கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கண விளக்கம்

Page 1

بالا، رق
விளக்கம்
ü、 *°
ם הנו 5 הן " " .
L
இ ■■
- ""======ت=_____

Page 2


Page 3

இலக்கண விளக்கம்
பண்டிதர் க. வீரகத்தி (இயக்குநர், வாணி கலைக் கழகம்)
பூரீ லங்கா புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,

Page 4
முதற்பதிப்பு: ஏப்ரல் 1968 திருத்திய மறுபதிப்பு : மார்ச் 1973
பதிப்புரிமை ஆசிரியருக்கு
வி ரூ. 3-75

பதிப்புரை
திருத்தியும், புதுக்கியும், விளக்கியும் வெளிவரும் இலக்கண விளக்கம்" இரண் டாம் பதிப்பை வெளியிட்டு வைப்பதில் நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிருேம்:
குறிப்பிட்ட தலைப்புகளைத் தேர்ந் தெடுத்து, விடயப்பரப்பைத் தருக்கரீதி யாக வகுத்திட்டு, நுண்ணிய ஆய்வு முறையில் புதுமையாக விளக்கஞ்செய்து, உளங்கொள்ளும் உதாரணங்கள் மூலம் தெளிவுசெய்து, இக்கால வழக்குகளை ஆங் காங்கே எடுத்துக்காட்டி, உயர்தரமாண வர்களும், இலக்கணப் பசியும் தாகமும் உடையவர்களும், மொழித்துறைப் பிரியர் களும் உவக்கும் வகையாக அமைந்துள் ளது இந்நூல்
சிந்தனையைக் கிழறிவிடும் கருத்துப் புதுமைகளையும், வாழையடி வாழையாக விடுபடாதிருந்த இலக்கணப்புதிர்கள் விடு விக்கப்பட்ட ஆக்கப்பாட்டையும் அறிஞர் உலகம் உவப்புடன் ஒப்புக்கொள்ளும் என் பதில் நமக்கு ஐயமில்லை.
அனைவரையும் நல்ல மனதுடன் நூலுட் பிரவேசிக்க ஆர்வமுடன் அழைக்கின்றுேம்.
பண்டிதர் திரு. க. வீ. அவர்கட்குத் தமிழன்னையின் வாழ்த்து ஆரக்கிடைக்க ஆண்டவன் அருள் தருக. அன்னையின் வாழ்த்தில் பண்டிதர் அவர்களால் இலக் கணத்துறை மேலும் வெளிச்சம் பெற்றுப் பிரகாசிக்கட்டும்!
பூரீ லங்கா புத்தகசாலை,
யாழ்ப்பாணம். பதிப்பகத்தார்
Ꮧ0- Ꭶ-78

Page 5
பக்கம் 1 - 9
I 0-14 35-سس-4 1l
36-37 40-44 45-47 47ー52 5 b5-سس-2 5 55ー57 58-59 60-62 63-65 67 حسب 66 77 --س-68 77-س-72 77-86 86-89 89-93 93-9 95-99 99 - 100
பக்கமும் விளக்கமும்
தமிழில் பெயர்ச் சொற்கள் திண்ை, பால் காட்டுதல்
(i) படர்க்கைப் பெயர்கள் (i) தன்மைப் பெயர்கள் (iii) முன்னிலைப்பெயர்கள் வினைச் சொற்களின் திணை, பால், இடஅமைப்பு வேற்றுமை
தமிழில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் முறைகள்
(ர்) எழுவாய்த் தொடர் அல்லது முதலாம் வேற்றுமை (i) செயப்படு பொருட்டொடர் (iii) காரண உடனிகழ்ச்சி (iV) ஏற்கும் தொடர்
(w) நீக்கல் ஒப்பீட்டுத்தொடர் (wi) உரிமைத்தொடர் (wit) ஆதாரத்தொடர்
py
. J o
· தொகைத்தொடர்கள் ஆகுமாறு
வினைப்பகுதிகள்
தொழிற்பெயர்கள்
வினையெச்சமாகுமாறு
பெயரெச்சம்
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினை
வியங்கோள் வினைமுற்று
எதிர்மறை வினையாக்கம் வினையாலனையும் பெயர்கள் தொகைத் தொடர்கள் ஆகுமாறு ஆகுபெயரும் அன்மொழியும் இருதிணைப் பொதுப்பெயர்
இடைச்சொல்
உரிச்சொல் அஃறிணை விரவுப்பெயர் அல்லது பால்பகா அஃறிணைப் முதனிலை எழுத்துக்கள் பெயர்
மொழியிறுதி எழுத்துக்கள்
101-104 இடைநிலை மயக்கம்
105 108
2 ست I 2-5 9-س-6
9 -- TI I
புணர்ச்சி உயிரிறுதி நிலை மொழியும் உயிர் முதல் வருமொழியும் சேருதல் இயல்புநிலை உடம்படு மெய்ப்புணர்ச்சி, குற்றியலுகரப்புணர்ச்சி பிற்சேர்க்கை
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்

(1) தமிழில் பெயர்ச் சொற்கள்
தின பால் காட்டுதல்
உயிர்களும், உயிரில் பொருள்களும் சிக்தனைத் திறனை அடிப் படையாகக்கொண்டு தமிழில் உயர்திணை, அஃறிணை எனப் பகுக் கப்பட்டுள்ளன மக்களும், தேவரும், நரகரும் உயர்திணை எனவும், ஏனைய உயிருள்ள - இல்லாத அனைத்தும் அஃறிணை எனவும் கூறு வர் கன்னூலார்.
ஆண்பால், பெண்பால், பலர்பால் என முப்பகுப்புக்களைக் கொண்டது உயர்திணை, அஃறிணை ஒன்றன்பால் பலவின் பால் என இருவகைப்படும். பாற்பகுப்பிலேயே எண்ணும் அடங்கி" யுள்ளது. ஆண், பெண், ஒன்றன்பால்கள் ஒருமை எண். பலரும்பலவும் பன்மை. இவ் ஐம்பாற் சொற்களும் படர்க்கைச் சொற்களாகும்.
தன்மை முன்னிலே இடச்சொற்களில் பாற்பாகுபாடு இல்லை. அவை ஒருமை, பன்மை மாத்திரம் குறிக்கும். பெயர்ச் சொற்கள் இந்த அடிப்படையிலேயே அஃதாவது இடத்தை ஒட்டியே தமிழில் அமைகின்றன.
இருதினைப் பெயர்களேவிட, இரு திணைக்கும் பொதுவான பெயர்களும் உண்டு. அவை திணைப் பொதுப்பெயர் அல்லது விரவுப்பெயர் எனப்படும். அடைமொழிகளைக்கொண்டும், சிறப்பு வினேகளைக்கொண்டும் அவற்றின் திணை, பால், எண் உணரப் படும்.
பெயர்கள் அனைத்திலும் வடிவம் கோக்கிப் பாற்பாகுபாட்டை அறிய முடியாது. நுண்ணிய இலக்கண வல்லாளராகிய சேை வ்ரையர், 'வினைச்சொற்போல இன்ன ஈறு இன்னபாற்கு உரித தெனப் யெயர்ச்சொல் ஈறுபற்றி உணரலாகாது” எனக் குறிப்பிட் டது முற்றிலும் உண்மையே,
இ.

Page 6
- 2 -
படர்க்கைப் பெயர்கள்
(அ) உயர்திணை ஆண்பால்:
னஃகானுெற்றே ஆடுஉ அறிசொல்’ எனக கூறும் தொல் காப்பியம். ஆண்பாற் பெயர்கள் னகர மெய்யை இறுதியாக உடையன என்பது இதன் கருத்து. அன்றி, னகரமெய்யை இறுதி யாக உடையன எலலாம் ஆண்பாற் சொற்கள் அல்ல, இன்னும் ஆண்பாற் சொற்கள் அஃனத்தும் னகர மெய்யீற்றல் மாத்திரம் ஆக்கப்படுவதும் இல்லை. வழக்கு நோக்கியே சிலபெயர்கள் அறி யப்படவேண்டி உள்ளன.
அ. னகர மெய்யீற்றுப் பெயர்கள்:
1. இடைச்சொற்கள் பகுதியாக எழும் சுட்டு வினுப்பெயர் களும் பிறவும். உ+ம். அவன், இவன், உவன், எவன், யாவன், பிறன், மற்றையான், அன்ன (வ)ன், ஒருவன் ஆதியன. می
I பொருள், இடம், காலம், சினை, குணப்பெயர்களைப்
பகுதியாகக் கொண்டு வருவன:-
1. -ன்/அன்: உ+ம் : செல்வன், இந்தியன், வசந்தடி9, பல்லன், வல்லன், உழவன். (அன் ஈறு ஆயினும் கொம்பன், முர்க்கன் என் பன திணை விரவுப் பெயர்களே).
2. -ன் வந்தன் :(உ+ம்): தன வந்தன், செல்வந்தன். திரு வந்தன், கீழ்வந்தன் ஆதியன. (தனம் வந்தவன், செல்வம் வந்தவன் என்பன இவ்வாறு மருவி இருக்கலாம். வந் தவன் - வந்தன்).
3. -ன்/காரன் :(உ+ம்):பணக்காரன், சீனுக்காரன், சித்திரக் காரன். வெள்ளேக்காரன், விளையாட்
டுக்காரன்

= 3 میسر
4. -ன்/அன்-*ஆன் :(உ+ம்): ஆழியான், நாட்டான், கொ டைக்கையான், பார்ப்பான், வண் ணுன் (ஆன் ஈறு ஆயினும் கொழும் பான், கண்டியான். வன்னியான் ஆதி 6 அஃறிணைப் பொருட்களையும்
உணர்த்தும்).
5. - ஆன் - மான்: (உ+ம்) அம்மான், கொம்மான்,
கல்விமான்.
6. -- ஆன் - வான்: (உ+ம்) : கனவான், குணவான்,
நீதிவான், பலவான்.
ஆம் திணைப் பொதுப்பெயர் (விரவுப்பெயர்) முன் "ஆண்" என்ற
அடைகொடுத்துப் பாலுணர்த்தல்: (உ+ம்) ஆண்பிள்ளை, ஆண்மகவு ஆண்குழந்தை, ஆண்
ஆசிரியர்.
திணைப் பொதுப்பெயரின் பின் சிறப்புவினை தந்து பாலு ணர்த்தல்: (உ+ம்) மூர்க்கன் அடிப்பான், குருடன் டோவான், முடவன் வருகிறன்
3.
ബം
ஈ. வழக்குநோக்கி உணர்வன: (உ+ம்) நம்பி, ஆடூஉ, விடலை, கோ, வேள், குரிசில், தோன்றல், அண்ணல்
ஆதியன.
உ. உவமை ஆகுபெயராய் ஆண்பால் குறிப்பது:
(உ+ம்:) யானே வந்தான் மூஞ்சூறு வந்தான், புலி வரு கிறன். குறிப்பு:-
1. னகர மெய்யீற்றுப் பெயர்கள் உயர்சொற் கிளவிகளா கும்பொழுது (மரியாதைச் சொற்கள்) ரகர மெய்யீற்றுப் பெயர்கள் ஆகின்றன. அரசன் - அரசர், அப்பன் . அப் பர், அண்ணன் - அண்ணர்.
*அன் விகுதியின் திரிபு ஆன் என்று கொள்வதிலும் ஆன் விகுதியின் குறுக்கம் அன் என்று கொள்ளுவதே பொருத்தமாகும்,

Page 7
- 4 -
2, னகர மெய்யீறு கெடாமலே அதன்மேல் ஆர் விகுதி
பெற்றும் மரியாதைச் சொற்களாக மாறுகின்றன. (உ+ம்) அண்ணனுர், வேந்தனர், மாமனர்.
8. (அர் விகுதி உயர்சொற் கிளவிக்காக உபயோகப்படுத் தப்பட்டதும். பன்மை உணர்த்த மேலும்விகுதி கொடுக்க வேண்டியதாயிற்று. (உ+ம) அரசர் - அரசர்கள், ஆசிரி யர் - ஆசிரியர்கள்.
4. பன்மை யுணர்த்தும் ஆர் விகுதி உயர்வுகருதி ஆண் பாற்சொல்லுடன் சேர்க்கப்பட்டதும், ஆர், பார் எனத் திரிக்கு பலர்பால் விகுதியாகி இருத்தல் வேண்டும். (உ+ம் அண்ணன் மார், மாமன்மார், தம்பிமார்,
(ஆ) உயர்திணைப் பெண்பால்:
*ள ஃகானுெற்றே மகடூஉ அறிசொல் ’ என்பர் தொல்காப் பியர். ளகர ஒற்றுடன் இகர விகுதியையும் சேர்த்துக் கூறுவர் பவணந்தியார். பெரும்பாலும் ஆண்பாற் சொற்களைப்போலவே பெண்பாற் சொற்களுமாகின்றன.
அ. ளகரமெய். இகர இறுதிகள்:
I. அவள், இவள், உ வள், எவள், யாவள், (பிறள்) அன்னுள்
மற்றையாள், ஒருத்தி ஆதியன. I, 1, + இ பொன்னி,செல்வி, பள்ளி, வசந்தி, கண்ணி, கண்பி, கன்னி, சிவப்பி, கள்ளி ஆதியன, (சிவப்பி, கள்ளி ஆதியன ஆகுபெயராய் அஃ றிணை ஒன்றன்பாலை (பெண்)க் கருதுவது முண்டு) 2 + இ|காரி வேலைக்காரி, பூக்காரி. பாற்காரி. 3, + இ/வதி: புனிதவதி, குணவதி, புண்ணியவதி,
பாக்கியவதி. ஆ. (உ+ம்): பெண்பிள்ளை, பெண்மகவு, பெண் ஆசிரியர்,பெண்
புலவர். இ. (உ+ம்): நோண்டி வந்தாள், குருடு அழுகிருள். ஈ: (உ+ம்:) தோழி, செவிலி, நங்கை ஆதியன
உ (உ+ம்): குயில் பாடுகிறள், பாவை பாடுகிறள் ஆதியன:

-- b سج
(இ) உயர்திணைப் பலர்பால்:
அ. ரகர மெய்யீறும். "கள் விகுதியும் பெற்றுவருவன:
a. அவர், இவர், உவர், தமர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர். எண்மர், ஒன்பதின்மர் (ஒன் பதுபேர்) பதின்*மர் மற்றையார் (மற்றையோர்) ஆதியன. b. அவர்கள், இவர்கள், உவர்கள், ஆசிரியர்கள், அரசர்கள், வணிகர்கள்(அர் மரியாதை கருதும் விகுதியாக மாறவே, அஃறிணைக்குரிய "கள்" விகுதிபெற்றுப் பன்மையுணர்த்த வேண்டியதாயிற்று) 1 ,
ஆ. மார் ஈறுபெற்று வருவன: (உ+ம்) அண்ணன்மார், தம்பி
மார், தங்கைமார். W
இ. விகுதிமேல் விகுதிபெறது அர் பன்மையுணர்த்தலும் உண்டு.
(உ+ம்): மாந்தர், மனிதர், (மாறுபாடாக) மக்கள்.
ஈ. ஆண்பன்மை, பெண்பன்மை எனப் பலர்பால் பகுப்பு இல்லை யாயினும், பெயர்ச் சொற்களைப் பொறுத்தவரையில் ஆண்பன் மையும், பெண்பன்மையும் உண்டு.
அண்ணன்மார், தம்பிமார், மாமன்மார்-ஆண்பன்மை. தங்கைமார். தமக்கைமார், தாய்மார் -பெண்பன்மை. அவன் - அவங்கள், அவளள் (-பேச்சுவழக்கு)
உயர்திணை ஆண் பெண் பொதுப்பெயர்
பல்துறைகளிலும், தொழில்நிலையங்களிலும் ஆணும் பெண் ணும் சமமாய்ப் பங்கு கொள்வதால் இவ்வகை விரவுப் பெயர்கள் இக்காலத்திற் பல்கி எழுகின்றன. இதனுல் 'அர் விகுதி பெரு வாழ்வு பெறுகின்றது.
- அர்: (உ+ம் கணக்காளர், காப்பாளர், பொறுப் பாளர், ஆய்வாளர், உரையாளர், பதிவாளர், பங்கா
* ஆர், மார் எனத் திரிந்தது மாத்திரமன்று, ‘அர்" என்பதும் சீமர்" ஆயிற்று, மகரமெய் எழுத்துப்பேறு எனக்கொள்க. னகர மெய் பின் திரிபு எனக்கொள்ளலும் ஒன்று,

Page 8
: . . سی. . .2
3. -இ/பதி:
4 -இ|சாலி:
5. - இ/ஆளி:
8. --இ/வாதி:
குறிப்பு: *ஆர்
- 6 -
ளர், எழுத்தாளர், தலைவர் கடுவர், கணக்கர், முதல்
வர், அதிபர், அமைச்சர், பிரதமர், உறுப்பினர், கலை ஞர், கவிஞர், ஒவியர், என வருவன.
(கணக்காள்என்பதே பொதுச்சொல். உயர்வுகருதியும், ஒலி, எளிமை வேண்டியும் " அர்' சேர்க்கப்பட்டதுபோலும்).
(உ+ம்) சாரதி, விமானி, தாதி, கருமி, மானி, காமி, கூத்தாடி, ஆங்காரி, தூங்கி, பொறுக்கி ஆதியன.
நீதிபதி, அதிபதி, ஆள்பதி, மடாதிபதி, தளபதி.
புத்திசாலி, மூளை சாலி, குணசாலி, பலசாலி. (சால். மிகுதிப்பொருள் தரும் ஓர் உரிச்சொல்)
கொடையாளி, நோயாளி, கடனுளி, முதலாளி, தொழிலாளி, கூட்டாளி, விருந்தாளி, பாட்டாளி. (ஆள் - ஆண், பெண், பொதுப்பெயர். ஒலி நயத்திற்காக இகரம் சேர்ந்திருக்கலாம்.)
வாதி, பிரதிவாதி, உலோகாயதவாதி, சந்தர்ப்பவாதி, அரசியல்வாதி, நியாயவாதி, தருக்கவாதி, அபேத வாதி, யதார்த்தவாதி. (வாதிப்பவன் வாதியென்ருகி, பின் ஒரு விகுதிபோற் கருதப்பட்டுச் சொற்களாக்கப்படுகின் னற.) .
’ என்பதன் குறுக்கமாகிய "அர்’ என்பதும், இகர
முமே இவ்வகைப் பெயர்களாக்கப்பட விகுதிகளாகின்
ه آ60 D می

- I -
(ஈ) அஃறிணைப் பெயர்கள்:
அ. 'து' விகுதி பெற்று வருவன: (உ+ம்) அது, இது, உது, அஃது, இஃது, உஃது, எது, யாது, ஏது; குறியது கெடி யது முதலான குறிப்பு வினைப் பெயர்கள்; ஒன்று (ஒன் + து - இவை ஒருமை எண்.
ஆ 'அ' > ஐ விகுதிபெற்று வருவன: (உ+ம்) அவை, இவை, உவை; எவை, யாவை; பிற, மற்றையன; நல்லவை, தீயவை; இரண்டு, மூன்று பத்து, ஆயிரம், கோடி ஆதி யன - இவை பன்மை, இ. அஃறிணை இயற்பெயர்கள் * (ஒருமைக்கும் பன்மைக்கும்
பொதுவானவை) பாலுணர்த்துமாறு: 1. கள் விகுதி பெற்று: (உ+ம்)
யானே - யானைகள், பசு - பசுக்கள் என ஒருமை யும் பன்மையும் காண்க. 2. floo (ylqut ô : (2- + (D)
யானை வந்தது - யாஃன ஒருமை யானை வந்தன - யானை பன்மை
3. எண்ணுப் பெயர்களை அடைமொழிகளாகப் பெற்று:
ஒருயானை இரண்டு யானே ஓர் ஆடு, பத்து ஆடு
குறிப்பு: A. அஃறிணைப் பெயர்களிலும் சிலவற்றுக்கு ஆண்
பெண் பகுப்பு உண்டு. B. இயற்பெயர்களுக்கு முன்
ஆண் அல்லது பெண் என்ற அடைகளைக் கொடுத்துப் பிரித்துக் காட்டலும் உண்டு.
A B ஆண் - பெண் ஆண் குரங்கு களிறு - பிடி பெண் குரங்கு G - '(I ஆண் புலி எருது - பசு பெண் புலி சேவல் - பேடு ஆண் விலங்கு கடுவன் - பெட்டை பெண் விலங்கு
* டால்பகா அஃறிணைப் பெயர்கள் எனவும் வழங்கப்படும்.

Page 9
س- 8 --س-
தன்மைப் பெயர்கள்:
ஒருமை - யான், நான் பன்மை  ையாம், காம், நாங்கள்
இச்சொற்கள் ஆண், பெண் பால்களுக்குப் பொதுவானவை தன்மைச் சொற்க்ளையும் இருதினைப் பொதுவானவை எனக் குறிப்பிடுவர் கன்னுலார். யான், காம் என்பன எழுத்து வழக்கி லேயே பெரும்பான்மையும் உண்டு. "நாங்கள்’ என்பது பிற்பட்ட கால வழக்காகும்.
நாம் என்பது பேச்சு வழக்கில் உயர்கிளவியாக முன்னிலைக்கு வருதல் அதிகம் உண்டு. சூத்திரர் எனக் கருதப்படுவோர் பிராமணர்களைக், கோயிற் குருமாரை நாம் என அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகுதியும் உண்டு. உயர்ந்த மக்கள் எனக் கருதப்படுவோரை இவ்வாறு அழைப்பது மரியாதை கருதிப் போலும்!
இன்னும் 'நாம் என்பது தன்மை ஒருமையாக வருதலும் உண்டு. 'காம் இப் பந்தியில் அடிக்கடி கூறுவதுபோல்’ எனச் செய்தி இதழ் ஆசிரியத் தலையங்கங்களில் வருவதனையும், உயர்க் தோர் எழுத்துக்களில் ஆங்காங்கே வருவதனயும் காண்க. ஏனைய மொழிகளிலும் இம் மரபு உண்டு.
முன்னிலைப் பெயர்கள்:
ஒருமை - நீ, நீர் பன்மை - நீவிர் நீயிர், எல்லீர், நீங்கள், தாங்கள்* முன்னிலைச் சொற்கள் இருதிணைக்கும் பொதுவானவை என இலக்கண நூல்கள் கூறும். உயர்ந்தவர்கள் உயர்வற்றவர்களை * நீ என வழங்குவர். நீ என்பது குறைந்தவர்களேப் பார்ததுக் கூறுவதாயினும் ஒப்புயர்வற்ற இறைவனையும் 'நீ எனவே தோத் திரப்பாடல் முன்னிலைப்படுத்தும். "அப்பன் நீ அம்மை நீ' என வருதல் காண்க. முன்னிலை ஒருமையில் 'நீர்' என்பது பிற்பட்ட வழக்காகும்.
* தாங்கள் என்பது படர்க்கைப் பெயராயினும் உயர்வு மிகுதி கருதி
முன்னிலக்கு வருவதும் உண்டு

- 9 -
"நீவிர்’ என்பது இலக்கண காலத்துக்கு மிக முற்பட்ட சொல் லாகலாம். அதன் பிறகே நீயிர்' வந்திருத்தல் வேண்டும். யகர உடம்படு மெய்பெற்ற அமைப்பு இதுவாகும்.
நீங்கள் என்பது பிற்பட்ட வழக்கு இச்சொல் அமைப்பை நோக்கும் பொழுது நீம்' என்பதே ஒரு காலத்து முன்னிலைப் பன்மை வழக்காக அமைந்திருத்தல் வேண்டும், பின்னரே 'கள்' விகுதிபெற்று நீங்கள் ஆகியது. மகரமெய் பன்மை உணர்த்தும். நாம், தாம் என வருதல் காண்க. வரலாற்று முறையிற் பார்க்கும் பொழுது முன்னிலைப் பன்மையாக ‘நீம்' என்பதே பழைய வழக்காதல் வேண்டும். அஃறிணைக்குரிய ‘கள் விகுதி உயர் திணைக்குரிய சொற்களுடன் சேருமுனபே, இருதிணைப் பொதுவான முன்னிலை யில் இடம்பெறுதல் படிமுறை வளர்ச்சிக்கு ஒத்ததாகும்.
எல்லீர் இப்பொழுது வழக்கில் இல்லை. எல்லீரும் என்பதற் குப் பதிலாக எல்லாரும் எல்லோரும் என்ற சொற்களே இப் பொழுது உண்டு. அதுமாத்திரமன்று, மூவிடப் பொதுச் சொல் லாகியும் அது வழக்குப் பெற்றுவிட்டது. நாம் எல்லோரும், நீங்கள் எல்லோரும், அவர்கள் எல்லோரும் என வரும்.
1. எல்லீரும் 2. எல்லாரும் 3, எல்லோரும் 'ஆர்' படர்க்கை
விகுதி ஆதலின், எல்லாரும் என்பது தன்மைக்கும், முன்னிலக் கும் வருதல் பிழை வழக்கெனக் கூறுவோரும் இல்லாமல் இல்லை.

Page 10
- 10 -
2. வினேச் சொற்களின் திணை, பால்,
இட அமைப்பு:-
வினைச்சொல் எனக் குறிப்பிடும்பொழுது, வினப்பகுதி, வினே யெச்சங்கள, வினைமுற்றுக்கள் என்பவற்றை அது கருதும். வினேட் பகுதிகளை எடுத்தலோசைப் படுத்திக் கூறுவதன் மூலம் அவை ஏவல் வினைகளாக மாறி. மு ைனிலை இடத்தையும், ஒருமை எண் ணையும், அவற்றுடன் எதிர்காலத்தையும் உணர்த்துகின்றன. அவை இருதிணைக்கும் பொதுவானவையும் கூட.
பெயர் , வினை எச்சங்கள் பால் விகுதிகளுடன் சேராத வினைக் குறைச் சொற்களாதலின் இருதிணை ஐம்பாலுக்கும், மூவிடததுக்கும் பொதுவானவை, கால இடைநிலைகள் பெறுதலின் அவ்வக் காலங் க%ளக் காட்டுவன ஆகும்.
பால் காட்டும் விகுதிகளுடன் சேர்ந்து, வினைச்சொல்லின் முழு அமைப்பாக ஆக்கம் பெறுவன வினைமுற்றுக்களே. தெளிவான ஈறுகளைக் கொண்டவை வினைமுற்றுக்கள் ஆதலின், அவற்றின் திணை, டால், எண், இட அமைப்பும் தெளிவாக உள்ளது.
(அ படர்க்கை வினைமுற்றுக்கள்:
(ஒருமை)
H, 'அன்' 'ஆன் விகுதிகளுடன் முடிவான உயர்திணைگ ஆண்பாற் படர்க்கை ஒருமை வினேமுற்றுக்கள் ஆகும் (உ+ம்) வந்தான், வந்தனன், வருகின்றன். வருகின் றனன. வருவான
0 * அள் " " ஆள் விகுதிகள் பெற்றவை உயர்திணைப் பெண்பாற் படர்க்கை ஒருமை வினைமுற்றுக்கள் ஆகும். (உ+ம்) வந்தாள், வந்தனள், வருகின்றுள், வருகின் றனள்; வருவாள். X
இ. 'து' 'று விகுதிபெற்றவை அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள். "டு விகுதியும் ஒன்றன்

- 1 -
படர்க்கையைக் காட்டும் எனக் கூறப்பட்டாலும் * அது
தெரிகிலேவினைமுற்று விகுதியாக வருவதில்லை,
(உ+ம்) வந்தது வருகின்றது - துo
போயிற்று - O
குறிப்பு: 1று விகுதி நிகழ்காலத்துக்கு வருதல் இல்லை. 'று
*டு' என்பன தகரத்தின் திரிபெனக் கண்டார் சங்கர நமச்சிவாயர்,
(பன்மை)
அர், ஆர்*, ப மார் ஈற்றுக்களைக் கொண்ட வினைமுற். றுக்கள் உயர்திணைப் பலர்பாலே காட்டுவன. (மார், 'ஆர்' என்பதன் திரியெனக்கொள்க. "மார் ஈற்று விண்முற்று பெயருடன் முடிவதன்றி வினையுடனும் முடியும்).
(உ+ம்) நடந்தனர், நடந்தார், கடக்கின்றனர், கடக் கின்றர்; நடப்பர், கடப்பார், சொல்லுப, கூறுப. (மார் ஈறு இன்றைய வழக்கிலில்ல).
* ஒன்றன் படர்க்கை தறடவூர்ந்த
குன்றிய லுகரத் திறுதியாகும் ? (தொல் - சேஞ -217)
தின்பது செல்வது என எதிர்காலத்துக்கு உதாரணங்கள் தரு வர் சேனவரையர். இன்று வழக்கில் இவ்வாறு கூறுவது இல்லை, (உ+ம்) ஈறுபெற்ற பொதுவினையே ஒருமைக்கும் பன்மைக்கும் வழக்கில் உண்டு.
(உ+ம்) உண்ணும் தின்னும் ஆகியன எழுவாய் ஒருமை பாயின் வினைமுற்றின் எண் ஒருமை எனவும், பன்மையாயின் வினைமுற்றும் பன்மை எண் எனவும் கொள்ளப்படும். (உ+ம்) மாடு மேயும், மாடுகள் மேயும். மாடு மேயும் என்ற உதா ரனத்தில் மாடு பால் பகா அஃறிணைப் பெயராதலின் பன் மையைக் குறித்து வழங்கப்படுதலும் உண்டு. ஆர் உயர்சொற் கிளவிக்குரிய விகுதியாக்கப்பட்டதும், உயர் திணைப்பன்மை உணர்த்த அதன்மேல் ‘கள்? விகுதியும் பெற
வேண்டியதாயிற்று. (உ9ம்) - ஆர்கள்; வந்தார்கள்.

Page 11
- 12 -
அ, ஆ, ஈற்றுக்கள் இறுதியான வினைமுற்றுக்கள் அஃ றிணைப் பன்மைக்குரியன. 'ஆ' எதிர்மறை வினைமுற் றுக்களுக்கே ஈற்று விகுதியாக வரும். 'அ' இரண்டிற் கும் வரும்.
(உ+ம்) நடக்தன, கடிக்கின்றன. எதிர்காலத்துக்கு நடப்பன, கடப்ப என உதாரணங்கள் தருவர் பழைய இலக்கண உரையாளர். அவை இன்று வழக்கிலில்லை.
குறிப்பு: உயர்திணைப்பன்மை அஃறிணைப் பன்மைகளுக்குப்
(ஆ)
தன்மை
குறிப்பு:
பொதுவான விகுதியாக "அவை என்ற சுட்டுச்சொல் இடம்பெற்று வருகின்றது. (உ+ம்) அண்ணனவை, தம்பியவை, உயிரவைநிலை.
தன்மை முன்னிக்ல வினைமுற்றுக்கள்:
இவ்வகை வினைமுற்றுக்கள் ஒருமை பன்மையைக் காட்டு
வன. இவற்றை ஆண் பெண்பாற் பொதுவினை முற் றுக்கள் எனக் குறிப்பிடலாம். தன்மையும் இருதிணைப் பொது எனக் கூறும் நன்னூலார் கருத்துப்படி இவை திணைப் பொது வினேமுற்றுக்களாகும்.
ஒருமை: (உ+ம்) - அல்: வருவல் (வருவேன்) இஃது வழக்கிழந்த வடிவம்.
அன்: வருவன் (வருவேன்) (படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்றக "வருவேன் பெருவழக்குப் ப்ெறதன்மை ஒருமை "வருவன்’ வழக்கொழிந்தது).
- என்: வருவென் (வருவேன்) (நாட்டுப் புறங்களில்
இடையிடையே இவ்வழக்கு இன்றும் உண்டு).
- என் வருவேன் (இவ்வடிவமே இன்றைய வழக்கில்
மிகுதியும் உண்டு-) −
கு, டு, து, று விகுதிகளே இறுதியாக உட்ைய உண்கு
கொண்டு; வந்து, வருது: சென்று, சேறு என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்றுக்களாகும்; இவை இன்று
வழக்கற்றன.

தன்மைப்
- 13 -
பன்மை
தன்மைப் பன்மை எனக் குறிப்பிடும்பொழுது, அஃது முன் னிலையையும், படர்க்கையையும் தனித்தனியாகவோ அல் லது கூட்டாகவோ உளப்படுத்தியும் நிற்கும். இவ்வாறு நிற்பன உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனக் கூறப்படும்,
(Φ + b)
- அம் : உண்டனம் } . - si in o a zer ri தன்மை+முன்னிலை இலக்கிய
ஆம 制 ఒ(TLTవి (கடையில் - எம் : உண்டனெம் w - ஏம் : உண்டேம் தன்மை + படர்க்கை இடம் -_@ உண்டோம் பெற்றன - கும் : உண்கும் - டும் . . உண்டும் வழக்கிழந்த - தும் : வந்தும, வருதும படர்க்கை வடிவங்கள
: சென்றும், சேறும்
(இ) முன்னிலே ஒருமை :
{ے
விஜனப்பகுதிகள் ஏவல் வினைகளாகமாறி ஒருமை வினை
முற்றுக்களாகும். (உ+ம்) கட வா, படி.
۰رگ
ஒருமை விகுதி பெற்றன (உ+ம்) ஐ; வந்தன, வருகின்றன, வருவை. ஆய்: வந்தாய், வருகின்றம், வருவாய். இ: உண்டி (உண்டாய்) - வழக்கொழிக்த இறப்பு. இ வருதி (வருகின்றம், வா)
குறிப்பு: முன்னிலை ஏவல் முற்றுக்களில் குறிப்புவினை அமைப்பு
இல்லை; இவை தெரிநிலை யொன்றிற்கே உரியன.
முன்னிலேப் பன்மை :
- இர் : - गोर्गी :
- மின் :
உண்டனிர்
உண்டீர் உண்மின் (ஏவற் பன்மை) விகுதிமேல் விகுதியாகக் *கள் பெற்று உண்மின்கள் எனவும் வரும். “காசணிமின்கள் உலக்கையெல்லாம்" (திருவா)

Page 12
- 14 -
- உம் : உண்ணும் ("உண்ணும், தின்னும் நீர் என உம் ஈற்ற வாய் வரும் பன்மை ஏவல் புதியன” எனக் கூறுவர் சங்கரநமச்சிவாயர். எனினும், உண்ணும் என்பது சிறிது மரியாதைப் பொருளில் முன்னில் ஒருமையையே குறித்தல் நடைமுறை வழக்காகும்.)
குறிப்பு: தெரிவில் விண்முற்றுக்கள் திணை, பால், எண், இடம் காட்டும் இம் முறைப்படியே, எதிர்மறை, குறிப்புவினை வினைமுற்றுக்களும் திணை, பால், எண், இடம் காட்டு கின்றன.
3. வேற்றுமை
அ-1. ஒரு பெயர்ச்சொல் "பொருள்நிலையில் வேறுபடுவது வேற்றுமை ஆகும். பெயரின் இயல்பான நிலை பொருளைக் குறித் தல், ஆகவே பெயர்ச்சொல் எனில் பொருட்சொல் என்ருகும். ஒரு பொருள் தானுெரு தொழில் புரியும் பொழுது அத் தொழிற்கு வினைமுதல் ஆகின்றது; இன்னுெரு வினை நிகழ்ச்சிக்கு இடனுகும் பொழுது அல்லது அவ்வினை நிகழ்ச்சியின் பயனை உறும்பொழுது செயப்படுபொருளாகிப் பொருள் நிலையில் மாறுபடுகின் றது; இவ்வாறு ஒரு தொழிலுக்கு எதுவாகும் பொழுதும், இன் னுெரு பொருளே ஏற்கும் பொழுதும், தன்னிடத்தில் உள்ள பொருள நீக்குல் பொழுதும், ஒன்றே பலவோ பொருளைத் தனக்கு உடை மையாக வைத்திருக்கும் பொழுதும், வேறு பொருள் அல்லது பொருட்களுக்குத்தான் இடமாகும் பொழுதும் தன்கில வேறுபடு கின்றது. வேறுபாடு-வேற்றுமை,
2. பொருள் நிலையில் வேறுபடுவது எனவே பொருளைப் பொறுத்தே வேற்றுமை துணியவும்படும், உருபு அடிப்படையில் அன்று. 'யாதன் உருபிற் கூறிற்ருயினும் பொருள் செல் மருங் கில் வேற்றுமைசாரும்" (தொல், சொல். கச். 107) என்பர் தொல் காப்பியனுர். இக்கருத்து இலக்கண உரையாளர் அனைவருக்கும் உடன்பாடானதே. w

- 15 -
ஆ1. ஒரு பெயர்ச்சொல் அல்லது பெயர்த்தன்மைப்பட்ட வேறுசொல் (வினையாலணையும் பெயர் ஆதியன) தனியே நின்று பொருள்நிலையில் வேறுபடுவது இல்லை. இன்னுெரு சொல்லுடன் தொடரும்பொழுதுதான் தொடரும் சொல்லின் தன்மைக்குத் தக பொருள்நிலையில் வேறுபாடு எழும். எனவே, வேற்றுமை என்பது சொற்ருெடர் அல்லது தொடர்மொழியின் அமைப்புப் பற்றிய இலக்கணம் ஆகும். மட்குடம் என்பது ஒரு வேற்றுமைத்தொடர்: மண் என்பது குடம் என்ற சொல்லுடன் சேர்ந்த உடனேயே பொருள்நிலையில் வேறுபட்டுவிடுகின்றது. அஃதாவது குடத்திற்கு ஏது மண் என்று எவருக்கும் தெரிந்துவிடும். ஆணுல் இலக்கண நூலோர் ஆல் என்ற உருபுதான் மண் என்ற பெயர்ச்சொல்லில் வேற்றுமையை ஏற்படுத்தியது என்று கூறுவர். உருபு வெளிப் பட்டு நிற்கும் தொடர் வேற்றுமை விரி எனவும், வெளிப்படாமல் நிற்கும் தொடர் தொகை எனவும் வேற்றுமைத்தொடர் இருவகைப் படுத்தப்படும். இலக்கண நூலோர் கருத்துப்படி ஒரு வேற்றுமைத் தொடர் முக்கூறுகளக்கொண்டது. அவை வேற்றுமை ஏற்ற பெயர், வேற்றுமைப்படுத்திய உருபு (மறைந்தோ வெளிப்பட்டோ). வேற்றுமையை முடிக்கும் சொல் என்பன ஆகும்.
2. இவ்வாறு ஆகும் வேற்றுமைத் தொடர்களை எழுவகைப் படுத்தி உரைப்பர் தொல்காப்பியனுர், படர்க்கைப்பொருளை ஒரு வன் தனக்கு எதிர்முகமாக்கி அழைப்பதையும், ஒரு வேற்றுமை எனக்கொண்டு, வேற்றுமை எண்வகை எனக் கூறவும்படும். “விளி கொள்வதன் கண் விளியொடு எட்டே” எனத் தொல்காப்பிய ணுரே கூறுவர். * விளி கொள்வதன் கண்’ (விளியும் கொள்ளப் படுமிடத்து) என்ற தொடரமைப்பை நோக்கும்பொழுது. விளியை வேற்றுமையாகக் கொள்வதில் தொல்காப்பியணுருக்கு உள்ள தயக் கம் புலனுகிறது, தயக்கத்திற்குக் காரணமும் உண்டு. தன்மை முன்னிலைப் பெயர்கள் விளிவேற்றுமையை ஏற்கா; படர்க்கை பெயர்களிலும் விளி. ஏற்காதவற்றை நன்னூலார் குறிப்பிடுவர் (சூ. 34).

