கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 1998.03-04

Page 1
பங்குனி சித்திரை 19gg
 


Page 2
பிரதம விருந்தின் திரு. பொ. கருணாக
மகளிர் கவியரங்கு:-
மானல்ல தேனல்ல மலரல்ல பெண் கவியரங்கத்தலமை
கவிஞர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம்
 
 
 
 

\ உலகமே நம் இல்ல
\ உள்ளமெல்லாம் நம்சொந்தம் fДоағзаға 4и
Ionilische Kultur Magazini
இனிய தமிழ் ஏடு இருதிங்கள் ஒன்று.
ஆசிரியர்:
இந்துமகேஷ்
வெளியிடு: பூவரசு கலை இலக்கியப்பேரவை
ஜெர்மனி.
\ DO. കn \ வது இதழ்.
பத்திரிகைத்துறையில் என்பக்கபலமாய் நின்று r பூவரசின் வளர்ச்சிக்கு ಙ್: ஒத்துழைப்பு நல்கும் V முகவரி என் இகரிய நண்பர்கள். Poovaas, சகோதரிகள். Sininiah Maheswaran, படைப்பாளர்கள். Otto Brenner Ailee 56,
,Brennen 28325 عمرہ مت ۔ ۔ ۔ ۔ = * = ^سہ • . . . . வாசகப பெருமககளுககு Germany. என் மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பரிக்கிறேன்.
V
அன்புடன் \ இந்து மகேஷ்

Page 3
வாழ்தீதுப் பூக்களி.
வேரின்றிவெட்டி வைத்தாலும் ஒட்டிய இர த்தி) வேரூன்றிஓங்கிவளர்ந்து, தடித்த இவைகளையும் மஞ்சள் பூவையும், (of6f'}if ffà)6ðDad/u/uso. தரமான மரப் பலகையையும் தருகிற
ஆவாக 0f06Jf) )0; itf(്bj, ' 91தைத்திங்களில் ஆரம்பத்து தொடர்ந்து 50வது இதழை வெளியிடவிருக்கும் தங்களுக்கு or அண்/ 40க்கங்கtள். போட்டிகள் நடத்தி பரிசளித்துத் தமிழ் வளர்த்துவது உயர்வானது. பங்குனரி14,1516ம் திகத6ளில்நடை பெறவுள்ள இதழ்க் கண்காட்சிசிறப்பு வர் நரை பெn வாழ்த்துக்கள்.
அன்புடன் பொள்ளாச்சி நசன் (தமிழ்நாடு இந்தியார்
ہےب<حصے
நீர் ஊற்றாவிட்டாலும் நிலம் நோக்கிப் புதைத்துவிட்டால் பூப்பூக்கும் பூவரசு
ஏழாண்டாய் கதிகால்கள் பதிவைத்துவிட்டீர்கள். பார்பாராய் பூவரசு பூப்பூக்கும் பயம் இல்லை. ്യf്മ മന്ത്രg_6് பூத்தாவி வாழ்த்துகிறேன்.
அன்புடன், -பூனகர் ரவி
ーイトー ஜெர்மனி)
2 *****nounalreagaris

്യf 'jU தழ் கிடைக்கப் பெற்றேன். மரிக்க தன்ரி
ܫܺܐ*rܗܝ ܆ ܡrܝܐܝ ܕ݁ܐ܇ ، , , ,i (بر محتراسيم "سې ؛ کې ؛ محيم بیا یي د تل په سم سر و . د گ . . . . یو سر دي . و د - lf iliÄ i j (tio tiuj li_. Li j Füföl Voi fvivo " (AJ A( وL) + // ) فرعوامی مرزrtلمی اوaA பூவரசு ia/offfbfff.
fറ്റ് ക്ന0 ഗ്f ിa''tl' ( இலக்கி/ உலகுக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் தங்கள் கலைப்பணிதொடர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன் ஏ.ஜே.ஞானேந்திரன் (சுவிஸ்)
്യയff, buff('? t/4/usrr S'(56)ár வh)க்கப் புலர்ந்தது!
புர்ாகைப் பூக்கள் சரமாய் தொடுக்கின்ற சிறகை விரித்தது! ஐம்பதாவது சிறப்பிதழும்
كلمة ) مم مساء عمل ವಿಶ್ವಕ್ಗ್ರ: வெகுவிரைவினிலே தமிழில் குளித்தது! 4jģ5ffid A/žģi:
5ഴുfff(b பொன்வழாக் காணும் நிறைவு மலரும் பூவரசு எடுப்பாய் இதயத்தில் 6) umfarifazayıfGoou
இருக்கையிட்.மர்ந்தது போர்த்தி வாழ்த்துகின்றேன்.
எங்கள் இளந்தளிர்க்கென அன்புடன்\ கிளைவிட்ட முளையும் செ.யோகநாதை மனம்Uட்டு மழலை (பிறேமன் ஜெர்மனி)
மொழியில் கதைத்தது Ygx كمصر
-N 3? ”محمححصے

Page 4
http Www.thamizhan-net தமிழ்ச் சிற்றிதழ்களும் FREEE 80CSA) தமிழனினர் வரலாறும். வன்னர்,
-பொள்ளாச்சி நசன்.
ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. பல்வேறு இழப்புக்களால் இதழ் தொடருவது தடைப்படும். பல்வேறு அச்சுறுத்தல்களால் இதழைவிட்டு விடுதலையாக எண்ணமிடவைக்கும். இப்படியான இழப்புக்களும் அச்சுறுத்தல்களும் இருந்தாலும்.
இதழ் நடத்துவதென்பது இனிமையானது, சுவையானது, சுகமானது. நெஞ்சுக்கூட்டுக்குள் நிம்மதிகளை நிறைத்துவைத்து, நெஞ்சு நிமிர்த்தித் தான் ஒரு இதழாளன்’ என்று நிமிர்ந்து நடக்கக் காரணமாக அமைவது.
ஒரு இதழின் தொடக்கம் எப்படிப்பட்டதாக இருந்தபோதும், அதனது பாதையில் எதிர்ப்படுகிற இலக்கிய நயமும், நட்பு இணைப்பும், கருத்துச் செறிவேற்றமும், அந்த இதழை நடத்துபவருக்கு, உற்சாகமூட்டிச் சிரமங்களுக்கிடையிலும் தொடரவைக்கிறது.இப்படிப் படிப்படியாக வளருகிற அந்த இதழும் இதழாளரும் மிகப்பெரிய சமுதாய மாற்றத்திற்கான அடித்தளமாகிறார்கள்.
ஒரு இதழ் நெருக்குதல்களுக்குட்பட்டு பாதியிலே நின்றுவிடுதல் வருந்துதற் குரியது. இருந்தாலும் இதழ் நிற்பதற்குள் அந்த இதழாளர் அவரால் முடிந்த மிகப்பெரிய பதிவைச் செய்திருந்தாரானால், அந்த இதழ் போற்றிட் பாதுகாக்கப்படும். அதைவிடுத்துப் பலஅண்டுகள் அந்த இதழ் வெளியான போதும் எதனையும் முதன்மைப்படுத்தாது ஒரு சமரசநோக்கோடு தொடருமானால், அது சிறப்பான இதழாகுமா? பல ஆண்டுகள் நடத்தி
என்ன பயன்?
புலம் பெயர்ந்து வாழ்தல் என்பது மிகவும் கொடுமையானது. அகதிகளாகி வேற்றுநாட்டில், மாற்றுக் கல்ை, கலாச்சார, மொழிகளுக்கிடையில் எழுதுதல் என்பதே கேள்விக்குறி. அங்கு கிளர்ந்து எழுதுதல் என்பது, இதழ் நடத்துவதென்பது மிகமிக உயர்வானது. அடிப்படைத் தேவைகளுக்கே அலைமோதும்போது, இதழ் நடத்துவதென்பது சாதாரணமானதா? புலம் பெயர்ந்த சூழலில் நெருக்குதலும், அடிமைப்படுத்துதலும் மிகச்சாதாரணமாகி
4.

மக்களை நெருக்க, தாயக மண்ணின் நினைவலைகள் பசுமையாய் வந்து மோத, இந்தச் சூழலே சில இதழ்கள் பிறக்கக் காரணமாகின்றன.
இவ்வகை இதழ்களில் தாயகக் காட்சியையும், நெருக்குதல்களுக்கு இடையில் சிறார்களைச் சிறப்பாக வளர்க்க வேண்டிய வலியறுத்தலையும் காண்கிறோம். புதிய சூழலைக் கலைநயத்தோடு படைப்பவைகளும் உண்டு.
பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பெயர்ந்த தமிழ்மக்கள் அங்கங்கே ஏகப்பட்ட இதழ்கள் நடத்தியுள்ளார்கள். மிகத் தரமாக, மிகச் செறிவான அச்சமைப்புடன் இந்த இதழ்கள் வெளியாகியுள்ளன. இவ்விதழ்களைக் கண்டு தமிழுலகமே பெருமைப்படும். அவுஸ்திரேலியமுரசு, அக்கினிக்குஞ்சு, அஆ.இ, இளைஞன், உலகத்தமிழர், ஈழமணி, ஈழநாடு, ஈழகேசரி, உயிர்ப்பு, ஊதா, எரிமலை, ஐரோப்பிய முரசு, ஓசை, கலைவாணி, கடல், சக்தி, சர்வதேசத் தமிழர், சஞ்சீவி சமர், சிந்து, சிந்தனை, சிறுவர் அமுதம், சைவ உலகம், சுவடுகள், சுமைகள், தமிழ் ஏடு, தமிழன், தமிழருவி, தமிழியம், தளிர், தாகம், தாயகம், தூண்டில், தேடல், தேனி, பனிமலர், புதுமை, நாழிகை, நான்காவது பரிமாணம், நிழல், நாணல், மனிதம், மரபு, மாற்றம், மீட்சி, மெளனம், வெண்ணிலவு.இப்படி
89களில் வெளியான புதுமை, 90ல் வெளியான கதிர், 93ல் காலாண்டிதழாக நடந்த தேனி. 94ல் 44க்கு மேற்பட்ட இதழ்களை வெளியிட்டுத்தொடர்ந்த தூண்டில், 9ல்ே பகுத்தறிவுக் கருத்து விதைப்பிற்குத் தொடர்ந்த கமலம், 20க்கு மேற்பட்ட இதழ்களை வெளியிட்டு இன்றும்தொடருகிற இளைஞன், 7ஆண்டுகளை நிறைவு செய்து 8வது ஆண்டில் 50வது இதழை வெளியிடவிருக்கும் பூவரசு - இந்த இதழ்கள் யாவும் ஜெர்மனியிலிருந்து வெளியான சிற்றிதழ்களாகும்.
rெ R
shr ar. -rol or , Parf ar sì a v M i fr | f
မုံ့နှံ့)(É) 83{نتائ “uyu4 - i V \f A W" لقينهما t-7Lulu اسمه رمحا مع عالمعاوية மக்களுககும 2 - 5 தொடர்பின் அடிப்படையிலே நிலைப்படுத்தப்படுகின்றது. இந்த இடத்தில்தான் பேரிதழ்கள் வேறுபடுகின்றன. இது மக்களோடு சமரசம்
செய்துகொண்டு, மக்களின் மறைமுகத் தேவைகளுக்கான அடிப்படையை அமைத்து, பொழுதுபோக்கி, மூளைச் செறிவேற்றாது, வியாபாரம் செய்து, தன் பொருளாதார வளத்தைப் பெருக்கிக்கொள்கின்றன. ஆனால் சிற்றிதழ்கள் மக்களோடு உறவுகொண்டு, மக்களுக்கான அடித்தளத்தை அமைத்து, வளர்த்து, கருத்துச் செறிவேற்றி, தன் சொந்தப் பொருளாதாரத்தை இழந்து, பாதியிலே நின்றுவிடவும் செய்கின்றன.
தன்னை இழந்தபோதும், இந்த மக்களுக்காகச்சிந்தித்து அவர்களது மொழி, கடுை, கலாச்சாரம், நாடு, விடுதலை என்பவற்றைப்பற்றி நுணுக்காக,
விரிவாக அந்தச் சூழல்க்கு ஏற்றவாறு அலசி ஆராய்ந்து சிந்தனைகளைப் பதிவாக்கி மக்களுக்காகக் குரலெழுப்புவதே இச் சிற்றிதழ்களுக்கான
5

Page 5
அடிநாதம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில், இலக்கில் வெளிப்பாட்டில் அமைப்பில் உள்ளன. இந்த இதழ்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது அது தமிழர்களது துணிவை உறுதியை,
செயற்பாட்டை, காட்டுகிற வரலாறாக உள்ளன. புலம்பெயர்ந்த நாடுகளில்
வெளியாகுகிற அனைத்து இதழ்களும் எந்தவித சார்புநிலையுமின்றி திறந்தமனதோடு சேகரிக்கப்படவேண்டும். இப்படி உலக அளவில் சேகரிக்கப்படுகிற இதழ்களின் காட்சிப்படுத்துதலும் பாதுகாப்பும், ஆய்வுக்குறிப்புமே சரியான சான்றாதாரங்களாக இருந்து பின்வரும் சமுதாயத்திற்கு உதவுவதாக இருக்கும்.
தமிழ்ச் சிற்றிதழ்களின் சேகரிப்பு தமிழனின் வரலாறு காட்டுவதே. எனவே உலகத் தமிழ்ச்சிற்றிதழ்களைச் சேகரிக்க ஊக்கப் படுத்துவோமாக!
படைப்பாளர்களின் கவனத்திற்கு!
பூவரசு இனிய தமிழ் ஏடு உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கிறது: எழுதப்படும் ஆக்கங்களின் கருத்துக்கள் ஆக்கதாரரின் சுய உரிமை, பூவரசு அவற்றிற்குப் பொறுப்பாகாது! மனிதநேயத்தோடு. சமுதாய நலன்கருதிபடைக்கப்படும் படைப்புக்கனைப் பூவரசு இதயபூர்வமாக வரவேற்கிறது!
F
f - ص
Ggev)'Jij Fujij

இறக்கைால் எழுதியது.
சொல்லித்தானாக வேண்டும் தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட். எம் தீவுகளைப்பற்றி சஞ்சீவி மலையை அனுமன்
~ همسیح
கடலிடைச் சிந்திய துண்டங்களாய் இத் தீவுகளைக் கவனியாமலே கரைசேராத் தி டுக்களால் தனித்திருந் தழுதனவாம்.
கைவிடப்பட்ட துனர் ங்களைக் கரைசோக்க யாருமில்லை. சஞ்சீவி மலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்
சஞ்சீவிமலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால் விண்னெழுந்த [] (t !!! Kନୀ ୩6]) { பொருதிய ஜடாயுவின்
j6nit TLů tí. இறக்கைகளாய் நாம் வெட்டுண்டோம் வீழ்ந்தோம். கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும் வீழுமுன் விண்னெழுந்து பொருதிய ஞாபகப் ଜରi{ ତୋରାଁ l ଝୁ}&୩rଞ*ଞ୍ଜ
சு.வில்வரத்தினம். புங்குடுதீவு.
இல்லையெனலாமோ?
சஞ்சீவி மூலிக்காற்றே வா வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு எழுந்து பறந்தாகவேண்டும். எம் முந்தைப் புலம் நோக்கி வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்பலம் அது.
இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர அனுமனும் இங்கில்லை. இராமர் அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும்.

Page 6
ஒரு மனிதன் மரணப்படுக்கையில் கிடந்தான். எல்லாவற்றையும் வாழ்க்கையில் ஆண்டு அனுபவித்த ஒரு மனிதனான அந்தத் தொண்டுகிழவனுக்கு, இனி மரணத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.
சூரியன் அஸ்தமித்து இருள் கவிந்து கொண்டிருக்கும் நேரம் அது. அந்த மனிதன் தன் கண்களைத் திறந்து தன் வலதுபக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த மனைவியைக்கேட்டான். "என் முத்தமகன் எங்கே" "இதோ,அவன் எனக்கு எதிரில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்!"என்று கூறினாள் மனைவி, ஆனால் அவன் விடவில்லை. "என் இரண்டாவது மகன் எங்கே?" "உங்கள் மூத்தமகனின் பக்கத்தில்தான் அவன் உட்கார்ந்திருக்கிறான்!" இதைக் கேட்டவுடனே அந்தக் கிழவன். மரணத்தின் வாசலைத் தொட்டுக்கொண்டிருந்த நிலையிலும் கூட தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார ஆரம்பித்தான். இதைக்கண்ட மனைவி பதறிப்போய், "என்னவேண்டும் உங்களுக்கு" என்று கேட்டாள். "நான் என் மூனறாவது மகனை எதிர்பார்த்திருக்கிறேன்!” என்றான். இதைக்கேட்டு அவன் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. 'நம் எல்லோரிடத்திலும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்
இவர் என்று வியந்தனர். அந்தக் கிழவனின் கால்களுக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்த மூன்றாவது மகன் சொன்னான்: "நான் இங்கேதாம்பா இருக்கேன்! நீ கவலைப்படாதே! நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம்!"
"நீங்க AJ KixfĝarmY Tarki h இங்கே இருக்கீங்க.ஆனால் நான்ழட்டும்
7 Mawr ** * vir ** *s*. Ved W* B F منقسع ها Carr - Yr enw- 1 \,
கவலைப்படாம இருக்கணும்.இல்லையா? நம்ம கடையை இப்போ அங்கே யார் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்? என்றான் அந்தச் சாகப்போகும் கிழவன்.
(-ஒஷோவின் குட்டிக்கதைகளிலிருந்து)
8

g) (hjeb6T t jo).562 i
உங்கள் நண்பர்
tists
உங்கள் குறைகளை ஊருக்குள் பரப்பி அதில் இன்பம் நுகர்பவர். உங்கள் பலவீனங்களைக் கண்டும் காணாதவராக நின்றுவிட்டு மற்றவர்களுடன் கலந்துரைத்து மகிழ்பவர். உங்கள் பிழைகளையும் குற்றங்களையும் பரப்பிவிட திட்டமிட்டு இயங்குபவர்.
உங்களாலேயே உயர்ந்துவிட்டுப் பின் உங்கள் தொடர்பை அவர்களிடமிருந்து பிரிப்பதற்குக் கங்கணம் GbL}_j687. உங்களுக்கு ஏற்படும் இன்னல்களை மற்றவர்களின்
கவனத்தில் அது அப்படி நடக்கத்தான் வேண்டும் என்று கருதும் வண்ணம் இரக்கம் அறச்செய்பவர். தன் காரிய சித்திக்காகப் பழிசொல்லவும் தயங்காதவர். சொந்தத்தின் பெயரைச்சொல்லித் தம் சொத்துத் தேவைகளுக்குமட்டும் வழி தேடுபவர்.
fif
உங்கள் குறைகளை உங்களிடம்மட்டுமே சுட்டிக் காட்டுபவர். உங்கள் பலவீனததை உங்களிடம் மட்டுமே உணர்த்த முனைபவர். உங்கள் பிழைகளைப் பெரிது படுத்தாதவர். உங்கள் நண்பர்களை உங்களைவிட்டுப் பிரிக்க
முயலாதவர். உங்களுக்கப் பிழையான தொடர்புகள் நட்பென இருக்கக்கண்டால அதுபற்றி விளக்கமாக
வாதிட்டுக் காட்பாற்றத் துணிந்தவர் உங்களுக்குப் பசித்தால் தன் பசியதுவென உணர்பவர். உங்கள் உயர்வில் உள்ளம் மகிழ்பவர்,
(எழிலனின் இரவல் இதயங்கள் நூலிலிருந்து)
9

