கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பாடல் மொழி நவீனத்துவம்

Page 1
El 7 E, 9 கொழும்பில் பிராந்திய தமிழ் மொழியி
 

ஆம் திகதிகளில் நடைபெற்று ல் மாநாட்டு நிகழ்வுகள்

Page 2


Page 3

தொடர்பாடல் மொழி நவீனத்துவம்
1992 மே 7, 8, 9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டு நிகழ்வுகள்
பதிப்பாசிரியர்
எம். ஏ. நுஃமான்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு

Page 4
தொடர்பாடல் மொழி நவீனத்துவம் பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டு நிகழ்வுகள்
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை, இலங்கை.
முதற்பதிப்பு: ஜூன் 1993
வெளியீடு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு - 2, இலங்கை.
பதிப்புரிமை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
அச்சு ராஜன் அச்சகம், 31, கியூ லேன், கொழும்பு - 2.
விலை: ரூபா. 150.00
Communication language and Modernisation Proceedings of the Regional Seminar on Tamil Linguistics
Editor: M. A. NUH MAN Dept. of Tamil, University of Peradeniya, Sri Lanka
First Edition: June 1993
Published by: Dept. of Hindu Religious and Cultural Affairs 21, Vauxhall Street, Colombo - 2, Sri Lanka
Copy Right: Dept. of Hindu Religious and Cultural Affairs
Printed at: Rajan Printers, 31, Kew Lane, Colombo - 2.
Price: Rs. 150 OO
ISBN 955 - 9233 - OO - 9

உள்ளடக்கம்
அறிமுகம் i
அமைச்சரின் உரை X
தொடக்க உரை
E. Annamalai Languages of Developing Societies 1
பகுதி 1
மொழி மாற்றமும் மொழி வளர்ச்சியும்
எம். ஏ. நுஃமான் மொழி வளர்ச்சி: இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும் 9
அ. சண்முகதாஸ் புதிய தமிழ் இலக்கணம்; அதன் தேவையும் சிக்கல்களும் 27
கே. திலகவதி தற்காலத் தமிழ் இலக்கணம் அதன் தேவையும் பிரச்சினைகளும் 42
செ. வை. சண்முகம் தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு 44
இ. அண்ணாமலை மொழிப் புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு 62
பகுதி 2
தொடர்பாடலும் மொழியும்
கி. கருணாகரன், வ. ஜெயா தற்காலச் செய்திப் பரிமாற்றத்தில் தமிழ்: சமுதாய மொழியியல் ஆய்வு 73

Page 5
சி. தில்லைநாதன் தமிழிலே தொடர் பாடல் இன்று நாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் 100
பகுதி 3
கலைச் சொல்லாக்கம்
இராம சுந்தரம் தமிழில் கலைச் சொல்லாக்கம் 109
எல். இராமமூர்த்தி கலைச் சொற்களின் தொடர் பாடல் திறனும் புதுமையாக்கமும் 130
பகுதி 4
தமிழ் மொழி கற்பித்தல்
கி. அரங்கன் தமிழில் இரட்டை வழக்கும் கற்பித்தல் பிரச்சினைகளும் 145
சுப. திண்ணப்பன் தமிழ் கற்பித்தலில் மேனாட்டுச் செல்வாக்கு 164
சுபதினி ரமேஷ் சொற்புணர்ச்சியும் மொழி கற்பித்தலும்: லகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி ஓர் ஆய்வு 188
சு. சுசீந்திரராசா, இ. கயிலைநாதன் இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும் 211

அறிமுகம்
தொடர்பாடல் மொழி நவீனத்துவம் என்ற பொதுத் தலைப் பில் 1992 மே மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந் துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டில் சமர்ப் பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. இம்மொழியியல் மாநாடு இந்து சமய கலாசார இராஜாங்க அமைச் சினால் 1992 மே மாதம் கொழும்பிலும் வேறுபல பிரதேசங்களி லும் நடத்தப்பட்ட தமிழ் சாகித்திய விழாவின் ஓர் அங்கமாக நிகழ்ந்தது. இம் மாநாட்டினை ஒரு சர்வதேச மொழியியல் மாநா டாக நடத்த வேண்டும் என்றே கெளரவ இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் ஆரம்பத்தில் விரும்பினார். ஆயினும் சில நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக இது ஒரு பிராந்திய மாநாடாக நடந்து முடிந்தது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து அறிஞர்களின் கட்டு ரைகள் இம்மாநாட்டில் இடம்பெற்றன. தமிழ் மொழி வளர்ச்சியில் பல்வேறு வகைகளில் பங்கு கொண்டு உழைக்கும் சுமார் ஐம்பது அறிஞர்கள் கலந்துகொண்டு இம்மாநாட்டைச் சிறப்பித்தனர். அவ் வகையில் இலங்கையில் நடைபெற்ற மிக முக்கியமான முதலாவது மொழியியல் மாநாடாக இது அமைந்தது.
இம் மாநாடு பின்வரும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
1. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் பேசும் சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் விளைவாக தமிழ்மொழி எதிர்நோக்கிய புதிய சவால்களையும் பிரச்சினைகளையும் இனங் காணுதல். - 2. நவீன தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ப இதுவரை தமிழ் மொழி அடைந்த மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் மதிப்பிடுதல். 3. நவீன கல்வி, விஞ்ஞான, தொழில் நுட்ப, தொடர்பாடல் வளர்ச்சிகளுக்கேற்ற வகையில் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சியை நெறிப்படுத்துதல். மாநாட்டின் நோக்கங்களுக்கு ஏற்றவகையில் பின்வரும் விட யங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இம் மாநாட்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Page 6
தமிழ் மொழி வளர்ச்சியும் அது தொடர்பான பொதுப் பிரச்சினைகளும்.
இக்காலத் தமிழ்மொழியின் இலக்கண அமைதியும் அதனை விதிமுறைப்படுத்துவதில் (Codification) உள்ள பிரச்சினையும்.
நவீன தொடர்பாடல் தேவைகளுக்கேற்ப தமிழை நவீனப் படுத்துதல்.
தமிழில் கலைச் சொல்லாக்கத்தை ஒருசீர் அமைத்தல்
முதல் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் தமிழைக் கற்றலும் கற்பித்தலும்,
மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக மாநாட்டில் சமர்ப் பிக்கப்பட்ட பதினான்கு கட்டுரைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. இக் கட்டுரையாசிரியர்கள் அனைவரும் தமிழ்மொழி வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை உடையவர்கள். மொழி வளர்ச்சி பற்றிய விஞ் ஞான நோக்குடையவர்கள். இவர்களுள் சிலரேனும் சர்வதேச ரீதி யில் புகழும் அங்கீகாரமும் பெற்ற மொழியியல் பேரறிஞர்கள். இவர்கள் எல்லாரும் ஓர் இடத்தில் கூடி, மூன்று தினங்கள் ஒன்றாக இருந்து, தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றிய பல்வேறு பிரச்சினை களை விவாதித்து, கருத்துக்களைப் பரிமாறி அதன் அடிப்படையில் சில முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றியமை தமிழ் மொழி வளர்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
2
இம் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தொடக்கவுரை தவிர, நான்கு பகுதிகளாக இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. முதல் பகுதியில் மொழி மாற்றமும் தமிழ் மொழி வளர்ச்சியும் பற்றிய ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றம் வளர்ச்சி பற்றிய பொதுவான பிரச்சினைகள் இக் கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படுகின்றன. தமிழ் மொழி வளர்சியில் மொழிப் பழமை வாதத்தின் பாதகமான செல்வாக்கினை எம். ஏ. நுஃமானின் கட்டுரை ஆராய்கின்றது. அ. சண்முகதாஸ், கே. திலகவதி, செ. வை. சண்முகம் ஆகியோரின் கட்டுரைகள் தற் காலத் தமிழின் இலக்கணம், அதனை விதிமுறைப்படுத்த வேண்டிய தன் அவசியம் அதில் உள்ள பிரச்சினைகள் என்பனபற்றி ஆராய் கின்றன. (அ. சண்முகதாஸ் அவர்கள் பிரயாண நெருக்கடி காரண மாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரமுடியாமையால் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவரது கட்டுரை மாநாட்டில் படிக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை. ஆயினும் அவரது கட்டுரை பிரதிசெய்யப்பட்டு மாநாட்டுப் பேராளர் அனைவருக்கும்
:

வழங்கப்பட்டது. கே. திலகவதி அவர்கள் கட்டுரை சமர்ப்பிக்காது குறிப்புக்களை வைத்துக் கொண்டு மாநாட்டில் உரைநிகழ்த்தினார். கடைசி நேரம் வரை அவரது கட்டுரை அச்சுக்கு வந்து சேரவில்லை. இந் நூலில் இடம் பெற்றுள்ள அவரது கருத்துக்கள் அவரது உரையின் ஒலி நாடாப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தெ:7குக்கப்பட்ட வையாகும்.) இ. அண்ணாமலையின் மொழிப் புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு என்னும் கட்டுரை முதல் பகுதியின் கடைசிக் கட்டுரையாக அமைகின்றது. தற்காலத் தமிழை நிர்ணயித்த சக்தி களையும் மொழிப் புதுமையாக்கத்தின் முக்கிய கூறுகளையும் விளக்கும் அவர் மொழியில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றங்களை நியமப் படுத்து வதில் அகராதியின் முக்கியத்துவத்தை ஆராய்கின்றார். தற்காலத் தமிழில் ஒரு பெரும் சாதனை என்று கருதத்தக்க க்ரியாவின் தற் காலத் தமிழ் அகராதியை உதாரணமாகக் கொண்டு தன் கருத்தினை விளக்கிச் செல்கின்றார். இந் த அகராதியின் உருவாக்கத்தில் இ. அண்ணாமலை அவர்கள் பிரதான பங்கு வகித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பகுதியில் தொடர்பாடலும் மொழியும் பற்றிய இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்மூலம் தொடர் பாடல் செய்வதில் இன்று நாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் பற்றி சி. தில்லைநாதன் தன் கட்டுரையில் விளக்குகின்றார். பல் வேறு வகையான தொடர்பாடல் தேவைகள், தொடர்பாடல் ஊடகங்கள் ஆகியவற்றுக்கேற்ப தமிழ்மொழிப் பயன்பாட்டை விரிவு படுத்துவதில் உள்ள பிரசசினைகள் பற்றி சமூக மொழியியல் நோக் கில் கி. கருணாகரன், வ. ஜெயா ஆகியோர் தம் கட்டுரையில் விரிவாக ஆராய்கின்றனர்.
மூன்றாவது பகுதியில் கலைச் சொல்லாக்கம் பற்றிய இரண்டு கட்டுரைகள் இடம் பெறுகின்றன. தமிழில் கலைச் சொல்லாக்கம் பற்றிய இராம சுந்தரத்தின் கட்டுரை தமிழில் கலைச் சொல்லாக்க முயற்சிகள் பற்றியும் கலைச் சொல்லாக்கத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகள் பற்றியும் கலைச் சொற்களைத் தரப்படுத்துவதன் அவசியம் பற்றியும் விரிவாக விளக்குகின்றது. எல், இராமமூர்த்தி தமிழில் வழங்கும் கலைச் சொற்களின் தொடர்பாடல் திறன்பற்றி நுண்ணாய்வு செய்தவர். அவரது கட்டுரை கலைச் சொற்கள் எவ் வகையில் தரப்படுத்தப்பட்டு நிலைபேறாக்கம் பெறுகின்றன என் பதை விளக்குகின்றது. மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் கலைச் சொல்லாக்கம் பற்றி அதிக அக்கறை காட்டினர். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் பிற்பகல் அமர்வு முழுவதும் கலைச் சொல்லாக்கப் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காகவே ஒதுக்கப் lull-gil.

Page 7
முதல் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் தமிழ் மொழியைக் கற்றல், கற்பித்தல் பிரச்சினைகள் பற்றிய நான்கு கட்டுரைகள் நான்காவது பகுதியில் இடம் பெறுகின்றன. மொழி வளர்ச்சியில் மொழி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் முக்கிய இடம் உண்டு. முன் எப்போதையும்விட நமது காலத்தில் மிகப் பெருந் தொகையான மாணவர்களுக்குத் தமிழைத் தாய் மொழியாகக் கற் பிக்க வேண்டியுள்ளது. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்போர் தொகையும் சமீபகாலத்தில் அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக இலங்கையில் முன் எப்போதையும்விட அதிக எண்ணிக்கையில் சிங்க ளம் பேசும் மாணவர்கள் தமிழைக் கற்க முற்படுகின்றனர். இந்நிலை யில் இருசாராருக்கும் தமிழை இலகுவாகவும் விரைவாகவும் திறமையுடனும் கற்றுக்கொள்ள வழி வகுக்க வேண்டியது அவசியமா கும். துரதிஷ்ட வசமாக நமது மொழிகற்பித்தல் துறையினர் மத்தி யில் பொதுவாக நிலவும் தமிழ் மொழி பற்றிய பழமை சார்ந்த மனப்பாங்கும் விஞ்ஞான பூர்வமற்ற கற்பித்தல் அணுகு முறைகளும் இதற்கு இடையூறாகவே உள்ளன. இதனாலேயே இம்மாநாட்டில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் பற்றிய ஒரு தனி அமர்வு இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். மாநாட்டில் கலந்து கொண்ட கல்வியாளர் மத்தியிலும் இப்பிரச்சினை பற்றிய பிரக்ஞை இருந்தமை கலந்துரையாடல்களின்போது வெளிப்பட்டது. இங்கு இடம்பெறும் கி. அரங்கன், சுபதினி ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் இப்பிரச் சினையின் சில அம்சங்களை ஒரளவு விரிவாக விளக்குகின்றன. சுப. திண்ணப்பனின் கட்டுரை மேல்நாட்டுச் செல்வாக்கினால் தமிழ் மொழி கற்பித்தலில் ஏற்பட்டு வந்த சாதகமான அபிவிருத்திகளை விரி வாக விளக்குகின்றது. இத்தகைய அபிவிருத்திகள்-குறிப்பாக மொழி யியல் விஞ்ஞானத்தின் செல்வாக்கு - பாடசாலை மொழிக் கல்வியில் பரவலாகச் சுவறவில்லை என்பது வருத்தத்துக்குரியது. சிங்களம் பேசும் மாணவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப் பதில் உள்ள மொழியியல் பிரச்சினைகள் சிலவற்றை சு. சுசீந்திர ராசாவும் இ. கயிலைநாதனும் தமது கட்டுரையில் விளக்குகின்றனர். இவர்கள் இருவரும் இத்துறையில் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தி யுள்ளனர். சு. சுசீந்திரராசா அவர்கள் சார்பிலும் திருமதி இ. கயிலைநாதன் அவர்களே மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தார். மாநாட்டு அமர்வுகளின்போது ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் தெரிவிக்கப்படும் முக்கியமான கருத்துக்களை இந்நூலில் தொகுத்து வழங்கும் நோக்குடன் மாநாட் டின் முழு நிகழ்வுகளையும் ஒலி நாடாவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் துரதிஷ்டவசமாக முக்கியமான கருத்துரைகள் பல, குறிப்பாக மூன்றாம் நாள் நிகழ்வு தொடர் பான கலந்துரையாடல்கள், இரண்டாம் நாள் இறுதியில் இ.அண்ணா மலை அவர்கள் ஆற்றிய முக்கியமான தொகுப்புரை போன்றவற்றுக்
, V

குரிய ஒலி நாடாப்பதிவுகள் கிடைக்கவில்லை. ஆகவே கருத்து ரைகளைத்தொகுத்து வழங்கும் முயற்சியைக் கவலையுடன் கைவிட வேண்டியதாயிற்று. V−
3
தொடக்க உரை தவிர இத்தொகுப்பில் உள்ள ஆய்வுக் கட்டு ரைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளன. தமிழ் மொழியைப்பற்றி இதுவரை நடைபெற்றுள்ள மிகப்பெரும்பாலான மொழியியல் ஆய்வுகள் ஆங்கில மொழியிலேயே உள்ளன. அதனால் தமிழ் மக்கள் அவற்றால் பரவலாகப் பயன்பெறவில்லை என்பதோடு பலராலும் அவை அறிந்து கொள்ளப்படாதவையாகவும் உள்ளன. தவிரவும் தமிழ் மொழியைப் பற்றித் தமிழில் சிந்தித்து தமிழில் எழுதாமல் தமிழை வளர்க்க முடியாது. சகல அறிவுத் துறை களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே அதனை வளர்க்க முடியும் என்பது எமது நம்பிக்கை. ஆகவே தான் இந்த மாநாடு பெரிதும் தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என நாங்கள் விரும்பினோம். வெளிநாட்டு அறிஞர்கள் விரும்பினால் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பலாம் என்று கேட்டிருந்தோம். பேராசிரியர் கி. கருணாகரன், வ. ஜெயா ஆகியோர் இணைந்து எழுதிய கட்டுரை மட்டுமே இம்மாநாட்டில் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் இந்த நூலுக்காக அவர்களே தங்கள் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி இருந்தனர். இலங்கை ஜனாதிபதி அவர்களும் அமைச்சர்களும் பிற மொழி அறிஞர்களும் கலந்து கொள்ளும் தொடக்க விழாவில் இடம் பெறும் தொடக்க உரை ஆங்கிலத்தில் இருப்பது அவசியம் என நாம் கருதினோம், அதற்கிணங்க இ. அண்ணாமலை அவர்களின் உரை ஆங்கிலத்தில் அமைந்தது. அதற்கும் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பை இந்நூலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் பெரிதும் விரும்பினோம். அதற்குரிய அவகாசம் இன்மையினால் அது சாத்தியமாகாது போயிற்று; அதற்காக வருந்துகின்றோம்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சிமொழி அல்லது தேசிய மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நாடுகளிலெல்லாம் அது கல்வி மொழியாகவும் உள்ளது. இங்கெல்லாம் கலைச் சொல்லாக்கம் உட்பட தமிழ் வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் பரஸ்பரத் தொடர் புகள் இன்றி தனித்தனியே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை யெல்லாம் ஒருங்கிணைத்து தமிழ் மொழி வளர்ச்சியை ஒருமுப் படுத்தவேண்டியதன் அவசியத்தை மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் அனைவரும் வலியுறுத்தினர். இதன் அடிப் படை யில்
W

Page 8
தமிழிைத் தாய்மொழியாகக் கொண்டோர் பெருமளவில் வாழ்கின்ற இந் நாடுகளிளெல்லாம் தமிழ் மொழியின் ஒருங்கிணைந்த வளர்ச் சியை நெறிப்படுத்தும் நோக்கில் மேற்குறிப்பிட்ட நான்கு நாடு களின் மொழியியல் அறிஞர்களையும் அதிகாரிகளையும் கொண்ட ஓர் இணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி வளர்ச்சியின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதித்து இணைப்புக் குழுவுக்குப் பரிந்துரை வழங்குவதற்காக தமிழ் மொழி பியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்பிராந்திய நாடுகளில் சுற்று முறையில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் மாநாட் டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தின் பிரதி ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்நூலின் இறு தியில் தரப்பட்டுள்ளது.
நான்கு நாடுகளின் அரசுகளும் ஒன்றினைந்தே இத்தீர்மானத் தைக் காரிய சாத்தியமாக்க வேண்டும். இது ஒரு பாரிய முயற்சி யாகும். இம்மாநாட்டின் கருத்தா என்ற வகையில் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சே இதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியைத் தொடக்கவேண்டும். எனினும் இலங்கையின் பிரத்தி யேக அரசியல் நிலைமைகளினாலும் வேறு சில நடைமுறைப் பிரச் சினைகளினாலும் இத் நீர்மானத்தின் மீது நடவடிக்கை மேற்கொள் வது இது வரை தாமதமாயிற்று. ஆயினும் இம்மாநாட்டை நிகழ் வித்த கெளரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் இதிலும் முன் முயற்சியை மேற் கொள்வார் என்பதே மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்களின் எதிர்பார் ப்பாகும்.
இம் மாநாடு தமிழ் மொழி பற்றிய டோவி உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழின் வளர்ச்சி பற்றி அறிவு பூர்வமாசுச் சிந்திப் போருக்கு ஒரு களமாக அமைந்தது. "தமிழுக்கு உயிரைக் கொடுக்க வேண்டாம்; அறிவைக் கொ டு ங் சு ஸ்" என இ. அண்ணாமலை மாநாட்டில் கலந்துரையாடலின்போது ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் உருக் மீாகக் கூறினார். அவரது கூற்று ஒரு பொன்மொழிபோல் ம்ே காதுகளிேல் இன்னும் ஒலிக்கின்றது. மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் இந் நூல் தமிழுக்கு அறிவைக் கொடுக் ஆம் ஆத்தகைய ஒரு முயற்சியே என்பது இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனநிறைவு தருவதாகும்.
இம் மாநாட்டையும் இத் தொகுப்பு நூலையும் சாத்தியமாக்கு வதில் வெவ்வேறு அளவிலும் வகையிலும் பங்குவகித்த அனைவருக்
நம் நன்றிகற வேண்டியது நமது கடமையாகும். பலருடைய கூட்டுழைப்பு இன்றி இத்தகைய முயற்சிகள் வெற்றிகாண்பதில்லை.
γι

இம் மாநாட்டின் கருப்பொருள் பற்றி தொடக்க உரையாற்ற இ. அண்ணாமலை அவர்களை அழைந்திருந்தோம். அவரே இதற்கு மிகப் பொருத்தமானவர் என நாம் கருதினோம். சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற மிகச்சில இந்திய மொழியியல் அறிஞர்களுள் அவரும் ஒருவர். தமிழ்மொழி வளர்ச்சியில் தீவிர அக்கறை உடைய வர். இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றுபவர். இந்திய அரசின் சார்பிலேயே அவர் இம்மாநாட் டில் கலந்து கொண்டார். அவரது தொடக்கவுரை தமிழை மைய மாகக் கொண்டு வளர்முக சமூகங்களின் மொழிவளர்ச்சி பற்றிய பிரச்சினைகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைந்தது. தொடர் பாடல் தேவைகளுக்கேற்ப தமிழ்மொழியை நவீனப்படுத்துதல் பற்றிய இம் மாநாட்டின் கருப்பொருளை அவரது உரை மித் தெளிவாக விளக்கியது. தொடக்கவுரையாற்றியது மட்டுமன்றி முதல் இரண்டு நாட்களிலும் மாநாட்டு நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பித்தும் தொகுப்புரை வழங்கியும் மாநாட்டின் பூரண வெற்றிக்கு உதவியதோடு மாநாட்டுத் தீர்மா எனத்தை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். மாநாட்டின் சார்பில் அவருக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இ. அண்ணாமலை அவர்களோடு தமிழ்நாட்டில் இருந்து பேர சிரியர்கள் செ. வை. சண்முகம், கி. கருணாகரன், இராம சுந்தரம், கி. அரங்கன் ஆகியோரும் பாண்டிச்சேரியில் இருந்து எல். இராம மூர்த்தி அவர்களும் சிங்கப்பூரில் இருந்து சுப. திண்ணப்பன் அவர்க ளும் மலேசியாவில் இருந்து கே. திலகவதி அவர்களும் எமது அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மொழியியலைத் தமது சிறப்புத் துறையாக வரித்துக் கொண்டவர்கள் தங்கள் துறையில் ஆழ்ந்த புலமை உடையவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் தீவிர அக்கறையுடன் உழைத்து வருட வர்கள் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்ததோடு மூன்று தினங்களும் மாநாட்டு நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொண்டு ஆதின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றினர். தமிழகத்தின் பிறிதொரு மொழி பியல் அறிஞரான பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத் தின் தலைவர் ஆர். கோதண்டராமன் அவர்களும் எமது அழைப்பை யேற்று மாநாட்டில் கலந்து கொண்டு "மொழி மரபும் இலக்கண் மரபும்" என்ற தலைப்பில் ஒரு சுட்டுரை படிக்க இசைந்திருந்தார். ஆயினும் இறுதி நேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் மr நாட்டில் அவரால் கலந்து கொள்ள முடியாது போயிற்று. பாரதி பார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வ. ஜெயா அவர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாவிடினும் பேராசிரியர் கி. கருணாகரனுடன் இணைந்து மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். இவர்கள் அனைவரும் நமது நன்றிக்கு உரியவர்கள்.
w

Page 9
இலங்கை அறிஞர்களான பேராசிரியர்கள், சு. சுசீந்திரராசா, சி. தில்லைநாதன், அ. சண்முகதாஸ் ஆகியோரும் திருமதிகள், இரத்தினமலர் கயிலைநாதன், சுபதினி ரமேஷ் ஆகியோரும் எமது வேண்டுகோளை ஏற்று மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தனர். பிரயாண நெருக்கடி காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமா கவும் பேராசிரியர்கள் சு. சுசீந்திரராசா அவர்களும் அ. சண்முக தாஸ் அவர்களும் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனையோர் இம்மாநாட்டில் முழுமையாகக் கலந்து கொண்டு அதன் வெற்றிக்குப் பெரும்பங்காற்றினர். பேராசிரியர், சு. சுசீந்திரராசா அவர்கள் இம்மாநாட்டின் அமைப்பாளர்களுள் ஒருவராகவும் இருந்து, கொழும்புக்கு வரமுடியாத நிலையிலும் கடிதங்கள் முலம் எமக்கு ஆலோசனைகள் வழங்கி உற்சாகமூட்டியவர். இவர்கள் அனைவருக் கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழியியல் மாநாட்டினையும் மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப் பாக வெளிவரும் இந்நூலினையும் உண்மையில் காரியசாத்திய மாக்கியவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் க. சண்முகலிங்கம் அவர்கள். ஓர் உயர் அதிகாரி மட்டுமன்றி சிறந்த ஆய்வறிவாளருமான அவர், இம்மாநாட்டின் முக்கியத்துவத்தினை முழுதும் உணர்ந்து அதனைச் சிறப்புற நிறை வேற்றி முடிக்க இராப்பகலாக உழைத்தவர். இம்மாநாட்டின் அமைப்பாளனாகச் செயற்பட எனக்கு வாய்ப்பளித்து, மாநாட்டின் கருப்பொருளைத் தீர்மானித்து மாநாட்டை வடிவமைப்பதிலும் கட்டுரையாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் எனக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கியவர். தன் அலுவலகக் கடமைகளுக்கு மத்தியில் இம்மாநாட்டின் செயலாளராகவும் திறம்படச் செயற்பட்டவர். இம்மாநாட்டைக் காரிய சாத்தியமாக்குவதில் அவருக்குத் தோன் றாத் துணையாக நின்று பூரண ஒத்துழைப்பு வழங்கியவர், இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன்அவர்கள். இவர்கள் இருவருக்கும் மாநாட்டின் சார்பில் நன்றிகூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த சகல அதிகாரிகளும் அலுவலர்களும் இம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் பெரும்பங்காற்றினர். அவர்கள் அனைவரும் நம் நன்றிக்கு உரியவர்கள். குறிப்பாக மாநாட்டின் நிருவாகிகளாகப் பணியாற்றிய உதவிப் பணிப்பாளர், எ. எம். நஹியா, நிர்வாக உத்தியோகத்தர் திரு. நா. சோமகாந்தன் ஆகியோருக்கும், பேராளர் களிள் தேவைகளை அறிந்து அவர்களை நன்கு பராமரித்த திணைக் களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சாந்தி திருநாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர்கள் டி. விக்கிரமராஜா, கே. குமாரவடிவேல், பிரசார உத்தியோகத்தர் எம். சண்முகநாதன் ஆகியோருக்கும்
viii

மாநாட்டுக் கட்டுரைகளைப் பிரதி செய்வதிலும் ஒலிப்பதிவு ந்ாடாக் களைப் பெயர்த்தெழுதித் தட்டச்சுச் செய்வதிலும் உதவிய செல்வி பொ. சுகிர்தா, திருமதி. தே. விமலதாசன், இந்நூலின் அச்சுப்படி களைத் திருத்துவதில் பெரிதும் உதவிய திரு. சீ. தெய்வநாயகம் ஆகி யோருக்கும் நாம் விசேடமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் கெளரவ பி. பி. தேவராஜ் அவர்களின் உள்ளத்திலேயே இம் மாநாடு முதலில் கருக் கொண்டது. அவர் ஒர் அரசியல்வாதி மட்டுமன்றி இலங்கையின் குறிப்பிடத் தகுந்த சமூக விஞ்ஞானிகளுள் ஒருவருமாவார். அதனா லேயே 1992-ஆம் ஆண்டின் தமிழ் சாகித்திய விழாவின் ஓர் அங்க மாக சர்வதேச ரீதியில் ஓர் மொழியியல் மாநாட்டை நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அது பிராந்திய மாநாடாக இறுதி வடிவம் பெற்றதும் வெளிநாட்டு அறிஞர்களை அழைத்து வந்து மாநாட்டை முழு நிறைவாக்குவதில் முழுமூச்சாக ஈடுபட் டார். இந்தியாவுக்குத் தானே நேரில் சென்றும், பல அறிஞர்களை நேரில் சந்தித்தும், சிலருடன் தொலைபேசியில் நேரடித் தொடர்பு கொண்டும் அவர்களது பிரயாண ஏற்பாடுகளை நேரடியாகத் தானே கவனித்தும் அவர்கள் கொழும்புக்கு வந்து சேர்வதை உறுதிப்படுத்தினார். மாநாட்டின் மு க் கி ய நிகழ்வுகளிலெல்லாம் கலந்துகொண்டு அறிஞர்களைக் கெளரவப் படுத்தினார். அவருடைய அனுசரணையும், உறுதிப்பாடும், ஒத்துழைப்பும் இன்றி இத்தகைய ஒரு பிராந்திய மாநாடு இலங்கையில் நடைபெற்றிருக்கவே முடியாது. தமிழ்மொழி வளர்ச்சியில் அவருக்கு உள்ள உண்மையான அக்கறை யின் வெளிப்பாடாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். அவ் வகையில் தமிழ் உலகம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட் டுள்ளது.
a TúD. 6.J. U dufost såT பதிப்பாசிரியர் - மாநாட்டு அமைப்பாளர்

Page 10
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் மொழியியல் மாநாட்டின் தொடக்க விழாவில் ஆற்றிய உரை
தமிழ் இளமையும் எழிலும் நிறைந்தது. காலத்தின் சீற்றங்களை வென்று வளமோடு திகழும் மொழி. காலத்துக்குக் காலம் தோன்றிய ஆயிரக்கணக்கான இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழிக்கு வலு வூட்டியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத் தையும் உயர்ந்த பண்புகளையும் போதித்த நூல்கள் தமிழில் நிறைந்து கிடக்கின்றன.
உண்மையில் ஒரு மொழியே மக்கள் வாழ்வின் சிறப்பனைத்தை யும் பகுத்துக் காட்டுகின்றது. மொழியும் மொழி சார்ந்த பண் பாடுமே மக்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடுகின்றன. மொழியும் பண்பும் நன்னெறிப்படுவதாயின் அங்கே மக்கள் செழிப் போடு வாழ்கின்றார்கள் என்பது பொருளாகும்.
இங்கனம் வாழும் ஒரு மொழி கால மாறுபாடுகளுக்கேற்ப இசைவுபட வேண்டும். அப்பொழுதுதான் அது உயிரோட்டமுள்ள மொழியாக நிலைக்கும். அந்த வகையில் தமிழ்மொழி உலகளா விய ரீதியிலே பரந்துபட்டுள்ள இன்றைய நிலையில் காலத்தின் அபிவிருத்தி மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. அதனைப் பகைப்புலனாகக் கொண்டே நாம் இன்று நடத்தும் மொழியியற் கருத்தரங்கு அமைந்துள்ளது.
தொன்மையான இலக்கிய வளம் நிறைந்த செல்வங்களோடு நவீன காலத்தில் நாவல், சிறுகதை போன்ற புதிய இலக்கிய வடி வங்கள் தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்தன. அத்துடன் இலகு தமி ழில் கருத்துக்களை உணர்த்தி வைக்கும் உரைநடை வளர்ச்சி பெற்றது.
இராமலிங்க வள்ளலார் எளிய மொழியில் இனிய தமிழ்ப் பாக்கள் இயற்றினார். எளிமையும் இனிமையும் நிறைந்த கவிதை களை ஆக்கி பாரதி, பாரதிதாசன் போன்றோர் புதுயுகக் கவிஞர் களாக மலர்ந்தார்கள். தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் பழந் தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சேர்த்து தமிழுக்கு அழியாப் பணிகள் செய்தார்.
இங்ங்ணம் தமிழகம் ஆற்றிய தொண்டுகளோடு இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர். நல்லூர் தந்த பூரீ ஆறுமுக நாவலர் உரை நடை இலக்கியத்தின் முன்னோடி.

வசனநடை கைவந்த வல்லாளர். அவ்வாறே சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பழந்தமிழ்ச் சுவடிகளை அச்சிற் பதிப்பதில் ஆற் றிய பணி அளப்பரியது. சுவாமி ஞானப்பிரகாசர் ஒப்பியல் துறைக்கு அரும்பணி ஆற்றினார். முதன் முதல் தமிழில் கலைச் சொல் ஆக் கத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர். அத்துடன் யாழ் நூலை ஆக்கி அவர் இசைத் தமிழுக்கு இணையற்ற தொண்டு ஆற்றினார்.
இந்தச் சாதனைகளையும் கருத்திற் கொண்டு மொழியியற் கருத் தரங்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் த மிழ் அடைந்துள்ள வளர்ச்சியை மதிப்பீடு செய்வதாக அமையும் . இக்கால கட்டத் திலே ஏற்பட்ட சமூக மாற்றங்கள் தமிழ் மக்களையும் பாதித்த துடன் விஞ்ஞான, கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான ல ளர்ச்சி தமிழ் மொழியிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இன்று தொடர்பு சாதனங்களின் முன்னேற்றத் தினால் செய்திப் பரிமாற்றத்தில் புதிய யுகத்தைத் தரிசிக்கின்றோம். இவை அனைத்தும் மொழியிலும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற் படுத்தியுள்ளன. இன்று தொடங்குகின்ற மொழியியற் கருத்தரங்கின் ஆய்வுப் பரப்புகள் இவ்விடயங்களை அடித்தளமாகக் கொண்டவை.
கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்ப் பேரறிஞர்கள் தமது கருத்துச் செறிவான ஆய்வுகள் மூலம் தமிழ் கூறும் நல்லுல கிற்கு ஒரு புதிய பங்களிப்பைச் செய்வார்கள் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். தமிழின் கடந்த கால சிறப்பையும் நிகழ்காலப் புதுமையையும் இணைத்து நாம் வந்த நெறியையும், வாழும் நெறி யையும் இவ்வறிஞர் பெருமக்கள் இணைத்துக் காட்டுவார்களாக.
நாம் இவ்வமைச்சைப் பொறுப்பேற்றவுடனேயே தமிழுலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை இலங்கையில் அரச முத்திரையோடு நடைமுறைப்படுத்தினோம். மொழி வளர்ச்சியின் இரண்டாவது படி நிலையில் கலைச்சொல் ஆக்கத்துக்கென ஒரு அறிஞர் குழுவை உருவாக்கினோம். கடந்த ஒரு வருடமாக அந்தக் குழு இயங்கி வருகின்றது. கலைச் சொல்லாக்கப் பணிகள் மேலும் விரிவடைவதற்கு இம் மொழியியற் கருத்தரங்கு வழிகோலும் என நம்புகின்றோம். இப்பணிக்கு இலங்கையும் தனது பங்களிப்பைச் செய்கின்றது என்பது எமக்குப் பெருமை தருவதாகும்.
இன்று நாம் தொடக்கி வைக்கும் விழா இலங்கையில் தமிழ் மொழிக்கு அரசு அளித்துள்ள சமத்துவத்தையும், மொழியும் கலை யும் வளர அரசு உறுதுணையாக இருக்கும் என்பதையும் பறை சாற்றுகின்றது. எனவே இலங்கைவாழ் இலக்கிய கர்த்தாக்களைத்
xi

Page 11
தன்னம்பிக்கையோடும், சமூகப் பிரக்ஞையோடும் இலக்கியம் படைக்க நாம் அழைக்கின்றோம். அவர்களது சிறந்த இலக்கியங்களை அரசு போற்றிக் கெளரவிக்கும் எனவும் உறுதி கூறுகின்றோம்.
விழாவின் பிரதான அம்சமாக இன்று தொடங்குகின்ற மொழி யியல் மாநாடு மொழி பற்றிய புதிய சிந்தனைகளுக்கு வித்திடும். இளையவர்கள் தாமே முன்னின்று நடத்தும் முத்தமிழ் அரங்கம் இலக்கியத்திற்கும் கலைக்கும் சிறந்த எதிர்காலம் அமையும் என்ப தற்குச் சான்று பகரும். நான்கு தினங்களும் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகள் எமது பாரம்பரிய மரபுகளுக்குப் புத்துயிர் ஊட்டும். இலக்கிய கர்த்தாக்கள் பெறுகின்ற கெளரவம் புதிய இலக்கியங் களின் உதயத்திற்கு வழி சமைக்கும். இவற்றால் இந்த சாகித்திய விழாவை நாம் தலைநகரில் நடக்கின்ற தமிழ்ப் பெரும் விழாவாகப் பெருமையோடு பிரகடனம் செய்கின்றோம். அந்த உணர்வால் மனம் நிறைந்த பெருமிதம் கொள்கின்றோம்.
நன்றி
xii


Page 12
தன்னம்பிக்கையோடும், சமூகப் பிரக்ஞையோடும் இலக்கியம் படைக்க நாம் அழைக்கின்றோம். அவர்களது சிறந்த இலக்கியங்களை அரசு போற்றிக் கெளரவிக்கும் எனவும் உறுதி கூறுகின்றோம்.
விழாவின் பிரதான அம்சமாக இன்று தொடங்குகின்ற மொழி யியல் மாநாடு மொழி பற்றிய புதிய சிந்தனைகளுக்கு வித்திடும். இளையவர்கள் தாமே முன்னின்று நடத்தும் முத்தமிழ் அரங்கம் இலக்கியத்திற்கும் கலைக்கும் சிறந்த எதிர்காவம் அமையும் என்ப தற்குச் சான்று பகரும். நான்கு தினங்களும் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகள் எமது பாரம்பரிய மரபுகளுக்குப் புத்துயிர் காட்டும். இலக்கிய கர்த்தாக்கள் பெறுகின்ற கெளரவம் புதிய இலக்கியங் களின் உதயத்திற்கு வழி சமைக்கும். இவற்றால் இந்த சாகித்திய விழாவை நாம் தலைநகரில் நடக்கின்ற தமிழ்ப் பெரும் விழாவாகப் பெருமையோடு பிரகடனம் செய்கின்றோம். அந்த உணர்வால் மனம் நிறைந்த பெருமிதம் கொள்கின்றோம்
நன்றி
xii

马岛岭它与塔姆可电电7729MP 97与电池日Q9P习母塔七岛河可 @--Tluss 1,9-a '07, usiųortolo) --Tlogo usog, sgïste o no-fi-11, 1/T
± ----+---+
—心*!)---- !!!!劑队)-
EFEITEITENIT.劑TựNUMEREH. §íssifitsi migrojusium opmusiųjų sūnus siųs §§§ © ® gaeo,
wae. LIHVIETI, IL

Page 13

LANGUAGES OF DEVELOPING SOCIETIES
Keynote Address by DR. E. ANNAMALA Director Central institute of Indian Languages Mysore, India.
வளர்முக சமூகங்களின் மொழிகள்
தொடக்க உரை கலாநிதி. இ. அண்ணாமலை இயக்குனர் இந்திய மொழிகளின் மைய நிறுவனம் மைசூர், இந்தியா.

Page 14

LANGUAGES OF DEVELOPNG SOCIETIES
2. Am nam allai
Languages are born equal, but they do not develop equally. Like human beings whose biological endowment for Survival and growth is equal except in pathological cases, the structural endowment for languages for their survival and growth is equal for all languages. The differential in development in the case of languages and human beings is due to Socio-cultural and political factors. These differences are reflected in the exicon, styles and discourse forms of the languages and not in their grammar. They are also reflected in the content codified in the tanguages, whether it is aesthetic scientific or philosophical; the medium they are used, whether it is oral, written, printed or electronic; the domains in which they function, whether it is home, school, workplace, government, armed forces etc. The larger extent of use in domains vertically and horizontally requires new media new content and new coding forms. The domains increase and are differentiated in a developed society, defined in terms of functional spocialisation, complex socio-political institutions and technological innovations.
A developing language is thus a language of a developing society. The characteristics of a developing language can be defined in terms of the social characteristics of the Society and their consequences to the language and not in terms of grammatical characteristics. It means that the development of the society is a necessary condition for the development of its language, it may not be a sufficient condition since it is

Page 15
possible for a society to perform its developmental functions through an alien language. This is actually done in many developing countries by using a colonial language like English in the domains of development and power like Science and technology, commerce, law and administration. The language which provides access to power and resources to its Speakers also appropriates to itself the power and
resources for its development. For the language to have Sufficient condition for its development, it must have contro over power and resources, to whicn it can, as a gatekeeper, provide access to its speakers. It means that planning for language development is really planning for social development and for a nondiscriminating society by equalising access to power and resources among the speakers of different languages. Language development is thus not merely a case of the language having more linguistic resources like new technical terms, reference tools etc. and symbolic, status as national language, but also a case of the language allowing its speakers have more economic resources and political power, In language planning in many developing countries. attention has been paid to the former with no concern for the latter and the result is artificial and spurious development of languages.
Another notion, which is historically incorrect, is that development is unidirectional it has been demonstrated by radical sociologists that development does not follow predetermined stages; that development is not necessarily preceded by under development and that under development may be an integral part of and a product of development itself. This is true of language development as it is of social development. The Tamil language, for example, has 2500 years of continuous recorded history, it has produced literary works the best of which are compara ble to the best in the world, it started literary trends like bhakti poetry and developed
2

literary theories like aham. It codified its grammar 2000 years ago and developed a philosophical system called Saiva Siddhantam within Hinduism 1000 years ago, It was a language of administration in which the rulers made their proclamations and maintained land records. The culture fostered by it reached heights of achievement in arts and architecture. Tamil is thus not an undeveloped language when its modern development begins. lts developmental efforts are changed from one state of development to another. Such a situation is true of other South Asian languages as
wel 4.
it is often argued that for its development Tamil should have English as its model and goal and should draw ideas and forms from it. As a developed language English is used in all domains of power and this is considered to be natural and efficient. This, however, forecloses the opportunity for Tamil to be used in these domains and thus causes problems for the development of Tamil. It is thus the development of English which causes the underdevelopment of Tami.
We shall now discuss the linguistic meaning of language development. Language development linguistically consists of codification, standardisation and modernisation all of which take place at any stage of the development of a language. Codification includes a variety of tasks, depending on the need of the language development of a writing system, spelling reform, script reform, creation of technical terms, creation of reference tools like dictionaries, encylopaedias, thesaurus, usage manuals etc., adaptation of the alphabet for new machines etc. standardization includes reduction of internal variation and emergence of one variety for use in inter-group situations. sharpening of boundaries with other languages and developing distinctiveness, improving precision
3

Page 16
of expression, increasing the use for intellectual activities etC,
Modernised state is often identified as the state obtaining in industrialised western countries and therefore the process of modernisation becomes synonymous with Westernisation. Modernisation of language in this ideological framework means attaining inte-rtranslatability with the languages of industrialised countries, i. e. western languages, by developing new vocabulary for new areas of knowledge, and new styles, registers and discourse forms for new situations of cognition and communication, which are needed for the functioning of an industrialised society. This is historically and theoretically a biased view giving primacy to one historical happening and to one model of change. It is necessary to isolate the notion of modernisation from a culture specific fixation,
A language is not modern because it exists in the modern times. It must have certain characteristics to be called modern and these characteristics are derived from the kind of society which used it. The characteristics may be stated in technological, structural and value oriented terms.
Let us first take up technological efficiency. The common use of language is for one to one or one to few communication, restricted in time and space. The need for proximate physical presence of the sender and receiver of message due to natural properties of the sound frequency of the human voice is a limitation of this biological mode of communication. This limitation is overcome by the writing technology. The natural limitations of the handwriting technology due to the nature of the materials used for writing and due to the speed of the hand is overcome by the printing technology and its variants like teleprinting, fascimile printing etc. Communication, thus, uses mechanical and electric modes made possible by technologies
A.

invented by man. The possibilities of storage and dissemination of information have enormously increased with reference to size and speed with computer technology. Communication is through electronic mode. The language which uses such technologies to overcome biological limitation and to maximize the extent of communication is modern.
When a language comes to be Written it introduces a new differentiation in style, viz., the style of written language. So does the electronic media in the spoken language itself. When the society develops functional Specialisation among the people, which may be due to development of new technologies, and new social institutions which require mastery of different skills and roles, specialised variations of the language also develop such as those used by Scientists, lawyers, administrators, journalists etc. This is at the level of discourse, where by the structural differentiation of language becomes heterogenous stylistically. At the level of grammar and lexicon, the structural differentiation is indicated by development of new syntactic constructions like impersonal sentences, morphologisation of functionally frequent phrasal structures, subsystems of phonology due to loan words and specialised words and meanings not used by all speakers and in all contexts.
in the realm of value orientation, as a language becomes modern, it becomes more secular and more intellectual in words and content; rational in knowledge codified in and expressed through it, it is open ended in content with no restriction or difficulty to deal with any subject; it provides open and equal access to information with no vested contro of any part of it; and it makes its norms, like the standard speech, appropriate use etc. accessible universally to all its speakers irrespective of their ascribed attributes. The last two make it necessary for the people to have channels like mass media and reference tools like encyclopaedia, dictionaries,
5

Page 17
grammars and ski\\s like higher literacy. All the above feature. are neceseary but not sufficient conditions for modernisations it may be seen that the above value orientations with regard to language are similar to the social values of rationality, ego - transcendence, individualness and equity,
It may be seen from the above description of modernisation that it manifests in codification and standardisation also. The technological aspect of modernisation emanates from codification and the structural aspect from standardisation. The aspect specific to modernisation is value orientation. Tami and other South Asian languages are changing in their value orientation in terms of the features mentioned above.
A crucial aspect of value orientation is open access to information for the speakers of the modernised language and easy access to it through increased channels of communication including mass media. Multiplicity of channels of communication also prohibits monopoly of information, This is true of societal modernisation as well and it shows the importance of the role of language for it. The language use for storage and dissemination of information almost is the defining feature of societal modernisation,
Nevertheless, the storage and dissemination of information particularly scientific and technological information is becoming the monopoly of English in modern times. This is not an instance of modernisation as many believe, but it is contrary to the tenents of modernisation as described above. To have open and equal access to information and to its dissemination channels, its necessary for all languages to develop. Only with such development, there will be equity between people and between nations.

பகுதி 1
மொழி மாற்றமும் மொழி வளர்ச்சியும்

Page 18

மொழிவளர்ச்சி: இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும்
எம். ஏ. நுஃமான்
1.மொழியும் மொழிவளர்ச்சியும்
மனிதன் பயன்படுத்தும் தொடர்பாடல் ஊடகங்களுள் மொழியே மிகவும் பிரதானமானது. நமது அபிப்பிராயங்கள், உணர்வுகள், தகவல்கள் முதலியவற்றைப் பிறர் இலகுவில் அறிந்து கொள்ள அல்லது புரிந்துகொள்ளச் செய்வதே தொடர்பாடல் (Communication ) என அகராதிகள் தொடர்பாடலுக்கு வரைவி பலக்கணம் கூறும். சைகைகள், அடையாளங்கள், நிறங்கள், பேச்சு, எழுத்து போன்ற பலவகையான ஊடகங்கள் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்த பொருளில் இவையெல்லாவற் -றையும் நாம் மொழி என்று கூறலாம். எனினும் இங்கு பேச்சை யும் எழுத்தையுமே மொழி என்ற சொல்லால் நாம் சுட்டுகின்றோம்.
மொழிவளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ப அச்சமூகத்தின் மொழிபெறும் இணக்கப்பாட்டைக் குறிக்கும். காலம் தோறும் ஏற்படும் சமூக வளர்ச்சி அச்சமூகத்தின் தொடர்பாடல் தேவையை அதிகரிக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வகையில் மொழி யும் வளர்ச்சியடைகின்றது. கபிலரும் பரணரும் வாழ்ந்த சங்ககால மக்களின் தொடர்பாடல் தேவைகளும், கம்பரும் ஒட்டக்கூத்தரும் வாழ்ந்த காலத்து மக்களின் தொடர்பாடல் தேவைகளும் நமது காலத் துத் தொடர்பாடல் தேவைகளும் மிகவும் வேறு பட்டவை, அவர் கள் பரிமாறிக்கொண்டவற்றைவிட மிகவும் அதிகமான, மிகவும் வேறுபட்ட தகவல்களை நாம் இன்று பரிமாறிக்கொள்கின்றோம். அதற்கு ஏற்ப நம்காலத்து மொழியும் வளர்ச்சியடைந்துள்ளது, நாம் இன்று பரிமாறிக்கொள்ளும் தகவல்களை அவர்கள் காலத்து மொழி -யில் நம்மால் தொடர்பாடல் இயலாது. உதாரணமாக பின்வரும் வாக்கியங்கள் கூறும் தகவல்களை கபிலர் அல்லது கம்பர் பயன் படுத்திய தமிழில் அல்லது பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் பயன்படுத்திய தமிழில் தொடர்பாடல் செய்வது முற்றிலும் சாத் தியமல்ல. 8
9

Page 19
1. தனியார் மருத்துவமனையில் அவசர சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
2. தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
3. குடித்தொகையைக் கட்டுப்படுத்துவதற்குக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையையே வளர்முக நாடுகள் அனைத்தும் இன்று கடைப்பிடிக்கின்றன,
4. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த நமது சமுதாயம் அந்த வளர்ச்சியின் அனைத்துக் கூறுகளையும் அறிந்துகொள்ள முற்படுகின்றது.
5. நான் புதிதாக வாங்கிய கார் ஒரு லீட்டர் பெற்றோலில்
பத்துக் கிலோ மீட்டர் ஓடும்.
இன்றைய நமது சமூக வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலித்து நிற்கும் இத்தகவல்களும் இத்தகவல்களை வெளிப்படுத் தும் மொழியும் முற்றிலும் புதியவை நமது சமூகத்தினதும் மொழியினதும் ஒரு புதிய - மிகவும் பிந்திய வளர்ச்சிக் கட்டத்தைக் குறித்து நிற்பவை. அவ்வகையில் கபிலரோ, கம்பரோ, நச்சினார்க் கினியரோ பயன்படுத்திய தமிழில் நாம் இவற்றை மொழி பெயர்த் துக் கூறுதல் இயலாது. காலம் தோறும் அவ்வக் காலத்தின் தேவை களுக்கேற்ப மொழி வளர்ச்சி அடைகின்றது என்பதையே இது காட்டுகின்றது.
மொழிவளர்ச்சி என்பது புதிய சொற்களின் பெருக்கத்தை மட்டுமன்றி ஒலியமைப்பு (Phonology) சொல்லமைப்பு (Morphology) வாக்கிய அமைப்பு (Syntax ) முதலிய மொழியின் அனைத்து நிலை களிலும் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்குகின்றது.
மாறாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை. மொழி இதற்கு விலக்கு அல்ல. வாழும் மொழிகள் எல்லாம் இடையறாது மாற் றத்துக்கு உள்ளாகின்றன. அதனால் தொடர்ந்து வளர்ச்சியடை கின்றன. மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நிகழ்ச்சியின் இரு அம்சங்க ளாகும். மொழி ஒரு சமூக சாதனம் என்ற வகையில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் வளர்ச்சிகளுமே மொழிமாற்றத்தையும் வளர்ச்சியையும் இறுதியாகத் தீர்மானிக்கின்றன. எனினும் முற் காலத்திலே மொழி வளர்ச்சி பெரிதும் பிரக்ஞைபூர்வமான ஒரு நிகழ் வாக இருக்கவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட் டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணப்பட
0

வில்லை. ஆனால் இன்றைய கைத்தொழில் நாகரீக யுகத்தில் பிற துறைகள் போல மொழிவளர்ச்சியும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ் வாக உள்ளது. மொழிவளர்ச்சி பற்றிய பல்வேறு கொள்கைகளும் திட்டங்களும், செய்முறைகளும் பின்பற்றப்படுகின்றன. கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் நிகழ்கின்றன. மொழியை நவீனப் படுத்துவதே இவற்றின் குறிக்கோள் ஆகும். மொழியை நவீனப் படுத்துதல் என்பது தற்கால சமுகத்தின் நவீன தொடர்பாடல் தேவைகளுக்கேற்ப மொழியை வளர்த்தல் அல்லது இணக்கப்ப டுத்துதலேயாகும். அவ்வகையில் தற்காலச் சூழலில் மொழிவளர்ச்சி, நவீனத்துவம் என்பன ஒரு பொருளையே குறித்து நிற்கின்றன எனலாம்.
தமிழின் நவீனத்துவம்பற்றி கருணாகரன் (1978), அண்ணா மலை (1980). சண்முகம் (1983) ஆகியோர் விரிவாக எழுதியுள் ளனர். இக்காலத் தேவைகளையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஏற் றவகையில் சொல்வளத்தைப் பெருக்குதல், பழைய வழக்குகளைத் தவிர்த்து பொதுவழக்கில் உள்ள சொற்களையே பெரிதும் பயன்படுத் துதல், சொற்களை இலகுவில் அடையாளம் கண்டு பொருள் விளங் கத்தக்க வகையில் சந்தி பிரித்து எழுதுதல், பழைய இலக்கண விதிகளுக்குப் புறம்பாக வளர்ச்சியடைந்துள்ள உருபனியல் வாக்கிய வியல் அம்சங்களுக்கு இடமளித்தல், பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல், பன் முகப்பட்ட மொழிநடையை வளர்த்தல், நவீன தொடர்பாடல் பொறி முறைகளுக்கு ஏற்றவகையில் எழுத்துச் சீர்திருத்தத்தை மேற் கொள்ளுதல் போன்றவற்றை நவீனத்துவத்தின் அம்சங்களாக இவர் கள் எடுத்துக்காட்டியுள்ளனர்,
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழ்மொழி இத் தகைய பண்புகளை நோக்கிப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந் துள்ளதை நாம் அவதானிக்க முடியும். மதப்பிரசாரகர்களும், நவீன அறிவியல், தொழில் நுட்பவியலாளர்களும், எழுத்தாளர்களும் பத் திரிகையாளர்களும் பல்வேறு சமூக, அரசியல் இயக்கங்களைச் சார்ந் தவர்களும் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத் துறையின ரும் பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞைபூர்வ மற்றும் இத்தகைய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனைத் தமிழின் நவீனத் துவம் நோக்கிய வளர்ச்சி எனலாம்.
தற்காலத் தமிழ் வளர்ச்சியிலே இதற்கு எதிரான போக்கு ஒன்றையும் நாம் காண்கின்றோம். தமிழ்மொழி அமைப்பிலே ஏற் பட்டுவரும் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத போக்கு இது. இப்புதிய மாற்றங்கள் தமிழ் மொழியின் வரம்பை உடைத்து அதன் வனப்பையும் வளத்தையும் அழித்துவிடும் என இப்போக்கினர் கரு
11

Page 20
துகின்றனர். பண்டைய மொழிமரபுகளைப் பேனுவதன் மூலமே தமிழ்மொழியை வளர்க்கமுடியும் என்பது இவர்களின் அடிப்படை வாதமாகும். மொழி வளர்ச்சியில் பழமையை வலியுறுத்தும் இப் போக்கினை மொழிப்பழமைவாதம் எனலாம். மொழிப்பழமை வாதம் ஒன்றில் இருந்து ஒன்று சற்று வேறுபட்ட இரு போக்குக ளைக் கொண்டுள்ளது, ஒரு போக்கு மொழிவளர்ச்சியில் 'இலக்கணத் தூய்மையை வலியுறுத்தும். மற்றது இலக்கணத் தூய்மையோடு மொழித் தூய்மையையும் வலியுறுத்தும். மொழி வளர்ச்சியில் இன்று வரை செல்வாக்குச் செலுத்திவரும் இப்போக்குகளின் விளைவுகளை மதிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும் ,
2. இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும்
இலக்கணத்தூய்மை என்பது மரபுவழிவந்த இலக்கணக்கொள்கையை வழுவாது கடைப்பிடித் தலையும் மொழியமைப்பில் ஏற்படும் புதிய மாற்றங்களையும் வழக்காறுகளையும் நிராகரிப்பதையும், எழுத்து வழக்கில் பேச்சுவழக்கின் செல்வாக்கை முற்றிலும் ஒதுக்குவதோடு பேச்சு வழக்கையும் எழுத்துவழக்கை ஒட்டி அமைத்துக் கொள்ள வலியுறுத்துவதையும் குறிக்கும். இவ்வகையில் எழுத்திலும் பேச்சி லும் மரபுவழி இலக்கண நெறி பேணப்படவேண்டும் என்பதே இலக்கணத் தூய்மைவாதத்தின் அடிப்படை எனலாம். வேறுவகை யில் சொல்லுவதாயின் செந்தமிழ் மரபினை அல்லது உயர் இலக்கிய மரபினை வலியுறுத்துவதே இலக்கணத் தூய்மைவாதம் எனலாம்.
மொழித் தூய்மை என்பது பொதுவாக சுயமொழிக் கூறுகளை மட்டும் பயன்படுத்துவதைக் குறிக்கும். பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழ்ச் சொற்களை மட்டும் பயன்படுத்த வேண் டும் என்பதே மொழித் தூய்மைவாதத்தின் சாராம்சமாகும்.
மொழித்தூய்மை வாதத்தைவிட இலக்கணத்தூய்மைவாதம் பழமையானது. தமிழில் நவீன உரைநடை முன்னோடிகள் முதல் வராக மதிக்கப்படும் ஆறுமுகநாவலரை நவீன தமிழில் இலக்கணத் தூய்மையை வலியுறுத்தியவர்களுள் முதல்வராகவும் நாம் கருதலாம். நவீன தமிழின் முக்கிய பண்பாகிய எளிமையை முதலில் வலியு றுத்தியவரும் நாவலரே. அவ்வகையில் யாவருக்கும் எளிதில் பொருள் விளங்குவது, பெரும்பாலும் இயற்சொற்களைக் கொண்டிருப்பது, பெரும்பாலும் சந்தி விகாரங்கள் இன்றி இருப்பது ஆகிய மூன்று அம்சங்களை நவீன உரைநடையின் முக்கிய பண்புகளாக வலியுறுத் தியவர் அவர், (நுஃமான் 1988). அதேவேளை மரபுவழி இலக் கண விதிகளையும் அவர் பெரிதும் வலியுறுத்தினார். 'இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும்
2

அறிந்து விதிப்படி எழுதுவதற்கும் பேசுவதற்கும் கருவியாகிய நூலாம்' என தனது இலக்கணச் சுருக்கத்தில் இலக்கண நூலுக்கு அவர் வரைவிலக்கணம் கூறியுள்ளார். ஆறுமுக நாவலர் பேச்சு வழக்கும் எழுத்துவழக்கை ஒட்டி அமைய வெண்டும் என்ற கருத் துடையவர் என்பதை இது காட்டுகின்றது அவ்வகையில் பேச்சுவழக் கின் செல்வாக்கினால் எழுத்துவழக்கில் ஏற்பட்டுவந்த சில புதிய மாற்றங்களை அவர் வன்மையாக நிராகரித்தார். "சுப்பிரமணிய பிள்ளையவர்கள் குமாரன் தம்பையா பிள்ளையவர்கள்’ என்ற தொடரில் குமாரன் என்னும் ஒருமைப் பெயரோடு அவர்கள் என் னும் பன்மைப் பெயர் புணர்ந்ததெப்படி? என தம்பையா பிள்ளை என்பவர் பாடிப் பதிப்பித்த குமார நாயக அலங்காரம் என்ற நூலைக் கண்டித்து எழுதிய கட்டுரை ஒன்றிலே நாவலர் கேள்வி எழுப்பு கின்றார். இராமலிங்க சுவாமிகள் பயன்படுத்திய நூல்கள் அறிவிக்க மாட்டாது' 'அவைகள் அறியாது’ ஆகிய தொடர்களில் காணப்ப டும் ஒருமை பன்மை இயைபின்மையை அவர் தன் "போலி அருட்பா மறுப்பு" என்னும் கட்டுரையில் கண்டித்து எழுதுகிறார் ( நுஃமான் 1988 ), இவை பேச்சு வழக்கு எழுத்து வழக்கில் ஏற்படுத்திய செல் வாக்கின் விளைவாகும். ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரை இலக் கணத் தூய்மை என்பது பேச்சு வழக்கின் ( கொடுந் தமிழ் ) செல் வாக்கு எழுத்துவழக்கில் (செந்தமிழ் ) ஏற்படாது பேணுவதே எனலாம் ‘* உரை நடையிலே அன்றாடப் பேச்சு வழக்கு வடி வங்களையும் சொற்களையும் பயன்படுத்துவதற்கு ஆறுமுகநாவலர் திட்டவட்டமாக எதிரானவர். அந்த வகையிலே, இறுகிய, வளைந்து கொடுக்காத ஒருவகையில் செயற்கையான தமிழ் உரைநடை வகை ஒன்று இன்று வரை கூட நிலைத்திருப்பதற்கு அவரும் ஓரளவுக்குப் பொறுப்பாளியாக இருக்கிறார் ' என இது தொடர்பாக கமில் சுவலபில் ( 1973 - 259 ) கூறுவதும் இங்கு மனம் கொள்ளத்தக்கது
ஆறுமுக நாவலரின் பின்வந்த எல்லா மரபு வழித் தமிழறி ஞர்களும் பெரும்பாலும் உயர் செந்தமிழ் மரபை இறுக்கமாகப் பேணுவதிலேயே ஆர்வம்காட்டி வந்துள்ளனர். பழைய இலக்கண மரபு சான்றோர்களால் தமிழ் மொழிக்கு அமைக்கப்பட்ட வரம்பு எனவும் அம்மரபை மீறுவது தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக அதனை அழித்துவிடும் என்றும் அவர்கள் நம்பினர். இந் நம்பிக்கையின் அடிப்படையில் பெரிதும் பழமை சார்ந்த மொழி நடை ஒன்றை அவர்கள் பயன்படுத்தினர். பழைய இலக்கண விதி களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தனர். பேச்சு வழக்கின் செல் வாக்கை முற்றிலும் தவிர்க்க விரும்பினர், தன் எழுத்துக்களில் இலக் கணத் தூய்மையை முற்றிலும் பேணியவர்களுள் ஒருவரான சுவாமி
3

Page 21
விபுலாநந்தர் இதுபற்றிக் கூறுவது நம் கவன த்துக்குரியது. "ஒவ் வொரு மொழிக்கும் சிற்சில சிறப்பியல்புகளுள. அவை தம்மை மாறு படாது பாதுகாத்தல் ஆன்றோர்க்கியல்பு. மொழி முதலிலும் இறுதியிலும் நிற்றற்குரிய எழுத்து இவையாமெனவும் இன்ன இன்ன எழுத்துர்களின் முன்னர் இன்ன இன்ன எழுத்துக்கள் மயங்காவெ எனவும் இலக்கண நூலாசிரியர் வகுத்துக்காட்டியிருக்கின்றனர். அவர் ஆராய்ந்தமைத்த விதிகளுக்கு இயைவாகச் சொற்களையாக்கிக் கொள் இதில் முறையாகும் . வினையெஞ்சு கிளவி, பெயரெஞ்சு விளவி தொகைமொழி, தொடர்மொழி என்றின்னவற்றிற்கு இனக் கண காலாசிரியர் கூறிய வரம்பினைக் கடைப்பிடிப்பது எவ்வாற்றா இம் இன்றியமையாததேயாம்" ( விபுலாநந்தர் 1973 - 155 - 56), 1938 ல் செங் ரைல் நிகழ்ந்த கலைச்சொல்லாக்க மகாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரையிலேயே சுவாமி விபுலாநந்தர் இவ்வாறு குறிப்பிட்டார். என்பது முக்கிய கவனத்துக்குரியது.
ஆயினும் இலக்கணத் தூய்மைவாதிகள் அனைவரும் மொழித் தூய்மைவாதிகள் அல்லர், மொ ழித் தூய்மை வாதத்துக்கு முற்பட் "பி"ண் ஆறுமுக நாவலர் அவர் காலத்துப் பிற ஆசிரியர்களைப் போலவே வடமொழிச் சொற்களைத் தாராளமாகக் கையாண்ட வர் கிரந்த எழுத்துக்களையும் பயன்படுத்தியவர் அவர், "சமஸ் கிருதம் தமிழ் என்னும் இரண்டு பாஷைக்கும் முதலாசிரியர் சிவ பருமான். . சமஸ்கிருதமும் தமிழம் சிவபெருமானா சிம் இருடிகளாலும் அருளிச் செய்யப்பட்ட இலக்கண நூல் ஈளை **-சிையாலும் ஆன்றோர்களால் தழுவப்பட்டமையாலும் தம்முள் "மித்துவம் உடையனவே பாம் ரான எழுதியவர் ( ஆறுமுகநாவலர் 1969: I 35 - I SR) gyar til sa சொற்களைக் கலந்து எழுதுவ தில் அவருக்கு எவ்வித ஆட்சேபமும் இருக்கவில்லை. அதுபோலவே ஆங்கிலச் சொற்களையும் நாவலர் தாராளமாகக் கையாண்டுள் ாோர். சமூக, அரசியல் விவகாரம் பற்றிய அவரது எழுத்துக்களில் ஆங்கிலச் சொற்கள் பல பயின்றுவரக் காணலாம்,
அன்ரித் தமிழ் இயக்கம் உச்சநிலையில் இருந்த காலத்தில் எார்ந்தவர் சுவாமி விபுலாநந்தர், உயர் செந்தமிழ் நடையையே பெரிதும் பயன்படுத்திய தீவிர செவ்வியல் வாதியான அவர் தனித்தமிழ் இயக்கத் துக்கு எதிரானவர் எனலாம் விஞ்ஞான தீபம் என்னும் தனது நெடுங்கட்டுரையிலே ஆரிய - தமிழ் மோதலை அவர் சாடி புள்ளார். "வடமொழி தென்மொழியிரண்டிலும் முதன்மை படைத் திருக்கும் நூல்களின் ஒப்புமையை நோக்குங்கால் . ஆரிய நன்று தமிழ் நீது தமிழ் நன்று ஆரியம் தீது தமிழ் மொழிக்கட் டலையாய ஒத்து இல்லை. ஆரிய மறைமொழி இழுக் ஆங்9டயது என்று இவ்வாறெல்லாம் பக்கம் பற்றிக் கூறுவாரது

உரையனைத்தும் மரபுநிலை திரிந்த வெற்றுரையென்பது தெளி வாகும்" என்பது அவர் கூற்று (விபுலாநந்தர் 1963; 41). ஆழ்ந்த ஒப்பியல் நோக்குடைய சுவாமி விபுலாநந்தர் பிறமொழி எதிர்ப் பாளராக இருந்ததில்லை. 'உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்பு கொண்டு தனக்குரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்" என்றும் அவர் எழுதியுள்ளார். (விபுலா நந்தர், 1971; 136) விஞ்ஞான தீபம் என்ற தனது கட்டுரைத் தலைப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் "தமிழ்மொழியில் உணர்வுச் சுடர்' என்பதிலும் பார்க்க விஞ்ஞான தீபம் என்பதே பொருத் கமுடைத்து. அன்றியும் தமிழ் நூற்பரவையுள் வடமொழிப் பெய ரெய்தப்பெற்ற நூல்கன் மிகப்பல" என்றும் கூறுகின்றார். ( விபு லாநந்தர் 1983 49 ) கலைச் சொல்லாக்கத்தில் தகுந்த தமிழ்ச் சொற்கள் இல்லாவிடத்து வடசொற்களைக் கையாளவேண்டும் என்பதும் அவரது கருத்து 1963 03).
இத்தகைய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரான பொழித் தூய்மைவாதம் அதன் தீவிர வடிவில் தனித்தமிழ் இயக்கமாக மறைமலை அடிகனால் தோற்றுவிக்கப்பட்டது, இந்த நூற்றாண் டின் முற்பகுதியில் தோன்றி இன்றுவரை தமிழ்ச் சிந்தனையில் பெரி தும் செல்வாக்குச் செலுத்திவரும் இவ்வியக்கத்தின் கருத்தியல் பற்றி அரசியல் நோக்கில் சிவத்தம்பியும் (1979 ) இலக்கிய நோக்கில் கைலாசபதியும் ( 1988 ), மொழியியல் நோக்கில் அண்ணாமலையும் 1979 ) விரிவாக ஆராய்ந்துள்ளனர். தனித்தமிழ் இயக்கம் இலக் கனத் தூய்மையோடு மொழித்தூய்மையும் பேணப்படவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பிறமொழிக் கலப்பால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதையே மொழித்தூய்மைவாதம்
schi கூறுகின்றது. " வடசொற்களை இப்போதே நாம் தை செய்யாவிடின் தமிழ் தன்னிலை கெட்டு வேறு மொழி போலாகிவிடக் கூடும். தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தன் இனி மையை இழந்து போவதோடு பல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாத இறந்து போகின்றன" என்பது மறைமலை அடிகள் கருதிது
மேற்கோன் , சோவே, 1956 71 ).
"" நம் தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி : எனினும் தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து வழங்கு கின்றோம். இது தவறு. பிறமொழிச் சொற்களை கலவாது பேசுத' லும், எழுதுதலும் நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்" என அரசு சார்பான தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் வெளியிட் டுள்ள பத்தாம் வகுப்புக்கான தமிழ் இலக்கண நூல் (1990 31 கூறுகின்றது. மொழி வளர வேண்டுமானால் பிறமொழிக் கலப்பைக் Janfrifak 57 வேண்டும் titor !!! !!f । பிறமொழிக் சுரினா?? 3ை !

