கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்

Page 1


Page 2

மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்

Page 3

மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
பேராசிரியர் சமாதிலிங்கம் சத்தியசீலன் B.A. Hons., M.A., Ph. D. தலைவர், வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ,
இலங்கை
அயோத்தி நூலக சேவை ஐக்கிய இராச்சியம் 2 OO 6

Page 4
தலைப்பு: மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சடுரகமும் ஆசிரியர் : பேராசிரியர் சமாதிலிங்கம் சத்தியசீலன்)ே
பதிப்பு : 2006
வெளியடு : அயோத்தி நூலக சேவை, ஐக்கிய இராச்சியம்
அச்சு : குமரன் அச்சகம்
-361 l\2 LATÈ 65, GabT (QLDU - 12, 66575376f6ë : kunabh@sltnet.lk
Title : Malayak kudipeyarvum Yalpanach Samugamum
(Jaffna Society and Emigration to Malaya)
Author : Prof. Samathilingam Sathiaseelan (C)
Edition: 2006
Published by: Ayothi Library Service,
48 Hallwicks Road, Luton, Bedfordshire. LU29BH.U.K
Printed by: Kumaran Press (Pvt) Ltd.
361 V2 Dam Street, Colombo - 12, E-mail: kumbh (ashtnet.lk
Cover Design by : Dream Station
ISBN 0-9549440-4-6
Price: Sri Lanka RS 600).OO) Other Countries USS 5.00

சமர்ப்பணம்
அம்மாவுக்கு.

Page 5

முன்னுரை
இந்த ஆய்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வரலாற் றில் முதுகலைமாணிப் பட்டத்திற்காக 1980 இல் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவமாகும். ஆனால் இந்த ஆய்வின் கால எல்லை 1940 இலிருந்து 1957 வரை மலாயக் கூட்டமைப்பு ஏற்படுத் தப்பட்ட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்விலே குடிபெயர்வு அல்லது புலம் பெயர்வு பிரதான அம்சமாக மாறியுள்ள இந்நாளிலே ஆரம்பக் குடிபெயர்வாக இடம்பெற்ற இலங்கைத் தமிழரின் மலாயக் குடிபெயர்வு பற்றிய பல் பரிமாணத்தை எடுத்துக்காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இன்று மேற்கு நாடுகளிலே புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்வில் காணப்படும் பல ஒத்த பண்புகளையும், வேறுபட்ட தன்மைகளையும் மலாயக் குடிபெயர்வில் அவதானிக்கலாம்.
இலண்டன் தமிழ் தகவல் நடுவத்தின் அழைப்பை ஏற்று இங்கு வந்து பல்வேறு நூலகங்களில் மேலதிகமான தகவல்களைப் பெற்று இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இம் முயற்சியை மேற்கொள்ளுமாறு என்னை அழைப்பித்து, நூல் வெளியீட்டிற்கு மூலகாரணமாக இருந்த தமிழ் தகவல் நடுவகத்திற்கும் அதன் இயக்குனர் திரு. வை.வரதகுமார், திரு.ம.விஜயபாலன் உட்பட்ட இயக்குனர் சபை அங்கத்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
இந்நூலின் வெளியீட்டிற்குத் தேவையான முழு நிதி உதவி யையும் வழங்கி, நூல் வெளியீட்டை முதன் முதலில் மலேசிய மண்ணிலேயே வெளியிட வேண்டுமென்று பெருவிருப்புடனும், வள்ளல் தன்மையுடனும் செயற்பட்ட இனிய நண்பர் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான நிறைவேற்றுனர் டத்தோ 9. Jasin Gig 6.16i, PJN, SSA, PPT, ANS -9, Guids (65d(5 LD607 lb 560 pig, நன்றிகள். எமது அன்பிற்குரிய நண்பர் கலாநிதி.க.ஹரிகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் வெளியீடு தொடர்பாகக் காட்டிய அக்கறைக்கும்,

Page 6
viii
ஆர்வத்திற்கும் மனப்பூர்வமான நன்றிகள் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வெளியீட்டுரை வழங்கி நூலை வெளியிட்டு வைத்த இனிய நண்பர் அயோத்தி நூலக சேவைகள் இயக்குனர் திரு.என்.செல்வராஜா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்.
இந்நூலுக்குப் பெருமனதுடன் மனம் நிறைந்த வாழ்த்துரை வழங்கிய மலேசிய இலங்கைச் சைவர் சங்கத் தலைவர் சைவ சித்தாந்த கலாநிதி திரு ச. பேரம்பலம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறே இந்நூலுக் குப் பெருமனதுடன் அணிந்துரை வழங்கிச் சிறப்புச் செய்த எனது ஆசிரியரும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்று துறைப் பேராசிரியரும், தலைசிறந்த வரலாற்றறிஞருமான சி. பத்மநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மலேசியா மண்ணிலிருந்து அணிந்துரை ஒன்றை விரும்பிய வேளை அதனை மனம் உவந்து வழங்கியதுடன் நூல் வெளியீட்டுக்கு உறுதுணை செய்த, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ். குமரன் அவர்களுக்கு உளம் நிறைந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன். இந்நூல் வடிவம் பெறுவதற்குப் பல வழிகளிலும் முன்னின்று உழைத்த நண்பர் திரு.எஸ். விசாகன் நல்லதொரு அறிமுக உரையை வழங்கியிருந்தார். அவருக்கும் எனது நன்றிகள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எனது முதுமாணி ஆய்வை மேற்கொண்டபோது இந்த ஆய்வுத் தலைப்பைத் தெரிவு செய்து, அதன் ஆய்வு மேற்பார்வையாளராக இருந்த எனது மதிப் பிற்குரிய ஆசிரியரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியருமான கலாநிதி கா. இந்திரபாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.
இந்த ஆய்வை மேற்கொண்டபொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலும் இலங்கையின் பிறபகுதிகளிலும் வாழ்ந்த பல மலாயன் ஓய்வூதியர், அவர்களின் உறவினர், மலாய இலங்கையர் சங்க நிர்வாக அங்கத்தினர் பல வழிகளிலே வேண்டிய உதவிகளைத் தந்தனர். அவர்களுடைய பூரணமான ஒத்துழைப்பின் விளை வாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுள் பலர் இன்றில்லாத போதும் அவர்கள் எனக்குத் தந்த பூரணமான ஒத்துழைப்பை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். இந்த ஆய்வின் தற்போதைய முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை நூல்வடிவில் வெளிக்கொணர வேண்டுமென்பதில் மிகுந்த

அக்கறையுடன் தீவிரமாகச் செயற்பட்ட நண்பரும், ஒருகாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தவருமான திரு. சு. விசாகனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள். லண்டனில் தங்கியிருந்த காலை அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து தந்த விசாகன் குடும்பத்தவரை மறக்கவே முடியாது.
மலாயக் குடிபெயர்வு பற்றிய ஆய்வைச் செழுமைப்படுத்து வதில் லண்டனில் உள்ள நூல்நிலையங்கள் பெரிதும் பயன்பட்டன. அவ்வரிசையில் லண்டன் பல்கலைக்கழக கீழைத்தேய மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான நூல்நிலையம், பிரித்தானிய பொது ஆவண அலுவலகம், தமிழ் தகவல் நடுவ நூலகம் - அவற்றின் ஊழியர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நூலுருவாக்கம் தொடர்பாக பயன்மிகு ஆலோசனைகள் வழங்கிய திரு.பத்மநாதஐயர், திரு.மு.நித்தியானந்தன் ஆகியோருக் கும் நிழற் படங்களை நிபுணத்துவக் கண்ணுடன் எடுத்துத் தந்த திரு. ஜி.ஜெயதீஸ். அவர்களுக்கும், இதனை சிறந்த முறையில் கணினி எழுத்துருவாக்கம் செய்து தந்த திரு.பொ.பாலநாதன் அவர்களுக் கும், சிறப்புற நூலை ஆக்கித் தந்த குமரன் அச்சகத்தினர், ஊழியர்களுக்கும் எனது நன்றிகள். எனது நூல் உருவாக்கத்திற்கு அனைத்து வழிகளிலும் நிதியுதவி வழங்கிய அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
இறுதியாக எனது ஆய்வுப் பணிக்கு என்றுமே துணையாக இருந்து ஊக்குவிக்கும் மனைவி அனுஷ்யாவுக்கும், பிள்ளைகள் பிரியதர்ஷன் , கோபிகாந்தனுக்கும் எனது நன்றிகள்.
1-7-2006 பேராசிரியர் ச.சத்தியசீலன் v தலைவர், வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி

Page 7
வாழ்த்துரை
“மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் எனும் தலைப்பில் பெருமுயற்சியோடு கூடிய ஆய்வினை மேற் கொண்டு அரியதொரு நூலை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ச. சத்தியசீலன். லண்டன், மலாயா பூரீலங்கா ஆகிய நாடுகளில் கிடைத்த அரசியல் ஆவணங்கள், மக்கள் தொகைக் கணக் கெடுப்பு போன்று பலவகை ஆவணங்கள், மேலை நாடுகள் - மலாயா -ழரீலங்கா ஆகியவற்றில் வெளியிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள், சிறப்பு மலர்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், நாளிதழ்கள் போன்ற பலவகைக் கருத்துக் கருவூலங்களைத் தொடர்பு கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.
இவை 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முதல் முக்கால் பகுதி வரைக்கும் உள்ள ஒரு நூற்றாண்டு காலகட்டத்தை சார்ந்தவையாகும். இவற்றிற்கு மேலாக மலாய நாட்டு அனுபவம் உடையவர்களாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்த 40 பேரோடு நேர்காணல் மேற்கொண்டு நேரடிச் செய்திகளைப் பெற்றுள்ளார் ஆசிரியர். அவரது பரந்த விரிந்த ஆழ்ந்த ஆய்வின் பலனாக யாழ்ப்பாணச் சமூகத்தினரின் மலாயக் குடிபெயர்வு பற்றியும், மலாய வாசத்தினால் அவர்களும், அவர்கள் குடும்பங்களும், யாழ்ப்பாண மக்களும் அடைந்த நன்மை பற்றியும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். வரலாற்று விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், ஒரு காலகட்டத்தில் உள்ள யாழ்ப்பாண நிலவரத் தையும், மலாய நிலவரத்தையும் ஒப்பிட்டு, தன் முடிவுகளை நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தவர் புதிய நாட்டில் சிறப்புடன் வாழ்வதற்கு காரணமாயிருந்த அவர்களது விசுவாசம், நேர்மை, திறமை, கடின உழைப்பு, கட்டுக்கோப்பு, சிக்கனம் போன்ற குணநலன்களை அன்றைய அரசியல் தலைவர்களின் கூற்றுவழி எடுத்துக் காட்டியிருப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. இந்த நூல் அனைத்து அறிஞர்களுக்கும் பயனுடையது, எனினும் கடல் கடந்து வாழும் அனைத்து யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் தன் முனைப்பும், பெருமிதமும், இனிய அனுபவமும் ஊட்டும் ஒரு நூலாகும். நூலாசிரியருக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியும்

Xi
வாழ்த்தும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடை கின்றேன்.
எங்கள் யாழ்பாணத் தமிழர்கள் " திரைகடல் ஓடி திரவியம் தேடு’ எனும் ஆன்றோர் கூற்றுக் கேற்ப, தங்களதும், தங்கள் குடும்பத்தினரதும் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வெளிநாடு சென்றார்கள். அவ்வகையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மலாயா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று நற்பெயரும் நல்வாழ்வும் பெற்றார்கள். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலாயாவுக்குக் குடிபெயர்வது கடினமான ஒன்றாக ஆகியது. மலாயா மட்டுமன்றி இங்கிலாந்து, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மொறிஷியஸ், தென்ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா என உலகின் பல நாடுகளிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் சென்று குடியேறியுள்ளார்கள்.
அன்று குடிபெயர்ந்த மக்கள் வளமான வாழ்வுக்காக அவ்வாறு செய்தார்கள்; இன்று அமைதியைத் தேடியும் உயிரைப் பாதுகாக்கவும் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலையில் உள்ளார்கள். இத்தகைய கவலைக்குரிய நிலைமாறி, கல்வியிலும் பண்பாட்டிலும் அதிக நாட்டம் கொண்டு வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர் சமூகம் மீண்டும் அமைதியான, சுமூகமான யாழ்ப்பாணத்தில் சிறந்த வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் கருணை கொண்டு அருள் புரிய வேண்டுமென மனமார வேண்டுகிறேன்.
யாழ்ப்பாணத்தவர் வரலாறு எதிர்காலத்தில் என்னவாகும் என்று அனைவரும் கேள்விக்குறியோடு இருக்கும் இத் தருணத்தில் நம் மலேசிய நாட்டில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றை முடிந்த அளவுக்குத் தெளிவாகவும், தக்க சான்றுகளோடும் ஒரு வரலாற்றுப் பெட்டக மாகத் தந்துதவியுள்ள பேராசிரியர் ச. சத்தியசீலன் அவர்களுக்கு மீண்டும் எங்கள் சங்கத்தின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திறமை, நேர்மை, சீர்மை மிகுந்தவர்கள் யாழ்ப்பாணத்தவர் என்னும் அன்றைய பிரித்தானியத் தலைவர்களின் கூற்றின் உண்மையைக் கட்டிக் காப்போம்.
சரவணமுத்து பேரம்பலம் AMN.AMP.PJK மலேசியா இலங்கைச் சைவர் சங்கத் தலைவர் சைவசித்தாந்த கலாநிதி. அருள் நெறி நேசர் விய வருஷம் ஆனி மாதம் 12ஆம் நாள் கோலாலம்பூர், மலேசியா (26.06.2006)