Page 13
- 16 -
3. வேற்றுமைத் தொடர்கள் எண்வகை எனக் கூறப்பட் டாலும், எழுவாய்த் தொடரும் விளித்தொடரும் தவிர்ந்த ஆறு தொடர்களுமே (உண்மையான) வேற்றுமைத் தொடர்கள் எனக் கருதப்படும். "வேற்றுமை ஐம்முதல் ஆரும் ' என்பர் பவணந்தி யார். எழுவாய், விளித்தொடர்கள் தொகையாகவும் விரியாகவும் நிற்கமுடியாதன; அல்வழித் தொடர்களைப்போலவே சொற்புணர்ச்சி யில் மாற்றம் பெறுவன - இதனுல் இவ்விரு தொடர்களும் அல் வழித் தொடர்கள் ஆக்கப்பட்டன.
இ-1. ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஒவ்வொரு உருபு என வரையறை செய்யப்பட்டுள்ளது. எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை. வினைமுதல் ஆகும் திரிபில்லாத பெயரே " எழுவாயுருபு' என்பர் நன்னூலார், ஆனல், ஆனவன், ஆகின்றவன், ஆவான் என்பனபோல் அமையும் ஐம்பாற் சொற்களையும் எழுவாயுருபுகள் எனக்கொள்வாரும் உண்டு. இவ்உருபுகளை ஏற்கும்பொழுது, மனித னைவன், தாயானவள், பறவையானது எனத தொடர்கள் அமை யும், இவ்ஏற்பாடு தமிழ்மொழிக்கு இயல்பானதன்று. இஃதொரு செயற்கைப்பாடு. வடமொழிப் பழக்கதோஷம்).
2. அண்மை விளியில் (சமீபத்தில் உள்ள பொருளை அழைப் பது) விளிப்பெயர் ' தம்பி’ என இயல்பாக நிற்றலும் உண்டு; * தம்பீ!' என ஈற்றெழுத்து நீளலும் உண்டு; முனிவ’ என ஈற்றெ ழுத்துக் கெடுதலும் உண்டு; முனிவா என கெட்டுத் திரிதலும் உண்டு. சேய்மை விளியில் பெரும்பான்மையும் ஈறு திரிக்தே நிற்கும், அள பெடை பெறுதலுமுண்டு,
3, உருபுகள் என வரையறுக்கப்பட்டவற்றைத் தவிர வேறு சொற்களும் உருபுகளுக்குப் பதிலாக வருவதுண்டு. தடியால் தாக்கினுன் என்பதற்குப் பதிலாகத் "தடிகொண்டு தாக்கினன்' என்று கூறுவதும் உண்டு. " கொண்டு" என்பது சொல்லுருபு எனப்படும். −
4. சில சந்தர்ப்பங்களில் ஒரு வேற்றுமையின் உருபுக்குப் பதிலாக இன்னுெரு வேற்றுமையின் உருபு வருதலும் உண்டு. இவ்வாறு அமைவது உருபுமயக்கம் எனப்படும்

- 17 -
(ஈ) முடிக்கும் சொற்கள் பெயராகலாம்; வினயாகலாம். வினை யால் முடிவன காரக வேற்றுமை எனப்படும். எல்லைப் பொருள் தரும் ஐந்தாம் வேற்றுமையும், ஆரும் வேற்றுமையும் பெயர்ச் சொற்களைக் கொண்டு முடிவன என்றும், கான்கும், ஏழும் பெயரை யும் வினையையும் கொண்டு முடிவன என்றும், இவை தவிர்ந்தன வினைகளேயே கொண்டுமுடியுமென்றும் கூறுவர் பவணந்தியார். வினைகொண்டு முடிவனவற்றில் எழுவாய்த்தொடர் சிறுபான்மை பெயரையும் வினுவையும் கொண்டு முடிவன என்றும் அறிக.
(உ) தீயனவற்றைச் சிந்தியாதான், தடியால் அடியான், அவ னுக்குத் தரமாட்டேன், புற்றிலிருந்து வரவில்லை, எனது குடை யன்று, அறிவில் நுட்பமில்லை, ஆகிய எதிர்மறைத் தொடர்களில் பெயர்ச்சொல்லின் பொருள்கிலேயில் வேறுபாடின்ருயினும், இவ் எதிர்மறைத் தொடர்களும் வேற்றுமைத் தொடர்களாகவே அமைதி காணப்பட்டுள்ளன. 4.
தமிழில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் முறை
தமிழிற் பெயர்ச் சொற்கள் வேற்றுமைப்படும் முறை மிக எளிமையானதும் தெளிவானதுமாகும். சிக்கல் அதிகமில்லை. ஒட்டு நிலையில் அமையும் வினைச்சொற்கள்போல் இவையும் அமைந்து விடுகின்றன.
(1) உருபு பெற்றுக்கொள்ளாமலே, பெயர்கள், கொண்டு முடியும் சொற்களின் தகவுக்கும் தன்மைக்கும் தக வேற்றுமைப் படுவது ஒருமுறை. இதுவே ஆதிமுறையாதல் வேண்டும்."
(அ) பெயர்ச்சொல், பயனிலை கொண்டு முடியும்போது எழு வாயாக மாறிவிடுகின்றது. அது அவ்வாறு மாற எவ்வித உரு பையும் பெற்றுக்கொள்ளவில்லை. திரிபு அடையாத இப் பெயரே "எழுவாய் உருபு" என்பர் பவணந்தியார்.
(ஆ) தொகை வேற்றுமை எனக் கருதப்படுபவை அனைத்தும் இம்முறையிலமைவனவே. (ஆணுல். மூவிடப் பெயர்களும், குற் றியலுகரப் பெயர்கள் சிலவும் வேற்றுமைப்படும்போது ஏற் படும் உள்மாற்றம் தவிர்க்க முடியாதது). "பாடம் படிக்கிறேன்" என்ற வேற்றுமைத் தொடர் இம்முறையிலமைந்தது. “பாடத் தைப் படிக்கிறேன்" எனச் சொல்ல வேண்டியதில்லை, சொல் வாரும் இல்லை.
பெரும்பான்மையும் சங்க இலக்கியப் பாடல்களில் அமைத்த வேற்றுமைத் தொடர்கள் உருபுபெருத தொகைத் தொடர்கள் ஆதல் காண்க. தொல்காப்பியச் சூத்திரங்களிற்கூட தொகைத்தொடர் அமைப்புக்களே மிக மிக அதிகம்
இ. 3

Page 14
: - 18 -
(2) எழுவாயும்,விளியும் தவிர்ந்தன உருபுபெற்று வேற்று மைப் படுதல்°, தொடரமைப்பில் இதுவே "அடுத்தபடி எனலாம். (அ) பெயரும் உருபும் நேராக இணைதல்: அடி+ஐ= அடியை, மண் + ஆல் = மண்ணுல் நகை +கு = ககைக்கு, (ஆ) மூவிடப் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் போது எழுவாய் தவிர்ந்த வேற்றுமைகளில் அவற்றின் முதலெழுத்துக்கள் குறு கிவிடுகின்றன. தன்மை : யான் > என்"; யாம் > எம்*
கான் > என்; காம் > கம்* முன்னிலை: நீ>நின்; நீங்கள் > உங்கள்
நீர் >உம்; தாங்கள் > தங்கள் (முன்னிலை மரியாதைப் பன்மை) படர்க்கை: தான் > தன்*; தாம் >தம்". (இ) று, டு இறுதியாக உடைய கெடிற்ருெடர்க்குற்றியலுகரப் பெயர்கள் இரட்டிய பின்பே (உள்மாற்றம்) உருபேற்கின்றன. உம்: நாடு>நாட்டு*+ஐ ஆறு> ஆற்று+ஐ
° உருபுபெருமல் சில பெயர்கள் வேற்றுமைப்படா. 'தம்பியை அடித்தான்" என்னும் தொடர் அதே கருத்தில் தம்பி அடித்தான்" என வரமுடியாது. எனவே, இவ்விடத்து உருபுபெற்றேயாக வேண்டும் நாளடைவில் பொதுமை உணர்ச்சியால் பெயர்கள் அனைத்திற்கும் உருபு கொடுக்கப்பட்டுத் தொடராக்கும் முறை ஏற்பட்டிருத்தல் வேண்டும். வேற்றுமைகள் அனைத்தும் உருபுபெற்றுக் கொள்ளும் முறை ஏற்பட்ட பின் முந்திய, அதாவது உருபேற்காத வேற்றுமை அமைப்பு, தொகைத் தொடர்களாக்கப்பட்டன போலும்.
* இக்குறியீடு காணப்படும் சொற்களின் மாற்றம் இயல்பிலேயே ஆரும் வேற்றுமையைக் குறிக்கின்றன. என்குடை, நாட்டுப்பாடல், ஆற்றுப் பள்ளம் ஆதியன இயற்கையாகவே ஆரும் வேற்றுமைத் தொடர்களாகக் காணப்படுகின்றன. இவை பின்பு ஏனைய வேற்றுமை களே ஏற்கும்போது அந்தந்த வேற்றுமைக்குரிய உருபுகளைப் பெற்றுக் கொள்கின்றன; வேற்றுமையேற்ற ஒரு பெயர் ம்ேலும் வேற்றுமைப் படுதற்கு இவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். இக் கருத்திற் போலும், "ஆறனுருபும் ஏற்குமஷ்வுருபே' எனப் பவணந்தியார் கூறி குர்?

- 19 -
(ஈ) உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்களிற் சிலவும் வேற் றுமை ஏற்கும்போது இரட்டிக்கின்றன. உ-ம்: i. வயிறு>லயிற்று, கயிறு> கயிற்று, பயறு>பயற்று
(உ) சில மென்ருெடர்க் குற்றியலுகரப் பெயர்கள் மெல் லெழுத்து வல்லெழுத்தாக மாறி வேற்றுமை ஏற்கின்றன.
உ-ம்: மருந்து+பை=மருத்துப்பை 4 இரும்பு + பாதை = இரும்புப் பாதை
கரும்பு+வில்லிக கருப்பு வில்லி
(ஊ) சாரியை பெற்று உருபு ஏற்பன
சாரியைகள்:
அத்து (உ-ம்) மரம் + அத்து + ஐ = மரத்தை
அன் : , அது + அன் + ஐ = அதனை இன் : , சிங்கம் + அத்து + இன் = சிங்கத்தின்
693 உன் + அ + கு = உனக்கு
, கள் + உ +கு = கள்ளுக்கு : , இன்று+ஐ+கு = இன்றைக்கு
(எ) ஆரும் வேற்றுமைத் தொகைத் தொடர்கள் முன்பின்னுக மாறி நிற்றலும் உண்டு. இவற்றை, "முன்பின்னகத் தொக்க ஆரும் வேற்றுமைத் தொகை" என்பர் பரிமேலழகர். உ-ம்: நுனிக்கொம்பு, முன்றில், மேல்வீடு ஆதியன. (எ) உருபுகளைத் தவிரச் சொற்களும் உருபுகளாக வரும். உ-ம் கொண்டு தடிகொண்டு தாக்கினுன்.
உட்ைய: அவனுடைய புத்தகம். குறிப்பு
1, மகரஈற்றுப் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் பொழுது சாரியை
பெற்றே ஆகவேண்டும்.
உ-ம்: மரம் + அத்து+ஐ =மர்த்தை
குணம் + அத்து+ஆல் = குணத்தால் துன்பம் + அத்து+கு = துன்பத்துக்கு
மாடம் + அத்து+இல்+இருந்து = மாடத்திலிருந்து சிங்கம் + அத்து + இன் + கால் = சிங்கத்தின்கால் வானம் + அத்து + இல் = வானத்தில்

Page 15
- 20 -
2, ஒருபெயர் இரு சாரியைகள் பெறுதலும் உண்டு.
உ-ம்: பயம்+அத்து+இன்+ஆல்=பயத்தினுல், 3. சாரியை பெற்றபின் باقع பேருமல் மீற்பதும் உண்டு.
உ-ம்: சிங்கம்+ அத்து+இன்+கால் = சிங்கத்தின் கால், இன் இன்என்பதைச் சாரியையாகக் கொள்ளாது ஆறன் உரு பெனக் கொள்வர் வீரமாமுனிவர். 4. உருபின் பின் சாரியை நிற்றலும் உண்டு.
உ-ம்: ஊர்ப்புறத்திருந்தான். எழுவாய்த்தொடர் அல்லது முதலாம் வேற்றுமை
பெயர்ச்சொல் அல்லது பெயர்த்தன்மைப்பட்ட சொல், உருபு
எதுவும் பெற்றுக் கொள்ளாமல் பயனில கொண்டு முடியும் அமைப்பு "எழுவாய்த்தொடர்' எனப்படும். இத்தொடரமைப்பில், பயனிலையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பெயர்ச்சொல் வினைமுதல் ஆகி, எழுவாயாக மாறிவிடுகின்றது. இவ்வாறு அமையும் எழுவாய்த்தொடர் ஒரு முழுவாக்கியமும் ஆக லாம், அல்லது ஒரு வாக்கியத்தின் உறுப்பாகவும் அமையலாம் . முழுவாக்கியமாகும் எழுவாய்த் தொடர்கள் பெயர்ச் சொல்லையும், ஏவல், வியங்கோள் வினைமுற்றுக்களையும், ஏனைய வினைமுற்றுக் களையும், வினுச்சொல்லேயும் பயனிலையாகக் கொண்டு முடிவன ஆகும்.
உ-ம்: 1. நீ மனிதன் (மனிதன் பெயர்ச் சொல்)
2. நீ படி (படி ஏவல் வினைமுற்று)
3. நீ வருக வருக! வியங்கோள் வினைமுற்று)
4. நீ வருகின்றம் (வருகின்றம் : தெரிகில வினைமுற்று)
5. நீ யார் (யார்? ; வினுச்சொல்)
பால் விகுதி பெற்றுக் கொள்ளாத பெயரெச்ச, வினையெச்ச,
வினைச்சொற்களைக் கொண்டு முடியும் எழுவாய்த் தொடரமைப்புக் கள் ஒரு முழுவாக்கியத்தின் கூறுகளாக நிற்பன ஆகும். உ+ம்: அ. மழை பெய்த நேரம் குடையில்லை . மழைபெய்த என்பது
எழுவாய்த் தொடர்.

سس ۔ 21 -۔
ஆ. தம்பி வந்து கோயிலுக்குப் போய்விட்டான் - 'தம்பி வந்து என்பது எழுவாய்த் தொடர். .
குறிப்பு: ஒரு முழுவாக்கியமே இன்னுெரு முழு வாக்கியத் துக்கு உறுப்பாக நிற்றலுமுண்டு.
உ-ம்: இலக்கணம் கசப்பான பாடம் என்பது மிகப்பெரும் விளக்கத்
தவருகும் - இங்கு "இலக்கணம் கசப்பான பாடம்" ‘என்பது என்ற சொல்லுடன் சேர்ந்து முழுவாக்கியத்துக்கும் எழுவாயாக நிற்கிறது. இது எழுவாய்த் தொடரமைப்புப் பற்றியதன்று.
III
ஆனவன், ஆகின்றவன் ஆவான் எனவும் ஆனவள், ஆகின் றவள், ஆவாள் எனவும் பால்கோக்கி அமைக்கப்படும் இவையாதி யான சொற்களை எழுவாய் வேற்றுமையின் சொல்லுருபுகள்’ எனக் குறிப்பிடுவர் ஒருசிலர். எழுவாய் வேற்றுமை அமைப்புக்கு இவை வேண்டியன அல்ல. எழுவாய்த்தொடரும் ஒரு வேற்று மையாகக் கொள்ளப்பட்டதால், ஏனைய வேற்றுமைக்கு உருபுகள் உளவாதல் போல் எழுவாய் வேற்றுமைக்கும் வேண்டும் என்ற காரணத்தால் இவை சொல்லுருபுகளாக்கப்பட்டிருக்கலாம். எனி னும், பொருட்களுக்கு வரைவிலக்கணம் கூறப்படும் வாக்கியங் களில் இச்சொற்கள் அனேகமாக உபயோகிக்கப்படுகின்றன. மணி தன் ஆனவன், கல்வி ஆனது, பூமிஆனது, என வருதல் காண்க.
III எழுவாய்த் தொடரில் எழுவாய் தோன்றமல் நிற்பதுமுண்டு. முன்நிற்பவரைப் பார்த்து, “நீ பாடு’ என்பதற்குப் பதிலாக, “பாடு” என்கிருேம். 'பாடு” எனக் கூறினும் அஃது ஒரு எழுவாய்த் தொடரே ஆகும்; "நீ என்பது தோன்ற எழுவாய். இப்படியே 'தம்பி வருகின்றன? என வினுவுமிடத்து வருகின்றன்" எனப் பதிலளிப்பதும்; 'தம்பி’ என்பது தோன்ரு எழுவாய்.
IV
தனிப் பெயர்களைப் போலவே தொகைத் தொடர்களும் பய னிலை கொண்டுமுடியும்போது எழுவாய்களாக ஆகின்றன.
உ-ம்: எண்ணப் போத்தல் உடைந்தது.

Page 16
- 22 -
பூமால் கசங்கி விட்டது. கூலிவேல் இழிந்ததன்று. தலயின் இழிந்த மயிர் பெறுமதியற்றது. யானைத் தந்தம் பெறுமதியானது. குடத்து விளக்குத் தெரிவதில்லை.
செயப்படு பொருட்டொடர் அல்லது இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ’. பொருள், செயப்படு பொருள். இரண்டாம் வேற்றுமையைப் பொறுத்த வரையில் தொகைத் தொடர்களே அதிகம் பயிலுகின்றன. இரண்டாம் வேற் றுமை உருபு பெற்றுக் கொள்ளாத தொடர்களே ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் உண்டாம். சீன மொழியில் இரண் டாம் வேற்றுமை உருபே இல்லையாம். இரண்டொரு இடங்களில் உருபு சேர்த்துத்தான் சொல்லவேண்டியுள்ளது. 'தம்பியை அடித் தான்" என்ற தொடரை, தம்பி அடித்தான்' என்று சொல்ல இய லாது அல்லவா?
2
வினை கிகழ்ச்சிக்குக் காரணமான பொருள் செயப்படுபொருள் எனப்படுகிறது. ஒரு வினைகிகழ்ச்சிக்குக் காரணமாக அஃதாவது பல நிமித்தத் தொகுதி உண்டு. அந் நிமித்தத் தொகுதியில் ஒன்று செயப்படுபொருள் என்க. 'யோகன் கவிதை எழுதுகின்றன்’ என்ற தொடரில் எழுதுதல் வினை நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சிக்கான நிமித்தங் களில் கவிதை ஒன்று. எனவே 'கவிதை' செயப்படுபொருள் என்க.
"இரண்டா குவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற் றேன்று மதுவே", எனச் செயப்படுபொருள் தோற்றத்தைச் செறிவுறக் கூறி யுள்ளார் தொல்காப்பியனுர், எவ்வழி வரினும், “வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணுக் தோன்றுமவை பொரு ளாக வரும் எனக் கருத்துரைக்கும் சேணுவரையர், 'வினையே

- 28 -
வினைக்குறிப் பென்ருராயினும் அவற்றின் செயப்படுபொருளே கொள்ளப்படும்; அவ்விரு முதலிற்றேன்றுமென்றமையான், முதலா தற்கும் வேற்றுமைப் பொருளாதற்கு மேற்பன அவையேயாகலின்" எனத் தெளிவாக விளக்கியது காண்க.
உ-ம்: படத்தை வரைந்தான். (வினை)
பண்பை உடையான். (வினைக்குறிப்பு) (முதல்நிலை: காரணமான நிலை, முதல் காரணம்)
3
(அ) வினைமுற்றல் முடியும் இரண்டாம் வேற்றுமைத் தொடர் முழுவாக்கியமாகின்றது. "மோர் குடித்தான்' என்பது ஒரு முழுவாக்" கியம், தோன்ரு எழுவாயைக் கொண்டது.
(ஆ) எச்சங்களைக் கொண்டு முடியும் இரண்டாம் வேற்றுமைத் தொடர்கள். (1) எழுவாய் அடைகளாகவும் (2) பயனிலை அடைக ளாகவும் (3) செயப்படுபொருள் அடைகளாகவும் வாக்கியங்களுக்கு உறுப்பாக நிற்கும். உ-ம்:
(1) தனிக் கவிதைகள் பாடிய பாரதி காவியமும் தந்து புகழ்
பெற்றன். V
(2) கண்ணன், கவிதையைப் பாடிப் பாடிக் கண்ணுறங்கினுன்
(3) கன்னியர் மொழியை வென்றகரும்பைக், காளையர் வெட்டி
வீழ்த்திவிட்டனர். (இ) வினைமுற்றல் முடியும் இரண்டாம் வேற்றுமைத் தொட ரில், வினைமுற்று வினையாலணையும் பெயராகும்பொழுது ஒரு முழுவாக்கியத்தின் எழுவாயாகவும், அடைத்தொடர் களாகவும் அமைந்து விடுகின்றன. உ-ம்: ଅsuଅବତୀ வென்றவன் சுருதியையும் வென்றன்.
(ஈ) உருபும் பொருளும் உடன்தொக்க இரண்டாம் வேற்று மைத் தொடர்கள் எனக்கருதப்படுவன பொருட்களின் பெயர்களாகவும் அமைகின்றன. மைக்கூடு, பாடசாலை, தோசைச்சட்டி என வருதல் காண்க.

Page 17
- 24 -
காரண, உடனிகழ்ச்சித் தொடர்கள் அல்லது மூன்ரும் வேற்றுமை
ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன மூன்றம் வேற்றுமை உருபு கள் எனவும், கருவி, கருத்தா, உடனிகழ்வு அதன் பொருள்களென வும் பவணந்தியார் கூறுவர். கருவியை முதற்கருவி, துணைக் கருவி எனவும், கருத்தாவை இயற்றுதற் கருத்தா, ஏவுதற்கருத்தா எனவும் பகுத்தும், உடனிகழ்வுடன் சேர்த்து மூன்ரும் வேற்று மைக்கு ஐந்து பொருள்களெனக் கொண்டு அவற்றுக்கு விளக்கங் தக்துகொண்டிருப்பது மரபாகிவிட்டது. கருவி, காரணம், எது, நிமித்தம் என்பன ஒரு பொருட் சொற்களாதலின், கருத்தாவும் ஒரு வகையில் குறிப்பிட்ட முயற்சிக்குக் காரணமாதலின் மூன்றும் வேற்றுமைப் பொருளைக் காரணப் பொருளெனக் கூறுவது பொருங் தும். எனவே, மூன்ரும் வேற்றுமைத் தொடர் காரணத் தொடரா கின்றது. உடனிகழ்ச்சிப் பொருள் மூன்றம் வேற்றுமைத் தொட ரின் மற்றெரு அமைப்பாகக் கொள்ளப்படல் வேண்டும்.
all-ti) :
1. முதற்கருவில் அறிவாலாகிய நூல்.
. துணைக்கருவி - ஏட்டினுலாகிய நூல்
2
இயற்றுதற்கருத்தா - மக்களாலாகிய மணிமண்டபம்
*
ஏவுதற் கருத்தா - சிற்பியாலாகிய மணிமண்டபம்
உடனிகழ்ச்சி - தந்தையொடுவந்த மைந்தன்.
2
'மூன்ருகுவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி
வினமுதல் கருவி யனமுதற் றதுவே
ஒடு என்பதனையே இங்கு மூன்றம் வேற்றுமை உருபாகவும், வினைமுதல் கருவிகளைப் பொருளாகவும் கூறிய தொல்காப்பியனுர், 'ஆன்’ என்ற உருபையும் உடனிகழ்வுப் பொருளையும் வேறு சூத் திரங்களால் கொள்ள வைத்தார். "ஆன்" என்பதன் திரிபு 'ஆல்'

ஒடு" என்பதன் திரிபு "ஒடு", எனவே, தொல்காப்பியர் கூறிய ஒடு, ஆன் என்ற இரண்டுமே மூன்றம் வேற்றுமை உருபுகளாகும்
2--th: t) ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்" (ஊசியினுற் குயின்ற
தூசும் பட்டும்) (i) "தூங்கு கையான் ஓங்கு நடைய’ (துங்குகை காரணமாக
ஓங்கு கடையையுடையன) (i) "அவருரையான் அறிக. (பழைய உரைநடை) ஆய்வு:
மூன்றம் வேற்றுமைக்குரிய பொருள்கள் அனைத்துக்கும் பொது வான உருபாக ஒடு’ எனப் பெயரிய வேற்றுமைக்கிளவி எனத் தொல்காப்பியனுர் கூறியது மிகப்பொருத்தமே. எங்கும் "ஆன்" உருபு காரணப்பொருளிலேயே வருகின்றது. பேச்சு வழக்கையும் எழுதது வழக்கையும் சரியாகக் கவனிக்காத காரணத்தால் பழைய இலக்கண உரையாசிரியர்கள் “ஒடு’ எனபதை உடனிகழ்ச்சிப் பொருளுக்குரிய உருபாகக் கொள்வதற்கு எத்தனித்திருக்கின்றனர். இதனுலேதான், 'தூங்கு கையான ஓங்கு நடைய’ என்ற தொடருக்கு 'தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என உடனிகழ்ச்சிப்பொருள் கண்டனர். உண்மை அப்படியில்லை. யானையின் ஓங்கு கடைக் குக் காரணம் துங்குக்ையே என்க. 'ஆன் உருபு எவ்விடத்தி லாயினும் உடனிகழ்ச்சிப் பொருளில் வரவில்லை. மாருக, "ஒடு" உருபு, ஊசியொடு குயன்ற தூசும்பட்டும்’ எனக் கருவிப் பொருளி லும், மலையொடு போராடும் மதயாளை’ என உடனிகழ்ச்சிப் பொருளிலும் வருகின்றது. இன்றும்கூட மொழிவழக்கில் "ஒடு" இவ்விரண்டு பொருளிலும் வருதலைக்காணலாம்.
உ-ம்: 1. பணத்தொடு சாகிருன் பணத்தோடு சாகிருன் 2 தமிழொடு மாய்கிறன் தமிழோடு மாய்கிருன் 3. அறிவொடு பொலிகிறன் அறிவோடு பொலிகிறன்
என்ற இடங்களிலெல்லாம். பணம் காரணமாக, தமிழ்காரண மாக, அறிவு காரணமாக என்றே வருதல் காண்க.
இ. 4

Page 18
- 26 -
தொல்காப்பியர் இலக்கணம், தொன்மைக்கும் இன்றைக்கும் பொருந்தி மொழி வழக்கின் தன்மையைக் காட்டுதல் காண்க. இதனுலேதான் - "ஒடு" என்ற உருபு இருபொருளையும் தருதலால் - மூன்றம் வேற்றுமையை இரு வேற்றுமைகளாகக் கொள்ளாது ஒரு வேற்றுமையாகக் கூறியுள்ளார்.
"ஒடு" "ஒடு" "ஒடெ' என்பன ஒட்டு என்னும் வினைப்பகுதியி னின்றும் பிறந்தன எனக் கால்டுவெல் கூறுவது மிகப் பொருத்த மாகத் தெரிகிறது. அதையொட்டித்தான் நான் அங்கு போகவில்லை’ என ஒருவர் கூறும்போது அது காரணமாகத்தான் நான் அங்கு போகவில்லை' என்பது கருத்தல்லவா?
ஏற்கும் தொடர் அல்லது நான்காம் வேற்றுமை
கான்காம் வேற்றுமைக்கு உருபு "கு"; கோடல்(கொள்ளுதல்" ஏற்றல்) அதன் பொருள். இக்கோடற் பொருளைக் கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, ஆதியாகப் பிரித் துக் காட்டுவர் பவணந்தியார். இதற்கு இது' என்பதுபட நிற்றல் நான்காம் வேற்றுமைத் தொடரமைப்பு ஆகும்.
உ-ம்: கொடை ஏழைக்கு உணவு கொடு
பகை: இலக்கணத்துக்குப் பகை அவிவேகம் நேர்ச்சி: பேராசிரியர்க்குப் பின்னணி உண்டு. தகவு விவேகிக்குப் புதுமை. அதுவாதல்: நகைக்குப் பொன் பொருட்டு: கூழுக்குக் குற்றேவல் முறை: வாணிக்குத் தங்கை
2
"இதற்கு இது என அமையும் ஒரு வேற்றுமைக்குப் பொருளை
அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. "பொருட்டு முறைபாதியின்’ எனப் பவணந்தியார் கூறியதும் இது கருதிப் போலும்,

سے 27 سے
3
தொழிற் பெயர்கள் நான்காம் வேற்றுமைத் தொடராக அமை தல் சிறிது சிந்திக்கப்பட வேண்டியது. உண்ணுதற்கு வந்தான் பிடித்தற்கு ஓடினன், எழுதுவதற்கு இருந்தார்கள் என இத்தொடர்கள் அமையும். இவற்றை முறையே, உண்ண வந்தான், பிடிக்க ஓடி னுன், எழுத இருந்தார்கள் எனச் செயவென்னெச்சங்களாகக் கூற லாம். இவ்விடங்களிளெல்லாம் செயவென்னெச்சத் தொடர்களைக் கையாளுவதே எழுத்து நடைக்கு எளிமையும் இனிமையும் தருகின்
DSls
செயவென்னெச்சத் தொடர்களிலிருந்து வினைப்பகுதிகள் தொழிற்பெயர்களாக வழங்கிய ஒரு நிலையை அறியக்கூடியதாக வுள்ளது. இன்றும் சில வினைப்பகுதிகள் தொழிற்பெயராகப் பொருள் தருதலும் அறிக. கட்டு, ஊற்று, சுற்று எனக் காண்க. இவை, கட்டுக்கு, ஊற்றுக்கு, சுற்றுக்கு என நான்கனுருபை ஏற்கும்.
நீக்கல், ஒப்பீட்டுத் தொடர் அல்லது ஐந்தாம் வேற்றுமை
ஒரு பொருளே இன்னெரு பொருளுடன் ஒப்பிட்டு உயர்வும் தாழ்வும் பார்ப்பது இவ்வேற்றுமையின் கோக்கமாகக் கூறப்படுகிறது
*ஐந்தாகுவதே
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது என்னும் அதுவே" (தொல்-சொல் கல்-78) இதனின் இற்று இது-இதனில் இத்தன்மைத்து இது-இதனிலும் பார்க்க இத்தன்மைத்து இது. 'இன்' உருபு. (உ+ம்) 1. மல்லிகையின் காறும் மருக்கொழுந்து
(மல்லிகையிலும் பார்க்க காறுவது மருக்கொழுந்து) 2. ஆவின் இழிந்தது எருமை
(ஆவிலும் பார்க்க இழிந்தது எருமை) முதல் உதாரணத்தில், "இன்" உருபு ஏற்ற பெயராகிய மல் லிகை மருக்கொழுந்துடன் ஒப்பிடப்பட்டு, நாற்றங் குறைந்தது என்ற உண்மை சொல்லப்படுகின்றது.

Page 19
- 28: -
அடுத்ததில், உருபு ஏற்ற பெயராகிய 'ஆ' (பசு) எருமையுடன்
ஒப்பு நோ கின்றது.
க்கப்பட்டு, எருமையிலும் உயர்ந்தது எனக் கூறப்படு
பின்வந்த கன்னூல், "ஐந்தாவதனுருபு இல்லும் இன்னும், நீங் கல், ஒப்பு. எல்லை, ஏதுப் பொருளே’ (சூ. 299) என ஐந்தாம் வேற்
றுமைக்கு விளக்கம் தரும்.
உருபு: 'இன்', "இல்". இல் என்பதன்திரிபு 'இன்' ஆகும். பொருள்:
நீங்கல்: சமயத்தில் நீங்கின்ை
ஒப்பு :
பனையிற்கரியது காக்கை
எல்லே - கரவெட்டியின் வடிக்கு வதிரி
6T@
ஆய்வு:
1 அ.
கல்வியிற் பெரியன் கம்பன்
3
மேல் உதாரணங்களை நோக்கும்போது ஐந்தாம் வேற்று மையின் அமைப்பிலும், முறையிலும் சில இடர்ப்பாடு கள் தென்படுகின்றன. உருபேற்கும் பெயருக்கே பொருள் குறிப்பிடுவது மரபு. இங்கே எதிர்மாறன ஒரு போக்குக் காணப்படுகின்றது. வேற்றுமை உருபேற்றது ‘சமயம்’. நீங்குதற் பொருளுக்குரியவன் மனிதன்; சமயம் வேற்று மைப்படவில்லை. எனவே ஐந்தாம்வேற்றுமைப் பொருள் நீங்கல் அன்று, நீக்கல்’ ஆகும். இலக்கணச் சுருக்கம் இவ்வாறே கூறும். இதை மறுத்து, மனிதன் நீங்கும் பொழுது, சமயமும் அவனை விட்டு நீங்குகின்றதுதானே என வாதிப்பது கொழும்பிலிருந்து வருகின்றவன் என் னிடமிருந்து கொழும்பு போகின்றது" எனக் கூறுதற்கு ஒப்பாகும். (மேற்படி கன்னூற் சூத்திரத்தில் நீக்கல் நீங்கல் ஆகியது ஓரளவுக்காவது எதுகைத்தொடை நோக்கிய விகாரமென அமைதி காண்போம்).
ஒப்பு உவமத்தொடரால் பெறக்கூடியது. அதற்கென வேற்
றுமை வேண்டியதில்லை. ஒப்பிட்டறியும் உயர்வுக்கும்,

FF.
II.
தாழ்வுக்குமே இவ்வேற்றுமை கொள்ளப்படல் வேண்டும். தொல்காப்பியனுர் கருத்தும் * அதுவே என்க.
எல்லைப்பொருள் நான்காம் வேற்றுமையில் அடங்கக் கூடியது. எல்லேப்பொருளில் இன் வருகின்றதெனின் அது உருபு மயக்கம் எனக் கொள்ளப்படலாம். இன்றேல் இது இலக்கண உரையாளர் மயக்கமாகும்.
ஏதுப் பொருளுக்குப் தரப்படும் உதாரணங்களும் உருபு மயங்கி நிற்பவையே. இதற்கெனத் தனிவேற்றுமை வேண்டா.
இவ்வேற்றுமை அமைப்பை உற்றுநோக்க ஓர் உண்மை தெளிவாகும். "இல்" என்ற உருபு இங்கும் இடப்பொரு %ளயே தருகின்றது என்பதே அவ்வுண்மை. முடிக்குஞ் சொல்லும், கின்று, இருந்து ஆதியான சொல்லுருபு களுமே நீங்கற் பொருளைத் தருகின்றன, ஆகவே எழாம் வேற்றுமைக்கே இப்பொருாேயும் கொடுத்து, (1) பொருளை வைத்திருப்பது (2) வைத்திருக்கும் பொருளை நீக்கிவிடுவது என்ற இரண்டையும் பொருளாகக் கொள்வதில் மொழி கட்டம் எதுவும் இல்லை. இரண்டாம் வேற்றுமையின் பொருள்களில் ஒன்றக நீக்கற் பொருள் (விலகல்) கொடுக் கப்படவில்லையா?
* ஐந்தாம் வேற்றுமையின் பொருண்மை கூறிய தொல்காப்பிய ஞர் ஒப்பிட்டுப்பார்ப்பதற்கான அடிப்படைகள் (தன்மை) இவை எனக் கூறியுள்ளார் (சூ. தொல், சொல். கல், 79) அவற்றுள் ஒன்று 'திர்தல்" என்பதாகும். ‘தீர்தல்" என்பதற்குக் கருத்து நீங்கல் ஆகக் கொள்ளப் பட்டதன்மூலம் இளம்பூரணர் இவ்விடர்ப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார் ன்னக் கருதமுடியும் அவர் கருத்தொழுகல் பவணந்தியாருக்கு விதி யானது போலும் தீர்தல் என்பதற்குக் கருத்து அதுவன்று. "நீ ஆள் தீர்ந்தவன்" என்ற பேச்சு வழக்கில் அதன்பொருள் பளிச்சிடுகிறது. விர கன், ஆழமானவன் என்பது கருத்து. ‘தீர்தல்" குறிப்பிட்ட ஒரு பண்பு?
‘ஒருவழி ஒன்று நீக்குதற்கு இடமாகியும்"
எனக் கல்லாடனர் கூறுவதும் காண்க: (தொல் சொல் கல், சூ. 63 உரை)
ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கத்தில் இவற்றைச் சொல்
லுருபு என எழுதுவர்.

