மாணவர்கள் சிலருக்கு தமிழரசுக் கட்சி மூலம் உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள் அளிக்கும் திட்டத்தினை ஆரம்பித்தனர்.
அக்காலத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள பாட சாலைகளில் க. பொ. த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் வாய்ப்பே மலையகத் தமிழ் மாணவர்களுக்கு இருந்தது. இதனால் இராமசாமி அவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்று கு. வன்னியசிங்கம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, பதுளை ஸ்பிரிங்வெலியைச் சேர்ந்த K. இராமசாமி, S. தம்பிராஜா, தெல்பத்தையைச் சேர்ந்த V.இரெங்கன், கொஸ்கொல்லையைச் சேர்ந்த சொர்ணமலர் நடராஜா ஆகியோருக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொடுத்ததுடன், யாழ் மத்திய கல்லூரி அதிபர் டாக்டர் D. T. நைல்ஸ், வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலய அதிபர் திரு S.அம்பிகை பாகன், யாழ் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஆறுமுகம் ஆகியோரின் உதவிகளைப் பெற்று இம்மாணவர் களுக்கு அவர்களின் கல்லூரிகளில் உயர் வகுப்பில் கல்வி பெற அனுமதியும், விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடு களையும் செய்துகொடுத்தார். இவற்றிற்கெல்லாம் திரு இராம சாமிக்கு அனுசரணையாக இருந்தது பதுளை தர்மதுரத்தா

Page 50
எண்னக்கோலங்கள் | 96
ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. தம்பி ராஜா அவர்கள் ஆகும்.
இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இராமசாமி, தம்பிஐயா, இரெங்கன் ஆகியோர் இலங்கைப்பல்கலைக் கழகம் சென்று பட்டதாரிகளாக வெளிவந்து அரசாங்க பாட சாலைகளில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் இருந்து தமக்கு அடுத்த தலைமுறையினரின் கல்வி முன்னேற்றத்திற்கு உழைத்ததுடன், மலையகத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர வழிகாட்டியாக அமைந்தனர். இவர்கள் அனைவரும் இன்றும் திரு. இராமசாமி அவர் களுக்கு நன்றி உடையவர் களாக இருக்கின்றனர்.
பாரதி பாடசாலை ஆரம்பித்த நாள் தொடக்கம் அரசு பொறுப்பேற்கும் வரையில் இப்பாடசாலையைத் தொடர்ந்து நடத்திச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள் சொல்லும் தரமன்று. பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து அரசு பொறுப் பேற்கும்வரை மாணவர்களிடம் வசதிக் கட்டணமாக ரூபா ஒன்றிலிருந்து பத்துவரை மட்டுமே வசூலிக்கப்பட்டது.
நல்மனம் கொண்ட நலன் விரும்பிகளின் நன்கொடை, பதுளை, பசறை, கொழும்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிதி உதவிப்படக் காட்சிகள் மூலம் சேகரித்த பணம், ஒரு கட்டத்தில் இதொ.கா. கொடுத்த நிதி உதவி போன்றவற்றைக் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையைத் தொடர்ந்து திரு. இராமசாமி அவர்கள் நடத்திவந்தார். இவருக்கு மிகவும் உறுதுணையாக அப்பாட சாலையின் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய திரு. V நடனசபாபதி, (வீரகேசரி நிருபர்), திரு. Y. தேவராஜ், செல்வி K. சந்திரா, திரு. S.முத்துக்கருப்பன், செல்வி இராஜேஸ்வரி, செல்வி. ஜானகி ஆகியோர் அனைத்துக் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு, அரசு பாடசாலையாகப் பொறுப்பேற்கும் என்ற நம்பிக்கையுடன், மிக அக்கறையுடனும், பொறுப்

97 / சந்திரபோஸ்
புணர்ச்சியுடனும் மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்கு அயராது தொண்டாற்றினர்.
1970ன் பின்னர் மலையகம் எங்கனும் உணவுப் பற்றாக் குறை, தொழிலாளர் சம்பளக் கொடுப்பனவுகள் பாதிப்பு, வேலைகுறைப்பு போன்றவற்றால் நிலைமைகள் மிகவும் மோசமாகின. இக்காலகட்டத்தில் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா அரசில் நியமன உறுப்பினராக இருந்த ஜனாப் A அளிஸ் (தலைவர், இலங்கை ஜனநாயக தொழி லாளர் காங்கிரஸ்), பதுளை நாடாளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு உதவி அமைச்சருமான திரு B, H. பண்டாரா அவர்களின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த ஜனாப் பதியூதீன் அவர்களின் அங்கீகாரத்தினால், 1974ல் பாரதி பாடசாலை அரசாங்க பாடசாலையாக அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. ஆயினும் அப்பாடசாலையில் கடமை யாற்றிய ஆசிரியர்கள் உடனடியாக அரச பாடசாலை ஆசிரியர்களாக நியமனம் பெறவில்லை. இதனால் அரசாங்க பாடசாலையான பாரதி பாடசாலைக்கு அதிபராக ஏற்கனவே அரசாங்க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு S. நாகரட்ணம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்தக் கட்டத்தில் பாரதி பாடசாலையில் இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களும் ஒன்பது தொண்டர் ஆசிரியர்களும் இருந் தார்கள். இப்பாடசாலையில் ஆரம்பித்த காலம் முதல் தொண்டாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு நியமனம் வழங்க வேண்டும் என்று பாடசாலையின் பெற்றோர்கள், பல்வேறு சமூகத்தாபனங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் ஆசிரியர்களின் நியமனம் இழுபறியாகவே இருந்தது.
திரு இராமசாமி அவர்களின் விடாமுயற்சியாலும், பதுளை வாழ் சமூகத்தொண்டர்களின் வேண்டுதலினாலும், பதுளை நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாப் A. M. அளிஸ்

Page 51
எண்னக்கோலங்கள் 98
அவர்களின் சிபார்சுகளினாலும், உதவிக் கல்வி அமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரான திரு Y B. துடா வையின் அனுசரணையுடனும், கல்வி அமைச்சில் தமிழ்ப் பிரிவின் தலைவராக இருந்த திரு லசுஷ்மண ஐயர் அவர் களின் அருமுயற்சியினாலும் 1976ல் அப்பாடசாலையில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய ஒன்பது பேரும் அரசாங்க பாடசாலை ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். ஆயினும் பாரதி பாடசாலையை ஆரம்பித்து அரசு பொறுப் பேற்கும் வரை அதிபராக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சிக்கே தம்மை அர்ப்பணித்த திரு இராமசாமி அவர்கள் இலங்கைப் பிரஜா உரிமை பெற்றுக் கொள்ளாத காரணத்தால் அரச பாடசாலை ஆசிரியராக நியமனம் பெறும் வாய்ப்பினை இழந்தார். அந்த வேளையிலும், தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை அரசாங்க பாட சாலையாகவும், சகஆசிரியர்கள் அரச பாடசாலை ஆசிரியர் களாகவும் நியமனம் பெற்றமையைக் கொண்டாடி மகிழ்ந்தார். தொடர்ந்தும் தம்மை சமூக சேவையில் இணைத்துக் கொண்டார்.
திரு இராமசாமி அவர்கள் பாரதி கல்லூரியில் கற்பித்த ஆசிரியை ஜானகி அவர்களை 1977ல் திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் மலையக மக்களுக்கும், மாணவர் களுக்கும் தமது சேவைகளை அளிக்குமுகமாக பல தொண்டர் தாபனங்களின் உதவியைப் பெற்று பாடசாலை நூல் நிலை யங்களுக்கு நல்ல நூல்களைப் பெற்றுக் கொடுத்தார். பாட சாலை அபிவிருத்தி சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொண்டு, தமது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார். 1984 முதல் 1989 வரை ஊவா மாகா ணத்தின் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு என்னும் தொண்டர்தாபனத்தில் இணைந்து சமூகத்தொண்டில் ஈடு

99 / சந்திரபோஸ்
பட்டார். இன்று ஓய்வு பெற்று, தமது 75 வயதினைப் பூர்த்தி செய்து, பவளவிழாக் கண்ட நாயகனான திரு பாரதி இராம சாமி அவர்களை நாமும் வாழ்த்தி வணங்குவோம்.
திரு பாரதி இராமசாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாரதி பாடசாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அரசு அமலாக்கிய “பாடசாலைகளின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாரதி பாடசாலையும், அதன் அண்மையில் இருந்த இங்குறுகம தமிழ் வித்தியாலயமும் இணைக்கப் பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாரதி கனிஷ்ட வித்தியாலயம் என்றும், ஆறு முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரை பாரதி மகா வித்தியாலயம் என்றும் இரு அதிபர்களின் கீழ் பலமாடிக் கட்டிடங்களையும், வகை வளங்களையும் கொண்டு இரு பாடசாலைகளிலும் எழுநூறு வரையான மாணவர்களையும், முப்பது வரையான ஆசிரியர்களையும் கொண்டு பதுளை தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும் பணியாற்றி வருகின்றது. பொன்விழாக்காணும் இக் கல்லூரி மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

Page 52
LJQJGNGågnå காறுைம் எஸ். பொ.
திமிழ் இலக்கிய ஊழியத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தடம் பதித்து ஈழத்திலும், தமிழகத்திலும் மட்டு மல்லாது, பூமிப்பந்தின் ஐந்து கண்டங் களிலும் கால்பதித்து தமது இலக்கிய இலக்கினையும், நோக்கினையும், போக்கி னையும் இலக்கியப் படைப்பாளிகளு டனும், இலக்கியச் சுவைஞர்களுடனும் சல்லாபித்து வரும் எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை 1932ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். ஆரம்பத்தில் யாழ் பெருமாள் கோவிலடி யில் அமைந்திருந்த “வேதப்பள்ளி’ என்று அழைக்கப்பட்ட மெதடிஸ் மிசன் ஆரம்ப பாடசாலையிலும், பின்னர் சென்பற்றிக்ஸ் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரி யிலும் கல்வி கற்று, தமிழகம் சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்,

101/ சந்திரபோஸ்
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து B.A. பட்ட தாரியானார்.
தமது பதினைந்தாவது வயதிலிருந்தே வீரகேசரி பாலர் வட்டத்தில் ஆரம்பித்த எழுத்துப்பணி இன்றும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது என எஸ். பொ. குறிப்பிடுகின்றார்.
"எஸ். பொ.வின் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலக்கியத்திலே பரிச்சயம் உடையவர்கள், அவர் முரண் Luit G56fair Guitguitas (a bundle of contradictions) Sapaj605ás காண்பார்கள். மரபுகளை உடைப்பதில் அவர் முன்னுக்கு நிற்பார். அந்தக் கட்டுடைப்புகள் மரபின் தொடர்ச்சியே என்று வாதாடுவார். கட்டுடைத்தல் தேவையையும், நியதியையும் பின்பற்றுகின்றது என்று நியாயம் கற்பிப்பார். சங்கத்தமிழுக்கு “பண்டித ஆவேசத்துடன் வக்காலத்து வாங்குவார். அதே மூச்சில் பாமரர் வழக்கே படைப்பிலக்கியத்திற்கான உயிர்த்துவ மொழி என்பார். இவற்றின் மத்தியிலே உறுதியான, தொடர்ச்சி யான, தெளிவான இலக்கியக் கொள்கையை அநுசரித்து வாழ்வதாகவும் அறிக்கையிடுவார்" என எஸ்.பொ. பற்றி அவரின் மூத்தமகன் டாக்டர் பொன் அநுர எஸ்.பொ.வின் ‘அப்பாவும் மகனும்’ என்னும் காவியநூலின் பதிப்புரையில் குறிப்பிடுகின்றார்.
1946ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த 'மலர்கள்’ என்ற கவிதையுடன் எனது இலக்கியப் பயணம் தொடங் கிற்று. 1955 வரை கதைகள், கட்டுரைகள், ஓரங்க நாடகங்கள் எழுதினேன். ஆயினும் இவை எழுத்துலகில் நான் சாதித்த வைகள் என்று சொல்லமுடியாது. 1955ன் பின்னரே எனது எழுத்துக்கள் அங்கீகாரம் பெற்றன. மார்க்ஸிஸம் மனித குலத்தின் ஈடேற்றத்திற்கும், பொருளியல் விமுக்திக்கும் ஏற்ற ஒரே வழி என்ற நம்பிக்கையை வரித்த அதே காலத்தில் தான் என் தமிழ் ஊழியம் துவங்கிற்று’ என எஸ். பொ. குறிப்பிடுகின்றார்.

Page 53
எண்னக்கோலங்கள் ! 102
எஸ். பொ. சிறுகதைத்துறையில் பல பரிசோதனை களைச் செய்து பாராட்டுப் பெற்றவர். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு போன்ற பிராந்திய மொழி வழக்குகளையும், கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பேச்சு வழக்கினையும் கையாண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் வீ, அவா, ஆண்மை, பூ என நான்கு சிறுகதைத் தொகுதி களாக வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றான "ஆண்மை’க்கு பாயிரம் எழுதிய இந்திரா பார்த்தசாரதி அவர்கள், "எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே எஸ். பொ. எழுத்துப் போராளி. மனிதனுக்காக சித்தாந்தமேயன்றி, சித்தாந்தத்துக்காக மனிதன் என்று சொல்வது மதியீன மென்று போராடியவர். எழுத்தில் தீட்டு, தூய்மை என்று எதுவுமில்லை. சிந்தனையில் நேர்மையும், சொல்லில் கபட மின்மையுமிருந்தால் போதும். அதுவே உன்னத எழுத்து என்று போராடியவர்” என்று குறிப்பிடுகின்றார்.
எஸ். பொ. வின் மற்றொரு சிறுகதைத் தொகுதியான "அவா’விற்கு முன்னுரை வழங்கிய வல்லிக்கண்ணன் அவர்கள், "ஈழத்து இலக்கிய உலகத்தில் ஒரு தனிச் சிறப்பு டையவர் எஸ். பொன்னுத்துரை. எஸ். பொ. என்று அறியப் பட்டுள்ள அவர் தனது சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனங்கள், கட்டுரைகளால் தனக்கென சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். தனது இலக்கியக் கொள்கை களினாலும், கண்டன விமர்சனங்களினாலும் பிரச்சினைக் குரிய ஒரு எழுத்தாளராகவும் எஸ். பொ. கருதப்படுகிறார்” என்று குறிப்பிடுகின்றார்.
இவரது முதல் சிறுகதைத் தொகுதியான “வீ" 1966ல் வெளிவந்தது. இதன் முகப்புக்கதையான ‘தேர்’ மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் புனை கதை அமர்வில் மிகச்சிறந்த தமிழ்ச் சிறுகதையாக அறிஞர் களால் சிலாகிக்கப்பட்டது.

103 / சந்திரபோஸ்
இவரது இரண்டு நாவல்கள் 196லும் 1971லும் வெளி யாயின. முதல் நாவலான "தீ" தமிழில் வெளிவந்த பாலியல் குறித்த முதல் முயற்சிகளில் ஒன்று. நனவோடை உத்தியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ் நாவல்.
இரண்டாவது நாவல் 'சடங்கு சுதந்திரன் பத்திரி கையில் தொடர்கதையாக வந்து 1971ல் நூலுருப்பெற்றது. யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் வாழும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஆறு நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்புத்தான் சடங்கு. யாழ்ப்பாண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த, கொழும்பில் தொழில்புரியும் அரசாங்க ஊழியரான செந்தில்நாதன் என்ற கதாபத்திரம் வாரஇறுதியில் கொழும்பி லிருந்து சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கொழும்பு செல்வதற் கிடையில் நடைபெறும் நிகழ்வுகள் பிரதேச மொழி வழக்கில் யாழ்ப்பாண சடங்குகள், சம்பிரதாயங்களையும், தனிமனித இயல்பூக்கத்தையும் (Motives) சொல்லிச் செல்கின்றது. இந்நாவல் தமிழ்நாட்டில் ராணிமுத்துவின் மறுபிரசுரத் திட்டத்தின் கீழ் பிரசுரமான ஒரே ஒரு ஈழத்து நாவல். சுமார் மூன்று பதிப்புக்கள் கண்டு ஒன்றரை இலட்சம் பிரதிகள் விற்பனை யான நாவல் சடங்கு.
எஸ்.பொ. அங்கதச்சுவையில், அரச உயர் மட்டங்களில் இடம்பெறும் லஞ்ச லாவண்ணியங்களை "பந்தநூல்’ எனப் படும் வினாக்குறியின் (?) தலைப்புடன் 1972ல் வெளியீடு செய்தார். இந்நூல், நச்சாதார்க்கும் இனியர் உரையுடன் கூடியதாக பண்டைய நூற்பதிப்புப் பணிகளின் ஊடாக யாத்திரா செய்யும் பிரமிப்பினை ஏற்படுத்தும்.
எஸ். பொ. ஈழத்து இலக்கிய ஊழியத்தில் சகோதர எழுத்தாளர்களின் திறமைகளை ஊக்குவித்தும், கெளரவித்தும் வந்துள்ளார். இதன் வெளிப்பாடாக ஈழத்தில் முதன்முதல் கூட்டு முயற்சியாக மத்தாப்பு என்ற குறுநாவல் ஒன்றும், சதுரங்கம்’, ‘காந்தீயக் கதைகள்’ என்னும் இரு தொகுப்பு நூல்களும் வெளிவந்தன.

Page 54
எண்னக்கோலங்கள் 104
'மத்தாப்பு’ என்னும் குறுநாவலை இ. நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு. வே. சு. வேலுப்பிள்ளை) “குறமகள்’ (வள்ளிநாயகி இராமலிங்கம்) ஆகிய நால்வருடன் இணைந்து எஸ்.பொ. இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்தார். இக்குறுநாவல் வீரகேசரியில் ஆறு வாரங்கள் தொடராக வந்து பின்னர் நூலுருப் பெற்றது.
‘சதுரங்கம்’ 1972ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆர். பாலகிருஷ்ணன், வ. அ. இராசரத்தினம், எம். ஏ. ரஹ்மான், மற்றும் தமிழக சாலை இளந்திரையன் ஆகி யோருடன் எஸ். பொ.வும் எழுதி வெளியிட்ட நூலாகும்.
“காந்தீயக் கதைகள்’ என்னும் தலைப்பில் 1969ல் காந்தி நூற்றாண்டை ஒட்டி ஆர். பாலகிருஷ்ணன், யுாழ்ப் பாணம் தேவன், ராஜநாயகன், என். எஸ். எம். இராமையா, வ. அ. இராசரத்தினம், தெளிவத்தை யோசப், இரசிகமணி கனக செந்திநாதன், கே. வி. நடராஜன், எம். ஏ. ரஹ்மான் என்னும் ஒன்பது எழுத்தாளர்களுடன் எஸ். பொ. இணைந்து எழுதிய ‘சில நேரங்களில் சில தோழர்கள்’ என்ற சிறுகதை ‘ராஜ் மித்திரா’ என்ற புனைபெயரில், பத்துச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூலாக அரசு வெளியிடாக வெளியிடப் till-gil.
மலரும் நினைவாக எஸ். பொவின் இளமை வரலாற்றை இணைத்து, அரை நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்த யாழ்ப் பாண மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்களை வரலாறுபோல கூறிச் செல்லும் நனவிடை தோய்தல் (1992) வெளியிடப்பட்டது. இதனை எஸ். பொ. Creative Essays என்ற இலக்கிய வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகின்றார். இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய அபிராமி வெளியீடுகள் விமல் அரவிந்தன், நனவிடை தோய்தல் புதிய இலக்கிய முயற்சி, நடை புதிது, அமைப்பு புதிது, நோக்கம் புதிது, அநுபவம் புதிது, ஆக்கம் புதிது. இதனால்

105 / சந்திரபோஸ்
ஈழத்து இலக்கியம் மேலும் வளம் பெறுகின்றது' என்று குறிப்பிடுகின்றார்.
ஈழத்தின் தமிழ்பேசும் இனங்களுடைய எதிர்காலத் தினைப் பாதிக்கவல்ல முக்கிய பிரச்சினை ஒன்று குறித்து 1970களில் 'எச். எம். பி முஹிதீன் அறிக்கை' வெளியிடப் பட்டது. இவ்வறிக்கை வெளிப்படையாகப் பார்க்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது போன்று தோற்றம் காட்டினாலும், உள்ளார்த்தமாக தமிழ் தேசிய எழுச்சியைத் தடுத்து, ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சியினை முடமாக்கும் நோக்கே இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு ஈழத்தமிழ் எழுத்தாள அமைப்புக்களை இணைத்து 'எஸ். பொ. அறிக்கை 31.10.1970ல் வெளியிடப் பட்டது. இதன் நிதர்சனங்களை, சிங்கள பெரும்பான்மை இனத்தின் பேரினவாத சன்னதத்தை நாம் கண்கூடாக இன்றும் காண்கின்றோம்.
எஸ். பொ.வின் ஆய்வு நூலாக 'இஸ்லாமும் தமிழும்’ என்னும் நூல் 'இஸ்லாமிய வாலிபர் இயக்கத்தால் 1975ல் கொழும்பில் வெளியிடப்பட்டது. இஸ்லாமிய மக்களின் தமிழ்த் தொண்டுகளை ஆவணப்படுத்தும் நூலாக வெளி வந்தது.
எஸ். பொ.வின் “கீதை நிழலில்’, குட்டிக் கதைகள் உருவத்தில் அமைந்த தத்துவக்கதைகளின் தொகுதி. இதில் இடம்பெற்ற பல கதைகள் கல்கி வார இதழில் தொடர்ந்து பல வாரங்கள் வெளிவந்து இராஜாஜி” என அழைக்கப் படும் இராஜகோபால ஆச்சாரியார் அவர்களின் பாராட்டுக் களைப் பெற்றவை.
எஸ்.பொ. தமிழ் நாடக உலகிலும் தடம் பதித்துள்ளார். நடிப்பின் மூலமே நாடகக் கலைக்குள் நுழைந்தார். 1953ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற சமாதான மகாநாட்டில்

Page 55
எண்னக்கோலங்கள் ! 106
அவர் எழுதி - நெறிப்படுத்தி - நடித்த ‘சாவு’ என்னும் நாடகம் எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் அரங்கேறிப் பாராட்டைப் பெற்றது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடக உலகின் தொடர்புகளையும், ஞானங்களையும் விரிவு படுத்திக் கொண்டார். பின்னர் மட்டக்களப்பு மண்ணிலே தான் நாடகத்துறையில் முழுமையுடன் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘முதல் முழக்கம்’, ‘அந்தநாள்’, ‘தலைக்குமேல்’, "கூண்டுக்கு வெளியே’, ‘வலை’ ஆகிய நாடகங்கள் எஸ். பொ.வால் எழுதப்பட்டு மட்டக்களப்பிலும், கொழும்பிலும் மேடை ஏற்றப்பட்டன. 'தினை விதைக்காதார்’ என்னும் வரலாற்று நாடகம் தினகரன் ஆண்டுமலரில் வெளிவந்தது.
‘வலை’ நாடகம் 1971ல் நூல்வடிவில் வெளிவந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நாடகக் குழுக்களால் பல தடவை மேடை ஏற்றப்பட்டது. சாணக்கியன் எனப்படும் "கெளடில்யனின் சதிகளும், சாகசங்களுமே இந்நாடகத்தின் கருப்பொருளாக அமைந்தன.
1974ல் “முறுவல்’ நாடகம் எழுதப்பட்டு 26.07.74ல் கொழும்பு வை. எம். பீ. ஏ. மண்டபத்தில் அரங்கேறியது. சுஹேர் ஹமீத்தின் நெறியாள்கையிலும் கலாநிதி சி. மெளன குருவின் காட்சி அமைப்பிலும் இந்நாடகம் மேடை ஏறியது. இந்நாடகம் 1994ம் ஆண்டு, தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் பேராசிரியர் இராமானுஜத்தின் முன்னுரை யுடன் நூலுருப்பெற்றது. பேராசிரியர் தமது முன்னுரையில், சுயமரபினைத் தேடுதல் என்பது ஒரு பிற்போக்குப் பார்வை யல்ல. மாறாக எஸ்.பொ.வின் வார்த்தையிலே கூறினால் அது ஒரு நற்போக்கு. சுயமரபின் யதார்த்தத்தைத் தேடி உணர்தல் என்னும் தாகத்துடிப்பை புலம்பெயர்ந்த தமிழர் என்ற காரணத்தால் எஸ்பொவினால் நன்கு உணரமுடிகிறது என்று குறிப்பிடுகின்றார்.
எஸ்.பொ. ஒரு கதை சொல்லியாகவே தமிழ் இலக்கிய உலகின் அங்கீகாரத்தை மட்டுமன்றி கெளரவத்தினையும்

107 / சந்திரபோஸ்
சம்பாதித்தார். ஆயினும் வசன நடைக்குப் பதிலாக கவிதை நடையில், அப்பையா காவியம் (1972), ‘அப்பாவும் LDöglub (1999) எனப் புதிய காவியங்கள் படைத்து வெளியிட்டுள்ளார். ‘அப்பாவும் மகனும் காவியத்திற்கு முன்னுரை எழுதிய ஞானக்கூத்தன் "இப்புதுமையான காவியத்தை எனக்குப் படிக்கக் கொடுத்து, அதுகுறித்து எழுதவும் கேட்டுக் கொண்ட" எஸ். பொ. வின் படைப்பாற்றலைப் பாராட்டுகின்றார்.
கவிஞர் நீலாவணனின் வரலாற்றினை ஆவணப் படுத்தும் முயற்சியாக "நீலாவணன் - எஸ். பொ. நினைவுகள்" என்னும் நூல் காலம் வெளியீடாக வெளிவந்தது. இந்நூல் நீலாவணனின் வரலாற்றுடன் சமகால ஈழத்துக் கவிதை முயற்சிகளையும் விமர்சன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நூலுமாகும்.
எஸ். பொ. மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டு “காந்தி தரிசனம்’ 1969-ல் வெளிவந்தது. செனகல் நாட்டின் சிறந்த எழுத்தாளரான செம்பென் ஒஸ்மானுடைய 'ஹால’ நாவலின் தமிழாக்கம் 1999ல் வெளிவந்தது. கென்யா நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் "கூகிவா தியாங்கோ’ எழுதிய நாவலை "தேம்பி அழாதே பாப்பா’ என்னும் நூலாக 2001ம் ஆண்டு வெளியிட்டார்.
நான்கு தசாப்தங்களாக எஸ்.பொ. வைத்துள்ள இலக்கியக் கோட்பாடுகள் சம்பந்தமான அறிக்கைகள், கட்டுரைகள், சிந்தனைகள் மற்றும் பல்வேறு செவ்விகள் குறித்த ஆவணமாகவும், சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கு களை அறிந்துகொள்ள உதவும் நூலாகவும் ‘இனி’ என்னும் நூல் 2000ம் ஆண்டில் மித்ர வெளியீடாக எஸ். பொ.வின் கனடா விஜயத்தின்போது வெளியிடப்பட்டது.
2003 டிசம்பரில் எஸ்.பொ.வின் "வரலாற்றில் வாழ்தல்” (Living Through History) 6T6öTgyLb 5Tgü 1924 Lušsilő606Tő

Page 56
எண்னக்கோலங்கள் ! 108
கொண்டு இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. இந்நூல் வெறும் நிகழ்வுப்பதிவு மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்ட ஒரு கலைஞனின் மதிப்பீட்டுப் பார்வையும், தனிப்பட்ட வாழ்க்கை அநுபவங்களைச் சுவைபடச் சொல்லிச் செல்கின்ற அதேநேரத்தில், எஸ். பொ. அடிப்படையான பல விவாதங்களையும் இந்நூலில் நிகழ்த்துகிறார். இதனைக் கையாளும் முறையினாலே தாம் ஓர் தேர்ந்த படைப்பாளியாக, படைப்பிலக்கியவாதியாக மட்டுமல்லாது, நமது காலத்தை விமர்சிக்கும் தேர்ந்த விமர்சகன் என்பதையும் நிரூபிக்கின்றார்.
இலக்கியம் பிற்போக்கோ, முற்போக்கோ என்பதல்ல முக்கியம். எப்போக்காயினும் இலக்கியம் நற்போக்கில் அமைவதே விரும்பத்தக்கது. இலக்கியம் இலக்கும், இலட் சியமும் உடைத்து. அந்த இலக்கு மானிடத்தின் விடுதலைக்கு உறுதுணையாக அமைதலே சாலவும் சிறந்தது. அந்த மானுட விடுதலை வெற்றுக் கோஷங்களினால் பெறப்படுவதல்ல. மனிதநேயத்தின் உச்ச உபாசனையினாலே மட்டுமே பெறப் படுவதாகும். எனவே, நற்போக்கு இலக்கியம் மிக எளிமை யானது என்று எஸ். பொ. குறிப்பிடுகின்றார்.
பவளவிழாக் காணும் எஸ்.பொ. இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து புதுமைகள் பல தமிழ் அன்னைக்கு அணிசெய்யவேண்டும் என்பதே எமது வேணவா.

