கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் இலக்கணப் பூங்கா

Page 1
! ! ! ! ! ! ! i
, !
ae --
口 No No !∞ √≠ ≤ ≤ ≤ ≤ ≤ |r:;":()sae |-sae|× 日-|-
-- | – |-, ! ! ! ! ! ! !No No. !! !! !! !! !!! s s, , , , , !|- , !
! !! !! !! !! !!
*:
 

saesae****** No !s = , !
, ! ! ! ! ! ! │ ├─ | –
, ( )
: , ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
s ( )
( ) sae
s.|-sae |-
±* :sae*----
, , , , , , , , , , )sae|-
TTP:T:
sae|-|-
|- ├ |- :|No. |-
()
( ) |- |-sae |-|-
|- .
|- |- ,|- .
, ! ! ! ! ! ! ! ! ! !
sae---sae-------------
, ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !! !! !! !!! --
! !! !! !!! , ! ! ! ! ! ! ! ! !
(s.sos , , ) – L – sae ************):
|s.s.|×
|-|- !| ()
|
|- | _
- ( ) ( ) |-|×s.| _ _ :|-|- : : : : : : : : : : - ( ) , ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، t :|()|×
. . . . . . . .sae| _ _ | || .|-, . . . . . . . . . ( ):: () |-
s', . . . . . .
. . . .
|- | _ _ _s',
, .
|-
, ( )
, . . . . . . . . . . . . . . . . |(i) : .

Page 2


Page 3

பண்டிதர் ச.வே.ப தமிழ் இலக்கணப்பூங்கா
ஆக்கியோன் : பண்டிதர். ச. வே. பஞ்சாட்சரம் (முன்னை யாழ் இந்துக் கல்லூரித் தமிழ்த்துறை)
வெளியீடு: பொன்னெழுத்துப் பதிப்பகம், இணுவில் மேற்கு, இணுவில், இலங்கை.

Page 4
பண்டிதர் ச.வே.ப - 2 - தமிழ் இலக்கணப்பூங்கா
T1}{AN/(11 11AKlXANATP 1POONC3A (Tarrnil Gray111-nar Boolk)
Author - Pandit S. V. Panchardcharan
முதற்பதிப்பு : 1984 தை இரண்டாம் பதிப்பு : 1987 சித்திரை முன்றாம் பதிப்பு : . 2002 ஐப்பசி
பதிப்புரிமை : நூலாசிரியருக்கே
அச்சுப்பதிப்பு: கங்கை (ஒவ்செற்) பிறின்டேர்ஸ் 184A, நாவலர் றோட் (பெருமாள் கோவிலடி) Ulslupt ILIT600ILD.
இலங்கை.
வெளியீடு :
பொன்னெழுத்துப் பதிப்பகம், இணுவில் மேற்கு,
இலங்கை.
கிடைக்குமிடங்கள் : 1. பூபாலசிங்கம் புத்தகசாலை 4, பேருந்துநிலைய வீதி, யாழ் நகர். 2. பூபாலசிங்கம் புத்தகசாலை
340, கடற்கரை வீதி, கொழும்பு - 11 3. பூபாலசிங்கம் புத்தகசாலை
309A, 3/2, காலி வீதி, வெள்ளவத்தை 4. அறிவமுது பொத்தகசாலை
கண்டி வீதி, கிளிநொச்சி.
விலை 150.00 ரூபா

Girtggbit 8.66).L. - 3 - தமிழ் இலக்கணப்பூங்கா
மூன்றாம் பதிப்பரின் வெளியீட்டுரை
எமது பதிப்பகத்தின் கன்னி வெளியீடான தமிழ் இலக்கணப் பூங்காவின் மூன்றாம் பதிப்பு இதோ உங்கள் கைகளில்!
இலக்கணக் கல்வியின் அவசியம் நன்குணரப்பட்டுத் தமிழ்ப் பாட நூல்களில் கூடுதலாக இலக்கணம் இடம் பெற்றுவரும் இந்நாளில் தமிழ் ஆசிரியர், பள்ளி மாணவர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள், தமிழ் ஆர்வலர் மத்தியில் தமிழ் இலக்கணப் பூங்கா பெற்றிருக்கும் வரவேற்பு - பொன்னெழுத்துப் பதிப்பகம் தேவையறிந்து செயற்பட்டுள்ளமைக்கு அத்தாட்சியாகும். நாம் அன்று குறிப்பிட்டவாறு கவிஞர் பஞ்சாட்சரம் புரிந்த கவிதைச் சாதனைகளைப் போன்ற ஓர் இலக்கணச் சாதனையாக அவரது இலக்கணப் பூங்காவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இலக்கணப் பூங்கா முதலாம், இரண்டாம் பதிப்புப் பிரதிகள் வெகு விரைவில் விற்பனையாகியிருந்தன.
மாணவர்களும் புத்தக விற்பனையாளர்களும் விரும்பிய வண்ணம், 14 வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய மூன்றாம் பதிப்பு, 1989இல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாக்குதலால் அப்பதிப்பு நூல்கள் அழிந்து விட்டதால், வெளிவரவில்லை. யுத்தப் பயங்கரம்மயமான, இன்றுவரையான நாட்டு நிலைபரங்களை ஊடுருவி ஒருவாறு இப்பொழுதுதான் அது வெளிவரமுடிகிறது.
இதனை முன்னின்று நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த கங்கை (ஒவ்செற்) பிறின்டேர்ஸினருக்கும், எமது பதிப்பகத்தை
அன்று நிதியுதவித் தொடக்கி வைத்த இணுவை திரு.பொன். சந்திரலிங்கத்துக்கும் என்றும் எமது இதயங்கனிந்த நன்றிகள்.
வணக்கம்
V. மகேஸ்வரன் பொன்னெழுத்துப் பதிப்பகம் இணுைவில் மேற்கு, இலங்கை.

Page 5
பண்டிதர் ச.வே.ப - 4 - தமிழ் இலக்கணப்பூங்கா
“இலக்கிய கலாநிதி” “பண்டிதமணி” SOLDJfr dl. bGNUdSUtil66D6IT அவர்கள் முதலாம் பதிப்புக்கு வழங்கிய
ஆசியுரை
பண்டிதர் திரு.ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் உதவிய “தமிழிலக்கணப் பூங்கா’ கல்விமான்களுக்கும், நல்லாசிரியர்களுக்கும் பெருவிருந்து. அவர்கள், பூங்காவில்
உட்பிரவேசித்து, ஆறிஅமர்ந்து இலக்கணப் பரப்பை உற்றுநோக்கிச் சிந்திப்பார்களாக,
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், கற்பிக்கும் இலக்கியத்துக்கு ஏற்றவாறு, தொடர்பு புலப்பட இலக்கணத்தில் வேண்டியவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்வார்களாக.
“நட, வா, மடி, சீ, . என்று தொடங்கும் நன்னூற் சூத்திரத்துக்குச் சிவஞான முனிவர் செய்த உரை சிந்திக்கற்பாலது.
“பூங்காவை” உதவிய ஆசிரியருக்கு நன்றி பகர்வோமாக.
சி. கணபதிப்பிள்ளை
கலாசாலை விதி,
திருநெல்வேலி,
I6. I2.83
 

பண்டிதர் ச.வே.ப - 5 - தமிழ் இலக்கணப்பூங்கா
மூன்றாம் பதிப்புக்கான நூலாசிரியர் முகவுரை
“ஒருவனது சகல துறைச் சிந்தனை விரிவுக்கும் அவனது மொழி ஆற்றலே அடிப்படை,” “மனித இனத்தின் இன்றைய முன்னேற்றத்திற்கே மொழிப்பயன்பாடுதான் முக்கிய காரணம்’ இவை ஆராய்ச்சியாளர் முடிபுகள்.
மனித இலட்சணமாக மட்டுமன்றி, உணவு, உடை, உறையுள் போன்ற ஓர் அடிப்படைத் தேவையுமாகிவிட்ட கல்வியை அவனை வாழ்விக்குங் கல்வியாக மாற்றுவதில் மொழித்தேர்ச்சியின் பங்களிப்பு முதன்மை வாய்ந்தது. மானுடத்தின் விசேட அறிவு பகுத்தறிவு பகுத்தறிவின் சிறந்த பெறுபேறு நியாய உணர்ச்சி. பகுத்து, நியாயித்து அறிவதற்குரியதான இலக்கணத்தைக் கற்றவன் - நியாய உணர்ச்சி பெற்றவனுமாகிறான். இவ்வுண்மைகளை மாணவர்களும், பெற்றாரும் தெளிந்து ஆதாயப்படவேண்டும்.
இத்துணை ஆற்றல்கள், நுட்பங்கள் பொலியும் மொழிகளைத் தனி மனிதர்களோ, சமூகங்களான மனிதர்களோ ஆக்கியிருக்க முடியுமா என்று பிரமித்து மொழிகள் கடவுளின் நேரடி ஆக்கங்களே என மனிதர் சிலர் வாதிடும் அளவுக்கு, மொழிகளுக்கு இன்றுவரை ஏற்பட்டுள்ள அதியற்புதக் கூர்ப்புநிலை, பழையன கழிதல், புதியன புகுதல் நிகழாமல் பொருந்தியிருக்கமுடியாது. அதேவேளை மனித சமூகங்களின் பல நூறு சந்ததிகள் அரிதில் தேடித்திரட்டிப் பேணிய சேமிப்பு விழுமியங்களினை எந்த அளவுக்கேனும் ஒதுக்கித்தள்ளி, ஒரு மொழி நின்று நிலைத்திருக்க முடியாது.
வழக்கு மன்னனின் தயவில் உருவானதுதான், மரபு மந்திரிசபை. ஆயினும் மரபு மந்திரிசபையின் முடிவுகளுக்கு, முடிந்தவரை கட்டுப்பட்டுச் செயற்படுவதுதான் வழக்கு மன்னனுக்கு மாண்பு; மொழி அரசுக்குப் பாதுகாப்பு!
கல்வி வாய்ப்புச் சிலருக்கே என்றிருந்த ஒரு காலத்தில் மொழிக் கல்வி அவர்களுள்ளும் ஒரு சிலருக்கே என்ற நிலை இருந்தது. அந்த ஒரு சிலரின் முழுநேரப் படிப்புக்கென அமைந்த இலக்கண நூல்கள், கல்விமுறைகள், “சகலர்க்குமே ஏனைப்பாடங்களோடு இலக்கணக் கல்வியும் அவசியம் என்றாகிவிட்ட இற்றை நாளில், முழுமையாகப் பொருந்தும்

Page 6
பண்டிதர் ச.வே.ப ) - 6 - தமிழ் இலக்கணப்பூங்கா
என்பதற்கில்லை. தேவைக்கேற்ற மாற்றங்களை, கற்பிக்கும் முறைகளிலும், வழங்கப்படும் அளவு கணக்குகளிலும் ஏற்படுத்த முயல்வதும், காலத்துக்கும், தேவைக்கும் பொருந்தும் புது நூல்களை ஆக்கித்தருவதும் மரபு மீறல்களாகா. இலக்கண மரபில் மாற்றங்களை வலிந்து ஏற்படுத்தாமல் இருப்பதே அவசியம்.
இலக்கண நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய திருப்பங்கள், சந்திகளில் பல இன்னமும் வெட்டை வெளிச்சமாக்கப்படாத, இருள் சூழ்ந்த நிலையில் உள்ளன. அதேவேளை பல கட்டங்களில் மாணவரைக் குழப்பி மலைப்பூட்டும் வாதப் பிரதிவாதங்களால் கண்ணைக் குருடாக்கும் மிதமிஞ்சிய ஒளிவீச்சு. இவைபோன்ற இடர்நிலைகள் மாணவன் இலக்கணப் பயணத்தை முழுமையாக முடிக்கத் தடையாயுள்ளன.
இந்நிலையில் காலம் அவாவும் தமிழ்ப்பணி மாணவர் மயங்கும் இருள்சூழ் சந்திகள், திருப்பங்களில் அளவான ஒளிவீசும் கம்பவிளக்குகளை மேலும் நிறுவுவதுதான்.
இப்பணியில், நாவலர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுச் கழகப் பண்டித வகுப்பு ஆசான் திரு. க. உமாமகேஸ்வரம்பிள்ளை, பட்டதாரி வகுப்புகள் உயர்தரவகுப்புகளில் கற்பிக்கும் திரு.நா. குழந்தைவேலு B.A.(Special Tamil) செ.வ.மகேஸ்வரன் M.A, முதலான தமிழாளர்களின் பழுத்த அனுபவங்கள் இந்த நூலுள் மேலும் பல இலக்கண உண்மைகளைப் புகுத்திப் பயன்பாடுமிகுந்ததாக்க ஊக்கின.
தமிழ் மாணவர்களே!
கற்கும் இலக்கண உண்மைகளை, பேச்சு, நூல்
வழக்குகளோடு பொருத்திப் பார்த்தாலே சரியான தெளிவும்
இரசனையும் உண்டாக முடியும்.
இந்தத் தமிழ்ப்பணிப் பங்காளிகளுக்கும், இந்நூலை வெளியிட்டும் அறிமுகமாக்கியும் வாங்கிப்படித்தும் ஆசி வழங்கியும் ஊக்கிவரும் தமிழபிமானிகளுக்கும் எனது சிறப்பு நன்றிகள்.
வணக்கம்.
ச.வே.பஞ்சாட்சரம்
இணுவில் மேற்கு, 0-10-2002 இணுவில், இலங்கை.

பண்டிதர் ச.வே.ப - 7 - தமிழ் இலக்கணப்பூங்கா
O.
02.
O3.
O5.
O7.
O8.
0.
1.
12.
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
பொருளடக்கம்
எழுத்து வகைகள் சொல் வகைகள் பெயர்ச்சொல் வகைகள்
ஆகுபெயர் வேற்றுமை வகைகள்
தொகை மொழிகள் வினைச்சொல் வகைகள் இடைச்சொல் வகைகள் உரிச்சொல் வகைகள் சொற்புணர்ச்சி வகைகள் விசேடமான புணர்ச்சிகள் சொற்றொடர்கள் பிரியும் விதங்கள் அறுவகைச் சொல் வழக்குகள் w ஒரு மொழி, தொடர் மொழி, பொதுமொழி வாக்கிய முதன்மை உறுப்புக்கள் தனி வாக்கியமும் தொடர் வாக்கியமும் திணை, பால், எண், இட, கால வழுவமைதிகள் அடைகள், சொற்றொடர் வகைகள்
அணிவகைகள்
பழமொழிகள்
கவிதை நயங்கள் சிறந்த கட்டுரை எழுத ஆயத்தங்கள் சுருக்கம் எழுத முக்கிய கவனிப்புகள் உலக மொழிகளில் தமிழ்ச் 4 ஈற்கள் பொருட்டொகுதிப் பெயர்கள் நீங்களுங் கவிஞராகலாம் நிறுத்தக் குறியீடுகள்
கடிதத்தின் அடிப்படை அம்சங்கள் - 9
பக்கம்
08
18
23
32
37
42
62
73
77
81
93
94
96
98
03 105
1
12
12
4
15
6
19
22
24

Page 7
பண்டிதர் ச.வே.ப - 8 - தமிழ் இலக்கணப்பூங்கா
6. சிவமயம் ஓம் சரவணபவகுக
எழுத்து வகைகள்
எழுத்துக்கள் :
பல்வேறுபட்ட ஒலி அணுக்களின் தனித்தனிச் சின்னங்களே எழுத்துக்களாம். எழுத்துக்கள் வரிவடிவம் எனவும்படும்.
‘ஒலியன்கள்’ எனவும் படுகின்றன. எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என நான்கு வகைப்படும். உயிர் எழுத்துக்கள் :
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள் எனப்படும். மெய்யெழுத்துக்கள் :
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய் எழுத்துக்கள் எனப்படும். இவை ஒற்று எழுத்துக்கள், புள்ளி எழுத்துக்கள் எனவும்படும். உயிர் மெய் எழுத்துக்கள் :
இந்தப் பதினெட்டு மெய்யெழுத்துக்களில் ஒவ்வொன்றோடும், அ, ஆ முதலிய பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் தனித்தனி சேர வரும் (18x12) இருநூற்றுப் பதினாறு எழுத்துக்களும் உயிர் மெய்யெழுத்துக்கள் எனப்படும். உ+ம் : ப்+ ஊ = பூ, க்+ஓ = கோ, ங்+ஐ = ங்ை, ய்+எ = யெ, ஆய்த எழுத்து :
அகேனம் எனப்படும் . எனும் ஓர் எழுத்து மட்டுமே ஆய்த எழுத்து எனப்படும்.
எனவே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் மொத்தம் உயிர் 12+ மெய் 18+ ஆய்தம் 01 + உயிர்மெய் 216 = 247 ஆகும். உயிர்களும் மெய்களுமான முப்பதும் முதலெழுத்துக்கள். உயிர்மெய்களும் ஆய்தமுமான 217 சார்பெழுத்துக்கள். குற்றெழுத்துக்கள் :
பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுள்ளும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும், பதினெட்டு உயிர் மெய் வரிசைகளிலும் வரும் க, கி, கு, கெ, கொ முதலிய (18 x 5) தொண்ணுாறும்
ஆக மொத்தம் தொண்ணுாற்றைந்து எழுத்துக்களும் குறுகிய ஒலி கொண்ட குற்றெழுத்துக்கள் எனப்படும்.

பண்டிதர் ச.வே.ப - 9 - தமிழ் இலக்கணப்பூங்கா
நெட்டெழுத்துக்கள் :
உயிர் எழுத்துக்களுள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும், பதினெட்டு உயிர் மெய் வரிசைகளிலும் வரும் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள முதலிய (18x7 ) நூற்றிருபத்தாறும் ஆக மொத்தம் நூற்றுமுப்பத்து மூன்றும் நெடிய ஒலிகொண்ட நெட்டெழுத்துக்களாம்.
மாத்திரை :
கண்கள் ஒருதடவை இமைக்கும் நேரம் அல்லது கைவிரல்கள் ஒருதடவை சுண்டக் கடக்கும் நேரம் ஒரு மாத்திரைப் பொழுது எனப்படும். இந்த ஒரு மாத்திரைப் பொழுதுள் ஒரு குற்றெழுத்து ஒலிக்கப்பட்டு விடும். அதனால் ஒரு குறிலின் அதாவது ஒரு குற்றெழுத்தின் மாத்திரை ஒன்று ஆகும்.
இது போல நெடில் அதாவது நெட்டெழுத்து ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரைப் பொழுதுள் ஒலிக்கப்பட்டு விடுகிறது. எனவே ஒரு நெடிலின் மாத்திரை இரண்டு ஆகும்.
இவ்வாறே ஒரு மாத்திரைப் பொழுதுள் இரண்டு மெய்களோ ஒரு மெய் இரண்டு தடவையோ ஒலிக்கப்பட முடிவதால் ஒரு மெய்யின் மாத்திரை அரை எனக் கொள்ளப்படும்.
இவ்விதமே " ஆகிய ஆய்த எழுத்தும் ஓரிமைப் பொழுதுள் இருதடவை ஒலிக்கப்படுவதால் அரை மாத்திரை உடையதாயிற்று. வல்லின மெய்கள் :
பதினெட்டு மெய்களுள் க், ச், ட், த், ப், ற் எனும் ஆறும் வல்லின மெய்கள் எனப்படும். மெல்லின மெய்கள் :
மிகுதி மெய்களுள் ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம். க் இற்கு ங், ச் இற்கு ஞ், ட் இற்கு ண், த் இற்கு ந், ப் இற்கு ம், ற் இற்கு ன், இன மெல்லெழுத்துக்களாம். இச் சோடி எழுத்துக்கள் ஒலிக்கப்படும் பொழுது வாயுறுப்புக்களின் தொழிற்பாடு ஒரே விதமாயமைதல் குறித்தே இனங்களாயமைந்தன. உள்நின்று எழுப்பப்படும் காற்றானது நெஞ்சைப் பொருந்தி வரும் பொழுது வல்லினமாகவும், மூக்கைப் பொருந்தி வரும் பொழுது மெல்லினமாகவும் ஒலிகள் வேறுபடுகின்றன. நீங்களும் ஒலித்துப் பார்த்தால் உண்மை தெளிவாகும்
இடையின மெய்கள் :
மிகுதி ஆறாகிய ய், ர், ல், வ், ழ், ள் என்பன இடையின மெய்களாம். இந்த இடை ஒலியும், உயிர் ஒலியும், காற்றானது

Page 8
பண்டிதர் ச.வே.ப - 10 - தமிழ் இலக்கணப்பூங்கா
மிடற்றைப் பொருந்தி வருவதால் பிறப்பவையாகும். காற்றானது உச்சியைப் பொருந்திவரப் பிறப்பது . ஒலியாகும்.
முற்றியல் உகர எழுத்துக்கள் :
அது, விடு, பொறு போலத் தனிக்குற்றெழுத்துக்களின் பின்னால் வரும் வல்லின உகரங்களும், ஆறு மெல்லின உகரங்களும் ( ங், து, ணு, நு, மு, னு), ஆறு இடையின உகரங்களும் (யு, ரு, லு, வு, ழு, ளு) தத்தமக்குரிய ஒரு மாத்திரை எச்சந்தர்ப்பத்திலும் குறைவுபடாதொலிப்பவை. அதனால் அவை முற்றுகரங்களாம். சொல்லின் முதலிலும் இடையிலும் வரும் எல்லா உகரங்களும் முற்றுகரங்களே.
குற்றியல் உகரங்கள் :
தனிக்குற்றெழுத்தல்லாத ஏனைய எழுத்துக்களுக்குப் பின்னால் சொல்லிறாக வரும் ஆறு வல்லுகரங்களும் (கு, சு, டு, து, பு, று) தத்தமக்குரிய ஒரு மாத்திரைக்குக் குறைந்து அரைநொடிப் பொழுதுள் ஒலிக்கப்பட்டு விடுவதால் குறுகிய இயல்புள்ள உகரங்களாக - குற்றியல் உகரங்களாக மாறி விடுகின்றன, இதனால் குற்றியல் உகரம் ஒன்றின் மாத்திரை அரை ஆகும். உ+ ம் நாற்று : இந்த ‘று வல்லொற்றான ‘ற்‘ இற்குப் பின்னால் வருவதால் வன்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும். பஞ்சு: இந்த ‘சு” மெல்லொற்றான ‘ஞ்’ இற்குப் பின்னால் வருவதால் மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
கொய்து : இந்த ‘து இடையெழுத்தாகிய ‘ய் இற்குப் பின்னால் வருவதால் இடைத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
வீடு : இந்த “டு’ ஆனது வீ என்னும் தனி நெடிலைத் தொடர்ந்து வருவதால் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் ஆகும். மரபு : இந்த ‘பு’ ஆனது தனி நெடிலல்லாதவையும் ஒரு குறிலுக்கு மேற்பட்டவையுமான 2 உயிர் எழுத்துக்களைத் தொடர்ந்து வருவதால் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
எ.கு : இந்த ‘கு’ ஆனது ' எனும் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவதால் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
இவ்வாறு நெடில் ஏழும் ஆய்தம் ஒன்றும் உயிர் அ-ஒ பதினொன்றும் வல்லின மெய், மெல்லின மெய் பன்னிரண்டும் வ் தவிர்ந்த இடைமெய் ஐந்தும் எல்லாமாக முப்பத்தாறு எழுத்துக்களைத் தொடரும் முப்பத்தாறு குற்றுகரங்கள் உள.

பண்டிதர் ச.வே.ப - 1 - தமிழ் இலக்கணபழங்கா
குற்றியல் இகரங்கள்:
மேற்கூறிய முப்பத்தாறு குற்றுகரங்களோடு 'யா' எனும் எழுத்து வந்து புணரும் பொழுது இக்குற்றியலுகரங்கள் குற்றியல் இகரங்களாக மாறும். உ+ம் : வீடு + யாது = வீடியாது. இவற்றுடன் கேண்மியா, சொன்மியா, போன்றவற்றில் வரும் “மி” யிலுள்ள இகரமும் குறுகிய இயல்புள்ள இகரமாகும். எனவே குற்றியலிகரங்கள் (36+1) முப்பத்தேழாகும். இவற்றுக்குத் தனித் தனியே மாத்திரை அரை ஆகும்.
ஐகாரக்குறுக்கம் :
ஐகாரம் “ஐ’ என்று தன் பெயர் கூறுமளவிற் குறுகாது, முற்றியல் ஐகாரமாம். ஆனால் சொற்களில் முதலெழுத்தாகவோ நடு எழுத்தாகவோ, இறுதி எழுத்தாகவோ, இது வரும்பொழுதோ, தனக்குரிய இரு மாத்திரைகளில் குறைந்து ஒரு மாத்திரைப் பொழுதுள் ஒலிக்கப்பட்டு விடுகிறது. இதனால் இது ஐகாரக் குறுக்கமாகிறது. ஐப்பசி, தைப்பொங்கல் - இவை போன்றவை மொழிமுதற் குற்றைகாரங்கள். வலைஞன், மடையன் மொழிநடு ஐகாரக் குறுக்கங்கள். தவணை, துவரை, திருக்கை - மொழியீற்றுக் குற்றை காரங்கள்.
ஒளகாரக் குறுக்கம் :
ஒளகாரம் தன் பெயர் கூறுமளவிற் குறுகாது முற்றெளகாரமாம். சொல் முதலிலும் (ஒளவை, மெளலி) சொல் நடுவிலும் (அகெளரவம்) மட்டும் வருவனவாகிய ஒளகாரம் எல்லாம் தமக்குரிய இரு மாத்திரைகளில் ஒன்று குறைந்து ஒரு மாத்திரை பெற்று ஒளகாரக் குறுக்கமாகும்.
ஆய்தக் குறுக்கம் :
ல், ள் ஆகிய சொல்லிறுதி எழுத்துக்கள், வருஞ் சொல்லின் முதலெழுத்தான ‘த்” உடன் சேரும்பொழுது ஆகத் திரிவடைவதுமுண்டு. (கல் + தீது = கட்றீது, முள் + தீது = மு.டீது). இவ்வாறு திரிந்துருவாகிப் பிற எழுத்துக்களின் நடுவில்வரும் . தன் அரைமாத்திரையிலுங் குறுகிய % மாத்திரை ஒலி பெற்று ஆய்தக் குறுக்கமாகும்.
மகரக் குறுக்கம்:
பாடல்களில் சொல்லின் ஈற்றில் வரும் ‘ம்‘ எழுத்தானது
‘ன்’ எனும் எழுத்தைத் தொடர்ந்து போன்ம் எனவும், “ண்’ எனும்
எழுத்தைத் தொடர்ந்து மருண்ம் எனவும் வரும் சந்தர்ப்பங்களில்

Page 9
- 12 - தமிழ் இலக்கணப்பூங்கா
தன் அரை மாத்திரையிற் குறைந்தொலித்து மகரக் குறுக்கம் ஆகும். போலும் போல்ம் ஆகிப் போன்ம் ஆனது. மருளும் மருள்ம் ஆகி மருண்ம் ஆனது. இதன் மாத்திரை % ஆகும்.
P_usJen 61 1sel - :
பாட்டில் ஓசை குறையுமிடத்து ஒரு சொல்லின் முதலிலோ நடுவிலோ ஈற்றிலோ உள்ள நெட்டெழுத்து - அல்லது குறில் நெடிலாக நீண்டு வந்த நெட்டெழுத்து உரிய இரண்டு மாத்திரைப் பொழுதுக்கு அதிகமாக நீண்டொலித்தால் அது உயிரளபெடை எனப்படும். நீண்டொலிக்கும் நெடிலின் உயிரெழுத்தின் குறில் குறியீடாக வெளிப்பட்டு நிற்கும். உ+ம்: மேஎவிய, தனாஅது, படாஅ. இதனால் ஓர் உயிரளபெடையின் மாத்திரை (2+1) மூன்றாகும். ஒற்றளபெடை
ஒற்றெழுத்துக்களுள் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்பன தனிக்குற்றெழுத்துக்குப் பின்னாலும் இணைக்குற்றெழுத்துக்களுக்குப் பின்னாலும் சொல்லின் இடையிலும் இறுதியிலும் நின்று நீண்டொலித்து (அஞ்ஞ்சு, இலங்ங்கு, கண்ண் என) இரட்டித்து நின்று ஒரு மாத்திரை பெற்றுப் பாடல்களின் இசைக்குறையை நிவர்த்தித்து நிறைவாக்கும். ஆய்த அளபெடை
சொல்லின் இடையில் வரும் " ஆகிய ஆய்த எழுத்தும் இரட்டித்து நீண்டொலித்து (% + % ) ஒருமாத்திரை பெற்றுப் பாட்டில் இசை நிறைத்து நிற்கும். இது ஆய்த அளபெடை எனப்படும். உ+ம் எ. கிலங்கிய
சார்பெழுத்துகள் : 369 1. உயிர்மெய்கள் - 12x18 = 216
2. aA es
வல்லாறன் மேலன - எ .”. கு, க .”. சு
- ஃ. டு அ ஃ. து 6 - ... 85 ... g.
திரிதலால் வருவது - அக்கடியன் =08
அ.கடியன்
விரிதலால் வருவது - மகான் =
LD ... 86T6öi

பண்டிதர் ச.வே.ப - 13 - தமிழ் இலக்கணப்பூங்கா
03. உயிரளபெடை
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, = 6 x 3 இடம் (முதலிடைகடை) ஒள (முதலில்மட்டும்) 18 + 1 குறில் நெடிலாகி இசை நிறைக்க (கெடுப்பதுTஉம்) வினை எச்சப்பொருள் தர அளபெடுப்பது
(பொருள் நசைஇ) - 2
04. ஒற்றளபெடை
ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள். ..
குறிற்கீழ்,
குறிலிணைக்கீழ் - இடையில் 1x2
குறிற்கீழ், குறிலிணைக்கீழ் - கடையில் P 42
தவிர்ந்தவை 10х2
05. குற்றியலுகரம்
வன்றொடர் - 6, மென்றொடர் 6, ‘வ்‘ தவிர்ந்த
இடைத்தொடர் - 5, நெடிற்றொடர் - 7,
சொல்லிடையில் வராத ஒளதவிர்ந்த
உயிர்த் தொடர் 11
ஆய்தத் தொடர் - = 36
06. குற்றியலிகரம்
36 குற்றியலுகரமும் யாவந்துபுணர
வருவன - 36. சொன் மியாவில் உள்ளது 1 = 37 O7. ஐகாரக் குறுக்கம்
சொல் முதலிடை கடையில் வருவன 3 F 03
08. ஒளகாரக் குறுக்கம்
சொல் முதலில் மட்டும் வரும் ஒள அங்கு
குறுகிவரும் 1 = 01
09. மகரக் குறுக்கம்
மருளும் - மருண்ம் - 1, போலும் = போன்ம் - 1
தரும் வளவன் - 1 03 ܣܒ 10. ஆய்தக் குறுக்கம்
கஃறீது, முஃடீது - = O2
Marinn
----
3
6
9

Page 10
- 4 - தமிழ் இலக்கணப்பூங்கா
சுட்டெழுத்துக்கள் :
அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் ஆகும். இவ்வெழுத்துக்கள் சொல்லின் உள்ளுறுப்பாக இடம் பெற்றுச் சுட்டுப்பொருள் தரும்பொழுது அகச்சுட்டு எனப்படும். உ+ம் அவ்அன் (அவன்), இவ்அன் (இவன்), உவ்அன் (உவன்). இச்சுட்டு எழுத்துக்கள் பெயர்ச்சொற்களின் புறத்தே அவற்றைச் சார்ந்து நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும்பொழுது புறச்சுட்டு எனப்படும். உ+ம் : அவ்வீடு, இவ்வீடு, உவ்வீடு.
s
சுட்டுவேர்னுக்கும் கேட்போனுக்கும் சேய்மைப் பொருளையும், ‘இ’ சுட்டுவோனுக்கு அண்மைப் பொருளையும், ‘உ’ கேட்போனுக்கு (முன்னிலைக்கு) அண்மைப் பொருளையும் சுட்டப்பயன்படும்.
‘அ’ சுட்டு நீண்டு, ஆங்கு, ஆண்டு எனவும், “இ’ சுட்டு நீண்டு ஈங்கு, ஈண்டு எனவும் ‘உ’ சுட்டு நீண்டு ஊங்கு எனவும் வருவதும் உண்டு. வினா எழுத்துக்கள் :
வினா எழுத்துக்களாவன எ, யா, ஆ, ஒ, ஏ ஆகியவை. இவற்றுள் வினாச் சொல்லின் முதலெழுத்தாக எ, யா (எவன், யாது) என்பனவும், வினாச் சொல்லின் இறுதி எழுத்தாக ஆ, ஒ (அவனா, நியோ) என்பனவும், வினாக்களின் முதலெழுத்தாகவும் இறுதி எழுத்தாகவும் (ஏவர்? அவனே?) ஏ என்ற எழுத்தும் வரும. அக வினா :
சொல்லுக்குள்ளேயே வினாவெழுத்து அமைந்திருப்பது அகவினா உ+ம் எது? புறவினா :
சொல்லின் புறத்தே வினாவெழுத்து அமைந்திருப்பது புறவினா உ+ம் எம் மனிதன்
யா என்ற வினாப் பெயரும் வினா வகையுள் அடங்கும். உ+ம் : யா பெரிய? (யா - பலவின் பால்வினா) மாற்றொலியன்கள் :
'க்' ஆகிய ஒலியன் கரடி’ எனும் போது Ka ஆகவும், நாகம் எனும் போது ha ஆகவும், தங்கம் என்பதில் ga ஆகவும் மாறி ஒலிக்கிறது.'ப' எனும் ஒலியன் பற்று என்பதில் Pa ஆகவும், இன்பம் என்பதில் ba ஆகவும் மாறிஒலிக்கிறது. இதனால் தமிழில் கப மாற்றொலியன்கள் எனப்படுகின்றன.

- 15 - தமிழ் இலக்கணப்பூங்கா
பிற்காலத்தில் தமிழில் புகுந்த எழுத்துக்கள் :
சம்ஸ்கிருத மொழித் தொடர்பால் தமிழில் இந்த ஜ, ஸ, ஷ, ஹ, ரீ முதலிய எழுத்துக்கள் உருவாகின. ஆங்கில மொழித் தொடர்பால் f எனும் எழுத்துக்குச் சமமாக "உடன் ப் சேர்த்துப் பிரயோகிக்கும் வழக்கு உருவாயிற்று. BA, GA, ZA என்னும் ஒலிகளுக்கு . இன்னமும் தமிழில் எழுத்துக்கள் அமையவில்லை.
வேற்று நிலை மெய்ம்மயக்கம் :
பதினெட்டு மெய்களுள்ளும் ர், ழ், ஆகிய இரு மெய்களில் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்துப் பின்னால் தன்னைத் தவிர்ந்த வேறு மெய்களையே கொண்டு வரும். இவ்வாறு இம்மெய்யெழுத்துக்களின் மயக்கம் தானல்லாத வேறு மெய்களோடே நிகழ்வதால் இது வேற்று நிலை மெய்ம்மயக்கம் எனப்பட்டது. உ+ம் நிமிர்ச்சி, வாழ்க்கை, இந்த ர், ழ், தவிர்ந்த பதினாறு மெய்களும் தம்மெய்யைத் தமக்குப் பின்னேகொண்டும் வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.
உடனிலை மெய்ம்மயக்கம் :
க், ச், த், ப், எனும் மெய்களில் ஒவ்வொன்றும் தன்னைத் தவிர்ந்த பிறமெய்யை ஒரு போதும் தனக்கு அடுத்துப் பின்னால் கொண்டுவராது. மூக்க்உ, இச்ச்ஐ, அத்த்இ, காப்ப்உ, என்பவற்றில் க் ச் த் ப் மெய்கள் தமக்கு அடுத்துப் பின்னால் க் ச் தீ ப் மெய்களையே முறையே கொண்டு வந்துள்ளமை காண்க. இவ்விதிப்படி திருப்தி, பக்தி முதலிய ஆரியச் சொற்களைத் தமிழில் எழுதும் போது திருத்தி, பத்தி என மாற்றி எழுதுவதே சரி. க் ச் தீ ப் ஆகிய மெய்களில் ஒவ்வொன்றும் தன்னொடு தான் மட்டும் சேரும் - மயங்கும் இத் தன்மை குறித்தே இது உடன் நிலை - உடனிலை மெய்ம்மயக்கம் எனப்பட்டது. க் ச் தி ப் ஆகிய நான்கும் தவிர்ந்த பதினான்கு மெய்களும் தமக்குப் பின்னே பிறமெய்களையும் கொண்டு வரும் என்பதை உய்த்துணர்க. உ+ ம் கண்ட்இ - கண்டி
ஈரொற்றுக்கள் :
ய், ர், ழ் ஆகிய மூன்று ஒற்றுக்களும் மட்டுமே தமக்குப் பின்னால் ஒவ்வொரு (தாம் தவிர்ந்த) தனி மெய்யூைத் கொண்டுவரும். உ+ம் : சாய்ந்து, தேர்க்கால், ခန္တီးနိီနီ இப்படியான சொற்களில் (சாய்ந்த்உலு ઇનિી அடுத்து வருவதும், ‘ய்‘ இன் பின்னால் இருஒற்றுக்கள் வந்துள்ளமையுரங்
f60s.

Page 11
I6 - தமிழ் இலக்கணப்பூங்கா
தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் :
அதாவது சம்ஸ்கிருத மொழியிலில்லாதவையும் தமிழ்மொழியில் உள்ளவையுமான எழுத்துக்களாவன எ, ஒ, ழ, ற, ன எனும் ஐந்துமாம். எழுத்துப் போலிகள் :
மரம், கலம் போன்ற அ.றிணைப்பெயர்களின் ஈற்று 'ம்' மெய்போய், ன், மெய் வந்து மரன், கலன் என வருதலுண்டு. சாம்பல், பந்தல் என்பவற்றின் ஈற்று ‘ல்‘ இற்குப் பதில் ‘ர்‘ வந்து சாம்பர், பந்தர் என நிற்பதுண்டு. அரும்பு, சுரும்பு என்பவற்றின் ‘உ’ ஈற்றுக்குப் பதில் அர் நின்று அரும்பர், சுரும்பர் என நிற்பதுண்டு. இவைகள் எழுத்துப் போலிகள் எனப்படும். மொழி முதற்போலி
உ+ம்: ஐயன் = அய்யன், ஒளவை - அவ்வை, வைத்தியர் = வயித்தியர். மொழி இடைப்போலிகள் :
அரசன் = அரைசன், இலஞ்சி = இலைஞ்சி, மொழி இறுதிப்போலிகள் :
சுரும்பு = சுரும்பர், பந்தல் - பந்தர் சந்தியக்கரம் :
ஐ என்ற எழுத்தின் ஒலியை அ, இ, ய் ஆகிய எழுத்துக்கள் அஇய் என்று சேர்ந்து நின்றும் தரும். ஒள எனும் எழுத்தின் ஒலியை அ, உ, வ் ஆகிய எழுத்துக்கள் சேர்ந்து நின்றும் தரும். இவ்வாறே அ, உ, ஆகிய எழுத்துக்கள் சேர்ந்து நின்று ஒகர ஒலி தரும். இந்த ஐ, ஒ, ஒள என்பனவே சந்தியக்கரங்களாம\ இன்று ஒளவை என்ற சொல் அவ்வை என்றும் நூல் வழக்கில் இடம் பெறுகிறது. சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள்:
அ, முதல் ஒள வரையிலான பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் உயிர் எழுத்துக்களாம். உ+ம்: அறை, ஆடை, இடம், ஈட்டி முதலியன க், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் எனும் ஒன்பதும் சொல்லின் முதலில் வரும் மெய்யெழுத்துக்களாம். (க் அணி, ச் ஈற்றம், முதலியன) இவ்வாறு உயிர் பன்னிரண்டும், மெய் ஒன்பதுமாக மொழி முதல் எழுத்துக்கள் இருபத்தொன்றாகும். சொல்லின் இறுதியாக வரும் எழுத்துக்கள் :
அ, ஆ, முதலிய ‘எ’ தவிர்ந்த உயிர் 11உம், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் எனும் மெய்கள் பதினொன்றும்

7 - தமிழ் இலக்கணப்பூங்கா
ஒரு குற்றிய லுகரமும் ஆக மொத்தம் இருபத்துமூன்று எழுத்துக்களும் சொல்லின் இறுதி எழுத்தாக வரும். உ+ம் உயிரீறுகள்: சொல் ல்அ, அம் ம்ஆ, தம்ப்ஈ முதலியன. மெய்யிறுகள்: உரிஞ், வெரிந் கூழ், தேன் முதலியன. குற்றுகரவிறுகள்; சுக்கு, பந்து முதலியன.
ஒரு, ஓர் வருமிடங்கள்:
அ, ஆ முதலிய பன்னிரண்டு உயிர்களாலும் தொடங்கும் ஒருமைப் பெயர்ச்சொற்களின் முன் ஒர் என்ற எண்பெயரே வர வேண்டும். (ஓர் அலை, ஓர் ஓடம்), க், ச், ஞ் முதலிய மெய்யெழுத்துக்களால் தொடங்கும் ஒருமைப் பெயர்களின் முன்னால் ஒரு என்னும் எண்ணுப்பெயரே வரவேண்டும். (ஒரு ஞாயிறு, ஒரு கழுகு)
பயிற்சி - 1
1. பின்வரும் உயிர்மெய்களை மெய்களாகவும் உயிர்களாகவும்
பிரித்தெழுதுக. தை, டீ, ளெ, ங், வி, சோ, ம. றா, லெள, ணொ
2. பின்வருஞ் சொற்களை வாசிக்குக.
1. வ்ஏல் 2. ந்அம்ப்இ 3. க்அண்ணன்அன் 4. க்உம்உத்அம் 5. பிற்ஐ ந்இல்ஆ 6. அம்ப்அல்அம் 7. ச்உந்த்அர்அ
வ்அல்ல்இ 8. த்ஒ ண்ட்அ க்அப் ப்அ ற்ஐ
9. ம்ஒளவ்அல்அந்த்ஆர் 10. ப்ஒளத்இக்அவ்இய்அல்
3. அ. பின்வரும் சொற்களுள் குற்றியல் உகரச்சொற்களைத்
தெரிந்தெடுத்தெழுதுக. சால்பு, குஞ்சு, நிலவு, மது, மோது, இடிமாடு, ஒதுவார், அசோகு, மகாமேரு, புற்று, உதயபானு, கஃசு, தில்லுமுல்லு, கான்யாறு
ஆ தெரிந்தெடுத்த குற்றுகரங்களை என்னென்ன
தொடர்க் குற்றியலுகரம் என எழுதுக.
4. அ. பின்வருவனவற்றுள் வினாச் சொற்களையும் சுட்டுச் சொற்களையும் வேறு வேறாகப் பொறுக்கி எடுத்தெழுதுக.
1. இம்மை 2, எக்கூண்டு 3. ஆராமை 4. ஈண்டு 5. நீயே 6. அந்தோ 7. நும் 8. யாங்கு 9. வருவானோ 10. அம்பரம் 11. இம்மியளவு 12.அங்ங்ணம் 13. ஆமா 14. ஏவர் 15. உவண்
ஆ. நீர் தெரிந்தெடுத்த சொற்களில் வினா எழுத்துக்களின்
கீழும், சுட்டெழுத்துக்களின் கீழும் கோடிடுக.