Page 8
அணிந்துரை
வரலாற்றில் ஒர் அத்தியாயம்
யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றில் ஏறக்குறைய நூறு வருடங்களாக மலாய தேசத்துடன் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்புகள் ஒரு சிறப்பு மிகுந்த அத்தியாயமாகும். அத்தொடர்பு களினால் மலாயாதேசத்திற்குப் பல நன்மைகள் ஏற்பட்டன. அதே போன்று யாழ்ப்பாண தேசத்தவருக்கும் பல நலன்கள் விளைந்தன. அண்மைக்காலம் வரை இலங்கையிலே தமிழர் வாழும் பகுதிகளில் யாழ்ப்பாண தீபகற்பமும், அதனைச் சார்ந்த தீவுப் பற்றும் சனநெருக்கம் மிகுந்த பகுதிகளாக அமைந்திருந்தன. இயற்கை வளங்களை மிகக் கூடிய அளவில் பயன்படுத்திப் பொருள் வளம் பெருக்குவதில் யாழ்ப்பாணத்தவர் ஈழம் முழுவதிலும் நெடுங் காலமாக முன்னணியில் இருந்தனர். அவர்களுக்கு ஆதாரமான இயற்கை வளங்கள் மிகவுங் குறைந்தவை. செயற்கை பண்ணக் கூடிய வயல்நிலங்களும் தோட்டக்காணிகளும் சனநெருக்கத்திற்கு ஏற்ற வகையிற் போதியளவிற் காணப்படவில்லை. அவர்கள் வாழும் பிரதேசம் வானம் பார்த்த பூமி. எனவே அவர்களின் கடின உழைப்பின் மூலமாகவே நிலம் வளம் பெற்றது. இங்கிலாந்தில் விவசாயப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே குடாநாட்டவர்கள் மாற்றுப் பயிர்ச்செய்கை முறையினை ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பொருள் சம்பாதிப்பதற்கு யாழ்ப்பாணத்தவருக்கு புதிய மாற்று வழிகள் கிடைத்தன. இலங்கை யில் நவீனக் கல்வியின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ மிஷனரிமார்கள் 19ஆம் நூற்றாண்டில் அடித்தளம் அமைத்தனர். அமெரிக்கன் மிஷனரிமாரும், வெஸ்லியன் மிஷனரிமாரும், அங்கிளிக்கன் திருச் சபை யாரும் யாழ்ப்பாணத்திலே பெருமளவிலான பாடசாலை களையும், கல்லூரிகளையும் உருவாக்கினார்கள். அவர்களின் முயற்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு யாழ்பாணத்தவரும் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வேண்டிய பணிகளைப் புரிந்தனர். அவற்றின் விளைவாக இலங்கையிலே கல்வித்துறையில் முன்னணியிலுள்ள சமூகமாக யாழ்ப்பாணத்தவர் முன்னேற்றம் கண்டனர். அமெரிக்க மிஷனரிமார்கள் உருவாக்கிய உயர்

xiii
கலபீடமான வட்டுக்கோட்டை செமினரியும், மருத்துவக் கல்லூரியும் இலங்கையில் யாழ்ப்பாணத்தவர் தொழில் வசதிகளைப் பொறுத்த வரையில் முன்னிலைப்படுத்துவதற்கு வேண்டிய தகைமைகளை அளித்தன. ஆங்கில மொழி மூலம் கல்வித் தகைமை பெற்றோர் பொது நிர்வாக சேவை, கல்விச் சேவை, வர்த்தகம் போன்ற துறைகளிலே தொழில் வாய்ப்புக்களைப் பெருமளவிற் பெற்றனர்.
நடுத்தர நிலையிற் கல்வி தகைமை பெற்றோரில் ஒரு சாரார் மலாயாதேசத்திற்குச் சென்று தொழில் வாய்ப்புக்களைக் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கையைப் போல மலாயாதேசமும் பிரித் தானியரின் ஆட்சியிற் பெருமாற்றங்களை அடைந்தது. அங்கு சுரங்கத் தொழிலும் பெருந்தோட்டங்களும் வளர்ச்சியடைந்தன. அவற்றிலே தொழில் புரிவதற்குச் சீனாவிலிருந்தும் இந்தியாவி லிருந்தும் தொழிலாளர் பெருமளவிலே புலம்பெயர்ந்து சென்றனர். அந்நாட்களில் மலாயர்கள் கல்வியிற் பின்தங்கிய நிலையிற் காணப் பட்டனர். மிக வேகமாக விருத்தியடைந்து நிர்வாக சேவையிற் கடமை புரிவதற்குக் குறைந்த ஊதியத்தோடு விசுவாசமாகக் கடமை புரியக்கூடியவர்களை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தப் பண்புகள் யாழ்ப்பாணத்தவரிடையிற் காணப்பட்டதால் பிரித்தானிய அதிகாரிகள் மலாயாவில் அச்சமூகத்தவர்களுக்கு நிர்வாகக் கட்டமைப்பிலும், பிற துறைகளிலும் நடுத்தர நிலைகளிற் பதவிகளை வழங்கினார்கள். இளைஞராக மலாயாவிற்குச் சென்ற வர்கள் தமது தேசத்துப் பெண்களைத் திருமணஞ் செய்து அவர்களை யும் தம்மோடு அழைத்துச் சென்று அங்கு குடித்தனம் பண்ணி னர்கள். அந்நாட்களில் மலாயர்கள் கல்வியறிவிலே மிகவும் பின்தங்கிய நிலையிற் காணப்பட்டனர். யாழப்பாணத்தவராகிய இலங்கையருக்கு அக்காலத்தில் அங்கு கணிசமான செல்வாக்கு டிற்பட்டிருந்தது. அந்நாட்டிலே வர்த்தகம், தொழில் உற்பத்திகள் ஆகியவற்றிலே முதலீடு செய்யும் அளவிற்கு அவர்களால் முதல் சேகரித்துக் கொள்ள முடியவில்லை. வீடுவாசல்களை அமைத்துக் கணிசமான கெளரவத்துடன் வாழ்க்கை நடத்துவதற்கும், பிள்ளை களுக்கு கல்வி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் வேண்டிய போதியளவு மாதவருமானம் அவர்களுக்குக் கிடைத்தது. சிக்கன மன பழக்கத்தினால் தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியினைச் சேமித்து, அதனை யாழ்ப்பாணத்திலுள்ள தங்கள் உறவினருக்கு ஆதரவு புரிவதற்குப் பயன்படுத்தினார்கள். மலாயாவிலும் யாழ்ப் பாணத்திலும் கோயில்களையும், கல்வி, கலாசார நிறுவனங்

Page 9
xiv
களையும், அமைத்துக் கொள்வதில் அவர்கள் ஆர்வங் கொண்டிருந்தனர். திருக்கேதீஸ்வரப் புனருத்தாரண சபையின் கிளை யொன்று மலாயாவில் அமைந்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தவர் மலாயாவிற்கு ஏன் குடிபெயர்ந்தார்கள் மலாயாவில் அவர்களின் வாழ்க்கை எவ்வாறமைந்தது? அவர்கள் அங்கு ஈட்டிய சாதனைகள் யாவை? அவர்களின் ஆதரவின் மூலம் யாழ்ப்பாணத்தில் எத்தகைய செல்வாக்கு ஏற்பட்டது? இத்தகைய விசாரங்களுக்கு விளக்கமாக அமைவதே மலாயக் குடிப்பெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் என்னும் இந்நூலாகும். இந்நூலாசிரியர் கலாநிதி. ச. சத்தியசீலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத் துறைத் தலைவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 30 வருடங்களுக்கு முன்பு சிறப்பு கலைமாணிப் பட்டம்பெற்றவர். பிரபல அறிஞரான பேராசிரியர் சூரிய நாராயணனின் வழிகாட்டலிற் சென்னைப் பல்கலைக்கழகத்திலே பட்டமேற்படிப்பு ஆய்வுகள் புரிந்தவர். யாழ்ப்பாணத்தவரின் மலாயாக் குடியேற்றம் பற்றி இலங்கையில் உள்ளவர்களில் இவர் மட்டுமே ஆய்வுகளைச் செய்தவர். அவற்றின் பயனாகவே விளைந்ததே இந்நூல். கடின உழைப்பின் பயனாகவும், நீண்டகால முயற்சிகளின் விளைவாகவும் இது உருவாகியுள்ளது.
பல வகையான மூலங்களிலே பரந்து கிடக்கும் விவரங்களைத் தேடிப் பெற்று அவற்றை புலமை நோக்கில் ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் திலே காணப்பட்ட சமுதாய நிலைமைகளைப் பின்னணியாகக் கொண்டு குடிப்பெயர்வுகள் இதிலே ஆராயப்பட்டுள்ளன. சமகாலத்து மலாயா தேசம் பற்றிய விபரங்களும் இதில் அடங்கியுள்ளன. இவ்விடயந் தொடர்பாக இது போன்ற விரிவான, ஆராய்ச்சி பூர்வமான நூலெதுவும் இதற்குமுன் வெளிவரவில்லை என்பது குறிப்பிடற்குரியது. மிகவுந் தெளிவான, கவர்ச்சியான நடையில் அது எழுதப்பட்டுள்ளமை நூலின் மற்றொரு சிறப்பாகும். இலங்கைத் தமிழர்கள் பற்றி வெளிவந்துள்ள மிகப் பயனுடைய நூல்களில் இதுவும் ஒன்றாகும். அதைப் படிக்க வேண்டிய தேவையும் அவசியமானது.
18.07.2006 பேராசிரியர் சி. பத்மநாதன்
வரலாற்றுத் துறை பேராதனைப் பல்கலைக் கழகம்

வெளியீட்டுரை
இலங்கையில் தமிழ் படைப்பாளிகளாலும், ஆய்வாளர்களாலும் மேற்கொள்ளப்படும் தரமான ஆய்வுகளை நூலுருவாக்கும் பணியில் ஆனைக்கோட்டை, அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு தன் பங் களிப்பை 1985இலிருந்து ஆற்றிவருகின்றது. ஆரம்பத்தில் நூலகவி யல் துறையில் மட்டும் தீவிர அக்கறை கொண்டிருந்த நாம் பின்னா ளில் எமது நூல் வெளியீட்டுப் பரப்பினை படிப்படியாக விரிவாக் கம் செய்தோம். அந்தவகையில் அயோத்தி நூலக சேவைகளின் ஐக் கிய இராச்சியக் கிளையின் மற்றுமொரு அறுவடையாக இந்நூல் உங்கள் கரங்களில் இன்று தவழ்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியரான சமாதிலிங்கம் சத்தியசீலன் அவர்களின் ஈழத்தமிழரின் மலாயப் புலப் பெயர்வு பற்றிய இவ்வாய்வு யாழ்ப்பாணத்திலிருந்து முதலாவது பொருளாதாரப் புலப்பெயர்வினை மேற்கொண்ட ஒரு தலைமுறை யின் வரலாற்றை எமக்கு விரிவாகவும், ஆதாரபூர்வமாகவும் சொல் கிறது. அன்று முதல் இன்று வரை பல்வேறு காரணங்களுக்காகத் தொடரும் ஈழத்தமிழரின் புலம்பெயர்வுகள் அவலம் நிறைந்தவை மட்டுமல்ல, எம்மவரின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் காலக்கிரமத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் சக்திபெற்றவை யாகவும் உள்ளன. தாயகத்தில் வேர்விட்டு அன்னிய தேசங்களில் கிளைபரப்பி விழுதெறிந்து வாழத்தலைப்பட்ட இன்றைய எமது தலைமுறையினருக்கும், எமக்குப்பின் வரப்போகும் பல தலை முறையினருக்கும் இந்நூல் பல விடயங்களைப் புரிய வைக்கும் என்று நம்புகின்றோம். இத்தகைய ஒரு வரலாற்றுத் தேடலை மேற் கொண்டு எமது இனத்தின் ஒரு காலகட்ட வரலாற்றை பதிவுசெய் துள்ள பேராசிரியர் ச.சத்தியசீலன் அவர்களுக்கு தமிழ் உலகம் என் றும் கடமைப்பட்டுள்ளது.
இத்தகைய நூலின் தேவையை உணர்ந்து இந்நூலின் மூலப் பிர தியை என்னிடம் ஒப்படைத்து இதை நூலுருவாக்க வேண்டும் என்ற விருப்பினை என்னுள் விதைத்த நண்பர் விசாகன் (லண்டன்) அவர் களுக்கு என் நன்றி.