Page 22
ளம் தமிழில் இருந்து பிரிந்து தனிமொழியாகியது எனவும் மொழித் தூய்மையாளர் அழுத்திக்கூறுவர். அவ்வகையில் தமிழ் மொழியை அதன் தனித்தன்மையோடு அழியாது பேணவேண்டுமாயின் தமிழில் பிறமொழிக் கலப்பை முற்றாகத் தடுக்கவேண்டும், புதிய தொடர்பா டல் தேவைகளுக்கு வேண்டிய சொல்வளத்தைப் பெருக்குவதற்கு தனித்தமிழ்க் கூறுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இவர் கள் வாதிட்டனர். இவ்வகையில் பழந்தமிழ்ச் சொற்களையும் சொற் சேர்க்கை முறைகளையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததா யிற்று. இவ்வாறு இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும் மொழிப்பழமை வாதத்தின் இரு அம்சங்களாயின. இவ்விரு போக்கு களும் மொழிவளர்ச்சியைத் தொன்மையை நோக்கித் திருப்பும் நோக்குடையன. அதனால் இவ்விரண்டையும் செவ்வியலாக்கம் ( Classicalisation ) என வழங்கலாம். இதன் சாதகமான விளைவு கள் சிலவற்றை - குறிப்பாக கலைச்சொல்லாக்கத்தைப் பொறுத்த வரை - நாம் இனங்காண முடியுமாயினும் நடைமுறையில் இது எதிர் நவீனத்துவத்துக்கே ( Counter Modernization ) இட்டுச் செல்கின் றது. தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, அரசுசார்பான மொழி அமைப்புக்களிலும் கல்வி நிறுவனங்களிலும் இலக்கணத் தூய்மை மொழித்தூய்மை ஆகியவற்றின் காவலர்களே முதன்மை இடம் பெற்றிருந்ததால், மொழிவளர்ச்சியில் இவர்களது கருத்தியலே அதிக செல்வாக்குச் செலுத்தியது. பாடநூல் ஆக்கம், கலைச்சொல் ஆக்கம், அரசு ஆவணங்களின் மொழிபெயர்ப்பு முதலியவற்றில் இப்போக்கின் செல்வாக்கை நாம் இன்றும் காணலாம். அடுத்துவரும் பகுதிகளில் செவ்வியலாக்கத்தின் நடைமுறை விளைவுகள் பற்றிச் சில உதாரணங்களை மட்டும் நோக்கலாம்
3. சொற்புணர்ச்சி
தற்காலத் தமிழின் முக்கிய பண்புகளுள் ஒன்று சந்தி பிரித்து எழுதுவதாகும். இதனை எளிமையாக்கத்தின் ஒரு அம்சமாக அண் ணாமலை ( 1980 ) விளக்குவார். சொற் புணர்ச்சியிலும் வாக்கிய அமைப்பிலும் எளிமையாக்கம் வெற்றி பெற்றிருப்பதையும் அவர் (1979) சுட்டிக் காட்டியுள்ளார். ஆயினும் இலக்கணத் தூய்மைவா தம் இதற்கு எதிர்நிலையில் செயற்படுவதையே காணமுடிகின்றது. பாடநூல்களில் சொற்புணர்ச்சிஅ முத்தி வலியுறுத்தப்படுகின்றது. இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தமிழ் - 9 பாடநூல் பின்வருமாறு கூறுகின்றது. ** இக்காலத்திலே செய்தித்தாள்களிலும் தரம் குறைந்த அச்சுப் புத்தகங்களிலும் புணர்ச்சி விதிகள் பெரும் பாலும் புறக்கணிக்கப்பட்டு வருதலைக் காண்கின்றோம். பல சந் தர்ப்பங்களில் பிழையாகவும் சொற்கள் புணர்த்தப்பட்டிருப்பதைக்
6

காணலாம். மாணாக்கர் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். சொற் களின் திருத்தமான புணர்ச்சிகளை அறி9து தாம் எரிதும் கட்டுரை களிலே இன்றியமையாத புணர்ச்சி விதிகளைப் போற்றி எழுதுதல் வேண்டும். ' பாடநூலில் இன்றியமையாத புணர்ச்சி விதிகள் எவை எனக் கூறப்படவில்லை ஆயினும் மொத்தம் 94 புணர்ச்சி விதிகளை இப்பாடநூல் கூறுகின்றது. இவை அனைத்தும் தற்காலத் தமிழுக்கு
இன்றியமையாதன என்பதே இப்பாடநூல் ஆசிரியர்களின் கருத்தா தல் வேண்டும் எனினும் பாடநூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி நடையில் உயிர்முன் உயிர் வரும்போது உடம்படுமெய் தோன்றுவதி லும் மெய் முன் உயிர் வரும்போது உயிர் மெய்யாய்ப் புணர்வதிலும் நெகிழ்ச்சி காணப்படுகின்றது. அதேவேளை லகர ஈற்று, மகர ஈற் றுப் புணர்ச்சியிலும் வேறுபல புணர்ச்சி விதிகளிலும் இறுக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவை இன்றியமையாப் புணர்ச்சி என அவர்கள் கருதுவது தெளிவு.
ஏ. எம். ஏ. அஸிசின் இலங்கையில் இஸ்லாம் என்னும் நூலில் இருந்து பழமை என்ற விளக்கு என்னும் கட்டுரையின் ஒரு பகுதியை இப்பாட நூலில் சேர்த்த ஆசிரியர்கள் மூல ஆசிரியர் லகர, மகர, ஈற்றுச் சொற்களைப் புணர்த்தாது எழுதியிருக்க பாட நூலில் அவற்றையெல்லாம் புணர்த்தியே பதிப்பித்துள்ளனர். இங்கு சில உதாாணங்களை பார்க்கலாம்,
epaid திருத்தம்
இருந்தால் போதும் இருந்தாற் போதும் நாகரிகத்தில் போதிய நாகரிகத்திற் போதிய நடைமுறையில் கொண்டுவரும் நடைமுறையிற் கொண்டுவரும் இயக்கும் சக்கரம் இயக்குஞ் சக்கரம் ஒன்றும் தெரிந்து ஒன்றுந் தெரிந்து இருக்கும் கெடுதல் இருக்குங் கெடுதல்
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் அரசகரும மொழித் திணைக்களமும் இப்புணர்ச்சி விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து வருகின்றன, Fisheries Department என்பதற்கு அரச கரும மொழித்திணைக்களம் கொடுத்துள்ள தமிழ் வடிவம் கடற் றொழிற் றிணைக் களம் ' என்பதாகும்.
4. வாக்கிய அமைப்பு
g முன் குறிப்பிட்ட ஏ. எம். ஏ. அஸிசின் கட்டுரையில் இருந்து மூன்றில் ஒரு பகுதியே பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் அதில் 140 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்திருத்தங்கள்
1 7

Page 23
கிரந்த எழுத்து நீக்கம், சொற்புணர்ச்சி, பிறமொழிச் சொற்கள் நீக்கம், வாக்கிய அமைப்பு ஆகிய நிலைகளில் செய்யப்பட்டுள்ளன. வாக்கிய அமைப்புத் தொடர்பான ஒரு உதாரணத்தை இங்கு தர லாம். அஸிஸின் கட்டுரையில் " நாம் தயாராயிருக்க வேண்டும் " என்று வரும் வாக்கியம் பாடநூலில் " நாம் தயாராயிருத்ததல் வேண்டும் " எனத் திருத்தப்பட்டுள்னது. " இது செயல் வேண்டும் என்னும் கிளவி " எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தின் மாதிரி யில் செய்யப்பட்ட திருத்தம் இது. செய்ய வேண்டும். போக வேண் டும் என எழுதுவது இக்கால மொழிமரபு. இவ்வாறு எழுதுவதே இன்று பெருவழக்காகும், பேச்சு வழக்கின் செல்வாக்கினால் எழுத்து வழக்கில் ஏற்பட்ட மாற்றமாக நாம் இதனைக் கருதலாம். இடைக் காலத் தமிழிலேயே இம்மாற்றம் தொடங்கிவிட்டது. பமந் தமிழில் இவை முறையே செயல் வேண்டும், போதல் வேண்டும், நிற்றல் வேண் டும் என அமையும். இப்பழந்தமிழ் மரபையே சரியான இலக்கண விதியாகக் கருதும் இலக்கணத்தூய்மைவாதிகள் புதிய மாற்றத்த்தை நிராகரிப்பர். இது மொழி வளர்ச்யைப் பின்னோக்கி இழுத்தலாகும்.
பழந்தமிழில் அல் என்ற அடியாகப் பிறந்த எதிர்மறை வினை முற்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றுற்கு ஏற்ப விகுதிபெற்று நான் அல்லேன், நாம் அல்லேம் , நீ அல்லை, நீங்கள் அல்வீர், அவன் அல்லன், அவள் அல்லள், அவர்கள் அல்லர், அது அன்று, அவை அல்ல என அமையும். ஆனால் இக்காலத் தமிழில் அல்ல என்ற வடிவமே இருதிணை ஐம்பால், மூவிடத்துக்கும் பொதுவானதாக அமைகின்றது இதுவும் பேச்சு வழக்கின் செல்வாக்கினால் ஏற்பட்ட எளிமை நோக்கிய மாற்றமாகும் மு. வரதராசன் போன்ற தமிழறிஞர்களும் இந்த அமைப்பையே பயன்படுத்தியுள்ளனர் ஆயி னும் இலக்கணத் தூய்மை வாதம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைந்த பாடத்திட்டத்திற்கிணங்க எழுதி வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்புக்குரிய தமிழ் இலக்கணம் அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல என்று”எழுதுவது பிழை என்றும் அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று என எழுதுவதே சரி என்றும் வலியுறுத்திக் கூறுகின்றது.
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூல் ஒன்றிலே இடம் பெறும் பின்வரும் வாக்கிய அமைப்பு பண்டைய உரையாசிரிபர்களின் செவ்வியல் நடையை ஒத்திருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.
" ஒப்பற்ற மேதாவிலாசத்தைத் தாகூர் உடையராயினும் தனி யொரு பிறவியாக அவரைக் கொள்ளலும் பொருந்தாது. என்னை
8

நாட்டபிமானத்தால் உந்தப்பட்டு, முன்னாட் போலியிலக்கியத்தின் தளைகளை அறுத்தெறியும் ஆசையால் ஏற்பட்டு இலக்கியம் படைத்த கவிஞரும் எழுத்தாளரும் இந்திய மொழிகள் பிறவற்றி லும் தோன்றினரன்றோ? (பணிக்கர்; ' 1961; 289)
5. பிறமொழிச் சொற்களின் தமிழாக்கம்
மொழிப்பழமை வாதம் பிறமொழிப் பெயர்களையும் சொற்க ளையும் தமிழ் மயப்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தி யுள்ளது. இவ்வம்சத்தில் பத்திரிகைத் தமிழ் அல்லது நாம் அன்றா டம் வழங்கும் பொதுத் தமிழுக்கும் கல்வித்துறை, அல்லது பாட நூல் தமிழுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதைக் காண முடியும். பொதுத் தமிழ் முடிந்த அளவு மூலமொழி உச்சரிப்பைப் பேண முயலுகின்றது. பாடநூல் தமிழ் முற்றிலும் அவற்றைத் தமிழ் மயமாக்க முயலுகின்றது.
எந்த மொழியும் பிறமொழிச் சொற்களை ஒலிச்சிதைவின்றி மூலமொழியில் உள்ளதுபோல் அப்படியே கடன் வாங்கிக் கொள் வதுமில்லை. அதுபோல் முற்றிலும் தனது ஒலி அமைப்புக்கு ஏற்ப ஒலி மாற்றம் செய்து தன்மயமாக்கிக் கொள்வதும் இல்லை. இரண்டுமே நிகழ்கின்றன. எல்லா மொழிகளும் பெருமளவு தமது ஒலியமைப்புக்கு ஏற்பவே பிறமொழிச் சொற்களைத் தழுவிக் கொள்கின்றன. அதேவேளை ஓரளவு பிறமொழி ஒலிகளையும் ஒலிச்சேர்க்கைகளையும் கடன் வாங்கியும் கொள்கின்றன. இவ்வாறு தான் தமிழ் மொழியிலே வடமொழித் தொடர்பால் ஜ, ஸ ஷ, ஹ முதலிய எழுத்துக்களும் ஒலிகளும் கடன் வாங்கப் பெற்றன. மொழிக்கு முதல், இடை, கடை நிலைகளில் வரா எனப் பழைய இலக்கண நூல்கள் குறிப்பிடும் ஒலிகள் இடம் பெறத் தொடங்கின. வடமொழித் தொடர்பால் ஏற்பட்ட இம்மாற்றங்கள் ஆங்கிலம் அறபு போன்ற பிறமொழிப் பெயர்களை எழுதுவதற்கும் வாய்ப் பாக அமைந்தன. மொழிப்பழமை வாதம் இவ்வாய்ப்பை மூடிவிடு கின்றது.
இலங்கையில் பல்கலைக் கழகம்வரை தாய்மொழி மூலம் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபின், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இயற்கை விஞ்ஞானம். சமூகவிஞ் ஞானம், கணிதம் போன்ற பல துறை சார்ந்த பாடநூல்களை"HP வேறு பல புகழ் பெற்ற நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. ஏ. எல். பஷாமின் asuisg, gigurt (wonder that was India), கே. எம். பணிக்கரின் ஆசியாவும் மேனாட்டு ஆதிக்க மும் போன்றவையும் இவற்று) அடங்கும். தமிழ் நாட்டில் கூட
9

Page 24
இந் நூல்கள் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆயினும் இம் மொழி பெயர்ப்புக்களில் அதீத செவ்வியல் நெறி பேணப்பட்டமையால் அவை தம் நோக்கத்தை ஈடு செய்ய முடியாத அளவு தொடர்பாடல் திறன் குன்றியவையாகக் காணப்படுகின்றன. பிறமொழிப் பெயர்க ளின் தமிழாக்க முறை மட்டுமன்றி வழக்கிறந்த பழந்தமிழ்ச் சொற்கள், இலக்கணக் கூறுகள், வாக்கிய அமைப்பு போன்றவை பெருமளவில் பயன்படுத்தப்படுவதும் இதற்குக் காரணமாகும். இந்நூல்களைப் பயன்படுத்தும் மாணவர் இவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடியாதிருப்பதாகக் கூறுகின்றனர். இங்கு பணிக்கிரின் ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள தமிழ் மயமாக்கப்பட்ட சில பிறமொழிப் பெயர்களை மட்டும் உதாரண மாகத் தருகிறேன்.
இடப்பெயர்கள் : அபுகானித்தான், அமித்த டாம், அலா சுக்கா, அனோய், இசுப்பெயின், இசுக்கொட்டிசு, இடச்சு, இரசியா, ஒகத்திரேலியா, சான் பிரrன்சுக்கோ சென் பீற்றசுப்பேக்கு, திரி னிடாத்து, தொக்கியோ, பலுச்சித்தான், பாக்கித் தான், பாங் கொக்கு, போணியோ, மன்செசுற்றர்.
ஆட்பெயர்கள் : அட்சன், ஆடிங்கு, உறோபேட்டு ஆட்டு, இரசல், இலாசுகி, உரூசோ, செங்கிசுக்கான், தொசுற்றோவிசுக்கி, யோட்சு, விற்றோரியா,
தொடர்பாடல் நோக்கில் இத்தகைய தமிழாக்கம் பயனற்றது என்பது வெளிப்படை. பத்திரிகை , வானொலி, தொலைக்காட்சி போன்ற தொடர்பாடல் சாதனங்களில் இப்பெயர்கள் பெரிதும் அவற்றின் மூல உச்சரிப்பை ஒட்டியதாகவே அமைகின்றன. மொழிப் பழமை வாதம் மேலோங்கியுள்ள கல்வித்துறைகளில் அவை வேறு பட்டு அமைகின்றன. அதனால் தமிழ் மயப்பட்ட புதியவடிவங்கள் அவற்றின் தொடர்பாடல் திறனை இழந்து விடுகின்றன. இன்று தமிழ்மட்டும் அறிந்தவர்களாலும் பரவலாக அறியப்பட்ட ஜோர்ஜ் புஷ், ஜோன் மேஜர் போன்ற பெயர்களை யோட்சு புசு, யோன் மேசர் என்றோ சோர்ச்சு புசு, சோன் மேசர் என்றோ தமிழ்மய மாக்கினால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மொழி பிரதா னமாக ஒரு தொடர்பாடல் சாதனம் என்றவகையில் மொழிமரபு நவீன தொடர்பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்பாடல் திறனை இழந்து விடாது.
பிறமொழிச் சொற்களை நீக்குதல் அ ல் ல து அவற்றைத் தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்
O

தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழித்தூய்மை. யாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினருக்கு உரியதாக அன்றி ஒரு பல்லின, பல்கலாசார சமூகத்துக்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்து விடுகின் றார்கள். மறைமலை அடிகள் தமிழ்மொழி வளர்ச்சியை சைவத் தோடு மட்டுமே இணைத்துப்பார்த்தார். அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்த வர்களும் சைவர்களே. பின்னர் வந்த பெளத்தர்களும், சமணர் களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன் படுத்தினர். எந்தவித கட்டுப்பாடுமின்றி வடசொற்களையும் பிற மொழிச் சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற் களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள் ளலாம் என்றும் தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்த னர் என்றும் அவர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972) மொழிமாற்றம் வளர்ச்சி பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி வெறும் உணர்ச்சி நிலைநின்று மறைமலை அடிகள் பிரச்சினையை நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழிவளர்கின்றது பழைய சொற்கள் வழக்கில் இருந்து மறைவதும் புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழிவளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். சங்ககாலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக் காலத்தில் வழக்கிறந்தன என்றால் தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டது என்பதே பொருள். பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும் போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது. ஆங்கி லம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பெளத்தர்களும், சமணர்களும் வைஷ்ணவர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் தங்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ்மொழியைப் பயன்படுத்தியபோது த மி ம் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது அதன் சொல்வளமும் பொருள்வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.
மறைமலை அடிகள் கருதுவதுபோல பழந்தமிழ் மரபை சைவத்தமிழ் மரபாகக் காண்பதும் பிறபண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தமிழின் அழி

Page 25
வாகக் கருதுவதும் தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருது வதை பிற பண்பாட்டினர்மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கி லும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும். கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும் கிறித்தவர் என்பதைவிட கிறிஸ் தவர் என்றும் இசுலாமியர் என்பதை விட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அவ்வச் சமூகப் பிரிவினர் விரும்புவராயின் மொழி மரபுக்கு விரோ சமானது எனக்கூறித் தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்பதோடு ஒரு பல்லின சமூகநோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக் கூற வேண்டும்.
6. பிறமொழிச் சொற் கலப்பு
மொழித்தூய்மை வாதம் தொடர்பாகக் கூற வேண்டிய பிறி தொரு அம்சம் சமூக வளர்ச்சிப் போக்கில் பிறமொழிக் கலப்புதவிர்க்க முடியாதது என்பதாகும். மனிதர்கள் சிற்சில குழுக்களாக பிற சமூகத் தொடர்பின்றி, பிறபண்பாட்டுத் தாக்கமின்றி தனித்து வாழ முடி புமாயின் அவர்களின் மொழியும் பிறமொழிக் கலப்பின்றி இயங்க முடியும். மிகப் பண்டைக் காலத்திலேயே இது சாத்தியமாகவில்லை. நவீன யுகத்தில் அத்தகைய ஒரு தனித்த வாழ்வை எண்ணிப்பார்க்
sG3a (ypgleufrgs.
பிறபண்பாட்டுத் தொடர்பு மூலம் அப்பண்பாட்டுக்குரியோ ரின் பொருட்களும் சிந்தனையும் நம்மைவந்து சேரும்போது அவற் றைக் குறிக்க அவர்கள் பயன்படுத்திய சொற்களும் நம் மொழியில் வந்து சேர்கின்றன. சைக்கிள், கார், பஸ், லொறி போன்ற சொற் கன் இவ்வாறே நம்மை வந்து சேர்ந்தன, நமது அன்றாடத் தொடர் பாட வில் இவை தவிர்க்க முடியாத சொற்களாகிவிட்டன. சைக்கிள் என்பதற்குப் பதிலாக துவிச்சக்கரவண்டி, ஈருருளி, இருசில்லி, மிதி வண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்த முயற்சி நடந்தது. ஆயி னும் சைக்கிள் என்பதே நிலைகொண்டு விட்டது. கார் என்பதற்கு மாற்றாக நாம் ஒரு சொல்லை உண்டாக்க முயலவில்லை. இதனை வடிவில் ஒத்த பழந்தமிழ்ச் சொல் (கார் மேகம், கார் காலம்) இருந்தது இதற்குக் காரணமாய் இருக்கக்கூடும். பஸ் என்பதற்குப் பதிலாக பேருந்து என்பது இன்று தமிழ்நாட்டில் வழக்கில் 2.ண்டு, ஆயினும் பஸ் என்பதே இன்னும் பெருவழக்கில் உள்ளது. இதனை பசு , வசு எனத் தமிழ் மயமாக்கும் முயற்சிகளும் நடந்தன. இலங் கையில் லொறியும் தமிழ்நாட்டில் லாறியுமே வழக்கில் உள்ளன இவற்றை உலொறி, உலாறி எனப் பயன்படுத்த பத்திரிகையாளர் யாவரும் முயன்றதாகத் தெரியவில்லை.

தமிழில் பிறமொழிச் சொற்கள்பல எவ்வாறு அத்தியாவசிய மாகிவிட்டன என்பது பற்றி ஒரு பத்திரிகையாளரான டி. எஸ். சொக்கலிங்கம் ஒரு முறை கூறிய கருத்து இங்கு மனங்கொள்ளத் தக்கது. V - -
* டாங்கி, விமானம், பெட்ரோல், மோட்டார், பீரங்கி; குண்டு, துப்பாக்கி, தோட்டா ஆகிய வார்த்தைகளை உபயோகிக் காமல் யுத்த செய்திகளைச் சொல்லவே முடியாது, டாங்கியும். பெட்ரோலும், மோட்டாரும் ஆங்கிலம். இவற்றை எப்படி மொழி பெயர்ப்பார்கள். தானே இயங்கும் ஊர்தி என்று ஒவ்வொரு தட வையும் மோட்டாருக்குப் பதிலாக நீளமாக எழுதுவார்களா? விமா னம், பீரங்கி குண்டு, துப்பாக்கி, தோட்டாவை எடுத்துக்கொள் வோம். இவையெல்லாம் தமிழ்வார்த்தைகளே என்று நீங்கள் நினைக் கலாம். புலவர்கள் தனித்தமிழ்க் கொள்கைப்படி இவை தமிழ் வார்த் தைகளே இல்லை. விமானம் சமஸ்கிருதம். பீரங்கி போர்ச்சுக்கேய பாஷையில் இருந்து வந்தது, குண்டு மராத்தி பாஷை, துப்பாக்கி துருக்கி பாஷை, தோட்டா உருதுவில் இருந்து வந்து சேர்ந்தது. இவ்வளவையும் பிறமொழிச் சொற்கள் என்று தள்ளி விட்டால் இவற்றுக்குப் பதிலாகத் தனித்தமிழில் எப்படிச் சொல்வார்கள்,? விமானத்துக்கு பறக்கும் வண்டி என்றும், பீரங்கிக்கு உருண்டு நீண்ட குழாயுள்ள வெடியென்றும் சொல்லுவார்களா? அப்படி சொன்னால் அவை பொருத்தமாயிருக்குமா?அல்லது ஜனங்களுக்குத்தான் புரியுமா? ( மேற்கோள் சோமலே 1956 : 88 ) Հ*
தனித்தமிழ் இயக்கம் அதன் தீவிர நிலையில் மொழி வளர்ச் சிக்குப் பாதகமானது என்பதைப் பொதுவாக பலரும் ஏற்றுக் கொண் டுள்ளனர். நாகரீகமடைந்த ஒரு மனிதன் காட்டுமிராண்டியாவதை ஒத்த பிற்போக்கானது என வையாபுரிப்பிள்ளை (1989:5) தமிழின் மறு மலர்ச்சி என்ற தனது நூலில் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். பழத் தமிழை மீட்டு அதை சமஸ்கிருதக் கலப்பற்றதாகப் பேணும் சுவாமி வேதாசலத்தின் முயற்சி இரு மடங்கு பிற்போக்கானது என்றும் அது ஒரு சாத்தியமற்ற காரியம் என்றும் கைலாசபதி ( 1986 ) கூறியுள்ளார். ஆயினும் தமிழில் மனம்போன போக்கிலான பிறமொழிக் கலப்பைக் கட்டுப்படுத்தியதும் தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதில் அதன் உள்ளார்த்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு வழிதிறந்து விட்டதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அதன் சாதகமான செல்வாக்கு என்றே கூறவேண்டும். -
எனினும் இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும் ஒன்றிணைந்த செவ்வியல் மொழிநடை பேச்சு மொழியில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்கின்றது. சாதாரண படிப்பறிவுள்ள வாச
23

Page 26
கர் மட்டுமன்றி ஒரளவு உயர்கல்வி பெற்றவர்கள்கூட இதனைப் புரிந்துகொள்வதில் இடர்ப்படுகின்றனர். தற்கால வழக்கில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்கள், இலக்கணக் கூறுகள் பலவற்றைக் கையா ளுதல், பழைய புணர்ச்சி விதிகளைப் பெரிதும் பேணுதல், பிறமொ ழிப் பெயர்களையும் சொற்களையும் முற்றிலும் தமிழ் மயமாக்கு தல் போன்றவை இத்தகைய இடர்பாட்டுக்குக் காரணமாகின்றன. இதனாலேயே மொழிவளர்ச்சியைப் பொறுத்தவரை செவ்வியலாக்கம் நவீனத்துவத்துக்கு எதிர்நிலையானது எனக்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ் மொழியைப் போன்றே சீனமொழியும் தொன்மை வாய்ந்த இலக்கிய வளம் பெற்ற ஒரு மொழியாகும். தமிழ்போல் சீன மொழியிலும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே பெரிய இடைவெளி புண்டு. இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகளில் தமிழ் மொழியை நவீனப்படுத்த முயற்சிகள் நடைபெற்றதுபோல் சீனமொழியை நவீ னப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பணிக்கர் தன் னுடைய நூலிலே இதுபற்றி விரிவாக எழுதியுள்ளார், பெரிதும், செவ்வியல் பாங்கான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன். இதில் கூறப்படும் பொரு ளுக்கும் அதன் மொழிநடைக்கும் இடையில் உள்ள இயைபின் மையை நாம் தெளிவாகக் காணமுடியும்
' இலக்கிய விற்பன்னரும் பொதுமக்களும் ஒரே மொழியை வழங்கச் செய்து அவ்வழி, சிந்தனைச் செல்வமனைத்தையும் பொது மக்களுக்குள் திறந்துவிடுவதே முதற் பணியென ஊ - சி கருதினான். இலக்கியச் சீனமொழியென்பது மக்கள் நாவிலே பயிலாத தொன்றா தலின் செத்தமொழியே அதுவென அவன் வாதித்தான். " மத்திய கால ஐரோப்பாவில் இலத்தீன் போன்றது அது; சாக்காட்டிலேயும் கூடியது குறைந்ததென்று பேதப்படுத்திப் பேச முடியுமாயின் அது இலத்தீனிலும் பார்க்க நனிசெத்த மொழியாகும். இலத்தீனைப் பேசுதலும் விளங்குதலுங் கூடும். ஆயின் இலக்கிய சீன மொழியைப் பேசும்போது நன்கு பழகிய சொற்ரொடர்களைப் பயன்படுத்தினா லன்றி அல்லது, பேசுவோன் சொல்லப்போவது பற்றி முன்னமே ஒரளவு தெரிந்திருந்தாலன்றி, அம்மொழியை செவிப்புலனால் விளங் கிக்கொள்ளல் பண்டிதர்க்கும் அரிதே! இவ்விடர்ப்பாட்டைத் தவிர்க் கும் பொருட்டும் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க சிந்தனைக் கரு வியாக மொழி அமைதல் வேண்டுமெனும் நோக்கத்தோடும் ஊ - சி பேச்சு வழக்கையே ஆதரித்தான்.
அவன் கூறிய ஆலோசனைகள் கட்டுமட்டானவை. தொல் லருங்கால நூல்களிலிருந்து மேற்கோள் காட்டலைத் தவிர்க்க; ஒரே பெற்றித்தாக வசனமமைக்கும் முறையை விலக்குக; காலப்போக்
24

கிலே வழக்கொழிந்த இலக்கியத் தொடர்களைத் தள்ளி, பேச்சு வழக்கினைத் தள்ளா தொழிக; இலக்கண வரம்புக்கமைய வசனம மைத்தலின் அவசியத்தை வற்புறுத்துக சாரமற்ற சொற்றொடர் களை உபயோகிக்க வேண்டா. முந்தையோரின் நடையைப் பின் பற்றவேண்டா சுருங்கக்கூறின் விளங்கத்தக்க மொழி நடையிலே இயற்கையாக எழுதுக, ஆயினும் அவன் எடுத்துக் கூறிய வாதங் களிலே விரவி நின்ற நிதானமும் அவனது புலமையுமெல்லாம் சீன இலக்கியத்துறையிலே தாராள மனப்பான்மை வந்து பாய்தற்கு வழி திறந்திருக்குமேயல்லாது அறிஞன் சென்னுடைய அரும்பணி யின்றேல் அவை இலக்கியப் புரட்சிக்கு அடிகோலியிருக்குமாவென் பது சந்தேமே. அறிஞன் சென்னே அக்கருத்துக்களை ஒரு புரட் சிக் கோட்பாடாக உயர்த்தி வைத்தவன். ஊ - சியின் வேண்டு கோளை ஆதரித்த சென் "சீன இலக்கியத்திலே ஒரு புரட்சி" உரு வாதல் வேண்டுமெனக் கட்டுரைத்தான். அவன் தானே பெருமித நடையிற் கூறியவாங்கு இலக்கியப் புரட்சிக் கொடியை ஏற்றி வைத் தான்.
பேச்சு மொழியிலியன்ற கட்டுரைகளைப் பிரசுரிக்கத் தலைப் பட்டு, ஊ - சியின் ஆறு உத்திகளையும் லா யவனசே கையா ளத் தொடங்கிய காலை இலக்கியப் புரட்சி ஈடேறியதோடு செயற் கைத்தன்மைமிக்க பாண்டித்திய நடையின் கட்டுப்பாடுகளைச் சீன மொழி உடைத்தெறிந்து விடுதலையும் பெற்று விட்டதெனலாம். ( பணிக்கர், 1969 ; 307 - 308 )
சீனமொழியின் நவீனத்துவம் பற்றிக் கூறும் மொழிபெயர்ப்பாள ரின் நடை பெருமளவு செயற்கைத் தன்மை மிக்க பாண்டித்திய நடையே என்பது வெளிப்படை. இலக்கணத் தூய்மை, மொழித்தூய்மை ஆகிய வற்றின் செல்வாக்குக்கு உட்பட்ட செவ்வியல் நடைக்கு இது நல்ல உதாரணமாகும். தமிழிலே இத்தகைய பாண்டித்திய நடையின் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தமிழ்மொழியை நவீன உல குக்குக் கொண்டுவந்தவர்கள் பாரதியும் அவன் வழிவந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களுமே ஆவர். அவர்கள் மூலமே தமிழில் பேச்சுமொழிக் கும் எழுத்துமொழிக்கும் இடையில் உள்ள இடைவெளி குறையத் தொடங்கிற்று. தமிழ் பன்முகப்பட்ட நடைவளம் பெற்று வளர்ந் தது. நவீன தொடர்பாடல் தேவைகளுக்கியைய நவீனத்துவம் பெற் றது. அவ்வகையில் தமிழின் எதிர்கால வளர்ச்சி அவர்கள் வழியில் செல்வதே உகந்தது,
·驾5

Page 27
அண்ணாமலை, இ.
ஆறுமுக நாவலர்
சிவத்தம்பி, கா,
சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர்
சோமலெ
நுஃமான், சாம். ஏ.
துஃமான், எம். ஏ.
பணிக்கர், கே. எம்.
மறைமலை அடிகள்
பயன்பட்டி நூல்கள்
( 1980 ) "எளிமையாக்கம் புதுமையாக்கத் தின் ஒருமுறை " மொழியியல் - 4 அண்ணாமலை நகர். (1969 ) பாலபாடம் ( நான்காம் புத்தகம் ) வித்தியானுபாலன அச்சகம், சென்னை ( 1979 ) தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி, சென்னை, (1963 ) விபுலாநந்த செல்வம் கலைமகள் வெளியீடு, சென்னை,
( 1973) இலக்கியக் கட்டுரைகள் கல்வி வெளி யீட்டுத் திணைக்களம், கொழும்பு. ( 1956 ) வளரும் தமிழ் பாரிநிலையம், சென்னை. ( 1988 ) * 19ஆம் நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும் "
மொழியியல் தொகுதி 11 இதழ் 1 - 4
( 1987 ) " ஆறுமுக நாவலரின் இலக்கணத் தூய்மை வாதம் " 19ஆவது ஆய்வுக் கோவை - அகில இந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் சங்கம், அண்ணாமலை நகர். ( 1979 ) ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு. ( 1972 ) உரைமணிக் கோவை சென்னை,
வையாபுரிப்பிள்ளை, எஸ். (1989) தமிழின் மறுமலர்ச்சி
Ar na matai, S.
Kailasapathy K.
Kamil Zveliabil Karunakaran K.
Shanmugam S, V.
露恋
நூற்களஞ்சியம், தொகுதி - 2. சென்னை. ( 1979 ) ''Movement for Linguistic Purism: The case of Tamil ' ' in language Movements in India Cill Mysore.
( 1986 ) " The Tamil Purist Movement: a Re-evaluation' in On Art and literature NCBH Madras. ( 1978) The Smile of Murugan, Leiden ( 1978 Studies in Tamil Sociolinguistics Malar Pathippu, Annamalai Nagar. ( 1983) Aspects of Language Develop ment in Tamil. All India Linguistics Associ - ation, Anna malai Nagar.

புதிய தமிழ் இலக்கணம்: அதன் தேவையும் சிக்கல்களும்
சண்முகதாஸ் . يع
முன்னுரை
இலக்கணம் என்பது இலட்சணம்" அல்லது இயல்பு' என்று கொள்ளில் தமிழ் மொழியின் இலட்சணங்களை அல்லது இயல்புக ளைக் கூறுவது தமிழ் மொழி இலக்கணம் எனப்படும். ஆனால், நம் மொழியின் இலக்கண வரலாற்றை நோக்கில், தமிழ் மொழிக்கு மட் டுமன்றி. அம்மொழியிலான இலக்கியங்களுக்கும் இலக்கணம் வகுக் கும் மரபு இருந்துவந்துள்ளதை நாம் அறிவோம். இலக்கியங் கண் டதற் கிலக்கண மியம்பும் " போக்கு, ஐந்திலக்கணங்கள் வகுக்கும் போக்கு, இலக்கிய மொழிக்கே இலக்கணம் வகுக்கும் போக்கு ஆகி யன இம் மரபின் பாற்படுவன. 1 , தற்போது, மொழியிலான இலக் கியங்களின் இயல்புபற்றித் திறனாய்வு என்னுந்துறை விரிவாக ஆராய் கின்றது, இலக்கியங்களுக்கும் மொழிக்குமுள்ள தொடர்பு குறித்து நடையியல் என்றொரு புதியதுறை பேசுகின்றது. எனவே இலக்கணம் என்னுஞ் சொல்லினை மொழியினுடைய இயல்புகளை மட்டும் விவ ரணஞ் செய்யும் முயற்சிக்கு உரியதாக வழங்குவது பொருத்தமாகும்
1. புதிய இலக்கணத்தின் தேவை
மரபுவழிவந்த தமிழ் இலக்கண நூல் எனக் கடைசியாக வெளி வந்தது ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம் என்பதாகும். இத னைத் தொடர்ந்து பல சிறு இலக்கண நூல்கள் வெளியிடப்பட்ட போதிலும், இவை எவையேனும் வளர்ச்சியடைந்த தமிழ் மொழிக் கேற்ற இலக்கண நிலைகளைக் கூறவில்லை. எம்முடைய மரபுவழி வந்த இலக்கண நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாயமைந்த தொல் காப்பியம் வடமொழிக்கு அமைக்கப்பட்ட இலக்கண மாதிரியை தமிழ் மொழிக்கும் அமைத்துக்கொண்டது. தமிழ்மொழி சமஸ்கிருத மொழி யைப் போலன்றி, மொங்கோலிய, யப்பானிய மொழிகளைப் போல் ஒர் ஒட்டுமொழி யென்பது மரபுவழி இலக்கண நூலாராலே உணரப் படவில்லை. அவ்வாறு அவர்கள் உணர்ந்திருந்தால், தமிழ்மொழி யில் இடைச்சொற்களுக்குள்ள முதன்மைப் பண்பினை அறிந்து அதற் கேற்றபடி இலக்கணம் வகுத்திருப்பர். இதனால், சங்கப் பாடல்க Oரிலும் பிற்கால இலக்கியங்களிலும் துணுக்கமான உணர்வுப் பொரு
7

Page 28
ளையும், சொற்றொடர் ஒழுங்கையும் நல்கிய இடைச்சொற்கள் உரைகாரர்களாலே இசை நிறைகளும் அசை நிலைகளும் எனப் பட்டன. ஒரு செய்யுளிலே இவ்வாறு பல இசை நிறைகளும் அசை நிலைகளும் இடம்பெறுமாயின், அச் செய்யுளைப் பாடிய சங்கப் புலவன் சொற்பஞ்சமுடையவனோ என்று எண்ணவேண்டியுள்ளது. சமஸ்கிருத மொழி இலக்கண மாதிரியைப் பின்பற்றித் தமிழ் இலக் கணம் அமைந்ததால் இதுபோன்ற பல இடர்பாடுகள் ஏற்பட்டன.
தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளை நன்கு இனங்கண்டு, அம்மொழியின் ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய னவற்றுக்கெல்லாம் இலக்கணங் கூறும் முயற்சிகளை இந் நூற்றாண் டின் நடுப்பகுதியிருந்து நவீன மொழியியலாளர் மேற்கொண்டுள்ள னர். இவர்கள்கூட, தாம் தாம் ஏற்றுக்கொண்ட இலக்கண மாதிரி களை அடிப்படையாகக் கொண்டே விளக்கங்கள் கொடுத்தனர். மேலைத்தேய மொழிகளின் செல்வாக்கிலே உருவாகிய நவீன மொழி யியற் கோட்பாடுகளைக் கற்ற நாம், தமிழ்மொழி அம்மொழிகளி னின்றும் வேறுபட்ட பண்புகளையுடையது என்பதை மறந்துவிடு கிறோம். ஐரோப்பிய மொழிகளிலே இடைச்சொற்கள் முதன்மைத் தன்மை பெறுவதில்லை. அங்கு இடைச்சொற்கள் * Minor Particles . என்னுந் தொடராலே குறிக்கப்பட்டன. இதே தொடரைத் தமிழ் இடைச்சொற்களைக் குறிப்பிடவும் உபயோகிப்பின், நாம் தமிழ் மொழியின் உண்மையான அமைப்பினைத் தெளிவுற விளங்கிக் கொண்டு அம்மொழிக்கு இலக்கணம் வகுக்கிறோம் எனக்கூற முடி யாது. அத்துடன், மொழியியலாளர் தத்தமக்கேற்றபடி கலைச் சொற்களை உபயோகித்து உள்ளனர். இவற்றுக்கிடையே இன்னும் ஒருமைப்பாடு காணப்படவில்லை. தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுத முற்பட்ட மொழியியலாளர்களும் முழுமையான ஓர் இலக் கண நூலை இதுவரை அமைத்தாரில்லை. தமிழ்மொழிக்கு தற்கால அடிப்படையில் புதிய முழுமையான இலக்கணம் அமைக்கவேண்டி யது சிறப்பான, கட்டாயமான தேவை என்பதை நாம் உணரும் அதேவேளை, அத்தகைய இலக்கணத்தை அமைப்பதிலே உள்ள பல சிக்கல்களையும் நெஞ்சிருத்த வேண்டியுள்ளது.
2 இலக்கணம் அமைப்பதிலுள்ள சிக்கல்கள் 2 . 1 இருவழக்குப் பண்பும் பேச்சு வழக்குகளும்
இன்றையத் தமிழ்மொழிக்கு இலக்கணம் அமைப்பதெனின், இன்றைய இலக்கியங்களிலே கையாளப்படும் மொழிவழக்கு, இன் றையத் தமிழ் மக்களின் பேச்சு வழக்குகள் என்பனவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இவை தொடர்பாக (1) தமிழ்மொழி
2 &

யின் இரு வழக்குப் பண்பு (2) தமிழ்மொழியின் பல்வேறுபேச்சு வழக்குகள் என்னும் இரு விடயங்கள் விரிவாக நோக்கப்படவேண்டும்"
தமிழ்மொழியின் " இருவழக்குப் பண்பு அல்லது " இருநிலை மொழி ( சண்முகம் 1986 ) பண்டைக்காலந்தொட்டே தமிழ்மொ ழியிலே காணப்பட்டு வருவதாகும். இத்தன்மையைச் சண்முகம்பிள்ளை ( 1960). சண்முகம் (1978 ) சண்முகதாஸ் ( 1977 ) ஆகியோர் சுருக்கமாகவும் தெய்வசுந்தரம் ( 1981 ) விரிவாகவும் நோக்கியுள் ளனர். இன்றையத் தமிழ் இலக்கியங்களெல்லாம் பேச்சு வழக்கில் மட்டுமோ, இலக்கிய வழக்கில் மட்டுமோ அமைவனவல்ல. இரு வழக்குசஞமே அவற்றில் பயின்று வருகின்றன. இலக்கிய வழக்கு ஒன்று எம்மிடம் இருப்பதால் இன்றைய இவ்வழக்குக்கும் இலக்கணம்
அமைக்கப்படுவது இன்றியமையாததாகும்.
இனி, தமிழ்ப் பேச்சு வழக்குகளை எடுத்துக்கொண்டால், பருமட்டாக இந்தியத் தமிழர் பேச்சு வழக்கு, ஈழத்தமிழர் பேச்சு வழக்கு என இரு பெரும் பிரிவுகளாகப் பாகுபாடு செய்துகொள்ள லாம். இவ்விரு வழக்குகளுக்கு இடையேயுள்ள பல வேறுபாடுகள் பற்றி சுவாமி விபுலாநந்தர் ( 1940, 1941), சுவெலெபில் ( 1959, 1966 ), சண்மு சம்பிள்ளை ( 1962, 1968), வேலுப்பிள்ளை ( 1972). சுசீந்திரராஜா (1973, 1982, 1984), யேசுதாசன் ( 1977, 1979 ), சண்முகதாஸ் ( 1983 ) ஆகியோர் நோக்கியுள்ளனர். இன்றைய தமிழ் இலக்கணம் அமைக்கும்போது இவ் வேறுபாடுகளையெல்லாம் நெஞ்சிருத்தியே முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யி னும், ஈழத் தமிழிலே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, மட்டக்களப்பு பேச்சு வழக்கு என இரு பெரும் பாகுபாடு இருப்பதையும், இந்தியத் தமிழில் பிராமணர் வழக்கு, பிராமணர் அல்லாதோர் வழக்குத் தொடக்கம் பல்வேறு வழக்குகள் இருப்பதையும் நாம் மறக்கலாகாது. எனவே இன்றையப் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுத முயற்சிப்
1. தமிழ்ப் பேச்சு வழக்குகளுக்கெல்லாம் பொதுப்படையாக அமையும் இயல்புகளை முதலிலே இனங்காண வேண்டும்.
2
ஒவ்வொரு பேச்சு வழக்குக்குமுள்ள சிறப்பியல்புகளை இனங்கண்டு அவற்றைப் பொதுவியல்பு ஒவ்வொன்றுட னும் தொடர்புறுத்தி நோக்கவேண்டும்.
எனவே, இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு இலக்கண வகைமைக்கும் இலக்கணக் கூறுக்கும் பொது விதிகளை வகுக்கின்ற வேளையில், பல்வேறு பேச்சு வழக்குகளை நெஞ்சிருத்தி சிறப்பு விதிகளும் வகுக்கவேண்டிய தேவையுண்டு.
29

Page 29
இன்றையத் தமிழ் இலக்கணம் அமைக்கும்போது வேறு சில சிக்கல்களும் உண்டு. தமிழில் இதுவரை எழுந்த தமிழ் இலக்கணங் கள் இனங்கண்ட இலக்கண வகைமைகள் இலக்கணக் கூறுகள் பற்றி வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் பொருத்தமானவையா? பொருந்தாவிடின், இன்றைய தமிழ்மொழியின் நிலைப்பாடுகள் என்ன? என்பன தெளிவாக்கப்பட வேண்டும். இது தொடர்பாகப் பின்வரும் தலைப்புகள் நுணுகிய நோக்குக்கு உட்பட வேண்டியன,
2. 2 உச்சரிப்பும் வரிவடிவமும்
மொழி முதலிலும், இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையிலும் தன்னின வெடிப்பொலிகளுக்குப் பின்பும், தன்னின மூக்கொலிகளுக் குப் பின்பும் இடம்பெறும் க், ச், ட், த் வெடிப்பொலிகளின் உச்சரிப்பு வேறுபாடுகள்பற்றி பல மொழியியலாளர்கள் நோக்கியுள்ளனர்?. ஒரே வரிவடிவம் இரண்டு அல்லது மூன்று வகையான உச்சரிப்புகளையு டையன என்னும் உண்மை வெளிக்கொணரப்படும்படியாக விளக் கங்களோ விதிகளோ அமைக்கப்பட வேண்டும் |ற்/ என்னும் வரி வடிவுக்கும் உச்சரிப்புக்குமிடையேயுள்ள சிக்கலும் தெளிவுறுத்தப் படவேண்டும். தொல்காப்பியர் / ற் / எழுத்தினுடைய பிறப்புப்
பற்றிக் கூறுமிடத்து,
** அணரி நுனிநா வண்ண மொற்ற
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும் **
( எழுத்ததிகாரம், சூ. 94 )
என்று கூறுகின்றார். நாவினுடைய நுனி மேல்நோக்கிச் சென்று அண்ணத்தைத் தீண்ட /ற்/, /ன்/ என்னும் ஒலிகள் பிறக்கும் எ ன க் கூறப்படுகின்றது. எனவே, தொல்காப்பியர் காலத்தில், கற்பு, பற, கன்று என்னும் சொற்களிலே இடம் பெறும் /ற்/ ஒலி ஆங்கில /t/ யினுடைய உச்சரிப்புப் போன்ற முன்னண்ண ஒலியாகவே அமைந்திருந்தது. நன்னூலாரும் அதே சூத்திரத்தை அப் படியே திருப்பிக் கூறுகின்றார். ஆனால், இன்று நாம் மேல் காட் டிய மூன்று சொற்களிலும், கற்பு என்பதில் இடம்பெறும் Iற்! ஒலியை மட்டும் தொல்காப்பியர், நன்னூலார் குறிப்பிட்ட உச்ச ரிப்புக்கமைய உச்சரிக்கிறோம். ஏனைய இரு சொற்களிலுமுள்ள |ற்/ ஒலியை ஆடொலியாகவே உச்சரிக்கிறோம்.3 இவ்வொலி பற்றி மரபு வழி வந்த எத் தமிழ் இலக்கண நூலிலும் விளக்கம் கொடுக்கப்பட வில்லை. இவ்வொலி மாற்றம் எக்காலகட்டத்திலே ஏற்பட்டது என்பது ஆராய்ந்து நோக்கப்பட வேண்டிய தொன்றாகும். எனினும் இன்றையத் தமிழ்மொழி இலக்கணம் இவ்வெழுத்தின் இருவேறு ஒலிக் கூறுகள் பற்றிய விளக்கமுடையதாக அமையவேண்டியது இன்றிய மையாததாகிறது.
30

இன்றையத் தமிழ் இலக்கணம் எழுத முயற்சிப்பவர் எதிர் நோக்க வேண்டிய இன்னொரு சிக்கல்/ழ்/ /ள் என்னும் எழுத்துக்கள் தொடர்பானதாகும். இன்று தமிழிலுள்ள எல்லாப் பேச்சு வழக்கு களிலுமே |ழ்|, |ள்| ஆகிய இரண்டும் /ள் என்று உச்சரிக்கப்படுகின் றன. எனினும், எம்முடைய மொழியிலே 1ழ்|, |ள்/ ஆகியன ஒலி யன்களாக இடம்பெறும் குறையொலி இணைகள் பலவற்றை எடுத்துக் காட்டுக்களாகக் காட்டலாம் (வாழ், வாள்; கிழவி, கிளவி, இை இளை) இன்றைய பேச்சு மொழிக்கு இலக்கணம் வகுக்கும்போது |ள் என் றொரு ஒலி இருப்பதாகவே கூறவேண்டியுள்ளது. அப்படியாயின் |ழ்/ வரிவடிவம் இடம் பெற்ற சொற்களிலே அதற்குப் பதிலாக 1ள்/ வரிவடிவு இட்டுத்தான் காட்டவேண்டும். இது பொருத்தமான முறையாக அமையுமா? சிக்கல் நாம் ஆழமாக நோக்கித் தீர்க்க வேண்டியதொன்று
2.3 சார்பெழுத்துக்கள்
குறுக்கங்கள், அளபெடைகள், ஆய்தம் எனப்பட்டவற்றை உள்ளடக்கிய சார்பெழுத்துக்கள் என்னும் பாகுபாடு இன்றைய தமிழ் இலக்கண அமைப்பிலே மிகவும் வேண்டப்படுவதொன்றோ என்பதும் ஆராயற்பாலது செய்யுளுக்காக முதன்மைப்படுத்தப் பட்ட குறுக்கங்கள் பேச்சு வழக்கிலே பின்பற்றப்படுவனவாயில்லை. ஆனால், பேச்சு வழக்கிலே சிற்சில சந்தர்ப்பங்களில் நெட்டொலிகள் நீண்டொலிப்பது இயற்கையாகவே நிகழ்கின்றது. எழுத்துக்கள் அவற் றின் ஒலிகள் பற்றிக் கூறுமிடத்து இவ்வியல்பினைச் சிறப்பாக கூறி விடலாம். ஆய்தம் எ ன் றொ ரு எ மு த் தி  ைன இக்காலத்தில் நாம் எவரும் உபயோகிப்பதில்லை. இக் குறியீட்டை, தேவை யேற்படின், மொழியின் ஏதாவது சிறப்பு த் தேவைக்கு உப யோகித்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்து, சார்பெழுத்து என்றொரு பாகுபாடு இக்காலத் தமிழ்மொழி இலக் 565 அமைப்பில் தேவையற்றதொன்றென்றே கருதவேண்டி புள்ளது.
2.4 சொற்பாகுபாடு
தொல்காப்பியர் தொடக்கம் எல்லா மரபுவழித் தமிழிலக்கண நூலாரும் தமிழ்ச் சொற்களை (1) பெயர் (2) வினை (3) இடை (4) உரி என்னும் நான்கு பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். இன்றையத் தமிழ்மொழி இலக்கண அமைப்பிலே இத்தகைய பாகு பாடு ஏற்புடையதா இல்லையா என்பதும் ஆய்வுக்குரியதாகும். சொற்பொருளை விளக்கும் பல்வேறு வகைப்பட்ட அகராதிகள்
31

Page 30
உள்ள இக்காலத்திலே சொற்பொருள் தெளிவுற விளங்காச் சொற் களென ஒரு பாகுபாடு தேவையற்றதாகின்றது. பண்டைக்காலத் திலும் இடைக்காலத்திலும் இப் பாகுபாடு தேவையானதொன் றாயிருந்திருக்கலாம். சண்முகம் (1986: 176 - 77) உரிச்சொல் பற்றி ஆராய்ந்து முடிவுரையிலே,
எனவே உரியியலை, ஒரு நோக்கில் சொற்பொரு ளியலை விளக்கும் இயலாகக் கொண்டு இங்கு சொல் லிலக்கண நோக்கில் அகராதியன் (Lexeme) பற்றியே பேசுகின்றது என்று கொள்ளலாம், அப்படியானால் முதல் சூத்திரமும் கடைசி எட்டு சூத்திரங்களும் சொற் பொரு ளியல் பற்றிப் பொதுக்கருத்தாகவும் ஏனைய சூத்திரங்கள் சொற்பொருள் உதாரணங்களாகவும் கொள்ள வேண் டும். வெளிப்பட வராத சொற்களின் பொருளினை விளக் குவதால் மேலும் இரண்டுவித நோக்கும் புலனாகிறது, இலக்கணத்தின் நோக்கம் இலக்கியக் கல்விக்கு உறு துணையாக இருப்பதென்பது. இது மறைமுகமாக ஒரு மொழியில் மொழி ஆராய்ச்சி தோன்றிய துவக்கக் கட் டத்தை அதாவது பழைய இலக்கியங்களை அறிந்து கொள்ள உதவுவதற்காகத்தான் மொழி ஆய்வு தோன் றியது என்பதையும் புலப்படுத்துகிறது. பயிலாத சொற் களுக்குப் பொருள் கூறுவது என்பது இலக்கியக்கல்விக்கு மொழி அளவில் உரியியல் உதவி செய்கின்றது என்று ஆகிவிடுகின்றது. இதனால் இலக்கியத்தின் வடிவத்தை யும் உள்ளடக்கத்தையும் (பொருளையும்) கூறும் பொரு ளதிகாரத்தைத் தொல்காப்பியரே இயற்றியிருக்கக்கூடும் என்ற கருத்தையும் கூட சூசகமாகப் புலப்படுத்து கின்றது. *
எ ன்று கூறியுள்ளமையை நோக்குமிடத்து இத்தகைய ஒரு சொற்பாகுபாடு சொற்பொருளை அடிப்படையாக வைத்து ஏற் படுத்தப்பட்டதென்பது புலானகின்றது. எனவே இக்கால இலக்கண அமைப்புக்கு இத்தகைய பாகுபாடு தேவையற்றதாகி விடுகின்றது.
இடைச்சொல் என்னும் பாகுபாடும் இன்றைய தமிழ் இலக் கன அமைப்பிலே மீளாய்வு செய்து அமைக்கப்பட வேண்டிய தொன்றாயுள்ளது. தமிழ்மொழி ஒட்டுமொழி வகையைச் சார்ந்தது. ஒர் அடிச்சொல் அல்லது வேர்ச் சொல்லுடன் பல பின்னிலைகள் ஒட்டப்பட்டு ஒரு சொன்னீர்மைப்பட்டு நடக்கும் வடிவங்கள் தமி ழிலே பலவுள. எடுத்துக்காட்டாக, விடுவிக்கப்பட்ட என்னும் வடி வத்தினைப் பகுப்பாய்வு செய்யின்,
32

விடு - அடிச்சொல்
வி - பிறவினை காட்டும் ஒட்டு
க்க் - நிகழ்காலத்தை உணர்த்தும் ஒட்டு H - எதிர்கால வினை எச்ச ஒட்டுگی
படு - செயப்பாட்டு வினை ஒட்டு
t - இறந்தகாலம் உணர்த்தும் ஒட்டு அ - பெயரெச்ச ஒட்டு
இவ்வாறு அடிச்சொல்லுக்குப் பின்னாலே ஒன்றன் பின் ஒன்றா கப் பல பின்னிலை சளை ஒட்டிச் சொல் வடிவங்களை ஆக்கும் பண்பு ஒட்டு மொழிகளிலே காணப்படுவதொன்றா ஆகும். ஆனால், இவ் வாறு ஒட்டப்படும் பின்னிலைகள் பல்வேறு செயல் திறன் உடையன. தொல்காப்பியர் இடைச் சொற்களைப் பின்வருமாறு பாகுபாடு செய்கிறார்;
அவைதாம், புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநஷம் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநஷம் அசை நிலைக் கிளவி யாகி வருநவம் இசை நிறைக் கிளவியாகி வருநஷம் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவம் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநஷ்மென் றப்பண் பினவே நுவலுங் காலை.
(சொல்லதிகாரம், சூ. 250)
இப் பா கு பா ட் டி னு ஸ் திணை, பால், எண், இடம் உணர்த்தும் இடைச்சொற்கள் அடக்கப்படவில்லை. அவற்றை எப் பாகுபாட்டினுள் அடக்குவது? எனவே, இக்காலப் பயன் பாட்டை நோக்கி, இடைச் சொற்கள் பின்வருமாறு பாகுபடுத்தப் பட வேண்டும்,
1. திணை, பால், எண், இடம் உணர்த்துவன. (எ - டு : அன், ஆன், அள், ஆள், அ, மார்)
2. வேற்றுமை உருபுகள். (எ - டு ; ஐ. கு, இன்)
3. வினைத்துணை நிலைகள் (காலங்காட்டும் இடை நிலைகள், எச்சம், பிறவினை, செயப்பாட்டுத்தன்மை ஆகியனவற்றை உணர்த்துவன)
4. சொல்லாக்கப் பின்னிலைகள் (எ - : தொழிற்பெயர்
ஈறுகள்)
33

Page 31
5. சாரியைகள் (அடிச்சொல்லும் பின்னிலைகளும் சேரு மிடத்து பொருள் வேறுபடாமலிருக்க அவற்றிடையே இடம்பெறும் இடைச் சொற்கள். எடுத்துக்காட்டாக பல- ஆல் என்பது பலவால் என ஆகிவிடாமல் பொருளைப் பாதுகாக்க வற்றுச் சாரியை இடையே வந்து பலவற்றால் என்றாகிவிடும்)
6. ஒப்புமை உணர்த்து வன (எ - டு போல)
7. பேசுவோன் குறிப்பு, உணர்வு ஆகியவற்றை உணர்த் துவதுடன் தொடர்களைத் தொடுப்பனவும் முடிவு நிலையில் நிற்பனவும்.
இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இடைச்சொற் பிரிவு பற்றிச் சிறிது விரிவாகக் கூறவேண்டும். இடைச் சொற்களான ஏ, ஓ உம், தான் ஆகியன பேசுவோனுடைய வினா, தேற்றம், ஐயம் போன்ற குறிப்புக்களை உணர்த்தவல்லன. இவை மரபு வழி இலக்கண நூலாராலும் குறிப்பிட்டவை. ஆனால் தொடர் அடிப்படையில் எழுவாயை முதன்மைப்படுத்துவது அல்லது தொடரின் சிறப்புப் பண்பினை முதன்மைப்படுத்துவது போன்ற பயன்பாடுகள் பற்றி அவர் குறிப்பிட்டாரில்லை, எடுத்துக் காட்டாக, பின்வரும் தொடர் களை நோக்குக (எடுத்துக்காட்டுகள் யாவும் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலிருந்து பெறப்பட்டன, பக்க விவரம் கொடுக் கப்பட்டுள்ளது);
1. 'சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்
காவ*" (ப. 25)
2. 'நானும் அவனுமே வாரி வய்ப்பம்’ (ப, 27)
3. மூட முக்காருவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோவம் செய்யிறா’’ (ப. 84)
4. 'துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை
செய்யத் துணியிறா.”* ܗܝ
மேற்காட்டிய தொடர்களில் முதல் மூன்றிலும் அவியளே, அவனுமே, இவனுளே, என இடம்பெறும் வடிவங்களில் வரும் "ஏ" கார இடைச்சொல் எழுவாயை முதன்மைப்படுத்தும் பயன்பாடுடை யதாயுள்ளது. இறுதி எடுத்துக்காட்டில், தொடரின் சிறப்பு நிலை யினை "ஏ" காரம் (சொந்தபந்தத்தையே) முன்தமைப்படுத்து கின்றது.4 இவ்வாறு, ஏ, ஓ, தான் போன்ற இடைச் சொற்களின்
34

இக்காலப் பயன்பாடுகள் தெளிவுற இனங்காணப்பட வேண்டும். இன்னும், இவ்விடைச் சொற்கள் 'உம் தொடரில் இடையில் மட் டுமே இடம்பெறுவதாகும். மற்றயவை, இடையிலும் இறுதியிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் இடைநிலைகள் தொட ரமைப்புடன் எவ்வாறு தொடர்புறுகின்றன என்பதும் விரிவாக நோக்கப்படவேண்டியதாகும். y
இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடும் இக்காலத்தில் தமிழ்மொழி இலக்கண அமைப்புக்கு வேண்டியதொன்றல்ல, இயற்சொல், திரிசொல் என்னும் வேறுபாடு செய்யுள் வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட தாகும். அகராதி வசதியுடைய இக்காலத்திலே இப்பிரிவு தேவை யற்றதாகிவிடுகின்றது. திசைச்சொல், வடசொல் என்பனவற்றை யெல்லாம் பிறமொழிச் சொல் என்னும் ஒரு பகுதிக்குள் அடக்கி விடலாம். எனவே தமிழ்மொழிச் சொல் - பிறமொழிச் சொல் என்னும் பாகுபாடு மட்டும் இன்றைய மொழி அமைப்புக்குப் போதுமான தாயமைகிறன்து.
2. 5 குறிப்புச் சொல்
தமிழ்மொழியிலே ‘மை’ யீற்றுச் சொற்கள் பல இருக்கின்றன. இம் மையீறு கொண்டமையும் போது பண்புப் பெயர்களாகவும்" மையீறு கெட்ட நிலையிலே பெயர் அடையாகவும், பெயரெச்ச மாகவும், வினையெச்சமாகவும், பயனிலைச் சொல்லாகவும் பயன் படுகின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றை நோக்குக.
அவன் பெருமை உடையவன்.
பெரு மலை
பெரிய மலை
மலைபெருத்துத் தோன்றுகின்றது.
இந்த மலை பெரிது.
முதல் வாக்கியத்திலே பெரு என்னும் அடிச்சொல் ‘மை’ யீறு பெற்றுப் பெயராகப் பயன்படுகின்றது. இரண்டாவது தொடரில், பெரு அடிச்சொல்லும் மலை பெயர்ச் சொல்லும் சேர்ந்து ஒரு சொன்னீர்மைப்பட்டுத் தொகையாக அமைகின்தது. இங்கு பெரு. பெயரடையாகப் பணிபுரிகின்றது. மூன்றாவது தொடரிலே பெரிய என்பது பெரு அடிச் சொல்லிருந்து அமைந்தவடிவமாகி, பெயர்ச்சொல் ஒன்றினை முடிக்குஞ் சொல்லாக எதிர்நோக்கி நிற்பது. இங்கு மலை என்னும் பெயரினாலே முடிவடைகின்றது" இங்கு பெரிய என்னும் வடிவம் பெயரெச்சம் என்னும் இலக்கணக் கூறுக்குரிய
35

Page 32
பணி செய்கின்றது. நான்காவது தொடரிலே பெருத்து என்பது வினையெச்ச வடிவமாக அமைகின்றது. இறுதித் தொடரிலே பெரிது என்னுஞ் சொல் பயனிலையாகப் பணிபுரிகின்றது. பெயராகவும் வினைபோலவும், அடையாகவும், முடிக்குஞ் சொல்லாகவும் ஒரே சொல் பயன்படுவதாயின், அத்தகைய சொற்களை பெயர்ப் பாகு பாட்டினுள் அடக்குவதா வினைப் பாகுபாட்டினுள் அடக்குவதா என்ற சிக்கல் ஏற்படுகின்றது. இத்தகைய சொற்களை ஒரு தனிப் பாகுபாடாக அமைப்பதே பொருத்தமாகத் தோன்றுகின்றது. இக் கருத்தினை அரண் செய்யும் வகையில் யப்பானிய மொழியிலிருந்து ஒர் எடுத்துக்காட்டைத் தருகின்றோம். யப்பானிய மொழியிலும்
எம்முடைய மையீற்றுச் சொற்களைப்போலப் பெருந்தெகையான சொற்களுண்டு பின்வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.
1. kuro ya ma கருமலை 2. kuroki yama கரிய மலை 3. kuro ku mi yu கருத்து மிளிரும் 4. yama kurosi மலை கரிது
யப்பானிய மொழியிலே kuro போன்ற சொற்கள் பெயர டையாகவும், எச்சமாகவும், முடிக்குஞ் சொல்லாகவும் பயன்படு கின்றன. இத்தகைய சொற்களை அம்மொயிழிலே பெயருக் குள்ளோ வினைக்குள்ளோ அடக்காமல் தனிப்பிரிவாக பாகுபடுத் தியுள்ளனர்.சி. தமிழ்மொழிக்கும் இத்தகையதொரு தனிப்பாகுபாடு பொருத்தமாயிருக்குமெனக் கொள்ளலாம், தமிழ் மொழியிலே குறிப்புவினை என்றொரு பிரிவினை வினையிலே இனங்காணுவதை விட, குறிப்பு வினையாகப் பயன்படும் சொற்களையும் மையீற்றுச் சொற்களையும் குறிப்புச் சொல் என்றொரு தனிப் பாகுபாட்டினுள் அமைத்தல் இன்றியமையாததாகும்.
2 . 6 வேற்று1ை0
தமிழில் வேற்றுமையினை முதலாம் வேற்றுமை, இாண்டரம் வேற்றுமை என்று பாகுபடுத்துவதோ, "ஐ வேற்றுமை "ஒடு" வேற்றுமை, ‘கு’ வேற்றுமை என்று பாகுபடுத்துவதோ பொருத்த மானதொன்றல்ல, பெயர்ச்சொல் ஐன்றுடன் வேற்றுமை உருபு சேருவதால் அப்பெயர் என்ன பொருளை உணர்த்துகின்றதோ அதனை அடிப்படையாகக் கொண்டு அது என்ன வேற்றுமை என நாம் இனங்காண வேண்டும். இன்றைய தமிழ்மொழியில், வேற் றுமை அமைப்பினைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்:
1. எழுவாய் வேற்றுமை.
பூங்குன்றன் பாடினான்.
36

2. செயப்படுபொருள் வேற்றுமை,
அரசன் பூங்குன்றனைப் புகழ்ந்தான். 3. கருவி வேற்றுமை
பூங்குன்றனால் அக்கருத்து முன்வைக்கப்ட்டது. 4. உடனிலை வேற்றுமை
பூங்குன்றனுடன் உதியன் சென்றான், 3. அடைதல் வேற்றுமை Ꮨ
இலக்கியப் பரிசு பூங்குன்றனுக்கு வழங்கப்பட்டது. 6. நீங்கல் வேற்றுமை
பூங்குன்றனிடமிருந்து பாடலைப் பெற்றனர் 7. உடமை வேற்றுமை.
பூங்குன்றனது புலமை . 8 இட வேற்றுமை
பூங்குன்றனில் நல்ல திறமையைக் கண்டனர். 9 விளி வேற்றுமை
பூங்குன்றா வா!
ஒவ்வொரு வேற்றுமையின் தொடரியல் நிலை தெளிவாக இனங்காணப்பட்டு விளக்கம் பெறவேண்டும்.
2, 7 தொடரியல்
மரபுவழித் தமிழ் இலக்கணங்களிலே தொடர்களின் அமைப் புப் பற்றித் தெளிவாகவும் பகுப்பாய்வு முறையிலும் விளக்கம் கொடுக்கும் ஓர் இயலே அமைக்கப்படவில்லை. புதிய மொழியிய லாய்வாளர்களே தமிழ் மொழியின் தொடரியலை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். அவர்களுடைய எழுத்துக்களையெல் லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டு புதிய தமிழ் இலக்கணத் திலே தொடரியல் என்னும் பகுதி விளக்கம் பெறவேண்டும்.
அடிக்குறிப்புக்கள் 1. இவை பற்றிய விளக்கங்களுக்குப் பார்க்கவும் சண்முகதாஸ்
(1689; 23 - 42).
2. எடுத்துக்காட்டாக, கண், அக்கம், மகன், திங்கள் என் னும் நான்கு சொற்களிலும் !க்/ இடம்பெறுகின்றது. ஒரே வரிவடிவம் இடம்பெற்றாலும் மூன்று வகையான உச்சரிப்புகள் இடம்பெறுகின்றன. முதலிரு சொற்களி
37

Page 33
38
லும் ஒலிப்பில் அடியண்ண ஒலியான (க்) ஆசு ஒலிக் கின்றது. மூன்றாவது சொல்லில் ஆங்கில (h) போன்ற ஒலியும் நான்காவது சொல்லில் ஆங்கில (g) போன்ற ஒலியும் ஒலிக்கின்றது.
3. ஈழத்தமிழில் ஆடொலி பற்றிய கைமோகிராம், பலற் றோகிராம் மூலம் பெற்ற விவரங்களுக்குப் பார்க்கவும் தனஞ்செயராசசிங்கம் (1972), சண்முகதாஸ் (1972) 4. தமிழில் ‘ஏ’ காரம் இவ்வாறு பயன்படுவது போல, யப் பானிய மொழியில் ya என்னும் இடைச்சொல் பயன் படுகின்றது. இவ்விரண்டினுடைய பயன்பாடுகளை இக் கட்டுரையாசிரியர் ஒப்பிட்டு நோக்கியுள்ளார், தகவல்: சண்முகதாஸ் (1991).
5. மேலும் விவரங்கள் பின்வரும் கட்டுரையிலே கொடுக்கப்
பட்டுள்ளன; சண்முகதாஸ் (1987)
துணை நூற் பட்டியல் சண்முகம், செ. வை. 1978 " பேச்சும் எழுத்தும் ', மொழியியல், 2. 3 பக். 57 - 85, அண்ணாமலைநகர்
. . . . . . . . . . . . . . 1986 சொல்லிலக்கணக் கோட்பாடு. அனைத் திந்திய தமிழ்மொழியியற் கழகம், அண்ணாமலைநகர். சண்முகதாஸ். 1977 • /قع 'ஆக்க இலக்கியமும் மொழியியலும்’
ஆக்க இலக்கியமும் அறிவியலும், (பதிப்பாசிரியர்: அ. சண்முகதாஸ்), தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பான வளாகம், இலங்கைப் ப ல் க  ைல க் கழகம். பக் 51 - 76.
.......... 1989 தமிழ் மொழி இலக்கண இயல்புகள், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம். யாழ்ப்பாணம், இரண்டாம் பதிப்பு (புதுக்கியது),
சண்முகம்பிள்ளை, எம். 1968 "யாழ்ப்பாணத் தமிழ்' இக்காலத்
தமிழ், முத்துப் பதிப்பகம், மதுரை.

யேசுதாசன், சி.
979
விபுலாநந்தர், சுவாமி.1941
வேலு ப்பிள்ளை, ஆ,
Deivasundaram, N.
Sanmugadas, A.
1972
1981
1972
பேச்சுத் தமிழ் இலங்கையிலும் தமிழகத்திலும்', மொழியியல் 2, 2 பக். 65 - 88, அண்ணாமலைநகர்.
"சோழ மண்டலத் தமிழும் ஈழ மண்டலத் தமிழும்', கலைமகள், L jd. 22 – 30
"ஈழநாட்டுத் தமிழும் செட்டி நாட்டுத் தமிழும் பாவலர் துரை யப்பா பிள்ள்ை வெள்ளிவிழா மலர். பக் 66 - 72.
Tami Diglossia, Nainar Pathipakam.
The Phonology of Verbal Forms in Colloquial Ceylon Tami, Ph.D, dissertation (Unpublished). University of Edinburgh.
1983 “Separation of Sri Lanka Tamil
from Continental Tamil'. Tamil Civilization. Tamil University. Tanjavur, p. p. .82 سب سے 75
1987 'Ouality Words in Tamil and
Japanese" Paper presented to Sixth international Conference Seminar of Tamil Studies, Kuala Lumpur.
1991 ''Comparative study of Tami
le land Japan Wai, Transactions of the nternational Conference of Orientalists in Japan. Nos XXXVII 1991 , The Institute of Eastern Culture Tokyo pp. 148 - 150.
39.

Page 34
Shanmugampillai, M , 1962
Suseendirarajah, S., 1973
ത്സ ത n mം -ത്ത ബn — 1975
1982 سے --------- حسن حســــ ـــــــــــــ---------
LSSSMSSSLSSSLSLMSMSMSMSSSLSSSMSSSS 1984
Thananjayarajasingham, S., 1972
Vipulananda, Swamy, 1940
Yesu dhason C., : 1977
40
''A Tami Dialect of Ceylon'' Indian linguistics 23, pp. 90 - 98.
Phonology of Sri Lanka anc) Indian Tamil Contrasted. lndian Linguistics 34, pp. 171 - 179.
“ “ ndian Tamil and Sri Lanka Tamil. A Study in Contrast (Noun system)'' Indian Journal of Linguistics . 2, Cafocutta, pp. 1 07 - 1 17Journa of Dravidian Linguistics
"Unique Kinship Terms in the Dialect of Jaffna and Kanyaku mari"” International Journal of Dravidian Linguistics, X; 1, Kerala, pp, 201-202
“ “ Lexica ! Differences between Jaffna Tamil and Indian Tami Tamil Civilization 2.2 Tamil University, Tanjavur p. p 22 - 32.
The Phonology of Nomina Forms in Jaffna Tamil
Ph. D. Dissertation (Unpublished). University of Edinburgh
" "Tamil Phonetics' Modern Review, Calcutta.
''Jaffna Tamil and Mainland Tamil ' ' 9th Seminar, Department of Tamil, MaduraiKamaraj University, Volume 1 I, pp. 300 — 305

Zvelebili, Kamil V.
1959
1966
Notes on two Dialects of Ceylon Tami !”" Transactions of the Linguistic Circle Delhi pp. 28 - 36
''Some Features of Ceylon Tamil ' ', Indo-Iranian Journal 9: 2, pp. 1 1 3
4

Page 35
தற்காலத் தமிழ் இலக்கணம்: அதன் தேவையும் பிரச்சினைகளும்
கே. திலகவதி
தமிழில் உள்ள இலக்கண நூல்கள் எல்லாம் செய்யுள் நடையை அடிப்படையாகக் கொண்டே அமைந்தவை. உரைநடை நன்கு வளர்ச்சியடைந்துள்ள காலம் இது. உரைநடை வளர்ச்சியின் காரணமாக மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் பல.
இம் மாற்றங்களை விளக்கும் இலக்கண நூல்கள் எவையும் எழுதப் படவில்லை.
சுய வளர்ச்சியினாலும் பிறமொழித் தொடர்புகளினாலும் தற்காலத் தமிழில் பல மாற்றங்கள் எற்பட்டிருப்பதனால் பழைய இலக்கண விதிகள் பல இன்றையத் தமிழுக்குப் பொருந்த வில்லை உதாரணமாக மலேசிய மொழித் தொடர்பினால், பழந் தமிழில் சொல் இறுதியில் பயின்று வராத பல புதிய எழுத்துக்கள் இ ன் று மலேசியத் தமிழில் பயின்று வருகின்றன. சுங்கை” சீப்புட், லூமூட்,
11ா காவ், ரெம்பாவ், மம்பாவ், கா ஜா ங், ரவ்வாங், குவாங் போன்றவை சில உதாரணங்கள்.
சத்தி விதிகளில் கூட தற்காலத் தமிழில் பல மாற்றங்கள் எற்பட்டுள்ளன. பழைய இலக்கண நூல்கள் செய்யுளுக்குரிய இறுக்கமான சந்தி விதிகளையே கூறுகின்றன. உரைநடை வளர்ச்சி சந்தி விதிகளிலும் பல நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்றையத் தமிழில் சந்தி பிரித்து எழுதுவதே பெருவழக்காய் இருக் கின்றது. ஆயினும் அதில் ஒரு ஒருமைப்பாடு காணப்படவில்லை. எங்கு பிரித்து எழுதுவது, எங்கு சேர்த்து எழுதுவது என்பதில் தடு மாற்றம் உண்டு. இப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் நவீன மொழியியல் அறிவு நமக்கு உதவக்கூடும்.
உருபனியலிலும் இன்று பல பிரச்சினைகள் உள்ளன. பெயர், வினை, இடை, உரி என்ற பழைய முறையிலான சொற் பா கு பாட்டை நாம் மறு பரிசீலனை செய்யவேண்டியுள்ளது. உரிச் சொல் பற்றி சரியான விளக்கம் இல்லை. சொற்பாகுபாட்டில் இடை, உரி என்பனவற்றுக்குப் 'பதிலாக பெயர், வினை ஆகியவற்றோடு டெய ரடை, வினையடை ஆகியவற்றை நாம் சேர்க்க வேண்டியுள்ளது. தொகை நிலைத்தொடர்களைக் கூட்டுப்பெயர்கள் (Compound noun)
42

என்று நாம் மறு பெயரிடவேண்டி இரு க் கும் கூட்டுவிரினை (Compound verb) களைப் பற்றி நாம் இன்னும் ஆழமாகச் சிந்திக்க வில்லை. தற்காலத் தமிழில் கூட்டு வினைகளின் பயன்பாடு அதிக மாகும் நடந்துகொள், வந்திரு, வந்துகொண்டிரு, பின்தங்கு, முன் னேறு என்பன வெல்லாம் கூட்டு வினைகளே. மொழியியலாளர் சிலர் இதுபற்றிச் சிந்தித்துள்ளனர். புதிய இலக்கணத்தில் நாம் இதற்கு ஒரு தனி இடம் கொடுக்க வேண்டும்.
வேற்றுமையிலும் நாம் பல மாற்றங்களைக் காண்கிறோம். உதாரணமாக - இன் என்ற ஐந்தாம் வேற்மை நீங்கற் பொருளில் இன்றையத் தமிழில் வருவதே இல்லை. பதிலாக - இலிருந்து, இட மிருந்து என்பனவே நீங்கற் பொருளில் வருகின்றன. அதுபோல் ஏழாம், வேற்றுமையில் - கண் உருபுக்குப் பதிலாக இன்று இல் உருபே பெரிதும் பயின்று வருகின்றது. இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வினை இயலில் மூன்று காலங்களைப் பற்றியே ந ம து இலக்கணங்கள் பேசுகின்றன. ஆனால் இன்றையத் தமிழ் நுட்பமான கால வேறுபாடுகளையெல்லாம் காட்டுகின்றது. ஆங்கில இலக் கணங்கள் கூறும் ASpcets பற்றி தற் கா லத் தமிழ் இலக்கணம் தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டும். உரைநடை வளர்ச்சி காரணமாகவும் ஆங்கில மொழித் தொடர்பு காரணமாகவும் இக் காலக் கூறுபாடுகள் இன்றையத் தமிழ் வினைப்பொருண்மையில் முக்கிய பகுதியாகிவிட்டன.
தமிழ் இலக்கண நூல்கள் தொடரியல் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் ஆராயவில்லை. மொழியியலாளர்கள் இது பற்றி ஆராய்ந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் தற்காலத் தமிழ் இலக்கணத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(இக்கருத்துக்கள் கே. திலகவதி அவர்கள் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒலிகாடாப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்டவை
43

Page 36
தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு
செ. வை. சண்முகம்
0. முன்னுரை
தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு என்ற தலைப்பில் தற்காலத் தமிழ், அதன் இலக்கண இயல்பு என்ற இரண்டு கருத் துக்கள் அடங்கியிருப்பது வெளிப்படை. எனவே இங்கு தற்காலத் தமிழை முதலில் அடையாளம் கண்டு, அதன் இலக்கண இயல்பு, அதாவது அந்த மொழித் தரவுகளில் உள்ள மொழி அமைப்பும் அதன் பொதுமையும் ஒழுங்கும் இங்கு ஒரளவு வெளிப்படுத்தப்படும்.
1. தற்காலத் தமிழ்
தற்காலத் தமிழ் என்பது எது என்ற கேள்வியை மரபுநோக்கில் தற்காலத் தமிழுக்கு இலக்கியம் எது என்ற கேள்வியாகவும், ஆராய்ச்சி நெறிமுறை நோக்கில் தற்காலத் தமிழுக்குரிய தரவுகள் எவை என்ற கேள்வியாகவும் விளக்கலாம். எப்படியானாலும் இந்தக் கேள்விக்குரிய விடையில் பதில் சொல்பவரின் சமூக மொழியியல் பார்வை உள்ளடங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
பொதுவாக இது எழுத்துத் தமிழ் பற்றியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பேச்சுமொழியில் உள்ள வட்டாரக் கிளைமொழி வழக்குகளும், சமூகக் கிளைமொழி வழக்குகளும், தொழில் வழக்கு களும், ஓரளவு எழுத்து மொழியைப் பாதிக்கும். இது தமிழுக்கும் டொருந்தும்.
இந்திய மொழிகளிலும் பிற ஆசிய ஆபிரிக்க மொழிகளிலும் எழுத்து வழக்கு ஆரம்பத்தில் இலக்கியம், சமயம், இலக்கணம் போன்ற சில துறைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்து பின்னர் மேலை நாட்டு அரசியல், பண்பாட்டுத் தாக்கத்தால் - மேலையாக்கத்தால் (Westernization) பல புதிய துறைகளிலும், பலராலும், பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இலக்கியத்திலும் உருவம், உள்ளடக்கம், ஊடகம் ஆகியவைகளிலும் மாற்றம் ஏற்பட்டதால் படைப்பிலக்கியவாதியாக செயல்படுபவர்களிடையும் மாற்றம் ஏற் பட்டது. இதற்கு இடையே அரசியல் மாற்றமும் ஏற்பட்டு எல்லா
44

மக்களும் ஒருவகையில் "இந்நாட்டு மன்னர்கள்’ ஆனார்கள். இவைகள் எல்லாம் தற்கால மொழியின் தகுமொழியைக் கண்டு பிடித்து இலக்கணம் எழுதும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதற்கான காரணங்கள் ஆகும்.
இந்தச் சமூகமாற்றம், மொழிப்பயன்பாட்டு மாற்றம், அரசியல் மாற்றம் ஆகியவை தமிழுக்கும் பொருந்தும். ஆயினும் தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கணப் பாரம்பரியம் இருப்ப தால் தற்காலத் தமிழை அடையாளம் காண்பதில் அறிஞர்களி டையே கருத்துமாறுபாடு இருந்துவருகிறது.
இந்த நிலையில் மொ ழி உணர்வும் இலக்கண உ ண ர் வும் உள் ள இலக்கிய அறிஞர்களின் இன்றைய ‘தமிழ் உரை நடையை பிழையின்றி எழுத" வும் "வழுக்குத் தமிழைப் போக்கவும் 'நல்ல தமிழை எழுதவும் உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளவும்
என்று அரை நூற்றாண்டுகளாக கட்டுரைகளும் நூல்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகச் செய்தித்தாள்களில் வாரந்தோறும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வாசகர்களோடு கருத்துபரிமாற்றம் நடைபெற்று வருகிறது. ஆனா லும் பல இடங்களில் சரியாகத் தற்காலத் தமிழை அடையாளம் காண்பதில் தடுமாற்றம் இருப்பது புலப்படுகிறது.
மொழியியலாளரும் தற்கால எழுத்துத் தமிழில் காணப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கை, சொல்லெழுத்துக்கள் (Spelling), பிற மொழிச் சொற்களைத் தழுவும் முறை என்பன பற்றி எழுத்துச் சீர்திருத்தம்' என்ற தலைப்பிலும் (சண்முகம் 1978) எழுத்தியல், சொல்லியல், தொடரியல் நோக்கில் "இக்காலத் தமிழ்மரபு' என்ற தலைப்பிலும் (பரமசிவம், 1983) நூல்கள் எழுதியுள்ளார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகம் தற்காலத் தமிழுக்கு விரிவான இலக்கண நூல்கள் வெளியிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது அண்ணாமலை பல்கலைக் கழகமும், பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவ னமும் கருத்தரங்குகள் நடத்தியுள்ளன. இருந்தாலும் மொழியிய லாளர் தரும் விளக்கங்கள் பரவலாக அறியப்படாததால் தற்காலத்
தமிழ் பற்றிய விவாதங்களில் அவை இடம் பெறவில்லை.
இருந்தாலும், தமிழ் அறிஞர்கள் எழுதிய நூல்களில் தமிழ்ப் பேராசிரியர்களின் எழுத்துகளும் கூட பிழையான வடிவங்களாகக் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே, அவர்கள் தற்காலத் தமிழை அடையாளம் காண்பதும் அதற்கு இலக்கண விளக்கம் தருவதும் மட்டும் அல்லாமல் அவர்களது
45

Page 37
மொழிபற்றிய கருத்தும் சமூகப்பார்வையும் கூட விவாதத்துக்கு உரியவை என்று நினைக்கவேண்டியிருக்கிறது. அதற்காகத் தமிழ் அறிஞர்கள் எடுத்துக்காட்டிய சில தவறான வழக்குகளைச் சுட்டிக்
காட்டி அவைகளின் உட்கிடை முதலில் இங்கு எடுத்துக்காட்டப் படும்.
அல்ல என்ற சொல்லை ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுச் சொல்லாக உ. வே. சாவும், வரதராசனும் கையாண்டுள்ளார்கள். அது தவறு என்று பலராலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஏமாறு என்ற வினைச் சொல்லின் செய்து’ என்ற வினையெச்ச வடிவம் "ஏமாறி" என்றுதான் இருக்கவேண்டும். "ஏமாந்து" என்ற வடிவத்தைக் கையாளக் கூடாது என்று பரந்தாமனார், (1955) கூறுவதற்கு மாறாக வரதராசன் (1967; 114) திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற இலக்கிய ஆராய்ச்சி நூலிலே அதைக் கையாண்டுள் ளார். நாள் என்ற சொல்லின் பன்மை வடிவம் நாள்கள் என்றுதான் இருக்கவேண்டும்; நாட்கள் என்று இருக்கக் கூடாது என்று அவர் கூறியதற்கு மாறாக மறைமலை யடிகளும் வரதராசனும் நாட்கள் என்பதைக் கையாண்டுள்ளார்கள், ஆனால் பரந்தாமனாரே "நாட்கள்" என்ற வடிவத்தைக் கையாண்டு அத ஏற்றுக்கொள்ளத்தகுந்த வடிவம் என்று "ஒப்புக்குச் சப்பாணி" யாக விவாதித்துள்ளதை ஒரு வாசகர் எடுத்துக் காட்டியுள்ளதைத் தமிழண்ணல் (1989; 122 அ.கு) குறிப்பிட்டு 'நாள்கள்" என்னும்போது ஒலிப்பு ஒருமாதிரியிருந்தலால் 'நாட்கள்" புகுந்து நிலைத்துவிட்டது போல் தோன்றுகிறது" என்று கூறினாலும், சமீபத்தில் அவரே (4, 4. 1992) 'நாள்களை நாட்கள் என்றும் நூல்களை நூற்கள் என்றும் எழுதுவது செந்தமிழாக எழுதுகிறோம் என்ற நினைப்பில் நிகழ்ந்து விட்ட தவறுகளே ஆகும்! 61ன்று கூறுவதன் மர்மம்" ஆராயத் தகுந்தது.
தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் வளர்ச்சி இயக்குநராகவும் இருந்த நன்னன் (1992) எழுதிய 'வழுக்குத் தமிழ்’ என்ற நூலை விமர்சித்த இன்னொரு பேராசிரியர், முத்துக் கண்ணப்பன் (1992) அந்த நூலிலேயே குறைகளை எடுத்துக்காட்டி திருந்திய வடிவங்க ளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
இந்நூலில் ஒருசிலர் (ப. 38) ஒரு சில தமிழர் (ப. 34) , பல எழுத்தாளர் (ப. 69) ஆகியவை முறையே "சிலர்', தமிழர் சிலர், எழுத்தாளர் பலர் என்று திருத்தப்பெற வேண்டும்." என்பது முத்துக் கண்ணப்பனின் வாசகம். எனவே ஒரு தமிழ்ப் பேராசிரியரின் வழக்குகளே வழுக்குகள் என்று இன்னொரு பேராசிரியர் கருதுகிறார்
6

என்றால் யாரும் துணிந்து தமிழ் எழுதிவிட முடியாது என்ற நிலையே ஏற்பட்டுவருகிறது. ஆனால் இந்த வழக்குப் பரவலாகக் காணப்படுகிறது. இவை தவறான வழக்கு என்ற எண்ணம் தமிழா சிரியர்களிடையேயும் பரவலாக உள்ளது. இங்கு பலவின்பால் பெயர் பலர்பால் பெயரோடு சேர்ந்து வருவதால் தவறு என்பது தமிழாசிரி யர்கள் வாதம் ஆனால் இது பொருந்தாது என்பது பிற்பகுதியில் (3, 1) விளக்கப்படும். ஒருசில தற்காலத் தமிழ்ப் பேராசிரியர்களின் வழக்குகளே தவறானவை என்று வாதிக்கும்போது பொதுத் தமிழ் அறிவோடு எழுதும் படைப்பிலக்கியவாதிகள், பத்திரிகை ஆசிரி யர்கள் ஆகியவர்களின் வழக்குகள் வழுக்களாகவும், குப்பைகளாகவும் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை அல்லவா? இதனாலேயே .ெரும் பான்மையோர் ஒத்துக்கொள்ளும் தற்காலத் தமிழை இனம் காண்ட தில் கருத்து மாறுபாடு ஒயவில்லை. அதே நேரத்தில் மொழியிய லாளர் இது பற்றி என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என்று பார்க்கும் பழக்கம் வரவில்லை; மாறாக மொழியியலாரைச் சாடு வதும் குறையவில்லை, இருந்தாலும் தமிழறிஞர்கள் ஏன் தற்காலத் தமிழை அடையாளம் காண மறுக்கிறார்கள் என்பதற்கான கார ணங்கள் ஆராயத்தகுந்தவை. அவையே "நோய் முதல் நாடு" வதாகும்.
முதலில் தமிழ் இலக்கணங்கள் மொழி மாற்றத்தை இயல் பானது என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றே நினைக்க வேண்டியிருந்தது. "கடிசொல் இல்லை காலத்துப்படினே' என்ற தொல்காப்பிய சூத்திரமும் (எச்சம். 56) சரி; பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்ற நன்னூல் சூத்திரமும் (461) சரி மொழிமாற்றத்தை வழு அமைதியாகத் தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றனவே தவிர மொழிமாற்றம் இயல்பானது: மொழி மாறும் இயல்பு உடையது; அந்த மாற்றத்தால் மொழியின் அமைப்பும் அதாவது இலக்கணமும் காலந்தோறும் மாறுபடும் என் பதைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது கோட்பாடTசி ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்று மொழியியல் என்றதுறை பத்தொன் பதாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் கொடிகட்டிப் பறந்திது" ஆனாலும் தமிழில் மொழி வரலாற்று ஆய்வு இன்னும் சரியாகக் கால் கொள்ளவில்லை. எனவே தமிழறிஞர்கள் ஆளுக்கு ஒன்றிரண்டு மாற் றத்தை ஏற்றுக் கொள்கின்றார்களே தவிர ஒருவர் ஏற்றுக்கொள்கின்ற வழக்கை இன்னொருவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் ஆராய்ச்சியில் விஞ்ஞான மனப்பான்மை இல்லை.
基7