Page 12
- 18 - தமிழ் இலக்கணப்பூங்கா
சொல் வகைகள்
சொல் அல்லது பதம் : தனி ஓர் எழுத்தினால் அல்லது பல எழுத்துக்களினால் ஆகிப் பொருள் தந்து - அர்த்தத்தின் குறியீடாக நிற்பது சொல் அல்லது பதம் எனப்படும். தனி எழுத்தாலான ஓரெழுத்துச் சொற்களில் சில வருமாறு : பூ, ஈ, வா, கோ, கை, நீ.
உளி, பந்து, சந்திரன், அறிந்தான், வாழ்ந்தனர் போன்றவை பல எழுத்துக்களாலான சொற்களாகும். இச் சொற்கள் பகுபதங்கள், பகாப்பதங்கள் என இருவகைப்படும்.
பகுபதங்கள் :
இச் சொற்களுள் பகுதி (வினையடி), விகுதி (இறுதிநிலை), இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறு உறுப்புக்களில் ஆறுமாகவோ, பலவாகவோ குறைந்தது பகுதி விகுதி என இரண்டாகவோ பிரிக்கப்படக் கூடிய சொற்கள் பகுபதங்கள் எனப்படும். இப்பகுபதங்கள் பெயர்ப் பகுபதங்கள் (பொன் + அன், இல் + மை, உண் + ட் + ஆன் + ஜ) வினைப்பகுபதங்கள் (பாடு + கின்று + அன் + அள், பார் + த் + த் + உ) என இருவகைப்படும். இப்படிச் சொல்லுறுப்புக்கள் புணர்ந்து சொற்கள் உருவாகியதுபோல, சொற்கள் புணர்ந்து சொற்றொடர்கள், வாக்கியங்கள் உருவாகின. சொற்கள் - உருபன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆறு பகுபத உறுப்புக்களும் கொண்ட சொல்:
ந் - விகாரம்
ー+ー த் -- த் -- அன் ー+
பகுதி சந்தி இடைநிலை சாரியை விகுதி
விகுதிகொண்ட காரணப்பெயர்கள், காரண இடுகுறிப்பெயர்கள், தொழிற்பெயர்கள், வினையாலணையும் பெயர்கள், வினையெச். சங்கள், பெயரெச்சங்கள், வினைமுற்றுக்கள் பகுபதங்களாம்.

தமிழ் இலக்கணப்பூங்கா
19 -
9的十地+니어國49트田
阎十垣9圆十f =@qiņ9ħ「十拒95 = ĮG-4-1,9+1@+9)|ņ09 url =1Ịno-TipolinqìTos-In+Timog) == qu@+I$$I?+q|u9@ –(4Q99)99验u99恒96+9士可+习十七9肃。生 88+IÙqİGoļņ94 so –ɖiɖoɖrtos@Q9的十Q9는田8) = 目且圆十函喻n =sąjon199f@+ơndoqioso) – 因姆可十919唱n =因诅9唱n 点可+眼十砚十009999 = 圆十占9十卢9T卧儿Ļ91ņ09-æ可十碗十碗十909可日 瓯十七99 =ᰗ可十淑十啦十hn = 909十臣儿9{总9生-w-ŁĘ+ț+8ırı – H+ņ+-ioos@ =Hņ–ī09koK的十地士明+&an = qiio-s-Z4---3-9)& =gn그녀19||그연+T+長9「여+SD니nn98) = gnk에 +T+七9%혁 =9T习哲 Q90+引十卢9十卢99 = -o-+$4%, 4 hođì)? —(qī£ș19:59) IsiGouốio||so-$+?+1ņ09+1999-w — Is-so-shof)o - (sqif)1909ņ9)|$ouđio1991/19+Q9loo) = 占f的十峻十峻+写十习十(g9士m电B)=七9u成道연고령9rm98**+3+3E8 = 反帝十弓的十明十@+q4函強on=9与函唱u吸坦a返与十桓949 = |?- †Go+$+#.+ơndoqios) =?取坦99B*十コ十長s」g = 运动十啦十淑十圆十914函验g=恒949盟u项羽等IÙ+1ņ9©+R9 og – 运动十咀十咀十圆十恒99唱TQ99=恒9巨因咽官99唱TQ9因?十可七姆士坦十t可= -RP十96 =(qieșútornno)) Il-1& (?)+?+@@ – (IDỰdī)ượcogs) II-ıđề与9*十g@+Eコg) = |fæ+q)+-s -sło –ĮIJújąĵo || ||Go+1ņ9f@+I+1ņ09lo – Ļostoł (j+ọ9o –|110Úąjo恒9动十啦十逾十巨R9= 편의되월퇴통제이지혜정D권的권되制헬國n的괴
@@sello
Trigolo
qihmisoo)
ports-T1ņosto
ọ90Ūuosog)
iņ9īnsnoe)
恒99999
qĒĢocesso
goqjóırı
s@ąsóirí
ospóin
9)ņ999)Ţrtoo) Q9qIII10091ņ0919 gặulag91ņ99-æ (qī£șmɔustoss) soustoņ9.Loo) (sq. filosops) punsọ919€) (qeşme)o(o)s(s) ışınıņasıl? (sợks)loogs) 1ņ91Inıņ09ųo sąjgsvg
爵取飒t可
1991/1991Jng) 它针 Į109-Tipsoo
1991]Ōgimo

Page 13
- 20 - தமிழ் இலக்கணப்பூங்கா
பகாப்பதங்கள்
எச் சொற்களைப் பகுத்தால் பகுதி, விகுதி, முதலிய அர்த்தமுள்ள கூறுகள் தோன்றுவதில்லையோ அச்சொற்கள் பகாப்பதங்கள் எனப்படும். இடுகுறிப்பெயர்கள், வினையடிகளின் ஒற்றிரட்டியும், முதல் நீண்டும் வந்த காரணப்பெயர்கள் (முறுக்கு, ஊண்) இ விகுதி புணர்ந்து கெட்ட காரணப்பெயர்கள் (மலர், அலை) ஆய், இ எனும் ஏவல் விகுதிகள் புணர்ந்து கெட்ட ஏவல் வினைமுற்றுக்கள் (நட, உண்) வினையடிகள் (படி, வா) இடை (மன்), உரிச் (சால்) சொற்கள் என்பன பகாப்பதங்களாம்.
நால்வகைச் சொற்கள்
தமிழ் மொழியில் வழங்குஞ் சொற்கள் நான்கு வகையாக இலக்கணப் புலவர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்சொற்கள். திரி சொற்கள், வடசொற்கள், திசைச் சொற்கள் என்பனவே அவை.
இயற்சொற்கள்
செந்தமிழ் நிலத்து மொழியாகி, நன்கு கற்றார்க்குங்
கல்லாதாருக்கும் ஒப்பத் தம் பொருளை விளக்கி நிற்பன
இயற்சொற்கள் உ+ம்: மண், பொன், படித்தான், அவன்.
திரிசொற்கள் :
ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களாகவும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும், கற்றாராய்ந்தறிய வேண்டிய கருத்துள்ளவையாகவும் அமைந்த சொற்கள் திரி சொற்கள் எனப்படும். உ+ம் : கிளி, தத்தை, சுகம் என்பவை ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரி சொற்கள். மா என்பது, விலங்கு, பொடி, பெரும், மாமரம் முதலிய பல பொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல். கடி என்பது காவல், மணம் முதலிய பல பொருள் குறித்த ஓர் உரித் திரிசொல்.
வடசொற்கள்
சம்ஸ்கிருதம் எனப்படும் மொழியின் சொற்களில் பலநூற்றுக்கணக்கானவை தமிழ் மொழியில் வழங்கி வருகின்றன. சம்ஸ்கிருத ஒலி வடிவில் நிற்குங்கால் அவை ஆரியச்சொற்கள் எனப்படும். தமிழ் இலக்கண ஒலி மரபுக்கமைய அவற்றின் வடிவங்களைச் செப்பனிட்டுத் தமிழேபோல் ஒலிக்கப்படும் பொழுதும் எழுதப்படும் பொழுதும் அவை வடசொற்கள் என்று அழைக்கப்படும். உ+ம்: ரிஷபம் - இடபம். தமிழுக்கும்

- 2 - தமிழ் இலக்கணப்பூங்கா
சம்ஸ்கிருதத்துக்கும் பொதுவான பொது எழுத்துக்களால் ஆக்கப்பட்டுத் தமிழில் கலந்த ஆரியச் சொற்கள் தற்சமம் (கமலம் - கமலம்) என்றும், விசேட எழுத்துக்களையும் கொண்ட சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழொலியிற் கிணங்க ஒரளவே உருமாறி நிற்கும் பட்சத்தில் அவை தற்பவம் (ஹரி = அரி) என்றும் பெயர் பெறும்.
சங்ககாலத் தமிழ் நூல்களில் மிக அருமை பெருமையாக இடம் பெற்ற வடசொற்கள் சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய காலகட்டங்கள் தோறும் ஆரியப் பண்பாடு, இலக்கியத் தொடர்பு, சைவ, வைணவ, சமண, பெளத்த சமயக் கருத்துப் பரம்பல்கள் மூலம் தமிழ்மொழியில் தம் ஆதிக்கத்தைப் பெருக்கி வந்து, நாயக்கர் காலத்தில் தமிழ் நடையில் சரிசமமாகக் கலந்து நிற்கும் நிலையை எட்டிவிட்டன. இத்தகைய வசனநடைக்கு மணிப்பிரவாள நடையெனப் பெயரும் சூட்டப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட மொழி விழிப்புணர்ச்சி காரணமாக மறைமலையடிகள், திரு.வி.க. பரிதிமாற்கலைஞர் போன்ற தனித்தமிழியக்கத் தந்தையர்களால் தூய்மை பெற்றுவந்த தமிழ் இன்றைய வளர்ச்சிநிலையில் அரிதாகவே வடசொற்களைக் கொண்டு இயல்கின்றது. ஆயினும் சங்ககால முதல் இன்றுவரை தமிழில் எழுந்துவரும் சமயம், இலக்கியம், சோதிடம், இலக்கணம் முதலிய பல்துறை நூல்களையும் நாம் ஐயம் திரிபறக் கற்று விளங்க வடசொல்லறிவு எதிர்காலத்தும் வேண்டப்படுகின்றது.
வடமொழியாகித் தமிழில் வழங்கும் ஆரியச் சொற்களில் சில :
அட்சரம், அபிடேகம், ஆரணியம், இட்டம், இதம், இராச்சியம், உதாரணம், இரத்தம், கீர்த்தி, சத்தம், சத்துரு, சிநேகம், இலட்சியம், சாரதி, சம்சாரம், துட்டன், தருமம், தீட்சை, இடாகினி, புட்பம், பூதம்.
திசைச்சொற்கள் :
வடமொழி தவிர்ந்த, ஆங்கில, அரபு, உருது, இந்துஸ்தானி போர்த்துக்கேயம், ஒல்லாந்தம், போன்ற பிற மொழிச் சொற்கள் தமிழ் ஒலி அமைப்புப் பெற்றுத் தமிழில் வழங்கும் போது அவை திசைச் சொற்கள் என அழைக்கப்படுகின்றன. வடசொற்கள், திசைச்சொற்களுக்கு ஈடாகக் கையாளப்படக்கூடிய தூய தமிழ்ச் சொற்கள் இருக்கவும் - அவற்றை ஆக்கக் கூடிய தமிழ் வேர்ச்சொற்கள் இருக்கவும் அவற்றை விடுத்துப் புறமொழிச் சொற்களையே கையாளுதல் சான்றோர்க்கு வழக்கமில்லை.

Page 14
- 22 - தமிழ் இலக்கணப்பூங்கா
திசைச் சொல் உதாரணங்கள்
போர்த்துக்கேயச் சொற்கள் :
அலுமாரி, ஆயா, கடதாசி, கதிரை, கப்பாத்து, கோப்பை, சப்பாத்து, சாவி, தவறணை, துப்பாக்கி, நங்கூரம், பாதிரி, ஜன்னல், வாங்கு, விறாந்தை.
ஒல்லாந்த மொழிச் சொற்கள் :
இலாச்சி, உலர்ந்தா, கக்கூசு, கந்தோர், சாக்கு, துட்டு, தோம்பு,
ஆங்கில மொழிச் சொற்கள் :
சினிமா, கார், கோப்பி, கொக்கோ, கோச்சி, சீமேந்து, தார், பொத்தான், பிடில், பென்சில்.
மராத்தி மொழிச் சொற்கள்:
அட்டவணை, சாம்பார், அபாண்டம், குண்டான், சாவடி,
பாரசீக மொழிச் சொற்கள் :
சபாசு, சர்க்கார், சிப்பந்தி, சமுக்காளம், சால்வை,
&LDsfr.
இந்துஸ்தானி மொழிச் சொற்கள் :
ஆசாமி, பயில்வான், உசார், பஞ்சாயத்து, மசோதா,
மனு, சிபார்சு, பாக்கி, பேட்டி.
பாளி மொழிச் சொற்கள் :
ஆணை, தூபி, சதுக்கம், வேதிகை, சீலம், பிக்கு,
பிக்குணி,
இன்னோர் அடிப்படையில் சொல் வகைகள்:
சொற்கள் பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள்,
இடைச் சொற்கள், உரிச்சொற்கள் என நான்கு வகையா" இன்னோர் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன.

- 23 - தமிழ் இலக்கணப்பூங்கா
பெயர்ச் சொல் வகைகள்
பெயர்ச் சொற்கள் :
பொருட்கள், இடங்கள், காலங்கள், சினைகள், குணங்கள், தொழில்கள் என்பவற்றைக் குறித்து நிற்குஞ் சொற்கள் பெயர்ச் சொற்களாம். இந்த அடிப்படையில் பெயர்களைப் பொருட்பெயர் (பெட்டி), இடப்பெயர் (நல்லூர்), காலப்பெயர் (வசந்தம்), சினைப்பெயர் (வேர்), குணப்பெயர் (பசுமை), தொழிற்பெயர் (ஆடல்) என ஆறாக வகுக்கலாம்.
ஆறுவகைப் பெயர்களடியாகப் பிறந்த காரணப் பெயர்கள்: காரணப் பெயர்
1. பொருட்பெயர் : வலை ... வலைஞன் 2. இடப்பெயர் : நாடு நாட்டார்
3. காலப்பெயர் : வேனில் . வேனிலான் 4. சினைப்பெயர் : கண் - - - கண்ணன் 5. குணப்பெயர் : கருமை . கரியன்
6. தொழிற் பெயர் : ஆட்சி ஆட்சியாளர்
பெயர்ச் சொல்லின் பொது இலக்கணம் :
இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைத் தனித்தனியே குறிக்கும் குறியீடுகளாக விளங்குவது பெயர்ச் சொல்லின் பொது இலக்கணம்.
பெயர்ச் சொல்லின் சிறப்பிலக்கணம் :
பெயர்ச்சொற்களின் சிறப்பிலக்கணமாவது வேற்றுமை உரு பேற்றலாகும்.
இன்னோர் அடிப்படையில் பெயர் வகைகள் :
பெயர்கள் எல்லாவற்றையும் இடு குறிப்பெயர், காரணப் பெயர், காரண இடுகுறிப்பெயர் என மூன்றாக வகுக்கலாம்.
இடுகுறிப் பெயர் :
பண்டுதொட்டு எக்காரணம் பற்றி இல்லாமலும், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றுக்கு வெறும் குறியீடு மாத்திரையாக இட்டு வழங்கப்பட்டு வரும் பெயர்கள் இடு குறிப்பெயர்கள் எனப்படும். உ+ம்: வாள், நிலம், மாரி,

Page 15
- 24 - தமிழ் இலக்கணப்பூங்கா
காரணப் பெயர் :
ஏதாவது ஒரு காரணம்பற்றி ஒரு பொருள், ஓர் இடம் முதலியவற்றுக்கு இடப்படும் பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும். உ+ம் : பாக்கு வெட்டி, விமானந்தாங்கி, கறுப்பி, கூழங்கையன், உண்ணி, உவரி, தொலைபேசி.
காரண இடுகுறிப் பெயர்கள்:
காரணங் கருதி வழங்கும்போது காரணப் பெயராகவும், அக் காரணங் கொண்ட பல பொருட்களுள்ளும் ஒரு பொருள் மட்டுமே அக் காரணப் பெயராலும் உரிமைபூண்டு குறிக்கப்படும் போது இடுகுறியாயும் தோற்றமளிக்கும் பெயர்கள் காரண இடுகுறிப் பெயர்களாம். உ+ம்: நாற்காலி எனும் பெயர், ஒரு பொருள் நான்கு கால்கள் கொண்ட காரணத்தால் அமைந்தமையால் காரணப் பெயராகவும், நான்கு கால்கள் கொண்ட ஆடு, மாடு, மேசை போன்றவற்றுள்ளும் ஒரு வகை ஆசனத்துக்கு மட்டுமே உரித்தாகி அதனையே குறிப்பதாய் இடுகுறியாயும் நின்று, காரண இடுகுறியாயிற்று. நாற்காலி, முள்ளி, முக்கண்ணன், வாய்ச்சி, அடுப்பு, வானொலி, செய்யுள் போன்றவை காரண இடுகுறிப் பெயர்களாம்.
இன்றைய இயற் பெயர்கள் பல இடுகுறிகளே:
உலகில் ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு பெயர் இட்டு வழங்கப்படுகிறது. பண்டைக் காலங்களில் யார் யார்க்கோ காரணப் பெயர்களாய் அமைந்து வழங்கிய ஐங்கரன், ஆறுமுகன், திருநாவுக்கரசன், கரிகாலன், திருமார்பன், பிறைசூடி, வேலவன், மயில்வாகனன், பூபாலன், நாமகள், பொன்னி மங்கையர்க்கரசி முதலிய பெயர்களும் இன்று மக்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. இப் பெயர்கள் ஆதியில் காரணம்பற்றி உண்டானவை என்பதாலும் இன்று இடுகுறியாய் மக்களுக்கு இட்டு வழங்கப்படுவதாலும். இவை காரண இடுகுறிப் பெயர்கள் என்று, பிழையான முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டு இக்கால இலக்கணநூல்கள் சிலவற்றிலும் குறிக்கப்பட்டு விட்டன.
ஐங்கரன் என்பது ஐந்து கரங்களை sd 60Luj6 Isrகளுள்ளும் தலைமை சான்ற ஒருவனுக்கே காரண இடுகுறிப் பெயராக அமைய முடியும். அப்படி இருக்க, ஐந்து கரங்களுடைமையாகிய காரணமே அமையாத ஒருவனுக்கு அப் பெயர் காரண இடுகுறியாக அமைவது எவ்வாறு? இவை சோதிடர் ஆணைப்படி நட்சத்திர LT5 எழுத்துக்கள் பொருத்தமே நோக்கமாக, வேறெக் காரணமும் அமையாது பெற்றோரால் இடப்பட்ட வெறும் இடுகுறிப் பெயர்களே. இக்

- 25 -
தமிழ் இலக்கணப்பூங்கா
கருத்தே இலக்கணச் சுருக்க நூலாசிரியர் றிலழரீ ஆறுமுக
நாவலர் முடியுமாகும். காரண இடுகுறிப் பெயர்களுக்கு அவர் காட்டிய உதாரணங்களான முள்ளி, கறங்கு, முக் கண்ணன் அந்தணர் ஆகிய பெயர்கள் குறிக்கும் பொருள்கள்
அனைத்தும் அப் பெயர்களுக்கான காரணங்களைத் தவறாது
கொண்டிருப்பதே அதற்குச் சான்று. நன்னூலார் பெயர்களை இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என இரண்டாகவே வகுத்தார்.
வினைப் வினைப்பெயர் | வினையடிப் வினைப்பெயர்ப் பகுதிகள் (தொழிற்பெயர்ப்) பகுதிகள் (தொழிற்பெயர்ப்) கொண்ட (35 KO கொண்ட பகுதிகள் காரணப் கொண்ட காரணப் கொண்ட பெயர்கள் காரணப் பெயர்கள் காரணப்
பெயர்கள் பெயர்கள்
கொல்லி கொலைஞன் | நிலை நிலையம் (தொலை)பேசி பேச்சாளன் காப்பு காப்பாளன் (கண்)காணி காட்சியன் குற்றி குற்றியன் (மன்று)ஆடி ஆடலி முறுக்கு முறுக்கன் எதிரி எதிர்ப்பாளன் | களை களைவாளர் எழுத்து எழுத்தாளன் | பூண் பூட்கையர் பறவை பறப்பன் பிடி பிடிப்பாளர் பிணங்கி பிணக்கன் கொள்ளை கொள்ளையர் கோவை கோப்பாளன் ' ! ஊண் ஊணர் முனை முனைவன் மறை மறையோன் சேரி சேரியான் vg9Hiç2 அடியாள் பிணி பிணியன்
இக் காரணப் பெயர்கள் அனைத்தும் குறிப்புவினை முற்றுக்களாகவும் வரும்.
இன்னோர் அடிப்படையில் பெயர்ச்சொற்கள்:
பெயர்கள் எல்லாம் பொதுப் பெயர், சிறப்புப்பெயர் என இரு வகையாகப் பிரிக்கப்படும்.
பொதுப் பெயர்கள் :
ஒரே இனத்துப் பல பொருட்களை மொத்தமாகச் சுட்டும் குழுப்பெயர் அல்லது சமூகப்பெயர் பொதுப்பெயராகும். மாட்டுவண்டி, பேருந்து, சரக்குந்து, மிதிவண்டி முதலிய ஊர்திகள் அனைத்தையும் மொத்தத்தில் சுட்டும் ஒரு பெயர்

Page 16
- 26 - தமிழ் இலக்கணப்பூங்கா
வாகனம். எனவே வாகனம் என்பது ஒரு பொதுப் பெயர். இதுபோல மரம், மிருகம், பறவை, தொழிலாளர் எனப் பல பொதுப் பெயர்கள் உள.
சிறப்புப் பெயர்கள் :
தனிப்பட்ட ஒரு பொருளையோ, இடம் முதலானவற்றையோ, உபகுழுவையோ, பிரித்துணர்த்திச் சிறப்பாகச் சுட்டுவது சிறப்புப் பெயராகும். பலா, மான், குயில், உழவர் என்பன முன்பு காட்டிய பொதுப்பெயர் உதாரணங்களின் சிறப்புப் பெயர்களாதல் காண்க.
இட அடிப்படையில் பெயர் வகைகள்:
பெயர்ச்சொற்கள், தன்மைப் பெயர்கள், முன்னிலைப் பெயர்கள், படர்க்கைப் பெயர்கள் என மூன்று வகை இடப்பெயர்களாகவும் வகுக்கப்படும்.
தன்மைப் பெயர்கள்:
நான், யான், அடியேன், சிறியேன், ஏழையேன், நாயேன், என்னுந் தன்மை ஒருமைப் பெயர்களும், நாம், யாம், அடியோம், சிறியோம், ஏழையோம், நாயோம், என்னும் தன்மைப் பன்மைப் பெயர்களும், நானும் நீயும், அவனும் முதலிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மைகளும் தன்மை இடத்தனவாம். இந்த ஒருமைப் பெயர்கள் யாவும் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டுக்கும் பொதுவானவை.
திணைப் பொதுமை
பறவைகள், மிருகங்கள் முதலிய அட்றிணை வர்க்கங் களும் பேசுவதாகப் புனைகதைகள், கவிதைகள் உள்ளன. அதனால் தன்மை, முன்னிலைப் பெயர்கள் உயர்திணைக்கன்றி அ.றிணைக்கும் உரியனவாக திணைப்பொதுவாக வழங்குகின்றன.
முன்னிலைப் பெயர்கள்:
நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயரும், நீயிர், நீவிர், நீங்கள் பெரியீர், நல்லீர், எல்லீரும் எனும் முன்னிலைப் பன்மைகளும், நீயும் அவனும், இவனும் முதலிய உளப்பாட்டு முன்னிலைப் பன்மைகளும் முன்னிலை இடத்தனவாம். இவை இருதிணைக்கும், ஆண் பெண் பால்களுக்கும் பொதுவாகி வரும். பல்லாயிரம் மைல்கள் இடைவெளியிலிருந்து இருவர் தொலைபேசி மூலம் பேசும் பொழுதும் அவர்கள் ஒருவருக்கொருவர் முன்னிலைதான்.

- 27 - தமிழ் இலக்கணப்பூங்கா
படர்க்கைப் பெயர்கள் :
தன்மைப் பெயர்கள், முன்னிலைப் பெயர்கள் தவிர்ந்த இவன், இது, கணேசன், சிட்டு, அது, எழிலி உட்பட்ட பெயர்கள் அனைத்தும் படர்க்கைப் பெயர்களே.
திணை அடிப்படையில் பெயர்கள் :
உயர்திணை, அட்றிணை எனும் இரு பிரிவுகளுள் அனைத்துப் பெயர்களும் அடங்கும்.
உயர்தினைப் பெயர்கள்:
மக்கள், நரகர், தேவர், போன்றோரைக் குறிக்கும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் எனப்படும். உ+ம் தொழிலாளர்கள், நாகன், அமரன், சிவகாமி.
அஃறினைப் பெயர்கள் :
உயர்திணை அல்லாத திணையாகிய அறிணையில் மக்கள், நரகர், தேவர், தவிர்ந்த அனைத்து உயிர்ப்பொருள்களும், சடப்பொருள்களும் அடங்கும். பறவைகள், மிருகங்கள் முதலியவை, குழந்தைகள், மரஞ்செடி கொடிகள் என்பன நிலம், நீர்,
தி, வீடு, புத்தகம் முதலியன அனைத்தையும் குறிப்பன அட்றிணைப் பெயர்களே.
பால் அடிப்படையில் பெயர்கள் :
எல்லாப் பெயர்களும் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனும் ஐந்து பிரிவுகளுள் அடங்கும்.
ஆண்பாற் பெயர்கள் :
உயர்திணைப் பெயர்கள் LD_(603D ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப்பகுக்கப்படும். எனவே மக்கள், நரகர், தேவரில் ஓர் ஆணைக்குறிக்கும் பெயர் ஆண்பாற் பெயராகும்.
உ+ம் செல்லையன், ஆறுமுகன், இந்திரன், எழிலன், எவன்
பெண்பாற் பெயர்கள் :
உயர்திணைக்குள் ஒரு பெண்ணைக் குறிக்கும் பெயர்
பெண்பாற்பெயர் எனப்படும்.
உ+ம் வள்ளி, இந்திராணி, மகள், பேர்த்தி

Page 17
- 28 - தமிழ் இலக்கணப்பூங்கா
பலர்பாற் பெயர்கள் :
உயர்திணையில் ஒருவர்க்கு அதிகமான ஆண்களையோ, பெண்களையோ, ஆண், பெண் கலந்த கூட்டத்தினரையோ குறிக்கும் பெயர்கள் பலர்பாற் பெயர்கள் எனப்படும். உ+ம் மாணவியர், வீரர், தமிழர், மக்கள், பேதையர்.
ஒன்றன்பாற் பெயர்கள் :
அறிணைப் பொருள் ஒவ்வொன்றையும் குறிக்கும் பெயர் ஒன்றன்பாற் பெயராகும். உ+ம் ஒரு பறவை, ஒரு மரம், பாம்பொன்று, ஒரு மனை, ஓர் ஒடை. மேலும் குழந்தை, சிசு என்பனவும் ஒன்றன்பாலாகவே கொள்ளப்படும். ஓர் அட்றிணை ஆணும் (சேவல், கடா, எருது) அல்லது ஓர் அட்றிணைப் பெண்ணும் (பேடு, மறி, பசு) ஒன்றன் பாலாகவே கொள்ளப்படுவது தமிழிலக்கண மரபு. இவை அட்றிணை ஆண் என்றும், அட்றிணைப் பெண் என்றும் மட்டுமே சுட்டப்படுவது இலக்கண ԼDUւկ.
பலவின் பாற் பெயர்கள்
அ.நினைப் பல பொருட்களைக் குறிக்கும் பெயர்கள்
யாவும் பலவின்பாற் பெயர்களே. உ+ம் விலங்குகள், வேலிகள்,
புட்கள், குடிசைகள், பூக்கள், குழந்தைகள்.
பால் பகா அஃறினைப் பெயர்கள்
அ.நிணையில் தனிச் சொல்லாக, ஒருமை வடிவில் நிற்கும் அட்றிணைப் பெயர் அந்நிலையில் ஒன்றன்பாலோ பலவின்பாலோ எனப் பகுக்கப்பட முடியாதது. அதனால் அது (மரம், மீன்) பால்பகா அட்றிணை எனப் பெயர் பெற்றது. அப் பெயர் ஒருமை வினை ஏற்றால் (மரம் விழுந்தது) ஒன்றன்பாற் பெயரெனக் கொள்ளப்படும். பன்மை வினை ஏற்று நின்றால் (மீன் நீந்தின) பலவின்பாற் பெயரெனக் கொள்ளப்படும்.
உயர்தினைப் பாற் பொதுப் பெயர்கள்:
பேதை , ஊமை போன்ற உயர்திணைப் பெயர்கள் ஆணைக்குறித்தும் வரும்: (பேதை சிரித்தான், ஊமை திணறினான்) பெண்ணைக் குறித்தும் வரும்: (பேதை நம்பினாள், ஊமை அழுதாள்) இவை போன்ற சொற்கள் உயர்திணைப் பாற் பொதுப் பெயர்கள் எனப்படும். உ+ம்: செவியிலி, அகதி, எதிரி, ஏழை, அநாதை, பாவி, சோம்பேறி, அறிவாளி, துரோகி, வாதி, பிரதிவாதி, நோயாளி, குற்றவாளி, பிள்ளை, உலோபி, ஏமாளி.

- 29 - தமிழ் இலக்கணப்பூங்கா
மேலுஞ் சில பாற் பொதுப் பெயர்கள் :
உபகாரி, சூத்திரதாரி, வாயாடி, தற்குறி, விருந்தாளி, மருந்தாளி, நீதிபதி, நியாயவாதி, சட்டத்தரணி, விவேகி, புத்திசாலி, அதிஷ்டசாலி, கடனாளி, பகையாளி, உழைப்பாளி, தொழிலாளி, முதலாளி, முன்னோடி,வழிகோலி, கொண்டோடி, பாட்டாளி, நாடோடி, பிரயாணி, பிரயாசி, நிரபராதி, சுழியோடி, பயங்கொள்ளி, தொடைநடுங்கி, காவலாளி, கண்காணி, படிப்பாளி, கொடையாளி, அடிமை, பங்காளி, வயதாளி.
இருதினை முவிடப் பொதுப் பெயர்:
எல்லாம் என்ற பெயர்ச் சொல் அவர் எல்லாம் என்று உயர்திணையிலும், அவை எல்லாம் என்று அட்றிணையிலும் வந்து திணைப் பொதுப் பெயராயிற்று. அவ்வாறே நாமெல்லாம், நிவிரெல்லாம், அவரெல்லாம் என வந்து மூவிடப் பொதுப் பெயராகவும் பயன்படுகிறது.
இருதினைப் பொதுப் பெயர்கள்: (விரவுத்திணை)
தாய், குருடு நொண்டி, செவிடு, மலடு, முதலிய பெயர்கள் உயர்திணை அட்றிணை இரண்டுக்கும் பொதுவாய் வரும்.
德 ஒருமை பன்மை அடிப்படையில் பெயர்கள் :
எல்லா வகைப் பெயர்களும் ஒருமைப் பெயர்கள், பன்மைப் பெயர்கள் என இரு வகைப்படும்.
ஒருமைப் பெயர்கள் :
உயர்திணைக்குள் ஒருவர் (கந்தன், குமாரி) குறிக்கும் பெயராயினும் சரி, அறிணைக்குள் ஒன்று (கடல், பந்து) குறிக்கும் பெயராயினும் சரி, ஒரு குழுவை, ஓர் இனத்தை, இயக்கத்தை, கட்சியை, சபையை, கழகத்தை, தொழிலைக் குறிக்கும் (தமிழினம், கவிஞர் சங்கம், தொண்டர் சபை) பெயராயினும் சரி அது ஒருமைப் பெயர் எனப்படும்.
பன்மைப் பெயர்கள் :
- - - உயர்திணையிலும் அட்றிணையிலும் ஒன்றிற்கு மேற்பட்ட பொருட்களையும், குழுக்கள், இனங்கள், முதலானவற்றையும் குறிக்கும் பெயர்கள் பன்மைப் பெயர்களாம். உ+ம் தபசியர், கட்சிகள்.

Page 18
பண்டிதர் ச.வே.ப - 30 - தமிழ் இலக்கணப்பூங்கா
வினையாலணையும் பெயர் :
ஒரு வினைமுற்று, பெயர்ச் சொல்லின் அர்த்தந் தந்து பெயர்ச் சொல்லாகி நிற்பதுமுண்டு. அச்சந்தர்ப்பத்தில் அச் சொல் வினையாலணையும் பெயர் எனப்படும். அடித்தார் என்னும் வினைமுற்று ‘அடித்தாரைச் சொல்லி அழு’ எனுமிடத்தில் பெயராக அர்த்தப் பட்டு ஐ என்ற வேற்றுமையுருபேற்றுச் செயப்படுபொருளுணர்த்திற்று. இவ்வாறே நல்லாரை, பிறந்தார்க்கு, கற்றாரே, அரியானை முதலியனவும் வினையாலணையும் பெயர்களாகும்.
ஆண்பாற் பெயரில் அஃறிணைப் பொருள்கள்:
ஆனைவிழுந்தான், பரவிப்பாய்ந்தான், இங்காலான், குறிகாட்டுவான், ஒட்டுசுட்டான், ஊரியான், கட்டைப் பறித்தான், பன்றி விரித்தான் ஆகிய இடப்பெயர்களும், மொழிமுறித்தான் (காய்ச்சல்) கூப்பிடுவான் (வாந்திபேதி) முதலிய பிணிப் பெயர்களும், கூரன், நரம்பன், (புகையிலை) மொட்டைக் கறுப்பன் (நெல்) முதலிய பயிர்ப் பெயர்களும் ஒலியன், உருபன் முதலிய மொழிப் பெயர்களுமாகிய ஆண்பால் விகுதி கொண்ட பெயர்களால் தமிழில் அ.நிணப் பொருட்கள் சுட்டப்படுவதும் மரபாக உள்ளது.
தொழிற் பெயர்கள்:
ஒரு வினை நிகழ்வுக்கு அல்லது தொழிலுக்குச் சூட்டப்படும் பெயர் தொழிற் பெயராகும். இது வினைப்பெயர் எனவும் பெறும். இத்தொழிற் பெயர்கள் வினைகளைக் குறிக்கும் தெரிநிலை வினையடிகளில் பிறந்து, தல், அல், அம், ஐ, சி, பு, வை, கை முதலிய விகுதிகளுள் பொருத்தமானவற்றை ஏற்றுவரும். இவற்றுள் பெரும்பான்மை காலங்காட்டா.
தொழிற் பெயர்களும் விகுதிகளும் - சில உதாரணங்கள் :
ஆடுதல் - தல் வாழ்வு - வு கோடல் - அல் மறதி - தி கூட்டம் - அம் புலவி - வி கொடை - ஐ பாய்த்து - து காட்சி - சி வாரானை - ஆனை விழிப்பு - பு போக்கு - கு பார்வை - வை சாக்காடு - காடு வருகை - கை கோட்பாடு - பாடு
நடத்தை - தை

பண்டிதர் ச.வே.ப - 3 - தமிழ் இலக்கணப்பூங்கா
பண்புப் பெயர்களிலிருந்து தோன்றிய தெரிநிலைவினையடிகளும் தொழிற் பெயர்களும் பண்புப் தெரிநிலை
பெயர்கள் வினையடிகள் தொழிற்பெயர்கள்
நீளம் நீள் நீளல், நீட்டம், நீட்டுதல், நீடித்தல் (560LD @5Dl@5 குறுகல, குறுககம
665,60LD வலி, வலு வலித்தல், வலுத்தல் குளிர்மை குளிர் குளிர்தல்
GeFlb60LD சிவ சிவத்தல், சேத்தல்
சிறுமை சிறு சிறுத்தல்
பெருமை பெரு பெருத்தல்
மென்மை மெலி மெலிதல், மெலிவு
இனிமை இனி இனித்தல்
66 6B பகைத்தல்
L60)LD புதுப்பி புதுப்பித்தல், புதுக்குதல் (pg|60)LD முதிர் முதிர்தல், முதிர்வு, முதிர்ச்சி கடுமை கடு கடுத்தல், கடுப்பு
Li6OpéOLD (R பழுத்தல்
கசப்பு கசத்தல்
பொறுமை பொறு பொறுத்தல், பொறை
சால், மாண், முதலிய உரிச்சொற்றெரிநிலை வினை. யடிகளிலிருந்து, சாலுதல், சால்பு, மாணுதல், மாட்சி முதலிய தொழிற்பெயர்கள் தோன்றும்.
கடைக்கணி, சித்திரி, முதலிய பெயர்ச்சொற்றெரிநிலை வினையடிகளிலிருந்து கடைக்கணிப்பு, சித்திரித்தல் முதலிய தொழிற்பெயர்கள் தோன்றும். ‘ஓ’ முதலிய உவம இடைத் தெரிநிலை வினையடிகளிலிருந்து ஒத்தல், ஒப்புதல் முதலிய தொழிற் பெயர்கள் தோன்றும்.
காலங்காட்டும் தொழிற் பெயர்கள்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் உண்டமை உண்கின்றமை உண்பது நடந்தமை நடக்கின்றமை நடப்பது
முதனிலைத் தொழிற் பெயர்கள்:
தொழிற்பெயர் விகுதிகள் புணர்ந்து பின் கெட்டு வினையடிரூபத்திலும் தொழிற்பெயர் அர்த்தத்திலும் நிற்பன முதனிலைத் தொழிற்பெயர்கள் எனப்படும். தல், அல் முதலிய தொழிற்பெயர் விகுதிகள் புணர்ந்து பின் கெட்டு முதனிலைத் தொழிற் பெயரான சில உதாரணங்கள்: உரிதுதல் - உரிஞ், உண்ணுதல் = உண், பொருநுதல் = பொருந், உதைத்தல் = உதை, வாட்டுதல் - வாட்டு, அடித்தல் = அடி

Page 19
- 32 - தமிழ் இலக்கணப்பூங்கா
ஆகு பெயர்
ஒரு பொருளையோ, ஒர் இடத்தையோ, ஒரு காலத்தையோ, ஒரு சினையையோ, குணத்தையோ, தொழிலையோ, வழமையாகக் குறித்து நிற்கும் ஒரு பெயர், தொன்று தொட்டுச் சில சந்தர்ப்பங்களில் அப்பொருளைக் குறிப்பதற்குப் பதில் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளை வாக்கியத்தில் குறித்து வருவதுண்டு. அச் சந்தர்ப்பத்தில் அப் பெயர் ஆகு பெயர் எனப்படும். உ+ம் வெற்றிலை நட்டான் என்ற வாக்கியத்திற்கு இலையை நட்டான் என்பதன்று பொருள். அவ்விலையைச் சினையாகக் கொண்ட கொடியை - முதலை நட்டான் என்பதே பொருள். இலையாகிய சினைப் பெயரானது கொடியாகிய முதலையே குறித்தது. எனவே சினைப்பெயரிலிருந்து இவ்வாகுபெயர் உண்டானதால் இதற்குச் சினையாகுபெயர் எனப் பெயரிடப்பட்டது. இவ்வாகுபெயர்கள் பத்தொன்பது வகைப்படும்.
1. முதலாகு பெயர் :
“வீட்டுக்கு வெள்ளையடித்தார்கள்’. இங்கு வீடு என்ற முழுப் பொருளின் பெயர் அதன் உறுப்பான சுவரையே குறித்து நின்றது. எனவே இங்கு வீடு என்பது பொருளாகுபெயர் அல்லது முதலாகு பெயர் எனப்படும்.
2. இடவாகு பெயர் :
‘நாடு வாழ்த்த நட!’ என்பதில் நாடு எனும் இடப்பெயர் அங்கு வாழ் மக்கள் எனும் அர்த்தத்தில் நின்றதால் இடவாகுபெயராயிற்று.
3. காலவாகு பெயர்
*கார்த்திகை பூத்தது’ என்பதில் கார்த்திகை எனும் காலப் பெயர் அம் மாதத்தில் பூக்கும் மலர் என்ற அர்த்தத்தில் நிற்பதால் இங்கு கார்த்திகை காலவாகு பெயர்.
4. சினையாகு பெயர் :
“தேயிலை நட்டான்’ என்னும் வாக்கியத்தில் இலை எனும்
சினைப்பெயர் முழுச்செடியைக் குறித்து நிற்பதால் இங்கு தேயிலை சினையாகு பெயர் எனப்படுகின்றது.