Page 7
அறம்.
"படைப்பாளர்கள் படைப்பது ஒரு கொள்கை நோக்கம் என்பதை மறந்து ஒய்வுநேர பொழுதுபோக்கே படைப்பது என்ற நிலையில் இருக்கின்றார்கள் எப்போது ஓய்வு கிடைக்கிறதோ அப்போது எழுதுகிறார்கள் காலம் கணியவேண்டும்! படைப்பாளர்கள் இறைமைக் கொள்கையோடு எழுதவேண்டும். படைப்பது ஓர் அறச்செயல் என்பதை உணரவேண்டும். படைக்கும் செயல் எல்லாராலும் இயலாது. இயன்றவர்கள் படைப்புச் செயலை அறம் சார்ந்ததாக உருவாக்க வேண்டும்.17 (மலேசிய அருவி இதழ் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து)
ஒன்றும் ஒன்பதும்.
ஒருவன் ஓரிடத்தில் தீயநடவடிக்கையால் ஒரு ரூபாய் சம்பாதித்தால், இன்னொரு இடத்தில் ஒன்பது ரூபாயை இழப்பான். ஒருவன் நல்லகாரியத்துக்காக ஒரு ரூபாயை செலவிட்டால் அதுவே நல்ல பலனாக வேறு சக்திமூலம் ஒன்பது ரூபாய் அவனுக்குக் கிடைக்கும். ஒருவருக்கு தீமை செய்தால்,உன்மனைவி, பிள்ளைகள் வேலைக்காரர் எல்லோரும் வெவ்வேறு வழிகளில் ஒன்பது மடங்கு தீமைகள்செய்வார்கள். நீ ஒருவருக்கு ஒரு சிறுநன்மை செய்தாலும் அது பெருகி, யார் யார் மூலமாகவோ ஒன்பது மடங்கு நன்மை வந்து சேரும்.
-DFTsit iQGä XJ5ff.
உயர்வு.
தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத் தன் உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டுபவன்தான் சமூகத்தில் உயர முடியும்.
- ஆபிரகாம் லிங்கள்.
விழிப்பு.
நாம் சுவாசித்துவந்த சாக்கடை தத்துவங்களை இன்றைய கால கட்டத்தில் நாற்றங்களாக உணர்ந்துவிடடோம். இனி அவைகளில் இருந்து விடுபடுவதைத்தவிர வேறுவழியில்லை.
-சாந்தி நிவாஸ்
1()

வென்றது யார்?
மற்ற நாடுகளைவிட சீனாவில்தான் சிகரெட் புகைப்பவர்கள் மிக அதிகம். மத்திய சீனாவில் உள்ள ஒரு நகரில் சமீபத்தில் ஒரு நாள் இரண்டு இளைஞர்களிடையே பெரிய வாக்கு வாதம் ஒரேசமயத்தில் அவர்கள் இருவரில் யாரால் அதிக சிகரெட்டுகளைப் புகைக்கமுடியும். இதைப்பற்றித்தான் அவர்கள் சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அதை நிரூபிக்க வேண்டுமே அவர்களில் ஒருவரான லியாவோ யோசுவான் நூறு சிகரெட்டுக்களை வட்டமாக வாயில் அடக்கிக்கொண்டார்.அவற்றைப் பற்றவைத்துக்கொண்டு ஆனந்தமாகப் புகையை இழுத்து வெளியே விட்டார். இப்படி ஒருமுறையல்லப் பலமுறை திடீரென்று அவர் தன் மார்பைப்பீடித்துக்கொண்டு கீழேவிழுந்து மாண்டுபோனார். அடுத்தவர் ஸாங் கங்யாங், அவர் ஒரே சமயத்தில் புகைத்தது எண்பது சிகரெட்டுக்களை சில நிமிடங்களுக்குப் பிறகு மூச்சுவிட முடியாமல் கீழே விழுந்தார். பின்னர் அவரை மருத்துவ மனைக்குத் துாக்கிச்சென்றனர். இருவரில் வென்றது யார்? முடிவு செய்யவேண்டியது நீங்கள்தான்.
(மலேசிய இதயம்' இதழிலிருந்து)
புகைப்பிடிப்பதை
நிறுத்த ஒரு யோசனை
புகைப்பிடித்தல் இதை அடியோடு நிறுத்த நினைத்தும் முடியவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா?
'இதோ! வழி இருக்கிறது.
முதலில் சாப்பிட்ட உடனோ, அல்லது காப்பி தேனீர் அருந்தியவுடனோ சிகரட் ஒன்றைப் பற்ற வைகக வேண்டும் என்ற தவனத்தைக் குறைதது அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேரம் தாமதித்து பற்றவையுங்கள் நாளடைவில் குறிப்பிட்ட இடைநேரம மறதியில் கூடிக் கொண்டே போகும் இறுதியில் சிகரட் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியப் பொருள் இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
AAAAS AAA S SASAiAAA SASA AeSi AAuu uuA சிவப்பி مست--------ب
(வெற்றிமணியிலிருந்து)

Page 8
இயந்திரமயமான இந்த நாட்டிலே தமிழ்ச்சஞ்சிகையை தளர்விலாமல்
தாடர்ந்து வெளியிடுவது கண்டு அதிசயித்துள்ளேன். தங்கள் தமிழ்ப்பணிதொடர என்றென்றும் எமது ஆதரவு உண்டு
இசம்பந்தன். (ராட்டிங்கன்)
அன்பான இனிய பூவரசே! அந்நிய நாட்டில் உதித்துவிட்டு அது எட்டாவது ஆண்டாகியதும் அணையாத அகல்விளக்காய் அன்னையவள் மொழியை மறவாது ஆக்கதாரர் சிறுவர் வரை வளர்ந்திட ஆற்றிய உன் சேைைவகள் அன்றும் என்றும் விளங்கிட அன்ணைவயள் அரவணைப்பில் ஆண்டாண்டு நீ ஆளாகி உயர்ந்திட அன்புடன் வாழ்த்துகின்றென். அகமகிழ்ந்தே கவிபாடி வாழ்த்துகின்றேன்.
திருமதி ஜெயா நடேசன்.
இம்மாதம் வெளியாகிறது இராஜன் முருகவேல் எழுதிய யெளவனமில்லாத யதார்த்தங்கள் (சிறுகதைத்தொகுதி)
2

உர்ைனது விழிப்பு.
பெண்ணே! அரும்பாகும் உனதாசை நீத்து அலங்கார வேளைபோக்கி
( -- へ○ அழகான கூந்தலறுத்து (r - " t அடக்கத்தை ஓடவிட்டு
● ○ーでヘ一 _^ பெரும் பொறுப்பேற்று இன்று
புரட்சியில் இணைந்தாய் பெண்ணே س۔“ -- .......... இரும்பான உனதுறுதி கண்ணுற்று
உலகமே வியூப்பிலின்று!
தேசமது திரையும்வேளை-நீ //www. தேகத்தை வெறுத்து மீட்பில் !Y யாரிதைக் கற்றுத்தந்தார் ) ۔ اس
( -- n பேரது சொல்வாய் பெண்ணே-உன் r ? ஊரது உறவதை மீட்க நீயும்-சம )1 خاصفسی ཐཁ། ཁམ་རན་། مسيك
தோழது கொடுத்த சேதி பாரது உள்ளளவும் உள்ளாளும் کم ܢܔ-ܗܝ வேரது விடியலின் விருட்சமாக
என்னினப் பெண்னே கேளிர் T“~~ உன்னது விழிப்பு. தாய் صص۔ مسیح' علیحدہ“ ۔ عی ரேட- மண்ணதுவிட்டு மறுபுலம் %っ= பெயர்ந்த போதும் -இன்னும் விரட்டா விலங்கை-எப்போது جا سسکس سے یہ حس سے کس سے ミニつー உடைப்பதாய் எண்ணம்
பொன்னிலும் புதுச்சடங்கிலும்பொழுதை நீ போக்கிக்கொண்டால் கற்றும் நீ விழிப்பிலில்லை, உன் கருத்திலும் எழுச்சியில்லை ա. உன்னது விழிப்பு எப்போ! என்றும் நீ ஏதிலியோ!
~~"سم "سس
கோசல்யா சொர்ணலிங்கம்,
13

Page 9
முதற்பரிசுபெற்ற சிறுகதை,
2 шінці,
பொ கருணாகரமூர்த்தி.
அதொன்றும் வழக்கமான விஷயமல்ல, ராகுலனை செஃபே வலியக் கூப்பிட்டு
உனக்கின்னும் ஒரு கிழமை fff (விடுமுறை) இருக்கு. மேலதிகமாய் இன்னும் ஒருகிழமை தாறன். இந்தமாதம் f
R /YY r r ۔ -- . ------ .”س---۔ வருமானால Vዕዞ6ክዕዘዘl፪ፅW} }Öህ 6ומוו ”bעצונסוז( போறதெண்டால் போய்வா. என்றான். "ஓ.ஜா."
மனதுள் சந்தோஷப் பனிதூவ அதைத்தாங்க முடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாம் வீடு வந்து சேர்ந்தான். இரவு முழுவதும் மனைவி லதாவுடன் பிரான்ஸஉக்குப் போவதா. சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வர முடியவில்லை.
சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்ப மிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம். கடைசியில் என்றும்போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும்,அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப் பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழிய அவர்களது கார் அஷ்டமி நவமி மரணயோகம் கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷஜூரிச் நோக்கி கோலாகலமாய் புறப்பட்டது. எட்டுமணிநேரச் சவாரிக் களைப்போடு ஷஉரிச்சில் அண்ணன் வீட்டு வாசலைஅடைந்தும் உள்ளே அடி எடுத்து வைக்க மேலும் நாலுமணிநேரம் நற்றவமியற்றவேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
14
 

அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல் வீட்டுக்காரி செப்பினாள்.
"அப்போ பேபி.?" "எங்காவது ஹோர்ட்டில்(குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்." இவர்கள் நிலமையை அறிந்தும் கவிஸ்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்து விடுவாளா என்ன? தன்பாட்டுக்குக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போனாள். அண்ணியும் வேலைக்குப் போய்விடுவாள். பகலில் யாருமிருக்க மாட்டோம் என்பதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால். இரவு வந்து சேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத் தூங்கவேண்டியிருந்திராது. ”சுவிஸுக்கு வருகிறோம்" என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்போதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்ப வேண்டாமென்று சமர்த்தா யிருந்தாள். ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷஅரிச் ரெயில்வே ஸ்டேசனுக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை "அத்தான்.அத்தான்"என்று அன்பொழுகஅழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப் போனதும் இந்த மைத்துனன்தான்.
குழந்தை பசியெடுத்து அலறத் தொடங்கினாள். அவளுக்குப் பால்கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது. ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய்க் கேட்டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்க வேணும் "வெந்நீர் என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரையமறுத்தது. வேறேதாவது கடையில கேட்டுப் பார்ப்பமே" என்று காரைக் கிளப்பவும் விருந்தோம்புவார் ஒருவாறு வந்து சேர்ந்தனர்.
இவ்வளவு நேரம் தெருவில் காக்க வைத்ததிற்காக ஒரு Sorryயாவது சொல்ல வேணுமே. ஊஹூம் இத்தனை மணிக்கு வந்தடைவோம் என்று உறுதியாகச் சொல்லாதது உங்கள் தப்புத்தான்!" என்றார்கள். அதையிட்டு ஒரு விவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மெளனம் காத்தனர். வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக்கொண்டு வந்த சான்ட்விச்சுகள் நிறையவே மிஞ்சிக் கிடந்தன. எல்லோருக்கும் இரவுச் சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தது.
15

Page 10
மறுநாள் காலை அண்ணன் வேலைக்குப் புறப்பட தானும் வெளிக்கிட்டுச் கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள். "நானும் ஓரிடத்தை போகவேணும். வரக் கொஞ்சம் செல்லும்." ஓரிடத்துக்கு என்றால்.அதைப்பற்றி மேலே கேளாதே என்பதுதான் அதற்குரிய உளவியல், இது லதா அறியாததா?
மயூரனையும் இழுத்துப் பிடித்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் சொன்னாள் -
மயூரன் நிற்கட்டும் அண்ணி. நான் பார்த்துக்கொள்ளமாட்டனே?" "வேண்டாம் லதா அவன் பயங்கரக் குளப்படிவிடுவன். ஒருவருக்கும் அடங்கான்." அதற்கு முன்னேயின்னே ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைச் கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு குழைஞ்சு அவளுடன் சேர்ந்த மாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக் கேட்கத் தயங்கினாள்.
அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு. புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கண்(கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள் (எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு கண்டு குறுணல் அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருக்கக்கூடிய தடயங்கள் புலப்படாது போகவும் பிரிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார் சாபமோ ஐஸ்டைன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி(அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப் பதிப்பு)அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டிவேலன்ன ஒரு போர்க்கருவியோ கடப்பாரையோ எங்காவது தென்படுகிறதா என்று தேடினார்கள். திடீரென கிசெதுரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதிதெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர் மூண்டு கலக்கிய சம்பவம் ஞாபகம் வரவும். அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு Migros Marktதேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சரிப்பீட்டார்கள். மாலையானதும் அண்ணன் குடும்பம் வந்துசேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்திய அசாத்தியங்கள். நடப்பு வட்டிவீதங்கள் மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப் பண்டங்களின் விலை தலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித் தூக்கம் போட்டார்.
16

அலாம் வைத்ததுபோல் ஏழுமணிக்கு எழும்பி பாத்றும் போனார். பின் 8Iősolől 6ö)L– LAHL-9-60 TT.
"எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியிலை" என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன்மேல் பதினொருமணிக்கு வந்து சேர்ந்தார்.
மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல் கிளாஸுக்குப் போவதாகச் சொன்னாள்.
மூன்றாம் நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னார் - "மயூரனை கிண்டர் ஹோர்ட் ஒன்றிலை கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள். புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான். அதுதான் நானும் போய்க் கூட நிக்கிறனான். தனிய நிற்கப் பழகிட்டனென்றால் நானுமெங்கையெண்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர். அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டிலை இருக்கிற விலைவாசியிலை." அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான். ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது. ராகுலன் சொன்னான்"போய் எடும்.சில வேளை கொண்ணனாய்க் கூட இருக்கலாம்." போய் எடுத்தால் மறுமுனையில்"குறுஙய்ஸ் கொட்.நான் சூசாரா.மன்னிக்கவேணும் அப்போது உறுதிப்படுத்த மறந்துவிட்டேன்.துகுணா.நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச் செய்வாய்தானே.?”
(வியட்னாமோ.தாய்லாந்துக்காரி.வார்த்தைகளை நசித்து மழலை பேசினாள்)
மண்ணிககவேணும்.நான் சுகுணாவல்ல.அவர் வீட்டு விருந்தாள்.இது சுகுணா வாறநேரந்தான்.நீங்கள் அவர்வந்தபிறகு பேசுவது நல்லது.குறுாய்ஸ் கொட்)
அண்ணியாவது ஏற்கனவே உறவுக்காரி கொஞ்சம் வாஞ்சையாய் இருப்பாள் அனைச்சு சிரிச்ச கதைப்பாள் என்று எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவது மாதிரி முகம்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது.
ஆனாலும் ராகுலனிடம் சொல்ல முடியவில்லை. அவர்கள் வந்து சேரவும் லதா அ00ண்ணியாரிடம் சென்னாள் -
சூ.சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள்." திடீரென்று அவள் முகம் கலவரமாகியது.
17

Page 11
மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப் பதட்டத்துடன் கேட்டாள் - "எ.எ.எ.என்னவாம்?" "எனக்கு அவள் பேசிய டொச் ஒண்டும் விளங்கேல்லை.எதுக்கும் நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்.வைச்சிட்டாள்."என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது. உதட்டை வலிந்து பப்லர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப்போல ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, "என்னோடை தையல் கிளாஸுக்கு வாற ஒரு தாய்லாந்துப் பிள்ளை" எனறாள. நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக் கொண்டு கோழித்துக்கம் போடமுதல் திருவாய் பலர்ந்தார். "ஜெர்மனியைப்போல இல்லை. இஞ்சை கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்.நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே..எந்த நேரமும் காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம். முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக் குடுத்தன். அடுத்தவளுக்குச் சீதனம் குடுத்தன். லதாவைக் கூப்பிட்டன். கையிருப்பு காலி. இனி மேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணினால்தான் நாலு காசைப் பார்க்கலாம். அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்திலை பார்ட்டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்."
ராகுலன் அவன்பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துச் கொண்டிருந்தான்.
அண்ணாச்சி தொடர்ந்தார். "அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை யார்க்கென்றியள். இஞ்ச லீற்றர் அஞ்சு பிராங்கெல்லே.வரேக்கமட்டும் உந்தப் பெரிய கொம்பியிலை பத்து லீற்றர் கேசில ஒரு பத்து லீற்றர் அடிச்சிருந்தா சும்மா ஒரு ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்."
(ராகுலன் மனத்துள்."யாருக்கு?")
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அரிo தங்காமல் ராகுலன் கேட்டான் - "உங்கடை ஷஉரிச்சிலை என்னதான் விசேஷம்?.அதைச் சொல்லுங்கோ." "விசேஷமெண்டு.?" "இங்க யாரும் ரூரிஸ்ட்டுகள் வந்தால் எண்னத்தைப் போய்ப்பார்க்கிறவை?
நானூறு கிலோமீட்டர் தள்ளி ஜெனீவா என்றால் யூ010ன்.ஓ.கட்டிடத்தைச் சொல்லலாம். இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரிலை ஒரு சேர்ச் இருக்காம். எங்கட சனமும் சிலது போறது.வடக்கை ஷௌகவுசனிலை ஒரு நீர்வீழ்ச்சி இருக்காம்.தானென்றால் இதொண்டுக்கும் இன்னும் போகேல்லை. இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்காலை நேரம்.? லதா ஆற்றாமல் கேட்டாள் -
18

"அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத் தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை.?"
"இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும் பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனெண்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஒடிப்போய் புகுந்திடும். பிறகு கோவிந்தாதான். கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்திய
a FT KLA
ளெனர் tLSLSLuqqqSq LGS ASSASqqLqTq S L LtTTqq ctSA S q Aq qLLOqqS LLLLLJLL LLLSLLLL S S LLLLLLLLS LLLLLLL Lu i goppo un ou LU. (ராகுலன் மனத்திற்குள்.இதுதான் ஸ்னோ மலையாய்க் கொட்டிக்கிடக்கு பார்" என்றிருப்பான்)
இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குகு கூட்டிப் போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்துப் போய் அவர்களது பொருள் முதல் உலகம் வேறென்பதும் புரிந்து போயிற்று. சடுதியான கால நிலை மாற்றம் ஒத்துக் கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல்முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக் கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும் அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம் படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள்.
கீழிறங்கவேயில்லை. அணிணன் பார்ட் டைம் வேலைக்குப் போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி மாடிக்கு ஏறிப்போனான். அண்ணி குசினிக்குள் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒருசம்பிரதாயத்திற்குக்கூட அவர்கள் "என்ன.குழந்தைக்கு எப்பிடியிருக்கு? என்றுவிசாரிக்கவில்லை. ஸ்தாவும் தனக்குள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி மிக மட்டமாக எடைபோடப் போகிறான் என்ற பயத்தில் மெளனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்காலங்கே மேலும் தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது. இரவு முழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது.
இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள். குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்துபோனது. அடுத்த தடவை கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியே வந்து மாடிப்படியில் நின்று அதட்டினான்.
ஏய். லதா உந்தப் பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்.மனுஷர் விடிய வேலைக்குப் போகவேணுமெல்லே."
19

