கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாசாரமும் பெண்வெளிப்பாடும்

Page 1
5D| | | | f>ഠ്വr1 ! 3SL lpg2,
 
 
 


Page 2

கலாசாரமும் பெண்வெளிப்பாடும்
தொகுப்பு :
கந்தையா சண்முகலிங்கம் தெ.மதுசூதனன்
ஆற்றல் மேம்பாட்டு மையம்

Page 3
Gires
தொகுப்பு:
கலாசாரமும் பெண்வெளிப்பாடும்
கந்தையா சண்முகலிங்கம்
தெமதுசூதனன்
ஐப்பசி 2006
'விழுது
3. டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07 தொ.பே: 011-2506272
டெக்னோ பிரின்ட் 55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06 தொ.பே: 07:301920

அறிமுகம்
ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
இன்று எம்மிடையே வாசிப்பு பரவலாக குறைந்து செல்கிறது. இதனால் அறிவு மட்டம் தாழ்ந்து செல்கிறது. சமகாலக் கல்வி வளர்ச்சியின் பன்முகத்தன்மைகளை நாம் உள்வாங்குவதில் பின்தங்கி வருகின்றோம். இது ஆபத்தானது. சமூகமேம்பாட்டுக்கு தடையாக அமைவது,
தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவிற்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அறிவு உள்ளது. இந்த அறிவுருவாக்கச் செயற்பாட்டுக்கு வாசிப்பு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளது. மொழித் திறன்களின் வளர்ச்சிக்கும் வாசிப்பு முக்கியமாக் உள்ளது.
சிந்தித்தல், கற்றல், தொடர்பு கொள்ளல் என்ற செயற்பாடுகளில் மொழியானது அடிப்படைக் கருவியாகின்றது. இத்தகைய மொழித் திறன்கள் இயல்பாகவே கடத்தப்படுவதற்கும் வாசிப்பு அவசியமாக உள்ளது. இந்த உயர்ந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையிலும்; அறிவுருவாக்கப்பணியில் தொடர்ந்து செயற்படுவதற்கானதிறன்களை ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி வளர்க்கும் பெரும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்கு உறுதுணையாகவே அக்டோபர் வாசிப்பு மாதத்தையொட்டி விழுது நிறுவனம் சில நூல்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படையில் "கலாசாரமும் பெண் வெளிப்பாடும்" எனும் நூல் வெளிவருகிறது.
தமிழ் இலக்கியத்தில் பெண்நிலைவாத சிந்தனைகளின் வெளிப்பாடுகள் தொடர்பான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளினதும்

Page 4
புனைகதைகளினதும் தொகுப்பாக 'கலாசாரமும் பெண்வெளிப்பாடும்' என்னும் இந்நூல் அமைந்துள்ளது.
வேதநாயகம் பிள்ளை, பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அம்பை உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளின் எழுத்துகளின் ஊடே பெண்விடுதலைச் சிந்தனைகள் வளர்ச்சியுற்று வந்திருப்பதை இத்தொகுப்பில் உள்ள பிண்ட்ப்புகள் கோடிட்டுக் காட்டுவனவாய் உள்ளன. அதேநேரம் பெண்நிலைவாதம், பால்நிலை சமத்துவம் போன்ற சிந்தனைகளையும் உள்வாங்கி கலாசார சிந்தனைத் தளங்களில் விமரிசன விழிப்புணர்வுகளை உருவாக்கவும் இந்நூல் பயன்படும்.
க. சண்முகலிங்கம் தெ.மதுசூதனன்

உள்ளே.
0
0.
()
()
சொல்லும் பொருளும்
பெண் நிலைவாதம் என்றால் என்ன? செல்லம்மாள்
யுக சந்தி ஆண் பெண்-உயிரியலும் சமூகவியலும்
புனர்
மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளையின் பெணிமானம்: இந்துச் சீர்திருத்த அரசியல்
ஒரு உரையாடல்
பாரதியின் எழுத்துக்களில் பெண்வெளிப்பாடு
பாரதிதாசனின் இயற்கைப் பாடல்களில் ஆண் - பெண் உறவு
தமிழ் யதார்த்த நாவல்களில் ஒடுக்கப்பட்டோரின் நிலையும் மேம்பாடும்
பாடசாலைக் கல்வியில் பால்நிலை கருத்துக்களை உள்வாங்குவதன் அவசியம்
O7
O9
20
41
55
57
63
74
76
89
97
13

Page 5

சொல்லும் பொருளும்
untsipilsoap (GENDER)
முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆண் - பெண் சமத்துவம்' என்று பேசப்பட்ட விட்யம் இன்று பால்நிலை சமத்துவம்' என்று உருமாற்றம் பெற்றுள்ளது. இந்த புதிய சொல் ஏன் புகுந்தது? அதன் தேவை என்ன? 'ஜென்டர் என்ற ஆங்கிலச் சொல் எவ்விதம் புதிய அர்த்தங்களுடன் உபயோகிக்கப்படுகிறது என்பதை அறிவதன் மூலமே பால்நிலை' என்ற புதிய சொல்லாக்கத்தின் தேவையைப் புரிந்து கொள்ளலாம்.
பால் என்ற தமிழ்ச் சொல், இலக்கணத்தின் ஊடாக தமிழில் அறியப்பட்ட சொல். ஆண்பால், பெண்பால் பலர்பால் ஒன்றன்பால், பலவின்பால் என்று இலக்கண நூல்கள் 'பால்' பற்றிக் கூறும். இலக்கணத்தில் பால் என்பது வகை, பிரிவு, பகுப்பு என்ற பொருளில் பயன்பட்ட்து. Gender என்ற ஆங்கிலச் சொல்லும் 1960க்கு முற்பட்ட காலத்தில் இலக்கணத்தில் உபயோகிக்கப்பட்ட சொல்லாகவே இருந்தது."Kind'SortClass என்றபொருளில்இது ஆண்,பெண்பிரிவைக் குறிப்பதற்கு உபயோகிக்கப்பட்டது. 1960க்களில் உளவியல்துறையைச் சார்ந்தவர்களின் கருத்துக்கள் ஆணுக்கும்பெண்ணுக்கும்இடையிலான பால்வேறுபாடுகளில் உடலியல் சார்ந்த அம்சங்கள்தான் தீர்மானமான காரணி என்ற கருத்தை மாற்றியது. மனிதரிடையே உள்ள பாலியல் இயல்புகளின் உருவாக்கம் உடலியல் காரணிகளால் மட்டுமன்றி பண்பாட்டுக் காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை உளவியலாளர்கள் எடுத்துக்காட்டினர்.தன்னினச்சேர்க்கை நடத்தை ஆணுக்குள் பெண்மையும்,பெண்ணுக்குள் ஆண்மையும் உறைவதையும் எந்த அம்சம் மேம்படுகிறதோ அதைப் பொறுத்து ஒருவரின் பாலியல் இயல்புகளும் நடத்தைகளும் வேறுபடும் என்றும் உளவியலாளர்கள் கூறத்தொடங்கினர். ஆகவேGender என்ற சொல்Sex என்பதில்இருந்து வேறுபட்டதொரு பொருளில் இவ்விதம் உபயோகிக்கப்படலாயிற்று.
1960க்களில் தோன்றிய பெண்ணியவாதத்தின் இரண்டாவது அலை உளவியலாளர்களின் இந்த விளக்கத்திற்கு புதிய பெண்நிலை வாத அர்த்தத்தைக் கொண்டு வந்தது.
-7-

Page 6
"உடல் அடிப்படையான பால் வேறுபாடு தப்பித்துக் கொள்ள முடியாதது. அதை ஒருவர் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அது தலைவிதி (Fate). ஆனால் 'பால்நிலை' (Gender) தலைவிதி அல்ல. அது ஒருவர் மீது புகுத்தப்பட்டது. அதை மனிதர் தம் சுயவிருப்பப்படிதீர்மானித்துக்கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் முடியும்" என்ற முடிவு பெண்நிலை வாதிகளால் முன்வைக்கப்பட்டது.
இது அறிவியல் சார்ந்ததும் அரசியல் சார்ந்தும் பல புதியவிளக்கங்களுக்கு இடமளித்தது. Gender என்பது சமூகத்தால் கட்டமைக்கப்படுவது ஆண், பெண் இயல்புகளை சமூகம்தான் உருவாக்குகின்றது. is giá2556i agpa,65uartalTif The Social Construction of Gender Roles என்ற கருத்தை முன் வைத்தனர். இதனை "சமூகத்தால் கட்டமைக்கப்படும்பால்நிலை வகிபாகங்கள்" என்று தமிழில் கூறலாம்.
அ) உற்பத்திச் செயன்முறை ஆ) மறுஉற்பத்தி-அதாவது குழந்தைகளைப் பெற்று வளர்த்து
மனுக்குலத்தை மறுஉற்பத்திசெய்தல், இ) சமூகத்தில் பெறும் வகிபாகங்கள் என்ற மூன்று வழிகளில் ஆணிற்கும் பெண்ணிற்கும் வேறாக பால்நிலை வகிபாகம் உருவாக்கம் செய்யப்படுகிறது. இதனை விட இன்னோர் அம்சம், எல்லா சமூகங்களிலும் ஆண் - பெண் சமத்துவமின்மையும் பேதமும் காணப்படுகின்றது என்பது. இந்தச் சமத்துவமின்மையும் சமூக அமைப்பினால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட ஒன்றே அன்றி உயிரியல் இயல்பாக வந்ததொன்றல்ல என்பதை பெண்ணியவாதம் எடுத்துக்காட்டியது. இதற்குக் காரணம் ஆணாதிக்க முறைமை (Partiarchy). வேலை, குடும்பம், சொத்து, சமயம், பால் உறவு ஆகிய எல்லா அம்சங்களிலும் பால்நிலைச் சமத்துவமின்மை ஊடுருவி உள்ளதை பெண்ணியவாதம் எடுத்துக்காட்டியது.
1970க்களில் ஐரோப்பியபல்கலைக்கழகங்களில்"WomenStudies" என்னும் கல்வித்துறைபுகுந்துகொண்டது.இந்தகற்கைநெறியை இன்று Gender Studies என அழைக்கின்றனர். பெண்கள் என்பதை விட'பால்நிலை என்ற சொல் நடுநிலைத்தன்மையுடைய அர்த்தத்தை பெற். றுள்ளது பெண்-ஆண் ஆகிய இரு திறத்தாரதும் நடத்தை, பிரச்சினை பற்றிய கல்வித் துறையாக் இதுமாறுகிறது என்றும் கொள்ளலாம்.
New Key Words A Revised Vocabulary of Culture and Society Tony Bennet lobgybáfisuituáliusába5 görőüBlackwell Galsifiu9GB (2005)

பெண் நிலைவாதம் என்றால் என்ன?
கம்லா பாசினுடனான உரையாடல்
கேள்வி : பெண் நிலைவாதம்
என்றால் என்ன?
பதில் பல்வேறு கோட்பாடு களைப் போல இல்லாமல், பெண் நிலைவாதத்தின் தத்துவார்த்த அல்லது கருத்தியல் ரீதியான தளத்தை ஒரு தனிக்கோட்பாட்டின் தொகுப்பிலிருந்து அது பெற்றுக்கொள்ளவில்லை.எனவே அனைத்துப் பெண்களுக்கும் எக்.
காலங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான வரையறை இதற்குக் கிடையாது. எனவே, பெண்.
நிலைவாதம் ஸ்தூலமான வர்.
ல்ாற்று / கலாசார நடைமுறை
களிலும், பார்வைகள் / உணர்வு
கள் / செயல்பாடுகளின் நிலை
களிலும் தளம் கொண்டிருப்பதால்
இதன் வரையறையானது மாற்ற
மடையக்கூடும்; மாற்றமடையவும்
செய்யும்,
س9-

Page 7
17ஆம் நூற்றாண்டில் பெண்நிலைவாதம் என்ற சொல் முதன்முதல் உபயோகப்படுத்தப்பட்ட போது அது கொண்டிருந்த அர்த்தம், இன்று 2005- ஆம் ஆண்டுகளில் அது கொண்டிருக்கும் அர்த்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகவே இருந்தது. இது பல்வேறு நிலையிலுள்ள பெண்களால், அவர்களின் வர்க்கப் பின்னணி/கல்வித்தகைமை ! உணர்வு நிலை போன்றவற்றைப் பொறுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும், ஒரு தேசத்துக்குள்ளேயும் பல்வேறு வகையாகப் பேசப்படலாம். ஒரே நிலையிலுள்ள பெண்கள்மத்தியிலுங்கூட, குறிப்பாக தந்தை வழிச்சமூகத்தின் தோற்றம் மற்றும் ஆண் மேலாதிக்க உணர்வுகளின் காரணங்கள் (வரலாற்று வேர்கள்) பற்றியும், வர்க்க/ சாதிய இன/ பாலினச் சார்பற்ற ஒரு சுரண்டலற்ற சமுதாயத்தை நிர்மாணிப்பது சம்பந்தமாகப் பெண்கள் போராட்டத்தின் தொலை, நோக்கத் தீர்மானங்களைப் பற்றியும் மாறுபட்ட பெண்நிலைவாதக் கருத்தோட்டங்களும், விவாதங்களும் இடம் பெறவே செய்கின்றன. எனினும், பெண்நிலைவாதத்தின் ஒருபரந்துபட்ட வரையறையாக இன்று ள்மக்கு இருப்பது இதுதான்: (பங்களாதேஷ், இந்தியா, நேபால், பாகிஸ்தான், இலங்கை போன்றதென்னாசிய நாடுகளின் பெண்களால் ஒரு சமீபத்திய பட்டறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது) "சமூகத்திலும், வேலைத்தலத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்கு பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளும்"
மேலாதிக்கத்தையும் தந்தைவழிச் சமூக அமைப்பையும் இனங்காணும் எவரும் ஒரு பெண்நிலைவாதியாகின்றார். ஆனால் வெறுமனே பாலின ரீதியிலான ஒடுக்குமுறை வடிவங்களை இனங்காண்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஆண் மேலாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும் என்று வரையறை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. இந்நடவடிக்கைகள் எந்த வடிவத்தையும் எடுக்கலாம். உதாரணமாக, ஒரு பெண் அவள் சிறுமைப்படுத்தப்படுவதை நிறுத்த முடிவு செய்வதை, சுய கல்வி கற்று ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள முனைவதை, பர்தாவுக்குள் மறைத்துக் கொள்ள மறுப்பதை அல்லது குழந்தைகள் பெற்றுக் கொள்ளுவதில்லை என்று தீர்மானிப்பதை, ஏனைய பல்வேறு ஸ்தாபன ரீதியான போராட்டங்களைப் போலவே பெண்நிலைவாத நடவடிக்கைகளாகவே நாம் கருதுகிறோம். ஆக்கபூர்வமாகச் செயல்படுவதற்கு ஒரு அமைப்பைச் சார்ந்திருப்பதுநல்லது.
-10

எனினும், ஒரு பெண்நிலைவாதியின்நிலைப்பாட்டை எடுப்பதற்கு நீங்கள் 652CI5 அமைப்பைச் சார்ந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. முன்னைய நாட்களில் பெண்நிலைவாதிகளின் போராட்டமானது பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமாக இருந்ததே அக்காலத்திய பெண்நிலைவாதிகளுக்கும், இன்றைய பெண்நிலை வாதிகளுக்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடாகும். அது கல்வி வேலைவாய்ப்புரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, பாராளுமன்றத் துக்குச் செல்லும் உரிமை, கருத்தடை உரிமை, விவாகாரத்துரிமை போன்றவற்றை உள்ளடக்கியதாயிருந்தது. அதாவது முன்னைய பெண்நிலைவாதிகள் சட்ட ரீதியான சீர்திருத்தங்களுக்காகவும், சட்டரீதியான சமத்துவநிலைகளுக்கான போராட்டங்களை, குறிப்பாக வீட்டையும், குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தாத போராட்டங்களையே முன்னெடுத்திருந்தனர். இன்றைய பெண்நிலைவாதிகளோ பாரபட்சங் களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சட்டரீதியான சீர்திருத்தங் களைத் தாண்டி மேலே போயிருக்கிறார்கள்; அவர்கள் பெண்ணின் முழுமையான விடுதலைக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இன்று பெண்நிலைவாதமானது வீட்டுக்குள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்ஆண்களின் மேலாதிக்கம் / குடும்பத்தினரால் அவர்கள் சுரண்டப்படுதல்/கலாச்சார ரீதியிலும், மதரீதியிலும் வேலைத்தலத்திலும் சமூகத்திலும் தொடர்ந்து நிலவிவரும் அவர்களுடைய கீழான அந்தஸ்து மறு உற்பத்தி ஆகிய இரு முனைகளிலும் அவர்களுடைய இரட்டிப்புச் சுமை போன்றவற்றுக்கு எதிரான போராட்ட வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.அத்தோடு, பெண்நிலை. வாதம் பெண்மையும், ஆண்மையும் பரஸ்பரம் தனித்துவமானவையும், உயிரியல்ரீதியாக நிர்ணயிக்கப்பட்டதுமான இருவேறு இனங்கள் என்ற கருத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
எனவே, பெண்கள் தமக்கெதிரான ஒரு தலைப்பட்சமான நீதிகள் மடடுமல்ல, அரசியல் சமூக (ஆண் மேலாதிக்க ஒடுக்குமுறை போன்ற அனைத்து வடிவங்களிலிருந்தும் தமது விடுதலையைப் பெற்றிடத் தொடர்ந்து போராட வேண்டும் என்று பெண்நிலைவாதிகள் கருது: கிறார்கள். பெண்கள் சுரண்டலுக்கும் (சமனற்ற ஊதியம், குறைவான ஊதியம்) ஒடுக்குமுறைக்கும் (ஆண் மேலாதிக்கத்தின் கீழ்) அடக்கு. முறைக்கும் (பெண்களுக்கெதிரான வன்முறை) பலியாகியிருப்பதால், பிற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் நாம்தான், நமதுநில்ைகளையும் சமூக அமைப்பையும் மாற்றுவதற்கான
--,

Page 8
போராட்டத்தை தொடக்கி வைக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
சாராம்சத்தில் இன்றைய பெண்நிலைவாதமானது, பெண்களின் சமத்துவம் மற்றும் கெளரவத்தை மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் நமது வாழ்க்கை முறைகளையும் நமது உடல்களையும் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைத் தேர்வு செய்யும் உரிமையையும் வென்றெடுப்பத்ற்கான போராட்டமாகும். ஆணுக்கு நிகரான பெண்ணின் சமத்துவத்தைக் கேட்பது மட்டும் போதாது என்பதை நாங்கள் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். உதாரணமாக, சமூகத்தால் மிருகத்தனமாக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு ஆண் விவசாயிக்குநிகரான சமத்துவத்தை ஒரு பெண் விவசாயி பெற்றுவிட்டாலும், அது அவளை முன்னேற்றப்பாதையில் வெகு தூரத்துக்கு இட்டுச்செல்லாது. எனவே பெண்நிலைவாதிகள் பெண்களின் சமத்துவத்தை மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் இருபாலர்க்குமானநியாயமான பாரபட்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவே போராடுகிறார்கள். கேள்வி: பெண்நிலைவாதம் ஒரு மேற்கத்தியக் கோட்பாடு என்பதும், எனவே அது தென்னாசியப் பெண்களுக்குப் பொருத்தமற்றது என்பது சரிதானா?
பதில் இது அபூர்வமாகத்தான் ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகின்றது. மாறாக இது ஒரு குற்றச்சாட்டாகவும், ஒரு தாக்குதலாகவும், ஒரு பேருண்மையாகவுங்கூட முன்வைக்கப்படுகின்றது. இதனாலேயே பெண் நிலைவாதிகள் "இயல்பாகவே" கண்ட னத்துக்குட்பட் (6, விதண்டா. வாதிகளாகக் கருதப்பட்டனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால், இந்தக் குற்றச்சாட்டை மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிய, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்ஆங்கில மூலம் கல்வி கற்ற ஆங். கிலத்தை மட்டும் பேசும், மேற்கத்திய ஆடைகளை அணியும் ஆண்களே (சில பெண்களும்) மிக அழுத்தமாக முன்வைக்கிறார்கள். மேற்கத்திய நாகரிகத்தின் பரவலால் தோன்றிய நவீன விஞ்ஞானத்தையும் நவீன மயமாக்கலையும் பற்றி இவர்கள் விவாதிப்பதில்லை.
இதே மனிதர்கள் பாராளுமன்றம் மற்றும் சனாதிபதி ஆட்சி முறையின் மேற்கத்தைய தோற்றுவாயை, மூலதனத்தின் வளர்ச்சியை நிலவுடமை அமைப்பின் அழிவு மற்றும் தனிச்சொத்துடமையின் தோற்றத்தை, இடதுசாரிக்கொள்கைகளை கேள்விக்குட்படுத்துவ தில்லை. பெண்நிலைவாதம் என்ற பதம் தென்னாசியாவில் உருவாக வில்லை என்பது உண்மைதான். ஆனால் தொழிற்புரட்சி மார்க்சியம்,
-12

சோஷலிசம் இன்னும் சொல்லப் போனால் நமது சில மதங்களுங்கூட தென்னாசியாவில் தோன்றவில்லையே. ஜன்ஸ்டீன் லாகூரிலேயும், மார்க்ஸ் கல்கத்தாவிலேயும், லெனின் டாக்காவிலேயும் பிறக்கவில்லை. ஆயினும் அவர்களுடைய மேற்கத்தைய உருத்தோற்றம், அவர்களுடைய கருத்துக்களை எமக்கு அவசியமற்றவையாக்கிவிடவில்லை. ஒரு கருத்தமைவை தேசிய பூகோள எல்லைக்குள் அடக்கிவிட முடியாது; பிற மனிதர்களுக்கு அவசியமற்றது என்று ஒதுக்கிவைக்கவும் முடியாது. எவ்வாறாயினும், பெண்நிலைவாதம் என்ற பதம் அந்நியமானதாயி, னும், அதன்கோட்பாடு ஒரு உருமாற்றத்துக்கான நடவடிக்கையேயாகும். இந்நடவடிக்கை தென்னாசியாவில் 19ஆம் நூற்றாண்டில் பெண்கள் மீது ஏவி விடப்பட் டிருந்த அடக்கு முறைக்கு எதிராக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டோடு அமைப்பு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. எனவே, பெண்நிலைவாதம் ஒரு அந்நியக்கருத்தமைவுஎன்றோ, செயற்கையான முறையில் தென்னாசியப் பெண்கள் மீது திணிக்கப்பட்டது என்றோ கூறிவிட முடியாது. ஆசியாவில் சனநாயக உரிமைகள் பற்றியும், சரிபாதி மக்கள்தொகையினருக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாதிருந்த நியாயமற்றநிலைபற்றியும் ஒருவிழிப்புணர்ச்சிதோன்றி வளர்ந்தபோதே, பெண்நிலைவாதமும், பெண்நிலைவாதப் போராட்டங்களும் எழுச்சி. யடைந்தன. முக்கியமாக, அரசியல் விழிப்புணர்வு உச்சகட்டத்தை அடைந்த குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டங்களில் பெண்நிலைவாத ஆரம்ப காலத்திலும் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் உள்நாட்டு சர்வாதிகார நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக்கு எதிராகவும் போராட் டங்கள் வெடித்தெழுந்தபோது பெண்நிலைவாத விழிப்புணர்வும் ஏற்பட்டு விட்டது. இக்காலகட்டங்களில் பெண் அடக்குமுறைக்கு எதிரான குரல் கள்,விதவைகளின் மறுமணத்துக்கான சாத்தியங்கள், பலதார மணத் தைத் தடை செய்தல், ஸதி'மற்றும் பர்தா ஒழிப்பு, பெண்களுக்கு கல்வி மற்றும் சட்டரீதியான சமத்துவம் போன்ற விஷயங்களையே வலியுறுத்தின. கேள்வி: காலனித்துவ ஆட்சிக்காலத்துக்கு முன்பே ஆசியாவில் பெண்களின் சமூக அந்தஸ்து பற்றிய விவாகங்கள் இடம்பெற்றுள்ளனவா? பதில் ஆம், பெண்கள் மீதான விவாதம் மிகவும் பழமையானதுதான். உதாரணமாக, பெண்கள் பெளத்த சங்கத்தில் சேர்ந்து துறவிகள் ஆக முடியுமா என்று கி.மு. 6-வது நூற்றாண்டிலேயே புத்தரும் அவருடைய சிஷ்யர்களும் விவாதித்திருக்கிறார்கள். ஆசியாவின் பலநாடுகளிலும்
- 13

Page 9
பெண் கல்வியுரிமை பற்றிய தொடர்ச்சியான கருத்து மோதல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேரி வொல்ஸ்டோன்கிடுஃட் என்ற பெண்நிலைவாதிக்குமுன்பாகவே18ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மேதையான சென் உறங்-மெள என்பவர் பெண்கள் கல்வி பற்றி எழுதினார். "கல்வி கற்பிக்கப்பட முடியாதவர் என இந்த உலகில் எவருமில்லை. அத்தோடு, கல்வி கற்பிக்காமல் விட்டு விடும்படியாகவும் ஒருத்தரும் இல்லை. இவ்வாறிருக்க, பெண் குழந்தைகளை மட்டும் நாம் ஏன் ஒதுக்கிவைக்க வேண்டும்? குழந்தைப் பருவத்தைக் கடந்ததிலிருந்தே அவர்கள் பெண்களுக்கான நாற்சுவர் உலகத்துக்குள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். ஆண் குழந்தைகளைப் போல அவர்கள் வெளியே வந்து ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்றுக்கொள்ள முடியாது. ஆண் குழந்தைகளைப் போல ஆசிரியர்கள் / நண்பர்களின் ஊக்கு விப்பைப் பெற்றுப்பயனடையவும் முடியாது. பெண்குழந்தைகள் ஓரளவு வளர்ந்து விட்டபோது, அவர்களுக்குத் தையல் வேலை செய்யவும், வரதட்சணையைச் சேர்க்கவும்மட்டும்தான்கற்றுக்கொடுக்கிறார்கள்." கேள்வி இவையெல்லாம் ஆண்களின் உணர்வுகளுக்கு எடுத்துக் காட்டுகளாக இருந்திருக்கின்றன.ஆண்களே பெண்நிலைவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார்களா?
பதில் ஆம். கீழ்த்தேசங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்களே பெண்களின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். உதாரணமாக சீனாவில் உறங்யுவெய் என்பவர் பெண்களின் பாதக்கட்டுகளையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும் அந்நாட்களில் இவ்வாறு தாக்கினார்: "இப்போது எனக்கு ஒரு கடமை இருக்கிறது; எண்ணிலடங்காத பெண்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்காகக் குர்ல் கொடுப்பது எனக்கு இப்போது ஒரு பெருவிருப்பம் இரு கிறது. என்னுடைய சமகாலத்திய எண்பது கோடிப் பெண்களை நிரந்தரமானதுயரக்கடலில் மூழ்கவிடாமல்காப்பாற்றுவது; எனக்கு ଡ଼୯5 பேரவா இருக்கிறது. எண்ணிலடங்காத தனிச் சிறப்பு வாய்ந்த பெண்களுக்கு சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது." அதே போல எகிப்தில் அகமட்ஃபெயார் எல் ஷிட்யாம் என்பவர்-பெண்விடுதலைக் கருத்துக்களை ஆதரித்து "ஒரு காலுக்கு மேல் இன்னொரு கால்" (One leg crossed over the other) 576ip L55á5,56025 1855 - gy, b goinggi) எழுதினார். அதே காலத்தில் காசிம் அமீன் என்பவர் "புதிய பெண்"(The new Women) என்ற நூலை எழுதியதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஈரானில் 1880, 1890 ஆம் ஆண்டுகளில் பல ஆண்
-14

புத்திஜீவிகள் பலதாரமணம், பெண்களை ஒதுக்குதல் போன்றவற்றை எதிர்த்தும் பெண்களின் உரிமைகளை ஆதரித்தும் நின்றிருக்கின்றனர். இந்தியாவில் ராம்மோகன்ராய் "ஸ்தி" பெண் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதைத் தொடர்ந்து வித்யாசாஹர், ராமகிருஷ்ணர், ரவீந்திரநாத் தாகூர், காந்தி, நேரு, சையத் அகமத் போன்ற பல சமூக அரசியல் சீர்திருத்தவாதிகள் தமது குரல்களை எழுப்பியிருந்தனர். கேள்வி: இந்தக் கால கட்டத்தில் ஆசியாவில் பெண்ணுரிமைக்
காக போராடிய பெண்கள் இருந்தார்களா? பதில் :ஆம்,பலர் இருந்தனர்.19ஆம்நூற்றாண்டிலும்பலபெண்கள்போராட் டங்களில்இறங்கியிருந்தனர்.அதிகம் அறியப்படாமல்இருந்தபண்டிதராமாபாய்(1858-1922)பெண்ணுரிமைக்காகஇந்தியாவில் முதலில் போராட்டத்தில் இறங்கியவர்களுள்ஒருவர்.இந்துமதஐதீகத்தை எதிர்த்ததோடு, 1880ஆம் ஆண்டுகளிலேயே பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்திருந்த இவர், ஒரு சுதந்திரமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டினார்.
இந்தோனேஷியாவில் பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக் காகவும், குரல் கொடுத்த முன்னோடியாகவிருந்த கார்த்தினி ( 18791901) என்பவர், பெண்களுக்காகத் தனிக்கல்வி நிறுவனங்களை அமைக்கும் வழக்கத்துக்கு எதிராகவும் போராடினார்.
ஈரானில்பாபி இனத்தைச் சேர்ந்த வீராங்கனையாகிய குவாரத் உல் அயின் (1815-51) என்ற பெண் தனது குடும்பத்தை விட்டு வெளியேறியதோடு, பர்தா அணிதலை நிராகரித்து, பர்தா அணியாமலே பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இவர் ஒரு போர்களத்தில் உயிர்நீத்தார்.
சீனாவில் ஜிவு ஜின் (1875-1907) என்பவர் டோக்கியோவில் கல்வி பயில்வதற்காக வீட்டை விட்டு வந்ததோடு, புரட்சிகர அரசியலோடும் பெண்கள் போராட்டங்களோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஜிவு ஜின் இந்நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவர், "சமத்துவ உரிமைகளைக் கொடுப்பதன்மூலம், புரட்சி எமதுவீடுகளிலேயே தொடங்கப்படவேண்டும்." என்று
இலங்கையைச் சேர்ந்த சுகலா, கஜமன் நோனா ஆகிய இரு பெண்கள், பெண்களின் ஒடுக்குமுறைக்கெதிராகவும், பெண்களின் தனித்துவ வெளிப்பாடுகளுக்காகவும் குரல் கொடுத்தார்கள். மஹா
-15

Page 10
வம்சத்தில் குறிப்பிடப்படும் சுகலாதனது தாய்நாட்டைக் காப்பதற்காக முதலாம் பராக்கிரமபாகு - என்ற அரசனுடன் போரிட்டாள் கஜமன் நோனாவால் எழுதப்பட்ட கவிதைகளில் சில அந்நாட்களில் பெண்களால் படிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
நமது சமூகநிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால், பெண் ஒடுக்குமுறை நடைமுறைகளும் வடிவங்களுங்கூட மாற்றமடைந்துள்ளன. எனவே (1980 ஆம் ஆண்டுகளில்) நாம் இன்று முன்வைக்கும் கோரிக்கைகள், 1880 ஆம் ஆண்டுகளில் வைக்கப்பட்ட கோரிக்கைகளிலிருந்து வேறுபடவே செய்யும்.இதில் முக்கிய அம்சம் என்னவெனில் பெண்ணடிமைத்தனம் என்பது அன்றும் இன்றும் ஒரே நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. இம்மாற்றங்கள் ஒட்டு மொத்தமான மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இன்றைய பெண்நிலைவாதிகள் தனித்துவமான, மிகவும் ஸ்தூலமாக இப்பிரதேசத்துக்கேயுரிய பிரச்சினைகளையே எழுப்புகின்றனர். வரதட்சனை, பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான பலாத்காரம், சமனற்ற ஊதியம் பாரபட்சமான தனிநபர் சட்டங்கள், மத ரீதியிலான பெண் ஒடுக்குமுறை, தகவல் தொடர்பு சாதனங்களில் பெண்களை எதிர்மறையாக உருவகப்படுத்துதல் போன்ற அனைத்துமே பிரத்தியேகமான பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளில் பலவற்றுக்கு எதிராக மேலைநாட்டுப் பெண்ணிலைவாதிகளும் குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், அதற்காக, இப்பிரச்சினைகள் எம்மோடு சம்பந்தப்பட்டவையல்ல என்றோ, அல்லது தென்னாசிய நாடுகளின் பெண்நிலைவாதிகள், மேலைநாட்டுப் பெண்நிலைவாதிகளின் சிஷ்யைகள் என்றோ கூறிவிட முடியாது. பெண் ஒடுக்குமுறை வடிவங்களில் சில உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கும்போது போராட்டங்களும் உலகளாவிய ரீதியாகத்தான் இருக்கமுடியும். சில மேற்கத்திய பெண்நிலைவாதிகள் குறிப்பிடும் பாலியல் சுதந்திரம், பெண்ணின் ஒருபாற்சேர்க்கை போன்ற விஷயங்களை நாம் இங்கே பிரதான விஷயங்களாக எடுத்துக்கொண்டதில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறோம்.
இன்னும் சொல்லப்போனால், தென்னாசிய நாடுகளின் பெண் நலைவாதிகள் மேலை நாடுகளின் பெண்நிலைவாதிகளின் கருத்தமைவுகளோடு அதிகம் ஒத்துப்போவதுமில்லை. இப்பிரதேசப் பெண். நிலைவாதிகளாகிய நாம், கோட்பாட்டு ரீதியான விவாதங்களில் ஈடு. பட்டு, மேலைநாட்டுப் பெண்நிலைவாதிகளால் எடுக்கப்பட்ட தனி. வகைப்பட்ட கருத்தியல் நிலைகளோடு இணைப்பை உருவாக்கி எம்மிடையே பிளவை உண்டுபண்ணிக்கொள்வதோ கிடையாது. எம்மில்
i-1 A