Page 10
X Vi
பேராசிரியர் அவர்கள் இந்நூலில், யாழ்ப்பாணத்துச் சமூகத்தினர் அக்காலகட்டத்தில் மேற்கொண்ட பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளை செரிவாகவும் தெளி வாகவும் வெளிக்காட்டியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவேண்டிய மிக முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. அன்றைய தமிழர்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்து கொள்வதற்கும் இதில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.
இவ்வரிய நூலை இயற்றிய பேராசிரியர் ச. சத்தியசீலன் அவர்களை வாழ்த்துவதோடு சிறந்த நூலாக வெளிவரப் பொருளுதவி நல்கிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ. சகாதேவன் அவர்களையும், இதன் பதிப்பாசிரியர் திரு. என். செல்வராஜா மற்றும் நண்பர் முனைவர் க.அரிகிருஷ்ணன் அவர்களையும் வாழ்த்துவதில் அகமகிழ் கின்றேன். அத்தோடு, இந்நூலினை வெளியிடுவதில் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பெருமை கொள்கின்றது.
மலேசிய மண்ணும், இலங்கை மண்ணும், மற்றும் பிற நாட்டு மண்ணும் இவ்வரிய நூலினை வரவேற்றுப் பதிவு செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
20.07.2006 இணைப்பேராசிரியர் முனைவர் எஸ். குமரன் தலைவா
இந்திய ஆய்வியல் துறை
மலாயாப் பல்கலைக்கழகம்
தோலாலம்பூர்

அணிந்துரை
உலகம் இன்று தனது பழைய நிலைகளை மறந்து புதிய முயற்சிகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முன்னுரிமை வழங்கி வருவதை நாம் உணர்கின்றோம். புதிய பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு நாடும் பதிவு செய்து வருகின்றது. ஆயினும், ஒரு நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகின்றனர். வளரும் தலை முறையினருக்கும், இனி வரும் தலைமுறையினருக்கும் தம் நாட்டு வரலாறும் தம் இனத்தின் வரலாறும் அடையாளம் காட்டப்படும் போது தான் தமது முந்தைய பெருமைகளையும் வளப்பங்களையும் அறிந்து, உணர்ந்து போற்றுவதற்குப் பேருதவியாக அமைகின்றது.
சில சுவடுகளாக இருக்கும் வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இம் முயற்சியை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமன்றி இலக்கியவாதிகளும் தங்கள் படைப்புக்களின் மூலமும் நூல்களின் மூலமும் வெளிக்கொணர முயற்சிப்பது ஒர் அறப்பணியாகும் அவ்வகையில் பேராசிரியர் ச. சத்தியசீலன் அவர்கள் 'மலாயாக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமூம்" என்ற தலைப்பிலான நூலை வெளியிடுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
மலாயாவின் அன்றைய நிலையும் மக்களின் வாழ்வும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவரின் வாழ்கை நிலையும் இந்நூலில் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. மலாயா நாட்டின் தொடக்க கால வரலாற்றை ஆராயும் போது யாழ்ப்பாண மக்கள் ஆற்றிய சேவை என்றும் நினைவில் நிறுத்தக் கூடியதாகும். மலாயாவுக்குக் குடிபெயர்ந்த அவர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவிச் சென்றார்கள். பொதுமக்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் மேலாளர்களாக யாழ்ப்பாணச் சமூகத்தினர் பணியாற்றி வந்துள்ளனர். தோட்ட மக்களின் தேவைகளை இயன்றவரையில் நிறைவுசெய்துள்ளனர். இரயில்வே மற்றும் பொதுச்சேவை துறை களிலும் அவர்களது சேவை அளப்பரியதாகும். இன்றைய அரசு நிர்வாகவியல் சுமூகமாக நடைபெறுவதற்கு யாழ்ப்பாணச் சமூகத்தினர் அடித்தளமாகப் பணியாற்றினர் என்றால் அது மிகை ш Пёъ Пф/.

Page 11
xviii
இந்நூல் வெளியீட்டுக்குத் தேவையான முழு நிதியுதவியையும் வழங்கியதுடன் மலேசிய மண்ணிலேயே இவ்வரலாற்று நூலை முதன்முதலில் வெளியிட வேண்டும் என்ற பெரு விருப்புடன் செயற் பட்ட என் அன்புக்குரிய நண்பர் டத்தோ பி.சகாதேவன் (மலேசியா) அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி. ஜப்பான், கோலாலம்பூர் என்று பயணிக்கும் தமது கல்விச் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் இம் முயற்சியில் மிக முக்கிய பங்கேற்று எனக்குத் துணையாக, என் நிழலாக நின்று செயற்பட்ட கலாநிதி க.ஹரிகிருஷ்ணன் (மலேசியா) அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றி.
நீண்டகாலமாக கொழும்பிலிருந்து துறைசார் நூல்வெளியீட்டுத் துறையில் முத்திரை பதித்துவரும் திரு கணேசலிங்கம் குமரன் அவர் கள் வழமையான தமது நூலியல் முத்திரையை இந் நூலிலும் அர்ப்ப ணிப்புடன் பதித்திருக்கிறார். அவருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றும் குமரன் புத்தக இல்ல ஊழியர்களுக்கும் எமது நன்றி.
எமது வெளியீடுகளுக்கு இதுவ்ரை வாசகர் அளித்த வரவேற்பு இந் நூலுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின் றோம்.
16.07.2006 என்.செல்வராஜா இயக்குநர்
அயோத்தி நூலக சேவைகள்
ஐக்கிய இரச்சியம்

அறிமுகவுரை
வாழ்வாதார ரீதியில் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கிரா மங்கள் தனித்து இயங்கும் ஆற்றலைப் பெற்றிருந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் மேற்கு நாட்டவர்கள் குறிப்பாகப் பிரித்தானியர் ஆட்சி யானது புதிய பல மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தது. மரபு வழியாகத் தன்னிறைவுடன் இயங்கிவந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் ஆங்கிலக் கல்வி அரசாங்க வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாழ். மக்களைப் புதிய பொருளாதார வாய்ப்புக்களைத் தேடி நகர வைத்தது. பேராசிரியர் சத்தியசீலன் அவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வரலாற்றில் முதுகலைமாணி (M.A) பட்டம் பெறுவதற்காக 1980இல் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவமாக இந்நூல் வெளிவருகிறது. இந்நூலில் யாழ்ப்பாணத்தில் அந்நாட்களில் மாற்றமடைந்த நிலையில் காணப்பட்ட சவால்கள் தள்ளு விசையாகவும், சவால்களை எதிர் கொள்ளும் வகையில் மலாயாவில் உருவாகிய வாய்ப்புகள் இழுவிசையாகவும் பொருத்த மான உதாரணங்களுடன் ஆராயப்பட்டமை வெற்றிகரமான சிறப்பம்சமாகும்.
பொருளாதாரக் காரணங்களுக்காக மலாயாவை நோக்கிய குடிநகர்வானது யாழ்ப்பாண சமூக உருவாக்கத்தில் பாரிய பல மாற்றங்களை உருவாக்கி விட்டதை ஆசிரியர் திறம்பட விளக்கி யுள்ளார். கி.பி. 1870-1957 வரையான தகவல்களைக் கொண்ட இந் நூலில் யாழ்ப்பாணத்தில் அந்நாட்களில் நிலவிய பின்தங்கிய சூழல் கள் பொருத்தமான புள்ளி விபரப் பட்டியல்கள், புகைப்படங்கள் துணையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பட்டியல்கள், புகைப்படங்கள் மலேய நிலைமைகளை விவரிக்க உபயோகப் பட்டமை நூலின் கவர்ச்சியை அதிகரித்துள்ளது. மலாயாவிற்கு யாழ்ப்பாணத்தவர்கள் சென்றமை பற்றி விவரிக்கையில் இலங் கையில் பல்வேறு இலாகாக்களிலும், தோட்டங்களிலும் உயர் பதவி களை வகித்த பிரித்தானியர் தமக்குக் கீழ் பணிபுரிந்த யாழ்ப்பாணத்

Page 12
XX
தவர்கள் பலரை மலாயாவுக்கு அழைத்து அங்கும் அரசாங்க இடை நிலை, உயர் பதவிகளிலும், தோட்டங்கள் நிர்வாகத்திலும் அமர்த் தினர். இலங்கையில் காணப்பட்ட ஆங்கில மொழி, ஒரே நிர்வாக அமைப்பு, ஒரே எசமானர்கள் என்பதனால் யாழ்ப்பாணத்தவர்கட்கு இலகுவாக இசைந்து போக முடிந்தது.
இலங்கையைப் போன்றே மலாயாவிலும் அரசியலில் பிரித் தானியருக்கு எதிரான போக்குக் காணப்படாமையால் மலாய அரசிய லிலும் யாழ்ப்பாணத்தவர்கள் பங்கு கொண்டமை விபரிக்கப்பட் டுள்ளது. இத்தகைய மிதமான அரசியல் சூழல் காணப்பட்டமை யால் முதலாம், இரண்டாம் உலகப்போர் நிதிக்கு யாழ்ப்பாணத் தவர்கள் நிதி உதவிகளைச் சேகரித்து வந்ததுடன் 1915இல் The Jaffna என்ற போர் விமானத்தை சேகரித்த நிதி உதவியுடன் கொள்வனவு செய்து பிரித்தானிய விமானப் படைக்கு வழங்கினர். இவ்விமானத்தின் படம், விமானம் ஆற்றிய பணிகள் போன்ற விபரங்களை நூலைப் படிப்பவர்கள் காணலாம். சுமுகமான உறவு பிரித்தானிய அரசுடன் காணப்பட்டமையால் பிரித்தானியர் யாழ்ப் பாணத்தவருக்கு கெளரவப் பட்டங்கள் பல வழங்கி, பதவி உயர்வு களையும் வழங்கினர். சுமுகமான உறவு பிரித்தானியருடன் காணப் பட்டமையால் 1922இல் வேல்ஸ் இளவரசர் வின்ட்சர் கோமகன் மலாயாவுக்கு வருகை தந்த வேளை இலங்கைத் தமிழர் சபையின் தலைவராக விளங்கிய சு. தம்பிப்பிள்ளையை இளவரசரை வர வேற்க அனுமதியளித்துக் கெளரவித்தமை பற்றிய படமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
மலாயாவிற்குக் குடிபெயர்ந்தவர்களால் யாழ்ப்பாணச் சமூகத் திலும் பாரிய மாற்றங்கள் உருவாகின. மலாயாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணத்தின் பெறுமதி இலங்கை ரூபாவில் மாற்றப்படுகையில் பிரதான வர்த்தகப் பயிரான புகையிலையினால் யாழ்ப்பாணத்தில் பெறப்பட்ட வருமானத்தை விடப் பன்மடங்கு என்பதும் நூலில் புள்ளி விபரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தகைய பணத்தின் மூலம் திடீரென பணம் படைத்த உயர் மத்திய வர்க்கமும் யாழ்ப்பாணத்தில் உருவாகிற்று. இவர்களின் வாரிசுகளே பிற்காலத்தில் தமிழர்களின் அரசியலில் பிரசித்தி பெற்ற பிரமுகர்களை உருவாக்கியது பற்றிய விவரமும் நூலில் அடங்கியுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் பல முன்னோடி நிறுவனங்களும் இவர்களால் உருவாகின. வங்கிகள், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கூட்டுறவுச் சபைகள், வைத்தியசாலைகள். பாடசாலைகள், கோவில் நிர்மாணப் பணிகள். புதிய கட்டிட்க்கலை

X Xi
(நாற்சார் வீடுகள்) போன்றவற்றின் அறிமுகமும் மலாயப் பணவரவால் உருவாகின. புதிய கட்டிடங்களாக அறிமுகப்படுத்தப் பட்ட மலாய பென்சனர்களின் வீடுகளின் படங்களையும் நூலில்
காணலாம்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் யாழ்ப்பாண சமூக உரு வாக்கத்தின் பல புதிய தகவல்கள் நூலில் வெளிக்கொணரப்படுவ தால், வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், அரசியல், சமூக மானிடவியல் ஆய்வாளர்கட்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும். நூலில் அடிக்குறிப்புகள், உசாத்துணை நூல்கள் முதலியன பயன்படுத்தப்பட்டமையும், பிரபல நூலகவியலாளர் என். செல்வ ராஜாவினால் உருவாக்கப்பட்ட சொல்லடைவும் காணப்படுவதால் இந் நூலின் கல்வித்தரம் உயர்வாகிறது.
3.3.2006 எஸ். விசாகன் BA. Hons., M.A (Madras), M.Sc. (London) பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகம்
கியூ கார்டின், லண்டன்

Page 13
உள்ளடக்கம்
முன்னுரை
வாழ்த்துரை
அணிந்துரை
அணிந்துரை
வெளியீட்டுரை
அறிமுகவுரை படங்களும், அட்டவணைகளும்
குறுக்கங்கள்
1. அறிமுகம்
குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் - !
பக்கம்
vii
xiii
XV
xvi
xviii
XXii
XXiv
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட நிலைமைகள் 8
குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் -II : மலாயாவில் காணப்பட்ட நிலைமைகள் மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் : குடிப்பெயர்வும் குடித்தொகைப் பரம்பலும் . மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் வாழ்க்கை - :
பொருளாதார நடவடிக்கைகள்
. மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் வாழ்க்கை -1 !
அரசியல் நடவடிக்கைகள்
. மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் வாழ்க்கை -II :
சமூக நடவடிக்கைகள்
மலாயத் தொடர்பும், யாழ்ப்பாணச் சமூகமும்
முடிவுரை
பின்னிணைப்பு
நேர்காணலுக்கு உட்பட்டோர் 11 முக்கிய நிகழ்வுகள்
உசாத்துணை நூல்கள்
சுட்டிகள்
ქ50
74
98
140
174
216
266
272
28O
292

படங்கள்களும், அட்டவணைகளும்
புற உருவப் படங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் மண்வகைகள் யாழ்ப்பாண மாவட்டத்தின் உவர்நீர்ப்பரம்பல் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பயன்பாடு யாழ்ப்பாண மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகளும் போக்குவரவுப் பாதைகளும் மலாயாவில் அரசியல் அபிவிருத்திகள் 1786-1941 மலாயாவின் நிலப்பயன்பாடு 1953
மலாயாவின் போக்குவரத்துப் பாதைகளும் பிரதான நகரங்களும்
நிழற் படங்கள்
யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச்செய்கை 1940களில் யாழ்ப்பாண சமூகம் -சில தோற்றங்கள் - 1 1940களில் யாழ்ப்பாண சமூகம் - சில தோற்றங்கள் - 11 ஆரம்ப கால முன்னோடி - சிங்கப்பூர் வைத்திலிங்கம் - 1871 மலாயாவில் நான்கு தலைமுறையினர் மலாயாவில் நாலாவது தலைமுறையினர் கோலாலம்பூரில் யாழ்ப்பாணத்தவர் பெயரில் உள்ள வீதி ஒன்று கோலாலம்பூரில் பிரித்தானிய உயரதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு கோலாலம்பூரில் வின்ட்சர் கோமகனின்
(வேல்ஸ் இளவரசர்) வரவேற்பு நிகழ்வு
XXiii
I9
2I
25
28
57
65
85
24
27
41
42
136
157
159