பண்டிதர் ச.வே.ப - 33 - தமிழ் இலக்கணப்பூங்கா
7.
10.
11.
குணவாகு பெயர் : “மஞ்சள் அரைத்தாள்’ இங்கு மஞ்சள் எனும் நிறப்பண்பின் - குணத்தின் பெயர் அக்குணமுடைய ஒரு பொருளைக் குறித்து நிற்பதால் மஞ்சள் குணவாகுபெயர் ஆயிற்று.
தொழிலாகு பெயர் : “பொங்கலுண்டோம்” என்பதில் பொங்கல் என்ற தொழிற் பெயர் அந்தத் தொழிலாற் பெறப்பட்ட உணவைக் குறித்து நின்றது. எனவே இங்கு பொங்கல், தொழிற்பெயரிலிருந்து பிறந்த தொழிலாகுபெயர்.
எண்ணலளவை ஆகுபெயர் : 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. இங்கு நாலு, இரண்டு என்னும் எண்ணலளவைப் பெயர்கள் முறையே நாலடி கொண்ட நாலடியாரையும், இரண்டடிகொண்ட திருக்குறளையும் உணர்த்தி நிற்பதால் நாலும் இரண்டும் எண்ணலளவை ஆகுபெயர்கள் எனப்பட்டன. ஐந்தவித்தான் ஆற்றல் என்பதும் இவ்வகையே.
முகத்தலளவை ஆகுபெயர்: "கொத்து உடைந்தது இங்கு கொத்து என்ற முகத்தலளவைப் பெயர் அந்த அளவைக் கருவியைக் குறித்து நின்று முகத்தலளவை ஆகுபெயராயிற்று. நீட்டலளவை ஆகுபெயர் : 'நாலு முழம் உடுத்தேன்’ இங்கே நாலு முழம் என்னும் நீட்டலளவைப் பெயர் அந்த நீளமுள்ள ஆடையெனும் அர்த்தத்தில் வந்த நீட்டலளவை ஆகுபெயர்.
எடுத்தலளவை ஆகுபெயர் நான் கொடுத்த ஓர் ஐம்பது இறாத்தலோடு அவன் வீழ்ந்தான். இங்கு இறாத்தலெனும் எடுத்தலளவைப் பெயர் அந்நிறையுள்ள அடியைக் குறித்து நிற்பதால் நிறுத்தலளவை ஆகுபெயர்.
சொல்லாகு பெயர் : ‘நூற்கு உரை எழுதினார்’ இங்கே சொல் எனும் அர்த்தத்திற்குரிய உரையெனும் சொற்பெயர் அச் சொல்லின் பொருளையே உணர்த்துவதால் சொல்லாகு பெயராயிற்று.

Page 20
12。
18.
14.
5.
16.
17.
18.
19.
- 34 - தமிழ் இலக்கணப்பூங்கா
தானியாகு பெயர் : “இளநீர் வெட்டினேன்” இங்கு தானத்தில் இருக்கும் தானியாகிய நீர் (இளநீர்), தானமாகிய கோம்பையைக் குறித்து நின்று தானியாகு பெயராகியுள்ளது. கழல் தொழுவோம், விளக்குடைந்தது என்பனவும் இவ்வகையே.
கருவியாகு பெயர் : “சிட்டி பாபுவின் வீணை கேட்டேன்’ இங்கு வீணை எனும் கருவிப் பெயர் அவ் வீணையின் நாதத்தைக் குறித்து நின்றதால் வீணை கருவியாகுபெயராயிற்று.
காரியவாகு பெயர் :
‘அலங்காரங் கற்றார்’ இங்கு அலங்காரம் என்னும் காரியப் பெயர் காரியத்தை விளக்கும் நூலைக் குறித்தலால் காரியவாகுபெயராயிற்று.
கருத்தாவாகு பெயர் : ‘கவி நயம் காணக் கம்பரைப் படி” இங்கு கம்பர் என்ற கருத்தாப் பெயர் அவர் பாடிய காவியத்தையே உணர்த்தியதால் அது கருத்தாவாகு பெயராயிற்று. உவமையாகு பெயர் : அதோ! குத்துப் பேச்சே உருவாகக் கொண்ட முள்ளு வருகிறான். இங்கு உவமைப்பெயர் உவமேயப் பொருளைக் குறித்து நிற்கிறது. எனவே முள்ளு உவமையாகு பெயர். முள்ளுவருகிறது என்னும் போது உருவக அணியாகும். இருமடி யாகுபெயர் : கார் என்ற கருமைப் பெயரானது முகிலைக் குறித்துக் குணவாகுபெயராகையில் ஒரு மடியாகுபெயர். முகிலுலவுங் கார்காலத்தைக் குறித்துக் கார் என நிற்கையில் இருமடியாகு GLUuuïT.
மும்மடியாகு பெயர் : அந்த இருமடி ஆகுபெயர், கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குறித்து நிற்கையில் மும்மடி ஆகுபெயர்.
அடையடுத்த ஆகுபெயர் :
வெற்றிலை நட்டான் என்பதில் இலையெனும் ஆகுபெயர் வெறுமையெனும் அடையை அடுத்து வந்ததால் அடையடுத்த ஆகுபெயரெனப்பட்டது.

- 35 - தமிழ் இலக்கணப்பூங்கா
பயிற்சி 2
அ. பின்வருஞ் சொற்களுள் பகுபதங்களைத் தெரிந்தெடுத்
தெழுதுக. பொன்னன், புலவன், விசிறி, பனை, அங்காடி, திமிங்கிலம், இணங்குவோம், எழுதுவிப்பான், விருந்து, பிரலாபம், தள்ளுண்டனர், காண்மின்களோ, வாழியர், அழுதார்க்கு, உறி.
ஆ தெரிந்தெடுத்த பகுபதங்களைப் பகுபத உறுப்புகள்
தோன்றப் பகுக்குக. கீழ்க்காணும் உறுப்புக் கூட்டங்களைச் சேர்த்துச் சொற்களாக்கி எழுதுக. (1) தின் +ற் + ஓம் (2) கூவு+இன்+அ (3) செல்
இ.
+ற் +அன்+அர் (4) வளம் +வ்+அன் (5) புகு + வ் +
ஆய் (6) சுடு + ஈர் (இறந்தகால உடன்பாடு)
(7) பறTவ்+ஐ (8) உண்+ண்+இ (9) நெருக்கு +
உண் + ட் + ஏன் (10) நடத்துவிப்பி+ ப்+ப்+ஆன்.
(11) 6uT十ó+ あ+ あ+ &gi (12) 守T十弦十あ十&6演。
கீழே வரும் பெயர்களை இடுகுறிப் பெயர்கள் வேறு
காரணப் பெயர்கள் வேறாகப் பிரித்தெழுதுக. (1) இளைஞன் (2) சட்டி (3) காப்பு (4) பகலோன்
(S) வெண்ணிறு (6) சட்டை (7) சாணி (8) அகழி (9) மோர் (10) சுவரொட்டி (11) செடி கொடி (12) மிளி (13) குறத்தி (14) ஒலிவாங்கி (15) பாறை (16) மூங்கில் (17) வள்ளம் (18) ஊண் (19) கீற்று (20) எழுத்து.
பொருட் பெயர், இடப் பெயர் முதலிய ஆறு வகையாகக் கீழ்வரும் பெயர்களைப் பிரித்தெழுதுக. . ܐܶܫܗ ܫ பல்லக்கு, வால், மைதானம், அரும்பு, நடிப்பு, மாரி, ஆவேசம், மொ KM , , மனிதன், குளிர்ச்சி, நடுகை,திராட்சை, சீமர்ம், ஏணி, நேற்று இருமை, எருமை VK.

Page 21
- 36 - தமிழ் இலக்கணப்பூங்கா
பின்வரும் தொழிற் பெயர்களிலிடம்பெறும் விகுதிகள் யாவை?
(1) நடை (2) நோக்காடு (3) பார்வை (4) கூடல் (5) தொழுகை (6) தேக்கம் (7) செலவு (8) ஆசைப்பாடு (9) மீட்சி (10) பிழிதல்
கீழ்வருவனவற்றைப் பொதுப் பெயர்களாகவும் சிறப்புப் பெயர்களாகவும் வகுக்குக. (1) மந்தாரை (2) மீன் (3) செவ்விந்தியர் (4) நகரம் (5) கெண்டை (6) விலங்கு (7) கட்டுமரம் (8) வேங்கை (9) பட்சிசாலம் (10) தாழம்பூ
பின்வரும் ஆண்பாற் பெயர்களுக்குப் பெண்பாற் பெயர்கள் தருக. பாங்கன், உழவன், சீமான், எயினன், வேடன், கலைஞன் வித்துவான், வித்தகன், அருளாளன், கனவான். வீரவான் பாணன், பிக்கு, நம்பி, நடத்துநன், தபுதாரன், திருவாளன், மூதாளன், அந்தகன், இரவலன்.
எவ்வகை ஆகுபெயரெனப் பெயரிடுக. (1) கடையில் நீலம் வாங்கி வா (2) கிணறு இறைத்தோம். (3)நாலுமணிபூத்தது (4)ஊரோடின் ஒத்தோடு. (5) கோவிலிற் கண்டல் வழங்கப்படும். (6) அந்தி சிவந்தது (7) உலகம் பலவிதம் (8) மிதிவண்டி காற்றுப்போய்விட்டது (9) மிளகாய் பயிரிட்டான் (10) திராட்சை மிக இனியது (11) எனக்குப் புளி பிடிக்காது (12) கவியரங்கம் கேட்க மக்கள் கடல்போல் திரண்டனர் (13) சந்தியில் கொலை விழுந்தது (14) இன்று வட்டமேசை கூடும் (15) மரம் பழுக்க வெளவால் தேடி வந்தது (16) நீங்கள் தேருக்குப் போனிர்களா? (17) மான்துள்ளுஞ் சாரலில் மயிலாடும் (18) காஞ்சிபுரம் கட்டி வந்தாள் (19) கோடை சுட்டெரிக்கிறது (20) வேலவர் ஏசல் படியுங்கள்.

- 37 - தமிழ் இலக்கணப்பூங்கா
வேற்றுமை வகைகள் வேற்றுமை
ஒரு பெயர்ச் சொல் எட்டு வேறுபட்ட வடிவங்களை ஏற்கும். அப்பெயர் ஈற்றில் ஏற்கின்ற பல்வேறுபட்ட உருபுகள் காரணமாகவும், அவற்றின் மூலம் அது உணர்த்தும் பல்வேறுபட்ட அர்த்தங்கள் காரணமாகவும் இவ்வேறுபட்ட வடிவங்கள் - வேறறுமைகள் உண்டாக்கப்பட்டுவிடுகின்றன. வினைமுற்றுக்களிலிருந்து பிறந்து வந்த வினையாலணையும் பெயர்ச் சொற்களும் வேற்றுமை உருபு ஏற்று விகற்ப உருவங்கள் பெறும். (ஆற்றை, சோலையை, கோடையின்கண் பூவோடு, இன்பத்தை, ஆடலை, அடித்தாரை)
1ஆம் வேற்றுமை :
முருகன் தோன்றினான். இங்கு முருகன் என்ற பெயரின் விகற்பமுறாத மூல வடிவமே எழுவாய்ப் பொருளில் நின்று முதலாம் வேற்றுமையாயிற்று. முதலாம் வேற்றுமைகள், ஆனவன், என்பவன், எனப்பட்டவன், ஆனது, என்பவை முதலிய சொல்லுருபுகளை ஏற்றும் வரும். (மனம் என்பது ஒரு குரங்கு) முதலாம் வேற்றுமைக்குரிய பொருள் எழுவாய்ப் பொருள்.
2ஆம் வேற்றுமை :
பெயர்ச் சொல் “ஐ’ உருபினை ஏற்றுச் செயப்படுபொருளை உணர்த்தி வருவது இரண்டாம் வேற்றுமையாகும். உ+ம் வீட்டைக் கட்டினான் - ஆக்கப்படுபொருள்; காட்டை அழித்தான் - அழிக்கப்படு பொருள்; கோவிலை அடைந்தான் - அடையப்படு
பொருள் பதவியைத் துறப்போம் - துறக்கப்படுபொருள்; சிங்கத்தை ஒத்தான் - ஒக்கப்படு பொருள்; பண்ணையை உடையான் - உடைமைப் பொருள் எனும் ஆறுவகைச்
செயப்படு பொருள்களை உணர்த்த 2ஆம் வேற்றுமை வடிவம் பயன்படும்.
ஆேம் வேற்றுமை :
. பெயர்ச் சொற்கள் இறுதியில் ‘ஆல்’ ‘ஆன்’ என்னும் உருபுகளை ஏற்பதன் மூலம் கருவிப் பொருளையும் (கோடரியால்) கருத்தாப்பொருளையும் (தச்சனால்) ஒடு, ஒடு என்னும் உருபுகளை ஏற்பதன் மூலம் (தாயொடு தந்தையோடு) உடன்

Page 22
- 38 - தமிழ் இலக்கணப்பூங்கா
நிகழ்ச்சிப் பொருளையும் உணர்த்தி வரும். கருத்தாப் பொருள் இரண்டு வகைப்படும். அவை: (1) ஏவுதற்கருத்தா: அரசினால் கட்டப்பட்ட மருத்துவ நிலையம் (2) இயற்றுதற் கருத்தா: பொற்கொல்லனால் செய்யப்பெற்ற அட்டியல். ஆல், ஆன், உருபுகளுக்குப் பதிலாக, கருவிப்பொருளில் “கொண்டு’ என்னுஞ் சொல்லுருபும் வரும்: ‘தடி கொண்டு தாக்கினான்’ 3ஆம் வேற்றுமை இவ்வாறு கருவி, கருத்தா, உடன் நிகழ்வுப் பொருள்களை உணர்த்தி வரும்.
4ஆம் வேற்றுமை : .
இதன் உருபு ‘கு’ ஒன்று மட்டுமே. இவ் வேற்றுமை கீழ்க் காணும் பொருள்களில் வரும்.
கொடைப் பொருள்; புலவர்க்குப் பரிசில் கொடுத்தோம். பகைப்பொருள் : கீரிக்குப் பகை பாம்பு நட்பு : துரியோதனனுக்கு நண்பன் கர்ணன் முறை: இளங்கோவுக்கு அண்ணன் செங்குட்டுவன்; தகுதி : நீதிபதிக்குரிய ஆசனம், பரணிக்கோர் ஜெயங்கொண்டான். முதற்காரணகாரியம் : தோசைக்குவைத்த மா நிமித்த காரண காரியம் : கூலிக்கு வேலை செய்தனர் இப்பொருள்களில் வரும்போது ‘கு’ உருபோடு, ஆக (புகழுக்காக) உரிய (அரசர்க்கு உரிய) எனும் சொல்லுருபுகளுஞ் சேர்ந்தும் வரும், ‘கு’ உருபுக்குப் பதிலாக, பொருட்டு, நிமித்தம் எனுஞ் சொல்லுருபுகள் வருவதும் உண்டு. (கூலிப்பொருட்டு வேலைசெய், கூலி நிமித்தம் வேலைசெய்)
என்தந்தை என்பது போன்ற உயர்திணையாகிய உடைமைத் தொகைகள் 4ஆம் வேற்றுமைப் பொருளிலேயே விரிக்கப்பட வேண்டும். அதாவது எனக்குத் தந்தை என்றே விரிக்கப்பட வேண்டும். இது முறைப்பொருளில் அடங்கும்.
5ஆம் வேற்றுமை:
பெயர்கள், இல், இன் எனும் உருபுகளை ஏற்று, ஒப்பு, எல்லை, ஏது, நீக்கம் என்னும் பொருள்களில் நிற்பது ஐந்தாம் வேற்றுமையாம். ஒப்பு: கரும்பின் இனிய மொழி, எல்லை; உரும்பிராயின் வடக்கு ஊரெழு, ஏது: ஆன்ம பலத்தில் உயர்ந்த மகாத்மா காந்தி, நீக்கம்; தலையின் இழிந்த மயிர். இப்பொருளில் இன் உருபோடு நின்றும்’ எனும் சொல்லுருபு சேர்ந்து நிற்பதும் உண்டு. (ஊரின் நின்றும் நீங்கினான்). ‘இல்’ உருபோடு இருந்து எனும் சொல்லுருபு சேர்ந்து, வீட்டிலிருந்து புறப்பட்டான் என வருவதும் உண்டு.

- 39 - தமிழ் இலக்கணப்பூங்கா
6ஆம் வேற்றுமை :
இதன் உருபுகள் அது, ஆது, அ என்பனவாம். அட்றிணைப் பொருள்களை உடைமையாகக் கொள்ளும் உடைமைப் பொருளில் இந்த ஆறாம் வேற்றுமை வரும். அந்த உடைமை தற்கிழமை, பிறிதின்கிழமை என இருவகைப்படும். தற்கிழமையாவது இயற்கையாய் ஒரு பொருளிலமைந்த உடைமை (எனது கை) பிறிதின் கிழமையாவது செயற்கையாக ஒரு பொருளிலமைந்த உடைமை. (எனது தொப்பி) தற்கிழமை ஆறுவகைப்படும்.
உறுப்புத் தற்கிழமை : மரத்தினது வேர்
2 பண்புத் தற்கிழமை : யானையினது வலிமை
3. தொழிற்றற்கிழமை : மந்திரியினது வருகை
4. ஒன்றின் கூட்டத்தற்கிழமை : கல்லினது குவியல்
5 பலவின் கூட்டத்தற்கிழமை : படைகளினது கூட்டம்
6 ஒன்று திரிந்தொன்றாய தற்கிழமை : அரிசியினது மா
பிறிதின்கிழமை முன்று வகைப்படும்.
1. பொருட் பிறிதின்கிழமை : எனது பொத்தகம் 2. இடப்பிறிதின் கிழமை : மீனவரது குடியிருப்பு 3. காலப்பிறிதின் கிழமை : மாரனது வேனில்
அவனது - அவன்தன், அவர்களது - அவர்தம், அவற்றினது - அவைதம் என, தன், தம், எனும் சொல்லு ருபுகள் வருதலும் உண்டு.
“அது முதலிய உருபுகளுக்குப் பதில் “உடைய’ என்னும் சொல்லுருபு வந்து இருதிணை உடைமைப் பொருளையும் உணர்த்துவதுமுண்டு.
1. புலவருடைய மைந்தன்
2. ஆட்டினுடைய பட்டி
“அந்தியின் இனிமை” போன்ற 6ஆம் வேற்றுமைத் தொடர்களில் உடைமை உணர்த்தி நிற்கும் “இன் வெறும் சாரியையே.
முடிக்குஞ் சொற்கள் :
6ஆம் வேற்றுமை தவிர்ந்த வேற்றுமைகளில் முடிக்குஞ் சொல் பின்னாலன்றி முன்னால் வருதலும் உண்டு. s hub குடத்தை வனைந்தான் - வனைந்தான் குடத்தை! துப்பாக்கியாற் சுட்டான் - சுட்டான் துப்பாக்கியால்

Page 23
- 40 - தமிழ் இலக்கணப்பூங்கா
கொடுத்தேன் அவனுக்கு!
ஓங்குக கல்வியில்!
இமயத்தின்கண் கொடி நாட்டினான் - கொடி
நாட்டினான் இமயத்தின்கண்,
வீரனே வருக - வருக வீரனே.
ஆனால். 6ஆம் வேற்றுமையின் முடிக்குஞ் சொல் முன்னால்வரின் வீடு முருகனது என வந்து, முருகனது எனும் வேற்றுமை, குறிப்புவினைமுற்றாக மாறிவிடும். இதனால் 6ஆம் வேற்றுமை முடிக்குஞ் சொல் இறுதியிலே மட்டும் வரும்.
முன்பின்னாகத் தொக்கதொகை :
இவ்வாறு 6ஆம் வேற்றுமையின் முடிக்குஞ் சொல் முன்னால் வர வேற்றுமை பின்னாற் சில சந்தர்ப்பங்களில் வந்து ஈற்றில் நின்ற 6ஆம் வேற்றுமை உருபு தொக்கு (நுனி, நாவினது - நுனிநா) என நின்று முன்பின்னாகத் தொக்க தொகையாக மாறுவதுண்டு. உ+ம் முன், இல்லினது - முன்றில்; அடை, ஆற்றினது -
9:60) usTO
7ஆம் வேற்றுமை :
இவ் வேற்றுமை இடப்பொருளில் வரும். ஒரு பொருளின்கண் இயற்கையாக உள்ளவற்றையும், செயற்கையாக உள்ளவற்றையும், குறித்து வரும். இடப் பொருண்மை உருபுகள் கண், இடம், மாட்டு, பால், மேல், கீழ், தோறும், எனப் பலவுண்டு. இவ்வுருபுகள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், எனும் ஆறுவகைப் பொருட்களையும் இடமாகக் கொண்டஉயத்திணை, அட்றிணைப் பொருள்களை உணர்த்தி வரும். உ+ம் : கண்ணன் கண் உள்ள கருணை: குடத்தின்கண் நீர்; படகின்கண் மீனவன்; கோடைக்கண் வெம்மை; முதலியன
மேற் கூறிய கண் முதலிய உருபுகளுடன் சேர்ந்து மலையின் கண் அருவி என நின்ற வேற்றுமை, இன்சாரியையையும், கண்என்ற உருபையும் விட்டு, ‘மலையில் அருவி” என நின்று, இல் என்ற சாரியை மூலமே இடப்பொருளை உணர்த்தி வருவது இன்று பெருவழக்காகியுள்ளது. இப்படி இடப்பொருள் தந்து வேற்றுமை உருபின் பிரதிநிதியாக நிற்கும் இல் ஆனது ஒரு சாரியையேயன்றி 5ஆம் அல்லது 7ஆம் வேற்றுமை உருபன்று என்பதுணர்க.

- 4 - தமிழ் இலக்கணப்பூங்கா
8ஆம் வேற்றுமை :
இவ் வேற்றுமை ஒருவரையோ பலரையோ விளிக்கும் - கூப்பிடும் பொருளில் வருவதால் விளி வேற்றுமையெனப் பெயர் பெற்றது. ஒரு பெயர்ச்சொல் ஈற்றில் ஏ, ஓ மிகுதலும் - மகனே வா! அம்மாளோ உண், ஈறு திரிதலும் - பிள்ளாய் கேளும், ஈறுகெடலும் - தோழ எழு! ஈறு நீளுதலும் - தம்பி வாராய்; ஈறு இயல்பாக நிற்றலும் - பிள்ளைகள் வாருங்கள்! ஈற்றயலெழுத்துத் திரிதலும் - மக்காள் உண்ணுங்கள் - எனப்பல விதங்களில் விளிப்பொருள் உணர்த்துவது எட்டாம் வேற்றுமையாகும். வேற்றுமை உருபேற்கையில் பெயர்கள் பெறும் விகாரங்கள்: எல்லாம் முதலிய பெயர்கள் வேற்றுமை உருபேற்குங்கால், அற்று, இன், தம், நும், முதலிய சாரியைகளை ஏற்கும். எல்லா + அற்று+ இன் + அது = எல்லாவற்றினது, எல்லார் + இன் + கு + உம் = எல்லாரிற்கும், எல்லீர் + நும் + ஐ, + உம் = எல்லீர்நும்மையும் எனவரும். இவ்வாறு அநேகம் பெயர்கள் வேற்றுமைக்கண் சாரியை ஏற்று வரும். உ+ம் = மரம் + அத்து +இன் + அது = மரத்தினது. வேற்றுமையில் தன்மை, முன்னிலைப் பெயர்கள் :
நான், நாம், யான், யாம், எனும் பெயர்கள் வேற்றுை உருபேற்கும் போது, என், நம், எம், என நின்று, என்னை, எம்மை, முதலாய வேற்றுமை விகற்பங்கள் பெறும். முன்னிலை நீ, நீர், நீங்கள், நீயிர் முதலிய பெயர்கள் உன், நும், உம் என நின்று, உன்னை, நும்மை, உம்மை, என உருபுகள் ஏற்று விகற்பமுறும் வேற்றுமை உருபு மயக்கம் :
சில சந்தர்ப்பங்களில் பொருண்மை அடிப்படையில் ஒரு வேற்றுமையினது உருபு நிற்க வேண்டிய இடத்தில், வேறொரு வேற்றுமையினது உருபு நிற்பதுமுண்டு. அவ்வுருபைப் பொருளுக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ளல் வேண்டும். “உரிய காலத்தின்கண் செய்த உதவி’ என 7ஆம் வேற்றுமை உருபான கண் வரற்குப்பதில், “காலத்தினாற் செய்த உதவி’ என 3ஆம் வேற்றுமை ஆல் உருபு வருவதும் ‘வேயைநக்குவீங்கு தோள்’ 66 2ஆம் வேற்றுமை உருபுவரவேண்டிய இடத்தில், “வேயொடு நக்கு வீங்கு தோள்!’ என மூன்றாம் வேற்றுமை ஒடு உருபுவருவதும், “இந்த ஜென்மத்தின்கண் உன்னை மறக்க மாட்டேன்!, என வரவேண்டியது - இந்த ஜென்மத்துக்கு உன்னை மறக்கமாட்டேன் என 4ஆம் வேற்றுமை ‘கு’ உருபு

Page 24
- 42 - தமிழ் இலக்கணப்பூங்கா
பெற்று வருவதும் ஓர் உருபுக்கே உரித்தான இடத்தில் உரித்தில்லாத இன்னோர் உருபு வந்த உருபு மயக்கங்களாம்.
வேற்றுமைப் பொருண் மயக்கம் :
குறிப்பிட்ட ஓர் உருபு, வேற்றுமைப் பொருண்மை என்பன மூலம் உணர்த்தப்படுதற்கே உரிய சில கருத்துக்கள் சில சந்தர்ப்பங்களில் வேறொரு வேற்றுமை உருபு வேற்றுமைப் பொருண்மை ஆகியவை மூலமும் ஓரளவு திருத்திகரமாக உணர்த்தப்படுவதுமுண்டு. உ+ம் : அரிசி என்ற கருவியால் சோறாக்கிய செய்தி “அரிசியால் சோறாக்கினாள்’ என 3ஆம் வேற்றுமைப் பொருண்மை மூலம் உணர்த்தப்படுவதே விதி. ஆயினும் 2ஆம் வேற்றுமைப் பொருண்மை மூலம் (ஆக்கப்படு பொருளில்) அரிசியைச் சோறாக்கினாள் என உணர்த்தப்படுவதுமுண்டு. இது வேற்றுமைப் பொருண் மயக்கம் எனப்படும். இது போல் விதிப்படி 5ஆம் வேற்றுமை எல்லைப் பொருண்மை மூலம் கோப்பாயின் வடக்கு நீர்வேலி 66 உணர்த்தப்படும் கருத்தானது 4ஆம் வேற்றுமையில் கோப்பாய்க்கு வடக்கு நீர்வேலி என, மனித உறவுமுறைப் பொருளன்றி, இட உறவு முறைப் பொருண்மைகருதி உணர்த்தப்படுவதுமுண்டு. 5ஆம் வேற்றுமை ஏதுப்பொருண்மையில் அமைந்த குத்துச் சண்டையில் புகழ்பெற்ற முகமது அலி என்ற கருத்து குத்துச் சண்டையால் புகழ் பெற்ற முகமது அலி என மூன்றாம் வேற்றுமைக் கருவிப் பொருண்மை மூலம் உணர்த்தப்படுவதும் உண்டு. இவையாவும் வேற்றுமைப் பொருண் மயக்கங்களாகும்.
தொகை மொழிகள்
வேற்றுமைத் தொகை :
வேற்றுமைப் பொருள் அமைந்த ஒரு சொற்றொடரில் வெளிப்பட்டு நிற்கும் உருபை நீக்கி விட்டாலும் அவ் வேற்றுமைப் பொருள் உள்ளது உள்ளபடி தொனிக்குமாயின் அவ்வுருபை நீக்கித் தொகையாக்கலாம். அது வேற்றுமைத் தொகை எனப்பெயர் பெறும். உருபை நீக்கினால் உருபு வந்து தரும் பொருளை அத்தொடர் தராது எனக் கண்டால் அது தொகையாக்கப்படலாகாது. அப்பம் சுட்டாள் என்பது ஐயுருபு தொக்கும் உரிய செயப்படுபொருள் உணர்த்திய இரண்டாம் வேற்றுமைத் தொகை. இவ்வாறு தொகுக்க முடியாத வேற்றுமைத் தொடர்களும் உண்டு. உ+ம் நான் மாட்டை அடித்தேன்; இதனை நான் மாடு அடித்தேன் எனத் தொகையாக்கிச் சொல்லப் புகுந்தால் நான் மாட்டை இறைச்சிக்காகக் கொன்றேன் என்று விபரீத அர்த்தமாகிவிடும். சீமாட்டி நாயொடு வந்தாள் என்பதைத் தொகையாக்கினால் சீமாட்டி நாய்

- 43 - தமிழ் இலக்கணப்பூங்கா
வந்தாள் என்று வேடிக்கையான, விபரீதமான அர்த்தப்பட்டு விடும். எனவே இந்த ஒடு, ஒடு உருபுகள் அதிகம் தொகா. இவ்வாறே 4ஆம் வேற்றுமைக் கொடைப் பொருளில் வரும் தாய் பிள்ளைக்கு உணவு கொடுத்தாள் போன்றவற்றின் ‘கு’ உருபைத் தொகுக்கலாகாது. ஏனைய உருபுகள் பெரும்பாலும் தொக்கு வந்து வேற்றுமைத் தொகைகள் உருவாகலாம். மண்ணுண்ணி தொகையாக்க முடியாத பிற வேற்றுமைத் தொடர்களையும் நுணுக்கமாக நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் ஒட்டி ஆராய்ந்தறிக. வினைத் தொகை :
வினைச்சொல்லாகிய பெயரெச்சம் ஒன்று தனது பெயரெச்ச விகுதியும் காலங்காட்டும் இடைநிலையுங்கெட்டு (கொல் என்று) பகுதி மட்டுமே நின்று பெயரெச்சப் பொருள் தந்தால் அது வினைத்தொகை எனப்படும். இவ்வினைத் தொகையை விரித்தால் கொன்ற, கொல்கின்ற, கொல்லும் என முக்காலத்திலும் விரியும். புலிகொல் யானை போன்ற இவ் வினைத்தொகைகள் காலங்கரந்த பெயரெச்சங்கள் எனவும் அழைக்கப்படும். உ+ம் : ஊன்றுகோல், தொடுவானம். பண்புத் தொகை : செம்மை முதலிய பண்புப் பெயர்கள் மை விகுதியும் ‘ஆகிய என்னும் உருபும் கெட்டு நின்று, வருகின்ற பெயரோடு புணருமிடத்துப் பண்புத்தொகைகள் உருவாகும்.
புளி + ஆகிய + சுவை = புளிச்சுவை கருமை + ஆகிய + கோழி = கருங்கோழி இரு பெயரொட்டுப் பண்புத் தொகை : 1. பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர் ஒன்று, ஆகிய என்ற
உருபு கெட்டுப் புணர்ந்த தொகையும் (நீதிபதி ஜங்கரன்) 2. சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர் ஒன்று, ஆகிய என்ற உருபு கெட்டுப் புணர்ந்த தொகையும் (சாரைப்பாம்பு) இரு பெயரொட்டுப் பண்புத்தொகைகளாம். உவமைத் தொகை :
போல், நிகர், ஒ, உறழ், முதலிய உவமை உருபுகள் கெட்டு உவமானப் பெயரோடு உவமேயப் பெயர் புணர்ந்து நின்றால் அது உவமைத் தொகை எனப்படும். (புலிபோல் கந்தன் = புலிக்கந்தன், மழைநிகர்கை = மழைக்கை) உம்மைத் தொகை :
எண்ணல், எடுத்தல், நீட்டல் முகத்தல் என்னும் அளவைகளால் பொருள்களை எண்ணும் அளக்குமிடத்துச்

Page 25
- 44 - தமிழ் இலக்கணப்பூங்கா
சொற்றொடரின் இடையிலும் ஈற்றிலும் 'உம்' கெட்டு நிற்கப் பெயரொடு பெயர் புணர்ந்து வருவது உம்மைத் தொகை
எனப்படும். உ+ம் இரவும் பகலும் - இராப்பகல், கழஞ்சும் காலும், = கழஞ்சேகால், சானும் அரையும் - சாணரை, நாழியும் ஆழாக்கும் - நாழியாழாக்கு. உயர்திணையில், சேர, சோழ, பாண்டியர் என எண்ணுப் பெயர் உம்மைத்
தொகைகளின் இறுதிப் பெயரானது அர், கள், பெற்றுவரும்; அட்றிணையில் கள் பெற்றும், (ஆடு, மாடுகள்) பெறாதும், (கூழ், கஞ்சி) வரும். அன்மொழித்தொகை :
வேற்றுமைத் தொகை. வினைத்தொகை முதலிய ஐந்து வகையுளும் அடங்கும் சில தொகைகள் சில சந்தர்ப்பங்களில் வழமைக்கு மாறாக, தொகை மொழிகளின் - தொகையில் இடம் பெறும் சொற்களின் அர்த்தங்களைத் தராமல் புறத்தே தொகை அல்லாத வேறு சொற்களின் அர்த்தத்தைத் தருவதுமுண்டு. இவ்வாறு தொகையல் மொழியின் அர்த்தத்தைத் தருவதால் அத்தொகைகள் அன்மொழித் தொகைகள் எனப்படும். அவை ஐந்து வகையில் அடங்கும்.
. குங்குமப் பொட்டு வந்தான் =வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை (குங்குமத்தாலான பொட்டு) 2. உளறுவாய்-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி 3. வெண்தலை =பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி 4. நங்கூரக்கொண்டை = உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழி 5. உயிர்மெய்-உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி
அன்மொழித் தொகைகள் - ஆகுபெயர்கள் / (ஒற்றுமை - வேற்றுமைகள்) 1. தமக்குரியவல்லாத அர்த்தம் 1. தமக்குரியவல்லாத அர்த்தம்
தரல் தரல் 2. ஒன்றுக்கு மேற்பட்டசொற் 2. ஒரே சொல்லாலானமை
56T666)d 3. புதிதாக ஆக்கப்படக்கூடி 3. நினைத்தபடி புதிதாக ஆக் 606) கப்பட முடியாதவை.
4. அர்த்தத்தைத் தமக்கு வெளி அர்த்தத்தைத் தம் தொ
யிலேயே வைத்திருப்பவை டர்பில்வைத்திருப்பவை.
5. நூல் வழக்கிலிருந்து சமூ 5. உலக வழக்கைத் தாயாகக் கத்தில் பரவுபவை கொண்டு வழங்குபவை
6. வசனங்களிலேயே 6. வசனங்களிலேயே வருபவை
வருபவை.

1.
- 45 - தமிழ் இலக்கணப்பூங்கா
uusj4 -3
அ. பின்வரும் வேற்றுமைத் தொகைகளை விரித்தெழுதுக. ஆ. எத்தனையாம் வேற்றுமைகள் எனக் குறிப்பிடுக.
இ. என்ன வேற்றுமைப் பொருளெனக் கூறுக.
1. உத்தியோகப்படிப்பு 2. குடிசை வாழ்க்கை 3. சவுக்கங்காடு 4. புலமைப் பரிசில் 5. வெள்ளைப் பிரம்பு 6. படகு விடு; 7. மலை வீழருவி 8. மண்ணுண்ணி 9. மன்றாடி 10. நெறிதவறேல் 11. பிரசங்கம் கேட்போம் 12. புற்பாய் 13. காசுப்பயிர் 14. தூய்மை சிறந்த
(உள்ளம்) 15. இராசபுத்திரி 16. பறைசாற்றினான்.
பின்வரும் வேற்றுமை மயக்கங்களை உருபு மயக்கமா பொருண் மயக்கமா வெனக் கூறுக. ܟ݂ 1. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை 2. 6060Tufts விழுந்தான் 3. பிச்சைக்கு மூத்தகுடி 4. தெருவோடு போய்ச் சந்தியில் வலப்பக்கம் திரும்பு 5. எதை நீங்குகிறாய் அதனால் துன்பம் வராது 6. இந்த இரகசியத்தை யாரோடும் பேசாதே 7. வழியால் வாருங்கள் 8. அவள் வீடு நகரத்தில் இருக்கிறது 9. பஞ்சத்துக்கு ஆண்டியோ பரம்பரை ஆண்டியோ 10. நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் 1. வீட்டுக்கு வீடு அழுகையொலி கேட்கிறது 12. அவனுடைய தந்தை சிறந்த ஒவியர் 13. ஊரை உற்றது உணர்த்தவும் வேண்டுமோ? 14. அவள் நூலைச் சேலையாக்கினாள் 15. அவனுக்கு அடிக்காதே 16. நல்ல காலத்துக்கு அவர் வந்தார் 17. என் மனத்தை உன்னடிக்கே வைத்தேன்.
இங்கே தரப்படும் தொகை மொழிகளை என்னென்ன தொகை எனக் கூறுக.
1. ஆடுகால் 2. ஆட்டுக்கால் 3. பயபக்தி 4. மதிமுகம் 5. முகச்சாயல் 6. உளறுவாய் 7. கற்சிலை 8. குகை ஓவியம் 9. அடுபோர் 10. வெஞ்சினம் 11. சுழல் துப்பாக்கி 12. துடியிடை 13. கயல்விழி 14, கெடுகுடி 15. கைக்கத்தி 16. நூலேணி 17. பழப்பாகு 18. ஊருலகம் 19. பிறைநுதல் 20. தூங்கு மூஞ்சி 21. ஞானசீலன் ஆசிரியர் 22. நீள்சடை
23. நீளக்கயிறு 24. ஒண் கதிர் 25. ஒளிர்கோள்

Page 26
46 - தமிழ் இலக்கணப்பூங்கா
4. எத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைகள்
எனக் கூறுக. 1. இன்மொழி பாடட்டும் 2. பெய்வளை ஆடினாள் 3. சரி. கைக்கரை வந்தான். 4. வடகிழக்கில் ஒரே மையிருள் மேகங்கள் 5. மலர்விழி போகிறாள் 6. வெண்தலை சிரிக்கிறான் 7. ஊதுகுழலுக்கு இதை வெளிவிடாதே 8. உயிர்மெய்கள் மொத்தம் இருநூற்றுப் பதினாறு 9. வெள்ளைப் பிரம்பு வந்திலன் 10. குதிரைவாற் கூந்தல் வென்றாள்.
வினைச்சொல் வகைகள்
வினைச்சொற்கள் :
மொத்தத்தில் பொருளெனவே கொள்ளப்படுகின்ற பொருளிடங் காலம் முதலானவற்றின் புடை பெயர்ச்சிகளைக் குறிப்பவை வினைச் சொற்கள் எனப்படும்.
தெரிநிலை வினைமுற்று :
வினைகளுள் தெரிநிலை வினைமுற்றுக்களானவை வினைமுதல் எனப்படும் கருத்தாவையும் வினை புரிதற்கான கருவியையும் (நிலம்) இடத்தையும்
செய்யப்படு செயலையும்
செயப்படு காலத்தையும் செய்யப்படு பொருளையும்
உணர்த்தி வரும். உ+ம் வனைந்தான் எனும் வினைமுற்றானது 1. வினைமுதல் - குயவனையும் 2. கருவி - மண், தண்டு, சக்கரத்தையும் 3. இடம் - குயவயிட்டியையும், படர்க்கையையும் 4. செய்யப்படுபொருள் - குடம் முதலானவற்றையும் 5. காலம் - இறந்த காலத்தையும் 6. செயல் - வனைதலையும் உணர்த்தி
நின்றது
பெரும்பாலும் வினையடியாகவும் சிறுபான்மை இடையடியா. கவும், உரியடியாகவும் பெயரடியாகவும் பிறந்து இத்தெரிநிலை வினைமுற்றுக்கள் காலத்தை வெளிப்படையாகக் காட்டி வரும். உ+ம் பாடினான், போல்கிறான், மாண்டான், சித்திரிப்பான்,

- 47 - தமிழ் இலக்கணப்பூங்கா
குறிப்பு வினைமுற்று :
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியன குறிக்கும் அறுவகைப் பெயர்களும், அப் பெயர்களடியாகப் பிறந்த காரணப் பெயர்களும், உவம உருபடியாகப் பிறந்த காரணப் பெயர்களும், அவன், அது போன்ற சுட்டுப் பெயர்களும், யார், எது போன்ற வினாப் பெயர்களும் வாக்கியங்களில் பயனிலையாக வருங்கால் அவை குறிப்பு வினைமுற்றுக்களாம். குறிப்பு வினைமுற்றுக்கள் காலத்தைக் குறிப்பாற் காட்டி வரும். கு.வி. முற்றுக்கு உதாரணங்கள்: பொன், பொன்னன், நாடு, நாடன், வேனில், வேனிலான், கண், கண்ணன், உழவு, உழவன், பெருமை, பெரியன், அனையன், எவன்? யாது?
வினை - பொது இலக்கணம், சிறப்பிலக்கணம்
பொருட்களின் 60L பெயர்ச்சிகளை வினைகளைக் குறிப்பது வினைச்சொல்லின் பொது விலக்கணம். காலத்தைக் காட்டுவது வினைச்சொல்லின் சிறப்பிலக்கணம்.
இருதினைஐம்பால் முவிடப்பொதுக் குறிப்பு வினைமுற்றுக்கள் :
வேறு, உண்டு, இல்லை, எங்கே, ஆகிய குறிப்புவினை முற்றுக்கள் இரு திணைக்கும், ஐந்து பால்களுக்கும், மூன்று இடங்களுக்கும் பொதுவாகிவரும். உ+ம் : நாம் இல்லை, மயில் இல்லை, மோகன் இல்லை, செல்வி இல்லை, அவர்கள் இல்லை, நீங்கள் இல்லை, பறவை இல்லை, வண்டுகள் இல்லை.
வினையடி :
வாழையடியில் பல புதுப்புது மட்டங்கள் வெடிப்பது போல் நட, வா, இரு முதலிய வினையடிகளிலிருந்து வினைமுற்றுக்கள் (நடக்கிறான், வந்தான்) வினையெச்சங்கள் (வந்து, இருந்து) பெயரெச்சங்கள் (வந்த, நடக்கின்ற) ஏவல் வினைகள் (நடக்குதி, வாருங்கள்) வியங்கோள் வினைகள் (காக்க, வாழ்க) முதலிய வினைகளும், தொழிற்பெயர்கள் (வருதல்) வினையாலணையும் பெயர்கள் (நடந்தானை) காரணப் பெயர்கள் (ஊக்கி) முதலிய பெயர்களும் பிறக்கின்றன. இதனால் இம் மூலக்கூறுகள் வினையடிகள் எனப்பட்டன. இவ்வினையடிகள் இயல்பான தெரிநிலைவினையடிகள் (போ) பெயரடியாகப் பிறந்ததெரிநிலை வினையடிகள் (கடைக்கணி) இடையடியாகப் பிறந்த தெரிநிலை வினையடிகள் (நிகர்) உரியடியாகப் பிறந்த தெரிநிலை வினையடிகள் (சால்) என நான்கு வகைப்படும்.