Page 12
"பிள்ளைக்குச் சாடையாய் காயுதண்ணை.அதுதான் அழுகிறாள். "சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலn மெல்லை!" அற்பப் பயலே அவர்கள் உனது விருந்தினர்கள்.நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப் போயிருக்கவேணும். "பாரசெற்றமோல் ஒன்று குடுத்திருக்கிறன்.தணியுதோ பார்ப்பம். "என்ன குடுத்தியோ..இனியும் அழுதால் மயூரனும் எழும்பி வாசிக்கத் தொடங்கிடுவன். பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ் செய்யேலா." பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன்மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ளே போகவும் ராகுலன் லதாவின் காதில் மெதுவாக ஆனால் உறுதியான குரலில் சொன்னான் - "நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம் லதா.இப்ப பிள்ளைக்குச் சட்ரைடயைப் போட்டிட்டு நீரும் ? -L-ộổ}ốö} வெளிக்கிடுநீர்-இதுக்கு மேலையுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது." லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஒசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொரு தரம் சரிபார்த்து எடுத்துக்கொண்டு சூட்கேஸ்களுடன் மெல்ல வெளியேறிச் கதவைச் சாத்திக்கொண்டு காரில்போய் அமர்ந்த பின்புதான் நிம்மதி உண்டானது. கார் கவிற்சர்லாந்து-ஜெர்மனி எல்லை நகரமான Base அண்மிக்கவும் மலைகளும் புள்ளத்தாக்குகளும் மறைந்து சமதரையிலான விரைவு சாலையில் மணிக்கு 120கி.மீ. வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள். எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளபடுகளை நிறைத்துச் கொண்டு வேகமாக வந்த பாரஉந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது. சற்றே பயந்தவிட்ட லதா சொன்னாள்."கண்மண் தெரியாமற் பறக்கிற லொரிக்காரண்ரை வேகத்தைப் பார்த்தியளே..? "எல்லாம் கொண்ணன் கோவிச்சுக் கொள்ளப் போறார் 6ான்ைடுதான்." "என்ன.அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ. என்னப்ப; சொல்லுநியள்?" "அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகள்தானே. அதுதான் வீரந்துக்கு லேட்டானால் கோவிச்சுக்கொள்ளப் போறாரெண்டு பறக்கிறான்." சுவிஸ்நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர்முட்டும்வரை கனிந்து கலுங்கிக்கலுங்கிச் சிரித்தாள். "எண்னவோ தெரியாதப்பா.அண்ணை முந்தியிப்பிடியில்லை. இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் ஒரு
20

ஆக்கள் தந்தவை. ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும்,
ஒரு பகுதிவரும்.என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். அது சளப்பெண் எப்இல்லை. மற்றவர்க905 நாங்கள் ஒரு டிஎப்டென்ஸிலதான்
வைத்திருக்கிறம் என்கிறதின்ற படிமம் அது."
அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து "நாங்கள் வேலைப்பழுவிலை உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்மன்னிச்சக் கொள்ளுங்கோ!" என்று சாஷ்டாங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப் போவதில்லை. சில வேளை ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்ட குழந்தையை டாக்டரிடம் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித் திரிந்தது.
மறுநாள்பால்ை தோட்டத்தில் சாய்வு கதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக் கொண்டிருக்கையில் சிற்றுண்டியும் சேமியாப் பாயாசமும் பரிமாற அங்கே வந்த லதாவைக் கேட்டான் - "ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே பாரிஸுக்குப் போவமே?” அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.ச்சொ. சரி.விடுங்கள்.அதை ராகுலன் தனியே ரசிக்கட்டும்.
-ل
எழிலன்எழுதிவரும் "சத்தியத்தின் சுவடுகள்”
எம்மெஸ்ஸார் எழுதிவரும்
சமரசத்தில் ஒரு சமாச்சாரம்"
Gigi ket
அடுத்த இதழில்!
21

Page 13
ஆன்மீக சிந்தனைகள்.
6s2 - ).
- ப.இராஜகாந்தன்.
நாம் இப்பிரபஞ்சத்தில் பார்க்கும் பொருள் யாவும் மலை, கடல், உயிரினங்கள், மக்கள், எல்லாமே எங்கிருந்து வந்தன என்ற கேள்வியை எங்களுக்குள்ளேயே கேட்டால் அது பரிணாமத்தின் தொடக்கத்திற்கே கொண்டு சென்றுவிடும். பரிணாமத்தின் தொடக்கம் என்றால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தை குறிக்கலாமா? இல்லை. அக்கல்லும் மண்ணும் எங்கிருந்து வந்தன என்று பார்க்கவேண்டும். இவை எல்லாமே சூட்சுமமான சக்தியிலிருந்துதான்வந்தவை. பிரபஞ்ச வரலாற்றில் முதலில் இருந்து சக்திமட்டுமே. அதில் ஒருபகுதி துகள்களாக மாற்றப்பட்டது என்பது விஞ்ஞானம் கண்டறிந்த உண்மை. ஒன்றும் இல்லாது பூச்சியத்தில் இருந்து ஒன்றும் உருவாகமுடியாது. அந்த நுட்பமான சக்தியே அருவமான இறைவன். அதுவே அத்வைத சித்தாந்தம் கூறும் பிரமம்.
கடவுளை ஒலிவடிவானவன் என்றும் சொல்வர். (நாதப்பிரமம்) ஒலி ஏற்படும் போது அதிர்வுகள் உண்டாகிறது. இவ்வதிர்வே மூலக்கூற்றுத் துகள்களை நகரச்செய்து ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்துவைக்கிறது. இவ்வணுமூலக் கூறுகள் இயக்கத்தின்போது அதிர்ந்து நர்த்தனம் புரிகின்றன. இதைச்
சித்தரிப்பதே
நடராஜர் நடனம் ஆகும். ஒலியின் அதிர்வால் படைப்பு
ஏற்படுவதை அருணகிரிநாதரின் "நாதவித்து கலாதீ நமோ நம என்னும்
திருப்புகழில் காண்க.
எல்லாப் பொருள்களுக்கும் அழிவுண்டு. அழிவில்லாதது அது ஒன்றே. ஆகையாலேயே அத்வைத சித்தாந்தத்தில் உள்ளது ஒன்றே இரு பொருள்
22

இல்லை என்று கூறப்படுகின்றது. இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. தோன்றுவதெல்லாம் வெறும் தோற்றமே.
அத்தனைபொருளும் மனித உடலும் அழிந்து நுட்பமாகமாறி திரும்பவும் சுழற்சியால் முன்பிருந்த நிலைக்கு வரும் (அதாவது சக்தி நிலைக்கு வரும்). மரத்தின் விதையுள் இன்னோர் மரம் ஒடுங்குகிறது. மனிதனுள் ஒடுங்கிய இன்னோர் உயிரணு மனிதனாகப் பிறக்கிறான். தோற்றமும் ஒடுக்கமும் மாறிமாறி வருகின்றன.
உண்மையில் அந்தப் பேரறிவே பேரானந்தமே இப்பிரபஞ்சமும், இப்பேரறிவின் வெளிப்பாடே உலகில் நாம்காண்பதும், நாமும் ஆகும். எங்கள் அந்தக் கரணங்கள் ஆகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம்எல்லாம் எங்கள் உடல் அழிவதுபோல் அழிந்தபின் நாமும்இறைவனில் ஒடுங்கிவிடுவோம். அதுவாக மாறிவிடுவோம். அதுவே அத்வைதம் கூறும் தத்வமசி நீயே அது என்பது ஆகும். அகங்காரமே நான் என்று எம்மைத் தனியாகப் பிரித்து அறிகிறது. இதை பக்தியின் மூலமும் தியானத்தின் மூலமும் அழிக்கலாம். மனம்இல்லாத நிலையில் நாம் தனியானவர் என்ற தன்மையை ஏற்படுத்தும் அகங்காயமும் அழிந்த பின் நாம் இறைநிலை எய்தியவர் ஆவோம். மனம் இல்லாத நிலையே "வாக்கும் மணமும் இல்லா மனோ லயம்" மனம் என்பது என்ன? கடந்த காலங்களில் நாம் கண்டவற்றின் இருப்பேயாகும். மனம் ஒன்றில் கடந்தகாலத்தை நினைக்கும் அல்லது எதிர்காலத்தைக் கற்பனை செய்யும். எதுவும்செய்யாது கம்மா இருப்பது இல்லை. கடந்தகாலமும் எதிர்காலமுமில்லாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம். முருகக்கடவுள் அருணகிரிநாதருக்கு முக்தி அளிக்கும்போது "சும்மாயிரு சொல்லற" என்பதைக்காண்க, கம்மாயிரு சொல்லற என்றதும் பொருள் யாதும் அறிந்திலேன் அம்மா என்று அருணகிரியார் பாடுகிறார். இதற்கும் கொச்சையாக சும்மாயிரு என்றதன் பொருளை அவர் அறியவில்லை என்று அர்த்தம் எடுக்கலாகாது. அதாவது பொன் பொருள் உறவினர் என்ற இந்த உலகப் பொருள்யாவும் மறைந்து தெய்வீகத்தை பேரின்பத்தைக் கண்டேன் என்பதேயாகும்.
3.

Page 14
கவிதையில் சிலம்பு
குணவாயில் கோட்டத் தெய்வம்!
--۔ حے سے ٹھ لگ ق سے۔ - حسن بس۔ ساحہ
1. அரசவையில் கமர்ந்திருந்தான் தந்தை, ஆங்கு
அன்னனொடு தம்பியுமே வீற்றிருந்தார், பரவுதமிழ்ச் சான்றோர்கள் நிறைந்த மன்றில் பழஞ்சுவடி பார்க்கின்ற பார்பான் வந்தான், நரைகண்ட தலைகொண்ட சேர மன்னன் நல்வாக்குக் கூறென்று அவனை நோக்கத்) தரைதொட்டுக் கண்னொற்றிச் சபை வணங்கித் தன் கலையை வாய்வழியே அவிழ்த்துவிட்டான்.
2. ஆண்டாண்டு காலமதாய்த் தமிழமண்ணில் ஆளுகைக்கு உரியவர்கள்,குடியில் மூத்த ஆண்பிள்ளை என்றவொரு மரபு உண்டு அதைமீற எச்சபையும் துணிவதில்லை, வேண்டாமேனன் வாக்கு, அதனைச்சொன்னால் வேண்டாத பகையன்றோ வந்து சேரும் தாண்டுதற்கு இயலாத தர்மக் கோட்டைத் தமியேன் சொல் தவிடுபொடி யாக்கலாமோ?
3. சொலல்வல்ல சோதிடன் சொல் சபையிலுள்ளோர்
உள்ளத்தில் ஊசியெனப் புகுந்து தைக்கப்) பலகற்றும் பதற்ற முறும் பேடிபோல பதைபதைத்து(ப்) பார்வேந்தன் முகத்தைப் பார்த்தார், அலைமோதும் நெஞ்சத்தின் அவலந்தன்னை அடக்கியவன் உண்மைதனைச் சொல்கவென்று நிலையற்ற மனத்தோனாய்ச் சபையோர் முன்னே
鸭 暖 臀 影 蕾 நிற்கின்ற கோள்ளுானி தனைப் பணித்தான்.

4. வேந்தன் சொல் கேட்டதுமே எதிர்வு சொல்வோன்'
எண்ணமதில் எழுந்தவற்றைச் சபையின் முன்னே சாந்தமுடன் சன்னமொழி தன்னில் அன்று சரித்திரத்தை மாற்றியவோர் வார்த்தை சொன்னான் 'ஏந்தலே இவ்வுலகு உய்யச் செங்கோல் ஏந்த ஏற்புடையோன் இளையோனே, என்று வானில் நீந்துகின்ற கோள்களெலாம் குறிப்பால் சொல்ல
"سى جع خصم
நேர்ந்ததை யான் ஈங்குரைப்ப தெவ்வாறென்று
5. ஆங்கிருந்த இளையவனோ ஆர்த்தெழுந்து
அருந்தமிழர் மரபதனில் அமுக்கைச் சேர்க்கும் ஆங்கார மொழியிதென்று இகழ்ந்து ரைத்தான் அன்னனே பீவ் வுலகாள்வான் என்றும் சொன்னான். ஆங்குள் ளேர் அசையாது சிலையாய் நிற்க அரசணிகள், அரசாடை தாம் துறந்து தீங்கில்லாத் தவ வாழ்வே மேலாம் என்று தீர்ப்பெழுதிக் கொண்டன்றே இளங்கோவானான்.
6. குணவாயில் கோட்டத்தின் துறவியாகி
குணமென்னும் குன்றேறி நின்றார் முன்னே மணவாளன்தனை மதுரைக் கொலைக்களத்தில் மடிந்தவனை நீதியெனும் அறத்தின் பேரால, பினமாக்கித் தென்மதுரை தானும் தீய்த்து(ப்) பின்னோர்நாள் விகன்ணுலகு போந்த செய்தி வணங்கி மலைக் குறவர்கள் சொல்லக் கேட்டு மன்பதையில் சிலம்பதனை ஒலிக்கச் செய்தான்.
7. சாத்தனெனும் தமிழ்ப்புலவன் தன்னோடன்பு
சமமாகப் பகிர்ந்திருந்த போதில் முன்பு ஆத்திப் பூச் சூடிய நற் சோழன் ஆண்ட அழகுநகர் புகார் வாழ்ந்த கோவலன் தன் மூத்தோரின் ஆசியுடன் கைப்பிடித்த முக்கனியை ஒத்த உயிர் மனையாள் தன்னைச் காத்திருக்க வைத்து ஒரு கணிகையோடு காலத்தைப் போக்கிய அக் கதையறிந்தார்.
8. toாதவியால், மாண்புயர் தன் குடிப்பிறப்பும்
மனையாட்டி தான்கொணர்ந்த பொருட் சிறப்பும் ஆதவனைக் கண்டொளியும் இருளேபோல அலறியவை வெகுண்டோட வெறுங்கையோடு தாதஷ் طفلها தாரணியும் Loszog: a IrtGi முன்னே தவிப்புடனே தான்வந்து நிற்கக் கண்டு பேதையவள் காற்சிலம்பைக் கையில்வைத்து காசாக்கி வருவீர். நாம் வாழ்வோம், என்றாள்.
25

Page 15
9. புகழ்மதுரை நகள் சேர்ந்து பொருளைவிற்கட்
பொற்கொல்லன் சூழ்ச்சியினால் கள்வனாகி இகவாழ்வைக் கொலைக் களத்தில் நீக்க மங்கை இனியெதற்கு வாழ்வு? அறம்கொன்ற மன்னன் புகவேண்டும் எரிநரகு, இந்த மண்ணும் பூண்டற்றுப் போகட்டும் என்றெழுந்து மிகவுழ்த் தியெனவே புயலாய்ச் சீறி மீனவனை ஒறுத்தறத்தின் தாயாய் நின்றாள்.
10.காவிரியின் தாலாட்டில் வளர்ந்த பேதை
காதலனை வைகைவளநாட்டின் மன்னன் ஆவிபறித் தடலையளாய் ஆக்க ஊழ்தான் ஆற்றியது பெரும்பங்கு அந்தோ,பின்னால் பூவீரியும் குணவாயில் கோட்டஞ் சேர்ந்து புதுமகவாய், புகழ்சேர்க்கும் தெய்வமாகிக் சாவினையே வென்ற தமிழ் நங்கை காதை சாற்றுவதே இளங்கோவின் சிலம்பு காணிர்;
26
 

றங்கும்
பூவரசு நூலகக்கண்காட்சி நடைபெறும் இத்தருணத்தில், ஜெர்மனியின் Hale நகரிலுள்ள ஆவணக்காப்பகத்தில் உள்ள பண்டைத் தமிழ் நூல்கள்பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் எழுந்ததனால் பூவரசு 15வது இதழில் (வைகாசி-ஆனி 1993) வெளியான இங்கே உறங்கும் தமிழ் ஏட்டுச்சுவடிகள் என்னும் தலைப்பிலான எனது கட்டுரை புதிய வாசகர்களுக்காக இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது)
-இந்துமகேஷ.
சில மாதங்களுக்கு முன்புஆனந்தவிகடன் இதழ் ஒன்றைக் கையில்வைத்துப் புரட்டிக்கொண்டிருந்த போது ஒரு கட்டுரையின் தலைப்பு என்னைக் கவர்ந்தது. ஜெர்மனியை வியக்க வைத்த
தமிழ்ப்புதையல்
72
T

Page 16
சென்னை மாநிலக்கல்லூரியில், வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் செசு.மோகனவேலு அவர்கள் இந்தக் கட்டுரைத்தொடரை வரைய ஆரம்பித்திருந்தார். (கடந்த இருபது ஆண்டுகளாகவே ஜெர்மானியர்களின் தமிழ்ப்பணிபற்றி ஆர்வம் காட்டிவந்த திரு மோகனவேலு ஜெர்மானியர்களின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் ஆராய்ச்சிசெய்து 1990ம் ஆண்டு சென்னைப் பல்கலைச் கழகத்தில் டாக்டர் பட்டம்பெற்றவர்.) ".18ம் நூற்றாண்டுத் துவக்கத்தின்போது இந்தியாவில் ஐரோப்பியநாடுகள் ஐந்து-டச்சு, போர்த்துக்கீஸ், டேனிஷ், பிராண்ஸ் மற்றும் ஆங்கில நாட்டவர்கள் தங்களுக்கு இடையே ஆதிக்க மற்றும் வானியப்போட்டிகளில் ஈடுபட்டு நாடுசேர்க்கும்கொள்கையில் பரஸ்பரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் ஜெர்மானியர்கள்மட்டும் தமிழகம்வந்து இதுபோன்ற ஆதிக்க மற்றும் வாணிபப் போட்டிகளில் ஈடுபடாமல் தமிழ்மொழி,இலக்கியம் கலாச்சாரம்மருத்துவம் இன்னபிறதுறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு தமிழைக்கற்றுத்தேர்ந்தனர்.தமிழின்தொண்மை.வளமை ஆகியவற்றில் ஆய்வுசெய்து அதுவரை தமிழின் மாட்சிமைபற்றி ஒன்றுமே அறியாத ஐரோப்பிய மக்களுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள்வாயிலாக எழுதி அனுப்பினர். அதுமுதல் ஐரோப்பியர்கள் குறிப்பாக ஜெர்மானியர்கள் தமிழ்மொழி. தமிழர் கலாச்சாரம், இவற்றைப்பற்றித் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டனர். ஜெர்மானியர்கள்பலர் இங்கு வந்து நூற்றுக்கணக்கான பனையோலைச் சுவடிகள்மற்றும் கையெழுத்துப்பிரதிகளை ஜெர்மனிக்கு எடுத்துச்சென்றனர். இவைமட்டுமன்றி சுமார் 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்கள் எழுதிய டைரிகளில் தினமும் தாங்கள் சந்தித்த தமிழர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்ட தமிழர்களின் பழக்கவழக்கங்கள், கல்விமுறைகள், வழிபாட்டு முறைகள், திருமணச்சடங்குகள், பண்டிகைகள், பசு வழிபாடு, நகைகளின் விலைவாசி நிலவரங்கள், வீட்டுத்தோட்டப் பயிர்வகைகள் இன்னும் பல குறிப்புக்கள் இருந்தன.
- இப்படித் தொடர்ந்தது கட்டுரை. ஆனந்தவிகடனில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் கட்டுரைத்தொடரை ஆவலுடன் வாசித்தேன். --•r-- வியப்பும், பிரமிப்பும் மகிழ்ச்சியும்,வேதனையும் என்று பல்வேறுவகையான உணர்வுகளும் என்னை ஆட்கொண்டன.
என் சின்ன வயசில் - வீட்டு முற்றத்தில் நிலவெறிக்கும் நேரத்தில் கயிற்றுக்கட்டிலைக் கொண்டு வந்துபோட்டு வானத்தைப்பார்த்தபடி மல்லாந்துகிடக்கும் என் தந்தையின் விரிந்த மார்பில் தலையைச்சாய்த்துக் கிடந்தபடி
28