Page 14
XXiv
IO.
lil .
12.
13.
19.
IO
tligig, Gil DIT607 lb - The Jaffna
சிங்கப்பூரில் முன்னோடி யாழ்ப்பாணத்தவர் குடும்பம் ஒன்று கோலாலம்பூரில் யாழ்ப்பாணத்தவரால் கட்டப்பட்ட கோவிலின் தற்போதைய தோற்றம் -2001
-18. யாழ்ப்பாணத்தில் மலாய, தென்னிந்திய செல்வாக்கிலான கட்டடக்கலை - சிலதோற்றங்கள்
1900களில் மலாயாவில் செட்டிமாரால் கட்டப்பட்டு நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட வீடொன்று
அட்டவணைகள்
1911 இல் ஐக்கிய மலாய் அரசுகளில் இலங்கைத் தமிழர் 1947, 1957 மலாய குடிசன அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரித்தானிய மலாயாவில் இலங்கைத் தமிழர் - 1921 மலாயாவில் இலங்கையர் - 1911 - 1970 மலாயாவில் இலங்கைத் தமிழர் - 1911 - 1970 மலாயாவில் இலங்கைத் தமிழர், சிங்களவர்
- 190I - 1970
பிரதான ஏழு அரச துறைகளில் இடைநிலைப் பதவிகள் பெற்றிருந்தோர் - 1938
மலாயாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பண விபரம் - 1890 - 1930
மலாயன் பென்சனர் மூலம் யாழ். மாவட்டத்துள் வந்த பணத் தொகை - 1976 - 1980
மலாய இலங்கையர் சங்க அங்கத்தவர்
தொகை - 1967 - 1978
I6O
76
18O
231
234
86
87
91
92
93
94
IO4
122
222
247

C.B.E.
C.J.H.S.S.
FM.S.
I.A.T.R.
I.S.M.
I.S.O.
J.P.
M.B.E.
M.C.A.
O.B.E.
P.J.K.
S.C.T.A.
S.M.T.
S.P.G.
S.S.
TPC.A.
U.C.H.C.
U.F.M.S.
U.M.N.O.
குறுக்கங்கள்
Commander of the Order of the British Empire Ceylon Journal of Historical and Social Studies
Federated Malay States
International Association of Tamil Research
Imperial Service Medal
Imperial Service Order
Justice of the Peace
Member of the order of the British Empire Malayan Ceylonese Association
Officer of the Order of the British Empire.
Pingat Jasake Bahaktian- Meritorious Service Medal Selangor Ceylon Tami's Association Setia Makhota Trengganu - Office of the Crown of Trengganu Society for the Propagation of the Gospel
Straits Settlements
Tamilian's Physical Culture Association University of Ceylon History of Ceylon Unfederated Malay States
United Malay National Orgonization

Page 15

அத்தியாயம் 1
அறிமுகம்
வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில் இருந்தே மனிதவரலாற்றில் மானிடக் குடிபெயர்வு நடைபெற்றுவந்துள்ளது. தாம் வாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, காலநிலை வேறுபாடுகள், மேய்ச்சல் நிலமின்மை, அயலவர் பகைமை போன்றன இக்குடிபெயர்வுக்கு காரணங்களாக அமைந்தன. ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்குள் மட்டுமே வாழ்ந்த மனித சமூகம் காலப்போக்கில் இத்தகைய குடிபெயர்வுகள் மூலமே உலகின் பல பாகங்களிலும் பரவின என்பதைத் தற்கால ஆய்வுகள் காட்டுகின்றன. மிக அண்மைக் காலத்தில் நாடுகளுக்கிடையிலும் கண்டங்களுக்கிடையிலும் நடைபெற்ற குடிபெயர்வுகளில் பொருளாதார, அரசியல், சமூக, சமயக் காரணிகள் முக்கிய பங்கை வகித்துள்ளன. அத்துடன் போக்குவரவுத்துறையிலே ஏற்பட்ட வியத்தகு வளர்ச்சிகள் தூரப் பிரதேசங்களிடையே இத்தகைய குடிபெயர்வுகள் இடம் பெறுவதை ஊக்குவிக்கலாயின. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கிய குடிபெயர்வு இக்குடிபெயர்வுக்குச் சிறந்த உதாரணமாகும். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் ஐரோப்பியர் ஆட்சியினால் உலகின் பல பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, சுரங்கத் தொழில் காரணமாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் பெருமளவான தொழிலாளர் குடிபெயர்ந்தமை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. ஆசிய நாடுகளில், குறிப்பாக மலாயாவில் பிரித்தானியராட்சி படிப்படியாக வலுப்பெற்றதைத் தொடர்ந்து

Page 16
2
மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி காரணமாக இந்திய, சீனத் தொழிலாளர் பெருமளவில் மலாயாவை நோக்கிக் குடி பெயர்ந்தனர்.
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் (1870) பிற்பாதியிலிருந்து மலாயாவில் வளர்ச்சியடைந்துவந்த ஈயச்சுரங்கங்களில் தொழி லாளராக வேலை புரிவதற்குப் பெருமளவிலான சீனத்தொழிலாளர் மலாயாவிற்குள் குடிபெயர்ந்தனர். அதேகாலப்பகுதியில் வளர்ச்சியடைந்துவந்த பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் காரணமாக ஏராளமான இந்தியத் தொழிலாளர் வருகை இடம்பெற்றது. தகரத்தொழிலினாலும், றப்பர்த்தொழிலினாலும் மலாயாவில் பெருமளவு பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில் பிரித்தானியராட்சியை மலாயாவில் கொண்டு நடத்த, இடைநிலைப் பதவிகளை வகிப்பதற்குத் தகுதியானவர்கள் மலாயாவில் காணப்படாததால் அப்பதவிக்கு ஏற்றவர்களாக விளங்கிய இலங்கைத்தமிழர் சிறப்பாக யாழ்ப்பாணத்தவர் வேண்டப்பட்டனர். இலங்கையிலிருந்து உயர் பிரிட்டிஷ் அதிகாரிகள் மலாயாவிற்கு உயர் பதவிகளைப் பெற்று மாற்றலாகிச் சென்றமையும், இலங்கையில் கோப்பிப் பெருந்தோட்டச் செய்கையை மேற்கொண்டவர்கள் கோப்பி வீழ்ச்சியின் காரணமாக இலங்கையை விட்டு மலாயா சென்று அங்கு தம் பெருந்தோட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தமையும், இவ்விரு சாராரின் கீழ் இலங்கையில் யாழ்ப்பாணத்தவர் கடமையாற்றியதால் ஏற்பட்டிருந்த தனிப்பட்ட தொடர்புகளும் யாழ்ப்பாணத்தவர் இடைநிலைப்பதவிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தன.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமெரிக்கன் மிஷன் போன்ற கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்கள் வழங்கிய உயர் கல்வி வசதிகளினாலும், சைவ அபிமானிகளாலும், இந்துமத நிறுவனங் களினாலும் வழங்கப்பட்டுவந்த கல்வியினாலும் இடைநிலைப் பதவிகளை வகிக்கக்கூடியளவிற்குத் தகுதிபெற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் பெருமளவில் காணப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் புவியியல் நிலைமைகள் இவரனை வருக்கும் போதிய வேலைவாய்ப்பை விவசாயத்துறையில் வழங்க முடியாதிருந்தமையாலும் இவ்விதம் கற்ற வாலிபர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதை அதிகம் விரும்பாமையினாலும், இடைநிலை அரசபதவிகளை அதிகம் விரும்பியமையாலும் மலாயாவில் வாய்ப்புகள் ஏற்பட்டபோது அங்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்தனர்.

அறிமுகம் 3
இக்காலப் பகுதியில் போக்குவரவுத்துறையில் ஏற்பட்ட அபிவிருத்திகளும் யாழ்ப்பாணத்தவர் மலாயாவிற்குக் குடிபெயர் வதை ஊக்குவித்தன. நீராவிக்கப்பல்களின் வருகை, முன்போலன்றி குறைந்த நாட்களில் இலங்கையிலிருந்து மலாயாத்துறைகளை அடையும் வசதிகளை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையிலும் யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் புகையிரதப் பாதை 1905இல் அமைக்கப்பட்டமை நேராகவே கொழும்பு சென்று மலாயாவுக்குக் கப்பல் எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. மலாயாவில் பிரித்தானியராட்சி வலுப்பெற்றமை, அங்கு ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, அரசதுறையிலும், தனியார் துறை களிலும் காணப்பட்ட தொழில்வாய்ப்புக்கள், பன்மைச்சமூகமாக மாறி வருகையில் பிரித்தானியர் குடிபெயர்ந்தவர்க்கு அளித்த பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகிய அனைத்தும் கற்ற யாழ்ப்பாணத்து இளைஞரை மலாயாபால் கவர்ந்திழுத்தன.
மலாயாவில் இடம்பெற்ற சீன, இந்திய குடிபெயர்வுபற்றிப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். மலாயாவில் சீனரதும், இந்தியரதும் பொருளாதார, அரசியல், சமூக நடவடிக்கைகள் பற்றிய பல ஆராய்ச்சி நுால்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவர்களது குடிபெயர்வின் பல்வேறு அம்சங்களும் நன்கு ஆராயப்பட்டுள்ளன. மலாயாவுக்கு யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்ந்தமைபற்றி ஒழுங்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இதனை ஒரளவுக்கு நிறைவு செய்ய இவ்வாய்வு முயற்சித்துள்ளது. சீனருடனோ, இந்தியருடனோ இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்களை எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிட முடியாவிடினும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் தம் அளவுக்கேற்ப முக்கியத்துவம் பெற்றவர் களாகவே காணப்பட்டனர். சீனர், இந்தியர் பெருமளவுக்குத் தொழிலாளராக மலாயாவுக்கு குடிபெயர இலங்கையர் பெருமளவுக்கு இடைநிலைப் பதவிகளை வகிப்பவர்களாகவே குடிபெயர்ந்தனர். இங்கு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர் என்று குறிப்பிட்டாலும் இவர்களுள் பெரும்பாலானோர் யாழ்ப் பாண மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களாகவே காணப் பட்டனர். அதுவும் யாழ்ப்பாணத் தமிழராகவே காணப்பட்டனர். மிகக் குறைந்தளவு சிங்களவரே மலாயாவுக்குக் குடிபெயர்ந் துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தவர் போல் அத்துணை முக்கியத்
துவம் பெறவில்லை.

Page 17
4 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
யாழ்ப்பாணச்சமூகத்தில் மலாயத்தொடர்பு ஏறக்குறைய ஒரு நுாற்றாண்டு காலமாகப் பெரும் முக்கியத்துவம் வகித்து வந்திருக் கிறது. யாழ்ப்பாணச்சமூகத்தின் பொருளாதார, சமூக, சமய, அரசியல் துறைகளில் மலாயப்பணமும் அதன் செல்வாக்கும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மலாயன் பென்சனர் மூலமாக யாழ்ப்பாணப் பிரதேசத்திற்குள் வந்து குவிந்த பணம் இப்பிரதேசத்தின் பணப் பயிரான புகையிலைச் செய்கை மூலம் பெறப்பட்ட வருமானத்திலும் அதிகமானதாகவே காணப்பட்டது. 1980கள் வரை இத்தொகை யாழ்ப்பாண மாவட்டத்தின் வருமானத் தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே காணப்பட்டது. மலாயன் பென்சனர் தொகை குறைந்து போனாலும் அவர்களது பென்சன் இலங்கை ரூபாவில் மாற்றிக்கொடுக்கப்படுவதால் அவர்கள் அதிகமான வருமானத்தையே அண்மைக்காலம் வரை பெற்று வந்தனர்.
பொதுவாகப் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் மூன்றாம் காலி லிருந்து மிக அண்மைக்காலம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார, சமூக, அரசியல் வாழ்வில் மலாயத் தொடர்பும் அதனால் பெறப்பட்ட பொருளாதார பலமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற மலாயக் குடி பெயர்வை ஆராய்வதே இந்நுாலின் நோக்கமாகும். மலாயாவிற்கு யாழ்ப்பாணத்தவர் ஏன் குடிபெயர்ந்தார்கள்? எவ்வாறு குடி பெயர்ந்தார்கள்? மலாயாவில் அவரது வாழ்க்கை எப்படிக் காணப்பட்டது? யாழ்ப்பாணச்சமூகத்தில் மலாயத் தொடர்பு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? போன்ற வினாக்களுக்கு இவ்வாய்வு நுால் விடையளிக்க முனைகிறது.
இந்நூலில் யாழ்ப்பாண மாவட்டம் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டையும், தீவுப்பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத் தையே குறிக்கும். இங்கு குறிப்பிடப்பட்ட பிரதேசத்திற்கு அப்பாலிருந்து குடிபெயர்ந்த தமிழர் என்று குறிப்பிடக்கூடியவர் மிகச் சிலரே. மலாயாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர் பரந்தன், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் தங்கி வாழ்வோரும் மிகச் சிலராகவே காணப்பட்டனர்.
இந்நுாலில் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிரதேசம் பிரித்தானியராட்சியில் மலாயா என்று அழைக்கப்பட்ட நிலப்பரப் பாகும். அதாவது மலாயத் தீபகற்பத்தையும், பினாங்கு,