Page 20
- 30 -
உரிமைத் தொடர் அல்லது ஆரும் வேற்றுமை
1.
ஆறம் வேற்றுமைத் தொடரமைப்பு ஏனைய வேற்றுமைகளி லிருந்து வேறுபட்டது. இவ் வேற்றுமையில் ஒருமைக்கும், பன் மைக்கும் வெவ்வேறக உருபுகளுண்டு. முடிக்கும் சொல் ஒருமை யாயின் அது (ஆது*) என்பதும், பன்மையாயின் ‘அ’ என் பதும் உருபாகும். அஃறிணைப் பொருள்தரும் முடிக்கும் சொற் களுக்கே இவ்வரையறை. முறையே எனதுகை, என கைகள் (என் னுடையன கைகள்) எனத் தொடர் அமையும். என்கை, என்கை கள் எனத் தொகைத் தொடர்கள் ஆகும்.
2
முடிக்கும் சொற்கள் உயர்திணையாயின் உடைய" என்ற சொல் லுருபு பெற்றுத் தொடரமையும், "என்னுடைய மகன்’, ‘என்னு டைய மாணவன்’ என வரும், ‘என்மகன்’ என் மாணவன்" எனத் தொகைத் தொடர்கள் ஆகும். ஏதாவது ஓர் உருபு கொடுத்துச் சொல்லவேண்டுமென்றல், எனக்கு மகன்", எனக்கு மாணவன் என வரும். பவணந்தியார் நான்காம் வேற்றுமைக்குக் கூறிய பொருள்களில் முறைப் பொருளில் இத்தொடர்கள் ஆகின்றன. இவ் அமைப்பை 'அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி னதுவெ னுருபுகெடக் குகரம் வருமே" எனத் தொல்காப்பியர் கூறு வர். "அதுவென்னுருபு கெட' என்பதற்கு அவ்வுருபு அவ்விடத்தில் வராமை எனக் கூறுவர் சேணுவரையர்.
− 3
இன்றைய வழக்கில் முடிக்கும்சொல் அஃறிணையோ, உயர் திணையோ "உடைய’ என்ற சொல்லுருபைச் சேர்த்துக் கொள்ளலே பரவலர்கக் காணப்படுகிறது. என்னுடைய மாடு", என்னுடைய புத்தகங்கள்’, ‘என்னுடைய மகன்’ என அமைகின்றன. முடிக்கும் சொல் உயர்தினையான தொடர்கள் எழுத்து வழக்கில் என் தங்கை’, "என் மனைவி', 'என் மாணவர்கள்’ என்றே தொகைத் தொடர்களாக அமைகின்றன; எழுதப்படுகின்றன.
ஆய்வு:
(அ) கன்னூலார் ஆரும் வேற்றுமைக்குக் கூறிய இலக்கணத் தின்படி, ஆறும் வேற்றுமைத் தொடர்கள், குறிப்பு வினைமுற்றுக்

- 31 -
களைப் பயனிலைகளாகக் கொண்ட எழுவாய்த் தொடர்களின் மறு தலை அமைப்புக்களாகவே தென்படுகின்றன. உ-ம்:
1. புத்தகம் எனது (எனது குறிப்பு வினைமுற்று)
எனது புத்தகம் (ஆரும் வேற்றுமைத் தொடர்)
2. புத்தகங்கள் என்னுடையன ('என்னுடையன” - என - கு. வி. மு.)
என புத்தகங்கள் (ஆரும் வேற்றுமைத் தொடர்)
ஒருமை வினைமுற்றுக்கான 'து' விகுதியும், பன்மை வினை முற்றுக்கான 'அ' விகுதியுமே ஆரும் வேற்றுமையின் ஒருமை விகுதியும், பன்மை விகுதியுமாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. எனவே, ஆரும் வேற்றுமை என ஒரு தனி வேற்றுமையை வைத் துக் கொண்டிருப்பது தொடரமைப்புப் பார்வையில் எவ்வித மேல திக பயனயும் தரவில்லை. அன்றியும். ஆரும் வேற்றுமை அமைப்பு, உயர்திணை முடிக்கும் சொற்களைக் கொண்ட தொடரமைப்பை உள்ளடக்கவுமில்ல்ை.
"உடைய' என்ற சொல்லைக் கொடுத்து அமைக்கப்படும் தொடர் களிலுள்ள பொருத்துக்கள் எதுவாவது ஆரும் வேற்றுமை அமைப்பு என்று சொல்லுவதற்குமில்லை. "உடைய’ என்ற சொல்லுருபு பெற்று அமையுந் தொடர் மூன்று சொல் இருசக்தியாகி, முன்னது எழு வாய்த் தொடரும், பின்னது குறிப்பு வினைப் பெயரெச்சத் தொடரு மென்பர் சங்கர நமச்சிவாயர். அவர் கருத்துப்படி அது ஓர் ஆரும் வேற்றுமைத் தொடரும் அன்று. “அவனுடைய மகன்’ என்பதில், 'அவனுடைய எழுவாய்த் தொடர்; உடைய மகன்’ குறிப்புவினப் பெயரெச்சத் தொடர். 锋
(ஆ) அஃறிணை ஒருமைக்குக் குறிப்பிட்ட 'அது' என்ற உருபு, உயர்திணை ஒருமைக்கும் வந்து இலக்கிய வாழ்வு பெற்றுவிட்டது. “நினது அடியாரொடல்லால்” என மணிவாசகனுர் பாடுதல் காண்க. "அரனது தோழன்” என்றே பெரியபுராணமுங் கூறுகின்றது. ஆரும் வேற்றுமை அமைப்பு வேண்டுமென வாதிடுவோர் இப் புதிய பிரயோகங்களை ஏற்றுக் கொண்டு, இதன்படி, "எனது மகன்' எனது மகள்" என வரும் பேச்சுத் தமிழையும் ஏற்றுக் கொண்டு உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவான அமைப்பாக, ஆம், வேற்றுமை அமைப்பை மாற்றி விடுதல் வேண்டும்.

Page 21
- 82 -
ஆதாரத் தொடர் அல்லது ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை உருபு கண், கால், இடம், இல், உள், மேல் கீழ் ஆதியன ஆகும். இடப் பொருள் தரும் பல சொற்களையும் ஏழாம் வேற்றுமை உருபுகளாகக் குறிப்பிடுவர் நன்னூலார். ஒரு பெயர்ச் சொல், அல்லது பெயர் குறிப்பிடும்பொருள் இன்னுென் றுக்கு ஆதாரமாக உள்ளது என்ற இயைபை ஏழாம் வேற்றுமைத் தொடரமைப்புக் காட்டும். இந்த இடத்தொடர்பு, தற்கிழமை, பிறி தின் கிழமை எனப் பகுக்கப்பட்டுள்ளது.
ஆரும் வேற்றுமைக்குரிய உரிமைத் தொடர்புகளையும், இவ் வேற்றுமைக்குரிய இடத் தொடர்புகளையும் தற்கிழமை, பிறிதின் கிழமை எனப் பகுத்துப் பார்ப்பதில் நுட்பமேதுமில்லை."
D-f:
ஞானியின் கண் அமைதி - பொருள் இட மாயிற்று.
பள்ளியிற் படிப்பு - இடம் மாதத்தில் இருபதுகாள் - காலம் 9 வாணிகையில் வினை - சினை s இளமையில் முறுக்கு - பண்பு , பாடுவதில் ஆர்வம் - தொழில் s
குறிப்பு: 8
நன்னூலார் கூறிய ஏழாம் வேற்றுமை உருபுகளைத் தவிர 'பக்கல்’ என்பதும் ஏழாம் வேற்றுமை உருபாக வருகின்றது. உ-ம்: என் பக்கல் வந்தான். சாசனத் தமிழில் ‘பக்கல்’ என்ற சொல் ஏழாம் வேற்றுமை உருபாக வருதலைச் சுட்டிக்காட்டுவர் வரலாற்று இலக்கண ஆசிரியர்கள். ܚ
பேச்சு வழக்கில் வேற்றுமை
"சபை சந்தி தவிர, மெத்தப் படித்தவர்களும் கூட, கிராமப்புற மக்கள் பேசுவதைப் போலவே பேசுகின்றர்கள். சாதாரண மக் கள் பேசும் வேற்றுமைத் தொடரமைப்புக்கள், திரும்பச் சிந்திக்கும் போது மிகச் சுவை பயப்பனவாயும் மொழியியலாளரின் ஆராய்வுப் பசிக்கு உணவாகவுமுள்ளன.

- 33 -
முதலாம் வேற்றுமை
அவர்கள் வந்துவிட்டார்கள் (எ. மொ.) அவை வந்திட்டினம் (பே, மொ.) அது(கள்) வந்திட்டுது(கள்) (பே. மொ.)
குறிப்பு:
உயர்திணை வினைச் சொற்களுக்குப் பதிலாக, அஃறிணை வினைச் சொற்களைக் கூறும் வழக்குப் பேச்சுமொழியிற் பெருகிக்கொண்டு வருகிறது. சிவலிங்கம் பள்ளிக்கூடத்துக்கு வந்துதா?’ என ஒருவர் கேட்கின்றர். இப்ப இதிலை கிண்டுது, போய்விட்டது போல’ என மற்றவர் விடை சொல்கின்றர். இப்படித்தான் அநேகமான வினைச் சொற்கள் பேசப்படுகின்றன.
இரண்டாம் வேற்றுமை:
தொகைத் தொடர்களே பேச்சுவழக்கிலும் அதிகமாகவுண்டு
உத்தியோகம் பார்க்கிருன், ܫ தண்ணீர் இறைக்கிறன், பால் கறக்கிறன் கெல்லு வெட்டுதல்; வயல் உழுதல்; தோட்டங் கொத்துதல்; என்றெல்லாம் காண்க. இரண்டாம் வேற்றுமை "ஐ' உருபுக்குப்பின், சாரியையோ, வேறு எதுவோ சேர்த்துச் சொல்லும் வழக்கு இல்லை. காரணம், ஒலி எளிமை மிக்க 'ஐ' என்பது உருபாக அமைவதே. பாலைக் கறந்து கொண்டுவா-இவ்விரித் தொடர் அப்படியே பேசப்படுகின்றது. சிறுவர்கள் இதனை எழுதும்போது (ஒரு சிலர்). "பாலய்க்கறந்து கொண்டுவா’ என எழுதி விடுகின்ருர்கள். "ஐ கூட்டொலி என் பதால் இவ்வாறு எழுதுகின்றர்கள் போலும் (ஐயர் - அய்யர்).
மூன்ரும் வேற்றுமை:
(அ) கையாற் குத்தினுன் (எ. மொ)
கையால் குத்தினுன் (பே. மொ.) கையாலே குத்தினுன் (இது பிரிநிலை ஏகாரம் அன்று.) இ. 5'

Page 22
(ஆ) மண்ணுற் சோருக்கினன் மண்ணுல் சோருக்கினுன் மண்ணுலே சோருக்கினுன்
(இ) தம்பியோடு வந்தான் (ஒடு)
தம்பியோடை வந்தான் (ஒடு+ஐ) தம்பியோடே வா (ஒடு+ ஏ)
ஐந்தாம் வேற்றுமை:
(அ) வீட்டிலிருந்து வருகிறேன் (எ. மொ.)
வீட்டிலை இருந்து வருகிறேன் (பே. மொ.) வீட்டை இருந்து வருகிறேன் (பே. மொ.) (ஆ) கல்வியிற் பெரியன் கம்பன்
கல்வியில் பெரியன் கம்பன் கல்வியிலே பெரியன் கம்பன்
ஆரும் வேற்றுமை:
(அ) என்னுடைய புத்தகம் (எ. மொ)
என்(னு)டை(ய) புத்தகம் (பே. மொ.) என்ரை புத்தகம் (பே. மொ.) (ஆ) புத்தகம் எனது = புத்தகம் என்னுடையது = (எனது புத்தகம்)
(எ. மொ.) புத்தகம் என்டை ஏன்டை" (பே, மொ.) புத்தகம் என்ரை (பே, மொ.)
ஏழாம் வேற்றுமை:
தலையிற் சுமந்தாள் தலையிலே சுமந்தாள் தலையிலே சுமந்தாள்
*ஏண்டை என்பது முஸ்லீம் மக்கள் பேச்சு வழக்கில் பெரும் பாலும் உண்டு. ‘என்டை” என்பதனே உச்சரிப்பது கடினமாக இருப் பதால், முதலெழுத்தைநீட்டி உச்சரிக்கின்றர்கள்போலும். ஈழத்தமிழ் மக்கள் இறுதியெழுத்தை மாற்றி 'ரை' என உச்சரிக்கின்ருர்கள். "டகர மெய்யும் ரகர மெய்யும் எழுத்துப் பேறுகளெனக் கொள்ளப்படு மிடத்தில் "ஐ" என்பது உருபு ஆகலாம்?

அவதானிப்பு:
(1) எழுவாய், விளிவேற்றுமைகளைத் தவிர்த்து, இரண்டாம் வேற்றுமை உருபாகவும் வரும் 'ஐ' ஒலி, ஒலிகயச் சாரியையாக மூன்றம், ஐந்தாம், ஏழாம் வேற்றுமை உருபுகளுடன் (ஆல்; இல் ஓடு) சேர்ந்து வருகின்றது.
(2) மேற்படி உருபுகளுடன் ஏகாரமும் சேர்ந்து வருகின்றது;
(3) ஆறும் வேற்றுமை அமைப்பு மிக விசித்திரமாகப் பேச்சு
வழக்கில் காணப்படுகின்றது. "உடைய" என்ற சொல்லுருபில் முதல் இறுதி (உ, ய) எழுத்துக்களைத் தவிர்த்து கடு எழுத்துடன் மாத்திரம் பேச்சு வழக்கு நிகழுகின்றது. இங்கும் வேற்றுமை உரு பாக ஐகாரமே ஒலிக்கின்றது
(4) நான்காம் வேற்றுமைத் தொடரமைப்பில் பேச்சு வழக்கில் மாற்றமெதுவுமில்ல. ஊகம்:
(1) மிகப் ப்ழைய மொழிவழக்கில் ஐகாரம் அநேகமாக எல்லா வேற்றுமைகட்கும் உருபாக இருந்திருக்க முடியுமோ என எண் னக் கூடியதாகவுள்ளது.
(2) அவ்வாறே ஏகாரமும், மூன்ரும், ஐந்தாம், ஏழாம் வேற் றுமை உருபுகளுடன் இணைந்துவருவதைப் பார்க்கும் பொழுது ஏகாரமும் ஓர் உருபாக ஏற்றுக்கொள்ள இடமுண்டு. வீரமாமுனிவர், "கொடுந்தமிழ்" என்னும் இலக்கண நூலில் வேற்றுமை உருபுகளுள் ஒன்றக ஏகாரத்தையும் குறிப்பிட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. இந்த” ஏகாரமும் பிரிநிலை ஏகாரமும் வேறுவேறு என அறிக.

Page 23
سے 36 سے தொகைத் தொடர்கள் ஆகுமாறு
உருபு வெளிப்படாத அறுவகை வேற்றுமைத் தொடர்களும் (2ஆம் வேற்றுமை முதல் 7-ம் வேற்றுமை முடிய), வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை ஆகிய அல்வழித்தொடர்களும் தமிழில் தொகைத் தொடர்கள் எனப்படும். அன்மொழித் தொகையும் இவ்வரிசையில் இறுதியானதாகக் கொள் ளப்படுகின்றது.
சொற்ருெடர்களில் காணப்படவேண்டிய சில உறுப்புக்கள் அற்றநிலையே தொகை எனப்படும். மேற்கண்ட தொகைத் தொடர் களே உற்று கோக்கும்பொழுது உருபுகளாகவோ, விகுதிகளாகவோ இணைப்பு மொழிகளாகவோ நிற்கவேண்டிய இடைச்சொற்கள், அப்படி நிற் காத நிலைதான் தொகைத்தொடராகுமெனப் புலப்படுகின்றது. பொதுமை காண முற்படின் இது தெரியாமற்போக இடமில்லை. (அ) வேற்றுமைத் தொகைத் தொடர்கள்
பெயர்ச்சொல் முடிக்குஞ் சொல்லின் தன்மைக்கேற்ப வேற்று மைத் தொகைத் தொடராகின்றது. உருபு, பெயர் வேற்றுமைப்பட்ட தற்கு அறிகுறியாக நிற்கும். உருபு வெளிப்பட்டதொடர்." விரித்தொடர்: உருபு இல்லாத தொடர் தொகைத் தொடர் பெயரும், முடிக்குஞ் சொல்லும் ஒன்ருயிணைவதால் வேற்றுமைத் தொகைத் தொடர்கள் ஆகின்றன. இடையில் உருபுகளைக் கொடுப் பின் அவை விரித்தொடராய்விடும். (உ+ம்)
2 ஆம் வேற்றுமைத் தொகை:
பால் குடித்தேன் (பாலைக் குடித்தேன் என விரியும்) பாடம் படிப்பேன் (பாடத்தைப் படிப்பேன் ) 1. பெயர், அண்மைநிலையால் வேற்றுமைப்படுகின்றது என்று கூறு வதிலும் அவாய் நிலையால் வேற்றுமையுறுகின்றது எனக் கொள் வதே பொருத்தமாகும் (அ) சில உருபு தொகைத் தொடராக இடந்தரா ஆயின், கருத்துக்
கவிழும் (உ+ம்) தம்பியொடு வந்தான்-தம்பிவந்தான்என வராது: (ஆ) சில உருபு எல்லா இடத்திலும் தொகைத் தொடராகா தம்பியை அடித்தான்-தம்பி அடித்தான் என வராதுத்

- 37 منسٹ
3 ஆம் வே. தொ.
கைத்தறிச் சேலே (கைத்தறியாலாகிய சேலை) பூமாலை (பூவாலாகிய மாலை) 4 ஆம் வே. தொ.
காலப்பண் (காலைக்குரிய பண்) பணச் சடங்கு (பணத்திற்குச் சடங்கு) 5 ஆம் வே. தொ.
பன வீழ்பழம் (ப?னயிலிருந்து விழும் பழம்) மலை வீழ் அருவி (மலையிலிருந்து விழும் அருவி) 6 ஆம் வே. தொ.
என் கொள்கை (என்னுடைய கொள்கை) வாணி மாணவர் (வாணியினுடைய மாணவர்) 7 ஆம் வே. தொ.
Ln23)6 ind (மலையில் வாசி) வான்முகில் (வானில் முகில்) (ஆ) அவ்வழித் தொகைத் தொடர்கள்:
வினையும் பண்பும்
தொழிற்பண்பும், குணப்பண்பும் எனப், பொருட்பண்பு இரு வகையாகக் கொள்ளப்படும். எழும்பல், வீழ்தல், வ8ளதல், நிமிர் தல், கடத்தல் என்பன மூலத்தொழிற் பண்புகள்.* செம்மை கருமை, சிறுமை ஆதியன குணப்பண்புகள். தொழிற் பண்புகளை உணர்த் தும் தொடர்கள் வினைத்தொகைகள் எனவும், குணப்பண்புகளை உணர்த்துவன பண்புத்தொகைகள் எனவும் கொள்ளமுடியும்.
(1) வினைத்தொகை: வினைப்பகுதியுடன் பெயர்ச்சொல் சேர்வ தால் வினைத்தொகை ஆக்கம் உறும் (வினைப்பகுதிகளை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்றும் கூறுவர்) ஆகவே தொழிற்பெயருடன் பெயரிணைதல் என்ருகும். இதன்படி தொழிற் பெயர் விகுதிகள் தொக்கநிலைதான் வினைத்தொகை ஆகலாம். விகுதிகள் இடைச் சொற்கள்). (உ+ம்) g
* கொத்தல் என்பது ஒரு தொழில் அது வளைந்தும் நிமிர்ந்தும் ஆவதல்
.லவா? இவ்வாறு அனைத்தும் காண்க

Page 24
- 38 -
சுடு + சோறு = சுடுசோறு தூக்கு+மேடை = தூக்குமேடை (கால இடைநிலை அற்றதால் முக்காலத்திற்கும் இவை வழங்கும்) (2) பண்புத் தொகை: பண்புச் சொற்கள் + பெயர்கள்.
பண்புத்தொகைகளில் பண்புச்சொல்லின் இறுதியான ‘மை’ விகுதியும், அதனேடுசேர "ஆகிய என்ற இணைப்பு மொழியும் தொக்குவரும். பொதுவுஞ் சிறப்புமாக இருபெயர்கள் ஒட்டி வரு வன இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
() ---th) (அ) செம்மை+தாமரை = செந்தாமரை
М (வண்ணப் பண்புத் தொகை)
வட்டம்+பலகை = வட்டப்பலகை
(வடிவுப்பண்புத் தொகை) மும்மை+குணம் = முக்குணம்
(அளவுப் பண்புத் தொகை) இனிமை+மொழி = இன்மொழி
(சுவைப் பண்புத் தொகை) (வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்பன பண்புப் பிரிவுகள்)
(ஆ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை:
சிறப்புப் பெயர்-பொதுப் பெயர்
சிவப்பு + நிறம் = சிவப்பு நிறம்
செம்மை + நிறம் = செக்கிறம்
ஆடி + திங்கள் = ஆடித்திங்கள் பொது + சிறப்பு
பொது + சிறப்பு = பொதுச் சிறப்பு
மன்னன் +கரிகாலன் = மன்னன் கரிகாலன்
(3) உம்மைத் தொகை:
எண்ணல் எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அன வைகளால் பொருள்களை அளக்கும் போது எண் உம்மை இடை யிலும் இறுதியிலும் வெளிப்படாமல் கிற்கப், பெயரோடு பெயர் தொடரும் தொடர் உம்மைத் தொகைத் தொடராகும்.

(e-+ú)
இராப்பகல்-இரவும் பகலும் என விரியும். சேரன் + சோழன் + பாண்டியன்=சேரசோழபாண்டியர்
குறிப்பு :
(1) உயர்திணை ஒருமைப்பாற் சொற்களை (ஆண்பாலும், பெண்பாலும்) எண்ணும்பொழுது இறுதிச் சொல் ‘அர்’ விகுதியுடன் முடிதல் வேண்டும்.
(2) அஃறிணை ஒருமைப் பாலுக்கும், திணைப்பொது ஒரு மைப் பாலுக்கும் இவ்விதியில்லை
(உ+ம்) நன்மை தீமை என்றும் வரலாம், நன்மை தீமைகள் என்றும் கிற்கலாம். (அஃறிணை ஒருமை)
தாய்தந்தை என்றும் நிற்கலாம், தாய் தந்தையர் என
வும் வரலாம். (பொதுத்திணை ஒருமை)
(4) உவமைத் தொகை :
உவமையைக் குறிக்கும் சொல்லும், பொருளைக் குறிக்கும் சொல்லும் உவமை உருபிடைச் சொல்பெருது, முறையே சேரும் பொழுது இவ்வகைத் தொடர்கள் ஆகின்றன.
(D ---th)
உவமைச்சொல் + பொருட்சொல் (உவமானம்) + (2_ошћ) பால் + நிலவு=பால்நிலவு (பானிலவு)
பவளம் + மேனி = பவளமேனி

Page 25
or 40 -
வினைப்பகுதிகள்
அ. தமிழில் அடிச்சொற்களே வினைப்பகுதிகள் ஆகும். இவற்றை
வினஅடிகள் எனவுங் கூறுவர். அடிச்சொற்களிற் சில ஒலி நயத்திற்காக இறுதியில் உகரம் பெற்று வினைப்பகுதியாச நிற்றலும் உண்டு. வீழ் என்னும் அடிச்சொல் வீழ் எனவும் கிற்கும், விழு எனவும் நிற்கும். பெரும்பாலும் மெய்யீற்று அடிச் சொற்கள் ஒலி எளிமைக்காக ஈறு திரியும். குற்றிய லுகரப் பகுதிகள் இவ்வாறனவையாகும். அடிச்சொற்களே விக்னப்பகுதிகளாக நிற்றலின் இவற்றை உரிச்சொற்கள் என் பர் சிவஞானமுனிவர். வினைப்பகுதியைத் ‘தணிவினை’ எனக் கூறுவர் இலக்கணக் கொத்து ஆசிரியர்.
(1) மொழிக்கு இறுதியாகவரும் எழுத்துக்களை அடிப்படையா
கக் கொண்டு வினைப்பகுதிகளை இருபத்துமூன்று வகையாகப் பிரிப்பர் பவணந்தியார். அவை: கட, வா. மடி, சீ, விடு, கூ வே, வை, கொ, போ, வெள, உரிஞ், உண், பொருந், திரும் தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃது என்பன வையாகும். இவை எவற் பொருளைத் தருதலின் ஏவல் வி%ன என்றும், ஏனைய வினைகளுக்குப் பகுதியாக நிற்றலினுலும் மேலும் பகுக்கமுடியாதன ஆதலினுலும் இவற்றை வினைப்ட காப்பதம் (ஏவல் வினைப்பகாப்பதம்)” என்றுங் கூறுவர் பவணர் தியார். (137) (2) அடிச்சொற்களுடன் 'மை' விகுதி சேர்வதால் பண் புப் பகுதிகள் ஆகின்றன. (உ+ம்) செவ்>செம்+மை=செ 60 சிறு+மை=சிறுமை; சேய் +மை=சேய்மை, தீ+மை= தீமை, வே>வெம்+மை, வெம்மை; புது+மை=புதுமை மெல்>மென் + மை = மென்மை; மேல் > மேன் + மை = மேன்மை; உள்+மை= உண்மை ஆதியனவும் இவற்றின் எதிர்ப்பதங்களும் பண்புப் பகுதிகள் என்பர் கன்னூலார்.
பொருள் வேறுபாட்டைக் காட்டவும் திரிவதுண்டு, நில்>நிறு
நிறுத்தான் "நிறு" ஆனலும் அடிச்சொல் நில் என்பதே

3.
Fro
- 41 -
இவ்வினைப்பகுதிகளிற் சில பெயருக்கும் வினைக்கும் பொது வாக நிற்கும். (உ+ம்) у
பூ-மலர் (பெயர்) -கரை -(ஆற்றங்)கரை பூ-பூத்தது-(வினை)-கரை-கரைந்தது மேலே குறிக்கப்பட்ட வினைப் பகுதிகளிலேயே மடி, சீ, வை, பார், செல், கேள் என்பன பெயருக்கும் வினைக்கும் பொது வாதல் அறிக. இவ்வினைப்பகுதிகளைச் செயப்படுபொருள் குன்ருதவை, குன்றி யவை என இருவகைப்படுத்தலாம். பவணந்தியார் குறிப்பிட்ட வினைப்பகுதிகளிலேயே மடி, சீ, விடு, வை, உரிஞ், உண், தின்,
தேய், பார், வவ், கேள் ஆதியன செயப்படு பொருள் குன்ருத
வையாகும். "செய்’ எனக் கூறியதும் எதனை என்னும் வினு வுக்கு அங்கே விடையுண்டு. அதுவே செயப்படு பொருளா கும். ஆதலின் செய்’ என்பது செயப்படு பொருள் குன்றத வினைப்பகுதி. 'கட' எனக்கூறியதும் எதனை எனக்கேட்பாரும் இல்லை; கேட்கவும் முடியாது. ஆதலின் அது செயப்படு பொருள் குன்றிய வினைப்பகுதியாகும். இரண்டுக்கும் பொது வான பகுதிகளும் உண்டு. (உ+ம்) முடி, மடி, கெடு, பிரி ஆதியன.
முடி முடிந்தான் (செயப்படுபொருள் குன்றியது)
முடித்தான் ( s குன்றதது) இவ்வினைப் பகுதிகளை எடுத்தலோசையாற் கூறும்பொழுது
அவை முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுக்கள் ஆகின்றன
என்பர் நச்சினுர்க்கினியர். (செய் எனக்கூறும் பொழுது எழு
வாய் (நீ) மறைந்து நிற்கின்றது. அதனுல் “செய்" என்பதே ஒரு தொடரும் ஆகின்றது) இக்கருத்தைச் சிலர் ஒப்புக்
கொள்ளவில்லை. 'ஆய்' என்ற விகுதியுடன் சேர்ந்துதான் (செய்+ ஆய் = செய்வாய், வா > வரு+ஆய் = வருவாய்) முன் னிலை ஒருமையைக் காட்டுகின்றன என்றும், பொதுவாகச் "செய்' என்ருல் அது “ஆய்’ என்ற விகுதி புணர்ந்து கெட்ட நிலே என் றுங் கூறுவர். பகுதியே ஒருமையைக் காட்டுதலின் மேலும்
ஒருமை விகுதி வேண்டியதில்லை.
g), 6

Page 26
6.
ெ
행o
- 42 -
*செய்' என்ற வினைப்பகுதி (முன்னிலை ஏவல் ஒருமை வினை முற்று) எதிர்மறை வினைமுற்றகும் பொழுது செய்யாதே; செய் யற்க, செய்யேல் எனவரும்.
செய்யாதே = செய் + ஆ+த்+எ (ஆகாரம் எதிர்மறை இடை நிலை, 'த் எழுத்துப்பேறு, "ஏ" ஒலி எளிமை உறுப்பு. முன்னிலைக்கு ஒருமை விகுதியாக வரும் இகரத்தின் திரிபுமாகலாம்.
ஏவல் வினைகள் முன்னிலைக்கே உரியவை - எனினும், (நாம்) செய்வோமாக எனத்திரிந்து தன்மைக்கும் (அவன்) செய்யட் டும் எனப்படர்க்கைக்கும் கூறி, ஏவற் பொருளின் தன்மையை வெளிப்படுத்தலாம். எதிர்மறையில் செய்ய வேண்டாம்” என்பது இடப்பொதுவாக நிற்கும்.
இவ்வினைப்பகுதிகளிலிருந்தே தொழிற்பெயர்களும் பெயர், வினை எச்சங்களும் வினைமுற்றுக்களும் ஆகின்றன. (உ+ம்)
செய்+தல் = செய்தல் (தொழிற்பெயர்)
-- த் 十9} ܒܡ ܫ செய்த (பெயரெச்சம்) 十あ+2. = செய்து (வினையெச்சம்)
十あ+ &ón = செய்தான் (வினைமுற்று) வினைப்பகுதி தவிர்ந்த அனைத்தும் இடைச் சொற்கள். வினைப்பகுதிகளிலிருந்து தொழிற் பெயர், எச்சம் முற்றுக் களை ஆக்கும் பொழுது, அப்பகுதிகளிற் சில இயல்பா கவே நிற்கும். சில இயல்பாயும் விகாரப்பட்டும் நிற்கும். சில விகாரப்பட்டே நிற்கும். கெட்டெழுத்தை முதலாக உடைய பகுதிகளே விகாரமடையுக் தன்மையைக் கொண்டவை,
. விகாரம் இன்றி இயல்பாக நிற்பன. (உ+ம்)
செய் > செய்தல், செய்த, செய்து, செய்தான். விடு > விடுதல், விடுப்பு; விட்ட, விட்டு, விட்டான். போ > போதல், போக்கு; போங்த, போன போந்து,
போய், போந்தான், போனுன் 2. இயல்பாயும் விகாரமாயும் நிற்பன. (உ+ம்)
சா> சாவு, சாதல்; செத்த, செத்து, செத்தான். நோ>கோவு, நோதல்; கொந்த, கொந்து, நொந்தான்.

3. விகாரப்பட்டே நிற்பன. (உ+ம்)
தா>தருதல், தரவு தந்த, தந்து, தந்தான் வா> வருதல், வரவு வாரி வந்த, வந்து, வந்தன்ா. ஒ. பெயர்களுள் பலபொருள் ஒருசொல், ஒருபொருட் பல சொல் உள்ளதுபோல் இவ்வினைப் பகுதிகளிலும் (1) பல பொருள்தரும் ஒருவினப் பகுதியும் (2) ஒருபொருள் தரும் பலவீனப் பகுதியும் 96äJC),
(உ+ம்) 1 வை> வைத்தான், வைதான்
முடி> முடிந்தான் (சீலயை முடிதல், இறந்து முடி தல்) முடித்தான். 2. சொல், பகர்வு, s } சொல்(வாய்)
உரை விளம்பு, புகல்
ஓ பிறவினைப்பகுதிகள் ஆகுமாறு:
1. வெளிச்சேர்க்கை
1 வி. பி. எனும் விகுதிகள் பெற்று: (உ+ b)
செய்+வி=செய்வி (தனிஏவல்) கட+பி ைகடப்பி Sg செய்+வி+பி=செய்விப்பி (இஜணஏவல்)
2. பகுதியுடன் கு, சு, இது, பு, று என்னும் விகுதிகளில்
ஒன்றுபெற்று: (a + (b) போ+கு-போக்கு காய்+சு = காய்ச்சு மருள்+டு=மருட்டு கெரி+து=கெரித்து எழு+பு= எழுப்பு பயில்+று=பயிற்று
3. துனேவின பெற்று: (உ+ம்)
செய்) படுக்கச்செய் * Pகடக்கப்பண்(ணு)

Page 27
- 44 =
11. உள்மாற்றம்: - - -
1. பகுதியிலுள்ள மெல்லெழுத்து வல்லெழுத்தாகமாறி:
(Φ + b)
ஒடுங்கு>ஒடுக்கு வருந்து > வருத்து 2, பகுதி இரட்டி: (உ+ம்)
வாடு>வாட்டு உருகு>உருக்கு
ஒள.ஒரே எழுத்தால் முடியும் வினைப்பகுதிகள் அனைத்தும் புணர்ச்சி யிலோ அல்லது சொல்லாக்கத்திலோ ஒரேமாதிரியாக அமைவ தில்லை. கல், நில், செல், சொல், வெல்; ஆதியன லகரமெய் யீற்றல் முடியும் வினைப்பகுதிகள். இவை புணர்ச்சியிலும் சொல்லாக்கத்திலும் ஒரேமாதிரியாக இல்லை. (உ+ம்)
புணர்ச்சி
1. கல் +ற்+ ஆன் க கற்றன்
நில்+ற்+ஆன் = நின்றன் போ + இன் + ஆன் = போனுன் வா+ த்+ஆன் = வந்தான் சா+த்+ஆன் = செத்தான்
2. கல் + க = கற்க
வெல் + க = வெல்க
சொல்லாக்கம்: (உ+ம்)
1. கற்க என்பது வியங்கோளாயும் எச்சமாயும் நிற்கும்.
செல்க என்பது எச்சமாய் நிற்காது. 2. கல் என்ற பகுதியிலிருந்து கற்பு, கல்வி என்ற தொழிற் பெயர்கள் எழும். கொல் என்ற பகுதியிலிருந்து இதே வடிவத்தில் தொழிற்பெயர்கள் வரா. கொலை என்று வரும்.
ஆகவே நன்னூலார் காட்டிய வினைப்பகுதிகள் ஒவ்வொன்றும்
அதே எழுத்தால் முடிவனவற்றுக்கு ஓர் உதாரணமன்றி "மாதிரி” அன்று. - w

- 45 -
Görfj) GLUİ
தொழில் நிகழ்ச்சியைக் கருதாது தொழிலுக்குப் பெயராய் வரு வது தொழிற்பெயர். இவை (1) தொழிலுக்கே என்றும் பெயரா யும் (2) அத்தொழிலுக்குரிய பொருளுக்கும் பெயராயும் நிற்கின் றன. (3) ஒரு தொழிற்பெயர்வடிவமே இவ்விரண்டு நிலையில் நிற்ற லும் P-676.
G5 Tyfibut if தொழிற்பொருட்பெயர்
1. போர்த்தல் போர்வை
உடுத்தல் உடுப்பு கறத்தல் கறவை காணல் கண் உண்ணல் ஊண்
2. பாயல் பாயல் (படுக்கை)
தேறல் தேறல் (தெளிவு, தேன்) தோயல் தோயல், (தயிர்) பாடல் பாடல் (பாட்டு)
ஆகுமாறு:
1. வினையடிகளே தொழிற்பெயராக நிற்பனவும் உண்டு
இவற்றையே முதனிலைத் தொழிற்பெயர் என்பர். (உ+ம்) பொரி, திரை, அலை, அணை, கட்டு ஆதியன. 11. வினைப்பகுதி திரிபடைந்து தொழிற்பெயராதல்:
() + li) 1. முதல் நீண்டு : பெறுபேறு; உறு-ஊறு 2. முதல் குறுகி காண்-கண் 3. பகுதி இரட்டி : ஊறு>ஊற்று; பாடு>பாட்டு;
எழுதுP எழுத்து

Page 28
11. வினப்பகுதி விகுதி பெற்றுத் தொழிற்பெயராதல்:
(அ) வினைப்பகுதிகளுடன் விகுதிசேர்ந்து:
விகுதி
-- அம் ஒட்டம்
+ அல் ஆடு,-ஆடல் +(த்)அல்=தல் : வாழ்தல், வாழ்த்தல் + (ச்)இ=சி வறள், வறட்சி 十(あ)●=ó மற - மறதி + (ஷ்)இ= வி ; கல - கலவி
-- 9) வா > வர - வரவு +(5) is 6 போ - போக்கு +(த்)உ= து பாய் - பாய்ந்து +()els : படி - படிப்பு
十3 ; கொடு - கொடை +(5)2s 605 : படு - படுக்கை +()ജ = ഞഖ கோவை
+(b) = Gold : படி+(ஆ) படியாமை -- tiu கொ>கோ - கோய்; தா - தாய் +ள் : விக்கு - விக்குள்
குறிப்பு:- அடைப்புக்குறிக்குள் தரப்பட்டவை எழுத்துப் பேறுகளும் உடம்படு மெய்களும் ஆகும். இவற்றையும் சேர்த்தே தொழிற்பெயர் விகுதிக்ள் சொல்லப்பட்டு வருகின்றன.
ஆ ? வினைப்பகுதிகளுடன் விகுதியும் கால இடை நில
யும் சேர்ந்து: (உ+ம்)
செய் + த் + (அ) + மை = செய்தமை செய்+கின்று(+ அ) + மை = செய்கின்றமை செய்+த்+(அ)+து = செய்தது செய்+கின்று + (அ+து க செய்கின்றது செய் + ல்+(அ)+(து) = செய்வது
* இவ்வாருனவற்றை வினைமுற்றின் தொழிற் பெயர்ப் பொருள் நில யாகவும் கொள்ளலாம் h−

FFé
- 47 -
வினைப்பகுதியுடன் இன்னுெரு தொழிற்பெயர் சேர்ந்து ஒரே சொல்லாய்த் தொழிற்பெயராதல்
கோ + காடு = நோக்காடு ծT + ծո08 = சாக்காடு பண் + பாடு = பண்பாடு வா> வரு+மானம் = வருமானம்
சேர்+மானம் = சேர்மானம்
வினைமுற்றுக்களுடன் விகுதி சேர்ந்து
கொள்வன + உ = கொள்வனவு கொடுப்பன + உ = கொடுப்பனவு தின்பன + உ = தின்பனவு உண்பன + உ = உண்பனவு
(நாளடைவில் இவ்வாறு கொள்ளலன்றி காடு, பாடு, என்பன போல் 'பனவு’ என்பதும் ஒரு தொழிற் பெயர் விகுதியாகக் கொள்ளப்படலாம்) தொழிற்பெயரும் தொழிற் பெயருஞ் சேர்ந்து:
வரவேற்பு விதுப்புறவு போக்குவரவு சிரமதானம்
Gá260TL6Gib
, வினையுடன் முடியும் வினைக்குறைச் சொல் வினையெச்சம்.
பால் காட்டும் விகுதிகளோ அல்லது ஒருமை பன்மை விகுதி களோ பெற்று ‘முற்று நில அடையாத சொற்களே வினைக்குறைச் சொற்கள். முடிக்குஞ் சொல்லாகிய வினை" என்பது வினைப்பகுதியையும் அதனடியாகப் பிறக்கும் சொற் கள் அனைத்தையும் கருதுமென்பர். தொழிற்பெயர், வினை
தொழிற்பெயருடன் வினையெச்சம் முடிவதற்கில்லை. தொழிற் பெய ராயினும் அது பெயரே. முடியின் அது பெயரெச்சம் என்றே கொள்ளப்படுதல் வேண்டும். வினையெச்சம் தொழிற்பெயருடன் சேர்ந்து ஒரே சொல்லாகி-ஒரே தொழிற்பெயராகித் தொழில் விகற் பங்களைக் காட்டுதல் மொழிவளர்ச்சி நிலையைக் கருதும் செய்து பழகல்" என்பதை ஒரே தொழிற் பெயராகக் கொள்ளலன்றி வினை யெச்சமாகவும் அதனை முடிக்குந் தொழிற் பெயராகவும் கொள்வது வினையெச்சத்துக்குரிய வரையறைகளைத் தகர்ப்பதாகும்;

Page 29
ܚܝ 48، -
யெச்சம், பெயரெச்சம், வினைமுற்று, பெயர்த் தன்மையடைந்த வினைமுற்று (வினையாலணையும் பெயர்) என்பன வினைப்பகுதி யடி யாகப் பிறந்தன. இன்னும் முடிக்குஞ் சொல்லாகிய "வினை என்பது குறிப்பு வினைச்சொற்களேயுங் கருதும்.
(ø- +úð)
செய்துவா 6 سےhuT - வினைப்பகுதி செய்துபழகல் கல்லது - பழகல் - தொழிற்பெயர் ஆடிப்பாடி அலைந்தான் - பாடி - வினையெச்சம் ஆடி முடித்த நாடகம் - முடித்த - பெயரெச்சம் எழுதிவந்தான் - வந்தான் - வினைமுற்று எடுத்துவந்தவனசொல் - வந்தவன் - வினையாலணையும்பெயர் சுற்றுவல்லன் ஆகினுன் - வல்லன் - குறிப்பு வினைமுற்று
வினையுடன் முடியும் வினைக்குறைச் சொல்லாகிய வினையெச் சம் செயலேயுங் காலத்தையுங் தெளிவாகக் காட்டுகின்றது. கால அடிப்படையில் வினையெச்சங்களைப் பகுத்து "வாய்பாடு' கூறுவர் கன்னூலார் இறப்பு: செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென. நிகழ்வு செய எதிர்வு: செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு
எச்சம் குறிப்பிடும் தொழிலேயும், முடிக்குஞ்சொல் குறிப்பிடும் தொழிலையும் செய்யும் வினைமுதல் (கருத்தா) ஒன்றேயாயின், அவ்வினையெச்சம், தன் (வினையெச்சத்தின்) கருத்தாவின் வினையைக் கொண்டு முடிந்தது எனப்படும். வாணி, வளர்த்து வந்தாள்’ என்று கூறும்பொழுது வளர்த்தலும், வருதலும் ஒரே வினைமுதலின் (வாணி) இருதொழில்கள். ஆகவே வளர்த்து என்ற வினையெச்சம் தன்கருத்தாவின் வினையான வந்தாள் என்பதுடன் முடிந்தது. செய்து, செய்பு, செய்யா, செய்யூ, வான், பான், பாக்கு ஆகிய வாய்பாட்டு எச்சங்கள் தன் கருத்தாவின் வினையைக்கொண்டு முடிவன.
'மழை பெய்ய கெல் விளைந்தது' என்பதில், பெய்தல் மழை
யின் செயல், விளைதல் கெல்லின் தொழில். ஆகவே பெய்ய என்ற வினையெச்சம் பிற (முடிக்குஞ் சொல்லின்) கருத்தாவின் வினையோடு முடிந்தது. செய்தென, செய, செய்யின், செய்யிய, செய்யியர் எச்சங்கள் தன் கருத்தா வினையாலும் முடியும்; பிற கருத்தா வினையாலும் முடியும்.