அவரிடம் கதைகேட்ட அந்தப் பழையநாட்கள் மனக்கண்ணில் நிழலாட - கணிகளில் நீர் கோர்த்துக்கொண்டது. ஆமையும்முயலும் கதையில் ஆரம்பித்து, மகாபாரதம் ஈறாக எண்தந்தைக்கு மனப்பாடம். அவரிடம் நான் கேட்டுத்தெரிந்துகொண்டவைகள் மட்டும்தான் இப்போது என் மனதில் நிற்கின்றன. மற்றவைகளெல்லாம் அப்பாவுடன் மறைந்துபோயின. நான் கற்றுக்கொண்ட பழந்தமிழ் இலக்கியங்களில் என் நினைவுக்கு எட்டியவரைதான் என் பிள்ளைகளுக்குச் சொல்லமுடியும்.
இப்படித்தான் - நம் ஒவ்வொருவருடைய அறிவும் நம் சந்ததிக்குக் குறைந்த விகிதத்தில் போய்ச் சேர்கின்றன. முன்னோர் சொன்னவைகளில் எல்லாம் நாம் அறிந்தவைகள் போக மிகுதியானவை காலத்தால் மறைந்துபோயின. இயற்கையின் அழிவுகளால் நாம் இழந்த தமிழ்ப்பொக்கிஷங்கள் ஏராளம். எஞ்சியிருப்பவைகளும் இப்படிப் பல இடங்களிலும் எவரும் அறியாமல் அங்கங்கே உறங்கிக்கிடக்கின்றன. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமாபுைலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கம் செய்தல்வேண்டும்" என்றானே பாரதி. வெளிநாட்டோர் கொணர்ந்து சேர்த்த தமிழ்ச்செல்வங்கள் அறிவுட் பொக்கிஷங்கள் நம்திறமையை நமக்கு உணர்த்தவில்லையா? இந்தத் தமிழ்ப்புதையல்கள்பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தமிழுக்குத் தொண்டுபுரிய முனைந்துநிற்கும் டாக்டர் மோகனவேலு போன்றவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம்நன்றிக்கடன்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
கட்டுரைத்தொடர் நிறைவு பெற்றதும் என்னுள் புதிதாய் ஒரு ஆவல் பிறந்தது.
இந்தத் தமிழ்ப்புதையலை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் என்ன?” கிழக்கு ஜெர்மனியின் Hafe நகர ஆவணக் காப்பக முகாமையாளருடன் இது சம்பந்தமாகக் கடிதமூலம் தொடர்புகொண்டேன். "தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.ஹல்லேநகர ஆவணக்காப்பகத்தில் ஏராளமான தமிழ் ஏட்டுச்சவடிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டுலட்சம் சுவடிகள்வரை இருக்கலாம்.அனைத்தையும் பார்வையிட்டு முடிப்பதும் அவைகளைப் புரிந்துகொள்வதும் சிரமமான காரியமாக இருக்கும்.ஆயினும் உங்கள் வருகைக்கு மகிழ்ச்சிடைகிறேன்" என்பதாக அவரிடமிருந்து
பெப்ரவரி மாதத்தில் (1993)ஒருநாள்மாலைஜெர்மானிய நண்பர் ஒருவரின் காரில் பயணப்பட்டேன்.
29

Page 17
இணைந்த ஜெர்மனியின் மறுபக்கத்துக்கு எனது முதலாவது பயணம். கார் கிழக்கு ஜெர்மனிக்குள் நுழைந்தபோது இரவாகிவிட்டிருந்தது. பெரும்பாலான பாதைகள் அடிக்கடி எனக்கு யாழ்ப்பாணத்தையே நினைவு படுத்திக்கொண்டிருந்தன. இன்னும் திருத்தப்படாத நிலையில் பெரும்பாலான பாதைகள். இருளில் ஆங்காங்கே தொலைவில் தெரியும் வெளிச்சங்கள். ஹலே நகரில் இரவு ஒரு வாடகை அறையில் தங்கிவிட்டு மறுநாள் கால்ை ஆவணக்காப்பகத்துக்கு விரைந்தேன். காப்பக முகாமையாளரைத்தேடி என் கண்கள் அலைந்தபோது - "வணக்கம்"என்ற குரல் கேட்டது.
ஆச்சரியத்துடன் திரும்பினால்எதிரில் ஒரு தமிழ் இளைஞர்-சிரித்தமுகத்துடன். "நான் டானியல் ஜெயராஜா"என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தரிசிக்கவந்தஇடத்தில் ஒரு தமிழரைக்கண்டதும் மனம் இன்னும் மகிழ்ச்சியடைந்தது. "நான் மேற்கிலிருந்து வருகிறேன்!"என்று ஆரம்பித்த நான் வந்த காரியத்தை விளக்கினேன். ஏற்கனவே நான் வருவதை அறிவித்திருந்தபடியால் ஆவணக்காப்பக முகாமையாளர் எனக்காக நேரத்தை ஒதுக்கிக் காத்திருந்தார். அடுத்த இரண்டொரு நிமிடத்தில் அவரைச் சந்தித்தேன். அவரது அலுவலக அறையில் அவர் வைத்திருந்த சில பனையோலைச் சுவடிகளை எடுத்து என் கையில் தந்தார். ஒலைச்சுவடிகளைக் கையில் வைத்திருக்கும் கலைமகளும், ஒளவையாரும், வள்ளுவரும் என்று எண் மனக்கண்முன்னே பல்வேறுவடிவங்கள் தோன்றின. சிறுவயதில் எனக்கு ஏடுதுவக்கிய என் முதல்ஆசான் என் பிஞ்சுக்கைகளில் ஏட்டையும் எழுத்தாணியையும் தந்து "அ.ஆ.இ.என்று எழுதக்கற்றுத் தந்தது நினைவுக்கு வந்தது.
பனையோலை.
66.
பனைசெழித்த எண் தாயகமணி.
எல்லாமே ஒட்டுமொத்தமாய். காலத்தால் மறைந்துபோகாமல் நிலைத்துக்கிடக்கும் பனையோலைகள். இலக்கியமாய் தமிழ்ச்செல்வங்களாய்.
"என்ன செய்வதாக உத்தேசம்?"
முகாமையாளர் கேட்டார். "சிலவற்றை நான் படித்துப் பார்க்கவேண்டும்.ஆனால் அதிகநாட்களுக்கு இங்கு தங்கும் திட்டத்துடன் இப்போது நான் வரவில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல் இது மிகச் சிரமமமான முயற்சிதானா என்பதைக் கணக்கிட்டுக்கொண்டு இன்று திரும்புகிறேன். மறுபடியும் இதில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் வர விரும்புகிறேன்.
30

நல்லது.இப்போது ஒரு சில சுவடிகளை நீங்கள் வாசித்துப்பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.எப்போதும் எண் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு.நீங்கள் வரலாம்.வேண்டிய தகவல்களைத் திரட்டிக்கொள்ளலாம்.ஆனால் எந்தச் கவடிகளையும் நீங்கள் வெளியே கொண்டுபோக முடியாது.இங்கிருந்தே வாசித்தாக வேண்டும்."
நன்றி!"என்று எழுந்தேன்.
அடுத்த அறையில் காத்திருந்தேன். சில நிமிடங்களில் ஒருபெண்மணி சில புத்தகங்களைக்கட்டாகச் சுமந்தபடி வந்தார்.
தடித்த உறையிட்டுக் கட்டப்பட்ட தமிழ்நூல்கள் அவை. பையினின் பல்வேறு அதிகாரங்கள். "இதை நீங்கள் வாசிப்பது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்" என்றார் அருகேவந்த டானியல். புள்ளிகளிடப்படாத மெய்யெழுத்துக்கள்.காலிடப்படாத ரகரங்கள். வாசிப்பது எனக்குச் சிரமமான காசியமாக இல்லை. எனினும் விரைவாக வாசிப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை. "தமிழிலும் டொச்சிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள் சிலர் ஒன்றிணைந்து ஆராய்ச்சியில் இறங்கினால் மிகவிரைவாக ஒருசில நூல்களையேனும் வெளிக்கொணர முடியும்" என்றார் டானியல் "உண்மைதான்" என்று ஒப்புக்கொண்டேன். "நீங்கள் இங்கே எத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள் ஜெயராஜ்?" என்று கேட்டேன். "திருச்சபை சம்பந்தமான ஒரு ஆய்வு. இங்கிருந்து தமிழகம்போன பாதிரிமார்களின் திருச்சபைப்பணிகளில் தமிழும் தமிழ்ப்பண்பாடும் எத்தகைய முக்கியத்துவம் வகித்தன என்பதுபற்றிய ஆய்வை டாக்டரேற்றுக்காகச் செய்தகொண்டிருக்கிறேன். இன்னும் சிலமாதங்களில் என் ஆய்வு முடிந்து விடும். இந்திய போனதும் அவைகளை வெளியிடுவேன்!" என்றார் அவர். இதுவரை பலநூற்றுக்கணக்கான சுவடிகளை ஆய்வு செய்திருக்கிறேன். இவைகளில் சித்தவைத்தியம், தாவரவியல், உணவுவகை, தமிழ்நாட்டின் சரித்திரம்,இப்படி ஏராளமான ஏட்டுச்சுவடிகள் என்பார்வைக்குக் கிடைத்தன!" என்றார் அவர். "தங்களைப்போன்று இன்னும் பலர் இதுபோன்ற ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமைசேர்க்கும்விஷயம் என்பதோடு பலனளிக்கும் விஷயமுமாகும்"என்றேன். "ஜெர்மானியத் தமிழியம்" என்ற ஒரு துறையை நிறுவி அதன் மூலம் ஏராளமான ஏட்டுச்சவடிகளைவெனிக்கொணர ஆவணசெய்யும்படி தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பேராசிரியர் மோகனவேலு.
அவரது கனவு நனவானால் தமிழுக்கு மேலும் பெருமை கிட்டும்.
31

Page 18
இன்று வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கல்விபயிலும் தமிழ் மாணவர்கள் விடுமுறைக்காலங்களை துபோன்ற ஆய்வு முயற்சிகளில் செலவிடுவது நன்று என்பது என் அபிப்பிராயம். இலக்கியம், மருத்துவம், கலாச்சாரம், கல்வி, சமயம் என்று பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் உருவாகவேண்டும். சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர் சமுதாயம் சிந்திக்குமா?
காற்றாடி நுகரின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது பாத்திகளா.Pநாள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்.' sitilj gij biisiitäiiiii Läisiäisitiis பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி நூல் இனி எதற்குளவிறு கூறிக்கொண்டே
LLLLLLL LL SMTsLLLLL T
விகாஞ்சநேரத்தில். ஊரின் மூலையில் ஒரு முக மரத்தில் விழுந்துகிழிந்து உருக் குளEந்து கிடந்தது காற்றாடி காற்றாடியின் கதை விதரிந்த முள்மரம் கொள்ளது ஏற்றி வைத்தவனை மறுக்கிறவள இறக்கி வைக்கப்பருவாள்!.
நன்றிகாசி ஆனந்தன் கதைகளிர்
a
52
 
 
 
 
 

f 5.J55
군十
(உருவக நாடகம்)
LSLSSYLStLtt0SYYSL 0t000L0LLLL0YLL0zYYYY000zYY0000YYzYLL000000L LLLLYY00L00z0LS
善 盖 针 拳 慧。翼 =-= ۔: 奎 5ett is g5 štiliyalagtt, tegy 5.tc legtists
కేజ్ ‘‘ محم" } *
翡岸兽样皇韩转角鞘垂星 (4:4兽里44兽钟* 皇星鳍*馨曾自4辑辑韩韩韩兽事#4 4*铸彗拜吉旨弹目卓睿言*翡幸44 台

Page 19
அன்பான தம்பி தங்கைகளே!
கடந்த இதழில் வெளியான 4 போட்டிகளிலும் அதிகம்பேர் உற்சாகமாகச் கலந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி! உங்களில் சரியான விடைகளை எழுதியவர்களது பெயர்களும் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலியின் பெயரும் அடுத்த இதழில் வெளியாகும்.
பூவரசு 7வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பரிசுபெற்றவர்களுக்கான பரிசளிப்பு "பூவரசம் பொழுது 98" விழாவில் வழங்கப்பட்டது. நேரில்வந்து பரிசுபெற முடியாதவர்களுக்கு தபால் மூலம் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசுபெற்றவரை இம்மாதம் பிறேமனில் நடைபெறவுள்ள நூலகச் கண்காட்சியில் தெரிவுசெய்வோம்.
பரிசுபெறுபவர்பற்றி அடுத்தஇதழில் அறியத்தருவோம்.
இந்த இதழிலும் உங்களுக்கான போட்டிகள் இடம்பெற்றுள்ளன. உங்கள் விடைகளை பூவரசு முகவரிக்கு 20.04.1998 Uதிகதிக்கு முன்பு அனுப்பி வையுங்கள். 《འི་རིང་
N
 

மக்கள்.
நாட்டு வளனை நயக்கு முரிமை நாட்டு மக்கள் யாவர்க்கு முண்டாம்.
ஒருசிலர் மட்டும் வளங்களை உறிஞ்சி வருமொரு நாடு வளர்வது கடினம்.
பெருகும் குடிகள் அருகும் வளங்கள் திருகும் நாளைய தினத்தின் கழுத்தை
மாறும் சூழற் கிசைவுற மனிதனும் மாறுதல் வேண்டும் வாழ்ந்திடவேண்டின்,
மக்கள் மாசில் வாழ்க்கைப் போக்கை பக்கச் சூழல் கர்தல் வேண்டுப்
வீட்டைச் சுத்தப் படுத்தும் விருப்பை நாட்டின் அழகிலும் காட்டுதல் வேண்டும்.
நாட்டுக் குழைக்கும் நற்குடிக் கில்லை 6) TLL.D 67 is 6. Qd6 (51.656ft.
3.
5

Page 20
ஆட்டுக்குட்டியும் Cسے سسک ک நரியும் ༄།། )
ஒரு ஊரிலே ஒருவன் ஆடுகளை வளர்த்து வந்தான்.இந்த ஆடுகளை எப்படியாவது சாப்பிடவேண்டுமென்று துடியாய் துடித்தது ஒரு நரி,
ஆடுகளுக்கு நாவலாக நாடிகளை Y-t-9\lew * TNS alw i Water pea
வளர்த்துவந்ததால் நரியால் சாபபிட y
முடியவில்லை. ጭጄ நாய்களால் கடிபட்ட நரி வஞ்சம் ނަރްފީ _2ے தீர்க்க எண்ணியது. இதற்காக ད་ངག་།
தினமும் பற்றைக்குள் பதுங்கிட்
பதுங்கி காவல் இருந்தது. ஒருநாள் 人。 ஒரு ஆட்டுக்குட்டி தவறுதலாக நீரியிருந்த பக்கத்துக்கு சென்றது. | காத்துக்கிடந்த நரிக்கு குசி தாங்க | 《-A \ / جیسے முடியவில்லை.உடனே லபக்கென்று V سسسسسسسسسی----------------- கெளவிக்கொண்டு பற்றைக்குள் W V V برای மறைந்தது. e - Y- ےلا\\ ല്ല ஆட்டுக்குட்டி தப்பிக்கொள்ள 7 / 2 ށަހަ
துடியாய் துடித்தது.முடியவில்லை. தப்பிக்கொள்ள வழிதேடியது.
உடனே ஆட்டுக்குட்டி "நரியாரே! நரியாரே நான் சொல்வதைச் கேளுங்கள். என்னைமட்டும்தான் இன்று சாப்பிடமுடியும். என்னை விடுவித்தால் தினமும் ஒவ்வொரு ஆட்டை சாப்பிட ஒழுங்கு செய்து தருவேன்.!" என்றது. இதைக்கேட்ட
പറ്
حح --س 《དམ།་་་་་་་《《། །
2/1N 1
 

நரிக்கு மேலும் சந்தோசம் தாங்க 2-ܢܝܠ` ̄ܐ-ܢ
முடியவில்லை. Y "அப்படியா நீசொல்வதைநம்பலாமா?
அப்படியானால் நீ இன்று ஒரு ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ( ஆட்டை கூட்டிவரவேண்டும் என்று _محبر , ک C கூறி விடுவித்தது.ஆட்டுககுட்டி தன் ހށަށި
தாயிடம் ஓடிச்சென்று நரியின் ( { ހޗި
محر گھகட்டளையை சொல்லி அழுதது. > | A حسین خشسسسسسسسسس"
இதைக் கேட்ட 5Tuj956i y அவ்விடத்தை நோக்கிப் பாய்ந்தன. )Sபூ நரியை நாயகள் கடித்துக்குதறியது. anya N N ( YSR நரி துடித்துத் துடித்து இறந்தது. ~ NNN Y Y
ட ஆடுகள் சுகமாய் வாழ்ந்தன. ○ ," گی کسمصبے ந }; Y 码
வாழ்ந்தால் எந்த ஆபத்திலிருந்துப் سمبر 35Ul I(ypiqu4tD என்பது இக் கதையிலிருந்து தெளிவாகின்றது 1. Ꮽi6Ꭰ6Ꮝ6lifᎢ?
A പ്പെ ഭ
an -கஜிநாத் தவம்.
as ーイ ཚེ་སྡེ༽ 萨” N ہےے<ح>کے (Ennepeta)
محمد
乙気ーイやー لے گی۔ A تک ہمسر ニ خصف / っ下へい /ヘ Sö" とご 2 ܝܢܠ/ 三 ク ヘイト/ ふ سسمبر N

Page 21
gbjfälgb v9oop (3:56ögbydbb 4603 LjLL*ł.
/参下\ ØY ஆனால் தேன்கூட்டிற்குக் கிட்டப்
.分 * 出をや」 /を | (3, AFEĊI LIL I u 'l ġbi حصے خص
(, *x அப்போது அங்கே ஒருதேனி வரவே w A அதைப்பார்த்து, "நீங்கள் மிக இனிப்பான தேனை உருவாக்கு கிறீர்கள். ஆனால் மிகப்பொல்லாத கொடுக்கை உங்களுடன் காவலுக்கு வைத்துள்ளிர்கள் ஏன்?" என்றது. அதற்குத் தேனீ, 3569t. it it (S உழைத்து 9 LDL T 14s)(scy, அதைக் காபபாற்றும் சக்தியை ஆண்டவன் எப்படியும் கொடுத்து
விடுவான!” எனறது. அடுத்தவன் பொருளுக்கு G(5
நாளும் ஆசைபபடாதே.
38
 

போட்டி எண்: 1.
இந்தப் படத்தினுள் சில
பொருட்கள் மறைந்திருக்கின்றன. அவைகளைக் கண்டுபிடித்து எழுதுங்கள்.
39

Page 22
•■■■■■■■•@
திரியானவை.
இங்கே 6 கங்காருக்கள்
ம்தான் ஒரே மா
அளித்தாலும் இவற்றில்
רח) *
இருக்கின்றன. எல்லாம் ஒரேமாதிரித்
தோற்றம் 2 ስዃ፧ அவை எவை?
s
போட்டி எண்: 2
A.
40
 

($. Iffl').lg ଶବ୍ଦାର୍ଥୀ' : '' ;
スづ
/
இந்தச் சாடிகளின் நிழல்களைக் கவனியுங்கள். நிழல்கள் மாறியுள்ளன.அல்லவா? எந்த நிழல் எதற்குப் பொருத்தமானது?
ጦo - a tă{}fft_tụ 6ĩ600ĩ: 4
இங்கு 12 சிறுவட்டங்கள் உள்ளன.
1 முதல் 12 வரையிலான இலக்கங்களை நீங்கள் இவற்றுள் இடவேண்டும். ஆனால் வெளியிலுள்ள 8 வட்டங்களுக்குள்ளும் இடப்படும் இலக்கங்களைக் கூட்டவரும் தொகை, உள்ளிருக்கும் 4 வட்டங்களின் இலக்கங்களைக் கூட்டவரும் தொகையின் இரண்டுமடங்காக இருத்தல் வேண்டும்.
41

Page 23
போட்டி எண்: 5.
இந்தச் சிங்கத்தின் வயது இதன் உடலிலேயே உள்ளது. அவைகளைக் கணக்கிட்டு இந்தச் சிங்கத்தின் வயது எத்தனை வருடங்கள் என்று கண்டு பிடியுங்கள்.
(எண்களின் தொகை மாதங்களாகும்)
42
 

UT606.
காட்டில் வாழும் விலங்குகளில் யானை மிகவும் பெரிய உருவமாகும். இது கூட்டம் கூட்டமாக வாழும் இனத்தைச் சேர்ந்தது. அதன் கண்கள் மிகச் சிறியவை. யானையின் மூக்கு நீண்டு வளைந்திருக்கும். அது தும்பிக்கை எனப்படும். இந்தத் தும்பிக்கையினால் பொருட்களை மணந்து உணரவும் பொருட்களைத் தூக்கவும் பயன்படுத்து கின்றது. அது தன் தும்பிக்கையினால் கிட்டத்தட்ட 5லிற்றர்வரை நீரை உறிஞ்சும்.இது சிறிய ஊசியையும் எடுக்கும். பெரிய பாரமான மரங்களையும் விழுத்தச் கூடியது. அதனால் அதன்தும்பிக்கை அதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. யானை மிகவும் ஆழமான ஆறுகளைக்கூட நீந்திச் கடக்கக் கூடியது. யானையின் செவிகள் கேட்பதற்குமாத்திரம் பயன் படுவதில்லை. அதன் உடம்பு மிகவும் மொத்தமான தோலினால் இருப்பதனால் தனது வெப்பத்தைத் தனிப்பதற்காக தனது சுளகு போன் காதினால் விசிறிக் குளிர்மைப்படுத்தும்.
ஒரு யானை 12 அல்லது 13 வருடத்தில் குட்டி போடும்.அப்படி குட்டிபோடும்போது 21 மாதங்கள்வரை தேவைப்படுகின்றது. பிறந்த ஒரு யானைக்குட்டி கிட்டத்தட்ட 90-100 கிலோ நிறையைக்கொண்டது. ஒரு யானைக்குட்டி பிறந்து இரண்டு வருடம்வரை தாயப்பாலையே உணவாகக் கொள்ளும்,
39gl தனது உடம்பிலிருக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக மண்சேறு,நீர்ஆகியவற்றில் ஒழுங்காக நீராடும்.இதன் உடம்பில் எப்போதும் சேறு ஒட்டப் பட்டிருக்கும். الروك யானையின் வெப்பத்தைத் தணிக்கும்.
43