அறிமுகம் 5
சிங்கப்பூரையும் உள்ளடக்கிய பகுதியையே அது குறிக்கிறது. தற்போது அது மேற்கு மலேஷியா என்று வழங்கப்படும் பகுதியும் சிங்கப்பூர் குடியரசுமாகும். இந்நுாலில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள்மலாயாஎன்றே குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பிரதேசத் தினுள்ளும் பெராக், செலங்கூர், நெகிரி செம்பிலான், பஹாங், ஜோகூர், சிங்கப்பூர் ஆகிய அரசுகளிலேதான் யாழ்ப்பாணத்தவர் பெருமளவு காணப்பட்டனர். முக்கியமாக மேற்குக்கரையோர அரசுகளின் பிரதான நகரங்களான சிங்கப்பூர், செரம்பான், கிளாங், கோலாலம்பூர், ஈப்போ, தைப்பிங், பினாங்கு போன்றவற்றில்தான் இவர்கள் பரவிக் காணப்பட்டனர். யாழ்ப்பாணத்தவரில் பெரும்பாலானோர் அரசாங்கத் துறையிலும் சிறுதொகையினரே தனிப்பட்ட நிறுவனங்களிலும் இடைநிலைப் பதவிகளை வகித்தனர். இத்தொழில்களின் அமைவு சார்ந்து இவர்கள் நகரப்புறங்களில்தான் பெருமளவு காணப்பட்டனர். பல்லின, பன்மத மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேதான் யாழ்ப்பாணத்தவர் வாழ்க்கையும் அமைந்திருந்தது. இத்தகைய சூழலில் வாழ்ந்தாலும் தம் தனித்துவத்தை இழக்காதவராகப் பழமை பேணும் பண்பு கொண்டவர்களாகவே இவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்வும் அது தொடர்பான விடயங்களும் இவ்வாய்விலே 1870 இன் ஆரம்பத்திலிருந்து 1957 வரையுள்ள காலப்பகுதி வரை எடுத்து நோக்கப்பட்டுள்ளன. 1870 இலிருந்து மலாயக்கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட 1957 வரைப்பட்ட சுமார் 90 ஆண்டுகாலப்பகுதியில் மலாயா நோக்கிய யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்வின் சிறப்புத்தன்மைகளை இந்நுால் விரிவாக ஆராய்கிறது. அதாவது சிங்கப்பூர் வைத்திலிங்கம் அவர்கள் மலாயா சென்றதாகக் கருதப்படும் காலம்தொட்டு (1870) மலாயா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1957 வரையையும் இது குறிக்கிறது. ஆயினும் மலாயத்தொடர்பு ஆரம்பித்த காலத்திலிருந்து மிக அண்மைக்காலம் வரை யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம், விளைவுகள் பற்றியும் இந்நுால் தனது கவனத்தைக் குவித்துள்ளது.
மலாயாவுக்கு யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்ந்தமைபற்றி ஒழுங்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் திரு. எஸ். gy60)JJIIg92ásub egy Guig, Gilsit A Hundred Years of Ceylonese in Malaysia and Singapore 1867 - 1967 என்ற நுால் மட்டுமே மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களைத் தரும்

Page 18
6 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
அரிய ஆதாரமாகத் திகழ்கிறது. பொதுவாக யாழ்ப்பாணத்தவரின் மலாயக் குடிபெயர்வு பற்றிய எழுத்தாதாரங்கள், தகவல்கள், குறிப்புக்கள் என்பன கிடைக்காததன் காரணமாக மலாயாவில் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை அரசாங்க, தனியார் துறைப் பதவிகளை வகிப்பதில் கழித்த மலாயத் தொடர்பு உள்ளவர்களை நேர்முகமாகவே சந்தித்தாவது தகவல்களைப் பெறவேண்டிய தேவை இவ்வாய்வு பொறுத்து அவசியமாயிற்று. அவ்வகையில் குடாநாட்டிலும் தீவுப்பகுதியின் பல பகுதிகளிலும் வாழும் மலாயன் பென்சனரையும், மலாயத் தொடர்பு உள்ளவர்களையும் நேர்முக விசாரணை செய்ய வேண்டி ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாகங்களிலும் வசிக்கும் நாற்பது மலாயன் பென்சனருடனும், மலாயத் தொடர்புள்ளவர்களுடனும் வினாக் கொத்தின் உதவி கொண்டும் நேர்முக விசாரணை நடாத்திப் பெறுமதிமிக்க தகவல்களையும், விபரங்களையும், அபிப்பிராயங் களையும் பெறமுடிந்தது. அத்துடன் இவர்கள் மலாயாவில் வாழ்ந்த காலத்தில் அக்கறையுடன் பங்குகொண்ட இலங்கைத் தமிழர் சங்கங்கள், மற்றும் பொதுக் கழகங்கள் பற்றிய நடவடிக்கைகள், இச்சங்கங்களின் ஆண்டறிக்கைகள், வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா மலர்கள், இச்சங்கங்களின் நடவடிக்கைகள் பற்றிய கட்டுரைகள், நுால்கள் மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் நடவடிக் கைகள் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய வேறும் துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும் பெற முடிந்தது. இவ்வாறே மலாயா நோக்கிய குடிபெயர்வு நடந்த காலத்தில் இலங்கையில் அரசாங்கப் பதவிகளை வகித்து இளைப் பாறியிருப்பவர்கள் சிலரிடமும் மேற் கொண்ட நேர்முக விசாரணைகளிலிருந்து அக்கால நிலைமைகள் பற்றியும், மலாயக்குடிபெயர்வு அக்காலத்தில் பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றியும் பல முக்கிய தகவல்கள், விபரங்கள் கிடைக்கப்பெற்றன.
இத்தகைய நேர்முக விசாரணைகளை விட இக்காலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளில் மலாயக்குடிபெயர்வு தொடர்பாக வந்த தகவல்கள், விபரங்கள் அனைத்தும் இந்நுாலாய் விற்காக ஆராயப்பட்டன. மலாயாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த இலங்கைத் தமிழரது பல்வேறு சங்கங்களின் விழா மலர்கள், சஞ்சிகைகள், இலங்கை திரும்பிய மலாயன் பென்சனரால் ஏற்படுத்தப்பட்ட மலாய இலங்கையர் சங்கத்தின் ஆண்டறிக்
கைகள், வெள்ளிவிழா மலர் ஆகிய அனைத்தும் இந்நுால்

அறிமுகம் 7
ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இலங்கை அரசாங்கத்தின் குடித்தொகை அறிக்கைகள், நிர்வாக அறிக்கைகள் என்பனவற்றில் மலாயக்குடிபெயர்வு பொறுத்துக்காணப்பட்ட விபரங்களும் ஒப்புநோக்கப்பட்டுள்ளன. மலாயாவில் வாழ்ந்த இந்தியர், இலங்கையர் நிலைமை பற்றி அந்தந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளால் ஆராய்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளும் இவ்வாய்வுக்கு உதவியுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல கல்லுாரிகளின் வருடாந்த மலர்கள், வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா மலர்களும் அவ்வாறே இந்து மத நிறுவனங்களால் வெளியிடப்பட்ட மலர்களும் இந்த ஆய்வின் முழுமைக்குத் துணைபுரிந்துள்ளன. பொதுவாக மலாயாவில் இந்தியர், சீனர் குடிபெயர்வு பொறுத்து வெளிவந்த ஆராய்ச்சி நுால்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் யாழ்ப்பாணத்தவரின் மலாயக்குடிபெயர்வு பற்றிய ஆராய்வை புதிய ஒளியில் பரிசீலனை செய்யப் பெரிதும் உதவின. இந்த விரிவான சான்றாதாரங்களினதும் களநிலை ஆய்வுகளினதும் துணையுடனேயே եւ ուք மாவட்டத்திலிருந்து மலேயாவுக்கு நடைபெற்ற குடிபெயர்வு பற்றிய பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த ஆராய்ச்சி நுால் முழுமைபெறமுடிந்தது.

Page 19
அத்தியாயம் 2
குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட நிலைமைகள்
இலங்கையில் பிரித்தானியராட்சி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே மிஷனரி இயக்கங்கள் கல்வி நடவடிக்கைகளிலே ஈடுபட்டிருந்தன. அவர்களால் நடத்தப்பட்ட பாடசாலைகளிலே ஆங்கிலக் கல்வி பெற்று வெளி யேறியவர் இலங்கையின் பிறபாகங்களிலும் பிரித்தானியராட்சி நிலவிய இந்தியா, பர்மா, மலாயா போன்ற இடங்களிலும் அரசாங்க உத்தியோகங்களையும், வேறு தொழில்களையும் பெற்றுக் கொள்ளும் மரபொன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். மிஷனரி இயக்கங்களுக்குப் போட்டியாக எழுந்த இந்து நிறுவனங்களால் நடத்தப்பட்ட பாடசாலை களிலிருந்து ஆங்கிலக் கல்வி பெற்று வெளியேறியோரும் இந்த மரபிலே இணைந்து கொண்டனர். இவற்றால் யாழ்ப்பாணச் சமூகத்திலே அரசாங்க தனியார் உத்தியோகம் பொறுத்து தனியானதோர் கெளரவமும், சமூக அந்தஸ்து பொறுத்து உயர்வு மனப்பான்மையும் வளர்ந்துவந்தது. இப்பின்னணியிலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் எந்தளவிற்கு யாழ்ப்பாணத்தவர் மலாயாவிற்குக் குடிபெயர்வதற்கு உதவியிருந் தன என்பது நுணுகி நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிக் காலிற்குச் சிறிது

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1 9
முன்பாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து யாழ்ப்பாண மக்கள் குடிபெயர்ந்து செல்லத் தொடங்கிவிட்டனர். இக்குடிபெயர்வு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து புறப்பட்டு மற்றைய இலங்கைப் பிரதேசங்களுக்குச் செல்வதோடு மட்டுமல்லாது கடல் கடந்து இந்தியா, பர்மா, மலாயா போன்ற பிரதேசங்களுக்கும் செல்வதாக அமைந்தது. இவற்றுள்ளே மலாயத் தீபகற்பத்தில் காணப்படும் gj6u LOGUTu gjuJigsgi (Federated Malay States - F.M.S.) Gig, TG GJITuj குடியேற்றங்கள் (Straits Settlements - S.S.) ஐக்கியப்படுத்தப்படாத LD GvIIu egy Jérő Git (Unfederated Malay States – U.F.M.S.,) egy,8) u இம்மூன்றிற்கும் 1870 லிருந்து 1925 வரை பெருந்தொகையான யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்ந்து சென்றுள்ளனர். இக்காலப் பகுதியின் பின்னருங்கூட 1940 வரையுள்ள காலப்பகுதியுள்ளேயும் முதற் பகுதியைப் போல பெருமளவினர் அல்லாவிடினும் குறிப்பிடத்தக்க யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்ந்துள்ளனர்.
பொதுவாகக் குடிபெயர்வு என்னும்போது தனியாள் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ தனது இருப்பிடத்தை நிரந்தரமாக மாற்றி அமைப்பதையே கருதுகின்றது. ஒரு சமூக அமைப்பில் இருந்து இன்னொரு சமூக அமைப்பை நோக்கி குடிபெயர்வு இடம்பெறும் போது புதிய அமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய தன்மையைப் பெற்றுக் கொள்வது அவசியமானதாகும். இவ்வகையிலே மானிடக் குடிபெயர்வு பற்றி ஆராய்ந்தவர் இரண்டு முக்கிய கோட்பாடுகளை வைத்து அதன் இயக்கத்தை ஆராய்ந்துள்ளனர். அக் கோட்பாடு களாக தள்ளுவிசை, இழுவிசைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன. தள்ளுவிசை எனக் கூறும்போது ஒரு பிரதேசத்தில் இயற்கை வளங்கள் அழிந்து அதனால் வறுமை ஏற்பட்டு அங்குள்ளவர் வேறிடங்களுக்குச் செல்லத்துாண்டப்படுவதைக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 1845இலும் 1846இலும் அயர்லாந்திலும், ஜேர்மனியின் றைன் நதிப் பிரதேசத்திலும் முக்கிய உணவுப் பொருளாக இருந்த உருளைக்கிழங்கு விளைச்சல் தொடர்ந்து தோல்வி அடைந்தமையால் குடிபெயர்வதைத் தவிர அப்பிரதேசத் தவர்க்கு வேறு வழியே இருக்கவில்லை என்பதைக் காட்டலாம். இழுவிசை என்று கூறும்போது ஒரு பிரதேசத்தில் சிறந்த வேலை வாய்ப்பு வசதிகள், அதிக சம்பளம், இருப்பிட வசதிகள், உயர்ந்த வாழ்க்கைத்தரம், தங்கம், வெள்ளி போன்ற பெறுமதிமிக்க
பொருட்கள் கிடைப்பது என்பவற்றால் மக்கள் கவரப்பட்டு இப்

Page 20
O மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
பிரதேசங்களுக்கு இழுத்துச் செல்லப்படலாம். எப்படி இருந்த போதும் அநேகமான குடிபெயர்வுகளில் இந்த இரண்டு சக்திகளும் செயற்படுவதனை அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து மலாயாத்தீபகற்பத்திற்கு குடிபெயர்ந்தமை அத்திலாந்திக் பெருங்குடிபெயர்வுடனோ, தென்னிந்தியாவில் இருந்து பிரித்தானியா ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுக்குக் குடிபெயர்ந்தமையுடனோ ஒப்பிடக்கூடிய அளவிற்குப் பெரிதாக இல்லாவிடினும் அதனுடைய அளவு, தன்மைக்கேற்றவகையில் முக்கியத்துவமான ஒன்றேயாகும். எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றமைக்கான காரணங்களையும் மேற் குறிப்பிட்ட இரு கோட்பாடுகளின் அடிப்படையில் நன்கு விளங்கிக் கொள்ளலாம். இதற்கு இக்காலப்பகுதியிலே - அதாவது 1870 இற்கும் 1957 இற்கும் இடையில் இலங்கையில், சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை நன்கு விளங்கிக்கொள்வது அத்தியாவசியமானதாகும்.
1815 இல் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் பிரித்தானியருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தொடர்ந்து 1833 இல் கோல்புறுாக் - கமெரன் சீர்திருத்தங்களின் விளைவாக இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1889 இல் இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இவற்றை நிர்வகிப்பதற்காக இங்கிலாந்திலிருந்தும் ஏனைய மேற்கத்திய நாடுகளிலிருந்தும் உயரதிகாரிகள் கொண்டு வரப்பட்டனர். இவர் களுள் அநேகர் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலே பல்தரத்திலான உயர் பதவிகளை வகித்தவராக இருந்தனர். இலங்கையிலிருந்து பல உயரதிகாரிகள் மலாயக் குடாநாட்டுக்குச் செல்வதும், அங்கு கடமை புரிந்த உயர் அதிகாரிகள் இங்கு கடமை யாற்றவருவதும் பொதுவாகக் காணப்பட்டது. இந்த வகையில் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிக்காலிலிருந்து இலங்கையில் பொது வேலைப்பகுதி, புகையிரதப்பகுதி, நிலஅளவைப்பகுதி, கட்டிடப்பகுதி ஆகிய துறைகளில் வேலை புரிந்த அனேக உயரதி காரிகள் மலாயக் குடாநாட்டிற்கு மாற்றலாகிச் செல்வதைக் காண முடிகின்றது. இலங்கையில் இவர்களின் கீழ் யாழ்ப்பாணத்தவர் கடமையாற்றியதிலிருந்து அவர்கள் திறமை, நேர்மை, முயற்சி