பலர் மேற்கத்திய பெண்நிலைவாதிகளின் கருத்தமைவுகள் பற்றி அதிகம் தெரியாதவர்களாகவும் இருக்கின்றோம். உண்மைகள் இவ்வாறாயிருக்க, தென்னாசிய நாடுகளின் பெண்நில்ைவாதிகள் மேற். கத்திய நாகரிகத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் விதண்டாவாதிகள் என்றும் எவ்வாறு கூற முடியும்? கேள்வி: இன்றைய காலகட்டத்தில் இத்தகைய போராட்டம் அவசிய
மானதுதானா? ஏனெனில் பெண்கள் இப்போது கல்வி,வேலை வாய்ப்பு வாக்குரிமை போன்ற பல ஜனநாயக உரிமைகளைப் பெற்றிருக்கின்றார்கள். பெண் பிரதமர்களையும், ஆளுமையுள்ள பெண் அரசியல் தலைவர்களையும் நாம் பெற்றிருக்கவில்லையா? மேலும் பெண் ராஜதந்திரிகள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எனப்பலதொழிற்துறைகளில் பெண்களை நாம் பார்க்கிறோம். அப்படியானால் பிரச்சனைதான் என்ன? பெண்நிலைவாதம் எமக்குத் தேவைதானா? பதில் : பெண்களின் உழைக்கும் சக்தி மக்களிடையே ஒரு செயலூக்கம் வாய்ந்த பங்கை வகிப்பதுடன் சிலர் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாயிருப்பினும், தென்னாசியநாடுகளில் பெண்கள் (ஊதியம் பெறுபவர்களாயிருந்தால்) மிகக்குறைவான ஊதியம் பெறும் தொழில் களையே செய்கின்றனர். "உயர்" தொழில் செய்வோரிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ளோரே, தீர்மானங்களை எடுக்கக்கூடிய செயல்நிறைவேற்றுத்துறை சார்ந்த அல்லது முகாமைத்துவ நிலைகளில் உள்ளனர். உழைக்கும் பெண்களில் பலர் "குடும்பத்துக்கு உதவும்" பொருட்டே தற்காலிக பணியிடங்களிலும் மிகக்குறைந்த ஊதியத்துக்காக வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர்.
பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில் கடைசியிடத்திலும், வெளியே தள்ளப்படுவதில் முதலிடத்திலும் இருக்கிறார்கள். தொழிற். சாலைகள் இயந்திரமாக்கப்படும்போது, அல்லது நவீன மயமாக்கப்படும்போது அது உடனடியாக பெண்களையே பாதிக்கின்றது. இயந்: திரங்கள் உழைக்கும் பெண்களின் இடத்தைப் பிடித்துக் கொள்ள, பெண்கள் வெளியே தள்ளப்படுகின்றனர். பெண் தொழிலாளர்களை வெளியே தள்ளிய இந்தியாவின் பஞ்சாலைத் தொழிலை இதற்கு ஒரு பொருத்தமான உதாரணமாக குறிப்பிடலாம். சில இடங்களில் பெண்களின் அந்தஸ்து நிலை உயரவே செய்துள்ளது. இலங்கையில், பெண்களின் சராசரி ஆயுட்காலம், எழுத வாசிக்கத் தெரிந்தோரின்
-17

Page 11
புள்ளிவிபரங்கள் போன்றவை ஊக்கமுட்டுபவையாக உள்ளன. ஆனால் பரந்துநோக்கும்போது, பெண்கள் சகலநிலைகளிலும் ஆண்களுக்குப் பின்னாலேயே நிற்கின்றனர்.நமதுநாடுகளில் மூன்றில் பெண்கள் பிரதமர் பதவிகளை அலங்கரித்திருந்த போதிலும் அரசியலில் பெண்களின் பங்கெடுப்பின் விபரங்கள் எமக்கு வியப்பைக் கொடுக்கின்றன. தென்னாசிய நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரையில் ஒரு சில பெண்களே பாராளுமன்றத்தில் அங்கத்தினராக இருந்திருக்கின்றனர். எனவேமுக்கியமான பொதுத்துறைகளில் ஒரு சில பெண்கள் இடம்பெற்றிருப்பதை மட்டுமே வைத்து ஒட்டு மொத்தமாக பெண்கள் அனைவரின் அந்தஸ்துகளுமேநம்நாடுகளில்திருப்திகரமாக உள்ளன என்று கூறிவிட முடியாது என்பதையே இது நிரூபிக்கின்றது. கேள்வி நிச்சயமாக, சமீபகாலக் கொள்கைகள் பெண்களின் விடுதலைக்கு வித்திட்டிருக்கின்றன? அக்கொள்கைகள் பெண்களை வீடுகளிலிருந்து வெளிக் கொண்டு வந்து, அவர்களை உழைக்கும் சக்தியாக மாற்றி, அவர்களுக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றனவே? பதில் : இம்மாற்றங்களால் ஒரு சில பெண்கள் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்றாலும், அந்தப் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. தேவைகளையும், விருப்பங்களையும் கருதி, அது அதிகமாக்கப்பட வேண்டும். இன்னும் அதிகமான பெண்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியே வந்து உழைக்கும் சக்தியாக மாறவேண்டும் என்றே நாம் கூறி வருகிறோம் ஆனால் அதே சமயம், பெண்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குதல், சுகாதாரமற்ற வேலைத்தலங்களின் சூழ்நிலைகள், மேலதிக வேலை, தன்னிச்சையாகவேலைக் குச் சேர்ந்தலும் விலக்கலும், தொழிற்சங்க சுதந்திரத்தை மறுத்தல், பாலினரீதியிலான சுரண்டல் என்று பலவழிகளாலும் பெண் தொழிலாளர். களைச் சுரண்ட அனுமதிக்கும் கொள்கைகளை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். பொருளாதாரச் சுதந்திரம் பெண்விடுதலைக்கு மிக அவ சியமான அடிப்படைகளில் ஒன்று ஆயினும், பொருளாதாரச் சுதந்திரத்தால் மட்டும் பெண் விடுதலையைக் கொண்டு வந்துவிட முடியாது, பொருளாதாரச் சுதந்திரம்பெற்ற பெண்கள் கூட,தமமோடு சம்பந்தப்பட்ட ஆண்களுக்கும், குடும்பத்தினருக்கும் கீழ்ப்படிவுள்ளவர்களாக இருந்து, வீடுகளில் பாரபட்சங்களை எதிர்கொள்ளும் நிலைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே, பொருளாதாரச் சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது பெண்கள் போராட்டங்களின் ஒரு பகுதி மட்டுமே.
- 18

கேள்வி: ஆனால் நிச்சயமாக, நாம் முன்னேற விரும்பினால், இத்தகைய
சுரண்டல் வடிவங்களைச் சிறிது காலத்துக்குச் சகித்துத்தான்
ஆக வேண்டும். நாம் முன்னேறியபின்பு இத்தகை எதிர்
மறையான அம்சங்கள் மறைந்துவிடும். பதில் : இந்த எதிர்மறையான அம்சங்கள் நம் முன்னேற்றத்துடன் மறைந்து விடும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் எமக்குக் கிடையாது. உண்மையில் அவை கட்டாயம் மறைந்தேயாக வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையே பல இடங்களில் எமக்குக் கடந்த கால அனுபவங்கள் தெரிவித்துள்ளன. நம் நாடுகளில் நாம் பின்பற்றும் வழிகள் முதலாளித்துவ உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டவை. வரலாற்று ரீதியில், முதலாளித்துவ உற்பத்திமுறை வளர்ச்சியான்து பெண்கள் பாலின ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட, விசேடமான பணிகளைச் செய்வதைத் தொடர்ந்துசெய்யநிர்ப்பந்தித்ததுடன், பெண்கள் மீதான சுரண்டலையும் உறுதிப்படுத்தியது. உதாரணமாக, ஐரோப்பாவில் "வீடு" ஒரு உற்பத்தி மையமாக இருந்துவந்தது. உணவு, உடைகள், சோப், மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டன. இவ்வுற்பத்தியிலும், விவசாயத்திலும், கால்நட்ைவளர்ப்பதிலும் பெண்களே ஒரு முக்கியமான பங்கை வகித்தனர். எனினும், தொழிற்புரட்சியுடன், பெண்களின் நிலையிலும், மாற்றமேற்பட்டது. ஏழைப்பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் (குறைந்த ஊதியத்துக்காக) வேலை செய்யவும், அடுத்த தலைமுறைத் தொழிலாளர்களை உற்பத்தி (இனமறு உற்பத்தி) செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். பூர்ஷஸ்வாப் பெண்கள் குடும்பப் பெண்களாக வீடுகளுக்குள்ளே வைக்கப்பட்டிருந்து தமது சொத்துக்கு வாரிசுகளை மறு உற்பத்தி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாறாக, இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்ஷலவாப் பெண்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தண்டிக்கவும் பட்டனர். இதனோடு ஏழைப்பெண்கள் சுரண்டப்படுவதும் செல்வந்தப் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவதுமான கருத்தமைவு நீடிக்கப்பட்டிருந்தது. எமது நாடுகளின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து இந்தப் போக்குகள் ஏற்கனவே இருந்து கொண்டிருந்தன. இவை தொடரவும் செய்யும்.
19

Page 12
செல்லம்மாள்
புதுமைப்பித்தன்
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரம நாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று அர்ைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாகவசமிழந்துகிடந்த கைகளை எடுத்து நெஞ்சின்மேல்மடித்துவைத்தார். இடதுகால் சற்று ஒருபுறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்த வைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்து விட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.
ତୁଏ5 பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்தும் பெரும்ப்ளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக்கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத்துன்பச்சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி,
பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலைகுலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்துவிடக்
பேரா.வி.அரசு தொகுத்த “புதுமைப்பித்தன் கதைகள் கலைமகள் மற்றும் பிற கதைகள்” எனும் தொகுப்பிலிருந்து செல்லம்மாள் கதை எடுக்கப்பட்டுள்ளது.
-20

கூடாது; அல்லது, அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர். த்து, போதி மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல. அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அனுபவித்தவரே.
பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறுமேடுகள் யாவும் படிப்படியாக

Page 13
இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளோயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.
குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப்படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா,
பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை, சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும் வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக்கொள்ளக்கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம்பிள்ளைக்குச் செல்லம்மாள்கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று குடும்பக்கடன் விவகாரம் வியாச்சியளல்லையை எட்டாத படி மூத்தவர் இருந்து சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.
சென்னை அவருக்குநிம்மதியற்றவாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால், அவளுக்கு உடம்புநைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம். * 。 ,  ̇ , ́.ኳ பிரமநாயகம்பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலைபார்க்கிறார் ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்க வேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் பட்ருகிறது.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறிமரத்துப்போன வடுவாகிவிட்டன. சம்பளத் தேதி என்று ஒன்று இல்லை. தேவையானபோதுவாங்கிக் கொள்ளவேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்தது.
-22

அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக் காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக். கும்படியாக அவர் கொடுத்துவிடுவதைப் பெற்றுக் கொண்டுவிடுதிரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாசவியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்புதன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும்பிரமநாயகம்பிள்ளைநகரின் எல்லை கடந்து, சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள,மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக்கொண்டு கைப்பொட்டணத்துடன் கால்நடையாகவ்ேபுறப்பட்டுத்தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார். பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக்களைப்பாறும் தருணத்தில் வீட்டுநடைய்ைமிதிப்பார். செல்லம்மாள் அன்றையப் பொழுதைக் கழித்தநிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட் டானாதிகளை முடித்துக் கொண்டி பிற்பாடு அடுப்பு மூட்டினால்தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும்:முடிக் கிடக்கு மாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும் சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட்பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.
இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங் களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக் குப் போய்விடுவோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும்
-23

Page 14
உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படி யெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக்கொள்ளும் மார்க்கங்களைப்பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாக மிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டுபண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சுதற்சமயப்பிரச்சனைகளை மறப்பதற்குச்செளகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.
2
அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று முட்டையுடன் நடைப்படியைத் தாண்டும் பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும் போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழக்கடைக்குச் சென்றாள்
"இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே" என்று நடைப்படியைத் தாண்டிய திரு.பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப்புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்துநிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலைவிட்டு உள் தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்துவிட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.
அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப்பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.
செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்தியநாள் இரவு நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக் கொண்டிருக்கும்போது, "வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போதுநெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும் என்று சொல்லிவிட்டாள்.
-24

பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப்பால் கொண்டு வரும்படி கேட்டிருக்கலாம். பிரம்மவித்தை கற்றுவரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப்பட்டிரா.
"அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொற்கலைப்பற்றிப்நினைக்கணும்? என்றார்.
"அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். அவுக' என்றது கடை முதலாளிப்பிள்ளையைத்தான்.
"தீபாவளிக்கு ஓங்க பாடு கவலையில்லே, கடையிலேயிருந்து வரும்; இந்த வருசம் எனக்கு என்னவாம்," என்று கேட்டாள். M
"எதுவும் உனக்குப் பிடித்தமானதாய் பார்த்து எடுத்துப் போட்டாப் போச்சு மொதல்லெ நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.
வழி நெடுக, அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதி விட்டு எடுத்துக் கொண்டு வருவது?பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக்கொண்டேபோனால் அநுமதிப்பார். களா? என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப்பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.
"என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னுநெனச்சுக்கிட்டே?வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டுவா, கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம்,அரைக்கஜம், பட்டு,பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாய்லின், டுவில்,என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை. . . .
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்தச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்து விட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
25.

Page 15
3
நடைப்படியருகில் பிரநாயகம் பிள்ளை வந்துமுட்டையை இறக்கி வைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைம்ேல் மேலோங்கி எழுந்து மங்கியது.
பிரமநாயகம்பிள்ளை கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை."உறங்கி இருப்பாள். நாளியாகலே. என நினைத்துக் கொண்ட்ே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்துஅருகிலிருந்த சிமினிவிளக்கை ஏற்றினார். அந்தமினுக்கட்டான் பூச்சி இருளைத்திரட்டித்திரட்டிக்காட்டியது. அதன்மங்கலானவெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.
முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம்பிள்ளை குனிந்துமுகத்துக்கு நேரே விளக்கைப்பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு: சுவாசம் மெல்லிய இழைபோல் ஒழ்க்கொண்டிருந்தது.
நிமிர்ந்து பின்புறமாகப்புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற்கட்டிலில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.
சாவகாசமாக, கிணற்றில்ஜலம் மொண்டுகால் கைகளைச்சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றின்ார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு உள்கட்டுக்குத் திரும்பிவந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படி தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிர. எண்ணெயை ஊற்றிச்சற்றுப்பதற்றத்துட்ன்மூக்கின்
 
 

மேலும் கபோலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டுவந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில்,கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.
முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.
இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிதுதலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிரவைக்கும் ஒரு பெரியதும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறுகுழந்தை மாதிரி அழுது கொண்டே, "தண்ணி." என்று கேட்டாள் செல்லம்மாள்.
"இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.
பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும்பிரயே ாகித்தார்.
செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டுவிழித்தாள்.எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப்புரியாததுபோல அவள் பார்வை கேள்வி. களைச் சொரிந்தது.
"நீங்க எப்ப வந்திய?. அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக்காத்துக்கிட்டு இருப்பா? என்றாள்.
பிரமநாயகம்பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப்பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லவேண்டும். கேட்பதற்குரிய பதில் சொன்னால் போதும்.
திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, "அம்மா, அம்மா ஊருக்குப்போயிடுவோம். அந்தத் துரோகி வந்தாபுடிச்சுக் கட்டிப்போட்டுவிடுவான்.துரோகி! துரோகிதுரோகி." என்றுஉச்சஸ்தாயியில்கத்திக்கொண்டு போனாள். குரல்கிரீச்சிட்டது. பிரமநாய்கம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.
-27

Page 16
செல்லம்மாள்மறுபடியும்பிதற்றஆரம்பித்தாள்.எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. "அம்மா, அம்மா. நீ எப்போ வந்தே?. தந்தி கொடுத்தாங்களா..?" என்றாள்.
"ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்த, உடம்புக்கு எப்படி இருக்கிறது?" என்று பிரநாயகம் பிள்ளை தாயாக நடித்தார்.செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம். மாதிரிப்பிதற்றல் வரும்பொதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும்.
"அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா. இவுங்க.இப்படித்தாம்மா. என்னைப் போட்டுட்டுப்போட்டுட்டுக்கடைக்குப் போயிடுதாக. எப்ப ஊருக்குப் போகலாம்?. யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?. இனிமே நான் பொடவெயே கேக்கல. என்னைக் கட்டிப்போடாதிய. மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெ விட்டுடிங்கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?. கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?. நான் எங்கம்மையைப் பார்த்துப் போட்டு வந்திடுதேன். அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."
மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது. வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம்பிள்ளை. இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது?கொஞ்சதூரமா?"
மறுபடியும் சுக்குப்பிரயோகம் செய்தார்.
நாடி மெதுவாகஒடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லோசா ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின்மனசில் லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவ கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒருமலைப்பு
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒருபுறமாகச் சரிந்து படுத்தாள்.
-28

என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப்புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க்களை மங்கி அகன்றது.
பத்துநிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள்விழித்துக்கொண்டாள். மேலெல்லாம் ஏன்நனைந்திருக்கிறது என்றுதடவிப்பார்த்துக்கொண்டு சிதறிக் கிடந்த ஞாகபத்தைக் கோவை செய்ய முயன்றாள்.
"தலையை வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே
"மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது" என்று சொல்லி விட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.
"மனசை அலட்டிக்கொள்ளாமல்நிம்மதியாகத்துங்கு, காலையில் சரியாகப் போய்விடும்" என்றார்.
"உம்" என்றுகொண்டு கண்களை முடியவள், "நாக்கை வறட்டுது, தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.
"ஏந்திரியாதே; விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.
"பச்சைத்தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்குநல்லது" என்று சொல்லிப்பார்த்தார்:தர்க்கம்பண்ணிஅவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப்படுக்க வைத்தார்.
கண்ணை முடிச் சில விநாடிகள் கழித்ததும், உங்களைத்தானே, எப்ப வந்திய? சாப்பிட்டியளா?"என்றாள்.
"நான் சாப்பிட்டாச்சு நீபடுத்துத் துங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம்பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கி. விட்டாள்.
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாகவிரித்துக்கொண்டு, "முருகா" என்றுகொட்டாவியுடன் உட்காரும் பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்.
-29

Page 17
களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக்கொண்டிருந்தது.
பொழுதும்புலரஆரம்பித்தது கறிகாய்விற்பனைக்காகத்தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செய்லிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிருந்து விரட்டியத. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவதுசுடச்சுடக் கொடுத்தால்நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.
அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டிருக்கையில், செல்லம்மாள்விழித்துஎழுந்திருந்துபடுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக்கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப்பார்த்தாள்.
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே" என்றார் பிரமநாயகம்பிள்ளை.
"மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்க, பசிக்கிது. சுடச்சுட ஏதாவது இருந்தாத்தேவலை" என்று செல்லம்மாள், தலைய்ைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெரித்துக்கொண்டு சொன்னாள்.
"அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?" என்றார்.
"வெந்நியெ எடுத்துப்பொறவாசல்லே வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள் செல்லம்மாள்
நல்ல கதையாத்தான் இருக்கு,நேத்துக்கெடந்த கெடப்பெமறந்து போனியா?நடமாடப்படாது."
"ஓங்களுககுததான என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெய் போகுது" என்று சொல்லிக்கொண்டே சுருட்டி வாரிக்கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.
-30

முகமூசென்று இரைத்துக்கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கெர்ண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.
"பையனன்னைப்பொறவாசருக்குக் கொண்டுவிட்டிருங்கபல்லைத் தேக்கட்டும்.நிக்க முடியல்லே" என்றாள்.
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப்புழைக்கட்ையில் கொண்டு போய் அவளை உட்கார வைத்தார்.
பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாட்ா" என்ற அங்கலாய்ப்புக்களுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்
பிளளையவர்கள் காப்பி எடுத்துவந்துஆற்றிக்கொண்டு. "பதமாக இருக்கு, குடி, ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷயங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்பளிரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.
"அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு, தாரேன்" என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்து வந்து தந்தார்.
காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக் கொண்டு. சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன சாப்பிட்டிய?" என்றாள்.
"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்" என்றார்
"வைத்தியனும் வேண்டாம்; ஒணனும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை, புளிச்ச தோச்ைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய? என்றாள்
புளிப்பாவது கத்திரிக்காயாவது காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டுக்கிட்டு வாரேன்; நேத்துக்
-31

Page 18
கெடந்த கெடப்பு மறந்து போச்சு போலே! என்று எழுந்தார்.
"அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய?நீங்க சாப்பிடுங்களேன் என்றாள் செல்லம்மாள்,
வைத்தியனைத் தேடிச் சென்றபிரமநாயகம்பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப்பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோதுபடுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.
அடுப்பங்கரையில் சுர் சுர் என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்கார வைத்துவிட்டு "என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.
வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள்கை நடுக்கத்தால் தோசைமாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப்பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப்பார்த்துச் சிரித்தாள்.
"போதும் போதும். சிரிக்காத்ே; வைத்தியர் வந்திருக்கிறார் ஏந்திரி" என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார். "இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்" "நீ ஏந்திரி" என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்
"நீங்க போங்க. நானே வர்ருதேன்" என்று குலைந்த உடையைசு சீர்திருத்திக் கொண்டு, தள்ளாடிப் பின்தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.
வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.
"அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப்போச்சு, தெகன சக்தியே இல்லியே இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்சம் நாளைக்கி நிறுத்தி வையிங்க காலையிலும் ராத்திரியிலும் பால்.
-32

மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது, ஐயா. மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலே தடவுங்க. இந்தத்தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க், நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன். என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.
"பார்த்துப்பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிய் புடிச்சாந்திப் பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா? ஒட ம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம் வாறதல்லையா! வந்தா, வந்தவளியாய் போகுது" என்றாள் செல்லம்மாள்.
இந்தச் சமயத்தில் வெளியில், "ஐயா, ஐயா!" என்று ஒரு குரல் கேட்டது.
"என்ன, முனிசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்று கேட்டுவிட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லை; நேத்துத்தப்பினதுமறுபிழைப்பு:நாளைக்கு முடிஞ்சாவருகிறேன் என்று சொல்லு முனிசாமி, நீஎனக்கு ஒரு காரியம் செய்வாயா?அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத்தொழுவம் இருக்குது பாது, அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா" என்று அனுப்பினார்.
"என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க" என்றாள் செல்லம்மாள்.
"அடெடே! மறந்தே போயிட்டேன்.நேத்துப் பொட வைஎடுத்தாந்து வச்சேன், உனக்கு எது புடிச்சிருக்கு பாரு வேண்டாத தெக் கொடுத்து அனுப்பிடலாம்" என்று முட்டையை எடுத்துவந்துவைத்தார்பிரமநாயகம் பிள்ளை,
"விடியன்னையே முட்டையைப் பார்த்தேன்; கேக்கணும்னு நெனெச்சேன்; மறந்தே போச்சு" என்று கூறிக்கொண்டே முட்டையிலிருந்துமூன்றுபுடைவைகளையும் புரட்டிப்புரட்டிப்பார்த்தாள். "எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன வெலையாம்?" என்றாள்.
"அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ" என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோரத்தில் வைத்தார்.
-33

Page 19
"கண்ட மானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத்தள்ளிக்கிட்டுநிக்காதியநான் இப்பவே சொல்லிப்பிட்டேன்" என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்
வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ 15வாங்கிவரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.
4.
அன்று பாயில் தலை சாய்கக ஆரத்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று கூrணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருக்ஷை செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளுகுளு என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்துவிட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்து விட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலைதூக்க ஆரம்பித்தன.
அருகில் இருந்துகொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக்கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய்விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.
"எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது. வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை" என்றாள் செல்லம்மாள்.
'உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி,ஆடாமெ அசங்காமெ படுத்துக்கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்" என்றார் பிரமநாயகம்பிள்ளை. அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப படடது. "கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?" என்றார்.
-34

"எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துகிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தர்ரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சற்றுக் கண்ணை மூடினாள்.
"இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத்தாரேன்" என்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.
அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போதுபால்காரனும் வந்தான்.
கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்து விட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தவிட்டு, "நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்" என்று வெளியே புறப்பட்டாா.
"சுருக்க வந்து சேருங்க, எனக்கு ஒருபடியா வருது" என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.
அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஒர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வருகைக்காக் காத்துக் காத்துநின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோற்ற, நிலைமையும் விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதி வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.
அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்துவந்து அவள் மேல் சிதறிக் குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினார்.
வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில்
குழப்பிநாக்கில் தடவினார். கால் கைகளிலும் தைலத்தைத் 25- வினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக் கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாக விட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார்.
-35

Page 20
அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. 'ஸார் உள்ளே யார் இருக்கிறது?" என்று குரல் கொடுத்துக்கொண்டே கைப்பெட்டியம் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.
"நல்ல சமயத்திலே வந்தீர்களையா!" என்று சொல்லிக் கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம்பிள்ளை.
"இப்போஎன்ன?" என்றபடியே அருகில்வந்து உட்கார்ந்துகையைப் பிடித்துப்பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல்கிட்டி விட்டிருந்தது. "ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க, ஊசி குத்தணும்" என்றார்.
பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும்.நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காக காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஷ்பிரிட்' விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழியவேர்வை வழியநின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவள்ையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள். டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச்சவுக்காரக் கட்டிரயக் கொடுக்க, மெளனமாகக் கை கழுவிவிட்டு , "தூங்குறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம்: எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரி கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா, ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக்கொண்டு எழுந்து நடந்தார். - - - . . .
முன்தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?" என்று விநயமாகக் கேட்க,"இப்பொழுது ஒன்றும் சொல்வதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்தரிக்ஷாக்காரனுக்கு ஒருநாலனா கொடுங்கள்"என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறிக்கொண்ட்ார். மடியிலிருந்த
-3 6

சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்துநின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.
செல்லம்மாள் தூங்கிக் கொண்டிருந்தாள். பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.
அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்து மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாததுபோல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின்மேல் உட்கார்ந்தது.
"தூது" என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
சற்று நேரம் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "உங்களுக்கு கொஞ்சம்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே" என்று கடிந்து கொண்டாள்.
"நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா? என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்தார்.
"நான் செத்துப் போவேன் போலிருக்கு, வீணாத் தடபுடல் பண்ணாதிய" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.
"நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன பிரதமாதம்?" என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?
"ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க" என்றாள் செல்லம்மாள்
"நீ கொஞ்சம் மன்செ அலட்டிக்காமே படுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக் கொண்டு நெற்றியைத் தடவிக்கொடுத்தார்.
"வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி" என்றாள். "வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே வாந்தியெடுத்தது?" என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு
-37

Page 21
முகத்தையேபார்த்துக்கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையி. லிருந்து முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்றுநீலம் பாரித்து விட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.
"நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது" என்றாள் மறுபடியும்.
"எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே" என்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தார்.
ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்" என்றாள் செல்லம்மாள்.
"இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.
"செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்துகொண்டிருந்தது.
"செல்லம்மா, பால் தெர்ைஞ்சு போச்சு, பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார்.
"ஆகட்டும்" என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.
சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள்.
"ஏன், வெளக்கை."விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.
அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.
பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.
உடல்தான் இருந்தது.
வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்து தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப்பிடுங்குவனபோல் இருந்தன.
-38

சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல் ஆவது ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்தும் பார்த்தார்.
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.
அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது.
உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.
உடலை எடுத்து வந்தார். "செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கணக்கிறது!" என்று எண்ணமிட்டார்
தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.
கீழே உட்காரவைத்து, நின்று 25 Dgil முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.
மீண்டும் எடுத்துக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடைவை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலை மாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். எப்பொழுதேத ஒரு சரஷ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறைநாழிவைத்தார்.
செல்லம்மாள் உடம்புக்குச் செய்ய வேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்துநின்றார்.
கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.
ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.
வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த
-39

Page 22
கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக்கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.
அருகில், "ஐயா!" என்றான் முனிசாமி. "முதலாளி குடுத்தாங்க" என்று நோட்டுகளை நீட்டினான்; "அம்மாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.
"அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க, ஒரு தந்தி எழுதித் தாரேன். அரெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டுவா" என்றார்.
நிதானமாகவே பேசினார்; குரலில்உளைச்சல் தொனிக்கவில்லை. பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான். பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.
அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.
பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.
அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.
-40

யுக சந்தி - -
ஜெயகாந்தன்
நீ அதிர்ஷ்டக்காரன். எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?"என்றதும் வேலாயுதம் குடுமியைச்சொறிந்தவாறுசிரித்தான்.
"அட அசடே, என்ன சிரிக்கறே? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா, உன் அப்பன் காலமும் உன் காலமும்தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து. இனிமே இதொண்ணும் நடக்காது. புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப்போறா.பொம்மணாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே. ம். எல்லாம் சரிதான், காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும். என்ன நான் சொல்றது?" என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.
"இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சுண்டு போ" என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிப்பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.
"பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னுவித்தான். கொழந்தை களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்" என்று அவள் சொன்னதும், வேலாயுதம் கும்பிடுபோட்டுவிட்டுத்தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன்வழியேநடந்தான்.
சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கெளரியம்மாள், தனது பதது வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக்கோலம்பூண்டபின் இத்தனைக் காலமாய் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.
ஜெயகாந்தன் எழுதிய “யுகசந்தி” எனும் கதை “இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்” எனும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
-41.

Page 23
எனினும் தன்
கோலம்பூண்டுபத்தேமாதங்களில், தரித்திருந்த
۔۔۔۔۔۔۔ یہ ہے . . . یہ ۔
மகன் வயிற்றில் பிறந்த மூத்த மகள்
.
லப்பது போல் கலைத்
r -
.. EE E 63 நம் கவ
.
_。
Fill II:
آب انباشد. சிப்புக்குரிய
ா கி
. وت
. கீதா மணக்
. س - كم சுமங்கலி வேடத் தை,
விட்டுக் குடும்பத்தை
± . கக்
த்துக் :"ಲ್ಲ:
Y—"
mர்வை
35535" போன
- . . . . . . . . .
 
 
 

அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து விழுந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசிச் சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கெளரிப் பாட்டி, தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணில் தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின் மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி - கணவன் இறந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய் அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.
கெளரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதியெனத் தன்னையே அவளில் கண்டாள்.
பாட்டியின் மகன்கனேசய்யர் தந்தையின் மரணத்தை அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர். அவரது மனைவி பார்வதி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை' தான்.
விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றி பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்ட போது, அவரது முடிவவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கெளரிப்பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.
பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்.
பயிற்சி முடிந்து பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்கு போன வருஷம்-புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய - நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்த போதும் கணேசய்யர் குழம்பினார்.
"அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு." என்று பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட, தானே வலிய முன்வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக் கூட எட்டாத கீதா வைதன்ய இருட்கிடங்கில் அடைப்பட்டுப் போவானோ என்ற அச்சம்தான்
இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது
-43

Page 24
இருவரும் தங்கிச்செல்வதுதவிர, சனி-ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள்பாட்டி, அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும் அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும், பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப்படாததுமாகும்.
இப்போதுவழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம்நாளைக் காலை அவள் வீட்டில் வந்துநிற்பான்என்று பாட்டிக்குத் தெரியும், வரவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும், அது வாடிக்கை,
ஒரு மைலுக்கக் குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் நடந்து வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப்பத்திரிகையைப் போட்டுக்கொண்டு முன்கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத் தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல்பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழிவைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில் வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா,
பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின்நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்தஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு "பாட்டி" என்ற முனகலுடன் விழிகளை அகலத் திறந்துமுகம் விகஸித்தாள்.
"கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன, "அம்மா அம்மா. பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா!.." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.
கதவைத்திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.
கணேசய்யர்முகத்தின்மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துகண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டுமிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல்விழித்தார் அவர். அதற்குள் "ஏன்டிசனியனே இப்படி அலறிண்டு
-44

ஓடிவாரே?" என்று குழந்தையை வைதுவிட்டு"வாங்கோ. வெயில்லே நடந்தா வந்தேள், ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ?" என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.
"இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்." என்று சலித்துக் கொண்டேபடியேறி உள்ளே வந்த தாயைக் கண்டதும் "நல்லவெயில்லே வந்திருக்கியே அம்மா, பார்வதி. அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரிலிருந்து எழுந்தார் கணேசய்யர்."
"பாவம், அசந்து தூங்கிண்டிருந்தே. இன்னும் செத்தே படுத்திறேன்." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸி சேரின் அருகே கிடந்த ஸடூல்மீது பையை வைத்துவிட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கைகால் முகம் அலம்பித் தலையிலும் ஒரு கை வாரித் தெளித்துக் கொண்டாள் பாட்டி. பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே. மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துகொண்டு திரும்பிவரும்வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாதபோதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவேகாத்துக்கொண்டிருந்தவள் போல்பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.
"பாட்டி வெயில்லே வந்திருக்கா. சித்தேநகந்துக்கோ. வந்ததும் மேலே ஏறிண்டு." விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர். عہ''' ، '&','',' '
"இருக்கட்டும்டா. கொழந்தை! நீ உக்காந்துக்கோடி" என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்தித் கொண்டாள் பாட்டி
"இப்ப என்ன பண்ணுவியாம்" என்று நாக்கைக் கடித்து வழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.
ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே'பக்கத்தில் ஸ்டூலின்
-45

Page 25
மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையைக் கொடியில் போடுவதற்காக பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலைகீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க்கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.
"ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு "இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி
இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் - எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்ற கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்சநல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலேருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும், மாட்டினிஷோதானே.போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர்.
"ஓ! தொடர் கதையா வந்துதே. அந்தக் கதைதானா அது?. பேரைப் பார்த்தேன்." என்று ஒரு பத்திரிகையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளைச் சனியன்னு திட்டறே?. நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னென்னே தெரியாது. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனைச்சிக்கோ." என்று மகனுக்குப்புத்தி சொல்லிவிட்ட, "கவர்லே என்ன சொல்லு - அவளைக் கேட்டப்போ, அப்பா சொல்லுவா ன்னு பூடகமாக குடுத்து அனுப்பிச்சாளே" என விளக்கினாள் பாட்டி,
கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு கவரை உடைத்து, அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களைப் படிக்க ஆரம்பித்ததும் - கணேசய்யரின் கைகள் நடுங்கின. முகமெல்லாம் குப் பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்துமுடித்ததும் தலைநிமிர்ந்து எதிர்ச்சுவரில் தொங்கிய்கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்.
தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது!
-46

நாற்காலியின் கைப்பிடியை இறுகப்பற்றிக் கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். தன் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக் கூட அவர் கவனிக்கவில்லை.
"என்ன விபரீதம்!" என்று துணுக்குற்ற பாட்டியம்மாள் தரையில் விழுந்த அந்தக் கடிதத்தை வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும். "என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு. இந்தக் கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்துத் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்த பின் தெளிந்த மனத்தோடுதான் எழுதுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்குவரத்தோ, முகலோபனமோகூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.
என்னோடு பணிபுரியும் ஹிந்தி பண்டிட் திரு.ராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறு மாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு போராடித்தான் இம்முவுக்கு வந்தேன். உணர்வுபூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து, பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப்படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்த முப்பது வயதில் - இந்த அளவு சோதனைகளையே தாங்காமல் - இன்னும் ஐந்தாண்டுகளுக்குப்பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
என் காரியம் வரைக்கும் சரியானதே! நான் தவறு செய்வதாகவோ இதற்காக வருந்த வேண்டுமென்றோ கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது. இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வெளிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப் பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன். . ."
இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்ல
-47.