Page 27
- 48 - தமிழ் இலக்கணப்பூங்கா
தெரிநிலை வினையெச்சம் :
கத்தியை எடுத்து, என்பது குறைவாக்கியம். எடுத்து என்றகுறை வினை வெட்டினான், பாய்ந்தான் போன்ற வினை முற்றுக்களில் ஒன்றை , அல்லது வெட்டி, வெட்ட முதலிய வினை எச்சங்களில் ஒன்றை அல்லது வீசிய, தீட்டிய போன்ற பெயரெச்சங்களில் ஒன்றை அல்லது பொருதல், பாய்தல் என்னும் தொழிற்பெயர்களில் ஒன்றை அல்லது வெட்டினானை, குத்தினவனுக்கு எனும் வினையாலணையும் பெயர்களில் ஒன்றை அல்லது வெட்டுநர், வெட்டி எனும் வினையடிக் காரணப் பெயர்களுள் ஒன்றைக் கொண்டுதான் தன் பொருள் முடியும். இவ்வாறு ஒரு வினைக்குறை ஒரு வினையை அல்லது தொழிற்பெயரை அல்லது வினையாலணையும் பெயரை அல்லது வினையடிக் காரணப் பெயரைக் கொண்டு தன் பொருள் முடிந்தால் அந்த வினைக்குறை, வினையெச்சம் எனப்படும். அவ்வினையெச்சங்களில், நால்வகைத் தெரிநிலைவினையடிகளுள் ஒன்றிலிருந்து பிறந்து காலத்தை வெளிப்படையாகக் காட்டி வருவது தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்புவினை வினையெச்சம் :
இன்மை, அன்மை ஆகிய பண்படியாக மட்டுமே பிறக்கக்கூடிய பிறந்த வினையெச்சங்களே குறிப்புவினையெச்சங்கள். இவ்வகைக் குறிப்பு வினையெச்சங்கள் குறிப்பாற் காலங்காட்டுவனவாம். உ+ம் அன்றி, இன்றி, அல்லாமல், இல்லாமல்.
வினையடைகள் :
இவ்விருவகை வினையெச்சங்களும், வினையெச்ச ஈற்றுத்தொடர்களும் வினைகளை விசேடித்து வருவதால் வினையடைகள் எனவும் அழைக்கப்படும். உ+ம் விரைந்து (ஓடினான்) இன்றி (உண்ணான்) பிச்சை எடுத்து (6).JITpsTG5)
துணைவினை :
சில பயனிலைச் சொற்றொடர்களில் இருவினைகள் அமைந்து வருவதுமுண்டு. அவற்றுள் வாக்கியத்தின் பிறப்புக்கு முக்கிய ஏதுவாக இருந்த வினையானது முதல் வினையாகவும், அவ்வினையர்த்தத்தைச் சிறக்கவைக்க அல்லது வெறும் அசைநிலையாக நிற்கும் வினை துணைவினையாகவும் கொள்ளப்படும். தெட்சிணாமூர்த்தி

- 49 - தமிழ் இலக்கணப்பூங்கா
தலைசிறந்த தவில் மேதையாகப் புகழ்பரப்பிநின்றார். இங்கு புகழ் பரப்பினார் என்பதே முதன்மையான வினை. நின்றார் என்பது பரப்பினார் என்ற வினையின் அர்த்தக் கூர்மைக்கு நுணுக்கமாக இலேசாக உதவியுள்ளது. எனவே நின்றார் துணைவினை. இவ்வாறன்றி “நீ எழுந்திரு” என்பதில் எழு என்பது தான் முதன்மையான வினை, இரு என்ற வினை அர்த்தமே இன்றி வாளா நின்றது. எனவே இரு என்பது இங்கு வாளாநின்ற துணைவினை.
வினையெச்ச விகுதிகள் :
உண்ண - அ காணிய - இய உண்டு - Sl கானியர் - இயர் நோக்கி - இ கேட்டக்கால் - கால் போய் - uÙ சொன்னக்கடை - கடை கானின் - இன் கண்டவழி - வழி கண்டால் - ஆல் சினந்தவிடத்து - இடத்து செய்பு : - உண்டலும் - S Lb நோக்கா – ليلاك கொள்வான் - வான் செய்யூ - 월23 அலைப்பான் - பான் வந்துழி - உழி தருபாக்கு - பாக்கு உணற்கு - கு உண்ணில் - இல் வந்தானோ உண்ணும்படி - U19. உண்ணும்வண்ணம் - வண்ணம் இல்லாமே - (3D உண்ணும்பொருட்டு - பொருட்டு உண்ணும்வகை - வகை இல்லாமல் - шо60 அல்லாமை a 6D அல்லாது - 9 இன்றி - 5 உண்டானெனின் - எனின் வருவானேல் - ஏல் வந்தானாயின் - ஆயின் உண்டென - 66
வினையெச்சங்கள் யாவும் இவ்வாறு விகுதிகள் மூலம் எச்சப் பொருள் உணர்த்தும். இவற்றுள் கால், கடை, இடத்து போன்ற விகுதிகள் கொண்டவினையெச்சங்கள் நிபந்தனை வினையெச்சங்கள் எனப்படும். ஏனையவை காரண வினையெச்சங்கள் எனப்படும்.
வினையடி விகாரப்பட்டு எச்சப்பொருள் தருதல் :
சில சொற்களைப் பொறுத்தவரை மட்டும் வினையடிகள் விகாரப்பட்டு வினையெச்சப் பொருள் உணர்த்தும் உ+ம் : புகு = புக்கு விடு - விட்டு.

Page 28
பண்டிதர் ச.வேய - 50 - தமிழ் இலக்கணப்பூங்கா
தெரிநிலை வினைப் பெயரெச்சம் :
*சிரித்த’ - இக்குறைவினை எப்படியும் ஒரு பெயரைக்கொண்டே பொருள் முடிவதால். இவ்வாறு பெயரையே எஞ்சி நிற்பதால் பெயரெச்சம் எனப்பட்டது. பெயரெச்சம் என்றழைக்கப்படுவதால் இக்குறைவினையை ஒரு பெயர்க்குறையெனப் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இப்பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும். (செய்த செய்கிற, செய்யும்) இத் தெரிநிலை
வினைப்பெயரெச்சங்கள் பிறக்கும் அடிகளாவன:
வினையடி பாடு - பாடிய பாடுகிற, பாடும் பெயரடி : சித்திரி = சித்திரித்த, சித்திரிக்கிற, சித்திரிக்கும் இடையடி : போல் = போன்ற, போல்கிற, போலும் உரியடி: சால் = சான்ற, சால்கிற, சாலும்.
செயப்படுபொருள் குன்றியவை தவிர்ந்த வினையடிப் பெயரெச்சங்கள் இழைத்த பெண் (செய்பவன்), இழைத்த ஒலை (கருவி), இழைத்த இடம் (நிலம்), இழைத்த இழைப்பு (செயல்), இழைத்த வேளை (காலம்), இழைத்த பெட்டி (செய்பொருள்), என்ற ஆறு பெயர்களையும் ஒன்றுதவறாமல் தனித்தனியாகக் கொண்டு பொருள் முடியும்.
குறிப்பு வினைப்பெயரெச்சம் :
இந்தப் பெயரெச்சம் பெருமை முதலிய பண்புப்
பெயர்களடியாகப் பிறந்து காலத்தைக் குறிப்பாற் காட்டிவரும்.
உ+ம்: பெரிய, உள்ள, நல்ல, இல்லாத. மேலும் படத்த,
கைய, எனச் சினைப் பெயரடியாகப் பிறந்து வரும் குறிப்பு வினைப்பெயரெச்சங்களும் உண்டு.
பெயரடைகள் :
இவ்விருவகைப் பெயரெச்சங்களும் பெயரெச்ச ஈற்றுத் தொடர்களும் பெயர்களை விசேடித்து வருவதால் பெயரடைகள் என்றும் அழைக்கப்படும். உ+ம் வாழ்ந்த (தமிழன்), பெரிய (கட்டடம்), ஒலைவேய்ந்த (குடிசை).
முற்றெச்சம் :
இம் முற்றெச்சமும் வினைமுற்று வடிவில் நிற்கும் ஒரு வினையெச்சமே. முற்று வடிவில் நின்று இவ்வாறு எச்சப்பொருள் தந்து நிற்பது வாக்கியங்களில் வரும் பொழுது மட்டுமே. உ+ம்: சீதை புலம்பினள் இருந்தாள் - புலம்பி இருந்தாள்.

பண்டிதர் ச.வே.ப - 5 - தமிழ் இலக்கணப்பூங்கா
வினைமுற்று வகைகள் : தன்மை ஒருமை வினைமுற்று :
கண்டனென், வருவேன், உண்பல், உண்கு, உண்டு, வந்து, வருது சென்று; சேறு - இவற்றின் விகுதிகள் முறையே: என், ஏன், அல், கு, டு, து, று. தன்மைப் பன்மை வினைமுற்று :
வந்தனம், வந்தாம், கண்டனெம், காண்பேம், காண்போம், உண்கும், உண்டும், வந்தும், வருதும். சென்றும், சேறும், இவற்றின் விகுதிகள் முறையே; அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும். நானும் நீயும் அவனும் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர்களும் தன்மைப்பன்மை வினைமுற்றுகளே ஏற்றுவரும். உ+ம் நானும் நீயும் அவனும் GBun GB6nurLib. முன்னிலை ஒருமை வினை முற்று :
உண்டனை, உண்கின்றனை, உண்டாய், உண்பாய், இவற்றின் விகுதிகள்: ஐ, ஆய் முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று:
சொல்லுதி, உண்ணல், சுருக்குண், உண்ணால், உண்ணேல் கேண்மியா இவற்றின் விகுதிகள் - இ, அல், உண், ஆல், ஏல், மியா. இவற்றுள் இ, மியா முதலிய விகுதிகள் புணர்ந்து கெட்டு, உண், கேள் என நிற்பனவும் ஏவல் வினைகளே.
முன்னிலைப் பன்மை வினைமுற்று : -
உண்டனிர், உண்கின்றீர், உண்பிர், கையினிர், கையீர், வல்லீர் இவற்றின் விகுதிகள் இர், ஈர். நீயும் அவனும் இவளும் என்னும் உளப்பாட்டு முன்னிலைப் பன்மைப் பெயர்களும், முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்களையே ஏற்று வரும். உ+ம் நீயும் அவளும் இவனும் போனிர்கள். முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று :
உண்மின், உண்ணுதிர், உண்ணிர், உண்ணும், சொல்லவும், சொல்லன்மின், விகுதிகள்: மின், இர், ஈர், உம். படர்க்கை ஆண்பால் வினைமுற்று :
தின்றனன். தின்றான், தின்னுவோன் விகுதிகள்: அன், ஆன, ஒன படர்க்கைப் பெண்பால் வினைமுற்று :
பாடினள், பாடினாள், பாடுவோள் விகுதிகள் அள், ஆள், ஒள்
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று :
மேய்ந்தது, கூவிற்று, குரைக்கும், விகுதிகள்: து, று, உம்,

Page 29
பண்டிதர் ச.வே.ப - 52 - தமிழ் இலக்கணப்பூங்கா
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று :
உ+ம் வந்தன, பாடும், வல்லவை, வாரா. விகுதிகள்
அ, உம், ஐ. ஆ - (எதிர்மறைவிகுதி) வா+த்+த்+அன்+அ
என்பதில் உள்ள அன்சாரியை இன்றியே “வந்த” என வினை.
முற்று வருவதுமுண்டு.
உ+ம் வீரை பொரிந்த, காரை கரிந்த
வியங்கோள் வினைமுற்று :
தன்மை, முன்னிலை, படர்க்கை மூவிடங்களுக்கும், அறிணை உயர்திணையாகிய இருதிணைகளுக்கும், ஆண்பால், பெண்பால், முதலிய ஐம்பால்களுக்கும் பொதுவாக வரும் வினைமுற்றுக்கள் இவை. (நாம் வாழ்க, வாழியர்; நீ வாழ்க ,
வாழிய ; அவர் வாழ்க , வாழிய, வாழியர் வாழ, வாழல் முதலியவை). இவற்றின் விகுதிகள், க, இய, இயர், இ, அ, அல். (அல் - என்பது வாழல் என எதிர்மறைப் பொருளில்
வரும்) இவையாவும் எதிர்காலம் உணர்த்தி வருவனவாம். இந்த வியங்கோள், வாழ்த்தல் வேண்டல், வைதல், விதித்தல் என நான்கு பொருள்களில் வரும்; வாழ்த்தல்; தமிழ்வாழ்க. வேண்டல்: கடவுள் காக்க வைதல்: அநீதி, அக்கிரமம் ஒழிக! விதித்தல்: நான்கு வினாக்களுக்கு விடை அளிக்குக.
மேற்குறிப்பிட்ட விகுதிகளுள் ‘க” விகுதிக்குமுன் ஆகு எனும் அடிவினையோடு கூடி வேறு வினைச்சொற்கள் சேர்ந்து வருவனவும் உண்டு. செல்வோமாகுக. அழைப்பாராகுக, வாழ்வானாகுக எனும் இவையும் வியங்கோள் வினைமுற்றுக்களாகப் பிற்காலத்தில் நாவலர் போன்ற இலக்கணப் புலவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அழைப்பாராகுக என்பது போன்றவை அழைப்பாராக எனவும் வரும்.
ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று முன்னிலைக்குமட்டும் உரியது. தன்மை முதலிய மூவிடத்
துக்குமுரியது. எதிர்காலம் உணர்த்திவருவது எதிர்காலம் உணர வருவது பெரும்பாலும் அறிவுக்களத்தில் பெரும்பாலும் உணர்ச்சிக் உதிப்பது களத்தில் உதிப்பது. செயல் நிகழுமென்ற நிச்சயத் செயல் நிகழுமென்ற உத் தோடு பிறப்பது தேசத்தோடு பிறப்பது ஒருமை பன்மை காட்டிவருவது ஒருமை பன்மைக்குப் பொ
துவாக வருவது
திணைபாற் பகுப்பு அற்றது திணைபாற் பொதுவாக வருவது

பண்டிதர் ச.வே.ப - 53 - தமிழ் இலக்கணப்பூங்கா
உடன் பாட்டு வினைமுற்று :
இது விதிவினையெனவும் பெயர் பெறும். இது வினை நிகழ்ச்சியை ஒப்புக்கொள்வதாக - உடன்படுவதாக அமையும் வினை முற்றாகும். உ+ம் சென்றனன், பூத்தன, ஆர்த்தனர், களிது, பெரியன்.
எதிர்மறை வினை முற்று :
இது மறை வினை எனவும் பெயர் பெறும். இவ்வினை முற்று வினை நிகழ்ச்சியை எதிர்மறுத்து நிற்பதால் எதிர்மறை எனப்படும். சென்று இல் அன், காண்கின்று இல் அ, காண் ஆள் (இங்கு காண்+ஆ+ஆள் என நிற்க வேண்டியது எதிர்மறை ஆகார இடைநிலை புணர்ந்து கெட்டது) என மேற்கண்டவாறு இல், ஆ என்பன வினை முற்றுக்களில் எதிர்மறை இடைநிலைகளாக வந்து எதிர்மறைப் பொருள் தந்தன. (அவை) உண்ணா என்ற பலவின்பால் எதிர் மறை வினைமுற்றில் வரும் ஆ மட்டும் பலவின்பால் விகுதி வேறாக வேண்டாது தானே பாலும் உணர்த்துவதால் விகுதி எனப்பட்டது. தோன்றலை = தோன்று + அல் + ஐ என்பது போன்றவற்றில் *அல்’ இடை நிலைஎதிர்மறைப் பொருள் தந்துவரும்.
எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சம் :
இப் பெயரெச்சங்கள் ஆ எனும் எதிர்மறை இடைநிலையும் அ எனும் விகுதியும் பெற்று கொல்+ ஆ + த் + அ என வரும். அ எனும் விகுதி பெறாமல் கொல்லா என வருதலும் உண்டு. (உண்ண்ஆ நஞ்சு) எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சம் :
இவ்வகைப் பெயரெச்சங்கள் அல், இல் எனும் பண்படிகளாகப் பிறந்து ஆ எனும் சாரியையும் பெற்றுத்’ சாரியையோடு கூடிய ‘அ விகுதியும் ஏற்று அல் ஆத்அ, இல் ஆ, த் அ என வரும். அ என்ற விகுதி கெட்டு அல்லா இல்லா எனவும் வரும். (இல்ல்ஆப் பிள்ளை) எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சம்
E-6cm十ども十5+2ー - உண்ணாது, s 605+shLD6)- உண்ணாமல், போ+க்+ஆ+த்+உ=போகாது, என்னும் எதிர்மறைத் தெரிநிலைவினை எச்சங்கள் گR எனும் எதிர்மறை இடைநிலைகள் மூலம் எதிர்மறைப்பொருள் உணர்த்துவன. எதிர்மறைக் குறிப்பு வினையெச்சம் :
இவை அன்மை, இன்மை எனும் பண்புப் பெயர்களின்
அடிகளிலிருந்து (அல், இல்) பிறந்து (அன்றி, இன்றி) றி

Page 30
- 54 - தமிழ் இலக்கணப்பூங்கா
(அல்லாது, இல்லாது) உ (அல்லாமை இல்லாமை) மை (அல்லாக்கால், இல்லாக்கால்) கால் (அல்லாக்கடை, இல்லாக்கடை) கடை (அல்லா விடத்து) இடத்து (இல்லா வழி) வழி (அன்றாயின், இன்றாயின்) ஆயின் முதலிய விகுதிகள் மூலம் எச்சப் பொருளையும் எதிர்மறையில் தந்து நிற்கும். இங்குவரும் ‘ஆகள் வெறும் சாரியைகளே.
செயப்படுபொருள் குன்றிய முற்றுக்கள் :
சில வினைமுற்றுக்கள் செயப்படுபொருள் கொள்ளமுடியாத வினையடிகளிலிருந்து பிறந்தவையாகும். சிரித்தான், நடந்தான், உறங்கினாள் முதலிய வினைமுற்றுக்கள் எதைச் சிரித்தான் என்றோ எதை நடந்தான் என்றோ செயப்படுபொருள் ஏற்க முடியாமை காண்க.
தன்வினை முற்றுக்களும் எச்சங்களும் :
ஒரு காரியத்தைத்தானே செய்பவன் இயற்றுதற் கருத்தா, பிறரை ஏவி அவர்கள் மூலம் ஒரு காரியத்தைச் செய்விப்பவன் ஏவுதற் கருத்தா. இவர்களில் இயற்றுதற் கருத்தாவின் வினைகள் தன்வினை முற்றுகளாகவும், எச்சங்களாகவும் வரும். உ+ம் கண்ணன் குழலூதினான், ஊதி, ஊதிய ஏவுதற் கருத்தாவின் வினைகளும் சில சமயம் தன்வினையாக வருவதுண்டு. உ+ம்: அரசன் கோவில் கட்டினான்.
பிறவினை முற்றுக்களும் எச்சங்களும் :
ஏவுதற் கருத்தாவின் வினைகள் மட்டுமே பிறவினை
முற்றுக்களாகவும் எச்சங்களாகவும் வரும். உ+ம் விஞ்ஞானிகள்
செயற்கைமழை பொழிவித்தார்கள். பொழிவித்து, பொழிவித்த,
தன்வினைகள் அவ்வினைச் சொற்களின் நடுவிலுள்ள மெல்லின மெய்கள் வல்லின மெய்களாகத் திரிக்கப்படுவதன் மூலம் (மறைந்து = மறைத்து) அல்லது கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளுள் ஒன்று சேர்க்கப்படுவதன் மூலம் (நீள் = நீட்டு, எழு = எழுப்பு) அல்லது வி, பி, என்பவற்றுள் ஒரு விகுதி சேர்க்கப்படுவதன் மூலம் (எழுது - எழுதுவி, படி - படிப்பி) அல்லது தன்வினைப்பகுதி ஒற்று இரட்டிப்பதன் மூலம் (ஆறு = ஆற்று) பிறவினைகளாக மாற்றப்படும். தன்வினையான சொன்னான் என்பதில் பகுதியாய் நின்றது, சொல் எனும் வினையடி. அது பிறவினையில் சொல்வி, சொல்விப்பி, எனும் பகுதிகளாய் நின்று மேல்வரும் இடைநிலை, விகுதிகளுடன் கூடிவரும். உ+ம் : எழுதுவிப்பி + க் + கிறு + ஆள்,

- 55 - தமிழ் இலக்கணப்பூங்கா
செய்வினை வாக்கியம் :
வினையை - செயலைச் செய்கின்ற கருத்தாவே எழுவாயாகவும் வினை சென்றடையும் பொருள் செயப்படுபொருளாகவும் வந்து, பயனிலையானது, படு, உண் முதலிய விகுதியெதுவும் பெறாமல் வருவது செய்வினை வாக்கியமாகும்.
உ+ம் : அறிஞர் நூலை எழுதினார். இங்கு எழுதும் வினையைச் செய்த கருத்தாவே எழுவாயாகவும், வினை சென்றடை பொருளான நூலே செயப்படு பொருளாகவும் எழுதினார் எனும் பயனிலை படு அல்லது உண் விகுதி பெறாமலும் வந்துள்ளமை காண்க.
செயப்பாட்டுவினை வாக்கியம் :
வினை சென்றடை பொருளே முதன்மை பெற்று எழுவாயாக வருவதும், கருத்தா மூன்றாம் வேற்றுமையின் ஆல் உரு பேற்று வருவதும் பயனிலை “படு’ அல்லது, உண், விகுதி பெற்று வருவதுமான வாக்கியம் செயப்பாட்டு வினை வாக்கியமாகும். உ+ம் : நூல் அறிஞரால் எழுதப்பட்டது: நான் கூட்டத்தினரால் நெருக்குண்டேன். முற்றுக்கள் காலங் காட்டல்:
பெரும்பாலான தெரிநிலை வினைமுற்றுக்களில் இடைநிலைகளே காலங்காட்டுகின்றன. ப், வ், இடை நிலைகள் எதிர்காலங் காட்டல் :
6TGiunit = 6G + i + j + sit = i வருவாய் = வா + வ் + ஆய் - வ் ஆ நின்று, கின்று, கிறு, நிகழ்காலங்காட்டல்
மகிழாநின்றோம்= மகிழ் + ஆ நின்று+ ஓம் - ஆ நின்று நடிக்கின்றாள் = நடி+ க் + கின்று + ஆள் = கின்று பொலிகிறது = பொலி + கிறு + அ + து = கிறு த், ட், ற், இன், இடைநிலைகள் இறந்த காலங்காட்டல்
சிரித்தார் = சிரி+த் + த்+ஆர் = த் உண்டன - உன் + ட் + அன் + அ = ட் தின்றாள் = தின் + ற் + ஆள் - ற் தேடினான் = தேடு + இன் + ஆன் = இன்

Page 31
- 56 - தமிழ் இலக்கணப்பூங்கா
பகுதிகள் விகாரப்பட்டுக் காலங்காட்டல்
புகு, விடு போன்ற வினையடிகளிலிருந்து பிறக்கும் எதிர்கால வினைமுற்றுக்கள் (புகுவான்) நிகழ்கால வினை முற்றுக்கள், (விடுகிறாய்) வழமைபோல் இடைநிலைகள் மூலமே காலங்காட்டும். இறந்தகால வினைமுற்றுக்கள் மட்டும் பகுதி விகாரப்படுவதால் காலங்காட்டும் உ+ம்: புக்+க்+ஆன், விட் + ட் + ஆன், கும்பிட் + ட் + ஆன்.
இவற்றுள் புகு '- புகுந்தான், விடு - விடுத்தான், தொடு - தொடுத்தான், என இடைநிலை மூலமும் இறந்த காலம் காட்டுவனவும், கொடு - கொடுத்தான். என இடைநிலை மூலம் மட்டுமே (இறந்த) காலம் காட்டுவனவும் உண்டு.
காலங்காட்டும் முற்று விகுதிகள் :
இவ்வாறு இடைநிலைகள், விகாரப்பட்ட பகுதிகள் மட்டுமன்றி, பெரும்பாலும் பால்காட்டுவதையே இயல்பாகக் கொண்ட வினைமுற்று விகுதிகளும் சில இடங்களில் காலங்காட்டுகின்றன. செய்யும் முதலிய முற்றுக்களில் செய் + ய் + உம் என “உம்’ விகுதி எதிர்காலங்காட்டி நிற்றல் காண்க.
உண்கும் என்ற தன்மைப் பன்மை முற்றில் (உண் + கும்) கும் விகுதி எதிர்காலம் காட்டுகிறது. இவ்வாறே ‘தும்’ (வா+தும் = வருதும்), றும் (செல் + றும் = சேறும்) எனவும், த.ப. முற்றுக்களில் விகுதிகள் எதிர் காலங்காட்டும். இவ்வாறு த. ஒருமை வினைமுற்றுக்களான உண்கு, வருது, சேறு, முதலியன கு, து, று, விகுதிகள் மூலம் எதிர்காலங்காட்டும். வியங்கோள், ஏவல் விகுதிகளும் எதிர்காலம் காட்டும்.
இவ்வாறே, சென்றும், வந்தும், உண்டும் முதலிய த, ப, வி. முற்றுக்கள் றும், தும், டும், மூலமும், சென்று, வந்து உண்டு முதலிய த, ஒ, வி முற்றுக்கள் று, து, டு, மூலமும் இறந்த காலங் காட்டின.
உண்பல் இங்கு அல் எனும் த, ஒ, வி. மு.
விகுதியுடன் நின்றும் இடைநிலை எதிர்காலம் உணர்த்திற்று. இப்படி இடைநிலைகள் மூலமோ, பகுதி

- 57 - தமிழ் இலக்கணப்பூங்கா
விகாரப்பட்டோ, விகுதிகள் மூலமோ வெளிப்படையாகக் காலங்காட்டும் இயல்பு குறிப்புவினைமுற்றுக்களுக்கு இல்லை.
தெரிநிலை வினையெச்சங்கள் காலங்காட்டல் :
செய்து (செய்+த்+ உ) எனும் ‘உகர விகுதி கொண்ட வினையெச்சம் ‘த்’ எனும் இடைநிலை மூலம் இறந்த காலங் காட்டிற்று. எழுதி என்ற தெரிநிலை வினையெச்சம் (எழுது + இ) இகர விகுதி மூலம் இறந்த காலங் காட்டிற்று. (தழுவி - தழிஇ - இ). போய் எனும் தெரிநிலை வினையெச்சம் ‘ய்‘ என்ற விகுதி மூலம் இறந்த காலங்காட்டிற்று. *புகு’ என்ற பகுதி விகாரப்பட்டுப் ‘புக்கு’ என நின்று வழக்காற்றலால் இறந்த காலங்காட்டிற்று.
இடுபு (இட்டு) எனும் ‘பு விகுதி வினையெச்சம் இறந்த காலங்காட்டும். பெய்தென - வினை எச்சத்தின் ‘என’ விகுதி இறந்தகாலங் காட்டும். கல்லா (கற்று) எனும் வினை எச்ச ஆ விகுதி இறந்த காலங் காட்டும். கானு (கண்டு) எனும் வி. எச்ச 'ஊர் விகுதி இறந்த காலங்காட்டும். இவ்வாறு, செய்து - உ, கழுவி - இ. போய் - ய், இடுபு - பு, பெய்தென - என, கல்லா - ஆ, காணு - ஊ எனும் வினை எச்ச விகுதிகளும், ‘புக்கு முதலிய பகுதி விகாரப்பட்டு உருவாகிய வினை எச்சங்களும், இறந்த காலங் காட்டும்.
எதிர்காலங்காட்டும் வினையெச்ச விகுதிகளாவன: செயின் - இன், செய்யிய - இய, செய்யியர் - இயர், செய்வான் - வான், அளிப்பான் - பான், உண்பாக்கு -
பாக்கு, கண்டால் - ஆல், காண்டலும் - உம், உண்ணும் வண்ணம் - வண்ணம், தருமாறு - ஆறு, உண்ணும்படி - படி, எண்ணும் பொருட்டு - பொருட்டு “உண்ணும் வகை - வகை.
செய்ய. என்பது முக்காலமும் உணர்த்தும் வினையெச்சம். பெரும்பாலான வினை எச்சங்கள் இறந்தகாலம் அல்லது எதிர் காலமே காட்டுவன. செய்ய எனும் வாய்பாட்டு வினையெச்சம் மட்டுமே முக்காலமும் காட்டும் உ+ம்.

Page 32
- 58 - தமிழ் இலக்கணப்பூங்கா
1. மழைபெய்யக் குளம் நிரம்பியது.
காரணப் பொருள் - பெய்ய - இறந்தகாலம்
2. சேவல் கூவப் பொழுது விடிந்தது
உடனிகழ்ச்சிப் பொருள் - கூவ - நிகழ்காலம்
3. உண்ண வந்தான்
காரணப் பொருள் - உண்ண - எதிர்காலம்
அன்றி, இன்றி, அல்லால், இல்லாது, அல்லாமல், அன்றேல் முதலிய குறிப்பு வினை எச்சங்கள் குறிப்பாற் காலங்காட்டி வரும்.
பெயரெச்சங்கள் காலங் காட்டல் :
தெரிநிலை வினைப் பெயரெச்சங்களில் இறந்தகால இடைநிலைத்’ பெற்ற செய்த எனும் வாய்பாட்டெச்சங்கள் (செய் + த் + அ) இறந்த காலங்காட்டும். நிகழ்கால இடைநிலைகள் பெற்ற, செய்யாநின்ற, செய்கின்ற, செய்கிற எனும் பெயரெச்சங்கள் நிகழ்காலங்காட்டும். “உம்’ எனும் எதிர்கால விகுதி மூலம், செய்யும் எனும் பெரெச்சம் எதிர்காலங்காட்டும்.
படத்த, கரிய போன்ற கு, வினை பெயரெச்சங்கள் குறிப்பாற் காலங்காட்டும். எதிர்மறை வினைகள் காலங்காட்டலில், இல், அல், ஆ, எனும் எதிர்மறை இடை நிைைலகளுள், இல் என்பது இறந்தகால இடைநிலையும், வினையடியுங் கொண்ட பகுதியோடு புணர்ந்து, செல் + ற் + இல் + அன் என்றும், விகாரப்பட்டிறந்த காலங்காட்டும் பகுதியோடு புணர்ந்து புக்க் + இல் + அன் என்றும், நிகழ்கால இடை நிலையும் வினையடியுங் கொண்ட பகுதியோடு புணர்ந்து நட+கின்று + இல் + அன் என்றும் நின்று, காலம் வெளிப்படவரும்.
‘அல்’ என்னும் எதிர்மறை இடைநிலை ‘கு’ சாரியை பெற்றும் பெறாதும் வினையடியோடு கூடி உண் + கு + அல் +அன் என்றும் நிகழ்காலம் வெளிப்பட வரும். உண்ணலன் என்னும் வினைமுற்று நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தப்

- 59 - தமிழ் இலக்கணப்பூங்கா
பயன்படுகிறது. ஆகார எதிர்மறை இடைநிலை பேசு+ஆ என விகுதியாயும் நின்றும், முற்றுவினையில் எதிர்காலமும் உணர்த்தியும் வரும். நட + ல் + ஆன் என்பதில் எதிர்மறை ‘ஆ’ புணர்ந்து கெட்டும் எதிர்மறைப் பொருள் உணர்த்தப்படுகிறது. இங்கு ‘வ்’ இனால் எதிர்காலம் உணர்த்தப்பட்டது. புகு + ஆ + ஆன் = புகான் இங்கு எதிர் மறை ஆகார இடைநிலை புணர்ந்து கெட்டும் எதிர் மறைப் பொருள் தருவதோடு எதிர்காலமும் உணர்த்தப்பட்டது.
காலங்காட்டாத இடைநிலைகள் :
அறிஞன் = அறி + ஞ் + அன் = ஞ்
வலைச்சி = வலை + ச் + ச் + இ = ச்
ஒதுவார் = ஒது + வ் + ஆர் = வ்
வண்ணாத்தி = வண்ணம் + த் + த் + இ = த்
தொடுநர் = தொடு + ந் + அர் - ந்
பெயராயும் வினையாயும் பயன்படும் சொற்கள் சில :
அடி, அணி, அரி, அறை, அலை, அணை, ஆறு, ஆடு, ஆள், இறை, இரை, இசை, இணை, இழை, ஈ, உந்து, உடு, உடை, உமி, உழை, ஊற்று, ஊர், ஏறு, படி, நடு, நாடு, விரை, கரை, தை, பிடி, சூடு, ஒடு, கலை, களை, வளை, குழை, குடை, கடை, மறை, முறி, திரி, பாய், வேய், குதி, துணி, பிணி, பார், கொத்து, காய், மலை, முனை, கிழி, பிணை, கூறு, தூறு, பட்டு, தட்டு, மடி, பணி, வரை, கூடு, கோடு.
தனிநிலை உருபன்கள்
தனித்து நின்று பொருள் தரும் வலிமை கொண்டதால், பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் “தனிநிலை உருபன்கள்” எனத் தொகுத்துச் சுட்டப்படுகின்றன.

Page 33
- 60 - தமிழ் இலக்கணப்பூங்கா
4 سے پوcuuBib
இத் தெரிநிலை வினைமுற்று ஒவ்வொன்றும் எவ்வகைச் சொல்லடியாகப் பிறந்தது?
1) கண்டார் 2) சித்திரிப்பேன் 3) போன்றது 4) சான்றன 5) செத்தான் 6) புக்கான்
7) இனிக்கிறது 8) மரத்தன 9) நிகள்ப்பன
10) கூர்த்தது.
பின்வரும் வியங்கோள் வினைகள் எவ்வெப்பொருளில் வந்தன? 1) ஏகாதிபத்தியவாதம் ஒழிக 2) வான்முகில் வழாது பெய்க 3) வாழ்க தமிழ்மொழி 4) எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்குக 5) மலிவளஞ் சுரக்க.
இவ்வினைக்குறைகள் பெயரெச்சங்களா? வினையெச்சங்களா?
1) அருந்தி 2) இல்லாமல் 3) வனைந்த 4) எழுதிய 5) உண்ணில் 6) காண்டலும் 7) செலுத்தும் 8) புனைவானேல் 9) காணிய 10) மெல்லிய 11) மீட்டும்படி 12) தழுவாத 13) வீழ்கின்ற 14) நடுங்கா 15) இன்றி 16) அல்லாமல் 17) மயங்குழி 18) ஆடுகிற 19) இல்லாத 20) சொன்ன 21) சுவைக்க
பின்வரும் பிறவினைகளைத் தன்வினைகளாக மாற்றுக 1) ஊட்டினான் 2) உண்பித்தான் 3) சூட்டினான் 4) எழுதுவிப்பித்தான் 5) நடத்துவேன் 6) பாய்ச்சுக 7) உருட்டினி 8) காட்டினான் 9) காண்பித்தான் 10) ஒடித்தது.
பின்வரும் செயப்பாட்டு வினைகளைச் செய்வினை
களாக்குக.
1) நாற்றுக்கள் பெண்களால் நடப்பட்டன.
2) சரக்குந்து ஒன்றால் மிதிவண்டி மோதுண்டது.
3) “கல்கி" யினால் பொன்னியின் செல்வன் நெடுங்கதை
எழுதப்பட்டது.

- 61 - தமிழ் இலக்கணப்பூங்கா
4) ரவிவர்மாவினால் உன்னத ஒவியங்கள் தீட்டப்பட்டன. 5) சி.வி. ராமன், சந்திரசேகர் என்னும் தமிழ்
விஞ்ஞானிகளாலும் நோபல் பரிசு வெல்லப்பட்டது.
பின்வருவனவற்றுக்கு எதிர்மறைப் பொருள் தரும் உறுப்புகளைக் கண்டறிந்து எழுதுக.
1) காணான் 2) பூத்தில 3) அன்றி 4) பார்க்காத 5) இல்லாமல்
பின்வரும் பெயர்களுக்கும், வினைகளுக்கும் திணை, பால், எண், இடம், கூறுக.
1) படகு 2) குரவர் 3) நடிகை 4) நீ 5) வந்தோம் 6) D6)f bgb60T 7) வானம் 8) தண்ணி 9) தாக்கினர் 10) ஆசான்
வினையாலணையும் பெயர்களின் கீழ்க் கோடிட்டுக் காட்டுக.
1) பொறுத்தார் புவியாள்வார் 2) கல்லாதது உலகளவு 3) பெற்றார் கூடினர் 4) கற்றாரைக் கற்றாரே காமுறுவர் 5) நடந்தது நடந்துவிட்டது 6) சிறுத்தது பெருக்கும் 7) இல்லானை இல்லாளும் வேண்டாள் 8) வாழ்வார்க்கு உரை 9) கெடுவான் கேடு நினைப்பான் 10) சேர்ந்தாரைக் கொல்லி
பின்வரும் வாக்கியங்களைக் கீழே தரப்படும் குறிப்பு வினைமுற்றுக்களுள் பொருத்தமானவற்றைக் கொண்டு (p(p60)LDu Ti5(585. அல்லை, அல்லன், அல்லேன், அல்லேம், அல்லீர், அல்லள், அல்லர், அன்று, அல்ல. 1) பயங்கொள்ளி அவள் . 2) பயங்கொள்ளி நான் . 3) பயங்கொள்ளி அவன் . 4) அந்தப்பாவிகள் அவர் . 5) இரந்துண்ணிகள் நீவிர் . 6) ஏமாளிகள் நாம் . 7) புறஞ்சொல்வது நல்ல பண்பு . 8) அநியாயங்கள் நிலைப்பவை. 9) தவறு செய்யாதவரை நீ தண்டிக்கப்படுவாய் .