- 49 -
வினையெச்சம் ஆகுமாறு:
அ, இறந்தகால வினையெச்சம்:
l.
கால இடைநிலைபெற்று: வினேப்பகுதி, கால இடைகிலை, உகரவிகுதி முறையே சேர்வதால் இவ்வகை எச்சங்கள்
ஆவது ஒருவகை (છે - + i))
செய் + த்+உ = செய்து (நத+ ப்+உ = ககுபு - சிரித்து)
குற்றியலுகரப் பகுதிகள் காலங்காட்டும் இகர விகுதியுடன் சேர்ந்து வினையெச்சங்களாவது இன்னுெருவகை. சில முற்றியலுகரப் பகுதிகளும் இவ்வாறு ஆகும்.
﷽®+ 8 . = ஆடி ஒடு+இ  ைஓடி 魏 மருவு+ இ = மருவி (முற்றியலுகரப்பகுதி)
: (மருவு, தழுவி முதலான எச்சங்கள் மரீஇ தழீஇ எனத்
திரிபடைதல் இலக்கிய வழக்கு)
கு, டு, று என்னும் எழுத்துக்களை இறுதியாகக்கொண்ட குறிலிணைப் பகுதிகள் (விகுதி ஒற்றுககள) இரட்டி வினை
யெச்சங்கள் ஆதல் மற்ருெருவகை. (உ+ம்)
Ilსტ = bக்கு உறு = உற்று தொடு = தொட்டு
தனிநெடிற்பகுதி யகரமெய்பெற்று வினையெச்சமாதல்
பிறிதொரு வகை (உ+ம்)
போ + tiu = போய்
ஆ+ய் = ஆய் சில தொழிற்பெயர்கள் அளபெடை பெற்று வினேயெச்
சங்களாதல் வேருெருவகை. (வழக்கிழந்த இலக்கியவழக்கு) (g --- (b)
சினம்>சினே+இ=சினே இ (சினந்து)
(சினம் - தெர். பெ}
கசை + இ = கசைஇ (நசை - தொ.பெ)
போ+(ந்)+த்+உ= போந்து-போய். இன்றைய வழக்கில் இல்லே.
g). 7

Page 30
- 0 as
குறிப்பு: 1. செய்யா, செய்யூ, என்னும் வாய்பாடுகள் செய்து என் னும் வாய்பாட்டின் திரிபு நிலைகள்; இன்று வழக்கிழந்தன.
2. செய்தென' என்னும் வாய்பாடு: (உ+ம்) சோலை புக் கென வெப்பம் நீங்கிற்று" என உதாரணங் காட்டுவர். இன்று வழக்கில் இல8ல. அதற்குப் பதிலாகப் புக்கதால் (போனதால்) எனக் கூறுவதே இக்கால வழக்கு. இன்னும் தெளிவாக, சோலைக்குப் போனதால் வெப்பம் நீங்கிற்று என்று வரும். புக்கது தொழிற்பெயர். ஆல் மூன்றன் உருபு. சோலைக்குப் போனதாலை, எனக்கூறுவது இக் காலக் கிராமிய வழக்கு.
ஆ. நிகழ்கால வினையெச்சம் :
செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் நிகழ்காலங்$ காட்டு மென்பர் பவணந்தியார். வி%னப்பகுதியுடன் அகரவிகுதி சேர்வதால் இவ்வாய்பாட்டு எச்ச ஆக்கம் நிகழ்கின்றது. (உ+ம்) செய்+அ= செய்ய, படு+அ = படுக்க; பிடுங்கு + அ = பிடுங்க. குறிப்பு: இக்காலவழக்கு: செயவென் எச்சப் பொருள் பின்வரும் வடிவங்களில் இக்காலத்து வெளிப்படுகின்றது. (உ+ம்) எழுதும்படி, எழுதும்பொருட்டு எழுதும் வண்ணம், எழுது மாறு (பெருவழக்கு), எழு(துவ)தற்கு (எழுத) என்பது தொழிற்பெயர் 'கு' உருபுபெற்று ஆகியதாகும். எழுதல், எழுதுவது ஒரேகருத்துள்ள இரு தொழிற்பெயர் வடிவங்கள், இரண்டிலும் ‘எழுதுவதற்கு" என்பதே இக்காலப் பெரு 6)]ყpმჩ{ტ•
S செயவென் வாய்பாட்டு வினையெச்சம் முக்காலத்திற்கும் பொது வாகக் கொள்ளப்பட நியாயம் உண்டு. கால இடைநிலை எதுவும் பெற் றுக்கொள்ளாதது காரணம் எனக் கருதப்படுவதிலும்பார்க்க, எதிர்காலம் முக்காலத்தையுங் காட்டுமென்பதே பொருத்தமானதாக முடியும். வினைப் பகுதிகள் எதிர்காலத்தைக் காட்டுவன. இவ்வினையெச்சத்தில் அகரவிகுதி சேர்ந்தல்லாமல், இயல்பான எதிர்காலத்தை இல்லாமற்செய்யும் முயற்சி எதுவும் இல்ல. நிகழ்காலம் முக்காலத்துக்கும் பொதுவாக நிற்குமென் றல், முக்காலத்துக்கும் பொதுவானதெல்லாம் நிகழ்காலந்தான் என்ற கருத்து அளவை நெறிக்கு ஒவ்வாதது. இயல்பாக எதிர் காலத்தைக் காட்டவேண்டிய இவ்வினையெச்சம் தொழில் முன்பின் அடிப்படையில் அல்லது காரணகாரிய அடிப்படையில் ஏனைக்காலங்களுக்கும் வரு கின்றது: "செய்யிய' என்னும் எதிர்காலவினையெச்ச வடிவம் இக்கருத் துக்கு இசைவானதாகும். (செயவென் எச்சம் பின்னர் ஆராயப்படும்)

- 5 -
எதிர்கால வினேயெச்சம்:
அ. வினைப்பகுதியுடன் எதிர்கால விகுதிபெற்று
பகுதி விகுதி ஊறு + இன் = ஊறின்
ಕ್ಷಣ 十 இன் + ஆல் = ஊறினுல் କୃଚ୍ଛା (B + இன் + ஆல் க ஓடினுல் { செய் + இன் + க செய்யின்
6T -- இன் + க வரின் செய் + து + ஆல் + ா செய்தால் + து + ஆல் + = படித்தால்
குறிப்பு: 1. ஆல் ஈற்று வினையெச்சங்களே இக்காலத்து வழக்காகும். 2. குற்றியலுகரப்பகுதிகள் ‘இன் பெற்றநிலை எளிமை
யற்ற நிலையாகவே, விகுதிமேல் விகுதியாக "ஆல்"
பெற்றிருத்தல் வேண்டும். இன், ஆல் என்பன ஏதுப் பொருளில் வரும் ஒற்றுமையால் ஒரேபொருளாகக் கொள்ளப்பட்டு நாளடைவில் குற்றியலுகரப்பகுதிகள் தவிர, ஏனைய பகுதிகளில் இன்னுக்குப் பதிலாக 'ஆல்' வந்து, செய்தால், கடந்தால் என இன்றைய வழக்குத் தோற்றம் பெற்றிருக்கலாம். இடையில் நிற்கும் 'து' சாரியை எனக் கொள்ளப்படலாம்.
ஆ. எதிர்கால வினைமுற்றுக்களுடன் (1) எதிர்கால வினையெச்சங் களும் (2) குறிப்பிட்ட சில விகுதிகளும் சேர்ந்து ஒரே சொற் களாய் எதிர்கால வினையெச்சங்களாகக் கணிக்கப்படுதல் மற் றெருவகை: (உ-ம்)
l,
உண்பான் + ஆயின் =உண்பானுயின்
+ எனின் கஉண்பானெனின் + ஆயினும் = உண்பாளுயினும் + எனினும்: (ஏனும்)= உண்பானேனும் + ஏல் = உண்பானேல்
இ. பகுதிக்கும் விகுதிக்குமிடையில் எதிர்மறை ஆகார இடைநிலை
பெற்று எதிர்மறை வினையெச்சங்கள் ஆகின்றன.

Page 31
ー 52 ー
(d. -- b)
செய் + ஆ + து = செய்யாது செய் + ஆ + மல் = செய்யாமல்
குறிப்பு: படியாமைக்கு-படிப்பதற்கு எதிர்மறை; படியாமல் விடு தற்கு என்பதே இக்காலத்து மிகுதியும் வழக்கப்படுகின்றது.
பெயரெச்சம் V.
1 (அ) பால் விகுதி அல்லது எண் விகுதி பெற்று "முற்று” ஆகாத வினைச்சொல் ‘எச்சம் (எஞ்சியது எச்சம்) எனப்படும். இவ் எச்சம் வினையுடன் முடியும் பொழுது வினையெச்சம் ஆவதுபோல், பெயருடன் முடியும்பொழுது பெயரெச்சம் எனப்படுகிறது. பால் அல்லது எண்விகுதி பெற்றுக்கொள்ளாத வினைக்குறைச்சொல் எனவே அது செயலையும் காலத்தையும் காட்டும் என்பதும் பெறப் படும். ஆகவே வினேயெச்சம் செயலும் காலமும் காட்டுவதுபோல் பெயரெச்சமும் அவற்றைக் காட்டும்.
*காலமும் வினையும்தோன்றிப் பால்தோன்ருது பெயர்கொள் ஞம் அது பெயரெச் சம்மே” அகத்தியர் சூத்திரம் எனக்கூறிக் கொள்ளப்படும் இச்சூத்திரம் பெய ரெச்சத்தின் தன்மையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
(ஆ) நிகழ்கால எதிர்காலங்களுக்குப் பொதுவாகச் செய்யும் என்னும் பெயரெச்சத்தையும், இறந்தகாலத்திற்குச் செய்த என் னும் பெயரெச்சத்தையும் வாய்பாடுகளாகக் கூறிய தொல்காப்பிய ஞர் இப்பெயரெச்சங்கள் செய்வது (வினை முதல்) கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறு காரணங்களுக்கும் (வினைமுற்றுக்கள் போல்) ஒத்த உரிமையை உடையன எனக் கூறுவது மிகநுட்பமாக உள்ளது. அஃதாவது இவ் ஆறும் காரண மாக (பல நிமித்தங்களைக் கொண்ட ஒரு தொகுதி) வினை என்னும் ஒரு காரியம் நிகழும் என்பதாகும். இவ்வாறு உண்டாகும் வினைக்கு பெயரெச்சவினை விலக்கானதன்று என்பது “ஒத்த உரிமைய என்பதற்குக் கருத்தாகும். இக்கருத்தை உதாரணங்களாக்கினுல் பின்வருமாறு அவை அமையும்
உண்டமனிதன், உண்டகடை, உண்டநேரம், உண்டபாத்திரம், உண்டசெயல், உண்டஉணவு. s
உண்ணுதல் எனும் தொழில் நிகழ்வதற்கு மேற்கூறப்பட்ட ஆறும் காரணங்களாக அமைதல் வேண்டும். இவ் ஆறும் காரணங்

س: 83 سے
களாகாத இடத்து உண்ணுதல் என்னும் காரியம் நிகழாது. அன்ன உரிமைய என்பதன் கருத்து இதுவே ஆதல் தெளிவுற அறிக.
*"நிலனும் பொருளும் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினயும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஒரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே”
(தொல், சொல்; 228)
(இ) தொல்காப்பியனுர் மிகநுட்பமாகக் கூறிய பெயரெச்ச இலக்கணத்தை கன்னூலார் குழப்பத்துக்குள்ளாக்கி விட்டார். புதி தாக எதையும் சொல்லாதது மாத்திரமன்று,. “பாலொடு செய்வ தாதி அறுபொருட்பெயரும் எஞ்சி நிற்பது” எனக் கூறி குழப்பமும் விளைவித்து விட்டார். விஜனகாலமொடு தோன்றும் எனக் கூறிய தொல்காப்பியனுர், பெயரெச்சம் பற்றிக் கூறும் பொழுது மீட்டும், செயலும் காலமும் பெயரெச்சம் காட்டும் எனக் கூறவேண்டிய அவசியம் இல்லை. இதனை நன்னூலார் பெயரெச்ச வரையறை எனக் கூறினுரெனக் கூறுவது அர்த்தமற்றது. கன்னூலார் கூறிய புதுக்காரியம் செய்கின்ற" என நிகழ்காலத்திற்கும் வாய்பாடு கூறி யதேயாகும்.
(ஈ) தொல்காப்பியனுர், "அன்ன உரிமைய' எனக்கூறிய கருத்தை “பாலொடு அறு பொருட் பெயரும் எஞ்சநிற்பது பெய ரெச்சமே” என கன்னூலார் கூறியது புதிதாக விளைத்திட்ட குழப்ப மாகும். இதனுலேதான் உரையாளர்கள் சில பெயரெச்சங்களைக் காரணப்பொருளன என்றும் சிலவற்றைக் காரியப்பொருளன என் றும் சிலவற்றை இரண்டிற்கும் பொதுவானவை என்றும் கூறித் தடுமாற்றம் எய்தினர். ‘ஒரன்ன உரிமைய' என்ற அடிப்படையில் எல்லாப் பெயரெச்சங்களும் காரியப் பொருளனவே. இந்நோக்கில் நடந்தகளை" என்ற பெயரெச்சத் தொடரிலும் நடந்த" என்பது காரியப் பொருட்டதே. களைக்கு கடந்ததுதான் காரணம். எனவே காரணப்பொருளில் இப்பெயரெச்சம் எனக்கூறுவது வேறுகோக்கு, வேறு அடிப்படை எனத்தெளிக.
2. பயன்பாடு: தொழிலும் காலமும் தோற்றிப் பெயருடன் முடியும் இவ் எச்சங்கள் பெயரடைகள் எனவும் படும். தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் முடியும் பெயர்ப் பொருளின் தொழிற் பாட்டுத்தன்மை குறிக்கும் பெயரடைகள் ஆகின்றன. படித்த மனி தன், படிக்கின்றமனிதன், படிக்கும் மனிதன் எனக் காண்க

Page 32
- 54
குறிப்புவினைப் பெயரெச்சங்கள், முடியும் ப்ெயரின் தன்மை குறிக்கும் அடைகள் ஆகின்றன. சிவந்தமண், வெளிறிய தேகம், கரிய செம்மல், உயர்ந்தபனே, உடைந்த உள்ளம் எனக்காண்க.
3. பெயரெச்சம் ஆகுமாறு:
(அ) இறந்தகாலப் பெயரெச்சம்
இறந்தகால வினையெச்சங்களுடன் 'அ' விகுதி சேர்வதால் இறந்தகாலப் பெயரெச்சங்கள் ஆகின்றன.
)ே குற்றியலுகரப்பகுதிகளை வினையடியாக உடைய எச்சங்கள்.
(A) ஓடி + அ = ஓடிய (யகரம் உடம்படுமெய்) விழுத்தி+அ= விழுத்திய ( sg) * } (8) ஒடி + அ = ஓடின (ணகரம் எழுத்துப்பேறு-சாரியை) விழுத்தி+அ= விழுத்தின ( , ) குறிப்பு: சாரியையாக வந்துள்ள னகர மெய்யை உடம்படுமெய்
என்று கூறுவர் கால்ட்வெல். (C) சில முற்றியலுகரப் பகுதி எச்சங்களும் இவ்வாறு அமையும் (உ+ம்) மருவிய, மருவின, ஆகிய, ஆகின. (i) ஏனைய விஜனப்பகுதிகளை வினையடிகளாக உடைய எச்சங்கள்:
செய்து + அ = செய்த கற்று + அ = கற்ற படித்து + அ = படித்த குறிப்பு: பகுதி இரட்டித்துக் காலங்காட்டும் எச்சங்களும் இவ்வாறே
யாகும்.
(உ +ம்) தொட்டு + அ = தொட்ட
உற்று + அ = உற்ற (ஆ) நிகழ்காலப் பெயரெச்சம்:
வீனப்பகுதி + நிகழ்வு இடைநில் + அ (உ+ம்) செய்+கி(ன்று + அ = செய்கி(ன்)ற.

- ᏰᏰ -
(இ) நிகழ்கால, எதிர்காலப் பெயரெச்சம்
gaugis+ p is செய் + உம் = செய்யும் (வே&ல)
مجمع
குறிப்பு: உம் என்பதே விகுதியாகவும், காலங்காட்டும் இடை நிலையாகவும் உள்ளது. இரு காலமுங் காட்டுதல் சந்தர்ப் பம் நோக்கித் தெரிக. (ஈ) எதிர்மறைப் பெயரெச்சம்:
(A) வினப்பகுதி + எதிர்மறைஇடைநில + அ
செய்+ஆ+அ=செய்யாத (தகரமெய் எழுத்துப்பேறு) கட + ஆ+அ= கடவாத ( , ) (B) குறிப்புவின: "எதிர்மறைப்பகுதி + சாரியை + அ
இல் + ஆ + அ = இல்லாத அல் + ஆ + அ = அல்லாத குறிப்பு: பகுதியே எதிர்மறை ஆதலின் இடையில் வந்த "ஆ" சாரியை
ஆகும். (C) எதிர்மறை வினையெச்சம் + உடன்பாட்டுப் GuUGyöJub செய்யாது+இருக்கிறன செய்யாதிருக்கிற செய்யாது + இருக்கும் = செய்யாதிருக்கும் செய்யாது + இருந்த = செய்யாதிருந்த
தெரிநில வினைமுற்று
வினைப்பகுதி, கால இடைநிலை (காலக்கிளவி), பால்காட்டும் (பாலறிகிளவி) விகுதி அல்லது ஒருமை பன்மை காட்டும் விகுதி முறையே ஒட்டிச் சேர்வதால் தெரிகில வினைமுற்று ஆக்கம் பெறு கின்றது, காலம் வெளிப்படையாகத் தெரிய நிற்கும் நிலை தெரிநிலை
வினேமுற்றுக்களில் பகுதிகள் தவிர்ந்த ஒட்டுறுப்புக்கள் அனைத் தும் இடைச்சொற்கள். அதனுற் போலும், எச்சங்கள் உட்பட இவ்வினைமுற்றுக்களேத் தொடர்வினைகள்’ என்பர் இலக்கணக்கொத்து ஆசிரியர்.
வினைமுற்றில் பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் விகுதியால் வினைமுதலும் தெளிவாகத் தெரிகின்றன. இன்னும்

Page 33
- 56 -
வினையின் தன்மையைப் பொறுத்து அதற்க்ான காரணமும் (கருவி), அது கிகழும் இடமூம், அச்செயலின் பயனுகத் தோன்றும் (செயப் படு) பொருளும் கூடத்தெரியும். “செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே’ என்பர் பவணந்தி யார். செயப்படுபொருள் குன்றிய பகுதிகளை அடிச்சொற்களாகக் கொண்ட வினைமுற்றுக்கள் செயப்படுபொருளைத்தரா.
இவ்வினை முற்றுக்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழிற்பெயர்களைப் பயனிலைகளாகக் கொண்டு நிற்கும் பொழுது வினைமுற்றுத்தொடர்கள் எனப்படும். (உ+ம்) பாடினுன் பரந்தா மன், பூரித்தது பூமி, வந்தது வசந்தம், கலங்கியது கண், பரந்தது பசுமை, பாறியது படுக்கை என முறையே காண்க.
தனியே ஒரு வினைமுற்றைக் கூறும் பொழுது எழுவாய் வெளிப்படையா கத் தோன்ருவிட்டாலும், அது ஓர் எழுவய்த் தொடரின் பயனில் என்பது பெறப்பட்டுவிடும்,
இத்தெரிநிலை விக்னமுற்றுக்களிடையில் எதிர்மறை இடைநிலை களைச் சேர்ப்பதனுல் அவை எதிர்மறை வினைமுற்றுக்கள் ஆகின் றன; வினைப்பகுதிகளைப் பிறவினைப்படுத்தி விடின் பிறவினை வினை முற்றுக்களாம்; பகுதிக்கும் கால இடை நிலைக்குமிடையில் படு என் னும் விகுதியைச் சேர்க்கச் செயப்பாட்டு வினைமுற்று ஆகின்றது.
ஆகுமாறு:
படர்க்கைத் தெரிநிலை வினைமுற்று.
வினைப்பகுதியுடன் த், ட், ற், இன்; கின்று, கிறு, ப், வ் ஆகிய
கால இடை நிலைகளில் ஒன்றும் ஆன், அன்; ஆள், அள், ஆர்,
அர்; து; அ ஆகிய ஐம்பால் விகுதிகளுள் ஒன்றும் முறையே இணைந்து சேர்வதால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்று ஆகின்றது. (உ+ம்)
இ. கா. - செய் + த் + ஆன் = செய்தான் கி. கா. - செய் + கின்று + ஆன் = செய்கின்றன் எ. கா. - செய் + வ் + ஆன் = செய்வான்
(இவ்வாறே ஏனைய விகுதிகளையும் இடைநிலைகளையும் ஒட் டிக்காண்க.)

سے 57 ۔
குறிப்பு 1 ஒரு வினைப்பகுதியுடன் ஐம்பால்களும் (படர்க்கை)
முக்காலங்களும் சேர்வதால் பதினைந்து வினைமுற்றுக் கள் ஆகுமென்பர் பவணந்தியார். ஆனல் அஃறிணை எதிர்கால ஒருமை, பன்மையினை முற்றுக்களுக்கு இன் றைய வழக்கில் ஒரு வினைமுற்றே உண்டு. (உ+ம்) அது மேயும், அவைமேயும், வருவது, வருவன இன் றைய வழக்கில் இல்லை
2. குறில் முதலும், குறிலுமான விகுதிகள் (அன், அள், அர்
து, அ) சாரியை பெற்றே வருவன்
3. படர்க்கைப்பலர்பாலில் ஆர்விகுதி மரியாதைப் பொரு ளில் ஒருமை எண்ணையுங் குறித்தலின் அதன்மேற் கள் விகுதிபெற்று வரும் (உ+ம்) வந்தார்கள், வ கின்றர்கள், வருவார்கள்.
தன்மைத் தெரிநில்ை வினைமுற்று:
வீனப்பகுதியுடன் காலஇடைநிலைகளில் ஒன்றும், என், ஏன் (ஒருமை); அம், ஆம், எம், ஏம் ஓம் (பன்மை) விகுதிகளில் ஒன் றும் சேர்ந்து மேற்படி வினைமுற்றுக்களாகும். (உ+ம்) செய்+த்+ஏன் = செய்தேன் செய்+கின்று+ ஏன் = செய்கின்றேன் செய் +வ்+ ஏன் என் செய்வேன் (ஒரு வினைப்பகுதியிலிருந்து ஒருமைக்கும் பன்மைக்கும் முக் காலங்களுக்குமாக ஆறு வி%ன முற்றுக்களாகும்.) முன்னிலைத் தெரிநிலை வினைமுற்று:
வினைப்பகுதியுடன் கால இடை நிலைகளில் ஒன்றும், இ, ஐ ஆய்ர்; இர், ஈர், ஈர்கள், விகுதிகளில் ஒன்றும் சேர்வதால் மேற்படி வினைமுற்றுக்களாகின்றன. (உ+ம்)
செய் + த் + ஈர் = செய்தீர் செய்+கின்று + ஈர் = செய்கின்றீர் செய்+வ் + ஈர் = செய்வீர்
(இவ்வாறே ஏனைய விகுதிகளையும் இடை நிலைகளையும் ஒட்டிக் காண்க.)
இ. 8

Page 34
- ፀ8
குறிப்பு வினை
செய்தான் - தெரிகில வினே (செய்+த்+ஆன்) செய்யோன்-குறிப்புவி&ன \ (செம்மை > செவ்>செய் + ஆன் > ஒன்)
அது ஏன் தெரிகிலைவினை? இது ஏன் குறிப்புவினை? அது, *செய்’ என்ற வினைப்பகுதியிலிருந்து எழுந்தது. இது செம்மை என்ற பண்புப் பெயரடியைக் கொண்டது. அதில் காலங்காட்டும் இடைநிலை நின்று வினைநிகழ்ச்சியை உணர்த்துகிறது. எனவே அது தெரிகில வி.ை இதில் கால இடைகிலேயே இல்லை, ஆணுல் இரண்டுக்கும் பொதுவாக வினைமுதல் (பால்காட்டும்) விகுதி உண்டு. அது இங்கே ஒன்று (ஆன்). அமைப்பில் பெயரடியாகப் பிறக்கும் பெயர்ச் சொற்களைப்போல் "செய்யோன் உள்ளது. அப்படியிருக் கவும் இதனை ஏன் குறிப்புவினை எனல் வேண்டும்?
(இவன்) செல்வமுடையவனுய் இருந்தான்-செல்வன் இவன்) செல்வமுடையவனுய் இருக்கின்றன் --செல்வன் (இவன்) செல்வமுடையவனுய் இருப்பான் --செல்வன்
மேலே காட்டிய தொடர்கள் குறுக்கம் வேண்டின. மூன்றுக் கும் பொதுவாகச் செல்வன்" அமைந்தது. செல்வன் என்ற சொல் லுக்குள் உடைமையே!டிருத்தல் என்ற செயலும், அதற்குரிய காலங் களும் அடங்கியுள்ளமை இப்பொழுது புலப்படுகிறதல்லவா? வினச் சொல்லில் வெளிப்படையாகப் பெறப்படும் இல்விரண்டும், செல் வன் என்ற அமைப்பிலும், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் புலப்படுகின்றது-குறிப்பால் புலப்படுகின்றது. செல்வமுடையவன் சார்பாகச் செயல் தெரிகின்றது. (சொல்லோன் குறிப்பைப் பொறுத் துக் காலக் தெரிகின்றது என்றுங் கூறலாம்) எனவே டெய்ரடியா கப் பிறந்தாலும் வினையிலிருந்து அறியக்கூடிய செயலுங் காலமும் குறிப்பாக அறியக்கிடத்தலின் குறிப்பு வினையாயிற்று இப்படி அமைபவை அனைத்தும் குறிப்பு வினைகள் என்க. இக்கருத்து, வினமுதல் விகுதி என்று கூறுதலாலும் புலனுகும். அது எந்த வினை? என்ன காலத்தில் கிகழ்ந்தது? இவற்றின் விடை குறிப் பாற் பெறப்படுதலின் குறிப்பு வினையாயிற்று. பெயரடியாகப் பிறக்கும் பெயரும், குறிப்புவினைமுற்றும் உருவத்தால் ஒன்ருயினும் உள்ளடக் கத்தால் வேருனலையே (உருவம் ஒன்று, சுவையில் வேறு).

- 59 -
*பொது கிலேயை எவரும் பொருட்படுத்துவதில்லை. எதிலும் மிகுதியும் (அளவுக்கு மிஞ்சியதும்) எதிலும் குறைவுமே (அளவுக் குக் குறைந்தது) கவனிக்கப்படுகின்றன. அனைவருக்குமே பல் உண்டு. அது கவனிப்பற்ற நிலை. ஒருவனுக்கு அளவுக்கு மிஞ்சி நீண்ட பல் உண்டு. இது கவனிப்புநிலை. எனவே அவன் பல்லன் ஆகிறன். வல்லன், புல்லன்; கல்லவன், கெட்டவன்; உளன் (என்றுமுள்ளவன்) இலன் என அமைவதுங் காண்க. இந்த அடிப் படையிலேயே குறிப்பு வி ைமுற்றுக்கள் ஆதியிற் தோற்றம் பெற் றிருத்தல் வேண்டும். நல்லவன் கெட்டவன் எனச் செயற்கைப் பாட்டுக்கு அமைந்த வடிவங்கள் போல் நாளடைவில் இயற்கைத் தோற்றங்களுக்கும் ஆகியிருக்கலாம். W
தமிழிற் பெயர்கள் அமைவது போலவே குறிப்புவினைகளும் பெயரடிகளுடன் வினைமுதல் விகுதிகள் சேர்ந்து அமைகின்றன. பெயர்களிலும் பண்புப்பெயரடிகளில் இருந்தே குறிப்பு வி?னகள் பிறக்கின்றன. அல் + அன் = அல்லன், இல் + அன் = இலன் அல் + (ற்) இ= அன்றி. இல் + (ற்)இ= இன்றி என முறையே காண்க: அல்லன், இலன் என்பன இக்காலத்து அல்லாதவன், இல்லாதவன் என வழங்கும் அவ்வாறே அன்றி, இன்றி என்பன அல்லாமல், இல்லாமல் என வழங்கும். வல்வன், கல்வன் முதலாயின வல் லவன் நல்லவன் என வழங்குகின்றன.
'குறிப்புவினைகள் நிகழ் காலத்துக்கு உரியனவாகக் கொள்ளல் அமையும்’ என்பர் கால்டுவெல். முக்காலத்திற்கும் பொது என்ற முறையில் அவ்வாறு கருதினர் போலும். காலம், சொல்வோன் குறிப்பிலேயே தங்கியுள்ளது. இயற்கை நிலைகளைத் தவிர, குறிப்பு வினைமுற்றின் முன், காலத்தைச்சுட்டியே சொல்வோன் இதைக் குறிப்பிடுவான். அந்தக் காலமே வினை நிகழ்ச்சிக்குரிய காலமென் பது தெரிக்தவிடும். எனவே முக்காலத்திற்கும் பொதுவான அமைப்பு என்பதே பொருத்தமாகும்.
குறிப்புவினை முற்றுக்கள் வேற்றுமையேற்கும்போது குறிப்பு வினையாலனையும் பெயர்கள் ஆகின்றன. நல்லவன்: குறிப்பு வினே முற்று. நல்லவனே நம்பு என்ற தொடரில் நல்லவன் குறிப்பு வினை யாலணையும் பெயர். பொதுவாக ஒரு பொருளைக் குறிப்பிடும் பொழுது பெயர்.
வினையடியில் இருந்து பெயர் உண்டாவதுபோல் பெயரடியில்
இருந்து வினை உண்டாகின்றது. அவ்வினை குறிப்பாய் அறியக் கிடத்தலின் குறிப்புவினை. குறிப்புக்கு இடமற்ற நிலையிற் பெயர்.

Page 35
- 60 ano
வியங்கோள் வினைமுற்று
விகுதி
க: வாழ்+க =வாழ்க இய: வாழ்+இய = வாழிய
இயர்: வாழ்+இயர் = வாழியர் அ; சொல்+அ = சொல்ல (நாம் சொல்ல) அல் ஒம்பு + அல் = ஓம்பல் (ஒம்புக)
வினைப்பகுதியைத் தனியாகக் கூறும்பொழுதே ஏவல்வினை ஆகி விடுகின்றது. வினைப்பகுதிகளுடன் மேற் குறிப்பிட்ட விகுதிகளைச் சேர்த்துக் கூறும்பொழுது வியங்கோள் வினைமுற்றுக்கள் எனப்படு கின்றன. பால்காட்டும் விகுதியோ அல்லது ஒருமை பன்மை காட் டும் விகுதியோ பெற்றுக்கொள்ளாததால் வியங்கோள் வினைமுற் றுக்கள், ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவானவை
இவை ஐம்பால் மூவிடங்சளுக்குப் பொதுவாயினும், பால் இடங் காட்டும் வினைமுற்றுடன் வியங்கோள் வினைமுற்றைச் சேர்த்து ஒரே சொல்லாக்குவதன் மூலம், அவ்வப்பால் இடவினைமுற்றக்கி விடலாம். ຂ +໖:)
வினைமுற்று வியங்கோள் கடப்பான் + ஆக = நடப்பானுக. நடப்பாள் + ஆக = கடப்பாளாக. படர்க்கை நடப்பார் + ஆக = கடப்பாராக.
நடப்பேன் + ஆக = நடப்பேனுக. میر } தன்மை நடப்போம் + ஆக = நடப்போமாக நடப்பாய் + ஆக = நடப்பாயாக முன்னில் நடப்பீர் + ஆக = கடப்பீராக
வியங்கோள் வினைமுற்று நடக்க + கடவன் = நடக்கக்கடவன்
, + கடவள் = நடக்கக்கடவள் , + கடவர் க கடக்கக்கடவர் (கடவன் குறிப்பு வினைமுற்று)

s 6 as
இவற்றை இக்கால உலக வழக்கென்பர் ஆறுமுகநாவலர்."
“ஆவாழி; அந்தணர் வாழி’ எனவரும் 'வாழி’ ‘வாழிய’ என் பதன் இறுதி எழுத்துக்கெடுதலுற்ற நிலையென்பர். எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள்:
பகுதியை அடுத்து “அல்’ எதிர்மறை இடைநிலை சேர்வதால் இவ்வகைமுற்றுக்கள் ஆக்கம் பெறும். (உ+ம்)
செய் + அல் + க = செய்யற்க உண் + அல்+க = உண்ணற்க
*அல்’ விகுதி இறுதித்தொழிற்பெயர், உடன்பாட்டுக்கும் எதிர்
மறைக்கும் பொதுவாகக் கையாளப்பட்டுள்ளது.
பேயனில்சொல் பாராட்டு 6 TOT D3h1GGOT 60T6)
மக்கட் பதடி (பதர்? எனல்’ 1. எனல்-என்னற்க-என்று சொல்லற்க (எதிர்மறை வி. வி.) 2. எனல்-என் க - என்று சொல்க (உடன்பாடு)
எனல் 1. விகுதிகெட்டு எதிர்மறை இடைநிலையுடன் நின்ற நிலை எனவுங் கூறலாம்.
விளக்கம்:
(அ) ஏவலின் கடுமை பதப்படுத்தப்பட்டநிலை வியங்கோள் எனல் பொருத்தமானதே. வியங்கோள் வினைமுற்றுத் தோற்றத் தின் துவக்கநிலை, தொழிற்பெயர்கள் வியங்கோள் வினைமுற்றுக்க களாகப் பிரயோகிக்கப்பட்டநிலை எனலாம். இலக்கிய வழக்கில்
* சங்க இலக்கியங்களிலும் இவ்வழக்குண்டு. “குடிபழி தூற்றம்
கோலேணுகுக’ (புறம் 72) ベ س
t பயனில் சொல் பாராட்டுவானை (பயனில் சொல் பேசுகின்றவனை யன்று) மகன் என்பதும் எனலும், மக்கட்பதர் என்பதும் (எனலும்) ஒன்று, உருவத்தால் மனிதன் உள்ளடக்கத்தால் பதர் என்பது கருத்து இவ்வாறு உரைகொண்டால் எனல்’ இரண்டும் தொழிற்பெயர்களாகவே நிற்கும்3
மகனெனல்-எனல் என்பதைப் பரிமேலழகர் எதிர்மறை வியங் கோள் எனக் கருத, அவர்க்குப் பின் வந்த சங்கர நமச்சிவாயர் எதிர் மறை ஒருமை ஏவல் எனக் குறிப்பிட்டார்;

Page 36
سه 62 -
மாத்திரம் இதற்கு உதாரணங்கள் உண்டு. இன்றைய எழுத்து வழக்கில் அதுவும் இல்லை. ஓம்பல் (ஒம்புக). எனல் (என்க) என வரும். இப்பிரயோகத்தில் தொழிற்பெயர் விகுதிகளை அழுத்தி உச் சரித்தல் வேண்டும்.
(ஆ) அடுத்த கிலேயாகச் செயவென் வடிவச் சொற்கள்ே வியங்கோளாகக் கையாளப்பட்டிருத்தல் வேண்டும். இன்றும் தாழ்க் தவர்கள் உயர்ந்தவர்களே நோக்கி இவ்வாய்ப்பாட்டாலேயே, "நாம் வர", "நாம் சொல்ல" எனக் கூறுவது வழக்கம்.
(இ) செயவென் வாய்பாட்டுச் சொற்கள் அனைத்தும் வினை யெச்சமாகக் கொள்ளப்பட்ட நிலையில், மேலும் வியங்கோள் வினை முற்று, வடிவமாற்றம் வேண்டி கின்றது. அன்றியும், காலப் பொதுவாகிய செயவென் எச்சம் இதற்குப் பொருத்தமற்ற நிலை யுங் கூட. எனவே, வினப்பகுதிக்கும், அகர விதிக்கும் இடையில். எதிர்கால இடைநிலை கொடுத்து வழங்கும் இன்றைய நிலை ஏற் பட்டிருத்தல் வேண்டும். (உ+ம்)
வாழ்+க்+அ = வாழ்க வாழ்+இ+(ய்)+அ = வாழிய ('i' உடம்படுமெய்) வாழ்+இ+(ய்)+ அ(ர்) = வாழியர் ( , )
குறிப்பு: வாழிய, உண்ணிய என்பன செய்யிய என்னும் வாய் பாட்டு வினையெச்சமாகக் கொள்ளப்பட்ட நிலையில் அக விகுதியுடன் ரகரமெய் சேர்ந்து வாழியர் என வந்தது. நச்சினுர்க்கினியர் முதலானுேர் 'அர் விகுதி எனவே கொண்டனர்.
(ஈ) வியங்கோள் விகுதிகளாக அ. அல் என்றவற்றையே கொண்டார் சேனுவரையரும். நன்னூலார் தான், குறுக்கு வெட்டு முயற்சியில் க, ய, இய, இயர் என விகுதிகள் கொண்டவர். வீர சோழியத்தைப் பின்பற்றியதால் எற்பட்ட வில்லங்கம் இது எனலாம்.