Page 26
முடியாது. ஒருவேளைநீங்கள் என் முடிவை ஆதரித்தால். இன்னும் ஒரு வாரமிருக்கிறது. உங்களை உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை "கீதா செத்து விட்டாள்" என்று தலை முழுகி விடுங்கள்.
ஆமாம், ரொம்ப சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிரவேறுயார்தான் தங்கள் நலனைத் துறந்து தியாகம்' செய்து விட்டார்கள்? ஏன் செய்ய வேண்டும்?
உங்கள் மீது என்றும் மாறாத அன்பு கொண்டுள்ள கீதா." "என்னடா. இப்படி ஆயிடுத்தே? என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.
"அவ செத்துட்டா. தலையெ முழுகிட வேண்டியதுதான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.
பாட்டி திகைத்தாள்!
தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக் கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த அம்மாய் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இதுதான் முதல் தடவை.
"அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி,
"வெறே, எப்படியம்மா சொல்லச் சொல்றே?.நீபிற்த வம்சத்திலே, இந்தக் குடும்பத்திலே ஐயோ..!" என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்ய முடியாமல் பதறினார் கணேசய்யர்.
"நான் பிறந்த யுகமே வேறேட r" என்ற வார்த்தை பாட்டிக்குவாயில் வந்து நின்றது. அப்பொழுதுதான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வுளவு காலத்திற்குப் பின் புரிந்தது.
"என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்ததுவெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி; அது ஆசாரமான யுகம். நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில். அதேபோல் தன் குடும்பமும் நடக்க நடத்திவைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில் - அந்த
-48

யுகத்தை. அந்த ஆசார ஜீவிதத்தைக் கெளரவிப்பதன் பொருட்டே என் சொல்லை, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்!" என்று தன்னைப் பற்றியும் தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும் தனித்துப் போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மெளனமாய் வாயடைத்து உட்கார்ந்திருந்தாள் பாட்டி
அப்போது அங்கு வந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்த கடிதத்தை எடுத்துப் படித்த பார்வதி "அடி, பாவிப் பெண்ணே, என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி!" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
பாட்டிதன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்.
"ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறுயார்தான் தங்கள் நலனைத் துறந்து, தியாகம்' செய்துவிட்டார்கள்?-பாட்டிக்கு சுருக்கென்றது. உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
கீதா பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல் - அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப் பெற்ற தாயும் தந்தையும்?. கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்.
-அதற்கென்ன?அதுதான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.
வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து, சிதைந்து.மக்கி, шp60йл6xлтகிப்பூச்சி அரிப்பது போல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?
ஆனால்.
கீதாவைப் போல் அவளைவிடவும் இளவயதில் அரை நூற்றாண். டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந்தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்தநினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளையெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை. யெல்லாம் கொன்றிருந்த கெளரிப்பாட்டி, அவற்றையெல்லாம் கீதாவிடம் காணாமலர், கண்டுணராமலா இருந்திருப்பாள்,
-49

Page 27
அதனால்தான் கணசய்யரைப் போலவோ, ப்ார்வதி அம்மாளைப் போலவோ கீதா இப்படி நடந்துகொள்ளப்போவதை அறிந்து. அவளை வெறுத்து உதறவோ, துஷித்துச் சபிக்கவோ முடியாமல் ஐயோ! என்ன இப்படி ஆய்விட்டதே!. என்ன இப்படியாய்விட்டதே' என்று கையையும் மனசையும் நெரித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி,
பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸிசேரில் சாய்ந்துபடுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,
"பாட்டீ." என்று ரகசியமாக எச்சரித்தான்.
"எங்கே? உள்ளே இருக்காளா கூடத்தில் இருக்காளா?" என்று பின்வாங்கி நின்றாள் மீனா.
"சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு துரங்கறா." என்றான் அம்பி.
மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்க விட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப்பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்தபின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது, என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.
அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளரிப் பிஞ்சு வாங்கிண்டு வந்தாளே." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை,
"எப்ப வந்தேள் பாட்டி?" என்று கேட்டு விட்டு, "என்ன விஷயம் இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா.
பாட்டியின் கண்கள் குளமாயின.
மீனாவைப் பார்க்கும் போதுதான் அவளுக்கு இன்னொ விஷயமும் - கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாயம், ஆவேசம் இரண்டும் - புரிந்தது பாட்டிக்கு.
-50

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள். g அதை நீபடிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் Littl2.
பிறகு ஏனோ படிக்கட்டுமே" என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.
மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.
"அடி நீநாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள்வழியே எக்கிநின்று கடிதத்தைப் படித்த அம்பிகூட விளக்கெண்ணெய் குடிப்பதுபோல் முகத்தை மாற்றிக் கொண்டான்.
வீடே சூன்யப்பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக் கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக் கண்டவர்கள் போல ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தை பார்த்தனர்.
இரவு முழுதும் கெளரிப் பாட்டி துரங்கவில்லை. சாப்படவில்லை; கூடத்து ஈஸிசேரைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை.மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும் மற்றப் பேரப்பிள்ளைகளைப் பார்த்தும் கீதாவை நினைத்தும் பெருமூச்செறிந்து கொண்டிருந்தாள்
'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டான்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போதுமுந்தானையால் கண்களைக் கசக்கிக்கொண்டாயேடி, கீதா?இப்போதல்லவா தெரிகிறது.பாட்டியை நிரந்தரமாய் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தே கண்கலங்கி நின்னிருக்கேன்று. இப்பன்னாபுரியறது. கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி,
என்னடி, இப்படிப்பண்ணிட்டியே!என்று அடிக்கடி தன்னுள்குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி,
விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக்கண் விழித்த போது மாயூம் போல் விடிவு கண்டிருந்தது.
தெரு வாசற்படியின் கம்பிக் கதவோரமாகக் கைப்பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்,
கண்விழித்த பாட்டி. நடந்ததெல்லாம் கனவாகிவிடக் கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் இது உண்மை' என்பதுபோல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.
-51

Page 28
அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய் கிடந்து மருகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி 'அம்மா! வேலாயுதம் வந்திருக்கான். அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையைச் செர்ைச்சி தண்ணிலே போயி முழுகு." என்றார்.
"வாயை மூடுடா ." என்று குமுற எழுந்தாள் பாட்டி "காலங்கார்த்தாலே அச்சான்யம் பிடிச்சமாதிரி என்ன பேச்சு. இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் குமுறியழுதாள் பாட்டி, பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.
"என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?. என்ன தப்புப் பண்ணிட்டிா, சொல்லு" என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.
"என்னதப்பா?. என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சடுத்தா? என்று கத்தினார் கணேசய்யர்.
அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு அமைதியாக யோசித்தாள் பாட்டி தன் மகன் தன்னிடம் இப்படிப் பேசுவது இதுவே முதல் தடவை.
பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா. எனக்குப் பைத்தியந்தான். இப்பப்பிடிக்கலைடா. இது பழைய பைத்தியம்! தீர முடியாத கைத்தியம். ஆனால் என்னோட பைத்தியம் . என்னோட போகட்டும். அந்தப் பைத்தியம் அவளுக்குப் படீர்னு தெரிஞ்சிருக்குன்னா அதுக்கு யார் என்ன பண்றது?. அவதான் சொல்லிட்டாளே என்காரியம் என்வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காமே விதரணையா செஞ்சிருக்கேன்று."
"அதனாலே சரியாயிடுமா அவகாரியம்? என்று வெட்டிப்பேசினார் as(3600raftinui.
"அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான். அதுக்கென்ன சொல்றே"என்று உள்ளங்கையில் குத்திக் கொண்டாள் பாட்டி, r ༦
"சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துக் பேரைக் கெடுத்த சனி செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித்
-52

தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.
"நம்ப சாஸ்திரம். ஆசாரம்! அப்படின்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பணிணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?. அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தைடா. எனக்குப் பதினைஞ்சு வயசுடா! என் கொழந்தை என் மொகத்தெப்பார்த்துப் பேயைப் பார்த்தது போல் அலறித்தேடா. பெத்ததாய்கிட்டே பால் குடிக்க முடியாமா, குழந்தை கத்துவே. கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே. அப்படி என்ன, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளே! அந்தக் கோரத்தை நீ ஏன்டா பண்ணலே கீதாவுக்கு?. ஏன் பண்ணலே சொல்லு?" என்று கண்களில் கண்ணிர் வழியக் கேட்கும்போது கணேசய்யரும் கண்களைப் பிழிந்து விட்டுக் கொண்டார்! அவள் தொடர்ந்து பேசினாள்.
"ஏன்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவை கட்டிக்கச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாதிச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?. காலம் மாறிண்டு வரது மனுஷாளும் மாறனும்னுதான்! நான் பொறந்த குடும்பத்திலேன்னு சொல்றயே. எனக்கு நீ இருந்தே வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. கீதா பண்ணின காரியத்தை மனசாலே கூட நெனைக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாகவும் இருந்தது. இப்போ முடியலியேடா. எனக்கு உன் நிலைமையும் புரியறது. நீ பிள்ளையும் குட்டியுமா வாழறவன். அதுகளுக்கு நாளைக்கு நல்ல காரியங்கள் நடக்கணும். எனக்குப் புரியறது. அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா. உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாட்ா? அவளுக்கு التوقيت வேண்டாம்னட்டா, ஆனா டேய் கணேசா. என்னே மன்னிச்சுக்கோடா. எனக்கு அவவேணும்! அவதான்டா வேணும். என்க்கும் இனிமே என்ன வேண்டி இருக்கு என் சாஸ்திரம் என்னோடயே இருந்து இந்தக் கட்டையோடே எரியும். அதனாலே நீங்க நன்னா இருங்கோ - நான் போறேன். கிதாவோடயே போயிடறேன். அதுதான் நல்லது. அதுக்காக நீ உள்ளுறத் திருப்திப் படலாம் - யோசிச்சுப் பூாரு, இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குட் பேர்ட்டுடு நான் வாரேன்" என்று கூறியவாறு மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.
-53

Page 29
"அம்மா!ஆ." என்றுகைகளைக் கூப்பிக் கொண்டு சப்தமில்லாமல் தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.
அசடே. எதுக்கு அழறே?நானும் ரொம்ப யோசிச்சுத்தான் அப்படி முடிவுபண்ணினேன். என்ன பண்ணினாலும் அவநம்ம கொழந்தையடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீவீட்டைச் சமத்தாப்பார்த்துக்கோ." என்று எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள் பாட்டி,
"எனக்கு உடனே போயி கீதாவை பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி
நீபோடாப்பா.நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத் தந்து அனுப்பினாள்.
"இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை. அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ.மாறுகிறது! நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக் கொள்ளக்கூடாதா? என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒருமுறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடைபெற்றுக் கொண்டாள்.
அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய, ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.
வேகமாய் ஆவேசமுற்ற வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயனப்படுவதென்றால்?.
ஓ! அதற்கு ஒரு பக்குவம் தேவை!
-54

ஆண் பெண்-உயிரியலும் சமூகவியலும் அம்பையின் "புனர்” சிறுகதையை முன்வைத்து.
சமூகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற இருபகுதியினருக்குமிடையில் சமூக வகிபாகம் தொடர்பாக உள்ள பிரிவின்ையையும், நடத்தையையும் தீர்மானிப்பது உயிரியலா அல்லது சமூகமா? பெண். களின் உயிரியல் இயல்புகள் தான் அவர்களுக்கு சமூகத்தில் உள்ள இடம் என்ன என்பதைத் தீர்மானிக்கவில்லை. சமூகமும் சமூகத்தில் நிலவும் பண்பாடும்தான் பெண்களின் வகிபாகத்தைத் தீர்மானிக்கின்றன. சமூகத்தின் பண்பாட்டையும் ஒழுக்க நடத்தை முறையையும் குழந்தைகள் உள்வாங்கும் செயன்முறையை சமூகமயமாக்கம் (Socialisation) என்பர். சமூகமயமாக்கல் மூலம் பால்நிலை வகிபாகம் abil60LDá535i Li(Báling. The Social Construction of Gender Roles 6T60T ஆங்கிலத்தில் இதனைக் கூறுவர்.
எழுத்தாளர் அம்பையின் புனர்' என்ற கதையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம். இக்கதையில் லோகிதாஸ் என்ற ஆண்குழந்தையும், சபரி என்ற பெண் குழந்தையும் உருவாக்கப்படுதலை அம்பை கலை மெருகுடன் சித்தரிக்கிறார். குடும்ப நிலையில் () முதல்நிலைச் சமூக LDL JDITáä55(púb (ii) குடும்பத்துக்கு வெளியே விளையாட்டுத் தோழர்கள், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் என்ற நிலையில் நிகழும் இரண்டாம் நிலைச் சமூகமயமாக்கமும் நிகழ்வது கலாபூர்வமாக இங்கே விளக்கம் பெறுகிறது.இந்த உருவாக்கம் நான்கு முறைகளில் செயப்படுகிறது என்று சமூகவியல் கோட்பாடு வரையறை செய்துள்ளது. 1. கையாளுகை
ஆண், பெண் குழந்தைகளுக்கு உரிய நடத்தை, ஒழுங்குகள், கெட்டித்தனமான சூழ்ச்சித்திறனுடன் கையாளுதல் ஒருமுறை "லோகு இன்ஜினியராகப் போவானாம்" "சரித்திரம் வேணாம்பா, மாத்ஸ், பிஸிக்ஸ் எடுக்கிறேன். அப்புறமா ஏரோ நாடிக்ஸ் என்ஜினியரிங் பண்ண்ஸ்ாம் ரன்கிறாள் கல்லாரி மாணவியான சபரி.
ஹிஸ்டரி எடு; அப்புறமா அடுப்புத்தானே ஊதணும்? சமைக்க
-55

Page 30
கத்துக்க, வாய்க்கு ருசியா சமைக்காத பொண்னை யாரு கட்டுவாங்க?ஃபெமினா பாரு, ரெசிபிகத்தரிச்சு வை" என்கிறார் அப்பா. நெறிப்படுத்தல் வரையறுக்கப்பட்ட பாதையில் குழந்தைகளை நெறிப்படுத்தல், "ம். பெரியவளாயிட்ட, அந்த முரளி கூட என்ன விளையாட்டு, பட்டம் விட்டயா? ஆம்பிளை விளையாட்டு என்ன? ஒழுங்காப் புஸ்தகம் வெச்சிட்டுப் படிக்கிறது." "என்ன தடதடன்னு ஓட்டம்?"
வார்த்தைகள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளின் பால்நிலை அடையாளங்களை வார்த்தைகளால் அடிக்கடி அடையாளப்படுத்தி அவர்களுக்கு அடையாளம் காட்டுவர். அவரவர் பால்நிலை சார்ந்த வளர்ந்தோரை முன்னுதாரணப்படுத்தி அவர்களை போன்று நடக்கச் செய்வர். தொடர்பு ஊடகங்கள் வார்த்தைகள் மூலம் இதைக் கச்சிதமாகக் கருத்தேற்றம் செய்கின்றன. "நீ அடக்கமானவள். நீதிர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள். நீதேவியானவள். நீஉபயோகமானவள். நீசுகத்தைத் தருபவள். நீதேவைக்காக மட்டும் வேலை செய்பவள். நீபாதுகாக்கப் படவேண்டியவள். நீபெண்" பல்தேசியக்கம்பனிகளின் டி.வி விளம்பரங்களின் வார்த்தை உள்ளடக்கம் பால்நிலை வகிபாக உருவாக்கத்தை செய்கின்றன.
செயல்கள்
வெவ்வேறு வகைச் செயல்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் பயிற்றப்படுகிறார்கள். அதன் மூலம் குறிப்பிட்ட செயல்கள் அந்தந்" தப்பால் நிலைக்கே கைவந்த கலை என்று ஆக்கப்படுகிறது.
"பெண் கிளார்க் இருக்கட்டும் நல்லா வேலை செய்வாங்களோ இல்லியோ, ஆபிஸ் அழகாக இருக்கும்."
"ஆச்சர் வேலைதான் நல்லது பெண்களுக்கு கெளரவமான வேலை"
பெண்ணியக் கோட்பாடு "புனர்" கதையில் சிறப்பாக விளக்கம்
பெறுகிறது.
-56

!
LGOTIT
9.60)
இருவர் உருவாக்கப்பட்டனர்
லோகிதாஸ்
ଥfulf.
率率率
லோகு, நீ பெரியவனாயிட்ட பிறகு என்ன பண்ணுவே?
நெறைய லாலிபாப் சாப்பிடுவேன். அசடு, சமத்தா பேசணும். இதோ அங் கிட்டே சொல்லு, நாய்க்குட்டி வாங்குவேன்.
எபில்லி. இன்னிக்கு அவனுக்கு மூட் இல்ல. என்ன வேலை
பண்ணுவே?சொல்லுடா
இன்ஜினியராய் போவேன். க்ரெக்ட் சொல்லிட்டான் பாத்திங்களா? 'டக்குனு சொல்லுவான். . . =_ ہستی:
இன்னிக்கு என்னவோ முரண்டு.
، " . - .. . லோகு இங்க வா. இந்த ஷோலே"டயலாக் சொல்லிவியா LIII).
LT டேன்.

Page 31
சே, சமத்துப் பிள்ளைன்னா அப்பா - அம்மா சொல்றபடி கேக்கும் சொல்லு,
வெளையாடப்போறேன்.
பிறகு போகலாம் இப்ப சொல்லு பந்து தரமாட்டேன்.
அரே ஒ சம்பா.
குட் லோகிதாஸ் பள்ளியில் 'என்பெற்றோர் என்ற தலைப்பில் எழுதிய முதல் கட்டுரை:
என் அம்மா பெயர் காவேரி, என் அப்பா பெயர் சங்கரன். என் அம்மாவுக்கு அப்பா - அம்மா சொல்வதைக் கேட்கும் பையன் பிடிக்கும். என் அப்பா பேப்பர் படிப்பார். எங்கள் வீட்டில் டி.வி உண்டு. நான் பெரியவனான பிறகு இன்ஜினியர் ஆகமாட்டேன்.
கோவையாக எழுதவில்லை என்று ஒரு மார்க் தந்தாள் டீச்சர். டிராயிங் வகுப்பில் வட்டமான மனிதனைப் போட்டுக் கை கால் போட முடியவில்லை அவனால், சதுரமாகப் போட்டான்.
"இப்பிடியா போடறது? எல்லோரும் வட்டமா உடம்பு போடலே? இப்பிடியா இருப்பாங்க?"
"இருப்பாங்கு, சதுரமா கை, சதுரமா தலை, அவங்க பறப்பாங்க. பறந்து போய் மானத்துலே கிரிக்கெட் ஆடுவாங்க, பந்துகூட சதுரமா இருக்கும்."
ஆரோக்கியமில்லாத கற்பனை என்று எழுதி '0' போட்டு அனுப்பினாள் டிச்சர். அம்மா திட்டினாள். தினம் காலையில் எழுந்து சொல்லச் சொன்னாள்.
மனிதர்கள் நடப்பார்கள். பந்து வட்டமாக இருக்கும். லோகு, உன்பக்கத்துல உட்கார்ந்து இருகடகிறது இந்துப் பையன். தானே?
ந்ேத்து உனனோட்வந்த பையன் யாரு? ஜோஸப்
எங்க விளையாடினங்க.
விளையாடலை சர்ச்சுககுள்ள காமிச்சான்.அங்க ஒரு ஆண்ட்டி கையிலப்ாப்பாஇருந்தது.அதுதான்மதர் மெரி
இனிமே இங்கெல்லாம் போகக் கூடாது தெரியுமா?
சரிப்பா, S.
58

லோகு இன்னிக்கு நீஷேவ் பண்ணிக்கணும்னு தோணுது இல்லப்பா. காவேரி, வெந்நீர் கொண்டு வா. இந்தா பிரஷ்ஷ oம் சோப்பும். அவ்வளவு வளரலப்பா. இந்தா வெந்நீர், சீக்கிரமா ஆகட்டும். ‹ ጳ மாதமாடிக்ஸ் எடுத்தா அப்புறம் இன்ஜினியரிங்அப்ளைபண்ணலாம். ஆரம்ப ட்ரெயினிங்குக்குப் பிறகு ஃபோர் ஃபிகர்ஸாலரிதான்.
எகனாமிக்ஸ் பிடிக்குதுப்பா. பி.ஏ.முடிச்சிட்டு என்ன பண்ணுவே? பாங்குலே கிளார்க் வேலை கிடைக்கும்.
இல்லப்பா. மானேஸ்மெண்ட் பண்ணலாம். ஏன் அதெல்லாம். பேசாம இன்ஜினியரிங்படி இந்தர் ஃபாரம். நெரப்பு. • இதோ இந்த இடத்துல எழுது மாதமாடிக்ஸ்ணு ஆண் சம்பாதிப்பவன். சம்பாதிப்பவனே ஆண். கதாநாயகி ஓடுகிறாள். குண்டர்கள் துரத்துகிறார்கள். கதாநாயயகன் வருகிறான். சண்டை நடக்கிறது. அவன் அவளை அடைகிறான். அவன் ஆண்.
பஸ்ஸில் ஏறிய மஞ்சள் புட வையை மனதில் கிடத்தி புணர்ந்து பார்த் தேன் - மனதில்தானே? பரவாயில்லை. ーl@l ஆண்பிள்ளை மனது. அப்படித்தான் இருக்கும். நிஜமாகவே பண்ணவருவாள் ஒருத்தி தாலி கட்டிக்கொண்டு இதற்காகவே
பூரி நன்னாயில்லையா? வருவாள் ஒருத்தி உனக்குச் சமைத்துப் G3 ITL.
எங்கள் ஸoட்டிங் துணியை அணியுங்கள். உங்கள் காதலி விரும்புவாள்.
எங்கள் ஸoவை அணியுங்கள். பெண்கள் உங்களைத் திரும்பிப்
Taõ6.
எங்கள் ஷர்ட்டை அணியுங்கள். உங்களுள் உள்ள சிங்கம்
விழித்துக்ெகாள்ளும்
"எங்கள் பிளேடை உபயோகியுங்கள். உங்கள் கன்னம் அவளுக்குப் பிடிக்கும். அதன்பின்
-59

Page 32
எங்கள் டூத் பேஸ்ட் உபயோகியுங்கள். பின் அவள் முகம் அருகே வரலாம்.
எங்கள் பானத்தை அருந்துங்கள். உங்கள் ஆபிஸர் உங்கள் சுறுசுறுப்பை விரும்புவார். w கசங்கிய ஆடை எதற்கு? கசங்காத எங்கள் துணி - ஆடையை அணியுங்கள். உங்கள் திறமை போற்றப்படும்.
நீசம்பாதிப்பவன். நீவேலைக்குச் செல்பவன். நீஉரிமைகளை உடையவன். நீஒட்டுப் போடுபவன். நீஅழக்கூடாதவன். நீஉறுதியானவன். நீதிர்மானங்கள் செய்பவன். நீஉலகை மாற்றுபவன் நீதிண்மையானவன். நீபெண்களைச்சுகிப்பவன். நீபடுக்கையின் ஆக்கிரமிப்பாளன். நீமேலதிகாரிகளைக் கவருபவன். நீஆண்,
米米米
சபரீ. இப்படி ஜட்டி போடாம வரலாமா?அசடு,அசட்டுப்பாப்பாதான் அம்மணமாநிக்கும். நல்ல பாய்பா ஜட்டி போடும்மான்னு சொல்லும்.
ஜட்டி போடும்மா. சபரி - ஒன்றாவது வகுப்பு - சபரிக்குட்டி, நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்குவே?
எங்க கிளாஸ்ல இருக்கிற அப்துல்லாவை "ஃசி அப்பிடியெல்லாம் பேசக்கூடாது தப்பு.
மூன்றாவது வகுப்பு - சபரி, அப்துல்லா என்ன ஆனான்? தெரியாது. என்னடீ தெரியாது?அவன் உன் ஃபிரெண்டு இல்ல? இல்லப்பா. அவன்தான் முஸ்லிம் ஆச்சே கேட்டுக்க இது சமத்தை. ம், பெரியவளாயிட்ட அந்த முரளி கூட என்ன விளையாட்டு?பட்டம் விட்டயா? அம்பிள்ளை விளையாட்டு என்ன? ஒழுங்கா புஸ்தகம் வெச்சிட்டுப்படிக்கிறது. '... . . . .
-60

என்ன தடதடன்னுட்டு ஓட்டம்? ம்மை இட்டுக்கிட்டது போதும், பாண்ட் மேல சட்டை என்ன இப்பிடி? வேற மாத்து உடனே.
என்ன பேசிட்டிருந்தே சீதாகிட்? என்னவோ ஸெக்ஸ்னு கர்துல விழுந்திச்சே?கெட்ட விஷயம் எல்லாம் என்ன பேச்சு?சாமி கும்பிடு போ.
கைத்தலநிறைகனி அப்பமோடவல் பொரி , கப்பிய கரிமுகன் அடிபேணி சொல்லு பத்துவாட்டி, நல்லது. மண்மீது உழைப்பார் எல்லாம் வறியராம். உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் இதைத்தன் கண்மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி. கைதட்டல் இதெல்லாம் எப்பபடிச்ச? பேச்சுப் போட்டில பேசினியே? இது என்னஏழை-பணக்காரன்னிட்டு?ஒரு பொண்ணு பேசர பேச்சா? எந்த ஸ்டூடன்ட் யூனியன்ல இருக்கே?
சரித்திரம் வேணாம்பா, மாத்ஸ், பிஸிக்ஸ் எடுக்கிறேன். அப்புறமா ஏரோநாடிக்ஸ் என்ஜினியரிங் பண்ணலாம்.
ஹிஸ்ட்ரி எடு, அப்புறமா அடுப்புதானே ஊதணும்? சமைக்கக் கத்துக்க, வாய்க்கு ருசியா சமைக்காத பொண்ணை யாரு கட்டுவாங்க?ஃபெமினா பாரு, ரெஸிபிகத்தரிச்சுவை,
ஒரு முட்டை டால்டா அல்லது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிப் போடவும், சிவக்க வதங்கியதும் அரைத்துள்ள மசாலா விழுதைக் கொட்டி. வதக்கல், வாட்டல், கரைத்தல், பொடித்தல், இடித்தல்,
இப்ப என்ன அலங்காரம், பொண்ணு பார்க்கவா போறாங்க? எங்க க்ரீமை உபயோகியுங்கள். மேனியில் வேண்டாதரோமத்தை அகற்றுங்கள்.இதோ எங்கள் க்ரீம் எங்கள் பாடியை அணியுங்கள். உங்கள் இளமையை எடுப்பாகக் காட்டும்.
இது எங்கள் புடவைக் காலம். இதை வாங்கும் பெண்கள் நல்ல தேர்ந்தெடுக்கும் ருசி உடையவர்கள். தோளை அணைக்கும் ஆண்
-61

Page 33
இந்தப் புடவையால் ஈர்க்கப்பட்டவன்.
எங்கள் சோப்பில் குளித்து,எங்கள் ஷாம்பூவில்தலை அலசிஎங்கள் பெளடரை முதுகில் கவிழ்த்து, எங்கள் நகச்சாயம், எங்கள் பொட்டை வைத்துக் கதவைத் திறந்தால் மன்மதன் எதிரே.
அந்தக் கஷ்டமான நாட்கள்.
எங்கள் எண்ணெயை உபயோகியுங்கள். வீட்டில் மாற்றத்தைக் கவனியுங்கள்.
அம்மா, சமையல் பிரமாதம்.
பிரமாதம் கமலா.
என் கணவர் இனி ஹோட்டலில் சாப்பிட மாட்டார். ஆம். அவள் ஒரு புத்திசாலியான மனைவி.
உங்கள் வீட் டின் கழிவறையைச் சுத்தப்படுத்த இதை உபயோகியுங்கள்,
அம்மா, நம்ம பாத்ரூமில் நல்ல வாசனை.
ஆம், அவளுக்குக் கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியும்.
அவள் ஒரு ரிஸப்ஷனிஸ்ட் அவள் அழகாக இருக்க வேண்டும்.
அவள் எங்கள் புடவைகளை உடுத்துகிறாள்.
பெண் கிளார்க் இருக்கட்டும். நல்லா வேலை செய்வாங்களோ இல்லியோ, ஆஃபீஸ் அழகா இருக்கும்.
டீச்சர் வேலைதான் நல்லது பெண்களுக்கு. கெளரவமான வேலை.
நீவீட்டைப் பேணுபவள்.
நீஅழகு சாதனங்களுக்கானவள்.
நீ அடக்கமானவள்.
நீதீர்மானங்களைக் கேட்டுக்கொள்பவள்.
நீதேவியானவள். w
நீஉபயோகமானவள்,
நீசுகத்தைத் தருபவ்ஸ்.
நீதேவைக்காக மட்டும் வேலைசெய்பவள்.
நீபாதுகாக்கப்பட வேண்டியவள்.
நீபெண்.
米米米》
-62

மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளையின் பெண்மானம்: இந்துச் சீர்திருத்த அரசியல்
முனைவர். கே. பழனிவேலு
காலனிய ஆட்சியும் அதைச் சார்ந்து அறிமுகமான அறிவுத் துறைகளும் இந்திய மக்களின் பாரம்பரியமான வாழ்வில் அசைவு களைத் தோற்றுவித்தன. கிறித்துவமதமாற்றங்களும் மதமாற்றத்தால் கிடைத்த உரிமைகளும் பூர்வீக மதத்தின் மீதும் மதம் சார்ந்த நடவடிக்கைகளின் மீதும் விமர்சனத்தை உருவாக்கின. ஆங்கிலக் கல்வி அரசின் வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஒரு வழியாகியது. உ.வே.சா. (61) :
என் இளமைக் காலத்தில் கிராமங்களுக்கு இங்கிலீஷ் படிப்பு வரவில்லை. நகரங்களில் சில பள்ளிக் கூடங்களில் இங்கிலீஷ் கற்றுத்தந்தார்கள். இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரைகுறையாகத் தெரிந்து கொண்டவர். களுக்குக் கூட எளிதில் வேலை கிடைக்கும். என ஆங்கிலக் கல்வியைப் பற்றிக் கூறுகின்றார்
சாதியுடன் இணைந்திருந்த இந்தியச் சமூகத்தில் ஆங்கிலக் கல்வி வாழ்க்கையின் போக்கை மாற்றக்கூடியதாக அமைந்தது. ஆங்கிலத்தின் வழி கிடைத்த நவீனச் சிந்தனைகள் இந்தியச் சமூகத்தின் சனாதனத் தன்மை மீது மாற்றுக் கண்ணோட்டங்களை ஏற்படுத்தின.
பிரிட்டிஷ் நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக். கியங்கள் போன்றவை இந்தியாவுக்கக் கொண்டுவந்த புதிய கருத்துக்களாலான அறிவுத் தொகுதி புதிய அறிவாளிகளுக்கு (சீர்திருத்தவாதிகளுக்கு) அறைகூவலாக அமைந்தன. அறச்சிந்
முனைவர் கே. பழனிவேலு தமிழ் விரிவுரையாளர். பெரியார் கலைக்கல்லூரி, கடலூர். “மாயூரம் ச.வேதநாயகம்பிள்ளையின் பெண்மனம், இந்துச் சீர்திருத்த அரசியல்" எனும் இந்தக் கட்டுரை. இவரது “கோட்பாட்டியல் திறனாய்வுகள்" எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.
--63ے