கலாநிதியாnைர் கல்வி அதிகாரி
Lண்டாரவளை தமிழ்ப் பிரிவுக் கல்வி அதிகாரியாக திரு. சிவநாயகமூர்த்தி அவர்கள் 1975ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகமானார். இவர் 1975ஆம் ஆண்டி லிருந்து 1980ஆம் ஆண்டுவரை இங்கு சேவையாற்றினார். இக்காலகட்டத்தில் யான் பதுளை சரஸ்வதி மகாவித்தியா லயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். இக்காரணத்தினால் திரு. சிவ நாயகமூர்த்தி அவர்களின் கல்விப் பணி யையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
இவர் பண்டாரவளை கல்வி அதிகாரி யாகக் கடமையாற்றியபோதும் ஊவா மாகாணத் தமிழ்ப்பாடசாலைகள் அனைத்தையும் அறிந்த கல்வியதிகாரி யாகத் தனது சேவையினை ஆற்றி வந்தார். பதுளை, பசறை, வெலிமடை ஆகிய தமிழ் வட்டாரக் கல்வி அதிகாரிகள் லீவில்

Page 57
எண்னக்கோலங்கள் 11O
செல்லும்போதெல்லாம் அவர்களின் பணியையும் பொறுப் பேற்று சிறப்புடன் செய்து ஊவா மாகாணத் தமிழ், முஸ்லீம் ஆசிரியர்களினதும், மலையகத் தமிழ்ச் சமூகத்தினதும் பாராட்டைப் பெற்றார்.
1945இல் கலாநிதி கன்னங்கரா அவர்களால் இலவசக் கல்வி அறிமுகப்புடுத்தப்பட்டது. அப்பொழுதே சுயமொழிக் கல்விக்கான திட்டமும் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டதுடன், 1958இல் இருந்து சுயமொழிக் கல்வி பாட சாலைகளில் கட்டம் கட்டமாக அமலாக்கப்படலாயிற்று. 1960ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டு சட்ட மூலங்கள் மூலம் தனியார் பாடசாலைகளையும், உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இவையெல்லாம், கல்வி கற்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமையென்ற கல்வியியல் தத்துவத்தை வலியுறுத்தும் அம்சமாகவிருந்தபோதிலும், சிங்களப் பேரினவாத அரசியல், தமிழர்களின் திறமைகளை மட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளாகவே நடைமுறையில் அமைந்தன.
1960இல் ஊவா மாகாணத்திலும் நல்ல நிலையில், சிறந்த நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த உதவி நன்கொடை பெற்ற பல நகரப் பாடசாலைகள் தமிழர்களின் கல்விக்கு சிறந்த வாய்ப்புகளைத் தந்து மலையகத் தமிழர்களின் கல்வி உயர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன. இத்தகைய பாட சாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் ஆக்கப்பட்டன. தமிழ் மாணவர் களுக்காகப் பாடசாலைகளில் தமிழ்ப் பிரிவுகள் எதுவித வசதிகளோ வளங்களோ இன்றிப் பெயரளவில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டன. ஆனால், இதே வேளையில் மலையகத் தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்க முன்வரவில்லை. அவை வசதிகள் அற்ற நிலையில் மாட்டுத் தொழுவங்கள்போல் தோட்ட நிர்வா கத்தின் கீழேயே இயங்கி வந்தன. எல்லோருக்கும் இலவசக்

111 / சந்திரபோஸ்
கல்வி என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிய சிங்களப் பேரினவாத அரசுகள், தோட்டப் பாடசாலை களைப் பொறுப்பேற்பதை காலதாமதப்படுத்தியே வந்தன. இதனை எதிர்த்து மலையகத் தோட்டத் தொழிற்சங்கங்களும், இடதுசாரி இயக்கங்களும், மலையகத் தமிழ்ப் பிரமுகர்கள், வர்த்தகர்கள் என்போரும் அரசுக்கும் கல்வி அமைச்சுக்கும் பல அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.
இக்காலகட்டத்தில் திரு சிவநாயகமூர்த்தி அவர்கள் பதுளை வட்டாரக் கல்வி அதிகாரி திரு ஜே. டி. நவமணி அவர்களுடன் சேர்ந்து ஊவா மாகாணத்திலுள்ள தோட்டத் தமிழ்ப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்பதற்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகளுக்கு வித்தியாதிபதி திரு சித்திரா டீ. சில்வா, வித்தியாதிபதி கப்ரின் அமரநாயகா, வித்தியாதிபதி பாளியக்காரா ஆகியோருக்கு பெரும் உதவி யாகவிருந்தார். எல்லாப் பாடசாலைகளுக்கும் சென்று அவற்றின் விபரங்களைத் திரட்டியதோடு, அங்கு கடமை யாற்றி வந்த ஆசிரியர்களின் கஷ்டங்கள் பற்றியும் விபரமாக காலத்திற்குக் காலம் வித்தியாதிபதிகளுடன் கலந்துரை யாடினார். இதன்மூலம் தோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் மீது தோட்ட முகாமையாளர்களின் கெடுபிடிகளைக் குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.
1977ஆம் ஆண்டு தோட்டப் பாடசாலைகள் அரசாங் கத்தால் எடுக்கப்பட்டபோது, இவர் பண்டாரவளை கல்வி வட்டாரத்தில் தனது மேற்பார்வைக்குட்பட்டிருந்த ஐம்பத்தி ரெண்டு தோட்டப்பாடசாலைகளையும் அங்கு கடமை யாற்றிய ஆசிரியர்கள் அறுபத்திரெண்டு பேரையும் எந்தத் தடங்கலுமின்றி அரசு கையேற்க ஆவன செய்தார். ஏனைய கல்வி வட்டாரங்களில் சில பாடசாலைகள் காலம் தாழ்த்தியே அரசினால் கையேற்கப்பட்டன. இதனை அப்போ திருந்த ஆசிரியர்கள் இன்றும் நினைவுகூர்ந்து பாராட்டு 6TT956,

Page 58
எண்னக்கோலங்கள் 112
அமைதியும் பொறுமையும் முகமலர்ச்சியும் கொண்ட திரு சிவநாயகமூர்த்தி அவர்கள் மலையகத் தமிழ் மாணவர் களின் இயல்பூக்கங்களை வெளிக்கொணரும் பணிக்காகப் பாடசாலைகளில் வட்டாரfதியில் பொருட்காட்சிகள், கலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றையும் ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி வந்தார்.
தமிழ் ஆசிரியர்களுக்கான சேவைக்காலப் பயிற்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சில் இருந்தும், பல்கலைக் கழகங்களிலிருந்தும் பல கல்வியியலாளர்கள், கல்வியியல் நிர்வாகிகளை பதுளை, பண்டாரவளை ஆகிய கல்வி வட்டாரங்களுக்கு அழைப்பித்து ஆசிரியர்களுக்கான சேவைக் காலப் பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் நடாத்தினார்.
பண்டாரவளைத் தமிழ் மகாவித்தியாலயத்திலிருந்த சிங்களப் பிரிவை சிங்கள மகாவித்தியாலயத்துடன் இணைத்தும், பண்டாரவளை ‘சிறுமலர் கொண்வென்ட்” சிங்கள வித்தியாலயத்தின் தமிழ்ப்பிரிவை பண்டாரவளைத் தமிழ் மகாவித்தியாலயத்துடன் இணைத்தும், பண்டார வளைத் தமிழ் மகா வித்தியாலயத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் முன்னின்று உழைத்தார். இதனால் பண்டார வளைத் தமிழ் மகாவித்தியாலயம் சகல வசதிகளையும் கொண்ட தமிழ் மத்திய மகாவித்தியாலயமாக மிளிர்ந்தது. இதற்காக மக்களின் பாராட்டையும் பெற்றார்.
வட்டாரக் கல்வி அதிகாரியாக மட்டுமன்றி பண்டார வளை மக்களின் சமூகவாழ்வில் ஒன்றுபட்டு, பொங்கல் விழா, கலைவிழா, நத்தார் ஒளிவிழா, நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா போன்ற சமய, சமூக நிகழ்ச்சிகளிலெல்லாம் கலந்து சிறப்பித்தார்.
இன்று அவருக்கு அமெரிக்க உலகப் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டம் அளித்துக் கெளரவித்துள்ளமை குறித்து பெரும் மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

eാക്കാീLDD സ്കെങ്ക കേതഖധnണ്
1968 ஆண்டு ஒருநாள் பேராதனைப் பல்கலைக்கழக வளாகம், இராஜவத்தை யில் ஓர் அறையில் முதன்முதலாக பதுளை திரு சந்திரசேகரன் அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது மலையகத்தைச் சேர்ந்த திரு சண்முகம், திரு வாசு தேவன், திரு மரியதாஸ் ஆகியோரும் அச்சந்திப்பின்போது அவர் அறையில் உடன் இருந்தனர். அப்பொழுது நாங்கள் அனைவரும் பல்கலைக்கழக இறுதி யாண்டுத் தேர்வுக்காகக் கற்றுக் கொண் டிருந்தோம். பொதுவாக நாங்கள் எல் லோரும் மார்க்ஸிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தோம்.
1960களில் ‘சர்வதேச கம்யூனிசம்’ இரு முகாங்களாகப் பிரிந்திருந்தது. இலங்கை யிலும் கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் யூனியன் (ருஷ்ய) சார்பு, மக்கள் சீனா

Page 59
எண்ணக்கோலங்கள் | 114
சார்பு அணிகளாகப் பிளவுபட்டு இருந்தது. இது சம்பந்தமாக எங்களிடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெறும் அத்துடன் சமூகமுன்னேற்றம், சாதி ஒழிப்பு, மலையக மக்கள் மறு மலர்ச்சி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் சம்பந்த மாகவும் உரையாடுவோம்.
1970ம் ஆண்டு பிற்பகுதியில் நான் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பதுளை சென்றேன். அங்கு மீண்டும் சந்திரசேகரன் அவர்களைப் சந்தித்துப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது அவரும் பட்டதாரியாகி இருந்தார். பட்டதாரியாவதற்கு முன்பு பதுளை “சென்பீற்ஸ்’ கல்லூரி என்ற தனியார் ஸ்தாபனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பாடசாலைகள் அரசினால் பொறுப் பேற்ற காலகட்டத்தில் இவர் ஆசிரியர் பதவியில் தொடரும் வாய்ப்பினை இழந்தார். பதுளை சென்பீற்ஸ் கல்லூரி அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பதுளை சிங்கள மகா வித்தியாலயமாக மாற்றம் பெற்றது.
பின்னர் சந்திரசேகரம் அவர்கள் அரசாங்க எழுது வினைஞர் சேவைக்குத் தெரிவாகி, பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். 1970 முதல் 1983 தமிழின ஒழிப்புக் கலவரம் வரை நாங்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நண்பர்களாக மட்டுமன்றி ஒரே குடும்பத்தவர்களாகவே பழகிவந்தோம்.
சந்திரசேகரம் அவர்கள் சிறந்த வாசகர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்த பாண்டித்தியம் பெற்ற வராகத் திகழ்ந்தார். இதனால் பல நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளை நிறைய வாசிக்கும் பழக்கமுடையவர். எங்கு, எப்பொழுது அவரைச் சந்திக்கும்பொழுதும் அவரது கைகளில் ஓரிரு பத்திரிகைகள் அல்லது புத்தகங்கள் இருக்கக் காணலாம். சிறந்த வாசகனாக இருந்தமையால் அகன்ற, ஆழமான, அடக்கமான அறிவைப் பெற்றிருந்தார். இதனால், இவர் ஒரு

115 / சந்திரபோஸ்
சீரிய சிந்தனையாளராகவுந் திகழ்ந்தார். எப்பொழுதும் எவரிடமும் அகமும் முகமும் மலர அளவளாவும் பண்பாளர். ஆயினும் குறுகிய மனப்பான்மை கொண்ட குதர்க்கவாதி களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்.
பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அதிபர்கள் S. முருகேசு, V மாணிக்கம்பிள்ளை, J. S. பிள்ளை, ஸ்பிரிங் வெலி இராமசாமி, நவமணி ஜோசப், இ. கணேசன், நவமணி (ஜூனியர்) ஆகியோர் கடமையாற்றிய காலகட்டங்களில் எல்லாம் சந்திரசேகரம் அவர்கள் கல்லூரியின் எழுது வினைஞராகக் கடமையாற்றினார். தனித்து எழுதுவினை ஞராக மட்டுமன்றி, அதிபர்கள், ஆசிரியர்களின் ஆலோசக ராகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராகவும், கபொத உயர்வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியராகவும் சேவைகள் ஆற்றினார். எதுவித சுயநல நோக்கமுமின்றி, மலையகத் தமிழ் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து நல்ல தொரு மலையக சமூகத்தை உருவாக்க முன்னின்று உழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தன் பங்கினையும் பணி யினையும் எதுவித சலசலப்புமின்றிச் செய்து வந்தார்.
சந்திரசேகரம் அவர்கள் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்திலும் சரி, பண்டார வளை கல்விக் காரியாலயத்தில் கடமை புரிந்த காலத்திலும் சரி, பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்துக்கு மட்டு மன்றி, ஊவா பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பாடசாலைகளின் முன்னேற்றத்திற்குப் பலவழிகளிலும் உதவிகளும் ஒத்தாசை களும் செய்பவராகவே பணியாற்றினார். உத்தியோகக் கடமை நேரங்கள் தவிர்ந்த மாலை வேளைகளிலும், ஒய்வு நாள் களிலும் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தைச் சகல வழிகளிலும் தரம் உயர்த்துவதற்கும், வித்தியாலயத்தின் வகை வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கும், பதுளை வாழ் தமிழ் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகளையும் நாளாந்தம் சந்தித்து வேண்டிய

Page 60
எண்னக்கோலங்கள் l 116
உதவிகளைப் பெற்று வித்தியாலய வளர்ச்சிக்குத் தொண் டாற்றினார்.
சரஸ்வதி மகாவித்தியாலய பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபைகளின் அனுசரணை யுடன் பதுளை சைவபரிபால சபை நிர்வாகிகளை அணுகி பாடசாலைக்கு வேண்டிய இடவசதிகளை விஸ்தரிக்கவும், பாடசாலை தளபாட வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகளுடன் சேர்ந்து உழைத்தார். சைவ பரிபாலன சபைத் தலைவர் K.S. இரட்ணசாமி (பதுளை மொடேன் தியேட்டர் உரிமை யாளர்), பதுளை புஸ்பா ஹாட்வையர் உரிமையாளர் புஸ்ப ராஜன், தொழிற்சங்கவாதிகள் திரு. சுப்பையா, கந்தசாமி, மொடேன் பிரிண்டேஸ் K. தட்சணாமூர்த்தி (பதுளை மாநகரசபை உறுப்பினர்), V. K. கந்தையா, பதுளை பிரிண் டேஸ் சற்குருநாதன். வீரையா (வர்த்தகர்), சட்டத்தரணி பத்மநாதன், பதுளை பாராளுமன்ற உறுப்பினர் B. S. பண்டாரா, பதுளை பாரதி கல்லூரி நிறுவனர் இராமசாமி ஆகியோரை ஒருங்கிணைத்து பதுளை சரஸ்வதி மகாவித்தி யாலயத்தை இன்று தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்வதற்கு அத்திவாரம் இட்டுத் தனது சேவையை நல்கியவர் சந்திரசேகரம் என்றால் அது மிகையாகாது.
ஊவாப் பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பட்டப்படிப்பை மேற்கொண்ட, பொருளாதார வசதிகள் குறைந்த சில மாணவர்களுக்கு உதவிபுரியும் முகமாக சந்திரசேகரம் அவர்கள் சில ஆசிரிய நண்பர்களிடமும், சில நலன்விரும்பிகளிடமும், மாதம் மாதம் பணம் சேகரித்து மாணவர்களுக்கு உதவி அளித்து வந்தார். இதற்கு உறு துணையாக ஆசிரியர்கள் S. தம்பி ஐயா, ரெங்கன், ஸ்பிரிங் வெலி இராமசாமி, இலங்கையர் கணேசன் ஆகியோர் உதவினார்கள்.
1972ம் ஆண்டில் சந்திரசேகரம் அவர்கள், ஆசிரியர்கள் பிள்ளை, இலங்கையர் கணேசன், S. தம்பிஐயா ஆகியோ

117 / சந்திரபோஸ்
ருடன் இணைந்து மாணவர்களுக்கான ஒரு கல்விச் சுற்றுலாவை ஒழுங்குசெய்தார். பதுளையில் இருந்து, கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றிற்கு ஐந்து நாள்கள் சுற்றுலா செல்வது என்று தீர்மானிக்கப்பட்டு மாணவர்கள், சில ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட வரலாற்று முக்கிய இடங்கள், நீர்த்தேக்கங்கள், தொழிற்சாலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் போன்ற வற்றை எல்லாம் மாணவர்கள் கண்டுகளிக்கவும், அனுபவ அறிவினைப் பெறவும் சிறந்தமுறையில் திட்டமிட்டு வெற்றி கரமாக அச்சுற்றுலா அமையவும் வழிவகுத்தார்.
வகுப்பறைக் கல்வி, நூல்கல்வி மட்டுமன்றி, மாணவர் களின் இயல்பூக்கங்களை வெளிக்கொணரும் வகையில், கல்விச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்கள், நூல்வெளியீடு ஆகிய துறைகளிலும் ஊக்கு விக்கும் வகையில் ஆலோசனை வழங்கிவந்தார்.
இவ்வாறு பலவழிகளிலும் பதுளையில் இருந்த காலத்தில் ஆடம்பரமற்ற முறையில், தனக்கு பதவிகளையோ, பட்டங்களையோ நாடாது, மட்டுப்படுத்தப்பட்ட பொரு ளாதார நிலையிலும் மலையகத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மாலான பணிகளை எதுவித விளம்பரமுமற்ற முறையில் செய்து வந்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சலசலப்பற்ற சமூக சேவையாளன். மானுடத்தை நேசித்த மாமனிதன்.
2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்திரசேகரன் அவர்கள் அமரரானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அன்னார் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளும் சாந்தி பெறல் வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

Page 61
கலாநிதிகOலநாதன் அவர்களுடன் ஒரு நேர்கால்ை
அண்மையில் இலங்கையிலிருந்து சில கல்லூரி அதிபர்களைக் கொண்ட குழு UNESCOவின் ஏற்பாட்டின் பெயரில் ரொரன்ரோவிற்கு வருகை தந்து யோர்க் Lució606 daypassSoi (York University) Luo கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர். இக்குழுவிற்கு கலாநிதி தி. கமலநாதன் தலைமை தாங்கி வந்திருந்தார். அவரோடு எமது சிறப்புச் செய்தியாளர் திரு சந்திர போஸ்) நடத்திய நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
கேள்வி : இலங்கையில் தேசிய கல்வி யியற் கல்லூரிகளின் தோற்றம் பற்றியும், அதன் நோக்கங்கள் பற்றியும் கூறுவீர்
256.7/7 ?
பதில் : இலங்கையிலுள்ள உலக வங்கி நீண்டகாலமாக மேற்கொண்ட கல்வி

19 / சந்திரபோஸ்
அபிவிருத்தி சம்பந்தமான ஆய்வின் பெறுபேறாய் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானித்தது. இத்தீர்மானத்திற்கமைய ஆரம்பத்தில் ஐந்து கல்வியியற் கல்லூரிகளை இலங்கையின் தென் பகுதிகளில் நிறுவினர். முதன் முதல் கம்பஹா மாவட்டத்தில் சியனே தேசிய கல்வி யியற் கல்லூரி நிறுவப்பட்டது. இன்று பதினேழு தேசிய கல்வியியற் கல்லூரிகள் வடகிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தேசிய கல்வி யியற் கல்லூரிகளின் பிரதான நோக்கம் ஆசிரியர்களின் 6) InteitatDLD 65055SGuuit (5th (Teachers' Professional Development). இதனடிப்படையில் எந்த ஒரு ஆசிரியரும் ஆசிரியப் பயிற்சி யின்றி வகுப்பறைக்குச் செல்லக்கூடாது என்னும் நோக்குடன் இக்கல்வியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுதோறும் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கல்வித்துறைக்கு அளித்து வருகின்றது.
கேள்வி : இலங்கையில் நடைமுறையிலிருந்து வரும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கும், தேசிய கல்வியியற் கல்லூரிக்குமுள்ள வேறுபாடுகள் எவை?
பதில் : ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் இன்று ஏற்கனவே ஆசிரியர்களாகப் பல ஆண்டுகளாகக் கடமை யாற்றிக் கொண்டு இருப்பவர்களிலிருந்து சிலரைத் தெரிவு செய்து ஆசிரியப் பயிற்சியினை அளித்து வருகின்றது. இது சேவைக்காலப் பயிற்சி போல் அமைகின்றது. ஆனால் தேசியக் கல்வியியற் கல்லூரிகள் ஒருவர் ஆசிரியராக வருவதற்குரிய முன்பயிற்சியினை அளித்து வருகின்றது. இக்கல்லூரிகளின் வருகையினால் இனிவரும் காலங்களில் எவரும் ஆசிரியர்க் கான முறைப்படியான பயிற்சியின்றி ஆசிரியத் தொழிலில் ஈடுபட முடியாது.

Page 62
எண்ணக்கோலங்கள் 12O
கேள்வி இன்று இலங்கையில் இயங்குகின்ற பதினேழு தேசியக் கல்வியியற் கல்லூரிகளில் எவ்வெவ் மொழிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன?
பதில் : சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகள் மூலம் பாடநெறிகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, தர்காநகர் - அழுத்கம, பூரீபாதா கல்வியியற் கல்லூரி - கொட்டகலை, ஊருகுண கல்வியியற் கல்லூரி - காலி ஆகிய கல்வியியற் கல்லூரி களில் தமிழ் மொழி மூலம் பயிற்சிகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிகள் மூலம் பாட நெறிகள் போதிக்கப்படுகின்றன.
øyesorozodišøZVLVA TÓ96ör677ø762v/7?
பதில் : அப்படிக் கூறமுடியாது. ஆயினும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள சில கல்வியியற் கல்லூரிகள் முழுமையாகச் சிங்களமொழி மூலம் கற்ற மாணவர்களைக் கொண்டு இயங்குகின்றன. கொட்ட கலையில் அமைந்துள்ள பூரீபாதா கல்வியியற் கல்லூரி தனித்து தோட்டத் தொழிற்துறையைச் சேர்ந்த தமிழ்ப் பிள்ளைகளுக்கென்றே GTZ எனப்படும் ஜேர்மானியத் தொழிநுட்பத் தாபனத்தால் முழுமையாக நிதி வழங்கப் பட்டு நிறுவப்பட்டது. ஆனால் இன்று மூவின மக்களும் இங்கு பயிற்சி பெறுகின்றனர். அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி தனித்து முஸ்லிம் மாணவர்கள் மட்டும் பயிற்சி பெறும் கல்லூரியாக விளங்குகின்றது.
கேள்வி : இக்கல்வியியற் கல்லூரிகளில் இடம்பெறும் பயிற்சி நெறிகள் பற்றிக் கூறமுடியுமா?
பதில் ஆம். இத்தேசியக் கல்வியியற் கல்லூரிகள் வழங்கும் பாடநெறி முழுமையான மூன்றாண்டுகளைக்

121 / சந்திரபோஸ்
கொண்டதாகும். முதல் இரண்டு ஆண்டுகளும் வதிவிடப் பயிற்சி (Residential Course) ஆகும். மூன்றாம் ஆண்டு கல்விக் கூடங்களுக்குச் சென்று கற்பித்தல் பயிற்சியினை மேற் கொள்ள வேண்டும். இவர்களது கற்பித்தல் செயன்முறை களைக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்வார்கள். இக்கல்வியியற் கல்லூரியில் இருபத்தொரு பாடநெறிகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முதல்மொழி, ஆரம்பக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல்வி, உடற்கல்வி, விவசாயம், நுண்கலை, சமயம், நாடகமும் அரங்கியலும் போன்ற இருபத்தொரு பாடநெறிகளின் கீழ் ஆசிரியப்பயிற்சி அளிக்கப்படுகின்றன.
கேள்வி : இவ்வாறு தெரிவாகும் மாணவர்களுக்கு ஏதும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றனவா?
பதில்: ஆம். முதல் இரண்டாண்டிற்கும் அவர் களுக்கு 1500 ரூபா (Alowance) வழங்கப்படுகின்றது. மூன்றாம் ஆண்டில் இத்தொகை 2000 ரூபாவாக வழங்கப்படுகின்றது.
கேள்வி: இவ்வாறு மூன்று ஆண்டுகள் பயிற்சியை முடித்துக் கொண்டவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு/ வழங்கப்படுகின்றதா?
பதில்; நிச்சயமாக, வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் தான் இப்பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எங்கள் யாழ்ப்பாணக் கல்வியியற் கல்லூரியில் 2000 - 2002ம் ஆண்டு வரை கற்கை நெறியை மேற்கொண்டு வெளியேறிய 67 மாணவர்களுக்கும் அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியத் தொழில் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி : இக்கல்வியியற் கல்லூரிகளில் கற்று, பாட நெறியை முடித்த பின்னர், ஆசிரிய சேவையில் ஈடுபடாது வேறு வேலைக்குச் செல்லமுடியுமா?

Page 63
எண்னக்கோலங்கள் 122
பதில் : வேறு வேலைகளுக்கோ அல்லது வேறு கற்கை நெறிக்கோ செல்வதானால், அக்குறிப்பிட்ட நபருக்கு கல்வியியற் கல்லூரியில் வழங்கப்பட்ட பயிற்சி நெறிக்கான சகல செலவுகளையும் அவர் மீள அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் (Bond) உண்டு.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசியக் கல்வியியற் கல்லூரியின் ஆரம்ப வரலாற்றைச் சுருக்கமாகக் diaC2A424/0/7.'
பதில் : ஆம். மனிதவள அபிவிருத்தி கல்வி கலாசார அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரி ஆணைக்குழு இலங்கையின் ஏனைய இடங்களில் கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்திலும் ஓர் கல்வியியற் கல்லூரி அமைக்கத் திட்டமிருந்தது. ஆனால் நாட்டுச் சூழ்நிலை, உள்நாட்டு யுத்தம், மக்கள் இடம் பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளால், 2000ம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் கல்வியியற் கல்லூரி ஆரம்பிக்கப்பட வில்லை. உலக வங்கி யாழ்ப்பாணத்தில் அமையவிருந்த கல்வியியற் கல்லூரிக்காக 465 மில்லியன் ரூபாவை ஒதுக்கியும் இருந்தது.
2000ம் ஆண்டு நான் வவுனியாவில் அமைந்திருந்த தேசியக் கல்வியியற் கல்லூரியில் உபபீடாதிபதியாக கடமை புரிந்துகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் அமையவிருக்கும் கல்வியியற் கல்லூரிக்கு பீடாதிபதி நியமனத்திற்காக விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. நான் கல்வியியலில் கலாநிதிப் பட்டம் முடித்திருந்தமை யினாலும், இருபது ஆண்டிற்கு மேல் அரசாங்கப் பாடசாலை களில் பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவமும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாள ராகச் சில ஆண்டுகள் கற்பித்த அனுபவமும், வவுனியாக் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகவும், உபபீடாதி

123/ சந்திரபோஸ்
பதியாக இருந்த அனுபவமும் இந்தப் பதவிக்கு என்னை தேசியக் கல்லூரிக்கு பீடாதிபதியாக நியமனம் பெற உதவின. எனது நியமனமே யாழ்ப்பாணத்தில் அமைய இருந்த கல்வி யியற் கல்லூரியின் ஆரம்ப முதல் நிகழ்வாகும்.
இந்த நியமனம் பெற்று யாழ்ப்பாணம் வந்த நான், தேசியக் கல்வியியற் கல்லூரி ஆணையாளர், யாழ்ப்பாணம் கல்விப் பணிப்பாளர், եւյութ -9լՄ* அதிபர், யாழ்ப்பாணப் பொதுமக்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகள், சமயத் தாபனங்கள் ஆகியவற்றின் உதவிகளைப் பெற்றேன். 2000ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி கோப்பாய் ஆசிரியக் கலா சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக கல்வியியற் கல்லூரி ஆரம்பமானது. ஆரம்ப செலவுகளுக்காக பத்து லட்சம் ரூபா கல்வி அமைச்சினால் வடகிழக்கு மாகாண கல்விப் பணிப் பாளர் ஊடாக அனுப்பப்பட்டது. ஆயினும் இப்பணம் ஆறு மாதங்கள் தாமதமாகவே திருமலையிலிருந்து வந்து சேர்ந்தது. ஆயினும் யாழ் சமூகத்தின் பெரியோர்கள் உதவி யுடன் திட்டமிட்டபடி மேற்குறிப்பிட்ட திகதியில் கல்வியியற் கல்லூரி ஆரம்பமானது. கல்லூரி ஆரம்பித்து சில தினங்களில் மே 9ம் திகதி யாழ் குடாநாட்டில் பாரிய யுத்தம் வெடித்தது. சாவகச்சேரி தாக்குதல் ஆரம்பம். இதனால் கோப்பாய் பாதுகாப்பற்றதாக இருக்கவே தற்காலிகமாகக் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் இராமநாதன் கல்லூரிக்கு இடம்பெயர நேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் சிரமங் களினால், கல்வியியற் கல்லூரி ஓர் நிரந்தர இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுயுறுத்தப்பட்டது. இதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்த கல்வியியற் கல்லூரிகள் சம்பந்தமான கல்வி அமைச்சிள் குழுவினரும், உலக வங்கிக் குழுவினரும் யாழ் குடாநாட்டில் பல்வேறு பொதுமக்கள் அமைப்புகளின் கருத்துகளை அறிந்தும், பல இடங்களைப் பார்வையிட்டும், இறுதியில் கோப்பாயில் இராஜவீதியில்

Page 64
எண்னக்கோலங்கள் 124
தேசியக் கல்வியியற் கல்லூரிக்கான கட்டிடத் தொகுதிகளை அமைப்பதற்கான முடிவினை எடுத்தனர்.
இதன் அடிப்படையில் தர்மலிங்கம் சித்தாத்தர் அவர்கள் 220 பரப்பு காணியினை கல்வியியற் கல்லூரி அமைப்பதற்காக அன்பளிப்புச் செய்தார். உலக வங்கி 35 மில்லியன் ரூபாவை புதிய கட்டிடத் தொகுதிக்காக ஒதுக்கியது. இவற்றைக் கொண்டும், பொதுமக்கள், பொதுத் தாபனங்களின் உதவிகளுடனும், அக்காலகட்டத்தில் அரசில் அங்கம் வகித்த திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உதவியுடனும் தேசியக் கல்வியியற் கல்லூரி யாழ்ப்பாணத்தில் அமைந்தது. இதில் ஒரு வேடிக்கை நிகழ்வு என்னவெனில், திரு தர்மலிங்கம் சித்தாத்தன் அன்பளிப்பாக வழங்கிய காணியில் இரண்டு பரப்புக் காணி தனக்குச் சொந்தமானது என அப்பிரதே சத்தைச் சேர்ந்த ஒருவர் கல்வியியற் கல்லூரி ஆணையாளர், யாழ் அரச அதிபர், யாழ் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி ஆகியோர்மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தி ருந்தார். அவ்வழக்கினை விசாரித்த நீதிபதி அவரது முறைப் பாட்டில் எதுவித ஆதாரமும் இன்மையால் வழக்கைச் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தார். இதுபோன்று பல்வேறு மட்டங்களிலிருந்தும் இக்கல்வியியற் கல்லூரிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகளும் இருந்தன. ஆயினும் இவற்றை யெல்லாம் பொதுமக்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு கல்வியியற் கல்லூரி பல்வேறு பற்றாக்குறைகளுடனும் விரைந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.
கேள்வி: தற்பொழுது கல்வியியற் கல்லூரியின் இயக்கம் பற்றிக் கூறுவீர்களா?
பதில்: பீடாதிபதி, மூன்று உபபீடாதிபதிகள், (கல்வியும் தரமேம்பாடும், நிதியும் நிர்வாகமும், தொடர் கல்வி), 27 விரிவிரையாளர்கள் இதில் மூவர் மட்டும் நிரந்தரமான வர்கள்) ஆகிய கல்விசார் உத்தியோகத்தர்களையும், பதிவாளர்

125 / சந்திரபோஸ்
ஒருவர், எழுதுவினைஞர்கள், உதவியாளர்கள் 30 பேரைக் கொண்டு இயங்குகின்றது. மொத்தமாக மாணவர்கள் 500 பேர் பயில்கின்றார்கள். இவர்களில் ஆண்கள் 120, பெண்கள் 380,
கேள்வி: தேசியக் கல்வியியற் கல்லூரியின் எதிர்காலத் திட்டங்களைக் கூறமுடியுமா?
பதில்: எமது யாழ்ப்பாணக் கல்வியியற் கல்லூரியை ஒரு முழுமையான கல்வியியற் கல்லூரியாக வளர்த்தெடுத்தல், நிரந்தர விரிவிரையாளர் நியமனம், தேவையான அளவு கல்விசார் உத்தியோகத்தர்களின் நியமனம், உலக வங்கி ஒதுக்கி யுள்ள நிதிவளங்களைப் பெற்று கல்வியியற் கல்லூரியை இலங்கையிலுள்ள ஏனைய கல்வியியற் கல்லூரிகளில் உள்ளது போன்ற வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்குதல், ஆசிரியர்களின் ஒழுக்கம், பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய நல்லாசிரியர்களை உருவாக்கி அடுத்த தலைமுறை யினருக்கு அளித்தல் என்பன எமது எதிர்காலத் திட்டங் களாகும்.

Page 65
வெள்ளி விழn Oலர்*
வெள்ளிவிழாக் காணும் ஓர் கல்வி நிறுவனத்தின் "வெள்ளிவிழா மலருக்கான" ஆசிரியனாக இருந்து உங்களிடம் பேசு வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நம் மண்ணில் இளம் தலைமுறையினரின் இயல்பூக்கங்களைச் சமுதாய நற்பணிக்காய் வெளிக்கொணரும் பணியில் இப்பாலர் கல்விக்கழகம் ஈடுபட்டு வருகின்றது என்பதனைக் கல்வியோடு தொடர்பு பூண்டோர் அனைவரும் அறிவர்.
எமது கழகம் தகைமைசால் கழகத் தலைவர் திரு ஆ செல்லையா என்ற அனுபவ முத்திரை பதித்த கல்விச் சான் றோன் வழிநடத்தலிலும், ஆற்றல்மிகு அன்பன் திரு இ. இரத்தினகோபால் என்னும் செயல்திறமை மிக்க செய

127 / சந்திரபோஸ்
லாளரின் அயராது உழைப்பினாலும் வளர்ச்சி பெற்று பாலர் கல்விப் பணியில் உயர்ந்து நிற்கின்றது.
வளர்முக நாடு ஒன்றில் வாழும் நாம், வளர்ச்சி பெற்ற நாட்டினை ஒத்த நவீன பாலர் கல்விக்கூடங்களை அமைத்து நடத்தி வருகின்றோம் என்று இங்கு கூறுவதற்கில்லை. அன்றியும் பாலர் கல்வியில் ஈடுபடும் வேறு சில தாபனங் களைப் போன்று சர்வதேச சமூக அமைப்புக்களிடமிருந்தோ, மதத்தாபனங்களிடமிருந்தோ, உள்ளூர் சமூக அமைப்புக்களிட மிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ பொருளாதார உதவி களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும் அல்ல. ஆயினும்கூட, நாம் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கை, நல்லபிமானம் என்னும் அத்திவாரத்தில் நின்றுகொண்டு கல்விப் பணியில் எமது சக்திக்கு மேல் சாதனைகள் படைத்துள்ளோம்.
எமது பாலர் கல்விக்கழகம் “பிள்ளைகளைப் பிள்ளை களாகவே காண்கிறது;” “பிள்ளைகளைப் பிள்ளைகளின் கண்கொண்டே பார்க்கின்றது;” “பிள்ளைகளிடம் பிள்ளைகள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே உறவாடுகின்றது" மொழி என்னும்பொழுது பேச்சு மொழி மட்டுமன்றி, குழந்தைகளின் கண்வீச்சு, கையசைவு, கால் அசைவு, உடல் அசைவு ஆகிய வற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்கும் உள்ளக்கிடக்கைகளை உணர்ந்துகொண்டு அவர்களுக்கான பணியினைப் பயனுடன் ஆற்றிவருகின்றது.
வெள்ளிவிழாக் கண்டு பொன்விழாக் காண ஏறுநடை போடும் கழகம் எமது கழகக் காப்பாளர்களில் ஒருவரான திரு இ. சிவானந்தன் அவர்கள் குறிப்பிடுவதுபோல் "பாலர்கள் ஆசையுடன், உற்சாகத்தோடு ஈடுபடும் ஆக்க விளையாட்ட கங்களாக பாலர் கல்விக் கூடங்களை மாற்றி அமைக்கும் புத்தாக்கப் பணியில் தொடர்ந்துவரும் ஆண்டுகளில் பணி யாற்ற உறுதி பூண்டுள்ளோம்." அதற்கான திட்டங்களும் எம்மகத்தே கொண்டுள்ளோம்.