Page 24
யானை இலை, தழை, பழங்கள், கரட், கிழங்கு போன்றவற்றை உணவாகக்கொள்ளும். இது ஒரு நாளில் கிட்டத்தட்ட 70-90 லிற்றர்வரை நீரைக் குடிக்கும். யானையின் கடவாய்ப்பற்கள் இரண்டும் கொம்புகள் போல இருக்கும். அவை தந்தம் எனப்படும். இன்று பெரும்பாலான யானைகளை அழித்து அதன் தந்தங்களில் சிலைகஸ் போன்ற பொருட்கள் தயாரிப்பதனால் பெருந் தொகையான T6065-66 குறைந்துகொண்டே போகின்றன.
M
لری، خاکجگحکجا フ三\a→守
 

அறம் செய விரும்பு,
செறமறைாஐ.
(Brennen)
அறம் என்றால் தருமம் என்பது பொருளாகும். பிறருக்கு உதவி செய்தல், அவர்களுடைய துன்பங்களை நீக்கி மகிழ்ச்சி உண்டாகச் செய்தலே தருமம் ஆகும். ஏழைகளை அன்பொடு உபசரித்து அவர்களின் பசியாற உணவளிப்பதும், அணிவதற்கு ஆடைகொடுத்து உதவுவதுமே தலை சிறந்த தருமம் ஆகும். வயதானவர்கள் எம்மிடம் உதவிகேட்டுவந்தால் தட்டிக்கழிக்காமல் அவர்களின் கஷ்டங்களைப்போக்கி திருப்தி அடையச் செய்ய வேண்டும். நோய்களால் கஷ்டப்படுபவர்களுக்கும் எம்மால் முடிந்த மருத்துவ வசதிகள் அளித்து குணப்படுத்தல் வேண்டும். அவர்களின் துன்பம் நீங்க நாம் இறைவனை வணங்கவேண்டும். உழைத்து வாழமுடியாத உடல் ஊனமுற்றவர்கள் வசதியாக வாழ்வதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிசெய்யவேண்டும்.
நாம் முழுமனதோடு பிறருக்கு உதவிசெய்யும்போது எம்மிடம் இருக்கும் செல்வம் பெருகுமே தவிர ஒருபோதும் குறையாது. எமக்குக் கஷ்டம் வரும்போதும், எமது இறுதிக்காலத்திலும் எம்முடன் துணையாக இருப்பது தருமம் ஒன்றுதான். மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும்போது எமது உள்ளத்திலும் இன்பம் பொங்கி சந்தோஷமடைகிறோம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்" என்ற பழமொழியை மனதில்கொண்டு சிறுவயதிலிருந்தே மற்றவர்களுடன் சேர்ந்து அன்பாக வாழப்பழகவேண்டும்.அப்போதுதான் பெரியவர்களானதும் போட்டி பொறாமை இன்றி அமைதியாக வாழமுடியும், ஆகவே தாமும் பொறுமையைக் கடைப்பிடித்து உழைப்பை உயர்வாகக்கொண்டு விருப்பத்தோடு அறம்செய்து பண்போடு வாழ்ந்து புகழ்பெறவேண்டும்.
{ "அறம்செய விரும் "கட்டுரைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற கட்டுரை)

Page 25
உயிரெழுத்துக்களின் சிறப்பு.
அன்னை அரவணைப்பில் அன்பைப் பெறலாம் ஆசிரியர் பணியில் அறிவை வளர்க்கலாம் இறைவன் பக்தியில் முக்தி பெறலாம் சிவதென்பதை இறைமையில் வாங்கலாம். உண்மையென்பதனை இதயத்தில் காணலாம் 2ஜிக்கமென்பதனை செய்கையில் காட்டலாம். ண்ெணமதனை நல்வழியில் செலுத்தலாம். ஏணிபோல் வாழ்வில் உயரலாம் Butfairs ugly 6-i Q5uilt 16Tid. ஒற்றுமையோங்கின் உயர்ச்சி அடையலாம் ஒதும் பிரார்த்தனையால் பக்தியை வளர்க்கலாம். ஒளிவையின் பாதையில் அழகாய் நடக்கலாம் அஃது நம்தமிழ் சிறப்பைக்காட்டுமே.
ஆன் வினோலினி நடேசன். (Havixbeck)
46
 

எமது தாய்மொழி
நாங்கள் எல்லாம் தமிழர்கள் எங்கள் தாய்மொழி தமிழ்மொழியே. நாங்கள் வாழ்வது யேர்மனியில் எங்கள் தாயகம் தமிழீழம். அம்மா அப்டா பிறந்தது தாய்நாட்டில் நாங்கள் பிறந்தது வெளிநாட்டில். வேற்று நாட்டில் வாழ்வதனால் வேற்று மொழியில் படிக்கின்றோம். தமிழை நாங்கள் மறக்கவில்லை தமிழ்மொழி எங்கள் உயிரன்றோ தமிழ் படிக்கப் போகின்றோம் தமிழாலயம் போகின்றோம். தேனினும் இனிய எம் தமிழ் மொழியை நாங்கள் கூடிப் படிக்கின்றோம். நன்றாய் ஆடிப் பாடிப் படிக்கின்றோம் சேர்ந்து மகிழ்ந்து படிக்கின்றோம். படிக்கப் படிக்க அறிவைக் கொடுக்கும் பண்புடன் வாழ வழி வகுக்கும் எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியே.
- அசோக் குலதாசன் -

Page 26

உன் கண்ணில் நான் காண்பதெல்லாம் எண்ணில்லாக் கவிதைகளை YU கவிதைகள் பல தந்தெனக்கு N
கவிஞன் என்று பெயரிட்டாய்! பெயரிட்ட நீ எனது
உயிருக்குள் புகுந்திட்டாய்
புகுந்துவிட்ட என்னகத்தே \ புத்துணவு தந்திட்டாய் V கண்ணயரும் கனத்தினிலும் \
கனவினிலே வலம்வந்து இன்பசுகம் தந்து என்னை அரவனைக்கும் உன் நினைவு என்றைக்கும் மாறாது \ நிரந்தரமாய் நீ
என்னுடனே வாழ்ந்திடணும். V
கற்பனையில் காதலித்து கவிதையில் உன் எழில்பாடி காலமெல்லாம் களிப்புடனே வாழ்வதை நான் நினைக்கையிலே இனிக்கிறதே என் நெஞ்சம்
-எல்.விஜயகுமார்.

Page 27
பூவரசு கலை இலக்கியப் பேரவையின்
பூவரசம் பொழுது 98.
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் ஏழாவது ஆண்டு நிறைவுவிழா பூவரசம்பொழுதாக 24098 சனிக்கிழமையன்று சிறப்புற மலர்ந்தது.
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம், திருமதி வில்ரூட்கடெல்கா ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர். அமைதி வணக்கத்தைத்தொடர்ந்து திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் இறைவணக்கப் பாடலைப் பாடினார். செல்வியிரதீபா மகேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். பேரவைக்கீதமும் அதனைத் தொடர்ந்து மழலையர் நடனமும் இடம்பெற்றன.
ஜெர்மனியின் பல பாகங்களிலுமிருந்துவந்த முன்னணி எழுத்தாளர்கள் கவிஞர்களோடு பிறேமன்வாழ் கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
பூவரசு 7வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசைப்பெற்றுக்கொண்டவரும் முன்னணி எழுத்தாளரும் விமர்சகருமான திரு. பொன்னையா கருணாகரமூர்த்தி (பேர்லின்) இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பூவரசு கலை இலக்கியப்பேரவையின் பிரதமஆலோசகரான ஜெர்மானிய அம்மையார் திருமதி வில்ரூட் கடெல்கா கெளரவ விருந்தினராகக் கலந்து
LLAuLLz LL LLLLLLLLu uuA SLq qL TTAqA ALTSSS SSASSASSASSLqqq qqqqLLLL S qqqq qLTS S LL SL LLLLL S qqqLqLLLLLSLLL கொண்டு பூவரசீக கலை இலககிய சேவைகளைப பாராடடினா. வசுரு: இளைய தலைமுறையினர்மத்தியில் தாய்மொழிகலை,கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுப்பதில் பூவரசுகொண்டுள்ள அக்கறை மெச்சத்தக்கதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
செல்வன் ஆனந்த் குலதாசன்,செல்வன் கஜிநாத் தவம், செல்வன் சிவஞ்ஜீவ் சிவராம் ஆகியோர் எங்கள் இளந்தளிர்கள் சார்பில் கலந்துகொண்ட இளம் சிறப்புரையாளர்கள்.
செல்வி ஆன் வினோலினி நடேசன் அவர்களின் நடனம் அடுத்து இடம்பெற்றது. தொடர்ந்து நடனஆசிரியை செல்வியூரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் இடம்பெற்றது.
கவிஞை திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் "மானல்ல தேனல்ல மற்ரல்ல பெண்" என்னும் தலைப்பில் மகளிர் கவிபரங்கு
இடம்பெற்றது. பூவரசு கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திருமதி
50

சசிகலா தேவராஜாவின் வரவேற்புக் கவியைத்தொடர்ந்து கவியரங்கு ஆரம்பமாயிற்று. திருமதி விஜயா அமலேந்திரன், திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி மகேஸ்வரி வரதராஜா, திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார் ஆகியோர் பங்குகொண்டனர். பெண்விடுதலை, பெண்ணடிமைத்தனம், ஆனாதிக்கம், பெண்கதந்திரம் என்பனவற்றை மையக்கருக்களாகக்கொண்டு கவிமலர்கள் தொடுக்கப்பட்டன.
புதுமையான முறையில் அரங்கேறிய "வீட்டுக்குப் போகவிடு" என்னும் இளந்தளிர்கள் பங்குகொண்ட இசைநாடகம் அனைவரையும் கவர்த்தது. தங்கக்கூண்டில் சிறைவைக்கப்பட்ட கிளி ஒன்று விடுதலைக்காய் ஏங்குவதைச் சித்தரித்தது இந்த நாடகம். இந்துமகேஷ் எழுதி இசைவடிவம் கொடுத்த இந்நாடகத்தை பூவரசு கலை இலக்கியப் பேரவை உறுப்பினர் திருமதி சாந்தராணி பத்மகுமார் நெறிப்படுத்தியிருந்தார். (ஒப்பனையாளர்களான செல்வன் அருண், செல்வி.ஜெயராணி செல்வத்துரை ஆகியோர் இந்நாடகத்தின் வெற்றிக்குப் பக்கபலம் என இரசிகர்கள் பாராட்டினர்)
அடுத்து இடம்பெற்ற செல்வி லக்சி கருணைராஜனின் "கிழக்கும் மேற்கும்" (கவிதைஇசைநாடகம்) மேலைத்தேச கீழைத்தேசக் கலாச்சாரத்தோடு பெண் விடுதலையையும் ந்தரித்தது. பங்குகொண்ட இளங்கலைஞர்கள் அனைவரும் தத்தம் நடிப்புத்திறனால் நாடகத்தை மெருகு படுத்தியிருந்தார்கள்.
விழாவின் இறுதிநிகழ்ச்சியாக எழுத்தாளர் இராஜன் முருகவேலின் "அந்தமாதிரி நகைச்சுவை நாடகம் இடம்பெற்றது. நகைச்சுவை என்றபெயரில் எவர்மனதையும் புண்படுத்தாமல் எளிமையான வசனங்களில் நகைச்சுவை இழையோட எழுதப்பட்டிருந்த இந்நாடகம், வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களின் அறியாத்தனங்களாலும் அனாவசிய செயற்பாடுகளாலும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தொட்டுக்காட்டியது. புதிய நாடகக்கலைஞர்கள் பலர் முன்னணிக் கலைஞர்களோடு இணைந்து இந்நாடகத்தில் பங்கேற்றனர். திருவாளர்கள் மனோஹிமண், உதயகுமார், ரமேஷ், ஞானச்செல்வம், லட்சுமிகாந்தன், குலதாசன், ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோருடன் இந்நாடகத்தின் இயக்குனரான திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வமும் இணைந்து நடித்திருந்தார்.
51

Page 28
பூவரசு 7வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் பரிசுபெற்றவர்களுக்கும், பூவரசு இளையோர்க்கென வெளியிடும் "எங்கள் இளந்தளிர்கள்" நடாத்திய ஆண்டுப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்குமான பரிசுகளும் விழாவில் வழங்கப்பட்டன.
புதியதல்ல புதுமையுமல்ல நூலுக்காகத் தமிழகத்தில் பரிசுபெற்ற கவிஞர் எழிலன் அவர்களைப்பாராட்டி பூவரசு ቇ6ö}ùù) இலக்கியப்பேரவை பூவரசம்பொழுது 88ல் சிறப்பித்து விருது வழங்கியது.
பூவரசு கடந்தகாலங்களில் நடாத்திய கலைவடிவங்களிலிருந்து தொகுக்கட் பட்ட பூவரசம்பூ வீடியோமலர் விழாவில் வெளிடப்பட்டது. இதன் முதற்பிரதியை பூவரசின் நீண்ட கால வாசகரான திரு கந்தையா சிவபாலன் அவர்களிடம் திருமதி புவனேந்திரன் வழங்கினார். பூவரசு 7வது ஆண்டு நிறைவு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் திருசுப்பிரமணியம் தயாபரன்அவர்களிடம் திருமதி.இந்துமகேஷ் வழங்கினார். அறிவிப்பாளர்களாக செல்வன் பிரசன்னா, திரு விஜயகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். இந்துமகேஷின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
(விழா நிகழ்ச்சிகளின் சில நிழற்படங்கள் இந்த இதழின் சில பக்கங்களில்) படப்பிடிப்பு- எஸ்.தேவராஜா.
பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
இளையோர்க்கான பிரத்தியேக இணைப்பு
"எங்கள் இளந்தளிர்கள்’
பூவரசு இதழின் நடுப்பக்கத்தில்

கடமைகள்.
காற்றில் அடிபட்டு வந்து ஒட்டிக் கொள்ளும் காகிதம் போல். ஊரையும் உறவையும் பிரிந்து உரிமையேதும் இல்லாத ஒர் தேசத்தில் வந்து ஒட்டிக் கொண்ட வனே!
உதிரம் சிந்தி உன்னை வளர்த்தவளங்கே அரண் உடை உறக்கமின்றி 9Q. uiiñf eshrTUஆடம்பர வாழ்வுக்காக ஆயிரம் ஆயிரமாய் அன்னி எறியும் நீ. அன்னை யவளுக்கு அனுப்புவதற்கு மட்டும் என்னுக் கணக்கா
வந்த வழிமறந்து வரப்போகும் வாழ்வை gessergy Aes - Ga gę வாழ்கின்ற வாழ்வே நிலையானதென்றுகொட்ட மடித்துக் குதுநாகலிப்பவனே. கடந்த காலங்கள் மீண்டும் வருவதில்லை-ஆனால் கடமைகள் என்பது எம்மவர்க்கு கடைசிக் காலம்வரை என்பதை கருத்தில் கொள். இன்றைய நிலையில் sa aianar Rainboufrasessur-ps உதறிவிடலாம்-வரும் நாளைகளில் நீ ஈன்றவர்கள் உன்னையும் உதறலாம் என்பதை ஏன் உணரவில்லை.
கொற்றையூர் வாசன்.
53

Page 29
4:{புக்தலா, அனுபவத்தொடர்
என் வாசகர்களைத்தேடி
Na
%.
மேலைநாடுகளிலுள்ள தமிழவாசகர்கள்பற்றி அந்தவாசகர் குறிப்பிட்ட கருத்துக்கள்பற்றி இந்துமகேஷ் என்ன சொல்லபயோகிறான் என்ற எதிர்பார்த்துக் காத்திருந்தேன் நான்.
لمحہ ح۔ 9اگسی ،
இந்துமகேஷ் மறுபடி அந்தக்கடிதத்தின்மீது தள் பார்ஷைடை ஓட விட டான்.
”அன்பான இந்துமகேஷ்!
உங்கள் கடிதம் கண்டேன. பேருவகை கொண்டேன் தங்களின் ‘விடியூலுக்கில்லை தூரம் நவீனத்தை உடனே படித்து முடித்து விடடேன்.
மானிடச் செய்திகள் பல பொதிந்த அரிய பலநாவல்கள் இன்னும் பல நீங்கள் படைக்க என் நல்வாழ்த்துக்கள்.
எனது முந்தைய கடிதத்தில் நான் குறிப்பிட்ட இலங்கைத் தமிழ் வாசகர்கள் கொஞ்சம்படிப்பு வாசனையுள்ள வாசிக்கும்பழக்கம் உள்ள உயர் இலக்கியங்களை நாடுகின்ற இரசிகர்களைத்தான். ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத்தமிழர்களில் 90வீதமானவர்கள் வாசிக்கும் பழக்கம் அற்றவர்கள். மட்டரகச்சினிமாக்கள். அல்லது 4பியர்போத்தல்களை வைத்து ரம்மியாடுதல் அவர்களைப் பொறுத்தமட்டில் உயர்ந்தவகைச் சிறந்தபோக்குகள். அவர்களைப் பொறுத்தமட்டில் உயர்ந்தவகைச் சங்கீதத்தை இரசிக்கவோ, உயர் இலக்கியத்தைப்பற்றி அறியவோ அவர்களால் முடியாது. எனவே ஒரு நூலின்விலை Proportional ஆக நிறையும் இருக்கவேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். சவூதி அரேபியாவில் இருக்கும் ஒரு எனது நண்பர் ஒருவர் எழுதினார். தனது அறைத்தோழர் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு இந்தியராம். அங்கு கிடைக்கக்கூடிய சஞ்சிகைகளில் ரீதேவி, அம்பிகா இவர்கள் படமுள்ள சினிமாச் சஞ்சிகைகளைத்தானாம் விரும்பிவாங்குவார். ஜெயப்பிரதாவுக்கு. ராதிகாவுக்கு எப்போது என்ன திகதியில் திருமணமாயிற்று, என்ன பிள்ளை பிறந்தது எப்போது என்ற விஷயங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் இந்தப் பொறியியல் பட்டதாரி, ஒருநாள் வாசிக்க ஒன்றுமில்லை என்று ஏதாவது நூல் தருமபடி கேட்டாராம்.நண்பர், தி.ஜானகிராமனின மரப்பசுநாவலை8 கொடுத்தபோது அடுத்த பத்தாவது நிமிடமே "ஒண்னும் புரியலேப்பா" என்று திருப்பிக்கொண்டுவந்து கொடுத்தாராம். என்னிடம் நண்பர்கள் நூல்கள் இரவல் கேட்பதேயில்லை,காரணம்
54