Page 34
தனைகளுக்கு அடிப்பட்ையான பகுத்தறிவுவாதம், மனித பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துக்கள், சமூக மாற்றத்தை அறிவியல் பூர்வமாகக் கட்டமைப்பதற்கான வாய்ப்பு, தனிமனித வாதத்துடன் இணைந்த இயற்கை உரிமை பற்றிய கொள்கைகள் போன்றவை பாரம்பரியச் சமூகத்திற்கு அந்நியமாக இருந்தன. (Jorden, 366) என்பர். பழமைப் பிடிப்புடைய ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் பாரம்பரியத்தைக் காப்பதற்காகப் பழைய மரபுகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தனர். இதன் மூலம் நவீனத்துவத்திற்கு இடமளிக்கக் கூடியதாக மரபுகள் அமைந்திருப்பதில் பெருமைப்பட்டுக் கொண்டனர். எனினும் இம்மாற்றங்கள் மிக எளிதாக நடந்து விடவில்லை. பல்வேறு இயக்கங்கள் உருவாகி இம்மாற்றங்களை நிலைப்படுத்தப்பாடுபட்டன. பிரம்மசமாஜம் (1 828), ஆரிய čripТgib (1975), பிரம்ம. ஞான சங்கம் (1883), இராமகிருஷ்ண இயக்கம் (1897)போன்ற பல இயக்கங்கள் இந்திய அளவில் தமது செயல்பாடுகளை நிகழ்த்தின. இந்தக் காலக்கட்டத்திலேயே சமரச சுத்த சன்மார்க்கசங்கம் (1865) ஆரம்பிக்கப்பட்டது. இவையனைத்தும் இந்து தர்மத்தில் சேர்ந்துவிட்ட குற்றங்களை நீக்கி, தூய முற்போக்கான தர்மங்களை முன்வைக்க முனைந்தன. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் (1826-1889) வாழ்ந்த சவேத நாயகம் பிள்ளையினை இந்தச் சீர்திருத்த இயக்கங்கள் வெகுவாகப் பாதித்துள்ளன. வள்ளலார், ஆறுமுக நாவலர், சி.வை.தமோதரம் பிள்ளை, உ.வே.சா. போன்று தமிழ்ச் சிந்தனை மரபில் முக்கிய இடம் வகித்தவர்களின் காலத்தில் வாழ்ந்து தமது சிந்தனைகளால் தமிழ்ச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ச.வேதநாயகம் பிள்ளை ஏற்படுத்தியிருக்கிறார். மரபான தமிழ்க்கல்வியைக் கற்றவர். என்றாலும், ஆங்கிலப் புலமையினாலேயே உயர்நிலையை அடைந்திருக்கிறார். பதிவேட்டுப் பொறுப்பாளராகப் (Record Keeper) பணியமர்ந்து நீதி. மன்றத் தவைராக முன்சிப்பாக-உயர்ந்துள்ளார். பணி ஓய்வுக்குப்பின் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் சிந்தனைகளையும் உயர்த்துவதற்காகப்பாடுபட்டுள்ளார்.
18,19ஆம் நூற்றாண்டுகளில் கல்வி என்பது மரபுவழியிலான தமிழ்க் கல்வியாகவே இருந்தது. தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றலே கல்வியாக இருந்த நிலையில் கல்வி அமைப்புகள் பெரும்பாலும் மதத்துடன் தொடர்பு கொண்டிருந்தன. குறிப்பாகச் சைவ மடங்கள் கல்வி கற்பிக்கும் இடங்களாக இருந்தன. இம்மடங்கள் அளித்த கல்வியில் சைவசாத்திரங்கள் முக்கியப் பாடங்களாக இருந்தன. செய்யுள் இயற்றுதல் தமிழ்க் கல்வியின் உயர்நிலையாகக் கருதப்
-64

பட்டது. வேதநாயகர் ஆங்கிலம் கற்றவராக இருந்தாலும் தமிழ்க் கல்வி மரபில் தோய்ந்தவராக இருந்துள்ளார். பல பாடல்களைப் புனைந்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்ட வேதநாயகர் திருவாவடுதுறை ஆதீன காத்தர் சுப்பிரமணிய தேசிகருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்துள்ளார். இதனை
மாயூரத்தில் முன்சிபாக இருந்த வேதநாயகம் பிள்ளை சிலமுறை திருவாவடுதுறை மடத்துக்கு வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாகப் பாடல்களை இயற்றி வருவார். ஒரு கிறிஸ்துவ கணவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தியன்றோ. பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமைகளையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புகளையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலையமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று. என உ.வே.சா.(140) குறிப்பிடுவதால் அறியலாம்.
வேதநாயகரைப் பற்றிக் குறிப்பிடும் உ.வே.சா. அவர், பிறரை அதிகமாக லட்சியம் செய்யாதவர்; அதிகமாகப் பேசாதவர், பிறருடைய தாட்சண்யத்தை எதிர்பார்க்காதவர் எனக் காட்டுகின்றார். மரபான தமிழ்க் கல்வியுடன் அதிகாரத்தில் இருந்த உயர் மனநிலையும் கொண்டிருந்த வேதநாயகர் மடங்களுடன் இருந்த தொடர்பு காரணமாக இந்து மதத்தின் மீதும் பற்று கொண்டவராக இருந்திருக்க வேண்டும். அதனால் பெரும்பான்மை இந்து மக்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என விரும்பியுள்ளார். பஞ்ச காலங்களிலும் காலரா போன்ற நோய்க் காலங்களிலும் மக்களுக்குச் சேவையாற்றிய வேதநாயகர், மக்கள் வாழ்வில், மனப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்குடன் பல நூல்களை எழுதியுள்ளார். பாரதியாருக்கு முன்னர்ப் பெண்களின்நிலையை உயர்த்துவதற்காகப் பாடுபட்ட வேதநாயகர் பெண்கல்வி, பெண்மானம், பெண்மதி மாலை, பொம்மைக் கலியாணம் ஆகிய படைப்புகளால் தமடமுடைய பெண்ணியல் சார்பை வெளிப்படுத்தியுள்ளார். 1869ல் வெளியிடப்பட்ட பெண்கல்வி நூல் பெண்கள் கற்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றது. பெண் கல்வி நூலின் இரண்டாம் பதிப்பு 1870ல் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் பெண்மானம் எனும் வசனகாவியம் இடம்
-65

Page 35
பெற்றது. பெண்மானம் நூலை எழுதியதற்கான காரணத்தைக் கூறும் வேதநாயகர் (214),
இங்கிலீஷ் முதலிய பாஷாந்தர கிரந்தங்கள்புருஷர்களிடத்தில் ஸ்திரீகள் நடக்க வேண்டிய கிரமங்களையும், அப்படியே ஸ்திரிகளிடத்தில் புருஷர்கள் நடக்க வேண்டிய கிரமங்களையும் நிஷ்பக்ஷ பாதமாக எடுத்துக்காட்டுகின்றன. திராவிட பாஷா ரூபமான கிரந்தங்களோ புருஷர்களால் செய்யப்பட்டன. ஆத லால், அக்கிரந்த கர்த்தர்கள், புருஷர்கள் விஷயத்தில் ஸ்திரீகள் அநுசரிக்க வேண்டிய விதிகளை மட்டும் நிர்த்தாக்ஷண்யமாகச் சொல்லி, ஸ்திரீகள் விஷயத்தில் புருஷர்கள் அவலம்பிக்க வேண்டிய நெறிகளைச் சொல்லாமலும் விட்டு விட்டார்கள். அந்தக் குறைவை நிவர்த்திக்கும் பொருட்டு, வசனரூபமான இந்தக் கிரந்தத்தை நாம் செய்ததே ஒழிய, ஸ்திரீகளிடத்தில் பரிதானம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நாம் வக்கீலாகத் தீக்ஷிதத்துக்கொண்டு புறப்படவில்லை, என்கிறார். இதனால் ஆங்கிலத்தில் வந்த பல நூல்களை வேநாயகர் கற்றிருக்கின்றார் என்பதை அறியமுடிகின்றது.
பெண் நிலைவாதம் பற்றிப் பெண்கள் எழுதிய நூல்களை வேதநாயகர் அறிந்திருக்கிறார். மேரி உல்ஸ்டன் கிராப்ட் என்ற அமெரிக்கப் பெண்மணி பெண் உரிமைகளைப் பற்றிvindication of the Rights ofman (SA,60öfæ6fisör 2_flsOIDæ606! ÉlutulíILIGSSiz56ö), vindication of the Rights of Women (பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்) (1972) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவருக்குப்பிறகு ஜான்ஸ்டூவர்ட் மில் என்பவரின் Subjecation ofwomen என்ற நூல் (1869) வெளிவந்தது. இந்த நூல் வெளியான ஆண்டிலேயே வேதநாயகரின் பெண்கல்வி என்ற நூலும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். பெண்களுக்குச் சமமான உரிமைகள், சொத்துரிமை, ஒட்டுரிமை, கல்வி உரிமைகளைப்பற்றி மேலை நூல்கள்பேசின. அதைப் போலவே வேதநாயகரும் பெண்களுக்கு அளிக்கவேண்டியஉரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசுகின்றார்.
பெண்கல்வி நூலில், கல்வி கற்ற பெண்கள் மரபு வழிப்பட்ட பண்புகளைத் துறந்து விடுவார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்டு நடைமுறையில் சிக்கலின்றிச் சென்று கொண்டிருக்கும் குடும்பக் கடமைகளைப் பெண்கள் புறக்கணித்து விடுவார்கள். பெண்கள் மீது கட்டப்பட்டுள்ள அவர்களின் உடல் சார்ந்த ஒழுக்கம் சிதைவடைந்து
-66

விடும். ஆணின் அதிகாரத்துக்குப் பெண் கட்டுப்படமாட்டாள். இதனால், குடும்ப, சமூக வாழ்வு சிதைவுற்றுவிடும் என்ற கருத்துகள் பெண் கல்விக்கு எதிராக நிறுத்தப்படுவதைக் காட்டி, தர்க்கப் பூர்வமாக மறுக்கின்றார் (விரிவுக்குக் காண்க: கே.பழனிவேலு, 2001). அது போன்றே பெண்மானம் நூலிலும் பெண்கள் சார்பாகநின்று பேசுகின்றார். பெண்களிடம் ஆண்கள் நடந்து கொளஸ் வேண்டிய முறைகளை, நடத்த வேண்டிய நெறிகளைச் சுட்டுவதற்காகவே இந்த நூலை வேதநாயகர் எழுதுகின்றார். என்றாலும், நாம் பெண்களுக்கான வக்கீலாகச் செயல்படவில்லை எனவும் கூறுகின்றார்.
பெண்களுக்கான உரிமைகளைக் கோரும் வக்கீல்களாக ஆண்கள் இருக்க முடியாது என்பதை வேதநாயகர் உணர்ந்திருக்கின்றார் எனக் கருதலாம், பெண் உரிமைகள் பற்றி ஆண்கள் பேசும் போது, அது ஆண்களின் நலன் சார்ந்ததாகவே அமையும் என்பதை வேதநாயகரின் கருத்துகளில் இருந்தும் எடுத்துக்காட்ட முடியம். ஆண் சார்ந்த சமூக இயக்கத்தில் தோன்றும் சிந்தனைகள், பெண்ணால் முன்வைக்கப்படும் போதும் அது ஆணின் சிந்தனையாகவே அமையும். என்றாலும்,பெண் உரிமை பற்றிய கருத்துகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, தொடர்ந்து பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் என்ற நிலையிலும் தமது கருத்துகளைச் செயல்படுத்த முனைந்தவர் என்ற நிலையிலும் தமது கருத்துகளைச் செயல்படுத்த முனைந்தவர் என்றநிலையிலும் வேதநாயகரின் பெண்ணியச் சிந்தனைகள் முக்கியத் துவம் வாய்ந்தவயைாகின்றன. பெண்கல்வி பற்றிப் பேசிய வேதநாயகர், மயிலாடுதுறையில் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி தொடங்கி நடத்த உறுதுணையாக இருந்துள்ளார். அப்பள்ளியில் தமது புதல்வி. யர்களைச் சேர்த்துப் படிக்கச் செய்துள்ளார் (சரளா இராசகோபாலன், 68) தமிழ் சிந்தனை மரபில் பெண் உரிமை பற்றிப்பேசியமுன்னோடியாக வேதநாயகர் திகழ்கின்றார்.
பெண்மானம் நூல் ஆண்களுக்கு அறிவுரை சொல்லும் முறையில் பெண்களின் சமூக நிலையை உணர்த்தி, அவர்களுக்கச் சமநிலை அளிக்கக் கோருகின்றது. ஆண்களில் பிரதிநிதியாகத் தன்னையே வேதநாயகர் முன்னிறுத்திக் கொள்கிறார். பெண்களுக்குச் சமவுரிமை ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில்களல் தமது பெண்நிலை பற்றிய கருத்துகளை வலியுறுத்திச் செல்கின்றார்.
ஆண்களுக்கு இணையானவர்கள்தான் பெண்களும் என்பதை நிறுவமுனைபவர், ஆண்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதையும்
-67.

Page 36
பெண்கள் அவர்களுக்கு அடங்கிப் போகின்றவர்களாக இருப்பதையும் ஒரு சமூக ஒப்பந்தமாக விளங்கிக்கொள்கின்றார்.
ஜனங்களுடைய நன்மைக்காக இராஜா, மந்திரி முதலானவர்களுக்கு அதிகாரங் கொடுக்கப்பட்டிருப்பதினால், அந்த விஷயந் தவிர மற்ற விஷயங்களிலெல்லாம் இராஜா மந்திரி முதலான அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் ஸமானஸ்தர்கள் தாமே! அப்படியே குடும்ப நன்மைக்காகப் புருஷனுக்கு எஜமானப் பட்டங் கொடுக்கப்பட்டிருப்பதினால், அந்த விஷயந் தவிர மற்ற விஷயங்களிலெல்லாம் புருஷனும் பெண்சாதியும் சமானஸ்தர். களாயிருக்கிறார்கள். தேச நன்மைக்காக இராஜாதிகாரம் பெற்றுக்கொண்டவன், தேசநன்மையில் தவிர, வேறு துர்விஷயங்: களில் அவனுடைய அதிகாரத்தை எப்படிச் செலுத்தக்கூடாதோ, அப்படியே குடும்ப நன்மைக்காக நாயகப் பட்டந்தரித்துக்கொண்ட கணவன்,குடும்பினிக்குக் கொடுமை செய்வதில் முற்றும் அதிகாரியாயிருக்கிறான் (வேதநாயகம்,190) என்கிறார். ஆண்கள் குடும்ப நன்மை கருதியே உயர்த்தப்பட்டிருக்கிறார்கள் எனக் குடும்ப எறவினையும் ஆண் தலைமையை ஒப்புக் கொண்ட ஒப்பந்த உறவாகக் காட்டுகின்றார்.
ஆண் தனது பிரஜையான பெண்ணை அடக்கி ஒடுக்குவதுமுறை மீறிய கொடுங்கோலாகின்றது. இதனால்தலைவன்- அரசனாகிய ஆண் - நெறிதவறாமல் அறவாதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். இந்த ஆண் உயர்வு சரிய்ா, தவறா என வாதிடாமல், பெண்ணை ஆண் ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களைக் காட்டுகின்றார். பெண்ணாலேயே ஆண் உலக இன்பங்களைப் பெறுகின்றான். திருமணத்திற்கு முன் தடை செய்யப்பட்டிருந்த பல இன்பங்கள் பெண் வரவினாலேயே அவனுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு அனைத்து இன்பங்களையும் கொண்டுவந்த பெண்களை ஆண்கள் மதிக்காமல் அலட்சியம் செய்வது அநியாயம் (179) என்கிறார். மேலும்:
பத்நியைப் புருஷன் எவ்வளவு கண்ணியப்படுத்துகிறானோ, அவ்வளவு புருஷனுக்குக் கண்ணியம். அவளை எவ்வளவு தாழ்த்தி வருகிறானோ அவ்வளவு தன்னைத் தாழ்த்திக் கொண்டதற்குச் சமானம் (196) என ஆண் தன்பொருட்டே பெண்ணை மதிக்க வேண்டும் என்கிறார். ஆணும் பெண்ணும் எவ்வளவு நேசமுடன் வதழ்கிறார்களோ அவ்வளவு
-68

பிறரால் மதிக்கப்படுவார்கள். இல்லை எனில் எவரும் அவர்களை மதிக்கமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களை மதிக்காமல், பெற்றோர் சொற்படி நடக்காமல் கெட்டுப்போவார்கள் (198) என்கிறார். இவற்றால் பெண் சமத்துவத்தை ஆண்களின் அறம் சார்ந்ததாக நிறுத்துகின்றார். சமத்துவம் பெண்களின் உரிமை என்பதை விட ஆண்களுடைய பெருந்தன்மையின் வெளிப்பாடாக அறம் சார்ந்த நடத்தையாகக் காட்டுகின்றார் என்றாலும், ஆணினுடைய கருணையைச் சார்ந்ததாக இவை பொருள்படுகின்றன.
மரபு ரீதியாகப் பெண்களின் பெருமைகளாகப் பேசப்படுபவற்றைப் பட்டியலிடும் வேதநாயகர் (184),
ஸ்திரிகளுக்கு உள்ள மற்ற கெளரவங்களோடு கூட, அவர்களுடைய தேக சௌந்தரியமும் அவர்களுக்கு விசேஷ யோக்கியதையை உண்டுபண்ணுகிறது. மிருகங்களுக்குள் பெண் மிருகங்களும், பெண் பகூரிகளும், அழகில்லாமலிருக்க, ஆண்மிருகங்களையும், ஆண் பகூரிகளையும் அழகாகப் படைத்த ஸ்வாமி, மனுஷர்களுக்குள் புருஷர்களைப் பார்க்கிலும் பெண்களை அதிரூபவதிகளாகப் படைத்திருக்கிறாரென்பது கண்ணுள்ள யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க விஷயமே. ஸ்திரீகள் சுகுமார தேகமும், மிருதுவாக்கியமும், துர்ப்பலமும், நாணமும், அச்சமும் உடையவர்களானதால், கண் முதலிய மிருதுவான அவயவங்களை அதிக ஜாக்கிரதையுடனே பாதுகாப்பது போல, அவர்களிடத்திலும் அதிக கிருபை பாராட்ட வேண்டியது, புருஷர்கள் மேல் விழுந்த பாரமாயிருக்கிறது என்கிறார். பெண்ணின் அழகு, பலமின்மை ஆகியவற்றுடன் இயற்கையாகப் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய், கர்ப்பம், பிரசவம் போன்றவற்றாலும் பெண் காக்கப்பட வேண்டியவள் எனும் கருத்தை வலியுறுத்துகின்றார். மேலும் குடும்பங்களில் பெண்களின் கடமைகளாகக் கருதப்படும் சமையல், கணவன், மாமனார், கடமைகளாகக் கருதப்படும் சமையல், கணவன், மாமனார், மாமியாரை உபசரித்தல் போன்றவற்றை இயற்கையானதாகக் கருதும் வேதநாயகர் இத்தகு பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பிறருக்கு இன்பங் கொடுப்பதால் பெண்களை மதிக்க வேண்டும் என்கிறார். மேலும் பெண்களின் அடக்கம், பொறுமை, சாந்தம், விசுவாசம் போன்ற குணங்களைப்புகழ்கின்றார்(182)
பண்பாடு பெண்கள் மேல் திணித்த சுமைகளை இயற்கை யானவையாகக் கருதும் வேதநாயகர், பெண் சமத்துவம் என்பது
-69

Page 37
ஆண்களின் கைகளிலிருந்து பெறுவதுதான் என்ற சிந்தனையுடையவராகவே இருந்துள்ளார். பெண்களுக்கு உரிமைகளை வழங்கும் மனநிலையை ஆண்களிடம் உருவாக்குவதையே தமது எழுத்தின் நோக்கமாகக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே பெண்கள் மீது ஆண்கள் இரக்கம் கொண்டு அன்பு செலுத்த வேண்டும் எனக்கூறி நம்முடைய பத்தினிகள் பிறந்த ஊரையும், வீட்டையும், தாய் தந்தை, சகோதரர் முதலான பந்துகளையும் விட்டு, நம்மை நம்பி வருகிறபடியால், அவர்களை மிகவும் பிரீதியாய் நடத்த வேண்டியது, நம்முடைய கடமையல்லவா?(182) என்கிறார். ஆண்களின் அனுதாபத்தினைத் தூண்டி அதன்மூலம் பெண்களுக்குச் சமத்துவம் ஏற்படுத்துவது வேதநாயகரின் எண்ணமாக இருந்துள்ளது. சமூகத்தில் உள்ள வழக்கங்களை எதிர்க் கேள்வி கேட்காமல் ஒத்துக்கொண்டு சிறிய திருத்தங்கள், மனநிலை மாற். றங்களின் மூலம் பெண்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் முயற்சியாக இவற்றை நம்மால் புரிந்துகொள்ள இயலும்,
கற்றுக்கொடுப்பதன் மூலம் தமது மனைவிகளை ஆண்கள் தமக்கேற்ப வடிவமைத்துக்கொள்ள முடியும் என வேதநாயகர் (191) சுட்டுகின்றார்.
ஸ்திரீகளுக்கு நல்ல புத்தி கற்பிக்க வேண்டியதும் புருஷர்களுடைய முக்கிய கடமையாயிருக்கின்றது. இந்தத் தேசத்தில் அதி பாலியத்தில் பெண்களுக்குக் கலியாணமாய்ப் புருஷர். களுடைய வீட்டிற்கு வருகிறபடியால், அவர்களுக்கு ஹிதோபதேசஞ் செய்து திருத்துவது புருஷர்களுக்குப்பிரயாசையாயிராது (191), என்பதன் மூலம் இதனை அறியலாம். மனைவிக்கு அளிக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுபவர் பெண்களுக்குக் கற்பித்து உயர். நிலையை அடையச் செய்யலாம் என்கிறார். இத்தகு கற்பிதங்களினா. லேயே பெண் இரண்டாந்தர நிலையை எய்தியிருக்கிறாள் என்பதை வேதநாயகர் கவனத்தில் கொள்ளாமல் இருந்ததற்கு அன்றைய காலச் சூழலைக் காரணமாகக் காட்டலாம். இதுபோவே, குழந்தைத் திருமணம் பற்றிய வேதநாயகரின் கருத்தை அக்காலச் சூழலிலேயே அணுக வேண்டியுள்ளது.
வயதுக்கு வருவதற்கு முன் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவராக அவர் இருந்துள்ளார். இவ்வாறு திருமணம் செய்வது சாத்திர இந்து) விதி எனக் கூறி (207)
-70

அதனை ஏற்றுக்கொள்கிறார். திருமணத்திற்கு முன் வயதுக்கு வருவது வெட்கக்கேடானதாகவும் வர்ணாசாரத்திற்கு எதிரானதாகவும் குறிப்பிடுகின்றார் (208) அதே நேரம் அதிபால்ய விவாகம் பற்றிக் கடிந்துரைக்கின்றார். வரதட்சிணையைக் கண்டிக்காத வேதநாயகர் பொருள் கொடுத்துப் பெண் கொள்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இதனை அவர் மாம்ஸ் விக்கிரயம் என்று சுட்டுகின்றார். இப்பழக்கத்தால் பெண்ணே மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிறாள் என்பதைக் காட்டி இத்தகு சாத்திர விரோதமான பழக்கம் பிராமணர்களிடத்தில் மட்டுமே இருக்கிறது. இதனை அவர்கள் விட்டொழிக்க வேண்டும் என்கிறார். அதே நேரத்தில் ஆணைப் போலப் பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு இல்லாமையால் பெண்ணுக்கு ஸ்திரீதனம் கொடுப்பது முறையே என (212) வரதட்சிணையை நியாயப்படுத்துகின்றார். இதற்குப் பின்னால் பெண்களுக்குச் சொத்துரிமை கோரும் குரல் இருப்பதை உணரமுடிகிறது. பெண்கள் தந்தையுடைய சொத்திலோ, கணவனுடைய சொத்திலோ உரிமையில்லாமல் இருப்பதனால் விதவையான பிறகு வாழ வழியில்லாமல் துன்பப்படுவதைக் காட்டுகின்றார். மனைவி. யைத் துன்பங்களிலிருந்து காப்பதற்காகப் புருஷர்கள் எப்படியாவது பிரயாசைப்பட்டுத் தங்களுடைய புத்தினிகளுக்குப் பிரத்தியேகமாகப் பொருள் வைக்கவேண்டும். அப்படிச் செய்வது நாம் முன்னமே விவரித்த படி சாஸ்திர சம்மதமாயிருக்கின்றது (203) என்று கூறுகின்றார். சொத்துடைமையே பெண்களைச் சமநிலைக்கு உயர்த்தும் என்பதை விதவைப் பெண்களின்நிலையினால் தெரியப்படுத்துகின்றார். ஆணின் /கணவனின் ஆளுகையற்ற முன்வைக்கப்படுவது நோக்கத்தக்கது.
வேதநாயகர் பெண்களுக்கு ஆதரவாக முன் வைக்கும் அனைத்துக் கருத்துகளையும் சாத்திரங்களின் அடிப்படையிலேயே முன் வைப்பதாகக் காட்டுகின்றார் (199.207)
சாஸ்திர விதியைச் சர்வ சாதாரணமாக இந்தத் தேசத்தார் அநுஷ்டானத்துக்குக் கொண்டு வராமலிருப்பதுஸ்திரீகளுடைய தெளர்ப்பாக்கியமாயிருக்கின்றது. (200) எனப் பெண்களுடைய அத்தனை துன்பங்களுக்கும் சாத்திர விதிகளை ஆண்கள் முறையாகக் கடைப்பிடிக்காமையே காரணம் என்கிறார். சாத்திரங்களை முறையாகக் கடைப்பிடித்தால் தமிழ்ச் சமூகம் சரியாக ஆண் பெண் சமத்துவத்துடன் இயங்கும் என வேதநாயகர் கருதியுள்ளார். இங்குச் சாத்திரம் என அவர் சுட்டுவன இந்துச் சாத்திரங்களே (வேதம் -197) எனத் துணியலாம். சாத்திரங்கள், இந்து நீதிகள் பெண்களுக்கு எதிராக இருக்க, அவையே பெண்களுக்குச் சமத்து
-71

Page 38
வத்தைத் தருவனவாக வேதநாயகரால் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றது.
இந்தச் சாத்திரவயப்பட்ட தீர்வுகளைப் பிரம்பசமாஜம் உள்ளிட்ட இந்துச் சீர்திருத்த இயக்கங்களின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. என்றாலும், வேதநாயகரிடம் பெண்ணியச் சிந்தனைகள் வெளிப்பட்ட காலத்தில் தமிழகத்தில் எந்தச் சீர்திருத்த இயக்கங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்பது முதன்மையானதாகும். அதற்கு அடுத்த காலக்கட்டங்களிலேயே தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. விரேசலிங்கம் பந்துலு (1848-1919), ஆர். வேங்கடரத்தின நாயுடு (1862-1939) ஆகியோர் பணியாற்றிய சென்னை இந்துச் சமூக மறுமலாச்சிக்கழகம் 1892இல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தை ஆய்வாளர்கள் இந்திய அளவில் சமூக மறுமலர்ச்சி இயக்கம் இரண்டாம் கட்ட நிலையை அடைந்த காலம் என்பர். மேலும் இறுக்கமான சாதிய அமைப்பும், தாமதமான அரசியல் விழிப்புணர்வுமே தமிழகத்தின் இத்தாமதத்திற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர் (Jonden , 375)
சமூக விழிப்புணர்வோ, அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தமிழகத்தில் முதன்முதலாகச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் வேதநாயகர் மதச் சீர்திருத்தவாதியாகவே 25նD35/ கருத்துகளை முன்வைத்திருக்கின்றார். இந்திய அளவில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களின் மதப் பின்னணியே இவருடைய தளமாகவும் இருந்திருக்கின்றது.
இராஜாராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அவரிடமிருந்த இந்துமதப் பாரம்பரிய ஈடுபாடு, அனைத்துலகச் சமயப் பார்வை, சமூக - அரசியல் ஈடுபாடு முதலியவை மேலும் வளர்க்கப்பட்டு பிரம்ம சமாஜம், மூன்றாகப் பிரிவுபெற்றுள்ளது. அவை முறையே ஆதி பிரம்மசமாஜம், இந்தியப் பிரம்மசமாஜம், சாதாரண பிரம்மசமாஜம் என அமைந்துள்ளன. தேவேந்திரநாத தாகூரைத் தலைவராகக் கொண்ட ஆதியிரம்ம சமாஜம் இந்தியப் பண்பை முதன்மைப்படுத்தியது. கேசவசந்திரசென் இந்தியப் பிரம்ம சமாஜத்தினை வழிநடத்தியுள்ளார். அவர் பிரம்மசமாஜத்தின் இந்துமத அடிப்படைத் தொடர்பை விலக்க முனைந்துள்ளார். சாமதாரண பிரம்மசம்ாஜத்தை வழிநடத்திய பண்டித சிவநாத சாஸ்திரி ராம்மோகன்ராயின் சமூக அரசியல் கருத்துகளில் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் நலனில் ஈடுபாடு காட்டியுள்ளார்

(சுப்பிரமணியன், 135). பிரம்மசமாஜத்தின் இம்மூன்று பிரிவுகளும் தமிழகத்தில் தமது கருத்துக்களைப் பரப்பியுள்ளன. 1864 இல் கேசவசந்திரசென் தென்னிந்தியப் பகுதிகளில் சுற்றப்பயணம் செய்துபிரம்ம சமாஜத்தின் கருத்துகளை, சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துள்ளார். 1872 வரை அரசாங்கத்தில் பணியாற்றிய வேதநாயகர் சீர்திருத்த இயக்கங்களில் நேரடியாக ஈடுபடாமல் அவற்றின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளார். தமது எழுத்துகளில் இச்சீர்த்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார். அதனாலேயே மதத்துக்கு விசுவாசமாக, மதக்கருத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படுவதாக, அவரது சீர்திருத்தக் கருத்துகள் இருக்கின்ற எனலாம்.
பெண்மானத்தைக் காப்பதற்காக வேதநாயகர் முன்வைக்கும் கருத்துகள் இந்துச் சாத்திர வயப்பட்டனவாக, பிரம்ம / ஆரிய சமாஜத்தின் சிந்தனைகளின் அடிச்சுவடுகளாகவே கருதத்தக்கன. மேலும் வேதநாயகரின் பெண்நிலைக் கருத்துகள் தமிழ்ச் சிந்தனை மரபின் தொடக்க குரலாக இருப்பதனால் தீவிரவாதத் தன்மையுடன் இல்லாமல், மிதவாதத்தன்மையினாலும்பிரம்மசமாஜத்தின் சீர்திருத்தச் சிந்தனைப் போக்காலும் சாத்திர, இந்துப் புராணக் கருத்துக்களைத் திரும்ப முன் வைத்து அவையே சமூக முன்னேற்றத்திற்கு, பெண் சமத்துவத்திற்கு அடிப்படையாகும் எனக் காட்டுகின்றார். வேதநாயகரின் பெண்நிலைவாதக் கரத்துகளில் மத அடிப்படைவாதம் வெளிப்பட்டாலும் அவர் காலத்திய சமூக அரசியலுக்கு இணக்கமாகவே அவரது சிந்தனைகள் அமைந்துள்ளன."
* இந்தக் கட்டுரையுடன் அடுத்து வரும் “ஒரு உரையாடல்" என்ற கட்டுரையையும் சேர்த்துப் பார்க்கவும்.
-73

Page 39
ஒரு உரையாடல்"
பேராசிரியர். அ. மங்கை
பெண்ணைக் குறித்த வெளிப்பாடுகள், ஆண்- பெண் இருபாலாராலும் தொடர்ந்து மையப்படுத்தப்பட்டே வந்துள்ளன. தொடக்கக்லா நாவல்களில் பெண்ணே முக்கியப் பாடுபொருளாக இருப்பதை உலக இலக்கியம் பலவற்றிலும் காணலாம். தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல. பால்ய விவாகம், விதவா விவாகம், பெண்கல்வி, பெண் ஒழுக்கம், பெண் ஆணுடைதரித்துத் தலைமை தாங்குதல் போன்றவை நமது இலக். கியத்தில் மலிந்து கிடக்கும் செய்திகள். வேதநாயகம் பிள்ளையின் சுகுண சுந்தரி சரித்திரம் மூன்று வயதுப் பெண்ணுக்கும் தாய்க்கும் பால்ய மணம் குறித்து நடக்கும் உரையாடலைப் பின்வருமாறு வெளிப்படுத்துகிறது. தவப்பெண்கள் மடத்தில் சிறையிருக்கலுற்றசுகுணசுந்தரி அவர்களுக்குத் தமிழ் கற்பித்து, தான் பிரெஞ்சு கற்றுக் கொண்டு அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வுரையை நிகழ்த்துகிறாள். மகள்: நம்முடைய வீட்டில் இவ்வளவு அமர்க்களமாய்க் கிடக்கிறதே!
ஏதுக்கடி அம்மா? . . . . தாய் : நாளைக்கு உனக்கு திருமணம் அடி அம்மா! மகள் : திருமணம் என்றால் என்ன? தாய் : திருமணம் என்றால் தாலி கட்டுதல் மகள் : தாலி என்றால் என்ன? தாய் : இதோ என் கழுத்தில் தாலி இருக்கிறது பார். இந்த மாதிரியாய்
உன் கழுத்தில் கட்டுவது.
"பெண் மொழி - பெண் வெளிப்பாடு எனும் தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையின் ஒரு பகுதியே இது. இக்கட்டுரை “பெண் - அரங்கம் - தமிழ்ச் சூழல்" எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.
பேரா.அ.மங்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலத்துறை ஆசிரியர். பெண்ணிய்ல் அரங்கம், மொழி பெயர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருபவர். - . . . . . .
-74