Page 38
தமிழ்ப் பேராசிரியராக இருந்து மொழி நூலும் மொழி வர லாறும் கற்பித்த காரணத்தினாலும், படைப்பிலக்கியவாதியான காரணத்தாலும்தான் வரதராசன் பல தற்காலத் தமிழ் வழக்கு களைத் தன்னுடைய நூலில் பயன்படுத்தியதோடு அவைகளுக்காக மொழிநூல் அடிப்படையில் வாதாடியும் இருக்கிறார். உதாரணமாக " அல்ல’ என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வழக்கு என்று 1954 இலேயே வாதாடியுள்ளார்.
'நீ அல்ல, நான் அல்ல, அவர் அல்ல, அது அல்ல முதலாய வாக்கியங்களில் அல்ல என்னும் குறிப்பு முற்றும் இக்காலத் தமிழில் இவ்வாறே (அதாவது உண்டு என்பதிலுள்ள பலவின்பால் விகுதி யான அகரத்தின் திரிடான ஐகாரமும் எல்லாப் பாலுக்கும் வரு கிறது). திணை பால் உணர்த்தாமல் பொதுவாக வழங்குகிறது. இதில் உள்ள அகர விகுதியும் மேற்கூறியவை போல் தன்பொருள் இழந்து சொல்லமைப்புக்குத் துணைபுரிந்து நிற்கிறது" என்பது அவருடைய விளக்க வாசகம் (1954: 180) அப்படியே அவர்தான்" என்ற வழக்கும் ஏற்றுக்கொள்ளத் தகுந்தது என்றும் விளக்கியுள் ளார் (ப. 187). இருந்தும் அதுவும் தவறான வழக்கு என்று முத்துக் கண்ணப்பன் (1984; 11) குறிப்பிட்டுள்ளார். மொழி மாற் றம் பற்றிய ஆய்வு விஞ்ஞான ஆய்வாக ஏற்றுக்கொள்ளப்படாமல் சொந்த விருப்பு வெறுப்போடு கூடிய ஆராய்ச்சியாக உள்ளது தான் இதற்குக் காரணம் என்று கூறவேண்டும்.
இலக்கிய அறிஞர்களின் இலக்கியக் கோட்பாடும் பரவலாக வழங்கும் தற்கால வழக்குகளை ஏற்றுக்கொள்ள தடையாக இருக் கலாம் என்று அண்ணாமலை (1992) குறிப்பிட்டுள்ளார். இலக்கிய விமர்சனத்தில் பாமர ரஞ்சகமான நூல்கள் நல்ல இலக்கிய நூல் களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதை ஒட்டி பாமர ரஞ்சக மான பரவலான மொழிவழக்குகள் தகுமொழி வழக்குகள் அல்ல என்று தமிழாசிரியர்கள் கருதியிருக்கலாம் என்பது இவர் கருத்து. ஆனால் மொழியியலில் அந்தக் கருத்து (பாமர ரஞ்சகமானது நல்ல நூல் இல்லை என்பது போன்றது) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அண்ணாமலை (1992) மொழியைப் பயன்படுத்துவோர்களி டையே ஏற்பட்டுள்ள அந்தஸ்த்து மாற்றத்தையும் குறிப்பிட்டுள் ளார். மொழிவழக்குகளைச் சரி, தப்பு என்று நிர்ணயிக்கிற கட்டுப் பா டு இன்று தமிழாசிரியர்களிடமிருந்து விஞ்ஞானிகளிடமும்,
பத்திரிகை ஆசிரியர்களிடமும் மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்
டுள்ளார். தமிழ் நாட்டில் தமிழாசிரி ர் எளின் சமூக அந்தஸ்து பற்றிய வரலாறு குறிப்பிடத்தகுந்தது,
48

சங்ககாலத்தில் படைப்பிலக்கியவாதிகளே புலவர்களாகக் கருதப்பட்டார்கள். எனவே அவர்களே மொழிக் காவலர்களாகவும் இருந்ததால் சமூகமுரண் ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கவேண்டி யிருக்கிறது இடைக்காலத்தில் படைப்பிலக்கியவாதிகள் மட்டுமே புலவர்கள் என்றும் உரையாசிரியர்கள், அறிஞர்கள், என்றும் இரண்டு பிரிவு ஏற்பட்டிருக்க வேண்டும் அப்பொழுது படைப்பிலக்கிய வாதி களின் சில வழக்குகளை அறிஞர்கள் குறை சொன்னபோது உலக வழக்கை ஒட்டியே புலவர்கள் தங்களுடைய வழக்குகளைச் சரியா னவை என்று வாதிட்டிருக்க வேண்டும். இதைக் கம்பரைப்பற்றி வழங்கும் துளி/ துமி என்ற சொல்லாட்சி பற்றிய பாமர வழக்காற் றால் அறியலாம். 17 ஆம் நூற்றாண்டில் இலக்கணக் கொத் து எழுதிய சுவாமிநாத தேசிகர் நூலாசிரியர் (படைப்பிலக்கியவாதிகள்), உரையாசிரியர்கள், போதகாசிரியர் (தமிழாசிரியர்கள்) என்று மூன்று பிரிவாரைக் குறிப்பிடுகிறார் (இ. கொ. 6, 23). உ யி ரெழுத் தை முதலாக உடைய பெயர்ச் சொல்லுக்கு முன்னால் ஒர் என்ற எண் ணடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கூறிவந்தாலும் பழையகாலம் முதல் இன்றுவரை அந்த விதி படைப் பிலக்கிய வாதிகளால் பின்பற்றப்படவில்லை. மேலும் ஒரு உலகம் (ஒருவிதமான உலகம், சினிமா உலகம், பத்திரிகை உலகம்,) ஒர் உலகம் (ஒன்றுபட்ட உலகம்) என்ற வழக்குகளிடையே பொருள் வேறுபாடு உண்டு என்று படைப்பிலக்கிய வாதியாக ஜெயகாந்தன் வாதாடியிருப்பது சரியான வழக்கை நிர்ணயிக்கும் பொறுப்பு படைப்பிலக்கிய வாதிகளுக்கு உண்டு. என்று வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். எனவே தான் தமிழாசிரியர்கள் தாங்கள் படித்த பழைய இலக்கிய இலக்கண மரபுகளை ஒட்டித் தற்காலத் தமிழ் வழக்குகளைக் குறை கூறுவது தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்தும் முயற்சியாகக் கொள்ளலாமோ என்று நினைக்கத் தோன்று கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு உண்மையும் எடுத்துக் காட்டத் தகுந்தது பரந்தாமனாரும் (1955) தமிழண்ணலும் (1989) ஓரளவு தற்காலத் தமிழ் வழக்குகளைப் போற்றுபவர்களாகவும் அவைகளுக்காக வாதாடுபவர்களாகவும் காணப்படுவது உண்மை தான். இருந்தாலும் சில வழக்குகளைப் பழைய இலக்கிய மரபை ஒட்டித் தவறு என்று கூறுவதற்குக் காரணம் (மெய்ம்மை, பொய்ம்மை என்பவையே சரி, மெய்மை, பொய்மை என்பவை தவறு. ஏனென்றால் பொய்ம்மை என்பது திருக்குறளில் (292) கையாளப்படுகிறது. தமிழண்ணல், 1989 : 219 " ஒருத்தி இருக்கும் போது ஒருவள் எதற்கு ப 246) தற்காலத் தமிழை அறிவுபூர்வ மாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை என்பதுதான். மொழி மாற்றம் இயல்பானது என்று ஏற்றுக்கொள்ளாததுதான் அதற்கும் காரணம் என்று நினைக்கவேண்டியிருக்கிறது.
49

Page 39
அடுத்து தற்கால தமிழ் வழக்குகள் சிலவற்றை எடுத்துக் காட்டி மொழிமாற்றத்தால் அவைகளின் இலக்கண இயல்பு மாறிய தன்மை விளக்கப்படும்.
2. இலக்கண இயல்பு
இலக்கண இயல்பு என்பது மொழி அமைப்பில் வருணனை நிலையில் - அதாவது மொழி பயன்படும் நிலையில் - காணப்படும் பண்புகளை எடுத்து விளக்குவது ஆகும். அந்தப் பண்புகளில் காணப் படும் பொதுமையையும், ஒழுங்கையும், வற்புறுத்துவதோடு மொழி முழுவதும் தருக்கரீதியாக அமையாததால் விதிவிலக்குகளாக வரு பவைகளையும் இலக்கண நிலையில் விதிக்குள் அடக்கிக்காட்டும் முயற் சியும் அதில் வெற்றிகாண முடியாதபோது புறனடையாக அமைத் துக்கொள்ளவதும் இதில் அடங்கும். ஏனென்றால் சாதாரண மனி தன் எப்படி மொழியைக் கையாள்கின்றான் என்ற உளவியல் உண்மை தெரியாததால் மொழியியலாளர் அதுபற்றிச் சரியான முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறார்கள். பொதுவாக அறிவு பூர்வமாகத் தற்காலத் தமிழிலும் பொதுமையும் ஒழுங்கும் இருக்கிறது என்று உணர்ந்து அங்குள்ள இலக்கண இயல்புகளை அறிந்தால் பெரும் பான்மையான வழக்குகள் தவறு என்ற கருத்து அடிபட்டுவிடும்.
இங்கு எழுத்து, சொல், தொடர் பற்றிய சில உதாரணங்களே விளக்கப்படுகின்றன.
2.1 எழுத்து
தற்காலத் தமிழுக்குரிய எழுத்துக்களின் எண்ணிக்கையே பிரச்ச னையாக இருக்கிறது. தற்காலத் தமிழ் நூல்களில் காணப்படும் எழுத்து எண்ணிக்கை மாறுபாடும் அந்த மாறுபாட்டுக்குக் காரண மான சமூகப்பார்வையும் முன்னரே (சண்முகம்; 1978; 63, 122) விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உண்மையில் கிரந்த எழுத்துக்களான ஸ், ஷ, ஜ, ஹ ஆகி யவைகளை வடமொழி எழுத்துகள் என பாட நூல்களில் குறிப்பிட்டு அவைகளை நீக்கவேண்டும் என்று வாதிடுவதுதான். இதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் சிலருடைய மிரட்டலுக்குப் பயந்துகொண்டு அவைகளை விலக்கி எழுதுவது வேடிக்கையானது; விந்தையானது. ஆகஸ்டு என்பதை ஆகசுட்டு என்று எழுவது பற்றி என்ன சொல் வது? தமிழண்ணல் கிரந்த எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று பொதுவாகவும் (1989 : 29) ஆகசுட்டு என்று எழுதினால் ஆகஸ்டு என்று ஒலிக்கமுடியாது என்றும் 'ஆகஸ்டு" என்றே எழுத லாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் (ப. 173).
50

எழுத்து பற்றிய அடுத்த பிரச்சனை எழுத்துக்களின் உச்ச சரிப்பு (அதாவது தனித்தும் சொல்லில் இன்னொரு எழுத்தோடு வரும்போதும்) பற்றியது. இதுபற்றிய கருத்து வேறுபாடு இல்லை. ஆனாலும் இன்றைய பேச்சுத் தமிழில் படித்தவர்களும் சரி படிக் காதவர்களும் சரி சில எழுத்துக்களை இன்னொரு ஒலியாக உச்ச சரிக்கிறார்கள் என்ற உணர்வு தமிழாசிரியர்களிடம் காணப்பட வில்லை. எழுத்துக்களின் உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மொழியியலாளர் எடுத்துக்காட்டியும் (சண்முகம், 1978; 76 - 89, L1 Lng')G| lb 1983: 54 67) தமிழாசிரியர்கள் மாற்றம் ஏற்படா ததுபோல விளக்கியுள்ளார்கள். அதனால் அவர்கள் சில சொற் களை இப்படி எழுதவேண்டும் என்பதற்குத் தரும் விளக்கம் பொருந் தாமல் போய்விடுகிறது, மேலும் இன்றைய சொல்லெழுத்தில் அமைந்துள்ள இலக்கண இயல்பு விளங்கிக்கொள்ளப்படாமலும் விளக்கப்படாமலும் போய்விடுகிறது.
பொதுவாக இன்னொரு உண்மையும் சுட்டிக்காட்டத் தகுந்தது சொல்லெழுத்துக்களில் மாற்றம் ஒலிமாற்றத்தால் மட்டும் அல்லாமல் ஒப்புமையாக்கம், இலக்கணமாற்றம் ஆகியவைகளாலும் ஏற்படும்.
ஒலிமாற்றம் யாறு s£2,000 Η Πτ(5) Winn ஆடு துழாய் --- துளசி உழுந்து - உளுந்து பழைமை - பழமை
புணர்ச்சி விதிமாற்றம் அவற்கு --- அவனுக்கு
அவட்டு Vinn அவளுக்கு
இலக்கண மாற்றம் ஒன்றனை ஒன்றை
வந்ததனால் - வந்ததால்.
மேலும் தற்காலத் தமிழில் றகரம் சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும்போது னகரமாக மாற்றம் பெற்றுவிட்டது. றகரம் சொல்லுக்கு இடையில் வரும்போது வல்லொலி - தடையொலி (Stop) ஆக இருந்து ஆடொலியாக மாறி இன்று தட்டொலி (Flab) ஆக மாறிவிட்டது. இரட்டை றகரம் தடையொலியும் தட்டொலியும் சேர்ந்த ஒலியாக, வாசிக்கும்போதும் மேடையில் பேசும்போதும் உச்சரிக்கிறோம். ஐகாரம் அண்ண ஒலிகளான ச. ஞ. ய ஆகிய எழுத்துக்கு முன்னாலும் மைகார எழுத்துக்கு முன்னாலும் அகரமாக உச்சரிக்ப்படுகிறது. இந்த ஒலிமாற்றங்கள் எல்லோருடைய பேச்சிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் அவைகளுக்கு ஏற்ப சொல் லெழுத்தில் மா ற் ற ம் ஏற்படாததால் சொல்லெழுத்துக்களின் இலக்கண இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பது சுட்டிக் காட்டத்தகுந்தது.
51

Page 40
சங்ககாலத் தமிழில் சொல்லெழுத்து முறை ஒலியன் சொல் லெழுத்து முறையாக மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே புணர்ச்சி விதிகள் அதிகம் காணப் படுகின்றன. பத்து என்ற சொல் பதின் (பதினொன்று), பன் (பண்னிரண்டு), பது (இருபது), நூறு (தொண்ணுாறு) என்று பலவித மாக எழுதப்படுவது ஒலியன் எழுத்து முறையை - சொற்களை உச்சரிக்கும் முறையை ஒட்டியது. ஆனால் ஒலிமாற்றத்துக்கு ஏற்ப சொல்லெழுத்தில் மாற்றம் ஏற்படாததால் புதிய சொல்லெழுத்து முறைகள் ஏற்பட்டுவிட்டன. .
ஐகாரம் அகரமாக மாறிய பிறகு தலைமை (தலை) வளையல் (வளை) போன்ற சொற்களில் அகரமாக உச்சரித்தும் ஐகாரமாக எழுதுவதால் உருபொலியன் சொல்லெழுத்தாக மாறி விட்டது. மாறாக பழை - என்ற அடிச்சொல்லாக இருந்து பழமை என்று எழுதும்போது ஒலியன் சொல்லெழுத்து முறையாக அமைந்து விட்டது. அதாவது இங்கு ஒருசொல் இரண்டுவித உச்சரிப்பைப் பெற்றிருந்தும் ஒரே விதமாக எழுதுவதே உருபொலியன் சொல் லெழுத்து. educate , education என்ற இரண்டு சொற்களிலும் பகுதியின் உச்சரிப்பு மாறுபட்டாலும் சொல்லெழுத்து மாறுபடாத தால் இது உருபொலியன் சொல்லெழுத்துக்கு உதாரணம் ஆகும்.
எந்நாளில் (எந்த நாளில்), என்னாளில் (என்னுடைய நாளில்), அந்நார் (அந்த நார்), அன்னார் (அப்படிப்பட்டவர்) என்ற சொற்களில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. இரண்டும் வேறு, வேறு சொல் என்ற முறையில் எழுத்தில் காட்டுவதால் இதற்கு உருபன் சொல்லெழுத்து என்று பெயர். நகரமும், னகரமும் இன்று ஒரே விதமாக உச்சரிக்கப்படுவதால் இது உருபன் சொல்லெழுத் தாக மாறிவிட்டது என்பது அறியத் தகுந்தது. ஆங்கிலத்தில் Eye/ Know/ No என்ற சொற்கள் ஒரேவித உச்சரிப்பைப் பெற்றிருந்தும் இரண்டு விதமாக எழுதப்படுவது எழுத்துமொழியில் வேறு வேறு சொல் என்று அறிந்து கொள்வதற்குத் தான். எனவே இவையும் உருபன் சொல்லெழுத்து முறையைச் சேர்ந்தவை.
ஆகவே தற்காலத் தமிழின் சொல்லெழுத்துமுறை பலவித வகைசளை உடையது (முழுவிவரத்துக்கு, சண்முகம், 1978; 123 - 156 பார்க்கவும்). தமிழ் எழுதுவோரில் தொண்ணுாறு சதவீதம் தமிழ் மொழியின் பழைய இலக்கிய மரபு தெரிந்து எழுதுவதில்லை. எழுத்து மரபையும் தங்கள் பேச்சு மொழின் அடிப்படையிலேயே எழுதுகிறார்கள். இது எல்லா மொழிக்கும் பொருந்தும் . எனவே
52

பழைய மரபை ஒட்டி எழுத வேண்டும் என்பது மேலே குறிப்பிட்ட படி சமூகமாற்றம் மொழி அமைப்பு மாற்றம் பயன்பாட்டு மாற்றம் ஆகியவைகளைப் புறக்கணிப்பது ஆகும். அதனாலேயே காலத்துக்கு ஒவ்வாதவர்கள் என்று பழைய மரபுக்காக வாதிடுபவர்களும் புறக் கணிக்கப்படுகிறார்கள்.
சொல்லெழுத்து பற்றி இன்னொன்றும் குறிப்பிடப்பட வேண்டும் பேச்சுமொழி வட்டாரத்துக்கு வட்டாரமும் சமூக த் துக் குச் சமூகமும் மாறுபடும் என்று மேலே குறிப்பிட்டபடி எழுத்துமொழி யிலும் சிறிய மாற்றம் ஏற்படலாம். அவைகளை உறழ்ச்சி வடிவங் களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சமயப் பற்றுடையவர் பழநி என்ற சொல்லெழுத்தை விரும்பலாம். ஏனென்றால் அது பழம் நீ என்று கூறிய புராண நிகழ்ச்சியை நினைவுபடுத்துவதாக அமையும். பழனி என்பது இலக்கியப் புலவர்கள் ஆதரிக்கும் வடிவம். இதுவே பழைய பெயரான பொதினி என்பதோடு தொடர்பு உடையது. எனவே இரண்டுவித சொல்லெழுத்தும் சமய உணர்வு, இலக்கிய உணர்வு என்ற வேறுபாட்டோடு தொடர்பு உடையது. எனவே எல்லாச் சொற்களுக்கும் ஒரே சொல்லெழுத்து இருக்கவேண்டும் என்று வற் புறுத்த வேண்டியதில்லை. . . . .
2.2 சொல்லியல்
இடைச் சொற்களான வேற்றுமை விகுதி, ஒட்டிகள் (தேற்றம், ஐயம், வினா போன்ற பொருளை உணர்த்தும் ஏ. ஓ. போன்றவை) என்பன எல்லாத் திணை பாலுடனும் சேர்ந்து வரும். முழுச்சொற் களும் பொருள் இழந்து இடைச் சொற்களாக அமையும், சொற்க ளுக்கும் இது பொருந்தும். தொல்காப்பியரே எற்று, ஆங்கு போன்ற இரு சொற்கள் தங்கள் பொருளை இழந்து இடைச் சொற்களாக வரும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழின் இந்த இரண்டு இலக்கண இயல்புகளையும் உணர்ந்து கொண்டால் தற்காலத் தமிழின் சில வழக்குகளை தகுவழக்காக - இலக்கண வழக்காகக் கருதலாம் என்ற தெளிவு பிறக்கும்.
2. 2. 1. தான்
தான் என்ற படர்க்கை பதிலீட்டுப்பெயர் சங்க காலத்திலேயே அந்தப் பொருளை இழந்து அசைச் சொல்லாகவும், தேற்றப் பொருளை உணர்த்தும் இடைச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு இன்று இடைச்சொல்லாக மட்டுமே வழக்கில் இருப்பதால் அவர் தான், நாங்கள்தான், நீங்கள்தான் என்று பன்மைச் சொற்களோடும் பயின்று வருகின்றது. முத்துக் கண்ணப்பன் இவைகளைத் தவறான
53

Page 41
வழக்குகள் என்றும் "அவர்தாம் என்று பயன்படுத்த வேண்டும் (1984; 11) என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் தமிழில் பெயர்ச் சொல்லுக்கும் அதோடு சேர்ந்துவரும் இடைச் சொல்லுக்கும் திணை, பால் இயைபு இருக்க வேண்டும் என்று புதிய இலக்கணம் அமைக்க வேண்டும், வரதராசன் (1954) அவர்தான் வந்தார் என்பன போன்ற வாக்கியங்களில் "தான்’ என்பது எண் வேறுபாடு அற்ற பொதுச் சொல்லாக வழங்கத் தொடங்கியுள்ளது என்று சிறப்பாகக் குறிப்பிட்டதோடு
"பழைய இலக்கியங்களைக் கற்றுத் திளைக்கும் சிலரும் அழகிய செறிவான நடையைப் போற்றி மகிழும் சிலரும் எவ்வளவு தடுத்து நின்ற போதிலும் பெரும்பாலோராகிய இ வ ர் க ளின் போக்கிலேயே மொழி செல்லும்; தடைகள் ஒருசில காலம் ஈர்த்துப் பிடித்து நிறுத்தலாம்; இறுதியில் வெற்றி பெறுவது பெரும்பாலோரின் போக்கே ஆகும், என்று பொதுவாகவும் கூறியிருப்பது தற்காலத் தமிழைச் சங்க காலத் தமிழ்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கி றவர்களும் கவனமாகப்படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண் டிய கருத்து.
2. 2, 2. ஆறாம் வேற்றுமை
மேலே குறிப்பிட்ட படி வேற்றுமை உருபும் இடைச்சொல்லே. அது ஏற்று வரும் பெயரும் கொண்டு முடியும் சொல்லும் திணை - பால் இயைபு பெற்று இருக்கவேண்டியதில்லை என்பது தமிழின் இலக்கண இயல்புகளில் ஒன்று. தமிழிலும் பிறமொழிகளி லும் ஒரே வடிவம் பல சொல்வகையைச் சார்ந்ததாக இருக்கலாம். கண் என்பது பெயராக இருக்கும்போது ஒன்றன்பால்; விகுதியாக இருக்கும்போது ஏழாம் வேற்றுமை உருபு, வேற்றுமை உருபாக இருக் கும்போது பெயராக இருக்கும்போதுள்ள கட்டுப்பாடு கிடையாது. அதைப்போலத்தான் அதுவும். அது என்ற பெயர்ச் சொல் ஒன்றன் பால் பெயராக இருக்கிறது என்பதற்காக வேற்றுமை உருபாக இருக்கும்போதும் அந்தக் கட்டுப்பாட்டை விதிப்பது தமிழ் மொழியின் இயல்பையும் அந்தச் சொல்லின் இயல்பையும் அறியாமல் கூறுவது ஆகிறது. அதே சமயத்தில் தொல்காப்பியர் மட்டும் வேற்றுமைத் தொகையில் அது என்ற உருபு கெட்டு 'கு' கரம் வரும் என்று கூறுவா னேன் (வேற்றுமை மயங்கு 11) என்ற கேள்வி எழுகிறது. தொல் காப்பியர் சில இடங் வி ல் கூறி யு ள் ள இ லக் க ண வழக்கு இன்றைய மலையாள மொழியிலும் நாஞ்சில் நாட்டு வழக்கி லும் வழங்கி வருகின்றன என்று எடுத்துக் காட்டியுள்ளார்கள் வையாப்புரி பிள்ளை (1949; 21). எனவே தொல்காப்பியர் தன்னுடைய நாஞ் சி ல் நா ட் டு வ ழ க் கை ப் பிரதிபலிக் கிறாரே தவிர 'அது' என்பது ஒன்றன்பால் பெயர் ச் சொல்
54

என்பதற்காக மாற்றிக் கூறவில்லை. எனவே தொல்காப்பியத்தின் பெயரால் கூட இலக்கண இயல்பை மாற்றக்கூடாது.
2. 2, 3. சிறப்பு ஒருமையும் பலர்பாலும்
சிறப்பு ஒருமை இடைக்காலத்திலே தனிப்பாலாக அங்கீகரிக்கப் பட்டுவிட்டது என்பதை வீரசோழியம் (சூ. 30 ) புலப்படுத்தும். பலர்பால் விகுதியே சிறப்பு ஒருமைக்காகப் பயன்பட ஆரம்பித்ததும் தான் முன்னிலையிலும் படர்க்கையிலும் பன்மை விகுதிக்குப்பிறகு கள் விகுதி சேர்க்கும் பழக்கம் உண்டாயிற்று, (ஈர்கள் ஆர்கள், ஆனா) லும் சிறப்புப் பலர்பாலுக்கு உரிய விகுதிகள் இன்னும் முழுமையாக நிலைபேறு அடையவில்லை. எனவே தற்காலத் தமிழில் இரண்டு வகையான விகுதிகள் கையாளப்படுகின்றன என்பது கவனிக்கத் தகுந்தது.
படர்க்கையில் சிறப்பு ஒருமை விகுதி - ஆர் என்பதே எல்லாக் கால விகுதியோடும் வருகிறது.
நடந்தார் ஓடினார் செய்தார் நடப்பார் ஒடுவார் செய்வார் நடக்கிறார் ஒடுகிறார் செய்கிறார்
பலர்பால் வினைமுற்று விகுதிகளிலியே பழமையும் புதுமையும் கலந்து காணப்படுகின்றது. புதுமையை விரும்புகிறவர்கள் ஆர்கள் என்பதையும் பழமையை விரும்புகிறவர்கள் அனர்/ஆர் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் பலருடைய எழுத்திலும் பழமையும் புதுமையும் கலந்து வருவதால் அது தற்காலத் தமிழின் சிறப்புப் பண்பு களுள் ஒன்று என்பதோடு தற்காலத் தமிழிலும் உறழ்ச்சி உண்டு என்ப தும் நிரூபணம் ஆகிறது. அனர்/அர் என்ற இரண்டு விகுதியும் துணை நிலை வழக்கில் அமைந்து ஆர்கள் என்பதோடு உறழ்ந்து வருகிறது என்று அவைகளின் பகிர்வை விளக்கலாம் .
அர் என்பது இன் என்ற இறந்தகால விகுதிக்கும் எதிர்கால விதிக்கும் பின்னால் வரும்
நடப்பர் ஒடுவர் செய்வர்
– ஓடினர்
அனர் என்பது பிற இறந்தகால விகுதிக்கும் நிகழ்கால விகுதிக்கும் பின்னால் வரும்.
நடந்தனர் செய்தனர்
நடக்கின்றனர் ஒடுகின்றனர் செய்கின்றனர்
(55

Page 42
2.2.4. அஃறிணை வினைமுற்று.
ஒன்றன்பால் வினைமுற்று ஒன்றன்பால் பலவின்பால் ஆகிய பெயர்களையும் எழுவாயாக ஏற் று வந்துள்ளதைப் பரமசிவம் (1983 123) கவனித்து இது தற்காலப் படைப்பிலக்கியங்களிலும் உரையாடல்களிலும் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
படைப்பிலக்கியம் : வார்த்தைகளுக்குப் பொருள் ஆழமும் வேகமும் 'ஏற்படுகிறது (புதுமைப்பித்தன்). குறிப்பும் பட்டியலும் மூலமாக இருந்தது (வாஸந்தி).
உரையாடல் அரிசியும் பருப்பும் சிந்திக்கிடக்கிறது. இங்கு காசும் பணமும் கொட்டியா கிடக்கிறது.
இந்த உதாரணங்களைக் கொடுத்து, "இத்தகைய வாக்கியங்கள் உரையாடல் தமிழில் மிகுதியாய் வருகின்றன. உரையாடலில் வரும் வாக்கியங்களைப் பிழைப்பட்டவை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது/து விகுதி பெற்ற வினைமுற்று பால்பகா அஃறிணை. ஆனால் எழுத்திலும் மேடையிலும் அதே வினைமுற்று ஒருமையாகவே கருதப்படவேண்டும். காரணம்" அன விகுதி பெற்று அங்கே வழக்கில் உள்ளது. என்று விளக்கமும் கொடுத்துள்ளார். மேலும் இலக்கிய வழக்குபற்றி "உரையாடல் செல்வாக்கு காரணமாக மேடைத் தமிழிலும் சிலரது எழுத்திலும் இத்தகைய சூழ்நிலையில் பயனிலை ஒருமையாகவே அமைகிறது" என்றும் கூறியுள்ளார் (ப. 12) இங்கு ஐந்து செய்திகள் சுட்டிக்காட்டத் தகுந்தவை: 1) பேச்சு வழக்கில் மிகுதியாகவும் அதன் தாக்கத்தால் எழுத்து வழக்கில் அது சிறுபான்மையாகவும் வருகிறது. 2) உடன்பாட்டு வினையில் மட்டும் அல்லாமல் எதிர்மறையிலும் இந்த இயல்பு காணப்படுறது.
ரயில் ஓடாது ரயில்கள் ஓடாது வகுப்பு கிடையாது: வகுப்புகள் கிடையாது.
3) எனவே இதைப் பால்பகா அஃறிணை வினைமுற்று என்று பொது
மைப்படுத்தலாம்.
4) இது தற்காலத் தமிழ் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது
என்ற உண்மையைப் புலப்படுத்துவதாகவும் கொள்ளலாம்.
5) வரலாற்று நோக்கில் இப்படிப்பட்ட பொதுச்சொற்கள் தொல் காப்பியத்திலேயே சுட்டப்பட்டுள்ளன என்று தமிழாசிரியர் களுக்காக எடுத்துக்காட்டத் தகுந்தது.
56

1. "செய்யும் என்னும் வினைமுற்று ஆண், பெண், ஒன்று, பல ஆகிய நான்கு பெயர்ச் சொற்களையும் ஏற்றுவரும் (வினை 30): 2. இசின், இரும் என்ற இடைச் சொற்கள் தன்மை, முன்னிலை படர்க்கை மூன்று இடப்பெயர்களையும் ஏற்கும் (இடை 27). 3. ஒன்றன்பால் பெயர் ஒன்றன்பால் வினை முற்றுப் பயனிலையையும் பலவின்பால் வினைமுற்று பயனிலையையும் ஏற்றுவரும் (மரம் விழுந் தது, விழுந்தன) இதற்குப் பிற்காலத்தில் பால்பகா அஃறிணைப் பெயர்என்று சிறப்புப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே எழு வாய் - பயனிலை, திணை - பால் இயைபோ அல்லது இட இயைபோ பெறவில்லை என்று அதிகம் கவலைப்பட வேண்டிய தில்லை. மொழியின் இலக்கண இயல்பு மாறிவருகிறது.
3. தொடரியல் இயல்பு
தொடரியலிலும், தற்காலத் தமிழ் சில புதிய இயல்புகளைக் கொண்டுள்ளது.
3.1 பெயரடை - பெயர்
தமிழி ல் பெயரடைக்குப் பிற கே பெயர் வரும் அப்பொழுது பெயரடைக்கும் அது தழுவிவரும் பெயருக்கும் திணை - பால் இயைபு கிடையாது. அதாவது ஒரு பெயரடையே எல்லாப் பால் பெயர்ச்சொற்களுக்கும் வரும். இது பெரும்பான்மை வழக்கு. சிறுபான்மையாக பெயருக்குப் பின்னால் பெயரடை வரும். அப் பொழுது பெயருக்குப் பின்னால் வரும் பெயரடையும் பெயரும் திணை - பால் இயைபு கொண்டிருக்க வேண்டும். இதுவே பெயரடை பெயர்த் தொடர் பற்றிய தமிழின் இலக்கண இயல்பு.
ஒரு மாணவன் - மாணவன் ஒருவன் ஒரு நூல் - நூல் ஒன்று
மேலே எடுத்துக்காட்டிய சில தமிழர், பல எழுத்தாளர் என்ற வழக்குகள் தவறு என்று முத்துக் கண்ணப்பன் கருதுவதற்குக் காரணமும் அங்கேயே சுட்டப்பட்டது. இங்கு சில / பல என்ற பெயர்ச் சொற்கள் பெயரடைகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பெயரடைக்கும் பெயருக்கும் திணை - பால் இயைபு பின்பற்றப் படவில்லை என்று தமிழின் இலக்கண இயல்பை ஒட்டி ஒருவர் வாதிடலாம். ஆனால் இங்கு சில பல என்ற சொற்கள் பலவின் பால் ஆயிற்றே, அவற்றை எப்படி பெயரடையாகப் பயன்படுத்த லாம் என்ற கேள்வி எழுகிறது. பொதுவாகத் தமிழிலும் பிறமொழி களிலும் பெயர்ச்சொல்லை பெயரடையாகப் பயன்படுத்தலாம்: மண்,
57

Page 43
வெள்ளி, சட்டி, குடம் ஆகியவை பெயர்ச்சொற்களே, ஆனாலும் மண்சட்டி, மண்குடம், வெள்ளிக்குடம் என்று கூறலாம். இங்கு சட்டி/ குடம் என்ற பொருளின் சிறப்புப் பண்பை மண்/ பொன் என்ற பெயர்ச்சொற்கள் விளக்குவதால் பெயரடையாகக் கருதுவ தில் தவறில்லை. தமிழ் இலக்கண நூல்கள் இவற்றைத் தொகை" என்று கூறியதற்கு காரணம் இ  ைவ மண்ணால் செய் த து. மண்ணால் செய்த குடம், ம ண் குடம், எ ன் று விளக்கு வதற்காகத்தான். மாற்றிலக்கண மொழியியலாளர்கள் உலக மொழி களில் பெயரடையாக வரும் சொற்களின் தொடரியல் பண்பை ஆராய்ந்து நல்ல, பெரிய என்று பெயரடையாக மட்டும் வரும் சொற்களும் ஒரு வாக்கியத்திலிருந்து உண்டாயிருக்கவேண்டும் என்று விளக்குகிறார்கள். மரபு இலக்கணத்தில் பெரிய, நல்ல ஆகிய சொற்களை குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவதும் இவை வினை முற்றிலிருந்து உண்டானவை என்ற கருத்தை வலியுறுத்து கிறது. எனவே பெயர்ச் சொற்களைப் பெயரடையாகப் பயன்படுத்து வது மரபு இல்லை என்று கூற முடியாது. மேலும் இங்கு ஒரு மொழிமாற்றமும் புதைந்துள்ளது என்பது எடுத்துக்காட்டத் தகுந்தது.
சங்கத் தமிழிலேயே எண்ணுப் பெயர் (இங்கு ஒன்று. இரண்டு என்ற பெயர்கள் மட்டும் அல்லாமல் சில, பல என்ற பெயர்களும் வரையறையில்லாத எண்ணுப்பெயர்கள் என்று குறிப்பிடப்படும்" அகத்தியலிங்கம் 1984; 146. நிறப்பெயர்கள், பண்புப் பெயர்கள் முதலானவை பெயரடை வடிவமும் பெயர் வடிவமும் தனித்தனியே பெற்று முன்னதே பெயரடையாகக் கையாளப்பட்டு வந்தது. இடைக்காலத்திலும், தற்காலத்திலும் அவை மரபுத் தொடராக (Idioms) உபயோகப்படுபவைபோக (செந்தாமரை, ஈரிழைத் துண்டு, முத்தமிழ்) பெருவாரியாகப் பெயர்ச் சொற்களே பெயரடையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கருப்புச்சட்டை, வெள்ளைத்துண்டு, சிவப்புப் பெண், இரண்டு வண்டு, ஐந்து வீடு, எட்டு மாணவர்கள் என்ற வழக்குகள். அந்த முறையிலேயே சில ஊர்கள், சில மனிதர் கள்; பல வீடுகள், பல மாணவர்கள், என்ற வழக்குகளும் இன்று காணப்படுகின்றன. இப்படிப்பட்ட வழக்குகளைத் தவறு என்று கூறி இரண்டு மாணவர் என்பதை மாணவர் இருவர், அல்லது இரு மாண வர் என்றும் பல எழுத்தாளர் என்பதை எழுத்தாளர் பலர், பல் எழுத்தாளர் என்றும் கூற வேண்டுமென்றால் இரண்டு பிரச்சனைகள் இங்கு எழும்புகின்றன. ஒன்று; இரு மாணவர், பல் எழுத்தாளர் என்பது சங்கத் தமிழ் வழக்குகளைப் புதுப்பிக்க முயலுவதாகும். மொழியில் பழைய வp க்குகளைப் புதுப்பிக்க முடியாது. இரண்டு; தமிழில் பெயரடையின் பொது வ ழ க் கா க இருக்கிற இலக் கணத்தைப் புறக்கணிப்பதாகும். மேலும் சிவப்புப் பெண் என்றும் கூ ற மு டி யா து. ஏனென்றால் சிவப்பு என்பது அஃறிணைப்
58

பெயர். அஃறிணையும் உயர் திணையும் சேர்ந்து வரக்கூடாது. எனவே செம்பெண் என்றுதான் கூற வேண்டும். எண்ணுப்பெயர்களை பெயரடையாகப் பயன்படுத்த வேண்டுமானால் பெயருக்குப்பின்னால் பெயரின் திணை - பாலுக்கு ஏற்ற வடிவமாக மாற்றி (வீடுகள் பல , மனிதர்கள் பலர்) அமைக்க வேண்டும் என்று புதிய இலக்கணம் கற்பிக்க வேண்டும். இந்த விதியை தமிழாசிரியர்களாவது ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. இப்படி முடியாத காரியத்தைக் கூறுவதாலேயே அவர்களுடைய இலக்கணமும் புறக்கணிக்கப்படு கின்றது.
3. 2 தன்மை - முன்னிலை
பெயர் - பெயர் அமைப்புடைய வாக்கியங்களில் தன்மை, முன் னிலை படர்க்கை ஆகிய மூன்று மூவிடப்பெயர்களும் தற்காலத் தமிழில் எழுவாயாக வருகின்றன. அங்கு படர்க்கைப் பெயர்களில் மட்டுமே எழுவாய்க்கும் பயனிலைக்கும் திணை - பால் இயைபு உண்டு. தன்மை, முன்னிலை பெயர் வாக்கியங்களில் திணை - பால் இயைபு கிடையாது. இது வினையாலணையும் பெயருக்கும் பொருந்தும். ஏனென்றால் தன்மை, முன்னிலைப் பெயர்களில் பால்வேறுபாடு இல்லை. எனவே தற்காலத் தமிழில் ஆக்கப்பெயர்கள் மட்டும் அல் லாமல் வினையாலணையும் பெயர்களும் தன்மை முன்னிலை எழு வாயாக இருக்கும்போது ஆண்/பெண் | பலர் மட்டுமே காட்டுவதால் படர்க்கைப் பெயர்போல அமைந்துள்ளன.
நான் மாணவன்/ நல்லவன் படித்தவன் மாணவி/ நல்லவள்/ படித்தவள்
நாங்கள் மாணவர்கள்! நல்லவர்கள்/ படித்தவர்கள்
நீ மாணவன்/ நல்லவன் படித்தவன் மாணவி/ நல்ல வள்/ படித்தவள்
நீங்கள் மாணவர்கள்/ நல்லவர்கள்/ படித்தவர்கள் இவையும் ஒரு வரலாற்று மாற்றத்தால் ஏற்பட்டவையே.
சங்ககாலத்தில் தன்மை, முன்னிலைப் பெயர்கள் எழுவாயாக இருந்து பெயர்ப் பயனிலை கொண்டு முடியும்போது இட இயைபு உடையதாக அமைந்திருக்கும்.
நான் மாணவனேன்
நீ மாணவனை
நீ வானவரம்பனை (புறம்)
59

Page 44
(யாம்) உயவற் பெண்டிரேம் அல்லேம் (புறம் 246. 10)
ஆனாலும் சங்க இலக்கியத்திலேயே ஒரு இடத்தில் இடவிகுதி இல் லாமல் பெயர்ப் பயனிலை வந்துள்ளது.
(அவன் எம் இறைவன்) யாம் அவன் பாணர் (புறம் 316.4)
இங்கு இட இயைபு இல்லாததோடு தன்மை முன்னிலை பெயர்களில் பால்விகுதி இல்லாததால் பால் இயைபும் இல்லாமல் ஆகிவிட்டது.
இதைத் தமிழ் இலக்கண மரபுப்படி விளக்கவேண்டுமானால் உயர்திணைக்குள் பால்பொதுப் பெயராகத் தன்மை, முன்னிலைச் சொற்கள் செயல்படுகின்றன என்று கூறலாம்"
இன்னும் தெலுங்கில் இட இயைபு தக்கவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழில் வினையாலணையும் பெயர் வாக்கியங்கள் மட்டும் பெயரெச்சம்/ தன்மை! முன்னிலைப் பெயர் (நான்! நீ படித்தவன் என்பது படித்த நான் / நீ) என்ற தொடராக அமைந்து இட இயைபைப் போற்றிவருகிறது.
பயன்பட்ட நூல்கள் அகத்தியலிங்கம், ச. (1983) சங்கத்தமிழ் 2, அண்ணாமலை நகர்.
. (1984அ) சங்கத்தமிழ் 3 (1984அ) அண்ணா
மலை, நகர். (1984ஆ) சொல்லியல் 1 (1984ஆ) அண்ணா மலை, நகர். சண்முகம், செ. வை. (1978) எழுத்துச் சீர்திருத்தம்,
அண்ணாமலை நகர். சுவாமிநாத தேசிகர் (1952) இலக்கணக் கொத்து, ஆறுமுக நாவலர் பதிப்பு, 5ஆம் பதிப்பு. தமிழண்ணல் (1989) வளர்தமிழ்: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் - (தினமணி நாளேட்டில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு) மதுரை 1992) "இன்னும் வேண்டும் இன்னமும்
, , * g : » » » « w » g go w R v p p * * * * * * *
வேண்டும்" தினமணி - தமிழ்மணி (4, 4. 92) பரமசிவம், கு. (1983) இக்காலத் தமிழ் மரபு, சிவகங்கை பரந்தாமனார், அ. கி. (1955) நல்ல தமிழ் எழுத வேண்டுமா,
சென்னை
60

முத்துக்கண்ணப்பன் 1984 தமிழ் எழுதப்படிக்க எளிய முறை,
சென்னை,
1992 "சரியான சொற்களும், சொற்றொ டர்களும் V வழுக்குத்தமிழ்; டாக்டர் மா. நன்னன் மதிப்புரை - தினமணி 24, 2, 92
வரதராசன், மு. 1954 மொழியியற் கட்டுரைகள், சென்னை
வையாபுரிப்பிள்ளை 1949 தமிழ்ச்சுடர் மணிகள், சென்னை
1992 "Dictionary and Dictionaracy
interview given to Usha Aroor,
The Hindu. 2, 2, 1992.
Anna malai, E.
61

Page 45
மொழிப் புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு
9. அண்ணாமலை
புதிய தமிழ் என்று சொல்லும்போது புதிய காலத்தில் வழங் கும் தமிழ் என்று பலரும் பொருள் கொள்ளுவார்கள். புதிய காலம் என்னும்போது புதிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்ட காலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்தப் புதிய மதிப்பீடுகளை வெளியிடும் தமிழையே புதிய தமிழ் என்று சொல்ல வேண்டும். புதிய மதிப்பீடுகள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களினால் பிறப்பவை. வாழ்க்கை நோக்கிலும் நுகர்விலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் பண்பாட்டு மாற்றங்கள் விளைகின்றன. சமூகத்தின் அமைப்பு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களினாலும் புதிய மதிப்பீடுகள் பிறக்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் ஜாதி, சமயம், விவசாயம் ஆகியவற்றின் அடிப்படை யில் அமைந்த வாழ்வு நெறி முறையே வர்க்கம், அரசியல், தொழி லியல் ஆகியற்றின் அடிப்படையில் அமைந்ததாக மாறும்போது, புதிய மதிப்பீடுகள் பிறக்கின்றன. இவற்றையெல்லாம் உள்வாங்கி மொழி மாறுதல் அடைகிறது. சமூக வளர்ச்சியில் ஆட்சி அலு வலகங்கள், நீதிமன்றங்கள், தகவல்பரப்புச் சாதனங்கள் என்று புதிய அமைப்புக்கள் உருவாகும்போது அவற்றின் தேவைகளை நிறை வேற்ற மொழி மாறுதல் அடைகின்றது.
அகத்தூண்டுதலாலும் புறத்தூண்டுதலாலும் சமூகத்தில் ஏற்படும் புதிய போக்குகளாலும் மொழி மாறுதல் அடைகிறது. புதிய தமிழில் இரண்டு புதிய சமூகப் போக்குகளின் தாக்கம் இருக்கிறது எனலாம். முதலாவது, தற்காலத்தில் வளர்ந்துள்ள சமூக மாற்றத்தால் வந்த இலக்கிய வளர்ச்சி. வட்டார இலக்கியத் தின் சிறப்பு அம்சம் வட்டாரத்துக்கே உரித்தான இருத்தலனுபவங் களை தமிழ்ச்சமூகத்தின் பொது அனுபவமாக்குவதாகும். பேச்சு மொழியில் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுவந்த இந்த வட்டாரக் கலாச்சார அனுபவங்கள் எழுத்துத் தமிழின் மூலம் பொதுமைப் படுத்தப்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் அனுபவ அடிப்படை விரி வடைகிறது. இரண்டாவது, அறிவியல் வளர்ச்சி. தற்காலத்தில் அறிவுநிலை ஒரு மொழிச் சமூகத்தைக் கடந்து உலகம் தழுவிய தாக இருக்கிறது இந்த உலகளாவிய அறிவின் அடிப்படையில் பல அறிவுத்துறைகளின் கருத்துக்களும் பிரச்சனைகளும் எழுதப்படுகின்
62

றன. அளவில், பரந்த தன்மையில் வேறான இந்தப் புதிய அறிவு வெளியீட்டுக்கு ஈடுகொடுக்கிறது புதிய தமிழ். இவ்வாறு புதிா தமிழ் இரண்டு வகைகளில் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்தி ருக்கிறது. தன் பரப்பை விரிவாக்கியிருக்கிறது. இவை இரண்டும் புதிய தமிழின் உள்ளடக்கத்தில் விரிவை ஏற்படுத்தி அதன்மூலம் மொழியின் பொருளிலும் வடிவத்திலும் - புதியபொருள்கள், புதிய சொற்கள், புதிய தொடர்கள், புதிய நடைகள், புதிய வெளி யீட்டு வடிவங்கள் என்ற முறையில் - மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன.
மேலே சொன்னவை தமிழின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற் படுத்திய சமூ ப் போக்குகள், சில சமூக மாற்றங்களின் விளைவாக தமிழை வெளிப்படுத்தும் சாதனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. செய்தித்தாள்கள், இதழ்கள் போன்ற தகவல் தொடர்புச் சாத னங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழின் பரப்பு விரியும் போது அதன் நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற தற்காப்பு உணர்வு ஒரு சமூகப் போக்காக உருவாகிறது. இந்த இரண்டு சமூகப்போக் குகளும் புதிய தமிழின் வடிவத்தில் நேரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலாவது, புதிய இலக்கியவாதிகளாலும் பத்திரிகையாளர்களாலும் கொண்டுவரப்பட்ட எளிமையாக்கம். இது மொழியைப் புரிந்துகொள்தலை அதிகமாக்க ஏற்படும் மாற்றம். இது பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள இடை வெளியைக் குறைத்தல், சொல்லின் வடிவ வேறுபாடுகளைத் தவிர்த்து அதன் வடிவச்சிதைவைக் குறைத்தல் என்ற இரண்டு முறைகளில் செய் யப்படுகிறது. இடைவெளியைக் குறைப்பது சொல்வடிவத்தை மட்டும் (Spelling) விட்டு விட்டு, உருபியல், தொடரியல், பொருளியல் முதலிய மற்ற எல்லா இலக்கண நிலைகளிலும் நடக்கிறது, "படிக் கும்போது', 'படிப்பவர்கள்’ "படிப்பிற்கு போன்ற எழுத்து வழக்கு வடிவங்களோடு "படிக்கிறபோது', "படிக்கிறவர்கள்", * படிப்புக்கு" என்ற பேச்சு வழக்கு வடிவங்கள் பரவலாக எழுதப் படுகின்றன. "அவன் கோபங்கொண்டான்”, “அவன் கோபமடைந் தான் என்ற எழுத்து வழக்குக்கே உரிய தொடர்களோடு "அவன் கோபப்பட்டான் "அவன் கோபித்துக்கொண்டான்", அவனுக்கு கோபம் வந்தது’, என்ற பேச்சு வழக்குத் தொடர்கள் பெருவழக்காகி வருகின்றன. சொல்வடிவத்தைச் சிதைக்காமல் இருக்க, சந்தி நீக்கி கோபம் கொண்டனர்" கோபம் அடைந்தான்’ என்றும் 'மரம்தான்", "பல்பொடி' என்றும் எழுதும் வழக்கம் மிகுதியாகி வருகிறது. இவற்றில் பல்பொடி போன்ற எடுத்துக்காட்டுகள் பேச்சு மொழியின் உச்சரிப் போடு ஒத்துப்போனாலும் மரம்தான்' போன்ற எடுத்துக்காட்டுகள் உச்சரிப்பிலிருந்து வேறுபடுகின்றன. இதனால்தான் இடைவெளி
63

Page 46
யைக் குறைப்பதையும் சொல்சிதைவைக் குறைப்பதையும் வேறுவேறு போக்குகளாகக் கொள்ளவேண்டும். நிறுத்தக்குறிகளைப் பயன் படுத்துவதும் மொழியைப் புரிந்துகொள்வதை அதிகப்படுத்துகிறது; எனவே அதுவும் எளிமையாக்கத்தின் ஒரு அம்சமே,
இரண்டாவது, தமிழ்ப் புலவர்களால் கொண்டுவரப்பட்ட தூய்மையாக்கம். இது மொழியை இனத்தின் அடையாளமாகத் தனிமைப்படுத்தும் நோக்கத்தில் பிறந்தது. இது பிறமொழிச் சொற்களையும், கொச்சைச் சொற்களையும் எழுத்துமொழியி லிருந்து விலக்குகிறது. மேலே உள்ள எடுத்துக் காட்டுத் தொடர் களில் “கோபம்’ என்பதற்குப் பதில் "சினம்’ என்ற சொல் ஏற்ற தாகக் கொள்ளப்படும். இது சொல்லை மட்டும் மாற்றுவதல்ல. சொல் மாற்றத்தால் சில தொடர்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். "அவன் "சினப்பட்டான் "அவனுக்குச் சினம் வந்தது" என்பன வழக்கற்றவை; அல்லது வழக்குக் குறைவானவை. பழைய இலக்கியச் சொற்களை அல்லது புதிதாக உருவாக்கிய நீண்ட சொற்களை வழக்கில் உள்ள சொற்தளுக்குப் பதிலாகத் தூய்மை கருதிப் பயன்படுத்தும் போது மொழியைப் புரிந்து கொள்ளுதல் குறையலாம். அப்போது எளிமையாக்கத்துக்கும் தூய்மையாக்கத் துக்கும் முரண் ஏற்படுகிறது. மொழியின் பரப்பு விரிவதன் விளை வாக புதிய தமிழுக்கு வரும் வட்டாரச் சொற்களையும் வழக்குக ளையும் அயல்மொழிச் சொற்களையும் தொடர்களையும் தூய்மை யாக்கம் மறுக்கவோ மறிக்கவோ முனையும்போது மொழியியல் முரண் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட முரண்களின் ஊடாட்டத்தின் விளைவுதான் புதிய தமிழை இறுதியில் நிர்ணயிக்கிறது.
எந்த மொழியிலும் புதுமையாக்கத்தை மூன்று கூறுகளின் அடிப்படையில் விளக்கலாம், எந்தச் சமூகத்துக்கும் எந்த மொழிக் கும் பொருந்தும் இந்தப் பொதுக் கூறுகளின் அடிப்படையில் புதுமை யாக்கத்தை விளக்கும்போது புதுமையாக்கத்துக்கும் (Modernisation) மேனாட்டாக்கத்துக்கும் (Westernisation) உள்ள வேறுபாடு விளங் கும். தமிழ் புதுமையடைய வேண்டும் என்று சொல்லும்போது ஆங்கிலம் போல் ஆகவேண்டும் என்று பொருளல்ல; அதாவது ஆங் கிலத்தை மாதிரியாகக் கொண்டு அதில் உள்ள கூறுகளை யெல்லாம் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொருளல்ல. புதுமையாக்கத்தின் விளைவாக, சில மொழிக்கூறுகளில் ஆங்கிலமும் புதிய காலத்தின் மொழி என்பதால், தமிழ் ஆங்கிலத்தின் அருகில் வரலாம். இதனால் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே மொழி பெயர்ப்புத் தன்மை அதிகமாகலாம். இது இரண்டு மொழிகளும் மேற்கொண்ட புதுமையாக்கத்தின் பொதுக்கூறுகளின் விளைவே யன்றித் தமிழ் ஆங்கிலத்தின் கூறுகளை ஏற்றுக்கொண்டதன்
64

விளைவு அல்ல. அதாவது, புதிய தமிழ் ஆங்கிலத்தின் போலி, அல்ல; புதிய காலத்தின் தேவைகளின் வெளிப்பாடு.
புதுமையாக்கத்தின் பொதுமையான மூன்று கூறுகளில் முதலா வது தொழில்நுட்பத்திறனை மொழிக்குக் கொண்டுவருவது. இடத்தை யும் காலத்தையும் கடந்த மொழிப்பரிமாற்றத்துக்கும், மொழிப் பரிமாற்றத்தின் வேகத்தையும் எட்டலையும் (reach) அதிகப்படுத்து வதற்கும், மொழியின் உள்ளடக்கத்தைப் பெருமளவில் சேமித்து வைப்பதற்கும் நொடியில் திரும்ப எடுத்து பயன்படுத்துவதற்கும் எழுத்துமுறை, அச்சு, தட்டச்சு, தொலையச்சு, கணிப்பொறி முதலிய தொழில் நுட்பச்சாதனங்கள் துணைபுரிகின்றன, இந்தச் சாதனங்கள் மொழியின் வளத்தை (resource) முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கின்றன. தொழில் நுட்பம் இயற்கை வளப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதைப் போலவே மொழி வளப் பயன் பாட்டையும் அதிகப்படுத்துகிறது. புதியகாலத்தின் அடிப்படையான இன்றியமையாத தேவை இது.
புதுமையாக்கத்தில் இரண்டாவது கூறு மொழிவளத்தை விரிவு படுத்துவது. இது புதிய சொற்கள், புதிய நடைகள், புதிய வெளிப் பாட்டு வடிவங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இவை மொழிக்குப் பன்னிலையைத் (heterogenity) தருகின்றன. தமிழில் அறிவியல் கலைச்சொற்கள், சட்டக் கலைச் சொற்கள் என்றும் இதழியல் நடை, நிர்வாக மொழி நடை என் றும் சிறுகதை வடிவம், விளம்பர வடிவம் என்றும் புதிய மொழி நிலைகள் தோன்றியிருக்கின்றன. இவற்றின் தோற் ற த் தா ல் மொழியின் அமைப்பிலும் இலக்கணத்திலும் மாறுதல்கள் ஏற்பட் டிருக்கின்றன. கலைச் சொற்களில் புதிய ஒலியன்களும் மெய்மயக் கங்களும், புதிய நடைகளில் புதிய தொடர்களும், புதிய வடிவங் களில் புதிய தருக்க அமைப்புகளும் தொடர் அமைப்புகளும் (rhetorics) தோன்றியிருக்கின்றன.
புதுமையாக்கத்தின் மூன்றாவது கூறு புதிய சமூக மதிப்பீடு களை வெளியிடும் வகையில் அமையும் மொழிப்பொருள் அமைப்பு (Semantic Structute) மாறுதல்கள். மேலே குறிப்பாகச் சொன்னது போல, புதிய தமிழ்ச் சமூகத்தில் மதிப்பீட்டு மாற்றம் ஏற்பட்டு வரு கிறது. இதன் விளைவாக "நாவிதன்", "வண்ணான்”, என்று பிறந்த குலத்தின் அடிப்படையில் உள்ள பெயர்கள் 'முடிதிருத்து
65

Page 47
வோர்’ ‘சலவைத்தொழிலாளி” என்று ஏற்ற தொழிலின் அடிப் படையில் மாறிவருகின்றன. "கணக்குப்பிள்ளை” என்ற சொல் பழைய மரபுக்கடைகளின் தொடர்பாகவும். "கணக்கர்" என்ற சொல் புதிய வணிக நிலையங்களின் தொடர்பாகவும் பயன்படுத்தப் பட்டு மரபும் புதுமையும் வேறுபடுத்தப்படுகின்றன. இதேபோல் உழவு, நெசவு, போன்ற மரபுத்தொழில்களின் கலைச்சொற்களுக்கு இணையாக இவற்றைப்பற்றிய கல்வித்துறைகளில் புதிய கலைச் சொற்கள் புயன்படுத்தப்படுகின்றன. "மின்னல்" போன்ற இயற்கை ஆற்றலைக் குறிக்கும் சொற்களிலிருந்து மனிதனின் கண்டுபிடிப்பு களைக் குறிக்க * மின்சாரம்" "மின்னலை போன்ற சொற்கள் பிறந்
திருக்கின்றன.
மொழியின் புதுமையாக்கம் சமூகப்போக்குகளால் நடைபெறு வதைப் பார்த்தோம். இந்த ஆக்கச் செயல் விரைவுபடுவதும் - சில சமயங்களில் துவங்குவதும் கூட இலக்கியவாதி, அரசியல்வாதி முதலியோரில் சிலருடைய தனிப்பட்ட செல்வாக்கினால் - அவர் களுடைய சமூக நிலைப்பாட்டால் - நடைபெறலாம். மக்கள் ஒன்று சேர்ந்து போராடும் இயக்கங்களாலும் ஏற்படலாம். இவை தவிர திட்டமிட்ட புதுமையாக்கமும் நடைபெறுகிறது. இது பெரும்பாலும் அரசாங்கத்தால் அல்லது அரசாங்கத்தின் உதவியோடு சிலர் கூடி முடிவெடுத்து நடைபெறுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் புதுமை யாக்கம் இவ்வாறு திட்டமிடப்படுகிறது. புதுமையாக்கத்தின் வேகத்தை அதிகமாக்கவும் அது செல்லும் திசையை நிர்ண யிக்கவும் திட்டமிடுதல் உதவுகிறது. திட்டமிடுதல் அதிகாரத்தில் உள்ளவர்களால் செய்யப்படுவதால் அவர்கள் செய்யும் புதுமையாக் கம் அவர்களுடைய சமூக மதிப்பீடுகளையே பிரதிபலிக்கும் மேலும் புதுமையாக்கம் மேலிருந்து வருவதால் மொழியோடு ஒட்டாமல் தனித்து நிற்கும் நிலையும் ஏற்படலாம். இந்திய மொழிகளில் உரு வாக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான அறிவியல், தொழில் நுட்ப, சட் டக் கலைச்சொற்கள் அந்தத் துறைகளைச் சார்ந்தவர்களால் பயன் படுத்தப்படாமல் அகராதிகளிலேயே முடங்கியிருக்கின்றன, அல்லது பாடப்புத்தகங்களோடு நின்றுவிடுகின்றன. ஒரு மொழி பேசுவோரின் சமூக, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதுமை யாக்கம் நடைமுறைக்கு வந்தால் அது மொழியில் ஆழ் ந் த மாறுதல்களை ஏற்படுத்தும் இல்லையென்றால், மேல் பூச்சான ஒப்பனை வேலையாகவே இருக்கும். ஒரு நாட்டில் சமூகத்தின் உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சி இல்லாமல் புதுமைக் கூறுகள் அயல் நாடுகளின் உதவியால் வந்திறங்கலாம் என்று பொருளியலா ளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய புதுமையாக்கம் வேரற்ற மரம்போன் றது; சமூகத்தோடு ஒட்டாதது. திட்டமிட்ட புதுமையாக்கத்தில்
66

4மாழியில் இது நடக்க வாய்ப்பு இருக்கிறது. மேலே சொன்ன குழுக்கள் உருவாக்கும் கலைச்சொற்கள் இந்த வகையைச் சார்ந்தவை. இப்படி மொழிக்கு வரும் கூறுகள் வளப்பமாகலாம், ஆனால் மெழிா வளர்ச்சியாகாது.
மேலே புதிய தமிழில் சில கூறுகளையும் அவற்றை தோற்று விக்கும் காரணிகளான சமூகப் போக்குகளையும் பார்த்தோம். இந்தச் சமூகப் போக்குகள் மொழிமாற்றத்தைப் பற்றிய மற்றொரு முக்கியமான தன்மையைக் காட்டுகின்றன. எழுத்துத் தமிழைக் கையாளுவோர் தமிழறிஞர்கள் மட்டுமல்ல; தமிழ்ப் படைப்பாளிகள் மக்கள் தொடர்புச் சாதனர்கள், அறிவியலாளர்கள் என்று விரிந் திருக்கின்றனர். இவர்களும் தமிழின் தன்மையை வரையறுக்கிறார் கள். எனவே, புதிய தமிழின் இயல்பு பல்வேறு வாழ்க்கைப் பின்னணியும் நோக்கங்களும் கல்வித்தகுதியும் பயிற்சியும் கொண்ட வர்களால் வரையறுக்கப்படுகிறது.
புதிய தமிழை உருவாக்குவதில் இவ்வாறு புதிய சமூகப்போக்கு களும் காரணர்களும் ஊடாடும்போது, அதனுடைய ஒப்புக்கொள் ளப்பட்ட விதிமுறைகள் (norms) என்ன என்ற கேள்வி எழுகிறது. பழைய இலக்கண நூல்கள் புதிய விதிமுறைகளுக்குப் பொருந்தி வரவில்லை. புதிய இலக்கண நூல்களும் தோன்றவில்லை. பழைய விதிகள் புறக்கணிக்கப்படாமலும் புதிய விதிகள் நிலைபெறாமலும் இருக்கின்ற நிலை உள்ளது. பழைய விதிகள் முற்றிலும் தள்ளப் படாமலும் புதிய விதிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படாமலும் ஒரு சமூகம் இயங்குகின்ற நிலையைச் சமூகவியலாளர்கள் மயக்கநிலை (anomic) என்பார்கள். புதிய தமிழைப் பொறுத்தவரை இத் தகைய மயக்கநிலை இருக்கிறது எனலாம்,
புதிய விதிமுறைகள் பற்றிப் பேசும்போது தமிழைப் பொறுத்த வரை இந்தியத் தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் ஒரே விதிமுறை கள் உள்ளனவா எ ன் ற கே ள் வி பிற க் கி றது. பேச்சு த் தமிழில் இரண்டுக்கும் விதிமுறைகள் வேறு என்பது தெரிந்த ஒன்று. எழுத்துத் தமிழில் இரண்டுக்கும் விதி முறைகள் ஒன்றே என்பது பரவலான நம்பிக்கை. திட்டமிட்ட மொழிமாற்றத்தில் குறிப்பாகக் கலைச் சொல்லாக்கத்தில் இரண்டு நாடுகளிலும் வெவ் வேறு போக்குகள் தெரிகின்றன. இரண்டு நாட்டுத் தமிழ் மக்களு டைய சமூக மதிப்பீடுகளும் சமூகப் போக்குகளும் ஒன்றாக இருந்தால் விதிமுறைகள் ஒன்றாக இருக்கும். இதை முடிவு செய்ய ஆய்வு தேவை. ஆய்வு தான் புதிய தமிழ் இரண்டா அல்லது இரண்டு வகைகள்கொண்ட ஒரு புதிய தமிழா என்று முடிவு செய்ய வேண்டும். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை வளர்ப்பதிலும் குறைப்பதிலும் அகராதி பெரும்பங்கு வகிக்கும். 67

Page 48
புதிய தமிழின் கூறுகளை நிலைப்படுத்த, புதிய விதிமுறை களை வகுக்கச் சில சாதனங்கள் தேவை. சில சமூகங்களில் மொழி யாசிரியர்கள் இந்தச் சாதனங்களாக விளங்குகிறார்கள், சில சமூ கங்களில் மொழிக் கழகங்கள் இந்தப் பணியைச் செய்கின்றன. சில சமூகங்களில் மேற்கோள் நூல்கள் (reference books) அந்தப் பணியைச் செய்கின்றன. தமிழைப் பொறுத்தவரையில் ஆசிரியர் களும் கழகங்களும் பழமையின் மாறாத்தன்மையிலும் அதிகார வழி யிலும் நம்பிக்கை வைத்திருப்பதால், புதிய விதிமுறைகளைக் கொண்டுவர, மயக்க நிலையைக் குறைக்க மேற்கோள் நூல்கள் தேவைப்படுகின்றன. மேற்கோள் நூல்களில் புதிய இலக்கண நூல் கள், அகராதிகள், மொழிப்பயன்பாட்டுக் கையேடுகள் முதலியன முக்கியமானவை. புதிய தமிழுக்கு இவை தேவை. இவை இக்காலத் தமிழின் தரவுத் தொகுப்பின் அடிப்படையில் அமையவேண்டும்.
புதிய மேற்கோள் நூல்கள் புதிய தமிழை வரையறுப்பதற்கும் விதிப்படுத்துவதற்கும் வருவதில் நன்மைகள் இருக்கின்றன. நூல்கள் எல்லோருக்கும் பொதுவானவை; அவற்றில் உள்ள செய்திகளை விரும்பிய நேரத்தில் தெரிந்து கொள்வதற்கு எல்லோருக்கும் சுதந் திரம் உண்டு. ஆசிரியர்களோ, தங்களிடம் வருபவர்களையோ தாங் கள் தரும் செய்திகளையோ, தங்கள் விருப்பப்படி கட்டுப்படுத்த முடியும். விதிமுறைகளைப் பற்றிய கருத்துகளில் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் செல்வாக்கு இருக்கலாம். அக ராதி முதலான மேற்கோள் நூல்கள், இன்று எழுதப்படும் தமிழ் நூல்களை வகைப்படுத்தித் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப் படையில் தயாரிக்கப்படும் போது அவற்றுக்குச் சமூகப் பிரதிநிதித் துவமும் அதன்மூலம் சமூக ஏற்பும் கிடைக்கிறது. இம்முறையில் அக ராதி தரும் செய்திகள் அதைத் தொகுத்தவரின் அல்லது அதை வெளியிட்டவரின் கருத்தாக அல்லாமல் சமூக மதிப்பீடுகளைப் பிரதி பலிக்கும் கருத்தாக அமைகிறது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இந்த முறையில் தற்காலத் தமிழின் தர வு க ளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்கால எழுத்துகளி லிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளைத் தற் காலப் பயன்பாட்டின் அடிப்படையில் வரையறுத்திருப்பதன் மூலம் இது தற்காலத் தமிழை வரையறுக்கிறது. பழஞ் சொற்களையும் கொச்சைச் சொற்களையும் நீக்கிச் செய்த சொல் தெரிவு இந்த வரையறுப்பை உறுதி செய்கிறது. அருகிவரும் சொல், பெருகிவரும் சொல், உயர் சொல், இலங்கைச் சொல் என்று சொற்களுக்கு வழக் குக் குறிப்புத் தந்திருப்பது புதிய தமிழின் இயங்கு சக்தியைக் காட்டு
68

கிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் தந்துள்ள பொருள் பகுப்பும் பொருள் வரையறையும் தற்காலத் தமிழின் பொருள் விரிவையும் பொருள் மாற்றத்தையும் காட்டுகின்றன இவை தமிழின் புதுமை யாக்கக் கூறுகளை வெளிப்படுத்துகின்றனவா என்று ஆராய்வது இக் காலத் தமிழ், மேலே சொன்ன பொருளில் புதிய தமிழா என்று காட்ட உதவும்.
இந்த அகராதி புதிய தமிழின் விதிமுறைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது. சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் இருக்கும்போது ஒன்றின் கீழ் மட்டுமே பொருள் வரையறை தந்து புதிய தமிழில் அதன் சமுக ஏற்பைச் சுட்டி விதிமுறை செய்கிறது. இதேபோல் சில சொற்கள் இந்தத் துறைகளில், இந்த இலக்கண அமைப்புகளில் மட்டும் வழங்கும் என்று துறை இலக்கண வழக்குக் குறிப்புகள் தந்து மொழிப் பயன்பாட்டின் விதிமுறைக்கு வழி வகுக் கிறது. இருத்தலியல், பெண்ணுரிமை போன்ற புதிய காலக் கருத் துச் சொற்களுக்கு விரிந்த துல்லியமான பொருள் தந்து அவற்றின் பொருளை நிலைப்படுத்துகிறது. இவ்வாறு தமிழில் புதுமையாக்கம் நடந்திருக்கிறதா என்று பார்க்கவும், வந்திருக்கிற புதுமைக் கூறுகளை நிலைப்படுத்தவும் இந்த அகராதி உதவுகிறது. புதிய தமிழின் விதி முறைச் சாதனமாக விளங்கவும் தகுதி பெற்றிருக்கிறது.
விதிமுறைப் பணியை அகராதி சரிவரச் செய்ய வேண்டுமானால், அகராதியைப் பயன்படுத்தும் பழக்கம் தமிழர்களிடையே வரவேண்டும். சொல்லின் வடிவத்தைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ, பயன் பாட்டைப் பற்றியோ சந்தேகம் வரும்போது பெற்றோர்களும் ஆசிரி யர்களும் தாங்களே விடையைத் தராமல் பிள்ளைகளை அகராதி யைப் பார்க்கத் தூண்ட வேண்டும். வீட்டுக்கு ஒரு பஞ்சாங்கம் இருப் பதுபோல் வீட்டுக்கு ஒரு அகராதி இருக்க வேண்டும். நாள் பார்ப் பதுபோல் சொல் பார்ப்பதும் பண்பாட்டுப் பழக்கமாக வேண்டும். இந்தப் பழக்கம் புதிய காலத்தின் பழக்கம். புதிய சமூக மதிப் பீட்டின் நடைமுறை வெளிப்பாடு. ஆகவே, அது தமிழர் சமூகம் புதிய சமூகம் ஆவதன் அடையாளம். புதிய மொழி மட்டுமல்லாமல் புதிய மொழிப் பழக்கங்களும் புதிய சமூகத்தின் தேவைகள். புதிய தமிழ்ச் சமூகத்தின் இந்தத் தேவைகளைத் தமிழ் எந்த அளவு நிறைவு செய்கிறது என்பது அதன் எதிர்காலத்தை முடிவுசெய்யும்,
69

Page 49

பகுதி 2
தொடர்பாடலும் மொழியும்

Page 50

தற்காலச் செய்திப் பரிமாற்றத்தில் தமிழ்: சமுதாய மொழியியல் ஆய்வு
கி. கருணாகரன் வ. ஜெயா
அறிமுகம்
தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு செய்திப் பரிமாற்றச் சாதனங்களின் வாயிலாகப் பல்வேறு நோக் கங்களின் அடிப்படையில் வழங்கப்பெறும் அனைத்து வகையான செய்திப் பரிமாற்றங்களையும் தற்காலச் செய்திப் பரிமாற்றம் என் கிறோம். எடுத்துக்காட்டாக, கல்வி, ஆட்சி, மக்கள் செய்தித் தொடர்பு போன்றவற்றை முக்கியமான சமுதாயச் செயற்பாடுகள் என்று குறிப்பிடலாம். இத்தகைய சமுதாயச் செயற்பாடுகள் யாவற்றிலும் தமிழ்மொழி பேச்சு வழக்காகவோ எழுத்து வழக் காகவோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு சாதனங்களின் வாயிலாகச் செய்திப் பரிமாற்றம் மேற்கொள்ளும் பொழுது, அவற் றில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கும், அம் மொழி வழக்கின் முக்கிய கூறுகளும் பலவகைகளில் சாதனத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுவதை நாம் அறிவோம். இதற்கு முக்கிய காரணம் செய் திப் பரிமாற்றத்தின் தன்மை செய்திப் பரிமாற்றத்தின் தேவை, செய்திகளின் இயல்பான பரிமாற்றம் போன்றவை யாவும் செய்திப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி வகையையும் மற்றும் மொழிப் பயன்பாட்டில் உள்ள சிறப்புக் கூறுகளையும் சார்ந்தே உள்ளன என்பதே, தமிழ் மொழிச் சூழலில் உள்ள ஒரு எடுத்துக் காட்டைக் கொண்டு இதனை விளக்கலாம். மக்கள் கல்வி தொடர்பான பயன்பாட்டில் காணப்படும் உரைக்கோவைக்கும் (Discourse) தொழில் நுட்பப் பயன்பாட்டில் காணப்படும் உரைக் கோவைக்கும் இடையே மாற்றங்களைக் காணலாம். இவ்விரண்டி லும் ஒரே வகையான கருத்துக்களே கூறப்படுகின்றன என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். செய்திகள் எவ்வாறு குறியீடு செய்யப்பட்டுள்ளன? இயல்பு நடையிலா அல்லது சிறப்பு நடையிலா? நுட்பப் பொருளிலா அல்லது நுட்பமில்லாத பொருளில ? என்பவற்றைப் பொறுத்து மாற்றம் அமைகிறது. மக்கள் செய்தித் தொடர்பில் பயன்படுத்தப்படும் நடையானது நுட்பத்துறையல்
73

Page 51
லாத விதத்திலும் இயல்பு நடையிலும் இருக்கும்; கற்றோருக்குப் பயன்படுத்தப்படும் நடையானது சிறப்பு நடையிலும் நுட்பப்
பொருளிலும் இருக்கும்.
தற்காலச் சமுதாயத்தில் பல்வேறு முன்னேற்றங்களும் கருத் துக்களும் தோன்றியுள்ளன. இத்தகைய மாற்றங்களினாலும் வளர்ச் சிகளினாலும் மொழிப் பயன்பாட்டிலும் அவற்றிற்கு ஈடான மாற் றங்கள் நிகழ்ந்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இது மொழியின் வளர்ச்சி நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. செய்தித் தொடர்பு என்பது ஒரு கருத்தைப் பற்றியோ அல்லது எண்ணத்தைப் பற்றியோ தகவல்களை அவற்றை நாடு வோருக்கு அளிக்கும் ஒரு செயலாகும், இத்தகைய செய்திப் பரி மாற்றங்கள் பல வழிகளில் நிகழக்கூடும். எனவே, ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் கலந்துறவாடலுக்கும், ஒரு வரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் செய்திப் பரிமாற்றம் அவசியமானதாகிறது. ஆதலால், செம்மையான செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்திட மொழிப் பயன்பாடு சிறப்பான பணியாற்றுகிறது.
இந்தியா போன்ற பல மொழிகளைக் கொண்ட வளர்ந்து வரும் நாட்டில் மக்கள் செய்தித் தொடர்பிற்குப் பயன்படுத்தப் படும் மொழியின் சிறப்பு, செய்திப் பரிமாற்றத்தின் செம்மை, மொழிப் பயன்பாட்டின் எளிமை போன்றன சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. எனவேதான் இந்திய நாட்டில், நாட்டுப்புற வழக் காறுகள் (சொற்கள், தொடர்கள், உரைக்கோவை போன்றன) செய் திப் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வளரும் நாடுகளில் பொதுவாக மக்கள் கல்வி, வயது வந்தோர் கல்வி, செய்திப் பரிமாற்றம் போன்றன முக்கியமானவையாகக் கருதப்படு வதால் இவற்றில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கானது எளிமை யானதாகவும், செம்மையானதா ச வும், மிகையில்லாததாகவும் இருக் குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.
நாம் எவ்வண்ணம் விரும்புகிறோமோ அவ்வண்ணமே நமது செய்திசளும் சருத்துக்களும் நாம் விரும்பும் மக்கட் பிரிவினருக்குச் சென்று சேரவேண்டும் என்பதுதான் சிறப்பான செய்திப் பரிமாற் றத்தின் இயல்பாகும் என்பதனால் நமது முயற்சிகள் யாவும் செய் திப் பரிமாற்ற அமைப்பானது செம்மையானதாகவும் சீரானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய திசையில் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் சமுதாயத்தில் அதுவும் கல்வியறிவு பெற்றோர் விழுக்காடு குறைவாகவுள்ள தொரு வளரும் சமுதாயத் தில், கல்வி புகட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மொழி வழக்கானது அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் மொழி வழக்கிற்கு மிக நெருக்க
74.