Page 66
எண்னக்கோலங்கள் 128
இம்மலர் சிறப்புற வெளிவர ஆசிகள் வழங்கிய பெரியோர்களுக்கும், மலரில் ஆக்கங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வழங்கிய கல்வியியலாளர்களுக்கும், பொருளுதவிகள் நல்கிய அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இம்மலரினை அழகுற அமைத்துக் கொடுக்க உழைத்திட்ட ஹட்டன் பி. பி. அச்சக ஊழியர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எம். நன்றி.
* யாழ்ப்பாணம் பாலர் கல்விக் கழகத்தின் வெள்ளிவிழா மலரில் எழுதியது. (1991)

சுதந்திரம் சுதந்திரம்! சுதந்திரம்!
(திரை விலகும்பொழுது மேடையில் ஒளி மங்கலாக இருந்து படிப்படியாகப் பிரகாச மாகிறது. நாடக மாந்தர்கள் வலதுபக்க பின்புற மேடையில் இருந்து, மேடையின் மத்திய பகுதி ஊடாக மத்திய முன் மேடையை அடைகின்றனர்)
ஆண்கள் : சுதந்திரம் சுதந்திரம்
(எண்ணிக்கை சுதந்திரம் அரங்க
வசதிக்கு ஏற்ப) இதுவே
எங்கள் தாரக மந்திரம்
மந்திரம் மந்திரம்
மந்திரம்
இப்பாடலை பாடல் குழுவினர் நாடக
மாந்தருடன் சேர்ந்து பாடுகின்றனர்)

Page 67
6T6coTecords(35TGorrissir 130
பெண்கள் சமத்துவம் சமத்துவம்
சமத்துவம்
- நாம்
காண விளைவது
சமத்துவம் இப்பாடலை பாடல் குழுவினர் நாடக மாந்தருடன் சேர்ந்து பாடுகின்றனர்)
ஆண்கள் சகோதரத்துவம்
என்றொரு தத்துவம் (2ம் தொகுதி) நாம்
(எண்ணிக்கை அரங்க பேண நினைப்பது
வசதிக்கு ஏற்ப) நித்தியம் நித்தியம் நித்தியம் (மூன்று குழுக்களும் இணைந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்று, பாடல் குழுவினருடன் முழுமையாகப் பாடுகின் றனர். பாட்டின் ஒசை படிப்படியாகக் கரைய பின்புற மேடைக்கு பாட்டின் ஒசைக்கு ஏற்ப நாடக மாந்தர் நகர்கின்றனர்.
அப்பொழுது ஒரு வழிப்போக்கன் வல முன்மேடை வழியாக வருகின்ற7ர். நாடக மாந்தர் அனைவரையும் முன்னும் பின்னும் நகர்ந்து ப7ர்த்துவிட்டு) வழிப்போக்கன் : இதென்னடா கூத்து. /மேடையில் இருப்பவர்களைப் பார்த்து அவர்கள் தாங்கி இருக்கும் அட்டைகளை வாசித்து சுதந்திரம் சமத்துவம்!! சகோதரத்துவம்!!! இதெல்லாம் என்ன? பெரிய பெரிய விசயங்களாகக் கிடக்குது!
(சிறிது யோசித்துவிட்டு)
நல்ல நல்ல விஷயங்களாயுமல்லோ இருக்குது.

131/ சந்திரபோஸ்
/சிறிது மேடையில் முன்பின் அசைந்த பின்னர்)
அப்ப. இதுதானே எங்களுக்கு
வேண்டும் இப்ப.
சனங்களே, சனங்களே!
வாருங்கள் சுதந்திரம் (வழிப்போக்கன் பெறுவோம் வாருங்கள் பார்வையாளர்களைப் இனங்களே இனங்களே பார்த்து பாடுகின்றார்). கூடுங்கள்
சமத்துவம் காண்போம் கூடுங்கள் சமத்துவம் காண்போம் கூடுங்கள் மக்களே மக்களே சேருங்கள் சகோதரத்துவம் நாடுங்கள்.
(பல திசைகளிலுமிருந்து ஆண்களும், பெண்களும் சிறுவர், சிறுமியரும் மேடைக்கு வந்து சேருகின்றனர்.
எல்லோரும் சேர்ந்து குசுகுசவெனப் பேசுகின்றனர். ஒசை இல்லை/
தலைவன் : ஆகா! மக்கள் எல்லோரும் வந்து விட்டார்கள், இணைந்து விட்டார்கள், அங்கீகாரம் வழங்கிவிட்டார்கள். sg95T.I. 235ft.
ஒருவன் : ஆகா என்றெழுந்தது யுகப்புரட்சி.
இங்கு எல்லோருமே எம்கட்சி.
அடிமை விலங்கினை அறுத்திடுவோம். விடுதலை விதைகளை
விதைத்திடுவோம்.
இப்பாடலை எல்லோரும் சேர்ந்து பாடுதல்)

Page 68
areb record Coronwendr II 132
navavar சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த வீரர்களே! வீராங்கனை களே, சூரர்களே! சூராங்கனைகளே! தீரர்கள்ே, தீராங்கனைகளே! எமது அடிமை விலங்கினை ஒடிக்க, அனை வரும் ஒன்றுபடுவோம். போரிடுவோம். வெற்றி அல்லது வீரமரணம், வெற்றி அல்லது வீரமரணம். இது உறுதி.
பொது சனங்களில்
ஒருத்தி ஆம். பூட்டிய விலங்குகள் ஒடிக்கப் படவேண்டும். அடிமைத்தளைகள் அறுக்கப்படல் வேண்டும். எம்மைச் சுரண்டி எமது உழைப்பினைச் சுரண்டி உல்லாசபுரி அமைத்து வாழும் உலுத்தர் களின் புழுத்துப்போன அரசியல் சித் தாந்தம், ஆட்சிமுறை அழிய வேண்டும். எமக்கு வேண்டும் சுதந்திரம் எமக்கு வேண்டும் சமத்துவம்! எம்மிடையே சகோதரத்துவம் மலரவேண்டும்!
2ம் பெண் சமாதானப்புறா சுதந்திரக் காற்றினைச் சுவாசித்துக்கொண்டு இம்மண்ணில் வலம் வரல் வேண்டும். அதற்காக நாம் GBuntilGSGBantub.
வழிப்போக்கன் : ஆமாம். நாம் சுதந்திரம் பெறுவதற் காகப் போரிடுவோம். சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகப் போரிடுவோம். சகோதரத்துவத்தைப் பேணுவதற்காகப் போரிடுவோம்.

பொதுமக்கள்
(குழுப் பாடலாகத் தொடர்கிறது)
133 / சந்திரபோஸ்
எம்மை அடக்கி ஆளும் எதிரியை ஒழித்துக்கட்டப் போரிடு வோம். நீதியை
நிலைநாட்டப் போரிடுவோம்.
GBumtrinGSGBantub.
போரிடுவோம் நாம் G3 untifiOSGSaintib. போரிடுவோம் நாம் போரிடுவோம். பொல்லாத எதிரியை இல்லாமல் செய்ய
போரிடுவோம் நாம் GuntrfQGauntb. நல்லோர்கள் வாழும் நாட்டினை அமைக்கப் போரிடுவோம் நாம் போரிடுவோம். இல்லாத நிலையை இல்லாமல் செய்ய
எல்லோரும் வாழும் பொன்பூமி அமைக்கப் போரிடுவோம் நாம் GuntrfCBGauntil
(என்று பாடி ஆடுகின்றனர். அப்பொழுது விசித்திர உருவத்துடன் வேறு ஒரு குழுவினர் அங்கு வந்து சேருகின்றனர்)

Page 69
எண்னக்கோலங்கள் 134
வந்தவர்களில்
ஒருவர்
பொதுமக்களில்
ஒருவர்
வந்தவரில்
ஒருவர்
பொதுமக்கள்
வந்தவர்களுள்
மற்றொருவர்
பொதுமக்கள்
வந்தவரில்
மற்றொருவர்
பொதுமக்கள்
வந்தவரில்
முதல்வர்
நன்று நன்று உங்கள் செய்கை நன்று நன்று
செய்கை நன்று நன்று நானிலத்தார் போற்றும் செய்கை வென்றிடுவீர்!
நீங்கள். ஆனால்
ஆனால்
ஆனால். ஆனால்
எதிரியோ, பலவான்
ஆமாம் பலவான்
; அவன் அரசியல் சாணக்கியன்,
: ஆமாம். அரசியலில் சாணக்கியன்
நின்று பேச நேரமில்லை
சோலிகளோ எமக்கு நிறைய உண்டு உண்டு. . . . உண்டு. ஆயினும்
ஆயினும், ஆயினும்.
தொன்று தொட்டு உங்களுடன் தொடர்ந்து

பொதுமக்கள்
135 / சந்திரபோஸ்
வந்த உறவினர் நாம்
ஒன்று விட்ட சகோதரர்கள் உறவு முறையில்
உங்களுக்கு (எல்லோரும் ஆச்சரியமாக ஒன்றுவிட்ட சகோதரர்கள்.
/பொதுமக்கள் சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்கின்றனர்/
முதல் குழுத்
தலைவர்
வந்தவரில்
முதல்வர்
வந்தவரில்
ஒருவர்
பொதுசனம்
(மேடையின் முன்வந்து)
சற்று பொறுங்கள். சற்று பொறுங்கள். எனக்கென்னவோ சந்தேகம், இவர்கள் ஏன் உதவிசெய்ய நாம் அழைக்காமலே வருகிறார்கள்?
தம்பி என்ன யோசிக்கிறார்?
உற்றார் நாம், இரத்தத்தின் இரத்தங்கள் நாம் இன்னும் என்ன யோசனை. ஒன்றுபட்டு போரிடுவோம். மாற்றானை அழிப்போம்.
எம்மண்ணை மீட்போம்.
தம்பிக்கு எப்பவும் யோசனைதான், எதிலும் சந்தேகம்தான்.
ஓம். ஓம். ஓம். அவர்கள் சொல்வது போல் சேர்ந்து போரிடுவோம்.

Page 70
எண்னக்கோலங்கள் ! 136
முதல்
குழுத்தலைவன் :
பொதுமக்கள்
எனக்கெண்டால் இவையிலை நம்பிக்கை இல்லை. ஆனாலும் பொதுசனங்களின் விருப்பத்திற்காக.
சேர்ந்து போரிடுவோம் சேர்ந்து போரிடுவோம் அந்தப் பொல்லாத எதிரியை இல்லாமல் செய்யச் சேர்ந்து போரிடுவோம்.
GLumff . . Gl umff
(உக்கிரமான போர் அவலச்சத்தங்கன், துப்பாக்கி வேட்டுக்கள் சத்தங்கள். மேடையில் யுத்தக் காட்சி நிழலாடுகின்றது
முதற் குழு
வந்த குழுத்
தலைவர்
முதற்குழுத்
தலைவர்
முதற் குழுத்
தலைவர்
வெற்றி! வெற்றி! வெற்றி!!! வெற்றிமேல் வெற்றி திக்கு எட்டும் புகழவே சுற்றிவந்த பகையினை - எம்
சூரர்கள் முறியடித்தனர்.
நிறுத்து, நிறுத்து.
ஆ. யார்? யார்?. அது?
நாங்கள்தான்
நாங்களேதான்
சுற்றிவந்த பகையை

பொதுமக்கள்
வந்தவர்கள்
பொதுமக்கள்
வந்தவர்கள்
பொதுமக்கள்
முதல் குழுத்
தலைவர்
137 / சந்திரபோஸ்
நாமே முடித்தோம் ஆம், நாமே முடித்தோம். சரி. அப்படியே நீங்கள் வென்றாலும், எங்கள் உடன் பிறப்புகளான உங்கள் வெற்றி எங்கள் வெற்றியல்லவா?
நீங்கள் எங்கள் உடன் பிறப்புகள் தான் இரத்தத்தின் இரத்தங்கள்தான் அதில் சந்தேகம் இல்லை.
இன்றுமில்லை
அன்றுமில்லை
ஆனால் வெற்றி
எங்களது: வெற்றி
எங்களது.
அப்போ எமது
சுதந்திரம், சமத்துவம்.
சகோதரத்துவம். . . .
Զ0. ԶՈ). ՋԱpn.
நாங்கள் தரும்போது
பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆ. . . . என்ன . . .?
எங்கள் மக்களை வஞ்சக வலையில் சிக்கவைத்து எங்கள் உதிரத்தில் நீச்சல் அடித்து விளையாட நினைக்கும் நீசர் களே, எங்கள் இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

Page 71
எண்னக்கோலங்கள் 138
பொதுமக்கள்
ம் அணி
மீண்டும்
2ம் அணி
3ம் அணி
நீங்கள் தரும் பிச்சை எங்களுக்கு வேண்டியதில்லை.
ஆம். ஆம்
போராடுவோம் தொடர்ந்து போராடுவோம் . பொல்லாத எதிரிகளை இல்லாமல் செய்ய போராடுவோம்.
சுதந்திரம்!
சுதந்திரம்! சுதந்திரம்!
சமத்துவம்!
சமத்துவம்
சமத்துவம்!
சகோதரத்துவம்!
சகோதரத்துவம்!
சகோதரத்துவம்!
/மேடையில் ஒளி பிரகாசமாக இருந்து சிறிது சிறிதாக மங்கிச்
செல்கிறது)

பசுஞ்சோலையில் ஓர் ULLOOb
இருபத்தியெட்டு வயதுக்குள் இவனுக்கு இப்படி ஒரு கொள்ளைநோய் வர வேண்டுமா? ஆண்டவனே! உனக்கென்ன கண்களே தெரியாதா? கருணையே இல்லையா? இந்தச் சின்னம் சிறுவயதில் பென்னம் பெரிய தண்டனை ஏன்? இப்பொழுதுதானே இவன் வாழ்வே ஆரம்பிக்கின்றது.
கண்ணீர் ஆறாகப்பெருக இறைவன் சன்னிதியில் உள்ளக் குமுறலுடன் வார்த்தைகள் உடைந்து உடைந்து வரு கின்றன. வேதனையுடனும், வெப்பியாரத் துடனும் மரகதம் துர்க்கையம்மன் ஆலயத்தில்.
மரகதத்தின் கணவர் சிவஞானம் மனத் துக்குள் இறைவனை மன்றாடிக் கொண்டு மனைவியின் அருகே சோகமே உருவாக நிற்கின்றார்.

Page 72
எண்ணக்கோலங்கள் 140
தங்கள் மகனின் வாழ்நாள் எண்ணப்பட்டு வருவதாக டாக்டர்கள் பலரும் கூறிக் கையை விரித்துவிட்டால் எந்தத் தாய், தந்தைதான் அதைத் தாங்கிக் கொள்வார்கள்.
சிவஞானம் - மரகதம் தம்பதிகளின் கடைக்குட்டி பிரகாஸ். கொழும்பில், வெள்ளவத்தையில், பிரபல தங்கநகை வர்த்தகர் சிவஞானம். நல்ல வசதிகளுடன் கொழும்பில் வாழ்ந்து வந்த குடும்பம், மூத்தமகன் ஈஸ்வரன் பத்து வயது. சென்தோமஸ் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது மகள் சாந்தி வயது ஆறு. ‘பிஷப்ஸ் பெண்கள் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்று வந்தாள். கடைக்குட்டி பிரகாஸ் வயது நான்கு. பாலர் பாடசாலைக்குச் செல்பவன்.
1983 ஜூலை ஜேஆர். ஜெயவர்த்தனாவின் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழ்இன அழிப்பினால் பாதிப்புற்று சிவஞானம் குடும்பம் புலம்பெயர்ந்து கனடா வந்து ரொரன் ரோவில் குடியேறினர்.
ரொரன்ரோவில் “வெலஸ்லியன் பார்லிமென்ட்” பகுதியில் ஓர் தொடர்மாடிக் குடியிருப்பில் தமது வாழ்க் கையை ஆரம்பித்தனர். ஆரம்ப கனடா வாழ்வில் சில அசெளகரியங்களை எதிர்நோக்கியபோதிலும் படிப்படியாக ஓரிரு ஆண்டுக்குள் கனடா வாழ்க்கை முறைக்கேற்ப வாழத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.
பிள்ளைகள் மூவரும் பாடசாலைகளில் சேர்க்கப் பட்டனர். சிவஞானம் “ரொரன்ரோ ஜெரால்ட் வீதியில் அமைந்துள்ள இந்தியன் பஜாரில் ஒரு நகைக்கடையினை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சுமாராக இருந்த வியாபாரம் படிப்படியாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சிவஞானம் அவர் களுக்கு மனைவி மரகதம் வீட்டு நிர்வாகத்திலும் சரி, வியா பாரத்திலும் சரி உறுதுணையாக விளங்கினார். இதனால்

141/ சந்திரபோஸ்
பிள்ளைகள் கல்வியில் ஆர்வமுடன் முன்னேறவும், வியாபாரம் சிறக்கவும் குடும்ப பொருளாதார நிலை வளரவும் வாய்ப் புக்கள் ஏற்பட்டன.
வியாபாரத்தின் நிமிர்த்தம் சிவஞானம் சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களுக்குச் சென்று நவீன நாகரீகத்திற்கு ஏற்ப அழகிய தங்க நகைகளைக் கொள்வனவு செய்து வந்து நியாய விலைகளில் விற்றுப் படிப்படியாக முன்னேறி, கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வர்த்தகத்துறையில் முக்கிய பிரமுகரானார்.
காலச்சக்கரம் மிக வேகமாக ஓடி ஆண்டுகள் பல கடந்தன. சிவஞானம் குடும்பம் ஸ்காபரோவில் சொந்தமாக ஒரு “பங்களா' வாங்கி வசித்துவந்தனர். அத்துடன் அச்சகம் ஒன்றினையும் ஆரம்பித்து நடத்தி வந்தார்.
மூத்தமகன் ஈஸ்வரன் மின்துறைப் பொறியியலாளராகி கனடாவில் பிரபல்யமான மோட்டோர்கார் உற்பத்திக் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். மகள் சாந்தி கணக் கியற்துறையில் பட்டம் பெற்று கனேடிய வருமான வரித் துறையில் பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவருக்கும் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப பொருத்தமான மண மக்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் ஆசீர்வாதங்களுடன் திருமணம் செய்து வைத்தனர்.
ஈஸ்வரன் தனது மனைவியுடன் மிகசாக்காவிலும், சாந்தி தனது கணவருடன் ஸ்காபரோவிலும் புதிய வீடுகள் வாங்கிக்கொண்டு சந்தோசமாக இல்வாழ்வில் ஈடுபட்டனர்.
கடைக்குட்டியான பிரகாஸ் தற்பொழுது இருபத்தி ஏழு வயதைப் பூர்த்தி செய்த இளைஞன். வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றுத் தந்தைக்கு உதவியாக வியாபார முயற்சிகளில் ஈடுபட்டான். பிரகாஸ் மிகச் சின்னவயதில்

Page 73
எண்னக்கோலங்கள் I 142
கனடா வந்தபோதிலும் தமிழ்மொழியினை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தான். அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு மொழி களிலும் நன்கு பாண்டித்தியம் பெற்றிருந்தான். இயல்பாகவே இலக்கிய ஈடுபாடு உடையவனாகவும், ஓர் இலக்கியச் சுவைஞனாகவும் இருந்தான். நவீன கவிதைத்துறையிலும் நாட்டம் உள்ளவன். அவ்வப்பொழுது தமிழில் புதுக்கவிதை களும் எழுதி வந்தான்.
சிவஞானம் அவர்கள் நடத்திவந்த நகைக்கடை வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற போதிலும், அச்சகத் தொழில் மந்தமாகவே இருந்தது.
வாழ்க்கையில் சாதனைகள் படைக்கவேண்டும் என்ற ஆர்வம் உடையவனாகவும் இயல்பான தொழில்நுட்ப ஆற்றலும், வர்த்தகத்துறையில் பட்டப்படிப்புமுள்ள பிரகாஸ், தந்தையின் அச்சகத்தைத் தான் பொறுப்பேற்று அத்தொழிலை முன்னேற்றப் பலஉத்திகளைக் கையாண்டு கடினமாக உழைத்தான். நவீன அச்சுக்கலை பற்றி நிறையவே வாசித்தான். கணினி வலை அமைப்புக்கள் மூலம் பல அரிய தகவல்களைப் பெற்றுக்கொண்டான். நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றை ஜேர்மனியில் இருந்து தருவித்ததுடன் அச்சகத்தையும் புதுப்பொலிவுறச் செய்தான். வியாபாரத்தைப் பெருக்குவதற்காகப் பல கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரித்து வினியோகித்தான். இதனால் தமிழ், ஆங்கில மொழிகளிலான பல்வேறு அழைப்பிதழ்கள், விளம்பர வெளியீடுகள், நூல்கள், வாராவாரம் வெளியிடும் பத்திரிகைகள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுக்கும் ஒப்பந்தங்கள் பலவற்றைப் பெற்று தொழிலில் முன்னேற்றம் கண்டான்.
தொழில் பெருகவே அச்சகத்தில் பணிபுரியவும்,
நிர்வாகம் செய்யவும் என மூவரைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டான். அதில் இருவர் ஆண்கள். அண்மையில்

143 / சந்திரபோஸ்
ஜேர்மனியில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இளை ஞர்கள். ஜேர்மனியில் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு நல்ல அனுபவஸ்தர்கள். மற்றவர் பெண்.
புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ‘தீபா அலுவலக நிர்வாகம் சம்பந்தமாகக் கல்லூரிப் படிப்பினை முடித்தவள். இருபத்தி ஐந்து வயது நிரம்பியவள். மோகம், மோகனம் பாடும் அழகு. கன்னங்களில் குழிவிழச் சிரிக்கும் கவர்ச்சி. "பாலிலும் வெண்மை. பணியிலும் மென்மை’ என்று, கண்ணதாசன் கவிதைக்கு இலக்கணமானவள். அன்னிய ரையும் கவரும் கண்ணியமான பேச்சு அச்சகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளரை அன்புடன் உபசரித்து அவர்கள் தரும் வேலைகளை பொறுப்புடன் பெற்று அழகுற, மிக நேர்த்தியாகக் குறித்த காலத்திற்குள் செய்வித்துக் கொடுக்கும்
லாவண்யம்,
தீபாவின் வரவு பிரகாசுக்கு வேலைப்பளுவைக் குறைத்தது. அச்சகத்தை நேர்த்தியாக தீபா நிர்வகித்து வந்தமை யினால் பிரகாஸ் தனது தொழிலை மேலும் வளர்க்கவும், தந்தையின் தொழிலில் உதவிகள் செய்யவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. தீபாவின் ஆலோசனையின் பெயரில் பிரகாஸ் ரொரன்ரோவில் இயங்கிவரும் பெரிய வர்த்தக நிலையங் களோடு தொடர்புகொண்டு அவ்வர்த்தக ஸ்தாபனங்களின் வாராந்த விளம்பரத்தாள்களை (Flyers) அச்சிட்டு வழங்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொண்டான். இதனால் இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கும் தொழில் தாபனமாக அச்சகம் மாறியது. இதனால் பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் இன்னும் சிலர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு வாரத்திற்குமுரிய வேலைகளை தீபா திட்டமிட்டு வழங்கி விடுவாள். அதன்படி வேலைகள் யாவும் இலகுவாக எதுவித தடங்கலுமின்றி நடைபெற்று வந்தன. அச்சுத் தொழிலில் வாடிக்கையாளரிடம் நல்லபெயரை சம்பாதித்துக் கொண்டனர்.

Page 74
எண்னக்கோலங்கள் ! 144
மகனின் துரிதவளர்ச்சி கண்டு சிவஞானமும் மரகதமும் பொங்கிப் பூரித்தனர். சில சமயங்களில் சிவஞானம் தம்பதிகள் காலையில் கோவிலுக்குச் சென்று வரும் வழியில் அச்சகம் சென்று மகனின் வளர்ச்சியினை அவதானித்து வருவார்கள். அவ்விதம் சென்று வரும்பொழுதெல்லாம் தீபாவுக்கு கோவில் பிரசாதத்தினைக் கொடுப்பதுடன், சிறிது நேரம் தீபாவுடன் உரையாடி வருவார்கள்.
தீபாவுடன் ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக சிவஞானம் குடும்பத்தவர்களுக்கு நெருக்கமாகியது. தீபாவின் பெற்றோர் "மார்க்கம்' பகுதியில் வசித்து வந்தனர். தீபா குடும்பத்தில் மூத்தவள். ஒரு தம்பியும், தங்கையும் அவளுக்கு உண்டு. தம்பி பல்கலைக்கழகத்திலும், தங்கை கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். தீபாவின் தந்தை நடராஜா றோயல் வங்கியிலும், தாயார் மொன்றியல் வங்கி ஒன்றிலும் வேலை பார்த்து வந்தனர். தீபாவுடன் அடிக்கடி சிவஞானம் குடும்பம் பேசிக்கொண்டதில் இருந்து சிவஞானம் அவர்களுக்கு ஒரு வகையில் தூரத்து உறவினர்கள் என்ற விபரமும் தீபாவின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது. தீபாவுடன் ஏற்பட்ட பழக்கம் காலப்போக்கில் தீபாவின் குடும்பத்தவர்களுடன் சிவஞானம் குடும்பம் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியது. இரு குடும்பங்களும் மிகவும் அன்னியோன்னியமாக உறவாடத் தொடங்கினர்.
இக்குடும்ப உறவு பிரகாஸ் - தீபாவிடமும் தொழில் தாபன உறவினைத் தாண்டி ஒரு நெருக்கத்தினை ஏற்படுத் தியது. ஒவ்வொரு வார இறுதியிலும் இரு குடும்பங்களும் சந்தித்துக்கொண்டன. பிரகாசின் சகோதரர் ஈஸ்வரன் குடும்பமும், சகோதரி சாந்தி குடும்பமும் சிலவாரங்களில் ஒருங்கு கூடி மகிழ்வார்கள்.
தீபாவை மருமகளாக்கிவிட வேண்டும் என்று மரகதம் ஆவலாக இருந்தார். பிரகாஸ் தாயின் ஆசையினை நிறை

145 / சந்திரபோஸ்
| ş.
ருந்தான். தீபாவும் பிரகாஸைத் தீவிரும்பினாள். இரு குடும்பங் களும் ஒரு நல்ல நாளில் கூடி திருமணத்திற்கான நாள்களைக் குறித்தனர். பிரகாசும் தீபாவும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் முடிந்தபின்னர் தினமும் மாலை வேளையில் தீபாவும் பிரகாசும் ஒன்றாகவே பிரகாஸ் வீட்டுக்குத் திரும்புவார்கள். தீபாவை மரகதம் விழுந்து விழுந்து உபசரிப்பார். தீபா மரகதத்திற்கு மாலைச் சிற்றுண்டிகள் தயாரிப்பதிலும், இரவு சமையலுக்கும் உதவிகள் செய்வாள். சிலவேளைகளில் பிரகாஸ் அறையினை அழகுற வைப்பாள். பிரகாஸ் எழுதித் தனது மேசையில் வைத்துள்ள கவிதைகளை எடுத்து வாசித்துப் பிரகாசைப் பாராட்டுவாள்.
"ஏன் பிரகாஸ் இவற்றை எல்லாம் ஒரு கவிதைத் தொகுதியாக வெளியிடலாமே" என்று தீபா கூறியபோது, "அப்படி ஒன்றும் நான் பெரிய கவிஞன் இல்லையே! அது மட்டுமன்றி, நான் எழுதி வைத்திருக்கும் கவிதைகள் சிலவே எனது ஆக்கம்; மற்றவை சில நான் இரசித்த பல்வேறு எழுத்தாளர்களின் கவிதைகள். எல்லாக் கவிதைகளையும் எனது கவிதைகள் என்று அச்சுவாகனம் ஏற்றினால் என்னை இலக்கியத் திருடன் என்றல்லவா உலகம் நையாண்டி செய்யும்’ என்று கூறினான் பிரகாஸ்.
இவ்வாறு இருவரும் மனம்விட்டுப் பேசி மகிழ்வர். கருத்தொருமித்த காதலர்களாக இருவரும் அன்பினில் திகழ்ந் திருத்தலைக்கண்டு இரு குடும்பமும் அகமகிழ்ந்தனர்.
இவ்வாண்டு தை மாதத்தில் ஒரு மங்கல நாளில் பிரகாஸ் - தீபா திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தின் பின்னர் பிரகாஸ் - தீபா சிவஞானம் குடும்பத்தினருடன் இருப்பதாகத் தீர்மானித்திருந்தனர்.

Page 75
எண்னக்கோலங்கள் 146
திருமணம் முடிந்த மறுநாள் தேனிலவுக்காக ஹவாய்' தீவுக்குச் சென்ற மணமக்கள் ஒருவாரம் கழிந்த பின்னர் வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் தேனிலவு சென்று வந்தமையை மறுவீட்டு அழைப்புப்போல பிரகாசின் அண்ணன் ஈஸ்வரன் குடும்பமும், அக்கா சாந்தியின் குடும்பமும், அப்பா அம்மாவுடனும், தீபாவின் பெற்றோர் சகோதரர்களுடனும் சேர்ந்து அமர்க் களமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சிவஞானமும் மரகதமும் தம் பிள்ளைகளின் நல்வாழ்வு கண்டு பூரித்திருந்தனர்.
ஒரிரு வாரங்கள் ஓடி மறைந்தன. காலையில் அச்சகத்திற்குச் செல்ல தீபா தயாராகிக்கொண்டிருந்தாள். பிரகாஸ் சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்ததைக் கண்ட தீபா திடுக்குற்றவளாய், ‘என்ன பிரகாஸ் செய்கிறது? ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்?’ என்று கேட்டாள்.
“எனக்கு ஒன்றுமில்லை. இலேசாகத் தலைசுற்றுவது போல் இருக்கின்றது. நான் சிறிது ஒய்வெடுத்துவிட்டு வருகின்றேன். நீர் அச்சகத்திற்குச் செல்லும். அங்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று பிரகாஸ் பதிலளித்தான்.
தீபா புறப்பட்டுச் செல்கையில் மரகதத்திடம், பிரகாஸ் சோர்வாக இருப்பதால் அவரை வீட்டில் இருந்து ஒய்வெடுக்கும்படி பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அச்சகத்திற்குப் போய் வருவதாக கூறிச் சென்றாள்.
பிரகாசின் அறைக்குச் சென்ற தாயார், பிரகாஸ் கட்டிலில் சாய்ந்தபடி கண்களை மூடியபடி இருந்ததைக் கண்டு அவனது நெற்றியில் கையை வைத்துப் பார்த்த வண்ணம் "என்ன மகனே செய்கின்றது?” என்று வாஞ்சை யுடன் கேட்டாள்.

147 / சந்திரபோஸ்
“ஒன்றுமில்லையம்மா, இலேசான தலைவலி" என்றான்.
“ஒரு கோப்பி போட்டுக்கொண்டு வருகின்றேன்” என்று கூறி சமையல் அறைக்குச் சென்று கோப்பியுடன் வந்த மரகதம் மகன் இருந்த நிலை கண்டு அலறினாள். அவள் அலறல் சத்தம் கேட்டு சிவஞானம் விரைந்து வந்தார். அப்போது அங்கு பிரகாஸ் மூக்குவழியாக இரத்தம் கசிய மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு பதற்றமுற்றார். உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டு 911க்கு போன் செய்தார். மனைவி மரகதத்தையும் சமாதானப்படுத்தினார்.
சிறிது நேரத்தில் அம்புலன்ஸ் வண்டியும், முதல் உதவிக்குழு, தீ அணைப்பு வாகனம், பொலீஸ் ஆகியன ஒலிகள் எழுப்பியவண்ணம் சிவஞானம் வீட்டை வந்த டைந்தன. பிரகாசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்காபரோ வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு பல பரிசோதனைகள் எடுக்கப்பட்டு பின்னர் நோயாளிகள் தங்கும் தனியறைக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில் தீபாவும், தீபாவின் பெற்றோரும், பிரகாசின் சகோதரர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு விரைந்தனர். மயக்கம் தெளிந்து கண்விழித்த பிரகாஸ் எல்லோ ரையும் பார்த்ததில் கலவரம் அடைந்தான். ஆயினும் மனதில் தெம்பை வரவழைத்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் இருந்த தீபாவையும், தாயாரையும் பார்த்து, ‘எனக்கு ஒன்று மில்லை. சற்று ஒய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் எல்லோரும் கவலைப்படாமல் வீடு செல்லுங்கள்’ என்று கூறினான்.
ஈஸ்வரனும், சிவஞானமும் பிரகாசின் பரிசோதனை முடிவுகளை அறிய டாக்டரைச் சந்தித்தனர். டாக்டர் கூறிய விடயம் அவர்களுக்குப் பேரிடியாக இருந்தது. பிரகாசுக்கு இரத்தப் புற்றுநோய்; அவன் வாழும் காலம் மிகக் குறுகியது

Page 76
எண்னக்கோலங்கள் 148
என அறிக்கைகள் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.
முதலில் இவ்விடயம் மற்றவர்களுக்கு மறைக்கப்பட்ட போதிலும் நாளாக நாளாக தீபா உட்பட குடும்பத்தில் அனைவரும் அறிந்துகொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கிடையில் பிரகாஸ் சிலநாட்கள் வீட்டிலும், பின்னர் வைத்தியசாலையில் கழிப்பதுமாகக் காலம் கடந்தது. தீபா முழுநேரமும் பிரகாசைப் பராமரித்து வந்தாள்.
பிரகாசும் தன் நோயைப்பற்றி அறிந்திருந்தபோதிலும், மற்றவர்கள் சஞ்சலப்படக் கூடாது என்பதற்காகத் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் எனவும் காட்டிக் கொள்வான்.
அதேபோன்றே குடும்பத்தவர்கள் அனைவரும் பிரகாஸ் முன்னிலையில் தமது கவலைகளை மனதுக்குள் புதைத்துக் கொள்ள எத்தனிக்கும் ஓர் மெளன நாடகம் அங்கே அரங் கேறும். ஆயினும் மரகதம் தம் மகனைப் பார்த்ததுமே அழுது அரற்ற ஆரம்பித்து விடுவார். தீபாவும் அத்தகைய சந்தர்ப் பத்தில் தன் மனதை எவ்வளவுதான் கட்டுப்படுத்த முயன் றாலும் கண்கள் அவளை அறியாமலே கலங்கிவிடும்.
இந்த நிலையிலும் பிரகாஸ் ஏதாவது புத்தகங்களை வாசித்துக் கொண்டும், சிலவேளைகளில் ஒரு டயரியை வைத்துக்கொண்டு சில கவிதை வரிகளை கிறுக்கிக் கொண்டும் இருப்பான். ஆனால் அவை முற்றுப்பெறாத கவிதைகளாகவே அமைந்திருக்கும். சில தான் வாசித்து இரசித்த கவிதைகளின் சில வரிகளாகவும் இருக்கும்.
கடந்த வாரத்தில் பிரகாசின் உடல்நிலை மிக மோசமாகி விடடது. வைத்தியமோ, பிரார்த்தனைகளோ பயனற்ற

140 / Payyourrafo
நிலையில் பிரகாசின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. பிரகாஸ் நெஞ்சினில் விரித்தபடி இருந்த டயரியினை எடுத்துப் பார்த்த பொழுது தீபாவின் கலங்கிய கண்கள் வழியே மங்கலாகச் சில கவிதை வரிகள்.
இருமலும் இரணமும7ய் இருந்த இதயத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்க வந்த இன்னோர் இதயம்!
இந்தப் பாலைக்கும் நீர் ஊற்ற நினைத்த கோடைக் கருக்கலில் ஓர் துண்டு மேகம்!
இந்தக் காட்டாற்று வெள்ளத்தை கைடபிடித்து அழைத்து வந்து காதல் படிக்கட்டுகளில் அமர வைத்த என் குட்டிதேவதை!
நான் எதுவரை என்று எனக்கே தெரியாத போதும் எதுவரையோ அதுவரை நானும் என்று சொல்லி என் தாயாகிப் போனவன்
AA fir/
- கவிதை வரிகளைப் படித்து முடித்த தீபா கதறி அழுது மயக்கமுற்றாள். பிரகாசை இழந்த தீபா, பிரகாசம் இழந்த தீபமானாள். பசுஞ்சோலையில் ஓர் பட்டமரம் போல்
ஆகியது தீபாவின் வாழ்வு.