Dabóir :
தாய்
மகள் :
தாய்
மகள் :
g5/Tui
மகள் :
தாய்
LD&Eb6fi :
தாய்
Dabói :
தாய்
மகள் :
g5/Tui
Débair :
உன் கழுத்தில் இருக்கிறதாலியை எடுது என் கழுத்தில் உடனே
நீயே கட்டிவிடலாமே! இதற்கு இவ்வளவு ஆரவாரமென்ன? : நான் கட்டக்கூடாது, ஆடவர்கள் கட்டவேண்டும்.
அப்படியானால், அப்பா எனக்குத் தாலி கட்டட்டுமே! அண்ணா கட்டட்டும் சமையல்கார சுப்பு கட்டட்டுமே!
; அவர்கள் எல்லோரும் கட்டக்கூடாது. வேறே கணவன்தான்
உனக்குத்தாலி கட்ட வேண்டும்.
எந்தப் பயல் எனக்குத் தாலிகட்டுவான்? ஒரு பயல் என்னைத் தொடுவானா?
; அப்படியெல்லாம் இகழாதே கணவன் மேலே நீஅன்பாய் இருக்க
வேண்டும். எத்தனையோ பெண்கள் கணவனோடு உடன்கட்டை ஏறியிருக்கிற்ார்களே!
உடன்கட்டை என்றால் என்னபொருள்? ; கணவன் இறந்து போனால் அவனோடு கூட மனைவியும் தீயில்
பாய்வது. இதுதான் உடன்பட்டை ஏறுதல்.
அப்பப்பா. அது என்னால் ஆகாது! எனக்குத் திருமணமே வேண்டாம்.
! நீ உடன்கட்டை ஏற வேண்டியதில்லை. நீ கணவன் மேல் அவ்
வளவு அன்பாய் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். கணவன் மேலே நான் மட்டும் அன்பாய் இருக்க வேண்டியதா? கணவனும் என்மேல் அன்பாய் இருக்க வேண்டியதில்லையா?
; கணவனும் உன்மேலே அன்பாய் இருக்க வேண்டியதுதான.
அப்படியானால் நான் முந்தி இறந்துபோனால் கணவனும்
என்னோடுகூட உடன்பட்டை ஏறுவானா, : இப்போது ஒருவரும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை.
உன்னுடைய அலப்பு வாயை முடிக்கொண்டு சும்மாயிருக்கuDITÜLATuuT?
நான்சும்மா இருக்கமாட்டேன். கணவன் என்னோடு கூட உடன். கட்டை ஏற உடன்பட்டால் நான்தாலிகட்டிக் கொள்வேன். அல்
லாதுபோனால்தாலிகட்டிக்கொள்ளமாட்டவேமாட்டேன். அவன்
கட்டினாலும் அறுத்தெறிந்து விடுவேன்." கிறித்துவப்பரவலுக்கும், பெண்கள் சீர்திருத்தத்திற்கும் உள்ள உறவு பற்றி விரிவாகக் காண இடமுண்டு.
-75

Page 40
பாரதியின் எழுத்துக்களில் பெண்வெளிப்பாடு
பேராசிரியர். தி.கமலி
நல்ல இயல்புகளை ஆதிக்க மனப்போக்கு அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக இல்லாமல் இங்கு ஆணுக்கு வேறானதும், பெண்ணுக்கு மிதமிஞ்சிய நிபந்தனைகளுடன் ஆனதுமான பால் வேறுபாட்டு பால் சார்பு ஒழுக்கமே இருக்கிறது. இரக்கத்திற்கு உரிய பெண்களுக்கு இரங்கும் எண்ணம் ஆடவரிடம் இல்லை. ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் மிக இயல்பாகக் கால் கொண்டுள்ளன. பெண் விடுதலை பற்றிய குழப்பமும் காணக் கிடக்கிறது. இந்நிலையில் 1907 ஆம் ஆண்டில், பெண் விடுதலை பற்றி இந்தியா வார இதழில் 3 கட்டுரைகள் எழுதியுள்ள பாரதியார் அதன்பின் 1914 க்குப் பிறகே இதுபற்றி எழுதுகிறார். பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்ற பரந்துபட்ட தளத்திற்குரியதாகக் கொண்டு பெண் வெளிப்பாடு அமைந்த விதம் பற்றிக் காணலாம்.
பாரதி, அவர் காலத்து வேரூன்றிக் கிடந்த ஆண் ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியலை அல்லது எதிர்ப்புக் கருத்தியலை முன் வைத்து பெண்ணடிமைத்தனத்தை வன்மையாகச் சாடுவதில் முதன்மையாக நின்ற மாற்றுக் கருத்தியலாளர் அல்லது எதிர்ப்புக் கருத்தியலாளர் என்ற நிலையில் அவரது எழுத்துக்களில் பெண், புதுமைப் பெண் ஆக வெளிப்படுகிறாள்.
பேராசிரியர். தி.கமலி அன்னை தெரசா மகளிர் பலகலைக்கழகத் தமிழ்த் துறையில் பேராசிரியர். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை"பெண்ணியலும் பாரதியும்" எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இதனை பேராசிரியர் வீஅரசு தொகுத்துப் பதிப்பித்துள்ளார். இந்நூலில் இடம்பெற்ற 'பெண் வெளிப்பாடு' எனும் கட்டுரை இத்தொகுப்பில் “பாரதியின் எழுத்துக்களில் பெண் வெளிப்பாடு" என்றுதலைப்பு மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. ჯ :::: :: · · · · · ·
-76

மரபு என்பது பழமைக்கு எதிரானது: பழமையினின்று மாறுபட்டது. மரபின் குறியீடு பழமைப்பெண் என்றால் நவீனத்தின் குறியீடு புதுமைப்பெண் ஆவாள். பணிதல் மரபுசார்பெண் கருத்தாக்கத்திற்குப் பெரிதும் வலியுறுத்தப்பட்ட பண்பாக இருக்க, நாணும், அச்சமும் நாய்கட்கு வேண்டும்; தீமை கொல்ல நாணம் என்ன? என்று தவறு கண்டவிடத்து அஞ்சாது தட்டிக் கேட்பது, 'புதுமைப் பெண் படிமத்தின் தலையாய இயல்பாகக் கருதப்பட்டது.
1860க்குப்பின் மேனாட்டுப் பெண்ணிய முன்னோடிகள், புதுமைப் பெண்" கருத்தாக்கத்தை உருவாக்கினர். 'புதுமைப் பெண்ணின்' முன்னோர்கள், கற்பு, திருமணம், தாய்மை, இல்லப்பணி, கணவனுக்கு ஊழியம் என்று தளைகளில் பிணிப்புண்டு தடுமாறும் போது இவள் விலகி, அவ்வாறு இல்லாமல் புதுமைப் பெண்ணாக உருவானவள்.மரபுச் சார்பற்றவள். உள்ளும் புறமும் தூய்மையானவள், பெண்ணினத்தின் பிரதிநிதி; மனித இன வகை மாதிரி, கருத்தாக்க உயிரிலக்குகளின் புனைவிடம்; நேர்மையானவள்; சில தருணங்களில் விமர்சிக்கும் நபரின் மனப் போக்கிற்கு ஏற்ப எதிர்மறையாகவும் உருவகிக்கப்படுபவள்; ஆனால் அதற்காக வருந்தாத திட சித்தம் உடையவள்" என்று மேனாடுகளில் பெண்ணியவாதிகள் வடிவமைத்த புதுமைப்பெண் இலட்சிய படிமமாகத்தான் குறிக்கப்படுகிறாளே அன்றி வாழ்ந்த பெண்ணோ அல்லது வாழும் பெண்டிரோ, பெண் விடுதலை மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் போராட்ட முயற்சியில் தம்மை ஈடுபடுத்தி உயிர்நீத்த அல்லது வெற்றிவாகைசூடிய பெண்ணியவாதிகளோ கூடக் கூறப்படவில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
தமிழில், 'புதுமைப்பெண் கருத்தாக்கத்தைத் தந்த பாரதியின் எழுத்துக்களில் புதுமைப் பெண், நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டவர்களாக வெளிப்படுகிறாள். கல்வி கற்று, நுட்பங்களைத் தேர்ந்து, வெளிநாடெங்கும் சென்று, புதுமை கொண்டு வந்து சேர்த்து பாரத தேசம் ஓங்க உழைப் பவள். அறியாமை இருளில் அமிழ்ந்து அவலமெய்தி, ஒளியின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுபவள்; நீசத் தொண்டையும், மடமையையும் வலியுறுத்தும் அடிமைச் சுருளைத் தீயிட்டுப் பொசுக்குபவள்; குலமாதர்க்கு இயல்பான கற்பெனும் குணத்தை அறிவை அழித்தும் கொடுமை செய்தும் காக்க முயலும் தீமைக்கு ஆட்படாதவள். ஆதிகாலத்தில் வாழ்ந்து கலி காலத்தில் அழிந்துபட்டவள் என்று பாரதியே குறிப்பிட்டாலும்,
-77.

Page 41
-பாரதி காலத்தில் வாழ்ந்த பெண்டிரின் வகைமாதிரி (Archetype) என்றோ,
-மகளிரது புள்ளியியல் சராசரி (The Statistical Average) என்றோ. - முன்னெப்போதும் வாழ்ந்தவள் என்றோ கொள்வதற்கில்லை.
பாரதி மிக மதித்த சகோதரி நிவேதிதாவோ, பாராட்டிய சீனப் பெண்கவிசியூசின் என்றோ, ஷேக்ஸ்பியரைக்காட்டிலும் சிறப்புமிக்கவர் என்று அவரால் மதிப்பீடு செய்யப்பட்ட ஒளவை என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவம் அய்யரது மனைவியும் பெண் விடுதலை ஆர்வலருமான திருமதி மங்களம் அம்மாளோ, அவரது அன்பைப் பெற்ற யதுகிரியோ, தங்கம்மாள் பாரதியோ, சகுந்தலா பாரதியோ, செல்லம்மாள் பாரதியோவென்று கொள்ளுவதற்கில்லை, பாரதி காண விரும்பிய இலட்சிய படிமம் (The Ideal Type) 6T60Taitb.
1864இல் பெர்லினில் பிறந்த சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெஃபர்
(Max Weber) 'S6uldful, ugld gy, disabib' (The Ideal Type) Libai விளக்குகையில் - .
- இது மனக்கட்டுமானம் (Mental Construct); ஊகமன்று; நடப்பியலின் தொகுப்பன்று, இலக்கண வரையறையாகச் சுட்டிக் காட் டுதற்குரியது (Frame of reference); g,60Tsi) 'ggl;25TGir-sigi'676ital எதனோடும் நூறு விழுக்காட்டு நிலையில் அடையாளப்படுத்த முடியாதது. மூன்று நிலைகளில் ஆக்கப்படுவது.i. வரலாற்று மேன்மைகள் நிறைந்த பழம் புனைவு தளத்தில் ஆக்கப்படுவது. i. சமூக நடப்பியல் கூறுகளின் அடிப்படையில் விவரிக்கப்படுவது. i. குறிப்பிட்ட ஒன்றுக்கு மாற்றாக நல்லியல்புகள் பொதியப் பெற்றதாக மீட்டுருவாக்கம் செய்வது என்ப்ார்.
அவ்வகையில்,பாரதியின் புதுமைப்பெண் மரபுப்பெண் படிமத்துக்கு மாற்றாக, புதுமை இயல்புகள் பொதியப் பெற்றதாக மீட்டுருவாக்கப்பட்டவள்.
- பாரதியின், புதுமைப்பெண் யார்? உண்மையில் அவள் இருக்கிறாளா? இனி வரப் போகிறவளா? இனி வரப்போகிறவள் எனின்? வருங்காலப் புதுமைப்பெண் எய்படி இருக்க வேண்டும்? என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கட்டுரையாக்கி அனுப்புங்கள்' என்று 1945 இல் கலைமகளில் திரு.கி.வா.ஜகந்நாதன் கேட்டுக் கொள்ள, புதுமைப்பெண் பற்றிய கட்டுரை பிப்ரவரியில் திருமதி.
-78.

குமுதினி எழுத, தொடர்ந்து, தி.ஜானகிராமன், திருமதி. கலாசுந்தரிராமன், எஸ்.அம்புஜம்மாள், சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள், பாக்கியலட்சுமி, கெளரி, இ.பாலசுப்பிரமணிய அய்யர், ஜீசரசுவதி அம்மாள், எல்வி.எஸ்.அமணியன், ஜெயலட்சுமி சீனிவாசன், எம்.எஸ்.கமலா, மதுரம் தியாகராஜன், காமு, ஏ.வி.கல்யாணி, பத்மாசனி, ஆர்.கிருஷ்ணவேணி அம்மாள், அ.வெ.கிருஷ்ணமூர்த்தி, சுத்தானந்த பாரதியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எப்படி இருக்க வேண்டும்? எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்ற புள்ளிகளில்தான் மேலே சொன்னவர்களது கருத்துக் கோவைகள் அமைந்திருந்தன என்பது குறிக்கத்தக்கது.இங்ஙனம்,பாரதி எழுத்தில் வெளிப்பட்ட 'புதுமைப் பெண் இன்றளவும் கிரியா ஊக்கியாகத் திகழ்கிறாள்.
மாற்றுக் கருத்தியல் அல்லது
மரபுக் கருத்தியல்
எதிர்ப்புக் கருத்தியல்
அச்சம்,நாணம், மடம், பயிர்ப்பு பெண்ணின்குணங்கள்
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு :
நடத்த வேண்டும்.
இல்லின் எல்லைகடப்பாள் பேய்
"ஆண்மை' எனும் ஆளுமைத் தன்மை உடையவன் ஆண்; பெட்பாம் பணிவு எனும் பெண். ணிர்மை உடையவள், பெண்
பெண்ணுக்கு உயிரினும் மேலானது 'கற்பு ஆணுக்கு 'கற்பு நன்று
தையல் சொல் கேளேல்
நானும், அச்சமும் நாய்கட்கு
வேண்டும்.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே திலக வாணுதல்ார் பாரத
தேசம் ஓங்க உழைத்திட வேண்டும்.
ஆணும் பெண்ணும் நிகர்; சரிநிகர் சமானம்.
கற்பு நிலை ஆண்- பெண் இருபாலாருக்கும் பொருந்துவதாதல்
வேண்டும்.
தையலை உயர்வு செய்,
-79.

Page 42
பெண் புத்தி பின் புத்தி பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே
தேவ வாழ்க்கை;
ஆதிமறைக் கீதம் அரிவையர் சொன்னார்கள்.
வினையே ஆடவருக்குயிர் காதல் செய்யும் மனைவியே சக்தி மனையுறை மகளிருக்கு கண்டீர்; கடவுள் நிலை அவளாலே அவ்வாடவர் உயிர் எய்த வேண்டும்.
பெண்ணுக்கு எதிரான பெண்ணுக்கு மறுமணம் வேண்டும். வழக்கங்கள் மிக்கிருந்தன. | ருதுவாகு முன் மணமுடிக்கலாகாது. சொத்துரிமை வேண்டும். பொருந்தா மணம் கூடாது. எதிர் ஜாமீன் கூடாது. கல்வி வேண்டும்.
பெண் உரிமையற்ற நிலை பெண் விடுதலை வேண்டும்.
என்று மாற்றுக் கருத்தியல் மற்றும் எதிர்ப்புக் கருத்தியலின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக பாரதியின் எழுத்துக்களில் பெண்வெளிப்படுவது ஒரு பரிமாணமாகும். புதுமைப்பெண், பெண்மை', 'பெண்விடுதலை" பெண்கள் விடுதலைக்கும்மி முதலிய ஆக்கங்கள் இவ்வகையின.
'கடையத்தில் தந்தை இறந்து விட்டார் என்ற தந்தி வந்தும் கணவனார் அனுமதிக்காததால், ஐந்நூறு நாட்கள் அழுதவண்ணமே இல்லத்தில் வளைய வந்த மனைவியின் கண்ணீரைக் காணச் சகியாமல் ஏழாவது நாள் பெருந்தன்மையுடன் கடையம் சென்று வர அனுமதித்த கணவர்; சென்னைநாகரிகத்தில்வாசலில் பெண்நின்றுவருவோர்போவோரை வேடிக்கை பார்க்கக்கூடாது என்ற மரபு தெரியாததால் கிராமத்து வழக்க நினைவில் வேடிக்கை பார்த்த மனைவியை மச்சினர் கடிந்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று அறைக்குள் வைத்து அடிக்க (அப்பாத்துரை அய்யர்) என்ன ஒரே சத்தம்? என்று வாசலில் உட்கார்ந்திருந்த தன்னிடம் கேட்டவருக்கு, அப்பாத்துரை மட்டை வைத்துக் கட்டுகிறான் (பயிர் வளையாமலிருக்க மட்டை வைத்துக் கட்டுவது தாவரநால் மரபு பெண் ஒழுக்கம் வளையாமல் இருக்க அடித்தலின் மூலம் அப்பாத்துரையின் செயல் மட்டை வைத்துக் கட்டுவதொத்ததாம்) என்று தாவர நூலறிவு வெளிப்பட பதிலளித்த நிபுணத்துவம், கண்ணெதிரே பெண் அடிபடுவதைக் காணச் சகியாது சென்று தடுக்க முனையாத தன்மை ஒருபுறம்
-80

தான் வெளியில் சென்று வருவதற்குள் உறங்கும் சிறுகுழந்தை விழித்து விட்டால் அருகில் சொம்பில் வைத்துள்ள பாலைக் கெண்டியில் ஊற்றித் தாருங்கள் என்ற சொல்லைச் செயற்படுத்துவதற்குள் தவித்த தவிப்பு: 'குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்சுவது வேறு; அழுமுன் பாலைக் கெண்டியில் ஊற்றிப் புகட்டுவது வேறாயிற்றே; தட்டுத்தடுமாறி ஊற்றித் தந்தபோது, குழந்தையே, 'என் கையில் தராதே, கெண்டி சுடும்; நீ வைத்துக் கொண்டு குடு; குடிக்கிறேன்' என்று சமர்த்தாகக் குடித்து குழப்பம் தீர்த்தது என்பது, குழந்தை பராமரிப்பில் பசிச்சயமற்ற தந்தையை அடையாளப்படுத்துகிறது. அவர் முன்கோபி, எழுதிக் கொண்டிருந்தாலோ, சிந்தனை வயப்பட்டிருந்தாலோ யாரும் அவரிடம் பேசக்கூடாது. இது எங்கள் வீட்டுச் சட்டம்; அப்பா பேச்சை மீறி கடையத்திற்கு என்னையும், அக்காவையும் அம்மா அழைத்துச் சென்றதுதான் அம்மா வாழ்வில் அப்பா பேச்சுக்கு எதிராக அம்மா நடந்து கொண்ட ஒரே தவறு. அது தங்கம்மாளின் வாழ்வில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வருபவரை விசாரித்து காலணியைக் கழற்றச் செய்து, துரசியற்று அவர் அப்பாவைக் காண மாடிக்குச் செல்ல வழிகாட்டி அறி. வுறுத்துவது எனது வேலை; தினமும் மாலையில் அவர் எழுதியவற்றை அஞ்சலில் சேர்ப்பதும், காலையில் செய்தித்தாள் வாங்கி வந்து அவருக்கு பிடிக்காத, நோய் நீக்கு மருந்துகளுக்கான விளம்பரத்தை அகற்றிவிட்டு அவர் படிக்கும்படி வைப்பது எங்கள் வேலை'. 'தினம் இப்படி இருபது பேருக்கு சிறுமி தங்கம்மாவால் சமைத்துப் போட முடியுமா? சம்பாஷணையை இங்கே வைத்துக் கொள்ளுங்கள், சாப்பாட்டை அவரவர் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சிறுமி படும்பாட்டைக் காணச் சகியாது அயல் நாட்டுப் பெண்மணி கூறும் வரை அறியாதிருந்த நிலை. போன்றவை எல்லாம் பாரதி என்ற ஆணை, கெடுபிடிகள் மிக்க கணவனை, இல்லப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளாத குடும்பத் தலைவனை, எழுத்தில் வெளிப்பட்ட பெண்வேறு வாழ்வில் இடம்பெற்ற பெண்வேறு' என்ற தன்மையைச் சுட்டுகின்றன. எனினும் கூடியவரை செயல்படுத்த முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன.
இல்லத்திலேயேபாட்டுகற்பிக்க ஆவன செய்தது. பெண்கள் தாளம் தட்டிப் பாடக்கூடாது என்றிருந்த காலகட்டத்தில், தாளம் தட்டித்தான் பாடவேண்டும்' என்றது.
-81

Page 43
ருதுவாகுமுன் தங்கம்மாளை மணமுடித்துத் தர மறுத்தது. யதுகிரியை நண்பர் ருதுவாகு முன் மணமுடித்துத் தர ஆயத்தம் செய்கிறார் என்று சினமுற்றது. கடையத்தில் ஆண்கள் பள்ளியில் பெண்கள் சேர்க்கப்படக்கூடாது என்ற விதியை, உறுப்பினர்கள் குழு கூட்டிமாற்றித்தன் பெண்ணை மூன்றாம் பாரத்தில் சேர்த்தது. மனைவி, குழந்தைகளை உயிராக நேசித்தது, உடலுக்கு ஒன்றெல்லாம் மனம் பதறித் தவிப்பது, செல்லம்மாளின் கரம் பற்றி இணையாக நடப்பது என்று இயன்றவரை செயல்படுத்த முயன்றுள்ளார். s
பாரதி எனும் சக்திதாசரின், ஆன்மீகக் கவிஞரின் எழுத்துகளில் பெண் ஆன்மீகத் தன்மை மிகப் பெற்றவர்களாக - சக்தியின் வடிவமாக
அம்சமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது மற்றொரு பரிமாணமாகும்.
சக்தி' என்ற மதுவை உண்போமடா?பெண்மைத் தெய்வம், மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்கவேஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல் அருளினொடு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூற வந்திட்டாள்; போற்றி , போற்றி, ஜயஜய போற்றி, மகாசக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில்மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவ வாழ்க்கை.
"காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்" வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி, மாயா சக்தியின் மகள்; மனைகட் வாழ்வினை வகுத்து வீட்டை விளக்கம் செய்து சக்தி நிலையமாக்குபவள். பேதை மாசக்தியின் பெண். ஞாலமுற்றும் பராசக்தி தோற்றம், ஞானம் என்ற விளக்கினை ஏற்றிக் காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும்; காதலென்பதோர் கோயிலின் கண்ணே.
"மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ, மதி கெட்டிரே" உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்றறி. யிரோ,பண்டாய்ச்சி ஒளவை, அன்னையும் தெய்வமும் பாரிடை முன்னறி தெய்வம்' என்றாளன்றோ?'தாய்க்குமேல் இங்கே ஓர் தெய்வமுண்டோ? தாய் பெண்ணே அல்லளளோ? தமக்கை தங்கை, வாய்க்கும் பெண்மக.
82

வெல்லாம் பெண்ணே அன்றோ! என்று ஆன்மீகத் தளத்தில் பெண்ணை அடையாளப்படுத்துகிறார்.
பாரதியின் விருப்பத்திற்குரிய தெய்வம். 'பராசக்தியாகும். முத்துமாரி, சிவசக்தி, காளி என்பனவெல்லாம் அத்தெய்வத்தின் வேறு பெயர்களேயாகும். துணிவெளுக்கச் சாம்பருண்டு எங்கள் முத்துமாரி, மனம் வெளுக்க வழியில்லையே என்று அன்னையிடம் வினவுபவர்.நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது; தாயே ஜெக்கம்மா என்று உபாசித்தற்கு குடுகுடுப்பைக்காரனது வழிமுறையைக் கூடப் பெறத் தயங்கவில்லை.
"எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா"
என்று சக்தியைச் சகலவிடங்களிலும் காணும் சக்திதாசராம்பாரதியின் எழுத்துகளின் வழி, 'பெண் சக்தியின் வடிவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாள். புதுமைப்பெண் படிமம் நடப்பியலில் காணவியலா இலட்சிய வகை மாதிரி என்றால், சக்தி வடிவம்' என்பது ஆன்மீகப் புனைவு" அல்லது, ஆன்மீகக் கற்பிதம்' எனலாம். பெண்ணைத் தெய்வமாக்கி, போற்றி, வழிபடும் மரபு மற்றொரு சாத்தியமற்ற தளமாகும். ஆன்மீக அடையாளப்படுத்தலை விட்டுவிட்டு, சக்தி என்பது ஆற்றல்; Energy; அல்லதுPower எனவே ஆக்கச்கதி பெண் ஆற்றலின் இருப்பிடம் பெண், மானுட மறு உற்பத்தி எனும் மகத்தான பங்களிப்பை LDITSDL repajálibg Boiguoisir Guair, "Empowerment of Women' என்பது பெண் ஆற்றலை மேம்படுத்துவது; சிவனெனும் நிலைத்த வடிவில், சக்தி எனும் நிலைத்த வடிவைப் பெண் எனும் சக்தி, ஆற்றல் சிறப்புற இயக்கி அழியாது வளப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகஞ் சாரா விளக்கத்தினைப் பாரதி எழுத்துகளில் வெளிப்படும் பெண்-சக்திவடிவிற்குத்தரசாத்தியமுண்டு.
பாரதி எனும் தமிழ்க் கவிஞருக்குப் பெண், கவியின்பமூட்டும் தண்ணிலவாய் - வெண்ணிலவாய் - வற்றாக் கவிதை ஊற்றாய் தென்படுகிறாள். அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறாள். பாரதி எனும் கவிஞனின் காதலி - அவனது விருப்பத்திற்குரிய கண்ணம்மா - செல்லம்மா' என்று மனைவி பெயரிட்டே காதல் பாடல்களைப் பாரதி எழுதியதாகவும் அவர் மரணத்துக்குப் பின் வெளியிட்ட அப்பாத்துரை அய்யர் தன் சகோதரியின் பெயர்பாடலில் குறிக்கப்படுவதை விரும்பாத வராக, அதை நீக்கிவிட்டு, 'கண்ணம்மா என்று சேர்த்து வெளியிட்டதாகச் சகுந்தலாபாரதி எழுதியுள்ளார். இதை ஏற்பின், இடைசெருகல்,
-83

Page 44
மாற்றல்' சமகாலப் புலவன் படைப்பிற்கும் நேர்ந்த விதியை நோவதா? அவரது மைத்துனர் அப்பாத்துரை அய்யர் அங்ங்னம் செய்யக்கூடியவரா? என்று ம.பெரியசாமித் தூரன் வருந்துவார். 'பேரின்பத்திற்கான பாடல்களையே நீர் எழுதிக் கொண்டிருந்தால் எம் போல்வார் என் செய்வோம், நாங்கள் ரசிக்க சிற்றின்பப்பாடல்களையும் கவியாகிய நீர் எழுதலாகாதா? என்று பொன்னுசாமிப்பிள்ளைகேட்டதற்கிணங்கப் பாரதி சில காதல் பாடல்களையும் எழுதினார் என்று கூறப்படுகிறது. அவரது அன்பிற்குரிய உறவினர் வள்ளி, புதுப்பாடல் எழுதியது பற்றிக் கேட்டதற்கு, வள்ளி, இப்போது நான் எழுதியவை காதல் பாட்டுகளாயிற்றே; இரண்டு வடமொழிச் செய்யுள் இயற்றியுள்ளேன். அவற்றை உனக்குப் பாடிக் காட்டுகிறேன்" என்று அவற்றைப் பாடியதாகக் கூறப்படுகிறது. பாடு பொருளைக் கணக்கில் கொண்டு, வருந்தவோ, தரத்தில் தாழ்ந்தவைஎன்று தள்ளவோ இயலாதபடி சிறப்புமிக்கனவாக அவரது பாடல்கள் திகழ்கின்றன. அவற்றில் பெண், பாரதி கண்ணம்மா. வாக - இன்னுயிர்க்காதலியாக, பச்சைக் குழந்தை, கண்ணில் பாவை, இச்சைக்கினியமது, தேநிலவு நெஞ்சில் வளர்சோதி, பெண் குலத்தின் பெருவெற்றி, ஆச்சரிய மாயை, ஆசைக்குமரி, தீச்சுடரை வென்ற ஒளி கொண்ட தேவி, கடல் அவள் சூழல்; மதி அவள் முகம், ஞாலவொளி எங்கும் அவள் ஞான ஒளி, கால நடையில் அவளது காதல் விளங்கும்;
"புகழ்ச்சி கூறுவீர் காதல் கிளிகட்கே, நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்; நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே"
மென்னடை, கனியின் சொல், கருவிழி மேனி எங்கும் நறுமலர் வீசிய கன்னி என்றுறு தெய்வம், அது மட்டுமா?
அவள் நகை புதுரோஜாப் பூ, விழி இந்திர நீலப்பூ; முகம் செந்தாமரைப் பூ, நுதல் பாலசூரியன் என்று பெண் காதலியாக வெளிப்படுகிறாள். கண்ணம்மா குழந்தையாக வெளிப்படுகிறாள்; சாரம் மிக்க இலக்கியப் பகுதிகள் இவை, இலக்கியச் சுவைக்காக மக்கள் மனதில் இடம் பெறும் தன்மை வாய்ந்தவையாம்.
பாரதி என்ற ஆணின் எழுத்துக்களில், பெண் வலுவற்ற, பலவீன. முள்ள மெல்லிய இனமாகத்தான் அடையாளப்படுத்த்ப்படுகிறாள். கணவன் மனைவியை அடித்து உதைத்து இம்சிக்கக்கூடாது. பெண். களை ஆண்கள் சமமாக நடத்தாவிட்ட்ால் அவர்களுடனேயே இருந்து சமைப்பதைத் தவிர்த்துச் சாத்துவீக முறையில் போராடிச் சமவுரிமை பெற வேண்டும். ' ' . . . . . . . . .
-84

'பெண்ணைத் துன்புறுத்தக்கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. இந்த விஷயத்தில் ஐரோப்பியப் பெண் விடுதலை முயற்சியிலிருந்து என் கருத்து வேறுபடுகிறது.பெண்ணைச் சம்பாத்தியம் பண்ணிப் பிழைக்கவிடக்கூடாது. பெற்றோரின் சொத்து மற்றும் கணவனின் சொத்தில் பங்களிக்க வேண்டும்' என்கிறார்.
இயல்பாகவே பெண்கள் மென்மையானவர்கள்; ஆணைச்சாராமல் அவர்களால் தனித்து வாழ முடியாது; அவர்களுக்குப் போதிய உடல் வலுவோ, திறனோ இல்லாததால் அவர்களால் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இயலவில்லை. மேலும் பிள்ளைப் பேறு அவர்களது உடற்பலத்தைக் குறைத்து விடுகிறது. உணர்வுக்கு அவர்கள் ஆடவரைச் சார்ந்திருக்கும் போது அவர்களால் அடிமைப் படுத்தப்படும் நிலை நேருகிறது.'
விலங்குகளிலும் பெண்ணினம் மென்மையானதாக இருக்கிறது. எனினும் விலங்கினம் அடிமைப்படுத்துவதில்லை. உலகில் உள்ள மாமிசப் பிராணிகளை எல்லாம் தாவர உண்ணிகளாக மாற்றிவிட்டால் கூட அவற்றுக்குப் போதிய தாவர உணவளிக்க முடியுமா என்பது ஐயம்தான். ஆனால் மனித இனம் சமமாக நடத்துவதன் மூலம் இன்பம் பெற எவ்விதத் தடையுமில்லை. ஆண், பெண் சமமாக நடத்தப்பட்டால் பாலின சமத்துவத் வரும். மகிழ்ச்சி பெருகும். குறையேதும் வராது என்கிறார் 'சந்திரத் தீவு' கதையில், துளசிபாயி எனும் இராஜபுத்திர கன்னிகையின் சரித்திரத்தில், சிவிகையில் வரும் துளசிபாயிடம் கொள்ளையடிக்க முற்படும் வழிப்பறிக்காரர்களிடமிருந்து அப்பாஸ்கான் மின்னலெனத் தோன்றி போரிட்டு அவளைக் காக்கிறான்.
"காத லொருவனைக் கைப்பிடித்தே - அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச் செய்துவாழ" என்னும் பெண்தான் வெளிப்படுகிறாள்.
பாரதி என்ற மனிதர் - சின்னஞ் சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டமனிதர்-சிறுபிராயத்திலேயே முதல் காதலைக் கொள்ள நேர்ந்த மனிதர்-எட்டையபுர ஜமீனின் அற்பங்களைக் காணச்சகியாத மனிதர்பெண்மையை மனைவியின் வடிவில் அறிந்த மனிதர், எது பெண்மை? இதுவோ? அதுவோ? என்றினங்காண முனையும் தேடலில் - பெண். செவ்வியப்புனைவாய்-கற்பிதமாய் வெளிப்படுகிறநிலை எழுத்துகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-85

Page 45
"உயிரைக் காக்கும்; உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மைஇனிதடா" என்றும், தண்மை, இன்பம், நற்புண்ணியம் சேர்ந்து தாயின் பேரும், சதியென்ற நாமும் கொண்டு,"துன்பம் தீர்ப்பது பெண்மை; கலியழிப்பது பெண்கள் அறமடா, கைகள் கோர்த்துகளித்துநின்றாடுவோம்' என்றார்.
"அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்" என்ற செவ்வியப்புனைவு - கற்பிதம் - பாஞ்சாலியாகவும் - அவள் வழி பாரத மாதாவாகவும் வெளிப்படுகிறது.
பாரதி என்ற பெண்ணியவாதியின் எழுத்துகளில் வெளிப்படும் பெண், பாரதி எனும் சமூகச் சீர்திருத்தவாதியின் எழுத்துகளில் வெளிப்படும் பெண், உரிமை உள்ளவள்; பெருமை மிக்கவள்; வேதமும் படைப்பாள், சாதமும் படைப்பாள்; அறிவை வளர்ப்பவள்; வையகத்தைப் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்குபவள்; கற்பை இருபாலாருக்கும் வேண்டுபவள்; பலியை அழிப்பவள்; விடுதலை பெற்றவள்; தேசிய இயக்கத்திலும், பொதுப் பணிகளிலும் பங்கு கொள்பவள்; குலத்து மாதர்க்கு இயல்பான கற்பைப் போற்றுபவள், விலகி வீட்டிலோர் பொந்தில் வாழப் பிரியமற்றவள், ஏத்தி ஆண் மக்கள் போற்றிட வாழ்பவள். உலக வாழ்வின் நுட்பங்கள் தேர்பவள், ஒதுபல நூல்வகை கற்பவள், நாற்றிசை நாடுகளுக்கும் சென்று புதுமைகளைக் கொண்டு வரத் தயங்காதவள், சாத்திரங்கள் கற்பவள், சவுரியங்கள் பற்பல செய்பவள்; மூடக் கட்டுகளைத் தகர்ப்பவள், மானடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க்கு இனிதாகச் சமைப்பவள், சாதாரண இந்து ஸ்திரிகளிடம் காணப்படும் பொய் நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது.
"அன்ன மூட்டிய தெய்வமணிக்கையின் ஆனைக் காட்டில் அனலை விழுங்குவோம்! காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே" என்று அப்பெண்ணியவாதியின் எழுத்துகளில் பெண், இன்று புதிதாய்ப் înDb356)JGTTTT5 (BBř LulạLDLDTa5(Positive Image) முன்னிறுத்தப்படுகிறாள். வற்புறுத்திப் பெண்ணைக்கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திட வேண்டும். கிழவர்கள் இளம் பெண்களை மணம்
-86

செய்தல் கண்டித்தற்குரியது. கன்னி விதவையரே மறுமணத்திற்குரியர் என்ற காந்தி கருத்து ஏற்கத்தக்கதன்று. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்றநிலை போய், மூன்று பெண் பெற்றால் முழுப்பரதேசி என்ற நிலையைத் தோற்றுவித்து விட்ட 'எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை போன்ற விவாகத் தொடர்பான ஆயிரத்தெட்டு ஊழல்கள் அகற்றப்படவேண்டும். பெண்டாட்டியைத் தன் சுயநலம், சந்தேகம் முதலியவற்றால் அடிமைப்படுத்த விரும்பும் ஆடவன் அதற்காகப் பெண் குலத்தையே அடிமைப்படுத்த விரும்பும் ஆடவன் அதற்காகப் பெண் குலத்தையே அடிமைப்படுத்தலாமா? ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் பெண்மையும் கற்பழிந்திடும். பூனாவில் அமையும் பெண்கள் சர்வகலாசங்கம் வரவேற்றற்குரியது. தாய்மொழியில் கல்வி அங்கு கற்பிக்கப்படும் பட்சத்தில் எண்ணி பத்தே ஆண்டுகளில் பெண்கள் ஆண்களைவிட அறிவுத் திறன்களில் வென்று மேலோங்கி விடுவர், ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளப்பட வேண்டும். பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை வலியுறுத்தலே, சந்திரிகையின் கதையை எழுதுகிறார். ருதுவாகு முன்னே பெண்ணுக்குமணமுடிக் கக் கூடாது. பெண்களை மேம்படுத்தும் செயல்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல் மாதர் தாமே முற்பட்டுத்தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
பூமண்டல முழுதும் பெண்ணைத்தாழ்வாகவும் ஆணைமேலாகவும் கருதிநடத்தும் முறைமை முற்றிம் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்தின் பிறப்பிடம்
ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ விடுதலைக்காதல் என்பது எல்லாம் பொய்மைக்காதல்; புவிமீது சுவைமிக்க பெண்மை நலந்துய்த்து, களவு இன்பம் நுகர விரும்பும் ஆடவர் கூறும் விடுதலைக்காதல் ஏற்றற்குரியதன்று என்று சமூகக் கேடுகளைச் சாடும் சீர்கிருக்தவாதியான பாரதியின் எழுத்துக்கள்,
"மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ? பாதிநடுக் கல்வியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே. காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத் தலைவர் போர்த் தொழிலைக் கருதுவாரோ"
-87.