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1
பற்றி நன்கு அறிந்திருந்தனர். இதன் விளைவாக இவ்வுயரதிகாரிகள் தாம் மலாயக் குடாநாட்டிற்குச் சென்றபோது தமக்கு உதவியாகத் தம் கீழ் கடமையாற்றிய யாழ்ப்பாணத்து இளைஞரையும் அழைத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற உயரதிகாரிகளுள் பேர்ச் (J,WW. Birch), Gugg307 i ((C.E. Spooner), Gib Tu Gi GD Li (Noel Trotter சிங்கப்பூரின் முதலாவதாக நியமனம் பெற்ற தலைமை தபால் அத்தியட்சகர்), பிறேயர் (GW Fryer, பிரதம வதிவிட கட்டுமானப் பொறியியலாளர்), றோப்சன் (J.H.M. Robson, கோலாலம்பூர் மலே மெய்ல் பத்திரிகை நிறுவனர்), ஒலிவர் மாக்ஸ் (Oliver Marks, பெராக்கிற்கான பிரித்தானிய வதிவாளர்), ஜோன் ட்றம்ப் (John Trump பெராக் அரச புகையிரதசேவை 2வது பிரிவு சிலோன் பயணியர்ஸின் கட்டளையிடும் அதிகாரி), எச். வாட் (H. Ward), ஏ.ஆர். வெனிங் (A.R.Venning செலங்கூர் அரச திறைசேரிப் பொறுப்பாளர்), அலெக்சாந்தர் சுவெற்றன்காம் (Alexander Swettenham, வதிவிட மேலாளர்), மறே (Maray தொடுவாய் குடியேற்றம்), வில்லியம் ரெய்லர் (WilliamTaylor சிங்கப்பூருக்கான குடியேற்றநாட்டுச் செயலர் பின்னர் FMS பிரதம வதிவாளர்), பிறங் சுவெற்றன்காம் (Frank SWettenham)" என்போர் குறிப்பிடத்தக்கவர்.
இலங்கையின் தேசாதிபதிகளாக விளங்கிய சேர் ஹென்றி D65 Golb(Sir Henry Maccallum)" (Šefi g)í5)g4 66í)(3u Tl (Sir Hugh Clifford)" (39 i 965 ton II G4пGibuq G4пL" (Sir Andrew Caldecott)" என்போரும் மலாயக் குடாநாட்டில் கடமையாற்றி இலங்கை நிர்வாகத்தை ஏற்றவர்களாவர். இவர்களுள் 1870 அளவில் இலங்கை நிர்வாக சேவையிலிருந்த பேர்ச் (WW.Birch) என்பாரும் நோயல் றோட்டர் என்பாரும் தொடுவாய் குடியேற்றத்தின் அழைப்பின் காரணமாகச் சிங்கப்பூர் வந்தனர். இவர்கள் மூலமாகவே 1871 அளவில் ‘சிங்கப்பூர் வைத்திலிங்கம்’ என்று பிரபல்யம் பெற்ற முன்னோடி யாழப்பாணத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார். தொடர்ந்து இலங்கையில் கோப்பித் தோட்டங்களை அமைத்த ஐரோப்பியப் பெருந்தோட்டக்காரர் வருகை இடம் பெற்றது. பின்னர் 1883 அளவில் கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஐரோப்பியருக்கு உதவியாக இலங்கையரும் இத்தொழில் துறைக்கு அறிமுகமாகினார்கள். அடுத்து 1891 அளவில் இலங்கையில் பகிரங்க வேலைப்பகுதியில் கடமையாற்றிய ஸ்பூனர், செலங்கூர் இராச்சியத்தின் பிரதம பொறியியலாளர் பதவியை பெற்றுக்

Page 21
12 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
கொள்கின்றார். இவர் தன்னுடன் வேலைபார்த்த பல இலங்கை யரைச் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழரை அழைத்து வந்தார். இக்காலமளவில்தான் ஒலிவர் மார்க்ஸ் என்ற பெருந்தோட்டக்காரர் இலங்கையிலிருந்து கிரிக்கெட் குழுவுடன் மலாயா வந்து பின்னர் பெராக்கின் 'பிரித்தானிய வதிவாளராக ப் பதவி பெறுகிறார். நோயல் றோட்டர் இலங்கையிலிருந்து வந்து சிங்கப்பூரில் முதலாவது தபால் தந்தித்தலைவராகப் பதவி பெற்று 1882 வரை கடமையாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொன்னம் பலம் அருணாசலத்துடன் கல்வி பயின்ற சேர் வில்லியம் றெய்லர் ஐக்கிய மலாய அரசுகளின் வதிவாளர் நாயகமாகப் பதவி பெற்ற தைத் தொடர்ந்து அனேக இலங்கையர் மலாய அரச சேவையில் சேர்ந்து கொள்ளுகின்றனர். இவற்றை விட புகையிரதப் போக்கு வரவு முகாமையாளராக குக் (Cook) என்பவர் 1917 இல் சென் ஜோன்ஸ் கல்லூரியின் தலைவரான யாகோப் தொம்சனுடன் செய்து கொண்ட ஒழுங்குகளின் பேரில் யாழ்ப்பாண வாலிபர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. பிரித்தானிய உயரதிகாரி களின் கீழ் கடமையாற்றிய யாழ்ப்பாணத் தமிழரின் கடமையுணர்வு, அர்ப்பணிப்பு, திறமை என்பவற்றின் காரணமாக பாராட்டினைப் பெற்றுள்ளனர். அதனால் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகவும் விளங்கினர். இவ்வாறு தனிப்பட்ட வகையில் உயரதிகாரி களின் தொடர்பின் விளைவாகக் கல்விகற்ற யாழ்ப்பாணத்து வாலிபர் குறிப்பிடத்தக்க அளவிற்கு மலாயக் குடாநாட்டில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டார்கள். இவ்வாறு சென்றவர் களை மையமாக வைத்து மலாயா நோக்கிய யாழ்ப்பாணக் குடிபெயர்வு வளர்ச்சியடைந்து சென்றது.
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பாதியிலே பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலே பெருமளவு அமைதி நிலவி யது. மலாயக் குடாநாட்டிலும், இலங்கையிலும் அமைதியான சூழலே காணப்பட்டது. பிரித்தானியராட்சிக்கு எதிர்ப்போ, வெறுப்போ, முற்றாக நீக்க வேண்டுமென்ற கிளர்ச்சியோ இப்பிர தேசங்களில் காணப்பட்டதென்று கூறமுடியாது. பிரித்தானியர் ஆட்சியை விரும்பியேற்ற மனப்பாங்கே இலங்கையில் காணப் பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டினைப் பொறுத்து மேலும் ஆதரவானதாக - அவர்களாட்சியைப் பெருமளவு போற்றி ஏற்கும் தன்மையுடையதாகக் காணப்பட்டது. பிரித்தானிய மன்னரின்

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1 13
முடிசூட்டு விழாவின்போதும், அவரது வாழ்க்கையிலே இடம் பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போதும் இந்த விசுவாசம் பெருமள விற்கு வெளிப்பட்டது. இத்தகைய சூழ்நிலையே இரு பிரதேசங் களிலும் நிலவியதால் மலாயக் குடாநாட்டிற்கு யாழ்ப்பாணத்தவர் சென்று தொழில் பெற்று வாழ்வது இயல்பாக நடந்தேறியது. ஒரே ஆட்சிமுறை, ஒரே நிர்வாக அமைப்பு, ஒரே ஆட்சிமொழி, ஒரே எசமானர் ஆகிய காரணங்களால் யாழ்ப்பாணத்தவர் மலாயாவில் தொழில் பெற்று வாழ ஊக்குவிக்கப்பட்டனர்.
ஐக்கிய மலாய அரசுகளும், தொடுவாய்க் குடியேற்றங்களும் தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 1867 தொடக்கம் அநுபவம் பெற்ற உயரதிகாரிகளை அனுப்பியுதவுமாறு இலங்கை அரசாங்கத்தை விண்ணப்பித்தது போலவே இடைநிலை ஊழியரையும் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொண்டன. மலாயா வில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப நாட்களில் உள்ளூர் நிர்வாக அலுவல்களிலோ, அபிவிருத்தி முயற்சிகளிலோ ஈடுபடக்கூடியள விற்கு கல்வி அறிவு பெற்ற சுதேசிகள் அங்கு மிகவும் குறைவாக இருந்ததன் காரணமாக இலங்கை அரசாங்கத்திடம் இத்தகைய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. மலாய மக்கள் நிர்வாக அலுவல்களில் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளில் குறிக்கப் பட்ட வேதனத்தில், குறிக்கப்பட்ட நேரத்தில் ஈடுபட்டு வேலை செய்வதைக் காட்டிலும் தங்களின் பாரம்பரிய விவசாய நடவடிக்கை களிலும், மீன்பிடித் தொழிலிலும் ஈடுபடுவதிலேயே கூடிய விருப்புடையவராய்க் காணப்பட்டனர்." 1885 - 1920 காலப்பகுதியில் மலாயாவில் ஏற்பட்ட அரசியல், நிர்வாக, பொருளாதார அபிவிருத்திகளினால் பெருமளவிலான இடைநிலைப் பதவிகளை வகிக்கக்கூடிய ஆங்கில அறிவு கொண்ட ஒரு வகுப்பினர் வேண்டப்பட்டனர். மலாயா அரசுகள் தாராள பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியதால் பெருமளவு வேலை வாய்ப்புக் களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. இடை நிலைப் பதவிகளுக்கு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள வெள்ளையின மக்களைப் பெறமுடியாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாகப் பெருமளவிற்கு ஆங்கிலக் கல்வி கற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் இடைநிலைப் பதவிகளைப் பெறும் விருப்புடன் தம் சொந்தச் செலவிலே மலாயக் குடாநாட்டிற்கு வந்தனர்." மலாய அரசின் வேண்டுதலின்

Page 22
14 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
விளைவாக இலங்கை நிர்வாக சேவையிலிருந்து மாற்றலாகி வந்த பிரித்தானிய உயரதிகாரிகள் தமக்குதவியாகக் குடியேற்ற நிர்வாகத் திற்கான எழுதுவினைஞர்களையும், நிருமாணப்பணி மேற்பார்வை யாளரையும் மற்றும் புகையிரதப்பகுதி, தபால் தந்திப் பகுதி, நில அளவைப் பகுதி, துறைமுகப் பகுதிக்கான இடைத்தர ஊழியர் களையும் இலங்கைத் தமிழரிடமிருந்தே நியமித்துக் கொண்டார் கள்." இலங்கைத் தமிழர் என்பது இங்கு யாழ்ப்பாணத்தவரையே குறிக்கின்றது.
மேலும் மலாயக் குடாநாட்டில் சுதேச ஆட்சியாளராகிய சுல்தான்களும், பிரித்தானிய அரசாங்கமும் ஒன்றிணைந்து அதன் அபிவிருத்திக்கு வெளிநாட்டவர் உதவ வேண்டுமென e9l ᎧᏗ éᎭ Ꭰ அழைப்பு விடுப்பதனைக் கண்டு கொள்ளலாம். உதாரணத்துக்கு செலாங்கூர் அரசின் சுல்தான் வெளி நாட்டவர் தங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவதற்காக வரவேற்கப்படுகிறார்கள் என்பத னைப் பிரகடனப்படுத்தியதைக் காட்டலாம். இதனைக் தொடு வாய்க் குடியேற்றத்தின் குடியேற்றச் செயலர் 25 ஜனவரி 1875 ஆம் திததியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடு கின்றார். 'நாங்கள் இப்பிரகடனத்தைப் பூரணமாக அங்கீகரிப்பதுடன் செலாங்கூர் மற்றும் மாகாணங்களுக்குச் சென்று அங்கு குடியேறவோ அல்லது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவோ விரும்பும் அனைத்து நன்மக்களுக்கும் எங்கள் அதிகாரிகள் சகல உதவிகளும் புரிவார்கள்." 1875 - 1925 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான யாழ்ப்பாணத்தமிழ் இளைஞர் மலாயக் குடாநாட்டில் அரசாங்க சேவையில் இடைநிலையிலான பதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இரண்டாம் காலிலிருந்தே இலங்கையின் பொருளாதார வரலாற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கிவிட்டன. குறிப்பாக கோல்புறுாக் - கமெரன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையின் சமூக, பொருளாதார, நிர்வாக அமைப்பிலே முக்கிய மாற்றங்கள் ஏற்படலாயின." இவற்றுள் மிக முக்கியமானது இதுவரையும் விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இலங்கை, வர்த்தகப் பொருளாதாரத்துக்கு மாற்றியமைக்கப் பட்டதாகும். இதனால் மத்தியகால இலங்கையின் பொருளாதார அமைப்பு சிதைந்து அந்த இடத்தைப் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையானது பிடித்துக்