Page 77
நழுவிய சீதேவி
இருபத்தி எட்டு வயது இளைஞன் சங்கர். தாயகத்திலிருந்து கனடா வந்து ஆண்டுகள் மூன்று ஓடி மறைந்துவிட்டன. நாட்டுப் பிரச்சினைகளும், வீட்டுப் பிரச்சினை களும் ஒன்றுசேர்ந்து துரத்த, பஞ்சையாய், பராரியாய் பல நாடுகளூடாகப் பந்தாடப் பட்டு, பல பிரயத்தனங்களின் பின்னர் கனடா வந்து சேர்ந்தான். வந்தாரை வரவேற்கும் கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரம் சங்கரையும் உள்வாங்கிக் கொண்டது.
தனியாகவே கனடா வந்து அகதிகளாகத் தஞ்சம் புகும் ஈழத்தமிp இளைஞர்களைப் போல், தனியறை வாசம்; உணவுக்காக தமிழர்கள் நடத்தும் உணவு விடுதிகளில் தஞ்சம். ஒரு சிலமணி நேர உறக்கம் தவிர்ந்த பதினாறு முதல் பதினெட்டு மணிநேர வேலை வேலையென இயந்திர

மய வாழ்வு. ‘வாழ்க்கைக்காக உழைப்பு என்ற நியதி மாறி, உழைப்பே வாழ்க்கையாகிவிட்ட நிலை.
இவ்விதம் மாடாக உழைத்து ஓடாகத் தேய்வது, "டொலர்’களைச் சேர்த்துக் குபேரனாகிவிடலாம் என்ற ஆசையினால் அல்ல. தாய்மண்ணை விட்டு வெளியேறிக் கனடா வந்து சேர்வதற்கிடையில் ஏற்பட்ட பல்லாயிரக் கணக்கான "டொலர்கள்’ கடன், அதற்கான வட்டி, சொந்த ஊரிலிருந்து பூரீலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயக் கெடுபிடியால் ஏதிலிகளாக இடம்பெயர்ந்து வன்னியில் வாடிவதங்கும் வயோதிபப் பெற்றோர், சகோதர, சகோதரிகளின் பராமரிப்புச் செலவு எனச் சங்கரின் உழைப்பின் ஊதியம் "குறைநிலை வரவு செலவுத் திட்ட மாகவே அமைந்தது.
சங்கர் வேலை செய்யும் இடங்களில் தன்னை ஒத்த தமிழ் இளைஞர்களின் நிலையும் தனது நிலையை ஒத்த தன்மையில் இருந்ததனை அவதானித்தான். வேலைத்தலத்தில் உணவு இடைவேளைகளின்போது அங்கு வேலை செய்யும் தமிழ் இளைஞர்கள் ஒரு குழுவாகக் கூடியிருந்து பலதும் பத்தும் பேசுவார்கள். சங்கரும் அவர்களுடன் சேர்ந்திருந்து உணவு இடைவேளையைக் கழித்தாலும் பெரிதாக எல்லோ ரிடமும் வளவளப்பாகப் பேசமாட்டான். ஆனால் அனை வரும் பேசுவதைச் செவிமடுப்பான். எல்லோரது பேச்சு களும் பெரிதும் தாய்நாட்டின் யுத்தநிலை, சமாதானப் பேச்சு வார்த்தை, தமது குடும்பநிலைகள், வருமானப் பற்றாக்குறை, ஒரு நேர வேலை, இருநேர வேலை, அதற்குமேலும் ஒருசில மணிநேர பகுதி நேர வேலை என்பவை பற்றியே சுற்றிச் சுழலும்.
இவர்களுக்கு மத்தியில் சுந்தர், கண்ணன் என்ற இரு சுகபோகிகள் இருந்தனர். நல்ல நகைச்சுவையாகப் பேசுவார்கள். அவர்களது வாழ்க்கைச் சித்தாந்தம் மற்றைய இளைஞர்களி

Page 78
லிருந்து வேறுபட்டது. "இஞ்சை பாருங்கடப்பா, எப்பிடியோ நாங்கள் கஸ்டப்பட்டு இந்த நாட்டுக்கு வந்திட்டம், முதலிலை இந்த நாட்டிலை இருக்கின்ற வசதியள், வாய்ப்புக்களை எல்லாம் நல்லா இந்த இளம்வதிலை அனுபவிக்க வேண்டும். இங்கை எல்லாம் நாங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வசதியள் நிறைய இருக்கு ஆரும் இஞ்சை எங்களை அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு கட்டுப்படுத்தவும் முடியாது. சும்மா பழங் கிழவங்கள் மாதிரி பஞ்சப்பாட்டுப் பாடிக் கொண்டிருக்காமல், வாலிபப் பொடியங்களாய் வாழ்க்கையை அனுபவியுங்களடா" என்று சுந்தர் கூறினான்.
சுந்தர் கூற்றுக்கு மறுப்புத் தெரிவிப்பதுபோல் அக் கூட்டத்திலிருந்த ஒருவன் "மச்சான் சுந்தர் நீயும் கண்ணனும் குடுத்துவைத்த செல்லப் பிள்ளைகள்; நீங்கள் அனுபவிக் கின்றீர்கள். நல்லா முசுப்பாத்தி பண்ணுறிங்கள். எங்களுக்கு எவ்வளவு கடமைகள், பொறுப்புக்கள், சுமைகள் எல்லாம்
ம்பியல்லே கிடக்கி ப்போல எங் கூத்தடிக்க முடியுமோ” என்று கூறினான்.
அப்போது கண்ணன் பேச ஆரம்பித்தான்: "மச்சான் நாங்கள் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாகத் தான் இருக்கிறம். உங்களுக்கு மட்டுமே உந்தச் சுமை, பொறுப்பு எல்லாம் இருக்கெண்டு நினைக்கிறீயள்! எங்களுக்கு பெத்தவை, சகோதரங்கள் எண்டு ஊரிலை எங்கடை கையைப் பாத்துக் கொண்டு இருக்கினம்தான். அதுக்காக எல்லாத்தையும் அவைக்காகத் தியாகம் பண்ணிப்போட்டு எங்கடை வாழ்க் கையைத் துலைச்சுப்போட்டு பிறகு எப்ப வாழ்க்கையைத் தேடுறது!”
"சரியாய்ச் சொன்னாய் மச்சான் கண்ணன்" என்ற சுந்தர் தொடர்ந்தான். "இஞ்சை பாருங்கடாப்பா. இந்தக் கனடா நாட்டிலை பணம் சம்பாதிக்கப் பல வழிகள் இருக்கு நானும் கண்ணனும் உங்களைப் போல இரண்டு மூன்று

வேலை என்று ஓடாமல் ஒரு வேலை செய்து வாற பணத்தை வைத்து நாங்களும் பணம் சம்பாதிக்கப் பல வழிகளில் மூளையைச் செலவு செய்து முயற்சிக்கிறம். நீங்கள் உடலை வருத்தி முதுகு முறிய வேலை செய்யிறீங்க! நாங்கள் அப்பிடியே!”
“ஓம்! ஓம்! நீங்கள் இருவரும் ‘கசினோ’ விளையாடு வதற்கும், ‘சுவீப்ரிக்கற் வெட்டுவதற்கும், குதிரைப் பந்தயத் திற்குப் போவதற்கும்தானே உங்கள் மூளையைச் செலவு செய்கிறீர்கள்? ஒருநாளைக்குக் கோப்பிக்குக் கூடக் காசில் லாமல் நடுத்தெருவில்தான் நிற்கப் போகிறீர்கள்" என்றான் மற்றொருவன்.
அப்பொழுது ஆவேசம் வந்தவன் போல் சுந்தர் கூறினான். "இருங்கடா! ஒருநாளைக்கு எனக்கும், கண்ண னுக்கும் பெரிய அதிட்டம் வந்து நாங்கள் பெரிய 'மில்லி யனர்களாக" ஆகுறோமா இல்லையா என்பதைப் பார்க்கத் தானே போகின்றீர்கள்" என்று கூறியபோது உணவு இடை வேளை முடிந்து மணி ஒலிக்கவே மீண்டும் தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது.
இளைஞர்கள் இயந்திரகதியில் இயங்கத் தொடங்கினர்.
மாலை வேலை முடிந்து சங்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அன்று மதிய உணவு வேளையின் போது சகஊழியர்களின் உரையாடலைச் சுற்றியே அவன் நினைவுகள் சுழன்றன.
‘அட! நானும் மூன்று ஆண்டுகள் கனடாவில் கழித்து விட்டேனே. ஆக ஓர் இரு முறைகள் மட்டுமே இந்த சுவீப்ரிக்கற் எடுத்திருக்கின்றேன். அதுவும் ஏன் வீண் செலவு என்று பின்னர் அதனையும் வாங்குவதை நிறுத்திவிட்டேன். தொடர்ந்து வாரம் ஒருமுறை ஒரு "ரிக்கற்’ வாங்கி

Page 79
யிருந்தால் என் பக்கமும் அதிட்டம் வந்திருக்குமோ, என்னமோ!’ என நினைத்துக் கொண்டான்.
சங்கரைப் பொறுத்தவரை கனடா நாட்டில் விற்பனை யாகும் நாளாந்த வாராந்த சீட்டிழுப்புக்கள் பற்றிய அறிவோ, அதிர்ஷ்டம் பற்றிய அபிப்பிராயமோ பெரிதாக இதுவரை இருந்ததில்லை. ஏதோ ‘649’, ‘சுப்பர் 7’ எனச் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கின்றான். அன்றைய மதியநேர உணவுவேளை உரையாடல் வாரம் ஒரு இரண்டு "டொலர் சுவீப்ரிக்கற்’ வாங்கச் செலவிட்டால் என்ன என்ற மன நிலையைத் தோற்றுவித்தது.
வீடு வரும் வழியில் ஒரு ‘சுவீப்ரிக்கற்றுகள்’ விற்பனை நிலையத்திற்குச் சென்று இரண்டு டொலர்களைக் கொடுத்து ஒரு ரிக்கற் கேட்டான். அன்று வெள்ளிக்கிழமையாகையால் கடைக்காரன் ‘சுப்பர் 7 ரிக்கற் ஒன்றைக் கொடுக்க அதனைப் பெற்றுக்கொண்ட சங்கர் வீடு போய்ச் சேர்ந்தான். அந்த வாரம் ‘சுப்பர் 7 ரிக்கற்றுக்கு முதல் பரிசு 12.5 மில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை சங்கருக்கு ஓய்வுநாள். பத்து மணிவரை தூங்கி எழும்பியவன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருவதற்காகப் பல்பொருள் அங்காடி’க்குப் புறப் பட்டான்.
போகும் வழியில் இருந்த சுவீப்ரிக்கற் விற்பனை நிலையத்தைக் கண்டபோதுதான் தான் வெள்ளிக்கிழமை வாங்கிய சுவீப்ரிக்கற்றின் ஞாபகம் வரவே அக்கடைக்குள் நுழைந்தான். அக்கடையில் கூட்டமாக இருக்கவே அங்கு நின்ற ஒருவரிடம் ‘சுவீப்ரிக்கற்றின் வெற்றி இலக்கங்களை எங்கு பெறலாம் எனக் கேட்டான். அதற்கு அந்த நபர் வெற்றி இலக்கங்கள் கொண்ட சீட்டுக்களைக் கொண்ட

பெட்டியினைக் காட்டினார். சங்கர் அதில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியேறி நடை பாதையில் நடந்தவண்ணம் தன்னிடம் இருந்த ‘சுப்பர் 7ல் உள்ள இலக்கங்களையும், வெற்றி இலக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு நடந்தான். அவன் வாங்கிய சுப்பர் 7ல் இருந்த இலக்கங்களில் ஒன்றுகூட அந்த வெற்றிபெற்ற இலக்கங்களாக அமையவில்லை. வெறுப்புடன் ‘சுப்பர் 7 ரிக்கற்றையும், வெற்றி இலக்கம் கொண்ட துண்டினையும் ஒன்றாகச் சேர்த்து நான்காக மடித்தவண்ணம் ஒரு இலக்கம் கூடச் சரியாக வராததிற்காக ஒரு பரிசு தருவார்களேயானால் அது எனக்கே’ என்று எண்ணியவாறு தான் செல்லவேண்டிய பல்பொருள் அங்காடி நோக்கி விரைந்தான். கையில் இருந்து நான்காக மடிக்கப்பட்ட சுவீப்ரிக்கற் சுருள் கீழே விழுந்தது.
கீழே விழுந்த அந்த சுருள் வீசிய மெல்லிய காற்றுக்கு நடைபாதையில் உருண்டது. உருண்டு சென்று ஒரு கடை வாசலில் நின்று சிகரட் பற்றவைத்துக் கொண்டிருந்த அக்கடை முதலாளியின் பாத அணிகளை முத்தமிட்டுக்கொண்டு நின்றது. அது அம்முதலாளியின் பார்வையில் பட்டது. அதனை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். நான்காக மடிக்கப் பட்டிருந்த ‘சுப்பர் 7 ரிக்கற்றும் சனிக்கிழமை நடைபெற்ற 649 வெற்றி இலக்கங்கள் கொண்ட துண்டும் காணப்பட்டது.
அதனை எடுத்துப் பார்த்த முதலாளிக்கு முதலில் ஏளனச் சிரிப்புத் தோன்றியது. ‘எந்தப் புத்திசாலியோ வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘சுப்பர் 7 சீட்டிழுப்பு ரிக்கற்றை சனிக்கிழமை இடம்பெற்ற 649 வெற்றி இலக்கங் களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றார் போலும்’ என்று எண்ணியவரின் உள்ளத்தில் மின்னலென ஒர் எண்ணம் உதயமாகியது. இதனை ஏன் நான் சரியான ‘சுப்பர் 7 வெற்றி இலக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது? எண்ணம் செயல் வடிவானது! தமது கடை உதவியாளனை அனுப்பி வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ‘சுப்பர் 7 வெற்றி

Page 80
எண்னக்கோலங்கள் 156
இலக்க சீட்டினைப் பெற்று வருமாறு செய்து ரிக்கற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த ‘சுப்பர் 7, ஏழு வெற்றி இலக்கங்களில் ஆறு இலக்கங் களும், “போனஸ்' இலக்கமும் சேர்த்து (6 / 7 +) அந்தச் சீட்டிற்கு இரண்டாம் பரிசாக டொலர் 1273540 கிடைத் திருந்தது.
சங்கரின் கைகளிலிருந்து நழுவிய நல்ல வாய்ப்பு கடைமுதலாளியைக் கட்டியணைத்துத் தழுவிக்கொண்டது.

வானத்து oேகம்
ன்ெ பெயர் செல்வராஜன். ஆனால் எல்லோரும் "ராஜா' என்றே அழைப் பார்கள். நான் சைவ ஆசாரங்களைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தேன். ஆயினும் எங்கள் குடும்பம் பெரிதும் ஆசாரசீலமான வைதிக குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. எனது தந்தை முற்போக்கான சிந்தனை உடையவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையுடையவர். இக்கொள்கை எனக்கும் பிடித்திருந்தது. எனது தாயார் கடவுள் நம்பிக்கை உடையவர். ஆயினும் சைவசமய அனுட்டானங்கள், வழிபாட்டு முறைகளில் பெரிதும் ஈடுபாடு கிடையாது. ஈடுபாடு கிடையாது என்று சொல்வதை விட, அவை பெரிதாகத் தெரியாதென்றே கூறலாம். வெள்ளிக்கிழமைகளில் கோவி லுக்குச் சென்று வழிபடுவார். செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும்,

Page 81
எண்னக்கோலங்கள் 158
சைவசமய விசேட தினங்களிலும் வீட்டினைச் சுத்தம் செய்து மரக்கறி உணவுவகைகளைச் சமைத்துப் பரிமாறுவார். அவ்வளவுடன் அவரது சமய அனுட்டானம் முடிந்துவிடும்.
இக்குடும்பத்தில் நான் ஏகபுத்திரன்.
தாயகத்தில் நிகழும் யுத்தம் காரணமாக எமது குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து, கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் ‘உருத்திரா மாவத்தையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறியது. அப்பொழுது எனக்கு வயது பதினாறு. அப்பா அரசாங்க நிர்வாக சேவையிலும், அம்மா விஞ்ஞான ஆசிரியராகவும் கொழும்புக்கு இடமாற்றமும் பெற்றிருந்தமை யினால், என்னையும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வித் தராதர உயர்தர வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தனர். நாளாக நாளாக கொழும்பிலும் பாதுகாப்பு என்ற காரணங் களைக்கூறி இராணுவத்தினராலும், காவல் துறையினராலும் வகை தொகையின்றி தமிழர்கள் வயது, பால் வித்தியாசமின்றி விசாரணை என்ற பெயரில் கைதாகினர். எங்கள் பாடசாலை மாணவர்கள் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். இதனால் எனது பெற்றோ ருக்கும் என்னைப்பற்றி மனச்சஞ்சலம் ஏற்பட்டது. நான் கல்வியில் ஆர்வமுடன் இருந்ததுடன், பாடசாலை விளை யாட்டுத் துறையிலும் மிகுந்த ஈடுபாடுகள் கொண்டிருந்தேன். கடுமையான உடல் பயிற்சிகள் மூலமும், பெற்றோர் என்னை நன்கு போஷித்ததன் மூலமும், நான் கட்டுடல் கொண்ட வாலிபனாக வயதுக்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டி ருந்தேன். பொதுவாக எனது நண்பர்களும், எமது உறவினர் களும் “ராஜன், நீ உண்மையிலேயே ஒரு ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியடா” என்று செல்லமாக அழைப்பார்கள்.
பாடசாலைக்குச் செல்லும் பொழுதும், பாடசாலை விட்டு வீடு வரும்பொழுதும் ஒரு சில நண்பர்களுடன்தான் வலம் வருவேன். அப்பொழுதும்கூட என் உடன் வரும் நண்பர்கள் "ராஜா பாரடா! வீதியால் போகும் எல்லாப்

159 / சந்திரபோஸ்
பெண்களும் உன்னைத்தான் பார்க்கின்றார்களே தவிர, எங்களை எவளும் திரும்பிப் பார்ப்பதாக இல்லை. உண்மையில் நீ ஒரு ஆணழகன்தாண்டா” என்று கேலி செய் வார்கள். இந்த அபரிமித வளர்ச்சி என் பெற்றோருக்கு கிலியைக் கொடுத்தது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னையும் காவல்துறையினரோ, இராணுவத்தினரோ கைது செய்யலாம் என்று எதிர்பார்த்தனர். நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை என்ற காரணத்தால் என்னை ஒரு நல்ல நண்பன் போலவே நடத்தி வந்தனர்.
தினசரி இரவு உணவின்போது நான், அப்பா, அம்மா மூவரும் ஒன்றாகவே அமர்ந்து உணவருந்துவோம். அவ் வேளையில் அன்று நடைபெற்ற விடயங்கள் பற்றியும், பொது விடயங்கள் பற்றியும் கலந்துரையாடுவோம்.
அன்றும் அப்படி உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் அப்பா, நாங்கள் மூவரும் கனடா செல்வதற் கான அபிப்பிராயத்தை வெளியிட்டார். அப்பாவின் சகோதரர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் கனடா சென்று அங்கு நிரந்தர பிரஜா உரிமை பெற்று நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவது நாங்கள் அறிந்ததே. அவர்மூலம் நாங்கள் அங்கு செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்ய இருப்பதாகவும் அப்பா கூறினார். எனக்குச் சொந்த ஊரான யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நாங்கள் இடம்பெயர்ந்து வந்ததே பெரிதும் திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் இன்னுமொரு இடப் பெயர்வு என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிய வில்லை.
ஆயினும், இராணுவக் கெடுபிடிகளும், எனது பாது காப்பினையும் உத்தேசித்துத் தான் இந்த ஏற்பாடுகளை எனது தந்தையார் செய்கின்றார் என்பதனையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. கனடா வரும் ஏற்பாடுகள் துரிதகதியில் நடை பெற்றுச் சில மாதங்களில் கனடா வந்து சேர்ந்தோம்.

Page 82
எண்னக்கோலங்கள் 16O
கினடா வந்து பத்து ஆண்டுகள் ஓடிமறைந்தன. இவ்வளவு விரைவில் நாட்கள் நகருகின்றதா என்ற கேள்வி தாயகத்திலிருந்து இங்கு வந்த எம்மவர்களுக்கு ஏற்படுவதுண்டு. சொந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் நாட்கள் நத்தை வேகத்தில் நகர்வதாகவும், கனடாவில் நாட்கள் இயந்திர கெதியில் ஒடிமறைவதாகவும் ஓர் உணர்வு.
கனடா வந்து சேர்ந்த காலத்தில் சித்தப்பாவின் உதவி யினால் "ரொரன்ரோ நகரில் 'ஸ்காபரோ பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினோம். அப்பா பாதுகாப்பு உத்தியோகத்தர் சேவையிலும், அம்மா தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியையாகத் தமிழீழச் சங்கத்திலும் இணைந்து கொண்டனர். நானும் பதி னொராம் வகுப்பில் சேர்ந்து கல்விகற்று பின்னர், ரொரன்ரோ பல்கலைக்கழகம் சென்று கணினித்துறையில் பட்டம் பெற்று பல்தேசியக் கம்பேனி ஒன்றில் இணைந்து பணியாற்றுவதுடன், பகுதிநேரமாக கம்பியூட்டர் தொழில்நுட்பத்தில் ஒர் புதிய மென்பொருளை உற்பத்தி செய்யக்கூடிய தனியான முயற்சி களிலும் ஈடுபட்டு வருகின்றேன்.
இந்த வேளையில் தான் அந்தப் பெண்ணைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அன்று வெள்ளிக்கிழமை. என் நண்பன் ஒருவனின் தங்கையின் திருமணம் றிச்மண்ட்ஹில்' கணேசர் ஆலயத்தில் நடைபெற்றது. அதற்காக அங்கு சென்ற வேளையில்தான் ராதை என்ற அந்தப் பெண் எனக்கு அறிமுகமானாள். நல்ல அழகி. கச்சிதமான உருவ அமைப்பு. நீண்ட அடர்த்தியான தலைமுடி. மானின் கூர்விழி மங்கை, அவளது மயக்கும் சிரிப்பும், மதுரப் பேச்சும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அவளுடன் உரையாடியதில் அவள் குடும்பமும் பல வருடங்களுக்கு முன் கனடா வந்ததையும், அம்மா அப்பா வுடன் ‘டான்மில்ஸ்’ பகுதியில் வசிப்பதையும், அவளுடைய

161 / சந்திரபோஸ்
ஒரே அக்காவும் திருமணமாகித் தனிக்குடித்தனம் நடத்து வதையும், ராதை’ ‘செனக்கல் கல்லூரியில் கணக்கியல், அலுவலக நிர்வாகம் சம்பந்தமான துறைகளில் கற்று வருகின்றாள் என்ற விபரங்களையும் அறிந்துகொண்டேன். அன்று திருமணத்திற்கு வந்திருந்த எனது சில நண்பர்களும், அவளது சில சினேகிதிகளும் ஏற்கனவே அறிமுகமானவர் களாக இருந்தமையினால் எல்லோரும் கூடியிருந்து குதூகல மாக உரையாடினோம்.
இச்சம்பவத்தின்மூலம் நானும் ராதையும் நண்பர்களா னோம். இந்நட்பினை வளர்த்துக்கொள்ள பல சந்தர்ப்பங் களை நாங்கள் இருவரும் ஏற்படுத்திக் கொண்டோம். எனக்கு ராதையை மிகவும் பிடித்துக்கொண்டது. அதேபோல் என்னை மிகவும் பிடித்துக்கொண்டதாக, அவள் அடிக்கடி சொல்லி அழகு கூட்டிச் சிரிப்பாள்.
எங்கள் நட்பு கனிந்து காதலாகியது. எங்கள் உறவு எங்கள் இரு குடும்பத்தினர்க்கும் தெரியவந்தது. இரு குடும் பத்துப் பெற்றோர்களும் கற்றவர்களாகவும், புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் இருந்தமையினால் எமது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினர். திருமணத்திற்கான பேச்சுக்களும் இரு குடும்பத்தவர்களிடையே இடையிடையே ஏற்பட்ட போதிலும், ராதையின் கல்லூரிக்கல்வி முடியும்வரை காத்தி ருப்போம் என்ற கருத்தினை இருவரும் முன்வைத்தோம். அதனை இரு குடும்பப் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் புயல்வேகத்தில் ஒரு பூகம்பம் புனிதா வடிவில் வந்து சேர்ந்தது. புனிதா தூரத்து உறவுக்காரப் பெண். உறவு என்று கூறுவதைவிட சிறுவயதிலிருந்தே தண்பர்கள். ஆயினும் புனிதாவின் குடும்பத்தினர் மொன்றி பலில் இருந்தமையினால் தொடர்புகள் குறைவாகவே இருந்தது. அண்மையில் இக்குடும்பத்தினர் "ரொரன்ரோ’ வந்து குடியேறினர். இதனால் ராதை, புனிதா நட்பு மீண்டும்

Page 83
எண்னக்கோலங்கள் 162
நெருங்கியது. புனிதாவின் குடும்பத்தினர் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், கனடா வந்த பின்னர் மதம் மாறி ஜெகோவாவின் சாட்சிகள் என்ற கிறீஸ்தவ மதப்பிரிவினால் உள்வாங்கப்பட்டு இருந்தனர். எப்பொழுதும் 'பைபிளும்' கையுமாகவும் முழுநேர மத ஊழியகாரர்களாகவும் மாறியிருந்தனர்.
புனிதா, ராதை நட்பு நாளாக நாளாக நெருக்க மாகியது. ராதையை தான் சார்ந்த மதத்திற்கு மாற்றிவிட புனிதா முயன்றாள். இது சம்பந்தமாக ராதை என்னிடம் கூறியபோதெல்லாம் நான் "இறை நம்பிக்கையும், மதவழிபாடும் அவரவர் சுதந்திரம். இதில் அபிப்பிராயம் சொல்ல என்ன இருக்கின்றது" என்பேன்.
இப்படியே சில நாட்கள் சென்றன. ஒருநாள் புனிதா என்னிடம், “ஏன் ராஜா ஒருமுறை நீங்களும் எங்கள் சேர்ச்சில்" நடைபெறும் பிரார்த்தனைகளைப் பார்க்க வரலாம்தானே!” என்று அழைப்பு விடுத்தாள்.
"புனிதா, உமக்கு துணை வேண்டுமென்றால் ராதையை அழைத்துச் செல்லும். நம்மை விடும். எனக்கு நிறைய வேலைகள் உண்டு" என்று அவளிடம் கூறினேன்.
முதலில் புனிதாவுடன் "சேர்ச் செல்ல மறுத்த ராதை ஒரு சந்தர்ப்பத்தில் அங்கு சென்றவள் என்ன மாயமோ ஜெகோவாவின் சாட்சிகள் என்ற மதத்துடன் சங்கமமாகி விட்டாள்.
இதனால் எனக்கு அவள்மீது கொண்ட அன்பினிலோ, திருமணம் செய்வது என்ற தீர்மானத்திலோ எதுவித மாறு தலையும் ஏற்படுத்தவில்லை.
நாள்கள் ஒடி மறைந்தன. கல்லூரிக் கல்வியையும்

163 / சந்திரபோஸ்
ராதை முடித்துவிட்டாள். இருகுடும்பத்துப் பெரியவர்களும் எங்கள் இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கும்பொழுது ராதை அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டாள்.
ஆம்! நான் ஜெகோவாவின் சாட்சிகள் என்ற மதத்தில் இணைந்து கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தாள். தான் முழுநேர சமய ஊழியராகத் தொண்டில் ஈடுபட விரும்பு வதனால் என்னையும் அத்தொண்டில் இணைந்து முழுநேர ஊழியராகப் பணிபுரிய சம்மதிக்கவேண்டும் என்று சாதித் தாள். இதற்குச் சம்மதித்தால்தான் திருமணம் நடக்கும் என்றும் கூறினாள்.
'மதம் என்பது மனிதர்களுக்காக மதத்துக்காக மனிதர் இல்லை!"
"ராதை, நீர் விரும்பியபடி உமது மதவழிபாடுகள், மத சேவைகள் செய்ய நான் இடையூறாக இருக்கமாட்டேன். ஆனால் அதற்காக எனது வாழ்க்கையின் இலட்சியங்களை, எனது சுயவிருப்புக்களை இழக்கவும் விரும்பவில்லை" என்று கூறினேன்.
இருவரின் பெற்றோரும் ராதைக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் தன் கருத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கவே, எங்கள் திருமணம் தடைப்பட்டு, உறவுகள் முறிந்தன.
வானில் தோன்றும் எல்லாக் கருமேகங்களும் மழை யினைத் தருகின்றனவா? இல்லையே! மேகங்கள் 'சூல்' கொள்கின்றன. மின்னல் மின்னுகின்றது. ஆயினும் காற்றால் கருமுகில்கள் கலைந்து மழை பொய்த்துவிடுகின்றது. என் காதலும் அவ்வாறே.

Page 84
மத்தளம் (குறும்படத்திற்கோர் பிரதி)
ஏ 9 விதி. கொடிகாமம் சந்தியிலிருந்து பருத்தித் க்கச் செல்லும் பாகையில் அமைந்திருக்கும் சிறு கிராமம் வரணி. உள்நாட்டு யுத்தம் காரணமாக வளமும், வனப்பும் இழந்து காணப்படுகின்றது.
மக்கள் முகங்களில் சொல்லமுடியாச் சோகம் எல்லோரிடமும் அச்சம், பரபரப்பு ஒருவகை ஏக்கம். அக்கிராமத்தில் சிறு இராணுவ முகாம். இராணுவத்தின் முன்னரங்கு என்பது காணப்படுவதுடன், அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் அமலில் இருப்பது போன்றதொரு நிலை.
10.06.2006 காலை வேளை. அன்றும் வழமை போல் வரணிக்கிராமம் விழித்துக் கொள் கிறது. காலை இளம் காற்று மா, பலா, தென்னை, பனை போன்ற வான் பயிர் களை வருடிச் செல்கின்றது.

165 / சந்திரபோஸ்
கிராமத்து மக்கள் தத்தம் அத்தியாவசியக் கடமை களின் பொருட்டு நடமாடிக் கொண்டிருக்கின்றனர். பாட சாலை செல்லும் சிறுவர்கள், சந்தைக்குச் செல்வோர், மற்றும் பல்வேறு வேலைகளுக்காகப் போவோர் வருவோர் என மக்கள் நடமாட்டம் மிக ஆரவாரம் இன்றி அமைதியாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பகல்பொழுது ஒருவாறு ஓடி முடிந்து மாலை வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். மாலைவேளை மைமல் பொழுதாகிச் சிறிது நேரத்தில் மையிருள் சூழ்கிறது.
பெரும்பாலான வீடுகளில் எண்ணை விளக்குகள் ஊதும் மென்காற்றுக்கு ஏற்றபடி அபிநயம்காட்டி ஆடிக் கொண்டிருக்கிறது. ஓரிரு வீடுகளில் சிறு மின்குமிழ் வெளிச்சம் மின்னியது. இரவு எட்டுமணிக்கிடையில் ஊரே அடங்கி விட்டது.
இரவு சுமார் பத்துமணியைத் தாண்டிக் கொண்டிருந்த வேளையில், ஊர் நாய்கள் ஒன்றிணைந்து குரைக்கும் சப்தம் அக்கிராமத்தின் நாலாபுறமும் எழுந்தது. திடும் திடும் என ஒழுங்கைகளாலும், வளவுகளுக்கூடாகவும் விரைந்து சிலர் செல்லும் ஓசைகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து வரணிக் கிராமத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம், முன்னரங்கு நிலைகளிலிருந்து துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கும் சப்தம் எழுந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் வசித்த மக்கள் என்ன, ஏது என்ற விபரம் அறியாது பிதிகொண்டு காணப்பட்டனர். பல நாள்களாக அமைதியாக இருந்த இக்கிராமம் இன்று அமளிதுமளிப்பட்டது. வீடுகளில் சிறுவர் சிறுமியர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க பெரியவர்கள் விழித்திருந்து பொழுதைக் கழித்தனர். ஓரிரு மணி நேரத்தின் பின்னர் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து மயான அமைதி நிலவியது. விழித்திருந்த பெரியவர்களும் நடுநிசியைத்தாண்டி உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

Page 85
எண்னக்கோலங்கள் 166
11. 08, 2006 காலைப் பொழுது பலபல என விடியும் வேளை திடீரென நாலாபக்கமும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து அக்கிராமத்தையே அதிரவைத்தது. கிராமம் விழித்துக் கொண்டது.
மக்கள் என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாது தடுமாறினர். வரணிக் கிராமத்திலிருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீற்றரில் அமைந்திருந்த முகமாலை இராணுவ முகாம், முன்னரங்கு நிலைகள், போராளிகளின் காவல் அரண் களிலும் இருந்தும், ஏவுகணைகள், பல்குழல் பீரங்கி உந்து கணைகள், துப்பாக்கி வேட்டுக்கள் எனச் சரமாரியாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பெரியதொரு தாக்குதல் நடவடிக்கை இராணுவத்தாலும், போராளிகளாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை அக்கிராம மக்கள் அறிந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து இனியும் வரணிக் கிராமத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்பதனை கணப்பொழுதிலேயே அறிந்து கொண்ட அக்கிராம மக்கள் தத்தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கையில் எடுக்கக்கூடிய பொருள்களுடன் உந்துருளி களிலும், சைக்கிள்களிலும், கால்நடையாகவும் கிராமத்தை விட்டு குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக இடம் பெயருகின்றனர்.
எங்கு செல்வது என்ற இலக்கற்று உயிர் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாக்கிக் கொண்டு வளவுகள், வயல் நிலங்கள், தரிசு நிலங்கள், முள்ளுப்பற்றைகள் ஊடாக கொடி காமம் நெல்லியடி வீதியைத் தாண்டி மந்துவில், மட்டுவில் பக்கமாக சிறுசிறு குழுக்களாக ஆயிரக்கணக்கானோர் இடம் பெயருகின்றனர். இடையிடையே அவர்கள் செல்லும் வழி களுக்கு அண்மையிலும் சில செல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. சில அவர்களைத் தாண்டிக்கொண்டு வீண் கூவிக்கொண்டு செல்கின்றன.