- 68 -
Grif|OGOO G.260TLIT66th
செய்தான் ー உடன்பாட்டு வினைமுற்று
(அ) செய்திலன் (ஆ) செய்தானல்லன் செய்தான் என்பதன்
(இ) செய்தானில்லை எதிர்மறை வடிவங்கள்
(ஈ) செய்யவில்லை
இவ் உதாரணங்களிலிருந்து எதிர்மறை வினைமுற்ருக்கள் எளி திற் புலப்படுகின்றது.
படர்க்கை :
(அ) கால இடைநிலை + எதிர்மறை இடைநிலை (இல், அல் ஆ) + விகுதி.
செய் + த் + இல் + அன் = செய்திலன் செய் + கின்று + இல் + அன் = செய்கின்றிலன்
செய் + ஆ + ஆன் = செய்யான் {ဒွါစို့ + ஆ + து = செய்யாது செய் + ஆ = செய்யா
குறிப்பு: 1. எதிர்மறை இடைநிலை 'ஆ' எதிர்காலத்திற்கே உரியது.
"இல்" எதிர் காலத்திற்கு வராது.
2. இல், ‘கு’ சாரியையடுத்து எதிர் காலத்துக்கு வ்ருவது. பழைய வழக்கு (உண்+கு+இல்+அன் = உண்கிலன்) 3. எதிர்மறை இடைநிலை 'அல் பெற்று வரும் வழிக்கும்
வீழ்ந்துவிட்டது. (உண்கலன்).
4. ஆன், ஏன், ஈர் முதலான கெடில் முதல் விகுதிகள் பகுதியுடன் கேராக இணையும் பொழுது, வடிவம் எதிர்மறையாய் விடும். 'ஆ' புணர்ந்து கெட்டது எனக் கூறுவர் இலக்கண நூலோர்,
5.அஃறிணைப் பன்மையில் "ஆ" விகுதியாயே நின்று எதிர்
மறை தரும்.

Page 37
- 64 -
(ஆ) தெரிநிலை வினைமுற்று எதிர்மறைக் குறிப்புவினே முற்றுக்கள் ஒன்றுடன் சேர்ந்து ஒரே சொல்லாய் எதிர்மறை காட்டுதல்.
( + li)
செய்தானல்லன்
செய்கிருனல்லன்
செய்வானல்லன்
(அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல; இலன், இலள், இலர், இலது (இன்று) இல ஆதியன எ. கு. வி. முற்றுக்கள்). (இ) தெரிநிலை முற்று + இல்லை (ஐம்பால் மூவிடப் பொதுக் குறிப்பு
வினை எதிர்மறை முற்று) (உ+ம்) செய்தானில்லை, செய்கின்றனில்லை, செய்வானில்லை.
(FF) செயவென் எச்சம் + இல்லை:
(உ+ம்) செய்யவில்லை, வரவில்லை, பாடவில்லை. (இவ்வாறு எதிர்காலத்துக்கு வராது)
குறிப்பு: தன்மை முன்னிலைக்கும் இவ்வாறே காண்க.
இக்கால வழக்கு:
விதி (உடன்பாடு)
$3: ..., 30სტI ” x * (MMMMMwy
உண்பாய் nnnnnnn
வா (வென்) MMMM வாருங்கோ Www. வருவியள் ma
(எதிர்) மறை உண்ணுதே, உண்ணவேண்டாம், உண் னக் கூடாது
உண்ணமாட்டாம் (பேச்சுவழக்கு) வராதை ( ) வராதையுங்கோ ( ) வரமாட்டியள், வராயஸ் ( 9 y )
எதிர்மறைப் பெயரெச்சம் :
தெரிகிலே: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில், ஆகார எதிர்மறை
இடைகிலே பெற்றுவரும். (உ+ம்) உண் + ஆ + த் + அ = உண்ணுத, தகரமெய்(த்) எழுத்துப் பேறு. இதுவே முக்காலத்திற்கும் பொது வான அமைப்பு இறுதி கெட்டு உண்ணு (ச் சொத்து) எனவும் நிற்கும்.

- 65 -
குறிப்புவினை இல், அல் என்னும் எதிர்மறையடிகளுடன் ஆகாரச் சாரியையும், எழுத்துப் பேறுடன் கூடிய விகுதியும் பெற்றுவரும்.
(உ +ம்) இல் + ஆ+த = இல்லாத அல்+ஆ+த = அல்லாத (பகுதியே எதிர்மறையாகலின் இடை நின்ற ஆகாரம் சாரியையாயிற்று; ஆகாரமும் எதிர் மறை இடை நில் எனின் "உள்ள என்ற பொருளைத் தருதல் வேண்டும். அப்படியில்லே)
எதிர்மறை வினையெச்சம்:
(அ) தெரிநிலை வினைப்பகுதி + எதிர்மறை இடைநிலை + புத்துப்
பேறு + விகுதி
(உ + ம்) உண் + ஆ + த் + உ = உண்ணுது (முக்காலத்திற்கும் பொது மல், மே, மை முத
லான விகுதிகள் பெற்று உண்ணுமல், உண் ணுமே, உண்ணுமை என முறையே வரும்)
() குறிப்புவினே இல், ગ્ર என்னும் எதிர்மறைகளுடன் ஆகாரச் சாரியையும் விகுதியும் பெற்றுவரும்,
(P + ib)
இல் + ஆ + த் + உ = இல்லாது (தகரமெய்
எழுத்துப்பேறு) இல் + ஆ + மல் = இல்லாமல் இல் + ஆ + மை = இல்லாமை
இல் -- 3 -- uே ::-به- இல்லாமே
9
W

Page 38
வினேயாலணயும் பெயர்
வினைமுற்றுக்கள் (தெரிநிலையோ, குறிப்போ) வினை நிகழ்ச்சியை வெளிப்படுத்தாது, வினைங்கழ்ச்சிக்கிடமான பொருளைக்குறித்து வினையாலணையும் பெயர்கள் ஆகின்றன. அஃதாவது, அவ் வினை முற்றுக்கள் பெயராய் விடுகின்றன. அதனுல் வேற்றுமையும் ஏற் கின்றன.
கொடுத்தானுக்குக் குறைவில்லை. கொடுத்தவனுக்குக் குறைவில்லை.
"கொடுத்தான் ஒரு தெரிகிலை வினைமுற்று. கொடுத்தானுக்குக் குறைவில்லையென்பதில் ‘கொடுத்தான் கொடுத்த மனிதனேக் குறிக் கின்றது; எனவே அது தெரிகிலே வினையாலணையும் பெயர்.
வல்லானுக்குப் புல்லும் ஆயுதம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
*வல்லான்’ ஒரு குறிப்புவினைமுற்று. வல்லவனுக்கு என வரும் போது அது வன்மையுள்ள மனிதனக் கருதுகின்றது. எனவே அது குறிப்புவினையாலணையும் பெயர்.
கொடுத்தவன், வல்லவன் என்பன முறையே கொடுத்தான் வல்லான் என்பவற்றின் யாப்பு நோக்கிய திரிபுநிலைகள். இப்படி யானவற்றைப், பெயரெச்சங்களுடன், சுட்டுப்பெயர்கள் சேர்ந்து அமைந்த வினையாலணையும் பெயர்கள் எனக்கொள்வாரும் உண்டு. (கொடுத்த + அவன் = கொடுத்தவன், வல்ல + அவன் = வல்லவன்) இப்பிரிவின் படி கொடுத்தவன் வல்லவன் என்பன பெயரெச்சத் தொடர்கள் ஆகும். பெயரெச்சத் தொடரிலுள்ள பெயர்கள் வேற் றுமை ஏற்பதற்குப் பிறிது விளக்கம் வேண்டியதில்லை, இயல்பான பெயர், வேற்றுமை ஏற்றதன்றி, வினையாலணையும் பெயர் வேற் றுமை ஏற்றதெனல மிகை அன்ருே தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் வேறு பாடு:
போவது, வருவது; போகின்றது, வருகின்றது; போனது, வந்தது என்பன அஃறிணைப் படர்க்கை ஒருமை வினைமுற்றுக்களுக் கும், கால இடைநிலை பெற்றுள்ள துவ்விற்றுத் தொழிற் பெயர் களுக்கும் பொதுவான வடிவங்கள்.

- 67 -
இவ் வினைமுற்றுக்களுக்கும், தொழிற் பெயர்களுக்கும் பொது வானவையென்றல் வினையாலணையும் பெயர்களுக்கும், தொழிற் பெயர்களுக்கும் பொதுவானவை என்பதும் பெறப்படும். படவே, வேறுபாட்டைச் சந்தர்ப்பம் நோக்கி அறிந்து கொள்ளல் வேண் டும். இவ்வழிப் போவது கூடாது' போவது (போதல்) தொழிற் பெயர். "போவது போகட்டும்’- போவது வினையாலணையும் பெயர். ‘அங்கே போகின்றதைப்பார்-போகின்ற முறையை" எனக் கருதும் பொழுது தொழிற்பெயர்: போகின்றபொருள் எனக் கருது கின்றபொழுது வினையாலணையும் பெயர்
ஒரு சில வடிவம் தொழிற்பெயருக்கும், வினையாலணையும் பெயருக்கும் பொதுவாக உள்ளபடியாலும், எல்லாம் வினைப்பகுதி யடியாகவே பிறத்தலாலும், இரண்டும் பெயர் என்ற முறையில் வேற்றுமை யேற்பதாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எதுவென வும் அறிதல் வேண்டும்.
வினமுற்றுக்களே வினையாலணையும் பெயர்களாதலின் வினை யாலணையும் பெயர்கள் ஐம்பால் மூவிடங்களிலும் வரும். தொழிற் பெயர்கள் படர்க்கை இடத்துக்கேயுரியவை. தொழிற் பெயர்களில் இருந்து வேறு பெயர்ப்பகுபதங்கள் ஆகக் கூடியன (ஊண் > ஊணன்). வினையாலணையும் பெயர்களில் இருந்து வேறு பெயர்கள் ஆகா. வினையாலணையும் பெயர் பால்காட்டும் விகுதிக ளைக் கொண்டமையால் எண்ணிக்கை வரையறையுடையன. தொழிற் பெயர்களோ காலத்திற்குக் காலம் பல்கிப் பெருகுவன.

Page 39
தொகைத் தொடர்கள் ஆகுமாறு
உருபு வெளிப்படாத அறுவகை வேற்றுமைத் தொடர்களும் (2 ஆம் வேற்றுமை முதல் 7-ம் வேற்றுமை முடிய), வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை ஆகிய அல் வழித்தொடர்களும் தமிழில் தொகைத் தொடர்கள் எனப் படும். அன்மொழித் தொகையும் இவ்வரிசையில் இறுதியானதாகக் கொள்ளப்படுகின்றது. /-
சொற்றெடர்களில் காணப்படவேண்டிய சில உறுப்புக்கள் அற்ற நிலையே தொகை எனப்படும். மேற்கண்ட தொகைத் தொடர்களை உற்று நோக்கும்பொழுது உருபுகளாகவோ, விகுதி களாகவோ, இணைப்பு மொழிகளாகவோ நிற்கவேண்டிய இடைச் சொற்கள், அப்படி நிற்காத நிலைதான் தொகைத் தொடராகுமெனப் புலப்படுகின்றது. பொதுமை காண முற் படின் இது தெரியாமற்போக இடமில்லை.
(இ) வேற்றுமைத் தொகைத் தொடர்கள்:
பெயர்ச்சொல் முடிக்குஞ் சொல்லின் தன்மைக்கேற்ப வேற்று மைத் தொகைத்தொடராகின்றது. உருபு, பெயர் வேற்றுமைப்பட்ட தற்கு அறிகுறியாக நிற்கும். உருபு வெளிப்பட்ட தொடர் விரித் தொடர்: உருபு இல்லாத தொடர் தொகைத் தொடர். ஆகவே பெயரும், முடிக்குஞ் சொல்லும் ஒன்ருயிணைவதால் வேற்றுமைத் தொகைத் தொடர்கள் ஆகின்றன. இடையில் உருபுகளைக் கொடுப்பின் அவை விரித்தொடராய்விடும். (உ+ம்)
13 பெயர், அண்மைநிலையால் வேற்றுமைப்படுகின்றது என்று கூறுவதிலும் அவாய் நிலையால் வேற்றுமையுறுகின்றது எனக் கொள்வதே பொருத்தமாகும். 2. (அ) சில உருபு தொகைத் தொடராக இடந்தரா தரின்,
கருத்துக் கவிழும் (உ+ம்) தம்பியொடு வந்தான்-தம்பிவந்தான் என வராது. (ஆ) சில உருபு எல்லா இடத்திலும் தொகைத் தொடராகா.
கம்பியை அடித்தான். தம்பி அடித்தான் என வராது

- 69
2 ஆம் வேற்றுமைத் தொகை:
பால் குடித்தேன் பாடம் படிப்பேன்
3 ஆம் வே. தொ.
கைத்தறிச் சேலை பூமாலை
4 ஆம் வே. தொ.
காலைப்பண் Li600 & 3 Lice
5 ஆம் வே. தொ.
விண் வீழ் கொள்ளி மலே வீழ் அருவி
6 ஆம் வே. தொ.
என் கொள்கை வாணி மாணவர்
7 ஆம் வே. தொ.
(பாலைக் குடித்தேன் என விரியும்) (பாடத்தைப் படிப்பேன் , )
(கைத்தறியாலாகிய சேலை) (பூவாலாகிய மாலை)
(காஜலக்குரிய பண்) (பனத்திற்குச் சடங்கு)
(விண்ணிலிருந்துவீழும் கொள்ளி) (மலையிலிருந்து விழும் அருவி)
(என்னுடைய கொள்கை)
(வாணியினுடைய மாணவர்)
unso6ોIII હી வான்முகில்
(மலையில் வாசி) (வானில் முகில்)
ஆ அவ்வழித் தொகைத் தொடர்கள்:
வினையும் பண்பும்
தொழிற்பண்பும், குணப்பண்பும், எனL பொருட்பண்பு இரு வகையாகக் கொள்ளப்படும். எழும்பல், வீழ்தல், வளைதல், நிமிர் தல், நடத்தல் என்பன மூலத்தொழிற் பண்புகள் * செம்மை கருமை, சிறுமை ஆதியன குணப்பண்புகள், தொழிற் பண்பு களை உணர்த்தும் தொடர்கள் வினைத்தொகைகள் எனவும், குணப் பண்புகளை உணர்த்துவன பண்புத்தொகைகள் எனவும் கொள்ள (Մուջպմ).
(1) வினைத்தொகை: வினேப்பகுதியுடன் மூவிடப்பெயர்கள் தவிர்ந்த் பெயர்ச்சொல் சேர்வதால் வினைத்தொகை ஆக்கம் உறும். (வினைப்பகுதிகளை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்றும் கூறுவர்.)
* கொத்தல் என்பது ஒரு தொழில். அது வளைந்தும் நிமிர்ந்தும்
ஆவதல்லவா. இவ்வாறு அனைத்தும் காண்க

Page 40
- 79 - ஆகவே தொழிற் பெயருடன் பெயரிணேதல் என்றகும், இதன்படி தொழிற்பெயர் விகுதிகள் தொக்கநிலைதான் வினைத்தொகை ஆக லாம். (விகுதிகள் இடைச்சொற்கள்) . (உ+ம்)
சுடு + சோறு = சுடுசோறு தூக்கு + மேடை = தூக்குமேடை (கால இடைகில அற்றதால் முக்காலத்திற்கும் இவை வழங்கும்.) (2) பண்புத்தொகை: பண்புச் சொற்கள் + பெயர்கள். பண்புத்தொகைகளில் பண்புச்சொல்லின் இறுதியான ‘மை’ விகுதியும், அதனேடுசேர ஆகிய' என்ற இணேப்பு மொழியும் தொக்குவரும். பொதுவுஞ் சிறப்புமாக இருபெயர்கள் ஒட்டிவரு வன இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
(Φ. - ib)
(அ) செம்மை + தாமரை = செந்தாமரை
(வண்ணப் பண்புத் தொகை)
= வட்டப்பலகை
வட்டம் + பலகை
(வடிவுப் பண்புத் தொகை)
= முக்குணம்
மும்மை + குணம்
(அளவுப் பண்புத் தோகை)
இனிமை + மொழி = இன்மொழி
(சுவைப் பண்புத் தொகை)
(வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பன பண்புப் பிரிவுகள்.)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
(ஆ)
சிறப்புப் பெயர்-பொதுப் பெயர்
சிவப்பு + நிறம் க சிவப்பு நிறம் } செம்மை + நிறம் = செந்நிறம் ஆடி + திங்கள் = ஆடித்திங்கள்
பொது+சிறப்பு
பொது + சிறப்பு = பொதுச் சிறப்பு மன்னன் + கரிகாலன் = மன்னன் கரிகாலன்

- 71 -
(3) உம்மைத் தொகை :
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் கான்கு அளவைகளால் பொருள்களை அளக்கும் போது எண் உம்மை இடையிலும் இறுதியிலும் வெளிப்படாமல் நிற்க, தொடரும் தொடர், உம்மைத் தொகைத் தொடராகும.
(Φ -+- i)
இராப்பகல் - இரவும் பகலும் என விரியும். சேரன் + சோழன் + பாண்டியன் = சேரசோழபாண்டியர்
குறிப்பு: (1) உயர்திணை ஒருமைப்பாற் சொற்களை (ஆண்பாலும்,
பெண்பாலும்) எண்ணும்பொழுது இறுதிச் சொல் 'அர்? விகுதியுடன் முடிதல் வேண்டும். (அஃறிணை ஒருமைப் பாலுக்கும். திணைப்பொது ஒரு மைப் பாலுக்கும் இவ்விதியில்லை. (உ+ம்) கன்மை தீமை என்றும் வரலாம். நன்மை தீமைகள் என்றும் நிற்கலாம். (அஃறிணை ஒருமை) தாய்தந்தை என்றும் நிற்கலாம், தாய் தந்தையர் என வும் வரலாம். (பொதுத்தினை ஒருமை)
(4) உவமைத் தொகை : உவமையைக் குறிக்கும் சொல்லும், பொருளைக் குறிக்கும் சொல்லும் உவம உருபிடைச் சொல்பெருது. முறையே சேரும் பொழுது இவ்வகைத் தொடர்கள் ஆகின்றன.
(p + (b)
உவமைச்சொல் பொருட்சொல் (உவமானம்) (உவமேயம்}
-H
十 பால் + நிலவு = பால் நிலவு (பானிலவு) பவளம் + மேனி = பவளமேனி

Page 41
ஆகுபெயரும் அன்மொழியும்
ஆகுபெயர்
சொற்கள் வெளிப்படையாயும் குறிப்பாயும் பொருள் தருவன சொல்லின் இயல்பான பொருள் வெளிப்படைப் பொருள். அது ஒரு சொற்றெடரில் அமையும்போது முன்பின் உள்ள சொற் களின் தாக்கங்களாலும், சந்தர்ப்ப ஆற்றலாலும் வேறு பொருள் தருவது குறிப்பு. இவ்வாறு ஒரு சொல் குறிப்பாகப் பொருள் தரும் முறைகளில் ஆகுபெயரமைப்பும் ஒன்று.
கத்தரி கொத்துகின்றர் எனக் கூறும்பொழுது. கத்தரி பயிரிடப் படும் நிலத்தைக் கெ துகின் ருர் என்றுதான் பொருள். "கத்தரி’ தனக்குரிய இயல்பான பொரு”ளக் குறிப்பிடாமல் நிலத்தைக் குறிப் பிடுதலால் அது ஆகுபெயர் எனப்படும்.
இதிலிருந்து ஒரு பெயர்ச்சொல் (ஒரு பொருள்) தொடர்பு பட்ட இன்னுெரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் என்றகும்.
(ஒரு பெயர் எனக் குறிப்பிடும்போது, தனியே ஒரு பெயர்ச் சொல்லையும் அது கருதும் : இரு சொற்கூடி ஒன்றப் அமைந்த ஒரு பெயரையுங் குறிக்கும். (உ+ம்) : அரண், மனே, பள்ளி, கூடம் ஆதியன தனிப் பெயர்கள். அரண்மனை, பள்ளிக்கூடம், ஆதியன இரண்டு கூடி ஒன்றப் அமைந்த பெயர்கள், ! ஒரு பெயர் தனியே நின்று ஆகுபெயராக முடியாது கொண்டு முடியும் வினைச் சொற்களாலும், அடைமொழிகளாலும் அது குறிப்புப் பொருளைத் தந்து ஆ பெயராகின்றது. (எதுவாயினும் ஒருசொற் ருெடரிலுள்ள பெயரென்றுக்கே இவ்வாய்ப்பு உண்டு) , முடிக்கும் வினைச்சொற்களால் ஆகுபெயராவன:
(உ+ம்) : தாமரை சூடினுள்.
வற்றல் தின்றேன். சூடினுள் என்ற வினையைக் கொண்டுதான் தாமரைப் பூ என்பது பெறப்படும் (கிழங்கினேயும், தண்டினையும், இலையினையும் சூடுவார் இல்லை) . தின்றேன் என்பதைக்கொண்டுதான் வற்றல் ஓர் உணவுப் பொருள் என்பதும் பெறப்பட்டது.

, 78 -
அடைமொழிகளாலாவன:
உ+ம்: புதுக்குடியிருப்பிலிருந்து வருகிறேன்
வகரக்கிளவி (வகரமாகிய எழுத்து-2)
இருப்பு ஒரு தொழிற்பெயர். தனியே நின்று அது குடியிருக்கும் ஊரைக் கருதாது. குடியென்னு அடைமொழியே ஆகுபெயருக்குக் காரணமாயிற்று.
"கிளவி என்பது இங்கு எழுத்தைக் குறிப்பதால் ஆகுபெய ராயிற்று, தனியே நிற்பின் சொல் என்ற கருத்தைத் தருமேயன்றி, எழுத்து என்ற கருத்தைத் தராது. அகரம் என்ற அடைமொழியே, கிளவி என்னும் சொல் எழுத்தைக் குறிக்கக் காரணமாகின்றது.
இவ்வாருனவற்றை இருபெயரொட்டாகுபெயர் என்பர் இலக் கண நூலோர்.
(2)
பெயர் அறுவகைப்படுவதால் ஆகுபெயரும் அறுவகைப்படும். ஆனுல் நன்னூலார் இவ் அறுவகையுடன் அளவை, சொல், தானி, கருவி, காரியம், கருத்தா என இன்னும் அறுவகைகளைக் கூட்டியும் இவ்வளவுதான் என வரையறை செய்ய முடியாமல் ஆகுபெயராக வரும் அனைத்தையும் "ஆதி" என்பதனுற் கொள்ள வைத்தார் (கன். சூத் 290), ஆதி என்பதனுல் இலக்கணவுரையாளர்கள் உவமையாகு பெயரையும், தேவர் முதலியோர் பெயரை மக்களுக்கிட்டு வழங்குவன வற்றையும் கொள்வர். ና
கூர்ந்து நோக்கின் கன்னூலார் மேலதிகமாகக் குறிப்பிட்ட அறுவகை ஆகுபெயர்களும், உரையாளர்கள் "ஆதி" என்பதனுற் கொண்டுள்ள உவமை ஆகுபெயரும் பொருளாதியான அறுவகைப் பெயருக்குள்ளும் அடங்கிவிடும்.
அளவை ஆகுபெயர் பண்புள் அடங்கும். உரை அல்லது சொல்லாகுபெயரை ஆகுபெயராகக் கொள்ள வேண்டியதில்லை. கொண்டாலும், உரையென்பது மொழி வடிவம் என்ற கருத்தில் அதனைப் பொருளாகுபெயரெனக் கூறிவிடலாம். தானி ஆகுபெயர் தான் (இட) ஆகுபெயரின் மறுதலையாகக் கொள்ளப்பட, அஃது இட ஆகுபெயருள் அடங்கிவிடும். கருவி ஆகுபெயர் என்பதும் பொருளாகுபெயருள் அடங்கும். காரிய ஆகுபெயர் பண்பாகுபெயரில் அடங்க, கருத்தா ஆகுபெயர் என்பது பொருளாகு பெயருள் அடங்கும். அப்படியே உவமையும் பொருளில் அடங்கும்.
இது 10

Page 42
74 -.
இலக்கண உரையாளர்கள் குறிப்பிடுவது ப்ோல் தெய்வப் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவது ஆகுபெயர் ஆகா என்க. எவ்விதத் தொடர்பு கருதாமலும், மரபு காரணமாக வைக்கப்படுவன அவை: ஆகுபெயர்களை, பெயர் அடிப்படையில் வகைப்படுத்திய இலக்கண ஆசிரியர்கள், ஆகுபெயர்த்தன்மை அடிப்படையில் விட்ட ஆகுபெயர் விடாத ஆகுபெயர் என இருவகைப்படுத்துவர். இன் னும் தொடர்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருமடி, மும் மடி, நான்மடி எனவும் வகைப்படுத்துவர்.
(3)
தொல்காப்பியனுர் ஆகுபெயர் வகைகளையும், ஆகுபெயரின்
தன்மையையும் பின்வரும் சூத்திரத்தில் தந்துள்ளார்.
"முதலில் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்த வழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ அ?ன(ய) மரபினவே யாகுபெயர்க் கிளவி’ முதலிற் கூறும் சினையறி கிளவி - பொருளாகுபெயர் சினையிற் கூறும் முதலறி கிளவி - சினயாகுபெயர்
பிறந்த வழிக் கூறல் - இடவாகுபெயர் பண்பு கொள் பெயர் - குணவாகுபெயர் இயன்றது மொழிதல் - காரணவாகுபெயர் இருபெயரொட்டு - இருபெயரொட்டாகுபெயர்
விண்முதல் உரைக்கும் கிளவி - கருத்தாவாகுபெயர்
*அனை மரபின' என்பதால் ஆகுபெயர்த் தன்மை அல்லது வரை யறையை உய்த்துணர வைத்தார். அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தை யுடையன என்பது 'அனே மரபின" என்பதற்குப் பொருள். எப்பெற் றிப்பட்டன என்பதற்கு விடைதான் உய்த்துணர வேண்டியது. ஆகுபெயர் வரையறையை உணர்த்தாமல் ‘அன மரபின' என எவ் வாறு அவர் சூத்திரம் செய்யக் கூடும்?
தொடர்பற்ற எதையும் அவர் ஆகுபெயர் வகையாகக் கூற வில்லையென்பதை காம் இலகுவாயே உணர முடியும் அல்லவா. இப்படிக் கூறுவதை இலக்கணம் தெரிந்தவர்கள் உடம்பொடு புணர்த் தல் என்னும் உத்தி என்பர். தொல்காப்பியர் கூறிய ஆகுபெயர் வகைப்பாடுகளைக் கவனித்துத்தான் கன்னூலார் "ஒன்றன் பெயரான்

- 75
அதற்கியை பிறிதை” என ஆகுபெயர் 'இலக்கணத்தை வெளிப் படையாகக் கூறினர்.
*அனய மரபினவென்றது அவ்வாறு யாதானுமோர் இயைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆதல் என ஆகுபெயர் இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு’ என, சேணுவரையர் கூறியதும் தெரிக, நன்னூலார் வெளிப்படையாகக் கூறினுர். தொல்காப்பியனுர் குறிப் பாக உணர வைத்தார். அவ்வளவுதான். இனி, தொல்காப்பியர் ஆகுபெயரென்றல் என்னவென்று கூறவில்லை எனக் குறைப்படு வோருமுளர்.
அன்மொழித் தொகை
(அ) தயிர்ச்சட்டி - 2ம் வேற்றுமைத் தொகைத் தொடர்,
LD40sfucras) — Зф 9. ps கூலி வேலை - 4th Js s விண்வீழ்கொள்ளி - 5ம் SS ஆனைக்கால் - 6b 9s விண் மனிதன் - 7ம் s
(ஆ) பிடி அரிசி - வினைத்தொகை ws
செங்காந்தன் - பண்புத்தொகை ps JG மதிமுகம் - உவமைத்தொகை , இராப்பகல் - உம்மைத்தொகைத் n
மேற்குறிப்பிட்ட வேற்றுமை, அல்வழித் தொகைத் தொடர்கள் தொடரமைப்பில் இடம்பெற்று ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள வேறு பொருள்களைக் குறிப்பிடுவது அன்மொழித்தொகை இலக்கண மாகக் கூறப்படும்.
உ+ம்: 'சங்கு வளையல் இங்கே வா"
கண்ணிருக்குக் கை கொடுத்தான்.
சங்குவளையல் அணிந்த சிறுமி அல்லது பெண்ணைக் கண்ட தும் ‘சங்குவளையல் இங்கே வா' என அழைக்கின்றேம். சக்தர்ப்பம் காரணமாகச் சங்கு வளயல் என்ற மூன்றம் வேற்றுமைத் தொடர் அதனை அணிந்த கங்கையைக் குறிப்பிடுகின்றது. எனவே, கங்கை என்ற சொல் அன்மொழியாகும். அஃதாவது குறிப்பிட்ட தொடரிற் சொல்லப்படாத மொழி என்பது கருத்து.

Page 43
- 76 -
தொகைத் தொடர்களெல்லாம் கூட்டுப் பெயர்கள் என்க. தொடரமைப்பு நோக்கங்களில் ஒன்று நாள் வீதம் பல்கிப் பெருகி வரும் பொருட்களை வழங்குவதற்காகப் பெயர் வைப்பதும் ஆகும். எனவே இத்தொகைத் தொடர்களும் பெயர்களே. தொகை என்ப தால் இருமொழிப் பெயர்கள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழி களை ஒரு சொல்லாகக் கொண்ட பெயர்கள் என்பதும் பெறப்படும்.
இப்படியான தொகைத் தொடர்களின் பொருள்களைத் தழுவிய வேற்றுப் டொருட்களுக்குரிய சொற்கள் தொகுவது அன்மொழித் தொகை என்க,
*ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி'
(நன். 368)
ஆகுபெயருக்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு
(1) இயற்பெயர்ப் பொருளுக்கும் ஆகுபெயர்ப் பொருளுக்கும் உள்ள தொடர்பு இருவகையானது. இருபொருள்களிலும் உள்ள பிரிக்கப்படாத தொடர்பு ஒருவகை. இது விடாத ஆகுபெயர் என் பதால் உணரப்படுவது. பிரிக்கப்படக்கூடிய தொடர்பு விட்டவாகு பெயர் என்பதால் பெறப்படுவது. இவ்விருவகைத் தொடர்பும் கிரந்தர மானது. அஃதாவது நியதியானது. இதனுலேதான் ஆகுபெயர் நியதிப் பெயரெனப்படும்.
அன்மொழி குறிக்கும் பொருளுக்கும், அவ் அன்மொழி பிறந்த தொகைத் தொடர் குறிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானதன்று. குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு தொடர் அந்த நேரத் தொடர்பு காரணமாக வேறு பொருளைக் குறிப்பிடுவது அன்மொழித் தொகையாகும்.
இதனுலேயே தான், தாழ், குழல் வந்தாள் என்னும்போது தாழ் குழல் ஆகுபெயரெனக் கூறப்படுகிறது. பொற்குலி பூரித்தாள் என் பதில் பொற்றலி என்பதும் ஆகுபெயர். கூந்தலுக்கும் பெண்ணுக் கும் உள்ளதொடர்பும் நிரந்தரமானது. நியதியானது.
பொன் வளையல் வந்தாள். குறுந்தொடி குறுகுறுக்கின்ருள் என் பவற்றில் பொன்வளையலும் குறுந்தொடியும் அன்மொழித் தொகை கள். தொடிக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பும், வளையலுக்கும் வனிதைக்கும் உள்ள தொடர்பும் நிரந்தரமானது அல்ல. இவற்றை அணிந்த நேரத்தில் அணிந்தவர் அன்மொழித் தொகையாகக் குறிப் பிடப்படுகின்றர்.

- 77 -
(2) ஆகுபெயர், ஒரு பொருளுக்குரிய பெயர் இன்னுெரு பொருளைக் குறிப்பிடுவதென்பதால் ஒரு மொழியிலும் வரும் இரு மொழியிலும் வரும். இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளிலும் வரலாம். அன்மொழித் தொகை இரு மொழியிலும் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளிலுமே வரும். s
இருதிணைப் பொதுப்பெயர்
(1) பெயர்ச்சொற்களைத் தெரிந்து வகைப்படுத்திய இலக்கண நூலோர் உயர்திணைப் பெயர். அஃறிணைப் பெயர் இருதினைக்கும் பொதுப்பெயரென அவற்றை மூவகைப்படுத்தினர் பொன்னன், பொன்னி ஆதியன உயர்திணைப் பெயர்கள். பொன், பணம் ஆதி யன அஃறிணைப் பெயர்கள். தாய், தந்தை ஆதியானவை இரு தினைப் பொதுப்பெயர்கள். இவை திணை விரவுப் பெயர் எனவும் கூறப்படும்.
(2) இப் பொதுப் பெயர்கள் கொண்டு முடியும் வினைச் சொற்களால் மாத்திரம் அன்று அடுத்து வரும் பெயர்ச் சொற் களாலும் திணைப் பொதுமை நீங்கும்.
*பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வரும் சிறப்புப்பெயர் வினைதாமே"
(கன். 359)
se + ib:
வினேச் சொற்களால் பொதுமை நீங்கல்
தந்தை பாடினுன் (தந்தை - உயர்திணை) தக்தை வருகிறது (தந்தை - அஃறிணை)
அடுத்துள்ள பெயர்ச்சொற்களால் கிபாதுமை நீங்கல்
இவன் தந்தை (தந்தை - உயர்திணை) இது தாய் (தாய் - அஃறிணை) சாத்தன் ஒருவன் (சாத்தன் - உயர்திணை) சாத்தன் ஒன்று (சாத்தன் - அஃறிணை)
(2) ஆசிரியர் தொல்காப்பியர் இயற்பெயர், சினப்பெயர், சினேமுதற்பெயர் முறைப்பெயர் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பன இருதினைப் பொதுப்பெயர்கள் எனக் கூறுவர்.