அவர்கள் பாஷையில் அவர்களுக்குப் புரியும்படியாய் நான் படிப்பவை ஒன்றும் அமைவதில்லை. விெகடன், குமுதத்தை உருவிக்கொண்டு போய்விடுவார்கள். கணையாழி மற்றும் கவிதைகள் இருக்கும்பக்கமே போக
56. எனவே எங்கெங்கு உயர்வாசகர்கள் இருக்கிறார்களோ, நூல்களுக்காகப் பணத்தைச் செலவிடும் பழக்கமுள்ளவர்கள்
இருக்கிறார்களோ அவர்கள்மத்தியில் உங்கள் எழுத்துக்களால் உங்களுக்கென்று ஒரு வாசகர்வட்டத்தை அமைத்துக்கொள்ள (3668 (6th.
உங்களை நான் வீரகேசரிப்பிரசுரங்கள் மூலம் எழுத்தாளர் என்று அறிவேன் நான் உண்மை பேசவேண்டும்.அவை எதையுமே நான்
நடித்ததில்லை. மெளனத்தில் அழுகின்ற மனங்கள்கூட நான் பிறேமன் வந்திருந்தபோது நண்பி ஒருவரிடமிருந்து கிடைக்கட்
பெற்றதால் டிக்க முடிந்தது. இப்போது உங்கள்
V orie krepas o o t -مستعمل حمص في مستحت
விடியலுக்கில்லை துரம் நவீனத்தைப்படித்துவிட்டு
எழுதுகின்றேன்.
1987ல் இந்துமகேஷின் விடியலுக்கில்லை தூரம் நவீனத்தைப் படித்துவிட்டு அவனது வாசகர்களில் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தின் சிலபகுதிகள் இவை. அழகிய சிறிய எழுத்துக்களில் மூன்று பக்கங்களை முற்றாய் நிறைத்திருந்த ஒரு உயர்மட்ட வாசகரின் நீண்ட கடிதம் அது. இந்துமகேஷ் மறுபடியும் முழுமையாக அந்தக் கடிதத்தைப் படித்தான். "என்ன மறுபடியும் திருப்பிப்படிக்கிறாய். ஒன்றும் புரியவில்லையா?" என்றேன் நான் சீண்டினாற்போல, இந்துமகேஷ் வழக்கம்போலவே உதடுகளில் புன்னகையைத் தேக்கினான். "ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சைத்தொட்டுக் செல்லும்போது ஷாசகர்களின் இலக்கியத்தரம்வாய்ந்த கடிதங்களால் அவனும் கவரப்படடு விடுகிறான். எனக்கு வந்துகொண்டிருக்கும் வாசகர் கடிதங்களில் என்னைக் கவர்ந்த கடிதங்களில் இதுவும் ஒன்று.” என்றான் இந்துமகேஷ். "கவர்ந்ததென்றால்.அவரது கருத்துக்களையும் நீ முழுமையாக ஒப்புக் கொண்டதாக நான் அர்த்தங்கொள்ளலாமா?" என்றேன். "இதுபற்றி நான முன்பே சொல்லியிருக்கிறேனே. ஒவ்வொருவர்க்கும் தத்தப் கருத்துக்களைச் சொல்ல உரிமையுண்டு. ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது மற்றவர்களின் உரிமை!” என்றான் இந்துமகேஷ்.
மழுப்பாமல் விஷயத்துக்குவா ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் வாசகர்கள்பற்றி இந்த வாசகர் சொன்ன கருத்தை உன்னால் ஒப்புக்கொள்ள முடிகிறதா?" என்றேன் நான் சற்றுக்கடுமையாக,
இந்தக்கேள்விக்கு நான் பதில் சொல்வதற்கு முன்னால் என் எழுத்துலக அனுபவங்கள்பற்றி உன்னோடுகொஞ்சம்பேசவேண்டும்." என்றான் இந்துமகேஷ். "பழைய புராணமா?.என்ன பெரிதாகச் சொல்லிவிடப்போகிறாய்..? வீரகேசரி உன் நவீனங்களை வெளியிட்டதைப்பற்றியும், இலங்கைவானொலியில் நீ நிறைய நாடகங்கள் எழுதியிருப்பதைப்பற்றியும், எல்லாநாளேடுகளிலும் உன்
55

Page 30
படைப்புக்கள்வந்தன என்பதுபற்றியும் அதே கீறல்விழுந்த பல்லவியைப் பாடட் போகிறாய்..!"என்றேன் நான் சலிப்பாக, "இல்லை. இது இன்னும் அதற்கு முற்பட்டது"என்றான் இந்துமகேஷ் "சரி.சொல்லு!"என்றேன்.
(தொடரும்)
{பூவரசு கார்த்திகை-மார்கழி 92ல் வெளியானது)
39 s T6ÕÕT If T dS
r ●一صسسه
தவளைகள!?
நெம்புகோல்களெல்லாம் ۔&
முறிந்துவிட்டன! அட! ஏமாந்த மனிதர்களே
கருவிகளை மறந்த கைகளுடன் சுடாத நெருப்புண்டா
மனிதக் கூட்டங்கள்! சுட்டுவிடும் நிலவுண்டா?
இன்னும் என்ன இடுக்கு தாண்டாத தவளையைக் கண்டதுண்டா?
தாண்ட தாவிட.? முயலுதலே முனைப்பாகிறதல்லவா!
டி அழ்ை. கரையேறுவோம்
பூபால் களியல் செய் யும் நானுமாய் மட்டுமல்ல
3ಣಾ ಪ್ರವಾಗಿ சித எல்லாரும்-எல்லாமும்
நீயும் நானுமாய் இன்பமென்பது
நல்லவனாய் இருப்பதில் வரையறை வகுககபபட்ட
தமக்கென்ன லாபம்? மனிதர்களுக்கு மட்டுமல்ல!
எல்லாரும் ஒரே குழியில் விழுத்து LS SLS S S SLS S SSYSSS SS SS
சேற்றைப் பூசிடுவோம்! எங்கெங்கும் எனதாகி
எல்லாமும் பிறராகி ஒன்றுக்குள் ஒன்றாகியிருப்பதில் ஒருவித சுகம் உண்டு?
N. صےرX சீஅருண். )மலேசியா( ܢܠ
سےہح<
56
 

BU)ébéibleb LTG
6ģijā56.
-- Sigtigs KSD(SHGösa)65
அத்தியாயம் 12.
சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? கம்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்துகொடுத்து மனதை மாற்றி அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய முடிந்தது?
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள். எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான். அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது? காரின் பின் சீற்றில் அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது. நான் சட்டையைக் கொடுக்கேக்கை வாங்கினாள். ஆனால் அவையள் பிறந்தநாளாலை வந்தவுடனை அகல்யாவை உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போய் கணநேரமாய்க் கதைச்சினம். சட்டையைத் திருப்பித் தந்துவிட்டாள்" “ஏனெண்டு கேட்கேல்லையே?" "அளவில்லையாம். கலர் சரியில்லையூாம். அதை வாங்கின கடையிலையே திருப்பிக் கொடுக்கச்சொன்னாள். அதுக்குப் பிறகு அவள் வெளியாலை வரவே இல்லை."
குரலில் விரக்தி,
"நீ என்னவாலும் பிழையாய்க் கதைச்சனியே?"
ፎ”7

Page 31
"அவள் கதைச்சால் எல்லே என்னவாலும் கதைக்க. கொழும்பிலை
இருக்கேக்கை கதைச்சாள். அவளா இவள்? நம்பமுடியேலை. ஒருமாதம்
மொஸ்கொவிலை நின்ைடாள். என்னாலையும் தொடர்புகொள்ள முடியேல்லை. அதுக்கிடையிலை இப்பிடி மாறிவிட்டாள்."
சோகமாகக் கூறினான் சிவராசன். திருமணம் புரியவென வெளிநாட்டிற்குவரும் சில பெண்கள் வருகிறவழியில் தங்கும்நாடுகளில் வேறு தமிழ் இளைஞர்களுடன் காதல்வசமாகிப் பாதை மாறிய பறவைகளானதை அறிந்துள்ளான் சோதி.
அப்படி அகல்யாவும்.? மனதில் எழுந்த அபிப்பிராயத்தைச் சிவராசனிடம் தெரிவிக்க முடியாது பாவம், அவுனின் மனம் சங்கடப்படும். உதடுவரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான்.
"சிவா! இதிலை என்னவோ இருக்குது. சிலவேளை கனகரத்தினமும்
g V typ L LqLA LLq qSS S S TLLAqA qAqLLqqAqqAASAALLLLL LLL LLLL LL LLLLLLLTLATTTSLLLT Tq qqqq qqq பயபசமுடய eenvouvuur vuuw vVu ೬wvoyಣ Unu ryuuyuu uur f 岳岳5、LG。野
"எப்பிடி.எப்பிடி.அவைதானே அவள் ஜேர்மனிக்கு வந்ததை எனக்கு அறிவிச்சவை. கனகரத்தினமண்ணைதான் என்னைத் தனிய கூட்டிக் கொண்டுபோய் சொன்னார் அவளுக்கு எண்ணைப் பிடிக்கேல்லை எண்டு!" “ஏனெண்டு கேட்டணியே?"
"கேட்டன். எண்னவோ பிடிக்கேலையாம். "இவையாலும் அவளோடை கதைச்சு மனதை மாத்தியிருக்கலாம் எல்லே." "அதுதான் எனக்கும் விளங்கேலை. தங்கடைபேச்சை அவள் தட்டமாட்டாள் எண்டு சொன்னவைதான் அவை. இப்ப அந்தக் கதையில்லை. அவளுக்குட் பிடிக்காட்டி எங்களாலை ஒண்டும் செய்யேலாது எண்டு கையை விரிக்கினம். என்னாலை அவள் இப்பிடிச் சொல்லி இருப்பாள் எண்டு நம்ப முடியேலை
"நீ அவளிட்டையே நேரை கேட்டிருக்க வேணும்!" "அவள் வெளியாலை வந்தால்தானே. அறையுக்கை போய் கதவைச் சாத்தினவள் பேந்து வரவே இல்லை." "நினைச்சவுடனை மாட்டுறத்துக்கும் பிடிக்காட்டிக் கழட்டி எறியவும் நீ என்ன உடுதுணியா?.இதை இப்பிடியே விடக்கூடாதுரண்டிலை ஒண்டு பார்க்கவேணும்.அப்பதான் புத்தி வரும்.
கோபத்துடன் கூறினான் சோதி. "அவள் மாட்டன் எண்டு சொல்லேக்கை என்னடா செய்யமுடியும்? இனி அவளை வற்புறுத்திச் சம்மதிக்கவைச்சாலும் அப்பிடி அமையிற வாழ்க்கை ஒரு வாழ்க்கையே? எனக்கும் கலியாணத்துக்கு = ۔ ۔ ۔ ۔ ۹گ .* போலை" என்று தழுதழுத்தான் சிவராசன். கண்கள் கலங்கி நீரைக்கொட்டத் தயாராகின. "சிவா நீ எதுக்கும் கவலைப்படாதை. ரெலிபோனிலை நல்லமாதிரிக் கதைச்சவள், கடிதங்களிலை கனவுகளை எழுதினவள் நீ இலங்கைக்கு அனுப்பின பரிசுகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டவள் திடீரெண்டு மனதை
ம்
ெ
fff
த்
5iÈiù
58

(ாற்றினாள் எண்டால் இதிலை என்னவோ இருக்கு. அது என்னெண்டு தெரிய வேணும். இவ்வளவு நாளாய் உன்னோடை நெருங்கி வந்த ஒருத்தி திடிரெண்டு மனதை மாற்றிக்கொள்ளமாட்டாள்.அதாலைதான் செல்லுறன். கொஞ்சநாளைக்கு நீ எதுக்கும் யோசிக்காமை இரு. நான், பாலன், கேசவன் எல்லாரும் அவையை நேரிலை சந்திச்சு எண்ணெண்டு கேக்கிறம். உறுதியாகக் கூறியபோது சற்று நம்பிக்கை பிறந்தது.
I சோதி கேசவன், பாலன் எல்லோரும் கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அவர்கள் கூட்டமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. உள்ளே வரச்சொல்வோமா?என்று தீர்மானிப்பதற்குள்ளாகவே நுழைந்தார்கள். தம்பியவை. "நாங்கள் ஏன் வந்திருக்கிறம் எண்டது உங்களுக்குத் தெரியும்.கூப்பிடுங்க அகல்யாவை. ஏணிப்படி ஒருத்தன்ரை வாழ்க்கையோடை விளையாடினவ எண்டு கேக்கவேணும்."
தம்பியவை வீணாய் பிரச்சினை கிளப்பவேண்டாம்." நாங்கள் பிரச்சினை கிளப்ப வரேல்லை. நீங்கள்தான் பிரச்சினையளை வளர்த்துக்கொண்டு போநீங்கள் நம்பினவனைக் கழுத்தறுத்துப் போட்டீங்கள். ஒருத்தனைப் பைத்தியக்காரனாக்கப் பாக்கிநீங்கள்.இது என்ன நியாயம்?" அகல்யாவுக்குப் பிடிக்கேல்லை. இதுக்குப் பிறகு எங்களாலை என்ன செய்யமுடியும்? மனதுக்குப் பிடிக்காதவனை வில்லங்கமாய்க் கட்டிவைக்கச் சொல்லுறியளோ?"
'எதுக்கும் நேரிலை வந்து சொல்லச் சொல்லுங்கோ" "என்ன நேரிலையோ-? என்று கோபமாகக் கேட்டவர்."ஒரு குமர்ப்பிள்ளையை உங்களுக்கு முன்னாலை வந்து சொல்லச்சொல்லுறியனோ?"என்று கத்தினார். "குமர்ப்பிள்ளை கடிதம் எழுதலாம். ரெலிபோனிலை கதைக்கலாம். அதிலை பிழை இல்லை. இப்ப எங்களுக்கு முன்னாலை வாறதுதான் பிழையோ?” என்று பதிலுக்குக் கேட்டான் கேசவன். "சும்மா பூச்சாண்டி காட்டாதேங்கோ. ஒருத்தன்ரை இல்லாதபொல்லாத ஆசைகளை வளர்த்து இப்ப புண்ணாக்கிப்போட்டு வாழலாம் எண்டுமட்டும் கனவு காணாதேங்கோ. அவனிலை என்ன குறை? என்ன தகுதி இல்லை. அதைச்சொல்லுங்கோ. இல்லாட்டிப்போனா கலியாணம் கட்டலாம் எண்டு மட்டும் நினைச்சப் பாக்கவேண்டாம். போஸ்டர் அடிச்சு ஒட்டுவம்.அவனுக்கு இதிலை விருப்பமில்லாட்டியும் அகல்யா எழுதின காகிதங்கனைட் போட்டோக்கொப்பி எடுத்து எல்லா இடமும் கொடுப்பம்பேந்து உங்கள்ாலை தலைநிமிர்ந்து நடக்கேலாது"என்ற சோதியின் சீற்றத்தின்முன்னால் விக்கித்து நின்றார் கனகரத்தினம்.

Page 32
"அவசரப்படாதேங்கோ தம்பியவை. முதலிலை இருங்கோ. இந்தாளுக்கு என்ன பேசவேணுமெண்டே தெரியாது." என்றவாறு இடையே வந்தாள்
66. தம்பியவை. உங்களிட்டை ஒண்டு கேக்கிறம். அதுக்கப் பதிலைச் சொல்லிப்போட்டு நியாயத்தைக் கதைப்பம்."
"சொல்லுங்கோ" இப்ப நாங்கள் பத்தாயிரம் மார்க்குக்கு மேலை செலவழிச்சுக் கூப்பிட்டம். இனி கலியாணத்துக்கு இன்னும் பத்தாயிரமாலும் வேணும். அவள் எங்கடை பிள்ளை. மணவறை வீடியோ எண்டு சிறப்பாய்த்தான் செய்ய வேணும். அவராலை அவ்வளவு சிறப்பாய்ச் செய்யமுடியுமே?” கேசவனும் சோதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். "அவர் இப்பவே கடனோடை இருக்கிறார். இன்னும் அவர் தன்ரை குடும்பத்துக்காகச் செய்யவேண்டியது நிறைய இருக்குது. இந்த லட்சனத்திலை இவளையும் அங்கை தள்ளச் சொல்லுரியனே?" "இதை நீங்கள் முதலிலையெல்லோ யோசிச்சிருக்கவேணும். "அப்ப நீங்கள் இந்தக் கலியாணத்தை விரும்பேல்லை?" "ஒம், நாங்கள்தான். இது நாங்களாய் யோசிச்சு எடுத்த முடிவில்லை. மற்றச் சனங்கள்சொல்லிச்சுதுகள். அதாலை யோசிச்சம். சரியாய்ப்பட்டுது. நாளைக்கு எங்கடை சொந்தக்காரச்சனங்கள் பெறாமகள் எண்டதாலைதானை இப்பிடி யொரு சம்பந்தத்தைச்செய்தவை எண்டு கதைக்கக்கூடாது. அதாலைதான் இப்பிடியொரு முடிவெடுத்தம் "உண்மைதான். நீங்கள் முடிவெடுத்ததிலை பிழை இல்லை. ஆனால் காலம் கடந்து எடுத்த முடிவு. இதாலை இன்னொருத்தன்ரைவாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படும் எண்டதை நினைச்சுப்பாருங்கோ ஒருத்தண்ரை அழிவிலை தான் உங்கடை பெறாமகனின்ரை வாழ்க்கை அமையவேணுமா?" "இன்னொண்டு அகல்யாவும் சிவராசனோடை ஆசைப்பட்டிருக்கிறா. அவவின்ரை ஆசாபாசங்களையும் அழிக்க நினைக்கிறியள்." "அவள் எங்களிட்டை இதைப்பற்றி ஒரு மூச்சுக்கூட விடேல்லை." "நீங்கள் செய்த உதவியளை நினைச்சுப் பேசாமல் இருக்கலாம்" தம்பியவை ஏதோ நடந்துபோச்சு. அகல்யாவும் சிவராசனிலை ஆசைட் பட்டிருந்தால் அதுக்குமேலையும் நாங்கள் குறுக்கை நிக்கமாட்டம்.ஆனால் ஒண்டு. நாங்கள் அவளிலை அக்கறைப்பட்டவங்கள். அவள் கண் கலங்காமை வாழவேணும். தொண்டையைக் கனைத்துக்கொண்டு தொடர்ந்தார் கனரத்தினம். 'நாலுபேர் நாலுவிதமாய்க் கதைக்கக்கூடாது. அந்த நல்ல எண்ணத்திலை தான் முதலிலை பின்வாங்கினாங்கள். இப்ப கலியாணம் செய்து வைக்கிறம். ஆனால் அதுக்கை சிவராசன் ஒணிடு செய்யவேணும்." எல்லாரும் அவரைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்கள். "அகல்யாவின்ரை பெயரிலை பத்தாயிரம் மார்க் பாங்கிலை போடவேணும்.இது அகல்யாவின்ரை எதிர்காலத்துக்கு."
6)

"பத்தாயிரம்.அவன் போடுவான்" "எப்பிடி?"என்று நம்பாமல் பார்த்தார் கனகரத்தினம். "நாங்கள் இருக்கிறம். இந்தப் பத்துவருசமாய் அவனோடை பழகினவங்கள் நாங்கள். நாங்கள் சொந்தமில்லை. ஆனால் இந்த அந்நிய மண்ணிலை ஒருவர்மேலை ஒருவர் அக்கறைப்பட்டவங்கள்.எங்களுக்கு ஒண்டெண்டால் அவன். அவனுக்கு ஒண்டெண்டால் நாங்கள்.இது சொந்தத்துக்கு மேலான பந்தம். இதுக்காகப் பத்தாயிரமெண்ன இருபதாயிரம் கேட்டாலும் தருவம். நீங்கள் கலியானத்துக்காக அலுவல்களைக் கவனியுங்கோ. நாங்கள் காசோடை வாறம்"
அவர்கள் போய்விட்டார்கள். "ஏனப்பா பத்தாயிரமெண்டு கேட்டனிங்கள்? என்ன நினைப்பாங்கள்?" கடிந்தாள் பவளம். - “காசாசையூரலை கேட்கேல்லை.இதொரு பரீட்சை.இப்பிடி நாலு சிநேகிதர் இருந்தால் சிவராசன் முன்னேறிவிடுவாள்!"
அத்தியாயம் 13.
திக்பிரமை பிடித்தவன் போல் நின்றான் சிவராசன். உறவென்ற ஆத்மாக்களின் மாற்றீடுகள் கைக்குக் கிட்டவந்து எட்டச் செல்லும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏன் விலகிக்கொள்ள ஆசைப்பட்டாய் அகல்யா? ஏன் வெறுத்துப் போனாய் இப்படி? வெட்டொன்று துண்டு இரண்டாய் எண் உறவைத் தறித்துக்கொள்ள எப்படி முடிந்தது உண்ணால்? இது தவறு. உனக்கே உன்னைப் பிடிக்காமல் போனது தவறு. உன்னுடைய மதிப்பு உனக்குத் தெரியாது. அதை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். ஒருவரைப்பற்றி மற்றவருக்குத்தான் பலதும் தெரியும். யாருக்காகவோ விலகிக்கொள்கிறாய்.இந்தச் சமூகத்துக்கப் பயந்துபோனாயா? சமூகத்தை விட்டுவிடு. அது சாக்கடை. அதனுள் சந்தணமாக மணக்கும் என்னை ஏன் இனங்காணாமல் விலகிப்போனாய்? ஒரு நிமிடம் எல்லாவற்றையும் நினைத்துப் பார். என்னைக் கேள். நான் சொல்வதைக் கேள். கொஞ்சம் கவனம்காட்டு. உன்னைப்போல் ஒரு உயர்ந்த உயிர் இவ்வுலகில் இல்லை. நீ இருப்பதாலேயே நான் இயங்குகிறேன். உண்ணை மையமாக்கியே எனது உணர்வுகள் உற்பத்தியாகி என் இலக்கங்களின் மூலாதாரமாகின்றன. புரிகிறதா? விலகிப்போகாதே அகல்யா. கிட்டவா அகல்யா என்னைவிட்டு விலகுகிறாயே என்று நான் வருத்தம் அடையவில்லை. ஆனால் இவ்வளவு விருப்பத்துடன் விலகுகிறாயே, அதுதான் பிழை எண்கிறேன்.
6