167 / சந்திரபோஸ்
அவ்வாறு செல்வரும் சத்தம் கேட்கும்போதெல்லாம் மக்கள் நிலத்தில் வீழ்ந்தும், மதவுகளுக்குள் ஒளித்தும் கொள் கின்றனர். இவ்வாறு மக்கள் கூட்டம் தத்தம் இஷ்ட தெய்வங் களின் நாமங்களை உச்சரித்தவண்ணம் நடந்தும், ஒடியும், விழுந்தும், எழுந்தும், உருண்டும் புரண்டும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
தாக்குதல் இலக்குகளை விட்டு நகர்ந்து கொண்டி ருந்த இம்மக்கள் கூட்டம் நான்கைந்து மைல்கள் கடந்த பின்னர் வயல்வெளி ஒன்றின் நடுவே அமைந்திருந்த கோவில் மண்டப நிழலை நாடினர். அக்கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்தனர். ஆயினும் அவ்விடம் தொடர்ந்து தங்குவதற்கு பாதுகாப்பற்ற பகுதியாக இருந்தமையினால் சிறிது இளைப்பாறிய மக்கள் கூட்டம் பல குழுக்களாகப் பிரிந்து தத்தமக்குப் பாதுகாப்பு என்று கருதிய இடங்கள் நோக்கி வெவ்வேறு திசைகளில் நகர்த்தொடங்கினர்.
அவ்வாறு பிரிந்து சென்ற குழுவினரில் ஒரு பகுதி யினர் அந்திசாயும் நேரத்தில் யாழ் - பருத்தித்துறை வீதி கலிகைச் சந்தியை அடைந்தனர். இதில் சிறியவர்கள், பெண்கள், ஆண்கள், முதியோர் என முந்நூறு வரையான மக்கள் இருந்தனர். எல்லோரும் மிகவும் களைப்படைந் திருந்தனர். பசிக்களை வேறு. அங்கிருந்த சிறு கடைகளில் கிடைத்த உணவுப் பண்டங்களை வாங்கியுண்டு கடைகளைக் காலி பண்ணித் தம் பசியை ஆற்றினர்.
சிறிது களைப்பாறிய பின்னர் அங்கிருந்து உள்வழிகள் ஊடாக வதிரி யாக்கரைப் பிள்ளையார் கோவிலை அடைந் தனர். அங்கு சென்றடையவும் பொழுது சாயவும் சரியாக இருந்தது. அங்குள்ள சிறுகடைகளிலும் இருக்கக்கூடிய தின் பண்டங்களைப் பெற்று சிறுவர்களுக்கும், வயோதிபர்களுக்கும் கொடுத்தனர். இரவுப்பொழுதை யாக்கரைப் பிள்ளையார் கோவிலடியில் கழித்தனர். விடிவதற்கிடையில் இன்னமும்

Page 86
எண்னக்கோலங்கள் 168
சிறுசிறு குழுக்களாக மேலும் பலர் இடம்பெயர்ந்து அவ்விடம் வந்து தங்கினார்கள்.
இரவு பத்துப் பதினொரு மணியளவில் திடீரென அவர்கள் தங்கியிருந்த கோவிலுக்கு அண்மையில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் சப்தம் கேட்டன. அதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் குழுவொன்று அவ்விடம் வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்தோர் சிலரை இராணுவம் தாக்கியது. எல்லோரும் பரபரப்புடன் எழுந்து நின்று "நாங்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளோம்; எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்’ எனக் கூச்சலிட்டனர். இங்கே கொட்டி' இல்லையா' என்று கேட்டு சில இளைஞர்களைத் தாக்கிவிட்டு அப்பால் அகன்று சென்றனர்.
ஒருவாறு இரவுப்பொழுது கழிந்தது. காலையில் அவ்வூர் மக்களின் உதவியுடன் விக்னேஸ்வரா கல்லூரியில் சென்று அனைவரும் தங்கினர். சில குடும்பங்கள் அங்கிருந்து தமது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கும் செல்ல ஏறக்குறைய ஐந்தாறு பேர் வரை அப்பாடசாலையில் தொடர்ந்து தங்கினர். அங்கிருந்தோர் அனைவரும் அச்சம், நடந்துவந்த களைப்பு, பசி மயக்கம் ஆகியவற்றுக்கு ஆளாகி திக்குத்திசை தெரியாத காட்டில் விட்டதோர் நிலையில் இருந்தனர். இம்மக்களின் வரவினை அறிந்த அவ்வூர் கிராமசேவகர் அவ்விடம் வந்து அம்மக்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு, அப்பகுதி மக்களின் உதவியுடன் முதலில் இடம்பெயர்ந்து வந்தவர் களுக்கான குடிநீர் வசதிகளையும், அவர்களின் பசியைப் போக்குவதற்காகக் கஞ்சி தயாரித்து வழங்கும் நடவடிக்கை யினையும் எடுத்தார். ஊர்மக்கள் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தொடர்ந்தும் இவ்விதம் உணவு அளிக்கக் கூடிய நிலையில் அவ்வூரும் இல்லை. ஏனெனில் அவ்வூரிலும் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் நிலவியது. இடம் பெயர்ந்து வந்தவர்களுடன் பணம் காசு இருந்தபொழுதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை வாங்கக்

189 / சந்திரபோஸ்
கூடியதாக அங்குள்ள வியாபார நிலையங்களிலும் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடே நிலவியது. ஒருநாளுக்கு ஒருவேளை உணவினைப் பெறுவதே மிகுந்த சிரமமாக இருந்தது.
ஒரிரு தினங்களின் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் விக்னேஸ்வராக் கல்லூரியில் தங்கியிருந் தோரின் விபரப்பட்டியலைத் தயாரித்ததுடன் சிலருக்கு முதலுதவிச் சிகிச்சைகளும் அளித்தனர். பின்னர் அவ்வூர் கிராமசேவகர், அரச அலுவலர்கள் உதவியுடன் ஒரு நாளைக்கு ஒரு தடவை உணவு சமைத்து வழங்குவதற்காகச் சமையல் பாத்திரங்கள், அரிசி, பருப்பு, உப்பு, புளி போன்றவற்றை இடம்பெயர்ந்த மக்களிடையே ஒரு தொண்டர் குழுவை அமைத்து வழங்கினர்.
இடம்பெயர்ந்து வந்த பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒத்துழைத்து சமையல் வேலையில் ஈடுபட்டு சமையல் முடியும் வேளையில் அவ்விடத்திற்கு விடுதலைப் போராளிக் குழுவினர் சிலர் வந்தனர். வந்தவர்கள் தமக்கும் உணவு வழங்கும்படி கேட்டனர். இடம்பெயர்ந்த மக்களுக்கே அங்கு சமைக்கப்படும் உணவு கால்வயிறு, அரை வயிறுக்கே போதுமானதாக இருந்த வேளையில், வந்தவர் களும் தமக்கு உணவு வழங்கும்படி கேட்டதில் அம்மக்க ளிடையே அதிருப்தியும், சலசலப்பும் எழுந்தது. வந்த விடுதலைப் போராளி ஒருவன் கூறினார் . "நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து உங்களுக்காகப் போராடுகின்றோம். நீங்கள் எங்களுக்கு உணவளிக்க ஏன் தயக்கம் காட்டுகின் நீர்கள்?" எனக் கேட்டார். அப்பொழுது இடம்பெயர்ந்த மக்களில் ஒரு சிலர் கூறினார்கள் - “குழந்தைகளுக்கும், வயோதிபர்களுக்கும் உணவைக் கொடுத்துவிட்டு, ஒரு பகுதியை அந்தத் தம்பிமாருக்குக் கொடுங்கள்" என்றனர்.

Page 87
எண்னக்கோலங்கள் 1 17O
இதன்பின்னர் போராளிக் குழுவினர் கொஞ்ச உணவைப் பெற்றுச் செல்ல மீதி உணவை அனைவரும் பகிர்ந்துண்டு அரைகுறை பசிபோக்கினர்.
மறுநாள் காலை பதினொரு மணியளவில் அன்றைய சமையல் வேலைகளில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு ஆயுதக் குழுவினரும், இராணுவத்தினரும் அவ்விடம் வந்தனர். வந்தவர்கள் வந்தவேகத்தில் சிலரைத் தாக்கினார்கள். நீங்கள் எல்லாம் புலிகளாடா? புலிகளுக்கா சாப்பாடு சமைச்சுக் கொடுக்கின்றீர்கள்?" என்று கத்திய வண்ணம் அங்கிருந்த பெரியவர், சிறியவர், ஆண், பெண் எனப்பாராது அடித்து உதைத்தனர். சமையல் பாத்திரங்கள், பண்டங்களையும் காலால் உதைத்துத் தள்ளி நாசம் செய்து விட்டுச் சில இளைஞர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு அவ்விடமிருந்து தமது வாகனங்களில் ஏறி விரைந்து மறைந்தனர்.
மக்கள் 'மத்தளமாக’ அடிபட்டு மாய்ந்து கொண்டி ருந்தனர். இன்னும் இன்னும் மாய்கின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் தாழ்த்தப்பeட தமிழர்களின்
88ലെ ഖണ്

Page 88
Giባጓr ጓላማጓ மெர்ஸ்ெ.S. அப்பிரமணிம் പAán polത്ത്
அன்பால் அறிவால் அருங்குணத்தால் யாவருக்கும் நன்மைசொல வாழ்ந்திட்ட நல்லுளத்தோய் - நின்தன் பரிவால் வளர்ந்தோம்! படித்தோம்! உயர்ந்தோம்! நின் பாதமலர்க் கிந்நூல் பரிந்து.

യേgഖnuി
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்ற மகுடத்தின் கீழ் ஓர் ஆய்வினை மேற்கொள்ள முனைந்த போது நீயே இதற்குத் தகுந்தவன் என வாழ்த்தியவர்கள் பலர். உனக்கு வேறு தலைப்புக்கள் கிடைக்கவில்லையா என்று தூற்றியவர்கள் சிலர். ஆயினும், வாழ்த்தியோரின் வாழ்த்துக் களை உரமாகக்கொண்டு, தூற்றியவர்களின் கருத்துக்களை, கருத்து மோதல்களே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு, இவ்வாய்வினை விரிவாக மேற் கொள்ள வேண்டுமென்ற வேணவாவில் இறங்கினேன். ஆயினும் இவ்வாய்வு பல்வேறுபட்ட காரணிகளினால் ஒரு சுருக்க வரலாறாகவே அமைந்துள்ளது.
இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக ஓரளவிற்கே உசாத்துணை நூல்கள் உதவி செய்தனவாயினும் இவ்வாய் வுக்குக் கைகொடுத்து உதவியவர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்காகவும், விடிவுக்காகவும் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற திருவாளர்கள் எம். சி. சுப்பிரமணியம் (முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்), ஜி. நல்லையா (முன்னைநாள் செனட்டர்), த. இராசலிங்கம்

Page 89
எண்னக்கோலங்கள் ! 174
(முன்னைநாள் உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்), என். டி. செல்லத்துரை (முன்னைநாள் யாழ். மாநகர சபை அங்கத்தவர்), ம. வைரமுத்து ஜே. பி. (அகில இலங்கை பெளத்த காங்கிரஸ் தலைவர்), வி. பொன்னம்பலம், ஆ வைத்திலிங்கம், கலாநிதி அ. சண்முகதாஸ் (யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ப. சந்திரசேகரம் (முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக கல்வியியல் பேரா சிரியர்) கலாநிதி சபா ஜெயராசா ஆகியோர்களாவர். இவர் களுக்கு என் நன்றி உரித்தாகுக. இவர்களைவிட இச்சமூக ஏற்றத்தாழ்வினால் கல்வி பெறும் வாய்ப்பினை இழந்த சில முதியோர்களும், தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்வி பெறுவதில் அடைந்த இன்னல்களையும் தாம் பெற்ற அநுபவங்களையும் கதைகதையாய் எடுத்துக் கூறியுள்ளனர். அவர்களுக்கும் என் நன்றி!
ஒப்பீட்டுக் கல்வி ஆய்வாளர்கள் இலங்கையின் கல்வி முறை பற்றியும் ஆய்ந்துள்ளனர். ஆயினும் இலங்கை வாழ் தமிழ் சமுதாயத்தில் ஒரு சாரார் கல்வியுரிமையற்று புறக் கணிக்கப்பட்ட நிலையினை ஏனோ எடுத்துக்காட்டத் தவறி விட்டனர்.
கல்வி சென்ற நூற்றாண்டுவரை வசதி படைத்தவர்கள் மட்டுமே பெறக்கூடிய ஆடம்பரப் பொருளாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டில்தான் கல்வியைப் பெறுவது ஒரு அடிப்படை மனித உரிமையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டது. இன்றும் அனை வரும் கல்வி பெறுகின்றனரா என்பது சந்தேகத்திற்குரியதே யாகும். அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளால் கல்வியினைப் பெறக்கூடிய தகுதியும், திறமையும் இருந்தும் கணிசமான தொகையினர் எம் நாட்டில் கல்வி பெறாமல் இருக்கின்றார்கள் என்பதனை அறிவுடை யோர் எவரும் ஏற்றுக்கொள்வர்.

175 / சந்திரபோஸ்
இவ்வாராய்ச்சியினை, யார் இந்தத் தாழ்த்தப்பட்ட தமிழர்கள்? கல்வி என்றால் என்ன? கல்வி யாருக்காக? 20ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி நிலை, 20ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர் களின் கல்வி வளர்ச்சி என்னும் நான்கு பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்துள்ளேன். இவ்ஆய்வுக்கு முன்னுரை வழங்கிச் சிறப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விப்புல சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சபா ஜெயராசா அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றி.
எஸ். சந்திரபோஸ்
1989-02-11

Page 90
ഗ്രdതുത0
இந்தியாவிலும் இலங்கையிலும் சாதியம் தொடர்பாக முன்வைக்கப்படும் பாரம்பரிய இலட்சியங்களில் "இரட்டை வடிவங்கள்” காணப்படுகின்றன. ஒருபுறம் சாதியத்தை நிலை நிறுத்தலும், மறுபுறம் நிராகரித்தலுமான பண்பாட்டுக் கோலங்கள் ஏககாலத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முரணியல்புகள் சமூக விஞ்ஞானிகளால் ஆழ்ந்து நோக்கப் படுகின்றன.
பாரம்பரிய வைதிக மரபில் தர்மங்கள் இரண்டு பிரிவுகளாக வகையியல் செய்யப்பட்டன. அவை, வரணாச் சிரம தர்மமும் மாணவ தர்மமுமாகும். வர்ணாச்சிரம தர்மம் சாதியம் தொடர்பான ஒழுங்குகளைக் கூற, மானவதர்மம் அனைத்து மானுடர்க்குமுரிய பொதுவான ஒழுக்கங்களை விளக்கியது. அறவிதிகளை மீறுவதிலும், சாதியம் சார்ந்த ஒழுக்கங்களை மீறுவதே பாவமானது என்று நம்பப்பட்டது. (J.H. Hutton, 1980 Caste in India, Oxford University Press, P. 125)
வைதிக மரபில் நிலைக்குத்துச் சமூக அசைவுகள் பற்றிய கோட்பாட்டு வடிவங்கள் முன்மொழியப்படவில்லை. சமூக பொருளாதார அடுக்கமைப்பில் நலிந்தவர் தொடர்ந்தும் நலிந்தவராக இருப்பதற்குரிய அறமும், ஒழுக்கங்களும், நியாயங் களும், விமர்சனத்துக்கிடமின்றிக் கட்டியெழுப்பப்பட்டன. இந்நிலையில் நிலைக்குத்துச் சமூகப் பெயர்ச்சியை அனுபவிக்க முடியும் என்பது ஒடுக்கப்பட்டோரின் வாய்மொழி இலக்

177 / சந்திரபோஸ்
கியங்களில் மாத்திரமே தூரத்துத் தொடுவானங்களாகக் காட்சிதந்தன.
சமூக அடுக்கமைப்பை ஒட்டியும் பற்றியும் சென்ற நியமமான கல்வி வரன்முறையாக ஒழுங்கமைக்கப்படுவ தற்கும், ஏட்டு வடிவங்களைப் பெறுவதற்கும் தொல்சீர் நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கப்படுவதற்குமான வாய்ப் பினைப் பெற்றிருந்தது. நலிந்தோருக்கான பாரம்பரியமான கல்வி வாய்மொழிவடிவங்களை மீறிக் கிளர்ந்தெழுந்து நிறுவன வடிவங்களைப் பெறமுடியாத சலனத்தோடு நின்றது. ஏற்றத் தாழ்வுள்ள சமூக அமைப்பின் கல்விச் செயற்பாடுகளில் இத்தகைய இருமைத்தன்மை காணப்படுதல் அகிலத்தின் பொதுப்பண்பு என்றும் கொள்ளலாம். நாட்டார் கலை இலக்கியங்களைப் பேணிக்காத்த பெருமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரியது என்ற கூறுதல் சமூக நடப்பியலை விளக்கும் கூற்று. ஒடுக்கப்பட்டோரின் நியமமற்ற கல்வி நிறுவனவடிவில் ஒருங்கிணைக்கப்படாவிடிலும், ஆற்றல் மிக்க உள்ளடக்கப் பொலிவைக் கொண்டிருந்தது. காலமாற்றம் மேலைமயப்படுத்தல், இந்திய விடுதலைப் போராட்டம் என்பவற்றின் பின்புலத்திற் சாதியம் தழுவி நின்ற சமயக் கோட்பாடுகளுக்குப் புதிய விளக்கங்களையும் வியாக்கி யானங்களையும் கொடுக்கவேண்டிய தேவை எழுந்தது.
தர்மம் என்ற எண்ணக்கரு சாதியத்துடன் எவ்வகை யிலும் இணைந்திருக்க வேண்டியதில்லை என்று விரற் இந்து சமாஜத் தலைவர் கலாநிதி கரன்சிங் தரும் விளக்கம் மறு மலர்ச்சி பெற்ற இந்துமத இயக்கங்களின் தலைமை வாசகமாக அமைந்தது. எழுச்சி மிக்க இந்தக் குரல் இலட்சிய வாக்காக இருந்ததேயன்றி சாதியத்துடன் இணைந்த சமூக அடுக்க மைப்பைத் தகர்த்து நிர்மூலமாக்கவில்லை. இச்சந்தர்ப் பத்திலேதான் இந்தியா இலங்கை ஆகிய நாடுகளிலே காணப் படும் விழுமியம்சார் இருமைத்தன்மையினைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

Page 91
erecorecordiscareoriassif I 178
ஜகஜீவன்ராம் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்த ஓர் அரசியற் போராளி. அவர் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவேளை அவரது அலுவலகத்தில் ஓர் உயர்சாதிக்காரர் "பியோன்’ ஆகக் கடமைபுரிந்தார். சாதி யத்தின் அடிப்படையில் தான் உயர்ந்தவரென்றும் ஆசீர் வதிக்கப்பட்டவரென்றும் அமைச்சர் தாழ்ந்தவரென்றும் ஜகஜீவன்ராம் அறியுமளவுக்கு அந்தப்பணியாளரின் மனப் LuqLDIši66ît Gohau6flouß3607. (Alexandra George 1986, Social Ferment in India, The Athlone Press, London, P 174) gigs F(pg5ITu நடப்பியலைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி.
ஒருபுறம் சாதிகள் இல்லை என்ற உரத்த குரலும், மறுபுறம் சாதிய உணர்வுகளை இறுகப்பற்றி நிற்றலுமாகிய விழுமியம்சார் இருமைத்தன்மைகள் மேலும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியுள்ளன.
புறத்தே எத்தகைய இலட்சியங்கள் முகிழ்த்தெழுந் தாலும், அகத்தில் இந்த மக்களிடத்து சாதியம்சார் உளவியல் குடிகொண்டுள்ளது. (R. Lannoy, 1975. The Speaking Tree, Oxford University Press P-370) grtsub grtifig5 26r 56opa GpGountir ஒரு சாரார். உள நெருக்கு வாரங்களுக்கும், உளவிரக்திக்கும் உள்ளாவோர் இன்னொருசாரார். இவ்வாறாக இருவேறு பட்ட உளவியற் புலங்களின் நிலைக்களனாகச் சமுதாயம் இருத்தலும் குறித்துரைக்கப்பட வேண்டியுள்ளது.
மேலைநாடுகளில் ஒருவரது சமூக அந்தஸ்து நான்கு தளங்களாற் கட்டியெழுப்பப்படுகின்றது. அவை பாரம்பரிய மாக ஒருவர் பெறும் சொத்துக்கள், அவரது பதவி, திருமணக் கட்டுப்பாடு, பிள்ளைகளின் நிலை என்பனவாகும். எமது சமுதாயத்தில் இந்த நான்கு தளங்களையும் மீறிக்கொண்டு சாதியம் முனைப்படைந்து நிற்றலும், சமூக அடுக்கமைப்பின் உயர்நிலையில் வதிவோர் அவற்றை மீளவலியுறுத்தி நிற்றலும் சமூக விஞ்ஞானிகளாற் சுட்டிக்காட்டப் படுகின்றன.

179 / சந்திரபோஸ்
இந்த அவலம் சமூகமாற்றத்துக்கான விசைகளைப் பின் தள்ளி விடவும் முயலுகின்றது.
புள்ளிவிபரவியல் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சாதியம்சார் அடுக்கமைப்புக்கும் வர்க்க அடுக்க மைப்புக்குமிடையே நேர்க்குணம் காணப்படுகின்றது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் என்போர் பெருமளவில் தொழிலாளிகளாகவே காணப்படுகின்றனர். ஆனால் தொழி லாளர் என்ற வர்க்கத்தினுள்ளே இடம்பெறுவோர் அனை வரையும் ஒன்றிணைப்பதற்குரிய எதிர்விசையாகச் சாதியம் இயக்கப்படுதல் முரணுரையாகக் காணப்படுகின்றது. முற்றிலும் தொழில் நுட்பமயப்படாத பண்பாட்டுக் கோலத்தின் வெளிப்பாடு என்று இந்த முரணுக்கு விளக்கமளிக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி எமது நிலத்தோடும் கிராமங் களோடும் உள்ள தொடர்புகளை இன்னமும் அடுதலையாக மாற்றியமைக்கவில்லை. இந்நிலையில் வர்க்க ஒருமைப் பாட்டின்மீது சாதியம் தொடர்ந்து குறுக்கீடு செய்கின்றது.
இத்தகைய பின்னணியிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்குரிய கல்வியை நோக்கிய விதமும், கல்வியில் எதிர் கொண்ட இடர்களும் நண்பர் எஸ். சந்திரபோஸ் அவர் களால் நுணுகி ஆராயப்படுகின்றன. ஆழ்ந்த ஈடுபாட்டோடு அவர் இந்த ஆய்வை மேற்கொண்டவேளை ஆய்வின் முடிவு களைப் பாதிக்கக்கூடிய அகவயமான மூடுதிரைக்குள்ளே தன்னை அகப்படுததிக் கொள்ளவில்லை. கருத்து நிதானத் தோடும் புறவயமான அணுகுமுறைகளோடு ஆய்வை ஆற்றுப்படுத்திச் செல்வதைக் காணமுடியும். மனவெழுச்சி அலைகளைக் கடத்தல் ஆய்வாளனது ஆய்வுச் செம்மைக்கு அச்சாணியாக அமைகின்றது.
சமூக நிலை மாற்றத்திலே தவிர்க்கமுடியாததும் வலு வானதுமான கருவியாகக் கல்வி அமைகின்றது. தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஏற்பட்ட கல்வி விழிப்பு சமகாலப்

Page 92
6T6corecords(85mGorrissir 18O
புரட்சிகர உணர்வின் கிளம்பல், இதனை வெறும் பண்பாட்டுக் கிளர்ச்சியென்று வரையறை செய்துவிடமுடியாது. இதன் தத்துவார்த்த விளக்கம் ஒடுக்குமுறைகளை நிராகரித்தலோடும், சுரண்டலை வேர்களில் இருந்தே கிள்ளி எறிவதோடும் தொடர்புடையது. சோசலிச கட்டமைப்பின் உள்ளேதான் பூரணமான பண்பாட்டுப் புரட்சியை அனுபவிக்க முடியு மென்பது யதார்த்தமாயினும் அத்தகைய தொடுவானத்து விடிவை நோக்கிச் செல்லும் வழிகளைச் செப்பனிடுவதற்குக் கல்வி வழித் துணையாகின்றது.
ஒப்பியல் அடிப்படையில் எமது கல்விச் சூழலையும் இந்தியாவின் கல்விச்சூழலையும் நோக்கலாம். இந்தியாவிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நலிவடைந்தோரா யிருப்பதற்குரிய காரணங்களுள் ஒன்றாக அமைவது கல்வியில் நிலவும் வேதனை நிரம்பிய பின்னடைவாகும். அவர்களி டையே எழுத்தறிவு பத்துசத வீதத்திலும் குறைவாகக் காணப் படுவதோடு பெண்களின் எழுத்தறிவு மேலும் பின்தங்கிய fissoeuusai a 6irangi. (O. Dreyer 1976. Cultural changes in developing countries, Progress Publishers, Moscow, p. 197).
இலவசக் கல்வி, தாய்மொழிக் கல்வி, கிராமங்களை நோக்கிய கல்வி விரிவு என்பவை அத்தகைய ஒர் அவல நிலையை இலங்கையில் உருவாக்காது விட்டாலும், கல்விச் செயற்பாடுகள் முழுவீச்சில் இங்கு நிகழ்ந்து இந்த மக்களை ஒருங்கே மேம்படுத்தியது என்றும் மிகைமதிப்பீடு செய்ய (ԼԶւգ-Այո35].
வரையறுக்கப்பட்ட மாற்றங்களையே கல்வி இந்த நாட்டில் நிகழ்த்தியது என்று கூறும்பொழுது கல்வியுடன் இணைந்து பிற காரணிகளையும் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டிய தேவை எழுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்களிற் பெரும்பாலானோர் நிலமற்ற உழைப்பாளர்களாக இருக் கின்றனர். வளங்குன்றிய கலடு, உவர் நிலம், ஒடுக்கிடங்கள்

181/ சந்திரபோஸ்
என்பவற்றைச் சார்ந்தே அவர்களது பெரும்பாலான குடி யிருப்புக்கள் யாழ்ப்பாணத்திற் காணப்படுகின்றன. (பேரா சிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை, 1989, செவ்வி)
வருமானத் தளம்பல் இந்த மக்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. பருவங்களை ஒட்டி உழைப்புக்குரிய கேள்வி எழுதலும் வீழ்தலுமான நிலைகள் வாழ்க்கையைத் தாக்கும்பொழுது கல்விச் செயற்பாடுகளும் தாக்கப் படுகின்றன. இத்தகைய நெருக்குவாரங்களினிடையே தாழ்த்தப் பட்ட மக்களுக்குக் கிடைத்த கல்வி பன்முக விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
அரசியற் குரலை ஒலிக்கமுடியாத நிலையிலிருந்த LDdisaffl-gigsill (Alexandra George, 1986, p. 159) LS5/Tass கிடைத்த கல்விப் பரிமாணங்கள் அரசியல்மயமாக்கலை ஏற்படுத்தின. சமூகமாற்றத்தை உள்ளடக்கமாகக் கொண்ட நிறுவன வடிவமைப்புத் தோன்றியது. கலை இலக்கியங் களிலும் அரசியல் அரங்குகளிலும் சமூக ஒடுக்கு முறை களுக்கு எதிரான கருத்துப் பொறிகள் ஏற்றப்பட்டன.
கல்வியின் செயற்பாடு அம்மட்டோடு நிற்கவில்லை. தாழ்த்தப்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறியும் வினாக்கள் பரவலாக எழுப்பப்படுவதற்குக் கல்விச் செயற் பாடுகள் தூண்டுவிசைகளைக் கொடுத்தன. வினா எழுப்பப் படாதிருந்த சமூகப் புலத்திற் புதிய புதிய வினாக்கள் எழுப்பப் பெற்றன.
நிலைக்குத்தான சமூக அசைவிற் கல்வியின் முக்கியத் துவம் உணரப்படலாயிற்று. இந்த விழிப்பு நடைமுறைகளுடன் எவ்வாறு இணைந்தன என்பதை நோக்கும்பொழுது அரசாங்கம் மேற்கொண்ட சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் எவ்வளவு தூரம் தாழ்த்தப்பட்ட மக்களின் காலடிகளுக்குச் சென்றன என்ற வினாவை எழுப்புவது பொருண்மையுடையது. திட்டத்தைச் செயற்படுத்தலிலும்,

Page 93
எண்னக்கோலங்கள் 182
முகாமைத்துவத்திலும், பணியாட்சித் துறையிலும், கல்வி நிர்வாகத்திலும் தொடர்பியல் சார்ந்த துறைகளிலும், தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உண்டு என்ற எமது நாட்டின் நடப்பியலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்நிலையிற் கல்வி உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் ஆழ்ந்தும், பரந்தும், உணர்வுபூர்வ மாகவும் அந்த மக்களின் காலடிகளுக்குச் செல்லமுடியாத இடர்கள் மேலும் துலக்கமாகின்றன.
இலங்கையிற் பல்வேறு கல்வி ஆணைக்குழுக்கள் காலத்துக்குக் காலம் நியமிக்கப்பட்டாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்கான உருப்படியான பூட்கை களோ, பரிந்துரைகளோ வறிதாகவே காணப்படுகின்றன என்ற மெய்ம்மையைச் சுட்டிக்காட்டுவதும் தவறாக அமைய மாட்டாது. இந்நிலையில் உறுதியானதும் உருப்படியானது மான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை வரைந்துகொள்வதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வரலாற்றை விருத்தி நோக்கில் வரன்முறையாக எழுதவேண்டிய ஒரு தேவை உணரப்பட்டது. இந்தத் தேவையைத் திரு எஸ். சந்திரபோஸ் அவர்கள் கல்வி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இந்நூலில் மிகுந்த நிதானத்துடன் நிறைவேற்றித் தந்துள்ளார்.
தந்தையார் அமரர் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் கண்ட கல்விக் கனவுகளில் ஒன்று இந்நூலில் நனவாகின்றது. இதனைத் தொடர்ந்து இத்துறையில் மேலும் பல ஆய்வுகள் மலரவேண்டியுள்ளன. பன்முக ஆய்வுகளுக்குரிய தூண்டல் களும் இந்நூலின் உள்ளடக் கத்து அனுபவங்களை இயங்க வைக்கின்றன.
efurt. GguyT3Fr
விரிவிரையாளர், கல்வியியற்புலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யார் இந்த தாழ்த்தப்பட்ட தமிழர்கள்?
7/7தும் ஊரே யாவரும் கேளிர்”
"சாதிகள் இரண்டொழிய வேறில்லை”
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பெ7வ்வா செய்தொழில் வேற்றுமையான்"
"affissair gavapalug List Lir குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்
A //76/Zb”
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
என்றெல்லாம் நல்லுரைகள் எந்த சமூகத்தி லிருந்து எழுந்ததோ அந்த சமூகத்தில் தான் சாதிப் பாகுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமையின் நீசத்தனமான நியதிகள், கேடுகெட்ட தன்மைகள்.