Page 46
என்று ஆண்-பெண் மனங்கலந்து வாழும் நிறைவாழ்விற்கு தளமமைக்கின்றன.
பாரதி எழுத்துக்களில் பெண், புதுமைப்பெண்' எனும் மாற்று/ எதிர்ப்புக் கருத்தியலாக, சக்தி வடிவு எனும் ஆன்மீகப் புனைவாக கற்பிதமாக - கவிக்கு கவிதை நல்கும் காதலியாக, பெண்மை, புரிதற்கியலாத செவ்வியப் புனைவாக, பாரதி என்ற ஆணின் எழுத்துகளில், வலுவற்ற மெல்லியளாக, ஆணின் பாதுகாப்பிற்குரியவளாக, அவனது துணையாக, பாரதி என்ற பெண்ணியவாதியின், நேர்முக பெண்படிமமாக (Positive image) சீர்திருத்தவாதியின் திருத்தங்களுக்குச் செயல் வடிவம் தருபவளாகப் பன்முக பரிமாணங்களில் வெளிப்படுகிறாள்.
-88

பாரதிதாசனின் இயற்கைப் பாடல்களில் ஆண் - பெண் உறவு
பேராசிரியர்.க.பஞ்சாகம்
மனிதர்களின் அடிப்படைச் சிக்கல் சக மனிதர்களோடு உறவு களை உற்பத்தி செய்து கொள்ளுகிறதன்மையில் இருக்கிறது; இந்தச் சிக்கல் இன்னும் ஆழமாக ஆண் - பெண் என்ற பாலியல் வேறுபட்ட உறவில் வெளிப்படுகிறது; இந்தச் சிக்கலை எதிர் கொள்ளுகிற வரலாற்றுப்போக்கில்தான், இவர்களது உலகில் குடும்பம்,மதம், கல்வி, அரசு, கலை, இலக்கியம், முதலிய அதிகார நிறுவனங்கள் தோற்றம் பெற்றன எனக் கருதலாம்; இந்தக் கட்டுரையில் இத்தகைய ஆண் - பெண் உறவுச்சிக்கலின் விளைவுபாரதிதாசனாரின் இயற்கைப்பாடல்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பெண்ணியல் சிந்தனையின் அடிப்படையில் - விளக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பொருள்(அது எதுவாக இருந்தாலும்) இன்னொரு பொருளுடன் உறவு கொள்ள நேரும்போது, உருவாகிற முதல் சிக்கல் "அதிகாரச் சிக்கல்தான்"; அதாவது யார் ஆளுவது, யார் ஆளப்படுவது என்ற சிக்கல்தான்; இது ஆண்-பெண் உறவில் தீவிரமாக வெளிப்படுகிறது; பிரமாண்டமாக, எந்தவகையான மனிதப் பிடிக்குள்ளும் அகப்படாமல் சுழல்கிற இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் பெண். எனவே
பேராசிரியர்கபஞ்சாகம் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாகப் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார். தற்போது புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். “ஓட்டுப்புல் பஞ்சு" என்று புதுக்கவிஞராக அறிமுகமான இவர், தமிழ் விமர்சனத்துறையில் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தி வருகிறார். தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு “இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்" (2000), “சிலப்பதிகாரம்" , "சில பயணங்கள்" (2002) நவீனக் கவிதைகள், எடுத்துரைப்பியல் (2003), “தலித்துகள், பெண்கள், தமிழர்கள்" (2004) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசன் இயற்றிய பாடல்களில் “ஆண்-பெண் உறவு" எனும் இந்தக் கட்டுரை தலித்துக்கள், பெண்கள், தமிழர்கள் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
-89

Page 47
எதையும் எதிர் கொள்ளுகிற சக்தி அவளுக்குள் தீவிர நிலையில் இயங்குகிறது; ஆனால் ஆண் நிலை என்ன? இவன் இந்த மண்ணில் இவ்வாறு காலூன்றிக் கொள்ள வழியின்றி அந்தரத்தில் பாதுகாப்பற்ற ஒரு தளத்தில் தொங்குகிறான்; தனக்கு விதிக்கப்பட்ட இத்தகைய ஒரு இயற்கையான நிலையில் பாதுகாப்பைத் தேடும் உயிரின் அடிப்படை உளவியலுக்கு ஏற்பப் பெண்களோடு" அந்தச் சக்தியோடு ஒட்டி கொள்ள முயலுகிறான்; நிலம் போல மறுஉற்பத்தி செய்யும் ஆற்றலோடு கூடிய பெண், அவனையும் தன் சக்தி வளையத்திற்குள் பிடித்துப் போடுகிறாள்; ஆனால் உறவு உருவாக்கத்தில் எப்பொழுதுமே சக்தி குறைந்தவர்கள்தான் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். எனவே, ஆண் பொறாமை கொள்ளுகிறான்; கருப்பை நமக்கும் இல்லையே என்று வேதனை கொள்ளுகிறான்; விளைவு, ஒருவன் -ஒருத்தி என்கிற ஆணாதிக்கச் சமூக அமைப்பிற்கு வழி ஏற்படுத்தித் தரும் கருத்தாக்கம்' உருவெடுக்கிறது:பெண்" என்கிற பிரமாண்டமான இயற்கை சக்தி, இப்படி ஒருத்தி - ஒருவன்' என்கிற குடும்ப அமைப்பிற்குள் ஒடுக்கப்படுகிறது, மாபெரும் ஆலமரம் போன்சாய் மரமாக வேண்டிய இடத்திற்குத்துக்கிச்செல்லும் அளவிற்குச் சிறுமைப்படுத்தப்படுகிறது. ஆணாதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறது, சொத்துரிமைச் சமுதாயம் தோன்றிய பிறது, இது மேலும் அழுத்தமாக நிலைநிறுத்தப்படுகிறது.
பாரதிதாசன் இந்நூற்றாண்டின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் என்பதில் ஐயம் கொள்ள முடியாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு அவருடைய பிறபாடல்களில் (காதல், இயற்கை, தமிழ், கதைப்பாடல்கள்முதலியவற்றில்) மரபார்ந்த சிந்தனையின், மொழியின் திருவிளையாடல் காரணமாக அவருக்குள் இருந்த ஆணாதிக்கப் பார்வைகள் பதிவாகியுள்ன என்பதும் உண்மை. யாகும். சான்றாக கைம்மைப்பழி என்ற அவர் கவிதையைக் காட்டலாம்; விதவைப்பெண்ணை,வேரிற்பழுத்த பலா, குளிர் வடிக்கின்ற வட்டநிலா, பூஞ்சோலை,சீதாப்பூமாலை, நறுங்கனி, எழில்வீணை, தேன்குடம் என்று பலவாறு வர்ணிப்பதில் வெளிப்படுவது பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாகப் பார்க்கிற ஆண் பார்வையே ஆகும்; இங்கே பெண்ணை இயங்கைப்பொருளாக உருவகிப்பதுபோலவே, இயற்கைப்பாட்ல்களில் இயற்கைப் பொருட்கள் அனைத்தையும் பெரும்பாலும் தன்னுகர்வுப் பொருளாகிவட்ட பெண்ணாகவே உருவகம் செய்கிறார்.
"நீலமுக் காட்டுக்காரி M நிலாப் பெண்ணாள்" என்கிறார் (அழகின் சிரிப்பு, பா.எண்.42)
;ن-90سه

"நீயும் பெண்களும் நிகர்" என்று மயிலைப் புகழுகிறார்.
(பாரதிதாசன் கவிதைகள் ப. 52) 'நீல உடையினைப் போர்த்தே-அங்கு நின்றிருந்தாள் உயர் விண்ணார்' என்று விண்ணைப் பார்க்கிறார். . . . . (பா.க.ப.173) இன்னும் தென்றலை, மலர்க்காடுகளை, வானம்பாடியை, கடலை, குன்றத்தை, ஆற்றை" இருள்ை, திசைகளை" ஏன் பத்திரிகை. களையும்" கூடப் பெண்ணாகவே பார்க்கிறார்; இத்தகைய அணுகு. முறையில் வெளிப்படுவது பெண்தான் அழகுப்பொருள்; எனவே அவள் ஆண்களின் நுகர்வுப் பொருள் என்கிற ஆணாதிக்கப் புனைவுதான்" இப்படி எந்தப் பொருளையும் பாலியல் அடிப்படையில் பிரித்து அடை யாளப்படுத்துவதே ஆண்மையவாதம் (அ) லிங்கமையவாதத்தின் வெளிப்பாடுதான் எனலாம். V
இப்படி இயற்கையை அவளாகவும் தன்னை அவனாகவும் கொண்டு துய்க்கும் ஒரு மனோபாவத்தில் இயங்கி உள்ளது போலவே, பாரதி. தாசன் இயற்கை நிகழ்வுகளை ஆண் - பெண்ணின் கலவிக் காட்சி. யாகவே காண்பதையும் இனிக் காணலாம்,
1. "தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள் சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள்மேலும்" என்று சக்களத்தியாக உருவகம் செய்கிறார் தென்றலைLiras, 75. 2. "மலர்க்காட்டை ஏற்றிச்டிசன்ற வண்டியை மறந்தே னில்லை". கு.வி.ப.1
"தனியொருத்தி, வையத்துமக்கள் மகிழக் குரல் எடுத்துப் பெய்த அமுதம்" பா.க.ப.160 4. "பொன்னுடை களைந்து வேறே, புதிதான முத்துச்சேலை தன்னிடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள்" - அழகின் சிரிப்புபா.எண்.13. 5. மறைகின்றான் பரிதி-குன்ற மங்கையோ ஒளியிழந்து நிறைமூங்கில் இளங்கை நீட்டி , , ; , வாராயோ என அழைப்பாள்". சு.சி.பா.எண்.40 \ 6. "ஆற்றுத்தாய்நடக்கின்றாள். வையம், தழைக, தழைக என்றே" அசிபா.எ63 7. "கள்ளரை வெளிப்படுத்தும் இருட்பெண்ணே"அசிபா.எ.17 8. "கிழக்குப் பெண் விட்டெறிந்த கிளிச்சிறைப்பரிதிப்பந்து, அசிபா.எண் 77 9. i LusróES. IAT. 150
10. பெண்கள் "கொயயாப்பழக் கூட்டம் என்றே உரைப்பாய்" பா.க.ப.100.
-91

Page 48
இயற்கையின் ஒரு சுவடுதான் இந்த மனிதனும் மனுவியும்,ஆனால் நிமிர்ந்து நின்றதால் இவனது மூளைக்குள் ஏற்பட்ட வளர்சிதை மாற்றத்தினால் தன்னில் இருந்து வேறாய் இயற்கையை உணர்கிற - அறிகிற-பகுத்தறிவைப் பெறுகிறான்.இதுவே இவர்களுக்குவரமாகவும் சாபமாகவும் விளங்கிற்று என்பதுதான் மனித வரலாறு காட்டுகிற உண்மையாக இருக்கிறது.
இவ்வாறு தன்னில் இருந்துவேறாய் இயற்கையை உணர்கிற இந்த மனித உயிர், இயற்கைக்கு முன்னால் "பாதுகாப்பற்ற உணர்வால்" தவிக்கிற நிலையை அடைகிறது; பிரமாண்டமான இயற்கை ஆற்றலுக்கு முன்னால் காலத்தாலும் அளவாலும், இடத்தாலும் எல்லைக்கு உட்பட்ட மனித உயிர், தன் இருப்பிற்கான போராட்ட முயற்சியின் விளைவாக இயற்கையை வழிபடத் தொடங்குகிறது. அறவே முடியாது என்ற அனுபவமுடிவில் முற்றிலும் சரண் அடைகிறது, சரண் அடைவது மூலம் தனக்கான உளவியல் பலத்தைப் பெற்று விடுகிறது; அதனால் தான் ஆதிகால நாகரீகம் அனைத்திலும் சூரியனும் நிலவும் காற்றும் கடலும் நீரும் மண்ணும், விலங்குகளும் மரங்களும் வழிபாட்டுக்குரிய பொருளாக மாறுகின்றன; இவ்வாறு வழிபாட்டுச் சடங்குகள் மூலமாகத் தன் வாழ்க்கைக் காலத்தை நிரப்பிக் கொண்ட ஆதி நாகரீக மரபின் வளர்ச்சியாகத்தான் இயற்கையை "அழகுப் பண்டமாக" "இன்ப ஊற்றுக்கண்களாக" உணர்ந்து மகிழ்கிற மனிதர்கள் உருவானார்கள் அவர்கள் கலைஞர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள்; பயமுட்டும் பொருளைத் தனக்கு அழகுணர்வூட்டும் பொருளாக மாற்றிய ரசவாதத்தை'மனிதர்களின் உழைப்பும் அதனால்கிடைத்தஓய்வும்தன் சாதித்துக் காட்டியது.என எழுதுவார் கார்க்கி.
பாரதிதாசன் அடிப்படையில் ஒரு கவிஞர்; மேலும் கருத்து முதல்வாதிகள் போல, இந்த இயற்கையின் பேராற்றலை, மனிதர்களுக்குப் புரியாத புலன்உணர்வு கடந்த ஒரு மாயா உலகத்திற்குள் மடக்கிப் பிடித்துச் சுருட்டி வைக்கும் மொழிவிளையாட்டில் நம்பிகை அற்றவர்; மனித வாழ்வு பற்றிய தத்துவ வரலாற்றில் பாரதிதாசனை இன்பக்கோட்பாட்டாளராக அடையாளம் காணமுடிகிறது.
எத்தனை பெரிய வானம்
எண்ணிப்பார் உனையும் நியே இத்தரை கொய்யாப்பிஞ்சு
நீஅதில் சிற்றெறும்பே
92

அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித்தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே?
(அ.சி.பா.எ.83) இப்படி உலகைக்கொய்யாவாகவும், தன்னைச்சிற்றெரும்பாகவும், உணர்கிற கவிஞர்,இந்திய மரபின் சார்வாகக் கோட்பாட்டாளராகவும், கிரேக்க மரபில் எபிக்கூரியன் சிந்தனையாளராகவும் விளங்குகிறார். "முடிந்த அளவு உச்சநிலை மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்க்கையின் நோக்கம்" என்பது சர்வாகம்!
(செள. மதார் மைதீன், பாவேந்தரும் சார்வாகக் கோட்பாடும், ப.இ517)
இவ்வாறு உச்சநிலை மகிழ்ச்சியை மனிதர்கள் எங்கே அடைய முடியும்?ஆண்-பெண்கலவியில்தான் எனக் கருதுகிறார். எனவேதான் இயற்கையின் அழகைக் கொண்டாட வருகிற பாவேந்தர், இயற்கை நிகழ்வுகளைக் கலவிக் காட்சிகளாகவே வடிக்கிறார் எனலாம். தமிழ் தரும் இன்பத்தைக் கூட மங்கை தரும் இன்பத்தோடு ஒப்பிட்டுப் பேசியவர் கவிஞர்; இனி அக்காட்சிகளைக் காணலாம்.
இருளைப் பார்க்கிறார்; ஒரு பெண்ணாகத் தெரிகிறாள்;மண்முதல் விண்வரை அவள் உடல்; மலர்க்கண்; பின்புறம் கரிய கூந்தல், கொண்டையில் குளிர்நிலா வயிர வில்லையாக மின்னுகிறது; கவிஞர் நெஞ்சம்கலங்குகிறது; விளைவு மனைவியின் முன்போய் நிற்கிறது. (அசிபா.எ.118)
இதுபோலவே தென்றலையும் சக்களத்தியாய் உருவகிக்கிறார்; தென்றல், யாருக்கும் தெரியாமல் பின்புறமாய் வருகிறாள்; சிலிர்த்திடு மாறுநெருங்கிப்படுக்கிறாள்,கூந்தல்சரிகிறது;கரத்தால்தடவுகிறாள்; புரியாத இன்பத்தைப் புரிகிறாள் புரியட்டும் என்றே தென்றல் தரும் கலவிச் சுகத்தில் மிதந்து கிடக்கும் போது, மனைவி வந்து முன் நிற்கிறாள். ஒகோ! கட்டித் தழுவியவள் தென்றல் போலும்" என்கிறார் கவிஞர் (UIT.d5.U. 175)
கடற்காட்சிகளைப் பார்க்கிறார்; அங்கே ஒரு கலவி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது; கடல் கலைஞனுக்கு அந்தியும் நிலவும் இரு மனைவிகளாம்; சக்களத்திகளாய் ஒருத்திக்கு ஒருத்தி; காத்திருந்த கடல் கணவன், புறப்பட்டுவரும் சேதிநிலாவை வாரி அணைக்கிறானாம் நம்மையும் பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறார் கவிஞர்.
-93

Page 49
"அந்தியும் நிலவும் கடலின் இரு மனைவியர் சக்கள்த்திகளாம். அந்தி வாழ நடந்தது பீடழிந்தான் கடற்கணவன் வந்திடும் சோதிநிலவைக் கடல் வாரி அணைத்தனன் காண்பீர்!"
மற்றொரு இடத்தில், விண்ணைப் பெண்ணாகவும் நிலாவை வாலிபனாகவும் காண்கிறார் வான்மகளின் முத்துமாலையை இந்தநிலா மகன் கையால் இழுத்து, நாட்புறமும்கிந்தி, நட்சத்திரக்குப்பையாக்கினான் என்று வன்முறைப்பட்ட பாலியல் காட்சியைக் காட்டுகிறார்.
IIT.5.L. 173
மக்கள் நிலை' என்றபாடலில் சிட்டு, அணில் ஆகியவிலங்குகளின்
காதல் காட்சிகளை வர்ணிக்கிறார். கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளியாக இணை இரண்டும்.கரைந்து கலந்திடும் அணில்:கட். டத்தைக் காட்டி, அந்த உயிர்களின் காதல் உலகில் ஏச்சுக்கள் இல்லை அச்சம் இல்லை சதிக்கூச்சல் இல்லை, கொத்தடிமைத்தனம்' கொஞ்ச மும் இல்லை.இவை எல்லாம் மனித ஆண்-பெண் உறவில் இருக்கிறதே எனச் சுட்டிக் காட்டுகிறார்.
கஞ்சி பறித்தார் எழுங் காதல் பறித்தார் - கெட்ட வஞ்சகம் சேர்சின்னமானிடச் சாதிக் வாய்ந்த நிலை இதுவா" (பா.க.க.59) என்று இயற்கையான காம உறவை இழந்த மானுடவாழ்வின் அவலத்தையும் நெஞ்சில் நிறுத்துகிறார். பாரதிபோல இந்த இடத்தில் காவல், கட்டு, விதி, வழக்கு, சாத்திரம், சடங்கு, மந்திரம், மணி, தாலி, என்று ஏதுமற்ற ஆதிகாலக் காமப்புணர்ச்சியை அவாவுகிறார் பாவேந்தர்,
பனைமரங்கள் உச்சி எழுப்பும் சிரிப்பொலியை இப்படிப்பார்க்கிறார் கவிஞர்:
குட்டைப் பனைமரம் ஒன்றும் எழில் கவந்தல் சரிந்ததோர் ஈந்தும் மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப வார்த்தைகள் பேசிடும் போது, கட்டுக்கடங்கா நகைப்பைப்-பனை கலகலவென்றே கொட்டிற்றே"
UIT.d5. 1.172
س94

இது போலவே புறாக்களின் உயிருள்ள அழகிய மேய்ச்சலின் நடுவே காதல் விளையாட்டைத்தான் காண்கிறார். கவிஞர். அவர் வார்த்தைகளாலேயே அக்காட்சியைக் காணலாம்.
தலைதாழ்த்திக் குடுகு டெ ன்று
தனைச் சுற்றும் ஆண்புறாவைக் கொலை பாய்ச்சும் கண்ணால் பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பி தலைநாட்டித் தரையைக் காட்டி
"இங்குவா" என அழைக்கும் மலைகாட்டி அழைத்தாலுந்தான்
மறுப்பாத்ரோ மையல் உற்றா?
(அசிபா.எண் 100) சூரியன் மறைகிறான் குன்றக்குமரி முகத்தில் ஒளியிழந்தாளாம் - மூங்கில் கரம் நீட்டி "வாராயோ என் கணவா" என்று அழைக்கிறாளாம்
"மறைகின்றான் பரிதி - குன்ற மங்கையோ ஒளியிழந்து நிறை மூங்கில் இளங்கை நீட்டி: வாராயோ என அழைப்பாள்" (அ.சி.பா.எ.40) இவ்வாறு "பூமியின் கர்ப்பத்திலே" காணக்கிடக்கும் இன்பங்களை எல்லாம் கூட்டி எடுத்துத் தெளிவித்து இறுத்துக் காய்ச்சி எடுத்து உருட்டித் தரும் பாவேந்தரின் வாழ்க்கைக் கோட் பாடு இன்பக் கோட்பாடாகத்தான் வெளிப்படுகிறது. இவ்வாறு இயற்கைக்குள்ளும் ஆண்-பெண் பாலியல் உறவையே கண்டு இன்பம் கொள்ள மனித மனம் அவாவுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. மனித வரலாற்றை, ஒருவன் ஒருத்தி என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு முந்திய பகுதி. பிந்திய பகுதி என்று இரண்டாகப் பிரித்து விடலாம். ஒருவன் - ஒருத்தி என்று ஒடுக்கப்பட்ட மனிதப் பாலியலின் விளைவுதான், அனைத்தையும் ஆண் பெண்கூட்டங்களாகப்பார்க்கிறபார்வைதோன்றியதற்கான அடிப்படை எனலாம். குடும்பம், மதம், கல்வி, அரசு அதிகாரம் முதலிய சமூகக் கட்டுமானங்கள், ஆண்-பெண்பாலியல் ஒடுக்குமுறைதான் தங்களது இருப்பிற்கான ஆதாரம் எனக் கொண்டு செயல்படும்போது, பாலியல் தன்மை இப்படிப் பலவாறாக வெளிப்படுத்திக் கொள்ளுகிறது.
பாலியலை ஒடுக்க, ஒடுக்க, அது பலவாறு பல கோணங்களில் கிளை கிளையாய்த் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது என்கிறார்
-95.

Page 50
உளவியல் அறிஞர்ரீச் (பெண்ணெனும் படைப்பு, ப.65). எனவேதான்மற்ற உயிர்களுக்கு இப்பாலியல் கணநேரச்சிலிர்ப்பாகவும் குறிப்பிட்ட பருவம் சார்ந்ததாகவும் இருக்க, மனிதனுக்கு மட்டும் எந்நேரமும் எப்பொழுதும் இவனை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற ஒன்றாக இது வளர்ந்திருக்கிறது. மொழி உலகில் வாழும் மனிதன் இதை இன்னும் ஆயிரம் மடங்காகப் புனைந்து புனைந்து பெருக்கிக் கொள்கிறான். மனிதர்களின் மொழி ஆண்களுக்கான மொழியாக இருப்பதால், இவனுடைய இந்த வெளிப்பாட்டில், இவனுகுள் இருக்கும் ஆணாதிக்க மனப்பான்மை வெளிப்படுகிறது. அதனால்தான் பாவேந்தரின் இந்த இயற்கைக்காட்சிகளிலும் ஆண்மையப் பார்வை பெரிதும் புலனாகிறது இது பாவேந்தருக்கு மட்டுமல்ல, மரபார்ந்த மொழியைப் பயன்படுத்தும் யாருக்கும் விளைகிற விபத்துதான். இத்தகைய இடங்களில் மொழியைக் கவிஞர் கையாளுகிறார் என்பதைவிட, மொழி, கவிஞரைக் கையாண்டு விடுகிறது என்பதுதான் உண்மை.
இவ்வாறு ஆண் - பெண் உறவு அடிப்படையில் பாரதிதாசன் இயற்கைப் பாடல்களில் மூன்றுவிதத் தன்மைகள் அமைந்து கிடப்பதைக் காண முடிகிறது.
1. பாரதிதாசன் இயற்கைப் பொருட்களைப் பெரும்பாலும்
பெண்ணாகவே பார்க்கிறார்.
2. இயற்கைக் காட்சிகளைக் கலவிக்காட்சிகளாகக் காண்கிறார்.
3. இக்காட்சிகள்ை மொழிப்படுத்தும்போது ஆணாதிக்கப் பார்வை
அவர் அறியாமலேயே வெளிப்படுகிறது.
பயன்பட்ட நூல்கள் 1. பாரதிதாசன் கவிதைகள், சிதம்பரம், மணிவாசகர் பதிப்பகம் 1992 2. பாரதிதாசன், அழகின் சிரிப்பு, சென்னை, கங்கை புத்தகநிலையம்
1991
3. சாய்பு மரைக்காயர் (தொ) பாரதிதாசன் ஆய்வுக் கோவை,
சென்னை, கங்கை புத்தக நிலையம், 1990 4. க.பஞ்சாங்கம்(மொ.பு) பெண்ணெனும் படைப்பு, புதுச்சேரி, செல்வன்
பதிப்பகம், 1999
96

தமிழ் யதார்த்த நாவல்களில் ஒடுக்கப்பட்டோரின் நிலையும் மேம்பாடும்
இமையம்
தமிழ் யதார்த்த நாவல்களில் ஒடுக்கப்பட்டோரின் நிலையும் மேம்பாடும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதயில்: அதாவது இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாவல் என்ற வடிவம் தமிழுக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டு முடிந்துவிட்டது. அதனுடைய பிற்பகுதி, 1947-க்குப் பிறகு, இன்றைய காலக்கட்டம்வரை. இதுதான் என்னுடைய தலைப்பு
இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தமிழில் வெளிவந்த எல்லா நாவல்களுமே யதார்த்த நாவல்கள்தான். யதார்த்தத்தை மீறிய முறையில் கதை சொல்லும் முறையும் தமிழில் முயற்சிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த முயற்சிகளின் விளைவாக 1985 இல் வெளிவந்த தமிழவனின் 'ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்", சாருநிவேதிதாவின் "எக்சிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும், அவருடைய இன்னொரு நாவலான ஜீரோடிகிரி , ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' (1997), எஸ். ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' (2000), கோணங்கியின் பாழி, சம்பத்தின் இடைவெளி, ஆனந்தின் நான் காணாமல் போகும் கதை (2003) ஆகிய நாவல்களை சொல்லலாம். வழக்கமான முறையிலிருந்து விலகி நின்று வாழ்க்கையைப் பார்த்தலும், பதிவு செய்தலும் என்ற போக்கு ஆங்கில படிப்பின் மூலம் பெறப்பட்டது. முயற்சிகள் நகல் செய்வதில் சென்று முடிவடைந்தது. யதார்த்தத்தை மீறிக் கதை சொன்ன முறை இந்த மண்ணோடு ஒட்டவில்லை.
இமையம் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். எண்பதுகளுக்குப்பின் அறிமுகமானவர். இவரது கோவேறு கழுதைகள் எனும் நாவல் பரவலான கவனத்தைப்பெற்றது. இவர் எழுதிய கட்டுரை "ஒருக்கப்பட்டோர் இலக்கியம்" எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. " ;
-97

Page 51
சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றைய காலம் வரை (1947- 2004) தமிழில் வெளிவந்த நாவல்களில், வாழ்க்கையை நேர்மையான முறையில் பதிவு செய்த நாவல்கள், சமூக நோக்கு, இலக்கியத்தரம், புதிய வித்தியாசமான முயற்சிகள், கொள்கை கோட்பாடுகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல்கள், சூழலின் காரணமாக உத்வேகம் பெற்று எழுதப்பட்ட நாவல்கள், எழுதுகிற பழக்கம் கைகூடிவந்த காரணத்தினாலேயே உருவான படைப்புகள் என்று பார்த்தோமானால் ஆண்டுக்குப்பத்து என்று கொண்டால்,560 நாவல்கள் வெளிவந்திருக்க வேண்டும். வந்திருக்கும். இவற்றுள் பல்வேறு காரணங்களுக்காக முன்னுரிமை கொடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு நூறு நாவல்களை பரிந்துரைக்க முடியுமா? அதிலும் சமூகத்தின் பெரும்பான்மையான, உழைக்கிற, நிஜமான உயிருள்ள மொழியைத் தங்களிடம் கொண்டுள்ள ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பற்றி, அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி, அவர்களுடைய கலைகள், விளையாட்டுகள், சடங்குகள் பற்றியெல்லாம் அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல்கள் என்று பார்த்தோமானால் அதனுடைய எண்ணிக்கை யின் அளவு மிகவும் சொற்பமே.
இருபதாம் நூற்றாண்டின்பின்பகுதிபலவகைகளில் முக்கியமானது. வரலாற்றிலும் இந்தப் பகுதி மிகவும் கவனிக்கப்பட வேண்டியபகுதி குறிப்பாக நாடு சுதந்திரமடைந்தது, நகர்மயமாதல், பரவலான கல்வி வாய்ப்பு, தொழில்மயம், இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு:நடுத்தரபடித்த வர்க்கம் உருவாதல், தகவல்தொடர்பு, அரசியல் கட்சிகள், அதிகார மாற்றம், என்று சமூகத்தின் மொத்தப் பகுதியையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. எல்லாவற்றையும் விட, வேலை இல்லாத சாதி என்று ஒரு பிரிவு உருவாதல், இப்படி நம்பமுடியாத அளவுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வாழ்க்கைமுறை மாறியுள்ளது. இந்த அரை நூற்றண்டுக் காலத்தில் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களைப் படைப்பாளிகள் எப்படிப் பார்த்துள்ளார்கள். யார் சார்பாக நின்று படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் மீது எவ்விதமான பார்வையை வைத்துள்ளார்கள் என்பதை ஆராய் வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
அரைநூற்றாண்டுக் காலத்தில் வெளிவந்த நாவல்களில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பதிவு செய்த விதம், நோக்கம்பற்றி பத்து பக்கங் களுக்குள் எழுதுவது என்பது இயலாத காரியம். காலப்பகுதி மிகவும் அதிகம், ஆனால்இங்கே எனக்கோ வழங்கப்பட்டிருக்கும் காலம்மிகவும் குறைவு கிடைத்த நேரத்தில் ஒவ்வொரு நாவல்பற்றியும் ஒரு அறிமுகம்
-98

மட்டுமே செய்யமுடியும். அதைத்தான நானும் செய்திருக்கிறேன். விடுபட்ல்கள் இருக்கலாம். அதேமாதிரி, இலக்கியம் என்பது என்ன என்பது போன்ற கேள்விகளுக்குப் போகாமல், நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுவது சிறந்தது என்பதனால், நான் நேரிடையாக நாவல்களைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.
சுதந்திரத்திற்கு முன்பு எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பெரும்பான்மையோர் உயர்குலத்தவர்களே. அவர்கள் பதிவு செய்த வாழ்க்கை முறையும் அவர்களுடைய வாழ்க்கைமுறையைத்தான். ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, மக்களைப் பற்றிக்கரிசனத்துடன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நம்மில் ஒருவர் வாதிடலாம். அப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. எப்படி எழுதியிருக்கிறார்கள் என்றால் வண்டி ஒட்டிகளாக, எடுபிடி வேலை செய்பவர்களாக, வேலைக்காரர்களாக, இப்படித்தான். ஒரு படைப்பில் இடைச்செருகல்கள் மாதிரி வந்துபோகிற பாத்திரங்கள். இலக்கியப் படைப்பில் அவர்களுக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருக்காது. ஆனால் இந்நிலை படிப்படியாக மாற்றம் கண்டுள்ளது. சமூகத்தின் அசிங்கமான, கீழான, விலக்கிவைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியத்தில்நாயக நாயகி அந்தஸ்து பெற்றார்கள். அவர்களுடைய வாழ்க்கையே முழுப் படைப்பாக உருவாக ஆரம்பித்தது. அப்படி உருவாகிவந்த நாவல்களைப் பற்றி இனி காணலாம்.
பொதுவாக ஒரு மனிதனையும், அவனுடைய குடும்பத்தையும், அக்குடும்பத்தின் - குடும்ப நபர்களின், இயல்புகளையும் அந்தந்த எழுத்தாளரின் அனுபவத்திற்கேற்ப, மொழி ஆளுமைக்கேற்ப எழுதிவந்த தமிழ் நாவல் உலகம் அவ்வப்போது தடம்மாறிப் போவதும் உண்டு. இயல்பானமுறையில் இல்லாமல் தனிமனித மேன்மைகளை துக்கங்களை, பொதுதுக்கங்களாக சமூகத்தின் பொதுவான மேன்மைகளாகக் கருதி, சமுக அக்கறையுடன் 1947 க்குப் பிறகு எழுதப்பட்ட நாவல் தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும்' (1957), இந்த நாவலில்தான் முதன்முதலாக ஆலை வருகிறது, தொழிலாளர்கள் வருகிறார்கள், போராட்டம் வருகிறது. முதன் முதலாகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்குமான முரண்பாட்டையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று நினைக்கிறேன்.நாவலில் வரக்கூடியமுக்கியப் பாத்திரங்கள்மணி, சங்கர், ராஜீ. இவர்கள் மிகவும் எளியவர்கள். அன்றாட்ப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக ஓயாமல்போராடுகிறவர்கள். நாவலாசிரியர் யார் சார்பாக நின்று பிரச்சினைகளை பார்க்கிறார் என்பதற்கு 293 ஆம் பக்கம் வருகிறவரிகள்நமக்கு உதாரணம்'
الناس.