Page 33
உன்னையே நீ தண்டித்துக்கொள்ளாதே. அதற்கு ஆயிரம் காரணங்களை அர்த்தமாக்கிக் கொள்ளாதே. சிவராசனின் கையிலிருந்த கடிதம் காற்றில் படபடத்தது.
சிவா!
மீண்டும் ஒரு கடிதம் எழுத தேர்ந்துவிட்டது. ஏன் நேர்ந்தது? இப்படி ஒரு நிலை ஏற்படுமென்று எதிர்பார்க்கவில்லை. திருமணம் முதலில் தடைப்பட்டதுமே சஞ்சலமான எனது மனது நிம்மதியானது. உங்களைவிட்டு விலகிவிட்டேன் என அமைதியானேன். ஆனால் மீண்டும் சஞ்சலம் உங்கள் நண்பர்களின் உருவில் கதவைத் தட்டியது. அதனால் இந்தக் கடிதம் எழுதுவது அவசியமானது. பார்த்தீர்களா? கடிதம் எழுதக்கூடாது, உங்களின் முகத்தைக்கூடப் பார்க்கச் கூடாது என்று கடவுளை மன்றாடிய எனக்கு இப்படி ஒருநிலை. இந்தக் கடித விசயத்தில்கூட நான் நினைத்தது நிறைவேறாதபோது, வாழ்க்கைவிசயத்தில் எப்படி நிறைவேற முடியும்? எதுவுமே எங்கள் கையில் இல்லை. ஏதோ ஒரு சக்தி. எல்லாவற்றுக்கும் மேலான சக்தி எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் சக்திஅந்தச் சக்தியின் முன்னால் நானோ நீங்களே எம்மாத்திரம்? என்னடா, இந்தப் பைத்தியக்காரிக்கு கடிதம் எழுதிக் குழப்ப நான்தானா கிடைத்தேன் என் நீங்கள் நினைக்கலாம். சிவா இப்போது நான் பைத்தியக்காரி ஆகும் நிலையில்தான் உள்ளேண். அதைத் தடுக்கத்தான் இந்தக்கடிதம். இந்தக் கலியாணம் வேண்டாம், கல்யாணம் என்ற பந்தம் புனிதமானது. பவுத்திரமானது. பாதுகாக்கப்படவேண்டியது. இதற்கெல்லாம் தகுதியானவள் இல்லை இந்த அகல்யா. 0SASuAS TAq STTLSLL OqLqL LL LLL LLLLLMLM MLMLu uA S ALSS q SSA qqqq LLLL LLS S LLq MMLSS qS S SSLSStttSt S SqqS eTSkeS S TTSqqqqq qqq LLeekekek TLTkH TCLkk keL A S TTTkTTTTTTT rrrJ tLLL LLL LkLk rrikS மொண்கோவில் ஏஜென்சி என்ற காமுகனால் எச்சில்பட்ட இலை. அவனிடமிருந்து தப்ப பேரடினேன். முடியவில்o0ல. எல்லாமே முடிந்த போது எண்னையே அழிக்க முயன்றேன். முடியவில்லை, அவசரமாக ஜெர்மனிக்கு அனுப்பிவிட்டான். இங்கே யாரிடம் என்நிலையைக்கூறுவேன்? மெனனமாக அழுதேன். தாயைச் சகோதரங்களைப் பிரித்துவந்த துயர் என நினைத்தார்கள். உங்களிடம் கூறியிருக்கலாம். சிலசமயம் எல்லாவற்றையும் மறந்து வாழ்வோம் என நீங்கள் முன்வரலாம். ஆனால் என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? உங்களின் நெருக்கம் அந்த ஏஜென்சிக்காரனையல்லவா நினைவுபடுத்தும்? அந்த மனித மிருகத்தின் கசப்பான நினைவுகளுடன் பாஷ்வாறு ஒரு
வாழ்க்கையை ஆரம்பிக்க இயலும்,
62

உங்களை முதலில் நேரிடையாகச் சந்தித்தபோதே விலகிக்கொண்டேன். ஏமாந்திருப்பீர்கள். ஆனால் நான் அறைக்குள்ளேயிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் விட்டதை நீங்கள் எங்கே அறிவீர்கள்? சித்தியும் சித்தப்பாவும் இந்தத் திருமணம் வேண்டாம் என்றபோது கடவுளே வழிகாட்டிவிட்டதாக சந்தோசப்பட்டேன். வருங்காலத்தில் பேசப்படும் திருமணங்களையும் சுலபமாகத் தட்டிக்கழிக்கலாம் என்ற தைரியும் ஏற்பட்டது. ஆனால் மீண்டும் உங்களுடன் ஒரு உறவு என்றபோது இடிந்துவிட்டேன். உங்களின் புனிதம் இந்தப் பாவியால் களங்கப்படக்கூடாது. களங்கம் என நீங்கள் நினைக்காது போனாலும் எண்மட்டில் அது களங்கம்தான். மனித மனங்கள் உறுதியானவை அல்ல. என்றாவது ஒருநாள் எனக்கும் எதையும் தாங்கும் சக்திவரலாம். அப்போது ஒரு துணை தேலைப்படலாம். அந்த நேரத்தில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் சந்திப்போம். அதுவரை என்னைச் சந்திக்க முயற்சிக்காதீர்கள். முயற்சித்து எண்ணைச் சஞ்சலப்படுத்தாதீர்கள். நிம்மதியற்றவள் ஆக்காதீர்கள் என்று உங்களின் பாதங்களில் விழுந்து கேட்கின்றேன்.
இது கோரிக்கை அல்ல. வரம்.
கடிதத்தை வாசித்த சோதி கேசவன் எல்லோரும் கவலை தோய்ந்த முகத்தோடு சிவராசனைப்பார்த்தார்கள். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. "சிவா! இப்ப என்ன செய்யப்போறாய்? அவர்களை உற்றுநோக்கினான். நிமிடங்கள் நிசப்தமாகின. கடகடவெனச் சிறித்தான். "நான் குளிக்கப் போறன். உடுப்புத் தோய்க்கவேணும். காயப்போடவேணும். சமைக்கவேணும். சாப்பிடவேணும். படுக்கவேணும். நாளைக்கு வேலைக்குட் போகவேணும்." "சிவா!" "எல்லாம் முடிஞ்சுபோக்கமுடிஞ்சது முடிஞ்சதாக இருக்கட்டும்
(முற்றும்)
63

Page 34
இந்துமகேஷ் எழுதும் இரட்டைவேடம்
நெருங்கதை ܨܗܝ
அடுத்த இதழில்.
காரணமில்லாத கோபம் அவன் மீது இத்தனை காலமாய் இல்லாமல் இப்போது.?
அவனிடம் என்னென்ன இவனுக்குப் பிடித்ததோ அதெல்லாம் இப்போது பிடிக்கவில்லை. போடா வெளியிலை
கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அவனை உதறிவிடச்சொல்கிற மனது? காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.
அவள் யாரோ இவன் யாரோ.
96.16i இவனது சகோதரியா? காதலியா? மனைவியா? ஒரு மணனுமில்லை. பிறகு
அவள் யாரோ இவன்யாரோ. எனினும் இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு நெருக்கi என் உறுத்தல் இவன் மனதில் தணலாகி. நெருப்பாகி.
மயக்கம்.ஏதோ ஒரு மயக்கம். மரணத்துக்கும் மயக்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இருக்கும். அது அப்படித்தான்! மயக்கத்தைத் தரும் மது. கொஞ்சம் கொஞ்சமாக மரணத்துக்கு அழைத்து போகிறது:
தெரியும். தெரிந்துதான் எல்யோரும் குடிக்கிறார்கள்.
64

மதுவில் மோகமா? மரணத்தில் மோகமா? இவனைப் பொறுத்தவரை மரணத்தில்
: சந்தர்ப்பம் சூழ்நிலை தவறுகளுக்குக் காரணமா? அல்லது இழைக்கப்படும் தவறுகளுக்கு அது ஒரு சாக்கா?
இரண்டும்தான்
------ سمہ ہے۔ کہ ^محمد للہ سب , ܗܶ ¬¬.r aܕ:rܟ: ܨܗܝ܂ ܘܐ ܕ݁ܕ *܆܆- ܐܝܟ [، ܕܐܲ: : ۔ ۔ ۔ ’۔ ۔ سعی ۔۔۔۔۔۔۔۔ சநதாட்ட சூழநலைகள் தவறுகளுககு வித்திடுகின்ற .
தவறுகள செய்பவன் ஈ நதாUப சூழநலைகளைத தனக்கேற்றவாறு
உருவாக்கிக்கொள்கிறான
, , - !
துணிந்தவன் சாதிக்கிறான். அது நல்லதே கெட் தோ எதுவாயினும் துணிந்தவன் சாதிக்கிறான்.
Lយអ្វីសោះ...?
பயம்.பயம். எதற்கெடுத்தாலும் பயம்.எந்த ஒரு காரியமும் பயத்தில்தான் பயனற்றுப்போகிறது :ம் தேவைதானா?
இந்துமகேஷ் எழுதும் இரட்டைவேடம்
அடுத்த இதழில்.
65

Page 35
முழ்காமல் காய்போம்.
நான் என்று வாழாமல் நாம் என்று வாழ்வோம், நாளைய விடிவுக்காய் தோழமை காப்போம்,
காற்றைப்போல் குலவ துயில் விட்ட முகங்களை விட்டுச் சுவர்கள் முட்டாமல் காப்போம்.
வீட்டுத் தோட்டத்தின் புதிய பூக்களை
Lori 806u && i tij & Siliqi போடாமல் காப்போம்,
நிழல்தர நீளும் பூவரசம் கிளைகளை விறகுக்காய் வெட்டிப் போகாமல் காப்போம்
நேச முகத்துடன் படரும் கொடிகளை கோயில் மாடுகள் மேயாமல் காப்போம்
நீள விரிந்த ஆழக் கடலில் ஈழத் தமிழினம் மூழ்காமல் காப்போம்,
செ.யோகநாதன். (பிறேமன்)
 

பூவரசு கலை இலக்கியப் பேரவை நடாத்தும் நூலகக் கண்காட்சி
ரெனேவர் கலாச்சார நிலையத்தில் 1998 மார்ச் 14, 15, 18ம் திகதிகளில் நடைபெறுகிறது.
இதுவரை வெளியான பூவரசு இதழ்களுடன் பூவரசுக்கு கிடைத்த ஏனைய சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெறும்

Page 36
பலதும் பத்தும்.
-ஏ.ஜே.ஆானேந்திரன்.
பெரிய இடத்து கல்யாணம்.
பெரியவர்கள் திருமணஞ்செய்துகொண்டால் அது நாடறிந்த சமாச்சாரமாகிவிடுவதுண்டு. இந்தட் பெரியவர் மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா?
ஜப்பானின் மல்யுத்த வீரரான அக்கிபோனோ மாப்பிள்ளையாகப் போகின்றார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. 516 இறாத்தல் எடைகொண்ட இந்த இராட்சத மனிதருக்கு யொக்கோசூனா’பட்டமும் கிடைக்கட் போகின்றது. அதென்ன யொக்கோ சூனா என்று கேட்க வருகிறீர்களா? சுமோ மல்யுத்த வீரர் ஒருவருக்குவழங்கப்படும் அதி உன்னத கெளரவந்தான் யொக்கோசூனா பட்டம். இன்றுவரையில் இப்பட்டம் எந்த வெளிநாட்டினருக்குமே வழங்கப்பட்டதில்லை. முதற்தடவையாக ஒரு வெளிநாட்டவர்டி(பிறப்பாள் அக்கிபோனோ ஹவாய் நாட்டவர்) இக் கெளரவத்தைப் பெற்று சரித்திரம் படைக்கப் போகின்றார். வரப்போகின்ற இலையுதிர் காலத்தில்தான் திருமணமாம்.
u Tf LosexuD56h? ஜப்பானிய அமெரிக்கரும், ஆசிரியையுமான கிறிஸ்டினா ரைக்கோ கலினா என்பவரே மணமகள். ரோக்கியோவை அடுத்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தில்தான் இவர் பணியாற்றுகிறாராம். கொட்டட்டும் கல்யாண மேளம்
ஒரு கொசுறுச் செய்தி. மணமகள் இப்போது 7மாதக் கர்ப்பிணியாம்.
uLITť SEDULJIT?... மூச்1.இது பெரிய இடத்துவிவகாரம்.
கொசுறுச்செய்தி 2, 28வயதான இந்த மல்யுத்த வீரரின் இயற்பெயர் சாட் றோவான். 2000வருடப்
68
 

பழமைவாய்ந்த, இந்தக் கெளரவப் பட்டத்தை மிகக் குறுகிய காலத்தில்,அதாவது தனது 3வருட காலத்தில் தேடி சரித்திரம் படைக்கிறார் இவர். 26வயதான மணமகளின் அப்பா ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி!
புகைப்பதைப் பகைக்கவும்.
சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் சீற்றத்தோடு ஏறிப்பாய முனைகின்றனவோ தெரியவில்லை. எரிவது சிகரட் மாத்திரமல்ல,உங்கள் பனநோட்டுக்களும்தான்! கலிபோர்னியாவிலிருந்து வெளியாகிய ஒரு சுவையான தகவல் இதோ தரப்படுகின்றது. புகைக்கும்போது, எவ்வளவு காசைக் கரியாக்குகின்றோம் என்று ஓர் ஆய்வு நடாத்தியபோது, இத்தொகை ஒருவரின் ஆயுட்காலத்தில் 230,000டாலர் தொடக்கம் 400,000 டாலர்வரை வரலாம் என்று கண்டறிர் திருக்கிறார்கள், ஒரு நாளில் எத்தனை சிகரட்டுகள் புகைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தொகைவேறுபடலாம் என்கிறார்கள் இவர்கள். இளவயதிலேயே புகைக்கஆரம்பித்து, 50வருடங்களுக்கு இப்பழக்கம் தொடர்ந்தால், மேற்கூறப்பட்ட தொகை வரலாம் என்பது இவர்கள் அபிப்பிராயம். ஒரு நாளில் ஒரு பாக்கெட் புகைப்பவர் (2.50 டாலர்படி) வருடத்தில் 900டாலர் பெறுமதியான சிகரெட்டுக்களைப் புகைத்துத் தள்ளியிருப்பார். 50வருடங்களில் இத்தொகை 45,000டாலர்களாகி இருக்கும். இதே தொகையை வருடாவருடம் வங்கியில் வைப்புக் செய்தால் 5வீத வட்டியுடன், முழுத்தொகையின் 4மடங்கு, 50வருடமுடிவில் கிடைக்கும் என்று மேலும் கூறுகின்றார்கள் இவர்கள். , ճ* ஆயுள் காப்புறுதிப்பனம்,வீடு,உடை,பல்போன்றவற்ை துப்புரவாக்கச்செலவிடும்பனம்-இவையெல்லாம் சேர்த் தான் மேற்கூறப்பட்ட தொகையாம்! இதைவிட புகைப்பதால் பற்றிக்கொள்ளும் வியாதிகளி சிகிச்சைகளுக்கான செலவு தனிஎன்கிறார்கள் இவர்கள்! இவ்வளவையும் வாசித்தபின்பு,இனியும் சிகரெட் புகைக்க் ஆசைப்படுகின்றீர்களா? பேசாமல் பணத்தை வங்கியில் போட்டு விடுங்கள். 'போதாத" காலத்து தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
s.s.
69

Page 37
தணியாத தாகம்.
டயானாவின் மறைவு எந்தவிதத்திலும் டயானா மோகத்தைத் தணிப்பதாயில்லை. டயானாவின் பிரியம.அவாஉருவம்பொறித்த விற்பனைப்பொருட்களை போட்டி போட்டுக கொண்டு வாங்கும் அளவுக்கு தீவிரமாகி இருக்கிறது டயானா உயிருடன் இருந்தபோதுகூட இவர் வடிவிலான பொம்மைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. சாள்ஸின் உருவகப் பொம்மை 1,000 டாலருக்கு விற்பனையாக, இளவரசி டயானாவினுடையதோ 1500 தொடக்கம் 1700டாலர் விலைக்கு விற்பனையாகி இருக்கின்றது. -A இவர் அகால மரணததிற்குப் பின்பு இவர் பெயர் பொறித்தபல பொருட்களை,டயானா சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. உதாரணமாக ஒரு விஸ்கி போத்தல் {விஸ்கியுடன்தான்),டயானாவின் திருமண நாளை அச்சிட்டபடி,போத்தல் ஒன்று 4000 டாலருக்கு விற்பனையாகி வருகின்றது. இன்னொருநிறுவனம்,மார்ஷல்தீவுகளினால் (வடமேற்கு பசுபிக பிராந்தியத்தில் 34 தீவுக் கூட்டங்களைக் கொண்டது) விசேஷமாக வெளியிடப்பட்ட முத்திரைகளையும் டாலர். ht) டாலர், டயானா ஞாபகாத்த நானயங்களையும் விற்பனை செய்து வருகின்றது. காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ளத் தெரிந்தவர்கள் இவர்கள் இதேசமயம், எந்தவித வியாபார நோக்கமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புக்களிடமும் ஏராளமான தொகைப்பணம்வந்து சேர்ந்திருக்கின்றது. அலுவலக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட, டயான நிதியம்(இளவரசியின்குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டது)ஏறத்தாழ 21மில்லியன் டாலர் தொகையை இதுவரை பெற்றிருக்கின்றது. பாடகர் எல்டென் ஜோனின் பிரபலமான டயானாட் பாடலின்மூலம் ஏற்தாழ 3 மில்லியல்
70
 

டாலர் தொகை கிடைத்துள்ளது. இத்தொகைகள், பொதுநலட் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன. இருந்தும் ஆயிரம்பொன் இறந்தும் ஆயிரம்பொன் என்பது இங்கேதான் சாலட் பொருத்தமாக இருக்கும்.
நின்றுவிட்ட நீண்ட வாழ்வு.
இன்றைய காலகட்டத்தில்,50ஐத்தாண்டி வாழ்க்கையை ஒட்டவே பகிரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கின்றது. இயந்திர வாழ்க்கை, எம்மைச் சூழும் போர்மேகங்கள், புரியாத புதிராகத் தோன்றும் நோய்நொடிகள் போன்றவை எல்லாம் ஆயுளைக் குறைக்கவே முயன்று வருகின்றன. இந்த நிலையிலும்,நூறைத்தாண்டி, 122வயதுவரை வாழ்ந்து உலக சாதனை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார் ஒரு மூதாட்டி. 36alf (upligt IGuust JEANNE LOUISE CALMENT. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம்திகதி மரணத்தைத் தழுவியிருக்கிறார் இந்த பிரெஞ்ச் பெண்மணி, தென்கிழக்கு பிரான்ஸிலுள்ளt ARLES என்னுமிடத்தில்தான் இவர் பிறந்தார். (2102.1875). பிறக்கும்போது, இவர்காலத்தில் காரும் இல்லை. மின்சார பல்புகளும் இல்லை. இவருக்கு ஒருமகள் இருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப்பின்னர் மேலும் 63வருடங்கள் இவர் வாழ்ந்திருக்கிறார். இவரது பேரன் ஒருவர் 1963ல் மரணித்து 6. Fift.
od 6osu atspot fsB 96îlungsresaT VINCENT VAN GOGH என்பவுரைத் தான் 1888ல் நேரில் சந்தித்ததாக இவர் கூறியுள்ளார். 1904ல் நோபல் பரிசுபெற்ற கவிஞர் MTSTRAL இன் நண்பி இவரெனவும் குறிப்பிட்டுள்ளார். சிரிப்பது வாழ்க்கையை நீடிக்க வைக்கும் என்று கூறியுள்ள இவர் தீக்கோழியை ஒத்த வயிறுகொண்டிருப்பதும் ஆரோக்கிய வாழ்வுக்கு தளம் அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.கு.1. இந்தப் பொல்லாத உலகத்தில் 'செஞ்சுரிவிளாச விரும்புபவர்கள், தயவு செய்து திருவாளர் தீக்கோழியைக் சந்திக்கவும்.
பி.கு:2, தயவுசெய்து ஆண்கள் பெண் தீக்கோழிகளையும், பெண்கள் ஆண் தீக்கோழிகளையும் சந்திக்கவும்.
7