Page 94
எண்னக்கோலங்கள் 1 184
அநாகரீகமான மிலேச்சத்தனமான கெடுபிடிகள் காணப் பட்டன. இன்னும் அதன் எச்சசொச்சங்கள் காணப்படு கின்றன. இதன் விளைவாக தமிழ்ச் சமுதாயத்தில் உயர்ந் தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடு உருப்பெற்றது.
தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எனப்படுவோர், இறைவனின் படைப்பினால் தாழ்ந்தவர்களா? அறிவாற்றலினால் தாழ்ந்தவர்களா? அங்க அமைப்பினால் தாழ்ந்தோரா? அன்றி செய்யும் தொழிலினால் தாழ்ந்தோரா? "செய்யுந் தொழிலே தெய்வம்” எனக் கூறும் தமிழ் மரபு செய்யுந் தொழிலினால் ஒருவனை தாழ்ந்தவன் எனக்கூறி வரையறை செய்திருக்காது. இறைவன் படைப்பில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதம் இருக்குமானால் இறைவன் படைப்பே அர்த்தமற்றதொன் றாகும். எவரும் பிறக்கும்போதே அறிஞர்களாகப் பிறப்ப தில்லை. சமூகத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் சந்தர்ப் பங்களே அறிவுடையார்களையும், அறிவிலிகளையும் உருவாக்குகின்றது. எனவே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்று குறிப்பிடுகின்றவர்கள் எந்த வகையிலும், எந்த முறையிலும், எந்த வழியிலும், எந்த நிலையிலும் தம்மைத்தாமே உயர் சாதித் தமிழர்களென உயர்த்திக் கொண்டவர்களுக்குத் தாழ்ந்த வர்கள் அல்ல. ஆனால் உயர்ந்த குலத்தவர்கள் உயர்ந்த சாதியினர்களென தமக்குத் தாமே முத்திரை குத்திக் கொண்டவர்களால் சகல வழிகளிலும் தாழ்த்தி வைக்கப் பட்டவர்கள் சனத்தொகையிலும் குறைவான ஒரு குழுவினரே (LITGöLD.
அரிசனர்கள், தீண்டத்தகாதோர், குறைந்த சாதியினர் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து, மக்களின் சகல பிறப்புரிமை களையும் மறுத்து அவர்களின் முன்னேற்றங்களைத் தடுத்து தமிழர்களில் ஒரு சாராரால், தமிழினச் சகோதரர்களை, தமிழர்களை அடக்கி ஆண்ட தன்மையினால் தோற்றம் பெற்றதே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் குழு.

185 / சந்திரபோஸ்
மண்ணில் மனித குலம் தோன்றிய நாள்தொட்டு இற்றைவரை காலம், சூழ்நிலை, சமூகவாழ்வு, ஆட்சி நிலை ஒரே நிலையில் நின்றுவிடவில்லை. மனிதனை மனிதன் உண்ட காலம் மாறி, மனிதனை பகிரங்கமாக இழுத்துவந்து அடிமைகளாக விற்ற காலமும் மறைந்து, பண்ணை அடிமை முறைகளும் உற்பத்தி முறையில் தனது உடல் உழைப்பை விற்ற நிலைகளும் மாறி, தனது சுயநிர்ணய உரிமைகளை வரையறை செய்துகொள்ளக்கூடிய நிலைமைக்கு வந்து - அதற்கு மேலும் சென்று, உழைப்பவனுக்கே உலகமென்ற நியதிக்கு மனிதகுல வரலாறு மாறிவிட்டதனை - அறிவு டையார் எவரும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். இந்த நிலையிலும் நீண்ட காலமாக ஒரே தொழிலில் நிலைத்து விட்ட காரணத்தால் தொழில்ரீதியாகப் பிரிவுகள் ஏற்பட்டு, அப்பிரிவுகளும் நிலைத்துவிட்டபோது சாதிகள் என்ற முத்திரை குத்தி, ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தமது உயர் வுக்கும் வாழ்வுக்கும், வரட்டுக் கெளரவத்திற்கும் சாதக மாக்கிய நிலையினை, அறிவு வளர்ச்சி ஏற்பட்டு அனைத்துலக நாடுகளும் முன்னேறும் வேளையிலும்கூட தொடர்ந்து பாதுகாக்க சில மெளடிகங்கள் முனைவதனை என்னவென்று கூறுவது?
இயற்கையோடியைந்த பழந்தமிழர் வாழ்வில் சாதி வேறுபாடுகள் இருந்திருக்க நியாயமில்லை. தமிழர்கள் தம் நிலப் பண்புகளுக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்து அகத்திணை, புறத்திணை ஒழுக்கங் களைப் பேணி வாழ்ந்தனரெனச் சங்க இலக்கியங்கள் சாற்று கின்றன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தாரக மந்திரத்தை தரணிக்குத் தந்தவர்கள் தமிழர்களே. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற சமயநெறி கண்டவர்கள் தமிழர், "சாதி குலம் பிறப்பென்னும் சுழிபட்டு தடுமாறும் ஆதமெலி நாயேனை" என்றும்,

Page 95
எண்ணக்கோலங்கள் 1 186
"அங்கமெலாம் கரைந்தமுகு தொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக் கரத்தார்க் காண்டர7கில், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
என்றும்
சாத்திரம் பல பேசும் சமுக்கர்கான் கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்யபீர்?"
என்னும் சைவநெறி கொண்டவர்கள் தமிழர். ஆயினும் இத்தகைய மாசற்ற தமிழ்ச் சமுதாயத்தில் பாதியில் வந்த சாதியென்னும் தொழுநோய் தனது இறுதிமூச்சினை இழுத்துக்கொண்டு நிற்கிறது. ஆரியர்களான பிராமணர்களின் தென்னிந்திய வரவே வர்ண பாகுபாட்டினைக் கொண்டு வந்தது; பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நால்வகை வர்ண பாகுபாடு எனும் நச்சு விதைகளைத் தமிழ் சைவ கலாசாரத்தில் விதைத்ததென ஆராய்ச்சியாளர் கொள்வர்.
இலங்கையைப் பொறுத்தவரை, பிராமணருடைய செல்வாக்கும், வர்ண பாகுபாடுகளும், பிராமண கல்வி மரபுகளும், பெளத்த மதத்தின் வருகையுடன் செல்வாக் கிழந்தனவென்பதனை இந்நாட்டின் அரசியல் வரலாறு, கல்வி வரலாறுகள்மூலம் அறிந்துகொள்வோம். கி.பி. 3ம் நூற்றாண் டளவில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. இதன்பின்னர் மேற்கு நாட்டவர் வருகையினால் - போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையினால் - இலங்கையில் போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் கல்விமுறைகள் இடம் பெற்றபின்பும், 20ம் நூற்றாண்டில் சுதந்திர அரசு தோன்றிய பின்னுங்கூட, இன்றுவரை தம்மினத்திலேயே ஒருசாராரைத்

187 / சந்திரபோஸ்
தாழ்த்தி வைத்திருக்கும், தாழ்ந்தவர்களாக நினைக்கும் நிலைமைகள் பொதுவாக இலங்கைவாழ் தமிழர்களிடமும், சிறப்பாக வடபகுதியில் வாழும் தமிழ்ப்பெருங்குடி மக்கள் மத்தியிலும், அழுங்குப்பிடியாகக் காணப்படுகின்றது. இக்கருத்தினை மறுப்போரும் உண்டு. இன்று சாதிப் பாகு பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்று உரைப்போரு முண்டு. உண்மையில் அப்படியொரு நிலை, ஏற்றத்தாழ்வற்ற தமிழ் சமுதாயம் உருவாகும் நிலையினை நான் மனமார வரவேற்கின்றேன். ஆனால் உண்மை நிலையில் இன்றும் சாதிப்பிரச்சனைகளும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் தொடர் கதையாகவே காணப்படுகின்றன.
1970-1980களில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமேயானால் முதலில் எம்மிடையே காணப்படும் சாதி வேறுபாடுகள் ஒழியவேண்டும்” எனக் கூறியுள்ளதும், அதற்காக அண்மைக் காலங்களில் (1977 ஆகஸ்ட் கலவரங் களுக்குப் பின்னர்) சமூகக் குறைபாட்டை ஒழிப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளும், சாதி ஒழிப்புக்கான காலக்கெடு கொடுத்ததும், பின்னர் சாதி ஒழிப்பு இயக்கம் பூரண வெற்றி யளிக்கவில்லையென் பதனை கூட்டணித் தலைமைப்பீடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுமான இந்நிகழ்ச்சிகள் யாவும் சாதிவெறியும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் இன்னமும் முற்றாக ஒழிந்து விடவில்லை என்பதற்குப் போதுமான சான்றுகளாம். இதனைவிட மன்னார், மிருசுவில், வேலணை, புளியங்கூடல், உடுப்பிட்டி, கைதடி போன்ற இடங்களில் மிக அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சாதி சாகா வரம் பெற்றதோ என சந்தேகிக்க வைத்துள்ளன. மேலும் 12.01.1989இல் அமரரான திரு. எம்.ஸி. சுப்பிரமணியத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1401.1989 வீரகேசரி பத்திரிகை மூலம் விடுத்த அஞ்சலிச் செய்தியில்:

Page 96
எண்னக்கோலங்கள் 188
தீண்டத்தகாதவர்கள் என்ற ஒதுக்கல் அநியா யத்துக்கு எதிராக நீண்டகாலம் குரல்கொடுத்து அத்தமிழ் மக்களின் சுயமரியாதையைப் பேணிப் பாதுகாத்த பெரும் தலைவர் திரு எம்.வி சுப்பிர மணியத்தின் மறைவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரி வித்துக் கொள்கின்றது.
இந்தப் போராட்டத்தில் வேறு அரசியல் தலைவர்களும், கட்சிகளும் ஈடுபட்டபொழுதிலும் தலைமைதாங்கி நடத்தி பல வெற்றிகளைச் சாதித்த பெருமை திரு. சுப்பிரமணியத்திற்குரியது. இன்றைய தமிழ் சமுதாயத்தில் சாதிக் கொடுமைகன் ஓரளவு ஒழிக்கப்பட்டுள்ளது. , அந்த மாற்றத்தை ஏற்படுத் தியவர் அன்னாரே,
"சாதிவேற்றுமை தீண்டாமை இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நாம் எல்லோரும் தமிழ்த் தாயின் மக்கள். எமக்குள் வேறுபாடுகள் இல்லை என்ற நிலை முழுமையாக ஏற்படவேண்டும். அதுவேதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி Z/765th,.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட தமிழர்களாக பள்ளர், பறையர், நளவர், நாவிதர், வண்ணார் எனப்படும் ஐந்து சமூகத்தினரையும் "பஞ்சமர்" என்னும் பாகுபாட்டால் அடக்கியுமுள்ளனர். இவ்வைந்து சமூகத்தினையும் ஒன்றிணைத்து "பஞ்சமர்” என்று அழைத்தாலும் கட்டாடி, பரிகாரி, சாம்பான் என்ற முப்பிரிவையும் தரப்படுத்திவிட்டு எஞ்சிய இருபிரிவினரையும் சந்தர்ப்பத்தோடொட்டிய அடிமை வேலைகளுக்குப் பயன் படுத்தினர். பஞ்சமர் என்ற பெயருக்கே "பஞ்ச பாதகம்" செய்வோரென வியாக்கியானமும் கொடுத்தனர். ஆனால்

189 / சந்திரபோஸ்
இவர்கள் உண்மையில் செய்த தொழில்கள் மூலம் உயர்சாதி யெனச் சொல்லிக்கொண்டோரின் உப்பரிகை வாழ்விற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தினையுமே உரமாக்கினர். விவசாய நிலக்குடிமைகளாக, வீடு கட்டிக்கொடுக்கும் தொழிலாளிகளாக, கள்ளும் கருப்பநீரும் இறக்கித் தருபவர் களாக, சிகை அலங்கரிப்போராக, உடைகளை வண்ணமிடு வோராக, பறை அறைவோர்களாக நகரசுத்தித் தொழிலாளர் களாக வாழ்ந்த - வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களுக்கே தாழ்த்தப்பட்ட தமிழர்களென்று மகுடம் சூட்டினர். இவர்கள் அந்த நிலைகளிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும்; அதுவே நியதியெனவும் கொள்ளப்பட்டது. இறைவழிபாட்டிற்காக ஆண்டவன் சந்நிதானத்திற்குள் செல்லக்கூடாது. பள்ளிக் கூடங்களில், பொது உணவு விடுதிகளில் சம ஆசனம் மறுக்கப் பட்டது. பொதுக்கிணறுகளில் தண்ணிர் எடுத்தல் தடுக்கப் பட்டது. நல்ல உடைகள் அணிதல், பாத அணி அணிதல், மேல் அங்கி அணிதல் (பெண்களுட்பட), பொது வீதிகளில் நடமாட்டம் என்பன கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய கட்டுப்பாடுகளை மீறியதனால் எரிந்து சாம்பலான குடிசைகள், உயிரிழந்த மனிதர்கள், கையோ, காலோ, விலா எலும்போ ஒடிக்கப்பட்டோர் எண்ணிக்கைகள் இச்சாதி வெறிக் கொடுமைகளின் சான்றாகும். அடர்ந்த காட்டுக்கு நெருப்பு வைத்துவிட்டு கையில் கம்புகளும் துப்பாக்கிகளும் கொண்டு காட்டுக்குள்ளிருந்து பீறிட்டுவரும் மிருகங்களை அடித்தோ, கட்டோ வீழ்த்தும் வேட்டைக்காரர்கள் போல் சேரிக்கு நெருப்பு வைத்துவிட்டு வெளியே வருவோரை வதைசெய்த சம்பவங்களை இந்நாட்டுத் தமிழர்களின் கறைபடிந்த வரலாற்றில் காணலாம். இத்தகைய சம்பவங்கள் எல்லாம் என்றோ நடந்தவையல்ல. நாம் வாழும் இன்றைய 20ம் நூற்றாண்டில் நடைபெற்றவை; நடைபெறுபவை!
தமிழர்கள் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரீகத்தில் சிறந்தவர்கள் என்றெல்லாம் ஒரு புறத்தில் கூறிக்கொண்டு

Page 97
எண்ணக்கோலங்கள் 1 19O
மறுபுறத்தில் தம்மினத்தின் ஒரு பகுதியினரைத் தாழ்த்தப் பட்ட மக்களெனக் கூறிக்கொண்டு, அவர்களை சமூக வாழ்வில் முன்னேறவிடாது, கல்வி, பொருளாதாரம், அரசியல் என்ப வற்றில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பவற்றைப் பேணமறுப்பது எந்த வகையில் நீதியாகும்? நிலமானிய முறை அமைப்பில் நிலவிய ஆண்டான், அடிமை முறைகளை தொடர்ந்து பாதுகாக்கும் காலங்கடந்த முயற்சிகள், கால மாற்றத்தினால் தடுத்து நிறுத்தப்பட முடியாதபோது இவர்கள் மதத்தின் பேராலும், தேசவழமையின் பேராலும், தொடர்ந்து சாதி அமைப்பினைக் காப்பாற்ற கூப்பாடு போட்டாலும் சாதி அமைப்பு இவர்கள் காலடியில் சுக்குநூறாவதனைத் தடுத்து நிறுத்தமுடியாது. இதனாற்றான் இன்று இந்த நெறி கெட்ட நீச அமைப்பிற்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்கவோ அல்லது வாதிடவோ நேரிடையாக எவரும் வருவது கிடையாது. அதற்கு மாறாக சகல அரசியல் தலைவர்களும், பொதுச் சேவையாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் இன்று தீண்டாமை ஒழிப்பு வீரராகப் பவனி வருகின்றனர்; மேடைகளில் பேசித்தீர்க்கின்றனர். சாதி முறை ஒழியவேண்டும்; சமத்துவநீதி ஓங்கவேண்டும் என்று பத்திரிகைகளில் எழுதிக் குவிக்கின்றனர். இவ்வேளையில்
நர்த்தனம் புரிகின்றன.
இன்றுவரை உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகள், அறிஞர்கள், ஞானிகள், இறைத்தூதர்கள், பெருங்கவி வாணர்கள், சிந்தனைச் சிற்பிகள், சீர்திருத்தச் செம்மல்கள், தேசப்பிதாக்கள் எல்லோரும் இச்சமூக ஏற்றத்தாழ்வினை ஒழிக்கவேண்டுமென்று அயராது உழைத்தனர். உலக அரங்கில் நடைபெற்ற பல்வேறு அரசியற் புரட்சிகள், கிளர்ச்சிகள், சமுதாய மாற்றங்கள் யாவுமே இச்சமூக ஏற்றத்தாழ்விற்கு சாவுமணி அடித்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிற்பியான மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப்

191/ சந்திரபோஸ்
போராட்டத்துடன் சாதி ஒழிப்பையும் இணைத்தார். "இந்திய சமூகத்தின் சாபத்தீட்டான தீண்டாமை ஒழியாவிட்டால் இந்திய சுதந்திரம் சாத்தியமில்லை"யென சுதந்திர இயக்க அண்ணல் முழங்கினார். சாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இலங்கைக்கும் விஜயம்செய்து சம ஆசன, சமபோசன இயக்கங்களை நடத்தினார். ஆயினும் இந்தியா, இலங்கை என்பன சுதந்திரம் பெற்று நான்கு தசாப்தங்கள் முடிவுற்ற பின்னருங்கூடத் தீண்டாமை ஒழி வில்லை. சாதி ஒழிப்பிற்கு இவர் காட்டும் வழி சம ஆசனம், சமபோசனம், ஆலயப் பிரவேசம், உயர் சாதியினர் என சொல்லிக்கொள்வோரின் மனமாற்றம் என்பன சாதிக் கொடுமைகளை அகற்றி விடுமென்றார். மூதறிஞர் ராஜாஜியும், திராவிட முன்னேற்றக்கழக அறிஞர்களும், சமூகங்களுக் கிடையில் ஏற்படும் கலப்புமணங்கள் மூலம் சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழித்துவிடலாம் என்றனர்.
இவையெல்லாம் சமூக சீர்திருத்தத்திற்கு வழி வகுக்கு மென்பதில் நானும் உடன்பாடுடையவனே. இன்று வரை எம் நாட்டில் முற்போக்குச் சிந்தனையுடைய அறிஞர்களின் அருமுயற்சியாலும், தாழ்த்தப்பட்ட மக்களுடைய விழிப்பி னாலும், எழுச்சியினாலும், அரசியல் மாற்றங்களினாலும், சர்வதேச அரங்குகளில் சமவுடமைக் கட்சியின் எழுச்சி யினாலும் சாதிப்பாகுபாட்டின் கெடுபிடிகள் தளர்ந்துள்ளன என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் முற்று முழுதாக சாதிக் கொடுமைகள் அற்றுவிட்டதென்று கூறுவதற் கில்லை. அது சமுதாயத்தில் வேர்விட்டுக் காலூன்றி நிற்கின்றது. அதனது சல்லி வேர்களும் பக்க வேர்களும் மட்டு மன்றி ஆணிவேருடன் பிடுங்கியெறியப் படவேண்டும். எனவே, சமூக அமைப்பு புரட்சிகரமாக மாற்றப்பட்டு நிலமானிய முறைப் பிரபுத்துவ அமைப்பும், சுரண்டல் முறைகளும் தகரும்பொழுது சாதி அமைப்பு முற்றாக அற்ற ஒரு சமத்துவ சமுதாயம் உதயமாகும். எனவே இந்நிலையடைய மக்களனை

Page 98
எண்னக்கோலங்கள் ! 192
வருக்கும் அறிவு வளர்ச்சி இன்றியமையாததாகும். அறிவும், அறிவுப் பொக்கிஷங்களும், அறிவை ஊட்டுகின்ற கல்விக் கூடங்களும் ஒரு சாராரின் ஏகபோக உரிமையாக இருக்கும் வரை இந்நிலை சாத்தியமாகாது. எனவே தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தலைநிமிர்ந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் பெற்று அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில்

கல்வி என்றால் என்ன? கல்வியாருக்காக?
மனித குலம் அறிவு வளர்ச்சியடைய ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை காலத்திற்குக் காலம் தோன்றிய பல்வேறு ஞானிகள், அறிஞர்கள், சிந்தனையாளர் கள், கல்வியியலாளர்கள், கவிவாணர்கள் கல்வி பற்றிப் பற்பல சிந்தனைகளைப் பல்வேறு வடிவங்களில் சொல்லி வைத் துள்ளனர். கால, தேச, வர்த்தமானங் களைக் கடந்து இவர்களுடைய சிந்த னைகள் அனைத்திலும் கல்வி பற்றிய ஒரு பொதுமைக் கருத்தினையும் உண்மை யினையும் அவதானிக்க முடிகிறது. “மனிதனை மனிதனாக வாழ வைப்பதே கல்வி" என்பதே அந்த உயரிய சிந்தனை யாகும்.
"கல்வியழகேயழகு" என்ற நாலடியாரின் கூற்றும், "கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடை யார் கல்லாதவர்” என வள்ளுவரும்,

Page 99
எண்ணக்கோலங்கள் 1 194
“கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" எனக் கொன்றை வேந்தன் தரும் கருத்தும் கல்வி பற்றித் தமிழ்ச் சான்றோர் தந்த நல்லியற் கருத்துக்களாகும். இக்கருத்துக்கள் "அறிவே உலகத்தின் அணையாத ஜோதி"யென்ற சிந்தனை யாளர் சோக்ரட்டீசின் கருத்துடன் ஒப்பு நோக்கக்கூடியது. தன்னைத்தானே அறிதலும், பகுத்தறிவு பெறுவதும், உயர்ந்த மனஉணர்ச்சிகளை அடைவதும், தூய்மையை வளர்ப்பதும் கல்வியென்று சோக்ரட்டீஸ் சொன்னார். சோக்ரட்டீசின் மாணவனான பிளேட்டோ கல்வியென்றால் என்னவென்று கூறுமிடத்து "கல்வி ஏட்டில் இல்லை. ஏட்டில் இடம் பெறவும் மாட்டாது. ஏனைய சாஸ்திரங்கள் போல் இலக் கணமும் கூறமுடியாது" என்றார். ஆனால் கல்வியினை அடையக்கூடிய மார்க்கம், "தளராது அறிவுத்திறனைப் பயன் படுத்துவதும், சுய அநுபவமும்” என்றார். மேலும் பிளேட்டோ, அறிவும், ஆர்வமும், பரிபக்குவமும், முதிர்ச்சியும் அடைய கல்வி ஒரு வழிகாட்டி, இது ஞானமுத்தியை அடைய ஏதுவாகவிருக்க வேண்டும் எனவும், கல்வி மக்களை ஞான முள்ளவர்களாக வளர்க்கவேண்டும், சுயநலமற்ற நாட்டன்பு உள்ளவர்களாக உருவாக்கவேண்டும் எனவும் கல்விக்கு இவ்வாறு சிறந்த அர்த்தங்களைத் தந்தார்.
இவ்வாறு கல்விக்குச் சிறந்த விளக்கங்களைத் தந்த பிளேட்டோ கல்வி யாருக்கு என்னும் நிலையில், அவர் தான் எழுதிய குடியரசு, சட்டம் என்னும் நூல்களுக்கிடையில் முரண்படுகின்றார். தனது நாற்பதாவது வயதில் குடியரசு நூலையும், தனது எழுபதாவது வயதில் சட்டம் எனும் நூலையும் எழுதியதாகக் கருதப்படுகின்றது. குடியரசு நூலில் தான் வாழ்ந்த கால சமுதாயத்தை மூன்று வர்க்கங்களாகப் பாகுபடுத்தியுள்ளார். முதல் வகுப்பினர் ஆளும் வர்க்கமாகக் கொள்ளுகின்றார். இவர்கள் தலைசிறந்த ஞானிகளாகவும், திறமைசாலிகளாகவும், ஆளுங்கலையைத் திறம்படக் கற்கக்

195 / சந்திரபோஸ்
கூடிய அறிவும், வாய்மையும், நியாயமும், நற்குணமும் இவர் களிடமுண்டு என்பது பிளேட்டோவின் கருத்தாகும். எனவே இவர்களுக்குத்தான் சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டு மென்றும் இவர்களால்தான் சிறந்த கல்வியைக் கற்கமுடியு மென்றும் பிளேட்டோ கருதினார்.
இரண்டாவது வகுப்பினராக இராணுவ வகுப்பினரைக் கொண்டார். இவர்களுக்கு இராணுவ சம்பந்தமான போர்ப்பயிற்சிகள், படை ஒழுங்குகள் போன்ற இராணுவப் பயிற்சிகள் கற்பிக்க வேண்டுமெனக் கருதினார். மூன்றாவது வகுப்பினராக தொழிலாளர்கள், உற்பத்தியாளரைக் கருதினார். இவர்களைத் தாழ்ந்தவர்களாகப் பிளேட்டோ கருதினார். இவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டுமென்ற நியதியில்லை. கல்வியளிக்கப்பட வேண்டுமாயின் அது தொழிற்கல்வியாக இருக்கலாம் என்றும், ஆனால் அரசு இவர்களின் கல்வியில் அக்கறை எடுக்க வேண்டியதில்லை; ஆயினும் அவர்களது வாழ்க்கைக்காகக் குடியியல் அறிவைக் கொடுக்கலாம் எனவுங்
கூறினார்.
சிறந்த ஞானியான பிளேட்டோ சமுதாயத்திலுள்ள மக்களை இவ்வாறு பாகுபாடு செய்ததற்குக் காரணமாக இருந்தது அவர் வாழ்ந்த சமுதாயச் சூழ்நிலையே எனத் துணிந்து கூறலாம். தனது தவறினை அவரேயுணர்ந்து, தான் உண்மையில் ஒரு சிறந்த ஞானியே என நிரூபிக்கும் வகையில் தனது எழுபதாவது வயதில் சட்டம் எனும் நூலில் "ஒரு நாட்டில் பரந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இப்பரந்த கல்வி அளவிலும் நிறையிலும் உயர்தரமுள்ளதாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
“கல்வி மூலம் வர்க்க வேறுபாடு குறையும்; சமுதாய ஒற்றுமை வளரும் என்று கூறுவதன் மூலம் முதன் முதல் வர்க்க வேறுபாடு, சமுதாய ஏற்றத்தாழ்வு மறைய கல்வியே

Page 100
எண்னக்கோலங்கள் ! 196
சாதனமென நம்பியவர் பிளேட்டோ ஆவர். கல்வி யாருக்கு என்பதில் முதலில் ஒரு முரண்பாடான கருத்தை பிளேட்டோ கொண்டிருந்தாலும், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது தவறையும் உணர்ந்து, கல்வி எல்லோருக்கும் என்று கூறிய துடன், வர்க்க வேறுபாடுகள் மறைந்து, சமூக ஒற்றுமை மலர கல்வியே சிறந்த சாதனம் எனக் கூறியதிலிருந்து பிளேட்டோ ஒரு படி உயர்ந்து நிற்கின்றார். உண்மை, அழகு, நன்மை ஆகிய பண்புகளை வளர்ப்பதற்கே கல்வி என்னும் இவரது கருத்து, முன்னர் குறிப்பிட்ட "கல்வி யழகே யழகு" எனும் நாலடியாரின் கூற்றுடன் ஒப்பு நோக்கப்படலாம்.
பிரான்சியப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோ அவர்கள் "குழந்தைகளுக்குச் சிந்திப்பதற்கு வழிகாட்டிக் கொடுத்தால் அதுவே உயர்ந்த கல்விக்கு வழிகோலும். நாமே சிந்தனை செய்து கல்வியினைப் பின்பற்ற வேண்டும்" என்றெல்லாம் கல்வி பற்றிக் கூறுகின்றார். ரூசோ இயற்கை வாதத்தில் நம்பிக்கை கொண்டவராயும், சமத்துவம், சுதந்திரம் என்ப வற்றில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவராயும் இருந்தார். இயற்கையைப் பொறுத்தளவில் எல்லா மனிதர்களும் சமமான வர்களே. அப்படிப்பட்ட எல்லா மனிதர்களது தொழிலும் மனிதத்தன்மையோடு வாழ வைப்பதாக இருக்கவேண்டும். இதனைக் கல்வி ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என ரூசோ வலியுறுத்தினார். எனவே, கல்வி பற்றி இத்தகைய வரைவிலக்கணம் கூறியதோடு நில்லாது, அக்கல்வியானது சகலருடைய பிறப்புரிமை என்பதனையும் ரூசோ வலியுறுத்தி உள்ளார்.
எல்லா மனிதர்களும் பிறக்கும்போது சமமானவர் களாகவே பிறக்கின்றனர். அப்படிப் பிறக்கும்போதே சிருஷ்டி கர்த்தாவான இறைவன் அவர்களிற்குப் பிறரிடம் பராதீனப் படுத்த முடியாத உரிமைகளை அளிக்கின்றார். மனிதனுடைய

197/ சந்திரபோஸ்
இந்த இயற்கையானதும், மாற்ற முடியாததுமான உரிமை களைக் காப்பாற்றுவதுதான் எல்லா அரசியல் சேர்க்கை களின் நோக்கமுமாகும். சுதந்திரம், சொத்து பாதுகாப்பு, அடக்குமுறையினை - சமூக அநீதியினை எதிர்த்து நிற்றல் ஆகியவை மனிதனுக்குள்ள இயற்கை உரிமைகளாகும். இவற்றைக் கல்வி மனிதர்களுக்கு வழங்குகின்றது.
ரூசோ வாழ்ந்த சமுதாயத்தில் பிரபுக்கள், உயர் குடியினர், மதகுருமார்கள் ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழ் மக்கள் சமூகம் சுதந்திரமற்று, சுரண்டப்பட்டு, வாழ்க்கையில் இன்னல்களை அநுபவித்துக் கொண்டிருந்தது. அக்காலக் கலைகளும், கல்வியும் அறிவியலும் சமூகத்தில் ஒரு சாராருக்கே வாழ்வளித்து வளம் சேர்த்தது. இந்தச் சமூகக் கலைகளும் கல்வியும், அறிவியலும் சரியான முறையில் சகல மக்களையும் சென்றடைய வேண்டும்; சகல மக்களுக்கும் உரிமையாக வேண்டும் என்ற தனது கருத்தினை முன்வைத்தார். பிளேட்டோ கல்வி யாருக்காகவென்று தொட்டுச் சென்ற கருத்தினை எல்லோருக்காகவும் கல்வியென்று நிலைநிறுத்திச் சென்றவர் ரூசோ ஆவார்.
கல்வி பற்றி கார்ல் மார்க்ஸ் கூறுமிடத்து, எல்லா விஞ்ஞான அறிவும் பொருளியலும், சமூகவியலும், வரலாறும், மெய்யியலும், அரசியலும், மானிடவியலும் ஒன்றிணைந்த சமூகத்தை உண்டுபண்ணும் கல்வியாக வழங்க வேண்டுமே தவிர சமூகத்தைப் பிரிவுபடுத்தும் கோட்பாடுகளை உருவாக்கும் தன்மையதாக மாறக்கூடாது. எல்லா மக்களும் சிறப்பான வாழ்க்கைமுறையை முற்றாக அறிந்திருக்க வேண்டும். மக்கள் அறிவு உண்மையானது. அது உலகின் பெருந்தோற்றமாகும். உளப்பண்பின் பெருந்தோற்றமும் உயர் எண்ணங்களுமாகும். உள்ளத்தில் இத்தன்மையை உண்மைக் கல்வி வளர்க்கவேண்டும். கல்வியானது மிக உறுதியான

Page 101
எண்னக்கோலங்கள் 1 198
நிலைபேறுடையதாகவும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்ப தாகவும், மனிதனின் பொறுப்புணர்ச்சியை உயர்த்துவதாகவும் சமூகநீதியைப் பரப்புவதாகவும் அமையவேண்டும். கல்விக்கு இவர் தந்த இலக்கணமும், அக்கல்வியானது யாருக்கு என்ப தனைக் கூறுமிடத்திலும் மனிதகுலத்தின் பொதுவுடமையே கல்வி என்று தத்துவம் ஒளிர்கின்றது.
20ஆம் நூற்றாண்டின் இணையற்ற உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர் ஜோன்டூயி, "எல்லோருக்கும் கல்வி அளிக்கப்படவேண்டும். அதன்மூலம் சமூகம் முன்னேற வேண்டும்" என்றார். கல்வி மூலம் சமூக சிந்தனையையும் அறிவையும் மனிதன் பெறவேண்டும். பொருளாதார விடுதலை பெறவேண்டுமென டூயி வலியுறுத்தியுள்ளார். தனிப் பட்டோரின் வளர்ச்சி, மனிதகுல முன்னேற்றம், மனித குலத்தின் இன்பம் என்பன மக்களாட்சியின் வேதாந்தம் என்னும்போது நீக்கிரோ மக்களும், உலகில் வாழும் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களும் தம் வாழ்க்கையில் உரிமை பெறாது வாழ்வது கண்டு டூயி சீற்றங் கொண்டார். எனவே, மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரானார். மாணவர்கள் எல்லோருக்கும் பொதுப் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்றார். முதலாளித்துவப் பள்ளிக்கூடங்களை எதிர்த்தார். நீக்கிரோக்களுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை அமைத்தல் சமத்துவத்திற்கு முரணானது எனக் கருத்துத் தெரிவித்தார். அவர் வகுத்த கல்வி இயக்கம் மனச்சாட்சி அடிப்படையில் சமத்துவ, சமூக, அரசியல் விடுதலை இயக்க மாயிற்று. ஜோன் டூயியின் கல்வித் தத்துவத்தில் கார்ல் மார்க்ஸ், ஹெகல், டார்வின் போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் பொதிந்திருந்தமையால் கனம் வாய்ந்ததாகவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததாகவும் இருந்தது. எனவே, இவரது கல்வித்தத்துவம் எவ்வித ஐயப்பாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி உரியதென்பதனை உணர்த்துகின்றது.