Page 34
- 62 - தமிழ் இலக்கணப்பூங்கா
இடைச் சொல் வகைகள்
இடைச் சொற்கள்:
தனித்தியங்க வல்ல பெயர்ச்சொற்கள், வினைசொற்கள் போலல்லாது, அப்பெயர்ச்சொற்களையும், வினைச்சொற்களையும் சார்ந்தும், அவற்றின் உள்ளுறுப்பாயும் நின்றியங்கும் சொற்களே இடைச்சொற்கள்.
அவை, வேற்றுமை உருபிடைச் சொற்கள். உவமை உருபிடைச் சொற்கள், உம்மை இடைச்சொற்கள், ஏகார இடைச்சொற்கள், ஓகார இடைச்சொற்கள், சாரியை இடைச்சொற்கள், விகுதி இடைச்சொற்கள், இடைநிலை உருபிடைச் சொற்கள், ஒலிக்குறிப்பு இடைச்சொற்கள், அச்சக்குறிப்பு இடைச்சொற்கள், விரைவுக்குறிப்பு இடைச்சொற்கள், அசைநிலை இடைச்சொற்கள், சுட்டு, வினா இடைச் சொற்கள், இசை நிறை இடைச்சொற்கள், அசைநிலை இடைச்சொற்கள், இணைப்பு இடைச் சொற்கள் எனப் பலவகைப்படும்.
வேற்றுமை உருபு இடைச்சொற்கள் :
இவ்வகையுள் ஐ, ஆல், ஆன், ஒடு, ஒடு, கு, இல், இன், அது, ஆது, அ, கண், முன், பின் போன்ற ஏழு வேற்றுமைகளது உருபுகளும், ஏ, ஓ குறிப்பொலிகளும் அடங்கும்.
உவம உருபு இடைச்சொற்கள் :
போல், புரை, ஒ, உறழ், மான், கடு, இயை, ஏய், நேர், நிகள், பொருவு, அனை, அன்ன போன்றவை இவ்வகையுள் அடங்கும்.
போல, புரைய, மான, ஒப்ப, உறழ ஏய்ப்ப என்பன மேற்கண்ட இடைச்சொற்களடியாகப் பிறந்த வினையெச்சங்களே.
'உம்' இடைச்சொல் : எதிர்மறை உம்மை :
களவெடுத்தாலும் பொய் சொல்லாதே, என்பதில் பொய் சொல்வதோடு, களவெடுத்தலையும் எந்த அளவிலோ

- 63 - தமிழ் இலக்கணப்பூங்கா
களவெடுத்தாலும் என்ற 'உம்' மை எதிர்மறுத்துரைப்பதால் அது எதிர்மறை உம்மை எனப்பட்டது. நீ படிக்காவிட்டாலும் மற்றவர் படிப்பைக் கெடுக்காதே. பிள்ளைகளைப் பட்டினி போட்டாலும் கடன்படக்கூடாது என்பனவும் இவ்வகையே
இழிவு சிறப்பு உம்மை
பிச்சைக்காரனும் அருவருக்கும் FITUTOB இங்கு சாட்பாட்டின் இழிவு சிறப்பித்துச் சொல்லப்பட்டது.
உயர்வு சிறப்பு உம்மை :
இளையராஜா வீட்டு இட்டலிச்சட்டியும் இசைபாடும். இளையராஜாவின் இசையாற்றலின் உயர்வைச் சிறப்பித்த உம்மை இது. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதும் இவ்வகை சார்ந்தது.
ஆக்க உம்மை :
பாலும் ஆயிற்று என்பது மருந்துமாயிற்று எனும் ஆக்கப் பொருள் தரும் ஆக்க உம்மை.
ஐய உம்மை :
மழை இன்று வந்தாலும் வரும்; வந்தாலுமிலுள்ள 'உம்' மழை வரவை ஐயத்துக்குரியதாக்கிய ஐயவும்மை.
எச்ச உம்மை :
பெண்களும் வந்தனர் - இங்கு வெளிப்படையாகச் சொல்லாமல் விட்ட ஆண்களின் வருகையும், பெண்களும் என்பதிலுள்ள உம்மை மூலம் உணர்த்தப்பட்டது. இது இறந்தது தழுவிய எச்ச உம்மை.
முற்று உம்மை :
பத்துத் தென்னைகளும் காய்த்தன - இங்கு வளவில் நிற்கும் முழுத்தென்னைகளையும் “உம்’ சுட்டியதால் அது முற்றுமையாயிற்று.
எண்னும்மை :
சேரனும், சோழனும், பாண்டியனும் செந்தமிழ் நிலமன்னர்கள் - இது எண்ணுதற்கண் வந்த எண்ணும்மை.

Page 35
- 64 - தமிழ் இலக்கணப்பூங்கா
தெரிநிலை உம்மை :
உலகை நடத்துபவன் நானும்மல்லேன்; நீயும் அல்லை. இது இறைவனே நடத்தும் நிலையைத் தெரிவித்து நிற்கும் தெரிநிலை உம்மை.
கடவுளை நம்பும் ஏவல் உம்மை. JITBILD வானம்பாடிநான் - பெயரெச்ச உம்மை. வெண் பனிதுறும் - வினைமுற்று உம்மை.
விரைவு உம்மை : "
‘கேட்டதும் அமுதாள்’ என்பதில் கேட்ட உடன்
(விரைந்து) அமுதாள் எனும் பொருள் உணர்த்தப்படுவதால்
இங்கு வந்த உம்மை விரைவும்மை எனப்படும்.
மட்டும் இடைச்சொல் :
இது எல்லைப் பொருளையும் (சந்தி மட்டும் போகலாம்) வரையறைப் பொருளையும் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) தந்து வரும்
ஏகார இடைச்சொல் தேற்ற ஏகாரம் :
உண்டே கடவுள்! பார்த்தாயா? - இது கடவுள் உண்மையைத் தெளிவிக்கும் தேற்ற ஏகாரம்.
வினா ஏகாரம் :
தீயே சுட்டது? வினவுதற்கண் வந்த வினா ஏகாரம் இது.
எண் ஏகாரம் :
நிலமே, நீரே, தீயே, காற்றே, வெளியே என்பவற்றில் வரும் ஏகாரங்கள் எண்ணுதற்கண் வந்த எண் ஏகாரங்கள்.
பிரிநிலை ஏகாரம் :
அக் குடும்பத்தில் இவனே மனிதன். இங்கு ஒரு கூட்டத்தில் ஒருவனைப் பிரித்துக் காட்டும் பிரிநிலைப் பொருளில் ஏகாரம் வந்தது.

- 65 - தமிழ் இலக்கணப்பூங்கா
எதிர்மறை ஏகாரம் :
சகுனி நல்லது செய்வானே? இது சகுனி நல்லது செய்யான் என்ற எதிர்மறைப் பொருளை உணர்த்தி வந்த எதிர்மறை ஏகாரம்.
இசைநிறை ஏகாரம் :
ஏஎ! இவளொருத்தி பேடியோ? என்பதிலுள்ள ‘ஏ’ இசைக்குறை நிவர்த்திக்க வந்த இசைநிறை ஏகாரம்.
ஈற்றசை ஏகாரம் :
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே - ஒரு பாடலின் முடிவை உணர்த்த அதன் ஈற்றடியில் வந்த ஈற்றசை ஏகாரம்.
ஓகார இடைச் சொற்கள்
ஒழியிசை ஒகாரம் :
V “படித்தற்கோ வந்தாய்?” என்பதில் நீ வந்தமை விளை
யாடவே என்று, சொல்லா தொழிந்த அர்த்தத்தையே
அழுத்தி நிற்பதால் இவ்வினா ஓகாரமானது ஒழியிசை ஓகார
மாயிற்று.
வினா ஒகாரம் :
தம்பி வந்தானோ? இது வினாப்பொருளில் வந்த வினா
ஒகாரம்.
உயர்வு சிறப்பு ஒகாரம் :
ஒ ஓ பெரியன் - மிகவும் பெரியன்தான் என்ற
அர்த்தத்தில் இந்த ஒகாரம் உயர்வைச் சிறப்பித்தது.
இழிவு சிறப்பு ஒகாரம் :
ஓ கொடியவளே! மிகக்கொடியவள் நீ என
இழிவைச் சிறப்பித்தது இந்த ஒகாரம்.
எதிர்மறை ஒகாரம் :
அவனையோ நம்புகிறாய்? என்ற வினா ஒகாரம்,
அவனை நம்பவேண்டாம் என எதிர் மறுத்து எதிர்மறை
ஒகாரம் ஆயிற்று.

Page 36
- 66 - தமிழ் இலக்கணப்பூங்கா
தெரிநிலை ஓகாரம் :
ஆணோ, பெண்ணோ வரலாம் - இங்கு இரு பாலாரும் வரலாம் எனத் தெரிவிக்கும் இந்த ஒகாரங்கள், தெரிநிலை ஒகாரங்களாகும்.
பிரிநிலை ஓகாரம் :
அவ்வூரில் இவனோ பட்டதாரி - ஒரு சமூகத்திலிருந்து ஒருவனைப் பிரித்துக்காட்டுவதால் இது பிரிநிலை ஓகாரம்.
அசை நிலை ஓகாரம் :
காண வாரீரோ - இங்கு அர்த்தமின்றியாயினும் பாடல்
வரியின் ஒசை, உணர்ச்சி என்பவற்றினைச் செப்பமாக்கி
நின்றதால் இது அசைநிலை ஓகாரம்.
சாரியை இடைச்சொற்கள் :
சாரியை இடைச்சொற்கள் ஏனைச்சொற்களில் அங்கமாகி நின்று, அவற்றின் உச்சரிப்பை இலகுபடுத்தியும், இனிமைப்படுத்தியும் வரும். சில சமயங்களில் வேற்றுமை உருபு செய்யும் தொழிலையும் (மலையில் வீடு), விகுதி செய்யும் தொழிலையும் (இல்லை - ஐ ) செய்து வரும்.
இல்லை - இல்+ ஐ - ஐ, எல்லிர்நும் = எல்லிர் + நும் - நும் மலையில் = மலை + இல் - இல், புளியம்பழம் = புளி + அம் * பழம் - அம், அதன் = அது + தன் - தன், பதிற்றுப்பத்து =பத்து + இற்று + பத்து - இற்று,
பக்கத்து = பக்கம் + அத்து - அத்து, முள்ளிற்கு = முள் + இன் + கு - இன், எண்ணு = எண் + உ - உ, அவற்றை = அ + அற்று + ஐ - அற்று அவன்றன் - அவன் + தன் - தன், அல்லாத = அல் + ஆ + த் + அ - ஆ. அவன்றான் - அவன் + தான் - தான், செல்கிறது செல் + கிறு + அ + து - அ எல்லார்நம் = எல்லார் + நம் - நம், உண்டனள் = உண் + ட் + அன் + அள் - அன்.

- 67 - தமிழ் இலக்கணப்பூங்கா
வடக்கத்தையார் = வடக்கு+அத்தை+ ஆர் - அத்தை, ஏற்றை = ஏறு + ஐ - ஐ பாடிடு - பாடு + இடு - இடு, தொடையல் - தொடை + அல் - அல்.
விகுதி இடைச்சொற்கள் :
அன், ஆன், ஒன் விகுதி இடைச் சொற்கள் ஆண்பால் காட்டும், அள், ஆள், ஒள் விகுதி இடைச்சொற்கள் பெண்பால் காட்டும் - அர், ஆர், ப, மார் விகுதி இடைகள் பலர்பால் காட்டும். என், ஏன், அல் கு, டு, து, று விகுதி இடைகள் தன்மை ஒருமை காட்டும். ஐ. ஆய், இ, அல், ஆல், ஏல், படு, உண், மியா முதலிய விகுதி இடைகள் முன்னிலை ஏவல் ஒருமை உணர்த்தும். (சில முன்னிலை ஒருமை உணர்த்தும்) எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும் விகுதி இடைகள் தன்மைப் பன்மை காட்டும், க, இய, இயர், இ. அ. அல் எனும் விகுதி இடைகள் இருதிணை ஐம்பால் மூவிடத்துக்குரியதான வியங்கோட் பொருள்காட்டும். இர், ஈர், - முன்னிலைப் பன்மை காட்டும். து, று, இவை ஒன்றன் பால் காட்டும். டு - இவ் விகுதி (ஆதிரை நாட்டு, குண்டு கட்டு) எனக் குறிப்பு வினைமுற்றுக்களில் ஒன்றன்பால் காட்டும். அ - இவ்விகுதி இடை பலவின்பாலை வி. முற்றில் காட்டும். பெயரெச்சத்தில் எச்சப் பொருள் தரும். ஆ இவ்விகுதி பலவின் பாலை எதிர்மறை வினைமுற்றில் காட்டும். இர், ஈர், மின் பன்மை ஏவலும், உம் விகுதி பன்மைஏவலும், (வினைமுற்றில்) ஒன்றன்பால், பலவின் பாலும், பெயரெச்சமும் உணர்த்தும்.
உ, ய், இ, இன், ஆல், ஏல், பு, ஆ, மல், மே, வழி, கு, இய, இயர், கால், கடை, வண்ணம், இடத்து, உம், வான், பான், பாக்கு, இல், மை, படி, வகை, பொருட்டு முதலிய வினையெச்ச விகுதி இடைச்சொற்கள் வினையெச்சப் பொருள் உணர்த்தும்.
‘அ’கர விகுதியின் சிறப்பு - தின்ற்அ எனப் பெயரெச்சப் பொருளிலும், தின்ன்அ என வினையெச்சப்பொருளிலும், பாடுகின்று அன்அ எனப் பலவின்பால் முற்றுப் பொருளிலும் கால்அன்அ 66 பலவின் பாலொடு உடைமைப் பொருளிலும், சுரக்க்அ என வியங்கோளிலும் வருவது அகர விகுதியின் சிறப்பாகும்.

Page 37
- 68 - தமிழ் இலக்கணப்பூங்கா
இகர விகுதியின் சிறப்பு :
ஒடுஇ என வினையெச்சப் பொருளிலும், உண்ண்இ எனக்காரணப் பெயர்ப்பொருளிலும், கண்ண்இ எனக் காரணப்பெயர்ப்பொருளோடு பெண்பாற் பொருளிலும்; நாடுத்இ என ஒருமை ஏவற்பொருளிலும் வாழ்இ என வியங்கோட் பொருளிலும் வருவது இகர விகுதியின் சிறப்பாகும்.
இடைநிலை உருபு இடைச்சொற்கள் :
ப், வ், இட்ைநிலை இடைகள் எதிர்காலத்தையும், ஆநின்று, கின்று, கிறு இடைநிலை இடைகள், நிகழ்காலத்தையும், த், ட், ற், இன் இடைநிலை இடைகள் இறந்த காலத்தையும், வினை முற்றுக்களில் காட்டுவதை முன்னர்க் கண்டோம்.
த் (வண்ணாத்தி), ச்(வலைச்சி), ஞ் (அறிஞன்), வ்
(ஓதுவார்) ந் (பொருநர்) என்பன காலங் காட்டாத பெயர்ச்சொல் இடைநிலைகளாகும்.
ஒலிக் குறிப்பு இடைச்சொற்கள் :
அம்மென, இம்மென, கோவென, சோவென, துடும் என ஒல்லென, படீர்என, படார்என, கடகடென, களகளென,
திடுதிடென, நெறுநெறென, படபடென, கலகலென, முதலியவை ஒலிக்குறிப்பு இடைச் சொற்களாம்.
அச்சக்குறிப்பு இடைச்சொற்கள் :
துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென போன்றவை அச்சப்பொருள் தரும் அச்சக்குறிப்பு இடைச்சொற்கள்.
விரைவுக் குறிப்பு இடைச்சொற்கள் :
பொள்ளென, பட்டென, சட்டென, விறுக்கென, பொருக்கென, கதும்மென, ஞெரேலென, சரேலென, என்பன விரைவுக் குறிப்பு இடைசொற்கள்.
அம்ம, ஒ, ஓகோ. வியப்பையும், பளபள, பளிபளிர். ஒளியையும், சேச்சே, சை மறுப்பையும் உணர்த்தும் குறிப்பு இடைசொற்களாம்.

69 - தமிழ் இலக்கணப்பூங்கா
அசைநிலை இடைச்சொற்கள் :
தனிக் கருத்தின்றி, வெறுமனே, 85(55gbl60L பிறசொற்களாம் வினைகள், பெயர்களோடு, இசை, உணர்ச்சி நிறைவு தந்து சார்த்தப்பட்டு நிற்பனவே அசைநிலை இடைச்சொற்கள். மற்று, மன், கொல், அந்தில், அம்ம, ஆர், மா, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஆங்க, ஈ, யாழ, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், இன், குரை, ஒகும், போலும் அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப முதலிய சொற்கள், அசைநிலை இடைச்சொற்களாய் வருவன. ஒழியிசை, ஆக்கம், கழிவு, முதலிய பொருள்களைத் தந்து வருவனவும் (மன் முதலியவை) இவற்றுளுண்டு. சுட்டு, வினா இடைசொற்கள் :
அ, இ, உ, என்னும் சுட்டுகளும், எ, யா, ஆ, ஒ, ஏ என்னும் வினாவெழுத்துக்களும், இடைச்சொற்களுள் அடங்கும். தொறும், தோறும் :
இவை ஏழாம், வேற்றுமைப் பல்பெயர் இடப் பொருளில் வரும் இடைச்சொற்கள்.
தான் இடைச்சொல்:
“அவன்தான் மனிதன்” எனப் பிரிநிலையாயும் அவன் மனிதன் தான் எனத் தேற்றப் பொருளிலும் இந்நாளில் *தான்’ எனும் இடைச்சொல் பெருவழக்காகப் பயின்று வருகிறது. இதனால் ஏகாரம் பிரிநிலை, தேற்றப் பொருள்களில் இன்று அதிகம் கையாளப்படுவதில்லை. ஆவது, ஆதல், ஆயினும், தான் :
இவ்விடைச்சொற்கள் கூழாவது, கஞ்சியாவது; கூழாதல் கஞ்சியாதல்; கூழாயினும் கஞ்சியாயினும்; கூழைத்தான் கஞ்சியைத்தான்; என விகற்பப் பொருள் தந்து வரும். சீ, சீசீ, சீச்சி, சை;
இவை இகழ்ச்சி குறிக்கும் இடைச்சொற்கள், அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ ஆஅ, ஒஒ. இவை இரக்கங் குறிக்கும் இடைச்சொற்கள்.
கூ, கூகூ, ஐயோ, ஐயையோ, ஐயஹோ, போன்றவை பேரச்சப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்.
ஆகா, ஆக, ஒகோ, அம்மா, அம்மம்மா. அச்சோ, போன்றவை அதிசயங் குறித்து வரும் இடைச்சொற்கள்,

Page 38
- 70 - தமிழ் இலக்கணப்பூங்கா
கொன் என்ற இடைச்சொல் அச்சம் பயனின்மை, காலம்,
பெருமை, ஆகிய நான்கு பொருளையும் தந்துவரும்.
வாளா, சும்மா, எனும் இடைச் சொற்கள் பயனின்மைப்
பொருள் தருபவை.
மன்ற தெளிவுப்பொருள் இடைச்சொல்லாகும்.
என, என்று ஆகிய இடைச்சொற்கள் :
வினைப் பொருள் :
மகன் பிறந்தான் எனக் கேட்டு - இங்கு என இடைச்
சொல் ‘பிறந்தான்’ வினையோடியைந்தது.
பெயர்ப் பொருள்:
அழுக்காறென ஒரு பாவி - இங்கு என இடைச்சொல்
அழுக்காறு என்ற பெயரோடியைந்தது.
எண்பொருள் :
நிலமென, நீரென, தியென - இங்கு “என எண்ணோ
டியைந்தது.
பண்புப் பொருள் :
வெள்ளென - இங்கு “என’ பண்போடியைந்தது.
குறிப்புப் பொருள் :
பொள்ளென வியர்த்தாள் - இங்கு “என” குறிப்
போடியைந்தது.
இசைப் பொருள் :
பொம்மென வண்டிசைக்கும் - இங்கு ‘என இசையோடி
யைந்தது.
உவமைப் பொருள் :
புலி பாய்ந்தெனப் பாய்ந்தான் - இங்கு “என’
உவமையோடியைந்தது.
எண்ணுப்பொருள் இடைச்சொற்கள் :
இவ்வகையில் உம், ஏ, என, என்று, என்பவற்றோடு,
என்றா, என, ஒடு ஆகிய இடைசொற்களும் அடங்கும்.
இசைநிறை இடைச் சொற்கள் :
தெய்ய, தில்ல, ஒகு என்பன இசை நிறை இடைச்சொற்களாம். இணைப்பு இடைச்சொற்கள் :
ஆனால், ஆயின், எனவே, எனினும், ஆகவே, இதனால், அதனால். 3.

5
- 7 - தமிழ் இலக்கணப்பூங்கா
يشبه பயிற்சி 5 கீழ்க்காணும் விகுதிக் கூட்டங்கள் மொத்தத்தில் உணர்த்தும் பொருள்களைத் தருக. 1. அன், ஆன் 2. அர், ஆர் 3. து, று 4. அள், ஆள், 5. அ. ஆ, 6. ஆய், ஐ, ஒய் 7. இர், ஈர், மின், உம்
8. க, இ, இய, இயர், அ 9. அம், ஆம், எம், ஏம், ஓம்
10. என், ஏன்.
பின்வரும் சொற்களிலுள்ள சாரியைகளைக் கண்டு எடுத்தெ
(gglé5. 1. பின்னங்கால் 2. தின்றது 3. அவிழ்ந்தன 4. இல்லை 5. (црівдBgђgЫ 6. பதிற்று
7. அவற்றை 8. மதிலின் மேல் 9. மேற்கத்திய 10. கானுவார்.
இங்கே வருவன எவ்வெவ் வகை உம்மைகள் எனக் கூறுக. 1. அரசனும் ஆண்டியாவான் 2. மொட்டைச்சிக்கு வாய்த்தவை மூன்றும் அப்படி 3. பெண்ணென்றால் பேயும் இரங்கும் 4. இரக்கப் போனாலும் சிறக்கப்போ 5. படிக்காவிட்டாலும் பாடசாலைக்குப் போ 6 படித்தவர்களுக்கும் விளங்கவில்லை 7. தோணி கவிழ்ந்தாலும் கவிழும் 8. பட்டும் படாமலும் பேசினார் 9. செய்யும் தொழிலே தெய்வம் 10. காலம் ஒருநாள்மாறும் 11. பொய்சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது. 12. வந்ததும் புறப்பட்டான்.
எவ்வகை ஏகாரங்கள் இவை? 1. அம்மா தம்பி வந்தானே 2. அவள் சொன்னதுஞ் சரியே 3. நாடகக்கலையே என்னை மிகவும் கவர்ந்த கலை 4. சிந்துநதியின் மிசை நிலவினிலே 5. பிச்சை எடுத்தே கோடீஸ்வரனாகப் போகிறாய்?
எவ்வகை ஓகாரமெனக் கூறுக.
1. களவெடுத்தவன் திருப்பித் தரப் போகிறானோ 2. அவர் நாளை வருவாரோ? 3. SEDD DIT ! Srň856îT என்னைப் பெற்றோ வளர்த்திர்கள்? 4. நண்பரோ பகைவரோ யாருக்கும் உதவுவேன் 5. செம்பாட்டான் மாம்பழச் சுவையோ சொல்லத்தேவையில்லை.
பெயரா? வினையா? இடையா? உரியா? எனக்கூறுக. கூர், தேள், நிகள், கமழ், உறழ், மாண், செழு, மேய்ந்து. ஓடிய, உழவு, குருசேத்திரம், நனி, ஆச்சிரமம், அம்ம, பவழ மல்லிகை.

Page 39
தமிழ் இலக்கணப்பூங்கா
- 72
|(109
“Tıç,9||Gn | '1ņ91/T1,9 ugi1ĝ09|JJI 鱷鰭變鱷轉麟*請 1,9 [](\s?- -·- - -was,،�- (918họ9||9轉Q9|Jo0ŪĶoņ9]]?与9ET長3EsQ91|? *:90091.JPG9m写990 R创m写9901199ơnபு999ர்யகிகு 鱷|鱷|*鱷體體銅韃 9шП3)--II(Uış9Ľng)|-omulgốq$@‘&“Togo &spné99函ég劑é出羽命羽羽6smloq "G)는長98·(sq. 'qison Įgi@qoßgi吸取Kns@ą (g.且沿坦km总9940 長9田 || Q9的道Jon鱷G3u因取写Lコ韃鱷 项羽909 h习u设啦的一般取取煙過煙白病* "酷°弗tumne U는guggg昭�电 *%強弓* 蘇駐soția sp | qi@ssmg | soos Tự | àɔũ, 199f9IÙlfR9的数目岳
Øශ්‍රw? இடி"TIJTu99)一运g色取9oos[jj].{? *韃4丁igg一因姆色99solo‘长巨9990,*U9韃0 Ļ9]+?Q99||4Q9与9999?坦电9qQR9‘追写R9武"Ју59)|99||9 “у9Л名"g"**sg Įmne)£ șmo)q19949弓且f) Įmrio)Įmne)hm 1,909φι£909§@₪9|(9 己omé月u恩輯長%。mo*—"鱷。 鱷 9tómk데,șólso
田C979Q9仁98) %urn그8
968ms &sua9%長969명9

- 73 - தமிழ் இலக்கணப்பூங்கா
உரிச்சொல் வகைகள்
உரிச்சொற்கள்:
பொருட்கு உரிமை பூண்ட குணங்களைக் குறிக்குஞ் சொற்கள் உரிச்சொற்களாம். உயிர்ப் பொருள்கள், சடப்பொருள்கள் ஆகிய இருவகைப் பொருள்களுக்கும் குணப் - பண்புகளும், தொழிற்பண்புகளும் உள. உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள் அறிவு, அச்சம், சினம், களிப்பு, முதலியன. அவற்றின் தொழிற் பண்புகள் உண்ணல், உலவல், உயிர்த்தல், உறங்கல் முதலியனவாம். சடப்பொருள்களின் குணப்பண்புகள், நிறம், மணம், வடிவம் முதலியன. அவற்றின் தொழிற்பண்புகள் உடைதல், ஒட்டுதல், சுருங்குதல், வீங்குதல், உதிர்தல் முதலியன.
உரிச்சொற்கள் தொழில், குணப் பண்புக் குறியீடுகளே. பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் விட்டு இயங்காத நிலையிலும் வேர்ச் சொற்களாயுள்ளதால் வேறாகக் குறிக்கப்படுகின்றன.
இவ்விருவகைப் பொருட்களதும் இருவகைப்பண்புகளா கிய குணப்பண்பு தொழிற்பண்புகளைக் குறித்துவரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். பண்புகளும், தொழில்களும் பொருள்களாகவும் கொள்ளப்படுவதால் அவை குறித்த உரிச்சொற்களும் சில சமயங்களில் பெயர்ச்சொற் களாகவும் கொள்ளப்படும் (உ+ம் செழு : செழுமை). இவ்வுரிச் சொற்களுள் ஒரு குணத்தை உணர்த்துஞ் சொற்களும் உண்டு. பல குணங்களை உணர்த்துஞ் சொற்களும் உள.
ஒரு குணம் உணர்த்தும் உரிச்சொற்கள்:- 1) சால் - அறிவு சால் சபையோரே: 2) உறு - உறுபுனல் தந்து உலகூட்டி, 3) தவ - ஈயாது வீயும் உயிர்தவப் பலவே 4) நனி - நற்றவர் வானில் நனி சிறந்தனவே 5) கூர் - துனி கூர் எவ்வமொடு 6) கழி - கழி கண்ணோட்டம் - இவை மிகுதி எனும் ஒரு குணம் உணர்த்தி வந்த உரிச்சொற்கள்.
பலகுணம் உணர்த்தும் உரிச்சொற்கள்
செழு - இந்த உரிச்சொல் செழும் பல்குன்றம் என
வந்து வளம்மிகு எனும் குணத்தையும், செழுந்தடி என வந்து
கொழுப்புடைமையான குணத்தையும் ஆக இரு குணங்களை

Page 40
தமிழ் இலக்கணப்பூங்கா
- 74
கொண்டுள்ளது. கடி என்னும் உரிச்சொல்லும் இவ்வாறு பல குணங்களைக் குறிக்கும். குழ,
தன்மை
கெழு, கவவு, தெவு, ஏ, வெம்மை, பருமை, எய்யாமை, பேண்,
கம, நளி, நள், பொற்பு, வம்பு, பழுது, வறிது, தட, பணை,
கறுப்பு, துறுதல் நம்பு என்பனவும் உரிச்சொற்களே.
உணர்த்தும்
உரிச்
இடைச்சொற்களும்,
ன்கள்
பெயரையோ வினையையோ சார்ந்து நின்று மட்டும்
உணர்த்துவதால்
நிலை உருப
சொற்களும் சார்பு நிலை உருபன்கள் எனப்படுகின்றன.
சார்பு
பொருள்
σιω9ιρ9φ,Jiccolgoris@line)ąjun | sourie)ņ1,909$ | qu flog)ụsgiĝi gg母ヒココолсо999пọ91/n199Ų909rı1,909.go.io|09ð]ტ 田C9병는「mnσπαρ99)βύọ9ųnış90Ūış9&1,909ŲŤ.“G”??gan ഢ9്യ99dിсло09ц9пoo qounļasn | 1,909$ụm-oцрпӧлп ge場ヒココGicq9@&Seun長9그8) || 968城Un「여 || U9듣그長9「여 占自唱ió qfilosops 因Q9唱七nnɑnɑɑ9@&ҫ9шпg9dlig9631,909), soq1109Lru9 0Q99因Gıdolçonguコgauコ| gunonusegq11;q1 ഢ9്യ99ഠിqn(099]])ტgungauコ gunonusegĝi 巨909写:可巨Q9写:可 ges」ココшӕпgc919Lænọ91In巨909写:可9)ņ09/09 田C9道U그nanggo@@ọ91Irlığ90Ūış9&巨909写:可Ļsug'g)& 因Q9唱七Tnалса99пọ9 Unųosn | 1,909$ụm-wцу99еол gg掲セココɑnɑ9@@су9шп09п9)巨909顷七mT目Ģ1,91909? 思C9병는 그nɑnɑɑ99)&Q9与巨求。一巨Q9跟七mTaış9úņ9LGT 역「구역1ţiereqþunsoos osyoołįmnuo

.
- 75 - தமிழ் இலக்கணப்பூங்கா
பயிற்சி - 6
அ. கீழ்க் காணும் பெயர்களுக்குத் திணை, பால், எண்,
இடம் என்பன கூறுக: கண்ணன், காற்று, கலைச்செல்வி, படகு, தண்ணிர், கவிஞர், படையாட்கள், நீவிர், நாம், பறவைகள்.
ஆ. பின்வரும் வினைமுற்றுகளின் திணை, பால், எண்,
இடம் என்பவற்றைத் தருக. உருக்கினான், உண்டன, LD6)(5lb, வனைந்தாள், வாழ்க, எழுமின், வருவேன், நீந்திற்று, போ, உண்பல்
பின்வரும் தொடர்களில் / சொற்களில் உள்ள வழுக்களைத் திருத்துக.
.
1) குமணனது தந்தையார் 2) பல அறிஞர்கள் 3) ஒவ்வொரு பொந்துகளிலும் 4) ஒர் மனிதன் 5) பட்டுச் சாத்துவோம் 6) சுடுதண்ணிர் 7) நான் அல்ல 8) காதுக்குடும்பி 9) ஒறனை மாடு 10) செலவழிக்காதே 11) மண்ணெண்ணை 12) அரை நார்க்கயிறு 13) புஸ்பராசாவும் சுரேஸ்குமாரும் 14) பேரூந்து 15) அருவிவெட்டு 16) ஐநூறு ரூபா 17) காடுவாசாதி 18) பாண்கிணறு 19) பிரட்டற்கறி 20) எந்தன் உள்ளம் 21) பேந்து வா 22) கூட்டத்திற்குச் சமூகமளிக்கவும் 23) எல்லுப்போலை புகையிலை 24) வெள்ளண வா 25) தேனீர்க்கடை 26) எண்ணுற்றியெழுபது 27) மூட்டைப் பூச்சி 28) கை கோர்த்து நின்றென்ன 29) உரைஞ்சிக் கழுவு 30) மயிர்க்குட்டி பட்டது 31) பங்குப்புக்கை 32) விடியப்பறம் 33) பிரளிக்காரன் 34) கல்விக்கு ஊக்கிவிக்கவும் 35) தலைமை வகுப்பார் 36) நாலுமுச்சந்தி 37) நொங்குக்குலை 38) தாய்ச்சிக் சட்டியில் வடை சுடு 39) அரியண்டம் பண்ணாதே 40) சீயாக்காய் 41) பலிக்கிடாய் 42) மினைக்கேடு 43) பச்சடிபோடு 44) தாவாரம் 45) பூசணிக்காய்

Page 41
- 76 - தமிழ் இலக்கணப்பூங்கா
46) கறணைக்கிழங்கு 47) முருக்கங்காய்க்கறி 48) கற்பூரம் 49) கழுநீர்க்கஞ்சி 50) கொடுவாக்கத்தி 51) சுகயினம் 52) திருவலகு 53) வானிர் 54) சிற்றுாண்டி 55) ஆளுனர் 56) பதட்டம் 57) முன்னுறு பிள்ளைகள் 58) கிறுகிவா 59) ஆராட்சி 60) பீச்சாண்டி 61) நீயோ அல்லது அவனோ
Gua6)Tib.
கீழ்வரும் இணைப்பதங்களைப் பொருள் வேறுபாடு தோன்ற வசனங்களில் வைத்தெழுதுக:
1) குழவி, குளவி, 2) உழவு, உளவு 3) சூழ், சூள் 4) ஆழ், ஆள் 5) தாழ், தாள் 6) அழகு, அளகு 7) கழை,களை 8) உழை, உளை, 9) அழை, அளை, 10) தழை,தளை 11) தோழன், தோளன் 12) ஆழி, ஆளி 13) வாழி, வாளி 14) இழை, இளை 15) கேழ், கேள் 16)ஒழி,ஒளி 17) கழி,களி 18) அழி,அளி 19) விழி, விளி 20) குழி, குளி 21) வழி, வளி 22) சுழி, சுளி 23) தெழி, தெளி 24) கொழுத்து, கொளுத்து 25) சோழன், சோளன் 26) விழை, விளை 27) முழை, முளை 28) தேனிர், தேநீர் 29) அன்னாள், அந்நாள் 30) எழிலி, எழினி 31) மானி, மாணி 32) அலகு,
அலகை 33) அவற்கு, அவர்க்கு 34) சமுகம், சமூகம் 35) முத்தாரம், முற்றாரம் 36) துறந்தான், திறந்தான் 37) உழு, உளு 38) இழி, இளி 39) வாழ், வாள்
40) பொழி, பொளி 41) ஊன், ஊண்.

- 77 . தமிழ் இலக்கணப்பூங்கா
சொற்புணர்ச்சி வகைகள்
வேற்றுமைப் புணர்ச்சி
சொல்லோடு சொல்வந்து சேரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப்புணர்ச்சி என இருவகைப்படும். வேற்றுமைப் பொருளில், உருபு வெளிப்பட்டேனும், தொக்கேனும் நின்று, வருஞ்சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும் உ+ம்: பாட்டைப் பாடினாள். ஒவியம் தீட்டினான். ஆயினும் வேற்றுமைப் புணர்ச்சி விதிகள் பெரும்பாலும் இத் தொகைகளைக் கருத்திற் கொண்டே கூறப்படுகின்றன.
அல்வழிப் புணர்ச்சி
வேற்றுமைத் தொடர் தவிர்ந்த எல்லா வகைத் தொடர்களுள்ளும் வரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்படும். இவை 14 வகைப்படும். இந்தப் பதினான்குவகை அல்வழித் தொடர்களுள் 5 தொகைநிலைத் தொடர்கள்; 9 தொகா நிலைத் தொடர்கள்.
தொகைநிலைத் தொடர்கள் 1) வினைத்தொகை - ஒடுமீன் 2) பண்புத்தொகை - கருவிழி 3) உவமைத்தொகை - கொவ்வைஇதழ் 4) உம்மைத் தொகை - அட்டமிநவமி 5) அன்மொழித்தொகை - துடியிடை (வந்தாள்)
தொகாநிலைத் தொடர்கள்
1) எழுவாய்த் தொடர் - நாம் வெல்வோம் 2) விளித்தொடர் - வீரனே செல் 3) தெ.நி.வி.மு. தொடர் - வந்தது விடிவு 4) கு.வி.மு. தொடர் - பெரியன் அவன் 5) பெயரெச்சத்தொடர் - கொண்ட கொள்கை 6) வினையெச்சத்தொடர் . ஒயவேண்டாம் 7) இடைச்சொற்றொடர் . அந்தோ கொடுமை 8) உரிச். சொற்றொடர் . குழக்கன்று 9) அடுக்குத் தொடர் - பாம்பு பாம்பு
இயல்புப் புணர்ச்சி
வேற்றுமைப் புணர்ச்சிகளும் அல்வழிப் புணர்ச்சிகளும் நிகழும் இடங்களில் நிலைமொழி வருமொழிகளில், தேtன்றல், திரிதல், கெடுதல், ஆகிய விகாரங்களில் எதுவும் இடம் பெறவில்லையாயின் அவை இயல்புப்புணர்ச்சி எனப்படும். உ+ம் மீன்வாடி, மரம் வளர்ந்தது.