மானதாக இருந்திடல் வேண்டும். இத்தகைய பயன்பாடுகள் இக் கால செய்திப் பரிமாற்றத்தில் செம்மையாகப் பணியாற்றிட வேண்டுமெனில் நாட்டுப்புற மக்களிடையே காணப்பெறும் எளிய, சிறந்த பயன்பாடுகளைத் தேர்வு செய்வதோடு அவற்றிற்கு இணை யான உயர்வழக்குப் பயன்பாடுகளையும் நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தகவல் சென்று சேரவேண்டிய மக்கட் குழுவின் தன்மைக் கேற்பவும், தகவல் தொடர்பு ஊடகத்தின் பண்பிற் கேற்பவும், செய்திப் பரிமாற்றம் நிகழும் இடங்களின் தனித்தன்மை களுக் கேற் பவும் செய்தியானது வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு தேவைகளுக் கேற்ப மொழி வழக்குகளைத் தேர்வு செய்யும் போது, மொழிப் பயன்பாட்டில் சில மாற்றங்களை - புதியனவற்றைச் சேர்த்தல், தேவையல்லாதனவற்றை நீக்குதல் போன்றன - செய் திட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட செய்தியை நாட்டுப்புற மக்களுக்கு அளித்திடும் போது, அவர்களது வழக்கிலி ருந்து பயன்பாடுகளைத் தேர்வுசெய்து அவற்றை நாம் பயன்படுத் திடவேண்டும். அவ்வாறே, சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினருக் கான செய்திப்பரிமாற்றத் தகவல்களை வடிவமைத்திடும் பே து அவர்களது வழக்கிலிருந்து பயன்பாடுகளைத் தேர்வு செய்திட வேண்டும். மொழியை சிறப்புப் பயன்பாட்டிற்கென (language for special purpose) பயன்படுத்தும் போதும் கூட இத்தகைய முறை யில் தேர்வு செய்திடுவதே சிறப்பானதாக அமையும். இதுகாறும் நாம் கண்டவற்றிலிருந்து, மொழிப் பயன்பாடானது செய்திப் பரி மாற்றத்தின் பல்வேறு கூறுகளைப் பொறுத்தே அமைகிறது என்பது தெளிவாகிறது.
தமிழ் மொழிப் பயன்பாடு
தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு என்னும் இரு பெரும் வழக்குகள் இருந்து வருவதை நாம் அறிவோம். இத்தகையதொரு மொழிச் சூழலை நாம் மொழியின் இருநிலைத் தன்மை (diglossia) என்று குறிப்பிடு கிறோம். ஒரு மொழியானது இரு வழக்குகளைக் கொண்டதாய் அவற்றுக்கிடையே அமைப்பு அளவிலான மாற்றமும் பயன்பாட்டு அடிப்படையிலான மாற்றமும் நிலவி வரும் சூழலை நாம் இரு நிலைத் தன்மை என்று கூறுகிறோம். தமிழ் மொழியில் உள்ள இரு நிலைத் தன்மையானது மொழியின் சிறப்புப் பயன்பாடுகளையும், இயல்புப் பயன்பாடுகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. சிறப் புப் பயன்பாடுகள் யாவும் தமிழ் மொழியின் எழுத்து வழக்காலும்,
ሃ5

Page 52
இயல்புப் பயன்பாடுகள் யாவும் பேச்சு வழக்காலும் நிறைவு செய் யப்பட்டு வருகின்றன. எடுத்துக் Tட்டாக, ஆட்சித்துறை, கல்வித் துறை (பெருமளவுக்கு), பத்திரிகைத்துறை (பெருமளவுக்கு) போன்ற வற்றில் எழுத்து வழக்கு பயன்படுத்தப்படுவதையும் மக்கள் தகவல் தொடர்பு, சமுதாய உறவாடல் போன்றவற்றில் பேச்சு வழக்கு பயன்படுத்தப்படுவதையும் நாம் அறிவோம். சில துறை பிளில் இரு வழக்குகளும் பயன்படுத் தப்படுவதும் உண்டு இத்தகைய மீறல்கள் தழுவல்கள் தமிழ் மொழி பேசும் மக்களின் சமுதாயச் சூழலின் காரணமாகவே நிகழுகின்றன. மேலும், எழுத்து வழக்கிலிருந்து சிறிது சிறிதாக பேச்சு வழக்கிற்கு மாறும் போக்கை நாம் காண் கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழ் மொழியின் உரைக்கோவை அமைப்பை வரலாற்று நோக்கில் காணும்போ து அதில் நடைபெற் றுள்ள எளிமையாக்க முயற்சிகளைக் காணலாம். அதேபோன்று பழந் தமிழ் இலக்கியங்களையும் ஒப்பிட்டு நோக்கினாலும் இத்தகைய எளிமையாக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதை நாம் கண்கூடாகக் காணலாம். இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்குச் சமு தாயத்தில் நிழ்ந்துள்ள வளர்ச்சியையும் பண்பாடு, அறிவியல், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத் தையும் காரணமாகக் குறிப்பிடலாம். இக்காலத் தமிழ் மொழிப் பயன்பாட்டை நுணுகி நோக்கினால் பல்வேறு பயன்பாடுகளுக்கு என்று தனித்தனி மொழி நடைகள் உருவாக்கப்பட்டு வருவதைக் ாண முடியும், சிறப்புச் சூழல்களில் சமுதாய மொழியியல் சூழல் "ளுக்கேற்ப பேச்சு வழக்கு பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். இக்காலத் தமிழில் பயன்படுத்தப்படும் இத்தகைய மொழி நடைகள் சுட யார் இத்தகைய நடையைப் பயன்படுத்து சிறார்? யாருடன் உரையாட இந்நடையைப் பயன்படுத் துகிறார்? எக்காரணத்திற்காகப் பயன்படுத்துகிறார்? எத்தகையொரு செய்தி இதன் வாயிலாக பரிமாற்றம் செய்யப்படுகிறது? எத்தகைய சூழ வில் இது பயன்படுத்தப்படுகிறது? எந்த முறையில் இது பயன்படுத் தப்படுறது? என்பவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவ்வினாக் களுக்கான தீர்வுகளே இக்காலத் தமிழில் "செய்திப் பரிமாற் றத்திற்கான மொழிநடையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லாம்.
மக்கள் தகவல் தொடர்பு
தகவல் தொடர்பு ஊடகங்கள் பல உள்ளன. வானொலி, திரைப்படம், செய்தித்தாள், இதழ்கள், விளம்பரங்கள், அறிவிப் புகள் போன்ற பல்வேறு ஊடகங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப் பட்டு வருவதை நாம் அறிவோம். கல்வியறிவு குறைந்த மக்களையே
ፕ 5

பெரும்பான்மையினராகக் கொண்ட இந்தியச் குழவில் மக்கள் தக வல் தொடர்பானது மிகவும் சிறப்பான பணியாற்றிட வேண்டிய நிலையில் உள்ளது.
மக்கள் தகவல் தொடர்பு வாயிலாக மக்கள் கல்வித் திட்டங் களை மேற்கொள்ளவேண்டியது நமது இன்றியமையாத கடமை களில் ஒன்றாகும். செய்திப் பரிமாற்றத்தின் இத்தகைய ஊடகங் களில் நாம் வெற்றி பெற்றிட வேண்டுமெனில் இந்திய மக்களில் பெரும்பான்மையோரின் சமுதாயப் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு மொழிப் பயன்பாட்டைத் திட்டமிட வேண்டும். கல்வி, பொருளாதார நிலை, தொழில், எயது, பால், மதம், போன்ற பவ்வேறு சமுதாயக் காரணிகளினால் அணிதிரளும் ாக்களுக்கென அவரவர் தேவைகளை ஈடுசெய்யும் நோக்கில் பல் வேறு நிகழ்ச்சிகள், செய்திகள், அறிவிப்புகள் போன்றன அளிக் கப்படுகின்றன. இத்தகைய சமுதாயக் காரணிகள் யாவும் மக்க களைப் பாகுபாடுசெய்து பிரிப்பதால் அவரவர்களது பின்புலத்திற் கேற்ப மொழித்தேர்வு செய்யப்படவேண்டும். மொழியைத் தரப் படுத்தும் கொள்கைகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட பயன் பாடுகளை வழக்குகளைப் பயன்படுத்திட மொழி வல்லுனர்கள், மொழித் திட்டமிடுவோர் செயல்பட வேண்டும். மொழிப் பயன் பாடும் அதன் தரமும் அனைத்து மக்கட்பிரிவினருக்கும், அனைத்து உளடகங்களுக்கும் ஒரே மாதிரி இருந்திட முடியாது. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையின் கீழே வருவ தாலும், அவ்வவற்றிற்கு என்று தனிப்பட்ட குறிக்கோள்கள் இருப் பதாலும் இக்குறிக்கோள்கள் யாவும் வெவ்வேறு விதத்தில் எட்டப் படவேண்டியிருப்பதாலும் நாம் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்கள் தொடர்பு ஊடகங்களுக்குக் கொடுக்கப்படும் தர விகள் வெவ்வேறாக இருந்திட வேண்டியுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான செய்தி கால அவகாசமாகும். சிலவகையான செய்திகள் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். சில புதிய கண்டுபிடிப் புக்கிளும் முன்முயற்சிகளும் விளக்கமான முறையில் உடனடியாக மக் களிடம் எடுத்துச் செல்லப்படவேண்டியிருக்கலாம். இவற்றையெல் லாம் செவ்வனே செய்திட வேண்டுமெனில் மக்கள்தொடர்புச் சாதனங்களின் அனைத்து ஊடகங்களும் கூர்ந்து நோக்கப்பட்டு செய்திகளின் தன்மைக்கேற்பவும், அவை சென்றடைய வேண்டிய மக்களின் பின்புலத்திற்கேற்பவும் தேர்வுசெய்யப்பட வேண்டும். எனினும், அனைத்து ஊடகங்களும் மொழியை ஏதாவது ஒரு வடி வத்தில் பயன்படுத்துகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
77

Page 53
சமுதாயங்கள் தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்டு வரு கின்றன. அதேபோன்று, ஒரு சமுதாயத்தால் பயன்படுத்தப்படும் மொழியும்கூட சில பயன்பாடு வில் குன்றிய நிலையிலும் சில பயன்பாடு களில் வளர்ந்த நிலையிலும் விளங்குவதை நாம் காணலாம். மொழிப் பயன்பாட்டில் புதுப்புது எல்லைகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே வருகின்றன. அந்தந்த எல்லைகளின் வளர்ச்சியின் பய னாக சொற் பெருக்கம், புதுமையாக்கம், அமைப்பிலும் பயன்பாட் டிலும் தரப்படுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் மொழிப் பயன்பாட்டின் சில எல்லைகள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
மக்கள் தொடர்பிற்குப் பயன்பாட்டு வழக்கை உருவாக்குதல்
பயன்பாட்டு வழக்கு (Functional language) என்பது சமு தாயத்தின் ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது சூழலில் குறிப்பிட்ட தொரு பணியைச் செய்து முடிப்பதற்கென்று உருவாக்கப்பட்ட வழக்காகும். இத்தகைய துறைகள் யாவும் தமக்கென்று சில குறிப் பிட்ட செயல்களையும், பணியையும் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, வாணிபம் என்பது ஒரு துறையாகும். இத்துறையில் பண்டங்களைப் பணத்திற்கு விற்பது என்னும் செயல் நடைபெறு கிறது. இச்செயலில் வாங்குவோர், விற்போர், தரகர் என்னும் உறவினடிப்படையிலான பணி நிகழ்வதை நாம் காண்கிறோம்.
ஒரு மொழியின் பயன்பாட்டு வழக்குகளைக் கண்டறிவதற்கு முன்னதாக மொழி எந்தெந்தத் துறைகளில் சிறப்பாகப் பயன்படுத் தப்படுகிறது என்பதைக் கண்டறிதல் வேண்டும். சமுதாயத்திற்குச் சமுதாயம் இதில் வேறுபட்டு நிற்பதை நாம் காண்கிறோம். அறிவியல் துறைகளில் மேலை நாட்டு மொழிகள் சிறப்பாகச் செயற்படுகின்றன என்றும் இந்திய மொழிகள் - அதிலும் குறிப்பாக வடமொழியானது - மதம், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகின்றன என்றும் பொதுவாகக் கூறப் படுவதுண்டு. அந்தந்தத் துறைகளில் மிகுதியாகக் காணப்படும் படைப்புக்கள் இக்கூற்றை நிரூபிக்கின்றன எனலாம்.
தமிழ் மொழியின் பயன்பாட்டு வழக்கு
தமிழ் மொழியில் இரு பயன்பாட்டு வழக்குகள் பயன்படுத்தப் பட்டு வருவதை நாம் காண்கிறோம். அவையாவன 1. இலக்கிய வழக்கு 2. பேச்சு வழக்கு. இவ்விரு வழக்குகளையும் மேம்படுத்தி செம்மைப்படுத்த அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிக
78

ளைத் தமிழ் மொழியின் வரலாறு நமக்குக் கூறுகிறது. தமிழ் மொழி யில் ஆய்வு செய்துவரும் சமுதாய மொழியியலார் இத்தகைய மொழிச் சூழலை இருநிலைத்தன்மை இருவழக்குச் சூழல் என்று வருணித்து இவ்விரு வழக்குகளுக்கும் பயன்பாட்டு ரீதியில் வேறு பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். தமிழ் மொழியின் இலக்கிய வழக் கானது இலக்கியம், கல்வி, தகவல் தொடர்பு, சட்டம், ஆட்சி, மதம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முறைப் படியான கூட்டங்களிலும், அலுவலகக் கடிதங்களிலும், ஆவணங் களிலும், வகுப்பறைகளிலும், காலமுறை இதழ்களிலும், இலக்கியப் படைப்புக்களிலும், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும், நூல்கள், அச்சிடப்பட்ட பிரசுரங்கள், படக்காட்சிகள், அரசு ஆவ ணங்களிலும் இன்னும் இவை போன்ற பிறவற்றிலும் இலக்கிய வழக் கின் பயன்பாடு காணப்படுகிறது. இலக்கிய வழக்கானது தனக்கென ஒரு சொற்கோவையையும் தொடரமைப்பு முறைகளையும் கொண் டுள்ளது.
தமிழ் மொழியை அறிவியல், தொழில் நுட்பம், தகவல் தொடர்பு ஊடகம், கல்வி, ஆட்சி போன்ற பல்வேறு துறைகளி லும் மேம்படுத்துவதிலும் வளப்படுத்துவதிலும் காட்டப்பட்ட உற் சாகத்தின் காரணமாக தனியாரும் அரசு நிறுவனங்களும் தமிழ்ப் பயன்பாட்டையும் தமிழ் வழக்குகளையும் பொருட் குறியீடு செய்தல் பொருள் விரிவாக்கம் செய்தல், புதுமையாக்கம் செய்தல் போன்ற பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ் மொழியின் வழக்குகளை வளப்படுத்தும் பணி மேற்கொள்ளப் பட வேண்டியது தேவையா? அல்லது தேவையில்லையா? என்னும் வினா எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் வினாவானது, நமது பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் இக்கால தமிழ்ச் சமுதாயத்தின் அன்றாடப் பணிகளைச் செய்து முடித்திட போதுமானவையாக உள்ளனவா என்பதாகும்.
தருக்கவியல் அடிப்படையில் மொழியின் பயன்பாட்டு வழக்கு
ஒரு குறிப்பிட்ட துறைக்குள் பயன்படுத்துவதற்கென்று குறிப் பிட்ட வடிவமைப்புக்களுடனும், உள்ளுரையுடனும், செய்திப் பரி மாற்ற நோக்கத்துடனும் உருவாக்கப்பட்ட வழக்குகளே ஒரு மொழி யின் பயன்பாட்டு வழக்குகள் என்று தருக்கவியல் அடிப்படையில் வரையறைப்படுத்தலாம். கொள்கை அடிப்படையிலும் இத்தகைய வழக்குகளை "பயன்பாட்டு மொழி என்று அழைக்கலாம். பயன் பாட்டு மொழியமைப்பானது பயன்பாட்டுச் சொற்களஞ்சியத்தையும் தொடரமைப்பு முறைகளில் வளத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
79

Page 54
பயன்பாட்டு மொழியின் செய்திப் பரிமாற்றக் குறிக்கோள்கள்
பயன்பாட்டு மொழியின் உள்ளுரையும், செய்திப் பரிமாற்றக் குறிக்கோள்களும் மொழி பயன்படும் துறையின் தேவைகளுக்கேற்ப வும் அத்துறையில் குறிப்பிட்ட எந்தவொரு செய்தியைப் பற்றிப் பேசப் போகிறோமோ அதன் தன்மைக் கேற்பவும் தீர்மானிக்கப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, 'அறிவியலுக்கான மொழி என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய பயன்பாட்டு மொழியானது தனக்கென ஒரு சொற் களஞ்சியத்தையும் தொடர மைப்பு முறையையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், இவை இரண்டும் அறிவியல் துறையைப் பிரதிபலிப்பனவாக அதாவது சோதனை முறை விளக்கங்கள், சோதனைகளின் விவரங்கள் போன் றவற்றைக் கொண்டனவாக இருந்திடல் வேண்டும்.
பயன்பாட்டு மொழி வழக்கானது தோற்றுவிக்கப்படுவதும் உண்டு; தன்னிச்சையாகத் தோன்றுவதும் உண்டு. இவ்வாறு தோன்று வதற்கோ அல்லது தோற்றுவிக்கப்படுவதற்கோ சில வகையான உணர்வுகளும், நுணுக்கங்களும் காரணமாக அமைகின்றன. ஒரு துறையில் கூறப்படும் செய்திகள் மற்றும் அத்துறையில் பயன்படுத் தப்படும் வழக்குகள் ஆகியவற்றில் உணர்வுகள பிரதிபலிக்கின்றன. நுணுக்கங்களோ, பயன்பாட்டு வழக்குகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளுதல், செய்திப் பரிமாற்றக் கொள்கைகளைக் குறியீடு செய்தல் மற்றும் விரித்தல் ஆகியவற்றிலும் பொருத்தமான உள்ளு ரையையும், வடிவமைப்பையும் தேர்வுசெய்தல் ஆகியவற்றிலும் அடங்கியுள்ளன எனலாம், இவ்வாறு, ஒரு பயன்பாட்டு மொழியை வடிவமைத்திட வேண்டுமென்றால் முதலில் குறிக்கோள்களைத் தீர் மானித்தல், அதில் பயன்படுத்தப்படும் உள்ளுரையையும், வடி வமைப்பையும் தீர்மானித்தல் போன்ற செயல்களைச் செய்திட வேண்டியுள்ளது. இவை மிகவும் கடினமான நீண்டகாலம் பிடிக்கக் கூடிய செயல்களாகும்.
மக்கள் தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கைப் பயன்பாட்டு மொழி வழக்காக ஏற்றுக்கொள்ள வேண்டு மெனில் இவ்வழக்கினைப் பிறவழக்குகளில் இருந்து பிரித்துக் கட்டு வதற்குப் போதுமான ஆதாரங்களைக் காட்ட வேண்டும். மக்கள் தொடர்புச் சாதனங்கள் - அவை வானொலியாயினும் தொலைக் காட்சியாயினும், அச்சு மூலங்களாயினும் - மொழியைப் பயன் படுத்துவதன் தலையாய காரணம் அவர்கள் வாழும் சமுதாயத் திலோ, ஊரிலோ, நாட்டிலோ நிகழும் அன்றாட நிகழ்ச்சிகளையும் நடப்புகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதற்கேயாகும். மக்கள்
80

தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு காரணி களின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருப்பதாலும் அவர்களுக் கிடையே வேறுபாடுகள் மிகுந்து காணப்படுவதாலும் ஒரேமாதிரி யான அமைப்பு முறையைக் கொண்ட மொழிவழக்கைப் பரவலாகப் பயன்படுத்த முடியாது. செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்வது தகவல் தொடர்பின் குறிக்கோளாக இருப்பதால், அதி ல் பயன் படுத்தப்படும் மொழி எளிமையானதாகவும், செம்மையானதாகவும், தெளிந்த நீரோடை போன்ற திட்டம் கொண்டதாயும், புரிந்து கொள்ளக் கூடியதாயும் இருந்திட வேண்டும். தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கை கூர்ந்து நோக்கிடும் போது அம் மொழி வழக்கில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, கிளைமொழி வழக்கு போன்ற வழக்குகள் செய்தியின் தன்மைக் கேற்பவும் அவை சென்றடைய வேண்டிய மக்களின் நிலைகளுக்கேற்பவும் பயன்படுத் தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். மேலும், செய்திப் பரிமாற்றம் பயன்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் பிரதிபலிக்கக் கூடிய செய்திகள் இதில் காணப்படுகின்றன. இதனையே, தகவல் தொடர்பு பயன்பாட்டு மொழிவழக்கின் சிறப்பாக நாம் கொள்ளலாம்.
ரோஜர்ஸ் (1984) என்பார் தகவல் தொடர்பின் பயன்பாடு களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்:
1. தகவல் அளித்தல்
2. தெரிந்தெடுக்கப்பட்ட தகவலை மதிப்பீடு செய்து
விளக்கமளித்தல்
3. சமுதாய பாரம்பரியங்களை ஒரு தலைமுறையிலி ருந்து பிறிதொரு தலைமுறைக்கு இட்டுச் செல்லுதல்
4. மகிழ்வித்தல்
5, மக்களை எழுச்சி கொள்ளச் செய்தல்
6. மக்களை மயக்குறச் செய்தல்
7. மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுதல்
8. மக்களுக்குத் தகுதியளித்தல்.
மேலே கூறப்பட்ட செயற்பாடுகளே தகவல் தொடர்பு மொழியின் பொதுவான பயன்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த
81

Page 55
உட்பிரிவுகள் இருப்பதற்கான ஆதாரமாக அவற்றில் பயன்படுத்தப் படும் மொழியமைப்பையும் மொழி நடையையும் கூறலாம். எடுத்துக் காட்டாக தகவல் தொடர்பில் விளம்பரங்களின் முக்கிய பயனாக எழுச்சிகொள்ளச் செய்தல் என்பதைக் குறிப்பிடலாம். எழுச்சி கொள்ளச் செய்தல் என்னும் பயன்பாட்டில் பின்வரும் பல்வேறு உட்பிரிவுகளைக் காணலாம். விளம்பரப்படுத்தப்படும் பொருளின் மேல் மக்சளின் கவனத்தைத் திருப்புதல், பொருளின் தன்மையைச் சோதித்தல், பொருள் பற்றிய சாதகமானதொரு மனவுணர்வை மக்களிடையே உருவாக்குதல், நம்பிக்கையையும் நாணயத்தையும் தோற்றுவித்தல், பொருளின் பண் பு, குணநலன்கள், பலன்கள் அமைப்பு போன்ற பலவற்றை விளக்கிக் கூறி அவற்றின் பயன் பாட்டை விளக்குதல் போன்றவற்றை உட் பிரிவுகளாகக் குறிப்பிட லாம். எடுத்துக்காட்டாக, விளம்பர உரைக்கோவைகளில் ஒரு சில வற்றில் வினையடைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடலாம் (நிச்சயமாக, பத்திரமாக, உறுதியாக, அழகாக, கவன மாக, உண்மையாக போன்றன). இச் சொற்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதைப் புள்ளியியல் அடிப்படையில் நாம் அணுகினால் இவ்வுண்மை புலப்படும். இவ்வாறு செய்வது அப்பொருள் பற்றிய நம்பிக்சையை மக்களின் மனதில் வளர்ப்பதற்கே யாகும்.
மக்கள் தொடர்பில் பயன்படுத்தப்படும் மொழி
மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளின் உள்ளுரையைக் கூர்ந்து நோக் கினால் அதில் உள்ள அனைத்துச் செய்திகளும் மக்களுக்குத் தகவல் அளிப்பதற்கெனவேயுள்ளன என்பது தெளிவாகும். பொதுவாக, செய்தித் தாள்கள், சமுதாயம், அரசியல், பொருளாதாரம், இனம், மொழி, அறிவியல், கலை போன்றவை தொடர்பான பிரச்சினைகள் நாட்டின் மூலைமுடுக்குகளில் எழும்போது அவற்றிற்கு முக்கியத் துவம் அளித்து வெளியிடுகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு கண் ணோட்டத்தில் வளைகுடாப் போரை அரசியல் பிரச்சினை என வருணிக்கலாம்; மற்றொரு கண்ணோட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே தோன்றிய மோதல் எனலாம் அல்லது சதாம் ஹ"சைன்புஷ் என்னும் தனி நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் எனவும் வேறொரு கோணத்திலிருந்து வருணிக்கலாம். எனவே செய்தி வெளி யிடுவோரின் விருப்பு வெறுப்புகளுக்கு இணங்கவும், செய்தியின் தன் மைக்கேற்பவும் செய்தி வெளியிடுவதில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் தமிழ்ச் செய்தித் தாள்கள் செய்திகள் தவிர்ந்த பிற தகவல்களையும் வெளியிட்டே வருகின்றன
82

அவற்றுள் அறிவிப்புகள், இன்றைய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தொலைக் காட்சி, வானொலி, நிகழ்ச்சிகள், சந்தை ஏற்ற இறக் கங்கள் காலநிலை, ரயில் - விமான கால அட்டவணை, வானிலை, குழைந்தை வளர்த்தல், சமைத்தல், தையல், அழகுக் கலை, கொள்முதல் போன்றனவும், மருத்துவம், வேலை வாய்ப்பு, மண மேடை, காணாமல் போனோர், பல்வேறு பொருட்கள் பற்றிய விளம்பரங்கள், ஏல வணிகம், மனை வணிகம், தள்ளுபடி விற்பனை போன்ற பல விவரங்களைத் தாங்கி வருகின்றன. இத் தகவல்கள் யாவும் ஏதேனும் ஒரு விதத்தில் சமுதாயத்தின் நடப்புகளை, அதில் நிகழும் செயல்களை மக்களுக்கு அறிவிப்பனவாக உள்ளன. மக்கள் தொடர்பு மூலங்களில் பயன்படுத்தப்படும் மொழி நடைகளுக் கிடையே காணக்கிடக்கும் வேறுபாடுகளைக் கண் டறி யு ம் கண் ணோட்டத்தோடு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (கருணாகரன், 1983 மணியன் 1986),
மட்கள் தொடர்பு மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற் களையும் தொடர் முறைகளையும் ஆய்வு செய்து அவற்றுள் காணக் கிடக்கும் முக்கிய பொதுமைக் கூறுகளின் அடிப்படையில் மக்கள் தொடர்புக்கென துறை வழக்கு ஒன்றினை உருவாக்கிடும் முயற்சியை கருணாகரன் (1979) விளக்கியுள்ளார்.
சொற்பொருள்களின் எல்லையை நீட்டித்தல் (குறி என்னும் சொல்லை எல்லை என்னும் பொருளில் பயன்படுத்துதல், எதிரொலி என்னும் சொல்லை விளைவு என்னும் பொருளில் பயன்படுத்துதல் போன்றன). அயல் மாதிரிகளின் அடிப்படையில் புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல் (அத்துமீறல் என்னும் சொல்லை பிறரது உரிமைகளில் தலையிடுதல் என்னும் பொருளிலும், புறக் கணிப்பு என்னும் சொல்லை உதாசீனம் செய்தல் என்னும் பொருளி லும் பயன்படுத்துதல் போன்றன.) வடமொழிச் சொற்களைப் புது விளக்கத்துடன் பயன்படுத்துதல் (கோஷ்டி என்னும் சொல்லை குழு என்னும் பொருளில் பயன்படுத்துதல், கோஷம் என்னும் சொல்லை உரிமைக் குரல் என்னும் பொருளில் பயன்படுத்துதல் போன்றன), வட மொழி, பெர்சோ அரபிக் போன்ற மொழிகளிலிருந்து சொற்களைக் கட னாகப் பெற்று பயன்படுத்துதல் (துஷ்பிரயோகம், பினாமி, போன்ற சொற்கள்), கடன் மொழி பெயர்ப்புச் சொற்களைப் பயன் படுத்துதல் (கறுப்புப் பணம், தொலைபேசி போன்றன), கடன் சொல்லைக் கூட்டுச் சொல்லாகப் பயன்படுத்துதல் (கெரோசெய், சஸ்பெண்ட் பண்ணு போன்றன) ஆங்கிலச் சொற்களைக் கடனாக வாங்குதல் (கண்டக்டர், கமிஷன் போன்றன), புது விதமான சொற்றொட ரமைப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (இந்திய விக்கட்டுகள் மள
83

Page 56
மளவென்று சரிவு போன்றன), புது விதமான சொற் செட்டுக்களை பயன்படுத்துதல் (பிடி வாரண்ட், மு ன் ஜாமீன் போன்றன) சொற் சுருக்கங்களைப் பயன்படுத்துதல் (யுனெஸ்கோ, ஐநா போன்றன), திரும்பக் கூறல் போன்ற பல உத்திகளை மக்கட் தொடர்பில் பயன்படுத்துவதால் இக்கூறுகள் மக்கட் தொடர்பு மொழியைக் குறிப்பனவாக ஏற்றுக்கொள்ளலாம்.
மேலும், மொழியமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையி லிருந்து விலகிச் செல்லக்கூடிய ஆனால் அதே நேரத்தில் மக்கட் தொடர்பில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, எடுத்துக் காட்டாக, | ர, ல | போன்ற ஒலிகள் சொல் முதலில் வருதல் (ரயில், லட்சம் போன்றன), ஆயுத எழுத்தை மொழி முதலில் பயன்படுத்துதல் (ஃபேன், ஃபைல் போன்றன) சொல்லிறுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் வருதல் (கிளார்க், பேங்க் போன்ற) தொடர் அமைப்பு முறை விலகல்கள் (நோயைச் சுட்டப் பயன்படுத்தப்படும் ஆ ... ஊ. அவுச் என்னும் தொடர், போன்றன) போன்ற பயன்பாடுகள் மக்கட்தொடர்பு வழக்குகளில் மிகப் பரவலாகத் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் காண்கிறோம்.
இவ்வாறு மொழியமைப்பில் எற்றுக் கொள்ளப்பட்ட முறையி லிருந்து விலகிச் செல்லுவது பின் வரும் விளைவுகளை மொழியில் ஏற்படுத்தியுள்ளது; மொழியில் சொற் சளஞ்சியத்தின் எல்லை விரிவு படுத்தப்பட்டுள்ளது. தொடரமைப்பு முறைகளில் புது அமைப்புக்கள் அறிமுகமாகியுள்ளன. மொழியமைப்பில் எளிமையாக்கம் நிகழ்ந் துள்ளது. உரைநடை பெருமளவில் வளர்ந்துள்ளது. மொழிபற்றிய விழிப்புணர்வு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசியலறிவு வளர்க்கப் பட்டுள்ளது. எழுத்து வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்குமிடையேயுள்ள தூரம் குறைக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் மொழியில் நிகழ்ந் துள்ள மிக முக்கியமான மாற்றங்களாகும்.
மக்கள்தொடர் மொழியில் காணப்படும் இத்தகைய அமைப்பு முறைகளின் சிறப்பியல்புகளைக் கண்டறியும் நோக்குடனும் மக்கள் தொடர்பு மொழியின் பயன்பாட்டில் எந்தெந்த பயன்பாடுகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன, எத் த  ைக ய செய்திகள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன என்னும் நோக்கத்துடனும் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டிருப்பினும் மொழியமைப்பையும் மொழிப்பயன்பாட்டையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் தொடர்பு மொழி வழக்கானது பிற
84

வழக்குகளிலிருந்து எங்கெங்கெல்லாம் மாறுபட்டு நிற்கிறது என்னும் ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டும். இத்தகையதொரு ஆய்வு மேற்கொள்ளப்படுமேயெனில் அதன் மூலமாக மக்கள் தொடர்பு மொழியை ஒரு பயன்பாட்டு மொழியாக உருவாக்க இயலும் ,
பயன்பாட்டு மொழியை உருவாக்கும் நுட்பங்கள்
இந்தியா போன்றதொரு வளரும் நாட்டில் மக்கட் கல்வி வயது வந்தோர்க் கல்வி போன்ற சமுதாயப் பணிகள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. நமது மக்களுள் கல்வியறிவு பெற்றிரா தோர் விழுக்காடு மிகுந்திருப்பதால் அவர்கள் யா வரும் மக்கள் தொடர்பு சாதனங்களின் வழியாக கல்வி புகட்டப்பட வேண்டிய வர்களாக உள்ளனர், அனைவருக்கும் கல்வியறிவு புகட்டி, கல்லா மையை ஒழிக்கும் வரை, நல்வாழ்வுத் திட்டங்களைச் செம்மையான விதத்திலும் வெற்றிகரமாகவும் நம்மால் செயற்படுத்த முடியாமல் போய்விடும். இந்நாளைய முறை சார்ந்த கல்வியில் நாம் உயர்தமிழ் வழக்கையும் இக்காலத் தமிழ் வழக்கையும் பயன்படுத்தி வருகிறோம். அதே சமயத்தில், முறைசாராக் கல்வி (முதியோர் கல்வி) யின் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர்ந்திருப்போமெனில் மேலே கூறப்பட்டவை போன்ற உயர் வழக்குகள் இப்பணிக்கு அவ்வளவாகப் பயன்படாமல் போய்விடக் கூ டு ம். எனவே, நமது அன்றாட மொழிப் பயன்பாடுகளில் காணப்படும் பொதுக் கூறுகளையும், அடிப்படைக் கூறுகளையும், கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும். முறைசாராக் கல்வியில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கானது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்திடலாகாது. மக்களைக் கல்வியறிவு பெற்றோராக ஆக்குவதும் உலக நடப்புக்களைப் புரிந்து கொள்ளச் செய்வதுமே நமது முக்கியக் குறிக்கோளாதலால், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்கிற்கு மிகவும் நெருக்கமான வழக்கையே அவர்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதில் பயன்படுத்த வேண்டும்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழக்குகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சொற்கள், தொடர்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு நிலைபேறு வழக்கை உருவாக்கி அதனை இக்கால செய்தித் தொடர்பில் பயன்படுத்தினால் அவற்றை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளுவர் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் அத்தகைய தொரு நிலைபேறு வழக்கில் பழஞ் சொற்களும் இலக்கிய வழக்கு களும் தவிர்க்கப்படுதல் வேண்டும்; ஏனென்றால் அவை இக்கால
85

Page 57
வழக்கில் எத்தகைய பயன்பாடும் பெற்றிருப்பதில்லை. மேலும், மொழியைப் பயன்படுத்துவோரின் கண்ணோட்டத்திலிருந்தும்கூட இத்தகைய எளிய வழக்குகள் வரவேற்கப்படுகின்றன. நிலைபேறு வழக்கானது மொழித் தூய்மை என்னும் மாயையில் புகுந்துவிடா மலும் குறுகிய மொழியுணர்வுகள் வட்டார உணர்வுகள் போன்றன வற்றிற்கு அடிபணிந்து விடாமலும் இருந்திட வேண்டும்.
பயன்பாட்டு மொழியை உருவாக்குவதில் நான்கு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன 1) மொழிப் பயன்பாட்டு எல்லைகளை வரையறை செய்து பின்பு அந்த எல்லைக்குள் மொழியின் முதன்மைப் பயன்களையும் துணைப் பயன்களையும் தீர்மானித்தல், 2) பயன்பாட்டுத் துறையில் இருக்க வேண்டிய மொழியின் வடிவம் மற்றும் உள்ளுரை ஆகியனவற்றைக் கண்டறிதல். 3) ஒரு குறிப் பிட்ட துறையின் பயன்பாட்டைப் பிரதிபலிக்கும் விதத்தில் சிறப் பான தொடரமைப்புக்களையும், சொற்களையும் கண்டறிதல். இத் தகைய தொடரமைப்பு முறைகளையும் சொற்களஞ்சியத்தையும் உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மொழி நடையிலோ அல்லது அமைப்பு முறையிலோ காணப்படும் வேறுபாடுகள் குறிப்பிடப்பட வேண்டும். 4) மேலே கூறப்பட்ட மூன்று உத்திகளையும் சரியான விதத்தில் ஒருங்கிணைத்தல். ஒரு மொழியின் பயன்பாடு பற்றிய ஆய்வை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் இருந்தும் அணுகலாம். மொ ழி யமைப்பில் எத்தகைய நிலைபேறாக்கம் செய்திடவேண்டும் என்னும் அணுகுமுறையிலும் இதனை மேற்கொள்ளலாம். இதன் வாயிலாக மொழியை, மொழிவழக்குகளை நிலைபேறாக்கம் செய்வது பற்றி நாம் அறிந்து கொள்ளுகிறோம். நிலைபேறாக்கம் பற்றி சிந்திக்கும் நிலையில் நமக்குள் பின்வரும் வினாக்கள் எழுகின்றன. 1) நிலைமொழி என்பது யாது? 2) ஒரு குறிப்பிட்ட வழக்கை நிலைபேறு வழக்கு என்று கருதுவதற்குக் காரணம் யாது? 3) நிலைபேறு வழக்கு என்பது யாரு டைய பார்வையில் நிலை வழக்காகிறது? இவை ஆய்வுக்கு உரியன. இவ்வினாக்களுக்கு விடையளிக்க முயலுகையில் இவற்றோடு தொடர் புடைய பின்வரும் வினாக்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி யுள்ளது, 1) மொழியை எக்காரணத்திற்காக நாம் நிலை பேறு வழக்காக்குகிறோம் ? 2) ஒரு குறிப்பிட்ட வழக்கை நிலை பேறு வழக்கு என்று கருதக் காரணம் யாது? இவ்வினாக்களுக்கான விடை தேடுகையில் மொழிப் பயன்பாட்டைப் பொறுத்தமட்டில் ஓர் ஒழுங்கை நம்மால் எங்கும் காணமுடிவதில்லை; அது சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது; துறைக்குத் துறை வேறுபடுகிறது; நபருக்கு நபர் மாற்றம் கொள்ளுகிறது என்னும் உண்மையை நாம் உணருகிறோம். மேலும், சமுதாயச் செயற்பாடு களுக்கும் பிற
88

வற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கையே எப்போதும் நிலை பேறு வழக்காகப் பயன்படுத்த முடியாது என்னும் உண்மையும் நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது. இதிலிருந்து, சமுதாயத் தேவைகளுக்கு ஏற்பவும், சமுதாயத்தின் நிலைக்கும், த ன் மை க்கு ம் ஏற்பவும் மொழிப் பயன்பாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட வழக்குகள் இருக்க வேண்டியது அவசியமானது என்பது தெளிவாகிறது. அதாவது, மொழியில் நிலைபேறாக்கம் செய்திட வேண்டுமென்றால் அது அம்மொழியைத் தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சமுதாயத்தின் பின்புலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ் மொழி வழக்குகள்
தமிழ் மொழியில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகள் இருப்பது போலத் தோன்றினாலும், மொழிப் பயன் பாட்டை நுணுகி ஆராய்வோமெனில் மூன்றாவது வழக்கு ஒன்று இருப்பதையும் நாம் காணமுடியும். இவ்வழக்கினை இக்கால இலக் கிய வழக்கு என்றோ நிலை - பேச்சு வழக்கு என்றோ அழைக்கலாம். பெர்குசென் (1958) போன்றோர்களால் வருணிக்கப்பட்டது போன்று தமிழ்மொழி இரு நிலை வழக்கு மொழியாயினும் தற் போதைய மொழிச் சூழலை நுணுகி ஆராயும் போது உண்மையில் மூன்று நிலை மொழி என்றே கூறவேண்டும். நாம் மூன்றாவதாகக் குறிப்பிடும் வழக்கும் கூட பிற இரு வழக்குகளைப் போன்றே பயன் பாட்டு வரையறைக்குட்பட்டே செயற்படுகிறது. அதாவது, உயர் இலக்கிய வழக்கானது இலக்கியக் கலந்துரையாடல்களிலும், சில விவாதங்களிலும், ஆய்வரங்குகளிலும், கற்றறிந்தோர்தம் படைப் Hக்களிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, சொல்லப் போனால் இது கற்றறிந்தோருக்காகக் கற்றறிந்தோரால் பயன்படுத்தப்படும் வழக்காகும். இந்த வழக்கின் பயன்பாட்டினைவிட இக்கால இலக்கிய வழக்கானது கூடுதலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, இவை யிரண்டும் வெவ்வேறு சமுதாயச் செயல்களை நிறைவேற்றப் பயன் படுத்தப்படுகின்றன; ஒன்று பயன்படுத்தப்படுமிடத்தில் பிறிதொன்று பயன்படுத்தப்படுவதில்லை. எனினும், இரு வழக்குகளைக் கலந்து பயன்படுத்தும் சூழல் இடைக் காலத்திலிருந்தே தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது, (சிங்காரவேலன், 1971).
ஒரு வழக்கைத் தேர்வு செய்து அதைப் பாட நூல்களில் பயன் படுத்தும் போது அவ்வழக்கைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் உணர்வைக் கற்போரிடம் தூண்டுவதுடன் கற்கும் செயலும் விரைவு படுத்தப்படும். இலக்கிய வழக்கினைப் பிந்திய நிலையில் கற்போருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய அணுகு முறையானது
87

Page 58
வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் கல்வி கற்போருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகிய தமிழ்த் திரைப்படங்கள் யாவும் இலக்கிய வழக்கையே கொண் டிருந்தன. எனினும் அறுபதுகளுக்குப் பின்னர் வெளியாகிய திரைப் படங்களும் நாடகங்களும் இப்பாதையிலிருந்து விலகிச் சென்றன. சிறிது சிறிதாகப் பேச்சு வழக்கு மக்களின் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ஒரு வகையான நிலைபேறு வழக்கு உருவாக்கப்பட்டு இவ் வழக்கானது இலக்கிய வழக்கினை அகற்றியது. மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்தை மக்களும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். ஏனெனில், இதன் வாயிலாக செய்திப் பரி மாற்றம் செம்மையாகவும் எளிமையாகவும் மாறியது எனலாம். இது நிகழ்வதற்குக் காரணம் இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற் கும் இடையே நடந்த தழுவலேயாகும் (சண்முகம்பிள்ளை, 1965); இவ்வாறு திரைப்படம் போன்ற மக்கள் தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மொழி வழக்கானது சில சிறப்புக் கூறுகளைப் பெற்று பயன்பாட்டு வழக்காக முகிழ்த்தது.
இருநிலை வழக்குச் சூழலானது பொதுவான நிலையான தன்மை கொண்டது என்று கருதப்பட்டாலும், மொழித் தழுவலின் காரண மாக சில வேளைகளில் வலுவிழந்தே காணப்படுகிறது. அதே சம யத்தில் இது மொழியில் காணப்படும் வேறுபாடுகளைக் களைகிறது. இத்தகைய நிலைபேறாக்கச் செயல்முறையைப் பின்வரும் மாதிரியின் உதவி கொண்டு விளக்கலாம் (சேங்காப், 1972).
மொழியில் நிலைபேறாக்கச் செயல்
I 2
விரைந்த மொழியில் வேறுபாடு
சமுதாய உ, விளைவாக களையும் தழுவல் L, மாற்றம் களையும் கண்டறிதல்
3. - - - 4 5
SSSMSSSSMSSSMSSSSSSASASASASASASASq SAS vommonww.
பிரிக்கும் முறைப்படியான செயல்/ o நிலை இணைக்கும் --> நிலை பேறாக்க -མས་མ། ཨ་ཁམཚ2>
செயல் முயற்சிகள் வழக்குகள்
88

மொழியில் நிகழும் மாற்றங்கள் சமுதாயத்தின் செய்திப் பரி மாற்றத் தேவைசளுடன் நேரடியான அல்லது மறைமுகமான உறவை கொண்டிருக்கின்றன. நிலையாக்கம் செய்வதின் மூலமாக செய்திப் பரிமாற்றத்தில் துல்லியத் தன்மையும் தெளிவும் செம் மையும் ஏற்படுகின்றன. நிலைபேறாக்கத்தின் மேற் கூறப்பட்ட மொழி யியற் குறிக்கோள்களன்றி மொழியியல் சாராத குறிக்கோள்கள் சிலவும் உள்ளன. நிலைபோறாக்கம் செய்வதால் சமுதாய - அரசியல் வேறுபாடுகளை நாம் அடைந்திட முடியும். இருநிலை வழக்குச் சூழலில் கூட மொழி நிலைபேறாக்கத்தின் போது இதே மாதிரி யான விளைவுகள் ஏற்படுகின்றன.
மக்கள் தொடர்புச் சசதனங்களில், அதிலும் குறிப்பாக செய் தித்தாள்களில், பயன்படுத்தப்படும் தமிழ் வழக்கில் பிற துறைப் பயன்பாடுகளில் காணக் கிடைக்காத பல மொழியியற் சிறப்புக் கூறுகள் இருக்கின்றன. அதே போன்று, வானொலியில் சிறார்களுக்கான நிகழ்ச்சிகளைப் படைப்பதில் பயன்படுத்தப்படும் தமிழ் வழக்கில் எளிய தொடரமைப்பு முறைகள், மிகைக் கூறுகள் மிகுதி, ஒரே மாதிரியான அமைப்பு முறையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துதல் போன்ற பண்புகளைக் காண்கிறோம். இது போன்ற பண்பினை கற்றோருக் கென ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தமிழ் வழக் கில் நாம் காணவியலாது. அப்படியே அவை பயன்படுத்தப்பட்டிருந்தா லும் அவை மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஒரு மொழியில் பயன்பாட்டு"வழக்கை உருவாக்குகையில் மேற் கொள்ளப்படும் மொழியியல் மாற்றங்கள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சமுதாயத்தின் செய்திப் பரிமாற்றத் தேவை களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும். மொழியில் நிகழும் பெரும்பான்மையான மாற்றங்களுக்குச் செய்திப் பரிமாற்றத்தில் செம்மை செய்தலே காரணமாக அமைகிறது. எனினும், இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாகவும் ஏனோதானோ என்னும் விதத் திலும் நிகழ்ந்துவிட நாம் அனுமதித்திடலாகாது, இவற்றைச் சரி யான விதத்திலும் முறையிலும் அமையும் படியாக நெறிப்படுத்திட வேண்டும். அதாவது, ஒரு குறிப்பிட்ட துறையின் பயன்பாட்டிற்கென வடிவமைக்கப்படும் மொழியானது நன்கு திட்டமிடப்பட்டு உருவ: க் கப்பட்டதாக இருந்திட வேண்டும். மொழித் திட்டமிடுதலின் இரு முக்கிய செயல்களான புதுமையாக்கப் பணியும் நிலைபேறாக்கப் பணியும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதி லிருந்து புதுமையாக்கமும் நிலை பேறாக்கமும் கூட செய்திப் பரி மாற்ற அமைப்போடு நேரடியாகவோ மறைமுகமாகவோ உறவு கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஏனெனில், மொழியின் பயன்பாட்டு வழக்கை உருவாக்குவதன் முக்கிய காரணமே செய்திப்
89

Page 59
பரிமாற்றத்தில் செய்மை ஏற்படுவதற்காகத்தான். மேலும், இவ்விரு பணிகளையும் நாம் மேற்கொள்ளுவதன் மூல ம் மொழியில் உயரிய அளவில் துல்லியத் தன்மையும், தெளிவும், புலப்பாட்டுத் திறனும் கூடுகின்றன.
இக்கால அறிவியல் தொழில் நுட்பத் துறைக்கான செய்திப் பரிமாற்றம்
சமுதாயத்திற்கு அறிவியல் பற்றிய செய்திகளை அளித்திட மொழியை இரு நடைகளில் பயன்படுத்தி வருகிறோம். ஒரு நடை முறைப்படியான அறிவியல் அறிவு புகட்டுவதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது; இன்னொரு நடையானது மக்களுக்கு அறிவியலறிவைப் புசட்டுவதில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவது நடையில் நிலை பேறு வழக்கும் இரண்டாவது நடையில் பரவலாகக் காணப்படும் பேச்சு வழக்கும் பயன்படுத்தப்படுகின்றன. முதற் பயன்பாடு சிறப்புப் பயன்பாடாகும். இரண்டாம் பயன்பாடு ஜனரஞ்சகப் பயன்பாடா கும். முன்னதில், கலைச் சொற்பயன்பாடுகளும் மொழியின் நிலை பெற்ற அமைப்புக்களும் மிகுதியாகக் காணப்படும், பின்னதில் கலைச் சொற்களும் நுட்பப் பயன்பாடுகளும் அகற்றப்பட்டு எளிமை யான அறிவியல் விளக்கங்கள் விரைவில் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் கொடுக்கப்பட்டிருக்கும். செய்திப் பரிமாற்ற மொழியின் புறவடிவில் காணப்படும் இருவகையான பிரிவுகளுக்கு இவைகளே காரணமாக அமைகின்றன. இந்த இரு வகைகளுள் இரண்டாம் வகை நடையானது தற்போதய இந்தியச் சமுதாயத்தின் சமுதாய மொழி யில் கண்ணோட்டத்திலும் பின்தங்கிய கல்வி நிலை, பொருளாதார வளர்ச்சி குன்றிய நிலை ஆகியவற்றின் பின்புலத்திலும் மிகவும் பய னுள்ளதாக அமையும் என்று நம்பலாம். இத்தகைய மொழி நடை யைப் பயன்படுத்தி செய்திப் பரிமாற்றத்தை எளிதான செயலாக ஆக்கலாம்.
அறிவியல் உரைக்கோவை
அறிவியல் உரைக்கோவையானது பல்வேறு நிலைகளில் காணப்படு கிறது. முதலாம் நிலையில் உரைக்கோவையின் அனைத்துப் பயன்களும் கொடுக்கப்படுகின்றன. இரண்டாம் நிலையில் பனுவலின் (text) பெரும்பான்மையான பகுதிகள் கொடுக்கப்படுகின்றன. மூன்றாம் நிலையில், உரைக்கோவை முறைகளான வருணனை முறை, வரை யறை குறை, பகுப்பு முறை, வரைபடம் - விளக்க முறை போன்றன உள்ளன. நான்காம் நிலையில் சொல்லணிக் கலை உத்திகள் உள்ளன. சொல்ல வேண்டிய செய்தியை எந்தவொரு அமைப்பில் சொல்ல
90

வேண்டும் என்று எழுதுவோர் / பேசுவோர் தீர்மானிக்கிறாரோ அத னையே சொல்லணிக் கலை என்று நாம் கூறுகிறோம். ஒரு குறிப் பிட்ட செய்தியைக் கூறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட கூறுகளுக் கிடையேயுள்ள உறவுகளையும் இவ்வுத்திகள் வெளிப்படுத்துகின்றன. சொல்லணிக் கலை உத்திகளாவன:
1. ஒழுங்கு முறை
அ. கால ஒழுங்கு <器· இடவொழுங்கு
இ. செயல் - விளைவு
2. அமைப்பு முறை
அ. செயல் - விளைவு
ஆ. சிறப்புத் தன்மையின் வரிசை முறை இ. ஒப்பீடு - வேறுபாடு
ஈ. ஒப்பாக்கம்
உ. எடுத்துக் காட்டு தருதல்
26a. 6.60) Julth
நாட்டுப்புற இலக்கியத்தில் மொழி வழக்கு
மக்கள் தொடர்பிலும் மக்கள் கல்வியிலும் நாட்டுப்புற வழக் காறுகளும், நாடுட்ப்புற இலக்கிய வகைகளும் நாட்டுப்புறக் கலைகளும் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதை இந்தியச் சூழலில் நாம் காண்கிறோம். சில விவரங்களைச் செய்திப் பரிமாற்றம் செய்வது மிகவும் சிக்கலான காரியமாக இருக்கும். இத் தகைய விவரங்களைக் கூட பொருத்தமானதொரு நாட்டுப்புறக் கலை அல்லது நாட்டுப்புற இலக்கிய நடையின் வாயிலாக எளிதாகவும் செம்மையாகவும் செய்திப் பரிமாற்றம் செய்திட முடியும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியில் நிகழ்வதை நாம் காண்கிறோம். திரைப் படங்களிலும், மேடை நாடகங்களிலும், மக்கள் இலக்கியங் களிலும், வானொலி போன்றவற்றிலும் இருபது இருபத்தைந்தாண்டு களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்கும் தற் போது பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ்மொழி நடைக்கும் மிகுந்த வேறுபாட்டை நாம் அறிகிறோம். இலக்கிய வழக்கு என்று போற்
91

Page 60
றப்படும் உயர் தமிழ் வழக்கைப் பயன்படுத்தும் சில மக்கள் தொடர் புச் சாதனங்கள் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாகி இருப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் இத்தகைய வழக்குகள் அவை பயன்படுத்தப்படும் மக்கள் தொடர்புச் சாதனங்களின் தன் மைக்கு ஏற்றனவாக இல்லாமல் இருப்பதேயாகும்.
மக்கள் தொடர்பிலும் மக்கள் கல்வியிலும் விளம்பரங்களும் அறிவிப்புகளும் சிறப்பான பணியாற்றுகின்றன. இவை மக்களுக்கு நீதி கற்பிப்பனவாகவும், கல்வி புகட்டுவனவாகவும், வாணிபம், சமு தாய உறவு ஆகியவற்றை வளர்பனவாகவும் உள்ளன, இத்தகைய விளம்பரங்களாலும், அறிவிப்புக்களாலும் சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களில் வாழும் மக்களும் பயனடைகின்றனர். இக்காலத் தமிழ் மொழிப் பயன்பாட்டை உற்று நோக்கினால் அதில் நாட்டுப்புற வழக்குகளும், இலக்கியங்களும், உ த் தி க ஞ ம், மிகுந்திருப்பதைக் காணலாம்.
பின்வரும் எடுத்துக் காட்டுகள் இவ்வுண்மையைக் கூறுவன வாக உள்ளன;
1. நபர் 1 பொன்னி, ஏன் உம்முன்னு மூஞ்சிய தூக்கிவச்சிகிட்டு
இருக்கே?
நபர் 2; நான் ஒங்ககிட்ட காரு பங்களா நக நட்டு வேணு மின்னா கேட்டேன். தைலா சில்க் சென்டர்ல ஒரு பொடவ வாங்கித்தாங்கண்ணுதானே கேட்டேன்.
நபர் 1: அட இதுக்கா புள்ள இப்படி கோவிச்சிக்கிறே. சரி, இப்பவே வா போய் தைலா சில்க் சென்டர்ல ஒரு பொடவ வாங்கிகிட்டு வந்துடலாம்.
2. நபர் 1; ஏன் சார் உங்க பேன்ட், சர்ட் எல்லாம் இவ்வளவு வெண்மையாக இருக்கே அதுக்கு என்ன காரணம்?
நபர் 2; எங்க ஆத்துல எம்பவும் ரீகல் சொட்டு நீலம்தான்
போங்க.
நபர் 1; நீங்க குடும்பத் தலைவி என்ற முறைல கேட்கிறேன் ஒங்க பொடவ மட்டும் இவ்வளவு வெளுப்பா இருக்கே என்ன காரணம்?
நபர் 3; எங்க வீட்ல எப்பவும் ரீகல் சொட்டு நீலந்தான்
உபயோகிப்போம்.
92

நபர் 1: என்னா பாப்பா உன் கவுண் இவ்வளவு வெண்மையா
இருக்கே, என்ன காரணம்?
நபர் 4 எங்க வீட்ல எப்பவும் ரீகல் சொட்டு நீலந்தான் உப
யோகிப்பாங்க,
மக்கள் தொடர்பிற்கு நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத் துவதுடன் நாட்டுப்புற வழக்கும், விடு கதைகளும், புதிர்களும், இசை யும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் மொழி யின் புலப்பாட்டுத் திறனை எளிமைப்படுத்த இயலுவதுடன் இத் தகைய செய்திகளைக் கேட்க வேண்டும் என்னும் உணர்வையும் மக்க ளிடையே வளர்க்க முடிகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளில் கட்புல செய்திப் பரிமாற்றமும் இருப்பதால் இவை மக்களை மிகவும் கவர் வனவாக இருக்கின்றன. இதனால் செவி - கட்புல நிகழ்ச்சிகள் மக்க ளின் மேல் மிகுந்த தாக்கம் செய்வனவாக உள்ளன. நாட்டுப்புறக் கதைகளும், பிற கலைகளும் இசையும் மக்களிடம் மிகவும் நெங்கிய உறவைக் கெண்டிருப்பதால் நாட்டுப்புற மக்கள், தாம் பிற சமு தாயத்தினரால் ஒதுக்கப்படுவதில்லை என்னும் உணர்வு கொள்ளு கின்றனர். எனவே நாட்டுப்புற வழக்காறுகளைக் கொண்ட செய் திகள் அவ்வளவாகக் கல்வியறிவு பெற்றிராத நாட்டுப்புறங்களில் வாழும் வளரும் சமுதாயத்தைச் சேர்ந்தோரை எளிதாகச் சென்ற டைகின்றன. மக்கள் தொடர்புச் சாதனங்கள் பலவற்றில் இத்தகைய பயன்பாடுகள் பல இருப்பதை நாம் சுட்டிக் காட்டலாம். இக்கால இலக்கியங்களில் நாட்டுப்புற வழக்காற்றுக் கூறுகள்
பொதுவாக இக்கால இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் வழக்காக நிலைபேறு வழக்கே இருந்து வருகிறது. ஏட்டு இலக்கியங் களில் நிலைபேறு வழக்கு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட்ட கால மும் இருந்தது. ஏட்டு இலக்கியங்களில் பேச்சு வழக்குக் கூறுகளைப் பயன்படுத்துவது தரக் குறைவானதாகக் கருதப்பட்டதுண்டு. நாட்டுப் புற இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள் கூட அவற்றிலுள்ள நாட்டுப்புற வழக்குக் கூறுகளை நீக்கிவிட்டு நிலைவழக்குக் கூறுகளைப் பயன்படுத்தினர். பல்வேறு செய்திப் பரிமாற்றச் சாதனங்களும்கூட இத்ததகைய மொழிப் பயன்பாட்டையே பின்பற்றின. இதன் காரணமாக பேச்சு வழக்குகள் இலக்கியங்களில் இடம்பெறுவது தடைசெய்யப்பட்டது. ஆயினும், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இதில் ஒரு மாற்றம் பிறந்தது. பாரதியாரின் படைப்புக்களில்-கவி தைகள், உரைநடை இரண்டிலும் - நாட்டுப்புற இசையும், வழக் காறுகளும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இடம் பெற்றன. சாதாரண மக்களுக்கான இத்தகைய மொழி நடையை பிரபல மடையச் செய்தவர் பாரதியாரே என்று நாம் கூறலாம். இத்தகைய
9.

Page 61
மொழிப் பயன்பாட்டின் உதவியால் மட்டுமே பரந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் மூலைமுடுக்குகள் எங்கும் நுழைய முடியும் என்று நம்பினார். இதனை அவர்தம் பின்வரும் சொற்களால் தெளிவாக நாம் அறிந்துகொள்ளலாம்.
'பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம்' பாரதியார் இக்கொள்கையைப் பேச்சளவில் மட்டும் கடைப் பிடிக்காது செயலளவிலும் கடைப்பிடித்தார். பின்வரும் அவரது படைப்புக்கள் இதனைத் தெளிவாக்குகின்றன:
'நன்றி கெட்ட விதுரா - சிறிதும் நாணமற்ற விதுரா தின்ற உப்பினுக்கே - நாசம் தேடுகின்ற விதுரா ?
"சகோதரிகளே ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே பெண் விடுதலைக்காக இந்த கூடிணத்திலே தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம்'
மொழிப் பயன்பாடு எளிமையானதாகவும், எளிதில் பயன் படுத்தக் கூடியதாகவும், பொதுமையானதாகவும் இருந்திடும்போது செய்திப் பரிமாற்றம் சிறப்பான விதத்தில் நடைபெறும் என்பதே பாரதியின் கோட்பாடாக இருந்தது. இதன் பயனாக செய்திப் பரிமாற்றம் எளிமையானதாக ஆக்கப்படுவதுடன் செய்தி யாருக்குச் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு உரிய விதத்தில் எவ்விதமான தடங்கலுமின்றிச் சென்றடையும். எனவே, செய்திப்பரிமாற்றத்தில் வெற்றி பெற்றிட , நாட்டுப்புற இலக்கியங்களில் காணும் பயன் பாடுகளைப் பாரதியார் பயன்படுத்தினார். இதனால் தம் கவிதை களிலும் கட்டுரைகளிலும் உரைக்கோவை அமைப்பில் எளிமை யாக்கம் செய்திட முடிந்தது. நாட்டுப்புற வழக்காறுகளுடன் நாட்டுப் புற இசை நயத்தையும், நாட்டுப்புற கலைகளையும் இன்ன பிறவற்றையும் பயன்படுத்திக்கொள்ள அவர் தவறவில்லை
எடுத்துக்காட்டாக, கும்மி, சிந்து, வண்டிக்காரன் பாட்டு போன்ற பாடல்களைக் கூறலாம்.
94

'கும்மியடி தமிழ் நாடு முழுவதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மைகண் டோமென்று கும்மியடி"
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்லகாலம் வருகுது ... சாதிகள் சேருது .
.ஐயோவென்று போவான்'
'மண்வெட்டிக் கூலிதின்ன லாச்சே! - எங்கள் s o - GLunrg Ggf. ''
இப்பாடல்களில் நாட்டுப்புற வழக்காறுகள் மிகுந்துள்ளதைக் கானலாம்.
புதினங்கள்
புதினங்களில் வட்டார வழக்குகளும் சமுதாய வழக்குகளும் பாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களில் பெரு மளவில் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். சிலவேளை களில் புதினங்கள் முற்றிலுமாக ஒரு குறிப்பிட்ட வட்டார வழக் கையோ சமுதாயவழக்கையோ அடிப்படையாகக் கொண்டு எழுதப் படுவதும் உண்டு. இத்தகைய புதினங்கள் பிற புதினங்களில் இருந்து மாறுபட்டு ஒரு குறிப்பிட்ட நடையைப் பின்பற்றுகின்றன இதன் மூலமாகத் தமது தனித்தன்மையை அவை பறைசாற்று கின்றன. இப்படிப்பட்ட புதினங்கள் மக்களின் பரவலான வரவேற் பைப் பெற்றிருப்பதால் இதழ்களில் இவற்றின் பயன்பாடு மிகுந் துள்ளது. இத்தகைய மொழி நடைகளின் அடிப்படையில் தமிழ்ப் புதினங்களையும் புதின ஆசிரியர்களையும் நாம் பாகுபடுத்த முடியும். இத்தகைய பயன்பாடுகள் மூலம் புதின ஆசிரியர்கள் படிப்போர் மனதில் தாம் விரும்பும் உணர்வை ஏற்படுத்த முடிகிறது. படிப் போரும் இதனால் புதினத்துடன் ஒன்றிவிட்ட உணர்வைப் பெறு கின்றனர்,
பின்வரும் எடுத்துக்காட்டுகள் இதனை விளக்குவனவாக உள்ளன;
95

Page 62
1. 'நாயே ... என்ன விடு .என்னத் தொடுறதுக்கு நீ Այո (5ւ-IT ... , ., ... அவள் நல்ல பாம்பப் போல் அவனைப் பார்த்து சீறினாள்'
2. **ஆமா இவிய நாயம் பேச வந்துட்டாவ. கைய கடிச்சி
இன்னா ரெத்தம் பாயுவே இது'
இத்தகைய மொழிநடையை அமைப்பதன் பயனாக வாசகர்கள் பலர் புதினத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனர். நடையில் உள்ள எளி மையும், செய்திப் பரிமாற்றத்தில் செறிவும், இயல்பான படைப்பும் கருத்தில் தெளிவும் இகுப்பதால் இத்தகைய புதினங்கள் படிப் போரால் மிகவும் விரும்பி வரவேற்கப்படுகின்றன.
சிறுகதைகள்
இக்காலத் தமிழ் சிறுகதைகளில் சொல், தொடர், பழமொழி போன்ற பல்வேறு அளவில் நாட்டுப்புறக் கூறுகள் (பேச்சு வழக்கு) பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். புதினங்களில் காணப் படுவதைப்போன்றே சிறுகதைகளிலும் கூட வட்டார மற்றும் சமு தாய வரிக்குகளைப் பயன்படுத்தும் ஆசிரியர்களையும் அவர்கள் படைக்கும் சிறுகதைகளையும் வகைப்பாடு செய்திட முடியும்.
இத்தகைய இலக்கியங்கள் சிறு அளவிலானவையாக இருப்!! தால் கதை முழுவதுமே கூட நாட்டுப்புற வழக்காறுகளைப் பயன் படுத்தி எழுதப்படுவதையும் நாம் பார்க்கிறோம். படைக் கப்பெறும் பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் அவர்களது வட்டார சமுதாய இயல்புகளுக்கு ஏற்பவும் இத்தகைய நடை பின்பற்றப்படுகிறது. இத்தகைய உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுகதைகளில் யதார்த்தத்தைப் புகுத்த முடிகிறது. மேலும், இதனால் மொழிப் பயன்பாட்டில் காணப்படும் மிகைகளும் ஒழிக்கப்படுகின்றன. விளைவாக, செய்திப் பரிமாற்றம் எளிதாக நடைபெற வழியுண் டாகிறது. மேலே கூறப்பட்ட இரு செய்திகளும் செய்திப் பரி மாற்றத்திறன் மற்றும் செய்திகளின் புரிதிறன் ஆகிய கண்ணோட் டத்தில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. செய்திப் பரிமாற்றத் திறனும் புரிதிறனும் மிகுதியாக இருந்தால்தான் செய்திப் பரி மாற்த்தின் குறிக்கோள்கள் எட்டப்படும். இக் குறிக்கோள்கள் எட் டப்படாவிடில் மொழிப்பயன்பாடு பயனற்றதாகவும் பொருளற்ற தாகவும் ஆகிவிடுகிறது. -
96

எடுத்துக்காட்டு
'இந்த ஜோடில இந்த செவலக் காளை கருமைலயவிட ரெண்டு விரக்கட குள்ளம். ஜோடி மாட்ல ஏதாவது ஒன்னு ஒரு விரக்கட குள்ளமா இருக்கலாம்'
மேலே உள்ள எடுத்துக்காட்டைப் படிக்கும் ஒருவர் அதில் கூறப்பட்டுள்ள செய்தியைப் புரிந்து கொள்ளுவதுடன் கதைமாந்தர்கள் அவர்களின் பின்புலம் போன்ற பல்வேறு தகவல்களையும் உடனடி மாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. எனினும், இத்தகைய மொழி நடையில் ஒரு குறைபாடும் உள்ளது. ஒரு கதை முற்றிலுமாக குறிப்பிட்டதொரு வட்டார வழக்கைக் கொண்டு படைக்கப்படுவ தால் பிறவட்டாரங்களைச் சார்ந்தோருக்குப் புரியாத பல மொழிக் கூறுகள் அதில் நுழைந்துவிட வாய்ப்பு உண்டாகிறது. இதனால் தான் தமிழ்மொழியில் பொதுக் கிளைமொழி அகராதி ஒன்று தேவை என்னும் வாதம் வலுப்பெறுகிறது. ہ۔
இக்கால உரைநடை
பல்வேறு விதமான செய்திப் பரிமாற்றங்சளுக்குத் தேவைப் படும் இக்கால உரைநடையானது எளிமையானதாயும் மிகைகளற்ற தாயும், நுட்பமானதாயும், தெளிவானதாயும் பொருள்மயக்கமற்ற தாயும் இருந்திடல் வேண்டும். இப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட உரைநடையானது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு உரைக்கோவையிலுள்ள தொடர்களில் சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் அளித்திட முடியுமென்றாலும் அது ஒரு முழுமையான பொருள் மயக்கத்தையோ, அல்லது புரிந்து கொள்ளவியலாத தன்மையையோ கொடுத்துவிடாது. எனவேதான், இந்நாட்களில் உரைநடையில் எழுதுவது பரவலாக விரும்பப்படுகிறது. சமுதாயத்தில் நிகழும் புதுமையாக்கத்தின் பயனாகத் தோன்றும் பற் பல புதுக்கருத்துக்களுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் கடன்சொற் களையோ, புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களையோ பயன்படுத் துகிறோம். இத்தகைய சொற்களுள் பலவற்றைச் சுட்டுவதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழிவழக்கிலிருந்து சொற்கள் கிடைக் கலாம், ராஜநாராயணன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய எழுத்து வழக்குக் கூறுகளையும் அயல் மொழிக் கூறுகளையும் தம் படைப்புக்களில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நடையைத் தமிழ்மொழிக்கு அறிமுசம் செய்துவைத்தவர் பாரதியாரே என்றுகூடக் குறிப்பிடலாம். மேலும் இதனால்
97,

Page 63
மொழியின் சொற்களஞ்சியம் பெருகுவதுடன் இக்காலச் செய்திப் பரிமாற்றத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் மொழி வளர்ச்சி பெறுவதும் சாத்தியமாகிறது. இதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழியின் உரைநடைப் படைப்புக்கள் பலவற்றை நாம் சுட்டிக் காட்டிட முடியும்.
முடிவுரை
தமிழ் மொழியானது அமைப்பிலும், பயன்பாட்டிலும் மாற்றங் களைக் கொண்ட பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட இருநிலை மொழியாக விளங்குகிறது" பேச்சு வழக்கானது வட்டார அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் மாற்றங்களைக் கொண்ட பல்வேறு கிளைமொழி களாகப் பிரிந்துள்ளது. எழுத்து வழக்கானது கற்றோர் மட்டுமே அணு கக்கூடிய வழக்காக இருப்பதோடு பேச்சு வழக்கிலிருந்து மாறுபட்ட தாகவும் விளங்குகிறது. சமுதாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இவ்வளர்ச்சி பற்றிய செய்திகள் உரியவிதத்தில் மக்களிடம் சென்ற டைய வேண்டும் என்னும் கருத்திலும் தமிழ்மொழியில் பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதற்கென்று, கற்றோரும் புதிதாகக் கல்வி யறிவு பெற்றோரும் பயன்பெறும் விதத்தில், பேச்சுவழக்கு மற்றும் எழுத்து வழக்கு ஆகிய இரு வழக்குக் கூறுகளையும் சாராமல் இயங்கவல்ல பயன்பாட்டு வழக்குகள் பலவற்றைப் படைத்திட வேண்டும். பயன்பாட்டு வழக்குகள் ஏன் தேவைப்படுகின்றன என் பதற்கு இதுவே மூலகாரணமாக அமைகின்றது.
பயன்பாட்டு வழக்கில் சேர்க்கப்படவேண்டிய மொழியியற் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவ்வழக்கானது எழுத்து வழக்குக் கூறுகளையோ பேச்சுவழக்குக் கூறுகளையோ கொண்டு எழுத்து வடிவத்திலோ அல்லது பேச்சு வடிவத்திலோ இருந்திடலாம். இவ்வழக்கினை எளிய வழக்கு அல்லது சிக்கலான வழக்கு என்று பேசுபொருளின் தன்மைக்கு ஏற்பவும் செய்தி சென்றடைய வேண்டிய மக்களின் தன்மைக்கு ஏற்ப வு ம் இருவகையாகப் பிரிக்கலாம். செய்தி சென்றடைய வேண்டிய மக்களின் பின்புலத்திற்கேற்ப எளிய நடையிலோ அல்லது விரிவான நடையிலோ அது அமையலாம். அதில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அமைப்பு முறைகளும், சொற்களும் இடம் பெற்றிருப்பதோடு அவை சிறப்பான விதத்தில் கையாளப்பட்டிருக்க வும் வேண்டும். மேலும், அவ்வழக்கின் செய்திப் பரிமாற்றக் குறிக் கோள்கள் யாவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
98

பல்வேறு தகவல் தொடர்புச் சாதனங்களில் தற்போது பயன் படுத்தப்படும் பயன்பாட்டு வழக்குகள் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்தும் வேறுபாடு செய்தும் காட்டுவதற்கென்று விரிவானதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகையதொரு ஆய்வு மேற்கொள்ளப்படுமேயெனில் அதன் பயனாகத் தமிழ் மொழியில் உள்ள பயன்பாட்டு வழக்குகளை அறிந்துகொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
பயன்பட்ட நூல்கள்
கருணாகரன், க. (1983) மொழி வளர்ச்சி
மணிவ சகர் பதிப்பகம், சிதம்பரம்
மணியன், ரி. (1986) பத்திரிகைத் தமிழ்
தமிழ் நூலகம், சென்னை.
Agesthialingom S. ard Karunakarn, K. (eds)(1980) Sociolinguistics and Dialectology (Seminar Papers), Annamalai University ; Annamalainagar.
Annamalai, E. (1980) 'Simplification as a Process of Modernization
in Sociolinguistics and Dialectology (Seminar Papers) (eds) S. Agesthialingom and K. Karunakaran,
Ferguson, C. A. (1971) 'Language Development' in language Structure and Language Use (ed.) A S. Di , SUP : Stanford,
Fishman, J. A. (1972) language and Nationalism,
Academic Press New York,
Karunakaran. K. (1979) 'Language Planning in Multilingua
Context' in 40; 178 - 18S
Le Page, R. B. (1964) : National Language Ouestion,
OUP : London.
Rubin, J. et al (1971) Can Language be Planned? HUP
Honolulu
Sankoff, G. (1972) 'Language Use in Multiligual Societies : Some Alternative Approaches', in Sociolinguistics, Pride and Holmes (eds.) Penguin : Harmondsworth
Shanmugam Pillai, M. (1965) 'Caste isoglosses in Kinship
Terms' A 7. 4. 59 - 86.
99

Page 64
தமிழிலே தொடர்பாடல் இன்று நாம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள்
சி. தில்லைநாதன்
மனித வாழ்வு செவ்வனே அமைவதற்குத் தொடர்பாடல் இன்றியமையாததாகும். பொதுத் தொடர்புகள் ஏற்றமுறையில் அமையாதவிடத்துப் பல குழப்பங்களுக்கு அது காரணமாகலாம் மனிதர் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்த்த சாதனம் மொழியாகும், அது செய்தி களைப் பரிவர்த்தனை செய்வதற்கான சாதனமாக மட்டுமன்றிச் சமுதாயத்தை உருவாக்கும் சக்தியாகவும் வளர்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது, சமுதாயப் பிராணியான மனிதன் குழைந்தைப் பருவமுதலே தொடர்புகொள்ள வாழைகிறான், ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ள எத்தனிப்பது மனித இயல்பு என்பர். மொழியினைத் தெய்வத்தினால் தோற்றுவிக்கப்பட்டுப் பக்தி செய்து காத்து வளர்த் திடக் கிடப்பதாக அன்றி சமூகத் தொடர் பாடலுக்கான சாதன மாக நோக்குதல் வேண்டும்,
காலத்தின் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில் எமது மொழி வளர்க்கப்படுவதும் கையாளப்படுவதும் அவசியமாகும். காலப் போக்கில் எம்மைச் சூழ நிகழும் மாறுதல்களால் பழையன கழி தலும் புதியன புகுதலும் த வி ர் க் க முடியாதவையாகும் ஒரு மொழியின் சொற்களஞ்சியம் அதனை உபயோகிப்பவர்களின் சமூ கத்தேவைகளைப் பொறுத்ததென்பர். சஹாராப் பாலைவனத்தில் வசிக்கும் மக்களிடை அறுபது புல்லின மரங்களைக் குறிக்கும் சொற்கள் வழங்கியபோதிலும், பனிக் கட்டியைக் குறிக்கும் சொல் ஒன்றும் இல்லை. புதியவற்றை வெளியிடும் தேவை ஏற்படுமிடத்தே அதற்கேற்பச் சொற்கள். தோன்றும்.
புராதனகால மக்கள் பாதுகாப்பு, உணவு, இன உற்பத்தி போன்றவை குறித்தே அக்கறை கொண்டவர்களாகவும் ஒய்வு 9ே நரம் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்தனர். ஒரு காலத்தில் கல்விப் பொருள் சுருங்கியதாகவும் மனப் பயிற்சியிலே தங்கியதாகவும் இருந்தது, அதுமட்டுமன்றிக் கல்வி, அறிவு, குறிப்பிட்ட குடும்பத் தார்க்கும் வர்க்கத்துக்கும் உரியதாகக் கருதப்பட்டது. இன்று உலகு
100

விரிந்து கல்விப்பொருள் பெருகிவிட்டது, கருவறையிலிருந்து கல்லறை வரை அனைவர்க்கும் கல்வி, கல்வியிற் சமவாய்ப்பு, தொழிற் கல்வி என்றெல்லாம் பேசுகிறோம். இந்நிலையில் அத்தேவைகளை நிறை வேற்றத்தக்க சாதனமாக மொழி அமைய வேண்டியது அவசிமாகும்.
தொடர் பாடல் என்றால் ப்ொதுவாக்கல் அல்லது பகிர்ந்து கொள்ளல் என்று பொருள்படும். ஒரு காலத்தில் உணவு, இணை விழைச்சு, பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகள் சம்பந்தமான அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இன்னொரு காலத்தில் தெய்வங்களையோ அரசர்களையோ போற்றுவதற்கு ஏற்றவகையில் மொழி வளர்ந்திருக்கலாம், ஆனால், "பயிற்றிப் பலகல்வி தந்து இந் தப் பாரை உயர்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலம் இது, இக் காலத்தில் மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவக் கூடிய மொழியின் ஆற்றலை நாம் தக்கவாறு உணர்ந்துள் ளோமா? ஒன்றை அறியவும் தெளிவுபடுத்தவும், ஒருவரை உடன் படுத்தவும் உதவும் மொழி ஒரு சக்தியாகும். அது ஏலவே இருப்ப தொன்று என்று அசட்டை செய்வது சாலாது.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம் என்று சொல்லிவருகிறோம். ஆனால், விஞ்ஞானக் கருத்துக்களை விளக்கும் இலாவகம் தமிழுக்கு எவ்வளவு தூ ரம் வாய்ந்துள்ளது? 30 ஆண்டுகளுக்குமுன் பல்கலைக் கழகம் வரையி லான கல்வி தாய்மொழியிலே நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டன, சமீபத்தில் விஞ்ஞானத் துறைகளிலான கல்வி பல் கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நடைபெற்றாலும், கல்லூரிகளில் த்மிழிலே நடைபெறுகிறது. தாய்மொழி மூலம் கல்வி போதிக்கப்பட வேண்டுமென்ற கருத்தினை வலியுறுத்தியவர்கள். இக்கால அறிவு மக்கள் மத்தியிற் சுவற வேண்டும் என்பதையே பிரதான குறிக் கோளாய்க் கொண்டிருந்தனர்.
ஆனால், படித்த பலரிடம் கருத்துக்களை வழுவின்றத் தெளி வாக வெளியிடும் மொழிவளம் குறைந்து வருவதை மாணவர் விடய ஆக்கங்களையும் பரீட்சை விடைத் தாள்களையும் மதிப்பிடும்போது அவதானிக்க முடிகிறது, முற்காலத்தில் விடயம் செவிவழியாகக் கேட்டு மனனஞ் செய்யப்பட்டது. ஆனால், இ ன் று வரிவடிவு எழுத்து மூல வெளியீடு முக்கியத்துவம் பெற்றுவிட்டது, வெளிப்டுவ தோடு அமையாது எழுத்தில் பாதுகாக்கப்படத்தக்கதாய் இருப்பதே மனித மொழியின் சிறப்பாகும். சாதாரண மனிதர் ஒவ்வொருவரா லும் சாப்பிடவோ தூங்கவோ முடிவதுபோல் பேசவும் முடியலாம். ஆனால், எழுதுவதற்குத் திறன் வேண்டும், மனிதகுலம் சுமார் நூறாயிரம் வருடங்களாகப் பேச்சுத்திறன் பெற்றிருந்த போதிலும்
0.

Page 65
சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளாகவே எழுதும் ஆற்றலை வளர்த் துள்ளது, எமது பண்பாட்டுப் பெருமைக்கு இன்று முக்கிய சான்றாக விளங்குவன எழுத்தில் உள்ளவையே. தொடர்வு கொள்பவர் எதி ரில் இல்லாததும் மனித நினைவாற்றலில் தங்கியிருக்காததுமான தொடர்பு எழுத்துமூலம் நடைபெறுகிறது, அது மயக்கத்துக்கிட மற்றவகையில் தெளிவாக அமைய வேண்டியது அவசியமாகும். அச்சு வாசனத்தால் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தால் மொழியில் எழுத்து வடிவம் பாரிய முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எம்மைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் L?-6f 6f 6f.
இந்நிலையில், எழுத முடியாதோர் அறியாதாரே ஆவர் என்று கொள்ளப்படலாம். செம்மையாக, தெளிவாக எழுதுவதென்பது இலேசான காரியமன்று. ஆனால் எழுத்தாற்றல் மிக அவசியமான ஒன்றாக இன்று விளங்குகிறது, விஞ்ஞானம், சட்டம், பொறியியல், கல்வி, வர்த்தகம், வைத்தியம் முதலான துறைகளுக்கு எதிலே பணியாற்றுபவராயினும் கடிதங்களையோ, குறிப்புக்களையோ அறிக்கைகளையோ எழுத வேண்டியவரேயாவர். வாசிப்பவர்களை ஏமாற்றாத வகையில் நேர்மையுடனும், மயக்காதவகையில் தெளி வுடனும், காலத்தை விரயமாக்காத வகையில் சுருக்கமாகவும் , அலுப்பூட்டாதவகையிலான வசனங்களில் எழுதவேண்டியது இன் றைய தேவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
இன்றைய தேவைகளைச் செவ்வனே நிறைவேற்றவல்ல கருவி யாகத் தமிழை வளம்படுத்த வேண்டுமென்பது ஒருபுறமாக, மயக் கம் தராதவகையில் வழுவின்றித் தெளிவாக தமிழில் எழுத முடியாத நிலையில் பலர் இருப்பது விசனத்துக்குரியதாகும், அப்பிரச்சினைக் குரிய காரணங்களையும் பற்றி ஆலோசித்தல் பயனுடைய காரிய LDfT (354 p.
இளந் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்துவரு கிறதென்றும் புத்தகங்களும் சஞ்சிகைகளும் இலேசில் வாங்க முடியா தளவுக்கு விலையேறிவிட்டன. என்றும் கூறப்படுகிறது. வியாபாரிகள் சுலபமாகவும் வேகமாகவும் விற்பனையாகும் புத்தகங்களையும் சஞ் சிகைகளையுமே தருவிப்பதால், தரமான நூல்கள் கிடைப்பது அரி தாக உள்ளதென்பதும் உண்மையே. பாடப் புத்தகங்களின் பாடப் பரப்புக்கள் மிகுதியானவையாக இருப்பதால் மொழிப் பயிற்சிக்கோ கவனிப்புக்கோ வேண்டிய அவகாசம் கிடைப்பதில்லை எ ன் றும் சொல்லப்படுகிறது. அதேவேளையில், மொழி கற்பிக்கும் திறனுள்ள ஆசிரியர் போதியளவு இல்லை என்ற குறையும் உளது, மொழி
0.