199/ சந்திரபோஸ்
கல்வி பற்றி மகாத்மாகாந்தி கூறுமிடத்து, கல்வி அறிவை வளர்ப்பது, ஆற்றலை வளர்ப்பது, உணர்ச்சிகளைப் பயன் படுத்துவது, மக்கள் வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது, மனிதனின் சமூக நடத்தையினை மாற்றியமைப்பது, மக்களில் உள்ளடங்கியிருக்கும் ஆன்மப் பண்புகளை படிப்படியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துவது என்று கருத்தினைத் தெரிவித்தார். கல்வி யாருக்கு என்னுமிடத்தில் கல்வி சகல மனிதனுக்கும் உரிமையென்று கூறிய அவர் அக்கூற்றோடு அமையாது, தமது கல்வித்திட்டத்தில் அவ்வுரிமையினை உயிர்நாடியாகக் கொண்டு ஆதாரப்பள்ளி முறையில் செயற் படுத்தியும் காட்டினார். இதனாற்றான் காந்தியடிகளின் கல்வித் தத்துவம் பகவத்கீதையில் முளைகொண்டு, இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் வேரூன்றி, தத்துவஞானி ரஸ்கினின் தத்துவத்தில் ஊட்டம் பெற்று உலகக் குழந்தைகள் அனை வருக்கும் தண்ணிழல் பரப்ப எழுந்த ஒரு பெருவிருட்ச மாகுமென்று எமது கல்வியியல் ஆசான் கூறுகின்றார்.
இன்றைய உலகில் கல்வி உரிமை மக்களின் பிறப்புரிமை யாகும். அவை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் அல்ல. உலக மக்களாகப் பிறந்த அனைவரும் கல்வி கற்றுச் சிறப் படைய வேண்டும். கல்வி தனிப்பட்ட ஒருவருக்கு நன்மை பயப்பதோடு சமூக முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. சமூக சீர்திருத்தத்திற்கு கல்வியும் மிகச்சிறந்த சாதனம் என்றெல்லாம் பெஸ்டலசி என்னும் கல்வியியலாளர் கூறுகின்றார்.
மனிதனை மனிதனாக்குவது கல்வி என்றார் கவிஞர் தாகூர். மனிதத் தன்மையினை மனிதன் பெறுவதற்கு உறு துணையாக விளங்குவது கல்வி என்றார் வில்லியம் வேட்ஸ் வர்த். 'கற்க மறுப்பவன் வாழ மறுப்பவனாவான்’ என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர். "அறிவை வளர்த்திட வேண்டும்.

Page 102
எண்னக்கோலங்கள் 2OO
மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் பயிற்றிப் பல் கல்வி தந்து இந்தப் பாரை உய்த்திட வேண்டும். வீடுதோறும் கல்வி விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நகர்கள் எங்கும் பலப் பல பள்ளி” என ஊரறிய, நாடறிய உண்மையெல்லாம் ஒருவருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தான் அமரகவி பாரதி. “ஒதுவது ஒழியேல்" என்றாள் ஒளவை. இவ்வாறு கல்விக்குப் பல வரைவிலக்கணங்களையும், கல்வி மக்களின் உரிமை என்பதனையும் நிலைநாட்டினர் கவிவாணர்கள்.
ஈழத் திருநாட்டில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டவர் நாவலர். சுதேச கல்வி இயக்கத்தை முதன்முதல் அந்நியராட்சிக்கெதிராகவும், சிறிஸ்தவ மிஷனரி களுக்கெதிராகவும் துணிவுடன் ஆரம்பித்தார். கல்விபற்றிக் கூறுமிடத்து இவர் “கல்வியை இளமைதொட்டு மரண பரியந்தம் வரை விடாமற் கற்கவேண்டும்” என்றார். “வித்தியா தானத்திற்கு சமமான தானம் ஒன்றுமில்லை. வித்தியாதானமே எல்லாத் தானத்திலும் சிறந்த"தென்பார். இவரால் 1848இல் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது. சுதேசக் கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரைவிலக்கணம் கூறிய இவரே தேசவழமை சக்திக்குட் பட்டு, சாதிவெறி காட்டி தமிழ் மக்களின் ஒரு சாராரின் கல்வி உரிமையினை, சமூக உரிமைகளை மறுத்தார். அவர் எழுதிய சைவ வினாவிடைகளில், சாதிவேறுபாடுகள் அப்பட்ட மாகக் காண்பிக்கப்பட்டன; கற்பிக்கப்பட்டன. அவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளிலும் கல்வியுரிமை தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டது. வித்தியாதானத் திற்கு சமமானது ஒன்றுமில்லையென்று கூறிய அவரே சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வித்தியாதானம் செய்து வைக்க மறுத்தும் இருக்கின்றார். இளமை தொட்டு மரண பரியந்தம் வரை விடாமல் கற்கவேண்டுமென்று கூறிய அவரே ஒரு சாராரின் கல்விக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்

2O1/ சந்திரபோஸ்
கின்றார். இவை நாவலரின் புகழுக்கு மாசு கற்பிப்பதற்காக எழுதப்படும் புனைகதைகளல்ல. இவைகள் உண்மைகள். ஜீரணிப்பது கடினமாகவும் இருக்கலாம்.
20ஆம் நூற்றாண்டில் கட்டாயக் கல்விக்கூடங்கள் எழுந்தன. ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் மனித உரிமை பட்டயத்தில் கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் அரசாங்கம் இலவசக் கல்வியை சகலருக்கும் அளிக்கும் கல்வி நிர்வா கத்தை தானே பொறுப்பேற்றும் இருக்கின்றது. இந்த நிலையில் கல்வியுரிமை யாருக்காவது மறுக்கப்பட்டிருக்கின்றதா? என்பது ஐயத்துக்குரியதே.

Page 103
2O-ம் நூற்றாண்டுக்கு
முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்விநிலை
லங்கையின் கல்வி வரலாற்றை ஆராய்ந்த கல்வியியலாளர்கள் ஏழு பெரும் பிரிவுகளாகக் கொண்டு ஆராய்ந்துள் ளார்கள். இதில் முதலாம், இரண்டாம் பிரிவுகளில் புராதன இலங்கையின் கல்வி பற்றி ஆராயப்படுகின்றது. ஆரியர் வரு கைக்கு முற்பட்ட காலந்தொட்டு கி. பி. 15ஆம் நூற்றாண்டு வரையிலான, ஏறக் குறைய 2000 ஆண்டுகளைக் கொண்ட ஒரு நீண்டகாலக் கல்விமுறை ஆராயப் படுகின்றது. ஆயினும் இக்கல்வி முறை பற்றிய குறிப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சமய நூல்களிலும் இலக்கியங் களிலும் ஆங்காங்கு காணப்படும் இக் குறிப்புக்களிலிருந்து பண்டைக் காலத்தில் நிலவிய கல்விமுறைகள் பற்றிய முடிவு களை ஊகித்தே அறியவேண்டியுள்ளது. எனினும், அக்காலகட்டத்தில் நிலவிய கல்விமுறையில் அடிப்படையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென்று கூற (DLL Ungl.

2O3 / சந்திரபோஸ்
இந்திய துணைக் கண்டத்தின் பழைய நாகரிகங்களும், பண்பாடும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி யிருக்க வேண்டும். கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரியர் வருகையுடன் பிராமணர் கல்வி மரபு பரவியது. பிராமணக் கல்வி மரபு இருபிறப்பாளர்களாகிய பிராமணருக்கு மாத்திரம் உரிய சாதி அடிப்படைக் கல்வியாய் விளங்கிற்று. சமய நூல்களும், வேள்விக் கிரியை முறைகளுமே அதில் இடம் பெற்றன. குரு - சீட பாரம்பரியமும் பிராமணக் கல்வி மரபில் இடம்பெற்றது. நால்வகை வர்ண பாகுபாடுகளான பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்னும் பகுப்பு சமுதாயத்தில் காணப்பட்டது. பிராமணர்களுக்கே கல்வி உரியதாகக் கொள்ளப்பட்டபோதிலும், அரசனின் அனு சரணையைப் பெறுவதற்காக சத்திரியர்களான ஆளும் வர்க்கத்தினருக்கும் கல்வி புகட்டப்பட்டது.
இன்றுள்ள சாதிப்பாகுபாட்டுடன் பிராமண மரபில் காணப்பட்ட வர்ணப் பாகுபாடு வேறுபட்டதொன்றாகும். பிராமணக் கல்வி மரபு சமயத்தின் ஒரு பகுதியாக விளங் கியதுடன் தன்னையறிவதற்கும். முத்தியடைவதற்குமான மார்க்கங்களைப் போதித்தது. இத்தகைய கல்விமுறை ஆரம்பத்தில் குடும்பத்தைச் சார்ந்ததாகவும், வேதாகமத்தையும், குலத்தொழிலையும் கற்பிப்பதாகவும் இருந்தது. பின்னர் தொழில்முறை அடிப்படையில் வந்த நால்வகை வர்ண பாகுபாட்டு அடிப்படையில் ஆண்டான் அடிமை சமுதா யத்தைப் பாதுகாக்கும் அரணாக விளங்கியது. இந்நால் வகைச் சாதிப்பாகுபாட்டில் சூத்திரர் கல்வி பெற்றார்களா என்று சொல்வதற்கில்லை. இன்று தம்மை இரு மரபும் தூய வழிவந்த கார்காத்த வேளாளப் பரம்பரையினர் எனச் சொல்லிக்கொள்ளும் உயர்சாதியினராகத் தம்மை வரித்துக் கொண்டவர்கள்கூட பிராமண வர்ண பாகுபாட்டடிப் படையில் சூத்திரரேயாவர். இவர்களுக்கே இக்காலத்தில் கல்வியில் இந்த நிலையென்றால் இவர்களால் தாழ்த்தி வைக்கப்பட்ட தமிழர்களின் கல்வி நிலை பற்றி ஒன்றும்

Page 104
sTescorecords(85me.orrassit 204
சொல்வதற்கில்லை. ஏனெனில் இத்தகைய பாகுபாடொன்று அக்காலகட்டத்தில் இருந்திருக்குமென்றும் சொல்வதற்கில்லை.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் பெளத்த கல்வி மரபு இலங்கையில் பரவியபோது பிராமணக் கல்வி மரபு செல்வாக் கிழந்தது. பெளத்த கல்வி மரபு சமூக ஏற்றத்தாழ்வைப் போக்கிச் சமன்செய்யும் கோலாக விளங்கிற்று, அது இரு பிறப்பாளருக்கு மாத்திரமே கல்வி உரியது என்ற நிலையினை மாற்றி எல்லோரும் கல்விபெற வாய்ப்பளித்தது. பெளத்த சங்கமும் அரசர்களும், பெளத்த கோட்பாட்டினைப் பரப்பு வதில் விருப்பங்கொண்டனர். இது இலங்கைக் கல்வி முறையின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாயிற்று மதகுருமார் மருத்துவம், சோதிடம், இலக்கியம், இதிகாசம் போன்றன வற்றை மடாலயங்களில் கற்பித்தனர். பெண்களும் பிக்குணி களாகி கல்வி பெற்றார்களென்று அறியக்கிடக்கின்றது. சமுதாயத் தேவைகளைக் கொண்டு நோக்கும்போது பெளத்த கல்வி மரபானது சமய அறிவினைப் பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் நன்னெறிகளைப் பயிற்றுவதில் முன்நின்றது எனலாம். அத்துடன் ஆட்சியாளருக்கு வேண்டிய ஆட்சிக் கலை, சமுதாயத் தேவையோடொட்டிய தொழிற்கல்வி என்பன இடம்பெற்றனவெனலாம். பிராமணக் கல்வி மரபை விட இக்கல்வி மரபானது கொள்கையளவில் முன்னேற்ற மானதொன்றாக இருந்தபோதிலும், உண்மையில் சகல மக்களும் சமமான முறையில் கல்வி பெற்றிருப்பார்களா வென்பது ஐயத்திற்குரியதே. மற்றும் இந்துக்களான தமிழர்கள் பெளத்த சமய கல்வி மரபினை ஏற்று எல்லோரும் கற்றிருப் பார்களென்பது ஊகிக்கவே முடியாததொன்றாகும். எனினும், பிராமணக் கல்வி மரபினைவிட பெளத்த கல்வி மரபு கற்றோர் தொகையும், கற்பிக்கப்பட்ட முறையும் கூடியும், முன்னேற்ற மடைந்தும் காணப்பட்டது.
இலங்கைக் கல்வி வரலாற்றில் மூன்றாம் பிரிவில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தி

2O5 / சந்திரபோஸ்
லிருந்த கல்வி வாய்ப்புக்களும் அவர்களின் மிஷனரி முயற்சி களும், அவற்றால் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள இலக்கியங்களிலும் மக்களின் வாழ்க்கை, சிந்தனை ஆகியவற்றிலும் உண்டான தாக்கம் ஆராயப்படுகின்றது. போர்த்துக்கேயர் 1505ல் இலங்கைக்கு வந்தபோதிலும் கோட்டை அரசனான தொன் யுவான் தர்மபாலா கிபி 1557ல் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதோடு கி.மு. 3ம் நூற்றாண்டி லிருந்து இலங்கையில் செல்வாக்கு செலுத்தி வந்த பெளத்த சமயமும், பெளத்த கல்வி மரபும் அரசனின் ஆதரவின்றி நிலைகுன்றியது. இந்தவிடத்தினை கத்தோலிக்க மிஷனரிமார் பிடித்துக் கொண்டனர். கரையோர மாகாணங்கள் போர்த்துக் கேயரின் ஆதிக்கத்திற்குக் கீழ் வர இலங்கையின் கல்வி வரலாற்றில் பிரான்சிசுக்கன் சபையார், இயேசு சபையார், டொமினிக்கன் சபையார், ஒகஸ்தின் சபையார் ஒன்றன் பின் ஒன்றாக பாடசாலைகளையும், கல்லூரிகளையும் மேலைத் தேச கல்வி மரபுகளின் அடிப்படையில் ஆரம்பித்தனர். இவர்களின் நோக்கம் தம் மதத்தைப் பரப்புவதேயாகும். குருமாருக்கான கல்வி, இளவரசர்களுக்கான கல்வி என்பனவும் மதமாற்ற நோக்கிலே செய்யப்பட்டன. இதேபோன்றே 1658ல் இலங்கையின் கரையோர மாகாணத்தைத் தமதாக்கிக் கொண்ட ஒல்லாந்தர்கள் போர்த்துக்கேயரைப் போன்றே கல்வி முயற்சிகளில் அக்கறை கொண்டனர். அவர்கள் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகுமுன் 18000 பிள்ளைகள் வரை அவர் களது பாடசாலைகளில் கல்வி பயின்றனர். இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒல்லாந்த சீர்திருத்த திருச்சபைகளை ஆரம்பித்தனர். கல்வியை அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று விரும்பினர். ஒல்லாந்தர் காலத்தில் இலவச கட்டாயக் கல்வி முறையும், பாடசாலைக்கு வராமைக்கு பெற்றோரிடம் குற்றப்பணம் அறவிடும் முறையும் காணப்பட்டது. ஆரம்பப் பாடசாலைகளில் சுதேச மொழிகள் மூலம் கல்வி கற்பிக்கப் LIL-L-gl.

Page 105
எண்னக்கோலங்கள் 206
இவ்வாறு போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஏறக் குறைய மூன்று நூற்றாண்டுகளாக இலங்கையை ஆண்ட காலத்திலேதான் முதன் முதல் சமயம், கல்வி, ஆட்சிமுறை ஆகிய துறைகளில் இலங்கை மேற்கு ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தைப் பெற நேர்ந்தது. 6ஆம், 7ஆம் 19ஆம் நூற்றாண்டு களில் கிறிஸ்தவ மத குருமார்களும், போர்த்துக்கேய, ஒல்லாந்து ஆட்சியாளர்களின் ஆதரவுடன் சமயத்தைப் பரப்புவதிலும், கல்விப் பணியிலும் ஈடுபட்டதனால் பழைய கல்வி மரபு வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில்கூட மானிய முறை பிரபுத்துவ முறைகளே இலங்கையில் காணப்பட்டன. சாதாரண பொது மக்களான சுதேசிகள் அடிமை நிலையில் தான் காணப்பட்டனர். சமுதாயத்தில் அரசன் அல்லது ஆட்சியாளர், பிரபுக்கள் குருமார், பலம் வாய்ந்த பெருங் குடி வணிகர்கள் என்ற வகுப்பு வேறுபாடுகள் காணப் பட்டன. சாதாரண பொதுமக்கள் விவசாயக் குடிகளாக, அடிமைகளாக பல்வேறு உடலுழைப்புத் தொழிலாளர்களாகக் காணப்பட்டனர். ஆட்சியாளர்களின் கீழ் திசாவைகள், கமறாளைகள், கிராமத் தலைவர்கள் என்போரும் காணப் பட்டனர். இராஜகாரிய முறை காணப்பட்டது. தேச வழமை தொடர்ந்தும் பேணப்பட்டது.
இந்த நிலையில் தமிழர்களில் உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே கல்வி வசதிகளும், வாய்ப்புக் களும் கிடைத்திருக்க முடியும். 1760 ம் ஆண்டு கோவிபற்று பாடசாலைக்கு வந்த மாணவர்களின் தொகை பற்றிய புள்ளி விபரத்தில் யாழ்ப்பாணத்தில் 28064 பேரும், திருகோண மலையில் 363 பேரும், மட்டக்களப்பில் 10 பேரும் படித்த தாகக் கூறப்படுகின்றது. இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட தாழ்த்தப்பட்ட தமிழர்கள் இடம் பெற்றார் களா என்று கூறுதல் இயலாததொன்றாகும். 1760ல் யாழ்ப் பாணத்தில் உள்ள நல்லூரில் 24 மாணவர்களுடன் செமினரி என்ற உயர்கல்வி ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. மதகுரு மார்களாகவும், ஆசிரியர்களாகவும் வர தமிழ் இளைஞர் களுக்குப் பயிற்றுவது இச்செமினரியின் நோக்கமாக இருந்தது.

2O7 / சந்திரபோஸ்
இதில் ஆசிரியர் அல்லாதவர்களும், தமிழில் கற்பிக்க இரு உள்ளூர் வாசிகளும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதிப ருக்குத் துணையாக இருந்தனர். இச்செமினரியில் தாழ்த்தப் பட்ட தமிழ் மக்கள் இடம் பெற்றிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் ஒல்லாந்தர் தேச வழமையைப் பின்பற்றியே பரிபாலனம் செய்தனர். அத்துடன் சமுதாயத்தில் உயர் நிலையிலிருந்த சுதேசிகளின் ஆதரவும் அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது. ஆகையினால் இருக்கின்ற சமுதாய அமைப்பினை மாற்றவேண்டும், சீர்திருத்தவேண்டு மென்ற தேவைகள் அவர்களுக்கு இருந்திருக்க நியாயமில்லை. தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இருக்கின்ற அமைப்பையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இருப் பார்கள். இதனால் போர்த்துக்கேயரோ, ஒல்லாந்தரோ ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் எடுத்திருப்பார்கள் என்று கூறமுடியாது.
கல்வி வரலாற்றில் அடுத்து வரும் 4, 5, 6 காலப் பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் கல்வி பற்றிய பல விடயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வு, கல்வியில் உண்டாக்கிய தாக்கம், கட்டாயக்கல்வி இயக்கம், கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தியமை, ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழிகளே போதனா மொழிகளாக வேண்டுமென்னும் கோரிக்கைகள் என்பனவும், இவை போன்ற வேறு முக்கிய அம்சங்களும் இக்காலப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. எனினும், இப்பகுதியில் எமது ஆய்வின் வசதிக்காக, பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டு முடியும் வரையான கர்லப்பகுதியின் கல்வி வளர்ச்சியினையும் ஆழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி நிலையினையும் நோக்குவோம்.
1796இல் கரையோர மாகாணங்களை ஆங்கிலேயர் கைப்பற்றிய போதிலும் 1815லேயே முழு இலங்கையையும்

Page 106
எண்னக்கோலங்கள் 208
தமது ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனர். எனினும் சமயத்தைப் பரப்பவும், கல்வி முயற்சிகளில் ஈடுபடவுமென 1804இல் லண்டன் சமயக் குழுவும், அதன்பின் 1812இல் வெஸ்லியன் மிசனரிமாரும், அமெரிக்க மிசனரிமாரும் இங்கு வந்து பாடசாலைகளை ஆரம்பித்தனர். இதற்கு முன்பு ஒல்லாந்தர்களினால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகளை பிரித்தானியக் கல்விமுறைக்கு மாற்ற பிரடறிக் நோர்த் தேசாதிபதியும், ஜேம்ஸ் கோடினர் பாதிரியாரும் இணைந்து முயற்சி செய்தனர். நோர்த்திற்குப் பின் வந்த தோமஸ் மெயிற்லண்ட் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கொள்கைக் கிணங்க இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளவில்லை. ஆயினும் சேர் பிரவுன்றிக்கின் காலத்தில் கல்வி வளர்ச்சி துரிதமடைந்தது. 1918இல் உப அத்தியட்ச குருபீடம் கொழும்பில் அமைக்கப்பட்டது. இதிலிருந்து இங்கிலாந்து திருச்சபை அங்கிலிக்கன் மிஷன்மாரும் கல்வி வளர்ச்சியில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 1832இன் பின்னரே அரசு கல்வியைப் பொறுப்பேற்றது. 1832இல் அமெரிக்கன் சமயக் குழுவினர் பல்வேறுபட்ட பாடசாலைகளையும், உயர்கல்வி நிறுவனம் ஒன்றினையும் யாழ்ப்பாணத்தில் நிறுவினர். இவர்கள் அமைத்த பாட சாலைகள் மூன்று வகையானதாகும்.
1. கிராமப் பாடசாலைகள்
2. மத்திய கல்லூரிகள்
3. இலவச விடுதிப் பாடசாலைகள் (அகடமி இதனுள்
அடங்கும்)
கிராமியப் பாடசாலைகள் வட்டுக்கோட்டையில் 18உம், உடுவிலில் 19உம், பண்டத்தரிப்பில் 12உம், மானிப் பாயில் 10உம், மற்றும் வேறிடங்களிலும் சேர்த்து 78 பாட சாலைகளை நிறுவினர். இப்பாடசாலைகளில் 1833இல் ஆண் - பெண் உட்பட 3095 பேர் கல்வி கற்றனர். மத்திய பாட சாலைகள் வட்டுக்கோட்டை, உடுவில், மானிப்பாய் ஆகிய

209 / சந்திரபோஸ்
இடங்களில் மட்டும் ஒவ்வொரு பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இம்மூன்று பாடசாலைகளிலும் 1833இல் 75 மாண வர்கள் மட்டும் கற்றனர். உயர் கல்வி நிறுவனம் 1832இல் வட்டுக்கோட்டையில் நிறுவப்பட்டது. 148 மாணவர்கள் அச்சந்தர்ப்பத்தில் படித்தார்கள் என்றும், அவர்களில் 140 பேர் இலவசக் கல்வி பெற்றார்களெனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் இப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கற்றார்கள் என்பது சந்தேகமே.
1865இல் இத்தீவின் கல்வி என்ன நிலையில் உள்ள தென்பதையும், அதன் வளர்ச்சிக்கான எதிர்கால வாய்ப்பு எத்தகையது என்பதையும், வழக்கிலுள்ள கல்வி முறையால் எவ்வளவு நன்மை ஏற்பட்டுள்ளதென்பதையும், இம்முறை எத்தகைய சீர்திருத்தம் செய்யலாமென்பதையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு சட்ட நிரூபண சபையானது ஒரு குழுவை நியமித்தது. இக்குழு 1867இல் சட்ட நிரூபணக் கூட்டமொன்றில் சமர்ப்பித்த விதப்புரைகளில் மக்களின் உண்மையான கல்விக்கு மிகச்சிறிதளவு ஏற்பாடே செய்யப் பட்டிருந்ததெனவும், இப்போதுள்ள பாடசாலைகள் அரை குறை கல்வி கற்றவரும், அறிவாழமற்றவரும், தலைக் கொழுப்பு மிக்கவருமான இளைஞர்களையே உருவாக்குகின்றன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விதப்புரைகளின் மூலம் தாழ்த்தப் பட்ட தமிழர்களின் கல்வி நிலை இக்கால கட்டத்தில் எந்த நிலையில் இருந்திருக்குமென்பதை நாம் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
1864ஆம் ஆண்டளவில் சுதேச மதங்களான பெளத்தமும், இந்து மதமும் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கின. பெளத்த சமய கலாசார கல்வி வளர்ச்சியில் வண. புளத்கம தர்மாலங்கார பூரீசுமணதீச, ஹிக்கடுவ பூரீசுமங்கல வண. மிகெட்டுவத்த குணானந்த தேரோ போன்றோரும், அமெரிக்கரான H. S. ஒல்கொட், அநகாரிக தர்மபாலா போன்றோரும் முன்னணியில் நின்றனர். பெளத்த சமயத்தைப்

Page 107
எண்னக்கோலங்கள் 210
போன்றே 1850இன் பின் இந்து சமயமும், தமிழ் மொழியும் மறுமலர்ச்சியடையத் தொடங்கின. இம்மறுமலர்ச்சி இயக்கத் திற்கு ஆறுமுகநாவலரே தலைமை தாங்கினார். 1848இல் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையும், அதனைத் தொடர்ந்து இணுவில் அம்பிகைபாகர் வித்தியா சாலையும், கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையும், கோப்பாய், கோண்டாவில், புலோலி, மூளாய், வேலணை, கொழும்புத்துறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் சைவத் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எழுந்தன. இந்த வேளையில் மிசனரிமாருடைய தடைகளும், தலையீடுகளும் சில இன்னல் களை விளைவித்துக் கொண்டிருந்தன. இக்காலகட்டத்தில் மிஷனரிமாரின் பலத்த எதிர்ப்புக்கிடையிலும் சைவ நெறி முறையில் அமைந்த ஆங்கிலப் பாடசாலையொன்றை நிறுவ முயற்சி செய்தனர். 1888இல் நாவலரின் மாணாக்கர்களும் உறவினர்களும் சேர்ந்து சைவப்பரிபாலன சபையை நிறுவினர். கிறிஸ்தவச் சமயக்குழுவினரின் நடவடிக்கைகளினால் நலிவுற்ற சைவத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்தன. 1890 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி ஸ்தாபிக்கப் பட்டது. சைவ பரிபாலன சங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகளின் தொகைகளையும், அதில் கல்வி பெற்ற மாணவர்களின் தொகைகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.
ஆண்டு பாடசாலைகளின் தொகை மாணவர் தொகை
1880 1 167
1885 4. 378
1890 6 661
1895 30 4600
1900 45 5000
இவ்விதமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை வரை கிறிஸ்தவ சமயக் குழுக்களினாலும், 19ஆம் நூற்றாண்டின்

21 / சந்திரபோஸ்
இறுதியில் சுதேச மத ஸ்தாபனங்களினாலும் இலங்கையின் கல்வி வளர்ச்சி விரிவடைந்தது. இலங்கைத் தமிழ் மக்களுடைய கல்வி நிலையும் மொழி, சமயம் என்பவற்றில் மறு மலர்ச்சி பெற்று புதுவேகம் பெற்றது. இந்து சமயப் பாரம்பரியத்திற்கு ஏற்பவும், சமய ஆகமங்களைப் பேணும் வகையிலும் கல்வி போதிக்கும் நடவடிக்கைகள் நாவலரினால் ஆரம்பிக்கப் பட்ட பாடசாலைகளிலும் சைவ பரிபாலன சபை நிறுவி நிர்வகித்த பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டதனால் தாழ்த்தப்பட்ட தமிழர்கள், குறைந்த சாதியினர், பஞ்சமர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட மக்கள் குழுவினருக்கு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இடமளிக்கப்பட வில்லை. 20ஆம் நூற்றாண்டின் பின்னர் கூட இத்தகைய பாட சாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட மறுக்கப்பட்ட நிலையும், சேர்த்துக் கொள்ளப்பட்ட சில மாணவர்கள் அடைந்த இன்னல்களையும் இக்காலகட்டத்தில் நாங்கள் கண்கூடாகக் கண்டுள்ளோம்; அநுபவித்துள்ளோம். ஆகவே, தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியானது 20ஆம் நூற்றாண்டி லிருந்துதான் ஆரம்பிக்கின்றதென்று துணிந்து கூறமுடியும். இதனை அடுத்து வரும் அத்தியாயத்தில் ஆராய்வோம்.
கல்வியின் பன்முகப் பார்வையில் பெரும்பாலும் முறைசார் கல்வியும், நூற்கல்வியும் தமிழர்களின் ஒரு பகுதி யினருக்கு மறுக்கப்பட்ட வேளையிலும் தமிழ் மக்களின் கலை இலக்கியங்களைப் பாதுகாத்து வளர்க்கும் பெரும் பணியில் இம்மக்கள் கணிசமான பங்கு கொண்டுள்ளனர். நாட்டார் கலை இலக்கியங்களை வாய்மொழி வாய்மொழி யாக வளர்த்தும் தாம் வாழ்ந்து வந்த கிராமங்களில் திரு விழாக்கள், கொண்டாட்டங்களில் நாட்டுக்கூத்து, தெருக் கூத்து வில்லுப்பாட்டு, காவடியாட்டம், கரக ஆட்டம் போன்ற தமிழ்க் கலைகளை வளர்த்து வந்துள்ளனர் சிறந்த தமிழ்க் கவிஞர்களாக நாடகக் கலைஞர்களாக, பாடகர்களாக விளங்கினார்கள்.

Page 108
எண்னக்கோலங்கள் 212
உயர்மட்டத்திலிருந்த தமிழர்கள் மேலைத்தேச நாகரீகம், கலாசாரம் கல்விமுறை என்பவற்றால் கவரப்பட்டு ஆங்கில மொழி பேசி ஐரோப்பிய நாகரீகத்தைப் பின்பற்றும் ஒரு புதிய வர்க்கத்தினராகத் தோற்றம் பெற்றபொழுது, தொடர்ந்து தமிழ்மொழி, பண்பாடு, கலை, கலாசாரங்களைக் காத்து வந்தோரில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றும் சிறந்த சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, விமர் சனம் போன்ற துறைகளிலும், இசை சங்கீதத் துறைகளிலும் விற்பன்னர்களாகத் திகழ்ந்து ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தகை யோரைப் புறக்கணித்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றினை பூரணப்படுத்த முடியாது.
அடுத்ததாக தமிழ் ஈழத்தின் வளங்களைப் பயன் படுத்தி கைப்பணிக் கல்வியை வளர்ப்பதிலும் இவர்களின் பங்கு முக்கியமானதாகக் காணப்பட்டது. மண்ணில், மரத்தில், மற்றும் பல்வேறுபட்ட கழிவுப்பொருட்களைப் பயன் படுத்தி பயனுள்ள கைவினைப் பொருட்களைத் தயாரித்தனர். பனை ஒலையிலிருந்து வீட்டுப் பாவனைப் பொருள்கள் பலவற்றைச் செய்தனர். இதேபோன்று களிமண்ணைப் பயன்படுத்தி பல கலைப் பொருள்களை ஆக்கினர். மரம், மிருகங்களின் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாத்தியக் கருவிகளைச் செய் தனர். இன்று நவீன கல்விமுறையில் அறிமுகப்படுத்தப் படும் வாழ்க்கைத்திறன் கல்வியினை, முறையான கல்வி வசதிகள் பெற வாய்ப்பு அற்ற நிலையிலும்கூட தமக்கிடையே இருந்த இயற்கை அறிவாற்றல் மூலம் வளர்த்து வந்துள்ளனர்.
சிற்சில கிராமங்களில் வைத்திய வாகடங்களை அறிந்து வைத்திருந்த ஒருசில தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முறிவு தறிவுச் சிகிச்சைகள், விசக்கடி வைத்தியம், மனநோயாள ருக்கான வைத்தியம் செய்வதில் பெரும் பெயர் பெற்று விளங்கி உள்ளனர்.

213 / சந்திரபோஸ்
அற ஒழுக்கத்திலும் இவர்கள் சிறந்து விளங்கினர். பெரியோருக்குப் பணிதல், மூத்தோர் சொல்லினை மதித்து நடத்தல், கீழ்ப்படிவு, பரோபகாரம் ஆகிய செய்கைகளிலும் சிறந்து விளங்கினர். ஆயினும் இவர்களது கீழ்ப்படிவு - உண்மை, நன்மை, தர்மம், கடவுள்நீதி என்பவற்றுக்குக் கட்டுப்பட்ட கீழ்ப்படிவு - என இவர்கள் எண்ணி இருந் தாலும், சட்ட நிலமானியமுறை, நிலப்பிரபுத்துவ அடக்கு முறைகளுக்கான அப்பாவித்தனமான கீழ்ப்படிவாகவே இருந்தது. இவர்களின் அப்பாவித்தனமான கீழ்ப்படிதலும் இவர்களை மேலும் மேலும் அதிகார வர்க்கத்தினரது தாழ்த்துதலுக்கு உதவியது.

Page 109
2O-ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி ωIGnήό8)
இலங்கையின் கல்வி வரலாற்றில் 5ஆம் 6ஆம் 7ஆம் பகுதிகளில் இடம்பெறுகின்ற புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வுக் கல்வியில் தாக்கம், கட்டாயக் கல்வி இயக்கம், கல்விக்கான வசதிகளை அதி கரித்தமை, ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழியே போதனா மொழி களாக வேண்டுமென்ற கோரிக்கைகளும், நிகழ்காலக் கல்வி நிலைமைகள் பற்றி யதுமான அமிசங்களும், இன்றைய கல்வி முறைக்கு பல்வேறு கல்வியமைச்சர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் இப்பகுதிகளுள் அடங்குகின்றன.
இப்பகுதிகளுக்கிடையேதான் தாழ்த்தப் பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிகளும் அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் இடம் பெறுகின்றன.