Page 44
- 78
இயற்பெயர் என்பது காரணம் கருதாது வைத்த இயல்பான பெயர்களாகும். இவ்வியற்பெயரை முதற்பெயர் எனக் குறிப்பிடுவர் நன்னூலார். சினைப்பெயரென்பது இங்கு உறுப்புப் பெயரைக் குறிக் காது, உறுப்படியாகப் பிறந்த பெயரைக் குறிப்பதாகும். கரிகாலன், முடவன், கண்ணன் ஆதியானவையே இங்கு சினைப்பெயர் எனப் படுகின்றன. சினைப்பெயர் தனியாக கின்று முதற்பெயருடன் சேரும் பொழுது சின் முதற் பெயரெனப்படும். சீத்தலைச்சாத்தன், பெருங் கால் யானை என அவைவரும்.
இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர் ஒவ்வொன்றும் தனித்தனி ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என்ற அடிப் படையில் பன்னிரண்டாக விரிவடையும்.
(3) தொல்காப்பியர் இருதிணைக்கும் பொதுவாக உள்ள முன்னிலைப் பெயர்களாக நீயிர், நீ இரண்டையுமே குறிப்பிட்டார். கன்னூலாரோ இல்விரண்டுடன் நீ, நீவிர், எல்லீர் என்ற மூன்றை யும் கூட்டி முன்னிலைப் பெயர் ஐந்து என்றர். தொல்காப்பியனுர் தன்மைப் பெயர்களை குறிப்பிடவில்லை. (தன்மைப் பெயர்கள் உயர் திணை என்பது அவர் கருத்து) கன்னூலாரோ தன்மைப் பெயர் களும் இருதிணைக்கும் பொதுவானவை எனக்கொண்டு, யான், நான், யாம், காம் என்ற கான்கையும் சேர்த்து இருதினேப் பொதுப் பெயர்களே விரிவாக்கியுள்ளார்.
(4) நன்னூலார் கருத்துப்படி இருதினைப் பொதுப் பெயர்கள்:
. ஆண்மைப் பொதுப்பெயர் (உயர்திணை ஆணுக்கும்
அஃறிணை ஆணுக்கும் போது):
ஆண்மை முதற் பெயர் - சாத்தன்
(உ+ம்) - சாத்தன் இவன்
சாத்தன் இவ்வெருது
ஆண்மைச் சினைப் பெயர் - முடவன்
முடவன் இவன் மூடவன் இவ்வெருது
ஆண்மைச் சினே முதற்பெயர் - முடக் கொற்றன்
முடக் கொற்றன் இவன்
முடக்கொற்றன் இவ்வெருது

,
II.
IV.
سے 79 سے
பெண்மைப் பொதுப்பெயர் (உயர்திணைப் பெண்ணுக் கும் அஃறிணைப் பெண்ணுக்கும் பொது):
பெண்மை முதற் பெயர் - சாத்தி
சாத்தி இவள் சாத்தி இப்பசு
பெண்மைச் சினைப் பெயர் - முடத்தி
முடத்தி இவள் முடத்தி இப்பசு
பெண்மைச் சினமுதற் பெயர் - முடச்சாத்தி
முடச்சாத்தி இவள் முடச்சாத்தி இப்பசு
ஒருமைப் பொதுப் பெயர் (உயர்திணை ஆணுெருமை, உயர்திணைப் பெண்ணுெருமை, அஃறிணை ஒருமை மூன்றிற்கும் பொது):
ஒருமை முதற் பெயர் - கோதை
கோதை இவன் கோதை இவள்
கோதை இது
ஒருமைச் சினப் பெயர் - Galíf
செவியிலி இவன் செவியிலி இவள் செவியிலி இது
ஒருமை சினை முதற் பெயர் - குருட்டுப் பிறவி
குருட்டுப் பிறவி இவன் குருட்டுப் பிறவி இவள் குறுட்டுப் பிறவி இது
பன்மைப் பொதுப்பெயர் (உயர்திணைப் பன்மைக்கும்
அஃறிணைப் பன்மை க்கும் பொது:
பன்மை முதற்பெயர் - கோதைகள்
கோதைகள் இவர்கள். கோதைகள் இவை

Page 45
- 80 -
பன்மைச் சினேப்பெயர் - செவியிலிகள்
செவியிலிகள் இவர்கள் செவியிலிகள் இவை
பன்மைச் சினை முதற்பெயர் - குருட்டுப்பிறவிகள்
குருட்டுப் பிறவிகள் இவர்கள் குருட்டுப் பிறவிகள் இவை
W. முறைப் பெயர்:
ஆண்மைப் பொது - தந்தை இவன்
தந்தை இவ்வெருது பெண்மைப் பொது - தாய் இவள்
தாய் இப்பசு
W. தன்மைப் பெயர்:
யான், நான் (இருதின ஒருமைக்கும் பொது)
- யான் ஆடவன்
யான் மங்கை யான் பூதம்
யாம், நாம் (இருதிணைப் பன்மைக்கும் பொது)
- நாம் தமிழர்
காம் பூதங்கள்
VI.முன்னிலைப் பெயர்:
நீ (இருதின ஒருமைக்கும் பொது)
- நீ ஓர் ஆண்
நீ ஒரு பெண் - நீ ஒரு மாடு
நீர் (நீர் இக்காலத்துப் பன்மை வழக்கில் இல்ல) நீயிர், நீவிர் (இவ்விரண்டும் இப்போது வழக்கம் இல்ல பதிலாக நீங்
கள் என்பதே வழக்கில் உண்டு)
- நீங்கள் ஆண்கள் நீங்கள் பெண்கள் நீங்கள் மிருகங்கள் (நீங்கள் என்பதையும் சேர்த்துக்கொள்க.) VIII., G dibGổi - நீங்கள் எல்லீரும் படித்தவர்கள்
மிருகங்கள் و ستصمة

- 8 -
6Iđồù)IIử - அவரெல்லாம் (உயர்திணப் பன்மை) - அவை எல்லாம் (அஃறிணைப் , )
தாம் , - அவர்கள் தாம் (உ ப.)
- அவைதாம் (அ. ப.) தான் - அவன்தான் (உ. தி. ஆ. ஒருமை) - அவள்தான் ( , பெ, , ) - அதுதான் (அஃறிணை , ) (5) இக்கால வழக்கு . ஒரு பொருளையே இருதிணைக்கும் பொதுவாக்கல்
சூரியன் உதிக்கிறன். சூரியன் உதிக்கிறது சந்திரன் உதிக்கிருன் சந்திரன் உதிக்கிறது மகனும், மகளும்:
இவன் மகன் இது மகன் இவள் மகள் இது மகள் உயர்திணை ஆண், அஃறிணை ஒருமை, பன்மை:
இடம் அடியாகப் பிறந்த ஆன் ஈறு(@一十ü)
இவன் 9ւt\DIվ Lքմ யாழ்ப்பாணத்தான, இம்மாமபழங்கள் உயர்திணை ஆண், பெண், அஃறிணை ஒருமை (ஒரு மைப் பொதுப்பெயர்): (1) தனிப்பண்புப்பெயர்:
முடம் வருகிறன் , வருகிருள் வருகிறது
இ. 11

Page 46
، 82 ہے
(2) பண்புப்பெயர் + அன்/இ'சாலி
(A) இவன் ஒரு ,,,,འ་་་་
இவள் ஒரு மூர்க்கன்/விண்ணன்
இது ஒர்
(குறிப்பு: மூர்க்கி, விண்ணி எனப் பெண்பாலும் உண்டு ஆயினும் மூர்க்கன், விண்ணன் என அழைக்கவும் படுகின்றன.-- “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' (B) அவன் ஒரு பாவி
அவள் ஒரு அது ஓர் :
(பாவி-அப்பாவி)
(C) இவன் பலசாலி/குணசாலி இவள் பலசாலி , இது
(3) தனிப்பொருட் பெயர்:
இவன் ஒரு மாணிக்கம் இவள் ஒரு மாணிக்கம்
இது ஒரு மாணிக்கம்
(4) பொருள் முதற் Qului:
இவன் ஒரு சாப்பாட்டிராமன்
இவள் ஒரு 多嫁
இது ஓர் (5) தொழிற்பெயர் + அன்:
இவன் ஓர் ஊனன்
இவள்
இது ஓர்
ஆய்வு
பன்மை சுட்டிய பெயர்
(1) பன்மைப் பொதுப் பெயர் என்பதில் தொல்காப்பியனுருக்
கும் நன்னூலாருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஆண்மை பெண்மை, ஒருமை, பன்மை என்று பிரித்த வகையில் நன்னூலார்

سے 88 سے
கருத்துத் தெளிவாக உள்ளது. பன்மைப் பொதுப் பெயாை உயர் திணைப் பன்மைக்கும், அஃறிணைப் பன்மைக்கும் பொதுவான பெய ராகக் கொண்டுள்ளார் நன்னூலார். "அவற்றுள் ஒன்றே இரு திணைத் தன்பால் ஏற்கும்” (கன்-284) என்ற சூத்திரத்தால், பன்மைப் பொதுப்பெயரும் இருதிணையிலும் பன்மைகளையும் ஏற்றுக் கொள்ளுமெனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
(2) பன்மை சுட்டிய பொதுப்பெயர் சம்பந்தமான தொல் காப்பியனுர் சூத்திரம் பின்வருவதாகும்.
* பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றிப் பாற்கும் ஒரன்னவ்வே” (தொல். சொ. 182)
இருதினை ஆண்மைக்கும் பொதுவான பெயர் ஆண்மைப் பொதுப் பெயர் என்பதுபோல், இருதினைப் பெண்மைக்கும் பொதுவான பெயர் பெண்மைப் பொதுப் பெயர் என்பதுபோல், இருதினை ஒருமைக்கும் பொதுவான பெயர் ஒருமைப் பொதுப் பெயர் என்பதுபோல், பன்மைப் பொதுப் பெயரென்பதும் இருதிணைப் பன்மைக்கும் உரியதாதல் வேண்டும். ஆனுல் தொல்காப்பியனுரோ பன்மை சுட்டிய எல்லாப் பெயர்களும் அஃறினை ஒருமைக்கும், அத்திணைப் பன்மைக்கும், உயர்தினை ஆண் ஒருமைக்கும் உயர் திணைப் பெண் ஒருமைக்கும் ஒத்த உரிமை உடையன என்பதுடன் நின்றுவிடுகின்ருர்,
(3) தொல்காப்பிய உரையாசிரியர்கள் எவராவது பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பலர்பாலில் வருவதற்கு உதாரணம் காட்டவில்லை. இது, இவர்கள் காலத்தில் பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பலர் பாலைக் குறிப்பதான சொல்வழக்கினைக் கொண் டிருக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. எனவே, பலபாலையும் சுட்டி நிற்கின்ற வழக்கிலேதான் பன்மை சுட்டிய (பொதுப்)பெயர் தொல்காப்பியனுரால் கையாளப்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியனுர் காலத்தும் பன்மை சுட்டிய பெயறு உயர்திணைப் பலர்பாலக் கருதமுடியாத நிலைதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
(4) "கள்" விகுதி தொல்காப்பியனுர் காலத்து உயர்திணைப் பலர்பாலைக் குறிக்கும் வழக்கில் விதியொன்று செய்யக்கூடிய அள வுக்கு இல்லை. "மக்கள்’ என்ற சொல்லில் 'கள் விகுதி காணப்

Page 47
பட்டாலும் (தொல், சொல். 1) பரவலாக வழக்கில் இல்லை என் பதாலேதான் உயர்திணைப் பன்மைக்குத் தொல்காப்பியனுர் 'கள்' விகுதியைக் குறிப்பிடவில்லை; அஃறிணைப் பன்மை விகுதி என மாத்திரம் குறிப்பிட்டார். கன்னூலார் காலத்தோ கள் விகுதி உயர்தினைப் பன்மையைக் குறித்தும் பரவலாகக் காணப்பட்டமை யால் கள் விகுதியைப் பலர்பால் விகுதிகளில் ஒன்ருகச் சொல்லியுள்ளார். கள் விகுதி உயர்திணைக்கும் வந்த பிற்பாடுதான் பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பலர்பாலையும் குறிக்கும் நிலை ஏற்பட்டிருத்தல் கூடும். "செவியிலி' என்ற இருதிணை ஒருமை, இருதினைக்கும் பொதுவான கள் விகுதி பெற்ற பிற்பாடு, செவியிலி கள் என நின்று இருதிணைக்கும் பொதுப் பன்மையாக மாறியதில் வியப்பில்லை. எனவே, பன்மை சுட்டிய பெயர் என்பதில், உயர் திணைப் பன்மையைத் தொல் காப்பியனுர் குறிப்பிடாமல் விட்டிருக் தால் அஃது அவர்கால மொழி வழக்கு நிலை எனப் புரிந்துகொள்ளல் வேண்டும். "கள் விகுதி அஃறிணைப் பன்மைக்குச் சிறந்ததாய் உயர்திணைப் பன்மைக் கண்ணும் விரவி வருதலின் ஒருமைப் பொதுப் பெயரோடு 'கள்' விகுதி புணர்ந்த துணையானே அவைப் பன்மைப் பொதுப்பெயராயின’ எனச் சங்கர நமச்சிவாயர் கூறு வதும் காண்க.
(6) ஆனல், "தொல் காப்பியரோ பன்மை என்ற சொல்லே இருதிணைப் பன்மைக்கும் பொதுவான பன்மையிலேதான் ஏனைய இடங்களிலே கையாண்டிருக்கின்றர். 'தாமென் கிளவி பன்மைக் குரித்தே" (தொல், சொல்.181) ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே (தொல். சொல். 187)” எனக்கூறி, இச்சூத்திரத்திலும் பன்மை என் பது இருதிணைக்கும் பொதுவான பன்மை என்றே கூறுகின்றர். 'தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்’ என்னும் நூலின் ஆசிரியர். தன் கூற்றுக்கு மேலுமோர் ஆதாரமாக, சிவஞான முனி வர் நன்னூல் விருத்தியுரையில் (கன். 284) 'தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினுர்’ எனக் கூறியதையும் குறிப்பிடுகின்றர்.
தன்பாலேற்றலை உம்மையால் தழுவியிருந்தால், சூத்திரத்தில் பலவே' என்ற சொல்லைக் குறிப்பிட இடமில்லை. இருதிணையிலும் பன்மையைக் குறிப்பிடுவது உம்மையால் பெறப்படும் ஆயிற்றே வேருக, பலவே" எனக் கூறவேண்டியதில்லை. வியப்பு என்ன என்றல் இருதிணை யிலும் தன் தன் பாலேற்றலை உம்மையால் தழுவிக்

- 85 -
கொண்ட சிவஞானமுனிவர் கூட, பன்மை சுட்டிய பெயர் உயர் திணைப் பன்மையைக் காட்டுவதற்கு உதாரணம் தராமல் விட்ட தாகும். ஒன்று உதாரணம் தரவில்லை. மற்றது உம்மையால் தழுவிக் கொண்டால் பலவே என்ற சொல் வருதற்கு இடமில்லை. இவ் இரு காரணங்களாலும் சிவஞானமுனிவர் கருத்தும் ஏற்பதற்கில்லை" என் பதும் பெறப்படும்.
பன்மை என்ற சொல்லை மேற்குறிப்பிட்ட இரு சூத்திரங்களி லும் பலவின்பாலுக்கும். பலர்பாலுக்குமாகக் குறிப்பிட்டது உண்மை தான். ஆணுல், தொல்காப்பியரோ ஒன்று, இரண்டு, பல எனவரும் வட நூல் வழக்கையும் ஏற்றுக் கொண்டவர். இரண்டுக்கு மேற்பட்டன பன்மை என்பது வடநூல் வழக்கு. இங்கும் இரண்டுக்கு மேற்பட்ட பால்களைக் குறிப்பிடும் பன்மை சுட்டிய பெயரை, அவ்வழக்குப்பற்றிப் பன்மை சுட்டிய பெயரென்று குறிப்பிட்டிருக்கலாம். அல்லவா. இச் சூத்திரத்தில் இப்படிக் கொள்வது மிகப் பொருத்தமும் கூட.
(6) நுணுகி நோக்கின். பன்மை சுட்டிய பெயரென்பதற்கு கன்னூலார் கொடுத்த கருத்து வேறு தொல்காப்பியனுர் கொண்ட கருத்துவேறு என்பது புலப்படும். தொல்காப்பியத்திலிருந்து சொற் பொதுநிலையை நோக்கும்போது கான்கு பால்களுக்குப் பொதுவான ஒரு நிலை, மூன்று பால்களுக்கு பொதுவான ஒரு நிலை தனித்தனிப் பால்களுக்கான ஒரு நிலையில் மொழிநுணுகி, நுணுகி வந்துள்ளது" தெரிகிறது.
திணைப் பொதுப்பெயர்த் தோற்றம்
(அ) இருதிணைப் பொதுப்பெயர்கள் திணைவிரவுப் பெயர்கள் எனவும் கூறப்படும். "உயர்திணைக்குச் சிறந்த பெயர் அறிணைக் கண்விரவியும் அஃறினைக்குச் சிறந்த பெயர் உயர்திணைக் கண் விரவியும் வருதலின் இவற்றை விரவுப் பெயரென்றும் கூறுப" என்று விளக்கம் தருவர் சங்கராமச்சிவாயர். இதிலிருந்து விளங்குவது முன்னேர்கள் எருது பசு முதலானவற்றின் நற்பயன் கருதி உவப் புக் காரணமாக உயர்தினைப் பெயர்களை அஃறிணைப் பொருள் களுக்கு வழங்கினர்கள் என்பதும், மனிதனிடத்து வெறுப்பு ஏற்படும் பொழுது உயர்திணைப் பெயர்களுக்கு அஃறிணைப் பெயர்களே வழங்கினர்கள் என்பதும் ஆகும். இது ஒரு கோக்கு:

Page 48
- 86 -
(ஆ) உடலமைப்பில் உள்ள ஊனங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாக நிற்றலின் இருதிணைப் பொதுப் பெயர்கள் ஏற்படவும் வழி பிறந்தது,
(இ) அறிவு விளக்க மற்ற நிலையிலும் பொதுப்பெயர்கள் ஏற்படும். எந்தக் குழந்தையாயினும் குழந்தை அறிவு விளக்கமற் றது. அதல்ை குழவி என்னும் பெயர் அஃறிணை ஒருமைக்கும், உயர்தினை ஆண் ஒருமைக்கும், உயர்திணைப் பெண் ஒருமைக்கும் பொதுவாக நிற்கின்ற நிலையைத் தொல்காப்பியனுர் குறிப்பிட்டுள்
6s.
(ஈ) திணைக்குப் புறநடையாகத் தொல்காப்பியர் கூறிய "குடிமை ஆண்மை." (தொல். சொல். 56) என்ற சூத்தி ரத்தை கோக்கும் பொழுது; அஃறிணைவினைகளாலேயே உயர்திணை யைக் குறிப்பாக உணர்த்திய ஒருங்லேயும் உண்டு என்பதும் பெறப்படும். இச்சூத்திரத்தையும் திணைப்பொதுப்பெயர் சம்பந்த மான தொல்காப்பியச் சூத்திரங்களையும் நோக்கும்போது படிப்படி யாகத் தனித்தனிப் பால்களேக் குறிப்பிடுமளவுக்கு மொழி நுணுகி நுணிகி வந்துள்ள கிலை புலனுகின்றது.
இடைச்சொல் 1. அடிச்சொற்கள் தவிரச், சொல்லாக்கத்திற்குப் பயன்படும். அனைத்துறுப்புக்களும் (சொல்லின் அகத்துறுப்புக்கள்), சொற்ருெடர் அமைப்புக்கு உதவும்-அஃதாவது பெயர்வினைச் சொற்களுடன் சேர்ந்து தொடர்களை அமைக்க உதவும் எழுத்தோ சொல்லோ அனைத்தும் இடைச் சொற்கள் எனக் கூறப்படுகின்றன.
"இடையெனப்படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்றியலும்; தமக்கியல் பிலவே"
(தொல். சொல். கச், 251)
எனத் தொல்காப்பியனுர் இடைச்சொல் இயல்பை எடுத்தியம்பினுர்,
இடைச்சொற்கள் எனப்படுவன பெயரடியோடும், வினையடி யோடும் சேர்ந்து கடந்து பெயர் வினைகளை ஆக்கியும், பெயர்வினைச் சொற்களோடு சேர்ந்து நடந்து தொடர்களை ஆக்கியும் வரும் இயல்

- 87 -
பைக் கொண்டவை; தனியாக நின்று பொருள் தரும் இயல்பும் அற்றவை என இச்சூத்திரத்திற்கும் பொருள் கொள்ளுதலே தகுதி யானதாகும்.
எனவே, அடிச்சொற்களிடமாக கடப்பன இடைச் சொற்கள் எனப்படும். இடம் இடையாயிற்று. (வேறு சொற்கள் ஆக்கப்படுவ தற்கு இடப்படும் (கொடுக்கப்படும்) சொல் இடைச்சொல் என்றுங் கூறலாம். கொடு >கொடை : இடு>இடை)
அடிச்சொற்கள் எனப்படுவனவற்றிற் கூடச், சில, இடைச் சொற்களென இலக்கண வல்லுனரால் அவ்வப்பொழுது சொல் லப்பட்டுள்ளன.
உ-ம்) (அ) சுட்டுவினுப் பெயர்களின் பகுதிகளனைத்தும் இடைச் சொற்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளன. அ+ அவன் =அவன்; யா+ அன் = யாவன். அடிச்சொல் "அ" எனக் கொண்டாலுஞ்சரி, அவ் எனக் கொண்டாலுஞ்சரி இடைச்சொல் இடைச்சொல்லே v,
(ஆ) எண்ணுப் பெயர்கள் சிலவற்றின் பகுதிகளும் இடைச் சொற்களாகக் கூறப்பட்டுள்ளன. 'ஈர்" பெயரடை யாக வரினும் ஒரு பெயர். இரண்டு என்பதன் பகுதி யுங்கூட. இவ் "ஈர்" முன்னிலைப் பன்மை விகுதியாக்கப் பட்டுள்ளது. ஒன்று தவிர்ந்தன பல என்ற தமிழ் மர புப்படி முன்னிலைப் பன்மை விகுதியாயிருக்கலாம். விகுதி ஓரிடைச்சொல். ஓர் என்பது ஒரிடைச்சொல் எனக் குறிப்பிடுவர் பரிமேலழகர். (ஒன்று என்ற பொருளில் அன்று.
(இ) என்ருன், போன்றன் ஆதியசொற்களை இடைச்சொற்களடி யாகப் பிறந்தன என்பர். என், போல் பகுதிகளல்லவா? உவம உருபுகளென, பவணந்தியார் குறிப்பிடுவனவற்றில் கணிசமானவை வினைப்பகுதிகளாக ஏற்கப்பட்டுள்ளனவே.
இவற்றைக் கவனிக்கும்பொழுது, இடைச்சொற்களிடமாக ஏனைச்சொற்கள் பிறத்தலின். "இடைச் சொல்" ஆயிற்று என்று கொள்வதே பொருத்தம் போலும். ஏனைச் சொற்களுக்கு இடமாய் நின்ற சொல் இடைச்சொல். “பெயர்வினைகள் உணர்த்தும் பொருட் குத்தான் இடமாக நிற்றலால் இடைச்சொல்லாயிற்று" என்ற கல்லாடனர் குறிப்புக் கவனிப்புக்குரியது.

Page 49
- 88 -
2. சொற்ருெடர்களில் பெயர், வினை, உரிச்சொற்கள் வரை யறை செய்யப்பட்டபின்பு அவற்றினிடமாக எஞ்சி நின்ற எழுத் துக்களையும் சொற்களையும் இடைச்சொற்கள் எனக் கொண்டாலும், இடைச்சொல்லின் மதிப்புச் சற்றுங் குறையாது இடைச்சொற் பரப்பைக் குறைக்கலாமன்றி, அவற்றின் தரத்தைக் குறைத்து மதிப் பிடமுடியாது. தமிழ்க் கன்னியின் நளின விழிகள் இடைச் சொற்கள். மொழிக்குச் சிக்கனத்தையும் களினத்தையுந் தந்து, கருத்தில் வளைவு கெளிவுகளை ஏற்படுத்துபவை அவை, மொழி வானத்தில் கண் சிமிட்டுக் தாரகைகள் இடைச் சொற்கள் என்றுங் கூறலாம். இவர் ஒரு பேராசிரியர், இவரும் ஒரு பேராசிரியர். ஒரு நோக்கில் இரு வரும் பேராசிரியர். மறு நோக்கில் இவ் இரண்டுக்கும் உள்ள வேறு பாடு வேறு எவ் இரண்டுக்கும் இருக்க முடியாது. "உம் சேர்ந்து கண் சிமிட்ட வில்லையா? புத்தகப் பூச்சிக்கும் புத்தியுண்டா? - உம் செய்யும் நளினம் உணரமுடியாததா? நீ படிக்கவோ வந்தாய் - நீ படிப்பதற்கு வரவிலலை. வேறேதோ பார்க்க வந்தாய், அதுவும் உனக்குச் சரிவராது பருவமும் இடமும் தப்பிச் செயல்படுகின்ற படியால், உனக்குப் படிப்புச் சரிவராதோ. வராது என்றெல்லாம் ஒகாரம் விண்ணுணம் செய்கின்றதல்லவா!
3. இவ் இடிைச் சொற்களைப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நன்னூலார் எண்வகையாக்குவர். அவை இவை:
(i) வேற்றுமை உருபுகள் (ii) கால இடைநிலைகளும் விகுதிகளும் (ii) சாரியைகள் (iv) உவம உருபுகள் (y) கருத்துச் சிறப்புக்களைத் தருவன ("தத்தம் பொருள்")
(உ-ம் ஏ, ஓ ஆதியன) 领 (wi) ஒலிக்குறிப்பு இடைச் சொற்கள்: திடுதிடு, விறுவிறு,
“சரேலென. (yi) இசை நிறைப்பன (vi) அசை நிலைகள்
குறிப்பு: ஐயோ, அன்றே, ஏன் ஆக்கும், முன், பின் முந்தி, படி, உள், அப்புறம், அப்பால், மேல், கீழ், மாத்திரம், அளவு,

- 89 -
தன, அதிகம், பார்க்க, காட்டிலும், ஆனலும், என்கிலும், ஆம், ஆதியனவும் இடைச்சொற்களாக உபயோகப்படுத் தப்படும். 4. இடைச் சொற்கள் தரும் பொருள்களையும் இலக்கண ஆசிரி யர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை: தெரிகிலே, தேற்றம், ஐயம், எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினு, இவை, போன்ற பிறவும் என்பர்
உரிச்சொல்
உரிய, போருள் என்ற இரு சொல்லும் உரிப் பொருள் என் ருனது போல் உரிய + சொல் உரிச்சொல்லாயிற்று. அகவாழ்வின் பொருள் மூலங்க%ள உரிப்பொருள் என்றதும், மொழிவாழ்விற் சொல்மூலங்களை உரிச்சொல் என்றதும் நுட்பமாக உள்ளது.
உரியசொல் என்ருல் எதற்குரிய சொல் என்ற வினு எழும். மனிதன் வெளிப்படுத்த வேண்டிய கருத்தைத் தருவதற்குஉரிய சொல் என்பது அதன் விடையாகும். சொல்மூலம் சொல்லவேண்டிய அடிப்படைக் கருத்தைத் தருவதற்கான சொல் உரிச்சொல்.
இவ் அடிச்சொற்களுடன் சொல்லாக்க உருபன்களான இடைச் சொற்கள் ஒட்டித்தான் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் ஆகின்றன. ஒட்டும் இடைச்சொற்கள் திணைபால் எண் இடங் க%ளக் காட்ட, அடிச்சொல் சொல்லவேண்டிய கருத்தைக் காட்டு கின்றது. ‘காத்தான் ஒரு வினைச்சொல். அடிச்சொல்லாகிய கா என்னும் பகுதி காத்தல் என்னும் கருத்தைத் தருகின்றது. ஒட்டிய இடைச் சொற்கள் முறையே காலம், திணை, பால்களைக் காட்டு கின்றன. “மன்னன்’ ஒரு பெயர்ச்சொல். ‘மன் பகுதி. இஃது ஆண்பால் விகுதியாகிய ஆன் உடன் சேர்ந்து, முறையே ஒழுங்கை நிலைநாட்டுதல் என்ற கருத்தையும், அதைச் செய்பவன் இவன என் பதையும் தெரிவிக்கின்றன. ஆகவே பெயரிலும், வினையிலும் இன்றி யமையாத பகுதியை உணர்த்துவன உரிச் சொற்கள் ஆகும்.
இவ் அடிச் சொற்களிலிருந்து பெயரும் வினையும் தோன்றுதல் யாத்திரம் அல்ல, இவையே பெயருக்கும், வி ைக்கும் பொதுவாக நிற்பதும் உண்டு. சா, கா, வை ஆதியானவை பொதுவானவை
இ 12

Page 50
90 a
இவற்றை எடுத்து உச்சரிக்கும்போது ஏவல் வினைகள் ஆகின்றன. படுத்து உச்சரிக்கும் போது பெயர்ச் சொற்களாகின்றன. படுத்துதாழ்த்தி -
*உயிரும் புள்ளியும் இறுதியாகிக், குறிப்பினும், பண்பினும் இசையினும் தோன்றி, நெறிப்பட வாராக் குறைச் சொற்கிளவி (தொல். எழு. 482) என அடிச்சொல்லைக் குறைச்சொற்கிளவி என்பர் தொல்காப்பியர். "எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற் கிளவி என்று ஒதினமையால் வடநூலாசிரியர் தாது என்று குறிப் பிட்ட சொற்களே இவை என்று கொள்ளப்படும், அவையும் குறைச் சொல்லாதலால்” என விளக்கியுள்ளார் தெய்வச் சிலையார் (தொல், சொல். 293)
ஒரு நெறிப்பட இல்லாமல் பல்வேறு வழிகளில் குறிப்பினும், பண்பினும், இசையினும் தோன்றும் குறைச் சொற்களாகிய அடிச் சொற்களின் இயல்புகளை மேலும் தெளிவு படுத்தியுள்ளார் தொல் காப்பியனுர். .
'உரிச் சொற்கிளவி விரிக்குங் காலை
இசையினும் குறிப்பினும், பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி ஒரு சொற் பல பொருட்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் பரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும்பொருள்வேறு கிளத்தல்.”
(தொல். சொல். 293)
1.e. ரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு காரணமாகத் தோன்
றுவன.
2. பெயரிலும், வினையிலும் மெய் தடுமாறுவன.
3. ஓர் உரிச்சொல் பல குணங்களுக்குப் பொதுவாயும் கிற்கும். ஒரு குணத்தை பல உரிச்சொற்கள் காட்டலும் உண்டு.
4. பயிலாத உரிச்சொற்களை, இவ் உரிச்சொற்கள் நிலைக்கள மாகப் பிறக்கும் பெயர் அல்லது வினையுடன் சார்த்தி, பொருள் வேறுபாடு அறியும்படியாகச் சொல்லுதல் வேண்டும்,

a 91 -
முதலில் உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு காரணமாகத் தோன்றும் என்கிருர், இசை என்பது பொருட்களின் அசைவால் எழும் ஓசை அல்லது பொருள் செய்யும் ஓசை என்பதாகும். கூ, கூ என இசைப்பது குயில். ஆகவே கூ என்னும் இசையடியாகப் பிறந்தது குயில், கீ, கீ, என்னும் ஓசையை அடிச்சொல்லாகக் கொண்டு பிறந்தது கிளி. கா, கா, எனக்கரையும் காகம் கா என் னும் அடிச்சொல் அடியாகப் பிறந்தது.
தொழிற்பண்பையும் பொருட்பண்பையும் குறிக்கும் சொற்க ளெல்லாம் பண்படிகளாகிய உரிச்சொற்களாகும்.
மரம், கல், தண், வெவ் ஆதியன (மனக்) குறிப்புக் காரண மாகத் தோன்றியன.
குறிப்பும், பண்பும், இசையும் குணப்பண்பும், தொழிற்பண்பு மென இரண்டாய் அடங்கும் எனவும், குணப்பண்பும், தொழிற் பண்புமாகிய பொருட்பண்பை உணர்த்தும்சொல் உரிச்சொல் என வும் காட்டுவர் சிவஞானமுனிவர்.
பெயருக்கும், வினைக்கும் அடிநிலைகளாகவும், பெயரும் வினை யுமாகவும், பெயர் வினைகளுக்கு அடைகளாகவும் உரிச்சொல் நிற் பதைப் பெயரினும், வினேயினும் மெய் தடுமாறல் என்கிறர் தொல் காப்பியர். காற்று என்னும் பெயர்ச்சொல் கால் என்னும் அடியா கப் பிறந்தது. தந்தான் என்னும் வினைச் சொல் தா என்னும் அடி டிாகப் பிறந்தது. கா, சா, கூ, வை முதலான அடிச்சொற்கள் பெயர் வினைகளுக்குப் பொதுவாக உள்ளன. ‘உறுமின்' என்ப தில் உறு என்னும் அடிச்சொல் அடையாக நின்றது. அற கனக் தான் என்பதில் அறு என்னும் அடிச்சொல் அற என மாறி அடை யாக நின்றது. V
மெய் தடுமாறல் என்பதற்கு, ஒலித்தற்கு அரிய மெய்களை ஈற்றில் உட்ைய அடிச்சொற்கள் ஒலித்துணை உகரம் பெறுவதையும் குறிப்பிடலாம். பொருந், திரும், என்பன பொருந்து, திரும்பு என மாறியுள்ளன. இதுதான் இதன் அடிச்சொல் எனத்தடுமாறும் அள வுக்கு இவ் உரிச்சொற்களின் உருவம் (மெய்) திரிந்து விட்டன அல்லவா.
சால, உறு, தவ, கனி என்பன ஒருபொருட் குணமுரைக்கும் , பலவுரிச் சொற்களாகும். இவற்றுக்குப் பொருள் மிகுதி என்பது, கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, வாசனை, விளக்கம்,

Page 51
சிறப்பு. விரைவு, மிகுதி, புதுமை, ஒலிப்பு முதலான பல குணங் களையும் தருதலின் பல குணம் தழுவிய உரிச்சொல். பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல் தனித்தனிக் குணங்களுக்குத் தனித்தனிச் சொல் இல்லாத, மொழியின் சொற்பரப்புக் குறைந்த ஒரு நிலையை யும், ஒரு குணம் தழுவியபல உரிச்சொல் வெவ்வேறு இடங்களில் ஒரு குணத்தைக் குறிப்பதற்குப் பல சொற்கள் தோன்றுவதையும் காட்டுகின்றது.
இறுதியாகத் தொல்காப்பியனுர் குறிப்பிட்ட உரிப்பொருள் பற் றிய செய்தி பயிலாதவற்றைப் பயின்றவையுடன் சார்த்தி, பொருள் விளக்குதல் ஆகும். சால் என்பது மிகுதிப் பொருள் தருவதோர் உரிச்சொல். இதனைத் தனியாகக கையாளுவது இன்றைய வழக்கில் இல்லை. ஆனல் நன்று என்னும் சொல்லுடன் சார்த்தி, சாலவும் நன்று எனக்கூறும் பொழுது மிக நல்லது என்ற பொருளை இலகு வாகத் தருகின்றது. பயிலாதவற்றைப் பயின்றவையுடன் சார்த்தும் பொழுது உரிச்சொற்களிற்சில வடிவததிலும் வேறுபட்டுவிடுகின்றன. சால் > சால, உறு>உற.
இவ்வுரிச்சொற்களேப் பல் வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி அஃதாவது ஒரு குணத்தையும், பல குணத் தையும் உணர்த்துவனவாகி, பெயர் வினைகளை விட்டு நீங்காதனவாய், செய்யுட்கு, உரியனவாய் பொருட்கு உரிமை பூண்டு வருவன உரிச் சொல் என்பர் பவணந்தியார்.
“பல்வகைப் பண்பும் பகர் பெயராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட்குரியன உரிச்சொல்” (நீன். 442)
கன்னுாலார் உரிச் சொல்லும் ஒரு பெயர் எனக் குறிப்பிட்டது மிகப் பொருத்தமாக உள்ளது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே'யாதலால் ஒரு சொல் பொருளைக் குறிக்கும் போது பெயரா கின்றது. ஓர் அடிச் சொல் பெயரைக் குறிக்கும்பொழுது பெயர் தான். வினையைக் குறிக்கும் போதும் அந்த வினைக்கு அஃதோர் பெய ரென்க.
பவணந்தியார் செய்யுட்குரியன உரிச்சொல்லெனக் கூறுவது தான் பொருத்தமாக இல்லை. வழக்கு வீழ்ந்த சொற்களை உரியியலில் அதிகமாக விளக்குகின்றமையால் அவை இனிச் செய்யுட்கே உரி யன என்று கருதினுர் டோலும், செய்யுட்குரியனதான் உரிச்

a 99 -
சொல் என்ற கருத்துத் தொனிக்கும் அத்தொடருக்கு, செய்யுட்கு உரியனவாய் பொருட்கு உரிமை பூண்டு வருவன என நுட்ப மாக உரையெழுதியுள்ளார் சங்கரகமச்சிவாயர். அதனுல் பொரு 2ளத் தருதற்குரிய சொல் உரிச்சொல் எனபதையும் சங்கர நமச்சி வாயர் தெளிவாக விளக்கியுள்ளார்.
அஃறிணை விரவுப் பெயர்
அல்லது பால்பகா அஃறிணைப் பெயர் ஒன்றன்பால் பலவின்பால் (விகுதி: து) விகுதி: அ (ஐ, வை) வ்
1. சுட்டுப்பெயர்: அது, இது உது -1, அவை, இவை, உவை
அஃது, இஃது, உஃது - அவ், இவ், உவ் 2. எண்பெயர்: ஒன்று. -2. இரண்டு, மூன்று. 3. வினுப் பெயர்: யாது, எது -3. யா, யாவை, எவை 4. வி%னப் வருவது, போவது.- 4. வருவன, போவன. 5. ஒப்புப் , ; போன்றது. -5. போன்றன. 6. பண்புப் , கரியது. சிவந்தது -6 கரியன. சிவந்தன.
7. பல, பல்ல;சில,சில்ல;உள,
உள்ள; இல, இல்ல;
அல, அல்ல.
(அ) மேற் குறிப்பிட்டனவும் இவை போன்றனவுக் தவிர, ஏனைய அஃறினைப் பெயர்களெல்லாம் ஒன்றன்பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுவாகவே தொல்காப்பியர் காலத்தும் அதற்கு முன் பும் வழங்கின. பொதுவாக நின்ற அஃறிணைப் பெயர்களேயே, அத்திணைக்குரிய இயல்பான பெயர்களென்ற கருத்தில் அஃறிணை இயற் பெயர் என்ருர் தொல்காப்பியர்.
(ஆ) கிளி, பூனே, பறவை, பசு, மிருகம்,செடி, கொடி முதலான சாதிப் பெயர்களே அஃறிணை இயற் பெயர்களெனப்பட்டன. இவை முடிக்கும் வினைச் சொற்களாலும் அடையாகவரும் எண் ணுப் பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆதியனவற்றலும் பாற்பொதுமை நீங்கி, ஒன்றன் பாலையோ பலவின் பாலையோ காட்டும்.
(1) பசு வந்தது - பசுவந்தன (2) கண் கொந்தது - கண் கொந்தன (8) இதுபசு - இவைபசு (4) ஒருமாடு - பத்துமாடு
(5) is . -- U6A)bATG6

Page 52
- 94 -
(இ) பால் பகுக்க முடியாத இவ் இயற்பெயர்களைப் பால்பகா அஃறிணைப் பெயரென்பர் பவணந்தியார். தொல்காப்பியர் காலத் தில் இவ் அஃறிணை இயற்பெயர்கள், கள் விகுதியுடன் சேர்ந்து பன்மைப்பாலைக் குறித்த வழக்கும் இருந்திருத்தல் வேண்டும். பெரும்பான்மையாக இல்லாத காரணத்தாற் போலும்,
*கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழி உடையபலவறி சொற்கே"
எனச் சூத்திரம் செய்தார் தொல்காப்பியர். கொள்வழி உடைய - கொள்ளும் இடமும் உண்டு. இதிலிருந்து பழைய நடைமுறை தெளி வாகத் தெரிகின்றது. பவணந்தியார் காலத்திலோ கள் விகுதி அஃறிணைப் பன்மைக்குப் பெருவாழ்வு பெற்றுக் கொண்டது. அத னுல் அஃறிணைப் பன்மை விகுதிகளுள் ஒன்றக, கள் என்பதனை யும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
(ஈ) கள் விகுதியின் செல்வாக்கு இப்படியானுலும் பேச்சு வழக்கில் பன்மைப் பெயர்களுக்கு ஒருமை வினைகொடுத்துப் பேசு வதே அதிகமாகக் காணப்படுகின்றது.
மாடுகள் வந்திட்டுது கண்கள் நோகுது
பேச்சு வழக்கில் ஒருமைவினைமுற்றுடன் ஏன் ஒருமைப் பெய ரொடுமே கள் விகுதியைச் சேர்த்துக் கூறுவதும் உண்டு.
மாடுகள் ஓடுதுகள் அதுகள் வந்திட்டுதுகள்
(உ) எழுத்து வழக்கிலும் கூட எதிர்கால வினைமுற்றுக்கு ஒருமை, பன்மை விகுதியில்லாததால் மாடுமேயும், மாடுகள் மேயும் என்றே எழுதப்படும்.
(ஊ) அஃறிணையில் ஒருமை பன்மை வேறுபாடு பின் புகுந்தது அன்று எனவும் முன்னிருந்து மறைந்தது என்றே கூற வேண்டு மெனவும் கூறுவர் தெ. பொ. மீ. இயற்கையான னகர ஈறு பெற்ற எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என்ற எழு சொற்களும் தவிர, பிற எல்லாம் ஒருமையில் னகரமும், பன்மையில் மகரமும் பெற்றவை எனல் வேண்டும் என மேலும் கூறுவர்.