யுணர்வும் பற்றும் குறித்து நீண்ட காலமாகப் பேசிய பின், தாய் மொழி மூலக்கல்வி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற பின், தமிழைச் செவ்வனே எழுவதற்குப் பயிற்சியளிக்கவல்ல ஆசிரி யர் பற்றாக்குறை பற்றிப் பேசும் நிலையில் உள்ளோம், அதே வேளையில், தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் அதிகரிக்க அதி கரிக்க வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் குறைந்து வருதாகவும் கூறப்படுகிறது.
அரசியற் பொருளாதார ஆதிக்கம் மிகுந்தவர்கள் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்கும், "யாதும் ஊரே என்று பலவிடங் களுக்கும் பெயர்வதற்கும் வாய்ப்பளிப்பனவாகலாம். இன்றைய உல கில் அரசியற் பொருளாதாரச் செல்வாக்குக் குறைந்த தமிழ் போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் பலர் தம்மொழிகளை நன்கு பயில் வதில் ஆர்வம் குறைந்தவர்களாகவும் உலகாதிக்கம் வாய்ந்த மொழி களை நாடுபவர்களாகவும் இருக்கலாம்.
அது எவ்வாறாயினும் , தமிழில் நன்கு தொடர்பாட முனை வோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளே எமது கவனத்துக்குத் பிர தானமான உரியவை, இலக்கணத்தைக் கவனமாகப் படிப்பவர்கள் இலக்கணப் பிழையின்றி எழுதுவார்கள் என்று சில காலத்துக்கு முன்னர்வரை கருதப்பட்டது. ஆனால், இலக்கண விதிகளை உருப் போடும் மாணவர்கள் இலக்கண பாடத்தில் நிறையப் புள்ளிகளைப் பெற்ற போதிலும், வழுவின்றித் தெளிவாக ஒழுத முடியாதவர் களாக இருந்ததை நடைமுறையிற் கண்டோம். இலக்கண அறிவு நடைமுறை மொழிப் பயன்பாட்டுக்கு உத்தரவாத மாகாது என் பதை அறிந்தோம்.
கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக மொழியியல் துறை மதிப்புக்கும் மோகத்துக்குரிய ஒன்றாக வளர்ந்து வருகிறது. மொழியின் தோற்றம், வளர்ச்சி குறித்த ஆய்வுகளும் ஒப்பியல் ஆய்வுகளும் வரலாற்றிலக்கண ஆராய்ச்சிகளும் பிரதேச வழக்குக ளைப் பற்றிய ஆய்வுகளும் பெருகியுள்ளன. தமிழில் வினைச்சொல்; தமிழில் பெயர்ச்சொல் என்ற ரீதியிலும் பல கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மொழிக்கல்வியிலும் பாடப்புத்தகங்களை ஆக்குவதிலும் மொழியியலாளர்கள் மிகுதியாகப் பங்குபற்றினர். ஆயினும், தமிழில் தெளிவாகவும் சரளமாகவும் இக்கால விடயங்களை எழுதும் திறனை வளர்த்தல் துன்பமாகவே உள்ளது. இன்னமும் எமது இலக்கணகாரர் மீதே பழிபோடும் நிலையில் உள்ளோம்.
நவீன அனுபவங்கள் நமக்கு ஆங்கிலமொழி மூலமாக அனேக மாகக் கிடைத்தன. அவற்றைத் தமிழில் வெளியிடுபவர்களும் ஆங்
103

Page 66
கிலங் கற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆங்கிலச் சொற் களைக் கலந்ததோடு வசனங்களையும் ஆங்கிலமொழி வழியமைப்பில் எழுதினர். சமஸ்கிருதச் சொற்கள் அளவுக்கதிகமாகக் கலந்ததை எதிர்த்துத் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதை அறிவோம். அதன் விளைவாகச் சமஸ்கிருதச் சொற்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. தமிழ் மொழி வளர்ச்சியை எவ்வாறு பாதித்தது என்பது ஆராயப்படவேண்டியது. இன்று பலர் சாதாரண தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களையே வெகு உற்சாகமாகக் கலந்தாள்கிறார்கள். பலர் ஆங்கிலத்திலேயே சிந்திப் பதால் அவர்கள் எழுதுவதை ஆங்கிலம் அறிந்தவர்களே ஒரளவு ஊகித்து விளங்கிக் கொள்ளமுடியும். அவர்கள் ஆளும் சில சொற் களின் பொருளை விளங்க வேண்டுமாயின், அவை ஆங்கிலத்தில் எச்சொற்களைக் குறிப்பன என்பதை முதலிற் கண்டுபிடிக்க வேண்டும். இந்நிலை தமிழிலே தொடர்பாட உசிதமானதன்று.
கலைச்சொற்களைப் பொறுத்தவரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. தூயதமிழ்ச் சொற்களைத் தேடும் ஆர்வம், மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரத்தக்க எழுத்துக்கள் பற்றிய நிலை, தமிழில் இல்லாத சில ஒலிகளை ஏற்பது - இவை சம்பந்தமான ஒருமுகப்பாடு வேண்டப்படுகிறது. ஒன்றையே குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன. இலங்கை யிலும் தமிழ்நாட்டிலும் வெவ்வேறு சொற்கள் வழங்கப்படுகின்றன. பொதுவாக நோக்குமிடத்து, அநேக கலைச் சொற்கள் வெறும் அடையாளக்குறிகளாகச் சப்பென்று தோன்றுகின்றனவேயன்றி சிந்தனையைச் சுண்டிவிடுவனவாக இல்லை,
ஒரு முகப்பாடின்மை குறிப்பிடத்தக்களவு குழப்பத்துக்குக் காரணமாகவுள்ளது. அரச விளம்பரங்கள், அறிக்கைகளிலேயே ஒரே ஆங்கிலப்பதத்துக்குப் பல்வேறு தமிழ்ச் சொற்கள் கையாளப்படு கின்றன, ஒரளவு வழக்கில் வந்து விட்ட சொற்களுக்குப் பதிலாகத் கூடப் புதிய சொற்கள் கையாளப்படுகின்றன. வழக்கு, தொடர்ச்சி, விளக்கம் என்பவற்றைப் பேணுவதிலும் பார்க்கத் தங்கள் கெட்டித் தனத்தை (ஏலவே சொல்லப்பட்ட விதத்திலிருந்து வித்தியாசமாகச் சொல்வது கெட்டித்தனம் என்று கருதப்படுகிறது) காட்டுவது சில ருக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. கூட்டுத்தாபனம் என்ற சொல் பெருவழக்கான பின் தொகுப்பகம், யாக்கம் போன்ற சொற்களும் அதே பொருளில் வழங்கப்படுகின்றன.
ஒலிவடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட இலக் கணங்களில் கூறியவாறு குறில், நெடில், குற்றியலுகரம், குற்றிய லிகரம், மகரக்குறுக்கம் அளபெடை முதலானவற்றைக் கற்பிப்பதில்
04

எவ்வளவு காலத்தைச் செலவிடலாம் என்பதையும் இன்றைய தேவைகளுக்கு ஏற்றவாறு தெளிவாக எழுதப் பயிற்ற எவ்வழிமுறை களைக் கையாளலாம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒசை விகற்பங்களுட் பலபொருள் குறித்த சொற்களும் செய்யுளிற் கைகொடுக்கு மளவுக்குச் சமூகவியற் சிந்தனைகளைத் தெளிவாகக் கூறவும் தொழில் நுட்பச் செய்திகளை நுணுக்கமாக எடுத்து ரைக்கவும் உதவுமென்று கூறமுடியாது.
சான்றோர் எழுதுவதைப் பின்பற்றப்படத் தக்க வழக்காகக் கொள்ளலாம் என்றால், தமிழ்ச் சான்றோர் நடைகளுக்குள்ளும் அடிப்படை ஒருமுகப்பாடு இல்லை. உதாரணமாகப் புணர்ச்சி விதிகள் கடைப்பிடிக்கப்படு மாற்றினை நோக்கலாம். பல சந் தர்ப்பங்களிற் சரி பிழை கூறுவதே கஷ்டமாக இருக்கிறதென்று ஆசிரியர் அங்கலாய்கின்றனர்.
எவ்வாறாயினும், மொழிவாயிலாகத் தொடர்புகொள்ளும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதே பிரச்சினையாகும். தொடர்பாட விழைபவர், அதற்கான அனுபவ வளமோ சிந்தனை வளமோ உள்ள வர், அதற்கேற்ற வழிமுறைகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகள் ஊடுருவிப் பரவி, உள் ளத்தில் உண்மை ஒளி உண்டாகி, அனுபவங்களை ஏனையவர் களுடன் பகிர்ந்து கொள்ளும் வேட்கை தோன்றுமிடத்து மொழியி னைக் குறிப்பான நோக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கையா ளும் நிலை உருவாகும். மேல்நாட்டு விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களை, வேடிக்கை பார்ப்பதல்லால் ஊன் பதைத்தே அவைபோல் இயற்ற உணர்ச்சி, கொள்வதும், மக்களை எட்டி அவர் களோடு தொடர்புகொள்ள வேண்டுமென்ற செயல்வேக உள்ளெ ழுச்சியும், மொழியாற்றலும் தொடர்பாடலும் சிறக்க உதவும், சமுதாய வாழ்க்கை ஒழுங்கை மாற்றியமைக்கும் ஆர்வத்துடன் எழுந்த சங்கமருவிய காலத்துத் தமிழிலக்கியங்கள் பல எடுத்துக் காட்டுக்களாகக் கொள்ளத்தக்கன.
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில் இனத்துவ, பழம்பெருமை, பாதுகாப்பு, புலப்பெயர்ச்சி, அகதிநிலை ஆய்வுகளில் நாம் முடங்கிக்கிடப்பதும் விசனத்துக் குரியதே u T (gjub.
05

Page 67

பகுதி 3
கலைச் சொல்லாக்கம்

Page 68

தமிழில் கலைச் சொல்லாக்கம்
இராம சுந்தரம்
இலக்கியம், இலக்கணம் செழிப்புற்ற மொழி தமிழ். எனவே, இந்த இருதுறை தொடர்பான கலைச் சொற்கள் தமிழில் நூற்றுக் கணக்கில் உள்ளன. (அவற்றையெல்லாம் ஒருங்கு தொகுத்து அகராதியாக வெளியிடும் பணி முறைப்பட இன்னும் மேற்கொள்ளப் படவில்லை. சிறு சிறு நூல்களே வெளிவந்துள்ளன. 'தமிழ் இலக்கிய இலக்கணக் கலைச் சொல் அகராதி" - உரிய விளக்கம், எடுத்துக் காட் டுக்களுடன் ஒரே நூலாக விரைவில் வெளிவர வேண்டும். இலக்கிய இலக்கண நூலாசிரியர்களும், உரையாசிரியர்களும் தந்துள்ள கலைச் சொற்கள் அனைத்தும் இதில் இடம்பெற வேண்டும்.) இலக்கிய இலக்கண வளஞ்சான்ற மொழியில் தத்துவ வளமும் காலப்போக்கில் சேர்ந்தது. வைதீகம், பெளத்தம், சமண மதக் கருத்துக்களைத் தாங்கிய பல்வேறு கலைச் சொற்கள் தமிழில் இடம் பெற்றன. (வைணவச் சொல்லகராதி, சைவச் சொல்லகராதி நூல்கள் வெளிவந் துள்ளன.) தமிழ் மக்களோடு தொடர்புடைய இத்துறைகளில் கலைச் சொல் உருவாக்கம் 1500, 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந் துள்ளது. தாமே சொற்களை ஆக்கிக்கொள்ள இயலா இடத்து, பிராகிருதம், பாலி, சமஸ்கிருதச் சொற்களை கடன்பெற்றோ, மொழி பெயர்த்தோ வழங்கினர். இதற்கென விதிகள் வகுக்கப்பட் டன. தற்சமம், தற்பவம் என்ற இரண்டின் அடிப்படையில் இந்தப் பிறமொழிச் சொற்கள் தமிழ்ப் படுத்தப்பட்டன. w
நன்னூலில் சமஸ்கிருதச் சொற்களை எவ்வாறு தமிழ்ப் படுத்த வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. அந்த விதிகளின்படி ரிஷபம், விஷம் , ஹரன், லாபம் தர்மம், என்பன முறையே இடபம், விடம் அரன், இலாபம், தருமம் என ஆயின, இதை இன்னும் விரிவாக இலக்கணக் கொத்து (சூ 87)
‘பொது எழுத்தாலும் 1 சிறப்பெழுத்தாலும் ? ஈரெழுத்தாலும் 3 இயைந்தும் மொழி பெயர்த்தும் 4 பொது எழுத்துள்ளும் பொதுவாய்த் 5 திரிந்தும் தமிழ்ச் சிறப்பெழுத் தைந்தானும் 8 திரிந்தும்
09

Page 69
மொழி முதல் இடைகடை எனுமூன்றி டத்தும் தோன்றல் முதலா விகாரம் தோன்றியும்7 வருமே தமிழில் வடமொழி என்க' எனக் கூறும்.
இந்திய மொழிகளுக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே விதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. தற்சம மாகவும், தற்பவமாகவும் (மணி - தற்சமம்; ஆணை - தற்பவம்) சொற்கள் கடன் பெறப்பட்டு எழுதப்பட்டன. இன்று ஐரோப்பிய மொழிச் சொற்கள் ஏராளமாகத் தமிழில் இடம் பெறு கின்றன. அவற்றைத் தமிழாக்குவதற்குச் சரியான ஒலி பெயர்ப்பு விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. உடனடியாக செய்ய வேண்டிய பணி இது.
Hydrogen - ஹட்ரஜன், ஐட்ரசன்
Oxygen - ஆக்ஸிஜன்; ஆக்சிசன், ஆக்ஸிசன் Fahrenheit - பாரன்ஹீட், பாரன்ஹீட்டு, ஃபாரன்ஹீட், Stalin - ஸ்டாலின், இசுடாலின்.
எனப் பலவாறு எழுதப்படுதல் குழப்பந்தரும். இலக்கியத் தமிழில் பங்கஜம், கஜம் ஆகியன பங்கயம், கயம் என்றே 1000 ஆண்டு களாக எழுதப்படுகின்றன, மாற்று எழுத்து வடிவம் இல்லை. அறி வியல் சொற்களைத் தமிழ்படுத்தும் போதும், தரப்படுத்தப்பட்ட ஒலி பெர்ப்பு / எழுத்துப் பெயர்ப்பு விதிகள் தேவை. ( A standard system of transliteration) இந்த ஒலி பெயர்ப்பு / எழுத்துப் பெயர்ப்பு குறித்து முதலில் குறிப்பிடக் காரணம், இன்னும் பல அறிவியல் சொற்கள் தமிழாக்கப்படாது தமிழில் எழுதப்படுவதும். tol) சொற்களைத் தமிழ்ப்படுத்தாது அப்படியே எழுத வேண்டியிருப் பதும் தான்.
லேசர், ரேடார் ஆகியன இலேசர், இரேடார் என்றும் எழுதப் படுகின்றன. ஆனால், ஒலிக்கும் போது இகரம் ஒலிக்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் பஸ், பா ல் கணி, கங்கை முதலிய சொற்கள் 'ப', 'க' என எழுதப்பட்டாலும் ஒலிக்கும்போது Bus, Balcony Gangai என்றே ஒலிக்கப்படுகின்றன. இங்கு ஒலிப்பு முறை யும், எழுத்து முறையும் இசையாமல் உள்ளன. எனவே இவற்றை எல் லாம் கருத்தில் கொண்டு ஒலிபெயர்ப்பு / எழுத்துப் பெயர்ப்பு விதிகள்
1. மணி 2. கதி 3. ஆதி 4. பிறிதின் இயைபு நீக்கம் (அந்நிய யோக வியவச் சேதம்) 5. மாலை, நாரி, 6. அற்புதம் (அத்புதம்). 7, உலகம் (லோக), விடம் (விஷம்), பரிசம் (ஸ்பரிச).
10

உருவாக்கப்படல் வேண்டும். அவ்வாறு உருவாகும் போது பல ஐரோப்பியச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல் சீர்மைப்படும்.
அறிவியல் மொழி எனக் கூறும்போது, அதில் மொழி சார்ந்த கூறுகளே (Verbal units) அன்றி மொழிசாராக் கூறுகளும் உள்ளன (Non - verbal units). GuittilustG) (Formula) FLD girl IITG) (equation) g5 5. யீடு (symbol) என்பன அவை. இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண் டியதில்லை. அப்படியே பயன்படுத்தலாம். உதாரணமாக H2 + o
என்பதை அப்படியே எழுதலாம். எச்2 + ஓ என எழுதவேண்டிய தில்லை.
அறிவியலில் சில சொற்கள் தலைப்பெழுத்துச் சொற்களாக (acronym) உள்ளன. Laser, Radar போன்றன அவை. இவற்றையும் நாம் தமிழ்ப்படுத்தி பின்னர் அவற்றைச் சுருக்கி எழுத வேண்டிய தில்லை. அதேபோல, சுருக்கெழுத்துக்களையும் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை. University Grants Commission என்பதை பல் கலைக்கழக மானியக் குழு எனத் தமிழில் எழுதினாலும் U. G, C. என்றுதான் சுருக்கி எழுதுகிறார்கள். இதை ப. மா. கு என எழுத வில்லை. ஆனால் U.N.O. என்பதை ஐ நா சபை'என எழுதுகின்றனர். இருந்தாலும் UNESCO யுனெஸ்கோ என்று தான் எழுதப்படுகிறது. இங்கும் ஒருமைப்பாடு இல்லை. இந்தவகைச் சொற்களை | தொடர் களை மொழி பெயர்த்தாலும், சுருக்கக் குறியீடாகப் பயன்படுத்தும் போது, அனைத்துலகக் குறியீட்டையே பயன்படுத்தலாம்.
இவ்வாறு, வாய்பாடு, சமன்பாடு, குறியீடு, தலைப்பெழுத்துச் சொற்கள், சுருக்கக் குறியீடுகள் முதலியவற்றைத் தமிழ்படுத்தாமல் வழங்குவதையும், தமிழ்ச் சொற்கள் இல்லாவிடத்து, பிற மொழிச் சொற்களை அப்படியே எழுத்துப் பெயர்ப்புச் செய்து வழங்குவதை யும் ஏற்றுக்கொண்டால், எஞ்சிய கலைச் சொற்களை எப்படி ஆக்கிக் கொள்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.
இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல் (மானிட வியல்) படிப்பு பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். 1830 களில் இதற்கான தொடக்கம் தமிழகத்திலும், இலங்கையிலும் ஏற்பட்டது. அப்போது வெளிவந்த பத்திரிகைகளிலும் அறிவியல் செய்திகள் இடம்பெறலாயின. ரேனிலகு பாதிரியார் ‘பூமிசாஸ்திரம்" என்கிற நூலை, தமிழர்கள் அறிவு பெறுவற்காக எழுதி 1832 இல் வெளியிட்டார். 1849 இல் இலங்கையிலிருந்து "பால கணிதம்" என்ற நூல் வெளியாற்று. இதில் ஆங்கில, தமிழ்க் கணித இயல் புகள் 179 பக்கங்களில் விளக்கப்பட்டன. 1855 இல் 'Algebra பற் றிய ஒரு நூல் "இயற் கணிதம்' எனத் தமிழாக்கப்பட்டு வெளி வந்தது. "வீச கணிதம்' என்ற இன்னொரு நூல் இதே ஆண்டில்
11

Page 70
வெளிவந்தது. இதுவும் 'Algebra' வைப் பறியதுதான். இயல் சணிதம், வீச கணிதம் என்பதன் பின்புலத்தில் தமிழ், வடமொழிப் பார்வை இருப்பதை அறியலாம். இதன் பின்னர், 1850 களில் மிகப் பெருஞ் சாதனை இலங்கையில் நிகழ்ந்தது.
1848 இல் டாக்டர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் என்ற அமெரிக்க மருத்துவர் இலங்கை வந்தார். ஐரோப்பிய மருத்துவ நூல்களைத் தமிழ்ப்படுத்தினார். தமிழ்வழி அதனைக் கற்பித்து அற்புதங்கள் நிகழ்த்தினார். கலைச் சொல்லாக்கம் பற்றிய சில நெறிகளையும் வகுத்தார். அவரது பணி அளப்பரிய பணி. அறிவியல் தழிமின் தந் தையாக அவர் விளங்குகிறார் என்றால் அது தவறாகாது. அந்த வகையில் இலங்கையை அறிவியல் தமிழின் தாயகம் எனலாம் பிஷ் கிறின் முயற்சியால் வெளிவந்த நூல்கள்:-
1. அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் (Anatomy
Physiology 8. Hygiene) 2. பெண் நோயை விவரிக்கும் மருத்துவ வைத்தியம் (Midwifery)
3 LD Ggy G egy iš 51T6ALIIT 5 lb (Human Anatomy) (q-. Laiig,
சாப்மன் மொழி பெயர்ப்பு)
4. 606), 55urts, Tib (The Principles and Practice of Medicine)
5. Qu 600 606, 59ulb (The Science 8 Art of Surgery) - 1872 6. மனுஷ சுகரணம்
7. Gaslish gilb (Chemistry - 1872)
இவர் வெளியிட்ட கலைச் சொல் தொகுதிகள்:
1. Materia Medica 8 Pharmacy
2. Midwifery
3. Diseases of Women 8 Children
4. Medical Jurisprudence
எஸ். சாமிநாதன், டி. டபிள்யூ. சாப்மன் ஆகியோர் இதில் இவருக்கு உதவினர். மேலும், அ) இந்து பதார்த்த சாரம் (Pharmacopoeia 8 India) ܫ
2

2) gaug Suh (Practice of Medicine) Sui re) களும் 1881 இல் வெளிவந்தன. இவரின் முயற்சியால் வெளிவந்த இந்த மருத்துவ நூல்கள் சுமார் 4500 பக்கங்களை உடையன. இவை தவிர, மருத்துவ நலம் குறித்துப் பல துண்டுப் பிரசுரங்களை யும் வெளியிட்டார். தமிழில் வெளியான ஐரோப்பிய மருத்துவம் (அலோபதி மருத்துவம்) குறித்த முதல் நூல்கள் இவை என்பது இங்கு அழுத்தமாகக் குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதச் செல்வாக்கு மிகுதி என்றாலும், அது 19 ஆம் நூற்றாண்டின் மொழி நிலையைக் காட்ட உதவுகிறது.
சாமுவேல் பிஃஷ் கிறின் வகுத்த கலைச் சொல்லாக்க நெறி முறைகள் அறிவு பூர்வமானவை; இன்றளவும் பயன்பாட்டில் உள்ளவை எனலாம்.
1. தமிழில் சொல்லைத் தேர்ந்தெடுத்கவும்; தனிச் சொல்
லாகவோ கூட்டுச் சொல்லாகவோ இருக்கலாம்.
தமிழில் இல்லாத/இயலாதபோது வடமொழிச் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது, அந் தச் சொல்லுக்கான ஆங்கிலப் பொருளை உறுதி செய்ய சமஸ்கிருதம் - ஆங்கிலம், ஆங்கிலம் - சமஸ்கிருதம் அகராதிகளைப் பார்க்கவும்,
2
3. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் இயதலாதபோது, ஆங் கிலச் சொற்களைக் கடன்பெறலாம். அவ்வாறு கடன் பெறும் போது அவற்றைக் கீழ்க்கண்டவாறு தமிழ்ப் படுத்த வேண்டும்:-
ate ←9!òቕ
id இரம் ic இக்
OUS Gior
மகாகவி பாரதியாரும் கலைச் சொல்லாக்கம் பற்றி எழுது வார். அவர் கலைச் சொல்லுக்குத் தரும் விளக்கமும் பொருத்த முடைமை கருதி இங்கு மேற்கோளாகத் தரப்பகிறது;-
'பரிபாஷை, ஸங்கேதம், குழுவுக்குறி என்ற மூன்றும் ஒரே பொருளைப் பலவகையிலே குறிப்பன: அதவாது ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன் பட்டு வழங்கும் பொது வழக்கமில்லாத சொல்,'
118

Page 71
கிறீன் கருத்துப்படி கலைச்சொற்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும். இல்லாதபோதுதான் வடமொழியிலோ, ஆங்கி லத்திலோ தேட வேண்டும். பாரதியாரும் இந்தக் கருத்தினரே.
தொடர்ந்து கலைச் சொல்லாக்கம் சூடு பிடிக்கத் தொடங்கி யது, பல நூல்களில் கலைச்சொல் பட்டியல் இடம் பெறலாயிற்று. பாட நூல்கள் பல வெளிவந்தன. மைசூர் அரண்மனையில் மருத்து வராக இருந்த ஜகந்நாதம் நாயுடு இங்கிலிஷ் வைத்திய சங்கிரகம் (A Compendium of English Medical Science) at airpo ST606) (452 பக்கம்) 1909 இல் வெளியிட்டார். இவர் ஏற்கனவே 1865 இல் Frfur GíîGOTT 66). (A Catechism of Human Anatomy 8t Physiology) என்கிற நூலை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு தனியார் முயற்சிகளில் பல கலைச் சொல் பட்டி யல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில், சென்னை அரசாங்கம் கலைச் சொல் குழுவை அமைத்தது. 1923 இல் Vernacular Scientific eேrm Committe" (வட்டார மொழிகளில் அறிவியல் கலைச் சொற் குழு) அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர் பா. வே. மாணிக்க நாயக்கர். சிறந்த பொறியாளரான இவர் கலைச் சொல்லாக்கத் தில் ஈடுபட்டார். "Justice பத்திரிகைளில் 2000 க்கு மேற்பட்ட கலைச் சொற்களை உரிய விளக்கங்களுடன் வெளியிட்டார். பல சொற்கள் தமிழில் இருந்து எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன. v
விபரம்:-
1930 - சட்டச் சொல் அசராதிக் குழு.
1932 -- 5606)& G). It di) g(up gaig (up Chemistry, Physics, Mathematics, Natural Science, Physiology 8. Hygiene, Geography. History, Economics, Administration, Politics 8 Civics தொடர்பான 7400 சொற்களை உருவாக்கி வெளியிட்டது. சமஸ்கிருதத் தாக்கம் அதிகம்.
1940 - சீனிவாச சாஸ்திரி தலைமையில் குழு; 15 பேர் உறுப்பினர். 1947 இல் பட்டியல் வெளியானது. இதற்கு முன்னுரை வழங்கியவர் தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் அவிநாசி லிங்கம் செட்டியார். பள்ளிகள் இந்தச் சொற்களைப் பயன் படுத்த வேண்டும் என்றார்.
1959 - கல்லூரித் தமிழ்க் குழு. ஜி. ஆர். தாமோதரன் தலைவர்.
1 4

1965 - சட்ட நூல்களை மொழி பெயர்க்கும் குழு. தலைவர்
மு. வரதராசன்.
1955 - இலங்கையில் தன்மொழி அலுவலகத்தில் கலைச் சொல்லாக்கப் பணி தொடங்கியது. 'அரசாங்கப் பகுதிகள், உத்தியோகப் பதவிப் பெயர்கள் நாமாவளிகள்' பட்டியல் வெளிவந்தது. பிறமொழிச் சொற்கள் அதிகம்
1932-ல் வெளியான கலைச் சொல் பட்டியலுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. காரணம், அப்பட்டியலில் வடசொற்களே அதிகம்; அடுத்த நிலையில் ஆங்கிலச் சொற்கள். தமிழ்ச் சொற்கள் மிகவும் குறைவு. எனவே, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1934 இல் கலைச் சொல்லாக்கக் கருத்தரங்கு நடத்தியது. தொடர்ந்து நடந்த பல கூட்டங்களில் உருவாக்கப்பட்ட கலைச் சொற்களைக் கொண்ட பட்டியல் 1936 இல் வெளிவந்தது. இதில் 5300 சொற்கள் இருந்தன. மீண்டும் இது திருத்தப்பட்டு, 10000 சொற்களைக் கொண்ட பட்டியலாக 1938 இல் வெளிவந்தது. சுவாமி விபுலாநந்தர் தலைமையில் இப்பணி நடந்தது. இராஜாஜி முழு ஆதரவு தந்தார், தமிழ்ச் சொற்கள் அதிகம் இடம்பெற்றன. கிரந்த எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டன்.
கலைச் சொல்லாக்கப் பணி விறுவிறுப்பு அடையும் இக்கால கட்டத்தில் பா. வே. மாணிக்க நாயக்கர், கா. சுப்பிரமணிய பிள்ளை, ஒளவை துரைசாமி பிள்ளை முதலியோர் கலைச் சொல்லாக்க நெறி கள் பற்றி எழுதினர். எல்லோரும் கலைச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே இருக்க வேண்டும் என்பதிலும் வடசொற்கள் தவிர்க் கப்படவேண்டும் என்பதிலும் உடன்பட்டனர். தமிழில் சொல் இல்லாதபோது, ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்திக் கொள்ள லாம் என்றனர். மூலச் சொல்லின் (கிரேக்கம், லத்தீன்) வேர்ப் பொருளை அறிந்து சொல்லுருவாக்கப்பட வேண்டும் என்றனர். வடசொற்களை நீக்க வேண்டும் என்றனர். இது முந்திய காலத் திலிருந்த மொழிக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றம் கொண்ட காலகட்டம் இது,
தொடக்கத்தில் வடமொழிச் சொற்களும் ஆங்கிலச் சொற் கரும் மிகுதியாகவும், தமிழ்ச் சொற்கள் குறைவாகவும் இருந்தன. 1936க்குப்பின் தமிழ்ச் சொற்கள் அதிகமாகின. 1940 - 47களில் மீண்டும் வடமொழிச் செல்வாக்கு மேலோங்கியது. அதற்குக் கண் டனம் எழவே, 1959இல் அமைக்கப்பட்டது கல்லூரித் தமிழ்க் குழு இக்குழு கீழ்க்கண்ட நெறிகளைப் பின்பற்றியது:-
1 5

Page 72
1. இயன்றவரை உலகளாவிய கலைச் சொற்களைப்
பயன்படுத்தல்; தேவையான அளவுக்கு இவற்றைத் தமிழாக்குதல்.
2. நன்கு "அறியப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பயன்
படுத்துதல்.
3. அவ்வாறு தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் தருதல்.
கிரந்த எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன.
தமிழ்வழிக் கல்வி கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் தோன்றிய கல்லூரித் தமிழ்க்குழு உடனடிப் பணியாக உலகளாவிய ஆங்கிலச் சொற்களை எடுத்தாள வேண்டிய நிலைக்கு ஆளானது. காலப்போக்கில், அக்கலைச் சொற்களில் பல தமி ழாக்கப்பட்டன என்பது வரலாறு.
உலகத் தமிழ் மாநாடுகளில் கலைச் சொல்லாக்கம் பற்றி விவாதிக்கப்பட்டன. அனைத்துலகத் தமிழ்க் கலைச் சொல்லாக்க மையம் நிறுவப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக் கழகம் 1982 தொடங்கிப் பல காலகட்டங் களில் கலைச்சொல் கருத்தரங்குகள் நடத்தியது. “கலைச்சொல் வங்கி ஒன்று செயல்படத் தொடங்கியது. கலைச் சொல்லாக்கத் தில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கலைச் சொல்லாக்கப் பணி சுமார் 2 லட்சம் சொற்களை உரு வாக்கியுள்ளது. இலங்கையிலிருந்து மட்டும் 50க்கு மேற்பட்ட கலைச்சொல் பட்டியல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலகட்டத் தில் தமிழும் சிங்களமும் பொறியியல், மருத்துவப் பாடங்களைக் கற்பிக்கும் மொழிகளாகவும் இங்கு செயல்பட்டிருக்கின்றன. தமிழகத் தில் இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வகுப்பறைகளில் நடைமுறையில் இரு மொழி 1ளும் பயிற்று மொழியாக உள்ளன. கிராமப்புற மாணவர்கள் கல்லூரிகளில் படிப்பதால் தமிழ் வழிப் படிப்புக்கு ஒரு வரவேற்பு இருக் லாம். ஆயினும், இன்னும் நடை முறைக்கு வராததால், தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் போதிய அளவு பயன்படுத்தப்பட வில்லை. அவ்வாறு பயன்படுத்தப்படாத தால், கலைச் சொற்களின் நிறைகுறை அறிதற்கு வாய்ப்பில்லை. எனவே, கலைச்சொற்கள் எல்லாம் அகராதியிலேயே உறங்குகின்
| 16

றன. இச்சூழலில் தமிழில் கலைச்சொல் இல்லை என்கிற குற்றச் சாட்டு பொருத்தமற்றதாகும்.
தமிழ்ப் பல்கலைக் கழகம் பொறியியல், மருத்துவம் தொடர் பான 27 பாடநூல்கள் தயாரித்துள்ளது. இத்துறை சார்ந்த 30,000 சொற்கள் திரட்டப்பட்டுள்ளன. சுமார் 15,000 சொற்கள் தரப் படுத்தப் பட்டுள்ளன. எல்லாம் இருந்தும் தமிழ் வழிக் கல்வி என்பது பொறியியல், மருத்துவத் துறைகளில் நடைமுறையில் இல்லாததால் இந்தக் கலைச் சொற்களின் தராதரமும் நிச்சயிக்கப் பட முடியாததாக உள்ளது. இவையேயன்றி அடிப்படை அறிவியல் சொற்கள் 36,000 தரப்படுத்தப்பட்டுள்ளன. அச்சுக்குத் தயாரான நிலையில் உள்ளன
கலைச் சொல்லை ஆக்கும்போது முக்கியமாகக் கவனிக்க
வேண்டியது அச் சொல் குறித்து நிற்கும் கருத்தமைவு (Concept) தான். சில சமயங்களில் மூலச் சொல் தக்க கருத்தமைவினைக் கொடுக்காது இருக்கலாம். அப்போது இதற்குப் புது விளக்கம் தர வேண்டியிருக்கும். எனவே, கலைச் சொல்லாக்கத்தில் கருத்தமைவு தான் முக்கியமே தவிர, மூலச்சொல் | வேர்ச்சொல் முக்கியம் அன்று. மூலச்சொல் ஒரோவழி உதவலாம்.
Economy பொருளாதாரம் History வரலாறு Ecology சூழலியல் Politics அரசியல்
96), filplair Economy 67 Girl ugi Oikos house', nomos 'low' at airp இரண்டு கிரேக்கச் சொற்களின் உருவாக்கம். கிரேக்கச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு தமிழில் சொல்லாக்க வேண்டுமென்றால் 'வீட்டுச் சட்டம்" என்று பொருள்படும். ஆனால் Economy என்ப தன் பொருள் அதுவன்று. எனவே இதை ஆங்கிலத்தில் இவ்வாறு 66ir dissor it. ''The management of a house hold or money matter" எனவே இங்கு கருதப்படும் கருத்து பணத்தோடு சம்பந்தப் பட்டது. பணம் என்பதையும் உள்ளடக்கிய சொல் "பொருள் : என்பது. எனவே, "பொருளாதாரம்", "பொருளியல்" என்கிற &606V&G& T6v e-G6)ITHug. History (historia (La. ) historia , histor (Gr.) Knowing' g5! 'an account of events; the knowledge of the past events" எனப் பலவாறு விளக்கப்படும். இதைத் தொடக்கத்தில் "சரித்திரம் எனத் தமிழில் ஆக்கினர். தற்போது இது வரலாறு என அழைக்கப்படுகிறது. வரலாறு என்பது பழைய தமிழ்ச் சொல். −
1 11

Page 73
Ecology - a study of plants, or of animals, or of peoples and
institutions in relation to environment
இதை அடிப்படையாகக் கொண்டு "சூழலியல்" என்ற கலைச்சொல் உருவாகியது. இதன் மூலச்சொல் (Gr) Oikos "house" logos discourse'
hypetrophy என்பது hyper + trophy என்ற சொற்களின் கூட்டு. hyper - "above' trophy "nourishment' g)60 35 iš 356pTj 660T (T 6) மிகை உணவு, மேல் ஊட்டம் எனவரும். ஆனால், இந்த அதிகப் படியான உணவினால் ஏற்படும் விளைவே இங்கு கருதப்படும். அதனால், இதை "மிகை வளர்ச்சி" என மருத்துவர்கள் ஆக்கி யுள்ளனர்.
இவற்றால் தெரிவது, மூலச் சொல்லின் வேர்ப் பொருள்
அறிந்து கலைச் சொல்லைத் தமிழில் உருவாக்குவதைவிட, அதன் கருத்தமைவை அறிந்து உகுவாக்குவதே சிறந்தது என்பதாகும். தமிழில் கலைச் சொல் கீழ்க்காணும் ஐந்து முறைகளில் உருவாக் கப்படுகிறது.
1) பழஞ்சொல்லைப் பயன்படுத்தல்,
2) சொற்பொருள் விரிவு.
3) புதுச்சொல் படைத்தல்.
4) மொழிபெயர்ப்பு.
5) கடன் வாங்கல்.
1) பழஞ்சொல்லைப் பயன்படுத்தல்:
தான் விரும்பும் கருத்தமைவுக்கு ஏற்ற சொல் தனது மொழியில் இருக்கும்போது (எழுத்துவழக்கு | பேச்சுவழக்கு) அதை அப்படியே கலைச் சொல்லாகப் பயன்படுத்தல்.
மருந்து, மருத்துவர், பொறி, ஊர்தி, வலவன் முதலிய GFrtiba,606it (up 60fps3u (Medicine, Doctor (Physician), Machine, Vehicle, Pilot - என்ற கருத்தமைவைச் சுட்டப்பயன்படுத்தல், மரபுவழித் தொழில் சார்ந்த சொற்களையும் ( Terms from traditional professions) Liugirl Gd5(5a) stilb.
2) சொற்பொருள் விரிவு:
ஒரு மொழியிலுள்ள சொல்லுக்கான பொருளைச் சிறிது விரித்துப் புதிய கருத்தமைவை விளக்குதல்.
gigoro - Dapartment 2-CDL - morph; DQ5Lu6ör — morpheme L6) i7, Liairs. It prih - Electricity
8

(வேற்றுமை உருபைக் குறித்த 'உருபு" என்பது இன்று "morph" ஐக் குறிக்கும் சொல்லாசப் பொருள் விரிவு பெற்றுள்ளது.)
3) புதுச் சொல் படைத்தல்:
ஒரு கருத்தமைவை விளக்கத் தக்க வண்ணம் புதுச் சொல் லைப் படைத்துக்கொள்ளுதல். இதற்கு மொழி மரபைக் கூடிய
வரை பின்பற்றுதல். இதற்கென சில சொல்லாக்க விதிகளை வரையறுத்துக்கொள்ளுதல்.
Computer - கணிப்பொறி, கணனி Technology - தொழில்நுட்பவியல் Hypertrophy - மிகை வளர்ச்சி Molecule - மூலக்கூறு
Element - தனிமம்
p6v ở GaláFIT Gv Góløör împiù utiq-LÜLI GOL u Glav (etymology of the source word) கலைச் சொல்லாக்குவதைவிட, கருத்தமைவைப் புரிந்து ஆக்குவதே சிறந்தது.
4) மொழிபெயர்ப்பு:
ஒரு கருத்தமைவைச் சுட்டத் தகுந்த சொல் இல்லாதபோது
அக்கருத்தமைவைத் தாங்கி நிற்கும் பிறமொழிச் சொல்லை மொழி பெயர்த்துக் கொள்ளுதல்,
Telescope - தொலை நோக்கி
Telephone - தொலைபேசி
Television - தொலைக்காட்சி
Radio - ஆகாஷவாணி, வானொலி
University - சர்வகலாசாலை, பல்கலைக்கழகம்.
இம்மொழி பெயர்ப்பு மூலமொழி இலக்குமொழி என்றோ
மூலமொழி (ஆங்) இலக்குமொழி (சமஸ்) இலக்குமொழி (தமிழ்) மூலமொழி (சமஸ்)
என்றோ அமையலாம்.
(அதாவது மொழி - மொழி (சமஸ்) இங்கு மொழி ஆங்கிலத் திற்கு இலக்குமொழியாகவும் தமிழுக்கு மூலமொழியாகவும் அமை யும் நிலை). குறியீடுகள், சமன்பாடுகள், வாய்ப்பாடுகள், அறிவி
119

Page 74
யலார் மற்றும் ஊர்ப் பெயர் கொண்ட சொற்கள், முதலெழுத்துச் சொற்கள் (acronym) முதலியவற்றை மொழிபெயர்த்தல் தேவை இல்லை.
5) கடன் வாங்கல்:
தகுந்த கலைச்சொல் தனது மொழியில் இல்லாதபோதும் புதுச்சொல் படைப்பதில் தொல்லை ஏற்படும்போதும் மொழி பெயர்த்தலில் குழப்பம் நேரும்போதும், பிறமொழிச் சொல்லை அதன் கருத்தமைவுடன் கடன்வாங்கிக் கொள்ளலாம்.
எக்ஸ்ரே X-ray பல்ப் Bulb
இவ்வாறு கடன் வாங்கும்போது ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளேயன்றி இந்திய மொழிகளும் துணைபுரியக் கூடும். , ' '
சதம் கஜானா ஜனநாயகம்
சொற்களைக் கடன் வாங்கித் தமிழில் எழுதும்போது சில சிக்கல் கள் ஏற்படுகின்றன. அவற்றைக் குறைக் 4 க் கிரந்த எழுத்துக்க ன்ளப் பயன்படுத்த அனுமதி வழங்குவதோடு, தமிழ் ஒலியின் அமைப்பு விதிகளிலும் சில நெளிவு சுளிவுகளுக்கு இடந்தர வேண்டும்.
ஸ்டா லின், ஆஸ்திரேலியா, ரேடார், லேசர், டெட்டால், பிளாஸ்மா ஃபாரன்ஹீட் முதலிய சொற்களை இசுடாலின், ஆசுத்ரேலியா, இரேடார், இலேசர், இடெட்டால், பிளாசுமா, பாரா: கீட்டு எனத் தமிழ்ப்படுத்தாது, அவற்றை உள்ளவாறே எழுத அனுமதிக்க வேண்டும். கடன் வாங்குதல் காரணமாக நிகழும் புதிய மெய்மயக்கங்களை அனுமதித்து அவற்றுக்கு விதி வகுக்க வேண்டும். (F) ஒலியை "ஃப்" என எழுதுவது இன்று பெரு வழக்காக உள்ளதால், இதை அனுமதித்து இக்கால இலக் கணம் அமையவேண்டும்.
இவ்வாறு, ஒரு சில கோட்பாடுகளைக் கொண்டு தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது, இவ்வுருவாக்கம் இதற் கென அமைக்கப்பட்ட குழுவின் ஒரு குறிப்பிட்ட பணியாக இல் லாது, பல குழுக்களால் பல காலங்களில் பல தேவைகள் கருதி மேற்கொள்ளப்படுவதால், தமிழ்க் கலைச் சொற்களில் ஒருமைப்
20

பாடு இல்லாது போகிறது. மேலும், இக்கலைச் சொல்லாக்கப் பணி தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழ்பேசும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் நடைபெறுவதால் சிக்கல் மிகுதி யாகிறது. இந்தக் கலைச் சொல்லாக்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரு கருத்தமைவுக்குப் பல கலைச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. v,
Physiology - உடல் இயங்கியல்
- உடல் செயல் இயல் (தமிழகம்) - உடல் தொழில் இயல் Department - g/60) sp (5)
திணைக்களம் ( இல)
இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று (one - to - one) என்ற இலட்சிய நிலை இல்லாது ஒன்றுக்குப் பல (many - to - one) என்கிற நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் உண்டு.
ஒரு கருத்தமைவைக் கலைச்சொல்லாக்கிப் புரிந்து கொள்வதற் கேற்பவே கலைச்சொல் அமைகிறது. ஒவ்வொரு கருத்தமைவும் சில உறவுகளைக் கொண்டுள்ளது. அவ்வுறவுகளை:
முதல் - சினை
பொது - சிறப்பு
காரணம் - காரியம் செய்வது - செயல்
என பல வகைப்படுத்தலாம்.
கயல்போலும் கண்' , குவளைபோலும் கண் எனப் புலவர் கள் கண்ணுக்கு வேறுவேறு உவமை கூறியதற்குக் ,கண்‘ என்கிற கருத்தமைவு பற்றிய அவர்தம் புரிந்துகோடல்தான் காரணம், "வினை பயன் மெய் உரு" என்ற நான்கின் அடிப்படையில் உவமை அமையும் என்று தொல்காப்பியர் சொன்னதும் உவமைக்கும் உவ மிக்கப்படும் - பொருளுக்கும் இடையே உள்ள உறவுபற்றித்தான். "புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினை உவமம் என்றால் 'முத்தன்ன வெண் பல்’ நிற உவமம் ஆகிறது.
இதைப்போலத்தான் கலைச்சொல்லுக்கும் - கருத்தமைவுக்கும் இடைநிகழ் உறவு பலவகையில் அமைகிறது. ". . .
சிலந்தியைக் குறிக்கும் 'எட்டுக்கால் பூச்சி முதல் - சினை" உறவில் அடங்கும் எனில், "மிகை வளர்ச்சி என்பது (Hypertrophy) காரண காரிய உறவில் அடங்கும்.

Page 75
கணிப்புத் தொழில் நுட்பம் (Computer technology) கட்டு
Ldrtarš Ggrtfolá) byl lub (Construction technology) atašru63T பொது - சிறப்பு உறவு உடையதென்றால், உடல் இயங்கியல் (physiology) தெளிப்பான் (Sprayer) ஆகியவை செய்வது - செயல் உறவு உடையதாகும். இவ்வகை உறவுகளே அன்றி, ஒரு பொரு ளின் பண்பு, அமைப்பு முதலியனசுடக் கலைச்சொற்கள் உருவாக் கப் பயன்படுகின்றன.
நீள்மை - Elastic
நட்சத்திர மீன் - Star - fish
இவ்வாறு பல்வேறு உறவுகளில் ஒருவர் ஒன்றைக் கருத மற்றவர் பிறிதொன்றைக் கருத வெவ்வேறு சொற்கள் உருவாயின.
இவ்வகைக் காரணங்களால் ஒன்றுக்கு ஒன்று என்கிற இலட் சிய நிலை ஏற்படவில்லை. எனவே கலைச்சொல் தரப்படுத்தம் தேவைப்படுகிறது. கலைச்சொல் தரப்படுத்தம் ,
தரம் / தரப்படுத்தம் என்பது கலைச்சொல்லில் மட்டுமன்றி * வாழ்க்கைத்தரம்", "பொருளின்தரம்', 'உற்பத்தித்தரம் , மாண வர்தரம்" என வேறு பல தளங்களிலும் காணப்படுகிறது.
கலைச்சொல் தரப்படுத்தம் என்றால் என்ன?
ஒரு கருத்தமைவைக் குறிக்கும் பல கலைச்சொற்களில் ஒரு கலைச் சொல் அதனைப் பயன்படுத்துவோரின் இசைவுடன் இதுதான் இதற்குப் பொருத்தமானது என வரையறுத்து, அதனையே பயன் படுத்துமாறு ஒரு ஒருமைப்பாட்டை அக்குழுவுக்குள் வேண்டு மென்றே திணிப்பதுதான் கலைச்சொல் தரப்படுத்தம் ஆகும்.
அக்குழுவுக்குள் கருத்துப் பரிமாற்றம் தெளிவுடனும் திறமை யாகவும் நடைபெற இது உதவும். தரப்படுத்தப்பட்ட கலைச் சொல் பொருத்தமானதாகவும் சொற் செட்டுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். (JLS - 38, 100)
தரப்படுத்தத்துக்கான முன் தேவைகள்
கலைச் சொற்களைத் தரப்படுத்த முற்படுமுன் 1) அனைத்துக் கலைச் சொற்களையும் தொகுக்க வேண்டும். 2) துறைவாரியாகப் பிரித்து பொருள் எழுதிக்கொள்ள வேண்டும். 3) சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள உறவைப் பகுத்தாய வேண்டும்; 4) அதனடிப் படையில் சில கொள்கைகளை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். 5) பிறகு வல்லுனர்களை அழைத்து விவாதித்து, தரப்படுத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் தரப்படுத்தம் நிகழவேண்டும்.

இதற்காக மக்கள் தொடர்புச் சாதனங்களையும் (இசுரேல், இந் தோனேஷியா போல) பயன்படுத்தலாம்.
கலைச் சொல் தரப்படுத்தக் கோட்பாடு.
கலைச்சொற்களைத் தரப்ப்டுத்தும்போது சில கோட்பாடு களை | நெறி முறைகளை வரையறுத்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும் என்றோம். ஈஜீன் ஊஸ்டர் (Eugene worster) என்ற அஸ்திரியப் பொறியாளர் கலைச்சொல்லாக்கம் / கலைச்சொல் தரப் LuGö35 Lib (35stóë 1931 — gav 35Th GT(p Sulu International standardization of Technical Terminology GT667 so spita56) ga) Gas TL. பாடுகளை வரையறுத்தார். அன்று முதல் "கலைச் சொல்லியல்" என ஒரு தனி அறிவுத்துறை வளரத் தொடங்கியது. 30மொழி களில் 200க்கு மேற்பட்ட குழுக்கள் இப்பணியை மேற்கொண்டுள் ளன. அனைத்துலகக் கலைச்சொல் தரப்படுத்தும் நிறுவனம் என்ற அமைப்பு 1951-இல் நிறுவப்பட்டது. இதன் செயலகம் வியன்னா வில் இயங்குகிறது. இது 7 அடிப்படைக் கொள்கை வெளியீடுகளை வெளியிட்டுள்ளது. பொதுவாக இக் குழுக்கள் ஊஸ்டரின் கோட் பாடுகளைப் பின்பற்றினாலும், குறிப்பிட்ட மொழியின் அமைப்பு மற்றும் தேவைக்கேற்பச் சில கோட்பாடுகளையும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. தமிழில் இவ்வகை முயற்சி இப்பொழுது தான் தொடங்கியுள்ளது. தமிழ் பல்கலைக் கழகத்தில் 1983இலும் 1884 இலும் அறிவியல் கலைச் சொல்லாக்கத் தரப்படுத்தப் பட்டறை நடைபெற்றது. அதில், 30,000க்கு மேற்பட்ட கலைச்சொற்கள் தரப்படுத்தப்பட்டன. 1984இல் மருத்துவக் கலைச் சொல் தரப் படுத்தப்பட்டறையும் நடைபெற்றது. அதில் 5000 மருத்துவச் சொற்கள் தரப்படுத்தப்பட்டன.
ஒரு துறையில் கலைச்சொல் தரப்படுத்தம் கீழ்க்கண்ட கோட் பாட்டின் அடிப்படையில் அமையும்; (கலைச்சொல் முன்னொட்டு. பின்னொட்டுக்கும் இவை பொருந்தும்.)
1) பொருத்தமுடைமை / திறனுடைமை
(Appropriateness / Efficiency)
ஒரு கருத்தமைவுக்குப் பல கலைச் சொற்கள் இருக்கும்போது அவற்றுள் பொருத்தமான சொல்லைத் தரப்படுத்தல்.
Anatomy - சரீர இயல், உடலமைப்பியல், உடலியல், உடற் கூறுஇயல். இவற்றுள் பொருட்பொருத்தம் அல்லது பொருள்திறன் நோக்கி உடல்கூறு இயல் என்பதைத் தரப்படுத்தல். சொற்பிறப்பியல் நோக்கிலும் இது பொருந்துவதாகும்.
23

Page 76
2. Sb160) LSILD: (Adaptability)
ஒரு கலைச் சொல் பெருவழக்கினதாகவும் மற்றொன்று அரு கிய வழக்கினதாகவும் இருக்கும் போது, பெருவழக்கிலுள்ளதை எடுத்துக்கொள்ளுதல்.
Joint கூடு, இணை (பொருளில் அதிக வேற்
றுமை இல்லை) Joint Secretary இணைச் செயலர் Joint action council sin, -G) [5L6Jq-lji GM5đi (g5(up Joint Statement கூட்டு அறிக்கை Joint account கூட்டுக் கணக்கு
இங்கு, வழக்கு மிகுதி நோக்கி இணைச் செயலரைக் கூட்டுச் செயலர் எனலாம். "பெருவழக்கு" என்பது சமூகத்தில் பொது இசைவு பெற்ற தற்கு அடையாளமாகும். எனவே, அதற்கு ஏற்பளித்தல் தேவை .
சில சமயங்களில், கருத்தமைவுக்கு பொருந்தாத சொல்லாக இருப்பினும் வழக்கில் வத்தபின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். Engineer பொறியாளர் (இதன் மூலப் பொருள்: Ingenious (L) மதிநுட்பம்)
3. Gog Tsibosi (6 / Gryfinid: (Economy / Simplicity)
மின்சார வாரியம், மின்சாரத் தடை என வழங்கப் பெற்று
வந்தவை. சொற்செட்டுக் கருதி, தற்போது மின்வாரியம், மின்தடை என வழங்கப்பட்டு வருகின்றன. •
4. ஒருமைப்பாடு: (Uniformity)
கூடுமானவரை ஒரு துறை சார்ந்த கலைச் சொற்களைத் தரப்படுத்தும் போது ஒருமைப்பாடு குலையாது தரப்படுத்தல் நல்லது. (எ. க) hydro- என்பது நீரோடு சம்பந்தப்பட்டது. இதைக் கொண்டு தொடங்கும் சொற்கள் கீழ்க் கண்டவாறு அமைகின்றன.
Hydraulics நீரியல்
Hydrology நீர்வள இயல் Hydraulic acoumu lator நீரியல் கொள் கலன்
ltis அழற்சி (மருத்) Dermatitis தோல் அழற்சி
124

Ucercolitis குடல் புண் அழற்சி
Scope நோக்கி
Stethascope い நெஞ்சு நோக்கி Microscope நுண் நோக்கி Telescope தொலை நோக்கி
Hyper மிகை
Hypertrophy மிகை வளர்ச்சி Hypertension மிகை அழுத்தம்
Angle கோணம் (பொறி) Ang le of friction உராய்வுக் கோணம் Angle of Kinetic friction நகர் உராய்வுக் கோணம் Angle of static friction நிலை உராய்வுக் கோணம்
சில கலைச் சொற்களில் இவ்வகை ஒருமைப்பாடு அமைதல் சாத்தியமில்லாது போகலாம். (எ. டு) Anti - என்கிற முன்னொட் டுக்கு நிகராகத் தமிழில் எதிரி, பகை, முரண், 'அடக்கி, தடை நீக்கி, முறி ஒழிப்பு எனப் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
g Antibiotic நுண்ணுயிரெதிரி, உயிர்ப்பகை,
நோய் உயிர் முறி
Antibody முரணுடலி
Antiem tic வாந்தியடக்கி
Antisteri ization மலட்டுத் தடை
Antipain வலிநீக்கி
Antimalaria மலேரியா ஒழிப்பு
Antitubercousis சய ஒழிப்பு
Antileprosy தொழு நோய் ஒழிப்பு
Antitoxin நற்செதிர்ப்பு, எதிர் நச்சு
Anti Hindi இந்தி எதிர்ப்பு
தரப்பட்டுள்ள தமிழ்ச் சொற்களை இவற்றின் பொருண்மைப் பரப்பில் (Semantic range) மூன்று பிரிவுக்குள் அடக்கலாம்.
1) எதிர்ப்பு ; எதிர், பகை, முரண் 2) தடுப்பு ; அடக்கி, தடை, நீக்கி 3) அழிப்பு ஒழிப்பு
இவற்றுள், நோய் சம்பந்தப்பட்ட சொற்களோடு Anti சேரும்போது 'ஒழிப்பு" என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், நோய் பற்றிய சமுதாயத்தின் அச்சமும் அதை ஒழிப்பதில் காட்டும் ஆர்வமுமேயாகலாம். எனவே, கலைச் சொல்லாக்கிகள் இந்தச் சமுதாயக் காரணியை மனதில்கொண்டு இதை ஆக்கியிருக்க
25

Page 77
வேண்டும். எதிர்ப்பு, பகை, தடை முதலிய சொற்களைவிட ஒழிப்பு ான்பது இந்த இடத்தில் பொருள் திறனுடைய சொல்லாக உள் ளது, 'இந்தி எதிர்ப்பு' என்னும் போது, இந்தி திணிப்பை எதிர்ப்ப தாக விளக்கப்படுகிறது. இது இந்தி ஒழிப்பு அன்று. இம்மாதிரி இடங்களில், ஒழிப்பு என்பதைவிட "எதிர்ப்பு’ என்பது எதிர்பார்க் ரும் கருத்தைப் புலப்படுத்துகிறது. ஒரு மொ ழி யின் திணிப்பை எதிர்க்க வேண்டும்; ஆனால் மொழியை எதிர்க்கவோ ஒழிக்கவோ வேண்டாம். ஆனால் ஒரு நோயை எதிர்த்தால் மட்டுமே போதாது ஒழிக்கவும் வேண்டும்; எனவேதான், "ஒழிப்பு என்பது நோய்களோடு சேர்க்கப்பட்டது போலும் என எண்ணத் தோன்றுகிறது. எனவே, இவ்வகைக் கலைச் சொல் தொகுதியில் முழு ஒருமைப்பாடு காணல் இயலக் கூடியதன்று.
5. பலதுறை நோக்கு (Interdisciplinary)
கலைச் சொற்களில் பலவும் ஒரு குறிப்பிட்ட துறைக்கென இல்லாது தொடர்புடைய பிற துறைகளிலும் பயின்றுவரக் காணலாம், எனவே, கலைச் சொல்லாக்கும் போதும், தரப்படுத்தும் போதும் அவ்வத்துறை வழக்கையும் கவனத்தில் கொண்டு தரப்படுத் g56i Luug)160L-Lug ITGjib. Structure, Stress. Angle, Pressure heat - Cup 565uL LuG) Go)Frsbé5(ob Micro - Macro, Scope, endo-exo inter -, intra - முதலாய பல ஒட்டுக்களும் பல துறைகளிலும் காணப்படும். ஒருமைப்பாடு கருதி இவற்றை எல்லாவிடத்திலும் ஒன்றுபோல் பயன்படுத்த முடியுமா எனப் பார்த்தல் நன்று. இல்லை யேல், குறிப்பிட்ட துறையில் இது இவ்வாறு வழங்கும் எனத் துறைச் சுட்டோடு அவற்றை வழங்கலாம்.
Sub-soil water - அடிமண்நீர் (பொறி) Sub-collector - துணை ஆட்சியர் (நிர்)
இங்கு இவ்வாறுதான் பயன்படுத்த முடியும். 'துணைமண் நீர் என்றோ ‘அடி ஆட்சியர்' என்றோ வழங்கினால் கருத்துப் புலப்படுத் தம் சரிவர நிகழாது, எனவே, எல்லாவிடத்திலும் ஒன்றுக்கு ஒன்று” என்ற இலட்சிய நிலை அமைவது சாத்தியமில்லை. ஆங்கிலத்திலும் இந்த நிலையைக் காணலாம். காட்டாக, "இயல்" என்ற ஒட்டுக்கு
iš GM6) gj giới) — ics, logy, graphy என்ற ஒட்டுக்கள் உள்ளன. இவையே அன்றி Chemistry, History, Anatomy என்பவற்றுள் வேறு அமைப்பு காணப்படுகிறது. தமிழில் காணப்படும் ஒருமைப்பாடு ஆங்கிலத்தில் காணப்படவில்லை, ஆனால் இதை ஒரு குறை என்று கூற முடியாது. அந்த மொழியின் இயல்பு அது.
26

6. மொழித் தூய்மை:
தமிழைப் பொறுத்தவரை கலைச் சொற்கள் தூய தமிழில் இருத்தல் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உண்டு. பிற மொழிச் சொற்களை - குறிப்பாக சமஸ்கிருதச் சொற்களை - நீக்க வேண்டும் என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இந்த மொழித் தூய்மை வாதம் இப்போது அரசோச்சுவதில்லை. காரணம் அவை ஒன்றுக் கொன்று தொடர்புடையனவாகும். ஆனால், தமிழ் - சமஸ்கிருத வேறுபாடு நமது வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. எனவே, தமிழில் கலைச் சொற்களை தரப்படுத்தும் போது சமஸ்கிருதச் சொல்லை நீக்குதலை ஒரு கோட்பாடாகச் சொல்லுவர்.
பெளதீகம் - இயற்பியல்
g & Tu of th - வேதியியல்
put Flf - சாறு
பிராணவாயு - உயிர்வளி
மேலே விவரிக்கப்பட்ட கோட்பாடுகள் அடிப்படையில் தமிழ்க் கலைச் சொல் தரப்படுத்தம் நிகழும் போது, நம் எதிர்பார்ப்பு நிறை வேறும். அதற்கென நாம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,
நாம் செய்ய வேண்டியவை:
மருத்துவம், பொறியியல் மற்றும், அடிப்படை அறிவியல் சம்பந்தப்பட்ட சொற்களும், சமுக அறிவியல் சொற்களும் தொகுக் கப்பட்டுச் சிறு சிறு தொகுதிகளாக இலங்கையிலும் தமிழகத்திலும் வெளிவந்துள்ளன. இவற்றையெல்லாம் (இதுவரை சுமார் 2 லட்சத் துக்கு மேற்பட்ட கலைச் சொற்கள் வெளியாகியுள்ளன) சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள மரபுவழித் தொழிலா ளர்களிடமிருந்து கலைச் சொற்களைத் திரட்ட வேண்டும். புதுச் சொற்களை ஆக்க வேண்டும்.
இப்பணிகளை மேற்கொள்ள
1. “தமிழ்க் கலைச்சொல் தரப்படுத்தக் குழு ஒன்று உடனே அமைக்கப்பட வேண்டும். (பல நாடுகளில் அரச ஆதரவில் இவ்வ கைக் குழுக்கள் செயல்படுகின்றன) இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் சார்பாளர்கள் இடம்பெற வேண்டும். துறை அறிஞர் களோடு மொழியியல் அறிஞர்களும், மொழி அறிஞர்களும் இடம்
127

Page 78
பெறுதல் வரவேற்கத்தக்கது. இது ஒரு தீர்வகமாக (Clearing House) இருந்து செயல்பட வேண்டும். இக்குழு, கலைச்சொல் பட்டியல் களை மட்டும் வெளியிடாது, தரப்படுத்தப்பட்ட கல்லச் சொல் அகராதிகளைத் துறைவாரியாகவும் பொதுவாகவும் வெளியிட வேண்டும். அவற்றைப் பயன்படுத்தியே பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.
2. அறிவியல் மூல நூல்களை எழுதுவதோடு மொழி பெயர்ப் பும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கென அறிவியல் இலக்கிய G).otyf)Ghuum úr smuDuin (Centre for translating science literature.) ஒன்று நிறுவப்பட வேண்டும். இந்த மையம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய விதத்தில் மூல அறிவியல் நூல் களைத் தமிழில் வெளியிடும் பணியையும் ம்ேற்கொள்ளலாம். தரப் படுத்தப்படும் கலைச் சொற்களையும் முழுமையாகப் பயன்படுத்தத் தமிழே பயிற்று மொழியாக வேண்டும். இல்லையேல் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகும்.
கலைச் சொற்களைத் தரப்படுத்தும் பணியில் எல்லா நாடு களையும் போல நாமும் ஈடுபடுவதோடு அவர்களது அனுபவத்தை யும் நாம் பெறுதல் நம் முயற்சியில் வெற்றிகாண உதவும். அறிவியல் யுகத்திற்கேற்பத் தமிழ் வளர இத்தகைய ஆக்கப்பணிகளில் காலச் சுணக்கமின்றி ஈடுபடுதல் கைமேல் பயன்தரக் கூடியதாகும்.
பயன்பட்ட நூல்கள்
அரங்கன், கி. 1988 *தமிழ் மொழியியல் கலைச் சொற்களைத் த ர ப் படுத் துதல், சில அனுபவங்கள். (உருளச்சு) தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
குழந்தைசாமி, வா, செ. 1985 "அறிவியல் தமிழ், பாரதிப்
பதிப்பகம் சென்னை.
சுந்தரம், இராம 1984 "தமிழ் வளர்ச்சி: கலைச்
சொல்லாக்கப் பணிகள், " தமிழ்க்கலை, 2:4 , தஞ்சாவூர்.
1988 **கலைச் சொற்களைத் தரப்
படுத்துதல்' களஞ்சியம், சென்னை.
丑28

பாரதியார்
Byron L. Janet
Johnson R. L. 8 Sagar J. C.
Rubin John et. ai.
Sagar d C. ' (issue - editor)
1977
1976
1980
1977
1980
பாரதியார் கட்டுரைகள், பூம் புகார் பிரசுரம், சென்னை.
'Selection among alternates' in language Standardization: the csse of Albanian Mouton, The Hauge.
'Standardization of terminology in a Model commu nication, JSL 23.
language planning processes Mouton, The Hauge.
international Journal of the Sociology of Language (IJSL) No. 12. Mouton, The Hauge.
(29

Page 79
கலைச்சொற்களின் தொடர்பாடல் திறனும் புதுமையாக்கமும்
எல். இராமமூர்த்தி
மொழி என்பது ஒரு சமுதாயத்தினரது தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு குறியீட்டு அமைப்பு ஆகும். மொழி சமுதாயப் பணிகள் பலவற்றைச் செய்யும் ஆற்றல் உடையது. ஆனால் நடைமுறையில் இப்பணிகளைச் செய்வதில் மொழிக்கு மொழி வேறுபாடு காணப்படுகிறது. சமுதாயப் பணியில் மொழியின் பங்கு சிறப்பாக அமைய மொழியை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பணியை நிறைவேற்ற மொழி பெற்றுள்ள சொல்வளம், இலக்கண இலக்கிய வளம், மொழிப் பயன்பாட்டில் மொழி வழக்குகளை எளிதாகப் பயன் படுத்தக்கூடிய நிலை ஆகியவற்றைக் குறிக்கும். மொழிகள் மொழிப் பயன்பாட்டில் தன்னிறைவும், திறனும் பெறவேண்டுமெனில் மொழிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டியது அவசியமா கிறது. வெயின்ஸ்டின் (1980 - 56) என்பவர் மொழித் திட்டமிடுதல் என்பது ஒரு சமுதாயத்தின் மொழிப் பயன்பாட்டில் கொண்டுவரப் படும் திட்டமிட்ட மாற்றம் என்றும், இது அரசால் அங்கீகரிக்கப் பட்ட நீண்டகாலத் திட்டம் என்றும், இம்மாற்றம் தொடர்பாடல் தேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதாக அமையும் என்றும் விளக்குவார். ஒரு நாட்டு வளர்ச்சியில் மொழிகளின் பங்கும் மொழித் திட்டமிடுதலின் பங்கும் மிக முக்கியமானவையாகும். ஒரு புதிய நாடு உருவாகிறது என்றால் அந்நாட்டு மொழிதான் அவர்களுடைய நாட்டுப் பற்றை வெளியிடுவதற்கு ஏற்றது என்ற உண்மையை ஃபின்னிஸ், வெல்ஸ், நார்வீஜியன், ஐரீஸ், பாஸ்க் போன்ற மொழி களின் மூலம் அறியலாம். பன்மொழிச் சூழல் உள்ள நாடுகளில் மொழிகளை ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் அடிப்படையில் பாகு படுத்திப் பயன்படுத்துவர். இதனால் எல்லா மொழிகளும் எல்லாச் சூழலிலும் செயல்படும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும். எனவே தான் வளர்ந்த நாடுகளில் தேசியமொழி என்ற ஒரு மொழியைத் தெரிவு செய்து எல்லாச் சூழலிலும் பயன்படுத்தினர் (கோல்மஸ். 1989; 3). அதேபோலத்தான் ஆதிக்கச் சூழலில் இருந்த நாடுகள் தங்கள் மொழியைத் தெரிவு செய்து தொடர்பாடல் தேவைகளுக் கும் பயன்படுத்தி வந்தன. இத்தகைய மொழிகளின் வளர்ச்சியையும்
'130

மொழிகளில் ஏற்பட வேண்டிய தன்னிறைவையும் மொழித்திட்ட மிடுதல் வழியாகத்தான் உருவாக்க முடியும் என்று ஃபெர்குசன் , ஹாகன், ஃபிஷ்மன், ரூபின் நீயூஸ் துப்ண் போன்ற அறிஞர்கள் நிறுவினர்.
புதுமையாக்கம்:
மொழி வளர்ச்சியினை மூன்று உட்பிரிவுகளில் விளக்குவர் மொழியியல் அறிஞர்கள். அவை 1. நிலைபேறாக்கம் 2. புதுமை யாக்கம் 3, எழுத்துருவாக்கம் என்பனவாகும். மொழிவளர்ச்சிச் செயல்பாட்டில் புதுமையாக்கம் சிறப்பான இடத்தைப்பெறும். ஃபெர்குசன் (1968; 32) என்பவர் புதுமையாக்கம் என்பதை நவீன முன்னேற்றங்களுக்கேற்ப சமுதாயத்தின் மொழிப் பயன்பாட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைக் கருத்திற் கொண்டு ஒரு குறிப் பிட்ட மொழியை மற்ற மொழிகள் மொழிப் பயன்பாட்டில் பெற் றுள்ள ஆற்றலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆக்கும் முறை
Greiruri .
மேலும் இவர் இதை இரண்டு நிலைகளில் விளக்குவார். அவை, 1. மொழிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் சொற்களஞ்சிய வளர்ச்சி 2. மொழிப் பயன்பாட்டிற்கு ஏற்ற தேவையான புது அமைப்புகளையும், புது மொழி நடையையும் ஏற்படுத்துவது. இன்று வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் வழி புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. அக்கருத்துக்களை வெளி யிடும் முயற்சியில் புதிய கலைச்சொற்களும், புதிய வாக்கிய, நடை அமைப்புகளும் தோன்றுகின்றன. இதன்வழி மொழியில் புதுமை யாக்கம் தோன்றுகிறது.
ஹாகன் என்பவர் (1966; 922 - 33) மொழி வளர்ச்சி நிலையை நான்கு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை, 1. தெரிவு 2. வடிவாக்கம் 3. விரிவாக்கம் 4. சமுதாய ஏற்பு என்பனவாகும். இதில் விரிவாக்கம் என்ற நிலையோடு, தம்முடைய புதுமையாக் கக் கருத்தைத் தொடர்புபடுத்துவார் ஃபெர்குசன். நார்வின் (1973; 27) என்பவரின் கருத்துப்படி புதுமையாக்கம் என்பது சொற்களஞ்சியம் மட்டுமல்லாது இலக்கண வளர்ச்சியும் கலந்த தாகும். கருத்தாடலில் பயன்படுத்தப்படும் மொழிக்கூறுகள் மக்களால் எளிதில் புரிந்துகொள்ளப்படும் வகையில் செய்யப்படும் எளிமையாக் கமும் புதுமையாக்கமே என அண்ணாமலை (1980) கூறுவார்.
31

Page 80
புதிய துறைகளில் மொழியைப் பயன்படுத்தும் போதும் புதிய கருத்துக்களை வெளியிடும் போதும் மொழிக் கூறுகளில் ஏற்படுத்தப் படும் விரிவாக்கமும், எளிமையாக்கமும் புதுமையாக்கம் எனப்படலாம்.
கருத்தாடல் செம்மையாக நடைபெற மொழிக்கூறுகளின் பயன்பாடு மிக முக்கிய பங்கு கொள்கிறது. புதுமையாக்கத்தில், மற்ற மொழிகள் பெற்றுள்ள ஆற்றலுக்கு ஏற்பத் தம்மொழியை மாற்ற பொதுவாக இரண்டு வழிகளை மேற்கொள்ளுவர். அவை, 1. பிறமொழிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் கூறுகளைக் கடன் வாங்கித் தம் மொழியில் அவற்றைப் புகுத்தி அதன்வழி ஆற்றலைப் பெருக்குவது 2. தம் மொழியில் உள்ள மொழிக்கூறுகளை ஏதேனும் ஒரு வகையில் மாற்றியமைத்து மொழிப்பயன்பாட்டில் ஆற்றலை உண்டாக்கிக் கொள்வது. தென்னிந்திய மொழிகளில் புதுமை யாக்கம் ஆங்கிலத்திலிருந்து சொற்களைக் கடன் வாங்குதல். கடன் கலப்பு, மொழிபெயர்ப்பு, சொற்களுக்குப் புதிய பொரு ளைத் தருதல், தொடராக்கம் செய்தல் போன்ற வழிகளில் நடைபெறுகிறது என கிருஷ்ணமுர்த்தி (1984) கூறுவார்.
இந்தக் கட்டுரை ஆட்சித்துறையில் தமிழைப் பயன்படுத்தும் போது புதுமையாக்கம் எவ்வாறு நிகழ்கிறது என்பதையும், உரு வாக்கப்பட்ட கலைச்சொற்களின் கருத்தாடல் திறனையும் ஆராய்கிறது
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக 1956-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின் அதைச் செயலாக்க தமிழ் வளர்ச்சித்துறை, மொழிபெயர்ப்புத் துறை போன்ற துறைகள் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நிலைகளில் ஆட்சித் துறையில் தமிழ்ப் பயன்பாடு புகுத்தப்பட்டது. இதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறை கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுப் பயன்பாட்டில் புகுத்தியது. அத்தகைய அகராதியில் கல்வித்துறைக் கலைச்சொல் அகராதி இவ்வாய்வுக்குத் தேர்ந்தெடுக் சப்பட்டுள்ளது.
புதுமையாக்க முறைகள்:
கல்வித் துறையில் தமிழைப் பயன்படுத்தும் பொழுது, அத் துறைக் கருத்துக்களை வெளியிட கீழ்வரும் வழிகளில் கலைச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன.
1. ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப்பட்டு, தமிழ் மொழிக்கேற்ப மாற்றி அமைக்கப்
பட்டுள்ளன. محس۔
置32

அதிகாரம் - Authority . . . . uonaisruuth - Grants சாலன் ----- Challan
2. கலைச் சொல்லின் ஒரு பகுதி கடன் சொல்லாகவும் மறு பகுதி தமிழ்ச் சொல்லாகவும் அமையும், கடன்கலப்பு முறையில் உரு வாக்கப்பட்டுள்ளது.
Gay LD55 still - Safe Custody f5) SliQuit Djil - Financial control onveg 6v 60) LouLuluh - Grant in-aid பகுதி நகல் - Extract
3. கடன் சொல்லுக்கு ஏற்ற அமைப்புடன் அச்சொல்லை மொழி பெயர்ப்புச் செய்து புதுசொல் படைத்தல்,
அறிவுரை குழு . - Advisory committee. Gaffids GO)3, LugGal(6 - Admission Register
4. கடன் சொல்லின் பொருளை த் தரும் முறையில் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- நீலத்தாள் வெண்கோட்டுப் படி
Blue print Teaching staff - பயிற்றுவிக்கும் பணியாள் Anamath - கருவூலக் கணக்கில் சேராப் பணம்
5. பழந் தமிழ்ச் சொற்களின் கருத்துக்களைப் புதிய கருத்துக் களுக்கு ஏற்ப மாற்றம் செய்து, அதையே கலைச் சொல்லாகப் பயன்படுத்தல்.
5.Tiaoji - Brush (Writing meterial)
(yug. 60LL - Citizenship (lienage)
(5(6) bl - Collection of houses (collection of fruits)
6 . ஒரு கலைச்சொல்லிலிருந்து அதன் பகுதியை மாற்றி வேறு ஒரு கலைச்சொல் படைத்தல்.
காட்சிப் பொருள் - Exhibit பொருட் காட்சி - Exhibition மதிப்பீடு - Evaluation ஈட்டுமதிப்பு - Compensative value (upstill 5 55616) - Enfacement of advice தகவல் முகப்பு - Enquiry counter பற்றுமை - Attachment கைப்பந்து — Sequire
133

Page 81
7 ஆங்கிலச் சொல்லின் நேர் சொல்லுக்கு இணையாக எதிர்ச் சொல்லை வைத்து கலைச் சொற்களை உருவாக்குதல்.
Fresher - அனுபவமில்லாதவர் Accuracy - நுணுக்கம், பிழையின்மை Atrandom - குறிப்பின்றி
8. பழஞ் சொற்களை அடையாக் கொண்டு கலைச்சொல் உருவாக்குதல்
குறுங்கூலி - Minimum wage மிகைப்பற்று - Over draft
9. ஒத்த பொருளையுடைய இரண்டு சொற்களை இணைத் துக் கலைச் சொல் உருவாக்குதல்.
Floor price - அடிமட்ட விலை Objection statement -- - - - 560L-LD gol'ü 4-4. Gay Th.
10. ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ஒன்றோ ஒன்றுக்கு
மேற்பட்ட சொற்களோ உருவாக்கப்பட்டுள்ளன.
1. ஒரு சொல்
Academic year கல்வியாண்டு Acada mic course メー கலைப் பாடம்
2. இரண்டு சொற்கள் :
High grade உயர்தரம்
M - X ܀- மேல்நிலை 3. மூன்று சொற்கள்
Reference шт гѓ60pәл
. . . . . . மேற்கோள் 4. நான்கு சொற்கள்
Correspondant தொடர்பாளர்
செய்தியாளர் செய்தி வரைவோர் நிருபர் 5. ஐந்து சொற்கள்
instruction அறிவுறுத்தல்
அறிவூட்டல் பணித்தல் போதனை கற்பித்தல்
l 34

புதுமையாக்கமும் கருத்தாடல் திறனும்
புதிய கருத்துக்கு ஏற்பப் புதிய சொற்களை உருவாக்குவதைப் புதுமையாக்கமாகக் கொண்டாலும் உருவாக்கப்பட்ட கலைச் சொற் களின் கருத்தாடல் திறனே புதுமையாக்கத்தை அளவிடும் கருவி யாக அமையும். கலைச் சொற் ஸ்ரின் கருத்தாடல் திறனை ஆராய பொருள் உணர் தேர்வு (Comprehensive test) நடத்தப்பட்டது. இத்தேர்விற்கு 75 கலைச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பனுவல் பயன்படுத்தப்பட்டது இத்தேர்வு பொது மக்களிடமும், அரசு அலுலலர்களிடையேயும் நடத்தப்பட்டது.
பொருள் உணர் தேர்வில் கலைச் சொற்கள், கொடுக்கப்பட்ட வடிவத்தில் அதன் பொருளுக்கேற்ற வேறு சொற்கள் வேற்று மொழிச் சொற்களாகவோ தொடர்களாகவோ அமைந்தன. ஒருசில சொற் களுக்குத் தவறாகப் பொருள்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்வில் சில சொற்கள் தேர்வின் நீளம், தனியவர் கேட்டல் திறன் (மறதி) போன்றவற்றால் விடுபட்டும். இருந்தன. SSSSSS
கலைச் சொற்கள் அவ்வாறே பயன்படுத்தப்படுவதற்கும் இணைச்சொற்களைப் பயன்படுத்துவதற்கும், அவற்றின் புரிதல் தன்மை முக்கிய காரணமாகும். சொற்களின் புரிதல் தன்மையையும், வடிவத்தையும் பின் வருமாறு இணைவுபடுத்தலாம்.
வடிவம்
سلم. புரிதல் + + தன்மை
+ வடிவம் + புரிதல்தன்மை = கருத்தாடல் திறன் அதிகம் - வடிவம் + புரிதல் தன்மை = கருத்தாடல் திறன் உண்டு - வடிவம் - புரிதல்தன்மை = கருத்தாடல் திறன் இல்லை
பொருள்உணர் தேர்வில், சில சொற்கள் கொடுக்கப்பட்ட வடிவத்துடனும் பொருளுடனும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய சொற்கள் நிலைபேறாக்கம் அடைந்த அல்லது தரப்படுத்தப்பட்ட சொற்களாகக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் எளிமையாக வும் பொருள் தெளிவுள்ளவையாகவும் உள்ளன. . . .
சேர்க்கைக் all LGBT b - Admission fees தேர்வு - Examination
S5

Page 82
மாற்றுப் பணி --- deputation
எழுத்தர் - - Clerk ... 1956-2. Lurial . - promotion
வேலை நீக்கம் - Suspension
சிலசொற்கள் பொருள் உணரப்படுகின்றன. ஆனால் கொடுக் கப்பட்ட வடிவத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு இணை யாகக் கடன் சொற்களோ, வேறு தமிழ்ச் சொற்களோ பயன் படுத்தப்படுகின்றன. கடன் சொற்கள் பயன்பாட்டிற்கு நீண்ட பழக் கம் காரணமாகும். கமிழ்ச்சொற்களுக்கு இணையாக பயன்படுத்தப் படும் சொற்களை மதிப்பீடு தரப்படுத்தலாம்.
அ) கடன் சொற்கள் கடன்சொல் பொருள்
மிகை ஊதியம் - போனஸ் BOnuS . பதவிவிலகல். - ராஜினாமா - resign
வட்டம் ー。 -தாலுகா - Taluk தண்டப்பணம் அபராதம் - fine கைப்பற்று AO ஜப்தி japti ஆ) இணைச் சொற்கள்
வினாத்தாள் - கேள்வித்தாள் - Ouestion paper விலக்கம் - நீக்கம் dismission பயிற்றுவிக்கும் பணியாள் - ஆசிரியர் Teaching staff சமுதாயச் - சாதிச்சான்றிதழ் - community . சான்றிதழ் Certificate ஊதியம் - சம்பளம் − рау
சில சொற்கள் கையாளப்பட்டாலும், பொருள் தவறாகக் கொள்ளப்பட்டது. இவை தூய இலக்கியச் சொற்களாக இருத்தல் குறிப்பிடத்தக்கது.
ஒறுத்தல் - penality fees நயப்புகள் - concession
பொருள் உணர் தேர்வில் சொற்களைப் பயன்படுத்தும் முறை யில் பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் வேறுபாடு காணப்படுகி றது. அதாவது மக்கள் நிலையில் கல்வி, வயது . வாழுமிடம் ஆகிய வற்றிற்கு ஏற்பவும் அலுவலர்களிடையே அலுவல்நிலை, பட்டறிவு ஆகியவற்றிற்கு ஏற்பவும் அவ் வேறுபாடு அமைந்துள்ளது. (காண்க அட்டவனை .) - 0ء۔ ..
136

கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்ட விழுக்காடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அலுவலர்கள் |
கையாளப்பட்டவை 8 - 20% 10 - 24% r இணைச் சொற்கள் 5.3 - 13.3% 5 - 16% கடன் சொற்கள் 4 - 24% 10 - 7133.3% தொடர்கள் 8 - 17% 6.7 - 14.7% தவறான சொற்கள் 4-12% 2.8 - 10.7% புரியாத சொற்கள் 12 - 29% 1 - 08.7%
மேலே காட்டப்பட்ட அட்டவணையில் கையாளப்பட்ட சொற்கள், இணைச் சொற்கள், கடன் சொற்கள் தொடர்கள் இவற்றை வைத்து கருத்தாடல் திறன் உள்ள சொற்களை கணக்கிடலாம்.
கருத்தாடல் திறன் உள்ள சொற்கள்
பொதுமக்கள் - 48%. அலுவலர்கள் - 61.2%
ஆட்சித்துறைத் தமிழ் என்பது அலுவலர்கள் தங்களின் அன் றாட அலுவல் நடைமுறைகளாகவும். பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் பயன்பாட்டிற்காகவும், பயன்படுத்தப்படுவதால் கருத் தாடல் திறனில் வேறுபாடு தோன்றுகிறது. ஆட்சித் தமிழ் எதிர் பார்த்த வெற்றியை அடையாததற்கு அத்துறைச் சொற்கள் சில செயற்கை மொழி பெயர்ப்பாகத் தமிழின் தன்மையில்லாமல் இருப் பதைக் காட்டலாம். உருவாக்கப்பட்ட சொற்களைத் தவிர புதிய சொற்களை தனியவர் உருவாக்குவதன் காரணமாகவும் சொற்கள்
நிலைபேறடையவில்லை.
பொருள் உணர் தேர்விலிருந்து கையாளப்பட்ட சொற்களின்
தன்மைகளை அறியலாம். V−
1. கையாளப்பட்ட பெரும்பாலான சொற்கள் கடன் சொல்
லுக்கு ஒத்த அமைப்புடைய மொழி பெயர்ப்புச் சொற்களாக உள்ளன.
அஞ்சல் ஆணை Postal order ஆய்வு அறிக்கை - Inspection report அலுவல்படி ഷ' Duty allowance
37

Page 83
2. பொருள் தெளிவுள்ள 'சொற்கள் கையாளப்படுகின்றன.
வேலை நீக்கம் - Suspension usas a surfey. - promotion
3. அன்றாடப் புழக்கத்தில் உள்ள சொற்களால் உருவாக் கப்படும் கலைச் சொற்கள் கையாளப்படுகின்றன
பணிமுடக்கம் - வேலைநிறுத்தம் - Strike தெரிபுபாடம் - விருப்பப்பாடம் - Elective Subject தடை ஒழிப்பு - தடை நீக்கம் - Clearance
4. சில சொற்கள் வடிவத்தில் எளிமையாக இருந்தாலும் பொருள் தெளிவில்லாததால் ஏற்கப்படவில்லை.
மந்தனம் - confidential நயப்பு - concession. முகவர் - agent வினைமுறி - Bond
5. சில கலைச் சொற்களுக்குப் பதிலாக கடன் சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும், அக் கலைச் சொற்கள் பொருள் தெளி வுடையனவாக இருப்பின் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்து வதன் மூலம் கடன் சொற்களை நீக்கலாம் என்பது கையாளப்பட்ட
முறையில் தெரிகிறது.
செலுத்துச் சீட்டு - சாலன் — Challan பட்டறிவு - அனுபவம் - Experience மிகை ஊதியம் - போனஸ் - Bonus பதவி விலகல் - Tirgaritid it. --Resignation
கலைச்சொற்கள் பொருள் தெளிவுடன் வடிவத்தில் நீண்ட தாக இருந்தாலும், பழக்கத்தின் அடிப்படையில் அவை எளிமை யாக்கம் செய்யப்பட்டுக் கருத்தாடல்திறன் கொண்டவையாக மாறுகின்றன.
Bank i cheque — au iš @š, as TGF TG av - காசோலை Index card - பதிவு குறிப்பு அட்டை - பதிவட்டை Claim - கேட்பு உரிமை - கோரிக்கை
பொதுவாக தமிழ்ச் சொற்களில் புதுமையாக்கம் முதலில் கடன் சொல்லாகவோ, கடின் கலப்புச் சொல்லாகவோ இருந்து, பின்
I 38

தமிழ்ச் சொற்களாக மாற்றப்பட்டுப் பயன்பாட்டில் எளிமையாக்கப் படுகின்றன.
குமாஸ்தா - எழுத்தாளர் - எழுத்தர் நியமனப் பத்திரம் - நியமன ஆணை - பணி ஆணை மத்ய அரசு - மத்திய அரசு - நடுவண் அரசு
- மைய அரசு போலீஸ் இலாகா - போலீஸ்துறை - காவல் துறை
எனவே வழக்குச் சொற்களால், பொருள் தெளிவாக ஆக்கப் படும் எளிய சொற்கள் நிலைபேறாக்கம் அடைகின்றன.
துணைநூல்கள்
ஆட்சிச்சொல்லகராதி. தமிழ்வளர்ச்சித்துறை, சென்னை.
கருணாகரன் கி., (1981.) மொழிவளர்ச்சி, மணிவாசகர் நூல கம், சிதம்பரம்.
Anna malai, E. (1980.) 'Simplification as a process of Modern er nization" in Socio linguistics and Dialectology, Anna mala i nagar.
Ferguson, Charles A. (1968.) ''Language development' in J. A. Fishman, eta (ed) Language problems of developing Nations, New York.
Florium Coulms (1989) language adaptation Cambridge press New York. .
Gravin C. Paul (1972) "Some comments on Language planning' in Advances in language planning Fishman: ( ed)
Hawgen. Eind (1966) ** Dialect, Language Nation,' American Anthropologist
Krishnamurthy Bh '(1984) ‘ʻ Modernization of South . lndian language. Lexical innovation in Newspaper Language in Bh. Krishnamurhty etal(ed) Modernization of Indian languages in news media.
Weinstein (1980) **Language planning in francophone Africa' Language ploblems and Language planning 4 (1).
I39

Page 84
பின்னிணைப்பு
a LashRT - 1
பொதுமக்கள் நிலை
20 - 30 வயது வரம்பு
PE SE HE
LF
R% U% R% U% R% u%
AD 8.0 6.7 120 1 0.7 16.0 18.7 TE 5.3 4.0 6.7 5.3 8.0 6.7 | EOE 4.0 6.7 12.0 14.7 |187 22.7 | PP || 16.0 || 13,3 || 12.0 || 8.0 || 10.7 || 9.3 W 9.3 10.7 5.3 10.7 4. O 6.7 UA 29.3 26.7 20.O 20. O 16.0 14.7 LR 28.0 |32.0 |32,0 |30,7 26.7 21.3
Jo lasnouT - 2
31 - 40 வயது வரம்பு
PE SE HE %R% U % لا %i#,% لR% t - AD 9.3 3 1C).7 133 3.3 16.0 TE 7 .3 ... 7 6.7 12.Ο 9.3 EO E .O. 12.0 16,0 21.3 20.0 4.0 PP 13.3 O.7 10.7 12.0 8.0 2.0 W 1 O.7 5.3 O.7 10.7 8.0 5.0 UA 256,3 4.0 16.0 16.0 3.3 2 O LR 26.7 34.7 20.0 4.0 1.3
4 O

a Lal ment - 3
41 அதற்குமேல் வயது வரம்பு
ΡΕ SE HE LF w
R% U% R% U%, R% U%
AD 12.0 9.3 14.7 16.0 18.7 20.0 TE 9.3 8.0 107 12,0 13.3 12.7
EO E 6.7 1 O.7 16.0 22.7 21.3 22.7 PP 17.3 16.0 9.3 13.3 6.7 13.3 WI 8.0 12.. O 8.0 6.7 90 67 UA 200 18.7 18.7 13,3 12.0 12.0 R 20.7 24.0 22.7 16.0 21,3 13.3
அட்டவணை - 4
பணியாளர்கள் நிலை
0, 6 year 7 - 12 years 13 above years LF
FC SC || LC FC SC LC FC SC LC
AD 20.0 18.7 10.7 21.3 20, O 12.. O 24.O 22.7 14.7
TE 9.3 8.0 5.3 12.. O 1 O.7 6.7 14.7 16. O 9.3
EO E 30.7 || 26.7 || 1 0.7 || 33.3 || 29.3 || 1 6 0 || 37.3 || 30, 7 || 14.7
PP ! 1 0.7 | 9.3 | 1 3.3 || 6.7 | 9. 3 | 1 2.0 | 8• O | 1 O.7 | 1 4.7
W 6, 7 8. O 10.7 2.7 4 O 8. O 2.7 4.0 6.7
UA || 6, 7 || 1 0 7 || 1 8.7 || 4.0 || 4. 0 || 1 6.0 || — - 13.3
LR | 1 4. 7 | 1 7,3 || 30,7 || 20.0 | 22.7 | 29.3 | 1 3.3 | 1 6.0 | 26,7
41

Page 85
142
ei di L6nu son 60 o
Ad
ΤΕ
EOE
PP
W
UA
LR
PE
HE
R
FC
SC
LC
விளக்கம்
m கையாளப்பட்டவை Iwo இணைச் சொற்கள் m கடன் சொற்கள்
தொடர்கள் ܒܚܚ܀
一 தவறானவை
ar தெரியாதவை
விடுபட்டவை
aw ஆரம்பக் கல்வி
m இடைநிலைக் கல்வி
a உயர் கல்வி
Massa Sign LDih
Hw--- நகரம்
Момо и முதல் நிலைப் பணி an இடைநிலை
ww. கடைநிலை

பகுதி 4
தமிழ் மொழி கற்பித்தல்

Page 86

தமிழில் இரட்டை வழக்கும் கற்பித்தல் பிரச்சினைகளும்
கி, அரங்கன்
ஃபெர்கூசன் (Ferguson) என்ற மொழியியல் அறிஞர் வேர்ட் (word) என்ற இதழில் வெளியிட்ட கட்டுரையின்மூலம் இரட்டை வழக்கு (Diglossia) என்ற சொல், மொழியியலில் - குறிப்பாக சமூக மொழியியலில்-முக்கியத்துவம்பெற ஆரம்பித்தது. அதோடு ஆய்வுல கில் ஒரு புதிய பரப்பையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டியது. தமிழில் உள்ள இரட்டை வழக்குச் சூழலையும் அச்சூழலால் பள்ளிகளில் தமிழ்மொழியைப் பயிலும் குழந்தைகள் எத்தகைய பிரச்சினை களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் நாம் இங்கு ஆராய முயற்சி செய்கிறோம். தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் மனப்பாங்கில் (Attitude) மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனப் பாங்கு மட்டுமன்றி தமிழில் பாட நூல்களை உருவாக்குபவர்களின் மனப்பாங்கிலும் மாற்றம் உண்டாக வேண்டும். குறிப்பிட்ட சில வகுப்புகள் வரை குழந்தைகள் தங்கள் வீட்டுச் சூழலில் பயன்படுத் தும் வட்டார/சமூகக் கிளைமொழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் சுட்ட விரும்புகிறோம். இதேபோல் எல்லாப் பள்ளிகளிலும் ஒரேவிதப் பாட நூல்களைப் பயன்படுத்தத் தேவை யில்லை என்பதையும் நாம் இக்கட்டுரையில் குறிப்பிட விரும் கி றோம். பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பின்புலத்தையும் பள்ளி கள் அமைந்துள்ள சுற்றுப் புறச் சூழலையும் கருத்தில்கொண்டு ஒரே வகுப்பிற்கு வெவ்வேறு விதமான பாடநூல்களையும் தயாரிக் கலாம் என்பதை நாம் பரிந்துரைக்க விழைகின்றோம்.
இரட்டை வழக்கை ஃபெர்கூசன் பின்வருமாறு வரையறை
செய்கிறார்.
‘. இது (இரட்டை வழக்கு) ஒப்பீட்டு நிலையில் நிலையான மொழிக் களன். இச்சூழலில் முக்கிய கிளைமொழிகளோடு (வட்டார நிலைபெறு கிளைமொழியோடு அல்லது நிலைபெறு மொழியோடு) மிகவும் வேறுபட்ட செம்மையான (சிக்கலான
五每5

Page 87
இலக்கணத்தைக் கொண்ட) மேலிருந்து நூழைக்கப்பட்ட இலக் கிய வழக்கு உள்ளது. இதன் மூலமே மிக உயர்வாக மதிக்கப் படும் இலக்கியங்கள் உருவ கின்றன. இவ்விலக்கியங்கள் முந்தைய காலத்தினதாகவும் இருக்கலாம். அல்லது பேச்சுக் குழுவின் இன்னொரு பிரிவினரால் திக்கப்படுவதாகவும் இருக்க லாம். இவ்வழக்கு பெரும்பாலும் பள்ளி போன்ற ஒரு முறை சார் சபிளணில் (Fromal situation) கற்கப்படுகிறது. மேலும் இது எழுதுவதற்கும் முறைசார் களனில் பேசுவதற்கும் பயன்படுகிறது. ஆனால் இது எந்தப் பிரிவினராலும் உரையாடலுக்காரப்
பயன்படுத்தப்படுவதில்லை."
கிரேக்கம், அராபி பேர்ன்ற மொழிகளை இரட்டை வழக்கிற்குச் சான்றுகளாக ஃபெர்கூசன் காட்டுகிறார். தமிழையும் ஒரு இரட்டை வழக்கை உடைய மொழி என்பதைச் சுட்டிக் காட்ட அவர் தவற வில்லை. இரட்டை வழக்கு என்ற கருத்தை மொழியியல் கருத் தாக மட்டுமின்றி சமூக மொழியியல் கருத்தாகவும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அமைப்பும் (Structure) செயல்பாடும் (Function) இக்கருத்தின் விளக்கத்தில் அடங்கியுள்ளன.
அமைப்பின் அடிப்படையில் நோக்கும் பொழுது இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் உள்ள இடைவெளி குறிப்பிடத் தகுந்தது. இரட்டை வழக்கை வரையறை செய்யும் முக்கிய கூறு இலக்கிய வழக்கு. தமிழைப் பொறுத்தவரை பள்ளிவகுப்புக் களன், அலுவiபிக் களன், சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய எழுத்துக் நளன் முதலியவற்றில் பயன்படுத்தப்படுவது இலக்கிய வழக்கு, இது மேல்நிலையிலிருந்து நுழைக்கப்பட்டது. பேசப்படும் கிளை மொழிகளிலிருந்து முகிழ்த்தெழுந்தது அல்ல இது. ஆகையால்தான் இலக்கிய வழக்கு என்பது பள்ளி மூலம் பெறப்படுகிறது. பேச்சு மொழியின் வழக்கைக் கற்பதுபோல் இவ்வழக்கு கற்கப்படுவது இல்லை. பேச்சு வழக்கு இால்டான களனில் கற்கப்படுகிறது. ஆனால் இலக்கிய வழக்கு இயன்பால் முறைசார் களனில் கற்கப்படுகிறது. நான்களில் இவ்விலக்கிய வழக்கு மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப் படுகிறது. குழந்தைகள் பாட நூல்களின் வழி இலக்கிய வழக்கைக்
சுற்றுக்கொன் ே
பின்றனர்.
இலக்கியங்கள் அனைத்தும் இவ்விலக்கிய வழக்கிலேயே உரு ாக்கப்படுகின்றன. பேச்சுக் குழுளின் எல்லாவிதச் செய்திப் பரி ாற்றத்திற்கும் இவ்வழக்கே பயன்படுத்தப் படுவதால் இதைப் பயன்படுத்துவது பெருமையாகக் கருதப்படுகிறது. கல்வி, நிர்வாகம், பொதுமக்களின் செய்திப் பரிமாற்றம், கடந்தகால மற்றும் நிகழ் ால இலக்கி பங்கள் ஆகிய அனைத்திலும் இலக்கிய வழக்கே Luri F :T
)
 

படுத்தப்படுகிறது. இவ்வழக் ை ப் பயன்படுத்துவோர் மரியாதைக் குரிபவராகக் கருதப்படுகிறார்கள். பேச்சுக் குழுவின் பல்வேறு பிரிவினரையும் இவ்வழக்கு தொடர்புபடுத்துகிறது. இலக்கணங் களின் மூலமும் அகராதிகளின் மூலமும் இவ்வழக்கு தரப்படுத்தப்படு கிறது. இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது தொல்காப்பியம் தன்னுரல் போன்ற இலக்கண நூல்கள் தமிழ் மொழியின் இலக்கிய வழக்கைச் செம்பைப் படுத்தவே பயன்பட்டன.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அறிஞர்களும் தமி ழைக் கற்ற ஆபஸ் நாட்டு அறிஞர்களும் இலக்கிய வழக்கைச் செம்மைப்படுத்தும் பனியில் அடிக்கடி ஈடுபட்டார்கள். அவர்கள் உருவாக்கிய இலக்கணங்களும் அகராதிகளும் இலக்கிய வழக்
g]] aji ji செம்மைப்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டவை. பேச்சு வழக்கு மிக அதிக மாற்றங்களுக்கு உட்படக் கூடியது. அத்த னர் மாற்றங்கள் இலக்கிய வழக்கிலும் அதிகமாக ஏற்படக்
கூடிய வாய்ப்புகள் உண்டு. அவற்றைக் கட்டுப்படுத்துவே தரப் படுத்தும் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் இடையே அமைப்பு ரீதியான வேறு 1ாடுகளும் இடைவெளியும் கூடுகின்றன. இவ்வாறு கூடுகின்ற வேறு பாடுகளும் இடைவெளியும் இலக்கிய வழக்கை வேறு மொழியாகக் கருதும் அளவிற்கு இட்டுச் செல்கின்றன. தமிழில் உள்ள இலக்கிய வழக்கைக் கற்பது இரண்டாம் மொழியைக் கற்பது போல் இருக் கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இது மிகைப்படுத்திக் கூறப்பட்ட கூற்று என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. தமிழைக் கற்பவர் கள் எவ்வாறு இவ்விரு வழக்கிற்கும் உள்ள இடைவெளியை உணர் கிறார்கள் என்பதை இக்கூற்று காட்டுகிறது. தமிழின் இரட்டை வழக்கைப் புரிந்துகொள்வது என்பது இவ்விரு வழக்குகளுக்கும் இை யில் உள்ள அமைப்பு ரீதியான இடைவெளி என்பது சொற்களஞ் சியங்களுக்கு (Lexicon) இடையிலான வேறுபாட்டோடு ஒலியனியல் மீற்றும் இலக்கண நிலைகளின் வேறுபாடுகளையும் உள்ளடக்கும்,
அமைப்பு வழியிலான வேறுபாடுகளுடன் செயல்பாட்டு வழியி லான வேறுபாடுகளும் இரட்டை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந் தவை. இவ்விரு வழக்குகளும் வெவ்வேறு விதமான செயல்பாடு கிளை நிறைவேற்றுகின்றன என்பதும் தாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். தமிழைப் பேசுபவர் எந்த வழக்கையும் கட்டுப் பாடின்றிப் பேச முடியாது. தனி மனிதனுடைய விருப்பு வெறுப் பின் பேரில் பேச்சு வழக்கையும் இலக்கிய வழக்கையும் சுதந்திர மாகப் பயன்படுத்த முடியாது. விதிப்பு முறைகளாலும் சமூக மதிப்பீடுகளாலும் தனிமனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான். இவ்விரு

Page 88
வழக்குகளும் எவ்வெக் களன்களில் பயன்படுத்தப்பட வேண்டுமென் பது சமூகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. தனி மனிதனின் கட்டுக்குள் அடங்கிய நிகழ்வாகப் (Phenomenon) பார்க்காமல் சமூக நிகழ்வாக நாம் இதைப் பார்க்க வேண்டும்,
இரட்டை வழக்குக் களன் நிலையானது என்று விவரிக்கப்படு கிறது. மொழிகளில் இரட்டை வழக்கு நிலை மட்டுமின்றி நிலை பெறு மொழி (Standard language)/ கிளைமொழிக் களனும் உள் எது எழுத்தின் கண்டு பிடிப்பும் பல்வேறு பிரிவினரையும் தொடர்பு படுத்த வேண்டிய நிலைபெறு மொழியின் செயல்பாடும் கிளை மொழிகளுக்கும் நிலைபெறு மொழிக்கும் இடையே அமைப்பு ரீதி யான இடைவெளியை மிகுதியாக உண்டாக்குகின்றன. ஒரு மொழி யின் வரலாற்றில் பல்வேறு கிளை மொழிகள் பல்வேறு காலகட் டங்களில் நிலைபெறு மொழியாகச் செயல்படுவதை நாம் காண லாம் . ஆகையால் தான் இலக்கியங்களில் பல்வேறு கிளைமொழிகள் ப ன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இரட்டை வழக் குடைய மொழியில், இலக்கிய வழக்கு என்பது எந்தவொரு வட் டாரக் கிளை மொழியிலிருந்தோ உருவாகவில்லை என்பது தெரிய வருகிறது. தமிழிலும் இரட்டை வழக்குக் களன் வரல7ற்றுக் காலம் தொட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.9
மொழி கற்பித்தலில் பிரச்சினைகள்
மொழியைக் கற்பிக்கும்பொழுது எந்த வழக்கைப் பள்ளிகளில் கற்பிப்பது என்பதை முதலில் வரையறுக்க வேண்டும். நாம் இங்கு இருவித நிலைகளைக் காணலாம். ஒரு மொழியில் உள்ள பல கிளை மொழிகளில் ஒரு குறிப்பிட்ட கிளை மொழி நிலைபெறு மொழியாக உயர்ந்து செய்திப் பரிமாற்றத்தின் எல்லா நிலைகளிலும் பயன்படு வது என்பது ஒரு நிலை. செய்திப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத் தப்படும் நிலைபெறு மொழி ஒரு பிரிவினரின் கிளைமொழி யாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு பிரிவினராவது இந்நிலைபெறு மொழியை இயற்கையான களனில் தாய்மொழியாகக் கற்கிறார்கள். மற்றப் பிரிவினர்கள் பள்ளி போன்ற களன்களில் கற்றாலும் இடை வெளி குறைவாகவே இருக்கும். கிளை மொழிகளிலிருந்து கிளைத் தெழுத்த நிலைபெறு மொழி காலப் போக்கில் அவைகளிடமிருந்து விலகிச் செல்கிறது. இங்கு மற்றைய கிளை மொழிகள் பேசும் குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்றப்படும் நிலைபெறு மொழி சில பிரச்சினைகளைக் கொடுக்கும். குழந்தைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இரு வகையாகப் பார்க்கலாம். 1. இக்குழந்தை களின் பண்பாட்டுப் பின்புலத்தில் எழும் பிரச்சனைகள் 2, நிலை
48

蔚
பெறு மொழிக்கும் நிலைபெறு மொழியல்லாத கிளைமொழிகளுக்கும் உள்ள அமைப்பு ரீதியான வேறுபாடுகள் சமூகத்தின் பின்தங்கிய நிலையிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வரும் குழந்தைகளுக்குப் பள்ளியின் களன் தங்களுடைய இயற்கையான களன்களிலிருந்து தனி மைப்படுத்தப்பட்டதைப் போன்ற உணர்வை உண்டாக்குகிறது, பள்ளிக் களனும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழியும் அவர்களுக்கு அறிமுகமாகாத செயற்கையானவை. பள்ளிகளில் மொழி பயிற்று விக்கும் ஆசிரியர்களும் பாடநூல்களின் உருவாக்கத்தைத் திட்ட மிடுபவர்களும் வட்டார மற்றும் சமூகக்கிளை மொழிகளின் பாதிப்பை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இவர்களுடைய மனப் பாங்கு மாறியதாகவோ இத்தகைய பிரச்சனைகளை அறிந்திருப்ப தாகவோ தெரியவில்லை. குழந்தைகள் மொழியைப் பள்ளிகளில் கற்கும்பொழுது ஏற்படும் பிரச்சனைகளுக்கு இவர்கள் கூறும் கார ணங்கள் மொழி கற்பித்தலுக்குத் தொடர்பற்றவையாகத் தோன்று கின்றன.
பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மொழியின் தன்மைக்கும் குழந்தைகள் வீட்டில் பயன்படுத்தும் மொழியின் தன்மைக்கும் வேறு
பாடு உண்டு. பள்ளி மொழி நுண்மையான கருத்துக்களை வெளி
யிடக் கூடியதாகவும் பல வகைப்பட்ட பரப்புகளில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. மத்திய வகுப்பிலிருந்து வரும் குழந் தைகள் பயன்படுத்தும் மொ ழி பள்ளியில் பயன்படுத்தப்படும் மொழிக்கு நெருக்கமாக உள்ளது. பெர்ன்ஸ்டைன் (Bernstein, 1973: 166) தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் பின்புலத்தையும் பள்ளியின் களனையும் பின்வருமாறு தெளிவாக விளக்குகிறார். 4
இரண்டு வெவ்வேறான செய்திப் பரிமாற்ற ஒழுங்கு முறையின் (System) அடிப்படையில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின்மை பள்ளிக்கும் அங்குப் பயிலும் உழைக்கும் வகுப்பிலிருந்து வரும் குழைந்தைகள் குழுவிற்கும் இருக் கிறது.
இதோடு தொடர்புடையது ஆசிரியர்களுடைய சம நிலையான மனப்பாங்கு. மொழியின் இயல்பையும் அதைக் கற்பிக்கும் பொழுது நாம் எதிர்கொள்கிற பிரச்சினைகளையும் தெளிவாக ஆசிரியர்கள் உணர்ந்துகொள்கிற மனப்பாங்கை உருவாக்க வேண்டும். பட்டநாயக் (Pattanayak, 1981:45) கூறுவது போல, பள்ளிகளில் பயன்படுத் தப்படும் மொழிக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டுக் களனிலும் சமூ கக் களனிலும் பயன்படுத்தும் மொழிக்கும் உள்ள இடைவெளி யினால் பள்ளிகள் குழந்தைகளிடம் ஒருவித அன்னியத் தன்மையை
149

Page 89
வித்தூன்றி விடுகின்றன, தாழ்ந்த வகுப்புகளிலிருந்தும் கிராமப்புறங் களிலிருந்தும் வரும் குழந்தைகள் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறாததற்குத் தவறான காரணம் கற்பிக்கப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் உள்ள இடை வெளியே காரணம் என்பதை மறந்துவிட்டு இவர்களுடைய அறிவுத் திறனின் குறையே காரணம் என்று கூறப்படுகிறது. பள்ளி மொழியை நேரடியாகவே குழந்தைகளுக்குக் கற்பிப்பதைவிட அவர்களுடைய வீட்டில் பயன்படுத்தும் கிளை மொழிகளிலிருந்து தொடங்கிப் பள்ளி மொழிக்கு அவர்களை இட்டுச் செல்ல வேண்டும். வீட்டில் இயல் பாகப் பயன்படுத்தப்படும் கிளை மொழிக்கும் பரந்த தொடர்பிற்கா கவும் புலமைக்காகவும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மொழிக்கும் தொடர்பை உண்டாக்கும் முறையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். இரட்டை வழக்குக் களன் என்பது ஒரு விதத்தில் பல் மொழிக்களனை ஒத்தது (Pattanayak, 1976:VI.). தமிழ் இரட்டை வழக்குக் களனில் இரு கிளைமொழி மாதிரியை (bidialectal model) முன் உதாரணமாகக் கொண்டு மொழி கற்பித்தலுக்குரிய பாடநூல் களைத் தயாரிக்கலாம். பாடநூல் தயாரிப்பில் கிளை மொழியின் பங் கையும் நாம் உணர வேண்டும் இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற் கும் நெருக்கமாக இருக்கின்ற மூன்றாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு பாடநூல்களை உருவாக்கலாம். கிளைமொழிகளிலிருந்து சொற்களை எடுத்துப் பாடநூல்களில் கையாளலாம்.
நாம் இப்பிரச்சினைகளைப் பண்பாட்டுக் கோணத்திலிருந்தும் மொழி அமைப்புக் கோணத்திலிருந்தும் பார்க்கலாம், பாட நூல்கள் குழந்தைகளின் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை அடித்தளமாகக் கொண்டு அமைய வேண்டும். பாடநூல்களில் கூறப் படும் செய்திகளை மட்டும் நாம் இங்குக் குறிப்பிடவில்லை. பாடங் களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களும் மொழி அமைப்பும் குழந்தைகளின் அனுபவத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஒரு பக்கம் தங்களுடைய வீட்டு மொழியிலிருந்து மிக வும் விலகியுள்ள இலக்கிய வழக்கைக் கற்பதாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பண்பாட்டிற்கு நெருக்கமில்லாத செய்திகளைப் பாடங்களில் படிப்பதாலும் அவதிப்படுகிறார்கள். முதல் நிலையில் குழந்தைகளின் பண்பாட்டிற்கு நெருக்கமான செய்திகளை மட்டும் பாடங்களில் கற்றுக்கொடுக்கலாம். முடிந்தவரை அவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டே பாடங்களைத் தயாரிக்கலாம். செய்திகளைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கு எவ்விதப் பிரச்ச னைகளும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் குழந்தைகள் இலக்கிய வழக்கின் அமைப்பைப் புரிந்துகொள்கின்ற வகையிலும் பாடநூல்களை அமைப்பது நல்லது. எல்லாப் பள்ளி
50

களிலும் ஒரே விதமான பாடநூல்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நியதியை ஒதுக்கிவைப்பது பொருத்தமென்றுகூட நமக்குத் தோன்றுகிறது. ஒரே வகுப்பிற்கூட குழந்தைகளின் சுற்றுப் புறச் சூழலையும் சமூகக் களனையும் கவனத்தில் கொண்டு வெவ் வேறு பாடநூல்கள் தயாரிக்கலாம்.
ஒரு பிரிவைச் சார்ந்த குழந்தைகளினுடைய செய்திப் பரி மாற்றத்தின் ஒழுங்கு முறை பள்ளியினுடைய செய்திப் பரிமாற்றத் தின் ஒழுங்கு முறையினின்று மிகவும் வேறுபட்டது. இவ்விரு செய்திப் பரிமாற்றத்தின் ஒழுங்கு முறைகளுக்கும் இடையே மிகுந்த இடைவெளி இருக்கிறது. பெர்ன்ஸ்டைன் (1973: 79) தாழ்ந்த வகுப்பினரின் பேச் சைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.9
"(இது) குறிப்பிட்ட மொழிப்பயனை உடையது. இது நிறைய செய்திகளை வெளியிடக்கூடியது என்றாலும் பேசுபவரின் எண்ணத்தை விவரிக்கக் கூடிய தன்மையை ஊக்குவிக்காததும் நுண்மையான கருத்துக்களுக்குப் பதிலாக வண்ணனை முறை யில் செய்திகளைக் கூறும் முறையை ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது."
இவ்விரு வழக்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டை மட்டும் பெர்ன்ஸ்டைன் கருத்து வலியுறுத்துகிறது என்று பொருள் கொண் டால் நமக்கு இதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. இவ் வேறு பாடுகள் இவ்விரு வகைப்பட்ட வழக்குகளின் உள்ளுறை இயல்பு (innate nature) என்று பொருள் கொள்ளும் பொழுதுதான் பிரச்சனை கள் உருவெடுக்கின்றன.
எந்த ஒரு கிளைமொழியும் | மொழியும் அந்த மொழியினர் வெளியிட விரும்புவதை வெளியிட முடியாமல் தடுக்கின்ற எந்தக் கூறையும் கொண்டிருக்க வில்லை. பெர்ண ஸ்டைன் நுண்மையான கருத்துக்களை வெளியிடக் கூடிய தன்மை தாழ்ந்த வகுப்பிலிருந்து வரும் குழந்தைகளின் கிளைமொழிக்கு இல்லை என்று கூறுவதுபோல் தோன்றுகிறது. இவர்களுக்கு நுண்ணிய கருத்துக்களை வெளியிட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை யாதலால் அவர்கள் தங்களுடைய பேச்சை அதற்குப் பயன்படுத்துவதில்லை. தாழ்ந்த வகுப்பினரின் பேச் சுக்கும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மத்திய வகுப்பினரின் பேச்சுக் கும் இடையே உள்ள இடைவெளியை உணர வேண்டியது அவசியம்.
நிலைபெறு மொழி / கிளைமொழிக் களனைவிடத் தமிழின் இரட்டை வழக்குக் களன் சிக்கலானது. தமிழின் இலக்கிய வழக்கு மிகவும் செம்மைப்படுத்தப்பட்டதோடு இலக்கியங்களில் பல நூற் றாண்டுகளாக இவ்வழக்கு பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த
51

Page 90
வழக்கே பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மொழியின் குறியீ டாகக் கருதப்படுவதாலும் சிறப்பு அளிக்கப்படுவதாலும் செய்திப் பரிமாற்றத்திற்கு இதுவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இலக்கிய வழக் கிற்கும் பேச்சு வழக்கிற்கும் உள்ள இடைவெளி தரப்படுத்தப்பட்ட கிளைமொழிக்கும் மற்றக் கிளைமொழிகளுக்கும் உள்ள இடை வெளியை விடக் கூடுதலானது.
பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் முதல் முறையாக இலக்கிய வழக்கிற்கு அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் வட்டார மற்றும் சமூகக் கிளைமொழிகளின் பின்புலத்தோடு பள்ளிக்கு வருகிறார்கள். இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் இடை யிலான இடைவெளி தொடர்புபடுத்தப்படுவதில்லை. பள்ளியின் களனும் அதில் பயன்படுத்தப்படும் பாடநூல்களும் இலக்கிய வழக் கைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமையவில்லை. பள்ளிகளில் தமிழை முதல் மொழியாகப் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இடைவெளி முக்கிய தடங்கலாக இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்களா என்பது ஐயத்திற் குரியது. மாணவர்களின் மொழியை ஆசிரியர்கள் அறியாமலிருப்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது. ஆகையால் குழந் தைகள் வீட்டுக் களனில் பயன்படுத்தும் கிளை மொழிகளின் தன் மையையும் அமைப்பையும் ஆசிரியர்கள் அறிந்திருப்பது தேவை. பேச்சு வழக்கைக் குறித்து வெறுப்பற்ற சம நிலையான மனப்பாங்கை ழ் சிரியர்கள் வளர்த்துக்கொள்ள குழந்தைகளின் வீட்டுக் கிளை மொழிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்ப் பாடநூல்கள்
நம் தமிழ்ப் பாடநூல்களைப் பற்றிச் சில கருத்துக்கள் கூறிவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் இலக்கிய வழக்கைக் கற்கும் போது வருகின்ற பிழைகளைக் குறிப்பிடுவோம். இப்பகுதியில் கூறப்படும் செய்திகள் அரங்கனும் ஜெயகுமாரும் (1988) இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. 8 இவ் வாய்வு அறிக்கையில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் பயன்படுத்தப்பட்ட பாடநூல்கள் மதிப் பீடு செய்யப்பட்டன. 7 இதிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்,
முதல் வகுப்பிற்குரிய பாடநூலில் எழுத்துக்கள் மரபுவழியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எழுத்துக்களுக்கு இடையிலான உருவ ஒற்றுமையை எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்கும்பொழுது பயன் படுத்தவில்லை. பாடங்கள் இம்முறையில் அமையவில்லை. 8 எழுத்
152

துக்கள் சொற்களின் வழி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு எழுத்தையும் பாடத்தில் அறிமுகப்படுத்தும் பொழுது சொற்சளும் கொடுக்கப்படுகின்றன. இவ் வாறு கொடுக்கப்படும் சொற்களில் எவை குழந்தைகளுக்கு அறிமுக மானவை எவை அறிமுகமாகாதவை என்பதைப் பாடநூல் தயா ரித்தவர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. பொருள் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் எவ்வளவு சொற்களை அறிந்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொண்டு பாடநூல்கள் தயாரிப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகள் தங்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சொற்களின் அளவை அறிந்திருந்தால் பாடநூல்களில் பயன்படுத்தும் சொற்களை அவர்களுடைய பேச்சிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பின்னணி பாடநூல் தயாரிப்பவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பல சொற்கள் பழந்தமிழிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்புப் பாடநூலில் இவற்றைத் தவிர்ப்பது எளிது.
சொற்கள் பக்கம் சொற்கள் பக்கம்
யாழ் 9 பண்ணொலி !
27 ஞமலி 13 பொற்றொடி
சகடம்
கோட்டம் ஞயம்
8 நோக்கு 28 g5PG)
e குடவோலை அறம் J J
ஞாலம் தெளவை
19 é95 l-fT நெளவி 29
பெளவம் J
கெளிறு 24
மஞ்ஞை 26
இதுபோன்றே ஓர் என்ற வடிவத்திற்கும் ஒரு என்ற வடிவத்திற் கும் உள்ள வேறுபாட்டை முதல் வகுப்பிலேயே அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்
53

Page 91
கள் இவ்வேறுபாட்டை உணர்ந்து எழுதுவதில்லை. ஒரு என்ற வடி வமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவ்வேறுபாடு களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டுமென்றால் மூன்று அல் லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கற்றுக்கொடுக்கலாம்.
இன்றையத் தமிழில் பின்பற்றப்படாத இலக்கண விதிகளை
கீழ்நிலை வகுப்புகளில் கற்றுக்கொடுப்பதை நாம் தவிர்க்கலாம். சான்றாக, - கள் என்ற விகுதி அஃறிணைப் பெயர்களோடு மட்டும் வரும் என்று மரபுவழி இலக்கணம் கூறுகிறது.
ஆடு + கள் 一一> ஆடுகள்
கண் -4- கள் حسسد- கண்கள்
பேனா + கள் -سس= பேனாக்கள் என்ற விகுதி பன்மையை உணர்த்த உயர்திணைப் பெயர்க يع - ளுடன் வருமென்று இலக்கணம் கூறும் .9
சிறுவன் ܫܚ சிறுவர் மனிதன் - மனிதர்
சிறுமி ~~~~~~~~ சிறுமியர்
ஆனால் தற்காலத் தமிழில் - கள் என்ற விகுதி எல்லாப் பெயர்களு டனும் வருகிறது.
சிறுவர்கள் நூல்கள் பையன்கள் பழங்கள் ஆண்கள் கற்கள் அலுவலர்கள் நாய்கள்
தற்காலத் தமிழில் காணப்படாத கூறுகளை நாம் ஏன் குழந் தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்? குழந்தைகள் தாங்கள் பயன் படுத்தும் தமிழிலோ மற்றவர்கள் பயன்படுத்தும் தமிழிலோ இவ் வேறுபாடுகளைக் காண்பதில்லை. ஆகையால் இதைச் சொல்லிக் கொடுப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அதேபோல் எளிமையான சொற்களுக்குப் பதிலாக சிக்கலான அமைப்புடைய சொற்களைப் பாடநூல்களில் தவிர்க்க இயலும். கண்டிடலாம் என்ற சொல்லுக்குப் எதிலாகக் காணலாம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இந்நூலில் இதுபோன்ற சொற்கள் பல உள்ளன. மொழிநடையும் இயல்பாக இருப்பது நல்லது.
இரண்டாம் வகுப்பிற்குரிய பாடநூலில் உள்ள குறைகள் சிலவற்றைப் பார்ப்போம். ஒவ்வொரு பாடமும் மூன்று பகுதிகளைக்
翼54

கொண்டது: 1. பாடம் 2. அருஞ்சொற்கள் 3. Luusióg). வாக்கியங்கள் எளிமையாக இருப்பினும் பாடங்களின் மையப் பொருள் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இல்லை. புதிய சொற்களையும் அருஞ் சொற்களையும் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டுமென்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் முதல் மூன்று வகுப்புகள் வரை குழந்தைகளுக்கு இலக்கிய வழக்கைப் புரிந்துகொள்ள வும் படிக்கவும் எழுதவும் கூடிய திறன்களை வளர்க்கின்ற முறையில் பாடநூல்களை உருவாக்க வேண்டும். இங்கு அவர்கள் பயன்படுத்து கின்ற பேச்சுவழக்கைத் தொடக்கமாகக் கொண்டு இலக்கிய வழக்கை நெருங்க வேண்டிய குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
பயிற்சிப் பகுதி மொழியின் அமைப்பைத் தெரிந்துகொள்ளக் கூடிய முறையிலும் அதைக் கையாளக் கூடிய திறமையை வளர்க் கின்ற முறையிலும் அமைய வேண்டும். நினைவாற்றலை வளர்க் கின்ற முறையில் மட்டும் பயிற்சிப் பகுதி அமைதல் கூடாது. கொடுக்கப்பட்டிருக்கின்ற பயிற்சிகள் குழந்தைகளின் மொழித் திறன்களை வளர்க்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
மூன்றாம் வகுப்பிற்குரிய பாடநூலும் சில குறைகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பாடமும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது: 1. பாடம் 2. அருஞ்சொற்கள் 3. வினாக்கள் 4. பயிற்சிகள் 5. இலக்கணம். பாடங்களில் அருஞ்சொற்களைக் கூடிய மட்டும் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களைப் பேச்சு வழக்கிலிருந்து கொடுக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகள் அனைத்தும் மூன்று அல்லது நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன:
1. கோடிட்ட இடத்தைப் பொருத்தமான சொற்களைக்
கொண்டு நிரப்புதல்.
அ. சொற்களைத் தராமல் கோடிட்ட இடத்தை நிரப்பக்
கூறுதல்.
ஆ. சொற்களைத் தந்து பொருத்தமான சொல்லைக்
கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புதல். 2. சொற்களைத் தந்து வாக்கியங்களை உருவாக்குமாறு
கூறுதல்" 3. ஆ என்ற பிரிவிலிருந்து பொருத்தமான சொற்களைத்
தேர்தெடுத்து அ என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குப்
பக்கத்தில் எழுதுதல்.
55

Page 92
4. எதிர்ச்சொற்களைத் தருதல்,
இங்கும் கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பயிற்சிகள் நினை வாற்றலையும் சொற்களஞ்சியத்தையும் வளர்ப்பதாகவே உள்ளன. மொழியின் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகள் பாடநூல்களில் காணப்படவில்லை. கடிதங்கள் எழுதக்கூடிய திறனை வளர்க்கும் விதத்திலும் பாடங்கள் உள்ளன. உரையாடலை வளர்க்கும் விதத்திலும் சில பாடங்கள் இருக்கின்றன. தமிழைப் பொறுத்தவரை உரையாடல் என்பது பேச்சு வழக்கில்தான் இயல்பாக இருக்கிறது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் அமைகின்ற நிகழ்ச்சிகளில் வருகின்ற உரையாடல்கள் - குறிப்பாகப் பேட்டியின் போது வரும் உரையாடல்கள் - சில இலக்கிய வழக்கில் அமை வது உண்டு, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகைய உரையாடல்கள் இடம் பெறுவதில்லை. மேலும் உரையாடல்களின் அமைப்பைப் பற்றியும் தெளிவான சிந்தனை இருப்பதாகத் தெரிய வில்லை. ஆகையால் பாடநூல்களில் இடம்பெறும் பாடங்களின் குறிக் கோள் வெளியுலக வாழ்வில் உள்ள அனுபவத்தோடு தொடர் புடையதாக இருத்தல் நல்லது.
பேச்சு வழக்கின் குறுக்கீடும் சில பிழைகளும்
முன்பு குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கையில் (Rangan and Jayakumar, 1988) குழந்தைகள் இலக்கிய வழக்கைக் கற்கும் பொழுது செய்கின்ற பிழைகள் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் செய்கின்ற பிழைகள் அனைத்திற்கும் காரணம் பேச்சு வழக்கிற்கும் இலக்கிய வழக்கிற்கும் இடைப்பட்ட இடைவெளிதான் என்று நாம் கூறிவிட முடியாது. மொழி கற்பித்தல் செம்மையாக நடைபெற குழந்தைகளின் பின்புலம், தரமான பாடநூல்கள் ஆகியவை மட்டு மின்றி ஆசிரியர்களின் மனப்பாங்கு, பள்ளிக் களன் ஆகிய அனைத் தும் பங்கு வகிக்கின்றன. மொழியில் குழந்தைகள் செய்கின்ற பிழைகளை பல வகைப்பட்ட கோணங்களிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டும். பேச்சு வழக்கின் செல்வாக்கினால் ஏற்பட்டவை என்று கருதுகிற பிழைகளை மட்டும் நாம் இங்கு தருகிறோம்.
தமிழில் குறிலும் நெடிலும் பொருள் வேறுபாட்டை உணர்த் துவதால் அவை ஒலியன்கள்,
: 91 to beat <缪母 having danced' இடு 'to put ஈடு compensation எடு to take ஏடு text 5/55th 'sorrow' giTdish sleep
LG) to paste gol G to drive away"
I 56

இவ்வொலிகளை ஆசிரியர்கள் தனித்தனியாக ஒலிப்பதற்கும் அவை சொற்களில் வரும்பொழுது ஒலிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஒலிகைளத் தனியாக ஒலிக்கும் பொழுது ஒரளவு செயற்கைத் தன்மை கூடுகிறது. ஆகையால் குழந்தைகள் பாடங்களைப் படிக்கும் பொழுதும் எழுதும் பொழுதும் பிழைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் இயற்கை யான ஒலிப்புமுறைக்குப் பழக்கப்பட வேண்டும். பின்வரும் எடுத்துக் காட்டுகள் நெடிலைக் குழப்பிக்கொள்ளும் இடத்தைச் சுட்டுகின்றன.
ஊக்கம் حالاییست உக்கம்
தூண்டின் سسسسه--yجڑ துண்டில் FITTT u Lib جھی۔ சாரயம்
பாராயணம் --> பாரயணம்
அஸ்ஸாம் جے அஸ்ஸம்
தப்பாது جلاس- தப்பது
இலக்கிய வழக்கில் ந் என்ற எழுத்தும் ன் என்ற எழுத்தும். பெரும்பாலான இடங்களில் ஒன்றாகவே ஒலிக்கப்படுகின்றன. த் என்ற ஒலிக்குமுன் ந் என்பது பல்லொலியாகவே ( Dental sound) ஒலிக்கப் படுகிறது. மற்ற இடங்களில் இவ்வொலிக்கும் ன் என்ற அண்பல் லொலிக்கும் (Alveolar sound) வேறுபாடு இல்லை. இதனால் குழந் தைகள் இலக்கிய வழக்கை எழுதும்பொழுது பிழைகள் ஏற்பட நேரிடுகின்றன. நாய் என்ற சொல்லில் வரும் முதலொலிக்கும் மனம் என்ற சொல்லில் வரும் இரண்டாவது ஒலிக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
நண்பர்கள் 一> 6oraiturias6T -- ணம்பர்கள்
நாய் -9- னஇ
ய் என்ற ஒலியையும் இ என்ற ஒலியையும் வேறுபடுத்துவதில் குழந் தைகளுக்குச் சிரமம் இருப்பதால் பிழைகள் சில ஏற்படுகின்றன. ஐ என்ற உயிரோடு முடியும் சொற்களைக் குழந்தைகள் எழுதும் பொழுது சிக்கல் தோன்றுகிறது.
அருமை -> அருமஇ உரிமை حیح۔ உரிமஇ மேசை --> மேசய் வாய்ப்பு -> வஇபு
ர என்ற ஒலிக்கும் ல என்ற ஒலிக்கும் குழந்தைகளிடையே குழப்பம்
வருகிறது.
* 7

Page 93
வரும் இடங்களில் ல என்ற ஒலி பயன்படுத்தப்படுவதையும்
நாம் பார்க்கலாம்.
இருக்கிறார் -> இருக்கிரல் பார்த்தார் -> பார்த்தல் guai) -> லயில்
ல வுக்குப் பதில் ர வரும் இடங்களையும் நாம் காணமுடியும்.
லாரி -> ராலி
இலக்கிய வழக்கில் வரும் ழ வுக்குப் பதில் ள வைப் பல கிளை மொழிகள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அதனால் இலக்கிய வழக்கில் ள வருமிடங்கள் ழ வரும் இடங்களாக எழுதவோ ஒலிக்கவோ படுகின்றன:
களங்கம் -> கழங்கம்
குளுமை -> குழுமை மஞ்சள் -> மஞ்சழ்
இலக்கிய வழக்கில் ட்ச் என்ற ஒலிகளின் தொடர்ச்சி பேச்சு வழக்கில் ச்ச் என்ற ஒலிகளின் தொடர்ச்சியாக வருகிறது. குழந் தைகள் இலக்கிய வழக்குச் சொற்களை எழுதும்பொழுது பேச்சு. வழக்கின் வடிவைக் கொடுக்கின்றனர். சில குழந்தைகள் இலக்கிய வழக்கு வடிவத்தையும் பேச்சு வழக்கு வடிவத்தையும் இணைத்து மூன்றாவது வடிவை உருவாக்கிவிடுகிறார்கள்.
கட்சிகள் -> கச்சிகள்
காட்சிகள் -> காச்சிகள்
காட்ச்சிகள்
இலக்கிய வழக்கில் இடையின மெய்களை அடுத்து வல்லின ஒலிகள் வரும்பொழுது சொற்களில் மூன்று மெய்யொலிகள் மயங்கி வருதல் உண்டு. பேச்சு வழக்கில் மூன்று மெய்கள் மயங்கி வருதல் இல்லை. இரு மெய்களின் மயக்கமே காணப்படுகின்றன. ஆகையால் மூன்று மெய்கள் மயங்கும் சொற்களைக் குழைந்தைகள் இருமெய்கள் மயங்கும் சொற்களாக மாற்றி விடுகின்றனர்.
சேர்ந்து محموسسعه சேந்து
பார்த்து جیسے பாத்து சார்த்து ཡས་ནས་───་ சாத்து தேர்ந்து -> தேந்து
158

இதுபோன்றே தஞ்சாவூர் பேச்சு வழக்கில் நாமடி (Retroflex) ஒலியை அண்பல் (Alveolar) ஒலியாக ஒலிப்பதுண்டு. 19 ஆகையால் பளளிகளில் பயிலும் குழந்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிழை களைச் செய்கிறார்கள்.
எடுத்துக்கொள்ளுங்கள் --9- எடுத்துக்கொல்லுங்கள் பார்த்துக்கொள் -- பார்த்துக்கொல் கிண்ணத்தில் -> கின்னத்தில்
இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள சில பிழைகளுக்குக் காரணம் குழந்தைகள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்கே. இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் இடைப்பட்ட இடைவெளி ஒரு முக்கிய காரணம். ஆனால் குழந்தைகள் செய்கின்ற எல்லாப் பிழை களுக்கும் இவ்வழக்கு சளின் அமைப்பு வேறுபாடே காரணம் என்று கூற முடியாது. இவ்விடை வெளியினால் சில பிழைகள் ஏற்படுகின் றன என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டியவர்களாக
இருக்கிறோம்.
முடிவுரை
ஒரு மொழியைப் பாடமாகக் கற்பிக்கும்பொழுது அம்மொழிக் களனை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இதை உணர்ந்திருக்க வேண்டும். இரட்டை வழக்குக் களன் மிகச் சிக்கலானது. இது ஒரளவு இரு மொழிய (Bilingua) நிலையைப் போன்றது என்று கூடச் சிலர் கூறியிருக்கிறார்கள். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பாட நூல் தயாரிப்பவர்களும் பாடத்திட்டத்தை உருவாக்குபவர்களும் தமிழில் உள்ள இரட்டை வழக்குக் களனை உணர வேண்டியது அவ சியம். பேச்சு வழக்கிற்கும் இலக்கிய வழக்கிற்கும் உள்ள இடை வெளியைத் தெரிந்திருப்பதோடு பேச்சு வழக்குக் குறித்த மனப் பாங்கும் மாறவேண்டும். இப்பின்னணியில் தான் தரமான பாட நூல்களையும் மொழிப் பயிற்சிகளையும் குழந்தைகளுக்கு நாம் பள்ளி களில் அளிக்க முடியும்.
குறிப்புகள்
1. "AS used by millions of the Tamil speech community in India today, it fits the definition exactly". (Ferguson, 1959).
2. ஃபெர்கூசன் உயர் வழக்கு (High variety) என்ற சொல்லை யும் தாழ்வழக்கு (LOW variety) என்ற சொல்லையும் தம்முடைய
159

Page 94
கட்டுரையில் பபன்படுத்துகிறார். நாம் , இங்கு உயர் வழக்கு என்ற சொல் ஆட்சிக்குப் பதிலாக இலக்கிய வழக்கு (Literary variety) என் பதையும் தாழ் வழக்கு (LOW variety) என்ற சொல்லாட்சிக்குப் பதி லாகப் பேச்சு வழக்கு (Colloquial variety) என்பதையும் பயன்படுத்துகி றோம்.சிலர் முறைசார் வழக்கு (Formal variety) என்பதையும் முறை சாரா வழக்கு (Informal variety) என்பதையும் பயன்படுத்துகிறார்கள் (Ramaswami: 1980).
3. தொல்காப்பியர் காலம் தொட்டே தமிழில் இரட்டை வழக்கு நிலை இருந்ததாக நம்பப்படுகிறது (ஆரோக்கியநாதன் 1986 - 112), அண்ணாமலையும் (1986 : i) (சண்முகமும் (1988:18) தொல்காப்பியர் காலம்தொட்டு இரட்டை வழக்கு நிலை இருந்தது என்பது சந்தேகத்திற்குரியது என்று கூறுகிறார்கள்.
''... there must have been the structural gap between the language of the vulgar and that affected by the literati as there is at present'. (Caldwell) (1856; 80)
'Tamil diglossia seems to go back to many centuries' (Ferguson 1959)
4. ''... between the school and the community of the working class child, there may exist a cultural discontinuity based upon two radically different systems of communication'' (Bernstein 1973: 166). gub Gudi) Gastair g g goalsT (De Silva: 1976) அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது; இது மூல நூலி லிருந்து கொடுக்கப்பட்டதல்ல. •
5. ' '... limited to a form of language use, which although allowing for a vast range of possibilities, provides a speech form which discourages the speaker from verbally elaborating subject intent and progressively orients the user to descriptive, rather than abstract concepts'. (Bernstein 1973: 79)
6. இந்திய சமூக அறிவியல்களின் ஆய்வுக் கழகம் நல்கிய நிதி யுதவியின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறை ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் கற்கும் எழுத்துத் தமிழில் பேச்சுத் தமிழின் தாக்கம் என்ற திட்டத்தை மேற்கொண்டது. இதனுடைய ஆய்வறிக்கை 1988 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட கழகத்திற்குக் Qarr(Đ3517 JL’.L-gi ((Rangan and Jayakumar 1988).
160

7. 1986 - 1988 ஆகிய கால கட்டத்தில் அவ்வாய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்பொழுது ஒன்று முதல் மூன்று வகுப்பு வீர பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட பாடநூல்கள் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நூல்கள் 1981 ஆம் ஆண்டு தமிழ் நாட்டுப் பாடநூல்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அவை இப் பொழுது பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில குறைகள் இந்நூல்களில் நிவர்த்தி செய்யப் பட்டுள்ளன.
8. அண்மையில் பாடநூல் நிறுனவத்தால் வெளியிடப்பட்ட முதல் வகுப்புப் பாடநூலில் எழுத்துக்கள் உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமர்சனம் பழைய முதல் வகுப்புப் பாடநூலுக்குத்தான் பொருந்தும் புதிதாக உருவாக்கப்பட்ட பாடநூல்களையும் நாம் மதீப்பீடு செய்ய வேண்டும். V−
9. தற்காலத் தமிழில் அர் என்ற விகுதி மரியாதை ஒருமை யைக் குறிக்கிறது. தொடரில் வரும்பொழுது இவ்விகுதி பன்மை யைச் சுட்டுகிறது. அர் பன்மையைச் சுட்டுவது மாறும்பொழுது - கள் என்ற விகுதி எல்லா இடங்களிலும் வருகிறது. அஃறிணைப் பெயர் களோடு மட்டும் வரும் என்ற இலக்கண வரையறை மீறப்படுகிறது:
நடிகன் நடிகை நடிகர் நடிகர்கள் ஆசிரியன் ஆசிரியை ஆசிரியர் ஆசிரியர்கள் தலைவன் தலைவி தலைவர் தலைவர்கள்
- அர் மரியாதை ஒருமை என்பதோடு ஆண்பாலையே பெரும் பாலும் குறிக்கிறது.
அர் தொடரில் வரும்பொழுது பன்மையைக் குறிக்கிறது.
ஆசிரியர் சங்கம் தொழிலாளர் போராட்டம் உழைப்பாளர் வர்க்கம் மாணவர் அணி ஆசிரியர், தொழிலாளர் ஆகிய சொற்கள் பன்மையையே சுட்டு கின்றன. விரிவுக்கு அரங்கனின் (1988, 1989) கட்டுரைகளைப் பார்க்கவும்.
10. சேலம் முதலிய இடங்களில் வழங்கும் பேச்சு வழக்கில் அண்பல் ஒலி நாமடி ஒலியாக மாறுவதைப் பார்க்கிறோம்.
6

Page 95
மணிமேகளை
மணிமேகலை حسست۔-
ᏯᎦᎧ0ᎠᎶᏓ) 6( )562 حوبی T
ஒன்று -> ஒன்னு -> ஒண்ணு மூன்று -> முனு —> eup 689)/
பயன்பட்ட நூல்களும் கட்டுரைகளும்
அண்ணாமலை. இ. (1986) அணிந்துரை ஆரோக்கியநாதனின்
நூலுக்கு.
அரங்கன், கி. (1988) ‘இக்காலத் தமிழ் இலக்கணம் களஞ்சியம்,
ஜ"லை, பக். 3. 1 - 23
... . (1989) ‘மொழி மாற்றமும் கோட்பாட்டுச் சிக்கலும் புதிய தமிழ் இலக்கணம் - சிக்கலும் தீர்வுகளும், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , புதுவை .
(1986) மொழியியல்: இரட்டை வழக்கு
ஆரோக்கியநாதன், என்.
மணிவாசகர் நூலகம். சிதம்பரம்.
உலகநாதன், தணிகை (1981) தமிழ்; இாண்டாம் வகுப்பு தமிழ்
நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
கோபாலகிருஷ்ணன், வே. தா. (1981) தமிழ் முதல் வகுப்பு தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை;
சண்முகம், செ. வை. (1985) மொழியும் எழுத்தும் அனைத்திந்தியத் தமிழ் மொழியியல் கழகம், அண்ணாமலைநகர்
Bernstein B. (1973) Class, code and control London; Paladin
Caldwell, R. (1856) A comparativ grammar of the Dravidian or south Indian family of languages
(Revised edition 1956, Madras)
162

Ôe Silva, M. W. S. (1976) Diglossia and literacy Clit.
Mysore:
Ferguson, C, A. (1959) 'Diglossia' in Word, 15. pp. 325-340.
Labov, W. (1970) The study of nonstandard English NCTE
and Centre for Applied Linguistics.
Pattanayak, D. P. (1976) "Forevard to De Silva's book.
(1981) Language and social issues Univ. of Mysore. Mysore;
Ramaswami, N. (1980). Formal and informal Tami Ph. D
Diss., University of Kerala.
Rangan, K. (1991) “ Diglossia and problems of teaching Tamil' in Working Papers in Linguistics, pp., 101-116. Department of Linguistics, Tamil University. Thanjavur.
R ang an, K. and Jayakumar, M., (1988) A pilot study on the impact of spikoen Tamil on learning written. Tamil by the primary school children, Report submitted to the ICSSR, New Delhi, mimeo.
Rangan, K. and Chandrasekaran, G. (1989) A. glossary of standardized technical terms in linguistics: English-Tamil, - Tamil University. Thanjavur.
i68

Page 96
தமி ழ் கற்பித்தலில் மேனாட்டுச் செல்வாக்கு
சுப. திண்ணப்பன்
‘புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் - நுட் பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கு இல்லை. மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிடமிசை ஒங்கும் என்று அந்தப் பேதை உரைத் தான். ஆ! இந்த வசை எனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று தமிழ்த் தாய் தன் மக்களை நோக்கி வேண்டு கோள் விடுப்பதா சப் பாரதி பாடினான். இந்த வேண்டுகோளின் பயனாக விளைந்தது மேனாட்டுச் செல்வாக்கு. கட்டுக்கிடையாய் நின்ற தமிழும் அறிவும் புத்துயிர் பெற்றுப் புதிய நெறிகளில் செல் வதற்கு நமது கலைப் பண்பாடுகளினின்றும் முற்றும் வேறுபட்ட ஒரு கலைப் பண்பாட்டின் தூண்டுதல் அவசியமாய் இருந்தது. ஆங்கிலே யரது கூட்டுறவால் இத் தூண்டுதல் நமக்குக் கிடைத்தது. புதிய விஞ்ஞான அறிவு சிறிது சிறிதாகப் புகுந்து தமிழுலகை உள்ளும் புறமும் புதைத்திருந்த இருட்படலத்தைக் கீறி நீக்குவதாயிற்று (வையாபுரிப்பிள்ளை : 1960), இந்தத் தூண்டுகோலாகவும் இருந்தது மேலை நாட்டுச் செல்வாக்கு. தமிழர்கள் மேலை நாட்டினருடன் கொண்ட தொடர்பு காரணமாகத் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி இயல் ஆகிய துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களுக்கேற்பத் தமிழ் கற்றல் - கற்பித்தல் துறையிலும் பல வகை மாற்றங்கள் தோன்றின. அம்மாற்றங்களைப் பட்டியலிட்டுக் காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
பின்னணி
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ராட்சி தமிழ் நாட்டில் ஏற்பட்டதும் மேனாட்டுச் செல்லாக்குத் தமிழ் நாட் டில் தீவிரமாக இடம் பெறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி விருத்தி யும் கிறித்துவ மதப் பிரசாரமும் மேனாட்டுச் செல்வாக்குப் பரவு வதற்குக் கருவிகளாயின, (வேலுப்பிள்ளை ஆ: 1978). ஆங்கில
164

நாகரிகத் தொடர்பினால் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் உண்டாயின, சமுதாயத்திலே சமத்துவம், சுயாதீனம், முதலிய பண்புகள் சிறப்பிடம் பெறலாயின. அதனால், மக்களிடையே நிலவிய சாதி பேதங்கள் அருகத் தொடங்கின. இவ்வாறு பல வழி களிலும் மக்கள் வாழ்க்கை மாற்றமுற, இலக்கியமும் அதன் போக்கிற் கிணங்க வளர்ந்து சென்றது. அதுமட்டுமன்றி அந்நாகரிகத் தொடர் பினால் விஞ்ஞான சாஸ்திர நூல்கள், அகராதிகள், ஒப்பிலக்கண நூல்கள் ஆராய்ச்சி நூல்கள் முதலியனவும் தோன்றலாயின. அவற்றை விடப் பத்திரிகைகளும் தோன்றி மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின (செல்வநாயம், வி. 1960).
ஐரோப்பியர் வருகையால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பல நன் மைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது தமிழ் நாட்டில், முதன் முகலாக அச்சுக் கூடத்தை நிறுவியமையாகும். அதன் விளைவாக, நாடெங்கும் பல்வேறு வகைப்பட்ட உரைநடை நூல்கள் தோன்றித் தமிழ் மொழியில் உரைநடை இலக்கியத்தை வளப்படுத்தின. நாடெங்கும் கல்விச்சாலைகள் தோன்றி, தமிழ் வளரப் பெருந் தொண்டாற்றின. மேனாட்டு இலக்கியங்களோடு அறிமுகமான தமிழ் மக்கள், அம்மொழிகளில் அமைந்துள்ள சிறு கதை, நாவல், நாடகம் போன்றவற்றைக் கற்றறிந்து தம் மொழியிலும் தோற்று வித்தனர். வேறு பிற துறை நூல்களும் வேர் விட்டுத் தழைத்தன. இப் புதிய இலக்கிய வகைகளைப் போட்டி போட்டுக்கொண்டு வளர்த்த பெருமை பத்திரிகைகளையும், திங்கள், வார வெளியீடுகளையுமே சாரும். விஞ்ஞானம் தந்த பல விந்தைகளான வானொலி, திரைப் படம் போல்வனவும் முத்தமிழும் வளரப் பணிபுரிந்து வருகின்றன (அடைக்கலசாமி; 1985). இவற்றின் வழி உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் செய்திகளை மக்கள் இன்று உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் மனம் விரிவடைய வசதிகள் காணப் படுகின்றன, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மேனாடுகளில் வெகு வேகமாக ஏற்பட்டு வருகிற அறிவியல் வளர்ச்சி மக்கள் வாழ்க்கை நோக்கையும் சிந்தனைப் போக்கையும் தீவிரமாகப் பாதிக்கிறது. எனவே இந் நூற்றாண்டிலே உலகம் மிகவும் சிறியதாய் மாறி விட்டது. உலகம் தமிழின் பெருமையை உணரத் தலைப்பட்டது.
ஐரோப்பியர் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மிகுதி யாகப் பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் , பீஜி, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக் கர்கக் குடியேற்றம் செய்யப்பட்டனர், இதனால் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை இருந்த தமிழ் கூறும் நல்லுலகம் பரப்பால் விரியத் தொடங்கிற்று. குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை வாயி
1.65

Page 97
லாகவும் மேனாட்டுச் செல்வாக்குத் தமிழர்களிடையே பெருகிற்று. 1947 இல் இந்தியா விடுதலையடைந்த பிறகு தமிழர்கள் கல்வி, தொழில், வாணிகம் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளுக்குச் சென்று குடியேறத் தலைப்பட்டனர். அதன் வழியாகவும் மேனாட்டுச் செல்வாக்கு தமிழர்களிடையே மிகுதி யாயிற்று.
மேலை நாட்டவரின் வருகைக்குப் பின்னர் தமிழ்மொழி வர லாற்றிலும் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது. அவர்களின் வாணிக உறவாலும் ஆட்சியாலும் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல வந்து கலந்தன (வரதராசன், மு. 1983). மேலை நாட்டறிஞர்களான பெஸ்கி, ரேனியஸ், கிரால், போப், ஆர்டன், கால்டுவெல் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டுத் தமிழைப் பற்றிக் குறிப்பாகப் பேச்சுத் தமிழைப் பற்றி ஆய்வு செய்தனர். மேலை நாட்டினரின் வருகையால் கலையியல், அறிவியல் போன்ற துறைகள் வளர வளரத் தமிழும் பல் வேறு மாற்றங்களைக் கண்டது. புதிய புதிய கலைச் சொற்கள், புதிய சில இலக்கணக் கூறுகள், புதிய புதிய வாக்கிய அமைப்புகள் போன்ற பல நிலைகளில் தமிழில் மாற்றங்கள் "ஏற்பட்டன. மேலும் 20 ஆம் நூற்றாண்டுத் தமிழைப் பற்றி ஆராயும் போது வானொ லித் தமிழ், பத்திரிகைத் தமிழ், அறிவியல் தமிழ் பற்றியும் ஆராய வேண்டும். மற்றக் காலகட்டத் தமிழ் மொழியின் அமைப்பை நோக்கும்போது தற்காலத் தமிழ் பல்வேறு வகைகளில் வேறுபட்டு நிற்பதைக் காண்கிறோம் (சக்தி வேல், சு. 1984).
எல்லிஸ், கால்டுவெல் ஆகிய அறிஞர்களின் நூல்கள் தமிழ் திராவிட மொழி இனத்தைச் சார்ந்தது என்றும், அவ்வின மொழி களில் தமிழ் தொன்மையானது என்றும் திராவிட மொழிகள் வட மொழியினின்று தோன்றியவை அல்ல என்றும் கூறிய கருத்துகள் தமிழ் அறிஞர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டின. இவர்கள் நூல்வழி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய திராவிட மொழிகள் உலக மொழியியல் அறிஞர் அரங்கிற்கு அறிமுகமாயின. இந்நூற்றாண்டில் எமனோ, பர்ரோ, கமில் சுவலபில், அன்ட்ரோ நோவ் முதலியோர், திராவிட மொழியியல், தமிழியல் ஆய்வு நூல்கள், கட்டுரைகள் எழுதினர். இவர்களின் அறிவியல் நோக்கில் அமைந்த ஆய்வுகள் தமிழ் அறிஞர்களிடையே பரவின. மொழியியல் துறை தமிழ் மண்ணில் வளரத் தலைப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர் வரவுக்கு முன்னர் குருகுலக் கல்வி நிலவியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 1650 வரை இந்து மடங்களின் வழியாகவும் கிறித்துவ மடங்களின் வழியாகவும் கல்வி அளிக்கப்பட்டது. இந்த மடப் பள்ளிகளில் தமிழும் சமஸ்கிருதமும்
166

கற்பிக்கப்பட்டு வந்தன. ஐரோப்பிர் வருகைக்குப் பிறகு கல்வி முறை யில் மாற்றம் ஏற்பட்டது. ஆங்கில ஆட்சியாளர்கள் முறைப்படி யான கல்வி அமைப்புகளைத் தோற்றுவித்துக் கற் கும் வாய்ப் பினைப் பெருக்கினர். ஆங்கிலக் கல்வியும் தமிழ்மொழிக் கல்வியும் பரவலாக வளர வழிசெய்தனர்.
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர்தம் தாய் மொழிக் கல்வியில் நாட்டம் செலுத்தினர். மாநில மொழிகள் கல்வியில் பயிற்று மொழிகளாக மாறின. மாநில மொழி வளர்ச் சிக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டப்பெற்றன. அலுவல், தொழில் காரணமாக ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலங்களுக்குச் சென்று தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் குடியேறி நிரந்தரமாகவும் வாழத் தலைப்பட்டனர். இவர்கள் தாங்கள் வாழும் மாநில மொழிகளுடன் தங்கள் தாய் மொழியையும் கற்க விளைந்தனர். அத னால், ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தோர் மொழிகளை யும் கற்றுக்கொடுக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர்களும் அவ்வாறு பிற மாநிலங்களில் குடி யேறினர். அங்கு த ங் க ள் தாய்மொழியான தமிழைக் கற்க முற்பட்டனர்.
இந்திய அரசாங்கத்தின் தேசிய மொழியான இந்தியும் அலு வலக மொழியாக ஆங்கிலமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மும் மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி பேசும் மாநி லத்தவர் ஆங்கிலத்துடன் இன்னொரு தென்னிந்திய மொழி படிக்க வேண்டும் என்றும், தென்னிந்திய மாநிலத்தினர் தாய்மொழி, ஆங் கிலத்துடன் இந்தி படிக்க வேண்டும் என்றும் அக்கொள்கை வலியுறுத்திற்று.
இவ்வாறு தமிழகத்தில் ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு தமிழ் மொழி, இலக்கியம், கல்வியியல் ஆகிய பல துறைகளில் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் தமிழ்மொழி கற்பித்தலிலும் பலவகை நிலைகளில் செல்வாக்கினைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தன.
மொழியியல்
மொழியியல் என்பது தமிழுக்கு ஒரு புதிய துறை. மொழியை அறிவியல் அடிப்படையில் பல்வேறு நோக்கில் ஆராயும் இந்தத்துறை இந்நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழில் நல்ல வளர்ச்சி கண் டது. சென்ற நூற்றாண்டில் கால்டுவெல், எல்லிஸ் முதலானவர்கள்
67

Page 98
தமிழில் மொழியியல் வளர்ச்சிக்கு வித்திட்டுச் சென்றனர். மொழி யியல் வளர்ச்சியால் தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள் தோன் றின. மு. வரதராசனாரின் மொழியியல், தமிழ் மொழி வரலாறு, மொழி கற்பித்தல் முதலிய நூல்களும் தேவநேயப் பாவாணரின் மொழி பற்றிய நூல்களும் இலக்கண நூல்களும் தமிழ் கற்பித்தலில் பலவகையான மாற்றங்களைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந் தன. விளக்க மொழியியல் அடிப்படையில் பலவகைத் தமிழ் இலக் கண ஆய்வுகள் வெளியிடப்பட்டன. மொழியியல் நோக்கில் 'தமிழ் கற்பித்தல் பற்றிய நூலை மா. சு. திருமலை எழுதினார். சமுதாய மொழியியல் வளர்ச்சி பெற்றது. மொழிப்பயன்பாடும், சூழலும் தமிழ்மொழி கற்பித்தலில் இடம் பெறத் தலைப்பட்டன. உறழ்நிலை மொழியியல் (Contrastive Linguistics) ஆய்வுகள் உருவாயின. இவற்றின் வழிப் பிறமொழியாளர்க்குத் தமிழ் கற்பிப்பதற்குதவும் கருவிநூல், புதிய முறைகள் தோன்றின. பெஸ்கி, போப், ஆர்டன், அன்ட்ரோ நோவ், லேமென் முதலிய வெளிநாட்டறிஞர்கள் மொழி யியல் நோக்கில் தமிழ் இலக்கணங்களை எழுதி ன ர். இவர்கள் கொடுத்த சில விளக்கங்களின் வழி தமிழ் மொழி கற்பித்தலில் எளிமையையும் தெளிவையும் புகுத்த முடிந்தது.
மொழியியல் கல்வி தமிழில் பரவ - வளர அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறையும் அதன்வழி தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், முத்துச் சண்முகனார், ச. அகத்தியலிங்கனார் ஆகியோரும் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. இவர்கள் தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பான ஆய்வுகளும் செய்து நூல்கள் வெளியிட்டனர். தமிழ் கற்பிப்போருக்கு மொழியியல் அறிவின் தேவையைத் திருமலை வலியுறுத்தினார். (1978).
தாய்மொழி கற்பித்தல், இரண்டாம் மொழி கற்பித்தல் என் பதைப் பிரித்தறியும் அணுகுமுறைகளும் மேனாட்டுச் செல்வாக்கா ல் உருவாயின. தாய் மொழி கற்றுக்கொள்ளுதலை மொழி கைவரப் Guspái) (Language Acquisition) at girl Iri. 3) T657 L-Tib Gudit if disi) றலை மொழி கற்றல் (Language tearning) என்பர். இந்த இரண் டினையும் வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு உளமொழியியல் கோட் பாடுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் தமிழ் கற்பித்தலை யும் நோக்கும் போக்கு இப்போது தலையெடுத்துள்ளது.
பல்வேறு சூழல்களில் தமிழ் கற்பித்தல்
பொதுவாக மொழிகளைக் கற்பிக்கும் சூழல்களைத் தாய்
மொழியைக் கற்பிக்கும் சூழல், இரண்டாம் மொழியைக் கற்பிக்கும்
சூழல், அயல் மொழியைக் கற்பிக்கும் சூழல் என மூவகைகளாகப்
168

பிரித்துக் காண்பர் (திருமலை. மா. சு : 1978). இவ்வாறு பிரித்துக் காண்பது பயன்படு மொழியியல் பிரிவைச் சார்ந்த மொழி கற்பித்தலில் ஒரு மரபாகும் தாய்மொழி என்றால் என்ன என்பதை இக்காலச் சூழ்நிலையில் வரையறுத்துக் காட்ட இயலாது என்னும் கருத்தை முத்துச் சண்முகன், திருமலை ஆகியோர் வவியுறுத்தி விளக்கி யுள்ளனர் (1977,78). தாய்மொழி என்ற கருத்தைவிடக் குழந் தையின் முதன்மொழி அல்லது குழந்தையின் சுற்றுச் சூழ்நிலை மொழி என்ற கருந்தே பொருத்தமானது என்பது மொழியியல் அறிஞர் கோட்பாடாகும். கற்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் மொழி என்றும் அயல் மொழி என்றும் பாகு படுத் துவர். முதன்மொழியைக் கற்கும் சூழலில் வகுப்பறையில் கற் கும் மொழியும் வகுப்பறைக்கு வெளியே பயன்படுத்தும் மொழியும் ஒன்றேயாகும். இரண்டாம் மொழியைக் கற்கும் சூழலில் வகுப்ப றையில் கற்கும் மொழியை வகுப்பறைக்கு வெளியேயும் பயன் படுத்தும் வாய்ப்புண்டு. அயல் மொழியைக் கற்கும் சூழலில் வகுப் பறையில் கற்கும் மொழியை வகுப்பறைக்கு வெளியே உடனடி யாகப் பயன்படுத்தும் வாய்ப்பில்லை (திருமலை: 1978).
இந்த அடிப்படையில் தமிழ் கற்பித்தலையும் மூன்று வகையாய் பிரித்துக்காணும் போக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழர்க்குத் தமிழ் கற்பித்தலை முதல் மொழிச் சூழல் என்றும் வட இந்திய மாநிலத்தவர்க்குத் தமிழ் கற்பித்தலை இரண்டாம் மொழிச் சூழல் என்றும் வெளிநாட்டவர்க்கு - பிற மேனாட்டு அல்லது கீழைநாட்டு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்க்குத் - தமிழ் கற் பித்தலை அன்னிய மொழிச் சூழல் என்றும் கூறலாம். இம் மூவசைச் சூழலுக்கேற்பத் தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான பாட நூல்கள், பயிற்சி நூல்கள் பயிற்றுக் கருவிகள் உருவாகியுள்ள நிலையையும் தமிழ் கற்பிக்கும் பணியில் இப்போது காணமுடிகிறது.
சிங்கப்பூரில் ஆங்கிலத்தை முதன் மொழி என்றும் சீனம், மலாய், தமிழ் ஆகியவற்றை இரண்டாம் மொழி என்றும் கூறுகின் றனர். இப்பாகுபாடு மொழிக்குக் கொடுக்கும் முதன்மை (வணிகம், அறிவியல், உலகத் தொடர்பு காரணமாக அமைவது) அடிப்படை யில் அமைகிறது. ஆங்கிலம் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி யாகவும் அலுவலக மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் பயன் படுத்தப்படுகிறது. எனவே சீனம், மலாய். தமிழைத் தாய் மொழி யாகக் கொண்டவருக்கு அம்மொழிகள் கற்றுக் கொடுக்கப்படும் சூழ் நிலையை இரண்டாம் மொழிச் சூழல் என்று கூறுகின்றனர். உண் மையில் பார்க்கப் போனால் ஒரு மொழியை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு அம்மொழியை இரண்டாம் மொழி
69

Page 99
எனும் பெயரால் கற்பிக்கப்படுகிற நிலையை இங்கே காண்கிறோம். எனவே தமிழ் இப்போது இரண்டாம் மொழி என்னும் பெயரால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குக் கற்பிக்கப்படு கிறது. மேலும் தமிழை முதல் மொழி நிலையில் கற்பித்தல், இரண் டாம் மொழி நிலையில் கற்பித்தல் , மூன்றாம் மொழி நிலை யில் கற்பித்தல் என்று தரத்திற்கேற்பச் செய்யப்படும் பாகுபாடும் சிங்கப்பூரில் உள்ளது.
பல்வகை நிலையில் தமிழ் கற்பித்தல்
மேனாட்டுச் செல்வாக்கின் காரணமாகக் கீழைநாடுகளின் கல்வி முறையில் மாணவர் வயதுக்கேற்ப அமையும் பல்வேறு கல்வி முறைகள் ஏற்பட்டன. இந்தியக் கல்வி அமைப்பினை ஒழுங்கு முறைப் பள்ளிக் கல்வி, ஒழுங்கு முறை சாராக் (Non - Formal) கல்வி, முறை யற்ற (Informal) கல்விச் செல்வாக்குகள் எனப் பகுப்பர். ஒழுங்கு முறைக் கல்வியில் பாலர்பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல் உயர்நிலைப் பள்ளி, உயர் கல்வி, பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி எனப் பாகுபடுத்தலாம் (கோவிந்தராசன் 1982), இந்த நிலைகளில் எல்லாம் படிப்படியாகத் தமிழ் கற்கும் போக்கு இந்தக் காலப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலைகளுக்கேற்பப் பாடத் திட்டம், பயிற்று கருவிகள், பயிற்சித் திட்டங்கள், மதிப்பீட்டு முயற்சிகள் ஆகியவற்றில் தமிழ்மொழியும் இ ட ம் பெற்றுள்ள நிலையை நாம் இப்போது காணமுடிகிறது.
ஒழுங்கு முறைசாராக் கல்வியில் பகுதி நேர, மாலை நேர, அஞ்சல் வழிக் கல்வி எனப் பல பிரிவுகள் உண்டு. இந்தப் பிரிவுகளி இம் தமிழ் கற்றல் இப்போது இடம் பெற்றுள்ளது. அஞ்சல் வழிப் பட்டப் படிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
முறையற்ற கல்விச் செல்வாக்குகளில் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும் கல்விக் கூறுகள் இடம் பெறும். வயது வந்தோர் கல்வி, முதியோர் கல்வி எனப் பல பிரிவுகளிலும் தமிழ் கற்பித்தல் நிகழ்ந்து வருவதையும் இதற்காகப் பயிற்று கருகவின் உருவாக்கும் முயற்சி யையும் நாம் இப்போது காண முடிகிறது.
உறுப்புக் குறை உடையவர்க்கும் மூளை வளர்ச்சி பாதிக்கப் பட்டவர்களுக்கும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் இருக் கின்றன.
முத்தமிழும் அறிவியல் தமிழும்
இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று கூறுகளாகப் பகுக்கப்பட்ட முத்தமிழ்ப் பாகுபாடு பழமையான ஒன்றாகும். இப்
70