215 / சந்திரபோஸ்
நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்களில் பண்ணை அடிமைகளாக, விவசாயக் குடிமைகளாக இருந்த நிலைமைகள் தமிழர் சமுதாயத்திலும் காணப்பட்டன. இச்சமுதாய அமைப்பு கட்டிக் காக்கப்பட்ட காலகட்டங்களில் தாழ்ந்தோர் கல்வி பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. இதனை நாம் முன்னர் பிராமண கல்வி மரபில் அவதானித்தோம். தமிழர்கள் பரவி வாழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நிலைகள் காணப்பட்டன. தமிழருடைய பழக்க வழக்கங்கள் வைதீகக் கொள்கையின் அடிப்படையிலும், சாதிப்பிரிவின் அடிப்படையிலும் எழுந்ததாகக் காணப்பட்டது. சமூகத்தில் ஒருசிலர் தாழ்ந்தோர், ஒருசிலர் உயர்ந்தோர் என்பதை முன்னுள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையும், இந்துசமய முறைப்படி பிறவியிலே உயர்ந்தோர், இழிந்தோர் எனப் பாகுபாடு உண்டென்று மக்களை நம்பவைத்து, தாழ்ந்தவர்கள் என்று கூறப்பட்டோரின் அறியாமையைப் பயன்படுத்தித் தொடர்ந்தும் அடிமைகளாகவும், அறிவிலிகளாகவும் வைத் திருந்த நிலையும் காணப்பட்டது. இதுவே சமூக நீதி என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்களும் தங்கள் அறியாமையினாலும், தங்கள் பலத்தைப் புரியாமையினாலும், சமயவாதிகள் கற்பித்த கருமவினை என்ற தன்மைகளை நம்பியதனாலும், உயர்சாதியினருக்குச் சேவகம் செய்வதற் காகவே இறைவனால் படைக்கப்பட்டோர்களென்ற எண்ணத் தோடு வாழ்ந்தார்கள். இன்றும் இப்படியான மனப்பாங்கு டைய ஒருசிலர் வாழ்ந்துகொண்டும் இருக்கின்றனர். இந்த நிலை தமிழ்ச் சமுதாயத்தில் இலங்கையில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலும் தொடர்ந்தது. போர்த்துக் கேயரினாலும், ஒல்லாந்தர்களினாலும், இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தாழ்த்தப்பட்ட தமிழருக்கு எந்தவிதமான கல்வி விமோசனமும் கிடைத்திருக்கமுடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக்

Page 110
எண்ணக்கோலங்கள் 216
காலத்திலும், இலங்கையில் சுதந்திர அரசு தோன்றியதன் பின்பும் இம்மக்களின் கல்வி வளர்ச்சியில் பல இடர்ப்பாடு களும் தடைகளும், சொல்லொணாத் துன்பங்களும் இருந்த போது இதற்கு முந்திய காலகட்டங்களில் இவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டிருக்குமென்றோ அல்லது இவர்களுக்குத்தான் கல்வி கற்பதில் ஆர்வம் இருந்திருக்குமென்றோ கூறுவதற்கில்லை.
கைத்தொழிற் புரட்சியின் பலனாகவும், சமதர்ம தத்துவங்களின் எழுச்சியினாலும், ஜனநாயக ஆட்சியின் மலர்ச்சியினாலும், இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கத்தினாலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விழிப்பினாலும் அவர் களின் கல்வி வளர்ச்சிக்கு கால்கோள் இடப்பட்டது. வெளி நாடுகளுக்குச் சென்று, கல்வி கற்று நாடு திரும்பிய சி. வை. தாமோதரம்பிள்ளை, ஹரோவிட், வைமன், போர்ட் துரை சாமி, கிங்ஸ்பரி போதகர் ஆகிய உயர்சாதி மக்கள் தம்முடைய வீடுகளில் சமையல் வேலை, தோட்டவேலை, ஆயா வேலை களுக்காக தாழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரை அமர்த்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க மதக்குழுவினர்களைச் சேர்ந்த சில பாடசாலை நிர்வாகி களுக்கும் மேற்கூறிய விதமான சேவகங்கள் செய்த தாழ்த்தப் பட்ட தமிழர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மதக்குழுப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்கு நடவடிக் கைகள் எடுக்கும்படி ஆலோசனைகள் கூறினர்.
இவ்வாறான வாய்ப்பினை முதன் முதல் 1803ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்த திரு. யோவல் போலும், 1903ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த திரு எஸ். ஆர். ஜேக்கப்பும், இதே காலத்தில் பிறந்த ஏ.பி. இராஜேந்திரா என்போரும் பெற்றனர். இவர்களின் கல்விக்கு தெல்லிப் பளை செமினரியும், வட்டுக்கோட்டை செமினரியும் யாழ்ப் பாணம் சென். பெற்றிக்ஸ் கல்லூரியும் உறுதுணையாய் இருந்தன. திரு யோவல் போல் அவர்கள் தாமே தமிழில்

217 / சந்திரபோஸ்
ஆரம்பக்கல்வி கற்று, தெல்லிப்பளை செமினரியில் ஆசிரிய ருக்கான பயிற்சியைப் பெற்றார். ஆயினும் இவர் ஆசிரிய ராகப் பணிபுரியாது, சிற்பக்கலையில் சிறந்து விளங்கினார். சாமுவேல் கிறீன்ஸ்வி என்ற ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுத் தேறினார். திரு எஸ். ஆர். ஜேக்கப் அவர்கள் யாழ்ப் பாணக் கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் முதன் முதல் சேர்ந்து படிக்கும் வாய்ப்புப் பெற்ற தாழ்த்தப் பட்ட தமிழ் மகனாவார். இவர் இக்கல்லூரியில் சேர்ந்த பொழுது, சாதி வெறியர்கள் தம் பிள்ளைகளை அக்கல்லூரிக்கு அனுப்பமாட்டோமென பிடிவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றிய பிக்னல் என்கிற ஆங்கிலப் பாதிரியார், "யார்தான் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் ஜேக்கப் ஒருவன் கல்லூரியில் இருக்கும் வரை இக்கல்லூரியைத் தொடர்ந்து நடத்துவேன்” எனக் கூறி துணிவுடன் செயற் Lul LTrf.
திரு ஏ.பி. இராஜேந்திரா அவர்கள் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியில் பெற்று 1906ம் ஆண்டில் கொழும்புக்குச் சென்று கல்வி கற்று, கல்வி யமைச்சில் லிகிதராகவும், பின்னர் பிரதம லிகிதராகவும், தமிழ்மொழி பெயர்ப்பாளராகவும், பரீட்சகராகவும், தமிழ்ப் பாடப் புத்தக சபையின் காரியதரிசியாகவும், கல்விப் பகுதி யினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். மகாயுத்த காலத்தில் உதவி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவிருந்து சிறப்பாகச் சேவை யாற்றியமையால் 1941ல் "முதலியார்” என்னும் பட்டத்தையும், பின்னர் எம்.பி.ஈ பட்டத்தையும் அரசாங்கம் இவருக்களித்து இவரை கெளரவித்தது.
மேற்கூறப்பட்ட மூவரது வரலாறும் கல்வி வளர்ச்சியும் தனிமனிதன் கல்வி வரலாறாகக் கொள்வதற்கில்லை. இதை தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கல்வி வளர்ச்சியின் தொடக்க நிலை வரலாறாகவே கொள் ரவேண்டும். இன்னல்களுக்கு

Page 111
எண்ணக்கோலங்கள் 218
மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்தவர் திரு யோவேல் போலாகும். இவரால் ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் உதயமாயிற்று. இவரோடு இணைந்து திரு எஸ்.ஆர். ஜேக்கப், திரு ஏ.பி. இராஜேந்திரா ஆகியோர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடினர். இச்சங்கம் மூலம் அரசியல் தலைவரின் தொடர்பை ஏற்படுத்தி டொனமூர் கமிஷன், சோல்பரி கமிஷன் போன்ற அரச விசாரணைக் குழுக்கள் முன் தோன்றி தம் மக்களின் இடர்ப்பாடுகளை இடித்து ரைத்தனர். கல்விக் கொள்கையிலே கறைபடிந்திருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். அத்துடன் கல்வி, பொருளாதாரம், சமத்துவம் போன்ற உரிமைகளுக்காகவும் வாதிட்டனர். திரு போல் அவர்கள், சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுந்தான் வழங்கப்பட வேண்டும் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலை வர்கள் கூற்றினை எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று வாதிட்டார். சாதிக் கொடுமைகள் பாட சாலைகளில் தீவிரமாகத் தலைவிரித்தாடியபோது இவர் எடுத்த நடவடிக்கைகளே சகல பாடசாலைகளிலும் சாதி, பேதம் பாராட்டக் கூடாதென்று சட்டம் ஏற்பட வழி வகுத்தது. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப் பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்குரலை எழுப்புவதற்காக ஜனதர்ம போதினி” என்னும் பத்திரிகையை வாராந்தம் வெளியிட்டு வந்தார்.
இக்காலகட்டத்தில் ஒரே பார்வையில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடைய கல்வி நிலையினை யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதினையும் நோக்கும்போது தாழ்த்தப்பட்ட தமிழர்களுள் ஒரளவு பொருளாதார வசதியுடையவர்களாக இருந்தவர்களுக்கும், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் பெற்றவர் களுக்கும், கிறிஸ்தவப் பாதிரிமாரின் அனுசரணையைப் பெற்றவர்களுக்கும் கல்வி வசதி பெற வாய்ப்பளிக்கப்பட்டது.

219 / சந்திரபோஸ்
இவ்வாய்ப்புக்களும் மிஷனரிமார்களின் பாடசாலைகளினா லேயே வழங்கப்பட்டன. பெரும்பாலும் கிராமப்புற மிஷனரிப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களைச் சேர்த்துக்கொண்டபோதிலுங்கூட, சமஆசன வசதிகள் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் நிலத்தில் உட்கார்ந்தோ, நின்றோ அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியாசனங்களிலிருந்தோ கற்கவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வேறுபாடுகள் மிஷனரியின் கொள்கையல்ல. ஆயினும், அப்பாடசாலைகளில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கொள்கைகளாகவும் அப்பாடசாலை அமைந்துள்ள அவ்வூர் உயர்சாதி மக்களின் அச்சுறுத்துதலாகவும் இருந்தன.
சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட தமிழர்களே கூடுதலாக வசித்த பகுதிகளில் அவர்களை கிறிஸ்தவர் களாக்குவதற்காக அவர்களுக்கெனவே மிஷனரிப் பாட சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. வதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் பாடசாலை, காரை தீவு மெதடிஸ்த மிஷன் பாட சாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம், கரையோரப் பகுதி களில் அமைந்து, மீனவ சமூகத்தினால் நிர்வகிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் ஒரளவு, தாழ்த்தப்பட்ட தமிழர் களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தினை அளித்தனர். இவற்றுள் சென். பெற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம், தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலை, ஆனைக் கோட்டை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்ற வற்றைக் குறிப்பிடலாம். விவேகமுள்ள பிள்ளைகளை கிறிஸ்துவத்தில் சேர்த்து மதத்தைப் பரப்புவதற்கு மிஷனரி மார்கள் முயற்சி செய்ததனால் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி கற்ற பிள்ளைகளில் விவேகமானோரை உயர்கல்விக் கான வாய்ப்பளிக்க மிஷனரி முயற்சி செய்தது.
இக்காலகட்டத்தில் சைவபரிபாலன சபையின் கீழ் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆயினும்

Page 112
எண்னக்கோலங்கள் 220
இவை இந்து சமயப் பாரம்பரியம், தேசவழமை என்ற கோட்பாடுகளைக் காரணம் காட்டி அப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வியளிக்க இடந்தரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையில் கூடிய முன்னேற்றம் உடைய மாகாணமாக இருக்கவில்லை. பண்டிதர் மயில்வாகனார் இந்தியாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவுபூண்டு விபுலானந்த அடிகளார் எனும் பெயரினைத் தாங்கி கிழக்கு மாகாணத்தில் இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைகளை ஆரம்பித்தார். 1929இல் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளில் அனைவரையும் பாகுபாடின்றி சேர்த்துக்கொண்டனர், கிழக்கு மாகாணத்தில் கல்விப் பிரச்சினை பற்றி 1928இல் விபுலானந்தஅடிகளார் கருத்துத் தெரிவிக்கையில், “கல்வி ஒருசிலருக்கு மட்டும் சொந்தமாக இருந்தால் அக்கல்வித் தத்துவத்துக்கும் இறை தத்துவத்திற்கும் முரணாக அமையலாம். பொதுவாக தமிழ்ச் சமுதாயமும் சிறப்பாக இந்து சமுதாயமும் சகல மக்களுக்கும் கல்வி மூலம் விமோசனமளிக்க வேண்டும்” என்று கூறி யுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வட மாகா ணத்தைப் போன்று சாதிக் கொடுமைகள், கொடுரமாக இருக்கவில்லை. அதற்குக் காரணமாக கண்டி ராச்சியத்துடன் அது கொண்டிருந்த தொடர்புகள், நிலமானிய சமுதாய அமைப்பின் தன்மைகள், உறுதி பெறாத நிலையும், பல இன, மத மக்கள் கலந்து வாழ்வதனாலும், சாதி அமைப்பின் கொடுமைகள் வட மாகாணத்தை ஒத்த தன்மையானதாக அங்கு நிலவவில்லை. எனினும், இங்குகூட சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்களுக்காக களுதாவளை என்ற கிராமத்தில் ஒரு தனியான அரசாங்கப் பாடசாலையுண்டு. இராம கிருஷ்ண மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்ட வைத்தீஸ்வர வித்தியாலயம் தாழ்த்தப்பட்ட தமிழர் களுக்கும், வேற்று மதத்தவரான இஸ்லாமியருக்கும் இடந் தந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி போன்றவைகளும்

221 / சந்திரபோஸ்
சிறுபான்மைத் தமிழருக்கு கல்வியளிக்க முன்வந்த ஸ்தா பனங்களாகும். நகரிலுள்ள பாடசாலைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கான கல்வி வளர்ச்சியில் சம சந்தர்ப்பங்களை அளித்தன என்றே கூறவேண்டும். இவை களில் பெரும்பாலானவை மிஷனரிப் பாடசாலைகளென்றால் மிகையாகாது.
இக்காலகட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இந்துப் பாடசாலை நிறுவ வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கிடையேயிருந்து ஒரு குரல் ஒலித்தது. இம்முயற்சியில் அல்வாய் வேலிர் சோதிடர், கரவெட்டி திரு கா. சூரன் ஆசாரியார், வதிரி சிவசம்பு வைத்தியர் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்தவ மிஷனரிக் கெதிராகத் தங்கள் பிள்ளைகளுக்கு இந்து கலாசாரப்படி கல்வி கற்பிக்க ஓர் பாடசாலையை 1914ஆம் ஆண்டில் நிறுவினர். இதுவே இன்று வளர்ச்சிபெற்று திகழும் தேவரை யாளி இந்துக் கல்லூரியாகும். இப்பாடசாலை ஆரம்பித்த காலத்தில் அரசாங்க உதவி நன்கொடைகள் ஏனைய பாட சாலைகளுக்கு வழங்கப்பட்டது போல் உதவி நன்கொடைகள் இப்பாடசாலைக்குக் கிடைக்கவில்லை. 1920ஆம் ஆண்டு தான் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலையாக வித்தியா பகுதியினரால் பதிவு செய்யப்பட்டு அரசாங்க உதவி நன் கொடையும் வழங்கப்பட்டது. இப்பாடசாலை உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப்பாடசாலையில் கல்வி கற்று மாணவர்கள் இன்று பல்துறைகளிலும் சிறந்து சமுதாயத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.
1905இல் ரஷ்யாவை ஆசிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றமையும், இந்திய தேசிய இயக்கமும், இலங்கையில் மத்திய வர்க்கத்தின் எழுச்சியும், தாழ்த்தப்பட்ட தமிழர்களி டையேயிருந்து எழுந்த சமத்துவ உரிமைப்போராட்டங்களும், முற்போக்குச் சிந்தனையுடைய உயர்வகுப்பினராகக் கருதப்

Page 113
எண்னக்கோலங்கள் 222
பட்ட சில தமிழர்களின் முயற்சிகளும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் கரிசனையை ஏற்படுத்தின. 1926ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்ததனால் சம போசனம், சம ஆசனம் என்ற இயக்கங்கள் வலுப் பெற்றன. 1928ஆம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என்னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளையும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண்கள் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக திரு. நெவின்ஸ் செல்லத்துரை, திரு. கனகரத்தினம், திரு. ஹன்டி பேரின்ப நாயகம், ரெவரன் பிக்னல் பாதிரியார், ரெவரன் பாதர் போல் மெத்யூஸ், டொக்டர் ஜேம்ஸ், திரு சி. பொன்னம் பலம், எஸ். டபிள்யூ மகாதேவா, அக்காலத்தில் அரசாங்க அதிபர்ாயிருந்த திரு. காண்டோஸ் என்போரும் பெரும் ஆதரவு அளித்தனர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் காந்தீய இயக்கத்தில் நம்பிக்கை வைத்து, சில சமுதாயக் குறைபாடுகளை சீர்திருத்த முன்வந்தது. ஆயினும் 1933ல் தனது பணிகளைச் செவ்வனே செயற்படுத்த முடியாது முறிவடைந்தது. ஆயினும் இவர்களின் நல்ல நோக்கங்கள் தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு இந்நூற்றாண்டில் ஊக்கம் அளித்தது.
சர்வசன வாக்குரிமையும், அதனைத் தொடர்ந்துவந்த மரவரி முறையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கணிசமான பகுதியினரின் வாழ்வில் ஓரளவு மாற்றத்தினைக் கொண்டு வந்தது. பொருளாதாரம், கலாசாரம், சமூகநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களினால் தாம் காலூன்றி நிற்கக்கூடிய
தொடர்ந்து காந்தியக் கருத்துக்கள், சனநாயக உரிமைகள், இடதுசாரி இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் ஆகியன இணைந்து இவர்களது விடுதலைப் போருக்கு பாசறை யாயிற்று. இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின்

223 / சந்திரபோஸ்
கல்வி வளர்ச்சி என்பது ஆங்காங்கே சில குறிகாட்டிகளாகக் காணப்பட்டனவே தவிர, ஒரு முழுத்தன்மையாகச் சமுதாய அமைப்புடன் இணையவில்லை.
இக்கால வேளையில் திரு ஜி. நல்லையா அவர் களினால் ஆரம்பிக்கப்பட்ட நல்வித்திய ஐக்கிய வாலிப சங்கம், திரு ஜி. எம். பொன்னுத்துரை, திரு எம்.சி. சுப்பிர மணியம் ஆகியோர்களால் 1941இல் அமைக்கப்பட்ட சன்மார்க்க ஐக்கிய வாலிப சங்கம், திரு ஆ. ம. செல்லத் துரை, பண்டிதர் செல்லையா, சைவப்புலவர் சி. வல்லிபுரம், க.முருகேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினால் உருவாகிய ஐக்கிய வாலிபர் சங்கமும், வடமராட்சி சமூக சேவா சங்கமும் ஒன்றிணைந்து 1942ஆம் ஆண்டு சிறு பான்மைத் தமிழர் மகாசபையை ஆரம்பித்தன. இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து, போராட்டங்களை நடாத்தி விடுதலைக்கு வழிவகுத்தது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டு களின் போராட்டமே சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தனது உரிமைகளுக்காகப் போராடியபோது, அதனை மழுங்கடிப்பதற்காக மிகக் கொடூரமான எதிர்த் தாக்குதல்கள், கொலைகள், கொலை முயற்சிகள், தீவைப்புச் சம்பவங்கள், ஆலயப் பிரவேச வழக்குகள் என எத்தனையோ கொடூரங்கள் தலைவிரித் தாடின. இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஸ்தாபனத்தின் கட்டுக் கோப்பைக் குலைய விடாது தம்மின மக்களின் விடுதலைக் காகப் போராடிய போராட்ட வீரர்களாக திரு யோவெல் போல், திரு எஸ். ஆர். ஜேக்கப், தியாகி முதலி சின்னத் தம்பி, ஏ. பி. இராஜேந்திரா, திரு டி. ஜேம்ஸ், திரு ஆ. மா. செல்லத்துரை, திரு எம்.சி. சுப்பிரமணியம், திரு ஜி. நல்லையா ஆகியோரைக் குறிப்பிடலாம். முதலியார் இராஜேந்திரா அவர்கள் டி. எஸ். சேனநாயகாவின் ஆட்சிக்காலத்தில்

Page 114
எண்னக்கோலங்கள் 224
செனட்டராக்கப்பட்டார், இவர் மூதவையில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முன்னேற்றங்கள் கருதி பல பிரேரணைகள் கொண்டு வந்தார்.
1956இல் SWRD பண்டாரநாயக்காவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி துரிதகதி அடைந்தது. இக்காலத்தில் மகாசபையின் அரும்முயற்சிகளினால் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் கந்தையா அவர்களின் ஆதரவுடனும், அந்நேரத்தில் கல்வியமைச்சராக இருந்த W. தஹநாயக்கா அவர்களாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்விபெற வசதியற்ற கிராமங்களில் ஏறக்குறைய 15 பாடசாலைகளை நிறுவிக் கொடுத்தார். இப்பாட சாலைகள் வருமாறு :
பாடசாலையின் பெயர் அமைந்துள்ள தொகுதி
1. குட்டியபுலம் அ. த. க. பாடசாலை (Ba6Tiu fruiu 2. கட்டுவன்புலம் அ. த. க. பாடசாலை காங்கேசன்துறை 3. சண்டிலிப்பாய் அ. த. க. பாடசாலை மானிப்பாய் 4. சுதுமலை அ. த. க. பாடசாலை மானிப்பாய் 5. அச்சுவேலி அ. த. க. பாடசாலை கோப்பாய் 6. புலோலி அ. த. க. பாடசாலை பருத்தித்துறை 7. இமையாணன் அ. த. க. பாடசாலை உடுப்பிட்டி 8. வசந்தபுரம் அ. த. க. பாடசாலை காங்கேசன்துறை 9. மந்துவில் அ. த. க. பாடசாலை சாவகச்சேரி 10. மட்டுவில் தெற்கு அ. த. க. பாடசாலை சாவகச்சேரி 11. சரசாலை அ. த. க. பாடசாலை சாவகச்சேரி 12. கைதடி அ. த. க. பாடசாலை சாவகச்சேரி 13. வரணி அ. த. க. பாடசாலை சாவகச்சேரி 14. வெள்ளாம் பொக்கட்டி சாவகச்சேரி
1
5
. பொன் கந்தையா அ. த. க. பாடசாலை சாவகச்சேரி

225 / சந்திரபோஸ்
இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது சில பாடசாலைகள் அக்கினி தேவனுக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள்கூட இப்படியான பாடசாலைகள் அவசியமில்லை என அரசாங்கத்திற்கு முறையீடு செய்தனர். தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென பாடசாலைகள் திறப்பது மேலும் அவர்களைத் தாழ்த்தி வைப்பது போலாகும் என்ற நியாயம் வேறு இதற்குக் கற்பித்தனர். அக்காலச் சூழ்நிலை யிலிருந்த பாடசாலைகளில் இம்மக்களுக்கு சமத்துவமான முறையில் கல்வி கற்பித்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கு சாதியின் பேரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக் குரல் கொடுக்காத இவர்கள், இந்து பரிபாலன சபையின் ஆதிக் கத்தின் கீழிருந்த பல பாடசாலைகளில் அனுமதித்த தாழ்த்தப் பட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டபோது அவர் களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத இவர்கள், இச்சந்தர்ப்பத்தில் கூப்பாடு போடுவது விசித்திரமாக இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென தனியான பாடசாலைகள் திறப்பது கல்விக்கொள்கைக்கும், சமத்துவ முறைமைக்கும் முரணானதே! ஆயினும், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்பாடசாலைகளின் தோற்றந்தான் அன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு பூட்டு போட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் சமத்துவமான முறையில் சகலருக்கும் கல்வி பெற திறக்கப்பட்டது. இன்று தாழ்த்தப் பட்ட தமிழர்க்கென திறக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பாட சாலைகளில் சகல மக்களும் படிக்கின்ற, படிப்பிக்கின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. எனவே, இந்த நிலையில் இப்பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி முழுத்தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குமே உறுதுணையாக இருக்கின்றன. திரு. டயிள்யூ தஹநாயக்கா கல்வியமைச்சராக இருந்த காலத்தில் 23 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களைத் தமிழர்கள் பெற்றனர். 1956 இலிருந்து 1960 வரை ஆசிரியர் பயிற்சிக்

Page 115
எண்னக்கோலங்கள் 226
கலாசாலைக்கு ஆண்டுதோறும் 30ல் இருந்து 50 வரையிலான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறுபான்மைத்தமிழர் மகாசபை தொண்டாற்றியதுடன் சமூகக் குறைபாடுகள் ஒழிக்கப்பட்டதை 1957ல் அமலாக்கவும், 1970ம் ஆண்டு அதன் குறைகளைக் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தது.
தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் 1962ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை தமிழர் பெளத்த சங்கம், சில தமிழ் பெளத்த பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இச்சங்கத்தின் தலைவராக (டேவிற்) எம். வைரமுத்து ஜே. பி. அவர்கள் இருந்தார். இணைச் செயலாளர்களாக கே. கனகலிங்கம், வி. மார்க்கண்டு என்போரும், உபதலைவர்களாக என். சின்னத்தம்பி, எம். பொன்னுத்துரை, எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரும், தனாதிகாரியாக எஸ். ஐயாத்துரையும் பதவி களை வகித்தனர். இவர்களால் பின்வரும் நான்கு பெளத்த தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
புத்தூர் பஞ்ளுசீல வித்தியாலயம் அச்சுவேலி ரீ விபஸ்சி வித்தியாலயம் கரவெட்டி ரீ நாரதா வித்தியாலயம் அல்வாய் சேய்மகே வித்தியாலயம்
இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆரம்பத்தில் இப்பாடசாலைகளில் பெளத்த சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் கல்விகற்றனர். இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அரசாங்க ஆசிரியர்களாகும் வாய்ப்பு பலருக்குக் கிட்டியது. இன்று இப்பாடசாலைகள் பேரளவில் பெளத்த தமிழ்ப் பாடசாலை

227 / சந்திரபோஸ்
களாக இருந்த போதிலும் சகலரும் சமத்துவமாகக் கற்க, கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக உயர்கல்வி வளர்ச்சிக்கும் இதற்கு மேலும் புலமைப்பரிசில்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கற்கும் நிலை வரை தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தமிழர்கள் கல்வியில் உயர்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையை இன்றைய இளம்சிறார்கள் எய்துவதற்காக நம்முன்னோர் பட்ட அரும்பாடுகள், சொல்லொணாத் துன்பங்கள், செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்தையும் நினைவுகூருவதுடன், எக்காலத்திலும், எந்த நிலையிலும் இத்தகைய இன்னல்கள் எந்த சமூகத்திற்கும் வரக்கூடாதென்றும், அவ்வாறு சமத்துவ மின்றி காணும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க முன்வருவோமென்றும் இளைஞர்கள் உறுதி பூணவேண்டும்.
இறுதியாக இலவசக்கல்வி அறிமுகம், அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்றல், இலங்கையில் தமிழர் களின் அரசியல்நிலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்பும் எழுச்சியும், மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கமுடியா திருந்த நிலை மாற்றப்பட்டு படிப்படியாக பல்வேறு போராட்டங்களைக் கடந்து இன்றைய கல்வி நிலையில் ஏனைய சமூகத்தவர்களோடு ஒத்த ஒரு நிலைக்கு தாழ்த்தப் பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி உயர்வு பெற்றது.

Page 116
(996)6O)
கல்வித்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த தாழ்த்தப்பட்ட தமிழர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக முற்போக்கு அரசாங்கங்களின் உதவி யுடன் கல்வித்துறையில் பல சலுகை களைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபை பெற்றுக் கொடுத்தது. பாடசாலைகள் பல ஆரம்பித்து வைத்தும், இருநூறுக்கு அதிகமான இளைஞர்களுக்கும், யுவதி களுக்கும் ஆசிரியர்களாக நியமனம் பெற்றுக்கொடுத்தும், ஆசிரிய கலா சாலைத் தேர்வில் சலுகை அடிப் படையில் இச்சமூக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டும், பல்கலைக்கழக அனுமதி, வெளிநாடுகளில் புலமைப்பரிசில் பெறும் வாய்ப்பினை அளித்தும், கல்வி அதிகாரி கள், அதிபர்கள் ஆகிய பதவிகளைப் பெற்றுக் கொடுத்தும் அளப்பரிய சேவை களை ஆற்றியுள்ளது.

229 / சந்திரபோஸ்
1935ஆம் 1940ஆம் ஆண்டுகளுக்கிடையில் வேரப்பிட்டி இந்துக்கல்லூரி காரைநகர், புத்தூர் புத்தகலட்டி இந்துக் கல்லூரி ஆகியன தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கல்வி பெறு வதற்காக இந்து போர்ட் இராஜரத்தினம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
நாவலர் பரம்பரையும், சேர் பொன்னம்பலம் இராம நாதனின் கல்விப் பாரம்பரியங்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியளிக்க முன்வராதபோது “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற கூற்றுக்கிணங்க மனி தார்த்துவத்தை உணர்ந்து, அடக்கப்பட்டிருந்த மக்களைக் கட்டியெழுப்பி, மறுக்கப்பட்டிருந்த மனித உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அயராது தொண்டாற்றி, ஆக்கமும் ஊக்கமும் அளித்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அமரர்களாகிவிட்ட திரு. நெவின்ஸ் செல்லத்துரை, தோழர் சி. தர்மகுலசிங்கம், தோழர் பொன் கந்தையா, திரு. ஹண்டி பேரின்பநாயகம், தோழர் எம். கார்த்திகேசு, திரு. ஏ. ஈ. தம்பர், தோழர் எஸ். சிவபாதசுந்தரம் முதலியோரையும், ஆங்கிலப்பாதிரிமார் சிலரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதே.
சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி, திருவள்ளுவர் மகாசபை, அருந்ததியார் சங்கம், வெகுசன இயக்கம் ஆகிய சமூக ஸ்தாபனங்களும் பிற்காலத்தில் தமிழர்களுடைய அரசியற் கட்சிகளும் இம்மக்களுடைய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுத்த முயற்சிகளும் பாராட்டுக் குரியன.
தற்போது யாழ். மாவட்டம் கல்வித்துறையில் முன்னேறிய மாவட்டமெனக் கூறப்படுகின்றது. ஆனால் இம்மாவட்டத்தில் பல வசதி குறைந்த பாடசாலைகளும், உயர்கல்வி பெற வசதியில்லாத ஏழைக்குடும்பப் பிள்ளை களும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகளில் பெரும்பான்மை

Page 117
எண்னக்கோலங்கள் 230
யோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோராகும். இப் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பெறுவதற்கு தகுந்த வசதிகளை அரசியல் தலைவர்கள், சமூக ஸ்தாபனங்கள், சீர்திருத்தச் செம்மல்கள், கல்வி நெறியாளர்கள் அரசின் துணை கொண்டு செய்து தர முன்வரவேண்டும்.
இன்றைய நிலையிலும் இம்மக்கள் மத்தியில் பள்ளி செல்லாமையும் இடைவிலகல்களும் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருத்தல் கண்கூடு. இதனை மாற்றி அமைத்தல் வேண்டும். நாட்டின் தற்காலச் சூழல், அரசு கடைப்பிடிக்கும் அன்னிய நாட்டின் வேலைவாய்ப்புகளும், குடும்ப பொரு ளாதார நிலையும் இவற்றுக்குக் காரணமாகின்றது.
உயர்கல்வி பெறுவோர் தொகையும், ஆசிரியர் கல்வி பெறுவோர் தொகையும் உடனடியாக தமிழ்மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி பெறுவோரினதும், ஆசிரியத் தொழிலில் ஈடுபடும் ஆசான்களினதும் உள்ளம் விரிவடைதல் வேண்டும். சமத்துவ உணர்வு மேலோங்க வேண்டும். சன்மார்க்க நெறி யினைக் காட்டல் வேண்டும்.
சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் கல்வி வளர்ச்சிக்குமான போராட்டம்
வெல்க!

உசாத்துணைநூல்கள்
இலங்கையிற் கல்வி - நூற்றாண்டு விழா மலர் பகுதி I, II, III.
மகாசபை மலர் - 1959 - 1979, அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வெளியீடு.
தேவரையாளி இந்து - 1975, தேவரையாளி இந்துக் கல்லூரி வெளியீடு.
கல்வித் தத்துவம் - திரு. ப. சந்திரசேகரம்
கல்வியியல் - பேராசிரியர் எஸ். முத்துலிங்கம்
வெகுஜன இயக்கச் சிறப்பு மலர்

Page 118


Page 119
கடந்த பன்னிரண்டு ஆண்டுகால BLL 6TT அறிவுத் தேடல் சார்ந்தும் இணக்கமான டெ யுள்ளது. இந்த நெடுங்கால நட்பும் பகிர்வும்த நண்பர் சந்திரபோஸ் அடிக்கடிசொல்லும் ஒரு
"கற்பதற்காகப் போராடு:
போராடுவதற்காகக்கல்.” இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கிறெ இந்த நூல் தொகை, கட்டுரைகள், நினைவுக்கு ஆவணம் என ஒரு கதம்பமாக இருப்பு ஆய்வாளனாகவும், இலக்கியவாதியாகவும், " சமூகமாகத் தமிழ்ச் சமூகம் விளங்கவேண் சீவியாகவும் பரிணமித்துள்ள சந்திரபோஸின் இந்நூல் காட்டுகிறது.