முதனிலை எழுத்துக்கள்
தமிழ்கெடுங் கணக்கில் உள்ள 247 எழுத்துக்களும் மொழிக்கு தலெழுத்தாக வருவதில்லை. குறிப்பிட்ட சில எழுத்துக்களே மொழிக்கு முதலாகின்றன. முயற்சி எளிமையும், உச்சரிக்கும் இனி மையும் மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட்டதனுற் போலும் எல்லா ஒலிகளும் மொழி முதலில் இடம்பெறவில்லை.
(அ) முதலாகும் உயிர்கள்
12 உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதலாக வரும்: 'பன்னி ருயிரும் மொழிமுதலாகும்’ (தொல், எழுத்து 59) நுங்தை என் னும் சொல்லில் குற்றியலுகரம் மொழி முதலானது என்னும் கூறு வர் தொல்காப்பியர்.
அழகு எழில் ஆரம் 666) இனிமை ஐயன் ஈதல் ஒன்று 9 - 6სტ ஒரம் ஊசல் ஒளவை
ஒள ஒரு கூட்டொலி ஆகும். அ+உ = ஒள. அ+வ் = ஒள. இதனுல் சந்தியக்கரம் எனவும் படும். அக்கரம்-அட்சரம் - எழுத்து. இக் கூட்டொலி முதலான தமிழ்ச் சொற்கள் மிகமிகக் குறைவு. ஒளடதம், ஒளசனம், ஒளதாரியம், ஒளபாசனம் முதலான வட சொற்களே சில உண்டு. அவ்வியம் முதலான சொற்களை ஒளவிய மாக எழுதுவதும் உண்டு. அ மொழி முதலாகக் கூடிய உயிரான படியால் அ ஒலியை முதலாகக் கொண்ட ஒள ஒலி மொழி முத லாகும் எனச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
(ஆ) மெய்யெழுத்துக்கள் தனியாக நின்று மொழி முதலாவ தில்லை. அஃதாவது வடமொழிபோல் ப்ரபை, த்ரவியம் எனத் தமிழ் மொழியில் மெய்யொலிகள் முன்வருவதில்லை. “உயிர்மெய் அல்லன மொழி முதலாகா' (தொல், எழு. 60) மெய் எழுத்துக் கள் உயிர்எழுத்துக்களுடன் சேர்ந்து உயிர் மெய்யாகவே மொழி முதலில் வரும். அப்படியிருந்தும் எல்லா மெய்யெழுத்துக்களும் உயிரோடு கலந்தாலும் முதலாகா. ஆனல், எல்லா மெய்யொலிகளும் தம் பெயர்களைக் கூறுமிடத்து மொழிமுதலாகும் என்பர் இலக்கண ஆசிரியர், ணகரம், னகரம், டகரம், ரகரம், லகரம், றகரம், ழகரம், ளகரம், என எழுத்துக்களின் பெயர்களைக் கூறும்பொழுது முத லாகா மெய்கள் முதலாகின்றன.

Page 53
- 96 -
உயிரேறிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும் மொழி முதலாகவரும். சுட்டெழுத்துக்களையும் வினவெழுத்துக்களையும் ஒட்டி ங் என்ற மெய்யெழுத்தும் மொழி முதலாக வருமெனக் கூறுவர் கன்னூலார். அதற்கு அங்ங்னம், இங்ங்ணம், உங்ங்னம், எங்ஙனம், யாங்ாங்னம் என உதாரணங்கள் காட்டப்படும். இவை இரு சொற்களாதலின் ங்கரம் மொழிமுதல் எனக்கூறுவதில் எவ்வித கருத்துமில்லை. இடத்தையும் தன்மையையும் ங்ணம் என்பது எங்கும் தனிமொழியாக இல்லை.
க், ச், த், ந், ப், ம் என்ற ஆறுமெய்களும் பன்னிரண்டு உயி ரோடும் கூடி மொழிக்கு முதலாகும்.
(1) க் - கண், கால், கிளி, கீரை, குன்று, கூடு, கெண்டி,
கேள்வி, கையுறை, கொடி, கோங்கு, கெளசலை
(2) ச் - சட்டி, சாடி, சினம், சீர், சுடலை, சூது, செங்கோல், சேய்மை, சைவம், சொல். சோடை, செளபாக்கியம்
குறிப்பு:- தொல்காப்பியர் சகரமெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களல்லாத ஏனைய உயிர்களோடு கூடித்தான் மொழி முதலாகுமெனக் கூறிஞர். கன்னூலார் தான் பன்னி ரண்டு உயிரோடும் கூடிவரும் என்ருர், அதனுல் சட்டி சகடம் முதலான சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தியன எனக் கருதப்படுகிறது. சை, செள என்ற எழுத்துக்கள் முத லாக வரும் சொற்கள் அநேகமாக வடசொற்களே. ஐ, ஒள என்பன கூட்டொலிகளாதலின் இக் கூட்டொலிகள் அகரமுத லாக ஒலித்தலின், அநேகமாக இவை மொழி முதலாகும் தன் மையை இழந்துவிடுகின்றன. சகரத்திற்கு மாத்திரம் அன்று, ஏனய மெய்களுக்குமே ஒளகாரம் தவிர்க்கப்படலாம்.
(3) த் - தன்மை, தாரம், திகழ்வு, தீமை, துன்பம், தூரம், தென்பு, தேன், தையல், தொடர், தோகை, தெளவல் (தெளவல் - இளமை)
(4) ந் - நரி, நாரி, நிலம், நீலம், நுகம், நூற்றல், கெல், நேற்று, கைதல், (வருந்துதல்) கொய்மை, நோவு, கெளவி (மான்)
(5) ப் பந்து, பாட்டு பிட்டு, பீர் (தாய்ப்பால்), புற்று, பூனே, பெண், பேதை, பையன், பொட்டு, போழ்து, பெள வம், (கடல்)

- 9ጎ -
(6) ம் - மகன், மாது, மிடி, மீசை, முள், மூலி, மென்மை, மேன்மை, மையல், மொய்த்தல், மோர், மெளவல் (மல்லிகை)
(7) வ் - அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டு உயி ரோடும் வகரமெய் மொழி முதலாகும். வழி, வாழி, விழி, வீரம், வெட்கம், வேதனை, வைதல், வெள வால்,
(8) ய் - யகரமெய் ஆ என்ற உயிரோடு மாத்திரம் மொழி முதலாகு மென்பர் தொல்காப்யியனுர், "ஆவோ டல்லது யகரம் முதலாது' (தொல், எழுத்து 65) யானை, யாடு, யாமம் என வரும்.
நன்னூலார் அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறு உயிர்களோடு வருமென்பர். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யெளவனம்
(இளமை)
குறிப்பு: நன்னூலார் காலத்துள்ள தமிழிற் கலந்த வடசொற் களுக்கு விதிகண்டு கொண்டார் அவர். யானே தவிர்ந்த மேற்காட்டிய உதாரணங்களெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்லாதனவே. ர், ல், ய் என்னும் மெய் யொலிகளை முதலாக உடைய வடமொழிகள் தமிழில் வரும்பொழுது முறையே அ இ, உ, இ, உ இ என்னும் உயிரெழுத்துக்களை முதலிற் பெற்றுவரும் (கன், 148) எனக் கூறிய கன்னூலார் யகரமெய் ஆகாரம் தவிர, அ உ ஊ, ஒ, ஒள என்னும் ஐந்துயி ரோடும் மொழி முதலாக வருமெனக் கூறியதன் காரணம் புலப்படவில்லை. வடசொற்களேத் தமிழ் உருவம் கொடுத்தும் கூறலாம். அல்லது சிரமமற்ற உச்சரிப்புடைய சொற்களை அப்படிய்ே எடுத்துக் கொள்ளலாம் என்பது அவர் கருத்தாதல வேண்டும்.
(9) ஞ்- ஆ, எ, ஒ என்னும் மூவுயிரோடும் முதலாகும் என்பர்
தொல்காப்பியர் கன்னூலார் அகரத்தோடும் வரு
மென்பர். ஞமலி (நாய்), ஞாலம் (பூமி), ஞெண்டு (கண்டு), ஞொள்கல் (அலைதல், மெலிதல், இளத்தல்)
ga, 13

Page 54
- 98 a
குறிப்பு: () Dமிறு (வண்டு) வண்டு என்ற சொல் புற நானூற் றில் வருகின்றது. அதனுல் ஞகர மெய் இகரத்தொடும்  ாேர்ந்து வருமென்றகிறது.
(3) ஞேயம் என்ற வடசொல் தமிழிற் கலந்து உள்ளது. அதனுல் ஏகாரத்தோடும் வருமென்று ஆகிறது.
(3) வடமொழிச் சொற்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஞ என்பது ந என்பதன் போலியாக உள்ளது எனக் காணலாம். கண்டு-ஞண்டு கமன் - ஞமன் எனக் காண்க. இதனுற்போலும் தொல்காப்பியர் ஞ் அகரத் தோடு வருமெனக் கூறவில்லை.
(இ) மொழிமுதலாகா எனத் தொல்காப்பியனுர் கூறிய ஒன் பது மெய்களில் ர், ல், ட், ற் என்ற நான்கு மெய்யொலிகளும் முதலாக உடைய தமிழ்ச் சொற்களல்லாத திசைச் சொற்களும் வடசொற்களும் தமிழ் உருவப்படுத்திக் கையாளப்படுவதைவிட, அப்படியே தமிழிலும், எழுதப்பட்டும் பேசப்பட்டும் புழக்கம் பெற் றுள்ளன
(1) ர் - ஐ தவிர்ந்த பதினுேர் உயிர்களோடும் மொழி முத
லாக உள்ள சொற்கள்:
ரதம் (இரதம்) ராகம் (இராகம்) fil-LJút, (LJD) ரீதி (இரீதி) ருசி (உருசி) ரூபம் (உரூபம்) ரெட்டியார் (இரெட்டியார்) ரேகை (இரேகை) ரொக்கம் (உரொக்கம்} ரோமம் (உரோமம்)
ரெளத்திரி (இரெளத்திரி)
(2) ல் - அ ஆ, இ, ஈ, ஐ ஒ முதலான உயிர்களுடன் மொழி
முதலாக உள்ள சொற்கள்:
லங்கா - இலங்கை லாகவம் - இலாகவம் லிங்கம் - இலிங்கம் 6ဂ်ဂိရ - இலீலை
ல்ோகம் - உலோகம்

 ை99 =
(3) ட் - டப்பா - இடப்பா
டம்ளர் . - தம்ளர் டில்லி - தில்லி டெலிபோன் - தெலிபோன் டொலர் - டொலர் டோலாக்கு - தோலாக்கு
(4) ற் - ருத்தல் - இறத்தல்
றப்பர் - இறப்பர், இரப்பர்
குறிப்பு: சிறப்புச் சொற்களே அப்படியே எடுத்தாளலாம். சில சிறப்புச் சொற்களைத் தமிழ உருவப்படுத்துவது அசிங்கம் எனக் கருதப்பட வேண்டும்.
மொழியிறுதி எழுத்துக்கள்
எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலாகாதவாறு போல, எல்லா எழுத்துக்களும் மொழிக்கு இறுதியாவதும் இல்லை. மொழிக்கு இறுதியாகும் எழுத்துக்களாவன:
(1) உயிர்: ஒள தவிர்ந்த பதினுேருயிர்களும் மொழிக்கு இறுதியாகு
மென்பர் தொல்காப்பியனுர். க், வ், என்பவற்றுடன் சேர்ந்து ஒளவும் இறுதியாகும் எனவுங் கூறுவர். பன்னிரண்டு உயிர்களும் மொழி இறுதியாம் என்பர் நன்னூலார்.
உ+ம்: விள, பலா, நரி, தீ, கடு, பூ, சே, கைதை, கோ, கெள விளக்கம்:
(ஆ) எகரம் அளபெடையிலேதான் ஈருகி நிற்கும் அன்றி
எந்த மெய்களுடனும் கலந்து ஈருகாது. அதனுலே தான் காவலர் எகரம் ஒழிந்தபதினுேருயிர்களும் மொழி இறுதியாகுமெனக் கூறினுர். சொல்லின் இறுதி வேறு, அளபெடை வேறு.
(ஆ) ஒள ஒரு கூட்டொலி என்பதைத் தொல்காப்பியனர் இங்கும் மறந்துவிடவில்லை. வெள என்பதை வவ் என்றும் எழுத லாம் அல்லவா. முதற் சூத்திரத்தில் (தொ. எழு. 69) ஒளகாரத் தைத் தவிர்த்து, “உயிர்ஒள எஞ்சிய இறுதியாகும்” என ஒலி நுட்ப உணர்வோடு சூத்திரம் செய்தவர் அடுத்த சூத்திரத்தில் வழக்குப் பயிற்சி நோக்கிப் போலும் "கவவோடு இயையின் ஒளவும் ஆகும்” (தொல், ஏழு. 70) எனக் கூறிவிட்டார்.

Page 55
(இ) ஒள என்பதும் மொழிக்கு இறுதியாக வேண்டும் என் பதாலேதான் நன்னூலார் வினைப்பகுதிகளை வகைப்படுத்துமிடத்து வெள என ஒரு பகுதி குறிப்பிட்டார். பின், வகர மெய் இறுதி யான பகுதிக்கு ‘வவ்' என உதாரணம் தந்தார். இதனுல் ஒரே கருத்துள்ள இரு வடிவங்கள் இடம் பெற்றுவிட்டன.
(2) outfi: ஞ், ண், b, ம், ள், tiu, f, ல், வ், p, ள் என்னும் பதினெரு மெய்களும் மொழிக்கு இறுதியாகும்.
உரிஞ் (உராய்ஞ்சு) நார்
Ln600T கால் வெரின் (முதுகு) தேவ் (பகைமை)
Digub யாழ் வாள் நாள் பாய் நோய்
விளக்கம்:
(அ) ஞ் இறுதியாக உரிஞ் என்ற ஒரேயொரு சொல்தான் உண்டு. இதுவும் வழக்கொழிந்தது. இன்று உரிநு, உரிஞ்சு, உராஞ்சு, உரஞ்சு என்று மாறி வந்துவிட்டது. இங்காளில் உரஞ்சுதல் என் பதற்குப் பதிலாக உரசுதல் என்ற சொல்லே பெருவழக்காக உள் ளது. எனவே மொழியிறுதி மெய்களிலிருந்து ஞ் என்பதைத் தவிர்த்துவிடலாம்.
(ஆ) ந் இறுதியான சொற்களும் இரண்டேயிரண்டுதான். அவை பொருந், வெரிந், முன்னது வினைப்பகுதி. பின்னது பெயர்ச்சொல். வெரிந் மறைந்துவிட்டது. பொருந் பொருந்து எனத் திரிந்துவிட்டது பொருந் பெரும்பான்மையும் வழக்கற்றது என்கிறர் தெ. பொ. மீ.
(இ) வகர மெய்யை நான்கு மொழிகள் மாத்திரம் இறுதியிற் கொண்டுள்ளன. அவை, அவ் (அவை), இவ் (இவை), உல் (உவை), தெவ் என்பனவாகும்.
(3) மொழியிறுதி எழுத்துக்களில் ஒன்றக, குற்றியலுகரத்தை யும் நன்னூலார் கொண்டுள்ளார். (உ+ம்) அஃகு, (கன். 107). இதிலிருந்து குற்றியலுகரத்தைத் தனியான ஓர் எழுத்தாக கன் னுாலார் ஏற்றுக்கொண்டுள்ளது தெரிகிறது.

- 101 -
இடைநிலை மயக்கம்
வெவ்வேறன ஒலிப்பிறப்பிடங்கள், ஒலிக்கும் முயற்சிகள் காரண மாக எல்லா ஒலிகளும் ஒன்றுடன் ஒன்று இணங்கி நிற்கமுடியாது. இன்ன ஒலிக்குப்பின் இன்ன இன்ன ஒலிகள் தாம் இணங்கி நிற் கும் என இலக்கண ஆசிரியர்கள் வரையறைப்படுத்தியுள்ளனர்.
தனிமொழியிலோ, தொடர்மொழியிலோ இரண்டெழுத்து (ஈரொலி) இணங்கிப் பொருந்தும் பொருத்துவாய் இடைநிலையென இங்குக் கருதப்படும். இணங்கி கிற்றல் மயக்கமாகும். மயக்கம் கூட்டம் ஒரு பொருட்கிளவி,
இவ் ஒலி மயக்கத்தை உயிருடன் உயிர், மெய்யுடன் மெய்" இவ்விரண்டும மாறிய மயக்கங்கள் என மூவகைப்படுத்தலாம். உயிரு டன் உயிர் மயங்குவதின்மையின் ஏனைய இரண்டும் இப்பகுதியிற் கூறப்படும். t
மெய்யுடன் மெய்மயங்கும் மெய்ம்மயக்கம்
(அ) க்,ச்,த்,ப் என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்கும்
(ஆ) ச், ழ் இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும்.
(இ) ஒழிந்த பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும்
தம்மொடு பிறவும் மயங்கும். - தம்மொடு தாம் மயங்கல் உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தம்மொடு பிறமயங்கல் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். ர், ழ், தவிர்ந்த பதினறு மெய்களும். வேற்றுநிலை மெய்ம் upuáаљn.
(1) ங்கரத்தின் முன் ககரம் மாத்திரம் மயங்கும்
ங் க் - தங்கம் ஊ தங் (க்+அ)ம் (ங் உடன் ககர
உயிர்மெய்யில் உள்ள க் மயங்கியது.) (2) ஞகரத்தின் முன் சகரமும், யகரமும் மயங்கும்
ஞ் ச் - பஞ்சம், மஞ்சம் ஞ் ய் - உரிஞ்யாது (வழக்கிலில்லை) (3) டகரத்தின் முன் க, ச, ப மயங்கும்
ட் க் - வெட்கம் ட்ச்" ஆட்சி ட் ப் - நுட்பம்

Page 56
(4)
(5)
(6)
(7)
(8)
- O2 -
ணகரத்தின் முன் ட், க், ச், ஞ், ப், ம், ய், வ் மயங்கும்
ண் ட் - பண்டம் ண் க் - வெண்கலம் ண் ச் - வெண்சோறு ண் ஞ் - வெண்ஞமலி, ஞமலி உகாய் ண் ப் - வெண்பல் ண் ம் - வெண்மலர் ண் ய் - மண்யாது ண் வ் - மண்வலிது நகரமெய்யின் முன் த், ய், மயங்கும்
ங் த் - பந்தம் ங் ய் - பொருங்யாது மகரமெய்யின் முன் ப், ய், வ் மயங்கும்
ம் ப் - தம்பி ம் ய் - கலம்யாது ம் ல் - நிலம் வலிது யகரமெய்யின்முன் மொழிமுதல் வரும் எல்லா மெய் களும் மயங்கும்
ய் க் - நாய் கடிக்கும். ய் ச் - நாய் சுழரும். ய் த் – நாய் தின்னும், ய் ந் - காய் நனைந்தது. ய் ப் - பாய் பரந்தது. ய் ம் - காய் மலிவு ய் வ் - சேய்வளர்ச்சி. ய் ய் - காய்யாது.
ய் ஞ் - கோய்ஞ்சல் ரகர மெய்யின்முன் மொழிமுதல் மெய்களெல்லாம் மயங் கும்
ர்க் - ஈர்க்கும். ர்ச் - வேர்ச்சாயல்
. வேர்சிறிது ர்த் - பார்த்தல் ர்ந் - ஓர்ந்து ர்ப் - ஈர்ப்பு ர்ம் - வேர்மனக்கும் ர்வ் - ஆர்வம் ர்ய் தயிர்யாது
ஞ்- பார்ஞாலம்

- 103
(9) லகரத்தின்முன் க், ச், ப், வ், ய் ஒன்றும்
ல்க் - கல்குரவு
ல்ச் - வல்சி(சோறு)
ல்ப் - சால்பு
ல்வ் - செல்வம்
ல்ய் - கால்யாத்தல் ((0) வகர மெய்யின் முன் ய் மயங்கும்
வ்ய் தெவ்யாது (பகைமை எது/பகைவர்யார்) (11) ழகரத்தின்முன் மொழிமுதல் மெய்கள் அனைத்தும்
மயங்கும்
ழ்க் - சூழ்க ழ்ச் - வீழ்ச்சி
ழ்த் - வாழ்த்து ழ்ந் - வீழ்ந்து
ழ்ப் - காழ்ப்பு ழ்ம் - கீழ்மனம்
ழ்வ் - வாழ்வு ழ்ய் - பாழ்யாது
ழ்ஞ் - பாழ்டுமிறு , (12) ளகரத்தின்முன் க், ச், ப், வ், ய் ஒன்றும்
ள்க் - வாள் கடிது ள்வ் - வாள்வலிது
ள்ச் - வாள்சிறிது ள்ய் - நாள்யாது
ள்ப் - வாள்பெரிது (13) றகர மெய்ம்முன் க், ச், ப், ஒன்றும்
ற்க் - கொற்கை ற்ச் - கற்சிறர் ற்ப் கற்பனே? (14) னகரமெய்முன் ற், க், ச், ஞ், ப், ம் ய், வ் மயங்கும்
ன்ற் - கன்றல் ன்க் - புன்கு ன்ச் - புன்செய்
ன்ஞ் = புன்ஞமலி ன்ப் - அன்பு ன்ம் - வன்மை
ன்ய் - கான்யாறு ன்வ் - மென் வண்ணம்
உடனில் மெய்ம் மயக்கம் (1) தனிமெய்முன் உயிர்மெய்யில் உள்ள
மெய்ம்மயக்கம் க்க் - பாக்கு ப்ப் - அப்பன் ங்ங் - இங்ங்ணம் ம்ம் - அம்மை ச்ச் - அச்சம் ய்ய் - வெய்யோன் ஞ்ஞ்- மஞ்ஞை(மயில்) ல்ல் - அல்லி ட்ட் - பொட்டு வ்வ் - தெவ்வர் ண்ண் - வண்ணம் ள்ள் - உள்ளம் த்த் - கொத்து ற்ற் - காற்று
ந்ந் - வெங்கீர் ன்ன் - கன்னி

Page 57
~ i ö4 -
(2) தனிமெய்யபுடன் தனிமெய் மயக்கம்
ய், ர், ழ் என்ற மூன்று மெய்களுக்கும்பின்தான் வேறு தனி மெய்கள் வந்து மயங்கும், ஏனைய மெய்களின் பின் தனிமெய்கள் மயங்கா.
க், ச், த், ப், ங், ஞ், ந், ம் என்ற எட்டு மெய்களும் ய், ர், ழ் என்ற மெய்களுடன் தனித்தனி இணங்கும் இயல்பின.
d 荷 p
காய்க்கும் ஈர்க்கு வாழ்க்கை காய்ச்சல் உணர்ச்சி சூழ்ச்சி மாய்த்தல் தூர்த்தல் வாழ்த்து வாய்ப்பு வார்ப்பு காழ்ப்பு வேய்ங்குழல் ஆர்ங்கோடு பாழ்ங்கிணறு தேய்ஞ்ச கூர்ஞ்சிறை பாழ்ஞ்சுனை காய்ந்த நேர்ந்தது வாழ்ந்தவர் மொய்ம்பு ஈர்ம்பனை பாழ்ம்பதி
குறிப்பு:
(1) ரகர, ழகர மெய்கள் தனிக்குறிலின் பின் நிற்பின் தனி மெய்களுடன் மயங்கா. நெட்டெழுத்தின் பின் நின்றல் மாத்திரம் தனிமெய்களுட்ன் மயங்கும். இவ் விதிப்படி வர்க்கம், தர்க்கம் என எழுதுவது பிழை. எனவேதான் அவை வருக்கம், தருக்கம் என மாற்றப்படுகின்றன. தமிழ் மொழி இடைநிலை மயக்க விதி களின்படி வர்க்கம் தர்க்கம் என எழுத முடியாது.
(2) ஒரு மொழியில் அல்லது தொடர்மொழியில் இரு தனித் தனி மெய்யெழுத்துக்களும் உயிர் மெய்யில் உள்ள மெய்யெழுத்து மாகச் சேர்ந்து மூன்று மெய்கள் அடுத்து கிற்கமுடியும். அதன் மேல் முடியாது. -
(B) மெய்யுடன் உயிரும், உயிருடன் மெய்யும் மயங்கல்
மெய்யுடன் உயிர் மயங்குவது உயிர் மெய்யாகும். உயிருடன் மெய்மயங்குவது அல், இல், ஊர், எல் எனவும் கல், புல், கண், விண் எனவும் வரையறையின்றி மயங்கும். ܐܗܝ

سے 105 0 <
புணர்ச்சி
நிலை மொழியும், வருமொழியும் பொருட் பொருத்தம் உறப் புணர்வது சொற்புணர்ச்சி எனப்படும். இரு சொல்லும் புணர்ந்து ஒரு சொல் நீர்மைப்படுதல் இரு காரியங்களில் தங்கியுள்ளது. ஒன்று மயங்கும், மயங்கா எழுத்தொலிகள் பற்றிய அறிவு. மற்றது அவ்வழி வேற்றுமைப் பொருள் பற்றிய தெளிவு. எனவே இவ் அறிவுந் தெளிவுதான் சரியான சொற்புணர்ச்சிக்கு வேண்டப்படுவன,
மெய்யிறுதி கிலேமொழிமுன் உயிர்முதல் வருமொழி புணரும் புணர்ச்சிக்கும், உடன்படு மெய்ப்புணர்ச்சிக்கும் அல்வழி வேற்று மைப் பொருள் நோக்குவேண்டியதில்லை. அல்வழியோ வேற்று மையோ இவ்விரு புணர்ச்சிகளும் ஒரேமாதிரித்தான் நிகழுகின்றன.
வாழை, பழம் என்ற இரு சொல்லேயும் இப்பொழுது சேர்ப் போம். வாழை என்ற நிலை மொழி இறுதி உயிர் ஐ. பழம் என்ற வருமொழி முதலின் மெய் ப். உயிருடன் மெய் மயங்குவதற்கு வரையறையில்லை. ஆகவே வாழைபழம் என்று சேர்க்கலாம். ஆனுல். மயக்கவிதி இருந்தும் சேர்க்க முடியவில்லை. ஏன்? வாழை பழம் என்ருல் அஃதொரு எழுவாய்த் தொடராகி வாழை தான் பழம் என்ற கருத்தைத் தந்துவிடுகின்றது. இஃது பொருளை நோக்காத தால் எழுந்த தவருகும். ஆகவேதான் இரு மொழிகளுக்கும் இடையே பகரமெய்யைத் தோன்றச்செய்து வாழைப்பழம் என எழுத வேண்டியதாயிற்று. வாழையினுடைய பழம் என விரிந்து ஆறும் வேற்றுமைத் தொடராகின்றது.
இன்னுமோர் உதாரணம் பார்ப்போம். வாள், போர் என்ற இருமொழிகளையும் வாள்போர்’ எனச் சேர்க்கலாம். மயக்கவிதி இடம் தரும். ("லளமுன் கசபவய ஒன்றும்மே”-கன். 117) ஆணுல் வாள் போரன்று. வாளிற்ை செய்யும் போர் என்பது கருத்தாக வேண்டும். அதனுல் ளகரமெய் டகரமெய்யாய்த் திரிந்து "வாட் போர் ஆயிற்று. டகரமெய்யும், பகரமெய்யும் மயங்கும் ஆகவே இலக்கணகெறி தவறவில்லை.
(1) இயல்புணர்ச்சியும் விகாரங் புணர்ச்சியும்
நிலமொழியும், வருமொழியும் எவ்விதமான மாறறமும் இன்றி அப்படியே இணைந்து நிற்பது இயல்பு புணர்ச்சியாகும்.
9). 14

Page 58
سے 6 {0} =ے
(அ) பொன் + வண்டு = பொன்வண்டு
பொன்னி+வந்தாள் = பொன்னிவந்தாள் வந்தது+வசந்தம் = வந்ததுவசந்தம் வந்தனள்+ வனிதை - வந்தனள்வனிதை
(ஆ) மகன் + அறிஞன் = மகனறிஞன் பழம் + இனியது = பழமினியது
அ, பிரிவிலுள்ள நிலைமொழி, வருமொழிகள் புணர்ந்தபோது எவ்வித மாற்றங்களும் கிகழவில்லை. தனித்தனியே நின்றதுபோல் புணர்ந்த பின்பும் நிற்கின்றன. அதனுலே இயல்பாகப் புணர்ந்தத ஞலே இவை இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
ஆ. பிரிவில் உள்ள நிலைமொழிகள் உயிர் எழுத்துக்களே இறுதி யாக உடையன. மெய்யெழுத்துக்களை வருமொழிகள் முதலாகக் கொண்டுள்ளன. இவை சேரும்பொழுது முதற்பிரிவிலுள்ள தொடர் கள் போல் அப்படியே நிற்கவில்லை. மெய்யெழுத்தில் வருமொழி முதல் உயிர் எறி, மகனறிஞன் எனவும், பழமினியது எனவும் புணர்ந்துள்ளன. இங்கும் இயல்புக்கு மாருக எதுவும் நடைபெற வில்லை. மெய்யோடு உயிர் சேருவது இயல்பானது. “உடல்மேல் உயிர்வங்தொன்றுவதியல்பே" (நன். 204). ஆகவே இவையும் இயல்பு புணர்ச்சிகளே. (இயல்பு புணர்ச்சி என்பதை இயல்புப் புணர்ச்சி என எழுதுதல் மரபைத் திமிறுவதாகும்.)
நிலைமொழியும், வருமொழியும் எல்லாவிடங்களிலும் இயல்பாகச் சேரமுடியாது. நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மயங்கா எழுத்துக்களைக் கொண்டனவாய் வரும்போதும், என்ன பொருளிற் புணர்க்க வேண்டுமோ அதே பொருளைப் புணர்ந்த பின்னும் தரு வதற்காகவும் நிலைமொழி இறுதியில் அல்லது வருமொழி முதலில் அல்லது ஈரிடத்திலும், அல்லது மொழிகளுக்கிடையிலும் அல்லது இறுதிமுதல் இடை என்ற மூன்றிடத்தும் மாற்றம் ஏற்பட வேண்டியுள்ளது. எற்படும் மாற்றம் விகாரமாகும், இது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
1. நிலைமொழி வருமொழிகளுக்கிடையில் ஓர் எழுத்தோ அல் லது ஓர் இடைச் சொல்லோ (சாரியை) தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.
2. கிலைமொழியிறுதி எழுத்துக் கெடுதல், கெடுதல் விகார Ditët D.

- 107 -
3 வருமொழி இறுதி அல்லது நிலைமொழி முதல் அல்லது ஈரிடத்தும் அல்லது இடையிற் தோன்றிய இடைச்சொல்லில் திரிபு ஏற்படுமாயின் அது திரிதல் விகாரம்.
pl.--to :
முல்லை + சிரிப்பு = முல்லைச்சிரிப்பு - தோன்றல் பசலை + படர்ச்சி = பசலைப்படர்ச்சி
LuLtb -- LDT6f6o5 = LILLD"16f605 - கெடுதல்
+ (8ങ്ങി = நீலமேனி புவியியல்+பாடம் = புவியியற்பாடம் - திரிதல் விண் + புலம் = விட்புலம் ff600 + ශිෂ්ඨික) க. நீலச்சேலே -கெடுதலும்தோன்றலும் வசந்தம் + பகல் = வசந்தப்பகல் வண்மை +தமிழ் = வண்டமிழ் , திரிதலும் செம்மை + , = செந்தமிழ் புளி + காய் = புளியங்காய் - தோன்றலும் , கள்ளி + காடு = கள்ளரியங்காடு - 9 y பனை + காய் = பனங்காய் - கெ. + தோ.+தி.
(பீர்க்கு+காய் = பீர்க்கங்காய் - , , p
குறிப்பு:
I, காடு+வளம் - நாட்டுவளம்
ஆறு + பாய்ச்சல் = ஆற்றுப்பாய்ச்சல் இங்கு நிலைமொழி இறுதி, வருமொழி முதல், இரு மொழிகளுக் கிடையே எவ்வித விகாரமும் இல்லையாயினும் நிலைமொழிகள் இரட் டித்ததால் இவையும் விகாரப் புணர்ச்சிகளே.
II. உடம்படு மெய்களும் தோன்றல் விகாரங்களே. (2) புணர்ச்சிப்பகுப்பு கிலேமொழியிறுதி, வருமொழிமுதல் எழுத்துக்களைக் கொண்டு புணர்ச்சியை நான்குவகையாகப் பிரிக்கலாம். s
(அ) உயிர்இறுதி + உயிர்முதல் (ஆ) மெய்யிறுதி + உயிர்முதல்.
(இ) உயிரிறுதி + மெய்ம்முதல். (ஈ) மெய்யிறுதி + மெய்ம்முதல்

Page 59
سے 108 سے
உயிரிறுதி நில மொழியும், உயிர் முதல் வருமொழியும் சேருதல்
1. இயல்புநிலை:
உயிரொலியும், உயிரொலியும் இணைந்து மயங்கா. மயங்காத நிலையிலும் இருமொழிகளையும் அப்படியே விடலாம். விடின், இரு மொழிகளுக்கு இடையிலும் விட்டிசை தோன்றும். அஃதாவது இரு சொல்லும் ஒன்ருய் இணையாததனுல் அவ்விரண்டுக்குமிடையில் ஒசையிடைவெளி உண்டாகும்.
Lడిm + @డి) = L&01 ప్భడి மணி+ ஓசை = மணிஓசை
இத் தொடர்களில் நிலை மொழியை உச்சரித்து முடிந்து வரு மொழியை உச்சரிக்கத் தொடங்குமுன் ஒரு கணப் பொழுது நேரம் இடையிற் பிடிக்கின்றது. இதனுல் அவை ஒரு சொல் நீர்மைப் படாமல் விட்டிசையை ஏற்படுத்துகின்றன. விட்டிசைத்தாலும் தொல்காப்பியர் காலத்தும் அதற்கு முன்பும் அப்படி எழுதப்பட்ட நிலை காணப்படுகின்றது. *எல்லாமொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருவு கொளல் வரையார்" (தொல், எழு. 140)
(எல்லா மொழி-நிலைமொழி, வருமொழி. வரையார்-நீக்கார்)
உடம்படு மெய்பெறுதலே நீக்கமாட்டார்களென்றல், அது பெருத நிலையும் இருந்தது என்பதும் பெறப்படும்.
*முனஇ’, ‘சினஇ’ முதலான வடிவங்களை உடம்படுமெய் பெருத வழக்குகள் என்பர், II. உடம்படு மெய்ப்புணர்ச்சி
(1) நிலைமொழி யிறுதி, வருமொழி முதலான உயிரொலிகளுக் கிடையில் ஏற்படும் விட்டிசையைத் தடுக்க, உயிரோடொத்த இடை எழுத்துக்களுள், மொழிமுதலில் வரக்கூடியவையான யகர, வகர மெய்களிலொன்றை அவ்வுயிரொலிகளுக் கிடையில் வரச்செய்து, இரு மொழிகளையும் புணர்த்துவது உடம்படுமெய்ப்புணர்ச்சி எனப்படும்.
மணி+ஒலி= மணிபொலி விழா + இன்பம் = விழாவின்பம்

م- 09) ;H -
இரு தொடர்களும் முறையே யகர வகர மெய்களை இடை யிற் பெற்றதால் விட்டிசை இல்லாது போக, ஒரு சொல் கீர்மைப் பட்டு, மணியோசை யெனவும், விழாவின்பமெனவும் புணர்ந்து கொண்டன.
(2) இ, ஈ, ஐ என்னும் உயிரொலிகளை இறுதியாக உடைய
நிலைமொழிகளின் முன், உயிர் வரும்போது பகர மெய் உடம்படு மெய்யாக வரும்; ஏகார நிலை மொழியின் முன் யகரம், அல்லது வகரம் வரும்; ஏனைய உயிரெழுத்துக்களின் முன் வகர மெய் உடம் படுமெய்யாகுமென்று இலக்கண நூல்கள் கூறும்.
“இ ஈ, ஐவழி யவ்வும் என
உயிர் வழிவவ்வும் ஏமுன் இவ் இருமையும்
உயிர் வரின் உடம்படு மெய்யென் ருகும்” (Bé 1620
இ, ஈ, எ, ஐ என்னும் எழுத்துக்களுடன் யகர மெய், ஓரளவு பிறப்பால் ஒத்தலின் யகரமெய் உடம்படு மெய்யாயிற்று
இ ஈ எ ஏ ஐஅங் காப்போடு அண்பல் முதல்கா விளிம்புற வருமே (கன், 77)
அடிநா அடியனம் உறயத் தோன்றும் (கன். 82) (முதல்கா-அடிகா. அண்பல்-அடியன்னத்தை அண்டியபல்.) (3) எகர உயிரும் இ, ஈ, ஏ, எனபலவற்றுடன் சேர, இடப் பிறப்பாலும், முயற்சிப் பிறப்பாலும் ஒத்ததாற் போலும், எகர உயி ரைத் தொடர்ந்தும் யகரம் உடம்படு மெய்யாக வருமென்றுரைத் தார் தொன்னூல் விளக்கமென்னும் இலக்கணநூல் ஆசிரியரான வீரமாமுனிவர்.
ஐமுன் யகர மெய்வருதலை, உயிர்வரு மொழிமுதலாக வரும் போது தனிக்குறில் முன் ஒற்று இரட்டும் யகர மெய்யாகவும் கரு தலாம்.
கண் + அழகு = கண்ணழகு அய்+அர்= அய்யர் (ஐ+ அர்) = (ஐயர்) ஏ என்னும் எழுத்திற்கு இரு ஒலிப்பு உண்டு ஏடு என்பதிலுள்ள ஏகாரம் ஓர் ஒலிப்பு. ஏது என்றதில் உள்ள ஏகாரம் இன்னுேர்