போது இந்த முத்தமிழுடன் அறிவியல் தமிழ் என நான்காவது தமிழ் தோன்றியுள்ளது இதுபற்றி அண்மைக் காலத்தில் கருத்தரங் குகள் பல தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. மேலும் நூல்கள், இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அறிவியல் தமிழ் கற்பித்தல் பற்றிய சிந்தனைகளும் வளரத் தலைபட்டுள்ளன. ஆங்கிலம் கற் பித்தலை ஏதேனும் ஒரு சிறப்பு நோக்கத்திற்கெனக் கண்டு பாகு படுத்தும் முறை உள்ளது. வணிகத்துக்குரிய ஆங்கிலம், தொழில் நுட்பத் துறையினர்க்குரிய ஆங்கிலம், அறிவியல் நோக்கத்திற்கான ஆங்கிலம் எனப் பாகுபடுத்திக் கற்பிக்கும் முயற்சிபோலத் தமிழிலும் எதிர்காலத்தில் உருவாவதற்குரிய நிலைகள் இப்போது தோன்றி வருகின்றன. அறிவியல் தமிழ் என்பது பல்வேறு அறிவியல் துறை களில் அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் தமிழாகும். முத்தமிழைப் போன்று அறிவியல் தமிழில் மொழி நயத்திற்கோ, உணர்ச்சிக்கோ மொழியின்பத்தை நுகரவைக்கும் முயற்சிக்கோ சிறிதும் இடமில்லை (கருணாகரன்; 1989) என்று அறிவியல் தமிழை ஏனைய தமிழினின்று வேறுபடுத்திக் காட்டுவர். அறிவியல் தமிழில் கலைச் சொல்லாக்கம் ஒரு கூறாகும். அறிவியல் நூல்கள் எழுதுவார்க்கு அறிவியல் தமிழ் கற்பிக்கும் தேவை உரு வாகியுள்ளது. w
பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
தமிழ், பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் கொண்ட மொழி என் பதை அனைவரும் அறிவர். செய்யுளும் வழக்கும் நாடித் தொல்காப் பியர் இலக்கணம் செய்தார் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும். இந்த இருவகை வழக்குகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையவை எனினும் எழுத்து வழக்கே மேம்பட்டது, பெரு மைக்குரியது, கற்பதற்கும் கற்பிப்பதற்கும் உரியது என்னும் கருத்தே நீண்ட காலமாகத் தமிழ் கூறும் உலகில் இருந்து வந்தது. பேச்சு வழக்கினை இழிசன வழக்கு, கொச்சை வழக்கு எனக் கூறுவது கற்றறிந்தோர் மரபு. ஆனால் மொழியியல் கல்வி வளர்ச்சி பெற் றதும் தமிழின் பேச்சு வழக்கும் மதிக்கத் தகுந்த ஒன்று என்றும், பேச்சு வழக்கே எழுத்து வழக்கிற்கு முன்னோடி என்றும் கருதப் பட்டது. எழுத்து வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கு மிடையேயுள்ள வேறுபாடுகள் பிரித்தறியப்பட்டன. பேச்சு வழக்கில் அமையும் பல் வேறு வட்டாரக் கிளைமொழிகள், இனக் கிளைமொழிகள், தொழிற் கிளைமொழிகள் பற்றிய ஆய்வுகள் பெருகின. திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளில் பேசும் தமிழைப் பேச்சுத் தமிழின் பொதுத் தாய்மொழியாகக் கொண்டனர் (கோதண்ட ராமன்: 1975). பேச்சுத் தமிழுக்கென இலக்கண நூல்களும் எழுதப் பெற்றன.
7

Page 100
இந்நிலையில் தமிழ் கற்றல் பணியிலும் பேச்சுத் தமிழைக் கற்பித்தல், எழுத்துத் தமிழைக் கற்பித்தல் என இருவகையாகப் பகுத்துக் காணும் முயற்சி தொடங்கியது. இந்த இரண்டு வழக்கு களையும் கற்பிப்பதற்கெனத் தனித் தனிப் பாடநூல்கள், பயிற்சி நூல்கள், ஒலிநாடாக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வேறுபாட்டின் அடிப்படை யில் கற்பிக்கும் நிலை அனனிய மொழி, இரண்டாம் மொழி கற் பித்தலில் அதிகமாக இடம் பெறுவதைக் காணலாம்.
நோக்கம்
பொதுவாகக் கல்வியின் நோக்கத்தைத் திருவள்ளுவர் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (39) என்று கூறு கிறார். கற்றபின் அதற்குத் தக நிற்றலே கல்வியின் நோக்கமாகும். பின்னே தோன்றிய குமரகுருபரர்,
அறம் பொருளின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்று உற்றுழியும் கை கொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை.
என நீதிநெறி விளக்கத்தில் கூறுகிறார். இதன் வழி அறம் பொருள் இன்பம் வீடு பெறுதல், புகழ் அடைதல், கவலை வரும்போது கைகொடுக்கும் கருவி பெறுதல், ஆகியவை கல்வியின் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளன.
மொழிக் கல்வியின் நோக்கத்தை ஒரு பழம்பாடல்
எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனுாற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்,
என்று கூறுகிறது. இதன் வழி மொழி முதற்காரணமாகிய எழுத் துக்களை அறிந்து கொள்வது இழிவைப் போக்கிக் கொள்ளவும், மொழித்திறத்தின் சிக்கலை நீக்கிக் கொள்ளவும், முதனுாற் பொரு ளுணர்ந்து வீடு பெறவும் உதவும் என அறிய முடிகிறது.
மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்குதவும் ஒரு கருவி என்பதை மேனாட்டுக் கல்வி வலியுறுத்தியது. கருத்துப் பரிமாற்றம் என்பது கருத்துகளை உணர்தல் உணர்த்தல் என இரண்டு அடிப் படையில் அமைகின்றது. இவை இரண்டும் ஒலி வழியாகவோ வரி
72

வடிவத்தின் வாயிலாகவோ நிகழமுடியும் ஒலி வடிவத்தின் வாயிலாக அமையும்போது உணர்தல் என்பது கேட்டல்; உணர்த்தல் என்பது பேசுதல். வரி வடிவத்தின் வாயிலாக அமையும் போது உணர்தல் என்பது படித்தல்; உணர்த்தல் என்பது எழுதுதல். எனவே இந்த நான்கு திறன்களையும் கற்பதே மொழிகற்றல் என்பதன் முதன்மை நோக்கங்களாகக் கொள்ளப் பெற்றன.
ஒரு பொருளைப் பற்றி எளிய முறையில் தெளிவாகப் பேசவும், ஒரு பொருளைப் பற்றி ஒருவர் பேசுவதைக் கேட்கவும், கேட்டுப் பொருள் உணரவும், ஒரு பொருளைப் பற்றித் தெளிவான முறை யில் படிக்கவும், படித்துப் பொருளுணர்ந்து கொள்ளவும் ஒரு பொருள் பற்றித் தெளிவாக எளிய முறையில் எழுதவும் ஆன ஆற்றலையும் பெற வேண்டும் என அறிஞர் ஜார்ஜ் ஸாம்சன் கூறுகிறார். எனவே இப்போது தமிழ் மொழி கற்பித்தலின் முதன்மை நோக்கம் கேட்டல் பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களைப் பெறுவதே எனக் கொள்கின்ற நிலை உருவாயிற்று (கோவிந்தராசன் மு; 1978).
ஒவ்வொரு திறனையும் பகுத்து அதன் நோக்கங்களை வேறு படுத்தி அவற்றைக் கற்பித்தல் நோக்கங்களாகக் கொண்டு வகுப் பறையில் பாடம் நடத்தும்முறை இப்போது வலியுறுத்தப்படுகிறது,
பொதுவாக நோக்கங்களைப் பற்றி எழுதும்போது வாக்கிய அமைப்பு நடத்தை முறை நோக்கமாக (Behavioural Objectives) அமைய வேண்டும் என்பர்.
பாடத்திட்டம்
பாடத்திட்டம், பாட ஏற்பாடு என்பவை கற்பித்தலுக்கு அடிப் படையாக அமைந்த கருவிகளாக ஆவணங்களாகக் கருதப்பெறுகின் றன. கற்கும் சூழல், நிலைகளுக்கு ஏற்பப் பாடப் பொருளைப் பகிர்ந்து அளித்தலே பாடத்திட்டத்தின் அடிப்படைப் பணியாகும். இருப்பி னும் கற்றலின் நோக்கம், பாடப் பொருள், கற்பித்தல் முறைகள், கற்றல் மதிப்பீடு முதலிய கூறுகளையும் இப்போதுள்ள பாடத் திட்டங்கள் விளக்குகின்றன. பாடத்திட்டம் பற்றிய கோட்பாடு நம் கல்வியியலில் மேனாட்டுச் செல்வாக்கால் தோன்றிய ஒன்றே. எனவே தமிழ் மொழி கற்பித்தலிலும் பாடத்திட்டம் வகுத்துப் பாடப் பொருள் நடத்தும் முறை மேனாட்டுச் செல்வாக்கால் உருவான ஒன்று என்றே கூறவேண்டும்.
பாடப்பொருள்
தமிழ் மொழிக் கல்வி என்பது பெரும்பாலும் இலக்கண இலக் கியக் கல்வியே என்னும் கருத்தே நிலவி வந்தது. எனவே தமிழ்
73

Page 101
மொழிப் பாடத் திட்டங்கள் தொடக்க காலங்களில் இலக்கண இலக் கியக் கூறுகள் மிகுதியாகக் கொண்டு விளங்கின. மொழித்திறன் விளக்கக்கூறுகள் குறைவாகவே இருந்தன. ஆனால் மேனாட்டு மொழிக் கல்வியில் திறன் கூறுகள் வலியுறுத்தப்படும் போக்கு அதிகமாகவே, தமிழ் மொழிப் பாடத் திட்டங்களிலும் - குறிப்பாகத் தமிழகத்தைத் தவிர மற்ற நாட்டுப் பாடத் திட்டங்களில் - மொழித் திறன்கூறுகளை வலியுறுத்திக் கருத்துப் பரிமாற்றத் திறன் பெருக வழிவகுக்கும் போக்கு, மிகுதியாகிக் கொண்டு வருகிறது.
மேலும் கற்பவரின் தேவைக் கேற்பப் பாடப்பொருள் அமைக்கும் பாடத் திட்டங்கள் தமிழ் கற்றலில் அண்மைக் காலத்தில் பெருகத் தலைப்பட்டன. பிறமொழியாளர் தமிழ் கற்பதன் தேவைகளையும் அவற்றைத் தீர்க்கும் முறைகளையும் பொன். கோதண்டராமன் சுட்டிக் காட்டுவார் (1975).
பயிற்று கருவிகள்
பாடப் பொருளை ஆசிரியரிடமிருந்து மாணவர்க்கு எடுத்துச் செல்லும் ஊர்திகளே பயிற்று கருவிகள். தமிழ்ப் பயிற்று கருவிகளில் பழமையானது 'நூல்’’ ஆகும். இது பழந்தமிழ் நாட்டில் எழுத் தாணி கொண்டு பனையோலையால் எழுதப்பட்டது. எனவே இதற்கு ஏடு என்னும் பெயரும் உரியதாயிற்று. 'நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்,' (373) விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் காற்றாரோடு ஏனை யவர்' (410) என்னும் குறள்கள் கற்றலில் நூலின் தேவையை உணர்த்தும். ‘அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்' (401) என்னும் குறள் நூலின் இன்றியமை யாமை பற்றிப் பேசுகிறது. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என்னும் நன்னூல் சூத்திரம் (10) நூல்பயன் பற்றிப் பேசுகிறது. மேலும் நூலின் அழகு, குற்றம் பற்றியும், நூல் நுவலும் திறன், உத்தி பற்றியும் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக் கண நூல்களும் பேசுகின்றன. நூல் பல கல் என்பது ஒளவையாரின் ஆத்திசூடி. 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனுரலாகும்’ என்று முதனூலுக்கு வரையறை கூறு கிறார் தொல் காப்பியர்.
மேனாட்டில் பயிற்று கருவிகளின் பயனைக் கற்றலில் வலியுறுத்தி யவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த காமினியஸ் (Comenius) என்னும் அறிஞரே ஆவார். கவர்ச்சியான வகுப்பறை, புலன்களுக்கு விருந்தளிக்கும் தோற்றப் பொலிவு, பட விளக்கங்களுடன் கூடிய பாட நூல் ஆகியவை பற்றிய செய்திகளையும் இவரே. முதலில் எடுத்தியம் பினார். இவர் அமைத்த இலத்தீன் மொழி கற்றலுக்குரிய பாடநூலில்
Ι 74

இலத்தீனை உயிருள்ள மொழியாக - பேச்சு மொழியாகக் - கற்பிக்க வேண்டும் என்றும் சொற் கோவைகள் நாள்தோறும் புழங்கக் கூடிய வைகளாகவும் அன்றாட வாழ்விற்குப் பயன்படக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் இலத்தீன் மொழிப் பாடப் பனுவலும் கற்பவர் மொழியில் அமைந்த மொழி பெயர்ப்பும் அருகருகே இரு க் கு மா று ம் அமைத்துக்காட்டினர். (Theodore Huebener; 1967).
இந் நூற்றாண்டில் அச்சுவடிவில் பாடநூல்களைத் தமிழில் உருவாக்கி வெளியிட்டவர் கா. நமசிவாய முதலியார் ஆவார். (வரதராசன், மு. 1983). 19 ஆம் நூற்றாண்டில் பால பாடங்கள் 1, 2, 3, ஆம் வகுப்புகளுக்கு ஆறுமுக நாவலர் வெளியிட்டார். ஏனைய பயிற்று கருவிகள் இந்நூற்றாண்டில் மேனாட்டுச் செல் வாக்காலும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியாலும் தமிழ் கற் பித்தலில் இடம் பெறத் தலைப்பட்டன. அவற்றின் பாகுபாடு வருமாறு.
1. அச்சு வடிவிலுள்ள கருவிகள் (படி எடுப்பதற்குரியவை, Printed Materials), பாடநூல்கள், பயிற்சி நூல்கள் கையேடுகள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், பெரிய புத்தகங்கள், செய்தித் தாள்கள், வார, மாத இதழ்கள்.
2. ஒளி ஊடுருவாக் கட்புலக் கருவிகள் (Non - projected Display Materials), பலவகைப் பலகை (சுண்ணப்பலகை,
காந்தப்ப லகை, மென் கம்பளத்துணிப் பலகை, அறிக்கைப்பலகை) வழி அமையும் காட்சிப் பொருள்கள், விளக்கப்படங்கள்.
3. ஒளி ஊடுருவும் அசையாக் கட்புலக் கருவிகள் (Stil Projected Display Materials), 626f 261 (5056.955 ft 6it 53ir, பட வில்லைகள், நுண்படச் சுருள், நுண்பட அட்டை.
4. செவிப்புலக் கருவிகள் (Audio Materials), வானொலி, ஒலிப்பதிவு நாடா, ஒலிப்பதிவுக் கருவி, காம்பக்ட் டிஸ்க், இசைத்தட்டு, தொலைபேசி.
5. Sheog i'll i L-léi, a (15699; air (Cine and Video Materials) திரைப்படச் சுருள், ஒலி ஒளிச் சேர்க்கைப் பட வில்லைகள், தொலைவாசகச் சேவை.
6. கணினி வழிக் கருவிகள் பொருள்கள் (Computer Mediated Materials) கணினி அடிப்படையில் அமைந்த
175

Page 102
கற்றல் மென்பொருள்கள், சொற்றொகுப்புச் சாதனங்கள் கணினி அச்சிடுவான்.
மேற்கண்ட பயிற்று கருவிகளில் செவிப்புலக் கருவிகள் பலவற் றைக் கொண்ட அறையை மொழித் திறன்களில் கேட்டல் - பேசல் ஆகியவற்றை வளர்க்கும் கருவிகள் கொண்ட அறையை - மொழிபயில் கூடம் என அழைப்பர் இப்போது மொழிபயில் கூடத்தில் கட்புல னால் உணரும் திரைப்படக் கருவிகளையும் வைத்திருக்கின்றனர்.
மேலும் கணினி இயந்திரங்கள், அதன்வழி அமையும் துணைக் கருவிகள், மென்பொருள்கள் கொண்ட அறை, கணினி பயில்கூடம் என அழைக்கப்படுகின்றது. இந்த அறையும் இன்று மொழிபயிலத் துணையாகவுள்ளது.
பயிற்றுமுறை
நன்னுரல் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆசிரியர் எங்ங்னம் பாடம் சொல்ல வேண்டும் என்பதனைக் கூறுகினறார். உரிய காலத் தையும் இடத்தையும் சிந்தித்துப் பார்த்து, மேன்மையானதோர் இடத்து அமர்ந்து, வழிபடும் இறைவனுக்கு வணக்கம் செலுத்தி, மாணவர்களுக்கு உரைக்கப்போகும் செய்திகளை உள்ளத்தே முறைப் படுத்திக், கோவையாக விரைவின்றி, வினவும் மாணவர்கள் இடத்தே சினம்கொள்ளாமலும், விருப்புற்று முகமலர்ச்சியுடன் பாடங்கேட் கும் மாணவர்களின் இயல்புகளை அறிந்து, அவற்றுக்கு ஏற்றவாறு அவர்கள் மகிழ மாறுபாடு இல்லா மனத்துடன் ஆசிரியர் கற்பிக்க வேண்டும் என்று நன்னூல் (சூத்திரம் 36) கூறுகிறது. இன்று பெரி தும் பாராட்டப்பெறும் கல்வி உளவியல் கருத்தை கி. பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பவணந்தி இலக்கியமாக்கியுள்ளது குறிப் பிடத்தக்கது (கோவிந்தராசன் மு: 1978), மாணவர்களும் ஒவியப் பாவைபோல அமைதியாக இருந்து செவிவாயாக நெஞ்சே கொள்ளு மிடமாகக் கற்கவேண்டும் என்பார் நன்னூலார் (சூத்திரம் 40). இங்கே கூறப்பெற்ற கல்வி முறை மொழி கற்பித்தல்முறை எனச் சிறப்பாகக் குறிப்பிட முடியாவிட்டாலும் பொதுவாகக் கற்பித் தலைப் பற்றிய கருத்துகளைக் கூறுகிறது என்று கருதலாம். இது மொழி கற்பித்தலுக்கும் உரியதாக இருந்தது எனக் கொள்ளுவதி லும் தவறில்லை. இங்கு மனப்பாடத்திற்கு முதல் இடம் தரப்பட்டது.
மேல் நாட்டுக் கல்வி முறைகளில் மறுமலர்ச்சி தொடங்கிட வித்திட்டவர் பலர். பிரெஞ்சு நாட்டறிஞர் ரூசோ, சுவிட்சர்லாந்து நாட்டு அறிஞர் பெஸ்டாலசி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாண்டி சோரி, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் டுயீ முதலியோர் கல் வித் துறையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தனர்.
76

புதிய முறைகள் குழந்தை உளவியலை மையமாகக் கொண்டு எழுந்தன. மனப்பாடத்திற்குப் பதில், செய்து கற்றலை வலியுறுத் தின. ஐம்புலன்களின் தேர்ச்சியே கல்விப் பயிற்சிக்கு அடித்தளம் என்னும் கொள்கை வலியுறுத்தப்பட்டது. ஒ வி யப் பாவை போல அமர்ந்திருக்கும் நிலை இங்கு இல்லை. விளையாட்டு முறை , நடிப்பு முறை , கிண்டர்கார்டன் முறை , மாண்டிசோரி முறை, ஒப்படைப்பு முறை எனப் பல முறைகள் கல்வியியல் உலகில் அறிமுகமாயின.
விளையாட்டு முறை, நடிப்பு முறை, கிண்டர் கார்டன் முறை மாண்டிசோரி முறைகள் அனைத்தும் தமிழ் கற்பித்தலிலும் இடம் பெற்றன. இதன் விளைவால் தமிழ் கற்றல் செயல்மிகுந்த ஒன் றாக மாறியது.
இந்திய நாட்டு முறைகள் - திண்ணைப் பள்ளிக்கூட முறைகள்ஆசிரியரை மையமாகக் கொண்டு விளங்கின. மேனாட்டுச் செல் வாக்கினால் தோன்றிய மொழி கற்பித்தல் முறைகள் மாணவரை மையமாகக் கொண்டு எழுந்தன.
19ஆம் நூற்றாண்டில் இரண்டாம் மொ ழி கற்பித்தலில் தோன்றிய முறை இலக்கண மொழிபெயர்ப்பு முறை (Grammar Transalation Method). Spg, GBTLg (p60so (Direct Method) தோன்றியது. பின்னர் சூழல்வழிமுறை (Situational Method) வலி யுறுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அமைப்பு மொழியியலை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது கேட்டல் பேசல் மொழி கற் LS digih (p30sp (Audio Lingual Learning) Gol DiTif) sipdi Lutpd 55 தினால் அமைவது என்பது இம்முறையின் அடிப்படைக் கோட் பாடு. சோம்ஸ்கியின் தொடரியல் கோட்பாட்டினை - மாற்றிலக் கண மொழியியலை - மையமாகக் கொண்டு எழுந்த முறை ஒர்ந்து OLDIT If gipGjuh (upGogo (Cognitive Language Learning method). இம்முறைகளும் தமிழ் கற்பித்தலில் இப்போது இடம் பெற்றுள்ளன. திறன்களை வலியுத்தும் கேட்டல் பேசல் வழக்கக் கோட்பாடே மிகுதியாகச் செல்வாக்கு பெற்றுள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்துப்பரிமாற்ற அணுகுமுறை (Communcative Approach) இப்போது பல நாடு களில் தமிழ்ப் பாடத்திட்டங்களில் இடம்பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக மேனாட்டுச் செல்வாக்குக்கு முன் இலக்கண விதி களை விளக்கிப் பின் எடுத்துக்காட்டுகளைப் பொருத்திக்காட்டும் வழக்கமே மிகுதியாக இருந்தது. இப்போது எடுத்துக்காட்டுகள் பல
77

Page 103
வற்றைச் கொடுத்து மாணவர்களே விதிகளை உணரச் செய்யும் போக்கு வலியுறுத்தப்படுகிறது.
தாய்மொழி கற்பித்தலில் குழந்கைகளின் மொழி வளர்ச்சி யுடன் இணைந்து கற்பிக்கும் போக்கு மேனாட்டுச் செல்வாக்வி னால் உருவாயிற்று. தமிழ் கற்பித்தலில் இப்போக்குப் பின்பற்றப் Lull-gil.
நடைமுறை வாழ்க்கையில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் தனித்து இயங்குவதில்லை. இணைந்தே இயங்கும் இயல்பின. எனவே இவற்றை ஒருங்கிணைத்துக் கற்பித்தல் இன்றைய மொழி கற்பித்தலில் வலியுறுத்தப்படுகிறது. இந்த அடிப் படையில் தமிழ் கற்பித்லும் இடம்பெற்று வருகிறது.
சிந்தனைத் திறனை மொழி கற்பித்தலுடன் இணைத்துக் கற்பிக்க வேண்டும் என்று இப்போது கல்வியியல் வல்லார் கூறுகின் றனர். அதற்கு ஏற்பத் தமிழ் கற்பித்தலும் மாணவர் சிந்தனை ஆற்றலை நெறிப்படுத்திப் பெருக்கும் தன்மையில் சென்று கொண் டிருக்கிறது.
கல்வித்துறையில் மதிப்பிடுதல் என்னும் சொல் கல்வியியல் கலைக்களஞ்சியத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய சொல் லாகும். இது கற்றல் கற்பித்தல் செயல் முறைகளில் (Learning and Teaching Process) gribu š3.ņu 56i) 6 L L16ir 5606T (Educational Values) மதிப்பீடு செய்வதுடன் அமையாது, கற்கும் முறைகள் Learning methods), 5b?ägib (poo (Teaching Methods) gou GOT பற்றியும் தொடர்ந்து மதிப்பீடு செய்வதை குறிப்பதாகும் (கோவிந்த ராசன், மு, 1984). சோதனை என்பது மதிப்பீடு நடவடிக்கையில் ஒன்று. மொழி கற்பித்தலிலும் கல்விப் பயன்கள், கற்கும் முறைகள், கற்பிக்கும் முறைகள், பயிற்று கருவிகள், பாடத்திட்டம் முதலிய வற்றையே மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய மதிப்பீட்டு முயற்சிகள் இப்போது தமிழ் கற்றல் - கற் பித்தலிலும் இடம் பெற்று வருகின்றன.
மொழிச் சோதனையில் கோடிட்ட இடங்களை நிரப்புதல், புறவய வினாக்கள், குளோஸ் (Cloze) பகுதி, முதலிய வினா முறைகள் மேனாட்டுச் செல்வாக்கால் புகுத்தப்பட்டன. இவை தமிழ் மொழி வினாத்தாள்களிலும் இடம் பெற்று வருகின்றன.
178

ஒரு பகுதியின் கருத்தறிதல் திறனைச் சோதிக்கப் பகுதியைக் கொடுத்துவிட்டுப் பல வினாக்கள் கேட்கப்படுகின்ற பாங்கும் மேனாட்டுச் செல்வாக்கால் தோன்றிய ஒன்றாகும். நினைவுகூர்தல், மீட்டுருவாக்கம், கருத்துருவாக்கம் தொடர்பாக வினாக்கள் கேட் கப்படவேண்டும் என்னும் கருத்தும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. இவையனைத்தும் தமிழ்மொழி தொடர்பான வினாத்தாள்களில் தரப்படுகின்ற நிலையைப் பல நாடுகளிலும் காணமுடிகிறது.
பொதுவாகத் தமிழ் கற்பித்தலில் பாடப்பொருளைச் (Content) சோதிக்கும் நிலை படிப்படியாகக் குறைந்து மொழித் திறனைச் சோதிக்கும் போக்கு மிகுதியாகிக் கொண்டிருப்பதை நாம் இப்போது உணர முடிகிறது.
கேட்டலும் பேசுதலும்
கேட்டல் பேசுதல் ஆகிய மொழித் திறன்கள் ஒலியை மைய மாகக்கொண்டு அமைபவை. தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றில் காணும் எழுத்துக்சளின் பிறப்புப் பற்றிய பகுதிகள் தமிழ் எழுத்து களின் உச்சரிப்பினை நன்கு விளக்குகின்றன. எனினும் மொழியியல் வல்லுநர்கள் ஒலியியல் பற்றிய விளக்க நூல்கள் எழுதிய பின்னர் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பினை நன்கு விளக்கிக் கற்பிக்கும் போக்குகள் தமிழ் கற்பித்தலில் தலையெடுத்தன. ஒலிப்புடைய ஒலிகள் ஒலிப்பிலா ஒலிகள் வேறுபாடும் குறில், நெடில், ர் ற், ல், ழ், ள்; ண், ந், ன் வேறுபாடும் பொருள் வேறுபாடு உணர்த்தும் இணைச் சொற்களின் வழியாகக் கற்பிக்கப்பட்டன. உச்சரிப்புத் திருத்தம் பெறுவதற்கு ஒலிநாடாக்கள் பயன்படுத்தப்பட்டன. மொழிபயில் கூடம் முதன்மை பெற்றது.
தமிழ் கற்பித்தலில் கேட்டல் கருத்தறிதல் என்னும் கூறு கற்பிக்கும் முயற்சியும் எழுந்தது. கதைகள், உரையாடல், பாடல்கள் ஆகியவற்றை ஒலிநாடாவில் ஒலிபரப்பிப் பின் அவை தொடர்பான கேள்வி கேட்டு மாணவர் கேட்டுணரும் திறன் அளக்கப்பட்டது. படத்தைப் பார்த்துப் பேசுகின்ற பயிற்சியும் பேச்சாற்றலை வளர்க்க உதவிற்று.
எழுத்துகளின் ஒலிவடிவம் வரிவடிவம் ஆகியவற்றில் ஒலிவடி வத்திற்கு முதன்மையளிக்கும் போக்கு வலியுறுத்தப்பட்டது. படித்தல்
மொழி கற்பித்தலில் படித்தல் ஒரு கூறாகும், இதனைப் படிக்காக் கற்றல், கற்கப் படித்தல் என இரு வகைப்படுத்துவர், படிக்கக் கற்றல்
179

Page 104
என்பது தொடக்க நிலையில் எழுத்துகளை அடையாளங் கண் டுணர்ந்து படித்தலைக் குறிக்கும். எழுத்துக்கள் அறிமுகம் என்பது பழங்காலத்தில் தமிழில் எழுத்துகளைக் கற்பித்து அதன் பின் எழுத்துகளாலான சொற்களை அறிமுகப்படுத்திப் படிப்பதாகும். ஆனால் இப்போது படங்களுடன் பாடப் புத்தகம் வெளியிடப்பட்டு படம் - சொல் - எழுத்து மு  ைற யி ல் அறிமுகப்படுத்தும் பாங்கு மேனாட்டுச் செல்வாக்கால் தோன்றிய ஒன்றாகும்.
படித்தலை வாய்க்குட் படித்தல் வாய்விட்டுப் படித்தல் என பகுத்துக் காண்பதும் மேனாட்டுச் செல்வாக்கால் உருவானவொன் றாகும். பழங்காலத்தில் படித்தல் என்பது பெரும்பாலும் உரக்கப் படித்தல் - வாய்விட்டுப் படித்தலையே குறித்தது. பிறகுதான் வாய்க்குட் படித்தல் வலிறுத்தப்பட்டது. K. Goodman (1967) என்பார் கூறிய வாய்க்குட்படித்தல் அணுகுமுறைகள் பல இப்போது தமிழ் கற்பித்தலில் பின்பற்றப்பட்டுக் கற்பிக்கப்படுகின்றன,
வாய்க்குட் படித்தலில் தரப்படும் பனுவலின் (TEXT) சட்டுக் கோப்பு மையப்பொருள் முதலியவற்றை அறியும் திறன் வலியுறுத் தப்பட்டு வருகிறது. மேலும் பனுவலில் உள்ள புதிய சொற்களின் பொருளைச் சூழமைவுக் குறியீடுகளின் துணைகொண்டு மாணவர்கள் தாமே ஊகித்துணர வேண்டும் என்னும் கோட்பாட்டை தமிழ் கற் பித்தலில் பின்பற்றி வருகின்றனர்.
எழுதுதல்
எழுதுதல் திறன் கற்பித்தலில் இரு வகை உண்டு. ஒன்று ஒலி வடிவங்களுக்கு ஏற்ற வரிவடிவங்களை எழுதுதல், அதாவது, வரி வடிவங்களை எழுதக் கற்பித்தல் , மற்றொன்று கட்டுரை கடிதம் அறிக்கை முதலியன எழுதுதல். முதல் வகை தொடக்க நிலைக் குரியது. இரண்டாம் வகை படிக்க எழுதத் தெரிந்த பின்னர் அமைவது.
பண்டைய நாளில் எழுத்துளைக் கற்பிக்கத் தொடங்குங்கால் அகர வரிசைப்படி கற்பித்தனர். அதாவது அ - ஒள வரையிலான உயிரெழுத்துகள், க் - ன் வரையிலான மெய்யெழுத்துகள், பிறகு க கா ..இவ்வாறான உயிர்மெய் எழுத்துகள் என எல்லா எழுத்துகளையும் கற்பித்தனர். வரிவடிவம் கற்பிக்கும் போது எளிமை யிலிருந்து அருமைக்கு என்னும் கல்வியியல் நோக்கின்படி
(1) L-, L-, Lu, li, LD, b, T, si (2) க, க், ச, ச், த, த், ந, ந், ய, ய், அ (3) வ, வ், ல, ல், ன, ன், ற, ற், ங், ங், ஆ
180

(4) ண, ண், ஞ, ஞ், ள, ள், இ, ஈ, உ, ஊ
(5) ழ, ழ், எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
என்னும் உருவ அடிப்படையில் கற்பித்தல் தமிழ் கற்பித்தலில் இப்போது தொடக்க வகுப்புகளில் பின்பற்றப்படுவதைக் காணு கிறோம். 1953 இல் பிதாவடியான் எழுதிய பாடநூலில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டுரை எழுதுவதில் கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரை, வழி காட்டுக் கட்டுரை, தன்னிச்சையாக எழுதும் கட்டுரை என மூவகைப் படுத்திக் காணும் போக்கு மொழி கற்பித்தலில் பின்பற்றப்படுகின்ற ஒன்று. இது பல நாடுகளில் தொடக்கநிலை மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும்போது பின்பற்றப்படுவதைக் காணமுடிகிறது. அண்மைக் காலத்தில் ஆங்கிலத்தில் செயல்முறைக் கட்டுரை (Process Writing) எழுதுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சொல்வதெழுதுதல் என்னும் திறன் கற்பித்தல், கேட்டல் எழுதுதல் ஆகிய திறன்களை வளர்க்க உதவும். இதனை இப்போது தமிழ் கற்பித்தலிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்துச் சீர்திருத்தமும் நிறுத்தற் குறியீடுகளும்
1680 இல் இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழ் கற்றலை எளிமைப்படுத்தின. முற் காலத்தில் எகரத்திற்கும் ஒகரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் மக்கள் இடர்ப்பட்டனர். இம்மயக்கத்தை நீக்கக் கருதிய வீரமா முனிவர் எகர ஒகரங்களுக்கு நீண்ட புள்ளியையும் மெய்யெழுத்துக் களுக்குச் சுழித்த புள்ளிகளையும் பயன்படுத்தி வேறுபாடு காட்டி னார். இவ்வாறு இயற்றிய மாற்றமே இன்றைய எகர ஒகர வடிவங் களுக்கு வழிகோலுவதாயிற்று.மேலும் கெ, கொ என்ற குற்றெழுத் துக் கொம்புகளை மேற்சுழித்து கே கோ என்று மாற்றியவரும் வீரமா முனிவரே ஆவர் (அடைக்கலசாமி 1983).
காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்ச்சிக்குறி, கேள்விக்குறி முதலான நிறுத்தற் குறிகளெல்லாம் தமிழுக்குப் புதுமை யானவை. இவை தொல்காப்பியத்திலும் இல்லை நன்னூலிலும் இல்லை. பயன்கருதி ஆங்கில மொழியிலிருந்து தமிழில் தழுவிக் கொள்ளப்பட்டவை இவை. ஆங்கில மொழியினால் தமிழ்மொழியில் ஏற்பட்ட புதுமைகளுள் இக்குறியீட்டு இலக்கணமும் ஒன்று, வினை முற்றை இறுதியில் அமைத்து எழுதுவது முற்றுப்புள்ளியின் வேலை யைச் செய்துவந்தது. ஏகார ஒகார உம்மைகள் காற்புள்ளி அரைப்
i 1 8 1

Page 105
புள்ளி இவற்றின் பணியைப் புரிந்துவந்தன. கி பி. 18 ஆம் நூற் றாண்டின் பின்னர் ஆங்கில மொழிப் பயிற்சி மிகுந்தபோது இந்திய நாட்டு மொழிகள் அனைத்திலும் ஆங்கில மொழிக் குறியிட்டு இலக்கணம் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது (பரந்தாமனார். அ. கி. 1955).
குறியீட்டு இலக்கணம் தமிழின்கண் தழுவிக்கொள்ளப்பட்ட தால் பொருளில் தெளிவும் படித்தலில் விரைவு உணர்ச்சியும் ஏற் பட்டன. படித்தல் எளிதாக அமைய இக்குறியீடுகள் பெரிதும் உதவின.
பத்தி பிரித்து எழுதும் போக்கும் மேனாட்டுச் செல்வாக்கே ஆகும்.
இலக்கணம்
மேனாட்டினர் வருகைக்கு முன்னர் அமைந்த தொல்காப்பியம், வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல், தண்டியலங்காரம், நம்பி அகப்பொருள், முதலிய தமிழ் இலக்கண நூல்கள் அனைத்தும் சூத்திர வடிவில் அமைந்தவை. மேலை நாட்டுச் செல்வாக்கினால் உரைநடை வளர்ச்சி அடைந்ததும் இலக்கண நூல்களும் உரைநடையில் எழுதப்பட்டன. ஆறுமுக நாவலர் இவக் கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை எழுதினார். இவை கற்பித்தல் நோக்கிலும் தெளிவு கருதியும் தொகுத்தும் பகுத்தும் இலக்கணக் கருத்துகளை இக்கால எடுத்துக்காட்டுகளுடன் தந்தன. இலக்கணம் கற்பிப்பது இவற்றால் ஒரளவு எளிதாக அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டு உரைநடைக் காலமாக இருந்த கார ணத்தால் உரைநடை வழக்குக்கு இலக்கணம் எழுதப்பட்டது. முற் காலத் தமிழ் இலணக்கண நூல்களில் இல்லாத அளவிற்குச் சொற் றொடர் இலக்கணத்திற்குத் தமிழ் கற்பித்தலில் முதன்மை அளிக் கப்பட்டது. மொழிப் பயிற்சிகளில் தனித்தனியே சொற்களைக் கொடுத்து இலக்கணக் வாக்கியங்களில் மாற்றம் செய்யும் போக்கு தோன்றியது. இதற்குச் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு பற்றிய தமிழ் மொழியியல் நூல்களின் செல்வாக்கு காரணம் என லடம். தேவநேயப் பாவாணரின் உயர்தரக் கட்டுரை இலக்கணம் என்பது ஆங்கில மொழிக்கு அமைந்த ரன் அண்ட் மார்ட்டின் இலக்கண நூலைத் தழுவித் தமிழுக்கு அமைத்த முயற்சி என்று கூறலாம்.
82

இலக்கணத்தை இலக்கணத்திற்காகப் கற்பிப்பது முற்காலப் போக்கு. இப்போது இலக்கணத்தைப் பயன்பாட்டு நோக்கில் கற்பிக்க வேண்டும் என்னும் கோட்பாடு தலைதூக்கி நிற்கிறது. பயன்பாட்டு இலக்கணம் கற்பிக்கும் நிலையே வலியுறுத்தப்படுகிறது.
ஒப்பிலக்கண நூல்கள் பலவற்றை மேனாட்டினர் செய்தனர். இதன்வழி ஏனைய மொழி இலக்கணங்களோடு தமிழ் இலக் கணத்தை ஒப்பிட்டுக்காணும் போக்கு எழுந்தது.
போப், ஆர்டன், கிரால், வீரமாமுனிவர் முதலியோர் தமிழுக்கு இலக்கண நூல்களைப் படைத்துத் தந்தனர். இவர்கள் எழுதிய இலக்கண நூல்களில் தமிழ் இலக்கண நூல்களில் இடம்பெறாத சில கூறுகள் இடம்பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக வினைத்திரிபு விளக் கம், வினை யடிச் சொற்கள் காலம் காட்டும் முறைக்கேற்ப வல்வினை, மெல்வினை, இடை வினைஎனப் பாகுபடுத்திய முறையைச் சுட்டிக் காட்டலாம் சொற்பாகுபாட்டில் பெயரடை, வினையடைகள் இடம் பெற்றன. இந்தக் கூறுகள் தமிழ் கற்பித்தலில் தெளிவையும் எளி மையையும். புகுத்த வழிகோலின
தமிழ் கற்பித்தலில் பல வகை இலக்கண மொழிப்பயிற்சி நூல்கள் உருவாக ஆங்கில மொழிப்பயிற்சி நூல்கள் முன்மாதிரிகளாக அமைந்துள்ளன.
இலக்கியம்
மேனாட்டினர் வருகையால் தமிழில் உரைநடை வளர்ச்சிய டைந்தது. இவர்கள் வருகைக்கு முன்னர் செய்யுள்வழி அமைந்த நூல்கள் - இலக்கிய, இலக்கணங்கள் - தமிழ் கற்பித்தலில் பாட நூலாக இருந்தன. ஆனால் மேனாட்டினர் வருகைக்குப் பிறகு தமிழ் கற்பித்தலில் உரைநடையில் அமைந்த பாடநூல்கள், இலக்கிய இலக்கண நூல்களே மிகுதியாக இடம்பெற்றன. மேனாட்டினர் வருகையால் தமிழில் தழைத்த சிறுகதை, புதினம், புதுக்கவிதை, கட்டுரை ஆகிய புதிய இலக்கிய வடிவங்களைக் கொண்ட நூல்கள் பாடநூல்கள் ஆயின. எனவே மேனாட்டினர் செல்வாக்கினால் இலக்கியப்பாடத்தின் பொருளும் வடிவமும் புதியனவாகத் தமிழ் கற்பித்தலில் இடம்பெறத் தலைப்பட்டன. இலக்கியத் திறனாய்வு என்னும் துறை மேலைநாட்டுச் செல்வாக்கினால் தமிழுக்குக் கிடைத் தது. அதனால், தமிழ் கற்பித்தலில் பழைய இலக்கியங்களை புதிய நோக்கில் காணும் இலக்கிய ஆராய்ச்சி அணுகுமுறைகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கினர்.
183

Page 106
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை என்பது தமிழில் முதன் முதலாகத் தோன்றிய எள்ளல் (Satire) இலக்கியம். இதி லுள்ள கதைகள் பாடநூலில் இடம்பெற்றன.
தமிழ் இலக்கியங்களான திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்றவற்றைப் போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதனால் தமிழ் இலக்கியங்களின் பெருமைபற்றி மேனாட்டினர் அறிந்தனர். மொழிபெயர்ப்புக் கலையும் மேனாட்டினர் வருகையால் தமிழ் கற்பித்தலில் ஒரு கூறாக இடம்பெற்றது.
இலக்கிய வரலாறு எழுதும் முயற்சி இந்த நூற்றாண்டில் தோன்றியதற்கு மேனாட்டுச் செல்வாக்குக் காரணமாக இருந்தது.
கருவி நூல்கள்
தமிழ் கற்பித்தலுக்கு உறுதுணையாக இருக்கும் கருவி நூல் கள் குறிப்பாக அகராதிகள் மேனாட்டினர் செல்வாக்கினால் தமி ழுக்குக் கிடைத்தன. அதற்கு முன்னர் சொற்களின் பொருளை விளக்க நிகண்டுகள் என்னும் செய்யுள் வடிவ நூல்களே இருந்தன. தமிழ்ச் சொற்களை அகர வரிசையாகத் தொகுத்துப் பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு அதிகாரங்களாகப் பகுத்துச் "சதுரகராதி' என்னும் அரிய நூலை வீரமாமுனிவர் (1680) எழுதி வெளியிட்டார். இவ்வகராதி நூலே, பின்னெழுந்த அகராதி நூல்களுக்கெல்லாம் முதல் நூலாகவும் சிறந்த வழிகாட் யாகவும் விளங்கியது.
பிற நாட்டார் தமிழ் கற்க உதவும் இருமொழி, மும்மொழி அகராதிகளும் மேனாட்டுப் பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டன. 9000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கி தமிழ் இலத்தீன் அகராதி ஒன்றையும் வீரமாமுனிவர் வெளி யிட்டார். போர்த்துக்கீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி நூல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். வீரமாமுனிவர் வெளியிட்ட இம்மூன்று அகராதி நூல்களும் தமிழ் நாட்டார் தமிழைக் கற்பதற் கும் பேருதவி புரிந்து வருகின்றன (அடைக்கலசாமி எம்.ஆர். 1985.)
மேனாட்டார் தந்த அகராதி நூல்களே இந்நூற்றாண்டில் தமிழ்ப் பேரகராதி முதலிய அகராதி நூல்கள் தோன்ற முன்னோடி யாக அமைந்தன.
ஆங்கிலத்தில் அமைந்த கலைக்களஞ்சியங்களை முன்மாதிரி யாகக் கொண்டு தமிழிலும் கலைக் களஞ்சியங்கள் தோன்றின.
84

பெர்சிவல் போன்றோர் தொகுத்த பழமொழிகள் தொகுப்பு தமிழ் கற்பிப்பதற்குக் கருவி நூலாக அமைந்தது. - - -
பிழை ஆய்வு
மொழி கற்பித்தலில் பிழை செய்வது பேதைமை என்றும், வெறுக்கத்தக்கது என்றும், தண்டிக்கத்தக்கது என்றும் முன்னாளில் கருதினர். கார்டர் (1981) போன்றோர் மொழி கற்றலில் மாண வன் செய்யும் பிழைகள் அவன் வளர்ச்சிப் படிநிலைகளைக் காட்டும் பண்பின என்று வலியுறுத்தினர். அதன்பின்னர் மாணவர் செய்யும் பிழைகளைத் தொகுத்தும் பகுத்தும் கண்டும் அவற்றுக்கான கார ணங்களை ஆராய்ந்தும், அவற்றைக் களைவதற்குரிய வழிமுறை 5ள் யாவை எனக் கண்டறிந்தும் கூறுகின்ற பிழையாய்வு நூல்கள் தமி ழில் தோன்றின. நடராசபிள்ளை, விமலா ஆகியோர் பிழையாய்வு பற்றித் தமிழில் நூல் எழுதினர். பிழையாய்வு அடிப்படையில் கற்பித்தலைக் கொண்டு மாணவர் கற்றலில் மேம்பாடு காணும் முயற்சிகள் தமிழில் தலையெடுத்துள்ளன.
ஆய்வு நூல்கள்
தமிழ் கற்பித்தல் தொடர்பான நூல்கள் தமிழில் இதுவரை 10 க்கு மேற்பட்டவை வெளிவந்துள்ளன. இவையனைத்தும் தமிழ் கற்பித்தல் முறைகளை விளக்குவன. கல்வித்துறையில் இன்று அறிமுகமாகியுள்ள புதுமைப் போக்கினுள் ஒன்று நுண்நிலைக் சிற் பித்தல் அல்லது சிறுகக் கற்பித்தல் (Micro teaching) முறையாகும். இது தமிழாசிரியராகப் பயிற்சி பெறும் மாணவர்களுக்குச் சிங்கப்பூர்த் தேசிய கல்விக் கழகத்தில் நடத்தப்படுகிறது. இம்முறையைக் கண்ட றிந்தவர் ஹெலன் ஹேப்பி கேர்ல் என்பவர். இவர்க்கு தவியவர்கள் புஷ், ஆலன் என்பவர்கள். இம்முறையை நவீன அறிவியல் கருவி களுடன் இணைத்து வளப்படுத்தியவர் அக்கிசன் என்பவராவர். (மீனாட்சி சுந்தரம், உ , 1983).
தமிழ் கற்பித்தல் தொடர்பான செயல்முறை (Action Research) ஆய்வுகள் பல சிங்கப்பூர்த் தேசிய கல்விக் கழகத்தில் பயிலும் ஆசிரியர்களும் பணிசெய்யும் விரிவுரையாளர்களும் செய்து வருகின் றனர். இவையனைத்தும் கல்வியியல் ஆய்வுகளாக - முன்னில்ைத் தேர்வு - நடவடிக்கை - பின்னிலைத்தேர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டவைகளாக அமைந்துள்ளன. அல்லது வினா நிரல் வழி அமையும் கருத்துக் கணிப்புகளாக அமைவன. தமிழ் மொழிப் பாடத் திட்டம், கற்பித்தல் முறைகள், கருவிகள் பற்றிய மதிப்பீடு, தேர்வு, மாணவர் மனப்போக்கு பற்றியவைகளாக இவை அமைந்துள்ளன.
185

Page 107
இவற்றில் கல்வியியல் புள்ளியியல் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இத்துறை மேனாட்டினர் வருகைக்குப் பின்னர் தோன்றிய ஒன்றே ஆகும்.
(pl 6m 6n J
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகை யினானே' என்னும் நன்னூல் கருத்துக் கிணங்கத் தமிழ் கற்பித் தலில் பழையன கழிந்து புதியன புகுந்துள்ளன. இதற்குக் கால மாறுபாடு மட்டும் காரணம் அன்று. மேநாட்டினர் வருகையும் அவர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வமும், தமிழர்கள் அவர்கள் அறிவியல் நோக்கின்பாற் கொண்ட அக்கறையும் காரணங்களாக அமைந்துள்ளன. தமிழ் கற்பித்தல் துறையில் ஏற்பட்ட மேனாட்டுச் செல்வாக்கினைப் பின்னணி, சூழல், நிலை, அறிவியல் தமிழ், இரு வகை வழக்கு, நோக்கம், பாடத்திட்டம், பாடப்பொருள், பயிற்று கருவிகள், பயிற்றுமுறை, மதிப்பீடு, படித்தல், எழுதுதல், சேட்டல், பேசுதல், இலக்கியம், இலக்கணம் கற்பித்தல், கருவி நூல்கள், ஆய்வு என்னும் பல தலைப்புகளில் இக்கட்டுரை விளக்கியது. இதன்வழி தமிழ் கற்பித்தலில் ஏற்பட்ட புதிய போக்குகளையும். நாம் உணர முடியும். இனி எதிர்காலத்தில் தமிழ் கற்பித்தல் அமையும் இயல்பினையும் ஓரளவு கணிக்க முடியும்.
бiassiт 聖l நூ
வேலுப்பிள்ளை, ஆ. (1978) தமிழ் இலக்கியத்தில் காலமும்
கருத்தும், பாரி புத்தகப் பண்ணை சென்னை.
செல்வநாயகம், வி. (1960.) தமிழ் இலக்கிய வரலாறு.
பூரீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்,
அண்டக்கலசாமி, எம். (1985) தமிழ் இலக்கிய வரலாறு
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை,
வரதராசன், (up. (1983.) தமிழ் இலக்கிய வரலாறு
சாகித்திய அகாதெமி, புது டில்லி,
சக்திவேல், சு. (1984) தமிழ்மொழி வரலாறு
மணிவாசகர் பதிபகம், சிதம்பரம்.
185

திருமலை, எம் எஸ். 1978.
முத்துசண்முகம் 1977,
கருணாகரன், கே. (பதி) 1989,
கோவிந்தராசன், மு. (1978)
கோவிந்தராசன், மு. (1982.)
பரந்தாமனார், அ.கி. (1955.)
மீனாட்சிசுந்தரம், உ. (1982.)
வையாபுரிப்பிள்ளை, எஸ்.(1960.)
Kothandaraman, P. (1975 )
- Goodman, K. S. (1967.)
Corder, S. Pit. (1981.)
Theodore Huebener. (1967.)
தழிழ் கற்பித்தல் மணிவாசகர் நூலகம், சிதம்பரம்:
*தாய்மொழி' மொழியியல் 1, 1 அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழம் ,
அறிவியல் உருவாக்கத் தமிழ் மணிவாசகர் பதிப்பகம், சென்னை
நற்றமிழ் பயிற்றலின் நோக்கமும் முறையும், தேன்மொழி பதிப்பகம்,
சென்னை.
மேல்நிலைப் பள்ளிக் கல்வி தேன்மொழி பதிப்பகம், சென்னை.
நல்ல தமிழ் எழுதவேண்டுமா? மலர் நிலையம், சென்னை.
தமிழ் பயிற்று முறைகள்
பண்ணை பதிப்பகம், மதுரை.
தமிழின் மறுமலர்ச்சி டாரி நிலையம், சென்னை,
ACourse in Modera Standard Tami Madras: international İnstitute of Tamil Studies,
“Reading: A Psycholinguistics Guessing Game'' Journal of Reading Specialist May, 1967.
Error Analysis and interlanguage Oxford University Press, London.
Audio Visual Techniques in
Teaching New York University Press, New York.
1 87

Page 108
சொற் புணர்ச்சியும் மொழி கற்பித்தலும்: லகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி ஒர் ஆய்வு
சுபதினி ரமேஷ்
1. சந்தி
உலக மொழிகள் பலவற்றில் உருபன்கள் அல்லது சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும்போது தம் வடிவத்தில் மாற்றம் பெறுவது உண்டு. இதனை எழுத்திலும், பேச்சிலும் காண்கிறோம். உருபன் அல்லது சொல் வடிவத்தில் ஏற்படும் இம்மாற்றத்ற்ெகு அதனை ஒட்டிவரும் பிற வடிவங்களே காரணமாகின்றன. இம் மொழி நிகழ்வைக் (Language Phenomenon) குறிப்பதற்கு உலகப் புகழ்பெற்ற வடமொழி இலக்கண அறிஞரான பாணினி சம்ஹிதா (samhita) என்னுஞ் சொல்லைக் கையாண்டுள்ளார் (அஷ்டாத்தியாயி 1.4:109).
இம்மொழி நிகழ்வைத் தற்காலத்து மேலைநாட்டு மொழியி யல் அறிஞர்களும் ஆங்கிலத்திற் 'சந்தி (sandhi) என்றே குறிப்பிடு கின்றனர். 1 சந்தியை அகச் சந்தி (internal sandhi), புறச்சந்தி (external sandhi) என வகைப்படுத்துகின்றனர். இவை பல உட் பிரிவுகளையுடையன (Hockett: 1958:277).
11 தமிழில் சந்தி
தமிழ் இலக்கண நூல் ஆசிரியர்களுள் ஒரு சிலர் மட்டும் 'சந்தி’ என்னுஞ் சொல்லைக் கையாண்டுள்ளனர். இப்பயன்பாடு வடமொழி யின் தாக்கமாகும். வீரசோழிய ஆசிரியர் தம் எழுத்ததிகாரத்தில் வரும் ஒரே ஒரு உட்பிரிவுக்கு ‘சந்திப்படலம்' எனப் பெயர் கொடுத்துள்ளார். இப்படலத்துள் வரும் இரு நூற்பாக்களில் (வீர! 18:28) ‘சந்தி’ என்னுஞ் சொல் கையாளப்பட்டுள்ளது. நேமிநாத ஆசிரியர் தம் எழுத்ததிகாரத்தில் 'சந்தி’ என்னுஞ் சொல்லை மூsாறு நூற்பாக்களில் (நேமி: 12; 15:24) கையாண்டுள்ளார்.
தொல்காப்பியம். நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் சந்தி என்பதனைப் புணர் - என்னும் அடியாகப் பிறந்த தமிழ்ச்
88

சொற்களைக் கொண்டே குறிப்பிடுகின்றன. புணர்ப்பு, புணர்ச்சி
புணரியல் போன்ற வழக்குகளைக் காண்க.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி பற்றிக் கூறும் ஆறு இயல்களுள் முதலில் அமைந்த இயலிற்குப் புணரியல் என்னும் பெயர் உள்ளது. இறுதி இயலிற்குக் குற்றியலுகரப் புணரியல்" என் னும் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய நான்கு இயல்களும் புணரியல் பற்றியவை என்றாலும் , அவை ‘புணரியல்' என்ற தொடரின்றிப் பிற பெயர்கள் கொண்டவை. இரண்டில் "மயங்கியல் என்ற தொடர் காணப்படுகிறது. உயிர் மயங்கியல்; புள்ளி மயங்கியல். மயக்கம், புணர்ச்சி இரண்டையும் வேறுபடுத்தும் போது சொற் புணர்ச்சியைப் புணர்ச்சி எனவும், எழுத்துப் புணர்ச்சியை மயக்கம் எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். 2 இவ்வகையில் ஒர் அதி காரத்திற்கு மட்டும் புணரியல் எனச் சிறப்பளித்து, மற்றுமோர் அதிகாரத்தை (குற்றியலுகர) வகைகூறிப் புணரியல் என்றமைக்குக் காரணம் விளங்கவில்லை. குற்றியலுகரப் புணரியலுள் உகர உயிர் நின்று பொருணோக்கத்தால் புணர்ச்சியொன்றையே விளக்குவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக்கருத வாய்ப்புண்டாகிறது. அன்றியும் புணர்ச்சி, மயக்கம் என்பன ஒரு பொருட் கிளவிகள் ஆயினும் சிறிது வேறுபாடு உண்டு என்று உணர்த்தக் கருதி ஆசிரியர் மயங்கியல்’ என்றும் ‘புணரியல்" என்றும் வேறு சொற்களைக் கையாண்டுள்ளார் போலும், புணர்ச்சி வகைகள் அனைத்தையும் உள்ளடக்கும் புணர்ப்பு என்னும் ஒரு பொதுச் சொல்லை (cover term) நன்னூலார் பயன்படுத்தியது போலத் தொல்காபியர் ஒரு பொதுச் சொல்லைப் பயன்படுத்தாது விட்டமை கருத்திற் கொள்ளத்தகும். பிற்காலத்தில் ஒரு பொதுச் சொல்லின் இன்றியமையாத் தேவையை நன்னூலார் உணர்ந்தார் போலும்.
2. பண்டைய இலக்கண நூல்களிற் புணர்ச்சி
தமிழிலக்கண நூல்கள் புணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித் துள்ளமை அந்நூல்களில் எழுத்திலக்கணத்திற் பெரும்பகுதி புணரி யலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமையில் இருந்து தெளிவாகிறது. இதனை முக்கியமாகத் தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன் னுால், இலக்கண விளக்கம் முதலிய இலக்கண நூல்களிற் காணலாம். எழுத்து, சொல், பொருள் என்பவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒன்பது இயல்கள் வகுத்த தொல்காப்பியர் எமுத்ததிகாரத்தில் ஆறு இயல் களிற் புணரியலே கூறுகிறார். புணரியலில் 40 நூற்பாவும், தொகை மரபில் 30 நூற்பாவும், உருபியலில் 29 நூற்பாவும், உயிர் மயங் கியலில் 93 நூற்பாவும், புள்ளி மயங்கியலில் 106 நூற்பாவும் குற்றிய லுகரப் புணரியலில் 75 நூற்பாவும் உள.
189

Page 109
வீரசோழிய எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு உட் பிரிவில் வரும் 28 நூற்பாக்களுள் பெரும்பாலும் புணர்ச்சி இலக் கணமே கூறப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த உட்பிரிவு "சந்திப் படலம்' எனப் பெயர் பெற்றுள்ளது. நேமிநாதம் எழுத்திலக்கணத் தையும். சொல்லிலக்கணத்தையும் கூறும் நூலாகும். இதில் எழுத் ததிகாரம் இயல் போன்ற உட்பிரிவுகளின்றி ஒன்றாகவே இருக் கின்றது. நேமிநாத எழுத்ததிகாரத்தில் வரும் 24 நூற்பாக்களுள் 15 புணர்ச்சி பற்றியவை, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டுக்கும் ஐவைந்து இயல்கள் வகுத்த நன்னூலார் எழுத்ததி காரத்தில் உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என்ற மூன்று இயல்களில் முறையே 53, 36 , 18 நூற் பாக்களில் புணரியல் பற்றிக் கூறுகிறார். இலக்கண விளக்கம் எழுத் ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகா ரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஐவைந்து இயல்களா கப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் மூன்று இயல்கள் புணர்ச்சி பற்றியவை; உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரி யல் என்னும் மூன்றிலும் முறையே 66, 29, 11 நூற்பாக்கள் உள.
2. 1 எழுத்துப் புணர்ச்சியின் முக்கியத்துவம்
இலக்கணகாரர் தமது நூல்களிற் புணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தமைக்குக் காரணம் யாது என்ற கேள்வி எழுவது இயல்பு. புணர்ச்சி மொழியில் காணப்படுவதால் அதனைப் புறக்கனிக்க முடியாது என்பது விடையாகலாம். எல்லா மொழிகளிலும் புணர்ச்சி உண்டு என்று சொல்ல முடியாது. மொழியில் புணர்ச்சி இல்லை என்றால் கவலை இல்லை. இருந்தால் அது பற்றிச் சொல் லத்தான் வேண்டும். புணர்ச்சி உச்சரிப்புப் பழக்கத்தின் ஓர் அமிசத் தைப் பிரதிபலிப்பது. காலப் போக்கில் மொழி மாறுகிறது; உச்சரிப்பு முறை மாறுகிறது என்று சொல்லும்போது புணர்ச்சிமுறை மாறு வதில்லை என்று சொல்லமுடியாது. ‘அங்குப் போனார்’ என உச் சரித்து அவ்வாறே எழுதிய காலம் ஒன்று இருந்தது. இன்று அவ்வாறு உச்சரிப்பார் இல்லை. அங்கு போனார்’ என்றே உச்சரிக்கிறார்கள். உச்சரிப்பிற்கு ஏற்ப அவ்வாறே எழுதுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் இன்றைய உச்சரிப்பைக் கருத்திற்கொள்ளாது பழைய முறைப்படி * அங்குப் போனார்' என்று எழுதுகிறார்கள். இரண்டு முறைகளை டிம் கருத்திற்கொண்டு புதிய புணர்ச்சி விதியொன்றை அமைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. அந்தந்த (அந்த + அந்த), நாலா பக்கமும் (நாலு + பக்கமும்), பத்திரிகாசிரியர் (பத்திரிகை + ஆசிரி துர்), அமெரிக்கர் (அமெரிக்கா + அர்) போன்ற புணர்ச்சிக்கு 3 புதிய விதியை எண்ணவேண்டும். ஒரு காலகட்டத்தில் ஒரு மொழியில் நிலவும் புணர்ச்சி அனைத்தும் செயற்பாட்டில் ஒரே தன்மையன
፻00

என்று சொல்ல முடியாது. சிலவற்றைச் சந்தி பிரித்து எழுதலாம்: பேசலாம். சேர்த்தும் எழுதலாம் ; பேசலாம். இரண்டும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவன. இத்தகைய புணர்ச்சி பற்றி இலக்கண நூல்களும் கூறுகின்றன. 'தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த ல, ளக்கள் வல்லினம் வரின் எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும் ஒருகால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்' எனப் பேசப்படுவதைக் காண்க. பல + பல : பற்பல , பலப்பல பலபல என அமையலாம் (தொல் : எழு : 215,216). இங்கு பிரிப்பதாலோ, சேர்ப்பதாலோ பொருளிலே எந்தவிதமான குழப்பமும் தோன்றுவ தில்லை. ஆயின் சில இடத்துப் புணர்ச்சியைப் போற்றாது விட்டால் பொருள் வேறுபாடு ஏற்படும். எடுத்துக்காட்டாகத் தமிழிலே மறை பொருள், மறைப்பொருள்; தந்த பலகை , தந்தப் பலகை வாழை பழம், வாழைப்பழம்; மாகப்பல், மாக்கப்பல் போன்றவற்றில் எழும் பொருள் பேறுபாட்டைக் கருதுக.
தெளிவான கருத்துப் பரிமாற்றத்தின் பொருட்டு இன்றியமை யாத புணர்ச்சி விதிகள் பெரும்பாலும் கையாளப்படாது விடப்படு வதில்லை. ஆயின் கையாளப்படாதபோது தோன்றும் மயக்கம் மிகப்பெரிது எ ன் று வலியுறுத்திச் சொல்லவும் முடியவில்லை. ஏனென்றால் மொழி நிகழ்விற்குச் சந்தர்ப்பம் (context) என ஒன்று உண்டு; இதன் மூலம் இன்றியமையாத புணர்ச்சி முறையைக் கைவிடுவதால் ஏற்படக்கூடிய பொருள் மயக்கம் நீங்கலாம். எனவே புணர்ச்சி நூற்றுக்கு நூறு வீதம் இன்றியமையாதது என வாதாடு வது ஏற்கக் கூடியதன்று. இன்று அறிஞர்கள் ‘தமிழ் நாடு அரசாங்கம், என எழுதுவதைக் கருத்திற் கொள்க.
தமிழிலே எழுத்துமொழி, பேச்சுமொழி ஆகிய இருவகைகளும் புணர்ச்சி முறையைப் போற்றிநிற்கக் காண்கிறோம். ஒரே புணர்ச்சி முறைதான் இரண்டிலும் உண்டு என்று எண்ணுவது தவறாகும். எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் பொதுவான புணர்ச்சி சில உண்டு. எழுத்து மொழியில் மட்டும் வரும் சிறப்பான புணர்ச்சி முறை சில உண்டு. இதுபோன்று பேச்சு மொழியில் சிறப்பாக வரும் புணர்ச்சிமுறை சில உண்டு. இருவகையிலும் உள்ள வேறுபட்ட புணர்ச்சி முறைகளுள் சில காலப்போக்கில் ஒன்றை ஒன்று தாக்கு வது உண்டு. தமிழ் மொழியிலே பேச்சு மொழியில் உள்ள முறை, எழுத்தில் உள்ள முறையைத் தாக்குவதை அவதானிக்க முடிகிறது. இதனை விரிவாகச் சிந்தித்தல் தற்காலத்து உரைநடையில் உள்ள புணர்ச்சி நிலையை விளங்கிக் கொள்வதற்குப் பெரிதும் உதவும். இங்கு சமுதாயத்தில் இருவகை மொழிகள் மூலமும் கருத்துப் பரி மாற்றம் தடையின்றி நடைபெற்று வருகிறது என்பதை நினைவிற் கொளல் வேண்டும்.
91

Page 110
ஒலியனியல் நிலையிலான செய்திகள் சந்திவிதி செயற்பாட்டிற் குப் போதுமானவையெனப் பொதுவாக நம்பப்படுகிறது. ஆயின் தமிழ் மொழியில் ஒலியனியல் நிலையிலான செய்திகள் மட்டும் சந்திவிதி செயற்பாட்டிற்குப் போதா என்கிறார் கோதண்டராமன் (1972 : 65 - 66). நடு என்ற சொல்லைக் கருதுக; பெயர் எனின் ஒரு முறையிலும், வினையெனின் வேறுமுறையிலும் சந்திவிதிகள் செயற்படுகின்றன. தொடரியல் அமைப்பும் சந்திவிதி செயற்பாட்டில் முக்கியபங்கு வகிக்கிறது. 'மாடு” என்ற சொல்லைக் கருதுக. இணைத்தொடரில் வரும்போது எவ்வித மாற்றமுமின்றி ‘மாடு கன்று எனவருகிறது. பெயருக்கு அடையாக வரும்போது "மாட்டு’ என மாறுகிறது. சந்தி விதிகளின் செயற்பாட்டிற்குப் பொருண்மையியல் செய்தியும் தேவை என்பதைப் பரமசிவன் (1982) காட்டியுள்ளார். எனவே சந்திவிதிகளின் செயற்பாடு ஒலியனியலை மட்டுமன்றி மொழியின் எல்லா நிலைகளையும் தழுவி நிற்கின்றது என்பதனை உணர்தல் வேண்டும். இதனாலும் புணர்ச்சியின் முக்கியத்துவம் தெளிவாதல் கண் கூடு.
3. லகர மெய்யீற்றுப் புணர்ச்சி - ஆய்வின் நோக்கம்
முற்காலத்தில் எழுத்துத் தமிழ்மொழியைப் பயன்படுத்தி யோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நன்கு கற்றறிந்த அறிஞர் மட்டுமே எழுத்தைக் கையாண்டனர். ஏனையோர் கையாள வில்லை. கையாள்வதற்குத் தேவையும், வாய்ப்பும் இருக்கவில்லை எனலாம். ஆயின் இன்று எழுத்துத் தமிழ் மொழியைப் பயன்படுத்து வோர் தொகை மிக அதிகரித்துள்ளது. பலதரப்பட்டோர் பல்வேறு துறைகளில், பல்வேறு தேவைக்காக எழுத்துத் தமிழ் மொழியைக் கையாள்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும் இவர்கள் கையாளுத் தமிழ் மொழி வேறுபடுகிறது. எனவே இன்று தமிழ் மொழியில் பல வகைகள் (Varieties) உள.
பண்டைய இலக்கண நூல்கள் கூறும் லகர மெய்யீற்றுப் புணர்ச்சிமுறை யாது? புணர்ச்சி பற்றிய பழைய சமுதாய (அறிஞர்) நோக்கு யாது? இன்று மொழியை எழுதப் பயன்படுத்துவோர் பண் டைய இலக்கண நூல்களில் கூறப்படும் புணர்ச்சி விளக்கங்களை (விதிகளை) எந்தளவிற்குக் கையாள்கிறார்கள்? கையாள்வதில் வேறு பாடு உண்டா? உண்டெனில் அது யாது? கையாள்பவர் ஏன் கையாள் கிறார்கள்? கையாளாதவர் ஏன் கையாளவில்லை? கையாளாது விடின் ஏற்படும் விளைவு யாது? மொழிப் பொருள் விளக்கத்திற்கு நன்மையா? தீமையா? கையாள்வதும், கையாளாது விடுவதும் இன்று சமுதாயத்தில் எவ்வாறு வரவேற்கப்படுகின்றன? இத்தகைய
192

சமுதாய நோக்கின் அர்த்தம் யாது? தமிழ்மொழி கற்றல், கற்பித் தலில் புணர்ச்சி பெறும் இடம் யாது? தரும் தொல்லை யாது? ஏன் இந்தத் தொல்லை? என்ன செய்யலாம்? புணர்ச்சி முறை கையா ளப்பட்டு வரும் போக்கிலே நாளடைவில் எவ்வாறு அமையும்? இவை போன்ற பல கேள்விகள் இன்றைய மொழி ஆட்சியைக் கூர்ந்து நோக்குபவர்கள் மனதில் எழுதல் வியப்பன்று. இவற்றை வரலாற்று நோக்கிலும், விளக்கமுறை நோக்கிலும், தற்கால மொழியியற் கொள்கைகள் அடிப்படையிலும் ஆராய்தல் பயன்படும்,
இத்தக் கண்ணோட்டத்தில் பல வகைப்பட்ட புணர்ச்சி வகை களுள் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி மட்டும் இங்கு விரிவான ஆய் விற்குக் கொள்ளப்படுகிறது. இன்று மொழியைப் பயன்படுத்துவோர். ஆட்சியில் இப்புணர்ச்சிமுறை கையாளப்படுவதில் வேறுபடக் காண் கிறோம். சிலர் இலக்கண நூல்களில் உள்ள இப்புணர்ச்சி விதி களைக் கடைப்பிடித்து எழுதியுள்ளதைக் காண்கிறோம். அவ்வாறு எழுதுவதே முறை, சிறப்பு என்பது அவர்கள் எண்ணம். உதாரண மாக சுவாமி விபுலாநந்தர். பேராசிரியர் வித்தியானந்தன் போன்ற அறிஞர் சிலர் புணர்ச்சி விதிகளைத் தவறாது கடைபிடித்து எழுதி யுள்ளனர். இப்புணர்ச்சியை அறிஞர் சிலர் முற்றிலும் கைவிட்டமை யையும் காண்கிறோம். உதாரணமாக பேராசிரியர் மு வரதராசன் - டாக்டர் முத்துச் சண்முகம், கி. வா. ஜகந்நாதன் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி முறை களை அறிந்திருந்தும் அவை இன்றைய உரைநடையில் தேவையற் றவை என நம்பியவர்கள். எளிமையாக்கத்தை விரும்பினார்கள் போலும். இன்று இவர்களைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். இன்னுஞ் சிலர் புணர்ச்சி விதிகள் அனைத்தையும் நன்கு அறிந்திருந் தும், இப்புணர்ச்சிடற்றி ஒருவழி நில்லாது சிலபோது புணர்ச்சி விதிகளை கையாண்டும், சிலபோது கையாளாமலும் எழுதியுள்ள தைக் காண்கிறோம். இவ்வகையினருள் சிறந்த அறிஞரும் உள்ளனர். உதாரணமாக தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி போன்றோரைக் கூறலாம். இவர்கள் நிலை பள்ளி மாணவர் பலரிடமும் காணப்படுகிறது. பள்ளி மாணவர்களின் நிலைக்குக் காரணம் இலக்கணங் கூறும் புணர்ச்சி முறைகளை அறியாமை, தெளிவின்மை ஆகலாம்.
3.1 இலக்கண நூல்கள் கூறும் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி
நாம் இங்கு தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம். நன்னூல், இலக்கண விளக்கம் ஆகிய நூல் சளில் வரும் லகர மெய் யிற்றுப் புணர்ச்சி பற்றிய நூற்பாக்களையும், நூற்பாக்களின் உரை யையும் மட்டும் கருத்திற் கொள்வோம்.
193

Page 111
முதற்கண் தொல்காப்பியம் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி பற். றிக் கூறியவற்றையும், உரைகாரரின் எடுத்துக்காட்டுக்களையும்* காண்போம். குறிப்பாக இங்கு நச்சினார்கினியருரையே கவனத் திற்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் நூற்பாக்கள் 150, 215, 216 36 7 , 368 , 369 , ' 870 , 371 , 372 , 373 , 874 , Ꮽ75 , 376 , 377 , 378 முதலியவற்றில் லகரப் புணர்ச்சி கூறப்படுகிறது.
வீரசோழியத்தில் லகரப் புணர்ச்சி பற்றிய பாகுபாடு ஏனைய தமிழ் இலக்கணகாரரைப் போன்று பெருமளவுக்குக் கூறப்பட வில்லை. எனினும் லகரப் புணர்ச்சி பற்றி நூற்பாக்கள் 17, 22, 28 விளக்குகின்றன. வீரசோழியத்தில் வடமொழிச் சந்திபற்றியே பெரி தும் பேசப்படுகிறது. வேற்றுமை, அல்வழிப் பாகுபாடு வடமொழி யில் பெரிதும் இல்லாததினாற்போலும் வீரசோழியத்தார் இந்தப் பாகுபாட்டைக் குறிக்கவில்லை என்று டாக்டர் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி கூறியது ஏற்கக்கூடியதாகவில்லை எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளை (தமிழ் வரலாற்றிலக்கணம்; 95) கூறுகிறார். வீர சோழியம் பொதுவாக வடமொழியிலக்கணம் தழுவிய நூலாயினும் அது தமிழ் மொழிக்கே இலக்கணங் கூறியது என்பதை மறுக்க முடியாது, நேமிநாதத்தில் லகரப் புணர்ச்சி பற்றி ஒரே ஒரு நூற்பா (17) மட்டுமே உண்டு.
அடுத்து நன்னூலார் கூறும் லகர மெய்யீற்றுப் புணர்ச்சிகளை நூற்பாக்கள் 170, 207, 227, 228, 229, 230, 231, 232, 233 ஆகியவற்றில் காணலாம். நன்னூலார் புணரியல் பற்றிக் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே உரைகாரரும் இலக்கண நூற்கருத்துக்களை அவ்வாறே ஏற்றுள்ளார்கள். மொழி இலகு கருதி தத்தமக்கென ஒரு தனித்துவமான நடையை (style) இங்கு கைக்கொண்டாலும் இலக்கணக் கருத்துக்களைப் பேணுவதில், இவர்கள் யாவரும் ஒன்றுபடுகிறார்கள்.
இலக்கண விளக்க ஆசிரியரும் நன்னூலாரைப் பின்பற்றியே நூற்பா செய்துள்ளார். குறிப்பாக நன்னூலில் வரும் 170, 227, 228, 229, 231, 233 ஆம் நூற்பாக்களோடு இலக்கண விளக்கப் புணர்ச்சி விதிகளாகவரும் 88, 137, 138, 139, 14 142 ஆம் நூற்பாக்கள் ஒத்துப்போகின்றன.
4. செய்யுள் நடையிலும் உரை நடையிலும்
லகர மெய்யீற்றுப் புணர்ச்சி
மொழிக்கு ஏற்ப இலக்கணமா? இலக்கணத்திற்கு ஏற்ப மொழியா? இலக்கணங்களை ஆக்கியோர் பலர் வழக்கில் இருக்கும்
194.