Page 38
முதற்பரிசு பெற்ற கட்டுரை.
மண்ணும்மணிதமும்.
--சக்திதேவி சத்தியநாதன்
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே!" இது உலகமக்கள் ஒவ்வொருவரினதும் தாரக மந்திரம். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தியிறக்குது மூச்சினிலே என்றார் மகாகவி பாரதியார். இந்த இரு வசனங்களும் ஒரே கருத்தையே குறிக்கின்றன. தாங்கள் பிறந்த மண்மீது ஒவ்வொரு மனிதரும் வைத்திருக்கும்பற்று அளவிட முடியாதது. எனது மண், எனது மக்கள் என்று நினைக்கும்போதே சிலிர்த்துக்கொண்டு சீறி வரும் அந்த உணர்ச்சிகளை, அதன் தன்மையை எழுத்தில் வடித்துக்காட்ட s எவராலுமே முடியாது. இன்றைய இருபதாம் நூற்றாண்டிலே பூரீலங்காவில் ஈழப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் இக்கால கட்டத்திலே தமிழர்களாகிய நாங்கள் பெரும்பான்மையாக அந்நிய நாடுகளில் வாழ்கின்றோம். இன்று எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. எங்களுக்கு என்று ஒரு மொழி இல்லை. உங்கள் தாய் நாடு எது? உங்கள் தாய்நாட்டுத் தேசியகீதம் எது? உங்கள் தாய்நாட்டுச் சின்னம்பதித்த கொடி எது? என்று கேட்பவர்களுக்குப் பதில்சொல்ல முடியாத பரிதாபமான தமிழர்களாக தலை குனிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
72
 

இந்த நிலைமை நீடிக்காமல் எங்கள் நாடு தமிழ் ஈழம், எங்கள்மொழி தமிழ் என்று தலைநிமிர்ந்து சொல்லி நாம் வாழ வேண்டுமானால், தமிழர்களாகிய எங்களுக்குள் மனித நேயம் மலர வேண்டும். மனிதர்களால் மனிதம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் மண்ணுக்கும் பெருமை. மனிதர்க்கும் பெருமை.
மனிதம் என்றால் என்ன? ஆறறிவு படைத்த மானிடப் பிறவிகளாகிய மனிதர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகளை மனிதம் என்பர். மனிதம் இல்லாதவன் பாக்களுக்கு ஒப்பானவன். இன்று அந்நியநாடுகளில் அலங்கார மாயைவாழ்வுக்குள் விழுந்து அதிலேயே ஊறிய எம் மனங்களில் மனிதம் என்பது பல மனிதர்களுக்கும் மறந்துபோய் விட்ட சங்கதி ஆகிவிட்டது. இன்றைய கணணியுகத்தில், இயந்திரங்களோடு இயந்திரமாக இயங்கும் எங்கள் தொழிற்பாடுகள், இலட்சியம் ஏதுமில்லா வாழ்க்கை, இரத்த உறவுகளின் இதயம் தொடும் அன்பு இவற்றை எல்லாம் இழந்து சுயநலம் நிறைந்தவர்களாக தமிழகர்களில் பெரும்பாலோர் வாழ்கிறோம். பூரீலங்காவிலே நாம் அன்று ஆண்ட எம் தமிழ்மண்ணை மீட்டெடுக்க, தமிழர்களாகிய எங்களது சுதந்திரபூமிக்காக இலட்சியப் போரொன்று புரிந்து கொண்டிருக்கின்றது தமிழீழலிடுதலைப் புலிகள் இயக்கம். பத்துவயதுப் பாலகனில் இருந்து பத்துப்பிள்ளைகளின் தந்தையும்கூட தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து தியாக வேள்வியில் வெந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால், அகதிகளாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலரும் தமிழீழத்திலே என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்களாக, தெரிய விரும்பாதவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. தாய்நாட்டில் தமிழர் சண்டையிட்டால் என்ன? செத்துமடிந்தால் என்ன? தாங்கள் இங்கு பென்ஸ்காரும், புதுவீடும் வைத்துக்கொண்டு வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் வாழும் இந்தச் சில மனிதர்களைப் பார்க்கும்போது இவர்களிடம் மனிதம் என்பதே மருந்துக்கும் இல்லையே என்று ஆதங்கத்துடன் வேதனைப்படத்தான் முடிகிறது. நாங்கள் பிறந்து தவழ்ந்து, தளிர்நடைபயின்று வளர்ந்த எங்கள் தமழீழ மண்ணிலே இன்று, போரினால் மண் வளம் அழிந்துவிட்டது. மனிதவளம் அழிந்துகொண்டிருக்கின்றது. நாளும் நிமிடமும் போர். விமானக்குண்டு வீச்சுக்களும், எறிகணைத் தாக்குதல்களும், போதாக்குறைக்கு விசாரணை என்ற பெயரில் சுற்றிவளைப்புக்களும் என்று ஈழத்தவரின் நாளாந்த வாழ்வே இன்று போராட்டமாயிருக்கும் இந்நேரத்திலே எறிகணைத் தாக்குதல்களால் பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்த வீடுகளை இழந்து, ஷெல் அடிகளால் சோலைவனம்போலிருந்த ஊர்களெல்லாம் சுடுகாடாய் மாறிவிட ஊர்கள்மாறி ஊர்கள்மாறி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
T3

Page 39
உதாரணமாக குரும்பசிட்டியில் பிறந்து,வளர்ந்து வாழ்ந்த ஒரு குடும்பம் குண்டுவீச்சுக்குப் பயந்து குப்பிளானில் சிலமாதம் வசித்து, அங்கு பயந்து
• سمہ کی بیو (f
ஏழால்ைசென்று வாழ்ந்து, சிலநாளில் மல்லாகம் சென்று அங்கும் சிக்கலால் சுன்னாகம் சென்று வாழ்ந்து சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணவாழ்வு சிலமாதங்கள். அங்கும் பயநீர் கிளிநொச்சிக்கு மாற அவ்விடத்திலும் சிங்கள இராணுவத் தொல்லைகள்கூட வவுனியா சென்று அங்கும் நிரந்த அமைதி அற்ற நிலையிலே வாழ்வுக்கும் சாவுக்குமிடையே தத்தளித்த வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இது எனது உடன் பிறப்பான சகோதரியின் இடர்ப்பாடான வாழக்கை. எனது உறவுக்குமட்டுமா இந்தநிலை? இல்லவே இல்லை. இன்று தமிழீழத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடியே தீரவேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். ஓடி ஒடி.இன்னும் ஓயவில்லை அவர்களது ஓட்டம். இப்படிப்பட்ட அவலமான நாடோடி வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் ஒருமித்த உணர்வு தனித்தமிழ்நாட்டில் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து வாழவேண்டும் என்பதே. தங்க இடமே இல்லாத தமிழனுக்கு உத்தியோகம், உழைப்பு என்பன நினைத்தும் பார்க்கமுடியாத கணவாகிவிட்ட நிலை. இந்த சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தலையாய கடமை தங்களது உறவுகள் ஒரு நேரமாவது வயிறார உண்பதற்குத் தங்களாலான உதவிகள் செய்யவேண்டும். அதேநேரம் தங்கள் நாட்டைக் காப்பதற்கு சாவைக்கூட சந்தோஷமாய் ஏற்கத் துணிந்து களங்களிலே போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு, வீர வேங்கைகளுக்குத் தங்களால் முடிந்தவரை கைகொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். எங்கள் தமிழீழத் திருநாட்டுக்காக எங்கள் எதிர்காலம் பிரகாசமாக ஒளிவீசுவதற்காக தாங்கள் மெழுகுதிரிகளாகஉருகிக்கொண்டிருக்கும். தியாக தெய்வங்களுக்கு மனிதப் பிறவிகள் நாம் நேசக்கரம் நீட்டி தமிழ்மண்ணின் மனிதத்தைப் புனிதம் ஆக்கிட இனிமேலாவது எங்களைத் தயார் படுத்துவோமா?
T4

நெஞ்சுக்குள் நெருப்பு
உறவில்லா வாழ்க்கைதான்.என் ஓ.ஸ்லாத்தை உருக்குது நீரில்லா மீனை போல்.என் நெஞ்சம்தான் துடிக்கது
6qgT6SlsÄ)6)MI LIL . i 1 DIT 5.3.. fili böT வாழ்வுமாச்சுதே ஒளிபட்ட பணிபோலே என் நினைப்பாச்சுதே! நடுக்கடல் பயணத்தில் துடுப்பும் தொலைந்ததே! இனித்திட்ட என்வாழ்வின் இன்பமும்தொலைந்ததே ஊரெல்லாம் கூடுது உறவோடு வாழுது வாழ்க்கையின் சுவைதனை வாரித்தான் அணைக்குது!
உறவும் நானும்தான்-இதுவென் உறவுகளின் கதையும்தான்
நீரில் அழுத மீனைப்போல் என் . . நெஞ்சம் நீந்தும் துயரில்தான். என்றும்
நெஞ்சம் நீந்தும் துயரில்தான்
ஆறைவிட ஐந்துதான் அகிலத்தில் பெரிதென்பேன்
நியாய்மெது? அதுவென்றால் என்விட்டு சிகப்புநிற பொலிஸென்பேன் நன்றிக்காய் வாலாட்டும் என்வீட்டு ஐந்தறிவு செய்த நன்றிதனை மறந்துதிட ய்ே என் உறவுகளின் பேரறிவு!
வேலனையூர்
pr*
鸭 Joli.: ó3i čOf GOf G33 : ,
75

Page 40
பூவரசு கலை இலக்கியப்பேரவை ஜெர்மனி.
தொடரும்பணிகள்:
இலக்கியத்துறை.
2.
3.
6.
வழக்கம்போல் இருமாதங்களுக்கு ஒருமுறை பூவரசு இனிய தமிழ் ஏடு வெளியிடப்படுதல்.
தரமான தமிழ் இலக்கிய ஆக்கங்களைப் பிரசுரித்தல்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் மூலம் வேற்றுமொழிப் படைப்புக்களை தமிழுக்கு அறிமுகம்
செய்தல்.
ஆண்டுதோறும் தரமான படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குதல்.
படைப்பாளர்களுக்கிடையே போட்டிகளை நடத்தி சிறந்த படைப்பாளர்களைக் கெளரவித்தல்.
புதிய படைப்பாளர்களின் ஆக்கங்களுக்குப் பிரசுர வாய்ப்பளித்தல்.
பூவரசு தவிர்ந்த வேறு தமிழ் நூல்களின வெளியீட்டுக்கு உதவுதல்.
இளையதலைமுறையினருக்கென சிறுவர் சஞ்சிகை
(எங்கள் இளந்தளிர்கள்) வெளியிடல்.
76

கலைத்துறை,
வருடந்தோறும் பூவரசு ஆண்டுவிழாக்கள் மூலம் கலை நிகழ்வுகளை நடாத்துதல்.
புதிய கலை வடிவங்களை அறிமுகம் செய்தல்
புலம்பெயர் தமிழர்களின் கலை முயற்சிகளுக்கு உற்சாகமூட நிதல். ஆதரவளித்தல்.
பூவரசு கலை,இலக்கியப் பேரவையில் அங்கம் வகிக்க விரும்பும் ஒருவர் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகராக இருத்தல் வேண்டும். ஏனைய விபரங்களுக்கு பூவரசு முகவரிக்கு எழுதுங்கள்.
முகவரி:
PoovdŕCStj. Sinních Mahesla/carscar, Ott Brerryer Alleeg2 SÓ, 28325 3 rener, Germant.
t
இனிய தமிழ் ஏபி

Page 41
சபையேறாத பாடலது.
நந்தவனப் பூக்கள் யாவுமே நறுமலர்ப் பூக்கள்தானே! எந்தவனப் பூக்களும் எழிலானவையென்றாலும் இந்தரகப் பூக்களிலே இறைவனவ னாலயத்திலே வந்து சேரும் பூக்களையே மக்களவர் நாடிச்செல்வர்
அரங்கமேறா நாட்டியமதுபோல் மக்களின் கரங்களேறாக் காவியத்தில் பலனேதுமிலை தரங்கள் பார்த்தே தங்கமதைக் கொள்வதுபோல உரங்களான படைப்பே என்றென்றும் உள்ளங்களைச்சேரும்,
ஊக்கமதால் உந்துதுல்தான் கொண்டு உறுதியுடன் ஆக்கங்கள்பல அடுக்கடுக்கா யெழுதினா யென்றாலும் தாக்கங்களவை சிலவென்றாலும் தரணியிலே நிகழ்த்தாவிடில் தேக்கங்களே மிகுதியாகும் திறனில்லாப் படைப்பினாலே!
சபையேறாப் பாடலது என்றேனும் சரித்திரத்தில் நிலைக்குமோ அவையேறா ஆக்கமது அகிலமதில் வாழுமோ? நிலையில்லா உன்கவியால் நிம்மதிதான் கிடைக்குமோ? கலையில்லா நிலவதைத்தான் காசினியோர் விரும்புவாரோ?
குடத்து நீரால் பலனென்றும் குவலயத்தோர் பெறுவதில்லை இடமறிந்து கொடாத கொடையால் ஏதிலிகள் வாழ்வதில்லை தடமறிந்து தடங்கள் பதித்தால் தவறுகள் வருவதேயில்லை விடமறிந்து விலகிச்சென்றால் வேதனைகள் சேர்வதில்லை
மெட்டில்லாப் பாடலதை மேடையில் ரசிப்பவரெவரோ! கட்டில்லாக் காளையரைக் கன்னியர்தான் விரும்புவரோ? துட்டில்லா வாழ்வதுதான் துல்லியமாய்த் துலங்கிடுமோ? விட்டிடாத பகையுணர்வால் விழிநீர்தான் மிஞ்சிடுமோ!
78
 

நூல்கள். . . . ۔۔۔۔۔۔حســـــــص حصصححسحسسہمے-۔ சொற்பொழிவுகள். . . །།།།
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான அகிலன், நாயார்த்தசாரதிஇந்திரா பார்த்தசாரதி, கண்ணதாசன்,பாலகுமாரன்ஜெயகாந்தள்கஜாதா, மற்றும் வைஷ்மிசிவசங்கரிஇந்துமதி ஆகியோரின் நாவல்கள்,சிறுகதைகள். கவிஞர் கன்னதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்மனவாசம், வனவாசம் உட்பட 50க்கு மேற்பட்ட நூல்கள். பாரதியார் கவிதைகதைகட்டுரைகள் பாரதிதாசன் கவிதைகதைகள்கட்டுரைகள்
கவிஞர் கண்ணதாசனின் திரைப்படங்ாடல்கள் கவிஞர் வைரமுத்துவின் திரைப்படப்பாடல்கள் கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் திரைப்படப்பாடல்கள் கண்ணதாசன்தவைரமுத்து, மேத்தா, நாகாராசன் ஆகியோரின் TTTATTTMT TLLlLLTTSLLLTLLLLLLL LGLLLLTS TTTTTTS திருக்குறள் உட்பட உங்களுக்குத்தேவையான அனைத்து நூல்களுக்கும் SruigpLast 6sLn 6an Nairognúsar. அத்துடன் தமிழகத்திலிருந்து வெளியாகும் வாரமாத சஞ்சி
தாய்ரைகணையாழிஇலக்கிபீடம் உட்பட) தரமான இலக்கிய சஞ்சிகைகளும் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி S.Kandasamy, Langdütjensand 2, 28259 Bremen,Germany.
Glasguáf-0421-585042
()கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவுகள், கவிஞர் கண்ணதாசனின் சொற்பொழிவுகள் ஆடியோக் கசற்றுகளிலும் பெந்துக்கொற்ாஜாழ்.

Page 42
பூவரசமிபூபற்றி.
எழிலாய் தொகுத்த பூவரசமி பூ எதிரொலிக்கும் நினைவில் நிந்திடவைத்தது.
bக்துக்களுடன் - செ.யோகநாதன் (பிறேமன்)
பூவரசமிபூபார்த்தோம். SS வளர்ச்சியும், முன்னெடுப்புக்களும் ஊக்குவிப்பும், சிறுவர்களை கலைஞர்களின் பங்களிப்பின் மூலம் முன்கொண்டு வருவதும் பாரட்டத்தக்கது. வாழ்த்துக்கள்:
அன்புடன் -திருமதி கோசல்யாசொர்னலிங்கம். (முல்கைம்)
கடந்த 7ஆண்டுகாலமாக கலைத்துறையில் பூவரசு சாதித்தவைகள் எத்தனையோ, அவற்றைத் தொட்டுக்காட்டும் பூவரசமிபூ மனதைத்தொட்டது. உங்கள் அயராத கலை, இலக்கிய முயற்சிகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும்.மறந்தவர்க்கும் அதை நினைப்பூட்டும் பூவரசமிபூ. உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம் என்று வளரும் பூவரசு உண்மையாகவே உள்ளங்களைச் சொந்தம் கொண்டாடுகிறது என்பதற்கு
அழுத்தமான சான்று பூவரசமிபூ, உன் இலட்சியபபாதையில் மேலும்
வெற்றிாடை போடவேண்டும்.
مش: 'نامہ ہی سعسمی - ، "س سہ - ، مہندسrرمدس கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உனது பணி சிறக்கும். யார் மறந்தாலும் அன்னைத்தமிழ் மறககாது உன்னை வளால்
FE-L-6 செ.செல்வக்குமார். (ரட்டிங்கன்)
எட்டாவது ஆண்டையும் எட்டிப்பிடித்து பூவரசமி பூவையும் உலகுக்குக் காட்டி பூத்துக்குலுங்கும் பூவரசே! நூறண்பேர்க் தமிழ் நெஞ்சங்கள் சார்பில் உனக்கு வாழ்த்துக்கள் பலநூறு. அன்புடன் வாழ்த்தும் http:Www.thamizham.net வன்பல்குலரிசா.நூறன்பேர்க்) #REëëိဒိဝဲဝ့်ဇံüMitါ - qfo၉/2၇
வாள்ளாச்சிதசன்

نمبر
Wavze1 S-ze கலை, இலக்கியப் பேரவை
வழங்கும் S. பூவரசம்பூ
பூவரசு கலை, இலக்கிய விழாக்களிலிருந்து
திரட்டிய மலர்கள்
G
"அவர்களும் இவர்களும் (துள்ளிசை நாடகம்) தாயே உளக்காக
s
(சின்னப் பூக்களின் வண்ணப்பாக்கள்) இசைக்கோலம் (இசை நிகழ்ச்சி) இதுவரையில் பூவரசு
(சந்திப்பரங்கம்) N இவற்றுடன் இன்னும் பல நிகழ்ச்சிகளைத்தாங்கி () வெளி வந்துள்ளது!
பூவரசம்பூ
(வீடியோ மலர்)
பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். நீங்கள் பார்க்கவேண்டாமா? 。 way
!முகவரிக்கு எழுதுங்கள் '0لال(°ا يا dPپه لوی محمدي
(eسم (محرم

Page 43
கலைஞர் கெளரவிப்
"ता ।
கிழக்கும் மேற்
(கவிதை -இசை-ந
 

、“