Page 42
- 78 - தமிழ் இலக்கணப்பூங்கா
விகாரப் புணர்ச்சி
தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய விகாரங்களில் ஒன்றோ பலவோ ஏற்பட நிகழ்வது விகாரப்புணர்ச்சி
எனப்படும். உ+ம்: பள்ளி + படிப்பு = பள்ளிப்படிப்பு - தோன்றல், வாள்+போர்=வாட்போர் - திரிதல், வாசம்+மலர் - வாசமலர் . கெடுதல், பனை+காய் = பனங்காய் -
இங்கே “பனை”யின் ஐ கெட்டு அம் தோன்றி பன்+அம் ஆகி, வருமொழி முதலான “க்"இன் இனமாக "ம்" திரிந்து ‘ங்’ ஆகிப் பனங்காய் என வந்தது. பனை + அட்டு = பன்+அட்டு = பன் ஆட்டு - பனாட்டு
பொதுவாகப் புணர்ச்சி வகைகள்
1.
ஒருசொல்லின் உயிரீற்றோடு ஒருசொல்லின் உயிர்முதல் வந்து புணர்தல். வாழை + இலை - வாழையிலை, 2. உயிரீற்றோடு மெய் வந்து புணர்தல். பாளை + சிரிப்பு - பாளைச்சிரிப்பு. 3) மெய்யீற்றோடு உயிர் வந்து புணர்தல் - சொல் + அமுதம் = சொல்லமுதம். 4. மெய்யிற்றோடு மெய்முதல் வந்து புணர்தல் - கால் + வண்ணம் = கால்வண்ணம் என 4 வகைப்படும்.
இப்புணர்ச்சி பெரும்பாலும், வேற்றுமையில் விகாரப்பட்டும்,
அல்வழியில் இயல்பாயும் இடம்பெறும்.
வேற்றுமை, அல்வழிகளில் இயல்பாகப் புணர்பவை:
1.
சொல்லின் ஈறாகவரும் 23 எழுத்துக்களுடனும் வந்து புணரும் ஞ், ந், ம், ய், வ். விள+ஞாற்சி = விளஞாற்சி விள+ஞான்றது= விளஞான்றது பலா+நிழல் = பலாநிழல் பலா+நூறு - பலாநூறு மலர்+மது = மலர்மது மலர் +விழி = மலர்விழி ஊழ்+வெற்றி = ஊழ்வெற்றி ஊழ் + வினை = ஊழ்வினை கான்+யாறு = கான்யாறு தேன்+யார்க்கு- தேன்யார்க்கு
பொதுப்பெயர் உயர்திணைப்பெயர் ஈற்று மெய்களோடு வந்து புணரும் வல்லினங்கள் (க்,ச்,த்,ப்).
.."
ட்” ஆகத் திரியு .
சேந்தன் கை சேந்தன் கண்டான்
பெண்பழி பெண் பார்த்தாள் மன்னர்செருக்கு மன்னர் தருக - “த்” வல்லினம் மட்டும் ஆண்+தகை = ஆண்டகை என

- 79 - தமிழ் இலக்கணப்பூங்கா
இப் பெயர்களின் உயிர் ஈறுகள், ய், ர் ஈறுகளுடன் வந்து புணரும் வல்லினங்கள்.
நம்பி கை நம்பி புதியவன் நங்கை கண்கள் நங்கை சிரித்தாள் அவர் தயவு அவர் தடுத்தார் தாய் பரிவு தாய் பரிந்தாள்
தாய்ப்பாசம் என வேற்றுமையில் மிகலும்,குமரக்கோட்டமென ஈறுகெட்டுமிகலும், அல்வழியில் அரச தலைவன் 66 ஈறுகெடலும் உண்டு.
4.
10.
1.
12.
13.
4.
15.
6.
ஆ, ஒ, ஏ, வினா ஈறுகளோடும், யா வினாவோடும் வந்து புணரும் வல்லினங்கள்: தம்பியா தந்தான்? அவனோ துடிப்பான்? உலகமே கவலைப்படும்? யா பெரிய? விளிப்பெயர்களில், மெய், உயிர் ஈறுகளுடன் வந்து புணரும் வல்லினம்: அண்ணா கேளாய், தாயே பொறு, கிள்ளாய் பற. முன்னிலைஈற்று உயிர்கள், ய்,ர்,ழ் மெய்களுடன் வந்து புணரும் வல்லினங்கள்; தின்றனை கண்ணா கண்டாய் கணேசா, புனைவீர் பாக்கள், வாழ் சிறந்து. ஏவல் ஈற்று உயிர், ய், ர், ழ் மெய்களுடன் வந்து புணரும் வல்லினங்கள்: போ கொடியா, செய் சிறுவா, சேர் சிவகுமாரா! தாழ் பாதகனே. செய்யிய எனும் வாய்பாட்டுச் சொற்களுடன் வந்து புணரும் வல்லினங்கள்: உண்ணிய சென்றான், செய்யிய பார்த்தான். பலவின்பால் வி.மு. ஈற்று அகரத்துடன் புணரும் வல்லினங்கள்: கூவின பூங்குயில், நல்லன தேடு. பெயரெச்ச ஈற்று அகரங்களுடன் புணரும் வல்லினங்கள்: அடித்த பந்து, ஒடுகிற தண்ணிர் 6ஆம் வேற்றுமை உருபு 'அ' வுடன் புணரும் வல்லினங்கள் தன சிறகுகள் பல,சில என்பவற்றின் ஈற்று அகரங்களுடன் வந்து புணரும் வல்லினங்கள்: பல குதிரை, சில பழக்கங்கள். ‘வாழிய” ஈற்று அகரத்துடன் புணரும் வல்லினங்கள்: வாழிய தாயே, வாழிய பரனடி. “வாழ்க’ ஈற்று அகரத்தொடு வந்து புணரும் வல்லினங்கள்: வாழ்க பண்பு, வாழ்க தமிழ்ப்பற்று. “வாழி” ஈற்று ‘இ’ யுடன் வந்து புணரும் வல்லினங்கள்: வாழி கருணை, வாழி செங்கோடன். "அம்ம’ ஈற்று அகரத்துடன் வந்து புணரும் வல்லினங்கள்: அம்ம பெரிது, அம்ம துர்க்கா

Page 43
- 80 - தமிழ் இலக்கணப்பூங்கா
17. “நீ” என்பதன் ஈற்று ஈகாரத்துடன் புணரும் வல்லினங்கள். நீ
பெரியன், நீ சிரி
18. ஏ,ஓ இடைச்சொற்களுடன் புணரும் வல்லினங்கள்: அவனே
தீரன், அவளோ பாவி.
19. வேற். உருபுகளான, ஒடு, ஒடு, அது; எண்களான, ஒரு, இரு அறு, எழு; வினைத்தொகைகளான, அடு, விடு, புகு முதலியவைகள்; சுட்டுக்களான அது, இது, உது; வினாவான எது என்பவற்றின் ஈற்று உகரங்களோடு வந்து புணரும் வல்லினங்கள்: தேக்கினது காடு, இரு சுடர், அடு களிறு, புகுபுனல், உது பிழை, எது தண்ணளி?
20. உகரம் பெற்ற ஏவல் வினைகளின் ஈற்றுகரங்களோடு வந்து புணரும் வல்லினம்; உண்ணு தம்பி, உரிது பார்ப்போம்.
21. குயின், ஊன் ஈற்று “ன்” உடன் புணரும் வல்லினங்கள்
குயின் கடுமை, ஊன் பசிது.
மிக்குப் புணர்பவை
எகர வினா, அ, இ, உ சுட்டுக்களுடன்
(1) உயிர் எழுத்துக்களும், யாவும் புணர 'வ்' தோன்றும். எவ்விடம், இவ்விடம், உவ்விடம், எவ் யானை, இவ்யாண்டு. (2) பிறமெய்கள் புணர அம்மெய்கள் மிகும். எந்நாடு,
உந்நாடு, எம்மண், இக்குடி, உவ்வீடு
சாவ என்பதுடன் க்ச்த்ப் தம் புணர்ச்சியில் மிகும் சாவக்குத்தினான், சாவப்போகிறான், சாவத்திரிகிறான்.
சாவ 'வ' கெட்டுச் சா என நின்றும் இப் புணர்ச்சியில் மிகும். சாக்குத்தினான், சாப்பாடல். செய்ய வாய்பாட்டு ஈற்று 'அ' வுடன் க்,ச்,த்,ப் மிக்குப் புணரும். ஒடக் காண்பது, செய்யப்போவது.
வினையெச்ச ஈற்று ‘இ’ யுடன் க்ச்த்ப் மிக்குப் புணரும். பாடிப் பறந்தன. இன்றித் தின்னான்.
குறில் வழி ய், உடனும், ஐ, நொ, து வுடனும் வந்து புணரும் ஞ், ந்,ம் இரு வழியிலும் மிகும்.
வேற்றுமைப்புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி மெய்ந்நிலை மெய்ந்நின்றது கைம்மேல் கைம்முறிந்தது
நொந்நாகா

81 - தமிழ் இலக்கணப்பூங்கா
விசேடமான புணர்ச்சிகள்
ண், ள், ன், ல், உடன், ந்:
ண், ள் ஈறுகளுடன் வேற்றுமை, அல்வழியில் புணரும் ந் ஆனது ண ஆகத் திரியும். கண்+ நீர் = கண்ணிர் பெண் + நின்றாள் = பெண்ணின்றாள் கள் + நீர் = கண்ணிர் கள் + நிரப்பு = கண்ணிரப்பு ன்,ல் உடன் ‘ந்’ புணர்கையில் ‘ன்’ ஆகத் திரியும். பொன் + நகை= பொன்னகை பொன் + நன்று = பொன்னன்று கல் + நிலை = கன்னிலை வில் + நீளம் = வின்னிளம்
உயிருடன் உயிர் புணர்தல் உயிர் எழுத்துடன் உயிர் எழுத்து உடம்படுமெய் பெற்றே புணரும், சொல்லின் இ, ஈ, ஐ ஏ ஈறுகளுடன் உயிர் வந்து புணர்கையில் 'ய்' உடம்படுமெய் பெறும்.
கேணி + ய் + அருகே = கேணியருகே, நீ ய் என்றேன், அவையடக்கம், தேயிலை.
இதுபோல அ, ஆ, உ, ஊ, ஏ, ஒ, ஓ, ஒள ஆகிய ஈறுகளோடு உயிர் எழுத்துக்கள் வந்து புணரும்போது வ் உடம்படுமெய் தோன்றும். (பலவாறு, அண்ணாவரங்கு, சேவுழுதன, நொவ்
விடை, கோவில், வெளவென்றான். ‘ஏ’ ஈற்றோடு நிகழும் உயிர்ப்புணர்ச்சி ‘ய்‘ உம், ‘வ்‘ உம் பெறும்).
குற்றியலுகரத்துடன் உயிர்கள் வந்து புணர்தல்
உயிர் எழுத்து வந்து புணரும்போது குற்றியல் உகரம் மெய்யை விட்டு நீங்கும். சங்கு + அறுப்பது = சங்கறுப்பது என நின்ற மெய்ம்மேல் உயிர்வந்து ஒன்றும். குற்றுகரத்தோடு யா வந்து புணரின் அக்குற்றுகரம் குற்றிகரமாக, ஆண்டு + யாது = ஆண்டியாது என மாறும். உயிர்த்தொடர்க் குற்றுகரம் (கயிறு) நெடிற்றொடர்க் குற்றுகரம் (நா‘டு”) என்பவற்றுள் றுவும், டுவும் வேற்றுமைப் புணர்ச்சிகளின் போது தமது ஒற்றுக்கள் இரட்டிவரும். உ+ம்: கயிற்றுக்கட்டில், நாட்டழகு அல்வழியில் “ஆடுகால்” “ஆறுவயது” எனவும் 2ஆம் வேற்றுமைத் தொகையில் “பயறுதிரி” “செவிடு நீங்க” எனவும் ஒற்று இரட்டாது, இயல்பாக வருமிடங்களுமுண்டு.

Page 44
- 82 - தமிழ் இலக்கணப்பூங்கா
மென்றொடர்க் குற்றியலுகர மெல்லொற்றுக்களில் பெரும்பாலன வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வல்லொற்றுக்களாகத் திரியும். கன்றா = கற்றா, கருப்புவில், நச்சுப்பை, மருத்துநீர் சில குற்றுகரங்கள், வேற்றுமை, அல்வழிகளில் ஐகாரமாகத் திரிந்தும் புணரும். பண்டு + காலம் = பண்டைக் காலம், ஆட்டைத்திவசம் இவை சில தனித்தும் “ஐ’ ஆகத் திரிந்து நிற்கும்
ஏறு = ஏற்றை, ஆண்டு = ஆட்டை, ஒற்றை, இரட்டை
பல, சில - புணர்ச்சி இவற்றில் ஒவ்வொன்றும் தன்னொடு தான் புணர்கையில் பல பல, சிலசில என இயல்பாயும் பலப்பல, சிலச்சில என மிக்கும், பல்பல, சில்சில என அகரங்கெட்டு நின்ற 'ல்' ற் ஆகத் திரிந்து பற்பல, சிற்சில என்றும் புணரும். பல, சில என்பவற்றோடு பிற சொற்கள் வந்து புணரும்போது ஈற்றகரங்கெட, பல்சாலை, சில் பொழுது என நிற்றலும், மெல்லினம் வர னகரமாகத் திரிதலும் (பன்முறை, சின்னாள்) வல்லினம் வர றகரமாகத் திரிதலும் உண்டு. (பற்குணம், சிற்குணம்) உயிர்வந்து புணரின் ‘ல்‘ ஆனது இரட்டலும் உண்டு. (பல்லியம், சில்லியம்) தனிக்குறிலின் பின்னால் வரும் ஒற்று தன்னுடன் உயிரெழுத்துப் புணருங்கால் இரட்டித்து நிற்கும், உ+ம்: கண்+அழகி= கண்ணழகி கள் + அருந்தேல் = கள்ளருந்தேல்.
தனிக்குறில் அல்லாதவற்றைத் தொடர்ந்த ண்ன் மெய்களோடு ‘ந்’ மெய்வந்து புணரும்பொழுது அந்த ண்ன் கள் கெட இந்த ந் அவை யாகத் திரிந்து நிற்கும். தூண் + நிலை = தூணிலை, தூண் + நான்கு = தூணான்கு, வான் + நிலை வானிலை, வான் + நாடு = வானாடு.
R
இத்தொடர் ள் ஈற்றுடன் புணரும் ந் உம், ல் ஈற்றுடன் புணரும் ந் உம் இவ்வாறே ண்,ஆகவும் ன் ஆகவும் மாறிநிற்க ள், ல் கள் கெடும். வாள் + நுதல் = வாணுதல், கால் + நகம் = கானகம்.
தன், என், எனும் ன் ஈறுகள் (வேற்றுமை வழி) வல்லினம் வர ‘ற்‘ ஆகியும் (தற்பகை, எற்பகை) நிற்கும், ‘நின்’ வல்லினத்துடனும் நின்பகை என இயல்பாகப் புணரும்.

- 83 - தமிழ் இலக்கணப்பூங்கா
மகர ஈறுகள்:- மகர ஈற்றுச் சொல்லிற்றும்’கள் க்ச்த்ப் அல் வழியில் வந்து புணர அவற்றின் இன மெல்லெழுத்துக்களாகத் திரியும். நாங்களிப்போம், இளங்குயிலே. வேற்றுமையில் ‘ம்’ கெட்டவழிவல்லெழுத்து, அல்லது அதன் இன மெல்லெழுத்து மிகும் (குளக்கரை, மரங்கொத்தி) உயிர், மெல், இடை எழுத்துக்கள் இயல்பாகவே புணரும் (குளம் அடை, குளம் நிறைக, குளம் வெட்டு)
‘ம்‘ ஈறுகெட்டவழி உயிரீற்று விதிகளின்படி இவை புணரும். நும், தம், எம், நம் என்பவற்றின் ஈற்றும்’கள், தம்முடன் (வேற்றுமை வழியில்) வந்து புணரும், ஞ்,ந் களாகவே தாமும் திரியும், நுஞ்ஞாண், நந்நாடு
ல், ள், ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சிகள்: தனிக்குறில் தொடர், ல், ள், ஈற்றுடன் இருவழியிலும் ‘த்” புணர, ல்=ற் ஆகவும் ள்-ட் ஆகவும் திரியும். கல் + தீமை = கற்றிமை கல் + தீது = கற்றிது, முள் + தீமை = முட்டீமை, முள் + தீது = முட்டீது, வந்து புணர் ‘த்’ ஆனது ‘ற்’ ஆகவும் ‘ட்‘ ஆகவும் திரிந்தமையும் காண்க. இவை கட்றீது, மு.டீது எனவும் நிற்கும். தனிக்குறிலல்லாதவை தொடர் ல்,ள் என்பன “த்” வந்து புணர்ந்து இருவழியிலும் ற் ஆகவோ ட் ஆகவோ திரியுமிடத்துக்கெடும். தென்றல் + தீமை = தென்றறிமை, தென்றல் + தீண்டி = தென்றறிண்டி வேள் + தீமை = வேடீமை, தாள் + தலை = தாடலை இதுவன்றி, தாள் + தாமரை = தாட்டாமரை வாள் + தடம் = வாட்டடம், நூல் + தொகுதி = நூற்றொகுதி, வயல் + தரை = வயற்றரை எனத் திரிந்தும் ‘ள், ல்’ கெடாமல் நிற்றலுமுண்டு
தனிக்குறில்வழிக் (கல்,முள்,முதலிய)ல்,ள் ஈறுகள் வேற்றுமை வழியில் கற்குறை, முட்குறை எனத்திரிந்து புணர்ந்து நிற்கும். அல்வழியில், திரியாமல் கல்குறிது, முள்கொடிது எனவும், திரிந்து கற்கொடிது, முட்கொடிது எனவும் நிற்கும். ஏனையவை தொடர் ல்,ள்,கள் அல்வழியில், நூல்படி, கோள் சொல்லாதே என இயல்பாயும், வேற்படை, கட்பானம் என விகாரப்பட்டும் புணரும். வேற்றுமை வழியில் கால்குதித்து,

Page 45
- 84 - தமிழ் இலக்கணப்பூங்கா
வாள் போழ்ந்து என இயல்பாயும் புணரும். “இல்’ எனும் எதிர்மறைப் பண்படியுடன் 용g சாரியை சேர்ந்துவரும் “இல்லை”யுடன் அல்வழியிலேயே புணரும், வல்லினம் மிக்கும், மிகாதும் வரும். (இல்லைப் பொருள், இல்லை பொருள்) “இல் லுடன் ஆ - சாரியை சேர்ந்த இல்லா எனும் சொல்லுடன் புணரும் க்ச்த்ப் கள் மிகும். (இல்லாப் பிள்ளை இல்லாக்கருணை). இந்த இல்லை இல்லா ஆகியவற்றுடன் ஏனையமெய்களும் உயிர்களும் இயல்பாகப் புணரும். இல் பொருள் எனச் சாரியை பெறாது இயல்பாகவும் புணரும்.
சுட்டுக்களுடனான புணர்ச்சி: சுட்டு ‘அ’ இ, உ, களுடன் ‘க்‘ ஆனது புணர க் மிகலும் . ஆகத் திரிதலும் உண்டாம். அ + கடியன் = அக்கடியன், அ.கடியன்,
ச்த்ப்களும் மிகும் : இ + பையன் = இப்பையன், உ+ சிறுமி = உச்சிறுமி சுட்டுகளுடன் மெல்லினம் புணர, மெல்லினம் மிகும். அ + நாடு = அந்நாடு அ + ஞமலி = அஞ்ஞமலி சுட்டுகளுடன் இடையினம், உயிரினம் புணர வ் மெய்தோன்றி நிற்கும். அரியானை = அவ்யானை, இவ்விடம்.
பாலை, பலா, முதிரை, விளா முதலிய மரப்பெயர்கள் அல்வழியில் இயல்பாயும், வேற்றுமையில் வரும் வல்லினமோ - இனமெல்லெழுத்தோ மிக்கும் புணரும்.
அல்வழி : பாலைபட்டது, விளாமரம். வேற்றுமை : பலாப்பழம், விளாங்கனி,
இயல்பாகவும் விகாரப்பட்டும் புணர்பவை: ஆ, மா, மியா என்பவற்றோடு க் ச் த் ப் என்பன
வேற்றுமையில் மிகும். ஆப்பட்டி, மாப்படை. அல்வழியில் இயல்பாகும். ஆசிறிது, மாபெரிது, கேண்மியா குன்றா.
சுறா, நிலா, புறா புணரும் வல்லினம் வேற்றுமையில் மிகும்: புறாப்பொறுக்கி, நிலாக்கற்றை, அல்வழியில் மிகுதலும் உண்டு: நிலாக்காய்ந்தது. இயல்பாய் நிற்றலும் உட்ணடு: சுறா சுழியோடிற்று.
இவை சுற, நில, புற, உண என நிற்பதும் உ சாரியை பெற்று சுறவு, நிலவு, புறவு, உணவு என நின்று வேற்றுமையில் நிலவுக் குளிர்ச்சி என மிக்கும், அல்வழியில் புறவு பறந்தது என இயல்பாயும் நிற்கும்.

- 85 - தமிழ் இலக்கணப்பூங்கா
அட்றிணைப் பெயர்களின் இ.ஐ ஈறுகளுடன் க் ச் தீ ப் ஆகியன வேற்றுமையில் மிக்கும் (ஆடிப்பெருக்கு, குதிரைப்படை) அல் வழியில் இயல்பாயும் (பருத்தி குறைவு, குதிரை துள்ளியது) மிக்கும், (வாடைக்காற்று மாரிக்காலம்) புணரும். ஏனைக் கணங்கள் இயல்பாகப் புணரும், மாலை மயக்கம், அந்தி வருகை. -
புளி, ஈற்று, இகரத்துடன், வன்கணம் வேற்றுமையில் தான் மிக்கும், தன்மெல்லினம் மிக்கும் புணரும் (புளிக்கறி, புளிங்கறி புளிச்சாதம், புளிஞ்சாதம்)
ஆப்பி குறுகி நின்ற ஆப்பியுடன் வன்கணம் வேற்றுமை வழியில் மிக்கும் (ஆப்பிக்கும்பி) அல்வழியில் இயல்பாயும் (ஆப்பி குவி) புணரும்.
“மீ என்பதன் ஈ ஈற்றொடு வன்கணம் இயல்பாயும் (மீகண்), மிக்கும் (மீக்கூற்று), தன்மெல்லினம் மிகுந்தும் (மீந்தோல்) புணரும்.
ண், ன், ஈறுகள் வல்லினம் வந்து வேற்றுமை வழியில் புணர ட், ற் ஆகத் திரியும். (சிறுகட் களிறு, கட்புலன், பொற்சிலை) திரியாதும் நிற்கும். (கண் பார்வை, மின்தாக்கம்) அல்வழியில் இயல்பாய் நிற்கும். (கண்கண்ட, தின்பண்டம்) ஏனை மெய்யினங்களுடன் இருவழியும் இயல்பாம். (பெண் வருகை, மண் மலர்ச்சி, முன் மொழிந்தார்)
ய், ர், ழ் ஈறுகளுடன் வன்கணங்கள் வேற்றுமையில் தாம் மிக்கும் தம்மினங்கள் மிக்கும் புணரும். (வேய்க்குழல், வேய்ங்குழல், போர்ப்பறை)
அல்வழியில் இயல்பாயும், தாமோ, தம்மெல்லினங்களோ மிக்கும் புணரும். (ஊர்கொடிது, வேர்தாங்கும், மெய்க்கீர்த்தி கார்ப்பருவம், பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு, கூர்க்கோணம்,
கூர்ங்கோணம்)
குற்றுகரங்களோடு வந்து புணரும் வல்லினங்கள் வேற்றுமையில் மிக்கும் (கரும்புக்கூட்டம், பளிங்குச்சிலை) அல்வழியில் இயல்பாயும் புணரும். (கன்று துள்ளியது, காடு, கடல்)

Page 46
- 86 - தமிழ் இலக்கணப்பூங்கா
சில சொற்களின் சிறப்புப் புணர்ச்சிகள் :
அது + அன்று = அதான்று, அகம் + கை - அகங்கை
- அதுவன்று - அங்கை தெங்கு+காய் = தேங்கு+காய் அகம்+ செவி - அகஞ்செவி தேங் +காய் = தேங்காய் = அஞ்செவி மீன் + கண் = மீற்கண் (வேற்) தமிழ்+ அரசன் = தமிழரசன் மீன் + பல = மீன்பல (அல்வழி) தமிழ அரசன் மீன் + கொடி = மீனக்கொடி தமிழ் + சிறப்பு = தமிழ்ச்சிறப்பு தேன் + மலர்=தேன்மல்ர் தாழ் + கோல் = தாழக்கோல்
= தேமலர் கீழ் + குலம் = கீழ்க்குலம் தேன் + குடம் = தேக்குடம் - கீழ்குலம்
= தேங்குடம்
தெவ் +வீழ்க = தெவ்வு வீழ்க தெவ் + கொடியன் = தெவ்வுக்கொடியன் தெவ் + யாவன் - தெவ்வியாவன் ஈம் + கிரியை = ஈமக்கிரியை கம் + குடம் = கம்மக்குடம்
குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்கள் :
இப்பெயர்கள் க், கு, என்பன கெட்டு வட குட, குண என நிற்க, வரும் பெயர் முதல் புணர்ந்து, வடமேற்கு, வடகடல், குடதிசை, குணகடல் எனவரும். தெற்கு - கு போய் ற் - ன் ஆகி, தென் ஆகித் தென்றிசை, தென்மலை, தென்கிழக்கு எனப் புணரும்.
கிழக்கு, மேற்கு - புணர்ச்சி விதங்கள் : கிழ்நாடு, கீழ்த்திசை, கீழைநாடு, கீழைத்தேசம். மேல்நாடு, மேற்றிசை, மேலைநாடு, மேலைத்தேசம்
திசைப்பெயர்கள் அத்தைச்சாரியை பெற்றுக் காரணப்பெயர்களாகும். வடக்கத்தையார், தெற்கத்தையார். சாரியை பெறாதும் காரணப்பெயர்களாகும். (வடக்கன், கிழக்கான், வடமர், வடவர், தென்னன்) குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சிகள் : ஒன்று : ஒன்று நிலைமொழியுடன், உயிர் தொடங்கு பெயர்கள் புணருங்கால் ‘ஒன்று முதல் நீண்டு ஈற்று “று

- 87 - தமிழ் இலக்கணப்பூங்கா
கெட்டு ன் - ர் ஆகத் திரிந்து ஓர் ஆகி நின்று உயிர் ஏறி, ஓரைந்து, ஓராயிரம் ஆகும்.
மெய் வந்து புணருங்கால் ஈற்று “று கெட்டு, ன் - ர் ஆகத்திரிந்து ‘உ’ பெற்று ‘ஒரு ஆகி, ஒரு நூறு, ஒரு கழஞ்சு என நிற்கும்.
இரண்டு : இரண்டு என்பதன் ‘இ’ முதல், ஈயாக நீண்டு, ஈற்று ‘டு உம் ‘ண்‘ உம் கெட்டு நின்ற 'ர' வின் உயிர்போய் ஈர் என நின்று, வரும் உயிருடன் புணர்ந்து ஈரேழு, ஈராயிரம் என நிற்கும். இரண்டு - மெய்வரின் ஈற்று ‘டு’ வும் ‘ண்‘ உம் பின் ‘ர’ ‘அ’ வும் கெட்டு, இர் ஆகி, உகரம் பெற்று இரு என நின்று இருநாழி, இருபது எனப் புணரும்.
முன்று : இதன் ஈற்று, றுவும் ன் உம் கெட்டு மூ என நின்று, உயிர்வரின் மூவாயிரம், மூவைந்து எனப் புணரும்.
மெய்வந்து புணர மூ குறுகி மு ஆகி, மெய்ம் மிகுந்து, மும்மதம் முக்காலம் என வரும்.
நான்கு : இதன் ஈற்றுக் ‘கு’ கெட ன் - ல் ஆகத் திரிந்து நாலாயிரம், நாற்பது எனப் புணரும்.
ஐந்து : இதன் ஈற்றுத் து’ வும், ‘ந்’ உம் கெட்டு ஐ என நின்று, வரும் உயிர்களோடு புணரும். ஐயைந்து, ஐவைந்து. மெய்வரின் அம்மெய் அல்லது (வல்மெய்வரின்) இனமெல் மிக்குப் புணரும். ஐந்நான்கு, ஐங்கனை.
ஆறு, ஏழு : இவற்றின் முதல்கள் (மெய்வந்து புணர்கையில்) குறுகி அறு, எழு என நின்று அறுபது, எழுபது, அறு நாழி, எழுமீன் எனப் புணரும். ஏழு எண்ணின் உகரம்போய் ஏழ் ஆகி ஏழ்கடல், ஏழ் பிறப்பு எனப் புணர்தலும் உண்டு.
எட்டு : இதன் ‘டு’ போய், ட் - ண் ஆகத் திரிந்து ‘எண் ஆகி, வரும் மெய்கள், உயிர்களுடன் புணர்ந்து, எண்குணம், எண்ணாயிரம் என நிற்கும்.

Page 47
- 88 - தமிழ் இலக்கணப்பூங்கா
ஒன்பது : ஒன்பதினோடு, பத்துப்புணருங்கால் ‘ஒ’ வைத் ‘தொ' வாகத் தகர அடிப்படையினதாக்கியும், ‘பத்து வை “நூறு ஆக்கியும், “தொன்’ இன் ‘ன்’ ஐ ள் ஆகத் திரித்தும், தொள்நூறு - தொண்ணுாறு என்றாக்கவேண்டும். “நூறு வந்து புணருங்கால் இந்தத் ‘தொள்’ உடன் நூறை ஆயிரமாகத் திரித்தும் புணர்த்த வேண்டும். தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம். எட்டு எனும் எண்ணுக்கு அடுத்துத் தோன்றிய ஒன்பது, பத்து’ க்குக் கட்டியமாய் அமைந்தது. அதே போன்று தொண்ணுறு நூறுக்குக் கட்டியம்.
பத்தோடு பிற எண்கள் புணர்தல் :
ஒன்று முதல் பத்து எண்களும், ஆயிரமும், பத்துடன் புணர்கையில் அப்பத்து என்பதன் ‘து கெட்டு, இன் அல்லது இற்றுச் சாரியை பெற்றுப் பதினைந்து, பதிற்றுப்பத்து, பதினாயிரம் என வரும். இவ்வாறே ஒன்பதுடன் இன், இற்றுச் சாரியைகளில் ஒன்று புணர்ந்து ஒன்பதினாயிரம், ஒன்பதிற்றாறு, ஒன்பதிற்றுக் கழஞ்சு என நிற்கும்.
ஒரு பத்து முதல் எண்பத்து வரை : ஒரு பத்து முதல் எண்பத்து வரையிலுள்ள எட்டுப் பத்துக்களின் இடைத் தகரவொற்றுக்கெட்டு இருபது, முப்பது என வருதலும், கெட்ட ‘த்” இற்குப் பதில் .. வந்து ஒரு ப.து, இருபது என வருதலும் உண்டு.
ஒரு ப.து முதலான எட்டுப் பத்து எண்களோடு, ஒன்றுமுதல் ஒன்பது எண்களும் வந்து புணருங்கால் அந்த
போய் மீண்டும் ‘த் அவ்விடத்தில் வெளிப்படுதல் வழக்கம் உ+ம்: இரு + ப.து மூன்று - இருபத்து மூன்று.
பன்னிரண்டு - விசேட விதி : பத்து என்ற நிலை மொழியோடு இரண்டு எனும் என்வந்து புணருங்கால் அப்பத்து என்பதன் ஈற்றுயிர் மெய் ‘து கெட்டுப் ‘பத்’ என நின்று அதன் ‘த்’ ஒற்று ‘ன்’ ஒற்றாகத் திரிந்து. ‘இரண்டு’ வருமொழி புணர்ந்து பன் + இரண்டு = பன்னிரண்டு ஆகும்.

- 89 - தமிழ் இலக்கணப்பூங்கா
எண்கள் இரட்டும் விதி : ஒன்பது தவிர்ந்த ஒன்று முதல் பத்து வரையிலான ஒன்பது எண்களும் இரட்டுங்கால் (ஒன்று + ஒன்று) நிலைமொழியின் முதலெழுத்தின் குறில் அதன் பிரதிநிதியாய் நின்று வருமொழியுடன் புணர்ந்து இரட்டும். வருமொழி முதல் உயிராயின் வ் உடம்படுமெய் தோன்றும். உ+ம்: ஒ+ஒன்று=ஒவ்வொன்று, வருமொழி முதல் மெய்யாயின் அம்மெய் மிகும். உ+ம்: மு மூன்று = மும்மூன்று இப்படியே ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐவைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, பப்பத்து என 6)](bLD. o
ஊகார வீற்றுச் சிறப்பு விதி: பூ என்னும் உயிரீற்றோடு
புணருங்கால் கசதபக்களின் இனமெல்லெழுத்துக்கள் மிகுதலும் உண்டு. உ+ ம்: பூம்பந்தல், பூந்தண்டு.
வடமொழிப் புணர்ச்சி : தமிழில் வழங்கும் வடசொற்றொடன்களின் புணர்ச்சி விருத்த சந்தி, குணசந்தி, தீர்க்க சந்தி என மூவகைப்படும்.
தீர்க்க சந்தி : அ, ஆ, என்பவற்றோடு அ, ஆ வந்து புணர்கையில் ஈற்று, முதல் அ, ஆக்கள் கெட்டு ‘ஆ’ ஒன்று தோன்றும். சந்தி, ஈறு, முதல்களாக இ, ஈ வரின் அவைகெட்டு ஓர் ஈ தோன்றும். சந்திக்கும் ஈறு, முதல்களாக உ, ஊ வரின் அவை கெட்டு ஓர் ஊ தோன்றும்.
1. கமல + அம்பிகை = கமல்ஆம்பிகை - கமலாம்பிகை
கும்ப+அபிடேகம்= கும்ப்ஆபிடேகம் = கும்பாபிடேகம். 2. கிரி + இந்திரன் = கிள்ஈந்திரன் = கிரீந்திரன்
கிரி + ஈசன் - கிர்ஈசன் = கிரீசன் மகீ+ இந்திரன் = மக்ஈந்திரன் = மகிந்திரன் நதி + ஈசன் = நத்ஈசன் = நதிசன் 3. குரு + உபதேசம் - குர்ஊபதேசம் = குரூபதேசம்
மேரு + ஊர்த்துவம் = மேர்ஊர்த்துவம் = மேரூர்த்துவம்

Page 48
- 90 - தமிழ் இலக்கணப்பூங்கா
குணசந்தி : அ, ஆ வொடு இ, ஈ, வந்து புணரச் சந்தி ஈறும் முதலுங்கெட்டு ஏ தோன்றும். நர + இந்திரன் = நர்ஏந்திரன் - நரேந்திரன் சுர + ஈசன் = சுர்ஏசன் = சுரேசன் தரா + இந்திரன் = தள்ஏந்திரன் = தரேந்திரன் மகா + ஈசன் = மக்ஏசன் = மகேசன் அ, ஆ, வொடு உ, ஊ, வந்து புணர ஈறும் முதலுங்கெட்டுஓ தோன்றும் ஞான + ஊர்ச்சிதன் = ஞான்ஒர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன் கங்கா + உற்பத்தி = கங்க்ஒற்பத்தி = கங்கோற்பத்தி மகா + உற்ஸவம் = மக்ஒற்ஸவம் = மகோற்ஸவம்
விருத்த சந்தி : அ, ஆ, ஈற்றோடு, ஏ, ஐ, வந்து சந்திப்பின் ஈறும் முதலுங்கெட ஐ தோன்றும். சிவ + ஐக்கியம் = சிவ்ஐக்கியம் = சிவைக்கியம் மகா + ஐஸ்வரியம் = மக்ஜஸ்வரியம் = மகைஸ்வரியம்
அ, ஆ. வோடு, ஓ, ஒள வந்து புணரின் சந்திக்கும் முதலும், ஈறுங்கெட்டு ஒள தோன்றும்.
திவ்விய + ஒளடதம் = திவ்விய்ஒளடதம் = திவ்வியெளடதம்
மகா + ஒளதாரியம் = மக்ஒளதாரியம் = மகெளதாரியம் மேற்கண்ட புணர்ச்சி விதிகளுக்குள் அடங்காத - இங்கு எடுத்துக்காட்டாத புணர்ச்சிகளையும் நூல்வழக்கு, உலக வழக்குகளோடு ஒட்டி ஆராய்ந்தறிக.
சொற்றொடர்கள் பிரியும் விதங்கள் : கானிறை = கான் + நிறை; கான் + இறை, கால் + நிறை கண்ணி = கண் + நீர், கள் + நீர், கண் + ஈள் அஞ்சிறை = அம் + சிறை; அஞ்சு + இறை கண்ணாடி = கண் + நாடி, கள் + நாடி, கண் + ஆடி பெண்ணன்று = பெண் + நன்று; பெண் + அன்று பாவாடை = பா + வாடை, பா + ஆடை, பாவு + ஆடை கானகம் = கான் + அசம்; கால் + நகம்; கான் + நகம்

- 9 - தமிழ் இலக்கணப்பூங்கா
வானிலை = வான் + நிலை; வான் + இலை; வால் + நிலை கட்கடை = கண் + கடை, கள்+ கடை, கட்கு + அடை கற்றிது, கட்றீது = கல் + தீது முட்டீது, முஃடீது = முள் + தீது அதுவன்று, அதான்று = அது + அன்று தேங்குடம், தேக்குடம் = தேன் + குடம் ஐவைந்து, ஐயைந்து + ஐந்து + ஐந்து பசுங்கிளி, பைங்கிளி = பசுமை + கிளி செவ்வாம்பல், சேதாம்பல் = செம்மை + ஆம்பல் சீறடி , சிற்றடி = சிறுமை + அடி கருமுகில், கார்முகில் = கருமை + முகில் பதிற்றுப்பத்து, பப்பத்து = பத்து + பத்து தாடலை = தாள் + தலை தாமரை - தாவும் + அரை, தாவும் + மரை uDIGi8pir = uDT6öI + Gg5ir முட்டாட்டாமரை = முள் + தாள் + தாமரை அவறின்றான் = அவல் + தின்றான் தேநீர் = தே + நீர் தேனி = தேன் + நீர் முந்நூறு = மூன்று + நூறு முன்னூறு = முன் + நூறு நானூறு - நான்கு + நூறு தேம்பிழி - தேன் + பிழி பேருந்து = பெருமை + உந்து பாசடை = பசுமை + அடை ஒள்ளிடம் = ஒன்மை + இடம் செய்ந்நன்றி - செய் + நன்றி கைம்மாறு - கை + மாறு கற்றா = கன்று + ஆ தன்னளி = தண்மை + அளி நாநூறு - நாக்கு + நூறு மீடிறன் - மீள் + திறன்
நாண்மலர் = நாள் + மலர்

Page 49
பண்டிதர் ச.வேய - 92 - தமிழ் இலக்கணப்பூங்கா
வேத்தவை = வேந்து + அவை பாசாங்குசம் = பாச + அங்குசம் வெந்நீர் = வெம்மை + நீர் மேற்றிசை = மேற்கு + திசை ஆட்டைத்திவசம் = ஆண்டு + திவசம் காலாவதி = கால + அவதி அளகேசன் = அளகு + ஈசன் சிந்தாகுலம் = சிந்தை + ஆகுலம் பாசுபதாஸ்திரம் = பசுபதி + அஸ்திரம் அங்குரார்ப்பணம் = அங்குர + அர்ப்பணம் பாத்துரண் = பகுத்த + ஊண் அந்தியேட்டி = அந்திய + இட்டி எவ்வேழு = ஏழு + ஏழு; எ+ ஏழு
பயிற்சி - 7
1. பின்வரும் சொற்றொடர்களில் ஏற்பட்டுள்ள புணர்ச்சி
விகாரங்கள் யாவை? 1. மரக்கட்டில் 2. பூஞ்சுனை 3. தேங்காய் 4. புளியந்தூவல் 5. பனாட்டு
2. இச்சொற்களைச் சேர்த்தெழுதுக.
1. ஆள் + நெறி 2. உள் + நாடு 3. பால் + நிறம் 4. சொல் + முடிவு 5. அவல் + தின்றோம் 6. சொல் + தொகை 7 புள் + திரள் 8. நாள்+ தோறும் 9. வான் + நதி 10. ஆண் + தகை
3. பின்வருஞ் சொற்றொடர்களைப் பிரித்தெழுதுக :
1. நானாழி 2. கற்றாழை 3. ஒண்டொடி 4. மீடிறன் 5. சிந்தா குலம் 6. யுத்தோபாயம் 7. முண்ணுனி 8. பட்றுளி 9. புனிற்றா 10. துவாதசாதித்தியர்.

பண்டிதர் ச.வே.ப - 93 - தமிழ் இலக்கணப்பூங்கா
அறுவகைச் சொல் வழக்குகள் (அ) இயல்பு வழக்குகள் : 1. இலக்கண வழக்கு 2. இலக்கணப்போலி 3. மருஉ வழக்கு (எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அச்சொல்லாலேயே அப்பொருள் குறிக்கப்படுவதால் இவை மூன்றும் இயல்பு வழக்குகள் எனப்பட்டன.)
(ஆ) தகுதி வழக்குகள் : 4. இடக்கரடக்கல் 5. மங்கலம் 6. குழுஉக்குறி (சிலபொருட்களை, அவற்றுக்கியல்பாய் அமைந்த சொற்களால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பதில் உள்ள தகுதி இன்மை கண்டு, தகுதி உள்ளவை எனக்காணும் பிற சொற்களால், குறிப்பதால் இவை மூன்றும் தகுதி வழக்குகள் எனப்பட்டன.) 1. இலக்கண வழக்கு : இலக்கணத்துக்கமைந்த சொற்கள்
இலக்கண வழக்குச் சொற்கள் எனப்படும். உ+ ம் நிலம், ஒடு, முதலியன. 2. இலக்கணப் போலி வழக்கு :
இலக்கணமுடையதன்றாயினும் படைப்புக்காலம்முதல் இலக்கண முடையதோடு ஒருங்கு படைக்கபட்பட்டது போல் எழுத்திலும் நின்று நிலவி வருஞ் சொற்றொடர் இலக்கணப் போலி எனப்பட்டது. உ+ ம்;
இலக்கணமுடையது - போலி இலக்கணமுடையது - போலி
கண்மீ மீகண் நாநூனி நுனி நா நகர்ப்புறம் புறநகர் கோவில் கோயில் ஆற்றடை அடையாறு பொதுவில் பொதியில்
3. மரூஉ வழக்கு : அருமருந்தன்ன : அருமந்த,
தெற்குளது. தெனாது, சோழநாடு: சோணாடு பாண்டியநாடு: பாண்டிநாடு, வாழ்நாள்: வாணாள், இருந்தவாறு; இருந்தவா, தஞ்சாவூர்: தஞ்சை, மரவடி: மராடி, யாவர்: யார், ஆர், எவன்; என், என்ன, என்றெல்லாம் ஒரு சொல்லானது காலப்போக்கில் ஒலி தேய்ந்து மருவி வழங்குதல் மரூஉ வழக்கு எனப்படும்.