மொழியைக் கண்டு இலக்கணம் எழுதுதல் ள்ன்ற குறிக்கோள் உடை யவராக இருந்தனர். ஆயின் பின்னர் அவ்இலக்கணங்களைப் பொன்னே போற் போற்றியவர்கள் இலக்கணத்திற்கேற்ப மொழி அமைதல் வேண்டும் என்ற குறிக்கோளுடையவர்களாக இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். பண்டைய இலக்கிய ஆசிரியர்களும் இலக் கியப் படைப்புக்களை ஏடுகளில் எழுதிய அறிஞர்களும் அச்சேற்றிய வர்களும் லகரப் புணர்ச்சி விதிகளைப் (ஏனைய புணர்ச்சி விதி களையும்) பொன்னே போற் போற்றியதில் வியப்பில்லை. இலக் கணங் கூறும் புணர்ச்சி விதிசளைக் கையாளாமல் விடுதல் ஒரு பெருங்குற்றம் என அன்று கருதப்பட்டது.
ஆயின் இக்கருத்து காலப்போக்கில் மாற்றம் பெறத் தொடங்கி யது. மொழி விளக்கத்திற்கு முதன்மை என்ற கருத்து ஓங்கியது. ஆதலால் அவசியமற்ற புணர்ச்சி விதிகளைச் சுமையெனக் கருதி அவற்றைக் கைவிடுவதற்கு அறிஞர் சிலர் முற்பட்டனர். பண்டைய இலக்கியங்கள் ஒரு சிலருக்கு மட்டும் என்ற நிலைமாறி தமிழர் அனைவருக்கும் உரியவையாதல் வேண்டும் என விரும்பினர். இவ் விருப்பம் நிறைவேறுவதற்குப் புணர்ச்சிகளைப் பிரித்துப் பிரித்து எழுதுவது ஒருவழி என எண்ணினர் போலும், பண்டைய இலக்கிய இலக்கண நூல்கள் சந்திபிரித்துப் புதிய பதிப்புக்களாக வெளிவரத் தொடங்கின9. இம்முயற்சிக்குப் பல்கலைக்கழக நிலையிலும் ஆதர வும், வரவேற்பும் கிடைத்தன8. இந்நிலை காலப்போக்கில் உரை நடையிலும் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. எனினும் பழைய நிலை முற்றாக மறைந்துவிட்டது எனக் கூறுவதற்கில்லை. கால வரிசைப்படி சில எடுத்துக்காட்டுக்களை எடுத்து ஒப்பு நோக்கி லகரப் புணர்ச்சியின் போக்கினை ஆராயலாம்.
4.1 செய்யுள் இலக்கியத்தில்
சங்ககாலம் முதல் இன்றுவரை எழுந்த செய்யுள் இலக்கியங் களில் லகரப்புணர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளது எனச் சிந்தித்தல் பயனுடைத்து. ஆயின் இவ்வாறு சிந்திக்கும்போது சில சிக்கல்கள் தோன்றுகின்றன. செய்யுள் இலக்கியங்களின், மூலபாடம் யாது என முடிவு செய்வது எளிதன்று. சில இலக்கியங்களுக்குப் பல பதிப்புக் கள் வெளிவந்துள்ளன. இவற்றில் வேறுபாடு காணப்படுகிறது. எனவே நமது ஆய்வின் பொருட்டு எதனைக் கொள்வது என்பது சிக்கலாகிறது. ஆயினும் சங்கப் பாடல்கள் போன்ற பண்டைய இலக்கியங்களை ஏடுகளில் கண்டவாறே ஆரம்பகாலத்துப் பதிப்பா சிரியர்கள் (சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் போன்றோர்) பதிப்பித்துள்ளனர் எனக்கொண்டுள்ளோம். இவர்கள்
95

Page 112
பாடபேதங்களைக் கருத்திற் கொண்டுள்ளனர். அவற்றைத் தம் பதிப்புக்களில் ஆங்காங்கு சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனைய இலக் கியங்களை வெளியிட்ட பிற்காலத்தவர் மூலபாடத்தை ஏடுகளில் உள்ளவாறு எந்தளவிற்குப் போற்றினார்கள் என்று உறுதியாக ஒன்றுஞ் சொல்ல முடியவில்லை. எடுத்துக்காட்டாக, தேவாரங்களில் இன்று காணப்படும் புணர்ச்சி முறைக்குக் காரணம் தேவாரங்க ளைப் பாடியவர்களா அல்லது பதிப்பித்தவர்களா என்று அறிய முடியவில்லை. இதுபோலவே அண்மைக்காலத்து வாழ்ந்த சுப்பிர மணிய பாரதியார் தம்பாடல்களை எழுதிய போது புணர்ச்சியை எவ்வாறு கையாண்டார் எனத் தெளிவாகக் கூற முடியவில்லை இன்று பாரதியார் பாடல்களுக்கு எத்தனையோ பதிப்புக்கள் வெளிவந்துவிட்டன. வேறுபாடுகளும் எத்தனையோ. மிக அண்மைக் காலத்தில் பண்டைய இலக்கியங்கள் தற்காலத்துப் பதிப்புக்களாக வும் வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு லகரப்புணர்ச்சியின் போக்கினை பின்வரும் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்,
1. நற்றிணை 7. தேவாரம் 2. குறுந்தொகை 8. திருவாசகம், 3. புறநானுTறு 9. பெரியபுராணம் 4. திருக்குறள் 10, மனோன்மணியம் 5. சிலப்பதிகாரம் 11. தாயுமானவர் பாடல்கள் 6. மணிமேகலை 12. சித்தர் பாடல்கள்
மேலே கூறப்பட்டுள்ள நூல்களில் பல உ. வே. சாமிநாதைய ரவர்களின் பதிப்பு ஆகும். இங்கு எம்மால் இயன்றவரை ஆரம்பப் பதிப்புக்களையே கொண்டுள்ளோம், அவ்வகையில் நற்றிணை, குறுந் தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பண் டைய இலக்கியங்களின் பழைய பதிப்புக்களில் இலக்கண நூலார் கூற்றுக்கிணங்க புணர்ச்சி விதிகளைப் பேணியுள்ளமை குறிப்பிடத் தக்கது. பண்டைய இலக்கியங்களின் தற்காலப் பதிப்புக்கள் சிலவற் றில் குறிப்பாக என். ராஜம் வெளியீடுகள், புலியூர்க் கேசிகன், வெளி யீடுகள் போன்றவற்றில் சந்தி பிரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு எளிமைப்படுத்துவது நோகக்மாகும்.
அதேசமயம் திருக்குறள், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் தாயுமானவர் பாடல்கள், சித்தர் பாடல்கள், மனோன்மணீயம் போன்ற பிற்காலச் செய்யுளிலக்கியங்கள் சிலவற்றில் இப்புணர்ச்சிகள் கையாளப்ப்ட்டும் சிலவற்றில் கையாளப்படாமலும் காணப்படுகின் றன. திருக்குறளைப் பொறுத்தமட்டில் நாவலர் பதிப்பில் மாத்திர மன்றி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலிய ஏனைய பதிப்புக்
196

களிலும் கூட அவசியமான இடத்து மட்டுமே புணர்ச்சி விதிகள் பேணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேவாரத் திருமுறைகளில் கூட மேற்கூறப்பட்ட முறையிலேயே புணர்ச்சிகள் கையாளப்பட்டும் கையாளப்படாமலும் இருக்கக் காணலாம். எடுத்துக் காட்டாக தருமபுர ஆதீனம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற் றின் வெளியீடுகளிலுள்ள தேவாரப் பதிகங்களில் புணர்ச்சிகள் பேணப்படவில்லை. எனினும் இவற்றிற்கு முன்வந்த நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை வெளியீடான தேவாரப் பதிகங்களில் இப்புணர்ச் சிகள் பேணப்பட்டுள்ளன. திருவாசகம், பெரிபுராணம் போன்ற செய்யுளிலக்கியங்களில் புணர்ச்சி விதிகள் முழுமையாகப் பேணப் பட்டுள்ளமையை சுவாமிநாத பண்டிதர் (1911), அருணாசல முதலியார் (1935) பதிப்புக்களிற் காணக்கூடியதாக இருக்கிறது. மனோன்மணியத்தின் வெவ்வேறு பதிப்புக்களில் புணர்ச்சியின் வெவ் வேறு நிலைகளைக் காணமுடிகிறது. அதாவது சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகப் பதிப்புக் சளில் (1933) புணர்த்தி யெழுதப்பட்ட சொற்கள் அதன் பின் வெளிவந்த பாலசுப்பிரமணியம் (1978) முதலியோரது பதிப்புக்களில் புணர்த்தி எழுதப்படாமல் காணப்படு கின்றமை ஈண்டு நோக்கத்தக்கது. மேலும் தாயுமானவர் பாடல் களிலும் சித்தர் பாடல்களிலும் பெரும்பான்மையும் லகர ஈறுகள் றகரமாக மாற்றப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றது இவ்விலக் கியங்களின் பதிப்புக்களை ஆராயும்போது பதிப்பித்தவர்களின் புணர்ச்சி நோக்குகளில் உள்ள வேறுபாடு புலனாகிறது. ஏனெனில் பதிப்புக்களை மேற்கொண்டவர்கள் வாசிப்பதை (reading) எளி மைப்படுத்தும் நோக்கம் கருதியோ பொருள் கிரகித்தலை எளிமைப் படுத்தும் நோக்கம் கருதியோ அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.
மேலும் செய்யுள்நடை என்று பார்க்கும்போது இலக்கண நூல்க ளில் உள்ள நூற்பாக்களில் புணர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளது என்ப தையும் நோக்கவேண்டும். அவ்வகையில் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களிற் புணர்ச்சி, இலக்கணவிதிகளின் அடிப் படையிலேயே அமைந்துள்ளது. மொழிக்கு இலக்கணம் வகுத்த இலக்கண ஆசிரியர்கள் தத்தம் நூல்களில் அவற்றைக் கையாண் டிருப்பது ஆச்சரியமில்லை. இவர்களைப் பின்பற்றி உரையெழுதிய உரை ஆசிரியர்களும், இலக்கண நூற்கருத்துக்களை அவ்வாறே போற்றியுள்ளனர். இவற்றின் வழியே அக்காலத்தில் எழுந்த ஏனைய நூல்களிலும் புணர்ச்சிகள் பேணப்பட்டுள்ளன எனலாம். இலக்கண நூல்களின் தற்காலப் பதிப்புக்கள் சிலவற்றில் (எடுத்துக்காட்டாக ராஜம் பதிப்பு) சந்தி பிரித்து எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இனி இருபதாம் நூற்றாண்டில் எழுந்த பாரதியார் கவிதை களில் (கண்ணன் பாட்டு, குயில் பாட்டு), பாரதிதாசன் கவிதைகளில்
: 197

Page 113
(திராவிடர் திருப்பாடல்) கண்ணதாசன் கவிதைகளில் (பினாங்கு 'கண்டேன், நான் கவிஞன்) லகர  ெ ய்யீற்றுப் புணர்ச்சிமுறை கையாளப்பட்டுள்ளமையைப் பார்க்கும் போது இவற்றில் புணர்ச்சி உள்ள, அற்ற நிலைகளைக் காணலாம், இதிலிருந்து இன்றைய நிலையில் விரிவான அளவிற் புணர்ச்சி முறைகள் தமிழ்மொழிக்கு வேண்டியதில்லை எனக் கருத வாய்ப்புண்டாகிறது. நன்னூல் முதலிய இலக்கண நூல்களில் கூறப்பட்ட வேற்றுமை, அவ்வழிப் பாகுபாட்டைப் பின்பற்றியே ஆரம்பகால எழுத்துக்களில் புணர்ச்சிகள் பேணப்பட்டு வந்துள்ளன. அதாவது வேற்றுமையில் திரிந்தும், அவ்வழியில் இயல்பாகவும் பொதுவாகப் புணர்ச்சிகள் பயின்று வருமெனக் கூறப்படுகிறது. எனவே அதன் வழிநின்று பார்க் கும் போது இங்கு புணர்ச்சிகள் எந்தளவிற்கு இவ் இலக்கண விதிக் குட்பட்டுவந்துள்ளன எனக் கூற முடியாமலிருக்கிறது. விதிப்படி வேற்றுமையில் திரியவேண்டியவை, அவ்வாறு திரியாமல் இயல்பாக வருவதை நவீனகால செய்யுள் இலக்கியங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இதற்குக் காரணம் ஒருவகையில் மொழியைப் புரிந்து கொள்ளும் பண்பு கருதி எளிமையைப் புகுத்துவதற்காக எனலாம். “சாதாரண படிப்பறிவுள்ளவர்களும், இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் மொழிநடை ஒன்றை உரு வாக்குவதை எளிமையாக்கம் 7 எனலாம். இது மொழி மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். அல்லாவிடில் பொருளுணர்ச்சியோடு இலக்கிய நயம் உணர்ந்து கற்பதற்குப் புணர்ச்சிகளைப் பிரித்து எழுதுதல் அவ சியம் என்றுங் கருதலாம். பாரதியார் கூறியுள்ளதுபோல பேசுவது போல எழுதுவதுதான் உத்தமம்" என்ற கருத்தால் பேச்சு வழக்கை தழுவி எளிமை கருதி புணர்ச்சிகள் பிரித்து எழுதப்பட் டிருக்கலாம்போல் தெரிகிறது, ஒவ்வொருவரும் இலக்கண விதி களைப் பயின்று அவன்றின்படி புணர்சி விதிகளைக் கைக்கொள்வது என்பது எளிதன்று. இக்காலத்தில் இயலாது என்று கூடச் சொல்ல லாம். புணர்ச்சி முறைகளிலும் காலத்துக்குக் காலம் பல மாறு தல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
4, 2 உரைநடை இலக்கியங்களில்
செய்யுளில் மட்டுமன்றி, காலந்தோறும் எழுந்த உரைநடையி லும் புணர்ச்சி கையாளப்பட்ட முறையை அறிதல் வேண்டும். பண் டைய உரைநடையைச் சிலப்பதிகாரத்துச் சில பகுதிகளிலும், உரை யாசிரியர்களின் உரைகளிலும், சாசனங்களிலும் காண்கிறோம். சாச னங்களைத் தனியே கருதுவோம். சிலப்பதிகாரத்து வரும் உரை நடைப் பகுதிகளிலும், ஏனைய உரை நூல்களிலும் செய்யுளில் உள்ள வாறே புணர்ச்சி முறை காணப்படுகிறது. இவற்றில் லகர வீற்றுப்
98

புணர்ச்சி விதிவிலக்கன்று. சிலப்பதிகாரத்து உரைப்பகுதிகளிலிருந்” தும் இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் போன்றோர் உரைகளிலிருந்தும் இவற்றைக் கண்டுகொள்ளலாம்.
இவ் உரைநடைகளைப் பார்க்கும் போது இவையாவும் கல்வியறி வுடையோர் படித்தறிதற்கென எழுதப்பட்டவை” போலக் காணப் படுகின்றன. எனவேதான் இவ்வுரைகளிற் கையாளப்பட்ட நடை இலக்கண விதிகளுக்கேற்ப அமைந்ததாகவும், இலக்கிய மரபில் வந்ததாகவும் உள்ளது. பேச்சு வழக்கில் வரும் சொற்களும் சொற் றொடர்களும் இவ்வுரையாசிரியர்கள்  ைக யா ன் ட நடையிலே பெரும்பாலும் இடம்பெறவில்லைபோல் தோன்றுகின்றது. இவர்கள் காலத்தில் இலக்கண நூல்களில் கண்டவாறே புணர்ச்சிகள் தமிழில் பேணப்பட்டு வந்தமை வழக்காறாக இருந்தது.
உரைநடை வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் தமது வசன நூல்களில் விளக்கத்தின் பொருட்டு சந்தி பிரித்து எழுதினார் என அறிகின்றோம். இருபதாம் நூற்றாண்டின் மொழிநடை பழைய செந்தமிழ் உரை நடையைத் தழுவி அமைந் தது. அப்பழைய நடை தம் காலத்திற்கு ஒவ்வாதது எனக் கூறி அதை நாவலர் கைவிட்டார். உரையாசிரியர்கள் கையாண்ட பழைய நடையிலே இலக்கணத்தோடு கூடிய கடின சந்தி விகாரங்கள் அமைந்திருத்தலைக் கண்டு அவை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாதவை என்ற காரணத்தால் அவற்றை நீக்கித் தாம் எழுது வது மக்களுக்கு இலகுவாகப் புலப்படுதல் வேண்டும் என்ற நோக் கத்தால் சந்திகளைப் பிரித்துப் பிரித்து எழுதத் தொடங்கினார்.8 அவ் வகையில் இவரின் நூல்களில் லகரப் புணர்ச்சிகள் நன்னூல் முதலிய இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கிணங்கக் காணப் பட்டாலும், இங்கு காணப்படும் ஒரு விதி அதாவது நிலை மொழி யீற்றில் வரும் லகரம் வருமொழி முதலில் வரும் தகரத்தோடு புணரும் போது றரகமாக மாறுவதைத் தமது நூல்களில் இயன்றளவு தவிர்த் துள்ளார். இதற்குக் காரணம் சொற்களின் உண்மை வடிவங்களை இலக்கண அறிவு இல்லாதவர்களும் எளிதிற் கண்டு பொருளறியத் தக்கதாக இருக்க வேண்டும் என்பதும், அச் சொற்களை உச்சரிப்ப தில் ஏற்படும் கஷ்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது மாகும். எனவே அதை நீக்குவதற்காக ஏகாரத்தைப் புகுத்தி 'அதனால் + தான்' என்பதை 'அதனாலேதான் என எழுதும் வழக்கத்தை உரு வாக்கியுள்ளார். 'அதனால்தான்’ என்பதைப் பிழையென மறுத்துள் ளார் போலும், 'அதனாற்றான்" என்பதில் உச்சரிப்புக் கஷ்டமும் உண்டு; புணர்ந்த சொற்களின் உண்மை வடிவங்களும் புலப்பட வில்லை. நாவலரைப் பொறுத்தமட்டில் கடினமான புணர்ச்சிகள்
99.

Page 114
பொது மக்களுக்குத் தொல்லையானவை; அவற்றை விளக்கத்தின் பொருட்டுச் சில இடத்து எளிமையாக்கலாம், அல்லது கைவிடலாம். இது காலத்தின் போக்கிற் கிணங்க மொழிநடை மாறி வருகிறது என்ற நாவலரின் கருத்தைப் புலப்டுத்துவதாக அமைகின்றது.
4, 3 சாசனங்கள்
சாசனங்கள் பெரும்பாலும் உரைநடையிலேயே அமைந்துள்ளன. ஒரு சில செய்யுள் நடையிலமைந்தவையாகவும் காணப்படுகின்றன. எனினும் கூடுதலாக சாசனங்கள் உரைநடையிலும், இடையே வரு பவை செய்யுள் நடையிலும் அமைந்திருக்கக் காணலாம். சாசன வாசகங்களை வரைந்தவர்களாலும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டு மென்ற நோக்கம் இருந்திருக்கிறது. பொதுவாக நோக்கும் போது சாசனங்களில் கையாளப்பட்ட நடை பேச்சுவழக்கை ஆதாரமாகக் கொண்டெழுந்ததெனக் கூறலாம் (வேலுப்பிள்ளை 1971:290),
சாசனச் செய்யுட்களுட் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பகுதி மெய்க் கீர்த்தி என்னும் இலக்கிய வகையாகும். இதன் செய்யுள்நடையில் லகரப் புணர்ச்சிகள் மட்டுமன்றி, ஏனைய புணர்ச்சிகளும் இலக்கண நூற்கருத்துகளுக்கமையப் பேணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். ஆயின் சாசனங்களில் வரும் உரைநடையைப் 13 பார்க்கும் போது அங்கு லகர வீறு, வல்லினம் முதல் மொழியாக வரும்போது றகரமாக மாற்றமடையவில்லை. அதாவது இங்கு புணர்ச்சி விதிகள் பேணப்படவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. முந்திய காலச் சாசனங்களிலும், பிற்காலச் சாசனங்களிலும் மொழி மாற்றத்திற் கேற்ப லகர மொழியீற்றுப் புணர்ச்சிகள் பேணப்பட்டுவந்த முறை பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளை விரிவாக விளக்கியுள்ளார். 4 இதிலிருந்து காலப் போக்கில் சாசனங்களிலும், மொழி விளக்கம் காரணமாகப் புணர்ச்சிகள் கையாளப்படவில்லை என்பது புலனா கிறது.
4. 4 இருபதாம் நூற்றாண்டு
இனி, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற அறிஞர்களின் உரைநடை எழுத்துக்களில் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி எவ்வாறு கையாளப்பட்டது - கையாளப்படுகின்றது என்று பார்ப் போம். இதில் மூன்று வகையான தன்மைகள் காணப்படுகின்றன.
அ) அறிஞர்கள் சிலர் தமது எழுத்துக்களில் புணர்ச்சி விதிகளை
முழுமையாகப் பேணியுள்ளனர். இவ்வகையில் சி. வை. தாமோதரம்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர்
00

க. க்ணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றோர் அடங்குவர்.
ஆ) இரண்டாவது வகையில் அறிஞர் சிலர் தமது எழுத்துக் களில் புணர்ச்சிகளைச் சில இடத்துக் கையாண்டும், சில இடத்துக் கையாளாமலும் உள்ளனர். இவ்வகையில் பேராசிரியர் தெg பொ. மீனாட்சி சுந்தரனார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. கைலாசபதி போன்றோர் அடங்குவர்.
இ) மூன்றாவது வகையில் அறிஞர் சிலர் தமது எழுத்துக்களில் புணர்ச்சி விதிகளை ஒரிடத்தும் கையாளாது விட்டமை குறிப் பிடத்தக்கதாகும். இவ்வகையில் பேராசிரியர் மு. வரத ராசன், பேராசிரியர் முத்துச்சண்முகன் போன்றோரும், அகிலன், கி. வா. ஜகந்நாதன் போன்றோரும் அடங்குவர்.
அறிஞர்கள் வரிசையில் உரை நடையினைக் கையாண்டு நல்ல தமிழ் நூல்களைத் தந்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்றோர் குறிப் பிடத்தக்கவர்கள். இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சாமி நாதையரவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருக்குள்ளும் அடக்க முடியாதவர். அவரைத் தனியே நோக்கலாம். சி. வை. தாமோரம்பிள்ளையவர்கள்19 தமது நூல்களிலும், பதிப்புகளிலும் இலக்கண விதிகளுக்கேற்ப புணர்ச்சி விதிகளைப் பேணியுள்ளார். சுவாமி விபுலாநந்தரும் கடினமான நடையில் புணர்ச்சி விதிகளைக் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் எழுத்துக்களைப் பெரும்பாலும் கற்றோரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இலக்கணநூற் கருத்துக்களைப் பின்பற்றி முழுமையாகப் புணர்ச்சி விதிகளைப் பேணியவர்களுள் ஒருவராக இவர் விளங்குகிறார். இவர்களைப் போன்றே பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் தமது நூல்களில் முழுமையாகப் புணர்ச்சியைக் கையாண்டிருந்தாலும், தமது நாடக நூல்களில் பேச்சுத் தமிழைக் கையாண்டுள்ளமையால் அங்கு லகரப் புணர்ச்சிகள், றகரமாகத் திரிபடைந்துள்ளமையைக் காண்பது அரிதாக இருக்கிறது (நானாடகம், இரு நாடகம்) ஏனெனில் உச்சரிப்பது போன்றே தமிழை எழுதியுள்ளமையால் புணர்ச்சிகள் இயல்பாகக் காணப்படுகின்றனபோல் தெரிகிறது. இம்வம்சம் இவரின் தனிப்பண்பை, தனிநடையைப் புலப்படுத்துகிறது.
இன்றைய தலைமுறையில் வாழ்ந்துங் கூட பேராசிரியர் வித்தி யானந்தன் பழைய மரபுவழி இலக்கண விதிகளைத் தழுவி நிற்றல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். அவர் தமது எழுத்துக்களில்
20

Page 115
புணர்ச்சி விதிகளை முழுமையாகப் பேணியுள்ளார். லகரப்புணர்ச்சி களும் கையாளப்பட்டுள்ளன. அத்துடன் பேராசிரியரின் மேடைப் பேச்சிலும் புணர்த்திப் பேசும் பண்பைக் காணக்கூடியதாக இருக் கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட மூன்று அறிஞர்களின் வரிசை ஒரு குரு சிஷ்ய பரம்பரையாக உருவாகியிருக்கிறது, அதாவது கவாமி விபுலாநந்தரின் மாணவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கணபதிப் பிள்ளையவர்களின் மாணவர் பேராசிரியர் வித்தியானந்தன். இவர்கள் மூவரிடமும் புணர்ச்சி விதிகளைப் பேணுவதில் ஓர் ஒருமைப்பாடு உண்டு
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் தமது உரைநடை நூல்கள், குறிப்பாகப் பதிப்பித்த பதிப்புகள் யாவற்றிலுமே தமிழி லக்கண மரபு தவறாது புணர்ச்சிகளைப் பேணியுள்ளார். எனினும் ஒரு முக்கியமான அம்சத்தை இங்கு கூறுதல் வேண்டும். இவர் சிந்தா மணியின் முதற் பதிப்பில் எழுதிய முகவுரைக்கும், முதுமைப் பரு வத்தில் எழுதிய நிைைவு மஞ்சரி முதலிய நூல்களுக்கும் நடையிலே வேறுபாடுண்டு. அதாவது ஆரம்பகால நூல்களில் புணர்ச்சி விதிகள் முழுமையாகக் கையாளப்பட்டுள்ள நிலையையும், முதுமைப் பருவத் தில் எமுதிய நூல்சளில் இப்புணர்சிகள் கையாண்டும், கையாளப் படாமலும் காணப்படும் இரு நிலைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. பிறகு வெளிவந்த நூல்களில் எளிமை கருதி விதிகள் பேணப்படவில்லைபோல் தெரிகிறது.9 எனவே இக்குறிப்பை ஆதார மாகக் கொண்டு பார்க்கும்போது இவரின் எழுத்துக்களில் புணர்ச் சிகள் கையாளப்பட்டதும், கையாளப்படாததும் ஆகிய இருநிலை களைக் காணலாம். இவரைப் போன்று தம் எழுத்துக்களின் ஆரம் பத்தில் புணர்ச்சியைப் பேணிப் பின்பு புணர்ச்சியைப் பேணாத அறி ஞர்கள் எத்தனைபேர் காணப்படுகிறார்கள் என்பது ஆய்வுக்குரியது.
புணர்ச்சி விதிகளைக் கையாளுந்தன்மையும், கையாளாத் தன் மையும் கொண்ட இரண்டாவது பண்பை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி ஆகியோரின் எழுத்துக்களில் காணலாம். இங்கு காணப் படும் இந்த மாறுபட்ட நிலைக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கூறமுடியாதுள்ளது. பண்டிதமணி கணதிப்பிள்ளையின் எழுத்துக் சளில் பொருள் மயக்கம் ஏற்படக்கூடிய இடத்து புணர்ச்சிபற்றிய இவரின் நிலைப்பாடு வேறாகவும், ஏனைய இடத்து வேறாகவும் காணப்படுகி றது. இதற்கு நல்லதோர் விளக்கம் பண்டிதமணி பற்றி க. சி. குல ரத்தினம் எழுதிய கட்டுரை ஒன்றில் காணப்படுகிறது - “பண்டித மணி மரபுவழி தமிழ் பயின்றவர், வரன்முறையறிந்தவர், சாதாரண சொற்றொடர்களை வசதி போலப் பிரித்தெழுதும்போது கருத்து
202

வேறுபாடு உண்டாகும். சில சமயம் எதிர்க்கருத்தும் உண்ட்ாகும் என்பதை விளக்கக் கூடிய வகையில் அவருடைய கண்டனம் ஒன்று 1929-ம் ஆண்டளவில் வெளிவந்தது. பெரியவர் ஒருவர் ‘நான் முகற் பயந்த' என்னுந் தொடரை ‘நான்முகன் பயந்த" என்று எழுதி அச்சில் பதிப்பித்துவிட்டார். இதைப் பண்டிதமணி அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘நான் முகற் பயந்த என்றால் நான்முகனாய பிரம்மதேவனைப் பெற்ற திருமாலைக் குறிக்கும். இது அதுவாக, அந்தப் பெரியவர் 'தான் முகன் பயந்த’ என்றெழு தியமை பிரமதேவனை பெற்ற தக்கன் முதலானவர்களையே குறிக் கும் என்பதைச் சொல்லாமலே சுட்டி விளக்கினார்’ (க. சி. குலரத் தினம்: 27.12.1986) இதிலிருந்து பொருள் மயக்கத்தைத் தவிர்க் கப் புணர்ச்சிகள் அவசியமாகின்றன என்பது பண்டிதமணியின் உள் ளக்கிடக்கை என்பது தெரிகிறது. ஆனால் தேவையற்ற விடத்து இப் புணர்ச்சிகள் அவசியமற்றவை என்பதே அவரின் கொள்கை யாகும். இதேபோல தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் எழுத்துக் களிலும் புணர்ச்சிகள் கையாளப்பட்ட, கையாளப்படாத இருநிலை களையும் காணலாம். இத்தகைய இரு நிலைகளுக்குக் காரணம் ஆசிரியர்களின் தனிப்பண்பு, தனிநடை எனவும் கொள்ளவேண்டியுள் ளது. அத்துடன் ஏற்பட்ட மொழிமாற்றம் (சந்திபிரிப்பு) நிலைபே றடையாத நிலையையும் இது சுட்டுவதாகக் கொள்ளலாம்.
புணர்ச்சி விதிகளை முழுமையாகக் கையாளாமல் எழுதும் அறி ஞர்களுள் பேராசிரியர்கள் வரதராசன், முத்துச்சண்முகம் போன் றோரும், கி. வா. ஜகந்நாதன், அகிலன் போன்றோகும் குறிப்பிடத் தக்கவர்கள். மொழி அறிஞர்கள் என்பதனாற்போலும் வரதராசன், முத்துச்சண்முகம் முதலியோர் மொழியில் கடின சந்தி விகாரங் களைக் கைவிட்டு எளிய நடையில் யாவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தமது நூல்களை ஆக்கியுள்ளனர். பேராசிரியர் வரதராசன் அறவியல் இலக்கியங்களின் பதிப்புக்களிலும் (திருக்குறள் வரதரான் பதிப்பு: 1962) புணர்ச்சி விதிகளைக் கைவிட்டுள்ளார்.
ஆக்க இலக்கியங்களான சிறுகதை, நாவல் முதலிவற்றின் ஆசி ரியர்கள் கையாளும் நடை புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் கி. வா. ஜகந்நாதன், அகிலன் போன்றோரின் ஆக்க இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஜகந்நாதன் முதலியோரின் பல படைப்புக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் லகர ஈற்று மாற்றங்கள் நிகழவில்லை என்பது தெரிய வந்தது.
203

Page 116
5. மொழி கற்பித்தலில் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி
பாடசாலைகளில் மொழிகற்பித்தலில் இலக்கணப் பயிற்சி முக் கியத்துவம் பெறுகின்றது. தமிழ் மொழியைப் பேசவும், எழுதவும், பேச்சு, எழுத்து வழக்குகளில் ஏற்படும் தவறுகளைத் திருத்தவும் இலக்கணப் பயிற்சி உதவுகிறது. பாடசாலைகளில் இலக்கணங் கற் பித்தலில் புணர்ச்சி விதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. "தமிழ்ப் பாடவிதானக் குழுவினர்’ மாணவர்களுக்கு இலக்கணங் கற்பித்தலில் புணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள் ளார்கள் என்பதை தமிழ், சமய, சமூகக்கல்விப் பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் முதலியவற்றில் விதிகளுக்கமையப் புணர்ச்சிகள் கையாளப்பட்டுள்ளமையைக் கொண்டு அறியலாம். ஆனால் இவர் களின் நோக்கம் எந்தளவுக்குப் பாடசாலைகளில் நிறைவேற்றப்படு கிறது என்பது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.
இன்று தமிழ் கற்பித்தலில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரியதோர் பிரச்சினையாகக் காணப்படுவது இலக்கணப் பயிற்சி யாகும். பாடசாலையில் கற்பிக்கப்படும் தமிழிலக்க ணம் பெரும் பாலும் நன்னூல் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மொழி மாற் றத்தைக் கருதாது மரபுவழி இலக்கணங்களைக் கற்று. அதன் வழி வந்த ஆசிரியர்கள் அதே முறையையே மாணவர்களிடமும் பிர யோகிக்க முயலுகின்றனர். பாட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள் சில இன்றையத் தமிழில் வழங்கப்படாத வ. உதா ரணமாக, கல் + தீது; முள் + தீது. இவற்றை மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து முறையே கஃறீது. முட்டீது ஏற்றே புணர்த் தப் பழகுகின்றனர். இதனால் மாணவர்களின் வரலாற்று மொழி யறிவு வளர்ச்சியடையலாம். ஆயின் இத்தகைய புணர்ச்சிளை அறி தலும், கையாள்தலும் பள்ளி மாணவர் நிலையில் அவசியந்தானா என்ற கேள்வி மொழியிலாளர் மனதில் தோன்றுகிறது. மேலும் பாடநூல்களில் சில சந்தர்ப்பங்களில் சந்தி பிரித்து எழுதப்படுவ தன் அவசியத்தை ஆசிரியர்கள் பாடநூல் எழுதுவோர்க்குச் சுட்டிக் காட்டத் தவறிவிடுகின்றனர்.
பொதுவாகப் பாடசாலை மாணவர்கள் லகரப் புணர்ச்சி விதி களைப் பேணுவதில்லை, ஏனைய புணர்ச்சிகளையும் மாண வர்கள் பேணுவது மிகக்குறைவு. எவ்வளவுதான் புணர்ச்சி விதி களைக் கற்பித்தாலும் மாணவர்கள் லகர மெய்யீறுகளைப் பொறுத்த வரை றகரமாக மாற்றாமல் இயல்புப் புணர்ச்சியாகவே எழுதுகி றார்கள். புணர்ச்சி பற்றிய இலக்கணப் பயிற்சிகளை ஆரம்ப வகுப் புக்களில் அன்றி மேல் வகுப்புக்களில் கற்பித்தால் மாணவர்களுக்குப்
A04

புணர்ச்சி பற்றிய விளக்கம் ஒரளவு தெளிவாகும் என்பது ஆசிரியர் களின் கருத்தாகும், 19
மாணவர்கள் தமிழ்மொழிப் பாடநூல்களை மாத்திரம் படித் தும், த்மிழ் மொழிப் பாடப் பயிற்சிகளை 11 மாத்திரம் செய்தும் மொழி அறிவையும், ஆற்றலையும் வளர்ப்பதாக நாம் கூறிவிட முடி யாது. அவர்கள் வாசிக்கும் பிற பாடநூல்கள், வகுப்பறைக்கப்பால் வாசிக்கும் பிற நூல்கள், சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்றவை யும் இவர்களின் மொழியறிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின் றன. இவற்றில் கையாளப்படும் புணர்ச்சி முறையையும் நாம் மனங்கொளல் வேண்டும். மேலும் வானொலி, தொலைக் காட்சி களிலும் 12 உச்சரிக்கப்படும் வடிவங்கள் மாணவர் எழுத்தைச் செல் வாக்கிற்கு உட்படுத்துகின்றன. இவை அனைத்தும் மொழி மாற்ற மடைவதை எடுத்துக் காட்டுகின்றன. இம்மாற்றங்களைப் பிழை யென நாம் கருத்தில் கொள்ளமுடியாது.
மாணவர்களின் பேச்சு மொழி (அதன் உச்சரிப்பு), சிலசமயம் அவர்கள் இலக்கிய மொழிச் சொற்களை எழுத, உச்சரிக்கப் பெரும் இடையூறாக அமைகின்றது. பேச்சுவழக்குக் காரணமாகவே பல தவறுகள் மாணவர் மத்தியில், அவர்தம் எழுத்துக்களில் காணப் படுகின்றன. பேச்சில் புணர்த்திப் பேசாதவற்றை எழுத்தில் புணர்த்தி எழுதுவது மாணவர்களுக்குத் தொல்லையாகத் தான் இருக்கும்.
6. முடிவுரை
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது ஆரம்பகாலத்திலிருந்து தற்காலம் வரை புணர்ச்சி என்ற அம்சம் குறிப்பாக லகர மெய்யீற்றுப் புணர்ச்சி அறிஞர்களி டம் எவ்வாறு நிலைபெற்று வந்துள்ளது என்பதை ஓரளவுக்குத் தெளிவுபடுத்திக் காட்டலாம். அவ்வகையில் பழைய (மொழியிற்) புணர்ச்சி முறையானது தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களிற் காணப்பட்டவாறே பேணப்பட்டுள்ளது. புணர்ச்சி யைப் பேணுதலின் நோக்கம் பழைய மரபுகளைப் பேணவேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இத்தகைய போக்கு காலத்திற் குக் காலம் மாறக்கூடியது. அதாவது வழக்கிலுள்ள மொழியின் இலக்கண மரபு மாற்றமடையும் போது புதிய இலக்கண மரபு தோன்றுதல் தவிர்க்க முடியாதது. முற்காலத்தில் கடின சந்தி விகா ரங்களைப் பிரயோகித்து எழுதுதல் தமிழில் வழக்காறாக இருந் தது. ஆனால் இன்று மொழியை எழுதப் பயன்படுத்துவோர் மத் தியில் (லகரப்) புணர்ச்சி விதிகள் யாவும் கையாளப்படுகின்றன என்று கூறமுடியாது. பழைய மரபு வழிவந்தவர்கள் ஒரளவிற்குக் கையாண்டாலும் ஏனையோர் காலத்தின் போக்கிற் கிணங்க தம்
、器05

Page 117
நடையினை மாற்றியமைத்துச் செல்கின்ற மையைத் தற்கால உரை நடை நூல்கள் எமக்குப் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் உரை யாசிரியர்களால் எழுதப்பட்ட உரைநடை நூல்களில் கையாளப் பட்ட நடை கற்றோர் படித் தற்கென எழுதப்பட்டது எனலாம். ஆனால் இக்காலத்தில் இவ்வழக்கு அருகிவருகிறது. பழைய உரை நடை நூல்களை இக்காலத்தில் அச்சிடுவோர் அவற்றிலுள்ள சந்திகளைப் பிரித்து எழுதிவருகின்றனர்.
தமிழிலக்கணகாரர் கூறிய பெரும்பாலான புணர்சி விதிகள் செய்யுள் இலக்கியங்களுக்கு ஏற்றனவாகவே முன்பு இருந்தன. ஆனால் செய்யுள்நடை மாற்றமடைந்து இலகுவான உரைநடை ஆறுமுகநாவலர் காலத்தின் பின் தோன்றத் தொடங்கியது. இங்கு பல புணர்ச்சி விதிகள் தேவையான இடத்து மாத்திரமே பயன்படுத் தப்பட்டன. மொழிப் பொருள் விளக்கத்திற்கு இதன் அவசியம் எவ்வளவு என்ற கேள்வி எமும்போது உச்சரிப்பிலோ, பொருளிலோ மாற்றத்தைச் செய்யாத விடத்து புணர்ச்சிகளின் அவசியம் தேவை யற்றதாகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக,
* கூடிய நெறியின கொழுத்தும் காலை பிண்டியும் பிணையலும் எழில்கையும் தொழில்கையும் வாரம் செய்தகை கூடையில் களைதலும் பிண்டி செய்தகை ஆடலில் களைதலும். என்பதைப் புணர்ச்சி விதிகளைப் பிரயோகித்து எழுதுவதாயின்:
கூடிய நெறியின கொழுத்துங் காலைப் பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும் வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும் பிண்டி செய்தகை யாடலிற் களைதலும்.
(சிலப் புகார்க்காண்டம் சரு) என அமையும். இங்கு காணப்படும் இரு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் பொருளில் மாற்றமேற்படவில்லை என்பது புலப்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு புணர்ச்சி தேவையற்தாகிவிடுகின்றது. பொருளைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து நில வும் இக்காலத்தில் புணர்ச்சிகள் பெரும்பாலும் அவசியமான இடங் களிலேயே இடம் பெறுகின்றன. எனினும் மொழியின் அடிப்படைப் பண்புசளைப் பேணும் புணர்ச்சிகள் சில எக்காலமும் நின்று நிலவு வனவாகும். இத்தகைய கருத்துக்களைக் காலத்தின் போக்குக் கிணங்க மொழிநடை மாற்றமடையும் போது ஏற்றுக்கொள்வதே பாரம்பரிய மனப்பாங்காகும்.
மற்றுமோர் நோக்கில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தலில் இப் புணர்ச்சிகளின் முக்கியத்துவம் அவ்வளவாகத் தெளிவுபடுத்தப்பட
06

வில்லை என்பதே இதுவரை பார்த்த விடயங்சளில் இருந்து புலனா கிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று மரபு வழி வந்த மொழி ஆசிரியர்களின் கற்பித்தல் முறை. இரண்டு இலக்கணங் கற்றல் தொல்லையானது என்ற மாணவர்களின் மனப்பாங்கு . எனவே இவ்விரண்டையும் மாற்றியமைத்து மொழியியல் அணுகு முறைகளுடன் இலகுவான முறையில் இலக்கணங்கற்றலை மேற் கொண்டால் இவ்வம்சம் வெற்றியளிக்கும். மொழி மாற்றமடை யாது நிலைபெற்றிருக்கும் போதுதான் அதன் நடை ஓர் தராதர வடிவத்தைப் பெறமுடியும். அதாவது மொழியில் ஏற்படும் மாற் றங்கள் காரணமாகப் புணர்ச்சிகளும் மாற்றமடையயும். எனவே இதனை வலிந்து திணிப்பதோ, நீக்குவதோ முடியாத ஒன்று
அடிக்குறிப்புகள்
1. Mario. A. Pei and Gaynor (1954); A Dictionary of
Linguistics.
''A form of Sanskirit origin (literally meaning linking) designating the phonetic change of a word according to its function or position in a sentence, i.e. the various changes in words as a result of their mutual influence on each other when used in conjunction.' '
2. தண்டபாணி தேசிகர், ச., (1972); தொல்காப்பிய மொழியில்
மயக்க விதியும் புணர்ச்சி இலக்கணமும், அண்ணாமலைநகர்,
3. சண்முகம் செ. வை. (1985) ‘மொழியும் எழுத்தும் அண்ணா
மலைநகர் , ப. 31.
4. இங்குள்ள நூற்பாக்களில் லகர மெய்யீற்றுப் புணர்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுக்கள் மாத்திரமன்றி ஏனைய புணர்ச்சிகளின் எடுத்துக்காட்டுக்களும் தரப்பட்டுள்ளன. நாம் இங்கு லகர மெய்யீற்றுப் புணர்ச்சி பற்றியே பேசுவதால் ஏனைய புணர்ச்சி களின் எடுத்துக்காட்டுக்களை கவனத்திற்கு எடுக்கவில்லை.
5. ராஜம் வெளியீட்டாளர்கள் பொதுமக்களின் நன்மை கருதி சந்தி பிரித்து பல நூல்களை மலிவுப் பதிப்புக்களாக வெளியிட்டு வந்துள்ளார்கள்.
8. கம்பராமாயணம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு
1965.
፩0 7

Page 118
7.
8.
9.
10.
11.
208
"மொழியைப் பேசும் பெரும்பான்மையோருக்கு வேண்டி மொழியினைப் புரிந்து கொள்ளும் நிலையிலும், உருவாக்கும் நிலையிலும் எளிமையைப் புகுத்துவதை எளிமையாக்கம் எனலாம்.”* (அண்ணாமலை. இ. 1980; 364)
'இவர் (ஆறுமுகநாவலர்) அச்சிட்ட புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் சிறிதுமில்லாத வகையும், அதிக கல்வியில்லாதவ ரும் எளிதாக வாசித்தற்கும், விளங்குவதற்கும் ஏதுவாகச் சொற்கள் பிரிக்கப்பட்டுச் சந்திவிகாரங்களின்றி இருந்த வகையும். ஆகிய இவைகள் இந்தியாவிலுள்ள பலருக் கும் ஆச்சரியத்தை விளைவித்தன. (கைலாசபிள்ளை த; 1939 : 63)
'இந்நூற்றாண்டின் முதற்பகுதியில் அவர் (உ. வே. சாமிநா தையர்) எழுதிய உரைப்பகுதிகள் அவர் அச்சிட்ட நூல்களுக்கு முகவுரைகளாகவும், கதைச் சுருக்கங்களாகவும் உள்ளன. பிற்காலங்களில் எழுதியவை தம்முடைய வாழ்க்கை அனுப வங்களைச் சித்திரிக்கும் நினைவு மஞ்சரி போன்ற நூல்களா கும். முற்பகுதியில் உரையாசிரியர்கள் கையாண்ட பழைய உரைநடையைத் தழுவிப் பண்டிதரானோர் படித்தறியக் கூடிய நடையில் எழுதியுள்ளார். அந்நடையாற் பயனில்லை என உணர்ந்து பிற்காலத்தில் காலத்தின் போக்கிற்கிணங்க பாமரமக்களும் படித்து இன்புறக்கூடிய ஒர் இலகுவான நடை யினைக் கையாண்டார், இப்புதிய நடையின் ஆற்றலை அவர் (உ. வே.சாமிநாதையர்) நன்கு அறிந்தே பழைய உரைநடை யினைக் கைவிட்டார் என நாம் கொள்ளவேண்டியிருக்கிறது.
(செல்வநாயகம், வி: 1960; 221)
சில பாடசாலைகள் (கிராம நகரப்புறம்) கவனத்திற்கெடுக்கப் பட்டு அங்குள்ள ஆரம்ப, மேல் வகுப்பு ஆசிரியர்களுடன் புணர்ச்சி பற்றிய உரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட கருத்து.
பயிற்சிப் புத்தகங்கள்
1. புதுமுறைத் தமிழ் மொழிப் பயிற்சி
பண்டிதர் செ. நடராசா (வகுப்பு 3 - 8)
2. தமிழ்மொழி அடிப்படை அறிவுப் பயிற்சிகளும்
தமிழ்மொழி துணைநூல் வரிசை (வகுப்பு 3 - 8)
இன்னும் சில பயிற்சிகள்.

12. தொலைக்காட்சியில் லகரம்" பின்வருமாறு புணர்த்தி எழு தப்பட்டிருந்தது. "தையல்க் கலை ரூபவாகினி செய்தியின் பின் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மேற்கண்டவாறு காணப் பட்டது. நாள் 18 - 5 - 1987.
உசாத்துணை நூல்கள்
அண்ணாமலை, இ. (1980) - "எளிமையாக்கம் புதுமையாக்
கத்தின் ஒருமுறை" மொழியியல் 4, அண்ணாமலை நகர்.
ஆறுமுகநாவலர் - நன்னூற் காண்டிகையுரை
பதிப்பு. வித்தியாநுபாலன யந்திர சாலை, சென்னை.
குலரத்தினம், க. சி. (1986) - ‘வரலாறும் காலமும்", பண்டித
மணி. சி. கணபதிப்பிள்ளை பற்றிய கட்டுரை, சஞ்சீவி (27-12-1986)
கைலாசபிள்ளை, த, (1939) - ஆறுமுகநாவலர் சரித்திரம்
3ம் பதிப்பு வித்தியா நுபாலன யந்திரசாலை, சென்னை.
சண்முகம், செ. வை. (1978) - எழுத்துச் சீர்திருத்தம்
அனைத்திந்திய தமிழ்மொழி யியல் கழகம் - அண்ணாமலை நகா.
சாமிநாதையர், உ. வே. (1894) - புறநானூறு மூலமும் உரையும்
- 3ம் பதிப்பு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
சுப்பிரமணிய சாஸ்திரி, டி. எஸ். (1937) - தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் ஜனனுகுல அச்சகம், திருச்சிராப்பள்ளி.
செல்வநாயம், வி. (1957) - தமிழ் உரைநடை வரலாறு
இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனை.
209

Page 119
வேலுப்பிள்ளை, ஆ. (1966) - தமிழ் வாலாற்றிலக்கணம்,
பாரி நிலையம் சென்னை.
... ........................... (1971) - சாசனமும் தமிழும்
பாரி நிலையம், சென்னை.
Kothandaraman, P. (1972) - "On Sandhi" Studies in
Tamil Linguistics Tamil Nuagam - Madras
210

இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும்
சு. சுசீந்திரராசா இ.கயிலைநாதன்
ஒரு நாட்டில் பல மொழிகள் வழக்கில் இருக்கும்போது மக்கள் தத்தம் தாய்மொழியுடன் நாட்டில் வழங்கும் ஏனைய மொழிகளையும் இயன்றவரை கற்பது அவர்களுக்கு ஏதோ வகையில் பயனுள்ளதாக அமையும். நமது நாட்டில் இன்று மூன்று மொழிகள் வழக்கில் உள்ளன. அவை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகும். இவற்றுள் சிங்களமும் தமிழும் பண்டுதொட்டு நம் நாட்டு மக்களின் தாய்மொழியாக இருந்து வருகின்றன. ஆங்கிலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் இருந்து இந்நாட்டு மக்கள் பலரின் இரண்டாவது மொழியாக இருந்து வருகின்றது. மொழிப் பண்பாட்டிலே குறிப்பிட்ட தாய் மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் பெருமளவு வரையறுத்துக் கூறத்தக்க வெவ்வேறு தொழிற் கூறுகள் இருந்து வந்துள்ளன. இலங்கை விடுதலை அடைந்ததற்குப் பின்னர் மொழிகளின் தொழிற் கூறுகள் பெரும் மாற்றம் பெற்றன.
இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையினர்; தமிழர் சிறுபான்மையினர். சிங்களம், தமிழ் தவிர்ந்த பிற மொழிகள் சிலவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவரும் இலங்கையில் உளர். அவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை. பண்டுதொட்டு இன்றுவரை தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற சிங்களவர் மிகக் குறைவு. இதே போன்று சிங்களத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற தமிழரும் மிகக் குறைவு. இது உள்நாட்டு மொழியறிவு நிலை. மறுபுறம் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்ற நல்ல மொழியாட்சி பெற்ற சிங்களவரும் தமிழரும் மிகப் பலர். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக இருந்தமையேயாகும். பிரித்தானியத் தொடர்பு, உலகத் தொடர்பு என்பனவும் ஆங்கிலம் கற்பதற்குத் துண்டுதலாக அமைந்தன. கிறித்தவமும் காரணமாயிற்று. அன்று ஆங்கிலம் கற்றவர் பெற்றிருந்த ஆங்கில மொழியறிவு உயர்வாகவே இருந்தது. ஆதலால் ஆங்கிலமறிந்த தமிழரும் சிங்களவரும் தமக்குள் ஆங்கிலம் மூலமே கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தனர். கிராமப்புற பள்ளி மாணவன் கூட இவ்வாறு ஆங்கிலத்தில் ஒரளவு கருத்துப் பரிமாறக் கூடியனவாக விளங்கினான்.
இந்த நிலை இலங்கை விடுதலை பெற்றதற்குப் பின்னர் படிப்படியாக மாறத் தொடங்கியது. நாட்டிலே சிங்களம் ஆட்சிமொழியாகியது: கல்வி மொழி
2.

Page 120
சிங்களம் அல்லது தமிழ் என மாறியது. ஆங்கிலத்தின் பயன்பாடு சுருங்கிச் சுருங்கி வந்தது; செல்வாக்கும் குறைந்தது. ஆங்கிலம் பாடசாலைகளிலே இரண்டாவது மொழியாத் தொடர்ந்து கற்கப்பட்டு வந்த போதிலும் முன்னர் பெற்றிருந்த தகுநிலையை இழந்தது. மாணவர்களின் ஆங்கில உரையாடல் திறனும் எழுத்துத் திறனும் குறைந்து குறைந்து வந்தன. முன்னர் போலன்றி ஆங்கிலத்தை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய சிங்களவர். தமிழர் எண்ணிக்கை வீழ்ந்தது. இதனால் காலப் போக்கில் சிங்களவரும் தமிழரும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் குறைந்தது. மொழிச் சமுதாயங்களிடையே படிப்படியாகப் பிரிவினை ஏற்பட்டது. அரசின் அன்றைய மொழிக் கொள்கையும் அன்று நிலவிய அரசியல் கருத்துக்களும் இப்பிரிவினையை மேலும் இறுகச் செய்தன. காலத்திற்குக் காலம் மொழிச் சமுதாயங்களிடையே தோன்றிய சந்தேகம், வெறுப்பு, காழ்ப்பு, பகை, கலவரம் ஆகியவற்றை இங்கு விரித்துக் கூறவேண்டியதில்லை. அத்தகைய சுற்றுச் சார்பு நிலையில் சிங்களத்தை அல்லது தமிழை இரண்டாவது மொழியாகக் கற்பதற்கோ கற்பிப்பதற்கோ வேண்டிய ஆர்வம், வாய்ப்பு இல்லாமற் போனது வியப்பன்று.
இன்றைய நிலை சற்று வேறு. இன்று சட்டத்திலே மொழிப் பிரச்சினை தீர்க்கப்பட்டு சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. இதுகாறும் மொழியடிப்படையில் இருந்து வந்த காழ்ப்பு நீங்கும் பொருட்டுச் செய்ய வேண்டிய சிறவற்றுள் சிங்களத்தையும் தமிழையும் இரண்டாவது மொழியாகக் கற்பதைத் தூண்டுவதும் ஒன்றாகும். எனவே சிங்களத்தையோ தமிழையோ இரண்டாவது மொழியாகக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு வேண்டிய திட்டங்களை நாடு முழுவதிலும் வகுத்தல் விரும்பத்தக்கது. இரண்டாவது மொழி கற்பித்தலில் தற்கால நெறிமுறைகளைப் பின்பற்றுதல் மூலம் மாணவர்களின் மொழி கற்றல் சுமையைக் குறைக்கலாம்; ஆர்வத்தைக் கூட்டலாம். மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் சுமையையும் குறைக்கலாம். இன்று ஆங்கிலத்தை நாட்டிலே இரண்டாவது மொழியாகக் கற்பது கற்பிப்பது பற்றி நாம் அரிதில் முயன்று செயற்படுவதை மனதிற் கொண்டு அத்தகைய செயற்பாடு உள்நாட்டு மொழிகளையும் இரண்டாவது மொழியாகக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வேண்டுவதே என உணர்தல் வேண்டும்.
சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் போதும் அவர்களுக்குத் தமிழாசிரியர்கள் தமிழைக் கற்பிக்கும்போதும் பல சிக்கல்கள் தோன்றலாம். அவற்றுள் சிலவற்றை முன்கூட்டியே இனங்கண்டு சுட்டிக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
212

ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பவர் அதனை முதலில் பேசக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஒரு மொழி பல கிளை மொழிகளைக் கொண்டதாயின் எந்தக் கிளைமொழியைத் தேர்ந்தெடுத்துக் கற்பது, கற்பிப்பது என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எழும் ஒரு பிரச்சினையாகும். எழுத்து மொழியும் மக்களிடையே வேறுபடுவதாயின் இத்தகைய பிரச்சினை அங்கும் தோன்றலாம். பிரித்தானிய ஆங்கிலமும் அமெரிக்க ஆங்கிலமும் பேச்சு நிலையிலும் எழுத்து நிலையிலும் வேறுபடுவதைக் கருதுக.
பேச்சுத்தமிழ் இடத்திற்கு இடம் சமுதாயத்திற்குச் சமுதாயம் மிக வேறுபடுவது: பலவாறு வேறுபடுவது. எழுத்துத் தமிழில் அத்தகைய வேறுபாடு மிகக் குறைவு. இலங்கையிலே பேச்சுத்தமிழ் பொதுவாக நோக்குமிடத்து யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலைநாட்டுத் தமிழ், இஸ்லாமியர் தமிழ் என வேறுபடுகின்றது. வேண்டுமானல் இன்னும் நுட்பமாக வேறுபடுத்தலாம். இவற்றுள் இரண்டாவது மொழியாகத் தமிழைப் பேசக் கற்க விரும்புபவர்களுக்கு எவ்வகையினைத் தேர்ந்தெடுப்பது என்பது கற்றல், கற்பித்தல் நிலைகளில் முதல் எழும் ஒரு பிரச்சினையாகும். இன்று தமிழ் பேசக்கூடிய சிங்களவர் மலைநாட்டுத் தமிழையோ இஸ்லாமியர் தமிழையோதான் பின்பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழையோ மட்டக்களப்பு பேச்சுத் தமிழையோ பேசுவதாகக் கூறமுடியவில்லை. காரணம் அதிக தொடர்பும் மிகக் குறைந்த தொடர்புமே. சிங்களவர்களுக்கு மலைநாட்டுத் தமிழருடனும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களுடனும் தொடர்பு மிக அதிகம். ஆனால் யாழ்ப்பாணத்து மக்களுடனோ மட்டக்களப்பு மக்களுடனோ நெருங்கிய தொடர்பு மிகக் குறைவு.
மலை நாட்டுப் பேச்சுத் தமிழும் இஸ்லாமிய மக்களின் பேச்சுத் தமிழும் உலகிலே பரந்துபட்டு வழங்கும் இந்தியப் பேச்சுத்தமிழுடன் அதிக ஒற்றுமை உடையன. எனவே இந்த இருவகைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பது பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தோன்றலாம். மறுபுறம் யாழ்ப்பாணத் தமிழ் காலத்தால் சமூக நோக்கில் கீர்த்தி (Prestige) பெற்றது. யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்புத் தமிழும் எழுத்துத் தமிழுடன் ஒற்றுமை அதிகம் உடையன எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன. எனவே எழுத்துத் தமிழையும் கற்க விரும்பும் சிங்களவர்கள் இந்த இரு வகைகளில் ஒன்றைக்கற்பது தமக்குப் பயனுள்ளதாக அமையும் எனக் கருதலாம். எது எப்படியாயினும், இவ்வாறு போட்டி போடக்கூடிய இத்தகைய கிளைமொழிகளில் ஏதோ ஒன்றினைக் காரணங் கருதாது தேர்ந்து எடுப்பது தவறாகாது. ஏனென்றால் இவ்வாறு தேர்ந்தெடுத்த பேச்சு மொழிவகை யொன்றினை நன்கு கற்றதற்குப் பின் ஏனைய வகைகளையும் தேவையேற்படும் போது ஒருவர் எளிதாகத் தாமாகவே பேசப் பழகிக் கொள்ளலாம். ஏனைய

Page 121
கிளைமொழிகளைச் சிறிய முயற்சியுடன் நன்கு புரிந்து கொள்ளலாம். தமிழிலே பேச்சுமொழி வகைகள் மிகப் பலவாயினும் தமிழர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர் அன்றோ? கிளைமொழிகளைப் புரிந்து கொள்ளும் அளவிலே வேறுபாடு இருக்கக்கூடும். பொதுவாக அந்த வேறுபாடு பெரும் விபரீதத்தினை ஏற்படுத்தாது.
மொழி அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடக் காண்கிறோம். மொழிகளை இரண்டாவது மொழியாகக் கற்கும்போது அமைப்பு வேறுபாட்டடிப்படையில் சிக்கல்கள் தோன்றுவது உண்டு. சிங்களமும் தமிழும் வெவ்வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை அமைப்பிலே எல்லா நிலைகளிலும் வேறுபடுபவை. எனவே சிங்களத்தையும் தமிழையும் தற்கால மொழியியல் நெறிமுறைக்கேற்ப ஒப்பீட்டடிப்படையில் ஆராய்ந்து ஒப்புவமைகளையும் வேற்றுமைகளையும் கண்டறிவது கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். மொழியின் பல நிலைகளிலும் ஒப்பீட்டாய்வை மேற்கொள்ளலாமெனினும் இங்கு ஒலியியல் ஒலியனியல் ஆகிய இரு நிலைகளிலும் மட்டும் ஒப்பீட்டாய்வை மேற்கொண்டு சிங்கள மாணவர்கள் தமிழைக் கற்றலிலும் அவர்களுக்குத் தமிழைக் கற்பித்தலிலும் எழக்கூடிய சிக்கல்களை மட்டும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகின்றோம். இதே போன்று உருபனியல், வாக்கியவியல், சொற்பொருளியல் ஆகிய நிலைகளில் ஆய்வு பின்னர் மேற்கொள்ளப்படும்.
எந்த ஒரு மொழியைக் கற்க முற்படும்போதும் மாணவர்களுக்கு முதலில் தோன்றும் பிரச்சினை உச்சரிப்புப் பற்றியதாகவே இருக்கும். ஏனென்றால் ஒரு மொழியை உச்சரிக்காமல் கற்றல் அரிது; கற்கும் மொழியில் புதிய ஒலிகளும் ஒலிகளின் புதிய சேர்க்கைகளும் இருப்பது உண்டு. சொற்களில் ஒலிகள் பயின்று வரும் இடங்களும் புதியன வாகலாம். வரும் ஒலிகள் ஒரளவு பழக்கமானவை யென்றாலும் அவற்றின் தன்மையிலே சிறிய சிறிய வேறுபாடு இருக்கலாம்.
இங்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை சிங்கள மணவர்கள் கற்கும் போதும் அவர்களுக்கு அதனைக் கற்பிக்கும் போதும் தோன்றும் பிரச்சினைகள் சிலவற்றை வகுப்பறையில் மொழிகற்றல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளைச் சில ஆண்டுகள் அவதானித்த அநுபவ அடிப்படையில் கூறுவோம். இந்த அவதானிப்பு கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி நிலையம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
இனி, முதற்கண் உயிர் ஒலியன்களைக் கருதுவோம். சிங்களத்தில் (கொழும்பிலும் சுற்றுப்புறத்திலும் பேசப்படும் வகை) 13 உயிர் ஒலியன்கள் உள. அவற்றுள் 7 குறில்; 6 நெடில். அவையாவன:
4

i:
Є 30 O e: e:
al 23 2.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 10 ஒலியன்கள் உள. அவற்றுள் 5 குறில்: 5 நெடில், அவையாவன:
i U i:
e O e: O
al a.
இரு மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழிலே உயிர் ஒலியன்களின் எண்ணிக்கை குறைவு. தமிழில் உள்ள 10 ஒலியன்களுக்கும் இயைந்துடன்படும் ஒலியன்கள் சிங்களத்தில் உண்டு. மேலதிகமாக ஐ ஐ. ஒ என்பன சிங்களத்தில் ஒலியன்கள்.
இரு மொழிகளிலும் உள்ள உயிர் ஒலியன்களின் மாற்றொலிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள. தமிழில் tt (1) ஆகிய இரண்டு // ஒலியனின் மாற்றொலிகள். சிங்களத்தில் 11 மட்டுமே /1/ ஒலியனின் மாற்றொலி. தமிழ்ச் சொற்களில் /1/ வரும் போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர் 11 என்றே ஒலிக்கிறார்கள். அதாவது, ! 3. I என ஒலிக்க வேண்டிய இடத்தும் (1) என்றே ஒலிக்கிறார்கள். இதேபோன்று தமிழில் / /ஒலியனின் மாற்றொலியாக ! :) வரும் போதும் அதனை மாணவர்கள் (t) என்றே ஒலிக்கிறார்கள். தமிழில் /u/ ஒலியன் ( + 1 (uஆகிய இரண்டையும் மாற் றொலியாக உடையது. சிங்களத்தில்/u/ ஒலியன்(u) எனும் மாற்றொலியை மட்டும் உடையது. இதே நிலை இதனை ஒத்த நெடிலிலும் உண்டு. எனவே தமிழ்ச் சொற்களில் 1 + 1 : வரும்போது அதனை மாணவர்கள் முறையே {u} {u} என ஒலிக்கிறார்கள். /nakku/; எனும் சொல்லைத் தமிழர் (nakkக் என ஒலிப்பர். ஆனால் சிங்கள மாணவர் (nakku என்றே ஒலிக்க முற்படுவர். இது தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பாகத் தோன்றும்.
தமிழில் /a/ ஒலியன் ( a 16 எனும் மாற்றொலிகளையுடையது. சிங்களத்தில் /ee/ ஒலியன்(3) எனும் மாற்றொலியையுடையது. தமிழில் 181 வரும்போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர் (38 என்று ஒலிக்க முற்படுகின்றனர். தமிழ்ச் சொற்களின் ஈற்றில் வரும் -ay எனும் தொடரை e என ஒலிக்கும் போக்கு அவர்களிடம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக katay) "கடை" எனும் சொல் (kate என ஒலிக்கப்படுகிறது. சொற்களின் முதலசையில் வரும் நெடிலின் நீட்டத்தைக் குறைத்து உச்சரிக்கும் போக்கு தமிழ் கற்கும் சிங்கள மாணவர்களிடம் உண்டு. சிங்களத்தில் சொற்களின் ஈற்றில்
5

Page 122
வரும் உயிர் ஒலிகள் ஒருவகை குரல்வளை ஒலியின் பிடியுடன் (glottal Catch) உச்சரிக்கப்படுகின்றன. இந்தப் பழக்கம் தமிழ்ச் சொற்களின் ஈற்றில் வரும் உயிர் ஒலிகளை ஒலிக்கும்போதும் சிங்கள மாணவர்களுக்கு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக (V 3: i kl "வீடு' எனும் சொல்லை (Vidu? என ஒலிக்கிறார்கள். இரு மொழிகளிலும் மூக்கின ஒலிகளுக்கு முன்னர் வரும் உயிர் ஒலிகள் முக்கினச் சாயல் பெறுகின்றன. ஆனால் சிங்களத்தில் இந்த மூக்கினச் சாயல் வன்மை பெற்றது. தமிழிலே மென்மையாக வருவது. சிங்கள மாணவர்கள் தமிழ்ச் சொற்களிலும் மூக்கினச் சாயலை வன்மைப்படுத்தி விடுகிறார்கள். இத்தகைய இயல்புகளால் சிங்கள மாணவர்கள் பேசுந் தமிழ் ‘சிங்களத் தமிழ்' ஆகிவிடுகிறது.
இனி மெய்யொலியன்களைப் பார்ப்போம். சிங்களத்தில் 24 மெய்யொலியன்கள் உள; தமிழில் 14 மெய்யொலியன்கள் உள. சிங்களத்தில் 10 ஒலியன்கள் மேலதிகமாக உள. இரு மொழிகளிலும் உள்ள ஒலியன்களைப் பின்வரும் அட்டவணைகளில் காண்க;
afrävsamb:
р t t C k
b d d 9 d g
S S
au ΠΥ)
l
r
V y
h
தமிழ்:
р t t C k
n
Tr V у
2I 6

இரு மொழிகளிலும் 11 ஒலியன்கள் இயைந்து உடன்படுகின்றன. தடையொலியன்களைப் பொறுத்தவரை தமிழிலே நுனிநா நுனியண்ண ஒலியன் உண்டு: சிங்களத்தில் இல்லை. சிங்களத்தில் ஒலிப்பு, ஒலிப்பில்லா, முன் மூக்கினச் சாயல் ஒலியன்களுக்கிடையே உள்ள முவ்வழி முரண் தமிழிலே இல்லை.
இரு மொழிகளிலும் முக்கொலியன்களைப் பொறுத்தவரை முவ்வழி முரண் உண்டு. ஆனால் மூன்றாம் ஒலியன் வேறுபடுகிறது. சிங்களத்தில் மருங்கொலியன் 1. தமிழில் 2. தமிழிலே குழிந்துரசொலியனும் குரல்வளை பிளந்துரசொலியனும் இல்லை.
தமிழ் மெய்யொலியன்களின் பல மாற்றொலிகள் சிங்கள மாணவர்களுக்குப் புதியன. எனவே அவற்றை ஒலிப்பதிலும் இனங்கண்டு கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல் தோன்றுகின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். சிங்களத்தில் நுனிநா நுனியண்ணத் தடை ஒலி 11 இல்லை. இது தமிழ்ச் சொற்களில் முதல் நிலையில் வரும்போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர்கள் வளைநாத் தடையொலியாக, அதாவது ! ) என உச்சரிக்கிறார்கள். சொற்களிலே ஈருயிர்க்கிடையே தனி (t வரும்போது அதனை நுனிநா நுனியண்ண வரு டொலியாக, அதாவது tr ஆக ஒலிக்கிறார்கள். இரட்டித்து t tt ) என வரும்போது அதனை l tt ) என ஒலிக்கிறார்கள். நாவளை மூக்கொலியும் நாவளை மருங்கொலியும் தமிழிலே ஒலியன்கள். அதாவது (n) டி) தொழிற் பாடுடைய ஒலிகளாக (functional) முரண் நிலையில் வருவன. இவை போன்று நுனிநா நுனியண்ண மருங்கொலியும் வளைநா மருங்கொலியும் தமிழிலே ஒலியன்கள். சிங்களத்தில் ( n 11 டி மாற்றொலிகள். (1) (1) மாற்றொலிகள், ! டி 11 1) ஆகியவற்றில் வளைநாத்தன்மை (retroflexion) குறிப்பிடத்தக்க அளவு இல்லை; மிக இலேசாகவே உள்ளது. ஆதலால் மாணவர்கள் தமிழில் வரும் //tடி ஒலியை நுனிநா நுனியண்ண ஒலியாக, அதாவது (n) ஆக ஒலிக்கின்றனர். இதே போன்று // 111 ஒலியை நுனிநா நுனியண்ண ஒலியாக, அதாவது // 11 ஆக ஒலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் பேச்சில் தமிழில் வேறுபடுத்தி ஒலிக்கப்படும் சொற்கள் (கொன்னை கொண்ணை, கொல்லை கொள்ளை போன்றவை) ஒரே மாதிரி ஒலிக்கப் படுகின்றன. அதனால் உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும் இவ்விரு சொற்கள் ஒன்றாகிவிடுகின்றன. சொல்லின் நடுவே உயிர் ஒலிகளுக்கிடையே வரும்/p/ஒலியன் 142^P என ஒலிக்கப்படும். இதனைச் சிங்கள மாணவர்கள் பெரும்பாலும் (f) எனவோtbl எனவோ ஒலிக்கின்றனர். தமிழ்ச் சொற்களில் ஈருயிர்களுக்கிடையே வரும் (k) ஒலியன் (X) என ஒலிக்கப்படும். இதனைச் சிங்கள மாணவர்கள் தம் மொழியில் வரும் ( h 1 ஆகவோ! g ) ஆகவோ ஒலிக்கிறார்கள். இனிப் பொதுவாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது தடை
7

Page 123
ஒலிகளின் ஒலிப்பு வன்மை இருமொழிகளிலும் வேறுபடுகிறது. சிங்களத்தில் வரும் b dgjg ஒலியன்கள் எனக் கண்டோம். இவை இவற்றையொத்த தமிழ் மாற்றொலிகளை விட ஒலிப்பு வன்மை மிக்கவை. எனவே தமிழ் மாற்றொலிகளையும் சிங்கள மாணவர்கள் மிக்க ஒலிப்புடனேயே ஒலிக்க முற்படுகின்றனர். /V/ V ) சிங்களத்திலும் தமிழிலும் உண்டு. தமிழ்ச் சொற்களின் முதல் நிலையில் வரும் IV ஒலியைச் சிங்கள மாணவர்கள் ஒலிக்கும் போது தமது உதடுகளைக் குவிய வைத்து ஒலிக்கின்றனர். ஆதலால் அது தமிழ் ஒலியாகத் தோன்றுவதில்லை.
தமிழ் மெய்யொலியன்கள் கூட்டாக வரும்போதும் சிங்கள மாணவர்களுக்குச் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. சிங்களத்திலும் தமிழிலும் மெய்யொலியன்கள் பெரும்பாலும் இரட்டிப்பன. ஆனால் சிங்களத்தில் வரும் இரட்டிப்பு தமிழில் உள்ளதைக் காட்டிலும் விறைப்பும் நீட்டமும் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. இந்தப் பழக்கம் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் போதும் வருவது உண்டு. தமிழில் வரும் (tL), IT, டி), !! ஆகிய சேர்க்கைகள் பிரச்சினையாகும். இவற்றை அவர்கள் பெரும்பாலும் முறையே [其j, Irl, Inn), Ill 6rsa SaMå கிறார்கள். தமிழில் வெவ்வேறு ஒலியன்கள் சேர்ந்துவரும் போது அவற்றைச் சிங்கள மாணவர்கள் பெரும்பாலும் பின்னோக்கு ஓரினமாக்கி (regressive assinilation) salajafeir psott. Inetkuls, gyd Gafncil me:kkit ஆகிவிடுகிறது. சிங்களத்தில் ஒரிடமுக்கன் அல்லாத ஒலி+தடைஒலி வருவதில்லை. தமிழில் வருவது உண்டு. இவ்வாறு தமிழில் வரும் ஓரிட மூக்கன் அல்லாத ஒலியைச் சிங்கள மாணவர்கள் ஓரிட மூக்கன் ஆக ஒலிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக 18nbut "அன்பு" எனும் சொல்லை tambulஎன ஒலிக்கிறார்கள். சொல் வேறாகிப் பொருளும் வேறுபட்டுவிடுகிறது.
இதுகாறும் ஒப்பீட்டாய்வு அடிப்படையில் கூறிய சில கருத்துக்கள் தமிழ் மொழியை நமது நாட்டில் இரண்டாவது மொழியாகக் கற்பிப்பதற்குத் துணை செய்யும் எனவும் இவ்வாய்வு ஏனைய அறிஞர்களையும் இத்தகைய ஆய்வை மேற்கொள்ளவும் செம்மைப் படுத்தவும் தூண்டும் எனவும் நம்புகின்றோம்.
உசாத்துணை:
Coates, W.A.. De Silva.M.W.S. 196O. "The Segmental Phonemes of Sinhalese." University of Ceylon Review, 18. 163-75.
Fairbanks, G.H., Gair, J.W., De Silva, M.W.S. 1968. Colloquial
Sinhalese, Part 1. Ithaca, N.Y.
218

Gair, J.W., Suseenditrarajah, S., Karunatillake, W. S. 1978.
An introduction to Spoken Tamil, External Services Agency, University of Sri Lanka.
kailainathan, R. 1980. A Contrastive study of Sinhala and Tamil Phonology, M.A. diss. (unpublished) University of Kelaniya.
Karunatillake, W.S., Suseendirarajah, S. 1973. "Phonology of Sinhalese and Sri Lanka Tamil; A Study in Contrast and Interference," Indian Linguistics, vol. 34, No.3, poona.
Suseendirarajah, S. 1967. ADescriptive Study of Ceylon Tamil,
Ph.D.diss. (unpublished) Annamalad University.
219

Page 124
1992 மே மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டில் தமிழ் மொழியின் ஒன்றிணைக்கப்பட்ட வளர்ச்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
தமிழ் மொழி ஒன்றுக்கு அதிகமான நாடுகளில் தேசிய மொழி அல்லது ஆட்சி மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஒரு பன்னாட்டு மொழி என்பதையும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அது கல்வி மொழியாகப் பயன்படுத்தப் படுகின்றது என்பதையும் கருத்தில் கொண்டு பிராந்திய தமிழ் மொழியியல் மாநாடு பின் வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.
1. மேற்குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்க மொழிக் கொள்கையினை வகுத்து நடைமுறைப் படுத்துவோர் மத்தியில் இருந்தும் இந்த நாடுகளின் மொழியியலாளர் மத்தியில் இருந்தும் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒர் இணைப்புக்குழு அமைக்கப் படவேண்டும். இக்குழு அந்த அந்த நாட்டு மொழிகளுடன் தமிழ் மொழி கொள்ளும் உறவுக்குப் பாதகமற்ற வகையில் பின்வரும் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை ஒருங்கிணைப்ப தற்கும் தொடர்புறுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.
அ) (சமூக, இயற்கை மற்றும் பெளதீக) விஞ்ஞானம், தொழில் நுட்பம், சட்டம், நிர்வாகம் முதலிய துறைகளில் கலைச் சொற்களை உருவாக்குதல்.
ஆ) (சமூக, இயற்கை மற்றும் பெளதீக) விஞ்ஞானத்தைத் தமிழ் மொழிமூலம் கற்பிப்பதற்குரிய பாட நூல்களையும் ஏனைய துணை நூல்களையும் பரிமாறிக்கொள்ளுதல்.
இ) தற்காலத் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுவதற்குரிய இலக்கணக் கருத்தாக்கங்களையும் கலைச் சொற்களையும் தமிழில் உருவாக்குதல்.
220

ஈ) தற்காலத் தமிழுக்குரிய இலக்கணம், அகராதி, வழக்காறு பற்றிய கைநூல், அச்சகத்தினருக்குரிய நடை விகற்பக் கைநூல் போன்ற உசாத்துணைக் கருவி நூல்களை உரு வாக்குதல். ܐ
உ) நிறுத்தற்குறி முறைமை, புணர்ச்சி விதிகள், சொற்களின் எழுத்துக் கூட்டல், தமிழ் எழுத்தில் இருந்து ரோமன் எழுத்துக்கும் ரோமன் எழுத்தில் இருந்து தமிழ் எழுத் துக்கும் இயற் பெயர்களையும் கலைச் சொற்களையும் ஒலி பெயர்ப்புச் செய்தல் போன்றவற்றைத் தரப்படுத்துதல்.
ஊ) நவீன அச்சுச் சாதனங்களுக்கேற்ற புதிய புதிய எழுத்து வடிவங்களை உருவாக்குதல், அச்சிலும் தட்டச்சிலும் வரி முடிவில் சொல் முறிவுக் கோடு இடுதல், கணனிஅச்சில் சொற்களின் எழுத்துக் கூட்டலைச் சரிபார்ப்பதற்குரிய கட்டளை நிரலை உருவாக்குதல் போன்ற தமிழின் தற் காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய சாதனங் களை உருவாக்குதல்,
மேற்குறிப்பிட்ட அபிவிருத்திகள் தொடர்பான பிரச்சினை களைக் கல்விசார் நிலையில் விவாதிக்கவும் மேற்குறிப்பிட்ட இணைப்புக் குழுவுக்குப் பரிந்துரைகள் செய்யவும் பிராந்திய தமிழ் மொழியியல் மாநாடு மேற்குறிப்பிட்ட நான்கு நாடு களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுமுறையில் நிகழ்த்தப்பட வேண்டும்.
ஒப்பம் இட்டோர்
கலாநிதி, இ. அண்ணாமலை, இந்திய மொழிகளின் மைய நிறுவனம். மைசூர், இந்தியா,
பேராசிரியர், செ. வை. சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இந்தியா,
பேராசிரியர், கே. கருணாகரன்,
பாரதியார் பல்கலைக் கழகம், இந்தியா.
பேராசிரியர், இராம சுந்தரம், தமிழ்ப் பல்கலைக் கழகம், இந்தியா,
221

Page 125
2
2
பேராசிரியர், கி. அரங்கன், தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்தியா.
கலாநிதி, எல். இராமமூர்த்தி, மொழியியல், பண்பாட்டு நிறுவனம், பாண்டிச்சேரி, இந்தியா.
கலாநிதி, சுப. திண்ணப்பன், தேசிய கல்விக் கழகம், சிங்கப்பூர்,
கலாநிதி, கே. திலகவதி,
மலாயா பல்கலைக் கழகம், மலேசியா.
பேராசிரியர், சி. தில்லைநாதன்,
பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கை.
கலாநிதி, எம். ஏ. நுஃமான், பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கை.
பேராசிரியர், எஸ். பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இலங்கை.
பேராசிரியர், வி. நித்தியானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை.

A RESOLUTION
ON CO-ORDNATED DEVELOPMENT OF TAM IL BY THE REGIONAL CONFERENCE ON TAMILLINGUISTICS
IN COLOMBO, SRI LANKA.
On 7th, 8th and 9th May, 1992
Recognising the fact that Tamil is a trans-national language being an official or Notional Language in more than one country and a language used in education in India, Sri Lanka, Malaysia and Singapore, the Regional Conference on Tami Linguistics resolves that:
01.
A co-ordinating committee with members representing the above four Countries and drawn from those involved in formulating and implementing language policy for the respective Governments and from Linguists in these countries to co-ordinate and to bring about convergence, without prejudice to the convergence of Tamil with other languages in the respective countries, in the development of
(a) technical vocabulary in science (social, natural and physical), technology, law and administration
(b) exchange of text books and other reading ma
terials used for teaching science (social, natura and physical) through Tamil.
(c) grammatical concepts and terms in Tamil for
the description of modern Tamil,
(d) reference tools like grammar, dictionary, usage manual, style manual for printers etc., for modern Tamil.

Page 126
2名4
(e) standardised punctuation system, sandhi rules spelling of words, transliteration of proper names ard technical terms between Roman and Tamil Scripts.
(f) tools for meeting the contemporary needs of Tamil like new fonds for printing through conventional and electronic menas, hyphenation at the end of line in printing and typing, spel check software in word processing etc.,
02. the Regional Conference on Tamil Linguistics shall
be organised once in every two years by the above four countries in rotation in order to discuss the issues relating to the above tasks academically and to make recommendations to the above co-ordinating Committee.
Signatories
Dr. E. Annamalai, C1L, Mysore, India
Prof. S. V. Shanmugam, Annamalai University, India Prof. K. Karunakaran, Bharathiar University, India Prof. R. M., Sundaram, Tamil University, ridia Prof. K. Rangan, Tamil University, India. Dr. L. Ramamoorthy, PiLC Pondichery, India Dr. S. P. Thinnappan, NE, Singapore Dr. K. Thilagawathy, University Malaya, Malaysia Prof. S. Thillainathan, University of Peradeniya, Sri Lanka Dr. M. A. Nu human, University of Peradeniya, Sri Lanka Prof. S. Pathmanathan, University of Jaffna, Sri Lanka Prof. V. Nithiananthan, University of Jaffna, Sri Lanka

கட்டுரை வழங்கியோர்
இ. அண்ணாமலை எம். ஏ, பிஎச்டி இயக்குனர், இந்திய மொழிகளின் மைய நிறுவனம், மைசூர், இந்தியா
கி. அரங்கன் எம். ஏ, பிஎச்டி மொழியியல் பேராசிரியர், மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இாத்தினமலர் கயிலைநாதன் பி. ஏ (சிறப்பு), பிஃபில், எம்.ஏ. சிரேஷ்ட விரிவுரையாளர், மொழியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், இலங்கை
எல். இராமமூர்த்தி எம். ஏ, பிஎச்டி ஆய்வாளர், பாண்டிச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம், பாண்டிச்சேரி, இந்தியா.
கி. கருணாகரன் எம். ஏ, பிஎச்டி மொழியியல் பேராசிரியர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
. சண்முகதாஸ் பி. ஏ (சிறப்பு), பிஎச்டி தமிழ்ப் பேராசிரியர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
செ. வை. சண்மூகம் எம். ஏ, எம். லிற் பிஎச்டி மொழியியல் பேராசிரியர், மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்,
தமிழ்நாடு, இந்தியா
சு. சுசீந்திரராசா எம். ஏ, பிஎச்டி மொழியியல் பேராசிரியர், மொழியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், இலங்கை,
இராம சுந்தரம் எம். ஏ, பிஎச்டி மொழியியல் பேராசிரியர், அறிவியல் தமிழ், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா,
墨25

Page 127
சுபதினி ரமேஷ் பி. ஏ (சிறப்பு), எம். ஏ. விரிவுரையாளர், மொழியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.
சுப. திண்ணப்பன் எம். ஏ, பிஎச்டி தலைவர், தமிழ்த்துறை, தேசிய கல்விக் கழகம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்.
கே. திலகவதி எம். ஏ, பிஎச்டி
இணைப்பேராசிரியர், இந்திய ஆய்வுத் துறை மலாயா பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா,
சி. தில்லைநாதன் எம். ஏ, எம். லிற் தமிழ்ப் பேராசிரியர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை, இலங்கை.
எம். ஏ. நுஃமான் எம். ஏ, பிஎச்டி சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை, இலங்கை.
வ. ஜெயா எம். ஏ, பிஎச்டி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
2露6

பக்கம்
韋露
7
お6
36
51
55
55
58
89
90
9.
0.
103
03
34
60
96
207
பிழை திருத்தம்
auf பிழை திருத்தம்
3. Continuous Continuous
7 inte-rtanslatability inter-translatability 27 முன்னோடிகள் முன்னோடிகளுள்
2 அறி9து அறிந்து 2& இாண்டரம் இரண்டாம்
ஐன்றுடன் ஒன்றுடன் 27 றகரம் நகரம்
8 ஆனா) ) ஆனா O அனர்/ஆர் அனர்/அர் 21 46. 146.)
சசதனங்களில் சாதனங்களில் 22 மொழியில் மொழியியல் 19 நாடுட்ப்புற நாட்டுப்புற 3. வெளிப்டுவ வெளிப்படுவ
3 எழுவதற்கு எழுதுவதற்கு 6 பிரதானமான பிரதானமாக 35 வெளியாற்று வெளியாயிற்று
6 அடையாக் அடையாகக் (சண்முகமும் சண்முகமும் 32 நோகக்மாகும் நோக்கமாகும் 29 மொழியில் - மொழியியல்
227

Page 128


Page 129
| iii
 

அது தொடர்பான பொது
* Gm呜 ún、
|
|
Eք:I-IIԱյլն --Անի Պրոլել