Page 60
سے 110 سے
ஒலிப்பு ஏது என்றதில் உள்ள எகாரம் போல் நிலைமொழியிறுதி ஏகாரம் ஒலிக்கப்படும் போது யகரம் உடம்படு மெய்யாகும். ஏனேய மாதிரி ஒலிக்கப்படும் போது வகர மெய் உடம்படு மெய்யாகும்.
ஆயிடை (ஆ + இடை), கோயில் (கோ + இல்), சுகயினம் (சுக + ஈனம்) என்ற இடங்களில் வகரமெய் உடம்படு மெய்யாக வருவதற்குப் பதிலாக யகரம் வந்துள்ளது. இப்படிவருவதனை யகர வகரம் போலி எனக் குறிப்பிடுவர் ஒரு சிலர். யகரமும் வகரமும் மயங்கின எனவும் குறிப்பிடுவர். ஒரு சிலர் (நேமிநாத உரையா சிரியர்.)
இப்படிக் கொள்வதிலும் பார்க்க, வருமொழி உயிர் இகர, ஈகாரங்கள் ஆதலின் யகரமெய் உடம்படு மெய்யாக வந்திருக்கலாம். நிலைமொழியிறுதியை நோக்காது, வருமொழி முதலை நோக்கி இவ் வுடம்படு மெய்யைக் (ய்) கொடுத்திருக்கலாமென்பது பொருத்த
DITELD.
(4) யகர, வகரங்களைத் தவிர னகர, ரகரங்களும் உடம்படு மய்யாகும் எனக் கூறுவர் கால்டுவெல், தனிச் சொல்லில் உயி ரொலிகளுக்கு இடையில் வரும் எழுத்துப் பேறுகளையும், பெயரிடை கிலைகளையும் உடம்படுமெய்களெனக் கொள்கின்ருர்போலும் அவர். நிலமொழி, வருமொழிகளுக்கிடையில் யகர, வகரங்களைத் தவிர வேறு எந்த மெய்யெழுத்துக்களும் உடம்படு மெய்யாக வருதல் இல்லை. அதுவும் உயிரோடொத்த இடையின மெய்களே வருகின் றன. யகர, வகர மெய்கள் மொழி முதற்கண்வரும் இயல்பை உடையன என இன்னுெரு நியாயமும் கூறுவர் சிவஞான முனிவர். உயிர்த்தன்மைப் பட்டமெய்களென்றபடியாலேதான், யகர, லகரங் களை உடம்படு மெய்கள் என்றனர். மொழிநூலாரும் இவற்றை அரை உயிர் எனக் கூறுதலும் சிவஞானமுனிவர் கருத்தை உறுதிப்படுத்துவதாகும்.
(6) உடன்படாத ஈர் உயிரொலிகளே உடன்படுத்துதலின் உடம்படுமெய்யெனப் பெயர்பெற்றது. உடன்பாடு என்பதன் மரூஉ உடம்பாடு என்பர். அன்றி, உயிர்களுக்கிடையில் உடம்பாக (மெய்யாக) அடுக்கும் மெய்யெனவும் காரணம் காண்பர் இலக்கண ஆசிரியர்கள்.
(6) இவ் உடம்படு மெய்களின் தோற்றம் ஏனைத் தோன்றல் விகாரம் போலல்லாமல் மயங்காதன மயங்குதற்கு ஆசுபோல

- 12 -
வந்தமையின் இப்புணர்ச்சியை இயல்பு புணர்ச்சி என்று கூறுவார் கூற்றும் அமையுமெனக் கூறுவர் சங்கராநமச்சிவாயர். (கன். 162 உரை இப்படிக் கூறுவதிலிருந்து உடம்படு மெய்களைத் தோன்றல் விகரமெனக் கூறுவதுதான் முதற்பொருத்தம் என்பது இவர் கருத்தாதலும் பெறப்படும். "இதனை இயல்பு புணர்ச்சி என்பாரு முளர்" எனக் கூறும் மயிலைநாதருக்கும் தோன்றல்விகார மென் பது கருத்தாகும்.
குற்றியலுகரப்புணர்ச்சி
குற்றியலுகர இறுதி மொழிகளின் முன், உயிர் முதல் மொழிகள் வரும்பொழுது, குற்றியலுகரம் நீங்க, கின்ற உயிரின்மேல் வருமொழி உயிரேறி முடிவது பொதுவானதாகும்.
யகர முதல் மொழி வந்தால் நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும்.
{ = காற்றேட்டம்
கரும்பு + இனிக்கும் = கரும்பிணிக்கும் நாகு+யாது = காகியாது
ெேபற = "முத்தியாம்பெற"
*உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
யவ்வரின் இய்யாம். முற்றும் அற்று ஒரோவழி?
குறிப்பு (1) சில முற்றியலுகரச் சொற்களும் குற்றியலுகரச் சொற்கள்போல் புணர்ந்து முடியும். ஒரு சில இடங்களில் முற்றும் அத்தன்மைத்தாகு மென்பது “முற்றும் அற்று ஒரோவழி” என்பதற் குக் கருத்தாகும்.
(முற்று-முற்றியலுகரம், அற்று-அத்தன்மைத்து) (உ+ம்) கதவு+ அழகு = கதவழகு
(2) சில குற்றியலுகரச் சொற்கள் உடம்படு மெய்பெற்றுப் புணர்வதும் உண்டு.
(உ +ம்) 'தன்முகமாகத் தானழைப்பதுவே"
அழைப்பது + ஏக அழைப்பதுவே.
*ஆது+உம்'க ஆதுவும் (கன். 300)

Page 61

பிற்சேர்ப்பு -
இயற்சொல்
பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் பாகுபாடு செய் யப்பட்ட பின்பு, சொல்லின் தன்மை நோக்கி மேலும் இயற்சொல், திரிசொல் எனப் பகுக்கப்பட்டது. இவ்வாறு பகுக்கப்பட்டபோது இப் பாகுபாட்டிற்கான இன்னுேர் காரணமும் தெரிவிக்கப்பட்டுள் ளது. செய்யுள் ஆக்கத்திற்கான சொற்கள் எனக் கூறிக் கொண்டே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், எனப் பாகு படுததினுர் தொல்காப்பியர்.
‘இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே' தொல் சொல். 397. எவ்வித சிரமமும், முயற்சியும் இன்றி இயல்பாகப் பொருளை உணர்த்தும் சொல் இயற்சொல் எனப்பட்டது. ஒரு மொழி வழங் கும் நிலப்பரப்பில், குறிப்பிட்ட அம்மொழியில் ஒருசொல் எங்கும் எப்பொழுதும் ஒரு பொருளையே குறிப்பிட்டால் அச்சொல் இயற். சொல் என்பது கருத்து. அஃதாவது குறிப்பிட்ட ஒரு சொல் குறிப் பிட்ட ஒரு பொருளைத் தருவது மொழிவழக்கில் இயல்பாய் விட்டது என்பதே இயற்சொல் என்பதற்குக் கருத்தாகும். அன்றி, இயற் சொல் இயல்பாற் பொருளுணரும் சொல் எனக் கருதுகின்றவர் களும் உண்டு.
இவ் இயற்சொல் பெயர், வினை, இடை, உரி என்ற நான் கோடும் சேர்ந்து பெயரியற் சொல், வினையியற்சொல் இடையியற் சொல், உரியியற்சொல் எனநான்கு வகைப்படும்.
பெயர் இயற்சொல் - காற்று, தீ, மண், வினை இயற்சொல் - :ைங்தான், படித்தான், இடை இயற்சொல் - ஐ ஆல், கு. உரி இயற்சொல் - அழகு, இளமை,
மொழி வழங்கும் நிலப்பரப்பில் அன்று, ஓர் குறிப்பிட்ட சொல் வேற்றிடங்களில் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அங்கும் அப்பொருளைத் தருவதும் இயற்சொல்லின் தன்மையாகும். அவற்றுள் V இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவமணித் தம்பொருள் வழமை இசைக்கும் சொல்லே. (தொல். சொல் 398

Page 62
- 2 -
இயற்சொல் செந்தமிழ் நிலத்து வழக்கொடு பொருந்திய தாய்க் கொடுந்தமிழ் கிலத்தும் தம் பொருள் வழுவாமல் உணர்த் தும் என்பது இச் சூத்திரத்தின் பொருளாகும். கொடுந்தமிழ் நிலம் அன்று, எங்குமே தம் பொருள் வழுவாமல் இசைப்பது இயற் சொல் எனக் கொள்வது மிகப் பொருத்தமாகும்.
மேற்குறிப்பிட்ட கருத்தின கன்னூலார் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். •Ꮙ
செந்தமிழாகித் திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல். (கன் 271) யார்க்கும் என்பதற்குக் கருத்து அச்சொல்ல வழங்குகின்ற யார்க்கும் என்பதுதான். திரியாது" (திரிசொற்கள் போலாகாமல்) என்பதால் திரிந்து வருவது திரிசொல் என்ற கருத்தையும் இங்கு குறிப்பாகக் காட்டியுள்ளார். அறியாதார், திரிசொல் எப்படியான சொல் என்பதற்கு அரிதுணர் பொருளென என்று கூறி இடர்ப்
படுவர்
திரிசொல்
(1) பொருளில் திரியாமல், உருவத்தில் திரிந்த சொல் திரி சொல் என்பது பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளது. செந்தாமரை சிவப்பானது என்று சொல்ல வேண்டிய தில்லை. செந்தாமரை என்றலே தாமரைப் பூவின் ஒரு தன்மை, அஃதாவது நிறத்தன்மை தெரிவிக்கப்படுகின்றது அல்லவா? திரி சொல் என்ற பெயரிலேயே சொல்லின் தன்மையும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அஃதாவது திரிதல் அல்லது திரிபு அச்சொல்லின் தன்மை என்றகும். ஏன் திரிகின்றது? எப்படித் திரிகின்றது? என் பதிலேதான் கருத்து வேறுபாடு எழலாம்.
(2) யாப்பிலக்கணத்தின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமைந்து வருவது செய்யுள். ஒசைச் சிறப்பும், ஒழுங்கும் அதிகம் கவனிக்கப்படுகின்ற காரணத்தால், ஒரு பொருளைக் குறிக்கும் பல சொறகளும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல்லும் அதிகம் வேண்டப்படுவதாயிற்று. ஆகவே இயற்சொற்களைத் திரிக்க வேண் டிய நிர்ப்பந்தமும், ஒரு பொருளின் பல தன்மைகளையும் குறிக்கப், பல சொற்க%ள ஆக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருத்தல் வேண் டும். இவ்வாறு திரித்த, ஆக்கிய சொற்கள் அனைத்தும் திரிசொல் என் பது, இயற்சொல்ஒழிந்த சொற்பரப்பை முற்ற முடிய அடக்கிக் கொள் வதற்குப் பொருத்தமாகவுள்ளது.

س یا سے
இவ்விரு கருத்தையும் முறையே தன்னுடைய கருத்தாகவும் பிறர் கருத்தாகவும் குறிப்பிடுகின்றர் சேனவரையர். 'திரித்துக் கொண்டது இயற் சொல்லான் இன்பம் பெறச் செய்யுளிட்ட ஆகாமையால் அன்றே. அதனுற் திரிசொல்லெனவே, செய்யுட்கு உரித்தாதலும் பெறப்படும்.” (தொல் சொல் 399 உரை) ஆணுல் ஒரு சிறு வேறுபாடு உண்டு. அஃது இரண்டாவது கருத்தை அவர் மறுத்து விட்டதேயாகும். ஒரு சொல் எழுத்துத் திரிவதும், முழுவதும் திரிவதும் எனத் திரிபின் தன்மை காட்டிய சேனுவரையர் முழுவதும் திரிந்த சொல்லேத்தான் "கட்டிய வழக்கு என்பாருமுளர்" எனக் குறிப்பிடுகின்றர். சொல்லை ஆக்கி வழங்கும் வழக்கு, ‘கட்டிய வழக்கு’ ஆகும். முழுவதும் திரிந்ததைப் புதிய சொல்லாக்கம்' என்றும் சொல்லலாம் அல்லவா?
(3) மேற்குறிப்பிட்டபடி எழுத்துத் திரிதல், முழுவதும் திரிதல்என விளக்கம் தரும் சேவைரையர் திரிபு முறையையும் உதாரணங்களாற் தந்துள்ளார். "கிளி" என்று பொருள்படும் 'கிள்ளே' என்ற சொல் உறுப் புத் திரிந்தது எனக் கூறுவர். இவர் குறிப்பிடும் உதாரணத்தை, எழுத் துத் திரிவதற்கு ஏற்றுக் கொள்வதில் தடை ஏற்படுகின்றது; கிள் + இ = கிளி. கிள் + ஐ = கிள்ளை. இ, ஐ இரண்டும் வினை முதற் பொருள் உணர்த்தும் விகுதிகளாக இங்குத் தொழிற்பட்டுள் ளன. முன்னதில் ளகர மெய் இரட்டிக்கவில்லை. பின்னதில் இரட் டித்தது. ஒருவேளை ‘தணிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் . என்ற மொழிப் புணர்ச்சித் தன்மை ஏற்பட்டபின் "கிள்ளை' என்ற சொல் வந்திருக்கக் கூடும். இதனுல் இச்சொல்லின் உறுப்புத் திரிந்தது எனக் குறிப்பிடும் சேனவரையர் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. ஏனையவும் ஆய்வுக்குரியன.
விலங்கல், விண்டு வெற்பு என முழுவதும் திரிவதற்கு உதா ரணம் காட்டுவர் சேணுவரையர். விள் + து = விண்டு. ‘விள்' என்ற அடிச்சொல்லே 'வில்' எனத் திரிந்து "விலங்கல்' என ஆயிற்று வெற்பு என்பதும் இவ்வாறே காண்க. இவ்வாறு மலை என்னும் பொருளுக்குப் பல சொற்கள் ஏற்பட்டுவிட்டன. வெற்பு, விலங்கல் முதலான சொற்களை முழுவதும் திரிந்தன என்று கொள்வதிலும், மலேயின் பல தன்மைகளையும் அவதானித்துக் காரணக் குறிகளாக ஏற்பட்ட பல பெயர்களென்று கொள்வது பொருத்தமாகத் தெரி கின்றது.
(4) திரிதல் என்பதற்குச் சேணுவரையர் கூறிய கருத்தை மறுத்து, சிவஞான முனிவர் இன்னுெரு காரணம் தருகின்றர். அவர் 6a)6.gils

Page 63
- 4 -
"ஈண்டு இயற்சொல் திரிசொல் என்றது அவற்றின் எழுத்துக்கள் திரியாமையும் திரிந்தமையும் கருதியன்று, வான ரத்தின் முகம் தன் இயல்பாயிருந்ததேனும் நரர்முகச் செவ்விக்கு மறுதலைப்பட்டமை கருதி வலிமுகம் எனப்பட்டது போலக், கல்வியேதுவானன்றி இயல்பாகத் தம்பொருளை உணரநிற்றலின் இயற்சொல் என்றும், அவ்வியல்பிற்கு மறுதலைப்பட்டுக் கல்வி யேதுவால் தம்பொருளை உணரங்ற்றலின் திரிசொல் என்றும் கூறப்பட்டன என்க" (நன். 272 உரை)
அரிதாக உணர நிற்றல் திரிசொல்லின் தன்மையெனக் குறிப் பிடுகின்ருர் சிவஞான முனிவர். இதனை ஒப்புக் கொள்வதற்கில்லை. ஒரு பொருளின் தன்மை எல்லோருக்கும் தன்மையாக இருத்தல் வேண்டும். சொல்லின் தன்மையும் படித்தவர்களுக்கும் படியாதவர் களுக்கும் பொதுவாகவே இருத்தல் வேண்டும். படியாதவனுக்கு ஒரு தன்மை, படித்தவருக்கு அஃதில்லையெனக் கருதுவது சரியன்று. முனி வர்கூறுவதே இலக்கண ஆசிரியர்க்கும் கருத்தாயின், 'திரிசொல்" எனக் கூருது, "அருஞ்சொல்” எனவே கூறியிருப்பர். "அரிதுனர் பொருளன திரிசொல்’ எனப் பவணந்தியார் கூறியது சிவஞான முனிவரை இப்படிச் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம். அரிதுணர்வு இலக்கண மாக இருக்கமுடியாது. அரிதுணர்வு உணர்வுநிலை. வேறுபாடாகும், திரிசொற் பற்றிய இலக்கணத்தில் தொல்காப்பியர் இவ்வாறு கூற ததும் கவனிக்கத்தக்கது. எப்படி, ஒருபொருள் குறித்த பல சொல் லும், பல பொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய எல்லாச் சொற் களும் திரிசொற்களாகாவோ, அப்படியே திரிசொற்களெல்லாம் அரி துணர் சொற்களாகா.
(5) திரிசொல்லிற்கு விளக்கம் தரும் தெய்வச்சிலையார், "அரங் கம் என்பது யாற்றிடைக் குறையையும், ஆடும் இடத்தையும், இல்லின்கண் ஒரு பக்கத்தையும், உணர்த்தும் எனவும் துருத்தி என்பது யாற்றிடைக் குறையையும், தோற்கருவியையும் உணர்த் தும் எனவும், ஆழி என்பது கடலையும், கேமியையும், வட்டத்தை யும் உணர்த்துமெனவும் குறிப்பிட்டு, இவ்வாறு திரிந்து வருதலின் திரிசொல்லாயிற்று, என்பர். தெய்வச் சிலையாரின்’ ‘திரிந்து வருதல்” சொற்கள் முன்னுள்ள பொருளையும் இழக்காமல் வேறு வேறு காலங்களில் வேறு வேறு பொருளைக் குறிப்பிடும் வழக்கினைத்

- 5 -
தெளிவாகக் காட்டுகின்றது. உதாரணமாக ஆழி என்ற சொல் ஒருகால் சமுத்திரமென்ற பொருளையே தந்திருக்கும். மற்றேர்கால் வடிவ ஒப்புமை நோக்கி மோதிரத்தையும் கேமியையும் கருதி யிருக்கலாம். இப்படிச் சொல் திரிந்து திரிந்து வெவ்வேறு பொருளில் வருகின்றது. தெய்வச் சிலையாரின் கருத்தை ஏற்பது மிகப் பொருத்த மாகவுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் ஒரு பொருளுக்குப் பல பெயர் வழங்கப்பட்டிருக்கும். அவற்றை ஒன்று சேர்க்கும் போது அவையும் திரிசொற்களே என்க. இடத்துக்கிடம் காலத்திற்குக் காலம் திரிக்த சொற்கள் எல்லாம் திரி சொற்கள். தேய்வச்சிலையார் கருத்து பேச்சு வழக்கிற்கும், பெயர்க் குறியீட்டு முயற்சிக்கும் பொருத் தமாக உள்ளது.
(6) திரிசொல்லிற்கு விளக்கம் தரும் மயிலைாநாதர், "இச் சொல் லிற்கு (திரிசொல்லிற்கு) வேறேர் இயற்சொல் கொடுவந்து (கொண்டு வந்து) திரித்துச் சொல்ல வேண்டுதலால், திரிசொல்லெனக் கொள்க. இதற்குப் பிறவாறு சொல்லுவாருமுளர், என்றர். மா என் பது பலபொருள் குறித்த ஒருசொல். மா பூத்தது என்று சொல் லும்போது மாமரத்தை மா என்ற சொல் குறிப்பிடுகின்றது. ஆகவேதான் வேறேர் இயற்சொல் கொண்டுவந்து பொருளைச் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகின்ருர் மயிலேநாதர் 'திரித்து' என்பதற்குப் "பொருளை வேறுபடுத்தி' என்ற கருத்தைக் கொடுக்கின்றர். திரிசொல் லின் ஒரு வகையாகிய பல பொருள் ஒரு சொல்லுக்கு மயிலை நாதர் கொடுக்கும் விளக்கம் மிக நுட்பமாக உள்ளது. திரிசொல் லிற்குத் தரும் விளக்கத்தில் மயிலைநாதரும், தெய்வச் சிலேயாரும் ஒத்த நோக்கு உள்ளவர்களாகக் காணப்படுகின்றர்கள்.
ஒரு மொழி பேசும் நாட்டிலுள்ள வெவ்வேறு பிரதேசங்களில் ஒரு பொருளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களும், புதிய பொருளுக்கு ஒரு சொல் ஆக்கப்படும் வரை, ஏதோ ஒரு விதத் தொடர்பு கருதி வேருெரு பொருளின் சொல்லை அதற்கு வழங்கி வந்ததனுலேற்பட்ட பல பொருள் ஒரு சொல்லும், யாப்புக் காரணத் திற்காக ஏற்பட்ட உருவத்திரிபு பெற்ற சொற்களும் திரிசொற்க ளாயின எனக் கொள்ளலாம்,

Page 64
திசைச்சொல்
காகாகம், ஆட்சி, தனிமனிதச் செல்வாக்கு, மொழிவளம், பிறநாட்டுவசிப்பு ஆதியன காரணமாக ஒவ்வொரு மொழியிலும் பிறமொழிச் சொற்கள் கலந்து விடுகின்றன. நமது தமிழ் மொழி யிலும் வேற்றுமொழிச் சொற்கள் காலத்திற்குக்காலம் கலந்து வழக் குப் பெற்று வருகின்றன. இவ்வாறகத் தமிழிற் கலந்துள்ள வேற்று மொழிச் சொற்கள் திசைச்சொற்கள்என அழைக்கப்படுகின்றன.
தமிழில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வடமொழிச் சொற்கள் பல திசைச் சொற்களாக இடம் பெற்றுவிட்டன. தொல் காப்பியத்திலேயே ஏறத்தாழ 100 சொற்கள் வரை கலந்துவிட்டன. இச்சொற்களுள் பாகதச் சிதைவு எனக்கருதப்படும் சொற்களும் அடங்கும். தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான ஒலிக ளால் அமைந்த சமஸ்கிருதச் சொற்களை அப்படியே எடுத்தாண் டுள்ளனர். கமலம், விமலம் ஆதியான சொற்கள் இவ்வகையின், சமஸ்கிருதத்திற்கே உரிய சிறப்பொலிகளால் அமைந்த சொற்களைத் தமிழொலிப்படுத்தியும் எடுத்தாண்டுள்ளனர். சுகி, போகி, முத்தி, பத்தி ஆதியன இவ்வகையின. எச்சொல்லாயினும் தமிழ் ஒலி முறைக் கேற்பவே அவை திசைச் சொற்களாக இடம்பெற்றன.
சமஸ்கிருதமே வடமொழி எனச் சிறப்பாகக் கருதப்பட்டாலும், சமஸ்கிருதத்துடன் அதிகம் தொடர்புள்ள வடகாட்டு மொழியான பிராகிருதச் சொற்களையும் திரித்துத் தமிழ் ஏற்றுக்கொண்டது. பிரா கிருதம் என்ற சொல்லே பாகதம் எனச் சிதைந்து தமிழில் இடம் பெற்று விட்டது. ஆணை, கட்டம், கண்ணன், விண்ணுணம் முதலான சொற்கள் பாகதச் சிதைவுகள் என உரையாசிரியர்களாற் குறிக்கப் பட்டுள்ளன: இவ்வாறக வடநாட்டிலிருந்து தமிழிற்கு வந்த (வட) திசைச் சொற்கள் திசைச்சொல் என்ற முறையில் ஆராயப்படாமல், வடசொல் என்ற முறையிலேயே தொல்காப்பியரால் ஆராயப்பட் டுள்ளன. வடமொழியாகிய சமஸ்கிருதத்திற்கும், தென்மொழியாகிய தமிழிற்கும் உள்ள அந்நியோன்னிய உறவே இதற்குக் காரணமா தல் வேண்டும்.
தொல்காப்பியர் காலத்திற்குப்பின், சமஸ்கிருதச் சொற்கள் பல்லவர் காலத்திலிருந்து சமயம், இலக்கியம், இலக்கணம் என்னும் பல துறைகளிலும் அதிகம் இடம் பெற்றுவிட்டன. வடசொல் ஊடுருவலை அதிகம் கண்ணுற்ற பவணந்தியார், வடசொல் தமிழில்

- 7 -
வருவதற்கான ஒலி விதிகளேயும் விரிவாகக் கூறியுள்ளார். வட சொற்களும் திசைச் சொற்களே எனக் குறிப்பிட்டவர் முதன் முத லாக நன்னூலாரே திசைச்சொல் பற்றிய விளக்கம் கூறப்படும் இடத்து, “ஒன்பதிற் றிரண்டி னில் தமிழ்மொழி நிலத்தினும்’ (கன். 273) என்றதால் நன்னூலார் காலத்துப் பதினெண் மொழி கள் பேசப்பட்டன என்பதும, ‘தமிழொழி நிலம்’ எனக் குறிப் பிட்டதால் சகஸ்கிருதம் பேசும் நாடும் எஞ்சிய நாடுகளுள் *ஒன்ருகும் என்பதும், எஞ்சிய நாடுகளின் “(தங்)குறிப்பினவே திகைச்சொல்” (கன். 273) என்பதால் தமிழிற் கலந்த சமஸ்கிரு தச் சொற்களும் திசைச் சொற்கள் என்பதும் புலப்படும்.
தொல்காப்பியனுர் திசைச்சொல் பற்றிக் குறிப்பிட்டது விரிவான ஆய்வுக்குரியது. ‘. .
*செந்தமிழ் சேர்க்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” (தொல், சொல். 400) செந்தமிழ் நிலம் மாத்திரம் அன்று, அதனைச் சார்ந்த ஏனைய பன்னிரு நிலங்களிலுமே (இப்பன்னிரு கிலத்தையும் கொடுந் தமிழ் நாடுகள் எனக் குறிப்பிடுவார்கள உரையாசிரியர்கள். கொடுந்தமிழ் - கோடிய தமிழ் - செம்மைப்படுத்தப்படாத தமிழ் - திருத்தமற்ற தமிழ்.) வேற்று மொழிகளிலிருந்து சொற்கள் திசைச் சொற்களாக இடம்பெற்றன என்பதே சூத்திரத்தின் கருத்தாகக் கொள்ளப்படில் வேண்டும். அன்றி, கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டிலுமிருந்து செந்தமிழ்ப் பிரதேசத் திற்குள் வந்து வழக்குப் பெற்ற சொற்கள் திசைச் சொற்கள் எனக் கருதுவது பொருத்தமில்லை. செந்தமிழோ, கொடுந்தமிழோ, அவை தமிழ்ச் சொற்களே, எனவே, இங்குத்தரப்பட்ட கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டால், தொல்காப்பியர் வடசொற்களும் திசைச்சொற் களே எனக் கருதியுள்ளார் என்பதும் பெறப்படும்,
திசை - இடம். கொடுந்தமிழ் நாடுகள் எனக் கூறப்பெற்ற 12 நாடுகளும், தமிழ் காட்டிலிருந்து விடுபட்ட பிரதேசங்களாய், வேற்றட்சி கொண்டனவாயும் இருந்திருக்கலாம். கொடுத்தமிழும் அந் நிலங்களில் வழங்கிய காரணத்தால், அங்கிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற் கலந்த சொற்களைத் திசைச் சொற்கள் எனக் கருதியிருக் தால், வேற்றிடச் சொல், திசைச்சோல் என்ற விளக்கத்தை உரை யாசிரியர்கள் கொண்டவராதல் வேண்டும் அல்லது தமிழிற் கலந்த சொற்கள் கொடுந்தமிழ்ச் சொற்களல்லாத அவ்வங் நாட்டுச் சொற் களாதல் வேண்டும்.

Page 65
- 8 -
திசைச்சொல்பற்றிய விளக்கந் தந்த நன்னூலார், உரையாசிரி யர்களின் உதாரண விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாற் போலும், செந்தமிழ் நிலத்திற்கு வந்த கொடுக்தமிழ்ச் சொற்களயும் திசைச் சொற்கள் எனக் குறிப்பிட்டுவிட்டார். 'ஒன்பதிற்றிரண்டினின் தமி ழொழி நிலத்தின், தங்குறிப்பினவே திசைச் சொற்கிளவி" என்ற ஈரடிகளுடன் சூத்திரம் அமைந்திருக்தால், பவணந்தியார் மிக நிறை வான கருத்தை வெளியிட்டவராவர். தன் காலத்துள்ள 17 மொழி களையும் குறிப்பிட்டது ஒரு சிறப்பாகச் சிலராற் கருதப்படும். எனினும் வேற்றுமொழிகளைச் சுட்டிச் சொல்லாமல்விட்ட தொல்காப் பியர் மிக ஆழமானவரே!
எதுவாயினும் வேற்றுமொழிச் சொற்கள் தமிழிற் கலந்து கொண்டே வருகின்றன. வரினும், அவை தமிழ் ஒலி மரபுக்குட் பட்டே வருகின்றன - வரவும் வேண்டும்.
திசைச் சொற்களில் சில:
அரேபியா - கோப்பி, தகவல், வசூல், இலாக்)கா.
ஆங்கிலம் - சீமெந்து, கூப்பன், கார், பென்சில் லீவு
வடமொழி - ஆயிரம், இலட்சம்.
இந்தி - கோடி, ஆசாமி, பயில்வான், பேட்டி, மசோதா,
dħul flJv, L. Tó565... ... ...
ஒல்லாந்தம் - இலாச்சி, உலாந்தா, கக்கூசு, கந்தேர்ர்,
கேத்தில், சக்கடத்தார், தோம்பு, பிசுக்கால்
சரக்கு, துட்டு, கொத்தாரிசு, தொலுக்கு போர்த்துக்கேயம் - அலுமாரி, கிருதி, சப்பாத்து, கோப்பை,
மேசை, கதிரை, தவறணை, துப்பாக்கி, சாவி
பிராஞ்சு - குசுனி, பீரோ, இலாம்பர். மராட்டி = அட்டவணை. சாவடி, வில்லங்கம், குண்டான், அபாண்டம், சாம்பார். பட்டாணி,..
பாரசீகம் - சபாசு (சபாஷ்) , சர்க்கார், சிப்பந்தி, சமுக்
காளம், சுமார்.
பாகதச் சிதைவுகள் :-
"வடமொழிச் சொற்களை கேரே எடுத்தாளாது பாகதத்தின் வழி யாகக் கொண்டு வழங்குதலே பண்டைக் காலத்துப் பெரு வழக்கா யிருந்தது' எனக் குறிப்பிடுவர் வையாபுரிய்ார் (இலக்

- 9 -
கண்ச் சிந்தனைகள் பக். 61.) தொல்காப்பியத்தில் எடுத்தாளப் பட்டுள்ளதாகக் குறிப்பிடும் சொற்களிற் சில: அரசர், இலக் கணம், ஆணை, இமை, உருபு, ஐயர், சுண்ணம், தேயம், படிமை, பார்ப்பனர், மாராயம், வண்ணம்.
வடசொல்
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழும் சமஸ் கிருதமும் பின்னிப் பிணைந்து விட்டன. தமிழகத்தில் மணிப்பிர வாள நடையென ஒரு நடை தோன்றும் அளவிற்கு சமஸ்கிருதச் . சொற்கள் தமிழிற் கலந்தன. ஆரியச் சொற்கள் அளவு மிஞ்சித் தமிழிற் கலந்தனவாயினும், அவை ஆரியச்சொல் உருவத்தில் (பெரும்பாலும்) கலக்கவில்லை. தமிழ் ஒலி மரபை ஏற்று அதற் குத்தக உருவம் பெற்றுத் தமிழிற் கலந்தன. ‘தத்வ ஓர் ஆரியச் சொல். 'தத்துவம்" எனத் தமிழ் வடிவம் பெற்றுத் தமிழிற் கலந்தது" அச்சொல். இவ்வாறு ஆரியச் சொற்கள் ‘தமிழ்மரபு உருவம் பெற்றுத் தமிழிற் கலந்த நிலையில், அவை "வடசொற்கள்' எனப்படும். (வேற்று நாட்டான் ஒருவன் இன்னுெரு காட்டிற் குடியேறி, அந் நாட்டுக் குடியுரிமையைப் பெறுவது போன்றன இவ்வடசொற்கள். குடியுரிமை பெற்ற நாளிலிருந்து அம் மனிதன் புதிய நாட்டின் குடிமகன் ஆபது போல் இவ் வடசொற்களும் தமிழ்ச் சொற்களாகவே மதிக்கப்படல் வேண்டும். இவ்வடசொற்களேக் களைந்து தனித் தமிழ் எழுத வேண்டுமென்ற முனைப்பு, குடியுரிமை பெற்ற ஒருவனுக்கு, குடி யுரிமை காட்டில் காணி வாங்க உரிமையில்லை என மறுக்கும் அநாகரிகம் போன்றது.)
தனியே சமஸ்கிருதத்திலிருந்து வந்த சொற்களை மாத்திரமன்று, சமஸ்கிருதக் கிளைமொழியான பிராகிருதச் சொற்களையும், வடசொற் கள் எனவே இலக்கணத் துறையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் "சிதைந்தனவரினும் இயைந்தன வரையார்’ (தொல், சொல். 402) என்ற சூத்திரத்தால் பாகதச் சிதைவுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். சேணுவரையர், கச்சினர்க்கினியர் முதலாயினுேர், (இயைந்தன வரை யார் . பொருத்தமானவற்றை நீக்கார்). எனவே, ஆரியச் சிதைவு பாகதச் சிதைவு இரண்டையும் வடசொல் என்ற தலைப்பின் கீழ்க் கொள்ள முடிகின்றது.
தமிழ் உருவம் பெற்ற ஆரியச் சொற்களே வடசொற்கள் என்பதைத் தொல்காப்பியனுர் தெளிவாகப் புலப்படுத்தி உள்ளார்
B

Page 66
- 10
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்’ (தொல். சொல். 401.) "வடசொல்லாவது ஆரிய மொழி ஒலிப்பினின்றும் நீங்கி, தமிழ் ஒலிப்படி இசைவு பெற்ற சொல்லாகும்’ என்பது இச் சூத்திரத்தின் பொருள்.
"வடவெழுத் தொரீஇ' என்பதற்கு "உப்பியும், எடுத்தும் கனத்தும் கூறும் வடவெழுத்துக்களின் நீங்கி’ என்று விளக்கம் கொடுப்பர் நச்சிஞர்க்கினியர்,
கவர்க்கம் முதல் பவர்க்கம் முடிய ஐந்துவர்க்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துக்கள் 'உரப்பு' ஒலி உடையன. குறிப்பிட்ட வர்க்கங்களில் மூன்றம் எழுத்துக்கள் 'எடுப்பு ஒலியின. நான்காம் எழுத்துக்கள் கனைத்து உச்சரிப்பன.
"வடவெழுத்தை நீங்கும், தமிழ் எழுத்தைப் புணரும்' எனக் கூறிய தொல்காப்பியனுர் இன்ன ஒலி இன்ன ஒலி ஆகும் என்று கூறவில்லை. அவர் காலத்தில் வடமொழிச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்பட்டபடியால் ஒலி மாற்ற விபரத்தை அவர் கூருமல் விட்டிருக்கலாம். நன்னூலார் காலத்தில் வடசொல் ஆதிக் கம் கூடுதலாகக் காணப்பட்டமையாற் போலும், ஒலித்திரிபு மரபை யும் விபரமாகக் கூறியுள்ளார். ܕܝܢ
ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலும், ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்துத் திரிந்த எழுத்தாலும், இவ்விருவகை எழுத் தாலும் இயைந்து வருவன வடசொல் எனக் கூறுவர் பவணந்தியார்.
"பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல். (கன். 274) பொது எழுத்தால் வந்தன; அ0லம், கமலம், காரணம், காரியம். 2. சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்தால் வந்தன; முத்தி, பத்தி,
போகி... 8. ஈரெழுத்தாலும் இயைந்தன; அரன், அரி, சலம்.
தமிழுக்கும், ஆரியத்திற்கும் பொது ஒலிகளைக் கொண்ட சொற்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படலாம், சிறப்பு ஒலி களால் அமைந்த ஆரியச் சொற்கள் வடசொல்லாகும்போது இன்ன ஒலி இன்ன ஒலியாக மாற்றப்படவேண்டும் என்ற விபரம் தேவை அல்லவா? அல் விபரங்களையும் நன்னூலார் பதவியலில் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். (கன் 148-150)

- ti -
வடமொழிகளான ஆரிய மொழிகள் இருவகையாகப் பகுக்கப் பட்டன. (1) ஆரியத்திற்கு உரிய சிறப்பு ஒலியாலும், (2 பொது வும் சிறப்பும் ஆகிய ஈரொலியாலும் ஆகிய ஆரியச் சொற்கள் திரிதல் முதலான விகாரம் பெற்றுத் தமிழில் வழங்கும் போது அவை "தற்பவம்" எனப்படும். () சுகி, போகி, சுத்தி, முத்தி (2) அரன், அரி, செபம், என்பன தற்பவம் ஆன வடமொழிகள்.
ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தால் ஆகி, விகாரம் பெற்றும் பெருமலும் தமிழில் வழங்குவன "தற்சமம்" எனப்படும். காரியம் மாலை முதலாயின பொது எழுத்தால் ஆகித் தமிழிற் திரிந்த தற்சம மொழிகள். கார்யம் இகரம் பெற்றுக் காரியம் ஆகி யது. மாலா என்னும் சொல், இறுதி ஆகாரம் ஐகாரமாகத் திரிதல் பெற்று, மலை எனத் தற்சமம் ஆனது. அமலம், கமலம், காரணம், குங்குமம் என்பன பொது எழுத்தாலாகிய சொற்கள்; திரிபு பெரு மலே தமிழில் வடமொழிகள் ஆயின.
ஆரியச் சொற்கள் வடமொழிகளாவதற்கு நன்னூலார் கூறிய விதிகளிற் பொருந்துவனவற்றைக் கொண்டு, வேற்றுமொழிச் சொற் களில் வேண்டியனவற்றைத் திசைச் சொற்களாக மாற்றிக் கொள் வதும் சாத்தியமே.

Page 67


Page 68


Page 69
ழ்ப்
! 법 出 岳 于 불법 湖
|-|- |- |-|- |- | | |-| |-
| 1
|- ----