Page 50
பண்டிதர் ச.வே.ப - 94 - தமிழ் இலக்கணப்பூங்கா
மூக்குக்குத்தி: மூக்குத்தி, பனிநீர்: பன்னிர், உள்ளுடல்: உள்ளுடன், பொய்ம்மை: பொம்மை, கருவாட்டு: கருவாடு என்பனவும் மரூஉ ஆகும்.
4. இடக்கரடக்கல் : ஒரு பொருட்கு இயல்பாயமைந்த சொல்லால் அதனைக் குறிப்பிடுவது சபைக்கு ஏற்காதெனக்கண்டு, ‘அவையல் கிளவி’ என அதனை விடுத்து, இதமான - தகுதியான பிறசொற்களால் குறிப்பிடும் வழக்கு இடக்கரடக்கல் எனப்படும். உ+ம் பகரவி, பவ்வீ; கால்கழுவி வருவேன்; ஒன்றுக்குப் போய் வந்தான்; புலிநின்றிறந்த நீரல்லீரம், மர்மஉறுப்பு, சிறுநீர்.
5. மங்கல வழக்கு : அமங்கலத்தைத் தவிர்த்து மங்கலமாகக் கூறுதல், மங்கல வழக்காகும். செத்தாரை, விடுதலை வித்தானார், இறைவனடி சேர்ந்தார், துஞ்சினார், வீடுற்றார் புகழுடம்பு மேவினார் என்றும், இழவோலையைத் திருமுகம் என்றும், இடுகாட்டை நன்காடு என்றும் வழங்குதல் மங்கல வழக்காகும். 6. குழுஉக்குறி : ஒவ்வொரு குழுவிலுள்ளோர், யாதாயினுமொரு காரணத்தால் ஒரு பொருளினது உலகறிபெயரை விடுத்து, பிறரறியா வகையில் வேறோர் சொல்லால் தம்முள் குறித்துரைப்பது குழுஉக்குறி எனப்படும். வேடர் கள்ளைச் சொல் விளம்பி என்றும், குடிகாரர் கள்ளச் சாராயத்தை வெட்டிரும்பு என்றும், பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றும் தம்முள் குறிப்பிடுவது குழுஉக் குறியாகும். கடைகளிலுள்ளோர் தம்முள் வழங்கும் விலைப்புள்ளிகளும் குழுஉக் குறிகளே.
ஒரு மொழி, தொடர்மொழி, பொதுமொழி ஒருமொழி : ஓர் எழுத்துக் கூட்டமானது எவ்வகையிலும் ஒரு தனிச் சொல்லாகமட்டுமே பொருள் தந்து நிற்பின் அது ஒரு மொழி எனப்படும். உ+ம் : பனை, மருதம், அடுக்கம், குடில், ஓடை, தளர்ச்சி, உருக்கினான்.
தொடர்மொழி : இரண்டு அல்லது அதிகமான சொற்கள் தொடராகச் சேர்ந்து நின்று பொருள்தரின் அத்தொடரானது தொடர் மொழி எனப்படும். உ+ம் : கன்னிமாடம், தாமரை இதழ், துன்றலோதி

பண்டிதர் ச.வே.ப - 95 - தமிழ் இலக்கணப்பூங்கா
பொதுமொழி : சில சந்தர்ப்பங்களில் ஒரு மொழியாகப் பிரிப்பின்றி நின்றும், வேறு சிலசந்தர்ப்பங்களில் இரண்டு . அல்லது அதிக சொற்களாகப் பிரிந்து நின்றும் பொருள் உணர்த்தும் எழுத்துக்கூட்டம் (5 மொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவான பொதுமொழி எனப்பட்டது. உ+ம் : பலகை - பலவானகைகள், வேங்கை - வேகுங்கை
பயிற்சி - 8
கீழ்க்காணும் பொதுமொழிகளை ஒருமொழியாகவும் தொடர்மொழியாகவும் பொருள்தேடி எழுதுக.
1) வாசுகி 2) வைகை 3) செல்வாய் 4) இரவலர் 5) உண்ணிர் 6) சேர்வை 7) அம்மான் 8) தங்கைகள் 9) தொழுகை 10) தொழுதாள் 11) கற்கை
12) கைமை 13) பாகல் 14) நீ சா 15) கண்மை 16) காரா 17) மன்றாடி 18) அம்புலி 19) துணிக்கை 20) அங்காடி 21) அப்பாவி 22) அடிப்பானை 23) வைகல் 24) நின்றாள் 25) விடுகை 26) பாடினி 27) அப்பட்டம் 28) விற்போர் 29) படித்தேன் 30) தொண்டகம் 31) பலகை 32) ஆசாரியார் 33) திருக்கை 34) சுத்தவாளி 35) உப்புமா 36) அக்கறை 37) கற்றா 38) பொய்ம்மை 39) உண்ணுங்கள் 40) ஆகாயம் 41) அக்காரம் 42) அத்திபாரம் 43) திருடாமை 44) வல்லியம் 45) மஞ்சாடி
2. கீழ்க்காண்பவை எவ்வெவ்வகைச் சொல்வழக்கெனக்
குறிப்பிடுக.
1) big நாவில் அமிர்தம் 2) வாத்தியார் வாழ்த்தினார் 3) வானம்பாடி கானம் பாடியது 4) புகழுடம்பு எய்தினார் 5) குதிரை ஓடிப்பரீட்சையில் தேறினான் 6) இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காதிர் 7) அவனுக்கு மர்ம உறுப்பில் காயம் 8) கடற்கரையில் கருவாடு காயும் 9) u umTir வந்தான்? 10) மயில்மிசை மேயினான் வள்ளல் முருகன்

Page 51
பண்டிதர் ச.வே.ப - 96 - தமிழ் இலக்கணப்பூங்கா
வாக்கிய முதன்மை உறுப்புக்கள்
பயனிலை : ஒருவாக்கியம் நிச்சயமாக, 1. ஒரு சராசரி நிகழ்வினைக் குறிக்க “உழவர் நெல்லை வெட்டினர்’ அல்லது 2. ஒரு நீடிக்கும் நிகழ்வினைக் குறிக்க “எங்கள் நாடு இலங்கை” (ஆகவுள்ளது) அல்லது 3. வினாமூலமும் ஒரு நிகழ்வினை மறைமுகமாக ஒப்புக்கொண்டு, அதுபற்றி மேலும் அறிய “உங்கள் தமிழாசிரியர் யாவர்” (ஆக இருக்கிறார்) என்றே பிறக்கிறது.
இவர் பெரும் பண்ணையார் (இவர் பெரும் பண்ணையை உடையவராக இருக்கிறார்) இங்கே உடையவராக இருத்தலும் ஒரு நிகழ்வே - வினையே.
எனவே முதல் உதாரண வினைப்பயனிலை ‘வெட்டினர்’ வினைநிகழ்வு குறித்த வினைப்பயனிலை. இரண்டாம் உதாரண “இலங்கை’ எனும் பெயர்ப் பயனிலையும் நாடாக உள்ளதாகிய வினை நிகழ்வினையே குறிக்கும் வினைத்தன்மை பெற்ற பெயரான பயனிலை! அதுபோல மூன்றாம் உதாரணத்தினது யாவர் எனும் வினாப்பயனிலையும் யாரோ ஒருவர் தமிழாசிரியாராக இருப்பதாகிய வினை நிகழ்வினை ஒப்புக்கொண்டு குறிக்கும் வினாப்பயனிலையே. எனவேதான் வாக்கியத்தின் Juj65T பொதிநிலையென - பயனிலை 6T6 அது அழைக்கப்படுகிறது. பயனிலை, வினைப்பயனிலை, பெயர்ப் பயனிலை, வினாப்பயனிலை என மூன்று வகைப்படும்.
வாக்கிய முடிக்கும் உறுப்பான பயனிலை பெரும்பாலும் இறுதியில் வரும். சிறுபான்மை நடுவிலும் (ஊர் திரண்டது ஆவேசத்தோடு) முதலிலும் (வந்தது விடிவு) வரும்.
தோன்றாப் பயனிலை: வாக்கியத்தின் பொருண்முற்றி முடிவதும், இன்றியமையாத உறுப்புமான இப்பயனிலை தோன்றா நிலையில் நிற்பது முண்டு. உ+ம் 1. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை (உண்டு). 2. பணம் பந்தியிலே (இருக்கிறது) குணங் குப்பையிலே (கிடக்கிறது) 3. இன்று சிவவழிபாடும் பணவழிபாட்டின் பின்பே (நடக்கிறது).

பண்டிதர் ச.வே.ப 97 - தமிழ் இலக்கணப்பூங்கா
எழுவாய் : பயனிலையோடு, யார், எவர், எது, எவை, எவள் முதலியவற்றுள் பொருத்தமான வினாப் பெயரைப் பொருத்தி எழுப்பும் வினாவிற்கு விடையாக வருவது எழுவாயாகும். வெட்டினர் என்ற செய்வினைப் பயனிலை கொண்ட வாக்கியத்தின் எழுவாயாக வினைமுதலாகிய கர்த்தா (உழவர்) வெளிப்படும். வெட்டப்பட்டது என்ற செயப்பாட்டு வினைப் பயனிலை கொண்ட வாக்கியத்துக்கு எழுவாயாக வினையடை பொருளாகிய செயப்படுபொருளான நெல்லே நிற்கும். கருத்தாவானது உழவர் ஆல் என 3ஆம் வேற்றுமை ஏற்று நிற்கும்.
கூட்டெழுவாய் : பல பெயர்கள் ஒன்று கூடியும் அமையும் எழுவாய் கூட்டெழுவாய் எனப்படும். முதலையும், மூர்க்கனுங்
கொண்டது விடா - செய்வினை வாக்கியம். இராவணனது, மார்பும், தோளும், நாவும், மெளலி பத்தும், வாளும், வீரமும் இராமபாணங்களால் பங்கப்படுத்தப்பட்டன - செயப்பாட்டு
வினை வாக்கியம்.
தோன்றா எழுவாய் : எழுவாயோ பயனிலையோ இன்றி வாக்கியம் இல்லை. எழுவாய் தோன்றாதேனும் நிற்றல் வழக்கம்.
உ+ம் (நீ) அறஞ்செய விரும்பு - (நீங்கள்) எந்தை புகலூர்
பாடுமின் புலவீர்காள் - (அவள்) பறந்து போனாளே.
செயப்படு பொருள்: பயனிலையோடு, யாரை, எவரை, எதனை, எவற்றை, எவனை முதலிய வினாப்பெயர்களுள் இசைந்ததைப் பொருத்தி எழுப்பப்படும் வினாவிற்கு விடையாக வருவது செயப்படுபொருள். செயல் - வினை சென்றடை பொருளே செயப்படுபொருள் எனப்படும். பெயரானது 2 ஆம் வேற்றுமை உருபாகிய “ஐ’ ஏற்றுச் செயப்படு பொருண்மை உணர்த்தும்.
உ + ம்; உழவர் நெல்லை வெட்டினர்.
இவ்வாறு செயப்படுபொருள் கொள்ளாத - செயப்படுபொருள்குன்றிய வாக்கியங்களும் உண்டு. அவை செயப்படு பொருள் குன்றிய வினை கொண்டவை.
D -t (p; 67 shlab6i BTCB FF pub

Page 52
UGiggsi, 8.66).u - 98 - தமிழ் இலக்கணப்பூங்கா
duußbg? – 9
1. தோன்றா எழுவாய்களைக் கண்டறிக.
1. ஆற்றைக்கடக்கும் வரை அண்ணன் தம்பி. 2. சொன்னாற்கேள். 3. நில் கவனி புறப்படு. 4. போகப் போகத் தெரியும். 5. எள்ளானாலும் எட்டாகப் பிரி. தோன்றாப் பயனிலைகளைக் கண்டறிக.
தம்பி பள்ளிக்கு. அவனுக்கு நல்ல வரவேற்பு. வர வர மாமியார் கழுதை போலே. மனைவி கொலை, கணவன் தலை மறைவு. தவத்துக்கு ஒருவரடி
தான்றாச் செயப்படுபொருள்களை எழுதுக.
ஒருவேளை உண்போன் யோகி. அவன் குடித்தே செத்தான். அவள் என்ன ஒயிலாக ஆடுகிறாள்? உண்டு கொழுக்க ஒரு வர்க்கம். மாடுகள் மேய்கின்றன.
3
தனிவாக்கியமும், தொடர் வாக்கியமும் தனிவாக்கியம் : கலந்தோம் போன்ற தெரிநிலை வினை. முற்றாகவோ கண்ணன் அல்லது எது போன்ற குறிப்புவினை முற்றாகவோ வரும் ஒரு பயனிலை மட்டுங்கொண்டு, வேறு வினையெச்சம், பெயரெச்சம் வினையாலணையும் பெயர் முதலிய பயனிலைக் கருக்கள் எவையுமின்றி முழுமைபெற்று நிற்கும் வாக்கியம் தனிவாக்கியம் எனப்படும். இவ்வாக்கியத்தை மேலும் இரண்டாகவோ அதிகமாகவோ பல்குவிக்க (Լplգս IIIՖl. உ+ம் : மழை பெய்கிறது. நீ ஒரு தமிழன். நியாயம் எது?
தொடர் வாக்கியம் :பயனிலையை மட்டுமன்றி, வினையெச்சம், பெயரெச்சம் முதலிய குறைவினைகளாகிய பயனிலைக் கருக்களையும் கொண்டிருக்கும் வாக்கியம் தொடர் வாக்கிடிமாகும். அதாவது மேலும் பல PARTERE பகுக்கப்படக்கூடியது தொடர்வாக்கியம்.

பண்டிதர் ச.வே.ப - 99 - தமிழ் இலக்கணப்பூங்கா
இத் தொடர் வாக்கியம் 1) கூட்டு வாக்கியம் 2) கலப்பு வாக்கியம் என இரு வகைப்படும்.
கூட்டு வாக்கியம் : இது ஓர் எழுவாய்க்குப் பல பயனிலைக் கருக்களான பெயரெச்சம், வினையெச்சங்களைக் கொண்டது.
so b “அந்நியர் வருகைக்குமுன், ஏககாலத்தில் சிங்கள, தமிழ் மன்னர்கள் பலரால் பகுதி, பகுதியாக ஆளப்பட்டு வந்த இலங்கை, பின்னர் வந்த போர்த்துக்கேயரால் ஆளப்பட்டு, அவர்களின் பின்வந்த ஒல்லாந்தரால் ஆளப்பட்டு, அவர்களின் பின்வந்த ஆங்கிலேயரால் ஆளப்பட்டு இன்று சுதேசிகளால் ஆளப்படுகிறது.” இந்தத் தொடர்வாக்கியம் எட்டுத் தனி வாக்கியங்களாகப் பிரிக்கப்பட முடியும்.
1. அந்நியர் வருகைக்குமுன், ஏககாலத்தில் சிங்கள தமிழ் மன்னர்கள் பலரால் ஆளப்பட்டுவந்தது இலங்கை நாடு. 2. பின்னர் போர்த்துக்கேயர் வந்தனர். 3. அவர்களால் இந்நாடு ஆளப்பட்டது. 4. அவர்களின் பின் ஒல்லாந்தர் வந்தனர். 5. அவர்களாலும் இந்த நாடு ஆளப்பட்டது. 6. அவர்களின் பின் ஆங்கிலேயர் வந்தனர். 7. அவர்களாலும் இந்நாடு ஆளப்பட்டது. 8. இன்று இந்நாடு சுதேசிகளால் ஆளப்படுகிறது.
கலப்பு வாக்கியம் : இது பல எழுவாய்களையும் பல பயனிலைக் கருக்களாகிய பெயரெச்சம் வினையெச்சங்களையும் கொண்டமைந்தது. உ+ ம் 1. “நாளைநான் கடற்கரைக்குப் போகேன்” என்று காந்தன் சொன்னான்.
மேற்படி கலப்பு வாக்கியம் தனிவாக்கியங்களாகப் பிரிபடும் விதம் (அ) நாளை நான் கடற்கரைக்குப் போகேன். (ஆ) இவ்வாறு காந்தன் சொன்னான்.
2. வானம் கறுத்து, மின்னல் மின்னி, இடி இடித்து, காற்றுக் குளிர்ந்து வீசி, மழை பொழியலாயிற்று. தனிவாக்கியங்களாக இக்கலப்பு வாக்கியம் பிரியும் விதம் :

Page 53
பண்டிதர் ச.வேய - 100 - தமிழ் இலக்கணப்பூங்கா
(அ) வானம் கறுத்தது . (ஆ) மின்னல் மின்னியது (இ) இடி இடித்தது. (ஈ) காற்றுக் குளிர்ந்து வீசியது. (உ) மழை பொழியலாயிற்று. எண்ணும்மைகள் கொண்ட தனிவாக்கியங்கள் சில மேலுஞ் சிறு தனிவாக்கியங்களாகுவதுமுண்டு. உ+ ம் முத்தனுக்கு நெஞ்சில் நரியும் நாவில் நாயும் குடியிருக்கின்றன. இத்தனிவாக்கியம்,
1. முத்தனுக்கு நெஞ்சில் நரிகுடியிருக்கிறது.
2. முத்தனுக்கு நாவில் நாய் குடியிருக்கிறது.
என இரண்டு சிறு தனிவாக்கியங்களாதல் காண்க.
திணை, பால், எண், இட, வழுவமைதிகள்
மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு. இவற்றுள் ஏதாயினும் ஒன்று காரணமாக ஒரு திணைப்பொருள் மறுதிணையிலும், ஒரு பாற்பொருள், வேறொரு பாலிலும் சொல்லப்படும்.
பால் வழுவமைதி
1. இதோ என் அப்பனுக்குத் தங்க வளையல்!
இங்கு மகிழ்ச்சி காரணமாகப் பெண்பால் ஆண்பாலிற் சொல்லப்பட்டது.
2. ஒளவைப்பாட்டி விநாயகரைத் தம்முயிர்த் தெய்வமாகக் கொண்டோங்கினார். இங்கு உயர்வினால் பெண்பால் பலர்பாலிற் சொல்லப்பட்டது.
3. தாய்க்குத் தாயாகிய இறைவன்.
இங்கு சிறப்பினால் ஆண்பால், பெண்பாலிற் சொல்லப்பட்டது.
4. அந்நியன் இம்மண்ணில் காலடி வைப்பானா?
கோபத்தினால் பலர் பால் ஆண்பாலிற் சொல்லப்பட்டது. - இதனை, கோபம் காரணமாகப் பன்மையானது ஒருமையில் வந்த எண்வழுவமைதியாகவும் கொள்ளலாம்.
தினை வழுவமைதி
1. என்னம்மை மேய்ந்துவிட்டு வந்தாள்.
மகிழ்ச்சியினால் அட்றிணை (பசு) உயர்திணையில் குறிக்கப்பட்டது.

umbuskis J. BauLU ۔ 101 ۔ தமிழ் இலக்கணப்பூங்கா
2 மக்கட் செல்வம் பெருகிற்று.
சிறப்பினால் உயர்தினை அட்றிணையிற் சொல்லப்
Lg).
3. அந்த நாயின் குரைப்பை நின்று ஆராயாதே!
கோபத்தினால் உயர்திணை மனிதன் அட்றிணையில் குறிக்கப்பட்டான்.
4. நான் முருகன் அடிப்பொடி,
இழிவினால் உயர்தினை அட்றிணையிற் சொல்லப்
L-gll
கல்ந்த தினை பால் பற்றிய முடிபு : இரு தினைப் பெயர்கள் கலந்து எழுவாயாக வருஞ் சந்தர்ப்பத்தில் சிறப்பு, மிகுதி, இழிவு - இவற்றுள் ஒன்று காரணமாக அது ஒரு முடிபைக் கொள்ளும். 1. திங்களுஞ் சான்றோரு மொப்பர் - சிறப்பினால்
அறினையும் உயர்தினைப் பயனிலை கொண்டது. 2. பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிபட்டோர், மூத்தோர். குழவி என்னும் இவர்கள் - குழவி எனும் அறினை இங்கு மிகுதியான உயர்தினைகளோடு சேர்த்து உயர்தினையிற் சுட்டப் பெற்றது. 3. முதலையும் மூர்க்கனுங் கொண்டதுவிடா. - இழிவினல்
பெற்றது.
bLangalamme :
விரனின் தாய் அழுவேனா? இங்கு விரனின் தாய் என்ற படர்க்கைப் பெயர் தன்மை எழுவாய் அர்த்தத்தில் வந்து இட வழுவமைதி பெற்றது.
*ன்னுடைய “இவர்” இப்பொழுது இலண்டனில் இருக்கிறார்” இங்கே சேய்மைச் சுட்டில் “அவள்” என்று தன்
காரனாக இவர் னைச் சுட்டியது அன்பு குறித்த
LeSang
காரகளே இன்றியோ ஒரு காலம் வேறொரு காணத்தில்

Page 54
பண்டிதர் ச.வேய - 102 - தமிழ் இலக்கணப்பூங்கா
1. தன்னை வரும்படி அவசரமாக அழைக்கும் நண்பனிடம், சாப்பிட்டுக் கொண்டே, “உண்டேன், உண்டேன். இதோ வந்திட்டேன்” என்று ஒருவன் விரைந்த எதிர்கால நிகழ்ச்சியை இறந்தகாலத்தில் சொல்லுதல் விரைவு காரணமான கால வழுவமைதி. 2. மதுவைத் திண்டுவோன் தொலைந்தான். இங்கு கட்குடியர் மிகுதியுங் கெட்டுக் குட்டிச் சுவராகி, அழிந்து போவதால் மிகுதி, நிச்சயம் காரணமாக எதிர்காலம் இறந்த காலத்திற் சொல்லப்பட்டது. 3. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்தது. இங்கு அறிகுறியின் தெளிவான பலனை வலியுறுத்த எதிர்கால நிகழ்ச்சி இறந்த காலத்திற் சொல்லப்பட்டது. 4. நான் கண்டியில் வசித்த காலத்தில் சைவ உணவு விடுதியிலேயே சாப்பிடுவேன். - இது எக்காரணமும் பற்றாது இறந்த காலம் எதிர்காலத்தில் குறிக்கப்பட்ட கால வழுவமைதி. 5. நடந்தது எனத் திடமாக நம்பப்படும் இறந்தகாலச் சம்பவத்தையும் நடந்திருக்கும் என எதிர்காலத்தில் குறிப்பிடுவதும் கால வழுவமைதியாகும். உ+ம்: நேற்றே அவர்கள் திருமணம் நடந்திருக்கும்.
தினைப்பொதுமை நீங்கல் : தாய், கறுவல், நொண்டி என்பன திணைப் பொதுப்பெயர்கள் இவை வினைமுற்று விகுதிகளால் பொதுமை நீங்கல் காண்க:- தாய் வந்தாள் உயர்திணை, தாய்வந்தது - அறிணை கறுவல் வந்தான் உ , தி கறுவல்வந்தது - அ , தி நொண்டி வருவான் உ , தி நொண்டி வரும் - அ , தி
பாற்பொதுமை நிங்கல் : குறிப்பு, தொழில் என்பன மூலம் பாற்பொதுமை நீங்கும். உ+ம் 1. பெண்கள் விடுதியில் ஐவள் சேர்ந்தனர் (உ.தி. பெண்பால் - குறிப்பு) 2. கடற்றொழிலாளர் மூவர் கைதாயினர்
(உ.தி. ஆண்பால் - தொழில்) 3. மாடு கன்றை அழைத்தது. (அ.தி.பெண் - குறிப்பு) 4. வண்டி மாடுகள் வரும். (அ.தி. ஆண் - தொழில்)

பண்டிதர் ச.வேய - 103 - தமிழ் இலக்கணப்பூங்கா
அடைகள் சொற்றொடர் வகைகள்
மரியாதை அடைமொழிகள் : திருவாளர், திருமதி, செல்வன், செல்வி, பூரீமான், பூரீமதி, சிவழl, பிரம்மறி, பூரிலழரீ, அருட்டிரு, வனபிதா, அடிகள், தவத்திரு, மாண்புமிகு, ஜனாப், ஜனாபா, அல்ஹாஜ், சங்கைக்குரிய,
அடுக்குத்தொடர்கள் : ஒரு சொல்லானது தான் தரும் அர்த்தத்தை மேலும் அழுத்தமாகத் தருதற் பொருட்டுத் தானே இரட்டித்து - அடுக்கிவருந் தொடர் அடுக்குத்தொடர் எனப்படும். உ+ ம்: அணு அணுவாக, கற்றை கற்றையாக, தெருத்தெருவாக, சுடச்சுட, பாம்பு பாம்பு, சின்னச்சின்ன, மணிமணியாக, ஊரூராக, சிரித்துச்சிரித்து, மேடைமேடையாக.
அடுக்கிடுக்குத் தொடர் : அடுக்குத்தொடர் ஒன்றில் ஒருசொல் மட்டும் திரிந்துநின்று கருத்தை அழுத்தஞ்செறிவோடு வெளியிடுமாயின் அத்தொடர் அடுக்கிடுக்குத் தொடர் எனப்படும் உ+ம் நடுநடுங்கி, பென்னம்பெரிய, செக்கச்சிவந்த, முற்றுமுழுதும், கன்னங்கரிய, கடுகடுத்த, சின்னஞ்சிறிய,
சிவந்த சிவந்த என்ற அடுக்குத்தொடரின் இரு சொற்களுமே இடுக்கி - திரிந்து. “செக்கச் செவேல்”, “செஞ்செவிய” என நிற்கும் உதாரணங்களும் உண்டு.
இணைமொழிகள் இருவேறுசொற்கள் இணைந்து உருவானது இணைமொழி. கருத்துச்செறிவு உயிர்த்துடிப்பு உச்சநிலைக்குயர்ந்த இன்னொருவகைச் சொற்றொடர் இணைமொழி. இணைமொழிகள் எதுகைத் தொடர்பாலோ, மோனைத் தொடர்பாலோ, எதிர்க்கருத்துத் தொடர்பாலோ பொருட்பொருத்தம் நோக்கி இணைக்கப்பட்டிருக்கும். (கரடுமுரடு - எதுகைத் தொடர்பு, வற்றி வரண்டு - மோனைத் தொடர்பு) உ+ம்: அருமை பெருமை, மூலைமுடுக்கு, சந்துபொந்து, பயிர்பச்சை, மட்டுமரியாதை, காடுமேடு, ஈவிரக்கம், ஏகபோகம், (நன்மைதீமை - எதிர்க்கருத்து).
இரட்டைக் கிளவி : தனித்து நின்று அர்த்தம் தரும் ஆற்றலற்ற ஒரு சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருள் தந்து நிற்கும் போது அது இரட்டைக்கிளவி எனப்படும். உ+ம் : கிறுகிறுத்து, கல் கல், பளிர் பள், கம கம.

Page 55
பண்டிதர் ச.வே.ப - 04 - தமிழ் இலக்கணப்பூங்கா
மரபுச் சொற்றொடர்கள் (இலக்கணைகள்) ; சில சொற்றொடர்கள் நேரடிப் பொருளுக்குப் பதில் வேறோர் அர்த்தத்தை வழக்காற்றலால் உணர்த்தும். அவை மரபுச் சொற்றொடர்கள் எனப்படும். குறிப்புப் பொருளை தந்து வருவதால் இலக்கணைகள் எனவும் பெறும். முகத்தில் கரிபூசுதல் என்பது ஒரு மரபுத்தொடர். இதற்கு ஒருவரை எவ்விதத்தில்ோ அவமானப்படுத்துவதாக அர்த்தங்கொள்வதே வழக்கம். இந்த வழக்கு மரபுப்பொருள் கோளுக்குரியதாதலால் இது மரபுத்தொடர் எனப்படும். தமிழில் இவை பல நூற்றுக்கணக்கில் வழங்குகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை Idioms எனவும் Phasa verbs எனவும் வழங்குவர்.
షో . -- .شد s» +tib -- : - ஆடுத்துக்கெடுத்தல், பந்தம்பிடித்தில், அள்ளியிறைத்தல்,”வயிற்றைக்கழுவுதல், துண்டுவிழுதல், குழிபறித்தல், அடிவருடல், கங்கணங்கட்டுதல், மனப்பால் குடித்தல்,
முயற்கொம்பு, உப்புப் புளியில்லாப் பேச்சு. 1-Y.
உவமைச் சொற்றொடர்கள் : கேட்போர்க்கு அந்நியமான ஒரு பொருளின் தன்மைகளை விளக்க, அவர்களுக்கு நன்கு பரிச்சயமான இன்னொரு பொருள் துணையாக எடுத்தாளப்படுதல் வழக்கம். அந்த விளக்கப்படவேண்டிய (அந்நியமான) பொருள் "உவமேய்ம் எனப்படும். விளக்கும் செயலில் துணையாக எடுத்தாளப்படும் பொருள் உவமானம் எனப்படும். இந்த உவமேய உவமானப் பொருள்களிடை ஒத்த தன்மைகள், பொதுத்தன்மைகள் நிறைந்து விளங்க வேண்டியது அவசியம். “தாரகை நடுவண் தண்மதிபோல மேடைக்கண் வீற்றிருக்கும் தலைவர் அவர்களே” என்ற புகழ்ச்சியில் உவமேயமான சபையோர்களைவிட, உவமானமான தாரகைகள் சிறந்தவையாகவும், அதிகமானவையாகவும், தலைவரை விட உவமானமாகிய சந்திரன் மேம்பட்டதாகவும் அமைந்திருத்தல் காண்க, இப்பண்பு, இகழ்ச்சியில் மிக இழிந்த உவமையுடன் அமைதல் வேண்டும். அனலிடைப்பட்ட மெழுகுபோல, ஆற்றில் கரைத்த புளியென, பசுத்தோல் போர்த்த புலி ஒப்ப, இலைமறை காய்போல, ஊமைகண்ட கனவைமான, காட்டில் எறித்த நிலவை நிகர்த்த என்பன சில உவமைத்
தொடர்கள்.

tungs of Cal - 105 - தமிழ் இலக்கணப்பூங்கா
பயிற்சி - 10
இத் தொடர்களை இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், இணைமொழி, அடுக்கிடுக்குத் தொடர் என வகைப்படுத்துக. 1. மப்பும் மந்தாரமும் 2. குளுகுளுப்பு 3. செக்கச் சிவந்த 4. வெவ்வேறு 5. குறுகுறு 6. வழிய வழிய 7. கண்டதுண்டம் 8. கமகம 9. தாறுமாறாக 10. அள்ளி அள்ளி 11. போக்குவரத்து 12. ஒவ்வொன்றாக 13. மூலை முடுக்கு 14. வெட்டை வெளியாக 15. ஏறக்குறைய 16. கர கர 17. சந்துபொந்து 8. பச்சைப் பசேல் 19. தெள்ளத் தெளிந்த 20. செஞ்செவிய 21. வீரதீரம் 22. டுமீல் டுமீல் 23. காரசாரம் 24. கன்னங்கரேல் 25. குளிரக்குளிர
அணிவகைகள் உவமை உருவக அணிகள் இருவர் சகோதரர் உரையாடுகின்றனர்.
அண்ணன் , தம்பி எங்கள் தளபதி உண்மையில்
நெப்போலியனைப் போன்ற ஒரு வீரன்தானடா! தம்பி : நெப்போலியனைப் போன்ற. என்ன அண்ணா?
எங்கள் தளபதி நெப்போலியனே தான்! இங்கு அண்ணன் கையாாண்டது உவமை அணி. தம்பி கைாயண்டது உருவக அணி. நெப்போலியனின் வீரம், விவேகம், துணிவு, ஊக்கம் போன்ற குணாதிசயங்களுள் பெரும்பாலன அமைந்தவனாகத் தனக்குத் தென்பட்ட தன் தளபதிக்கு, அவனிலும், மேம்பட்டவனாகத் தான் கருதும் நெப்போலியனை உவமையாகக் கூறினான் அண்ணன்.
ஆனால் தம்பியோ, நெப்போலியனின் சிறப்புக்கள் நூற்றுக்கு நூறுவீதம் இத்தளபதியிடமும் இருப்பதான நம்பிகையுடனும், இவன் அச்சொட்டாக நெப்போலியனே தான் என்ற பெருமித உணர்வோடும் இவனை நெப்போலியனாகவே உருவகித்துவிட்டான்.
அண்ணன் கூற்றில் உவமேயம் தளபதி உவமானம் நெப்போலியன். இது உவமை அணி. தம்பி கூற்றில் தளபதி நெப்போலியனாகவே தரிசிக்கப்பட்டான் - உருவகிக்கப் பட்டான். இது உருவக அணி.

Page 56
பண்டிதர் ச.வே.ப - 106 - தமிழ் இலக்கணப்பூங்கா
உ+ம்உவமை அணி உருவக அணி
தாமரை (போன்ற)முகம் முகம் (ஆகிய) தாமரை சந்திர வதனம் வதன சந்திரன் கெண்டை விழி விழிக்கெண்டை இமயத் தோள் தோளிமயம்
மேலுஞ் சில உருவகங்கள் :
கால்பெற்ற தாமரை, வேரில்லாக் கொடி, வங்கச் சிங்கம், சொல்லேருழவர், சாளரங்களில் பூத்த தாமரைகள், சன்னலில் உதித்த சந்திரன், களத்தை எகிறும் மதயானை.
உன்றன்தோள் இமயத்தின்
உச்சியினை யான்வென்று ரென்சிங்காய்க் களிக்கின்ற
திருநாளும் எந்நாளோ?
- (GF.(86),J.L)
வஞ்சப் புகழ்ச்சி அணி :
புகழ்வதுபோல் பழிக்கும் பாங்கில் அமைந்த அணி வஞ்சப்புகழ்ச்சி அணி. இது அங்கத அணியின் மறைமுகவசைப் பிரிவை ஒத்தது. நாசூக்காக, மறைமுகமாக வெளியிடுவதன் மூலமே கேட்போனிடம் உத்தேச உளப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களும், சந்தர்ப்பங்களும் உண்டு. அச்சிறப்புக் குறித்து இவ்வுத்திமுறையும் ஓர் அணியாக மதிக்கப்படுகிறது. புகழ்வது போலப் பழித்தலாகிய இவ்வணி (Satire), இலக்கியக் கலையின் உச்சியில் மலர்ந்த
ஒன்றாகப் போற்றப்பட்டுப் புகழ் மிகு ஆங்கிலக் கவிஞர்
களாலும் பெருவழக்காகக் கையாளப்படுகிறது.
உ+ம் ஒரு சீமாட்டியின் அரக்க சுபாவத்தை நாசூக்காகச் சாடவிழைந்த ஒரு கவிஞன், “அச்சீமாட்டி ஜீவகாருணியம் மிக்கவள், தான் வளர்க்கும் சிறுபூனைக்குக்கூடத் தினமும் பாசத்தோடு பத்தெலிகளாவது அடித்து உணவுபடைப்பாள்’ என்று புகழ்வதுபோலக் குத்திக்காட்டி, வெற்றிகரமாக அச்சீமாட்டியைப் பழித்துவிடுகிறான்.
பயந்தாங்கொள்ளி முத்தரம்மானைப் புகழ்வதுபோலப் பழிக்குங் கவிதை -

பண்டிதர் ச.வே.ப - 107 - தமிழ் இலக்கணப்பூங்கா
“முனியைக் கூடத் தள்ளி வீழ்த்திவிட்டார் - எங்கள் முத்தரம்மான் வீர னாகிவிட்டார்! மனைவி கலைக்க ஓடி வந்த நேரம் - அந்த மையிருட்டில் நடந்ததிந்த வீரம்”
- (3.086)I.L.)
தற்குறிப்பேற்ற அணி :
இயற்கையாகவோ ஒரு காரணம் பற்றியோ நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் புலவன் தான் கருதும் ஒரு காரணம் பற்றியே நிகழ்ந்ததாக, தன் குறிப்பை அந்நிகழ்ச்சிமேல் ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி.
உ+ம் மிதிலை நகரத்தின், LDIT6soo85 உச்சிகளில் கொடிகள் காற்றில் அசைந்துகொண்டிருந்தமை தூரத்தில் வந்து கொண்டிருந்த இராமனை “ஒல்லை வா’ என்று அந்நகள் அழைப்பது போன்றிருந்தது என்கிறார் கம்பர்.
முகிலினங்கள் அலைகிறவே முகவரிகள் தொலைந்தனவோ - இங்கு காற்றின்போக்கில் அள்ளுண்டலையும் முகில்களை, தாம் தேடி வந்தவரின் முகவரியைத் தொலைத்துவிட்டதால் அவரது வீடுதேடி அவை அலைகின்றனவோ என்று தன் குறிப்பை ஏற்றிப் பாடுகிறார், இக்காலத் திரையுலகக் கவிஞர் வைரமுத்து:
தன்மை நவிற்சி அணி :
படிப்பவன் மனத்திரையில் பளிச்செனக்காட்சி விரிக்கும் வருணனைச் சிறப்புத் தன்மைநவிற்சி அணி எனப்படும். so hub “வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்” இவ்வணியே படிமம்’ எனும் பெயரையும் பெறுகிறது.
சிலேடை அனிை: இரு பொருள்பட - இரட்டைக் கருத்துவர அமைந்த வாக்கியம், பாடல்கள் சிலேடை எனப்படும். இரட்டுற மொழிதல் எனவும் இவ்வணி குறிக்கப்படும். உ+ம் வாரும் இரும்படியும். நம்பிக்கை வை. இருந்ததும் படித்தோம்.

Page 57
பண்டிதர் ச.வே.ப - 108 - தமிழ் இலக்கணப்பூங்கா
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே!
வேற்றுப்பாருள் வைப்பு அணி : புலவன் தான் கூறப்புகுந்த ஒரு பொருளின் தன்மை கூறிப் பின்னும் அதற்கு வலுவூட்டல் வேண்டி உலகறிந்த பொதுப்பொருள் வேறொன்றையும் அதற்கு ஊன்றுகோலாகக் கூறி முடித்தல் வேற்றுப்பொருள் வைப்பு அணியாகும்.
உ+ம். சீதை இராவணனுக்கு, உன், மந்திர, மாய பலங்களும், உடல், வர, வாள், i j60DL j6)áj85(65D இயமனை வெல்லலாம். ஆனால் என் இராமனின் அம்புக்கு இவை எல்லாம் சிதறி அழிவது நிச்சயம், எனக்கூறி “விளக்கின் முன்னால் இருள் நிற்க முடியுமா?’ எனச் சம்பந்தமற்ற ஒரு பொருளை அடுத்து வைத்தமை சிறந்த உதாரணம்.
உயர்வு நவிற்சி அணி : ஒரு பொருளானது தன் பெயராலன்றி, அதி உயர்ந்த வேறோர் பொருளின் பெயரால் குறிக்கப்பட்டுக் கேட்பாரை மகிழ்விப்பதும், ஒன்றை அதன் இயல்பான தன்மையினும் அதிகம் உயர்த்திச் சொல்வதும் இந்த அணி. உ+ம் பிறையை அணிந்த கயல்விழிகள், வானத்தை முட்டும் மாளிகைகள்.
பிறிதின்நவிற்சி அணி : ஒரு கருத்தை, வெளிப்படையாகச் சொல்லாமல், சமமான பிறிதொன்றை, வேறொன்றை மொழிதல்மூலம் கேட்போர் உணர வைக்கும் அணி பிறிதின் நவிற்சி அணியாகும். இதனையே (Symbol) என்னும் குறியீடு என நவீன இலக்கியகாரர் மொழிவர்.
s b “கட்டிலொன்று வாங்கியதால்
தொட்டில் ஒன்று வாங்கியதால் வட்டில் பத்து வாங்கிவிட்டேன் பாவி’
- (3.686).U)

பண்டிதர் ச.வே.ப - 109 - தமிழ் இலக்கணப்பூங்கா
இல்பொருள் உவமை அணி : இல்லாத ஒரு பொருளை இருப்பதாகவோ, நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியை நடந்ததாகவோ கொண்டு, அவற்றை உவமானங்களாகக் காட்டி, உவமேயப் பொருள்களை விளக்குவது இல்பொருள் உவமை அணி எனப்படும்.
உ+ம் இருளின் துண்டங்கள் ஒளித்துண்டங்களைக் கவ்வினாற் போல, கருவண்டுகள் வெண்மல்லிகைப் பூக்களிலமர்ந்து மது அருந்தின.
ஐயவணி :
ஒரு பொருளை இன்னதுதான் எனத் தெளிந்த நிலையிலுங்
கவிஞன் அதன் மேம்பாட்டை வாசகள் நயந்தின்புறவைக்கும்
நோக்குடன், அப்பொருளிலும் சிறந்த இன்னொரு பொருளோ
என ஐயுறும் பாவனையில் அதனைப் பாடுவது ஐய அணி.
s Lib தாதளவி வண்டு தடுமாறும் தாமரையோ?
மாதர் எழில் முகமோ?
தேற்றவணி : ஒரு பொருளைக் கண்டு, அதுவோ, இதுவோ என்று சந்தேகிக்கும் பாவனை முடிவில், இன்ன இன்ன காரணங்களால் அது இப்பொருள்தான் எனத்தேறும் பாங்கில் அமைவது தேற்ற அணி.
உ+ம் : சந்திரன் பகலிலும் ஒளி வீசுவதில்லை; கருவண்டுகளை, கோத்த முத்தாரத்தை, கொவ்வைக்கனிகளை அணிந்து தோன்றுவதில்லை. எனவே அங்கு தெரிவது சந்திரனன்று; மங்கை முகமேதான்.
எடுத்துக் காட்டுஅணி : புலவன் தான் கூறும் கருத்துத் தெளிவுபடுதற் பொருட்டுத் தன் கருத்துக்குப் பொருந்தும் இன்னோர் விடயத்தை எடுத்துக் காட்டுதல் எடுத்துக் காட்டு அணியாகும்.
உ+ம்: 'அகர முதல எழுத்தெல்லாம்!” என்ற எடுத்துக்காட்டு அணி மூலம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற உண்மையை விளக்கிக் காட்டினார் வள்ளுவர்.