Page 52
அரசாங்கமோ அவர்களது கோரிக்கைகளுக்கும் மனுக்களுக்கும் எந்தவிதமான மதிப்பும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமோ, நிவாரணத்திற்கான உத்தரவாதமோ அளிக்க முன்வரவில்லை. எனவே கிட்டியிட்டு நெருக்கும் வாழ்க்கைக் கஷ்டங்களை தாங்க முடியாமல், கடைசியாக தங்கள் உரிமைக்காக போராடத் தீர்மானித்துவிட்டார்கள். வேலை அல்லது நிவாரணம். நூல் கொடு அல்லது சோறு கொடு.
1957-இல் இன்றைய அளவுக்குத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் இல்லை. அப்போதே தொழிலாளர்களின் நிலையையும் போராட்டத்தையும் முதன்மைப்படுத்தி எழுதியுள்ளது வியப்பாக இருக்கிறது. நாவலின் இறுதியில் வரக்கூடிய வரிகளும் சிந்திக்க வைப்பதாக இருக்கின்றன.
அந்த ஊர்வலத்துக்கு ஆதரவாக பல தெருக்களிலிருந்தும் மக்கள் வந்து குழுமி, ஊர்வலத்தோடு செல்லத் துவங்கினார்கள்.
பல்வேறு சிற்றாறுகளைத் தன்பால் இழுத்துச் சேர்த்து, மகாபிரவாகமாகப் பரிணமித்து செல்லும் ஜீவநதியைப் போல, அந்த ஊர்வலம் கணத்துக்கு கணம் பலம் பெற்று விரிவடைந்து கொண்டேயிருந்தது.
(Ludö 31,5)
சேர்ந்தே நலம் பெறுவோம். சேர்ந்தே வலிமை காட்டுவோம்' என்பதுதான் நாவலின் மையக்கருத்தாக இருக்கிறது. இதுதான் நாவலாசிரியரின் பார்வையைக் காட்டுகிறது.பஞ்சும்பசியும் நாவல் ஒரு ஆலை நிர்வாகத்திற்கும் உழைப்பாளிகளுக்குமிடையிலான உறவையும் சிக்கலையும் முன்வைக்கிறது என்றால், டி.செல்வராஜின் மலரும் சருகும்' (1967) என்ற நாவல் கிராமப்புறங்களில் தங்களுடைய வாழ்வின் ஆதாரமாக வைத்துள்ள சிறு சிறு துண்டு நிலங்கள் பறிபோவதைக் காட்டுகிறது, நிலம் நிலத்தோடு சேர்கிறது. பிக்கலும் பிடுங்கலும், வறுமையும் பிணியும், பிணியோடு சேர்கிறது. மாடாசாமி என்கிற கிழவனின் குடும்பத்தினர் நிலத்தை இழந்து, கூலிகளாக எப்படி மாறுகிறார்கள் என்பதுதான் நாவல். மாடாசாமியின் மகனுடைய மகளை, மகனுடைய மகனுக்குக் கொடுக்க, பையனுடைய படிப்பு செலவிற்காக நிலம் அடமானமாகிறது, நாவலின் முடிவில் நிலமும் கைவிட்டுப் போகிறது. பேத்திக்கும் பேரனுக்கும் திருமணமும்
-100

நடைபெறவில்லை. இன்றைய படித்த இளைஞர்களின் உதாரண. மாகத்தான்மாடசாமிக்கிழவனின்மகள் வயிற்றுப்போரன் இருக்கிறான். அவன்ால்தான் அந்தக் குடும்பமே நிலைகுலைந்துபோகிறது.நாவலின் முடிவில், அவசர காரியங்களுக்கு பணம் கொடுத்து நிலங்களைப் பறித்துக்கொண்ட, முறையான கூலியைக் கொடுக்காத பண்ணை. யாருக்கு எதிராக கிராம மக்கள் திரண்டு வந்து போராடுகிறார்கள். பஞ்சும் பசியும் நாவல் ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையை முன்னிறுத்தியது என்றால் மலரும் சருகும் நாவல் விவசாயக்கூலிகளின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. இந்த இரு நாவல்களும் சமநிலையற்ற நம்முடைய சமுதாயத்தின் இரண்டு முக்கியமான பகுதிகளை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
இதே காலகட்டத்தில் அதாவது 1969 - இல் வெளிவந்த நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை இங்கே குறிப்பிடவேண்டும். இந்தியாவின் தலை சிறந்த பத்து நாவல்களில் இதுவும் ஒன்று' என்று க.நா.சுப்பிரமணியத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட நாவல் இது. ஒரு செட்டிமார் குடும்பம் படிப்படியாகச் சீரழிந்து ஊரைவிட்டு வெளியேறுகிறது. திரவி' என்கிற இளைஞனின் பாத்திரத்தின் வழியாகத்தான் மற்றப் பாத்திரங்கள் அறிடுகப்படுத்தப்படுகிறார்கள். மொத்த நாவலும் அந்த ஒரு பாத்திரத்தைத்தான் பிரதானப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் மதிப்பும், பொருளும் பெற்று செல்வாக்குடன் இருந்த குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளில் எப்படிக் கீழிறங்கி பிழைப்புத் தேடி ஊரைவிட்டு வெளியேறுகிறது என்பதை அக்கறையுடன் சொல்கிறார், நீல. பத்மநாபன். இந்த நாவலோடு "பஞ்சும் பசியும்' நாவலையோ, மலரும் சருகும்,நாவலையோ பிறகு'நாவலையோ ஒப்பிட முடியாதது மட்டுமல்ல; கூடாது என்பதுதான் எனது எண்ணம். தலை முறைகள் நாவல் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை மட்டுமே பிரதானப்படுத்துகிறது. பிற நாவல்கள் உழைக்கிற, சுரண்டப்படுகின்ற வஞ்சிக் கப்பட்ட ஒரு சனத்திரளின் கதையை அல்ல, அவல வாழ்க்கையை முன் வைக்கின்றன. இந்த இடத்தில் சுமதியின் கல்மண்டபம் (2001) என்ற நாவ்லைக் குறிப்பிட வேண்டும். பிராமணர்களிலேயே தாழ்த்தப்பட்ட வர்களான செவண்டிப் பார்ப்பனர்களைப் பற்றியது. இவர்கள் பிணம் துக்குபவர்கள். வீட்டுக்குள் அனுமதிக்கப்படாதவர்கள், பிற சமூகத்தின. ரால்,பிராமணர்களிலும் தீண்டாமை உண்டு, கீழ் அடுக்கில் உள்ளவர்கள் உண்டு, என்று காட்டுவதற்காக எழுதப்பட்ட நாவல் இது இந்த நாவல் வருகின்ற காலம் கவனிக்கத்தக்கது. சூழலைப் பயன்படுத்திக் கொள்ள எழுதப்பட்ட நாவல்களை நாம் அடையாளம் காணவேண்டும்.
10.

Page 53
ஒடுக்கப்பட்டோர்மீது பிறருக்குப்பற்றுதல் உண்டு; ஆனால் பரிவு இல்லை. இது மாதிரியான நாவல்கள் வெறுப்பு என்பதுமானிட வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைத் தொடர்ந்து நிலைநிறுத்த முயல்கின்றன. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை வரையறுக்கப்பட்டதாக, முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மாதிரி வேதனையும் துக்கமும் கொண்ட வேறு ஒரு இனம் உண்டா?
1976 இல் வெளிவந்த கிராஜநாராயணனின் கோபல்ல கிராமம்' நாவலைபலகாரணங்களுக்காக முக்கியமானதாகக் கருத வாய்ப்புண்டு. பிழைப்பைத் தேடி ஒரு இன மக்கள் ஒரு இடத்திலிருந்து இடம் பெயர்ந்து பிறிதொரு இடத்தில் குடியமர்தல் என்பது மனித இனத்தின் முக்கியமான நிகழ்வு. இதில் தனி மனிதப் பெருமைகள், சிறுமைகள், சுகம், துக்கங்களுக்குப் பதிலாக, ஒரு குழுவின், கூட்டத்தின் போராட்டம், நம்பிக்கை, வாழ்வை எதிர்கொள்ளும் விதம், எல்லாமும். அடுத்த தலைமுறையினருக்குத் தரப்பட வேண்டிய முக்கிய ஆவணம், வரலாறு அந்த வகையில் கோபல்ல கிராமம்-இன்றையநாடோடி இனமக்களின் வாழ்வை ஆவணப்படுத்த நம்மை அழைப்பதாக இருக்கிறது.
அசோகமித்திரனின் தண்ணீர் (1973) நாவல் நம்முடைய கவனத்திற்குரியது. சென்னையில் நடுத்தர எளிய மக்கள் அன்றாடம் படுகின்ற, தினசரி எதிர்கொள்கிற, வாழ்வைச் சொன்ன நாவல். சுதந்திரத்திற்குப்பிறகு பெருமளவில் உருவானநகர்ப்புறங்களில் உள்ள, நடுத்தர சமூகத்தின் கடைநிலைப் படிகளில் உள்ள மக்கள் படுகிற பாட்டைச் சொன்ன நாவல் இது.முக்கியமாகப் பெண்கள் படும் அவலம், பகட்டோ அலங்காரமோ இல்லாமல் வாழ்வைப்பதிவுசெய்த நாவல் இது. ஒடுக்கப்பட்டோரின் படைப்பிலக்கியம் என்றாலே அதில் தவறாமல் இடம்பிடிப்பது பூமணியின் பிறகு (1979) நாவல். சாதிய அடுக்குகளில் மிகவும் கீழான நிலையிலுள்ள தெலுங்கு மொழி பேசும் சக்கிலியக் குடும்பத்தை இலக்கியமாக்கியது மிகவும் முக்கியமானது. நாவலின் முக்கியப் பர்த்திரங்கள் அழகிரி, ஆவுடை தமிழிலக்கியத்தில் மாடு அறுக்கும் சக்கிலியும் சக்கிலிச்சியும் கதாநாயக நாயகி அந்தஸ்து பெற்றது இந்த நாவலில்தான். இந்த நாவல்தான் தமிழ்ச்சூழலில் யார் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற கேள்வியை முதன் முதலாகக் கேட்டது. நம்முடைய சமூகம் பிறப்போடு சாதியையும், வாழ்கிற இடத்தையும் இணைத்த சமூகம். ஒவ்வொரு ஒடுக்கப்படுகிற இனமும், அதன் கீழ் அடுக்கிலுள்ள இனத்தைக் கூச்சமின்றி ஒடுக்குகிற் சமூகம் நம்முடையது என்பதை வெளிப்படையாகச் சொன்ன நாவல் இது பிறகு
-02

-நாவல் தமிழில் பல நாவல்கள் உருவாக ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த வரிசையில் 1985-இல் வெளிவந்த கு. சின்னப்பப் பாரதியின் சங்கம்'நாவலும் முக்கியமானது. மலையை நம்பி வாழ்கிற, மலையோடு தங்களுடைய வாழ்வை இணைத்துள்ள ஆதிவாசி மக்கள், எப்படி மலையிலிருந்து, அவர்களுடைய உடைமையிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சங்கம்நாவல், வியாபாரிகள், தந்திரக்காரர்கள், அரசாங்கத்தால், குறிப்பாக வனத்துறையினர் என்கிற மிருகங்களால், மலைவாழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதும், இறுதியில், மலைவாழ் மக்கள் ஒரு அமைப்பாக திரண்டு தங்களுடைய சொத்தான மலையை, இயற்கையைமீட்கப் போராட, ஊர்வலமாகச் செல்கிறார்கள் என்பதுதான் நாவலின் மையம், நாவலில் 332 - ஆம் பக்கம் வருகிற வரிகள் இந்த உண்மையை நமக்கு சொல்கின்றன.
மலைமக்கள் - காரணமின்றி அவர்களுடையநிலங்களைப் பிடுங்கப்படுவதற்கு எதிராகப் போராடுகிறார்கள். பயிரிடப்பட்ட நிலம் எங்களுக்குச் சொந்தமானது. படர்ந்து வளர்ந்த இந்தச் சோலை எங்களுக்கு உரிமையானது. அது பறிக்கப்படவோ அழிக்கப்படவோ பார்த்திருக்கமாட்டோம்.
அந்த மலையில் முதல்முறையாக சத்தியத்தின் குரல், தர்ம ஆவேசத்தின் உஷ்ணமூச்சு, ஆத்ம ஆவேசத்தின் ஒலி நாதம், உரிமைப் பிரகடனத்தின் ஓங்கிய குரல் எழுந்து இடி முழக்கமென எங்கும் கிடுகிடாய்த்தது.
(U.233)
கு.சின்னப்பப்பாரதியின் தாகம்' என்கிறமற்றொருநாவல் கூலிகளின் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. கிராமப்புற உழைக்கிற கூலிகள்நிலச்சுவான்தார்களிட்ம்படுகிறகேவலமான அடக்குமுறைகள், கூலி உயர்வுக்காக நடத்தப்படுகிற போராட்டம், ஒன்று சேர்கிற இளைஞர்கள் என்று அந்த நாவல் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது.நாவலின் முன்பகுதி மிகவும் சிறப்புவாய்ந்தது. பின்பகுதி அவர் சார்ந்திருந்த இயக்கத்திற்காக எழுதப்பட்டதுபோல் இருக்கும். கொள்கைகள் ஒரு இலக்கிய படைப்பை உருவாக்க முடியாது.
பெண்களுக்கு மனம் உண்டு என்ற எண்ணம் மகாபாரத காலத்தி. லிருந்த ஆண்களுக்கும் சரி, இன்றைய காலத்து ஆண்களுக்கும் சரி, இருப்பதாகத் தெரியவில்லை. நம்முடைய சமூகம், மொத்த ஒழுக்கத்
-103

Page 54
தையும் நேர்மையையும் கட்டுப்பாட்டையும் பெண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கிற சமூகமாக இருக்கிறது. உதவியற்ற நிலையில் மட்டுமல்ல, உதவியை எதிர்பார்க்க முடியாத, உதவியைப் பெற முடியாத நிலையில் இருப்பவர்கள் பெண்களே. இதற்கு நல்ல உதாரணம் ப.சிவகாமியின் 'ஆனந்தாயி (1985). சமூகத்தின் அடித்தளத்தில் பறையர் சமூகத்தில் வாழ்கிற பெரியண்ணன், அவனுடைய மனைவி ஆனந்தாயி, அவனுடைய கூத்தியான்லெட்சுமி என்றுநாவல்பின்னப்பட் டிருந்தாலும் கிராமப்புறப் பெண்கள்படுகிற மொத்த அவலமும் நம் கண். முன் வருகிறது. "உங்களுக்கு நான் எப்படி சொல்வேன், ஒரு பொம்பள அழகோ, அழகில்லியோ அதுவேற சமச்சாரம். தனியா இருந்திட முடியுமா?இருக்க விட்டு விடுவார்களா?பட்டாத்தாங்க தெரியும்" (ப.278) இந்த வாக்கியம் இன்றைய ஒவ்வொரு பெண்ணின் வாயிலிருந்தும் வெளிவரக்கூடிய வார்த்தையாக இருக்கிறது.நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவள், படிக்காதவன், உயர்ந்த நிலையிலுள்ளவள், ஒடுக்கப்பட்ட இனத்திலுள்ள பெண் யாராக இருந்தாலும் இதுதான் அவர்களுடைய நிலை. அவலம், சமூகக் கேவலம்."
நாவலில், நான்குமாத கர்ப்பிணியாக்கிவிட்டு ஓடுகிற ஆள், மனைவி இருக்கும்போதே வேறு. ஒருத்தியுடன் உறவு கொள்ளும் ஆண்கள், சகஜமாக வருகிறார்கள். வாழ்கிறார்கள். ஆனந்தாயி எதிர்கொண்ட்தைப் போலவே அவளுடைய மக்களும் எதிர்கொள்கிறார்கள்.லெட்சுமி மாதிரியான் பெண்களும் நிறையவே இருக்கிறார்கள். ஒடுக்குதல் என்றநிலையில் எந்த இனத்துப் ப்ெண்ணும் விதிவிலக்கல்ல. கொள்கை, கோட்பாடு, கோஷம், ஊர்வலம் போராட்டம் என்ற எந்த விளம்பரப் பலகையும் இல்லாமல் கிராமப்புறம் பண்களின் வாழ்வை அழகாகச் சொன்னநாவல் ஆனந்தாயி. இதேமாதிரிபழையன கழிதலும் (1989) கவனத்திற்குரியது. அதே நேரத்தில் அவருடைய 'குறுக்குவெட்டு' (1999) நாவல் ஒற்றைத்தன்மையில் எழுதப்பட்டத் ஒன்று அதை நாம் எளிதில் புறக்கணித்துவிடலாம்.
ஆனந்தாயி வெளிவந்த அதே ஆண்டு, 1985 -இல் வெளிவந்த ஜெயகாந்தனின் அந்த அக்காவைத்தேடி'என்ற நாவல், பெண்களின் உலகத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. ஒன்று நகர்ப்புறத்துப் பெண்கள். மற்றொன்று, கிராமப் பெண்கள். இரண்டு பெண்களும் சந்திக்கும் பிரச்சினைகள் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஜெயகாந்தனின் படைப்பில்வரும் பெண்கள் படித்தவர்கள். வேலைக்குச் செல்கிறவர்கள். தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.ஆனந்தாயி - நாவலில் வரும் பெண்கள் படிக்காதவர்கள். ஆண்களை நம்பி
-104

இருப்பவர்கள். இந்த இரு நாவல்களோடு ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள் நாவலையும் சேர்க்கலாம்.
உப்பளத் தொழிலாளிகளை, குறிப்பாகப் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கரிப்புமணிகள் நாவல், வெளியானபோதே பரந்த அளவில் வரவேற்பு பெற்றது. உப்பளத்தில் அன்றாடம் பெண்கள் படுகின்ற பாட்டையும், உழைப்பையும், வியர்வையையும், உழைப்பு பறிபோவதையும், தனிமனித நிலையில் இல்லாமல், ஒரு கூட்டத்தின் துக்கமாக, உழைப்பாக, ஏக்கமாகப் பதிவாகியுள்ளது. அரைகுறை சம்பளத்திற்கு வேலை செய்கிறநிலையில், ஊதிய உயர்வு கேட்தற்காக வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்க நினைக்கும் நிர்வாகம், இது தொடர்பாக போராட்டம் என்று நாவல் விரிந்துள்ளது. நாவலின் பக்கம் 237, 238களில் வருகின்ற வரிகள் இதை உறுதி செய்கின்றன.
சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்? அந்தக் கூட்டம் தேரிக்காட்டில் அவளைத் தொடர விரைந்து ஓடுகிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஓட்டமும் நடையுமாகப் போகிறாள்.
இந்த அம்மை யார்? ஆண்டாண்டு காலமாக வெறும் பாவைகளாக, பூச்சிகளாக அழுந்தி இயலாமையின் சின்னங்களாக இருந்த சக்தியின் ஆவேச எழுச்சியோ. உழைப்பைக் கொடுத்தும் உணவு கிடைக்காத சராசரி மனிதர். களுக்கும் கண்ணுக்குத் தெரியாமல் ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் பணக்கார வர்க்கத்திற்குமிடையிலான போராட்டத்தை வலியுறுத்துவதற்காகவே எழுதப்பட்ட நாவல்தான் கரிப்புமணிகள்.
மகாபாரத காலத்திற்கு பிறகு வந்த பெளத்த காலத்தில், பெளத்த ஜைன இலக்கியங்களில் வைசிய வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுத்தது மட்டுமல்ல, கதைத் தலைவன் சத்திரியனாக இருக்க வ்ேண்டுமென்ற மகாபாரத காலத்திய நடைமுறை மறைந்து, நல்லவ. னாகவும் நல்லவனுக்கு மகனாகவும், கதைத் தலைவர்கள் படைக்கப்பட்டனர். இந்நிலை தமிழில் 1950க்குப் பிறகு மெல்ல மறையத்தொடங்கியது எனலாம். வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டோரின்நில்ை என்னவென்று இதற்கு முன் எப்போதாவது கேட்கப்பட்டதுண்டா? இன்று கேட்கப்படுகிறது. கேட்கிற குரலும் தனிக்குரலாக இல்லாமல் கூட்டுக்குரலாகக் கேட்கிறது; உயிர்த்துடிப்புடன். இது காலத்தின் தேவை. காலத்தின் அழைப்புக்குநிறையபேர் செவிசாய்த்தார்கள் என்றாலும் ஒரு சிலரை மட்டுமே இங்கக் காணலாம்.
-105.

Page 55
சமூகத்தில் சராசரிக்கும் கீழ் சராசரிகளாக, எந்த மதிப்பு மற்றவர்களாக, இழிசனர்களாக இருந்தவர்களை நாவலில் பிரதான பாத்திரமாக்கும் முயற்சி பெருமளவில் 1970-க்குப் பிறகுதான் நடந்தது எனலாம். இதற்கு நல்ல உதாரணங்களாக ஜீநாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே (1974) நாவலையும், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவனையும், "சினிமாவுக்குப் போன சித்தாளையும், ஜீ நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலையும் குறிப்பிடலாம். இந்த நான்கு நாவல்களிலும் வரக்கூடியவர்கள் பொய் பேசுகிறவர்கள், பொய்ச்சாட்சி சொல்கிறவர்கள், கூட்டிக் கொடுப்பவர்கள், உடலை விற்பவர்கள், ரிக்ஷா ஒட்டுபவர்கள், கிளி ஜோசியக்காரன், சித்தாள். மொத்தத்தில் சமூகத்தின் பார்வையில் மட்டமானவர்கள். கீழ் தட்டு வகையறாக்கள், பிளாட் பாரம்கள், இவர்களுடைய ஒருநாள் பொழுது போவது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படிப் போகிறது என்பதை மிகுந்த அக்கறையுடன் சொன்ன நாவ்ல்கள் இவை. இந்தக் கரிசனம்தான் ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுகிறது.
உன்னைப்போல் ஒருவனின் கிளிஜோசியக்காரனோடு கூடிய சித்தாளுக்கும், நாளை மற்றுமொரு நாளேயில் ஆள் பிடித்துவரச் சொல்லிச் சோரம்போன லட்சுமிக்கும், குறத்தி முடுக்கில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் உடலை விற்கும் பெண்களுக்கும், (குறிப்பாக தங்கம் ரிப்போர்ட்டருடன் இணைந்ததற்கும்) தி.ஜானகி. ராமனின் அம்மா வந்தாளில் வரும் - அம்மா, கணவனை விட்டு வேறு ஒரு உறவு கொண்டதற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சோற்றுக்காக விபச்சாரம் செய்தவற்கும், திமிரால் விபச்சாரம் செய்வதற்கும் வித்தியாசமில்லையா? நாளை மற்றுமொரு நாளே நாவலில் பக்கம் 14 இல் ஒரு உரையாடல். ' ' ' ... " .
'ஏதோ சிரிச்சிப் பேசி வெளையாடுற பிள்ளயா. வேணுமின்னுட்டு ஒரு கிராக்கிசொல்லச்சின்னியே என்று தனது வெற்றிக்குமுத்தாய்ப்பு:தேட முனைந்தாள்மூக்கனின்மனைவி அந்தகிராக்கி எங்கேயும் ஓடிடாது. காலேலே எட்டு ஓம்போது மணிக்கி அந்த அய்யர் சந்தக் கடைக்குக் கறி காய் வாங்க வருவாரு அவரநாளைக்கே பாத்திடலாம்"
சமூகத்தின் கீழ்த்தளத்திலுள்ளவர்களும் நாயகம் நாயகி அந்தஸ்து பெற்றார்கள்.நிறைகுறைகளோடு இந்தப்போக்கு தமிழிலக் கியத்தின்போக்கை மட்டுமல்ல முகத்தையும் மாற்றியமைத்தது. இந்த மாற்றங்களால் தமிழில் வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு
sàAK

ஒடுக்கப்பட்ட பிரிவினர் தங்களுடைய இன அடையாளத்தோடு பகிரங்கமாக எழுதத்தொட ங்கினார்கள். 1985க்கு பிறகுதான்தங்களை வருத்தும் சாதியக் கொடுமை, மதக் கொடுமை, வறுமை, சாதிய உள்முரண்கள், தாங்கள் சந்தித்த இழிவுகள், அவமானங்கள் த்தையும் இலக்கியங்களாக்கினர். இந்த இலக்கியங்களின்
படையான தன்மைக்காகவே அதிகப்படியான வரவேற்பைப் பெற்றது. இந்த வரவேற்பு நிறையப் பேரை எழுதத் தூண்டியது. இதற்கு நல்ல உதாரணம் பாமாவின் கருக்கு, சங்கதி, வன்மம்' (2002), ராஜ் கெளதமனின், சிலுவைராஜ் சரித்திரம் (2002), சேர்தர்மனின் துர்வை' (1996), ரீதரகணேசனின் வாங்கல், சந்தி (2001), முகமது மீரானின் 'கூனன் தோப்பு' (1993), துறைமுகம் (1990), அழகிய பெரியவனின் திட்டு' (2001) போன்ற நாவல்களை சொல்லலாம். முகமது மீரானின் படைப்புகள் கடலோரவாழ் மக்களின் அன்றாத அல்லல்களை நயம்பட பதிவு செய்தவைகள்.
. பாமாவின் கருக்கு நாவலும், ராஜ் கெளதமனின் சிலுவை ராஜ் சரித்திர மும் ரீதரகணேசனின் வாங்கல்' நாவலும் மதக் கொடுமைகளை உயிரோட்டத்துடன் விவரிப்பவை நெருப்பென சுட்டுப் பொசுக்கும் சாதியக் கொடுமையிலிருந்து மீள்வதற்காக கிருத்துவ மதத்திற்கு மாறுகிறவர்கள், கிருத்துவ மதத்திற்குள் இருக்கும் சாதியப்பிடுங்கல்களை, இழிவுகளை, சந்திக்க நேரும்போது எதிர்கொள்கின்ற சங்கடங்களைப் பார்த்து அல்ல, கேட்டு அல்ல, தன்னுடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழிவுகளை எல்லாம் பாமா கருக்கு நாவலில் பதிவு செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களை இழிவு படுத்துவதில் எந்த மதமும் சளைத்தது அல்ல என்பதைத்தான் கருக்கு நாவல் மூலம் நாம் அறிகிறோம். சாதியக் கொடுமையிலிருந்து மீள்வதற்காக மதம் மாறியதாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்குரிய இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் படுகின்ற அவஸ்தையைத்தான் நாம் சிலுவைராஜ் சரித்திரத்தில் பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட இன்த்துப் பெண்களைச் சீண்டுவதில் எல்லா மதத்துச் சாமியார்களும் ஒன்றுதான் என்பதை நிருபிக்கிறது ரீதர கணேசனின் வாங்கல் நாவல்.
கிராமப்புறங்களில் கால்காணி, அரைக்காணி நிலத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், உதிரிசாதியினர், நகர்மயமாதல் என்ற விஷக்கண்ணியில் சிக்கி நிலங்களை இழந்து, நகரத்தில் தினக்கூலிகளாக, சாக்கடை ஒரவாசிகளாக மாறி வருகிறார்கள், என்பதைப் பெருமாள் முருகனின் "ஏறுவெயிலில்" (1996) பார்க்கிறோம்.
-107

Page 56
நாவலின் தொடக்கத்திலேயே மணி என்ற நாயின் மூலம் விவசாய நிலங்கள் வீட்டுதமனைகளாயின என்பதை நுணுக்கமாக பதிவு செய்துள்ளார்.
யாருடைய மடியில் குழைந்து விளையாடினாயோ, அவர்களில் இப்போது யாரும் இல்லை. நீ எந்த வீட்டு வாசலில் படுத்து கொண்டு சர்க் என்ற சத்தம் வந்ததும் குறைத்தாயோ, அந்த வீடுகள் இப்போது ஆளரவமற்றுவிட்டன. பாழடைந்து நிற்கின்றன. சோறு போடவும் ஆளில்லை
(L.2)
இந்த இருபது ஆண்டுகளுக்குள் விளைநிலங்களில் குறைந்தது 5 சதவிகிதமாவது வீட்டுமனைகளாகிவிட்டன என்பது உண்மை, முன்பு அந்தநிலங்களை நம்பி வாழ்ந்த குடும்பங்களின் இன்றையநிலை என்ன என்பதுதான் நெருப்பாகச் சுட்டுப் பொசுக்ககிறது. இதுதான் பெருமாள் முருகனின் மற்றொரு நாவலான நிழல் முற்றம்' (1993). சமூகத்தின் எதிர்காலம் என்று நம்பப்படுகின்ற சிறுவர்களைப் பற்றியது. சிறுவர்களின் உலகம் என்பது இன்றைக்கு தரிசு நிலமாக மட்டுமல்ல, கருகிப்போன உலகமாகவும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம், சினிமாக் கொட்டகையில் சோடா, முறுக்கு, டி, வறுகடலை விற்கிற சிறுவர்களையும், சினிமா போஸ்டர் ஒட்டுகிற சிறுவர்களையும் பார்க்கிறோம். பெரியவர்களாகிய நாம் சிறுவர்களைப் பல விதங்களில் உதவி என்ற பெயரில், அபாயகரமான செயல்களில் ஈடுபடுத்துகிறோம் என்பதை நிழல்முற்றம் நாவல்கண்ணாடி மாதிரிநமக்குக் காட்டுகிறது. இதே ஆசிரியருடைய "கூளமாதாரி" (2000) என்றநாவலும் சிறுவர்களின் உலகத்தை சித்திரமாக்கிக் காட்டுகிறது. நாவல் முழுவதும் சிறுவர்களுக்கு இணையாக ஆடுகளும் வருகின்றன. தனித்தனிப் பெயர்களுடன் தனித்தனி அடையாளங்களுடன், விசித்திரம்தான். தெலுங்கு மொழி பேசுகிற சக்கிலிய இனச் சிறுவன் பண்ணையாளாக, கவுண்டர் குடும்பம் ஒன்றுக்கு ஆடு மேய்க்கப் போகிறான். அந்தச் சிறுவன், ஆடுகள், காடுகள் என்று விரிகிறது நாவல். தமிழககிராமங்களில் ஆடு மாடு மேய்க்கும் ப்ண்ணையாளாக வேலை செய்கிற சிறுவர்களின் ஒருமாதிரிதான் 'கூளமாதாரி' நாவல். நம்முடைய கட்டளைப்படி நாம் வைக்கிற மரம் வளர்க்கிறதா? மரமோ, செடியோ,கொடியோ? அதனுடைய குண இயல்குளக்கு ஏற்றபடிதான் வளரும். இந்தப் புரிதலைக் குழந்தைகளிடம் நாம் காட்டுகிறோமா? தன்னுடைய ஆண்டைமகனுக்காக உயிரை விட்டுவிடுகிற கூளையன் இப்போதும் என் கண்முண்ணே நிற்பதுபோல் இருக்கிறது.
-108

இந்த வகையில் 1996 - இல் வெளிவந்த சோ. தர்மனின் துர்வை' நாவலும் நம்முடைய கவனத்திற்குரியது. உருளைக் குடி என்ற கிராமத்தில் சிறு விவசாயிகளாக இருந்தவர்கள், மழை இல்லாமல் விவசாயம் சீர்கெட, படிப்படியாக கிராமவாசிகள் நகரத்தை நோக்கிகுறிப்பாக தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு எப்படிப் போகிறார்கள் என்பதையும், தொழிற்சாலைக்குள் சிக்கி எப்படிச் சீரழிக்கிறார்கள் என்பதையும் மிகுந்த வலியுடன் விவரிக்கிறது நாவல். நரகத்தில் பிச்சைக்காரர்கள் பெருகி வருவதையும் சொல்கிறது. சமூகத்தின் ஒரு முகம் இப்படி என்றால், மற்றொரு முகம், பிணத்தைப் புதைப்பதற்கு இடம் கேட்டு, பிணத்தை எடுத்துச் செல்ல வழிகேட்டுப் போராடுகிறது. செங்கொடி ஏந்துகிறது. ரீதர கணேசனின் வாங்கல்' (2001) நாவலில் இதைக் காண்கிறோம். பிணத்தைப் புதைக்க இடமில்லாமல் தவிக்கும் ஒரு இனம் வேறு எங்காவது இருக்குமா?
ஒடுக்கப்பட்டவர்களிலேயே ஒடுக்கப்பட்டவர்களாக, கீழ்மத்தரமாணவர்களிலேயே கீழ்த்தரமானவர்களாக ஒட்டுமொத்த சமூகமும் பார்த்து முகஞ் சுளிக்கும் மனிதர்களும் இம்மண்ணில் உண்டு. அவர்கள்தான் அரவாணிகள். அரவாணிகளின் துயர வாழ்க்கையை இலக்கியமாக்கிய பெருமை சு.சமுத்திரத்தைச் சாரும். அவருடைய வாடாமல்லி நாவல்தான் அரவாணிகளையும் மனிதப் பிறவிகளாகப் பார்த்த நாவல். மிகவும் மனிதாபிமானத்தோடு பாத்திரங்கள் உருவாக்கப் பட்டிருக்கும். இந்த நாவலை அடியொட்டி அரவாணிகளை மையப்படுத்திப் பல படைப்பு முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டு தோற்றுப் போனத வரலாறு. அதில் இரா.நடராஜன் எழுதிய 'மதி என்னும் மனிதனின் மரணம் குறித்து என்ற சிறுகதை, அரவாணிகளை மேலும் இழிவுப்படுத்திய ஒன்றாகும். வெறும் தகவல்களை, வாய்வழிச் செய்திகளை வைத்து எழுதப்பட்ட படைப்பு அது தெருவில் போகும்போது அரவாணிகளைப் பார்த்து பகடி செய்யக்கூடிய மனிதர்களில் இரா.நடராஜனும் ஒருவர்தான் என்பதை அந்தச் சிறுகதையே சொல்லும்,
சு.வேணுகோபாலின் 'கூந்தப்பனை நாவலை நாம் ஓர்ளவு பொருட்படுத்திப் பேவ வாய்ப்புண்டு. பணத்தாசையின் காரணமாக வெளிநாடு செல்வதற்காக நிலத்தை அடமானம் வைத்து அல்லல்படுகின்ற சிறு விவசாயக் குடும்பத்தின் சீரழிவைச் சொன்ன நாவல் அது. இந்த வரிசையில் பெயர்ப்பட்டியலாகச் சேர்க்கக்கூடியநாவல்பாமாவின் வன்மம் (2002). இது பறையர்களுக்கும் பள்ளர்களுக்குமான மோதலை மையப்படுத்திப் பேசுகிறது.
- 109