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1 15
கொண்டது. இப் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை புதிய முறையான பொருளாதாரப் பழக்கங்களையும், அக்காலத்திலிருந்த பொருளா தார அமைப்பிற்குப் புதிதான பல கருத்துக்களையும் கொண்டுவந்து அது வரை நிலைத்திருந்த அமைப்பின் அடித் தளங்களை விரைவில் அரித்தது." கோப்பிப் பயிர்ச்செய்கையே பெருந்தோட்டப்பயிர்ச் செய்கையில் முதலில் முக்கிய இடத்தை வகித்தது. 1840 இல் உருவான “கோப்பிக் காய்ச்சல் வெகு விரைவாகப் பரவியது. 1847 - 1850 இல் இடம்பெற்ற வியாபார மந்தத்தின் பின்னர் இன்னும் வேகமாக கோப்பித் தொழில் வளர்ச்சியடைந்தது. 1870 இல் கோப்பித் தொழில் உச்ச நிலையை அடைந்தது. அடுத்த சில வருடங்களில் கோப்பி விலை 50 சதவீதம் உயர்ச்சி அடைந்தது. இந்நிலைமைகளினால் 1878 இல் 275,000 ஏக்கர் தோட்டநிலங்கள் ஐரோப்பியருக்குச் சொந்தமாயிருந்தன.* ஆனால் இந்நிலைமை யானது 1890 க்கு முன்பாக எதிர்பாராத அளவு வீழ்ச்சி கண்டது. கோப்பிப் பயிர்ச்செய்கை நோயினால் பாதிக்கப்பட்டமையாலும், பிரேசிலில் மலிவான முறையில் பெருமளவு கோப்பி உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய சந்தைகளுக்கு வந்தமையாலும் ஐரோப்பியத் தோட்டக்காரருக்கு பெருநட்டம் உண்டாயிற்று. 1889 அளவில் கோப்பித் தோட்டங்களும் 50,000 ஏக்கர்களாகக் குறைந்து விட்டன." இந் நிலைமைகளினால் ஐரோப்பிய பெரும்தோட்டக் காரருள் 400 பேர் இலங்கையை விட்டு வெளியேறினர்.”
இவ்வாறு வெளியேறியவர்களுள் குறிப்பிடத்தக்க அளவினர் புதிதாக அபிவிருத்தியடைந்து வந்த மலாயக் குடா நாட்டிலே பெருந்தோட்ட முயற்சிகளிலே ஈடுபட்டனர். மலாயாவில் பெருந் தோட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஐரோப்பியர்களுள், சிறப்பாக பரந்தளவிலான கோப்பிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர்களில் இலங்கையிலிருந்து வந்தவர்களே அனேகமானவர்.* இலங்கையில் இருந்து மலாயாவிற்கு வந்த பிரித்தானிய பெருந்தோட்ட முயற்சியாளர் தமக்குத் தேவைப்பட்ட இடைநிலையிலான உத்தி யோகத்தருக்கு இலங்கையையும், தொழிலாளருக்குத் தென்னிந்தி யாவையும் நாடினர்." ஏற்கனவே இலங்கையின் நிர்வாகத் துறையிலும், கோப்பி, தேயிலை பெருந்தோட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்ததன் காரணமாக இவர் யாழ்ப்பாணத் தமிழருடைய திறமையை நன்கு அறிந்திருந்தனர். அதுமட்டுமல்ல இலங்கை வந்த தென்னிந்தியத் தொழிலாளரும், யாழ்ப்பாணத்தவரும் ஒரே மொழி

Page 23
16 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
யைப் பேசியதன் காரணமாகத் தோட்ட முதலாளிகளுக்கும் தொழிலாளருக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துவோராயும் இவர்கள் விளங்கினர். இதனால் மலாயா சென்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட ஐரோப்பிய முதலாளிகள் அங்கு தென்னிந்தியத் தொழிலாளரை மேற்பார்வை செய்ய யாழ்ப்பாணத் தமிழரையே பயன்படுத்திக் கொண்டனர்.
இதனால் குறிப்பிடத்தக்களவு யாழ்ப்பாணத்தவர் பெருந்தோட் டங்களில் எழுதுவினைஞராக, மேற்பார்வையாளராக, உதவி வைத்தியராக, தோட்டத் தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகப் பதவி பெற்றுக்கொண்டனர்.* இந்நிலை 1930வரை காணப்பட்ட தெனலாம். அதன்பின்பாக யாழ்ப்பாணத்தவர் பெருமளவு காணப் பட்ட இத்துறையிலே மலையாளிகளுடைய வருகை பெருமளவு இடம் பெற்றது." இருந்தாலும் 1950 வரையில் குறிப்பிடத்தக்களவு யாழ்ப்பாணத்தவர் இறப்பர், செம்பனைப் பெருந்தோட்டங்களில் (Palm Oil) நீண்டகால சேவை அடிப்படையில் உயர் பதவி பெற்றிருப்பதைக் காணலாம்.
இலங்கையிலிருந்து மலாயக் குடாநாட்டிற்கு முதலில் சென்ற ஐரோப்பிய பெருந்தோட்ட முதலாளிகளுள் பின் வருவோர் குறிப்பிடத்தக்கவராவர். வெனிங் (A.R.Venning), ஒலிவர் மார்க்ஸ் (Oliver Marks, C.M.G), Gpril Guait (J.H.M.Robson), G35i (E.V.Carey), Gisii 6 GPLib 61 GbLFødt 6vL —681 (Sir Graeme Elphinstone), Gg st LD 6sv 6)ẹ)/p6ơ6ìGom'ỉ 6)íổìaồ (Thomas Heslop Hill) Ug,GồLITGöI (A.R.Rathbone) என்போராவர்.” கடைசியாகக் கூறப்பட்ட இருவரும் செலாங்கூர், நெகிரி செம்பிலான் பிரதேசங்களில் கோப்பிச் செய்கையை மேற்கொண்டதோடு, புகையிரதப் பாதை அமைப்பிலும் பங்கு கொண்டிருந்தனர். ஹில் பெராக் அரசில் குடிவரவு அதிபராக பின்பு பதவி பெற்றார்.* இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட ஏ.ஆர். வெனிங் (A.R.Venning) செலாங்கூர் அரசில் அரச திறைசேரிப் பொறுப்பாளராகப் பதவியுயர்வு பெற்றார். மலாய நிர்வாக சேவையில் சேர்ந்த றோப்ஸன் (J.H.M. Robson) Rawang பிரதேசத்தின் மாவட்ட அதிகாரியாகப் பதவி வகித்துப் பின்னர் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதோடு “Malay Mail" என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையை மேற் கொண்டு கிரிக்கெட் குழுவுடன் 1890 இல் மலாயா வந்த ஒலிவர் மார்க்ஸ் (Oliver Marks) நிர்வாக சேவையிற்

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1 7
சேர்ந்து பல பதவிகள் வகித்து செலாங்கூர் அரசின் பிரித்தானிய வதிவாளராகப் பதவி உயர்வு பெற்றார். இவ்வாறு இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர் பெராக், செலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய அர்சுகளில் கோப்பிச் செய்கையை ஆரம்பித்ததுடன் மலாய நிர்வாக சேவையிலும் பங்கு கொண்டு உயர் பதவிகளையும் வகித்தனர்." இத்தகைய நிலைமை யானது யாழ்ப்பாணத் தமிழர் இப்பிரதேசங்களில் வேலை வாய்ப் பைப் பெற்றுக் கொள்வதற்கு மேலும் உதவுவதாக அமைந்தது.
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் மூன்றாம் காலிலிருந்து இருபதாம் நுாற்றாண்டின் இரண்டாம் கால் வரையுள்ள காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்பட்ட பொருளாதார நிலைமைகளை இங்கு கவனித்தல் பொருத்தமானதாக இருக்கும். ஒரு பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்து செல்வதற்கு அப்பிரதே சத்தில் நிலவிய உள்ளூர் பொருளாதார நிலைமைகள் எந்தளவிற்கு காரணமாயிருந்தன என்று தொடர்புபடுத்திப் பார்ப்பது கடினமான தாகும். இந்திய துணைக்கண்டத்தின் குடிப்புள்ளியியல் பற்றி ஆராய்ந்த கிங்ஸ்லி டேவிஸ் (Kingsley Davis) என்பவர் குடிபெயர் தலுக்கு அடிப்படைக் காரணம் வெளியிடங்களில் காணப்படும் பொருளாதார வாய்ப்புக்களே என்றும் உள்ளூர் பொருளாதார நிலைமைகள் அத்தகைய தாக்கத்தை எல்லா இடங்களிலும் ஏற்படுவது இல்லை என்றும் குறிப்பிடுகிறார்."
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்பட்ட பொருளாதார நிலைமைகள் யாழ்ப்பா ணத்தவர் மலாயாவிற்குக் குடிபெயர்வதற்கு உதவியாய் இருந்தன என்பதை மறுக்க முடியாது. இப் பிரதேசத்தின் மண் வளமும், நீர்வளமும் அதன் பயிர்ச் செய்கையையும், குடித் தொகையையும் பெருமளவிற்கு நிர்ணயித்துள்ளன. இக்குறிப்பிட்ட காரணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இவை யாழ்ப்பாணத்தார் மலாயா விற்கு குடிபெயர்வதில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்ப நனைக் கண்டுகொள்ளலாம். சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மண்வளத்தை மூன்று முக்கிய பிரிவுகளில் அடக்கிக் கொள்ளலாம்.
(1) செம்மண் பிரதேசம். இப்பிரதேசமானது வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு யாழ்ப் பாணப் பிரிவுகளை உள்ளடக்கியது. பருத்தித்துறைப் பகுதியானது செம்மண், நரைமண் கலந்த பகுதியாகக்

Page 24
18 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
காணப்படுகிறது.
(2) நரைமண் பிரதேசம் தீவுப்பகுதிகளையும், தென்மராட்சிப் பகுதியையும் கொண்டுள்ளது. வலிகாமம் மேற்கில் அமைந்துள்ள வட்டுக்கோட்டைப் பகுதியும் நரைமண் ணையே கொண்டுள்ளது.
(3) மணற்பிரதேசம். இப்பிரிவிலே தென்மராட்சியின் வட பகுதியும் வடமராட்சியின் வடகிழக்குப் பிரிவும் அடங்கி யுள்ளது.
இம்மூவகைப் பிரதேசங்களில் மணற் பிரதேசத்தில் போதி யளவு நன்னீர் காணப்படாததால் குடித்தொகை குறைவாகவே காணப்படுகிறது. தீவுப்பகுதியில் அனேகமான இடங்களில் நன்னீர் பெறுவது மிகக்கடினமாகவே இருக்கிறது. இதனை அண்டி யிருக்கும் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்களவில் நன்னீர் கிடைக்காததன்மை காணப்படுகிறது. கோண்டாவில், உரும்பிராய், சுன்னாகம், சங்கானை, தெல்லிப்பளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய செழிப்பான செம்மண் பிரதேசத்தில் நன்னீர் கிடைக்கிறது. ஆனால் இப்பிரதேசங்களுக்கு வடகிழக்காகச் செல்லும் போது சிறப்பாக வசாவிளான், நெல்லியடிப் பிரதேசங் களில் நீர்மட்டம் மிக ஆழத்தில் இருப்பதன் காரணமாக விவசாயத் தேவைக்காகக் கிணறுகளை வெட்டுவது மிகக் கடினமாக இருந்தது. கிணறு வெட்டுவதற்கான நவீன உபகரணங்களும், நீரினை வெளியேற்றுவதற்கான இயந்திரங்களும் இல்லாத அக் காலத்தில் இச் செம்மண் பிரதேசத்தில் குடித்தொகை பரவிக் காணப்படவில்லை. இக்காரணங்களினால் தோட்ட விவசாய நடவடிக்கைக்கு ஏற்ற நன்னீரைக் கொண்ட செம்மண் பிரதேசங்
களின் அளவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது.
குடாநாட்டில் காணப்படும் நெல்வயல்களில் பெரும் பாலானவை நரைமண் பிரதேசங்களிலே தான் காணப்படுகின்றன. இங்கு நடைபெறும் நெற்செய்கை முழுவதும் மழை நீரை நம்பி இருப்பதால் நம்பிக்கைக்குரியதாகக் காணப்படவில்லை. இத் தன்மையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை, அராலி, சுழிபுரம், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, மானிப்பாய், உடுவில், கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், சுன்னாகம், சங்கானை, அளவெட்டி, அச்சுவேலி, கரவெட்டி, நெல்லியடி,

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் I 19
翼
y
કૃષ્ણુકુંW 離制
KNS
Ar
y
s
la 空
e
* لـ g
s