Page 58
பண்டிதர் ச.வே.ப - 10 - தமிழ் இலக்கணப்பூங்கா
கருத்துடை அடைகோளணி : ஓர் உள்நோக்கத்தை வலிவாக நிறைவேற்றப் பொருத்தமான அடைமொழிகளைப் பொருத்தமான உத்திமுறையில் பிரயோகிப்பது இவ் வணி. உ+ம் : சீதை மாசுண்ட மணியனாள், தேசுண்ட திங்களும் என்னத் தேய்துள்ளாள். காசுண்ட கூந்தலாள். ஆனால் அவள் கற்பும் காதலும் மட்டும் ஏசுண்டதில்லை.
வேற்றுமை அணி : , m ஒன்றுக்கொன்று ஒப்பான இரு பொருள்களை வேற்றுமைப்படுத்திக் காட்டுதல் வேற்றுமை அணியாகும். உ+ம் பிரமனும் படைப்பாளி; பெருங்கவிஞனும் படைப்பாளி: ஆயினும் பிரமன் படைக்கும் வெற்றுடம்புகள் அழிந்துவிடும் பெருங்கவிஞன் படைக்கும் காவியங்கள் அழிந்துவிடுவதில்லை.
பயிற்சி - 11
1. பின்வருவன என்னென்ன அணிகள் எனக்கூறுக:
1. தேன்போலுங்கவிதை இது 2. நீ என் கண்ணில் பாவையன்றோ? 3. தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேன்கலந்து பரக்க விட்டாற்போன்று செழித்துச் சிவந்த அந்திவானம் 4. அவன் தன் அண்ணனையே அடித்து வென்ற அதிபெரியன் 5. பீலிபெய்சாகாடும் அச்சிறும், அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின் 6.வேகத்திரை வாயால் வேதப் பொருள் பாடும் ஆழித்தவ முனிவர் 7 என் மகன் குறும்புக்காரன் தான்; வாயாடிதான்; பொறுப்பிலிதான்; ஆனால் திருடன் அல்லன் 8 மாண்டு கிடக்கும் மனிதாபிமானப் போராளிகளுக்காகத் தர்மதேவதை வானத்திலிருந்து கண்ணிர் பொழிகிறாள் என்னும்படி மழை “சோ’ வெனக்கொட்டுகிறது. 9. இராவணன் காலடி எடுத்து வைக்குந்தோறும் பூமிதேவி முதுகு உளுக்குற்று முனகலானாள் 10. உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்புச்செய்தவன் தண்டனை கொள்வான்.

பண்டிதர் ச.வே.ப - - தமிழ் இலக்கணப்பூங்கா
2. பின்வருஞ் சிலேடைத் தொடர்களிலுள்ள இருவேறு
பொருள்களைக் கண்டறிக. 1. வாரும் இரும்படியும் 2. இருந்ததும்படித்தோம் 3. நீ நம் பிக்கை வை 4. அவன் அறிவிலாதவன் 5. சின்னப் பனை வெட்டினோம் 6.மாமன் மாமியர்க்குணவு கொடுத்தான் 7.புலிகொல்யானை வீழ்ந்தது 8.வல்லாரை வளர்ப்பது எளிது 9. செல்லக்கால்கள் 10. அந்தணர்க்கு ஆபத்து 11. வாய்த்த விடம் 12. குந்தியிருந்தாள் 13. அடிப்பார் இல்லை 14. என்னத்தை வாழ்த்தினாள் 15. மூன்று கப்பல் வாழைப் பழங்கள் 16. ஓநாய் 17. அம்மா தவம் 18. எழுவாய் பயனிலை 19. ஆனைக்குட்டி ஐயருக்கு எத்தனை கால் 20. ஒளித்திரு 21.தலைவிதிவசம் 22.புதுக்கவிதை 23. தேனி 24. கட்கடை 25. நீர் வாரும் 26. சீறடி 27 நூறுதரம் 28. அச்சிறுவண்டி.
பழமொழிகள் : மனித சமூகத்தின் அனுபவத்தெளிவு மேலிட்டில் பிறப்பவை பழமொழிகளும் விடுகதைகள் போன்றவைகளும். EP மொழிகள் மனித சமுதாயத்தின் ஒழுக்க வளர்ச்சிக்கும், பண்பாட்டுச் சீரமைப்புக்கும், சிந்தனைச் செழுமைக்கும் தாயாகவும் அவற்றின் சேயாகவும் நின்று மெருகேறி நிலைத்து நிலவும் விசித்திரப் பொக்கிசங்கள். பண்டுதொட்டு வழங்கி வரும் காரணத்தினால் இக் கூற்றுக்கள் பழமொழிகளென வழங்கப்படுகின்றன எனலாம்.
உ+ம் : கண்டது கற்கப் பண்டிதனாவான் மேழிச்செல்வம் கோழைபடாது - காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு - குறிப்பூச்சு நெஞ்சிருட்டு - பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் - உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று - அடிக்கிற கைதான் அணைக்கும் - ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் - வண்டியும் ஒருநாள் ஒடத்தில் ஏறும் - கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை குடிக்கிறது கூழ் கொப்பளிக்கிறது பன்னிர் - கந்தையானாலும் கசக்கிக்கட்டு.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

Page 59
பண்டிதர் ச.வே.ப - 12 - தமிழ் இலக்கணப்பூங்கா
مه جه سے கவிதைகளில் காணப்படும்
* நயங்கள் :
(1) எளிமையான சொல்நடை (2) உவமை உருவக, குறியீட்டு அணிகள் மலிந்திருத்தல் (3) யாரும் முன்பு பாடாத புதுக்கற்பனைகள் கொண்டிருத்தல் (4) ஒலி நயம்மிக்க எதுகைகள், அதிக மோனைகள் பொலிந்திருத்தல் (5) மனக்கண்ணில் காட்சி விரிக்கும் ஒவியத்தன்மை (6) தூண்டப்புகுந்த உணர்ச்சியைப் பூரணமாகத் தூண்டத் தக்க சந்தப் பொருத்தம், நுணுக்கமான சொற்பிரயோகம் (7) சமூகத்தின் நன்னம்பிக்கைகளை, நல்ல தியானங்களை மேலும் வலுப்படுத்தும் கருத்துயர்வுடைமை (8) சமூகத்தை உண்மையில் உலுக்கும் பிரச்சினைதீர நடுநிைைலயோடு உணர்ச்சி அழுத்தத்தோடு சரியான வழியுரைத்தல் (9)சுருங்கச் சொல்லலாலும் சமூகத்தைக் கட்டும் நியாய ஆற்றலாலும் மந்திரமாம் தன்மை (10) ஓசை நுணுக்கமும் யாப்பு அமைதியும் பெற்று மெல்லின, இடையின ஒலிகள் மலிந்து குலுங்கும் சொல் விருந்தாய் ஒளிர்தல் (11) சமூகப் பாரம்பரியங்கள், பண்பாடுகளை ஊறுபடுத்தாத நற்பலன் தரும் புதுமைகளை ஏற்கும் - தீமைகளை உக்கிரமாகச் சாடித் தள்ளும் இலட்சிய சந்நதமாய் - நீதிக்குரலாய் விளங்கல் (12) கவிதையின் உயிர்சத்தியாகிய உணர்ச்சி வேகம் கூர்த்து வீச்சுடைத்தாய் அமைந்திருத்தல்.
சிறந்த கட்டுரை எழுதுவதற்கு இன்றியமையாத ஆயத்தங்கள் : இளம் வயதிலிருந்தே பாடசாலை, ஊர்ச் சங்கங்களில் இடம் பெறும் விவாதங்களில் ஈடுபட்டு, துரிதமாக, நெறிப்படச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து வந்திருக்க வேண்டும். தவறியவர்கள் இந்த நிமிடத்திலிருந்தாயினும் நண்பர்களோடேனும் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டுச் சிந்தனை விசையை வளர்க்க வேண்டும். எவ்வகைக் கட்டுரைச் சிறப்புக்கும் சிந்தனை யாற்றலே அடிப்படை ஒருவனது சிந்தனையிலுதிக்கும் கருத்துப் பெருக்கத்தின் பிரதிபலிப்பே அவனது சொற்களஞ்சியம் என்பர் உளவியலாளர்.
செந்தமிழ் நூல்கள், பத்திரிகை, சஞ்சிகைகளை நிறைய வாசித்து அறிவுலகின் சகல துறைகளிலும் நிலவும் கருத்துக்கள் தகவல்களைத் தேடித்திரட்டி மனதில் பதித்து வருதல்

பண்டிதர் ச.வே.ப - 113 - தமிழ் இலக்கணப்பூங்கா
வேண்டும். இப்பயிற்சி மனத்திரையில் சரியான சொல்வடிவங்கள், சொற்றொடர் வடிவங்கள் வாக்கிய வடிவங்களைப் பிழையறப் பதித்துப் பிழையற எழுதும் ஆற்றலை உருவாக்கித்தரும்.
தினமும் ஒரு பக்கமாயினும் சுயசிந்தனையில் எழுதி வருதல் வேண்டும். இப்பயிற்சி எழுத்துறுப்பு அமைவுக்கும், ஆற்றல் மிக்க சீவகளை ததும்பும் வசன நடையில் எழுதும் இலாவகம் கைவரவும் வழிசெய்யும்.
எழுவாய் - பயனிலைகளுக்கிடையில், எழுவாய் சுட்டுகளுக்கிடையில் பொருத்தமின்மையாகிய வசனப்பிழைகள், கருத்துத் தெளிவின்மை, விறுவிறுப்பின்மை ஆகிய குறைபாடுகளை இலகுவில் அறவே நீக்கிக் கட்டுரையைச் சிறப்பிக்க மிகவும் உதவுவது கருத்துக்களைச் சிறுசிறு வசனங்களில் அமைத்தெழுதும் வழக்கமாகும்.
பரீட்சார்த்தி தாம் எழுதும் கருத்து, புள்ளிவிபரம், ஒரு சொல்லின் உச்சரிப்பு என்பன சரியென்று நிச்சயம் இல்லாத பட்சத்தில் எவ்விதத்திலோ அவற்றை எழுதுவதைத் தவிர்த்து விடவேண்டும்.
பரீட்சார்த்தி தாம் எழுதத் தெரிந்தெடுத்த கட்டுரை பற்றிய தமது மனச்சார்பு அடிப்படையில் மனதில் உதிக்கும் கருத்துக்களை விரைவாகத் தனித்தாளில், உதித்த ஒழுங்கில் குறித்துக் கொள்ள வேண்டும். போதிய அளவு கருத்துக்களைக் குவித்துக் கொண்டபின், அவற்றை முதல் விளக்க வேண்டியதிலிருந்து முடிவில் விளக்கவேண்டியது வரை இலக்கமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்வது அடுத்தபடி
அதன்பின் வாசகனின் அவதானம் முற்றாகக் கட்டுரையின் பக்கம் திரும்பிக் குவியும் வண்ணம் கவர்ச்சியான தோற்றுவாய் - பீடிகை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னரே முக்கிய கருத்துக்களைப் பந்தி பந்தியாக விளக்கவேண்டும்.
தாம் ஏற்கனவே ஒழுங்கு செய்திருக்கும் வரிசைக்கிரமத்தில் ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு பந்தியில் விளக்கவேண்டும்.

Page 60
பண்டிதர் ச.வே.ப - 4 - தமிழ் இலக்கணப்பூங்கா
பரீட்சார்த்தி தாம் மனனமாக்கி வைத்திருக்கும் கவிதைகள், பழமொழிகள், மரபுச் சொற்றொடர்கள், பொன் மொழிகள் என்பவற்றில் பொருந்துவனவற்றை ஆங்காங்கே புகுத்தியும், தர்க்க ரீதியாகவும் எழுதுவதன்மூலமும் கட்டு-ரைக்குக் கவர்ச்சி, கனதி, உயிர்த்துடிப்பை ஏற்படுத்த வேண்டும்.
இறுதியான முடிவுரைப் பந்தி, முழுக்கட்டுரைக் கருத்துக்களின் சாராம்சம் -- பரீட்சார்த்தியின் தெளிவான தீர்ப்பு அடங்கியதாக இருத்தல் அவசியம்.
எழுதி முடித்த பின் கட்டுரை நிதானத்தோடு வாசிக்கப்பட்டு எழுத்துப் பிழைகள், வசனப்பிழைகள் மற்றும் தவறுகள் யாவும் திருத்தப்பட வேண்டும்.
“சுருக்கம்” எழுத முக்கிய கவனிப்புகள்
(1) எத்தனை சொற்களிலே சுருக்கம் அமைய வேண்டும் என்பதனை முதற்கண் நிச்சயப்படுத்தல் அவசியம். (2) பந்தியின் மையக் கருத்து, அதன் கண்ணோட்டம் என்பன கண்டுபிடிக்கப்படும்வரை கருத்துான்றி மீண்டும் மீண்டும் அப்பந்தி வாசிக்கப்பட வேண்டும் (3) seibg மையக் கருத்தே பந்தித் தலையங்கமாக எழுதப்படுதல் வேண்டும் (4) அந்த உயிர்க் கருத்தைத் துலக்கி, நிலை நிறுத்தத் தேவையான கருத்துக்களை மட்டும், அரிசிக்குள்ளிருந்து நெல் பொறுக்கிச் சேகரிப்பது போலப் பொறுக்கி எடுத்து ஒரு தாளில், பந்தியிலமைந்த வரிசைக்கிரமத்தில் சரியான - சிறு சிறு - சொந்த வாக்கியங்களில் குறிக்கவும். (5) தரப்பட்ட பந்தியில் உவமைகள், உதாரணங்களையும் மிகைபட, திரும்பத் திரும்ப முரண்படக் கூறப்பட்டவைகளையும் ஆராய்ந்து முடிந்தவரை விலக்கவும். (6) சேகரித்த சிறு வசனங்களை ஆகவே, ஆயினும், அதனால் முதலிய தொடுப்புச் சொற்களால் பொருத்தமுறத் தொடர்புபடுத்துக. (7) சுருக்கத்தில், ஒரு கருத்தைக் குறிக்கும் உதைபந்து, குடியிருப்பு அமைச்சரவை போன்ற சொற்றொடர்களும் ஒவ்வொரு சொல்லாகவே எண்ணப்படுகின்ற வழக்கப்படி, சொற்களை எண்ணி விதிக்கப்பட்டதிலும் ஐந்திற்கு மேற்பட்ட சொற்கள் கூடியோ குறைந்தோ காணப்பட்டால் மட்டும் மேலும் சில கருத்துக்களை நீக்கியோ. புகுத்தியோ சொற்றொகையைச் சரிப்படுத்தவும். (8) ‘சுருக்கம்’ விடைக்குரிய

பண்டிதர் ச.வே.ப - 115 - தமிழ் இலக்கணப்பூங்கா
கோடிட்ட தாளில் உமது சுருக்கத்தைக் கோடுதோறும் ஒரு சொல்லாகப் பார்த்து எழுதி, திரும்ப அதனை வாசித்துப் பிழைகள் திருத்திச் சொல்லெண்ணிக்கையையும் gाीि பார்த்துவிடுக.
உலகமொழிகளில் தமிழ்ச் சொற்கள்
தமிழ் மொழியிற் பிறமொழிச் சொற்கள் வந்து கலந்துள்ளது போலத் தமிழ்ச் சொற்களும் ஏராளமாகப் பிறமொழிகளில் சென்று கலந்துள்ளன. தமிழின் சேய்மொழிகளான தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், குடகு, கோண்டா, துத்தம், ராஜ்மகால், ஒராவோன் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் நிறைந்து நின்று வழங்கி வருதல் இயல்பே. மேலும் எமது அயலவர் மொழியாகிய சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் வழக்கிலுள்ளன. ஆங்கிலமாகிய சர்வதேச மொழியில் கட்டு Djib - Catamaran, 960)600, d535 (6 - Annicut, serfd - Rice, 353 -, Curry, LDITstildbiTu --- Mango, LÖ6Tg55560660 fir --Mulliga Tawny, LD6OõTG6JÚLọ - Mamoty, afi(bü (B - Serute, 3in6ù5 - Coolie, முதலிய தமிழ்ச் சொற்கள் சென்று செறிந்து வழங்குகின்றன. கிரேக்க மொழியில் அரிசி (அறாசா) தோகை (துகி) முதலிய தமிழ்சொற்கள் வழக்கிலுள்ளன. எகிப்திய மொழியில் அப்பா - அத்தன் (அத்) முதலிய சொற்கள் வழங்குவதாக ஆய்வாளர் கூறுகின்றனர். ஜப்பானிய மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் கலந்து வழங்குவதாக அண்மைக்கால ஆராய்ச்சிகள் நிருபித்துள்ளன. தமிழுக்குச் சொற் கடன் வழங்கிய சம்ஸ்கிருதமொழி கூட, தமிழிலிருந்து மீன், நீர், நீலம், கூந்தல் குடிசை, கலை, பழம், பூசை, பொத்தகம் முதலிய சொற்களைக் கடனெடுத் திருப்பதாக மொழி ஆய்வாளர் கூறுகின்றனர்.
உலகின் ஆதிமொழிகளான கிரேக்கம், தமிழ், இலத்தீன், சமஸ்கிருதம், கீபுறு, சீனம் ஆகியவற்றுள் ஒன்றான தமிழ், திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாகும் பழமையும், என்றும் சீரிளமைத் திறங்குன்றாப் புதுமையும் உடையது.

Page 61
பண்டிதர் ச.வே.ப
- 16 - தமிழ் இலக்கணப்பூங்கா
பொருட்டொகுதிப் பெயர்கள்
இருநிதி : இருதினை : இருவினை : இருசுடன் இருபிறப்பு : முக்கனி : முத்தமிழ் : முசசங்கம : மும்மூர்த்திகள் : மும்மதம் முப்பொருள் : (ptbLD6ub : மும்முரசு : மூவேந்தர் : (pLILT6) : முப்புரம் : மூவிடம் : மும்மண்டலம் :
முக்குணம் : திரிகரணம் : முப்பொழுது : நாற்படை : நால்வர் :
நானிலம் : நால்வகைப்பூ :
நால் வருணம் : நான்கு புருடார்த்தம் நான்கு அரண் :
நான்கு புண்ணியம் :
நாற்கணம் :
சங்கநிதி, பதுமநிதி. உயர்திணை, அட்றிணை. நல்வினை, தீவினை. சூரியன், சந்திரன்.
சனனம், உபநயனம். வாழைக்கனி, பலாக்கனி, மாங்கனி. இயல், இசை, நாடகம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம். சிவன், திருமால், பிரமா கன்னமதம், கபோலமதம், பீசமதம்.
Lug5, Libi, u8FLb. &60076)lub, 856öTLDub, LDITGOuj. வீரமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு. சேரர், சோழர், பாண்டியள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். பொன்மதில், வெள்ளிமதில், இரும்புமதில். தன்மை, முன்னிலை, படர்க்கை. அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். ராசசம், தாமசம், சாத்துவீகம். மனம், வாக்கு, காயம். காலை, உச்சி, மாலை. யானை, குதிரை, தேர், காலாள். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். நிலப்பூ, நீர்ப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ நரகள், தேவர், மனிதர், விலங்கு. இருக்கு, யகர், சாமம், அதர்வனம். (பெண்); அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு. (ஆண்): அறிவு, ஓர்ப்பு. கடைப்பிடி, நிறை. பிரம்மர், சைத்திரியர், வைசியர், சூத்திரள்
அறம், பொருள், இன்பம், விடு
காடு, மலை, நீர், மதில் தானம், தவம், கல்வி, ஒழுக்கம் வல்லினம், மெல்லினம், இடையினம், ៩. ឧិfi6b

பண்டிதர் ச.வே.ப
நால்வகையாழ் :
நாற்கவி
நான்கு உபாயங்கள்: நால்வகைப்பொன்:
ஐம்பொறி : ஐம்புலன் : ஐந்து சக்தி :
பஞ்சபூதம் :
ஐங்கனை : பஞ்சவர்ணம் :
U(658FLDITUT585lb :
பஞ்சலோகம் :
பஞ்சகெளவியம் :
பஞ்சகன்னிகை :
பஞ்சதந்திரம் :
ஐந்திணை-அகம்: ஐந்தினை- புறம்:
பஞ்சாங்கம் : பஞ்சநாதம் : ஐந்து குற்றம்:
பஞ்சமூர்த்திகள்:
ஐந்திலக்கணம் :
- 17 - தமிழ் இலக்கணப்பூங்கா
பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி சாமம், பேதம், தானம், தண்டம் ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூதம் மெய், வாய், கண், மூக்கு, செவி சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி,
கிரியாசக்தி, ஞானாசக்தி
நிலம், நீர், வளி, தீ, வெளி வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம் கருமை, செம்மை, பசுமை, மஞ்சள், வெண்மை கொலை, களவு, கள், பொய், குருநிந்தை இரும்பு, செம்பு, ஈயம், பொன், வெள்ளி பால், தயிர், நெய், கோசலம், கோமயம் அகலிகை, மைதிலி, தாரை, துரோபதை, மண்டோதரி அசம்பிரேட்சிய காரித்துவம், அர்த்தநாசம், சந்தி விக்கிரகம், சுகிர் லாபம், மித்திரபேதம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை திதி, வாரம், நாள், யோகம், கரணம் கஞ்சம், கண்டம், தோல், நரம்பு, தொளை அவிச்சை, அகங்காரம், அவா, விருப்பு,
வெறுப்பு
சதாசிவம், உருத்திரன், மகேசுவரன், பிரமா, திருமால்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்பெருங் காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை,
குண்டல கேசி, வளையாபதி,
சீவகசிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் : நாகசூமாரகாவியம், உதயணகாவியம்,
يعم
ஐம்படை : பஞ்சலிங்கம்:
ஐம்புலத்தார் :
யசோதரகாவியம், சூளாமணி, நீலகேசி. சக்கரம், வில், தண்டு, வாள், சங்கு
சுயம்புலிங்கம், காணலிங்கம், தெய்விகலிங்கம், ஆரிடலிங்கம், மானிடலிங்கம்.
பிதிர், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்

Page 62
பண்டிதர் ச.வேய
பஞ்ச வாசனை :
ஐங்குரவர் : ஐங்காயம் :
ஐம்பால் :
ஆறுபடை வீடு :
ஆறுபகை :
ஆறாதாரம் :
ஆறுசுவை :
ஏழு பருவம் :
அட்டசித்தி :
எட்டுத் தொகை :
அட்டலக்குமி :
அட்டகிரி :
- 8 - தமிழ் இலக்கணப்பூங்கா
இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம். அரசன், தந்தை, தாய், தமையன், குரு கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம். ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர்,
குன்றுதோறாடல், திருவேரகம், பழமுதிர்சோலை. ஆறு பருவங்கள் :
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். அணிமா, இலகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்து. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை. தனலக்குமி, தானியலக்குமி, தைரியலக்குமி, செளரியலக்குமி, வித்தியாலக்குமி, கீர்த்திலக்குமி, விசயலக்குமி, இராச்சியலக்குமி. இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்
எட்டுவகை மெய்ப்பாடு : நகை, அழுகை, இளிவரல் மருட்கை,
அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி,
அட்டாங்கயோகம் : இயமம், நியமம், ஆதநம், பிராணாயாமம்,
நவக்கிரகம் :
நவரத்தினம் :
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது, கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், முத்து.

பண்டிதர் ச.வே.ப - 9 - தமிழ் இலக்கணப்பூங்கா
நவதானியம் : உழுந்து, பயறு, கடலை, எள்ளு.
கொள்ளு, சாமை, தினை, நெல், துவரை.
நவரசம் : அற்புதம், இரெளத்திரம், கருணை, இழிவு,
சாந்தம், சிங்காரம், பயம், பெருநகை, வீரியம்.
நவபேதம் சிவம். சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசுவரன் உருத்திரன், மால், அயன்
பத்துப் பாட்டு : மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், நெடுநல்
வாடை, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை திருமுருகாற்றுப்படை. தசாவதாரம் : மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன்,
பரசுராமன், தசரதராமன், கண்ணன், பலதேவன், கல்கி.
நீங்களும் கவிஞராகலாம்! யாப்பரின் அடிப்படை
ஒன்றுக்கொன்று சம்னான ஓசை அளவுடைய இரன்டு அடிகள் கூடக் கவிதை என்றே அழைக்கப்படும். இரட்டை நான்கு அடி கொண்ட அதிநீண்ட விருத்தக் கவிதைகளும், அடியளவில் மேலும் நீளும் அகவற்பா, கலிப்பா, ப.றொடை வெண்பா, வஞ்சிப்பா முதலியனவும் உண்டு.
இக்கவிதைகள் எதுகை, மோனை இலட்சணங்கள் சரிவர அமைந்திருக்க வேண்டியது அடுத்த முக்கிய அம்சம். இந்த எதுகை, மோனைகள் கவிதைகளுக்கு இலக்கணங்கள் என்பதைவிட - இன்றியமையாத இலட்சணங்கள் - அழகுகள் என்பதே பொருத்தமானது.
ஆனால் இன்று பத்திரிகைகளில் வெளிவருங் கவிதைகளில் இவ்விலட்சணங்கள் அமைந்தவை மிக அபூர்வம். கவிதைகள் “செவிநுகள் கனிகள்’ என வருணிக்கப்படுவதற்கு ஓசை ஒழுங்கும் எதுகை மோனை இலட்சணங்களுமே காரணம். இதனை, இத்தகைய மரபுக் கவிதைகளையும்.

Page 63
பண்டிதர் ச.வேய - 20 - தமிழ் இலக்கணப்பூங்கா
இவற்றைப் பற்றிக் கவலையே இன்றி அமைந்த புதுக்கவிதைகளையும் கவியரங்குகளில் காதாரக் கேட்ட இரசிகள்கள் ஒப்புக்கொள்வர்.
எனவே கவிதைக்கு உயிள்நாடியாகிய திட்டமிட்ட ஓசை ஒழுங்கு, இன்றியமையாத அழகுகளான எதுகை, மோனை இம்மூன்றும் அடிப்படை அம்சங்களாம். இம் மூன்றையும் சரிவரப்புரிந்து கொண்டவள் நல்ல சிந்தனைத் தெளிவும், உணர்ச்சி வேகமும் மிக்கவராயின் சிறந்த கவிதைகளை நிச்சயம் அவர் பாடித்தள்ள முடியும்.
எதுகைத் தொடைகள் :
கவிதையின் ஒவ்வோர் அடியினதும் முதற்சீரின் இரண்டாவது எழுத்து ஒத்தமைதல் எதுகை எனப்படும்.
பட்டு வாழ்க்கை நாடகம் ஒரேயொரு
கட்டு வீழ்ச்சி ஆடுவர் அரோகரா
வெட்டு ஊழ்க்கு விடினார் தராதரம்
மொட்டு &Ep தோடையில் அரூபியாய்
அவதானிக்குக :
1. ஒவ்வொரு கூட்டிலுமுள்ள நான்கு சொற்களும் ஒவ்வொருபாட்டு நாலடிகளின் முதற்சீர்கள். இந்த நான்கு சீர்களினதும் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றாக - ஒத்தனவாக இருப்பதை அவதானிக்கவும். இத்தொடைகள் எதுகைகள் எனப்படும். 2. இந்த முதற்சீர்களின் முதலெழுத்துக்கள் யாவும் குறில்களாக - அல்லது யாவும் நெடில்களாகக் கட்டாயமாக அமைந்திருத்தல் காண்க. இதைவிட்டு, குறில்களும் நெடில்களும் அடித்தொடக்கச் சீர்களின் முதலெழுத்துக்களாக ஒருபோதும் கலந்து வருவதில்லை. 3. இந்த எதுகைச் சின்களின் 2ஆம் எழுத்துக்கள், ஒன்றில் ஒரே மெய்களாக, அல்லது ஒரே உயிர்மெய்குறிற் கூட்டமாGen. நெடிற்b கூட்டமாகவோ மட்டும் அமைந்திருப்பதை அவதானிக்குக.

பண்டிதர் ச.வே.ப - 12 - தமிழ் இலக்கணப்பூங்கா
4. கவிதை எதுகை, மோனைகளைப் பொறுத்தமட்டில் சை, கை, டை முதலிய ஐகாரங்கள் அனைத்தும் குறில்களே - மூன்றாம் கூட்டை அவதானித்தறிக.
மோனைத் தொடைகள் :
ஒவ்வோர் அடியின் தொடக்கச்சீரின் முதல் எழுத்துடன் அவ்வடியின் மறுபாதியின் முதற்சீரின் முதலாம் எழுத்து ஒத்து வந்து மோனைத்தொடை அமைதல் இலட்சணம் - குறைந்தபட்சம் அவ்வடியின் வேறேதாவது ஒரு சீரின் முதலெழுத்தாவது ஒத்து வருதல் கட்டாயம்.
so b:
படுக்கும் போது மேற்கினிலே
படியுந் தலைகள் காலையிலே கிடக்கும் மாறிக் கீழ்த்திசையில்!
கிளர்ந்து பள்ளி எழுவீரே!
(F.(86).I.U)
ஒரு பாட்டின் அடிகள் ஓசை அளவு ஒத்து அமையுமாயின் ஏனைய கவிதை இலக்கணங்களான சீர் அலகுகள், அவ்வலகுகள் சந்திக்கும் தளைகள் யாவும் பிசகின்றித் தானாகச் சரியாக அமைந்துவிடும்.
முன்று மோனைக் குடும்பங்கள்
அ, ஆ, ஐ, ஒலி இ, ஈ, எ, ஏ 2, 2, 3, 9 ய, யா, யை, யெள யி, யீ, யெ, யே யு, யூ, யொ, யோ க, கா, கை, கெள கி, கீ, கெ, கே கு, கூ, கொ, கோ ச, சா, சை, செள சி, சீ, செ, சே சு, சூ, சொ, சோ த, தா, தை, தெள தி, தீ, தெ, தே து, தூ, தொ, தோ ஞ, ஞா, ஞை, ஞெள D, ஞ, ஞெ, ஞே | து, நூ, ஞொ, ஞோ ந, நா, நை, நெள நி, நீ, நெ, நே நு, நூ, நொ, நோ
ப, பா, பை, பெள பி, பி, பெ, பே பு, பூ, பொ, போ LD, DMT, 6DDD, GD67 ưôì, Lổ, Qup, (8up மு, மு, மொ, மோ வ, வா, வை, வெள வி, வீ, வெ, வே வு, வூ வொ, வோ

Page 64
பண்டிதர் ச.வேய - 22 - தமிழ் இலக்கணப்பூங்கா
நிறுத்தக் குறியீடுகள்
முற்றிய கருத்தலகு வாக்கியம். அதன் இடை எல்லை, கடை எல்லைகளைக் குறிப்பவை குறியீடுகள். கடை எல்லைக்கற்களாவன முற்றுப்புள்ளி, வியப்பிசைக் குறி, வினாவிசைக் குறி. இடை எல்லைக் கற்களாவன விளக்கிசைக்குறி, தொடரிசைக்குறி, காற்புள்ளி. 1. முற்றுப் புள்ளி (.) :
கூற்று - தகவல் வாக்கியத்தின் முடிவில் இடப்படுவது. 2. வியப்பிசைக் குறி (?):
கருத்தை விட ஓர் உணர்ச்சியே அதிகப்படியாக - முதன்மையாகத் தொனிக்கும் வாக்கிய முடிவுக் குறியீடு இது. 8. வினாவிசைக் குறி (?) :
வினாப் பொருளில் முடிந்த ஒரு வாக்கியத்தின் முடிவில் இடப்படுவது இது. 4. விளக்கிசைக் குறி (:) :
(முக்காற் புள்ளி) ஒரு சிறு விடயத் தலைப்பை அடுத்து அதன் விளக்கம் பின்னால் வருவதைக் காட்ட
இடப்படுவது.
5. தொடரிசைக் குறி (;) : (அரைப்புள்ளி)
(அ) ஓர் எழுவாய், பல பயனிலைகளைக் கொண்ட கூட்டு வாக்கியத்தில் (கடைசிப் பயனிலை தவிர்ந்த) எல்லாப் பயனிலைகளின் இறுதியிலும் இடப்படுவது இது.
(ஆ) ஒன்றுக்கொன்று எதிர்மாறான கருத்துள்ள இரண்டு வாக்கியங்களுக்கிடையிலும் இடப்படுவது இது. உ+ம் : கொழுத்தவன் மேலுங் கொழுக்கிறான்; மெலிந்தவன் மேலும் மெலிகிறான்.
(இ) ஒரே கருத்து மையங்கொண்டு விளங்கும் பல தனி வாக்கியங்களின் முடிவிலும் (இறுதிப் பயனிலை தவிர்ந்து) இடப்படுவது இது, உ+ம் : ஈட்டு புகழ் நந்தி பாண, நீ எங்கையர் தம் வீட்டிருந்து உாட விடிமளவும், - கேட்டிருந்து,

பண்டிதர் ச.வே.ப - 123 - தமிழ் இலக்கணப்பூங்கா
“பேய்’ என்றாள் அன்னை; பிறர் “நரி” என்றார்; தோழி ‘நாய்” என்றாள்; நீ என்றேன் நான்.
காற்புள்ளி (,) : விளிகளைத்தனித்தனி அடுத்தும் (அம்மா, அப்பா,) அடுக்கி வரும் இறுதி தவிர்ந்த பெயரெச்சங்களையும் வினையெச்சங்களையும் அடுத்தும் இடப்படுவது இது. வாக்கியக் கருத்துக்களை நின்று நின்று நிதானமாகக் கிரகிக்க இது உதவுகிறது. -- உ+ம் : சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா, சோற்றுப் பொருக்குலர்ந்தவாயா, புலையா, - திருக்குடந்தைக் கோட்டானே, நாயே, குரங்கே, உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.
6. SCHéaséSÖufG (Apostrophe) :
செய்யுள் ஒசைக்காகச் சொல்லை முதல், இடை, கடையில் குறைக்கலாம். என நன்னூலார் அனுமதித்துள்ள போதும் கீழ்க்கண்டவாறு சுருக்கக் குறியீடிட்டு அதனைச் செய்வது இலக்கணக்கட்டுக் கோப்பைப் பாதுகாக்க உதவும்.
போனான் = போ(யி)னான் + போனான் போறாள் = போ(கி)றாள் = போறாள் கேட்கிது = கேட்கிடுற)து = கேட்கி ‘து வந்தான்டா = வந்தான் (அ)டா = வந்தான் ‘டா
மேற்கோட்குறி ! இது ஒருவரது கூற்றை சிந்தனையை அடைப்பிட்டுக் காட்டவென இடப்படுவது. உ+ம்: “வென்று வா மகனே!”
விளக்கக் குறிப்புகள் சார்பெழுத்துக்களும் சார்பொலிகளும் : பக்கம் - 12
ஒலிவடிவம் என்பது தமிழிலுள்ள பல்வேறு உச்சரிப்பு ஒலிகளின் வடிவம். வரிவடிவம் என்பது அவ்வொலிகளுள் 247 பெற்ற எழுத்து வடிவங்கள். வரிவடிவ எழுத்துக்களுள் 30 முதலெழுத்துப்போக எஞ்சிய சார்பெழுத்துக்கள் 217. இந்த 217 எழுத்து ஒலிகளோடு, தமக்கெனத் தனித்தனி வரிவடிவம் பெறாத குற்றுகர, குற்றிகர, ஐகாரக்குறுக்க, ஒளகாரக்குறுக்க, மகரக்குறுக்க, ஆய்தக்குறுக்க, ஒலிகளும், உயிர்அளபெடை, ஒற்றளபெடை, ஆய்தஅளபெடை ஆகிய ஒலிகளும் சார்பொலிகளே.

Page 65
பண்டிதர் ச.வே.ப - 24 - தமிழ் இலக்கணப்பூங்கா
கடிதத்தின் அடிப்படை அம்சங்கள் 9:
கடிதங்கள் பெரும்படியாக 2 வகைப்படும். (1) உறவுமுறைக்கடிதம் (2) உத்தியோகபூர்வக் கடிதம்,
உறவுமுறைக் கடிதம் எழுதுதல் அனுபவமூலம் அனைவர்க்கும் கைவந்த கலை. ஆனால் பலவகைகளைக் கொண்ட உத்தியோக பூர்வக் கடிதமோ (எல்லாவற்றுக்கும் பொதுவான) 9 அம்சங்களை அடிப்படை உறுப்புகளாகக் கொண்டது. இக் கடித அமைப்புப் பற்றி, தட்டச்சுப் பயின்ற ஒருவரிடம் விபரமாக அறியலாம்.
நவாம்சம்
- “su60)L6G”
வடலியடைப்பு, சித்தன்கேணி.
2 -- 01-01-2002
கணம்
இயக்குநர், -> பழப்பாகுத் தொழிற்சாலை, நெல்லியடி.
gu1 IIT །─────────->>
<- காய்ச்சுநர் பதவிக்கு விண்ணப்பம்
மேற்படி பதவி வெற்றிடம் பற்றிய தங்கள் விளம்பரத்தை நேற்றைய தமிழ்த் தினசரிகளில் கண்ணுற்றேன். அதில் கேட்கப்பட்டுள்ள சகல தகைமைகளும் எனக்கும் உண்டு. எனவே நானும், தங்கள் தொழிலகத்தில் வெற்றிடமாக உள்ள காய்ச்சுநர் பதவிக்கு இத்தால் மனுச்செய்கிறேன்.
என் கல்வித் தகமைகள், 5 வருடத் தொழிலனுபவம்
பற்றிய அத்தாட்சிப் பத்திரங்கள், அண்மைக்காலத்தில் பெறப்பட்ட [6](န္ဓါစို့ நல்லொழுக்கத்தகுதி பற்றிய சான்றிதழ்கள் என்ப
வற்றின் உண்மைப் பிரதிகள் தங்கள் அறிவுறுத்தலுக்கமைய இத்துடன் தங்கள் மேலான பரிசீலனைக்கு அனுப்பப்படுகின்றன.
இப்பதவி எனக்கு வழங்கப்பட்டால் நான் முழுமனதோடும் விசுவாசத்தோடும் எனது கடமைகளை நிறைவேற்றி வருவேனென இத்தால் உறுதி கூறுகின்றேன். \ தங்கள் சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
oloist)-> 7
இப்படிக்கு
<-- தங்கள் உண்மையுள்ள
8 歯量ナー " செந்தாமரை V d


Page 66


Page 67
அறிவூர் பளர்
இலக்கணத்தோடு இடர்படும் L தென்பூட்டி, இலக்கணக் கல்வியை ஆற்றலோடு இலக்கணப் பூங்கா ெ
இக்கால மாணவர் வசதி நோக்க ஒழுங்கில் வகுத்திருப்பதும், இலக்
நோக்கோடு விடயங்கள் பூங்காவின் தனிச் சிறப்புக்கள்.
கற்போர் மனங்களிற் கிளர்ச்சியூட் இந்நூலை ஆக்கிய கவிஞர் பகு வாழ்த்தும்.
இலக்கணங் கற்கும் மானவர் களுக்கும் வேலையை இலகுபடுத்
இலக்கணம் எனும் இன்றியமையார் அறிமுகஞ்செய்யப் பொருத்தமான
பயங்கரமாக மாணவர் கருதும் இ தமிழில் சிறு குறிப்புக்களாக காலத்தினாற் செய்த தமிழ்ப்பணி.
எவர்க்கும் விளங்கும் எளிய ந உனன்மைகள் இலக்கணப் பூங்காவி
மூத்த தலைமுறையிடம் தாம் வா தலைமுறைக்கு வட்டியும் முதg கையளித்துள்ளார் என் மானவர்
எல்லாத் தரத்தினரும் தமிழ் விளங்கிக் கொள்வதற்குத் து: அமைந்துள்ளது.
&|Flä$। ଜୁର୍ଣ୍ଣ 184, El sugj GJITL, A

ர்வையில்...!
மாணவர்களுக்குக் கைகொடுத்துத் இனிய அனுபவமாக மாற்றிவிடும் வெளிவந்துள்ளது.
கலாநிதி சபா ஜெயராசா கி, விடயத் தலைப்புக்களைத் தனி கன அறிவுக்கு வலிவான தளமிடும் பிளக்கப்பட்டிருப்பதும் இலக்கனப்
தமிழறிஞர் க. சிவராமலிங்கம் 14
டும் உதாரனப் பிரயோகங்களோடு ந்சாட்சரத்தைத் தமிழுலகு நிச்சயம்
கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை படி களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர் தியுள்ளது தமிழ் இலக்கணப் பூங்கா. பண்டிதர் வே. சண்முகலிங்கம் ப் பாடத்தை மீண்டும் மாணாக்கர்க்கு நூல் இலக்கணப் பூங்கா.
சைவ பூஷணம் நம, சிவப்பிரகாசம் இலக்கணத்தை எளிய, இனிய பழகு நண்பர் பஞ்சாட்சரம் தந்துள்ளமை
நமரர் வி. தருமலிங்கம் (முன்பா.உ) டையில் பெரும்பாலான இலக்கன ஸ் விளக்கப் பெற்றுள்ளன.
பண்டிதர். நா. இராசையா ங்கிய இலக்கண அறிவை, இளைய லுமாக இலக்கணப் பூங்கா மூலம் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்.
பண்டிதர் இ. இராசலிங்கம் இலக்கணத்தை மிக இலகுவாக னை புரிவதாக இலக்கணப் பூங்கா
புலவர் ம. பார்வதிநாதசிவம்
செற் பிறிண்டேர்வர் பெருமாள் கோவிஸ்டி) யாழ்