Page 57
இதுவரை சொல்லப்பட்ட நாவல்களிலும் சரி, காலத்தின் அவசியம் கருதி சொல்லப்படாமல் விடுபட்ட நாவல்களும் சரி, எழுதுதல் என்ற அதிகாரம், கெளரவம் போன்றவற்றை பெறுவதற்காக எழுதப்பட்ட படைப்புகள் அல்ல என்று சொல்ல முடியும். மேலே குறிப்பிடப்பட்ட நாவல்களின் கதைக்களன்களும், பாத்திரங்களுமே சாட்சிகள்.
இந்த57ஆண்டுகாலத்தில் வெளிவந்தநாவல்களை தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு வியப்பை அளிக்கக்கூடிய பல விசயங்கள் தெரியவருகின்றன. மார்க்சிய இயக்கத்தோடு தொடர்புடைய எழுத்தாளர்கள் மட்டுமே பொதுப் பிரச்சினைக்குப் போராடுவது என்ற முடிவோடு நாவலை முடித்துள்ளார்கள். இதற்கு உதாரணங்களாக பஞ்சும் பசியும், மலரும் சருகும், சங்கம், தாகம், வாங்கல்,கரிப்புமணிகள் -இந்த எல்லா நாவல்களின் முடிவும் ஒரே முடிவுதான். அது ஊர்வலமாக - போராட்டக்களமாக முடிகிறது. இவைகளைத் தவிர வேறு எந்த நாவலும் நிர்வாகத்திற்கு எதிராக, பண்ணையாருக்கு எதிராக, சாதி அமைப்புக்கெதிராக, குறைந்த கூலிக்கு எதிராக, சமூக அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாக, போராட்டத்தில் இறங்கியதாக பதிவுகள் இல்லை. மாறாக சமூக இழிநிலையை படம் பிடித்துக்காட்டின. பெரும்பாலான நாவல்கள் தனிமனித நிலையிலிருந்து, ஒரு குடும்பத்தின்நிலையிலிருந்துமட்டுமே சமூகத்தை பதிவு செய்துள்ளன. போராட்டத்திற்குரிய குரல் இவைகளில் இல்லை என்று சொல்லமுடியாது.இவர்கள் முனக மட்டுமே செய்துள்ளார்கள்.
சுதந்திரத்திற்கு முன் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கும், அதற்கு பிறகு எழுத வந்தவர்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. எழுத்தாளர்கள் மட்டுமல்ல. எழுது பொருள்களுக்கும் வேறுபாடு இருப்பதை மிக எளிதாக உணரமுடியும். இப்போது எல்லாரும் எழுதுகிறார்கள். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கதை மாந்தர்களாகின்றனர். இது இன்றைய காலத்தின் தேவை மட்டுமல்ல வரலாறும் கூட் இன்றைய தமிழ் இலக்கியத்தின் முகம் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமாக இருக்கிறது.
சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றைய காலம்வரை வந்த எல்லா வகையான் நாவல்களையும் தொகுத்துப் பார்க்கும்போது நம்முன் எழுகிற கேள்வி, இலக்கியப் படைப்பு என்பது இன்றைய அரிப்பைத் தீர்க்கிற ஒன்றான்ன்பதுதான்.அதோடு பெரிய வெற்றிடம் இருப்பதையும் காணலாம்.நம்முடையநாவல்கள். முந்தைய சமூகம் பற்றி, வரலாறுகள் பற்றி வாயைத் திறக்கவில்லை என்பது வியப்பளிக்கிறது. தமிழ்ச் சமூக
-11Թ

வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லையா, செய்துவைத்த பானையைப் போன்றிருந்ததா என்ற கேள்வி, எழுகிறது. நம்முடைய படைப்பாளிகளுக்கு முந்தைய சமூகத்தை, வரலாற்றை இன்றைய பார்வையிலிருந்து அலசி பார்க்கும், இன்றைய வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் அறிவுகூர்மை ஏன் இல்லாமல் போனது - என்பது நம்மைக் கவலை கொள்ளவைக்கிறது.நம்முடைய மூதாதையர்களின் வாழ்வை, வரலாறுகளை நாம் ஒரு சமூகச் செயல்பாடாக அறிந்து கொள்ளாமல் புள்ளி விவரங்களாக மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய நிலை அவமானத்திற்குரியது. பிற மொழிகளில் இந்த நிலை இல்லை என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
தெலுங்கு மொழியில் வெளிவந்த கொடிவண்டிகண்டி குடும்பராவ் எழுதிய படிப்பு (1970) என்ற நாவலில், ரீனிவாசன் என்பவன் படிக்கச் செல்கிறான்.காலம் 1930. அப்போதுவெள்ளையரின் ஆட்சிக்கெதிராக பல்வேறுபோராட்டங்கள் நடக்கிறது. ரீனிவாசன் மட்டுமல்ல, அவனோடு பயிலும் பல மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். சிறை செல்கின்றனர். பல மாணவர்களுடைய படிப்பு வீணாகிறது. ரீனிவாசனின் படிப்பும் பாதியில் நின்றுவிடுகிறது. அவனுடைய படிப்பை மட்டுமே நம்பியிருந்த குடும்பம் நடுத்தெருவுக்க வருகிறது. அந்த ஒரு குடும்பம் மட்டுமல்ல, பல குடும்பங்கள் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றன. நாவல் மையப்படுத்துவது சுதந்திரப் போராட்டக் காலத்தில் பள்ளி கல்லூரி, மாணவர்களுக்கிடையே நிலவிய சூழலை மட்டுமல்ல, அன்றைய சமூகத்தையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது மாதிரியான நாவல் தமிழில் உண்டா?சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் (2000) என்ற நாவல் உண்டு. அந்தநாவல்தகவல்களை மட்டுமே தன்னுடைய பலமாக எண்ணி எழுதப்பட்டுள்ளது. தகவல்களை அறிய நாவலைப் படிக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு சமூகவியலாளனுக்கும் படைப்பாளிக்குமான வேறுபாடு என்ன? இக்கேள்விகளுக்கு நாம் பதில் தர வேண்டியவர்களாக இருக்கிறோம். மார்க்சியசித்தாந்தம், இயக்கம் நம்முடையமண்ணில் வேர் ஊன்றி வெகுகாலமாகிவிட்டது. அந்தத் தத்துவம் இந்த மண்ணில் ஏற்படுத்திய மாற்றம் பற்றி, அதனால் உண்டான இயக்கங்கள் பற்றி கலாபூர்வமாக உருவான படைப்பு ஒன்றைக்கூட என்னால் அடையாளம் காட்டமுடியவில்லை. பிற மொழிகளில் நல்ல சான்றுகள் கிடைக்கவே செய்கின்றன. உதாரணத்திற்கு பூதநாத் பாதுரி 1986 - இல் எழுதிய 'விடியுமா? என்ற தெலுங்கு நாவலையும், மகாசுவேதா தேவி எழுதிய "1984. இன் அம்மா என்ற வங்க மொழி நாவலையும் குறிப்பிடலாம்.
- 11

Page 58
தமிழ் மொழியில் ஒடுக்கப்பட்டோரைப் பற்றி போதிய அளவுக்கு யதார்த்தநாவல்கள் வந்திருந்தாலும் மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரபிள்ளையின் தோட்டினியின் மகனை (1944) போன்றோ காட்டில்உரிமை'(1975)நாவலைப் போன்றோ நம்மிடம் இல்லை என்பது வெட்கத்திற்குரியது. முண்டா மக்கள் கலகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. காட்டில் உரிம்ை' நாவல். நம்முடைய மண்ணில் கலவரங்களே இல்லையா? ஒரு ஆவணத்திற்காக, சோலை சுந்தர பெருமான் எழுதிய செந் நெல்' என்ற நாவல் கிழ் வெமணிப் படுகொலையை மையப்படுத்திய நாவல் என்று சொல்லலாம்.
பழைய வரலாறுகளை இன்றைய பார்வையில் அணுகிய படைப்பு என்று நாம் எதைச் சொல்ல முடியும்? அப்படிப் பார்க்கிற பார்வையே தமிழில் இல்லை. கன்னடத்தில் வெளிவந்த மாஸ்தி வெங்கடேச. அய்யங்கார் எழுதிய 'சிக்க வீரராஜேந்திரன்' (1974) போன்ற நாவலை தமிழில் அடையாளப்படுத்துவது கடினமே. மலையாள மொழியில் வந்த பொற்றெக்காட்டின் விஷக்கன்னி (1980) போன்ற நாவல்கள் ஏன் நம்மிடம் இல்லை?
தமிழ் யதார்த்த நாவல்களில் ஒடுக்கப்பட்டோரைப்பற்றி பதிவு செய்தவர்கள் என்ற வகையில் மட்டுமே, நம்முடைய எழுத்தாளர்களை நாம் கெளரவிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் நாவல்களில் பல, சமூகத்தின் ஒரு பகுதியை பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்தவை என்பதைத் தவிர வேறு தகுதிகளற்ற நாவல்கள். ஒடுக்கப்பட்டோரின் பல முகங்களை, அந்த மக்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வலியோடு, அவஸ்தைகளோடு, கொந்தளிப்புகளோடு, நிர்க்கதியான, அவலமானநிலையோடு எழுத வேண்டியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் போலவே பரந்து விரிந்த தளத்தில் எழுத வேண்டும். எந்தக் கோட்பாட்டுக்குள்ளும், சட்டகத்திற்குள்ளும் பொருத்தாமல் எழுத வேண்டும். எழுத முடியும் என்று நம்புவோம்
- 12

பாடசாலைக் கல்வியில் பால்நிலை கருத்துக்களை உள்வாங்குவதன் அவசியம்
சாந்தி சச்சிதானந்தம் அறிமுகம்
இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. SSS SSS S
எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதியபாடவிதானங்கள்அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக் கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது கையாளுகின்றது.
பால்நிலை என்றால் என்ன?
மனிதர்கள் தங்கள் இனப்பெருக்கத் தேவைகளின் காரணமாக ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருப்பதை நாம் பால் என்னும் பதத்தினால்
சாந்தி, சச்சிதானந்தம் பெண்ணிலைவாதச் சிந்தனையாளரும் செயற்பாட்டாளரும் ஆவர்: "விழுது" நிறுவனத்தின் தவிசாளராக சமூக அபிவிருத்தி வேலைகளில் முனைப்புடன் செயற்படுகிறார்.
இக்கட்டுரை அகவிழி மார்ச் 2006 இதழில் வெளியானது.
-113

Page 59
குறிப்பிடுவோம். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் பொருந்துவதாகும். அனேக உயிரினங்களுக்கு மத்தியிலும் ஆண் உயிரினம் பெண் உயிரினம் எனப் பால் வேறுபாடுகளுள்ள இனங்கள் உண்டு.
ஆயின், பால்நிலை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமாகும். "பால் சமூகத்தில் வகிக்கின்ற நிலை" பால்நிலை என்று பொருள் கொள்ளலாம். சமூகமயமாக்கலினால் உருவாதலினால் பால்நிலை என்பது மனிதர்கள் மத்தியிலே மட்டும்தான் காணப்படுகின்றது. ஆண்கள் வீரமுள்ளவர்கள், தைரியசாலிகள், அறிவு பூர்வமானவர்கள் என்பதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் தலைவர்களாக வருவது பொருத்தமாகும் என்று தற்சமயம் நிலவும் பால்நிலைக் கோட்பாடு கருதுகின்றது. அதேபோன்று பெண்கள் மென்மையான சுபாவம் உடையவர்கள், அழகானவர்கள், நாணம் கொண்டவர்கள், இலகுவாக அச்ச மடைவார்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள், கற்பு உடையவர்களாக இருக்கவேண்டியவர்கள்,சிந்திக்கும் ஆற்றல்குறைந்தவர்கள் என்று இக் கோட்பாடு எடுத்தியம்புகின்றது.
ஆறுதலாக இருந்துபால்நிலை ஆணுக்கும். பெண்ணுக்கும் விதிக்
கும்.குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தோமானால், அவையெல்
லாமே ஆண்களுக்குக் கீழே அடங்கி வாழ்ந்து அவர்களின் வெவ்வேறு உடல் தேவைகளைத் தீர்த்து வைக்கவும்: அவர்களுக்கேயுரிய வாரிசுகளைப் பெற்றுக் கொடுக்கவும் உகந்தவர்களாகப் பெண்களை உருவாக்குவதே அதன் நோக்கம் என்பதை உணரலாம். அழகு
அடக்கம், கற்பு வீட்டுக்குரியவள் போன்ற கருத்துக்களெல்லாம் இதனை விளக்குகின்றது.
பால் என்கின்ற உயிரியல் வேறுபாட்டிற்கும் பால்நிலைக்கும்
நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றனவாயினும் உயிரியல் இயல்பு
களுக்குச் சற்றும் பொருந்தாத வகையிலும்பால்நிலை உருவாக்கப்
படலாம். இதற்கு உதாரணமாக, தாய்மை என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையில்வகிக்கவேண்டியமுக்கியபாத்திரம் என்று பொதுவாகவே சமூகம் வலியுறுத்துவதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது உயிரிய ரீதியாகவும் பெண்களுக்குப் பொருந்துவதாகும். இயற்கையும் இனப் பெருக்கத்தின் முக்கிய பங்குதாரராகப்பெண்களைப் படைத்ததனால் பெண்களின்உடல்அங்கங்களையும் வாழ்க்கைவட்டத்தினையும்.அதை மையப்படுத்தியே உருவாக்கியிருப்பதை நாம் காணலாம். இங்கு பால்நிலை என்பது பால் என்பதுடன் பொருந்துகின்றது.
- 14
 

ஆனால் அதே சமயத்தில், கணவன் ஒருவனால்தான் பெண்ணுக்கு வாழ்வு கிட்டுகின்றது என்று பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஒரு ஆணின் மீது தங்கி நிற்கும் பாத்திரமாகச் சித்தரிக்கின்றது. ஆனால் உயிரியல் ரீதியாக, ஒரு பெண் ஆணின் மீது தங்கிநிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லையாகும். இனப் பெருக்கத்தில் கருக்கட்டலில் மட்டும்தான் ஒரு ஆண் பங்கு வகிக்கின்றான். அதன் பின் குழந்தையைப் பெற்று வளர்ப்பதிலெல்லாம் இயற்கை ஒரு மனித ஆணுக்கு எந்தவிதமான பாத்திரத்தினையும் வழங்கவில்லையென்பதே உண்மையாகும். இதற்கு மாறாக, துரக்கணாங்குருவி போன்ற சில பறவை இனங்களை எடுத்துக் கொண்டால், கூடு கட்டுவதிலிருந்து குஞ்சுகளைப் பராமரிக்கும் வரையில் அந்த ஆண் பறவைகள் இயற்கையாகவே பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, மனிதர்களைப் பொறுத்தவரையில் இது முற்றுமுழுதாக சமூகத்தினால் உருவகப்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். பால்நிலை உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?
மனித சமுதாயத்தை முன்னோக்கித் தள்ளுவதற்கு இரண்டு வகையான நடவடிக்கைகள் வேண்டும். ஒன்று உற்பத்தி, மற்றது இனப் பெருக்கம் (உற்பத்தி, மீளுற்பத்தி என மார்க்சியவாதம் இதனை விளக்குகின்றது). இது இரண்டும் நடந்தால்தான் மனிதர்கள் தங்கள் உடலின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தமது இனத்தையும் தொடர்ந்து இந்தப்பூமியில் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த இரு அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதுதான் சமூகமயமாக்கலின் நோக்கமாகும். அந்த ஒழுங்கின் வழியேதான் ஒவ்வொரு விதமான சமூகங்களும் தோன்றின. தவிரவும் ஒவ்வொரு கால்கட்டத்திற்கும் மனித சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறையும் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றது. பார்க்கப்போனால், உற்பத்தி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்ற முறையில்தான் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டது. உற்பத்தி ஒழுங்கமைக்கப்படும் முறை பொருளாதாரக் கட்டமைப்பாக இருக்க, மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறை அக்காலத்தின் பால்நிலை உறவுகளாயின.
இதை மேலும் விளக்குவதற்கு ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலம் உற்பத்தியை ஒழுங்கமைத்த முறையையும் அதற்கேற்ற மீளுற்பத்தி தன்னை ஒழுங்கமைத்த முறையையும் நாம் உதாரணங்களினூடாகப்
- 15

Page 60
பார்க்கலாம். ஆதியில் பொதுவுடைமை வழங்கியிருந்த காலம், கூட்டுற்பத்தி முறைகளும் அதைக் கொண்டு நடத்தத் தேவையான கூட்டுக் குடும்ப முறைகளும் பரவியிருந்தன. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி ஒரு தார மணம் என்பது தெரியாத காலமாகவும் இருந்தது. எனவே, கற்பு போன்ற நாம் இன்று பெண்களுக்கேயுரியது என்று அறிந்திருக்கின்ற பண்புகளை மனிதகுலம் அன்று அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
இக்காலகட்டத்திற்குப்பின்னர், தனியுடைமை தோன்றியது. ஆண் கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில்லாதவர்களாக நடமாடித் திரியும் சுதந்திரம் பெற்றதனாலே தனியுடைமை அமைப்பின் கீழ் அவர் கள் சொத்துக்களை உழைக்கும் வசதிபெற்றவர்களாக மாறினார்கள். சமூகத்தில் அவர்கள் ஆதிக்கமும் ஓங்கியது. தாம் சேர்த்த சொத்துக்களுக்கான வாரிசுகளைத் தரும் கருவிகளாக பெண்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இதனால், தனியுடைமையுடன் ஒருதார மணமும் தோன்றியது. ஒரு தார மணத்துடன் பெண்கள் சமூகத்தில் தாம் வகித்த உயரிய அந்தஸ்தினை இழந்தனர்.
ஆண்டான் - அடிமை உறவு கொண்ட சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், உலகமயமாக்கம் என உலகின்பொருளாதாரக் கட்டமைப்பு மாறி வந்திருக்கின்றது. இந்த ஒவ்வொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏற்றது போல ஆண்களினதும் பெண்களினதும் சமூகப் பாத்திரங்கள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. எங்கு பெண்கள் பொருளாதார உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தார்களோ அங்கெல்லாம் அவர்களின் நிலை சற்று உயர்ந்த அந்தஸ்து உடையதாக இருந்ததைக் காணலாம்.
பால்நிலை உறவுகள் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன?
பால்நிலை என்பது இயற்கையால் அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதனால் அதனைக் காலம் காலமாக தக்கவைத்துக் கொள்வதற்கு மனிதர்கள் பெரும் பிரயாசைகளை எடுக்க வேண்டியிருந்தது. ஒரு சந்ததியினருக்கு ஒரு முறை மூளைச்சலவை செய்தால் போதாதே. ஒருவருடைய வாழ்நாளில் அவர் என்றும் மாறாதிருக்க தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்பதுடன், அவ்வாறே ஒவ்வொரு சந்ததியினருக்கும் செய்து கொண்டு வரப்பட வேண்டும்,
-116

இதற்காக மதக்கோட்பாடுகளையும் சம்பிரதாயச்சடங்குகளையும் உருவாக்கினார்கள் இவற்றின் மூலம், இந்த உலகத்தில் நிலவும் பால்நிலை உறவுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டதுஎனநிலைநாட்டினர். சிறு வயது முதல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வளர்க்கும் முறைகளில் இத்தகைய உறவுகளை வலியுறுத்தினர். பெண்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கான ஆற்றல்களை தம்முள் வளர்த்தெடுத்துக்கொள்ளும் சகல வாய்ப்புக்களும் அவர்களுக்குநிராகரிக்கப்பட்டன. உதாரணமாகக் கல்வி அவர்களுக்குப் பல காலமாக நிராகரிக்கப்பட்டு வந்தது. நடமாடும் சுதந்திரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு வெளியுலகம் தெரியாதவர்களாக வளர்க்கப்பட்டார்கள். அரசியலில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயகம் தோன்றிய நாடுகள் பலவற்றில் அங்கிருந்த அடிமைச் சமூகம் போலவே பெண்களையும் பிரஜைகள் என்றுகூட அந்த அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்களுக்கு மூளை என்ற அங்கம் இல்லை என்றுகூட சாதித்த விஞ்ஞான ஆய்வுகள் ஆண்களினால் செய்யப்பட்டன. யாரும் ஒரு பெண் ஒரு கொஞ்சம் வேறுபாடான நடத்தையைக் கொண்டாளாயின் ஈவிரக்கமின்றி அவள் கொலை செய்யப்பட்டாள். கல்லெறிந்து கொல்லப்படுகின்றதும் உயிருடன் கட்டி வைத்து தீ மூட்டப்படுவதும் பெண்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் கொடுமைகளில் ஒரு சிலவாகும். இன்றோ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் மூளைச் சலவைசெய்யும் இதே வேல்ையை வேறு உருவில் எமது ஊடகங்களும், கல்விக் கோட்பாடுகளும் செய்து வருகின்றன.
இவ்வாறு, பரம்பரை பரம்பரையாகச் செயற்படுத்திய சமுகமயமாக்கலின் விளைவாகத்தான் பெண்கள் நாம் இன்று பார்க்கும் பெண்களாக உருவாகியிருக்கின்றனர். ஆண்கள் நாம் இன்று பார்க்கும் ஆண்களாக இருக்கின்றனர். சமூக வழக்கங்கள் ஆண்களையும் பெண்களையும் உருவாக்க, அந்த ஆண்களும் பெண்களும் திரும்ப சமூக வழக்கங்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில்தான் புரல்நிலை உறவுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன. நாம் இன்று காணும் முறைகளில் பால்நிலை உறவுகள் நிலவுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
பால்நிலை ஒரு சமூகத்தின் ஆண்களினதும் பெண்களினதும் புரத்திரங்களை வரையறுக்கின்றது. அவாகள் ஒரு நிலைக்கு மேலே மாறுபாடான நடத்தை கொண்டவர்களாக இருக்க (piņu un 35 12 குறுக்குகின்றது. இதனால் குறிப்பாகப் பெண்கள் தங்களது
- 17

Page 61
வாழ்க்கையில் பல வாய்ப்புக்களையும் வளங்களையும் இழக்கின்றனர். அவர்களுக்குத் தமது சொந்த அபிலாஷைகளுக்குரியவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தெரிவு இல்லாமல் போகின்றது. திருமணம், குடும்பம் என்பதுதான் பெண்களின்பிரதான கவனமாக இருக்க வேண்டும் என்று சமூகம் தனியே பெண்களின்மீது அந்தச் சுமையை ஏற்றுவதனால் அனேகம் பெண்கள் தங்கள்வாழ்வின் இலட்சியங்களைக் குழிதோண்டிய் புதைக்க வேண்டியதாக இருக்கின்றது.
இந்த உலகில் தொழிலதிபர்களாகக் கோடிக்கணக்கான முதலீடு களை ஆள்பவர்களும், மதத்தலைவர்களாக ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்வைக் கட்டுப்படுத்துபவர்களும், அரசியல் உயர் தலைவர்களாக வருபவர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்கள் இன்னும் அனேகமாகத் தங்கள் உழைப்பினைக் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஓயாமல் ஒழியாமல் வழங்கும் தொழிலாளிகளாகத்தான் தொடருகின்றனர். ...
ஆண்களுக்கு பெண்களளவு கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்களுக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணின் கெட்டித்தனமும் இயல்பும் எப்படியிருந்தாலும்கூட அவன் உழைப்பவனாக, உத்தியோகம் பார்ப்பவனாக, வீரமுள்ளவனாக இருக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்த்து அழுத்தங்களைக் கொடுக்கின்றது. இது ஒரு அநீதியாகும்.அதனை மனித உரிமைமீறலாகக்கூட விவரிக்கலாம். இந்த நிலைமாறி, ஒவ்வொரு மனிதரும் தமது ஆற்றல்கள், விருப்பங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளவும், தம்மை வெளிக்காட்டவும், சுதந்திரம் இருக்கும்நாள் வரவேண்டும். கல்விக்கும் பால்நிலைக்கும் என்ன தொடர்பு?
கல்வி ஒரு மனிதனை உருவாக்குகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இளவயது முதல் செல்வாக்குச் செலுத்தி, ஒருவரின் சிந்தனா முறைகள், கண்ணோட்டங்கள், விழுமியங்கள். ஏன், பழக்க வழக்கங்களும் கூட கல்வியினால் உருவாக்கப்படலாம். பால்நிலை உறவுகளும், ஒருவரின் சிந்தனா முறையிலும் கண்ணோட்டங்களிலும் விழுமியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் உணர்வுபூர்வமாக நிலவுகின்றது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். இதிலிருந்து பால்நிலை உறவுகளை மாற்றுவதில் கல்வித்திட்டம் ஒருமுக்கியபங்கு வகிப்பதைப் புரிந்து கொள்ளலாம். சமூகமயமாக்கலைக் கூட மேவி, சுற்றுச் சூழலுக்கும். அப்பாற்பட்ட புதிய சிந்தனா முறைகளைத் தூண்டக்கூடிய கருவி கல்வியாகும்.
-1 18

அது தவிர, நிலவும். பால்நிலை உறவுகளைத் தக்கவைத்து பலப்படுத்தும் கருவியாகவும் கல்வி தொழிற்பட்டு வந்திருக்கின்றது. எமது உலகம் எதை முக்கியமாகக் கருதி அதைப் பற்றிய அறிவுத் தேடலில் ஈடுபட்டிருக்கின்றது, ஆவணப்படுத்தியிருக்கின்றது, கற்றிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே அதற்குள் உள்ள பால்நிலை ஏற்றத் தாழ்வுகள் எமக்குப் புலப்படும். வரலாற்றை எடுத்தாலும் அது ஆண்களின் வரலாறாகத்தான் இருக்கின்றது. மத போதனைகள் எல்லாம் ஆண்களுக்குச்சார்பாகவே இருக்கின்றன விஞ் ஞானமும் பெண்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு இன்னமும் பின்னிற்கின்றது. இந்தப் பின்னணியில், கல்வித் திட்டத்தினையே அதற்கேற்ப சீரமைக்கும் பணி நம்முன் உள்ளது. கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களைப் புகுத்தும்முறைகள் என்ன?
தம்மைச் சூழவுள்ள, தாம் அன்றாடம் பார்க்கும் சமூக ഉ-ബ5ങ്ങബ്
மாற்றி புதிய உறவுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய விழுமியங்களை மாணவர்கள் மனதில் தோற்றுவிப்பதே கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் நோக்கமாகும். இந்நோக்கம் இரண்டு வழிகளில் அடையப்படலாம். அவை பின்வருமாறு:
1) சமூகத்தில் தற்போது நிலவும் அசமத்துவமான பால்நிலை உறவுகள் பற்றிய விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பது அல்லது குறைப்பது
உபயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாட விதானங்களிலும் UTLÜ புத்தகங்களிலும் வெளிப்படையாகவோ அல்லது பூடகமாகவோ அசமத்துவமான பால்நிலை உறவுகள் காட்டப்படுமாயின், அவற்றை மாற்றுவது இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது பாடங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவது தொடங்கி ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைமைகள் வரை சகல விடயங்களையும் கையாளும், மாற்றவேண்டிய பாட உள்ளடக்கத்திற்கான உதாரணங்களாக, பாடங்களில் வருகின்ற கதைகளில் பெண்களினதும் ஆண்களினதும் பாத்திரங்கள் சமூக மாதிரிகளாக (stereo typed roles) மட்டுமே இருப்பது, உலகப் பெரியார்களின் கதைகள் தனியே ஆண் பெரியார்களின் கதைகளாக இருப்பது, வரலாறுகள் ஆண்கள் கண்ணோட்டத்திலிருந்து எழுதப் டுவது, சமூகவியல் பாடங்களில் வீட்டுவேலை போன்ற பெண்களின்து தொழில்கள் பெறுமதி மிக்க
-19

Page 62
தொழில்களாகக் கருதப்படாமல் குறிப்பிடப்படுவது ஆகியவற்றைக் கூறலாம்.
ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைகளுக்கு உதாரணமாக அவர்கள் சமூக மாதிரிகளாக ஆண்களையும் பெண்களையும் உரு. வகப்படுத்தும் கதைகளை ஏற்றுக்கொண்டு எதுவித விமர்சனங்களும் இன்றி மாணவர்களுக்குக் கூறுதல், பொம்பிளைப் பிள்ளை நீர் உமக்கு இந்த வேலை நன்றாக வரும், ஆம்பிளைப்பிள்ளை நீர் இதை நன்றாகச் செய்வீர் என்ற வண்ணம் மாணவர்களுடன் பேசுவது, சமயநம்பிக்கைகள் போன்றவை அசமத்துவபால்நிலை உறவுகளைச் சித்தரிக்கும்பொழுது அதைப் பற்றிய விளக்கங்களைத் தராமல் கற்பித்துக் கொண்டு போவது, ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிரியர்களும் தாம் பாரம்பரிய வேலைப் பிரிவினைகளைத் தங்களுக்குள் எற்படுத்திக்கொண்டு மாணவர்களுக்கான முன்மாதிரிகளாக இருப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2) புதிய சமத்துவமான சமூக விழுமியங்களை மாணவர்கள்
சிந்தனையில் உருவாக்குவது இந்த நடவடிக்கையில் இதற்குரிய புதிய பாடவிதானங்கள் எழுதப்படவேண்டும். குறிப்பாக விடலைப்பருவத்தினருக்கு, பால்நிலை உறவுகள் தோன்றிய காரணங்கள், அவை தம்மை வெளிக்காட்டும் முறைகள், சமத்துவமானதொரு புதிய சமூகத்தின் அம்சங்களைச் சித்தரிக்கும் கதைகள், எமது சமூகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவும் ஒப்படைகள், ஆகியவற்றைப் போன்ற விடயங்கள் அவர்கடைய பாடாந்தரத்தில் உள்ளடக்கப்படவேண்டும்.
மேற்கூறிய நடவடிக்கைகள் ஒரு பாரிய பணியாகும். இவற்றைச் செவ்வனே செயற்படுத்துவதற்கு முதலில் அதனைச் செயற்படுத்தும் கல்வியியலாளர்களும் ஆசிரியர்களும் சமூகம் தங்களுக்குள் இதுவரைகாலமும் வளர்த்தெடுத்த தங்கள் கண்ணோட்டங்களிலிருந்தும் விழுமியங்களிலிருந்தும் தாம் விடுபடவேண்டும். சமூகத்தினின்று வேறுபட்டு தாங்கள் தனித்துவமாக நிற்கும் ஆற்றல் இந்த ஆசிரியச் சமூகத்தினருக்கு உண்டா என்பது ஒரு கேள்வியாகும். அவர்கள் இதற்கு விடை பகர்வார்களா?


Page 63
ஆதாராமாகி சமுதாயத்திற்கு
அபிவிருத்திசார்ந்த பயிற்சியும், கள வழங்கல. தொடர்புகளை உருவாக்கி கருத்து மற்றும் குழுக்களின் வலையமைப்பு சமத்துவமும் சமாதானமும் நிை சட்டங்கள் ஆகியவற்றில் மா எடுத்துரைத்தலும் தூண்டுதலும்,
> ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள் (
பரப்புதலிலும் ஈடுபடல். > வறுமையினாலும் கல்வியின் ை
சமூகத்தினருக்கு எழுத்தறிவு, நடவடிக்கைகளுக்கூடாக அவர்கள் குரல் கொடுத்தலுக்கும் உதவுதல் எங்கள் உபாய மார்க்கங்கள். கல்விச் சமூகத்தின் விழிப்பு, சிவில் சமூ
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அர கட்டமைப்புக்களில் வளர்ச்சி
பால்நிலை அபிவிருத்தி அரங்கக் கலையின்
எமது வெளியீடுகள். ۔۔۔۔۔۔ அகவிழி - ஆசிரியர்களுக்கான மாதஇதழ்
கூடம் - பன்முக சிந்தனைகளுக்கான காலா
 
 
 
 
 
 
 

b6] வியாபிப்பதற்கு அதன் விழுதுகள் லையமைப்புக்கள் கிளைவிட்டுப் பரந்து இயங்கும் அமைப்புத் தான் விழுது
ந்தும் பங்கேற்பு சனநாயகம் வீறுடன்
ாக, அரச தனியார் மற்றும் அரசு சாரா டையும் விழுமியங்களையும் வளர்த்து நளைத் தாபிக்க உதவுதல்,
சார்ந்த அமைப்புக்களையும் நிறுவுதலும்,
த்திலான திட்டச் செயற்பாட்டு உதவியும்
க்களினால் ஊட்டமளித்துநிறுவனங்கள் களுக்கு அனுசரணையாயிருத்தல்,
லத்து நிற்பதற்கான கொள்கைகள், ாற்றங்களை கொண்டு வருவதற்கு
மூலம் அறிவு உருவா க்கத்திலும்
மெயினாலும் குரலி
நின் இயக்கம்
சியல் அமைப்புக்களின் சனநாயகக் ட
மலர்ச்சி தனியார் துறையின்ரின் விருத்தி
ண்டிதல்