Page 25
20 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
மாவிட்டபுரம், தெல்லிப்பழை முதலான இடங்களிலிருந்தே மலாயாவிற்கு அதிகமானோர் சென்றுள்ளனர். இவ்விடங்கள் வலிகாமம் வடக்கு, மேற்கு, கிழக்கு, யாழ்ப்பாணம், வடமராட்சி வடமேற்கு, தீவுப்பகுதி பெரும்பாகப் பிரிவுகளுக்குள் காணப் படுகின்றன. இப்பிரதேசங்களில் காணப்படும் மண்வளம், நீர்வளம், நிலப் பயன்பாடு என்பவற்றிற்கும் மலாயாவிற்குக் குடிபெயர்ந் தமைக்குமிடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை அவ தானிக்க முடிகின்றது. இவ்வாறு குடிபெயர்ந்தோரில் அனேக மானோர் ஒரளவு வசதி கொண்ட விவசாயிகளின் உறவினராயும், ஆங்கிலக் கல்வி கற்றவராயும், மலாயக்குடா நாட்டின் பொரு ளாதார வாய்ப்புக்களை அறிந்து கொண்டவராயும் காணப்பட்டனர். இவர்களது வெளியேற்றம் விவசாய நிலப் பற்றாக்குறையின் நெருக்கடியை ஓரளவிற்குக் குறைக்க உதவியதெனலாம்.
இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் குடாநாட்டில் இடம் பெற்ற விவசாய நடவடிக்கைகளை அறிந்து கொள்வது மலாயாவிற்குக் குறிப்பிடத்தக்க அளவினர் குடிபெயர்ந்ததைப் புரிந்து கொள்ள உதவும். பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலங்கள் ஒத்த தன்மையைக் கொண்டனவாகக் காணப் படவில்லை. சில பிரதே சங்களில் அதிகமாகத் தாழ்ந்த காணிகளும், சில பிரதேசங்களில் அதிகமாக மேட்டுநிலங்களும் காணப்படுகின்றன. இதனால் பரந்தளவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக் கூடியவகையில் இந்நிலங்கள் காணப்படாது, உறவினர் இடையே பங்கிடப்பட்டே காணப்படுகின்றன. இவ்விவசாய நிலங்கள் உயர் வகுப்பினர்க் குரியனவாக, தாழ்ந்த வகுப்பினரின் உதவியுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவையாகக் காணப்பட்டன. விவசாய நடவடிக்கைகளில் முக்கியமானதாக யாழ்ப்பாண மக்களின் பிரதான உணவாகிய நெல் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் பெறப்படும் மழையை நம்பிப் பயிர் செய்யப்படு கின்றது. குடாநாட்டில் நரைமண் காணப்படும் பகுதிகளிற்றான் பெருமளவு நெற்செய்கை இடம்பெறுகிறது. செய்கை பண்ணப் படும் நெல் உற்பத்தி குடாநாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடியதாக இல்லை. 1921 இன் குடித்தொகை அறிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வருடாந்த நெல் உற்பத்தி அதன் குடித்தொகையின் கால்வாசிப் பகுதிக்கே போதுமானது எனக் கணிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது." குடா நாட்டுக்கு வெளியே

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1
i
S
S>
眶、
2.

Page 26
22 மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
நெல் உற்பத்தி செய்யக்கூடிய விளை நிலங்கள் இருந்தாலும் அங்கு காணப்பட்ட மலேரியா போன்ற கொடிய நோய்களினாலும், மக்கள் அங்கு குடியேறுவதில் அக்கறை காட்டாமையினாலும் மிகக் குறைவாகவே மக்கள் அப் பிரதேசங்களில் குடியேறி இருந்தனர்." பெருமளவிலான நெல் குடா நாடு தவிர்ந்த பிரதேசங்களிலிருந்தும், இந்தியா, பர்மாவிலிருந்துமே இறக்குமதி செய்யப்பட்டது. காலநிலை பொய்த்தால் நாட்டில் பெருமளவு உணவுப் பற்றாக் குறை காணப்படுவது வழமையாக இருந்தது. பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு நெல் உற்பத்தி போதாததாகவே இருந்தது.*
குடாநாட்டின் அடுத்த முக்கிய விவசாயப் பயிராகப் புகை யிலை காணப்பட்டது. விவசாயத்திற்கேற்ற நீர் கிடைக்கக்கூடிய செம்மண் பிரதேசங்களிலும், நன்நீர் கிடைக்கக்கூடிய நரைமண் கொண்ட தீவுப்பகுதிகளிலும் புகையிலை பயிரிடப்பட்டது. இச்செய்கையானது 1870 களிலிருந்தே யாழ்ப்பாணப் பொருளாதார அமைப்பில் முக்கிய பங்கைப் பெற்றுக்கொண்டுள்ளது. உண்பதற் கான புகையிலை, புகைப்பதற்கான புகையிலை என இரண்டு வகை பயிரிடப்பட்டன. பொதுவாகச் சிங்களப் பிரதேசங்களுக்கும், மலையாளப் பகுதிக்கும் இவை ஏற்றுமதியாகின.* குடாநாட்டின் குறிப்பிடத்தக்க தொழிலான சுருட்டுக் கைத்தொழிலுக்கு மூலப் பொருளாக இப்புகையிலைச் செய்கை காணப்பட்டது. மக்களின் பிரதான உணவுப்பொருளான அரிசியை வாங்குவதற்கான பணத்தை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாகவே புகையிலைப் பயிர்ச் செய்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டது.* 1901 ஆம் ஆண்டுக் குடித் தொகை அறிக்கையில் முன்னரிலும் பார்க்கப் பரந்தளவில் இது செய்கை பண்ணப்படுவதாகவும், துரதிட்டவசமாகப் பழைய முறை களைப் பின்பற்றி, புகையிலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.” குடாநாட்டின் புகையிலை பணப்பயிராகத் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், அதன் விலை ஏற்ற இறக்கங்கள் யாழ்ப்பாணத்தவரின் கொள்வனவுச் சக்தியைப் பெருமளவு பாதித்தன. இலங்கையிலும், மலாயாவிலும் பெரும்பாலான ஆங்கிலக்கல்வி கற்ற யாழ்ப் பாணத்து இளைஞர் எழுதுவினைஞர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருந்ததால் விவசாய நடவடிக்கை களிலே ஈடுபடுவோர் தொகை குறைவாகவே காணப்பட்டது.

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் 1 23
அதனால் 1921 இல் புகையிலை கூடிய விலையைப் பெற்றுக் கொண்டதுடன் 1921, 1922 ஆம் ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளரிடைய சம்பளமும் திடீரென அதிகரித்தது." 1930 இன் பின்பாக யாழ்ப்பாணத்தின் புகைப்பதற்கான புகையிலைச் செய்கை யும் சுருட்டுக் கைத்தொழிலும், சிகரட், பீடித்தொழில் வளர்ச்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டன. அவ்வாறே யாழ்ப்பாணத்தில் உண்ப தற்கான புகையிலை உற்பத்தி செய்தோர் உள்ளூர் தரகர்களினாலும் திருவாங்கூர் வர்த்தகர்களினாலும் சுரண்டப்பட்டனர். 1934 இல் அரசாங்க ஆதரவுடன் இவற்றைத் தடுக்க யாழ்ப்பாண மலையாள கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் யாழ்ப்பாண புகையிலை உற்பத்தியாளர் நன்மை அடைந்தனர்.’ இவ்வாறு புகையிலைச் செய்கையின் மூலம் பெற்ற பணத்தில் குறிப்பிடத் தக்களவு பணம் இப்புகையிலைத் தொழிலை விருத்தி செய்வதற் கான வழியிலன்றி இவரது பிள்ளைகளின் கல்விக்காகவே செலவிடப்பட்டது.
இவ்விரு முக்கிய விவசாய நடவடிக்கைகளைவிட வயல்களிலும் தோட்டங்களிலும் சிறுதானிய உற்பத்தி சிறப்பாக நடைபெற்றது. வரண்ட பிரதேசத் தானியங்களான சாமி, குரக்கன், வரகு, எள்ளு, பயறு, உழுந்து என்பனவும் மரவள்ளி, வாழை, வெற்றிலை, சணல் போன்றனவும் மற்றும் உப உணவுப் பொருட்களும் குறிப்பிடத்தக்களவு செய்கை பண்ணப்பட்டன. வறிய மக்களின் பிரதான உணவாக மரவள்ளிக் கிழங்கும், பனை மரத்தினின்றும் பெறப்பட்ட உணவுப்பொருட்களும் இடம் பெற்றன." முக்கியமாக பனைமரத்தின் பழம், கிழங்கு இவற்றின் மூலம் பெறப்பட்ட உணவுகளாகிய ஒடியல், பனாட்டு, சீவல் என்பன இவற்றுள் சில. ஒரு காலத்தில் இவ்வுணவுப் பொருட்கள் குடா நாட்டின் குடித்தொகையில் 75 சதவீதத்தினரின் பிரதான உணவாகக் காணப்பட்டது." யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவுப் பகுதியில் வாழ்ந்த மக்கள் மிகவும் ஏழ்மை நிலையிலேயே காணப்பட்டனர்.* மிகக்குறைந்தளவு போக்குவரவு வசதிகளே காணப்பட்ட இக்காலப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. மருதனாமடம், சுன்னாகம், சங்கானை, அச்சுவேலி, நெல்லியடி, சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற சந்தைகள் கூடும் இடங்களில் வண்டிகளில் கொண்டு வரப்பட்ட பொருட்களில் ஓரளவு வர்த்தகம் நடைபெற்ற

Page 27
!ք பபானச் சமூகமும
=
பெயர்வும் யா
மலாயக் குடி
占芷、
Gl
fi
பிலைப் பயி
ଛା!! !! .. '×114). I'll
தி
A JITF3F3;TE,
الم.
- I
fili
 

குடிபெயர்ந்தமைக்கான காரணிகள் |
{3sn puDT) 5 put]]$ I puD DHT susuāloDայ4Dր
--—–
1JIH LSIJ (NJ-s战
활語義時 WW활크 H: 』
|
puca) unios“, siifilį įsississo,
看|
『國民iT!』L』『EET&T를 빼낼量
를 *■ ■ ■ ■ –—−)====== 轟』『畢門學ae嗜睡)
■■』團『鬥』圖藍圖調■ *1蛙圖鱷置驅疊』疊
를』■ 를 빼를 는LF 불國科學社 : }
日를『T 를 넓官를 빼論
曰圖譴「國國』
-)-
磁* |-& |}/Lisso, tTTE

Page 28
2f: மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
தெனவாம். சிறு கடைகள் கிராமங்களின் மையநிலைகளில் இடம்பெற்றிருந்தன. கடற்றொழில் மிகப் பின்தங்கிய நிலையில் கரையை அண்டியே நடைபெற்றது. சணலால் பின்னப்பட்ட வலைகள் மீன்பிடித் தொழிலில் உபயோகிக்கப்பட்டன. கால்நடை வளர்ப்பு, பனைமர ஏற்றுமதி, தெங்குச் செய்கை எனபனவும் குறிப்பிடத்தக்களவில் நடைபெற்றன. பொதுவாகப் பணப்புழக்கம் குறைந்த அளவிலே காணப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் குடித்தொகைப் பெருக்கத்திற்கும் மலாயாவிற்குக் குடிபெயர்ந்து சென்றன மக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதனை அறிந்து கொள்ளலாம். 1871 இலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை என்று 1931 வரை எடுக்கப்பட்டுள்ள குடித்தொகை விபரங்கவில் 192 காலப்பகுதியைத் தவிர்ந்தவற்றில் ஒரு சீரான குடித்தொகைப் போக்கு காணப் படுவதை அவதானிக்கலாம்." குடித்தொகை பெருக்க வீதமானது 1881 இல் 8.1 ஆகவும், 1891 இல் 5.1 ஆகவும், 1901 இல் 77 ஆகவும், 1911 இல் 8.6 ஆகவும், 1931 இல் 7.3 ஆகவும் கானப்படுகிறது. மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இக்குடித்தொகைப் பெருக்க வீதம் குறைவாகக் காணப்படுவதற்கு முக்கிய காரணி களுள் ஒன்றாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்து செல்லும் தன்மை அமைந்துள்ளது." 1921 இல் குடித்தொகை பெருக்கத்தில் திடீர் வீழ்ச்சியை அவதானிக்கலாம். அதாவது 1.2 ஆக அதன் பெருக்க வீதம் காணப்படுகிறது. இத் திடீர் வீழ்ச்சிக்கான காரணங்களாக கொள்ளை நோயும், குடிபெயர்வும் இருந்தன எனக் குறிப்பிடப்படுகின்றது." யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து மிகஷனரிப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி கற்று வெளியேறிய இளைஞர் இலங்கையின் பிற மாவட்டங்களிலும், தொடுவாய்க் குடியேற்றங்களிலும், மலாய் அரசுகளிலும் எழுதுவினைஞர், வேறு பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காகப் பெருமளவில் குடி பெயர்ந்தனர்." மேற்கூறிய இடைநிலைப் பதவிகளைப் பெற்ற வகையில் 7XX) யாழ்ப்பாணத்தவர் 1911 இல் மலாயாவில் இருந்தனர் எனக் கணிக்கப்பட்டுள்ளது." மலாயாவில் ஏற்பட்ட அபிவிருத்தி யின் காரணமாக 1981 காலப்பகுதி வரை முன்னென்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தவர் குடிபெயர்வு அதிகரித்திருந்தது. 1911-1981 காலப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குடித்தொகைப் பெருக்கத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியளவிற்கு இக் குடிபெயர்வு அமைந்
-"

க்கான காரணிகள்
குடிபெயர்ந்தமை
|-
...
』
படம் 2
ாதாறறங்கள்
ழபபான சமூகம
4ே0களில் பரம்

Page 29
மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்
28
qi@o@couri sırffffnfo@șurig) qi@sefeysyi soureuși șeșș-TirouanIssouriņđium :p q —ırı sırtos@-ạaŭH
マ城科村神社判”』,『利村수나자****『내**********人』, hɔn i 7 ou sanīnī FTGEROES
uoissala s,o gra pud uosqo, Jodsudu 1
Y 似鸵(Éjဂုံuwill |
龄
} ł i o toA' n A1-liw-iw Nwo 費/ .* 鞑 A il1wann 3
SQ NW T S ! Cj N\/
V Tf|SNIN3d wN-J-Jvm,
o.ITBA, Hồny.- ****臀系•.* Addisināms,$版。wae门* . 0803d 1 Nioeso!).感،D>(29*) oyov Niway» iwumuluşanvasoo人局图%